கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவழியா நாட்கள்

Page 1


Page 2

5്ഞുJച്ചേ
- LUGÕI –
மல்லிகைப் பூந்தல்
201/4 ருநீகதிரேசன் வீதி, கொழும்பு - 13.
தொலைபேசி: 2320721

Page 3
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு :
முதற் பதிப்பு
ji6O) LD-פ
பக்கங்கள்
6fl6o6o
அட்டைப்பட வடிவமைப்பு :
அட்டை அச்சமைப்பு
கணினி அச்சமைப்பு
ISBN
LDrritë 2009
ஆசிரியருக்கே
Xiv + 90
50/-
(3LDLD631 assi
Happy Digital
எஸ். லிகோரின் றோசி
978-955-8250-43-3
அச்சிட்டோர் : Lakshmi Printers 103A, விவேகானந்தா மேடு, கொழும்பு 13.

சில நிமிடங்கள் பேசுகின்றேனே.
முதலில் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். நான் ஒரு எழுத்தாளன் அல்லன். வாசகன். வாசித்ததைப் பகிர்ந்து கொள்பவன். இன்னும் சொல்வதானால், முன்னொரு காலத்தில்., எழுபதுகளில் எழுதினேன். சிறுகதை ஜாம்பவான்களான செ.கதிர்காமநாதன், அங்கையன் கயிலாயநாதன், செ.யோகநாதன் போன்றவர்கள் எழுதிக்கொண்டிருந்த காலத்தில், இடையே பேனாவும் எழுத்தும் உத்தியோகத்துடன் மட்டுப்படலாயிற்று.
இப்போது ஏன் இந்தத் தொடர்? சுலபமாக விடை சொல்ல முடியாத கேள்வி இது.
பாரதியில் தொடங்கி. படிப்படியாகக் கவிதைகளில் செய்யப்பட்ட பரிசோதனை முயற்சிகளால் இன்று எமக்குப் புதுக் கவிதை கிடைத்திருக்கின்றது. இன்றைய புதுக்கவிதை பல சமயங்களில் கட்டுரையாகவும், சில சமயங்களில் நல்ல கவிதையாகவும் பரிணமித்து எமக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது.
ஆங்கில இலக்கியத்தில் இருந்துதான் சிறுகதை, நாவல் ஆகிய வடிவங்கள் தமிழுக்குக் கிடைத்தன. ஆனால், கவிதையில் கிடைத்த புதிய வடிவம் போன்ற ஒன்று தமிழில் நாவல், சிறுகதை ஏன் கட்டுரையிலும் உருவாகவில்லை.
நண்பர் கே.எஸ்.சிவகுமாரன் அடிக்கடி குறைபட்டுக் கொள்வார். சமகால ஆங்கில இலக்கியங்களில் காணப்படும் உருமாற்றம், வீச்சு என்பன தமிழில் இல்லையே! என்று. ஊன்றிக் கவனிக்கையில் அது gift 6istop UGalgópg). Readers Digest, National Geographic Magazine முதலிய ஆங்கில மாதாந்த சஞ்சிகைகளில் வரும் கட்டுரைகளைப் படிக்கும் போது ஒரு நல்ல சிறுகதையையோ, நாவலையோ படிக்கும் உணர்வே ஏற்படுகின்றது. மாறாகத் தமிழ்ச் சிறுகதைகள் பல, கட்டுரை வரிசையில் சேர்க்கப்பட வேண்டி உள்ளன.
iii

Page 4
அவ்வாறே, ஆங்கில மொழியிலான சிறுகதை, கட்டுரை போன்றவற்றின் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் ஏனோ தமிழ்மொழியை இன்னமும் வந்தடைந்ததாகத் தெரியவில்லை.
அந்த ஏக்கம்தான் நினைவழியா நாட்கள் தொடரை எழுதத் தூண்டியது. 'மல்லிகை"யில் தொடராக வெளிவந்தபோதே இது கட்டுரையா, கதையா என்று தர்க்கிக்கப்பட்டது. இது எதில் அடங்கும் என்று தெரியவில்லை. ஆனால், உருவ மாற்றமொன்றை விழைகின்ற எழுத்தாக அமைய வேண்டுமென்றுதான் நான் விரும்பினேன்.
செங்கை ஆழியானின் 'அக்கா, உடுவை தில்லைநடராஜாவின் அப்பா போன்றவையும் சாதாரண உரு அமைப்பில் இருந்து மாறுபட்டவையே. ஏன், சாந்தன், உமா வரதராஜன், நீர்வை பொன்னையன் (வேறு பலரும் உளர்) ஆகியோரின் சிறுகதைகள் சிலவும் வடிவம் தாண்டி அமைந்தவையே. மு. தளையசிங்கம், பேராசிரியர் சிவசேகரம், கம்பவாரிதி ஜெயராஜ், ந. இரவீந்திரன் ஆகியவர்களின் கட்டுரைகளின் வடிவமும் சாதாரண வடிவத்தில் இருந்து வேறுபடுவதை நாம் அவதானிக்கலாம்.
ஒரு சுவையான விடயம் என்னவென்றால் மேலே குறிப்பிடப்பட்ட யாவருமே, இலக்கியம், அரசியல், சமுதாயம் பற்றி தமக்குள்ளே ஒன்றுபடாது வேறுபட்டு விமர்சிப்பவர்கள், எழுதுபவர்கள். ஆனாலும், புதிய, வித்தியாசமான எழுத்து வடிவத்தைத் தருவதில் ஒன்றுபடுகின்றனர்.
முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொருவர்தான் எம்மவரான அ.முத்துலிங்கம், அவரின் சிறுகதை, கட்டுரை, நேர் கானல் யாவுமே புதிய வடிவத்தில், புதிய பார்வையுடன் அமைந் திருக்கும். சமகால எழுத்தாளர்கள் பலருக்குக் கிடைக்காத பரந்துபட்ட உலக அநுபவமும், அவரின் ஆங்கிலப் புலமையும், விரிந்த வாசிப்பும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அப்படி வித்தியாசமானதாக எழுத்து அமைய வேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடே
நினைவழியா நாட்கள்.
சிறுகதை எழுதும் பாணியில் சாந்தனும், திறனாய்வில் மறைந்த
இலக்கிய இரசிகர் திரு. இ.இரத்தினமும் என்னை மிகவும் பாதித்த iv

வர்கள். சிறுகதை 'சிறுகதையாகவே இருக்க வேண்டும், குறுநாவலாகி விடக்கூடாது என்பதில் திரு. இரத்தினத்திற்கு இருந்த பெருவிருப்பு எனக்கும் உண்டு. எழுத்தில் தேவையற்ற சொற்களோ, வசனங்களோ இருக்கவே கூடாது என்பதில் கண்டிப்பானவர் திரு.இரத்தினம். அதனால் தானோ என்னவோ இத்தொடரில் உள்ள அனைத்தும் சிறியனவாகவே அமைந்து விட்டன.
இத்தொடரில் வரும் பாத்திரங்கள், சதையும் இரத்தமும் உள்ள உண்மையான மனிதர்கள்தாம். பலர் புலம்பெயர்ந்து விட்டாலும், சிலர் இன்னமும் நம் நாட்டிலேயே வாழ்ந்து வருகின்றனர். தொடரை ஆரம்பித்த போது ஒரு தயக்கம் இருந்தது. சம்பந்தப்பட்டவர்களின் மனதைப் புண்படுத்தி விடுவேனோ? என்று எழுதியவர் யாரென்று அறியாமலே சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த விமர்சனங்கள் தொடர்ந்தும் எழுத வைத்தன.
‘எலி வால் நாயகன் லோகன், மேற்குலக நாடொன்றில் வாழ்ந்து வருகின்றான். பள்ளிப் படிப்பில் எப்படியிருந்தாலும் வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறியவன், அவன். எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் சமாளிக்கும் திறன் சிறுவயதிலேயே அவனிடம் இயல்பாகவே இருந்தது.
"மந்திரவாதி தங்கவேல், எங்கே இருக்கிறான் என்றே தெரிய வில்லை. ஐந்தாம் வகுப்பின் பின், நான் பாடசாலை மாறியதுடன் அவனுடனான தொடர்பு விடுபட்டுப் போயிற்று. ஆனால், அவனையும், நீதவான் வீட்டு நாயையும் இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை. நாய் உயிருடன் இருக்க மாட்டாது என்று தெரிந்திருந்தும், இன்றும் கூட அந்த ஒழுங்கையில் என் கண்கள் தேடுவது அந்த நாயைத்தான்.
ரெக்னிக்கலாக கோழி பிடிக்கக் கற்றுத் தந்த ராசன்' பற்றி இப்போது மூச்சுவிட முடியாது. அப்படிப் பெரிய ஆளாக அவன் மாறி விட்டான். அன்றைய சந்தோஷங்கள்தான், அவசரப்பட்டு, எரிச்சல்பட்டு ஓடிக்கொண்டிருக்கின்ற இன்றைய வாழ்க்கையைக் கொஞ்சமாவது இளைப்பாற்றுகின்றன. இனிமையாக்குகின்றன.
"சிரமதானம் நமசிவாயத்தார் ஒரு வித்தியாசமான மனிதர். கோட்பாடுகள் எதையும் பின்பற்றாமலே சமயம், சமுதாயம் ஆகிய

Page 5
ஆண்டும்
இரண்டுக்கும் இடையே நிலவுகின்ற முரண்பாடுகளைத் தன்னளவில் சுலபமாகத் தீர்த்துக் கொண்ட மனிதர். கோயில் வழிபாட்டோடும், நிர்வாகத்தோடும் சம்பந்தப்படாமலேயே சமூகத் தொண்டாற்றியவர். அவர் வைத்த மரங்கள் அந்த யுத்த பூமியில் செழிப்பாக வளர்ந்து விருட்சமாகி இன்றுகூடப் பயன் தருகின்றன.
எல்லாத் தொடரிலுமே ஒரு வாழ்வியல் யதார்த்தம் பொதிந் திருக்கிறது. இவை பற்றி அடிக்கடி டொமினிக் ஜீவாவுடன் பேசிக் கொண்டிருப்பேன். எழுதும், எழுதும் என்று என்னை எழுதத் தூண்டியவர், அவர்தான். எழுதுவதற்கு மெத்தச் சோம்பல்படுபவன், நான். சுண்டி இழுத்து, தட்டிக் கொடுத்து என்னை எழுத வைத்தவர் ஜீவாதான். இப்போது இந்நூல் "மல்லிகைப் பந்தல் வெளியீடாக வருவதற்கும் அவர்தான் காரண கர்த்தா, அவருக்கு என் நன்றிகள்,
பேராசிரியரும், நண்பருமான திரு. சிலலிங்கராசா இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். அவருக்கும் எனது நன்றிகள்.
முக்கியமாக இன்னொன்று சொல்ல வேண்டும். எனக்கு நிரந்தரமான வாசகர்கள் இருவர் எப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் என் இளைய மகனும், மனைவியும்தான். அவர்களின் முகமே என் எழுத்தின் தரத்தைச் சொல்லிவிடும். என் மகனின் கருத்துப்படி இந்தத் தொடரில் உள்ள சில சகிக்க முடியாதவை. பாடசாலை நாட்களில் திறமான கையெழுத்திற்காகப் பலமுறை பிரம்பால் பாராட்டுப் பெற்றவன், நான். அப்படிப்பட்ட கையெழுத்தை அழகாகப் பிரதி பண்ணித் தந்தவர், என் மனைவி. அவருக்கும் என் நன்றிகள்.
இதுவரை எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இனி, இந்நூல் வாயிலாக எனது எழுத்துக்கள் - மாற்றத்தை நாடும் ஒரு வாசகனின் எழுத்துக்களாக - உங்களுடன் பேசட்டும்.
"பரன்" இல, 40, லில்லி அவனியூ
தொலைபேசி : 01:12508170
கொழும்பு 06.
மின்னஞ்சல் : murugesuthaya baran@yahoo.com vi

அணிந்துரை
- பேதலி.ர். லெலெSwanan
மல்லிகை இதழ் எனது கைக்குக் கிடைத் ததும் நான் முதலில் வாசிப்பது 'பரன் எழுதும்
'நினைவழியா நாட்கள்' என்னும் தொடரையே.
இந்தப் பரன் யார்? என்பதை அறியவேண்டுமென்று அவாவுற்றேன். அண்மையிலேதான் பரன் என்பவர் தயா பரனே என்று அறிந்து கொண்டேன். மகிழ்ந்தேன்.
'நினைவழியா நாட்கள் தொடரில் இடம்பெற்ற சம்பவங்கள் எனது இளமை நினைவுகளோடும் மிக நெருக்கமான உறவினைக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்துக் கிராமிய வாழ்வினூடு வளர்ந்த ஒருவர், 'அசை போடும் விடயங்களாக இவை எனக்குத் தெரிந்தன. ஓர் இலக்கியப் படைப்பினுள் வாசகன் தன்னையும் கண்டுகொள்ளும் போது அந்தப் படைப்பு மகத்தான வெற்றியைத் தன தாக்கிக் கொள்கின்றது. இத்தொடரை வாசித்த பலருக்கும் இவ்வனுபவம் ஏற்பட்டிருக்கும்.
நினைவழியா நாட்கள் என்னும் தொடர் ஒரு வகையிலே சிறுகதை போலவும், புனைவு சார்ந்த எழுத்துப் போலவும் தென்படுகின்ற அதே வேளையில், வாழ்க்கைச் சம்பவங்களைச் சுவை
Vii

Page 6
யாகச் சுட்டும் ஒரு வித, படைப்பாகவும் அமைந்துள்ளது. தமிழுக்கு வந்த ஒரு புதிய சிறுகதை வடிவம் என இதைக் கொள்ளலாம் போலத் தெரிகிறது.
ஒப்பீட்டு அடிப்படையிலே நோக்கும்போது, இலங்கையில் தமிழ் மொழியிலான வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள் மிகக் குறை வாகவே தோன்றியுள்ளன. இலக்கியவாதிகள், புலமையாளர்கள், அரசியல்வாதிகள், கவிஞர்கள் முதலானோர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளினூடு அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் பதிவாகி புள்ளமையை நாம் கண்டுகொள்ளலாம். நாவலர் தொடக்கம் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை வரை இத்தன்மையை அவதானிக்கலாம்.
பரனின் நினைவழியா நாட்கள் கூட வாழ்க்கைச் சம்பவங்கள்தான். ஆனால், அவை கட்டுரைகள் அல்ல. நல்லதொரு சிறுகதையைப்
படிக்கும் நிறைவைத் தரும் படைப்புகளாக அமைந்துள்ளன.
வாழ்க்கை நினைவுகளை, அழியாத கோலங்களைக் கலை மெருகுடன் வெளியிடும் பொழுது அதில் ஒரு திருப்தியும் மகிழ்ச்சியும் படைப்போனுக்கும் படிப்போனுக்கும் ஏற்படும்.
இளமை நெஞ்சில் ஆழமாகப் பதிந்த சில சம்பவங்களை நடுத்தர வயதைத் தாண்டும் வேளையிலே நினைவு கூர்வதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் இந்த நினைவுகளை இரை மீட்கின்ற போதிலும் அவற்றைக் கலாபூர்வமாக எழுத்திலே பதிவு செய்வதில்லை. இந்த வகையிலும் நினைவழியா நாட்களுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.
வாழ்க்கையில் இளமை, வாலிபம் என்பன திரும்பப் பெற முடியாதன. ஆனால், அந்தப் பருவத்து நினைவுகள் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கும். நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் முதலியவை இளமைத் துடிப்போடு கூடிய இனிய நினைவுகளாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, படிப்பினைகளையும் சொல்லிச் செல்கின்றன. உதாரணமாக நாய்க்கு வாய் கட்டும் மந்திரம்' என்ற அத்தியாயத்தைச் சுட்டிக் காட்டலாம்.
Viii

கிராமத்து வாழ்வியலை அழியாத கோலங்களாக வரைந்த பரன், வேகமும் பரபரப்பும் நிறைந்த நகரத்துப் பண்பாட்டையும் படம் பிடித்துக் காட்டத் தவறவில்லை.
நினைவழியா நாட்களில் இடம்பெறும் ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு செய்தியைச் செம்மையாகச் சொல்லிச் செல்கின்றது. ஒருவரின் ஆளுமை விருத்தியின் அத்திவாரம் இளமையிலேயே இடப் படுகின்றது என்ற செய்தியையும் இப்படைப்பினுTடு அறிந்துகொள்ள முடிகின்றது. சமூக, பொருளாதார, பண்பாட்டு விழுமியங்களின் பலமும் பலவீனமும் ஏதோ ஒருவகையில் ஏதோ ஒரு அளவில் இங்கு பதிவாகி ឃុ616T60.
சொல்லும் விடயத்தைச் சுவைபடச் சொல்லும் மொழியாற்றல் பரனுக்கு நிறையவே கைகொடுத்திருக்கின்றது. இலேசான ஒரு நகைச்சுவை பரவியும் விரவியும் இடம்பெற்றுள்ளமை, கவனிப்புக்கும் இரசனைக்கும் உரியது. வாசகனை ஈர்க்கும் வகையிலே இடமறிந்து
அளவறிந்து நகைச்சுவையைக் கையாண்டுள்ளார்.
கருத்து நிலையில் மாத்திரமன்றிக் கட்புல நிலையிலும் பரனது
வாக்கிய அமைப்பு வசீகரிக்கின்றது.
படித்துப் பாருங்களேன்.
g60១៩២១លកំ,
தமிழ்த்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
2.02.2009

Page 7
பதிப்புரை :
எழுத்தாளன் ஒருவனது vேனா குனில்பும் vோது, சானுடம் தன்னைத் தானே
நீசீர்த்திக் கொள்ளுகின்றது
- டொலியில் ஜீan
பரன் தொடராக எழுதி வந்த நினைவழியா நாட்கள்' என்ற இந்தக் கட்டுரைத் தொடர் மல்லிகை இதழில் ஆரம்பித்த காலத்திலேயே பலராலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த ஒரு கட்டுரைத் தொடர்தான்.
நினைவழியா நாட்கள்' என்ற இந்தக் கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து எழுதி வரும் இந்தப் பரன் என்பவர் யார்? என இலக்கியச் சுவைஞர்கள் பலர், தொலைபேசி மூலமும், கடிதங்கள் வாயிலாகவும் அடிக்கடி என்னை விசாரித்து வந்தனர்.
நானும் ஒரு முதிர்ச்சியுள்ள சஞ்சிகைக்காரனது பந்தாவுடன் எனக்குக்கூட, அவரது உண்மைப் பெயர் தெரியாது!" என என்னை விசாரித்தவர்களுக்குச் சொல்லி வந்தேன்.
கட்டுரை எழுத ஒப்புக்கொண்ட காலகட்டத்தில் நண்பர் தயாபரன் என்னைக் கேட்டுக் கொண்ட உறுதிமொழி ஒன்றுதான். எக் காரணத்தைக் கொண்டும் இந்தத் தொடரில் எழுதிவரும் என்னுடைய பெயர் வெளியே தெரியவரக்கூடாது என்பதுதான்.
நானும் அவருக்குக் கொடுத்த வாக்குறுதியை இறுதிவரை பாதுகாத்து வந்துள்ளேன்.

இந்தப் படைப்பு சிறுகதையுமல்ல, கட்டுரையுமல்ல, கவிதையுமல்ல. இது இலக்கியத்தில் புதியதொரு உருவம் - வடிவம். இந்த உருவமும் உள்ளடக்கமும் நண்பருக்கு நன்கு கைவந்துள்ளதை ஆரம்பகாலக் கட்டுரைகளில் இருந்தே நான் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.
இக்கட்டுரைகள் எழுத்து வடிவத்தில் பிரசுரத்திற்கு வந்த உடனேயே, நான் ஆறுதலாக நேரமெடுத்திருந்து முழுவதையும் கையெழுத்துப் பிரதியிலேயே படித்துப் பார்த்து விடுவேன்.
இந்த உருவம் அல்லது வடிவம் தமிழுக்குப் புதுசு, ஆங்கிலத்திலும் மற்றும் வளர்ச்சி பெற்றுள்ள உலக மொழிகளிலும் இன்று இந்த எழுத்து உத்தி பிரபலமாகப் பேசப்பட்டுக் கொண்டுதாணிருக்கிறது.
ஆனால், தமிழுக்கு இது புதுசு.
இத்தகைய எழுத்து உள்ளடக்கங்கள் ஒவ்வொருவரது சுய வாழ்க்கையிலும் நடந்துதான் இருக்கின்றன. ஆனால், இந்தச் சுய அநுபவத்தை நம்மில் பலர் எழுத்தில் பதிய வைக்க மறந்து விடுகின்றோம். - படைப்பாளிகள் உட்பட
பரனின் எழுத்து வெற்றி என்னவென்றால், அவர் தனது இந்தச் சின்னச் சின்னச் சுவையான வாழ்க்கை நிகழ்ச்சி அநுபவங்களைத்
தனக்கேயுரிய எழுத்துநடையில் பதிவு செய்து வைத்துள்ளதுதான்.
எனது சொந்த எழுத்து வாழ்க்கையில் கூட, எத்தனையோ ரஸமான சம்பவங்கள் - அநுபவங்கள்.
பலவற்றைப் பதிவு செய்து, எழுத்தில் கூட வடித்து வைத்திருக்கின்றேன்.
இளவயகக் காலத்து ரசனை செறிந்த அநுபவங்கள், சம்பவங்கள், நிகழ்ச்சிகள் நினைக்க நினைக்க இனிப்பானவை - சுவையானவை.
பலருக்கு தங்கள் தங்களது வாழ்வில் இடையிடையே ஏற்பட்ட சிறு சிறு நிகழ்ச்சிகளைச் சுவைபட எழுத்தில் வடித்து வைக்கத் தெரிந்திருப்பதில்லை.
xi

Page 8
என் வாழ்வில் இளமைக் காலத்திலும் இத்தகைய சுவையான, இன்றுகூட நினைத்து நினைத்துச் சிரிக்கக்கூடிய சம்பவங்கள் இடம் பெறாமலுமில்லை. இந்தச் சம்பவங்களை அல்லது சிறு நிகழ்ச்சிகளை எழுத்தில் பதிய வைத்து ஆவணப்படுத்த முனையும்போது, எக்காரணத்தைக் கொண்டும் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களின் மனசு புண்பட்டுவிடக் கூடாது. அவர்களும் நம்முடன் சேர்ந்து சிரிக்கக் கூடியதாக அந்த நகைச்சுவைச் சம்பவங்கள் எழுத்தில் பதியப்பட்டிருக்க வேண்டும். இதில் மிகக் கவனமும் அக்கறையும் அடிப்படைத் தேவையாக இருக்க வேண்டும்.
என் இளமைக்கால வயதில், நாங்கள் நம்பும் கொள்கையைப் பிரசாரப்படுத்தும் அமைப்புகளுக்கு சுவரொட்டிகளை இரவிரவாக நகரத்தின் வீதிகளில் ஒட்டப்போவது வழக்கம், நடு இரவானதும், ஊர் அடங்கியதும் நாங்கள் இளைஞர்கள் இரண்டு மூன்று பேராகச் சேர்ந்து சைக்கிளில் புறப்பட்டுச் செல்வோம்.
இப்படித் தெருத் தெருவாகச் சுவரொட்டிகளை ஒட்டிவந்த சமயத்தில் உடல் தேவைக்காகத் தெருவோரம் ஒதுங்க வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டது, எனக்கு.
நான் சைக்கிளை ஒருபக்கம் நிறுத்திவிட்டு வேலியோரம் ஒதுங் கினேன். அது ஒரு தெருவோரக் குடிசை வீடு, சிறுவெளிச்சம் தெரிந்தது. கணவன் - மனைவியாக இருக்க வேண்டும். அவர்கள் கதைத்துக் கொண்டிருந்தது மெதுவாக எனக்குக் கேட்டது. பக்கத்தே தகரப்படலை,
என் குறும்புத்தனம் விழித்துக் கொண்டது.
படலையை விரலால் மூன்று தடவை உரக்கத் தட்டினேன். 'வீட்டுக்காரர். வீட்டுக்காரர். வீட்டுக்காரர்." என மூன்று தடவைகள் உச்சரித்தேன். இடைவிட்டுத் தொடர்ந்து கொஞ்சம் சுண்ணாம்பு தாஹீங்களா..? கொஞ்சம் சுண்ணாம்பு தாஹீங்களா..? கொஞ்சம் சுண்ணாம்பு தாறிங்களா..? என அடித்தொண்டைக்குள் குரலை அம்மி வைத்துக் கொண்டு, குரல் கொடுத்தேன்.
"பட்டென்று விளக்கு ஊதி நூர்க்கப்பட்டது.
பேச்சுச் சத்தம் சட்டென்று நின்றுவிடுகிறது.
xii

அடுத்த நாள் அந்த அயலெங்கும் நடுச்சாமத்தில் வந்து சுண்ணாம்பு கேட்ட கொள்ளிவாய்ப் பிசாசின் கதைதான் கதை கதையாகப் பேசப்பட்டிருக்கும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
இப்படி நிறைய நிறையச் சம்பவங்களைக் கதை போலச்
சொல்லலாம். படிப்பவர்களுக்கும் சுவையாக இருக்கும்.
ஏன் உங்களது ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் நினைத்துப் பார்த் தால் எத்தனையோ சம்பவங்களை, இன்று நினைத்துப் பார்த்தாலும் கூட, மனசிற்குள் சிரித்து மகிழக்கூடிய தொட்டம் தொட்டமான
சுவையான நிகழ்ச்சிகளைக்கூட, நினைவு கூரலாம்.
இந்தத் தொடரில் "எலிவால் என்றொரு கட்டுரை இடம் பெற்றுள்ளது. படித்துப் பாருங்கள்.
அந்த மாணவப் பருவத்தில் அந்த இளம் மாணவர்களின் சிந்தனை ஒட்டம், அந்தச் சிந்திக்கும் சுறுசுறுப்பு, தங்களது தேவை கருதி, அவர்கள் எடுக்கும் விசித்திர முடிவு. உண்மையாகச் சொல்லுகின்றேன், அந்தக் காலகட்டத்தில் அந்த இளம் மாணவர்களில் நானும் ஒருவனாக இருக்கவில்லையே! என்ற ஏக்கத்தைத்தான் என் நெஞ்சு முழுவதும் படர வைத்தது, அந்தக் கட்டுரையை ஊன்றிப் படித்தபோது.
இளமைப் பருவம்தான் எத்தனை அற்புதமானது - விசித்திரமான கற்பனைகளை அடுக்கடுக்காகக் கொண்டது.
சொல்லப் போனால், நான் உங்களது வாசிப்பு ரசனைக்குள் குறுக்கிடக் கூடாது. புகுந்துவிடக் கூடாது.
இருந்தும் என் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியை இந்த இடத்தை விட்டால், வேறொரு இடத்திலும் பதியவைத்துவிட இயலாது.
மத்திய வயது வந்தவர்கள் நம்மை அறியாமலேயே நாம் நமது இளவயதுக் காலத்திற்குள் சஞ்சரித்து வருகின்றோமே! - இதுதான் இந்தப் புதிய எழுத்துக்கு வெற்றி என்று கூறலாம்.
இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சம்பவமும் கதையல்ல,
கற்பனையுமல்ல, வாழ்க்கையின் எதார்த்த உண்மைகள். நிஜமான உண்மைச் சம்பவங்கள்.
Χ111

