கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள்
Page 1
ஜி
இராஜாங்க அை இல
· KMMXX) MMXXXMMX X}{X}(XXXXX) MKMMXXXXXM
MMXXXXXXX KMXMMMM)
× × ×
600TLITLL)66)56T.
மச்சர் அலுவலகம்,
555.
Page 2
Know your District.3
Muslims of
atale District
History and Heritage
A.A. Fuaji, B.A. Dip-in-Ed.
Presentation Office of the Minister of State for Muslim Religious & Cultural Affaira 34, Malay Street, Colombo 2 Sri Lanka 1993
Page 3
மாவட்ட அறிமுக நூல்: 3
மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள்:
வரலாறும் பாரம்பரியமும்
ஏ.ஏ.எம்.புவாஜி, பி.ஏ., கல்வி டிப்ளோமா
வெளியீடு:
முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அலுவலகம், 34, மலே வீதி, கொழும்பு 2 இலங்கை 1993
Page 4
This book is published
On the occasion Of the
National Meead - Un - Nabi Celebrations 1993
held at Matale
on October 2, 1993
A.H. 144 14 Rabiu Akhir 15
and presented to
THE HON. RANILWICKREMESINGHE, M.P. Prime Minister & Minister of Industries, Science & Technology of the Democratic Socialist Republic of Sri Lanka
by
A-haj-AH.M.AZWER, M.P.
Hon. Minister Of State for Muslim Religious & Cultural Affairs
Page 5
பொருளடக்கம்
முன்னுரை: மாண்புமிகு அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் பா.உ
முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
Foreword: Hon. Ahaj A.H.M. AZwer M.P.
Minister of State for Muslim Religious & Cultural Affairs.
பதிப்புரை: அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் என்னுரை: ஏ.ஏ.எம்.புவாஜி
அத்தியாயம்:
மாத்தளை மாவட்டம்: ஓர் அறிமுகம் அறாபியரின் இலங்கை வருகை முஸ்லிம்களும் மலைநாடும்
மாத்தளை மாவட்டத்தில் முஸ்லிம்கள் முஸ்லிம்களும் கல்வியும்
ஒரு பொருளியல் நோக்கு தொழிற் திறமைகள் பொது வாழ்வு . பள்ளிவாசல்கள் . ஸியாரங்கள் . இலக்கிய முயற்சிகள்
12.
3.
14,
விளையாட்டுத்துறை வாழ்வியலும் பண்பாடும் முஸ்லிம் கிராமங்கள்
* நன்றி
Page 6
Title: Muslims of Matale District History and Heritage
Author: Abdul Aseez Mohamed Fuaji B.A. Dip-in-Ed.
Former. Principal, Zahira College, Matale
Publishers: Office of the Ministerof State and the Department
of Muslim Religious & Cultural Affairs,
34, Malay Street, Colombo-Ő2, Sri Lanka.
Printer: Threeyem Printers, Madras - 600 OO1.
FrSt Editio: A.D. 1993 - OCtOber-2
A.H. 1414 - Rabiul Akhir- 15
CopyRight: (C) Publishers
9 முன்னுரை
தேசிய மீலாத விழா கொண்டாடப்படும் இன்றைய தினத்திலே வெளியிடப்படும், மாத்தளை மாவட்டத்து முஸ்லிம்களின் வரலாற்று நூல், நாம் இன்று கொண்டாடும் மீலாத் விழாவினை நிரந்தரமாக நினைவு கூர உதவும் சாதனங்களில் ஒன்றாகத் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வெளியீடு ஏனையவற்றோடு தொடர்பற்ற, ஒரு தனிப்பட்ட முயற்சியன்று; மாறாக, மாவட்ட அடிப்படையிலே, ஈழத்து முஸ்லிம்களின் வரலாற்றினை ஒழுங்காக, கிரமமாக ஆவணப் படுத்துவதற்கு நாம் எடுத்துள்ள பாரிய முயற்சியின் ஓர்அங்கமே இது. களுத்துறை, அநுராதபுரம் ஆகிய இரு மாவட்டங்களிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் வரலாறுகளை நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். இவை இரண்டும் முஸ்லிம்களினதும், ஏனைய இனத்துச் சகோதரர்க ளினதும் ஏகோபித்த ஆதரவையும் வரவேற்பினையும் பெற்றுள்ளன என்று நாம் துணிந்து கூறலாம். இந்நூல் வெளியிடப்படும் இதேவே ளையில், தேசிய மீலாத் விழா மலர் ஒன்றும் வெளியிடப்படுகின்றது.
ஒரு சிறுபான்மை இனத்தின் விழாவாக இம்மீலாத் விழா நடை பெறவில்லை; இது ஒரு தேசிய விழாவாகக் கொண்டாடப்படுகின் றது என்பதை மக்களும், ஆட்சியாளர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். ஒரு தேசத்தில் வாழ்கின்ற அத்தனை இனங்களும் ஒர் மலர்ச்செண்டில் இணைக்கப்பட்டுள்ள வெவ்வேறு மலர்களைப் போன்றவை; ஒரு மலர்ச் செண்டில் தொடுக்கப்பட்டுள்ள தனித்தனி மலர்கள், எவ்வாறு தம் தனித்தன்மைகளினால் மலர்ச் செண்டில் தொடுக்கப்பட்ட மொத் தத்தின் அழகை மேலும் அழகுபடுத்துகின்றனவோ அவ்வாறே தனி இனங்கள் தம் பங்களிப்புகளினால் தேசிய விழாவினை மேம்படுத் தும் என்ற எண்ணத்துக்கு இவ்விழா வலுவூட்டுகிறது.
மாபெரும் சமயத் தலைவர்களில் ஒருவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஜனனத்தை மாத்திரம் கொண்டாடும் விழாவல்ல மீலாத் விழா. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எதனைப் போதித்தார் களோ அப்போதனைகளை, எப்பண்புகளை தம் வாழ்வில் கடைப்பி
Page 7
10
டித்தார்களோ, அவ்வுயர் பண்புகளை நினைவு கூர்வதும், அவற்றை எம் வாழ்வில் இயன்றளவு கடைப்பிடிக்க முயற்சிப்பதுவுமே இவ்வி ழாவின் முக்கிய இலக்காக இருத்தல் வேண்டும். உத்தம திருத்தூதர் மிக உன்னதமானவர்கள்; கருணையும் தயையும் மிக்கவர்கள்; பொறு மையும் இணக்கமும் வாய்ந்தவர்கள்; கஷ்டங்களைக் கண்டு மனந்தள ராதவர்கள்; எதிர்ப்பைக் கண்டு அஞ்சாதவர்கள்; மீலாத் விழா கொண் டாடும்போது நாம் நபிகள்நாயகத்தின்(ஸல்) இவ் உதாரகுணங்களை நினைவு கூர்கின்றோம்; அவற்றைப் பற்றிச் சிந்திக்கின்றோம்; அவற்றை எம் வாழ்வில் இணைத்துக் கொள்ள முயற்சிக்கின்றோம். இதுவே மீலாத் விழா கொண்டாடுவதின் தாற்பரியமாகும். பல்வேறு பட்ட கருத்துக்கள், கோட்பாடுகள் மானுட குலத்தைத் துண்டாடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்திலே, கஷ்டங்களும், வேதனைக ளும் மலிந்துள்ள இக்காலகட்டத்திலே, நபிகள் நாயகம் (ஸல்) தம் வாழ்வில் காட்டிய அருங்குணங்கள் உலகத்தில் 'அமைதியையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கும் அவசியமானவை என்று கூற லாம். எனவே மீலாத் விழாக்கள் வற்றாது வழங்கும் நீருற்றுக்கள் போல எப்போதும் பயனளிப்பவையாகவே இருக்கும்.
மாத்தளை நகரை தன் மையமாகக் கொண்ட மாத்தளை மாவட் டம் முஸ்லிம்கள் கணிசமான பங்கினை வகிக்கும் ஒரு மாவட்டமா கும். மாத்தளை கண்டி இராச்சியத்தின் திசாவனிகளில் ஒன்றாகும். எனவே மாத்தளையில் வாழ்ந்த முஸ்லிம்களும் ஏனைய இனத்தவர்க ளும் கி.பி.1815-1948 உட்பட்ட குறுகிய காலப்பகுதியைத் தவிர வேறு எந்தக் காலகட்டத்திலும் ஐரோப்பியரின் ஆட்சிக்குள் இருந்ததில்லை. இதன் விளைவாக மாத்தளை மக்கள் தன்னம்பிக்கை, சுதந்திர மனப் போக்கு ஆகியவற்றினை உடையவர்களாக இருக்கின்றனர். சிரமங் கள் எதிர்நோக்கும் போது நகைச்சுவை உணர்வோடு, அவற்றைச் சமாளிக்கும் இயல்பும் உடையவர்கள்.
முஸ்லிம்கள் மாத்தளை மாவட்டத்தில் வாழ்ந்த நீண்டகாலப்ப குதியிலே ஏனைய இனத்தவர்களோடு மிக நட்புடனும், இணக்கத்துட னும், ஒற்றுமையுடனும் வாழ்ந்துள்ளனர். முஸ்லிம்களின் விஷேச ஆற்றல்களை உணர்ந்த கண்டியர்களும், அதன் பின்னர் அதிகாரம்
செலுத்திய ஆங்கிலேயர்களும், அத்திறமைகளை நாட்டின் வளர்ச் சிக்கு நன்கு பயன்படுத்திக் கொண்டனர். நாட்டின் ஏற்றுமதி, இறக்கு மதி, வணிகத்திலும், பொருள் போக்குவரத்திலும் முஸ்லிம்கள் முக் கிய பங்கினை வகித்தனர்.
நிறை அறிவும் வரலாற்றுணர்வும் உள்ளவரும், மாத்தளை ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான ஜனாப் ஏ.ஏ.எம். புவாஜி “மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு" என்ற இந்நூ லில் முஸ்லிம்கள் தொடர்பான அத்தனை விஷயங்களையும் விரிவாக வும் ஆழமாகவும் எழுதியுள்ளார்.
மாத்தளையில் நடைபெறும் தேசிய மீலாத் விழாவுக்கு வேறு பரிமாணங்களும் இருக்கின்றன. மாத்தளையைச் சேர்ந்த ஒரு முஸ் லிம் தனவந்தர் நன்கொடையாக வழங்கிய இரண்டு ஏக்கர்காணியில் ஒரு வீடமைப்புத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இங்கே மீலாத் விழா வழங்கும் முக்கிய பாடங்களில் ஒன்றான மனித ஒற்றுமை செயல் ரூபம் பெறுவதைப் பார்க்கின்றோம். எண்ணற்ற நற்பிரஜை களை உருவாக்கியுள்ள மாத்தளை ஸாஹிராக் கல்லூரி மத்திய மாகாண சபையின் ஆதரவினால் புதுப்பொலிவு பெறுவதைக் காண் கின்றோம். மாத்தளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஐந்து பாராளுமன்ற அங்கத்தவர்களும் ஒரு முஸ்லிம் பாடசாலையின தும் அதன் சுற்றாடல் வளர்ச்சிக்காகவும் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலி ருந்து ஒரு கணிசமான தொகையினை வழங்கித் தேசிய ஒற்றுமைக்குச் சான்று பகர்வதைக் காண்பது எம் மனதுக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகின்றது. எனது அமைச்சும் மாத்தளை ஸாஹிரா பள்ளிவாசலின் விஸ்தரிப்புக்காக இரண்டு இலட்சம் ரூபா வழங்கியுள்ளது.
இதேவேளையிலே, மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் பாரம் பரியச் சிறப்புக்களை வெளியுலகத்திற்குக் காட்டவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். தொன்மைமிகு காணி உறுதிப்பத்திரங்கள், சன்னஸ்கள், ஒலைச்சுவடிகள், பழைய கையெழுத்துப் பிரதிகள், பாரம்பரிய கைவினைப் பொருட்கள், முஸ்லிம்களின் பாரம்பரிய உடைகள் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒர் இஸ்லா
Page 8
19
மிய கலாச்சாரக் கண்காட்சியும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக் கண்காட்சி முஸ்லிம்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையின ருக்கு எமது பாரம்பரியத்தின் உயர்வையும் சிறப்புக்களையும் எடுத் துக்காட்டும்.
இவ்விழாவின் வெற்றிக்குத் தமது பூரண ஒத்துழைப்பையும் வழங்கிய தேசிய மீலாத் விழா மாத்தளை மாவட்ட செயற்குழுத் தலைவரும், செயற்றிறனும், ஆளுமையும் நிரம்பிய கல்விமானுமான ஜனாப்ஏ.இசட்-ஒமர்டீன்,துடிப்பும், ஆர்வமுமிகு செயலாளர்ஜனாப் யூ.எல்.எம்.ராஸிக், ஜே.பி. ஏனைய குழு அங்கத்தவர்கள் அனைவருக் கும் இவ்வேளையிலே என்இதயபூர்வமானநன்றியினைச்சமர்ப்பிப்ப தில் பெரும் மகிழ்வடைகின்றேன்.
அல்ஹாஜ் அப்துல் ஹமீத் முஹம்மத் அஸ்வர், பா.உ. முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அலுவலகம், 34, மலே விதி, கொழும்பு-02 இலங்கை
13 ForeWord
This book "Muslims of Matale District; Their History and Heritage" is being issued on this occasion of the National Meelad-Un-Nabi Celebrations which are being held today, October 2, 1993. This book will be a permanent rememberance of our celebrations at Matale. This book is not a One-shot affair but a part of our intention to document the history and culture of the Muslims of this country, under the rubric "Know Your District series. Already, its Counterparts on Kalutara and Anuradhapura districts have been issued and make bold to state, have been warmly received by Muslims and non-Muslims alike. Simultaneously, With this Volume, a Souvenir Commemorating these Celebrations is also being released today.
The Meelad-Un-Nabi Celebrations are being conducted as National events, not merely as the Celebratory event of a minority. This fact has been grasped by the public and the Government and lends, strength to the belief that all the Communities in the island are like a bouquet of flowers, each flower Contributing its own special characteristics to the total design.
Meelad-Un-Nabi celebration is not only the celebration of the birth anniversary of a religious leader; it is the celebration, the remembering of all the principles for which Muhammed (sal) stood for and the noble qualities which were integral to his life. Indeed, Muhammed (sal) was the best model to all
Page 9
4.
mankind. He was kind, forgiving, sympathetic, amiable, amicable, undaunted in the face of almost insurmountable tribulations, He was ever patient in midst of misfortunes.
By celebrating the anniversary of such a life, we remind ourselves of these noble qualities. We must resolve to bring these qualities into our lives also. That will be the true essence of these celebrations. On these days, when humanity is torn by divergent views and where there is so much suffering all around, these qualities are our only hope for peace and prosperity. Hence, the value of Meelad-un-Nabi, is perennial.
Matale District, of which the town of Matale is the hub, is an area where the Muslims play a significant role. Matale is one of the Dissawanies which comprised the Kandyan Kingdom. Hence, the Muslims and others of Matale had never experienced European paramountcy except for a period lasting from 1815 to 1948. The people of Matale are, in consequence, self-reliant, independent in thought and action and filled with tough practicality tinged with wry humour.
The Muslims, throughout their long years in Matale, have been conspicuous for their co-operation and friendly interaction with all the communities. The special abilities of the Muslims had been recognized and put to use by the kingdom of Kandy and later governments. For instance, they formed an important part, in the Kandyan period, of the "Madige badde' which transported the exports and imports of the kingdom. All these factors, are shown intelling detail in the book"Muslims
S
of Matale District. Written by Mr.A.A.M. Fuaji, a highly qualified graduate and a former Principal of Matale Zahira College; it encapsulates everything that, should be known about the Muslims of Matale.
The Meelad-un-Nabi Celebrations have other dimensions. A philanthropist of Matale has graciously donated a two-acre plot, on which it is intended to build houses. This is a practical measure that will spread the measage of Meelad-un-Nabi throughout Sri Lanka.
Zahira College, Matale, which has moulded hundreds of students of Matale into good citizens, is being modernized by a generous grant from the Provincial Council.
All the five members of the Parliament representing the Matale District have Contributed monies from their funds to the development of this Muslim School and its environs. Consider this as a shining example of the national unity that prevails in Sri Lanka and thank them for this magnanimous gesture.
My Ministry has donated two hundred thousand rupees for the expansion of the Zahira College Mosque.
We have not lost sightof bringing out the heritage of Matale Muslims. Synchronous with the Meelad-un-Nabicelebrations, an exhibition is being mounted. This will contain the past documentation of the Muslims of Matale Such as deeds, 'sannasa'andola leaf manuscripts. The special dresses of the
Page 10
6
Muslims, including ceremonial robes, will be on display. It is also intended to bring together rare artefacts of the Muslims of Matale.This exhibition, it is hoped, will bring to the consciouSness of the Muslims, specially the younger generation, the wonderful heritage they are heir to.
take this opportunity to thank Mr. AZ. Omerdeen, the dynamic President of the Meelad Celebrations Organising Committee, its dedicated Secretary Mr. U.L.M. Razik J.P. and all the other Committee members who stood shoulder to shoulder with us to make these Meelad-un-Nabi celebrations a reality and a Success.
Alhaj Abdul Hameed Mohamed Azwer, M.P. Minister of State for Muslim Religious & Cultural Affairs
Office of the Minister of State for Muslim Religious & Cultural Affairs,
34, Malay Street,
Colombo 2,
Sri Lanka
பதிப்புரை 7ן
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றினை மாவட்ட ரீதியாக ஆராய்ந்து நூலுருவில் வெளிக்கொணர எமது இராஜாங்க அமைச்சு 1991-ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஆரம்பித்த முன்னோடி முயற்சியில் இந்நூல் மூன்றாவது வெளியீடாகும்.
1992-ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி அதிமேதகு ரண சிங்க பிரேமதாச அவர்களது தலைமையில் களுத்துறையில் நடை பெற்ற நடமாடும் ஜனாதிபதி சேவையின் பொழுது "களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள்’ எனும் முதலாவது நூல் பிரசுரமாகியது. அத னைத் தொடர்ந்து கடந்த வருடம் அப்போதைய பிரதமரும் இப்போ தைய மேதகு ஜனாதிபதியுமான டீ.பி.விஜயதுங்க அவர்களைப் பிர தம விருந்தினராகக் கொண்டு அநுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய மீலாதுன் நபிவிழாவின் போது 'அநுராதபுர மாவட்டமுஸ்லிம்கள்" எனும் இரண்டாவது வெளியீடு சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது "மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள்’ எனும் இந்நூல் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பிரதம அதிதியாகக் கொண்டு அங்கு நடைபெறும் நான்காவது தேசிய மீலாத் விழாவின் பொழுது வெளிவருவது நிறைவையும், மகிழ்வையும் தருகிறது.
முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் (பாராளுமன்ற உறுப்பி னர்) அவர்கள் இவ்வமைச்சை 1990 மார்ச் 30-ல் தலை நோன்பு தின மன்று பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை 22 பிரசுரங்கள் இவ்வமைச்சு மூலம் வெளிவந்துள்ளமை பெருமைக்குரிய ஒரு விடய மாகும். ஒரு பிரசுராலயம் செய்யக்கூடிய அளவு பணியை முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சும், அதன்திணைக்க ளமும் செய்துள்ளமை மாண்புமிகு இராஜாங்க அமைச்சர் அவர்களு டைய ஆர்வம், வழிகாட்டல், அலுவலர்களின்பணித்திறமை என்பன வற்றின் வெளிப்பாடேயாகும்.
தேசிய மீலாதுன்நபி விழா தொடர்பாகவும், முஸ்லிம் கலாசார
Page 11
8
விருது விழாத் தொடர்பாகவும் வெளிவருகின்ற விஷேட மலர்களும் கூட பல அறிஞர்களினதும், வரலாற்று ஆசிரியர்களினதும் அரிய கட்டுரைகளைத் தம்மகத்தே கொண்டு வெளிவருகின்றன.
ஒரு சமூகத்தின் பாரம்பரிய விழுமியங்களை வெளிக்கொணர்வ திலும், பாதுகாப்பதிலும், வருங்காலத்திற்காகப் பத்திரப்படுத்தி வைப்பதிலும், வரலாறு முக்கிய பங்கொன்றினை வகிக்கிறது. பண் டைய மரபினை எடுத்துக்காட்டி, இன்றைய மரபினை வளம்படுத்தி, வருங்கால மரபுகளை நெறிப்படுத்தும் வல்லமை வரலாற்றுக்குண்டு. அதேபோன்று இந்நாட்டு முஸ்லிம்களுக்கு அரேபியர் இங்கு தொடர்பு கொண்ட காலம் முதலாகவே தனித்துவமான பாரம்பரிய வரலாறொன்று உண்டு. இம்முதுசொம் எதிர்வரும் நூற்றாண்டுகளின் தலைமுறையினர்களுக்கும் விட்டுச்செல்லப்பட வேண்டுமெனும் முயற்சியாகவே அமைச்சர் அஸ்வர் அவர்களின் பணிப்பின் பேரில் இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாத்தளை மாவட்டம் இலங்கையின் ஏனைய மாவட்டங்களைப் போன்று புகழ்மிக்க வரலாற்றுப் பாரம்பரியத்தை உடையது. தனது ஈராயிரத்து ஐநூறு ஆண்டு கால வரலாற்றில் சுமார் 133 ஆண்டுகள் மட்டுமே அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலம் தவிர சுதந்திரத் தைப் பேணிய ஓர் இராச்சியம் கண்டி இராச்சியமாகும். இக்கண்டி இராச்சியம் தான், மேற்கு தென் கரையோர முஸ்லிம்கள் போர்த்துக் கேயரினால் துன்புறுத்தப்பட்ட வேளையில் அவர்களுக்கு அடைக்க லம் கொடுத்து புதுவாழ்விற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகும். இவ்விராச்சியத்தின் ஓர் அங்கமான மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றினை வெளிக்கொணர முடிந்ததில் இவ்வமைச்சு பெருமை கொள்கிறது.
இவ்வரிய பணியை மிகக்குறுகிய காலத்துள் செய்து முடித்தவர் பேராதனைப் பல்கலைக்கழகப்பட்டதாரியும், மாத்தளை ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக் கடமையாற்றியவருமான ஏ.ஏ.எம். புவாஜி
19
அவர்களாவார். பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆய்வுத்துறையில் அவர் பெற்ற பயிற்சியும் அநுபவமும் இந்நூலைத் தரமானதாக வெளி யிடுவதற்கு உதவியதைக் காண்கின்றோம்.
அவரது முயற்சிக்குப் பக்கபலமாய் இருந்த்ோர்ஜனாப் ஏ.இசட். உமர்தீன் அவர்களைதலைவராகவும் ஜனாப்யூ.எல்.எம். ராஸிக் அவர் களைச் செயலாளராகவும் கொண்ட தேசிய மீலாத் விழாவின் மாத் தளை மாவட்டக் குழுவாகும். இந்நூலின் கையேட்டுப் பிரதியைச் செப்பனிடுவதில் உதவிய முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்கள முன்னைநாள் உதவிப்பணிப்பாளரும், பேரறிஞருமான கன்சுல் உலூம் அல்ஹாஜ், எம்.எம்.எம். மஹ்ருப், பேராதனைப் பல்க லைக்கழக மெய்யியல்துறை முதுநிலை விரிவுரையாளர் எம்.எஸ். எம். அனஸ் மற்றும் செளதுல் ஹக் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.பைரூஸ், காதிபுல் ஹக் அல்ஹாஜ் எஸ்.ஐ. நாகூர் கனி ஆகியோர் நன்றிக்குரி யோர் ஆவர்.
மிகக் குறுகிய காலத்துள் இதனைச் சிறப்புற அச்சிட்டுத்தந்த திரியெம் பிரசுரத்தாருக்கும் எமது நன்றிகள்.
அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல், இராஜாங்க அமைச்சின் செயலாளர்
Page 12
90 என்னுரை
"வரலாற்றின் முதுகிலே மனிதன் முன்னேறுகிறான்" என்று மாபெரும் சிந்தனையாளரும், தத்துவ ஞானியுமான மகாகவி அல்லாமா இக்பால் ஒரு முறை பிரஸ்தாபித்தார்.
நம் முன்னோர் பிதிரார்ஜிதமாக நமக்கு வழங்கிச் சென்ற பாரம்ப ரியத்தின் வெளிச்சத்தில், அவர்கள் விட்டுச்சென்ற அடிச்சுவட்டில் சென்றுதான், நாம் நமது நிகழ்காலத்தைச் சீர்ப்படுத்திக் கொள்ளவும், பிரகாசமான வருங்காலத்தை உருவாக்கிக் கொள்ளவும் வேண்டியுள்
துெ.
எமது பூர்வீகம், இலங்கையில் நாம் குடியேறிய காலம், ஸய் லான் எனவும், ஸ்ரந்தீப் எனவும் நம்மூதாதையரால் அழைக்கப்பட்ட இவ்விலங்கை மணித்திரு நாட்டின் வரலாற்று வளர்ச்சியில், எம் பங்க ளிப்பு இத்தியாதிபற்றிய ஆதாரபூர்வமான அறிவும் தெளிவும், வர லாற்றுக் கணிப்பும், இன்றைய கட்டத்தில் காலத்தின் தேவையென் பதை எவரும் மறுப்பதற்கில்லை.
இந்நிலையில், தேசிய மீலாத்விழா இவ்வாண்டு வரலாற்று முக் கியத்துவம் வாய்ந்த மாத்தளையில் கொண்டாடப்படுவதை முன் னிட்டு, மாத்தளை முஸ்லிம்களின் வரலாறு ஆவனப் படுத்தப்படும் ஆக்கபூர்வமான நிகழ்வுக்குக் கால்கோலிட்ட இஸ்லாமியப் பண்பாட் டலுவல்கள் அமைச்சும், திணைக்களமும் இராஜாங்க அமைச்சர் அல் ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் பாராட்டப்படல் வேண்டும்.
மாத்தளை முஸ்லிம்களின் வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவு செய்யும் அரும்பணியை மிகுந்த பொறுப்புணர்வுடனும், அர்ப்பணிப் புடனும் செய்து முடிப்பதற்கு நான் பெரும் பிரயாசையெடுத்துள்ள மைக்கு இப்பதிவுகளே சான்றுபகரும்.
காலக்கெடு விதிக்கப்பட்டு செயற்பட நேர்ந்த நிர்ப்பந்தம் காரண மாய், இவ்வாய்வில் விடுபட்டுப்போனவை பல இருக்கலாம். இன்
92
னுஞ் சில விரித்தெழுதப்பட வேண்டியனவாயும், மேலும் ஒளிபாய்ச் சப்பட வேண்டியனவாயுமிருக்கலாம். குறிப்பிடப்படவேண்டிய சில பெயர்கள் விடுபட்டும் இருக்கலாம்.
எனினும், ஆவணப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுப் பதிவை, நான் நேசிக்கும் சமூகத்தவர்க்குச்சமர்ப்பிக்கும் அரிய வாய்ப்பு கிடைத் தமைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நான் நன்றி செலுத்துகின் றேன். இவ்வேளையில் எனக்கு கல்வியில் ஆர்வத்தையூட்டிய என் பெற்றோர்களையும், நல்லறிவூட்டிய ஆசிரியர்களையும் நன்றியுணர் வுடன் நினைவு கூர்வதில் நெஞ்சம் மகிழ்கிறேன்.
வரலாறு, ஆய்வு போன்ற துறைகளில் ஆர்வங் கொண்ட அறிவு ஜீவிகள் மட்டுமன்றி, ஓரளவு எழுத்துவாசனை கொண்ட சகலரும் வாசித்துப் பயனடைய வேண்டுமென்ற நன்னோக்குடன், கடினசொற் பிரயோகங்கள் யாவையும் தவிர்த்து, சரளமான எளிய நடையில் இதனை எழுத முயன்றுள்ளேன்.
மாத்தளை மாவட்ட முஸ்லிம் ஊர்களைச் சேர்ந்த பெருமக்கள்
பலர், இப்பணியில் எனக்கு நல்கிய ஒத்துழைப்பு என்னை மெய் சிலிர்க்கவைத்தது.
சிரமசாத்தியமான இப்பணியில் நான் உற்சாக் உத்வேகத்துடன் ஈடுபடுவதற்கு ஊக்குவிப்பு நல்கி தேவையான உதவிகளை வழங்கிய மாத்தளை அரச்ாங்க அதிபர் திரு. கே.டப்லியூ.ஈ. கரலியத்த, வரலாற் றுத்துறையில் என்ஆர்வத்தை வளர்த்துவிட்டவரும், என்வரலாற்றுப் பார்வையை நெறிபடுத்தியவரும் என் ஆசிரியருமான தேசிய மீலாத் குழுத்தலைவர் ஜனாப் ஏ.இலட் ஒமர்தீன், கையெழுத்துப்பிரதிக ளைப் பார்வையிட்டும் ஆலோசனைகள் வழங்கியும் உதவிய என் இனிய நண்பர் பண்ணாமத்துக் கவிராயர் எஸ்.எம். ஃபாரூக், பல ஊர்களுக்குச் செல்லுவதற்கு தன் வாகனத்தை தந்துதவியது மாத்திரம் அல்லாமல், என்னோடு பல இடங்களுக்கும் வந்து எனக்கு உற்சாகம் ஊட்டிய என் அன்பு சகோதரர் ஹாஜிஏ.ஏ.எம்.வைமரிக்கார், படிப்ப தற்குச் சிரமமான கையெழுத்தில் நான் எழுதிக் குவித்தவற்றைப் படி யெடுத்துத்தரும் சிரமமான பணியில் சற்றேனும் சலிப்பின்றி பல
Page 13
99.
இரவு கண் விழித்திருந்து ஈடுபட்ட என் அன்பு மாணவன் எச்.எம். பரீன் ஆகிய ஐவருக்கும்ரன் இதயம் கனிந்த நன்றிகள் உரித்தாகுக. என் இதயத்தில் மகிழ்ச்சி ததும்பும் இவ்வேளையிலே என் அன்பு ஆசிரியை திருமதி. எஸ்.நடராஜா அவர்களை நன்றியோடு நினைவு கூர்கின்றேன்.
மாத்தளை முஸ்லிம்களின் வரலாற்றுக் குறிப்பினைப் பதிவுசெய் யும் பூர்வாங்க முயற்சியாக இதனைக் கொள்வதே பொருத்தமென நினைக்கிறேன். வருங்காலத்தில் இவ் ஆய்வினை மேலும் விரிவாக மேற்கொள்ள முன்வரும் வரலாற்று மாணவருக்கு எனது இம்முயற்சி வழி அமைக்க வேண்டுமென்பதே எனது வேணவா 'அல்ஹம்துலில்லாஹ்" ஏ.ஏ.எம். புவாஜி 111, கொடப்பொல ரோட், மாத்தளை.
23
அத்தியாயம் - 1
பொதுவாக, ஊர்ப்பெயர்கள் காரணப் பெயர்களாகவே இருக்கும். எனவே மாத்தளை என்ற பெயர் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்குவதற்கும் பல காரணங்கள் காட்டப்படுகின்றன. தன்னுடைய மாமன்மார்சிலரைத் தோற்கடித்து, இலங்கையின்ஆட்சி யைக் கைப்பற்றிய, இலங்கையின் மிக மூத்த மன்னர்களுள் ஒருவ னான பந்துகாபயன், பின்னர் இத்தீவின் மத்தியப் பகுதியில் அமைந்தி ருந்த கிரிகந்த எனும் பிரதேசத்தைத் தன் தாயின் சகோதரனும், தன்னு டைய மனைவி சுவர்ணபாலியின் தந்தையுமான சிவ என்பவனுக்கு வழங்கினான்.
இன்று மாத்தளை மாவட்டம் என்றழைக்கப்படும் பிரதேசமே அன்று கிரிகந்த என்று அழைக்கப்பட்டிருக்கின்றது.
மன்னன் தன்னுடைய தாயின் சகோதரனுக்கு, அதாவது தன்னு டைய மாதுலனுக்கு வழங்கிய பிரதேசம் என்றபடியால், மக்கள் இப்பி ரதேசத்தை “மாதுல’ என்று அழைக்கலாயினர்.
மாதுல என்ற பெயரே மாத்தளை என மறுவியதாக ஒரு கதை வழக்கில் இருக்கிறது. இரண்டு மலைத் தொடர்களுக்கு இடையில் அமைந்த விசாலமான சமதரையாக இப்பிரதேசம் இருந்தபடியால், விசாலமான இடம் எனும் பொருள்பட “மகாதளய' என்று இப்பிர தேசம் அழைக்கப்பட்டதாகவும் 'மகாதளய’ என்ற பெயர் காலப் போக்கில் மாத்தளை எனத் திரிந்தது என்றும் சிலர் நம்புகின்றனர்.
கஜபாகு என்னும் மன்னன் சோழ நாட்டிலிருந்து பன்னீராயிரம் சிறைக்கைதிகளை இலங்கைக்கு அழைத்து வந்ததாகவும், அவர்களில் ஒரு பெரும் பகுதியினரை மாத்தளைப் பிரதேசத்தில் குடி அமர்த்திய தாகவும், அதனால் பெருங்கூட்டம் எனும் பொருளில் மாத்தளைப் பிரதேசத்தை மக்கள் 'மாத்தளைய" என அழைத்தனரென்றும் மாத்த
Page 14
94
ளைய என்ற பெயரே மாத்தளை என மாறியது" என்றும் வேறு சிலர் விளக்கம் கூறுகின்றனர். எனவே, மாத்தளை என்ற பெயர் எவ்வாறு தோன்றியது? என்பதைப் பற்றி திட்டவட்டமாக எதுவும் கூற முடி
tuftğ5/.
அண்மைக் காலம் வரை மாத்தளை நகரம் பன்னாமம் என முஸ் லிம்களாலும் தமிழர்களாலும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
இன்றும் பன்னாமம் என்ற பெயர் முற்றாக மறைந்துவிட் வில்லை. 1762-ஆம் ஆண்டு கண்டிஅரசனைச் சந்திக்க வந்த ஆங்கிலே யத் தூதுவரான ஜோன் பிபஸ் மாத்தளையைப் பன்னாமம் என்றே அழைத்துள்ளார்.
1861-ஆம் ஆண்டு மாத்தளை நகரில் வாழ்ந்த இரண்டு முஸ்லிம் கள் தொடர்பான ஒரு கடன் பத்திரத்தை மாத்தளை பன்னாமத்து கடை விதான ஆராச்சி என்பவர் எழுதியுள்ளார். இது மாத்தளையின் ஒரு பகுதிக்குப் பன்னாமம் என்ற பெயர் உத்தியோக பூர்வமாக வழ்ங்கி வந்திருக்கிறது என்பதை உணர்த்துகின்றது.
திசாவ ஒருவரினால் மாத்தளைப் பிரதேசத்திலுள்ள ஒவில்ல எனும் ஊரில் இருந்து அகற்றப்பட்ட 'பன்னயோ’ என்ற சாதியினர் இன்று மாத்தளை நகரம் அமைந்துள்ள பிரதேசத்தின் ஒரு பகுதியில் குடியேறியுள்ளனர்.
இதனால் இப்பகுதி பன்னகம என்ற நாமத்தைப் பெற்று இருக்கி றது. வெலிகம என்ற பெயர் வெலிகாமம் என அழைக்கப்படுவது போல் பன்னகம என்பது முஸ்லிம்களால் பன்னகமம் என வழங்கப் பட்டு பின்னர் அது பன்னாமம் என்று மறுவி இருக்கலாம்.
மாத்தளை என்ற பெயரின் தோற்றத்தைப் பற்றி ஐயங்கள் எழ லாம்; ஆனால் மாத்தளையின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி எவருக்கும் எந்த ஐயமும் எழ முடியாதபடி மாத்தளையின் வரலாறு புகழ் பூத்ததாக இருக்கின்றது.
வரலாற்றுப்புகழ் மிக்க அநுரதபுரத்தைத்தலைநகரமாக்கிய பந்து காபயனுக்குப் பட்டமகிஷியை வழங்கிய பிரதேசம் மாத்தளை.
95
பெளத்த மதத்தின் உயர்வுக்காகவும் தேசிய விடுதலைக்காகவும் எல் லாளனுக்கெதிராக துட்டகைமுனு போர் முரசைக் கொட்டிய போது அவனுக்கு உதவியவர்கள் மாத்தளை மக்கள்.
எழுத்தில் வடிக்கப்படாதிருந்த பெளத்த மதப் போதனைகள் அழிந்துவிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டபோது, சாக்கிய முனியின் உயர் போதனைகளை எழுத்தில் வடிப்பதற்கு களம் அமைத்துக் கொடுத்து பெளத்த மத வரலாற்றில் மாத்தளை அழியா இடம் பெற்றிருக்கிறது. மாத்தளை நகருக்கு அருகாமையில் இருக்கும் அளுவிகாரையும், கலையார்வமிக்க காசியப்பன் உல்லாசமாக வாழ்ந்து நாட்டை ஆண்ட, சர்வதேசப் புகழ் பெற்ற சீகிரிய குன்றம் இருப்பதுவும் மாத் தளை மாவட்டத்திலேயே; தம்புள்ளைகுகைக்கோயில் இருப்பதுவும் இங்கேயே.
1635-ஆம் ஆண்டு மாத்தளைப் பிரதேசம் இரண்டாம் இராஜசிங்க னின் மூத்த சகோதரனான விஜயபால எனும் மன்னனின் தலைமை யின் கீழ் ஓர் உய இராச்சியமாக நிகழ்ந்திருக்கிறது.
இவன் மாத்தளை நகருக்கு மூன்று மைல் தொலைவிலுள்ள கொடப்பொல எனும் இடத்தில் இருந்து அரசாண்டான். இதனால் இம்மன்னன் கொடப்பொல மன்னன் ' என்று அழைக்கப்பட்டது போலவே இவனின் இராசதானியை மாத்தளை நகரோடு இணைத்த பாதையின் ஒரு பகுதி இன்றும் "கொடப்பொல ரோட்" என்றே அழைக்கப்படுகின்றது.
நாயக்க மன்னர்கள் இங்கே கோட்டை கட்டி இப்பிரதேசத்தைப் பாதுகாத்தார்கள். ஆங்கிலேயர்ஆட்சியை விரட்டுவதற்காக 1848-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பெரும் முயற்சி மாத்தளை மாவட்டத்தையே மையமாக கொண்டிருந்தது.
அன்றும் இன்றும் 1848-ஆம் ஆண்டு கலகம் மாத்தளைக் கலகம் என்றே அழைக்கப்படுகின்றது.
இவை அனைத்தும், இலங்கை வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே மாத்தளை முக்கியமான ஒரு பிரதேசமாக விளங்கியிருக்கி றது என்பதைப் புலப்படுத்துகின்றன.
Page 15
26
902 சதுரமைல் பரப்புடைய மாத்தளை மாவட்டம் மத்திய மாகா ணத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது.
மாத்தளைப் பள்ளத்தாக்கின் சராசரி உயரம் 1200 அடியாகும் . மாத்தளைப் பிரதேசத்தின் ஊடாக ஒடும் மலைத் தொடர்கள் எட்டி பொல, படடு, எல்கடுவ, பலக்கடுவ, உன்னஸ்கிரிய, ஒவிலிகந்த தும்மல்தெனிய போன்றவைகளாகும்.
இப்பிரதேசத்தினூடாக பாய்கின்ற சுது கங்கை, அம்பன் கங்கை முதலிய ஜீவநதிகள் மாத்தளையை வளம்படுத்துவதோடு வடமத்திய மாகாணத்தையும் வளம்படுத்தி ஒரு காலத்திலே தென்கிழக்காசியா வின் நெற்களஞ்சியம் என இலங்கை புகழ்பெறுவதற்குக் காரணமாயி ருந்திருக்கின்றன.
வற்றாத நீர் ஊற்றுகள் பல இருப்பது மாத்தளையின் விஷேச புவியியல் தன்மையாகும். தியபுபுல, மடவளை, உல்பொத என்பவை இத்தகைய ஊற்றுகளில் இரண்டாகும்.
மாத்தளை மாவட்ட பொருளாதாரம் கலப்பு பொருளாதாரமா கும். நெல்லே மாத்தளை மாவட்டத்தில் பயிரிடப்படுகின்ற முக்கிய உணவுப்பயிராகும்.
இம்மாவட்டத்தில் 30,000ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் நெல் பயிரிடப்படுகின்றது. சில காலங்களுக்கு முன்வரை இங்கே பழைய விவசாய முறைகளே கையாளப்பட்டன.
ஆனால் இப்போது நிலைமை பெருமளவுக்கு மாறிவிட்டது. மகாவலி அபிவிருத்தித் திட்டம் இப்பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளுக்கு விவசாயப் புனர் வாழ்வை அளித்துள்ளது.
தேயிலையும் ரப்பரும் இங்கே விளைகின்ற முக்கிய பணப்பயிர் களாகும்.
ஏறத்தாழ 20,000 ஏக்கர்களில் தேயிலையும், 32,000 ஏக்கர் நிலப்ப ரப்பில் ரப்பரும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தளவு கொக்கோ செய்கை இம்மாவட்டத்தில் பரவவில்லையென்ற போதிலும்,
97
கொக்கோ மாத்தளை மாவட்ட பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை மறுக்க முடியாது.
மாத்தளை மாவட்டத்தின் ஒரு பகுதியிலே இன்று புகையிலைப் பயிர்ச் செய்கை பிரபல்யமாகியுள்ளது. தென்னை, மிளகு, ஏலம் போன்ற பயிர்களும் இங்கே காணப்படுகின்றன.
பெரும் கைத்தொழில்கள் மாத்தளை மாவட்டத்திலே போதிய ளவு இன்னும் வளரவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.
வரக்கா முறையில் அமைந்திருக்கும் மட்பாண்ட தொழிற்சாலை ஏராளமான மாத்தளை பிரதேச இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்புகளை அளித்துள்ளது.
"பட்டிக்" தொழிற்சாலைகள் சில வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் ஓர் ஆடைத் தொழிற்சாலை ஆரம் பிக்கப்பட்டிருக்கிறது. வேறு சில ஆடைத் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
செங்கல், சுண்ணாம்பு உற்பத்தி, பீடித்தொழில், வீட்டுத் தளபா டங்கள்செய்தல் போன்ற சிறுதொழில்கள் பல இப்போது இம்மாவட் டத்தில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஏறத்தாழ 1970-ஆம் ஆண்டில் இருந்து இரத்தினக்கல் தொழில் மாத்தளையில் முக்கியத்துவம் பெற்று உள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லக்கல, எலஹெர போன்ற பகுதிகளில் ஏறத்தாழ 1970-ஆம் ஆண்டள வில் தரமான நீலக்கற்களும் வேறு வகை இரத்தினக் கற்களும் கண்டெ டுக்கப்பட்டன.
இக்கண்டு பிடிப்பு மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இப்ப குதியை முற்றாக மாற்றியமைத்துவிட்டது. இது மாத்தளை நகரத்தி லும் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
மாத்தளை நகரமே இந்த மாவட்டத்தின் பரிபாலன, வணிகத் தலைநகரமாக விளங்குகின்றது.
Page 16
98
இன்றைய நிர்வாக முறைக்கேற்ப ரத்தொட்ட, தம்புள்ளை, கலே வெல, பல்லேபொல, உக்குவளை,நாவுல போன்ற பிரதேச நகரங்க ளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
மாவட்ட மக்களின் கல்வித் தேவைகளைக் கவனிக்க தரமான சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் தேவையான இடங்களில் அமைந்துள்ளன.
பெளத்தர்களுக்கு ஓர் அளுவிகாரை; இந்துக்களுக்கு ஒரு முத்து மாரியம்மன் கோவில்; கிறிஸ்துவர்களுக்கு வஹகோட்டை தேவால யம்; முஸ்லிம்களுக்கும் கோட்ட கொடை பள்ளிவாசல் என நான்கு முக்கிய மதத்தவர்களையும் இலங்கையின்பல பாகங்களில் இருந்தும் கவரும் வணக்கஸ்தலங்கள் மாத்தளை மாவட்டத்தில் இருப்பது சிறப் பாகும்.
சிங்களவர்கள் பெரும்பான்மையினராய் வாழும் இம்மாவட்டத் தில் தமிழர்களும், முஸ்லிம்களும் கணிசமான அளவு வாழ்கின்றனர்.
இன ஒற்றுமைக்குப் பெயர் போன மாவட்டம் இது; சிங்களவர்க ளும், தமிழர்களும், முஸ்லிம்களும் பரங்கியரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் வாழும் மாவட்டம் இது.
இனங்களுக்கிடையே சில சிறு பிரச்சினைகள் முன்னர் காணப் பட்ட போதிலும் மாத்தளை மாவட்டம் இன ஐக்கியத்திற்கு ஒரு எடுத்துக்காட்டான மாவட்டமாகவே விளங்கி வருவதைச் சிறப்பாகக் கூறலாம்.
ஆதாரக் குறிப்புகள்
1 History of Matale - ADistrict Publication 2. ACLawry - Gazetteer of the Central Province of Ceylon, (1898).
3. Fr. S.G.Perera - History of Ceylon 4. A.C.Lawry - Gazetteer of the Central Province of Ceylon.
99
அத்தியாயம் - 2
ஒர் உலகப் படத்தில் இலங்கையின் நிலையை அவதானிக் கும் ஒருவரின் மனதில் முதலில் பதியும் எண்ணம் இலங்கை ஒரு தீவு என்பதும், அது ஒரு பாரிய நிலப்பரப்பான இந்திய உப கண்டத்திற்கு மிக அண்மையில் அமைந்திருக்கிறது என்பதுமேயாகும்.
மேலும் சற்று அவதானிக்கும் போது இலங்கை மேலைநாடுக ளுக்கும் கீழைநாடுகளுக்கும் இடையே ஏறத்தாழ மத்தியில் அமைந்தி ருக்கிறது என்பது தெட்டெனப் புலனாகும்.
எனவே, இவ்விரு நிலத் தொகுதிகளுக்குமிடையே வர்த்தகத் தொடர்புகள் ஆரம்பமானபோது, ஆழிகளின் ஆரவாரங்களையும் அபாயங்களையும் துச்சமெனக் கருதி, திரைகடல் ஒடித் திரவியம் தேடும் முயற்சியில் மக்கள் சமுதாயத்தின் ஒரு சாரார் ஈடுபட்டபோது, இலங்கை விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, அது இந்த வர்த்தகத்திலே முக்கியபங்கு பெறுவது புவியியல் கட்டாயமாகிவிட் lso
பாய்மரக்கப்பல்களிலே, காற்றின் போக்கு ஒன்றையே நம்பி, கடல் வாணிபத்தில் ஈடுபட்ட வணிகர்களுக்கு ஒர் ஒப்பற்ற தங்குமிட மாக இலங்கை அமைந்தது. இந்த வணிகர்களுக்கு இலங்கையிலே அரச ஆதரவும், மக்களின் வரவேற்பும் கிடைத்தன.
இலங்கையின் கரையோரங்களிலே அமைந்திருந்த இயற்கைத் துறைமுகங்கள் இவ்வர்த்தகர்களுக்கு அனுகூலமாய் அமைந்தன.
இவற்றோடு இரத்தினக் கற்கள், முத்துக்கள், யானைத் தந்தங்கள் போன்ற வர்த்தகப் பொருட்கள் இங்கே தாராளமாகக் கிடைத்தமை, இத்தீவின்கவர்ச்சியை மேலும் கூட்டியது. எனவே பண்டைக்காலத்தி லேயே இவ்வர்த்தகத்தில் ஈடுபட்ட உரோமர்களும், அறாபியர்களும்,
Page 17
30
சசானிய பாரசீகர்களும் இத்தீவோடு நெருங்கிய தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர்.
இந்த அந்நிய இனத்தவர்கள்இலங்கையோடுஅதன்வரலாற்றின் ஆரம்பகாலத்திலேயே தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை கிரேக்க உரோம வரலாற்று நூல்களும், எமது நாட்டின் வரலாற்று ஏடான மகாவம்சமும் புதைபொருள் அகழ்வுகளும் நிரூபிக்கின்றன.
ஏறத்தாழ 6-ஆம் நூற்றாண்டிலே உரோமர்கள் கீழைத்தேய வர்த்த கத்திலிருந்து ஒதுங்கிவிட்டனர் அல்லது ஒதுக்கப்பட்டு விட்டனர். எனவே, பெரும் இலாபத்தை வழங்கிய இவ்வர்த்தகம்,பாரசீகர்கள தும், அறாபியர்களினதும், அறாபியர்களின் உதவியாளர்களாக விளங் கிய அபீஸினியர்களினதும் ஏகபோக உரிமையாக மாறியது. இம்மாற் றத்தின் பிரதிபலிப்பை நாம் இலங்கையிலும் அவதானிக்கிறோம்.
ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றி, பரவிய போது அறாபி யர்கள், பாரசீகர்கள், அபீஸினியர்கள் ஆகிய மூன்று இனத்தவர்களும் இஸ்லாத்தைத் தழுவினர்; மூன்று இனத்தவர்களும் அறாபிய மொழி யையே பேசினர்.
எனவே, இக்காலகட்டத்திற்குப் பின்னர் அறாபிய வர்த்தகர் என்ற சொற்கள் பொதுவாக இம்மூன்று இனத்தவர்களையும் குறிக் கின்றன என்றே வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்
அறாபியர்கள் எனப் பொதுவாக அழைக்கப்படும் இம்மூன்று இனத்தவர்களும், இலங்கையரோடு வளர்த்துக் கொண்ட வர்த்தக தொடர்பே இலங்கையில் இஸ்லாம் பரவுவதற்கு வழிகோலியது.
முஸ்லிம்கள் இலங்கைக்கு வர்த்தகர்களாக வந்தார்களேயன்றி, சமயப் பிரசாரகர்களாக வரவில்லை. அவர்கள் இஸ்லாமிய சமயப்பிர சாரத்தில் ஈடுபடவில்லை. பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு நேரமும் இருக்கவில்லை. பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கமும் இருக்க வில்லை; அவர்களின் ஒரே நோக்கம் வியாபாரமே. அதனை அவர்கள் ஒழுங்காகவும், சிறப்பாகவும் செய்தனர்.
3.
ஆனால் இந்த முஸ்லிம்கள் தமது வணிகத்தில் கடைப்பிடித்த நேர்மையும், அவர்களின் அழகிய பழக்க வழக்கங்களும், அவர்கள் காட்டிய மனிதநேயமும் இந்நாட்டு மக்கள் பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்குக் காரணங்களாக அமைந்தன என்பதை சகலரும் ஏற்றுக் கொள்வர்.
இந்திய இஸ்லாமிய மன்னரான அலாஹ"த்தின் கில்ஜி கி.பி. 1311-ஆம் ஆண்டளவில் பாண்டிய நாட்டை மண்டியிடச் செய்தார். ஆனால் விஜயநகரப் பேரரசின்எதிர்ப்பினால் அன்றைய காலக்கட்டத் திலே இஸ்லாமிய ஆட்சி தென்னிந்திய மண்ணில் நிலைபெற வில்லை.
இதற்கு மாறாக இஸ்லாமிய ஆட்சி தென்னிந்தியாவில் ஸ்தாபிக் கப்பட்டிருந்தால், தமிழக அரசியல் வழக்கப்படி இலங்கையிலும் அந்த ஆட்சியை அமைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கும். முஸ்லிம்கள் படையெடுத்து இலங்கையைக் கைப்பற்ற முயற்சிக்கா விட்டாலும், முஸ்லிம் வணிகர்கள் வேறு வழியில் இலங்கையைக் கைப்பற்றியதைப் பார்க்கின்றோம்.
முஸ்லிம்கள் இலங்கையை வாள் கொண்டு கைப்பற்றவில்லை. தாம் சுமந்த பொஇகளின் மூலமே இலங்கை மக்களின் இதயங்களைக் கைப்பற்றிவிட்டனர் என பல வரலாற்றாசிரியர்கள் இஸ்லாம் இலங் கையில் நிலைபெற்ற வரலாற்றைக் கூறும்போது குறிப்பிட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் இலங்கைக்கு எப்போது வந்தனர்; எங்கிருந்து வந்த னர்; அவர்களின் குடியேற்றங்கள் எவ்வெங்கே, எவ்வெவ் அடிப்ப டைகளில் அமைக்கப்பட்டன என்பதையெல்லாம் விவரிப்பது கடின மான காரியமாகும்.
சிங்கள இனத்தின் வரலாற்றினைக் கூறுவதற்கு ஒரு மகாவம்சம் இருப்பதை போல, தமிழர்களின் சரித்திரத்தைக் கூற ஒரு யாழ்ப்பாண வைபவ மாலை இருப்பதைப் போல இலங்கை முஸ்லிம்களின் வர லாற்றைக் கூறுவதற்கு ஒரு மூலாதார நூல் இருந்திருந்தால் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை எழுதும் பணிஇலேசானதாக இருந்திருக் கும். ஆனால் துரதிஷ்டவசமாக அத்தகைய ஒரு நூல் எம்மத்தியில் இல்லை.
Page 18
39
எனவே ஆங்காங்கு காணப்படும் குறிப்புகளையும் ஏனைய வர லாற்று சான்றுகளையும் வைத்தே முஸ்லிம்களின் வரலாற்றை எழுத வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.
அதிலும் சில உண்மைகளை, முஸ்லிம்களின் பரம எதிரிகளான போத்துகேயர்களினதும், ஒல்லாந்தர்களினதும் குறிப்புகளில் இருந்தே அனுமானிக்க வேண்டியுள்ளது என்பதையும் நாம் மறக்கக் &all - (1957.
இலங்கையில் முஸ்லிம் குடியேற்றங்கள்எப்போது ஏற்பட்டன என்பதைப் பற்றிக் கிடைக்கும் சில தகவல்கள் ஒன்றுக் கொன்று முரணாக இருப்பதையும் சில சந்தர்ப்பங்களில் அவதானிக்கலாம்.
சில வரலாற்று ஆசிரியர்கள் நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்து கொண்டிருக்கும் போதே முஸ்லிம்கள் இலங்கையில் குடியேறி இருந் தனர் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வெலன்டின் (Valentyn) எனும் ஒல்லாந்தர் இலங்கை முஸ்லிம்கள் மலபார் முஸ்லிம்களின் சந்ததியினரென்றும் அவர்கள் 15-ஆம் நூற்றாண்டில்தான் இலங்கையில் குடியேறினார்கள் என்றும் கூறுகின்றார்.
ஆனால் வெலன்டினின் கருத்து முற்றிலும் தவறானது என்பது எல்லோரும் கூறும் முடிவாகும். செய்லான், செரந்தீப், ஜஸிரத் அல் யாகூத் (இரத்தினக்கல் தீவு) என்றெல்லாம் அறாபியரால் அழைக்கப் பட்ட இலங்கையில், முஸ்லிம்கள் எப்போது குடியேற்றங்களை அமைத்தார்கள் என்பதைத் திட்ட வட்டமாக கூறுவது சுலபமான தல்ல.
ஏறத்தாழ கி.பி. 922-ஆம் ஆண்டு மரணமான புஜெர்ஹ் இப்னு ஷஹ்ரயார் எனும் இஸ்லாமிய வரலாற்றாசிரியர் அஜாபுல் ஹிந்த் (இந்தியாவின் அதிசயங்கள்) எனும் தனது புகழ் பெற்ற நூலில் தந் துள்ள சில விபரங்கள், இரண்டாம் கலீபா அமீருல் மூமினின் ஹஸரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் போதே (ஹிஜ்ரி 13-23) இஸ்லாத்தைப் பற்றிய ஒர் அறிமுகம் இலங்கையில் வாழ்ந்த அராபி யர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்து
35
விட்டனர். முகம்மதும் அவரது மகனும் பேருவலையில் இறங்கி அங்கு வாழ ஆரம்பித்தனர்"
இஸ்லாமிய வரலாற்றாசிரியர்அல்பலாதுரி கூறும் ஒரு சம்பவம் பெருமளவு நம்பக் கூடியதாகவிருக்கின்றது.
பலாதுரியின் கூற்றுப்படி கி.பி.634-ஆம் ஆண்டு இலங்கை அரி யாசனம் ஏறிய மாணவம்ம என்ற அரசன் இலங்கையில் உயிர்நீத்த சில முஸ்லிம் வணிகர்களின் மனைவியரையும் பெண் குழந்தைகளையும் உமையா ஆளுநரான ஹஜ்ஜாஜ் இப்னு யூசுபிடம் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளான்.
ஆனால் அவர்கள் சென்ற கப்பல் இன்றைய கராச்சிக்கு அண்மை யில் இருந்த தேபல் எனும் பிரதேசத்திற்கு அருகாமையில் கடற்கொள் ளைக்காரர்களினால் தாக்கப்பட்டிருக்கின்றது. அதில் இருந்த பெண் கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
தன்னிடம் அனுப்பப்பட்ட இஸ்லாமியப் பெண்களுக்கு இழைக் கப்பட்ட இந்த அநியாயத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஹஜ்ஜாஜ், தேபல் பிரதேச மன்னனான ராஜ் தாஹிரிடம் சிறை பிடிக்கப்பட்ட பெண்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கூறி ஒரு தூதுக் கோஷ் டியை அனுப்பி வைத்தார்.
ஆனால் தேபல் அரசன் ஹஜ்ஜாஜின் வேண்டுகோளை நிறை வேற்றும் விஷயத்தில் போதிய அக்கறை காட்டவில்லை. அதனால் ஆத்திரம் கொண்ட ஹஜ்ஜாஜ்ராஜ் தாஹிரைத் தண்டிப்பதற்காக சிந்து பிரதேசத்திற்கு ஒரு படையை அனுப்பியதாக அல்பலாதூரிதன்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கி.பி. 711-ஆம் ஆண்டு ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் இளைஞரான முஹம்மது இப்னு காசிமின் தலைமையில் ஒரு படையை அனுப்பிய தும் அப்படை சிந்து நதிப்பிரதேச அரசரான தாஹிரைத் தோற்கடித்த தும் வரலாற்று உண்மைகள். •w
இவ்வாறே ஈழத்திலே வாழ்ந்த சில முஸ்லிம் பெண்கள் ஹஜ் ஜாஜ் இப்னு யூசுபின் அவைக்கு அனுப்பப்பட்டதும் உண்மையா
Page 19
36
னால், எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே இலங்கையில் ஒரு சில முஸ்லிம்களாவது வாழ்ந்திருக்கின்றனர்என்ற உண்மை உறுதிப்ப டுத்தப்படுகின்றது.
சிந்து நதிப் பிரதேசத்தை முஸ்லிம்கள் கைப்பற்றுவதற்கு முன் னரே, இலங்கையிலும் - தென்னிந்தியாவிலும் முஸ்லிம்கள் வாழ்ந்த னர் என செய்யத் சுலைமான் நத்வி கூறுவது எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்தனர் என்ற கூற் றுக்கு வலுவூட்டுகின்றது.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாக வைத்து, முஸ்லிம்கள் இலங்கையில் எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டு பகுதிக ளில் கணிசமானஅளவு குடியேறி இருந்தனர்என்ற முடிவுக்கு வருவது தவறாகாது. ஆரம்பத்தில் முஸ்லிம் குடியேற்றங்கள் சிறியனவாகவும் கடற்கரைகளை அண்மியதாகவுமே இருந்திருக்கும்.
தஹ்புத் அல் முஜாஹிதின் எனும் வரலாற்று நூல் கி.பி. 82-ஆம் ஆண்டு பாவா ஆதம் மலையைத் தரிசிப்பதற்காக, கிழக்குக்கு வந்த ஒரு ஷெய்க்கும் அவரது சிஷ்யர்களும் தென்னிந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இன்றைய மலபார் பகுதிகளில் இறங்கி, அங்கே விசாலமான அளவு இஸ்லாமியப் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறுகின்றது.
ஆனால் வேறு சில ஆதாரங்கள் இதற்கு முன்னரே இப்பகுதிக ளில் இஸ்லாம் பரவி இருந்தது எனக் கூறுகின்றன.
அதேபோன்று தென் இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரத்தி லும் இக்காலகட்டத்தில் இஸ்லாம் பரவி இருந்திருக்கிறது. இவ்வி ரண்டு பகுதிகளிலிருந்தும் வணிக நோக்கோடு முஸ்லிம்கள் கணிச மான அளவு இலங்கையில் வந்து குடியேறியுள்ளனர்.
எனவே - பத்தாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலே குறிப்பிடத் தகுந்த அளவிற்கு, முஸ்லிம்கள்இலங்கையில்குடியேறி, வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் என்று உறுதியாக கூறலாம்.
இக்காலப்பகுதியில் இலங்கையில் கணிசமான அளவு முஸ்லிம் கள் வாழ்ந்தனர் என்று கூறுவதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன.
33
கின்றன. அவரின் கூற்றுப்படி இலங்கையிலும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் வாழ்ந்த அறாபியர்கள் தமது தாயகமான அரேபியா விலே ஒரு புதிய மார்க்கம் தோன்றியுள்ளது என்பதைப்பற்றி கேள்விப் பட்டு, அதனைப் பற்றிய விபரங்களை அறிந்து வருவதற்கு தகுதி வாய்ந்த ஒருவரை அரேபியாவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அனுப்பியிருக்கின்றனர்.
ஏதோ காரணங்களினால் இவர் ஹஸ்ரத் உமர் (ரலி) ஆட்சியின் போதே அறாபியாவை அடைந்துள்ளார். தகவல்களைத் திரட்டிக் கொண்டு இலங்கை திரும்புகையில் பலுசிஸ்தானுக்கு அருகாமை யில் இவர் மரணிக்கவே இவரது பணியாள் இலங்கை வந்து, இலங்கை அறாபியர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளார்.
இலங்கையில் வசித்த அறாபியர்கள் தமது சொந்த நாட்டிலே ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிவதில் அக்கறை காட்டுவது அதிசய மானதோர் விஷயமல்ல.
எனவே நாம் இத்தகவலைப்பற்றி சந்தேகப்பட வேண்டிய தில்லை. ஆனால் இச்சந்தர்ப்பத்திலே இலங்கையில் எவராவது இஸ் லாத்தைத் தழுவினர் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. எனவே ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் முஸ்லிம்கள் இருந்தனர்என்ற முடிவுக்கு யாரும் வந்துவிடமுடியாது.
மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய காசிசிட்டி எனும் ஈழத்து அறிஞர் இலங்கை முஸ்லிம்கள், உஹதுப்போரிலே கோழைத்தன மாக நடந்து கொண்டமைக்காக நபிகள் நாயகத்தினால் அறாபியாவி லிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களின் சந்ததியினர் எனக் கூறியுள் επιτή,
ஆனால் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஏற்றுக் கொள்ளப்பட்ட எந்த ஓர் இஸ்லாமிய நூலிலும் காணப்படவில்லை. எனவே இக்க ருத்து நிராகரிக்கப்பட வேண்டியதொன்றே. .
Page 20
34
சேர். அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் முஸ்லிம்கள் மத்தியிலே நிலவி வந்த நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து, முஸ்லிம்கள் எட்டாம் நூற்றாண்டின் முதல் பகுதியிலே இலங்கை வந்து யாழ்ப்பா ணம், மன்னார், குதிரைமலை, புத்தளம், கொழும்பு, காலி, கற்பிட்டி, பேருவலை போன்ற இடங்களில் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகின்றார்.
மேலும் இவ்வாறு இங்கு வந்து குடியேறியவர்கள் நபிகள் நாய கம் (ஸல்) அவர்களின் வம்சமான ஹாஷிம் வம்சத்தைச்சார்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். சேர் அலக்சாண்டர் ஜோன்ஸ்டனின் கூற்றை நிரூபிப்பதற்கு இலங்கையில் எவ்விதமான உறுதியான ஆதா ரமுமில்லை. ஆனால் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலும் இஸ்லாமிய பேரரசின் வரலாற் றைப் பார்க்கும்போது, இக்கூற்றில் பல உண்மைகள் இருக்கலாம் என நினைப்பதற்கு இடமுண்டு.
இக்காலப்பகுதியிலே ஆட்சி செய்த ஆரம்ப உமையாக்கள், ஹாஷிமிகள் மீது புரிந்த கொடுமைகள் பயங்கரமானவையாகும். ஹாஷிமிகள் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் உயிர்தப்புவ தற்காக தூர நாடுகளுக்கு ஓடிவிட்டனர் என்று கூறுகிறது வரலாறு. இவர்களில் சிலர் இலங்கை வந்து குடியேறி இருக்கலாம் என்று நம்புவதற்கு இடமுண்டு.
பேருவலையில் வாழும் பழமையான ஓர் இஸ்லாமிய குடும்பத் தவரிடம் இருக்கும் ஓர் ஏடு பேருவலையில் முஸ்லிம்கள் குடியேறிய தைப் பற்றி சில புதிய தகவல்களைத் தருகின்றது.
இந்த ஏடு கூறும் வரலாறு பின்வருமாறு: ஹிஜ்ரி 22-இல் (கி.பி. 643-644) யெமன் தேசத்து அரசவம்சத்தைச் சேர்ந்த பதியுத்தீன், சலா ஹ"த்தீன், முஹம்மத் என்ற மூவரது தலைமையில் நான்கு கப்பல்கள் யெமன் துறைமுகத்திலிருந்து கீழைத்தேய நாடுகளை நோக்கிப் புறப் பட்டன.
இவர்களில் பதியுத்தீன் மலையாளக் கரையோரத்தில் இறங்கி விட்டார். சலாஹ"த்தீன் தென் இந்தியாவைச் சேர்ந்த பெரிய பட்ட ணத்திலும், சலாஹ"த்தீனின் மகன் சம்ஸ"தீன் மன்னாரிலும் இறங்கி
39
மங்கையரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வாழ்ந்தி ருக்க வேண்டும்.
12-ஆம் 13-ஆம் நூற்றாண்டுகளிலும் அதற்குப் பின்னரும் துறை முக பட்டணங்கள் யாவும் முஸ்லிம்களின்கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தன என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.
பொதுவாக மலபார் கரையோரங்களில் முஸ்லிம்கள் தம்மு டைய குடியேற்றங்களை எந்த அமைப்பில் அமைத்திருந்தார்களோ, அதே அமைப்பினையே இலங்கையிலும், பின்பற்றி இருக்க வேண் டும்.
கள்ளிக்கோட்டை பகுதிகளிலே முஸ்லிம்கள் துறைமுகங்க ளுக்கு அருகாமையில் "பங்கசாலா’ என அழைக்கப்பட்ட தமது பண்டகசாலைகளை அமைத்துக் கொண்டு அவற்றைச் சுற்றிவர, மிக நெருக்கமாக தமது இல்லங்களை அமைத்துக் கொண்டனர்.
ஒரளவுக்கு சுதந்திரமாக வாழ விரும்பிய இவர்கள், அந்நாட்டு அரசனுடைய அங்கீகாரத்துடன்தம்மில் ஒருவரைத் தலைவராக தேர்ந் தெடுத்துக் கொண்டனர். பொதுவாக இத்தலைவனே அரசனது சார் பாக அந்த குடியேற்றத்தின் ஆட்சி அலுவல்களைக் கவனித்தான்.
வரிகளைக் கூட, இவனே திரட்டி அரசனிடம் ஒப்படைத்தான்" ஏறத்தாழ இத்தகைய அமைப்பையே இலங்கை முஸ்லிம்களும் தம் குடியேற்றங்களிலும் பின்பற்றியிருக்க வேண்டும்.
உதாரணமாக முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்த நகரமான கொழும்பில் துறை முகத்துக்கு அருகாமையில் இந்த வணிகர்களின் "பங்கசாலாக்கள்’ இருந்தன. இதை வைத்தே "பெங்சோல் விதி" என்ற பெயர் ஏற்பட்டது.
இவற்றைச் சுற்றி முஸ்லிம்களின் இல்லங்கள் அமைந்திருந்தன. பள்ளி வாசலும் மையவாடியும் நகருக்குள்ளேயே அமைந்திருந்தன.
இவர்களின் மத்தியில் ஏற்படும் வழக்குகளை இஸ்லாமிய சட்ட அடிப்படையில் விசாரிக்க ஒரு விஷேட நீதி மன்றமும் இருந்தது.
Page 21
40
தமிழையே தம் தாய்மொழியாக கருதிய இம்முஸ்லிம்கள், தம் சமய வாழ்க்கையில் எவ்வித நெகிழ்ச்சியையும் காட்டாது சமயப் பற்றுடை யவர்களாக வாழ்ந்தனர். நாளடைவில் முஸ்லிம்கள் பாணந்துறை, களுத்துறை, மக்கொன, அழுத்கம, பெந்தொட்ட போன்ற கடற்கரை நகரங்களிலும் புதிய குடியேற்றங்களை அமைத்துக் கொண்டனர்.
முஸ்லிம்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறிய்தற்குப் பல காரணங்களைக் காட்டலாம். இலங்கையில் ஏராளமான வியா பாரபொருட்கள் இருந்தமை, அரசர்நல்கிய ஆதரவு, மக்கள்வழங்கிய வரவேற்பு, சிறந்த சுவாத்தியம் ஆகியவற்றை நாம் முக்கிய காரணங்க ளாக கருதலாம்.
அரசரும் மக்களும் பெளத்தர்களாக இருந்தபோதிலும், அவர்கள் முஸ்லிம்களுக்கு தமது சமயத்தையும் பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பதற்குப் பூரண சுதந்திரத்தை வழங்கினர்.
இதற்கு ஒர் எடுத்துக்காட்டாக, பேருவலையைச்சார்ந்த முஸ்லிம் வணிகர்களுக்கு, இலங்கையரசன் கி.பி.1010-ஆம் ஆண்டு வழங்கிய செப்பேட்டில் எழுதப்பட்டுள்ள சன்னாஸைக் காட்டலாம்.
வர்த்தக வளர்ச்சிக்கும், அதன் ஊடாக பொருளாதார வளர்ச்சிக் கும் முஸ்லிம்கள் ஆற்றிய பெரும் தொண்டினை நன்குணர்ந்த அரசர், இந்த செப்பேட்டின் மூலம் பேருவலை முஸ்லிம்களுக்குப் பல உரி மைகளையும் சலுகைகளையும் வழங்கியுள்ளார்.
மேலும், இந்த செப்பேட்டின் மூலம் முஸ்லிம்களுடைய கெளர வமும், கண்ணியமும் எவ்வித குறைவுமின்றி எப்போதும் பாதுகாக் கப்படும் என்ற உத்தரவாதத்தையும் வழங்கியுள்ளான்"
முஸ்லிம்களுக்கு, அரசன் பள்ளிவாசல்கள் கட்டிக் கொள்ள அனு மதி வழங்கியதோடு, விஷேச மையவாடிகளை அமைத்துக் கொள்வ தற்கும் உரிமை வழங்கியுள்ளான். மனத் திருப்தியோடும், நிம்மதி யோடும் வாழ்ந்த ஈழத்து முஸ்லிம்கள் தம்முடைய முழு கவனத்தை யும் வர்த்தகத்தில் காட்டிப் பெரும் செல்வத்தைத் திரட்டினர். நாட் டிலே செல்வாக்கினையும் பெற்றனர்.
37
புகழ் பெற்ற வரலாற்றாசிரியரான எச்.டபிள்யூ. கொட்ரிங்டன் எட்டாம், ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஏராளமான அறாபிய நாணயங்கள் இலங்கையின் கடற்கரை ஓரங்களிலும் வேறு பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டிருப்பதை அடிப்படையாக வைத்து, 9-ஆம், 10-ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லிம் குடியேற்றங்கள் இலங்கையில் நன்கு ஸ்தாபிக்கப்பட்டுவிட்டனஎன்ற கருத்தை வலியு றுத்துகிறார்.
ஹிஜ்ரி 377 என குறிக்கப்பட்டுள்ள அறாபிய எழுத்துக்களை கொண்ட ஒரு கல்லறை நடுகல் கொழும்பு முஸ்லிம் மையவாடி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் சமயப்பற்று பலவீனமடைந்தி ருந்தபோது, இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்துவதற்காக பக்தாத் கலீபாவினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சமயப் பிரசாரகரான காலித் இப்னு பகாயா என்பவரின் கல்லறை நடுகல்லே இதுவாகும். இலங்கைக்கு 'தஃவா’ பணிக்காக அனுப்பப்பட்ட காலித் இப்னு பகாயா, இங்கேயே இறையடி சேர, அவர்களின் அடக்கஸ்தலத்தில் நடுவதற்காக அவரைப் பற்றிய பல குறிப்புகள் கூபி எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட ஒரு கல்லறை நடுகல்லைப் பக்தாத் கலீபா இலங் கைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இக்கல் இப்னு பகாயாவின் அடக்கஸ்தலத்திற்கு அருகாவடியில் நடப்பட்டு இருக்கிறது". பின்னர் இந்த முஸ்லிம் மையவாடி கைவி டப்பட்டுவிட்டது என்றும் இந்த நடுகல் ஓர் அரச அதிகாரியினால் கொண்டு செல்லப்பட்டுவிட்டது என்றும் சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்த முஸ்லிம்களுக்கு மாத்திரமே மார்க்கப் போதனைச் செய்யபகுதாதிலிருந்து ஓர்ஆனிலிம் அனுப்பப்பட்டுள்ளார் என்றால், அக்காலத்தில் இலங்கையில் இவ்வருகையை நியாயப்ப டுத்த கூடிய அளவிற்கு முஸ்லிம்கள் இருந்திருப்பர் என்று அனுமா னிப்பது தவறாகாது.
காலிப் பக்தாத் என்பவர் தமது நூலில் கி.பி. 877-ஆம் ஆண்டில் பக்தாத்தில் வாழ்ந்த அறிஞர்களில் ஒருவராக அப்துல் ரஹ்மான்
Page 22
38
இப்னு மூஸா அல்ஸெய்லானிஎன்பவரைக் குறிப்பிடுகிறார். அறாபி யர் இலங்கையை "ஸெய்லான்’ என்றும் அழைத்தனர் என்பது எல்
லோருக்கும் தெரிந்த உண்மையே.
கி.பி. 850-ஆம் ஆண்டு இலங்கை வந்த சுலைமான் தாTர், கி.பி.900-ஆம் ஆண்டு இங்கு வந்த, சில்சிலாத் அல் தவாகீஹ் எனும் நூலின் ஆசிரியரான அபூ ஜெய்த் அஷ்ஷிராபி, கி.பி. 930-ஆம் ஆண்டு வந்த அல்மஸ"தீஆகியோரின் குறிப்புகளும் அவர்கள் வந்த காலங்க ளிலே இலங்கையின் கரையோரங்களிலே முஸ்லிம்கள் பரந்து வாழ்ந் தனர் என்ற உண்மையைப் புலப்படுத்துகின்றன.
அவ்வாறே கி.பி.1116-ஆம் ஆண்டு இலங்கையைத் தரிசித்த அல் இத்ரீஸியும், கி.பி.1341-ஆம் ஆண்டு இலங்கையில் பிரயாணம் செய்த உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய யாத்திரிகரான இப்னு பதூதாவும் தத்தம் நூல்களிலே இலங்கையிலே முஸ்லிம்கள் தொகையாக வாழ்ந் ததையும் அவர்கள் இங்கு செல்வாக்கோடும் புகழோடும் வாழ்ந்ததை யும் விரிவாக விளக்கி உள்ளனர்.
கொழும்பு நகரம் ஜல்ஸ்தி என்று அழைக்கப் பெற்ற ஒரு முஸ் லிம் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததென்றும் அவர் ஐநூறு மெய்க்காப்பாளர்களின் பாதுகாப்போடு நகரத்தை ஆண்டார்”என்றும் இப்னு பதூதா குறிப்பிடும் செய்தி மனதில் பதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
வர்த்தகத்திற்காக இலங்கை வந்த முஸ்லிம்கள் ஆரம்பத்தில் புத்த ளம், பேருவலை, கற்பிட்டி, காலி, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற முக்கிய துறைமுகங்களிலேயே குடியேறி தமது வர்த்தகத்தை நடத்தி வந்தனர்.
சிலர் காலத்துக்கு காலம் தம் தாயகம் திரும்பி இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையோர்நிரந்தரமாய் இலங்கையிலேயே தங்கி யிருக்க வேண்டும்.
ஒருசிலர்தம்மோடுதம் குடும்பங்களையும் அழைத்துவந்திருக்க லாம். ஆனால் பெரும்பான்மையானோர் பெரும்பாலும் இங்குள்ள
43
வணிகத்தின் காரணத்தினாலும் அதனால் பெற்ற செல்வத்தின தும் செல்வாக்கினதும் காரணத்தினாலும் முஸ்லிம்கள் அரசியலில் முக்கியத்துவம் பெற ஆரம்பிக்கும் காலகட்டத்திலே தான் போத்துக் கேயர் இலங்கைக்கு வந்தனர்.
போர்த்துகேயர்களின் வருகை முஸ்லிம்களின் வரலாற்றை முற் றாக மாற்றியமைத்தது.
13-ஆம், 14-ஆம், 15-ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களின் செல் வாக்கு வளர்ந்த வேகத்தை அவதானிக்கும்போது, அக்காலகட்டத் திலே போத்துகேயர் இலங்கை வராது இருந்திருந்தால், இலங்கை ஒர் இஸ்லாமிய இராச்சியமாக மாறியிருக்குமோ என்று சிந்திப்பது அறி வுக்குப் பொருந்தாததாக இருந்திருக்கமாட்டாது என்று எமர்சன் டெனன்ட் கூறுவது 16-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் முஸ்லிம்கள் எந்த அளவு செல்வாக்கு பெற்றிருந்தனர் என்பதைப் புலப்படுத்துகிறது.
ஆதாரக்குறிப்புகள்
1. University of Ceylon - History of Ceylon - Chapter V 2. Sir Emerson Tennent -"Ceylon" 3. S. Ameer Ali- A Short History of the Saracens 4. Dr. Kami Asad - Muslims of Sri Lanka under the British. 5. Tahput- ul - Mujahideen 6. Dr. Kami Asad - Muslims of Sri Lanka under the British
7, ibid
8. Van Sanden - Moors 9. University of Ceylon - History of Ceylon - Chapter VI 1O. M.M.M. Mahroof and Mrs. Marina smail- Muslims of Kalutara District. 11. Fr. S.G. Perera - History of Ceylon 12. Sir Emerson Tennent - "Ceylone"
Page 23
அத்தியாயம் - 3
வர்த்தகம் செய்வதன் பிரதான நோக்கம், ஆகக்கூடிய இலாபத் தைச் சம்பாதிப்பதாகும். உச்சஇலாபத்தை அடைய ஒரு வழி, வணிகர் கள் மீள்விற்பனைச்செய்வதற்காக எவ்வெப்பொருட்களை வாங்குகி றார்களோ, அவ்வப்பொருட்களை அவை உற்பத்தியாகும் இடங்களி லேயே வாங்குவதாகும்.
இலங்கையின் முக்கிய வணிகப் பண்டங்களான இரத்தினக்கற் கள், யானைத் தந்தங்கள், பாக்கு, வாசனைத் திரவியங்கள் போன் றவை பெருமளவுக்கு இலங்கையின் உட்பிரதேசங்களான இரத்தின புரி, கம்பளை, கண்டி, மாத்தளை, குருனாக்கலை, தம்புள்ள, கொத் மலை, கேகாலை போன்ற இடங்களிலேயே கிடைத்தபடியால், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம் வணிகர்களுக்கு அப்பி ரதேசங்களுக்கே நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அப்படிப் போகும்போது அப்பிரதேச மக்களுக்குத் தேவையான உப்பு, கருவாடு போன்ற பொருட்களை விற்பனை செய்து இலாபம் பெறும் வாய்ப்பும் இருந்தது.
எனவே தம் நிலையை ஒரளவிற்கு கரையோரப் பகுதிகளிலே ஸ்திரப்படுத்திய பிறகு, முஸ்லிம்கள் இலங்கையின் உட்பகுதிகளுக் குள் பிரவேசிக்க முயற்சிப்பதும், அங்கே குடியேற்றங்களை அமைக்க முயற்சிப்பதும் தவிர்க்க முடியாதவையே.
ஏறத்தாழ ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்கள் வர்த்தகத்திற்காக கண்டி, இரத்தினபுரி, மாத்தளைபோன்ற பிரதேசங்க ளுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.
தொடக்கத்தில் இந்த வியாபாரிகள் தம்முடைய வியாபாரங் களைமுடித்துக்கொண்டு, உடனடியாகக் கரையோரங்களிலே இருந்த தம் ஊர்களுக்குத் திரும்பும் வழக்கம் உடையவர்களாக இருந்திருப்பர்.
4.
ஒரு பக்கம் முஸ்லிம்களின் எண்ணிக்கை இயற்கையாகவே பெருக, மறுபக்கம் இலங்கை முஸ்லிம்களின் நிறைவான வாழ்வி னைக் கண்டு தென்னிந்தியாவின் இரு கரைகளிலும் இருந்து மென்மே லும் முஸ்லிம்கள் இங்குவர, இலங்கையிலே முஸ்லிம்களின் தொகை துரித வளர்ச்சிபெற ஆரம்பித்தது; புதிய, புதிய குடியேற்றங்களும் பெருக ஆரம்பித்தன.
பத்தாம் நூற்றாண்டிலிருந்து 15-ஆம் நூற்றாண்டின் முடிவு வரை முஸ்லிம்களே கீழத்தேய வர்த்தகத்தின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்தனர் என எமர்சன் டெனன்ட் கூறுகிறார்.
முஸ்லிம்களுக்குச் சகல பிரதான துறைமுகங்களிலும் வியாபார ஸ்தலங்கள் இருந்தன. இந்து சமுத்திரம், அராபியக்கடல்வங்காளவிரி குடா, செங்கடல், பாரசீகக்குடா, பசிபிக் சமுத்திரம் ஆகிய பெரும் நீர்ப்பரப்பை தம் ஆதிக்கத்துக்குள் வைத்துக் கொண்டு ஒரு பெரும் வணிகத்தை நடத்திக் கொண்டிருந்தனர் இந்த முஸ்லிம்கள்.
இவர்கள் ஜப்பானிலிருந்து வெள்ளியைப் பெற்றனர்; சீனாவிலி ருந்து தங்கத்தையும் பட்டுகளையும் பெற்றனர். மொலுக்காஸ், போர் னியோ போன்ற தீவுகளிலிருந்து கராம்பு, சாதிக்காய், ஏலம் போன்ற வாசனைப் பொருட்களைப் பெற்றனர். புடவை, அரிசி, அபின் போன்ற பொருட்களை வங்காளத்திலிருந்து கொணர்ந்தனர். மிளகை யும், இஞ்சியையும் மலபாரிலும், பட்டுக்கம்பளங்களைப் பாரசீகத்தி லிருந்தும், குதிரைகளை அரேபியாவிலும் பெற்றனர்".
யானை, கறுவா, பாக்கு, முத்து மாணிக்கக்கற்கள் போன்றவை இலங்கையில் கிடைத்தன.
எனவே, அன்றைய கீழைத்தேய வியாபாரம் என்பது சகல வியா [ ዘT፬ பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு பிரமாண்டமான வர்த்தக முயற்சியாக இருந்தது என்பதை அவதானிக்கலாம். விஷேசமாக முஸ் லிம்களே ஈடுபட்டிருந்த இந்த கீழைத்தேய வணிகத்திலே இலங்கை முஸ்லிம்களின் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகவே இருந்தது.
Page 24
49
இக்காலக்கட்டத்திலே, இலங்கை ஆசியாவின் மிகப்பெரும் வியாபார சந்தைகளில் ஒன்றாக பெரும் புகழோடு திகழ்ந்தது. இலங்கை முஸ்லிம்கள் இங்கு உற்பத்தியாகும் அத்தனைப் பொருள்க ளிலும் வியாபாரம் செய்யும் பெரும் வணிகர்களாக விளங்கினர்.
நேரடி உற்பத்தியிலே பாரிய அளவிலே அக்காலத்தில் ஈடுபடாதி ருந்த முஸ்லிம்கள், தம் திறமையையும் ஆளுமையையும் வணிகத் துறையிலே பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிலே வெளிப்படுத்தி னர்.
சிங்களவர்கள் நிலத்தைப் பண்படுத்திக் கொண்டிருந்த வேளை யிலே, முஸ்லிம்கள் இரத்தினங்களையும், முத்துகளையும் விற்று, பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்தனர் என டெனன்ட் விதந்துரைக்கி றார்.
இந்திய சமுத்திரத்திலே கலம் செலுத்திக் கொண்டிருந்த போர்த் துகேய கப்பற்றலைவனான ஒடோடா பார்போஸா, தான் கண்டவற் றையும் கேட்டவற்றையும் அடிப்படையாக வைத்தும் டிகொன்டி (Diconti) பார்தீமா(Barthama) கோர்சாலி(Corsal) போன்ற போர்த்துகே யர்கள்கூறியவற்றை அடிப்படையாக வைத்தும் ஒருநூலை எழுதியுள்
Tss,
அவர் தனது நூலிலே இலங்கையில் இருந்த சகலதுறைமுகங்களி லும் முஸ்லிம்களே அதிகமாக வாழ்ந்தனரென்றும் அவர்களே அங்கு செல்வாக்கு பெற்றிருந்தனர் என்றும் கூறுகிறார்.
பார்பேர்ஸாவின் முஸ்லிம்களைப் பற்றிய வர்ணனை ரசிக்கக்கூ டியதாகவும் எம்முன்னோர்களைப் பற்றிய ஒருவித பெருமித உணர்வை ஊட்டக் கூடியதாகவும் அமைந்துள்ளது. அவரது வர் ணனை பின்வருமாறு: 'முஸ்லிம்கள் மிக அழகான, விலையுயர்ந்த பெரிய கைக்குட்டைகளைத் தம் தலைகளில் தலைப்பாகைகளைப் போல் கட்டியிருப்பர். அழகான கற்கள் பதிக்கப்பட்ட அவர்களின் காதணிகள் பாரத்தின்காரணமாக அவர்களது தோள்களைத் தொட்டுக் கொண்டிருக்கும். அவர்களின் உடம்பின் மேற்பகுதி திறந்தே இருக் கும். மேனியின் கீழ்ப்பகுதியை விலையுயர்ந்த ஆடைகளினால் மறைத்திருப்பர்".
47
இவ்வாறு முஸ்லிம்கள் பெரும் புகழோடும் செல்வாக்கோடும் வாழ்ந்த காலகட்டத்திலே தான் போத்துக்கேயர் இலங்கை வந்தனர். வர்த்தக அடிப்படையிலும் சமய அடிப்படையிலும் முஸ்லிம்க ளைத் தம் பரம வைரிகளாக கருதிய போர்த்துக்கேயரின் வருகை, இலங்கை முஸ்லிம்களின் வளர்ச்சியைப் பெரிதும் பாதித்தது. உள் நாட்டு அரசியல் குழப்பங்களின் காரணமாக, கோட்டை இராச்சியத் தில் போத்துக்கேயர்களின் ஆதிக்கம் வளர ஆரம்பித்தது. போத்துக்கே யர்கள் தம் செல்வாக்கு பெருகியபோது, அச்செல்வாக்கை முஸ்லிம்க ளுக்கெதிராகவே பாவித்தனர். எனவே முஸ்லிம்களின் வணிகம் வளர்ச்சி குன்ற ஆரம்பித்தது.
மேலும் போத்துக்கேயர்கள் இலங்கை வந்த ஒரு சில வருடங்க ளுள் ஆரம்பித்த அரசியல் அமைதியின்மை, கி.பி.1658-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நீடித்தது. வர்த்தகத்தைப் பெரிதும் பாதிக்கும் ஓர் அம்சம் அரசியல் அமைதியின்மையாகும்.
எனவே போர்கள் நிறைந்த இக்காலப்பகுதி வர்த்தகத்தையே நம்பி வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு ஒரு பெரும் சோதனைக்காலமா கவே இருந்தது.
இந்த கால கட்டத்தில் ஏராளமான முஸ்லிம்கள்தம் கரையோரக் குடியேற்றங்களை விட்டுவிட்டு இலங்கையின் உட்பகுதிகளிலே ஒரு புதுவாழ்வைத் தொடங்கியிருக்கலாம். vn
கி.பி.1597-ஆம் ஆண்டு தென்மேற்கு பகுதி முழுவதையும் உள்ள டக்கிய கோட்டை இராச்சியத்திற்குப் போத்துக்கேயர்கள் அதிபதிகள் ஆயினர்.
இதன்பிறகு கரையோரப் பகுதிகளிலே முஸ்லிம்கள் மகிழ்ச்சி யாக வாழ்வது முடியாத காரியமாக மாறிற்று.
சமய வாழ்விலும் வர்த்தக வாழ்விலும் அவர்களுக்குப் பலதடை கள் விதிக்கப்பட்டன.
கி.பி.1613-ஆம் ஆண்டு, போர்த்துக்கேய தேசாதிபதிஅஸிவீடோ, கி.பி.1591-ஆம் ஆண்டுக்கு முன்னர் கொழும்பில் வசித்த முஸ்லிம்
Page 25
48
களை தவிர மற்ற அத்தனை முஸ்லிம்களும் கொழும்பை விட்டு வெளியேற வேண்டுமென கட்டளைப் பிறப்பித்தான்".
அவ்வாறே கோட்டை இராச்சியத்துக்குள் புதிதாக முஸ்லிம்கள் குடியேறுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது. ஆனால் இச்சட்டங் கள் கத்தோலிக்க குருமார்களையும், போத்துக்கேய பிரபுக்களையும் திருப்திப்படுத்த போதுமானவையாக இருக்கவில்லை.
முஸ்லிம்களைக் கடவுளதும், போத்துக்கேய அரசனதும் பரம எதிரிகளாகக் கருதிய இவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக கடும் நடவ டிக்கை எடுக்குமாறு போத்துக்கேய அரசனைத் தூண்டினர்.
இதன் விளைவாக, முஸ்லிம்களின் நிலை தொடர்பாக, 1622, 1623, 1624-ஆம் ஆண்டுகளில் தேசாதிபதி கொன்ஸ்டன்டைன் டி ஸாவுக்குப் போர்த்துக்கல் அரசனிடமிருந்து பல கட்டளைகள் வந்தன.
இக்கட்டளைகளின்அடிப்படையில் 1626-ஆம்ஆண்டின்முற்பகு தியில் முஸ்லிம்கள் கோட்டை இராச்சியத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர்"
பல நூற்றாண்டுகளாக, திரை கடல் ஒடி திரவியம் தேடி, எந்த மண்ணை முஸ்லிம்கள் வளப்படுத்தினார்களோ, அந்த் மண்ணை விட்டு அவர்கள் பலாத்காரமாக அகற்றப்பட்டு வெறுங்கைகளோடு அகதிகளாக விரட்டப்பட்டனர்.
எதிர்காலமே இருள்மயமாகவிருந்த இக்காலக்கட்டத்திலே முஸ் லிம்களுக்குக் கைகொடுத்தது கண்டி. அப்போதைய கண்டி அரசனான சேனரத், நாடுகடத்தப்பட்டமுஸ்லிம்களை அன்புடன்வரவேற்றான். ஏறத்தாழ கி.பி.1582-ஆம் ஆண்டிலிருந்து எண்ணற்ற படையெ டுப்புகளுக்குள்ளாகி, தனது வாலிபப் பரம்பரையின் ஒரு பெரும் பகுதியை இப்போர்களில் பலியாக்கி, ஆள் பல குறைவினால் தத்த ளித்துக் கொண்டிருந்தது கண்டி இராச்சியம், இப்படையெடுப்புகளி னால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவுகள் கண்டியை இன்னொரு பக் கம் வாட்டிக் கொண்டிருந்தன.
45
ஆனால் நாளடைவில் வியாபாரப் போட்டிகள் பெருக சிலரை யாவது முக்கியமான இடங்களிலே நிரந்தரமாக தங்க வைக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். இவ்விடங்களை அடிப்படையாக வைத்து பின்னர் முஸ்லிம் குடியேற்றங்கள் உருவாகி இருக்க வேண் டும்.
எட்டிப்பொல எனுமிடத்திற்கு அருகாமையில் உள்ள படாவி என்ற ஊரிலும், மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த மொரகொல்லை என்ற ஊரிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ்க் கல்வெட்டுகள் ! 9-ஆம் 10-ஆம் நூற்றாண்டு காலப்பகுதிகளில் இந்திய வியாபாரிகள் இலங்கையின் உட்பகுதிகளில் வியாபாரம் செய்து கொண்டிருந்த தைப் பற்றி குறிப்பிடுகின்றன.
எனவே இக்காலக்கட்டத்தில் முஸ்லிம் வியாபாரிகளும் உள்ளூர் வியாபாரத்திலே மும்முரமாய் ஈடுபட்டிருப்பர் என்று நிச்சயமாகக் கூறலாம்.
w
பொதி மாடுகளில் ஏற்றிக் கொண்டு தேவையான வியாபாரப் பொருட்களைக் கிராமம் கிராமமாக கொண்டு செல்லும் அமைப்பு, தவளம்" என அழைக்கப்பட்டது. இந்தப் போக்குவரத்து முறை இலங்கையிலே முஸ்லிம்களாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த வியாபாரிகள் வழக்கமாக தங்கி, தாம் கொண்டு வந்த பொருட்களைப் பண்டமாற்று செய்த இடமும் தவளம் என்றே அழைக்கப்பட்டது". தவளம் என்ற இச்சொல்பொலன்னறுவை ஆட் சிக்காலத்தின் போதே பிரசித்தமான சொல்லாக இருந்திருக்கிறது.
எனவே பொலன்னறுவை ஆட்சிக் காலத்திலேயே அதாவது கி.பி. 1215-ஆம் ஆண்டுக்கு முன்னரே, முஸ்லிம் வியாபாரிகள் தமது தவளமாடுகளோடு வியாபாரத்திற்காக ஊர்ஊராகச்செல்லும் காட்சி, சர்வசாதாரண ஒன்றாக இருந்திருக்க வேண்டுமென ஊகிக்கலாம்.
இக்காலக் கட்டத்திலே இலங்கையின் மத்தியப் பகுதிகளில் பல முஸ்லிம் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டிருக்கும் என்று நம்புவது பிழையாகாது.
Page 26
46
கி.பி. 1283-ஆம் ஆண்டு யாப்பாஹ"வ எனும் இராசதானியில் இருந்து நாட்டை ஆட்சி செய்த முதலாம் புவனேகபாகு, ஹாஜி அபூ உதுமான் என்பவரின் தலைமையில் வர்த்தக தூதுக்குழுவொன்றை எகிப்திய சுல்தானைச் சந்திப்பதற்காக அனுப்பினான். எகிப்திய சுல் தானுடன் நேரடி வணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் நோக் கோடு, எடுக்கப்பட்ட இம்முயற்சியின் சூத்திரதாரிகள் முஸ்லிம் களே. முஸ்லிம்கள் வழங்கிய ஆலோசன்ைகளின் அடிப்படையி லேயே இத்தூதுக்குழு அனுப்பப்பட்டது.
இதுவும் கி.பி.1335 - 1341 காலப்பகுதியில் ஆட்சி செய்த ஐந்தாம் விஜயபாகுவின் அமைச்சர்களில் ஒருவராக மீரா லெப்பை என்பவர் இருந்தார் என்பதும் இக்காலப்பகுதியில் முஸ்லிம்கள் எவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்தனர் என்பதை புலப்படுத்துகின்றன.
முஸ்லிம்கள் இவ்வளவு அரசியல் செல்வாக்கு பெற்றிருந்த கார ணத்தினால் இக்காலகட்ட தலைநகரங்களான தம்பதெனிய, யாப்பா ஹ"வ, குருனாக்கல போன்ற இடங்களிலும் இவற்றுக்கு அருகாமை யில் அமைந்திருந்த பிரதேசங்களிலும் முஸ்லிம் குடியேற்றங்கள் பல அமைந்திருக்கலாம்.
கி.பி. 1344-ஆம் ஆண்டு இலங்கையில் பரவலாக பிரயாணம் செய்த இப்னு பதூதா, தான் பாவா ஆதம் மலைக்குப் போகும்போது பல ஊர்களில் முஸ்லிம்களைச் சந்தித்ததாகக் கூறுகின்றார்.
குருனாக்கலைக்கு அருகாமையில் ஒரு பள்ளிவாசல் இருந்ததாக வும் அப்பள்ளிவாசலில் இருந்த ஷெய்க் உஸ்மான் என்பவர் முஸ்லிம் களதும் முஸ்லிம் அல்லாதோர்களினதும் நன்மதிப்பைப் பெற்றிருந் தார் என்றும் இப்னு பதூதா மேலும் கூறுகின்றார்.
இதேபோன்று வேறு பல பள்ளிவாசல்களும் இருந்திருக்கலாம். 15-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சீனச் சக்கரவர்த்தி ஒருவர், சிவ னொளிபாத மலைக்கும், தெவிநுவரை கோயிலுக்கும் காணிக்கைகள் அனுப்பியபோது, ஓர் இஸ்லாமிய வணக்கஸ்தலத்திற்கும் காணிக்கை அனுப்பி வைத்துள்ளார்.
49
தேவைக்கு அதிகமாகவே கண்டி இராச்சியத்தில் செழிப்பான நிலங்கள் இருந்தன; ஆனால் அந்நிலங்களைப் பயன்படுத்த போதிய ளவு ஆட்கள் இல்லாத ஒரு பரிதாப நிலை கண்டியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பெரும் தடையாக இருந்தது.
ஆகவே, இத்தகைய ஒரு காலகட்டத்திலே ஊக்கமும், உழைப்புத் திறனும் ஆளுமையும் கொண்ட ஒர் இனம், வாழ்வதற்கு இடம் இல் லாது தவித்தபோது, அந்தவினத்தை தன் பிரதேசங்களுக்கு அழைத்து வந்து, கண்டி அரசன் சேனரத் குடியேற்றியதில் எவ்வித ஆச்சரியமு மில்லை.
உண்மையில் முஸ்லிம்களின் வருகை கண்டிக்கு ஒரு வரப்பிரசாத மாகவே இருந்தது. ஆனால் முஸ்லிம் இனம் இதை இவ்வாறு கருத வில்லை. கருத விரும்பவுமில்லை. இது முஸ்லிம் இனம் என்றும் பெருமைபடக்கூடிய விஷயம்.
அன்றைய முஸ்லிம்கள் தமது கண்டி குடியேற்றத்தைக் கண்டி இராச்சியத்தின் நிலையில் இருந்து ஆராயவில்லை. தமது நிலையில் இருந்தே கணித்தனர்.
எங்கே போவது எப்படி வாழ்வது என்று தத்தளித்துக் கொண் டிருந்த சமயத்திலே, தமக்கு உதவிக்கரம் நீட்டி, வாழ்வுதந்த இராச்சிய மாகவே கண்டி இராச்சியத்தை முஸ்லிம்கள் கருதினர்.
தமது சமூகம் வழியறியாது திண்டாடிய காலத்திலே, தமக்கு உதவிய உடன் பிறவாச் சகோதரர்களாகவே முஸ்லிம்கள் கண்டிச் சிங்களவரைக் கருதினர்.
இன்றும் கண்டியச் சிங்களவர்களுடன்ஒரு தனிப்பாசம் முஸ்லிம் களுக்கு இருப்பது இந்த உணர்வின் பிரதிபலிப்பேயாகும்.
கண்டிஅரசனின்அழைப்பை ஏற்றுகண்டியின்பலபகுதிகளிலும் பரவலாக முஸ்லிம்கள் குடியேறினர். பின்னர் முஸ்லிம்கள் கண்டிய மண்ணுக்காகப் பல சந்தர்ப்பங்களில் தம் இரத்தத்தைக் காணிக்கை யாக வழங்கி, தம் நன்றிக் கடனை வெளிப்படுத்தியதைப் பெருமை யாக இயம்பிக் கொண்டிருக்கிறது கண்டி வரலாறு.
Page 27
50
கண்டி அரசன் ஒருவனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையே தியாகம் செய்த பங்கரகம்மான முஸ்லிம் வீர வனிதை' ஒரு வகையில் இந்த நன்றிக் கடனையே தனிப்பட்ட முறையிலே செலுத்தினாள் என்று கூறலாம்,
போத்துக்கேயரின் பிரதேசங்களிலிருந்து நாடு கடத்த்ப்பட்ட முஸ்லிம்களின் தொகை என்னவென்று திட்டவட்டமாக கூற முடி Այո51.
ஆனால் ஒரு பெருந்தொகையானோர் கண்டிக்கு ஓடினர் என இலங்கையில் போத்துக்கேயரின் வரலாற்றை எழுதிய கொய்ரோஸ் பாதிரியார் கூறுகின்றார்.
மேலும் மட்டக்களப்பில் மட்டும் 4000 முஸ்லிம்கள் குடியமர்த் தப்பட்டனர் என்றும் அவர் கூறுகின்றார்.
இக்காலக் கட்டத்தில் தான் கண்டி, கம்பளை, மடவளை, மாத் தளை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் கூடுதலாகக் குடியேறியி ருக்க வேண்டும்.
1626-ஆம் ஆண்டு கட்டளையால் கரையோரங்களில் இருந்த அத் தனை முஸ்லிம்களும் தமது பாரம்பரிய குடியேற்றங்களை முற்றாக கைவிட்டுவிட்டு வந்துவிட்டனர் என்று நினைக்க முடியாது.
1626-ஆம் ஆண்டுக்குப் பின்னரும் முஸ்லிம்கள் கரையோரப் பகு திகளிலே போத்துக்கேயரின் ஆட்சிக்குள் வாழ்ந்தனர்.
4. சில தேவைகளுக்காக போத்துக்கேயர் இவ்வாறு முஸ்லிம்கள் வாழ்வதற்கு அனுமதி அளித்திருக்கலாம்.
ஆனால் 1626-ஆம் ஆண்டுக்குப் பிறகு கரையோரங்களில் தொடர்ந்து நிம்மதியாக வாழலாம் என்ற நம்பிக்கையை முஸ்லிம்கள் இழந்திருப்பர்.
எனவே, சேனரதனின் மகனான இரண்டாம் இராஜசிங்கனின் ஆட்சிக்காலத்திலும் கரையோரப் பகுதிகளிலிருந்து கூட்டம் கூட்ட மாய் முஸ்லிம்கள் கண்டி இராச்சியத்தில் வந்து குடியேறுவதைப் பார்க்கின்றோம்.
5
கி.பி. 1638-ஆம் ஆண்டு கண்டியைக் கைப்பற்ற வந்த போர்த்துக் கேயப் படையை ராஜசிங்கன் முற்றாக முறியடித்தான்.
இந்த வெற்றிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்த தாக இருந்தது. இந்த யுத்தத்திலே கண்டியர்களுக்கு ஆதரவாக போரிட்ட சில அராபியர்களின் வீரத்தைக் கண்டு வியந்த ராஜசிங்கன் இந்த அராபியர்களைஅக்குறணையிலேகுடியமர்த்தியதாகவும் அவர் கள் விரும்பிய பெண்களை மணமுடிக்க அரசனே துணை நின்றதாகவும்" இப்பிரதேச முஸ்லிம்களிடையே உள்ள வழக்காறு கள் கூறுகின்றன.
பழைய குடியேற்றங்களில் தொடர்ந்து வாழ்ந்த முஸ்லிம்களின் மீது போத்துக்கேயர் தமது குரோதத்தை அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர்.
கி.பி. 1643-ஆம் ஆண்டு அன்டோனியோ டி அம்ரால் எனும் போத்துக்கேய தலைவன் மாத்தற்ையில் முன்னூறு முஸ்லிம்களைக் கொன்று குவித்தான் என்றும் அலுத்கமையிலும் ஒரு பெரும் தொகை யானமுஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்என்றும் குய்ரோஸ் பாதிரியார் குறிப்பிடுகின்றார்".
போத்துக்கேயர் விரட்டப்பட்டு, ஒல்லாந்தர் ஆட்சியைக் கைப் பற்றிய பின்னரும் கரையோர முஸ்லிம்களின் துன்பங்கள் குறைய வில்லை. ஒல்லாந்தரும், சமய ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் கரை யோரங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை நசுக்கவே முயற்சித்தனர்.
எனவே இவர்களின் ஆட்சியின்போதும் முஸ்லிம்கள்துறைமுக குடியேற்றங்களை விட்டுவிட்டு கண்டி இராச்சியத்தை நோக்கி வரும் இயல்பு தொடரவே செய்தது.
ஒல்லாந்தர் கரையோரப் பகுதிகளை ஆட்சி செய்த காலத்திலே கண்டி இராச்சியத்திலே முஸ்லிம்களின் செல்வாக்கு பெரிதும் வளர்ச் சியடைந்தது.
முஸ்லிம்களுக்கு இந்த இராச்சியத்திலே பரிபூரணமதச்சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. முஸ்லிம் குடியேற்றங்கள் அமைந்திருந்த
Page 28
59
இடங்களில் எல்லாம் பள்ளிவாசல்கள் கட்டிக் கொள்வதற்கு அரசன் காணிகள் வழங்கினான் அது மாத்திரமின்றி கட்டப்பட்ட சில பள்ளி வாசல்களின் பராமரிப்பு செலவுகளுக்காகக் காணிகளையும் அன்ப
ளிப்பு செய்தான். ரொபர்ட் நொக்ஸின் வரலாறும் இதைக்
கூறுகின்றது".
இக்கிாலக் கட்டத்திலே முஸ்லிம்கள் கண்டி அரசனின் மாளிகை
அலுவல்களிலும் இராச்சியத்தின் அரசியல் அலுவல்களிலும் பெரும் முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.
அரச மருத்துவர்களாக பல முஸ்லிம்கள் கடமையாற்றியுள்ள னர். ராஜபக்ஷ வைத்தியதிலக கோபால எனும் கெளரவப் பட்டத்து டன் அரச குடும்பத்தவர்களுக்கு வைத்தியம் பார்த்த முஸ்லிம் மருத் துவ மேதைகளின் பரம்பரையினர் இன்றும் மாவெனல்ல பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
பூவெலிக்கடை, வெதராலகே அபூபக்கர் பிள்ளை என்பவர் ராஜாதி ராஜ சிங்கன் ஆட்சிக் காலத்தில் அரச மருத்துவராக இருந் துள்ளார்".
அரச மாளிகைகளில் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட முல்தன்கே என்றழைக்கப்பட்ட உணவு கூடத்துக்குப் பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களே பொறுப்பாக இருந்துள்ளனர்.
மடிகே பத்த என்றழைக்கப்பட்ட நாட்டின் போக்குவரத்து துறைக்கு கீர்த்தி சிறி ராஜசிங்கனின் ஆட்சிக் காலத்திலே ஷெய்க் ஆலிம் என்பவரும் அவருக்குப் பின்னர் அவரது பேரரான ஷெய்க் அப்துல் காதர் லெப்பை என்பவரும் பொறுப்பாக இருந்தனர்".
விக்கிரம ராஜசிங்கனின் படையிலே ஏறத்தாழ 850 முஸ்லிம்கள் கடமையாற்றியதாக டொய்லியின் குறிப்புகள் கூறுகின்றன.
நிலையானபடைகள் மிகச்சிறியனவாகவே இருந்தகாலத்திலே, எண்ணுாற்றி ஐம்பது என்பது ஒரு கணிசமான தொகையாகும். எனவே கண்டி ராச்சியத்தின் பாதுகாப்புக்கு முஸ்லிம்கள் பெருமளவுக்குப் பொறுப்பாக இருந்தனர் என்று கூறலாம்.
53
1762-ஆம் ஆண்டு ஜோன் பிபஸ் எனும் ஆங்கிலேயர், ஆங்கி லேய கிழக்கிந்திய கம்பெனியின் தூதுவராக கண்டியரசனான கீர்த்தி பூரீராஜசிங்கனைச் சந்திக்க வந்தபோது, கண்டி அரசரின் பிரதிநிதியா கத்திருக்கோணமலைச் சென்று ஆங்கிலேய தூதுவரைச்சந்தித்து அவ ரைக் கண்டிக்கு அழைத்து வந்தது மவுலா லெப்பை என்பவரின் மகன் உதுமா லெப்பை என்பவரே". கர்நாடக நவாப் முகம்மது அலியைச் சந்திக்க ஒரு தூது கோஷ்டி சென்றபோது அதற்கு தலைமை தாங்கியவ ரும் இந்த உதுமா லெப்பையே.
1764-ஆம் ஆண்டு கீர்த்தி பூரீ ராஜசிங்கனின் தூதுவராக தென்னிந் திய நவாப் அலி கானைச் சந்திக்க சென்றவர் உமர் கத்தா எனும் முஸ்லிமாவார்"
இவையெல்லாம் கண்டி இராச்சிய அரசியலில் அன்று முஸ்லிம் கள் எந்தளவு முக்கியத்துவம் பெற்றிருந்தனர் என்பதைக் காட்டுகின்
றன.
"கேவலமான இந்த முஸ்லிம்கள் கண்டியில் பெருகிய பின்னர் கண்டி அரசனின் கொள்கை ஒல்லாந்தருக்கு எதிரானதாகவே இருக்கி றது” என்று டச்சு தேசாதிபதி கொலானெஸஅம் "முஸ்லிம்களுடன் பழக ஆரம்பித்த பின்னர்கண்டியரசன் ராஜதந்திரமிக்கவனாகவும் விவ ரங்கள் அறிந்தவனாகவும் மாறிவிட்டான்" என்று தேசாதிபதி சுரோய் டரும்" கூறுவதிலிருந்து எந்த அளவு முஸ்லிம்கள் கண்டிஅரசர்கள் மீது செல்வாக்கு செலுத்தினர் என்பது புலப்படுகின்றது.
இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் இருந்து பெருந்தொ கையான முஸ்லிம்கள் போத்துக்கேயர் காலத்திலும் பின்னர் ஒல்லாந் தர் ஆட்சி காலத்திலும் கண்டி இராச்சியத்தில் வந்து குடியேறினர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
பெருந்தொகையான முஸ்லிம்கள் கண்டி இராச்சியத்தில் வாழா திருந்திருந்தால் கண்டி அரசர்கள் காலத்தில் முஸ்லிம்கள், அவர்கள், பெற்றிருந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கைப் பெற்றிருக்க முடி
யாது.
Page 29
54
முஸ்லிம்கள் கண்டி இராச்சியத்தில் குடியேறிய ஒரு சில வருடங் களுக்குள் போத்துக்கேயரின் படையெடுப்புகளினால் நலிவுற்றும் அழிவுற்றும் இருந்த விவசாயத்தைப் பழைய நல்ல நிலைக்கு அவர் கள் உயர்த்திவிட்டனர் என்று கலாநிதி சி.ஆர்.டி." சில்வா கூறுகின் றார்.
இது உண்மையாயின் நிச்சயமாக பெருந்தொகையான முஸ்லிம் கள் கண்டி இராச்சியத்தில் குடியேறி இருக்க வேண்டும்.
பெருந்தொகையான முஸ்லிம்கள் வந்திருந்தால், நிச்சயமாக அதிலே ஒரு கணிசமானதொகையினர்கண்டி இராச்சியத்தின்தலைநக ருக்கு மிக அண்மையில் அமைந்திருந்த செழிப்பான, நல்ல சுவாத்தி யம் நிலவிய மாத்தளையில் குடியேற்றங்கள் அமைத்திருப்பர்.
மேலும் வியாபார போக்குவரத்து பாதைகைளை ஒட்டியே குடி யேற்றங்கள் அமைக்கப்பட்ட அந்த காலத்திலே, கண்டி - புத்தளம் வியாபார பாதையும் கொட்டியாரம் - கண்டி வியாபார பாதையும், எந்த பிரதேசத்தின் ஊடாக சென்றதோ அந்த மாத்தளை பிரதேசத்தில் முஸ்லிகளின் பல குடியேற்றங்கள் நிச்சயமாக அமைந்திருக்கவே வேண்டும்.
எனவே போத்துகேயர் காலத்திலும் ஒல்லாந்தர் காலத்திலும் மாத்தளை மாவட்ட முஸ்லிம் குடியேற்றங்கள் ஒரு சில, அமைக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறலாம்.
மற்றும் சில குடியேற்றங்கள் முன்னரே உருவாகி இருக்க வேண் டும்.
ஆதாரக் குறிப்புக்கள் 1. University of Ceylon - History of Ceylon, 2. I bidi
3. bid 4. Dr. M.D. Ragahavan. 5. University of Ceylon - History of Ceylon 6. bid
SS
7. C.R. de Silva - The Portuguese in Ceylon.
8. bid
9. C.M.. Austin de Silva 1O. Gazeteer of the Central Province of Ceylon 1 1. Kamil Asad - Muslims of Sri Lanka under the British. 12. Historical Relation of Ceylon - Robert Knox 13. Lorna Devaraja - The Muslims in the Kandyan Kingdom. 14 bid
15. bid
16. T.B. H. Abyasinghe - Muslims in Sri Lanka 17. Lorna Devaraja - Muslims in Sri Lanka 18. Kami Asad - Muslims of Sir Lanka under the British
Page 30
56
அத்தியாயம் - 4
சிங்கள இனத்தவர்கள் தமது வரலாற்றைப் பேணி பாதுகாப்ப தில் அதிக ஆர்வம்காட்டி வந்துள்ளனர்.
ஆனால் இலங்கை முஸ்லிம்கள் அண்மைக் காலம் வரை இத்து றையில் சிறிதேனும் ஆர்வம் காட்டவில்லை என்றே கூறவேண்டும்.
தமது பண்டைய வரலாற்றை இலங்கை முஸ்லிம்கள் எழுதத்தவ றியதால் இன்று அவர்களின் வரலாற்றை எழுதுவது கடினமான காரிய மாக இருக்கிறது.
தேசிய மட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை எழுது
வதே கடினமானதாக இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் வரலாற்றை ஆதாரபூர்வமாக எழுதுவது எவ் வளவு சிரமமானதாக இருக்கும் என்பதைக் கூற வேண்டியதில்லை. இக்கூற்று மாத்தளை மாவட்டத்திற்கும் பொருந்தும்.
இலங்கையின் கரையோரப் பகுதிகளில் தம்மை ஸ்திரப்படுத்திக் கெர்ண்டவுடன் முஸ்லிம்கள் இலங்கையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கண்டி, குருனாகல, கம்பளை, மாத்தளை போன்ற பிரதேசங்களுடன் வர்த்தகத் தொடர்புகள் அமைத்துக் கொள்ள முயற் சித்திருப்பர்.
கி.பி. பத்தாம், பதினொறாம் நூற்றாண்டுகளில் இப்பகுதிகளில் சில குடியேற்றங்களை அமைத்திருப்பர் என்று கூறுவதற்கு ஆதாரங் கள் இருந்தபோதிலும், முஸ்லிம்கள் மாத்தளை மாவட்ட பிரதேசங்க ளில் எப்போதுகுடியேறினர் எங்கிருந்து வந்து குடியேறினர் எந்த அடிப்படையில் வந்து குடியேறினர் என்று கேள்விகளுக்குத் திட்ட வட்டமான பதில்களை அளிப்பது கடினமாக உள்ளது. ஆங்காங்கே காணப்படுகின்ற, மாத்தளை வரலாற்றோடு தொடர்பு உள்ள சில தகவல்களை அடிப்படையாக வைத்தும் ஏனைய பிரதேசங்களின் வர
57
லாறுகளை ஆராயும்போது கிடைக்கும்.ஆதாரங்களைக் கொண்டுமே, நாம் மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றை எழுத வேண்டி யுள்ளது.
இலங்கையரால் இயற்றப்பட்ட சில நூல்களும், போத்துக்கேய, டச்சு, ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களால் தரப்படும் சில குறிப்புக்க ளும் மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றைக் கூற ஓரள வுக்கு உதவியாக இருக்கின்றன.
ஆங்கிலேயர் காலத்திலே மாத்தளை முஸ்லிம்களின் வரலாற் றைக் கூறுவதற்கு அரசாங்க அதிபர்களின் நிர்வாக அறிக்கைகள், வெவ்வேறு காலங்களில் தொகுக்கப்பட்ட குடிசனமதிப்பு அறிக்கை கள், அரசாங்கதிணைக்களங்களில் காணப்படும் பதிவுகள், ஆகியவை பெரிதும் உதவுகின்றன.
இலங்கையில் முஸ்லிம் குடியேற்றங்கள் பல்வேறுபட்ட அடிப் படைகளில், பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்று இருக்கின்றன. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் பொதுவாக அராபியர்கள் என அழைக்கப்பட்ட அராபிய தீபகற்ப மக்களதும், பாரசீகர்களின தும் குடியேற்றங்கள் அமைந்திருக்கின்றன.
பத்தாம், பதினொராம் நூற்றாண்டுகளிலும் அதற்குப் பின்னரும் தென்னிந்தியாவின் மேற்குக் கரையிலும் கிழக்குக் கரையிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் இங்கு குடியேற்றங்களை அமைத்திருக்கின்ற னர்.
ஒல்லாந்தர் காலத்தில் படை வீரர்களாக இங்கு அழைத்துவரப் பட்ட மலாயர்களில் சிலரும் அரசியல் காரணங்களுக்காக ஜாவாவிலி ருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட மலாயர்களும் இலங்கையில் பல இடங்களில் குடியேறி உள்ளனர்.
பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் வளர்ச்சியினால்இலங்கை யின் ஏற்றுமதி இறக்குமதி வணிகமும், பொதுவான உள்ளூர் வர்த்தக மும் விரிவடைந்தபோது, அவ்வர்த்தகத்தில் பங்கு பெறுவதற்காக காயல்பட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, அம்மாபட்டணம், காயா
Page 31
58
மொழிபோன்ற ஊர்களில் இருந்து வந்த தென்னிந்தியமுஸ்லிம்களும் இலங்கையில் 19-ஆம்நூற்றாண்டிலும் இருபதாம்நூற்றாண்டின்முதற் பகுதியிலும் குடியேறினர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அன்றைய வட இந் தியாவில் இருந்து வந்து ஏராளமான "மேமன்களும்" இலங்கையில் குடியேறினர்.
மாத்தளை மாவட்டத்தைப் பொருத்த வரையில் நாம் காணும் விஷேட தன்மை மேற்கூறப்பட்ட அத்தனை மக்கள் கூட்டங்களிலும் ஒரு சிலராவது இங்கும் குடியேறி இருப்பதாகும்.
மாத்தளை மாவட்டத்தில் ஆரம்ப முஸ்லிம் குடியேற்றங்கள் வர்த்தகத் தேவைகளை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கண்டியில் இருந்து திருக்கோணமலை, கொட்டியாரம், மட்டக்க ளப்பு, புத்தளம் போன்ற துறைமுகங்களுக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும் வியாபாரிகளுக்கும், துறைமுகங்களிலிருந்து பொருட்களைக் கண்டிப் பிரதேசத்திற்குக் கொண்டுவரும் வியாபாரிக ளுக்கும் தாம் தங்குவதற்கும் தமது தவளம் மாடுகளை நிறுத்துவதற் கும் நீர்வசதியுள்ள, பாதுகாப்பான இடங்கள் தேவைப்பட்டிருக்கும். இவ்வியாபாரத்தைச் செய்தவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்க ளான படியால் இவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய மாத்தளை, கொங்காவலை, கோட்டகொடை, மாபேரிய, நிக்கவட்டுவான, ரஜ்ஜ மன போன்ற இடங்களில் முஸ்லிம் குடியேற்றங்கள் ஆரம்பமாகி இருக்கலாம்.
1635-ஆம் ஆண்டளவில் மாத்தளைப் பிரதேசத்தின் அரசனாக இருந்த விஜயபால ‘கால” (GALA) என அழைக்கப்பட்ட மாட்டுக் கொட்டில்களை இன்று கொங்காவலை என அழைக்கப்படும் இடத் தில் வைத்திருந்தான்.
இதனால் கொங்கால என்ற பெயர் இப்பகுதிக்கு வைக்கப்பட் டதா அல்லது தவளம் மாடுகள் இங்கு நிறுத்தப்பட்டதால் இந்தபெ யர் வந்ததா என்பது தெளிவில்லை.
கொங்காவலைப்பகுதிமக்களுக்கும்வரக்காமுறை மக்களுக்கும்
59
கண்டிஅரசன் "மடிகே” பொறுப்பை வழங்கியிருந்ததும் மாத்தளைக் கும் வரக்காமுறைக்கும் இடையில் தவளன்கொயா என்ற ஊர்இருப்ப தும் இப்பகுதிக்குத்தவளம் போக்குவரத்தோடு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கும் என்பதைப் புலப்படுத்துகின்றது.
பின்னர் போத்துக்கேயர் காலத்திலும், ஒல்லாந்தர் காலத்திலும் கரையோரப் பிரதேசங்களினின்றும் விரட்டப்பட்ட முஸ்லிம்களும், தாமாகவே அப்பிரதேசத்தை விட்டு வெளியேறிய முஸ்லிம்களும் கண்டி இராச்சியத்தில் குடியேற வந்தபோது அவர்கள் மாத்தளைப் பகுதிகளிலும் தம் குடியேற்றங்களை அமைத்தாகக் கருதலாம்.
இவ்வாறு வந்தவர்கள் அனைவரும் வியாபாரத்தில் ஈடுபடக் கூடிய அளவிற்கு மாத்தளைப் பிரதேச வர்த்தகம், வளர்ச்சியடைந்தி ருக்க முடியாது. இதனால் பலர் விவசாயத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
எனவே நீர் வசதியை அடிப்படையாக வைத்துச் சில விவசாயக். குடியேற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். மாபேரிய, வரக்காமுறை, நிக்ககொல்லை, கோட்டகொடை, நிதுல் கஹகொட்டுவ, உல்பொத் தப்பிட்டிய போன்ற கிராமங்களில் விவசாயத்திற்காகவும் முஸ்லிம் கள் குடியேறியிருக்கலாம்.
ஆங்கிலேயர் காலத்தில் திருகோணமலை மாத்தளை பாதை அமைக்கப்பட்டபோது மடவளை, நாலந்த, நாவுளை போன்ற இடங் களில் வர்த்தகத்திற்காக சில முஸ்லிம்கள் குடியேறினர்.
அவ்வாறே பெருந்தோட்டச் செய்கை வளர்ச்சியினால் ஏற்பட்ட வியாபாரப் பெருக்கத்தின் காரணமாக ரத்தொட்ட, பல்லேபொல, பலாபத்வலை, அலுவிகாரை, உக்குவளை போன்ற இடங்களிலும் சில முஸ்லிம் குடியேற்றங்கள் உருவாகின.
மேற்கூறப்பட்டமுஸ்லிம் குடியேற்றங்கள் பெரும்பாலும் சிறிய னவாகவே இருந்தன. இக்குடியேற்ஜ்கள் ஆரம்பத்தில் ஒரு சில வீடு களை உள்ளடக்கியனவாகவே இருந்தீ4
பொதுவாக பெரும்பாலான மாவட்டங்கள் குறைந்த சனத்
Page 32
60
தொகை உடையனவாகவே அக்காலத்தில் இருந்தன.
கி.பி. 1762-ஆம் ஆண்டு கண்டி மன்னனான கீர்த்தி சிறி ராஜசிங்க னைச்சந்திக்க வந்த ஆங்கிலேய தூதுவரான ஜோன்பிபஸ் திருகோண மலையிலிருந்து கண்டி வந்தபோதுதான் கண்ட ஊர்களைப்பற்றி சில குறிப்புகள் வரைந்துள்ளார்.
இக்குறிப்புகளைப் பார்க்கும்போது இப்ப்ாரிய பிரதேசம் குறைந்த சனத்தொகையை உடையதாகவே இருந்தது என்பது புலப்ப டுகின்றது.
இக்காலத்தில் மூதூருக்கும் மின்னேரியாவுக்கும் இடையில் இருந்த ஒரு முக்கியமான கிராமமாக பங்குரான என்றும் முஸ்லிம் கிராமம் கருதப்பட்டது.
ஆனால் இங்கு இருந்தது பத்து, பதினைந்து சிறிய வீடுகள் மாத்தி ரமே. கல்லால் கட்டப்பட்ட ஒரு வீடாவது இங்கு இருக்கவில்லை யென்றும் பிபஸ் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தளை மாவட்டத்தில் அமைந்திருந்த ஒரு முக்கியமான முஸ் லிம் கிராமமான நிக்கவட்டு வளையைப் பற்றி விவரிக்கும் போது அது ஏழு, எட்டு குடிசைகளைக் கொண்ட ஒர் ஊர் என்றும் தான் தங்குவதற்காக தயார் செய்யப்பட்டிருந்த வீட்டை வர்ணிக்கும் போது அது 'கேவலமான, அசுத்தமான ஒலையால் வேயப்பட்ட ஒரு மாட் டுக் கொட்டகை" எனவும் பிபஸ் கூறிஉள்ளார்.
நாலந்த, நாவுல போன்ற சிங்களக் கிராமங்களைப் பற்றியும் அவர் எதுவும் விஷேசமாக கூறவில்லை. பன்னாமம் என மாத்தளை யைக் குறிப்பிடும்பிபஸ் "இப்பகுதியில் மக்கள் வசிக்கின்றனர் என்று கூறுவதற்குச் சில அறிகுறிகள் தென்படுகின்றன” என்றே கூறுகிறார்.
எனவே ஆயிரத்தி ஏழுநூற்றி எழுபதுகளில் மாத்தளை மாவட்டத் தில் அமைந்திருந்த முஸ்லிம் குடியேற்றங்கள் சிறியனவாகவும் சனத் தொகை குறைந்தனவாகவுமே இருந்திருக்க வேண்டும் என்பது புலப் படுகின்றது.
6
கி.பி. 1814-ஆம் ஆண்டில் மாத்தளை மாவட்டத்தில் 2350 முஸ் லிம்களே வாழ்ந்தனர் எனச் சில பதிவுகள் காட்டுகின்றன.
சில வருடங்களுக்கு முன்வரை மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த நிக்ககொல்ல எனும் ஊரில் வாழ்ந்த ஜனாப் அப்துல் வஹாப் என்பவர் நிக்ககொல்ல குடியேற்றத்தைப் பற்றியும் வேறு சில முஸ் லிம் குடியேற்றங்களைப் பற்றியும் தனக்குக் கிடைத்த செவிவழிச் செய்திகளைப் பெரும் சிரத்தையோடு குறித்து வைத்துள்ளார்.
இவர் எழுதியிருக்கும் குறிப்புகளின்படி இலங்கையின் கரை யோரங்களில் வாழ்ந்த அராபிய முஸ்லிம்களில் சிலர் கி.பி. 1580-ஆம் ஆண்டளவில் புத்தளத்திலிருந்து குருனாகலைக்கு அருகாமையில் அமைந்திருந்த எல்வ்லப்பிட்டிய என்னும் இடத்தில் குடியேறி இருக் கின்றனர்.
இவர்களில் சிலர் வர்த்தகத்திலும் பெரும் பான்மையோர் சேனைப்பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்டு இருந்திருக்கின்றனர்.
ஏறத்தாழ கி.பி. 1770-ஆம் ஆண்டளவில் சத்கோரளை விதானை என்பவரின் தலைமையின் கீழ் சிலர் எல்வலப்பிட்டியைத் துறந்து மய்வெல எனும் இடத்தில் குடியேறியுள்ளனர்.
பின்னர் இவர்களில் சிலர் நிக்ககொல்ல, கெட்டவலை, உக்கு வளை போன்ற இடங்களில் குடியேறிஉள்ளனர்.
இந்த மக்களின் சந்ததியினரில் சிலர் பன்னாமம், கோட்ட கொடை, அக்குராம் பொடை, எல்மல்பொத்த போன்ற இடங்களில் குடியேறினர் என்றும் இக்குறிப்புகள் கூறுகின்றன.
மர்ஹலிம் ஜனாப் அப்துல் வஹாப் கூறியுள்ள சில விவரங்க ளுக்கு சில அரசாங்க ஆவணங்கள் ஆதாரங்களாக இருக்கின்றன.
வேறு சில ஆதாரங்களும் இருக்கின்றன. எனவே இக்குறிப்பு களை செவிவழிச்செய்திகள் என எளிதாக நிராகரித்துவிட முடியாது. 1873-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் திகதி முதல் எல்வலப் பிட்டி, வலக்பிட்டிய எனும் கிராமங்களுக்குத் தம்பிலெப்பை என்ப
Page 33
62.
வரை விதானையாக நியமிக்கும், வடமேற்கு மாகாண அரசாங்க அதி பரால் வழங்கப்பட்ட நியமனக் கடிதம் எல்வலப்பிட்டியில் முஸ்லிம் கள் செல்வாக்கோடு வாழ்ந்திருக்கின்றனர்என்பதை உறுதிப்படுத்துகி Dél.
1859-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ஆம் திகதி முறையாக எழுதி கைச்சாத்திடப்பட்ட காணி உறுதிப் பத்திரம் ஒன்று பின்வுருமாறு கூறுகிறது.
'சத்கோரனை திசாவ, இஹல தொலஸ் பத்துவயில் உள்ள எல்வ லப்பிட்டி எனும் ஊரில் வசிக்கும் நெய்னா மீரா புள்ளையின் மகளான மரியம்பு நாச்சி எனப்படும் நான், எனது தாயின் மூலமாக உரிமை பெற்று நாற்பத்தெட்டு வருடங்களாக பலன் அனுபவித்து வரும் திக் வெல்லை கும்புர எனும் காணியை எல்வலப்பிட்டியைச் சேர்ந்த இப் ராஹிம் பிள்ளை என்பவருக்கு விற்பனை செய்கின்றேன்"
இந்த உறுதிப் பத்திரமும் முஸ்லிம்கள் எல்வலப்பிட்டி எனும் ஊரில் நெடுங்காலமாக வாழ்ந்துவந்ததைக் காட்டுகிறது.
நிக்ககொல்லை கிராமத்தில் வாழும் பலருக்கு சத்கோரளை விதானை என்ற வாசகம் இருப்பதுவும் ஒரளவுக்கு ஜனாப் அப்துல் வஹாப்பின் குறிப்புகளை உண்மைபடுத்துகிறது. இத்தகைய ஆதாரங் களால் ஜனாப் அப்துல் வஹாப் தந்துள்ள சில தகவல்கள் உண்மை யென்று நிரூபிக்கப்படுவதனால் அவர் தந்துள்ள ஏனைய விடயங்களி லும் சில உண்மைகள் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.
ஆனால் மத்திய மாகாணத்தைப் பற்றி ஏராளமான தகவல்களைத் g5(536ip sco, Dirgoa (A Gazetteer of the Central Province of Ceylon) 1898-ஆம் ஆண்டே வெளியிட்டAC லோறி என்பவர் நிக்ககொல்லை எனும் கிராமத்தின் தோற்றத்தை ஹாரிஸ் பத்துவயில் அமைந்துள்ள பமுனு பொல எனும் இடத்தைச் சேர்ந்த மடிகே உடையார் எனும் முஸ்லிமுடன் தொடர்பு படுத்துகின்றார். பமுனுப்பொல என்னும் இக்கிராமத்தில் காணிச் சொந்தக் காரர்களாக முஸ்லிம்கள் வாழ்ந்தி ருக்கின்றனர்.
65
கி.பி. 1803-ஆம் ஆண்டு பமுணுப்பொல காணி ஒன்றைப்பற்றிய வழக்கில் கலகம அடப்பயா என்பவரின் பெயரும் குறிப்பிடப்படு கின்றது. இன்று கூட நிக்ககொல்லையைக் கலகாமம் என்று அழைக் கும் வழக்கம் உள்ளது.
எனவே இதுவும் கருத்தில் கொள்ளப்படக்கூடிய விஷயமாகும்.
கண்டி அரசர்களின் ஆட்சிக் காலத்திலேயே "மடிகே பத்த" எனும் போக்குவரத்துத்துறைக்குப் பொறுப்பாக விருந்த முஸ்லிம்கள் மாத்தளை கொங்காவலையிலும், வரக்காமுறையிலும் வாழ்ந்து வந்தி ருக்கின்றனர்.
1790-ஆம் ஆண்டு ஹரஸ்கம முகாந்திரம் என்பவர் தனது காணியை ஐம்பது 'ரிதி"காசுகளுக்கு அபூக்கர் நய்தே என்பவருக்குக் கொடுத்திருக்கிறார்.
இதற்குச் சாட்சிகளாக ஆதம்பிள்ளை குஞ்சி நய்தே என்பவரும் கொங்காவலை பக்கீர்தம்பியும் இருந்திருக்கிறார்கள்.
அலுவிகாரையைச் சேர்ந்த உடவளவு அதிகாரம் நிலம எனும் பிரதானி தனது மகனான கிரிபண்டா துக்கன ராலைக்கு ஒர் ஒலைச்சு வடி மூலம் 1817-ஆம் ஆண்டு காணிகளை வழங்கியுள்ளார்.
இந்த உயிலில்சர்ட்சிகளாக கொங்காவலை விதானையான வாப் புக் கண்டும், கொங்காவலை செய்யது குருன்னேஹே என்பவரும் கைச்சாத்திட்டுள்ளனர்
1803-ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் மாத்தளை நகரத்திற்கு மிக அருகாமையில் கட்டப்பட்ட மெக்டோவல் கோட்டையைப் பற்றி எழுதும்போது வெசாக் நானயக்கார என்பவர் இக்கோட்டை முஸ் லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் கட்டப்பட்டது என்று கூறுவது முஸ்லிம்கள் கொங்காவலைப் பகுதியில் 1803-ஆம் ஆண்டளவில் கூட பெருந்தெகையாக வாழ்ந்திருக்க வேண்டும் என்ற உண்மையை உணர்த்துகின்றது?
கி.பி. 1762-ஆம் ஆண்டில் நிக்கவட்டவான எனும் ஊரில் முஸ் லிம்கள் வாழ்ந்தனர் என்பதற்கு ஜோன் பிபஸின் குறிப்புகளும் சான்று பகர்கின்றன.
Page 34
64
மேலும் அவர் பலாபத்வலைக்கு அருகில் இருபது முப்பது பொதி மாடுகளைக் கொண்ட முஸ்லிம் வியாபாரக் கூட்டமொன் றைக் கண்டதாக கூறுவதும் முஸ்லிம்கள் இக்காலப்பகுதியில் மாத் தளை பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததைக் காட்டுகின்றது.
'உக்குவளைப் பகுதியில்ே மிக தொன்மையான முஸ்லிம் குடி யேற்ற்மாக கருதப்படுகின்ற மாபேரிய எனும் கிராமத்தில் இருந்த பழைய பள்ளிவாசலுக்குப்பாவிக்கப்பட்டிருந்த மரச்சட்டங்கள், சலா கைகள், கதவு நிலைகள், கதவுகள் என்பன இன்றும் காணப்படுகின்
றன. A. இவை முந்நூறு நானூறு வருடங்கள் பழைமையானவையெனக்
கருதக் கூடியவை.
அந்த பள்ளிவாசலின் தேவைக்காக கட்டப்பட்டிருந்த படிகளின் அமைப்பும், அப்படிகளை அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கற்களின் அளவும் இப்பள்ளியின் தொன்மையைப் பறைசாற்று கின்றன.
காணிகளை ஒழுங்காக பதிவு செய்ய ஆரம்பித்த காலகட்டமான ஆயிரத்தி எண்ணுாற்று அறுபதுகளில் மாத்தளை மாவட்ட காணிப் பதிவுக் காரியாலயத்தில் காணப்படும் சில விவரங்கள் கொங்கா வலை, வரக்காமுறை, நிதுல்கஹகொட்டுவ, மாபேரிய, நிக்க கொல்ல, எலமல்பொத்த போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் நெடுங் காலமாக வாழ்ந்திருக்கின்றனர் காணி உடைமையாளர்களாக இருந் திருக்கின்றனர் என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றன.
தனிப்பட்ட முஸ்லிம்களிடம் இருக்கும் பத்திரங்கள் பலவும் கி.பி. 1800-ஆம் ஆண்டளவிலே முஸ்லிம்கள் மாத்தளை மாவட்டத் தில் ஏராளமான காணிகளுக்கு உரிமையாளர்களாக இருந்தனர் என்ப தைப் புலப்படுத்துகின்றன. மேற்கூறப்பட்ட கூற்றுகளுக்குச்சான்றுக ளாக மாத்தளை காணிப்பதிவு காரியாலயத்தில் பெறப்பட்ட சில விவரங்கள் கீழே தரப்படுகின்றன.
(1) ஆயிரத்தி எண்ணுாற்றி அறுபத்து நான்காம் வருடம் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி பதிவு செய்யப்பட்ட ஒரு காணிவிபரம், இது நிதுல் கஹகொட்டுவ எனும் கிராமத்தில் இருந்த காணி ஒன்றை பெரிய தம்பி வெதராலயின் பிள்ளைகளான சேகு
65
உம்மாவும், பிச்சை உம்மாவும் மாபேரிய கிராமத்தைச் சேர்ந்த
நெய்னாபுள்ளை பக்கீர்தம்பிக்கு வழங்கியதைக் கூறுகின்றது.
இதே தினத்தில் செய்யப்பட்டுள்ள இன்னொரு பதிவு இந்த இரண்டு முஸ்லிம் பெண்களும் வரக்காமுறையில் இருந்த தமது காணி
ஒன்றை
நெய்னா புள்ளை பக்கீர்த் தம்பிக்கு வழங்கும் விவரத்தைத்
தருகின்றது. இது வெவ்வேறு முஸ்லிம் கிராமங்களுக்கிடையே இருந்த தொடர்பையும் காட்டுகின்றது.
(ii)
கி.பி. 1864-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு பதிவு. இது மொஹிதீன் அப்துல் காதர் என்பவருக்கு வரக்காமுறையில் உரித்தாக இருந்த சேகுபுள்ளைவத்த என்ற காணியின்எல்லை களைக் குறிப்பிடுகின்றது.
வடக்கில் ஆதம் புள்ளையின் தோட்டம் கிழக்கில் பக்கீர்த்தம்பியின் தோட்டம் தெற்கில் சின்னக்குழந்தையின் தோட்டம் மேற்கில் உதுமான் லெப்பையின் தோட்டம்.
இது வரக்காமுறையில் முஸ்லிம்களுக்கு நிறைய காணிகள்இருந்ததை உணர்த்துகின்றது.
(iii)
(iv)
கி.பி. 1864-ஆம் ஆண்டு பதிவு: இது பரகஹவல எனும் கிராமத்தில் வசிக்கும் சுலைமா புள்ளே சின்னத்தம்பி என்பவர் மானாம் பொடையில் உள்ள ஒரு காணியைச் சுலைமான் புள்ளையின் மகளான கொழந்தை என்பவரிடம் இருந்து வாங்கியதைக் குறிக்கின் (Dé51.
கி.பி. 1864-ஆம் ஆண்டு பதிவு: இது நிக்ககொல்ல கிராமத்தைச் சேர்ந்த உதுமான் கண்டு விதானையின் மகன் பிச்சைக்கண்டு ஆரச்சி என்பவர் நிக்க கொல்லை காணியொன்றை காசிம்புள்ளையின் மகள்குப்பி உம்மாவிடம் வாங்கியதை குறிப்பிடுகின்றது.
Page 35
66
காணிப் பதிவுக் காரியாலயத்தில் காணப்படும் இந்த ஆதாரங்க ளும் முன்னர் கூறப்பட்ட ஏனைய ஆதாரங்களும் ஆங்கிலேயரின்
ஆட்சிஆரம்பமானபோதுமாத்தளையின்பலபகுதிகளிலும் முஸ்லிம் குடியேற்றங்கள் பரவலான முறையிலே அமைந்து விட்டன என்பதை உறுதிப்படுத்துகின்றன.
வெளிப்பிரதேசங்களிலிருந்து மாத்தளைப் பகுதிகளுக்கு வந்து குடியேறிய முஸ்லிம்களை மாத்தளையில் அன்று வாழ்ந்த சிங்கள பெருங்குடிமக்கள் வரவேற்று அரவணைத்து, தம்முடைய ஆதரவை யும் பாதுகாப்பையும் அவர்களுக்குப் பூரணமாக வழங்கியுள்ளனர். சிங்களவர்கள் காட்டிய இந்த நல்லெண்ணமே மாத்தளையில் குடியேறிய முஸ்லிம்களின் துரித வளர்ச்சிக்கு முக்கிய காரணமாயிருந்
55l.
எனவே மாத்தளை முஸ்லிம்களிடையே சிங்களவர்களின் மீது ஒரு நன்றிஉணர்வு எப்போதும் இருந்துள்ளது.
நான்கு பக்கங்களிலும் பெரும் சிங்களக் குடியேற்றங்களால் சூழப்பட்ட சிறிய கிராமங்களில்கூட முஸ்லிம்கள் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். தம்புள்ளைக்கு அருகாமையில் இருக்கும் நிக்கவட்ட வான என்ற பழைய முஸ்லிம் கிராமம். இதற்கு உதர்ரணமாகும்.
எல்லா வசதிகளும் கிடைத்தாலும் முஸ்லிம்கள் சமய சுதந்திரத் தையே முதன்மையானதாக மதிப்பர். கண்டிய சிங்களப் பெளத்தர்கள் இந்த விடயத்திலும் முஸ்லீம்களுடன் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டதுடன்முஸ்லிம்களின் சமய நடவடிக்கைகளுக்கு ஆத ரவளித்தே வந்தனர். பெளத்தர்களின் இம்மத சகிப்புத்தன்மையை கண்டி இராச்சியத்தில் பதினெட்டு வருடங்கள் வாழ்ந்த ஆங்கிலேய ரான ரொபர்ட் நொக்ஸின் நூலும் வேறு ஆதாரங்களும் தெளிவாக உணர்த்துகின்றன.
கண்டியில் இருந்த ஒரு பள்ளிவாசலுக்குக் கண்டி நகரத்தில் வாழும் ஒவ்வொரு குடியிருப்பாளரும் ஒரு பணம் வழங்க வேண்டு மென்ற அரசகட்டளை ஒன்று இருந்ததென்றும் முஸ்லிம்கள் மிக
67
உரிமையோடு ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று இதனை வசூலிப்பர் என்றும் நொக்ஸ் கூறியுள்ளார்"
பெளத்த விகாரைகளின் பராமரிப்புக்காக எம்முறையில் கண்டி அரசன் விகாரைகளுக்குக் காணி வழங்கினானோ அதே அடிப்படை யில் பள்ளிவாசல்களின் நிர்வாகத்திற்காகவும் காணிகள் வழங்கினான் என்றும் அக்காணிகளில் குடியிருந்தவர்கள் பள்ளிவாசலுக்குச் "சேவைகள் வழங்குவதற்குப் பதிலாக பள்ளிச்செலவுக்களுக்காக பணம் கொடுத்தனர் என்றும் இவர் கூறியுள்ளார்.
ரிதி விகாரையில் இருந்த பிக்குகள் தமது விகாரைக்குச் சொந்த மானரம்புக்கந்தனஎன்ற கிராமத்தில் வாழ்ந்தமுஸ்லிம்களுக்குஅவர்க ளுட்ைய பள்ளிவாசல் கதீபின் செலவுக்காகவும் பள்ளிவாசலின் நிர் வாகச் செலவுக்காகவும் தமது விகாரைக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கியுள்ளனர்"
இது கண்டி பெளத்தர்களின் உன்னத உளப்பாங்கை எடுத்துக்காட் டுகின்றது. மாத்தளையிலும் முஸ்லிம்களிடம் சிங்களவர்கள் இந்த பெருந்தன்மையான போக்குடனேயே நடந்து கொண்டனர்.
தம்மோடு ஒன்றிணைந்து வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அவர்களின் சமய அனுஷ்டானங்களையும் மதக் கோட்பாடுகளையும் தமதுபழக்க வழக்கங்களையும் கடைப்பிடிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை மாத்த ளைப் பிரதேச சிங்கள மக்கள் அமைத்துக் கொடுத்தனர்.
கண்டி இராச்சியத்தின் ஏனைய பகுதிகளைப் போலவே மாத்த ளைப் பிரதேசத்திலும் முழு வர்த்தகமும் முஸ்லிம்களின் கரங்களிலே தங்கியிருந்தது."கண்டியர்களிடம் வர்த்தக உளப்பாங்கு சற்றேனும் இல்லை. அவர்கள் வியாபாரத்தை வெறுக்கின்றனர். விற்பனை செய் யும் நோக்கோடு அவர்கள் எப்பொருளையும் உற்பத்தி செய்வ தில்லை. இலாபத்துடன் மீள்விற்பனைச் செய்யும் நோக்கோடு அவர் கள் எதையும் வாங்குவதுமில்லை’ என 1901ஆம் ஆண்டு மாத்தளை உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய ஈ.பி. அலெக்சாண்டர் என்பவர் கூறியுள்ளார்".
Page 36
68
1901-ஆம் ஆண்டு கண்டியர்களைப் பற்றிய இக்கணிப்பு 1801ஆம் ஆண்டு மாத்தளைச் சிங்களவர்களுக்கும் முற்றிலும் பொருந்துவதா கவே இருக்கின்றது.
மாத்தளைச் சிங்கள மக்கள் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலே கூட வியாபாரத்தில் சற்றேனும் ஈடுபாடு காட்டவில்லை.
எனவே மாத்தளைப் பிரதேச வர்த்தகம் முழுவதும் முஸ்லிம்க ளின் ஏகபோக உரிமையாகவே மாறியது என கூறலாம்.
பாதைகளும், போக்குவரத்து வசதிகளும் அற்ற அக்காலத்திலே, காடுகளும் விலங்குகளும் மலிந்திருந்த அக்காலத்திலே, மாத்தளை முஸ்லீம்கள் வியாபாரப் பொருட்களைத் தவளம் மாடுகளில் ஏற்றிக் கொண்டு அல்லது தாமே சுமந்து கொண்டுகிராமம் கிராமமாகச் சென்று வர்த்தகம் செய்தனர்.
அந்தந்த கிராமங்களில் இருந்த உற்பத்திப் பொருட்களை வாங்கி னர். புடவை, அலங்காரப் பொருட்கள், வீட்டு உபகரணங்கள் போன் றவற்றை விற்றனர்.
பொதுவாக முஸ்லிம் வியாபாரிகளின் வருகை கிராமப் பெண்களுக்கும் இளம் மங்கையர்களுக்கும் மிக மகிழ்ச்சிகரமான காட்சியாக இருந்திருக்க வேண்டும்.
முஸ்லிம்கள் சுய இலாபத்திற்காகவே இவ்வர்த்தகத்திலே ஈடு பட்ட போதும் அவர்கள் மாத்தளை கிராமங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினர் என்பதை மறுக்க முடியாது.
வர்த்தகமே முஸ்லிம்களுக்குப் பழக்கப்பட்ட தொழிலாக இருந் தபோதிலும், மாத்தளையில் வாழ்ந்த சகல முஸ்லிம்களும் அன்று வியாபாரத்திலேயே ஈடுபட்டிருக்க முடியாது.
முழு முஸ்லிம் சனத்தொகையும் வணிகத்தில் ஈடுபடக்கூடிய அளவுக்கு மாத்தளைப் பிரதேச வர்த்தகம் வளர்ச்சியடைந்திருக்க வில்லை.
எனவே பெரும்பாலான் முஸ்லிம்கள் விவசாயத்தையே தம் பிர தான தொழிலாகக் கொண்டிருந்தனர்.
69
மிக அண்மைக்காலம் வரை ரஜ்ஜமனை,நிக்க கொல்ல,கோட்ட கொடை, நிக்கவட்டு வான, மாதிப்பொல, நமடகஹவத்தை போன்ற பகுதிகளில் பெருந்தொகையான முஸ்லீம்கள் நேரடியாக விவசாயத் தில் ஈடுபட்டிருந்தனர் என்பது வரலாற்று உண்மை.
விவசாயத்தோடு கால்நடை வளர்ப்பும் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு முக்கியத் தொழிலாக இருந்தது. தச்சுத் தொழிலிலும் ஏனைய தொழில்களிலும் சிலர் ஈடுபட்டிருந்தனர்.
முஸ்லிம்கள்.விவசாயத்தைப் பிரதானமான தொழிலாகக் கொண் டதால் அன்று வழக்கில் இருந்த நில உடைமை முறையை ஏற்க வேண்டியிருந்தது; தம்முடைய மதக் கோட்பாடுகளுக்கு முரண்படாத வகையில் அன்று இருந்த நில உடைமை முறைக்குள் தம்மை நுழைத் துக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தமும் சில முஸ்லீம்களுக்கு ஏற்பட்
• القL
அன்றைய நில அமைப்பு முறையில் காணிகள் நிந்தகம், விகார கம் தேவாலகம் என பலவகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
உதாரணமாக விகாரகம் காணிகள் என்பவை விகாரைகளின் பரா மரிப்புக்காக அவ்வவ் விகாரைகளுக்கு அரசனால் வழங்கப்பட்டிருந்த காணிகளாகும்.
இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளின் ஐந்தில் ஒரு பகுதி குறிப் பிட்ட விகாரையின் நேரடி பரிபாலனத்தில் கீழ் இருக்கும். இப்பகுதி "முத்தெட்டுவ" என்று அழைக்கப்பட்டது.
ஏனைய நான்கு பகுதிகளும் விவசாயிகளின் மத்தியில் பிரித்து கொடுக்கப்பட்டன.
இப்படிக் கொடுக்கப்படும் ஒவ்வொரு பகுதியும் ஒரு "நிலப்பங் கு" என அழைக்கப்பட்டது; இந்த பங்கைப் பெற்றவர்கள் "பங்குகா guir எனவும் அழைக்கப்பட்டனர்.
இப்பங்குகளைப் பெறுபவர்கள் வெவ்வேறு வகையான சேவை களை விகாரைக்காக ஆற்ற வேண்டியிருந்தது.
Page 37
70
அலதெனிய, அலவத்துக்கொடை, ரம்புக்கந்தன, துனுவில போன்ற பல ஊர்களிலும் முஸ்லிம்கள் இவ்வாறு விகாரைக் காணிக ளைப் பெற்றனர். அவற்றுக்குப் பிரதியாக விகாரைகளின் சில பணிக ளுக்கு உதவி செய்துள்ளதை அறிகிறோம். மாத்தளை மாவட்டத்தி லும் முஸ்லிம்கள் விகாரைக் காணிகளைப் பெற்று அங்கு வாழ்ந்துள் ளனர். உதாரணமாக அலுவிகாரையில் அமைந்துள்ள உடவிகாரைக் காணிகளை ஒரு முஸ்லிம் வைத்திருந்தார். இக்காணிகளுக்குப் பிரதி யாக இவர்கள் சேவைகளை அல்லது பணத்தை வழங்கினர்".
இவ்வாறே தனிப்பட்ட பிரமுகர்களின் காணிகளில் ஒருவர் குடியிருந்தால் அந்த பிரமுகருக்குச் சில சேவைகள் செய்வதும் வழக்க மாயிருந்தது.
உதாரணமாக மாத்தளை வடக்கு கந்தப்பள்ள கோரளையைச் சேர்ந்த கொஸ்பொத்த எனும் கிராமத்தில் துல்லேவ அதிகாருக்கும் அதபத்து முதியான்சலாகே பண்டா என்பவருக்கும் இருந்த காணிக ளில் பின்வருவோர் குடியிருந்தனர்; பிச்சைக்கண்டு வெதகே அஹமது கண்டு, அபூபக்கர் அஹமது கண்டு, சியம்பலாகஹகே அபூபக்கர் தம்பி, உமருலெப்பை வத்தே உன்னேஹே, பள்ளிய குருன்னேஹே
குறிப்பிட்ட விகாரைக்கோ அல்லது நில உடைமையாளருக்கோ குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தைத் தான்செய்ய வேண்டியிருந்த சேவைகளுக்குப் பதிலாக கொடுப்பதன் மூலம் சேவைகளைச் செய் யாது ஒதுங்கிக்கொள்ளும் வாய்ப்பும் இருந்தது.
தம்முடைய மதக்கோட்பாடுகளுக்கு நேரடியாக முரண்படாத சில சேவைகளைச் செய்வதற்கு முஸ்லிம்கள் தயாராயிருந்திருக்கின்ற னர். இந்தப் போக்கு சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்கிடையே ஒர் இணக்கத்தையும், செளஜன்யத்தையும், நல்லெண்ணத்தையும் ஏற் படுத்த உதவியது. سسی
கண்டிஅரசனின் காலத்தில் பெரும்பாலும் முஸ்லிம்கள் சிங்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குக் கீழேயே இருந்தனர்.
ול
ஆனால் 1818 ஆம் ஆண்டு இந்நிலையிலே ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. கி.பி. 1818 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி வெளியாகிய பிரகடனமும் 1818 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி வெளியாக்கப்பட்ட பிரகடனமும் கண்டி பிரதேசத்தில் முஸ்லிம் களைக் கண்டி பிரதானிகளின் கட்டுப்பாட்டுக்குள் நின்றும் அகற்றின முஸ்லிம்களுக்கென தனி முஸ்லிம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
சிறிய முஸ்லிம் கிராமங்களுக்கும் தனி முஸ்லிம் ஆரச்சிகளும் விதானைகளும் நியமிக்கப்பட்டனர். மாத்தளையில் இருந்த முஸ்லிம் குடியேற்றங்களுக்கும் தனி ஆரச்சிகள் நியமிக்கப்பட்டனர்.
1830 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் நிலவிய மானிய முறை பொருளாதார அமைப்பிலே புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்ப டலாயின.
இம்மாற்றங்கள் அத்தனைக்கும் அடிப்படையாக அமைந்தது 1825 ஆம் ஆண்டளவில் இலங்கை மத்திய மலைநாட்டில் அறிமுக மான கோப்பிப் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையே.
வெளிநாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில், ஏற்பட்ட வர்த்தக மாற்றங்கள் இலங்கையிலே கோப்பி மிகத் துரிதமான வளர்ச் சிப் பெறுவதற்கு உதவின.
1845ஆம் ஆண்டு மலைநாட்டிலே 35,595 ஏக்கர் நிலப்பரப்பிலே பயிரிடப்பட்டிருந்த கோப்பி 1848ஆம் ஆண்டு 60,000 ஏக்கராக அதிக ரித்தமை இப்பயிர்ச் செய்கையின்அசுர வளர்ச்சியைக் காட்டுகின்றது?
1860 ஆம் ஆண்டளவில் மலையகம் முழுவதுமே ஒரு விசால மான கோப்பித் தோட்டமாகவே மாறிவிட்டது எனலாம்.
நிலமும் சுவாத்தியமும் கோப்பிச் செய்கைக்குப் பொருத்தமாக இருந்ததால் மாத்தளை மாவட்டத்திலும் கோப்பி செய்கை பெரும் வளர்ச்சி அடைந்தது.
Page 38
79.
1830 ஆம் ஆண்டளவில் மாத்தளை நகருக்கு அருகில் உள்ள வாரியப்பொல எனும் இடத்தில் கோப்பித் தோட்டம் ஆரம்பிக்கப்
பட்டது.
வெகு விரைவில் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த அலுவி 6ft 60), பலாபத்வல, மடவளை, கவுடுபெலல்ல, உக்குவளை, ரத் வத்தை, ரத்தொட்ட, கைக்காவளை, பல்லேபொல, உடஸ்கிரிய, நிக் ககொல்ல போன்ற பகுதிகளிலும் கோப்பிச்செய்கை வேகமாக வளர்ச் சியடைந்தது.
இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்குமுகமாகவே 1878 ஆம் ஆண்டு கண்டி-மாத்தளை புகையிரதப்பாதை ஆரம்பிக்கப்பட்டு 1880 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.
1880 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோப்பி வீழ்ச்சியடைய ஆரம்பித் தது. புது வர்த்தகப் பயிரான தேயிலையின் ஆட்சி ஆரம்பமாகியது. கோப்பித் தோட்டங்கள், தேயிலை தோட்டங்களாக மாற ஆரம்பித் தன.
மாத்தளை மாவட்டத்திலும் இதேதான் நடைபெற்றது. தேயி லைப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை மாத்தளை மாவட்டத்தில் 'வளர்ச்சியடைந்தது.
1896 ஆம் ஆண்டளவிலேயே 22493 ஏக்கர் பரப்பிலே தேயிலை பயிரிடப்பட்டிருந்தது; ஏறத்தாழ 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் கோக் கோவும் பயிரிடப்பட்டிருந்தது.
பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் வளர்ச்சி இலங்கை தேசிய பொருளாதாரத்திலும் சமூக அமைப்புகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியதைப் போலவே மாத்தளை மாவட்டத்திலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
ஆரம்பக் காலங்களில் கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கண்டிச் சிங்களவர்கள் வேலை செய்ய தயாராக இருக்கவில்லை.
73
எனவே தோட்டங்களில் பெரும் தொழிலாளர் தட்டுப்பாடு ஏற் பட்டது. தோட்டங்களின் நலனைத்தன்நலனாகக் கருதிய ஆங்கிலேய அரசாங்கம் தேவையான அளவு தென்னிந்திய தொழிலாளர்களை இங்கே வரவழைத்ததன் மூலம் இப்பிரச்சினையைச் சமாளித்தது.
இவ்வாறு மாத்தளை மாவட்டத்திலும் தோட்டங்களில் ஏராள மான இந்தியத் தொழிலாளர்கள் குடியமர்த்தப்பட்டனர்.
இதுகாலம் வரை மாத்தளையில் வாழ்ந்த அத்தனை இனங்களும் தமது உணவுத் தேவைகளைத் தாமாகவே பூர்த்தி செய்து கொள்ளும் இனங்களாகவே இருந்தன.
ஆனால் இந்தியத் தொழிலாளர்களின் வருகையோடு, வெளி நாட்டு ஏற்றுமதிக்காகப் பொருட்களை உற்பத்தி செய்துவிட்டு, தனது உணவுத் தேவைகளுக்கும் பிற தேவைகளுக்கும் பிறரை எதிர்பார்த்து நிற்கும் ஒரு சமூகம், ஏனைய பெருந்தோட்ட மாவட்டங்களில் தோன் றியதைப் போலவே மாத்தளையிலும் தோன்றியது. இதனால் வெளி நாட்டு வர்த்தகமும் உள்நாட்டு வர்த்தகமும் போட்டிப் போட்டுக் கொண்டு வளர்ந்தன.
மாத்தளை மாவட்டத்தில் விளைந்த அத்தனைக் கோப்பியையும், தேயிலையையும் ஏற்றுமதிக்காக கொழும்புக்கு ரயிலின் மூலம் அனுப்புவதற்கு அவற்றை முதலில் வெவ்வேறு தோட்டங்களிலி ருந்து மாத்தளையில் இருந்த புகையிரத நிலையத்திற்கு கால்நடையா கவோ, மாட்டு வண்டிகள் மூலமாகவோ கொண்டு வரவேண்டியிருந் தது. .
அதே போல தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, தோட்டங்களுக்குத் தேவையான உரம்,உபகரணங்கள் போன் றவற்றை நகரத்தில் இருந்து தோட்டங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
இதனால் வாடகைக்குக் கொடுப்பதற்காக மாட்டு வண்டிகளை வைத்திருத்தலும் மாட்டு வண்டிகளை ஒட்டுதலும் 'கிராக்கி’ உள்ள தொழில்களாக வளர்ச்சி பெற்றன.
Page 39
74
நாளடைவில் போக்குவரத்து 'கொந்துராக்குக் காரர்கள்' உரு வாகினர். 1850 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்ட மாத்தளை - ரத்தொட்டை பாதையும் ஏனைய 'கரத்தை" பாதைகளும் இப் போக்கு வரத்துக்குப் பெரிதும் உதவின.
பொருள் போக்குவரத்தும் மனிதப் போக்குவரத்தும் அதிகரிக்க மாத்தளை மாவட்டத்தில் பல நகரங்கள் உருவாக ஆரம்பித்தன.
அரசாங்க அலுவலகங்களின் அமைவினால் முக்கியத்துவம் பெற்று, ஒரு சிறு நகரத்தின் அந்தஸ்தைப் பெற்றிருந்த மாத்தளை, விரிவும் செழிப்பும் பெறலாயிற்று.
அன்றைய மாத்தளை நகரின் மையமாக விளங்கிய கொங்கா வலை 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சில கடைகளை உடைய இடமாக இருந்தது.
ஆனால் 1848 ஆம் ஆண்டில் கூட மாத்தளை நகரம், சாதாரண நிலையில் தான் இருந்தது.
திருக்கோணமலை வீதியின் இரு பக்கங்களிலும் ஒலையால் அல் லது வைக்கோலால் வேயப்பட்ட கடைகள் சில இருந்தன.
ஐந்தே ஐந்து கட்டடங்களே ஒடு வேயப்பட்டனவாக இருந்தன. ஆனால் இந்த ஐந்தும் அரசாங்க கட்டடங்களாகவே இருந்தன. ஆனால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் பின்னர் மாத்தளை துரிதமாக வளர்ந்தது. ரயில் நிலையம் அமைந்திருந்த காரணத்தினால் கொங்காவலைப் பகுதி பெரும் முக்கியத்துவம் பெற்றது. திருக்கோ ணமலை வீதியையும் கொங்காவலை பாதையையும் இணைக்கும், இன்று ஹெரிஸன் ஜோன்ஸ் ரோட் என்றழைக்கப்படும் பாதையைப் பற்றி 1921ஆம் ஆண்டு மாத்தளை உதவி அரசாங்க அதிபராக இருந்த ஹெரிஸன் ஜோன்ஸ் தனது பரிபாலன அறிக்கையில் கூறும்போது இப்பாதை கொங்காவலை பாதையிலும் கொடப்பொல பாதையி லும் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெரிதும் உதவும் என்று கூறியிருப்பது அன்று கொங்காவலை பாதை எந்தளவு முக்கியமான பாதையாக இருந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்து
75
கின்றது.
மாத்தளையின் பெரும் வளர்ச்சியினால் அது இலங்கையில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாத் தளை நகர பரிபாலனம் 1888 ஆம் ஆண்டு லோக்கல் போர்ட் (Local Board) எனும் உள்ளூராட்சிமன்றத்தின் பொறுப்பில் விடப்பட்டது.
இவ்வாறே மடவளை, தம்புள்ளை,ரத்தொட்ட, பலாபத்வெல, கவுடு பெலல்ல போன்ற இடங்களும் சிறுநகரங்களாக உருவெடுத்தி ருந்தன.
சிறு நகரங்கள் எனும்போது நேரான ஒரு பாதையின் பக்கங்க ளிலே இடை இடையே வீடுகள், ஒரு சில கடைகள் - "கால" என்றழைக்கப்பட்ட மாட்டுக்கொட்டில்கள் - என்றே பொருள் எடுக்க வேண்டும்.
இந்த ஐந்து நகரங்களிலும் பலாபத்வெலயில் மாத்திரமே இரண்டு தெருக்கள் இருந்திருக்கின்றன. "இந்த ஐந்து நகரங்களும் செனிடரி போர்ட் (Sanitary Board) என்றழைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பில் விடப்பட்டிருந்தன.
பெருந்தோட்டங்களின் வளர்ச்சியும் அதன் விளைவாக ஏற்பட்ட வர்த்தக வளர்ச்சியும், நகரங்களின் தோற்றமும் மாத்தளை முஸ்லிம் சமூகத்தைப் பெரிதும் பாதித்தன.
அச்சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. ஆரம்பத்தில் மாத்தளையில் குடியேறிய முஸ்லிம்களில் கணிசமான தொகையினர் விவசாயத்தில் ஈடுப்பட்டனர் என்பது உண்மை.
ஆனால் ஏனைய இடங்களில் வசித்தமுஸ்லிம்களுக்குபோலவே மாத்தளை முஸ்லிம்களுக்கும் வியாபாரம் என்பது அவர்களின் உடம் பின் இரத்தத்தோடு ஓடிய ஒன்றாக இருந்தபடியால், இப்போது வர்த் தக வாய்ப்புகள் பெருக ஆரம்பித்தவுடன் பலர் இந்த புதிய வாய்ப்புக ளைப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர்.
சிலர் விவசாயத்தைக் கைவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
Page 40
76
சிலர் விவசாயம் செய்துகொண்டே வர்த்தகத்திலும் ஈடுபடலாயினர்.
இலங்கையில் ஏற்பட்ட வணிக வளர்ச்சி வேறுபல மக்கள் கூட் டத்தினர்களும் இங்கு வருவதற்குக் காரணமாயிற்று.
இவர்களுள் முக்கியமானவர்கள் தென்னிந்திய முஸ்லிம்களா வர். காயல்பட்டணம், ஏர்வாடி, கீழக்கரை, அம்மாபட்டினம் போன்ற ஊர்களிலிருந்து இவர்கள் வர்த்தகத்திற்காக இலங்கை வந்த னர்.
இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் நிரந்தரமாக குடி யேறும் நோக்கோடு வரவில்லை.
ஒரு சிலர் இங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டபோதிலும் பெரும் பாலானோர் தற்காலிக பிரஜைகளாகவே இங்கு வாழ்ந்தனர்.
இவர்களின் வருகை முஸ்லிம்களின் தொகையைக் கூட்டியது மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரங்களிலும் பெரும் மாற்றங் களை ஏற்படுத்தியது.
இந்த வியாபாரிகளில் பலர் மாத்தளை மாவட்டத்தில் குடியேறி னர். தென்னிந்தியாவில் இருந்து வந்த இன்னொரு இனத்தோர்செட்டி கள் போன்ற தென்னிந்திய தமிழ் வர்த்தகக் கூட்டத்தினர் ஆவர்.
இவர்களிலும் கணிசமானோர் பெருந்தோட்டங்களுக்கு அருகா ழையில் அமைந்திருந்த மாத்தளை, உக்குவளை, ரத்தொட்டை, கவுடு பெலல்ல போன்ற இடங்களில் குடியேறி வர்த்தகத்தில் ஈடுபட்ட்னர். மாத்தளை வர்த்தக வளர்ச்சி வெளிநாட்டு மக்களைக் கவர்ந்தது போலவே இலங்கையர்களான கரையோரச் சிங்களவர்களையும் கவர்ந்தது. கைத்தொழில்களிலும், வியாபாரத்திலும் அனுபவம் மிக்க கரையோரச் சிங்களவர்கள் மலைநாட்டின் ஏனைய பகுதிகளில் வந்து நிறைந்தது போலவே மாத்தளை மாவட்டத்திலும் வந்து குவிந்த னர்.
தென்னிந்திய தமிழ் வணிகர்களின் வருகையும், கரையோரச்சிங் களவர்களின் வருகையும் இதுவரை பெருமளவுக்கு மாத்தளை உள்
77
ளூர் வர்த்தகத்தின் ஏகபோக உரிமையாளர்கள்ாயிருந்த முஸ்லிம்க ளுக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்தது.
வியாபாரப் போட்டிகள் ஆரம்பமாயின. இவ்வியாபாரப் போட் டிகள் சிலவேளைகளில் பல்வேறு இனங்களுக்கிடையே சில விரிசல் கள் ஏற்படக் காரணமாயின.
மாத்தளை மாவட்டம் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி
Lஅட்டவணை1
spegi Gouluuuli 1871 1881 1891
முஸ்லிம் முஸ்லிம், முஸ்லிம்
a T. To, Tc, அத்தரகல்லாவ - 46 18 33 20 எல்மல்பொத்த 42 46 47 53 கோட்டகொடைl48 36 68 56 42 39 மாபேரிய I2O IO3 4. 34 30 23 நமடகஹவத்தை 108 88 IOI 82 O5 8l. நிக்ககொல்ல 137 28 172 153 139 I2O நிக்கவட்டவான 156 45 63 50 65 62 நிதுல்கஹகொட்டுவ 2O 28 18 25 ஒயபகல 46 33 பரகஹவெல 6O 63 69 76 பட்டிவெல 23 13 29 21 ரஜ்ஜம்மன 8. 66 17 5 ரன்வெடியாவ 22 29 22 உல்பொத்தபிடிய40 29 4. 33 32 40 வது ரெஸ்ஸ 6O 42 29 20 O6 O வரக்காமுறை *165 275 206 230 ۔ــه பம்பரகட்டுபொத்த 23 13 23 22 ஹெகிரில்ல 14 12 04 03 தெஹிபிட்டிய 30 43 27 ತೆ!
Page 41
78
மாத்தளை மாவட்டம்: முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி
அட்டவணை 2
1871 88. 1891
at Quaud r, பெ Mu அக்கரஹடுவ 5I 40 42 கொங்காவலை 248 208 259 235 மாதிப்பொல 25 28 29 24 மானாம்பொடை 141 IO7 56 27 94 23 மாருக்கோன 135 II2 93 63 98 87 ரைய்த்தலாவளை 67 56 45 45
5 1870-1891 காலப்பகுதியில் காணப்பட்ட மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் சனத்தொகை விவரங்கள் மேலே தரப்பட்டுள்ள இரண்டு அட்டவணைகளிலும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்விவரங்கள் கண்டி மாவட்ட நீதிபதியாகவும் பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் கடமையாற்றிய AC லோஹி என்பவர் இயற் g5u sco, pig Sasojigs (Gazetteer of the Central Province of Ceylon) பெறப்பட்டவையாகும்.
இவற்றில் முதல் அட்டவணையில் கூறப்பட்டுள்ள ஊர்கள் முழு மையாக முஸ்லிம் கிராமங்கள் என அழைக்கப்படக் கூடியவைகளா கும்.
இரண்டாவது அட்டவணையில் தரப்பட்டுள்ள கிராமங்கள்முஸ் லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களாகும்.
எனவே இரண்டாவது அட்டவணையில் தரப்பட்டுள்ள விவரங் கள் அக்கிராமங்களில் வாழும் முஸ்லிம்களின் தொகைகளை மாத்தி ரம் குறிக்கவில்லை.
இவ்வட்டவணையில் தரப்பட்டுள்ள தொகையில் ஐம்பது அல் லது அறுபது வீதமானோர் முஸ்லிம்களாயிருந்திருப்பர் என்று கணித் தல் பாதுகாப்பானதாகும்.
79
இவ்விரண்டு அட்டவணைகளிலும் தரப்பட்டுள்ள கிராமங்க ளைத் தவிர நாவுல, அளுத்கம, நிலகம, வாரியப்பொல, தொட்டக முவ, ரத்தொட்ட, பல்தெனிய, கைக்காவளை, தெம்பிலிதெனிய, பல்லேகம, ஹெவனவெல போன்ற ஊர்களிலும் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கின்றனர்.
இந்த அட்டவணைகளில் காணப்படும் கிராமங்களில் அத்தரகல் லாவையைத் தவிர மற்றெல்லா கிராமங்களிலும் ஓரளவிற்கு ஆண், பெண் விகிதாசாரம் சமமாகவே இருக்கின்றது.
எனவே அத்தர்கல்லாவையைத் தவிர மற்றெல்லா குடியேற்றங்க ளும் நிரந்தரமானவையென்றும் அத்தரகல்லாவையில் மாத்திரம் வியாபாரத்திற்காக ஆண்கள் மாத்திரம் அதிகமாக போய்க்குடியேறியி ருப்பர் என்று கருதலாம்.
முதல் அட்டவணையில் காணப்படுகின்ற ஒயபகல எனும் கிரா மம் 1881, 1891ஆம் ஆண்டு கணிப்புகளில் இரண்டாவது அட்டவணை யில் காணப்படும் கொங்காவலையோடு இணைக்கப்பட்டுள்ளது.
நாம் முதல் அட்டவணையில் காணும் இன்னொரு குறிப்பிடத் தக்க விஷயம் ரஜ்ஜம்மனை, வதுரெஸ்ஸ, ஹெகிரில்லை என்ற மூன்று கிராமங்களினதும் சனத்தொகை படிப்படியாக குறைந்து கொண்டு போவதாகும்.
ரஜ்ஜம்மனை மக்கள் அந்த ஊரைவிட்டு இரண்டு மூன்று மைல் தள்ளி ஒரிடத்தில் குடியேறி இருக்கின்றனர்.
இப்போது அவ்விடம் கெடவலை என அழைக்கப்படுகின்றது. ரஜ்ஜம்மனை இப்போது ஒரு சிங்கள கிராமமாக இருக்கிறது. வது ரெஸ்ஸ எனும் கிராமத்தில் இருந்த முஸ்லிம் மக்கள் படிப்படியாக பக்கத்துக் கிராமமான எல்மல் பொதையிலும் வேறு இடங்களிலும் குடியேறியுள்ளனர்.
இப்பகுதிகளில் இப்போது வாழும் மக்களும் இவ்வாறே நம்பு கின்றனர்.
Page 42
8O
ஹெகிரில்ல என்பது மாத்தளை பள்ளேசிய பத்துவில் இருந்த ஒவல வசத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றாகும்.
இது பொதுவாகசனத்தொகை மிகக் குறைந்த ஒரு கிராமமாகவே இருந்திருக்கிறது. ஒரு முஸ்லிம் கிராமம் என AC லோறியினால் வர்ணிக்கப்படும் இக்கிராமம் ஏதோஒரு வகையில் குடியேறுவதற்குப் பொருத்தமற்ற குடியேற்றமாய் இருந்திருக்க வேண்டும்.
ஹெகிரில்ல என்னும் கிராமம் முஸ்லிம்களால் "செக்கில்ல" என்று அழைக்கப்பட்ட தென்றும் இங்கே வாழ்ந்த மக்கள் அவ்வி டத்தை விட்டு மாத்தளையில் வந்து குடியேறினர் என்றும் மாத்தளை யிலும் உள்பொத்த பிட்டியிலும் வாழும் சில பெரியவர்கள் கூறுகின்ற னர்.
சிறிய கிராமங்களில் கூட ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் யுகத்தில் இருக்கும் எமக்கு அட்டவணைகளில் தரப்பட்டுள்ள சனத் தொகைகளைப் பார்க்கும் போது இம்முஸ்லிம் கிராமங்கள் மிகச் சிறிய கிராமங்களாக இருந்திருக்கும் என்ற எண்ணம் ஏற்படலாம்.
ஆனால் இன்று நகரங்களாக விளங்கும் தம்புள்ளையின் சனத் தொகை 1891ஆம் ஆண்டில் கூட338ஆகவே இருந்ததென்றும் உக்குவ ளையின் சனத்தொகை 302 ஆகவும் கலேவெலயின் சனத்தொகை 65 ஆகவே இருந்ததென்றும் "உணரும் போது குறைந்த சனத்தொகை என்பது முஸ்லிம் கிராமங்களுக்கு மாத்திரம் தொடர்புடையதல்ல என்பது விளங்கும்.
மாத்தளை மாவட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் மொத்த சனத் தொகை 1881ஆம் ஆண்டு 640 ஆக இருந்திருக்கிறது.
ஆனால் 1891ஆம் ஆண்டு இது 5503ஆக குறைந்திருக்கிறது. 1880 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கோப்பி வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது; இதற்குப் பதிலாக புதிய பயிரான தேயிலை வளர்ச்சியடையும் வரை நாட்டின் வருமானத்திலும் வர்த்தகத்திலும் குறைவும் தேக்கமும் ஏற் பட்டிருக்கலாம். صبر
இதனால் மாத்தளையில் வியாபாரம் செய்துகொண்டிருந்த இந்
8
திய முஸ்லிம் வியாபாரிகள் சிலர் இந்தியா திரும்பியதால் மாத்தளை முஸ்லிம்களின் சனத்தொகையில் இவ்வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்க முடியாது.
மாத்தளைமாவட்டமொத்தசனத்தொகையிலும், இந்திய தொழி லாளர்களைக் கணக்கில் எடுக்காது பார்க்கும் போது கூட, இந்த சனத் தொகை வீழ்ச்சியைக் காண்கின்றோம்.
மாத்தளை மாவட்டம்: முஸ்லிம்களின் சனத்தொகை ஆண்டு - 1921 அட்டவணை - 3 மாத்தளை மாவட்டம்: சனத்தொகை
பெயர் 1871 1881 1891
மாத்தளை நகரம் 3597 4032 497 மாத்தளை கிழக்கு 3OO3 20,274 89% மாத்தளை வடக்கு 1626 8822 16799 மாத்தளை தெற்கு 2594 435.27 36,534
58.672 8665.5 7654
எனவே கோப்பி வீழ்ச்சி மாத்திரமன்றி, தொற்றுநோய் போன்ற ஒரு காரணியும், 1881-1891-க்கும் இடையில் உள்ள காலப்பகுதியில் சனத்தொகை குறைவதற்குக் காரணமாயிருந்திருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு. இக்காரணியினால் முஸ்லிம்களும் பாதிக்கப்பட் டிருக்கலாம்.
மாத்தளை மாவட்டம்: முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி ஆண்டு - 1921 அட்டவணை: 03
aardfisät Guust இலங்தை இந்திய oavsvanuit மொத்தம் அம்பள 40 - -- மடவளை தேமலபாகே 89 O wo 90
மடவளை நகரம் 2 28
Page 43
89.
கோட்டகொடை நுனுக்கேவத்த அலுவிகாரை பலாபத்வளை கவுடுபெலல்ல நிக்ககொல்ல யடவத்தை முருத்துவத்த தீவில்ல துல்லேவ மாத்தளை நகரம் வரகிகாமுறை தெஹிபிட்டிய கூம்பியான்கொடை தாரலந்த வாரியப்பொல மெதகொடை உக்குவளை கலால்பிட்டிய மானாம்பொட
Dmt Gurîu பரகஹவெல நிதுல்கஹகொட்டுவ மாருக்கோண குருகெட்ட
உல்பொத்தபிட்டிய (உக்கு வளை)
ரைத்தலாவளை
எல்கடுவ உல்பொத்தபிட்டிய (கியுல)
கியுல
கைக்காவ்ளை
பல்லேகம
246
109
150
46
66
31
92
104
2O
17
Ol
20
305
124
92
104
திக்கும்புர ரத்தொட்ட நகரம் அக்கரஹடுவ குருபெபில்ல பள்ளம கும்பலோலுவ
ஆநதாவலை ஹ"னுகெட்ட நாரங்கொல்ல
நாவுள
நாலந்த கொஹலன்வெல பல்லேபொல பல்தெனிய
அளுத்தம எல்மல்பொத சவனவெளி-மரக்கல LurrGé95 மாதிப்பொல-மரக்கல பாகே மாதிப்பொல-சிங்கள பாகே
ரன்வெடியாவ
கலெவெல புவக்பிட்டிய பல்லேவெல வேரகலவத்த நமகடவத்த ட்டிவெல பம்பரகபொத்த நிக்கவட்டவான தம்புள்ளை நகரம்ம கிபிஸ்ஸ
117
:
25O
49
78
157
O .
20
ar 17
26
70'
96
23
8
2O
252
49
78
157
19
83.
Page 44
84
1921 ஆம் ஆண்டு மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் சனத் தொகை வளர்ச்சி அட்டவணை அவர்களின் வளர்ச்சியையும் எழுச்சி யையும் பல கோணங்களில் இருந்து காட்டுகின்றது.
இந்த அட்டவணையில் இந்திய முஸ்லிம்கள் என்ற் சொற்கள், பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் காரணமாகவும், அதனால் ஏற் பட்ட வர்த்தக விருத்தியின் காரணமாகவும் ஏறத்தாழ 1840ஆம் ஆண் டுக்குப் பிறகு தென்னிந்தியாவிலிருந்து இலங்கை வந்த முஸ்லிம்க ளைக் குறிக்கின்றனவே அன்றி அதற்குப் பல வருடங்களுக்கு முன் னால் இந்தியாவிலிருந்து இலங்கை வந்து குடியேறிய இந்திய முஸ் லிம்களின் பரம்பரையைக் குறிக்கவில்லை என்பது தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டிய விடயமாகும்.
இந்தப் பரம்பரையினர் இலங்கை முஸ்லிம்கள் என்றே இந்த சனத்தொகை மதிப்பீட்டில் கணிக்கப்பட்டுள்ளனர். இந்த மதிப்பீட் டின்படி 964இந்திய முஸ்லிம்கள் மாத்தளையில் இருந்திருக்கின்றனர். மாத்தளை தெற்கிலே இருந்த தோட்டங்களில் மாத்திரம் 302 இந்திய முஸ்லிம்கள் வேலை செய்துள்ளனர். மாத்தளை கிழக்கில் இருந்த தோட்டங்களில் வேலை செய்த முஸ்லிம்களின் தொகை 508 என்று குறிக்கப்பட்டுள்ளது.
இந்த தோட்டங்களில் முஸ்லிம்கள் என்ற ரீதியிலேயே கணக்கெ டுக்கப்பட்டுள்ளதே யொழிய இலங்கை முஸ்லிம், இந்திய முஸ்லிம், மலாயர் என்ற அடிப்படையில் எடுக்கப்படவில்லை.
எனவே இந்த508முஸ்லிம்களில் எத்தனை பேர்இந்திய முஸ்லிம்
85
கள் என்று திட்டவட்டமாக கூறமுடியாது. மாத்தளை தெற்குத் தோட் டங்களில் வேலை செய்த முஸ்லிம்களின் விகிதாசாரத்தை அடிப்ப டையாக வைத்து மேற்குறிப்பிட்ட 508 முஸ்லிம்களில் 60% வீதமா னோர்இந்திய முஸ்லிம்கள் என்று கணித்தால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்குப் பின்னர் மாத்தளைக்கு வந்து வாழ்ந்த இந்திய முஸ்லிம் களின் தொகை 1570 ஆக (964+302+304:1570) இருக்கும்.
இக்காலக்கட்டத்தில் மாத்தளை மாவட்டத்தில் வாழ்ந்த இலங்கை முஸ்லிம்களின் தொகை ஏறத்தாழ5200அளவிலேயே இருந் திருக்கும்.
எனவே இந்திய முஸ்லிம்களின் வருகை எந்தளவுக்குமாத்தளை முஸ்லிம்களின் ஆட்பலத்தைக் கூட்ட உதவியிருக்கும் என்பதையும் அது எந்தளவுக்கு மாத்தளைமுஸ்லிம்களின் கலாச்சார வளர்ச்சியைப் பாதித்திருக்கும் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.
மூன்றாம் இலக்க அட்டவணையைப் பார்க்கும் போது 1921ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் மாத்தளை மாவட்டம் முழுவதுமே ஓரளவு பரவி விட்டனர் என்ற உண்மையும் புலப்படுகின்றது.
முதலாம் இரண்டாம் இலகக அட்டவணைகளோடு ஒப்பிடும் போது மூன்றாம் இலக்க அட்டவணையில் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களாக கூடுதலான இடங்கள் தரப்பட்டிருப்பதைப் பார்க்க லாம்.
இப்புதிய குடியேற்றங்கள் பெரும்பாலானவைவர்த்தகத்திற்காக ஏற்பட்டவையே. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை பணப் புழக் கத்தை பெரிதும் அதிகரித்தது.
இதனால் இதுவரை அத்தியாவசியமானவையையே தேவைக ளாக கருதிய கண்டியச் சமூகம் தன் தேவைகளை விரிவு படுத்த ஆரம்பித்தது.
இதனால் இப்பிரதேசத்தில் உள்ளூர் வர்த்தகம் பெருக ஆரம்பித்
=lك5
Page 45
86
ஏற்கனவே வியாபார அனுபவமிக்க சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்தபடியால் புதிய வாய்ப்புக்களை அது ஓரளவிற்குப் பயன்படுத் திக்கொண்டது.
முஸ்லிம்களில் பலர்வர்த்தக வாய்ப்புகள் உடைய இடங்களிலே சிறு கடைகளை ஆரம்பித்தனர். வேறு பலர் கிராமம் கிராமமாக பொருட்களைச் சுமந்து சென்று விற்க ஆரம்பித்தனர்.
மாத்தளை மாவட்டத்திலே "பொட்டணி வியாபாரம்", மணிப் பெட்டி வியாபாரம்,ஈரொட்டு வியாபாரம், சந்தை வியாபாரம் என்ற தொழில்கள் பிரபல்யமாகின.
இந்த வியாபார வளர்ச்சிகண்டிச்சிங்களவர்களுக்கும் முஸ்லிம்க ளுக்குமிடையில் இருந்த உறவை மேலும் பலப்படுத்தியது. முஸ்லிம் களில் பலர் பல இடங்களிலும் சிறு சிறு காணிகளை வாங்கவும் ஆரம்பித்தனர்.
உதாரணமாக நிக்ககொல்ல முஸ்லிம்கள் தங்கொழுவ, தீவில்ல, ஹபுதேன, உடஸ்கிரிய போன்ற இடங்களில் காணிகள் வாங்கியதைக் கூறலாம்.
இதே காலகட்டத்தில் கரையோரச் சிங்களவர்கள், தென்னிந்திய தமிழ் வியாபாரிகள் போன்றோரும் மாத்தளை மாவட்டத்தில் வியா பாரத்தில் ஈடுபட்டதால் வியாபாரப் போட்டிகளும் ஆரம்பமாயின.
பிற மாவட்ட மக்களோடு மாத்தளை முஸ்லிம்கள் செய்த வியா பாரமும் தொடர்ந்தது.
தவளம் மாடுகளில் பொதிகளை ஏற்றிக்கொண்டு தம்பலகாமம் பகுதிக்கும், வேறு பகுதிகளுக்கும் மாத்தளை முஸ்லிம்கள் தொடர்ந்து போனார்கள். இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சிலர் இன்னும் உயிர் வாழ்கின்றனர்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட பொதி மாடுகளில் பொருட்களை ஏற்றிக்கொண்டு அல்லது மாட்டு வண்டிகளில் பொருள்களை ஏற்றிக்கொண்டு கூட்டம் கூட்டமாய் வியாபாரிகள்
87
செல்வர். மாடுகளின் கழுத்துக்களில் பெரிய பெரிய மணிகள் தொங் (5td.
மாடுகள் ஆடி, ஆடி நடக்கும்போது இம்மணிகள்எழுப்பும் ஒலி அப்பிரதேசம் முழுவதும் ஒலிக்கும் என கூறப்படுகிறது.
இந்த மணிகளைத் தொங்கவிடுவது தம்முடைய வருகையை மக்களுக்கு அறிவிக்க உதவியிருக்கும் என்றபோதிலும், இவற்றை தொங்கவிட்டதன் முக்கிய நோக்கம் பாதைகளில் இருக்கக் கூடிய சிறுத்தைகள் போன்ற மிருகங்களை விரட்டுவதற்கே என்றும் இவ்வி யாபாரத்தைப் பற்றி தெரிந்த சில முதியவர்கள் கூறுகின்றனர்.
தம்புள்ள சீகிரிய, தேவாஹ"வ, நாவுளை போன்ற பகுதிகளில் பகல்வேளைகளில்கூட காட்டு யானைகள் பாதைகளுக்கு அருகே காணப்படுவது 1940-க்கு முன்னர் சர்வசாதாரணமாகும்.
இத்தகைய ஆபத்துக்கள் நிறைந்த காலத்திலே அஞ்சா நெஞ்சு டன்காடுகள் வழியே சென்று வியாபாரம் செய்து தம்முடைய தேவை களையும் பூர்த்திசெய்து, மாத்தளை பிரதேச மக்களின் தேவைகளை யும்பூர்த்திசெய்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய முஸ்லிம் வியாபாரிகளின் சேவையை நன்றியுணர்வுடன் மதிப்பீடு செய்வது நாட்டின் கடமையாகும்.
மூன்றாம் இலக்க அட்டவணையில் மாத்தளை மாவட்டத்தில் பல புதிய இடங்களில் முஸ்லிம்கள் குடியேறியுள்ள்னர் என்பதை நாம் அவதானிக்கும் அதே நேரத்தில் 1881ஆம் ஆண்டில் ஒரு முஸ்லிம் கிராமம் என அழைக்கப்பட்ட அத்தரகல்லாவையும் 1881ஆம் ஆண்டு கூடுதலாக முஸ்லிம்கள் வசிக்கின்றனர்என்று வர்ணிக்கப்பட்ட கிராம மான அக்கரஹடுவயும் முஸ்லிம்களால் கைவிடப்பட்டுள்ளதையும் அவதானிக்கிறோம்.
அத்தரகல்லாவ நாலந்தைக்கு பத்து மைல் வடகிழக்கில் உள்ள ஒர் ஊராகும். 1881 ஆம் ஆண்டு 46 ஆண்களும் 18 பெண்களும், 1891 ஆம் ஆண்டு 33 ஆண்களும் 20 பெண்களும் இங்கு வாழ்ந்திருக்கின்ற னர். *
Page 46
88
இக்காலக் கட்டத்தில் ஆதம்புள்ளை தம்பிலேப்பை என்பவரும் பிச்சை உம்மா என்பவரும் ஒரு காணிவழக்கில் கூட ஈடுபட்டிருக்கின் றனர். *
ஆனால் 1901ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்போது இங்கு முஸ்லிம்கள் இல்லை. அதேபோல் அக்கரஹெடுவயும் நாலந் தைக்குக் கிழக்கில் உள்ள ஒரு கிராமமாகும். இங்கும் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கின்றனர்.
பல முஸ்லிம்கள் இங்கு காணி உடைமையாளர்களாக இருந்த னர். பள்ளிவாசல் கட்டி, கதீப் ஒருவரை நியமித்து தம் மத அனுஷ்டா னங்களை நிறைவேற்றும் அளவுக்கு மதப்பற்றுடைய முஸ்லிம்கள் வாழ்ந்த இவ்வூரையும் முஸ்லிம்கள் அற்ற ஒர் ஊராகவே 1901 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு காட்டுகின்றது.
முஸ்லிம்கள் ஏன் இவ்விரண்டு ஊர்களையும் கைவிட்டனர் என் பதற்கு காரணம் காட்ட முடியாது.
ஏறத்தாழ 1935ஆம் ஆண்டுவரை அதிக பொருளாதாரமுக்கியத்து வம் பெறாதிருந்த, வளர்ச்சியுறாதிருந்த கலெவெல பிரதேசத்தை 1940-45 -க்குப் பின்னர் பெருமளவு மாற்றியமைத்த புகையிலை பயிர்ச் செய்கையின் ஆரம்பத்தை நாம் ஆயிரத்தி தொளாயிரத்து இருபதுக ளில் காண்கின்றோம்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே புகையிலைப் பயிர்ச் செய்கை கலெவெல பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் போதிய வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் 1915ஆம் ஆண்டளவிலே நல்ல புகையிலையை இப்பகுதியில் இலாபகரமான முறையிலே பயி ரிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
எனவே பலர் இப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். 1915 ஆம் ஆண்டு மாத்தளை உதவி அரசாங்க அதிபரின் பரிபாலன அறிக்கை பின்படி சேனைப் பயிர்ச்செய்கைக்காக இப்பகுதியில் 1041அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
தானிய உற்பத்திக்கென்றே இந்த அனுமதிப்பத்திரங்கிள் பெறப்
89
பட்டிருந்த போதிலும், புகையிலையே கூடுதலாக உற்பத்தி செய்யப் பட்டது என இக்காலப் பகுதியில் மாத்தளை உதவி அரசாங்க அதிப ராக கடமையாற்றிய திரு. சேமோர் கூறியுள்ளார்.
ஆரம்ப காலக்கட்டங்களில் யாழ்ப்பாண வியாபாரிகள் புகை யிலை விவசாயிகளுக்குப் பண உதவி அளித்துள்ளனர். 1921 ஆம் ஆண்டு 542 ஏக்கரில் புகையிலை பயிரிடப்பட்டுள்ளது.
இந்த பயிர் கலேவெல பகுதி முஸ்லிம்களின் பொருளாதார நிலையை முற்றாக மாற்றியமைத்தது பிற்கால வரலாறாகும்.
மாத்தளை முஸ்லிம்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூடுதலாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்காக அவர்கள் முற்றாக விவசாயத்தைக் கைவிட்டுவிட்டனர் என்று கருதிவிடக்
all-fl.
சில பிரதேசங்களில் முஸ்லிம் விவசாயிகள் ஏனையோருக்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்துள்ளனர்.
உதாரணமாக 1911 ஆம் ஆண்டு தனது நிர்வாக அறிக்கையில் மாத்தளை உதவி அரசாங்க அதிபர் கலேவெல முஸ்லிம் விவசாயிக ளைப் போற்றி எழுதியுள்ளதைக் கூறலாம்.
1901 ஆம் ஆண்டளவில் வரக்காமுறை முஸ்லிம்கள் ஒன்றி ணைந்து வரக்காமுறை ஓயாவுக்குக் குறுக்கே ஒர் அணைக்கட்டி முப் பது ஏக்கர் வயல்நிலத்துக்கு நீர்வசதி பெற்றுக்கொண்டதை அக்கால மாத்தளை உதவி அரசாங்க அதிபரான அலெக்சாண்டர்பாராட்டியுள் Gimti.
Page 47
90
மாத்தளையில் முஸ்லிம்கள் ஊர் 0.5 $岛 斑-30 30-$ 岛 0-5 is
பெயர்கள் வயதுக்கு வயதுக்கு வயதுக்கு வயதுக்கு வயதுக்கு வயதுக்கு வயதுக்கு
பட்டோர் பட்டோர் பட்டோர் பட்டோர் பட்டோர் பட்டோர் பட்டோர்
ஆ பெ ஆ பெ ஆ பெ ஆ பெ ஆ பெ விதம் வீதம்
பட்டிவெல 3 5 6 7 6 7 3 0 1 s is as
தமடக 2 27 S 幻魔 衡
ஹவத்தை
நிக்க கொல்ல 2 28 & 4 34 49 3 21 2 3 2% க
ரைத்தனா 7 3 23
參義磷緩f
0 2粥 鲷
உல் பொத்த S SSSS S LLL S SS S SS S S 0 S S SYS S S0S S S S S S S S S S S S S SY
Sugu
வயது அடிப்படையில் ஆறு முஸ்லிம் கிராமங்களின் சனத்தொ கையைப் பார்க்கும் போது, ஐம்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டோ ரின் வீதம் மிகக் குறைவானதாக இருப்பதைக் காண்கின்றோம். முப் பது வயதுக்கு மேற்பட்டோரின் வீதம் கூட பொதுவாக குறைவாகவே இருக்கிறது. மருத்துவ வசதிகள் குறைவாகவும், நோய்கள் பரவலாக வும் இருந்த அக்காலத்தில் ஏனைய இனத்தவர்கள் மத்தியிலும் இதே நிலைதான் காணப்பட்டிருக்கும். இன்று மாத்தளை மாவட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டோரின் வீதம் 12.5% ஆகும். 35 வயதுக்கு மேற்பட் டோர் வீதம் கூட 32% ஆக உயர்ந்திருக்கிறது. இது எங்கள்மூதாதையர் எவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.
ς) 1
மாத்தளை மாவட்டம்: முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி
அட்டவணை: 4
இலங்கை இந்திய மலாயர் மொத்தம் முழு இலங்
முஸ்லிம் முஸ்லிம், கையிலும்
முஸ்லிம் சனத்தொகை
1921 O3 964 170 722 3025笠
1946 8263 1034 32 96.3 436556
1953 O52 472 32. 284.5 536&&9
1963 1840 890 200 16930 73OO
1971 2OO68 16 617 2846 9000
1981 24995 696 574 26965 O93890
99. --- 33609 a
அட்டவணை இலக்கம் 4, 1921 ஆம் ஆண்டுக்குப் பின்னர், மாத் தளை முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி இயற்கையானதாகவே இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றது. மாத்தளை முஸ்லிம்க ளின் வளர்ச்சி வீதம் பொதுவாக இலங்கையில்முஸ்லிம்ளின் சனத் தொகை வளர்ச்சிக்கு ஒத்ததாகவே இருக்கின்றது. இலங்கை முஸ்லிம் களின் மொத்த சனத்தொகையின் 2.3% அல்லது 2.4% வீதமாகவே மாத்தளை முஸ்லிம்களின் சனத்தொகை 1921 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றது.
மாத்தளை மாவட்ட சனத்தொகையும் மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் சனத்தொகையும் ஓர் ஒப்பீடு
அட்டவணை-5
ஆண்டு மாத்தளை மாத்தளை விகிதாசாரம்
மாவட்ட மாவட்ட முஸ் சனத்தொகை லிம்களின்
சனத்தொகை
92 1658 722 6.2%
Page 48
992
1946 55720 96.8 6.2%“
93 2OO49 2845 6.4%
1963 25588O 693O 6.69.
1971 3,484 2846 6.996
98. 3573.54 26265 7.0ም፩
1991 43,390 33609 7.8ኗö
அட்டவணை இலக்கம் 5 மாத்தளை மாவட்ட சனத்தொகை வளர்ச்சி வீதத்திற்கும் மாத்தளை மாவட்ட முஸ்லிம் சனத்தொகை வளர்ச்சி வீதத்திற்கும் இடைய்ே பெரிய வேறுபாடு ஏதும் இல்லை என்பதை உணர்த்துகின்றது. 1953 ஆம் ஆண்டுக்குப் பிறகு மாத்தளை முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி வீதம் சற்று கூடிக்கொண்டு போவதைக் காணலாம். இதற்கு முக்கிய காரணம் தொழில், வியாபா ரம், கல்வி போன்ற காரணங்களுக்காக வேறு பிரதேசங்களிலிருந்து குறிப்பாக, அக்குரனை, கல்ஹின்னை, உடத்தளவின்ன போன்ற இடங்களிலிருந்து முஸ்லிம்கள் மாத்தளையில் குடியேறி இருப்பதா கும். இனப்பிரச்சினைகளுக்குப் பின்னர் வட மாகாணத்திலிருந்தும் கீழ் மாகாணத்திலிருந்தும் சில முஸ்லிம்கள் மாத்தளை மாவட்டத்தில் குடியேறியுள்ளனர்.
மாத்தளை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் மொத்த சனத்தொகையும் முஸ்லிம்களின் சனத்தொகையும் - ஆண்டு 1991
அட்டவணை: 6
உதவி அரசாங்க மொத்த முஸ்லிம்களின் அதிபர் பிரிவு சனத்தொகை சனத்தொகை
மாத்தளை உ. அ. பிரிவு 7O493 279 உக்குவளை உ. அ. பிரிவு 57210 9IO கலெவெல உ. அ. பிரிவு 65234 78. யட்டவத்தை உ. அ. பிரிவு 28,366 1703 ரத்தொட்ட உ. அ. பிரிவு 49674 1505 தம்புள்ள உ. அ. பிரிவு 0 47883 64
பள்ளேபொல உ. அ. பிரிவு 28249 366
93
நாவுள உ. அ. பிரிவு 28292 347 அம்பான்கங்கை உ. அ. பிரிவு 1543 59 லக்கல உ. அ. பிரிவு 3488 4 வில்கமுவ உ. அ. பிரிவு 270.58 0
அட்டவணை இலக்கம் 6, உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளின் அடிப்படையில் முஸ்லிம்களின் குடி பரம்பலைக் காட்டுகிறது. "காகம் இருக்கும் இடமெல்லாம் முஸ்லிமும் இருப்பான்’ என்று முன்னர் கேலியாக சொல்வர். ஆனால் இன்று வில்கமுவ அரசாங்க அதிபர் பிரிவில் முஸ்லிம் ஒருவரும் இல்லை. காகமும் இல்லையோ தெரியாது. அம்பான்கங்கை, லக்கல, வில்கமுவ ஆகிய மூன்று பரிபா லன பிரிவுகளிலும் மொத்தம் 56032 மக்கள் வசிக்கின்றனர். இன்று இங்கே முஸ்லிம்களின் தொகை ஆக அறுபத்து மூன்றேயாகும்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் கணிசமான அளவு முஸ் லிம்கள் வாழ்ந்த இப்பகுதிகளில் ஏன் இந்த மாற்றம்? முஸ்லிம்க ளுக்கு அப்பகுதிகளில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதா? இலங்கை வரலாற்றை ஆழமாக படித்த எவரும் அந்த முடிவுக்கு வரமாட்டார்கள்.
காலநிலை காரணமாக இம்மூன்று பிரதேசங்களிலும் பெருந் தோட்டப் பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்படவில்லை. எனவே - ஏனைய பிரதேசங்களில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள், வணிக வளர்ச்சிகள், புதிய தொழில் வாய்ப்புகள் இங்கே ஏற்படவில்லை. பெரும்பாலும் இயற்கையோடு போராடிக்கொண்டு இப்பகுதிக ளிலே கஷ்ட ஜீவனம் நடத்திக்கொண்டு இருந்த முஸ்லிம்கள், புது வாழ்வைத் தேடி, பெருந்தோட்டபயிர்ச்செய்கையினால் அரவணைக் கப்பட்ட வளமான பிரதேசங்களுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் ஏனைய எட்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் முஸ்லிம்கள் கணிசமான அளவில் வாழ்கின்றார்கள் என்பதை கீழே தரப்படும் விவரங்கள் உணர்த்தும்.
மாத்தளை உதவி அரசாங்க அதிபர் பிரிவு
கிராம சேவர்கள் பிரிவுகள்: மொத்தம் 52 மொத்த சனத்தொகை: ஆண் 38539 பெண்கள்: 31954 முஸ்லிம்களின் சனத்தொகை: ஆண் 6376 பெண்கள்: 5803
Page 49
94
கிராம சேவர் பிரிவு மொத்த சனத்தொகை முஸ்லிம்களின்
சனத்தொகை es பெ ஆ பெ அளுவிகாரை 10. 1065 93 86 2. போகஹகொட்டுவ 875 820 40 80 3. தியபுபுல்ல 650 747 18 4. 4 தொம்பவெல S9 &98 8 5 தொறக்கும்புற 636 639 3 3 6. துணுக்கொலவத்தை 49 44, 6 5 7 கொங்காவெல 278 24 825 46
ஹரஸ்கம 28 36 9
9 ஹ"லங்கமுவ 619 854 4 28
(வடக்கு) 0. ஹ"லங்கமுவ 616 599 8 10
(தெற்கு) II. களுதாவெல 974 867 56 49 12. கிரிகல்பொத 576 558 2 2
3. கோட்டகொடை 56 483 252 27 14 கூம்பியான்கொடை 478 425 44 32
5 Olego) 508 438 235 198
I6. DLoco) O69 155 O 5
உல்பொத்த 17. மாளிகாதென்னை 1842 I847 5I3 509 8. மல்வத்தை 367 915 22 25 9. மந்தண்டாவளை 557 533 360 300 20. முஸ்லிம் நகரம் 238 2069 1559 1359 21. ஒயபகல 495 489 377 38.9 22. பாராவத்தை O65 80 253 299 23. ரஜ்ஜம்மன 477 会6 一 - 24. சிங்கள நகரம் 411 475 70 8. 25. விகார பார 890 992 215 25
95
கலெவெல; உதவி அரசாங்க அதிபர் பிரிவு
கிராமச் சேவகர் பிரிவு: 46 மொத்த சனத்தொகை : ஆண்கள்: 32763 முஸ்லிம் சனத்தொகை : ஆண்கள்: 3582
கிராமச் சேவகர் பிரிவு மொத்த சனத்தொகை
இஹல பம்பாவ பஹலபம்பாவ தேவாஹ"வ கொலனி எல்மல் பொத்த ஹெவன வல மகுல்கஸ்வெவ நமடகஹவத்தை பட்டிவெல புவக்பிடிய கலெவெல நகரம் பெலியாகந்தை புலனவெவ தம்பட்டவாவன தமுனு முல்ல கலபவுல லேனவல தண்டுயாய தேவாஹ"வ மாதிப்பொல பளுஹொம்பாவ ரன்வெடியாவ வஹகோட்டை வலஸ்வெவ
es
250
55.
6.
79
622
674
54
562
O4
ፈ876
730
274
431
624
283
425
பெண்கள்: 3247 பெண்கள்: 3599
முஸ்லிம் சனத்தொகை
பெ ولعب
35 38
75 65
385 38
515 474 463 507
32 29
650 65
IO7 80
96 98
32 38
3. 40
17 2.
I6
O 6
2 3
44 5I
会& 50
16
14 17
13 9
490 560
36 32
7 2
Page 50
96.
24 வேரகல்வத்தை 465. 440 382
374 25 தட்வெஹர 377 405 O உக்குவளை - உதவி அரசாங்க அதிபர் பிரிவு கிராமச் சேவகர் பிரிவு: 73 மொத்த சனத்தொகை ஆண்கள்: 282 பெண்கள்: 28889 முஸ்லிம் சனத்தொகை ஆண்கள்: 4816 பெண்கள்: 4285
கிராமச் மொத்த சனத்தொகை முஸ்லிம் சேவகர் பிரிவு சனத்தொகை
s பெ ༤ பெ தெஹிபிட்டிய 626,564,460 39 2 தும்புக்கொல 585 523
கடுவெல ,会30 4.09 O
கலால்பிட்டிய 441 38 ○7 5 கொஹொம்பிலிவெல 657 622 49 45 6 குறிவெல 33 390 67 6. 7 மாபேரிய 508 573 5OO 5652 மானாம்பொடை 844 8O 685 665 9 மாருக்கோண V. 899 90 675 670 O மீதெனிய 489 46.5 48 395 பஹலவெல 566 586 63 2 பரகஹவெலா 460 592 305 453 3 ரத்தலவெல 460 392 270 19
உக்குவளை 553 544 47 45 உள்பொத்தபிட்டிய 290 330 36 会3 6 வரக்காமுறை 655 547 570 465 17 தவளன்கொயா 4.25 4&4 9 3 8 எல்கடுவ 5O 598 9 4. 19 எல்கடுவ வத்த 67. 866 2 3 20 எல்வள 36 567 3 3. 2. ஹலான்கொடை 43 4O6 7 22 கடுதெனிய 299 3O3 2 2
97
23 உடுப்பிட்டிய 536 649 6 8 24 வாரியப்பொல வத்த 494 543 9 3. 25 வெலிகல 209 226 A.
தம்புள்ளை - உதவி அரசாங்க அதிபர் பிரிவு கிராமச் சேவகர் பிரிவு: 46 மொத்த சனத்தொகை:ஆண்கள்: 23747 பெண்கள்: 24136 முஸ்லிம் சனத்தொகை:ஆண்கள்: 834 பெண்கள்: 530
கிராம சேவகர் பிரிவு மொத்த சனத்தொகை முஸ்லிம்
சனத்தொகை
ஆ பெ <莎 பெ
தம்புள்ளை 106 008 OO 87 2 நயாக்கும்புர 582 54 39 379 3 &67Laud 87 088 6 4. கிபிஸ்ஸ் 338 279 8 8 5 ரத்மல்கட்டுவ 335 39. 49 55 6 தம்புளுகம 248 235 3 4. 7 வெவலவெவ 694 726 5O 48
ffffTASID 435 3& 7
யட்டவத்தை - உதவி அரசாங்க அதிபர் பிரிவு கிராம சேவகர் பிரிவு: 56 மொத்த சனத்தொகை:ஆண்கள்: 14242 பெண்கள்: 14124 முஸ்லிம் சனத்தொகை:ஆண்கள்: 902 பெண்கள்: 801
கிராம சேவகர் பிரிவு மொத்த சனத்தொகை முஸ்லிம்
சனத்தொகை
ஆ பெ لگے பெ I மீதியாபொல 419 437 ΙΙ7 14 2. முருந்துவத்த མ་357252 14 80 நிக்ககொல்ல 286 277 286 277 4 நிக்ககொல்ல வடக்கு 298 267 29O 257 5 தல்கஹகொட 206 2ᎤᏰ 3. 25
Page 51
6 டன்கன் பிளேஸ் 6. 55 3 7 தெல்கொல்ல 235 【76 I 4. 8 துல்லாவ 239 2% 5 3 9 துல்லாவ கிழக்கு 96 203 6 I6 O SEP650 463 380 ፈ8 7 LDL-656flu 400 438 Onn 2 மஹவெல 184 192 9 3. 13 ரதலவெல 313 296 7 2 14 தெம்பிளிதெனிய 214 224 3
(தெற்கு)
ரத்தொட்டை - உதவி அரசாங்க அதிபர் பிரிவு
கிராம சேவகர் பிரிவு: 54
மொத்த சனத்தொகை:ஆண்கள்: 25236 பெண்கள்: 2438 முஸ்லிம்கள் சனத்தொகை:ஆண்கள்: 723 பெண்கள்: 782
கிராம மொத்த முஸ்லிம் சேவகர் பிரிவு சனத்தொகை சனத்தொகை
ஆ பெ والتي பெ
போதிக்கொட்டுவ 3I4 343 86 38 2 ஹங்கரன்கந்த 748 78 27 2O 3 கைக்காவளை 5I6 3&3 40 3. 4. கந்தநுவர கிழக்கு 558 613 27 31 கந்தநுவர மேற்கு 465 44】 9 6 குருவாவ 453. 433 50 68 7 பள்ளேகம 304 315 23 19 8 ரத்தொட்டை 1475 O70 5 134 9 விகாரகம 43 447 27 26 O தம்பலகல 622 579 38 63 II உள்பொத்த பிடிய 743 753 28O 3O8 2 வனரானிய 406 440 34 2O 3 அள்வத்த 398 423 - 14 பம்பரகிரியெல்ல 749 691 2 3 5 ஹொரகொல்ல 358 359 3. 4.
16 இக்கிரியாகொல்ல 39 355 8 7 17 கைனெக 49 473 3 2 8 கொஸ்வான தெற்கு 274 242 2 19 புஞ்சி எலுவாகந்த 861 74. 2.
நாவுல - உதவி அரசாங்க அதிபர் பிரிவு கிராம சேவகர் பிரிவு: 31 மொத்த சனத்தொகை: ஆண்: 14253 பெண்கள்: 14039 முஸ்லிம்கள் சனத்தொகை: ஆண்: 180 பெண்கள்: 167 கிராம சேவகர் மொத்த முஸ்லிம் பிரிவு சனத்தொகை சனத்தொகை
பெ ولعل பெ ل
நாவுள 696 612 55 52 சேனகம 325 3OO 28 IIO 3 கொரகஹ்மட 257 250 6 5 பள்ளேபொல - உதவி அரசாங்க அதிபர் பிரிவு கிராம சேவகர் பிரிவு: 44 மொத்த சனத்தொகை: ஆண்கள்: 14022 பெண்கள்: 14227 முஸ்லிம்கள் சனத்தொகை: ஆண்கள்: 195 பெண்கள்: 171 கிராம சேவகர் மொத்த முஸ்லிம்
பிரிவு சனத்தொகை சனத்தொகை
ஆ பெ اینکه பெ
அளுத்கம 404 441 63 47 2 மனன்வத்தை 326 28O 67 53 3 நிலன்றொருவ 23 233 I 13 4 பல்தெனிய 337 358 8 6 5 பல்லேபொல 242 242 7 6
வடக்கு
6 பல்லேபொல தெற்கு 443 519 2 23
Page 52
100
அமபான்கங்கை: உதவி அரசாங்க அதிபர் பிரிவு கிராம சேவகர் பிரிவு: 20 மொத்த சனத்தொகை : ஆண்கள்: 7757 பெண்க்ள்: 7686 முஸ்லிம்கள் சனத்தொகை : ஆண்கள்: 29 பெண்கள்: 30
கிராம சேவகர் மொத்த முஸ்லிம்
பிரிவு சனத்தொகை சனத்தொகை
பெ es பெ کے கும்பளோளுவ 388 402 u 2 உனுகெட்ட 562 539 6
3 களுகல்தென்ன 250 230 -
கவுடாகமன 4. 62 22 24
மாத்தளை மாவட்டம் 1991 ஆம் ஆண்டு பதினொரு உதவி அர சாங்க அதிபர் பிரிவுகளாக வகுக்கப்பட்டிருந்தது. மேலே தரப்பட் டுள்ள விவரங்கள் (அட்டவணை 7) மாத்தளை மாவட்டத்தின் வட கீழ்ப் பிரதேசத்தில் அமைந்துள்ள லக்கல, அம்பான் கங்கை, வில்க முவ ஆகிய மூன்று உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளையும் தவிர்ந்த ஏனைய எட்டு பரிபாலனப் பிரிவுகளிலும் முஸ்லிம்கள் எவ்வாறு பரந்து வாழ்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றது. இவ்விவரங்கள் சில முக்கியமான உண்மைகளை மறைமுகமாக உணர்த்துகின்றன.
மாத்தளை மாவட்டத்திலே முஸ்லிம்கள் எந்தளவுக்குச் சிங்கள வர்களோடும் தமிழர்களோடும் நெருக்கமாய் வாழ்கிறார்கள் என் பதே இவ்வட்டவணை காட்டும் மிக முக்கியமான உண்மையாகும். ஏனைய சமூகங்களோடு இனவெறுப்புக்கள், விரிசல்கள், பூசல்கள், பிரச்சினைகள் இருந்திருக்குமேயானால், முஸ்லிம்கள் இவ்வாறு சித றிவாழத் துணிந்து இருக்கமாட்டார்கள். இஸ்லாமியப் பேரரசின் ஆரம்பகாலத்திலே ஒரு பெண்மணிஎவரின்துணையுமின்றி, தன்னந்த னியாக பாரசீகத்திலிருந்த காதீஸ்ஸியாவிலிருந்து ஹிஜாசுக்குச் சென்று திரும்பினார் என்று வாசிக்கின்றோம்; வியப்படைகின்றோம். அன்று இஸ்லாமியப் பேரரசு பிரயாணிகளுக்கு வழங்கிய பாதுக்காப் பையெண்ணி பெருமை படுகின்றோம்; இறுமாப்படைகின்றோம்.
இன்று அம்பான் கங்கை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள
O
கலுகல்தென்ன என்ற ஊரில், ஒரு முஸ்லிம் பெண்மணி தனியாய்
வாழ்வதைக் காட்டுகிறது இவ்வட்டவணை. சிங்களவர்கள் மத்தி
யிலே இவ்வாறு தன்னந்தனியாக வாழ ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு
மனத்துணிவைக் கொடுத்தது சிங்களவர்கள் மீது அப்பெண்ணுக்கு
இருந்த அசையா நம்பிக்கையே.
மாத்தளை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பரந்து வாழ்வதற்கும்
வியாபாரத்திலும் ஏனைய பொருளிட்டும் முயற்சிகளில் துரிதமாய்
முன்னேறுவதற்கும் இங்கு வாழும் பெரும்பான்மை மக்களின்
உயர்ந்த மனப்பான்மையும் ஒரு காரணமாகும். பெரும்பான்மைச்
சிங்களவர்களோடும் ஏனைய தமிழ் இனத்தவரோடும் மாத்தாளை
மாவட்ட முஸ்லிம்கள் ஐக்கிய உணர்வைச் சிறந்த முறையில் வெளிப்
படுத்துவதையும் இங்கு சுட்டிக்காட்டுவது முக்கியமாகும்.
ஆதாரக் குறிப்புக்கள்
1. A.C.Lawry - Gazetteer of the Central Province of Ceylon
2. John Pybus
3. K.D.G. Wimalaratne - Muslims of Sri Lanka
4. ACLawry - Gazetteer of the Central Province of Ceylon
5. Vesak Nanayakkara - A Return to Kandy
6. Robert Knox - Historical Relation of Ceylon
7. Loma Devaraja - - Musims in the Kandyan Kingdom
8. A.G.A., Matale - Administrative Reports- 1901
9. A.C.Lawry - Gazetteer of the Central Province of Ceylon
10. bid
11 bid
12. G.C.Mendis-Ceylon under the British
13. AGA Matale - Administrative Reports- 1915
14. A.C.Lawry - Gazetteer of the Central Province of Ceylon
15. bid
16. bid
17. Ibid
18. Census Report-1921
19. A.C.Lawry - Gazetteer of the Central Province of Ceylon
2O. bid
21. bid
Page 53
102
அத்தியாயம் - 5
இருநூறு வருடங்களுக்கும் மேலாக, ஏறத்தாழ 900 சதுர மைல் பரப்புள்ள மாத்தளை மாவட்டத்திலே, பல இனமக்கள் மத்தியிலே, பரந்து வாழ்கின்ற முஸ்லிம்களின் கல்வி வரலாற்றை எழுதுவது சுலப மான காரியமல்ல. பாடசாலைகள் எப்போது தோன்றின? எவ்வாறு தோன்றின? காலத்திற்குக் காலம் மாணவர் தொகை எவ்வாறு வளர்ச் சியடைந்தது அல்லது குன்றியது? ஆசிரியர்களின்நிலை என்ன? அவர் களின் தகுதிகள் யாவை? கல்வியைப் பற்றிய பெற்றோர்களின் மனோ பாவம் என்ன? வேறு இன, வேறு மொழிபாடசாலைகளில் படித்தவர் கள் எத்தனைபேர்? போன்ற இன்னோரன்ன விஷயங்களைப் பற்றி யெல்லாம் ஒழுங்கான, ஆழமான முறைகளில் ஆராய்ச்சிகள் செய்த பின்னரே இத்தகைய ஒரு வரலாற்றைத் திருப்திகரமான முறையில் எழுதலாம். எனவே இங்கு தரப்படுவது ஒரு மேலோட்டமான கண் ணோட்டமேயாகும்.
பல இன மக்கள் வாழ்கின்ற மாத்தளை மாவட்டத்தில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மாத்திரம் குடியேற்றங்களை அமைக்காது, முஸ்லிம்கள் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக குடியேறியுள்ளனர். பெரும்பாலான இம்முஸ்லிம்குடியேற்றங்கள்,சிங்களகிராமங்களின் மத்தியிலேயே அமைந்திருக்கின்றன. நாலியகனத்தநிக்கவட்டவன, ரஜ்ஜம்மன, கோட்டகொடை, நிக்ககொல்ல போன்றவை இத்தகைய குடியேற்றங்களுக்குச் சிறந்த உதாரணங்களாகும்.
இத்தகைய சூழலிலே குடியேறிய சமூகத்திற்கு, ஆரம்பகாலக் கட்டங்களில் தமது நிலையை ஸ்திரப்படுத்துவதில் கவனம் சென்றி ருக்குமேயொழிய, கல்வியையோ, கலாச்சாரத்தையோ கவனிப்ப தற்கு நேரம் இருந்திருக்கப் போவதில்லை. ஒரு வகையில் அந்த காலக்கட்டத்திலே முஸ்லிம்கிள், தம்முடைய கவனத்தைப் பல்வேறு துறைகளிலும் சிதற அடித்து இருந்திருந்தால், அது விவேகமானதாக வும் இருந்திருக்கமாட்டாது.
O3
முஸ்லிம்களைப் பொருத்தவரையில், குர்ஆனை ஒதக் கற்பது அத்தியாவசியமானது. எனவே முஸ்லிம்கள் இதில் கவனம் காட்ட தவறவில்லை. சகல கிராமங்களிலும் ஏதோ ஒர் அடிப்படையில் முஸ் லிம்கள் தம்முடைய பிள்ளைகளுக்குக் குர்ஆனை ஒதக் கற்றுக் கொடுத்திருக்கின்றனர். பெரும்பாலான இடங்களில் குர்-ஆன் ஓதிக் கொடுக்கும் லெப்பைகள் முக்கியமான மார்க்க விஷயங்களையும் பிள்ளைகளுக்குச்சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். ஏறத்தாழ 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மாத்தளை மாவட்ட முஸ்லிம் கிராமங்க ளிலே இந்த நிலையே நிலவி இருக்கிறது எனப் பொதுவாகக் கூறலாம.
ஆனால் சில கிராமங்களில் ஏதோ ஒர்அமைப்பில் மொழிஅறிவு, குறிப்பாகத் தமிழ் மொழி அறிவு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.சிலர்,குறிப்பிடக்கூடிய அளவிற்குத் தமிழ் மொழி அறிவைப் பெற்றிருக்கின்றனர் என்பதை மிகப் பழைய காணிஉறுதிப் பத்திரங்களை ஆராய்ந்தால் அவதானிக்கலாம்.
1845ஆம் ஆண்டில் மாத்தளை கொங்காவலையில் வசித்த ஜெய் னுல் ஆப்தீன் நொத்தாரிஸ் அவர்கள் தமிழில் எழுதிய காணி உறுதிப் பத்திரங்களை இன்றும் காணலாம். அவ்வாறே கொங்காவலையைச் சேர்ந்த மீரா சாய்பு குப்பைத்தம்பி நொத்தாரிஸ் அவர்களும் தமிழில் எழுதிய காணி உறுதிப்பத்திரங்கள் இப்போதும் காண்பதற்கு இருக் கின்றன. இவையெல்லாம் எச்சமூகத்திலும் காணக்கூடிய விதிவிலக் குகளே.
பொதுவாக எல்லோரும் இந்தளவு தமிழ் அறிவு உடையோராய் இருந்தனர் என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் பழைய காணி உறு திப் பத்திரங்கள் பலவற்றிலும் சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் தமிழில் தம் பெயர்களை எழுதியுள்ளதையும் காணலாம். இது ஓரளவுக்காவது முஸ்லிம் மக்கள் மத்தியிலே எழுத்தறிவு இருந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. எனவே ஒழுங்கான ஒரு பாடசாலை அமைப்பில் எழுத்தறிவு வழங்கப்பட்டது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை யென்ற போதிலும், ஏதோ ஒரு முறையில் எழுத்தறிவு வழங்கப்பட் டுள்ளது என்பது மாத்திரம் நிச்சயம்.
Page 54
O4
1891 ஆம் ஆண்டு மாத்தளை மாவட்டத்தில் இருந்த சில முஸ்லிம் கிராமங்களின் சனத்தொகை விவரம்
ஊர்ப் பெயர் ஆண்கள் பெண்கள் மொத்தம் எலமல்பொத்த 47 53 OO மாபேரிய 30 23 53 மாதிப்பொல 29 24 53 நமடகஹவத்த OS 8. 86 நிக்ககொல்ல W 39 2O 259 நிக்கவட்டவான 63 62 25 நிதுல்கஹகொட்டுவ 8 25 43 பரகஹவெல 69 76 45 ரன்வெடியாவ 29 22 5I
மேலே தரப்பட்டுள்ளஒன்பது கிராமங்களின்சனத்தொகையைப் பார்க்கும் போது, தெளிவாக விளங்கும் உண்மை யாதெனில் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு கிராமத்திலும் பெரிய அளவில் கல் விக்கான ஒரு முயற்சி எடுப்பதற்குப் போதுமான அளவுசனத்தொகை ஒன்று இருக்கவில்லை என்பதாகும். இவற்றுள் மாபேரிய, பரகஹ வெல, நிதுல்கஹகொட்டுவ என்ற மூன்று கிராமங்கள் மாத்திரமே ஒரளவு அருகருகே அமைந்துள்ளவை.
ஆக, சிங்கள பாடசாலைகள் ஏதாவது இவ்வூர்களுக்கு அருகா மையில் அமைந்திருந்தால், அந்தப் பாடசாலைகளுக்காவது முஸ்லிம் களும் சென்று படித்திருக்கலாம். ஆனால் அதுவும் அவ்வாறிருக்க வில்லை.
1896 ஆம் ஆண்டு கீழ்வரும் அரசாங்க சிங்கள பாடசாலைகள் மாத்தளை மாவட்டத்தில் இருந்தன."
அக்குராம்பொடை சிங்களப்
பாடசாலை தாவுள மாதிபொல ps
gafu
9.
OS
லேனதொர கும்புக்கந்தன தம்புள்ளை நிலகம கலேவெல யடவத்தை குறிவெல துல்லேவ லேலி அம்ப
DL6G6 ரத்மல்எல ஒவிலிக்கந்த தென்ன
கைக்காவள்ை
பள்ளேகம புவக்பிட்டிய மாரகொமுவ
多弹
9. "
1899 ஆம் ஆண்டு மாத்தளை மாவட்டத்தில் கிறிஸ்தவ சமயப் பிரச்சார சபைகளினால் நடத்தப்பட்ட கீழ்வரும் பாடசாலைகளும்
இருந்தன."
புனித தோமியர் ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை புனித தோமியர் பெண்கள் ஆங்கிலப் Iffec) புனித அக்னெஸ் பெண்கள் சுயபாஷா பாடசாலை புனித அக்னெஸ் கைத்தொழில் பாடசாலை அளுவிகாரை கலவன் பாடசாலை
குளோடா எஸ்டேட் ஆண்கள் சிங்களப் பாடசாலை உடஸ்கிரிய ஆண்கள் பாடசாலை குளோடா எஸ்டேட் ஆண்கள் தமிழ்ப் பாடசாலை மாளிகா தென்னை ஆண்கள் பாடசாலை எல்வள கலவன் பாடசாலை
Page 55
06
கூம்பியான் கொடை ஆண்கள் பாடசாலை கிறிஸ்து தேவ ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை கிறிஸ்து தேவ ஆண்கள் சுயபாஷா பாடசாலை மெதன்ல வெஸ்லியன் பாடசாலை கஹகல வெஸ்லியன் பாடசாலை தங்கந்த பெளத்த பாடசாலை இவ்வாறே பெளத்த சமய, அடிப்படையில் நடத்தப்பட்ட பாட சாலையே, 'மாத்தளை ப்ெளத்த ஆண்கள் பாடசாலை 1896 ஆம் ஆண்டு மாத்தளை மாவட்டத்தில் இருந்த இருபத்தி ரண்டு அரசாங்கப் பாடசாலைகளில் மாதிப்பொல, குறிவெல, யட வத்தை ஆகிய இடங்களில் இருந்த பாடசாலைகள் மாத்திரமே, முஸ் லிம் பிள்ளைகள் சென்று படிப்பதற்கு ஒரளவு வசதியாக இருந்த பாடசாலைகளாகும். தம்முடைய கிராமங்களுக்குப் பக்கத்தில் பாட சாலைகள் இருந்ததால், அங்கு சென்று சில முஸ்லிம் பிள்ள்ைகள் படித்திருக்கின்றனர்.
ரைத்தளாவளை, குறிவெல பாடசாலைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தில் பலர் குறிவெல பாடசாலையில் படித்திருக்கின்றனர். இவர்களுக்குச் சிங்களம் தெரியுமே ஒழிய தமிழ் எழுத வாசிக்கத் தெரியாது. அதேபோன்று மாதிப்பொல கிராமத்தின் முதல் ஆசிரியரான ஜனாப் தம்பிராஜா உசைன் மீராசாஹிப் மாதி பொல சிங்களப் பாடசாலையில் படித்தவரே. ஆனால் பெரும்பா லான முஸ்லிம் கிராமங்களில் வாழ்ந்த பிள்ளைகள் படிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் படிப்பதற்கு அவர்களுக்குப் பாடசா லைகள் இருக்கவில்லை என்பது அதனிலும் பார்க்க ஒரு பெரும் உண்மையாகும்.
கிறிஸ்தவ சமயப் பிரச்சார சபைகளினால் நடத்தப்பட்ட பாடசா லைகளில் எல்வள கலவன் பாடசாலை, வரக்காமுற முஸ்லிம் கிரா மத்திற்கு ஒரளவு அருகாமையில் இருந்தது. புனித தோமியர் ஆண்கள் பாடசாலை, புனித தோமியர் பெண்கள் பாடசாலை, புனித அக்னெஸ்
O7
பாடசாலை, கிறிஸ்து தேவ ஆண்கள் ஆங்கில பாடசாலை, கிறிஸ்து தேவ ஆண்கள் சுயபாஷாபாடசாலை, பெளத்தஅமைப்பு ஒன்றினால் நடாத்தப்பட்ட பெளத்த ஆண்கள் பாடசாலை ஆகிய ஆறு பாடசாலை களும் மாத்தளை முஸ்லிம்களுக்குப் படிப்பதற்கு வசதியாக இருந்தன.
பிரிதம் எனும் ஆங்கிலேயர் இலங்கை முஸ்லிம்களைப் பற்றி கீழ்வருமாறு கூறுகிறார். “முஸ்லிம்களுடன் தொடர்பு கொள்வதும் - அவர்களுடன் சமயத்தைப் பற்றிப் பேசுவதும் கஷ்டமான விஷயங்க ளாகும். அவர்கள் மத்தியில் பாடசாலைகளை அமைப்பதில் எந்த வொரு கிறிஸ்தவ சமயப் பிரச்சாரச் சபையும் இன்னும் வெற்றிபெற்ற தில்லை". * வண.ஜேம்ஸ் செல்கெர்க் என்பவர் 1844 ஆம் ஆண்டு கீழ்வருமாறு எழுதியுள்ளார். "இன்று நானும் இன்னொரு மதப் போத கரும் கண்டியில் வசிக்கும் சில குடும்பங்களைச்சந்திக்கச்சென்றோம். நாங்கள் சில முஸ்லிம் குடும்பங்களைச் சந்தித்தோம். நாங்கள் இறை வனைப் பற்றியும் அவனது அருளைப் பற்றியும் பேசும் போது அவர் கள் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் கிறிஸ்து நாதரின் பெயர் உச்சரிக்கப்பட்டதும் குழப்பம் ஆரம்பமாகிவிட்டது. கடவுள் அவர் களை மன்னிப்பாராக. எங்கள் பிரச்சாரத்துக்குச் செவிமடுக்காமலிருப் பதும் எதிர்ப்பதும் முஸ்லிம்கள் மாத்திரமே". இது கிறிஸ்தவ சமயத் தைப் பற்றிய முஸ்லிம்களின் மனப்போக்கைக் காட்டுகின்றது.
எனவே கிறிஸ்தவ சமயப் பிரச்சாரகர்களைப் பற்றிய பயம், பெரும்பாலான முஸ்லிம் பெற்றோர்களைத் தம்முடைய பிள்ளைக ளைக் கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு அனுப்பாமல் தடுத்திருக்கும்.
அறிஞர்சித்திலெப்பை அராபிபாஷாவுக்கு விடுத்த ஒரு வேண்டு கோளில் முஸ்லிம்களின்நிலையைப் பற்றி கீழ்வருமாறு விளக்கினார். "இத்தேசத்திலுள்ள முஸ்லிம்கள் கல்வி அறிவில் அதிக அசட்டையா யிருக்கின்றார்கள். மற்றும் சாதியர்களெல்லோரும் நாளுக்கு நாள்கல் வியிலும், சீர்திருத்தத்திலும் தேறி வருகின்றார்கள்”, “சித்திலெப்பை முஸ்லிம்களைப் பற்றிப் பொதுவாக கூறியது மாத்தளை முஸ்லிம்க ளுக்கும் பொருத்தமானதாகவே இருந்திருக்கும்.
Page 56
108
இக்காரணங்களினாலும் பொருளாதாரப் பிரச்சினைகளாலும், பெரும்பாலான மாத்தளை முஸ்லிம்கள், கல்வி கற்க வாய்ப்பு இருந் தும், அவ்வாய்ப்பினைப் போதுமான அளவு பயன்படுத்தவில்லை என்றே கருதவேண்டும். ஆனால் மாத்தளை மாவட்டத்தில் அமைந்தி ருந்த பெரும்பாலான முஸ்லிம் கிராமங்களில் மக்கள் கல்வித்துறை யில் ஏறத்தாழ 1940 ஆம் ஆண்டு வரை வளர்ச்சியடையாது இருந்த தற்கு மிக முக்கிய காரணம் வாய்ப்பின்மையே ஆகும். வாய்ப்பு வழங் கப்பட்டபோது இக்கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் தம் திறமை யைக் காட்டவே செய்தனர்.
வாய்ப்புகள் இருந்த இடங்களிலே முஸ்லிம்கள் ஒரு சிலர் கல்வி யில் அக்கறை காட்டினர். பெப்டிஸ்ட் கிறிஸ்தவ சமயப் பிரச்சார சபையினால் எல்வள எனும் கிராமத்தில் நடத்தப்பட்ட சிங்கள பாட சாலையில் வரக்காமுறையைச் சேர்ந்த பல முஸ்லிம்கள் படித்துள்ள னர். அவ்வாறே மாத்தளை கிறிஸ்து தேவ ஆங்கிலப் பாடசாலையில் மாத்தளையில் வாழ்ந்த பல முஸ்லிம்கள் 1920 ஆம் ஆண்டுக்கு முன் னரே படித்துள்ளனர். இவர்களில் விஷேசமாக குறிப்பிடப்படக்கூடிய வர் டாக்டர் ஹாமித் என்பவராகும். இவர் தொட்டகமுவ எனும் இடத்தில் இருந்த அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றியுள் ளார். டாக்டர்ஹனான் என அழைக்கப்பட்ட இவரது மகனும் மருத்து வத்துறையோடு சம்பந்தமுடையவராகவே இருந்தார். புகையிரதத்தி ணைக்களத்தில் "ஹெட் கார்ட்"டாக கடமையாற்றிய மர்ஹ"ம் STஒமர்தீன், டாக்டர் ஹாமிதின் சகோதரராவார்.
ஆயிரத்தித் தொளாயிரத்து இருபதுகளிலும் முப்பதுகளிலும் கல் வித்துறையில் சில குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை அவதானிக் கக் கூடியதாக இருக்கின்றன. நிக்கவட்டவானையைச் சேர்ந்த மர் ஹ"ம் எச்.எம்.அப்துல் காதர் என்பவர் சமூகப் பற்றோடு படிப்பித்து, மாதிப்பொல எனும் கிராமத்தில் ஜனாப் உசைன் மீராசாஹிபு எனும் ஆசிரியரை உருவாக்கினார். மாருக்கோன எனும் கிராமத்தில் மர் ஹ"ம் உதுமா லெப்பை என்பவர் ஆசிரியராக இருந்துள்ளார். இதே காலப் பிரிவில் ரைத்தளாவளையைச் சேர்ந்த மர்ஹாம் பிச்சை மரிக்
109
கார் மாத்தளை பெளத்த ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்பித்திருக் கின்றார். கந்தசாமி பாடசாலையில் மர்ஹ"ம் இஸ்மாயில் என்பவர் ஆசிரியராகக் கடமையாற்றியிருக்கின்றார். இவர்களில் ஒருவராவது பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள் அல்லர். பெரும்பாலும் ஆறாம், ஏழாம் வகுப்புக்கள் வரை படித்த ஆசிரியர்களே.
ஆனால் இது ஆச்சரியமானதல்ல. 1933 ஆம் ஆண்டில் கூட, இலங்கை முழுவதிலுமே முஸ்லிம்களில் ஐந்து பேர்கள் மாத்திரமே பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக இருந்தனர்."நிக்ககொல்லையில் ஆரம் பிக்கப்பட்டிருந்த பெப்டிஸ்ட் தமிழ்ப் பாடசாலையில் சில முஸ்லிம் மாணவர்கள் படிக்க ஆரம்பித்தனர். மாத்தளையில் பல முஸ்லிம் மாணவர்கள் கந்தசாமி பாடசாலையில் படித்தனர். பெளத்த ஆண்கள் பாடசாலை, கிறிஸ்து தேவ வித்தியாலயம், புனித தோமியர்ஆண்கள் பாடசாலை போன்ற பாடசாலைகளிலும் முஸ்லிம் மாணவர்களின் தொகை அதிகரித்தது.
இக்காலப் பகுதியில் 'உக்குவளையில் முஸ்லிம்கள் கல்வியில் பெரும் அக்கறைகாட்ட ஆரம்பித்தனர். உக்குவளையில் முஸ்லிம்கள் • கல்விச் சங்கம் ஒன்றை அமைத்து கல்வி வளர்ச்சிக்கு உழைப்பதைப் பார்க்கின்றோம். இவர்கள் காட்டிய அக்கறையின் காரணத்தால், அங்கே பல முஸ்லிம் ஆசிரியர்கள் தோன்றினர். இங்கே ஏற்பட்ட கல்வி அக்கறை பின் ஒரு காலக்கட்டத்திலே தனி முஸ்லிம் பாடசா லைகள் உருவாவதற்கு உதவியது.
1959 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ்ப் பாடசாலை யொன்றை முஸ்லிம் பாடசாலையாக மாற்றுவதற்கு, முஸ்லிம் மாணவர்கள் மொத்த மாணவர் தொகையில் 70% சதவீதமானவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. உக்குவளை முஸ்லிம் மக்கள் ஆரம்பித்த போராட்டம் இதை 51% சதவீதமாக குறைத்தது.
மாத்தளையில் முஸ்லிம்கள் மத்தியில் 'கல்வி விழிப்புணர்ச்சி” யினை ஒரு பெளத்த கல்விமான் ஏற்படுத்தியதைப் பற்றி மாத்தளை மக்கள் நன்றியுணர்வோடு இன்றும் பேசுகின்றனர்.
அக்காலத்தில் விஜயா கல்லூரியின் அதிபராக இருந்த திரு. வி.டி.
Page 57
10
நாணயக்கார முஸ்லிம்களின் வீடுகளுக்குச் சென்று கல்வியின் அவசி யத்தை எடுத்துரைத்திருக்கின்றார். தம்முடைய பாடசாலையில் முஸ் லிம் மாணவர்களைச் சேர்த்து, பாடசாலைக் கட்டணங்களில் கூட
அவர்களுக்கு சில சலுகைகளை வழங்கியுள்ளார். இதன் பயனாக, முஸ்லிம்கள் பலர் விஜயா கல்லூரியில் சேர்ந்து படித்தனர். திரு. வி.டி.நாணயக்கார ஊட்டிய ஆர்வத்தால் படித்த பலர் வாழ்க்கையில் உயர்நிலையை அடைந்தனர்.
இவர் மாத்தளை மாவட்ட முஸ்லிம் கல்வி வளர்ச்சிக்குச் செய்த இன்னொரு மகத்தான சேவை மாத்தளை நகரத்தில் ஏறத்தாழ பத்து ஏக்கர் நிலத்தை மாத்தளை ஸாஹிரா கல்லூரிக்கு அவர் மாத்தளை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பெற்றுக்கொடுத்ததாகும். மர்ஹஜூம் அல்ஹாஜ் ஏ.எம். இஸ்மாயில் மெளலவிஅவர்களால் கட்டப்பட்ட மத்ரஸா, ஹமீதியா பாடசாலையாக மாறிய 1942-ஆம் ஆண்டு, மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் ஒரு முக்கியமான ஆண்டாகும். 1942-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஹமீ தியா பரீடசாலையே 194-ஆம் ஆண்டு “ஸாஹிரா" என்ற பெயரைப் பெற்றது. மாத்தளை மாவட்டத்தில் இருக்கும் அத்தனை முஸ்லிம் கிராமங்களில் இருந்தும் பிள்ளைகள் ஸாஹிராவில் படித்திருக்கின்ற னர். அவர்களில் பலர் இன்று மிக நல்ல நிலைகளிலும் உள்ளனர்.
எனவே மாத்தளை மாவட்ட கல்வி வளர்ச்சிக்கு மாத்தளை ஸாஹிராவின் பங்களிப்பு கணிசமானது, காத்திரமானது. மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள் கல்வியில் காட்டிய அக்கறையின்மையை 1946-ஆம் ஆண்டு மாத்தளை ஸாஹிராவின் மாணவர் தொகையை வைத்து கணிக்கலாம். அவ்வாண்டு இப்பாடசாலையில் 75 மாணவர் களே படித்தனர். இதில் மாணவர்களே உயர் வகுப்புகளில் படித்தனர்." ஆனால் வெகு விரைவில் மாணவர் தொகை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.
முஸ்லிம்பாடசாலை ஒன்று தரமாக வளரஆரம்பித்ததைக்கண்ட வுடன், முஸ்லிம்களின் போக்கிலும் ஒரு மாறுதல் ஏற்பட ஆரம்பித் தது. முஸ்லிம் பெற்றோர்கள் இடையிலே தமது பிள்ளைகளை விலக் காது, தொடர்ந்து படிக்கவிட்டனர். மாத்தளை மாவட்டத்தின் ஏனைய
கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு சேர்க்கப்பட்டனர். கலே வெல, நிக்ககொல்ல, உக்குவளை, இரத்தொட்டை போன்ற அத்த னைப் பகுதிகளிலிருந்தும் பிள்ளைகள் இங்கு வர ஆரம்பித்தனர்.
பொலன்னறுவை, மூதூர், மட்டக்களப்பு, வரக்காபொல, மாவ னெல்ல போன்ற பகுதிகளில் இருந்தெல்லாம் மாணவர்கள் வந்து இப்பாடசாலையில் சேர்ந்தனர். இங்கே படித்த மாணவர்கள் அர சாங்க வேலைகளில் சேர ஆரம்பித்தவுடன், இதுவரை கல்வியில் அக் கறை காட்டாது இருந்த பெற்றோர்களும் ஆர்வம் காட்ட ஆரம்பித்த னர். 1955-ஆம் ஆண்டு மாத்தளை ஸாஹிரா கல்லூரியில் பல்கலைக் கழகப் பிரவேச வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆயிரத்தித் தொளாயிரத்து ஐம்பதுகளில் மாத்தளை மாவட்டத்தி லுள்ள பல கிராமங்களிலும் கல்வியில் ஒரு திருப்பம் ஏற்படுவதைக் காண்கின்றோம். இத்தசாப்தத்தில் நிக்ககொல்ல, ரஜ்ஜம்மண மாபேரிய, ரைத்தளாவளை, மாணாம்பொடை, வரக்காமுற, மாத் தளை, உல்பொத்தபிடிய போன்ற பல கிராமங்களிலும் முஸ்லிம்கள், கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சையில் தேறி, ஆசிரியர் நியம னம் பெற ஆரம்பித்தனர். இது முஸ்லிம்களின் கவனத்தைக் கல்வியின் பால் நன்றாக திருப்பியது.
இத்தசாப்தத்தில் பல முஸ்லிம் கிராமங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதுவரை தமிழ்ப் பாடசாலைகளாக இயங்கி வந்த சில பாடசாலைகளும், 1959-ஆம் ஆண்டுக்குப்பின்னர் முஸ்லிம் பாடசாலைகளாக மாறின. மாத்தளை முஸ்லிம் பாடசாலைகள் பொதுவாக, திருப்திகரமான முறையில் இப்போது வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றன.
இந்த தசாப்தம் மாத்தளை மாவட்ட முஸ்லிம் மகளிர் கல்வியி லும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது எனலாம். பாக்கிய வித்தியால யத்தில் படித்த ஜனாபா ஜெஸிமா சஹலிர்தீன் 1952-ஆம் ஆண்டு பரீட் சையில் தேறி, 1953-ஆம் ஆண்டு அதே வித்தியாலயத்தில் ஒர் ஆசிரி யையாக நியமனம் பெற்றார். இது முஸ்லிம் மகளிர்கல்விவளர்ச்சிக்கு ஒரு பெரும் தூண்டுகோலாக அமைந்தது.
மாத்தளை மாவட்டத்து சகல பாடசாலைகளிலும் முஸ்லிம் மக
Page 58
Ι 12
ளிர் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தனர். ஒரு காலக் கட்டத்தில் முஸ்லிம் மகளிர் கல்வி வளர்ச்சியில் பாக்கிய வித்தியாலயம் ஒரு பெரும் பங்கை வகித்தது. 1961-ஆம் ஆண்டு மாத்தளையில் ஒரு தனி முஸ்லிம் மகளிர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை மாவட்ட முஸ் லிம் மகளிர் கல்வி வளர்ச்சியில் இது ஒரு மைல்கல்லாகும்.
மாத்தளை மாவட்டத்து முஸ்லிம் பெண்மணிகளில் முதல் பட்ட தாரியானஜனாபாஹனியாகப்பார்கம்பளை ஸாஹிராக்கல்லூரியில் படித்தே சர்வகலாசாலைக்குப்பிரவேசித்தார். இவர்1964-ஆம் ஆண்டு பட்டதாரியானார். இன்று பாக்கிய வித்தியாலயம், ஆமினா மகளிர் வித்தியாலயம், அஜ்மீர் முஸ்லிம் மகா வித்தியாலயம், அல்புர்க்கான் மகா வித்தியாலயம், மின்ஹாஜ் முஸ்லிம் மகாவித்தியாலயம் ஸாஹி ராக் கல்லூரி போன்றவை பல பெண் பட்டதாரிகளை உருவாக்கி உள்ளன. Y
ஆயிரத்தித் தொளாயிரத்து எழுபதுகளில் மாத்தளை ஸாஹிராக் கல்லூரியில், கல்வி பொதுத்தராதரப் பத்திர உயர்தர விஞ்ஞான வகுப் புகள் ஆரம்பிக்கப்பட்டமை, மாத்தளை மாவட்ட முஸ்லிம் கல்வி வளர்ச்சியில் இன்னொரு மைல்கல்லாகும். இவ்வகுப்புகள் ஆரம்பிக் கப்பட்ட காலத்திலிருந்து மாத்தளை மாவட்ட சகல முஸ்லிம் கிராமங் களிலிருந்தும் மாணவ, மாணவிகள் இங்கு வந்து படித்தார்கள். இங்கு படித்த பலர் இன்று விஞ்ஞானபட்டதாரிகளாக இருக்கின்றனர்; சிலர் டாக்டர்களாக இருக்கின்றனர்; சிலர் பொறியியலாளராக இருக்கின்ற னர். இன்று பலர் மருத்துவ, பொறியியல், விஞ்ஞான துறைகளில் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்றும் ஸாஹிராக்கல்லூரியில் மாத்திரமே விஞ்ஞான, வணிக, கலை ஆகிய மூன்று பிரிவுகளிலும் உயர்தர வகுப்புகள் நடை பெறு கின்றன. ஆமினா மகளிர் மகா வித்தியாலயம், அஜ்மீர் முஸ்லிம் மகா வித்தியாலயம், அல்புர்க்கான் மகா வித்தியாலயம், குறிவெல முஸ் லிம் மகா வித்தியாலயம், மாதிப்பொல முஸ்லிம் மகா வித்தியால யம், மின்ஹாஜ் முஸ்லிம் மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைக ளில் கலை வகுப்புகளும், வணிக வகுப்புகளும் நடைபெறுகின்றன. இவ்வித்தியாலயங்கள் பல பட்டதாரிகளை உருவாக்கியுள்ளன.
13
மாத்தளை முஸ்லிம்கள் மத்தியிலே முதன்முதலாகக் கல்வித் துறையிலே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அல்ஹாஜ் எஸ். எச்.ஏ. வதுரத் அவர்களாவார். 1949-ஆம் ஆண்டு இவர் பட்டதாரியா னார். மாத்தளை முஸ்லிம்கள் மத்தியில் இது அன்று ஒரு சாதனையா கவே கருதப்பட்டது. அக்காலக் கட்டத்திலே பலவித உயர் உத்தி யோக வாய்ப்புகள் இருந்தபோதிலும், அவர் அவற்றை உதாசீனம் செய்து விட்டு, தன் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கல்விக்காகவே அர்ப்பணித்தார். மாத்தளை மாவட்டத்தில் பிறந்த ஒரு பெரும் கல்வி மானாக இவரைக் கருதலாம்.
1946-ஆம் ஆண்டு வழக்கறிஞர் பரீட்சையில் சித்தியடைந்த ஜனாப் டி.எம்.ஏ. சாலே மாத்தளை முஸ்லிம் மக்கள் மத்தியில் தோன் றிய முதல் வழக்கறிஞராவார். கல்வித் துறையிலே மிக உயர்ந்த நிலைக்குச் சென்ற மாத்தளை மாவட்டத்து முதல் முஸ்லிம் ஜனாப் ஏ.இஸட் ஒமர்தீன் ஆவார். இலங்கையில் உள்ள பல சாஹிராக் கல்லூரிகளின் அதிபராகவும், முஸ்லிம் ஆசிரியர் பயிற்சி கலாசாலை அதிபராகவும் கடமையாற்றிய இவர், பின்னர்பிரதேசகல்விஅத்தியட் சகராகப் பல முக்கியமான மாவட்டங்களிலே கடமையாற்றினார். கல்வித்துறையில் இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பயிற்சி பெற்ற இவர், இன்று இலங்கை தேசிய கல்வி ஆணைக்குழுவின் உறுப்பினராக இருக்கின்றார். ஒரு பெரும் கல்விமானான ஜனாப் ஒமர்தீன் அவர்களே இலங்கையில் கல்வி டிப்ளோமா பரீட்ஷையில் திறமைச் சித்திபெற்ற முதல் முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாத்தளையில் பிறந்து, ஸாஹிராவில் கல்வி கற்ற ஜனாப் எஸ். எச்.ஏ. ரீஸ்ா, இன்று சட்டத்துறையில் ஒரு நிபுணராகத் திகழ்கிறார். இலங்கை சர்வகலாசாலையில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற இவர், பின்னர் அமெரிக்காவின் புகழ்பூத்த சர்வகலா சாலையான ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் சட்டத் துறையில் முதுமானிப் பட்டத்தையும், பின்னர் இங்கிலாந்தில் சட்டத்துறை கலாநிதி பட்டத் தையும் பெற்றுள்ளார்.
மாத்தளை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவரான ஜனாப் ஏ.ஸி. கபூர் பிரதிபொலிஸ்மா அதிபராக இன்று கடமையாற்றுகின்
Page 59
14
றார். இவரது இளைய சகோதரர் அல்ஹாஜ் ஏ.ஸி. செய்ரிதீன், நான்கு சாகிரா கல்லூரிகளில் அதிபராக கடமையாற்றி உள்ளார். இவர் முஸ் லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளராக வும் சேவையாற்றியுள்ளார்.
மாத்தளை மாவட்டத்தின்முதல் முஸ்லிம் டாக்டரான அல்ஹாஜ் ஏ.ஸி. ரஸாக், ஜனாப் ஏ.ஸி. கபூர் அவர்களின் இன்னொரு இளைய சகோதரர்ஆவார். மாத்தளை மாவட்டத்து முஸ்லிம்களில் இராணுவத் துறையில் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர் கேணல் ஏ.எம்.எம். பரீட் அவர்களாவார். இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற "சேன்ட் ஹேர்ஸ்ட்" இராணுவக் கல்லூரியில் படித்த இவர், இப்போது ஜோர் டான் நாட்டின் கெளரவ கொன்சல் ஆக சேவையாற்றுகின்றார். மிக இளம்வயதிலேயே ஜனாப்.ஏ.எஸ்.எம்.ஜவீர்இராணுவச்சேவையில் மேஜராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகயுத்தத்தின் போது, பிரித்தானிய ஆகாயவிமா னப் படையில் கடமையாற்றுவதற்கு விமானியாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்ஜனாப் ஓ.எம். மஹ்றுப். இவர் புனித தோமியர்கல்லூரியில் படித்தவர் மீஸான் ஹாஜியார் அவர்களின் புத்திரர்களில் ஒருவரான ஜனாப் பாயிஸ் மொஹிதீன் அவர்கள் மத்திய வங்கியில் ஓர் உயர் பதவியிலும், இன்னொரு புதல்வரான ஜனாப் கபீர் மொஹிதீன் மின் சார சபையில் ஓர் உயர் உத்தியோகத்திலும் இருக்கின்றனர்.
மாத்தளை முஸ்லிம்கள் மத்தியில் தோன்றி முதல் பொறியியலா ளர் அல்ஹாஜ் எம்.எச்.எம். ஐயுப் ஆவார்கள். அவர்கள் நீண்ட கால மாக சவூதி அரேபியாவில் கடமையாற்றிக் கொண்டு இருக்கின்றார். ஜனாப் எம்.எஸ்.எம். நளிம் இங்கிலாந்தில் ஒரு விரிவுரையாளராக இருக்கின்றார்.
மாத்தளையில் வாழ்ந்த ஜனாப் ஏ.ஏ.எம். பாரூக் ஒரு நீதியரசராக சேவையாற்றுகின்றார். ஜனாப் ஏ.ஏ.எம். பஸில் 'எயார் லங்கா" நிறு வனத்தில் ஒர் உயர் பதவியை வகிக்கின்றார். மாத்தளை மாவட்ட கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்கியவர், மாத்தளை ஸாஹிராக் கல்லூரிகள் மூலம் மாத்தளை மாவட்டமுஸ்லிம்களுக்குப் பெரும் சேவையாற்றிய திரு. எம்.வி. மத்தாய் ஆவார்.
5וו
இவ்வாறு மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி வரலாறு தொடர்ந்து வீறுநடை போட்டுக் கொண்டு செல்கின்றது. இன்ஷாஅல் லாஹ் இனிவரும் காலங்களில் இவ்வரலாறு பெருகி, மாத்தளை மாவட்டத்திற்கே புகழ் குவிக்க வேண்டுமென பிரார்த்திப்போமாக!
மாத்தளை மாவட்ட முஸ்லிம் பாடசாலை விபரங்கள்
ஆதாரக் குறிப்புக்கள் 1. Administrative Report - 1896 2. Administrative Report - 1899 3. Pridham - Ceylon and her dependencies. 4. An article by Marhoom A.M.A. Azeez - g5L6p gadi Sub - sibésirad
செய்யுள் தொகுப்பும் உரைநடைத் தொகுப்பும்.
5. என் கதை - கவிஞர் அப்துல் காதர் லெப்பை 6. S.M. Haniffa - A Great Son 7. Zahira College, Matale - Silver Jubilee Number.
Page 60
776
அத்தியாயம் - 6 ஒரு பொருளியல் நோக்கு
ஆரம்பத்தில் இலங்கையில் குடியேறிய முஸ்லிம்கள், வர்த்தகத்தையே முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தனர். இவ்வாறே மாத்தளை மாவட்டத்தில் முதலில் நுழைந்த முஸ்லிம்களும் வர்த்தகர் களாகவே நுழைத்திருப்பர். ஆனால், மாத்தளையில் புதுக்குடியேற் றங்கள் அதிகரித்த போது, பல முஸ்லிம்கள் விவசாயத்திலும் வேறு தொழில்களிலும் ஈடுபட ஆரம்பித்திருப்பர். மாத்தளை மண்ணின் வளமும், குறைவில்லா நீர் வசதியும் விவசாயத்தின்பால் முஸ்லிம்க ளைக் கவர்ந்திருக்கும். கிராமத்தின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்ய, தேவையான பிற தொழிலாளர்களும் காலப்போக்கில் தோன் றியிருப்பர். ஏனைய கிராமங்களைப் போலவே, சகல வழிகளிலும் முஸ்லிம்கிராமங்களும்தன்னிறைவுபெற்ற கிராமங்களாகவே விளங் கியிருக்கும்.
பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை வளர்ச்சியுற்ற மாவட்டங்களில் மாத்தளையும் ஒன்று.பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை வளர்ச்சியடை யும் வரை, மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் பிரதான தொழில்க ளாக வர்த்தகமும் விவசாயமுமே விளங்கியிருக்கின்றன. காணிகள் இல்லாதவிடத்து, முஸ்லிம்கள் பெளத்த விகாரைகளின் காணிகளைப் பெற்று, அதற்காக அன்றைய வழக்கத்தின்படி விகாரைகளுக்குச் சேவையும் செய்துள்ளனர். இது பல முஸ்லிம் கிராமங்களில் நடை பெற்று இருக்கிறது. முஸ்லிம்கள் விவசாயத்தில் எந்தளவு ஈடுபட்டி ருந்தனர் என்பதையே இது காட்டுகின்றது.
1840ஆம் ஆண்டின் பின் பெருந்தோட்ட பயிர்ச் செய்கையின் துரித விருத்தி, மாத்தளை மாவட்டத்தில் பல புதிய தொழில்களை உருவாக்கியதோடு, வர்த்தக விருத்திக்கும் வழிகோலியது. ஆனால் புதிய வாய்ப்புகளை ஒரு சில முஸ்லிம்களே பயன்படுத்தினர் என்று கூறலாம். தேசிய அளவில் நோக்கும் போது கூட, நாம் இந்த நிலை
117
தென்படுதவதைப் பார்க்கின்றோம். பெருந்தோட்டச் செய்கை வளர்ச்சி பல புதிய தொழில்களை உருவாக்கியபோது அவற்றை கரை யோரச் சிங்களவர்களும், பரங்கியர்களும், தமிழர்களும் பயன்படுத் திய அளவுக்கு, முஸ்லிம்கள் பயன்படுத்தினர் என்று கூறமுடியாது.
போர்த்துக்கேயர்களினதும் ஒல்லாந்தர்களதும் காலங்களில் கரை யோரச் சிங்களவர்கள் மத்தியில் கணிசமான அளவு மூலதனம் உருவா கியிருந்தது. ஆனால் இவ்விரு ஐரோப்பிய இனத்தவர்களும் முஸ்லிம் களின் மீது காட்டியதுவேஷத்தின் காரணத்தினால், முஸ்லிம்களுக்கு மூலதனம் உருவாக்கிக் கொள்ள கூடிய, வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தன.
தேசிய அளவில் புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்பட்டபோது, அவற்றை ஜேம்ஸ் அல்விஸ், குருஸ் டிமெல், சொய்சா, டொக்டர் மார்க்கஸ் பெர்னான்டோ, ஜெரோனிஸ்பீரிஸ், இரத்னசபாபதி, ரொக் வுட், நமசிவாயம், விஜயவர்தன போன்ற குடும்பத்தவர்கள் பயன்ப டுத்திய அளவுக்கு, முஸ்லிம்களுக்குப் பயன்படுத்த முடியாது போன தற்கு முக்கிய காரணம், முஸ்லிம்களிடம் நிலவிய மூலதன பற்றாக்கு றைவேயாகும். வாப்பிச்சி மரிக்கார் போன்ற ஒரு சிலரே ஆரம்பத்தில் இப்புதிய வாய்ப்புகளைப் பெருமளவில் பயன்படுத்தக் கூடியவர்க ளாக முஸ்லிம் சமுகத்தில் இருந்தனர். மாத்தளையிலும் ஆரம்பத்தில் இந்நிலையே காணப்பட்டது.
19-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியிலே மத்திய மாகா ணத்திலே ஐரோப்பியர் 139,434 ஏக்கர் நிலம் வாங்கினர்; இலங்கையர் 9,47,310 ரூபா முதலீடு செய்து 35,199 ஏக்கர் காணி வாங்கியுள்ளனர். ஆனால் மாத்தளை முஸ்லிம்கள் எவரும் இவ்விற்பனையினால் பயன் பெற்றனர் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கண்டியில் கூட இக்காலக்கட்டத்திலே சின்ன லெப்பைச் சகோதரர்கள் என்ற வர்த்தக ஸ்தாபனத்தினர்களுக்கும் மீயாப்புள்ளை என்பவருக்கும் மாத்திரமே தோட்டங்கள் சொந்தமாக இருந்தன.
மாத்தளையிலும் போதிய மூலதனம் இன்மை, பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஏற்படுத்திய புதிய தொழில் வாய்ப்புகளைப் பூரண
Page 61
8
மாக பயன்படுத்திக் கொள்வதற்கு மாத்தளை முஸ்லிம்களுக்குப் பெரும் தடையாக இருந்திருக்கும். மூலதனம் உடையவர்களாய் இருந்த சில மாத்தளை முஸ்லிம்கள், சிற்சில வாய்ப்புகளைப் பயன்ப டுத்தவே செய்தனர் 1840-1856 காலப்பகுதியில் முஸ்லிம்கள் கோப்பித் தோட்டங்களின் தேவைகளுக்காக மாத்தளைப் பகுதியில் நானூறு வீடுகள் கட்டியிருந்தனர் என்று கலாநிதி ஏ.சி.எல். அமீரலி கூறுகின் றார்.
ஆனால் வேறு பல பெரும் பொருளாதார முயற்சிகளில் மாத் தளை முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்தனர் என்று கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் சிறிய மூலதனமே தேவைபடுகின்ற சிறு வர்த்தகத்தில் மத்திய மாகாண முஸ்லிம்கள் கூடுதலாக ஈடுபட ஆரம் பித்துள்ளனர். முஸ்லிம்கள் மத்தியிலே மூலதன உருவாக்கத்திற்கு இவ்வர்த்தக முயற்சிகள் உதவின. 1901-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரக் கணக்கெடுப்பு, 19-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளிலே மத்திய மாகாணமுஸ்லிம்கள் கூடுதலாக ஈடுபட்டிருந்த தொழில்களைச் சுட்டிக் காட்டுகின்றது.
மத்திய மாகாணம் - தொழில் கணக்கெடுப்பு 1901
முழு சனத் முஸ்லிம்களில் தொழில் தொகையிலும் குறிப் குறிப்பிட்ட தொழி
பிட்ட தொழிலில் ஈடு லில் ஈடுபட்டோர் பட்டோர்
ஆண் பெண் ஆண் பெண் அரசாங்க சேவை 3,393 254 277 O2 மிருக வளர்ப்பு, விற்பனை 685 a- 202 நெற்காணிச் செய்கை 46422 25.353 1883 886 நெற்காணி உரிமையாளர் 1075 8300 49 இறைச்சி விற்பனை ーI36 awan 27 முட்டை வியாபாரம் 73 ar 6. и на
மேசன் தொழில் 695 · 352
19
ஜவுளி வியாபாரம், தையல் 983 270 424 &
தொழில்
கடை வியாபாரம் 5I& 242 123 கரத்தைக்காரர் 1657 204 reவழக்கறிஞர்கள் 29 anwo நாட்டு வைத்தியர்கள் 229 38 தவளம் வியாபாரிகள் 99 «annes 63 ··
மேலே தரப்பட்டுள்ள அட்டவணை, மத்திய மாகாண முஸ்லிம் களினதும் ஏனைய சமுகத்தவர்களினதும் தொழில்நிலையைக் காட்டு கின்றது. 1901-ஆம் ஆண்ட்ளவில் கண்டி, கம்பளை, நுவரெலிய, கலஹா தெல்தெனிய, வத்தேகம போன்ற பகுதிகளில் பெருந்தோட் டப் பயிர்ச்செய்கை நன்கு வளர்ச்சியடைந்திருந்தது. வர்த்தக வாய்ப்பு கள் துரிதமாக அதிகரித்தன. எனவே முஸ்லிம்கள் அதிகமாக வியாபா ரத்தில் ஈடுபட்டனர். இதை அட்டவணை காட்டுகின்றது. மத்திய மாகாண முஸ்லிம்களில் ஏறத்தாழ 40% வீதமானோர் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதை அட்டவணை விளக்குகின்றது. ஆனால் மாத்தளை மாவட்டத்திலும் இதே நிலை 1901-ஆம் ஆண்டு இருந்தது என்று கூறமுடியாது.
மாத்தளை மாவட்டம் கிராம ரீதியாக முஸ்லிம்களின் தொழில் கணக்கெடுப்பு - ஆண்டு 1901
•S
བྲབློ་ ઢ ' s ·别 翡 望 撰。露 管。管 și ş 計器 繋 a 黒 遠* 暴 営選 。 _器 ste s . ح ح b6 8 t క్షా • 顧き 器尋 器 退導s 器議 器 器尋 言語
discs/Talia 275 எல்மல் பொத்த 268 s
பம்பரகட்டு 77
பொத்த
Page 62
920
5DLa s ஹவத்தை ரைத்த
STAT6AX sy
நிதுல்க apolar
ட்டுவ
Vē ஹவெல
மாபேசிய 78
Lorcavarub
பொடை
வரக்கா A.
Guðfts
கோட்ட
கொடை
alldór LS 87 பிட்டிய
uo-auanaw ay
Voyah Luar zo
கொங் 23 Α
«SMASARIOS
தாரலந்த 23
A
8
6彦
A
O
மேலே தரப்பட்டுள்ள அட்டவணையில் மாத்தளை மாவட்டத் தில் இருக்கும் பதினாறு முஸ்லிம் கிராமங்களின் தொழில் நிலை தரப்பட்டுள்ளது. இது 1901-ஆம் ஆண்டிலும் மாத்தளை மாவட்ட முஸ்லிம் மக்கள் கூடுதலாக விவசாயத்திலேயே ஈடுபட்டிருந்தனர் என்பதைக் காட்டுகின்றது. புள்ளி விவரம் முழு முஸ்லிம் சனத்தொ கையில் 46% வீதமானோர் விவசாயத்திலும் மிருக வளர்ப்பிலும் ஈடு பட்டிருப்பதைக் காட்டுகிறது. தொழில் செய்த முஸ்லிம்களின் அடிப் படையில் பார்த்தால் 79% வீதமானோர் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆக சனத்தொகை அடிப்படையில் பார்க்கும் போது 7% சத வீதமானோரே 1901-ஆம்
9
ஆண்டு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த சொற்ப தொகையினர் வியாபாரத்தில் ஈடுபட்டது கூட, முஸ்லிம்கள் மத்தி யில் ஓரளவிற்கு மூலதனம் உருவாவதற்கு உதவி இருப்பதைப் பார்க் கின்றோம்.
மாத்தளை மாவட்டம் - தொழில் கணக்கெடுப்பு 1911
தொழில் மாத்தளை மாவட்ட முழு மாத்தளை
சனதொகையிலும் குறிப் மாவட்ட முஸ்லிம் பிட்ட தொழிலில் ஈடுபட் களில்
டுள்ளோர் குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளோர் ஆண் பெண் ஆண் பெண்
நெற்காணிச் சொந்தக்காரர் 7323 2806 25I 182 நெற்காணிச் செய்கை 7362 3735 99 06 ஏனைய விவசாய முயற்சிகள் 14958 11770 20 (தோட்டத் தொழில், தொழிலா ளர் உட்பட மிருகவளர்ப்பு, விற்பனை 9. 3. 87 தச்சுத் தொழில் 44 17 இறைச்சி வியாபாரம் 22 2. டெய்லர்கள் (ஆண்-பெண் 65 48 42 தையல் தொழிலாளர்) மேசன் தொழில் 247 36 கரத்தைச் சொந்தக்காரர் 3. 4. 9 கரத்தை ஒட்டுவோர் 320 04 தவளம் வியாபாரம் 8 ரயில் போக்குவரத்து - 一64 30
தொழில்கள் தபாற் சேவை 34
Page 63
99.
ஜவுளி வியாபாரம் உணவு விடுதிகள் தானிய வியாபாரிகள் இரும்பு வியாபாரம் மண்ணெண்ணெய் வியாபாரம் விறகு வியாபாரம் பொது வியாபாரம் பொலிஸ் சேவை அரசாங்க சேவை
வழக்கறிஞர் பிரசித்த நொத்தாரிஸ் வழக்கறிஞர் - லிகிதர்கள் ஆங்கில வைத்தியம் அப்போதிக்கரி நாட்டு வைத்தியர்கள் ஆசிரியர்கள் பொறியியல் - நில அளவை யியல் வீட்டு வேலைக்காரர், "கோச்" சாரதிகள் வீட்டுத் தோட்ட தொழிலாளர் கூலி வேலைக்காரர் பிச்சை எடுப்போர்
3.
104
27
14
144
III
11
878
515
2
16
298
577
29
31
II 3.
65
22
8 11
562 25
20
4.
16
O
22 19
22 19
7
1911-ஆம் ஆண்டு மாத்தளை மாவட்ட தொழில் கணக்கெடுப்பு, இக்காலகட்டத்திலே மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் பொருளா தாரநிலை பற்றிய பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. 1911-ஆம் ஆண்டு மாத்தளை மாவட்ட முஸ்லிம் சனத்தொகை என்னவென்று திட்டவட்டமாக கூறமுடியாது. ஆனால் 1901-ஆம் ஆண்டு சனத்தொ கையையும் 1921-ஆம் ஆண்டு சனத்தொகையையும் அடிப்படையாக வைத்து 1911-ஆம் ஆண்டுமாத்தளை மாவட்டமுஸ்லிம்சனத்தொகை 6600 அளவில் இருந்திருக்குமென உத்தேசமாக கூறலாம்.
193
இதில் 483 முஸ்லிம்களுக்கே சொந்தமாக வயல் நிலங்கள் இருந் திருக்கின்றன என்பது புலப்படுகின்றது. அதாவது அன்றைய மாத் தளை முஸ்லிம்களின் மொத்த சனத்தொகையில் 6% வீதத்தினருக்கே சொந்த வயல் நிலங்கள்இருந்திருக்கின்றன. மிருக வளர்ப்பு, இறைச்சி வியாபாரம் ஆகிய இரண்டு தொழில்களிலும் முஸ்லிம்கள் கூடுதலாக பங்கு பற்றியிருக்கின்றனர். அட்டவணை முஸ்லிம் வழக்கறிஞர் ஒரு வர் மாத்தளையில் இருப்பதைக் காட்டுகின்றது.
இது 1911-ஆம் ஆண்டிலேயே மாத்தளை முஸ்லிம் ஒருவர் வழக் கறிஞராகிவிட்டாரோ என்ற கேள்வியை எழுப்பலாம். உண்மையில் இது மர்ஹல்ம் ஜனாப் எம்.வை.சலே என்பவரையே குறிக்கின்றது. இவர் மலாய இனத்தைச்சார்ந்தவர். இவரே மலாய இனத்தைச் சேர்ந்த முதல் வழக்கறிஞர் என்றும் நம்பப்படுகின்றது. 1902-ஆம் ஆண்டு வழக்கறிஞராக தொழில் புரிவதற்கு மாத்தளை வந்த மர்ஹஜூம் எம்.வை.சலே மாத்தளை நகரத்தின் பொது வாழ்விலும் கொங்கா வலை பள்ளிப் பரிபாலனத்திலும் முக்கிய இடம் வகித்திருக்கிறார்.
வைத்தியத்துறையில் முஸ்லிம்கள் ஒரளவுக்கு சிறந்து விளங்கி னர் என்ற உண்மையும் தெரியவருகின்றது. இவ்வட்டவணை 1911-ஆம் ஆண்டு முஸ்லிம்கள் சற்று கூடுதலாக வியாபாரத்தில் ஈடு பட்டிருப்பதைக் காட்டுகிறது. மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை அடிப்படையில் கணிக்கும் போது 12% சதவீதத் தினர் வணிகத்தில் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறோம்; தொழில் செய் கின்ற முஸ்லிம்களின் அடிப்படையில் பார்த்தால் 32% சதவீதத்தினர் வியாபாரத்தில் ஈடுபட்டிப்பதைக் காணலாம். மேலும் பொலிஸ் சேவையிலுள்ளோர், அரசாங்க சேவைகளிலுள்ளோர்,ஆசிரியர்கள், இலிகிதர்கள் என ஒரு சிறு மத்தியவகுப்பினரும் உருவாவதைக் காண் கின்றோம்.
ஏறத்தாழ இரண்டாம் உலக மகாயுத்தம் ஆரம்பமாகும் வரை மாத்தளை மாவட்டமுஸ்லிம்களின் பொருளாதார நிலையில் பெரும் மாற்றங்கள் எதுவும் நடந்ததாக கூறமுடியாது. ஆனால் யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் பல முஸ்லிம்கள் செல்வந்தர்களாக மாறுவதைக் காண்கின்றோம். м
Page 64
94
ஏறத்தாழ ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதுகளில் மாத்தளை மாவட்ட் முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பிடக்கூடிய ஒரு சில முஸ் லிம் தனவந்தர்கள் உருவாகினர். இத்தகையோரில் ஒருவர் "காலயார் என அழைக்கப்பட்ட மர்ஹஅம் எஸ். மீராசாஹிபு ஆவார். 1920-35 காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்தில் தேயிலை,இரப்பர் தோட் டங்கள் பெரும் வளர்ச்சி பெற்றிருந்தன. மாத்தளை நகரைச் சுற்றியி ருந்த ரத்தொட்டை, கைக்காவளை, கம்மடுவ, நிக்கலோய, உக்கு வெளை, பல்லெபொல, யடவத்தை, கவுடுபெலல்ல, மடவளைபண் டாரப்பொல போன்ற பகுதிகளிலெல்லாம் பெருந்தோட்டச் செய்கை நன்கு விருத்தியடைந்திருந்தது.
மாத்தளை மாவட்டத்தில் இருந்த ஒரு சில தோட்டங்களுக்கு மாத்திரமே தம் உற்பத்திப் பொருட்களை உக்குவளைப் புகையிரத நிலையத்திற்குச் கொண்டுசெல்லல் வசதியாக இருந்திருக்கும். மற் றவை அத்தனைக்கும் வசதியான புகையிரதநிலையம் மாத்தளையே. உரம், உணவுப் பொருட்கள், கட்டடப் பொருட்கள் போன்ற பல வகையான பொருட்களைத் தோட்டங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியும் இருந்தது. பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு மாட்டு வண்டிகள் மாத்திரமே இருந்த காலம் அது.
எனவே தோட்டத்துரைமார்கள் மாட்டு வண்டிகள் வைத்திருந்த வர்களுடன் போக்குவரத்து ஒப்பந்தங்கள் செய்து கொண்டனர். இத் தொழிலைப் பெரிய அளவில் செய்து பிரசித்தி பெற்றவர் மர்ஹஜூம் எஸ். மீராசாஹிபு ஆவார். பின்னர் "லொறி" போக்குவரத்து ஆரம்பித் தபோது அத்துறையில் இறங்கி அதனிலும் பெரும் வெற்றி பெற்றார். அக்காலத்திலேயே, ஐந்து, ஆறு லொறிகளுக்கு இவர் உரிமையாள ராக இருந்தார் என கூறப்படுகின்றது. மாத்தளை மாவட்டத்தில் பெருந்தோட்ட பயிர்ச் செய்கையின் மூலம் பெரும் அளவிற்கு முன் னேறிய முதல் முஸ்லிம் இவரே எனலாம்.
மாத்தளைக்கு அருகாமையில் இருக்கும் அக்குறனை எனும்
பிரசித்தி பெற்ற முஸ்லிம் கிராமத்தில் இருந்து இளவயதிலேயே மாத்தளை வந்து, வியாபாரத்தில் ஈடுபட்டு, தன் திறமையினால் உன்
195
னத நிலைக்கு உயர்ந்தவர் "மிஸான் ஹாஜியார்’ என மக்களால் மரியாதையோடு அழைக்கப்பட்ட முகம்மது மொஹீதின்ஹாஜியார். பெருந் தோட்டங்களை வாங்கி அவற்றை இலாபகரமாக நடத்திக் காட்டிய முதல் மாத்தளை மாவட்ட முஸ்லிம் இவர் என்பதே பொது வான கருத்து.
ஏறத்தாழ இதே காலக்கட்டத்தில் கல்ஹின்னையில் பிறந்த காசீம் ஹாஜியார் அவர்களும் மாருக்கோனையைச் சேர்ந்த அப்துல் ஹமீத் ஹாஜியார் அவர்களும் பல தோட்டங்களுக்குச் சொந்தக்காரர்களாய் இருந்தனர். 1930ஆம் ஆண்டுக்குப்பின்கலேவெல பகுதியில் புகையி லைப் பயிர்ச்செய்கைப் பெரும் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. இப்ப யிர்ச்செய்கையில் எல்மல்பொத்த, மாதிப்பொல, நமடகஹவத்தை போன்ற கிராமங்களில் வசித்த முஸ்லிம் மக்கள் கூடுதலாக ஈடுபட்ட னர்.
இவர்களுள் எல்மல் பொத்தயைச் சேர்ந்த எஸ்.எஸ். முகம்மது காசீம் ஹாஜியார், நமடகஹவத்தையைச் சேர்ந்த யு.கே.அப்துல் ஹமீத்ஹாஜியார், புலக்பிட்டியைச்சேர்ந்த சம்மூன்ஹாஜியார் போன் றோர் மிக முக்கியமானவர்கள் ஆவார்கள்.
1935-ஆம் ஆண்டு கலேவெலயில் ஒரே ஒரு தேனீர்க்கடை தான் இருந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் இன்று, மாத்தளை மாவட் டத்திலே, மாத்தளைக்கு அடுத்த பெரிய நகரம் கலேவெல ஆகும். இப்பெரும் மாற்றத்திற்கு ஒரே காரணம் புகையிலையே. புகையிலை இப்பிரதேச மக்களின் வாழ்க்கையிலே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புகையிலை வியாபாரத்தால் கூடிய நன்மை அடைந்தவர் கள் முஸ்லிம்களே. நமடகஹவத்தை, மாதிப்பொல, எல்மல்பொத்த, சவனவெளி, ரன்வெடியாவ,தேவாஹ"வ போன்ற முஸ்லிம் கிராமங் கள் ஓரளவு செல்வ நிலையில் இன்று இருப்பதற்கு, புகையிலைப் பயிர்ச் செய்கையின் வளர்ச்சியே முக்கிய காரணமாகும்.
ம்ாத்தளை மாவட்ட முஸ்லிம்கள் தமது சொந்த மாவட்டத்திற் குள்ளேயே தம்முடைய தொழில் முயற்சிகளை மேற்கொண்டிருந்த வேள்ையிலே, துணிந்து கொழும்பு சென்று ஏற்றுமதி வியாபாரத்தில்
Page 65
196
இறங்கிய பெருமை, அல்ஹாஜ் எஸ்.எச். மொஹம்மது அவர்க ளையே சாரும். தேயிலையையும் ஏனைய உள்ளூர்விளைப்பொருட்க ளையும் ஏற்றுமதி செய்வதற்கு, இவர் ஏறத்தாழ 1940-ஆம் ஆண்டள வில் தலைநகரத்தில் "மீஸான் அன் கோ' என்ற பெயரில் ஒரு ஸ்தாப னத்தை ஆரம்பித்தார். இன்றும் அவ்விஸ்தாபனம் இதே துறையில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
எனவே ஏற்றுமதி துறையில் இறங்கி அதில் வெற்றிகண்ட முதல் மாத்தளை மாவட்ட முஸ்லிம் அல்குறனையில் பிறந்து, மாத்தளை யில் குடியேறிய அல்ஹாஜ் எஸ்.எம். முஹம்மது அவர்களே!
கைத்தொழில்களை ஆரம்பித்து, அவற்றின் மூலம் வாழ்க்கை யில் குறிப்பிடக்கூடிய அளவிற்கு வெற்றி கண்டவர்மர்ஹஅம் தங்கம ரிக்கார்முகம்மது இப்ராஹிம் ஆவார். சாதாரண தொழிலாளியாக தன் வாழ்வை ஆரம்பித்த மர்ஹஅம் முகம்மது இப்ராஹீம், 1928-ஆம் ஆண்டு சுண்ணாம்பு சூளை ஒன்றையும் பின்னர், செங்கல் சூளை ஒன்றையும் ஆரம்பித்தார். இன்று மாத்தளை மாவட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சுண்ணாம்பு சூளைகளில் மிகப் பழைமையானது இவர் ஆரம்பித்ததே எனத் துணிந்துரைக்கலாம்.
பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை வளர்ச்சி, புகையிலைப் பயிர்ச் செய்கை வளர்ச்சி, வணிக வளர்ச்சி, கைத்தொழில் வளர்ச்சி ஆகிய எதுவுமே மாத்தளை மாவட்டத்திலே உடனடியாக எவ்வித மாற்றங்க ளையும் செய்யவில்லை. அவற்றின் விளைவுகளைப் பல வருடங்கள் கழிந்த பின்னரே சமூகம் உணர்ந்தது.
ஆனால் 1965-ஆம் ஆண்டளவில் எலஹர, கலுகங்கை, லக்கல போன்ற பிரதேசங்களிலே தரமான நீலக்கற்களும் வேறு நிற இரத்தி னக் கற்களும் கிடைக்க ஆரம்பித்தமை இப்பிரதேசங்களிலும் மாத் தளை நகரத்திலும் உடனடியாக புரட்சிகரமான பொருளாதார, சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. ஒரு குறுகிய காலப் பகுதிக்குள்ளேயே பல கோடி பெறுமதியான "ஆறு நூல்களும், "நீலம்களும்", "ரூபிக ளும்” இங்கே கிடைத்தன.
197
வறிய நிலையில் இருந்த எவஹெர, ஒரு போதும் கண்டிராத பெரும் செல்வத்தைக் காண ஆரம்பித்தது. பெரும் பெரும் "மெனிக் முதலாளிகள்’ அங்கே உருவெடுத்தனர். "அழகிய, நவீன, புத்தம் புதிய" கார்களைக் காண வேண்டுமானால் எலஹெர பிரதேசங்களுக் குப் போக வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, பேருவளை, இரத்தினபுர, எஹெலியகொடை மாணிக்கக்கல்வியாபாரிகள் இப்பிர தேசத்திற்குப் படையெடுக்க ஆரம்பித்தனர்.
எலஹெரயில் எங்குப் பார்த்தாலும் "வாடிகள்" இல்லங்கள், நீர்ப் பம்புகள், தொழிலாளிகள், மாணிக்க முதலாளிகள், அவர்களது புத்தம் புதிய கார்கள் என்று அடையாளம் தெரியாத அளவிற்கு எல ஹரபிரதேசம் மாறிவிட்டது. மாணிக்க வியாபாரம் மாத்தளையையும் பெருமளவிற்கு மாற்றியது.
இரும்புவியாபாரம்,துணிவியாபாரம், நகை வியாபாரம் போன் றவை சூடு பிடிக்க ஆரம்பித்தன. பேருவளை, எஹெலியகொடை முஸ்லிம் மாணிக்க வியாபாரிகளும், இரத்தினபுர, எலஹெர "மெனிக்" வியாபாரிகளும் மாத்தளை நகரத்தில் கண்ட கண்ட இடங் களிலெல்லாம் "மெனிக் கன்னா ஸ்தானய" (மாணிக்கக் கற்கள் வாங் கும் இடம்) என்று எழுதப்பட்ட பெரிய விளம்பர பலகைகளோடு கடைகளை ஆரம்பித்தனர். இரவில் கூட "டோர்ச்லைட்களை அதிகம் காணாத மாத்தளை நகரம் பட்டப் பகலிலே சிறிய "டோர்ச்லைட்டுக ளைத் தூக்கிக் கொண்டு மாணிக்க கற்களை மதிப்பீடு செய்ய முயலும் கூட்டத்தை வினோதமாகப் பார்க்க ஆரம்பித்தது.
சகல வியாபாரங்களுக்கும் மூலதனம் வேண்டும்; மாணிக்கவியா பாரத்துக்கும் அது வேண்டும்; ஆனால் இவ்வியாபாரத்திற்குத் தேவை யான மிகப்பெரிய மூலதனம்; இந்த வியாபாரியிடம் பணம் கொட்டிக் கிடக்கின்றது என்ற மனப்பிரமையை உண்டு பண்ணுவதாகும். எனவே இம்மாணிக்க வியாபாரிகள் மிக ஆடம்பரமான முறையிலே தம் கடைகளை அலங்காரப்படுத்தினர். கடைகளில் எங்கு பார்த்தா லும் அலங்காரமும் ஜொலிப்பும், கடைக்கு முன்னால் இரண்டு மூன்று கார்கள்; இந்த ரீதியில் ஐம்பது, அறுபது "மெனிக்" கடைகள் மாத்தளையில் ஆரம்பிக்கப்பட்டன.
Page 66
98
நகரத்தில் கடை கட்டிடங்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட் டது. முப்பதாயிரம் நாற்பதாயிரம் என்று விற்கப்பட்ட கடைகளின் மதிப்பு மூன்று இலட்சம், நான்கு இலட்சம் என்று உயர ஆரம்பித்தது. மாணிக்க வியாபாரம் மாத்தளைக்கு ஒரு மவுசை வழங்கியது. இவ்வி யாபாரத்தின் மூலம் பெரும் பணம் சம்பாதித்த முதல் மாத்தளை முஸ்லிம் வெலிகமையைப் பிறப்பிடமாக கொண்ட கலீல் ஹாஜியார் அவர்களாவார்.
இன்று கலில் ஹாஜியார் அவர்களும், அவர்களது சகோதரர்க ளும் பெரும் தொழில் அதிபர்களாக விளங்குகின்றனர். கலில் ஹாஜி யாரைப் போலவே, மாணிக்க வியாபாரத்தின் மூலம் செல்வத்தைச் சேர்த்தவர்கள் எ.எம்.நசீர்ஹாஜியார்அவர்களும் ஏ.ஆர்.எம். இக்பால் ஹாஜியார் அவர்களும் ஆவார்கள். மாத்தளை முஸ்லிம்களில் முதன் முதலில் காணி வாங்குதல், விற்றலை பெரும் அளவில் செய்து, வாழ் வில் உயர்ந்தவர் எ.எஸ்.எம். வசீர் ஹாஜியார் அவர்களாவார்.
மாத்தளை மாவட்டத்திலே 1950-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற் பட்ட கல்வி வளர்ச்சியும் வர்த்தக வளர்ச்சியும் ஒன்றிணைந்து, முஸ் லிம் சமூகத்தில் ஒரு சில "டொக்டர்களை” ஒரு சில வழக்கறிஞர் களை, பல ஆசிரியர்களை, பல வர்த்தகர்களை உருவாக்கி, ஒருபலம் பொருந்திய மத்தியதர வகுப்பை தோற்றுவித்தன. வர்த்தகத்துறை, கல்வித்துறை, அரசாங்க சேவை, கைத்தொழில்துறை, விவசாயம் என பல துறைகளிலும் மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள் ஈடுபட்டு இருப் பதால், முஸ்லிம்களின் பொருளாதார நிலை திருப்திகரமானதாகவே விளங்குகிறது என்று கூறலாம்.
பெருந்தோட்டச் செய்கையின் வளர்ச்சி வணிக வளர்ச்சி, மாணிக்க வியாபாரம் போன்றவை, மாத்தளை மாவட்ட முஸ்லிம்க ளின் வாழ்க்கையிலே பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன என்பது உண்மை. ஆனால் இவற்றினால் வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் ஒரு சிலர் மாத்திரமே.
ஆனால் 1970-களின் பிற்பகுதியில், மத்தியக் கிழக்கு நாடுகள் தம்மிடம் குவிந்த "பெட்ரோ டொலர்' களை செலவிட ஆரம்பித்த போது, ஏற்பட்ட தொழில் வாய்ப்புகள் இலங்கையின் பெரும்பா
99
லான மாவட்டங்களில் வியக்கத்தகுந்த பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியதைப் போலவே மாத்தளை மாவட்டத்திலும் ஏற்படுத்தி உள்ளனஎனலாம். மாத்தளை மாவட்டத்தில் இருக்கும் சகலமுஸ்லிம் கிராமங்களில் இருந்தும் வாலிபர்களும் யுவதிகளும், நடுத்தர வயது ஆண்களும் பெண்களும் பல்வேறு வகையானதொழில்களைச்செய்வ தற்காக சவூதி, ஜோர்டான், துபாய்,ஒமான், கடார், அபுதாபி போன்ற மத்திய கிழக்கின் முஸ்லிம் நாடுகளுக்கும் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் சென்று இருக்கின்றனர். கோடிக்கணக்கான ரூபாய்களைதம்மாவட்டத்திற்கு அனுப்பிகொண் டிருக்கின்றனர்.
மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரத்தை பெரி தும் உயர்த்தியுள்ளது இவ்வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள்தாம். 1975-ஆம் ஆண்டளவில் மாத்தளை முஸ்லிம் நகர பகுதியில் ஒரு "பேர்ச்’ நிலத்தின் விலை ஏறத்தாழ அறுநூறு, எழுநூறு ரூபாய்தான்; இன்று ஒரு "பேர்ச்சின் விலை முப்பதாயிரம் ரூபாய். இம்மாற்றத் திற்கு முக்கியமான காரணம் வெளிநாட்டுப் பணமே இவ்வெளிநாட் டுப் பணம் மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் நிரந்தரமான முன் னேற்றத்தை எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதை இப்போது மதிப் பீடு செய்தல் முடியாது.
Page 67
30
அத்தியாயம் - 7 தொழிற் திறமைகள்
எந்தத் தொழில் மிகச் சிறந்தது என நபிகள் நாயகத்திடம்
ஒரு தோழர் வினவிய போது, இறைத்தூதர் "மனிதன் கையினால் செய்யும் தொழிலும், தவறு ஒன்றுமே நிகழாத வியாபாரமும்’ என்று பதில் அளித்தார்கள். நபிகள் நாயகத்தின் இக்கூற்று உடல் உழைப்பை மேன்மைப் படுத்துகிறது; உழைப்பின் மகத்துவத்தை உணர்த்துகின் pgi.
நபிகள் நாயகத்தின் விளக்கத்துக்கேற்ப, மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள் தொழில்களில் உயர்வு, தாழ்வு பார்க்கவில்லை. தமது மதக் கோட்பாடுகளுக்கு முரணாக இல்லாத போது, அவர்கள் எந்தத் தொழிலையும் செய்யத் தயாராக இருந்தனர். 1911-ஆம் ஆண்டு தொழில் அடிப்படையிலான புள்ளிவிபரக்கணக்கெடுப்பு மாத்தனை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செய்த தொழில்களைக் காட்டுகிறது.
விவசாயிகளாக, கால்நடை வளர்ப்போராக, வியாபாரிகளாக தச்சர்களாக, நாவிதர்களாக, சலவைத் தொழிலாளர்களாக, ரயில்வே ஊழியர்களாக, கரத்தைத்காரர்களாக, தையற்காரர்களாக இப்படி எல் லாவிதமான தொழில்களையும் செய்பவர்களாக நாம் மாத்தளை மாவட்ட முஸ்லிம்களைப் பார்க்கின்றோம்.
எல்லாவிதமான தொழில்களையும் மாத்தளை முஸ்லிம்கள் செய்த போதிலும், சில குறிப்பிட்ட தொழில்களில் இவர்கள், அசாதா ரணதிறமைகளைக் காட்டியிருப்பதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
தையற்கலை, முஸ்லிம்களுக்கு கைவந்த ஒரு கலையாக இருந்திருக்கிறது. என்பதை ஒல்லாந்தரது சில குறிப்புக்கள்புலப்படுத் துகின்றன. கரையோரங்களில், குறிப்பாக கொழும்பில் முஸ்லிம்கள் வாழ்வதை விரும்பாத ஒல்லாந்தர்கூட, முஸ்லிம் தையற் தொழிலா னர்களுக்குப் பல சலுகைகளை வழங்கி, கொழும்பிலும் ஏனைய
31ו
கரையோர நகரங்களிலும் வசிப்பதற்கு ஊக்குவித்திருப்பதை ஒல்லாந் தரது குறிப்புக்கள் உணர்த்துகின்றன.
மாத்தளை முஸ்லிம்களும் ஆரம்பத்தில் இருந்தே தையற்கலை யில் விஷேச திறமையைக் காட்டியுள்ளனர். பெருந்தோட்ட வளர்ச்சி யினால் பல ஆங்கிலேயர்கள் மாத்தளை மாவட்டத்தில் வசித்தது, மாத்தளை நகரத்திலே தையற்தொழில் நன்கு வளர்வதற்கு ஒரு காரண மாக இருந்திருக்கலாம்.
இந்நூற்றாண்டின் முற்பகுதியிலேயே தாஜூதீன் பாய், கெளஸ் பாய், ஜலீல் துவான் போன்ற தேர்ச்சி பெற்ற தையற்கலைஞர்கள் மாத்தளையில் தொழில் செய்ய ஆரம்பித்தனர். தையற் தொழிலுக்கு மாத்தளையில் கிடைத்த வரவேற்பு பெருந்தொகையான மாத்தளை முஸ்லிம் இளைஞர்கள் இத்தொழிலில் பயிற்சி பெறுவதற்கு தூண்டி யது. மர்ஹஅம்களான செய்யத் சுல்தான், அபூபக்கர், ஏ.ஹஸன்,சேகு நூர்தீன், எஸ்.எம்.ஏ. முகுத்தார் ஹாஜியார் போன்றோர் மாத்தளை நகரத்தில் ஒரு காலக்கட்டத்திலே பிரசித்தி பெற்ற தையற்காரர்க. ளாக இருந்தனர்.
மாத்தளை முஸ்லிம் "டெயிலர்கள்” வேறு பல ஊர்களுக்கும் சென்று, அங்கும் பெரும் புகழோடு தொழில் புரிந்தனர். ஏறத்தாழ முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் மாத்தளை முஸ்லிம் "டெய்லர்கள்’ பெரும் மதிப்போடு இருந்தனர்.
அன்று யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற "டெயிலராக" விளங்கிய மர்ஹலிம் எஸ்.எச்.அப்துல் சமதை இன்றும் பல யாழ்ப்பாணத்தவர் கள் நினைவு கூறுகின்றனர். இவ்வாறே கண்டியில் மர்ஹஜூம் ஏ.ஸி. அப்துல் ரஹீம், எஸ்.எச். செய்யது இஸ்மாயில் ஹாஜியார் போன் றோர் வெற்றிகரமாக தையற் தொழில் நடத்தினர். இன்றும் இவ்விரு வரது புதல்வர்களும் கண்டியில் புகழோடு இருக்கின்றனர்.
கெக்கிராவ, பெர்லன்னறுவை, அநுரதபுரம், தம்புள்ளை, கலே வெல போன்ற பல ஊர்களிலும் மாத்தளை முஸ்லிம் தையற் தொழி லாளர்கள் புகழோடு தொழில் செய்தனர்; பலர் இன்றும் செய்கின்ற
Page 68
39
மாத்தளைமுஸ்லிம்களின்பிறவித்திறமை வெளிப்பட்டமற்றும் ஒரு தொழில் மேசன் (மேஸ்திரி) தொழிலாகும். ஏறத்தாழ 1920-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பணச்செழிப்பின் காரணமாக பெரும் பெரும் கட்டிடங்கள் மாத்தளை நகரத்திலும் ஏனைய பகுதிகளிலும் எழஆரம் பித்தன. இது திறமை மிக்க, சிறந்த மேசன்மார் தோன்றுவதற்கு வழி வகுத்தது.
மர்ஹஅம்களான எம்.அப்துல் மஜீத், முகம்மது யூனூஸ், டி.மு ஹம்மது இப்ராஹிம், ஹஜ்ஜிமரிக்கார்போன்றோர் இத்துறையில் மிகப் பிரபல்யம் அடைந்தோர் ஆவர். மாத்தளை நகரத்தின் மத்தியில் கம்பீரமாக நின்று நகருக்கு அழகு சேர்க்கும் மணிக் கூண்டு கோபுரம் மஜீத் மேசனார் அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டதாகும்.
மாத்தளை நகரில் அமைந்துள்ள தமிழ் மகளிர் பாடசாலையான பாக்கிய வித்தியாலயத்தில் காணப்படும் ஓர் அழகான, உறுதியான கட்டிடம் இரண்டு பெரியார்களோடு தொடர்புடையதாகும். மே மாதம் 18-ஆம் திகதி, 1924-ஆம் ஆண்டு இக்கட்டிடத்திற்கு அடிக்கல் வைத்த வர் இந்திய தேசப்பிதாவான மகாத்மா காந்தி ஆவார்; இக்கட்டிடத் தைத் திறந்து வைத்தவர் சேர். பொன்னம்பலம் இராமநாதனாவார். இக்கட்டிடத்தைக் கட்டியவர் முகம்மது இப்ராஹிம் ஆவார்.
மாத்தளை நகரத்தில் கட்டப்பட்ட முதல் "கொங்கிரிட்" கட்டி டம் 1930-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஐ.எல்.எஸ். கட்டிடமாகும். இத னைக் கட்டியவர் மர்ஹஜூம் முகம்மது இப்ராஹிமே. மாத்தளை நக ருக்கு வனப்பை வழங்கும் ஓர் அழகான கட்டிடம், மாத்தளை டவுன் பள்ளியாகும். இதைக் கட்டியவர் உள்பொத்தபிட்டி கிராமத்தைச் சேர்ந்த மர்ஹமும் எம்.எஸ்.ஹஜ்ஜி மரிக்கார் என்பவராவார். மாபேரி யைச் சேர்ந்த சாஹுல் ஹமீது என்பவரும் பிரபலமான மேசனாக விளங்கியுள்ளார்.
இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே வைத்தி பத்துறையில் முஸ்லிம்கள் ஒரு தனித்திறமையைக் காட்டியுள்ளனர். இஸ்லாமிய மருத்துவ மேதையான இப்னு ஸினா எழுதிய வைத்திய நூல், பல ஐரோப்பிய மருத்துவ கலாசாலைகளில் நீண்ட காலமாக
33
பாடநூலாக பயன்படுத்தப்பட்டது. இலங்கையிலும் முஸ்லிம்கள் வைத்தியத் துறையில் புகழ் பெற்றவர்களாக விளங்கியதை எல்லோ ரும் அறிவர்.
திப்பிட்டிய கட்டபேரியைச் சேர்ந்த வைத்தியப் பரம்பரையின ரைப் போன்ற, அல்லது பூவெலிக்கடை வைத்தியப் பரம்பரையின ரைப் போன்ற முஸ்லிம் வைத்தியர்கள் மாத்தளை மாவட்டத்தில் தோன்றியிருக்கின்றனர் என்று கூறமுடியாவிட்டாலும் தரமான, திற மைமிக்க பல வைத்தியர்கள் மாத்தளை முஸ்லிம்கள் மத்தியிலே இருந்திருக்கின்றனர் என்பதை உறுதியாக கூறமுடியும்.
மாத்தளை மாவட்டத்தில் பிறந்த, ஒரு சிறந்த வைத்தியர் என உள்பொத்தபிட்டியில் பிறந்த வாப்பு வைத்தியர் கருதப்படுகிறார். கண்டிக் கருகாமையில் உள்ள அத்தரகம பெளத்த விகாரை பிக்குவி டம் மருத்துவக் கலையைக் கற்ற வாப்பு வைத்தியர், படிக்கும் போதே தனது திறமையை நன்கு வெளிப்படுத்தித் தன் ஆசானின் பெரும் மதிப்பைப் பெற்றிருக்கின்றார். தொழில் செய்ய ஆரம்பித்த பிறகு இவருடைய புகழ், மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவி யிருந்தது எனக் கூறலாம்.
இவர் பயின்ற அத்தரகம மருத்துவச் சாலையில் உள்ள ஓர் அறைக்கு “வாப்புக் குட்டிய” எனப் பெயர்ச் சூட்டப்பட்டிருப்பது, இம்மருத்துவ சாலையைச் சேர்ந்தோர் எந்த அளவிற்கு வாப்பு வைத்தி யர் மீது மரியாதை வைத்திருந்தனர் என்பதை உணர்த்துகின்றது. இவ ரது மகன் சாஹ"ல் ஹமீதும் பிரபலமானவைத்தியராக விளங்கினார்.
உள்பொத்தபிட்டியில் பிறந்த மற்றுமொரு சிறந்த வைத்தியர் இப்ராஹிம் லெப்பை வைத்தியராவார். இவருக்குப் பிறகு இவரு டைய மகனான சாதுக்கீன் வைத்தியர், தன் தந்தையின் தொழிலைச் செய்து வருகின்றார். மாத்தளை பன்னாமத்தைச் சேர்ந்த ஆமீது லெப் பையின் மகன் இல்யாஸ் வைத்தியர் கைதேர்ந்த வைத்தியராக விளங் கியிருக்கிறார். அனைத்து இன மக்கள் மத்தியிலும் பிரபல்யமானவ ராக விளங்கிய இவரது வீடு மருந்து வீடு என்றே அழைக்கப்பட்டதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவரது தந்தை ஆமிது ஆரச்சியும்,
Page 69
e 34
பாட்டனார் சின்னத்தம்பி மாப்பிள்ளையும், வைத்தியர்களாகவும் இருந்தனர்.
நிக்ககொல்லையில் இப்ராஹிம் லெப்பை வைத்தியர் என்பவர் பிரபலமானவராக விளங்கியுள்ளார். காசிம் லெப்பை வைத்தியர் இதே ஊரைச் சேர்ந்த மற்றொரு பிரபல வைத்தியர் ஆவார். காசீம் லெப்பை வைத்தியருக்குப் பின் அவரது புதல்வர்களான செய்யது ஹ"லைன், சால்தீன் என்போரும் வைத்தியர்களாக விளங்கியுள்ள னர். அண்மையில் மறைந்த முஹம்மது லக்கரிய்யாவைத்தியர்மாத்த ளையில் பிரபலமாயிருந்த வைத்தியராவார்.
முஸ்லிம்களால் "செக்கிரில்ல" என்றழைக்கப்பட்ட ஹெக்கி ரில்ல என்ற முஸ்லிம் கிராமம், ஏறத்தாழ நூறு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு பெருவெள்ளத்தால் அழிக்கப்படுவதற்கு முன்அக்கிரா மத்தின் ஆரச்சியாக கடமையாற்றிய சின்னத்தம்பி ஆரச்சியின் தந்தை யான பக்கீர்த்தம்பி வைத்தியர், அவர்வாழ்ந்த பகுதியிலே பிரபலமாக விருந்த ஒரு வைத்தியர் ஆவார்.
விஷ வைத்திய அறிவு அத்தியாவசியமாகவிருந்த அக்காலத் திலே தம் சமூகத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான அறிவும், ஆற்றலுமிக்க பல விஷ வைத்தியர்களும் மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் மத்தியிலே தோன்றினார்கள். எல்மல் பொத்த கிராமத்தலைவராக கடமையாற்றிய சாஹ"ல் ஹமீது விஷ வைத்திய துறையிலும் சிறந்து விளங்கினார்.
ரைத்தளவளையில் வாழ்ந்த மரிக்கார் வைத்தியர் ஒரு விஷ வைத்திய நிபுணராகக் கருதப்பட்டிருக்கிறார். முஸ்லிம் பெண்மணி கள் ஒரு சிலரும் வைத்தியத்துறையில் சிறந்து விளங்கியிருக்கின்றனர். பம்பரக்கட்டுபொத்தயில் வாழ்ந்த ஜெய்னம்பு ஆச்சி வைத்தியத்தில் சிறந்து விளங்கிய ஒரு முஸ்லிம் பெண்மணியாவார்.
மனித வைத்தியத்தில் மாத்திரமல்லாது, மிருக வைத்தியத்திலும் மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள் சிறந்து விளங்கியிருக்கின்றனர். இம்மாவட்டமுஸ்லிம்கள் ஈடுபட்டிருந்த தொழில்களை அடிப்படை பாக வைத்து ஆராயும்போது, மிருக வைத்தியத்துறையில் முஸ்லிம்
135
கள் பெரும் அனுபவம் பெற்றிருந்தது ஆச்சரியமானதல்ல என்பது விளங்கும்.
1911-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரக் கணக்கின் படி, மாத்தளை மாவட்டத்தில் மிருக வளர்ப்பைத் தொழிலாகக் கொண்டிருந்தோர் மொத்தம் நூற்றுத் தொண்ணுற்றி நான்கு பேர் இருந் தனர். இதில் எண்பத்தியேழு பேர் முஸ்லிம்கள் ஆவார்கள். மிருக வளர்ப்பில் இந்தளவு முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்தபடியால் அவர்கள் மத்தியில் பல மிருக வைத்தியர்கள் தோன்றினர்.
மாத்தளை நகரத்தில் வாழ்ந்த ஒரு சிறந்த மிருக வைத்தியர் மரிக் கார் என்பவராவார். தாரலந்த பகுதியில் விஷ வைத்தியத் துறையில் பிரபலமாக இருந்த ஜனாபா சுபைரா உம்மா இவரது மகளாவார். நிக்ககொல்லையில் மீரா சாஹிப் என்பவர் இத்துறையில் திறமை உடையவராக இருந்தார். அவருக்குப் பின் அவரது புதல்வர்களான அப்துல் ஹமீதும் ஸ்மிமும் இத்துறையில் பிரபலமாயிருக்கின்றனர்.
மாபேரியில் மர்ஹ9ம் ஏ.சம்மூன் மிருக வைத்தியத் துறையில் சிறந்து விளங்கினார். சிங்கள கிராமத்து மக்களும் இவருடைய உதவி யைப் பெறுவர். இதே ஊரைச் சேர்ந்த சாஹ"ல் ஹமீது, முஹம்மது ராஜன், ஜலீல் போன்றோரும் சிறந்த மிருக வைத்தியர்களாக கருதப்ப டுகின்றனர். மாத்தளையில் முகம்மது லெப்பை ஒரு சிறந்த விலங்கி யல் வைத்தியராக இருந்தார். இவருக்கு பின் இவரது புதல்வர்களான ஜனாப் அப்துல் லதீபும், ஜனாப் சம்மூன் அவர்களும் இத்துறையில் சிறந்து விளங்கினர். இவ்வாறு மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள் வழமையான துறைகள்போக, ஏனைய துறைகளிலும் தமது விசேட திறமைகளை காட்டியிருப்பதையிட்டு இன்றைய மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள் பெருமைபடலாம்.
Page 70
36
அத்தியாயம் - 8 பொது வாழ்வு
புனித இஸ்லாம், ஒரு சமூகம், தனிமனிதன் ஒருவனுக்குச்செய்ய வேண்டிய கடமைகளை விளக்கி இருப்பதைப் போலவே, ஒரு தனி மனிதன், அவன் வாழ்கின்ற சமூகத்தின் மேம்பாட்டுக்காக ஆற்ற வேண்டிய கடமைகளையும் மிக விளக்கமாக வரையறுத்திருக்கிறது. "பர்ழுகிபாயாக்கள் எல்லாம், சமூகம் தனிமனிதனுக்கு உதவி செய் யும் சந்தர்ப்பங்களே. பர்ழு கிபாயாவினால் விதியாக்கப்பட்ட விட யங்கள், சமூகப் பொறுப்புக்களே. அவ்விடயங்களை நிறைவேற்றல் சமூகத்தின்மீது கடமையாகும்”. இது சமூகம், தனி மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய ஒரு விளக்கமாகும்.
அவ்வாறே ஸக்காத், சதக்கா போன்றவை, சமூகத்தில் வாழும், ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக தனி மனிதனுக்கு வழக்கப்பட்ட வாய்ப்புக்களாகும். ஒரு தனிமனிதன், ஏழைகளுக்குச்சதக்கா கொடுக் கும் போது அவன் சமூகத்தை வாழ வைக்கின்றான். அதுபோலவே, புள்ளிவாசல்களை அமைத்தல், வைத்தியசாலைகளைக்கட்டல், பாட சாலைகளை நிருவுதல், அனாதை விடுதிகளை அமைத்தல் போன்ற வைகளும் ஒரு தனிமனிதன் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய சேவை களே.
அவ்வாறே ஒரு தனிமனிதன் ஓர் ஆசிரியனாக, ஒரு வைத்திய னாக, ஒர்அரசியல்வாதியாக, ஒரு சமூகசேவையாளனாக சேவையாற் றும் போதும், அவன் சமுதாய வளர்ச்சிக்கு உதவியவனாகின்றான். சமூக வளர்ச்சிக்காக இத்தகைய நற்சேவைகள் செய்தோரை நினைவு கூரல் அவர்களின் சேவைகளால் நன்மையடைந்த சமூகத்தின் கடமை யாகும்,மாத்தளை மாவட்டம் இத்தகைய சேவையாளர் பலரை உரு வாக்கியுள்ளமை பெருமைக்குரிய சாதனையாகும்
மாத்தளை மாவட்டத்தில் முஸ்லிம்களின் குடியேற்றங்கள் ஆரம் பமான காலத்திலேயே சமூக நன்மையைப் பெரிதாக மதிக்கும் மக்கள்
27
சிலர் இருந்திருப்பர். இவர்கள் சமூக முன்னேற்றத்துக்காக ஏனையோ ரைவிட கூடிய பங்களிப்பை வழங்க விருப்பமுள்ள மக்களாகவும், ஆற்றலுள்ள மக்களாகவும் இருந்திருப்பர். இப்படிப்பட்ட முஸ்லிம் கள், தாம் வாழ்ந்த காலத்திலே, தம்மால் இயன்ற சேவைகளைத் தம் சமூக வளர்ச்சிக்காக செய்திருப்பர்.
ஆங்கிலேய அரசாங்கத்தின் 1818-ஆம் ஆண்டுப்பிரகடனம், முஸ் லிம்களைக் கண்டி பிரதானிகளின் ஆதிக்கத்துக்குள் இருந்து அகற்றி யது. முஸ்லிம்கள் வாழ்ந்த அத்தனைக் கிராமங்களிலும் முஸ்லிம் களுக்குப் பொறுப்பாக முஸ்லிம் "ஆரச்சிகள்” நியமிக்கப்பட்டனர். இவ்வடிப்படையில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்திருந்த அத் தனைமுஸ்லிம் கிராமங்களுக்கும் முஸ்லிம் ஆரச்சிகள் நியமிக்கப்பட் டிருப்பர். இவர்களில் சிலராவது கடமை என்ற குறுகிய வட்டத்திற் குள் தம்மைச்சுருட்டிக் கொள்ளாது, சமூக மேம்பாட்டையும் மனதில் கொண்டு செயலாற்றியிருப்பர். முஸ்லிம் ஆரச்சிகள் சிலர் துணிவோ டும், கடமை உணர்வோடும் செயலாற்றினர் என்பதற்கு, 1897-ஆம் ஆண்டு மாத்தளை உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு. ஜி.எஸ். செக்ஸ்டனின் பரிபாலன அறிக்கை சான்று பகர்கின்றது.
1897-ஆம் ஆண்டு வரக்காமுறை கிராமத்தில் ஒரு கொலை நடந் தது. கொலையாளி ஒடி ஒரு வீட்டுக்குள் ஒளிந்துவிட்டான். குடிவெறி யில் இருந்த கொலையாளி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, எதையும் செய்ய துணிவான் என்பதை உணர்ந்திருந்தும், வரக்காமுறை முஸ் லிம் ஆரச்சி அஞ்சவில்லை; தயங்கவில்லை. துணிவோடு வீட்டுக்குள் புகுந்து, கொலையாளியைக் கைது செய்தார்.
திரு.ஜி.எஸ்.செக்ஸ்டன்தன் பரிபாலன அறிக்கையில் இம் முஸ் லிம் ஆரச்சியைப் பாராட்டி எழுதியுள்ளார். இதே போன்று பல முஸ் லிம் அதிகாரிகள் தம் கடமைகளைச் சிறப்பாக செய்து தம் Flypas வளர்ச்சிக்கு உதவியிருக்கலாம்.
1852-ஆம் ஆண்டு மாத்தளை நகரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் புள்ளே பக்கீர்த்தம்பி ஆரச்சி என்பவர் "மரிக்கார்” ஆக அன்றைய இலங்கை தேசாதிபதியினால் நியமிக்கப்பட்டார். மாத்தளை மாவட் டத்துமுஸ்லிம்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்குக்கிடைத்த,
Page 71
58
ஆதாரத்தோடு, நிரூபிக்கக்கூடிய முதல் அரசாங்க உயர் நியமனம் இதுவே. "மரிக்கார் ஆட்சி" என்பது அக்காலத்திலே முஸ்லிம்கள் வாழ்ந்த பல பகுதிகளில் காணப்பட்ட ஓர் ஆட்சி முறையாகும்.
பொதுவாக மரிக்கார்களே தமது பிரதேசங்களில் வாழ்ந்த முஸ் லிம்களின் நல்வாழ்வுக்குப் பொறுப்பாக இருந்தனர். ஆங்கிலேய அர சாங்கத்தை தமக்கு வழங்கப்பட்டிருந்த பிரதேசத்தில் வாழ்ந்த முஸ் விம் மக்கள் மத்தியிலே, பிரதிநிதித்துவப் படுத்திய மரிக்கார்களே, தமது பிரதேசங்களில் ஒழுங்கையும் சமாதானத்தையும் நிலை நாட்டு பவர்களாகவும், தமது சமூகத்தின் தேவைகளை குறைபாடுகளை அரசாங்க மட்டத்தில் அறிவிப்பவர்களாகவும் இருந்தனர்.
"மரிக்கார்". மார்களுக்கு வழங்கப்பட்ட நியமன கடிதத்தின் அமைப்பு, மரிக்கார் பதவியை எந்தளவு உயர்வாக அரசாங்கம் கருதி யது என்பதையும், அது எந்தளவு உயர் அந்தஸ்தை இப்பதவிக்கு வழங்கியிருக்கிறது என்பதையும் உணர்த்துகின்றது.
மத்திய மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் பிரமுகர்களான முஹாந்திரம்கள் உதவி அர சங்க அதிபருடன் சேர்ந்து பிடித்த படம் இது. இப்படத்தில் மாத்தளையைச் சேர்ந்த இரு முஹாந்திரம்களும் இருக்கின்றனர்.
క్ష్
13ኗን
19-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20-ஆம் நூற்றாண் டின் முற்பகுதியிலும் மாத்தளை முஸ்லிம்கள் சிலர் "முஹாந்திரம்" என்ற உயர்பதவிகளை வகித்துள்ளனர். இவர்களுள் ஒருவர், வரக்கா முறையைச் சேர்ந்த ஒமர்லெப்பை மடிகே முஹாந்திரம் ஆவார். வரக் காமுறை ஜும்ஆபள்ளிவாசலும், வரக்காமுறை முஸ்லிம் மகா வித்தி யாலயமும் இவரது காணியிலேயே அமைந்துள்ளன. வரக்காமுறை ஜும்ஆ பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இம்ஹாந்திரம் இருந் திருக்கிறார். பள்ளி நிர்வாக பொறுப்பாளராகவும் இவர் இருந்திருக்கி
ஹார்.
இவருக்குப் பின் இவரது மகன்சாஹ"ல் ஹமீது ஆரச்சி என்பவர் பள்ளிக்குப் பொறுப்பாக இருந்திருக்கிறார். மாத்தளை நகரத்தில் முதன்முதலாக முஹாந்திரம் என்ற பதவிக்கு நியமிக்கப்பட்ட முஸ் லிம் , குஞ்சுத்தம்பி முஹம்மது மரிக்கார் என்பவராவார்.
1929-ஆம் ஆண்டு மரணமடைந்த இவரின் சேவையை அரசாங் கம் பெரிதாக மதித்திருக்க வேண்டும். மாத்தளை நகரில் உள்ள கொடப்பொல பாதையையும், தாரலந்த பாதையையும் இணைக்கும் குறுக்குப் பாதை, 1912-ஆம் ஆண்டில் கூட, "முஹாத்திரப் பாதை" என்றே அழைக்கப்பட்டுள்ளது. இங்கே "முஹாந்திரம் என குறிப்பி டப்படுபவர், மரிக்கார் முஹாந்திரமே. மாத்தளை மாவட்டத்தில் பதவி வகித்த கடைசி முஸ்லிம் முஹாந்திரம் குழந்தை உடையார் முகம்மது அபூபக்கர் என்பவராவார்.
முஹாந்திரமாக நியமிக்கப்படுவதற்கு முன், பல வருடங்களாக டவுன் ஆரச்சியாக கடமையாற்றிய இவர் கொங்காவலை ஜ"ம்ஆ பள்ளிவாசலில் மத்திசமாக பல வருடங்கள் சேவையாற்றியுள்ளார் என்பது அவதானிக்கத்தக்கது.
1888-ஆம் ஆண்டு பல முக்கியமான நகரங்களிலே நகர பரிபால னத்துக்குப் பொறுப்பாக "லோக்கல் போர்ட்" மaேl Board) என்ற ழைக்கப்பட்ட உள்ளூர் ஆட்சி மன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. இம் மன்றங்கள் நியமிக்கப்பட்ட நகரங்களில் மாத்தளையும் ஒன்று. இம் மன்றத்தில்அரசாங்க அதிகாரிகள்மூவரும் நகர மக்களின்பிரதிநிதிகள் மூவரும் இடம் பெற்றனர்.
Page 72
40
அரசாங்கத்தின் சார்பாக இம்மன்றத்தில் அங்கத்துவம் வகித்த அரசாங்க அதிகாரிகள், உதவி அரசாங்க அதிபர், மாவட்ட பொறியிய லாளர், மாவட்ட வைத்திய அதிகாரி ஆகிய மூவராவார். மக்கள் சார்பாக மூவர் தெரிவு செய்யப்பட்டனர். இம்மன்றத்தில் அங்கத்து வம் பெறுவது நகரத்தில் பெரும் அந்தஸ்தை வழங்குவதாக இருந்தது. இந்த உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் மாத்தளை முஸ்லிம் மர்ஹ9ம் ஜனாப் எம்.வை சாலே ஆவார்.
1915-ஆம் ஆண்டிலிருந்து பல வருடங்கள் இவர் இம்மன்றத்தின் அங்கத்தவராக கடமையாற்றினார். இலங்கை மலாயர் இனத்தைச் சேர்ந்த முதல் வழக்கறிஞர் எனக் கருதப்படும் மர்ஹஜூம் எம்.வை. சாலே கொங்காவலை ஜ"ம்ஆ பள்ளி நிர்வாக விஷயங்களிலும் பெரும் ஈடுபாடு காட்டியுள்ளார்.
மாத்தளை மாவட்ட முஸ்லிம்களிலே, பொதுவாழ்விலே மிக உன்னதமானநிலையை அடைந்தவர்யார்என்ற கேள்விக்கோ, பொது வாழ்விலே மிகக் கூடுதலான பங்களிப்பை அளித்துள்ளவர்யார்என்ற கேள்விக்கோ இரண்டு விதமான பதில்கள் இருக்கமுடியாது. இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில், ஒரே பதில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அல்ஹாஜ் ஏ.ஸி.எஸ். ஹமீத் என்பதேயாகும். முப்பத்து மூன்று வருடங்கள் இலங்கைப் பாராளுமன்ற அங்கத்தவராக இருக் கின்ற, முன்னர் நீதித்துறை, உயர்கல்வி அமைச்சராக கடமையாற்றிய கெளரவ வெளிநாட்டு விவகாரஅமைச்சர்ஹமீத் அவர்கள், மாத்தளை யில் கல்வி கற்று, மாத்தளையிலே வாழ்ந்து, மாத்தளை மாவட்ட பொதுவாழ்விலே, குறிப்பாக மாத்தளைமுஸ்லிம்களின் பொதுவாழ் விலே பெரும் அளவிற்கு ஈடுபட்ட ஒரு தலைவர் ஆவார்.
மாத்தளை வை.எம். எம்.ஏ. இயக்கத்தின் தலைவராகவும், மாத் தளை மாநகர சபை அங்கத்தவராகவும் பணியாற்றிய, அமைச்சர் ஹமீத், மாத்தளை முஸ்லிம் மகளிர்கல்வியின் தந்தை என அழைக்கப் படக் கூடியவராவார். மாத்தளை மாவட்டத்திலே இருக்கும் ஒரே முஸ்லிம் மகளிர் கல்லூரியான ஆமினா முஸ்லிம் மகளிர் மகாவித்தி யாலயம் இவரது முயற்சியின் விளைவே"
4.
கெளரவ அமைச்சர் அல்ஹாஜ் ஹமீத்தைப் பற்றி எந்தளவுக்கு அக்குறனைக்குப் பெருமைப்பட முடியுமோ, எந்தளவுக்குக் கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்குப் பெருமைபடமுடியுமோ, அந்தளவுக்கு அவரைப்பற்றி மாத்தளைக்கும், மாத்தளை மாவட்ட முஸ்லிம்களுக் கும் பெருமைப்பட முடியும். மாத்தளை முஸ்லிம்களோடு நெருங்கி வாழ்ந்த இவ்வமைச்சரைப் பற்றி மாத்தளை முஸ்லிம்கள் பெருமைப் படுவது நியாயமானதே!
மாத்தளை நகர உள்ளூர் ஆட்சி அரசியலில் முஸ்லிம்களின் முத் திரையை மிக அழுத்தமாகப் பதித்த முதல் முஸ்லிம் மர்ஹஅம் Gas.6Tüb.6Tib.8no° 60avoir -gausti. g4 te.699rban District Council) 6r67 அழைக்கப்பட்ட மாத்தளை நகர சபையின் அங்கத்தினராக இவர், 1924-ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு 10-1-1947 அன்று, அதன் தலைவராக உயர்ந்து, 1949-ஆம் ஆண்டின் இறுதிப்பகுதிவரை தன் கடமைகளைச் செவ்வனே செய்தார்.
மாத்தளை நகரசபையின் முதல் முஸ்லிம் தலைவரான இவரது அகால மரணம், மாத்தளைக்கு,குறிப்பாக, மாத்தளை முஸ்லிம் சமூ கத்திற்கு ஒரு பேரிழப்பாகும். இவரது மகன் மர்ஹம்ை எம். தாஹிர் ஹ7 ஸைன் மாத்தளை நகர சபை தலைவராகவும், பின்னர் மாத்தளை மாநகரசபை முதல்வராகவும் கடமையாற்றினார். மாத்தளை மாநகரச பையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் இவரே.
சிங்கள மக்களே மிக்ப் பெரும்பான்மையாக வாழ்கின்ற வஹக் கோட்டை பிரதேச கிராமசபைத் தலைவராக ஏறத்தாழ முப்பந்தைந்து வருடங்கள் தொடர்ந்து சேவையாற்றியுள்ளார். "சேனா முதலாளி" என மக்களால் மரியாதையாக அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.காசீம் ஹாஜியார் அவர்கள்.
மிகக் குறைந்த எண்ணிக்கையான முஸ்லிம்களே வாழ்கின்ற இரத்தொட்டை பிரதேசத்திலே கிராம சபைத்தலைவராகவும், அது பட்டினச் சபையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர், பட்டினச் சபைத்த லைவராகவும் நீண்டகாலம்மர்ஹஜூம் எம்.கே.அப்துல்ஹமீத்தேவை யாற்றியுள்ளார்.
Page 73
142
இதே பட்டினச்சபையின் தலைவராக கடமையாற்றிய ஜனாப் என்.பி.எம். இக்பால், 1968-ஆம் ஆண்டு காங்கேசன்துறையில் நடை பெற்ற அகில இலங்கை பட்டினச் சபைத் தலைவர்களின் மகாநாட் டில், அன்றைய இலங்கைப் பிரதமரான திரு. டட்லி சேனநாயக்கா வால் பட்டினச் சபைத் தலைவர்களிலே மிக இளமையானவர் எனப் பாராட்டப்பட்டார்.
உக்குவளைப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் கணிசமான அளவு வாழ்ந்த போதிலும், சிங்களவர்களே பெரும்பான்மையாக வாழ்கின் றார்கள். இப்பிரதேச கிராமச்சபைத் தலைவராக நீண்டகாலம் மர் ஹூம் யூ.எல்.ஏ.மஜீத் ஹாஜியார் அவர்கள் கடமையாற்றினார்கள். மாத்தளை மாநகரசபை, ரத்தொட்டைபட்டினச்சபை வஹகோட்டை கிராமச்சபை, உக்குவளை கிராமச்சபை ஆகிய நான்கு உள்ளூர் ஆட்சி மன்றங்களும் சிங்களவர்கள் பெரும்பான்மையாய் வாழ்கின்ற பிரதே சங்களிலேயே அமைந்துள்ளன.
இத்தகைய மன்றங்களிலே சிறுபான்மை இனத்தவர்களான முஸ் லிம்கள்தலைவர்களாகத் தொடர்ந்து பலமுறை தெரிவு செய்யப்பட்டி ருப்பது அவர்களுடைய தனிப்பட்ட ஆற்றலையும் செல்வாக்கையும் சுட்டிக் காட்டுகின்றது. அதே வேளையில், சிங்கன மக்களுக்கும் முஸ் லிம் மக்களுக்குமிடையே நிலவிய நல்லுறவையும். நல்லெண்ணத் தையும் தெளிவாக உணர்த்துகின்றது.
மாத்தளை மாவட்ட உள்ளூர் ஆட்சி மன்றங்களிலே பல முஸ் லிம்கள் அங்கத்துவம் வகித்துள்ளனர். சிலர்தலைவர்களாகவும் வேறு சிலர் உபத்தலைவர்களாகவும் சேவையாற்றியுள்ளனர். பலர் அங்கத்தி வர்களாக இருந்து பெரும் சேவைகளைச் செய்து புகழ் குவித்துள்ளனர்.
இலங்கையிலே நடந்த முதல் மாகாண தேர்தலிலே வெற்றி பெற்ற மாத்தளை மாவட்ட ஒரே முஸ்லிம் அபேட்சகர் அல்ஹாஜ் ஐ.எம்.அத்ஹம் ஆவார். இரண்டாவது மாகாண தேர்தலிலே மாத் தளை மாவட்டத்தில் முஸ்லிம்கள் ஒருவரும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாத்தளை மாவட்டத்தில் குறிப்பாக மாத்தளை நகரத்தில், பல இன மக்களும் அங்கத்துவம் வகிக்கின்ற பல்வேறுப்பட்ட சமூக சேவை அமைப்புகள், இலக்கிய, கலாசர்ர அமைப்புகள், விளை
143
யாட்டுத் துறை அமைப்புகள் ஆகியன இயங்கியிருக்கின்றன; இயங் கிக் கொண்டிருக்கின்றன.
சமூக சேவையை நோக்கமாகக் கொண்ட மாத்தளை சமூக சேவை இயக்கம், "ரோட்டரி சங்கம்", "லயன்ஸ் சங்கம்", "ரோட ரெக்ட் சங்கம்" "லியோஸ் சங்கம்" எனப்பல அமைப்புகள் இயங்கு கின்றன. இவை மாத்தளை மாவட்ட மக்களுக்குக் கணிசமான அளவு சேவைகளைச் செய்துள்ளன.
ஹொக்கி, உதைப்பந்தாட்டம், கிரிக்கட் போன்ற விளையாட்டுக் களை வளர்ப்பதற்காக, அமைக்கப்பட்டுள்ள சங்கங்கள் இந்த விளை பாட்டுகளில் பங்குபற்றும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பல வகைகளில் உதவுகின்றன.
மாத்தளை முஸ்லிம் டெய்லர் சங்க உறுப்பினர்கள் சிலர், ஊர் மக்களுடன் கோட்ட கொடை பள்ளிவாசலுக்கு முன்னால் எடுத்த படம்.
Page 74
144
இத்தகைய அமைப்புகள் பலவற்றிலும், முஸ்லிம்கள் தம்மு டைய சனத் தொகை விகிதாசாரத்திலும் பார்க்க, கூடியளவு அங்கத்து வம் வகிக்கின்றனர். பொறுப்பான பதவிகளை அலங்கரிக்கின்றனர். இம் முறைகளில் மாத்தளை மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு இவர் கள் உதவுகின்றனர். பல இனத்தவர்கள் அங்கத்துவம் வகிக்கும் அமைப்புகளில், முஸ்லிம்களும் பங்குபற்றுவதுஇன ஒற்றுமை மலர வும், பரஸ்பர நல்லெண்ணம் வளரவும் உதவுகின்றது.
وفي عهد فيه وأخي
LTI T'ISFEL fil
மாத்தளை முஸ்ஜிம் வாசகசாலையை உருவாக்கியவர்கள் பிரஸ்தாபகட்டடத்தின்முன் னால் காணப்படுகின்றனர்.
பெரும்பாலும் முஸ்லிம்களேஅங்கத்துவம் வகிக்கும் இஸ்லா மிய அமைப்புகள் பலவும், மாத்தளை மாவட்டத்திலே இயங்கிக் கொண்டிருக்கின்றன. மாத்தளை மாவட்டத்தில் இயங்கிக் கொண்டி ருக்கும் மேற்படி முஸ்லிம் சங்கங்களிலே மிகப் பழமையானது என நாம் "மாத்தளை முஸ்லிம் டெயிலர் சங்கத்தைக் குறிப்பிடலாம்.
145
தொடர்ந்து பல வருடங்கள் கோட்டக் கொடை கந்தூரியை வெகு விமரிசையாக நடத்தி வரும் இச்சங்கம், ஒரு சாதனையையே படைத்தி ருக்கிறது எனலாம்.
மர்ஹஜூம் கேள்ம்.சயித் எனும் பெரும் சமூக சேவையாளரைச் செயலாளராகக் கொண்டு, 1930-ஆம் ஆண்டு மாத்தளையில் அமைக் கப்பட்ட "ஸவாதுல் அஃலம் முஸ்லிம் சங்க பிரச்சார சபை" குறிப்பி டத்தக்க ஒரு சங்கமாகும். இஸ்லாத்தைப் பற்றிய விளக்கத்ண்த முஸ் விம்களுக்கும், முஸ்லிம்கள் அல்லாதோருக்கும் வழங்கும் நோக்கத் தோடு அமைக்கப்பட்ட இச்சங்கம், "இஸ்லாத்தின் சிறப்பு'(Beauties of Islam) "இஸ்லாத்தைப் பற்றி பிறமதத்து பிரமுகர்களின் கருத்துக்கள் "Views of eminent non Muslims on Islam) Gustairp (5 disansit, unsous மின்றி, கேட்பவர்களுக்கு இலவசமாய் வினியோகித்துள்ளது.
முஸ்லிம் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதையும் இது ஒரு-நோக்க மாய்க்கொண்டிருந்தது.ஆனால் இச்சங்கம் நீண்டகாலம் இயங்கியதா கத் தெரியவில்லை,
மாத்தளை மாவட்டத்திலே முஸ்லிம்களால் அமைக்கப்பட்ட சமூகசேவை அமைப்புகளிலே ஆக்கபூர்வமான பல சேவைகளைச் செய்துள்ள ஒரு ஸ்தாபனம் "மாத்தளை முஸ்லிம் வாசகசாலை புத்தக flsnavuo Foræld" (Matale Reading Room and Library Society) -Gib. மர்ஹம்ே டி. முகம்மது இப்ராஹிம்,ஹாஜி ஏ.ஓ.எம். ஹனிபா மர் ஹூம் எம். சம்சுதீன், மர்ஹூம் எம். அப்துல் மஜீத், மர்ஹூம் எஸ்.டி. ஒமர்தீன், மர்ஹூம் மெளலவி அல்ஹாஜ் எம்.ஏ. முகம்மது இஸ்மாயில், மர்ஹானும் கே.எம். சயீத், ஹாஜி பீ.ஏ. வாஹித் ஆகியோ ரின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம், மாத்தளை நகரச பையிடம் இருந்து நிலத்தைப் பெற்று, ஒரு கட்டிடத்தை எழுப்பியது. இச்சங்கம் 31-8-1947 அன்று வெளியிட்ட கட்டிட அழிக்கையில், சங்கத்தின் நோக்கம் கீழ்வருமாறு விளக்கப்படுகின்றது. "முஸ்லிம் சமூக, மத, தேசிய, ராஜ்ய, ஞான, கல்விவளர்ச்சி, இதர சமூகத் தோருக்கு சத்திய இஸ்லாத்தின் தத்துவஞான நன்னோக்கங்களை விளங்க வைப்பதற்கு, தற்கால நிலைமைக்குகந்த வண்ணம், போதிய
Page 75
.46
ஏற்பாடுகள் புரிந்து ஒரு முஸ்லிம் வாசகசாலை நடப்பிப்பதுடன்சமூக ஒற்றுமை சீர்திருத்த முன்னேற்றங்களைக் கோரி சேவை செய்வது."
இச்சங்கம் பல வருடங்களாக ஒரு வாசிக சாலையை நடத்தியது. குர்ஆன் மத்ரஸா ஒன்றை சிறப்பாக நடத்தியது; ரமழான் மாதங்களில் பெண்களுக்குத் தராவீஹ் நடத்தியது; மீலாத் விழாக்களை விமரிசை யாக நடத்தியது. இடையிலே மூடப்பட்டிருந்த இந்த வாசிக சாலை யைச் சிறப்பாக மீண்டும் நடத்த முயற்சிகள் நடந்து கொண்டு இருக் கின்றன.
1950-களில் மாத்தளைவை.எம்.எம்.ஏ. இயக்கம் மிகச்சிறப்பான முறையிலே மீலாத் விழாக்களை நடத்தியது. அவ்வாறே 'மாத்தளை முஸ்லிம் நலன்புரிச்சங்கம்” என்ற அமைப்பும் மீலாத் விழாக்களைச் சிறப்பாக நடத்தியது. இப்போது இஸ்லாமிய இள்ைஞர் நலன்புரிச் சங்கம் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.
மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் எஸ்.எச்.ஏ. வதுரத் அவர்களும் ஜனாப் எஸ்.எப். ஸ்வாஹிர் அவர்களும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தலைவர்களாக கடமையாற்றி மாத்த ளைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். சிறப்பாக இயங்கிக்கொண்டிருக் கும் மத்திய தென்னக்கும்புர வை.எம்.எம்.ஏ. இயக்கத்தின் ஆயுட்கால செயலாளராகக் கடமையாற்றும் ஜனாப் நாகூர் பிச்சை அவர்களும் மாத்தளையைச் சேர்ந்தவரே!
மாத்தளை மாவட்டம் பள்ளிவாசல்களுக்கு, பாடசாலைகளுக்கு, மத்ரஸாக்களுக்கு பணத்தால் உதவும் பல தனவந்தர்களைக் கண்டிருக் கிறது. 1950-களில் கட்டிடங்களின்றி, வகுப்பறைகளின்றி மாத்தளை ஸாஹிரா கல்லூரி தவித்தபோது, பதின்மூன்று வகுப்பறைகளைக் கொண்ட ஒரு நீளமான கட்டடத்தைக் கட்டிக் கொடுத்து, மாத்தளை மாவட்டத்திலே வரலாறு படைத்தார் அல்ஹாஜ் எம்.ஸி.எம். ' ஹனிபா.
மாத்தளை டவுன் பள்ளியை உடைத்து, பெரிதாகக் கட்டிய போது, ஏற்பட்ட செலவின் பெரும் பங்கு மீஸான் ஹாஜியார் அவர்க ளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எல்மல்பொத்த ஜூம்ஆ பள்ளிவாச லைக் கட்டுவதில் எஸ்.எஸ். முகம்மது காஸிம் ஹாஜியார் அவர்கள்
47
பெரும் பங்கு ஏற்றார்கள். மிகப் பெரும் செலவில் கட்டப்பட்டிருக் கும் நமடகஹவத்தை ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு அவ்வூர் பிரமுகரான மர்ஹஜூம் அல்ஹாஜ் அப்துல் ஹமீது ஆரச்சியார் அவர்களுடைய பங்களிப்பு கணிசமானதாகும்.
ஜனாப் ஏ.ஆர்.ஏ. கலாப் அவர்கள் மாத்தளை கொங்காவலை மையவாடிக்கு அருகாமையில் ஒரு தைக்காவைத் தன் சொந்த செல வில் கட்டி, மாத்தளை மக்களுக்குப் பெரும் சேவை செய்துள்ளார். இன்று கொங்காவலை ஜும்ஆ பள்ளிவாசல் இவ்வளவு அழகாகவும் விசாலமானதாகவும் இருப்பதற்கு, முக்கிய காரணகர்த்தாக்கள் என்று நாம் எம்.எம். கலீல் ஹாஜியார் அவர்களையும், எ.எம். நஸீர் ஹாஜி யார் அவர்களையுமே சுட்டிக் காட்ட வேண்டும்.
மாத்தளை தோலவத்தையில் அமைந்திருக்கும் அழகான பள்ளி வாசல் ஏ.ஆர்.எம். இக்பால் ஹாஜியார் மாத்தளை முஸ்லிம்களுக்கு வழங்கிய அன்பளிப்பாகும். உள்பொத்தபிட்டியில் உள்ள குர்ஆன் மத்ரஸா கட்டிடத்திற்கு, ஜனாப் யூசூப் ஒரு கணிசமான தொகையைச் செலவு செய்துள்ளார். பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும் வேறு பல நல்ல காரியங்களுக்கும் மாத்தளை மாவட்டத்து முஸ்லிம் தனவந்தர் கள் அள்ளி அள்ளி வழங்கியுள்ளனர்.
ஹாஜி ஏ.எஸ்.எம். வஸிர், ஹாஜி எஸ்.எம். மன்சூர், ஹாஜி எம்.ஏ.எஸ்.எஸ். ஹமீத், ஹாஜி ஏ.ஏ.எம்.வை. மரிக்கார், உக்குவை பரீட் ஹாஜியார், புவக்பிட்டிய ஜனாப், எ.எஸ்.எம். சாலி போன்ற மாத்தளை மாவட்ட தனவந்தர்கள் பல நல்ல காரியங்களுக்கு உதவி யுள்ளனர்.
இவ்வாறு மாத்தளை மாவட்டத்தின் பொது வாழ்வின் சகல துறைகளிலும் முஸ்லிம்கள் பூரணமாக ஈடுபட்டு தம் பங்களிப்பை வழங்கியுள்ளதைக் காண்கின்றோம். மாத்தளை மாவட்டம் முஸ்லிம் களுக்கு நிம்மதியாக வாழ்வதற்கு, மகிழ்ச்சியாகத் திகழ்வதற்குத் தேவையான அத்தனை வசதிகளையும் வழங்கியுள்ளது. இதனை முஸ் லிம்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் மாத் தளை மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்குத் தம்மால் இயன்றதைச் செய்து தம் நன்றிக்கடனைச் செலுத்தியுள்ளார்கள் என் பது சமுதாயம் பெருமையுறத் தக்க அம்சமாகும்.
Page 76
;
1 구
அத்தியாயம் - 9
"தொழும் இடம்" அல்லது "வனக்கஸ்தலம்" என்பதைக்
குறிக்கும் மஸ்ஜித் என்ற சொல்லுக்குச் சமமான தமிழ்ச் சொல்லா கவே, "பள்ளிவாசல்" என்ற பதம் முஸ்லிம்களால் பயன்படுத்தப்படு கிறது. இறைவனைத் தொழும் இடம் கட்டிடமாகவே இருக்க வேண் டுமென்ற கட்டாயம் இஸ்லாத்தில் இல்லை; நஜிஸ் அற்ற, சுத்தமான எந்த இடமும் இறைவணக்கத்திற்கு ஏற்றதே. திறந்த வெளிகளில் கூடத் தொழுகையை நடத்தலாம். ஆனால் தொழுகைக்கு என பிரத்தி யேகமாக ஒரு கட்டிடத்தை எழுப்பிக்கொள்வது பலவகைகளில் பயன் உள்ளதாகும்.
தொழுகையில் ஈடுபட்டுள்ளோரை வெயில், மழை, குளிர் போன்ற இயற்கைப் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கவும், அவர்க வின் மனஓர்மையைப் பலப்படுத்தவும் கட்டிடங்கள் உதவும். மேலும் தொழுகைக் கென்று ஒரு கட்டிடம் எழுப்பப்பட்டால், அதனைச் சுத்தமாக வைத்துக்கொள்வது இலேசானதாகும்.
எனவேதான் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து பள்ளிவா சல்கள் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கின்றோம். ஹிஜ்ரத்தின்போது யத்ரிப் நகரத்திற்குள் நுழைவதற்கு முன், தான்தங்கிய "குபா" எனும் சிற்றூரில் நபிகள் நாயகம் (ஸல்) ஒரு பள்ளிவாசல் கட்டியதையும், மதீனாவுக்குப் போன ஒரு சில நாட்களில், அங்கே பள்ளிவாசல் கட்ட ஆரம்பித்ததும் இதற்குச் சான்றுகளாக உள்ளன. இதனைப் பின்பற்றி முஸ்லிம்கள் உலகத்தில் எப்பகுதிகளில் குடியேறினாலும், அங்கே தம்முடைய வனக்கங்களுக்காக பள்ளிவாசல்களை எழுப்புவதைத் தம்முடைய தலையாய கடமையாகக் கருதினர். அவ்வாறே செயற்பட வும் செய்தனர்.
இஸ்லாத்தில் கூட்டுத் தொழுகைக்குப் பெரும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவன் வீட்டில் தொழுவதைவிட, பள்ளிவாச வில் ஏனையோருடன் சேர்ந்து தொழுவது பன்மடங்கு நன்மைகளைத்
Page 77
150
தரக்கூடியது என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. "பள்ளிவாசலுக் குப் போவதும், வருவதும் அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்வதில் ஒன்றாகும்" (தபரானி) ஒரு முஸ்லிம் தூரத்தைக் கவனி மாது, மழை, வெயில், இருள், குளிர் என்று பாராது பள்ளிவாசலுக்குச் அசல்வதில் சிரத்தை காட்டவேண்டும் என்று இவ்ஹதீஸ்கூறுகின்றது. 'வசதியிருந்தும் பள்ளிவாசலுக்குச் சென்று தொழாதவன், எனது வழி முறையைப் பின்பற்றியவனாக மாட்டான்" என்று இறைத்தூதர் அரு னியுள்ளார்கள்.
எனவே - எங்கே குடியேறினாலும் அங்கே ஒரு பள்ளிவாசல் அமைப்பதை முஸ்லிம்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பொது வாக ஒரு முஸ்லிம் குடியேற்றத்தின் வரலாறும், அவ்வூர் பள்ளிவாச லின் வரலாறும் ஏறத்தாழ சம காலத்திலேயே ஆரம்பிக்கின்றன என்று கூறலாம்.
கூட்டுத் தொழுகையின் முக்கியத்துவத்தின் காரணத்தாலும், பள் ளிவாசலில் தொழுவதன் மேன்மையின் காரணத்தினாலும், அவசிய மேற்படும்போது ஒரே கிராமத்திலே ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிக ளைக் கட்டும் வழக்கமும் ஏற்பட்டது. பள்ளிவாசல்களைக் கட்டுவ தும் பள்ளிவாசல்களைக் கட்ட உதவுவதும் மிக மேன்மையான காரி பங்களாக கருதப்படுவதனால், பள்ளிவாசல்களைக் கட்டுவது சிரம மான காரியமாக இருக்கவில்லை.
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் மாளிகைகள் எனப்படுவத னால், முஸ்லிம்கள் பள்ளிவாசல்களை அழகாக கட்டுவதில் பெரும் சிரத்தை காட்டினர்; வீண் ஆடம்பரமும், அலங்காரமும் கூடாதென இஸ்லாம் கூறுவதனால், பள்ளிவாசல்களின் அமைப்பில் நாம் கண் களை உறுத்தும் படாடோபத்தைக் காண்பதில்லை. எனவே பள்ளிவா சல்கள் எளிமையானவையாகவும் அழகானவையாகவும் விளங்குவ தைக் காணலாம்.
இவ்வடிப்படைகளிலே மாத்தளை மாவட்டத்தில்,அவ்வவ் ஊர் சனத்தொகைகளுக்கேற்ப, அழகான, கம்பீரமான, பெரிய, சிறிய பள் ளிவாசல்கள்,தைக்காக்கள் பல கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
151
இவற்றுள் பல, ஊர்மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்டியவைக ளாகும். ஊர் பிரமுகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஊர்மக்களின் ஒத்து
ழைப்போடு கட்டியவை ஒரு சிலவாகும்; சில, தனிப்பட்டவர்களால்
கட்டப்பட்டவையாகவும் இருக்கின்றன.
இஸ்லாமிய சமூக வாழ்வில் பள்ளிவாசல் மிக முக்கியமான ஸ்தானத்தை வகிக்கின்றது. இஸ்லாமிய சமூகத்தின் ஆத்மீக தேவைக ளைப் பூர்த்தி செய்யும் வணக்கஸ்தலங்களாக பள்ளிவாசல்கள் விளங் கும் அதே நேரத்தில், அவை இஸ்லாமிய மக்களின் பிற சமூகத்தேவை களைப் பூர்த்தி செய்யும் ஸ்தாபனங்களாகவும் இயங்குகின்றன. மாத் தளை மாவட்டத்திலுள்ள பல பள்ளிவாசல்கள் இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் பல தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம்.
Page 78
59
குர்ஆன்ஒதிக்கொடுப்பதற்குவசதியானதணிஇடங்கள்இல்லாத ஊர்களில், அவ்வூர் பள்ளிவாசல்களே மாலை நேரங்களில் குர்ஆன் மத்ரஸாக்களாகவும் சேவையாற்றுகின்றன; பெரும்பாலானவை "பயான்கள்", தஃலிம் வாசிப்புகள் ஆகியவற்றின் மூலம் மார்க்க அறிவைப் பரப்புகின்றன. பெரும்பாலும் கிராமங்களிலே,பள்ளிவா சல்கள் இஸ்லாமிய நெறிமுறைகளை,இஸ்லாமிய சமூகம் மீறாவண் ணம் பாதுகாக்கின்றன.
மாத்தளை மாவட்டம் முழுவதிலுமே முஸ்லிம் சமூகம் அவ்வவ் வூர் பள்ளிவாசல்களின் பரிபூரணமான கட்டுபாட்டுக்குள் இருக்கின் றது என்று கூறமுடியாது. நகரங்களிலே பள்ளிவாசல்களின் கட்டுப் பாடு பலவீனமானதாகவே இருக்கிறது. ஆனால் இன்றும் பெரும்பா லான கிராமங்களில் பள்ளிவாசல்,சமூகத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பலமான ஸ்தாபனமாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இது பெருமை படக்கூடிய விடயமுமாகும்.
மார்க்க நெறிகளை மீறுவோர்மீது அபராதம் விதிக்கும் பள்ளிவா சல்கள் சில இன்றும் மாத்தளை மாவட்டத்தில் இருக்கின்றன. இவ் வாறு பள்ளிவாசல்கள் சமூகத்தவறுகளைக் கண்டிக்க, தண்டிக்ககூடிய நிலையில் இருப்பது பெரும் நன்மை பயப்பதாகும். இத்தகைய பள்ளி வாசல்கள், இஸ்லாமிய ஒழுக்க நெறிகள் பகிரங்கமாக மீறப்படுவ தைப் பெருமளவு தடுக்கின்றன என்று கூறலாம்.
இன்று மாத்தளை மாவட்டத்தில் இருபதுக்கு மேற்பட்ட ஜும்ஆபள்ளிவாசல்களும், ஏறத்தாழ இருபத்தைந்து தைக்காக்களும் இருக்கின்றன. இன்று பொதுவாக மாத்தளை மாவட்டத்தில் இருக் கும் அத்தனை பள்ளிவாசல்களும் தைக்காக்களும் சிறப்பாக இயங்கு கின்றனஎன்று கூறலாம். ஜ"ம்ஆ தொழுகைகளுக்கு மாத்திரம் இன்றி, ஜங்கால தொழுகைகளுக்கும் பள்ளிவாசல்களில் கணிசமான கூட்டம் தொழுகைகளில்,ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
பல வருடங்களுக்குமுன்னர்ஏனைய பிரதேசங்களில் போலவே, மாத்தளை மாவட்டத்திலும், பல்ஊர்ப்பள்ளிவாசல்களில் சில முதிய வர்களை மாத்திரமே காணக்கூடியதாக இருந்தது. இளைஞர்கள் ஒரு
153
சிலரே தொழுகையில் ஈடுபாட்டோடு இருந்தனர். ஆனால் அல்லாஹ் வின் பெரும் கிருபையினால் இன்று நிலை முற்றாக மாறிவிட்டது. இன்று மாத்தளை மாவட்டத்தில் உள்ள அத்தனை பள்ளிகளிலும் இளைஞர் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருவது எதிர்காலத்தைப் பற்றி ஒரு பெரும் நம்பிக்கையைத் தருகின்றது. கீழ்ே மாதிரிக்காக ஒரு சில பள்ளிவாசல்கள், தைக்காக்களைப் பற்றி சில விவரங்கள் தரப்படுகின்றன. ஸெய்ன் மெளலானாதைக்கா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வம்சத்தில் உதித்தவர்கள் என்று கருதப்படும் செய்யது லெய்ன் மெளலானா எனும் பெரியாரி னால் ஏறத்தாழ இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட லெய்ன்மெளலானாதைக்கா, மாத்தளைநகரத்தின்மத்தியில்அமைந் துள்ளது. தனிப்பட்ட ஒரு மார்க்கப் பெரியாரின் பெயரில் அழைக் கப்படும் பள்ளிவாசல்கள், தைக்காக்கள் மாத்தளை மாவட்டத்தில் ஓரிரண்டே இருக்கின்றன. எனவே இத்தகைய பெரியார் ஒருவரைப் பற்றி சற்று விரிவாக அறிதல் பயன் உடையதாகும்.
ஏறத்தாழ 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அரேபிய தீபகற்பத் தில் இருந்து இலங்கை வந்த ஒமர் மெளலானா எனும் பெரியார், வெலிகாமத்தில் வாழ்ந்த அப்துல்லா மெளலானாவின் ஏக புதல்வி யைத் திருமணம் செய்து வாழ்ந்தார்கள். தம்பதிகளுக்கு செய்யத் அப் துல் காதர் மெளலானா எனும் ஆண் குழந்தை ஒருவர் பிறந்தார்.
மார்க்கப்பிரச்சாரத்திற்காக இலங்கையின் பல பகுதிகளுக்கும் பிரயாணம் செய்த ஒமர் மெளலானா அவர்கள், கீழ் மாகாணத்தில் உள்ள திருகோணமலை, சோன்கவாடி”. எனுமிடத்தில் இறையடி சேர்ந்தார்கள். இவ்விடத்தில்தான் இவர்களின் ஸியாரம் இருக்கிறது: அப்துல் காதர் மெளலானா அவர்களுக்கு முஸ்தபா மெளலானா, யாஸின் மெளலானா, அஹமது மெளலானா, சக்காப் மெளலானா என நான்கு புதல்வர்கள் இருந்தனர். இவர்களில் முஸ்தபா மெளலா னாவின் திருப்புதல்வரே செய்யது லெயின் ம்ெளலானா எனும் பெரி யார் ஆவார்கள்.
Page 79
54
கஸாவத்தை ஆலிம் அவர்களிடம் மார்க்கக் கல்வி கற்ற ஸெயின் மெளலானா அவர்கள், சுமார் பன்னிரண்டு வருடங்கள் கெக்கிராவ கானகங்களில் "கல்வத்"தில் இருந்திருக்கிறார்கள். பின்னர்மாத்தளை, காலி, காத்தான்குடி போன்ற பகுதிகளில் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். இறைவணக்கத்திற்காகவும் தன்னுடைய மார்க்கப் பிரச்சார பணிக்காகவும் லெயின் மெளலானா அவர்கள் மாத்தளை யில் கட்டிய சிறியதைக்கா, இன்று மிகஅழகான கட்டிடமாக வளர்ச்சி பெற்று மாத்தளை நகருக்கு அழகு ஊட்டிக்கொண்டு இருக்கிறது.
மாத்தளை முஸ்லிம்களோடு மெளலானா அவர்கள் மிகநெருக்க மாகவும், அன்பாகவும் பழகியிருக்கிறார்கள். மெளலானா அவர்க ளின் இறைபக்தியும், உன்னதமான பண்புகளும், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களும் மாத்தளை மக்களை அவர்கள் பால் ஈர்த்தன. மாத் தளை முஸ்லிம் மக்களின் இதயங்களிலே அழியா இடம் பெற்ற மகானாக இப்பெரியார் திகழ்கின்றார்கள்.
1922ஆம் ஆண்டு இறையடி சேர்ந்த ஸெயின் மெளலானாஅவர்க ளின்ஸியாரம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மாவடிப்பள்ளியில் அமைந்துள்ளது. செய்யத் ஸெயின் மெளலானா மறைந்த பின்னர், அவர்களின் புதல்வரான சக்காப் மெளலானா அடிக்கடி மாத்தளை வந்து தைக்கா நிர்வாக வேலைகளையும் மார்க்கப் பணிகளையும் ஆற்றி வந்தார்கள்.
ஐவேளை தொழுகைககளுக்கும் கணிசமான அளவு மக்கள் இங்கு பிரசன்னமாகின்றனர். ரமழான் மாதத்தில் பெண்களுக்கு இங்கே தராவீஹ் தொழுகை நடத்தப்படுகிறது; அப்போது சிறப்பான பயான்களும் நடைபெறும். புகாரி மஜ்லிஸ் எர்ன்ற அமைப்பில் பல நாட்களுக்கு பயான்கள் நடத்தப்படுவது இப்பள்ளிவாசலின் ஒரு விஷேசமாகும்.
ஹனபி ஜும்ஆ பள்ளிவாசல்
இப்போது ஹனபி பள்ளி என்றழைக்கப்படும் இப்பள்ளி முன் னர் சேகுராத் பள்ளி என்றே அழைக்கப்பட்டது. அண்மைக்காலம்
155
வரை மிகச் சிறிய பள்ளியாகவே இருந்த இப்பள்ளி, ஹனபி மத்ஹ பைப் பின்பற்றிய தென்னிந்திய வியாபாரிகளால் கட்டப்பட்டிருக்க வேண்டும். இது ஏறத்தாழ இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
சேகுராவுத்தர் என்ற ஒருவர், அவருடைய பெயர் இப்பள்ளியு டன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்று சொல்லுகிற அள வுக்கு, இப்பள்ளியின் வளர்ச்சிக்குப்பங்களிப்பு செய்து இருப்பார், பெரும்பாலும் அவரே தனி ஆளாக இதைக் கட்டியிருக்கலாம். எனவே மக்கள் இதனை "சேவு ராவுத்தர் பள்ளி" என்று அழைத்திருப் பர். சேவு ராவுத்தர் என்ற பெயரே மறுவி, "சேகுராத்” என்று வந்தி ருக்க வேண்டும்.
ஏறத்தாழ இதே காலக்கட்டத்திலே ஹஸன் நெய்னா ராவுத்தர் என்ற ஒருவர், மாத்தளை டவுன் பள்ளியின் வளர்ச்சியில் பங்குபற்றுகி றார். எனவே இவரைப் போன்றே சேவுராவுத்தரும் வசதியுடன் வாழ்ந் தவராகவும் சமயப்பற்று மிக்கவராகவும் இருந்திருப்பார் என்று க்ருத (Մ)ւգպմ).
மாத்தளையில் வாழ்ந்த கூடுதலான இந்தியமுஸ்லிம்கள்.டவுன் பள்ளியுடனேயே தம்மை இணைத்துக்கொண்டனர். எனவே - சேகு ராவுத்தர் பள்ளி பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. ஆனால் 1946 ஆம் 47ஆம் ஆண்டுகளில் மேமன்பாய்மார்களின் தொகை மாத்தளை யில் அதிகரிக்க ஆரம்பித்தவுடன், இந்தப் பள்ளியும் வளர்ச்சிபெற ஆரம்பித்தது. ஹனபி மத்ஹபையே பின்பற்றிய மேமன்கள், தம்மை சேவு ராவுத்தர் பள்ளியுடனேயே கூடுதலாக இணைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். இதன்பின்னரே ஹனபி பள்ளி என்ற பெயர் வழக்கில் வர ஆரம்பித்தது.
சில வருடங்களுக்கு முன்னர் இப்பள்ளி உடைத்துக்கட்டப்பட் டது. இக்கட்டிட வேலைகளுக்கு அதிகமாக உதவியவர்கள் மேமன் முஸ்லிம்களே. இப்பள்ளிவாசல் கதீபாக பலர் சேவையாற்றியுள்ள னர். ஆரம்பகாலத்து கதீபாக கடமையாற்றியவர் மீராசா லெப்பை என்பவர் ஆவார்.
Page 80
S6
முஹம்மது மூஸின் ஆலிம் சாஹிப் எனும் பெரியார், மிக நீண்ட காலம் இங்கே கதீபாக பணியாற்றியுள்ளார். ஹம்ஸாட் இப்ராஹிம், செய்யத் முஹம்மது போன்ற ஆலிம்களும் இங்கே கடமையாற்றியுள் ளனர். 1961 ஆம் ஆண்டில் இருந்து அல்ஹாஜ் ஏ.ஏ.ஜுனைத் ஆலிம் அவர்கள் கதீப் பதவியை வகித்து வருகின்றார்கள். இந்தப் பள்ளிவாச லின் உயர்வுக்கு ஜுனைத் ஆலிம் அவர்களின் உழைப்பும் அவர் மக்க ளோடு உருவாக்கிக்கொண்ட நல்லுறவும் ஓரளவுக்கு காரணங்களாக இருக்கின்றன என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர். இப்பள்ளியின் வளர்ச்சிக்கு ஹாஜி ஏ.ஆர்.எம். இக்பாலின் பங்களிப்பு கணிசமானதா கும். நாலியாகனத்த ஜும்ஆ பள்ளிவாசல்
சுமார் நாற்பது குடும்பங்கள் வாழ்கின்ற இம்முஸ்லிம் கிராமத் துக்கு இப்பகுதியில் ஏகப்பட்ட நிலபுலன்களுக்கு உரிமையாளராக இருந்தவரும், 'முத்துவாப்பா ஹாஜியார்” என அழைக்கப்பட்ட வருமான மர்ஹ"ம் அல்ஹாஜ் எஸ்.எச்.முஹம்மத் அவர்கள் ஒரு பள்ளிவாசலை அமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் கிராமம் வளர ஆரம்பித்த போது, இப்பள்ளியில் இடவசதி போதாத நிலை ஏற்பட் டது. பள்ளியும் கிராமத்துக்குச் சற்று தூரத்திலேயே அமைந்திருந்தது. மார்க்கப்பற்றுள்ளவர்களாய் இருந்தோரும் அக்காலத்தில் ஒரு சிலரே கடும் மழை பெய்தால் பள்ளிக்குப் போவோர் குறைவு. இதனால் இக்கிராமத்தில் ஜூம்ஆ தொழுகை நடக்காமல் கழிந்த வெள்ளிக் கிழமைகளும் உண்டு.
இவ்வூரில் 1978 ஆம் ஆண்டு பாடசாலை அதிபராகக் கடமை யேற்ற ஜனாப் எம்.எச்.ஏ. ரஹீம் என்பவரின் பெருமுயற்சியினால், ஊருக்கு மத்தியில் ஒர் அழகிய பள்ளிவாசல் 1990 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அல்-மஸ்ஜிதுல் இப்ராஹிமியா எனப் பெயர் சூட் டட்பட்டு, 4-11-1990 திறக்கப்பட்ட இப்பள்ளிவாசலின் கட்டட வேலைகளுக்கு, மாத்தளை முஸ்லிம் தனவந்தர்கள் பெரிதும் உதவி யுள்ளனர். இவர்களுள் "மீஸான்கொம்பனி" உரிமையாளர்கள், எஸ். எம்.மன்சூர் ஹாஜியார், ஏ.ஆர்.எம்.இக்பால்ஹாஜியார் போன்றோர் பெரிய அளவில் உதவி இருக்கின்றனர். அதேபோல் இவ்வூரில் இயங் கும் குர்ஆன் மத்ரஸாவுக்கும் மாத்தளை முஸ்லிம் வியாபாரப் பெரு, மக்கள் உதவுகின்றனர் என்பது நோக்கற்பாலது.
57 தேவஹவ மஸ்ஜிதுல் அமீன் பள்ளிவாசல்
தேவாஹ"வ என்பது 1949ஆம் ஆண்டு ஒரு குடியேற்றத்திட்டத் தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு கிராமமாகும். 1949 ஆம் ஆண்டு இருபத்தொன்பது முஸ்லிம் குடும்பங்கள் இங்கு குடியேறின. இந்த கிராமத்திலே எவ்வாறு ஒரு பள்ளி உருவாக்கப்பட்டது என்ற விவரம் இக்கிராமத்தில் 1972 ம் ஆண்டு வெளியிடப்பட்ட "தேவாஹ"வ" என்ற நூலில் காணப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:
“தேவஹ"வ புலனவெவக் கிராமத்திற்கு பம்பரகட்டுபொத்த என்ற இடத்திலிருந்து வந்த முஸ்லிம் மக்கள் தமது ஜங்காலத் தொழு கையை ஆரம்பத்தில் ஒலைக் குடிசையிலே நடத்திக்கொண்டனர். பின்னர் பல மாதங்கள் செல்ல அவ்வோலைக் குடிசை மண் குடிசை யாக மாறியது.
ஏறக்குறைய ஐந்து வருடங்கள் இம்மண் குடிசையிலே தமது தொழுகையை நடத்திவந்தார்கள். பிறகு ஊர் ஜமாஅத்தார்கள் ஒன்று கூடி, தமது ஐவேளைத் தொழுகையை நடத்திக்கொள்ள நிரந்தரமான கட்டிடம் இல்லாத குறையைப் பற்றி பரஸ்பரம் கலந்துரையாடி, ஒரு முடிவுக்கு வந்தனர். அம்முடிவின் அடிப்படையிலே முதன் முதல் மாத்தளை மீஸான் ஹாஜியாரின் உதவியை நாடினார்கள். அவர்களு டைய உதவியுடனேயே இப்போதிருக்கும் பள்ளிக்குஅடிக்கல்நாட்டி னார்கள்.
பின்னர் 1955ஆம் ஆண்டிலிருந்து ஈழத்தின் பல பாகங்களுக்கும் இப்பள்ளிக்குரிய கட்டிட உதவிகளைப் பெற, ஊர்ஜமாஅத்தார்களில் முக்கியமானவர்கள் சென்று வந்தனர். அதன் பயனாக ஈ.எல்.ஹாஜி யார் அவர்களும் மாத்தளை சுண்ணாம்பு போரனை இப்ராஹிம் முத லாளி அவர்களும் மேலும் இவ்வூர் சுற்றிவரவுள்ள தனவந்தப் பெரி யார்களும் தம்மால் இயன்றவாறு இப்பள்ளிவாசல் கட்டிடத்திற்கு உதவிகளைப் புரிந்தனர். இறுதியாக 1962 ஆம் ஆண்டு இக்கட்டிட வேலைகள் பூர்த்தியாகின
Page 81
58
சவனவெளி ஜும்ஆ பள்ளிவாசல்
எலமல்பொத்த, மாதிப்பொல, சவனவெளி ஆகிய மூன்று கிரா மங்களிலும் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல்களில் காலத்தால் முந்தியது சவனவெளி ஜும்ஆ பள்ளியே. யெமன் தேசத்திலிருந்து வந்து, இப்ப குதியில் மார்க்கப் பணியில் ஈடுபட்ட ஒரு பெரியாருடன் தொடர்புப டுத்தப்படும் இப்பள்ளிவாசல், குறைந்தது நூற்றி அறுபது வருடம் தொன்மையானது என இவ்வூர் மக்கள் நம்புகின்றனர்.
1948ஆம் ஆண்டு மாதிப்பொல ஜும்ஆ பள்ளிவாசலும் அனேக மாக இதே காலக்கட்டத்தில் எலமல்பொத்த ஜும்ஆ பள்ளியும் கட் டப்படும் வரை சவனவெளி பள்ளிவாசலே இம்மூன்று கிராம முஸ் லிம் மக்களுக்கும் ஜும்ஆ பள்ளிவாசலாக விளங்கியது. நிக்ககொல்ல ஜும்ஆ பள்ளிவாசல்
1982ஆம் ஆண்டு வரை நிக்ககொல்ல ஜும்ஆ பள்ளியாக இயங் கிய பழைய பள்ளிவாசல், மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள மிகத் தொன்மையான பள்ளிவாசல்களில் ஒன்றாகும். 1898-ஆம் ஆண்டு தொன்மையான பள்ளிவாசல் என ஒரு பள்ளிவாசல் வர்ணிக் கப்படுமாயின், அது எந்த அளவு பழமையானதாக இருக்கும் என்பதை ஊகிக்கலாம்.
1898ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திரு. ஏ.ஸி.லோறியின் நூல், நிக்ககொல்ல ஜும்ஆ பள்ளிவாசலை மிகத் தொன்மையானது என்றே வர்ணிக்கிறது. சனத்தொகை பெருகியதால் பள்ளியைப் பெரிதாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதே வேளையில் பழைய பள்ளி அமைந்திருந்த இடமும் ஓரளவு பொருத்தமற்றதாக கருதப்பட்டது.
எனவே ஒரு புதிய இடத்தைத் தெரிவு செய்து, அவ்விடத்திலே புதிய பள்ளிவாசலைக் கட்ட ஆரம்பித்தனர். இவ்வூர் மக்கள் செய்த ஒரு புத்திசாலித்தனமான செயல், பழைய பள்ளியை உடைக்காமலே புதிய பள்ளியைக் கட்ட ஆரம்பித்ததாகும். 1982ஆம் ஆண்டு திறக்கப் பட்ட புதிய பள்ளியே, இப்போது ஜும்ஆ பள்ளியாக இயங்குகிறது. ஆனால் பழைய பள்ளியும் ஐங்காலத் தொழுகைக்கும் ஜனாஸா
159.
தொழுகைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் ஊரின் தொன்மையைக் கூறும் ஓர் அத்தாட்சியாகவும் அது விளங்குகிறது.
நமடகஹவத்தை ஜும்ஆபள்ளிவாசல்
கீர்த்தி சிறி ராஜசிங்கனின்ஆட்சியின்போது (1747-1782) ஸ்தாபிக் கப்பட்டதாகக் கூறப்படும் இக்கிராமம், எவ்வளவு தொன்மையா னதோ, அவ்வளவு தொன்மையாக இவ்வூர் பள்ளியும் இருக்க வேண் டும். பெருகிவரும் சனத்தொகைக்கு ஈடுகொடுக்கும் வகையில், நமட கஹவத்தை ஜ"ம்ஆ பள்ளிவாசல் ஏறத்தாழ 1950 ஆம் ஆண்டளவில் விஸ்தரிக்கப்பட்டது. முழுக்கிராமமுமே ஒன்று சேர்ந்து இப்பணிக்கு உதவியது. இப்போது மீண்டும் இப்பள்ளி புதுப்பித்து பெரிதாக கட் டப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிவாசலின் வளர்ச்சியிலும், கட்டிட வேலைகளிலும் இவ்வூர்ப்பிரமுகரான மர்ஹும் அல்ஹாஜ் உசைன் கண்டு அப்துல் ஹமீத் ஆரச்சியார் காட்டிய அக்கறை அலாதியானதாகும். தனது கடைசி மூச்சு வரை அவர் இந்த பள்ளி வாசலுக்காக உழைத்தார் என்றால், அது மிகையாகாது. அவரது மறைவுக்குப்பின்அவரது குடும் பத்தார் தொடர்ந்தும் இப்பள்ளிவாசலின் வளர்ச்சியில் அக்கறை காட் டுவது மகிழ்ச்சிக்குரியதாகும். ரஹீமிய்யா தைக்கா - மாத்தளை
மாத்தளையில் பிறந்து, வளர்ந்து,உயர்அரசாங்கப் பதவிவகித்து, பின்னர் கொழும்பில் குடியேறி வர்த்தகத்தில் ஈடுபட்ட ஜனாப் அப் துல் ரஹீம் முகம்மது கலாப், தான் பிறந்த மண்ணுக்கு, தன் ஊர் மக்களுக்கு வழங்கிய அன்புப் பரிசு கொங்காவலை முஸ்லிம்மைய வாடிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் ரஹீமிய்யா தைக்காவா கும். மாத்தளை மாவட்டத்திலே ஒரு தனி மனிதரால் கட்டப்பட்டு "வக்ப்" செய்யப்பட்ட முதல் பள்ளி இதுவே.
முன்னர் கொங்காவலை முஸ்லிம் மையவாடிக்கு அடக்கத்திற் காக கொண்டு செல்லப்பட்ட் அத்தனை ஜனலாக்களுக்கும் தொழுகை கொங்காவலை ஜும்ஆ பள்ளிவாசலிலேயே நடத்தப்பட்
Page 82
60
டது. ஆனால் இப்போது ரஹீமிய்யா தைக்காவிலும் ஜனாஸாத் தொழுகை நடத்தப்படுகிறது. ஸாஹிராக் கல்லூரி பள்ளிவாசல்
இப்பள்ளி 1980-களில் கொழும்பு பி.எஸ்.கே.வி. பல்லாக் லெப்பை ஸ்தாபனத்தாரால் ஸாஹிராக் கல்லூரி வளாகத்துக்குள் கட் டப்பட்டது. மாத்தளை மாவட்டத்திலே பாடசாலை மாணவர்களின் சமயத் தேவைகளுக்கென கட்டப்பட்ட முதல் பள்ளிஇதுவே. இப்பகு தியிலே வேறு பள்ளிகள் இல்லாதபடியால் இப்பள்ளி இப்பிரதேச முஸ்லிம் மக்களுக்குப் பெரிதும் உதவுகின்றது எனலாம். மாத்தளை டவுன் ஜும்ஆ பள்ளிவாசல்
மாத்தளை நகரத்தின் மத்தியிலே அமைந்து, நகரத்துக்கு அழகை யும் சோபையையும் வழங்கிக்கொண்டிருக்கும் மாத்தளை டவுன் ஜும்ஆ பள்ளி, வியாபாரத்தின் நிமித்தம் மாத்தளைக்கு வந்து குடியே றியதென்னிந்திய வர்த்தகர்களால், ஏறத்தாழ 1870-களில் கட்டப்பட்ட ஒரு பள்ளிவாசலாகும். கண்ணியத்துக்கும் மரியாதைக்குமுரிய பல பெரும் ஆலிம்களோடும் பெரியார்களோடும் நெருங்கிய தொடர்பு டைய இப்பள்ளிவாசலின் வரலாற்றில், முதன் முதலாக குறிப்பிடப் பட்டுள்ளவர்கள், மாபெரும் மார்க்க ஞானியும் இறை நேசஞ்மான தைக்கா சாஹிப் அப்பா வலியுல்லா அவர்களின் மருகரும், கலீபாவு மான செய்ஹ9 காமில் சுல்தான்.அப்துல் காதர் ஹாஜியார் அவர்களா chunrif.
இந்தப் பள்ளிவாசலில் தொழுகைகளை நடத்திக் கொண்டுஇதே பள்ளியை மையமாக வைத்து, மாத்தளைப் பிரதேசத்தில் பரந்து வாழ்ந்த முஸ்லிம்களின் மார்க்க தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு, மார்க்க நலன்களைக் கவனித்துக் கொண்டு, இங்கு வாழ்ந்த இப்பெரியார் 1876 ஆம் ஆண்டளவில் மாத்தளையில் வபாத்தானார் 456.
ஹாபிஸ் முகம்மது சுலைமான் லெப்பை ஆலிம் அவர்களின் புதல்வர் கதீப் முஹம்மது சம்சுதீன் லெப்பை ஆலிம் எனும் பெரியார் 1902 ஆம் ஆண்டுவரை இப்பள்ளிவாசலின் தலைமைப் பொறுப்பில்
16
இருந்தார்கள். மர்ஹ9ம் மொன்னா அஹ்மது இப்னு உவைசுனா லெப்பை காஹிரி, ஹாஜி, சேநா முதலியார் இப்னு உவைசுனா லெப்பை காஹிரி ஆகிய இரு பெரியார்களும் வர்த்தகத்தில் ஈடுபட் டுக்கொண்டிருந்த அதே வேளையில், இப்பள்ளிவாசலின் உயர்வுக்கள் கவும், இங்கே வாழ்ந்த முஸ்லிம்களின்சமய வளர்ச்சிக்காகவும் அரும் பாடு பட்டுள்ளனர்.
இவ்விருவரதும் அருங்குணங்களாலும் சமயப் பணிகளின் மேன் மையினாலும் கவரப்பட்ட, கஸாவத்தை ஆலிம் அப்பா அவர்கள், இவ்விருவர்மீதும் அரபு மொழியில் ஒரு முனாஜாத்து பாடியுள்ளதாக கூறப்படுகிறது.
இப்பள்ளியின் ஜமாஅத்தினர்களின் தொகை குறைவாக இருந்த காலத்தில், இப்பள்ளியின் சூழலில் வீடுகள் அதிகம் காணப்படாத காலத்தில், பள்ளிவாசலின் பின்னால் இருந்த நிலம் மையவாடியாக பாவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1894ஆம் ஆண்டளவில் மையவாடிக் காக மந்தண்டாவளையில் நிலம் வாங்கப்பட்ட பின்னர், பள்ளிவாச லோடு இருந்த நிலத்தை மையவாடியாக பயன்படுத்தும் வழக்கம் நிறுத்தப்பட்டு, மந்தண்டாவளை நிலம் மையவாடியாக பயன்படுத் தப்படுகிறது.
1950 -களில் கூட இந்தப் பள்ளிவாசல் சிறியதாகவே இருந்தது. உள்பள்ளி ஐம்பது அடி நீளமும் முப்பது அல்லது முப்பத்தைந்து அடி அகலமும் உடையதாய் இருந்திருக்கும் நீளவாக்கில் ஐந்து, ஆறடி அகலமான தாழ்வாரம்) அகலவாக்கில் ஏறத்தாழ பதினைந்து அடி நீளமான ஒரு வெளிப்பள்ளி, பள்ளிவாசல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு முகப்பு அவ்வளவே; இதுதான் அன்றைய டவுன் பள்ளி.
இக்காலக்கட்டத்திலே சனத்தொகைப் பெருக்கத்தின் காரணத்தி னாலும், வேறு காரணங்களாலும் இப்பள்ளியை விஸ்தரிப்பதைப் பின்போட முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. மர்ஹம்ை மீஸான்ஹாஜி யார் அவர்களின் தலைமையில், பள்ளி ஏறாத்தாழ் உடைத்துக் கட்டப் பட்டது என்று சொல்லக்கூடிய அளவிற்கு பாரிய திருத்தங்கள் செய் யப்பட்டன. அழகான, கம்பீரமான ஒரு முகப்பு அமைக்கப்பட்டது.
இது கட்டப்பட்ட காலக்கட்டத்திலே வெளிப்படையாக சொல் லப்படாவிட்டாலும், செலவின் பெரும்பகுதியை, ஏறத்தாழ முழு
Page 83
69.
செலவினையும் மீஸான்ஹாஜியார்அவர்களே ஏற்றுக்கொண்டார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகவே இருந்தது. இது மீஸான் ஹாஜியார் அவர்கள் மாத்தளைக்குச் செய்த பெரும் சேவையாகும்.
டவுன் பள்ளியும் மீஸான்ஹாஜியார் அவர்களின் ஜனாஸாவைப் பள்ளி நிலத்திலே பள்ளிக்கு மிக அருகாமையில் நல்லடக்கம் செய்வ தற்கு இடமளித்து, தன்நன்றியுணர்வைக் காட்டியது. மர்ஹஅம் கே.ஏ. ரஸாக் அவர்களும், மர்ஹஜூம் ஹஸன் அப்துல் காதர் அவர்களும், மீஸான்ஹாஜியார்அவர்களுக்குப் பள்ளியைப் புணர்நிர்மானம் செய் யும் தூயபணியில் பெரிதும் உதவினார்கள். பின்னர் மர்ஹஅம் எச்.எம். இஸ்மாயில் ஹாஜியார் அவர்களின் தலைமையில் மேலும் இப்பள்ளி விஸ்தரிக்கப்பட்டது.
1970ஆம் ஆண்டு வரை காயற்பட்டணத்தைச் சேர்ந்த ஆலிம்களே இப்பள்ளிவாசலின் கதீப்களாக கடமையாற்றினர். கிட்டத்தட்ட 1940 ஆம் ஆண்டிலிருந்து 1950ஆம் ஆண்டுவரை மர்ஹலிம் அப்துல் ரஹீம் லெப்பை ஆலிம் அவர்கள் கதீபாக கடமையாற்றினார்கள். இவர்களு டைய குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இன்றும் மாத்தளையில் வாழ்வ தோடு, பள்ளியின் வளர்ச்சியிலும் தொடர்ந்து அக்கறைகாட்டி வரு கின்றனர்.
1950-1965 கால்ப்பகுதியில் கதீபாக கடமையாற்றிய மக்கி ஆலிம் சாஹிப் அவர்களும், மாமூனா லெப்பை ஆலிம் அவர்களும் குறிப்பி டத்தகுந்தவர்கள் ஆவர். மக்கி ஆலிம்ஸா அவர்கள் தமது மார்க்க ஞானத்தாலும், பழகும் தன்மையாலும்ஜமாஅத்தினரிடம் பெருமதிப் பைப் பெற்றார்கள். மாமூனா லெப்பை ஆலிம் அவர்கள் பெரும் பேச்சாளர் அல்லர்; ஆனால் அவர்களைப் பார்க்கும் போதே ஒரு சாலிஹான மனிதரைப் பார்க்கின்றோம் என்ற எண்ணம் தானாகவே மனதில் தோன்றும், அளந்து பேசுவார்; ஆனால் ஆழமான அறிவுடை யவர்.
1965-1970 காலப்பகுதியிலே சுல்த்தான் ஆலிம் சாஹிப் அவர்கள் கதீபாக கடமையாற்றினார்கள். கண்ணியமான தோற்றம், யாரையும் வசீகரிக்கும் பேச்சு, மனதைக் கவரும் குணநலன்கள், இவை அனைத் தும் ஒருங்கே பெற்றிருந்த சுல்த்தான், ஆலிம் சாஹிப் அவர்கள் ஒரு தலைமுறையின் பெரும்பகுதியினரைப் பள்ளியோடு இணைத்தவரா Gስ፤{Tበ፲.
63
மக்களோடு குறிப்பாக இளைஞர்களோடு மிக அழகிய முறை யிலே பழகி, அவர்களைப் பள்ளிக்கு வரச் செய்த இவ் ஆலிம் அவர் களை, டவுன் பள்ளிஜமாஅத்தினர் எளிதில் மறந்துவிடமாட்டார்கள்.
பெரும் ஆலிம்கள் நிறைந்த ஒரு குடும்பத்திலே பிறந்த மர்ஹஜூம் கவுஸ் ஆலிம் அவர்கள் தம் பேச்சுவன்மையினாலும், ஆழமான அறி வினாலும் மக்கள் மத்தியில் பெரும் கெளரவத்தைப் பெற்றார்கள். இப்பள்ளிவாசலின் கதீபாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர் இவரே. தற்போது அல்ஹாஜ் ஏ.எஸ்.எம்.சக்கரிய்யா மெளலவி அவர் கள் வெகு சிறப்பாக தன் கடமைகளைச் செய்து வருகிறார்கள்.
தராவீஹ் தொழுகையிலே திருக்குர்ஆன் முழுவதையும் ஒதி தொழுவிக்கும் வழக்கம்மாத்தளை மாவட்டத்திலே முதல்முறையாக டவுன் பள்ளியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. முதன் முறையாக அவ்வாறு மாத்தளையில் தொழுவித்தவர்கள் காயற்பட்டணத்திலே ஒர் உயர் குடும்பத்திலே பிறந்த ஹாபிஸ் இஸ்மாயில் ஹாஜியார் அவர்களாவார்கள். முதிர்ந்த வயதிலும் கால் கடுக்கத் தொழுவித்தார் கள்; ஆனால் அதற்காக அவர் கால் காசு பெற்றதில்லை.
கொழும்பு, கண்டி பள்ளிவாசல்களில் போல அடிக்கடி குத்பா பேருரைகளை வழங்க, தகுதிவாய்ந்த, பிற ஊர் உலமாக்களை வரவ ழைக்கும் வழக்கம் இப்பள்ளியில் இருப்பது சிறப்பான ஒரு விஷயமா கும். மாத்தளை மக்கள் மத்தியில் மார்க்க அறிவு வளர்வதற்கு டவுன் பள்ளி செய்யும் இச்சேவை மகத்தானதாகும்.
டவுன் பள்ளிவாசல் நிர்வாகக் குழு உறுப்பினர்களான அல்ஹாஜ் அஸ்வர் , ரஸாக், அல்ஹாஜ் எஸ்.எம்.மன்சூர், அல்ஹாஜ் எம்.கே.யூசூப், அல்ஹாஜ் எம்.ஜியாவுத்தீன் மொஹிதீன் ஜனாப் எஸ்.எம்.அபுல் ஹஸன் ஆகியோர் இப்பள்ளியை மிகச் சிறப்பாக நடத்துவதோடு, இப்பள்ளியின் எதிர்கால வளர்ச்சியையும் மனதில் கொண்டு இப்பள்ளியோடு இருக்கும் கட்டிடத்தையும் பெரும் தியா கங்களுக்கு மத்தியில், பல இலட்சங்களைக் கொடுத்து வாங்கியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.
Page 84
64
1992ஆம் ஆண்டு இப்பள்ளிவாசலில் ஆரம்பிக்கப்பட்ட மத்ரஸா அல்ஹாஜ் சக்கரியா மெளலவி அவர்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மாபேரிய ஜும்ஆ பள்ளிவாசல்
மாத்தளை மாவட்டத்தில் உள்ள மிகத்தொன்மையான பள்ளிவா சல்களில் ஒன்றாக , மாபேரிய ஜும்ஆ பள்ளிவாசல் கருதப்படுகின் றது. இப்பள்ளிவாசல் மாருக்கோண முதியான்ஸே என்பவரால் கட் டப்பட்டது என 1898ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட திரு. ஏ.ஸி.லோ றி யின் நூல் கூறுகிறது. மாருக்கோன முதியான்ஸே என்பது ஒரு முஸ்லிம்பிரமுகரின் கெளரவப்பட்டமாக இருக்கலாம். மானாம்பொ டைக் குளத்தைக் கட்டியவரும் இவரே என்றபடியால், இவர் ஆட்சி யாளர்களோடு நெருங்கிய தொடர்பு உள்ளவராக இருந்திருக்க வேண் டும் என்பது புலப்படும்.
இப்பிரதேசத்தில் கணிசமான அளவு முஸ்லிம்கள் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால்தான், இத்தகைய ஒரு செல்வாக்கு முஸ்லிம்களுக்குக் கிடைத்திருக்கும் என்று கருதுவது பிழையானதல்ல. இவ்வாறு மாருக் கோன முதியான்ஸே என்பவருக்கு முன்னரே இப்பகுதியின் மூத்த கிராமமானமாபேரியில் முஸ்லிம்கள் இருந்திருப்பர்என்றால், மாருக் கோன முதியான்லே பள்ளி கட்டுவதற்கு முன்னர்ே அக்கிராமத்தில் மண்ணால் கட்டப்பட்ட ஒரு சாதாரண பள்ளியாவது இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பலாம்.
1635ஆம் ஆண்டு மாத்தளை உபராச்சியத்தின் அரசனாக நியமிக் கப்பட்ட விஜயபால மன்னரின் காலத்தில் வாழ்ந்தவர் மாருக்கோன முதியான்ஸே என்பவர். எனவே, மாபேரிய ஆரம்ப பள்ளி எவ்வளவு தொன்மையானதாக இருக்கும் என்பதை ஊகிக்கலாம். ஆரம்பகாலங் களில், மானாம்பொடை, மாருக்கோன, உள்பொத்தபிட்டி, வரக்கா முற போன்ற ஊர்களிலிருந்து மக்கள் ஜும்ஆ போன்ற தொழுகை களுக்கு மாபேரிய பள்ளிக்கே வந்திருக்கின்றனர் என்று மாபேரிய கிராமத்தில் வசிக்கும் பலரும் கூறுகின்றனர். மானாம்பொடை, உள் பொத்தபிட்டி, வரக்காமுற, மாருக்கோன போன்ற ஊர்களில் இருப்ப வர்களும் இக்கூற்றை ஏற்றுக்கொள்கின்றனர்.
65
மாபேரிய பள்ளிவாசல் நிதுல்கஹகொட்டுவ எனும் பகுதிக்கும் மாபேரிய எனும் பகுதிக்கும் இடையே ஒடுகின்ற சுதுகங்கை எனும் ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. ஏறத்தாழ நாற்பது அடி நீளமும் முப்பது அடி அகலமும் கொண்டிருந்த இப்பள்ளிவாசலுக்கு முகப்பு ஒன்றும் இருக்கவில்லை. சாதாரண ஒரு மண்டபம் போலவே கட்டப் பட்டிருந்தது. உள்ளே "மிம்பர்" எனும் பிரசங்கமேடை அமைக்கப் பட்டிருந்தது. தூண்கள் சுமார் ஐந்து அடி சுற்றளவு உடையனவாகவும் சுவர்கள் இரண்டு அடிஅகலம் கொண்டவையாகவும் இருந்தன. கூரை "ரட்ட உளு" என்றழைக்கப்பட்ட ஒடுகளினால் வேயப்பட்டிருந்தது.
பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்பட்டிருந்த சலாகைகள், கதவு கள், கதவு நிலைகள் போன்றவை இப்பள்ளிவாசலின் தொன்மையை நிரூபிப்பனவாக இருந்தன. தொழுகைக்கான சுத்தங்களைச் செய்வ தற்கு இப்பகுதி முஸ்லிம்கள், பெரும்பாலும் ஆற்றையே பயன்படுத் தியுள்ளனர். இதன்காரணமாக சுமார்நாற்பதுஅடி உயரமானபடிக்கட் டுகளை ஆற்றுக்கும் பள்ளிவாசலுக்கும் இடையில் அமைத்துள்ளனர். தனித்தனிக் கற்களால் ஆன இப்படிக்கட்டுகள் இன்றும் உள்ளன. இப்படிக்கட்டும் இப்பள்ளிவாசலின் தொன்மையை உறுதிப்படுத்து கிறது.
புதிய பள்ளிவாசல் புதியதீோர் இடத்தில் 1964ஆம் ஆண்டு கட் டப்பட்டது. அக்காலத்திலேயே இப்பள்ளியைக் கட்டுவதற்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது. இப்பள்ளிவாச லுக்கு ஊர்மக்களின், அதுவும் விசேஷமாக பெண்களின் பங்களிப்பு குறிப்பிடக்கூடியதாக இருந்திருக்கிறது. அடித்தளம் அமைப்பதற்காக ஊர் ஆண்கள் வெட்டியிருந்த மண்ணைஇரவில் பெண்கள் மாத்திரம் போய் நின்று அப்புறப்படுத்தி இருக்கின்றனர்.
ஒவ்வொரு வேளையிலும் சமையலுக்காக எடுக்கும் அரிசியில் ஒரு பிடியைச் சேமித்து வைத்து, மாதமுடிவில் சேர்ந்த அரிசி முழுவ தையும் பள்ளிக்குக் கொடுத்து உள்ளார்கள். சகல வீடுகளிலும் இச்சே மிப்பு நடைபெற்று இருக்கின்றது. பணத்தால் உதவ முடியாத மக்கள் தென்னை, பலா, கமுகுபோன்ற மரங்களையும் வேறு பொருட்களை யும் கொடுத்துதவியுள்ளனர்.
Page 85
66
எம்.ஸி.எம்.ஹனீபா ஹாஜியார் ஏ.எம்.ஹாஷிம் ஹாஜியார், எம்.எஸ்.எம்.இப்ராஹிம் ஹாஜியார், எம்.எஸ்.எம்.அப்துல்லா ாஜியார் போன்றோர் இப்பள்ளிக்குக் காணிகள் வழங்கி உள்ளனர். மாத்தளையில் வாழ்ந்த பெரும் ஆலிம்களில் ஒருவரான மர்ஹஅம் அல்ஹாஜ் ஏ.எம்.முகம்மது இஸ்மாயில் மெளலவி அவர்கள் மாத் தளை நகரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை இப்பள்ளிக்கு "வக்ப்" செய் துள்ளார்கள். இன்றும் மாருக்கோன, பரகஹவெல, நிதுல்கஹகொட் டுவ, மாபேரிய ஆகிய நான்கு கிராமங்களுக்கும் மாபேரிய பள்ளிவா சலேஜும்ஆ பள்ளியாக விளங்கி வருகின்றது.
கொங்காவலை ஜும்ஆ பள்ளிவாசல்
கொங்காவலை பள்ளிவாசலே மாத்தளை நகரத்தில் அமைந் துள்ள பள்ளிவாசல்களில் மிகத் தொன்மையானது என்பதைப் பற்றி எவ்விதமான கருத்து வேற்றுமையும் இல்லை. ஆனால் மாத்தளையில் வாழ்கின்ற ஒரு சில முஸ்லிம் பிரமுகர்கள் கொங்காவலை பள்ளிவா சல் இன்றிருக்கும் இடத்தில் கட்டப்படுவதற்கு முன்னர், மெக்டோ வல்கோட்டைக்கு அருகில், அதாவது இன்று விஜயா கல்லூரிஅமைந் துள்ள இடத்துக்கு அண்மையில் ஒரு பள்ளி இருந்ததென்று கூறுகின்ற னர்.
மாத்தளைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் பண்டாரப் பொல எனும் கிராமத்தில் வாழ்ந்த மர்ஹஅம் காமில் மொஹொத்தார் எனும் மலாய இன முஸ்லிம் சகோதரர் ஒருவர் மாத்தளை முஸ்லிம் பிரமுகர்கள் சிலரின் முன்னிலையில் 1976ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி எழுத்து மூலம் செய்துள்ள ஒரு பிரகடனத்தில், தற்போது காணப்படும் கொங்காவலை ஜும்ஆ பள்ளி கட்டப்பட்டி ருக்கும் நிலத்தின் உரிமையாளர்கள் மொஹத்தார், எனும் மலாய முஸ்லிம் குடும்பத்தவர்கள் என்றும், இப்பள்ளியைக் கட்டியவர் முஹம்மது ஹஸன்அஜ"னுன்எனும் மலாயச்சகோதரர்ள்ன்றும்தான் கேள்விப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
பள்ளிவாசல் கிட்டத்தட்ட 1867ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டி ருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜனாப் காமில், 1938
67
ஆம் ஆண்டு மர்ஹஜூம் அல்ஹாஜ் அப்துல் வஹாப் ஆலிம் சாஹிப் அவர்களும் மர்ஹஅம் அல்ஹாஜ் செய்யது முகம்மது ஆலிம் அவர்க ளும், செய்யது முகம்மது ஆலிம் அவர்களின் புதல்வரான மர்ஹ9ம் ஹாஜி எஸ்.எம்.ஏ.முகுத்தார் அவர்களும்பாபாஜெயின் மொஹொத் தார் என்பவரின் வீட்டுக்குச் சென்று, பள்ளி காணியை "வக்ப்" செய் யப்படவேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூற, பெரும் உவகை யோடு இக்காணி "வக்ப்" செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
கொங்காவலை பள்ளிவாசல் மலாய முஸ்லிம்களால் கட்டப்பட் டது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாகும். இருப தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மலாயச்சகோதரர்கள் இப்பள்ளியின் நிர்வாகத்தில் பெரும் பங்கு வகித்திருக்கின்றனர். இந்த வகையில் சிந்திக்கும் போது, மர்ஹ9ம் காமில் மொஹொத்தார் அவர்களின் பிரகடனம், கொங்காவலை பள்ளிவாசல் கட்ட்ப்படுவதற்கு முன்னர், ! மாத்தளையில் வேறு ஒரு பள்ளி அல்லது பள்ளிகள் இருந்திருக்கலாம் என்ற கருத்துக்கு வலுவூட்டுகிறது.
மெக்டோவல் கோட்டை கட்டப்பட்டிருந்த பிரதேசத்தில்ே ஒரு பள்ளி இருந்தது என்ற கருத்தும் உதாசீனப்படுத்தப்படக்கூடியதல்ல. 1818ஆம் ஆண்டு கண்டிக்கலகத்தை அடக்கியப் பின்னர், ஆங்கிலேயர் கண்டியைச் சுற்றி ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த கோட்டைகளின் பாதுகாப்புக்காக ஏராளமான போர்வீரர்களை நிறுத்தினர். இக்கோட் டைகளில் பெரும்பாலானவை மலேரியாபிரதேசங்களிலே அமைந்தி ருந்ததனால், ஒருசில ஆங்கிலேய வீரர்களையே இவற்றில் நிறுத்தி னர். பெரும்பான்மையான வீரர்கள் மலாய முஸ்லிம்களாகவே இருந் தனர்.
இத்தகைய கோட்டைகளில் ஒன்றே, மாத்தளையில் அமைந்தி ருந்த மெக்டோவல் கோட்டையாகும். ஏனைய கண்டிப் பிரதேசக் கோட்டைகளில் போலவே, மெக்டோவல் கோட்டையிலும் பல மலாய் வீரர்கள் இருந்திருப்பர். ஆரம்பக்கால மலாய மக்கள்மதத்தில் குறிப்பிடத்தகுந்த ஆர்வம் காட்டினார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்
Oslo)).
Page 86
68
எனவே மெக்டோவல் கோட்டையில் இருந்த மலாய் வீரர்கள் தமது தொழுகைகளுக்காக கோட்டைக்கு அருகாமையில் ஒரு பள்ளி வாசலை அமைத்திருக்கலாம். இதில் ஊர் முஸ்லிம் மக்களும் தொழு திருக்கலாம். "எங்கெல்லாம் மலாயர் காவற்படை இருந்ததோ, அங் கெல்லாம் அநேக பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன". என்று மலாய ரைப் பற்றிய ஒரு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது சிந்தனைக்குரியதா கும். ஆகவே மெக்டோவல்கோட்டைக்கு அருகே ஒரு பள்ளி இருந்தி ருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.
ஆரம்பக் குடியேற்றங்கள் நிகழ்ந்த காலத்திலேயே மாத்தளை முஸ்லிம்கள் தமக்கென பள்ளிவாசல்களை அமைக்கவில்லையா அல் லது அவை பற்றிய சரியான தகவல்களை இன்னும் நாம் பெற்றுக் கொள்ளவில்லையா அல்லது ஆதியிலிருந்தே இதே இடத்திலேயே ஒரு பள்ளிவாசல் இருந்திருக்குமா என்ற விவரங்கள் ஆராயப் பட வேண்டியவையாகும்.
எது எப்படி இருந்தபோதிலும், கொங்காவலை பள்ளிவாசல் இப்போது இருக்கும் இடத்திலேயே, நீண்ட காலமாக இருந்து-வந்தி ருக்கிறது என்பதில், எவ்வித சந்தேகமுமில்லை. 1898 ஆம் ஆண்டு இப்பள்ளி கொங்காவலையிலேயே இருந்தது என்பதற்கு ஏ.ஸி.லோ றியின் நூல் ஆதாரமாக இருக்கிறது. இந்தப் பள்ளி பல கதீப்மார்க ளைக் கண்டிருக்கிறது. கதீப்களின் எண்ணிக்கை ஒரளவிற்கு இப்பள்ளி யின் தொன்மையை உணர்த்தும். சுமார்முப்பது வருடங்களுக்குமேல் அல்ஹாஜ் புகாரி ஆலிம் அவர்கள் தொடர்ந்து கதீபாக கடமை ஆற்றி னார்கள். அவர்களுக்கு முன் அப்துல்கழர் லெப்பை அவர்கள் நீண்ட காலம் கதீபாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு முன், மு.க. ஆதம் லெப்பை ஆலிம் அவர்கள் ஏறத்தாழ 1924 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டுவரை கதீபாக இருந்திருக்கின்றார்கள்.
ஆதம் லெப்பைக்கு முன் அப்துல் கபூர் லெப்பை அவர்களின் மூத்த சகோதரரானஅப்துல் கப்பார்லெப்பை அவர்கள் கடமையாற்றி யுள்ளார்கள். அப்துல் கப்பார் லெப்பைக்கு முன் அவரது தந்தையா ரான அஹமது லெப்பை அவர்கள் கதீபாக சேவையாற்றியுள்ளார்கள்.
69
அஹமது லெப்பைக்கு முன்னர்அவரது தந்தையான வாப்பு லெப்பை கதீபாக இருந்துள்ளார்கள்.
1872 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி வாப்பு லெப்பை கதீப் மகன் அஹமது லெப்பை, ஒரு காணி உறுதிப் பத்திரத்தில் சாட்சியாக கையொப்பமிட்டுள்ளார். இது வாப்பு லெப்பை 1872ஆம் ஆண்டிலோ அதற்கு முன்னரோ கதீபாக இருந்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகின்றது. வாப்பு லெப்பை கொங்காவலை பள்ளியில் தான் கதீபாக இருந்திருக்கின்றார். எனவே 1871 ஆம் ஆண்டிலும் கொங்காவலை பள்ளி, இப்போது இருக்கும் இடத்திலேயே இருந் துள்ளது என்பது விளங்குகிறது.
வாப்பு லெப்பைக்கு முன்கருத்தம்பி லெப்பை என்பவர்கதிபாக இருந்துள்ளார்கள். இவர் வாப்பு லெப்பையின் தந்தையாரா என்பது தெரியாது. இவரும் கொங்காவலை பள்ளியில் கடமையாற்றியவரே. மு.க.ஆதம் லெப்பை அவர்கள் கதீபாக கடமையாற்றிய காலத்திலே, அஹமது லெப்பை அவர்களின் இன்னொரு புத்திரரான அப்துல்காதர் லெப்பை அவர்களும் "கதீபாக" இருந்துள்ளார்கள்.
அந்தக் காலத்தில் கொங்காவலை பள்ளிவாசலில் சம காலத்தில் இரண்டு லெப்பைமார்கள் கதீபாக இருக்கும் வழக்கம் இருந்துள்ளது. ஒருவர் பள்ளிவாசல் கடமைகளைக் கவனித்தால், மற்றவர் ஊர்சம்பந் தமான மார்க்க விஷயங்களை கவனித்து வந்து உள்ளார். தேவையான சந்தர்ப்பங்களில் "ஊர் லெப்பை" பள்ளிவாசல்களில் தொழுகை
களையும் நடத்துவார்.
அப்துல் காதர் லெப்பையின் மகன் க.அ.அம்தூன் லெப்பை அவர்கள் தன் தந்தைக்குப் பின் ஊர் லெப்பையாக கடமையாற்றியுள் ளார்கள். 1930ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்20ஆம் திகதிகைச்சாத்திடப் பட்டுள்ள ஒரு காணி உறுதிப்பத்திரம் மர்ஹஅம் அம்தூன் லெப்பை அவர்களை கதீப் என்றே வர்ணிக்கின்றது.
Page 87
70
1950-களில் சிறியதாக இருந்த இப்பள்ளி, இன்று மிகப்பெரிய, மிக அழகான, பள்ளியாகக் காட்சியளிக்கிறது. இலங்கையிலே கூடுத லான சொத்துக்கள் உள்ள பள்ளிகளில் ஒன்றாகவும் இது கருதப்படுகி |ID51
இந்தப் பள்ளியிலே ஒரு கிதாபு மத்ரஸா இயங்குகிறது. இதில் ஒதிய பல மாணவர்கள் மெளலவிபட்டம் பெற்று வெளியேறி, இலங் கையின் பல பகுதிகளிலும் சேவையாற்றிக் கொண்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிட பட வேண்டிய அம்சமாகும்.
கந்தநுவிர ஜும்ஆ பள்ளிவாசல்
இது ஒரு தேயிலைத் தோட்டத்தில்அமைந்துள்ளது. பல வருடங் களுக்கு முன்னர் இத்தோட்டத்தில் பல முஸ்லிம் தொழிலாளர்கள் வேலை செய்தனர். இந்த தோட்டத்தின் உரிமையாளரான மீஸான் ஹாஜியார் அவர்கள், முஸ்லிம் தொழிலாளர்களின் சமயத் தேவைக ளுக்காக இப்பள்ளியைக் கட்டினார்கள். ஆனால் தோட்டம் கைமாறிய பிறகு, புள்ளிவாசல் கவனிப்பாரற்று இருந்தது. முஸ்லிம் தொழிலா ளர்கள் பலர் தோட்டத்தை விட்டு வெளியேறி விட்டனர்.
இங்கே சில முஸ்லிம்கள் வாழ்ந்த போதிலும் இஸ்லாம் இருக் வில்லை. பாங்கு ஒலிக்கவில்லை; தொழுகை நடைபெறவில்லை. இத்தோட்டத்து முஸ்லிம் தொழிலாளர்கள் இந்நிலையில் இருக்கும் போது, பத்து வருடங்களுக்கு முன் மாத்தளை "தப்லீக் ஜமாஅத்" சகோதரர்கள் இவர்களோடு தொடர்பு கொண்டார்கள். "தஃவத்" கொடுக்க ஆரம்பித்தார்கள்.
அவர்களின் முயற்சியின் விளைவு, இன்று இங்கே ஐவேளை தொழுகை நடக்கின்றது. ஜும்ஆ நடக்கின்றது. இத்தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளை இன்று கிதாபு மத்ரஸாவில் ஒதுகிறார். அல்ஹம்து லில்லாஹ். இன்று சுமார் இருபத்தைந்து முஸ்லிம் குடும்பங்கள் இங்கே வாழ்கின்றன.
7ן
மாத்தளை மாவட்ட ஜும்ஆ பள்ளிவாசல்கள்
அளுத்கம அளுவிகாரை உள்பொத்தபிட்டி எலமல் பொத்த ஏழாங் கட்டை கண்டலம . கந்தநுவர கலெவெல கம்பியடி கவுடு பெலல்ல
கோட்டைகொடை
கொங்காவலை சவன வெளி தம்புள்ள தம்பலகல தேவாஹ"வ நமட கஹவத்த நாலியா கனத்த
நாவுள நிக்க கொல்ல நிக்கவட்டுவான பல்லெபொல பாராவத்த மாதிப்பொல மாபேரிய மானாம்பொட மாத்தளை டவுன் மாத்தளை ஹனபி , வரக்காமுற
ஜும்ஆ பள்ளிவாசல்
e? - 97
pp
p
y
y 9
9
p
pg. pg.
ps 9 p.
pp. p
s
9
9 p.
ps
sy
pp
y
sp 9 p.
9 y
9 g y
9 py
Page 88
179
VA வேரகல்வத்த
ரத்தொட்ட ரன் வெடியாவ ரைத்தளாவளை
ps
99 py
9
p
மாத்தளை மாவட்ட தைக்காக்கள்
பாத்திமா மஸ்ஜித் வாரியப்பொல தைக்கா மர்க்கஸ் அல் இஸ்லாமி ரஹீமியா தைக்கா
மொஹிதீன் மஸ்ஜித் (எம்.ஸி.ரோட்)
ஸெய்ன் மெளலானா தைக்கா ஒயபகல தைக்கா ஸாஹிரா தைக்கா மந்தண்டாவளைதைக்கா களுதாவளைதைக்கா சீனி அப்பாதைக்கா மீதெனிய கொலனி தைக்கா மட்டாவ மொஹியத்தீன் தைக்கா வரகந்த தைக்கா பரகஹவெல தைக்கா மாருக்கோன தைக்கா உக்குவளை டவுன் தைக்கா ரத்தொட்ட தைக்கா கந்த நுவர தைக்கா எலமல் பொத்த தைக்கா மகுல்கஸ்வெவதைக்கா பட்டி வெல தைக்கா பம்பரக்கட்டு பொத்த தைக்கா
மாத்தளை
வரக்காமுற
உக்குவளை உக்குவளை
ரத்தொட்டை கந்ததுவர எலமல் பொத்த மகுல்கஸ்வெவ பட்டிவெல பம்பரகட்டு பொத்த
73
புவக்பிட்டிய தைக்கா V− புவக்கபிடிய வேவெல தைக்கா வேவெல
பல்லேவெல தைக்கா பல்லேவெல நிக்ககொல்ல புதிய தைக்கா | நிக்ககொல்ல
நிக்க கொல்ல பழைய தைக்கா p நிக்க கொல்ல பழைய பள்ளிவாசல் g
பதிங்கஸ்கொட்டுவதைக்கா
ஆதாரக் குறிப்புக்கள்
மாத்தளை மாவட்டத்து பள்ளிவாசல்கள்
1. A.C.Lawry - Gazetteer of the Central Province of Ceylon | 2. ibild
3. Ibid
4. Fr. S.G.Perera - A History of Ceylon 5. G.C.Mendis - Ceylon under the British. 6. Article - The Ceylon Daily News - 15th December, 1967
Page 89
74
அத்தியாயம் - 10
லியாரங்கள்
இறை வணக்கத்திலும் மார்க்கப் பிரச்சாரத்திலும் தம்மை
முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, மனித குலத்திற்கு மாபெரும் சேவை செய்த பெரியார்கள், மகான்கள் காலத்திற்குக்காலம் தோன்றி யுள்ளார்கள். இவர்களது ஈமானின் சக்தியினாலும், தியாகத்தின் தன் மையினாலும் எல்லாம் வல்ல அல்லாஹ், தனது மாபெரும் அருளை இவர்கள் மீது சொரிகின்றான்; மகத்தான சக்திகளை வழங்குகிறான். இம்மகான்களும் அல்லாஹ் வழங்கிய சக்திகளை அவனது படைப்புக ளின் நன்மைக்காக பயன்படுத்தினார்களே ஒழிய, தம் சுய இலாபத்திற் காக பயன்படுத்தவில்லை.
இத்தகைய ஞானவான்களையே, இறை நேசர்களையே நாம் இஸ்லாமிய வழக்கில், "வலிமார்கள்’ என்கின்றோம். மேன்மை உடையோரை மதித்தலும், கெளரவித்தலும் மனித இயல்பே. இந்த அடிப்படையில்தான் பெரும் சமூக சேவைகளை, சமயப் பணிகளைச் ச்ெய்து கொண்டும், இறைவழிப்பாட்டில் ஈடுபட்டுக் கொண்டும், இருந்த மகான்களைக் கெளரவிக்கும் வழக்கம், இலங்கையிலும் இருந்து வந்திருக்கிறது.
இப்படியான மகான்கள் இறையடி சேர்ந்த பின்னரும் ஸியாரங் கள் என்றழைக்கப்படுகின்ற இவர்களது அடக்கஸ்தலங்களுக்குச் செல்லுதல், அவர்களுக்குத் தம் மரியாதையைக் காட்டுதல் போன் றவை எல்லா நாடுகளிலும் உள்ள பழக்கங்களாகும். இத்தகு ஸியாரங் கள் பல மாத்தளை மாவட்டத்திலும் காணப்படுகின்றன.
அரேபியா, மொரோக்கோ, பாரசீகம் போன்ற நாடுகளில் வசித்த முஸ்லிம்கள், இலங்கை முஸ்லிம்களால் "பாவா ஆதம் மலை" என அழைக்கப்பட்ட மலையை ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களோடு தொடர்புபடுத்தினர். இந்த மலையைத் தரிசிப்பதற்கு வெளிநாட்டு
175
இறைநேசர்கள் பலர் வந்தனர். 'தான்இலங்கை வந்தது, பாவா ஆதம் (அலை) அவர்களுடைய பாதச் சுவட்டைத் தரிசிப்பதற்கே" என்று இப்னு பதூதா தன்நூலில் கூறியுள்ளார்."
உலகப் பற்றுகளைத் துறந்து, இறை நேசம் ஒன்றையே நோக்க மாக கொண்டிருந்த இத்தகைய யாத்திரிகர்களில் சிலர் தமது ஆத்மீக தேவைகளுக்கு அனுகூலமான இடங்களை இலங்கையில் கண்ட போது, அல்லது தமது சேவை ஒரு குறிப்பிட்ட பிரதேச மக்களுக்குத் தேவையென்று எண்ணிய போது, அங்கேயே நிரந்தரமாய் தங்கி விட் டனர்; சிலர் அவ்விடங்களிலேயே மறைந்தும் இருக்கின்றனர். இம்ம கான்களின் தூய வாழ்வைக் கண்டும், சேவைகளை அனுபவித்தும், சக்திகளை உணர்ந்தும் இருந்த மக்கள் இவர்கள் மறைந்த பின்னரும் இவர்களைக் கண்ணியப்படுத்தியதில் எவ்வித ஆச்சரியமுமில்லை.
இவ்வாறான நிகழ்வுகள் சில மாத்தளை மாவட்டத்திலும் நடை பெற்றுள்ளன. தாம் வாழ்ந்த தூய வாழ்க்கையினாலும், செய்த சேவை களின் தன்மையினாலும் ஈழத்து முஸ்லிம் பெரியார்கள் சிலரும் இவ் வாறு அவர்களுடைய மரணத்துக்குப் பின்னர் கண்ணியப்படுத்தப் பட்டிருக்கின்றனர். இத்தகைய நிகழ்வுகளும் மாத்தளை மாவட்டத் தில் நடைபெற்றுள்ளன.
எனவே மக்களால் கண்ணியப்படுத்தப்படும் ஸியாரங்கள் பல, மாத்தளை மாவட்டத்தில் காணப்படுகின்றன. அவற்றுள் கோட்டக் கொடை, வரக்காமுறை, மாத்தளை, உள்பத்தபிட்டி, நிக்ககொல்ல, சவனவெளி, மானாம்பொடை ஆகிய ஊர்களில் இருக்கும் ஸியாரங் கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.
கிராம வாரியாக அத்தகைய ஸ்பியர்gங்களின் வரலாற்றை இனிச் சுருக்கமாக அறிவோமாக.
கோட்டகொடை
சுதுகங்கையின் கரையோரத்தில் அமைந்திருக்கும் இக்கிராமத் தின் ஜும்ஆ பள்ளிவாசல் வளவில், அல்லாஹ்வின் வலிமார்களான அஸ்செய்கு அப்துல் முத்தலிப் ஒலியுல்லா, செய்கு பரீத் ஒலியுல்லா,
Page 90
76
செய்கு மதார் (ரஹ்), மீரா நாச்சியார் (ரஹ்) ஆகியோரின்ஸியாரங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் செய்கு முத்தலிப் ஒலியுல்லா அவர்க ளின் ஸியாரம் நாற்பது அடி நீளமானதாகும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் இவ்வொ லிமார்கள் எங்கிருந்து வந்தனர், எப்போது வந்தனர் என்று கூற முடி யாது இருக்கின்றது. ஆனால் இவர்கள் தொடர்பாக நடந்துள்ள பல அற்புதங்கள்,கராமத்துக்கள் இக் குக்கிராமத்தின் பெயரை இலங்கை யின் பல பகுதிகளிலும் பரவச்செய்துள்ளன. ஏறத்தாழ எண்பத்தைந்து வருடங்களாக இவ்வலிமார்கள் பெயரில் வெகு விமரிசையாக கந்தூரி இக்கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
மர்ஹ9ம் சுல்த்தான் என்பவரே, இக்கந்தூரியை ஆரம்பித்திருக் கின்றார். பின்னர் மாத்தளை முஸ்லிம் டெய்லர் சங்கம் என்ற ஸ்தாப னம் இக்கந்தூரியைத் தொடர்ந்து சிறப்பாக நடத்திவந்திருக்கிறது. இந்த வருடம் இக்கந்தூரி ஊர்மக்களின் ஒர் அமைப்பினால் சிறப்பாக நடத்தப்பட்டது. மாத்தளை நகரில் வாழ்ந்த ஓர் இந்து பிரமுகர் தன் சொந்த செலவில் பல வருடங்களாக இங்கே கந்தூரிகொடுத்துள்ளார். இக்கிராம மக்களைப் பொருத்தவரை, சகல நற்காரியங்களையும் இத் தர்ஹாக்களில் 'பாத்திஹா’ ஒதிய பின்னரே, ஆரம்பிக்கும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
சவனவெளி
கிட்டத்தட்ட, 1830-ஆம் ஆண்டளவில் யெமன் தேசத்தில் இருந்து வந்த செய்கு ஜலாலுத்தீன் (ரஹ்) எனும் இறைநேசச் செல்வர், இவ்வூ ரில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக இவ்வூர் மக்கள் நம்புகின்றனர். இவ்வூர் மக்களின் ஆத்மீக தேவைகளையும், பக்கத்து ஊர்களில் வாழ்ந்த மக்களின் ஆத்மீக தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக் கோடு இப்பெரியார் சவனவெளியில் வாழ்ந்திருக்கிறார்கள்.
பெரும் தக்வா தாரியான இப்பெரியார், தாம் மரணிக்கும் முன் னரே தன்னை அடக்கம் செய்ய வேண்டிய இடத்தை ஊர்மக்களுக்குச் சுட்டிக்காட்டி இருந்ததாகவும், அவ்விடத்திலேயே பின்னர் அம்ம கான் அடக்கப்பட்டதாகவும் சவனவெளியில் வாழும் மூத்த மக்கள்
77ו
பலர் கூறுகின்றனர். வருடாவருடம் துல்ஹஜ் பிறை இருபத்தெட்டில் இங்கு கந்தூரி நடைபெற்று வருகின்றது. இங்கே பல கராமத்துகள் நடைபெற்றிருக்கின்றன என்று ஊர் மக்கள் கூறுகின்றனர்.
மானாம்பொடை
மானாம்பொடை ஜும்ஆ பள்ளி வாசலில் அடங்கப்பட்டிருக் கும் பெரியார், அலித்தம்பி ஆலிம் அப்பா என்றழைக்கப்பட்ட அல் ஹாஜ் செய்கு நூர்தீன் ஆலிம் சாகிப் ஒலியுல்லா ஆவார்கள். பெரும் பக்திமானும் கல்விமானுமான கஸாவத்தை ஆலிம் அப்பா அவர்க ளின் உறவினரான அலித்தம்பிஆலிம், கஸாவத்தை ஆலிமோடு தென் னிந்தியா சென்று மார்க்க ஞானம் பெற்றார்கள். பின்னர் தாயகம் திரும்பிய அலித்தம்பி ஆலிம் அவர்கள், மானாம்பொடையில் தங்கி மார்க்கச் சேவை செய்து வந்தார்கள்.
நிக்க கொல்லை கிராமத்தில் திருமணம் செய்திருந்த அலித்தம்பி பெரியார், தன் வாழ்நாளிலேயே பல அற்புதங்களைச் செய்து காட்டி யுள்ளதாக, ஊரைச் சேர்ந்த பலரும் கூறுகின்றனர். இப்பெரியாரது நான்காவது தலைமுறையினர் இன்றும் நிக்ககொல்லையில் சிறப்பாக வாழ்கின்றனர். மாத்தளை மாவட்டத்து முஸ்லிம்களின் மத்தியில் பெரு மதிப்போடு வாழ்ந்த மர்ஹாகும் அல்ஹாஜ் கவுஸ் ஆலிம் இப் பெரியாரின் பேரனின் மகனாவார்! வரக்காமுறை
வரக்காமுறையில் அடங்கப்பட்டிருக்கும் மகான், செய்குநூர்தீன் ஒலியுல்லா ஆவார்கள். இவர்கள் பகுதாதிலிருந்து வந்தவர்கள் என் பதை செய்கு முகம்மது கெளதுல் கோட்டாரி என்பவரின் தமிழ் பாடல் ஒன்று உணர்த்துகிறது. ஆனால் எப்போது வந்தார்கள் என்ப தைப் பற்றி விவரமாக கூறுவதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. வரக்காமுறை கிராமம் வரக்காமுறை ஆற்றினால் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆற்றுக்கு அக்கரையில் உள்ள பகுதி மெதசிய பத்துவிலும், ஆற்றுக்கு இக்கரையில் உள்ள பகுதி கொஹொன்சிய பத்துவிலும் அமைந்துள்ளன.
ஆரம்பக் காலக்கட்டத்திலே கொஹொன்சிய பத்து பகுதி ஒரள வுக்குக்காடாகவும், மெதசிய பத்து பகுதியேசனத்தொகை நிறைந்ததா
Page 91
178
கவும் இருந்தன. எனவே மெதசிய பத்து பகுதியிலே பள்ளிவாசலைக் கட்டுவதற்குச் சகல பூர்வாங்க ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
ஆனால் இந்த சந்தர்ப்பத்திலே பல வருடங்களுக்கு முன்னரே மரணித்து விட்ட செய்கு நூர்தீன் ஒலியுல்லாஹ், அதிசயமர்ன முறை யிலே தலையிட்டு, தன்னுடைய அடக்கஸ்தலம் அமைந்துள்ள இடத் தையும், பள்ளிவாசலை அமைக்க வேண்டிய இடத்தையும், பள்ளிக் கிணறு தோண்ட வேண்டிய இடத்தையும் சுட்டிக்காட்டியதாகவும், அவ்வேண்டுகோள்தட்டிக் கழிக்கக்கூடிய முறையில் இருக்கவில்லை யென்றும், அதனால் அன்றைய வரக்காமுறையின் பெரும் முக்கியஸ் தரான ஒமர் லெப்பை மடிகே முஹாந்திரத்தின் தலைமையில் ஊர்மக் கள் ஒன்று கூடி செய்கு நூர்தீன் ஒலியுல்லாஹ் சுட்டிக்காட்டிய இடங்க ளிலேயே ஸியாரம், பள்ளிவாசல், கிணறு போன்றவற்றை அமைத்த தாகவும் ஊர் மக்கள் கூறுகின்றனர்.
கண்டி - மாத்தளை பிரதான பாதை ஒரத்தில் அமைந்திருக்கும் இந்த ஸியாரத்தை நெருங்கியவுடன் வாகனத்தைச் சற்று நிறுத்தி காணிக்கை போடாது செல்லும் முஸ்லிம்கள் குறைவு. வரக்காமு றைக்கு அருகாமையில் வாழும் சகல ஊர், முஸ்லிம் மக்களாலும், பெரிதும் கண்ணியப்படுத்தப்படும் ஸியாரம் இதுவாகும். முஸ்லிம் அல்லாதோரும் இந்த ஸியாரத்தைப் பெரிதும் கெளரவப்படுத்துகின்ற னர். பல வருடங்கள் மகான் நூர்தீன் ஒலியுல்லாஹ் பெயரில் இங்கு கந்தூரி இடம் பெற்று வருகின்றமை அவதானிப்புக்குரிய அம்சமாகும். உள்பொத்தபிட்டி
1946-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முப்பதாம் திகதி உள்பொத்தபி டிய கிராமத்தில் மறைந்த செய்கு பாவா செய்கு சுலைமானுல் காதிரி அவர்கள் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். கன்னியாகும ரியைச் சேர்ந்த கோட்டாறு எனும் கிராமத்தில் பிறந்த சுலைமானுல் காதிரி அவர்கள், ஒரு சிறந்த புலவராகவும், பெரும் ஞானவானாகவும் திகழ்ந்துள்ளார்கள்.
79
இலங்கை வந்த இப்பெரியார் உள்பொத்தபிட்டியில் தங்கி மாத் தளை, கண்டி, கல்ஹின்னை போன்ற ஊர்களிலும் அவற்றைச் சுற்றி யுள்ள பகுதிகளிலும் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். "கோட் டாறு பாவா’ என கண்ணியமாக அழைக்கப்பட்ட இந்த இறைநே சரை, இப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பலர்தம் ஞானக்குருவாக ஏற்று போற்றினர்.
ஒருநாள் இப்பெரியார்கல்ஹின்னையைச் சேர்ந்த பிரபல வழக்க றிஞரும், தம்முடைய சீடர்களில் ஒருவருமான மர்ஹஜூம் அல்ஹாஜ் ஏ.ஓ.எம்.ஹ"ஸைன் அவர்களின் வீட்டில் தங்கினார்கள். அப்போது பாவா அவர்கள் முதிர்ந்த வயதை அடைந்திருந்தார்கள். பின்னர் மர் ஹஜூம் ஹ"ஸைன் அவர்களிடம்,விடைபெறும்போது "நான் இனி இங்கு வருவது, மாத்தளைக்கு அண்மையிலுள்ள உள்பொத்தபிட்டி கிராமத்தில், இறையடி சேர்வதற்கு முன்னர் உங்களுடன் சில நாட்க ளுக்குத் தங்கியிருப்பதற்காகும்" என்று கூறினார்கள்.
இக்கூற்றின்படியே 1945-ஆம் ஆண்டின் இறுதியில் கல்ஹின்னை வந்து, தன் அன்புக்குரிய நண்பர் ஹ"ஸைனுடன் சில நாட்கள் தங்கி னார்கள். அப்பொழுது ஒரு நாள் மர்ஹலிம் ஹ"ஸைன், செய்கு அவர் களிடம் "உள்பொத்தபிட்டிக்கு அழைத்துச் செல்லவா’ என்று கேட் டார்கள். ஆனால் செய்கு அவர்கள் "வேண்டாம். இன்னும் காலமி ருக்கிறது" என்று கூறிவிட்டார்கள். , சில நாட்களுக்குப் பின்னர், 1946-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருபத்தொன்பதாம் திகதி, செய்கு அவர்கள், மர்ஹஜூம் அல்ஹாஜ் ஹ"ஸைனிடம் தம்மை உள்பொத்தபிட்டிக்கு அழைத்துச் செல்லு மாறு வேண்ட, அவரது வேண்டுகோள் உடனடியாக நிறைவேற்றப் பட்டது. அடுத்த நாள் பாவா அவர்களின் சீடர் ஒருவர் கல்ஹின்னை வந்து, தம் குரு இறையடி சேர்ந்து விட்டதை ஹ"ஸைன் ஹாஜியிடம் அறிவித்தார்."தான் மரணிக்கும் தினத்தையும் இடத்தையும் பற்றி, தன் அற்புத முன்னறிவால் அறிந்திருந்த சுலைமானுல் காதிரி எனும் இப் பெரியாரின் ஸியாரம், உள்பொத்தபிட்டி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னால் அமைந்துள்ளது.
Page 92
8O
நிக்ககொல்ல
இங்கே இரண்டு ஸியாரங்கள் இருக்கின்றன. ஒன்று "ரிக்ஷா மெளலானா’ என்றழைக்கப்பட்ட ஒரு சமயப் பெரியாரின் மூதாதை ஒருவரின் அடக்கஸ்தலமாக இருக்க வேண்டும் என்று நம்பப்படுகி றது. மற்றது, நிக்ககொல்ல மக்களால் "புலவர் அப்பா" என பெரும் அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்பட்ட ஒரு பெரியாரின் அடக்கஸ்தலமாகும். புலவர் அப்பா உடஸ்கிரிய கலஹேன எனும் ஊரில் வசித்த போதிலும், நிக்ககொல்லையுடன் மிக நெருங்கிய தொடர்பு உடையவர்களாக இருந்தார்கள். இறைபக்தி மிக்கவர்களா யும் நற்குணங்கள் பொருந்தியவர்களாயும் இவர்கள் விளங்கினார்கள். தன்னுடைய "மைய்யத்தை” சூடு அடங்கு முன்னர் அடக்கிவிட வேண்டும் என்ற வஸியத்தைக் கூறிவிட்டு, இப்பெரியார் இறையடி சேர்ந்து விட்டார்கள். இவர்களின் வேண்டுகோளின்படி, உடனடியாக மைய்யத்தைக்குளிப்பாட்டி, கபனிட்டு, ஜனாஸாநல்லடக்கத்திற்காக மக்கள் கொண்டு போயிருக்கின்றனர்.
இருப்பினும், இருள் கவிந்து விட்டது. ஜனாஸா வேலைகளை நிறைவேற்ற வெளிச்சம் போதாத நிலை. இந்த நேரத்தில் மக்கள் எதிர்பாராவண்ணம் ஒரு வெளிச்சம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த வெளிச்சத்திலேயே ஜனாஸா வேலைகள் யாவும் சிறப்பாக முடிக்கப் பட்டன என்று ஊர் மக்கள் கூறுகின்றனர்.
நீண்ட காலமாக இவ்வூரில் மஷாயிஹ்மார் கந்தூரி மிக விமரிசை யாக இடம் பெற்று வருகிறது. பிற ஊர்களிலிருந்தும் மக்கள் கலந்து கொள்ளும் கந்தூரியாக இது இருந்தது. கடந்த சில வருடங்களாக இக்கந்தூரி சிறிய அளவிலேயே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தககது.
கொங்காவலை
மாத்தளை கொங்காவலை ஜும்ஆ பள்ளி வாசலோடு அமைந்தி ருக்கும் அழகிய வியாரத்தை, மாத்தளை முஸ்லிம் மக்கள் அன்றிலி ருந்து இன்றுவரை "சீனத்து ராஜா அவுலியாக்கள் வியாரம்" என்றே
18
மரியாதையோடும் கண்ணியத்தோடும் அழைத்து வருகின்றனர். “சீனத்து ராஜா அவுலியா” என்ற நாமம் மலாய அரச வம்சத்தைச் சேர்ந்த ஒரு வலியுல்லாவையே குறிக்கின்றது என்பதுவே மாத்தளை மக்களின் திடமான நம்பிக்கை. மலாய இனத்தைச் சேர்ந்த சில வலி மார்களின் ஸியாரங்கள் கண்டியிலும் இருக்கின்றன.
போகம்பரமலாயமிலிட்டரி பள்ளி என்று முன்னர்அழிைக்கப் பட்ட "லைன் பள்ளியில்" இருக்கும் துவான் துங்கு ஹ"லைன் வலியுல்லா அவர்களின் ஸியாரம்.
கண்டி பியாஷோ தோட்டத்தில் அமைந்திருக்கும் துவான் சின்கிலான் வலியுல்லா அவர்களின் ஸியாரம்.
தென்னக்கும்புரையில் அடங்கப்பட்டிருக்கும் துவான் பாகூஸ் வலியுல்லா அவர்களின் ஸியாரம்.
மாத்தளையில் அடங்கப்பட்டிருக்கும் வலியுல்லா, மலாய இனத் தைச் சேர்ந்த ஒரு மகான் என்பதை மாத்தளை முஸ்லிம்கள் பரிபூரண மாக நம்பியபோதிலும், இவர்கள் எப்போது வந்தார்கள், ஏன்வந்தார் கள் என்பதைப்பற்றியெல்லாம் திட்டவட்டமாக எதுவும் கூறமுடியா துள்ளது. ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்திலே (1658-1796) அவர்கள் ஜாவாவை யும் கைப்பற்றியிருந்தனர். அவர்களின் ஆட்சியே அங்கும் நடை பெற்று கொண்டிருந்தது.
ஆனால் ஜாவா அரசவம்சத்தவர்கள் அடிக்கடி ஒல்லாந்தருக்குத் தொல்லைகள் கொடுத்துக் கொண்டு இருந்தனர். ஒல்லாந்தருக்கு ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு எதிராக இயங்கு கின்ற அரசகுடும்பத்தவர்களைஜாவாபகுதிகளில் தொடர்ந்து வாழவி டுவது ஆபத்திரனது, ஆனால் அதே நேரத்தில், அரச குடும்பத்தவர்க ளைக்கொன்றால்நாட்டில் எதிர்ப்பு அதிகரிக்கலாம். இந்ததர்மசங்கட மான நிலையைச் சமாளிப்பதற்கு ஒல்லாந்தர் கையாண்ட வழிமுறை நாடுகடத்துதல் ஆகும்.
இவ்வாறு சிலர்மடகஸ்கார்தீவுக்கும், பலர்இலங்கைக்கும்நாடு கடத்தப்பட்டனர். 1706-ஆம்ஆண்டு ஜாவாவின்முந்நாள் மன்னரான
Page 93
89.
கஸலினா மான் குராத் மாஸ் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். 1723-ஆம் ஆண்டு ஒல்லாந்தருக்கெதிராக புரட்சி செய்த நாற்பத்தி னான்கு இளவரசர்களும் பிரபுக்களும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட் LGBT.
1734-ஆம் ஆண்டு ஜாவாவின் முதலமைச்சரான தானுரேஜ் என்ப வர் இலங்கைக்குத் தேச பிரஷ்டம் செய்யப்பட்டார். ஆரம்பத்தில் தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டவர்கள் கொழும்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தனர். சில வருடங்களுக்குப்பின்னர்ஜாவா திரும்பு வதற்கு இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், ஒரு சிலரே அவ்வாறு திரும்பிச் சென்றனர். ஏனையோர் இங்கேயே தங்கிவிட்ட னர். இவர்களில் பலர் பெரும் பக்திமான்களாக இருந்திருக்கின்றனர். கொழும்பு பெரிய பள்ளி வாசலில் அடங்கப்பட்டிருக்கும், மகான் துவான் பாகூஸ் பலங்கயா ஒர் உதாரணமாவார்.
இத்தகைய ஒர் இளவரசர் மாத்தளைக்கு வந்து வாழ்ந்திருக்க வேண்டும். தன்னுடைய பக்தியினால்,நற்குணங்களினால் மாத்தளை மக்களுடைய இதயங்களைக் கவர்ந்திருக்க வேண்டும். எனவே அவர் மறைந்த பின்பும் மக்கள் அவரது அடக்கஸ்தலத்தைக் கண்ணியப் படுத்தி இருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.
இப்பகுதிகளில் அடங்கப்பட்டுள்ள மலாய வலிமார்கள் ஆங்கி லேயரோடு இலங்கை வந்த மலாயப்படைகளின் தளபதிகளாக கட மையாற்றிய மலாய பக்திமான்களில் சிலராக இருக்கலாம் என்று கருதுவதற்கும் இடமுண்டு.
இங்கே அடங்கியுள்ள வலியுல்லாவின் திருநாமம் துவான் சிறி பதி என மலாயச் சகோதரர்கள் பலர் கூறுகின்றனர். ஆனால் அலித் தம்பி வலியுல்லாவின் பேரரும், கவுஸ் ஆலிம் அவர்களின் தந்தையு மான செரிப்தீன் ஆலிம் அவர்கள், தாம் இயற்றிய ஓர் அரபுக் கவிதை யிலே (பைத்) "மாத்தளையில் அடங்கியுள்ள ஜெய்னுல் ஆப்தீன்" என ஓர் வலியுல்லாவுைக் குறிப்பிட்டுள்ளார்கள். அக்கவிதையை வாசிக்கும் போது ஆலிம் அவர்கள் ஜெய்னுல் ஆப்தீன் என குறிப்பிடு வது சீனத்து ராஜா வலியுல்லாவையே என்பது தெளிவாக விளங்கும்.
183
எனவே "சீனத்து ராஜா' வலியுல்லாவின் இயற்பெயர் ஜெய் னுல் ஆப்தீன் என்றும் "துவான் சிறிபதி' என்பது அவர்களது அரச வம்ச பெயராகவோ அல்லது அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கெள ரவ பெயராகவோ இருக்கும் என்று கருதுவது பொருத்தமானதாகவே இருக்கின்றது.
1518-ஆம் ஆண்டிலிருந்து 1521-ஆம் ஆண்டுவரை ஜாவாநாட்டை யாண்ட அரசனின் முழுப்பெயர் ஆதிபதி யூனூஸ் என்பதாகும்." இங்கே "ஆதிபதி' என்பது கெளரவப் பெயராகவே இருக்கிறது.
ஆதிபதி, சேனாபதி, போன்றவை மலாயஅரச வம்சத்தினர்தமக் குச் சூட்டிக் கொண்ட கெளரவ பெயர்களாகும். ஆதிபதி யூனுஸின் தந்தையின் பெயர் ரதன் பதஹ் சேனாபதி ஜிம்புன் என்பதாகும்:
எனவே தமிழிலும், வடமொழியிலும் தலைவன், அரசன் எனப் பொருள் வழங்கும் பதி எனும் சொல், இந்துக் கலாச்சாரத்தால் ஆரம் பத்தில் பாதிக்கப்பட்டிருந்த மலாயாவிலும் இதே பொருளில் பயன்ப டுத்தப்பட்டிருக்கலாம்.
ஆகவே சிறிபதி என்பது இங்கே அடங்கப்பட்டிருக்கும் ஸெயி னுல் ஆப்தீன் ஒலியுல்லாவின் கெளரவப் பெயராகவே இருக்க வேண் டும். மர்ஹஜூம் சரிப்தீன் ஆலிம் இயற்றிய கவிதையில் சில அடிகளும் அவற்றின் பொருளும் கீழே தரப்படுகின்றன.
N イ .محصے محصے یا مرگ يدعي العايديك العلاجل (W = # . て த ፲9 اہلیٰ بجا آگطانۂ خلنلستۓ
Page 94
84
"வீரரான சைனுல் ஆபுதீன் என்ற தலைவர் பொருட்டினாலும் (உதவி தேடுகிறேன்) அவர் அல்லாஹ் அளித்த அருட்பாக்கியங்களால் பெரு மைப்படத்தக்க (ஒரு மகானாவார்).
அவரது மகிமைக்குரிய அடக்கஸ்தலம் மாத்தளை நகரில்அமைந் துள்ளது. மேலும் அவரது பிறப்பிடம் சீன தேசமாகும். இவர் (உயர்ந்த) இறைநேசச் செல்வர்களில் ஒருவராவார்.
'சீனத்து ராஜா'துவான் சிறிபதி ஸெய்னுல் ஆப்தீன் வலியுல்லா வின் காரணமாக பல அற்புதங்கள் நடத்திருக்கின்றன என்று நம்பப்ப டுகின்றது. அண்மையில் கூட இப்படிப்பட்ட கராமத்துக்கள் நடந்தி ருக்கின்றன என்று பலரும் கூறுகின்றனர்.
மாத்தளை மாவட்டத்து ஸியாரங்கள்
ஆதாரக்குறிப்புக்கள்
1. JMM ராஜி - இஸ்லாமிய யாத்ரீகர் கண்ட ஈழம் - தமிழ் இலக்கி
யம் - தற்காலச் செய்யுள் தொகுப்பும் உரைநடைத் தொகுப்பும். 2. S.M. ஹனீபா - "மலையகப் பெருமகன்’ 3. Paulinus Tambimuttu - The Ceylon Daily News November 13th 1965. 4. சையத் இப்ராஹிம் - "தென்கிழக்கு ஆசியா" (மலேசியா, இந் தோனேசியா)
185
அத்தியாயம் - 11
முஸ்லிம்கள் இலங்கையில் எப்பகுதிகளில் வசித்த போதிலும், இரண்டு அம்சங்களில் விஷேச சிரத்தை காட்டியுள்ளனர்; ஒன்று, இஸ்லாமிய மத அனுஷ்டானங்களை ஒழுங்காக பின்பற்றுதல் மற் றது, இயன்றளவுக்கு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு இணங்க தம் கலாச்சாரத்தை அமைத்துக் கொள்ளல். இவை இரண்டுக்கும் அடுத்து, தமிழைப் படிப்பதிலும், தமிழை வளர்ப்பதிலும் இவர்கள் ஆர்வம் காட்டியிருக்க வேண்டுமென்று சொல்லக்கூடிய அளவிற்கு இவர்கள் தமிழில் அக்கறை காட்டியிருப்பதை முஸ்லிம்கள் வாழும் சகலப் பிரதேசங்களிலும் நாம் அவதானிக்கலாம். இத்தன்மை மாத்தளை மாவட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் மத்தியிலும் நிறைய இருந்திருப் பதைக் காணலாம்.
சிங்கள மக்கள் அதிகமாக வாழ்ந்த ஒரு பிரதேசத்தில் அமைந்தி ருந்த பம்பரகட்டுப்பொத்த எனும் ஒரு முஸ்லிம் சிற்றுாரில் பிறந்து, வளர்ந்த முதியவர்கள், தமது குடும்பப் பெரியவர்கள் தமக்கு வீட்டில் படிப்பித்த பாடல் என,
"குரவையொடு பேரிகை துந்துபிதாளமொடு
கொட்டு முரசமதிரவே" போன்ற கடினமான பாடல்களைப் பாடிக்காட்டுமளவுக்குத் தமிழ் மணம் மாத்தளை மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் கூட கமழ்ந்திருக் கிறது. தாம் தம் உயிரினும் மேலாக ஒம்பிய இஸ்லாமிய கோட்பாடுக ளைப்பற்றிய பாடல்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி பாடல்கள், அன்னாரின் நற்றோழராம் சஹாபாக்களைப் பற்றிய பாடல்கள் போன்றவை தமிழில் இருந்ததினால்தான், இந்தளவுக்கு முஸ்லிம்கள் தமிழ்மொழி மீது பற்று வைத்திருந்தார்களோ, தெரி யாது?
Page 95
186
காத முஸ்லிம்களும்தமிழ்மணம்ததும்பும் கவிபாடும் திறமை பெற்றி ருந்தார்கள் என்பதை மட்டக்களப்பு முஸ்லிம்களின் நாட்டுப் பாடல்
கள் உணர்த்துகின்றன.
இந்தத்திறமை மாத்தளையில் வாழ்ந்த ஒரு சில முஸ்லிம்களிட மும் இருந்திருக்கின்றது என்பதை பல வருடங்களுக்கு முன் அரிசி யின் விலை இருபத்தைந்து சதமாக உயர்த்தப்பட்டபோது,இதன் கார ணமாக மரம் ஏறும் தொழிலாளி இரண்டு சதத்திற்குப் பதிலாக நான் குச் சதம் கேட்ட காலத்திலே, மாபேரிய எனும் கிராமத்தைச் சேர்ந்த யூனூஸ் லெப்பை என்பவர்தம் நண்பர்களோடு அரிசி விலையேற்றத் தைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தபோது, கவிதை நடையில்
"கொத்தரிசி நாலு பணமாச்சு பிழைக்கிறது ரொம்ப மோசமாப் போச்சு மரமேறுறவனும் நாலு சதம் கேட்கலாச்சு என்னடப்பா இது பெரும் கஷ்டமாய்ப் போச்சு என்று பாடினார் என்று கூறப்படுவது புலப்படுத்துகின்றது.
யாழ்பாணத்து முஸ்லிம்களின் மத்தியில் தோன்றியதைப் போலவோ, மட்டக்களப்பு முஸ்லிம்கள் மத்தியில் தோன்றியதைப் போலவோ எண்ணிக்கையில் அதிகமான புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் தோன்ற வில்லை. ஆனால் இங்கு தோன்றிய கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஒரு சிலராகவே இருந்தபோதிலும், அவர்களின் பங்களிப்பு கணிசமானதா கவும் கனமானதாகவும், காத்திரமானதாகவும் விளங்குகிறது என்பது இலக்கிய உலகத்தால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
மாத்தளை முஸ்லிகளின் இலக்கிய முன்னோடியாக கருதப்படக் கூடியவர் ஷெய்கு பாவா ஷெய்கு சுலைமானுல் காதிரி அவர்களாவர். தென்னிந்தியாவைச்சேர்ந்த கோட்டாறு எனும் ஊரில் பிறந்த சுலைமா னுல் காதிரி மாத்தளைக்கு அருகாமையில் உள்ள உள்பத்தபிட்டி எனும் ஊரில் நீண்ட காலம் வாழ்ந்துள்ளார்கள். இதனை கீழ்வரும் பழம் பாடலொன்று இவ்வாறு கூறுகிறது.
87.
'கோட்டாறு பதிபிறந்து குலஞ்சிறக்க வாழ்ந்திருந்த சத்குருவாம் மெஞ்ஞான தயாபரராம் இறையருளை மெத்தவுமே பெற்றவராம் மேன்மை மிக உற்றவராம் மெய்நிலையை இலங்கைவாழ் மேலோர்க்கு போதித்த ஷெய்கு பாவா ஷெய்கு சுலைமானுல் காதிரி'
கண்டி, பட்டிகாமம், மாத்தளை, கல்ஹின்னை, உள்பத்தபிடிய எனும் ஊர்களிலும், வேறு பகுதிகளிலும் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பல மக்களால் ஞானக்குருவாக ஏற் கப்ட்ட வர்கள் ஷெய்கு சுலைமானுல் காதிரி ஆவார்கள். 1946-ஆம் ஆண்டு உல்பத்தபிட்டியில் காலமான இவர்களின் "ஸியாரம்", உல்பத்தபிட்டி பள்ளிவாசலுக்கு முன்னால் இருக்கிறது. தமிழ்ப்புலமை மிக்க காதிரி அவர்கள், முஸ் லிம்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்க அறிவை வளர்க்கும் நோக் கோடு, மெய்ஞ்ஞான ஆனந்தக்களிப்பு, மெய்க்குரு கும்மி, மெய்ஞ் ஞான தங்கப்பாட்டு மாலை, சிபாமாலை, திருமெஞ்ஞானச் சாகரத் திருப்பாடல் திரட்டு, பாவா காசீம் ஒலியுல்லா பதிகம், திருபகுதாது உதுமானிய்யா குருமணிமாலை, போன்ற பல சன்மார்க்க நூல்களைத் தமிழில் இயற்றியுள்ளார்கள். அவர்களின் நூல்களில் ஒன்றான திரு மெய்ஞ்ஞானச் சாகரத் திருப்பாடல் திரட்டு எனும் நூலில் காணப்ப டும்,
"மின்னுகின்ற வுட்பொருளே மீமிழந்த வஹமதுவே
பொன்னுடைய பணியதுபோல் புவியிலெங்குமே நிறைந்தீர்
தன்னுடைய நூரொளிவை தயவாயெனக் கருள்வீர்
அன்னுடைய அகமியத்தை அருளும்ரசூலுல்லாவே" என்ற செய்யுள், பாவா அவர்களின் கவித்திறனையும் சொற்றிறனையும் புலப்படுத்துகின்றது.
கோட்டாறு புலவர் சுலைமானுல் காதிரி முஸ்லிம்களுக்கே சொந்தமான அரபுத்தமிழில் இயற்றிய ஒரு சிறு நூல் பத்ருமாலையா கும். அபூஜஹீலின் பெரும் படையின் சவாலைத் துச்சமென மதித்து, இஸ்லாத்திற்காக உயிரை அர்ப்பணிக்கத் தயாராய் இருந்த 313 பத்ரு சஹாபாக்களினதும் திருநாமங்களை கூறி, அல்லாஹ்வின் அருளைக் கோரும் இந்நூல், இன்றும் கல்ஹின்னை போன்ற கிராமங்களில் வல் லோனின் உதவியை நாடி பாடப்படுகிறது.இப்பத்ருமாலைந்ஜ்முஷ்
Page 96
188
ஷ"ஹரா" கவிமணிஎம்.சி.எம்.சுபைர்,அவர்களால் தமிழ்ப்படுத்தப் பட்டிருக்கிறது. அதிலிருந்து சில அடிகள் கீழே தரப்பட்டிருக்கின்றன.
"எந்த இடம் ஒதிடினும்
ஏகன் அருள் மிகுதி உண்டாம் சொந்தமாய் பத்ரியீன்கள்
சோபனமாய் வந்திடுவார் சிந்தைகளி கூர்ந்திரக்க
சீக்கிரம் மக்பூலாம் வந்திருந்து எப்போதும்
வருசையாய் ஒதிடுங்கோ அல்லாஹ்வின் நல்லுதவி
ஆபத்துகள் தீர்ந்துவிடும் எல்லாமுராதுகளும்
ஏகன் கபூலாக்கிடுவான் பொல்லாஜ"த்ரீ தாவூன் போகும் வபா தீரும் நல்லாக இப்புகழை
நாள் தோரும் ஒதிடுங்கோ’
சுலைமானுல் காதிரி அவர்களுக்கு அக்காலத்தில் வுாழ்ந்த தென் னிந்திய, ஈழத்து தமிழறிஞர்கள் பலரோடும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. இவருடைய நூல்களில் ஒன்றான பஞ்சரத்தின மாலை எனும்நூலுக்குச்சிறப்புப்பாயிரங்கள்எழுதியவர்கள்இருவர். ஒருவர் கோட்டாறு மகா வித்துவான் சதாவதானி செய்குத்தம்பி பாவ லர்; மற்றவர், வித்துவத் தீபம் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர். இப்பாயிரங்கள் இவ்விரண்டு மேதைகளாலும் எழுதப்பட்டதிலி ருந்து சுலைமானுல் காதிரி எந்தளவு மதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது புரிகிறதன்றோ?
கீழக்கரையிலே பிறந்து, பொருள் தேட இலங்கை வந்து, நெடுங் காலமாய் மாத்தளையிலே வாழ்ந்து, மாத்தளையிலேயே மறைந்தவர், மாத்தளை முஸ்லிம்களாலும் மற்றோராலும்" "சதக்குத்துத் தம்பி புலவர்” என அன்புடன் அழைக்கப்பட்ட மர்ஹ"ம் எஸ்.டி.எம். சதக் குத்தம்பி. பத்துவயதிலே கவிபாடஆரம்பித்த இவர், மாத்தளையிலே
189
வாழ்ந்த காலத்திலே, ஏராளமான கவிதைகளையும் பதங்களையும் இயற்றியுள்ளார். அழகாக பாடக்கூடிய திறன் பெற்றிருந்த இவர் தன் பாடல்களை இலங்கை வானொலியிலும் பொது ம்ேடைகளிலும் பாடியுள்ளார்.
இவர் இயற்றிய கவிதைகளில் சில சங்கீத மாலை, இலங்கை இன்னிசைப் பூங்கா, கீதா மிருதச்சோலை எனும் பெயர்களோடு நூல்க ளாக வெளிவந்துள்ளன. இந்நூல்களில் காணப்படும் பாடல்கள் யாவும் இஸ்லாமியத் தொடர்புடையவையாகும்.
பாவலர் அவர்கள் இஸ்லாமிய நூல்களை இயற்றுவதோடு மாத் திரம் திருப்தியடைந்துவிடவில்லை. இலங்கையை நேசித்த புலவர் இலங்கை சுதந்திரம் பெற்றபோது பாடிய கவிதைகள் 'சிறிலங்கா சுதந்திர கீதம் அல்லது மரதன் ஒட்ட மணிஒலி எனும் பெயரில் வெளி யிடப்பட்டுள்ளன. இக்கவிதைகள் கவிஞரின் தேசப்பக்தி, தொலை நோக்கு, கற்பனா சக்தி, கவித்துவம் போன்றவற்றை நன்கு வெளிப்ப டுத்துகின்றன.
"தேசத்தைத் தேசங்கள் ஆளவிடோம் - எங்கள் தேவியின் மேனியைத் தீண்டவிடோம்; நேசக்கரம் நீட்டி நின்றிடுவோம் - ஆனால் நீச பாசக்காரர் நெருங்கவிடோம்" மாத்தளை முஸ்லிம் மக்களால் மிக கெளரவமாக மதிக்கப்பட்ட இப்புலவர் அவர்களை, ஏனையோரும் நன்கு மதித்தனர் என்பதை அவரது நூல்களில் ஒன்றான 'மரதன் ஒட்ட மணி ஒலி’ என்பதற்கு, இஸ்லாமியப் பேரறிஞர் ஏ.எம்.ஏ. அஸிஸ், பண்டிதமணி சி. கணப திப்பிள்ளை, கவியோகி சுத்தானந்த பாரதி, வித்துவான் பெரியதம்பி போன்றோர் எழுதியுள்ள வாழ்த்துரைகள், அணிந்துரைகள், சிறப்பு ரைகள் என்பன எடுத்துக் காட்டுகின்றன.
சுமார் இருபது,இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால், சதக் குத்தம்பி புலவர் மீது மாறா அன்பு கொண்ட கீழக்கரை வணிகப் பெருமக்கள், மாத்தளையில் ஒரு வசதியான வீட்டைக்கட்டி, அதனை புலவர் அவர்களுக்கு அன்பளிப்பு செய்தனர் என்றால், அவர்கள் எந்த ளவுக்குப்புலவர்மீதுஅபிமானம் வைத்திருந்தனர்என்பது புலப்படுகி றதல்லவா?
Page 97
190
பெரும் கண்ணியமிக்க ஆலிம்களின் பரம்பரையின் வாரிசாக நிக்ககொல்லையில் உதித்த அல்ஹாஜ் கவுஸ் ஆலிம் அவர்கள், மாத் தளை முஸ்லிம் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு பெரும் ஆலிமா வார்கள். காயற்பட்டணத்திலே ஒதி, அங்கு தன் ஆசான்களின் பேரன் பையும் அபிமானத்தையும் பெற்றிருந்த கவுஸ் ஆலிம் அவர்கள், பல சிறந்த இஸ்லாமியக் கவிதைகளைப் படைத்திருக்கின்றார்கள். ஆனால் அவற்றைஅச்சுவாகனம் ஏற்றுவதில் ஆலிம் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. எனினும் ஆலிம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பத்தினர் அவரது கவிதைகள் சிலவற்றை ஒரு சிறு நூலுருவில் வெளியிட்டுள்ளனர்.
மாத்தளை முஸ்லிம்களின் முத்திரையை ஈழத்து ஆங்கில, தமிழ் இலக்கியங்களிலே முதன்முதலாக மிக அழுத்தமாகப் பதித்தவர், அண்மையில் மறைந்த 'கன்ஸ"ல் உலூம்’ (அறிவுப் பொக்கிஷம்) அபுதாலிப் அப்துல் லதீப் ஆவார். கொங்காவலையில் பிறந்த மிகப் பெரும் அறிவுஜீவியான லத்தீப்பின் இலக்கியப் பங்களிப்பு, அளவில் - சிறியதாக இருக்கலாம்; ஆனால் அப்பங்களிப்பு ஆழமானது; காத்திர மானது என்பதை எவரும் மறுக்கத்துணியார்.
ஆழ்ந்த நூலறிவு, விசாலமானபார்வை, தொலைநோக்கு, சமூ கப்பற்று, மனிதநேயம் இவை அனைத்தையும் ஒருங்கே பெற்றி ருந்த மர்ஹஜூம் ஏ.ஏ.லதீப், பல விஷயங்களைப்பற்றி அறிவுபூர்வமாக சிந்திக்கக்கூடிய, பேசக்கூடிய, எழுதக்கூடிய ஆற்றலுடையவராக விளங்கினார்.
ஆசிரியராக கடமையாற்றிய காலத்திலே, பல மாணவர்கள் இத யங்களிலே இலக்கியத் தாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்திய இவர், தனது தமிழ் ஆக்கங்களிலே மாத்தளை முஸ்லிம்கள் பயன்படுத் திய, பயன்படுத்துகின்ற, தூயதமிழ்ச் சொற்கள் என்று கூற முடியாத, ஆனால் மண் வாசனை நிரம்பிய உயிரோட்டமுள்ள சொற்களைப் புகுத்தி, அச்சொற்களுக்கு ஓர் இலக்கிய அந்தஸ்த்தைவழங்கியவரா வார்.
1960-களில் 'தாரகை”யிலும் "இன்சானிலும் வெளியான இவ ரது ஆக்கங்கள், இக்கூற்றுக்குச் சான்று பகரும். பல வருடங்களுக்கு
19
முன் மாத்தளையில் நடந்த ஒரு மைய்யத்து பிரச்சினையைக் கருவாக வைத்து, அவர் படைத்த "மைய்யத்து’ என்ற சிறுகதை, மைய்யத்துக் கள் கொண்டு செல்லப்படும் காலம்வரை உயிர் வாழும் ஓர் இலக்கி யப்படைப்பு எனலாம்.
இவர் ஆங்கிலத்தில் சில சிறுகதைகளையும் கவிதைகளையும் ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். குறுகிய நோக்குடன் இஸ்லாத்தைப் பார்த்து, அதில் குறை கூறியவர்களைச் சாடுவதற்கு மர்ஹஅம் லதீபின் பேனா, என்றும் தயங்கியதில்லை. இத்தகைய கட்டுரைகள் ஏதாவது ஒர் ஆங்கிலப் பத்திரிகையில் பிரசுரமாகி இருந் தால், இரண்டு மூன்று நாட்களுக்குள் "சுடச்சுட" ஆதாரபூர்வமாக, நியாயபூர்வமாக மர்ஹஜூம் லதீப் பதில் எழுதுவார் என்று பலரும் உறுதியாக நம்பினர். பெரும்பாலும் மர்ஹூம் லதீபும் அவ்வாறு பதில் எழுதவே செய்வார். இஸ்லாத்தின் மீது நியாயமற்ற முறையில் துவேஷ கணைகளை எய்தவர்களுக்கெதிராக இயங்கிய ஒரு தனி மனித இராணுவமாகவே லதீப் விளங்கினார் எனக் கூறலாம்.
J 'அப்துல் லத்தீப் அறிவின் சின்னம் அனைத்துக் கலைகளை அலசும் வண்ணம் இனத்தின் துவேஷம் கக்குவோர் மீதும் எரிந்து பதிலுடன் எரிசரம் விடுவோன்’ இவ்வாறு 'ராம் ரஹிம் எங்கே?" என்ற தனது கவிதையில் மர் ஹலிம் லத்தீபை கவிஞர் இக்பால் வர்ணித்தது நூற்றுக்கு நூறு உண் மையே.
நொவெஸ்டி செய்தி ஸ்தாபனத்திலே கடமையாற்றிய லதீப், சர்வதேச விஷயங்களைப் பற்றி எழுதியஆங்கில கட்டுரைகள், பல வெளிநாட்டுப் பத்திரிகைகளில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இவரது பத்திரிகைத் துறைச் சாதனைகளைப் பாராட்டி, சோவியத் பாராளுமன்றம் ஓர் உயர் விருது வழங்கிக் கெளரவித்துள்ளது. பத்திரி கைத் துறைக்காக, இவ்வுயர் விருதைப் பெற்ற முதல் இலங்கையர் மர்ஹலிம் லத்தீபே. இது மாத்தளை மண்ணுக்குக் கிடைத்த மகிமை யன்றோர் 1992-ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலு
Page 98
99.
வல்கள் இராஜாங்க அமைச்சு லத்தீபுக்கு 'கன்ஸால் உலூம்" எனும் விருதும், பொற்கிழியும் வழங்கி கண்ணியம் செய்தமை ஈண்டு மகிழத் தக்க விடயமாகும்.
அண்மைக் காலம் வரை பன்னாமம் என்றழைக்கப்பட்டு வந்த மாத்தளையில் பிறந்து, 'பண்ணாமத்துக் கவிராயர்’ என்ற புனைப் பெயரில் முப்பது வருடங்களுக்கு மேல் தரமான கவிதைகளைப் படைத்து வரும் ஜனாப் எஸ்.எம். பாரூக் எம்நாட்டிலுள்ள தலைசி றந்த தமிழ்க் கவிஞர்களுள் ஒருவராவார். பாடசாலைப் பருவத்திலே பாடல்கள் எழுதி, வகுப்புத் தோழர்களால் 'புலவர்” என அன்போடு அழைக்கப்பட்ட ஜனாப் பாரூக், இளமையிலேயே 'கவிதைநடை கைவந்த வல்லாளராவார்”.
ஜனாப் எஸ்.எம்.பாரூக் அவர்களது கவிதைகள் பல, தாரகை தேசாபிமானி, இன்சான், செய்தி, மல்லிகை, வீரகேசரி, தினகரன், சிந்தாமணி போன்ற ஈழத்துப் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. சில வெளிநாட்டுப் பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளன. இவரது கவிதைகளில் சோடையானது என்று கூறுவதற்கு எதுவுமே இல்லை என்று கூறி, திரு. அந்தனி ஜீவா இவரைப் பாராட்டியுள்ளார்.
இவரது கவிதைகளில் உணர்ச்சி கொப்பளிக்கும்; சொல்லாட்சி கோலோச்சும், "செத்தைக் கவிதைகள் செப்புதற்கு நானறியேன்; அக் கினியாய் உமிழும் ஆவேசப் பாவலன் நான்’ என்று தன்னை அறிமு கப்படுத்தும் இவர், சமுதாய அவலங்களைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு சமுதாயக் கவிஞராவார்.
1985-ஆம் ஆண்டு "விழுதுகள்” என்ற சஞ்சிகையில் வெளிவந்த பண்ணாமத்துக் கவிராயரின் "ஈமான்தாரி" என்ற கவிதையிலிருந்து சிலவடிகள் கீழே தரப்படுகின்றன. அவை பண்ணாமத்துக் கவிராய ரின் கவித்துவத்தைப் புலப்படுத்தும்,
கஃபாவில் பெருமானார்
கண்டுடைத்த
சிலைகளெலாம்
இந்நாளில் - எங்கள்
193
இதயத்துள் நுழைந்தனவோ? ஈமான் சுடர்கின்ற நெஞ்சம் எமதென்றால் ஈனத்தனங்கள் கொலுவிருக்க நியாயமென்ன?
வணக்கங்கள் யாவுமிங்கே
வரண்ட
சடங்காச்சு
பிணக்குகளில் வாழ்நாளைக்
கடத்துவதே
வழக்காச்சு
அச்சம்
இறையச்சம்
இதர அச்சம் யாவும்
துச்சமென மதிக்கும்
துணிவெங்கே?
"பிறநாட்டு நல்லறிஞர்” கவிதைகளைமூல அழகு சிதையாமல் தமிழ்ப்படுத்தி, தமிழிலக்கியத்துக்கு ஓர்அழியாசேவையை செய்துள் ளார் எஸ்.எம். பாரூக். நஸ்ருல் இஸ்லாம் போன்ற தலைசிறந்த வங் காள கவிஞர்களையும், வேறு பல பாலஸ்தீனிய கவிஞர்களையும் ஒழுங்காக, சிறப்பாக தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கவிஞர் எஸ்.எம். பாரூக்கையே சாரும்.
பண்ணாமத்துக் கவிராயர் மொழி பெயர்த்த நஸ்ருல் இஸ்லாம் கவிதைகளைக் 'கவிதைப் பூங்கா’ என்ற தலைப்பில் இலங்கைப் பல்கலைக் கழகக் கொழும்பு வளாக முஸ்லிம் மஜ்லிஸ், தான் வெளி யிட்ட நஸ்ருல் இஸ்லாம் நினைவு மலரில் தொகுத்து வெளியிட்டுள் ளது. இவ்வாண்டு தமிழ்ஒளி எனும் விருது இவருக்கு வழங்கப்பட்
t-gs.
ஜனாப் எஸ்.எம். பாரூக்கைப் போலவே, மாத்தளை ஸாஹிரா
கல்லூரி உருவாக்கிய இன்னொரு கவிஞர் ஜனாப் குவைலித் ஆவார்.
Page 99
194
பாடசாலையில் பயிலும் காலத்திலேயே இலக்கிய ஆர்வம் கொண்டி ருந்த ஜனாப் குவைலித், "மறையும் நிழல்" "பறக்கும் உயிர்” ஆகிய புனைப்பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் தத்துவச்சாறு, ஜீவியப்பயணம், ஒளிப்பாதையில் ஸாஹிரா, தேவ ஹ"வ வரலாறு போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.
இளைஞர்களுக்கு நற்புத்தி புகட்டவேண்டும்; அவர்களைத்தூய் மையான வழியில் இட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் இவரது கவிதைகளில் காணப்படுகிறது. தத்துவச்சாறு எனும் இவரது நூலில் காணப்படும்
"வீண்விளையாட்டு, நேரம் போக்கும் போக்கு
விருப்புமிகு பற்று வேதனையாம் புற்று சேய்மை நிறை நோக்கு சிந்தனையாம் செய்கை
செழிப்பான வாழ்வின் அடிப்படை இதுவே"
என்ற அடிகள் ஜனாப் குவைலித் அவர்களின் உயர் எண்ணங்க ளைப் பிரதிபலிக்கின்றன.
அரபு எழுத்தணிக் கலையில் புகழ் பெற்றுள்ள ஜனாப் ரைத்தளா வளை அஸிஸ், பல வருடங்களுக்கு முன்னர் பல வானொலி நாடகங் களை எழுதியுள்ளார். இஷரது சித்திரக்கதைகளும் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. இலங்கை வானொலியில்'இசையும் கதையும்” என்ற நிகழ்ச்சி நடந்த காலக்கட்டத்திலே மிகவும் பிரபலமாயிருந்த ஒரு பெயர் மாத்தளை - ஜியாத் என்பதாகும்.
ஒரு சிறந்த ஒவியரான மர்ஹஜூம் எம்.ஸி. மதார்சாஹிபு, சித்திரக் கலையைப் பற்றியும், சிற்பக் கலையைப் பற்றியும் சில தரமான கட்டு ரைகளை எழுதியுள்ளார். அஜந்தா ஒவியங்களைப் பற்றி அவர் எழு திய கட்டுரைகள் அவரின் ஓவிய அறிவை புலப்படுத்துகின்றன.
1980-ம் ஆண்டளவில் பாரிஸ் பாரூக் பல அழகிய கவிதைகளைப் பட்ைத்தார். தொடர்ந்து எழுதியிருந்தால் அவர் ஒரு தரமான கவிஞ ராக உருவாகி இருப்பார். அண்மைக்காலங்களில் மாத்தளை மாவட்ட முஸ்லிம் எழுத்தாளர்கள் பலரின் ஆக்கங்கள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
195
அத்தியாயம் - 12
ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதுகளில் கிரிக்கட், உதைப் பந்தாட்டம் போன்ற மேற்கத்திய விளையாட்டுக்கள், புனித தோமியர் கல்லூரி, கிறிஸ்து தேவ வித்தியாலயம், விஜயாக் கல்லூரி போன்ற கல்லூரிகளில் விளையாடப்பட்டன. 1942-ஆம் ஆண்டில்சாஹிராகல் லூரி ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், அக்கல்லூரியும் இவ்விளையாட்டுக ளில் முழுமையாக பங்கு பற்றியது. மாத்தளை வாழ் பொதுமக்களும் இவ்விளையாட்டுகளில் ஈடுபட்டனர்; ஆர்வம் காட்டினர்; இவ்விளை யாட்டுகளை வளர்ப்பதற்கு உதவிகளை நல்கினர். மாத்தளை நகரத் தில் விளையாடப்பட்ட அத்தனை விளையாட்டுகளிலும் முஸ்லிம் கள் உற்சாகத்தோடு ஈடுபட்டுள்ளனர். தம் திறமையையும் ஆற்றலை யும் வெளிப்படுத்தி உள்ளனர். மாத்தளை மாவட்ட விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு இம்மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் விளை யாட்டு வீரர்களாக பங்களிப்புச் செய்துள்ளளனர். விளையாட்டுப் பரிபாலனத்துறையில் தம் பங்களிப்பை வழங்கியுள்ளனர்; குறிப்பி டக்கூடிய அளவிற்கு நிதி உதவிகள் வழங்கியும் விளையாட்டுத்துறை முன்னேற்றத்திற்கு உதவியுள்ளனர். மாத்தளை மாவட்ட விளையாட் டுத்துறை வரலாற்றை விருப்பு, வெறுப்பின்றி ஆராயும் எவரும், இவ் வரலாற்றில் முஸ்லிம்களின் முத்திரை மிக அழுத்தமாக பதிந்திருக்கி றது என்பதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்.
ஆரம்பக் காலங்களிலே ஹாஜி எச்.ஏ. ஹனான் போன்றோரும் பின்னர் ஜனாப்களான எம்.எச்.ஜெய்னுதீன், ஏ.ஸி.எம். ஜவாஹிர், கே.டி.சாலே, எம்.எச்.புவாட், எஸ்.ஜவ்பர், ஹாஜி ஏ.எச்.சால்தீன் போன்றோரும் கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போதிலும், இவ்விளையாட்டு மாத்தளையில் நன்கு வளர்ச்சி பெறாததனால் இவர்களுக்குத்தம் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கோ தம் திறமை களைப் பூரணமாக வெளிப்படுத்துவதற்கோ வாய்ப்புகள் கிட்டவில்,
Page 100
96
ல்ையென்றே கூற வேண்டும். ஹாஜிகளான எஸ்.எச்.ஏ.வதுாத் என். எம்.யாசீன், மர்ஹஅம்களான ஏ.சி.ஜுனைதீன், ஏ.சி.புகாரி எஸ்.ஏ.பரீட், எம்.சி.பாவா சாஹிப், கச்சி மொஹிதீன் என்.எம்.சா ஹ"ல் ஹமீது, எம்.எஸ்.அமீர்தீன், ஜனாப்களான டி.எஸ்.ஜே. பக்கீ ரலி, ஆபூ எஸ்.எச்.எம். தாஹா, கே.எம். அபூசாலி, கே.எம்.ஜாயிர், எம்.சரூக் போன்றோர் உதைப்பந்தாட்டத்தில் திறமை காட்டிய மாத் தளை மாவட்டத்து முஸ்லிம்களில் சிலராவார்கள். மாத்தளை முஸ் லிம்களில் உதைப்பந்தாட்டத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர் ஜனாப் ரொனி பக்கீரலியாவார். இவர் இலங்கை தேசிய உதைப்பந் தாட்டக் குழுவுக்குத் தலைமை தாங்கியுள்ளார். ஜனாப் கே.ஆர்.எம். ஜபருல்லா இலங்கை தேசிய கனிஷ்ட உதைப்பந்தாட்டக் குழுவில் அங்கம் வகித்துள்ளார். மாத்தளை உதைப்பந்தாட்ட வளர்ச்சிக்கு 'சென்ட்ரல் ஸ்போர்ட்ஸ் கிளப்'(CentralSportsClub) மூலம் மர்ஹஅம் எஸ்.ஏ. லத்தீப் கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளார். மர் ஹ"ம் அக்பர், மர்ஹ"ம் கே.எஸ்.எம்.புகாரி, மர்ஹ"ம் "கிரின்ஸ் டார்ஸ்’ இஸ்ராயில் பாய், ஹாஜி எஸ்.எச்.ஏ., வதுரத், ஜனாப் ஓ.எல். எம்.ஏ.ரவுப் ஆகியோர் இவ்விளையாட்டின் வளர்ச்சியில் பெரும் அக் கறை காட்டியுள்ளனர்.
தேசிய அளவில் மாத்தளை முஸ்லிம்கள் புகழ் பெற்ற இன்னு மொரு விளையாட்டு வெறி பாரம் தூக்குதல் (Weight ling) ஆகும். இத்துறையில் மாத்தளை முஸ்லிம்களில் தலை சிறந்தவர் ஜனாப் டி.எஸ்.ஜே.பக்கீரலி என்பவராவார். இத்துறையில் இவர்தலைசிறந்த ஒரு போதனாசிரியராக (Coach) கருதப்படுகின்றார். ஹாஜி என்.எம். யாசீன், ஜனாப் பி.ஏ. வொலிட் ஆகியோர்களும் இத்துறையில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றுள்ளனர்.
மாத்தளை நகரம் பெரும் புகழ் பெற்றிருக்கும் விளையாட்டு ஹொக்கியாகும். மாத்தளை இளைஞர்கள் பலர் இலங்கை தேசிய ஹொக்கி குழுவில் காலத்திற்குக் காலம் இடம் பெற்றுள்ளனர். இவர் களில் கணிசமான தொகையினர் முஸ்லிம்கள் ஆவர். மாத்தளையைச் சேர்ந்த கீழ்வரும் முஸ்லிம்கள் தேசிய ஹொக்கி குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர். ஜனாப் எம்.எச்.புவாத், மர்ஹஅம் எம்.எச்.சரூக்,
97
ஜனாப்களான என்.எம்.பவ்சர், எஸ்.ஐ.எஸ். அஜ்வாட், ஏ.எம். அன் சார் ஏ.ஜே.எம்.பாரூக், எம்.எச்.ஜியாவுத்தீன் அஹ்மத், டி.மிஹ்லார் தீன், டி.எம்.ரிஸ்வி, எஸ்.எம்.முலாபர், எம்.ஜி.ஏ.வதுரத், எச்.எம். ஜனீர், எப்.மொஹொத்தார், எம்.எம்.ஜியாத், டி.ஏ.கமால்தீன், மர் ஹஜூம், எச்.எம்.முஸம்மில்.தேசிய ஹொக்கிக்குழுவில் இடம்பெற்ற முதல் மாத்தளை முஸ்லிம் என்ற பெருமை மாத்தளை உருவாக்கிய தலை சிறந்த வீரர்களுள் ஒருவரான ஜனாப் எம்.எச்.புவாத் அவர்க ளைச் சாரும். மர்ஹஜூம் எச்.எம்.முஸம்மில் அவர்களும் ஜனாப் எஸ். எம்.முலாபர் அவர்களும் தேசிய ஹொக்கி குழுவின் தலைவர்களாக இருந்துள்ளனர். 1956-1991 காலப்பகுதியில் மாத்தளை மாவட்ட ஹொக்கி குழுவில் 170 வீரர்கள் இட்ம் பெற்றுள்ளனர். இவர்களில் சிங்களவர்87 பேர்; தமிழர்கள்2 பேர், பரங்கியர்3 பேர்; முஸ்லிம்கள் 59 பேர். இலங்கை தேசிய ஹொக்கி குழுவில் 1953-1990 காலப்பகுதி யில் 50 மாத்தளை வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 29 பேர் சிங்களவர், 5 பேர் தமிழர், 16 பேர் முஸ்லிம்கள். இதே காலப்பகுதி யில் நான்கு மாத்தளை ஹொக்கி வீரர்கள் தேசிய குழுவின் தலைவர்க ளாக இருந்துள்ளனர். இதில் இருவர் முஸ்லிம்கள் ஆவர். இப்புள்ளி விவரங்கள் ஹொக்கி விளையாட்டுத்துறைக்கு மாத்தளை முஸ்லிம்க ளின் பங்களிப்பின் அளவினைக் காட்டுவதற்காக தரப்பட்டவையா கும்.
ஹொக்கி விளையாட்டின்ஏனைய துறைகளான பயிற்சி, தெரிவு, மத்தியஸ்தம் போன்ற துறைகளிலும் மாத்தளை முஸ்லிம்கள் தம் பங்களிப்பை வழங்கியுள்ளனர். மர்ஹஅம் ஏ.ஏ.சத்தார், மர்ஹஅம் எச்.எம். முஸம்மில், ஜனாப் ஏ.ஜே.எம்.பாரூக் ஆகியோர் தேசிய ஹொக்கி குழுவின் பயிற்சி பொறுப்பாளர்களாக(Coach) சேவையாற். றியுள்ளனர். மர்ஹஜூம் ஏ.ஏ.சத்தார் ஜனாப் ஏ.ஜே.எம். பாரூக், கேணல் ஏ.எம்.எம். பரீட், ஜனாப் யு.எல்.எம். லத்தீப் ஆகியோர் தேசிய ஹொக்கி குழு தெரிவாளர்களாக(Selectors) சேவையாற்றியுள் ளனர். கேணல் ஏ.எம்.எம்.பரீட், ஜனாப் யு.எல்.எம்.லத்தீப் ஆகிய இருவரும் தேசிய ஹொக்கி மத்தியஸ்தர்களாக கடமையாற்றியுள்ள னர். மாத்தளை மாவட்ட ஹொக்கி சங்க பரிபாலனத்திலும் முஸ்லிம்
Page 101
198
கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். 1958-61 காலப்பகுதியில் ஜனாப் ஏ.இசட் ஒமர்தீன் அவர்கள் இச்சங்கத்தின் செயலாளராக இருந்து பெரும் சேவையாற்றியுள்ளார்கள். ஜனாப் ஏ.ஜே.எம்.பாரூக், ஜனாப் யூ.எல்.எம்.லதீப் ஆகியோரும் இச்சங்கத்தின் செயலாளர்களாக பதவி வகித்துள்ளனர்.
சாரணீயத்துக்கும் விளையாட்டுத்துறைக்கும் ஓரளவு தொடர்பு இருக்கிறது. இலங்கையின் முதல் சாரணியக் குழு 1912-ஆம் ஆண்டு மாத்தளை கிறிஸ்து தேவ கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. அக்குழு வில் இடம்பெற்றவர்கள் திரு. வி.நடராஜா, திரு. ஜோன் கருணாரத்ன, திரு. ஆர்.பி.கொட்டுவ கெதர திரு. ஆர்.பி. கப்புவ்த்த, திரு. பீட்டர் போலிங், ஜனாப் ஏ.எம்.ஹமீத், ஜனாப் எம்.சஹாப்தீன் எனும் எழு வர் ஆவார்கள். எனவே இலங்கையின் முதல் சாரணிய குழவிலேயே இரண்டு மாத்தளை முஸ்லிம்கள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கின் றோம்.
மாத்தளை மாவட்டத்தில் வாழும் பல இனங்களுக்குமிடையில் ஒற்றுமை, புரிந்துணர்வு, செளஜன்யம் ஆகியவற்றை வளர்ப்பதற்கு விளையாட்டுத்துறை பெரும் பங்களிப்பை நல்கி உள்ளது. மாத்தளை விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு, மாத்தளை முஸ்லிம்கள் கணிச மான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
799
அத்தியாயம் - 13 வாழ்வியலும் பண்பாடும்
மாத்தளை மாவட்டத்திலே, முஸ்லிம்கள் தற்போது பரந்து வாழ்கின்ற போதிலும், பாரம்பரிய முஸ்லிம் கிராமங்கள் என்று அழைக்கப்படக் கூடியவை மாத்தளை மாவட்டத்தில் ஏறத்தாழ இரு பதே இருக்கும். இவற்றுள் பல அருகருகே அமைந்து, ஒன்றோ டொன்று தொடர்புடையனவாக இருக்கின்றன. உதாரணமாக மாபே ரிய, பரகஹெவெல, மாருகோன, ரைத்தளாவளை, மானாம் பொட எனும் கிராமங்களைக் காட்டலாம்.
இவ்வாறே பட்டிவெல, நமடகஹவத்தை, தேவாஹ"வ, ரன்வெ டியாவ போன்ற கிராமங்கள் தொடர்புடையனவாக விளங்குகின்றன. இதே நெருங்கிய தொடர்பு எல்மல்பொத்த,மாதிப்பொல, சவன வெளி, நிக்ககொல்ல ஆகிய கிராமங்களுக்கிடையே நிலவுகின்றது. மாத்தளை, வரக்காமுறை, உள்பொத்தபிட்டி, கோட்டகொட, இரத் தொட்ட, நிக்ககொல்ல போன்ற கிராமங்கள் ஏறத்தாழ ஒரே பிரதேசத் திலே அமைந்துள்ளன என்றும் தொடர்புடையனவென்றும் கூறலாம்.
ஆக நிக்கவட்டவன, நாலியாகனத்த என்ற இரு கிராமங்கள் மாத்திரமே தனி, தனியே அமைந்துள்ளவையாகும். இங்கே கிராமங் கள், வெவ்வேறு சிறு தொகுதிகளாக காட்டப்பட்ட போதிலும், இவை அத்தனையும் ஒரு சிறு பிரதேசத்திலே அமைந்திருப்பதனா லும், வர்த்தகம், கல்வி, உத்தியோகங்கள், போக்குவரத்து வசதிகள் ஆகியவை இக்கிராமங்களுக்கிடையே நெருங்கிய தொடர்பை ஏற்ப டுத்தி இருப்பதனாலும், மாத்தளை முஸ்லிம்களுக்கிடையில் ஒரு கலாச்சார ஒற்றுமை தென்படுவதை அவதானிக்கலாம்.
ஆரம்பகாலங்களில் பிரதேசஅடிப்படையிலும், நகரம், கிராமம் என்ற அடிப்படையிலும் வர்த்தகம், விவசாயம் என்ற அடிப்படையி லும் கிராமங்களுக்கிடையே சில கலாச்சார வேறுபாடுகள் தென்பட்டி
Page 102
900
ருக்கலாம். ஆனால் இன்று இத்தகைய சிறு வேற்றுமைகள் கூட, குறைந்து கொண்டே வருகின்றன என்பது தெளிவு.
அனைத்து சமூகங்களின் கலாச்சாரங்களிலும் அவை பின்பற்று கின்ற சமயங்களின் சாயல் படிந்திருப்பதைக் காணலாம். சமயப் பாதிப்புகளுக்கு உள்ளாகாத கலாச்சாரம் எதுவும் இருப்பதில்லை. ஆனால் இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பொருத்தவரையில் நாம் காணும் முக்கிய பண்பு அக்கலாச்சாரத்தின் அடித்தளமாக சமயம் இருப்பதாகும்.
இஸ்லாம் ஒரு சமயம் மாத்திரமல்ல, அது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டமுமாகும். ஒரு மனிதனது பிறப்பிலிருந்து இறப்புவரைஅவனது வாழ்க்கையில் நடைபெறக்கூடிய அத்தனை முக்கிய நிகழ்வுகள் பற்றி யும் இஸ்லாம் விதிமுறைகளை அமைத்துள்ளது. இவற்றை மீறுவது மார்க்கத்திற்கு முரணானதாகும்.
எனவே பெரும்பான்மையான முஸ்லிம்களின் வாழ்க்கை இஸ் லாத்தின் விதிமுறைகளை ஒட்டியே அமைந்திருக்கும். இதனால் முஸ் லிம்களின் கலாச்சாரத்தின் அடித்தளமாக இஸ்லாம் இருப்பதோடு, அது முஸ்லிம் கலாச்சாரம் முழுவதிலுமே வியாபித்திருப்பதையும், அவதானிக்கலாம்.
ஆனால் ஆரம்ப காலங்களில் இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பற்றி ஒரு தெளிவின்மை இருந்ததாலும், பிற சமயத்தவர்களின் நெருங் கிய தொடர்பினாலும் சில அந்திய பழக்க வழக்கங்கள், முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவி இருக்கின்றன என்பது உண்மை. இருப்பினும் இத்தகைய சந்தர்ப்பங்களில் கூட, அந்திய பழக்க வழக்கங்கள் ஒரு குற்ற உணர்வோடும் ஒரு வகையான வெட்க உணர்ச்சியோடுமே பின்பற்றபடுவதனால் எல்லைகள் மீறப்படுவது குறைவு. இது முஸ் லிம்களின் கலாச்சாரத்திற்கு ஒரு தனித்துவத்தையும், சிறப்பையும் வழங்குகின்றது. குடும்பவாழ்வும்
ஒரு சமூகத்தின் கலாச்சாரத்திற்கும் குடும்ப வாழ்வு நடைபெறும் வீடுகளுக்கும் தொடர்புண்டு. வீடுகளின்அமைப்புமுறைகூடஅச்சமூ"
201
கத்தின் கலாச்சாரப் போக்கை வழிநடத்துவதாக இருப்பதைக் காண லாம். ஆரம்பத்தில் முஸ்லிம் கிராமங்களில், வீடுகள் சிறியனவாகவும் மண்ணாலும் வைக்கோலாலும்அல்லது ஒலையாலும்அமைக்கப்பட் டவையாக இருந்தபோதிலும், 1940-50களில் முஸ்லிம்கள் பொதுவாக பொருளாதார வசதியுடையவர்களாக வளர, வீடுகளின் அமைப்பி லும் வித்தியாசங்கள் தோன்ற ஆரம்பித்தன.
சனத்தொகை விகிதாசார அடிப்படையில் பார்க்கும் போது, ஒவ் வொரு முஸ்லிம் கிராமத்திலும் பெரிய வீடுகள் அதிகம் கட்டப்படுவ தைக் காண்கின்றோம். வீடுகளின் அமைப்புகளுக்கேற்ப, உறங்கும் முறைகளில், வரும் விருந்தினர்களை அமரவைக்கும் முறைகளில், உணவருந்தும் முறைகளில், வீட்டுத் தளபாடங்களிலே, மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
அக்கால முஸ்லிம் வீடுகளில் நாம் காணும் ஒரு விஷேட பண்பு, வீட்டின் மத்தியில் 'நிலாமுற்றம்’ ஒன்றை அமைத்து, அதைச் சுற்றி, நிலா முற்றத்தை நோக்கும் வகையில் நீளவாக்கில் இரண்டு மூன்று அறைகளை அமைப்பதாகும். கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு உதவுவ தாக இருந்த இத்தகைய வீடுகள் மாத்தளை, மாருக்கோன போன்ற பகுதிகளில் இன்றும் காணப்படுகின்றன.
ஆண்கள் பலர்வியாபாரத்தில் ஈடுபட்டு, பலநாட்கள்வெளியூர்க ளில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருந்த காலக்கட்டத்திலே, இத்த கைய வீடுகள் முஸ்லிம் பெண்களுக்குப் பெரும் பாதுகாப்பை வழங் கியிருக்கும். பொதுவாக ஏனைய சமூகங்களில் போலவே, முஸ்லிம் கள் மத்தியிலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையே வழக்கமாக இருந்தது. பெற்றோர்களின் வீடுகள் பெரிதாக இருந்தால், திருமணத்திற்குப்பின் னரும், பிள்ளைகள் தம் பெற்றோர்களின் வீடுகளிலேயே வசித்தனர்.
பெற்றோர்களின் வீடுகள் சிறியனவாக இருந்த பட்சத்தில் பக்கத் திலேயே நிலம் இருந்தால், தாமும் ஒரு சிறு வீட்டை அமைத்துக் கொண்டனர். இத்தகைய அமைப்பு குடும்ப ஒற்றுமைக்கு உதவியது. முதியவர்கள் பராமரிக்கப்பட்டனர். அவர்களின் மூலம் இளைய தலைமுறையிண்ர்க்கு பாரம்பரியங்கள் கையளிக்கப்படக்கூடிய வாய்ப்புக்களும் ஏற்பட்டன.
Page 103
909
ஆனால் இப்போது இவ்வழக்கம் வேகமாக குறைந்து கொண்டு வருகின்றது. தனிக் குடும்பமுறை பிரசித்தி பெற்று வருகின்றது. இன்று முஸ்லிம் சமூகத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளுக்கு, இக் கூட்டு வாழ்க்கை முறை உடைந்து வருவது ஒரு காரணமாக இருக்க லாம்.
மாத்தளை மாவட்டத்தில் இருக்கும் பெரும்பாலான பள்ளிவா சல்கள் சமூக ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்குப் பெரிதும் உதவுகின் றன. முஸ்லிம்கள் இஸ்லாமிய மார்க்க விதிகளுக்கு ஏற்ப, தம் வாழ்க் கையை நடத்துகின்றனரா என்பதை ஒர் அளவுக்கு கண்காணிக்கின் றன. பள்ளி வாசல்களின் கண்காணிப்பும், கட்டுப்பாடும் தவறுகள் பகிரங்கமாக நடைபெறுவதையாவது தடுக்கின்றன என்று கூறலாம்.
1920-களில் கூட, சில முஸ்லிம் பள்ளிவாசல்கள் மதுபானம் அருந்திய ஜமாத்தினருக்கு நாற்பது அடிகளைத் தண்டனையாக வழங் கியுள்ளன. இன்றும் தவறுகளுக்கு அபராதம் விதிக்கும் பள்ளிவாசல் கள் பல, மாத்தளை மாவட்டத்தில் இயங்குகின்றன. தவறு செய்தவர் களைஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் வழக்கமும் முன்னர் இருந்திருக் கிறது என்பது இவ்விடம் குறிப்பிடத்தக்கது. திருமணச் சம்பிரதாயங்கள்:
திருமணம் மிக புனிதமான ஒர் ஒப்பந்தம் என்று இஸ்லாம் கருது கிறது. இஸ்லாமியச் சட்டப்படி, திருமணம் நிறைவேறுவதற்கு ஆறு பகுதிகள் உள. அவை1.வலி, 2. சாட்சிகள், 3. மணமகள், 4. மணமகன், 5. ஈஜாப், 6. கபூல் என்பனவாம். விவாகத்தின்போது மணமகன், மணமகளுக்கு ஒரு தொகைப்பணம் அல்லது பொருள் கொடுக்க வேண்டும். இது மஹர் எனப்படும். "பெண்களுக்கு அவர்களின் மஹரை அளித்து விடுங்கள்” என திருக்குர்ஆன் ஆணையிட்டுள்ளது.
மஹர் கொடுக்காமல் கணவன் இறந்துவிட்டால், அவனுடைய சொத்திலிருந்து, மஹரை வேறாக்கிக் கொடுத்த பின்னரே மீதிச் சொத்து,வாரிசுகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு மஹர் கொடுப்பதை இஸ்லாம் கட்டாயப்படுத்தி இருக்கிறது.
903
இஸ்லாம் யார் யாரைத் திருமணம் செய்யலாம், யார் யாரைத் திருமணம் செய்யக்கூடாது என்பதைப் பற்றியெல்லாம் வரையறை களை வகுத்துள்ளது. இவற்றை எக்காரணங்களுக்காகவும், எவருக் கும் மீற முடியாது. திருமணம் செய்த மகிழ்ச்சியில் மணமகன்கொடுக் கும் விருந்து "வலிமா” என அழைக்கப்படும். இது மணமகனின் வசதிற்கேற்ப கூடவோ, குறையவோ செய்யலாம். இஸ்லாமியத்திரு மணங்களில் இவ்வடிப்படைகள் பல பின்பற்றப்படுகின்றன.
ஆனால் ஏனைய இன, மத,கலாச்சார பாதிப்புகளால், பல புதிய அம்சங்கள் முஸ்லிம் திருமணங்களில் ஊடுருவி இடம் பெறுவதைக் காண்கின்றோம். இஸ்லாம் கட்டாயம் என்கின்ற சில அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்காது, இஸ்லாம் முக்கியத்துவம் அளிக்காத ஒரு சில அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண் கின்றோம். உதாரணமாக, மஹருக்குக் கொடுக்கப்படாத முக்கியத்து வம் சீதனத்துக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இது முஸ் லிம்களின் திருமண ஆசாரங்கள் எந்தளவு அந்நிய கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகின்றது.
மாத்தளை மாவட்டத்து முஸ்லிம் திருமணங்களில் ஏராளமான பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், ஆசாரங்கள் பின்பற்றபடுகின் றன. மார்க்கம் விரும்பாதஒருசில பழக்கங்களும் பின்பற்றப்பட்டிருக் கின்றன. இப்போதும் பின்பற்றப்படுகின்ற சில சம்பிரதாயங்களும், அருகிவிட்ட சில சம்பிரதாயங்களும் இங்கே சுருக்கமாகத் தரப்படு கின்றன.
இச்சம்பிரதாயங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ள, ஏனைய மாவட்டங்களில் போலவே, மாத்தளையிலும் திருமணம் என்பது இரு குடும்பங்களின், இரு கூட்டத்தாரின் இணைப்பு என்ற அம்சத் திற்கே கூடுதலான முக்கியத்துவம் வழங்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே திருமணத்திற்கு முன் அல்லது திருமணத்தின் போது எடுக்கப்படும் சகல நடவடிக்கைகளும் இவ் விரு கூட்டத்தாரிடையே நல்லிணக்கத்தையும் நல்லுணர்வையும், பரஸ்பரபுரிந்துணர்வையும்கூட்டுவதையே நோக்கமாக கொண்டிருந்
தன.
Page 104
904
எனவே இந்த நோக்கத்தில் வெற்றிபெறுவதற்கு அனுசரணையா கவே சம்பிரதாயங்கள், மரபுகள், ஆசாரங்கள் வளர்ந்துள்ளன என்ப
தைக் காணலாம். இந்த சமூக நோக்கு மறக்கப்பட்டு அல்லது ஒதுக்கப் பட்டு, திருமணம் என்பது, ஒர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் ஒரு தனிப்பட்ட இணைப்பு மாத்திரமே என்ற நவீன மேற்கத் திய கருத்து முஸ்லிம்களின் மத்தியிலும் காலூன்ற ஆரம்பித்தவுடன், பாரம்பரிய சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பித்தன. குடும்பங்களின் விரிவு, குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு இடங்களில் சிதறி வாழ்தல், பொருளாதார நெருக்கடிகள், புதுயுகத் தின் அவசரத்தன்மை ஆகியனவும், பழக்க வழக்கங்களும் சம்பிரதா யங்களும் மறைவதற்குத் துணைக் காரணங்களாக விளங்குகின்றன.
ஒர் ஆணோ அல்லது பெண்ணோ திருமண வயதை அடைந்தவு டன் அவர்களது பெற்றோர்கள் அவர்களுக்குத் திருமணத்தை முடித்து வைக்க முயற்சிப்பர். பல வருடங்களுக்கு முன்னர் திருமணங்கள் பெரும்பாலும் குடும்பங்களுக்குள்ளேயே அல்லது ஊருக்குள்ளேயே நடைபெற்றபடியால், பெரும்பாலும் பெற்றோர்களே தாம் விரும் பிய வீட்டினரோடு திருமணப் பேச்சு வார்த்தைகளை நடத்தினர் அல் லது இரு சாரார்களுக்கும் நெருங்கிய ஒர் உறவினர் திருமணம் பேச்சு வார்த்தைகளை நடத்தி முடித்தார்.
இதில் முக்கியமாக பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனங்கள் - கைக்கூலி, காணி, வீடு, நகை போன்றவைப் பற்றியே கொடுக்கல் - வாங்கல் என்ற பேரில் பேசப்படுகின்றன. இவற்றில் இருசாரார்க ளுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டால் இத்திருமணம் நிச்சயம் செய்யப்படும். இதை 'பேச்சு வார்த்தை முடித்தல்’ என அழைத்தனர். ஆனால் இன்று பெரும்பாலான திருமணங்கள், குடும்பத்திற்கு வெளி யேயும் ஊருக்கு வெளியேயும் நடைபெறுவதனால் பெரும்பாலும் கல்யாணத் தரகர்களினாலேயே திருமணங்கள் ஏற்பாடு செய்யப்படு கின்றன.
திருமண சம்பந்தம் முடிவாகிவிட்டால் மணப்பெண்ணுக்கு 'அடையாளம் போடுதல்" எனும் ஒரு வழக்கம் இருக்கிறது. மணமக
905
னின் தாய், சகோதரிகள், நெருங்கிய உறவுப் பெண்கள் ஆகியோர் மணமகள் வீட்டுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் சென்று, மணமகளின் உறவினர்கள் மத்தியிலே, மணமகனின் தாய் அல்லது மணமகனின் சகோதரிசில தங்கநகைகளை மணமகளுக்கு அணிவிப்பார்கள். திரும ணம் நிச்சயமாகி விட்டது என்பதை ஊராருக்கு உணர்த்தவும் இரு குடும்பத்தவர்களுக்கிடையே பரஸ்பரஉறவு ஏற்படவும் இவ்வழக்கம் பெரிதும் உதவுகின்றது.
திருமணம் நிச்சயம் ஆனபிறகும் சிலவேளை திருமணம் உடனே நடைபெறாது இருக்கலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், பெரு நாள் போன்ற விஷேச தினங்களில், மாப்பிள்ளை வீட்டார் மணப் பெண்ணுக்குப் புத்தாடைகள் அனுப்பி வைப்பர். அதேபோல் ரம ழான் மாதம் வந்தால் தலைநோன்புக்கு முன்னால் அரிசி, கருப்பட்டி போன்ற உணவுப்பொருட்களைஅனுப்பிவைப்பர். பெருநாள் அன்று காலை, பெண் வீட்டார் மணமகன் வீட்டுக்கு விஷேசமான காலை ஆகாரங்களை அனுப்புவர். இடைப்பட்ட காலங்களிலும் அன்பளிப் புகள் பரிமாறிக் கொள்ளப்படும்.
சில சந்தர்ப்பங்களில் "திருமணம்’ நடைபெறுவதற்கு முன் னரே, திருமணப் பதிவு நடைபெறும். இஸ்லாமிய அடிப்படையில் பார்க்கும்போது இதுவே உண்மையான திருமணமாகும். ஊர் பள்ளி வாசல் கதீப்பின் தலைமையில் அல்லது வேறொரு ஆலிமின் தலை மையில் இந்த நிக்காஹ் வைபவம் நடைபெறும்.
இதே வேளையில் விவாகப் பதிவும் நடைபெறும். இதில் மணம கன் வழங்கும் மஹர் தொகை, பெண் வீட்டார் கொடுக்கும் சீதனம் ஆகியவை குறிக்கப்படும்.
ஏறத்தாழ 1937-ம் ஆண்டுக்குப் பிறகே அரசாங்கத்தின் Среvib முஸ்லிம் திருமணப் பதிவுகள் நடைபெற ஆரம்பித்தன. அதற்கு முன் னர் ஊர் கதிப்பே "கடுத்தம்" எனும் கடிதத்தின் மூலம் இத்திருமணப் பதிவுகளைச் செய்துள்ளார். சில இடங்களில் கடுத்தம் தமிழிலும் சில இடங்களில் அரபுத் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. பழைய கடுத்தங் கள், முஸ்லிம்கள் மத்தியில் நிலவிய சீதன வழக்கங்களைப் பற்றி பல சுவையான தகவல்களைத் தருகின்றன.
Page 105
906
சீதனமாக பொன் நகைள் மாத்திரமல்லாது; பித்தளை, வெண்க
லப் பொருட்கள், மரத்தளபாடங்கள் ஆகியவற்றையும் வழங்கினர்.
மாத்தளையில் ' ; சீதனமாகப் பசுமாடுகளும் கொடுக்கப்பட்டுள்
ளன. கைக்கூலியை இலங்கை நாணயமான ரூபாயில் குறிப்பிட் டுள்ள கதீப்மார்கள் மஹரைப் பல சந்தர்ப்பங்களில் 19 / கலஞ்சி பொன், 100 கலஞ்சி பொன் என்றே குறிப்பிட்டுள்ளனர். மஹரைப் பற்றி கதீப்மார்கள் கடுத்தங்களில் எழுதியுள்ள முறையே, இவற்றை கொடுக்கும் நோக்கம் யாருக்கும் இருக்கவில்லை என்பதைப் புலப்ப டுத்துகின்றது.
ஆக மார்க்க விதி ஒன்றை பேச்சளவிலாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்திருக்கிறது. மீறக்கூடாத மார்க்க விதிகளுக்கும், கைவிடவிரும்பாத ஒரு பொருளா தார தேவைக்குமிடையே முஸ்லிம்கள் அமைதி கண்டமுறை இதுவா கும். மஹரைத் தருகின்றோம் என்று சொல்வது, மஹரைக் கொடுத்த லுக்குச்சமம் என்ற மனப்போக்கும், இது தவறு என்று தெரிந்திருந்தும் அதை மாற்ற முடியாத நிலையில் இருந்த கதீப்களின் நிலையும் புரிகி D51,
1894ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு கடுத்தம் பார்வைக்காக கீழே தரப்படுகின்றது.
'ஹிஜ்ரத் ஆயிரத்து முன்னூற்றிப்பதினொராம் ஆண்டு ஷப்பான் மாதம் 29-ம் திகதிக்குச் சரியாகிய ஈஸா கிறிஸ்து வருடம் 1894-ம் ஆண்டு சித்திரை மாதம் 6-ம் திகதி மாத்தளையைச் சேர்ந்த அஸ் கிரி கோரளை பல்லேசிய பத்துவையில் கலகாமத்திலிருக்கும் உதுமான் பிள்ளையின் மகன் மரைக்கார் மாப்பிள்ளைக்கும், மேற்படி ஊர் ஹஜ்ஜி லெப்பை மகள் ஹாஜரா உம்மா என்ற பெண்ணுக்கும் நிக்காஹ் - 19 1/2 கலஞ்சி பொன் மகருக்கு நிக் காஹ் முடிந்தது. களரியில் பெண்ணுடைய தகப்பனார் கொடுக்க பொருந்திக் கொண்டது சீதனம்: தெல்கொல்லை வயலில்5லாச்சம்,அக்கரடுவ வயலில் பிடிவனி பங்கு 15 லாச்சதரையில் 5 லாச்சம்.
907
கம்மஞ்ஞா வளவு தோட்டத்தில் / பங்கு கண்டுர வாப்பா வளவில் / பங்கு, வீடு ஒன்று.
பொன் நகை ஆறு,செம்பு, பித்தளை சாமான் எல்லாம் 40 ரூபா மாப்பிள்ளையும் பெண்ணும் கேட்ட வேளை கொடுக்க பொருந்தி கொண்டபடி அறியும் சாஹிது, தம்பிலெப்பை ஹாஜியாரும் பக்கீர் லெப்பையும் ஆப்தின் லெப்பையும்".
இஸ்லாமியத் திருமணச் சட்டப்படி மணமகன் மணமகளுக்கு மஹர் கொடுப்பது கட்டாயம். ஆனால் அண்மைக்காலம் வரைமாத்த ளையில் பல பகுதிகளில் மஹர் குறிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, பெரும்பாலும் கொடுக்கப்படவில்லை. உதாரணமாக, மாத்தளையில் 1942-ஆம் ஆண்டு மார்கழி மாதத்திலிருந்து 1950-ம் ஆண்டு கார்த்திகை மாதம் வரை நடந்துள்ள முன்னூறு திருமணங்களில் ஒரே ஒரு திரும ணத்தில் மாத்திரம்தான்மஹர் சபையில் வைத்தே கொடுக்கப்பட்டுள்
ளது.
1954-ஆம் வருடத்தில் கூட அவ்வாண்டில் பதிவுச்செய்யப்பட்ட நூறு திருமணங்களில், ஆக ஒன்பது திருமணங்களில் மாத்திரமே மஹர் சபையில் வைத்தே கொடுக்கப்பட்டுள்ளது.
மஹர் என்று குறிக்கப்பட்ட தொகையும் ரூபா 51/-, ரூபா IOl/-, 19 1/2 கலஞ்சி பொன் என்ற ரீதியில் கடமைக்குச் சொல்லப்பட்ட தொகைகளாகவே இருந்திருக்கின்றன. சில பகுதிகளில் மஹர் தொகை உடனடியாக கொடுக்கப்பட வேண்டுமென்று கதீப்மார்கள் நிர்ப்பந்தித்திருக்கின்றனர்.
இப்போது சபையில் வைத்தே மஹர் தொகையைக் கொடுக்கும் வழக்கம் வளர்ந்து வருகின்றது. முஸ்லிம் இளைஞர்கள் அரபு நாடுக ளில் தொழில் செய்ய ஆரம்பித்த பின்னர், சீதனம் வாங்காமல் மஹர் கொடுத்து திருமணம் செய்யும், தூய இஸ்லாமிய முறை வழக்குக்கு வந்து கொண்டிருக்கின்றது. நிக்காஹ்களைப் பள்ளிவாசல்களில் நடத் தும் வழக்கமும் பரவிக் கொண்டிருக்கின்றது. இஸ்லாம் எதிர்பார்ப் பது போலவே மணமகன் தனது தகுதிகேற்பவும் மணமகளின் குடும்
Page 106
908
பத்தகுதிகேற்பவும் மஹர் வழங்கும் பழக்கமும் பெருகிக் கொண்டு இருக்கின்றது.
திருமணம் போன்ற வைபவங்களுக்கு கிராமத்தில் வாழும் அத் தனைமுஸ்லிம்களையும் அழைக்க வேண்டுமென்ற வழக்கம் பெரும் பாலான கிராமங்களில் இருந்தது. பெரும்பாலான கிராமங்களில் வைபவம் நடைபெறவிருக்கும் வீட்டுக்காரர்ஜும்ஆநாளன்று பள்ளி வாசலில் வெற்றிலை வைத்து எல்லோரையும் அழைக்க வேண்டு மென்பது ஊர் நியதியாக விளங்கியது. இந்த அழைப்புக்குப் பின்னர் "ஊர்முகத்தின்” வீடுவீடாகச் சென்று வைபவ வீட்டுக்காரரின் சலாத் தைக் கூறி வைபவத்திற்கு வருமாறு அழைக்க வேண்டும்.
இவையெல்லாம் நிறைவேற்றப்பட்டால் மாத்திரம் தான் திரு மண விழாவில் பங்கேற்க மக்கள் செல்வர். இப்போது இவ்வழக்கம் மறைந்துவிட்டது என்றே கூறலாம். ஊர் முழுவதையும் அழைக்க முடியாத நிலையில் உள்ளவர் பள்ளிவாசலில் அதைக் கூறி மன்னிப் புப் பெற்றுக் கொள்ளலாம்.
ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நகரப்பகுதிகளில் அச்சடிக்கப்பட்ட அழைப்புக் கடிதங்கள் மூலம் அழைப்பு விடுக்கும் வழக்கம் அறிமுகமானது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் அழைப்புக் கடிதங்களுடன் திருமண வீட்டார் நேரடியாகச் சென்று அழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
திருமண வீட்டில் திருமணத்திற்குத் தேவையான பலகாரங்களை நல்ல நாள் பார்த்து செய்ய ஆரம்பிப்பர். நெருங்கிய உறவு பெண்கள் அத்தனை பேரும் திருமண வீட்டுக்கு வந்து இவ்வேலைகளில் பங் கேற்பர். பலகாரம் செய்ய ஆரம்பிக்கு முன்னர் பெண்கள் முதலில் "ரபான்" கொட்டுவர். பின் பலகாரச் சட்டி அடுப்பில் ஏற்றப்படும். இதுவே திருமண வைபவத்தின் ஆரம்பம்.
அண்மைக் காலம் வரை உறவினர்களுடைய திருமண வீடுகளுக் குச் செல்லும்போது, அரிசி, வாழைக்குலை, தேங்காய் போன்ற பொருட்களை மாடுகளில் ஏற்றிக் கொண்டு போகும் வழக்கம்மாதிப்
909
பொல, பம்பரக்கட்டுப் பொத்த போன்ற கிராமங்களில் இருந்தது. கிராமியத் திருமண வீடுகளில் மாப்பிள்ளை கப்பு என்று ஒன்றை அமைக்கும் வழக்கம் இருந்தது. ஆலவட்டம் போல் அலங்கரிக்கப் பட்டிருக்கும் இந்த கப்புக்குக் கீழேயே மாப்பிள்ளை அமர்வார். மாத் தளை நகரத்திலும் அண்மையில் இருக்கும் கிராமங்களிலும் மன வரை அமைப்பது வழக்கமாக இருந்தது.
மாப்பிள்ளையைப் பெண் வீட்டுக்கு, ஊர்வலமாக அழைத்துச் செல்லும் வழக்கம் மாவட்டம் முழுவதிலும் இருந்திருக்கிறது. நிக்க கொல்ல, பம்பரகடுபொத்த, கோட்டகொட போன்ற கிராமங்களில் மாப்பிள்ளையை யானையில் ஏற்றி, ஊர்வலமாக அழைத்துச் செல் லும் வழக்கம் இருந்தது. குதிரைகளிலும் மாப்பிள்ளை ஊர்வ லம் நடந்திருக்கிறது. மாத்தளை நகரத்தில் நெடுங்காலமாக மோட் டார் வாகனங்களில் ஊர்வலம் போகும் சம்பிரதாயம் இருந்தது.
மாப்பிள்ளை ஊர்வலத்தில் போகும்போது உறவினர்கள், நண் பர்கள் வீட்டில் அவரை நிறுத்தி, மாலையணிவித்து, பால் சிறிது அருந்த வைத்து, வாழ்த்துக் கூறி அனுப்பும் வழக்கம் மிக அண்மை காலம்வரை இருந்தது. நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னர் மாப்பிள்ளை ஊர்வலம் போகும்போது, சிலம்பு விளையாட்டு, சீனடி விளையாட்டு, சுருள்வாள் விளையாட்டு போன்றவை நடைபெறும். வசதியுள்ளவர்களின் வீட்டுக் கல்யாண ஊர்வலங்களில் வாணவேடிக் கைகளும் இடம்பெறும்.
கல்யாண ஊர்வலங்களின் போது வழிநெடுகிலும் இத்தகைய வேடிக்கைகள் நடைபெற்றபடியால், மாப்பிள்ளை, பெண் வீட்டை அடையும் போது சில வேளை இரவு இரண்டு மூன்று மணியாகும். எனவே இத்தகைய வழக்கங்கள் நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுக் கும் இந்த யுகத்திலே கைவிடப்பட்டதில் எவ்வித ஆச்சரியமும் இல்
60)S),
இதே காலப்பிரிவில் நடைமுறையில் இருந்த ஒரு வழக்கம் மொய் சேகரித்தலாகும். பெரும்பாலான கிராமங்களில் திருமண வீட் டுக்கு வந்த விருந்தினர்கள் திருமணவீட்டில் அதற்கென்று வைக்கப்
Page 107
9 O
பட்டிருந்த வெற்றிலைச் செப்பில் பணத்தைப் போடுவர். ஆனால் மாத்தளை உட்பட, வேறு சில இடங்களில், விருந்தினர் வழங்கும் மொய் பணத்தைப் பகிரங்கமாக சொல்லி எழுதும் வழக்கம் மிக அண்மை காலம்வரை இருந்தது. மொய்யாக சேரும் தொகை ஒருவரு டைய சமூக அந்தஸ்தைப் பிரதிபலிக்கும் ஒன்றாகவும் கருதப்பட்டது. பல இனமக்களோடு தொடர்புள்ளவர்கள் சிலர்ஏனைய இனத்து நண்பர்களுக்கெனகுறிப்பிட்ட ஒரு சில நாட்களில் 'எட்ஹோம் என்ற சிற்றுண்டி வைபவத்தை நடத்துவர். இதற்கு வருபவர்களும் மொய் போடுவர். மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் வெள்ளை விரித்தல் பன்னீர் தெளித்தல், மாப்பிள்ளையின் பாதங் களை மணமகளின் சகோதரன் கழுவுதல், அதற்கு பகரமாக மாப் பிள்ளை மைத்துனனுக்கு மோதிரம் அணிவித்தல் போன்ற வழக்கங் கள் இன்று முற்றாக மறைந்துவிட்டன என்றே கூறலாம்.
மாத்தளை மாவட்டத்து சில முஸ்லிம் கிராமங்களில் சில வரு டங்களுக்கு முன்னர் கல்யாண விருந்துகள் வாழை இலைகளிலேயே பரிமாறப்பட்டிருக்கின்றன. நிக்கவட்டவனை எனும் கிராமத்தில் தாமரை இலைகளில் உணவு பரிமாறுவதே வழக்கமாக இருந்திருக்கி
-
அவசரத்தன்மை இல்லாத ஒரு காலப்பகுதியிலே, திருமணத் திற்கு வருகின்ற விருந்தினர்கள் அத்தனைபேரும் உறவினர்களாகவே, உள்ளூர்வாசிகளாகவே இருந்த காலக்கட்டத்திலே, திருமணங்களின் போது ஏகப்பட்ட ஆசாரங்கள் பின்பற்றப்பட்டன. இது மக்களுக்கு மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம். மக்க ளுக்கு இத்தகைய வேடிக்கைகளை, உல்லாசங்களை ரசிக்கின்ற பொறுமையும், மனோபாவமும் இருந்திருக்கலாம்.
எனவே நேரத்தைப் போக்கும் இத்தகைய சம்பிரதாயங்களுக்கு அன்று ஓர் இடம் இருந்தது.
ஆனால் திருமண வீடுகளுக்குச் செல்லும் போதே எப்போது சாப்பிடுவோம், எப்போது வீடு திரும்புவோம் என்ற அவசர எண்ணத்
9.
துடனேயே விருந்தினர்கள் செல்லும் இக்காலத்திலே, இத்தகைய நேரம் எடுக் கும் சம்பிரதாயங்கள் அருகி கொண்டே போவதில் ஆச்சரியமில்லை
அல்லவா?
மெளலூதுகளும் கந்தூரிகளும்
ரபீயுல் அவ்வல் மாதத்தில் வீடுகளில் மெளலூது ஒதுவதும், பள்ளிவாசல்களில் கந்தூரி கொடுப்பதும் மாத்தளை மாவட்டத்தில் எல்லா பகுதிகளிலும் மிகச்சிறப்பாக நடைபெற்ற ஆசாரங்களாகும். இன்றும் அவை சகல கிராமங்களிலும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பல வருடங்களுக்கு முன்னர் மாத்தளையில் ரபீயுல் அவ்வல் மாதம் பன்னிரண்டு நாட்களிலும் மிகச் சிறப்பாக மெளலுது ஒதி சோறு பங்கிடுவர்.
கொங்காவலை ஜும்மா பள்ளியில், மாத்தளையின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் கொண்டுவரப்படும் சோறு பங்கிடப்படும். முதல் நாள் கந்தூரியும் பன்னிரண்டாம் நாள் கந்தூரியும் பள்ளிக் கந்தூரிகளாக கருதப்பட்டன. டவுன் பள்ளியில் ஒவ்வொரு நாளும் கந்தூரி வழங்கும் பொறுப்பை வெவ்வேறு முஸ்லிம் தனவந்தர்கள் ஏற்றிருந்தனர். இந்தப் பன்னிரண்டு நாட்களும் மாத்தளையில் மிக மகிழ்ச்சிகரமான நாட்கள். பள்ளிவாசல்கள் மிக அழகாக இருக்கும்.
முஹியத்தீன் ஆண்டவர்கள் கந்தூரியும் சகல கிராமங்களிலும் சிறப்பாக நடைபெறும். பாத்திமா நாயகியின் பெயரில் தலைபாத் திஹா பெரும்பாலான வீடுகளில் ஒதப்பட்டது. தலை பாத்திஹா ஒதும் வீடுகளில் "மேல் கட்டி” கட்டுவர். இதில் வீட்டுப் பாவனைக ளுக்குத் தேவையான பல பொருட்கள் கட்டப்பட்டிருக்கும். தலை பாத்திஹா ஒதி முடித்தவுடன் பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு இப்பொருட்களைப் பறித்தெடுப்பர். இது சம்பந்தப்பட் டோர் அத்தனை பேருக்கும் ஒரு மகிழ்ச்சியான வேளையாகும். பண்ணாமத்துச் சந்தனக் கூடு
நாகூர் கந்தூரி மாதத்தில் மாத்தளை நகரத்தில் எடுக்கப்பட்ட சந்தனக்கூடு, மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் பொது கலாச்சார
Page 108
212
நிகழ்ச்சியாக கருதப்பட்டது. அக்காலத்திலே பண்ணாமத்து சந்தனக் கூடு என்பது, மலையகம் முழுவதும் மிகப்பிரபலமாக இருந்திருக்கி
D3.
கூடு நடைபெறும் நாளன்று மாத்தளை மாவட்டத்தில் இருந்து மாத்திரமின்றி ஹெட்டன், நாவலப்பிடிய, தலவாக்கெல்ல போன்ற ஊர்களில் இருந்தும் இன, மத வேறுபாடின்றி மாத்தளை நகரத்தில் மக்கள் வந்து கூடுவர் என்றும், அன்று மாத்தளை நகரமே விழாக்கோ லம்பூண்டிருக்கும் என்றும் அக்கால கட்டத்தில் வாழ்ந்து, இவ்விழா வைப் பார்த்து ரசித்த மக்கள் கூறுகின்றனர்.
கூடு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், கொங்கா வலை பள்ளிவாசலில் இருந்த கொடிமரத்தில் கொடியேற்றப்படும். கொடியேற்றும் விழா வெகு விமரிசையாக இருக்கும். இக்கொடியை ஏற்றுவதற்கு முன்னர், இக்கொடியைக் கையால் பிடிக்க, சற்று நேரம் தலையில் வைத்துக் கொள்ள, போட்டாபோட்டி நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
பண்ணாமத்து சந்தனக்கூடு என்பது, கப்பல், பங்களா, ரதம், கூடு என நான்கு அமைப்புகளைக் கொண்டதாக இருந்தது. முதல் மூன்றும் இவ்விழாவிற்கென ஒழுங்கு செய்யப்பட்ட மாட்டு வண்டிகளில் ஏற் றப்படும். கூடு அளவில் பெரியதாக இருந்ததால் இதை வைப்பதற்கு கோவிலில் இருந்து தேர்சகடையைப் பெற்றனர்.
பங்களா என்பது, பலகைகளால் அமைக்கப்பட்ட ஒரு வீடாகும். கப்பல் என்பதும், இவ்வாறு பலகைகளால் அமைக்கப்பட்டதே. இவை இரண்டும் மிக அழகாக இருக்கும் என்றும், கப்பலைப் பார்க் கும்போது நேரில் ஒரு கப்பலைப் பார்க்கும் எண்ணம்தான் ஏற்படும் என்றும் மாத்தளையில் வாழும் மூத்த மக்கள் கூறுகின்றனர்.
இவ்விரண்டிலும் ஆடலும், பாடலும் நடைபெறும். கூடு இரண்டு மூன்று, தட்டுக்களை உடையதாக அமைக்கப்பட்டிருக்கும். அது சரிகைகளாலும், மணிகளாலும் கண்ணைக் கவரும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
913
இந்த நான்கு அமைப்புகளும் நகரத்தின் பிரதான பாதையூடாக கொண்டு செல்லப்படும். இந்த ஊர்வலம் செல்லும் போது நகரத்தின் முக்கிய இடங்களில் சீனடி, சிலம்பம், சுருள்வாள், வாள்வீச்சு போன்ற விளையாட்டுக்கள நடைபெறும். இதற்கென்ற கண்டி, கடுகஸ் தொட்ட, மடவளை போன்ற ஊர்களில் இருந்தெல்லாம் விளை யாட்டு வீரர்கள் அழைத்து வரப்படுவர்.
ஹெரிஸன் ஜோன்ஸ் ரோட், தோலப்பிட்டி போன்ற பகுதிகளில் வாழ்ந்த சிலரே பங்களா என்ற அமைப்புக்குப் பொறுப்பாக இருந்த னர். பங்களாவுடன் தொடர்புடைய அத்தனை விஷயங்களும் இவர்க ளின் ஆதரவுடனேயே நடந்தன. அதனால் இவர்கள்’பங்களா பார்ட்டி என அழைக்கப்பட்டனர்.
கப்பல் என்ற அமைப்போடு சம்பந்தப்பட்டிருந்தவர்கள் கொட பொல சந்தியில் வசித்த மக்களாவர். இவர்கள் "கப்பல் பார்ட்டி" என அழைக்கப்பட்டனர். பாட்டு, நடனம், சிலம்பம், வாள் வீச்சு, சீனடி அலங்காரம் போன்ற அத்தனையும் இவ்விரு குழுவினராலும் போட்டி அடிப்படையிலே செய்யப்பட்டதினால், அனைத்தும் மிகச் சிறப்பாகவே அமைந்தன.
1937-ஆம் ஆண்டு அல்லது 1938-ஆம் ஆண்டு கூடு விழா நடந்த போது கொடபொல முச்சந்திக்கருகில் மின்சர்ர கம்பி ஒன்றில் சிக் குண்டு கப்பல் விழுந்தது. புனித இஸ்லாத்தோடு எவ்வித சம்பந்தமும் இல்லாத கூடு எடுக்கும் இந்த வழக்கம் அத்தோடு நிறுத்தப்பட்டு விட்டது. ஏறத்தாழ சமகாலத்தில்,வறக்காமுறையில் நடத்தப்பட்ட கூடு விழாவும் நிறுத்தப்பட்டுவிட்டது. பஞ்ஞாவைபவம்:
ஆஷ"ரா மாதத்தில் மாத்தளையில் பஞ்ஞா வைபவம் பெரிய அளவில் நடைபெற்றிருக்கிறது. பலர் புலிகள், வேடர்கள் போன்று வேஷம் போட்டுக் கொண்டு, தம்முடைய ஆட்டத்திறமையை வெளிப்படுத்துவர். ஆடுபவர்களின் திறமையும், பாய்ச்சலின் வேக மும் முகப்பாவனைகளும் அங்க சேஷ்டைகளும், பார்ப்போரைப் பரவசப்படுத்தும் என்று பலரும் கூறுகின்றனர்.
Page 109
94
இவர்களுக்குப் பின்னர் பெண்கள் போன்று வேஷம் போட்டு ஆண்கள் ஆடிக்கொண்டு வருவர். இவ்வாறு ஆண்கள் பெண்களைப் போல தம்மை அபரிமிதமாக அலங்கரித்துக்கொண்டு ஆடும் நடனம் “ஜோகி நடனம்" என அழைக்கப்பட்டது.
ஊர்வலத்தின் நடுவில் அலங்காரம் செய்யப்பட்ட ஒரு பெட்டி யில், சரிகை போன்ற பொருட்களால் செய்யப்பட்ட ஒரு கைவைக்கப் பட்டிருக்கும். இதுதான் பஞ்ஞா என அழைக்கப்பட்டது, ஊர்வலம் போகும்போது ஒரு சிறுவனை ஒருவர் கடை, கடையாக அழைத்துச் செல்வார். ஒவ்வொரு கடைக்கு முன்னாலும் பையனை நிறுத்தி அவனை அடிப்பது போல் நடித்து, பணம் கேட்க வைப்பார். இச்சந் தர்ப்பத்தில் இருவரும் படிக்கும் பாட்டு பின்வருமாறு அமைந்திருக் கும் என கூறப்படுகிறது.
'காட் காட்டோ
மால் மால்லோ
ஐ டான்ஸே ஒய்யாரே
எங்க கொடுத்தாய்?
இங்கு கொடுத்தேன்
வாங்கித்தா
வாங்கித் தாரேன்"
மக்கள் ஆட்டக்காரர்களுக்குப் பணம் கொடுப்பர். இது ஆஷ"ரா மாதம் 'ஜாவ் சிங்கன்’ வேஷம் என அழைக்கப்பட்டது. வேடன் வேஷத்தில் ஒருவர் வந்து ஆடிப்பாடி, பணம் கேட்கும் வழக்கமும் இதில் ஓர் அம்சமாக இருந்தது. இது "ஏகா-மகா" என அழைக்கப்பட் டது என்று மக்கள் கூறுகின்றனர். பல வருடங்களுக்கு முன்னரே இந்நிகழ்ச்சி முற்றாக நிறுத்தப்பட்டு விட்டது. வீரவிளையாட்டுக்கள்
அக்காலத்தில் சிலம்பம், சீனடி, வாள்வீச்சு, சுருள்வாள் போன்ற வீர விளையாட்டுக்கள் மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் மிகப்பிரபல்யமாக இருந்திருக்கின்றன. எல்லாக் கிராமங்களிலும் இவ்விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இருந்திருக்கின்றனர்.
215
இவ்விளையாட்டுக்களில் பெற்ற தேர்ச்சி முஸ்லிம்களுக்கு பெரும் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்கியிருக்கின்றது.
மாத்தளை நகரில் வாழ்ந்த மர்ஹலிம்களான ஹமீத், சின்னஅமீர், இஸ்மாயில் போன்றோர் மிகச் சிறந்த ஆட்டக்காரர்களாக கருதப்படு கின்றனர்.
இவ்வாறே மல்யுத்த வீரர்கள் பலர், மாத்தளை மாவட்டத்தில் இருந்திருக்கின்றனர். விஷேசமாக அமைக்கப்பட்ட கோதாக்களிலே மாத்தளை வீரர்களும், வெளியூர் மல்யுத்த வீரர்களும் கலந்து கொள் கின்ற மல்யுத்த போட்டிகள் நடைபெறுவது வழக்கமாக இருந்திருக் கின்றது,
வெற்றிப் பெற்ற வீரர்களை மாலையணிவித்து, நகரெங்கும் ஊர் வலமாக அழைத்துச் செல்வர் என்று கூறப்படுகிறது. மார்க்கோனை யில் யூசுப் பைல்வான் மர்ஹஅம் கே.எம்.எஸ். கபூர் போன்றோர் சிறந்த மல்யுத்த வீரர்களாக கருதப்பட்டனர். ஜனாப்களான சேகு நூர் தீன், ஹகீம்ஸாகீப், ஸெயினுத்தீன், சுதார், ஹாஸிம் போன்றோர் பல வீர விளையாட்டுக்களில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்று கூறப்படுகி
DÉW.
களிக்கம்பு
களிக்கம்பு ஆடுவது முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பிரபல்யமான பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. இரவு நேரங்களில் பந்தங்கள் வழங்கும் வெளிச்சத்தில் இவ்விளையாட்டுக்கள் நடைபெறும் என சில கிராமங்களில் வாழும் மூத்த மக்கள் கூறுகின்றனர்.
இவ்விளையாட்டின் உக் கட்டத்திலே விளையாட்டு வீரர்கள் காட்டும் திறமையும் வேகமும், லாவகமும் மெய் சிலிர்க்க வைக்கும் என இவர்கள் கூறுகின்றனர். இக்கலையைக் கற்பித்தவர்கள் அண்ணா விகள் என அழைக்கப்பட்டனர்.
இத்தகைய அண்ணாவிமார்களில் பிரபலமான இருவர் நிக்க கொல்லயைச்சேர்ந்த நூர்முஹம்மது அண்ணாவியாரும், மீரர் உசைன் அண்ணாவியாரும்ஆவார்கள். மானாம் பொடை கிராமத்திலும்களிக் கம்பு விளையாட்டு பிரபலமானதாக இருந்திருக்கிறது.
Page 110
926
மீலாத் விழாக்கள்
மாத்தளை மாவட்ட கலாசார வளர்ச்சியில் மறக்க முடியாதவை மாத்தளை நகரத்தில் 1950-1960 காலப்பகுதியில் நடந்த மீலாத் விழா ஊர்வலங்கள் ஆகும். மர்ஹ"ம் எம்.ஏ.காதர், காலம்சென்ற திரு. வி.கதிர்வேல் ஆசிரியர் போன்றவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மாத் தளை ஸாஹிராக்கல்லூரி மாணவர்களின் இசைக்குழு நபிகள் நாயகத் தின் புகழ்கூறும் பாடல்களைத் திறந்த வாகனம் ஒன்றில் அமர்ந்து அழகாக பாடிச்செல்லும் காட்சி மக்கள் மனதில் இருந்து என்றும்
V அழியா காட்சியாகும்.
இச்சங்கீத ஊர்வலம் முஸ்லிம்களினதும் ஏனைய மதத்தவர்களின தும் பேராதரவைப் பெற்றது. சகல முஸ்லிம் கிராமங்களிலும் மீலாத் விழாக்களைச் சிறப்பாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. குறைந் தபட்சம் பாடசாலை மட்டத்திலாவது சகல கிராமங்களிலும் இது கொண்டாடப்படுகிறது.
ஏறத்தாழ 1950-ஆம் ஆண்டில் இருந்து மீலாத் விழாவை முன் னிட்டு பொதுக் கூட்டங்களை விமரிசையாக ஒழுங்கு செய்யும் வழக் "கம் மாத்தளையில் அண்மைக் காலம் வரை இருந்தது. தலை சிறந்த தென்இந்திய, இலங்கை பேச்சாளர்கள்பலர்மாத்தளை மீலாத்விழாக் களில் உண்ரயாற்றியிருக்கின்றனர். மீலாத் விழாவை கொண்டாடும் முகமாக இஸ்லாமிய இன்னிசைக் கச்சேரிகள் நடத்தும் வழக்கமும் மாத்தளையில் இருந்தது. பதம்பாடுதல்
மாத்தளை முஸ்லிம்களின் கலாச்சாரத்தில் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது பதம் பாடுதலாகும். பள்ளி கந்தூரி வைபவங்கள், தனிப் பட்ட வீடுகளில் ஒதப்படும் மெளலுது வைபவங்கள், திருமணவைப வங்கள் போன்றவை பதம்பாடும் களங்களாவும் இருந்தன.
மர்ஹஅம்களான சித்திலமரிக்கார், சரிப்தீன் லெப்பை, ஐ.எல். எம்.அப்துல் றஹீம், கே.எம்.எஸ். அப்துல் கபூர், எஸ்.எம்.ஹனிபா, நிலாப்தீன், கெளஸ் ஆலிம், அப்துல் அஸிஸ் ஆராச்சியார், சதக்குத் தம்பி பாவலர் போன்றோர் பதம் பாடுவதில் புகழ் பெற்றிருந்தனர்.
97
உக்குவலை பிரதேசத்தைச் சேர்ந்த ஜனாப் ஏ.ஆர். நூர்முஹமத், ஜனாப்அப்துல் ஜப்பார்கலால் பிட்டியில் வசித்த எம்.எஸ். முஹிதீன் பிச்சுைஜனாப் எம் இப்றாகீம், உல்பத்து பிட்டியைச் சேர்ந்த ஹனிபா ஹாஜியார், மாதிப்பொலையைச் சேர்ந்த ஜனாப் உசைன் மீரா சாஹிப் போன்றோர்அழகாக பதங்கள் பாடுவர்எனகூறப்படுகிறது. ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன்னர் மாத்தளையைச் சேர்ந்த மர்ஹலிம் அமீர்தீன் அவர்களும் ஜனாப் கே.எம்.எஸ்.அபுசாலி அவர்களும் பதம் பாடுவதில் மிகப் பிரபல்யமாக விளங்கினர்.
இசைக் கச்சேரிகள்
1940-களில் இஸ்லாமிய இசைக் கச்சேரிகள் ஏற்பாடு செய்யும் வழக்கம் மாத்தளையில் இருந்தது. ஹிந்தி சினிமாப் பாடல்கள், மாத் தளை முஸ்லிம்கள் மத்தியிலே இசை ரசிகர்கள் பலரை உருவாக்கியி ருந்தன. இலங்கைக்குப் பிரபல இந்திய இஸ்லாமிய பாடகர்கள் வரும் போது அவர்கள் மாத்தளைக்கு வருவது வழக்கமாக இருந்தது. அப் படி அவர்கள் வந்த சந்தர்ப்பங்களில் பாட்டுக் கச்சேரிகள் ஒழுங்கு செய்யப்பட்டன. இப்படி மாத்தளையில் பாடியவர்களில் மலாங் பாய், கலீபுல்லாஹ், காரைக்கால் தாவூத் போன்றோர் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஆவார்கள்.
இத்தகைய பிரபல பாடகர்களின் வருகையினால் மாத்தளையில் உருவான சிறந்த பாடகர், தன் வாழ்க்கையையும் தன் சொத்தின் பெரும் பகுதியையும் இஸ்லாமிய இசைக்காகவே அர்ப்பணித்த மர் ஹஅம் சேகு தாவுத் மாஸ்டர் ஆவார். ஜனாப் தாஸிம் என்பவரும் அழகாகப் பாடக்கூடிய திறமை பெற்றிருந்தார். மர்ஹஜூம் கே.எம். எஸ். தெளவ்தான் அவர்களும் ஜனாப்கே.எம்.எஸ். சல்சபீல் அவர்க ளும் இலங்கை வானொலி இஸ்லாமிய நிகழ்ச்சி பாடகர்களாக இருந் தனர். இப்போது மாத்தளை கமல் நாடறிந்த ஓர் இளம் பாடகராக விளங்குகிறார்.
Page 111
918
அத்தியாயம் - 14 Qe QAS ベー Q Q முஸ்லிம் கிராமங்கள்
நிக்கவட்டவான
வகபனக கோரளை பள்ளேசியப்பத்துவில் அமைந்திருக்கும் நிக்கட் டுவான இலங்கையில் உள்ள கிராமங்களில் மிகத்தொன்மையான ஒன் றாக கருதப்படுகின்றது. கி.மு.முதலாம் நூற்றாண்டிலேயே வலகம்பாகு எனும் மன்னன் இக்கிராமத்தைத் தம்புள்ளை விகாரைக்கு வழங்கியதாக நிஸங்கமல்லனது (கி.பி. 1187-96) கல்வெட்டு ஒன்று கூறுகின்றது' எவ் வாறு இவ்வூர் தொன்மையானதோ, அவ்வாறே இவ்வூரிலுள்ள முஸ்லிம் குடியேற்றமும் தொன்மையானதே. .
கண்டி - கொட்டியாரம் தவளம் பாதையில் அமைந்திருந்த முக்கிய மான 'தங்கமுடங்களில்’ ஒன்றாக கருதப்பட்ட நிக்கவட்டவானையில் முஸ்லிம்கள் எப்போது முதன்முதல் குடியேறினர் என்பதை உறுதியாக கூறமுடியாவிட்டாலும், 1762 ஆம் ஆண்டிலேயே இக்கிராமத்தில் முஸ் லிம்கள் குடியேறிவிட்டனர் என்பதை கண்டியரசனது அரச அவைக்கு, ஆங்கிலேய வர்த்தக கம்பெனியின்தூதுவராக வந்த ஜோன் பிபஸ் என்பவ fsr குறிப்புக்கள் நிரூபிக்கின்றன.
1762ஆம் ஆண்டு கண்டியரசனைச்சந்திப்பதற்காக திருக்கோணமலை யில் இருந்து புறப்பட்ட பிபஸ், அவரின் பிரயாணத்தின்போது தங்கிய ஊர்களில் நிக்கவட்டுவானையும் ஒன்றாகும். இக்கிராமத்தைச் சிங்களவர் கள் 'நிக்கவட்ட வெனி' என்றும், முஸ்லிம்கள் நொச்சித்தோட்டம் என் றும் அழைக்கின்றனர் என்று கூறும் பிபஸ், நிக்கவட்டுவான ஒரு முஸ்லிம் கிராமமென்றும், அங்கு ஏழெட்டு சிறு வீடுகள் மாத்திரமே இருந்தன வென்றும் கூறுகின்றார். கிராமத்தின் அளவு எப்படி இருந்த போதிலும், இது 1762 ஆம் ஆண்டு ஒரு முஸ்லிம் கிராமமாகவே இருந்தது என்பதை பிபஸின் குறிப்புக்கள் உணர்த்துகின்றன.
எராவுள, லேனாவ, அலகொலவெவ எனும் சிங்களக் கிராமங்களை
மூன்று திசைகளிலும், ஒரு மலைக்குன்றை மறுதிசையிலும் எல்லைகளாக கொண்ட மிக விசாலமான ஒரு பிரதேசமே நிக்கவட்டவான ஆகும். இந்தளவு விசாலமானதும், நீர்ப்பாசன வசதிகள் நிறைந்ததுமான இப்பா ரிய பிரதேசம், முஸ்லிம்களுக்கு எவ்வாறு கிடைத்தது என்பதை விளக்கும் வகையில், ஒரு நிகழ்வு கூறப்படுகின்றது.
உடுநுவர தஸ்கரையைச் சேர்ந்த தவளம் வியாபாரிகள் கீழ்தங்கிச் செல்வதும், அப்படி இப்பகுதியின் ஊடாக பிரயாணம் செய்யும் போது பக்கத்து ஊரில் வாழ்ந்த இப்பிரதேச பிரதானிக்கு உப்பு கருவாடு போன்ற பொருட்களைக் கொடுப்பதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பிரதானி தனக்கு வழங்கப்பட்ட பொருட்களை அன்பளிப்புகள் என்றே கருதியிருக் கவில்லை. ஆனால் வியாபாரிகள் அவ்வாறு கருதியிருக்கவில்லை.
99
சில மாதங்களுக்குப் பின்னர் முஸ்லிம் வியாபாரிகள் பிரதானியி டம் கணக்கு விவரங்களைச் சமர்ப்பித்து, ஒரு பெருந்தொகை பணத் தைக் கேட்டுள்ளனர். சிங்களப் பிரதானி இதை எதிர்ப்பார்த்திருக்க வில்லை. ஆனால் தன்னுடைய கெளரவத்தை விட்டுக் கொடுக்க விரும்பாத பிரதானி எராவுல, அலகொலவெவ, லேனாவ, மலைக் குன்று ஆகிய நான்கு எல்லைகளையும் குறிப்பிட்டு, இவ்வெல்லைக ளுக்கு உட்பட்ட முழுப் பிரதேசத்தையும் தான் கொடுக்க வேண்டிய கடனுக்குப் பதிலாக தஸ்கர வியாபாரிகளுக்கு வழங்கியதாக ஒரு கதை கூறப்படுகிறது.
நிக்கவட்டவான - சனத்தொகை விவரம்
ஆண்டு ஆண் பெண் * 1871 56 45 88. 63 50
— ARQ f3. 69
மேலே தரப்பட்டுள்ள சனத்தொகை புள்ளிவிவரம் நிக்கவட்டவான கிராமத்தில் தொடர்ந்து சனத்தொகை குறைவாகவே இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றது. சனத்தொகை பன்மடங்கு பெருகிவிட்ட பின்னர் கூட இங்கு காணிப் பற்றாக்குறை ஏற்படாத அளவிற்கு முஸ் லிம்களுக்குக் காணிகள் அன்றே இருந்திருக்கின்றன என்பதைச் சிந்திக் கும்பொழுது மேற்கூறப்பட்ட சம்பவத்தில் ஓரளவு உண்மை இருக் குமோ என்று எண்ண வேண்டியுள்ளது. அண்மைக்காலம் வரை பக் கத்து ஊர்களில் வாழும் சிங்கள மக்கள், பிரதானியால் குறிப்பிடப் பட்ட நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள காடு களை வெட்டுவதாக இருந்தால்கூட, வெற்றிலை எடுத்து வந்து முஸ் லிம்களிடம் அறிவித்தப்பின்னரே அவ்வாறு செய்வர் என்று கூறப்படு கின்றது. இதுவும் பிரதானியைப் பற்றிய சம்பவத்தில் ஒரளவு உண்மை இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.
தவளம் வியாபாரத்திற்காகவே இக்குடியேற்றம் ஆரம்பமான போதிலும் காலப்போக்கில் நெற்பயிர்ச் செய்கையும் சேனைப் பயிர்ச் செய்கையும் பிரதான தொழில்களாக மாறின. 1956 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிளகாய்ச்செய்கை முக்கியத்துவம் பெற்றது. ஆனால் ஏறத்தாழ
Page 112
990
1971ஆம் ஆண்டளவில் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட புகையிலைச் செய்கையே இப்பிரதேச மக்களின் வாழ்வில் முதன்முதலாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இது நிக்கவட்டவான முஸ்லிம்களின் பொருளாதார நிலையை வெகுவாக உயர்த்தியது. 1990ஆம் ஆண்டள வில் வெங்காயச் செய்கை இங்கு ஆரம்பிக்கப்பட்டது. வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த, காக்கையன்குளத்து முஸ்லிம்கள், ஏறத்தாழ அறுபது குடும்பத்தினர் அகதிகளாக வந்து இக்கிராமத்தில் வாழ்வது வெங்காயச்செய்கை இந்தளவு வெற்றிப் பெறுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வெங்காயச் செய்கை,நிக்கவட்டவான முஸ்லிம்களின் பொருளாதார நிலையைப் பெரிதும் உயர்த்தியுள்ளது. சிலவேளை இது நிக்கவட்டவானையில் பெரும் சமூக,கலாச்சார மாற்றங்களை ஏற்படுத்தினால், அது ஆச்சரியமானதாக இருக்காது.
நிக்கவட்டுவான கல்வித்துறையில் மிகவும் பின்தங்கிய ஒரு கிரா மந்தான். ஏறத்தாழ 1960 ஆம் ஆண்டுவரை இவ்வூரில், படித்த மக்க ளின் தொகை குறைவாகவே இருந்தது. ஆனால் ஏனைய முஸ்லிம் கிராமங்கள் பொறாமை படக்கூடிய அளவிற்கு, ஆச்சரியப்படக்கூடிய அளவிற்கு சில தனிப்பட்ட சாதனைகள் இங்கு நிலைநாட்டப்பட்டுள் ளன என்பதையும் மறுக்க முடியாது. மாதிப்பொல எனும் கிராமத்தில், 1928ஆம் ஆண்டு ஜனாப் உசைன் மீராசாஹிபு என்பவர்தமிழ் ஆசிரிய ராக நியமிக்கப்பட்டார். மாதிப்பொல சிங்கள பாடசாலையில் இருந்த தமிழ்ப் பிரிவில் படித்த ஜனாப் உசைன் மீராசாஹிபுக்கு அங்கு ஆசிரியராக கடமையாற்றிய, மர்ஹஅம் ஜனாப் H.M. அப்துல்காதர் படிப்பித்துள்ளார். நிக்கவட்டவானையைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹ9ம் H.M. அப்துல்காதர், பாடசாலை விடுமுறைக்காலங்களில் தன்னை நிக்கவட்டவானைக்கு அழைத்துச் சென்று படிப்பிப்பார் என் றும் அதனாலேயே அக்காலத்தில் ஆறாம் வகுப்புப் பரீட்சையில் தனக்கு சித்தியடைய முடிந்ததென்றும் இன்றும் ஜனாப் உசைன் மீரா சாஹிபு அவர்கள் நன்றியுணர்வினோடு கூறுகிறார்கள். 1928 ஆம் ஆண்டு தன் மாணவர் ஒருவரை ஆசிரியராக நியமிப்பதில் வெற்றி பெற்ற மர்ஹ9ம் அப்துல் காதலர் எப்போது ஆசிரியரானார். அவர் எங்கே தமிழ்ப் படித்தார் என்பதற்கெல்லாம் துரதிர்ஷ்டவசமாக
99.
பதில் கூறமுடியாது இருக்கின்றது. மாத்தளை மாவட்ட ஆரம்ப முஸ் லிம் தமிழாசிரியர்களில் ஒருவராக கருதப்படும் மர்ஹலிம் எஸ்.எல். எஸ்.அப்பாஸ் அவர்களும் இக்கிராமத்தைச் சேர்ந்தவரே. இவர்அக்கா லத்திலேயே யாழ்ப்பாணம் சென்று படித்திருக்கிறார். மாத்தளை மாவட்டத்து முஸ்லிம்களின் மத்தியில் தோன்றியுள்ள இரண்டாவது பொறியியலாளரான ஜனாப் எம்.ஐ.ஏ.ஹஸன் நிக்கவட்டவானைக் கிராமத்தைச் சேர்ந்தவரே.
மர்ஹஜூம் ஜனாப் அப்பாஸுக்குப்பின்னர்இக்கிராமத்தில் ஆசிரி யர்களாக நியமனம் பெற்றவர்கள் ஜனாப் ஏ.எம்.முஸ்தபா, ஜனாப் ஏ.எம்.சிராஜுத்தீன் ஆகியோர் ஆவர். இவர்கள் இருவரும் மர்ஹூம் அப்பாஸ் அவர்களின் புதல்வர்களே. இன்று நான்கு ஆசிரியைகளும் இவ்வூரில் இருக்கின்றனர். இக்கிராமத்தைச் சேரந்த ஜனாப் எம்.ஒய். லதீப் என்பவர் சிங்கள மொழியில் படித்துவிட்டு கிராமச் சேவகராக கடமையாற்றுகின்றார். ஆனால் இங்கு அரசாங்க உத்தியோகங்களில் இருக்கும் அத்தனை பேர்களும் வெளியூர்களில் படித்தவர்களே. இப் போதும் பல மாணவ, மாணவிகள் வெளியூர்களில் படித்துக்கொண்டி ருக்கின்றனர். 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிக்கவட்டவான முஸ்லிம் பாடசாலையில் இப்போது 274 மாணவ, மாணவிகள் படிக் கின்றனர். ஒன்பது ஆசிரிய, ஆசிரியைகள் கற்பிக்கின்றனர். முதலாம் ஆண்டிலிருந்து பத்தாம் ஆண்டுவரை வகுப்புக்கள் நடைபெறுகின்
றன.
நொச்சிவெட்டை என முஸ்லிம்களால் அழைக்கப்படும் நிக்க வட்டுவானையில்ஒரு பழைமையானஜ"ம்ஆபள்ளிவாசல் அண்மை வரை இருந்தது. இது கட்டப்பட்டபோது எல்லா வீடுகளும் இதைச் சுற்றியே இருந்தன. ஆனால் காலப்போக்கில் பள்ளிவாசலுக்கு அருகா மையில் உள்ள இடங்களைக் கைவிட்டுவிட்டு சற்று சேய்மையிலி ருந்த இடங்களில் இவ்வூர்மக்கள் வீடுகளைக்கட்டினர். புதிய கிராமத் திலே ஒரு தற்காலிக தைக்கா கட்டப்பட்டு அதிலேயே அன்றாட தொழுகைகள் நடத்தப்பட்டன. ஜும்ஆ தொழுகைக்கு மாத்திரமே ஜும்ஆ பள்ளி திறக்கப்படும். மற்ற நேரங்களிலும் மற்ற நாட்களிலும் ஜ"ம்ஆ பள்ளி மூடப்பட்டே இருந்தது. 1986 ஆம் ஆண்டு ஒரு புதிய
Page 113
999
பள்ளிவாசல் கட்டப்பட்டது, பழைய பள்ளிவாசல் உடைக்கப்பட்டு விட்டது. இப்பள்ளிவாசல் இவ்வூர் வர்த்தகப் பிரமுகரான ஜனாப் எம்.ஸி.எம்.இஸ்மாயில் அவர்களால் கட்டப்பட்டு வக்ப் செய்யப்பட் டுள்ளது.
கெலிஒய, பட்டுப்பிட்டி போன்ற கிராமங்களோடு நெருங்கிய தொடர்பு உள்ள சில 'தங்கள் மார்கள்'முன்னர் இங்கு அடிக்கடி வருவது வழக்கமாய் இருந்திருக்கிறது. அவர்களுக்கு இப்பகுதியில் பெரும் கெளரவமும் செல்வாக்கும் இருந்திருக்கிறது. காணித் தக ராறு, குடும்பத்தகராறு போன்றவையைக் கூட "தங்கள்"தலையிட்டு தீர்த்து வைப்பார்கள் என்று கூறப்படுகிறது. வரக்காமுறை
மாத்தளை நகரத்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு தொன்மையான முஸ்லிம் குடியேற்றம் வரக்காமுற கிராமமாகும். இக்கிராமத்திற்கு மாத்தளை மாவட்டத்திலுள்ள ஏனைய முஸ்லிம் கிராமங்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. ஏனைய முஸ் லிம் கிராமங்கள் ஒரு தனி 'பத்துவயில்", அதாவது ஒரு தனி பரிபா லனபிரிவில் மாத்திரம் அமைந்து இருக்கும்போது, வரக்காமுற மாத்தி ரம் இரு வேறு 'பத்துவ"க்களில் அமைந்துள்ளது. ஒரு பாதி மாத்தளை கொஹென்சிய பத்துவயிலும், மறுபாதி மெதசிய பத்துவயிலும் அமைந்திருக்கின்றன. கண்டியரசர்களது காலத்தில் இக்கிராமத்தில் வாழந்த முஸ்லிம் மக்களுக்கு "மடிகே" பொறுப்பு (போக்குவரத்து பொறுப்பு) வழங்கப்பட்டிருந்தது 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் கண்டிமீது படையெடுத்தப் போது வரக்காமுறயில் வாழ்ந்த ஒரு சில முஸ்லிம்கள் ஆங்கிலேயருக்கு உதவியாக இருந்தனர் என்பதனால் அன்றைய கண்டியரசனான விக்கிரமராஜ சிங்கன் ஆங்கிலேயப் படையை முற்றாக முறியடித்தபின், தன் கோபத்தை வரக்காமுற முஸ் லிம்கள் மீது திருப்பியிருக்கின்றான் இவ்விவரங்கள் ஆங்கிலேயர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னரே வரக்காமுறயில் முஸ்லிம்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என்ற உண்மையை உணர்த்து கின்றன.
993
வரக்காமுற என்ற பெயர் எப்படி வந்தது என்பதைப் பற்றியும் இவ்வூரில் ஒரு கதை நிலவுகின்றது. இன்று வரக்காமுற முஸ்லிம் மகாவித்தியாலயம் இருக்கும் இடத்துக்கு அண்மையில் ஒரு பலாம ரம் இருந்திருக்கிறது. இம்மரத்தின் பழங்கள் தனிச்சுவையுடையவை. ஒருமுறை வரக்காமுற ஆரச்சியார் இம்மரத்தின் பழமொன்றைப் பலக் கடுவயில் இருந்த தன் மேலதிகாரிக்குக் கொடுத்தார். பலாப்பழத்தை உண்ட பிரதானிக்கு மீண்டும் மீண்டும் அப்பழத்தை உண்ண வேண் டும் என்ற ஆசை வந்துவிட்டது. எனவே வரக்காமுற ஆரச்சியை அழைத்து ஒவ்வொருவாரமும்தனக்கு அதே பலாமரத்தின் பழமொன் றைக் கொண்டு வரவேண்டும் என்று கட்டளையிட்டு விட்டார். ஆரச் சிக்கு இது ஒரு பிரச்சினையாகிவிட்டது. இம்மரத்தின் பழத்தின்சுவை ஊர் அறிந்த விஷயம். ஊர்க்காரர்களிடமும் உறவினர்களிடமும் இருந்து பலாப்பழங்களைக் காப்பாற்ற வேண்டுமே? வாராவாரம் அதிகாரிக்குப் பழம் கொடுக்காவிட்டால் அவனது கோபத்திற்குள் ளாக வேண்டுமே? எப்படி இந்த இக்கட்டிலிருந்து தப்புவது என்று யோசித்த ஆரச்சி ஒரு முடிவுக்கு வந்தார். உடனே இந்த பலாமரத்திற்கு ஒரு "காவல்’ போட்டார். சிங்களத்தில் பலாப்பழத்திற்கு "வரக்கா" என்றும் காவலுக்கு "முற" என்றும் கூறுவார்கள். ஒரு பலாமரத்திற் குக் காவல் நியமிப்பது சர்வசாதாரணமான விஷயமா? இல்லையே. எனவே சிங்கள மக்கள் பலா மரத்திற்குக் காவல் என்ற பொருளில் வரக்காமுற என்றார்கள். அதுவே நிரந்தரமான பெயராக நிலைத்து விட்டது. வரக்காமுற என்ற பெயர்எவ்வாறு வந்தது என்பதை விளக்க வரக்காமுற மக்கள் கூறும் கதை இதுவே. கதை மெய்யாக இருக்க லாம். அல்லது பொய்யாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கூறுகின்ற பலாப்பழத்தின் சுவையைப் போலவே அவர்கள் கூறும் கதையும்
சுவையாகத்தான் இருக்கிறது.
வரக்காமுற கொஹொன்சிய பத்துவ சனத்தொகை" ஆண்டு goorassir பெண்கள் 88 62 42
89. 穹 . . . | ܀ 9ܬ݂ܐ܂
Page 114
1994
இச் சனத்தொகையில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள்.ஒரு சிலர் துராவ இன்த்தைச் சேர்ந்த சிங்களவர்கள்.
வரக்காமுற மெதசிய பத்துவ சனத்தொகை"
ஆண்டு ஆண்கள் பெண்கள் 1881 168 164 1891 20 II2
சனத்தொகையில் பெரும் பான்மையோர் முஸ்லிம்களே. மாத்தளை மாவட்டத்து ஏனைய முஸ்லிம் கிராமங்களின் சனத்தொகைகளோடு ஒப்பிடும்போது வரக்காமுற சனத்தொகை நியாயமான அளவு பெரிய தாக இருப்பதைக் காணலாம்.
19 ஆம் நூற்றாண்டிலே வரக்காமுறமுஸ்லிம்கள் ஏனைய கிரா மத்து முஸ்லிம்களைப் போல விவசாயத்தையே தம் பிரதான தொழி லாகக் கொண்டிருந்தனர். வரக்காமுற ஊடாக ஓர் ஆறு ஓடியது, விவசாயததிற்கு உதவியாய் இருந்திருக்கும். 1899 ஆம் ஆண்டு மாத் தளை உதவி அரசாங்க அதிபர், த்ன்து வருடாந்த பரிபாலன அறிக்கை யில் வரக்காமுறமுஸ்லிம்கள் ஆற்றங்கரைக்கு அருகாமையில் உள்ள முப்பத்திரண்டு ஏக்கர் வயல் நிலங்களை இவ்வாற்றின் நீரைக் கொண்டு விவசாயம் செய்வதைக் குறிப்பிடுவதோடு இவ்வூர் மக்கள் ஆற்றுக்குக் குறுக்கே ஓர் அணை கட்டித்தருமாறு தம்மிடம் வேண்டு கோள் விடுத்திருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அர சங்கம்அணைக்கட்டுவதற்கு எவ்வித முயற்சியும் எடுத்ததாகத் தெரிய வில்லை. ஆனால் 1901 ஆம் ஆண்டு மாத்தளை உதவி அரசாங்க அதிபராக இருந்த EB. அல்ெக்சாண்டர் தனது பரிபாலன அறிக்கை யில் வரக்காமுற முஸ்லிம் விவசாயிகள் ஒன்று சேர்ந்து தமது சொந்த முயற்சியிலேயே ஒர்அணையைக் கட்டியிருப்பதையிட்டுதன்பாராட் டைத் தெரிவித்துள்ளார். வரக்காமுற மக்கள்விவசாயத்திற்குத் தேவை யானஒர்அணையைத்தாமாக கட்டிக்கொண்டது அவர்கள் விவசாயத் திற்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற அதே நேரம் அவர் களுடைய விடாமுயற்சியையும் உழைப்பையும் காட்டுகின்றது.
995
கோப்பி, கொக்கோ போன்ற பணப்பயிர் விவசாயத்திலும் வரக்கா முற முஸ்லிம்கள் அக்கறை க்ாட்டியுள்ளனர். வரக்காமுற மக்களில் பெரும்பாலானோர்தம் தோட்டங்களிலே கொக்கோ போன்ற பயிர்க ளைப் பயிரிட்டுள்ளனர். இன்றும் பணப்பயிர் விவசாயத்தின் அடை யாளங்களை வரக்காமுற எங்கனுமே காணலாம். இருபதாம் நூற் றாண்டின் ஆரம்பத்தில் இவ்வூரைச் சேர்ந்த பலர் சிறு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். சிலர் வியாபாரத்துறையில் பெரும் வெற்றி பெற்றுள்ளனர். மர்ஹல்ம் சரிப்தீன் ஹாஜியார், மர்ஹஅம் எஸ்.ஏ.ஐ வாத் போன்றோர் வியாபாரத்துறையில் குறிப்பிடக்கூடிய அளவிற்கு வெற்றி பெற்ற இரு வரக்காமுறவாசிகளாவர்.
மாத்தளை நகரத்திற்கு அருகாமையில் இருந்தது என்பதனால் வரக்காமுற கல்வித்துறையில் விஷேசமுன்னேற்றம் அடைந்திருந்தது என்று சொல்லுவதற்கில்லை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வரக்காமுற மக்களின் ஒரு சிலரே தம் பிள்ளைகளைக் கண்டிக்கோ மாத்தளைக்கோ, கல்வியினைப் பெறுவதற்காக அனுப்பக்கூடிய அள விற்கு வசதி படைத்தவர்களாக இருந்தனர். வசதிகள் படைத்திருந்த அந்த ஒரு சிலரின் பிள்ளைகளுக்கு மாத்திரமே ஓரளவு ஆங்கிலக் கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஒரு சிலர் எல்வல சிங்க ளப் பாடசாலையில் ஒரளவு சிங்களம் படித்தனர். ஏறத்தாழ 1934ஆம் ஆண்டளவில் வரக்காமுறதமிழ்ப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின் னரே இக்கிராமத்திலே பெருந்தொகையான மக்களுக்குக் கல்வி பெறும் வாய்ப்பு கிட்டியது எனலாம். இப்பாடசாலை, முன்ன்ாள் கொழும்புசாகிராகல்லூரிஅதிபரும் பெரும்அறிஞருமானமர்ஹம்ை அல்ஹாஜ் ஏ.எம்.ஏ.அஸிஸ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதா கும். ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பதுகளில்கூட இந்தப் பாடசாலை யில் எட்டாம் வகுப்புவரையே வகுப்புக்கள் இருந்திருக்கின்றன. எனவே ஆரம்பத்தில் கல்விப் பொதுதராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்த வரக்காமுற மாணவர்கள்மாத்தளையில் அல்லது உக்கு வளையில் தான் படித்திருக்க வேண்டும். ஜனாப்களான எம்.வி.எம். ஜாவார்தீன், எம்.ரபாய்தீன், ஒ.எம்.ஜாபீர், முகம்மது தாஜுர், மர் ஹம்ை எஸ்.ஏ.அனுரன்ஆகியோரை வரக்காமுற கிராம, ஆரம்பக்கால
Page 115
996
ஆசிரியர்கள்எனலாம்.இப்போது இவ்வூரில் பல பட்டதாரிகளும்பல ஆசிரிய ஆசிரியைகளும் இரு மெளலவிகளும் இருக்கின்றனர்.
வரக்காமுற கிராமத்தில் ஒரு தொன்மையானஜம்ேஆபள்ளிவாச லும் மூன்று தைக்காக்களும் இருக்கின்றன. ஜூம்ஆ பள்ளிவாசல் எப்போது கட்டப்பட்டது என்பது தெரியாது. ஆனால் 1898ஆம் ஆண் டில் வரக்காமுற ஜும்ஆ பள்ளி இன்று இருக்கின்ற அதே இடத்தில் இருந்திருக்கிறது என்பதற்கு ஏ.ஸி.லோறியின்நூல் ஆதாரமாக இருக் கிறது. இப்போது உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் இடவசதி குறைவான தாக இருப்பதால் அதை பாரிய அளவில் புனர்நிமானம் செய்வதற் காக திட்டங்கள் தீட்டப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிவாசலுக்கு ஒரு பெறுமதியான காணி, கெளரவ,வெளிவிவ கார அமைச்சர் அல்ஹாஜ் ஏ.ஸி.எஸ்.ஹமீது அவர்களின் உதவியால் கிடைத்துள்ளது.
மாத்தளையில் "கூடு" எடுத்த காலப்பகுதியில் இங்கும் கூடு எடுக்கப்பட்டது. இவ்விழா கோலாகலமாக நடைபெறும் என்றும் அத்தினத்திலே மாத்தளை போன்ற ஊர்களிலிருந்து எல்லாம்,உறவி னர்கள் வந்து குழுமிவிடுவர் என்றும் அந்நாள் மிக மகிழ்ச்சியான நாளாக இருக்கும் என்றும் மூத்தவரக்காமுறமுஸ்லிம்மக்கள்கூறுகின் றனர். ஆனால் மாத்தளையில் நிறுத்தப்படுவதற்கு முன்னரே இங்கு கூடு எடுக்கும் வழக்கம் நின்று விட்டது. முன்னர் இந்த ஊரில் கந்தூரி யும் வெகு விமரிசையாக வருடாவருடம் கொடுக்கப்பட்டது.
Lon(Sufu
உக்குவளை நகரத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும் மாபே ரிய எனும் கிராமம், மாத்தளை மாவட்டத்தில் உள்ள மிகப் பழைமை யான முஸ்லிம் குடியேற்றங்களில் ஒன்றாகும். 14-ஆம் நூற்றாண்டில், துருக்கி தேசத்தைச் சேர்ந்த நான்கு குடும்பத்தினர்கள் இப்பகுதியில் பிரயாணம் செய்ததாகவும் அவர்கள் மாபேரிய என்று இன்று அழைக் கப்படும் பிரதேசத்தில் கிடைத்த நீரைப் பார்த்து "சுத்தமான நீர்" என்று பொருள்பட தம்மொழியில் "மாபெரி" என்று கூறியதாகவும் "மாபெரி" என்ற சொல்லே காலப்போக்கில் மாபேரிய என்று திரிந்து
997
விட்டதாகவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். மேலும் இந்நான்கு குடும்பங்களில் ஒன்று மாபேரியில் தங்கிவிட்டதாகவும் மற்ற மூன்று குடும்பத்தினரும் முறையே மானாம்பொடை, வரக்காமுறை, கோட்டகொடை ஆகிய மூன்று ஊர்களிலும் குடியேறியதாகவும் இவர்கள் கூறுகின்றனர். இவ்வூர் மக்கள் கூறுவது உண்மையென்றால் இரண்டு விஷயங்கள் வெளிப்படுகின்றன. ஒன்று மாபேரிய முஸ்லிம் குடியேற்றம் துருக்கிய முஸ்லிம்களால் ஆரம்பிக்கப்பட்டது, மற்றது இக்குடியேற்றம் 14-ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டது. இவ் விரண்டு,"செய்திகளையும்" உண்மைபடுத்துவதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் மாபேரிய முஸ்லிம் குடியேற்றம் பழைமை யானது என்பதற்கு திரு. AC லோறி தரும் ஒரு தகவல் ஆதாரமாக இருக்கிறது. மத்திய மாகாணத்தில் இருந்த கிராமங்களின் நிலையை அறிவதற்கு எமக்கு பெரிதும் உதவும் திரு AC லோஹியின் நூல், மாபேரிய பள்ளிவாசல் மாருக்கீோன முதியான்யே என்பவரால் கட் டப்பட்டது என்று கூறுகின்ற்து. மானாம்பொடை கிராமத்தைப் பற் றிக் கூறும்போதுமானாம்பொடையில் ஒரு குளம் விஜயபால எனும் அரசனது காலத்தில் மாருக்கோனமுதியான்ஸே என்பவரால் கட்டப் பட்டது என்று லோறி கூறுகிறார். 1635-ஆம் ஆண்டில் தன்தந்தையான சேனரத்தின் மரணத்திற்குப் பிறகு மாத்தளை உபராச்சியத்தின் அரச னான விஜயபாலவின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. தனது இளைய சகோதரனும், கண்டி மன்னனுமான இரண்டாம் ராஜசிங்கன் தனது மற்ற சகோதரனும், ஊவ உபராச்சியத்தின் மன்னனுமானகுமார சிங்கனை விஷம் ஊட்டி கொன்று விட்டான் என்பதை அறிந்ததும் வரலாற்றில் கூறப்பட்டிருப்பது போல 'ஒரு குதிரை வண்டியில் ஏறி நாட்டைவிட்டு ஓடிவிட்டான்". உண்மையில் தன்னுடைய சகோ தரன் குமாரசிங்கனுக்கு நடந்தது தனக்கும் நடக்கலாம் என்று அஞ்சிய விஜயபால ஒல்லாந்தரிடம் ஓடி விட்டான். எனவே விஜயபால மாத்த ளையிலிருந்து மிக நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை. பதினைந்து வருடங்கள் ஆட்சி செய்திருப்பான் என்று வைத்துக் கொண்டாலும், அவனுடைய ஆட்சி 1650-ஆம் ஆண்டளவில் முடிந்திருக்கும். எனவே விஜயபால எனும் அரசனது காலத்தில் மாருக்கோன முதியான்ஸே,
Page 116
XXZO
மானாம்பொடை குளத்தைக் கட்டினாரென்றால் அது 1650-ஆம் ஆண் டுக்கு முன்னர் கட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படியாயின் மாபே ரிய பள்ளி ஏறத்தாள, சமகாலத்திலேயே, அதாவது 1650-ஆம் ஆண்ட ளவில் கட்டப்பட்டிருக்கலாம். இந்த அடிப்படையில் பார்த்தால்கூட மாபேரிய குடியேற்றம் ஏறத்தாள 350 வருடங்கள் தொன்மையானது என்பது புலப்படும்.
மாபேரிய கிராமத்திற்குக் கிழக்கே தெஹிதெனிய எனும் கிராம மும், மேற்கே மானாம்பொடை கிராமமும் தெற்கே கல்லோயாவும் வடக்கே மாருக்கொன எனும் கிராமமும் எல்லைகளாக உள்ளன. இக்கிராமம் மாபேரிய, நிதுல்கஹகொட்டுவ, பரகஹவெல திகனச் சேன, தலகொட்டுவ, ஆனகால ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. எனவே தான் இப்போதும் இப்பகுதி மக்களுக்கெல்லாம். மாபேரிய பள்ளிவாசலே ஜும்ஆ பள்ளிவாசலாக இருக்கிறது. சுது கங்கை ஆற்றின் இரு மருங்குகளிலும் மக்கள் குடியேறி வாழத்
தொடங்கினர்.
மாபேரிய கிராமத்தில் ஆரம்பத்தில் விவசாயமும்; வியாபார முமே முக்கியத் தொழில்களாக இருந்துள்ளன. பரகஹவெலயில் மாருக்கோண முதியான்ஸேயினால் அமைக்கப்பட்டிருந்த குளம் இவர்களுக்கு தேவையான நீரை வழங்கியிருக்கும், சிலர் ஆற்று நீரை அடிப்படையாக வைத்தும் விவசாயத்தை மேற்கொண்டனர். இவர் கள் வியாபாரத்திலும் முக்கியமாக ஈடுபட்டிருந்ததனால் லக்கல, பள் ளேகம, இரத்தொட்ட, தெஹிதெனிய, வெஹிகல, குரளவெல போன்ற சிங்கள ஊர்களுடன் இவர்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது. பலர்அப்பகுதிகளில் வயற்காணிகளை வாங்கி குத்தகைக்கு விட்டிருந் தனர். காலக் கிரமத்தில் இவை விற்கப்பட்டிருக்கலாம், அல்லது மற்ற வர்களால் பிடிக்கப்பட்டிருக்கலாம்.
உக்குவளைப் பிரதேசத்தில் உள்ள ஏனைய முஸ்லிம் கிராமங்க ளோடு ஒப்பிடும்போது கூட , மூத்த கிராமமான மாபேரிய,கல்வித்து றையில் மிகவும் பின்தங்கியிருந்தது விசித்திரமானதாகவே இருக்கி றது. ரைத்தளாவளை, மாருக்கோன, பரகஹவெல மானாம்பொடை
229
போன்ற பகுதிகளில் ஆயிரத்தித் தொளாயிரத்து முப்பது, நாற்பதுக ளில் கல்வியில் முஸ்லிம்கள் ஒரளவு அக்கறை காட்டுவதைப் பார்க் கின்றோம். ஆனால் இந்தளவு கூட அக்கறை மாபேரியயில் காட்டப்ப டவில்லை. விவசாயமும் வியாபாரமும் இப்பகுதி மக்களின் கவனத் தைத் தேவைக்கு அதிகம் ஈர்த்து விட்டனவோ தெரியாது.உக்குவளை அஜ்மீர் மகாவித்தியாலயம் இப்போது இயங்கும் இடத்தில் உக்கு வளை தமிழ்ப் பாடசாலை அமைக்கப்பட்ட பிறகே மாபேரிய முஸ் லிம்கள் ஒரளவுக்கு கல்வியில் அக்கறை காட்ட ஆரம்பித்திருக்கின்ற னர். மாத்தளை சாகிராக் கல்லூரியில் நீண்டகாலமாக சேவையாற்றும் ஜனாப் SAரபாக் அவர்களே மாபேரிய கிராமத்திலே முதன் முதலாக ஆசிரியர் நியமனம் பெற்றவராவர். ஆரம்ப ஆசிரியர்களில், மாபேரிய
கிராமமுன்னேற்றத்தில் பெரும்கரிசனைக்காட்டிவரும் ஜனாப்ஐனுத் தீன் அவர்களும் ஒருவராவார். இப்போது இப்குதியைச் சேர்ந்த பலர் அரசாங்க உத்தியோகஸ்தர்களாக சேவையாற்றுகின்றனர்.
மாருக்கோன
மாபேரிய, மானாம்பொட, ரைத்தாளவளை ஆகிய முஸ்லிம் கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு கிராமமே மாருக்கோன உக்குவளைப் பிரதேசத்தில் இருக்கும் ஏனைய முஸ்லிம் கிராமங்க ளைப் போலவே இக்கிராமமும் மாபேரிய எனும் மூத்த கிராமத்திலி ருந்தே உருவாயிற்று. ஆனால் ஏனைய கிராமங்களை விட இக்கிராமம் மார்க்கக் கல்வியிலும் உலகியற் கல்வியிலும் ஆரம்பித்திலிருந்தே ஒரளவு அக்கறை காட்டியிருக்கிறது. மார்க்கக் கல்வியைப் பொருத்தவ ரையில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டியவர் முகம்மது சுலை மான் ஆலிம் சாகிப் அவர்களாவார். தென்னிந்தியாவில் ஒதி தாயகம் திரும்பிய இவர் இலங்கை சாதுலியா தரீக்காவின் கலீபாவாக வெகு காலம் இருந்தார். எனவே இலங்கையின் பல பாகங்களிலும் பிரபல்ய மானவராக இவர் விளங்கினார். சேர், மாக்கான் மாக்கார் போன்ற கொழும்பு முஸ்லிம் தனவந்தர்களின் மத்தியில் இவருக்குப் பெரும் செல்வாக்கு இருந்தது.
உலகியல் கல்வியிலும் மாருக்கோன முஸ்லிம்கள் ஒரு சிலரா வது ஆரம்பத்தில் இருந்தே அக்கறை காட்டி வந்துள்ளனர். 1920-ஆம்
Page 117
9:30
ஆண்டிலேயே மர்ஹஜூம் உதுமான் லெப்பை அவர்கள் ஓர் ஆசிரிய ராக கடமையாற்றியுள்ளார்கள். எனவே இவர்களின் புத்திரர்களில் ஒருவர் ஒரு மெளலவியாகவும், ஒருவர் பிரபல வர்த்தகராகவும்,இரு வர் வழக்கறிஞர்களாகவும், இருவர் ஆசிரியர்களாகவும் விளங்கிய தில் எவ்வித ஆச்சரியமுமில்லை. ஆயிரத்தித்தொளாயிரத்து இருபதுக ளில் கூட இங்கே பிறந்த, மர்ஹஜூம் சரீப்தீன், மானாம்பொடையில் படிப்பித்துக் கொண்டிருந்த "கிழவன் வாத்திஎன்று அழைக்கப்பட்ட வரிடம் தமிழும் ஆங்கிலமும்படித்தார். எனவே அவர்தனது மகனான ஜனாப் S. ஜலீல் அவர்களை ஆங்கிலக் கல்விக்காக மாத்தளைக்கு அனுப்புவதைப் பார்க்கின்றோம். மர்ஹல்ம் ULM அன்வர்,ஜனாப் U.LM. பாரூக் ஆகிய இரண்டு வழக்கறிஞர்களும்இக்கிராமத்தைச்சேர்ந்
தவர்களே.
மாத்தளை மாவட்டத்து முதல் பயிற்றப்பட்ட சிங்கள ஆசிரிய் ரான ஜனாப் இஸ்மாயில் மாருக்கோனையைச் சேர்ந்த தலகொட்டுவ யில் பிறந்தவராவார். இவரது சிங்களமொழி அறிவைப் பார்த்து, சிங்கள மக்கள் கூட வியப்பர் என்று கூறப்படுகிறது. ஜனாப் சல்சயில், அல்ஹாஜ்ULM கலீல் ஆகியோர்களும் ஆரம்பமுஸ்லிம் ஆசிரியர்கள் என அழைக்கப்படக் கூடியவர்கள் ஆவர். பொருளாதாரத் துறையி லும் இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபல்யமாய் இருந்துள்ளனர். இவர்களில் மிக முக்கியமானவர் அப்துல் ஹமீத் ஹாஜியார் ஆவார். மாத்தளை மாவட்டத்தில் பெருந்தோட்டங்கள் வைத்திருந்த ஒரு சில முஸ்லிம்களில் இவரும் ஒருவர் கரகஹத்தென்ன, குறிவெல, பவ் லான, பண்டரப்பொல போன்ற பல தோட்டங்களுக்கு இவர் உரிமை யாளராக இருந்தார். இந்த ஊரைச்சேர்ந்த மர்ஹஜூம் ULM கமால் அவர்கள் உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் வியாபாரத்தில், ஒரு காலக் கட்டத்தில் மிகப் பிரபலமாக விளங்கினார்.
மாபேரிய ஜும்ஆபள்ளியே மாருக்கோனமக்களுக்கும் ஜும்ஆ பள்ளியாக விளங்குகிறது. ஆனால் அன்றாட மார்க்க அனுஷ்டானங் களை நிறைவேற்ற வசதிகள்மிக்க தைக்கா ஒன்று இங்கே கட்டப்பட் டுள்ளது. இவ்வூரைச் சேர்ந்தவரும் சுலைமான் ஆலிம் சாஹிபின்புதல்
93
வருமான இப்ராஹிம் ஆலிம் அவர்கள் நீண்டகாலம் 'காதி” யாக கடமையாற்றினார்கள். ஜனாப் S.M.ஜலீல் இப்பகுதியில் வாழ்கின்ற ஒரு சிறந்த சமூக சேவையாளராவார். பரகஹவெல:
மாபேரிய ஜும்ஆ பள்ளிவாசலின் பரிபாலனத்துக்குக் கீழ் இருக் கும் இன்னொரு கிராமம், மாபேரிய கிராமத்துக்கும் உக்குவளை நகரத்துக்கும் இடையில் அமைந்துள்ள பரகஹவெல ஆகும்.இதுவும் மாபேரிய கிராமத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்களால் உருவான ஒரு கிராமமே. ஆனால் அக்குடிப் பெயர்வு குறைந்த பட்சம் 19-ஆம் நூற் றாண்டின் முதல்பகுதியிலாவது நடந்து இருக்கவேண்டும். 1864-ஆம் ஆண்டில் செய்யப்பட்டுள்ள சில காணிப்பதிவுகள் முஸ்லிம்கள் பரக ஹவெல கிராமத்தில் நீண்ட காலமாக வாழ்ந்திருக்கினறனர் என்ற உண்மையை உணர்த்துகின்றன. 1864-ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு காணிப் பதிவு பரகஹவெலையைச் சேர்ந்த சுலைமான் பிள்ளையின் மகன் சின்னத்தம்பி அதே ஊரில் வாழ்ந்த சுலைமான் லெப்பையின் மகள் கொழந்தையிடம் பரகஹவெலைக் கிராமத்தில் இருக்கும் ஒரு நிலத்தை வாங்கியதைக் குறிப்பிடுகின்றது. இது 1864-ஆம் ஆண்டுக் குப் பல வருடங்களுக்கு முன்னரே பரகஹவெலையில் முஸ்லிம்கள் குடியேறி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
1635-ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறிய மாத்தளை மன்னன் விஜய பாலயின் ஆட்சியின் போது மாருக்கோன முதியான்ஸே என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட மானாம்பொடைக் குளம்பரகஹவெல கிராமத் தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியதாகவே இருந்தது. 1888-ஆம் ஆண்டில் கூட இக்குளம்,இப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்களால் பழுது பார்க்கப்பட்டுள்ளது. எனவே 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மானாம்பொடை, பரகஹவெல, மாபேரிய போன்ற கிராம வாசிக ளுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாக விளங்கிய இக்குளம், 1888-ஆம் ஆண்டுக்குப் பின்னரே பெருந் தோட்ட வளர்ச்சிக்காக பலிகொடுக்கப்பட்டது என்பது புலப்படுகின் றது. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை எவ்வாறு நெற்செய்கையையும்
Page 118
92392
அதில் ஈடுபட்டிருந்த விவசாயிகளையும் பாதித்தது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணமாகும். மழைநீரை நம்பியும் இக்குளத்து நீரை நம்பியும் விவசாயம் செய்த பரகஹ வெலை மக்களில் பலர், பெருந் தோட்ட வளர்ச்சியினால் புதிய தொழில் வாய்ப்புக்கள் ஏற்பட்ட போது அவற்றை உதாசீனப்படுத்தவில்லை. அவ்வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டனர். சிலர்வியாபாரத்தில் ஈடுபட்டனர். சிலர் “ஹோட்டல்’ வியாபாரத்தில் ஈடுபட்டனர். மாத்தளை நகரத்தில் இன்றும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் பேர்சியன் ஹோட்ட லும் ஹமீதிய்யா ஹோட்டலும் இவ்வூர்மக்களால் ஆரம்பிக்கப்பட்ட வையே. இவ்வூர்மக்களில் வியாபாரத்தில் ஈடுபட்டு முன்னேறியவர்க ளில் "க்னகல முதலாளி" என்று மக்களால் அழைக்கப்பட்ட மர் ஹசீம் முக்ம்மது காசீம் ஒருவராவார். இலங்கை முன்னால் ஜனாதிப தியான திரு. வில்லியம் கொபல்லாவவுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்று கூறப்படுகின்றது. s
பரகஹவெல முஸ்லிம்கள் கல்வித்துறையிலும் பெருமளவு அக் கறை காட்டி இருக்கின்றனர். மானாம்பொடையில் இயங்கிய உக்குவ ளைத்தமிழ்ப்பாடசாலையில் திருஆழ்வார்பிள்ளையிடம் கல்விகற்ற ஜனாப் MTM. ஹனிபா உக்குவளைப் பகுதியில் முதன்முதலாக ஆசி ரிய நிய்மனம் பெற்றவர்களில் ஒருவராவார். நிச்சயமாகபரகஹவெல பகுதியின் முதல் அரசாங்க ஆசிரியர் இவரே. இன்று கொழும்பில் பிரபல வழக்கறிஞராகவும் இஸ்லாமிய சேவையாளராகவும் விளங் கும் ஜனாப் MCM, சரூக் இக்கிராமத்தைப் பிறப்பிடமாக கொண்ட
வரே. மாத்தளை மாவட்டத்து முஸ்லிம்களில் ஆரம்ப விஞ்ஞானப் பட்டதாரிகளில் ஒருவரான ஜனாப் HMபாரூக் இக்கிராமத்திலேயே பிறந்தார். இக்கிராமத்தில் பிறந்த ஜனாபா பஸினாநபீல் எனும் பெண் மணி வழக்கறிஞராக மாத்தளையில் தொழில் நடத்துவது பரகஹ வெல மக்கள் கல்வியில் காட்டிய அக்கறையை உணர்த்துகின்றது. இன்று "ஹோட்டல் மேனேஜ்மென்ட்" என்பது இலங்கையில் ஒரு பிரபலமான பாடநெறியாக இருக்கிறது. ஆனால் ஏறத்தாழ 1970-ஆம் ஆண்டுகாலகட்டத்திலேயே இங்கிலாந்தில் படித்துவிட்டு,உல்லாசப்
933
பயணிகளுக்காக இலங்கையில் ஆரம்பத்தில் கட்டப்பட்ட ஹோட் டல்களில் ஒன்றான "ஹோலிடே இன்"னில் ஆயிரத்தித் தொளாயி ரத்து எழுபதுகளிலேயே பகுதி மேலாளர்களில் ஒருவராக பணியாற் றிய அல்ஹாஜ்VH. புவார்தீன்ஹாஷிம் அவர்களும் இவ்வூரைப்பிறப்பி டமாக கொண்ட்வர்தான். இன்று இவ்வூரில் பிறந்த பலரும் பாடசா லைகளிலும் வேறு அரசாங்கத் திணைக்களங்களிலும் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.
மாபேரிய ஜும்ஆ பள்ளியே பரஹவெல மக்களின் ஜும்ஆ பள் ளியாக விளங்குகிறது. ஆனால் தமது அன்றாட மத அனுஷ்டானங் களை நிறைவேற்றுவதற்கு இக்கிராமத்து மக்கள் சகல வசதிகளும் பொருந்திய ஒரு தைக்காவை அமைத்துக் கொண்டுள்ளனர். மாத் தளை பெர்சியன் ஹோட்டல் உரிமையாளரும், இவ்வூர் முக்கிய பிர முகர்களில் ஒருவருமான அல்ஹாஜ் AM ஹாஷிம் அவர்கள், வசதி யான இடத்தில் ஒரு நிலத்தை வாங்கி,அதில் ஒரு மத்ரஸாவை அமைத் துக்கொடுத்தார். ஆரம்பத்தில் இது ஒரு மத்ரஸாவாகவே இயங்கியது. 1973-ஆம் ஆண்டு AHM முகுத்தார் ஹாஜியார் அவர்களின் தலைமை யில் பலர் ஒன்று சேர்ந்து இக்கட்டிடத்தை விஸ்தரித்து இதை ஒரு தைக்காவாக மாற்றியுள்ளனர். ரைத்தள்ாவளை
ரைத்தளாவளை,மாத்தளை மாவட்டத்தில்மெதசிய பத்துவயில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். ரஜத்தளாவ என்ற பெயரே ரைத்த ளாவ என மாறிற்று என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் மாத்தளை கிழக்கு, பள்ளேசிய பத்துவில் அமைந்திருந்த ரைத்தளாவ என்ற கிரா மமே ரஜத்தளாவ என முன்னர் அழைக்கப்பட்டது என AC லோஹி கூறுகின்றார். கொடப்பொல எனும் ராஜதானியிலிருந்து மாத்த ளையை ஆண்ட மன்னனான விஜயபாலயடவர எனும் இடத்தில் ஓர் அணையைக்கட்டி அங்கிருந்துரைத்தளவளையை நோக்கி ஒரு கால் வாயை வெட்டினான். கால்வாய் கொஹிலவத்த எனுமிடத்தை அடைந்தபோது ஒரு பாறை குறுக்கிட்டது. அப்போது வெவமெத் தகே எனும் ஊரைச் சேர்ந்த அலகக்கோன் அச்சிலா என்பவன்அரசன்
Page 119
934
முன்வந்து "இந்த பாறையை உடைத்தால் நான்கழுமரம் ஏறுவேன்’ என்றான். அடுத்த நாள்பாறை உடைக்கப்பட்டது. கூறியதுபோலவே அச்சிலா ஒரு கழுமரத்துடன் அரசனது சமூகத்திற்கு வந்தான், இளகிய மனதுடைய விஜயபால "தற்கொலை செய்ய வேண்டாமென்றும் அதற்கு பதிலாக கால்வாய் வெட்டுவதில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஒரு வேளை உணவு அளிக்குமாறும் அச்சிலாவிடம் கூற, அவனும் அவ்வாறே செய்தான் “என்று ஒரு கதை கூறப்படுகிறது. விஜயபால மன்னன் ஒரு பலாமரத்தின் நிழலில் நின்று கால்வாய் வெட்டும் வேலையை மேற்பார்வை செய்தான் என்றும் அதனால் அந்த பலா மரம் "வெட சிடி கொஸ்கஹ" என அழைக்கப்பட்ட தென்றும் சிலர் கூறுகின்றனர். கால்வாய் வெட்டும்போது கூடைகளில் நிரப்பி மண் னைக் கொட்டிய இடம் இன்றும் கூடாகொடெல்ல என்றே அழைக்கப் படுகின்றது. இவையாவும் ரைத்தளாவ எனும் கிராமத்துடன் தொடர் புள்ள கர்ண பரம்பரை கதைகளாகும்.
ரைத்தளாவளையின் ஒரு பகுதி தொம்பகொட்டுவ. இங்கு முஸ் லிம்கள் வசித்தினர். இக்கிராமத்தில் கண்டி தளதா மாளிகைக்கு நிறைய காணிகள் இருந்தன. அதில் சில் காணிகளை வருடத்துக்கு ஒரு 'பெலி வயலுக்கு ஒரு ரூபாய் என்ற கணக்கில் சில முஸ்லிம்கள் குத்தகைக் குப் பெற்றிருந்தனர். அவ்வாறு காணிகள் பெற்றிருந்த முஸ்லிம்களின் பெயர்கள் பின்வருமாறு: தம்பி லெப்பை குருன்னேஹே, தொம்ப கொட்டுவ குப்பயா, கொங்காவல தம்பிக்கண்டு, ஆசியா குப்பயா, நூஹஜூலெப்பை, உம்மா நாச்சி, குஞ்சுக் கண்டு, குப்பை நய்தே"
விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டிருந்த ரைத்தளா வளை முஸ்லிம்களுக்குத் தும்பர மடவளையுடனும் மாருக்கோனத. லக் கொட்டுவயுடனும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
ஆரம்பத்தில் இக்கிராம மக்கள், மாபேரிய பள்ளிவாசலிலேயே தம் மத அனுஷ்டானங்களை நிறைவேற்றி வந்தனர். ஆனால் ஏறத் தாழ 1910 ஆண்டளவில் மாபேரிய பள்ளி வாசலில் ஒரு சின்னப் பிரச்சினை ஏற்பட்டது. ரைத்தளாவளை மக்களது மனது புண்படும் படி சில வார்த்தைகள் வெளிவந்துவிட்டன. கொதிப்படைந்தரைத்தா ளவளை முஸ்லிம்கள் மர்ஹஅம் தம்பி லெப்பையின் தலைமையில்
235
நான்கு க்ம்புகளை ஊன்றி ஒரு தற்காலிக பள்ளியை உடனடியாக எழுப்பி விட்டார்கள். பிறகே மண்ணால் கட்டினார்கள். காலப்போக் கில் பள்ளிவாசல் பெரிதாக கட்டப்பட்டது. இப்போதும் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. வெள்ளவத்தையில் இருந்து ரைத்தளாவளைப் பள்ளிக்கு "மூன்று நாள்" ஜமாஅத் வந்தோர் இப் பள்ளிக்குத் தேவையான அளவு மலசலக் கூடங்களை அமைத்துக் கொடுத்தனர் என்றும் ஏறத்தாழ ஐம்பதினாயிரம் ரூபாய் பெறுமதி யான கம்பிகளை வழங்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
ரைத்தளாவளைக்கும் மாருக்கொனைக்கும் இடைப்பட்ட குறி வெல எனும் இடத்தில் இருக்கும் பாடசாலையே இவ்விரண்டு முஸ் லிம் ஊர்களுக்கும் பொதுவான பாடசாலையாகும் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் குறிவெல சிங்களப் பாடசாலையின் ஒரு பகுதி யில் ஒர் ஒலை கொட்டகையிலேயே இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட் டது. 1965-ஆம் ஆண்டு அப்துல் ஹமீத் ஹாஜியார் மூன்றரை ஏக்கர் காணியினை இப்பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கினார். இப் போது குறிவெல முஸ்லிம் பாடசாலை இவர் வழங்கிய காணியி லேயே அமைந்துள்ளது. அண்மையில் இப்பாடசாலை மகாவித்தியா லயமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் கல்வியில் ஒரளவு அக்கறை உள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். ஆயிரத்தித்தொளாயிரத்து இருபதுகளிலேயே ரைத்தளாவளையிலிருந்து ஜனாப் ILM சஹீத் கடுகஸ்தொட்ட புனித அந்தோனியார் கல்லூரிக்குப் போய் படித்திருக்கிறார். கால்நடையா கத்தான் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்குப் போய்ப் வந்திருக்கிறார். முப்பதுகளில் ஜனாப் P.M.A. லதீப் மாத்தளை வந்து புனித தோமியர் கல்லூரியில் படித்திருக்கிறார். இப்பகுதியில் முதன்முதலாக ஆசிரியர் நியமனம் பெற்றவர் இவரே. மாத்தளை சாகிராக் கல்லூரியில் ஆசிரிய ராக நீண்டகாலம் சேவையாற்றிய இவர் மாணவர்களின் முன்னேற்றத் தில் பெரும் அக்கறை காட்டினார். சாகிராக் கல்லூரியின் முன்னேற்றத் துக்கு இவர் கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளார். குறிவெல அரசாங்க தமிழ்ப் பாடசாலையில் கல்விகற்று முதன்முதலாக ஆசிரிய நியமனம் பெற்றவர்ஜனாப்SLM ஹாஷிம் என்பவராகும். இப்போது இவர் வரக்காமுறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமை யாற்றுகின்றார். குறிவெல பாடசாலையில் தம் ஆரம்ப கல்வி யைப் பெற்ற மர்ஹஅம்ULM. அன்வர் 1960-ஆம் ஆண்டு வழக்கறிஞ ராக சத்தியப் பிரமாணம் செய்தார். பிற்காலத்திலே மார்க்கப்பணிக்கர் கத் தம் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒதுக்கிய மர்ஹஅம் அன்வ
Page 120
Page 121
238
வாக உணர்த்துகின்றது. இந்த உறுதிப்பத்திரம் மூலம் மானாம்பொட முஸ்லிம்கள்தாமாகவே தம்மீது சுமத்திக் கொண்ட கட்டுப்பாடுகள்.
(அ) தொழுகை, ஜக்காத், நோன்பு, ஹஜ் ஆகிய கடமைகளை
(ஆ)
(g))
ஒழுங்காக நிறைவேற்றுவோம் என்று உறுதியளிக்கும் அதே நேரத்தில் வெள்ளிக்கிழமையன்றும் வெள்ளிக்கிழமை மாலையிலும் நடைபெறும் சமய அனுஷ்டானங்களில் குறிப் பிடப்பட்டநேரங்களில் ஒழுங்காக கலந்து கொள்வோம் என் றும் வாக்களிக்கின்றோம். வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் மார்க்க அனுஷ்டானங் களில் கலந்து கொள்ள தவறினால் பன்னிரண்டு சதம் அபரா தம் செலுத்த வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின் றோம். இரண்டாவதுமுறையாக இத்தவறு நேர்ந்தால் இருபத் துநான்கு சதம் அபராதம் செலுத்துவதற்கு உடன்படுகின் றோம்.
வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் நடைபெறும் சமய அனுஷ்டானங்களுக்குத் தேவையானவற்றை வழங்குவ தற்குநாம்ஏற்றுக்கொள்கின்றோம்.இதில்நாம்தவறினால், தவறியவர் ஐம்பது சதம் அபராதம் செலுத்துவார், இவ்வ னுஷ்டானங்களில் கலந்து கொள்ளாதவர்ஐந்து சதம் அபரா தம்கட்டவேண்டும்என்பதையும்ஏற்றுக்கொள்கின்றோம்.
இவ்வுறுதிப்பத்திரம் மானாம்பொடை கிராமத்தில் ஓர் ஆதர்ச சமய சூழலை ஏற்படுத்த எத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்ப தைக் காட்டுவதுடன் கோட்டாறு பாவா சுலைமானுல் காதிரிய்யி அவர்கள் மார்க்கப் பணிகளில் எவ்வளவு அக்கறை காட்டி இருக்கின் றார்கள் என்பதையும் புலப்படுத்துகின்றது.
மாபேரிய பள்ளியில் தமது மதஅனுஷ்டானங்களை ஆரம்பத்தில் நிறைவேற்றி வந்த மானரீம்பொட முஸ்லிம்கள் 1860-ஆம் ஆண்டள வில் தமது கிராமத்திலே ஒரு பள்ளியைக் கட்ட வேண்டுமென்று தீர்மானித்தனர். உடனடியாக இவ்வூரில் வாழ்ந்த மீரா சாஹிபு வின்
939
மகளாரான அலிமா நாச்சி பள்ளிக்கட்டுவதற்கும் மையவாடியாகப் பாவிப்பதற்கும் ஒரு காணியை வழங்கினார்.மண்ணால் சிறிய அள வில் ஒரு பள்ளி கட்டப்பட்டது. பின்னர்ஏறத்தாள1890-ஆம்ஆண்டள வில் இதனைத் திருத்திக் கட்டியுள்ளனர். திருத்த வேலைகளுக்குத் தேவையான பணத்தை 'களிக்கம்பு" விளையாட்டு ஆடி சேர்த்தோம் என இவ்விளையாட்டில் பங்குபற்றிய ஒருவர்தன்மகனிடம் கூறியுள் ளார். இந்த பள்ளிவாசலோடு பல மார்க்க ஞானிகள் தொடர்புகொண் டுள்ளனர். இவர்களில் ஒருவர் "பெரிய லெப்பை" என மக்களால் அழைக்கப்படும் ஒரு பெரியார், இவர் அபூபக்கர் (ரலி) அவர்களின் பரம்பரையில் உதித்தவர் என்று நம்பப்படுகின்றது. இப்பள்ளியோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இன்னொரு பெரியார்அலித்தம்பி அப்பா ஒலியுல்லா ஆவார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு சிறு நிகழ்வு சுவையானது. இவர்களும் கஸாவத்த ஆலிம் அப்பா அவர்க ளும் கீழக்கரைத் தைக்கா சாஹிபு எனும் பெரும் மார்க்க ஞானியிடம் ஒதிய மாணவர்களாவர். ஒரு முறை தைக்கா சாஹிப் ஒலியுல்லா அவர்கள் கஸாவத்தை ஆலிம் அப்பாவை சுட்டிக்காட்டி "அது ஒர் அறிவுக்கப்பல்" என்றும் அலித்தம்பிஅப்பாவைச்சுட்டிக்காட்டிஅது ஒரு விலாயத்துக் கப்பல்” என்றும் சொன்னார்கள் என்று ஒரு கதை நிலவுகின்றது. மர்ஹலிம்களானத.அ. அப்துல் ரஹ்மான், மீ. இஸ்மா யில் லெப்பை, S.M. நாகூர் அடுமை, கோடி வளவு அப்பா ஆகியோர் இப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளனர். இப்பள்ளிக் குக் காணி வழங்கியுள்ளவர்களில் மர்ஹஅம் எம்.ஏ.எம். காசீம் ஹாஜி யார் அவர்களும் ஒருவர். இப்போது பள்ளிக் காணயில் கட்டப்பட்டு வரும் குர்ஆன் மத்ரஸாவுக்க இவ்வூரைச் சேர்ந்த வாஹித் ஹாஜியார் அவர்கள் குறிப்பிடக்கூடிய அளவிற்குப் பண உதவி அளித்துள்ளார் கள். உக்குவளை நகரத்தக்கு அருகாமையில் ஒரு தைக்கா கட்டப்பட் டுள்ளது. இது மானாம்பொடை ஜூம்ஆ பள்ளிவாசலின் பரிபாலனத் துக்குக் கீழ் இயங்குகிறது இதற்கு உருக்குவளை பிரபல வர்த்தகரான பரீட் ஹாஜியார் அவர்கள் பெரிதும் உதவியுள்ளார்.
ஏனைய முஸ்லிம் கிராமங்களை விட் மானாம்பொடையில் "கல்வித்தாகம்" ஓரளவிற்கு இருந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண் டின் இரண்டாவது தசாப்தத்திலேயே "ஸ்கோல" என அழைக்கப் பட்ட ஒரு சிறு பள்ளிக்கூடம் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒலைக் கொட்டில்தான், ஆனால் "கிழவன் வாத்தி" என்று மக்களால் அழைக்
Page 122
940
கப்பட்ட ஒர் ஆசிரியர் தமிழையும், ஒரளவிற்கு ஆங்கிலத்தையும் நன்கு படிப்பித்திருக்கிறார். "பைரோஸ் ஹில்" தோட்ட உரிமையாள ராக இருந்த ஜனாப் அபுல்ஹஸன், மாருக்கோன செரிப்தீன் ஆரச்சி யார், ஜனாப் செய்யத் ஹ"ஸைன் போன்றோர் இவரிடம் படித்தவர் களே. இப்பாடசாலை வளர ஆரம்பித்தது. உக்குவளையில் இருந்த "பாபர் எஸ்டேட்" உரிமையாளராக இருந்த திரு பாபர் எனும் ஆங்கி லேயர் கூட சிறிது காலம் இந்த பாடசாலைக்கு மேலாளராக இருந்தி ருக்கிறார். 1922-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் திகதி இப்பாட சாலை உக்குவளை தமிழ்ப் பாடசாலை என்ற பெயரில் கல்வித் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டது ஏறத்தாள 1935-ஆம் ஆண்டு ஆழ்வார்பிள்ளை என்பவர்ஆசிரியராக நியமனம் பெற்றார். 1936-ஆம் ஆண்டு வழக்கறிஞர் மர்ஹூம் அல்ஹாஜ் AOM ஹ"ஸைன் ஆவர்க ளுக்கு, இப்பாடசாலை மேலாளர் நியமனம் வழங்கப்பட்டது. திரு ஆழ்வார் பிள்ளை ஆசிரியரிடம் கல்வி கற்றவர்கள்ல் ஜனாப் MTM.ஹனீபா, ஜனாப் KS.S. முகம்மது ஹாரீட், ஜனாப், S.ஜூனைத், மர்ஹஅம் அப்துல் காதர் ஆலிம் போன்றோர் முக்கியமானவர்கள் ஆவார்கள். மானாம்பொடைபகுதியில் முதன்முதலாக ஆசிரிய நியம னம் பெற்றவர்களான ஜனாப் MTM. ஹனிபா அவர்களும் ஜனாப் K.S.S. முகம்மது ஹாரிட் அவர்களும் திரு. ஆழ்வார்பிள்ளை அவர்களி டமே கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்குப் பின்னால்S. ஜுனைது அவர்கள் ஆசிரியராக நியமனம் பெற்றார்கள். மாத்தளை மாவட்டத்தில் ஒரு சிறந்த ஆலிமாக விளங்குவதற்குத் தேவையான ஆற்றலைப் பெற்றிருந்தவர் மர்ஹஅம் அப்துல் காதர் ஆலிம் சாஹிப், ஆனால் அல்லாஹ்வின் ஏற்பாடு வேறு விதமாக இருந்தது. இலங்கையில் ஒதி முடித்துபட்டம் வாங்கியபிறகு, மேற்ப டிப்புக்காக தென்னிந்தியாவில் உள்ள புதுக்குடி மத்ரஸாவுக்குச் சென்ற இவ் இளம் ஆலிம், அங்கேயே இறைவனடி சேர்ந்து விட்டார். இதுமானாம்பொடைக்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும்.
மாதிப்பொல
மாதிப்பொல, மாத்தளை மாவட்டத்தில் உடுகொடை பள்ளேசி யப் பத்துவில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமமாகும். “மகாதிம்மன” எனும் பிராமனனது பெயரிலிருந்தே மாதிப்பொல எனும் பெயர் தோன்றியதாக இவ்வூரில் ஒரு கதைகூறப்படுகிறது, ஆனால் 'மாதிய எனும் பிராமணனின் பெயரிலிருந்தே இப்பெயர் வந்ததென்று மக்
24
கள் நம்புவதாக திரு AC லோறி தன்னுடைய நூலில் கூறியுள்ளார். 1871-ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் மாதிப்பொல தனிக் கிராமமாக கருதப்படாது கெந்தன் கொழுவ எனும் கிராமத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 1871-ஆம் ஆண்டு மாதிப்பொல மிகச் சிறிய கிராமமாகவே இருந்திருக்கிறது என்பதை உணர்த்துகின்றது. 1881-ஆம் ஆண்டு இங்கு 25 ஆண்களும் 28 பெண்களும் வாழ்ந்திருக் கின்றனர். 1891-ஆம் ஆண்டில் கூட 29 ஆண்களும் 24 பெண்களுமே இங்கு வாழ்ந்திருக்கின்றனர். இச்சனத் தொகையில் பெரும்பான்மை யோர் முஸ்லிம்களே. மாதிப்பொல முஸ்லிம்களின் பூர்வீக கிராமங்க ளாக வதுரெஸ்ஸ, மாய்வெல எனும் கிராமங்களே கருதப்படுகின் றன. இன்றைய மாதிப்பொல கிராமத்தின் ஒரு பகுதியான தோர முள்ள கிராமம் 1935-ஆம் ஆண்டிலும் 'கல்வெட்ட" கிராமம் 1952-ஆம் ஆண்டிலும் தோன்றியுள்ளன.
1948-ஆம் ஆண்டுவரைசவனவெளிபள்ளிவாசலே மாதிப்பொல மக்களின் ஜும்ஆ பள்ளிவாசலாக திகழ்ந்தது. 1948-ஆம் ஆண்டிலே தான்மாதிப்பொலகிராமத்தில் ஒரு தனிபள்ளிவாசல் கட்டப்பட்டது. இப்பள்ளியைக் கட்டுவதற்கு இங்கே வாழ்ந்த பக்கீர் ஹகீம் சாகிபு என்பவர்காட்டிய ஆர்வம் குறிப்பிடத்தக்கதாகும். இவர்பலவகைகளி லும் இங்குள்ள முஸ்லிம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உற்சாக மூட்டி இருக்கிறார். அப்துல் ரஹீம் ஆலிம் என்பவர் நீண்டகாலம் இப்பள்ளியில் கதீபாக கடமையாற்றியுள்ளார்.
நெற்செய்கையும் சேனைப்பயிர்ச் செய்கையுமே மாதிப்பொல முஸ்லிம்களின் பூர்வீக தொழில்களாக இருந்தன. ஆனால் 1951-ஆம் ஆண்டுக்குப் பின்னர் புகையிலைப் பயிர்ச் செய்கை பெரும் முக்கியத் துவம் பெற்றிருக்கிறது. ஜனாப்களானVMதைய்புத்தீன், ஹபீப் முகம் மது, T சம்மூன் ஆகியோர் புகையிலைச் செய்கையிலும் புகையிலை வியாபாரத்திலும் ஈடுபட்டு வெற்றிபெற்றனர், இப்போதுமாதிப்பொ லக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் மாத்தளை போன்ற நகரங்களில் வியாபாரம் செய்கின்றனர்.
1928-ஆம் ஆண்டிலே மாதிப்பொலதமிழ்ப்பாடசாலை ஆரம்பிக் கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் மாதிப்பொல சிங்கள பாடசா லையில் தமிழ் வகுப்புகள் நடைபெற்றன. இச் சிங்கள பாடசாலை யில் படித்த ஒரு முஸ்லிம் மாணவர் ஜனாப் உசைன் மீரா சாஹிப்
Page 123
949
ஆவார். இந்த பாடசாலையில் கற்பித்த, நிக்கவட்டவன என்ற ஊரைச் சேர்ந்த ஜனாப் H.M. அப்துல் காதர் என்பவர் ஜனாப் மீரா சாஹிபை விடுமுறை காலத்திலே நிக்கவட்டவானைக்கு அழைத்துச் சென்று படிப்பித்து இருக்கிறார். ஜனாப்.M. அப்துல் காதர் அவர்களின் தியா கத்தினாலும் சேவை மனப்பான்மையினாலும் ஜனாப் மீராசாஹிப் ஆறாம் வகுப்பு பரீட்சையில் சித்தியடைந்து ஆசிரியராக நியமிக்கப் பட்டார். சிறிது காலம் மாதிப்பொலசிங்களபாடசாலையில் கற்பித்த ஜ்னாப் மீரா சாஹிப் மூன்று வருடங்கள், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மாதிப்பொல தமிழ்ப் பாடசாலையிலும் கடமையாற்றியிருக்கிறார். அப்போது அவருக்கு மாதச்சம்பளமாக இருபத்தைந்து ரூபாவழங்கப் பட்டுள்ளது. ஆங்கிலம் கற்பதற்காக மாதிப்பொலையில் இருந்து மாத் தளைக்கு முதன்முதலாக வந்தவர்ஜனாப்தஸ்லீமாகும். அவர் பின்னர் போலிஸ் சேவையில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து இன்ஸ் பெக்ட ராக கடமையாற்றிய பின் பதவியிலிருந்து இளைப்பாறினார். ஏறத் தாழ 1960-ஆம் ஆண்டுக்குப் பின்னரே மேல்வகுப்புகள் மாதிப்பொல தமிழ்ப் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இங்கே படித்து முதன்முதலாக ஆசிரியர் நியமனம் பெற்றவர்கள், ஜனாப்களான தாஸிம், சமர்தீன் ஆகியோர் ஆவர். அதன் பிறகு பலர் ஆசிரியர் நியம னங்கள் பெற்றிருக்கின்றனர். சிலர் இப்போது பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கின்றனர் உள்பொத்த விட்டிய
உள்பொத்தபிட்டி,மாத்தளை நகருக்கு ublas அண்மையில் அமைந் துள்ள ஒரு தொன்மையான முஸ்லிம் கிராமம் ஆகும். கியுள ஆரச்சி யின் பரிபாலன பொறுப்பில் விடப்பட்டிருந்த இந்த கிராமத்தின் சனத்தொகை 1871-ஆம் ஆண்டு அறுபத்தொன்பதாகவே இருந்ததி இக்கிராமத்தின் பூர்விக குடிகள். மெதகொட, திப்பட்டுமுள்ள போன்ற இடங்களிலேயே ஆரம்பத்தில் வசித்தனர். இங்கே ஆற்றங்க ரைகளில் விவசாயம் செய்தும் சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபட் டும் வாழ்ந்திருக்கின்றனர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் முஸ் லிம்கள் இவ்விடங்களை விட்டுவிட்டு இன்றைய உள்பொத்தபிட்டிய கிராமம் அமைந்திருக்கும் இடத்திற்கு பக்கத்திலே உள்ள ஆற்றோரங் களில் குடியேறியுள்ளனர். இங்கு வாழுகின்ற பலர் உள்பொத்தபிட் டிய கிராமத்தை "பொல்கிரியாவ’ எனும் பக்கத்து ஊரில், அரசனது முன்
943
னிலையில்,தோலோடு இருந்த ஒரு தேங்காயைத் தன் வெறுங்கைக ளால் நசுக்கிப் பால் வடியச் செய்து தன் சக்தியைக் காட்டிய பக்கீர்த் தம்பி என்பவருடன் சம்பந்தப்படுத்துகின்றனர். இவரது உடற்பலத் தைக் கண்டு வியந்த அரசன்,அவருக்கு "அசுர விசுர வீர பிரகதிய முதியான்சே” என்ற விருதையும் உள்பொத்தபிட்டிய என்ற ஊரையும் வழங்கியதாக இவர்கள் கூறுகின்றனர். மாத்தளை காணிப்பதிவாளர் காரியாலயத்தில் காணப்படும் பதிவொன்று நய்தே உடையார் ஒமர் கண்டு என்பவருக்கு மெதகொடையில் காணி இருந்ததை நிருபிக்கின் றது. உள்பொத்தபிட்டி முஸ்லிம்களுக்கு இன்றும் மெதகொட, திப் பட்டுமுள்ள போன்ற இடங்களில் காணிகள் இருப்பதும், பள்ளியக் கும்புர, என்ற பெயரில் மெதகொடயில் ஒரு காணி இருப்பதும், இன்றும் இவ்வூர் மக்களில் சிலர் மெதகொடயுடன் இணைத்து அழைக்கப்படுவதும் உள்பொத்தப்பிட்டி மக்களுக்கு உண்மையில் மெதகொடயுடன் தொடர்பு இருந்திருக்கும் என்பதை உண்மைபடுத் துகின்றன.
1898-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு நூலில், உள்பொத்த பிட்டி பள்ளிவாசல் பழமையான பள்ளிவாசல் என வர்ணிக்கப்பட் டுள்ளது.இது இவ்வூர் பள்ளிவாசலின் தொன்மையைக் காட்டுகிறது. ஆரம்ப பள்ளிவாசல் ஆற்றோரத்தில் இருந்ததென்றும்,அது வெள்ளத் தால் அழிவுற்ற பின்னரே இப்போதிருக்கும் புதிய பள்ளி கட்டப்பட்ட தென்றும் கூறப்படுகின்றது. ஏறத்தாள நூற்றிப்பத்து வருடங்களுக்கு முன் இதே சுதுகங்கையின் கரையில் அமைந்திருந்த "செக்கிரில்ல” எனமுஸ்லிம்களால் அழைக்கப்பட்ட ஹெக்கிரில்லமுற்றாக அழிவுற் றதுபோல இதே வெள்ளத்தால் ஆற்றங்கரையில் இருந்த உள்பொத்த பிட்டி பள்ளிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம்.
ஆரம்பத்தில் இவ்வூர் மக்கள் கூடுதலாக விவசாயத்திலேயே ஈடு பட்டிருந்தனர். பணப்பயிர்ச் செய்கை இலாபகரமானதாக இருந்த போது இவர்கள் கோப்பி, மிளகு, கொக்கோ போன்ற பணப்பயிர் களை உண்டாக்கினார். சிலர் சிறு தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். இன்று புதிய தலைமுறையினர் கூடுதலாக வியாபாரத்தில் ஈடுபட்டி ருக்கின்றனர். 1950-ஆம் ஆண்டில் தனிப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்
Page 124
944
டது. இவ்வூரில் முதன்முதலாக ஆசிரியர் நியமனம் பெற்றவர்ஜனாப் MHA ரஹீம் என்பவராவார். இன்று இவ்வூர்ஆண்களில் சிலர்ஆசிரி யர்களாக இருக்கின்றனர். சிலர் வேறு அரசாங்க உத்தியோகங்களில் இருக்கின்றனர். சிலர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். பெண் களில் சிலர் ஆசிரியைகளாக இருக்கின்றனர்.
இவ்வூர் சிறிய ஊராக இருந்தபோதிலும் புகழ் மிக்க ஊராகும், ஒரு காலகட்டத்திலே புகழ்மிக்க வைத்தியராக விளங்கிய வாப்பு வைத்தியர் பிறந்த ஊர்இது.அருள்வாக்கிஅப்துல்காதர், சதாவானி செய்குத்தம்பி பாவலர் போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பெரும் புலவரும் இறை நேசருமான கோட்டாறு பாவா சுலைமானுஸ் காதிரிய்யி வாழ்ந்து மறைந்த ஊர் இது.
ரஜ்ஜம்மன:
மாத்தளை தெற்கு கம்பஹசிய பத்துவில் அமைந்திருக்கும் ரஜ் ஜம்மனன்னும் இக்கிராமம் மிக தொன்மையானது என்பது எவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் உண்மையாகும். இதுவே மாத்தளை மாவட் டத்துள் உள்ள கிராமங்களில் மிகத் தொன்மையானது என கருதுவோ ரும் உளர். மாத்தளை மாவட்டத்தில் முஸ்லிம்களின் ஆற்றங்கரைக் குடியேற்றங்களில் ரஜ்ஜம்மனை ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. இது மாத்தளைக்கும் நிக்கவட்டவனைக்கும் இடையில்அமைந்துள்ள ஒரு கிராமமாகும். எனவே முஸ்லிம்களின் தவளம் வியாபாரத்தில் இதுவும் ஒரு முக்கியமான தங்குமிடமாக இருந்திருக்கலாம். இக்கி ராம மக்களுக்கு மாத்தளை, நிக்ககொல்ல, நிக்கவட்டுவான, கோட்ட கொடை, உள்பொத்தபிட்டி போன்ற கிராம முஸ்லிம்களோடு நெருங் கிய தொடர்பு இருக்கின்றது. ரத்த கம்மாஹே என்பவர் இக்குடியேற் றத்தை ஆரம்பித்ததினால் இது ரஜ்ஜம்மனை என அழைக்கப்பட்டது. எனAC லோறி தனது நூலில் கூறியுள்ளார்.
945
ரஜ்ஜம்மன சனத்தொகை விவரம்"
ஆண்டு ஆண்கள் பெண்கள் மொத்தம்
Kamr
1871 81 66 47
88. 17 28
1891 ma- O5
1871-ஆம் ஆண்டில் ஒரு முஸ்லிம் கிராமமாக ரஜ்ஜம்மனை இருந் தது. இங்கு வாழ்ந்த அத்தனைப் பேர்களும் முஸ்லிம்களே. இதை ஒரு முஸ்லிம் கிராமமென்றேAC லோஹியும் குறிப்பிடுகின்றார். 1871-ஆம் ஆண்டில் 147 பேர் இங்கு வாழ்ந்துள்ளனர், ஆனால் காலப்போக்கில் சனத்தொகை படிப்படியாக குறைந்து 1891-ஆம் ஆண்டு ஐந்து ஆண் கள் மாத்திரமே இங்கு வாழ்வதைப் பார்க்கின்றோம். முஸ்லிம் சனத் தொகை ரஜ்ஜம்மனையை விட்டு படிப்படியாக அருகில் இருந்த இட மான கெட்டவலையில் குடியேறியிருக்கிறது. இப்போது கெட்டவ லையே முஸ்லிம் கிராமமாக இருக்கின்றது. ரஜ்ஜம்மனை ஒரு சிங்கள கிராமமாகவே இருக்கின்றது. ஆக ஒரு முஸ்லிம் வீடு மாத்திரமே ரஜ்ஜம்மனையில் இருப்பதாக கூறப்படுகிறது. மடவளை, நாலந்த, நாவுல, தம்புள்ளை போன்ற மாத்தளை மாவட்ட பிரதேசங்கள் ஊடாக மாத்தளை - திருக்கோணமலை பாதை கட்டப்பட்டவுடன் தவளம் வியாபாரத்தில் ரஜ்ஜம்மனை வகித்த முக்கியத்துவத்தை அது இழந்து விட்டதா? அதனால் ஏற்பட்ட சனத்தொகை வீழ்ச்சியா இது? அல்லது இந்த சனத்தொகை பெயர்ச்சிக்கு ஏதாவது ஒர் அசம்பாவிதம் காரணமாக இருந்ததா? இதற்கு சரியான பதில் சொல்வதற்கு உரிய முறையில் ஆராய்ச்சிகள் செய்யப்படல் வேண்டும். நில தட்டுப்பாடு இல்லாத அக்காலத்தில் ஒரு கிராமத்தை விட்டு வேறொரு கிராமத்துக் குப் போய் குடியேறுவது அவ்வளவு கஷ்டமானதாக இருக்கவில்லை. 1884-ஆம்ஆண்டில் கூட இங்குநிலம் மலிவானவிலையில் விற்கப்பட் டிருப்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. 1884-ஆம் ஆண்டு கம்மசெ லாகெதர இப்ராஹிம் லெப்பை 10 ஏக்கர் காணியை ரூபா 204/-க்கு வாங்கினார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது.
Page 125
946
ஆரம்பத்தில்இங்குவிவசாயமே முக்கியத் தொழிலாக இருந்தது. மிக அண்மைக் காலம் வரை விவசாயமே முக்கிய ஸ்தானத்தை வகித் துள்ளது. ஆனால் இப்போது இளைஞர்கள் கூடுதலாக வியாபாரத்தில்
ஈடுபட்டுள்ளனர். இன்று ஜனாப் MLM வாஹித், ஜனாப் M கவுஸ் ஹாஜி JM ராசிக் ஆகியோர் முக்கிய வர்த்தகர்களாக விளங்குகின்ற னர். பல இளைஞர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.
கல்வித்துறையில் முன்னேறுவதற்கு இவ்வூர் மக்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கவில்லை. 1950-ஆம் ஆண்டளவிலேயே ரஜ்ஜம் மனை பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1958-ஆம் ஆண்டில் கூட கல்விப் பொதுத்தராதரப் பத்திரப் பரீட்சைக்குப் படிப்பதற்குப் பலா பத் வெலைக்கே போக வேண்டி இருந்தது இத்தகைய சிரமங்களுக்கி டையில் படித்து ஆசிரிய நியமனம் பெற்று இக்கிராமத்தின் ஆரம்ப ஆசிரியர்களானவர்களே ஜனப் M ஜுனைதீன், மர்ஹ"ம் ஜனாப் MCM கரீம் ஆகியோர். இன்று இங்குள்ள வேறு சிலரும் பலவகை யான அரசாங்க உத்தியோகங்களில் கடமையாற்றுகின்றனர்.
ஊரில் உள்ள பழைய ஜும்ஆ பள்ளி, ஏறத்தாழ இருபது வருடங் களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டது. ஊர் மக்கள் அத்தனைபேரும் பள்ளிகம்டிட வேலைகளில்தம்மால் இயன்ற உதவிகளைச் செய்திருக் கின்றனர். நளீம் ஹாஜியார், கலீல் ஹாஜியார் போன்ற தனவந்தர்கள் இப்பள்ளிக்குப் பண உதவி வழங்கியுள்ளனர். ஏறத்தாள, 1970-ஆம் ஆண்டில் இருந்து இந்த பள்ளியின் வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டும் ஹாஜிJM ராஸிக் அவர்களுக்கு, ஜனாப் செரிப்தீன், ஜனாப் MIL லதீப் போன்றோரும் ஊர் மக்களும் பெருந்துணையாய் இருக் கின்றனர்.
நமடகஹவத்தை
நமடகஹவத்த, மாத்தளை வடக்கு கந்தப்பொல கோரளையில் அமைந்துள்ள ஒரு தொன்மையான முஸ்லிம் கிராமமாகும். இன்று
இந்த ஊரில் வாழும் எந்த முதியவரும் இந்த கிராமத்துக்கு நமடகஹ வத்தை என்ற பெயரைத் தவிர வேறு எந்த பெயரும் இருந்ததாக
947
கூறவில்லை. அப்படி இருந்தது என்று கூறுவதை அவர்கள் ஏற்பதாக வும் இல்லை. ஆனால் AC லோஹி தனது நூலில் இந்த கிராமத்தை நம்படகஹவத்த என்றே குறிப்பிடுகின்றார். இது அடுபடகஹவத்த என்ற பெயராலும் அழைக்கப்பட்ட தென்றும் உணர்த்தியுள்ளார். மேலும், கண்டியை ஆண்ட இரண்டாவது நாயக்க மன்னனான கீர்த்தி சிறி ராஜசிங்கனின் ஆட்சி காலத்தில் (1747-1782) இந்தியாவிலிருந்து வந்த ராஜகோபால கனகசிங்க பீர் புள்ளே முஹாந்திரம் என்பவரி இக்கிராமத்தை ஸ்தாபித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பட்டிவெல, தொம்பகொல்ல, புவக்பிட்டிய, வேரகல்வத்தை போன்றவை நமடகஹவத்தைக்கு அருகாமையில் அமைந்துள்ள சிறு கிராமங்களாகும். ஆரம்பத்தில் முஸ்லிம்கள் வேரகல்வத்தையிலும் தொம்பகொல்லையிலும் வாழ்ந்ததாகவும் பின்னர் அங்கு வாழ்ந்தவர் களில் பலர் நமடகஹவத்தையில் குடியேறியதாகவும் கூறப்படுகிறது. தொம்பகொல்லையில் இருந்து முஸ்லிம்கள் வருவதற்கு காரணமாக இருந்தது, கிராமத்தின் அருகே இருந்த காடுகளில் வாழ்ந்த புலிகளின் தொல்லை என்றும் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் மக்கள் நெற்பயிர்ச் செய்கையிலும் சேனைப் பயிர்ச் செய்கையிலுமே அதிகமாக ஈடுபட்டிருந்தனர். நல்ல நிலையில் இருந்த குளமொன்று கிராமத்திற்குப் பக்கத்தில் இருந்தது நெற்பயிர்ச் செய்கைக்குப் பெரும் உதவியாக இருந்திருக்கும். இன்றும் நெற் செய்கை நமடகஹவத்த முஸ்லிம்களால் முற்றாக கைவிடப்பட வில்லை என்ற போதிலும் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் இருந்து புகையிலைப் பயிர்ச் செய்கை இங்கே முதல் இடத்தைப் பெற ஆரம்பித்தது எனலாம். மூலதனம் உள்ள பலர் புகையிலைச் செய்கையில் பெருமளவில் ஈடுபட்டது மற்றுமன்றி புகையிலை வியாபாரத்திலும் ஈடுபட்டனர். புகையிலைத் தொழில் பலரை மிக உன்னதமான நிலைக்கு உயர்த்தியது. நமடகஹத்தயைச் சேர்ந்த ஆதம்பிள்ளை ஹாஜியார், அப்துல் ஹமீத் ஹாஜியார், ஆகி யோரும் புவக்பிட்டியைச் சேர்ந்த சம்மூன் ஹாஜியார் அவர்களும் புகையிலை வியாபாரத்தில் முன்னணிக்கு வந்தவர்களில் குறிப்பிடத்
Page 126
948
தக்கவர்களாவர். சலாகுத்தீன்ஹாஜியார் என்பவரும் இவ்வியாபாரத் தில் முன்னணியில் இருக்கின்றார் என்று கூறப்படுகிறது. இளைய தலைமுறையில் ஜனாப்களான ASIM சாலி, ASIM இர்பான், AHM மன்சூர்AS.M. கலீல் போன்றோர் இவ்வியாபாரத்தில் சிறந்து விளங்கு கின்றனர்.
இவ்வூர் கிராமத்தலைவராக கடமையாற்றிய மர்ஹஜூம் உசைன் கண்டு ஹாஜி அவர்களும் மர்ஹஅம் அல்ஹாஜ்அப்துல் ஹமீத் ஆரச்சி யார் அவர்களும் ஊர் பள்ளிவாசல் முன்னேற்றத்திலும் பெரும் அக் கறைகாட்டியுள்ளனர். இங்கு நடத்தப்படுகின்ற குர்ஆன்மத்ரஸாவின் செலவுகளுக்காக அப்துல் ஹமீத் ஹாஜியார், புவக்பிட்டி பிரதான பாதையில் தனக்குச் சொந்தமான ஒரு பாரிய கட்டிடத்தின் வருமா னத்தை ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
நமடகஹவத்தை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் சில விஷேச அம்சங்களைக் காணக் கூடியதாக இருக்கிறது. 1921-ஆம் ஆண்டு கலெ வெல சிங்களப் பாடசாலையில் ஒரு தமிழ்ப்பிரிவு ஆரம்பிக்கப்பட் டது. அப்போது நமடகஹவத்தையைச் சேர்ந்த அபூபக்கர் வாத்தியார் என்பவர் இத்தமிழ்ப்பகுதியின் தலைவராக இருந்தார். பின்னர் சேர் ராஸிக் பரீத் காட்டிய அக்கறையினாலும் ஊர்மக்கள் வழங்கிய ஒத்து ழைப்பினாலும் 1947-ஆம் ஆண்டு ஒரு தனிப்பாடசாலை ஆரம்பிக்கப் பட்டது. அப்போது மட்டக்களப்பைச் சேர்ந்த ஜனாப் இப்ராஹிம் என்பவர் இப்பாடசாலையின் தலைமையாசிரியராக கடமையாற்றி னார். 1965-ஆம் ஆண்டு இவ்வித்தியாலயம் மகாவித்தியாலய அந் தஸ்த்துக்கு உயர்த்தப்பட்டது.
இவ்வூரின் முதல் பட்டதாரி ஜனாப் NA சமத் என்பவராவார். இப்போது வேறு பலரும் பட்டதாரிகளாக வெளியேறியுள்ளனர். இந்த பாடசாலையில் படித்த பலர் இன்று பல்கலைக் கழகத்தில் பயில்கின்றனர். இவ்வூரைச் சேர்ந்த பலர் ஆசிரிய ஆசிரியைகளாக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
249
மாத்தளை
மாத்தளை மாவட்டத்தின் பரிபாலன தலைநகரமாக விளங்கும் மாத்தளையில், சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே, முஸ்லிம்கள் குடி யேறியிருப்பர் என்று கருதுவதற்கு நிறைய இடமுண்டு. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பரங்கியர் ஆகிய சகல இனத்தவர்களும் ஒற்று மையுடனும் சகோதர வாஞ்சையோடும் நெடுங்காலமாக வாழும் நகரம் இது. மாத்தளை நகரத்திற்கு முஸ்லிம்கள் எப்போது வந்தனர் எங்கிருந்து வந்தனர் என்ற கேள்விகளுக்குத் திட்டவட்டமான பதில்க ளைக் கூறுவதற்குக் போதியளவு ஆதாரங்கள் இல்லை. மாத்தளை, தவளம் வியாபாரத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த ஒர் இடமாகும். மாத்தளையில்,முஸ்லிம்களின் பாரம்பரிய குடியிருப்புகளில் ஒன்று என கருதப்படும் கொங்காவலைதவளம் வியாபாரத்தில் ஒரு முக்கிய தங்குமிடமாக இருந்திருக்கிறது. 1762-ஆம் ஆண்டு, இப்பகுதியால் பிரயாணம் செய்த ஜோன் பிபஸ்,மாத்தளைக்கு அருகாமையில் தவ ளம் வியாபாரிகளைச் சந்தித்ததைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். 1803-ஆம் ஆண்டிலேயே கொங்காவலைப் பகுதியில் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்ந்ததாக வெஸாக் நாணயக்கார என்பவர் எழுதியுள்ளார். மாத்தளை முஸ்லிம் மக்களிடம் இருக்கும் காணி உறுதிப்பத்திரங்கள்,முஸ்லிம்கள் மாத்தளை நகரப் பகுதியில் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே ஏராளமான நில புலன்களுக்கு உரி மையாளர்களாக இருந்தனர் என்பதைக் காட்டுகின்றன. எனவே முஸ் லிம்கள்,மாத்தளை நகரத்தில் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லேயே கணிசமான அளவு வாழ்ந்தனர் என்று கூறமுடியும்.
முஸ்லிம்கள் பொதுவாக சகல இனங்களோடும் தொடர்புடைய வர்களாகவே இருந்தபோதிலும் தம்முடைய சமய, கலாச்சாரத் தேவைகளுக்காக நகரத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளிலேயே செரிந்து வாழ்ந்திருக்கின்றனர். கொங்காவலை, ஒயபகல, தாரலந்த, தோல பிட்டிய போன்ற பகுதிகளே மாத்தளை முஸ்லிம்களின் பாரம்பரியக் குடியிருப்புகளாக இருந்திருக்கின்றன். இந்நான்கு இடங்களும் ஒன் றோடொன்று இணைந்த பிரதேசங்களாகும். மாத்தளை முஸ்லிம்க
Page 127
Ջ50
ளின் பாரம்பரிய இருப்பிடம்களான இவைகள் அன்றைய முஸ்லிம்க ளால் வசதிக்காக,மரிக்க்ார்வளவு, ஆரச்சியார்வளவு, அக்கரைவளவு,
ஒயபகல, புதுவளவு, யக்க டய வளவு, உடவளவு என அழைக்கப்பட் டிருக்கின்றன. இவ்வாறு இணைந்த ஒரே பிரதேசத்தில் வாழ்ந்தது மாத்தளை முஸ்லிம்களுடைய கலாச்சார ஒற்றுமைக்குப் பெரிதும் உதவியுள்ளது.
மாத்தளை முஸ்லிம்கள் சனத்தொகை பரம்பல்
கொங்காவலை
1881 248 ஆண்கள் 208 பெண்கள் 1891 259 ஆண்கள் 235 பெண்கள்
இத்தொகைகளில் பெரும்பான்மையோர் முஸ்லிம்களாய் இருந்திப்பர்.
suude 1871 46 ஆண்கள் 33 பெண்கள் தரரலந்த (இது கொடப்பொல பகுதியையும் உள்ளடக்கி இருந்தது)
88. 138 ஆண்கள் 141 பெண்கள் 1891 108 ஆண்கள் 97 பெண்கள்
மேலே தரப்பட்டுள்ள விவரங்கள், 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மாத்தளை நகரத்தில் முஸ்லிம்களின் நிலையை, எடுத்துக் காட்டுகின் றன. இன்று ஒரளவுக்கு முஸ்லிம்கள் மாத்தளை நகரில் பல பகுதிகளி லும் வாழ்கின்ற போதிலும் தமது பாரம்பரிய பகுதிகளிலேயே அவர் கள் இன்றும் செறிந்து வாழ்கின்றனர். இப்பாரம்பரிய பகுதிகளை விட்டு புதிய பகுதிகளுக்குச் சென்றவர்கள் பாரம்பரிய பகுதிகளில் போதியஅளவுக்கு நிலம் இல்லாத காரணத்தால் சென்றார்களேஒழிய இப்பகுதிகளின் மேல் ஏற்பட்ட வெறுப்பால் விட்டுச்சென்றதில்லை.
பெருந்தோட்ட பயிர்ச் செய்கையின் காரணமாக ஏற்பட்ட வர்த் தக வளர்ச்சி ஏராளமான இந்திய முஸ்லிம்கள் மாத்தளையில் வந்து குடியேறுவதற்கு காரணமாயிற்று. மாத்தளையில் குடியேறிய
95
தென்னிந்திய முஸ்லிம்கள் பெரும்பாலும் மார்க்கப் பற்று மிக்க பிரதேசங்க ளான காயற்பட்டணம், கீழக்கரை, காயாமொழி, ஏர்வாடி போன்ற ஊர்களைச் சேர்ந்தவர் ஆவர். இந்த தென்னிந்திய முஸ்லிம்கள் காட் டிய சமயப்பற்று, அன்றாட இஸ்லாமியக் கடமைகளுக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவம் போன்றவை மாத்தளை முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்த ஆரம்பித்தன. இந்திய வியாபாரிகள் சிலர்இங்கு வாழ்ந்த முஸ்லிம்களுடன்திருமண உறவுக ளும் பூண்டனர். தென்னிந்திய முஸ்லிம்களின் வருகை, மாத்தளை யிலே, முஸ்லிம்களுடைய சனத்தொகையை அதிகரித்தது மாத்திர மின்றி.அவர்களதுசமய, கலாச்சார வாழ்விலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் மாத்தளை முஸ்லிம்களின் பிரதான தொழில்களாக விவசாயமும் வியாபாரமுமே இருந்து வந்திருக்கின்றன. 1850-ஆம் ஆண்டுக்கு முன்னர் உள்ள சில காணி உறுதிப்பத்திரங்கள் மாத்தளை யில் வாழ்ந்த சில முஸ்லிம்களுக்கு ஏராளமான அளவு வயல்களும் "சேனைகளும்" இருந்ததை உணர்த்துகின்றன. ஆனால் 1850-ஆம் ஆண்டுக்குப் பின்னர் கூடுதலான மாத்தளை முஸ்லிம்கள் வியாபாரத் தில் ஈடுபடுவதைப் பார்க்கின்றோம். போதிய மூலதனமின்மையி னால் இவர்கள் ஆரம்பத்தில் சிறுசிறு வியாபாரங்களிலேயே அதிகம் ஈடுபட்டனர். தவளம் வியாபாரம் தொடர்ந்து இவர்களது கவனத் தைக் கவர்ந்திருக்கும். ஆனால் பெருந்தோட்டப்பயிர்ச் செய்கை சகல மாத்தளைக் கிராமங்களிலும் "பணப் புழக்கத்தை" அதிகரித்திருந் தது. எனவே கிராமங்களுக்குத் துணி, மணிச்சாமான்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றைச் சுமந்து சென்று விற்கும் "பொட்டணி வியாபாரம்”பெருக ஆரம்பித்தது. இதில் மாத்தளை முஸ்லிம்களும் பெருவாரியாக ஈடுபட்டனர். ஒரு காலகட்டத்தில் சில சீனவியாபாரி கள்,துவிச்சக்கர வண்டிகளில் இத்தகைய வியாபாரத்தை மாத்தள்ை மாவட்டத்திலே, குறிப்பாக மாத்தளை நகருக்கு அருகாமையில் இருக் கின்ற கிராமங்களில் செய்ய முயற்சித்தனர். ஆனால், சிங்கள, தமிழ் மக்கள் முஸ்லிம் வியாபாரிகளுக்குக் கொடுத்த ஆதரவைச் சீனர்களுக் குக் கொடுக்கவில்லை. எனவே முஸ்லிம்களோடு போட்டி போட
Page 128
959
முடியாது சீனர்கள் சென்றுவிட்டனர். அந்தளவு மாத்தளை முஸ்லிம் கள்இந்த வியாபாரத்தில் சிறந்து விளங்கினர். சிலர் கிராமங்களுக்குப் போய் அங்கு இருக்கும் விளைப்பொருட்களை வாங்கும் "ஈரொட்டு
வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தனர். மாத்தளைநகரத்தில்அமைந்தி ருந்த பெரும்பாலானகடைகளையும் இவர்களே நடத்தினர்.ஆரம்பக் காலகட்டதிலே மாத்தளை நகரத்தில் பெரிய அளவில் இயங்கிய முஸ்லிம் கடைகளில் சில LSஆப்தீன்ஹாஜியார்கடை, தாவுத்வாய் சாப்பு, சாஹ"ல் ஹமீது ஹாஜியாரின் புடவைகடைமுஹம்மதுஅலி சாப்பு, மஜீதியா ஹோட்டல், ஹமீதிய்யா ஹோட்டல் போன்றவை யாகும்.
மாத்தளைமுஸ்லிம்களின்வாழ்வில் சமயம் எப்போதும் முக்கிய ஸ்தானத்தை வகித்தே வந்திருக்கிறது. எனவே குடியேற்றங்கள் ஆரம் பமான காலத்திலேயே பள்ளிகள் இங்கு அமைக்கப்பட்டிருந்தன. மாத்தளை டவுன் பள்ளி, ஹனபி பள்ளி போன்றவை ஏறத்தாழ நூறு வருடங்களுக்கு மேல் பழைமையானவை. கொங்காவலைப் பள்ளி வாசல் அவற்றைப் பார்க்கினும் பழைமையானதாகும். இன்று மாத் தளை நகரபிரதேசத்திறகுள்மூன்று பெரிய ஜும்ஆ பள்ளிவாசல்களும் ஒன்பது தைக்காக்களும் இருக்கின்றன. இவை அத்தனையும் சிறப் பாக இயங்குகின்றன. முஸ்லிம்கள்தமதுமத கோட்பாடுகளுக்கு ஏற்ப நடப்பதற்கு இவை பெரிதும் உதவுகின்றன. இங்குள்ள ஜும்ஆபள்ளி வாசல்களை எவ்வாறு ஜமாஅத்தினர் ஆதரிக்கின்றார்களோ அதே வகையில் தத்தம் பகுதிகளில் அமைந்துள்ள தைக்காக்களையும் ஆத ரிக்கின்றனர். இங்குள்ள அத்தனை ஜும்ஆ பள்ளிவாசல்களும் தைக் காக்களும் அழகான தோற்றங்களுடன் இருப்பதற்கும், சிறப்பாக இயங்குவதற்கும் மாத்தளை மக்களின் தாராள மனமும் சமயப்பற் றுமே முக்கிய காரணங்களாயிருக்கின்றன. இவ்வூரில் அமைந்துள்ள பள் ளிவாசல்களுக்கும் தைக்கதுகளுக்கும் மாத்திரமின்றி மாத்தளைமாவட் டத்தில் உள்ள வேறு பல பகுதிகளில் உள்ள பள்ளிவாசலுக்கும் தைக்காக்களுக்கும், குர்ஆன்மத்ரஸாக்களுக்கும் மாத்தளைமுஸ்லிம் தனவந்தர்ர்கள் தம்முடைய உதவிகளை வழங்கி வருகின்றனர்.
95.3
மாத்தளை பல இனங்கள் வாழும் ஒரு நகரமாக இருந்தபோதி லும், ஏனைய சமய, கலாச்சாரப் பாதிப்புகள் பெருமளவு முஸ்லிம் கள் மீது தாக்கங்களை ஏற்படுத்தவில்லை. இங்கு வாழும் முஸ்லிம் கள் பெரும் அளவிற்கு தம் மார்க்க கோட்பாடுகளுக்கிணங்கவே வாழ்க்கையை நடத்தியுள்ளனர். தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், போன்ற மார்க்க அனுஷ்டானங்களில் தொடர்ந்து அக்கறை காட்டி வந்துள்ளனர். ஆயிரத்தித் தொளாயிரத்து ஐம்பதுகளில் கூட ஆறு, ஏழு வயது பாலகர்கள் ரமழான் மாதத்தில் நோன்பு பிடிப்பது மாத்தளை யில் சர்வ சாதாரணம். அக்காலத்திலே பிரபலமாயிருந்த ஒரு பாடல் 'ஒரு நகரில் ஏழு வயதுடைய பாலகன் ஒருவன்’ என்பதாகும். இது ஏழு வயது சிறுவன் ஒருவன் நோன்பு பிடித்ததை ஒரு சாதனைபோல் வர்ணிக்கும். இது ஏனைய மக்களுக்கு விந்தையாக இருந்திருக்கலாம்; ஆனால் மாத்தளை மக்களுக்கு புதுமையாக இருக்கவில்லை. காரணம் ஆறு வயது பாலகர்கள் நோன்பு பிடித்துக் கொண்டு விளையாடித் திரிவதைக் கண்ட நகரம் மாத்தளை. இந்தளவு மாத் தளை முஸ்லிம்களில் ஒரு பகுதியினராவது மார்க்க அனுஷ்டானிங் களில் கவனம் செலுத்தி வந்ததற்கு பல காரணங்கள் உதவியிருக்கலாம். அவற்றுள் ஒன்று மர்ஹ"ம்களான மு.க.ஆதம் லெப்பை ஆலிம், செய் யது முஹம்மது ஆலிம், சாலி மெளல்ானா, மர்ஹ"ம் அல்ஹாஜ் வஹாப் ஆலிம் சாஹிப், மர்ஹும் அல்ஹாஜ் MM முஹம்மது இஸ்மா யில் ஆலிம் போன்ற பெரியார்களின் சமயப் பணிகளாகும் என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். மர்ஹ"ம் அப்துல் வஹாப் ஆலிம் அவர்கள் அக்காலத்திலேயே காயற்பட்டணம் சென்று ஒதியவர்கள். பெரும் பக்திமானாக விளங்கியவர்கள். தென்னிந்தியாவில் உள்ள பிரபலமான வேலூர் அரபுக் கல்லூரியில் ஒதி, பட்டம் பெற்ற இஸ்மா யில் ஆலிம் அவர்கள் நுண்ணறிவும், ஆழ்ந்த ஞானமும், திடமான மார்க்கப்பற்றும் ஒருங்கே பெற்றிருந்த ஓர் மார்க்க அறிஞராவார். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இஸ்மாயில் ஆலிம் அவர்கள் மாத்த ளையை பொருத்தவரையில் ஒரு "முற்றத்து மல்லிகை" ஆகவே விளங்கினார்கள். அன்னாருக்குக் கொடுக்கப்பட வேண்டிய இடம் மாத்தளையில் ஒரு போதும் கொடுக்கப்படவில்லை; இதனால் இழந்
Page 129
954
தது அவரல்லர்; மாத்தளை முஸ்லிம்களே. அவரது அறிவைப் பூரணி மாக பயன்படுத்திக் கொள்ள மாத்தளை தவறிவிட்டது. மர்ஹ"ட இஸ்மாயில் ஆலிம் அவர்கள் மெளலவியாகக் கடமையாற்றிய உடு வர'போன்ற பகுதிகளில், அங்கு வாழும் முதியவர்கள் இன்று கூட இஸ்மாயில் ஆலிமைப் பற்றி மிக உயர்வாக பேசுகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் மாத்தளை நகரில் அமைந்திருந்த அரசின முஸ்லிம் ஆண்கள் பாடசாலைக்கு மர்ஹ"ம் இஸ்மாயில் ஆலிம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. இப்பெயர் மாற்றத்தோடு சம்பர் தப்பட்ட அத்தனை பேரும் பாராட்டுக்குரியவர்களே.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாத்தளைநகரத்தில் முஸ் லிம்களுக்குக் கல்வி வாய்ப்புக்கள் குறைவாகவே இருந்தன. முஸ்லிம் களுக்கென்று பாடசாலைகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் மாத் தளை மாவட்டத்தில் இருந்த ஏனைய முஸ்லிம் குடியேற்றங்களுடன் ஒப்பிடும்போது மாத்தளை நகரத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுக்குக் கல்வி வாய்ப்புக்கள் கூடுதலாக இருந்தனவென்றே கூற வேண்டும். 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே புனித தோமியர் ஆண்கள் ஆங்கில்ப் பாடசாலை, கிறிஸ்துதேவ ஆண்கள் ஆங்கிலப் பாட சாலை, புனிததோமியர் பெண்கள் ஆங்கிலப் பாடசாலை, புனித தோமியர் பெண்கள்'சுயபாஷா பாடசாலை என பல பாடசாலைகள் மாத்தளை நகரத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. சில வருடங்களுக்குப் பின்னர் விஜயாக் கல்லூரி, பாக்கிய வித்தியாலயம், கந்தசாமி பாட சாலை எனஅழைக்கப்பட்ட தமிழ்ப் பாடசாலை,மாத்தளை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை போன்ற பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட் டன. ஓரளவுக்காவது எழுத்தறிவைப் பெறக் கூடிய வாய்ப்புகளை இங்கு அமைந்த தமிழ்ப் பாடசாலைகள் முஸ்லிம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அளித்தன. இது மாத்தளை முஸ்லிம் சமுகத்திற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். மாத்தளையில் இயங்கிக் கொண்டி ருந்த ஆங்கிலப் பாடசாலைகள் மாத்தளை முஸ்லிம்களில் சிலருக்கா வது அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னரே ஒரு புதிய உலகைத் திறந்து கொடுத்தன. மாத்தளை முஸ்லிம்கள் அத்தனைப் பேருக்கும் ஆங்கிலப் பாடசாலைகளில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை;
955
ஆங்கிலப் பாடசாலைகளில் படிப்பதற்குத் தேவையான வசதிகளும் பெரும்பர்ன்மையான முஸ்லிம்களுக்கு இருக்கவில்லை. ஆனால் இந்த அரிய வாயப்பு கிடைக்கப் பெற்றவர்களில் ஒரு சிலராவது தமக்குக் கிடைத்த வாய்ப்புக்களை நன்கு பயன்படுத்திக் கொண்டனர் என்பதை மாத்தளை வரலாறு எடுத்துக்காட்டுகின்றது. மாத்தளை நக ரில் வாழ்ந்த முஸ்லிம்களில் ஒரு சிலராவது ஆங்கிலம் அறிந்திருந்த தற்கு இப்பாடசாலைகளே காரணமாகும். 20-ஆம் நூற்றாண்டின் மூன் றாம் தசாப்தம் முடிவடைவதற்கு முன்னரே டொக்டர் ஹமீத் எனும் மாத்தளை முஸ்லிம் தொட்டகமுவ அரசாங்க வைத்திய சாலையில் "டொக்டராக" கடமையாற்றியதற்கும், மர்ஹ"ம்ST ஒமர்தீன் என்ப வர் ஹெட் கார்டாக (Head Guard) கடமையாற்றியதற்கும் மர்ஹ"ம் SM பதுர்தீன் என்பவர் புகையிரத நிலையத்தில் பரிசோதகராக (Cheker) கடமையாற்றியதற்கும், மர்ஹ"ம்களான அப்துல் மஜீத், M சம்சு தீன், ஹாஜி AC ஜெய்னுதீன் ஜனாப் செரிப்தீன் போன்றோர் உள்ளூ ராட்சி மன்றங்களில் வேலை செய்ததற்கும் மர்ஹ"ம் M.A. அப்துல் ரஹீம் தபாற் சேவையில் இணைந்ததற்கும் மாத்தளையில் இருந்த ஆங்கிலப் பாடசாலைகளே காரணங்களாக இருந்தன. மர்ஹ"ம் OM ஜவீர், ஜனாப் ARM கலாப், ஜனாப் OM மர்சுக், அல்ஹாஜ் MHA சக்கூர், மர்ஹ7ம் அல்ஹாஜ் MMS லதீப், மர்ஹ"ம் AH ஆபூபக்கர், ஜனாப் W.H. ஜெய்னுத்தீன், ஹாஜிMHA லத்தீப், மர்ஹ"ம்SM சாதுக் கீன், ஜனாப் புகாரி, ஜனாப் AH லதீப், ஹாஜி AH. சஹ"ர்தீன் போன் றோருக்கு அரசாங்க சேவையில் இணையும் தகுதியை வழங்கியவை இப்பாடசாலைகளே. 1946-ஆம் ஆண்டு வழக்கறிஞரான ஜனாப்TMA சாலே அவர்கள் மாத்தளை புனித தோமியர் கல்லூரியில் படித்தவரே. மாத்தளை மாவட்டத்தின் முதல் முஸ்லிம் பட்டதாரியாக 1949-ஆம் ஆண்டு சித்தியடைந்த முன்னாள் மாத்தளை சாகிராக் கல்லூரி அதிப ரும் கல்விமானும் ஆன அல்ஹாஜ் S.HA வதுரத் அவர்கள் விஜயாக் கல்லூரியில் படித்தவராவார். முன்னாள் பிராந்திய கல்வி அத்தியட்சக ரும், தற்போது தேசியக் கல்வி ஆணைக்குழு உறுப்பினருமான கல்வி மான் ஜனாப் AZ ஒமர்தீன் அவர்களும், முன்னாள் சாகிராக் கல்லூரி அதிபரான மர்ஹ"ம்AM ரகீம் அவர்களும் பட்டதாரிகளாக உருவாவ தற்கு அடித்தளம் அமைத்தது விஜயாக் கல்லூரியே. சவூதி அரேபியா
Page 130
956
வில் இலங்கைத் தூதுவராக கடமையாற்றிய aaping? ACH. முகம்மது அவர்களும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் அல்ஹாஜ் ACS. ஹமீத் அவர்களும், அமைச்சரின் வகுப்புத் தோழரும் பெரும் எழுத்தா ளருமான மர்ஹ"ம் AA லத்தீப் அவர்களும் விஜயாக் கல்லூரியின் பழைய மாணவர்கள். 1942-ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மாத்தளை சாகிராக் கல்லூரி மாத்தளை முஸ்லிம்களுக்கும், மாத்தளை மாவட்ட
முஸ்லிம்களுக்கும் செய்த சேவை பொன்எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியதாகும். மாத்தளை முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்கள் என்ன என்று கேட்டால் கொடுக்கப்பட வேண் டிய பதில் 1 அல்லாஹ்வின் அருள் மாத்தளை சாகிராக் கல்லூரி. இன்று மாத்தளையில் ஒரு படித்த சமூகம் இருப்பதற்கு இக்கல்லூரியே பிரதான காரணமாகும். இக்கல்லூரி உருவாக்கியவர்கள் இன்று இலங் கையின் பல பாகங்களிலும் 'டாக்டர்களாக, வழக்கறிஞர்களாக, பொறியியலாளர்களாக, அரசாங்க உத்தியோகத்தர்களாக, ஆசிரியர்க ளாக கைத்தொழில் அதிபர்களாக, பிரபல வர்த்தகர்களாக" பிரகாசிக் கின்றனர். கணக்கு ஆய்வாளர் ஜனாப், எஸ்.எம்.சப்ரி, இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எம்.எ.எச். மஹ்றுப், டொக்டர் எம்.சி.எம். சுபைர், டொக்டர் MM இஸ்ஸதீன் போன்றோர் சாஹிராவில் படித்த வர்களே. சிறிது காலத்திற்கு பிறகு சாகிரா கல்லூரியில் இருந்து பிரிந்து ஒரு தனி மகளிர் கல்லூரியாக பரிணமித்த ஆமீனா முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் முஸ்லிம் பெண்கள் மத்தியிலே கல்வி அறிவு வளர்வ தற்கு அருஞ்சேவையாற்றியுள்ளது. இதில் படித்த பலர்ஆசிரியைகளா கவும் வேறு பல உத்தியோகங்களிலும் கடமையாற்றுகின்றனர்.
19-ஆம் நூற்றாண்டில் மாத்தளை முஸ்லிம்களின் பிரதான தொழி லாக இருந்தது விவசாயமே. ஆனால் இன்று விவசாயத்தை மாத்திரம் நம்பி வாழ்கின்ற ஒரு முஸ்லிமாவது மாத்தளையில் வாழ்கின்றாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இன்று வர்த்தகமே மாத்தளை நகர முஸ்லிம்களின் முக்கிய தொழிலாக விளங்குகிறது. தையல் தொழிலி லும் வேறு கைத் தொழில்களிலும் கணிசமான தொகையினர் ஈடுபட் டுள்ளனர். இன்று ஏராளமான மாத்தளை முஸ்லிம் ஆண்களும் பெண் மணிகளும் அரசாங்க சேவைகளில் கடமையாற்றுகின்றனர். மாத்
957
தளை நகரத்து முஸ்லிம் வாலிபர்களில் பலர் இன்று வெளிநாடுகளில்
தொழில் செய்கின்றனர்.
மாத்தளை உள்ளூராட்சி மன்றங்களில் மாத்தளை முஸ்லிம்கள் சிறப்பான இடத்தை வகித்துள்ளனர். செல்வாக்கோடும் அந்தஸ்த்தோ டும் இருந்த இவர்கள் இன, மத வேறுபாடின்றி மாத்தளை நகர முன்னேற்றத்திற்கு உழைத்துள்ளனர். மாத்தளை நகரத்தில் முஸ்லிம் கள்,சிறுபான்மையோராகவே இருந்த போதிலும் முஸ்லிம்கள் சிலர் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது சகல முஸ்லிம் அங்கத்தவர்களும் ஏனைய இன அங்கத்தவர்களின் மத்தியில் தோற்று வித்திருக்கிற நல்லெண்ணத்தையே காட்டுகிறது.
மாத்தளை நகர சபை - தலைவர்களாக சேவையாற்றி இருக்கும் முஸ் லிம்கள்
1. மர்ஹாம் ஜனாப் KMM ஹ"ஸைன் 2. மர்ஹ"ம் ஜனாப் K.M. ஆதம்
3. மர்ஹ"ம் ஜனாப் MT ஹ"ஸைன்
மாத்தளை நகரசபை அங்கத்தவர்களாக சேவையாற்றியுள்ள முஸ் லிம்கள்
1. அல்ஹாஜ் SM மொஹிதீன் 2. அல்ஹாஜ் NLT. தீன் 3. அல்ஹாஜ் M.K, செய்யது இஸ்மாயில் 4. அல்ஹாஜ் HA, ஹனான் 5. மர்ஹ"ம் ஜனாப்MS மொகினுத்தீன்
மாத்தளை மாநகர சபைத் தலைவராக சேவையாற்றிய முஸ்லிம்கள் மர்ஹ"ம் 1. ஜனாப் MT. ஹ"ஸைன்
மாத்தளை மாநகர சபையின் அங்கத்தவர்களாக சேவையாற்றிய முஸ் லிம்கள்
1. apné ACS. Saadušev
Page 131
958
2. அல்ஹாஜ் HA, ஹனான் 3. ஜனாப் AM மஹ்றுப் 4. gapng) MCM. apasiun 5. ஜனாப்OLMA ரவுப் 6. அல்ஹாஜ் ASM வசீர் 7. அல்ஹாஜ்JM ஜவுபர்தீன்
மாத்தளை மாநகரசபையில் தற்போது அங்கத்தவர்களாக சேவையாற் றும் முஸ்லிம்கள்
1. agarti döLM. A ரவுப்
2. ஜனாப்M.R.M. அவ்பர்தீன்
3. ஜனாப் W. ரஸ்மார் ஹ"ஸைன்
4. அல்ஹாஜ் MCM. ஹனிபா
நகரசபை அங்கத்தவராக கடமையாற்றியுள்ள அல்ஹாஜ் NLT. தீன் அவர்கள் மாவட்ட அபிவிருந்தி சபையின் ஓர் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்கள்.
சில வரலாற்று நூல்கள், அரசாங்க அதிகாரிகளின் அறிக்கைகள் போன்றவற்றில் மாத்தளை நகரத்தின் முஸ்லிம் பகுதியைப் பற்றி ஆங்காங்கே சில குறிப்புக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக, கொடப்பொல செட்டிக் கிணற்றுக்கு அருகாமையில் இருக்கும் ஓடை "கொடப்பொல எல’ என்றே அழைக்கப்பட்டும், அரசாங்கப் பத்தி ரங்களில் குறிக்கப்பட்டும் இருக்கின்றது. "தோல’ என்பது மாத்தளை முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடமாகும். இதற்கு பக்கத்தில் உள்ள, ஒடை “பிரஹ்மன எல" என அழைக்கப்பட்டுள் ளது. மழைக்காலங்களில் இவ் ஓடை நீர் "தோலையை'ப் பாதித்த தால்1921-ஆம் ஆண்டு இங்கு திருத்த வேலைகள் செய்யப்பட்டுள் ளன. இது 1921-ஆம் ஆண்டில் கூட, "தோலை’ முக்கிய இடமாக இருந்ததைக் காட்டுகிறது. 1912-ஆம் ஆண்டு முகாந்திரம் ரோட்டில் ரூபா. 596-68 செலவில் ஒரு புதிய பாலம் கட்டப்பட்டிருக்கிறது இன்று பிரபலமான பாதையான ஹெரிஸன் ஜோன்ஸ் ரோட்டின்
959
முதல் பகுதி, அதாவது பிரதான வீதியையும் கொங்காவலை வீதியை யும் இணைக்கும் பாதை 1921-ஆம் ஆண்டு ஹெரிஸன் ஜோன்ஸ் எனும் உதவி அரசாங்க அதிபரினால் அமைக்கப்பட்டது. இவ்வதிகாரி இப்பாதை முஸ்லிம் மையவாடி வரை விஸ்தரிக்கப்பட வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார். பின்னர் அவரது காலத்திலேயே இது விஸ்தரிக்கப்பட்டது என கூறப்படுகின்றது. முதல் பகுதியில் பாதை அமைப்பதற்கு காணி உமையாளர்களுக்கு கொடுத்த மொத்த நஷ்ட ஈடு ரூபா 2173.07 ஆகும். இப்பாதைக்கு ஹெரிஸன் ஜோன்ஸ் ரோட் என்ற பெயர் இடப்படுவதற்கு முன்னர் இது சிமெட்ரி ரோட் (Cemetry Road) என்றே அழைக்கப்பட்டு இருக்கின்றது. 1899-ஆம் ஆண்டு மாத்தளை சோதிடர் ஒருவர் 1899-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் திகதி உலகம் அழிந்துவிடும் அல்லது பெரும் ஆபத்து ஏதாவது ஏற்படும் என்று கூற பெரும்பாலான மக்கள் இதை நம்பியிருக்கின்ற
நகரத்தில் வாழ்ந்த பலர் வீடுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்திருக்கின்றனர். ஒருவர் இன்னொருவரைப் பேய் என்று நினைத் துக் கத்தியால் குத்தியும் உள்ளார். வணக்கஸ்தலங்கள் பலவற்றில் விஷேச ஆராதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன; இது ஓர் உதவி அரசாங்க அதிபர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கதையை முஸ்லிம்கள் நம்பினார்களா இல்லையா என்பது தெரியாது. ஒருவன் குதிரையில் ஏறி வந்து யாசகம் கேட்டாலும் அவருக்கு யாசகம் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இப்படி ஒரு சம்பவம் 1930-ஆம் ஆண்டளவில் மாத்தளை நகரத்தில் நடந்துள்ளது. அராபியர் ஒருவர் குதிரையில் ஏறி நகரத்தின் ஊடாக சில மார்க்க கோஷங்களைக்கூறிக்கொண்டு செல்வார். யாரிடமும் எதுவும் கேட்க மாட்டார்.
ஆனால் முஸ்லிம்கள் பலர் தாமாக அவரிடம் போய் "சதகா" கொடுப்பர். இது பல மாதங்களாக நடந்தது என பலர்
கூறுகின்றனர்.
Page 132
926O
தேவாஹ"வ
தேவாஹ"வ என்பது கலெவெல நகரத்துக்கு ஏறத்தாழ நான்கு மைல் தொலைவில் அமைந்திருந்த ஒரு சிறு குளமாகும். சிதைவுற்ற நிலையில் இருந்த இக்குளத்தைத் திருத்தியமைப்பதனால், ஏற்படக் கூடிய நன்மைகளை மாத்தளை உதவி அரசாங்க அதிபராக இருந்த ஈ.பி. அலெக்சாண்டர் 1901-ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்குச் சுட்டிக் காட்டியுள்ளார்ஆனால் திருத்தியமைப்பதற்கு எவ்வித நடவடிக்கை களும் எடுக்கப்படவில்லை.
இக்குளத்திற்கு அருகாமையில் இருந்த ஒரு சிறு முஸ்லிம் கிரா மமே பம்பரகட்டுப்பொத்த 1881-ஆம் ஆண்டில் 23 ஆண்களும் 13 பெண்களும் இங்கே வாழ்ந்திருக்கின்றனர்."இருபதாம் நூற்றாண்டின் நான்காம் தசாப்தத்தில் திரு. டி.எஸ். சேனாநாயக்க அவர்களின் முயற் சியினால் இக்குளம் ஒரு பாரிய நீர்த்தேக்கமாக மாற்றப்பட்டது. மற்று மன்றி இதை அடிப்படையாக வைத்து, தேவாஹ"வ குடியேற்றத் திட்டமும் அமைக்கப்பட்டது. இப்புதிய நீர்த்தேக்கத்தினால் பாதிக் கப்படவிருந்த கிராமங்களில் ஒன்றாக பம்பரக்கட்டுப்பொத்த இருந்த படியால், இங்கிருந்த மக்களும் தேவாஹ"வ குடியேற்றத்திட்டத்தின் கீழ் தேவாஹ"வ புதிய கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.
இவர்களோடு அளுத்கமயைச் சேர்ந்த இருவர், கடுகன்னாவை யைச் சேர்ந்த இருவர், உடுநுவரையைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் இருபத்தொன்பது முஸ்லிம் குடும்பங்கள் தேவாஹ"வயில் குடியேற் PLUL-L-Gði.
இக்குடியேற்றத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று ஏக்கர் தரைகாணிகளும் ஐந்து ஏக்கர் வயற்காணிகளும் வழங் கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இரண்டு பெரிய அறைக
96
ளும் ஒரு விராந்தையும் உள்ள வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டது. இருபத்தொன்பது முஸ்லிம் குடும்பங்களுக்குதரைகாணிகளும் வீடுக ளும் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன. இது நீர்த்தேக்கத்தினின்றும் இரண்டரை மைல் தொலைவில் அமைந்துள்ளது.
முஸ்லிம்களுக்குக் கொடுக்கப்பட்ட வயற்காணிகள்ஏனையோர் களுக்குப் போன்றே தேவாஹ"வ வாவிக்கு அருகாமையில்அமைந்தி ருந்தன. இந்த இருபத்தொன்பது குடும்பங்களுமே, இன்று கிட்டத் தட்ட இருநூறு குடும்பங்களாக பெருகியிருக்கின்றன.
ஆரம்பத்தில் இங்கு குடியேறிய முஸ்லிம்கள் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆனால் வெகுவிரைவில் சிலர்வியா பாரத்திலும் ஈடுபட ஆரம்பித்தனர். இப்போது பெரும்பாலானோர் புகையிலை வியாபாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட போது, இங்கே ஒரு பாடசாலை இருக்கவில்லை. எனவே பக்கத்து ஊரான மகுல்கஸ்வெவயில் இருந்த சிங்களப்பாடசாலையில் ஒரு பகுதி முஸ்லிம்பிள்ளைகளுக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டது. சுமார்அறுபது பிள்ளைகள் இங்கே படிக்கச்சென் றனர். ஜனாப் கரீம் எனும் ஆசிரியர் இவர்களுக்குப் பொறுப்பாக இருந்தார்.
1959-ஆம் ஆண்டு தேவாஹ"வயில் ஒரு தனிபாடசாலை ஒலைக ளினால் மறைக்கப்பட்ட சிறு கொட்டகையில் ஆரம்பிக்கப்பட்டது. 1964-ஆம் ஆண்டிலேயே இப்பாடசாலைக்கு ஒரு நிரந்தர கட்டிடம் கிடைத்தது. இப்பாடசாலையில் படித்து முதல் ஆசிரியராக நியமனம் பெற்றவர் ஜனாப் எம்.எம்.இஸ்மாயில் ஆவார்.
இப்பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்று, பின்னர் பல்க லைக்கழகத்திற்குப் பிரவேசித்த முதல் மாணவர்ஜனாப் எம்.எச்.இஸ் ஹாக் ஆவார். பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, ஒரு புலமைப் பரிசில் பெற்று வெளிநாடு சென்று, திரும்பிய இவர் இன்று ஒரு பெரும் தொழில் அதிபராக இருக்கிறார். இன்று இங்கு படித்த மாண வர்கள் பலர் அரசாங்க உத்தியோகங்களில் இருக்கின்றனர். பலர் பல்க
லைக்கழகத்தில் படிக்கின்றனர்.
Page 133
969
1962-ஆம் ஆண்டு இங்கே ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. பின்னர் மத்ரஸத்துல் ஜலாலியா எனும் பெயரில் குர்-ஆன் மத்ரஸா வும் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இக்கிராமம் பெரும் முன்னேற்றத் தைக் கண்டிருக்கிறது. இம்முன்னேற்றத்துக்குப் பலர்தம் பங்களிப்பு களை வழங்கியுள்ளனர். அவர்களுள் ஏ.முத்தலிப் ஹாஜியார், ஜனாப் ஏ.முனாப், ஜனாப் எம்.ஸி.எம்.ஜ"னைதீன், ஜனாப் ஐ.ஜே.ஹம்ஸா லெப்பை போன்றோர் முக்கியமானவர்கள் ஆவர். இப்போது ஜனாப் எம்.நிலாமுத்தீன் என்ற வாலிபர் இக்கிராம முன்னேற்றத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றார்.
1950களில் கூட இடையிடையே இவ்வூருக்கு காட்டுயானைகள், கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம் என்று கூறப்படுகின்றது. அப்ப டிப்பட்ட அடர்ந்த காடாக இருந்த இப்பிரதேசத்தை, இன்று பொன் கொழிக்கும் பூமியாக மாற்றியுள்ளனர் தேவாஹ"வ முஸ்லிம்கள். இவ்வூரில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், பாரிய முன்னேற்றமும் இம் மக்களின் விடாமுயற்சியையும் அயராத உழைப்பையும் காட்டுகின்றன.
ரங்வெடியாவ
இது கலெவெல நகரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். குருனாகல மாவட்டத்தைச் சேர்ந்த மாந்திரர்வ, பானக முவை ஆகிய இரண்டு ஊர்களிலிருந்தும் ஏதோ காரணத்தினால் சில முஸ்லிம்கள் வெளியேறி பன்னியத்த என்ற இடத்தில் குடியேறி இருக் கின்றனர். பின்னர் இதனையும் கைவிட்டு விட்டு, பஹலகொட்டுவ, இஹலகொட்டுவ, கலகஸ்ஸாவ போன்ற இடங்களில் குடியிருந்து விட்டு ஈற்றில் கெப்பிட்டிய என்றும் ரங்கெடியாவ என்றும் அழைக் கப்படும் இடத்தில் குடியேறியுள்ளனர்.
இக்கிராமத்தின் ஆரம்பப் பெயர் ரங்ஹவடிய, இவ்வூர் மக்கள் ஆரம்பத்தில் உபதிஸ்ஸ என்ற அமைச்சருக்கு "தங்கப்பணங்கள்’ வழங்கியதால், இப்பெயர் வந்தது என ரங்ஹவடிய என்ற பெயரின் தோற்றத்திற்குத் தனது நூலில் திரு. ஏ.ஸி. லோஹி காரணம் கூறியுள்
T,
263.
1871-ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் போது, இக்கி ராமச்சனத்தொகைதனியாக எடுக்கப்படாது கொஸ்பொத்த வலக்கும் புர போன்ற கிராமங்களுடன் சேர்த்தே கணிக்கப்பட்டுள்ளது. 1881-ஆம் ஆண்டில் இக்கிராமத்தின் சனத்தொகை 22 ஆண்கள், 30 பெண்கள்.*
இவ்வூரிலே துல்லேவ அதிகாருக்கும் உபதிஸ்ஸ வஹல அதப் பத்து முதியான்சலாகே பண்டாவுக்கும் ஏறத்தாழ ஒன்பது ஏக்கர் நிந்த கம் காணிகள் இருந்தன* ரங்வெடியாவ நய்தே, பிச்சைக்கண்டு வெதகே அஹமது கண்டு, தம்பகஹகே அஹமது கண்டு, சியம்பலாக ஹகே அபூபக்கர் தம்பி உமரு லெப்பே, வத்தே குருன்னஹே போன் றோர் இக்காணிகளைப் பெற்று, விவசாயம் செய்திருக்கின்றனர். விவ சாயமே மக்களின்முக்கியத் தொழிலாக இருந்தது. ஆனால் இப்போது புகையிலை வியாபாரம் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஊரில்ஜ"ம்ஆப் பள்ளி ஒன்று உள்ளது. 1958-ஆம் ஆண்டு இறுதி
யில் பள்ளிக் காணியில் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. பாட சாலைக்கு ஜனாப்களான யூ.எல்.செய்னுல் ஆப்தீன், ஈ.மஸாய்தீன் ஆகியோர் காணிகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இன்று இங்கு சுமார் இருநூறு குடும்பங்கள் வாழ்கின்றன. இரத்தொட்டை
தஹய்யா கொடகந்த என்னுமிடத்தில் வாழ்ந்த "ரஹத்” பிக்கு கள் இவ்வூரின் ஊடாக பாயும் ஆற்றின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழக்கமாக குளிக்க, அதனால் "ரஹத்தொட்ட" எனஅழைக்கப்பட்டு இன்று ரத்தொட்டை என அழைக்கப்படும் இவ்வூரில் பெரும்பான் மையாக வாழ்வோர் சிங்களவரே, ஆனால் நகரப்பகுதிகளில் ஒரளவு முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
இவ்வூரில் ஆரம்பத்தில் குடியேறிய முஸ்லிம்கள் வியாபார நிமித்தமாக, தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களே. ஆரம்ப முஸ் லிம்கள் இந்நகரத்திற்கு அண்மையில் இருக்கும் மடக்கும்புற, திக்கும் புற ஆகிய இடங்களில் குடியேறி, வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Page 134
964
இப்பிரதேசத்தில் விளைந்த பாக்கு, புளி போன்ற பொருட்களைச் சேகரித்துக் கொண்டு, மன்னார், புத்தளம்போன்ற துறைமுகங்களுக்குச் சென்று விற்பதும், அங்கிருந்து உப்பு, கருவாடு போன்ற பொருட்களைக் கொண்டு வந்து இப்பகுதிகளில் விற்பதுவுமே இம்முஸ்லிம்களின் முக்கியத் தொழிலாக இருந்திருக்கின்றது.
ஆடுகள் வளர்ப்பதிலும் இவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். இவ் விரண்டு இடங்களிலும் குடியேறியவர்கள் இரு சகோதரர்களே, மூத்த வர் செய்க் இப்ராஹிம் மடக்கும்புறயில் குடியேற, இளையவர் திக் கும்புறயில் குடியேறியுள்ளார். இது ஏறத்தாழ 1800-ஆம் ஆண்டளவில் நடைபெற்றிருக்கலாம். செய்க் இப்ராஹிம் இப்பகுதியில் உள்ள ஒரு பெண்னை திருமணம் செய்ய அவர்களுக்குப் பிறந்த ஒரு மகன் சேவு ராவுத்தர் ஆவார்.
பெருந்தோட்டச் செய்கை இப்பகுதியில் வளர்ச்சிபெற, வர்த்த கம் விருத்தியடைந்தது. ரத்தொட்டை,நகரமாக உருவெடுக்கஆரம்பித் தது. 1855-ஆம் ஆண்டு ரத்தொட்டை-மாத்தளை பாதை தேசாதிபதி வார்டினால் அமைக்கப்பட்டது. வியாபாரம் பெருகவே, தமிழ்நாடு காயற்பட்டன முஸ்லிம்கள் சிலர் ரத்தொட்டையில் கடைகளை ஆர்ம் பித்தனர். இதே காலக்கட்டத்தில் சேகு ராவுத்தரும் மடக்கும்புறயில் இருந்து வந்து, ரத்தொட்டையில் கடை ஒன்றை ஆரம்பித்தார்.
சேகுராவுத்தரின் மகள் மரியம் பீபி என்பவர், சேகு மீறா என்பவ ரைத் திருமணம் செய்து, ரத்தொட்டையில் வாழ்ந்தார். இவர்களு டைய சந்ததியினர் இன்னும் ரத்தொட்டையில் சீரும் சிறப்போடும் வாழ்கின்றனர். இவ்வூரின் வளர்ச்சிக்குப் பல வழிகளிலும் தம் பங்க ளிப்பை வழங்கிக் கொண்டு இருக்கின்றனர்.
இவ்வூரில் ஒரு ஜும்ஆ பள்ளியும், ஒரு தைக்காவும் உள்ளன. ஜும்ஆ பள்ளியாக விளங்கும் பள்ளிகிட்டத்தட்ட இந்நூற்றாண்டின் முதல் அல்லது இரண்டாவது தசாப்தத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும், இதைக் கட்டியவர் வனராணி தோட்டத்தின் உரிமையாள ராக இருந்த சுலைமான் லெப்பை என்றும் நம்பப்படுகின்றது. தைக்கா 1942-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
965
இத்தைக்கா அண்ழையில் ஹாஜி எம்.எம். இஸ்மத் அவர்களின் தலைமையில் பெரிதாகக்கட்டப்பட்டது. இப்பணிக்கு உதவியவர்க ளுள்குறிப்பிடத்தக்கவர், யாஸின்ஹாட்வெயர்ஸ் உரிமையாளர் எஸ். 'எச்.நுவாஸ் ஆவார். இரத்தொட்டைஜ"ம்ஆபள்ளிக்கு மீஸான்ஹாஜி யார் இரண்டு கடைகளை வழங்கியுள்ளார்கள். அப்பாஸ் எனும் ஓர் இந்திய வர்த்தகர் குர்-ஆன் மத்ரஸா நடத்துவதற்கு ஒரு கட்டிடத்தை வக்ப் செய்துள்ளார்.
ஆரம்பத்தில் முஸ்லிம் மாணவர்கள் இங்கிருந்த தமிழ்ப் பாடசா லையிலேயே கல்விக் கற்றார்கள். 1972-ஆம் ஆண்டு தனி முஸ்லிம் பாடசாலை இங்கு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தம் ஆரம்பக்கல்வி யைப் பெற்ற பலர், இன்று உயர்ந்த நிலையில் உள்ளனர்.
ரத்தொட்டை பிரதேசத்தில் பொது வாழ்விலே முஸ்லிம்கள் பெரும் பங்கு வகித்திருக்கின்றனர். மர்ஹ"ம் எம்.கே. அப்துல் ஹமீது பல வருடங்கள் கிராமச்சபை தலைவராக சேவையாற்றினார். கிராமச் சபை பட்டினசபையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர், பட்டினச் சபை யின் தலைவராக கடமையாற்றினார். அவ்வாறே இரத்தோட்டையில் ஆரம்பத்தில் குடியேறிய செய்க் இப்ராஹிமின்பரம்பரையைச் சேர்ந்த ஜனாப் என்.பி.எம். இக்பால் அவர்களும் இரத்தோட்டை பட்டினச்ச பையின் தலைவராக பல வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.
இவ்வூர் பொது வாழ்வில் ஜொலித்த இன்னொரு முஸ்லிம் மாத் தளையில் இருந்து வந்து, இங்கு குடியேறிய எச்.எம்.ஜெய்னுல் ஆப் தீன் ஹாஜியார் அவர்களாவார். ஹாஜிகளான ஏ.எச்.எம். பாச்சா, எம்.எம்.இஸ்மத் என்.பீ.எம்.நூன் ஆகியோர் இரத்தொட்டை நகரத் தின் வளர்ச்சிக்கும் இரத்தொட்டை முஸ்லிம் சமூக வளர்ச்சிக்கும் இப்போது தொண்டாற்றி வருகின்றனர். கோட்டகொடை
மாத்தளையின் வடகிழக்குத் திசையில் மகாவலி கங்கையின் கிளை நதிகளில் ஒன்றாகிய சுதுகங்கையின் கரையோரத்தில் அமைந்
Page 135
9266
துள்ளது அமைதி தவழும் கோட்டகொடை எனும் சிறு கிராமம். மாத்தளையை அடுத்து அலுவிகாரை, கனன்கமுவ, இம்புலன்தண்ட,
மாத்தளே வத்த, துனுக்கேவத்த என்ற சிங்கள ஊர்களை அடுத்த
இறுதிக்கிராமமாக கோட்டகொடை அமைந்துள்ளது.
மிளகுக் கொடிகளைப் படரவிடுவதற்காக இவ்வூரில் இலவம் பஞ்சு ம்ரங்கள் ஏராளமாக நாட்டப்பட்டிருப்பதால், சிங்கள மக்கள் இப்பிரதேசத்தைக் "கொட்டகொட" என அழைத்தனர். "கொட்ட" என்ற சிங்களச்சொல் இலவம் பஞ்சு என்று பொருள்படும். எனவே "கொட்டகொட" என்பது பொதுவாக இலவம் பஞ்சு மரங்கள் அதிக மாக உள்ள இடம் என்று பொருள்படும். "கொட்ட கொட" என்ற சிங்களப் பெயரே, தமிழில் கோட்டகொடை என திரிபுற்றதாக நினைக்க இடமுண்டு.
ஆங்கிலேயர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றிய ஆரம்பக் காலத்திலே, கண்டியின் "முதல் அதிகார்" ஆக கடமையாற்றிய மொல்லிகொட திசாவையின் மனைவியான மாம்பிடிய குமாரி ஹாமிக்கு,இந்த கிராமத்தில் நிறைய காணிகள் இருந்ததாகவும், அக்கா ணிகளை குமாரிஹாமி புஞ்சிரால முகாந்திரம் என்பவருக்கு விற்றதாக வும் அவர் அவற்றைப் பின்னர் முஸ்லிம் ஒருவருக்கு விற்றதாகவும் திரு. ஏ.ஸி.லோஹி கூறியுள்ளார்.
பழமைமிக்க முஸ்லிம் கிராமமாக கருதப்படும் கோட்ட கொடை, இங்கு அடங்கப்பட்டுள்ள வலிமார்களின் "கராமத்துகள்’ காரணமாக மாத்தளை மாவட்டத்தில் பிரசித்தி பெற்றிருக்கிறது. இக் கிராமத்தின்பெயர்இலங்கையில் பலபகுதிகளிலும் பிரசித்திஅடைவ தற்கு காரணமாயிருந்தோர், மாத்தளைமுஸ்லிம்டெயிலர்சங்கத்தினர் களாவார்கள்.
மிகச்சிறியதாக இருந்த ஊர்பள்ளியை, இச்சங்கத்தினர்1956-ஆம் ஆண்டு புதுப்பித்தனர். இப்போது ஊர் மக்கள் ஒன்றுபட்டு, பிற ஊர் முஸ்லிம் மக்களின் பண உதவிகளையும் பெற்று, இப்பள்ளியைப் புனர்நிர்மானம் செய்துள்ளனர். கட்டிட வேலைகள் இன்னும்முடிவ டையவில்லை. -
967
1957-ஆம் ஆண்டு வரை கல்வி வழங்க விரும்பிய பெற்றோர் களுக்குத்தம்முடைய பிள்ளைகளை நான்கு மைல் தொலைவில் அமைந்திருந்த பலாபத்வெல தமிழ் வித்தியாலயத்திற்கே அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால் அப்படித் தம் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்களின் தொகை, மிகக் குறைவே. 1957-ஆம் ஆண்டு இறுதிப் பகுதியிலே இக்கிராமத்துக்கென ஒரு தனிப்பாடசாலை, பள்ளிவாசல் கட்டிடத்திலே ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலையில் சேர்க்கப்பட்ட முதல் மாணவர் வை.எம்.முத்தலிப் என்பவராவார்.
பாடசாலையை ஆரம்பித்தபோது மாணவர் முழுத்தொகை 41 ஆக இருந்தது. இங்கு தலைமை ஆசிரியர்களாக கடமையாற்றிய மர் ஹ"ம் ஏ.இஸட்-ஆப்தீன், மர்ஹ"ம் எம்.எச்.மொஹிதீன் ஆகிய இருவ ரது முயற்சிகளினாலும் ஊர்ப்பிரமுகர்களான மர்ஹ"ம் என்.எம்.இஸ் மாயில் லெப்பை, ஜனாப்களான எம்.அப்துல் ஹாஷிம், என்.எம்.இப் ராஹிம், எம்.வஹாப்தீன், எம்.ஒமர்தீன் எஸ்.எம். ரஷித் ஆகியோரின் உழைப்பினாலும் 1961-ஆம் ஆண்டு பாடசாலைக்கென அரசகாணி ஒதுக்கப்பட்டது. அத்தோடு, அதில் ஒரு நிரந்தர கட்டிடமும் கல்வித் திணைக்களத்தினால் கட்டப்பட்டது.
கோட்டகொடை ஜும்ஆ பள்ளிவாசல் கதீப்களாக மர்ஹாம்க ளான ஒமர்லெப்பை, இஸ்மாயில் லெப்பை, அப்துல்காதர் லெப்பை ஆகியோரும், ஜனாப் அப்துல் முனாப் லெப்பையும் கடைமையாற்றியுள்ள ளனர். இவ்வூர் மார்க்க வாழ்வில் மாவனெல்லையைப் பிறப்பிடமா கக் கொண்ட அல்ஹாஜ் இஸ்மாயில் ஆலிம் அவர்கள் முக்கியமான ஓர் இடத்தைப் பெற்றிருக்கின்றார். இந்த ஊரில் சில மெளலவிகள் தோன்றுவதற்கு இவர் வழங்கிய உதவியும் உற்சாகமும் காரணங்க ளாக இருந்திருக்கின்றன.
ஆரம்ப கால கட்டங்களில் மர்ஹ"ம்களான சதக்கு லெப்பை, ஹபீபு லெப்பை, அஹமது லெப்பை, மரிக்கார் தம்பி ஆகியோர் 'மத்திச்சங்களாக", ஊர்த்தலைவர்களாக சிறப்பாக கடமையாற்றியுள் ளனர். அண்மைக்காலத்தில் ஜனாப் என்.எம்.இப்ராஹிம், ஜனாப் எம். வஹாப்தீன் ஆகியோர் ஏறத்தாழ முப்பத்தைந்து வருடங்கள் கிராமத் தலைவர்களாக, மத்திச்சங்களாக சேவையாற்றியுள்ளனர்.
Page 136
968
இக்கிராமத்தின் கல்விவளர்ச்சிக்குமர்ஹாம் ஏ.இஸட். ஆப்தீன், மர்ஹும் எம்.எச். மொஹிதீன், அல்ஹாஜ் கே.நஜும்தீன், ஜனாப் எஸ்.ஜுனைத் ஆகியோர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இப்பாடசாலையில் கடமையாற்றிய முதல் ஆசிரியை திருமதி. ஹவ்வா உம்மா ஆவார். இந்த பாடசாலையில் தலைமை ஆசிரியராக கடைமையாற்றிய மர்ஹ"ம் எம்.எச்.மொஹிதீன் அவர்களின் LunarfluaT ரான இவர், இக்கிராமத்திற்குப் பெரும் சேவை செய்துள்ளார்.
இப்பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற ஜனாப் ஜே.எம்.இக்பால், இன்று ஒரு பட்டதாரி ஆசிரியராக கடமையாற்று கின்றார்; ஜனாப் எம்.சுஹைர் என்பவர் அவுஸ்திரேலிய பல்கலைக் கழகம் ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகின்றார் என்பது இவ் வூருக்கே பெருமை சேர்ப்பதர்கும். எலமல்பொத்த
எலமல்பொத்த, வஹகோட்டைக்கும், மாதிப்பொல எனும் ஊருக்கும் இடையில்அமைந்துள்ள ஒரு வளமானமுஸ்லிம் கிராமமா கும். இக்கிராமத்துக்கு எலமல்பொத்த என்ற பெயர் எவ்வாறு தோன் றியது என்பதை விளக்குவதற்கு மக்கள் கூறும் கதை சுவையானது மட்டுமல்ல சற்று விசித்திரமானதுங்கூட.
'தவளம் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சிலர், தம் மாடுகளைப் பட்டியவத்தை எனும் இடத்தில் கட்டுவது வழக்கம். ஒரு நாள் ஒரு மாடு காணாமல் போய்விட்டது. எங்காவது ஒடியிருக்கும் என்று நினைத்த வியாபாரிகள் இதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வில்லை. ஒரிரு நாட்களில் இன்னொரு மாட்டையும் காணவில்லை. வியாபாரிகள் உசார் ஆயினர். விழித்திருந்து காவல் காத்தனர்.
சிறு சத்தம்; இருளிலும், ஒளி வீசும் இரண்டு கண்கள் தெரிகின் றன; வருவது ஒரு சிறுத்தை என்பது காவல் காப்போருக்குத் தெரிந்து விட்டது. ஆபத்தான கட்டம். சத்தம் போட்டால் சிறுத்தை இன்று ஓடிவிடும்; ஆனால் நாளைவரும். எப்படியாவது இதைப்பிடித்துவிட வேண்டும் என்று முடிவு கட்டிய வியாபாரிகள், எப்படியோ அதைப் பிடித்துவிட்டனர். வெளிச்சத்தில் பார்த்தால் பிடிப்பட்டது புலிதான். ஆனால் சாதாரணமான புலியல்ல, ஒரு வெள்ளைப்புலி.
269
வினோதமான இம்மிருகத்தை அரசனுக்கே அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்று எண்ணிய வியாபாரிகள், அதனைக் கண்டிய ரசனுக்குப் பரிசாக வழங்கினர். இவ்வன்பளிப்பால் மன மகிழ்ந்த கண்டி மன்னன், வியாபாரிகளுக்கு ஒரு பரந்த நிலப்பரப்பை அன்ப ளிப்பாக வழங்கியது மட்டுமல்லாமல், அப்பிரதேசத்திற்கு "எலதிவி யன் பொத்த’ என்ற பெயரையும் சூட்டினான். 'எலதிவியன்’ என் றால் வெள்ளைப்புலி என்பது பொருள். எலிதிவியன் பொத்த என் பதே எலமல் பொத்த என்று நாளடைவில் மாறிவிட்டது என்பது ஊர் மக்களின் நம்பிக்கை.
எலமல்பொத்த பழமையான ஒரு கிராமம் என்பதில் சந்தேக மில்லை. இப்பகுதியில் முஸ்லிம்களுக்கிடையே நடந்த சில காணி விற்பனைகள் 1864-ஆம் ஆண்டுகாணிப் பதிவுகாரியாலயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக எலமல்பொத்த ஊரைச் சேர்ந்த உதுமான்கண்டு, விதானை லெப்பை, சுலைமான் கண்டு ஆகிய மூவ ரும் எலமல்பொத்தையில் இருந்த ஒரு நிலத்தை அதன் உரிமையாள ரான, எலமல் பொத்தையைச் சேர்ந்த உதுமான் லெப்பை என்பவரி டம் வாங்கியதை, 1864-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு பதிவு காட் டுகின்றது.
இதே ஆண்டில் செய்யப்பட்ட இன்னொரு பதிவு உதுமான் கண் டும் உதுமாலெப்பையும் எலமல்பொத்த அபூபக்கர் லெப்பையிடமி ருந்து எலமல் பொத்தைப் பிரதேசத்தில் ஒரு காணி வாங்கியதைக் காட்டுகிறது. இக்காணிப் பதிவுகள்,எலமல் பொத்த பகுதியில் முஸ் லிம்கள் நில உடமையாளர்களாக வெகு காலம் வாழ்ந்திருப்பதைப் புலப்படுத்துகின்றன.
ஆனால் ஆரம்பத்தில் இக்கிராமத்தில் சனத்தொகை குறைவா கவே இருந்திருக்கிறது. 1871-ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப் பில் எலமல் பொத்த தனிக்கிராமமாக கருதப்படவில்லை. காரணம் சனத்தொகை போதுமானதாக இருந்திருக்க மாட்டாது. ஆனால் 1871-ஆம் ஆண்டுக்குப்பின்னர் வதுரெஸ்ஸ என்ற ஊரிலிருந்தும், பன்லியத்த என்ற ஊரிலிருந்தும் சில முஸ்லிம் குடும்பங்கள் இங்கு வந்து குடியேறின.
Page 137
970
இக்குடியேற்றங்கள் எலமல் பொத்த கிராமத்துக்கு ஓர் அந் தஸ்தை வழங்க, 1881-ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் இது ஒரு தனிக்கிராமமாக ஏற்கப்பட்டிருப்பதைப் பார்க்கின்றோம். 1881-ஆம் ஆண்டு இக்கிராமத்தில் 42 ஆண்களும் 46 பெண்களும் வாழ்ந்திருக்கின்றனர்" 1881-ஆம் ஆண்டுக்குப்பின்னர் வேறு இடங்க ளில் இருந்து வந்து, எவரும் குடியேறவில்லை போலும். 1891-ஆம் ஆண்டில் இக்கிராமத்தின் சனத்தொகை 47 ஆண்கள், 53 பெண்கள், பத்து ஆண்டு சனத்தொகை வளர்ச்சி சாதாரணமானதாகவே இருப் பதை உணரலாம்.
ஆரம்பக் காலங்களில் வழக்கம் போல முஸலிம்கள் இக்கிராமத் தில் விவசாயத்திலே ஈடுபட்டிருப்பர். தவளம் வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டிருந்தனர். தேங்காய் போன்ற பொருட்களைக் கொண்டு சென்று விற்பது, கருவாடு, உப்பு போன்ற பொருட்களை வாங்கி வந்து விற்பது - இதுவே பொதுவாக இங்கு நடந்த தவளம் வியாபாரம்.
எலமல்பொத்தயில் வாழும் முதியவரான ஜனாப் சஹாப்தீன், தன் தந்தை ராஜமரிக்கார் தவளம் வியாபாரியாக வாழ்ந்ததைக் கூறு கின்றார். ஊரிலிருக்கும் ஏனைய முதியவர்கள் இதை ஏற்றுக் கொள் கின்றனர்ஜனாப் சஹாப்தீனின் வயதை அடிப்படையாக வைத்துபார்க்கும் போது, மர்ஹ"ம் ராஜமரிக்கார் 1870-1900 காலப்பகுதியில் தவளம் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பார் என்று கூறலாம்.
கலேவெல பிரதேசம் புகையிலைச் செய்கைக்கு உகந்தது எனறு உணர்ந்த சில யாழ்ப்பாணவியாபாரிகள், 20-ஆம் நூற்றாண்டின் ஆரம் பத்தில், இப்பிரதேசத்துமக்களைபுகையிலைச்செய்கையில் ஈடுபடுத் தினர். பண உதவிகளும் வழங்கினர். எலமல்பொத்த பகுதியில் புகை யிலைச் செய்கையில் ஈடுபட்ட முன்னோடிகளில் ஒருவர் இக்கிராமத் துத் தலைவராக இருந்த மர்ஹாம் பிச்சைக்கண்டு அப்துல் ரஹ்மானா வார்.
இவரைத் தொடர்ந்து, வேறுபலரும் இக்கிராமத்தில் புகையிலை விவசாயத்தில் ஈடுபடலாயினர். இன்றும் புகையிலை வியாபாரமே இவ்வூரின் முக்கியத் தொழிலாக விளங்குவதைக் காணலாம். 1960
971
களில் 'புகையிலை மன்னன்” என வர்ணிக்கப்பட்ட மர்ஹாம் எஸ். எஸ்.எம்.காசீம் ஹாஜியார் எலமல்பொத்தயைச் சேர்ந்தவரே இன்று அவரது பேரன் ஜனாப் எஸ்.எம். நிஸாம் இவ்வியாபாரத்தில் சிறந்து விளங்குகிறார்.
ஆரம்பத்தில் இக்கிராமத்தில் ஒரு தனிப்பள்ளிவாசல் இருக்க வில்லை. இக்கிராம மக்கள் ஒரு மைல் தூரத்தில் அமைந்திருந்த பக்கத் துக் கிராமமான சவனவெளி பள்ளிவாசலுக்கே தமது தொழுகைகளுக் காக்ச் சென்றனர். நீண்டகாலம் இவ்வழக்கம் இருந்து வந்திருக்கிறது. 1942-ஆம் ஆண்டில்தான் இவ்வூர் மக்கள் தம் தேவைகளுக்கென ஒரு பள்ளிவாசலைக் கட்டினர். அதுவும் மண்ணாலேயே முதலில் கட்டப்பட்டது. 1946-ஆம் ஆண்டு பள்ளிவாசல் கல்லால் கட்டப்பட் டது. முஹம்மது தம்பி முத்தலிப், அப்துல் காதர், அப்துல் ரஸாக், காசீம் ஹாஜியார் போன்ற ஊர் பிரமுகர்கள் பள்ளிவாசலைக் கட்டுவ தில் பெரும் பங்கு வகித்தனர். சில வருடங்களுக்குப் பின்னர் இப் பள்ளி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இதற்கு காசீம் ஹாஜியார் அவர் கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்.
ஏறத்தாழ 1880-ஆம் ஆண்டளவில் பிச்சைக்கண்டு அப்துல் ரஹ் மான் என்பவர் இவ்வூர் கிராமத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவ ருக்குப் பின்னர் அவரது மகனான சாஹ"ல் ஹமீது என்பவர் 1957-ஆம் ஆண்டுவரை இப்பதவியை வகித்தார். விஷக்கடி வைத்தியத்தில் சிறப் புற்று விளங்கிய இவர், ஒரு புலவராகவும் விளங்கினார் என கூறப்படு கின்றது. அதன்பின் 1957-ஆம் ஆண்டிலிருந்து 1977-ஆம் ஆண்டு வரை ஜனாப் ஏ.எல். ஹம்மாதுதீன் என்பவர் இப்பதவியை வகித்தார். 1977-1987 காலப்பகுதியிலே திரு. தியோபிலஸ் என்பவர் இப்பதவியி லிருந்து சேவையாற்றியுள்ளார். 1987-ஆம் ஆண்டிலிருந்து ஜனாப் ஏ.ஸி.ஏ. முனாஸ் என்பவர் இப்பதவியைச் சிறப்பாக வகித்துக் கொண்டிருக்கின்றார்.
எலமல்பொத்த கிராமத்துக்கென்று ஒரு தனிப்பாடசாலை மாண் புமிகு வெளிவிவகார அமைச்சர் அல்ஹாஜ் ஏ.ஸி.எஸ். ஹமீது அவர்க ளால், 1959-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை மத் ரஸா கட்டிடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. 1962-ஆம் ஆண்டு இப் பாடசாலைக்கு ஒரு நிரந்தரக் கட்டிடம் கிடைத்தது. இப்பாடசாலை யில் படித்து முதல் முதலாக ஆசிரியர் நியமனம் பெற்றவர், மர்ஹ"ம்
Page 138
979
எச்.எம். தாஸிம் ஆவார். இந்த பாடசாலையில் படித்த பலர், இன்று ஆசிரியர்களாக வங்கி அதிகாரிகளாக, கிராம அதிகாரிகளாக, "டொக் டர்களாக" கடமையாற்றுகின்றனர் என்பது அவதானிப்புக்குரியது.
இக்கிர்ாமத்து மக்களில் பலர் இப்பிரதேச பொது வாழ்விலும் முக்கிய பங்கேற்று வருகின்றனர். சுமார் 33 வருடங்கள் வஹ கோட்டை கிராமசபைத் தலைவராக சேவை செய்த மர்ஹ"ம் எஸ். எஸ்.எம். காசீம் ஹாஜியார் இக்கிராமத்தைச் சேர்ந்தவரே. 1938-ஆம் ஆண்டிலிருந்து 1970-ஆம் ஆண்டு வரை மர்ஹ"ம் அப்துல் கரீம் லெப்பை ஹாஜியார் ஊர்கதிபாகவும், முஸ்லிம் விவாக பதிவுகாரராக வும் சேவையாற்றியுள்ளார். 1970-ஆம் ஆண்டிலிருந்து எஸ். எம். இஷ்ஹாக் ஹாஜியார் அவர்கள் முஸ்லிம் விவாக பதிவுகாரராக கட மையாற்றுகின்றார்கள். மானாம் பொடையில் அடங்கப்பட்டிருக்கும் அலித்தம்பி ஒலியுல்லாவின் பேரனின் மகனான இவர், வேறு பல சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார்.இன்று ஜனாப் ஏ.ஆர்.எம்.சர்தார் அவர்கள் இப்பிரதேசத்தில் ஒரு பிரபலமான சமூக சேவையாளராக விளங்குகின்றார்.
சவனவெளி
சவனவெளி எனும் கிராமம் மாத்தளை வடக்கு, உடுகொடை பள்ளேசியப்பத்துவில் அமைந்துள்ளது. காடுகள் அடர்ந்திருந்த இப் பகுதியிலே, வதுரெஸ்ஸ போன்ற இடங்களிலிருந்து வந்த முஸ்லிம் கள், குடியேற்றம் ஒன்றினை அமைத்தனர். இக்கிராமம் சவனவெளி என்று அழைக்கப்பட்டது. “சவன” என்று ஒரு வகை செடி அடர்ந்தி ருந்ததனாலேயே, இப்பகுதி "சவனவெளி" என்றழைக்கப்பட்டது என்று ஊரவர் கூறுகின்றனர்.
ஆனால் சிங்களவர்கள் இக்கிராமத்தை "ஹெவனவெல" என்றே அழைக்கின்றனர். உடுகொடபள்ளேசியப்பத்துவில்ஹெவன வெல என்ற பெயரில் இன்னுமொரு கிராமமும் இருக்கின்றது. எனவே சவனவெளி என்பது ஹெவனவெல என மாறியது என்று நினைப்பதிலும் பார்க்க, ஹெவனவெல என்பதுதான் சவனவெளி என்று திரிந்து இருக்கும் என்று நினைப்பது பொருத்தமானதாகும்.
973
ஏறத்தாழ நூற்றி அறுபது வருடங்களுக்கு முன்யெமன்தேசத்திலி ருந்து வந்த, ஒரு சமயப்பெரியாருடன் இக்கிராமம் தொடர்புபடுத்த்ப் படுவதனால், இக்கிராமம் தொன்மையான ஒன்றாக இருக்க வேண் டும்’ என்று நினைப்பதற்கு இடமுண்டு. மேலும் 1948-ஆம் ஆண்டு வரையிலும் எலமல்பொத்தை, மாதிப்பொல ஆகிய இரு கிராமத்து மக்களுக்கும் சவனவெளி பள்ளிவாசலேஜும்ஆ பள்ளியாக இருந்த தும் சவனவெளி கிராமத்தின் தொன்மையை உறுதிப்படுத்துகிறது.
விவசாயமே இப்பகுதி முஸ்லிம்களின் ஆரம்பத் தொழிலாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கு வாழ்ந்த ஒரு சிலராவது வியாபாரிகளாக இருந்தனர். அதுவும் கரையோரப்பகுதிகள் வரை பிரயாணம் செய்கின்றவர்களாக இருந்தனர் என்பதை திரு. ஏ.ஸி. லோறியின் நூல் உறுதிப்படுத்துகின்றது. ஹெவனவெலயைப் பற்றி அவர் கீழ்வருவாறு கூறுகின்றார்.
"ஆரச்சிலாகே கரு என்பவருக்கு இங்கு முக்கால் ஏக்கர்பரப்புள்ளஒரு தோட்டக்காணி"நிந்தபங்குவ"வாக இருந் தது. இதை சில முஸ்லிம்கள் பெற்றிருந்தனர். தாம் வைத்திருந்த நிலத்திற்காக இம் முஸ்லிம் குடிமக்கள் ஒவ்வொருவரும் கீழ் வருவனவற்றை உரிமையாளருக்குக் கொடுக்க வேண்டி இருந்
ĝ5ĝøl.
வருடத்துக்கு ஒருமுறை இரண்டு பென்ஸ் (1 பவுணின் 1/120 பங்கு) பணம்
I. கரையோரப்பகுதிகளுக்குப் போய்வரும் போது "1 நெல்லி o_ւնւյ**
l. "ஒரு பிரிவெல்ல கருவாடு" திரு. ஏ.ஸி. லோறி தரும் இவ்விவரம் சவனவெளி முஸ்லிம்க ளில் ஒரு சிலராவது கரையோரப் பிரதேசங்களுக்கு அடிக்கடி போகின் றவர்களாக இருந்தனர் என்பதை உணர்த்துகின்றது. சவன வெளியிலி ருந்து முஸ்லிம்கள் கரையோரத்திற்குப் போவது வியாபாரத்துக்கே யன்றி, வேறு எந்த காரணத்திற்காகவும் இருந்திருக்க முடியாது. கலெ வெல பிரதேசத்தில் இருக்கும் ஏனைய கிராமங்களில் போலவே,
Page 139
974
இங்கும் இன்று புகையிலைப் பயிர்ச்செய்கையும் புகையிலை வியா பாரமும் பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
ஏனைய முஸ்லிம் கிராமங்களில் போலவே இங்கும் ஆரம்பத் தில் கல்வி வசதிகள் இருக்கவில்லை. இப்போது சில மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றனர். சிலர் மார்க்கக் கல்வி கற்பதற்கு மத்ரஸாக்களில் சேர்ந்துள்ளனர். சிலர் அரசாங்க உத்தியோகங்களில் கடமையாற்றுகின்றனர். நாலிய கனத்த
நாலியகனத்த, மாத்தளை மாவட்டத்தில் லக்கல தேர்தல் தொகு தியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இக்கிராமத்தில் இன்று சுமார் நாற்பது குடும்பங்கள் வாழ்கின்றன. இது லக்கல தொகுதியி லுள்ள ஒரே ஒரு முஸ்லிம் கிராமமாகும். ஆரம்பத்தில் இலங்கையில் வடமத்திய மாகாணத்திலுள்ள தமன்கடுவ பகுதியிலிருந்து வந்து, மக்கள் இங்கு குடியேறினார்கள் என்று கூறப்படுகின்றது. ஆனால் அவர்களின் சந்ததியினர்கள் எவருமே தற்போது இங்கில்லை. ஏதோ ஒரு காரணத்தினால் காலப்போக்கில் இக்கிராமம் அப்படியே அழிந்து விட்டதாகவும், நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் ரஜ்ஜம்மனை, கெற்றவலை, கோட்டகொடை போன்ற பகுதிகளிலிருந்து மக்கள் விந்து, இங்கு குடியேறினர் என்று இங்குள்ள மக்கள் கருதுகின்றனர். திரு. ஏ.ஸி.லோஹி எழுதிய "இலங்கையின் மத்திய மாகாணத் cong5ŭ Luppis? au eaĵaj perswo birdäy” (A Gazetteer of the Central Province in Sri Lanka) மேற்கூறப்பட்ட கருத்துக்கு ஒரளவு ஆதாரமாக இருப்பதைக் காண்கின்றோம். மாத்தளையில் வாழும் ஒரு முஸ்லிம் குடும்பத்தினரிடம் இருக்கும் சில காணி உறுதிப்பத்திரங்களும் ஓரளவு இந்த கருத்துக்கு ஆதாரமாக இருக்கின்றன. நாலியாகனத்த, வதுரெஸ்ஸ, மவுசா கொல்ல, பெபோலெல்ல பாரக்கொட்டுவ போன்றவை அம்பன எனும் பெருங் கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள சிறு கிராமங்களாகும்.
ஒரு போரிலே, பெரும் வீரத்தைக் காட்டிய ஒரு நீர்கொழும்பு தமிழருக்கு ஒர்அரசன்சன்னஸ் மூலம் ஏராளமானகாணிகளை இப்பிர
275
தேசத்தில் வழங்கியிருந்ததாகவும், பின்னர் அவரது பரம்பரையில் உதித்த காளியம்மா என்ற பெண் வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த, 'கோரனை’ எனும் பதவி வகித்த ஒருவரைத் திருமணம் செய்ததாக வும் திரு. ஏ.ஸி.லோறி தன்னுடைய நூலில் கூறியுள்ளார்.
தமன்கடுவ என்பது வடமத்திய மாகாணத்திலுள்ள ஒரு பிரதேச மாகும். தமன்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த சிலரைக் காளியம்மா அழைத்து வந்து நாலியகனத்தையில் தனக்கு இருந்த காணிகளில் குடி யிருத்திருக்கலாம் என்றும், ஏதோ ஒரு காலகட்டத்தில் அம்பன்கங்கை ஒரத்தில் இருந்த இக்கிராமம், வெள்ளத்தால் அழிந்திருக்கலாம் என் றும் ஊகிப்பதற்கு இடமுண்டு.
தமன்கடுவயைச் சேர்ந்த வர்ணகுலசூரிய வெத்திசிங்க முதியான் சலாகே குலசேகரம் பிள்ளை உடையாரின் மகள் காளியம்மா என்ப வர், அம்பன பகுதியில் தனக்கிருந்த ஏராளமான காணிகளை விற்ப னைச் செய்வதை அறிவிக்கும் காணி உறுதிப்பத்திரங்கள் சில மாத்த ளையில் வசிக்கும் ஒரு முஸ்லிம் குடும்பத்தினரிடம் இருக்கின்றன. சிலவேளை திரு. ஏ.ஸி.லோஹி குறிப்பிடுகின்ற காளியம்மா இவரா கவே இருக்கலாம். இன்றும் நாலியகனத்தயில் இருக்கும் பெரும்பா லான வயல்களும் காணிகளும் மாத்தளை நிக்ககொல்ல, கலெவெல, அக்குரன போன்ற ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிலருக்கே சொந்த மாக இருக்கின்றன.
இவர்களும் காளியம்மாவிடமிருந்தோ அல்லது அவருடைய குடும்பத்தினரிடமிருந்தோ இக்காணிகளை வாங்கியிருக்கலாம். இவர்களே கொட்டவலை, கோட்டகொடை, ரஜ்ஜம்மா போன்ற இடங்களிலிருந்து முஸ்லிம்களை அழைத்துவந்து நாலிய கனத்தயில் குடியமர்த்திருக்கலாம்.
மாத்தளை மாவட்டத்தில் இருக்கும் முஸ்லிம் கிராமங்களில் மிக வசதிக்குறைந்த கிராமம் இதுவே. மாத்தளை மாவட்ட முஸ்லிம்களில் ஒரு சதவீதத்தினர் கூட நாலியகனத்தைக் கிராமத்துக்குப் போயிருக்க மாட்டார்கள். ஏன் ஒரு சதவீதத்தினருக்குக் கூட, இக்கிராமம் சரியாக எங்கே இருக்கிறது என்பது கூட தெரியாது இருந்தாலும் ஆச்சரியமில்லை. அந்த
Page 140
276
அளவுக்கு ஏனைய முஸ்லிம் பகுதிகளிலிருந்து ஒதுங்கிய ஒரு கிராம மாக நாலியகனத்தை இருக்கிறது.
ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்னர் மாத்தளையிலிருந்து நாலிய கனத்தைக்கு ஒருவர் போவதாக இருந்தால் அவர் நாவுளைக் குப் போக வேண்டும். அங்கிருந்து எலஹெர பாதையில் நான்கு மைல்தூரம் சென்றால், அம்பன சந்தியை அடையலாம். அங்கிருந்து ஐந்து மைல்தூரம் நடந்து சென்று நாலியகனத்தயை அடைய வேண் டும். கடைசி இரண்டு மைல்களும் மழைக்காலத்தில் சகதியாகத்தான் இருக்கும். நடந்தால் முழங்கால் வரை சேற்றில் கால்புதையும்.
1973 ஆம் ஆண்டுதான் இங்கே ஒரு முஸ்லிம் பாடசாலை ஆரம் பிக்கப்பட்டது. அது வரை இங்கே தமிழ்ப் படிப்பதற்கு எவ்வித வசதி யும் இருக்கவில்லை. அல்ஹம்ரா முஸ்லிம் வித்தியாலயம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடசாலையில், இன்றுகூட 28 மாணவர்க ளும் 22 மாணவிகளுமே கற்கின்றனர். ஆண்டு ஒன்றிலிருந்து ஆண்டு ஒன்பது வரையுமே வகுப்புகள் இருக்கின்றன. ஒன்பது வகுப்புகளில் படிப்பிக்க இருக்கும் ஆசிரியர்கள் மூவர் மாத்திரமே.
1978ஆம் ஆண்டு உள்பொத்தபிட்டியைச் சேர்ந்த ஜனாப் எம்.எச். எம்.ரஹீம் இப்பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டார். இவர் இந்த கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கி யுள்ளார். இவர் இக்கிராமத்திற்கு வரும்வரை மத்ரஸா எதுவும் இங்கு இருக்கவில்லை. எனவே பெருபான்மையான பிள்ளைகளுக்கு ஒதல் இல்லாமலே இருந்தது. ஜனாப் எம்.எச்.எம்.ரஹீமின் முயற்சியினால் ஒரு மத்ரஸா ஆரம்பிக்கப்பட்டது. w
மத்ரஸாவில் ஒதிக்கொடுக்கும் முஅல்லிமுக்குச் சம்பளம்
கொடுப்பதற்கு மாத்தளை நகரமுஸ்லிம் வர்த்தகர்கள் பலர்உதவுகின் றனர். மேலும் இவர் எடுத்த சிரத்தையினால் நாலியகனத்தை பாதை திருத்தியமைக்கப்பட்டதுமட்டுமன்றி ஊருக்குப்பஸ்சேவையும் அறி முகப்படுத்தப்பட்டது. ஜனாப் ரஹீமின் முயற்சியினால் இக்கிராமத் தில் குழாய்க் கிணறுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
977
இக்கிராமத்தில் பள்ளி ஒன்று இருந்தபோதிலும், அது கிராம மக்களுக்கு வசதியான இடத்தில்அமைந்திருக்கவில்லை. பள்ளி வசதி குறைவானதாகவும் இருந்தது. இன்று இங்கு அழகான சகல வசதிக ளும் பொருந்திய பள்ளி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த பள்ளியைக் கட்டுவதில் அல்ஹாஜ்மெளலவிஎம்.ஏ.எம்.இப்ராஹிம் அவர்களும், ஜனாப் எம்.எச்.ஏ.ரஹீம் அவர்களும் பெரும் அக்கறை காட்டினர். மாத்தளை முஸ்லிம் தனவந்தர்களும் தாராளமாக உதவியுள்ளனர் என் பதை சொல்லியே ஆகவேண்டும். நிக்ககொல்ல
மாத்தளை மாவட்டத்தில்அமைந்துள்ளமுஸ்லிம் கிராமங்களுள் தொன்மையான ஒரு கிராமம் நிக்ககொல்லை ஆகும். மாத்தளை மாவட்டத்து முஸ்லிம் குடியேற்றங்கள் இரண்டு வழிகளில் நடந்துள் ளன என ஊகிக்க முடியும். ஒன்று கொட்டியாரம், மட்டகளப்பு போன்ற துறைமுகங்களோடு கண்டியரசர்களுக்கும் கண்டி இராச்சிய மக்களுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பின் காரணமாக ஏற்பட்டன வாகும். கண்டி - கொட்டியாரம் தவளம் பாதையும் கண்டி - மட்டக ளப்பு தவளம் பாதையும் மாத்தளை மாவட்டத்தின் ஊடாகவே அமைந்திருந்தன.
இவ்வியாபாரத்தின் காரணமாக சில முஸ்லிம்கள் நிக்கவட்ட வான, ரஜ்ஜம்மன, மாத்தளை போன்ற இடங்களில் குடியேறியிருக்க லாம். அவ்வாறே கண்டிபுத்தளம் தவளம் பாதையும் மாத்தளைப் பிரதேசத்தின் ஊடாகவே அமைந்திருந்தது. இதனால் சில புத்தளம் முஸ்லிம்களும் மாத்தளை மாவட்டத்தில் குடியேறியிருக்கலாம்.
மேலும் அரசியல் காரணங்களினால் புத்தளம் போன்ற கரையோ ரப் பகுதிகளிலிருந்து புதுவாழ்வு தேடிவந்த முஸ்லிம்களும் குருனா கலை ஊடாக, காலப்போக்கில்,மாத்தளை மாவட்ட பிரதேசங்களில் குடியேறி இருக்கலாம். நிக்ககொல்ல, எலமல் பொத்த, மாதிப் பொல, ரங்வெடியாவ போன்ற குடியேற்றங்கள் புத்தளத்தின் ஊடாக நடைபெற்றிருக்கலாம். பின்னர் உள்ளூர் வியாபாரத்தின் காரணத்தா லும் வேறு காரணங்களாலும் இருசாராரும் ஒன்றுபட்டிருப்பர்.
Page 141
278 இரண்டு கலாசாரங்களும் ஒன்றாகசங்கமித்து இருக்கும்.அக்குர னையைப் போலவே, நிக்ககொல்லையிலும் "சத்கோரளை விதான லாகே' என்ற வாசகமும் வேறு சிங்கள வாசகங்களும் இருப்பதைப் பார்க்கின்றோம். மாத்தளை மாவட்டத்து ஏனைய முஸ்லிம் கிராமங்க ளில் சிலவற்றிலும் இத்தகைய வாசகங்களைக் காண்கின்றோம்.
அதே நேரத்தில் தம்பிராஜா, குப்பைத்தம்பிபிச்சைத்தம்பி, செல் லம்மா, தங்கச்சி உம்மா, ஆத்தங்கரை நாச்சியார், குப்பம்மா, சின்னத் தம்பி, சின்னது பிள்ளை போன்ற பெயர்களையும் பார்க்கின்றோம்.
எனவே ஆரம்ப முஸ்லிம் குடியேற்றங்கள் சிலவற்றில் காணப் பட்ட சிங்களச் சாயலும் சில குடியேற்றங்களில் காணப்பட்ட தமிழ்ச் சாயலும் மாத்தளைமாவட்ட முஸ்லிம்களிடையே சங்கமமாய் இருப் பதைக் காண்கின்றோம்.
நிக்ககொல்ல குடியேற்றம் புத்தளம் ஊடாகவே நடைபெற்றிருக் கும் என்று நம்புவதற்கு பல சான்றுகள் உள்ளன. அரசியல் காரணங்க ளாலும் வியாபாரக் காரணங்களாலும் உந்தப்பட்ட சில முஸ்லிம்கள், புத்தளத்திலிருந்து வந்து குருனாகலைப் பிரதேசத்திலுள்ள எல்வலப் பிட்டிய, வலக்பிட்டிய போன்ற இடங்களில் குடியேறியுள்ளனர். சிலர் பக்கத்து ஊர்களுக்குச் சென்று யூனானி வைத்தியம் போன்ற தொழில்களைச் செய்து வாழ்ந்து விந்தனர்.
சிலர் எல்வலப்பிட்டியில் விவசாயம் செய்தனர். வேறு சிலர் தொழும்புக்கொல்ல, மாந்திராவ, தல்கஹபிட்டிய, பல வத்பொல, பல்லியபொல, ரம்புக்கந்தன, மொரகொல்லவெல போன்ற ஊர்க ளுக்குச் சென்று சேனைப் பயிர்ச் செய்கை செய்தனர்.
நிம்மதியாக எல்வலப்பிட்டிய பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்க ளுக்கு ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே இவர்களின் தலைவராக இருந்த சத்கோரனை விதானை என்பவர், இங்கிருந்து வெளியேறி மாய்வெல எனும் இடத்தில் குடியேறினார் இவ்வாறு வேறுசிலரும் வெளியேறினர். இந்த வேளையில் தான் சத்கோரளை விதானை உதுமான் கண்டு என்பவரின் தலைமையின் கீழ், ஒரு கூட் f டம் நிக்ககொல்லையில் குடியேறியதாக நம்பப்படுகிறது.
979
முதலில் உதுமான் கண்டு, ஏலக்கரை பகுதியிலே குடியேற் றத்தை அமைத்தார் என்றும் நம்பப்படுகிறது. இது ஏறத்தாழ 1780ஆம் ஆண்டளவில் நடைபெற்றிருக்கலாம்.
நிக்ககொல்லையில் குடியேறிய மக்கள் விவசாயத்தில் ஈடுபட்ட னர். ஆனால் அதே நேரத்தில் பலர்தவளம் வியாபாரத்திலும் ஈடுபட் டுள்ளனர். இங்கு வசிக்கின்ற முதியவர்கள் சிலர்தமது முன்னோர்கள் தவளம் வியாபாரத்திற்குச் சென்ற முறையை மிக அழகாக விளக்கு கின்றனர்.
பாக்கு, தேங்காய், எலுமிச்சம்பழம், கருப்பட்டி, பாணி, போன்ற பொருட்களைச் சேகரித்துக் கொண்டு தம்பலகாமம், கொட்டியாரம் போன்ற பகுதிகளுக்குச் செல்வதும் அங்கிருந்து உப்பு, கருவாடு போன்ற பொருட்களை இங்குகொண்டு வருவதும் வழக்கமாக இருந் திருக்கின்றது.
தவளம் வியாபாரத்தின் கடைசிக் காலக்கட்டத்தில் ஒரிருமுறை
தவளம் வியாபாரிகளோடு சேர்ந்து சென்ற ஒரிருவர், இன்றும் நிக்க கொல்லையில் வாழ்கின்றனர். பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் பின், இவ்வூர் மக்கள் பலவிதமான வியாபாரங்களிலும் ஈடுபட்டுள்ள னர். மிக அண்மைக்காலம் வரை பெரும்பாலான மக்கள் நேரடியா கவே விவசாயம் செய்தனர்.
மரக்கறிச் செய்கை, புகையிலைச் செய்கை போன்றவை இங் குள்ள பலர் ஈடுபடும் தொழில்களாகும். பலர்மாத்தளை, கலெவெல, குருனாகலை போன்ற பகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வூர் மக்கள் பலருக்கு அம்பன, தீவில்ல, ஹபுதேன போன்ற பகுதிகளில் ஏராளமாக காணிகள் இருக்கின்றன.
நிக்ககொல்லையில் காணப்படும் பழைய பள்ளிவாசல் மாத் தளை மாவட்டத்திலுள்ள தொன்மையான பள்ளிவாசல்களில் ஒன்றா கும். இப்போது எஸ்.எம்.முகம்மது ராஜன் ஹாஜியார்அவர்க ளின் தலைமையின் கீழ், அல்ஹாஜ் கவுஸ்ஆலிம், ஹாஜி சலாகுதீன், ஹாஜி எஸ்.பி.ஏ.அஸிஸ், ஹாஜி ஜெய்னுல் ஆப்தீன் போன்றோர்
Page 142
928O
ஒன்று சேர்ந்து ஊர்மக்களின் பெரும் உதவியோடு அழகிய புதுப்பள் ளியைக் கட்டி முடித்துள்ளனர்.
1977ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு1982ஆம் ஆண்டு ஜாமியுல் அன்வர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இப்பள்ளி,கட்டி முடிக்கப் பட்டது. மார்க்கப்பற்றுமிக்க இவ்வூரில்இன்று புதிய பள்ளிவாசலும், பழைய பள்ளிவாசலும் வேறு மூன்று தைக்காக்களும் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கின்றன. சரிப்தீன் ஆலிம், தம்பிராஜா ஆலிம், கவுஸ் ஆலிம் போன்ற பெரும் ஆலிம்கள் பிறந்த ஊர் இது.
சரிப்தீன் ஆலிம் அவர்களை இன்றும் கெக்கிராவ மக்கள் மறக்க வில்லை. தம்பிராஜா ஆலிம் மினுவாங்கொடையில் பெரும் கண்ணி யத்துடன் மதிக்கப்பட்டவர், கவுஸ் ஆலிம் மாத்தளை டவுன் பள்ளி கதீபாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர். இன்றும் இவ்வூரில் மார்க்க அறிவு நிறைந்த,உயர் பண்புகள் கொண்ட பல ஆவிம்கள் வாழ்கின்றனர். மார்க்கச் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் நிக்க கொல்லை ஜும்ஆபள்ளியின் கதீப்களாக நீண்டகாலம் சேவையாற்றி யுள்ளனர். இது நிக்ககொல்லையின் ஒரு சிறப்பு. இக்கதீப்புகள் மார்க் கப் பணிக்காக எவ்வித ஊதியமும் பெறாமல் இருந்தது அவர்களின் தனிச்சிறப்பு.
உயர் பண்புகளும் சமூகப்பற்றும் உடைய அல்ஹாஜ் ஏ.அப்துல் அசீஸ் ஆலிம் அவர்கள் 1937 ஆம் ஆண்டிலிருந்து அண்மைக் காலம் வரை இவ்வூர் கதீபாகவும் முஸ்லிம் விவாக பதிவுகாரரர்கவும்"சிறப் பாக.சேவையாற்றி உள்ளார்கள். இவர்கள் மார்க்க விஷயங்களில் மிக கண்டிப்பானவர்கள். இவர்களுக்கு முன்னால் இவர்களின் தந்தை மர் ஹ9ம் ப.ஆப்தீன் லெப்பை அவர்கள் இவ்வூர்கதீபாக கடமையாற்றி யுள்ளார்கள். ஆப்தீன் லெப்பைக்கு முன்னால் அவர்களின் தந்தை மீ.உதுமான் லெப்பை கதீபாகச் சேவையாற்றியுள்ளார்கள்.
நிக்ககொல்லைப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடசாலை 1910ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பெப்டிஸ்ட் பாடசா
98.
லையாகும். கிறிஸ்தவ மிஷனரி சங்கங்களால் நடத்தப்பட்ட இப்பாட சாலையில் கிறிஸ்தவப் பாதிரிமார்களும் படிப்பித்தனர். இங்கே கட மையாற்றிய சிறந்த ஆசிரியர்களுள் ஒருவராக திரு டேவிட் மதிக்கப்ப
டுகின்றார்.
இங்கு ஐந்தாம் வகுப்பு வரையுமே வகுப்புகள் இருந்தன. அதன் பிறகு படிப்பதென்றால் ஒன்று மாத்தளைக்குச் செல்லவேண்டும் அல் லது பலாபத்வலைத்தமிழ்ப்பாடசாலைக்குச்செல்லவேண்டும். பலா பத்வன்ல தமிழ்ப் பாடசாலையில் திரு. ஏ.ஆர்.சுப்பிரமணியம் என்ற, ஒரு சிறந்த ஆசிரியர் கடமையாற்றியிருக்கிறார். இன, சமய வேற் றுமை பாராது சேவையாற்றிய திரு. ஏ.ஆர்.சுப்பிரமணியம் ஆசிரிய ரைப் பற்றி பலாபத்வல பாடசாலையில் படித்து பரீட்சையில் தேறி, நிக்ககொல்ல கிராமத்தின் முதல் ஆசிரியராக நியமனம் பெற்ற, நிறை அறிவும் உயர் பண்பும் மிகு "பெரிய சேர்” அல்ஹாஜ் கே.நஜும்தீன் அதிபர் அவர்கள் மிக உயர்வாக இன்றும் பேசுவார்கள்.
படிப்பித்ததுடன்நிறுத்திவிடாது ஹாஜிநஜ"ம்தீன் அவர்களுக்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி நேர்முகப் பரீட்சைக்குக் கடிதம் வந்த போது, அவரைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று, தொழுகை நேரங்களின்போது அவரை வெள்ளவத்தைப் பள்ளிக்கும் அழைத்துப் போகும் திரு. ஏ.ஆர்.சுப்பிரமணியத்தை, அவர் இன்றும் மறக்க வில்லை; முஸ்லிம் சமூகமும் இத்தகையோரை மறக்கக் கூடாது.
ஆரம்பத்தில் இருந்தே ஒரளவு பண வசதியுள்ளவர்களாக நிக்க கொல்லை மக்கள் பலர் இருந்தபடியால், மாத்தளை ஸாஹிரா கல்லூ ரிக்குத் தம் பிள்ளைகளை அனுப்புவது அவர்களுக்குக் கஷ்டமான விஷயமாக இருக்கவில்லை. எனவே நிக்க கொல்லையைச் சேர்ந்த பல மாணவர்கள் ஸாஹிராவில் ஆங்கில மொழி மூலம் படித்தனர். சிலர் தமிழ் மொழி மூலம் படித்தனர். ஆங்கில மொழிமூலம் படித்து முதல் பட்டதாரி ஆனவர் ஜனாப் வை.எல்.எம்.ஜலில்ஆவார். ஜனாப் ஏ.ஏ.எம்.ஜலிலும் ஆரம்ப பட்டதாரிகளில் ஒருவராவார்.
இவ்வூரின் முதல் வழக்கறிஞர் என்ற பெருமை ஜனாப் ஏ.ஏ.எம். இல்யாஸ் அவர்களையே சாரும்.
Page 143
989
1958 ஆம் ஆண்டு நிக்ககொல்லையில் முதல் முஸ்லிம் பாட சாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையின் உயர்வுக்கு காரண மாக இருந்த ஒர்அதிபர்அல்ஹாஜ் எச்.எம்.இல்யாஸ் அவர்கள் ஆவார் கள். 1977 ஆம் ஆண்டு இப்பாடசாலை மகாவித்தியாலயமாக தரமு யர்த்தப்பட்டது. கல்வி பொதுத்தராதர உயர்தர வகுப்புகளும் ஆரம் பிக்கப்பட்டன.
இன்று மாத்தளை ஸாகிராவிலும் நிக்ககொல்லை மின்ஹாஜ் மகாவித்தியாலயத்திலும் படித்த பல மாணவ, மாணவிகள் பல்க லைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கின்றனர். பலர் ஆசிரியர்க ளாக, வங்கி அதிகாரிகளாக,இளம் பொறியியலாளர்களாக சேவை செய்து கொண்டிருக்கின்றனர். ஜனாப் ஏ.எம்.எம்.அப்ளர்தீன் என்ப வர் கெய்ரோசர்வகலாசாலையில் படித்துபட்டம் பெற்று, இப்போது மாலைத்தீவுகளில் ஒரு விரிவுரையாளராக கடமையாற்றுகின்றார். மெளலவிதாஹா அவர்கள் இப்பகுதியில் ஒரு புகழ்பெற்ற மெளலவி யாகத் திகழ்கிறார்கள்.
அளுத்கம
அளுத்கம, மாத்தளை வடக்கு, உடுகொட பள்ளேசியப் பத்து வில் அமைந்துள்ளஒரு கிராமமாகும். இதுவஹகோட்டைக்கு அருகா. மையில் உள்ளது. 1871ஆம் ஆண்டிலேயே இங்கு முஸ்லிம்கள் வாழ்ந் திருக்கின்றனர் என்பதற்கு ஏ.ஸி.லோறியின் நூல் ஆதாரமாக இருக்கி D51.
இங்கு ஆரம்பத்தில் குடியேறியவர்கள் வியாபாரத்துக்காக இலங்கை வந்த இந்திய வியாபாரிகளே. அவர்களின் சந்ததியினர்கள் இன்றும் இங்கும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். 1921 ஆம் ஆண்டு இங்கு எழுபது முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர். இவர்களில் ஒருவர் மாத்திரமே இலங்கை முஸ்லிம்; ஏனைய அறுபத்தொன்பது பேர்களும் இந்திய முஸ்லிம்களின் சந்ததியினர்ே இன்றும் இங்கு வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்திய வம்சத்தினரே!
ஆரம்பத்தில் இருந்தே, இங்கு வாழுகின்ற முஸ்லிம்களின் பிர
983
தான தொழிலாக வியாபாரம் அமைந்திருக்கிறது. இன்றும் அதே நிலைதான் நீடிக்கின்றது. ஆனால் இப்போது ஒரு சிலர் புகையிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பான்மையான அளுத்கம முஸ்லிம்கள்,புகையிலை வியாபாரத்தையே தம்முடைய தொழிலாக கொண்டிருக்கின்றனர். இன்று ஒரு சில அளுத்கம முஸ்லிம்கள் மாத் தளை, கலெவெல போன்ற நகரங்களில் கடைகள் வைத்துள்ளனர்.
இவ்வூரில் பழைமையான ஒரு ஜும்ஆ பள்ளிவாசல் இருக்கின் றது. இந்த பள்ளிவாசலோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒரு வர் “தேத்தண்ணி" அப்பா என்றழைக்கப்படும் ஒரு பெரியார் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அரபு நாடொன்றில் இருந்து இங்குவந்த இப்பெரியார் அளுத்கமயிலேயே தங்கி இவ்வூர் மக்களின் ஆத்மீக நலன்களைக் கவனித்துக் கொண்டும், மார்க்கப் பிரச்சாரம் செய்துகொண்டும் இங்கு வாழ்ந்திருக்கிறார். காலைநேரத் தொழுகைக்கு வரும் மக்களுக்குத் தேனீர்தயாரித்து கொடுக்கும் வழக் கம் இவருக்கு இருந்ததால் இப்பெரியாரை இவ்வூர் மக்கள் "தேத் தண்ணிமெளலானா' என்று அன்போடு அழைத்திருக்கின்றனர்.
காலப்போக்கில் இது தேத்தண்ணி அப்பா என மாறிவிட்டது எனகூறப்படுகின்றது. இந்த ஊரிலேயே இறைவனடி சேர்ந்த இப்பெ ரியாரின் ஸியாரம், இப்பள்ளிக்கருகாமையில் இருக்கிறது. இம்மகா னின் பெயரில் கந்தூரி ஒதும் வழக்கம் இங்கு நெடுங்காலம் இருந்தது. முன்னர் தேனிர் கொண்டு போய் இங்கே பாத்திஹா ஒதும் வழக்கம் பரவலாக இருந்தது.
ஆரம்பத்தில் இங்குள்ள மக்கள் பக்கத்திலே இருந்த மனன்வத்த எனும் ஊரில் இருந்த சிங்கள பாடசாலையிலேயே கல்வி கற்க வேண்டி இருந்தது. அப்படி சிங்களம் கற்றவர்களில் ஒருவர் இன்று ம்ாத்தளையில் வாழும் அபூசாலி ஹாஜியார் என்பவராவார். சிறிது காலம் வரை இவர் இலங்கை பொலிஸ் சேவையில் கடமையாற்றி னார். பின்னர் மனன்வத்த சிங்கள பாடசாலையில் ஒரு தமிழ்ப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் ஒரு சில முஸ்லிம்கள் மாத்திரமே தம்முடைய பிள்ளைகளை இப்பாடசாலைக்கு அனுப்பினர்.
Page 144
284,
இப்போது இங்கு ஒரு முஸ்லிம் பாடசாலை இயங்கிக் கொண்டு இருக்கின்றது. இவ்வூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் பெண்கள்ஆசிரி யைகளாக நியமனம் பெற்றுள்ளனர். மூன்று பேர் பல்கலைக்கழகத் தில் படித்துக் கொண்டு இருக்கின்றனர். இவ்வூரை சேர்ந்த ஜனாப் யூ.எல்.எம். ஹனீபா என்பவர் பிரதேசசபை உறுப்பினராக சேவை யாற்றுகின்றார்.
ஆதாரக் குறிப்புகள்
1. A.G.A. Matale - Administrative Report - 1901 2. A.C. Lawry - Gazetteer of the Central province of Ceylon.
3. ibid | 4. bid 5. ibid 6. bid
7 bid
8. Census Report - 1921 9. A.C. Lawry - Gazetteer of the Central Province of Ceylon. 1O. bid 11. History of Matal 12. AC.Lawry - Gazetteer of the Central Province of Ceylon
13. bid
14. loid
15. bic
16. bid
17. bid 18. S.M. Haniffa - The Great Son
19. bid 2O. A.C. Lawry - Gazetteer of the Central Province of Ceylon 21. bid
22. bid
23. biC
24. A.G.A Matate - Administrative Report - 1921 25. AGA Matate - Administrative Report - 1912 26. AGA Matate - Administrative Report - 1921 27. AGA Matate - Administrative Report - 1899
நன்றி
இந்நூலுக்குத் தேவையான விவரங்களைத் திரட்டும் முயற்சியில் நான் ஈடுபட்டபோது எனக்கு பலர் உதவிநல்கினர். சிலர் விவரங்கள் திரட்டித் தந்தனர்; சிலர் தேவையான நூல்களைப் பெற்றுத்தந்தனர்; வேறு சிலர் அரிய புகைப்படங்கள் சிலவற்றைத் தந்துதவினர்; பலர் நான் அவர்களைச் சந்திக்கச் சென்ற நேரம், அவர்களுக்கு வசதியாக இருந்ததோ இல்லையோ, அதைப் பற்றிக் கவலைப்படாது, என் னோடு அமர்ந்து மிக மகிழ்ச்சியோடு, தமக்குத் தெரிந்த விவரங்களை என்னிடம் கூறினர். இத்தகைய உதவிகள் கிடைக்காது இருந்திருந்தால் இந்நூல் இந்தளவு சம்பூரணமானதாக இருக்காது. எனவே இவர்கள் அனைவரையும் என் மனக்கண் முன் சற்று நிறுத்துகின்றேன்; என் மனப்பூர்வமான நன்றியினை அவர்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன். இப் பணியில் எனக்கு உதவி நல்கியவர்களின் பெயர்களைத் தருவதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
மாத்தளை
ஹாஜி ஏ.எம். சபீக் ஜனாப் கே.எம். அபுசாலி O ஜனாப் எம்.ஏ.எம். சுக்ரி ஜனாப எஸ்.எம. அபுல ஹஸன திரு கே. கணபதிப்பிள்ளை ஹாஜி எச்.எம். அப்துல் ஹஸன் ஜனாப் என். சம்சுதீன் திருமதி பி. அருணாசலம் ஹாஜி ஏ.எச். சஹ"ர்தீன் ஜனாப எச.எல. அருஸ் ஹாஜி எம்.எச்.ஏ. சத்தார் ஹாஜி எம்.எச்.எம். அனஸ் ஹாஜியானி எஸ்.யு. சத்தார் ஜனாப ஓஅஹமது O. O. ஜனாப் எம்.எஸ்.ஏ. சத்தார் ஜனாப எஸ்.எம. அஷரப ஹாஜி எம்.எச்.ஏ. சக்கூர் ஜனாப் எம்.ஐ.எம். இம்தியாஸ் ஜனாப் டி.எம்.ஏ. சாலே ஹாஜி எம்.ஐ.எச். இனூன் ஹாஜி எஸ்.எம். சால்தீன் ஹாஜி பி.டி. இஸ்ஸதீன் ஜனாப் ஏ.எம். சலாம் ஜனாபா எஸ்.என். சம்சுதீன் திரு எஸ். சந்திர சேகரம் ஜனாப் எஸ்.எச்.எம். கபீர் திரு எம். சிவஞானம்
Page 145
திரு டி.எம். சிங்கராஜ் ஜனாப் எஸ். சாரூக் ஜனாப் ஏ.எச்.எம். சிராஜ் ஜனாப் எம்.சி.எம். தாஜுதீன் ஜனாப் எம்.டி.எம். பாயிஸ் ஹாஜி எம்.கே. யூசுப் ஜனாப் ஏ.டபிள்யு.எம். நிஹாஸ் ஜனாப் ஓ.எம். மஹ்றுப் ஹாஜி ஏ.சி. மூஹ்சின் ஹாஜி ஏ.ஜி. மூஸா ஜனாப் ஏ.எச்.எம். ரபாய்தீன் ஜனாப் எஸ்.எம். ரிஸ்வி மெளலவி ஏ.ஆர்.எம். ரிஸ்வி ஜனாப் எம்.ஐ.எம். ரியால் ஜனாப் ஏ.டபிள்யு.எம். ரஸ்மார் திரு எம். ராஜரட்னம் ஹாஜி எம்.எச்.ஏ. லத்தீப் ஹாஜி எஸ்.எச்.ஏ. வதூத் ஹாஜி ஏ.எஸ்.எம். வசீர் ