கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் ஒரு வாரம்

Page 1


Page 2


Page 3

இலங்கையில் ஒரு வாரம்
J ல்கி
தியாகராயநகரம் : : சென்னை-17.

Page 4
முதற்பதிப்பு: ஜனவரி, 1954. இரண்டாம் பதிப்பு: செப்டம்பர், 1956.
மாருதி பிரஸ், இராயப்பேட்டை, சென்னை-14

பதிப்புரை
ஒருநாள் எனது நண்பர் ஒருவர் தலவிரி கோலமாக ஓடி வந்தார். சந்தோஷத்தால் துள்ளிக் குதித்து ஓடிவந்ததால்தான் அவர் தலையெல்லாம் கலைந்து, அப்படித் தலைவிரி கோலமாகக் காட்சி யளித்தது. ஓடிவந்த மனிதர் என்னிடம் ஒரு கேள்வியைப் போட்டார்.
* கல்கி ' பத்திரிகையின் ஆசிரியர் பூரீமான் கல்கி இலங்கைக்குப் போனரல்லவா ?'.என்ருர், * ஆமாம் போனுர், போய்விட்டு வந்துதானே * இலங்கையில் ஒரு வாரம்' என்ற தலைப்பில் கட்டுரை கூட எழுதுகிருர், போகாமலேயே எழுது கிருர் என்று சந்தேகப் படுகிறீரா?' என்றேன்.
* அதற்குச் சொல்லவில்லை ஐயா ! போன மனிதர் ஏன் இப்படித் திரும்பி வந்துவிட்டார் ’ என்ருர்.
நான் மிகவும் கோபத்துடன் அவரை முறைத துப் பார்த்தேன். அவரும் என்னுடைய கோபத்திற் குரிய காரணத்தைப் புரிந்து கொண்டுவிட்டார்.
* இல்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு இலங் கைக்குப் போனரே ! ஒரு வாரத்திலேயே ஏன் திரும்பினர் ? கூட இரண்டு மூன்று வாரம் இருந்து விட்டு வரக்கூடாதா? நமக்கெல்லாம் இலங்கையைப் பற்றி இன்னும் ஏராளமாக எழுதலாமே !’ என்று சலித்துக்கொண்டார்.
* கல்கி அவர்களின் இலங்கையில் ஒரு வாரம் ' கட்டுரையைப் படித்தவர்கள் எல்லோருக் குமே அவர் " இன்னும் எழுதமாட்டாரா? இன்னும் எழுதமாட்டாரா?' என்று ஆவல் ஏற்படத்தான் செய்யும்.

Page 5
4
நாம் இலங்கைக்குப் போக வேண்டுமென்ருல் பல தொந்தரவுகள் உண்டு.
பாஸ்போர்ட் வாங்கவேண்டும். விஸா வாங்க வேண்டும்.பாஸ்போர்ட்டுக்கும் விஸாவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிய ஆராய்ச்சி நடத்த வேண்டும். சுங்க அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், எல்லாம் கேட்கும் கேள்வி களைக் கேட்டுப் பைத்தியம் பிடிக்காமல் தப்பிப் பிழைத்துப் போய்ச்சேர வேண்டும்.
ஆயிரம் வருஷங்களுக்குமுன் பழையாறைச் சுந்த சோழன், சைன்யங்களையும் கொன்றை மரங்களையும் திரட்டிக்கொண்டு இலங்கைக்குப் போய் ஜனநாத புரத்தை ’ நிர்மாணிப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளெல்லாம் நாம் பாஸ்போர்ட்டும் விஸாவும் வாங்குதற்குச் செய்யும் முயற்சிகளின் காலில் கட்டியடிக்கக் கூடக் காணுது.
ஆனல் இனிமேல் இலங்கைக்குப்போய்ப் பார்த்து விட்டு வரவேண்டுமானுல் ஒருவிதச் சிரமமுமில்லை. நிம்மதியாக நாற்காலியில் சாய்ந்துகொண்டு, கால்மேல் காலைப் போட்டுக்கொண்டு, இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டால் போதும்.
இலங்கையையும் சேய்நாடாகிய யாழ்ப்பாணத் தையும், சுற்றிப் பார்க்கலாம். அங்குள்ள தலைவர் களுக்குச் ‘சமுகம் கொடுக்கலாம். அவர்களுடைய தமிழ் மணம் கமழும் புகை மணத்தை நுகரலாம்.
அடடே! நீங்கள்தான் ஏற்கெனவே புத்தகத் தைக் கையிலெடுத்து விட்டீர்களே. நான் ஏன் குறுக்கே நிற்கவேண்டும் ? 6.:} பழ. சிதம்பரன், தி. நகரம்
உரிமையாளர், பாரதி பதிப்பகம்.

இலங்கையில் ஒரு வாரம்
தமிழ் நாட்டுக்கு மாபெரும் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆசை என் உள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தது ; என் இரத்தத்தில் கொதித்துக் கொண்டிருந்தது ; என் இருதயமாகிற வெளியில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது.
சென்ற ஆகஸ்டு மாதத்தில் திடீரென்று அந்த ஆசை பொங்கிப் பெருகிவிட்டது. " எனக்கு ஏதாவது போக்குக் காட்டாவிட்டால் பூகம்பம், பெரு வெள்ளம் முதலிய உற்பாதங்களாக உருவெடுப்பேன் 1’ என்று பயமுறுத்திற்று. அஸ்ஸாமிலும் உத்தரப் பிரதேசத் திலும் இப்படி யாரோ தேசத் தொண்டு செய்யும் ஆர்வத்தை அமுக்கி வைத்ததினலேயே அங்கெல் லாம் மேற்கூறிய உற்பாதங்கள் நேர்ந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் என்ன? ஆனல் நான் அத்தகைய தவறு எதுவும் செய்யவில்லை ; அதாவது தேசத் தொண்டு செய்யும் ஆர்வத்தை அமுக்கிவிட

Page 6
6 இலங்கையில் ஒரு வாரம்
வில்லை. அந்த ஆர்வத்தை எப்படிவெளிப்படுத்துவது என்று யோசித்துப் பார்த்தேன். அதற்கு இரண்டே இரண்டு வழிகள்தான் என் முன்னுல் தென்பட்டன" ஒன்று, காங்கிரஸ் மகா சபையின் அக்கிராசனப் பதவிக்குத் தேர்தலுக்கு கிற்கவேண்டும், அல்லது குறைந்த பட்சமாக, மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்காவது நின்று தொலைக்க வேண்டும் ! இது ஒரு வழி.
ஆல்ை இந்த வழியில் சிறிது புகுந்துபார்த்ததில் எத்தனை எத்தனையோ தடைகள் மலைபோலக் குறுக் கிட்டது. இந்த வழியில் தொண்டு செய்ய வேண்டு மென்ற ஆசை எனக்கு முன்னதாகவே பலருக்கு ஏற்பட்டிருந்தது என்பதை நன்கு அறிந்தேன். அவர்கள் வெகுதூரம் முன்னேறி என்னைப் போன்ற வர்கள் அந்த வழியில் பிரவேசிப்பதற்கே இடமில் லாமல் செய்து விட்டார்கள். அவர்கள் யார் யார் எனில், பொய், புளுகு, போர்ஜரி, கள்ளக் கை யெழுத்து, கள்ளமார்க்கெட்டு, லஞ்சம், சிபார்சுஆகிய மகானுபாவர்கள் தான். அடிப்படையில் காங்கிரஸ் அங்கத்தினர் கையெழுத்து வாங்குவதி லிருந்தே அத்தகையோர் விடா முயற்சியுடன் வேலை செய்து வந்திருக்கிருரர்கள். அத்தகைய அஸ்காய சூரர்களுக்கு முன்னல் நாம் எங்கே? ஆகவே எனக்குத் தெரிந்திருந்த இரண்டாவது வழியைத்தான் நான் தேட வேண்டியதாயிற்று.
அந்த இரண்டாவது வழி, தமிழ்நாட்டிலிருந்து சில நாளைக்கு எங்கேயாவது போய்விட்டு வருவதே. தமிழ் நாட்டில் இப்போது தலைபோகிற பிரச்சனையா யிருப்பது உணவுப் பிரச்சனை ; அதாவது உணவு

கல்கி 7
இல்லாத பிரச்சனை. உணவு இல்லாத கேடு காரண மாகச் சில ஸ்திரிகள் குழந்தைகளே விற்பதாகச் செய்திகள் வந்தன. இன்னும் சில தாய்மார்கள் வயிற்றில் உள்ள குழந்தைகளைக்கூட விலைகூறி விற்று விடுவதாகப் பிரசுரமாயிற்று. உணவு இல்லையென்று குழந்தைகளைப் பெற்றவர்கள் விற்ருல் வாங்கிக் கொள்கிறவர்கள் அக் குழந்தைகளே என்ன செய்வார்கள் என்பது தெரியவில்லை. இப்படிப்பட்ட பயங்கரமான நிலைமையில் ஒருவர் ஒரு வார காலமாவது வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டு வந்தால் அந்த வரையில் உணவு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவி செய்ததாகுமல்லவா ? இப்படியே ஒவ்வொரு வரும் செய்தால் அதாவது வெளிகாட்டுக்குப் போய் ஒருவார உணவை மீத்தால் நமது உணவு மந்திரி முன்ஷி மிகவும் குஷியடைந்து நம்மை வாழ்த்த மாட்டாரா ? நாம் திரும்பி வரும்போது பூரீ ரோச் விக்டோரியா நமக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்க மாட்டாரா ?
எனவே,வெளிநாட்டுக்குப் போவதன்மூலம் தமிழ் நாட்டுக்குத் தொண்டு செய்வது என்று தீர்மானித் தேன். எந்த வெளி நாட்டுக்குப் போவது என்று யோசித்தபோது முதலில் கொரியா ஞாபகம் வந்தது. உடனே தளபதி மக் ஆர்தருக்கு ஒரு தந்தி கொடுத் தேன். 'உதவிக்குப் புறப்பட்டு வரத் தயார் உடனே ஒரு ஸல்பர் போர்ட் பம்பர் விமானம் அனுப்பவும் ’ என்று. ' விலாசதார் அகப்படவில்லை " என்று தந்தி திரும்பி வந்துவிட்டது ! அடுத்தபடியாக நமது அண்டை நாடாகிய இலங்கையை நினைத்துக் கொண் டேன். இலங்கை மந்திரி ஒருவர் தமிழ் நாட்டின் கதியை நினைத்து உருகி, ' பத்தாயிரம் டன் அரிசி

Page 7
இலங்கையில் ஒரு வாரம்
கடன் கொடுக்கிறேன் ' என்று தெரிவித்திருந்தார். சில காலத்துக்கு முன்பு இலங்கை தனக்கு வேண்டிய அரிசிக்கு இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டி ருந்தது. இப்போது சக்கரம் சுழன்று, இலங்கை இந்தியாவுக்கு அரிசி கடன் தருவதாகச் சொல்லு கிறது. இந்த அதிசயமான நிலைமையின் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டாமா ? உண்மையாகவே மனமிரங்கி இலங்கை மந்திரிகள் அரிசி கொடுக் கிருர்களா ? அல்லது " அழுகிய வாழைப் பழத்தை மாடுகூடத் தின்னுவிட்டால் புரோகிதருக்குத் தானம் கொடுத்துவிடு !” என்று கோமுட்டி செட்டியார் கதையில் சொன்னரே, அந்த மாதிரி இலங்கை சர்க்கார் சொல்லுகிருரர்களா ?
இதை நேரில் தெரிந்துகொண்டு வ்ருவதற்காக இலங்கைக்குச் சமுகம் கொடுப்பது என்று தீர்மானித் தேன். (நாம் இங்கே " விஜயம் செய்தல் ' என்று சொல்வதை நமது யாழ்ப்பாண சகோதரர்கள் சமுகம் கொடுத்தல் ' என்று சொல்லுகிருரர்கள்.) இலங்கை போவதற்கு இன்னும் சில முகாந்திரங்களும் எனக்குக் கிடைத்தன.
1. கொழும்பு தமிழ்ச் சங்கத்தார் தங்களுடைய எட்டாம் ஆண்டு விழாவில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று என்னைக் கேட்டிருந்தார்கள். அதற்குத் தேவையான போக்கு வரவு வசதிகளை * ஒழுங்கு செய்து ' தருவதாகவும் சொல்லி யிருந்தார்கள். -
2. தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் அடுத்த ஆண்டு தமிழ்த் திருவிழாவை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற அழைப்பை ஒப்புக்கொண்டிருந்தார்கள். அவ்

கல்கி 9
விதம் இலங்கையில் தமிழ் விழா நடத்துவதற்குப் பூர்வாங்க எற்பாடுகளே ஒழுங்கு செய்து விட்டு வரும்படி பூரீ பெரியசாமித் தூரனேயும் என்னையும் கேட்டுக் கொண்டார்கள்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமான இன்னெரு காரணம் இருந்தது. பதினேரு வருஷத் அதுக்கு முன்னுல் ஒரு தடவை நான் யாழ்ப்பாணம் சென்று திரும்பினேன். பிறகு எங்கெங்கே சென்ருலும், எந்தத் தமிழர் கூட்டத்தில் பேச நேர்ந்தாலும், ஒரு செய்தியைத் தவருமல் சொல்லி வந்தேன். அது என்ன வென்ருல், " உண்மையான தமிழ் அன்பைக் காணவேண்டும் என்ருல், யாழ்ப் பாணத்திலேதான் காண வேண்டும் " என்பது. பம்பாயிலும் கல்கத்தாவிலும் டில்லியிலும் இன்னும் தமிழ் நாட்டிற்குள் சென்ற சென்ற இடங் களிலெல்லாம் இதை நான் சொன்னதுண்டு. மற்ற இடங்களில் வசிக்கும் தமிழர்களிடம் தமிழ் அன்பு இல்லாமலில்லை. ஆனல், சில இடங்களில் உள்ள தமிழர்கள் தங்கள் தமிழ் அன்பை ஒளித்து வைத்துக் கொள்கிருர்கள். துப்பறியும் நிபுணர்களைக் கொண்டு அதைக் கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. இன்னும் சில இடங்களில் வெடிமருந்து வைத்துப் பாறையைப் பிளந்தால் தமிழன்பு சிறு ஊற்ருக மேலே வருகிறது. இன்னும் சில இடங்களில் தமிழ் அன்பு வேறு பாஷைகளின் மீது துவேஷமாகப் பரிணமித்துக் கோர தாண்டவம் செய்கிறது. ஆனல் யாழ்ப்பாணத் திலும் யாழ்ப்பாணத் தமிழர்கள் உள்ள இடங்களிலும் தமிழ் அன்பு வெளிப்படையாக அதனுடைய இனிமையான வடிவத்தில் பொங்கிப் பெருகுவதைக் காணலாம்,

Page 8
10 இலங்கையில் ஒரு வாரம்
இப்படியாகப் பதினெரு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததைக் கொண்டே சொல்லி வந்தேன். திடீரென்று சில நாளைக்கு முன் ஐயப்பாடு தோன்றி விட்டது. பத்து ஆண்டுகளுக்குள் உலகத்தில் எத்தனையோ மாறுதல்கள் நிகழ்ந்து விடுகின்றன. வாழ்க்கையிலும் பல மாறுதல்களைக் காண்கிருேம்: பன்னிரண்டு வருஷத்துக்குள் புதுப்பிக்காவிட்டால் பதிவு செய்த பத்திரம் கூடக் காலாவதி' ஆகி விடுவதாகக் கேள்விப் பட்டிருக்கிருேம். அப்படி யிருக்க யாழ்ப்பாணத்தாரின் தமிழ் அன்பு மட்டும் ஒரு மாமாங்கம் ஆகியும் அப்படியே நிலைத்திருக்கும் என்பது என்ன கிச்சயம் ? மறுபடியும் ஒரு தடவை போய்ப் பார்த்து விட்டு வந்தாலன்றி அதைப் பற்றி இனிக் கூட்டங்களில் சொல்லக்கூடாது. ஆனல் தமிழ்க் கூட்டங்களில் அதைப்பற்றிச் சொல்லக் கூடாது என்ருல் வேறு என்னத்தைச் சொல்வதற்கு இருக்கிறது ?
எனவே, இலங்கைக்குச் சென்று யாழ்ப்பாணத் தமிழர்களுக்குச் சமுகம் ’ அளித்துவிட்டு வருவது என்று தீர்மானித்து, அதற்கு வேண்டிய ஒழுங்கு களேச் செய்ய ஆரம்பித்தேன்.
இலங்கைக்குப் போக ஒழுங்கு செய்வதென்பது சாமான்ய காரியம் அல்ல. பாஸ்போர்ட் வாங்க வேண்டும்; விஸா வாங்க வேண்டும். ' பாஸ் போர்ட்' டுக்கும் விஸா'வுக்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பற்றி ஆராய்ந்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும். இன்னும், பண்டைக்காலத்தில் இலங் கையை வெற்றி கொள்ளச் சென்ற வீரத் தமிழர் களைப் போலவே உடம்பில் குத்துக் காயங்களுடன் புறப்பட வேண்டும். அம்மை ஊசி இரண்டு இடத்தில்

கல்கி - 1
குத்திக் கொள்ள வேண்டும் ; காலரா ஊசி இன்னும் இரண்டு இடத்தில் குத்திக்கொள்ள வேண்டும்.
அம்மை ஊசி என்ன அப்படி ஒன்றும் தொந்தரவு செய்துவிடவில்லை. இலேசாக விட்டு விட்டது. ஆனல் காலரா ஊசி குத்திக் கொண்ட அன்று கொஞ்சம் சுரம் வந்திருந்தது. ஊசி குத்திய டாக்டரை டெலிபோனில் அழைத்துச் “சுரம் வந்திருக் கிறது !’ என்றேன். " சும்மா வரட்டும் ; பரவா யில்லை !’ என்ருர், "உமக்குப் பரவாயில்லை;1எனக்குப் பரபரப்பா யிருக்கிறதே !’ என்றேன். ' அப்படித் தான் கொஞ்சம் பரபரப்பாயிருக்கும். காலரா ஊசியே அப்படித்தான். அதற்குக் கொஞ்சம் கூடப் புத்தியே இல்லை. தராதரம் தெரிவதில்லை. எழுத்தாளர்பத்திராதிபர் என்று கூடப் பயப்படாமல் கொஞ்சம் தொந்தரவு கொடுக்கும். ஆல்ை ஒரு நாளில் அது போய்விடும் !" என்ருர் டாக்டர்.
* அப்படியா செய்தி ? இருக்கட்டும் இந்தக் காலரா ஊசியைப் பற்றி ஒரு தடவை வெளுத்து வாங்கிவிட வேண்டியதுதான் !" என்று முடிவு செய்தேன்.
ஆனல் காலரா ஊசியினல் ஏற்பட்ட ஒரு நன்மை அதைப் பழி வாங்கும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளச் செய்தது.
சுரத்துடன் அறையில் படுத்திருந்தபோது வெளியில் யாரோ சிலர் வந்தார்கள். ' கல்கி இருக் கிருரா?” என்று விசாரித்தது என் காதில் விழுந்தது. பதில் கூறிய பிள்ளை 1 இருக்கிருர்; ஆனல் அவருக்குக் காலரா இகுைலேஷன். ’ என்று சொல்வதற்குள், வந்தவர்கள், " சரி, சரி ! பிற்பாடு

Page 9
12 இலங்கையில் ஒரு வாரம்
வந்து பார்த்துக் கொள்கிருேம் என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினர்கள். வந்தவர்கள் அவ்வளவு அவசரமாகத் திரும்பிச் சென்றதை அதற்கு முன் நான் அறிந்ததேயில்லை ! ' காலரா * Sஎன்ற வார்த்தை காதில் விழுந்ததுமே ஓட்டம் பிடித்தார்கள் !
இதை யெல்லாம் இங்கே நான் விவரமாக எடுத்துக் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவெனில், வருகிற 1951-ம் வருஷம் ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டிலிருந்து தமிழன்பர்கள் பலர் இலங்கை போக வேண்டிய அவசியம் ஏற்படும். மதுரையிலும், திருவாரூரிலும், கோயமுத்தூரிலும் கடந்தது போன்ற மாபெரும் தமிழ்த் திருவிழா அடுத்த முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக் கிறது. அந்த விழாவுக்குப் போக விரும்பும் தமிழ் அன்பர்கள் இப்போது முதலே பிரயாண வசதி களுக்கு ஒழுங்கு செய்யத் தொடங்குவது நலமா யிருக்கும்.
2
6ன் நண்பர் ஒருவரிடம் ஒரு சமயம் ஒரு பழைய கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். ' 1985-ம் வருஷத்தில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி வந்திருந்தார். அச்சமயம் நானும் அவ்விடம் போயிருந்தேன்." என்று சொல்லத் தொடங்கினேன்.
உடனே நண்பர் குறுக்கிட்டு, ‘எந்த வருஷத்தில் போனிர்கள் ? 1985-லா 1986-லா?" என்று கேட்டார்.

கல்கி 13
1 1935-ல் தான் !" என்றேன்.
* எந்த மாதத்தில் ?" என்ருர்.
* நன்ருய் ஞாபகம் ვეძაბა. ஆகஸ்டு மாதமா யிருக்கலாம்."
* ஒரு வருஷம் ஆகஸ்டில் பெரு மழை பெய்தது. அந்த வருஷமா ?” 盛
* இருக்கலாம்.'
* எந்த ஊருக்குப் போனிர்கள்? திருச்செங் கோட்டுக்கா ?”
* ஆமாம்.”
* திருச்செங்கோட்டுக்குப் போக எந்த ஸ்டேஷ னுக்குடிக்கெட் வாங்கினிர்கள் !"
* சங்கரி துர்க்கம் ஸ்டேஷனுக்கு !” -
* அப்போதெல்லாம் ரயிலில் நீங்கள் மூன்ரும் வகுப்பில் பிரயாணம் செய்வது வழக்கமா? இரண்டாம் வகுப்பிலா ?”
' கிடைத்த வகுப்பில் "
* சென்னையிலிருந்து சங்கரி துர்க்கத்துக்கு
டிக்கெட் விகிதம் என்ன ?”
* சுமார். os
* சுமாராகத்தான் தெரியுமோ ? நிச்சயமாய் தெரியாதாக்கும் ?”
* தெரியாது.”
" உங்கள் காதில் தொளே போட்ட அடையாளம்
இருக்கிறதே ! அப்போதெல்லாம் கடுக்கன் போட்டுக் கொள்வதுண்டோ ?”
1 இல்லை.”

Page 10
14 இலங்கையில் ஒரு வாரம்
* அப்படித்தான் நினைத்தேன். ஏனென்ருல் காதில் கடுக்கனேடு போனுல் மகாத்மா கடுக்கனேக் கழற்றிக் கொடு என்று கேட்டுவிடலாம் அல்லவா ? அதிருக்கட்டும்; யாரோ இங்கிலாந்தில் ஒரு வெள்ளேக் காரன் ! காதைக் குத்திக் கடுக்கன் போட்டால் கண் ணுக்கு நல்லது ' என்று சொல்லியிருக்கிருணுமே ? அதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன ?”
* சாதகமான அபிப்பிராயந்தான். காதைக் குத்தினுல் கண்ணுக்கு நல்லது. கண்ணைக் குத்திக் கொண்டால் காதுக்கு ரொம்ப நல்லது. y
* அப்படித்தான் நானும் கினைத்தேன். இப்போ தெல்லாம் வைரத்தின் விலை எப்படி யிருக்கிறது ; அதிகமா ? குறைவா ?”
மேற்படி நண்பரிடம் நான் சொல்ல ஆரம்பித்த விஷயத்தைச் சொல்லவே இல்லை ! சொல்ல முடிய வில்லை.
இலங்கைக்கு எந்தக் காரிய கிமித்தமாகவாவது போக விரும்பும் நண்பர்கள் ஆகாச விமான நிலையத்தில் சுகாதார அதிகாரிகளிடமும் சுங்கப் பரிசோதனை அதிகாரிகளிடமும் மேற்கண்டவாறு பல கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராயிருக்க வேண்டும்.
சுகாதார அதிகாரி உங்களே ஏற இறங்கப் பார்த்துவிட்டு, கையில் உள்ள அச்சுப் பாரத்தையும் ஏற இறங்கப் பார்ப்பார்.
பிறகு, " உங்களுக்கு வைசூரி உண்டா ?' என்று கேட்பார்.
* இல்லை."
. “ GG8arj. P”

கல்கி ' ' . . 15
* இல்லை.” o pragar ?” * அதுவும் இல்லை.” * டைபாய்ட், நிமோனியா, டபிள் கிமோனியா, காக்கை வலிப்பு, முடக்கு வாதம், குன்மம்.'
* இவை ஒன்றும் இல்லை.” சுகாதார அதிகாரியின் முகத்திலிருந்து சோக ரஸம் சொட்டும். பிறகு உங்கள் கையைப் பிடித்து நாடி பார்த்துக் கொண்டே, ' சுரம், கிரம் ஏதாவது இருக்கிறதா !” என்று கேட்பார்.
* சுரம் ஒன்றும் இல்லை. கிரம் ஏதாவது இருக் கிறதா என்று கையைப் பிடித்துப் பார்த்த நீங்கள் தான் சொல்லவேண்டும்.'
இல்லை என்பதற்கு அறிகுறியாக உத்தி யோகஸ்தர் தலையை ஆட்டிவிட்டு, 1 ஒக்கே ! போகலாம் !" என்பார். V
இத்தனை கேள்வி கேட்ட டாக்டர் " ஆஸ்த்மா உண்டா ?’ என்று மட்டும் என்னைக் கேட்கவில்லை. துரதிர்ஷ்டத்தைப் பாருங்கள்! அவ்விதம் கேட்டிருந் தால் உடனே, " உண்டு 1 திவ்யமாய் உண்டு ' என்று அந்த டாக்டருக்குப் பதில் சொல்லியிருப் பேன் அல்லவா ?
சுகாதார அதிகாரியிடமிருந்து சுங்க அதிகாரி யிடம் போகவேண்டும்.
சுங்க அதிகாரி உங்கள் பெட்டிகளேயும் படுக்கை களேயும் திறந்து காட்டச் சொல்வார். வாயைத் திறந்து காட்டச் சொல்வார். வயிற்றைத் திறந்து காட்டச் சொல்வார். சட்டைப் பைகளே உதறிக் காட்டச் சொல்வார். s

Page 11
16 இலங்கையில் ஒரு வாரம்
எல்லாவற்றையும் பார்த்த பிறகு 1 ஏதாவது பட்டு கிட்டு எடுத்துப் போகிறீர்களா ?’ என்று கேட்பார்.
* Θου3υ."
துணிமணி ?” * இல்லை. இலங்கையில் நிர்வாணம் அடைய எண்ணிப் போகிருேம்."
* தங்கம் ஏதாவது இருக்கிறதா ?” * இல்லை ; இருந்தாலும் கொடுக்கும் உத்தேச u6ుడిు.
1 வைரம் ? வைடூரியம் ? கோமேதகம் ? புஷ்ப ராகம் ? ரத்தினம் ? முத்து ? பவழம் ?”
6 இல்லை ? * புகையிலை ? கஸ்தூரி ? கோரோசனை? குங்குமப் g?"
1 ஒன்றும் இல்லை " சுங்க அதிகாரி மிக்க அதிருப்தி அடைந்து சந்தேகக் கண்ணுடன் உங்களே மேலுங் கீழும் பார்ப்பார்.
11 ஒக்கே ! போகலாம் !" என்று சொல்லி அடுத்த ஆளேக் கூப்பிடுவார்.
அப்புறம் போலீஸ் அதிகாரியிடம் போக வேண்டும்.
எங்கே போகிறீர்?" * இலங்கைக்கு ' * இலங்கைக்கா ? சிலோனுக்கா ?” * சிலோனுக்கு ? * சிலோனுக்கு எதற்காக '

கல்கி 17
* சிலோனைச் சுருட்டி எடுத்துக்கொண்டு வருவ தற்கு!”
* வந்து ?"
1 விரித்துக்கொண்டு படுப்பதற்கு.”
* சரி ! நீர் எந்த வருஷம் பிறந்தீர் '
* 7953-6b."
* எங்கே பிறந்தீர்?"
* ஒரு இருட்டறையில் '
சாட்சி உண்டா ?”
* கிடையாது.'
* அது வருந்தத் தக்கது. நீர் எப்போது இறந்தீர் ?”
46 1950-ல்
4 எங்கே !'
* காஷ்மீரில் நடந்த விமான விபத்தில் !”
* பிறகு இங்கு எப்படி வந்தீர்!" * இந்திய சர்க்கார் விமான விபத்தைப் பற்றி விசாரிக்கக் கமிஷன் ஒன்று கியமித்தார்கள். கமிஷன் விசாரித்து விபத்து நேரிடவில்லை ? என்று முடிவு செய்தது. நானும் அந்த முடிவை ஒப்புக் கொண்டேன். துண்டு துண்டாய்க் கிடந்த என் உடம்பெல்லாம் ஒன்று சேர்ந்து ஒட்டிக்கொண்டு உயிர் பெற்று எழுந்தது. பிறகு இங்கே வந்தேன்.'
* ரொம்ப வருந்தத் தக்க விஷயம். ஒக்கே ! நீர் போகலாம்.”
இப்படியாகப் பலவிதச் சோதனைகளுக்கு உள ளான பிறகு ஆகாச விமானத்துக்குச் சென்ருேம். எங்களே இலங்கைக்கு ஏற்றிச் செல்வதற்காகக் காத்
2

Page 12
18 இலங்கையில் ஒரு வாரம்
திருந்த விமானத்தின் முன் பகுதியில் * சீதா தேவி” என்று எழுதியிருந்தது. விமானத்தின் பெயர் அதுவென்று தெரிந்தது. இதுபற்றி நண்பர் பூரீ பெரியசாமித் தூரன் அவர்களுக்கு மிகவும் சந்தோஷம், \
* முன் காலத்தில் அன்னே சீதா தேவியைக் கண்டுபிடித்து வருவதற்காக அனுமார் ஆகாச மார்க்கமாய் இலங்கைக்குச் சென்ருர். இப்போது அதற்குப் பதிலாக அன்னே சீதா தேவி குழந்தை களாகிய நம்மை இலங்கைக்குக் கொண்டுபோகிருர் !' என்று சொல்லிச் சொல்லி ஆனந்தப்பட்டார்.
விமானத்துக்கு அனுமார் என்று பெயர் வைக்காமல் "சீதா தேவி” என்று பெயர் வைத்ததில் எனக்கும் சந்தோஷந்தான். சென்ன சர்க்கார் மந்திரிகள் ஆகாயப் பிரயாணம் செய்வதற்காக ஒரு விமானம் வாங்கினர்கள். அதற்கு * அனுமார் ’ என்று பெயர் வைத்தார்கள். அனுமார் தமது சுபாவத்தை அடிக்கடி காட்டிக் கொண்டிருந்தார். ஒரு சமயம் அனுமார் மீது ஏறிச் சென்னை மந்திரிகள் டில்லிக்குப் போனுர்கள். வழியில் ஒரு கிராமத்தில் சில பக்தர்கள் ராம பஜனை செய்துகொண் டிருந்தார்கள். அனுமார் காதில் அது விழுந்து விடவே, திடீரென்று முன்னெச்சரிக்கையில்லாமல் கீழே ஒரு மைதானத்தில் இறங்கிவிட்டார். அப்புறம் அங்கிருந்து புறப்படவும் மறுத்துவிட்டார். சென்னை மந்திரிகள் திண்டாடித் திணறி, பிழைத்தது புனர் ஜன்மம் என்ற எண்ணச்துடன், கால்நடையாகவும் கட்டை வண்டியிலும் சென்று ரயில் ஏறி டில்லி போய்ச்சேர்ந்தார்கள்.

கல்கி 19
கருணே மிக்க சிதாதேவி அப்படியெல்லாம் எங்களேப் பாடாய்ப் படுத்தாமல் பத்திரமாய் யாழ்ப் பாணத்தில் கொண்டுபோய் இறக்கினர். அங்கே யுள்ள சுங்க அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முதலியவர்களிடம் தாக்கல் கொடுத்துவிட்டு, விமான நிலையத்திற்கு வந்திருந்த யாழ்ப்பாணத்துத் தமிழ் அன்பர்களிடம் சற்றுத் தூரத்திலிருந்தபடியே அளவளாவிப் பேசிவிட்டு மறுபடியும் புறப்பட்டோம். அந்த மரகதத் தீவின் இயற்கை வளங்களை மேலிருந்து பார்த்துக்கொண்டே, கொழும்பு போய்ச் சேர்ந்தோம். தமிழ்ச் சங்கத்து நண்பர்கள் ஏற்பாடுசெய்திருந்தபடி கொழும்பு நகரில் டாக்டர் நெல்லைநாதன் அவர்களுடைய இல்லத்தில் தங்கினுேம்,
来 球
கொழும்பில் முதன் முதலாக மான் விசாரித்த விஷயம் அங்கே உணவு கிலேமை எப்படி என்பது தான். சில வருஷங்களுக்கு முன்னல் இலங்கையில் உணவுத் தட்டுப்பாட்டைக் குறித்து அடிக்கடி செய்தி வருவதுண்டு. இந்தியாவிலிருந்து அரிசி அனுப்பி வைப்பதற்குத் தூது கோஷ்டிகளும் இங்கே வந்த துண்டு. அப்படியிருக்க, தற்போது இலங்கை இந்தியாவுக்கு அரிசி கடன் கொடுப்பதாக முன் வருவது எவ்வாறு சாத்தியமாயிற்று?
இலங்கையின் நிலப்பரப்பை எண்ணும்போது ஜனத் தொகை அதிகம் என்று சொல்லமுடியாது. தமிழ் நாட்டில் மூன்று ஜில்லாக்களின் பரப்புக் கொண்டது இலங்கை, வாழ்கின்ற மக்கள் சுமார் 67 லட்சம் பேர்தான். ஆயினும் இலங்கை பற்ருக்

Page 13
20 இலங்கையில் ஒரு வாரம்
குறை நாடாகவே இருந்து வருகிறது. இலங்கை மக்களுக்குப் போதுமான உணவுப் பொருள் இலங்கையில் விளைவதில்லை. சமீபகாலத்தில் விளே விக்க முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்த நிலைமையில் இலங்கையில் தற்சமயம் உணவுத் தட்டுப்பாடு கிடையாது. எல்லா மக்களுக்கும் பசி தீர உண்பதற்கு வேண்டிய உணவு கிடைத்து வருகிறது. அதுமட்டுமல்ல ; அரிசி கடன் கொடுப்பதற்கு வேண்டிய வசதியும் இருக்கிறது.
இவ்வளவு திருப்திகரமான நிலைமை இலங்கையில் தற்சமயம் குடி கொண்டிருப்பதற்குக் காரணங்கள் என்னவென்று விசாரித்துப்பார்த்தபோது பின்வரும் காரணங்கள் தெரிந்தன -
1. உணவுத் திட்டத்தை முன் ஜாக்கிரதையுடன் சரியாக வகுத்து அமுல் 5டத்துகிருரர்கள். உணவுத் தேவை இவ்வளவுதான் என்பதைச் சரியாக நிர்ண யித்துக் கொண்டு, அதில் பற்றக் குறைக்குப் பர்மாவிலிருந்து அரிசியும் ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமை மாவும் தருவித்துக் கொள்கிருரர்கள். உணவுப் பங்கீடு முறை புகாருக்கு இடமின்றிச் சரிவர அமுல் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து இலங்கை அரசாங்கத்தை (5ாம் கட்டாயம்பாராட்டியே தீரவேண்டும்.
உணவு இலாகா இவ்வளவு திறமையுடன் கிர்வகிக்கப்பட்டு வருவதற்குப் பொறுப்பாளியான அதிகாரி பூரீ ஆள்வாப் பிள்ளே என்னும் தமிழர்தான் என்று அறிந்தபோது எனக்கு இரு மடங்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. இலங்கையில் நான் சந்தித்துப்

கல்கி 21
பேசிய நண்பர்களில் பூரீ ஆள்வாப்பிள்ளை அவர்களின் திறமையைப் பாராட்டாதவர் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
2. இலங்கை வாசிகள். (சிங்களவர், இந்தியர்கள், தமிழர்கள் அனைவரும்) அரிசியின் அடிமைத் தனத்தி லிருந்து விடுதலை பெற்றிருக்கிருர்கள். அரிசியே கதி-அரிசிச் சோறு இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது ' என்ற மனப்பான்மை இலங்கையில் கிடை யாது. ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் கோதுமை மாவைக்கொண்டு நல்ல முறையில் உயர்ந்த ரகமான ரொட்டி (Bakers Bread) இலங்கையில் எங்கும் செய்யப்படுகிறது. ரொட்டிக் கிடங்குகள் (Bakery) எங்கெங்கும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கை யில் சாதாரணக் கடையில் வாங்கும் ரொட்டி சென்னையில் ஸ்பென்ஸர் கம்பெனியில் வாங்கும் ரொட்டியை விட மேலாயிருக்கிறது. எல்லோரும் ரொட்டி சாப்பிடப் பழகிக் கொண்டிருக்கிருர்கள்.
வாரத்துக்கு ஒரு படி அரசிதான் ஒவ்வொரு வருக்கும் ரேஷன். இந்த ஒரு படி அரிசியின் விலை ஆறணுத்தான். ஒரு படி அரிசியோடு ரொட்டி, கறி காய்கள், கிழங்குகளேக்கொண்டு திருப்தியாகச் காப்பாடு நடந்துவிடுகிறது.
அதிகப்படியாக அரிசி வேண்டுகிறவர்கள் பகிரங்கமாக வேறு கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். இலங்கையில் விளையும் அரிசிக்குக் கட்டுப்பாடு இல்லை. விலை நிர்ணயமும் இல்லை. ஒரு படி இலங்கை அரிசியின் விலை சுமார் ஒரு ரூபாய். ஆகையால் அதிகம் பேர் இந்த விலைக்கு இலங்கை அரிசி வாங்குவதில்லை.

Page 14
22 இலங்கையில் ஒரு வாரம்
ரேஷன் கடை அரசியைப் பர்மாவிலிருந்து இலங்கை சர்க்கார் தருவிக்கிருர்கள். வாங்கிய விலை யைக் காட்டிலும் மிகக் குறைந்த விலைக்கே கொடுக் கிருரர்கள். இதில் ஏற்படும் வித்தியாசத்துக்கு இலங்கை சர்க்கார் உதவிப்பணம் (Subsidy) கொடுத்து உதவுகிருரர்கள். அதாவது நஷ்டத்தைச் சர்க்கார் கணக்கில் எழுதிவிடுகிருர்கள். இந்த நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளும் பண வசதி இலங்கை சர்க்காருக்கு இருக்கிறது.
3. இலங்கை சர்க்கார் இலங்கையின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யப் பர்மாவிலிருந்து அரிசியும் ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமை மாவும் தருவிக்கிருரர்கள். இதற்காக அந்த நாடுகளுக்கு இலங்கை சர்க்கார் பணம் அனுப்புவது அவசியம் அல்லவா?
இந்தியாவில் நாம் வெளி நாடுகளிலிருந்து உணவுப் பொருள் தருவிப்பதை கிறுத்தப் பார்க் கிருேம். வெளி நாடுகளிலிருந்து உணவுப் பொருள் தருவித்து அதற்காகப் பணம் அனுப்பினல் இந்தி யாவின் பொருளாதார நிலையை அது பாதிக்கிறது. ஆகையால் உணவு இறக்குமதியை கிறுத்த வேண்டும் என்று நமது தலைவர்கள் சொல்கிருர்கள்.
ஆனல் இந்த மாதிரிக் கவலை இலங்கை சர்க்கா ருக்குக் கிடையாது. இலங்கையிலிருந்து தேயிலையும், ரப்பரும் ஏராளமாக அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி யாகிறது. இதற்காக அயல் நாடுகளிலிருந்து ஏராளமான பணம் இலங்கை க்கு வரவேண்டியதா யிருக்கிறது. இப்படி வரவேண்டிய தொகையில் ஒரு பகுதியை அரிசியும் கோதுமை மாவும் தருவித்துக்

கல்கி 23
கொள்ள உபயோகப் படுத்துகிருரர்கள். இதனல் இலங்கை சர்க்காரின் பொருளாதார நிலைமை பாதிக் கப் படுவதில்லை.
அரிசியும் கோதுமை மாவும் தேவைக்குக் கொஞ்சம் அதிகமாகவே, தருவித்து வைத்திருக் கிருரர்கள். எனவே, பத்தாயிரம் டன் அரிசி இப்போது கடன் கொடுத்துப் பிறகு திரும்பப் பெற்றுக் கொள்வதில் இலங்கை சர்க்காருக்கு யாதொரு கஷ்டமும் இல்லை. ஒரு வேளே கொஞ்சம் செளகரியங்கூட இருக்கலாம்.
* இந்தியாவில் பஞ்சம் தாண்டவமாடியபோது நாங்கள்தானே உதவி செய்தோம் ? இங்கே நீங்கள் கொஞ்சஞ்கூட நன்றியில்லாமல் எதிர்க்கிறீர்களே ?” என்று இலங்கையிலுள்ள ஏழரை லட்சம் ஏழை இந்தியத் தொழிலாளிகளுக்கு எடுத்துச் சொல்ல லாம். ' உங்களுடைய தலைவர்களேத் துறத்திவிட்டு எங்களையே தலைவாகளாக வைத்துக் கொள்ளுங்கள்!" என்றும் சொல்லலாம். யார் கேட்பது?
a 秦 拳
ஏழரை லட்சம் ஏழை இந்தியத் தொழிலாளர் என்று சொன்னதும், முக்கியமான ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.
இலங்கை இன்று இவ்வளவு செல்வத்தில் சிறந்த நாடாயிருப்பதற்குக் காரணமானவர்கள் யார் ? இலங்கையின் செல்வத்துக்கு அடிப்படை என்ன ? பர்மாவிலிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந் தும் தருவிக்கும் உணவுப் பொருளுக்கு அலட்சிய மாகப் பணம் கொடுக்கக்கூடிய கிலைமையில் இன்று
இலங்கை எதனுல் இருக்கிறது ?

Page 15
24 இலங்கையில் ஒரு வாரம்
இலங்கையின் செல்வச் செழிப்புக்குக் காரணம் அதன் வியாபாரப் பெருக்கம். இலங்கையின் வியா பாரப் பெருக்கத்துக்குக் காரணம்தேயிலையும் ரப்பரும். தேயிலை-ரப்பர்த் தோட்டங்களில் ஆதிநாளிலிருந்து உழைத்துப் பாடுபட்டு வளர்த்தவர்கள் இந்தியாவி லிருந்து, முக்கியமாகத் தமிழ் நாட்டிலிருந்து இலங் கைக்குச் சென்றுள்ள தொழிலாளிகள்.
தேயிலையும் ரப்பரும் இலங்கையில் கிரம்ப உற்பத்தியாகிறது. பல தேசங்களுக்கும் போகிறது. அவற்றுக்கு நல்ல விலையும் கிடைக்கிறது. ஆகை யால், ஸ்டர்லிங்-டாலர் நாணயங்களில் இலங் கைக்குப் பணம் வரவேண்டியதாகிறது. அந்தப் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டு அரிசியும் கோதுமை மாவும் வேண்டிய அளவு தருவிக்க முடிகிறது.
இந்தச் சுபிட்சமான நிலைமைக்கு ஆதிகாரண மானவர்களும், இன்று காரணமா யிருப்பவர்களும் ஏழரை லட்சம் இந்தியத் தொழிலாளர்கள்தான்.
இலங்கையில் முன் தலைமுறைகளில் வேலை செய்யப் போனவர்களும் அவர்களுடைய சந்ததிகளு மான இன்று ஏழரை லட்சம் தமிழ் நாட்டுத் தொழி லாளிகள் இலங்கையில் இருக்கிருர்கள். இவர்களைப் பின் தொடர்ந்து சென்று வியாபாரம் முதலிய தொழில்களில் ஈடுபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் இருக்கிருர்கள். ...' .
இந்த ஏழரை லட்சம் இந்தியர்களே-பெரும் பாலும் தமிழர்களே - அங்கிருந்து கிளப்பிவிட இலங்கை சர்க்காரின் மந்திரிகள் பலவித உபாயங்

கல்கி 25
களேக் கையாண்டு வருகிருர்கள். பற்பல சூழ்ச்சித் திட்டங்கள் வகுக்கிருரர்கள்.
முக்கியமாக இந்தியர்களுடைய பிரஜா உரிமை யையும் வோட்டுரிமையையும் பறித்துவிடக் கூடிய சட்டங்களேச் செய்திருக்கிருர்கள். d
இத்தனே வருஷங்கள் இலங்கையில் தொடர்ந்து வசித்தவர்களுக்கு மட்டுமே இலங்கையில் பிரஜா உரிமை உண்டென்றும், அதற்கு அவர்கள் அத்தாட்சி காட்டி ருசுப் படுத்தவேண்டும் என்றும் விதித்திருக்கிருர்கள்.
இந்தக் கடுமையான சட்டத்தின்படியும் இலங்கையின் பிரஜாவுரிமை பெறக்கூடிய இந்தி யர்கள் லட்சக் கணக்கானவர்கள் உண்டு. ஆனல் அதற்குரிய தஸ்தாவேஜுகளேத் தேடிக் கண்டு பிடித்துக்கொண்டு வந்து கொடுத்துப் பதிவு செய்து கொள்வதென்பது பெரும்பான்மை எழுதப் படிக்கக் தெரியாத ஏழைத் தொழிலாளர்களுக்கு அசாத்திய மான காரியம்.
படிக்கத் தெரிந்தவர்களும் உலகம் அறிந்தவர் களுமான மனிதர்களுக்குத் தற்காலிகமாக இலங்கை போய்விட்டு வருவதற்குரிய பாத்திரங்களைப் பூர்த்தி செய்து, அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லி, நிபந்தனைகளை நிறைவேற்றிவிட்டுப் போய் வருவது பிரம்மப் பிரயத்தனமாயிருக்கிறது. எழுதப் படிக்கத் தெரியாத தோட்டத் தொழிலாளி ஒருவர் தம்மை இலங்கைப் பிரஜை யாகப் பதிவு செய்து கொள்வதற்காகப் பூர்த்தி செய்யவேண்டிய பாரங்களைப் பார்த்தால் காம்
மூர்ச்சை போட்டு விழுந்துவிடுவோம். அதற்குரிய

Page 16
26 இலங்கையில் ஒரு வாரம்
இதர தஸ்தவேஜ"மகளேக் கொண்டு வரும்படி சொன்னுல் ? வேண்டாம் ! வேண்டாம் எங்களுக்குப் பிரஜா உரிமையே வேண்டாம் ! சும்மா விட்டால் போதும் !" என்று கதறுவோம்.
அவ்வளவு பயங்கரமான சோதனையை இந்தியத் தொழிலாளிகளுக்கு இலங்கை சர்க்கார் ஏற்படுத்தி யிருக்கிருர்கள்.
அந்தச் சோதனையில் அவர்கள் தேறுவதற் காகப் பெருமுயற்சி புரிந்துவரும் சில தலைவர்களே இலங்கையிலுள்ள இந்திய மக்கள் பெற்றிருக்கிருரர் கள். இது அவர்களுடைய பாக்கியம்.
இத்தகைய இந்தியத் தலைவர்களில் சிலரை இலங்கையில் நான் சந்தித்தேன். பூரீ ராஜ்லிங்கம் பூரீ தொன்டைமான் குமாரவேல், பூரீ சுப்பையா, சோமசுந்தரம், ஜனப் ஆஸிஸ் ஆகியவர்களைப் பார்த்துப் பேசினேன்.
ஏழரை லட்சம் இந்தியத் தொழிலாளிகள் பிறப் புரிமை, வோட்டுரிமை உள்பட எல்லா உரிமைகளேயும் இழந்து அடியோடு சர்வ நாசம் அடையாமல் தடுத்துக்கொண்டு கிற்பவர்கள் இந்த ஒரு சில இந்தியத் தலைவர்கள்தான்.
சில நாளைக்கு முன்பு இலங்கை மந்திரிகளில் ஒருவரான பூரீ குணசிங்கா என்பவர் இந்தத் தலைவர் களைப் பற்றிப் பேசியது பத்திரிகைகளில் வெளியாகி யிருந்தது.
' இந்தியத் தொழிலாளிகளே ! ராஜலிங்கத் தையும், தொண்டைமானையும், சுப்பையாவையும் நம்பாதீர்கள். அவர்களே நம்பினுல் அழிந்து போவீர்கள். அவர்களுடைய திட்டம் எதுவும்

கல்கி 27
உருப்படாது !’ என்று பூரீ குணசிங்கா எச்சரித் திருக்கிருர்,
ஒரு ராஜலிங்கமும், ஒரு தொண்டைமானும் ஒரு சுப்பையாவும் இல்லாமற் போயிருந்தால் இலங் கையின் சகல வளங்களுக்கும் காரணமான ஏழரை லட்சம் தமிழர்களை இலங்கை சர்க்கார் ஓட்டைக் கப்பலில் ஏற்றிக் கடலிலே விட்டிருப்பார்கள்.
பூரீ ராஜலிங்கத்துக்கும் பூரீ தொண்டைமா அக்கும் பூரீசுப்பையாவுக்கும் மற்றும் அவர்களுடைய சகாக்களுக்கும் ஏழரை லட்சம் தோட்டத் தொழி லாளர் மட்டுடின்றித் தமிழ்நாடே மிகவும் கடமைப் பட்டிருக்கிறது.
3.
é 6 தமிழ் மணம் கமழ வேண்டும்" என்று ம்ணி ரங்கு ராகத்தில் கீர்த்தனம் பாடுகிருர்களே, உண்மையில் தமிழுக்கு என்று ஒரு தனி மணம் உண்டா என்று கேட்டால், கட்டாயம் உண்டு என்று கான் தயங்காது சொல்வேன். தமிழ் மணம் என்பது புகையிலைச் சுருட்டைப் புகை க்கும்போது உண்டாகும் மணமாகவே இருக்கவேண்டும். யாழ்ப்பாணத் தமிழர் களோடு பழக நேர்ந்தவர்கள் யாரும் இதை எளிதில் கண்டுகொள்வார்கள். .
யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் இருக்கிருரர்களே, அவர்களுடைய வாய்கள் சிறிது நேரம் கூடச் சும்மா இருப்பதில்லை. ஒன்று அவை அழகிய தமிழில் கதைத்துக் கொண்டிருக்கும் ; அல்லது நறுமணச் சுருட்டைப் புகைத்துக் கொண்டிருக்கும். அவர்கள்

Page 17
28 இலங்கையில் ஒரு வாரம்
பேசும் தமிழில் இனிய புகை மணம் கமழும் என் பதைப் பற்றி எள்ளளவும் ஐயமில்லை.
இப்படிப்பட்ட யாழ்ப்பாணத் தமிழர்களில்தமிழர் தலைவர்களில்-பேராசிரியர் அருள்நந்தி ஒருவர். கொழும்பு தமிழ்ச் சங்கம் ஆரம்பித்த நாளிலிருந்து இவர்தான் அச் சங்கத்தின் தலைவர். இவர் முன்னுளில் இலங்கை அரசாங்கக் கல்வி இலாகாவில் உத்தியோகம் பார்த்தார். டி.புடி டைரக்டர் என்ற பதவி வரைக்கும் வந்தார். அதற்கு மேலே கியாயமாக டைரக்டர் பதவிக்கும் இவர் வந்திருக்கவேண்டும். ஆனல் இலங்கை சிங்கள சர்க்காரின் வேற்றுமைக் கொள்கை அதற்குக் குறுக்கே வழி மறைத்து நின்றது. நல்ல வேளையாக இச் சமயத்தில் இலங்கையைச் சுதந்திரம் தேடிக் கொண்டு வந்தது. காந்தி மகானுடைய தவத்தினுல் இந்தியாவுக்கு வந்த சுதந்திரம் இந்தியாவோடு கின்று விடவில்லை. கடல் கடந்து இலங்கைக்கும் சென்றது. பர்மாவுக்கும் ஜாவா-சுமத்ராவுக்கும்கூட அல்லவா அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது !
இலங்கைக்குச் சுதந்திரம் வந்தபோது சிங்கள மந்திரிகள் அதுவரை அரசாங்க உத்தியோகத்தி லிருந்தவர்களுக்குச் சதந்திரம் அளிக்க முன் வந்தார்கள் ! " உபகாரச் சம்பளத்துடன் விலகிக் கொள்ள விரும்புகிறவர்கள் விலகிக்கொள்ளலாம் என்றர்கள். அச் சமயம் பார்த்து உத்தியோக விலங்கை உடைத்துக்கொண்டு வெளியேறியவர் களில் பூரீ அருள்நந்தி ஒருவர். தற்சமயம் இலங்கை சர்வகலாசாலையில் தத்துவப் போதகராயிருந்து
வருகிருர்,
y

கல்கி 29
பேராசிரியர் அருள்நந்தி அவர்களே அறிவுக் களஞ்சியம் என்று கூறுவது மிகையாகாது. நவீன மேனட்டுக் கல்வியில் தலை சிறந்த தேர்ச்சி பெற்றி ருப்பதுடன் பழந்தமிழ் நூல்களே நன்கு ஆராய்ந்து கற்றவர். எவ்வளவுக்குப் படித்தவரோ, அவ்வளவுக் கும் அடக்கம் வாய்ந்தவர். ' கிறைகுடம் தளும்பாது ' என்பதற்கு பூரீ அருள்நந்தி பிரத்தட்ச உதாரண மாவார். இவ்வளவு அடக்கம் வாய்ந்தவராயினும் அவருடைய உள்ளத்தில் பொங்கும் தமிழன்பை வெளியிடச் சந்தர்ப்பம் நேரும்போது அவருடைய அடக்கம் பறந்துவிடுகிறது. கொழும்பு சங்க விழா இரண்டு தினங்கள் நடந்து முடியப் போகும் தரு வாயில் இவர் சில வார்த்தைகள் கூறினர். " இளம் பிராயத்தில் நான் கவி பாடினேன். அதைக் கேளுங்கள் !" என்று ஆரம்பித்தார். கவி என்ன என்பது எனக்கு ஞாபகம் இல்லை. அதன் கருத்தை மட்டும் சொல்லுகிறேன்.
பூரீ அருள்நந்தி இந்த உலக வாழ்க்கையிலுள்ள துன்பங்களேக் கண்டு கலங்கினராம். மும் மலங் களுக்கு இடமாகிய இந்தப் பிறவியை எதற்காக அளித்தாய் என்று இறைவனிடம் முறையிட்ட ராம். எப்படியாவது இந்த மானிட வாழ்க்கையிலிருந்து தம்மைத் தப்புவித்துக்கரை சேர்க்கும்படி கடவுளிடம் மன்ருடிக் கொண்டிருந்தாராம். அச்சமயத்தில் ஒரு கன்னியைச் சந்திக்க நேர்ந்து அவள் பேரில் மோகம் கொண்டாராம். உடனே அவருடைய மனப்பான்மை அடியோடு மாறிப் போய் விட்டதாம் ! 'தமிழணங்கே! உன்னுடைய காதலின் இன்பத்தை அனுபவிப்ப தற்காக இந்தக் கொடிய மும்மலங்களுக்கு இடமாகிய

Page 18
30 இலங்கையில் ஒரு வாரம்
மனிதப் பிறவியைக்கூட நான் சகித்துக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன் !" என்று சொன்னுராம்.
தெய்வத் தமிழ் மொழியின் பேரில் பூரீ அருள் கந்திக்கு அவ்வளவு மோகம். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் காரியதரிசி வித்வான் கனகசுந்தரம் , அவர்களுக்கோ தமிழில் மோகம் என்பது மட்டுமல்ல அதன் காரணமாகப் பலர் மீது கோபம். தமிழைக் குறைத்துச் சொல்லுகிறவர்களின்மீது கோபம். தமிழ்ச் சங்க விழாவுக்கு முட்டுக்கட்டை போட்டதாக அவருக்குத் தோன்றியவர்கள் மீது கோபம். எதிர் பார்த்த அளவு அவருடன் ஒத்துழைத்துத் தமிழ்ப் பணிசெய்யாதவர்களின் மீது கோபம் . இசை எல்லாவற்றையும்விட இலங்கைக்குத் தமிழர்கள் புதிதாக வந்தவர்கள் என்று சொல்கிருர்களே, அவர்கள்மீதுஅவருக்கு மெத்தக் கோபம்.
* தமிழர்களா புதிதாக இலங்கைக்கு வந்து குடி யேறியவர்கள் ? ஒரு நாளும் இல்லை. சிங்களவர்கள் தான் அஸ்ஸாமிலிருந்தோ, வங்காளத்திலிருந்தோ, கலிங்கத்திலிருந்தோ வந்து இலங்கையில் குடியேறி ஞர்கள். இப்போது வந்திருக்கும் பூகம்பத்தைப் போல் அந்த நாளிலும் ஒரு பூகம்பம் வந்திருக்கும் ; அதற்குப் பயந்து ஓடி வந்தார்கள். தமிழர்களாகிய நாங்கள்தான் இலங்கையின் ஆதிக் குடிகள். அப்படி நாங்கள் வெளியிலிருந்து வந்திருக்கும் பட்சத்தில் வடக்கிலிருந்து வந்தவர்கள் அல்ல. இலங்கைக்குத் தெற்கே லமூரியா கண்டம் கடலில் மூழ்கியபோது . அங்கிருந்து கிளம்பி வந்தோம். சிலர் இலங்கையில் தங்கினுேம். சிலர் தமிழகத்துக்குப் போனுேம் எப்படியும் முதலில் இலங்கைக்கு வந்தவர்கள் நாங்கள்தான்!” என்று வித்வான் கனகசுந்தரம்

கல்கி 3.
சக்கைபோடு போட்டார். அவரை யார் மஅறுத்துச் சொல்ல முடியும் ? முடியவே முடியாது. லமூரியா கண்டம் இலங்கைக்குத் தெற்கே இந்துமகா சமுத்தி ரத்தில் இருந்திருக்கவேண்டும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஏனெனில் லமூரியா கண்டம் இருந்திராவிட்டால் அது எப்படி முழுகியிருக்க முடியும். முடியாதுதானே ! எப்போது லமூரியா கண்டம் கடலில் மூழ்கிற்று என்அறு ஏற்பட்டதோ, அதற்கு முன்னல் வெளியே அது இருந்திருக்கத் தானே வேண்டும் !
ஆவேசமும் ஆத்திரமும் உள்ளவர்கள்தான் எந்தக் காரியத்தையும் சாதிக்கமுடியும், வித்வான் கனகசுந்தரம் அவர்களிடம் இந்தப் பண்புகள் இருக் கின்றன. அதோடு கிர்வாகத் திறமையும் இருக் கிறது. தமிழ்ச் சங்க ஆண்டு விழாவை அவர் இவ்வளவு சிறப்பாக கடத்தியதே அவருடைய திறமைக்குச் சான்ருகும். தமிழ்த் தாயை இலங்கையி லிருந்து ஒட்டி விடலாம் என்று யாராவது கனவு கண்டிருந்தால் அது இனி ஒருக்காலும் பலிக்கப் போவதில்லை. ஏனெனில் தமிழ்த் தாய்க்குக் கொழும்பு நகரில் ஒரு நிலையான வாசஸ்தலம் ஏற்படுத்து வதற்கு வித்வான் கனகசுந்தரம் ஏற்பாடு தொடங்கி விட்டார். கடன் வாங்கி நிலம் வாங்கியாகிவிட்டது. நிலத்துக்காக வாங்கிய கடனை அடைத்துவிட்டுப் பிறகு தமிழ்த் தாய் வசிக்க அந்த கிலத்தில் ஒர் இல்லம் அமைக்கவேண்டும். கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கு ஒரு சொந்தக் கட்டடம் மட்டும் ஏற்பட்டு விடட்டும் : அப்புறம் " தமிழை இலங்கையிலிருந்து விரட்டுவேன்' என்று எவன் துணிந்து சொல்ல முன் வருவான்? பார்க்கலாம் ஒரு கை !

Page 19
32 இலங்கையில் ஒருவாரம்
காரியதரிசி பாலசுந்தரம் அவர்களின் மனுேரதம் நிறைவேறுவது அப்படியொன்றும் பிரமாதமான காரியமன்று. விரைவிலேயே அது நிறைவேறி விடும் என்று நம்புகிறேன். தமிழ்ச்சங்க விழாவில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்களின் மலர்ந்த முகங்கள் எனக்கு நம்பிக்கை அளித்தன. வித்வான் கனகசுந்தரம் இனிய தமிழ்ப் பண்புக்குரிய முறையில் அவர்களுடைய ஒத்துழைப்பைக் கோரிப் பெற்றுத் தமிழ்ச் சங்க கட்டிடத்தை கிறுவுவார் என்று நம்பு கிறேன்.
தமிழ்ச் சங்க விழாவில் கூடியிருந்தவர்களே பற்றிச் சில வார்த்கைள் இங்கே கூறியே தீர வேண்டும். தமிழகத்தில் சென்ற ஏழெட்டு ஆண்டு களாகப் பல தமிழ் விழாக்கள், கவிஞர் விழாக்கள், கடந்திருக்கின்றன. * அந்த விழாக்களில் பலவற் அறுக்கும் நான் சென்றிருக்கிறேன். ஆனல் இந்தச் சபையைப் போலப் பார்த்ததில்லை” என்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் சொன்னேன். அதையேதான் இங்கேயும் ச்ொல்கிறேன். அங்கே ஒன்றும் இங்கே வேருென்றும் சொல்லும் வழக்கம் என்னிடம் கிடையாது. தமிழ் நாட்டில் நடக்கும் தமிழ் விழாக் களில் வெள்ளே வெளே ரென்ற ஆடை அணிந்து மலர்ந்த முகங்களுடன் சொற்பொழிவுகளே ரஸித்து அனுபவித்துக் கொண்டிருப்போர் கூட்டத்தைச் சபையில் ஒரு பகுதியில் பார்க்கலாம். அவர்கள் செட்டி நாட்டிலிருந்து வந்த தமிழன்பர்களாயிருப் பார்கள். பூரீ சா. கணேசன் அவர்களுடைய சட்டை யணியாத கரிய திருமேனி மற்றவர்களின் ஆடை வெளுப்பை நன்கு எடுத்துக் காட்டும். கொழும்பில் தமிழ்ச் சங்க விழாவில் கூடியிருந்த

கல்கி 33
கூட்டம் முழுதுமே அப்படியிருந்தது. எல்லாரும் ஆாய வெள்ளே உடை தரித்தவர்கள். (பெரும்பா லோர் அடையாறு பாணியில் சட்டை அங்கவஸ்திரம் அணிந்தவர்கள்.) அவ்வளவு பேரும் மலர்ந்த முகத் தினர். சொற்பொழிவாளர் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து உணர்ந்து அனுப வித்து ஆனந்தப்படுகிறவர்கள். ஒவ்வொரு சமயம் எனக்குத் தோன்றியது. மேடையில் ஏறிச் சொற் பொழிவு ஆற்றுகிறவர்களேக் காட்டிலும் சபையில் அமர்ந்திருப்பவர்கள் அதிகம் படித்து அறிந்தவர்கள் என்று. தமிழனுக்குரிய உயர்ந்த பண்பாட்டின் காரணமாகவும் தமிழன்பு காரணமாகவுமே அவர்கள் அவ்வளவு உற்சாகத்துடன் சொற்பொழிவுகளே ரஸித்து மகிழ்கிருர்கள் என்றும் கருதினேன்.
ஆண் மக்கள் மட்டும் அல்ல ; பெண் மணிகள் பகுதியிலும் அப்படியேதான். யாழ்ப்பாணத் தமிழர் குடும்பங்களில் படித்த பெண்மணிகள் அதிகம். இலங்கையின் முன்னேற்றத்துக்குப் பல துறையிலும் காரணபுருஷரான ஸர். பொன்னம்பலம் ராமநாதன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பெண்கள் கலாசாலை யொன்று நிறுவினர். அதில் படித்த பெண்மணிகள் பலர் இப்போது கொழும்பில் பெரிய குடும்பங்களில் எஜமானிகளாயிருக்கிருர்கள். அவர்கள் * சைவ மங்கையர் கழகம் ' என்னும் ஸ்தாபனத்தை நிறுவி நன்கு நடத்திவருகிருரர்கள். அவர்களுடைய கழக மண்டபத்திலேதான் தமிழ்ச்சங்க விழா நடந்தது. இதிலிருந்து தமிழ் விழாவுக்கு வந்திருந்த பெண் மணிகள் எந்தத் தரத்தைச் சேர்ந்தவர்களாயிருப் பார்கள் என்று ஊகித்துக்கொள்ளலாம்.
3

Page 20
இலங்கையில் ஒரு வாரம் 64 في
மண்டபத்தில் பாதி இடத்தைத் தாய்மார்களே அடைத்துக் கொண்டார்கள். சில தாய்மார்கள் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார் க்ள். ஆனல், அவர்கள் பகுதியிலிருந்து ஏதேனும் பேச்சுச் சத்தம் அல்லது "குவா குவா சத்தம் வர வேண்டுமே ? அவ்வப்போது சொற்பொழிவை ரஸித்துச் சிரிக்கும் சத்தத்தைத் தவிர வேறு சத்தமே கிடையாது. சுருங்கச் சொன்னல், அங்கே வந்திருந்த தாய்மார்கள் தங்கள் மகவுகளைக் கூட மறந்திருந்தார்கள். குழந்தைகள் அழுகையை மறக் திருந்தன. ஆண் பிள்ளேகளோ சுருட்டுப் புகைத் தலைக்கூட மறந்து தமிழின் பத்தில் லயித்திருக் தார்கள். சபையிலிருந்தவர்கள் யாருமே சுருட்டுப் புகைக்கவில்லை ! பூரீ அருள்5ந்தி கூடத்தான் ! இந்த விந்தையை என்னவென்று சொல்வது ? அவர்க ளுடைய தமிழன்பை என்ன சொல்லிப் பாராட்டுவது? இயலாத காரியம்.
இத்தகைய அருமையான தமிழன்பர்கள் ஆயிரக் கணக்காக உள்ள 15கரத்தில் தமிழ்த் தாய்க்கு ஒரு சிறிய கட்டிடம் கட்டுவதுதான பெரிய காரியம் ? நல்ல முறையில் முயற்சி தொடங்கினுல், இலங்கையில் வாழும் பதினிேந்து லட்சம் தமிழர்களும் அந்தத் திருப்பணிக்கு உதவி செய்வார்கள் ofன்பது நிச்சயம்.
*
* அங்கே ஒன்றும் இங்கே ஒன்றும் சொல்லும்
வழக்கமில்லை என்றீரே ? சென்ற இதழில் ஏழரை லட்சம் • தமிழரைப் பற்றிச் சொல்லியிருந்தீர் ? இந்த

கல்கி 35
இதழில் 'பதினேந்து லட்சம் தமிழர்' என்கிறீரே / ஏழு நாளேக்குள் ஏழரை லட்சம் தமிழர்கள் அதிகமானது எப்படி ?’ என்று நேயர்கள் சிலர் கேட்கக் கூடும்.
என் அன்பrர்ந்த நேயர்களே ! கட்டாயம் நீங்கள் அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டியது தான். நான் பதில் சொல்லக் கடமைப் பட்டவன். சென்ற இதழில் நான் கூறியதும் உண்மை ; இந்த இதழில் நான் மேலே கூறியிருப்பதும் உண்மை. சென்ற இதழில் குறிப்பிட்ட ஏழரை லட்சம் தமிழர்கள் கடந்த அநுாறு ஆண்டுக்குள் தோட்டத் தொழிலாளிகளாகவும் வீட்டு வேலைக்காரர்களாகவும் சில்லறை வர்த்தகர்களாகவும் சென்று இலங்கையில் குடியேறியவர்கள். இந்த ஏழரை லட்சம் தமிழர் களின் பிரஜா உரிமைகளேப் பறித்து அவர்களை விரட்டியடித்துவிடத்தான் கருணை மிகுந்த சிங்கள மந்திரிகள் முயன்று வருகிருர்கள்.
இலங்கையில் வசிக்கும் இன்னுெரு ஏழரை இலட்சம் தமிழர்களோ பழைய புராதன பூர்வீக இலங்கைக் குடிகள். அவர்கள் இலங்கையில் எப்போது வந்து குடியேறினர்கள் என்பதை வரை யறுத்துக் கூற இயலவில்லே. குறைந்த பட்சம் இரண்டாயிர வருஷங்களாக இந்தப் பழந்தமிழர்கள் இலங்கைக் கடற்கரை யோரப் பகுதிகளில் வசித்து வருகிருர்கள். தமிழ் நாட்டுக்கும் இவர்களுக்கும் சரித்திரப் பூர்வமாகத் தொடர்பு நெடுகிலும் இருந்து வந்திருக்கிறது. சமீப காலத்தில் தமிழ் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்த பெரியார்களான பூரீ ஆறுமுக நாவலரும் க்வாமி விபுலானந்தரும் இலங்கையின் பூர்வீகத் தமிழ்ப் பரம்பரையைச் சேர்ந்தவர்களே.

Page 21
36 இலங்கையில் ஒரு வாரம்
தவிர, இலங்கை பல துறைகளிலும் புத்துயிர் பெறுவதற்குக் காரண புருஷராயிருந்த ஸர் பொன் னம்பலம் ராமநாதன் ஈழ நாட்டுப் பழம்பெருங் குடியைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் இலங்கையில் ஸர் பி. ராமநாதனுக்கு இணையில்லாத செல்வாக்கு இருந்தது. பழைய யதேச்சாதிகார பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்திலும் அவருக்கு இணை யில்லாத மதிப்பு இருந்தது. சர்க்காரும் மதித்தனர்; மக்களும் மதித்தனர். சிங்கள மக்களோ அவருக்கு என்றென்றும் தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டவர்கள். (7.
(Uதலாவது மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தில், 1917-18ல், இலங்கையில் ஒரு பெரிய கிளர்ச்சி நடைபெற்றது. இன்றையதினம் இலங்கை யின் சர்வ சக்திவாய்ந்த பிரதமராயிருக்கும் பரீ சேன நாயகர் அப்போது சாதாரண பிரஜையாக இருந்தார். அவரும அவருடைய சகாக்கள் சிலரும் மதுவிலக்கு இயக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த இயக்கத் தின் காரணமாகச் சிங்களவரிடையே புத்துணர்ச்சி ஏற்பட்டது. அது எப்படியோ சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் அடிதடி கலகமாக முடிந்தது. இன்னும் பெரிய வேடிக்கை என்னவென்றல், மேற்படி சமூகக் கலவரத்தை அப்போதிருந்த பிரிட்டிஷ் கவர்னர் பிரிட்டிஷ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எழுந்த பெரும் புரட்சியாக எண்ணிவிட்டார். உடனே சேன நாயகா, பேரன் ஜயதிலகா முதலிய பல முக்கியமான சிங்களத் தலைவர்களேப் பிடித்துச் சிறையில் அடைத் தார். சிங்கள மக்கள் பீதி யடைந்து செய்வதறியாது திகைத்திருந்தனர். அச்சமயம் ஸர் பொன்னம்பலம்

கல்கி 37
ராமநாதன் "நான் இருக்கிறேன், அஞ்சவேண்டாம்!” என்று அபயப் பிரதானம் அளித்தார். * இங்குள்ள அதிகாரிகளிடம் மன்ருடிப் பயனில்லை. இங்கிலாந்து சென்று உண்மையை எடுத்துக்கூறி நியாயம் பெற்று வருகிறேன்!” என்று பிரயாணமானர். எம்டன் கப்பல் குண்டு போட்ட காலத்தில், கடற் பிரயாணம் மிக அபாயம் கிறைந்ததாயிருந்த காலத்தில், இங்கி லாந்துக்குக் கப்பலில் பிரயாணமானர். பிரயாணத் தின்போதே இலங்கையின் நிலைமையை விளக்கியும், சிங்களத் தலைவர்களுக்கு இழைத்த அநீதியை எடுத்துக் காட்டியும் ஒரு புத்தகம் எழுதினர். இங்கி லாந்து சேர்ந்ததும் அதை அச்சிட்டுப் பார்லிமெண்டு அங்கத்தினருக்கும் மந்திரிகளுக்கும் கொடுத்தார். பிரதமர் லாயிட் ஜார்ஜையும் மற்ற மந்திரிகளேயும் பேட்டி கண்டு பேசினர். அந்த அபாயகரமான யுத்த சமயத்தில் அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்து கருத்தையும் மாற்றினர். அதன் பலனுகச் சிங்களத் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அது மட்டும் அல்ல ; மேற்கூறிய அநீதிக்குக் காரண புருஷரான பிரிட்டிஷ் கவர்னர் திருப்பி அழைக்கப் பட்டார். இம்மாதிரி கவர்னரைத் திருப்பி அழைத் தது என்பது அதற்கு முன் எப்போதும் நடந்த தில்லை. அதற்குப் பிறகு, இந்தியாவில் வைஸ்ராய் வேவல் திருப்பி அழைக்கப்பட்ட ஒரு சம்பவம்தான் நிகழ்ந்திருக்கிறது.
ஸர் பி. ராமநாதன் இலங்கை திரும்பி வருவதற் குள் மேற்கூறியவை நடந்துவிட்டன. எனவே, ஸர் பி. ராமநாதன் கொழும்பில் வந்து இறங்கியபோது அவருக்குச் சிங்களவர்கள் அளித்த வரவேற்பைப் போல் அதற்கு முன்னும் இலங்கை பார்த்ததில்லை

Page 22
38 இலங்கையில் ஒரு வாரம்
அதற்குப் பிறகும் பார்த்ததில்லை. குதிரைகள் பூட்டிய ரதத்தில் அவரை வைத்துக் கொழும்பு வீதி களில் ஊர்வலம் விட்டார்கள். ஆயிரமாயிரம் மக்கள் விதிகளில் இருபுறமும் நின்று ஜய கோஷம் செய்தார் கள். ரதம் ஒரு முக்கியமான நாற் சந்திக்கு வந்ததும் குதிரைகளே ரதத்திலிருந்து அவிழ்த்து விட்டு விட்டுச் சிங்களத் தலைவர்கள் தாங்களே ரதத்தை இழுத்தார்கள் ; ஸர் ராமகாதனிடம் தங்களுடைய அன்பையும் மரியாதையையும் நன்றியையும் காட்டு வதற்காகத்தான்.
இதெல்லாம் பழங்கதைதான். ' கதையா? கனவா ? என்றுகூடச் சந்தேகம் தோன்றும் வண்ணம் தற்சமயம் இலங்கையில் காரியங்கள் நடந்து வருகின்றன. சிங்கள மந்திரிகளின் மனப் போக்கு அவ்வளவு தூரம் மாறியிருக்கிறது. புதிதாக வந்த இந்தியர்களின் பிரஜா உரிமைகளைப் பறிக்கப் பார்ப்பதுபோல், யாழ்ப்பாணத் தமிழர்களின் பிரஜா உரிமைகளைச் சிங்கள மந்திரிகள் பறிக்க முடியாது. அவர்களே இலங்கையை விட்டுத் துரத்திவிடலாம் என்று கனவு காணவும் முடியாது.
ஆயினும் ஏழரை லட்சம் யாழ்ப்பாணத் தமிழர் களின் மனதில் இன்று அமைதி இல்லை ; நாளே என்ன நேரிடுமோ என்ற கவலை குடிகொண்டிருக் கிறது. இன்று ஏழரை லட்சம் புதிய இந்தியர்களைத் துரத்தப் பார்க்கிறவர்கள் நாளேக்கு ஏழரை லட்சம் பழைய தமிழர்களே எப்படி நடத்துவார்கள் என்று யாருக்குத் தெரியும் ? - இலங்கையின் மொத்த ஜனத் தொகை 67 லட்சம். பழைய தமிழரும் புதிய தமிழரும் சேர்ந்தால் பதினேந்து லட்சம். இந்தப் பதினைந்து

கல்கி 39
லட்சத்தில் ஏழரை லட்சம் பேரை உரிமை அற்றவர் களாக்கிவிட்டால் மிச்சமுள்ள ஏழரை லட்சம் தமிழர்கள் மிகக் சிறுபான்மையாகிவிடுவார்கள் அல்லவா?
யாழ்ப்பாணப் பழந் தமிழர்களில் பெரும் பணக் காரர்களோ, தோட்ட முதலாளிகளோ அதிகம் பேரில்லை. பெரும்பாலும் நடுத்தர வகுப்பினர். படிப்பு, Fர்க்கார் உத்தியோகம், வக்கீல் வேலை, உபாத்தியாயர் வேலை முதலியவற்றில் ஈடுபட்டிருப்பவர்கள். வருங் காலத்தில் இவர்களுடைய நிலைமை என்ன ஆகும் ? எனவே, பழந்தமிழர்களில் தீர்க்க திருஷ்டி உள்ள வர்கள் எல்லாரும் புதுத் தமிழர்கள் நடத்தும் பிரஜா உரிமைப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் ள்ன்று மனமார விரும்புகிருர்கள்.
யாழ்ப்பாணத் தமிழர்களுடைய தமிழன்பைக் குறித்து முன்னம் மகிழ்ச்சியுடன் கூறினேன். இனியும் அதைப் பற்றிச் சொல்ல வேண்டியதா யிருக்கும். ஆனல், அவர்களுடைய அரசியலைப பற்றி அவ்வளவு மகிழ்ச்சியுடன் சொல்வதற்கில்லே. அதைப் பற்றிச் சோகரசம் கலவாமல் சொல்லவோ எழுதவோ இயலாதுதான்.
எனக்குத் தெரிந்தவரையில் இலங்கைத் தமிழர் களிடையில் நாலு அரசியல் கட்சிகள் இருக்கின்றன ஒன்று, பழைய கிதானக் கட்சி ; இரண்டு, தமிழ்க் காங்கிரஸ் கட்சி என்னும் புதிய ஒத்துழைப்புக் கட்சி ; மூன்ருவது, தமிழரசுக் கட்சி அல்லது சமஷ்டிக் கட்சி; நாலாவது, சுதந்திரக் காந்தியக் கட்சி.
பழைய நிதானக் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஸர் பி. ராமநாதனுடைய மாப்பிள்ளை பூரீ எஸ்.

Page 23
40 இலங்கையில் ஒரு வாரம்
நடேசன், ஸர் அருணுசலத்தின் குமாரர் ஸர் ஏ, மகாதேவா முதலியவர்கள். இவர்கள் தமிழர்க ளுடைய உரிமைகளுக்காகப் போராடுவதில் பின் வாங்கியவர்கள் அல்ல. சிங்கள மந்திரிகளுக்கு இவர்களிடம் மரியாதை உண்டு. அவசியமான போது ஒத்துழைத்தும் அவசியமானபோது போராடியும் வந்தார்கள்.
இவர்களுக்குப் போட்டியாகத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஏற்பட்டது. இதன் தலைவர் பூரீ பொன்னம்பலம் என்பவர். பத்து வருஷத்துக்கு முன்னுல் கான் இலங்கை சென்றிருந்தபோது இவரை * இலங்கையின் எரிமலை ' என்று பலரும் சொன்னர்கள். தீப்பொறி பறக்கும்படி சிங்கள மந்திரிகளைத் தாக்கியும் தமிழர் உரிமைகளைத் தாங்கியும் பேசுவார். இவர் போகு மிடங்களுக்கெல்லாம் நெருப்பணக்கப் பின்னேடு ஒரு * பயர் என்ஜின் " போகும் என்று வேடிக்கையாகச்
சொல்வார்கள்.
இத்தகைய வீராவேசத்துடன் பூரீ பொன்னம் பலம் கட்சியார் சென்ற தேர்தலில் போட்டியிட்டுப் பழைய பிரமுகர்களேத் தோற்கடித்தார்கள். சில நாள் வரையில் இலங்கைப் பார்லிமெண்டில் போராடியும் வந்தார்கள். பிறகு, ஒரு நாள் பூரீ பொன்னம்பலம் பூரீ சேனநாயகாவின் மந்திரி சபையில் மந்திரியாகி விட்டார் 1 மந்திரி வேலை நன்றகவே பார்த்து வருகிருர். பேச்சும் முன்னேவிடத் தீவிரமாகவே பேசிவருகிருரர். எனினும், இது அவருடன் சேர்க் திருந்தவர்களிலேயே சிலருக்குப் பிடிக்கவில்லை. V−
அப்படிப் பிடிக்காமல் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிச் சிலர் தமிழரசுக் கட்சி என்ற

கல்கி 41
புதிய கட்சியை அமைத்திருக்கின்றனர். இந்தக் கட்சியின் தலைவர் பூரீ செல்வநாயகம். தமது கட்சி யைப் பிரசாரம் செய்வதற்காகச் ' சுதந்திரன் ' என்னும் தினப் பத்திரிகையை இவர் ஆரம்பித்து நடத்திவருகிருர், அதில் பொருள் நஷ்டமும் அடைந்து வருகிருர் என்று கேள்விப்பட்டேன்.
* சுதந்திரன் " ஆசிரியரும், மற்றும் அங்குள்ள உதவி ஆசிரியர் சிலரும் என் நண்பர்கள். எனவே, அவர்களைச் சந்திக்கச் ' சுதந்திரன்.” காரியாலயத் அதுக்குப் போனேன். அங்கே பூரீ செல்வ நாயகம் இருந்தார். அப்போதுதான் என்னுடைய பெருமை எனக்குத் தெரிந்தது ! குறைந்த பட்சம் பதினுயிரம் பேருக்குச் சமம் நான் என்று அறிந்துகொண்டேன். ஏனெனில், பதினுயிரம் பேர் அடங்கிய கூட்டத்தில் பிரசங்கம் செய்வதுபோல் பூரீ செல்வநாயகம் தமது கட்சியை எனக்குச் சொற்பொழிவாகவே ஆற்றினர்
இது ஒரு பழைய சம்பவத்தை எனக்கு ஞாபகப் படுத்திற்று. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மாதம் மும்மாரி பொழிந்து தேசம் சுபிட்சமாயிருந்த காலத்தில், மகாத்மா சுயராஜ்ய இயக்கத்தை ஆரம் பித்தார். சுயராஜ்ய மந்திரத்தைக் கிராமங் கிராம மாகப் போய்ச் சொல்லவேண்டு மென்று தொண்டர் களுக்குக் கட்டளையிட்டார். நானும் சில கிராமங் களுக்குப் போனேன். ஒரு கிராமத்தில் தம்பட்டம் அடித்து, கிராமச் சாவடிக்கு முன்னல் மாபெரும் கூட்டம் நடைபெறும் என்அறு அறிவித்த பிறகு, குறிப்பிட்ட நேரத்தில், கையில் ஒரு ஹரிகேன் லாந்த ருடன் சர்வடிக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே ஒரே ஒரு மனிதர்தான் ஆஜராயிருந்தார். அந்த

Page 24
42 இலங்கையில் ஒரு வாரம்
ஒருவராவது வந்திருக்கிருரே என்ற நன்றி உணர்ச்சி யுடன், பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியாவில் செய்துவரும் அட்டூழியங்களேப் பற்றி, சாங்கோபாங்கமாகக் கேட்ப வரின் இரத்தம் கொதிக்கும்படியாக, ஒன்றேகால் மணி நேரம் "பிரசங்கம் செய்தேன். நானே வந்தணுேப சாரமும் சொல்லிக்கொண்ட பிறகு சபையோராகிய அந்தத் தனி நபரைப் பார்த்து, ! ஐயா ! தங்கள் தேசபக்தி என்னேப் பரவசப்படுத்துகிறது. தாங்கள் யாரோ ! எந்த ஊரோ ?' என்றேன்.
அதற்கு அந்தப் புண்ணியவான், " என்னைத் தெரியவில்லையா, ஸாமி ! நான் உம்மைத் தொடர்ந்து கோபி செட்டிபாளையத்திலிருந்து கரூர் வரையில் வந்திருக்கிறேனே ? நான் சி. ஐ. டி. க்காரன்!உங்களேக் கண்காணிப்பதற்காக என்னைப்போட்டிருக்கிருரர்கள்!” என்ருன்,
நல்லவே&ளயாக நான் சி. ஐ. டி. க்காரன் அல்ல மற்றப்பபடி பூரீ செல்வநாயகம் என்ன ஒரு பெரிய பொதுக் கூட்டமாக நினைத்துச் சக்கைப்போடுபோட்டு
விட்டார்.
ஒரு இலட்சியத்தில் ஆவேசம் உள்ளவர்கள்தான் இப்படியெல்லாம் செய்யக்கூடும். பூரீ செல்வநாயகத் துக்கு ஆவேசம் இருக்கிறது. அத்துடன் வாதத் திறமையும் அபாரமாயிருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் வசிக்குமிடங்கள் ஒரு தனி அரசு ஆக்கப் படவேண்டும் என்று அவர் சொல்கிருரர். தனி அரசு என்றல் பாகிஸ்தானப்போன்ற தனி அரசு அல்ல. உள்நாட்டுக் காரியங்களில் சர்வாதிகாரம் உள்ள தனி அரசும் வெளிநாட்டு அரசியல், போக்குவரவு, சைன்யம் முதலியவற்றுக்கு இலங்கையுடன் இணப்பும் இவர்கள்

கல்கி 43
கோருகிருரர்கள். இதைச் சமஷ்டி அரசியல் என்றும் பூரீ செல்வநாயகம் கோஷ்டியார் சொல்கிருரர்கள்.
தமிழரசுக் கோரிக்கைக்கு எவ்வளவு கியாயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் பொருட்டு, இலங் கையில் தமிழர்கள் மிகப் பெரும்பாலராய் வசிக்கும் இடங்களே யெல்லாம் குறிப்பிட்டு பூரீ செல்வநாயகம் ஒரு படம் தயாரித்திருக்கிறர். அந்தப் படத்தின்படி கடற்கரை யோரமாகக் கோடுபோட்டுக் குறிப்பிட்ட இடங்கள் எல்லாம் தமிழர் வாழும் பிரதேசங்கள். இலங்கையின் நடுமத்தியில் குறிப்பிட்ட பிரதேசம் புதிதாக வந்த தமிழ்த் தொழிலாளிகள் வசிக்கும் தோட்டப் பிரதேசங்கள். பூரீ செல்வநாயகம் திட்டத் தின்படி இலங்கை விஸ்தீரணத்தில் மூன்றில் ஒரு பகுதி தமிழரசாக மாறவேண்டும். இந்தக் கட்சிக்கு இலங்கையில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்ப தைக் கவனிக்க எனக்கு அவகாசம் இல்லை. பூரீ செல்வ நாயகத்தின் அந்தரங்க சுத்தியான ஆர்வத்தைக் காண மட்டுமே முடிந்தது.
* சுதந்திரன் " ஆசிரியர் பூரீ சிவநாயகம் நல்ல மறுமலர்ச்சி எழுத்தாளர். அத்துடன் சிறந்த பேச்சாளர். தமிழ்ச் சங்க விழாவில் இவர் நன்கு ஒத்துழைத்து ஓர் அரிய சொற்பொழிவும் ஆற்றினர்.
ஒரு பத்திரிகையைப் பற்றிச் சொன்ன பிறகு கொழும்பில் Ib lisg/ வரும் இன்னும் இரு தினப் பத்திரிகைகளைப் பற்றியும் சொல்லிவிட வேண்டியது தான,
இலங்கையில் இன்று மிகப் பிரபலமாக விளங்கும் தினத் தமிழ்ப் பத்திரிகை 1 வீரகேசரி " முப்பதினுயிரம் பிரதிகளுக்குமேல் இந்தப் பத்திரிகை

Page 25
44 இலங்கையில் ஒரு வாரம்
விநியோகமாகி வருகிறது. பலவிதக் கஷ்டங்களுக்கு உள்ளாகிவரும் இந்தியர்களின் கட்சியை எடுத்துச் சொல்லி * வீரகேசரி ' தீவிரமாகப் போராடி வருகிறது. யாழ்ப்பாணத் தமிழர்களின் நலன்களையும் பாதுகாக்க முயன்றுவருகிறது. ஆகவே, இலங்கையி லுள்ள எல்லாத் தமிழர்களின் அபிமானத்தையும் பெற்றிருக்கிறது. இவ்வளவுடன், எந்தக் கட்சியையும் நேர்மையுடன் எடுத்துச் சொல்லிப் போராடுவதினுல் இலங்கை சர்க்காரும்-சிங்கள மந்திரிகளும்கூட வீரகேசரி"யை மதித்து நடந்து கொள்ளுகின்றனர். * வீரகேசரி ' ஆசிரியர் பூரீ கே. பி. ஹரன் பரம சாத்வீகரான மனிதர். உயர்ந்த இலட்சியங்கள் படைத்தவர். சிறந்த ஆஸ்திகர் ; பக்திமான். பத்திரிகைத் தொழிலுக்கு அடுத்தபடியாக ஆஸ்திக முயற்சிகளில் அவருக்குச் சிரத்தை. கொழும்பு நகரில் பூரீ சுந்தரம் பிள்ளை, பூரீ கதிர்வேலு செட்டியார் போன்றவர்கள் செய்யும் கோயில் திருப்பணிகள்கூட்டுப் பிரார்த்தனைகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு ஊக்கத்துடன் உதவி செய்து வருகிருர்,
* வீரகேசரி 'யின் செய்திப் பகுதி ஆசிரியர் பூரீ கே. வி. எஸ். வாஸ் அஸ்காய குரர். அருபது டன் ருஷிய டாங்கி ஒன்றிடம் உள்ள வேகமும் ஆற்றலும் வாய்ந்தவர். இலங்கையில் அவருக்குத் தெரியாத பிரமுகர் அநேகமாக யாரும் இருக்க முடியாது. ஆனல், பெரும்பாலோருடைய முகம் அவருக்குத் தெரியாது. குரல் மட்டும் தெரியும். பூரீ கே. வி. எஸ். வாஸ் டெலிபோனில் கூப்பிடுகிருர் என்ருல், எப்பேர்ப்பட்ட பிரமுகரும் மற்றக் காரியங்களே கிறுத்தி வைத்துவிட்டு டெலிபோனிடம் செல்
வார்கள்.

கல்கி 45
தமிழ்ச் சங்க விழா உண்மையில் 'வீரகேசரி’யின் விழா என்று சொல்லும்படியாக, விழாவின் நடவடிக்கைகளே அந்தப் பத்திரிகையில் பிரசுரித் திருந்தார்கள். பூரீ கே. வி. எஸ். வாஸ் ஒவ்வொரு கூட்டத்திலும் ஆஜராயிருந்தார். அவருக்குத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தெரியாது. ஆனல், அவ்வளவு பிரசங்கங்களையும் எப்படித்தான் வார்த் தைக்கு வார்த்தை சரியாயிருக்கும்படி பத்திரிகையில் பிரசுரித்தார் என்பது மிக்க வியப்பளித்தது.
பூரீ கே. வி. எஸ். வாஸ், "வீரகேசரி"யின் செய்தி ஆசிரியர் என்பதைத் தவிர, இந்தியாவிலும் மலேயா விலும் உள்ள பல பத்திரிகைகளுக்கு இலங்கை நிருபராயிருந்து வருகிருரர். ' வீரகேசரி ? வேலை களுக்குக் குந்தகம் நேராமல் மற்ற வேலைகளைப் Lutri iš G(gi.
ஒரு பொதுக் கூட்டத்தில் மாலை ஒன்பது மணி வரையில் ஆஜராயிருந்துவிட்டு, வீடு சென்று * வீரகேசரி’க்கு விவரமாக எழுதிக் கொடுத்துவிட்டு, பிறகு பம்பாய்-மலாய்-சென்னைப் பத்திரிகைகளுக்கு எழுதி ஆகாசத் தபாலில் சேர்ப்பித்துவிட்டு, இரவு மூன்று மணிக்கு பூரீ கே. வி. எஸ். வாஸ் தூங்கப் போவார் என்று அறிந்தேன். அவர் வாழ்க !
பூரீ கே. வி. எஸ். வாஸ் இலங்கையின் பிரஜை
யாகத் தம்மைப் பதிவு செய்து கொண்டிருக்கிருரர். இது இலங்கைக்கு லாபம் ; இந்தியாவுக்கு கஷ்டம், நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் !
கொழும்பில் நடந்துவரும் மற்ருெரு தினப் பத்திரிகை 'தினகரன்." பொதுவாக இது இலங்கை சர்க்காரை ஆதரிக்கும் பத்திரிகை. தமிழ்ச் சங்க

Page 26
46 இலங்கையில் ஒரு வாரம்
விழா சம்பந்தமாகத் ' தினகரன் " ஒத்துழைக்க வில்லை யென்றும், செய்திகளையே போடவில்லை யென்றும் சில தமிழன்பர்கள் குறிப்பிட்டார்கள். விழா கடந்த மறு தினம் பார்த்தால், ' தினகரன் ” மற்றப் பத்திரிகைகளைக் காட்டிலும் ஒரு படி அதிகமாகவே தமிழ்ச் சங்க ஆண்டு விழாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல பத்திகள் பிரசுரித் திருந்த ஆ.
இதிலிருந்து ஒன்று நிச்சயமாயிற்று. இலங்கை யிலுள்ள தமிழர்கள் அரசியல் முதலிய துறைகளில் எவ்வளவு மாறுபட்டிருந்தாலும் தமிழ் மொழியைப் போற்றுவதில் அனைவரும் ஒன்று படுவார்கள் என்பதுதான். பூரீ அாரனுக்கும் எனக்கும் இது எவ்வளவு மகிழ்ச்சி அளித்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா ?
4
அறுபது டன் ருஷிய டாங்கிக்கு இணையான ஆற்றல் வாய்ந்த பூரீ கே. வி. எஸ். வாஸ் என்பவரைப் பற்றி முன்னர் குறிப்பிட்டேன் அல்லவா ? அப்படிப்பட்ட பூரீ கே. வி. எஸ். வாஸின் ஆற்றலைக்கூட மீறிவிட்ட ஒரு செய்தியை இப்போது கூற விரும்புகிறேன். திருவாளர் விபீஷண ஆழ்வார் அவர்களுக்குச் சில நாளேக்கு முன்பு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுக்குக் கூறியே தீர வேண்டும. கூருவிட்டால் விபீஷண ஆழ்வாருக்கு மன நிம்மதி ஏறபடTஅது.

கல்கி 47
திருவாளர் விபீஷண ஆழ்வார் தனிப்பெரும் சிரஞ்சீவித் தமிழர் என்பது ஆராய்ச்சியாளர் அனைவரும் ஒப்ப முடிந்த செய்தியாகும். இராவணன் எப்போது தமிழனே, அப்போது அவனுடைய தம்பி விபீஷணனும் தமிழன்தான். இராவணன் தமிழன் என்பது அவனுடைய பத்துத் தலைகளின் மேலும் அடித்துச் சத்தியம் செய்து முடிந்துபோன செய்தி. அவன் முப்புரி நூல் அணிந்து, யாழ் என்னும் இசைக் கருவியை மீட்டிக்கொண்டு, சாம வேதத்தை ஒதிச் சிவபெருமானப் புகழ்ந்து பாடியதிலிருந்து இராவணன் தமிழன் என்பது உள்ளங்கை தென்னங் கனியாக விளங்கி யிருக்கிறது. இராவணனைத் தமிழன் என்ருே, குறைந்த பட்சம் திராவிடன் என்ருே, நாம் ஒப்புக்கொண்டு விடுவதே நலம். இல்லாவிடில், நமது ஆராய்ச்சிக்காரர்கள் கிஷ்கிந்தா புரிவாசிகளுக்குத் தமிழர் பட்டத்தைக் கட்டித் தொலைத்து விடுவார்கள். வாலி இறந்ததும் தாரை புலம்பிய கட்டத்தை எடுத்துக் காட்டி " ஒரு தனித் தமிழ்க் கைம்பெண்ணைத்தவிர வேறு யார் இப்படி அருமையாகப் புலம்பி யிருக்கமுடியும் ' என்று ஒரு பெரிய போடாகப் போட்டு நம்மைத் திணற அடித்து விடுவார்கள் ! கிற்க.
நமது சிரஞ்சீவி விபீஷண ஆழ்வார் நெடுங்காலம் இலங்கையை ஆண்டு வந்த பிறகு கலியுகம் தொடங் கிற்று. உடனே விபீஷணரின் கவலையும் தொடங் கிற்று. சீதையும் இராமருமாகச் சேர்ந்து நம்மை இப்படி மோசம் செய்து கெடுத்துவிட்டார்களே என்று வருந்தினர். இந்த உலகில் என்றென்றைக்கும் இருக்கும்படி சொல்லிவிட்டுப் போனர்களே என்று

Page 27
48 இலங்கையில் ஒரு வாரம்
கிேனேத்து மிகவும் வருத்தப்பட்டார். அதிலும் பூரீராமர் என்ன சொன்னுர் ?
" இந்தா விபீஷணு லங்காபுரி ராஜ்யம் !
இங்தா ! இந்தா ! இங்தா !”
என்று பல்லவி, அநுபல்லவி, சரணங்களாகச் சொல்லிக் கொடுத்து விட்டுப் போய்விட்டார் ! அவருக்கென்ன சொல்வதற்கு ? இந்த இலங்காபுரி ராஜ்யத்தை என்றென்றைக்கும் . யார் கட்டிக் கொண்டு மாரடிப்பது ?. இப்படிக் கவலைப் பட்டுக் கொண்டே விபீஷண ஆழ்வார் கலியுக ஆரம்பத்தில் கொழும்புக்கு அருகில் உள்ள ஒரு குன்றின் குகையில் படுத்து அண்ணன் கும்பகர்ணனுடைய தொழிலை மேற்கொண்டார். தமிழர்களின் தொழிலை மேற்கொண்டார் என்று சொல்வதும் தவருகாது.
ராட்சதர்களுடைய காலக்கணக்கின்படி ஒரு ஜாம நேரம் தூங்கிவிட்டு எழுந்து பார்த்தால், இலங்கையில் எல்லாம் மாறுதலாயிருக்கக் கண்டார். அவர் தூங்கும் சமயத்தில் என்னவெல்லாமோ நடந்து விட்டது. தூங்குகிறவனுடைய தொடையில் கயிறு திரிப்பவர்கள் அல்லவா ஐரோப்பியர்கள் ? முதலில், போர்ச்சுகீயர் வந்தார்கள்; பிறகு டச்சுக் காரர் வந்தார்கள். இந்த இரு சாராரையும் எடுத்து விழுங்கக்கூடிய ஜான்புல் கடைசியாக வந்து சேர்ந்தார். ஜான்புல் பல வருஷ காலம் ஆட்சி செலுத்தி விட்டுத் தன் க்குச் சரியான வார்ஸ0 சிங்களவர்கள்தான்-அதிலும் கனம் சேனநாயகா தான்-என்று தீர்மானித்து, அவருடைய கையில் இலங்கா ராஜ்யத்தைக் கொடுத்து விட்டுப் போனர். எனவே விபீஷண ஆழ்வார் அாங்கி எழுந்ததும் முழி

கல்கி 49
முழி என்று முழிக்கும்படி நேர்ந்தது. இராஜ்யம் கையை விட்டுப் போனதில் விபீஷணருக்கு 62ღ[ნ மாதிரி சந்தோஷந்தான். எனவே ' வாழ்க தூக்கம் ? என் அறு கோஷித்து விட்டு, இலங்கையில் இனி சாதாரண பிரஜையாக வாழ்வது என்று தீர்மானித்தார். இங்கேதான் அவருக்குச் சங்கடங்கள் பல ஏற்பட்டன.
பிரஜா உரிமைப் பதிவு அதிகாரியிடம் சென்று * என்னை இலங்கையின் பிரஜையாகப் பதிவு செய்ய வேண்டும் ? என்று கேட்டுக் கொண்டார். அதிகாரி அவரிடம் ஒரு கத்தை 15முனுக்களேக் கொடுத்துப் பூர்த்தி செய்து தரச்சொன்னர். விபீஷண ஆழ்வார் அந்த கமுனுக்களைப் பார்த்துவிட்டுத் திஅறுதிறு வென்று விழித்தார்.
‘ எழுதப் படிக்கத் தெரியாதா? என்று அதிகாரி கேட்டார்.
é é தெரியும்; ஆனல் நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் எழுத்துக்கள் வேறு விதம7 யிருந்தன. ஆகையால் அதிகாரி அவர்களே கமுனுக் களேப் பூர்த்தி செய்து சொள்ள வேண்டும் /?
அதிகாரி கருணைகூர்ந்து விபீஷணரைக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
* உம்முடைய பெயர் என்ன ?”
விபீஷணன்."
* தகப்பனுர் பெயர் ?
புலஸ்தியர்,'
* பாட்டனர் பெயர் !”
** ւ ԳgլbլDT.**
4.

Page 28
, 50 இலங்கையில் ஒரு வாரம்
* தகப்பஞரும் பாட்டனரும் இலங்கையில் பிறந்து இலங்கையில் வசித்தவர்கள் தானு ?
* தகப்பனர் புலஸ்தியர் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய பெயரால் பொலன்னருவா என்ற நகரமும் இருக்கிறது."
* பாட்டனர் விஷயம் என்ன ” * பாட்டனர் திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் பிறந்து பிரம்மலோகத்தில் வசித் திருப்பவர் ./*
* அப்போதே கினைத்தேன்!” என்ருர் அதிகாரி. விபீஷணரை ஏற இறங்கப் பார்த்து, ' அப்படி யானுல் உம் பாட்டனுர் இலங்கை வாசி இல்லை !' GT 6ნrღუf.
* இல்லை. ஆனல் அண்ணன் இராவணனுக்குப் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லச் சில சமயம் இங்கே வந்ததுண்டு.”
* சரி ? நீர் இலங்கையின் வம்சாவளிப் பிரஜை உரிமை பெற முடியாது.'
* அது இல்லா விட்டால், வேறு எந்தப் பிரஜா உரிமை கொடுத்தாலும் சரிதான் ’
* நீர் இலங்கையில் பிறந்ததற்கும் இருந்த தற்கும் சாட்சி உண்டா ?
விபீஷணர் சிறிது யோசித்துவிட்டு ' பிறந்த தற்குச் சாட்சி கிடையாது. இருந்ததற்கு அனுமார் என்று ஒருவர் சாட்சி சொல்லக்கூடும். ஆனல், அவரைத் தேடிப் பிடிப்பது கஷ்டம் !" என்ருர்,
* அந்த மாதிரி வாய்மூல சாட்சி உபயோகமில்லை எழுத்து மூலமான ஆதாரம் வேண்டும்.”

கல்கி 5
இதைக் கேட்ட விபீஷணர் சுறுசுறுப்புடன் சென்று, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், துளசிதாஸ் ராமாயணம், ராம நாடகக் கீர்த்தனை ஆகிய புத்தகங்களேக் கஷ்டப்பட்டுத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து கொடுத்தார்.
அதிகாரி அவ்வளவு புத்தகங்களேயும் புரட்டிப் பார்த்து விட்டு, ' இதெல்லாம் பழைய கதைகள். உபயோகமில்லை. திரேதா யுகத்துச் செய்தி இங்கே யாருக்கு வேணும் ! 1938-வருஷத்திலிருந்து 1945-ம் வருஷம் வரையில் நீர் எங்கே இருந்தீர்?’ என்று கேட்டார்.
* இலங்கையில் தான் இருந்தேன்.'
இ تقيقي ருக3த
* இதற்கு ஏதாவது தஸ்தாவேஜ" மூலமான சாட்சியம் இருக்கிறதா ?” -
எந்த மாதிரி ?? * இந்தியாவிலிருந்து ஏதாவது கடிதம், ரிஜிஸ்தர் மணியார்டர் மேற்படி ஆறு வருஷங்களில் வந்த துண்டா ? வந்த கடிதங்களின் உறைகளேப் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறீரா?”
4 இல்லை." * அப்படியானுல், உமக்குப் பிரிஜா உரிமையும் இல்லை.”
இதைக் கேட்ட விபீஷணர் மூர்ச்சை யடைந்து விழுந்து எழுந்த பிறகு, “ இனி இலங்கையில் இருப்பதா? வைகுண்டத்துக்குப் போய் முறை யிடுவதா ?” என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிருராம். இதைக் கேள்விப்பட்டதும் விபீஷணரைப் பற்றிய கவலேயில் 5ான் ஆழ்ந்தேன். முருகனைப்

Page 29
52 இலங்கையில் ஒரு வாரம்
பற்றிய கவலே தோன்றிய பிறகுதான் அவரை மறக்க முடிந்தது.
ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? ஒரு மனிதருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதையறிந்த சிநேகிதர் ஒருவர் வந்து தமது அனு தாபத்தைத் தெரிவித்தார். ' உமக்குக் கூச்சல் என்ருல் பிடிக்காதே ! இரண்டு குழந்தைகளும் சேர்ந்து கூச்சல் போட்டால் பெருந் தொல்லையா யிருக்குமே ' என்று கேட்டார். ' அதுதான் இல்லை ! ஒற்றைக் குழந்தையாக இருந்தால்தான் கூச்சல் தொந்தரவு. இரண்டு குழந்தைகள் சேர்ந்து கூச்சலிடும்போது ஒன்றின் கூச்சல் இன்னென்றின் கூச்சலில் மறைந்துவிடும் அல்லவா ?' என்று சொன்னுர் இரட்டைக் குழந்தையின் புத்திசாலித் தகப்பனர்.
இதுபோலவே முருகனேப பற்றி எனக்கு ஏற்பட்ட கவலையினுல் விபீஷணரின் கவலையை நான் மறக்கலாயிற்று.
来 来
ரத்மனலை விமான நிலையத்தில் நாங்கள் இறங் கியதும் அங்கே கூடியிருந்த நண்பர்களின் முகங் களுக்கு மத்தியில் ஒரு முகம் பளிச்சென்று மலர்ச்சி யுடன் காட்சி தந்தது. யாரோ தெரிந்தவராய்த்தான் இருக்குமென்று அவரைப் பார்த்துப் புன்னகை செய்து வைத்தேன். உடனே அவரும் புன்னகை செய்து, " நீங்கள் கோவிலுக்கு வரவேண்டும், தெரியுமா? கோவிலுக்குக் கட்டாயம் வரவேண்டும் ! இல்லாவிட்டால் உங்களைத் திரும்பிப் போக விட
மாட்டோம் !" என்ருர்.

கல்கி 53
டாக்டர் நல்லநாதனின் இல்லம் சேர்ந்ததும் மறுபடியும் அதே நண்பரைப் பார்த்தேன். "நீங்கள் கோவிலுக்கு வரவேண்டும். எங்கள் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொள்ள வேண்டும் 1 இல்லா விட்டால் விடமாட்டேன்!” என்ருர். இந்த நண்பரின் பெயர் கே. வி. எஸ். சுந்தரம் என்றும், கொழும்பில் பிரபல வர்த்தகர் என்றும் அறிந்தேன்.
கோவிலுக்கு வரவேண்டும் ; கூட்டுப் பிரார்த் தனையில் கலந்துகொள்ள வேண்டும். இல்லா விட்டால் விடமாட்டேன் !" என்று அவர் மேலும் பத்துப் பன்னிரண்டு தடவை சொன்ன பிறகு, எனக்குக் கோபம் வந்து விட்டது.
* எந்தக் கோவிலுக்கு ?" என்று கேட்டேன். * முருகன் \கோவிலுக்கு ' என்ருர் பூரீ கே. வி. எஸ். சுந்தரம்.
* எந்த முருகன் ?” என்றேன். சிறிது திகைத்துவிட்டு, “ ஒரே முருகன்தான். அவர்தான் !" என்ருர்,
* ஒரே முருகன்தான் என்ருல், அவரை நான் தமிழ் நாட்டில் பார்த்தேனே ? இங்கே எப்போது வந்தார் ?”
* முன்னமே வந்துவிட்டார். வெகு காலமாக இங்கேதான் இருக்கிருர்."
இது என்ன ஐயா, வேடிக்கை ? வெகு காலமாக இங்கே இருக்கிருர் என்ருல், இலங்கையின் பிரஜையாகப் பதிவு செய்து கொண்டிருக்கிருரா ?"
பூரீ சுந்தரம் விழித்துப்போனர். அவருடைய விழிப்புக்கு எனக்குக் காரணம் தெரியாமலில்லை

Page 30
54 இலங்கையில் ஒரு வாரம்
முருகப் பெருமான் இப்போதைய இலங்கைப் பிரஜா உரிமை விதிகளின் கீழ் பதிவு செய்துகொள்ள முடியாது. ஏனெனில், அவர் வள்ளி, தேவயானை ஆகிய இரண்டு பத்தினிகளேயும் இரண்டு கண்களாக வைத்துக் கொண்டிருப்பவர் அல்லவா ?
ஆகவே, முருகன் இலங்கையின் பிரஜை ஆக முடியாது. இரண்டு மனைவிகள் உள்ளவர் யாருமே இலங்கைப் பிரஜையாக முடியாது. ஒருத்தியை மனைவி என்றும், இன்னெருத்தியை வேறு ஏதாவது பெயர் சொல்லியும் அழைத்தால் புகழ்பெற்ற இலங் கையின் பிரஜையாகலாம்! இருவரையும் மனைவிமார் என்று அழைத்தால் அது சாத்தியமில்லை.
இருதார மணத்தைப் பற்றி என்னுடைய அபிப் பிராயம் எதிரிடையானதுதான். ஒரு தார மணங் கூட அவ்வளவு புத்திசாலித்தனமானது என்று நான் சொல்ல முடியாது. ஒரு தடவை, ஏதோ போகிறது என்று மன்னித்து விடலாம். இரண்டாங் தடவையும் ஒரு தவறைச் செய்தால் அதை யார் தான் சரி என்று ஒத்துக் கொள்ள முடியும் ?
ஆகவே, இருதார மணத்தை நான் அவ்வள வாக விரும்புகிறவன் அல்ல. ஆனலும், இந்தக் காரணத்தைக் கொண்டு அநேக ஆயிரம் இந்தியர் களுக்குப் பிரஜா உரிமை இல்லையென்று அடித்து விடுவதாயிருந்தால், அதை எப்படி கியாயம் என்று ஒத்துக்கொள்ள முடியும் ?
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இரு தாரப் பிரச்னையின் இரகசியம் இதுதான். தேயிலைத் தோட் டங்களில் வேலை செய்யப்போன இந்தியத் தொழி லாளிகளில் பலர் ஒரு மனைவிக்கு மேலே கலியாணம்

கல்கி 55
செய்து கொண்டிருக்கிருர்களாம். முன்னே யெல்லாம் தோட்ட முதலாளிகளுக்கு இது செளகரியமா யிருந்தது. தேயிலைத் தோட்டங்களில் வேலை செய் வதற்குப் பெண்கள் அதிகம் தேவை. அவர்களுக்குச் சம்பளம் குறைவாகக் கொடுத்தால் போதும். சுதந் திரமாக ஸ்திரிகளைக் கொண்டு வந்து தோட்டங்களில் விடுவதற்கில்லை. அதனல் பல சிக்கல்கள் ஏற்படும். ஆகையால் தோட்டத் தொழிலாளிகள் இரண்டு அல்லது மூன்று மனைவியர்களை மணந்து கொள் வதை முதலாளிகள் விரும்பினர்கள். அதிகக் கூலி வருமானம் வரும் என்ற காரணத்தினுல் பல தொழி லாளிகள் அவ்விதம் இருதார மணம் செய்து கொண்டார்கள். −
இப்போது சிங்கள சர்க்கார் கொண்டு வந்திருக் கும் சட்டத்தின்படி மேற்படி வழக்கம் பிரஜா உரி மைக்குப் பெரும் இடையூருக ஏற்பட்டிருக்கிறது. பிரஜா உரிமையைக் கைவிடுவதா? அல்லது கட்டிய மனைவியைக் கைவிடுவதா ?” என்ற தர்ம சங்கடமான நிலைமை பல ஏழைத் தொழிலாளிகளுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. பாவம் ! இரண்டு பெண்டாட்டிக்காரர்களுக்கு உள்ள கஷ்டங்கள் போதாதென்று இந்த நெருக்கடி வேறு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. −
இந்த நெருக்கடியான பிரச்னை நமது முருகப் பெருமானுக்கும் ஏற்படத்தானே செய்யும் என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. எனவே, நண்பர் சுந்தரம் அவர்களிடம் 'முருகனை இந்தியாவுக்கே திரும்ப அனுப்பி விடுவதுதானே ?" என்று ஆனமட்டும் சொல்லிப் பார்த்தேன். நண்பர் சுந்தரம் * அது முடியவே முடியாது ' என்று சொல்லிவிட்டார்.

Page 31
56 இலங்கையில் ஒரு வாரம்
பிறகு அவருடைய வற்புறுத்தலுக் கிணங்க ஜிந்துப்பட்டி பூரீ சுப்பிரமண்ய ஸ்வாமி கோவிலுக்குப் போய்ப் பார்த்தபோது, நண்பர் சுந்தரம் அனுமதி கொடுத்தாலும் முருகன் அங்கிருந்து இலேசில் கிளம்பிவிட மாட்டார் என்று நான் முடிவு செய்ய
வேண்டியதாயிற்று.
கோவில் என்றல், இது அல்லவா கோவில் ? பக்தி என்ருல் இது அல்லவா பக்தி ? பிரார்த்தனை என்ருல் இது அல்லவா பிரார்த்தனை ?
கோவில் பிராகாரத்தில் அமைந்திருந்த விஸ்தார மான மண்டபத்தில் அலங்கரித்த அழகிய ஊஞ்சல் மஞ்சத்தில் வள்ளி, தேவயானை சமேதராக முருகன் வீற்றிருந்தார். ஊஞ்சல் இலேசாக ஆடிக்கொண்டி ருந்தது. முருகன் பக்தர்களுக்கு அருள் புரிய நெருங்கி நெருங்கி வருவது போல் தோன்றியது.
பூரீ சுந்தரம் அவர்களும் அவருடைய சகோதரரும்
பட்டை பட்டையாக வெள்ளேத் திருநீறு அணிந்து, பலப் பல ருத்திராட்ச வடங்களைத் தரித்து, சிவ பக்தியே வடிவங் கொண்டவர்களாக விளங்கினர்கள். இவர்களைப் போல இன்னும் நூற்றுக் கண்க்கான அடியார்கள் அச்சபையில் சேர்ந்திருந்தார்கள். திருச் செந்தூரிலிருந்து வந்திருந்த ஒரு பக்தர் இனிய குரலில் திருப்புகழ் பாடினர். அனைவரும் ஒரு முகமாக மனங்குவிந்திருந்து பிரார்த்தனை நடத்தினர்கள். பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்படிப்பட்ட இடத்திலிருந்து புறப்படுவதற்கு முருகன் இலேசில் இணங்கிவிடுவாரா?

57
கொழும்பில் நாங்கள் தங்கிய சில தினங்களில் இன்னெரு ஆலயத்துக்குச் செல்லும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. கொழும்புக்குப் பக்கத்தில் கப்பித்தாவத்தை என்னும் விசித்திரப் பெயர் உள்ள ஊரில் பூரீ கைலாசநாதர் என்னும் பழமை யான ஆலயம் இருக்கிறது. இது வெகு காலமாகச் சிதிலமாகக் கிடந்தது. பூரீ வி. எஸ். சாமிநாத செட்டியார் என்னும் வணிக வைசியர் அந்தப் பழைய ஆலயத்தை புதுப்பிக்கும் திருப்பணியில் ஈடுபட்டார். பதின்மூன்று ஆண்டுகள் முயன்று, தம் குலத்துப் பிர்முக்ர்கள் பலருடைய உதவியுடன் திருப்பணியை முடித்துக் கும்பாபிஷேகமும் நடத்தினர். கும்பாபி ஷேகம் நடந்த மூன்று மாதத்திற்கெல்லாம் இறைவன் அந்தப் பெரியாரைக் கைலாசத்துக்கே அழைத்துக் கொண்டார்.
இந்தப் புனிதமான ஆலயத்தை எங்களுக்குத் தரிசனம் செய்துவைத்தவர் பூரீ பி. ஸி. கதிர்வேல் செட்டியார் எர்ன்னும் மற்ருெரு பிரபல இந்திய வர்த்தகர். இவரும் சிறந்த பக்திமான். நம் திருப்புகழ் மணி கிருஷ்ணசாமி ஐயரின் குழாத்தைச் சேர்ந்தவர். பூரீ கைலாசநாதர் கோவிலில் இவர் சிரத்தை கொண்டிருப்பதோடுகூட, இன்னும் பல பொதுநலத் தொண்டுகளிலும் ஈடுபட்டிருக்கிருர், ' இந்தியர்கள் இலங்கையில் பணம் சம்பாதித்து இந்தியாவுக்குக் கொண்டு போவதில் முனைந்திருக்கிருர்களே தவிர இலங்கையில் கிரந்தரமான தர்மம் எதுவும் செய்வ தில்லை ” என்ற புகார் இவரால் ஓரளவு நீங்கி வருகிறது என்று நண்பர்கள் செர்ன்னர்கள்.

Page 32
58 இலங்கையில் ஒரு வாரம்
தமிழ்ச் சங்க ஆண்டு விழாவின்போது பெற்ற அனுபவங்களிலிருந்தும் இந்த இரண்டு ஆலயங்களில் கண்ட காட்சிகளிலிருந்தும் பூரீ தூரனுக்கும் எனக்கும் ஒரு கிச்சயம் ஏற்பட்டது. தமிழ் நாட்டில் இப்போது சிலர் ' தமிழை ஒழித்து விடுவோம் !" என்றும், இன்னும் சிலர் கடவுளைத் தொலைத்து விடுவோம் !" என்றும் பயமுறுத்தி வருகிருர்கள் அல்லவா ? அப்படியே இவர்களுடைய கட்சி பிரமாதமான வலிமை பெற்று வெற்றி யடைந்தாலும், நம்முடைய தமிழும் தமிழரின் கடவுளும் கட்டாயம் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். தமிழையும் தமிழரின் சமயத்தையும் தமிழ் நாட்டிலுள்ளவர்கள் கைவிட்டாலும் கூட இலங்கையிலுள்ள தமிழர்கள் போற்றிக் காப்பாற்றி வருவார்கள். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இத்தகைய உறுதி பெற்றுக்கொண்டு கொழும்பு நண்பர்களிடம் விடையும் பெற்றுக்கொண்டு, பூரீ தூரனும் நானும் யாழ்ப்பாணத்துக்குக் கிளம்பினுேம்.
5
யாழ்ப்பாணத்தில் இடறி விழுந்தால். இது என்ன ? இடறி விழுவதற்கு யாழ்ப்பாணத்துக்குப் போகவேண்டுமா ? உங்களூரிலேயே இடறி விழக் கூடாதா?. விழலாம், ஐயா, விழலாம்! உள்ளூரிலேயே நன்றக இடறி விழலாம். ஆனல், உள்ளூரிலே இடறி விழுந்தால் எங்கேயாவது நடுச்சாலையில் விழுந்து தொலைப்போம். அல்லது ஒரு டிராம் வண்டி அல்லது மோட்டார் வண்டி அல்லது ஒரு ரயில் வண்டி மீது -

கல்கி 59
விழுந்து தொலைப்போம். வண்டிகள் வீணில் சேதம் அடையும் ; போக்கு வரத்துத் தடைப்படும்.
ஆஞல், யாழ்ப்பாணத்தில் இடறி விழுந்தால் ஒரு உபாத்தியாயர் அல்லது ஒரு கல்விமான் மீது தான் விழுவோம். அப்படி விழுவதினுல் அவர் களுக்குச் சேதம் ஏதேனும் ஏற்பட்டால் அதைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். ஆயிரம், பதியிைரம் பேரில் ஒருவர் இருவர் குறைந்துபோனல் என்ன பிரமாத நஷ்டம் ? ஒருவேளை இடறி விழும்போது பக்கத்தில் ஒரு ஆசிரியர் அல்லது கல்விமான் இல்லாமற் போனுலும், நாம் தரையில் விழுந்துவிட முடியாது. யாழ்ப்பாண நகரத்துக்குள் ஒரு சாலையோ ஒரு வீதியோ தரையில் விழுந்து வைக்கலாம் என்ற ஆசை யாருக்கும் வேண்டியதில்லை. ஏனெனில் அப்படி நீங்கள் இடறிக் கீழே விழப் போகிறீர்கள் என்பதற்கு அறிகுறி காணப்பட்டவுடன் ஒரு சுகாதார அதிகாரி ஓட்டமாய் ஓடி வந்து நீங்கள் தரையில் விழாமல் தாங்கி எடுத்துக் கொண்டுபோய் உங்களைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு மறு காரியம் பார்ப்பார் !
குப்பைத் தொட்டியில் போடும் உரிமை பத்திரி காசிரியர்களுக்குத்தான் உண்டு என்று அதுகாறும் எண்ணி யிருந்தேன். யாழ்ப்பாணத்துச் சுகாதார அதிகாரிகளுக்கும் அந்த உரிமை உண்டு என்று தெரிந்தது. பத்திரிகாசிரியர்கள் கதை கட்டுரைகளே மட்டும்தான் குப்பைத் தொட்டியில் போடுவார்கள். யாழ்ப்பாணத்துச் சுகாதார அதிகாரிகளோ அந்தக் கதை கட்டுரைகளே எழுதியவர்களேக்கூடக் குப்பைத் தொட்டியில் தூக்கிப்போட்டு விடுவார்கள் !

Page 33
60 இலங்கையில் ஒரு வாரம்
இது எப்படி எனக்குத் தெரிந்தது என்ருல், யாழ்ப்பாணத்தில் நானும் பூரீ தூரனும் தங்கியிருந்த இரண்டு தினங்களில், ஒரு நாள் மாலை போலீஸ் அதிகாரியைப் போல் உடுப்புத் தரித்த ஒருவர் வந்தார். 'ஐயா ! இந்த ஊர் ஆலயத்தில் திருவிழா நடைபெறுகிறது, நீங்கள் ஐந்து கிமிடம் வந்து சமுகம் தரவேண்டும் !" என்ருர், என் காதுகளை நான் நம்ப வில்லை. எப்போதுமே என் காதுகளின் விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் அவநம்பிக்கைதான். அவரை ஏற இறங்கப் பார்த்து விட்டு, ' எங்கே வரவேண்டும் என்கிறீர்கள் ?" என்றேன். " ஆலயத்துக்கு வர வேண்டும். விழா நடக்கிறது ' என்ருர்,
ஒருவேளை யாழ்ப்பாணத்தில் ஆலயம் என்ப தற்குப் போலீஸ் ஸ்டேஷன் அல்லது சிறைச்சாலை என்ற பொருள் இருக்குமோ என்று யோசித்தேன். எல்லாவற்றுக்கும் போய்ப் பார்த்துவிடலாம் என்று துணிந்து புறப்பட்டேன். கோயிலைச் சுற்றியுள்ள ராஜ வீதிகளில் ஒன்றுக்கு வந்து சேர்ந்தோம். வண்டியிலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினுேம், என் சட்டைப் பையிலிருந்து கைக்குட்டையை எடுத் தேன் ; அப்போது ஒரு காகிதம் கீழே விழுந்தது. உடனே அந்தப் போலீஸ் உடுப்பு தரித்த சுகாதார உத்தியோகஸ்தர் அந்தக் காகிதத்தைப் பொறுக்கி எடுத்து வீதி ஓரத்தில் வைத்திருந்த குப்பைத் தொட்டியில் கொண்டுபோய்ப் போட்டார். பிறகு நான் வேண்டுமென்றே கைக்குட்டையைக் கீழே போட்டேன். அதையும் பொறுக்கிக்கொண்டுபோய் தொட்டியில் போட்டார்.

கல்கி 61
* பெரியசாமி ! ஜாக்கிரதை தப்பித் தவறித் தரையில் விழுந்துவிடவேண்டாம். விழுந்தால் நம்மையும் கொண்டுபோய்த் தொட்டியில் போட்டு விடப் போகிருர் 1’ என்று எச்சரித்தேன்.
* பார்த்தீர்களா ? நம் ஊரில் கோயில் உற்சவம் என்ருல் சுற்றுப் பக்கங்களில் எவ்வளவு குப்பையும் கூளமுமாயிருக்கும் ? இந்த வீதிகளில் ஒரு குப்பை கூளங்கூட இல்லையே?’ என்ருர் தூரன்.
* இந்த ஊரில் குப்பை கூளத்துக்கு மெத்த கிராக்கிபோல் தோன்றுகிறது. கறுப்பு மார்க்கெட் காரர்கள் அமுக்கி விட்டார்களோ, என்னமோ ?” என்றேன்.
* இல்லை ஐயா ! திருவிழாவை முன்னிட்டு வீதிகளேச் சுத்தம் செய்து வைத்திருக்கிருேம் !" என்ருர் அதிகாரி.
* ஓகோ ! அப்படியா ?” * வீதிகள் தூய்மையாக இருப்பது உங்களுக்குப் பிடித்திருக்கிறதல்லவா ?”
* பிடித்திருக்கிறது ! ஆணுலும் ஒரு குறை. வீதி களே யெல்லாம் சுத்தம் செய்து வைத்திருந்தால் மட்டும் போதுமா ? ஏன் நெடுகிலும் ரத்தினக் கம்பளம் விரித்திருக்கக் கூடாது?’ என்றேன்.
*ரத்தினக் கம்பளம் விரித்தால் தரை அழுக்காகி விடும், ஐயா !” என்ருர் அந்தச் சுகாதார அதிகாரி. நாலு வீதிகளையும் சுற்றிப் பார்த்த பிறகு ஆலயத்துக்குள் செல்ல நண்பர் பெரியசாமித் தூரன் விரும்பினர். நான் கண்டிப்பாக மறுத்து
விட்டேன்.

Page 34
62 இலங்கையில் ஒரு வாரம்
" கித்தியமாய் கிட்களமாய் கிராமயமாய் நிறைவாய்
(நீங்காச் சுத்தமுமாய்...'
என்று தாயுமானவர் பாடியிருக்கிருரர். கடவுள் சுத்த வடிவமாக இருக்கிருர் எனில், அந்த நாலு வீதி களிலும் அவர் கட்டாயம் இருக்கத்தான் வேண்டும். கடவுளேத் தரிசிக்க ஆலயத்துக்குள் போகவேண்டிய அவசியம் என்ன ?
மேலும், ஒரு கட்டுரை எழுதும்போது எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போவது உசிதம் அல்ல. ஆகையால் இடறி விழுகிற கட்டத்துக்கே திரும்பி வந்து சேரவேண்டியதுதான்.
1111ழ்ப்பாணத்தில் எங்கே பார்த்தாலும் இடறி விழும் இடமெல்லாம், ஆசிரியர்கள் அல்லது கல்விமான்களாகவே இருப்பார்கள். நகர மண்ட பத்தில் நடந்த கூட்டத்தில் ஒரு பிரமுகரைக் குறிப் பிட்டு, ' இவர் இன்னுர். பெரிய கல்விமான் (ஸ்காலர்)” என்று ஆசிரியர் பேரின்ப நாயம் அறி முகம் செய்வித்தார்.
* கல்விமான்கள் இருக்கட்டும், ஐயா! கல்விமான் களேத்தான் இந்த ஊரில் எங்கே திரும்பினுலும் பார்க்கிருேமே ! கல்விமான் இல்லாத ஒருவரைக் காட்டுங்கள் !’ என்று கேட்டேன்.
அந்த நண்பரால் காட்ட முடியவில்லை. என் ஆகாசக் கோட்டை தகர்ந்தது. கல்விமான் அல்லாத ஒருவரைக் கண்டுபிடித்தால், அவரைக் கொண்டு 6 கல்விமான் அல்லாதார் சங்கம் " ஒன்று ஏற்படுத்தி, அவர்களுக்குத் தனிப்பட்ட உரிமைகளும்

கல்கி 63
ச்ட்டசபை ஸ்தானங்களும் உத்தியோகங்களும் வேண்டுமென ஓர் இயக்கத்தையே ஆரம்பித்து வைக்கலாம் என்று எண்ணியிருந்தேன். அது சாத்தி மாகவில்லை!
பDறுபடியும் பள்ளிக்கூட ஆசிரியர்களிடம் வரு வோம். யாழ்ப்பாணத்தில் பள்ளிக்கூட ஆசிரியர் களும் பள்ளிக்கூடங்களும் ஏராளம்.
* யாழ்ப்பாணத்தின் மாபெருங் கைத்தொழில் என்ன ?” என்று கொழும்பில் உள்ளவர்கள் ஒரு கேள்வி போட்டுக் கொள்வார்களாம். ' பள்ளிக்கூடங் தான் !” என்று பதிலும் சொல்வார்களாம். இப்படி அவர்கள் சொல்வதற்குத் தகுந்தாற்போல் ஆசிரியர் பூரீ ஹாண்டி பேரின்பநாயகம் கையில் ஒரு தடி வைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
பத்து வருஷத்துக்கு முன்னுல் பூரீ பேரின்ப நாயகத்தை நான் பார்த்தபோது அவர் கையில் பிரம்பு இல்லை ; இப்போது இருந்தது. அப்போது அவர் பள்ளிக்கூட ஆசிரியர் அல்ல. ஆனல் இப்போது ஹிந்து காலேஜ் தலைமை ஆசிரியர். " ஆகவே இந்தக் கைத்தடியினல் உங்கள் பள்ளிக்கூடத்தில் தொழில் 15டத்துவீர்களோ ? பிள்ளைகளை அடித்து வெளுத்து விடுவீர்களோ ?” என்றேன்.
* அதெல்லாம் இங்கே நாங்கள் பிள்ளைகளை அடிக்கிற வழக்கம் இல்லே ' என்ருர் பூரீ பேரின்ப நாயகம்.
* அப்படியானுல் பெற்றேர்களேத்தான் அடிப் பீர்களோ ?” என்று பீதியுடன் கேட்டேன்.

Page 35
64 இலங்கையில் ஒரு வாரம்
* பெற்ருேர்களையும் காங்கள் அடிக்க மாட்
டோம்.
* பின்னே, உங்கள் கையில் தடி இருப்பது எதற்காக ?”
* காலில் கொஞ்சம் நீர் கட்டிக்கொண்டிருக் கிறது. ஆகையால் சிறிது சாய்ந்து நடக்கவேண்டி யிருக்கிறது. நடப்பதற்கு உதவியாக இந்தத் தடியை வைத்துகொண்டிருக்கிறேன்.'
* நீங்கள் சாய்ந்து நடப்பதும் ஒரு அழகாய்த் தான் இருக்கிறது!’ என்றேன்.
அந்தக் குறிப்பை அறிந்து பரீஹாண்டி பேரின்ப நாயகம் நானும், பூரீ பெரியசாமித் தூரனும் ஊருக்குப் புறப்படுகையில் தலைக்கு ஒரு அழகிய கைத்தடி பரிசாகக் கொடுத்தார்.
6
ஸ்ெகோடிகாமா என்னும் பெயர் கொண்ட கப்பல் தலைவனைப் பற்றி எப்போதோ சரித்திரப் புத்தகத்தில் படித்திருப்பதாக ஞாபகம். அந்தத் தடியன் இப்போது என் முன் எதிர்ப்பட்டால் அவன் கன்னத்தில் நாலு அறை கொடுத்து விட்டு மறு காரியம் பார்ப்பேன். ஆனல், அவன் இறந்து தொலைந்து போய்விட்டான் ! இறந்து போனவர் களின் விஷயத்தில் அஹிம்சையைக் கைக் கொள்ளுவது அவசியமில்லை யென்பது என்னுடைய கொள்கை. உயிரோடிருப்பவர்களிடம் அவசியம் அஹிம்சா தர்மத்தை அனுசரிக்க வேண்டியதுதான்.

ஏனெனில் நாம் அவர்களுடைய கன்னத்தில் நாலு அறை கொடுப்பதற்கு முன்னுல் அவர்களும் கம்மோடு ஒத்துழைப்பது என்று தீர்மானித்து விடக் கூடும். இறந்துபோனவர்களின் விஷயத்தில் அத்தகைய கவலே இல்லை. ஆகையால், வாஸ்கோடிகாமா மட்டும் இப்போது நம் முன்னுல் வந்தால் அவன் கன்னத்தில் நாலு அறை கொடுக்கத் தயங்க வேண்டியதில்லை.
ஐரோப்பாவில் உள்ளவர்கள் கீழ்காட்டுக்கு வருவ தற்கு முதன் முதலில் அந்த வாஸ்கோடிகாமாதான் வழி காட்டினனம். அவன் ஒரு போர்ச்சுயேன். அவனைத் தொடர்ந்து வந்த போர்ச்சுகீயர்கள் இலங்கையில் சில பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டு
Ο Lt Joff ; t]- வகதாாகள அபப f அவ @5@Yf ஆணட காலத்தில் பாழ்ப்பாணத்தார்கள் பட்ட அவதிகள் கொஞ்ச நஞ்சமல்ல. போர்ச்சுக்கல் /B/TL’t - T7
கொடுமைக்கும் குரூரத்துக்கும் பெயர் போனவர்கள் இப்போது கூட இந்தியா தேசத்தில் ஒருச் சாண் அகலமுள்ள கோவாவில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் என்ன பாடு படுத்துகிருர்கள், பாருங்கள் / இருநூறு முந்நாஅ வருஷங்களுக்கு முன்னுல் .ே வேண்டுமா ? பற்பல கொடுமைகள் செய்து ஹிந்து மதத்தாரைக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ; அாண்டி ஞர்கள். போர்ச்சுகிய ஆட்சியின் போது யாழ்ப் பாணத்து மக்கள் இலை போட்டுச் சர்ப்டி_ பயப்படு வார்களாம் ! ஏனெனில் வாசலில் எச்சில் இலே விழுந்தால், இந்த வீட்டார் ஹிந்துக்கள் என்று ஊகித்துக் கொண்டு போர்ச்சுஇய அதிகாரிகள் வீட்டுக்குள் புகுந்து அதிக்கிரமம் செய்வார்களாம். இதன் காரணமாக அந்த நாளில் யாழ்ப்பாணத்தார் இலே போட்டுச் சாப்பிடுவதைக் கைவிட்டு
த் தட்டில் 5

Page 36
66 இலங்கையில் ஒரு வாரம்
சாப்பிடத் தொடங்கினர்கள். ஆனல், ஹிந்து மதப் பற்றை அவர்கள் இழந்துவிடவில்லை. ஹிந்துமத பக்தி காரணமாக அமாவாசையன்று மட்டும் இலையில் சாப்பிட்டு விட்டு எச்சில் இலையைக் கூரை முகப்பில் செருகி விடுவார்களாம் ! நாளடைவில் அது ஒரு குருட்டு மத சம்பிரதாயமாகி இன்றும் யாழ்ப்பாணத்து வைதீக குடும்பங்களில் அமாவாசை யன்று எச்சில் இலையைக் கூரை முகப்பில் செருகும் வழக்கம் நடைபெற்று வருகிறது !
கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது வீட்டு வாசலில் எச்சில் இலையைப் போடும் வழக்கத்தைத் தடை செய்த போர்ச்சுகீயர்களும் ஒரு நல்ல காரியத்தைத்தான் செய்தார்களோ என்று தோன்று கிறது. எதுவும் ஒரு நன்மைக்கே என்று தெரியாமலா நம் பெரியோர்கள் சொல்லியிருக்கிருரர்கள்? ஆகையால் வாஸ்கோடிகாமா போனல் போகிருன் என்று அவனே மன்னித்து, கன்னத்தில் அறையாமல் விட்டு விடுவோமாக !
谦 游 豪
முன் அத்தியாயத்தின் இறுதியில் பூரீ ஹாண்டி பேரின்பநாயகம் அவர்களின் கைத் தடியைப் பற்றிச் சொல்லி யிருந்தேன். இங்கு அந்த மனிதரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லத்தான் வேண்டும். அவரை மனிதர் ' என்ரு சொன்னேன் ? அது அவ்வளவு பொருத்தமில்லேதான் ! பூரீ ‘ஹாண்டி'யை ஒரு மனிதர் என்று சொல்லுவதைக் காட்டிலும் அவரை ஒரு ஸ்தாபனம் ' என் அறு சொல்லுவது பொருத்தமாயிருக்கும்.

கல்கி 67
அவருடைய நீளமான பெயரில் ‘ஹாண்டி' Handy) என்பது பழைய போச்சுகீய ஆட்சியின் ஞாப்கச் சின்னமாகும். போர்ச்சுகீய ஆட்சியில் கிறிஸ்தவர் களாக மாறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் பூரீ பேரின்ப நாயகம். ஆனல், தற்போது யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவர்-ஹிந்துக்கள் என்ற வேற்றுமை அதிகம் கிடையாது. ஒரே குடும்பத்தில் அண்ணன் கிறிஸ்துவ ராயும் தம்பி ஹிந்துவாயும் இருப்பார்கள். ஆனல், எல்லாரும் தமிழர்கள் ; தமிழ்ப் பண்பாடு உடையவர்கள்.
பூரீ ஹாண்டி பேரின்பநாயகமோ கிறிஸ்துவரும் , அல்ல; ஹிந்துவும் அல்ல. அவருடைய மதம் காந்தீய மதம்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னுல் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது பூரீ பேரின்ப நாயகம், அகில இலங்கை யுவர் காங்கிரஸின் காரிய தரிசியாயிருந்தார். அப்போது அவர் யுவராகவும் இருந்தார். இன்றைக்குத் தலே கரைத்த முதியவரா யிருக்கிருரர். இந்த மாறுதலுக்குக் காரணமான இரண்டு நிகழ்ச்சிகள் ஒரே நாளில் ஒரே சமயத்தில் அவருடைய வாழ்க்கையில் 5ேரிட்டன என்று அறிந்தேன்.
பூரீ பேரின்ப நாயகம் தம் வாழ்க்கையில் இரண்டு பேரைக் காதலித்தார். அவர் காதலித்தவர்களில் ஒருவர் காந்திமகான்; இன்னுெருவர் அவரது மனைவியார்.
1947-ம் ஆண்டு ஜனவரி 1ாதம் 30-ந் தேதி மாலை 6-மணிக்கு பூரீ பேரின்ப நாயகத்தின் அருமை மனைவி இறந்து போனர். இந்தப் பொறுக்க முடியாத

Page 37
68 இலங்கையில் ஒரு வாரம்
துயரத்தில் அவர் ஆழ்ந்து தவித்துக் கொண்டிருந்த போது, நண்பர் ஒருவர் வந்தார். " உங்களுக்கு இன்னுெரு பேரடி போன்ற செய்தி வந்திருக்கிறது!" என்ருர், " அது எப்படி முடியும் ? அது என்ன செய்தி ?’ என்று பூரீ பேரின்பநாயகம் கேட்டார். அவருடைய மனைவி காலமான ஏறக்குறைய அதே நேரத்தில் காந்திமகான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியை நண்பர் தெரிவித்தார். அன்று இரவே பூரீ பேரின்ப நாயகத்தின் வயதில் பத்து வயதுகூடி விட்டது என்று அவருடைய நண்பர்கள் தெரிவித்தார்கள்.
இதற்கிடையில் பூரீ பேரின்பநாயகம் ஒரு தப்புக் காரியம் செய்தார். அதாவது இலங்கைச் சட்டசபைத் தேர்தலுக்கு கின்ருர், சட்டசபைக்கு நின்றது தவருன காரியம் இல்லே. ‘காந்தீய வாதி' என்று சொல்லிக் கொண்டு நின்றதுதான் தவறு. சிங்கள வர்களின் கொடுமையிலிருந்து தமிழர்களேக் காப்பாற்றுவோம் என்றும், தமிழர்களுக்கு 100-க்கு 50 பிரதிநிதித்துவம் கேட்போம் என்றும், இல்லையேல் தனித் தமிழரசு ஸ்தாபிப்போம் என்றும் சொல்லிக் கொண்டு பிறர் கின்றர்கள். சண்ட மாருதப் பிரசாரம் செய்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பூரீ பேரின்ப நாயகம் காந்தீயத்தின் பெயரால் கின்ருர், கிற்கலாம்; ஆனல், ஜயிக்க முடியுமா ? குருவளியின் முன்னல் இளந்தென்றல் கிற்குமா ? எனவே, தோற்றுப் டோனுர்,
இதல்ை காங் தீயத்தினிடம் அவருக்குப் பற்றுக் குறைந்து விடவில்லே. இன் அறு அகில இலங்கைக் காந்திய சேவா சங்கத்தின் தலைவராக இருக்கிருர், எது எப்படியானுலும் காங் தீயக் கொள்கையை இலங்

கல்கி 69
கையில் பரப்புவது என்று இந்தச் சங்கம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. காந்திஜியின் D600f மொழிகள் அனைத்தையும் சிங்களே பாஷையில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு ஒரு பெரிய திட்டம் போட்டிருக்கிறது. இச் சங்கத்தின் காரியதரிசி மற்ருெரு பரம காந்தி பக்தரான பூரீ சி. கே. வேலா யுதம் பிள்ளே.
இலங்கைக்கும் சிறப்பாக யாழ்ப்பாணத்துக்கும் பூரீ பேரின்பநாயகம் செய்திருக்கும் தொண்டுகளே அளவிட முடியாது. இலங்கைத் தீவுக்குக் காந்தி மகானையும், நேரு அவர்களேயும், ராஜாஜியையும் தருவிப்பதற்கு மூல காரணமாயிருந்தவர் அவர்தான். ஏன் நான் இம்முறை இலங்கை சென்றதற்குக்கூட முக்கிய குற்றவாளி அவர்தான். * இங்கே பலர் உங்களுடைய சொற்பொழிவைக் கேட்க விரும்பு கிருர்கள். நீங்கள் வருகிறீர்களா, அல்லது நாங்கள் புறப்பட்டு அங்கே வரட்டுமா ?” என்று எழுதியிருந் தார். இப்போதைய தமிழ் நாட்டு உணவு கிலேமை யில் நான் என்ன பதில் செர்ல்ல முடியும் ? ? நான் வருகிறேன் ; நானே வருகிறேன்" என்று கதறிக் கொண்டு கிளம்பினேன்.
முதலில் பொதுத்தொண்டிலேயே வாழ்க்கை யைச் செலவிட்டு வந்து, பிறகு சில காலம் வக்கீல் தொழில் செய்த பூரீ பேரின்பநாயகம், இப்போது பல கண்பர்களின் விருப்பத்தின் பேரில் கொக்குவில் ஹிந்துக் கல்லூரித் தலைமை ஆசிரியர் பதவியை எற்றிருக்கிருர். அவருடன் ஒத்துழைத்துப் பல ஆசிரியர்கள் தொண்டு புரிகிருர்கள். கொஞ்சம் இக்கட்டான கிலைமையை அடைந்திருந்த கொக்குவில் ஹிந்துக் கல்லூரி பூரீ பேரின்பநாயகம் பொறுப்பு

Page 38
70 இலங்கையில் ஒரு வாரம்
ஏற்ற பிறகு பெரிதும் முன்னேற்றம் அடைந்திருக் கின்றது.
米 米 米
பேழ்ப்பாணத்திலே இடறி விழுந்தால், ஒரு ஆசிரியர் மேல் நாம் விழும்படியாக இருக்கும் என்று சொன்னேன் அல்லவா? அங்கே படிப்பும் அதிகம், பள்ளிக்கூடங்களும் அதிகம். இது மட்டுமல்ல. தமிழ் நாட்டில் ஒரு ஆசிரியர் மேல் நாம் இடறி விழுந்தால் அந்த ஆசிரியர் தெருவில் * அப்பர்டா !” என்று கீழே விழுவார். அநேகமாக அவர் அரைப் பட்டினிக்காரராகவும் மெலிந்த மனிதராகவும் இருப் பார். யாழ்ப்பாணத்தில் அப்படியில்லை. அங்கே ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம். இந்தியாவில் உயர்நிலைப் பள்ளிகளில் (அதாவது ஹைஸ்கூல் களில்) ஆசிரியர்கள் 60 முதல் 120 வரை சம்பளம் பெறுகிருரர்கள். தலைமை ஆசிரியர்களுக்கு 150 முதல் 250 வரை இருக்கலாம். யாழ்ப்பாணத்தில் நமது ஹைஸ்கூல்களேயே கோலேஜ்' என்கிருர்கள். ஆசிரியர்களுக்கு 200 முதல் 800 வரை கிடைக்கிறது. தலைமை ஆசிரியர்களுக்கோ 400 முதல் 600 வரை சம்பளம். இன்னேரு விசேஷம் என்னவென்ருல், இலங்கையில் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்து கொழும்பு யுனிவர்ஸிடி வரையில் மாணவர்கள் சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. உபாத்தி யாயர்கள், பேராசிரியர்கள், எல்லாருடைய சம்பளங் களேயும் இலங்கை அரசாங்கமே கொடுத்து வரு கிறது. இதில் அதிசயம் ஒன்றுமில்லை. அரசாங்கத் துக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறபடியால், கல்வித் துறைக்குத் தாராளமாகப் பணம் செலவு செய்ய முடிகிறது.

கல்கி 71
யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் நல்ல சம்பளம் பெறுவதோடுகூட, சமூக வாழ்க்கையில் நல்ல அந்தஸ்தும் பெற்றிருக்கிருரர்கள். அரசியல் தொண் டிலும், கலைத் தொண்டிலும், இலக்கியத் தொண்டி லும் ஈடுபட்டு வேலை செய்கிருர்கள். பொது ஊழி யத்தில் பற்றுக்கொண்ட ஆசிரியர்களில் வைத்தீ சுவரக் கல்லூரியின் தலைமை ஆசிரியர் பூரீ அம்பிகை பாகன் ஒருவர். தோற்றத்தில் பன்னிரண்டு ஆண்டு களுக்கு முன்பு எப்படியிருந்தாரோ அப்படியே இவர் இன்றைக்கும் இளம் பிள்ளேத் தோற்றத்துடன் இருக்கிருர், பன்னிரண்டு வயதையும் எப்படித்தான் சாப்பிட்டு ஜீரணம் செய்து கொண்டாரோ, தெரிய வில்லை. தோற்றத்தில் மாறுதல் இல்லாவிட்டாலும் அவருடைய வாழ்க்கையில் ஒரு மாறுதல் ஏற்பட் டிருக்கிறது. முன்னம் நான் பார்த்தபோது கட்டைப் பிரம்மச்சாரியாக இருந்தார். பூரீ ராமகிருஷ்ண மடத்தில் பற்றும் தொடர்பும் கொண்டிருந்தார். நமது மாஜி கல்வி அமைச்சர் திரு. அவிநாசிலிங்கத் தைப்போல் இவரும் கித்தியப் பிரம்மச்சாரியாகவே இருந்து விடுவாரோ என்ற கவலை எனக்கு ஏற் பட்டது. இலங்கையில் சிங்களவரின் தொகை தாறு மாருகப் பெருகிக் கொண்டிருக்கும் கிலைமையில், பூரீ அம்பிகை பாகனைப்போன்ற இளைஞர்கள் பிரம்மச் சாரிகளாகவே இருந்தால், இலங்கைத் தமிழர்களின் கதி என்ன ஆகிறது? ஆகவே, அச்சமயம், * பெண்ணைப் பெற்ற ' எந்தப் பாக்கியசாலியான தகப்பனர் பூரீ அம்பிகைபாகன மருமகனுக அடையப் போகிருரோ ?” என்று எழுதிவைத்தேன். இந்தக் கலியான விளம்பரம் வெகு சிக்கிரத்திலேயே பலன் அளித்தது. பெண்ணைப் பெற்ற ஒரு பாக்கியசாலி

Page 39
72 இலங்கையில் ஒரு வாரம்
இவரை மருகராக அடைந்தார். இன்றைக்கு பூரீ அம்பிகைபாகன் தம் இல் லத்திலும் உள்ளத் திலும் ஒரு அம்பிகையைப் பெற்று இல்லறம் நடத்தி வருகிருர், அவருடைய வீட்டில் சின்னஞ்சிறு குழந்தைகள் மழலை பேசி ஒடியாடுகின்றன !
இந்தக் காட்சியைப் பார்த்து மகிழ்ந்தேன். உடனே, பூரீ இராஜ அரிய ரத்தினத்தின் ஞாபகம் வந்தது. அடாடா ! இதோ ஒரு அருமையான இளைஞர் இன்னும் பிரம்மச்சாரியாக இருந்து வரு கிருரே ? இதனுல் இலங்கைத் தமிழர் சமூகம் எத்தனை 5 ஷடம் அடைந்து வருகிறது? எந்தப் பாக்கியசாலி இவரை மருகராக அடையப் போ கிருரோ ?
யாழ்ப்பாணத்தில் “ ஈழ கேசரி' என்னும் வாரப் பத்திரிகை பல ஆண்டுகளாகச் சிறப்பாக நடந்து வருகிறது. " இந்து சாதனம் ' ஹிந்து சமயப் பிரசாரத்துக்குச் சாதனமாயிருந்து வருவதுபோல், 4 ஈழ கேசரி ' இலங்கையில் உள்ள தமிழ் LD-ն) மலர்ச்சி எழுத்தாளருக்கு ஒர் அரிய சாதனமாக விளங்கிவருகிறது. இந்தப் பத்திரிகையைத் திறம்பட நடத்திவரும் ஆசிரியர் பூரீ இராஜ அரிய ரத்தினம், அருமையான பிள்ளே திறமையான எழுத்தாளர் , குணம், தங்கக் கம்பிதான் ! இதற்கு மேலே நான் சொல்ல வேண்டியதில்லை. பிறகு, பெண்ணைப் பெற்ற பெரியவர்களின் அதிர்ஷ்டம் !
* ஈழ கேசரி’ பத்திரிகையின் அதிபர் யாழ்ப்பா ணத்துப் பிரமுகர்களில் ஒருவரான பூரீ Gur6ör&Or uur அவர்கள். இந்தச் சிறந்த பத்திரிகையை நடத்துவ தோடு பல அரிய பழந் தமிழ் நூல்களே வெளியிட்டுத்

கல்கி 73
தமிழ்த் தாய்க்குத் தொண்டுபுரிந்து வருகிருர், இம்முறை நான் சென்றிருந்தபோது பூரீ பொன்னையா வைத்திய சாலையில் நோய்ப் படுக்கையில் படுத்திருப்ப தாக அறிந்து, அவரை வைத்தியசாலைக்குப் போய்ப் பார்க்க விரும்பினேன். பூரீ பொன்னையா அவ்வளவு தூரத்துக்கு வைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் பேசுவதாக இருந்தபொதுக்கூட்டத்துக்கு எப்படியோ வந்து சேர்ந்து விட்டார். தமிழன்பும் உண்மையான நட்பும் எவ்வளவு சக்திவாய்ந்தவை ? -
மேற் கூறிய நண்பர்களிடம், வடக்கு இலங்கைக் கடற்கரையோரமாக எங்களே அழைத்துச் செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தேன். மதுரையும் ஈழமும் ' கொண்ட பராந்தக சோழன் என்ன, பழையாறைச் சுந்தர சோழன் என்ன, தமிழ் நாட்டுப்பேரரசர்களிலே இணயற்ற பெருமை வாய்ந்த இராஜ ராஜ சோழன் என்ன, கங்கையும் கடாரமும் கொண்ட ' இராஜேந்திர சோழன் என்ன, இத்தகைய அழியாப் புகழ்பெற்ற தமிழ் மன்னர்கள் மாபெரும் படைகளுடன் கப்பல் ஏறிக் கடல் கடந்து வந்து ஈழ நாட்டில் இறங்கியிருக்கக் கூடிய கடலோரப் பகுதி களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்குச் சில காலமாக இருந்து வந்தது. இதைப் பற்றி நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது வந்தார் ஒரு மனிதர். அவர் உருவத்தில் குட்டையா யிருந்தார். களே பொருந்திய முகத்துடன் சமுகம் தந்தார்.

Page 40
74 இலங்கையில் ஒரு வாரம்
இவருக்கு ஊர் பருத்தித்துறை என்றும், இவரும் ஓர் ஆசிரியர்தான் என்றும், பெயர் திரு. ஏரம்ப மூர்த்தி என்றும் அறிந்தேன்.
பெயர், இதற்குமுன் கேள்விப் பட்டிராத பெயரா யிருந்தது.
* ஐயா ! நீங்கள் பேச வேண்டியதே யில்லை ?" என்ருர், திரு. ஏரம்ப மூர்த்தி.
1 இல்லை, நான் பேசவில்லை!" என்று பணிவுடன் தெரிவித்துக் கொண்டேன்.
* நிச்சயமாக நீங்கள் பேச வேண்டியதில்லை " என்ருர் மறுபடியும்.
இல்லை நான் பேசவே இல்லை!" என்று மீண்டும் கூறினேன். * உண்மையாகத்தான் சொல்லுகிறேன் ; நீங்கள் பேசவேண்டாம் ! தெரிகிறதா ?’ என்ருர் பருத்தித் அதுறையார்.
உள்ளத்தில் பொங்கி எழுந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டேன். அப்பேர்ப்பட்ட பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தார் இந்தியாவை ஆண்ட காலத்தில் 8 நீர் பேசக்கூடாது ' என்று 144-வது பிரிவின்படி எனக்கு உத்தரவு போட்டார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை. உத்தரவைக் கையில் வைத்துக் கசக்கிக் கொண்டே பேசித் தீர்த்தேன். அப்படிப்பட்ட என்னே இந்த இலங்கைத் தீவில் * பேசக்கூடாது!’ என்று கட்டளையிடுவதற்கு இந்த மனிதர் யார் ? இவருக்கு என்ன அதிகாரம் ? பூரீ சேனநாயகாவின் சுவீகார புத்திரர் என்று தம்மை இவர் கினைத்துக் கொண்டாரா ? இவ்விதம் எண்ணிப் பொருமினேன்.

கல்கி 75
* எதற்காகச்சொல்லுகிறேன் என்ருல், பருத்தித் துறைக்கு நீங்கள் சும்மா வந்துவிட்டுத் திரும்பினுல் போதும் ! தங்களேச் சொற்பொழிவு ஆற்றச் சொல்லித் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை !” என்று சொன்னுர் திரு. ஏரம்பமூர்த்தி.
* அப்படியா சமாசாரம்? மனதிற்குள் இவ்வளவு கெட்ட எண்ணமா வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று நானும் மனதில் நினைத்துக் கொண்டேன்.
முன்னமேயே கடற்கரை யோரமாகப் பருத்தித் துறை வரையில் போகத் தீர்மானித்திருந்தபடியால், * அதற்கு என்ன ? அப்படியே ஆகட்டும் " என்றேன்.
* தாங்களும் பூரீ தூரனும் பருத்தித்துறைக்கு வந்து சமுகம் தந்தால் போதும். ஒரு வரவேற்பு நடத்துவோம். அதை ஏற்றுக்கொண்டு திரும்பி விடலாம். பேச்சு, பிரசங்கம், சொற்பொழிவு எதுவும் கண்டிப்பாக வேண்டியதில்லை. தாய் நாட்டிலிருந்து வந்தவர்களேச் சேய் நாட்டிலுள்ள நாங்கள் உபசரிப்பது எங்கள் கடமை யல்லவா ? . ஆனல், தங்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவுமட்டும் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை ! ஆகையால் நீங்கள் பேசவேண்டியதில்லை !' என்ருர் பூரீ ஏரம்ப மூர்த்தி.
* சேய் நாட்டிலுள்ள உங்க்ள் கடமையைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனல், என் கடமை என்ன வென்று எனக்குத் தெரியும். கட்டாயம் உங்களுக்குத் தொந்தரவு கொடுத்தே தீருவோம். 5ானும் பூரீ தூரனும் நாளே மத்தியானம் பருத்தித்துறைக்கு வந்தே தீருவோம் !" என்று சொன்னேன்.

Page 41
8
பள்ளிக்கூடத்தில் நான் படித்துக்கொண் டிருந்தபோது, சில நாள் படித்துத் தொலைத்த துண்டு என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன்-இந்தியா தேசத்துக்கு ஒரு பெரிய ஆபத்து வந்தது. "இந்தியா கிணற்றில் விழுந்துவிட்டது ' என்ற பரிதாபமான கூக்குரல் எழுந்தது. ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லாரும் ஓடிப்போய்ப் பார்த்தோம். கிணற்றில் இந்தியா தேசம் விழுந்துதானிருந்தது. இதற்கு ஒரு பையனுடைய அஜாக்கிரதைதான் காரணம் என்றும் தெரிந்தது. ஆனல், அந்த நெருக்கடியான நிலைமையில் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லாரும் விழித்துக்கொண்டு கின்ருர்கள். நான் அந்த நாளில் கேட்ட சில தேசியப் பிரசங்கங்களில் 1 தேசத்துக்காக நீங்கள் ஒரு துரும்பையாவது எடுத்துப் போட்டதுண்டா?’ என்று நம் தலைவர்கள் அலறியது என் காதில் விழுந்தது. அது அச்சமயம் என் ஞாபகத்துக்கு வந்தது. உடனே ? இந்தியா வுக்காகத் துரும்பை எடுத்துப் போடுவது என்ன ? ஒரு கல்லைத் தூக்கியே போடலாம் !" என்று முடிவு செய்தேன். கிணற்றில் விழுந்து முழுகாமல் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியாவின் பேரில் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டேன். உடனே இந்தியா தேசம் ஒரு கீச்" ரத்தம் கூடப் போடாம்ல் தண்ணீரில் முழுகிப் போய்விட்டது.
இவ்வாறு இந்தியாவுக்குச் சேவை செய்ததினுல் நான் அச்சமயம் அடைந்த கஷ்ட நஷ்டங்களேச் சொல்லி முடியாது. அன்று முழுதும் ஆசிரியர் கட்டளைப்படி பெஞ்சியின் மேல் நிற்கும் கஷ்டம்

கல்கி 77
ஏற்பட்டது. அல்லாமலும் ஒரு புதிய இந்தியா தேரப்படம் வாங்கிக்கொண்டு வந்து கொடுக்க வேண்டி இருந்தது. இதன் மூலம் மூன்றரை ரூபாய் 5ஷ்டமும் ஏற்பட்டது.
இதைப்பற்றி முன்னம் ஒரு தடவை நான் எழுதித்தானிருக்கிறேன். ஆயினும் சமீப காலத்தில் திருவாங்கூர்ப் பகுதியிலிருந்து, " அந்தோ ! கடவு ளுக்கு ஆபத்து " " ஆகா கடவுளேக் காணுேம் !" என்று கூக்குரல்கள் வந்தபோது மேற்படி சம்பவம் என் நினைவுக்கு வந்தது. திருவாங்கூர்ப் பகுதியி லுள்ள கோயில்களிலிருந்து திடீர் திடீர் என்று விக்கிரகங்கள் காணுமற்போய் வருகின்றனவாம் ! கடவுளின் விரோதிகள் அல்லது ஹிந்து மதத்தின் விரோதிகள் இவ்விதம் செய்கிருர்கள் என்று ஊகிக்கப் படுகிறது. ஆனல், மேற்படியார்கள் கடவுளையோ, ஹிந்து மதத்தையோ தாக்குவதற்கு இம்மாதிரி முறையைக் கையாளுவது : பைத்தியக் காரத்தனமே யல்லவா ?
இந்தியா தேசப்படம் கிணற்றில் விழுந்து முழுகு வதினுல் இந்தியா தேசம் எவ்வித ஹானியும் அடைந்துவிடாது. அதுபோலவே, விக்கிரகங்களுக்கு ஏற்படும் ஆபத்து கடவுளேயோ ஹிந்து மதத் தையோ பாதித்து விடாது. அப்படிப் பாதிக்கும் என்று கினைப்பவர்கள் அறியாதவர்கள்.
நமது முன்னேர்களாகிய மகான்கள் விக்கிரகங் களேயே தெய்வம் என்று எண்ணிவிடவில்லை. எங்கும் நிறைந்த கடவுளே, நெஞ்சத்தில் வீற்றிருக்கும் கடவுளே, கினைத்துத் துதிப்பதற்கு ஒரு சின்னமாகவே கோவில் விக்கிரகங்களைக் கொண்டார்கள். மனம்

Page 42
78 இலங்கையில் ஒரு வாரம்
குவிந்து இறைவனே வழிபடுவதற்கு விக்கிரக ஆராதனையை ஒரு சாதனமாகவே ஏற்படுத்தியிருந் தார்கள். எனவே, இந்தியா தேசத்தின் சரித் திரத்தில் விக்கிரகங்களுக்கு அவ்வப்போது பல ஆபத்துக்கள் நேர்ந்திருந்தபோதிலும் ஹிந்து மதத் துக்குத் தீங்கு ஒன்றும் 5ேர்ந்திடவில்லை.
வடக்கு இலங்கை போர்ச்சுக்கீயரின் ஆட்சியில் இருந்தபோது ஹிந்து மதத்தின் தெய்வங்களுக்கு, அல்லது விக்கிரகங்களுக்கு ஆபத்துக்கள் நேர்ந்தன ! அதிர்ஷ்ட வசமாக, யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள தமிழர்கள் நமது சமய தத்துவங்களே நன்கு உணர்ந்த வர்கள். ஆகவே, விக்கிரகங்கள் போய்விட்டனவே என்று அழுது கொண்டிருந்துவிடவில்லை. விக்கிரகத் துக்குப் பதிலாக வேறு சின்னங்களே வைத்துக் கொண்டார்கள்.
யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் கந்தசாமி கோவில் உற்சவத்தைப் பற்றி முன்னமே குறிப்பிட் டிருந்தேன் அல்லவா ? இந்தக் கோவிலின் மூல ஸ்தானத்தில் முருகன் விக்கிரகம் இல்லை. அதற்குப் பதிலாக,
" சுற்றி நில்லாதே போ ! பகையே !
துள்ளி வருகுது வேல் '
என்று அமரகவி சுப்பிரமணிய பாரதியார் பாடிய வெற்றி வேலாயுதத்தையே பிரதிஷ்டை செய்திருக் கிருரர்கள்.
ருத்தித் துறைக்குப் போகும் வழியில் பூரீ வில்லிபுரம் என்னும் விஷ்ணு ஸ்தலத்தைத் தரிசிக் கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. இந்த ஊர்

கல்கி 79
ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்திலும் விக்கிரகம் இல்லை. மகாவிஷ்ணுவின் சின்னமாக அவருடைய கையில் ஏந்திய சக்கரத்தையே பிரதிஷ்டை செய்து பூஜை கடத்தி வருகிருரர்கள். இந்த ஆலயமும் மிகவும் பரிசுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது. பூரீ சக்கர ஸ்வாமியின் சன்னிதிக்கெதிரே விஸ்தாரமான வெண் மணல் பிரதேசம் கண்ணையும் கருத்தையும் கவரு மாறு அமைந்திருக்கிறது. இந்த வல்லிபுர ஆலயத் தில் நடைபெறும் உற்சவங்களுக்குத் தமிழகத்தி லிருந்து பிரசித்திபெற்ற நாதஸ்வர வித்வான்களேத் தருவிப்பார்களாம். வெண்ணிலவில் வெண் மண்லில் பதினுயிரம் இருபதினுயிரம் மக்கள் திரண்டிருந்து நாதஸ்வரத்தின் இசையைக் கேட்டுப் பரவசமடை வார்களாம். இதையெல்லாம் கேட்டபோது,
" கேற்று முன்னுளில் வந்த உறவன்றடி-இது
கெடும் பண்டைக் காலமுதல் கேர்ந்து வந்ததாம் !"
என்ற பாரதியார் வாக்கு என் கினேவுக்கு வந்தது. தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் எற்பட்ட உறவு நெடும் பண்டைக்கால முதல் நேர்ந்து வந்த உறவு என் பதில் ஐயமில்லை. அந்த உறவின் அழியாத சின்னங் கள்ாக இது போன்ற ஆலயங்கள் விளங்குகின்றன. இராஜராஜ சோழன் ஈழத்தை வெற்றிகொண்டு பொலன்னருவா (புலஸ்தியநகர்) என்னும் அப் போதைய தலைநகருக்கு ஜனநாதபுரம் என்று புனைப் பெயர் அளித்து அரசு புரிந்த காலத்திய சிவன் கோவில்கள் இன்னமும் அந்தப் புலஸ்திய நகரில் இருக்கின்றன. இராஜராஜன் காலம் 950 வருஷங் களுக்கு முந்தியது. அதற்கும் இருநூறு வருஷங் களுக்கு முன்னல் பூரீ சுந்தரமூர்த்தியும் இன்னும் ஆாறு ஆண்டுக்கு முன் பூரீ ஞானசம்பந்தரும் இலங்

Page 43
8O இலங்கையில் ஒரு வாரம்
கையில் இருந்த சிவன் கோவில்களைப் பற்றிப் பாடி யிருக்கிருர்கள். அப்படி அவர்களால் பாடப்பெற்ற கோயில்களில் ஒன்று மன்னர் தீவில் பாலாவி நதிக் கரையில் மாதோட்டம் என்னும் ஊரில் இருந்தது. இந்தக் கோவிலுக்கு அந்நாளில் திருக்கேதீசுவரம் என்று பெயர். சம்பந்தர்-சுந்தரர் காலத்தில் இந்தக் கோயில் இராமேசுவரம் கோயிலைப்போல் அவ்வளவு பெரியதாயிருந்ததாம். சேதுக்கரையில் கின்று பார்த்தால் கோபுரம் தெரிந்ததாம். எனவே, பூரீ சம்பந்தரும் சுந்தரரும் இராமேசுவரக் கடற்கரையில் கின்று தரிசித்துத்தான் திருக்கேதீசுவரத்தைப் பற்றிப் பாடினர்கள் என்பது ஒரு சாராரின் கருத்து.
ஆனல், அது தவருன கருத்து என்று நான் எண்ணுகிறேன். பூரீ ஞானசம்பந்தரும் சுந்தரரும் இலங்கையிலுள்ள சிவஸ்தலங்களுக்குப் போய் தரிசித் திருந்ததால்தான் அவ்வளவுதத்ரூபமாகப்பாடியிருக்க முடியும். கடல் கடந்து செல்வது ஆசாரத்துக்கு விரோதம் என்ற குருட்டுக் கொள்கை பிற்காலத்தில் தமிழகத்தில் தோன்றியது. எனவே சம்பந்தரும் சுந்தரரும் கடல் கடந்து போயிருக்கவே மாட்டார்கள் என்று வைத்துக்கொண்டு இந்தக் கரையிலிருந்தே பாடினர்கள் என்று கற்பனை செய்திருக்க வேண்டும். இதன் ‘உண்மை எப்படியானலும் சம்பந்தர் காலத்திலேயே இலங்கையின் வடபகுதியில் பிரசித்த மான சிவாலயங்கள் இருந்தன என்று ஏற்படுகிற தல்லவா ? சம்பந்தருடைய காலம் இன்றைக்கு 1,300 வருஷங்களுக்கு முன்பு என்பது சரித்திரத்தில் முடிவு கண்ட உண்மை. எனவே, அதற்கும் முற்பட்ட மிகப் பழமையான காலத்தில் தமிழர்கள் இலங்கை

கல்கி 8.
யில் குடியேறிச் சைவ சமயத்தை வளர்த்துச் சிவா லயத் திருப்பணிகளும செய்திருக்கவேண்டும்.
திருக்கேதீசுரம் ஆலயம் இப்போது அழிந்து பாழ் பட்டுக் கிடக்கிறது. காலம் என்னும் அரக்கனே, யுத்தம் என்னும் பூதமோ அல்லது மதத் துவேஷம் என்னும் பிசாசோ அந்த ஆலயத்தை விழுங்கியிருக்க வேண்டும். திருக்கேதீசுவரம் ஆலயம் இருந்த இடத் தில் வேருெரு புதிய ஆலயத்தை கிர்மாணிப்பதற்குப் பெரும் பிரயத்தனம் ஒன்று இலங்கையில் தொடங்கி யிருக்கிருரர்கள், இந்த முயற்சிக்குப் பிரபல இலங்கை இந்தியர்களின் ஆதரவு இருக்கிறது எந்த இடத்தில் புதிய ஆலயத்தை கிர்மாணிக்கலாம் என்றும், எப்படி அதை நிர்மாணிக்கலாம் என்றும் யோசனைகள் நடந்துவருகின்றன. இதற்காகத் தமிழ் நாட்டிலி ருந்து ஆலய கிர்மாண ஆராய்ச்சி நிபுணரான பூரீ வி. எம். நரசிம்மன் யோசனை சொல்ல அழைக்கப் பட்டுப் போயிருக்கிருர் என்று அறிந்து மகிழ்கிறேன். இந்த பூரீ வி. 5ாம். நரசிம்மன் இக்காலத் தமிழர்கள் கம்பரை படித்துத் தெரிந்துகொள்ள உதவுமாறு உரையுடன் கம்பராமயணத்தைப் பதிப்பித்த பூரீ வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்களின் புதல்வர். ஆலயச் சிற்பங்களேப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்து பல அரிய கட்டுரைகளே எழுதி யிருக்கிருரர். கட்டிட கிர்மாணத்துறையில், அவரு டைய புலமையைக் குறிக்கும் பல இந்திய-ஆங்கிலப் பட்டங்கள் பெற்றவர் பூரீ நரசிம்மன், B. A., B. E. A M. 1. E., M. R. Sa1, 1 (L011) அவர்கள் இலங்கைக்குச் சென்று திருக்கேதீசுவர ஆலயத்தைத் புதுப்பிக்க உதவி புரிவது தமிழ் நாட்டுக்கும் இலங்கை க்கும்
6

Page 44
82 இலங்கையில் ஒரு வாரம்
உள்ள நீடித்த கலாச்சார உறவை மறுபடியும் புதுப் பித்து கிலே நிறுத்தி உறுதிப் படுத்துவதாகும்.
米 米 米
தாய் நாட்டில் உள்ளவர்கள் சேய் நாட்டுக்குப் போய்ப் பார்க்கும்போது அங்கே காணும் நல்ல அம்சங்களைக் கவனித்துக்கொண்டு வருவதுதான் கியாயம். நல்லதல்லாத அம்சங்கள் பலவும் இருக்கக் கூடுந்தான். ஆனல் அவற்றை ஆராய்வது ஒரு வாரத்து விருந்தினராகப் போகும் நம்முடைய கடமையன்று. மிஸ் மேயாவின் வேலை செய்கிறவர்கள் வேறு யாராவது இல்லாமலா போகிருரர்கள்? ஆகவே மனத்திற்கு மகிழ்ச்சிதரக்கூடிய நல்ல அம்சங்களைப் பற்றி மட்டுமே இதுவரை எழுதி வந்திருக்கிறேன். ஆயினும் மிகவும் வருந்தத்தக்க ஒரு கிலேமையைப் பற்றிச் சொல்லித் தீரவேண்டியிருக்கிறது. தமிழ் நாட்டைக் காட்டிலும் பிற்போக்கான நிலைமை ஈழ நாட்டில் ஒரு அறையில் இருந்துவருகிறது. அது தான் தீண்டாமை ஒழிக்கும் அதுறை. ஹரிஜனங்கள் என்று மகாத்மாவினல் புது 5ாமகரணம் செய்யப் பட்ட நம் தின சகோதரர்களுக்குத் தமிழ்நாட்டிலுள்ள ஆலயங்களேயெல்லாம் மேளதாளத்துடன் திறந்து விட்டுவிட்டோம். நமது தார்மீக வாழ்க்கையின் கேந்திர ஸ்தலங்களாகிய ஆலயங்களே பொறுத்த வரையில் இந்தியாவில் தீண்டாமையை ஒழித்து விட்டோம். ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டோம். ஆனல் ஈழ நாட்டில், கல்வியறிவில் சிறந்த தமிழ் மக்கள் வாழும் யாழ்ப்பாணப் பகுதியில் இன்னமும் தீண்டாமை அரக்கன் ஆட்சி செலுத்தி வருகிறன் ! கோயில்களுக்குள் ஹரிஜனங்கள் புகக்

கல்கி 83
கூடாது என்று வழி மறிக்கிருண். இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்வது ?
யாழ்ப்பாணத் தமிழர் சமூகத்துக்கு இது எவ்வளவு பெரிய அவக்கேடு என்பது பருத்தித் தூறைக்குப் போகும் வழியில் உள்ள வதிரி என்னு மிடத்தில் எங்களுக்கு நன்கு தெரியலாயிற்று. அந்தக் கிராமத்தில் எங்களே வழிமறித்து கிறுத்தினர்கள். ஒரு பள்ளிக் கூடத்தில் வற்வேற்பு உபசாரமும் நிகழ்த்தினர்கள். துாய கதராடை புனைந்த ஒரு நண்பர் இனிய குரலில் அழகாகவும் தெளிவாகவும் தேவாரம் பாடினர். இன்னுெரு நண்பர் மிக இனிய செந்தமிழில் வரவேற்புரை கிழ்த்தினர். சபையோரின் முகங்களில் பண்பட்ட கல்வியறிவின் களே குடி கொண்டிருந்தது. அவர்கள் அத்தனே பேரும் ஹரிஜனங்கள் என்பது கூட்டத்தின் இறுதியில் பூரீ பேரின்ப நாயகம் சொல்லித்தான் நாங்கள் தெரிந்து கொண்டோம் ; தெரிந்து அதிசயித்தோம். இவர்களேயா ஈழ நாட்டு ஆலயங்களில் விடுவதில்லை யென்று ஆத்திரமும் அடைந்தோம். அப்படியானல் திருக்கேதீசுவரம் ஆலயத் திருப்பணி முதலிய கைங்கரியங்கள் என்னத்திற்கு என்றும் எண்ண மிட்டோம். கடவுள் அருளால் மறுமுறை நான் இலங்கை க்குப் போக நேருமானல், அப்போது ஈழ நாட்டில் தீண்டாமை ஒழிந்துவிட்டது என்ற நல்ல செய்தியைக் கேள்விப்பட விரும்புகிறேன்.
வதிரி பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்த வரவேற்பு நிகழ்ச்சியின் முடிவில் அந்தப் பள்ளிக்கூடத்தின் நன்கொடையாளரான திரு. கா. சூரன் என்பவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினர்கள். இப்பெரியார் நந்தன் சரித்திரத்தில் வரும் பெரிய கிழவனுரை
h

Page 45
84 இலங்கையில் ஒரு வாரம்
எனக்கு ஞாபகப்படுத்தினர். ஆனல் அந்தப் பெரிய கிழவனுருக்கும் இந்தச் சூரணுருக்கும் வேற்றுமை மிக அதிகம். இவர் காந்தி மகான் மறைந்ததும் இயற்றி அச்சிட்ட ஒரு பாடல் புத்தகத்தை எனக்கு அளித்தார். அந்தப் புத்தகத்தை ஒரு பொக்கிஷமாக
நான் போற்றி எடுத்துக் கொண்டு வந்தேன்.
பாடல் ஒருபுறம் இருக்கட்டும. முகவுரையில் இவர் எழுதியிருக்கும் வசன நடைக்கு ஒரு உதாரணம் பாருங்கள ;ー
* மகாத்மா மறைந்த மறுதினம் 31-1-48 சனிக் கிழமை சுமார் 7 மணிக்கு மகாத்மா அவர்களை யாரோ சுட்ட் தால் அவர் இறந்ததாகக் கேள்விப்பட்டேன். நான் நம்ப வில்லை. சில நிமிஷங்கழித்து விஷயம் உண்மைதான் என்றும் இரவு நேருஜி அழுதழுது பேசியதாகவும் அறிந்தேன். (மகாத்மா) மனிதனுல் சகிக்கமுடியாத கஷ்டங்களையெல்லாம் மேற்கொண்டு ஜெபமடைந்த நிகழ்ச்சிகளெல்லாம் என் மனக் கண்முன் ஒன்றன்பின் ஒன்றுகக் காட்சி அளித்தன. மகாத்மா யாருக்காக மேற்படி கஷ்டங்களை அனுபவித்தாரோ அவர்களில் ஒருவனே அவருக்கு இறுதிக் காலனும் ஆனுன். ஒரு நுண்ணிய ஊசியானது பெரிய சேலைகளையெல்லாம் தைத்து உடுப்பாக்கியது போலவும் ஒரு தீக்குச்சியானது எல்லையற்ற தீயைப் பரப்புவது போலவும் மகாத்மா ஆகிய சிறிய உருவம் தனது உடல் பொருள் ஆவி மூன்றையும் உலக சேவைக்கு ஒப்படைத்தாலன்றே இன்று எல்லா உலகமும் அவருடைய தத்துவங்களைப் பின்பற்றும்படி பிரசாரஞ் செய்து வருகிறேன் !.
எப்பேர்ப்பட்ட தமிழ் வசன நடை அதில் என்ன உணர்ச்சி என்ன சக்தி! நான் நம்பவில்லை ? என்ற சின்னஞ்சிறு வாக்கியம் எவ்வளவு பொருள் பொதிந்து உணர்ச்சி ததும்பி கிற்கிறது ?

கல்கி 85
இதை எழுதியவர் ஒரு ஹரிஜனர் ; அதிலும் வயது முதிர்ந்த கிழவர். இத்தகைய உத்தமர்களினல் தான் உலகில் மழை பெய்கிறது. இலங்கையை அடியோடு கடல் கொண்டு போய்விடாமல் கொஞ்சம் கொஞ்சம் கரையை இடிப்பதுடன் திருப்தியடைந்து கிற்கிறது. வாழ்க திரு சூரனர் வாழ்க அவருடைய திருக்குலம் !-இப்படிப்பட்டவர்களே ஆலயங்களில் விட மறுக்கும் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் மேற்படி அநீதியை நிவர்த்தி செய்கிறவரையில் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டுதான் வாழவேண்டும் ! சிங்களவரிடம் போராடத்தான் அவர்களுக்கு வலிமை ஏற்படுமா?
9
நம்முடைய தமிழ் நாட்டு முன்னேர்களின் வழியைப் பின்பற்றி எங்கேயாவது ஒரு நாட்டுக்குப் படையெடுத்துச் செல்லவேண்டும் என்ற ஆசை என் மனதில் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது. ஆனல், படையெடுத்துச் செல்வதற்கு படை யல்லவா தேவை? என்னிடம் படையில்லை. படை யிருந்தாலும்தான் என்ன ? ஏதோ ஈழ மக்கள் நம்மவர்களாயிற்றே என்ற உரிமையுடன் படை எடுத்துச் சென்ருல் யு. என். ஒ. சங்கம் குறுக்கே வந்து தொலைக்கும். தன் மனிதர், வேற்று 'மனிதர் என்று பாராமல் குண்டு போட்டுக் கொல்லும் ! படையெடுப்பை அகியாயமாக வாபஸ் வாங்கவேண்டி வரும்.
படைதான் இல்லையே, பதிலுக்கு ஒரு குடை யாவது எடுத்துப் போவோமென்ருல் குடையும்

Page 46
86 இலங்கையில் ஒரு வாரம்
சமயத்தில் சிக்கவில்லை. ஆகவே வெறுங்கையுட னேயே புறப்பட்டோம். வெய்யிலை வெய்யில் என்று கினையாமல், நிலாக்கதிர் என்று கினைத்துக்கொண்டு ஊர்காவற்றுறை, காங்கேயன் துறை, வல்வெட்டித் துறை முதலிய கடலோரப் பகுதிகள் வழியாகச் சென்ருேம். இங்கேயெல்லாம் சமுத்திர ராஜன் சாந்த வடிவுகொண்டு இலங்குகிருன், மலைபோன்ற அலைகளும் கடலின் கொந்தளிப்பும் இல்லை. மிக அடக்கமாக இருக்கிறது நீர்ப்பரப்பு. மிருதுவான சிறு அலைகள் இலங்கா தேவியின் பாதங்களே மெள்ள மெள்ளத் தொட்டுவிட்டுத் திரும்பிவிடுகின்றன. சோழ நாட்டில் உள்ள கோடிக்கரைக்கும் யாழ்ப்பாணக் கடற்கரைக்கும் ஏறக்குறைய முப்பது மைல் தூரங் தான். கோடிக்கரையில் காலையில் படகில் எறினல் மாலையில் இங்கு வந்துவிடலாம். முன்னுளில் பராந் தகன், இராஜராஜன், இராஜேந்திரன் முதலிய சோழ மன்னர்கள் தங்கள் மாபெரும் படைகளுடன் இந்தத் துறையிலே வந்து இறங்கியிருக்கலாம். நாவாய்கள், கப்பல்கள், தோணிகள், படகுகள், ஒடங்கள், கட்டு மரங்கள் ஆயிரக்கணக்கில் சேகரித்துப் படைகளை ஏற்றி வந்திருக்கவேண்டும். ஆனல் நாடு பிடிக்கும் ஆசையுடன் மட்டும் அவர்கள் வரவில்லை. ஈழநாட்டு அரசகுலத்தினரில் சண்டை மூண்டு, யாராவது உதவிக்கு அழைத்தபோதுதான் வந்தார்கள். வந்த இடத்தில் நல்ல அரசாட்சியை நிலைநாட்டி ஆண் ሲ ...ዘ`ffém56ኽT . .
அது ஒரு காலம். இப்போது என்ன நடக்கிறது தெரியுமா ? கோடிகிகரைப் பக்கங்களிலிருந்து பிழைப் புக்குக் கஷ்டப்படுகிறவர்கள் கள்ளப் படகுகளில் ஏறித் திருட்டுத்தனமாக வந்து இந்தக் கரைகளில்

கல்கி 87
இறங்குகிருரர்களாம். இவர்கள் சிலராயிருந்தாலும் இதைப் பற்றிச் சிங்கள மந்திரிகள் பிரமாதப்படுத்து கிருர்கள்.
* சில வருஷங்களுக்கு முன்னல், இந்தியாவில் அரிசிக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்த பிறகு, இலங் கையில் உணவு நிலைமை நெருக்கடியடைந்திருந்த போது, கோடிக்கரைப் பகுதியிலிருந்து கள்ளப் படகு களில் இலங்கைக்கு அரிசி போய்க்கொண்டிருந்தது. கள்ளப் படகுக்காரர்கள் நல்ல விலைபெற்று லாப மடைந்து வந்தார்கள். இப்போதோ இலங்கையின் உணவு கிலைமை திருப்திகரமாகிவிட்டதால் அங்கே தஞ்சை ஜில்லா அரிசிக்குக் கிராக்கி கிடையாது. இலங்கை சர்க்கார்தான் நமக்கு அரிசி கடன் தரு கிருரர்களே? அது ஒரு காலம் ! இது ஒரு காலம் ! இப்படியாக எண்ணமிட்டுக்கொண்டும் விவாதித் துக்கொண்டும் பருத்தித்துறை போய்ச் சேர்ந்தோம். பருத்தித்துறை அன்பர்கள் எங்களுக்குக் காரசார மான விருந்து அளித்தார்கள். பிறகு பாரதூரமான வரவேற்பும் அளித்தார்கள். ஆம், வரவேற்பு மிக மிகப் பாரமாகவே இருந்தது. இலங்கையையே தூக்கிக் கையில் கொடுத்து விட்டார்கள் ! நல்ல வேளையாக, இலங்கையை நாலு சட்டத்துக்குள் புகுத்திக் கண்ணுடியும் போட்டிருந்தபடியால் என்னல் தாங்கமுடிந்தது! கனம் சேனநாயகா, பண்டாரநாயகா, குணசிங்கா முதலியவர்களுடைய கண்ணில் படாமல் இந்தியாவுக்கு எடுத்துக்கொண்டு வரவும் முடிந்தது! இலங்கை தேசப்பட வடிவமாக அமைந்த அழகிய சித்திரப் பத்திரத்தில் அன்பையும் இன்பத் தமிழையும் குழைத்து இனிய கவிதையாக எழுதிக் கொடுத்தார்கள். அந்தக் கவிதையில்

Page 47
88 இலங்கையில் ஒரு வாரம்
* கள்வனின் காதலி ‘யான கல்யாணி முதல் பல கதாநாயகிகளும் கதாநாயகர்களும் பவனி வந்தார் கள். இதிலிருந்து தாய் நாட்டிலிருந்து போகும் பத்திரிகைகள் - புத்தகங்களைப் பருத்தித்துறைத் தமிழ் அன்பர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் படித்து மகிழ்ந்தார்கள் என்பது தெரியவந்தது. வரவேற்பு முடிந்ததும் திரு ஏரம்பமூர்த்தி எங்கள் அருகில் வந்து 'நீங்கள் பேசவேண்டியதில்லை!" என்ற பல்லவியைப் பாடினர். ' நாங்கள் ஏதாவது பேசாவிட்டால் இந்த ஊர் ரசிகர்கள் எங்களே ஊமையென்று நினைத்துக் கொள்ள மாட்டார்களா ?" என்றேன்.
* அதனுல் பாதகமில்லை. இந்த நேரத்தில் இவ்வளவு பேர் வந்து கூடியதே பெரிய காரியம். மேலும் இவர்களேச் சோதிக்கக்கூடாது !” என்ருர், * இந்த நேரத்தில் இந்த ஊர்க்காரர்கள் சாதா ரணமாக என்ன செய்வது வழக்கம் ?" என்று கேட்டேன்.
" மத்தியான உணவுக்குப் பிறகு சற்றுக் கண்
ணயருவார்கள் !" என்ருர்,
* அப்படியானல், இங்கேயே கண்ணயரட்டும் ! நாங்கள் பேசியே தீருவோம் !" என்று சொல்லிவிட்டு பூரீ தூரனும் நானும் ஒரு மணி நேரத்துக்கு மேலே வெளுத்துக் கட்டினுேம். பருத்தித்துறை வாசி களின் உச்சிப்பகல் உறக்கத்தை அன்று குட்டிச் சுவராக்கிவிட்டோம் !
மறுநாள் மாலை யாழ்ப்பாணத்தில் நாங்கள் விமான மேறியபோது திரு ஏரம்பமூர்த்தியும் அவ ருடைய நண்பர்களும் வந்திருந்தார்கள். திரு எரம்ப மூர்த்தி என்னிடம் அந்தரங்கமாக 'ஊருக்குப் போன

கல்கி 89
பிறகு தங்கள் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்!” என்ருர்,
* அவசியம் கவனித்துக் கொள்ளுகிறேன். ஆனல், மறுமுறை இலங்கை வரும்போது பருத்தித் துறைக்கு வந்து பேசட்டுமா ? இப்பொழுதே சொல்லிவிடுங்கள் ' என்று கேட்டேன்.
1 பேசுங்கள் ; பேசுங்கள். விரியான சொற். பொழிவும் ஆற்றுங்கள்!” என்று திரு ஏரம்பமூர்த்தி அலறிஞர்.
இப்படிச் சொன்னல் நான் பேசாமலிருப்பேன் என்று அவருக்கு எண்ணம் போலிருக்கிறது !
பார்க்கலாம் ஒருகை !
0
இந்த இலங்கைக் கட்டுரைகளுக்கு மங்களம்பாட வேண்டிய கட்டம் நெருங்கிவிட்டது. இவை உலகெங்கும் பெருங்கிளர்ச்சியை உண்டாக்கி யிருக் கின்றன. கொரியா யுத்தம் குறுக்கிட்டிராவிட்டால், պ. 676ծr. 8թ. சபையில்கூட இக்கட்டுரைகளை கிறுத்துவது பற்றி விவாதித்திருப்பார்கள் ! புது டில்லியிலுள்ள ஒரு தமிழன்பருக்கு இக்கட்டுரைகள், கவி பாட வேன்டிய அவசியத்தைக் கூட உண்டாக்கி விட்டன. அறு சீர்களில் நெடில், ஆசிரியக் கலித் தொகை, வெண்பா, விருத்தம் தன்னில் ஐந்து விருத் தங்கள் அவர் பாடி அனுப்பியிருக்கிருர், அவ்விருத் தங்களில் மாதிரிக்கு இரண்டு வரிகளைக்கேளுங்கள்:-
" இடறி விழும் விஷயம் பற்றி இரண்டு பக்கம் வரைந்துள்ளீர்கள் இடறி விழுந்தால் இவ்வூரில்
இதைப் பற்றி எங்கும் பேச்சு 1"

Page 48
90 இலங்கையில் ஒரு வாரம்
கட்டுரைகளே முடித்தே தீரவேண்டிய அவசியம் இப்போது தெளிவாய்ப் புலனுகிறதல்லவா ? முடிப்ப தற்கு முன்னுல் யாழ்ப்பாணத்தில் நாங்கள் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லி விடுகிறேன்.
* இலங்கையில் உள்ள தமிழ்ப் பிரமுகர்களுக்குள் பூரீ க. கனகரத்தினம் என்று ஒருவர் உண்டு. இவர் இலங்கை அரசாங்கத்தில் பெரிய உத்தியோகம் வகித் தவர். சில காலத்துக்கு முன்பு உத்தியோகத்தை விட்டு விலகி அரசியலில் பிரவேசித்தார். இலங்கைப் பார்லிமெண்டில் அங்கத்தினர் ஆனர். தற்சமயம் இலங்கை சர்க்கார் கல்வி இலாகாவின் பார்லி மெண்டரி காரியதரிசியாக இருந்து வருகிருர்,
தமிழிலும் தமிழிசையிலும் பூரீ கனகரத்தினம் கொண்டுள்ள பேரபிமானம் இவருக்கும் தமிழ் காட்டுக்குமுள்ள சொந்தத்தை வளர்த்து வந்தது. சென்னையில் நடந்த முதலாவது தமிழிசை மகா நாட்டுக்கு வந்திருந்து கலந்து கொண்டார். பிறகு, அநேகமாக ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் இவரை ஸெண்ட்மேரீஸ் மண்டபத்தில் நடைபெறும் தமிழி  ைச க் கச்சேரிகளில் கண்டிருக்கிறேன். இவருடன் இவருடைய புதல்வியும் மருகரும் கூடத் தவருமல் வ்ருவார்கள்.
இவ்வருஷம் மே மாதத்தில் கோவையில் நடை பெற்ற தமிழ் வளர்ச்சிக்கழக விழாவிற்கு இவர் விஜயம் செய்து, அடுத்த தமிழ் விழாவை இலங் கையில் நடத்துமாறு அழைத்தார். "கஞ்சிவரதப்பா!” என்று கேட்டதும் ' எங்கே வரதப்பா ?" என்று விழுந்தோடிய பக்தனைப்போல் தமிழ் வளர்ச்சிக்

கல்கி 91.
கழகத்தாரும் பூரீ கனகரத்தினத்தின் அழைப்பை ஒப்புக் கொள்ளத் தீர்மானித்தார்கள்.
இந்தச் செய்தி அறிந்ததும் பூரீ கனகரத்தினம் குதூகலம் அடைந்தார். இலங்கையில் உள்ள தமிழன்பர்கள் எல்லாருடைய கூட்டுறவையும் பெற்றுத் தமிழ் விழாவைப் பிரமாதமாக நடத்துவ தென்று ар)-5) செய்தார். பூரீ அாரனும் நானும் போயிருந்த சமயத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு பூர்வாங்கக் கூட்டம் கூட்டினர். பூரீ கனகரத்தினத்தின் அழைப்பை ஏற்றுப் பல அரசியல் கட்சிகளேச் சேர்ந்த பிரமுகர்களும் அரசியலில் அவ்வளவாகக் கலந்து கொள்ளாத தமிழன்பர்களும் விஜயம் செய் திருந்தார்கள். ஆனலும் இக்கூட்டத்தில் என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலை எல்லாருடைய மனதிலும் குடி கொண்டது.
கூட்டத்தின் ஆரம்பத்தில், இந்தப் பூர்வாங்கக் கூட்டத்துக்கு பூரீ எஸ். நடேசன் அவர்களே பூரீ கனக ரத்தினம் தலைவராகப் பிரேரேபித்ததும் மேற்கூறிய கவலை அநேகமாக விட்டுவிட்டது. அனைவருடைய முகங்களும் மலர்ந்தன.
விஷயம் என்னவென்றல், பூரீ கனகரத்தினம் அரசியல் துறையில் பூரீ பொன்னம்பலம் கட்சியைச் சேர்ந்தவர். பூரீ எஸ். நடேசன் அவர்கள் அக்கட்சிக்கு மாறுபட்டவர். சென்ற தேர்தலில் கின்று தோற்றுப் போனவர்தான். ஆயினும் யாழ்ப்பாணத் தமிழர் சமூகத்தில் பூரீ எஸ். நடேசனுக்கு விசேஷ மரியாதை உண்டு.
இலங்கையின் முடிசூடா மன்னராக விளங்கிய ஸர் பொன்னம்பலம் ராமநாதனின் மருகர் பூரீ எஸ்.

Page 49
92 இலங்கையில் ஒரு வாரம்
நடேசன் பரமேசுவரக் கல்லூரியின் தலைவர். தாய் நாடாகிய தமிழ் நாட்டுக்கும் சேய் நாடாகிய வடக்கு இலங்கைக்கும நீடித்துள்ள தொடர்பிலிருந்து விளைந்த பண்பாட்டின் கனிந்த பழம் என்று பூரீ எஸ். நடேசன் அவர்களேச் சொல்லுவது பொருந்தும். ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல பாண்டித்தியம் வாய்ந்தவர். தமிழ்நாட்டு, ஈழநாட்டுப் பழைய சரித் திரங்களே ஒப்பிட்டுச் சிறந்த ஆராய்ச்சி செய்து பல உண்மைகளேக் கண்டு வைத்திருப்பவர். தமிழிலக் கியம், தமிழ்க் கலைகள் சம்பந்தமாக இலங்கையில் நடைபெறும் எல்லா முயற்சிகளிலும் பூரீ எஸ். நடேசன் அவர்களுக்கு முக்கியமான பங்கு உண்டு.
அரசியல் துறையிலாகட்டும், மற்ற எந்தத் துறையிலாகட்டும், தமிழ் மக்களிடையே ஏற்படும் வேற்றுமைகளேக் கடந்து தமிழ் மக்களே ஒன்று சேர்த்து ஒருமைப்பாட்டை கிலை நாட்டக்கூடிய சக்தி தமிழுக்கு உண்டு என்பது என்னுடைய தீர்ந்த கருத்து. இதற்கு ஒரு அத்தாட்சி யாழ்ப்பாணத் திலும் கிடைத்ததுபற்றி நானும் குதூகலமடைந் தேன்.
ஆனல் எங்களுடைய குதூகலத்தைக் கொஞ்சம் குறைப்பது என்று கங்கணங் கட்டிக்கொண்டு நண்பர் திரு. அம்பிகைபாகன் எழுந்து நின்ருர், அவர் திருவாரூரில் நடந்த தமிழ் விழாவுக்கு வந்திருந் தவர். எனவே, அவர் ஓர் எச்சரிக்கை விடுத்தார். தமிழ் விழா நடத்துவது என்ருல் எளிதில்லை. அதற்குப் பணம் வேண்டும், பிரயத்தனம் வேண்டும், பலருடைய கூட்டுறவு வேண்டும்; ஊக்கம், உற்சாகம், ஆள்கட்டு வேண்டும். இருபது, முப்பதியிைரம் ரூபாய் வரையில் செலவு ஆகும். இதெல்லாம்

கல்கி 93
நம்மால் ஆகக்கூடிய காரியமா? யோசித்து முடிவு செய்யுங்கள் !" என்ருர்,
இதற்குத் தகுந்த பதில் கூறினர் பூரீ காராள என்னும் சிங்கம் அன்பர். " இந்த ஈழ நாட்டில் பெண் களுக்கு வரதட்சணை கொடுத்துக் கல்யாணம் செய்து கொடுப்பதற்குச் சில தமிழர்கள் ஒரு லட்சம் ரூபாயும் அதற்கு மேலும் செலவு செய்கிருர்கள் ! அப்படி யிருக்கும்போது, நமது தமிழ்த்தாயை இங்கு அழைத்து உபசரிப்பதற்கு எல்லாத் தமிழர்களும் சேர்ந்து ஒரு முப்பதினுயிரம் ரூபாய் கொடுக்க முடியாதா ? முடியும். இப்படிப்பட்ட சிறந்த திருப் பணிக்கு இக்காட்டில் பணம் சேராது என்று சந்தேகிப்பதே அவமானமான காரியம் 1 விழாவை 5டத்தியே ஆகவேண்டும் !" என்று காராளசிங்கம் கர்ஜித்தார்.
இதைத் தழுவியே மற்றும் சில நண்பர்களும் பேசினர்கள். கடைசியாக, தமிழ் விழாவை யாழ்ப் பாணத்தில் வருகிற 1951 மார்ச்சு அல்லது ஏப்ரல் மாதத்தில் நடத்துவதென்று ஏகமனதாகத் தீர்மா னிக்கப்பட்டது. பெரிய வரவேற்புக் கழகம் நியமிக்கும் வரையில் பூர்வாங்க முயற்சிகளேத் செய்வதற்கென்று அங்கு வந்திருந்தவர்கள் எல்லாரையும் கொண்ட ஒருகுழு நியமிக்கப்பட்டது. இதற்கு பூரீ எஸ். நடேசன் அவர்களே தலைவராக நியமிக்கப்பட்டார். திரு. முதலியார் சின்னத்தம்பி அவர்களும் திரு. க. நவ ரத்தினம் அவர்களும் காரியதரிசிகளாக நியமனம் பெற்ருர்கள்.
திரு. க. நவரத்தினம் யாழ்ப்பாணத்திலுள்ள தலை சிறந்த கலை அன்பர்களில் ஒருவர். தமிழ்நாட்டுச்

Page 50
94 இலங்கையில் ஒரு வாரம்
சிற்பக் கலையைக் குறித்து ஒரு பெரிய நூல் இயற்றியவர். இவர் காரியதரிசி என்று ஏற்பட்டதும் எழுந்து நின்று, ' இங்குள்ள அன்பர்கள் எல்லாரும் தலைக்குப் பத்து ரூபாய் அங்கத்தினர் சந்தா கொடுத்துவிட்டுப் போகவேனும். அப்போதுதான் வேலை துவங்கலாம் !" என்று சொல்லி, அவவிதமே வசூலிக்கவும் தொடங்கிவிட்டார். " சரியான காரிய தரிசிதான் , தமிழ் விழா யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடக்கும் என்பதில் சந்தேகமில்லை ” என்று நானும் முடிவு செய்து கொண்டேன்.
யாழ்ப்பாணத்தில் வரும் ஆண்டில் நடக்கப் போகும் தமிழ் விழாவின் மூலம் தமிழகத்திலுள்ள இரண்டரைக் கோடித் தமிழர்களுக்கும் ஈழத்திலுள்ள இருபத்திரண்டரை லட்சம் தமிழர்களுக்கும் தொன்று தொட்டுள்ள அண்ணன்-தம்பி உறவு மேலும் வலுவடைந்து ஓங்கும் என்று நம்புகிறேன்.
* என்ன, 8ցամ, இது ? முன்னெல்லாம் பதினைந்து லட்சம் தமிழர் என்று சொல்லிக்கொண்டி ருந்தீரே ! அதற்குள் எப்படி இருபத்திரண்டரை லட்சம் ஆயிற்று ” என்று நேயர்கள் கேட்பது என் காதில் விழுகிறது. பதினேந்து லட்சம் என்பது இலங்கை சர்க்கார் கொடுக்கும் கணக்கு. இப்படி வேண்டுமென்றே குறைத்துச் சொல்லவதாகச் சிலர் கருதுகிறர்கள். இருபத்திரண்டரை லட்சம் என்பது தமிழரசுக் கட்சித் தலைவர் பூரீ செல்வநாயகம் கொடுத்திருக்கும் கணக்கு இந்த இருபத்திரண்டரை லட்சத்தில் இலங்கையில் வாழும் முஸ்லிம் தமிழர் களையும் பூரீ செல்வநாயகம் சேர்த்துக் கொண்டிருக் கிருர், இப்படிச் சேர்த்திருப்பது மிகவும் கியாய

கல்கி 95
LDIT60Tg5! என்பதில் சந்தேகமில்லை. தமிழர்கள் முஸ்லிம்களானலும் தமிழர்கள்தானே ? அவர்க ளுடைய தாய்மொழி அரபு மொழியாகப் போய் விடாதே ! தமிழ் மொழி ஒரு அற்புதமான அரவணைக்கும் மொழி. தன் நீண்ட கருணைக் கரங்களே நீட்டித் தமிழ்த் தாய் தன் எல்லாக் குழந்தைகளையும் அணைத்து ஆசிர்வதிக்கிருள். பழைய காலத்தில் பெளத்த மதத்தைத் தழுவிய தமிழர்கள் தமிழில் சில சிறந்த இலக்கியங்களே இயற்றித் தந்தார்கள். அவ்விதமே சமண மதத்தைச் சேர்ந்த தமிழர்களும் தமிழ்க் காவியங்களே இயற்றி ஞர்கள். சைவர்களும் வைஷ்ணவர்களும் தமிழில் அமுதொழுகும் பாடல்களே அளித்தார்கள். ஏன் ? கிறிஸ்துவர்கள் மட்டும் பின் வாங்கினர்களா இல்லை! அழகிய தமிழில் பூரீ வேதங்ாயகம் பிள்ளே பல சாஹித்யங்களே இயற்றினர். ' ரகஷண்ய யாத்ரீகம்" என்னும் மொழி பெயர்ப்புக் காவியமும் தமிழில் வெளியாகியிருக்கிறது. முஸ்லிம்களில் எத்தனை சிறந்த தமிழ்ப் புலவர்களும் கவிஞர்களும் இருந் திருக்கிருர்கள் ? வள்ளல் சீதக்காதியைப் பற்றியும், சீரு புராணத்தைப் பற்றியும் அறியாதார் யார் ?
தமிழ்த்தாயின் புதல்வர்கள் எந்த மதத்தினரா யிருந்தாலும் எந்த நாட்டில் வசித்தாலும் அவர்கள் 100-க்கு 100 பங்கு அசல் தமிழர்களேயாவர். அவர் களுக்குத் தமிழ் மொழியில் பூரண உரிமை உண்டு. இதை இலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம்கள் பலர் உணர்ந்திருக்கிருர்கள். இல்லாவிடில் ஸாஹிராக் கல்லூரித் தலைவர் ஜனப் ஏ. எம். ஏ. அஸிஸ் அவர்களும் தமிழாசிரியர் ஜனப் கமாலுதீன் அவர்களும் அவ்வளவு லாகவமாகத் தமிழ் மொழி

Page 51
96 இலங்கையில் ஒரு வாரம்
யைக் கையாண்டு எவ்விதம் சரமாரியாகப் பொழிக் திருக்க முடியும் ?
இம்முறை இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் பலர் சொற்பொழிவு ஆற்றியதைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பூரீ எஸ். நடேச பிள்ளை, டாக்டர் கணபதிப் பிள்ளை, பேராசிரியர் அருள்நந்தி, வித்வான் கனகசுந்தரம், வித்வான் க. வேந்தனர், மட்டக் களப்பு திரு. சின்னத்தம்பிப் புலவர், திரு. சிவநாயகம் முதலியவர்கள் ஆற்றல் வாய்ந்த தெய்வத் தமிழ் நடையைக் கையாண்டு சொற்பொழிவு ஆற்றி ஞர்கள். இந்த நண்பர்களுடைய பேச்சுக்களே கேட்டுக் கொண்டிருந்தபோதெல்லாம் எனக்குத் தோன்றியது இதுதான் :-தமிழகத்தில் இப்போதெல்லாம் தமிழ் விழாக்கள் பல நடைபெறுகின்றன. இந்த விழாக் களுக்கு இலங்கையில் உள்ள தமிழ்ப் பெருமக்கள் சிலரையாவது அழைத்துக் கலந்து கொள்ளும் படி செய்யவேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் கடத்தும் தமிழ் விழாக்கள் பூர்த்தி யடைந்ததாகும். ஆம் ; தமிழ் விழாவை வரும் ஆண்டில் இலங்கையில் 5டத்துவதினுல் மட்டும் 15ம்முடைய நோக்கம் ஈடேறிவிடாது. 15ம் நாட்டில் நடைபெறும் தமிழ் விழாக்களுக்கு 15ம் இலங்கைச் சகோதரர்கள் சிலரையும் அழைக்கவேண்டும்.
இதன் மூலம் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் உள்ள நீண்டகால நட்புக்கு எவ்வளவோ நன்மை உண்டு. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அது உறுதுணையாயிருக்கும் என்பதிலும் ஐயமில்லை.


Page 52


Page 53
இந்திய அர
ள்ள சாகித்
இவ்வாண்டு ப
罹
பாரதி ட
தியாகராயநகரம்
 

ྋ་
ய அக் காடமியில்
சாங்க சார்பில்
ரிசு பெற்ற நூல்.
|-----*「!