Page 9
அதனால்தான் போலும் ஒவ்வொரு சம்பவமும் சுவையாக, ரசிக்கத் தக்க அநுபவமாக, நினைக்க நினைக்க நமது இளவயசுக் காலக் குறும்புத்தனங்களை நினைவுபூட்டுவதாக அமைந்துள்ளதை நாம் ரசித்து ரசித்துச் சுவைத்துப் படிக்கின்றோம்.
உண்மையைச் சொல்லுகின்றேனே -
நண்பர் தயாபரனை எனக்கு நீண்ட நெடுங்காலங்களாகவே
தெரியும், நட்புக்கு இனியவர். நம்பகத்தன்மை மிக்கவர்.
அவரது திருமணம் கொழும்பில் நடைபெற்ற சமயம், அத்திருமண வரவேற்பு விழாவில் முக்கியமாகக் கலந்துகொள்ள வேண்டுமென்ற வேணவாவுடன் ஒரு வார இடைவெளியில் கொழும்பு வந்து, விழாவில் கலந்துகொண்டவன், நான்,
நாங்கள் வாழ்வில் பலரிடம் பல கோணங்களில் நட்புகொண்டு பழகி வருகின்றவர்கள்தான். அதிலும் இலக்கியப் பொதுவாழ்வில் நாம் பலருடன் பழக வேண்டிய, அவர்களின் நன்மை தீமைகளில் அவசியம் கலந்துகொள்ள வேண்டிய தேவையும் ஏற்படுவதுண்டு.
அது தவிர்க்க முடியாததும் கூட!
ஆனால், என்னமோ தெரியாது. நண்பர் தயாபரன் என்றாலே என் நெஞ்சு அப்படியே குளிர்ந்துபோய் விடுகின்றது. கனிந்து உருகி விடும். அவரிடம் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் ஏதோவொரு ஆகர்ஷ்ண சக்தி இருப்பது போல, என் மனதிற்குப் படும். அது அவரை நெஞ்சார நேசிப்பதன் மன வெளிப்பாடோ என்னமோ எனக்குத் தெரியாது.
".
23.02.2009
xiv

2. ΩΝ
©႔2©
தங்கவேலுதான் வகுப்பில் பெரியவன். வயது, உயரம் எல்லாவற்றி லும்தான். ஐந்தாம், ஆறாம் வகுப்புப் பொடியள்கூட எங்கள் வகுப்புப் பொடியளிடம் சேட்டை விடமுடியாது. தப்பித் தவறி தங்கவேலுவிடம் மாட்டினால். அதோகதிதான்.
மந்திரமும் தனக்குத் தெரியும் என்று சொல்வான். மந்திரத்தில் மாமரம் வளர்த்து மாங்காய் காய்க்கப் பண்ணுவேன் என்றான். நான் நம்பவில்லை. ஆனால், நம்ப வேண்டி வந்தது! ஒருநாள், "பைப்படியில் நிற்கிற விலாட்டு மாமரத்தில், காகம் கொத்திப் போட்டுவிட்டுப் போன மாங்கொட் டையை எடுத்து வரச்சொன்னான். செல்வகுமார் எடுத்து வந்து கொடுத் தான். "ஏன் நீயே போய் எடுத்தால் என்ன?" என்றேன். "மந்திரம் பலிக் காது” என்றான். திரும்பவும் "ஏன்ரா?” என்றேன். "உனக்கு இதெல்லாம் விளங்காது, சும்மா இரு' என்றான்.
'பள்ளிக்கூடம் முடிந்து எல்லோரும் போனப் போல குடிதண்ணீர்க் கிணத்தடியில் சந்திப்போம்” என்றான். "என்ன செய்யப் போறாய்?" என்று கேட்டேன். 'வந்து பாரன்” என்றான். அன்றைக்கு முழுக்க ஒரு படிப்பும் மூளையில் ஏறவில்லை.
- l

Page 10
பள்ளிக்கூடம் முடிய, விளையாட்டு மைதான மூலையில் பண்டிதர் வீட்டு வேலியோடு இருந்த கிணற்றடியில் கூடினோம். தங்கவேலு விசுக்கோத்துப் பெட்டி மூடியுடன் வந்தான். "கெயார் பிஸ்கற் பெட்டி. எப்படி எடுத்தானோ தெரியவில்லை. வேலிக் கிளுவந்தடி முறித்து நிலத்தில் கிடங்கு கிண்டினான். திருநீறும், குங்குமமும் கிடங்கில் கொட்டி, மாங்கொட்டையையும் போட்டுத் தண்ணீரையும் ஊற்றினான். இலை சருகுடன் மண்ணையும் போட்டு மூடினான். பெட்டியை அதன் மேல் மூடி பழைய தென்னோலைகளால் மறைத்தான். ஒருவருக்கும் சொல்ல மாட்டோம் என்று சத்தியமும் வாங்கினான். "நாளைக்கு இதேநேரம் இங்கை வாங்கோ. இப்ப எல்லாரும் போங்கோ." என்று எங்களை அனுப்பினான்.
"நீ இதை நம்பிறியா?" என்று ரகு வழியில் கேட்டான். “மடையா. அவன் டூப் விடுறான். மாங்கொட்டை முளைக்க ஆறு மாதம் பிடிக் கும்' என்றான். எனக்கும் அப்படித்தான் பட்டது!
அடுத்தநாள் பின்னேரம், தென்னோலைகளை விலக்கிப் பெட்டியைத் தூக்கியபோது இளம் குருத்துடன் விலாட்டு மாங்கன்று வாளிப்பாய் நின்றது! வியப்பை விடப் பயந்தான் அதிகமாய் இருந்தது. இரண்டாம் பேச்சு இல்லாமல், தங்கவேலுவுக்கு மந்திரம் தெரியும் என்று எல்லோரும் ஒத்துக்கொண்டார்கள். “வெளியிலை சொல்லாதையுங்கோ. பிறகு பலிக்காது' என்றான் தங்கவேலு.
'நீ கெட்டிக்காரன்தான்ரா." என்றான் ரகு, "இதென்ன பெரிய வேலை. ஒருநாளைக்கு உந்த நீதவான் வீட்டு நாயின்ரை வாயைக் கட்டிறன் பார்." என்றான் தங்கவேலு. "அதைச் செய்தால். நீ மகா விண்ணன்தான்' என்றான் ரகு. சங்கக் கடையடிச் சந்தி ஒழுங்கைதான் பாடசாலைக்குக் குறுக்கு வழி. பெரிய கேற்றால் வருவதானால் மெயின் ரோட்டில் நடந்து சுற்றி வரவேண்டும். ஒழுங்கையில் நீதவான் வீட்டைத் தாண்டியவுடன் சின்னக் கேற் வந்துவிடும். ஆனால் நீதவானின் அல்சேஷன் நாய் வீட்டினுள் நின்றால் ஒருவரும் வரமுடியாது. அது குரைக்கும் சத்தத்தில் எங்களுக்குக் குடல் தெறிக்கும். நாய் அவிட்டு நின்றால் நாங்கள் ஒழுங்கைப் பக்கமே தலைகாட்டுவதில்லை! சுற்றி நடந்து பெரிய கேற்றால்தான் போவோம்.
வெள்ளிக்கிழமை நாய்க்கு "வாய் கட்டுவது' என்று தீர்மானமாயிற்று. மந்திரம் போடத் தேங்காயும் கற்பூரமும் தேவை என்றான் தங்கவேலு.
..........................................-2--

எல்லோரும் ஆளை ஆள் பார்த்தார்கள். வீட்டில் என்ன சொல்லித் தேங்காய் கொண்டு வருவது என்ற பயம் எல்லோர் முகத்திலும் இருந் தது. எப்படியாவது தான் கொண்டு வருவதாக ரகு ஒத்துக்கொண்டான்.
வெள்ளி அதிகாலையிலேயே எல்லோரும் பாடசாலைக்கு வந்திருந் தார்கள். தங்கவேலு தலையில் குளித்து வந்திருந்தான். ஈரத்தலையுடன் பள்ளிக்கூடத்துக்குப் பின்புறம் வேப்பமரத்துக்குக் கீழே இருந்த வைரவர் சூலத்துக்குத் தேங்காய் அடித்துக் கற்பூரம் காட்டினான். மந்திரமும் சொன்னான். தேங்காய்ப் பாதி ஒன்றுக்குக் குங்குமம் பூசி எடுத்துப்போய் நீதவான் வீட்டு வளவுக்குள் வீசிவிட்டு வந்தான். ஆனால் அன்றைக்கும் சின்ன கேற் பக்கம் ஒருவரும் போகவில்லை.
திங்கட்கிழமை பள்ளிக்கூடம் போனபோது அதிசயமாக இருந்தது. நாயின் அசுமாத்தையும் காணவில்லை! குரைக்கிற சத்தமும் கேட்க வில்லை! "அடேய். நாய் செத்திருக்குமோடா?. தங்கவேலு என்னவும் சூனியம் செய்திருப்பானோ..?" என்று செல்வகுமார் கேட்டான். விலாட்டு மாமரம் முளைத்த பின்னர் அவன் தங்கவேலுவின் அபிமானியாக மாறி யிருந்தான்! செவ்வாய்க்கிழமையும் நாயின் குரைப்புச் சத்தம் கேட்க வில்லை. ஆனால் நாயைத் தான் கண்டதாக குகநேசன் சொன்னான். எங்களுக்குப் புதினமாக இருந்தது. நல்லவேளை, நாய் சாகவில்லை என்று நிம்மதியாகவும் இருந்தது!
தங்கவேலு சின்னக் கேற் வழியாகத்தான் அன்றைக்குப் பாடசாலை க்கு வந்தான். அவன் முகத்தில் ஒரு பெருமிதம் இருந்தது. "எப்படி என் வேலை?” என்று கேட்பதைப் போன்ற முகபாவம் அது "என்னடா. இதுவும் டூப் என்று நினைக்கிறியா..?' என்று ரகுவைக் கேட்டான். ரகு திரும்பி என்னைப் பார்த்து முறைத்தான். எனக்கு அவமானமாக இருந்தது. இரகசியமாக நான் தங்கவேலுவுக்குச் சொன்னதை, இப்படி எல்லோர் முன்னிலையிலும், அவன் போட்டு உடைப்பான் என்று நான் நம்பியிருக்கவில்லை. "சரி போங்கோ. இனியாவது மந்திரத்தை நம்பு ங்கோ' என்று சொல்லியபடி தங்கவேலு வகுப்புக்குப் போனான். "நீயும் கோள் சொல்லப் பழகிவிட்டாய்" என்று முகத்தை முறுக்கியபடி ரகுவும் போனான்.
அடுத்த நாளும் சிலர் சின்னக் கேற்றால்தான் பள்ளிக்கூடம் வந்தார் கள். 'நாய் சும்மாதான் நிக்குது. குலைக்கவே இல்லை' என்றார்கள். வழக்கம் போலப் பயம் காரணமாக பெரிய கேற்தான் கதி என்று நான்
-3-

Page 11
இருந்து விட்டேன். பின்னேரமும் எல்லோரும் சின்னக்கேற்றால் போனார் கள். "நீயும் வாடா" என்று தங்கவேலு என் கைளையும் இழுத்தான். “நாளைக்கு வாறன்ரா. விடடா." என்றபடி நான் பெரிய கேற் பக் கம் ஓடிவிட்டேன்.
வெளியே வந்து சங்கக் கடையடிக்குப் போனபோது பொடியள் கூட்டம் தெரிந்தது. எட்டிப் பார்த்தால் நடுவில் தங்கவேலு முழங்காலில் இரத்தம் வடிய நின்றான். "என்னடா. என்ன நடந்தது?" என்று ரகுவைக் கேட்டேன். 'தங்கவேலுவை நீதவான் வீட்டு நாய் கடிச்சுப் போட்டுது." என்றான் அவன். "தங்கவேலு. அப்பிடியெண்டால். உன்ர மந்திரம் பலிக்கேல்லையோடா..?' என்று கேட்டேன். "அதெல் லாம் சரியடா. மந்திரம் குலைக்கிறதைத்தானே நிப்பாட்டியிருக்குது. கடிக்கிறதை இல்லை." என்றான் தங்கவேலு!

Mல்க்தேட்டி
குணரத்தினம் மாஸ்ரரை நினைத்தால் மிஞ்சுவது பயந்தான். அடி பிச்சு உதறும். பிரம்பு கிழியும் வரை மண்டகப்படிதான். வீட்டுக் கணக்குச் செய்யாவிட்டால் தப்பமுடியாது. காலையில் பஸ் ஏறியதில் இருந்து, ரவுனில் இறங்கும்வரை கனகலிங்கம் பயந்தபடிதான் வந்தான். எப்படிச் சமாளிப்பது. ஒரு கணக்குத்தானும் செய்யவில்லை! மொத்தம் இருபது! பள்ளிக்கூடம் போயும் செய்யமுடியாது.
மீன் சந்தையைக் கடக்கும் போது, நாய்க்குட்டிகள் இரண்டு அவன் பின்னே ஓடிவந்தன. ஒன்று, உர். என்று முறைத்தது. அடி சவுக் காலை' என்றபடி குனிந்து கல்லொன்றை எடுத்து வீசினான். கீ. கீ. என்று கத்தியபடி இரண்டும் ஓடின.
கனகலிங்கத்துக்கு மூளையில் பொறி தட்டியது! “எடே பொடி யள். நல்ல சாதி நாய்க்குட்டி இருந்தால் ஒண்டு கொண்டு வாங் கோடா' என்று அடிக்கடி குணரத்தினம் மாஸ்ரர் சொல்வது ஞாபகத் துக்கு வந்தது. கடையில் மாட்டுத்தாள் கடதாசிப்பை ஒன்று வாங்கி னான். ஒழுங்கையால் திரும்பி நடந்தான். இரண்டு நாய்க்குட்டிகளும் ஒன்றையொன்று புரட்டி உருண்டு விளையாடிக் கொண்டிருந்தன. சத்தம் போடாமல் ஒன்றை 'லபக்" என்று பிடித்துப் பைக்குள் போட்டான்.
-5-

Page 12
மற்றது பயத்தில் 'வில். வீல்" என்று கத்திக்கொண்டு ஓடியது. காற்றுப் போவதற்காகப் பையில் இரண்டு ஒட்டையும் போட்டாயிற்று! இனி யென்ன. எல்லாம் சுபம்தான். என்று நினைத்தபடி நடந்தான். முதலாம் குறுக்குத் தெருவைத் தாண்டி எட்டி நடந்தால் தெரிவது மாஸ்ரர் வீடுதான். இப்போது பயம் இல்லை. மனமும் இலேசாக இருந்தது.
கேற்றைத் தட்டியபோது வந்தது, ரீச்சர்! "என்ன மேனை. பள்ளிக் கூடம் போகேல்லையோ. இங்கை வந்து நிக்கிறாய்..?" என்றபடிதான்
கேற்றைத் திறந்தா,
'இல்லை. மாஸ்ரரைப் பாக்க வேணும்."
"அவர் சேர்ச்சுக்குப் போட்டார். ஏன் மேனை?' என்றா ரீச்சர்.
"நாய்க்குட்டி கொண்டுவரச் சொன்னவர். அதுதான் கொண்டு
வந்தனான்.'
"சரி. உதிலை கட்டிப்போட்டுப் போம். சங்கிலி கொண்டுவந்து தாறன். அவர் வரக்கை சொல்லுறன்."
சங்கிலியால் கட்டிவிட்டுப் போகும்போதுதான் நாய்க்குட்டியை வடிவாகப் பார்த்தான். பிரவுண் கலரில், வெள்ளைப் புள்ளிகளுடன் கொழுக்கு மொழுக்கென்று இருந்தது.
'கணக்குச் செய்யாதவன் எல்லாம் எழும்பு. இங்காலை வாங்கோ எல்லாரும்." குணரத்தினம் மாஸ்ரர் வழக்கமான பல்லவியுடன் பிரம்பைத் தூக்கினார். எழுவதா. விடுவதா கனகலிங்கம் யோசித்தான். ஏன் பொய் சொல்ல வேண்டும். அதோடை நாய்க்குட்டியும் கொடுத்தா யிற்று பயப்படாமல் எழும்பிப் போனான்.
“எத்தனை செய்தனிர்?"
"ஒண்டும் செய்ய இல்லை. சேர்'
"ஒண்டும் செய்ய இல்லையோடா..? ஒண்டுதானும் செய்யாமல் விட்டிட்டு. நடப்பா எழும்பி வந்து சொல்லுறிரோ.?"
-6-

கை, கால் என்று பேதமில்லாமல் பிரம்பு விளையாடியது.
'இல்லை சேர். இனிச் செய்யிறன் சேர்." அடி தாங்காமல் புழுவாய்த் துடித்தபடி கனகலிங்கம் கத்தினான் ". சேர். சேர். வேண்டாம் சேர். விட்டிடுங்கோ சேர்."
"இனியாவது ஒழுங்காய்ச் செய்.” மாஸ்ரர் பிரம்புக்கு ஒய்வு கொடுத்தார்.
A
சேர். சேர். நான் சேர். நாய்க்குட்டி சேர். பிறகும் ஏன் சேர் அடிச்சியள் சேர்."
"நாய்க்குட்டியோடா..? தெரு நாய்க்குட்டியைப் பிடிச்சுக் கொண்டு வந்து தந்திட்டு. ' திரும்பவும் மாஸ்ரரின் பிரம்பு கனகலிங்கத்தின் மேல் புகுந்து விளையாடியது.

Page 13
Uyl)/
66 o o yy o o
ன்ெனடா வாங்கினாய் கடையிலை?” என்றான் அழகன்.
'பிறிஸ்ரல் இரண்டும், ஒரு சின்ன கச்சான் அல்வாவும்" என்றேன்.
'மத்தியான இன்ரெவெலில பள்ளிக்கூடத்தால வெளிக்கிட்டு பிறிஸ்ரல் அடிச்சுப் போட்டு, மணக்காமல் இருக்கக் கச்சான் அல்வாவும் தின்னுறிரோ - எவ்வளவு நாள் பழக்கம்?" என்றான் இந்திரன். "வகுப்பு க்கு வாரும் உம்மட நல்ல பழக்கம் பற்றி எல்லாரிட்டையும் விளங்கப்
படுத்திறன்."
"ஐயோ உண்மையா நான் சிகரெட் குடிக்கிறயில்லை. இது."
“டேய். கதை விடாதையடா. நாங்கள் சிகரட் குடிச்சால் மட்டும் மாஸ்ரர் மாரிட்டைப் போய்ச் சொல்லுவீர். இப்ப நீரே நடத்துறிரோ..?
"சத்தியமாக நான் சிகரட் குடிக்கிறயில்லை" என்றேன். பயத்தில் கண்களில் நீர் நிறைந்தது.
"அப்ப ஏனடா வாங்கிறாய்..?' என்றான் அழகன்.
-8-

"கனகசபை மாஸ்ரர்தான் வாங்கச் சொன்னவர். சிகரெட் அவருக் குத்தான்! எனக்குக் கச்சான் அல்வா வாங்கச் சொன்னவர்" விளங்கப் படுத்தி முடிக்குமுன் கண்களில் இருந்து நீர் வடிந்தது.
"சரி. சரி. அழிாதை. பபா மாதிரி. ஒம்பதாம் வகுப்பெல்லே படிக்கிறாய்." என்றான் அழகன். அவன் கொஞ்சம் பரவாயில்லை. இந்திரன்தான் படுபாவி, வகுப்பிலை பயங்கரக் குழப்படி, பொடியளை வெருட்டுவது அவனுக்குக் கைவந்த கலை.
எல்லாம் கனகசபை மாஸ்ரரால் வந்தவினை ரீச்சரும் எங்கட பள்ளிக் கூடத்திலதான் படிப்பிக்கிறா. இரண்டு பேருமே எங்கள் வகுப்புக்குப் பாடம் எடுப்பவர்கள். அப்பாவியான என்னில் இரண்டு பேருக்கும் விருப்பம். அவர்களின் சில வேலைகளை நானும் செய்வது வழக்கம். மாஸ்ரர் சிகரட் குடிப்பவர். அவர் கடைக்குப் போனால் பக்கற்றாகவே வாங்கி விடுவார் என்ற பயத்தில் ரீச்சர்தான் இந்த ஏற்பாட்டைச் செய்திரு ந்தா. ஒவ்வொரு நாளும் மத்தியான இன்ரெவலில் நான் கடைக்குப் போய் இரண்டு 'பிறிஸ்ரல் வாங்கி மாஸ்ரரிடம் கொடுக்க வேண் டும். ஒன்று மத்தியானச் சாப்பாட்டின் பின், மற்றது இரவுக்கு. மருந்து மாதிரி.
"காசு குடுக்காமல் எப்பிடி வாங்கிறாய்?" என்றான் இந்திரன். “மாதம் முடியக் கடைப் புத்தகத்தைப் பார்த்து ரீச்சர் குடுப்பா."
"அப்படியெண்டால் எங்களுக்கும் இரண்டு கச்சான் அல்வா வாங்கடா..."
'மாட்டன்' என்றேன்.
“வாங்கடா. இல்லாட்டில் என்ன நடக்கும் தெரியுந்தானே.?” என்று சயிக்கிளில் இருந்து இறங்கினான். பேசாமல் இரண்டு கச்சான் அல்வா மாஸ்ரரின் கணக்கில் வாங்கிக் கொடுத்தேன். இப்படித்தான் ஆரம்பம். பிறகுதான் நான் மாட்டிக் கொண்டது விளங்கியது. அந்தக் கிழமை அதுவே தொடர்ந்தது.
அடுத்த கிழமையும் இரண்டு பேரும் சயிக்கிளில் வந்தார்கள். “எங்க ளுக்கு இண்டைக்குக் கச்சான் அல்வா வேண்டாம். இரண்டு பிறிஸ்ரல் வாங்கடா' என்றான் இந்திரன். மறுத்தேன். வெருட்டினார்கள்.
-9-

Page 14
அன்றைக்கு நாலு பிறிஸ்ரலும், கச்சான் அல்வாவும் கேட்டபோது, கடைக்காரன் என் முகத்தைப் பார்த்தார். ஒன்றும் சொல்லாமல் எடுத்துத் தந்தார்.
“கனகசபை மாஸ்ரரிட்டைச் சொல்லாதை, சொன்னால் பல்லுக் கழரும்” என்றான் இந்திரன்.
திங்கட்கிழமை காலை பாடசாலைக்குப் போனபோது, கனகசபை மாஸ்ரர் கூப்பிடுவதாகப் பியூன் வந்து சொன்னான். கேள்விப்பட்டிருப் பாரோ..? என்ற பயம் இருந்தது. ஆனால் மாதம் முடியாதபடியால் கடைப் புத்தகத்தைப் பார்த்திருக்க மாட்டார் என்ற தைரியத்தில் போனேன். ஸ்ராவ் ரூமில் கனகசபை மாஸ்ரருடன் ரீச்சரும் இருந்தா.
"வாரும். வாரும். நல்லா வளர்ந்திட்டீர் போல. புதுப் புதுப் பழக்கமும் பழகிவிட்டீர்” என்றார் மாஸ்ரர். எனக்குத் திக்கென்றது. பேசாமல் நின்றேன்.
“ஒருநாளைக்கு நீரும் இரண்டு சிகரட் குடிப்பீரோ.? உம்மை நல்ல பிள்ளை எண்டு நம்பி இருந்தம்..!” மறுமொழி சொல்ல முன் கன்னத் தில் பளிரென்று விழுந்தது. "கடைக்காரன் சொன்னான். நல்ல பிள்ளை கெட்டுப் போகுது சேர். உங்களாலை எண்டு என்னைக் குறை சொல்லு றான்."
அடுத்த கன்னத்திலும் அடி விழுந்தது. 'அவனை அடியாதை யுங்கோ.' ரீச்சர் முன்னே வந்து மறித்தா. 'அவன் நல்ல பெடியன். ஏன்ரா மேனை அப்பிடிச் செய்தனி.? பார் நாங்களே உன்னைக் கெடுத் துப் போட்டம்.!"
“இல்லை ரீச்சர். உண்மையா நான் வாங்கவில்லை. என்னை வெரு ட்டி இவன் இந்திரனும். அழகனும்தான் வாங்கிக்கொண்டு போன வங்கள்!' தட்டுத் தடுமாறி சொல்லி முடித்தேன்.
"சரி. சரி. நீர் இன்னமும் பபா மாதிரித்தான் இருக்கிறீர். போம் வகுப்புக்கு." ரீச்சருக்கு இந்திரனின் கெட்டித்தனம் தெரிந்திருந்தது.
ரீச்சர் சொல்வது போல நான் இன்னமும் பபாதானோ..? என்று
நினைத்தபடி திரும்பி நடந்தேன். பின்னேரம் இந்திரனிடமும் அடி வாங்க வேண்டி இருக்கும் என்ற பயமும் கூடவே வந்தது.
-10

2ణిశntఓఎగీ
66
நோட்டீஸ் ஒட்டத்தான் வேணுமா?" என்றான் ரகு.
'வருசா வருசம் ஒட்டுறதுதானே. பிறகென்ன கேள்வி?' குகன்
கேட்டான்.
“போனமுறை சண்டையில முடிஞ்சது ஞாபகம் இல்லையோ..?"
"ஏன் இல்லை. இந்த முறை சண்டை வராமல் சமாளிப்பம்."
கோயில் திருவிழாவுக்கு நோட்டீஸ் ஒட்டுவதில்தான் இந்த இழுபறி. ஊர் முழுக்க நோட்டீஸ் ஒட்டுவதுதான் வழமை. குணசிங்கம் வீட்டுக் கேற்றில் போனமுறை ஒட்டிய நோட்டீசால்தான் பிரச்சினை வந்தது. அடிதடியில் முடிந்து நோட்டீஸ் கட்டும் எரிக்கப்பட்டது.
குணசிங்கம் ஊர்ச் சண்டியன். திருவிழா அன்றைக்கும் கோயிலில் வந்து முரண்டு பிடித்தான். தேவனுக்கும் சபாவுக்கும் அடியும் விழுந்தன. மாஸ்ரர்தான் ஒருமாதிரிக் குணசிங்கத்தைச் சமாளித்து அனுப்பி வைத்தார். இனிமேல் நோட்டீஸ் ஒட்ட எவனாவது எங்கட பக்கம் வந்தால் கைகால் முறியும் என்று எச்சரித்து விட்டுப் போனான்.
"குணசிங்கம் தண்ணியில நிப்பான். நீங்கள் போய் நோட்டீஸ் ஒட்டு ங்கோ. வாங்கியும் முறியுங்கோ. எனக்கென்ன..?’ என்றான் ரகு.
-ll

Page 15
"அப்பிடிச் சொல்லாதை மச்சான். எல்லாருமாய்ப் போய் ஒட்டுவம். அப்ப அவனால என்ன செய்ய ஏலும்?' என்றான் குகன்.
"விசர்க்கதை கதையாதை. அவன் சண்டியன் என்று பேரெடுத்தவன். அடிபிடிக்குப் பயப்படான். நாங்கள்தான் மானம் கெடவேணும்."
சொல்லும் போதே ரகுவின் குரலில் எரிச்சல் தெரிந்தது.
“சரி சரி. கனக்கக் கதைச்சு ஏன் பிரச்சனைப் படுவான். இராமலிங்கத்தையும் நாதனையும் கூட்டிக்கொண்டு போவோம்" என்றான் குகன்.
இராமலிங்கமும் நாதனும் ஒரு சயிக்கிளில், குகனின் சைக்கிளில் நான் ஏறிக்கொண்டேன். ரகுவும் தேவனும் இன்னொன்றில், வழியெல்லாம் நோட்டீஸ் ஒட்டி, பள்ளிக்கூட ஒழுங்கைக்கு வரும்போது, இரவு பதினொரு மணியாகி விட்டது.
“மச்சான் நான் இறங்கி ஒடப்போறன்" என்றான் தேவன். போன முறை அடி இன்னமும் ஞாபகம் இருந்திருக்க வேண்டும்.
"பேசாமல் வாடா...' என்றான் ரகு, ஒழுங்கைத் துவக்கத்திலேயே குணசிங்கம் நின்றான். கூட இரண்டு பேர்.
“டேய். போனமுறை சொன்னது ஞாபகம் இல்லையோடா..?”
“உங்கட கேற்றில இந்த முறை ஒட்டமாட்டம்."
"அதென்னடா என்ரை கேற்.? இந்த இடம் முழுக்க எங்கட ஏரியாதான்ரா. உடனை திரும்பிப் போங்கோ."
'இல்லை நாங்கள் சமாதானமாத்தான் வந்தனாங்கள். கொஞ்சம் நாங்கள் சொல்லுறதையும் கேளுங்கோ." என்றபடி முன்னே போனான் குகன். ஒரே உதையில் குகனின் கையில் இருந்த பசைவாளி தெறித்து விழ, அவன் வேலியோரம் விழுந்து கிடந்தான்.
“குணசிங்கம், உன்னோட கொளுவ வரேல்லையப்பா." என்று கிட்டப் போன ரகுவிற்கு விழுந்த உதையில் நோட்டீஸ் கட்டுகள் பறக்க, ரகுவும் எகிறி விழுந்தான்.
திரும்பிப் பார்த்தேன். இராமலிங்கத்தையும் நாதனையும் காண வில்லை. அவர்கள் வந்த சைக்கிளும் இல்லை. காவலுக்கு வந்தவர்கள் காற்றாகப் பறந்திருந்தார்கள். கீழே விழுந்தவர்களை விட்டு விட்டுத்
-12

திரும்பி ஒடுவதா. இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் முன் குணசிங்கத்தின் கால் என்னை நோக்கி நீண்டது.
இடது பக்கம் சரிந்து, உடம்பை வளைத்து நிமிர்ந்ததால் என் தலை தப்பியது. குணசிங்கத்தின் கால் வானம் தேடியது. துரையண்ணனிடம் பழகிய விசயங்கள் ஞாபகத்திற்கு வந்ததும், என் கால் உயர்ந்து குணசிங்கத்தின் காலை உதைத்ததும் ஒன்றாகவே நடந்தன. அவன் கரணமடித்து விழுந்தான். விழுந்தவன் எழும்பவில்லை. அவனோடு கூட நின்றவர்கள் ஒடிப்போயிருந்தார்கள்.
'அவன் குடித்திருந்தது உனக்கு வசதியாய்ப் போய்விட்டது” என்றான் ரகு, நோட்டீஸ் கட்டையும், பசை வாளியையும் தூக்கிக் கொண்டோம். அன்றைக்கு மாதிரி வாழ்நாளில் நான் என்றைக்குமே சைக்கிள் உழக்கவில்லை. அப்படி ஒரு ஒட்டம்.
அடுத்த நாள் சனிக்கிழமை ஆதலால், பள்ளிக்கூடப் பக்கமோ, ரவுண் பக்கமோ போக வேண்டிய தேவை இருக்கவில்லை. குட்டி போட்ட பூனை மாதிரி வீட்டையே சுற்றி வந்தேன். பின்னேரம் மாஸ்ரர் வந்த போது குட்டு உடைந்தது. நடந்ததை எல்லாம் காலையிலேயே தேவன் சொல்லி விட்டதாகக் கூறினார். மாஸ்ரருக்கு விசயம் தெரிந்ததில் நிம்மதி. எப்படியும் வீட்டாருக்குத் தெரிய வேண்டியதுதானே!
"இவனுக்கு ஏன் இந்தத் தேவை இல்லாத வேலை.?" என்று அக்கா பேசினா. அப்பா ஒன்றும் சொல்லவில்லை. அவரின் பார்வையே எல்லாவற்றையும் பேசியது.
மாஸ்ரருடன் வெளியே வந்தபோது, "என்ன குணசிங்கத்தை அடிச்சு விழுத்திப் போட்டியாம்.? துரை அண்ணனிட்ட நல்லாப் பழகித்தான் இருக்கிறாய் போல..?" என்றார். அவரின் குரலில் சின்னப் பெருமையும் இருந்தது. அவர்தான் துரையண்ணனிடம் சேர்த்து விட்டவர்.
திங்களும் செவ்வாயும் பள்ளிக்கூடம் போவதில்லை என்று நானும் ரகுவும் முடிவெடுத்தோம். செவ்வாய் இரவுதான் திருவிழா. தேவை இல்லாமல் ஏன் திரும்ப உரசிக் கொள்ள வேண்டும் என்று பட்டது. அடிமனதில் ஒரு பயமும் இருந்தது. திருவிழாவில் எல்லோரும் ஒரு கூட்டமாகவே திரிந்தோம்.
'மச்சான். குணசிங்கம் வந்திருக்கிறான்ரா. ' என்றபடி
பதட்டமாகத் தேவன் வந்தான். எனக்குப் பயத்தில் வேர்த்தது.
13

Page 16
"சரி. இனியென்ன இன்னொரு திருவிழாத்தான்." என்றான் ரகு. மெதுவாக என் கண்கள் மாஸ்ரரைத் தேடின. அவரையும் காணவில்லை.
குணசிங்கமும் கூட்டாளிகளும் கிட்ட வந்தனர். ஒடுவதில் பிரயோசனமில்லை என்று பட்டது. வருவது வரட்டும் என்று முன்னே போனேன்.
'என்னடாப்பா. திருவிழாவுக்கு வந்தால் எங்களைக் கண்டுகொள்ளவும் மாட்டியளோ..?' என்றான் குணசிங்கம். அவன் குரலில் கோபம் இருக்கவில்லை.
'இல்லையண்ணை. நீங்கள் வருவியள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை." என்றேன்.
"சரி. சரி. நடந்ததை எல்லாம் விட்டிடுவம், வாங்கோ போய்த் தேத்தண்ணி குடிப்போம்" என்றான்.
கிட்ட வந்து தோளில் கைபோட்டுக் கூட்டிப் போனான். என்னால் நம்ப முடியவில்லை. எல்லாருமாய்ப் போய். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்துடன் வீதியோரம் இருந்த கடையில் தேநீர் குடித்தோம். வடையும் வாங்கித் தந்தான். நான் காசு குடுக்க வெளிக்கிட்டாலும் தடுத்து அவனே குடுத்தான். எனக்குப் புது அநுபவமாக இருந்தது.
“என்னவும் பிரச்சினை வந்தால் எனக்குச் சொல்லுங்கோ. எங்கட கோயில் திருவிழாவை நாங்கள் தானே நடத்த வேணும்." என்றான். எல்லாரும் தலையாட்டினோம்.
'அண்ணை. அண்டைக்கு நடந்ததை. மறந்திடுங்கோ. நாங்கள் வேணுமென்று செய்யேல்லை." என்றேன்.
“சீ. சீ. அதையெல்யாம் அண்டைக்கே மறந்திட்டன்." என்றான். கிட்டே வந்து என் முதுகைத் தட்டி "நான் போறன் சரிதானே?" என்று சொல்லிவிட்டுக் கூட்டாளிகளுடன் போனான்.
"மச்சான் நீ. எழும்பி விட்டாய்' என்றான் ரகு.
“என்ன நீரும் சண்டியர் ஆகிவிட்டீர் போல. ' என்று பின்னாலிருந்து குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தேன். மாஸ்ரர் சிரித்துக்கொண்டு நின்றார்.
-4-

(یادول ۱/
இணக்கமான சிரிப்பு, எங்கேயோ பார்த்திருக்கின்றேன் என்று மனதுக்குள் பல்லி சொல்லிற்று. கதைக்கலாம் போல இருந்தது.
"என்னைத் தெரியுமா..?"
"ஒமண்ணை. தெரியும்."
2リタ
"எப்படித் தெரியும்.
'இந்தப் பள்ளிக்கூடத்தில உங்களைத் தெரியாதவை இருக் கேலாது. py
மனம் சந்தோஷத்தில் கிளர்ந்தது. பாடசாலையை விட்டு ஐந்து வருடங்களாகி விட்டன. ஏறக்குறைய பாடசாலையையும் மறந்தாயிற்று. இவனுக்கு. இப்போதைய மாணவன் ஒருவனுக்கு இன்னமும் என்னை ஞாபகம் இருக்கிறதே. பெருமையாக இருந்தது!
"நல்லாய்ப் படிச்சு முன்னுக்கு வரவேணும்.'
"தாங்ஸ் அண்ணை.” என்று சொல்லிவிட்டுப் போனான்.
-15

Page 17
பாடசாலையினுள் நுழையும் போது கொஞ்சம் தயக்கமாக இருந்தது. பழைய கணித ஆசிரியர் வரும்படி அழைப்பு விடுத்து இருந்தார். ஆசிரியர்கள் சிலரைத் தவிர தெரிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றுதான் நம்பியிருந்தேன். இப்போது தயக்கம் விட்டுப் போயிருந்தது.
பாடசாலையில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. முன்னர் "ரெனிஸ்? விளையாடிய இடத்தில் புதிதாக இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று. பரிசோதனைச் சாலையின் பின்பக்கத்தே நெடிது வளர்ந்த நான்குமாடிக் கட்டடம். அவ்வளவுதான்!
அதிபரின் அலுவலக அறை அப்படியே மாற்றமின்றி இருந்தது. விறாந்தையில் அதே வாங்கு. சாய்மனைக் கதிரை போன்ற வசதியுடன் இருக்கும் நீளமான வாங்கு. அதை எப்படி மறக்க முடியும்? உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தண்டனை வாங்கு" அல்லவா?
உயர்தர வகுப்பில் குழப்படிக்குத் தண்டனை வித்தியாசமானது. அந்த வாங்கில் உட்கார வேண்டியதுதான். தண்டனையின் தரத்துக்கு அமைய வாங்கில் உட்காந்திருக்க வேண்டிய நேரம் கூடும். குறையும். பாட சாலைக்கு வருவோர், ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோருமே வாங்கில் இருப்பவரைப் பார்த்துக் கொண்டுதான் போவார்கள். அதுவே பெரிய தண்டனை. அதிபர் மாறினாலும், தண்டனை முறையில் மாற்றம் இல்லை போலும் என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது.
“என்ன தேவன் சிரிக்கிறீர்கள்?’ . என்ற குரல் கேட்டது. புதிய அதிபர். அவரும் என்னுடைய பழைய ஆசிரியர்தான்.
“பாடசாலை நாட்களை மறக்க முடியுமா..? வேலைக்குப் போனா லென்ன..? அவை மனதில பசுமையாத்தான் இருக்கும்."
ஸ்ராப் ரூமிற்குள் போனபோது நல்ல வரவேற்பு இருந்தது. பழைய முகங்கள் ஆர்வமாகச் சுகம் விசாரித்தன. புதிய முகங்களையும் அறி முகப்படுத்திக் கொண்டேன்.
“என்ன. கொழும்புக்குப் போனதால எங்களையெல்லாம் மறந்து
விட்டாயோ? என்று நினைத்தேன்.” என்றார் கணித ஆசிரியர். ஆளனுப்
பிக் கூப்பிட்டவர் அவர்தான்.
-16

பேச்சு மதிய இடைவேளை வரை நீண்டது. புறப்பட்டு வெளியே வந்தேன். அதிபரின் அறை எதிர்ப்பட்டது. அந்த நீளமான. சாய் மனைக் கதிரை போன்ற தண்டனை வாங்கு". மண்டபத்தைக் கடந்து வாசற்பக்கம் வந்தபோது, அதே மாணவன்தான் மீண்டும். கையில் நோட்டுப் புத்தகங்களோடு. மொனிற்றராக இருக்க வேண்டும். திரும் பவும் அதே இணக்கமான சிரிப்பு! எப்படி என்னை ஞாபகத்தில் வைத்தி ருக்கிறானோ..? ஒருவேளை. பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பெற்றதைப் பார்த்திருப்பானோ? அல்லது கால்பந்து விளையாட்டில் என் ரசிகனோ..? மனதில் புதியதொரு உற்சாகம்! கேட்க வேண்டும் என்று மனம் உன்னியது.
'தம்பி."
"என்னண்ணை.?"
"எப்படி என்னை அவ்வளவுதூரம் ஞாபக வைத்திருக்கிறீர்..?” அவன் ஒருகணம் தயங்கினான். மெல்லிய சிரிப்பொன்று எட்டிப் பார்த்தது.
"நீங்கள் அடிக்கடி இந்த வாங்கிலை இருக்கிறனிங்கள் தானே..? அதுதான் நல்ல ஞாபகம் இருக்குது.”
எனக்குள் நட்சத்திரங்கள் மின்னின!
-17

Page 18
Л
ܝn Sܗܶܢܶܝܐܬ݂ܶܗܽܛܝܐ
புதிய இடம். கொஞ்சம் அந்தரமாக இருந்தது. கொழும்பில். தலைமை அலுவலகத்தில் இருந்த அன்னியோன்யம் இந்தக் கிளை அலுவலகத்தில் இல்லைப் போல் பட்டது. ஆளோடு ஆள் கதைக்க நேரமில்லை. வேலை தலைக்கு மேல் இருந்தது. போதாக் குறைக்கு எல்லோரும் பள்ளிக்கூடப் பொடியள் மாதிரி வெள்ளைச் சேட்" போட்டிருந்தார்கள். இரண்டொருவர் மெல்லிய கலர் 'சேட்"டில் இருந்தார்கள். எல்லோருடைய தலைமயிரும் அளவாக வெட்டப்பட்டு, நன்கு வாரப்பட்டு இருந்தது.
நான் ஒரு அந்நியன் போல உணர்ந்தேன். பிடரிவரை நீண்டு வளர்ந்த தலைமுடியும், அழுத்தமான கலரில் கட்டம் போட்ட சட்டையும், பெல் பொட்டம் காற்சட்டையும் அவர்களுக்குப் புதிதாக இருந்திருக்க வேண்டும். ஒரு மாதிரிப் பாத்தார்கள். 'சலாவுதீன் மட்டும், கிட்ட வந்து பேசினான். தலைமை அலுவலகத்தில் வேலை செய்த நட்பு.
“என்னடா எல்லோரும் இப்படிப் பேய் பிடித்தவர்கள் மாதிரி இருக்கிறீர்கள்?' என்றேன்.
-18
 

“கொஞ்ச நாள் போனால் உன்னையும் பேய் பிடிக்கும். மனேஜர் லிவில் நிற்கிறார். வந்த பின் பார்."
“போடா. எத்தனை மனேஜர்மாரை என் யூனியன் அநுபவத்தில் பார்த்திருக்கிறேன். இவர் என்ன கொம்போ” என்றேன். அவன் சிரித்தான்.
முதல்நாள் என்பதால் விரைவில் வேலையை முடித்துவிட்டு அறைக் குப் போக முயற்சித்தேன். உதவி மனேஜர் அருகில் வந்தார். காலையில் என்னை எதிர்கொண்டு வேலையையும் பாரம் தந்தவர் அவர்தான்.
"போக ஆயத்தமா?” என்றார்.
"ஓம்" என்றேன்.
"சாந்திகுமாரின் வேலை முடியவில்லை. நீரும் சேர்ந்து செய்யும்."
"ஏன். சாந்திகுமார் செய்யமாட்டாரா?”
'இல்லை அது கொஞ்சம் கஸ்டமான வேலை”
"அப்படியானால் நாளையில் இருந்து நான் அவரின் வேலையைச் செய்கிறேன். என் வேலையை அவர் செய்யட்டும்."
மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு “நீர் போம்” என்றார்.
வெளியே வந்து சிகரட் பற்றவைத்து இரண்டு இழுப்பு இழுத்த பின் பதற்றம் அடங்கியது. முதல்நாளே கொழுவியிருக்கத் தேவையி ல்லையோ..? சரி, இப்போது அறைக்குப் போயும் ஒன்றும் செய்யப் போவதில்லை, திரும்பப் போய் வேலை செய்தால்தான் என்ன..? என்று யோசித்தேன். சிகரெட்டை முடித்துவிட்டு, சாந்திகுமாரிடம் போ னேன் பலன்ஸ் சீற்றை வைத்து இன்னமும் பிணைந்து கொண்டிருந்தான்.
"என்ன அவுட்டா?"
A
ஓம். ஐம்பது சதம் அவுட்'
“கொண்டு வா ரேப்பை.?' என்று இலக்கங்களை நோட்ட மிட்டேன். ஐந்து நிமிடத்தில் பிழை பிடிபட்டது. "செக்கில் 25 சதமாக இருந்ததை "லெட்ஜரில் 75 சதமாகப் பதிந்திருந்தான்.
-19

Page 19
"எப்படி இவ்வளவு கெதியாய்க் கண்டு பிடித்தாய்..?' என்று சாந்திகுமார் கேட்டான்.
"உதுமாதிரி நிறையப் பிழை நானும் விட்டவன்தான்.” இருவரும் சிரித்தோம். சினேகம் முளைவிட்டிருந்தது. சத்தம் கேட்டு உதவி மனேஜர் வந்தார்.
"நீர் போகவில்லையா..?"
"பலன்ஸ் சீற் அவுட். அதைச் சரிப்படுத்தினேன்."
அவரது பார்வையில் மாற்றம் தெரிந்தது.
அடுத்தநாள் 'சலாவுதீன் வந்தான். 'மனேஜர் வந்துவிட்டார், உன் னோடு பேசவேண்டுமாம்" என்றான். போனேன். அறை, மேசை எல்லாமே சுத்தமாக இருந்தன. மேசையில் ஒரு பைலையும் காணவில்லை. ஆள் ஆறடி உயரம். கஞ்சி போட்ட சேட், "ரை. தலைமயிர் ஒழுங்காகப் படிய வாரியிருந்தது. ஐம்பது வயதிலும் கண்ணாடி இல்லாமல் சின்ன எழுத்து வாசித்தார்.
நிமிர்ந்து பார்த்து. "ஏன் இந்தத் தலைமயிர். கதிர்காமத்துக்கு நேர்த்தியா." என்றார். நக்கல் என்று புரிந்தது.
"...இல்லை. திருப்பதிக்கு”
"அப்பிடியோ. சரி. ஆனா. இங்கை ஒருவரும் தலைமயிர் நீளமாக வளர்க்கிறது இல்லை. மெல்லிய கலர் 'சேட்"தான் போட வேணும். நீரும் மாற்றிக் கொள்ளும்!"
"ஏதாவது புதிய சட்டம் இருக்குதோ? தலைமை அலுவலகத்தில் இதே கோலத்தோடுதான் வேலை செய்தேன். யூனியன் ஒபிசுக்கும் அப்படியொரு கடிதமும் வரல்லை."
ஒ. கொழும்பில் நீர் யூனியன் லிடரோ?' என்றார்.
Ꮫ Ꮫ
ஓம்" என்றேன்.
மெதுவாகச் சிரித்தார்.

"கொழும்பில சேனநாயக்கா மனேஜர். இங்க நான்! நான் சொல்றதை நீர் கேட்க வேண்டும். ஒரு கிழமை அவகாசம் தருகிறேன். மாறிக் கொள்ளும்!"
கோபம் தலைக்கேறியது. ஒரு யூனியன் லிடரோடு இப்படிச் சண்டித் தனம் காட்டுகின்ற மனேஜரைச் சும்மா விடக் கூடாது. இவருக்கு நான் யார். எனது செல்வாக்கு என்ன. எல்லாவற்றையும் புரிய வைக்க வேண்டும்!
பின்னேரம், "திருக்குமார். உமக்கு யூனியன் ஒபிசில் இருந்து கோல்..' என்று உதவி மனேஜரின் அழைப்பு.
கொழும்பு யூனியன் ஒபிசில் இருந்து சில்வா! அடுத்த சம்பள அதிகரிப்பு. யூனியன் தேர்தல். கூட்டு ஒப்பந்தம். அலசுவதற்கு நிறைய விடயங்கள் இருந்தன. மனேஜரின் கெடுபிடியைச் சொன்னேன்.
"நீ கொமம்பில கூட்டக்கக் வாவன். எல்லாம் விபரமாய்ப்
(Ա) ததுககு பேசுவோம்." என்றான் சில்வா,
உதவி மனேஜர் சிரித்துப் பேசினார். "நீங்கள் யூனியன் லீடரா.?" புதிய மரியாதை தெரிந்தது.
கொழும்பில் சில்வாவுடன் என் கொதிப்பைப் பகிர்ந்து கொண்டேன். எனது புதிய கிளை மனேஜருக்கு, ஒரு யூனியன்காரனைப் பற்றி
ஒன்றுமே தெரியவில்லை. . கதைக்கிற முறையும் தெரியவில்லை. என்றேன்.
"கணக்கெடுக்காதை. விட்டுவிடு. ' என்றான் சில்வா.
"நீயும் இப்ப மனேஜ்மண்டுக்குப் பந்தம் பிடிக்கத் தொடங்கிட்டியோ?”
'இல்லையடா. அந்த ஆள் நல்ல மாதிரி. தேவை இல்லாமல் ஏன் உரசுறாய். பிறகு பிரச்சினை தொடரும்."
"சில்வா! நீ நிறையவே மாறிவிட்டாய்! இந்தக் கிளைகளின் மனேஜர்கள். சும்மா தனிக்காட்டு ராசாக்கள் மாதிரி!”
"நான் இல்லை என்றேனா..? ஆனால் உன்ரை மனேஜர் கொஞ்சம் வித்தியாசம். நான் அவரோட வேலை செய்திருக்கிறன்!. ஆ!

Page 20
இன்னொரு விசயமும் சொல்ல வேணும்."
“என்ன..???
"உனக்குத் தெரியுமோ தெரியாது. இன்றைக்கு எங்களுக்கு கிடைக்கிற இந்தச் சம்பள உயர்வுகளுக்கு 70ஆம் ஆண்டு வங்கிகளில நடந்த வேலை நிறுத்தந்தான் காரணம்.
"சரி. அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?"
"எல்லா வங்கிகளும் 91 நாள்தான் ஸ்டிரைக். ஆனால் எங்கட வங்கி. விடாமல் 107 நாள் ஸ்டிரைக்! அதாலைதான் இண்டைக்கு நானும் நீயும் இந்தச் சம்பளம் எடுக்கிறம்."
"சில்வா. நீ திரும்பவும். தேவை இல்லாமல் அலட்டுறாய்." பொறுமை என்னை விட்டுப் போகத் தொடங்கியது.
“கொஞ்சம் பொறு. காரணம் இருக்குது. உன்ரை இப்பத்தைய மனேஜர்தான் அப்ப எங்கட யூனியன் தலைவர். அதுதான்!”
திங்கட்கிழமை வேலைக்குப் போனதும். எல்லோரும் அதிசயமாகப் பார்த்தார்கள். கட்டையான தலைமயிர் வெட்டு. வெள்ளை நிற நீளக்கைச் சேட்டு. அவர்களைத் திகைக்க வைத்திருக்க வேண்டும்.
"திருக்குமார்."
திரும்பிப் பார்த்தேன், கூப்பிட்டவன் சலாவுதீன்.
"என்ன விசயம்?' என்றேன்.
"பார்த்தியா. உன்னையும் பேய் பிடிச்சிட்டுது." என்று சிரித்தபடி போனான்.

"சாப்பிடப் போகல்லையா?" என்றான் திரு.
"இன்றைக்குச் சிவபட்டினிதான்."
"ஏன்ரா.???
"இன்னமும் "செக்'குக்குக் காசு போடுறார்களில்லை.!"
“மூன்றரை மணியாகிறதே.ஒன்றரை இரண்டு மணிக்காவது "செக்' றிற்ரேன் அனுப்ப வேண்டாமா..?"
"அனுப்பத்தான் வேணும். ஆனால் இன்னும் சில கஸ்ரமர்களிட செக் கிடக்கிறது. கணக்கிலும் காசு இல்லை."
"அப்ப றிற்றேன் பண்ணிவிடு."
'பிறகு வந்து அழுவார்கள். இல்லாட்டி. கத்துவார்கள்."
-23

Page 21
“கொஞ்ச நாளைக்கு இரண்டையும் செய்யவிடு. இல்லாட்டி
மத்தியானச் சாப்பாட்டை மறந்துவிடு.”
“போதாக்குறைக்கு வைத்தியும் திட்டுறான். என்னால தன்வேலை யும் மினக்கெடுதாம்." வயிற்றெரிச்சலைச் சொன்னேன்.
ஏறக்குறைய மூன்று மாதங்களாக இதுதான் நடக்கின்றது. வங்கியில் நடைமுறைக் கணக்குப் பகுதிக்கு வந்தாலும் வந்தேன். இதே பிரச்சினை. எத்தனையோ தடவை கெஞ்சியாயிற்று. ஏசியும் ஆயிற்று. சிரித்துக் கொண்டே வந்து நிற்பார்கள். தம்பி, றிற்ரேன் பண்ணிப் போடாதை தம்பி. என்றபடி, இப்ப காசு அனுப்புறன் தம்பி. என்று முதலாளி ரெலிபோனில் கெஞ்சுவார். எனக்கும் பாவமாக இருக்கும். காசு வரும். வரும். என்று, சாப்பிடவும் போகாமல் நாலுமணிவரை மேசையிலேயே கிடந்து காய வேண்டியதுதான்.
பாவம் என்று பட்டபோதும். பல்லைக் கடித்துக் கொண்டு ஆறு பேரின் செக்குகளை ஒரு நாள் றிற்ரேன் பண்ணினேன். அடுத்த நாள் இரண்டு பேர் வந்து அழுதார்கள். மற்ற நான்கு பேரும் அழத் தொடங்க முன்னர் நானே திட்டி அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் பிரச்சினை ஆரம்பமாயிற்று. மனேஜர் கூப்பிட்டு அனுப்பினார். போனேன்.
“என்ன தேவன். நேற்றுச் செக் றிற்ரேன் கனக்கவோ..?
6. A 列
ஓம்.'
"ஏன் அப்படி?.." தொடர்ந்தார்.
"செக் குடுக்கிறாங்கள். ஆனால் கணக்கிலும் காசில்லை. காசும்
போடவில்லை. அதுதான்.'
"சொல்லிப் போடவச்சிருக்கலாம் தானே..?
"சொல்லிக் களைத்தாயிற்று."
"அப்படி விடமுடியாது. எங்கட கஸ்ரமற்றை செக்கைத் திருப்பினா. அவையின்ர வியாபாரத்தைப் பாதிக்கும். பிறகவை வேற வங்கிக்குப்
24
܂ ܐ ܚܝ ܫܒܚܙܘܐܡܢܘܼܬܐ ܘܝܪܬܘܬܐ ܐܬܐܡܢܘ ܘܗܘܝܘ.

போவினம். அதிலும் பலபேர் நல்ல கஸ்ரமர் எப்படியாவது சமாளிக்க வேணும். அதுதான் வங்கித் தொழில். இதுக்குத் தான் உங்களுக்குச்
சம்பளம். *列
எங்கேயோ தொடங்கி மனேஜர் அடிமடியில் கையை வைக்க. கோபம் வந்தது.
"என்ன காலையிலேயே. மங்களமோ..?" என்றான் திரு.
"சும்மா எரிச்சலைக் கிளப்பாத."
"போ போ. உன்ரை மேசையடியில எல்லாரும் நிற்கிறான்கள்."
மேசைக்குப் பக்கத்தில் கந்தசாமியும், நாதனும் சிரித்துக் கொண்டே நின்றார்கள். இரண்டு வியாபாரிமாரும் நாயும் பூனையும். ஒருவரை ஒருவர் கடித்துத் தின்னாத குறை! ஆனால், இன்றைக்கு ஒற்றுமையாக வந்திருந்தார்கள்.
'தம்பி. என்ன தம்பி. செக்கைத் திருப்பிப் போட்டீர்..?"
“எங்களுக்கு எவ்வளவு நட்டம் தெரியுமா..? நசிந்தார்கள்!
"இன்றைக்கும் கணக்கில காசில்லாட்டி செக் திரும்பும்" என்றேன்
“இல்லை. இல்லை. நாங்கள் மனேஜேரோட கதைச்சனாங்கள்."
"நானும் மனேஜேரிட்ட இருந்துதான் வாறன். இன்றைக்கும் திருப்புவன் என்று சொல்லியிருக்கிறன்." என்று கடுகடுத்தேன்.
“என்ரை தம்பி அப்பிடிச் செய்ய மாட்டுது." சிரித்தபடி, கந்தசாமி என் முதுகைத் தடவினார். கன்னத்தில் ஒரு அறை விடலாம் போல இருந்தது. வேலை போயிட்டால்...! பேசாமல் இருந்தேன்.
"சீச்சி. நாங்கள் தம்பிக்குக் கரச்சல் குடுக்கமாட்டம். இந்த முறை கொஞ்சம் இறுகிப் போச்சு. எப்படியும் அண்டைக்கே காசு போடுவம் தம்பி. நாதன் தன் பங்குக்குக் கெஞ்சினார். ஏதோ அண்ணன்மார்
-25

Page 22
is a
தம்பிமாரைக் கெஞ்சுமாப் போல. 'போட்டுவாறம் தம்பி. பார்த்துக் கொள்ளும்." பார்க்கப் பாவமாயும் இருந்தது.
என் முகத்தைப் பார்த்த திரு சொன்னான். "நீ இன்டைக்கும் பட்டினி
தான்ரா."
ஒன்றரைமாத லிவின்பின் வந்தேன். நிலைமை. அப்படியே தான் இருந்தது. என் இடத்தில் வைத்தி. "மச்சான். நீ வந்திட்டாய்தானே. என்னைக் காப்பாத்து மச்சான். இந்த ஒன்றரை மாசமா விசர் பிடிச்சிட்டுது. இந்தா லெட்ஜர்ஸ் எல்லாம். ஆளை விடு!". தப்பினேன் பிழைத்தேன் என்று ஓடினான்.
இரண்டு வருடமாக எடுக்காத லிவுகளை உடனடியாக எடுக்கச் சொல்லி தலைமை அலுவலகம் கடிதம் அனுப்பியதால் . ஒன்றரை மாதமாக நேரத்துக்குச் சாப்பிட்டேன். இனி.!
“வைத்தி. இனிமேல் மட்டும் உன்ரை வேலையை நான் மினெக் கெடுத்திறன் எண்டு திட்டாதே." என்றேன்.
“சரியடா. சரி! . அட, உன்னில ஏதோ வித்தியாசம் தெரியுது மச்சான்.' வைத்தி தொடர்ந்தான்.
“போடா. போய் வேலையைப் பார். இதென்ன குமுதத்தில ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்கிற மாதிரியே." வெட்டி அனுப்பினேன்.
லிவு முடிந்து வந்ததைக் கேள்விப்பட்டு. கஸ்ரமர்கள் சுகம் விசாரித் தனர். கந்தசாமியும் நாதனும் வந்தார்கள். பேசினார்கள். ஆனால் கொஞ்சம் எட்ட நின்றே பேசினார்கள்! ஒயாமல் . 'தம்பி, தம்பி" என்கின்ற கெஞ்சலுக்கு என்ன ஆயிற்று?
நாதன் ஒருபடி மேலே போய், அண்ணை'. என்று மரியாதையாக வேறு அழைத்தார்!
அன்று மத்தியானம் இரண்டு மணிக்கே சாப்பிடப் போனேன்.
' என்று வைத்தி
ஆவலாதிப்பட்டான். "இந்த ஒன்றரை மாதமும் நான் பட்டினியடா...'
-26
“எப்படியடா முடித்தாய் செக் றிற்ரேன்.?
 

என்று பிரலாபித்தான். என் முகத்தைப் பார்த்தவன் திடீரென்று கதையை நிற்பாட்டினான். உற்றுப் பார்த்தான். "இதென்னடா. ஒரு பெரிய மீசை வளர்த்திருக்கிறாய்...? முகத்தில கால்வாசியை விழுங்குதடா!' என்றான்.
"அதைவிடு. மீசை வந்தாலும் வந்தது. சாப்பாட்டு நேரத்தையே மாற்றி விட்டது பார்” என்றான் திரு.
மனேஜரும் சாப்பாட்டு அறைக்கு வந்தார். "என்ன இது? கம்பளிப் பூச்சி மாதிரிப் பெரிய மீசையோடை நிற்கிறீர். ஏன்?" என்றார்.
á 4.
நடைமுறைக் கணக்கில வேலை செய்ய." என்றான் திரு. எல்லோரும் சிரித்தோம்.
எப்படியோ மீசை அதன்பின் நின்று நிலைத்து விட்டது!

Page 23
Qiblycol
முற்றத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது, அழுகைச் சத்தம் கேட்டது.
“யாரங்க அழுகிறது?’. கேட்டபடியே வீட்டுக்குள் நுழைந்தேன். “வேற யார் உன்ர மருமகள்தான்' என்றா அக்கா, மது அழுது கொண்டிருந்தாள்.
"அரை மணித்தியாலமா அழுகிறாள். ஏதோ ஒப்படையாம். முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டுகள் வேணுமாம். நான் எங்கே போறது." என்றா அக்கா.
"வீட்டில இருக்கும் கண்ணாடியை உடைப்பமா?". இரகுவரனின் ஐடியா. மதுவைவிட நாலுவயது இளையவன்.
"நீயும் இப்ப அழப்போறியோ?" என்று அக்கா கேட்க ஒடித் தப்பினான்.
“என்ன மது. என்ன விசயம்.?" மதுவின் தலையைத் தடவி விசும்பலை நிற்பாட்டி விஷயத்தைக் கேட்க வேண்டி இருந்தது.
-28
 

"மாமா. ரீச்சர் தந்த ஒப்படை. செய்யவேணும்."
"சரி . என்ன ஒப்படை என்றுதான் சொல்லேன்?"
“சயன்ஸ் ஒப்படை. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து கடல் மட்டத்துக்கு மேல பார்க்கிறது."
அட. 'பொஸ்கோப். பத்தாம் வகுப்பில் பெளதீகத்தில் படித்து, மறந்தது. அதுவா!
"ஒப்படையை பள்ளிக்கூடத்தில வைத்தல்லவோ செய்யிறது முறை. அப்ப ரீச்சரும் சொல்லித்தரலாம்."
'இல்லை மாமா. பள்ளிக்கூடத்தில நேரம் இல்லையாம். வீட் டிலை இருந்து செய்துவரட்டாம். ரீச்சர் செய்யிற முறையை விளங்கப் படுத்தினவா."
'அதற்காக. இப்ப ஏன் அழுறாய்?"
"எனக்குச் சரியா விளங்க இல்லை. கண்ணாடித் துண்டும் இல்லை."
"பயப்படாதை. நான் உதவி செய்யிறன்". மதுவின் முகத்தில் புன்னகை!
"முகங்கழுவிக் கொண்டு ஓடிவா. ரவுணில போய், தேவையானது களை வாங்கி வருவம்." மோட்டார் சைக்கிளை ஸ்ராட் பண்ணினேன்.
"எங்கை போறாய்..? வேலையில இருந்து வந்து. தேத்தண்ணியும் குடிக்கேல்லை.” அக்கா தேநீர்க் கோப்பையுடன் வந்தா.
'மதுவும் நானும் ஒப்படைச் சாமான் வாங்கப் போறம்."
"வாங்கோ சேர்." என்றார் முதலாளி வயிரவநாதன். பின்னேரம் என்றபடியால் கடையில் சனக்கூட்டம். இருந்தாலும் என் வங்கி உத்தியோகத்துக்கு ஒரு மரியாதை!
“என்ன சேர் வேணும்.?” கடைப் பையன் ஓடிவந்தான். எனக்குத் தேவையான முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டுகள் பற்றிச் சொன்னேன். இன்ன நீளம், இன்ன அகலம் . சிலது முக்கோணமாய் வெட்டி. அவனுக்கு விளங்கப்படுத்தினேன்.
வயிரவநாதனின் கடை, ரவுணிலேயே பெரிய கண்ணாடிக்கடை. எங்கள் வங்கியின் கஸ்ரமர். வேலை எப்படியும் முடியும்!
-29
ostějiž-výr

Page 24
"சேர். நாங்கள் மொத்த விற்பனைதான். எங்களட்டை துண்டுக்கண்ணாடிகள் இல்லை. பிரேம் போடுற கடைகளிலதான் அதுகள் எடுக்கலாம்."
அப்போதுதான் என் முட்டாள்தனம் புரிந்தது.
"யோசிக்காதையுங்கோ சேர். உங்கை இரண்டாம் குறுக்குத் தெருவில குணரத்தினத்தின்ரை கடை, பிரேம் போடுற கடை, கட்டாயம் இருக்கும். நான் வேணுமென்டா கடைப்பொடியனை உங்களோடை அனுப்புறன்"
வேண்டாம் என்று தடுத்துவிட்டு மீண்டும் புறப்பட்டோம்.
குணரத்தினத்துக்கும் என்னைத் தெரிந்திருந்தது. ஒடி ஒடி உபசரித்தார். சாமானைக் கேட்டதும் தான் அந்தப் பிரச்சினை தெரிந்தது.
“இப்ப வெட்டுத்துண்டு எல்லாம் நாங்கள் வைச்சிருக்கிறதில்லை சேர். கொன்வென்டுக்குப் பக்கத்தில புதுசாத் திறந்த கடைப் பெடியன் கொஞ் சம் காசு தந்திட்டு அள்ளிக் கொண்டு போயிடுவான்’ என்றார் குணரத்தினம்.
“எந்தக் கடை?” . எனக்குப் பிடிபடவில்லை.
"மாமா எங்கட கொன்வென்ருக்குப் பக்கத்தில புதுசாத் திறந்தவை. அதாகத்தான் இருக்கவேணும்.” என்றாள் மது.
மோட்டார் சைக்கிள் கொன்வென்ரடிக் கடையை நோக்கி ஓடியது. கடை, கொன்வென்ற் மதிலோடேயே ஒட்டினாற் போல இருந்தது. பள்ளிச்சாமான் கடையா. அல்லது பலசரக்குக் கடையா. புரியாதபடி எல்லாப் பொருட்களும் இருந்தன. சுவரெங்கும் இறாக்கைகள். அவற்றில் அடுக்கடுக்காய் பொருட்கள். ஒவ்வொன்றும் வகையாய்ப் பிரிக்கப்பட்டு.!
"மாமா இங்கை இருக்கு." மது காட்டிய திசையில் இறாக்கையின் கீழ்த்தட்டில் கண்ணாடித்துண்டுகள். நீள அகலத்துக்கு ஏற்ப,
'தம்பி கண்ணாடித் துண்டுகள் வேணும்" என்றேன். கடைப் பொடி யன் நீள அகலங்கள் குறித்துக் கொண்டு உள்ளே போனான். நானும் மதுவும் துண்டுகளுக்காகக் காத்திருந்தோம்.
பொடியனுக்குப் பதிலாக நடுத்தர வயதுக்காரர் ஒருவர் வந்தார்.
-30

“என்ன தேவைக்குத் தம்பி, இந்தக் கண்ணாடித் துண்டுகள்.?”
சாமானைக் கேட்டால், என்ன தேவைக்கு என்று கேட்கிற கடைக் காரர் மேல் கோபம் வந்தது.
"ஏன். இதுகள் வாங்கிறதுக்கும் லைசன்ஸ் தேவையோ..?’ என் கேள்வியின் நக்கல் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.
'இல்லைத் தம்பி. பார்த்தால் ஏதோ பள்ளிக்கூட ஒப்படைக்குத் தேவையான சாமான் போல கிடக்குது. அதுதான் கேட்டனான்."
"ஒம். ஓம். ஒப்படைதான்."
“எந்த வகுப்புக்கு. என்ன ஒப்படை?”
“எட்டாம் வகுப்புக்கு. பெரிஸ்கோப்"
"பொடியா. அந்த இறாக்கையில. மேல்தட்டில. துணியால கட்டி வைச்சிருக்கிற பார்சலை எடு” என்றார் அவர்.
துணிப் பொதியைக் கவனமாகப் பிரித்தார். உள்ளே. நாலோ, ஐந்தோ பெரிஸ்கோப்புகள் வெவ்வேறு அளவில்! பள்ளிக்கூட ஒப்படைக்கு ஏற்ற தோற்றத்தில் இருந்தன.
"இதிலை ஒன்றைக் கொண்டுபோனால். உங்களுக்குச் சுகம். அதுதான் கேட்டன்." என் முகத்தை நோட்டமிட்டார் அவர்.
'இது மாத்திரமில்லை. அநேகமான பள்ளிக்கூட ஒப்படைகள் எல்லாம் பிள்ளையஞக்கு ஏற்ற மாதிரி செய்து வைச்சிருக்கிறம். ஏதேனும் தேவையென்டால் ரெலிபோன் பண்ணுங்கோ." அவர். அது தான் கடை முதலாளி. தனது விசிற்றிங் கார்ட்டை என்னிடம் நீட்டினார் எனக்கு இன்னமும் அதிர்ச்சி தெளியவில்லை.
ரீச்சரின் நேரத்தை மட்டுமல்ல, பிள்ளைகளினதும் பெற்றோரினதும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் கலை, எனக்குத் தெரிந்திருக்க நியாய மில்லைத்தான்!
-31

Page 25
9
9ဂ်ခံခÅနှိခြုံ2ဇံh
சைக்கிளில் இருந்து இறங்கியபடியே சபா சொன்னான், “தேவன்,
காத்துப் போகுது போல." என் சைக்கிளில் இருந்து இறங்கி அருகே போனேன். எந்தச் சில்லு என்று கேட்கமுன்னரே பின்சில்லின் வால்கட்
டையைக் கழற்றினான். 'புஸ். என்ற சத்தத்துடன் மிச்சக்காற்றும் போனது.
"மடவேலை. இன்னும் கொஞ்சத் தூரம் போயிருக்கலாம்.' என்
றேன். "பரவாயில்லை, வாடா. இரண்டு பேருமே உருட்டிக் கொண்டு போவம்" என்றான்.
"எவ்வளவு தூரமடா உருட்டுறது?’ எனக்கு எரிச்சலாக இருந்தது.
சபாதான் நெருக்கிக் கூட்டிக் கொண்டு வந்தான். ரவீந்திரனிடம் போய் நோட்ஸ் வாங்கிக் கொண்டு வருவோம், என்று. முதலில் மாட்டேன் என்றுதான் சொன்னேன். ஒரு சின்னப் பிரச்சினையில் ரவிக்குக் கன்னத்தில் ஒங்கி அடித்து விட்டேன். என்னில்தான் பிழை என்று எனக்கும் தெரிந்திருந்தது. இருந்தாலும். மன்னிப்புக் கேட்க வெட்கமாக இருந்ததால் பேசாமலே இருந்துவிட்டேன்.
-32
 

பின்புதான் என் முட்டாள்தனம் உறைத்தது. ரவியின் நோட்ஸ் கொப்பிதான் எங்கள் எல்லோருக்கும் வேதப்புத்தகம். மணியான கையெ ழுத்தில் அழகாக எழுதியிருப்பான். அவனது கொப்பியைப் பார்த்து எங்களது கொப்பியில் எழுதுவது தான் வழமை.
"நீயே போய் நோட்ஸ் கேட்டால். மன்னிப்புக் கேட்டமாதிரி இருக்கும்." என்று சொல்லித்தான் சபா கூட்டி வந்தான்.
குமரேசன் மாஸ்ரரின் ரியூற்றரி, பக்கத்து ஒழுங்கையில் இருப்பது ஞாபகம் வந்தது. "அங்கே போய் சைக்கிள் பம்ப் கேட்போம்” என்றேன்.
"போடா உந்த ஒழுங்கை வழியே போனால். இன்னும் கொஞ்சம் முள்ளுக் குத்தும். பிறகு ரியூப்' தான் மாற்ற வேணும். இங்கை மெயின் ரோட்டிலேயே யாராவது தெரிந்தவர் வீட்டில் சைக்கிளை விட்டிட்டு, ரவி வீட்டில் போய் "பம்ப்" எடுத்து வருவம்.”
அதுவும் சரி என்று பட்டது.
"இன்னமும் கொஞ்சத் தூரம் போனால் காயத்திரி வீடு வரும். அங்கே சைக்கிளை விட்டிட்டுப் போவம்' என்றான்.
எனக்குத் திக்கென்றது. உண்மையாத்தான் ரியூப்பில் காற்றுப் போயிற்றோ..? அல்லது இவன்தான் கழற்றி விட்டானோ? என்ற சந்தேகமும் வந்தது. காயத்திரி எங்கள் பாடசாலைக்குப் பக்கத்துப் பாடசாலையில் படிப்பவள். பாடசாலைகட்கிடையேயான போட்டிகளில் கலந்து கொள்ள வருவதால், அவளுக்கு என்னையும் சபாவையும் தெரியும். இவனும் பல தடவைகள் சைக்கிளில் 'கலைத்துத் திரிந்திருக் கிறான். கனகசபை மாஸ்ரர் ஒருமுறை "படிக்கிறதை விட்டிட்டு ஆருக்கும் பின்னாலையும் சுத்தாதையும்' என்று எச்சரித்தார். பிறகு தெரிந்தது, அவரின் தமையன் மகள்தான் காயத்திரி என்று.
“டேய். வேணுமெண்டே காத்தைப் போக்காட்டினனி.?"
“மடையன் மாதிரிக் கதையாதை. இப்ப நடக்கிறதைப் பார். அந்தப் பெரிய கேற் போட்ட வீடுதான். போய் பெல்லை அடி.'
இனி அவனிடம் கதைப்பதில் பிரயோசனமில்லை என்று பட்டது. சைக்கிள் பெல்லை அடித்தேன். சின்னப் பொடியன் ஒருவன் எட்டிப் பார்த்து, "என்ன வேணும்" என்றான்.
-33

Page 26
"காயத்திரி இருக்கிறாவா..?"
உள்ளே போனவன் இன்னொரு மனுசியுடன் வந்தான். சாடையில் காயத்திரியின் அம்மா போலிருந்தது.
'ஆர் தம்பி நீர்..?”
"நான் தேவன். இவர் சபா. காயத்திரியின்ரை பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துப் பள்ளியில படிக்கிறம். அவவுக்கும் எங்களைத் தெரியும். சைக்கிளுக்குக் காத்துப் போட்டுது. அதுதான்."
“யாரம்மா..?” என்றபடி காயத்திரியும் வந்தாள்.
"ஒ. தேவனோ. உள்ள வாங்கோ. என்ன விசயம்?"
'இல்லை. சைக்கிளுக்குக் காத்துப் போட்டுது. "பம்ப்" இருக்குமோ..? என்று இழுத்தேன்."
“பிள்ளை இவையளைத் தெரியுமோ..?" காயத்திரியின் காதுக்குள் குசுகுசுத்தார் தாய்.
ஓம். ஓம். தெரியும். ஆனால் இஞ்சை சைக்கிள் "பம்ப்" இல்லை."
"சைக்கிளை இஞ்சை விட்டிட்டு. மாலுசந்தியில ரவீந்திரன் வீட்டை
போய் பம்ப் எடுத்திட்டு வரலாம் எண்டு பாக்கிறம்." என்றான் சபா.
"அதுக்கென்ன தம்பி. விட்டிட்டுப் போங்கோ' என்றார் காயத்திரி யின் தாய்.
வெளியே வரும்போது கொஞ்சம் யோசனையாக இருந்தது. இதுவும் மாஸ்ரருக்குத் தெரிய வந்து எனக்கும் மங்களம் கிடைத்தால்...! சபாவிடம் சொன்னேன்.
"சும்மா பயப்பிடாதை. இப்ப என்ன செய்து போட்டம்.? காத்துப் போட்டுது. சைக்கிளை வைக்க இடம் கேட்டம். என்ன பிழை??
"நீதானேயடா காத்தைப் போக்காட்டினாய்!"
“சத்தம் போடாம வாடா. பெரிய அரிச்சந்திரன்தான் நீ."
-34
 

ரவீந்திரன் வீட்டை போனதும் அவன் ஒடி வந்து வரவேற்றான். "வாடா இப்பவெண்டாலும் வழி தெரிஞ்சுதே." என்றான். எனக்கு வெட்கமாக இருந்தது. "நான் எப்பவோ மறந்திட்டன். நீதான்." என்று சிரித்தான். இவனைப் போய் அடித்தேனே என்று மனம் சங்கடப்
பட்டது.
ரவியும் அவனுமாக சைக்கிள் பம்பையும் எடுத்துக் கொண்டு ரவியின் சைக்கிளில் போனார்கள். நான் ரவியின் தாயார் தந்த தேநீரைக் குடித்து முடிய, இருவரும் திரும்பி வந்தார்கள்.
'தம்பி. நீரும் தேத்தண்ணியைக் குடிச்சிட்டுப்போம்.' ரவியின் தாய் சபாவை கூப்பிட்டார்.
"நாங்கள் காயத்திரி விட்ட குடிச்சிட்டம் அம்மா' என்றான்.
சபாவைப் பார்த்தேன். முகத்தில் பெருமிதம்! “எப்பிடி என் வேலை” என்று கேட்குமாற் போல, கேற்றடியில வைத்து ரவியிடம் சொன்னேன், 'மச்சான். இவன் என்னையும் உன்னையும் சேர்த்துப் பேக்காட்டுறான். கவனமா இரு. பிறகு எங்கட தலைதான் உருளும்!"
"போடா. காயத்திரி இவனுக்கு மசியமாட்டாள்.' ரவி சிரித்தான்.
ஏ.எல் சோதனையின் போதுதான் மீண்டும் காயத்திரியைக் கண்டேன். ரிசல்ட் வந்தது. நான் பெயில் என்று உறுதியானது. அதற்காக என்னை விட ரவிதான் அதிகம் கவலைப்பட்டான். அவன், சபா, காயத்திரி எல்லோருக்கும் யூனிவேசிற்றிக்கான புள்ளிகள் கிடைத்திருந்தன.
AA
சபா. யூனிவேசிற்றியில போய் அவளிட்டைச் சான்ஸ் கேளடா' என்றான் ரவி.
'இல்லையடா. நான் லண்டனில அண்ணாவிட்டப் போறன்." "அப்ப காயத்திரி. விஷயத்தை. விட்டிட்டியா?" சபா ஒன்றும் சொல்லாமல் கொஞ்சநேரம் இருந்தான். "என்னடா சொல்லன்ரா..?
ரவி கிண்டினான்.
'இல்லை மச்சான். அவளைக் கேட்டன், மாட்டன் எண்டிட்டாள். படிக்கிற வயதில இதென்ன விசர் வேலை எண்டு திட்டினாள்.'
-35

Page 27
"அப்ப என்ன. லண்டனுக்குப் போய் பாதிரியாராகப் போறியோ?” என்று சிரித்தான் ரவி.
சபா லண்டன் போனதாக அறிந்தோம். தனக்கும் சொல்லவில்லை என்றான் ரவி. திரும்பவும் ரியூற்றரி, ஏ.எல், ரெக்னிக்கல் கொலேஜ், சம்பந்தமே இல்லாத தொழில். ஆறு வருடங்கள் ஒடி ஒளிந்தன. கொழும் பில் ரவியைச் சந்தித்தேன். பல்கலைக்கழக விரிவுரையாளனாக இருந் தான். மேற்படிப்புக்காக அமெரிக்கா போக இருப்பதாகச் சொன்னான். இனிமேல் அவனையும் சந்திக்கும் வாய்ப்பு இராது என்று மனம் சொன்னது.
தேரசைவது போல, வாழ்க்கை ஆற அமர உருளுகையில் காலம் ஒடியே விடுகிறது. மீண்டும் தொழில் மாறி, நண்பர்கள் சேர்ந்து. பிரிந்து. ஆனால் சபாவும் ரவியும் தட்டுப்படவே இல்லை.
மழை காரணமாக, எல்லா விமானங்களும் பிந்தி வந்தன. பயணி களின் கூட்டம் எக்கச்சக்கமாக இருந்தது. பெரிசுகளும் குஞ்சு குரு மன்களும் கியூவில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. பார்க்கப் பரிதாபமாக இருந்தது. விரைவாகப் பயணிகளை அனுப்புமாறு கூறி விட்டுத் திரும்புகையில் ஏதோ கசமுசா சத்தம்!
கணவன், மனைவி, மகன் என்று ஒரு குடும்பம். அலுவலருடன் ஏதோ தர்க்கம்! எட்டிப் பார்த்தேன். தெளிவில்லாத அறிவிப்புப் பலகைகளால் ஏற்படும் வழமையான சிக்கல்!
தெரிந்த முகம்போல இருந்தது. "சபாவோ...' மனதின் மூலையில் மெல்லிய உற்சாகம், கிட்டப் போனேன். விசாரித்துப் பார்க்க மனம் உந்தியது. சபாவேதான். நம்பிக்கை வலுத்தது. நல்லாய்ப் பெருத்துச் சிவந்திருந்தான்.
'நீ. மன்னிக்கவும். நீங்கள் சபாநாதன் தானே...!" திடுக்கிட்டுத் திரும்பினான். என்னை மட்டுக்கட்ட அவனால் முடியவில்லை.
'நீங்கள் யார்.?" என்றான்.
பெயரைச் சொன்னதும் திகைத்துப் போனான்.
“தேவன். சரியா மாறிட்டாய். முந்தி இருந்த பால்வடியும் முகம் இல்லை. பெரிய மீசை பொலிஸ்காரன் மாதிரி இருக்கிறாய்.” என்று
-36

சிரித்தான். ஏறக்குறைய இருபது வருடங்களின் பின் சந்திக்கிறோம் என்று வியந்து கொண்டான்.
"எப்பிடி இருக்கிறாய்..? திரும்பவும் என்னையறியாமலே ஏக வசனத்திற்கு தாவியிருந்தேன்.
'நல்லாய் இருக்கிறன். குடியும் குடித்தனமுமாக." அதே பழைய சிரிப்பு. நக்கல்!
"இப்ப லண்டனில் பேர் சொன்னால் தெரியும் அளவுக்கு ஒரு வழக் கறிஞர், நான். மறந்துவிட்டேன். இது என் மகன் அசாந்த். மனைவி காயத்திரி!'
காயத்திரியா..? அதே காயத்திரியா..? எப்படி மாறிவிட்டாள்.! என்னால் நம்ப முடியவில்லை.
எப்படி, என்று கேட்பது நாகரிகமில்லை என்று பட்டதால் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்தேன்.
"வழக்கம் போல பேசாமல் இருக்கிறாய். எப்படி என்று கேளன்"
என்றான் சபா.
"எண்பத்துமூன்றுக் கலவரத்தில் இலங்கை அகதிகள் பலர் இலண் டனில் கொட்டுப்பட்டனர். அவர்களுக்கு உதவுகிற வழக்கறிஞனாக வேலை செய்தேன். காயத்திரி குடும்பமும் அப்படித்தான் வந்து சேர்ந் தவை. பிறகு இப்பிடி முடிஞ்சுது!'
"சைக்கிளுக்கு வால்கட்டை கழட்டின மாதிரி, இதுக்கும் ஏதும் பிளான் வைச்சிருந்தனியோ..?' என்றேன்.
சபாவும் காயத்திரியும் வாய்விட்டுச் சிரித்தனர். . நானுந்தான். எங்கள் சிரிப்பின் காரணம் புரியாமல், அசாந்த் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
റ ε) / -

Page 28
Ο
o 9ηλιού
பிரசாத் அடிக்கடி கூப்பிடுவான், "அருமையான பஜனை. வந்து பாரேன். பூசை முடிய ஏழு மணியளவில் வந்தால் போதும்." அவன்தான் ஆச்சிரமத்தில் நடக்கும் பஜனைக்கு மிருதங்கம் வாசிப்பவன்.
சனிக்கிழமைகளில் பஜனை. மூன்று வாரங்கள் தொடர்ந்து போன பின்னர், மனம் பஜனையில் ஒட்டிக் கொண்டது. ஏதோ ஒர் ஈர்ப்பு! தேவாரத்தை இவ்வளவு அழகாகவும் உருக்கமாகவும் பாடமுடியுமா? ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருந்தது.
ஒரு சனிக்கிழமை, சாமியார் கூப்பிட்டு விசாரித்தார். பெயர், ஊர், வேலை என்று எல்லாமே கேட்டார்.
"ஏன் பூசைக்கு வருவதில்லை. பஜனைக்கு மட்டும் வருகிறீர்?" சிரித்தேன். அவரும் சிரித்துவிட்டுப் போனார். இலகுவில் மறக்க முடியாத சிரிப்பு!
"ஒவ்வொரு சனிக்கிழமையும் கடற்கரைக் காத்து வாங்காமல் இப்ப வெல்லாம் ஆச்சிரமம் போறாயாக்கும். ஏதாவது அம்பிட்டதா..?” என்றான் சலாவுதீன்.
“இல்லை. சாமியாராகப் போறேன்."
-38

"சும்மா மடக்கதை கதையாதே. நீயாவது சாமியாராகப் போறதோ. எப்போதுமே நீ ஆசாமிதான்."
பஜனையைப் பற்றிச் சொன்னால் நம்பமாட்டான். கொம்யூனிசம் கதைச்சுக் கொண்டு உதுவேறயோ..? என்று நக்கலடிப்பான். பேசாமல் GLumtuiu 69 GL Gör.
திங்கள் காலை. இரண்டு லட்ச ரூபா "டிராப்ட் மாற்ற வேண்டு மென ஒருவர் வங்கிக்கு வந்தார். சாமியாரின் பெயரில் இருந்தது டிராப்ட், பணத்தை வந்தவரிடம் கையளிக்குமாறு ஆச்சிரமக் கடிதத் தலைப்புடனான ஒப்புதலும் இருந்தது.
“காசாகத் தருவதென்றால். சாமியார்தான் வரவேணும். வேண்டு மென்றால் கணக்கில் வரவு வைக்கலாம்."
"மனேஜரிடம் போய்ப் பேசலாமோ..?” என்றார் வந்தவர். தலையை ஆட்டிவிட்டு வேலையைக் கவனித்தேன். அவர் மீண்டும் வரவில்லை. மனேஜரும் அதையேதான் சொல்லி இருக்க வேண்டும்.
அடுத்தநாள் காலை, சாமியாரே வங்கிக்கு வந்தார். வரதன் ஒடிப் போய் பயபக்தியோடு கூட்டிவந்தான்.
"நான் வந்தால்தான் காசு தருவிரோ.?’ சிரித்தார். மனதைக் கவ்வு கின்ற அதே சிரிப்பு.
"அதுதான் சட்டம். அதை மாற்ற முடியாது." "மெத்தச் சரி. இப்போது என்னிடம் பணத்தைத் தரலாந்தானே' மீண்டும் அந்தச் சிரிப்பு.
'மறக்காமல் சனிக்கிழமை பஜனைக்கு வாரும் தம்பி" என்றபடி சாமியார் போனார். வரதன் முறைத்தான்.
"எல்லாரும் சாமியார் சொல்லத் தலை கீழாக நிண்டு செய்யி றாங்கள். நீ அவரை வங்கிக்கே கூப்பிட்டிட்டியே.?”
அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து விட்டேனோ என்று ஒரு நெருடல். யோசித்துப் பார்க்கையில் நான் செய்ததில் பிழையில்லை என்று தெளிவு பிறந்தது.
இப்படித்தான் சாமியாருடன் நெருக்கம் ஆரம்பித்தது. பஜனை இல்லாத நாட்களிலும் சாமியாருடன் போய்ப் பேசிக்கொண்டிருக்கின்ற அளவுக்கு வளர்ந்தது.

Page 29
ஆச்சிரமத்துப் பிள்ளைகள் தங்கியிருக்கும் இடத்திற்கும் சாமியார் கூட்டிப் போனார். ரவுணிலிருந்து பத்துமைல் தூரம் - அழகான இடம். பூந்தோட்டம் போல இருந்தது. ஏறக்குறைய ஐம்பது பிள்ளைகள். எல்லோரும் திக்கற்றவர்கள்தான்! சாமியாரைக் கண்டதும் ஓடிவந்து சூழ்ந்து கொண்டார்கள். கூடவே "ஊர்ப் பெரியவர்கள் பலரும் இருந்தனர். பிறண்டிக் கடை மகாலிங்கம், தியேட்டர் ஒணர் தங்கராசா, முதலாளி சுந்தரலிங்கம், வழக்கறிஞர் ரங்கநாதன், பெரியகடை மோகன சுந்தரம். எல்லாப் பெரிய மனிசரும் நின்றனர்.
தாங்கள்தான் அந்தப் பிள்ளைகளை வாழ வைக்கிறார்கள் என்ற தோரணை. அவர்கள் பேச்சில் அவர்களின் தலையீடு கொஞ்சம் அதிக மாகவே இருந்தது போலப்பட்டது. மனதில் பட்டதைச் சாமியாரிடம் சொன்னேன். அதற்கும் அதே சிரிப்பு!
"இந்தப் பிள்ளைகளுக்காக அவர்கள் பணம் செலவழிக்கிறார்களே."
என்றார் சாமியார்.
"இவர்களிடம் பணம் வாங்கி இந்தப் பிள்ளைகளை வளர்ப்பது
உங்கள் சமயக் கொள்கைகளுடன் முரண்படாதா?”
"என்ன கொள்கை. என்ன சமயம். முதலில் பசி! அதை மறந்தால் தான் சமயம். பசியைப் போக்கப் பணம் வேண்டும். என்னிடமும் இல்லை. உன்னிடமும் இல்லை. இவர்கள் தருகிறார்கள்!"
'இது சரியா..?
"ஏன் சரியில்லை. உங்களுடைய கொம்யூனிசக் கொள்கை மாதிரித் தான் இதுவும். இருப்பவர்களிடம் பெற்று இல்லாதவரிடம் கொடுக்கி றேன்."
"இருந்தாலும் சரியாகப் படவில்லை."
"அப்படியானால், இந்த ஐம்பது பிள்ளைகளையும் பட்டினியுடன் இருக்க இடமில்லாமல். இப்படியே விட்டு விடலாம் என்கிறீரா.? அது சரியா..? இது எனது வழி. உங்கட சமதர்மக் கொள்கையை விட வித்தியாசமானதுதான்." என்றார் சாமியார், முத்தாய்ப்பாக ஒரு சிரிப்பு!
சாமியார் என்ன தான் சொன்னாலும். அவர் செய்வது எவ்வளவு தூரம் சரி என்று எனக்குப் பிடிபடவில்லை. பிள்ளைகளைத் திரும்பிப் பார்த்தேன். அந்த முகங்களின் மலர்ச்சி.1 என் நெஞ்சு குளிர்ந்து. நிறைந்தது!
நான் தொடர்ந்தும் பஜனைக்குப் போனேன்.
- 40

GîS aym&S
66
Tெப்பிடியடா பிடிக்கிறது?’. என்றான் குகன்.
"தோட்டத்திலை தேடுவம். இல்லாடில் பெத்தாச்சியின்ரை பழைய கொட்டிலுக்குள்ளை பாப்பம்." என்றேன்.
"தோட்டத்திலை இந்த முறை கச்சான் நடயில்லை. பெத்தாச்சி யின்ரை வீட்டதான் போகவேணும். 罗列
"எப்படியாவது பிடிக்க வேணுமடா. இல்லையெண்டால் திங்கட் கிழமை வகுப்புக்கு வெளியிலை தான். சுந்தரமூர்த்தி மாஸ்ரர் சொன் னாச் சொன்னதுதான். 罗列
எலி ஒன்று பிடிப்பதுதான் இப்போதைய பிரச்சினை. எட்டாம் வகுப் புப் படிக்கத் தொடங்கிய போது, இப்படியெல்லாம் பிரச்சினை வரும் என்று நாங்கள் ஒருவருமே எதிர்பார்க்கவில்லை. சுந்தரமூர்த்தி மாஸ்ரர்தான் ‘விஞ்ஞானம் படிப்பித்தார். படிப்பித்தல் எழுப்பம்!
"படிப்பு என்னடா படிப்பு. எல்லாம் அநுபவத்தோடை சேர்ந்திருக்க வேணும். மனுசனுக்குப் பயன்படாத படிப்பாலை ஒரு பிரயோசனமும் இல்லை." என்பார்.
- 41

Page 30
திடீரென ஒருநாள். "எலிதான் நோய்க்கான முக்கிய காரணி. எல்லாரும் எலி பிடியுங்கோ." என்றார். நாங்கள் சிரித்தோம்.
“சிரிக்க வேண்டாம். சீரியசாசச் சொல்லுறன். இந்தச் சனி, ஞாயிறு ஒவ்வொருவரும் ஒவ் எலியாவது பிடிக்க வேணும். திங்கட்கிழமை பிடிச்ச எலியின்ரை வாலைக் கொண்டு வரவேணும். இல்லாட்டில் வகுப்புக்கு வெளியிலைதான் நிக்கோணும்."
'வகுப்புக்கு வெளியே நின்று என்ன செய்யிறது.?' வாமன் மெதுவாகக் கேட்டான்.
"எலி பிடிக்கிறதுதான்."
வகுப்பே சிரித்தது.
“சேர். இரண்டு பேராகச் சேர்ந்து பிடிக்கலாமோ..?" தயங்கிய படியே வாமன் கேட்டான்.
"ஒம்.!"
எல்லோரும் சோடி சேர்ந்தோம். எனக்குக் குகன். பெத்தாச்சியின் கொட்டில் நிறையத் தட்டுமுட்டுச் சாமான்கள். நாங்கள் உருட்டிப் பிரட்டிய சத்தம் கேட்டு, எங்கள் நாயும் சேர்ந்து கொண்டது. ‘புதையல் மாதிரி" எலி ஒன்று ஓடியது. நாங்கள் கலைத்து அடிக்க. ஒரு மாதிரி யாக நாய் அதைப் பிடித்து விட்டது. அந்தக் கிழமை நாயின் புண்ணியத்தில் பிழைத்துக் கொண்டோம்.
திங்கட்கிழமை காயவைத்த எலி வாலைக் காட்டியபோது, மாஸ்ரர். தலையை ஆட்டினார். கொஞ்சப் பேர் வகுப்புக்கு வெளியே போனார் கள். லோகநாதன் தான், 'ஹிரோ. மூன்று எலி பிடித்திருந்தான். மாஸ் ரரே ஆச்சரியப்பட்டார். இதுவும் ஒரு வகைச் சமூகத் தொண்டு என்று அவனைப் பாராட்டினார்.
மாஸ்ரர் போனபின், "எலி பிடிப்பது சமூகத் தொண்டா..?' என்று லோகனைக் கேட்டேன்.
'இல்லையடா. அது பூனைத் தொண்டு.” என்று சிரித்தான்.
-42

அடுத்தகிழமை பிரச்சினையில் முடிந்தது. ஒரு எலிதானும் அம்பிட வில்லை. எல்லாமே ஒடித்தப்பிவிட்டன. திட்டு வாங்கி வகுப்புக்கு வெளியே நிற்கவேண்டியதாயிற்று. இந்தமுறையும் லோகன் மூன்று எலி பிடித்திருந்தான்.
‘எலி பிடிகாரன்" என்ற பட்டமும் கிடைத்தது.
“என்னடா செய்யலாம்.?" என்றான் குகன், அடுத்த கிழமையும் எலி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கவில்லை.
'லோகனைக் கேட்டுப்பாரடா..? உன்ரை கூட்டாளிதானே, ஒன்றாவது பிடித்துத் தருவான்." என்றான்.
அவனது யோசனை நன்றாகவே உதவியது. அடுத்த திங்கள் எங்களுக் காக லோகன் இரண்டு எலிவால் கொண்டு வந்திருந்தான். தனக்காக மூன்று.
"அவன் விண்ணன்தான்ரா..!" என்று குகன் வியந்தான்.
"இப்படியே அவனைப் பிடித்துக் கொள்ளடா." என்று அட்வைஸ் வேறு.
தொடர்ந்து எலி பிடித்துத் தரும்படி லோகனிடம் கேட்க வெட்கமாக இருந்தது. "நானும் குகனும் வருகிறோம். சேர்ந்து பிடிப்போமா..?”
என்று கேட்டேன்.
கொஞ்சம் யோசித்துவிட்டு. 'குகன் வேண்டாம். நீ மட்டும் வா." என்றான்.
"என்ன கிழமை பிடிக்கலாம்?' என்றேன்.
"எலி பிடிக்கிறதுக்கு நாள் பார்க்க வேணுமோ..? இந்த வெள்ளிக் கிழமை பிடிப்பம்."
“வெள்ளிக்கிழமை வேண்டாமடா. கோவிலுக்குப் போகவேணும்."
"சரி வியாழக்கிழமை பிடிப்பம். பள்ளிக்கூடம் முடிய என்னோடை வா. போகலாம்."
-43

Page 31
வியாழக்கிழமை கெதியாக வந்துவிட்டது போல் தோன்றியது. லோகன் வீட்டிற்குப் போய்ப் புத்தகங்களை வைத்து விட்டு, எலி பிடிக்க வெளிக்கிட்டோம். ஒழுங்கையால் நடந்து கடற்கரை ரோட்டிற்கு வந்தோம். மீன் மார்க்கட்டுக்குள் நுழைந்தான். பூனைகள்தான் நிறைய நின்றன. பூனையுள்ள இடத்தில் எலி இருக்குமா? என்ற சந்தேகம் வந்தது. விறுவிறு என்று நடந்து போய் மீன் விற்கும் ஆச்சியிடம் ஏதோ கதைத்தான். கிட்டப்போன போது, ஆச்சி கடதாசியில் சுற்றியபடி ஏதோ அவனிடம் கொடுத்தது தெரிந்தது. விரித்துப் பார்த்தபோது, எலிவால்கள் இருந்தன.
"வாடா போகலாம்." என்று வெளியே கூட்டி வந்தான்.
'நீ எலி பிடிக்கிறதில்லையாடா..?
'இல்லை. இந்த ஆச்சி வீட்டிலை நிறைய எலி இருக்குதாம். அவதான் பிடிச்சுத் தாறவ."
“காசு குடுக்க வேண்டாமோ..?
“இல்லையடா. சும்மாதான்,' என்று சிரித்தான்.
"இந்தாடா உனக்கு மூன்று வால். எனக்கு இரண்டு போதும்." என்று கொஞ்சம் தாராளமாகவே கொடுத்தான்.
திங்கட்கிழமை நானும் குகனும் தான் "ஹீரோ"
“மூன்று எலி பிடிச்சிருக்கிறாங்கள். கெட்டிக்காரன்கள்." என்று
சுந்தரமூர்த்தி மாஸ்ரர் பாராட்டினார்.
வகுப்பு முடிய நானும், குகனுமாகப் போய் லோகனுக்கு நன்றி சொன்னோம்.
"அடுத்த முறை ஐந்து தாறன்." என்றான்.
'அவ்வளவு எலி பிடிக்கலாமாடா..?
“மடையா. இது எலிவால் இல்லை. குஞ்சுத் திருக்கை மீன் வால். மாஸ்ரருக்கு விளங்காது."
நானும் குகனும் ஆளை ஆள் பார்த்தோம். "பேய் முழி முழிக் காதையுங்கோ. பிறகு மாட்டுப் படுவியள்." என்றபடி லோகன் போனான்.
44
 

a/1ဍ)%©
66
னெக்கும் ஒரு "ரீ போடச் சொல்லடாப்பா. களைப்பா இருக்கு”
என்றபடி கதிரையில் அமர்ந்தான், குமார்.
ஆச்சரியமாக இருந்தது. சமறியில் பின்னேர ரீ போடுவதில் தன்னை ஒருவருமே மிஞ்ச முடியாது என்று தம்பட்டம் வேறு அடித்துக் கொள் பவன். சமறியில் இருந்த ஐந்துபேரும் வேலையிலிருந்து வந்து குமார் போடும் "ரீக்காகக் காத்திருப்பது வழக்கமாய் இருந்தது.
"நீ, டொக்டர் வேலைக்குப் போகாமல். தேத்தண்ணிக் கடை வைத்திருக்கலாம்." என்று ரகு அடிக்கடி நக்கல் அடிப்பான். ஆனால், யார் என்ன சொன்னாலும், பின்னேரத்தில் ரீ போடுவது குமார்தான். "சும்மா சொல்லக்கூடாது, அவன் போடும் ரீ. திறம்தான்' என்று சமறியில் எல்லோருமே ஒத்துக் கொண்டார்கள்.
"ஏன் குமார் உடம்பு சரியில்லையா?"
"இல்லை தேவன். மனம்தான் சரியா இல்லை."
"ஏன் சாந்தாவோடை வழக்கம் போலப் பிரச்சனையா?"
45
SMS SSSSSSS SSTTSSMSS

Page 32
"கலியாணம் கட்டிறதெண்டு தீர்மானம் ஆனபின், இரண்டு பேரும் சண்டை பிடிப்பதில்லை. ஆனால், இப்ப புதுப் பிரச்சனை."
எனக்கு எரிச்சல் வந்தது. இந்தக் கலியாணத்தை ஒப்பேத்த நானும் ரகுவும் பட்டபாடு. எத்தனை சமாதான முயற்சிகள். சாந்தா வீட்டாரை யும், குமாரின் தாய் தகப்பனையும் சம்மதிக்க வைக்கப்பட்ட பாடு.
"காதலிப்பியள். வீட்டிலை வேண்டாமெண்டால் அழுது ஆர்ப் பாட்டம் பண்ணுவியள். பிறகு எங்களட்டை வந்து மண்டாடுவியள். எல்லாம் ஒருமாதிரிச் சரிவர, இப்ப வேறை பிரச்சனை எண்டு.”
"கோவிக்காதையடாப்பா. இது வேறை மாதிரிப் பிரச்சனை."
"டக். டக்' என்று கதவைத் தட்டும் சத்தத்துடன். “உள்ளே வரலாமா..?' என்ற குரல் கேட்டது. வாசலில் சாந்தா நின்றிருந்தாள்.
"என்னப்பா. நீர் கிளினிக் முடிந்து ஹாஸ்ரலுக்குப் போக வில்லையா?." என்றான் குமார்.
“தேவன் அண்ணாட்டைச் சொல்லலாம் என்று வந்தன்."
As G) ரசர ஏன நான சொலலமாடடனா.:
'சரி சரி சண்டையைக் கலியாணத்திற்குப் பிறகு வைச்சுக் கொள்ளுங்கோ. இப்ப விசயத்தைச் சொல்லுங்கோ." என்றேன்.
“தேவாண்ணை. எல்லாம் சரிவந்தாப் போல. இப்ப எங்கடை மாமா. சாதகப் பொருத்தம் பார்க்க வேணுமென்று நிக்கிறார்."
66 罗列
அதுக்கென்ன LUITTT B5695 LILL-GRT... . .
"பார்த்தாச்சு. நானும் குமாரும் பிள்ளையார் கோவில் ஐயரட்டைக் குடுத்துப் பார்த்தனாங்கள், துப்பரவாகப் பொருந்தவில்லை என்று சொல்லுறார்."
"என்ன வேதாளம் பழையபடி முருங்கை மரமேறுது..?
AA o
அதுதான் தேவன் பயமாய் இருக்கு. நீங்கள் எல்லாரும் கஷ்டப்
பட்டு கலியாணத்திற்கு சம்மதிக்க வைக்க இந்தாள் வந்து குழப்பும் போல கிடக்கு." குமாரின் பேச்சில் கவலை தொனித்தது.
-46

என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. நிமிர்ந்து ரகுவின் முகத்தைப் பார்த்தேன். வழமையான சிரிப்புடன் தலையை ஆட்டினான்.
"நாங்கள் குழம்பிப் போய் இருக்கிறம். நீங்கள் சிரிக்கிறியள்." என்று அவன் மேல் கோபப்பட்டாள் சாந்தா.
"சாதகத்தைக் குடுங்கோ. உங்கடை மாமாவும் ஒருக்காப் பார்க்
கட்டன்." என்றான் ரகு.
"ஐயோ, .பொருந்தவே இல்லை. பிள்ளையார் கோவில் ஐயர் பொருத்தம் பார்க்கிறதிலை கெட்டிகாரர்." என அழாக்குறையாகச் சொன்னாள் சாந்தா.
"அப்ப ஒண்டு செய்வம். இரண்டு சாதகத்தையும் என்னடைத் தாங்கே. நான் மாமாவோடை கதைச்சுச் சரி பண்ணுறன்."
"ரகு எப்படியாவது சரி பண்ணடாப்பா. இல்லாட்டில் நாங்கள் தற்கொலைதான் செய்யோணும்' என்றான் குமார்.
"விசர்க்கதை கதையாதை. நீங்கள் இரண்டு பேருமே டொக்ரர். ஒரு டொக்ரர் கதைக்கிற கதையே இது. பேசாமல் சாந்தாவைக் கூட்டிக் கொண்டு போய் ஹாஸ்ரலிலை விட்டிட்டு வா. எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்ளுறன்."
தாலி கட்டி முடிந்தபின்னர்தான், சாந்தாவினதும், குமாரினதும் முகத்தில் 'களை வந்தது. சாந்தாவின் மாமாவும் ரகுவும் கலியாண மண்டப வாசலில் நின்று சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். கலியாண வேலை முழுக்க என் தலையில் விழுந்ததால் நான்தான் ஒடித்திரிய வேண்டி இருந்தது.
"ரகு. கொஞ்சம் உதவி செய்யடாப்பா. மாப்பிளை பொம்பிளை யைக் கால்மாற அனுப்போனும்."
"அதுக்கென்ன நாங்கள் செய்யிறம் கவலைப்படாதை.என்றபடி ரகு வர, மாமாவும் விசிறி மடிப்புச் சால்வையுடன் பின்னே வந்தார்."
"சாப்பாடு முடிய அனுப்பினால் போதும்தானே மாமா. இராகு காலத்திற்கு முந்தி அனுப்பிவிடலாம்.'
-47

Page 33
“சாத்திரம் நல்லாப் பார்க்கிறீர் தம்பி.” என்று ரகுவை ஆசீர்வதித்
தார் மாமா.
மாமா. மாமா என்று ரகு கூப்பிடுவதையும். ரகு. ரகு. என்று அவர் உருகுவதையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. எப்படி இவ்வளவு கெதியிலை அவரை மடக்கினான் என்று பிடிபடவில்லை.
“தேவன் நீ போய்ப் பந்தியைக் கவனி. மாப்பிளை, பொம்பிளையைச் சாப்பிடப் பண்ணி நாங்கள் அனுப்பி வைக்கிறம்."
சனக்கூட்டம் போன பின்னர், மண்டபம் வெறிச்சோடிக் கிடந்தது.
கலியாணக் களைப்புத் தீர ஒரு கதிரையில் சாய்ந்து உட்கார்ந்தேன்.
“என்னடா களைச்சுப் போனியா..? ரீ. போட்டுத்தர குமாரும்
இல்லை." என்றபடி வந்தான் ரகு.
"மாமா. எங்கையடா..?"
'மாப்பிளை பொம்பிளையோடு அனுப்பிவிட்டன். ' என்று கண்ணைச் சிமிட்டினான்.
“எப்படியடா. மாமாவைச் சரிக்கட்டினாய்?" இவ்வளவு நாட்களாக
மனதில் இருந்த கேள்வி டக்கென்று வெளியே வந்தது.
"கட்டாயம் தெரியவேணுமோ..?"
"சொல்லடாப்பா. தெரிஞ்சு கொள்ள ஆசையா இருக்கு."
"ஒண்டும் பெரிய வேலை இல்லை. மாமாவுக்குச் சாதகம் பொருந்த வேணும். அவ்வளவுதானே. என்ரை குருநாதர். அவர்தான் மாஸ்ர ரிட்டைப் போய் விசயத்தைச் சொன்னன். எல்லாம் அவர் செய்து தந்தார். இரண்டு பேருக்கும் பொருந்திற மாதிரி. சாதகம் எழுதி. அதை நெல்லுப் பானையுக்கை போட்டு அவிச்சு. மாமாட்டைக் குடுத்தம். மாமா ஒண்டும். முயல் பிடிக்கிற நாய் இல்லை. சும்மா குலைக்கிற ஆள்தான். எல்லாம் நம்பிவிட்டார்.'
"ரகு இது வெளியிலை தெரிய வந்தால்..?"
“அடுத்த வருசம் பிள்ளை பிறக்க எல்லாம் சரியாப் போகும்’ என்று சிரித்தபடி போனான் ரகு.
-48

6lanశ్రీని 92%9
ைெசிக்கிளின் பெல் சத்தம் கேட்டுக் கதவைத் திறக்க, 'அம்மான்' நின்றிருந்தான்.
"என்ன கதவு திறக்க இவ்வளவு நேரம்?. காலைச் சாப்பாட்டுக்குப் பிறகு நித்திரையா?"
"இப்ப, என்ன நித்திரை?. கம்மா இருக்கப் பஞ்சி பிடிக்குது."
"ஏன். வீட்டில ஒருத்தரும் இல்லையா?"
"மூன்று நாள் லிவுதானே, அம்மாள் கோவில் பூசைக்காக, அக்கா குடும்பம் ஊருக்குப் போயிட்டினம்."
"அப்ப நீதான் வீட்டுக்குக் காவலோ..?"
“என்னடா..? போலிஸ்காரனைப் போல, வாசலிலை நிண்டு விசாரிச்சுக் கொண்டு. முதலிலை உள்ளை வா."
'அம்மான்' என்னோடு வங்கியில் வேலை செய்பவன். அவன் பெயரை விட, அம்மான்' என்ற பட்டப் பெயரே புழக்கத்தில் இருந்தது.
- 49

Page 34
ஆள் கொஞ்சம் 'திருவாலி. ஆனால், "பம்பல்காரன். அவன் வந்ததால், பொழுது போவதற்குப் பிரச்சினை இருக்காது என்று பட்டது.
'மத்தியானமும் நிண்டு பின்னேரம் போகலாமே?” என்றேன்.
"அப்ப சாப்பாடு.?”
"கடை தான்!”
அம்மான் கொஞ்சம் யோசித்து விட்டு, "மத்தியானம் சமைப்பமா? என்றான்.
எனது தயக்கம் புரிந்தாற் போல். “சோறு வேண்டாம். பாணும், கறியும்' என்றான், தொடர்ந்து.
பின்வளவில் தோட்டத்தைக் கிளறும் கோழிகளின் ஞாபகம் வந்தது. 'அம்மானிடம் சொல்வதா..? விடுவதா..? சொன்னேன்.
“ஆற்றை கோழி?” "தெரியாது. நெடுக பின் வளவுக்கை தான் நிக்கும்!"
"அப்ப ஒண்டை அமத்துவம்.”
"எப்படிப் பிடிக்கிறது.?"
"அதெல்லாம் நானல்லோ பார்க்கிறது." என்றபடி தோட்டப் பக்கம்
போனான்.
பின் வளவில்தான் தோட்டம். ஏழெட்டுக் கோழிகள், கீரைப் பாத்தியைக் கிண்டிக் கொண்டிருந்தன. எங்களைக் கண்டதும், ஒடிக் கொக்கரித்து விலகின.
“பழைய சாக்கு ஏதும் இருந்தால் கொண்டுவா!” அம்மான் உஷா ரானான். சாக்கைத் தூக்கிக் கொண்டு, பதுங்கிப் பதுங்கி மெதுவாகக் கோழிகளின் பின்னே போனான். ஒரு கோழியைச் சாக்கால் அமத்த, மற்றவை கொக்கரித்துப் பறந்தன. அந்த அமளியில், கொஞ்சம் பிடி தளர, பிடித்த கோழியும் தப்பி ஓடிப்போய் விட்டது.
அம்மான் இரண்டு மூன்று முறை ஒடிக் களைத்தது தான் மிச்சம். ஒன்றும் கைக்கு அகப்படவேயில்லை.
-50

“என்னடா. பிடிக்கேலாதா..?”
'இல்லை! முந்திப் பிடிச்சிருக்கிறன். இந்த முறை மாட்டுப் படுகுதில்லை.”
“ஈரச் சாக்குப் போட்டுப் பிடிக்கலாம் தானே..??? நானறிந்த சூத்திரத்தையும் சொன்னேன்.
திரும்பவும் 'பெல்’ சத்தம் காதை நோண்டியது. கதவைத் திறந்த போது, இராசன் நின்றிருந்தான்.
“எவ்வளவு நேரமா 'பெல்’ அடிக்கிறன்.? அம்மான்ரை சைக்கிளும் நிக்குது. என்ன செய்யிறியள்?
"தோட்டத்துக்கை நிக்கிறம்"
“என்ன. தண்ணி மாறுறியளா?”
என் முகம் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். ஒன்றும் பேசாமல், பின்வளவுப் பக்கம் போனான். இராசனும், எங்களோடு படித்தவன்.
பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் உதவி விரிவுரையாளன். பரம் பரைத் தோட்டக்காரன். எங்களது தோட்ட மேற்பார்வையும் அவன்தான்.
தோட்டப் பக்கமாகப் போனவன், சாக்குடன் வேர்த்து விறுவிறுத்து நின்ற அம்மானைக் கண்டிருக்க வேண்டும்.
“என்ன. ரெண்டு பேருமா. கோழி பிடிக்கிறியளோ..??? புன்னகையுடன் கேட்டான்.
"ஒண்டும் பிடிபடுகுதில்லை.” அம்மானின் குரலில் விரக்தி தொனித்தது.
"சாக்குப் போட்டுக் கோழி பிடிக்கிறது பழைய ரெக்னிக், இப்பத்தை கோழியள். உதுக்கு ஆப்பிடுமோ?"
இராசனின் அட்வைஸ் அம்மானுக்குக் கோபத்தை வரவழைத்து விட்டது.
"இதென்ன?, கம்பஸ் பொடியளைப் பேய்க் காட்டுற மாதிரியே.?
-51

Page 35
சண்டை வேண்டாம் என்று, நான் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.
"நீ தனிய இருக்கிறாய், எண்டு அக்கா சொல்லிப் போட்டுப் போனவ. பாத்தி கட்டித் தண்ணி மாறுவம் எண்டு, வந்தால். கோழியளோட சேர்ந்து நீங்களும், பாத்தியைக் கிண்டி வைச்சிருக்கிறியள்." இராசன் அலுத்துக் கொண்டான்.
"மத்தியானம் நல்ல கறியாச் சமைப்பம் எண்டு பாத்தம். அதுதான்
கோழி ஒண்டு பிடிப்பமெண்டு.” நான் விளங்கப்படுத்தினேன்.
"எங்கை. ஒண்டும் பிடிபடுகுதில்லை.” அம்மான் எரிச்சலுடன் சொன்னான்.
"நான். பிடிச்சுத் தரவோ?’ இராசனின் கேள்வி எங்களை மடக்கியது.
"எப்படியடாப்பா. பிடிப்பா..?
"அதேன் உங்களுக்கு.? எனக்கும் சேத்துச் சமைப்பியள் எண்டாச் சொல்லுங்கோ!'
அம்மான் தலையாட்ட, நானும் ஒத்துக் கொண்டேன்.
“தேவன். நீ போய் நாலு கிழங்கு அவிச்சு. வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டி ஆயத்தம் பண்ணு! அம்மான் நீ பாண் வாங்கப் போகேக்கை. சுப்பையா அண்ணையின்ரை கடையிலை ஒரு அரையும் வாங்கிக் கொண்டு வா!' என்றபடி இராசன் வீட்டுக்குள் போனான்.
கோழி பிடியாமல் "கரடி விடுகிறானோ என்ற சந்தேகத்தோடு எட்டிப் பார்த்தேன்.
"நீ போய் அடுப்படி வேலையைப் பாரன்ரா! நான், இவன் தூரன்ரை புத்தக அலுமாரியுக்கை ஒரு சாமான் தேட வேணும்.” என்றபடி போனான், இராசன்.
கிழங்கும் கூடவே இரண்டு முட்டையும் அவித்து வைத்து, வெங் காயம் வெட்டி முடிக்க, அம்மானின் சைக்கிள் சத்தம் கேட்டது. இரண்டு பேரும் உள்ளே வந்த போது, பின் கதவால் உரித்த கோழியும் கையுமாக இராசன் நுழைந்தான்.
-52

"இந்தாங்கோ. கொண்டு போய் வெட்டிச் சமையுங்கோ!'
நம்ப முடியவில்லை. கோழி பிடிச்ச சத்தமும் இல்லை. உரிக்கக் கத்தியும் கேட்கவில்லை.
"எப்படிப் பிடிச்சனி?”
"அதெல்லாம் தொழில் ரகசியம். அம்மான் கோழிச் செட்டை களைத் தாட்டுப் போட்டு, நாலு கல்லு மேலால வை. நாய்
கிண்டாமல்!" என்றபடி இராசன் கிணற்றடிக்குப் போனான்.
"எப்படிப் பிடிச்சவன் எண்டு. உனக்கும் தெரியாதா?.” அம்மானும் ஆச்சரியப்பட்டான்.
சாப்பிட்டு முடிந்து மெல்லிய "மிதப்பில் எல்லோரும். அம்மான் திரும்பவும் தொடங்கினான்.
'எப்பிடிப் பிடிச்சாய் எண்டு, எங்களுக்கும் சொல்லித் தாவன்ராப்பா?”
“ஈரச்சாக்குப் போட்டுத் தான்.”
"சும்மா. கெம்பர் காட்டாதை சொல்லு!”
இராசன் ஒரு மீன் பிடிக்கும் தங்கூசியையும், நைலோன் நூல் உருண்டையையும் தூக்கிக் காட்டினான்.
"இதாலை தான்டா பிடிச்சன்."
எனக்கும், அம்மானுக்கும் ஒன்றும் விளங்கவில்லை.
"எப்படியடா, இதாலை பிடிச்சனி?"
'தங்கூசியில புண்ணாக்கைக் கொழுவி. நைலோன் நூலில தங்கூசியைக் கட்டி, நூலை மரத்தில கட்ட வேணும். பிறகு புண்ணாக்குக் கட்டியளை கொஞ்சங் கொஞ்சமா கோழியளுக்குக் கிட்டப் போட வேணும்."
'பிறகு.?"
-53

Page 36
“பிறகென்ன, அவ்வளவு தான்! கோழி, ஒவ்வொரு புண்ணாக்காக் கொத்திக் கொண்டு வரும். தானே நூலையும் இழுத்து, தொண்டையில தங்கூசியையும் மாட்டி. கதை முடிஞ்சுது! தூக்கிக் கட்டி உரிக்க வேண்டியது தான்'
"கத்தி ஒண்டும் இல்லாமல் உரிச்சனியே? அம்மானுக்கு ஒரே ஆச்சரியம்.
"இதுக்கெல்லாம் "செவன் ஓ குளொக் பிளேட்டுத்தான் சொல்லப்பட்ட ஆயுதம்!”
“எங்கையடா உதெல்லாம் எடுத்தனி?” என்றேன்.
“எல்லாம் உன்ரை மருமேன் தூரன்ரை புத்தக அலுமாரியிலை தான்." என்று சிரித்தான், இராசன்.
"நீ கெட்டிக்காரன் தான்ரா. ஆனால், ஆட்ஸ் பக்கல்ரிக்குப் போகாமல், மெடிக்கல் பக்கல்ரிக்குப் போயிருக்க வேணும்.” என்று நக்கலடித்தான் அம்மான்.

“a-6noziခံ့) ခိဂ်’
6 இப்போது வகுப்புக்குப் போனால், ஜெயசிங்கத்தாரிடம் மாட்டுப் படவேண்டி இருக்கும்." என்றான் அசோகன். நேரம் காலை 10 மணியைத் தாண்டி இருந்தது. காலை 8.30க்கு முன்னர் மாணவர்கள் வகுப்பறையில் இருந்தாக வேண்டும் என்பது ஜெயசிங்கத்தாரின் கட்டுப்பாடு.
"என்ன செய்யலாம்.?"
“கொஞ்சம் பொறு. ஏதாவது செய்வோம்' என்றான்.
யாழ்ப்பாணம் தொழில் நுட்பக்கல்லூரியில் பட வரைஞர் வகுப்பில் பயில்பவர்களுள் நானும் அசோகனும் சேர்த்தி. கல்லூரிக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கிப் படித்தோம். சனி, ஞாயிறுகளில் ஊருக்குப் போவதால் திங்கள் எப்படியும் பிந்தியே வருவோம்.
"இந்த மாதம் மூன்று முறை லேற்." என்று அசோகன் சொல்லிக் கொண்டிருந்த போது மார்க்கண்டு மாஸ்ரர் வருவதைக் கண்டேன். சைக்கிளில் தியோடி லைற் கருவியைக் கட்டியபடி மெதுவாக வந்தார்.
-55

Page 37
“என்ன வாசலிலேயே நிக்கிறியள்.?"
"...உங்களைப் பார்த்துக் கொண்டுதான் சேர். திங்கட்கிழமை சேவயிங் பாடம் இருப்பதால் தியோடி லைற் கொண்டு வருவியள். உதவி செய்யலாம் எண்டு நிக்கிறம்..” என்றான் அசோகன்.
“சைக்கிளைக் கொண்டு போய் நிப்பாட்டிப் போட்டு. இதுகளை ஒபீசிலை வையுங்கோ." என்று சொல்லும் போது அவர் முகத்தில் திருப்தி தெரிந்தது.
அசோகன் என்னைப் பார்த்து முறுவலித்தான். அலுவலகத்தினுள் நுழைந்த போது, ஜெயசிங்கத்தார் நிமிர்ந்து பார்த்தார். முகத்தில் இருந்தது புன்முறுவலா. கடுகடுப்பா என்று தெரியவில்லை. அதிபருக்கே உரித்தான. அப்படி ஒரு முகம்.
“மார்க்கண்டு மாஸ்ரர் வைக்கச் சொன்னார். பின்னேரம்
எங்களுக்குச் சேவயிங் இருக்கு." அவர் தலையாட்டியதும் வெளி
யேறினோம்.
'இப்போது போனால் ஆறுமுகம் மாஸ்ரருக்கு ஏன் லேற் என்று மறுமொழி சொல்ல வேணும். வா! கன்ரீனுக்கு." என்று அசோகன் முன்னே போக நான் பின்னே நடந்தேன்.
“இரண்டு ரீ ஒடர் பண்ணி விட்டு வா" என்று அனுப்பியவனைக் காணவில்லை. ரீயுடன் மேசையில் காத்திருக்க. கையில் ஒரு பார்சலுடன் வந்தான்.
"என்னாட இது சாப்பாடா?”
AA
ஒம். வழக்கம் போலத்தான்."
“ஆற்றை பார்சல்?"
“தெரியாது. நல்ல மணமா இருக்கு." என்று பார்சலை மணந்த படியே சொன்னான்.
இட்லி பூப்போல இருந்தது. துணைக்கு அரைத்த சம்பலும், இட்லிப் பொடியும்.
"பாத்தியா. எழுப்பமா. இருக்கு. சாப்பாடு கொண்டு வந்தவருக்குப் புண்ணியம் சேரும்." என்றான் அசோகன்.
-56

இதுவும் வழமைதான். காலைத் தேநீர் இடைவேளையின் போது, கன்ரீனில் மாணவிகள் சாப்பாடு வைக்கும் அலுமாரியை எப்படியோ திறந்து ஏதாவது ஒரு பார்சலை எடுத்து வந்து விடுவான்.
கேட்டால். “போடா. பத்துப் பார்சலிலை ஒன்று குறைந்தால். கெட்டா போய்விடும். எல்லாப் பெட்டையஞம் ஒண்டா இருந்து தானே சாப்பிடுகுது. உடம்பு குறையும்" என்று சொல்லிச் சிரிப்பான்.
நானும், அசோகனும், ஞானியுமாக அந்தப் பார்சலை விழுங்கித் தீர்த்து விடுவோம். வகுப்புப் பெண்பிள்ளைகள் இரண்டு மூன்று நாட்கள் திட்டினார்கள். பிறகு, பட்டினிப் பட்டாளங்கள் தின்று தொலைக்கட்டும் என்று விட்டு விட்டார்கள்.
மத்தியான இடைவேளையின் பின்னர் தான் மார்க்கண்டரின் "சேவயிங் வகுப்பு. பலருக்கு அந்த வகுப்பு பிடிப்பதில்லை. மத்தியானச் சாப்பாட்டின் பின் வெயிலில் அலைய முடியுமா? மார்க்கண்டேயரின் பின்னால் உலைந்து திரிவது நாங்கள் மூன்று பேரும் தான்.
புகையிரத நிலையத்தை அண்டிய காணியை அளந்து கொண்டிருந் தோம். மங்களா ஒடி வந்தாள். விசாலாட்சி மயங்கி விழுந்து விட்டதாக அவள் கொண்டு வந்த செய்தியுடன் பாடம் குழம்பி விசாலாட்சி கதாநாயகியானாள்.
“பொம்பிளைப் பிள்ளையஞக்கெல்லாம் இந்தப் படிப்புத் தேவை தானா?” என்று திட்டியபடி ஞானியும், அசோகனும் மங்களாவின் பின்னே ஓடினார்கள்.
நான் போய்ச் சேரும் போது ஞானி, சந்திக்கடையில் வாங்கிய சோடாப் போத்தலுடன் வந்தான். மயக்கம் தெளிவித்துச் சோடா குடிக்க வைத்து மங்களாவைத் துணையாக்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அடுத்த நாள் வகுப்புக்குச் சென்ற போது. முழு வகுப்புமே முகத்தை நீட்டிக் கொண்டிருந்தது போன்று பட்டது.
"சும்மா. விட்டிட்டுப் படி.." என்றான் அசோகன்.
'இல்லை என்னவோ வித்தியாசமாப் படுகுது. மங்களாவும் வாயை மூடிக் கொண்டிருக்கிறாள்.'
-57

Page 38
“மெளன விரதமோ..?" என்றான் ஞானி.
அவன் பேச்சு மங்களாவைக் கிண்டி விட்டிருக்க வேண்டும்.
"நேற்று நீங்கள் செய்த வேலைக்கு, வேறு என்னதான் செய்யலாம்?" மங்களாவின் குரலில் கோபம் தெரிந்தது.
AA
ஒம். ஓம். பிராமணப் பிள்ளை பாவம் என்று. என்ரை காசிலை சோடா வாங்கி வந்தது பிழைதான்." என்று கொதித்தான் ஞானி.
"செய்யிறது எல்லாம் செய்து போட்டு. சோடாவும் வாங்கிக் குடுப்பியள்."
"ஏன் அப்படி என்ன செய்து போட்டம்?"
"அந்த பிள்ளை மயங்கி விழுந்தது உங்களாலை தானே. அந்தப் பிள்ளை யின்ர சாப்பாட்டை மூண்டு பேருமாத் திண்டு போட்டியள்."
"பாவம் விசாலாட்சி. அது வெளியிலையும் சாப்பிடாது. கன்ரீனிலை சோடாவும் இல்ல. வெறும் வயித்தோடை வெயில்லை நிண்டால் மயக்கம் வராமல் என்ன செய்யும்.?”
ஞானியின் பார்வை எங்களை மொய்த்தது. நாங்கள் தான் சூத்திரதாரி என்பது அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.
"உங்கடை புண்ணியத்திலை போன கிழமையும் அந்தப் பிள்ளை பட்டினி. மங்களாவின் குரலில் கோபம் குறையவில்லை. மூச்சுக் காட்டாமல் வெளியேறுவதைத் தவிர வேறு தெரியவில்லை.
அடுத்த நாள் வகுப்புக்கு நேரத்தோடே போயிருந்தோம். படிப்பில் மும்முரம் என்று காட்டுவதைத் தவிர, வேறு எதுவும் செய்யத் தோன்ற வில்லை. மற்றவர்களும் அவ்வளவாக முகம் கொடுக்கவில்லை.
ரீ இன்ரேவலின் போது கடைசி ஆட்களாகத்தான் வகுப்பில் இருந்து வெளியேறினோம். மூவருமாக ஒரு மேசையில் அமர்ந்து ஆறிக் கொண்டிருந்த தேநீரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
“தேவன்." என்ற குரல் கேட்டுத் திரும்ப விசாலாட்சி நின்றிருந்தாள்.
-58

“மூன்று பேருமா இதைச் சாம்பிடுங்கோ” என்றபடி ஒரு பார்சலை வைத்து விட்டுப் போனாள்.
'இல்லை. வேண்டாம். சொறி. சொறி.”
எதைச் சொல்வதென்று தெரியவில்லை.
"உங்கள் மூன்று பேரிலும் எனக்குக் கோபம் இல்லை. இண்டைக்கு இரண்டு பார்சல் கொண்டு வந்தனான். சாப்பிடுங்கோ."
சொல்லிப் போன விசாலாட்சியுடன் கூடப் போனது எங்களை இழுக்கும் சாப்பாட்டு வாசனையுந்தான்.
-59

Page 39
ခ်ိဳ2ဖဍ)/kænဇံ)
நெற்றைக் கட்டி முடித்தபோது களைத்துப் போயிருந்தோம். இன்னமும் வெயில் குறையவில்லை. இப்போது விளையாடினால் தான் முடியும். கொஞ்ச நேரத்தில் "வொலிபோல்' ஜாம்பவான்கள் வந்து விடுவார்கள். எங்களைப் போன்ற கற்றுக்குட்டிகளுக்கு இடம் கிடையாது.
“எட்டுப் பேர் இருக்கிறம். நாலு, நாலு பேராகக் கன்னை பிரித்து விளையாடலாம்." என்றான் சபா.
"சமனாகப் பிரியுங்கோ. இல்லாட்டில் விளையாட்டு சூடு பிடிக்காது.” என்று திரு தொடங்கினான்.
"ஒன்றுமே சரிவராது. அங்கை பாருங்கோ "சிரமதானம் வருகுது.”
நாதன் சொல்லத் திரும்பிப் பார்த்தோம். மெயின் ரோட்டில் இருந்து கோவில் வீதிக்கு வரும் பாதையில் நமசிவாயத்தார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எங்களுக்குத் திக்கென்றது. நமசிவாயத்தாரிடம் மாட்டுப்பட்டால் அவ்வளவுதான். அன்றைய விளையாட்டு அரோகராதான்.
-60

“என்ன. எல்லாரும் சும்மா நிக்கிறியள்?. வாங்கோ என்னோடை. வேலை கிடக்கு." என்றபடி நமசிவாயம் சைக்கிளில் இருந்து இறங்கினார்.
“இப்பதான் விளையாடத் தொடங்கிறம். பிறகு விளையாட ஏலாது."
“இந்த வெய்யில்லை என்ன விளையாட்டு? என்னோடை வந்து கொஞ்சம் வேலை செய்யுங்கோ. வெய்யில் தாழ விளையாடலாம்."
இனிமேல் தப்ப முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். நமசி வாயத்தார் பிடித்தால் விடமாட்டார். உள்வீதி, வெளிவீதி என எல்லா மரங்களுக்கும் தண்ணீர் விட்டாக வேண்டும். கோயில் கிணற்றில் இருந்துதான் இறைப்பு. மடத்துப் பூமரங்களுக்கும் தண்ணிர் பாய்ச்ச வேண்டும். அதற்குப் பின்னர்தான் விளையாடலாம்.
'கயிற்றையும், வாளியையும் கொண்டு வாங்கோ...' என்றபடி மண் வெட்டியுடன் முன்னே நடந்தார்.
துலாக் கயிற்றைப் பிடித்தபடி திரு கேட்டான் "இண்டைக்காவது கொஞ்சம் வெள்ளண விடுங்கோ. பெரியாக்கள் வந்தால் எங்களை விளையாட்டிலை சேர்க்கினம் இல்லை."
நமசிவாயத்தாருக்குப் பாவமாக இருந்திருக்க வேண்டும்.
"மாஸ்ரட்டைச் சொல்லி நான் ஒழுங்கு செய்யிறன். உங்களையும் சேர்த்து விளையாட வைக்கிறன். அதோடை இண்டைக்கு இறைப்பு முடிய இரண்டு றாத்தல் பேரீச்சம்பழமும் வாங்கித் தாறன்."
நமசிவாயத்தாருக்கு "சிரமதானம்' என்று பெயர் வருவதற்கு பேரீச்சம் பழமும் ஒரு காரணம். அவர் செய்விக்கும் வேலைகளுக்கு சன்மானம் கிடையாது. பேரீச்சம்பழம் அல்லது எள்ளுருண்டைதான். அதுவும், கந்தையா அண்ணை கடையில்தான் வாங்கித் தருவார்.
'திருவும் தேவனும் உள்வீதியில நிக்கிற மரங்களுக்கு ஊத்துங்கோ." என்றபடி வாளியில் தண்ணீரை நிறைத்தார். வெளிவீதி கடந்து உள்விதி வரை வாளித் தண்ணீரைத் தூக்கிச் செல்ல வேண்டும். கஷ்டமான வேலைதான்.
-61

Page 40
"நீங்கள் உள்விதியிலை கொண்டு போய் ஊத்துங்கோவன். நாங்கள் தண்ணி இறைக்கிறம்." திரு இடைமறித்தான்.
“உள்வீதி மரங்களுக்குத் தண்ணி ஊத்தினால் நிறையப் புண்ணியம் கிடைக்கும். அதுதான் உங்களை அனுப்புறன்." சொல்லிச் சிரித்தார் நமசிவாயத்தார்.
"அவர் கோயிலுக்கை போறதும் இல்லை. சாமி கும்பிடுறதும் இல்லை. உனக்குத் தெரியாதே...? நாதன் திருவின் காதில் கிசுகிசுத்தான்.
"சும்மா கதை விடாதை. அவரும் ஐயரும் நல்ல கூட்டு. மடத்திலை இருந்து "செஸ் விளையாடுவினம். ஐயர் குடுக்கிற மோதகம், வடை எல்லாம் தின்னுவார். கோயில்ல மரம் நட்டுத் தண்ணி ஊத்துறார். கோயிலுக்கை மாத்திரம் போகமாட்டார். நல்ல பேய்க்கதைதான்."
என்றான் திரு.
எங்களுக்கும் புதினமாகத்தான் இருந்தது. நமசிவாயத்தாரின் போக்கு அப்படி. ஐந்து வருடங்களுக்கு முன்னர் தான் ஊருக்கு இருப்புக்கு? வந்தார். அதுவரையும் கொழும்புச் சீவியம், பெரிய உத்தியோகத்தில் இருந்து இளைப்பாறியவர் என்பதால் ஊரில் நல்ல மரியாதை இருந்து. ஊர் வேலை எல்லாம் இழுத்துப் போட்டுச் செய்வார். மற்றவர்களையும் விடமாட்டார். வேலை செய்விப்பதிலும் விண்ணன். சம்பளம் கிடை யாது. பொது வேலை செய்வதற்கு ஏன் சம்பளம். என்பது அவரது கொள்கை, வேலை முடிய கந்தையா அண்ணை கடைப் பலகாரமும், பிளேன் ரீயும் கிடைக்கும். இதுதான் நமசிவாயம் என்ற அவரது பெயரைச் சிரமதானம் என்று மாற்றியிருக்க வேண்டும்.
“சபாவையும், நாதனையும் சேர்த்துக் கொள்ளுங்கோ. கெதியா முடிச்சிடலாம்.” என்றார் நமசிவாயம். எண்ணிக்கை கூடியதால் வேலை இலகுவானது.
"இந்த ஆள் கொம்யூனிஸ்ராம்." என்றான் சபா.
“யார் சொன்னது.???
"எங்கடை வீட்டிலை அப்பிடிக்கான் ககைக்கினம்."
டிலை அபப்டிதத த
"கொம்யூனிஸ்ற் எண்டா..??? நாகன் கேட்டான்.
Ա, நாத
-62

"அதுதான்ரா கோயில் இல்லை. சாமி இல்லை. என்கிற ஆக்கள்." திரு விளங்கப்படுத்தினான்.
"ஆனால், இந்தாள் கோயில் வீதியிலை தானே மரம் நட்டு வளர்க்குது.” திருவின் பதில் சபாவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி யிருந்தது.
"அதுதானே. மடத்திலை நிக்கிற மா, வாழை, கொய்யா எல்லாம் நமசிவாயத்தார் வைச்சதுதானே.” நாதனுக்கும் ஆச்சரியம்.
எங்களுக்கும் தான். வாசிகசாலையிலும், கோயிலிலும் வளர்ந்து நின்றகின்ற நிழல் மரங்கள், பழமரங்கள் எல்லாமே நமசிவாயத்தார் வைத்ததுதான். நல்ல கன்றுகளாகத் தேடிக் கொண்டு வந்து நடுவார். கூடும் கட்டி வளர்ப்பார். தண்ணீர் எங்கள் ‘உபயம்", நாங்கள் பார்த் திருக்க அவை மரங்களாக வளர்ந்தன. மடத்திலே பூத்துச் சொரிகின்ற மரங்களும் நமசிவாயத்தார் கொண்டு வந்து நட்டதுதான். ஐயர் கேட்ட பூமரங்கள் எல்லாம் நட்டார். அதனால்தானோ என்னவோ ஐயருக்கும் அவருக்குமிடையே நல்ல சிநேகிதம் இருந்தது.
“மடத்திலை உள்ள மரங்களுக்கு நான் தண்ணி மாறுறன். நீங்கள் இறைச்சு விடுங்கோ. ' என்றபடி நமசிவாயத்தார் போக திரு ஆரம்பித்தான்.
“மாவும். கொய்யாவும் நல்லாக் காய்ச்சிருக்கு. அதுதான் அவர் எங்களை மடத்துக்கை விடுறாரில்லை"
இறைப்பு முடிந்து கை கால் கழுவி, கிணற்றுக் கட்டில் உட்கார்ந்த போது, நமசிவாயத்தார் திரும்பி வந்தார். ஒரு கையில் மண்வெட்டியும், மறுகையில் துணிப் பொதியுமாக.
"கொய்யாக்காய் பிடுங்கி வாறாரடா.." சபா கிசுகிசுத்தான்.
"அவர் வைச்ச மரம்தானே. பிடுங்கினால் என்ன..??
'ஐயரும் கூட வாறார். பூசைக்காய் பிடுங்கியிருப்பார்." என்ற திருவின் பதில்தான் சரிபோல எனக்குப் பட்டது.
-63

Page 41
"பார்த்தியளா..? காயெல்லாம் நல்ல பெரிசு. திண்ணைவேலி பாமிலை இருந்து கொண்டு வந்து வைச்சனான். இங்கினையுக்கை இந்த இனம் கிடைக்காது.” நமசிவாயத்தின் குரலில் பெருமை தொனித்தது.
ஆவலுடன் எட்டிப் பார்த்தோம். சின்னத் தேங்காய் சைசில் கொய்யாக்காய்கள். பெரிய அளவு விலாட்டு மாம்பழங்கள். பார்க்கவே
ஆசையாக இருந்தது.
'மறக்காமல் கந்தையா அண்ணை கடையிலை பேரீச்சம்பழம் வாங்குங்கோ." என்றபடி நமசிவாயத்தார் சைக்கிளில் ஏறினார்.
“எல்லாப் பழத்தையும் விட்டிட்டுப் போறியள். பூசைக்கெண்டு சொல்லி மடப்பள்ளியிலை குடுக்கவோ..?' திரு மெதுவாகக்
கேட்டான்.
"ஒமோம் பூசைக்குத்தான். எல்லாம் உங்கடை வயிற்றுப் பூசைக்கு. ளாளுக்கு எடுத்துத் தின்னுங்கோ." என்றபடி சைக்கிளை மிதித்தார். ஆளாளுககு ததுத @l (DLIIգ தத

(ypa&) OMULÓ
அலுவலகக் கதவு மூடியிருந்தது. ஆள் நடமாட்டமே இல்லை. வாயிற்படியில் நாயொன்று சுருண்டு படுத்திருந்தது. நேரம் காலை 7.30 எனக் கடிகாரம் காட்டியது. அதுமட்டுமல்ல, நான் வந்து 15 நிமிடங்கள் ஆகியிருந்தன. துறைமுகத்தினுள் வாகனங்கள் புகையையும், இரைச்சலையும் கக்கிக் கொண்டு பறந்தன. அலுவலகத்தின் இரண்டு பக்கத்திலும் பாரம் தூக்கிகள் சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தன.
சென்ற வாரம் பயிற்சியின் போது, விரிவுரையாளர் வலியுறுத்தி யிருந்தார். நேரம். நேரம்தான் எமது தொழிலின் உயிர்நாடி, துறைமுக வேலைகள் நேர அட்டவணையின் படி நடந்தாக வேண்டும். ஒரிடத்தில் தடங்க எல்லாமே சங்கிலிக் கோர்வை போல பிந்திவிடும். அதனால், காலை எட்டு மணிக்கே சரக்குக் குதங்கள் திறந்திருக்க வேண்டும். அலுவலகம் அரைமணித்தியாலம் முன்பே திறக்க வேண்டும். அவரை நம்பித்தான் நானும் அதிகாலையிலேயே வந்திருந்தேன். எட்டு மணியும் ஆயிற்று. கால் கடுக்கக் காத்து நின்றதுதான் மிச்சம். அலுவலகம் திறக்கப்படவில்லை. ஏன் ஆள்நடமாட்டமுமே இல்லை.
பயமாக இருந்தது, வேறு இறங்குதுறைமுகத்துக்கு வந்து விட் டேனோ என்று. விசாரிப்பதற்கும் அருகிலே ஒருவரையும் காணவில்லை.
-65

Page 42
தூரத்தில் செல்பவர்களும் ஒடிக் கொண்டிருந்தார்களே தவிர, நிதானமாக நடந்து போவோர் எவருமே இல்லை.
எட்டே கால் மணியளவில் அலுவலக வேலையாள் வந்தான். பெரிய சாவிக் கொத்து குலுங்க சாவகாசமாக வந்தான். அவனும் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. நாய் எழுந்து வழிவிட, பூட்டைத் திறந்து உள்ளே போனான். திரும்ப அவனைக் கண்ட போது, அவன் கையில் தும்புக்கட்டை இருந்தது.
'இதுதான் எலிசபெத் இறங்குதுறையா..?" என்றேன். "ஆம்." என்று தலையாட்டியவன் தன்பாட்டிலே அலுவலகத்தினுள்ளே போய் விட்டான்.
9 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார் அலுவலர். நல்ல கட்டுமஸ்தான உடம்பு. அதற்கேற்ற உயரம். மோட்டார் சைக்கிளை ஸ்ராண்டில் நிற்பாட்டியவரின் கண்கள் என்னை மேய்ந்தன.
“என்ன விசயம்.? இங்கே நிற்கிறீர்.” முதலில் விசாரித்தது அவர்தான்.
"எலிசபெத் இறங்குதுறை அலுவலகம் இதுதானா..?
"ஆமாம். என்ன வேண்டும்.?"
"பொறுப்பாளரைச் சந்திக்க வேண்டும்."
“எதற்காக..?” அவர் குரலில் ஒருவித கண்டிப்பு இருந்தது.
"அவரிடம் போகும்படிதான் கடிதம் தந்திருக்கிறார்கள்."
"யார் தந்திருக்கிறார்கள்.? கொடு பார்க்கலாம்."
வாங்கி நிதானமாகப் படித்து முடித்தார். இவர் தானோ பொறுப் பாளர் பீரிஸ். சந்தேகம் வலுத்தது.
'நீங்கள் தானா பீரிஸ்?"
"அவரிடம் கொண்டு போய்க் கொடு."
கை காட்டிய திசையில் அந்த வேலையாள் அமர்ந்திருந்தான்.
-6-

'இல்லை இந்தக் குதத்தின் பொறுப்பாளர் பீரிசைத் தான் சந்திக்க வேண்டும்."
"அவர்தான் அது. போ."
எனக்குத் திக்கென்றது. வேலையில் சேரும் முதல்நாளிலேயே இப்படி
ஒரு அநுபவமா? புதிராக இருந்தது. கடிதத்தை நீட்டிய போதுதான் என்னை முழுமையாகப் பார்த்தார் பீரிஸ்.
"உட்கார். புதிதாகச் சேர்ந்தவனா..? எவ்வளவு காலம் பயிற்சி..? எத்தனை பேர்.?" கேள்விகள் அடுத்தடுத்து வந்தன.
“மூன்று மாதம் பயிற்சியில் இருந்தோம். 30 பேர்." என்று தொடங்கி எல்லாம் விபரமாகச் சொன்னேன். என் பதில் அவரைத் திருப்திப்படுத்தியிருக்க வேண்டும். முகத்தில் ஒரு மெல்லிய முறுவல் தோன்றியது.
'நீ சமாளிப்பாய். முதலில் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். போகப் போக பழகிவிடுவாய்."
“மஞ்சிநாயக்கா." என்று கூப்பிட்டார்.
மோட்டார் சைக்கிள்காரன் வந்தான்.
"புதுப் பொடியன். நீதான் வேலை பழக்க வேண்டும்."
“என்னோடு வா." என்று மஞ்சி நாயக்கா அழைக்க, போனேன்.
அவனுக்கும் தனி அறை இருந்தது. அழகாக ஒழுங்குபடுத்தி இருந்தான். கலகலப்பாகப் பேசினான். அவனில் ஒரு ஒழுங்கு தெரிந்தது.
"நான். பழக்குவதற்கு என்ன இருக்கிறது? பயிற்சியின் போது எல்லாம் சொல்லித் தந்திருப்பார்கள். "பயப்பிடாதே அது தான் எங்கள் தொழிலின் தாரக மந்திரம்” என்றான்.
என்முகம் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். ' இருக்கின்றாயே. என்ன?’ என்றான்.
ஏதோ யோசனையில்
'இவரா பொறுப்பாளர். ? நம்ப முடியவில்லையே! தன் அலுவலகத்தை அவரே தும்புக்கட்டையால் கூட்டினாரே..?"
-67

Page 43
‘'நீ பார்த்தாயா..?
"ஆமாம். காலையில் நான் அவரை அலுவலக வேலையாள் என்று நினைத்தேன். ஏன் இப்படி..? இங்கே...? வேலையாட்கள் இல்லையா..?”
"அவரிடமே கேளேன்.?
"எப்படிக் கேட்பது.?”
“பார்த்தாயா. பயப்படாதே என்றேனே. மறந்து விட்டாயா?” சிரித்தான்.
மத்தியானம் சாப்பிடுவதற்கு எனக்கும் அழைப்பு வந்தது. பீரிசும் இருந்தார்.
“எப்படிச் சாப்பாடு.?" என்றான் மஞ்சி நாயக்கா.
"பரவாயில்லை."
“காலையில் ஏதோ இவரிடம் கேட்க வேண்டுமென்றாயே? இப் பாது கேளேன்."
“என்ன கேட்க இருந்தாய்..?” என்றார் பீரிஸ் 'இல்லை அப்படி ஒன்றும் இல்லை.”
"சும்மா மழுப்பாதே. கேள்' என்றான் மஞ்சிநாயக்கா,
“காலை 7, 30க்கே அலுவலகம் திறக்க வேண்டும் என்று பயிற்சியின்
போது சொன்னார்கள்."
"யார் பீக்கொக் நடராசாவா..? அவன் அப்படித்தான். சும்மா வெருட்டுவான். புத்தகப் பூச்சி. பயிற்சியெல்லாம் ஒரு கண்துடைப்பு. நடைமுறை வேறு."
'மற்றது. நீங்கள் ஏன் அலுவலகம் திறக்க வேண்டும்.? சுத்தம் செய்ய வேண்டும். ? அலுவலக வேலையாள் கிடையாதா..?"
என் கேள்விக்கு அவரின் சிரிப்புத்தான் பதிலாகக் கிடைத்தது. சிறிது யோசனையின் பின் திரும்பவும் தொடங்கினார்.
-68
 

'நீ புதியவன். போகப் போகப் பழகி விடுவாய். இந்தச் சரக்குக் குதம் என் பொறுப்பில். இறக்கப்படுவதற்கும். எடுத்துப் போடு
வதற்கும் நானே பொறுப்பு. சாவிக் கொத்து என்னிடமே இருக்க
வேண்டும். இன்னொருவருக்குக் கொடுக்க முடியாது."
“மற்றக் கேள்விக்கும் மறுமொழி சொல்லி விடுங்களேன்.” மஞ்சி நாயக்கா சிரித்தபடி இடைவெட்டினான்.
“ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள். உன் அலுவலகம் தான் உன் வாழ்க்கை. அது ஒழுங்காகச் சுத்தமாக இருந்தால்தான். மற்றதெல்லாம் தொடரும். அலுவல வேலையாள் வரும்வரை குப்பைக் குள்ளா வேலை செய்வாய்..? உன் வீடு குப்பையாக இருந்தால் நீ சுத்தம் செய்ய மாட்டாயா? அதுபோல்தான் இதுவும். இதுவும் ஒரு வகைப் பயிற்சி தான். பழகிக் கொள்.'
மஞ்சிநாயக்காவைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.
'இதுதான் தொழிலில் முதலில் படிக்க வேண்டிய பாடம். கவன மாகக் கேட்டுக் கொள். என் அறையைப் பார்த்தாய் தானே..?
இவரிடம்தான் படித்தேன்." என்றான்.
அவன் சொன்னது உண்மையான பொயின்ற் என்று அன்றைக்கு எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், ஏறக்குறைய 30 வருட அரசாங்க சேவையின் போதும், பீரிசின் முதல்பாடம் தான் எனக்குக் ᏣᎧᏛᎣᏪ9Ꮟ கொடுத்திருக்கிறது.

Page 44
်ဖ်)(ဎG(onပGၾø©”
66
தம்பி பேனாவைக் கொஞ்சம் தாஹீங்களா..?”
என் கேள்வி அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது. வங்கிக் கவுண்ட ரின் அருகே நின்றிருந்தான். சின்னப் பையன். பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும். பாடசாலை யூனிபோமில் இருந்தான். கையில் இரண்டும் மூன்று மாணவர் சேமிப்புப் புத்தகங்கள்.
"ஒரு நிமிடத்தில் தந்து விடுவன். இதை நிரப்பிறதுக்குத் தான்.'
பணம் கட்டும் நறுக்கு அவன் கண்ணில் பட்டிருக்க வேண்டும். பேனாவை நீட்டியவன், ஒருகணம் தயங்கினான். மூடியைக் கழற்றி எழுதும் பகுதியை மட்டும் நீட்டினான். சிரிப்பு வந்தது. அவன் ஆள்
கெட்டிக்காரன்தான். சுழியன்.
வழக்கத்தில் இந்த மாதிரிச் சங்கடங்கள் கிடையாது. இந்த வங்கியின் ஆரம்பகால ஊழியன் நான். இப்போது தொழில் மாறியாயிற்று. இருந்தாலும், பழைய நண்பர்கள் வங்கியில் இருந்தார்கள், அதுவும், இந்தக் கிளையின் மனேஜரும் நானும் ஒன்றாக வேலை செய்தவர்கள்.
உதவி மனேஜர் என்னிடம் தான் வேலை பழகினான். என்ன தேவைக்கும்
-70

அவர்கள் தான். அவர்களே படிவம் நிரப்பி. பணம் பெற்று. எல்லாமே நொடியில் முடிந்துவிடும்.
இன்றைக்குச் சகுனம் சரியில்லைப் போலும், வங்கிக்குள் நுழைந்த போதே எக்கச்சக்கக் கூட்டம். திருவிழாச் சனம் போல திங்கட்கிழமை என்பதை மறந்து போயிருந்தேன். மனேஜர் நாதன் அறையில் இல்லை. உதவி மனேஜர் அறையை எட்டிப் பார்த்தேன். அவனும் தொலைந்து போயிருந்தான். ஆச்சரியமாக இருந்தது. திங்கட்கிழமை காலையில் எங்கே போனார்கள். அதுவும் வாடிக்கையாளர் நிறைந்திருக்கும் போது.
கவுண்டரில் உட்கார்ந்திருந்த பெண் சிரித்தாள்.
"மனேஜரையா. தேடுகிறீர்கள்.?"
"ஒம். உதவி மனேஜரையும் காணவில்லையே..!"
"பணம் வைக்கும் அறைக் கதவு தானே பூட்டிக் கொண்டு விட்டது. ரெக்னீசியன் வந்திருக்கிறார். எல்லோரும் அங்கேதான்."
வங்கிகளில் இடைக்கிடை இப்படிப் பிரச்சினைகள் வருவதுண்டு. இனி அவர்களைத் தேட முடியாது. வேர்வை வழிய, பெட்டகத்துடன்
மல்லுக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.
"படிவத்தை நிரப்பி என்னிடம் தாருங்கள்.” மீண்டும் அதே பெண்தான்.
தலையாட்டிவிட்டு, எழுதும் மேசையருகே வந்தேன். படிவத்தை எடுத்த போதுதான் சட்டைப் பையில் பேனா இல்லை என்பது புரிந்தது. யாரிடம் கேட்கலாம். தேடிய போதுதான், இந்தப் பையன் அகப்பட்டான்.
“எழுதிவிட்டுத் தாருங்கள்." சொன்னவன் என் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் கவுண்டருக்குப் போய்விட்டான். படிவம் நிரப்பியபின், மூடியைத் தேடிய போது, அது அவனிடம் தான் என்பது நினைவுக்கு வந்தது. மீண்டும் சிரிப்பு வந்தது.
'நன்றி தம்பி. இந்தாரும் உமது பேனா...'
கையில் வைத்திருந்த மூடியைப் பொருத்திச் சரிபார்த்துச் சட்டைப்
பையில் கவனமாக வைத்தான்,
-7l

Page 45
"அங்கிள் பேனா நன்றாக எழுதியதா..? அவன் கேள்வியில் தொனித் தது பெருமையா..? அல்லது அக்கறையா? என்பது புரியவில்லை.
“நல்ல பேனா தான்." நான் சர்டிபிக்கட் கொடுத்தேன்.
“எத்தனையாம் வகுப்புப் படிக்கிறாய்..?”
"எட்டாம் வகுப்பு.”
'நன்றாகப் படித்து முன்னுக்கு வா...' மனதாரச் சொல்லிவிட்டுக் கவுண்டரை நோக்கி நடந்தேன்.
"அங்கிள். அங்கிள்."
அவன்தான் சிரித்தபடி கூப்பிட்டான்.
“என்ன வேணும்.?"
"இரண்டு ரூபா தாங்கோ."
சிரிப்பு வந்தது. பையன் முஸ்பாத்திக்காரன்தான். என்னுடனேயே பகிடி விடுகிறானே!
“பிறகு தருகிறேன்." சிரித்தபடி திரும்பினேன்.
"அங்கிள். இரண்டு ரூபா தராமல் போறிங்களே..?”
மீண்டும் அவன் தான். குரலும் கொஞ்சம் உயர்ந்திருந்தது. எரிச்சல் வந்தது. கரைச்சல் பிடித்தவனாக இருப்பானோ? மற்றவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். திரும்பவும் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்தேன்.
"அங்கிள் இரண்டு ரூபா தந்து விட்டுப் போங்கள்."
இப்போது அவன் குரல் நன்றாகவே உயர்ந்திருந்தது. எரிச்சலும் கோபமும் வந்தன. பிடித்துக் கன்னத்தில் இரண்டு கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அப்போது தான் பார்த்தேன். வாடிக்கையாளர்கள்
எங்களையே கவனித்துக் கொண்டிருந்ததை. கூச்சமாக இருந்தது.
சட்டைப் பையில் கை விட்டபோது, கிடைத்தது ஐந்து ரூபாய் தான். எடுத்துக் கொடுத்துவிட்டுக் கவுண்டரை நோக்கி நடந்தேன்.
-12

"அங்கிள். இந்தாங்கோ மிச்சம்.” மூன்று ரூபாயை நீட்டினான்.
"வேண்டாம் நீயே வைத்துக் கொள்.” என் குரலில் இருந்த கோபம் எனக்கே உறைத்தது.
'இல்லை அங்கிள். நான் கேட்டது இரண்டு ரூபாய் தான். இந்தாங்கோ மிச்சம்."
கூட்டம் எங்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்தது. விடுப்புப் பார்க்க யாருக்குத்தான் விருப்பமில்லை. மிச்சத்தை வாங்கிய பின், திரும்பி நடந்தேன்.
"அங்கிள்.” மீண்டும் அவன்தான்.
“என்ன சேட்டை விடுகிறாயா..?" என் உடம்பில் பதட்டம் பரவியது. இந்தச் சிறுவன் எவ்வளவு அலுப்புத் தருகின்றான்.
"அங்கிள் என் மேல் கோபமா..?' திரும்பவும் கேட்டான்.
“எதற்குக் கேட்கிறாய்..?' வந்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு மெதுவாகக் கேட்டேன்.
'இல்லை அங்கிள். உங்களுக்குக் கோபம் தான். அது தெரிகிறது. கோபப்படாதீர்கள். இதை வேண்டுமென்று தான் செய்தேன். அந்த இரண்டு ரூபா. உங்களுக்கு ஒரு சின்னத் தண்டம்.”
"ஏன்.?' என்னையறியாமலேயே கேட்டேன்.
“உங்கள் ஞாபக மறதிக்குத் தான் இந்தத் தண்டம். காசு தந்து விட்டீர்கள் தானே. இனிமேல் மறக்கமாட்டீங்கள். வங்கிக்கு வரும் போது, பேனாவை மறக்கவே மாட்டீங்கள்.”
அட! எவ்வளவு சுலபமாக உறைக்க வைத்திருக்கின்றான். கோபம் போய் ஆச்சரியம் மிஞ்சியது!
இப்போது கூட, ஏதாவது அலுவலகத்தினுள் நுழையும் போது, சட்டைப் பையில் பேனா இருக்கின்றதா என்று பார்க்கத் தவறுவதே இல்லை.
-73

Page 46
ပံငါ့.႕ အျ႔မှီ2©
66
Uயரில் காற்று இல்லை." என்றான் அடிகன்.
“என் சைக்கிளிலும் தான்" மன்னவன் குரலும் கேட்டது.
குனிந்து பார்த்தேன். என் சைக்கிள் ரயர்களும் சூம்பிக் கிடந்தன.
எரிச்சல் வந்தது. பக்கத்தில் சைக்கிள் கடையும் இல்லை. ஒரு கிலோ மீற்றராவது உருட்ட வேண்டும்.
"யார் செய்திருப்பார்கள்.?"
“வேறை யார்?. எல்லாம் இவங்கடை வேலைதான்.” மன்னவன் பேச்சில் கோபம் தொனித்தது.
"இவங்கள் எண்டால்?..' அழகன் திருப்பிக் கேட்டான். அவன் எப்போதுமே நிதானம் தவறாதவன்.
"நேற்று முட்டிக் கொண்டோமே. அந்த சீனியர்கள்தான்."
-ി4

மன்னவன் சொன்னதும் சரி போலத் தோன்றியது. நேற்றைய சம்பவம்தான் இதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும் என நானும் நினைத்திருந்தேன்.
பேர்சிவல் ஹோல்" என அழைக்கப்படும் மண்டபத்தில்தான் சோம சுந்தரத்தாரின் முகாமைத்துவக் கணக்கியல் வகுப்புக்கள் நடந்து கொண்டிருந்தன. பயிற்சிக் காலத்தில் அவரது கணக்கியல் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பும் இருந்தது. சென்றவாரம் தொடங்கிய புதிய வகுப்பில் நாங்கள் மூவரும் சேர்ந்திருந்தோம். இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முகம் கொடுத்துப் பேசுவதாக இல்லை. பிரச்சனைப் படாமல் படித்து முடித்தால் போதும் என்று சமாளித்து வந்தோம்.
பிரச்சினைகள் சொல்லிக் கொண்டு வருவதில்லைப் போலும். சைக்கிள் நிற்பாட்டும் இடத்தில்தான் பிரச்சினை தொடங்கியது.
“இங்கே சைக்கிள் நிற்பாட்டாதீர்கள். இந்த இடத்தில் சீனியர்கள் தான் நிற்பாட்டுவார்கள்." என்றான் அவன்.
"அப்படி ஒரு சட்டமும் கிடையாது. நாங்கள்தான் முதலில் வந்தோம். இங்கேதான் நிற்பாட்டுவோம்' என்றான் மன்னவன்.
"ஏன் மண்டபத்தின் பின்புறத்தில் நிற்பாட்டலாம் தானே? அங்கே இடம் இருக்கிறது." f
"அங்கே நிற்பாட்ட முடியாது! சரியான வெய்யில், ரயரில் இருந்து காற்று இறங்கி விடும்.' என்றான் மன்னவன்.
'இது சீனியர்களின் இடம். வேண்டாம், போய் விடுங்கள். தேவையில்லாமல் பிரச்சினை கிளப்பாதீர்கள்." என்று மீண்டும் எச்சரித்தான் அவன்.
'முடியாது. இங்கேதான் நிற்பாட்டுவோம். செய்வதைச்
என்று முரண்டு பிடித்த மன்னவனை ஒருவாறு சமாதானப்படுத்திக் கூட்டிக்கொண்டு போனான், அழகன்.
செய்யுங்கோ. '
அன்றைய பிரச்சனை அத்தோடு தீர்ந்தது. இன்று அதே இடத்தில் தான் நிற்பாட்டுவோம் என்று மன்னவன் அடம் பிடிக்க, வேறு வழியின்றி சைக்கிள்களை நிற்பாட்டி விட்டு வகுப்புக்குச் சென்றிருந் தோம். திரும்ப வந்த போதுதான் மூன்று பேருடைய சைக்கிள்களிலுமே காற்றில்லை என்பது தெரிய வந்தது.

Page 47
“இவங்களைத் தேடிப்பிடித்து அடிக்க வேண்டும்!...” என்றான்
மன்னவன்.
அவன் எப்போதுமே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று
பேசுபவன்.
"வேண்டாம். பிரச்சனை தொடரும். இரண்டு வருடங்கள் படிக்க வேண்டும்.” அழகன் ஞாபகப்படுத்தினான்.
"சோமசுந்தரத்தாரிடம் சொல்லிப் பார்க்கலாம்.' என்றேன்.
விசயத்தைக் கேள்விப்பட்டதும் சோமர் சிரித்தார்.
"இதில் நான் என்ன செய்ய இருக்கிறது.?”
'இதென்ன சீனியர்கள். ஜூனியர்கள் என்று பிரித்து. சண்டித் தனம் செய்வது. உங்கள் கல்லூரிதானே, நீங்கள் சொல்லலாம் அல்லவா..?' அழகன் நாசுக்காக விசயத்தைப் புட்டு வைத்தான்.
"நான் பொலிஸ்காரன் அல்ல." சோமரின் பதிலிலும் அர்த்தம் இருந்தது.
'ஒத்துக்கொள்கிறோம். ஆனால், பல்கலைக்கழகங்களில் ராகிங்
செய்வது போலத்தான். இங்கேயும் சீனியர்கள் நடந்து கொள்
கிறார்கள். அதைத்தான் நீங்கள் கேட்கக் கூடாதா?’ என்கிறோம். என் கேள்வியில் இருந்த நியாயம் சோமரைச் சிந்திக்க வைத்தது.
"அந்தப் பழக்கம் இங்கேயும் வரக் கூடாது. இது ஒரு தொழில் கல்விக்கான நிறுவனம்..!"
"அப்படியானால், நீங்கள்தான் சீனியர்களுக்குச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்." சோமர் மீண்டும் சிரித்தார்.
"ஏன் உங்களாலே இதைத் தீர்க்க முடியாதா? அப்படியென்றால் படித்து முடித்த பின் எப்படி நிறுவனங்களை நிர்வகிக்கப் போகின்றீர்கள்? வரும் பிரச்சினைகளை எப்படிச் சமாளிப்பீர்கள்?"
சோமரின் கேள்விகள். சரியாகத்தான் பட்டன.
-سي-70--

"சோமர் சொன்னது சரியாக விளங்கவில்லை." என்றான் நியாஸ். அவனும் எங்கள் வகுப்பில் படிப்பவன்தான்.
'நீங்களே தீருங்கள் என்றுதானே சொல்கிறார். அதை நான்
பார்த்துக் கொள்கின்றேன்." என்றான் மன்னவன். அடிதடி எல்லா வற்றிற்கும் பின்னிற்காதவன் அவன்.
"வேண்டாம். புகையை ஊதி ஊதி நெருப்பைப் பெரிதாக்கி
விடாதே." திரும்பவும் எச்சரித்தான் அழகன்.
"இவங்களுக்கு உன்னுடைய "பைபிள் பாஷை விளங்காது. என்னுடைய வழிதான் சரி.'
"மன்னவன் கோபப்படாதே. நாங்களும் ஒருவழியில் முயற்சி செய்து பார்ப்போம்." என்றேன்.
"என்ன செய்யலாம்.?' இருவரும் ஏககாலத்தில் கேட்டார்கள்.
'அவங்கடை சைக்கிள் காற்றை நாங்களும் திறந்துவிட்டு. என்ன நடக்கிறதென்று பார்ப்போம். நடப்பதைப் பொறுத்து அடுத்த கட்டத்திற்குப் போகலாம்."
"சரி. நாளைக்கே செய்வோம்.” மன்னவன் சொல்ல, வேறு வழியின்றி எல்லோரும் ஒத்துக்கொண்டோம்.
மூன்றாம் நாளே செய்த வேலையின் "மகத்துவம்" தெரிந்தது. பிரச்சனையை எதிர்பார்த்திருந்ததால் சைக்கிள்களை ரவுணிலே விட்டு விட்டு நடந்தே வகுப்புக்குப் போயிருந்தோம்.
எங்களை வரவேற்க சீனியர்களின் கூட்டமொன்று வாசலிலேயே காத்திருந்தது.
"ஏன் சைக்கிள் இல்லாமல் நடந்து வாஹீங்கள்? அவர்களில்
ஒருவன் கேட்ட கேள்வியில் எல்லாமே தொக்கி நின்றன.
"வெய்யில்லை நிற்பாட்டிறதாலை காத்து இறங்குது. அதுதான் வேறை இடத்திலை நிழலிலை நிப்பாட்டிப் போட்டு வாறம்."
மன்னவன் இம்முறை நிதானமாகப் பதில் சொன்னான்.
-77

Page 48
"எங்கடை சயிக்கிளுக்கும் நேற்றுக் காற்றுப் போயிட்டுது.” அதே ஆள் திரும்பவும் பதில் சொன்னான்.
"வெய்யில்லை நிப்பாட்டி இருப்பியள்.” மன்னவனின் பதில் எங்களுக்கும் சிரிப்பை வரவழைத்தது.
"காற்று. வால்க்கட்டையையும் எப்பிடித் தூக்கிக்கொண்டு போச் செண்டுதான் தெரியவில்லை" சொன்னவனின் பேச்சில் கோபம் தெரிந்தது. -
"ஆரும் காற்றைத் திறந்து போட்டு வால்க்கட்டையைக் கழட்டிக் கொண்டு போயிருப்பாங்கள்.” மன்னவன் அப்பாவி மாதிரிப் பதில் சொன்னான்.
"வேறை ஆர். நீங்கள்தான் கழட்டி இருக்க வேணும்."
"எங்கடை சைக்கிளுக்குக் காற்றுப் போச்சுது. உங்களைக்
கேட்டமா..? ஆனால் உங்கடை சைக்கிளுக்குக் காற்றுப் போனால்
மட்டும். நாங்கள். நல்ல ஞாயம்தான்' மன்னவன் நக்கலாகச்
சொன்னான்.
"என்ன. கதை தடிக்குது? இனிமேல் எவனாவது எங்கடை
சைக்கிள் காற்றைத் திறந்து விடட்டும். பிறகு நடக்கிறதைப்
பாருங்கோ." இன்னொரு சீனியர் கோபத்தில் கத்தினான்.
"எங்கடை சைக்கிளுக்குக் காற்றுத் திறக்கிறவன்ரை கைதான்
முறியும். ஞாபகம் வைச்சுக் கொள்ளுங்கோ..!" மன்னவனும் உரக்கக்
கத்தினான்.
பேச்சு வார்த்தை திடீரென்று நின்றது. எல்லோரும் ஆளை ஆள் பார்த்தபடி பேசாமல் கலைந்து போனார்கள். நாங்களும் மெதுவாக வகுப்பை நோக்கி நடந்தோம்.
"ஏன்ரா இப்பிடிக் கத்திறாய்? திரும்பவும் பிரச்சனை கிளப்பப் போறியே.?' அழகன் ஆதங்கப்பட்டான்.
'இதெல்லாம். ஒரு நாடகமடா. பொறுத்துப் பார்' என்றான்
மன்னவன்,
என்ன மாயமோ தெரியவில்லை. படிப்பு முடியும் வரை அதன் பின்னர் ஒருவரது சைக்கிளுக்குமே காற்றுப் போகவில்லை,
س-8/----

Aܥܟܢܐ 2ܟ݁ܽ9)ܢܬ ܘܥܶܬܶܢܘG
Tெசனை மூக்கைத் துளைத்தது. நல்ல மணமாக இருந்தது. அடுப்படிக்குள் எட்டிப் பார்த்தேன். மூன்று வாண்டுகளும் ஒன்றாக உட்கார்ந்திருந்து எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள், சண்டை எதுவும் பிடிக்காமல். ஆச்சரியமாக இருந்தது! மூன்று பேரும் ஒன்று கூடினால் நிச்சயம் பிரளயம்தான். வழக்கு. விசாரணை என்றுதான் முடியும். இன்று நிலைமை மாறியிருந்தது.
“ஜெகன். என்ன செய்கிறீங்க..?"
“வந்து பாருங்களேன், மாமா..!" என்றான், ஜெகன்.
உள்ளே நுழைந்ததும் பலாப்பழ வாசனை என்று புரிந்தது. ஒரு சின்னத் துண்டு பலாப் பழத்தை மூன்று பேருமாகப் பங்கு போட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
"சாப்பிட்டுப் பாருங்க மாமா..!" ஜெகன் நீட்டினான்.
தேவாமிர்தமாக இனித்தது. நல்ல முற்றிய பழம். மரத்திலேயே பழுத்த பழம் போலும்,
-------9؟/----

Page 49
“இன்னும் கொஞ்சம் தரவா..?' கேட்காமலேயே எடுத்து நீட்டினான், இரகு.
மறுபேச்சில்லாமல் வாங்கி வாயில் போட்டுக் கொண்டேன். சாப்பிடச் சாப்பிட சுவை கூடுவது போலிருந்தது.
“நல்லாயிருக்கா..? மீண்டும் ஜெகன்தான் கேட்டான்.
“அருமையாக இருக்கு. யார் கொண்டு வந்தது?"
“வேறு யார், மாமா. தாத்தா தான்!”
இப்படியான விசேஷமான சாமான்களையெல்லாம் கொண்டுவருவது அப்பா தான். ஊர் முழுக்க அவருக்கு நண்பர்கள். 'பண்டமாற்று' அவரின் பிடித்தமான பொழுதுபோக்கு. தின்பண்டங்கள் என்றில்லை, புத்தகங்கள், பூமரக் கன்றுகள் என்று நண்பர்களில் வீடுகளில் இருந்து கொண்டு வருவார். அதபோல், இங்கிருந்தும் போகும்.
கழுவிய பின்னரும் கை மணத்தது. அப்படியொரு வாசனை. எங்கிருந்து கொண்டு வந்தாரோ தெரியவில்லை.
"மாமா..!" என்றான் ஜெகன்.
“என்ன..???
“ஒரு சின்னத் துண்டுதான் மாமா தாத்தா கொண்டு வந்தவர். ஒரு முழுப் பழம் கொண்டுவரச் சொல்லுங்களேன்..!"
"தாத்தா எங்கே..?"
“உலாத்துக்குப் போய்விட்டார்." என்றான் குமரன்.
அப்பாவின் வழக்கமான உலா நேரம் அது. மாலை நாலு மணியாகி விட்டால் சைக்கிளில் ஏறிக் கிளம்பி விடுவார். திரும்பி வர ஏழு
மணியாகி விடும். வாசிகசாலையில் பத்திரிகை வாசித்து, நண்பர்களுடன்
ஊர்ப்புதினம் கதைத்து வர நேரமாகிவிடும்.
பழம் யாரிடம் வாங்கி வந்தாரோ தெரியவில்லை. இரவு வரும்போது
கேட்டு, இன்னொன்று வாங்கி வரச் சொல்ல வேண்டும் என
நினைத்தேன்.
மாமி வீட்டு ஞாபகம் வந்தது. அங்கு நிற்கும் பலா மரத்தின் பழமும்
சுவையானதுதான். ஆனால், இவ்வளவு ருசி அதற்குக் கிடையாது.
" --80س--

'மாமி விட்டு பலா மரத்தின் பழமும் நல்ல இனிப்புத்தான்." என்றேன்.
“எந்த மாமி?” என்றான் இரகு.
“தாத்தாவின் தங்கச்சிதான்."
“அங்கை போய் ஒரு பழம் பிடுங்கி வாருங்கோவன்!" என்றான் ரகு, எதையும் உடனே செய்துவிட வேண்டும் என்று துடிப்பவன், அவன்.
“போடா! உனக்கு எப்போதுமே அவசரம்தான்.'
'இல்லை. மாமா, இப்ப பலாப்பழ சீசன்தானே."
அவன் சொன்னதிலும் ஞாயம் இருந்தது. சீசன் முடிந்தால் பழம் கிடைக்காது. ஆனால் மாமி வீடு போவதென்றால் ஐந்து மைல்கள் சைக்கிள் உழக்க வேண்டும்.
“வாற சனி போய்ப் பார்க்கிறன்."
அடுத்த சனிக்கிழமை சைக்கிளை எடுத்தபோது,
“எங்கே போகிறாய்..?' என்றார் அப்பா.
"மாமி விட்டுக்கு."
“கொஞ்சம் பொறு! நானும் வாறன்."
திக்கென்றது. அப்பாவுடன் கூடப் போனால் போய்ச் சேர்ந்த மாதிரி தான். போகும் வழியெல்லாம் அவரின் நண்பர்களின் வீடுகள். ஒவ் வொரு படலையாக நின்று கதைத்துப் போக வேண்டும். அவருடைய நடைமுறை அது. போதாதற்கு தெருவெங்கும் போவோர் வருவோர் எல்லாரும் குசலம் விசாரிப்பார்கள். அவர்களுடனும் நேரம் போய்விடும்.
'இல்லை! கொஞ்சம் அவசரமாகப் போகலாம். என்று பார்க்கிறன்."
'சனிக்கிழமை உனக்கு லிவுதானே? நான் உன்னை மினைக்கெடுத்த
மாட்டன்." என் யோசனை அவருக்கு விளங்கியிருக்க வேண்டும்.
-8-

Page 50
சொன்னது போலவே, வழி வழியே பிரேக் போடாமல் வந்தார். இருந்தாலும் கனகசிங்கத்தார் தன் வீட்டு வாசலில் நின்றது பிழையாகப் போய் விட்டது.
“என்ன மாஸ்ரர் நிக்காமல் போறியள்.?' ரோட்டுக்குக் குறுக்கே வந்து மறித்தார்.
"தங்கச்சி வீட்டை ஒருக்காப் போறம். இவனுக்கு நிக்க நேர மில்லையாம்.”
"பரவாயில்லை. ஒருவாய் தேத்தண்ணி குடிச்சிட்டுப் போகலாம் தானே?"
அப்பாவின் பார்வை என்மேல் விழுந்தது. கனகசிங்கத்தார் அப்பாவின் நீண்ட நாளைய நண்பர். தட்டிக் கழிப்பது முறையில்லை என்று பட்டது. நானே கேற்றைத் திறந்து உள்ளே நுழைந்தேன்.
சைக்கிள் உழக்கிய களைப்புக்கு எள்ளுப்பாவும், பிளேன்ரீயும் இதமாக இருந்தன. வெளிக்கிடும் போது, கனகசிங்கத்தாரின் மனைவி ஒடி வந்தா.
"மாஸ்ரர் அண்டைக்குக் கொண்டு வந்து தந்தியள் பலாப்பழத் துண்டு. அருமை, நல்ல திறமான பழம். இவரட்டை சொன்னனான், உங்களுக்குச் சொல்லச் சொல்லி.”
"ஒம், மாஸ்ரர் அப்படியொரு ருசியான பழம். நாங்கள் சாப்பிட்ட தேயில்லை. கனகசிங்கத்தாரும் ஆமோதித்தார்.
வீட்டிற்கு வந்த பலாப்பழத் துண்டில் ஒரு பகுதி இங்கேயும் போயிருக்கின்றதென்பது விளங்கியது. வேறு யார் யாருக்குப் போய்ச் சேர்ந்ததோ தெரியவில்லை.
மாமி வீட்டில். பெரிதாகப் புதினம் எதுவும் இல்லை. அப்பா இப்போது அடிக்கடி வருவதில்லை என்று மாமி குறை பட்டுக் கொண்டா.
'ஏன் போனகிழமை வந்தன்."
'முந்தியெண்டால் கிழமைக்கு இரண்டு தரமாவது வருவியள்.!" மாமியின் பேச்சில் ஆதங்கம் இருந்தது.
'இவ்வளவு தூரம் இப்ப எனக்குச் சைக்கிள் ஒடேலாது."
-82

66
ஏன். வழியிலை அஞ்சாறு இடத்திலை நிண்டுதானே வருவியள்.?" மாமியின் மறுமொழி எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. முற்றத்தில் எட்டிப் பார்த்தேன். பலாமரம் பெரிதாகக் கிளை பரப்பி முற்றத்தை மூடி நின்றது. உயரத்தில் பலாக்காய்கள் முள்விரிந்து தொங்கின.
“சரியான உயரத்திலை கிடக்கு. பிடுங்க ஆளில்லாமல் அலையிறம். ஆரிருக்கினம் இந்த வீட்டிலை ஏறிப் பிடுங்க?" மாமி குறைப்பட்டுக் கொண்டா.
"அதுதான். இந்த முறை பழம் அனுப்ப இல்லையோ..?”
மெதுவாகக் கேட்டேன்.
“என்ன சொல்லிறாய்..? போன கிழமை ஒரு பழம் அனுப்பினான் தானே. நல்ல பழம். வேரிலை பழுத்தது. இந்த முறைதான். இப்பிடி இரண்டு காய் வந்தது. ஒண்டை நாங்கள் எடுத்துக் கொண்டு, மற்றதை அண்ணனிட்டை அனுப்பி விட்டனே!"
வீட்டில் சாப்பிட்ட பலாப்பழத் துண்டின் ஞாபகம் வந்தது. கனகசிங்கத்தாரும் நினைவில் வந்து போனார். அப்பாவின் முகத்தைப் பார்த்தேன். மெல்லிய முறுவல் இருந்தது.
"இவனும் சாப்பிட்டவன். மறந்து போனான் போலை!" என்றப அப்பா சிரித்தார்.

Page 51
ഗ്രേ
அடையா நெடுங்கதவாகத் திறந்திருக்கும் "சமறிக்" கதவு அன்று மூடியிருந்தது. ஒருவரது சிலமனையும் காணவில்லை. 'எங்கே போய்த் தொலைந்திருப்பார்கள்?’ என்று யோசித்தபடி, తి ఎrGoT போனேன்.
சாப்பாட்டு மேசையைச் சுற்றி எல்லோரும் நின்றிருந்தார்கள். சாமியார் மட்டும் ஒரு கதிரையில் உட்கார்ந்திருந்தான். அவன் தலை குனிந்தபடி இருந்தது.
"என்ன நடக்கிறது. இங்கே?"
“தேவன் முதலிலை நீயும் இரு." என்றபடி ஒரு கதிரையை
என்பக்கம் தள்ளினான், ஈசன்.
"சாமியாருக்கு என்ன நடந்தது?. சுகமில்லையா..?”
"இவனுக்காக...? நல்லாத்தான் இருக்கிறான். அதுவும் வலு உசாராயிருக்கிறான். ' குகன், கோபத்தோடு சொன்னான்.
“என்னடா..? ஒரு மாதிரி மறுமொழி சொல்லுறியள்.2' ஏதோ பிரச்சினை என்று விளங்கியது.
-84
 

'மிசஸ். சில்வா வந்து எல்லோரையும் ஏசிப்போட்டுப் போறா..." சத்தி, மெதுவாகப் பதில் கூறினான்.
பிரச்சினை என்னவாக இருக்கலாம்? என்பதை ஊகிக்க முடிந்தது. வழக்கம் போல, "சோமாவதி சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அதில் 'சாமியாருக்கு சம்பந்தம் இருக்க முடியாது. அவன் ஒழுங்கானவன். ஒருவரோடும் வம்புக்குப் போகாதவனாச்சே!
"சரி விசயத்தைச் சொல்லு.?' என்று ஈசனைக் கேட்டேன். "விசயம் தலைக்கு மேலை போட்டுதடா..!"
"ஏன்.? என்ன?"
"சோமாவதி. "எக்ஸ்பெற்றிங்காம். இவன் சாமியார்தான் குழப் படிக்காரன் என்று மிசிஸ் சில்வா சத்தம் போட்டா, நாங்கள் எல்லாரும் தறுதலையளாம். நம்பி வீட்டிலை இருக்க விட்டால். நாயஸ் மாதிரி நடக்கிறமாம். எல்லாம் இவனாலை வந்த வினை' ஈசனின் கோபம் அவனது முகத்தில் தெரிந்தது.
உச்சந் தலைக்குள் என்னவோ செய்தது. விசயம் இவ்வளவு தூரம் போயிருக்கிறது, எனக்குத் தெரியாமல். அதுவும் சாமியார். நம்பவே முடியவில்லை. மிகவும் ஒழுங்கானவன். தன் வேலை உண்டு, கோயில் உண்டு என்று திரிபவன். பெயரை விட, 'சாமியார்” என்ற அவனது பட்டம்தான் நடைமுறையில் இருந்து வந்தது. -
"நான் நம்பமாட்டன். டேய் சாமியார்! நீ என்னடா சொல்லு
றாய்..?"
"தேவன், நான் சொல்லிறதெல்லாம் சொல்லிப் போட்டன்.
சத்தியமா எனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை! ஆனா, இவங்கள் நம்புறாங்கள் இல்லை. சோமாவதி பொய் சொல்லுறாள்.'
சாமியாருக்குத் தொண்டை அடைத்தது. குரலும் கூடத் தழதழத்தது.
'டேய். நீங்களெல்லாம் ருத்திராட்சப் பூனையளடா" குகன்
மோசமாகத் திட்டினான்.
—రS

Page 52
வழக்கமாகச் சோமாவதியைப் பார்த்துப் பல் இளிப்பவன், அவன் தான். அவனுடைய சேட்டை தாங்காமல் மிசிஸ் சில்வா என்னிடம் பல தடவை குறைப்பட்டிருக்கின்றா.
மிசிஸ் சில்வா வீட்டின் பின்புறத்தில் இருக்கும் வளவில் உள்ள பழைய வீடுதான் எங்கள் சமறி. அதன் சொந்தக்காரியும் அவதான். சோமாவதி, மிசிஸ் சில்வா வீட்டு வேலைக்காரி. சினிமாக் கதாநாயகி மாதிரி இருப்பாள். வழக்கமாக அவளுடன் சேட்டை விடுவது குகன் தான். ஈசனும் இடைக்கிடை பல்லைக் காட்டுவான். இருவரையும் திட்டி மேய்ப்பது என் வேலையாக இருந்தது.
மிசிஸ் சில்வாவைத் தேடிப் போனபோது, கணவரும் கூடவே இருந்தார். ஒய்வு பெற்ற பொறியியலாளர். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். இன்று வாயைத் திறக்கவில்லை. சிரிக்கவும் இல்லை.
"சாமியாராலைதான் பிரச்சனை என்று சொன்னீர்களாம். நான்
நம்பவே மாட்டேன்..!" என்றேன்.
"நானும் முதலில் நம்பவில்லை. சோமாவதி விடாப்பிடியாகச் சொல்கிறாள். அவள் வீட்டை விட்டு ஒரு இடமும் போவதில்லை. உம்முடைய நண்பன் அடிக்கடி நைற் டியூட்டி செய்து விட்டுப் பகலில் சமறியில் நிற்கின்றான். நானும் பகலில் பாடசாலைக்குப் போய் விடுகிறேன். எனவே அவள் சொல்வதை நம்பவேண்டித்தான் இருக்கிறது.”
“சோமாவதி சொன்னால் நம்பி விடுவதா? சாமியார் நல்ல பொடியன். ஒரு குழப்படியும் செய்யமாட்டான். அதிகமாய் பேசவும் மாட்டான். அப்படியிருக்க."
"அமுசடக்கியா இருப்பவங்களை நாம நம்பேலாது" மிசிஸ் சில்வா
இடைவெட்டினா,
“சரி. நான் சோமாவதியை விசாரிச்சுப் பார்க்கவா..?"
'நீரென்ன விசாரிக்கிறது? இவ்வளவு தூரம் நடந்த பிறகும். உங்களை வீட்டிலை வைச்சிருக்கிறது எங்கடை பிழை. உடனை வீட்டாலை வெளிக்கிடுங்கோ." எஞ்சினியர் சில்வாவுக்கும் கோபம்
வருமென்பதை அன்றுதான் அறிந்து கொண்டேன்.
—86

“தேவன், உம்மை நம்பித்தான் வீட்டைத் தந்தன். இது வெளியிலை தெரிந்தால், பள்ளிக்கூடத்திலையும் எனக்கு மரியாதை கிடைக்காது. சோமாவதியின்ரை பிரச்சினையை எப்படியாவது சமாளிச்சுக் கொள்ளுவன். ஆனால், இன்னும் ஒரு கிழமைக்குள்ளை எல்லோரும் வீட்டை விட்டுப் போயிடோணும். சாமியாரை இண்டைக்கே அனுப்பி விடும். அவ்வளவுதான். நீர் போகலாம்."
மிசிஸ் சில்வாவுடன் தொடர்ந்து பேசவேண்டிய தேவை இருக்கவில்லை.
சமறியில் இருந்து வெளிக்கிட்ட சாமியாருடன் பஸ் ஸ்ராண்ட் வரை போனது நான் மட்டுமே.
"சாமியார். நீ இதைச் செய்திருக்க மாட்டாய். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும். ஏதாவது வித்தியாசமா நடந்ததா?."
"தேவன். நீயுமா இப்படிக் கேட்கிறாய்? என்ன விளங்கிக்
y
கொண்ட ஒருவன் என்று உன்னை நான் நினைச்சிருந்தன்.' சாமியார்
அழுதே விட்டான்.
"நீயுமா, புரூட்டஸ்?" என்ற கேள்வி போல் அது என் மனதைக் குடைந்தது.
"சரி. அடுத்த கிழமை உன்னை வந்து சந்திக்கிறன்' என்றபடி புறப் பட்டேன்.
சமறிக்கு உடனே திரும்ப மனமில்லை. குணசிங்கத்தின் அறையை நோக்கி நடந்தேன். மனதில் இருந்ததை அவனிடம் கொட்டிய பிறகு ஆறுதலாக இருந்தது.
எல்லாவற்றையும் கவனமாகத் திருப்பித் திருப்பிக் கேட்டான்.
'இதெல்லாம். ஆறப்போட்டு விசாரிக்க வேண்டிய விசயமடா..! வாடா இப்ப என்னோடு' என்று பம்பலப்பிட்டி ரெஸ்ரோரண்டுக்குக்
கூட்டிப் போனான்.
சாமியார் செய்திருக்க மாட்டான் என்ற கருத்தை அவனும் ஆமோதித்தான், மருந்து உள்ளே இறங்க, உசார் ஏறியது.
-87

Page 53
“தேவன் ஒண்டுக்கும் யோசியாதை..! எனக்குப் பொலிஸ் 'ஒ.ஐ.சி"யைத் தெரியும். நான் கண்டுபிடிப்பன். நீ போ!' என்று அனுப்பி வைத்தான்.
சமறிக்குத் திரும்பியபோது மற்றவர்களும் பெட்டி படுக்கைகளோடு ஆயத்தமாய் இருந்தனர்.
மூன்றாம் நாளாக இருக்க வேண்டும். முன்வீட்டில் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தேன். சோமாவதி அழுது குளறிக் கொண்டிருந்தாள். மிசிஸ் சில்வா பத்திரகாளியாக மாறிக் குதித்துக் கொண்டிருந்தாள். எனக்கேன் வம்பு என்று பேசாமல் வந்து அறைக்குள் படுத்துவிட்டேன்.
கதவு தட்டும் சத்தம் கேட்டுத் திறந்தபோது, மிசிஸ் சில்வா நின்றிருந்தா, அப்படியொரு கோலத்தில் அவவை நான் கண்டதே இல்லை. தலைமயிர் குழம்பி, முகம் கறுத்திருந்தது. கண்கள் சிவந்திருந்தன. அழுதிருப்பா என்று பட்டது.
'வாங்கோ. மிசிஸ் சில்வா. எல்லாரும் போயிட்டினம். நானும் நாளைக்குப் போயிடுவன். இந்த மாத வாடகையை போவதற்குள் தாறன். தோன்றவில்லை.
அவவோடு வேறு எதுவும் பேச வேண்டுமென்று
“தேவன். என்னை மன்னிச்சுக் கொள்ளும்." சொல்லும் போதே
மிசிஸ் சில்வா அழ ஆரம்பித்து விட்டா.
"கவலைப்படாதையுங்கோ. மிசிஸ் சில்வா, இந்தப் பிரச் சினைகளை மறந்து இருக்கலாம் எண்டுதான் நானும் பார்க்கிறேன்."
'இல்லை. தேவன். ஒரு பாடசாலை அதிபராக இருந்தும், இதை நான் சரியா விசாரிக்க இல்ல. உம்மடை பிரண்ட். சாமியாரிலை பிழை இல்லை.'
மனதில் இருந்து பெரிய பாரம் இறங்கியது போன்று இருந்தது. இப்போதாவது சாமியாரைப் பற்றி விளங்கிக் கொண்டாவே என்று
சந்தோஷமாக இருந்தது.
'நான் சொல்லக்கை நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. இப்ப மாத்திரம் எப்பிடித் தெரிய வந்தது.?'
-88--

'பொலிசாலை வந்து. சோமா வதியை இரண்டு நாள் விசாரிச்சவை. பிறகுதான் உண்மை என்னவெண்டு தெரிஞ்சுது. சோமாவதி முதலிலை பொய் சொல்லி இருக்கிறாள்.'
"சாமியார். இல்லையெண்டால். காரணம் யாரெண்டு. கண்டு பிடிச்சாச்சோ..?' ஆவலை அடக்கமாட்டாமல் கேட்டேன்.
மிசிஸ் சில்வா. குனிந்து நிலத்தைப் பார்த்தபடியே இருந்தார். கண்களில் இருந்து மீண்டும் கண்ணிர் வடிந்தது.
"இவர். எங்கடை இவர்தான். என்னாலையும் நம்பவே முடிய வில்லை. பொலிஸ் விசாரிச்ச பிறகுதான் சோமாவதி உண்மையைச் சொன்னாள். இவரும் ஒத்துக் கொண்டார்."
கதைக்க முடியாமல் மிசிஸ் சில்வா விக்கி, விக்கி அழுதா, நாங்கள் பட்ட வேதனையை அவவும் படட்டும் என்று பேசாமல் இருந்து விட்டேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பிரயோசனம்?
அடுத்தநாள் காலை. சமறித் திறப்பைக் கொடுத்தபோதுதான் மிசிஸ் சில்வாவைக் கடைசியாகப் பார்த்தேன். அந்தக் கம்பீரமான முகம் வாடிப்போய்க் கிடந்தது.
குகனும். ஈசனும் விசயம் தெரிந்து மன்னிப்புக் கேட்டார்கள். அதன் பின்பு அவர்கள் தொடர்பும் விட்டுப் போயிற்று. ஆனால், சாமியார் இன்றுவரை என் நண்பனாகவே இருந்து வருகிறான்.

Page 54


Page 55
GOG
புலமைத்துவக் உருவானவர் தும்பளைக் கிர
பத்திரகாளி அ
சுதந்திரப் பறை சுற்றித் திரியும்
நினைவழியா நாட்கள்" என்ற மகுடத் பிரசுரமான இவரது படைப்புக்கள் நூலு படைப்புக்கள் அனைத்துமே இவரது ம அனுபவ முத்துக்கள் எனலாம். தனது க வாழ்க்கை என்ற வட்டத்தின் புறநிலை தனது வாழ்வின் நினைவுத் தடங்களை அதேவேளை அங்கதச் சுவையுடனும்
ஒவ்வொரு காட்சியும் ஒரு மின்னல் ெ வடமராட்சியின் மண்வளம், மனவளம் ஒவ்வொரு காட்சியிலும் இழைந்து வ அவரது தந்தை முருகேசு மாஸ்டரின் மகிழ்ச்சியைத் தருகிறது.
தயாபரனின் இந்தப் படைப்பானது, தம் நூற்றாண்டுக் காலம் நடைபயின்று. த இலக்கியத்தில் ஒரு புது அரும்பு முளை படைப்புக்கள் வாயிலாக இலக்கிய ஆர்
 

கேசு தயாபரணி
தடும்பம் ஒன்றின் பின்னணியில் ருகேசு தயாபரன் வடமராட்சி மத்தின் நெல்லண்டைப் மாள் ஆலயச் சூழல் துவச் செழுமைக்கு விளை
டமராட்சியின் பரந்து கிடக்கும் பத்தின் துடுக்குத்தனம், エリ リエ。
பாடசாலை நண்பர் குழாம் னின் வாலிபப் பின்தளமாப்
ந்தகால வாழ்வின் நிகழ்வுகளை நின்று நோக்குகிறார் தயாபரன் மிகத் தெளிவாகவும், ஆழமாகவும் வர் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
றிப்பாக மனதைச் சுண்டியிழுக்கிறது. பண்பாடு சொல்லாட்சி என்பன கின்றன. தயாபரனின் எழுத்தில் லதுறை ஆளுமை பிரதிபலிப்பது
ழ் இலக்கியத்திற்கு ஒரு புதுவரவு ர்வடைந்து வருகின்ற புனைகதை கொள்வதனை, இந்தப்
வலர்கள் இனங்காணலாம்
- சிவன்னியகுலம்
BN-978-955-825-4-3-3