கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்தோநேசியாவில் 2 வருட அனுபவம்

Page 1


Page 2


Page 3

இந்தோநேசியாவில் 2 வருட அனுபவம்
"குருபவனம்"
கண்டி வீதி, agrnrch&s&#GBayr mi?..

Page 4
முதற்பதிப்பு ஆடி 1986
விலை ரூபா : 16-00
அச்சுப் பதிப்பு: மஹாத்மா அச்சகம், ஏழாலை,

O
11. 12.
15.
உள்ளே
முன்னுரை O 9 0 w w Y ஐந்து நிமிடங்கள் . . anthigi Gop" . . . . . . ao vo as a s இந்தோநேசியாவில். . . .
மதப்பள்ளிகள் LLLLLL LLLL SS SLSSS SS SSLL LSL C SL LLL SL தமிழின் தாக்கம் . so 0 காகம் இல்லாத ஊர் . Lum flæmt-m' - a
வடசுமாத்திராவில் உள்ள இந்து ஆலயங்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்ட
சீனக் கோயில்கள்
திருமண விழா « ... 89 ) ke v » V » e ve பரிச விழா YYY L SLLLLSS S H CSSS CSSS மணமகனின் தந்தையின் உறுதிமொழி மணமகளின் தந்தையின் உறுதிமொழி
புரோகிதர்கள் orge e O B a 8 '
சீதனம் o se s es e Q og 8 திருமண உறுதியுரை . ) » Ab ) ) மணமகனின் உறுதியுரை · · · · மணமகளின் உறுதியுரை O DI O N P மணமக்களுக்கு அறிவுரை மரணக் கிரியை e o e O
இறுதி மரியாதை வசனம் 0 0 O 8
பூமிபுத்திரா LL LSL L0 0L S 0L00LL LLL
LpgiJUTT as a s et - அகஸ்தியர் சிலை . . .
சடைவேதம்
பக்கம்
13
28
25
29
31
露3
35
ጃ6
37
38
39
4罗
44
45
46
48
49
55
55
5尔
57

Page 5
27.
28.
29。
30.
31.
32.
33.
34. 35,
36.
37
38.
39.
40。
4 l .
42。
43.
44'
45.
46.
47。
iv
தமிழ் மாணவரும் இந்து சம்யப் பாடமும்
மலாக்காச் செட்டியார்கள் .
இந்தோநேசிய இராச்சியமும்
கெர்ம்மியுனிச சித்தாந்தமும்
அகழ்வாராய்ச்சி . . உலகம் முழுவதிலும் தமிழினம் . பாலி இந்துக்கள் A s 0 o II o a si 0 பாலித் தீவு பற்றிய பொதுக் குறிப்புக்கள் அம்புல் தீர்த்தம் dS a t dl a v x கிந்தாமணி a A U e 4 y 8 ቇበ Iä69 M L S S0LL0LLS S LL LSL 0SS LLL LL LSL
சுகர்னுே குடும்பம் s + C • • = s O சாந்திதாசா ஆச்சிரபம் . ... சாந்தி பிரம்பனன் . . 1 t மேடான் மாரியம்மன் கோயில் A தர்ம புத்திரா பாடசாலை . . . . ،ماه தர்ம புத்திரா பாடசாலை 11 . மாரியம்மன் கோயிலின் மகிமை' . நாடகம் • re. . . . . . . . . முன்மாதிரியானதமிழர்கள் இருவர் . வள்ளல் திரு. சி. மாரிமுத்து . . . . . . அறிஞர் து. குமாராசாமி
s
65
68
70
73
77
83
87
89
90
90
93
96
107
10
111
15
9
v. 120
34

சிவமயம்
முன்னுரை
இந்த நூல் ஓர் வரலாற்று நூலல்ல; அல், லது ஒர் யாத்திரை நூலல்ல; அல்லது ஓர் ஆத்மீக நூலல்ல; அல்லது ஓர் இலக்கிய நூலல்ல; அல்லது ஓர் கற்பனைக் கதையல்ல. ஆனல் இவை யெல்லாம் சேர்ந்த ஒன்றுதான் இந்த நூலாகும்.
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இந்தோ நேசிய மக்களுடன் உறவாடும் வாய்ப்பை இறைவன் தந்தான். அவர்களுடைய வாழ்க்கை யோடு வாழ்க்கையாக இரண்டறக் கலந்து அவர்களுடைய கலாச்சாரங்களை அறியும் வாய்ப் புக் கிடைத்தது. கடவுள் வழிபாடு, திருமணம், மரண வீடு, திவச வீடு, பூப்பு நீராட்டு விழா, சுதந்திர தின விழா ஆகிய விழாக்களில் பங்கு பற்றி அங்கு அவர்களிடையே காணப்பட்ட கலாச்சார ஓட்டத்தை உணர முடிந்தது.
வீடுகளில் நடைபெறும் அல்லது கோயில் களில் நடைபெறும் எந்த விழாவாயினும் அங்கு அடியேனுக்கும் ஒரு இடம் முக்கியமாகக் கொடுத்தே வந்தார்கள். அடியேன் ஒரு விழா விற்குச் செல்லத் தாமதமானுல் அடியேன் செல் லும் வரை காத்திருப்பார்கள்; அல்லது அவர்க ளாகவே இருப்பிடந் தேடி அழைத்துச் செல்ல வந்துவிடுவார்கள்.

Page 6
vi
இரண்டு ஆண்டுகள் அவர்களோடு கலந்து வாழ்ந்த வாழ்க்கையின் போது நம்மவருக்கும் பயன்படத் தக்கவற்றையே இந்த நூலில் கூறி யுள்ளேன். இந்தோ நேசியாவில் சைவமும் தமி ழும் ஒரு காலத்தில் எவ்விதம் வேரூன்றியிருந் தது என்பதற்கு ஒரு ஆரம்ப நூலே தவிர இது ஒரு முழுமையான நூலல்ல. எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்கு இதை ஒரு அரிச்சுவடி என்றே கூறலாம்.
உலகத்தில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்துக்கள் அதிகமாக வாழும் தேசம் இந்தோ நேசியாவாகும். இத்தகையதொரு தேசத்தின் கலாச்சாரத்தைப் பற்றியோ அரசியலைப் பற் றியோ வரலாற்றைப் பற்றியோ ஆராய்ச்சி செய் யாமலிருந்தால் நமது தமிழுக்கும் சைவத்திற்கும் தீமை செய்தவர்களாகக் கருதப்படுவோம்.
இந்தோநேசிய மொழியில் பெரும்பான்மை யான சொற்கள் தமிழ்ச் சொற்களாகும். தமிழின் உருவம் மாருமலே வழங்கும் சொற்கள் ஒரு பகுதி, ஒரு சில சொற்கள் சிறிது உருவ மாற்றம் பெற்றுள்ளன. முழுமையாக உருவ மாற்றம் பெற்று வழங்கும் சொற்களும் உள்ளன. ஒரு காலத்தில் இத்தகைய சொற்களில் இருந்து தான் இன்ன இன்ன தமிழ்ச் சொற்கள் பிறந் தன என்று அவர்கள் ஆராய்ச்சி செய்யக் கூடும் ஆகவே இந்தோநேசியாவில் சைவமும் தமிழும் பற்றி விரிவான ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும்.

vii
எதிர் காலத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அங்கு நிறைந்த ஆராய்ச்சிகளுக்கு இடமுண்டு, என்பதை மாத்திரம் கூறிக்கொள்ள விரும்பு கின்றேன்.
இந்த நூலுக்கு "8ந்து நிமிடங்கள்" என்ற தலைப்பில் 'நந்தி" அவர்கள் அருமையான அணிந்துரை ஒன்று அளித்துள்ளார்கள். (99. யேனுடைய நீண்டகால நண்பர். முதல் சந்திப் பில் அவர் வைத்தியகலாநிதியாகவும் அடியேன் ஒரு தமிழாசிரியனுகவும் சந்தித்துப் பழகினுேம், காலகதியில் நூல் வாசகர்களாகப் பழகினுேம், கடைசியில் எழுத்தாளர்களாக உறவு கொண் டோம். அவர்கள் நாவலப்பிட்டியில் இருந்த காலத்தில் தோட்டப் பகுதி மக்களுக்கு சுகா தார சம்பந்தமாகப் பேச்சுகள் நிகழ்த்தினர்கள். அவர்களுடைய எழுத்து மலையகத்தை அடிப் படையாகக் கொண்டே வளர்ந்தது என்றல் அது மிகையாகாது. அடியேனையும் அடியேனு டைய எழுத்துக்களையும் உள்ளவாறு புரிந்து கொண்ட ஒரே ஒரு நண்பர் அவர்தான் என்றல், அது மிகைப்படுத்திச் சொல்வது அல்ல. ஒரே இரவில் நூலை வாசித்து பன்னிரண்டு மணித்தியா களுக்குள் ஒரு அருமையான அணிந்துரையை அளித்தாரென்ருல் அவருடைய வாசிக்குந் திறமை யையும் ஜனரஞ்சகமான எழுத்துத் திறமையை யும் கூறுவதற்கு வேறு அத்தாட்சியே தேவையி ல்லை. வைத்தியகலாநிதி "நந்தி" அவர்களுக்கு அடியேனுடைய உளம்கனிந்த நன்றியைத் தெரி

Page 7
viii
வித்துக்கொள்வதில் மிக மகிழ்ச்சி கொள்ளுகி ன்றேன்.
ஈழத்தில் தமது செந்தமிழ்த் திறமையால் பல பட்டங்களைத் தமக்கு ஆக்கிக் கொண்டவர்கள் பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். அவர்கள் நாள் முழுவதும் பொதுச் சேவையில் ஈடுபட்டு சேவைக்கென்றே தம்மை முழுதாக அர்ப்பணித்தவர்கள். இத்தகைய அம்மையாரவர் கள் அடியேனுடைய வேண்டுகோளை ஏற்று ஒரு நாளிலேயே அருமையான வாழ்த் துரை ஒன்றை வழங்கியமைக்கு அடியேன் என்றென்றும் கடமைப் பட்டுள்ளேன். அவருக்கும் அடியேனுடைய மன மார்ந்த நன்றி என்றும் உரித்தாகுக. இந்த நூலினை உரிய காலத்தில் வெளியிட நல்லமுறை யில் அச்சிட்டு உதவிய மஹாத்மா அச்சகத் தாருக்கும் அடியேனுடைய அன்பையும் ஆசியை யும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
"குரு பவனம்", இங்ங்ணம் கண்டி வீதி, நா. முத்தையா
சாவகச்சேரி.

ஐந்து நிமிடங்கள் "நந்தி’
அன்பும், 28 வருட கால நட்பும் காரண மாக, அரிய நண்பர் ஆத்மஜோதி திரு. நா முத்தையா அவர்கள் ஆணையிட்டதனுல், அவ ருடைய இந்த நூலுக்கு ஒரு முகவுரை எழுதி உங் களை ஐந்து நிமிடங்கள் தாமதிக்கவைக்கிறேன்.
ஆத்மஜோதி அவர்களின் 40 வருட காலப் பொதுவாழ்வு, சமயத்தின் அடிப்படையில், கல்வி - அறிவூட்டல், சமுதாய சீர்திருத்தம், பத் திரிகை - எழுத்துத் தொழில் ஆகியவற்றில் ஈடுபாடு உடையது. 1955 இல், இந்த நாட்டு ஏழைத் தொழிலாளரின் சமய வாழ்வில் அக்கறை கொண்டு, மலைநாட்டின் தோட்டப் பகுதிகளில் ஆரம்பித்த அவரது “பிரயாணம்"பல தென்னிந்திய சமய யாத்திரைகளில் அனுபவம் பெற்று, 1976 இல் கோலாலம்பூரில் அகில உலக சமய மகா நாட்டில் கலந்துகொண்டதில் இருந்து, தென் கிழக்கு ஆசிய சைவத் தமிழ் மக்களின் சேவைக் காக, அவ்வப்போது, திரும்பியது.

Page 8
Χ
இதில் இந்தோநேசிய சைவ ம க் களி வி பிற்கு ஆத்மஜோதி அவர்கள்' சேவை, ஒரு நூலாகத் தரப்படின் பயன் தரும் என்று பலர் விரும்பியதுண்டு. ob5(36 மிகவும் தேவையான இந்த நூலை இப்போது பார்க்கும் போது மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படுகிறது.
பூரண மனத்துடன் சேவை செய்வதுடன், ஒழுங்காகப் (8ւյԺ ճյլÉ, தெளிவாகவும் நயமாகவும் எழுதவும் வல்லவர் அவர். சமய தத் துவங்கள் என்ன உருவத்தில் இருப்பினும் ஆராய்ந்து, அவற்றை எல்லோரும் விளங்கிப் uu (or God Luis வண்ணம் எழுதும் அவரது ஆற்றலைத் தமிழ்
(1978) ஆகவும்:ஈழத்துச் சித்தர்களின் வரலாற்றுத் தத்துவம் “முப்பெரும் சித்தர்கள் (1973) <莎田 வும்; சமய நிகழ்ச்சிகளின் கருத்துக்கள் பன்னி மாத நினைவுகள் (1978) i 2b 5 yiiɓ; sou கருத்துக் கிள் "தத்துவக் கதைகள்’ (1975) ஆகவும் நூலு குவம் பெற்று நமது சிந்தனைக்கு உணவு ஊட்டி யதைத்தான் குறிப்பிடுகிறேன்.
அந்த வழியில் வந்த, 'இந்தோநேசியாவில் இரண்டு ôGöt- soi 9 Lư Qu tỗ” என்ற இந்நூல் வெறும் பிரயாண அனுபவ நூல் அல்ல; இது ஒரு சமய, முதாய, சரித்திர உணர்வுை சிந்தனை நூலாகும். இந்தோநேசியாவில் ճնirGքւծ

xi
இந்துக்களைப் பற்றியும், குறிப்பாகத் தமிழ் மக் கள் பற்றியும் கூறும் இந்த நூலில் பூர்வ குடி கள், குடியேறிய தமிழ் மக்கள், சமூக நிகழ்ச்சி களில் சமய முறைகள், கோவில்கள், சாதி வேற் றுமையும் சீதனச் சீர்கேடும் இல்லாத சமூக அமைப்பு, பொழுதுபோக்கு ஆகிய பல தகவல் களைத் தந்து, அவற்றிற்கு விளக்கங்களை அளித் திருப்பதோடு, தேவையான வழிமுறை ஆலோ சனைகளையும் தந்திருக்கிருர்,
இந்த அவதானிப்புகளிலும் ஆலோசனைகளி லும் மூன்றை, மிக முக்கியமானவை எனக் கருதி இங்கே குறிப்பிடுகிறேன்; காரணம், அவை தமி ழன் குடி புகுந்த எல்லா நாட்டுத் தமிழர் சமு தாயத்திற்கும் பொருந்தும். முதலாவது தமிழ் மொழி பற்றியது: இந்தோநேசியாவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் த மி பூழி ல் பேச, வாசிக்க, எழுதக்கூட வல்லமையுள்ளவர்களாக இருக்க, வாலிபர்கள் தமிழில் பேசினுல் விளங்கக் கூடியவர்களாக இருக்க, சிறர்கள் பேசவும் தெரி யாதவர்களாக இரு க் கி ரு ர் க ள் (பக். 8, 60), 'தமிழை மறந்த பின் நாம் தமிழர் என்று சொல்லிக்கொள்ள முடியாது. தமிழை மறந்தால் எமக்கு மதமும் இல்லை" (பக்.8) என்ற கருத்தை வற்புறுத்துகிறர். இந்த நிலை இங்கிலாந்தில் உள்ள தமிழர்களுக்கு மிகவும் பொருந்தும் என் பதை அங்கே சென்றவர்கள் அறிவார்கள் அத்தஜன பேருக்கும் அங்கே, இங்கிலாந்தில் உள்ள வாலிப ரும் சரி பெரும்பாலான சிறர்களும் சரி, நமது

Page 9
xii
நாட்டில் தமிழ் கற்றபின் 1977 இலும் 1982 இலும் அகதி" களாகப் போனவர்கள்!
"வீட்டிலே தமிழிலே பேசுங்கள். தமிழனைத் தமிழன் கண்டால் தமிழிலேயே பேசவேண்டும். என்று ஆத்மஜோதியார் தரும் சிறு ஃபோர் மியூலாவே இந்த அவல நிலையைத் திருத்தும்,
இரண்டாவது கோவில் வழிபாடு பற்றியது (பக். 27, 106 - 107): கோவில்களில் அணுவசிய ஆர்ப்பாட்டங்களைத் தவிர்த்து கூட்டு வழிபாடு, நாம பஜனை, தியானம் போன்றவற்றிற்கு முக் கியத்துவம் கொடுப்பது வற்புறுத்தப்படுகிறது. நமது நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் பெருமளவு குறைந்தபோதிலும், கோவில்களில் பஜனையும் தியானமும் அறிவுரை வழங்கலும் மிகக் குறைவு அல்லது இல்லை; அல்லது இருந்தாலும் பிரயோ சனம் அற்ற முறையிலும் சூழலிலும் நடைபெறு கிறது என்றே கூறவேண்டும். ஆகவே இந்த ஆலோசனை ஈழத்திற்கும் தேவை. மூன்ருவது, தமிழரின் "பாவம்" பற்றியது (பக் 71):
*உலகில் எல்லாச் சமூகத்தவருக்கும் ஒரு இராச்சியம், ஒரு தேசம், ஒரு மாகாணம், ஒரு கட்டுக்கோப்பு இருப்பதைக் காண்கின்ருேம், தமிழனுக்கு என்று இன்றைய உலகில் எதுவுமே இல்லை." என்று எழுதியவர் "இன்றைய உலகில் தமிழ் இனத்திற்கென்று தனியான ஒரு உலக அமைப்பு ஏற்படவேண்டும்." என்ற பாரிய கருத்தைக் கூறியிருக்கிறர்.

xiii
இத்தகைய செய்திகளும், கருத்துக்களும் மிகுந்த, இலகுவில் படிக்கத் தக்க, ஆங்காங்கே நகைச்சுவை மூலம் சிந்தனையைத் தூண்ட வைக்கும் இந்த நூல் ஆத்மஜோதியார் தமிழ் மக்க ளுக்குத் தரும் இன்னும் ஒரு பரிசு. இதுபோல் முன்னவைபோல், இன்னும் படைத்து தமிழ் மக்களுக்கு அவர் உறுதுணையாக நிற்கவேண்டும் என்று வேண்டுகிறேன்.
மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், திருநெல்வேலி.
8-8-86;

Page 10
வாழ்த்துரை
"ஆத்மஜோதி" என்ற ஆன்மீக இணைப் பிஞல் அகில உலகுக்கும் அறிமுகமானவர் திரு. நா. முத்தையா அவர்கள். நீண்ட காலத் தொடர்பை மலையகத்து மக்களோடு ஏற்படுத் திக் கொண்ட பெருமையும் இப்பெரியாருக்கு உண்டு. அதிபராக இருந்து ஆத்மீக வாழ்வை யும் இணைத்துப் பணி புரிந்தமையால் இவர்களின் நாமம் சைவ உலகிலும் கல்வி உலகிலும் நிலை பெற்றுவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் இந்தோ நேசியாப் பயணத்தை மேற் கொண்டு அங்கு பல சொற்பொழிவுகளை ஆற்றி வந்தமை பத்திரிகை வாயிலாக நாமறிந்த செய்தி யாகும். மலேசியா, சிங்கப்பூர், இந்தோ நேசியா ஆகிய இடங்களில் இவர்களின் உரைகள் நடை பெற்றமையையும் அவை பயனுள்ளவையாக அமைந்தமையையும் அன்பர்கள் பலரும் பாராட் டிப் பேசியதை நான் செவியாரக் கேட்டேன்.
இந்தோநேசியாவில் இரு வருட அனுபவங் கள் என்ற பெயரில் வெளிவரும் இந்நூல் ஆசிரி யரின் தூய அனுபவங்களை எடுத்துக் காட்டுகிறது. அந்நாட்டு மக்களின் சமய நம்பிக்கை, திருக் கோயில் வழிபாட்டு முறை ஆகியவற்றேடு அந் நாட்டுக் கலாசாரத்தையும் இந்நூல் பிரதிபலிக்

XV
கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்து சமய வரலாறு என்னும் நூல் சிங்கப்பூர் சர்மா அவர்களால் எழுதப்பட்டது. பயனுள்ள நூல் என்று பலரும் அதனை ஏற்றுக்கொண்ட னர்.
உயர்திரு முத்தையா ஆசிரியரால் எழுதப் பட்ட இந்நூல் ஒரு வரலாற்றுப் பின்னணியை விளக்கி அந்நாட்டு மக்களின் இந்து மத நாக ரீகத்தையும் எடுத்துக் காட்டுகிறது. தமது அணு பவத்தை வைத்து ஆக்கிய இந்நூலுக்கு இந்தோநேசிய இந்துக்கள் அதிக வரவேற்பளிப் பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. எனவே ஆசிரியர் அவர்களின் பணி மேலும் மேலும் ஓங்கவேண்டுமென்று பிரார்த்தித்து அமைகின் றேன்.
தங்கம்மா அப்பாக்குட்டி
பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை

Page 11

இந்தோநேசியாவில் இரண்டு வருட அனுபவம்
இந்தோநேசியா என்னுஞ் சொல்லுக்கு இந் துக்கள் வாழும் தேசம் என்பது பொருள். உல கத்தில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதாவது இரண்டாவதாக இந்துக்கள் வாழும் பிரதேசம் இந்தோநேசியாவாகும். ஆகவே பெயருக்கேற்பப் பொருளும் அமைந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்று மில்லையல்லவா? சு மா த் தி ரா, யாவா, போர் ணியோ, பாலித்தீவு ஆகிய நான்கு பெருந்தீவு களும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட சிறுதீவுக் கூட்டங்களும் சேர்ந்ததே இந்தோ நேசிய இராச் சியமாகும்.
மூவாயிரந் தீவுகளிலும் மக்களே இல்லை. பாலித்தீவில் மாத்திரம் ஒன்றரைக்கோடி இந்துக் கள் வாழுகின்றர்கள். ஒரு காலத்தில் இந்தோ நேசியா முழுவதிலும் இந்துக்களே வாழ்ந்த தாகச் சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன. படை யெடுப்புக்களின் தாக்கத்தால் இன்று இந்தோ நேசிய இராச்சியம் முஸ்லீம் இராச்சியமாக விளங்குகின்றது.
யாவாதீவின் தலைநகரம் ஜாகர்த்தா என்பது. ஜாகர்த்தாவில் ஒரு பெரிய நூதனசாலை இருக் கின்றது. நூதனசாலையில் இருக்கும் புதைபொருள் ஆராய்ச்சிப் பொருட்களில் நூற்றுக்குத் தொண்

Page 12
- 2 -
ணுாறு வீதமானவை இந்து சமயச் சின்னங்களே. நூதனசாலையில் நுழைவாயிலில் சுமார் ஆறு அடி உயரமான தொந்திக்கணபதி ஒருவர் வீற்றிருக் கின் (ார். அவர் தான் நம்மையெல்லாம் வர வேற் கின் ருர், இருபத்தெட்டுக்கும் அதிகமான கருங் கல்லினுல் செதுக்கப்பட்ட விநாயகப் பெருமா னின் திருஉருவங்களை நாம் இன்றுங் காணலாம். சிவலிங்கங்கள், ந ட ரா ஜ ரி ன் திருஉருவங்கள் போன்றவைகள், கலைக்குக் கலையாகவும், தெய்வீ கத்திற்குத் தெய்வீகமாகவும் விளங்குகின்றன.
சுமாத்திராவின் தலைநகரமான மைடான் நக ரில் மாத்திரம் இருபதினுயிரத்துக்கும் அதிக மான தமிழர்கள் வசிக்கின்றனர். இந்தோ நேசியா முழுவதிலுமே இருபத்தையாயிரத்திற்குக் குறை யாத தமிழர்கள் வசிக்கின்றனர்.
பா லி த் தீ வில் வசிக்கும் ஒன்றரைக்கோடி பேரும் இந்துக்களாகவே வாழுகின் ருர்கள். இன் றும் புதைபொருளாராய்ச்சியினருடைய கையில் அகப்படும் பொருள் சிவலிங்கமாகவோ அன்றி இந்துத் தெய்வங்களின் திருஉருவங்களாகவோ தான் இருக்கும்.
ஒரு காலத்தில் உலகம் முழுவதிலுமே இந்து சமயத்தவர்கள்தான் இருந்ததுபோன்றே இந்தோ நேசியா முழுவதிலுமே இந்துக்கள் மாத்திரமே வாழ்ந்து வந்த காலம் ஒன்றிருந்தது. பாலித் தீவில் வசிக்கும் அத்தனை பேரும் இந்துக்களாக இருப்பது போன்றே இந்தோநேசியாவில் வசித்த

سے 3 سس
அத்தனை பேரும் ஒரு காலத்தில் இந்துக்களாவே இருந்திருக்கிறர்கள்.
இந்து, இஸ்லாம், பெளத்தம், கிறிஸ்தவம் ஆகிய நான்கு மதங்களும் இந்தோநேசிய அர சாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மதங்க ளாகும். இந்தோ நேசிய அரசியல் பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் அமைந்தபடியி ல்ை நான்கு சமயங்க ளருக்கும் ஒரே வித சலுகை யும் பாதுகாப்பும் உண்டு. எந்தச் சமயத்தவ ராயினும் அவர் அச்சமய ஒழுங்கு கட்டுப்பாடு களுக்கமைந்து வாழவேண்டும். எந்தச் சமயத் தையும் சாராது தனக்குச் சமயம் இல்லை என்று ஒருவர் சொல் வாராகுல் அவர் காலவரையறை யின்றி அரசாங்க விருந்தினராக இருக்க நேரிடும். மிகக் கடுமையான சிறைத் தண்டனை அநுபவிக்க நேரிடும். முதலிடம் மதத்திற்கே தரப்படுகிறது. அடுத்தபடியாகத்தான் அரசியல் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஒருவன் மதக் கொள்கைகளை அநுசரித்து அதன் படி நடப்பாஞஞல் அவன் நல்ல பிரஜை யாக வாழ முடியும் என்பது அரசினுடைய நம் பிக்கை, மதத்தின் மூலமாகத்தான் நல்ல பிரஜை களை உருவாக்க முடியும். இன்றைய மக்களுடைய வாழ்க்கை மனம் போ ன போக்கெல்லாம் போகிறதாக அமைந்துவிட்டதைப் பார்க்கிருேம்.
மதாசாரங்களை அநுட்டித்தல் மூலம்தான் மனிதன் மனிதனுக வாழ முடியும் என்பது அர

Page 13
- 4 -
சாங்கத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. மதங் கள் எல்லாம் பஞ்சசீலக் கொள்கையின் அடிப் படையிலேயே இயங்கவேண்டும். ப ஞ் ச சீ ல க் கொள்கையின்படி இயங்காத சமயம் அங்கு
இருக்க முடியாது.
முன்னுெரு காலத்தில் இந்துக்கள் மயமாக இருந்த பிரதேசத்தில் இன்று இந்துக்கள் சிறு பான்மையினராக இருக்கின் ருர்கள். மொழிவழி யாகப் பார்த்தாலும் தமிழர்கள் சிறுபான்மை யினராகவே காணப்படுகின்றனர். மற்றைய சம யங்கள் தோன்றுவதற்கு முன்பு உலகம் முழுவ தும் இந்து சமயம் பரவியிருந்தது என்பதற்குப் பல சான்றுகள் இன்றும் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் கிழக்கிந்தியத்தீவுகள் என்று அழைக்கப்பட்ட தீவுக்கூட்டங்களே இன்றைய இந்தோநேசியா வாகும்.
இந்தோ நேசியாவைத் தாயகமாகக் கொண்ட அனைவரும் இந்தோ நேசியர் என்ற பெயரால் அழைக்கப்பெறுவர். இந்தோ நேசிய மொழி அனை வருக்கும் பொதுவானதாகும். பாடசாலைகளில் இந்தோநேசிய மொழி மூலமே கல்வி கற்க முடி யும். ஆங்கிலத்திற்கும் ஒரு படநேரமுண்டு, இந்தோநேசியாவில் அ று பது க் கு மேற்பட்ட மொழிகள் உண்டு. அவை அத்தனையும் எழுத்து வழக்கற்ற மொழிகளாகும். பேச்சுவழக்கு மாத் திரம் உண்டு. அந்தந்தச் சமூகத்தினர் தமக் குள்ளே அந்த மொழியைப் பேசுவதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை.

سسه 5 سه
ஒருமுறை மேற்கு ஜேர்மனியர் ஒருவர் திருப் பராய்த்துறையைச் சேர்ந்த சுவாமி சித்பவா னந்தருடைய ஆச்சிரமத்திற்கு வந்திருந்தார். கருத்துப் பரிம ர ற் ற ம் நடைபெற்றபொழுது சுவாமிகள் சில கேள்விகள் கேட்டார்கள். ருஷ்யா உங்கள் நாட்டின் மீது படையெடுத்து பெரிய அழிவுகள் எல்லாம் செய்தார்களே, நீங்கள் அந்த அழிவினின்று எப்படி முன்னேறினிர்கள்?
எங்களிடம் இருந்த யந்திரங்கள் மிகமிகப் பழைமையானவை. அவற்றை ருஷ்யர்கள் அழித் ததன் மூலம் நமக்கு நன்மையே செய்தார்கள். பழைய இயந்திரங்கள் அழிக்கப்படா விட்டால் நாம் அவற்றையே திருத்தித் திருத்தி ஓட விட் டிருப்போம். உற்பத்தி குறைந்திருக்கும். ஆணுல், எல்லாம் புது யந்திரமாக்கப்பட்டதன் பின் உற் பத்தி பெருகியிருக்கிறது.
நாங்கள் சம்பளத்திற்காக எட்டு மணித்தி யால வேலையும் தேசத்திற்காக நான்கு மணித் தியால வேலையும் செய்வதால் எங்கள் மனித சக்தி அத்தனையையும் தேச முன்னேற்றத்திற் காக அர்ப்பணம் செய்துள்ளோம். இதுதான் எங் கள் தேச முன்னேற்றத்தின் இரகசியம் என்று அந்த மேற்கு ஜேர்மனியர் கூறினர்.
நம் நாட்டில் எட்டு மணித்தியாலமும் பொழு தைப் போக்காட்டுவார்கள். மீதி இரண்டு மணித் தியாலம் வேலைசெய்து நான்கு மணித்தியால நேரம் மேலதிகச் சம்பளம் பெறுவார்கள். தேசப்

Page 14
- б —
பற்றில் தான் அவர்களுக்கும் எங்களுக்கும் எவ் வளவு வித்தியாசம் உண்டு. இந்திய மக்களைப் பற்றிச் சுவாமிகள் கேட்ட கேள்விக்கு அந்த ஜேர்மானியர் பின்வரும் பதிலைக் கூறினர்.
நான் இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த் தேன். மக்களோடு உரையாடியும் பார்த்தேன். குஜராத்தியைக் கண்டேன்; மராட்டியரைக் கண் டேன்; வங்காளியைக் கண்டேன்; மலையாளியைக் கண்டேன்; தெலுங்கனைக் கண்டேன்; தமிழனைக் கண்டேன். இத்தனை பேரைக் கண்டும் ஒரு இந் தியனைக் காண முடியவில்லையே என்று கவலை யுடன் தெரிவித்தார்கள்.
இதே போன்றுதான் நமது இலங்கையிலும் அமைந்துவிட்டது. சிங்களவர்கள் இருக்கிருர்கள்; தமிழர்கள் இருக்கிருர்கள்; இஸ்லாமியர்கள் இருக் கிருர்கள். இவர்களுக்குள்ளே நான் இலங்கை யன்” என்று சொல்லிக் கொள்பவர்களைத்தான் காண முடியவில்லை. "இலங்கையன்’ என்று பலர் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறர்கள். ஆஞல் அவர்களிடம் கூட நான் இலங்கையன் என்ற உணர்வைக் காண முடியவில்லை. அரசியல் வாதி கள் தமது அரசியல் லாபத்திற்காக வகுப்புவாத விஷத்தைச் சிறிது கிள்ளித் தெளித்து விடு கின்ருர்கள். அது பாமர மக்கள் மத்தியிலே நன் ருகப் பதிந்து ஊறிவிடுகின்றது.

س- 7 س
மதப்பள்ளிகள்
1976 ஆம் ஆண்டு அகில உலக இந்து மகா நாடு ஒன்று மலேசியாவைச் சேர்ந்த கோலா லம்பூரில் நடைபெற்றது. அம்மகாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அடியேனுக்கும் கிடைத்தது. உலகம் முழுவதிலுமிருந்து பல பிரதிநிதிகள் வந் திருந்தனர். மகாநாட்டு முடிவில் விரும்பிய பேரா ளர்களை மலேசியா முழுவதும் அழைத்துச்சென்று சென்று பல இடங்களிலும் உபந்நியாசங்களுக் கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். எம்மோடு உடன் வந்தவர்களில் திரு. T. M. P. மகாதேவன் பாலித்தீவைச் சேர்ந்த திருமதி. ஒகா மேடானைச் சேர்ந்த பூரீஇராமுலு முதலியோர் குறிப்பிடத்
தக்கவர்கள்.
பூரீ இராமுலு அவர்கள் நாங்கள் எல்லோரும் இந்தோநேசியாவுக்கு வர வே ண் டு மெ ன் று அழைப்பு விடுத்தார்கள், 1977 ஆம் ஆண்டு அடி யேன் மறுபடியும் மலேசியா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. மலேசியாவில் நின்று பூரீ இராமுலு வுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவர் கட்டா யம் மேடானுக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தி எழுதியிருந்தார்கள். அடியேன் அதனைப் பயன் படுத்திக்கொண்டு பினங்கிலிருந்து மேடானுக்கு விமான மூலம் இருபத்தைந்து நிமிடங்களில் சென்று சேர்ந்தேன். அடியேனை வரவேற்பதற் காக மாரியம்மன் கோயில் தலைவர் திரு. சி. மாரிமுத்து, பூரீஇராமுலு முதலாக பதினைந்துபேர் வரை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்கள்.

Page 15
-س- 8 --
அந்தப் பிரயாணத்தின்போது இருபத்தெட்டு நாட்கள் மேடானில் தங்கிப் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பினை ஏற்பாடு செய் திருந்தார்கள்.
அத்தருணத்தில் கோயில்களிலும் வீடுகளி லும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந் தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு ஐந்து நிகழ்ச்சிகளிலும் பங்குபற்ற வேண்டிய சந்தர்ப் பங்கள் ஏற்பட்டன. 8ம்பது வயதுக்கு மேற் பட்டவர்கள் தமிழில் பேச, வாசிக்க, எழுதக் கூடிய வல்லமையுள்ளவர்களாக இருந்தார்கள். வாலிபர்களுக்குத் தமிழில் பேசிணுல் விளங்கக் கூடிய ஆற்றல் இருந்தது. சிறர்களுக்கு எழு தவோ பேசவோ வாசிக்கவோ தெரியாது. உனது பெயர் என்ன என்று குழந்தைகளைக் கேட்டால் அவர்கள் பெற்றருடைய முகத்தை நிமிர்ந்து பார்ப்பார்கள். பெற்ருர் இந்தோநேசியன் மொழி யில் சொன்னதன் பின்பே தமது பெயர்களைச் சொல்வார்கள்.
இருபத்தெட்டு நாட்கள் பணியாற்றியபின் மேடான் பூரீ மாரியம்மன் கோயிலில் பிரியா விடை வைபவம் ஒன்று நிகழ்ந்தது. அதிலும் அடியேன் தமிழை மறந்தபின் நாம் தமிழர் என்று சொல்லிக்கொள்ள முடியாது. தமிழை மறந்தால் எமக்கு மதமும் இல்லை என்ற கருத்தை மிகமிக வற்புறுத்திக் கூறினேன்.

ܗܝܘܤܡܗ 9 -ܚ-
கூட்டத்தில் ஒருவர் எழுந்து, கடந்த நான்கு வாரங்களாகத் தமிழின் முக்கியத்துவத்தைப்பற் றியே பேசிவருகின்றீர்கள். தமிழை மறந்து விட்ட சமூகத்தில் இதனை எப்படி நடைமுறைப் படுத்துவது என்பதைப்பற்றிச் சிறிது கூறுவீர் களா? என்று கேட்டார்.
வீட்டிலே தமிழிலேயே பேசுங்கள். தமிழன் தமிழனைக் கண்டால் தமிழிலேயே பேச வேண் டும். இந்தோநேசியக் குழந்தைகளுக்கு ஏழு வயதில்தான் பாடசாலையில் சேர்வதற்கு அனு மதி கிடைக்கிறது. மூன்று வயது முதல் ஏழு வயதுவரை குழந்தைகள் தமிழ்மொழி மூலம் மதத்தைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக் கின்றது. காலையில் இந்தோ நேசியப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாலையிலும் மாலை யில் இந்தோ நேசியப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்குக் காலையிலும் தமிழ்மொழி மூலம் மதப்பள்ளிகள் நடத்தலாம். இதனை அரசாங்கம் அனுமதிக்கிறது.
நீங்கள்தான் இப்பாடசாலைகளை ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கள். குறிப்பிட்ட இடங்களில் பாடசாலைக் கட்டி டத்தை எழுப்பிய பின் அறிவியுங்கள். உங்கள் அறிவித்தல் கிடைத்த உடன் வருகின்றேன்,
ஆறு மாதத்திற்கிடையில் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று வந்து சுமார் ஆறு மாதங்கள் தங்கினேன். தொடக்கத்தில் முக்கிய

Page 16
- 10 -
மாக ஆறு இடங்களில் மதப்பள்ளிகள் உருவா கின. அவை பத்திசா, டாராட், பசுண்டான், அவுரி, புல்லுக்கொல்லை, புலோபராயன் என்னும் ஆறு இடங்களாகும். இப்பாடசாலைகளில் கல்வி கற்பிக்கத்தக்க ஆசிரியைகளை அந்தந்தப் பாட சாலையின் சூழலிலேயே கோயில் நிர்வாகம் தெரிவு செய்தது. தமிழ் கற்கும் மாணவர்களுக்கு தமிழ்ப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
தமிழ் கற்பிக்கும் ஆசிரியைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் விதம் பற்றியும் தமிழ் அறிவை மேம்படுத்துவது பற்றியும் பயிற்சிகள் அளிக்கப் பட்டன. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுச் சரி யாக மூன்று மாதங்களில் ஒரு கலை விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். டேச்சு, பாடல், பரதநாட்டியம், கிராமிய நடனம், நாடகம், நகைச்சுவை நிகழ்ச்சிகள் சம்பந்தமான விஷய ங்களில் போட்டிகள் நடைபெற்றன. மாணவர் காட்டியதிறமைகளைக் கண்டு பெற்ருரே வியந்த னர். அக்கலைவிழாவின் பின் தமிழ் கற்கும் மாண வரின் தொகை எக்கச்சக்கமாகக் கூடியது. ஆசிரியைகளும் கற்பித்தலில் மிகமிக ஆர்வம் காட்டினர். கூட்டுவழிபாட்டுப் பாடல்களை முறை யாகக் கற்றுக் கொடுத்தனர். சிவபுராணத்தை முற்றும் ஓதல் போட்டியில் பல மாணவர்கள் வெற்றி கண்டனர். அவர்களைப்பாராட்டி பூரீ மாரியம்மன் கோயில் தலைவர் திரு. சி. மாரிமுத்து அவர்கள் பரிசுகளும் வழங்கினுர், இரண்டாவது முறை அடியேன் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு

- 1 -
முன்பாக தலைவர் சி. மாரிமுத்து அவர்கள் நாவ லப்பிட்டிக்கு நேராக வந்து இந்தோ நேசியா வுக்கு வருமாறு அழைப்புவிடுத்தார்கள்.
சி. மாரிமுத்து அவர்களும் அவரது மகள் லீலாவும், பேரன் இராஜா ஆகிய மூவரும் வந் திருந்தார்கள். கண்டி, கதிர்காமம், நுவரெலியா, கொழும்பு போன்ற இடங்களைப் பார்வையிட்டுச் சென் ருர்கள். −
மதப்பள்ளிகளி ல் காலையில் இரண்டு மணி நேரமும் மாலையில் இரண்டு மணி நேரமும் தமிழ் சொல்லிக்கொடுக்கப்படுகின்றது. ஆசிரியைகளு க்குரிய சம்பளத்தைக் கோயில் நிர்வாகமே வழங்கிவருகின்றது. தமிழ் கற்கும் பிள்ளை களுக்குத் தமிழ்நாட்டு அரசாங்கம் பாலர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு ஈருன பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பாடநூலை அனுப்பிவைத்து உதவி செய் திருக்கிறது. கல்கி, ஆனந்தவிகடன் குமுதம் போன்ற வாரவெளியீடுகளையும் இந்தியத்தூதுவர் காரியாலயம் வரவழைத்துக் கொடுத்துக்கொண்டு வருகிறது.
தமிழ் அச்சகம் ஒன்று இல்லாத இவர் களுக்குத் தமிழ்நாட்டு அரசாங்கம் செய்த இப்” பேருதவி ஒரு வரப்பிரசாதமாகும்.
அரசினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏதா வது ஒரு மதத்தைச் சார்ந்தவர்களாக இந்தோ நேசியர்கள் வாழவேண்டும். மதம் இல்லாத

Page 17
一进2一
வர்களுக்கு இங்கு வாழ்க்கையும் இல்லை. எந்த மதத்தையுஞ் சாராத நாஸ்திகர்களுக்கு இங்கு இடமில்லை. மதமற்றவர்கள் நீண்ட காலம் அரசினர் விருந்தினராகவே இருக்க நேரிடும். இத்தகையவர்கள் விடுதலை அடைய வேண்டு மாஞல் மதகுருவாக உடையவர் ஒருவர் வந்து பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பேற்றவரும் அரசாங்கமும் இவர் கோயிலுக்குச் சென்று ஒழுங் காக வழிபடுகின்ருரா என்பதை அடிக்கடி கூர்ந்து கண்காணித்து வருகின்றது.
ஏதாவது ஒரு மதத்தையும் சாராதவர்கள் அரசியல் சட்டப்படி கடுமையான தண்டனைக் குள்ளாவார்கள். எந்த ஒரு சமயத்தையுஞ் சாராதவர்கள், சமய வாழ்வில் ஈடுபடாதவர்கள் ஆகிய இத்தகையவர்கள் கொம்மியுனிசுக்கள் என்று அழைக்கப்படுவார்கள். கொம்மியுனிசுக் களின் கொடுமைகளுக்கு ஆளானவர்கள் பலர் இங்கு இருக்கின்றர்கள். ஆதலினுல் கொம்மியு னிசுக்களை இங்குள்ள அரசாங்கமும் மக்களும் உலகிலேயே மிகக் கொடியவர்கள் என்று கருது கின்றர்கள். இதனுல் நாட்டினுள்ளே கொம்மியுனி சுக்களோ அன்றி அவர்கள் கொள்கைகளோ புகுந்துவிடாதபடி அரசாங்கமும் மக்களும் மிக விழிப்போடு இருக்கின்றனர். எந்த உருவத்தில் யார் நூல் கொண்டுவந்தாலும் அதனைக் கடுமை யாகப் பரீசீலனை செய்த பின்பே அந்த நூலைக் கொண்டு செல்ல அனுமதிக்கிறர்கள்.

سست 13 -----
கொம்மியுனிசு என்று ஒருவர் நிரூபிக்கப் பட்டால் அவருக்குக் கிடைக்குந் தண்டனையும் மிகப் பாரதூரமானதாகும். இந்தோநேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்றும் கூட்டுச் சேர்ந்து கொம்மியுனிசுக்களை ஒழிப்பதில் ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளன. கொம்மியுனி சாக இருக்கும் ஒருவன் இராஜத்துரோகம் செய்தவனுகக் கருதப்படுகின்றன். கொம்மியு னிசுக்களுக்குக் கொடுக்கும் தண்டனையை ஒரு வன் ஒருமுறை பார்த்து விட்டாணுணுல், வாழ்க் கையில் எப்பொழுதுதாவது தன்னை ஒரு கொம் மியுனிசு என்று சொல்லிக்கொள்ள ஆசைப் படவே மாட்டான். ஒரு காலத்தில் இங்கு வாழ்ந்த கொம்மியுனிசுக்கள் மக்களை மிகக் கொடூரமாக நடாத்தியுள்ளார்கள். அந்தப் பயமே இப்பொழு தும் தலைமுறை தலைமுறையாக இரத்தத்தில் ஊறிப் போயுள்ளது.
தமிழின் தாக்கம்
மைதானம் என்ற தமிழ்ச்சொல் மைடான் ஆகி இப்போது மேடான் என்று அழைக்கப் படுகிறது. சுமாத்திராவின் தலைநகரம் மேடான் ஆகும். இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக் குத் தென்னிந்தியாவிலிருந்து தமிழர் கொண்டு வரப்பட்டது போலவே இந்தோநேசியாக் கரும் புத் தோட்டங்களுக்கும் மலேசியாவிலிருந்தும் தென்னிந்தியாவிலிருந்தும் தமிழர் கொண்டு வரப்பட்டனர். இவர்களில் ஒரு பகுதியினர்

Page 18
- 14 -
அரசாங்கம் நடத்தியபுகையிலைத் தோட்டங்களி லும் பிரித்தானிய கொம்பனிகள் நடத்திய புகை யிலைத் தோட்டங்களிலும் வேலைசெய்தனர். கொம்மியுனிசுக்களின் ஆட்சி ஓங்கிய காலத்தில் தோட்டப் பகுதிகளிலிருந்த தமிழர்கள் மேடான் நகரை நோக்கி வந்து குடியேறினர். கையில் பணம் உள்ளவர்கள், இந்தியாவோடு தொடர்பு ள்ளவர்கள், இந்தியாவுக்கே போய்ச் சேர்ந்து விட்டனர். மற்றையோரில் பெரும்பான்மையினர் மேடான் நகரைச் சுற்றிக் குடியேறினர்.
இப்பொழுது நகரின் மத்தியிலே விளையாட்டு மைதானமாக இருக்கும் பகுதி ஒரு காலத்திலே நீண்டு அகன்று பெரிய மைதானமாகக் காணப் பட்டது. அப்பகுதி மைதானம் என்றே அழைக் கப்பட்டது. அப்பெயரே மேடான் ஆகியது.
இங்கு இன்றும் பல தமிழ்ச் சொற்கள் உருத் திரியாமலே வழக்கில் இருந்துவருகின் றன. உருத் திரிந்த சொற்களை நோக்கும்போது இந்தியாவில் ஏற்பட்ட ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஹமில்ரன் என்ற ஒரு வெள்ளைக் காரர் ஒரு பாலம் கட்டினுர், அப்பா லத்திற்கு 'ஹமில்ரன் பிரிட்ஜ்' என்று பெயர் வைக்கப் பட்டது. கிராமிய மக்களால் அச்சொல் உச் சரிக்கப்பட முடியவில்லை. அவர்கள் உச்சரிப்பு மருவிமருவி “அம்பட்டன் பிரிட்ஜ்" ஆகி, மறுப டியும் ஆங்கிலப் பெயராக மாற்றப்பட்டபோது "பாபர் பிறிட்ஜ்" என்று பெயரைப் பெற்றது.

۔س- 15 --سے
இந்தோநேசியாவிலும் பல தமிழ்ப் பெயர்கள் உச்சரிப்பு மாறுபாட்டால் உருமாற்றம் பெற்று விட்டன.
தண்ணீர் சேர்த்து வைக்கும் பெரிய டாங்கி கள் தீர்த்தநாடி என்று அழைக்கப்படுகின்றன. இச்சொற் பிரயோகத்தைத் தமிழ்நாட்டிலோ அன்றி ஈழத்திலோ காணமுடியாது. ஆகாய விமானம் கருடா என்று அழைக்கப்படுகிறது. அரசாங்கச் சின்னமும் கருடனேயாகும். தர்ம புத்திரா, குரு இயக்கம், குருபக்தி, சூரியா, சந்திரா, நிர்வாணு, இராமா போன்ற சொற்கள் பெரிய ஸ்தாபனங்களுக்குப் பெயர்களாக அமை துள்ளன. சிலோன், இலங்கை, மதருஸ், டில்லி கொழும்பு, கல்கத்தா போன்ற பெயர்கள் வீதி களுக்கு இடப்பட்டுள்ளன.
சில தமிழ்ச் சொற்கள் பல விதத்தில் உரு மாற்றம் பெற்று முந்திய உருவத்தை எவ்விதத் திலும் அறிந்துகொள்ள முடியாதவாறு சிதைந்து விட்டன. இந்தோ நேசிய மொழிக்கு அதற்கென்று தனியாக எழுத்து இல்லை. பேச்சு வழக்கில் உள்ள மொழிக்கு உச்சரிப்பின்படி லத்தீன் எழுத்துக்களே பயன்படுத்தப்படுகின்றன. மேல் நாட்டு மொழிகளுக்குப் பொதுவாக உபயோகப் படுவது லத்தீன் எழுத்துக்களே. இன்னுந் தெளிவாக்கினுல் ஆங்கில மொழியிலுள்ள இருபத் தாறு எழுத்துக்களுமே அவையாகும். அவை களில் பிரதானமான உயிர் எழுத்துக்கள் ஐந்து,

Page 19
= 16 -
மற்றவை மெய்யெழுத்துக்கள். இந்தோநேசியன் மொழியிலும் இதே சட்டந்தான் பயன்படுத்தப் படுகின்றது. இவ்வைந்து எழுத்துக்களில் ஒன்றே அல்லது அதிகமோ இல்லாது வார்த்தை அமையாது. அமைந்தால் சப்திக்காது.
இங்கு போர்த்துக்கீசியர், ஒல்லாந்தர், ஆங் கிலேயர், யப்பானியருடைய ஆட்சிகளின் போது தமிழ்ச் சொற்களில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.
தமிழில் உயிர்மெய் எழுத்துக்கள் இருப்பது போல் லத்தீனில் உயிர்மெய் எழுத்துக்கள் இல்லை. ஆகவே எப்பொழுதும் மெய் எழுத்துடன் உயிர் எழுத்தைப் பிணைத்தாலன்றி வார்த்தை சப்திக்காது. தமிழில் இருப்பது போல் அ, இ, உ, எ, ஒ என்ற குறில் எழுத்துக்களும், ஆ, ஈ, ஊ, ஏ, ஓ போன்ற நெடில்களும் லத்தீன் எழுத் துக்களில் வெவ்வேருக இல்லை. குறிலுக்கும் நெடிலுக்கும் உயிரெழுத்துக்கள்தான் உபயோ கப்படும்.
X, Y, Z ஆகிய மூன்று எழுத்துக்களும் மலாய் மொழிக்கு அதிகம் உபயோகம் இல்லை. Y என்னும் எழுத்து மெய் எழுத்தாகக் கூறப் பட்டாலும் அது உயிர் எழுத்தாகவும் உபயோகப் படுவதுண்டு. இரண்டு அல்லது மூன்று உயிர் எழுத்துக்கள் சேர்வதால் உச்சரிப்புப் பேதப் படும் விதத்தைக் கீழே உள்ள உதாரணங்கள் கொண்டு அறியலாம்.

سے 17 سے
ဂိုဒိ} = } -n Er} n
EU
IEW | ೩ IA AQur AI ) 8 U r مع {^3ur gه إن له أن
OA ஒவா 器 泽
Au-6967T; Toean-5T 6). It 6ir; Soeara-dri 61J Ty IT Koekoe-5š 5; Boeah- 6. Tr; Biola-Guur 6oT; Boekoe-L || 4 (5; Doea-G36u T; Moeloet-3p9) t”; Baik- š; Mawloed-ob6T 3T"; Boy-Guru; Boeboer---- ữ; Sajoer-Fry, jf.
சில மெய்யெழுத்துக்கள் ஒன்று சேர்வதால் வேறுவிதமான சப்தம் உண்டாகும். அவற்றை யும் கீழ்க்காணும் உதாரணங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Th-s; , ; Ph-F; Ck-d; Kh-d; Ni-gs: Ng-sil; Sh-6); Dj-g; Ll-gir; Ch-i GT60T d g திப்பதும் உண்டு. Dh-த் (பாதம் என்னும் பதத்

Page 20
-- 18 سس
தில் "த" வின் சப்தமி) Njani-ஞாஞ: பாடல்; Gam-Pang-5 tồLJT År: 5f 6d lluð; Dja-Ng-An- og Trải ங்ான்: வேண்டாம்; Tie-Lana-ச்செலானு: கால் F*60); Djam-gir tồ; siq. 5 IT prð; Tjampoer-f Fiħ பூர்: சேர்; Keling-கெலீலிங்: சுற்றிலும்; Tabeச்சா பே: மிளகாய்; Pandiang-ப்பாஞ்ஜாங்; நிகள ud T6OT; Gadja-sregir: uLu T&OT; Koetjing-Sin, đófiĚ: பூனை, Media-மேஜா மேசை; Anding-அன்ஜிங்: 5 Tuiu; Monjet-G3LDT GG5": (5r tåg; Adharmaஅதர்ம அதர்மம்; Chabar-காபார்: செய்தி: Shanghai-ஷங்ஹாய்: பட்டினத்தின் பெயர்.
ஒரேவித மெய்யெழுத்துக்கள் இரண்டு சோடி யாகச் சேர்ந்தால் அவைகளின் சப்தம் சற்றே அழுத்தமாக உச்சரிக்கப்பட வேண்டும்.
Ama-S9 DIT; Amma-e9fLDAT; Ala-s:96) IT; Allaஅல்லா அல்லது அளா: Kana-கஞ: Kannaகன்னு அல்லது கணு
ஒரு வார்த்தைக்குப் பின்னுல் "2" போடப் பட்டால் ஒன்றிற்கு அதிகப்பட்டதெனக் குறிப் பிட அவ்வார்த்தையை இரண்டு முறை உச் சரிக்கவேண்டும். இது மலாய்ப் பாஷையில் மாத்திரம் வழங்கி வருகிறது.
Orange 2-Orange, Orange; Anak 2-AnakAnak; Lemboe 2-Lemboe, Lemboe.

است 19 سست
காலத்திற்குக் காலம் உச்சரிப்பும் எழுத் துக்களும் மிகவேகமாக மாறிக்கொண்டிருக்கின் றன என்பதற்கு உதாரணம்:
Bus ஆங்கிலேயருடைய காலத்திலே இப்படி எழுதப்பட்ட சொல் Bas இப்படி ஆகி இப்போ Bis என்று எழுதப்படுகின்றது. Dukacita-துக்கா சீத்தா கஷ்டம்; Tuhan-ரூகன்: இறைவன். இறை வன் என்ற சொல்லிலிருந்து பிறந்தது. Tuanரூஅன்: 8யா, துரை, எஜமானன்; தூயன் என்ற சொல்லிலிருந்து பிறந்தது. Dawa-டேவா தேவா, தேவி, தேவதா, தேவதை தேவன் என்ற சொல்லி லிருந்து பிறந்தது. Sila-சீலா சீலம், சீலம் என்ற சொல்லிலிருந்து பிறந்தது. Duka-துக்கா துக் கம், துக்கம் என்ற சொல்லிலிருந்து பிறந்தது. Cinta-சின்தா: காதல், சிந்தை என்ற சொல்லி லிருந்து பிறந்தது. Sukacita-சுகாசித்தா : சுகம்சந்தோஷம், சுகம் என்ற சொல்லிலிருந்து பிறந் 59ỹ. Tukam-gỹi ẻ 5 Lỗ, Karma-öj LDIr; Anugrahaஅணுக்கிரகா: அனுக்கிரகம், Tirkahaiu-தீர்க்காயு: தீர்க்காயுள்; Kapal-கபல்: கப்பல்; Tirai-திரை: அலை; Harimau கரிமாவு- அரிமாவு: புலி; Kerbauகெர்பஷ்: எருமை, கறுப்பு ஆவு: கருமை நிற Gp 60Lu 6T (560 to; Singa-dhi 5 T: fij5 b; Badaiபாடை வாடைக்காற்று; Wadai-வாடை பாடைபிரேதப் பாடை, Mutiara-முத்தியாரு முத்து Mutu-qp j5): (pi 5 ; Ratna-3) Ti:560: Q Tj5 660T lb; Manikam-DIT GOlofš 5 ibi; Waiduri-God 6 GB fl: Sơ) 6)J(3fìu tổ; Arak-s9ịp đề: ở Irg Iru tổ; Sura-G} (U}:

Page 21
س- 20 --س-
கள்ளு; Su-கு: வெள்ளை; Nira-நீரா பதநீர்; Setia-செத்தியா; சத்தியம்: Karya-கார் யா: காரி ulis; Saudara-03F6TLT (13: dr (35 T 5T6T; Cendanaசென் டாஞ: சந்தனம்; Auvoh-ஒளவோ ஒளவை; Upi-உப்பி: உப்பை (ஒளவையின் சகோதரியார்); Nani-நாணி, நன்னி: பெண்; Kala-காலா: காலம்; Purba-, fu T: , f6Juř; Bulan-y Ho6ổ7 : F fỀ S T 6ởT; பூமியை வலம்வருபவன்; Tanggal-தங்கல்: சந் திரன், 27 நட்சத்திரங்களிலும் தங்கிச் செல் Lu6u 6ổT; Bambu-Ljublj: prňufs iò; Surya-G fuu TT: சூரியன்: Pustaka-புஸ்தகா புஸ்தகம்; Candraசந்திரா சந்திரன்; Pasai-LuTGoo: LT F Gop; Parisai பரிசை பரிசை யுத்த வீரன் எதிரியின் ஆயுதம் தாக்காவண்ணம் தனக்கு முன்ஞல் பாதுகாப்பாக வைத்திருப்பது; Mandala-மண் டலா: மண்டலம்; Manga-மாங்கா: மாங்காய்; Palam-uypub: luyplb: Guru (5(5: (5(5; Sisyaéf6 uuIT : f6ổT; Siswa-f6ňo 6 r: sol 6ổr; Wartaவர்தா வர்த்தமானம்; Obat-ஒபாட்: மருந்து; Siswi-d6f)65: fs 60) u; Kutumbur-gig, Lilf: கொத்தமல்லி; Merica-மெரிக்கா: மிளகு, Kapur5 y-4, j: 5 ibu Tub; Air-situj: 565760ofj; Indrapura-இந்திர புரா: இந்திரபுரி; Tirtanadi-தீர்த்த நாடி: தண்ணீர்த்தாங்கி; Indragiri-இந்திரகிரி: இந்திரகிரி: Andai-ஆண்டை எஜமானன்; Andiஅண்டி காரோ வம்சத்தினர், குழந்தைகளை மரி யாதையாக அழைக்கும் வார்த்தை; Tolanா தோழன் தோழன்; Akang-அகாங்: அக்கா; Kaka-sit is T : 9 disr, 96&T600); Abang-syllumi:

- 2 -
அண்ணு; Ute-உதே:அத்தை; Aya-8யா: தகப் பன், பெரியார்களை மரியாதையாக அழைக்கும் வார்த்தை; Budi-புடி புத்தி, செய்நன்றி மற வாமை; Bhuda-புத்தா புத்தர்; Seri சேரி: சிரித்த முகம்; Kekel-கெக்கேல்: எக்களிப்பு: Keledaiகெலேடை:கழுதை; Mama-மாமா: தாய்; Gajaகாஜா கஜம், யானை; Terai-ரே ருய் தாமரை Swami-distriB), 5500T6), 65T; Istri-6f).5 f: LD 20, 65, பூரீமகள் ; 1stritewai-யூரீதேவி: நெல்; Suwaranaசு வர்ணு: சொர்ணம், தங்கம்; Pone-பொன்னி: பெயர், ஆறு, Tembega-தெம் பாகா: தாம்பரம், தாமிரம் என்ற லோகம்: Kolam-கோலம்: குளம், ßři (35 di S5b; Gantang- 356ổT g få: S9) 6T 6Od 5); Cupafru T: S9A SIT God Shu; Kati- 5 iš S: f6 og 50d6J; Rupiagt" LSlutr; Q5 Luir; Mega-3uD 35 T: (3LDSlb; Tanguதங்கு தாங்கு, தங்கு; Pohonkelapa பொகோன் கெலப்பா: கற்பதாரு, தென்னை; Mapgasatwaமார்ஹாசத்வா-மிருகசத்வா: மிருகப்பாதுகாப்பு; Amang-9 LDrrňu: 9ußLDT6ôt; Tambunam-5Lß j50Tuň : புஷ்பம்: Siagian-சீஆஜியன் சிறப்பு அகத்தன்; Goni- 335 IT 60ơi?: SF fir di Gg5; Siagan - fos9 356ðr : éop FT GOT அகத்தை உடையவன்: Siregar-சிரே கார்: சீரகத் g5 Tf; Colia-3F IT juu TT: G F Typ 5ðr; Pandia-Lu T GẮT டியா: பாண்டியன்; Maliala-மலியாலா:மலையாளம்; Palawi-பல்லாவி: பல்லவன்; Brahmana-5)g T di மணு: பிராமணன்: Nandai-நந்தை: நம் தாய், பெற்றதாய்: Pulukkolai-புல் லுக்கொல்லை; ஒரு ஊரின் பெயர்; Inang-இணுங்: ஈன்ற நல்லாள் : Linga-ss) is T : 65) is sits.

Page 22
مص-۔:: 22 سمیہ
காகம் இல்லாத ஊர்
சுமாத்திராவில் காகத்தைக் காணமுடியாது. காகத்தை மலாய் மொழியில் காக்கா என்றே அழைப்பர். இங்குள்ள இந்துத் தமிழர்கள் புரட் டாதி மாதத்தில் சனிக்கிழமை விரதம் அனுட் டிப்பர். எங்கள் ஊரவர்களைப்போல் காகத்திற் குச் சோறு வைப்பதில்லை. சனீஸ்வரனுடைய வாகனம் காகம். ஆனபடியினுல் காகத்திற்குச் சோறு வைத்தே உண்ணும் வழக்கம் நம்மவ ரிடத்தில் உண்டு. இங்கு காகம் இல்லாதபடினுல் அத்தகைய வழக்கம் இல்லாது போய்விட்டது.
நம்மவரில் சிலர் தினமும் உண்ணுமுன் காகத்திற்குச் சோறு வைத்து அது உண்ட பின் உண்ணும் வழக்கம் உடையவர். ஏதாவது ஒரு உயிருக்கு உணவு கொடுத்து உண்ணும் வழக்கத்தோடு உணவுப் பரிசோதனையுமாகின் றது. நஞ்சுள்ள உணவைக் காகம் இலகுவில் அறிந்துகொள்கிறது. அத்தகைய உணவை அது உண்பதில்லை.
நவக்கிரகங்களை ஒன்பது முறை சுற்றிக் கும்பிடுவார்கள். ஆணுல் சிவனையோ அம்பிகை யையோ ஒரு முறைதான் சுற்றிக் கும்பிடுவார் கள். காரணம் சனீஸ்வரனுக்கு அவ்வளவு பயம். சனிக்கிழமைகளில் ந வ க் கி ர க வழிபாட்டிற் காகப் பெருங்கூட்டம் உண்டு. முக்கியமாகச் சனீஸ்வரனுக்கு "எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற

بیس- 23 --
வருவார்கள். சிலர் நவக்கிரகத்திற்கு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி ஒன்பதுமுறை சுற்றிக் கும் பிட்டுவிட்டு மற்ற மூர்த்திகளுக்கு வணக்கம் செலுத்தாமலே சென்றுவிடுவர். சனிக்கிழமை களில் கூடும் கூட்டம் வெள்ளிக்கிழமைகளில் கூடுங் கூட்டத்தைவிட மிக அதிகமாயிருக்கும்.
தமிழ் நாட்டிலிருந்து வரும் சோதிடர்கள் சனி தோஷம், செவ்வாய் தோஷம் என்று கூறி அத்தோஷ நிவிர்த்திக்காகச் சாந்தியும் செய் வார்கள். சோதிடம் சொன்னதற்குக் கூலி கொடுத்ததை வாங்குவார்கள். சாந்தி செய் வதற்கு இவ்வளவு கொடுத்தாக வேண்டும் என்று நிறையக் கறந்துவிடுவார்கள்.
சாந்தி செய்யப் பணவசதியில்லாதவர்கள் கடைசியாக அடியேனிடம் வருவார்கள். அவர் களுக்கு “ஓம் நமசிவாய மந்திரத்தைக் காலை மாலை நூற்றெட்டு முறையாவது செபம் செய் யுங்கள்" என்று வழிப்படுத்தி விடுவேன். அவர் கள் குடும்பமாகவே மந்திர செபம் செய்து கிரக தோஷம் நீங்கப் பெற்றிருக்கிறர்கள். இது எப்படி என்று சிலர் கேட்பார்கள். சிவபெரு மான் ஒருவரே எல்லாருக்கும் எஜமானன்; நவக்கிரகங்கள் அவருடைய வேலைக்காரர்கள். வேலைக்காரனைக் கும்பிடுவதிலும் பார்க்க எஜமா னனைக் கும்பிட்டால் பலன் கூடுதலாக உண் டல்லவா?

Page 23
ܚ 24 --
மாசறு திங்கள் கங்கை அணிந்தென்
உளமே புகுந்த அதில் இாயிறு திங்கள் செவ் Hதன் வியாழன் வெள்ளி
சனிபாம்பிரண்டு (PLGT *று நல்ல நல்ல அை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே என்ற கோளறு பதிகத்தைப் பாடிப் பரவுங்கள் என்று சொன்னுல் *தன் பிறகு விளங்கிக் கொண்டு சிவபெருமானையே கண்ணிர் வார வேண்டிக் கிரகதோஷம் நீங்கப் பெறுபவர்கள் உண்டு.
கிரக தோஷத்திலும் பார்க்கச் சோதிடர் சொல்லும் கிரகதோஷம் மக்களைப் பயத்தில் *சித்தி விடுவதுமுண்டு.
இந்தோநேசியன் மொ ழி யில் நரிக்கு வார்த்தை 2) båv• Strp svarið அங்கு நரியில்ஜல. *தனுல் அதைக் குறிக்கும் சொல்லும் இல்லாது போயிற்று. நரியும் |5rպմ 6ջ sծ ց என்பது பலருடைய கருத்து. இரு பேராசிரியரிடம் இது பற்றி வினவியபோது இங்கு நரி என்றெரு மிரு கம் இல்ஜல, அதனுல் அப்பொருளுக்குரிய சொல் அலும் இல்லை; என்றர். படத்தில் நரியைப் பார்த் தவர்கள் இதுவும் 9 (5 FIT 5 sirti என்றே கருத்தில் கொண்டார்கள்.
<勃仄T山。并引 மாணவர்களின், ஆராய்ச்சி ஆர்வத் தைத் தூண்டுவதற்காகவே சில சொற்களைக் (35Քծlւն பிட்டேன். இந்தோநேசிய மொழியைப் !--Ibprნoor

- 25 m
மான ஆய்வு செய்தால், இந்துக்களைப் பற்றி யும், தமிழ் மொழியைப் பற்றியும் இன்னும் எத் தனையோ தகவல்கள் கிடைக்கக்கூடும். இன்றைய இந்தோநேசியன் மொழியில் நூற்றுக்கு 65 வீத மான சொற்கள் தமிழ்ச் சொற்களேதான். அவை மருவி வேறு உருவம் பெற்றுக்கொண்டு வருகின் றன.
மதுரையில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் யப்பானிய மொழி தமிழிலிருந்து தோன்றிய மொழி என்பதைத் தகுந்த ஆதாரங் களுடன் விளக்கங்கொடுத்து நிலைநிறுத்தினர். தமிழ் மொழி ஆராய்ச்சியில் ஈடுபாடுடையவர் கள் இந்தோநேசியன் மொழியை நன்கு கற்று ஆ ர ர ப் க் சி செய்வார்களேயானுல் அந்த ஆராய்ச்சி மிகப் பயனுள்ளதாக அமையும். இந்த ஆராய்ச்சி தமிழ் மொழிக்குச் செய்யுந் தொண் டாகவும் அமையும்.
urrfarrLIT
இந்தோநேசியாவில் அரசாங்கத்தால் ஒப் புக்கொள்ளப்பட்ட சமயங்கள் நான்கு. அவை இஸ்லாம், இந்து, பெளத்தம், கிறிஸ்துவம் என் பன. இந்த நான்கு சமயங்களையும் பேதமின் றிப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. சமயங்களைப் பாதுகாப் பதற்காக அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட சபை "பாரிசா டா" எனப்படும். இச்சபை இந்தோ நேசியா முழுவதிலும் உண்டு. அதாவது இந்

Page 24
ளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இருபத்தேழு மாகாணங்களிலும் பாரிசா டாக்கள் உண்டு.
ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு மதத் திற்கும் தனித்தனியான பிரிவுகள் உண்டு. இந் துக்கள் தமது இந்து சமயப் பாதுகாப்புச் சபை யைப் 'பாரிசாடா' என்று அழைப்பதுபோல இஸ்லாமியர் "மொபாலின்' என்றும், பெளத்தர் "வாலு பி" என்றும், கிறிஸ்தவர் "டெஹேயின்" என்றும் அழைப்பர். மாகாணுதிபதிக்குக் கீழே அடுத்த தலேவராக இருப்பவர் இந்தச் சமயத் தலேவர்களாவர்.
அரசியல் நிர்வாகத்துக்குக் கீழே மத நிர் வாகம் அமைந்திருந்தாலும் மதத்திற்கே முத லிடமும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது. மதத்திற்குக் கீழே தான் அரசியலுக்கு முக்கியத் துவம் கொடுக்கப்படுகிறது. அதாவது மதம் மேலேயும் அதன் பாதுகாப்பில் அரசியல் நிர் வாகமும் அமைந்துள்ளது.
நான்கு மதத் தலைவர்களும் சேர்ந்து பேசும் வாய்ப்புக்கள் உண்டு. இம்மதத் தலேவர்களே அழைத்து அரசாங்கம் தமது பிரசைகளே நல் வழிப்படுத்தும் முறைபற்றி ஆலோசனை களேக் கேட்கிறது. அவர்கள் சமர்ப்பிக்கும் நல்லாலோ சனேகளே அரசாங்கம் அமுல்நடத்துகிறது. எந் தச் சமயத்தவனுயினும் அவன் தன் சமயத்தில் பற்றுள்ளவனுகவும், ச ம ய அனுட்டானங்களே
 

H 27 -
அனுட்டிப்பவனுகவும் இருக்கவேண்டும். சமய நம்பிக்கை ஒன்றினுல்தான் மனிதன் மனிதனுக வாழமுடியும் என்பதை அரசாங்கம் நூற்றுக்கு நூறு ஒப்புக்கொள்ளுகின்றது.
நான்கு சமயத் தலேவர்களும் சேர்ந்து பேசுவதை "சிறுகுணன் பிராஹம" என்ற பெய ரால் அழைப்பர். பாரிசா டாவின் முக்கிய வேலே அரசாங்க உதவியுடன் இந்து சமயத்திற்காகப் பாடுபடுதல்.
அ. கோயில் இல்லாத இடங்களில் கோயில் கட்
டிக்கொடுத்தல் ஆ. இந்து மதப் பிரச்சாரம் செய்தல். இ. சமய நூல்களே வெளியீடு செய்தல், ஈ. சமய சஞ்சிகைகளே நடத்துதல். உ. சமய நூல்களே இனுமாகக் கொடுத்தல். ஊ. ஏழைகளுக்கு உதவி செய்தல், எ. பாடசாலேகள் நடத்துதல்.
வருடந்தோறும் பத்தாயிரம் பேருக்குக் குறை யாமல் பூர்வகுடிகள் இந்துக்களாகச் சேர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
கோயில்களேப் பாரிசாடா ஏற்றுக்கொண்ட பின் கரகம், காவடி ஆடுதல், செடில் குத்தி உடல் வருத்துதல், முள்ளுமிதியடியில் நடத்தல் போன்ற செயல்களே நிறுத்தி பஜனை, திருமுறை ஒதுதல், நாமஜெபம், தியானம் போன்றவற் றுக்குக் கோயில்களில் முக்கியத்துவம் கொடுத்து

Page 25
வருகின்றனர். இதனல் ஆலய வழிபாட்டின் போது ஒரு அமைதியைக் காணமுடிகின்றது. மக்களும் மன அமைதிபெற்று மன நிறைவோடு வீடு திரும்புகின்றனர். வீடுகளிலும் ஜெபம், தியானம் என்பனவற்றில் ஈடுபடத் தூண்டப்படு கின்றனர். மேளம் போன்ற வாத்தியங்கள் இங்கு இல்லாமையினுல் பூஜையின்போது நாமபஜனை யும், பக்திப் பாடல் ஓதுதலும் நடைபெறுகின் றன. வழிபாட்டுக்கு வருபவர்கள் அத்தனை பேரும் இதில் கலந்துகொள்ளுகின்றனர். பூஜ கரும் இதில் கலந்துகொள்ளுகின்ருர். அவரே வழிகாட்டியாகவும் விளங்குகின்றர். இதனுல் வழிபடுவோரின் உள்ளத்தில் ஒரு நிறைவைக் காணமுடிகிறது. தாமும் வழிபாட்டில் பூரண மாகக் கலந்துகொண்டதாக மனப்பூரிப்பு எய்து கின்றனர். இதனுல் இறைவனுேடு மனந்திறந்து பேசும் ஒரு வாய்ப்பினைப் பெறுகின்றனர்.
கோயில்களில் வருட ர நீ த உற்சவங்கள் நடத்த விரும்புவோர் முன்கூட்டியே தாம் உற் சவம் நடத்தும் முறைபற்றிப் பாரிசாடாவுக்கு எழுத்துமூலம் அறிவித்து அவர்களின் உத்தர வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ur j சாடாத் தலைவர் உற்சவம் நடத்துபவர்களை அழைத்து அமைதியான முறையில் எப்படி வழி பாடு நடத்தலாம் என்பதுபற்றி ஆலோசனை களைக் கூறுவார். அவர்கள் சொல்லும் ஆலோ சனைகளை ஏற்றுக்கொண்டால்தான் அவர்களுக்கு உற்சவம் நடத்தி உத்தரவு கிடைக்கும்.

ܚ 29 ܕܗܘܝܘܙܚ
வடசுமாத்திராவில் உள்ள இந்து ஆலயங்கள்
ه1
2.
3.
ه4
5.
б.
5.
16.
7.
18.
பூரீ மாரியம்மன் கோயில் -
ஜாலான் ரெகு உமார், இல, 18 காளி அம்மன் கோயில் -
தருமா பெலாகங் வீதி தண்டாயுதபாணி கோயில்-கெஜாக்சன் வீதி சிங்கமாகாளி கோயில் - கபுன்சாயூர் மாரியம்மன் கோயில் -- பூலோபராயன்; பூரு ஆகங்றக்ச பூவானு -
பொலோனியா வீதி, இல. 46.
(பாளிக் கோயில்) மாரியம்மன் கோயில் - டாராட் வீதி மாரியம்மன் கோயில் - கம்பங்டுரியான் மாரியம்மன் கோயில் - டேசா லா லாங்
. மாரியம்மன் கோயில் - மோகொன் சீடி
மாரியம்மன் கோயில் - தேராதை மாரியம்மன் கோயில் - பசுண்டான் முனியாண்டி கோயில் -
மூவாருதாகுஸ், பாஸாக் பாஹி. மாரியம்மன் கோயில் -
பெர்கபூனன், பெக்காலா
மாரியம்மன் கோயில் - பிஞ்சை தண்டாயுதபாணி கோயில் - லுபுக்பாக்கமி மாரியம்மன் கோயில் - சுங்கால்
மாரியம்மன் கோயில் -
பெர்கபூனன் சிம்பாகுலி

Page 26
9.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
மாரியம்மன் கோயில் -
பெர் கபூணுன் செந்திஸ் மாரியம்மன் கோயில் -
பெர்கபூஞன் பாத்தாங் பூரீ மாரியம்மன் கோயில் - செய்சேமாயாங் பத்திரகாளி கோயில் - கம்புங்பாசிர் மாரியம்மன் கோயில் - பெர்கபூனன்,
தஞ்சுங்ஜாதி, பிஞ்சை மாரியம்மன் கோயில் -
பெமாதங் சியன்தார் மாரியம்மன் கோயில் -
பெர்கபூனன், கெறிகுர்றிப்புன். மாரியம்மன் கோயில் -
பெர்கபூனன், படாங்செர்மின், மாரியம்மன் கோயில் ட
பெர்கபூனன், பூலூசீன. கோயில் பெமேனு - கபுபபாதென் லங்கட்
பூருசேலாயங் -
கபுபாதென் லங்கட், சிலா யங், மாரியம்மன் கோயில் -
செதாசியுன், திபெங்திங்கி.
பெரும்பான்மையான கோயில்கள் மாரியம்
மன் கோயில்களே. தென்னிந்தியக் கிராமங் களில் இருந்து வந்த இவர்கள் வரும்போது மாரி யம்மன் வழிபாட்டையுங் கொண்டுவந்துள்ளார் கள். இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டங் களிலும் இக்காட்சியினைக் காணலாம். பாடசாலை

حس۔ 31 سس
யில்லாத தேயிலைத் தோட்டங்களைக் காணலாம். ஆணுல் மாரியம்மன் கோயிலில்லாத தேயிலைத் தோட்டங்களைக் காண்பது அரிது. மழை வேண் டிஞலும் மாரியம்மாதான்; நோய் நீக்கம் செய்ய வேண்டுமானுலும் அவளேதான். அம்மை நோய் ஒரு வீட்டில் வந்துவிட்டால் வீட்டுக்கு மாரியம்மா வந்திருக்கிருள் என்ற பரிபாஷையிலேயே பேசு வதைப் பார்க்கின்ருேம். மாரியம்மா தேகமீ எல்லாம் பூத்திருக்கிருள்; முத்துப் போட்டிருக் கிருள் என்ற பரிபாஷையோடு மாரியாத்தா ளுக்கு நேர்த்திக்கடனும் செய்வர். மாரியாத்தா ளுக்கு அபிஷேகம் செய்த இளநீரை நோயா ளிக்குக் குடிக்கக் கொடுப்பர். நோய் வந்த வீட் டிலே வேப்பம் இலையைக் கொத்துக்கொத்தா கக் கட்டித் தொங்கவிடுவர். இதனைக் கண்ணுற்ற வர்கள் அந்த வீட்டில் நோய் வந்துள்ளது என் பதை யூகித்துக்கொள்ளுவர். நோய் மாறும் வரை அந்த வீட்டிலே உள்ளவர்கள் புலால் உண்ணமாட்டார்கள்; எண்ணெய்ச் சட்டி வைத் துப் பொரியல் செய்யமாட்டார்கள். இப்படி அவர்களுடைய வாழ்க்கையில் மாரியம்மன் வழி பாடு இரண்டறக் கலந்துள்ளது.
இந்துக் கோயில்களாக மாற்றப்பட்ட சீனக் கோயில்கள்
1. புடி சக்தி (புடி - புத்தி) - வீதிவாகிடின், இல. 28.
2. பிரக்மனு - வீதி அறயா, இல. 65.

Page 27
ܚܫܚ 32 ܚܘܣ
3. பஞ்சசக்தி - வீதி செஞகின் 4. திரிநாக சக்தி - நேகாரு வீதி, இல, 73. 5. பிராதானு - தென்தேறம் வீதி, இல, 175, 6. பஞ்சதன் மாத்திரா - இந்துஸ்திரி வீதி,
கங்பெம்பாகுணன், இல. 3. 7. மெக்கார்சக்தி - கருடா வீதி, இல, 28, 8. முலியா ஆகுங் - கெறேதா ஆபி வீதி,
கங்தாகிலியா, இல, 45. 9. அர்ஜ"னு - சுகாருமை விதி,
கொம்பிளைக்கே பாகாறன், 10. சேருயு - இன்ருஸ்திரி வீதி, இல. 6. 11. விஷ்ணு - ருகாயு வீதி, கங்புன்து, இல. 4. 12. றகாயு - றகாயு வீதி, கங்பூது, இல. 4. 13 வானுரு - சீபோலங்கித் விதி, இல, p 14. நாரதா - பெர்பன் விதி 15. சின் தாதாமை - பிஞ்சை விதி, K. M. ஐ.
Lu6)6moni 4, சிந்தாதாமை. 16. மர்தாவா - சீலங்சாலிங் வீதி, இல, 19. 17. இந்தன் - பஜாக், இக்கன ഖ്ള്യു. 18. தஞ்சுங்புரா - கம்புங், ஜும்பா வீதி. 19. கெசூமா - கோ றஸ் வீதி, இல. 58. 20. பிராசாதா - ருகாயு, கங்குசன் வீதி,
இல, 7 B, 21. தர்மிகா - சுக்காருமை வீதி, கொம்பிலெக்கேர்பாகாரன், 22. சங்கர் சிவா - பஜார் வீதி, இல, 4,
சுங்கல்,

سسس. = 33 -س-
மேலே கூறிய இருபத்திரண்டு ஆலயங்களும் பெளத்த ஆலயங்களாக இருந்தவை. சீனர்கள் நடத்திய ஆலயங்கள் பல. பெளத்த சீனர்கள் இந்துக்களாகிக்கொண்டு வருகின்றனர். அவர் கள் இந்துக்களாக ஆனதோடமையாது தாம் வழிபாடு செய்துவந்த பெளத்த ஆலயங்களை யும் இந்து ஆலயங்களாக மாற்றிக்கொண்டனர். இந்து ஆலயங்களுக்கு இந்துப் பெயர்களையே சூட்டிக்கொண்டனர். ஏன் கோயிலையும் மாற்றி நீங்களும் மாறிக்கொண்டீர்கள் என்று கேட்ட போது, நாங்கள் வணங்கிய புத்தபிரான் இந்து சமயத்தவர்தானே, ஆதலால் நாங்கள் இந்து சமயத்தவராக மாறியதில் என்ன பிழை? என்று கேட்டார்கள். புத்தபிரான் இந்துவாகப் பிறந்து, இந்துவாக வாழ்ந்து, இந்துவாகவே இறந்திருக்கிருர். அவர் ஒரு புதிய சமயத்தை உண்டாக்கியவரும் இல்லை. இந்து சமயத்தவர் கைக்கொண்ட சில மூடப் பழக்கவழக்கங்களைச் சீர்திருத்தம் செய்தாரே தவிர புதிதாக எதை யும் கூறவில்லை. புத்த பெருமான் கூறிய பஞ்ச சீலம், அஹிம்சை, சத்தியம் என்பனவெல்லாம் முன்பே இந்து சமயத்தில் உள்ளவைதான். ஆகவே பெளத் தத்திற்கும் இந்து சமயத்திற்கும் கொள்கை வேறுபாடு எதுவும் இல்லை என்ப தைப் பூரணமாக அவர்கள் நம்புகின்றர்கள் .
திருமண விழா
எங்கள் ஊரிலே ஒரு பெண்ணுக்கு மாப் பிள்ளை தேடிப் பெண்ணின் தந்தைக்கு நான்கு

Page 28
-س- 34 --سسه
சோடி செருப்புத் தேய்ந்ததாகக் கூறுவார்கள். இங்கே பெண்ணைப் பெற்றவர்கள் பெண் வளர வளரக் கவலையினுல் தேய்ந்துபோவதைத்தான் காண்கின்ருேம். எங்கள் சமூகத்தில் காசுக் காகத் தான் கல்யாணம் நடக்கிறது. கல்யாணத் துக்காகக் காசு கொடுப்பதில்லை. இந்தியாவில் வரதட்சணை என்ற பெயரில் வழங்கப்படுவது இங்கு சீதனம் என்ற பெயரால் குறிக்கப்படு கிறது. ஸ்திரீதனம்; பூரீதனம் ஆகி அது சீதனம் ஆகிவிட்டது. பெண்ணின் அழகிற்கோ, குணத் திற்கோ, குலத்திற்கோ, கல்விக்கோ இருந்த முக்கியத்துவம் எல்லாம் மறைந்து பணத்திற்கே தான் சமூகம் முதலிடங் கொடுத்துள்ளது.
பணம் கூடக்கூடக் கருமை நிறமுடைய பெண் செம்மை நிறமுடையவளாகிருள். குண மில்லாதவள் குணவ தியாகிவிடுகிருள். இதனுல் கல்வி, ஒழுக்கம், குணத்தில் சிறந்த பெண்கள் திருமணமாகாது வீட்டுக்குப் பாரமாயிருப்பதைக் கண்கூடாகக் காண்கின் ருேம்.
வரனுக்குக் கொடுக்கும் தட்சணை வரதட்சணை என்று கூறப்படும். அன்னதானம், கோதானம், பூதானம் போன்ற எந்தத் தானத்தைக் கொடுக் கும்போதும் தானம் கொடுப்பவர் தானத்தைப் பெற்றுக்கொள்பவருக்குத் தட்சணை கொடுப்பது வழக்கம். அதுபோல, கன்னியைத் தானஞ் செய்பவர் கன்னிகா தானத்தைப் பெற்றுக்கொள் பவருக்குத் தட்சணை கொடுப்பது வழக்கம். தட்சணைக்கு வரையறை இல்லை. 8ந்து சதம்

- 35 -
வைத்தாலும், தட்சணை தான்; ஐயாயிரம் ரூபா வைத்தாலும் தட்சணை தான். ஆணுல் மக்கள் மனம்போல வரதட்சணை வளர்ந்து அதுவே முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
இந்தோநேசியத் தமிழர்களிடையே மாப் பிள்ளை வீட்டார் தான் பெண் கேட்டுச் செல்வது வழக்கம். சிவபெருமான், உமாதேவியார் திரு மணத்தின்போது சிவபெருமான் சப்தரிஷிகளை இமயமலை அரசனிடம் பெண் கேட்ட வரலாறு கந்தபுராணத்தில் காணப்படுகின்றது. அதே வழக்கமே இந்தோ நேசியத் தமிழரிடம் இன்றும் காணப்படுகின்றது. பெண் வீட்டார் மாப்பிள்ளை கேட்டுக் செல்லுதல் பெண்ணுக்கு இழுக்கு. மாப் பிள்ளை வீட்டார் பெண் கேட்டுச் செல்வதால் சீதனப் பிரச்சினை என்பது அங்கு இல்லை.
இருபகுதியாரும் திருமணத்திற்குச் சம் மதிக்குமிடத்து ஒரு நல்ல நாளில் நிச்சயதார்த் தம் நடைபெறும். அதில் பல பெரியார்கள் கலந்துகொள்வர். நிச்சயதார்த்தத்திலன்று பரிச விழா எப்போ என்பதுபற்றி நிச்சயிக்கப்படும்.
பரிச விழா
இவ்விழா பெண்ணின் இல்லத்திலோ அன் றிப் பெண்வீட்டார் குறிக்கும் ஒரு கோயிலிலோ அன்றிப் பொது இடம் ஒன்றிலோதான் நடை. பெறும். இவ்விழாவில் மாப்பிள்ளை கலநீகு

Page 29
سے 36 سے
கொள்வதில்லை. மாப்பிள்ளை வீட்டாரும் நெருங் கிய உறவினரும் கலந்துகொள்வர். நூறு இரு நூறுபேர் வரையிலும் சில பரிச விழாவில் கலந்துகொள்வதுண்டு. இதில் விருந்து கொடுக் கும் செலவு முழுவதும் பெண்வீட்டாருடைய தாகும். மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு வரும்போது ஏழு அல்லது ஒன்பது தாமி பாளங்களில் மங்கலப் பொருட்களுடன் பெண் ணுக்கு வேண்டிய உடுப்பு, நகை முதலியனவும் தின்பண்டங்களும் கொண்டுவருவர். பெண் வீட் டார் அவர்களை நல்லமுறையில் வரவேற்றுக் கொண்டுவந்த பரிசப் பொருட்களைப் பெற்றுக் கொள்வர். மணமகள் சபைக்கு வந்து மண மகன் வீட்டாரிடம் அவர்கள் கொண்டுவந்த உடு பிடவையையும் நகையையும் பெற்றுக்கொண்டு செல்வார். பின் அதே பிடவையையும் உடுத்தி, நகையையும் அணிந்துகொண்டு வந்து பெரி யோர்களுக்கு வணக்கம் செலுத்தி ஆசி பெறு வார். பரிசு என்ற சொல்லிலிருந்து வந்தது தான் பரிசமீ என்ற சொல்லுமாகும். பரிச விழாவில் முதலாவது மணமகனின் தந்தையிட மிருந்தும், இரண்டாவது மணமகளின் தந்தை யிடமிருந்தும் வாக்குறுதி பெற்றுக்கொள்வது மரபு.
மணமகனின் தந்தையின் உறுதிமொழி
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய; ஓம் நமசிவாய. இங்கு வருகைதந்துள்ள சபையோர்களின் முன்னிலையில் இந்தப் பரிச விழா நடைபெறும்,

இந்த நன்னுளிலே அடியேன் வாக்குறுதி அளிப் பது யாதெனில் திரு. மணமகளின் தந்தை பெயர் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் ஏற்படப்போகும் திருமண உறவானது எங்கள் இரண்டு குடும்பத்தினருக்கு மிடையில் என்றென்றும் நிலையான உறவாக இருந்துவரும் என்பதுடன் எங்கள் குடும்பங் களுக்கிடையில் அபிப்பிராய பேதங்கள் ஏற்படா மலும் மன ஸ்தாபங்கட்கு இடம் கொடாமலும் ஒற்றுமையுடன் நாங்கள் வாழ்ந்து வருவோம் என்பதனை இத்தால் உறுதிப்படுத்துகின்றேன். இதற்கு இறைவன் திருவருள் பாலிப்பா ராக
திரு. மணமகளின் தந்தையின் பெயர் அவர் களுடைய புதல்வி திருவளர் செல்வி மணமகளின் பெயர் 8 எங்கள் குடும்ப அங்கத்தினருள் ஒருவ ராக வரப்போவதை முன்னிட்டு அச்செல்விக்கு எங்கள் நல்லாசியைச் சமர்ப்பித்து எங்கள் நல் லன்பும் நல்லாதரவும் அச்செல்விக்கு இருந்து வரும் என்பதனைச் சபையோர்கள் முன் தெரி விக்கும் அறிகுறியாக இந்தப் பரிசப் பொருட்களை எங்கள் குடும்பத்தின் சார்பில் முழுமனதுடனும் உள்ளன்புடனும் மகிழ்ச்சியுடனும் சமர்ப்பிக்கின் ருேம். இதனை ஏற்றுக்கொள்ள வேண்டுகின்ருேமி,
மணமகளின் தந்தையின் உறுதிமொழி
ஓம் நமசிவாய; ஓம் நமசிவாய; ஓம் நமசிவாய.
திரு. மணமகனின் தந்தையின் பெயர் அவர் கள் உள்ளன்புடன் எமது செல்விக்கு வழங்கும் பரிசப் பொருட்களை எங்கள் குடும்பச் சார்பில்

Page 30
مسس۔ 38 سے
முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதுடன் இன்று முதல் எங்கள் இரண்டு குடும்பங்களுக்குமிடை யில் ஏற்படப்போகும் இந்தத் திருமண உற வானது பல்லாண்டு காலம் எவ்வித இடையூறு மின்றித் தழைத்தோங்குவதற்கு அன்னை பரா சக்தி அருள்புரிய வேண்டும் என்ற பிரார்த்தனை யுடன் இந்தப் பரிசப் பொருட்களை மனமகிழ்ச்சி யுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.
மாப்பிள்ளை வீட்டார் தாம் கொண்டுவந்த பரி சப் பொருட்களைப் பெண்வீட்டாரிடம் கொடுத்த பின் மாப்பிள்ளை வீட்டார் கொண்டுவந்த உடை யையும் நகைகளையும் மணமகள் அணிந்து கொண்டு சபையோரின் முன்னிலையில் வந்து வணக்கம் செலுத்து வார். மணமகள் உடை உடுத் திக்கொண்டு வரும் சுமார் அரைமணித்தியால இடைவெளிக்குள் அருளுபதேசங்களும் பிரார்த் தனையும் இடம்பெறும். மணமகள் பெரியோர் களின் ஆசியைப் பெற்றுக்கொண்ட பின் வந் திருந்தோர் அனைவருக்கும் விருந்துபசாரம் நடைபெறும்.
புரோகிதர்கள்
சுமாத்திராவில் இந் து ஸ்தாபனங்களுக் கெல்லாம் தலைமையானதாகவும் வழிகாட்டியாக வும் விளங்குவது மேடான் பூரீ மாரியம்மன் கோயிலாகும். சமய சமூக சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கெல்லாம் பூரீ மாரியம்மன் கோயில் வழிகாட்டலையே - எப்பொழுதும் பொதுமக்கள்

سنة 39 مسند
எதிர்பார்த்திருப்பர். நன்கு படித்தவர்களாகவும், கடவுள் பக்தி உள்ளவர்களாகவும், கடவுள் நம் பிக்கை உள்ளவர்களாகவும், ஒழுக்க சீலர்களா கவும் உள்ளோரைத் தெரிந்தெடுத்து பூரீ மாரி யம்மன் கோயில் நிர்வாகம் புரோகிதராக நிய மித்துள்ளது. இவர்கள் எவ்வித சாதிப் பாகு பாடுமின்றித் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர் கள் தான் திருமணக் கிரியைகளையும் அந்திமக் கிரியை களையும் செய்துகொள்ளுந் தகுதியுடைய வர். புரோகிதர்கள் எல்லோரும் கோயிலில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் தவருது கலந்துகொள்ள வேண்டும். வீட்டிலும் கிரமமான கடவுள் வழிபாடு செய்யவேண்டும். எல்லா வித மான பொதுப்பணிகளிலும் ஈடுபாடுடையவராக இருக்கவேண்டும். மக்கள் மகிழ்வுடன் கொடுக் கும் தட்சணையைத் திருப்தியான மனத்துடன் புரோகிதர் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிரப் பணத்திற்காக எவ்விதக் கிரியைகளும் செய்ய லாகாது. பொதுமக்களின் முறைப்பாட்டின் பேரில் புரோகிதர் தகுதியற்ற வழியில் நடந்து கொண்டார் என்பது நிரூபிக்கப்படுமிடத் து கோயில் நிர்வாகம் பகிரங்கமாகக் குறிப்பிட்ட புரோகிதரின் புரோகிதத் தொழிலை நிறுத்தி வைக்கும். சட்டபூர்வமாக அவரது புரோகிதத் தொழில் செல்லுபடியாகா தாக்கப்பட்டுவிடும்.
சீதனம்
மணமகன் வீட்டார் பெண் கேட்டுச் செல்வ தாலும், பெண்ணுக்கு வேண்டிய அணிகலன்களை

Page 31
ܚ- 40 ܗܡܗ
மாப்பிள்ளையே கொடுக்கும் வழக்கம் இருப்ப தாலும் சீதனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. திருமணத்தின்போது வீட்டில் அன்று நடை பெறும் விருந்துச் செலவு முழுவதையும் மாப் பிள்ளை வீ ட் டா ரே பொறுத்துக்கொள்வர். சீதனம் வாங்கித் திருமணஞ் செய்வது ஒரு ஆண்மகனுக்கு இழுக்கு என்று இங்குள்ளார் கருதுகின்றனர். ஒரு பெண்ணைப் பராமரிக்க இயலாதவன் ஏ ன் திருமணஞ் செய்துகொள்ள வேண்டும்? என்று இளக்காரமாய்ப் பேசுவர். இதுபோன்றே ஒரு ஆண்மகன் மாமியார் வீட் டில் வசிப்பதும் ஆண்மைத்தனம் இல்லாத தாகக் கருதப்படுகின்றது. பெண்ணினுடைய கழுத்தில் மூன்று முடிச்சு விழுந்துவிட்டால் அன்று தொடக்கம் அப்பெண் கணவனுடைய வீட்டிலேயே வாழவேண்டியவளாவாள். ટ6િ) பெண்கள் ஒருசில வீடுகளில் மாமியார், நாத் தஞர் கொடுமைகளுக்கு ஆளாவதுண்டு. இது மிக அருமையாக நிகழ்வதொன்றகும். தற்காலத் தில் இது எவ்வளவோ குறைந்துவந்துள்ளது.
திருமணப் பதிவு அதாவது இந்துக்களுக் குரிய பதிவு விடயத்தை அரசாங்கம் பூரீ மாரி யம்மன் தேவஸ்தானத்திடமே ஒப்படைத்துள் ளது. மணமக்களுக்குள் பிரிவினை ஏற்படுமிடத்து அதனையும் தேவஸ்தானமே சமரசப்படுத்திவைக் கின்றது. தேவஸ்தானத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மேலிடத்திற்கு மனுச்செய்ய லாம். மனுச்செய்த கொப்பியையும் இணைத்து

- 41 -
மறுபடியும் புனராலோசனைக்குத் தேவஸ்தானத் திற்கே அரசாங்க மீ திருப்பி அனுப்பிவைக்கும். தேவஸ்தானம் மறுபடியும் இரு வ  ைர யு மீ அழைத்து சமரசத்திற்கான திட்டங்களைக் கூறும். அதனையும் கேட்காத இடத்து தேவஸ் தானம் தமது பூரணமான விசாரணையுடன் தமது தீர்ப்பையும் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கும். தேவஸ்தானத்தின் தீர்ப்பு எதுவோ அதனை ஒட்டியே அரசாங்கத்தின் தீர்ப்புக் கிடைக்கும். அதனையும் ஏற்றுக் கொள்ளாத இடத்து அப்பீல் செய்யலாம். அப்பீல் முடிவு கள் வர ஆண்டுக் கணக்காகலாம். தேவஸ் தானத்தினதும் கீழ்க்கோட்டினதும் தீர்ப்பை ஒட்டியே அப்பீல் தீர்ப்பும் அமைந்திருக்கும். இதனுல் தேவஸ்தானத்திற்கு வரும் முறையீடு களில் பெரும்பான்மையானவை தேவஸ்தானத் தீர்ப் பை யே ஏற்றுக் கொண்டுவிடுகின்றன. முதலிலேயே தேவஸ்தானத்தவர் இருவருக்கும் அறிவுரை கூறும்போதும் விசாரணை செய்யும் போதும் எமது விசாரணை இருவரையும் சேர்த்து வைப்பதற்காகவே தவிர பிரித்து வைப்பதற்காக அல்ல என்பதை நன்கு உணர்த்திவிடுவர் நீங்கள் பிரிவுதான் வேண்டும் என்ருல் அதனை நாங்கள் செய்யத் தயாரில்லை. நீங்கள் மேலி டத்தில் சென்று முறையிட வேண்டியதுதான் என்று ஆணித்தரமாகக் கூறிவிடுவர். மேலே செல்பவர்கள் பணப் பலத்தால் தமது காரியத் தைச் சாதித்துக் கொள்வதுமுண்டு.

Page 32
ത്ത 42 -
திருமண உறுதியுரை
பெரும்பாலான திருமணங்கள் பிள்ளையார் பூஜையுடனேயே நடைபெறுகின்றன. ஒரு நிறை குடம், இரு குத்து விளக்குகள், மஞ்சளில் பிடித்த பிள்ளையார் இவற்றுடன் பூசை ஆரம்பமாகும். *8ந்து கரத்தனை" என்ற திருமுறைப் பாட லுடன் தீபாராதனை நடக்கும். பெரியவர் ஒரு வர் தலையில் தலைப்பா கட்டித் தேங்காய் உடைப்பார். தேங்காய் உடையும் வகையைச் சபையோர் உன்னிப்பாகக் கவனிப்பர். நல்ல முறையில் தேங்காய் உடைந்தால் எல்லாருடைய முகத்திலும் மகிழ்ச்சி மலரும். இந்த நம்பிக்கை யில் எல்லாரும் உறுதியாயிருப்பதைக் காண லாம். ஒரு முறை ஒரு பெரியவர் மிகக் கவலை யுடன் வந்து தனது பேரப்பிள்ளையின் கலி யாணத்தின் போது தேங்காய் ஒழுங்காய் உடைய வில்லை; தாறுமாருக உடைந்துவிட்டதே: இதனுல் ஏதாவது கெடுதி ஏற்படுமா என்று கவலையு யுடனேயே கேட்டார்.
பெரியவரே, எவ்வித பயமுங் கொள்ளத் தேவையுமில்லை. உடைத்தவனும் அவன்தான்; உடைப்பித்தவனும் அவன்தான்; அவனன்றி ஓரணுவும் அசையாதல்லவா? பிள்ளையார் சிதறு தேங்காயைத் தான் பெரிதும் விரும்புகிறர். ஆத லால் இதில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பெரியவரும் மகிழ்வுடன் வீடு சென்றர். மணமக் கள் சீரும் சிறப்பும் பெற்று இன்றும் வாழ்கின்

سے 43 ‘‘ --س۔
றனர். ஆணுல் ஒரு வருடத்தின் பின் பாட்டி
இறந்துவிட்டாள். சும்மா இருந்த வாய்க்கு அவல்
கிடைத்தால் சொல்ல வேண்டுமா? என்று சொல்
வார்களே! அதே போன்று தேங்காய் உடைக்
கும்போதே எங்களுக்குத் தெரியுமே ஏதோ
நடக்கப் போகிறதென்று. அது நடந்து விட்
டதே என்று மொட்டந் தலைக்கும் முழங்காலுக். கும் முடிச்சுப் போடுகிறவர்கள் உண்டு.
ஒரு தாம்பாளத்தில் பழம், பாக்கு, வெற்றிலை, மஞ்சள் பூசிய தேங்காயுடன் தாலியும் வைத்து சபையினரின் ஆசிக்காக அனுப்பப்பெறும், தாலி மஞ்சள் நூலிலேயே கட்டப்பெறும். திருமாங் கல்யதாரணம் செய்யும்போது மஞ்சள் கலந்த அரிசியினுல் ஆசீர் வாதம் செய்வர். பெரியோர், உற்றர், உறவினர் மாலை மாற்றுதல் மூலம் ஆசீர்வாதம் செய்வர்.
திருமண மண்டபத்துக்கு மணமகனும், மணமகளும் வந்து சேருவதற்கு முன்பாக தனித்தனி தங்களுக்குக் கிட்ட உள்ள கோயி லுக்குச் சென்று வழிபாடாற்றிக் கோயிலில் காளாஞ்சி பெற்றுக்கொண்டு வருவர்.
திருமாங்கல்யதாரணத்திற்கு முன்பு மண மகனும் மணமகளும் தனித்தனி உறுதியுரை எடுத்துக் கொள்வர். திருமணக் கிரியைகளுள் இது முக்கிய இடம் பெறுகின்றது.

Page 33
- 44 -
மணமகனின் உறுதியுரை
ஓம் நமசிவாய; ஓமீ நமசிவாய; ஓம் நமசிவாய, இங்கு சமூகம் கொடுத்திருக்கும் சபையோர் கள் முன்னிலையில் திரு. மணமகளின் தந்தை பெயர் அவர்களுடைய புதல்வி செளபாக்கியவதி மணமகளின் பெயர் என்னும் பெயர் கொண்ட கன்னிகையை எனது பிரிய மனைவியாக மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளுகின்றேன்.
எனக்கு வாழ்க்கைத் துணைவியாக வந்த எனது மனைவியுடன் இன்று முதல் இல்லறத்தை நடத்துவது என் கடமையாகும் என்று நான் உறுதிமொழி கூறுகின்றேன்.
நெறி தவருமல் பிழை செய்யாமல் இல்லற தருமத்தின்படி நடந்து, வாழ்விலும் தாழ்விலும் சமபங்கேற்று உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பது என் கடமையாகும்.
என் உயிர் உள்ளவரையில் எனக்குத் துணை யாக வாழும் எனது மனைவிக்கு எந்தவிதத் துரோகமுஞ் செய்ய மாட்டேன். என் வாழ்நாள் முழுவதும் என் மனைவியைக் காப்பது என் கடமை என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.
இறுதிவரை இல்லறத்தை என் மனைவியுடன் நல்லறமாக நடத்துவேன் என்று இறைவன் பெயரால் உறுதிமொழி செய்து, இங்கு கூடி

ത്ത് 45 അ
யுள்ள பெரியோர்கள் முன்னிலையில் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்ட என் மனைவிக்கு இத்தருணத்தில் உள்ளன் போடு திருமாங்கல்ய தாரணம் செய்கின்றேன்.
மணமகளின் உறுதியுரை
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய; ஓம் நமசிவாய. இங்கு நடந்துகொண்டிருக்கும் இத்திருமண விழாவில் எனக்குத் திருமாங்கல்யதாரணம் செய்த வரை என் கணவராக ஏற்றுக்கொண்டு கட்டுப் பாடாகவும் கண்ணியமாகவும் இல்லறத்தை நல் லறமாக நடத்துவது எனது கடமையாகும் என்று உறுதிமொழி கூறுகின்றேன்.
நெறி தவருமல், பிழை செய்யாமல், இல்லற தருமத்தின்படி நடந்து, வாழ்விலும், தாழ்விலும் சமபங்கேற்று, உண்மையாகவும், நேர்மையாக வும் நடப்பது என் கடமையாகும். என் உயிர் உள்ள வரையில் எனக்குத் துணையாக வாழும் எனது கணவருக்கு எவ்வித துரோகமும் செய்யா மல், கற்புநெறி தவருமல், வாழ்நாள் முழுவதும் பணி செய்வதே எனது கடமையாகும் என்பதை மனதுட்கொண்டு நடப்பேன்.
இறுதிவரை எனது கணவருக்குத் துணையாக நின்று இல்லறத்தை நல்லறமாக நடத்துவேன் என்று இறைவன் பெயரால் உறுதிமொழி செய்து, இங்கு கூடியுள்ள பெரியோர்கள் முன்

Page 34
ܚ 46 ܚܚܗ
னிலையில் வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்ட எனது கணவருக்கு இந்தக் கணை யாழியை உள்ளன்போடு அணிவிக்கின்றேன்.
மணமக்களுக்கு அறிவுரை
பெரியோர்களே! சகோதர சகோதரிகளே! தாழ்மையான வணக்கம்.
இப்பொழுது இவ்விளைஞர்கட்கு நடந்த திரு மண சந்தர்ப்பத்தில் மணவாழ்க்கை சம்பந்த மாகச் சில நல்லுரைகளை நினைவு கூருவோ DITest
காதலர் கருத்தொருமித்து ஒன்றுபட்டு மணம் புரிந்து கொள்வதே இன்பம் என்பது கொள்கை. எனினும் இதைவிட மேலான இன் பம் அறநெறிகளை விளங்கிக்கொண்டு அதன் படி வாழ்க்கை நடத்தவேண்டும்.
தன் மனைவியை நேசிக்கும் ஒருவன் திரு மணத்தினுல் நன்மையை எதிர்பார்ப்பவன். தன் மனச்சாட்சிக்கு விசுவாசமாக இருப்பதுபோல மனைவியிடமும் விசுவாசமாக இருக்கவேண்டும். மனைவி அவனுக்குத் தியாகம் செய்வாள்;
அவனைக் கெளரவிப்பாள்; உதவி புரிவாள்.
தன் கணவனிடம் அன்பு கொண்ட மனைவி
ஒருத்தி திருமணத்தினுல் நன்மையை எதிர் பார்ப்பவள். தன் மனச்சாட்சிக்கு விசுவாசமாக

سسه 47 س
இருப்பதுபோன்று தன் கணவனிடமும் விசுவாச மாக இருக்கவேண்டும். அவனை அவள் பூரண மாக நம்பவேண்டும். அவனைக் கெளரவிக்க வேண்டும். அவனை நன்கு பாதுகாக்க வேண் டும்.
உண்மையில் திருமணம் என்பது ஆசீர் வாதங்களால் சூழப்படும் புனித சம்பந்தமாகும். அதனுல் அவர்கள் சந்ததியும் அவர்கள் போன்றே வளர்ந்து, இருவரினதும் சந்தோஷத்திற்குச் சாட்சியாக இருப்பார்கள்.
,
ஆதலால் திருமண வாழ்க்கையில் ஈடுபட்ட சகோதரரே, சகோதரியே, மணமகன் கடமை மனைவியைக் காப்பாற்றுதல்; அவள் வாழ்க்கை யில் சந்தோஷமாக இருக்கச் செய்தல்; அவ ளிடம் அகத்திலும், புறத்திலும் விசுவாசமாக நடந்து கொள்ளுதல்; அவள் வியாதியுற்ற காலங் களில் கவனித்துச் சிகிச்சை ஆற்றுதல்; குழந்தை களைப் பராமரித்தல்.
மனைவியின் கடமை தன் கணவனை அன் போடு நேசித்தல்; அவனுக்கு உதவி செய்தல்; பொறுமையைக் கையாளுதல்; எல்லா அம்சங் களிலும் விசுவாசமாக இருத்தல்; கீழ்ப்படித லுள்ளவர்களாக நடந்து கொள்ளுதல்; என்பன என்பதை நன்கு சிந்தித்து உணரவேண்டும்.
உலகக் கடமைகளுக்கிடையே மாயையின் மயக்கும் ஜால ஒளிக்கிடையே அறநெறிகளை

Page 35
حسن 48 - است.
இடைவிடாது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்! பிற உயிர்களையும் மதித்து நடந்து கொள்ளுங் கள் உங்களைச் சூழ்ந்துள்ள எல்லோரிடமும் அன்பு என்னும் அமிர்தத்தை வழங்கப் பயின்று வரவேண்டும். இவைகளுக்குத் தடையாக உள் ளது கோபமீ. கோபம் அகங்காரத்திலிருந்து உண்டாவது. ஆதலால் ஒவ்வொரு நாளும் உங் களை அடக்கி ஆள்வதில் முயற்சிப்பீர்களாக
உங்கள் தாய் தந்தையரிடம் பட்சமாக நடந்து கொள்ளுங்கள். மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்குடன் செய்க பிறருக்கு நன்மையையும் சாந்தியையும் தரும் சேவைகளையும் புரியுங்கள்!
இவ்வாருக அன்பும், அறிவும், ஆனந்தமும் உங்களிருவர் உள்ளத்திலும் செழித்து வளர்நீ தோங்கட்டும். நீங்களிருவரும் இன்னும் எல்லா ஜீவர்களோடும் சாந்தியும் சமாதானமுமாகப் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வீர்களாக
மரணக் கிரியை
எல்லா மரண வீடுகளிலும் சிவபுராணம் ஓதுதல் வழக்கத்தில் இருந்து வருகிறது. இறந் தவரின் பிள்ளைகள் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று ஸ்நானம் செய்து விட்டு ஒவ்வொரு பாத்திரங்களில் நீர் எடுத்துக் கொண்டு வருவர். தாம் எடுத்துக்கொண்டு

வந்த நீரால் பிரேதத்தைக் குளிப்பாட்டுவர். எல்லா மரண வீடுகளிலும் பிரார்த்தனைக்கு முக் கியத்துவம் கொடுப்பர். கடைசியில் பேரப் பிள்ளைகள் எல்லாம் சுற்றியிருந்து பந்தம் பிடித்துப் பாடும் கிரியை ஒன்று நடைபெறும். அதாவது அந்த ஜீவாத்மா இருள் வழி செல் லாது ஒளி வழியே செல்வதாகப் பாவனை.
இறுதி மரியாதை வசனம்
அணுமுதல் இவ்வண்ட சராசரம் அனைத்திலும் சர்வ வியாபியாகச் சார்ந்திலங்கும் சச்சிதானந்த சோதியின் அதிமர்மமும் அற்புதமுமான நியதி யில் ஜடப் பொருட்கள் அனைத்துமே பிறப்பென் னும் விதிக்கு இலக்காக வேண்டியிருப்பதுபோல், இன்று மரணமென்னும் மர்மமான வாயிலில் நுழைந்து மறைந்துபோன முதியவரின் - நண்ப ரின் - இளைஞரின் - அம்மையாரின் - சகோதரி யின் - குழந்தையின் - சடலம் இதோ நம் முன் இருக்கின்றது.
நம்மோடு நம்மைப்போல் உடல் தாங்கி உலகில் உலவிய இவரை நாம் இனிக் காணப் போகின்ருேமில்லை. வாழ்க்கையின் அந்தத்தில்நடுவில் - தொடக்கத்தில் - திடீரென அழைத்துக் கொள்ளப்பட்டார். அனைவற்றையும் மறந்தார். இவ்வுடலைத் துறந்தார். அவருடைய வாழ்க்கைத் தீபம் அணைந்து போயிற்று.
இந்த ஜகம் மாபெரும் பாடசாலை. இதில் உயிர் வாழ்வனவெல்லாம் மாணவ மாணவிகள்.

Page 36
ஒவ்வொரு மாணவனும் மாணவியும் காலையில் துயில் கலைந்து, புதிய உடை அணிந்து, பாடசாலைக்குச் சென்று தமது கடமைகளை நிறைவேற்றுவதுடன், பு தி ய பாடங்களைக் கற்று, சிறிதளவு விருத்தியாக்கிக் கொண்டு, மாலையில் வீடு திரும்பி, தனது புழுதியடைந்த ஆடையை அகற்றிப் புதிய ஒன்றை அணிகின் ருன். இவ்வாறு தினம் தினம் செய்கின்றன். அதுபோலவே இவ்வுடலைத் தாங்கித் திரிந்த உண்மை, உண்மை மனிதராகிய ஆத்மா தனது கடமைகள் முடிந்து தான் கற்க வேண்டியவை களைக் கற்று இன்று திரும்புகின்றர். ஜகம் என் னும் இப்பாடசாலையில் அம்மாண வரை இனி நாம் காணப்போகின் ருேமில்லை. அவருக்குத் தேவையானவைகளைக் கற்கவும் கடமைகளை ஆற்றவும் ஏற்ற வேற்றுடலில் மீண்டும் தோன்று வார் என்பது புனர்ஜன்ம நியதி.
"கிழிந்த உடையை அகற்றி
புதிய ஒன்றை அணிவது போலாம் மரணமீ” என்று கீதையில் பூரீ கிருஷணபரமாத்மா உபதே சித்தருளியது போல் நமது - முதியோர் - நண் பர் - இளைஞர் - அம்மையார் - சகோதரியார் - குழந்தை அணிந்திருந்து அகற்றிய உடையாகிய அவர் உடலைச் சுற்றி நமது அந்திய மரியாதை களைச் சமர்ப்பிக்கும் பொருட்டுச் சூழ்ந்துள் ளோம்.
பிரிவாற்றமையினுல் நமது மனம் வருந்தத் தான் செய்கின்றது. பட்டினத்தடிகளுங்கூடத்

ܚ 51 ܡܗܗܗܝ
தன் தாயின் மரணத்தால் கசிவுற்று நொந்து அழுதார், என்றல் நாம் எம்மாத்திரம்?
மரணத்தினுல் உண்மையில் நாம் நினைப்பது போன்று அஞ்சுதற்குரிய அம்சங்கள் இல்லை என்பதாக நமக்கு உபதேசிக்கப்பட்டிருப்பினும் எந்த - முதியோருடன் - நண்பருடன் - இளைஞ ருடன் - அம்மையாருடன் - சகோதரியாருடன் - குழந்தையுடன் நாம் நெருங்கிப் பழகி இருந் தோமோ, எந்த முதியோரிடத்தில் - நண்பரிடத் தில் - இளைஞரிடத்தில் - அம்மையாரிடத்தில் - சகோதரியாரிடத்தில் - குழந்தையிடத்தில் நமது அன்பின் ஒரு பாகத்தை வைத்திருந்தோமோ, எவர் நம்மில் ஒருவராக மிளிர்ந்திருந்தாரோ, அவர் இப்பொழுது நம் கண்களுக்கு மறைந்து போயினுரே. அவர் இருந்த இடமெல்லாம் அவர் இல்லாமல் சூனியமாய்க் காணப்படுகிறதே என்று எண்ணும்பொழுது நம்மைக் கவலை கப்பு கின்றது. துக்கம் நம்மைப் பீடிக்கச் செய்கின் றது. ஆணுலும் சகிக்கத்தான் வேண்டும்.
இருளும் ஒளியும் போலும், இன்பமும் துன்பமும் போலும், இறப்பும் பிறப்புஞ் சூழ வாழ்க்கை நடைபெறுகின்றது.
உலகம் நாடகமேடைக்குச் சமானமாகும் என்று நமது ஆன்றேர் மொழிந்துள்ளனர். மக்கள் பலவித அங்கங்களில் ஆடவர்களாகவும் பெண்டிராகவும், செல்வந்தராகவும், ஏழைகளாக ճյլն: அரசர்களாகவும், ஆண்டிகளாகவும்

Page 37
سست 52 ہس~~
வேடங்கள் தாங்கித் தோன்றுகிருர்கள்; அப் பால் மறைந்து போகின்றர்கள். வாழ்க்கை என்ற மேடையிலும் இதுவே தான் மாறிமாறி நடக்கின்றன. இவ்வாறு ஊழ்வினை என்னும் சக்தியானது ஜனன மரணமென்னும் சக்கரத் தைச் சுழற்றுகின்றது.
சுமார் 2500 ஆண்டுகட்கு முன் எமது பாரத நாட்டில் தோன்றிய சித்தார்த்த - கெளதமர் என்ற அவதாரபுருடர் வாழ்க்கையின் இரக சியத்தை அறியத் துறவு பூண்டு திரிந்த காலை யில் வழியில் மாது ஒருத்தி தோன்றி மரண மடைந்த குழந்தைக்கு உயிர்ப்பிச்சை அளிக்கு மாறு பிரார்த்தித்தனள். “அம்மையே வருந் தற்க மரணமேற்பட்டில்லாத ஒரு வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி கடுகு கொணர்க" என்று அத் துறவி அப்பெண்ணை அனுப்பினுர், அம்மங்கை நல்லாள் திரும்பி வந்து, “சுவாமி யான் ஏது செய்யட்டும்? மரணமேற்பட்டில்லாத வீடு இல் லவேயில்லையே!” என்று கண் கலங்கினள்.
*அம்மணி கவலைப்படுவதால் பயன் யாது? எவர்க்கும் ஏற்பட்டில்லாத எதுவும் தங்கட்கு ஏற்பட்டுவிடவில்லை. நித்தியம் என்று மக்கள் நினைந்து மாயையில் மயங்கி மகிழ்வுற்று மனங் களிக்கிருர்கள். உலக இன்பம் அநித்தியமான ஒன்றை அடிப்படையாகக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறது என்பதை அவர்கள் உணரவில்லை. மனந் தேறி மகனே மயானங் கொண்டேகுங்கள்” என்று கனிந்த மொழிகளால் சாந்தப்படுத்திச்

--سے 53 ۔
சென்றனர். அவ்வம்மையும் மனநிம்மதி பெற்று ஈமக்கடன்களை முடித்து இல்லம் ஏகினள்,
நமது மனதைச் சாந்தப்படுத்திக் கொள்ள இதே போதனை நமக்கு உதவி அளிக்க வேண் டும். நீர்க்குமிழிபோன்ற வாழ்க்கையின் நிலை யற்ற தன்மையை மரணம் நிச்சயப்படுத்துகின் றது. உலக வாழ்க்கை நிழலுக்குச் சமானமானது; கானல் நீர் போன்றது; அநித்தியமானது என் பது உண்மையானுலும், நிழலுக்குக் காரணமா யுள்ள நித்தியமான “சத்" என்னும் மெய்ப் பொருள் ஒன்றுண்டு. சத்தியமான அப்பொரு ளைக் காண மக்கள் சத்திய வழியாம் சன்மார்க்க நெறி நிற்கவேண்டும் என்பது முத்தர்கள் திரு மொழியாகும்.
உடலை நீத்த ஆத்மாவுடன் செல்பவர் பற் றுடன் வாழ்ந்த உற்றரல்ல; உறவினரல்ல; வாழ்வு நித்தியமானது என எண்ணிக் கண் ணெனப் போற்றிய பொன், பொருள் அல்ல செல்வன மற்றும் தான் செய்த தானமும், தரு மமும், தவமும், நற்கருமங்களும், பாவங்களுமே u Il T 5.
எனவே மனம் போன போக்கிலும், ஆண வத்தின் அலங்கோல ஆட்சியிலும், ஆசைகளின் மோச வலைகளிலும், வஞ்சகப் பேய்களாம் பொய், காமம், கொலை, களவு, கள் என்னும் பஞ்சமா பாதகங்களாலும் மயங்கி விழாமல், நேர்மையுட.

Page 38
- 54 m
னும் நெறி பிசகாமலும், ஒழுக்கம் தவருமலும் அன்பு, தயை, கருணை, பக்தி, விசுவாசம் முத லிய சீரிய குணங்கள் கமழும் உத்தமர்களாக வும் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற இந் தச் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் உறுதி செய்து கொள்வது இன்றியமையாததாகும்.
சற்று நமது மனக் கதவைத் திறந்து கேட் போமானுல் சலனமற்றுக் கிடக்கும் இச்சடலம் இந்த உபதேசத்தைத்தான் நமக்குக் கடைசியா கச் செய்கிறது என்பது புலனுகும். இந்த உன் னத எண்ணத்தை நமது உள்ளத்தில் பதியச் செய்து கொள்வோம்.
எந்த உடலை நமது - முதியோர் - நண்பர் - இளைஞர் - அம்மையார் - சகோதரியார் - குழந்தைவளர்த்துப் போஷித்து வந்தாரோ, எந்த உட லின் உதவியால் உலகிற்குத் தாம் செய்யவேண் டிய கடமைகளைச் செய்து முடித்தாரோ, எந்த உடலை அவர் விட்டுப் பிரிந்தாரோ அந்தப் பூத உடலை நாம் மூலப் பிரகிருதியாகிய பூமிக்கு - ஐம்பூதங்களில் ஒன்ருகிய அக்கினிக்கு அர்ப் பணம் செய்யும்மு ன்னம், மாயையில் கட்டுண்டு கிடக்கும் நமக்கு மர்மமாகத் தோன்றும் அவ ருடைய தற்போதைய நிலையில் அவர் மீண்டும் சம்சார பந்தங்களில் ஈடுபடாதிருக்கவேண்டும். திவ்யமான புனித வாழ்வில் திகழவேண்டும். ஏக பராபர வஸ்துவாக அங்கிங்கு என்றிலாது எங்கும் நிறைந்து பரிபூரணமாக விளங்கும்

- 55
இறைவனடியினையடைந்து சாந்தி நிலையை எய்த வேண்டும். திருவருட் கடாட்சம் அவருக்கும் அவரது சுற்றத்தார்கட்கும் என்றுமிருக்கவேண்டு மென இரண்டு நிமிடம் பிரார்த்தனை செய்வோ ! ré6ומו
于r颅1 于n岳卤!! சாந்தி1
பூமிபுத்திரா
இந்த நாட்டின் பூர்வகுடி மக்களை பூமிபுத் திரா என்று அழைப்பர். இவர்கள் கல்வியிலும் பொருள் ஈட்டத்திலும் நாகரிகத்திலும் பின் தங்கிவிட்டனர். இவர்களை எல்லாத் துறைகளி லும் முன்னேற்றுவதற்காக அரசாங்கம் பெரு முயற்சி எடுத்து வருகின்றது. இந்தப் பூமி அவர்களுக்கே சொந்தமானது என்ற கருத் தால் அவர்களைப் பூமிபுத்திரா என்று அழைக்க லாயினர். பூமிபுத்திரா என்ற சொற்ருெடர் ஒன்றே பல சரித்திர உண்மைகளைச் சிந்திக் கத் தூண்டுகின்றது.
மதுரா
இந்தியாவில் மதுரை இருப்பது போலவே இங்கும் மதுரா இருக்கின்றது. இது கிழக்கு யாவாத் தீவிற்கும் பாலித் தீவிற்கும் இடையில் உள்ள ஒரு தீவு. இந்திய மதுரையில் மஞ்சு விரட்டு நடைபெறுவதுபோல இந்த மதுராத் தீவிலும் வண்டிச் சவாரி நடைபெற்று வருகின் றது. மாட்டுக்குக் கொம்பு சீவுதல், அழகுபடுத்

Page 39
- 56 -->
துதல் போன்றவைகளும் மாட்டுக் கொம்புகளுக் கிடையில் குஞ்சங் கட்டுதல் போன்றவைகளும் உண்டு. ஒரு பலமான தடியின் நுனி மாடுகள் பூட்டப்படும் நுகத்தடியின் மத்தியில் பொருத் தப்பட்டிருக்கும். தடியின் அடிப் பகுதியில் ஒரு வர் இருக்கத் தக்கதான பலகை ஒன்று பொருத் தப்பட்டிருக்கும். அப்பலகையில் இருந்தே மாடு விரட்டுவார்கள். இதற்கென்றே மாடுகள் வளர்க் கப்படுகின்றன. இவை சவாரி மாடுகள் என அழைச் கப்பெறுமீ. இந்தியாவில் நடைபெறும் மஞ்சுவிரட்டு இச்சவாரியினின்று வேறுபட்ட தாயினும் சில சந்தர்ப்பங்களில் இதனையும் மஞ்சு விரட்டு என்றே அழைக்கின் ருர்கள்.
இந்தோ நேசியா முழுவதும் சயாம், மலே சியா, தைலண்ட் ஆகிய எல்லா இடங்களிலும் இச்ச வாரி நடைபெறுவதைக்கொண்டு ஒரு காலத்தில் இப்பகுதிகளில் தமிழருடைய செல் வாக்குக் கொடிகட்டிப் பறந்துள்ளது என்றே கூறவேண்டியுள்ளது. இச்சவாரிப் போ ட் டி பொங்கலை அடுத்தே நடைபெற்று வருகின்றது. சவாரியின்போது சவுக்கு என்றழைக்கப்படும் சாட்டைகள் பயன்படுத்தப்படும். சத்தம் கேட் குமே தவிர மாடுகளின்மீது சவுக்கடி படுவ தில்லை.
அகஸ்தியர் சிலை
பூரீலங்காவில் பராக்கிரம மன்னனுடைய சிலை என்று சொல்லிக்கொள்வது போன்றதொரு

ܣܚܗ 57 -
சிலை இந்தோநேசிய ராச்சியம் முழுவதிலும் காணலாம். அதுதான் அகஸ்தியர் சிலையாகும். கிழக்கு யாவாவில் அகஸ்தியர் கோயில் ஒன்று இருக்கிறது. இக்கோயில் 11 ஆம் நூற்ருண்டுக்கு முன் கட்டப்பட்டதொன் ருகும். இக்கோயிலில் இருந்த அகஸ்தியர் சிலை சந்தனக் கட்டையால் செய்யப்பட்டது. அதுவும் பொதியமலைச் சந் தனக் கட்டையால் செய்யப்பட்டது. பிற்காலத் தில் சிலையில் சிறிது ஊனம் ஏற்பட்டபடியிஞல் அச்சிலையை அகற்றிக் கருங்கல்லினுல் செதுக் கப்பட்ட சிலை ஒன்று வைத்துள்ளார்கள். சந் தனக் கட்டையில் செதுக்கப்பட்ட சிலை யாவாத் தீவிலுள்ள நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலைக் கட்டிய் அரசன் வடக்கிருந்து உயிர் நீத்ததாகச் சரித்திரம் கூறுகின்றது. யாகர்த்தாவிலுள்ள நூதனசாலையில் சுந்தர பாண்டியனுடைய (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) முத்திரை உள்ளது.
சடைவேதம்
சடைவேதம் என்று அழைக்கப்படும் வேத நூல் ஒன்றுளது. இதன் மறுபெயர் ‘பாழி’ என் பது. பாழி என்ற சொல் திரிந்து பாலி ஆயிற்று, பாலியில் இருக்கும் இந்து வேதமும் இதில் கூறப்படும் இந்து வேதமும் ஒன்ரு என்ற ஆராய்ச்சி மிக அவசியமானது.

Page 40
ܗܩܗ 58 -
தமிழகத்தின் வட எல்லையிலிருந்த ஒரு சிறு இராச்சியத்திற்கும் பாலி என்று பெயர். இதனை ஆண்டவர் வடுகர். அவரை வென்றவன் பெருங் கால்கிளி என்ற முற்காலச் சோழன். (ஆதா ரம் - அகநானூறு பாட்டு- 375) சென்னை மகுலி பட்டண எல்லையில் வடாகர் என்ற பெயருடைய வர்கள் வசித்தார்கள். வடுகர் பேசிய மொழி தெலுங்கு - அதாவது தமிழ் கலந்த தெலுங்கு மொழி. கன்னட எல்லையிலும் வடுகர் வசித்த தாகத் தெரிகிறது.
இலங்கையை ஆண்ட குளக்கோட்ட மன்ன னுடைய கல்வெட்டு ஒன்றில்,
*முன்னுட் குளக்கோட்டன்
மூட்டும் திருப்பணியை பின் குட் பறங்கி பிடிப்பனேல் பூனைக் கண் செங்கண் புகைக்கண்ணர் போய் மாற மானே வடுகாய் விடும்"
வரும் பாடலில் வரும் வடுகு என்ற சொல் ஆராய்ச்சிக்குரியதாகும்.
தமிழ் மாணவரும் இந்து சமயப் பாடமும்
தமிழ்ப் பிள்ளைகளிற் சிலர் இந்தோநேசிய மொழி மூலமே இந்து சமய பாடங் கற்பிக்கின் றனர். பாலி இந்துக்கள் கற்கும் பாடத் திட்டமே

- 59 -
இவர்களுக்கும் உரியதாகும். பாலி இந்துக்கள் கற்கும் சமய பாடத்தில் வழிபாட்டு முறையோ பக்தி முறையோ காணப்படுவதில்லை. இந்து சமய தத் துவங்களுக்கே முதலிடங் கொடுத் திருக்கின் றனர். பாமர மக்களுக்கேற்ற பாடங்களோ பாடத் திட்டங்களோ அவர்களிடமில்லை.
சுகர்னுே அவர்கள் ஜனதிபதியாக இருந்த காலத்தில் பாலித்தீவிலிருந்து நன்கு கற்ற பத் துப் பட்டதாரிகளைப் பொறுக்கி எடுத்து, காசிச் சர்வகலாசாலைக்கு அனுப்பிவைத்தார். பத்துப் பேரும் வேதாந்தத்தை நன்கு கற்றுத் தேறிய வர்கள். பகவத்கீதை, வேதங்கள், உபநிடதங் கள், பிரம்மசூத்திரம் போன்றவற்றை முறை யாக நன்கு கற்று, பரீட்சை எழுதி, பட்டப் படிப்பில் நன்கு தேறியவர்கள். அந்தத் தரத்தி லுள்ள பாடப் புத்தகங்களே அவர்களுடைய பரீட்சைக்கும் நியமிக்கப்பட்டவையாகும்.
வேதங்கள், ஆகமங்கள், உபநிடதங்களை நன்கு கற்ற மேதாவிகளிடமே அவர்கள் கற் றமையினுல் அந்த மேல்மட்டத்திலேயே அவர் க. ளுடைய பாடத் திட்டங்களும் அமைந்தனவாகும். காசிச் சர்வகலாசாலையில் படித்துப் பட்டம் பெற்ற பத்துப் பேரும் ஊர் திரும்பியபின் பகவத்கீதை போன்ற உயர் தத்துவ நூல்களை இந்தோ நேசிய மொழியில் மொழி பெயர்த்தனர். அவையே பாடத் திட்டங்களிலும் அமைந்தன. கீழ்மட்டத்திலுள்ள மக்களுக்கு அவர்களுடைய மொழிபெயர்ப்புகள் பயன்படவில்லை.

Page 41
ܗܚ- 60 =
தமிழரிடம் ஒரு சிறந்த பண்பாடு உள்ளது. தாம் சென்று குடியேறிய தேசங்களில் உள்ள மக்களோடு இரண்டறக் கலந்துவிடுகின்ருர்கள். அதேபோல் தம் மத்தியில் வாழ்ந்துவரும் அந் நியர்களையும் அரவணைத்து அவர்களையும் சேர்த் துக்கொள்ளுகின்றர்கள். இந்த உயர் தனிப் பண்பாடுதான் அவர்களைத் தாய்மொழியை மறக்கச் செய்துள்ளது. இதனுல் வருங் கேட் டினை அவர்கள் உணரவில்லை. தாய்மொழியாந் தமிழ் மொழி தெரியாதவன் தமிழனுக வாழ முடியாது. தமிழ் மொழி இல்லையேல் மதமும் இல்லை; மதம் இல்லையேல் ஒன்றும் இல்லையாகும்.
மேடான் நகரிலே வாழும் தமிழர்களிடையே சமய வேறுபாடு இருக்கலாம்; ஆணுல் சாதி வேறுபாடு இல்லை என்றே கூறவேண்டும். சாதிக் குரிய பெயர்களாகிய முதலியார், பிள்ளை, சேர்வை, கோஞர், 8யர், சர்மா போன்ற பெயர் களை நீக்கியதோடு உயர்வு தாழ்வு பார்க் காம லேயே திருமணங்களும் நடைபெற்றுக்கொண் டிருக்கின்றன. அங்கு வாழும் இருபத்தையா யிரம் தமிழர்களும் திருமணத்தால் ஒன்ருகிவிட் டனர். ஏதோ ஒரு வழியில் சொந்தக்காரராகி யும்விட்டனர். மிகச் சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் மற்றைய சமூகத்தினரின் நன் மதிப்பைப் பெற்று வாழ்வதற்கு முக்கிய கார ணம் அவர்களிடையே சாதி வேறுபாடில்லாமை யாகும். இதே நிலை ஈழத்திலும் தமிழகத்திலும் புரட்சிகரமாக ஏற்படவேண்டும். மகாத்மா

۔ 61 ------
காந்தி அடிகள் இதற்காகவே தமது உயிரைத் தியாகம் செய்து முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆணுல் எம்மை விட்டுச் சாதிக் கொடுமைகள் ஒழியவில்லை; இனப் பூசல்களும் நீங்கவில்லை. சாதிப் பாகுபாடுகள் நீங்கும் வேகம் போதியதாக இல்லை என்றே கூறவேண் டும். சூழலின் தாக்கம் அடைந்த வேகத்தோடு ஒப்பிடும்போது இது மிக மந்த நிலையிலேயே உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
**ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்"
*அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராகி
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை வார் சடைக் கலந்தார்க் கன்பராகில் அவர்கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே"
இவையெல்லாம் மேடைப் பேச்சுகளாகி விட்டன; நடைமுறையில் இல்லை. பேச்சுக்கும் செயலுக் கும். மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமாகி விட்டன. W
புலால் உண்பவன் புலையன். இது கார ணப் பெயர். இதற்கு விளக்கங் கொடுத்தாலே சிலரால் அதனைச் சீரணித்துக்கொள்ள முடிவ தில்லை.
மலாக்காச் செட்டியார்கள்
மலேசியாவில் மலாக்கா என்ற பகுதியில் வாழ்ந்துவந்த வணிகச் செட்டியார்கள், மலாக்

Page 42
س۔ 62 سس
காச் செட்டியார்கள் என்றே அழைக்கப்படுகின் றனர். இன்றும் அவர்கள் அப்பெயராலேயே அழைக்கப்பட்டாலும், இந்துக்களாயிருந்து இந்து சமய முறைப்படி வழிபாடுகள் ஆற்றினு லும், ஒரு தமிழ்ச் சொல் தானும் வாசிக் து அறிய முடியாத நிலைக்குப் பின்தள்ளப்பட்டுள்ளனர். தேவாரங்கள் மலாய் மொழியில் எழுதிப் பாடஞ் செய்யும் நிலைக்கு வந்துவிட்டனர். பரம்பரை யாக வந்த ஒருசில பண்பாடுகளைக் கைவிடாது காப்பாற்றி வருகிறர்கள். எப்படி இருந்தாலும் தாய்மொழியை மறக்கும் நிலைக்கு வரும்போது தமிழ்ப் பண்பாட்டையும் படிப்படியாக மறக்கும் நிலைக்கு வந்துவிடும். ஒரு மலாக்காச் செட்டி யார் வீட்டில் நான்கு தலைமுறையினரை ச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மணிமேகலை யின் மகள் அபிராமி; அபிராமியின் மகள் ஜானகி; ஜானகியின் மகள் புஷ்பம். இப்பெயர்களைக் குடும்பங்களிலே காணமுடிந்தாலும் அவை கால வெள்ளத்தில் தாக்குப்பிடித்து நிற்க முடியும் என்று சொல்வதற்கில்லை.
தமிழ்ப் பெயர்கள் உச்சரிப்பில் மலாய் மொழியின் உருவத்தை அடைந்துவிட்டன. தமிழ்ப் பெயர்கள் வைக்கப்பட்டாலும் உச்சரிப் புக்களில் பலவித மாற்றங்கள். காரணம் தமிழ் உச்சரிப்புத் தெரியாமையாகும். வீட்டில் தமிழில் பேசும் பழக்கம் இல்லாதபடியினுல் தமிழ்ச் சொற்களின் உச்சரிப்பின் உருவத்தை அவர் களால் உணர முடிவதில்லை. பதிவுப் பெயர் ஒன்

- 63 -
ருகும்; கூப்பிடுகின்ற பெயர் இன்னென்றகும். லெச்சி என்ற பெயர் இலட்சுமணன் என்ற பெயரின் திரிபாகும். முத்தையா என்று உச்சரிக் கத் தெரியாது; முக்தியா என்றே உச்சரிப்பார்கள். வேலுப்பிள்ளை என்ற பெயரை வேப்பிலை என்றே உச்சரிப்பார்கள். திருத்தினுலும் அவர்கள் நாவு திருந்துவதில்லை. இந்திராதேவி என்ற பெயர் இண்டா தேவி என்றே உச்சரிப்பார்கள். பிருந்தா தேவி, பிந்தாடேவி ஆகிவிடுகின் ருர். இப்படி உச்சரிப்பு மாற்றங்கள் அநேகம்; அநேகம்,
தமிழ் தெரிந்த, தமிழ் பேசுகின்ற, அதுவும் செந்தமிழ் பேசுகின்ற ஈழத்திலும் தமிழகத்திலுமி தூய தெய்வத் தன்மையான பெயர்கள் மறைந்து, சினிமா நட்சத்திரங்களின் பெயர்களும், நாவல் களில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களும் இடம்பெற்றுக்கொண்டு வ ரு கி ன் ற ன. ટર્કી6 தமிழ்க் குழந்தைகளினுடைய பெயர்களே, தமிழ் தெரிந்த தமிழர்களாலேயே உச்சரிக்க முடிவ தில்லை. மொழி மூலம்தான் ஒரு இனம் காப் பாற்றப்படுகிறது. மொழியில் ஈடாட்டம் காணப் பட்டால் இனத்திலும் ஈ டாட்டம் காணப்படும்.
தாய் பேசுகிற மொழி தாய்மொழி. வீட்டிலே எப்பொழுதும் தாய்மொழியிலேயே பேச்சுவழக்கு இருந்துவருமாஞல், தாய்மொழியை எப்பொழு துமே மறக்கவேண்டிய சூழ்நிலை உண்டாகாது. இன்றும் சில தமிழ்க் குடும்பங்களில் உள்ளவர் கள் வீடுகளில் ஆங்கிலத்தில்தான் பேசுகிரூர்கள்.

Page 43
இதற்காக ஆங்கிலம் தெரிந்த ஆயாமார்களையே வீடுகளில் வைத்திருக்கின்றர்கள். நண்பர் ஒரு வருடைய இல் லத்தில் தைப்பொங்கல் பொங்கி யிருக்கிருர்கள். பொங்கல் முடிந்து பூசை நடக் கும்போது தந்தையார் மகனைப் பார்த்துத் தேவாரம் பாடுமாறு கேட்டுள்ளார். பையணுே * ட்விங்கிள் ட்விங்கிள் லிற்றில் ஸ்ரார்" என்று பாடியிருக்கிறன். இதனைக் கேட்ட தந்தையா ருக்கு ஒருபக்கம் சிரிப்பு: இன்ஞெருபக்கம் அழுகை,
இத்தகைய பிள்ளை வளர்ப்பினுல் சமயப் பண் பாடே அற்றுப்போகின்றது. தமிழ் மொழி முறை யாகக் கற்காமையிஞல் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடாகிய தருமமும் தமிழ் மொழியின் பண் பாடாகிய பக்தியும் இல்லாமல் போகின்றது.
மலேசியா, சிங்கப்பூர், இந்தோநேசியா போன்ற இடங்களில் சில குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் பாடசாலை மாணவராக இருக்கும் போதே போதைப் பொருட்களுக்கு அடிமைக ளாகிவிட்டார்கள். இதற்குக் காரணம் வீட்டிலே கடவுள் வழிபாடு இல்லை; குடும்பமே கோயிலுக் குச் செல்வதில்லை. பெரியோர்களுக்கு மரியாதை செய்யவேண்டும் என்பதைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்காத குடும்பம். அப்பாவும் மக னும் ஒரே மேசையில் இருந்து ஒரே போத்தலி லுள்ள பீர், விறண்டி, விஸ்கியை இருவரும் மாற்றி மாற்றி ஊற்றி ஊற்றிக் குடிக்கும் குடும்

பம். அதனல் அவர்கள் நன்மை எது? தீமை எது? பாவம் எது? புண்ணியம் எது? என்று தெரியாது வாழ்கின்றர்கள்.
இந்தோநேசியாவில் கல்விக்கூடங்களிலே சாதாரணமாகக் கல்வி பயிலும் மாணவர்களிடம் புகைக்கும் பழக்கம் அநேகமாக உண்டு. ஆசிரி யர்களில் பெரும்பாலோரும் புகைக்கும் பழக்கம் உடையவர்கள். பெண்களும் சர்வ சாதாரண மாகப் புகைக்கும் பழக்கம் உடையவர்களாகக் காணப்படுகின்றர்கள். இதனுல் புகைக்கும் பழக் கம் மரியா தையற்ற பழக்கம் என்பதைப் பல ரால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. இந்த நிலையில் மாணவர்களை ஆசிரியர்களால் கண் டிக்கவும் முடிவதில்லை.
தாய்மொழியும் சமயமும் தாயினுலேயே பிள்ளைகளுக்கு ஊட்டப்படவேண்டியவை. தாயி ஞலேயே வீட்டில் வளர்க்கப்பட வேண்டியவை. இதை மறந்த குடும்பங்களிலே மொழிப் பற்று, மொழி வளர்ச்சி, மதப் பற்று. மத வளர்ச்சி, இனப் பற்று, இன வளர்ச்சி, மத அனுட்டானங் கள் என்பவற்றைக் காண முடிவதில்லை.
இந்தோநேசிய இராச்சியமும் கொம்மியுனிச சித்தாந்தமும்
மேடான் நகரைத் தவிர இந்தோநேசியா வின் மற்றைய பகுதிகளிலும் 5, 10 குடும்பங்கள், 25, 30 குடும்பங்கள் என்ற வகையில் பரந்து

Page 44
- 66 es
பட்டு வாழுகின்றர்கள். இத்தகைய தமிழ் மக் கள் எந்தத் தமிழ்ப் பத்திரிகையும் வாசிக்கும் வாய்ப்பு இல்லை. தமிழை மறந்துபோவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். வெளி இடங்களி லிருந்து தமிழ் நூல்களையோ, தமிழ்ப் பத்திரிகை களையோ வரவழைப்பதில் பல கட்டுப்பாடுகளும், பல சிரமங்களும் உண்டு. நூல்களை இறக்குமதி செய்வதற்குரிய கட்டுப்பாடு வேறு எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு இருக்க வில்லை. போதைப் பொருளுக்கு அடுத்தபடியாக மிகக் கடுமையான சட்டம் நூல்கள் இறக்கு மதிக்கு உண்டு. இக்கட்டுப்பாடு ஏற்பட்டதற் கும் காரணங்கள் உண்டு.
கொம்மியுனிச சித்தாந்தங்கள் எந்த உரு வத்திலும் பரவிவிடலாம் என்ற அச்சமே இக் கட்டுப்பாட்டிற்கு மூலகாரணமாகும். சிங்கப்பூர், மலேசியா, இந்தோநேசியா ஆகிய தேசங்கள் கொம்மியுனிசுக்களின் கொடுமைகளை நன்கு அனுபவித்தவர்கள். அதனுல் கொம்மியுனிசுக் களை ஒழித்துக்கட்டுவதற்கு மூன்று இராச்சியங் களுக்கிடையிலும் ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டுள் ளது. சாந்தியையும், சமாதானத்தையும் இழந்து பயத்தினுல் தினமும் செத்துக்கொண்டே இருந்த காலம் ஒன்றிருந்தது.
அடியேன் மேடான் செல்லும்போது அடி யேனுல் எழுதப்பட்ட "திருமுறைச் செல்வம்" என்ற பெயருடைய முப்பது நூல்கள் கொண்டு

سے 67 سے
சென்றிருந்தேன். முகப்புப் படத்தைப் பற்றி விளக்கம் கொடுத்தேன். அதற்கு அவர்கள் கூறிய மறுமொழி வெளியிலே தோற்றம் வேறு; உள்ளே வாசித்தால் உட்பொருள் வேருகப் பல நூல்கள் வந்துவிடுகின்றன. போதைப் பொருள் கடத்து பவர்களும் அப்படித்தானே கடத்துகிறர்கள் என்று கூறி சுங்க அதிகாரிகள் அத்தனை புத்த கங்களையும் தடுத்து நிறுத்திவிட்டார்கள். ஒரு வாரங் கழித்துச் சுங்க அதிகாரியிடம் சென்று புத்தகம் பற்றிய விளக்கம் கொடுத்தோம். புத் தக முகப்புப் படத்தின் தத்துவ விளக்கமும் கொடுக்கப்பட்டன.
அடியேனுடைய கடவைச் சீட்டில் அடியே னுடைய தொழில் தலைமை ஆசிரியர் என எழு தப்பட்டிருந்தது. அதைப் பார்த்த உடனே சிறிது விலகியிருந்த சந்தேகம் மேலும் வலு வடைந்தது. தலைமை ஆசிரியராக உள்ளவர் இந்த நூல்களை இங்கு ஏன் கொண்டு வரவேண் டும்? ஏதோ ஒரு குறிக்கோளுடன்தான் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். அது என்ன என்று அடியேனை வினவினுர். சந்தேகம் வலுவாகி விட்டது என்பது அவருடைய முகத்திலே காணக் கூடியதாய் இருந்தது.
தெய்வாதீனமாகக் கூடவந்த நண்பர் நல்ல விளக்கம் கொடுத்தார். இவர் இந்து சமயப் பாடசாலைக்குத் தலைவராக இருக்கிருர், ஆன படியினுல்தான் இந்து சமய நூல்களை எழுத

Page 45
68 omo
முடிந்தது. இங்கும் இந்து சமயப் பிரசாரத்திற் காகத்தான் வந்துள்ளார். அரசாங்கமே மதத் திற்குத்தானே முக்கியத்துவம் கொடுக்கிறது. அரசாங்கக் கொள்கைக்கு உதவியாக இந்து சமய மக்களுக்கு இந்து சமயப் பிரச்சாரம் செய்ய வந்துள்ளார் என்று கூறியதும் சுங்க அதிகாரியின் முகத்தில் ஒரு தெளிவு ஏற்பட் டதைக் காண முடிந்தது.
உடனே சுங்க அதிகாரி "உங்களுக்குச் சிர மம் தந்ததற்கு மன்னியுங்கள். ஒரு சிலர் விடு கின்ற பிழையினுல்தான் நாங்கள் சில விஷயங் களில் சிறிது கடுமையாக இருக்கவேண்டியுள் ளது. நீங்கள் அடிக்கடி வாருங்கள்! எமது மக் களுக்கு நல்ல தைக் கூறி அவர்களை நல்வழிப் படுத்துங்கள்" என்று கூறி எழுந்து இரு கைகளை யும் கொடுத்து அன்போடு அனுப்பிவைத்தார்.
அகழ்வாராய்ச்சி
முதன் முதல் தோன்றிய நூல் இருக்கு வேதம் என்று உலகம் மு மு வ தி லுமு ள் ள ஆராய்ச்சியாளர்கள் ஏ கோபித்த முடிவு செய் துள்ளார்கள். வேத நூலை அடிப்படையாகக் கொண்ட சமயம் வைதிகம் எனப்படும். வேத நூல் தோன்றுவதற்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவலிங்க வழிபாடு தோன்றிவிட்டது. ஒரு காலத்தில் சிவலிங்க வழி பாடே உலகம் முழுவதிலுமிருந்தது. இந்தோ நேசியாவின் நில அகழ்வின்போது கண்டெடுத்த

- 69 ܚ
சிவலிங்கங்களும் மற்றைய விக்கிரகங்களுமே அதற்கு அத்தாட்சியாகும்.
குமரிக்கண்டம் எ ன் று அழைக்கப்பெறும் லிமூறியாக் கண்டத்தை ஆராய்ந்தவர்கள், வட மொழியில் வேதங்கள் நான்கு இருந்தது போன்றே தமிழ் மொழியிலும் வேதங்கள் நான்கு இருந்தன என்று அபிப்பிராயப்படுகின்றனர். அவ்வேதங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்று பெயர் பெற்றிருந்ததாகவுங் கூறுகின்றனர். கடல்கோளினுல் பல நூல்கள் அழிந்து விட்டன என்பதே அவர்களுடைய கோட்பாடாகும்.
நிலத்தைத் தோண்டும் இடங்களில் எல்லாம் ஒரு சிவலிங்கமோ அன்றி இந்துக்களின் ஒரு விக்கிரகமோ தான் தோன்றிக்கொண்டிருக்கின் றன. காஞ்சிப் பெரியவர்கள் ஒருமுறை, "சிவ வழிபாடு என்பது உலகம் முழுவதிலும் இருந் தது என்று சொல்லவேண்டுமே தவிர பரவியது என்று சொல்வது பிழை" என்று சொன்னுர்கள்
பின்னுல் வந்த சமயங்கள்தான் உலகம் முழுவதிலும் பரவித் தொன்றுதொட்டிருந்து வந்த சிவ வழிபாட்டினை மறைத்துவிட்டன. சிவ வழி பாடு இருந்தபடியேதான் இருந்தது. மற்றைச் சமயங்கள் எல்லாம் ஏதோ ஒரு நோக்கத்தோடு பரவின. தோண்டி எடுக்கப்பட்ட தொல்பொருள் கள் தமிழின் தொன்மை க்கும் தமிழின் பண் பாட்டிற்கும் சான்ருக விளங்குகின்றன. தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு தருமம்; தமிழ் மொழி

Page 46
سے 70 سس
யின் பண்பாடு பக்தியாகும். ஆகவேதான் நமது முன்னுேர் எம்மால் எப்பொழுதும் மறக்கவேண் டாத இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டார்கள். அவை கடவுளும் தருமமும் ஆகும். கடவுளும் தருமமும் ஒன்று, என நமது முன்னுேர் கருதினர். கடவுளுக்குப் புறம்பாகத் தருமத்தை அவர்களால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடிய வில்லை,
தருமமாகிய இடபத்தின்மீது எமது வழிபடு கடவுளாகிய சிவபரம்பொருளை ஏற்றிவைத்து ஒன்ருகப் பார்த்த பெருமை சைவ சமயத்திற் குரியது. அன்பும் சிவமும் ஒன்று எனக் கண்டது போலவே அறமும் சிவமும் ஒன்றெனக் கண் ட்னர் சைவத் தமிழர்கள். சைவ நீதி என்று கடவுளை அழைத்த பெருமை நமது சமயத்திற் குரியதாகும்.
உலகம் முழுவதிலும் தமிழினம்
இத்தகைய தமிழினம் எல்லாத் தேசங்களி லும் மிக இழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருப் பது மனவருத்தத்திற்குரிய ஒன்ருகும். இதற் குக் காரணம் தமிழன் தருமத்தை மறந்துவிட் டமையாகும். தன்னுடைய தனித்துவத்தையும் இழந்துவிட்டான். இதனுல் தன்னலம் தலை யெடுத்துப் பரநலம் அழிந்துகொண்டே வருகின் றது. உயர்ந்த வழிபாட்டைச் செய்து வந்த தமிழணுே உருக்குலைந்து வேற்றுமொழி பேசுபவ ணுகி, வேற்றுச் சமயக் கொள்கைகளைத் தன் னகத்தே பொருந்துபவனுக மாறிவிட்டான்.

உலகத்தில் முதன் முதல் தோன்றிய மொழி களில் தமிழும் ஒன்று என்பதை மொழி ஆராய்ச்சி யாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். உலகத் தில் முதன் முதல் தோன்றிய மதமும் சைவம் என்பதை எல்லா மத ஆராய்ச்சியாளரும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். அதேபோல் உலகில் நாக ரிகம் அடைந்த சமூகங்களில் தமிழ்ச் சமூகம் காலத்தால் முந்தியது என்பதைச் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட் டத் தவற வில்லை.
அயல் நாடுகளில் சென்று இந்நிலையை எண்ணிப் பார்க்கும்போது தமிழன் என்னதான் பாவஞ் செய்தாளுே என்று எண்ணத் தோன்று கிறது. உலகில் எல்லாச் சமூகத்தவருக்கும் ஒரு இராச்சியம், ஒரு தேசம், ஒரு மாகாணம், ஒரு கட்டுக்கோப்பு இருப்பதைக் காண்கிருேம். தமி ழனுக்கு என்று இன்றைய உலகில் எதுவுமே இல்லை.
இன்றைய உலகில் தமிழ் இனத்திற்கென்று தனியான ஒரு உலக அமைப்பு ஏற்படவேண் டும். “அதில் எல்லாத் தேசங்களிலுமுள்ள தமி ழர்களின் பிரதிநிதிகள் விகிதாசாரப்படி இடம் பெறவேண்டும். உலகின் எந்த ஒரு மூலையி லாயினும் தமிழர்களுக்கு இனவாரியாகத் துன் பம் ஏற்படும்போது இந்த அமைப்பு முன்வந்து அநீதியை உலகுக்கு எடுத்துக்காட்டி நீதி கோரிக் குரல் எழுப்பவேண்டும். இன்று தமிழர்கள் எங்

Page 47
سسه , 72 س
கெங்கு வாழ்கின் ருர்களோ அங்கங்கெல்லாமி அவர்கள் வாழ்கிற தேசத்திற்கு நம்பிக்கை 2 - 60oL u 6) u li tis6T r 5 வாழவேண்டும். பெரும் பான்மைச் சமூகம் நீதியைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் சிறுபான்மைச் சமூகம் கவலையின்றி வாழலாம். பெரும்பான்மைச் சமூகம் நீதியி னின்று தவறுமானுல் சிறுபான்மைச் சமூகம் பல இன்னல்களுக்காளாக நேரிடும். அத்தருணங் களில் உலக அமைப்பு அநீதியை எடுத்துக் காட்டி நீதியை நிலை நிறுத்த முடியும்.
இந்த விடயத்தில் இந்தோநேசிய அரசாங் கமும் அங்குள்ள தமிழர்களும் புத்திசாலித்தன மாக நடந்துள்ளார்கள் என்றே கூறவேண்டும். 6) is 6d அடிப்படையாகக் கொண்டு அரசிய லமைப்பை ஏற்படுத்திக் கொண்டதால் சிறு பான்மை இனத்தினருக்குச் சட்டரீதியான பாது காப்பு எந்த இடத்திலும் காணுேம். இந்தோ நேசியாவில் தமிழ்ச் சமுதாயம் என்ற ரீதியில் எடுத்துக்கொண்டால் தமிழர்கள் இந்தோ நேசியா வின் சனத்தொகையில் ஒருவீதந்தானுமில்லை. இந்தோநேசியா மதத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பதால் இந்தோநேசியத் தமிழர்கள் அங் குள்ள இந்துக்களோடு தம்மைப் பிணைத்துக் கொண்டார்கள். இந்தியாவுக்கு அடுத்தபடியாக் அதிகமான இந்துக்கள் வாழும் பிரதேசம்' இந்தோநேசியாவுாகும். ஆகவே இந்தோநேசி யத் தமிழர்கள் இந்தோ நேசியாவில் மதத்தால்

مسے 73 سے
இரண்டாவது இடத்தைப் பெற்ற இந்துக்களோடு சேர்ந்தபடியினுல் இந்தோநேசியாவில் இரண் டாவது பெரும்பான்மையினராக வாழுகின்றனர். இந்து சமயப் பாதுகாப்பில் இந்தோ நேசியத் தமிழர்கள் தகுந்த இடத்தைப் பெற்றுக்கொண் டனர்.
பாலி இந்துக்கள்
பாலி என்பது ஒரு தீவு. அங்கு வாழும் ஒன்றரைக் கோடி பேரும் இந்துக்களே. வேற்று மதத்தவர்கள் பார்வையாளர்களாக இருக்கிறர் கள். ஆணுல் நிரந்தரவாசிகளாக இருப்பவர்கள் அத்தனை பேரும் இந்துக்களே. ஆணுல் அவர்க ளுடைய மொழி இந்தோநேசிய மொழியாகும். உலகம் முழுவதிலும் பஞ்ச மாபாதகங்களை நீக்கி இந்து தர்மத்தைக் கடைப்பிடித்து வாழும் ஒரு சமூகம் உண்டென்ருல் அது பாலித் தீவிலுள்ள இந்துக்களாகும். கொலை, களவு, கள், காமம், பொய் ஆகிய பஞ்ச மாபாதகங்களையும் ஒழித் து பஞ்சசீலத்தைக் கடைப்பிடிக்கின்றனர். பாலி
டிக்கும் பஞ்சசீலக் கொள்கையே முக்கிய காரணமாகும்.
கோட்டில் குற்றப்படுதலும் சி  ைற க்கு ச் செல்லுதலும் அவர்களுடைய வாழ்க்கையில் காண முடியாது. மறியற்கூடங்களில் மனிதர் இல்லை. குற்றவாளிகளைத் தேடி அலையும் வேலை பொலிசாருக்கு இல்லை. சட்டத்தரணிமார் இருந்

Page 48
سے 74 س
துமி அவர்கள் அங்கு வேலை செய்வதில்லை. அவர்கள் வேறு இடங்களில் சென்று தொழில் புரிகிறர்கள். இந்தோநேசிய அரசியலில் சிறு பான்மையினருக்குப் பே ா தி ய பாதுகாப்பு உண்டு. எல்லா மக்களும் யாதோர் பயமுமின்றி வாழும் வாழ்வுக்கு முக்கிய காரணம் அரசியலார் கடைப்பிடிக்கும் பஞ்சசீலக் கொள்கையாகும்.
உலக யாத்திரீகர்கள் எவ்வித பயமுமின்றி யாத் திரை செய்யும் இடம் பாலித் தீவு ஒன்றே யாகும். இன்றைக்கு மூன்று நான்கு தலைமுறை கதிர்காமம் செ ல்ப வர் க ள் ஏதாவது ஒரு பொருளைத் தவற விட்டுவிட்டால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. காரணம் அதனைக் கண்டெடுத்தவர் கோயிலுக்குப் பின்னுல் உள்ள அரச மரத்தில் கட்டித் தொங்கவிட்டுவிடுவார். பொருளுக்குரியவர்கள் அங்கு வந்து அதனைப் பெற்றுக்கொள்வார்கள். இதேபோன்ற ஒரு நிலை யைப் பாலியிலுமி காணக்கூடியதாக இருக்கின் றது. அதாவது யாத்திரீகர்கள் ஒரு பொருளை ஒரு இடத்தில் வைத்துவிட்டுச் சென்று பின்பு எந்த நேரம் வந்தாலும் வைத்த பொருள் வைத்த இடத்திலேயே இருக்கும். மேலைத் தேசத்தி லுள்ள யாத்திரீகர்கள் பெருந்தொகையாகப் பாலித் தீவுக்கு வருகின்றர்கள். அவர்களோடு பாலித் தீவு மக்களுக்கு வேண்டாத சில பழக்க வழக்கங்களும் வந்துவிடுகின்றன. அதனுல் அவர் களுக்கென்றே கடற்கரை ஓரமாக ஒரு பகுதியை ஒதுக்கி விட்டுள்ளார்கள். யாத்திரீகர்கள் நீச்சல்

- 75 m
உடையுடன் வெயில் காய்வது போன்றவை அந் தப் பிரத்தியேக எல்லைக்குள் செய்யலாம். ஆணுல் மற்றைய எந்த இடங்களிலும் அப்படிச் செய்ய முடியாது. தமது நாட்டுக்கு வரும் யாத்திரீகர் களைத் திருப்தி செய்வதே இந்த ஏற்பாட்டிற்கு முக்கிய காரணமாகும்.
வாகனம் ஓட்டிகள் போக்குவரவுச் சட்டங் களின்படி நடந்து கொண்டாலும் சில சந்தர்ப் பங்களில் அவர்களையும் மீறி, காத்திராப் பிர காரமாக விபத்துக்கள் நேர்ந்து விடுவதுண்டு. இத்தகைய சந்தர்ப்பங்களில் வாகனம் ஒட்டிகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேர்ந்தால் அத் தகையவர்கள் சிறைச்சாலைக்குச் சென்றுதான் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ப தில்லை. காலையில் சென்று கையொப்பம் இட்டு விட்டுத் தனது தொழிலுக்குச் செல்லலாம். தொழில் முடிந்து வீடு திரும்பும்போது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட்டுவிட்டுத் திரும் பலாம். ஒருநாளைக்கு இருமுறை பொலிஸ் நிலை யம் சென்று கையொப்பம் இடுதல் ஒன்றே அ வ ரீ க ஞ க்கு ரிய சிறைத்தண்டனையாகும். பாலித் தீவிலுள்ள மறியற்சாலைகள் மூடிக்கிடக் கும் அதே நேரத்தில் மற்றைய தேசங்களில் மறியற்சாலைகள் போதவில்லை என்ற குரல்கள் ஒலிக்கக் காண்கிருேம்.
பாலி இந்துக்கள் இந்தோ நேசியாவின் எந்/ தப் பகுதியில் வசித்தாலும் எந்தப் பகுதியில்

Page 49
سے 76 ہے
தொழில் பார்த்தாலும் அவர்கள் தங்கள் தரு மத்தினின்று தவறுவதில்லை. இது உண்மைதான என்று அறிவதற்காகப் பதினைந்து ஆண்டு களுக்கு முன்பு இந்து சமயப் பிரதிநிதி ஒரு வரும், இஸ்லாமியப் பிரதிநிதி ஒருவரும், புத்த சமயப் பிரதிநிதி ஒருவரும், கிறிஸ்தவ சமயப் பிரதிநிதி ஒருவருமாக நால்வர் பாலித் தீவு சென்று தம்மை யாரென்று காட்டிக்கொள் ளாமலே அங்குள்ள மக்களின் ஒழுக்கம்பற்றிப் பரிசீலனை செய்துள்ளனர். அவர்கள் நால்வ ருடையவும் ஏ கோபித்த முடிவு ஒன்ருகவே இருந்தது. அதாவது உலகம் முழுவதிலும் விபச் சாரம் செய்பவர்கள் இல்லாத நாடு ஒன்று உண்டு என்ருல் அது பாலித் தீவு மாத்திரமே என்றும் விபச்சாரம் செய்யாத சமூகம் ஒன்று உண்டு என்ருல் அது பாலி இந்துக்கள் மாத் திரமே என்ற முடிவுக்கும் வந்தனர்.
உலகிலுள்ள நல்லொழுக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு இடத்திலே இருக்கின்றன என்ருல் அது பாலித் தீவாகும். பிரமதேவன் தனது படைப்பிலே அணு அணுவாக அழகை ஒன்றுசேர்த்து, திலோத்தமை என்ற தெய்வப் பெண்ணைப் படைத்தான் என்ருெரு கதை உண்டு. அதுபோல நல்லொழுக்கம் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து பாலித் தீவைப் படைத்துள்ளான் என்றே சொல்லவேண்டும்,
இத்தகையதொரு சமூகத்தை உருவாக்கி ராமராச்சியம் காணவேண்டுமென்று மகாத்மா

காந்தி அடிகள் பல தியாகங்களைச் செய்து பாடுபட்டார். அவருடைய கனவு நனவாக வில்லை. இந்தப் பாலித் தீவை வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று பார்க்கும் வாய்ப்பும் காந்தியடிகளுக்குக் கிடைக்கவில்லை. இத்தகைய நல்ல எண்ணங்களை எண்ணி அவற்றையே செயல்படுத்த எண்ணிய காந்தியடிகளுக்குக் கடைசியில் கிடைத்த பரிசு துவக்குச் சூடாகும்.
இயேசு, முகம்மது, புத்தர் போன்றவர்களும் இதற்காகவே தமிமை அர்ப்பணஞ் செய்துள் ளனர். இக்கலியுகத்திலும் இப்படிப்பட்டதொரு சமுகம் இருக்கிறது என்பதை நினைக்கும்போதே உள்ளத்தில் ஒரு இனிமை கிளுகிளுக்கிறது. பாலி இந்துக்களின் இந்த உயர் தனிப் பண்பாட்டை இந்தோநேசிய அரசாங்கமே பாராட்டியுள்ளது. கலியுகத்திலே சத்திய யுகம் தோன்றிவிட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது.
பாலித் தீவு பற்றிய பொதுக் குறிப்புக்கள்
பாலித் தீவு கிழக்கு மேற்காக 200 கி. மீற்றர் நீளமும், வடக்குத் தெற்காக 100 கி. மீற்றர் அகல மும் உள்ளது. சிற்பங்கள் நிறைந்த தீவு. "வீதி தோறும் இரண்டொரு பள்ளி" என்று பாரதி யார் பாடினுர். அதேபோன்று வீடுதோறும் கோயில் வழிபாட்டைப் பாலியிலே காணலாம். வீட்டு முற்றங்களை அலங்கரிப்பன கோயில் களே.

Page 50
- 78 -
பாலித் தீவின் பெரிய கோயில் திரிமூர்த்தி கோயில் எனப்படும். பல இடங்களிலும் சிறிய அளவில் திரிமூர்த்தி கோயில்களே உண்டு. வீடு களிலும் திரிமூர்த்தி கோயில்கள் உண்டு. திரி மூர்த்தி என்பது பிரமா, விஷ்ணு, உருத்திரன் ஆதியோர். மூன்று பெரிய தூண் வடிவில் சிற்ப வேலைப்பாடுகள் அமைந்ததாய் இருக்கும். நடு வில் உள்ளது பெரியதாயும் பக்கங்களில் உள் ளவை சற்றே சிறியனவாயும் இருக்கும். நடு வில் இருப்பது சிவம். இரு பக்கங்களிலும் பிரமா வும் விஷ்ணுவுமாகும். எந்தக் கோயில்களுக் குள்ளேயும் சுவாமியின் திருஉருவங்கள் இல்லை.
முஸ்லீம்களின் படையெடுப்புகளும் போர்த் துக்கீசிய ஒல்லாந்தர்களின் படையெடுப்புகளும் நிகழ்ந்த காலத்திலே விக்கிரகங்களை எடுத்து மறைத்து வைத்திருக்கவேண்டும். பின்பும் அவர்களுக்குப் பயந்து விக்கிரகங்களைக் கோயி லில் வைக்காமலேயே வணக்கம் செலுத்தியிருக்க வேண்டும்.
வீட்டில் நடக்கும் பூஜைகளில் இறைவனின் திருவுருவங்களும் திருவுருவப் படங்களும் இடம் பெறுகின்றன. பிரம்மகாயத்ரி எல்லோராலும் செபிக்கப்படுகின்றன. பிரம்மகாயத்ரி காலையில் 108 முறையும் மாலையில் 108 முறையும் செபம் செய்யும் வழக்கம் அவர்களிடத்துக் காணப்படு கின்றன. இதனுல்தான் அவர்களிடத்து ஒரு தேஜஸ் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

- 79 -
பாலியில் ஒரு பண்டிதரைப் பார்க்கச் சென் றிருந்தேன். எங்கள் ஊரில் இலக்கிய இலக் கணத்தில் பாண்டித்தியம் உடையவர்களையே பண்டிதர் என்று சொல்வது மரபு. அங்கு அப் படியல்ல. சமய ஞானம் பெற்றவர்களாகவும் அவற்றில் பயிற்சி உடையவர்களாகவும் மக்களை யெல்லாம் ஒன்றுபோல் கருதிச் சேவை செய் பவர்களாகவும் உடையவர்களுக்குத்தான் அரசாங் கம் “பண்டிதேயா" என்ற பட்டத்தைக் கொடுக் கின்றது.
பிராம்மண, சத்திரிய, வைசிய, குத்திரர் ஆகிய நான்கு வர்ணத்தாரும் இருக்கின்றனர். இவை நான்கும் அங்கு தவிர்க்க முடியாத வர்ணப் பிரிவினைகள் ஆகும். திருமணம் போன்றவை ஒரு வர்ணத்தை விட்டு மற்ற வர்ணத்தவரோடு செய்வதில்லை. அப்படி வர்ணத்தை விட்டுச் செல்பவர்களை அன்றைக்கே எல்லாத் தொடர்பு களையும் நீக்கி விட்டுவிடுவார்கள். பின்பு அவர் கள் தாய் தந்தையர் என்று கருதியோ வேறு முறை கொண்டாடியோ வந்து சேர்ந்துகொள்ள முடியாது. மரணத் தறுவாயிலும் அவர்கள் அனு மதிக்கப்படுதில்லை.
அடியேன் பார்க்கச் சென்றிருந்த பண்டிதர் ஒரு பிராமணர், ஆணுல் புலால் உண்பவர், எங்கள் ஊரில் எந்தப் பிராமணரும் புலால் உண்ப தில்லை என்றேன். அவருடைய முகத்தில் ஆச் சரியம் ஏற்பட்டதைப் பார்த்தேன். நான் ஒரு

Page 51
- 80 -
சூத்திரன் ஆணுல் நான் புலால் உண்பதில்லை. புலால் உண்ணுகிறவர்கள் வீட்டில் நாங்கள் சாப் பிடுவதில்லை என்றேன். இன்னும் ஆச்சரியத் தோடு நோக்கினர். எங்கள் ஊரில் புலால் உண் பவர்களைப் புலையர் என்றுதான் சொல் வார்கள். நான்காவது வர்ணத்தவராகிய சூத்திரர் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாரும் விவசாயிகளே, மற்றைய மூன்று வர்ணத்தாருக்கும் உணவு கொடுத்து அவர்களை வாழவைக்கும் சூத்திர தாரிகள் இந்த நாலாவது வர்ணத்தவர்கள். ஆத லால்தான் இவர்களைச் சூத்திரர் என்று அழைக் கிருர்கள் என்றேன்.
புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். இன்று மத் தியானம் எங்கள் வீட்டிலே சாப்பிட வேண்டும். சாப்பிடுவீர்களா? என்று கேட்டார். சுத்தமான பாத்திரங்களில் மரக்கறி ஆக்கித் தந்தால் சாப் பிடலாம் என்றேன். நாங்கள் புலால் ஆக்குகிற பாத்திரங்கள் வேருகத்தான் வைத்துக் கொள் வோம். எல்லா நாளுமீ புலால் உண்பது இல்லை என்ருர், வாரத்திற்கு இரண்டு நாட் கள் மாத்திரம்தான் முட்டை அல்லது மீன் மாத்திர மீ ஆக்கப்படும் என்றர்.
அடியேனுடன் உடன் வந்த இருவர் அவர் களில் மூவருமாக ஆறுபேர் உட்கார்ந்து சாப் பிட்டோம். எல்லாருக்கும் உணவு வாழை இலை யில்தான் பரிமாறப்பட்டது. சாப்பிடுவதற்கு முன்பாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்து

-81 -
சாப்பிட்டோம். அவர்களும் அப்படியேதான் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து சாப்பிட்டார் கள். புலால் உண்ணும் தினங்களிலும் இப் படிச் செய்வீர்களா எனக் கேட்டேன். இல்லை என்ருர், எதை உண்டாலும் இறைவனுக்கு அர்ப் பணம் செய்து தான் சாப்பிட வேண்டுமென்று வேதங்கள் கூறுகின்றன. இறைவனுக்கு அர்ப் பணிக்கப்படாத உணவு மலத்திற்குச் சரியானது, அதனை உண்ணக்கூடாது என்று வேதங்கள் கூறுகின்றன என்றேன். என்ருலும் புலாலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய எனது மனம் சம்மதிக்கவில்லை என்றர். அப்படியா ஞல் இறை வனுக்கு அர்ப்பணம் செய்யும் உணவை நாம் உண்டால் என்ன என்று கேட்டேன். உணவு பரிமாறிக்கொண்டிருந்த அவரது மனைவியும் மக ளும் நாங்கள் இன்றுதொடக்கம் மரக்கறியைத் தவிர வேறு உண்பதில்லை என்று உறுதிமொழி கூறினுர்கள் . இனிமேல் பாலித் தீவுக்கு அடி யேன் வரும்போதெல்லாம் உங்கள் வீட்டில்தான் எனக்கு உணவு என்றேன். நீங்கள் இனிமேலும் எப்போதும் வரவேண்டும் என்பதற்காகவே எங் கள் குடும்பம் தாவர போசனிகளாக மாறிவிட் டது என்று மிக மகிழ்வுடன் கூறிஞர்கள். அடி யேனுக்கும் பெரிய மகிழ்ச்சி.
பாலித் தீவு முழுவதும் பச்சைப்பசேல் என் றிருக்கும் காட்சி மிக ரம்மியமானது. பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்றிருக்கும் நெல் வயல் கள், தென்னஞ் சோலைகள், தென்னங் குலைகள்

Page 52
மண்ணிற் பொருந்தக் காய்த்து நிற்கும் காட்சி மிக அழகானது. சுமார் 10 கி. மீற்றர் தூரத் திற்கு வீதியின் இரு புறங்களிலும் திராட்சைப் பந்தல்கள் தனி ஒரு காட்சி. வீடு இடங்கொண்ட பகுதியைத் தவிர மற்றைய நிலப் பரப்பு முழு வதும் ஒரே திராட்சைப் பந்தலாகவே காணப் பட்டது.
பெளர்ணமி தினம் வழிபாட்டு நாட்களுள் மிகச் சிறந்தது. எல்லாத் தெய்வங்களுக்குமே விசேட வழிபாடு நடக்கும் தினமாகும். வீடு களிலிருந்து கோயிலுக்கு வரும் போது தத் தமக்கு விருப்பமான உணவுப் பண்டங்களைத் தயாரித்துக் கொண்டுவந்து இறைவன் சந்நிதி யில் படைத்து வழிபாடு நடத்துவர். குருவாக இருப்பவர் முக்கியமாகப் பிரம்மகாயத்ரி மந்தி ரத்தைச் செபித்துப் பூஜை நடத்துவார். பூஜை முடிந்ததற்கடையாளமாக உணவுப் பண்டங்கள் மீது தீர்த்தம் தெளிப்பதோடு வந்திருந்தவர்கள் மீதும் தீர்த்தம் தெளித்து, தீர்த்தம் பருகவுங் கொடுக்கப்படும்.
பக்தர்கள் செல்லும் நேரங்களில் எல்லாம் பூஜையும் வழிபாடும் நடைபெறும். ஒரு நாளைக்கு இத்தனைமுறை இன்ன நேரம் என்ற கணக்கு இல்லை. திரிமூர்த்தி கோயிலுக்குப் பத்துப் பூசகர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் பெண். மற்ற ஒன் பது பேரும் ஆண்கள். அவர்களுடைய பெயர் கள் பின்வருமாறு:

- 83 -
1. மங்கு தம்பக் - பெண் 2. மங்கு சுகெனுடி - ஆண் 3. மங்குருமி 99 4. மங்கு பூரீனுசா 19 5. மங்கு சுதாமதா 99 6. மங்கு முன் டி 7. மங்கு பூரீவேந்தன் 8. குஸ்டி மங்கு நுரு 9. குஸ்டி மங்கு சீதமன், 10. மங்கு கந்தன் 99
ஆண் பெண் இரு பாலாருடைய பெயர்களி லும் மங்கு என்ற சொல் இடம்பெறுவதை முக் கியமாகக் கவனிக்கலாம். மங்கு என்ற சொல் அவர்களுக்குத் தெய்வத் தன்மையை விளக்கும் சொல்லாகும். w
அம்புல் தீர்த்தம்
தேவேந்திரன் கோயில் என்பது ஒன்று உண்டு. இக்கோயில் 'கம்பசிறிங்" என்ற கிரா மத்தில் உள்ளது. கோயிலின் உள்ளே ஊற் றெடுக்கும் தண்ணிர் ஓடிவந்து குளம்போல நிற் கிறது. இக்குளமே அம்புல் தீர்த்தம் அல்லது தீர்த்த அம்புல் என்று அழைக்கப்படுகிறது. கோயிலில் ஊற்றெடுக்கும் இத்தீர்த்தம் பதினைந்து குழாய்கள் மூலம் குளத்தை நிரப்புகிறது. பல வித நோய்களை நீக்குவதாக தீேகம், மக்களும் அத்தீர்த்தத்தை நல்ல வழியில் பயன்படுத்துகின் றனர்.

Page 53
ܚ- 84 ܚܗ
இத்தீர்த்தக் கரையில் இருபத்தைந்து பேர் வரையில் யாத்திரீகர்களை வரவேற்பதற்காகக் காத்து நிற்கின்றனர். கையில் பலவித நிறங் களை உடைய துண்டுகள் வைத்திருக்கின்றனர். யாத்திரீகர் வந்தவுடன் அரையில் ஒரு துண் டும் தலையில் ஒரு துண்டுமாகக் கட்டிவிடுகின் றனர். மேல்நாட்டு யாத்திரீகர் அவற்றைக் கட் டிக்கொண்டு கமெருவுக்கு முன்னுல் நிற்கின் றனர். தேவேந்திரன் கோயிலுக்குள் போகிற வர்கள் இப்படித்தான் போக வேண்டும் போலிருக் கிறது என்று மேல்நாட்டு யாத்திரீகர் எண்ணு கின்றனர். இவர்கள் கட்டும்போது அவர்களும் மகிழ்வுடன் விரும்பி ஏற்றுக்கொள்ளுகின்றனர். அடியேன் வேட்டியும் உடுத்து மடித்த சால்வை யும் அணிந்திருந்தபடியிஞல் என்னிடம் யாரும் வந்து நெருங்கவில்லை.
எல்லாம் பார்வையிட்டு யாத்திரீகர் திரும்பி வந்தவுடன் தாம் கட்டியவற்றைத் தாமாகவே அவிழ்த்து எடுப்பதோடு உடனே பணமும் பெற் றுக்கொள்கின்றனர். இப்போதான், பணம் சம் பாதிப்பதற்கு இதுவும் ஒரு வழி என்பதை யாத் திரீகரால் புரிந்துகொள்ள முடிகின்றது. எவ்வளவு குறைந்த தொகையைக் கொடுத்தாலும் மகிழ் வுடன் பெற்றுக்கொள்ளுகின்றனர். இவ்வளவு தரவேண்டும்; அவ்வளவு தர வேண்டும் என்று அடம்பிடிப்பதில்லை.
இக்கோயில்-கி.பி 962 ஆம் ஆண்டில் கட்டப் பட்டதாகத் தெரிகிறது. பத்திரா இந்திரா என்

سے ) 85 سے
பவரால் இத்தீர்த்தம் உண்டாக்கப்பட்டது. இக் கோயில் கட்டுவதற்கான திட்டம் திரிமூர்த்தி கோயிலிலேயே உருவானது. ஒரு இடத்தில் ஒரு புதிய கோயில் அமையவேண்டுமானுல் ஒரு புனித கோயிலிலோ அன்றிப் புனித இடத்திலோ பெரியவர்கள் பலர் ஒன்று கூடி அதைப்பற்றித் தீர்மானிப்பது வழக்கம். நல்ல இடத்திலே இருந்து உருவாகும் ஆலோசனை நல்ல முறையில் அமை யும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. இப்படியான எண்ணத்தோடு திரிமூர்த்தி கோயி லில் உருவானதே தேவேந்திரன் கோயிலும் அம்புல் தீர்த்தமுமாகும். பத்திரா இந்திரா என்ற பாலி அரசனுடைய முழுமுயற்சியே இந்தத் தேவேந்திரன் கோயிலும் அம்புல் தீர்த்தமுமாகும். இத்தீர்த்தத்தை டாக்டர்களால் கைவிடப்பட்ட நோயாளர்களுக்கு மந்திரித்துக் கொடுத்து நோய் நீக்கம் கண்டிருக்கிருர்கள். புதுநெல் விதைக்கும் போது இத்தீர்த்தத்தை எடுத்து நெல்லில் தெளித்துவிட்டு வயலில் விதைத்தால் அந்த ஆண்டு விளைவு கூடியிருப்பதாகக் கூறுகிருர்கள். புது வீடு கட்டிக் குடி புகுபவர்கள் இத்தீர்த்தத் தைக் கொண்டுவந்து தெளித்தே சாந்தி செய் கின்றனர். மக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைக ளோடும் இத்தீர்த்தம் இரண்டறக் கலந்துள் எTஆகு
பாலியில் கல்யாணங்கள் பண்டிதேய வின் தலேமையில் நடைபெறும். கல்யாணமான பெண் கள் தமது கூந்தலைச் சுருட்டி முடிவஈர்கள்.

Page 54
- 86 -
இதைக் கொண்டுதான் ஒரு பெண் கல்யாண மான வளா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.
மரண வீடுகளில் அழும் வழக்கம் உண்டு. அந்திமக் கிரியைகள் நான்கு 8ந்து மணித்தியா லம் வரும். பெருந்தொகைப் பணம் செலவு நடத்துவர். பெரும்பாலோர் பிரேதங்களை எரிக் கும் வழக்கம் உடையவர். சிலர் புதைத் தாலும் வசதி வரும்போது புதைத்த பிரேதத்தைக் கிளறி எடுத்து நெருப்பில் எரிக்கும் வழக்கமும் உண்டு, மரண வீட்டுத் துடக்கு என்பது மூன்று நாட் களுக்கு மாத்திரமே. அந்திமக் கிரியையும் பண்டி தேயாவினுல்தான் நடத்தப்படும். பாலியில் பிதி ருக்கள் வழிபாடு முக்கிய இடம் பெறுகின்றபடியி ஞல்தான் அந்திமக் கிரியைகளும் முக்கிய இடம் பெறுகின்றன. m
வீட்டில் குழந்தை பிறந்தால் 3 நாட்கள் மாத்திரம் துடக்குக் காப்பவர்கள் உண்டு. சிலர் 12 நாட்கள் துடக்குக் காப்பார்கள். இன்னுஞ் சிலர் 3 மாத காலத்திற்குத் துடக்குக் காப்பார். இவையெல்லாம் புலனடக்கத்தை அடிப்படை யாகக் கொண்டே அமைந்தன என்று பெரியவர் ஒருவர் கூறிஞர். குழந்தையின் முடி ஒன்றரை வருடங்களின் பின் தா ன் வெட்டவேண்டும். பெரும்பாலும் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர் கள் தெய்வீகமாய் அமைந்திருக்கும். தற்காலத் தில் சினிமா நட்சத்திரங்களினுடைய பெயர்களும் சாதாரணமாக வழக்கத்திற்கு வந்துவிட்டன.

- 87 m
கிந்தாமணி
கிந்தாமணி என்பது ஒரு இடத்தின் பெயர் அங்கே தண்ணீர் வற்ருத குளம் ஒன்றுண்டு. இக்குளத்தின் பெயர் லேக் பத்தூர் என்பது. நாலு பக்கமும் மலையிஞல் சூழப்பெற்ற குளம். இக் குளத்தின் அக்கரையில் இரண்டு விசேடங்கள். ஒரு பக்கத்தில் ஒரு வெந்நீர் ஊற்று. அந்த வெந்நீர் குளத்துடன் வந்து கலக்கின்றது. அங்கு பலரும் வந்து எந்த நேரத்திலும் நீராடு வர். இந்த வெந்நீர் ஊற்றில் நீராடினுல் தோல் சம்பந்தமான நோய்கள் நீங்குகின்றனவாம். வெந்நீர் ஊற்றுக்கு நேர் எதிரே ஒரு கிராமம் தெறுணியன் என்பது அக்கிராமத்தின் பெயர். கிராமங்களைக் கம்பம் என்ற பெயரால் அழைப் பர். கம்பு என்ற தமிழ்ச் சொல்லிலே இருந்து பிறந்ததுதான் கம்பம். அதாவது முதன் முதல் குடியேறிய மக்கள் தங்கள் தங்கள் நிலங்களுக்கு அடையாளமாகக் கம்புகளை ஊன்றினுர்கள். அதி லிருந்து வந்ததே கம்பம்
அக்கம்பத்தில் முக்கியமாகத் திரிமூர்த்தி கோயில் ஒன்றுண்டு. கிராமக் கந்தோர் ஒன்றும் இருக்கிறது. கந்தோரின் முற்றத்திலே T. W. ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சாயந்தரமானதுமீ அக்கிராமத்து மக்கள் எல்லோரும் கிராமக் கந் தோர். முற்றத்தில் ஒன்றுகூடுவர். எல்லாருஞ் சேர்ந்து T. W. பார்ப்பர். கிராமத்துப் பிரச் சினைகளைப்பற்றியுமீ அங்கு பேச்சு நடக்கும்.

Page 55
- 88 -
இக்கிராமத்தின் ஒரு கோடியில் குளக்கரை ஒரமாகப் பாரிய மரம் ஒன்றிருக்கிறது. விழுது கள் உண்டு. ஆணுல் அது ஆலமரம் அல்ல. அம்மரம் புலால் உண்ணும் தாவர வர்க்கத் தைச் சேர்ந்தது. அக்கிராம மக்களில் யாரா வது இறந்தால் அம்மரத்தின் கீழே ஒரு குழியை வெட்டிப் பிரேதத்தை அக்குழியில் இட்டுச் செல் வர். ஆணுல் குழி மண்ணுல் மூடப்படுவதில்லை இரண்டு மூன்று தினங்கள் கழித்து வந்து பார்த் தால் வெறும் எலும்புக்கூடே காணப்படும். 2, 3 எலும்புக்கூடுகளைப் பார்த்தோம். ஏதாவது நாய் நரிகள் உண்ணுகின்றனவோ என்ருல் இல்லை என்றே கூறவேணடும்.
அப்பிரேதத்திற்கு உடுத்திய உ  ைட க ள் யாவும் அப்படியே இருக்க உள்ளே எலும்புக் கூடுகள் மாத்திரம் உள்ளன. அம்மரத்தின் வேர் கள் பிரேதத்தின் இறைச்சிப் பாகத்தை உறிஞ்சி எடுத்துவிடுகின்றன. இந்த நிகழ்ச்சியைக் காட்டி யாத்திரீகர்களிடம் அக்கிராம மக்கள் பணம் பறிக்கின்றனர். எம்மிடம் பணம் கேட்க வந்த முதியவரிடம் நீங்கள் ஏன் மக்களை ஏமாற்று கின்றீர்கள்? இதிலும்பார்க்க நீங்கள் எல்லாரும் சேர்ந்து கோயிலில் வழிபாடு நடத்தினுல் யாத் திரீகரும் அதில் பங்குபற்றித் தம்மாலியன்ற பணமும் கொடுப்பார்களே என்றேன். அதற்கவர் வருகின்ற யாத்திரீகர்களில் பெரும்பான்மை யோர் இதைத்தரன் கூடுதலாக நம்புகின்றனர். மரத்தையும் எலும்புக்கூட்டையும் படம்பிடிக்கின்

سے 89 سے
றனர். கோயிலைப் படம்பிடிப்பார் யாரும் இல்லை. ஆதலால்தான் நாமும் எமது வயிற்றை வளர்ப் பதற்கு இவ்வழியைப் பின்பற்றுகிருேம் என்ருர்,
Frriage
சாங்கி என்பது ஒரு கிராமம். மரச் சோலைகள் நிரம்பிய ஒரு காட்டின் மத்தியில் ஒரு கோயில், அக்கோயில் சரஸ்வதி கோயில் என்று அழைக் கப்படுகின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறை பூஜை நிகழும். சரஸ்வதிதேவியின் படத்திற்கே பூஜை நடைபெறுகிறது. சரஸ்வதிதேவியின் கைகளில் வீணை, ஏடு, ஜெப மாலை, தாமரைப் பூ என்பன இருக்கின்றன. சரஸ்வதிதேவி மயில்மீது வீற் றிருக்கின்றர். மயிலின் கால்களுக்குக் கீழே பாம்பு படம் எடுத்தவண்ணம் கிடக்கிறது. ஒரு மணி நேரம் வரை பூஜை நடைபெறும்.
இங்கு செல்லும்போது குரங்குக் கூட்டங் கள் நம்மை வரவேற்கின்றன. அங்கு செல்பவர் கள் குரங்குகளுக்கு உணவாக முக்கியமாகக் கடலை வாங்கிச் செல்வர். குரங்குகள் யாத்திரீ கர்களைக் கண்டதும் தாமாகவே தோளிலும் தலையிலும் மார்பிலும் ஏறிக்கொள்ளும், கண் ணுடியைக் கழற்றிச் சென்று தான் போட்டுக் கொள்ளும். பொக்கெற்றுக்குள் கையை விட்டு அதற்குள் இருக்கும் எப்பொருளாயினும் எடுத் துச் சென்றுவிடும். அவற்றுக்கு நாம் இடையூருக இருந்தால் சீறும், கோபப்படும், கடிக்கும்.

Page 56
-90 -
சுகர்ணுே குடும்பம்
அடியேன் பார்க்கச் சென்ற பண்டிதேயாவின் வீட்டில் சுகர்ணுேவின் குடும்பப் போட்டோ ஒன்றைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சுகர்ணுேவின் தாயார் பத்மாவதி. இவர் பாலி யைச் சேர்ந்த பிராமண வம்சத்தவர். சுகர்ணுே வுக்கு நான்கு குழந்தைகள், மூத்த பிள்ளையாகிய குந்தூர் என்பவர் ஆண்; மற்றைய மூன்றும் பெண்கள். மேகாவதி, சுகுமாவதி, இராமாவதி என்பதே அவர்களின் பெயர்கள். சுகர்ணுேதான் இந்தோநேசியாவின் முதலாவது ஜனதிபதி. இவரது தாயார் இறந்தபோது இந்து சமய முறைப்படி அவரது பிரேதத்தை எரித்து அச் சாம்பலைக் கா சி க் கு அனுப்பிவைத்ததாகப் பண்டிதேயா கூறினுர். இப்பண்டிதேயா சுகர்ணுே வின் சொந்தக்காரர்.
சாந்திதாசா ஆச்சிரமம்
இந்தோநேசியா முழுவதிலும் ஒரே ஒரு ஆச்சிரமத்தைக் காணமுடிந்தது. அதுதான் சாந்திதாசா ஆச்சிரமம் ஆகும். சாந்திதாசா என்ருெரு கிராமம் பாலியில் கடற்கரையை அடுத் துள்ளது. அங்குள்ள கோயிலுக்கும் சாந்தி தாசா என்றுதான் பெயர்.
1976 ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்த அகில உலக இந்து மகாநாட்டிற்குப் பாலியில் இருந்து இரண்டு பேராளர்கள் வந்து கலந்து

-س- 91 س
கொண்டனர். ஒருவர் பெயர் புண்ணியாத்மாஜி என்பது. மற்றவர் திருமதி. ஓஹா ஆகும். திருமதி. ஒஹா அவர்கள் எங்களோடு மலேசியா முழுவதிலும் பிரயாணம் செய்து பல கூட்டங் களில் ஆங்கிலத்தில் ந ல் ல கருத்துக்களைச் சொன்னவர். அவர் ஒரு இடத்தில் வைத்து அடியேனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார் கள் , "நீங்கள் எப்போதாவது ஒரு நாளைக்குக் கட்டாயம் பாலிக்கு வர வேண்டும். வரும்போது இந்தோ நேசியன் மொழியை நன்கு கற்றுக் கொண்டு வாருங்கள். ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் பாலிக்குப் போகக் கிடைத்தது. ஆணுல் இந்தோநேசியன் மொழியைத் தான் அடியேன் கற்றுக்கொள்ளவில்லை. இந்தோநேசியன் மொழி யைக் கற்றிருந்தால் எவ்வளவு பிரயோசனமாய் இருந்திருக்கும் என்பது அங்கு சென்ற பின்தான் அடியேனுக்கு விளங்கியது.
திருமதி. ஓஹா அவர்கள் பாலிப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியை ஆக இருந்தவர்கள். ஓய்வு பெற்ற பின் மக்களுக்குச் சேவை செய்ய நாட்டம் கொண்டார். கடற்கரையை அடுத்து அமைதியான சூழ்நிலையில் ஒரு இடத்தைத் தெரிவு செய்தார், காந்தி, வினுேபாஜி இருவ ரிடமும் மிகுந்த ஈடுபாடுடையவர். அவர்க ளுடைய கருத்துக்களைப் பிரதிபலிக்கும் முறை யில் அந்த ஆச்சிரமம் அமைந்துள்ளது. ஆச் சிரம வாசிகள் 25 பேர் வரையில் இருக்கின்ருர் கள். 8ரோப்பா, அமெரிக்காவைச் சேர்ந்தவர்

Page 57
- 92 -
களும் அங்கு வாழுகின்ருர்கள். குடும்பமாகவும்
இருக்கிருர்கள். சில அணு தைக் குழந்தைகளும்
இருக்கிருர்கள். ஆச்சிரமத்தில் வாழ்பவர்கள்
எல்லோரும் பஜனை, தியானம், சத்சங்கம் தவிர்ந்த நேரங்களில் தங்களாலியன்ற ஏதாவது ஒரு தொழில் செய்யவேண்டும். அவர்களுக்குரிய
உணவு, உடை ஆதியன ஆச்சிரமத்திலேயே
உற்பத்தி செய்துகொள்ள வேண்டும்.
ஆச்சிரமச் சூழலின் அமைதி அங்கு செல்
வோர் எவரையும் கவர்ந்து இழுக்க வல்லது.
திருமதி. ஒஹா அவர்களுடைய கணவர் தமது
இல்லத்திலேயே தமது பிள்ளேகளுடன் வாழு
கின்றர். கடமைகள் முடிந்ததும் திருமதி.
ஒஹா அவர்கள் புளியம்பழமும் ஒடும்போல
வாழத் தலைப்பட்டார். நல்லதொரு வாசிக சாலேயும் ஆச்சிரமத்தில் உண்டு. அக்கம்பக் கத்திலுள்ளவர்களும் காலே, மத்தியானம், மாலே நேரங்களில் நடைபெறும் பிரார்த்தனேகளில் வந்து கலந்துகொண்டு பயன்பெறுகின்ருர்கள். பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்
நியாசம் ஆகிய நான்கு ஆச்சிரமங்களும்
எல்லோருக்கும் உரியது என்பதை நம்மவரில் பலர் மறந்துவிடுகின்ருர்கள். பிரமச்சரியத்தி லிருந்து கிருகஸ்தாச்சிரமத்திற்குச் செல்பவர்கள் அப்பாலும் இரு ஆச்சிரமங்கள் உண்டு என்
பதை மறந்துவிடுகின்ருர்கள். திருமதி, ஒஹா
அவர்கள் மக்கள் சேவையில் முன்னுேடியாக விளக்குகின்ருர்கள்.

- 93 -
உணவு எல்லோருக்கும் சாத்வீகமான சைவ உணவாகும். உணவு சாப்பிடுதற்கு முன்பு அரை மணித்தியாலம் பிரார்த்தனே நடைபெறும். பிரார்த்தனேயில் பிரம்மகாயத்ரியும், "ரகுபதி ராகவ ராஜாராம்' என்ற பாடலும் முக்கியமாக இடம்பெறுகின்றன. உணவும் கறி வகைகளும் நடுவில் இருக்கும். ஆச்சிரம வாசிகள் எல்லோ ரும் வட்டமாக உட்கார்ந்து தமக்கு விரும்பிய உணவை விரும்பிய அளவு எடுத்து உண்பர். எல்லோரும் உணவு உண்ணும் பாத்திரம் சிரட்டையாகும். ஆச்சிரம வளவுக்குள் நூற் றுக்கணக்கான தென்னே மரங்கள் நிற்கின்றன.
சாந்தி பிரம்பனன்
இது ஒரு பிரமாண்டமான கோயில். இது மேற்கு ஜாவாவில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருக்கும் கோயில் உள்ளது. சாந்தி பிரம்மா கோயில் 20x20x33 மீற்றர் அளவுள் னது. சாந்தி சிவா 34x34x47 மீற்றர் அளவுள் ளது. சாந்தி விஷ்ணு கோயில் 20x20x33 மீற்றர் அளவுள்ளது. இம்மூன்று கோயிலேயும் சுற்றி வரப் பரிவார தெய்வங்கள் நிறைய உண்டு.
சாந்தி சிவா கோயிலேச் சுற்றிச் சிவ மகா தேவா, சிவ மதகுரு, கணேசர், துர்க்கா மகா தேவி, மகாதலா, நந்தீஸ்வரா என்னும் ஆறு கோயில்கள் உண்டு. இவற்றைச் சுற்றி மொத்த மாக 240 கோயில்கள் உண்டு. தற்போது அர சாங்கம் பொறுப்பேற்று இக்கோயில்களே ப் புன

Page 58
ص: 4 9 صـد
ருத்தாரணஞ் செய்து வருகிறது. சாந்தி பிரம் பனன் கோயில் 1977 ஆம் ஆண்டில் புனருத் தாரணம் செய்யத் தொடங்கியுள்ளார்கள். அதன் வேலை பூர்த்தி அடைய 1987 ஆம் ஆண்டு ஆகும். அதன் பின்பே மற்றைய கோயில்கள் புனருத்தாரணம் செய்ய ஆரம்பிப்பர். புனருத் தாரண வேலை பூர்த்தியுறும்போது தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கோயில் பழைய தாகிவிடும். r
கோயிற் சுவர்களில் இராமாயணக் கதை களும், பாரதக் கதைகளும், பாகவதக் கதை களும், சிவனுடைய திருவிளையாடல்களும் சித் திரமாகவும் சிற்பமாகவும் இடம்பெற்றுள்ளன. சாந்தி சிவா 908 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
சாந்தி நந்தி கோயில் 13x13x22 மீற்றர் அள வில் கட்டப்பட்டுள்ளது. வாகன தேவா கோயில் 15x15x25 மீற்றர் அளவில் கட்டப்பட்டுள்ளது. சாந்தி உத்தமா கோயில் 13x13x22 மீற்றர் அள வில் கட்டப்பட்டுள்ளது. கோபுர கலசங்கள் லிங்க உருவில் அமைந்துள்ளன. இக்கோயில் அமைந்துள்ள ஊரின் பெயர் பிரம்பனன் என், பதாகும். அ ட் ட தி க் கு ப் பாலகர்களுக்கும் இங்கே கோயில் உண்டு. ஐப்பசி மாதத்தில் நான்கு நாட்கள் இராமாயண நாடகம் நடை பெறும். இதனை ஆண்டுதோறும் பெருவிழா வாகவே கொண்டாடுகின்றனர். இந்தோநேசி யரில் சாதி சமய பேதமற்று எல்லோருக்குமே பாரத, இராமாயண, பாகவதக் கதைகளில்

- 95 -
ஈடுபாடு உண்டு. இக்கதைகளில் வரும் தத்துவங் கள் மக்களின் வாழ்க்கையைப் புனிதப்படுத்து கின்றன. இந்தோநேசியாவில் தினமும் எங் காவது ஓரிடத்தில் பாரத, இராமாயணக் கதை கள் பிரவசனமாகவோ நாடகமாகவோ நாட் டிய நாடகமாகவோ நடந்துகொண்டிருக்கும்.
சிங்கசாறி என்ற இடத்திலுள்ள கோயிலும் மிகப் பழைமை வாய்ந்தது. பல இடிபாடுகளுக் கிடையே இக்கோயில்களைப் பார்க்கும்போது மிகக் கவலையாக இருந்தது. இங்கும் அகஸ் தியருடைய ஒரு கருங்கற் சிலையைப் பார்க்க முடிந்தது. மற்றைய ரிஷிகளுக்கில்லாத பெருமை அகஸ்தியர் ஒருவருக்கே காணப்படுகின்றது. அகஸ்தியர் அங்கு சென்று வசித்தபடியிஞல் மக்கள் மனதில் அவர் முக்கிய இடம் பெற்றிருக் கிருர், அரச குடும்பத்தினர் நீராடியதாகக் கரு தப்படும் , நீர்நிலை ஒன்றைக் காணக்கூடியதாக இருந்தது. அழகிய சித்திர வேலைப்பாடுகள் அமைந்த கற்களால் அது கட்டப்பட்டுள்ளது. குளத்தின் பெயர் "சாந்தி வட்டுக்கொடே" என்" 115jo
இக்கோயிலில் சரஸ்வதிதேவியின் பெரிய சிற்பம் ஒன்றைப் பார்க்க முடிந்தது. இங்குள்ள சிற்பங்கள் எல்லாமே இந்தியாவில் உள்ள சிற் பங்கள் போன்றே காணப்படுகின்றன. இந்த இடிபாடுகளுக்கிடையே துவாரபாலகர் இருவ ருடைய சிற்பங்களைப் பார்க்க முடிந்தது. இவை இரண்டுக்கும் இடையே தெரு ஒன்று செல்லு

Page 59
س- 96 --
கின்றது. அத்தெரு குறைந்தது பத்து மீற்றர் அகலமுடையதாக இருக்கும். இச்சிலைகள் இரண் டும் நல்ல சுத்தமான கருங்கல்லால் செய்யப் பட்டவை. அதனுல்தான் அவற்றை உடைக்க முடியவில்லை. எனது உயரத்திலும் பார்க்க இரண்டு அடி உயரம் கூடியவை. நான்குபேர் சேர்ந்தாலும் கட்டிப்பிடிக்க முடியாத அவ்வளவு ப ரு ம ன் வாய்ந்தவை. துவாரபாலகரைக் கொண்டே அக்கோயிலின் L 5T u Dr Gior L-LDT60r தோற்றத்தை ஓரளவு ஊகித்துக்கொள்ளலாம். அநுமார் சஞ்சீவி மலையைச் சுமந்துகொண்டு வருவதுபோன்ற இராமாயணச் சித்திரங்கள் பல அங்கு காணப்படுகின்றன.
மேடான் மாரியம்மன் கோயில்
மேடான் மாரியம்மன் கோயில் ஒரு நூற் ருண்டைக் கடந்துவிட்ட பழைமை உடையது. தற்பொழுதுள்ள இராஜகோபுரம் 1884 ஆம் ஆண் டு கட்டப்பட்டதென்று கோபுரத்திலே பொறிக்கப்பட்டுள்ளது. ஆணுல் அந்த இடத் லே மாரியம்மன் வழிபாடு சிறிய கோயில் ஒன்றில் 1800 ஆம் ஆண்டிற்குச் சமீபமாக நடை பெற்றதாகக் கர்ணபரம்பரைச் செய்திகள் கூறு கின்றன.
தமிழ் நாட்டில் தொண்டி, வஞ்சிநகர், காவிரிப்பூம் பட்டினம் ஆகிய துறைமுகங்களி லிருந்து மரக்கலங்கள் சாமான்களை ஏற்றிக் கொண்டு மலாக்கா சலசந்தியில் விற்கொடி,

سے 97 --۔
புலிக் கொடி, மீனக் கொடிகளைப் பறக்கவிட்டுப் பெருமிதத்தோடு வியாபாரம் புரிந்த காலம் ஒன் றிருந்தது. அக்காலத்தில் அறிமுகமான துறை முகங்களில் ஒன்றுதான் லபுகான் (Labuhan) என்பதாகும். இது சிறிய துறைமுகம் என் ருலும் அக்காலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது. இத் துறைமுகம் இந்தோநேசியா வில் வட சுமாத்திராவின் கிழக்குக் கரையில் அமைந்திருந்தது. இன்று வட சுமாத்திராவில் பெரிய ஏற்றுமதி இறக்குமதித் துறையாக விளங் குவது பிளாவான் (Belawan) என்பதாகும். இதற் கும் லபுகானுக்கும் இடைத் தூரம் 7 கி. மீற்றர் தூரமாகும். சுங்ாைங் டெல்லி (Sungai Deli) சங்க மத்தில் உள்ளது. அதிலிருந்து சுமார் 20 கி. மீற்றர் தூரத்தில் மேடான் நகரம் உள்ளது.
சுமார் 14ஆம் 15ஆம் நூற்றண்டிலே மலே சிய சுல்தான் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் வட சுமாத்திராவின் கிழக்குக் கரையில் வடக்கி லிருந்து தெற்கு வரை சிறுசிறு இராச்சியங்கள் அமைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். பூரீகேர் di dib:5T60T6ir (Kesultanan), grjadi 5T l' (Langkat), கேர்சுல்தானன் டெல்லி, கேர்சுல்தானன் கேர், டான்ற் (Kerdant), கேர்சுல்தானன் இந்திபுரா (Indrapura), கேர் சுல்தானன் பூரீ ஆஷாகான் (Ashakan) என்ற இராச்சியங்கள் கடற்கரையில் அமைக்கப்பட்டன. பூர்விக குடிகளாகிய பத்தாக் (Batak) காரர்கள் உட்புறமாக நகர்ந்து கொள்ள, கரையோரங்களில் இந்த இராச்சியங்கள் அமைந்
560T

Page 60
டெல்லி என்னும் இராச்சிய எல்லையில் பூர்வ குடிகளாகிய பத்தா, காரோ (Karo) இவர்களில் பல பிரிவினர்கள் உண்டு. ஒரு பிரிவினர் செம் பேரிங் (Sembring) என்று அழைக்கப்பட்டார் கள். இப்பிரிவினர்களிடம்தான் பூர்வீக குடி யேற்றக்காரருடைய பண்பாடு சிறிது தென்படு கின்றது. இந்தப் பிரிவினர்கள் தான் தம் பிரி வினரின் சின்னமாகத் தமிழ் நாட்டின் பிரிவினை களைக் காட்டும் சோழியா, பாண்டியா, மலை யாளி என்னும் பெயருடையவர்களாகக் காணப் படுகின்றனர்.
இந்த நிலையில் டச்சுக்காரருடைய வரவு ஆரம்பமானது. இவர்கள் இந்த நாட்டில் காலூன் றும் நோக்கத்தோடு வர்த்தக நிலையங்களையும் புகையிலைத் தோட்டங்களையும் ஆரம்பித்தனர்.
வெள்ளையர்கள் இங்கு வந்தபோது தமிழர் களை மலேசியாவிலிருந்து 1883 தொடக்கம் ஒப் பந்தக் கூலிகளாகக் கொண்டுவந்தனர். இந்தியா வின் பெயரிலேயே இந்த ஒப்பந்தக் கூலி கள் பதிவு பெற்றனர். பூரீ டெல்லியில் வெள்ளை யர்களால் கொண்டுவரப்பட்டுக் குடியேற்றப்பட்ட தமிழர்களுக்கும் கூலிகள் என்ற பெயரே வழங் கப்பட்டு வந்தது,
கூலிகள் என்ற முடிவின்படி இந்தத் தமி ழர்கள் பட்டணத்தின் மையத்திலிருந்து படிப் படியாக எழுப்பப்பட்டு மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சுங்ாைங்டெலி

ஆற்றங் கரையில் சிறு அம்மன் கோயிலை அமைத் துக்கொண்டு வழிபாடு செய்துவந்தனர். அந் நதிக்கு அப்பால் மேற்குத் திசையில் ஏறத்தாழ ஒரு கி.மீற்றர் தூரத்தில் சுங்கைபாபூரா (Babura) நதிக் கரையில் முருகனுக்கு ஒரு ஆலயத்தை நிர் மாணித்து, தண்டபாணி என்ற பெயரால் திருப் பணி வேலை நடைபெற்றது.
இத்தமிழர்களின் நிலை  ைய மேம்படுத்த விரும்பிய - 1850 தொடக்கம் 1890 வரை ஆட்சி புரிந்த - பூரீ சுல்தான் டெலி அவர்கள் தமிழர் களுக்கென ஒரு கிராமத்தை அமைத்துக் கொடுத் தார். அது தண்டபாணி கோயிலை வடக்காக வும், தமிழர்களின் மயானக் கரையைத் தெற் காகவும், “பயூரா" ஆற்றை மேற்காகவுங் கொண்டு அமைக்கப்பட்டது. அது ஏறத்தாழ 12 கி. மீற்றர் நீளமும் 4 கி. மீற்றர் அகலமும் கொண்டது.
அன்று குடியேறிய தமிழர்கள், தமிழர்களின் பண்பாட்டையும் இந்துக்களின் சம்பிரதாயங் களையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு ஊரை அமைத்துக்கொண்டார்கள். 1885 இல் வீ. மு. செட்டியார் அவர்கள் வட்டிக்கடை வைத்தார் கள். வெள்ளையர்களால் பிளாக் பாங்கர் (Black Banker) என்ற சிறப்பின் அடிப்படையில் தொழிலை ஆரம்பித்தார். இந்த நிலையில் உயர் திரு. மு. ரெங்கசாமி நாயக்கர் அவர்கள் 1907 யூன் மாதம் 4 ஆம் திகதி மறைந்தார். திரு.

Page 61
سے 100 ۔
மு. ரெங்கசாமி நாயக்கர் அவர்களின் அரிய முயற்சியால் மேடான் பூரீ மாரியம்மன் கோயில், பொதுமக்களின் பொருளுதவி கொண்டு 1884 இல் ஆரம்பிக்கப்பட்டது. இப்படி உருவான இக் கோயிலை அன்ருடத் தேவையான பூசைச் சாமான்களையும் சேர்த்து நல்ல முறையில் நடத் தினர். இந்துக்களின் விசேட தினங்களையும் உற்சவங்களையும் நல்ல முறையில் நடத்தினர். புரோகிதர்களை நியமித்து அவர்களைக் கொண்டு நாமகரணஞ் செய்தல், காது குத்துதல், அட் சராப்பியாசம் செய்தல், திருமணஞ் செய்தல் ஈமக்கிரியைகள் செய்தல் ஆதியன செய்வித்து வந்தார்கள்.
ரெங்கசாமி நாயக்கர் அவர்கள் தமக்குச் சொந்தமான நிலத்தையும் தான் குடியிருந்த உறுதியான இரண்டு பெரிய வீடுகளையும் கோயி லுக்கு நிரந்தர நன்கொடையாகக் கொடுத்தார் கள்,
ஆரம்பமுதலே தோட்டத்திற்குக் கூலிகளாக வந்தவர்களில் ஏதோ ஒரு அளவு தமிழ் படிக்கக் கூடியவர்கள் ஆங்காங்கே தோட்டங்களில் தமக் குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஓரளவு தமிழ் போதித்து வந்தார்கள். இதிலே சிறந்து விளங்கிய தோட்டம் பாடாங் செர்மின் (Padang Cemin) என்பதாகும். அத்தோட்டத் தண்ட லாகிய (கங்காணி) பொ. சுப்பையாபிள்ளை அத் தோட்டத்தில் பள்ளிக்கூடம் நடத்திய உபாத்

سس۔ 101 سے
தியாயருக்கு நீண்ட காலமாக ஆதரவும் அணு தாபமும், பாதுகாப்பும் அளித்து, தமிழைப் பாதுகாத்து வந்தார்கள். மேடானைத் தவிர மேடானுக்கு வெளியே வட சுமாத்திராவின் கிழக் குப் பாகங்களில் உள்ள ஊர்களில் எங்கெங்கு தமிழ் மக்கள் வாழ்ந்தார்களோ, அங்கங்கெல் லாம் மேலே குறிப்பிட்ட வழிமுறையில் தமிழ்ப் பாடசாலைகள் நடந்தேறின.
இராஜகோபுரங் கட்டியவர், கும்பகோணத் தைச் சேர்ந்த குப்பாபிள்ளை என்ற சிற்பி ஆவர். இவரே இங்கு சில காலந் தங்கி சில கல் வீடுகளையுங் கட்டியுள்ளார். சீனச் சிற்பிகளுக்குச் சமதையாகக் கட்டிட வேலைகளில் நிபுணராக இருந்தார்.
மயானக் கரை கோயிலின் சொத்தாகப் பரி பாலிக்கப்பட்டு வந்தது. இக்கோயிலை நிர்வகிக்க ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்தினுர்கள். விசேட உற்சவம் புரட்டாசி மாசத்தில் வரும் நவராத் திரி பத்து நாட்கள் ஆகும். இந்தப் பத்து நாள் உபயங்களையும் பத்துப் பிரிவினர் செய்து வந்தார்கள்.
1, பால்காரர் 6. பொற் கொல்லர் 2. சில்லறைக் கடைக்காரர் 7. மண்வினைஞர் 3. வண்டிக்காரர் 8. கல்வினைஞர் 4. தண்டல் மார்கள் 9. பண்டிதர்கள்
5. குமாஸ்தாக்கள் 10. மேஸ்திரிகள்

Page 62
முறையே இவர்கள் ஒவ்வொரு நாளைக்கு ஒவ் வொரு திருவிழாச் செய்துவந்தனர்.
தைப்பூச விழா மிகமிகச் சிறப்பாக நடை பெற்று வந்தது. இவ்விழா ஊர் மக்கள் எல் லோருஞ் சேர்ந்து நடத்தும் பொது விழாவாக அமைந்திருந்தது. மேலே குறிப்பிட்ட பத்துப் பத்துப் பகுதியினரின் தலைவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தைப்பூச விழா எப்படி நடத்துவது என்பது பற்றி ஆலோசனைக் கூட் டம் ஒன்று நடத்துவர். இதில் பணம் சேர்த் தல் முக்கிய இடம் பெற்றது. தலைவர்கள் பத் துப்பேரும் வீடுதோறும் சென்று நிதி வசூல் செய்தனர். மூன்று நாட்களுக்கு மத்தியானம், இரவு ஆகிய இரு வேளைகளுக்கும் அன்னதானம் குறைவின்றி நடந்தது. அதாவது பகல் பதி ணுெரு மணிக்கு ஆரம்பமாகும் அன்னதானம் சில சமயங்களில் இரவு பன்னிரண்டு மணிக்குத் தான் முடிவுறும்.
மேற்கூறிய வகையில் எவ்வித குறையுமின் றிக் கோயில் நிர்வாகம் நல்ல முறையில் நடை பெற்றுக் கொண்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு திரு. ப. வ. டொன்னுச்சாமிப்பிள்ளை என்பவர் தலைமைதாங்கி, கோயில் நிர்வாகத்தைச் செவ் வனே நடத்திவந்தார். இவர் ஒரு யாழ்ப்பாணத் தமிழர் . இக்காலத்தில் கோயில் எல்லைக்குள் சிவன் கோயில் கட்டப்பட்டுக் கும்பாபிஷேக மும் சிறப்பாக நடைபெற்றது. மேடான் பூரீ மாரி பம்மன் கோயிலில் இருக்கும் வழிபடு மூர்த்தி கள் பின்வருமாறு:-

سے 103 سب
1. விநாயகப்பெருமான், மூவழிகம், பலிபீடம்.
2. மாரியம்மன், பலிபீடம். எழுந்தருளி விக் கிரகமும் உண்டு. r
3. முருகப்பெருமான், மயில், பலிபீடம். எழுத்
தருளி விக்கிரகமும் உண்டு.
4. சிவலிங்கம், பிள்ளையார், உமாதேவியார்,
நந்தி, பலிபீடம், சண்டேசுவரர்.
5. திருமால், கருடாழ்வார், அநுமார், பலிபீடம்,
6. வயிரவர்.
7. நவக்கிரகம்,
8. இடும்பன்.
காலை 6 1/2 மணிக்கும் மாலை 5 1/2 மணிக்குமாக இக்கோவிலில் இருநேரப் பூசைகள் நடைபெறு கின்றன. ஒரு நேரப் பூசைக்கு சுமார் முக்கால் மணி நேரம் செலவாகும். கோயிலில் வெள்ளி தோறும் கூட்டு வழிபாடும் அருளுபதேசமும் நடைபெற்று வருகின்றன.
சுங்ாைங்டெல்லியில் இருந்த அம்மன் கோயிலை இவர்கள் கிராமம் அமைத்துக் குடியேறிய காலத் தில், மேடான் பூரீ மாரியம்மன் கோயிலுக்கு மேற்கே பபூரா ஆற்றங் கரையில் அமைத்துக் கொண்டார்கள். இதுவே இப்பொழுதுள்ள காளி அம்மன் கோயிலாகும்.
ஒவ்வொரு கோயிலுக்கும் முக்கியமாக ஒவ் வொரு பூங்கொல்லை இருந்துவந்தன. வேப்ப

Page 63
- 104'-
மரத்தையும் அரச மரத்தையும் ஒன்ருகச் சேர்த்து வைத்து அவற்றுக்குத் திருமணம் செய்து வைக்கும் வழக்கமும் இருந்து வந்தது. அரசு சிவமாகவும் வேம்பு சக்தியாகவுங் கொள் ளப்பட்டது.
1925ஆம் ஆண்டில் ஹரிஜனங்கள் கோயிலில் சமத்துவம் கோரி போராட்டம் நிகழ்த்தினர். இந்தியாவில் மகாத்மா காந்தி அவர்கள் ஹரி ஜனங்களின் சமத்துவம் கோரிப் போராட்டம் நிகழ்த்தியதன் பிரதிபலிப்பே இங்கும் நடந்த தாகும். இப்போராட்டத்தின் பேருகத் திரு. பொன்னுச்சாமிப்பிள்ளை கோயில் நிர்வாகத்தி னின்று விலகினர். இதன் பிறகு பெண்கள் கோயிலுக்கு வந்து வழிபடுவதும் நின்றுவிட் டது. இதனுல் குழந்தைகளுக்கும் கோயில் பழக் கம் தடைப்பட்டது. தாய்மார் வந்தால் தானே குழந்தைகளுக்கும் அப்பழக்கம் ஏற்படும். கால கதியில் கோயில் கும்பிடும் பழக்கமே முற்ருக மக்கள் மத்தியில் அருகிவிட்டது.
மக்கள் உண்மைகளை மறந்து கரகம் காவடி யில் நம்பிக்கை வைத்து அந்த ஆட்டபாட்டங் கள் தான் கடவுள் என்று நம்பத் தலைப்பட்ட னர். கோயில் பக்கம் ஆண்டு முழுவதும் எட்டிப் பார்க்காதவர்கள், மூன்று நாட்களுக்கு மஞ்சள் துணியைக் கட்டிக்கொண்டு, பக்தர்கள் போல வேடமிட்டுக் கரகந் தூக்கி ஆடுவர். அவர்கள் மேலே உரு வரும், அவர்களே அம்பிகையாக

--- 105 سه
மாறிவிடுவர். கள்ளுச் சாராயம் குடித்துவிட்டும் ஆடத் தொடங்கினர். நின்று வேடிக்கை பார்ப் பவர்களுக்கு விபூதி கொடுத்தல், வரம் கொடுத் தல் ஆதியனவும் நிகழத் தொடங்கின. இந்தத் தெருக் கூத்துக்களைப் பார்வையிட்ட வேற்றுச் சமயத்தினர் இந்தக் கூத்துத் தான் இவர்க ளுடைய கடவுளும் சமயமும் வழிபாடும் என்று பகிரங்கமாகக் கூறவுந் தொடங்கினர். பரிகசிக் கவுந் தொடங்கினர்.
நாள் ஒன்றுக்கு மூன்று முறை தெய்வத் திரு உருவைத் தீண்டி, வருடம் 365 நாட்களும் பூசை செய்து வரும் பூசகரிடம் சுவாமி வெளிப் படுவதில்லை. ஆணுல் வருடத்தில் மூன்று நாட் கள் மாத்திரம் கரகம் ஆடுபவரிடம் சுவாமி வெளிப்பட்டு ஆடுகிறது என்ருல் இது உலக அதிசயங்களுள் எட்டாவதாகக் கொள்ளவேண் டும். கரகம் தூக்கும் குடிகாரனிடம் ஏன் சுவாமி வெளிப்பட்டு வர வேண்டும் என்று மக்கள் சிந் திக்கத் தொடங்கினர். முக்கியமாக இளைஞர்கள் ஆராயத் தொடங்கினர்.
கோயில்களும் விக்கிரகங்களும் முறையாக அமைக்கப்படுவதற்கு முன்பு மரத்தின் கீழே ஒரு கல்லை நாட்டி அதனையே தெய்வம் என்று வணங்கிவந்தனர். இலங்கைத் தேயிலை, றப்பர் தோட்டங்களில் வேலை செய்துவந்த தமிழ்த் தொழிலாளர்களுக்கு சுவாமி கும்பிடுவதற்கென்று வருடத்தில் மூன்று தினங்கள் விடுமுறை கொடுக்

Page 64
-- 106 س
கப்பட்டன. முதல் நாள் ஆற்றங் கரையில் கர கம் பாலித்தலும், இரண்டாம் நாள் ஒவ்வொரு வருடைய இல்லங்களுக்கும் கரகம் எழுந்தருளு தலும், மூன்ரும் நாள் கரகம் ஆற்றில் குடி விடுதலும் நடைபெற்றுவந்தன.
இந்த முறைகள் எல்லாம் ஆகம முறைப் படி கோயில்கள் அமைவதற்கு ன்பு பொருத்த மானதாக இருக்கலாம். தற்பொழுது கோயில் கள் எல்லாம் ஆகம விதிப்படி கட்டப்பட்டுள் ளன. சிற்ப சாஸ்திர விதிப்படி விக்கிரகங்கள் அமைக்கப்பட்டு கும் பாபிஷேகம், மண்டலா பிஷேகம் செய்து முறையாகப் பூசைகளும் நடை பெறுகின்றன. மூல விக்கிரகமும் எழுந்தருளி விக்கிரகமும் எல்லாக் கோயில்களிலும் உண்டு. முறையாகப் பிரதிட்டை செய்யப்பட்டு வருடம் முழுவதும் பூசை செய்யப்படும் விக்கிரகத்தைத் தவிர்த்து, தற்காலிகமான கரகம் அவசியமா என்ற எண்ணம் , சிந்தனையாளர்களின் உள்ளத் தில் எழுந்தது.
இப்புத்துணர்வு வாலிப மட்டத்தில் மிகப் பெரிதாக எழுந்தது. இதனுல் கரகம், காவடி போன்ற அணுவசிய ஆர்ப்பாட்டங்களை இந்தோ நேசியக் கோயில்களினின்று தவிர்த்துள்ளனர். பாரிசாடாமூலம் சட்ட ரீதியாகச் செடில் குத் துதல், கரகம் ஆடுதல், காவடி ஆடுதல் போன் றவற்றைத் தடுத்துள்ளனர். ஆண்டில் ஒரு முறை கோயில் சென்று கூடிக் குடித்துக் கூத்

حسب 107 -
தாடும் கும்பலிடமிருந்து எதிர்ப்பும் கிளம்பாம லில்லை. இந்தப் பிதற்றல்களுக்கு வாலிபர் செவி கொடுக்கவில்லை. இடும்பன் பூசை என்ற பெய ரால் கோயிலில் ஆடு கோழிகளை வெட்டிச் சாராயத்தையும் கள்ளையும் கலந்து குடித்துத் தமது இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு கூட்டம் எல்லா இடங்களிலும் இருந்துவரத்தான் செய்கின்றது.
கோயில்களில் கூட்டு வழிபாடு, நாம பஜனை, தமிழில் அர்ச்சனை, தியானம் என்பன ஆரம் பிக்கப்பட்ட பின், அதில் ஈடுபட்டுச் சுவை கண் டவர்கள் கரகம், காவடி போன்ற ஆர்ப்பாட் டங்களினுல் யாருக்கும் பயனில்லை என்பதை உணர்ந்துகொண்டார்கள். இப்பொழுது மற் றைய சமயத்தவர்களும் இந்துக்களைக் கண்டு மரியாதை செய்கின்றனர். கோயில்களில் நடை பெறும் அந்தர் யோகங்களிலும், தியான வகுப்பு களிலும் மற்றைய சமயத்தவர்களும் வந்து கலந்துகொள்ளும் அளவுக்கு இந் து க் கள் உயர்ந்துவிட்டார்கள்.
தர்ம புத்திரா பாடசாலை
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் பக்கிரி சாமிப்பிள்ளை என்பவர் மேடான் திடலுக்குத் தென்மேற்கு மூலையில் ஆங்கிலப் பள்ளி ஒன்று ஆரம்பித்தார். மலேசியாவிலிருந்து ஆங்கிலங் கற்ற தமிழர்களும், சீனர்களும் குமாஸ்தாக்க

Page 65
---- 1.08 ܚܗ
ளாகவும், வியாபாரிகளாகவும் வந்தனர். அவர் களுடைய குழந்தைகளின் கல்வியை முன்னிட் டும் , மலாய்க்காரரை முன்னிட்டும் ஆங்கிலப் பாடசாலை ஆரம்பித்தார். அதன் முடிவு என்ன வென்று எவ்விதத்திலும் அறிய முடியவில்லே. அதைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு வடமேற்கே கதிரேசன் என்பவர் அதேபோல ஆங்கிலப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து நடத்தினுர், அதன் முடிவும் மர்மமாகவே இருக்கிறது.
தமிழ்க் கல்வி பல உபாத்தியாயர்களால் ஆங்காங்கே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தன. இப்பாடசாலைகளுக்குக் கோயில் ஆதரவோ தனவந்தர் ஆதரவோ கிடைக்க வில்லை. இதனை நடத்திய உபாத்தியாயர்கள் திண்ணைப் பள்ளிக்கூட முறையில் நடத்தியதால் சாதாரண மக்களுடைய சிறிய உதவிகளே அவர் களுக்குக் கிடைத்தன. பொதுமக்கள் ஆசிரி யர்களுக்குச் செலுத்தும் காணிக்கை முறையில் ஆசிரியர்களைப் போஷித்துவந்தார்கள். இவர்க ளில் முக்கியமானவர்கள் வீரமுத்து உபாத்தி யாயர், பூத்தை உபாத்தியாயர், ரெங்கசாமி நாயுடு, சைவர், பெ, நாராயணசாமி ஆகியோ ராவர். இவர்களை இக்கைங்கரியத்தின் தியாகி கள் என்றே குறிப்பிடலாம்.
இதில் கடைசியாகக் கோயிலின் பின்புறத் தில் மேற்சொன்ன முறைப்படி பள்ளிக்கூடம் நடத்தியவர் ரெங்கசாமி நாயுடு, அவர் 1930 இல் அந்த இடத்திலிருந்தும் அப்புறப்படுத்தப்பட்

سے 9 10 سے
டார். அதே தொடர்பில் திரு. து. குமாரசாமி டில்லி இந்து சபையை இயக்கிய காலத்தில் அதே சங்கத்தின் கண்காணிப்பின் பெயரால் பல பாடசாலைகளை இயக்குவித்தார். அவை எந்தப் பொருளுதவியும் பெறவில்லையென்றலும் தற்கால முறைப்படி பிள்ளைகளிடம் ச மீ ப ள ம் வசூல் செய்துகொண்டு அ  ைத இயக்கிவந்தார்கள். வேறு பொருளுதவி எதுவுங் கிடையாது. ஆசிரி யர்களுடைய இடையரு முயற்சியினுலேயே இவை நடைபெற்றன.
இவையெல்லாம் யப்பானியருடைய வருகை யால் பாழ்பட்டுவிட்டன, இதைத் தொடர்ந்து 1945 ஆம் வருட இறுதியில் சமையல்கார சுப்பையா, சம்பூர்ணு சுப்பிரமணியம், மு. 8யாவு ஆகியோர் 5 lb (8urti LT tulig 6b (Kampong Darat) 62(5 பாடசாலையைச் சிறிதாகக் கட்டி முடித்து, அதில் ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடத்தை ஆரம்பித் தார்கள். இது நிகழ்ந்தது 1950 க்குப் பின் ஆகும்.
மாரியம்மன் கோயிலுக்கு முன்புறத்தில் ஒரு மண்டபங் கட்டி அதில் நாடகம், பிரசங் கம், பொதுக் கூட்டம், திருமணம் இவை நடந்த நாட்கள் தவிர மற்ற நாட்களில் பள்ளிக்கூடம் நடக்கும் என்ற பொதுசனப் பிரச்சாரத்தோடு ஆரம்பித்தார்கள். ஆணுல் ஏதோ ஒரு காரணத் தால் திசை மாறி பாரதி ஆங்கிலப் பாடசாலை என்ற பெயரால் ஒரு ஆங்கிலப் பாடசாலையை
ஆரம்பித்து நடத்திக்கொண்டிருந்தார்கள். சில

Page 66
سے 110 مس۔
காலங்களுக்குப் பிறகு அது பாரத் ஆங்கிலப் பாடசாலை என்ற பெயரைப் பெற்றது. இப்படி நடந்துகொண்டிருந்த காலத்தில் இந்தோநேசிய அரசாங்கத்தின் கல்வி இலாகாவின் கல்விப் பராமரிப்பு கண்காணிப்பின் அடிப்படையில் அந்நிய மொழிப் பள்ளிக்கூடங்களின் திருத்த பராமரிப்பின் அடிப்படையில் இரண்டு வருட கால இடைவெளியில் முழு இந்தோநேசியன் பாடசாலையாக மாற்றப்பட்டது.
ஏற்கனவே மாரியம்மன் கோயில் நிர்வாகத் தோடு இணைக்கப்பட்ட டாராட் தமிழ்ப் பாடசாலை தர்ம புத்திரா I என்ற பெயரில் நடந்து கொண் டிருக்கிறது.
தர்ம புத்திரா பாடசாலை 11
இப்பாடசாலையை 1951 முதல் தன் மரண காலம்வரை அதாவது 1983 வரை நல்ல முறையில் நடத்தியவர் திரு. ரா. வெங்கடசாமி நாயுடு என் பவர். இவர் பொதுஜனங்களின் சொல்லடிகளையும் இழைத்த இன்னல்களையும், பொறுத்துக்கொண்ட தோடு மிகக் குறைந்த சம்பளத்தையும் பெற் றுத் தன் காலத்தைக் கழிக்க வேண்டியவரானுர், இப்பாடசாலையை நிலைக்கச் செய்வதற்கு அவர் செய்த தியாகத்தை எவரும் மறக்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை.
இந்நிலையில் டாராட் தமிழ்ப் பாடசாலைக் கட்டிடம் ஓரளவு கட்டிடமாக இருந்ததே தவிர

ܚܗ L11 -
இந்தோநேசிய அரசாங்கக் கட்டிடச் சீரமைப் பின்படி அமையவில்லை. 1974 ஆம் ஆண்டு வள் ளல் திரு. சி. மாரிமுத்து அவர்கள் பூரீ மாரி யம்மன் கோயில் தலைவர் ஆனதும் இப்பாட சாலைக் கட்டிடம் புதுமை பெற்றது. 1985 ஆம் ஆண்டு மூன்று மாடிக் கட்டிடமாகவும் புதுமை பெற்றுள்ளது.
மாரியம்மன் கோயிலின் மகிமை
மேடான் பூரீ மாரியம்மன் கோயிலில் வேற் றுச் சமயத்தவர்களும், வேற்றுச் சமூகத்தவர் களும் வந்து வழிபடுங் காட்சி கண்ணுக்கினிய காட்சியாகும். இவர்களது வேண்டுகோளை அமீ பிகை ஈடேற்றிவைக்கும் காரணத்தினுலேயே அன்பர்கள் அடிக்கடி வருகின்றனர். மேடான் நகரத்தின் மத்தியில் வானளாவ உயர்ந்திருக் கும் கோபுரங்களையுடைய பூரீ மாரியம்மன் கோயில் நகரத்திற்கே ஒரு ஒப்பற்ற சோபையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பிரதான வீதியின் பக்கமாக அமைந்திருக்கும் மதில் சுவரில் பாலிக்காரர் ஒருவர் அழகான சிற்பங் களோடு சித்திரங்களையுந் தீட்டியுள்ளார். நட ராஜப் பெருமானுடைய நடனத் தோற்றம், கண்ணன் தேரிலிருந்தவாறே அர்ச்சுனனுக்குக் கீதா உபதேசம் செய்யும் காட்சி, யோகாச னங்கள் ஆகியவை மிக விசேடமாக அமைத் துள்ளன.

Page 67
- 112 -
கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் கூட்டு வழிபாடும் உபந்நியாசமும் நடைபெற்று வரு கின்றன. வெள்ளிக்கிழமையை விடச் சனிக்கிழமை பெருந்தொகையானுேர் வழிபாட்டுக்கு வருகின் றனர். சனீஸ்வரனை மகிழ்விக்க, செவ்வாய் தோஷத்தைப் போக்க, நவக்கிரக வழிபாடு செய்ய அதிகாலை தொடக்கம் இரவு ஒன்பது மணி வரை வந்துவந்து செல்வர். முக்கியமாக சனீஸ்வர னுக்கு எண்ணெய் ஊற்ற வருகின்றனர். சனிக் கிழமை ஊற்றும் எண்ணெயைக் கொண்டு வாரம் முழுவதும் கோயில் விளக்குகள் எல்லாம் ஏற்றப் படுகின்றன. நவக்கிரகங்களுக்கு இரு க் கும் பயமோ பக்தியோ பயபக்தியோ மற்ற எந்தத் தெய்வங்களுக்கும் இல்லை. அம்பிகையை ஒரு முறை தானும் வலம் வராதவர்கள் நவக்கிரகங் களை ஒன்பது முறை வலம் வருகின்றனர். சிலர் நவக்கிரக வணக்கம் மாத்திரமே செய்து விட்டுத் திரும்பிவிடுகின்றனர். நவக்கிரக வழி பாட்டில் முக்கியமாக ஈடுபட்டிருப்பவர்கள் வேற் றுச் சமயத்தினரும் வேற்றுச் சமூகத்தினருமே
நல்ல பார்வையை உட்ைய அன்பர் ஒருவர் இரு கண்களுடைய பார்வையினையும் திடீரென இழந்துவிட்டார். இராப்பகலாக அம்பிகையிடம் வேண்டுதல் செய்தார். மனமுருகிக் கதறினர். அவருடைய வேண்டுகோள் வீண்போகவில்லை. அம்பிகை அருள் பாலித்தாள். சில தினங்களில் இரு கண்களும் பார்வை வாய்க்கப்பெற்றவ ராஞர். இப்படி அம்பிகையின் திருவருட் கடாட்

and l3 -
சத்தைப்பற்றி நூற்றுக்கணக்கான 8 தீகங்களை
அன்பர்கள் கூறிக்கொண்டே இருக்கின்றனர்.
கள்வன் ஒருவன் கோயில் பொருள் ஒன்றைத்
திருடிக்கொண்டு புறப்பட்டான். வழி தெரிய
வில்லை. அப்பொருளைத் தலையில் வைத்தபடி விடி யும் வரை கோயிலைச் சுற்றிக்கொண்டே இருந்
தான். பூசகர் வந்த பின்தான் அவனுக்கும்
உண்மை புலப்பட்டது.
வேற்றுச் சமூகத்தினர்கள் பக்தி சிரத்தை யோடு கோயிலில் வீழ்ந்து வணங்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். தொட்டு வணங் கக்கூடிய மூர்த் திகளின் திருப்பாதங்களைக் கைகளினுல் தொட்டு கண்களிலே ஒற்றிக்கொள் வார்கள். அவர்களுடைய பக்தி சிரத்தையான வணக்கம் பார்ப்பவர்களுடைய உள்ளங்களை உருக்கிவிடுகின்றது. பக்தியோடு பூசை செய்பவ ருடைய கிரியைகள் பார்ப்போருடைய உள் ளத்தை உருகச் செய்வது போன்றே பக்தியோடு வழிபாடு செய்பவர்களுடைய வணக்கமும் பார்ப் போருடைய உள்ளத்தை நெகிழ வைக்கின்றது.
மேடான் பூரீ மாரியம்மன் கோயில் நிர்வாகம் ஊரிலுள்ள இந்துப் பொதுமக்களுக்கு உடைமை யாக்கப்பட்டு பொதுச்சபை ஒன்றிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. இச்சபையை அரசாங்கம் இந்துக்களின் சார்பில் அங்கீகரித்துள்ளது. அர சாங்கத்தில் பதிவும் பெற்றுள்ளது. இந்துக்கள் எல்லோரும் இச்சபை மூலமாக சமய விடயங்

Page 68
= 114 =
கள் பற்றிய பிரச்னைகளை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். கல்யாணப் பதிவு போன்ற விடயங்களைக் கோயில் நிர் வாகமே பொறுப்பேற்றுச் செய்வதால் பொதுமக் களுக்கு எவ்வித செலவும் சிரமமுமின்றிக் கல்யா ணப் பதிவுப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
திருமணப் பதிவின் பின் கோயிலிலேயே மிகக்குறைந்த செலவுடன் திருமணமும் நடத்தி வைக்கப்படுகின்றது. வீடுகளிலும் பொதுமண்ட பங்களிலும் திருமணம் நடத்த விரும்புபவர் களுக்கும் கோயில் நிர்வாகமே புரோகிதரை அனுப்பி வைக்கின்றது. அந்தப் புரோகிதருக்குத் தத்தம் இயல்புக்கேற்ற தட்சணையைக் கொடுப் பர். புரோகிதரும் அதனைப் பொதுநலச் சேவை என்று கருதியே செய்கின்றர். இதற்கான புரோ கிதர்கள் பதின்மர் கோயில் நிர்வாகத்தினரால் நியமிக்கப்பட்டுள்ளனர். பரம்பரையாகப் புரோ கிதத் தொழிலில் ஈடுபட்டு முறையாகச் செய்து வரும் புரோகிதர்களும் இக்கிரியைகளைச் செய் வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்குள்ள திருமண முறை மிகச் சுருக்கமாக அமைந்துள்ளது. மாப்பிள்ளையும் பெண்ணும் தனித்தனியாகத் தமது திருமண ஒப்பந்தத்தைச் சபையோர் முன்னிலையில் வாசித்தபின் மஞ்சள் நூலில் கோர்த்த தாலியை சபையோரின் ஆசீர் வாதம் பெற்றபின் மங்கல வாத்தியம் முழங்க

- 115
சபையோர் அட்சதை மூலம் ஆசீர்வதிக்க மாப் பிள்ளை பெண்ணினுடைய கழுத்தில் கட்டுவார். பின்பு மாலை மாற்றிக் கொள்ளுவர். அதன் பின் பெரியோர்கள், உறவினர்கள் ஆசீர்வாதஞ் செய் வர். அறிஞர்கள் திருமண தத்துவம் பற்றியும் மணமக்கள் வாழும் முறை பற்றியும் அறிவுரை கூறுவர். விருந்துடன் திருமணம் இனிதே நிறை வுறுகின்றது.
நாடகம்
இற்றைக்கு நூற்றண்டுகளுக்கு முன்பே இராமாயணம், பாரதம், குமணன், அரிச்சந்திரன் போன்ற நாடகங்கள் கோயில்களில் ஆரம்பிக்கப் பட்டன. தருமத்தைப் பற்றியும் ஒழுக்கங்களைப் பற்றியும் பக்தியைப் பற்றியும் விளக்கும் நாட கங்களே முதன்மையாக மேடையேறின. ஆண் களே பெண்வேஷமிட்டு நடித்தனர். பெண் வேஷத்திற்காகத் தமது மீசையைச் சிரைத்துக் கொண்டவர்களுமுண்டு. ஒருசில சமயங்களில் பெண்களே நடிக்க முன்வந்தாலும் ஆணுே பெண்ணுே ஒருவரை ஒருவர் தொட்டு நடித்தல் குற்றமாகக் கருதப்பட்டது.
இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு வரும் நாடகக் கோஷ்டிகள் இந்தோநேசியாவுக்கும் வருவதுண்டு. இந்தோநேசியா முழுவதிலும் பர வலாக இராமாயண பாரதக் கதைகளே நாட்டிய நாடகங்களாக நடிக்கப்பெறுகின்றன,

Page 69
- 116
சங்கராச்சாரிய சுவாமிகள் 1978 ம் ஆண்டில் உலக சமய சமரச மகாநாடு நடாத்தியபோது பாலியில் இருந்து வேதாசரஸ் என்ற பெயரு டைய பாராளுமன்ற அங்கத்தவருடைய தலைமை யின்கீழ் வந்த நாட்டிய நாடகக் கோஷ்டியி னர் அற்புதமாக பாரத இராமாயண நாட்டிய நாடகங்களை ஆடிக்காட்டி மகிழ்வித்தனர். இதே கோஷ்டியினர் இலங்கைக்கும் சமூகம் கொடுத்து இரண்டு நிகழ்ச்சிகளில் பங்குபற்றினுர்கள். 1923 ஆம் ஆண்டில் ஒரு நாடகக் கோஷ்டியினர் இந்தியாவிலிருந்து இந்தோ நேசியாவுக்கும் வந் தனர். இக்கோஷ்டியினர் பலதரப்பட்ட நாட கங்களை ஆடிக் காண்பித்தனர்.
இந்த நிலையில் இந்த நாட்டில் வசித்த குமாஸ்தாக்களும், காரியாலயச் சிப்பந்திகளும் சேர்ந்து 1913 ஆம் ஆண்டு ஒரு சங்கம் அமைத் தார்கள். டில்லி இந்து சபை என்று அதற்குப் பெயரிட்டனர். திரு. ப. வ. பொன்னுசாமிப் பிள்ளை என்பவர் ஒரு யாழ்ப்பாணத்துக்காரர். இவருடைய உத்தரவாதத்தின் பேரில் மேற்படி சபையை அரசாங்கம் அங்கீகரித்தது. டில்லி இந்து சபையின் மு க் கி ய உறுப்பினர்களான இராமசாமி சர்மா (வேலூர்), ம. சுப்பையா (கும்பகோணம்) ஆகிய இருவரும் இச்சங்கத்தின் பேரால் நாடகம் நடத்த முக்கிய ஆலோசகர்க ளாக விளங்கிஞர்கள். சில ஆண்டுகள் இச்சங் கம் வெகு சிறப்பாகவே நடைபெற்றுவந்தது. பின்னர் ஏதோ சில காரணங்களினுல் செய லிழந்துவிட்டது.

سے 117 -س۔
இதேபோல் மீண்டும் 1932ஆம் ஆண்டு திரு. து. குமாரசாமி அவர்கள் திரு. ம. சுப் பையா அவர்களுடைய ஆலோசனையைக்கொண் டும் திரு. ப. வ. பொன்னுச்சாமிப்பிள்ளை அவர் களின் உறுதுணையைக்கொண்டும் அச்சங்கத்தை ஆரம்பித்தார். திரு. து. குமாரசாமி அவர்க ளுடைய உதவியோடும் திரு. ம. சுப்பையா அவர்களுடைய ஆலோசனையோடும் நாடகம் ஆட ஆரம்பித்தார்கள். இவர்கள் பல இதி காசக் கதைகளையும் தரும நெறிகளையும் ஒட்டி யுள்ள பல நாடகங்களைச் சிறப்பாக நடத்திக் காண்பித்தனர். அதோடு அவர்களுடைய நோக் கத்தையும் நிறைவேற்றி வைத்தார்கள். இத் தகையவர்களையும் நாம் மறக்க முடியாது. திரு. குமாரசாமி அவர்கள் வசனங்களை எழுதி உருவம் கொடுத்தார்கள். இதன்மூலம் அபிநயங் களையும் மெய்ப்பாடுகளையும் வெளிப்படுத்தினர். பின்னணி, மேடை அலங்காரம் என்பவற்றை திரு. ம. சுப்பையா அவர்கள் அமைத்தார்கள். இருவரும் அப்போதைக்கப்போது திருத்தங் களைச் செய்து சீரமைத்து நாடகங்களை உரு வாக்கினுர்கள். இது ஏறக்குறைய 1930 ஆண்டு வரை செவ்வனே நடைபெற்று வந்தது. அதன் பிறகு எல்லாம் அழிந்து எல்லாராலும் கைவிடப் பட்டது.
இதேபோல் 'பாடாங் செர்மின்" தோட்டத் தில் சுயேச்சையாக இருந்த நாராயணசாமி தமது சகாக்கள் சிலருடன் சேர்ந்து நல்ல முறையில் நாடகங்களை நடத்திக் காட்டிஞர்.

Page 70
ܚ- 1:18 -ܢ
டில்லி இந்து சபைக் குழுவினை ஆரம்பிக்கு முன்பே இவர்கள் ஆரம்பித்துவிட்டனர். இந்த நாராயணசாமி அவர்கள் வேலூரை அடுத் துள்ள கரிஹேரி என்னும் ஊரில் உள்ளடங்கி இருக்கும் கம்மவார் புதூரைச் சேர்ந்தவர். இவர் ஒவ்வொரு வருடத்திலும் புரட்டாதி மாதத் தில் அதே தோட்டத்தில் தீ மிதி விழாவை நடத் திக் காண்பித்தார். அதேபோல் பிஞ்சை மாரி யம்மன் தைப்பூசத் திருவிழாவில் எந்தவித வசூலும் இல்லாமல் தமது சொந்தச் செலவி லேயே நடத்திச் சிறப்பித்தார். இதில் இவர் கள் முறையாகச் சங்கீதம் கற்றவர்கள் அல் லர். தாமாகவே கற்றுத் தேறியவர்கள்.
இதில் ஒரு விசேடம் என்னவென்ருல் திரு வாளர் து. குமாரசாமியோ, திரு. ம. சுப்பை யாவோ, திரு. நாராயணசாமியோ எவ்வித பேதமுமின்றி ஒருவருக்கொருவர் அநுசரணை யாக ஒத்துழைப்பு நல்கினர். நாராயணசாமி அவர்களுடைய எ ல் ல ர நற்செயல்களுக்கும் “பாடாங் செர்மின்" தண்டல் பொ. சுப்பையா பிள்ளை அவர்கள் பேருதவியே இவருடைய வாழ்க்கைக்கு ஆதாரமாயிருந்தது. யப்பானிய ருடைய வருகையால் இந்நாடகக் குழு இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிட்டது. இந்தோ நேசியாவின் சுதந்திரத்தின் பின் தோட்டமும் நடைபெறமல் நின்றுவிட்டது. திரு. நாராயண Frifiuq 6 sear திரும்பவேண்டி ஏற்பட்டுவிட் باقی سا

حسد 9 أ 1 سب
முன்மாதிரியான தமிழர்கள் இருவர்
அடியேன் மேடானுக்குச் செல்வதற்கு முக் கிய காரணமாக இருந்தவர் பூரீ இராமுலு அவர் கள். அவர் வருந்தி அழைத்திராவிட்டால் அடி யேன் அங்கு சென்றிருக்க முடியாது. ஆகவே அவருக்கு முதலில் நன்றிகூறக் கடமைப்பட்டுள் ளேன். பூரீ இராமுலு அவர்கள் மூலம் முதலில் அறிமுகமானவர் பூரீ மாரியம்மன் கோயில் தலைவ ரான திரு. சி. மாரிமுத்து அவர்கள். முதன் முறையாக அடியேன் சென்றபோது இருபத் தெட்டு நாட்கள் அங்கு தங்கும் வாய்ப்புக் கிடைத்தது. திரு. மாரிமுத்து அவர்கள் இலகு வில் யாரையும் நம்பிவிட மாட்டார். நம்பிவிட் டால் பின்பு சந்தேகப்படவும் மாட்டார். இரண் டாவது முறை அடியேன் மேடான் நகருக்குச் செல்வதற்கு முன்பு திரு. மாரிமுத்து அவர்கள் தமது மகள் லீலாவுடனும் பேரன் இராசுவுட ஆம் வந்திருந்தார். நாவலப்பிட்டியில் இரண்டு தினங்கள் தங்கி அங்குள்ளவர்களிடம் நான் உண்மையான சேவையாளஞ அன்றி போலியா னவரா என்று நன்கு உசாவி அறிந்துகொண்ட பின்பு இரண்டாவது முறையும் வருமாறு நேரில் அழைத்ததோடு, நேரில் அழைப்புக் கொடுப் பதற்காகவே தான் வந்ததாகவும் கூறிஞர். கொழும்பு, கண்டி, நுவரெலியா, கதிர்காமம் போன்ற இடங்களையும் பார்வையிட்டபின் அடி யேனுக்கும் அழைப்புக் கொடுத்துவிட்டு ஊர் திரும்பிவிட்டார்.

Page 71
-- 120 --س-
அடுத்து அடியேனுடைய உள்ளத்தைக் கவர்ந்தவர் அறிஞர் து. குமாரசாமி அவர் கள். அவர் ஜவஹர்லால் நேருவைப்போன்று ஆஜானுபாகுவான தோ ற் ற ம் உடையவர். அவரை முதலில் பார்த்த உடனேயே பலநாட் பழகியவர் போன்ற ஒரு எண்ணம் மனதில் உதித்தது. பழகுவதற்கு இனியவராகவும் அறி வாளியாகவுங் காணப்பட்டார். வீட்டுக்குச் சென்ற இடத்திலேயே பொன்னுடை போர்த்திக் கெளரவித்ததோடு சில அருமையான புத்தகங் களையும் கொடுத்து உதவிஞர். அவருடைய பிறந்த தினத்தை அவருடைய சீடர்களும் நண் பர்களும் கொண்டாடுவதற்கு முயன்றுகொண் டிருந்தார்கள். அடியேனையும் முக்கிய விருந் தினராக இருந்து போகுமாறு பணித்தார்கள். விசா முடிவுற்றபடியிஞல் அடியேன் பிறந்ததின விழாவிற்கு நிற்க முடியவில்லை. ஆனல் ஒரு நண்பருடைய உதவியுடன் அடியேனுடைய ஆசியை நாடாவில் பதிவுசெய்து கொடுத்து வந்தேன். அதைப் பாராட்டி எழுதியிருந்தார்
கள்,
வள்ளல் திரு. சி. மாரிமுத்து
மேடான் மக்களுடைய உள்ளத்தில் என்றும் நீங்காத இடம் பெற்றவர் சி. மாரிமுத்து அவர் கள். அவருடைய சமுதாய சிந்தனை, சிந்தனை யோடு பேச்சோடு மாத்திரம் இல்லாது செயலி லும் காட்டிய கர்ம வீரர். தியாக உணர்வுடைய வர். தனிமனிதனுடைய முன்னேற்றத்தைக்

- 121 -
காட்டிலும் சமுதாயமாக மக்கள் உயர்வு பெற வேண்டும் என்ற சிந்தனை உடையவர். சுய உழைப்பினுல் உயர்ந்த உத்தமர். தன்னைப் போல எல்லாருமே வாழ முடியும் என்ற நம் பிக்கையும் உடையவர். ஊக்கமும், முயற்சியும் கடவுள் வழிபாடுமே தேவையானவை என்று ஆணித்தரமாகக் கூறுவார். என்னைப்போல நீங் களும் வாழுங்கள்! நீங்கள் மனம் வைத்தால் என்னைப்போல வாழ முடியும் என்று மக்களைத் தட்டி எழுப்பி உறுதியாகக் கூறுவார்.
இவருடைய பெற்றேர்கள் வட சுமாத்திராத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமி ழகத்திலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள். எழு பத்தொரு வயதினைத் தாண்டிவிட்ட திரு. மாரி முத்து அவர்கள் இப்பொழுதும் சுறுசுறுப்பான இளைஞர் போலக் காணப்படுகின்றர். திரு. மாரி முத்து அவர்கள் தோட்டத்தில் மாட்டுவண்டி ஒட்டியவர். அதனுல் தோட்டத்துத் தண்டல் களின் கெடுபிடிகளை எல்லாம் நன்கு அனுபவித் தவர். கல்வியில் எழுத வாசிக்கத் தெரிந்தவரே அன்றி அதிகம் படிக்காதவர். தான் படிக்கா தவராணுலும் தனது பிள்ளைகள் எல்லோரையும் நன்கு படிக்க வைத்தவர்.
இவரது தோட்டத் துரை இவரது நேர்மை யைக் கண்டு இவரைக் களஞ்சிய அறையின் உதவியாளராக நியமித்தார். எழுத்தில் கணக்கு வைத்துக்கொள்ளத் தெரியாதவராணுலும் மனதி

Page 72
حصے 122 ہے
லேயே எல்லாவற்றையும் வைத்திருந்து சொல்லக் கூடிய ஞாபக சக்தி உடையவர். இவரது திறமை க்கும் நேர்மைக்கும் பரிசாகக் களஞ்சிய அறை யின் முழுப் பொறுப்பும் இவரிடம் கையளிக்கப் பட்டது. இவர் தமக்கு உதவியாளாக ஒருவரை வைத்துக்கொண்டார்.
இவருக்கு ந்ேது ஆண்மக்களும் மூன்று பெண்மக்களும் இருக்கின்றனர். இவரது அன்பு மனைவியாரும் நல்ல பண்புகள் வர்ய்க்கப் பெற்ற வர். போருக்குப் பின்னர் வியாபாரத்தில் இறங் கித் துரித வளர்ச்சி கண்டவர். பொருளாதா ரத்தில் தான் உயர்வு கண்டபின்பே மற்றை யோருக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களை யும் தன்னைப்போல ஆக்கவேண்டும் என்ற நினை வைத் தனது அடிப்படை மனதில் வைத்துக் கொண்டு செயலாற்றியவர். அவரது இடை விடாத முயற்சி மேடானில் ஒரு உயர்ந்த பணக் காரணுக்கியது. இன்று அவரை எல்லோரும் வள்ளல் மாரிமுத்து என்று அழைக்கும் நிலைக் குத் தருமவாளுகிவிட்டார். முதன் முதல் மேடா னில் வியாபாரமீ ஆரம்பிக்கப்பட்டாலும் யாவா வின் தலைநகரமாகிய ஜாகர்த்தாவை மையமாக வைத்துப் பல தொழிற்சாலைகளை உண்டாக்கி வளர்ச்சி கண்டவர். மூத்த மகன் சீனிவாசன் பெருமுயற்சியாளன். அவரை எல்லோரும் அன் புடன் வாசன் என்றே அழைப்பார்கள். வியா பாரத் துறையிலும் கைத்தொழில் துறையிலும் துறைபோகக் கற்றவர். இவரது தொழிற்சாலை

- 123
யில் உருவாகும் சட்டைகளும் துணிகளும் அமெரிக்காவுக்கும் சவூதிக்கும் ஏற்றுமதி செய் யும் அளவுக்கு உயர்நிலை அடைந்து விட்டன.
இவரது தொழிற்சாலைகளில் இன்று பத்தா யிரத்துக்கும் அதிகமான பேர் வேலை செய்கின் றனர். இவரது தம்பிமார் இருவர் இவரது இரு கரங்களாக விளங்குகின்றனர். இந்தியா, கொரியா போன்ற இடங்களிலிருந்து தொழில் நுட்பம் வாய்ந்த நிபுணர்களை வரவழைத்து அவர்கள் மூலம் தொழிலை விருத்தி செய்துகொண் டிருக்கிருர், தொழிலதிபராக விளங்கும் வாசன் அவர்கள் இன்று ஒரு கோடீசுவரனுக விளங்கு கின்ருர்.அவருடைய பெண்கள் மூவர் அமெரிக்கா வில் வர்த்தகக் கல்வியே கற்றுவருகின்றனர். அவர் வீட்டில் தங்தியிருக்கும் நேரம் மிகக் குறைவாகும்.
1974 ஆம் ஆண்டு பொதுமக்கள் இவரது நல்ல குணங்களைக் கண்டுபிடித்து இவரை பூரீ மாரியம்மன் கோயில் தர்மகர்த்தா சபைக்குத் தலைவராக நியமித்தார்கள். இதன் பின்பு தமது முயற்சிகளையெல்லாம் மக்களிடமே ஒப்புவித்து விட்டு இப்போ ஒரு சிறந்த சமூக சேவையாள ணுக விளங்குகின்றர். இவர் கோயில் தலைவ ரானவுடன் கரகம், காவடி, தீ மிதித்தல் போன்ற வேடிக்கைகளுக்கு இடம்கொடுக்காமல் கோயி லில் பிரார்த்தனை, நாம ஜெபம், பக்திப் பாடல், தியானம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

Page 73
தமிழர்கள் மொழியால் ஒன்றுபடுவதைவிட மதத்தால் ஒன்றுபடுவது பலமானது எனக் கருதுகின்றர். காரணமும் உண்டு. தமிழ் மொழி பேசுகிறவர்கள் இருபத்தையாயிரம் பேர் மாத்திரமே ஆஞல் இந்துக்கள் மூன்று கோடி வரை இருக்கிருர்கள். மத ரீதியில் வருடந் தோ று மீ லட்சக்கணக்கானவர்கள் கூடிக் கொண்டே வருகின்ருர்கள்.
தமிழர்களுடைய வளர்ச்சிக்குக் கல்விதான் முக்கியமென்ற கருத்தில் மிக்க உறுதியுள்ளவர். அதற்காகக் கோடிக்கணக்கான ரூபா பணம் செலவுசெய்து ஒரு உயர்நிலைக் கல்விக்கூடம் கட்டியுள்ளார். நான்கு மாடிக் கட்டிடம், இதைப் போன்ற ஒரு கட்டிடம் ஜாகர்த்தாவில் மாத் திரந்தானுண்டு. இவ்வாண்டு அரைச் சம்பளத் தோடும் சம்பளமில்லாமலும் நானூறு பேர் வரை கல்வி கற்கின்றர்கள். சமுதாய முன்னேற்றத் திற்காக இரவு பகல் என்பதின்றி உழைத்துக் கொண்டே இருக்கின் ருர், தன்னைப்போலச் சேவை செய்ய எல்லோரையும் அழைக்கின்றர். இளைஞர் களுக்கு முக்கியம் கொடுக்கின்றர். எதிர்கால உலகம் இன்றைய இளைஞர்களிடந்தான் உண்டு. ஆதலால் அவர்கள்தான் சமுதாய வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்கின்றர்.
அறிஞர் து. குமாரசாமி
இவரை மேடான் தமிழ் அன்பர்கள் அண் ணல், அண்ணு, D. K. என்று அன்புடன் அழைப்

- 125 -
பர். இவரது பெற்றேர்கள் முன்னர் பிரஞ்சுக் காலனியாக இருந்த பொண்டிச்சேரியிலிருந்து வட சுமாத்திராவுக்குக் குடியேறியவர்கள். இவர் 1906 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி பிறந்தார். தந்தையார் திரு. துரைசாமிப்பிள்ளை அவர்கள். தாயார் பார்வதியம்மாள்.
தமிழ் மொழியைத் தன் தாயாரிடமிருந்தும் ஆங்கில அறிவைத் தந்தையிடம் இருந்தும் கற் றுக்கொள்ளும் பேறு பெற்றவர். இளம் வயதி லேயே தமிழைப் பயிலுவதில் வளம் மிகுந்தவ ராக இருந்ததினுல் அவர் ஏழு வயதுச் சிறுவ ணுக இருக்கும்போதே பிஞ்சை பூரீ மாரியம்மன் ஆலயத்தில் இராமாயணம், மகாபாரதம் முதலிய நூல்களை ஓதுவதற்கு அவருடைய உதவி பயன் படுத்தப்பட்டது. மேடான் எம். பி. எஸ். ஆங் கிலப் பள்ளியில் ஏழாம் வகுப்புவரை ஆங்கிலம் கற்றர். தட்டச்சு, சுருக்கெழுத்து, வேதாந்தம் முதலிய நூல்களையும் தனிப்பட்ட முயற்சியிஞல் கற்ருர்,
1931 ஆம் ஆண்டில் டில்லி இந்து சபையின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டு பத்து ஆண்டு கள் சேவை செய்தார். டில்லி இந்து சபையில் மாதர் பகுதி, ஞானப் பகுதி, விளையாட்டுப் பகுதி, இயல் இசை நாடகப் பகுதி ஆகிய பிரிவுகளை அமைத்து, பெண்கள் முன்னேற்றம் இறை பக்தி விளையாட்டுத் துறையில் ஈடுபாடு, தமிழ் இசை, நாடகம் மு த லா ன வ ற்றை த் தோற்றுவிக்கவும், வளர்க்கவும் பாடுபட்டார்.

Page 74
- 126 -
1954 இல் மேடான் பூரீ மாரிய்ம்மன் கோயில் பின்புறமுள்ள பாடசாலைக் கட்டிடம் கட்டி முடிந்த தருணத்தில் ஆலயத்திற்கும் பள்ளிக் கூடத்திற்கும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட் டார். நான்கு ஆண்டுகள் அயராது உழைத்து ஓரளவு முன்னேற்றமான கருமங்களில் தமிழர் களை ஈடுபடச் செய்தார்.
தமிழர்கள் மொழி, கலை, விளையாட்டு ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் 1929 இல் 'வித்தியாப்பியாச சங்கம்" என்னும் அமைப்பினை உருவாக்கினர். இதில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசிப்பழக பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.
1935 இல் டாராட் என்னுமிடத்தில் தமிழ்ப் பாடசாலை என்னும் பள்ளியை ஆரம்பித்தார். "அக்தர்வேக்" அல்லது ஜாலான் இஸ்காண்டார் மூடாவில் ஒரு தமிழ்ப் பள்ளியும், "கொழும்பு ஸ்ட்ராட் அல்லது ஜாலான் தருமாவில் ஒரு தமிழ்ப் பள்ளியும், "ஜ"ரலியானுஸ்ட்ராட்" அல்லது ஜாலான் ஆசியாவில் ஒரு தமிழ்ப் பள்ளியும் டில்லி இந்து சபை மேற்பார்வையில் நடைபெற்றுவந்த காலத்தில் குமாரசாமி அவர்கள் அப்பாடசாலை களில் ஆங்கில மொழியைப் பயிற்றுவிக்க அரும் பாடுபட்டார்.
தமிழர்கள் தமிழைக் கற்றிருப்பது போலவே ஆங்கிலம், இந்தோநேசிய மொழி ஆகிய மொழி களிலும் தேர்ச்சி பெற உதவும் பொருட் டு

a- 127 -
பத்து மணி நேரத்தில் கற்றுக்கொள்ளக்கூடிய லத்தீன் எழுத்ததிகாரம் என்னும் நூலை 1937 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். 1940 @ab *மேடானின் தினகரன்" என்னும் மாத வெளியீடு ஒன்றை நடத்திஞர். ஜப்பானியர் காலத்தில் சூழ்நிலையின் காரணமாக நிறுத்தப்பட்டு 1948, 49 இல் இந்தியன் என்னும் பெயரில் மீண்டும் வெளிவந்தது. இந்தியர் ஒருவர் இ ற ந் தா ல் பாடையில் வைத்து நால்வர் சுமந்து செல்வது வழக்கம். இது மற்றைய சமூகத்தவர்களுக்கு ஏளனமாகப் பட்டது. மற்ற இனத்தவர் நம் இனத்தவரை மதித்து வாழவேண்டும் என்று கருதி டில்லி இந்து சபையின் உதவியுடன் பிரேத வண்டி ஒன்றை வாங்கினர். இறந்தவர் உடலை அழகாகவும் மரியாதையாகவும் பெட்டி யினுள் வைத்து மயானம் எடுத்துச் செல்வதற்கு இவ்வண்டி பயன்படுத்தப்பட்டது. மயானம் வரை பாடிச் செல்வதற்கேற்ற 'ஆதியந்த மிலாதவா போற்றி" என்று தொடங்கும் பாடலையும் இயற் றித் தந்தார்.
வறுமையில் உழலும் தமிழர்கள், அன்ருட வாழ்விற்கு நாளெல்லாம் உழைத்து மாலையில் மதுக் கடையில் கூடுவதைக் கண்ட டி. கே. அவர் கள், மதுவுக்கு அடிமைப்பட்டவர்களை மீட்க வேண்டும், என்னும் நோக்கத்துடன் 1932 இல் மதுபான விளக்கம் என்னும் நூலை வெளியிட் டார். இதுவே அறிஞரின் முதல் நூலாகும். இந் நூலில் மதுவோடு உறவு கொள்ளும் மனிதன்

Page 75
- 128 حبسته
எவ்வாறெல்லாம் ஒழுக்கம் இழந்தவனுக உடலா லும் உள்ளத்தாலும் சக்தியற்றவனுக நோய் களுக்கு உறவினனுக, சமூகத்தின் சீர்கேட்டுக்கு வழிவிடுபவனுகத் தனது குடும்பத்தைத் தானே அழித்துக்கொள்ளுங் குடிகாரனக மாறுகிறன் என்பதை எடுத்துரைத்தார்.
சீர்திருத்தத் திருமண முறை ஒன்றை ஏற் படுத்தி அதற்கான முறைகளையும் சீர்திருத்த சவ அடக்க முறை ஒன்றையும் வெளியீடு செய் தார். இம்முறைகளே இன்றும் பயன்படுத்தப்படு கின்றன. இவர் எம்மதமும் சம்மதம் என்ற மனப் பாங்குடையவர், அடையாற்றில் இயங்கி வந்த பிரம்ம ஞான சங்கக் கிளையை மேடானி லும் தோற்றுவித்தார். மேடான் பிரம்ம ஞான சங்கத் தலைவராகவும் விளங்கினர்.
இவர் இயற்றிய பல பாடல்களில் "ஓங்கா ரப் பிரணவமே, ஓம் பரப் பிரமமே நமோ நமோ!" என்று தொடங்கும் பாடல் Mjö fuu TT வில் வெளிவரும் "தர்மஜோதி" மாத இதழிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
1929 முதல் சுமார் 25 ஆண்டுகளுக்குத் தமிழர்களை நல்வழிப்படுத்த இடைவிடாது பணி யாற்றிய டி. கே. தமது முயற்சிகளுக்குப் போது மான ஆதரவும் தகுந்த பலனும் கிடைக்காத தஞல் எடுத்த பிறவியை மக்களுக்கு நன்மை பயக்கும் நற்காரியங்க2ளப் புரிவதிலேயே செல விடவேண்டும் என்னும் நோக்கத்தில் 1954 இல்

- 129 --
புத்த சமயத்தைத் தழுவினர். அதன் பின்னர் புத்த சமயத்தை நிலைபெறுத்த வாழ்நாள் எல் லாம் உழைத்தார். சமண சமயத்தைச் சேர்ந்த நாவுக்கரசருக்கு அவரது திறமை நோக்கிச் சம ணர்கள் “தருமசேனர்” என்ற பட்டத்தை அளித் ததுபோலப் பெளத்த தர்மத்தில் டி. கே. காட் டிய நல்ல தெளிவான போக்கையும், கூர்மை யான அறிவையுங் கண்ட இந்தோ நேசிய பெளத்த பிக்குகள் சங்கம் அவருக்கு “மஹா உபாசக மஹா பண்டிதர்" என்னும் சிறப்புப் பட்டத்தை வழங்கியது.
டி. கே. அவர்கள் சென்னை சென்றிருந்த போது சென்னை பெளத்த சங்கத் தலைவர் "மஹா தேரர் நந்தீஸ்வரர்" அவருக்கு அசோக தர்ம சூரியா என்னும் பெயரைச் குட்டிஞர். டி. கே. தனது இறுதிக் காலத்தில் சம்ஹா உபாசக மஹா பண்டித அசோக தர்ம சூரியா? என்னும் பெயருடன் புத்தரின் உண்மைகளைத் தமிழர்களுக்கும் இதர மக்களுக்கும் எடுத்தியம்பி வந்தார்.
单●★

Page 76


Page 77


Page 78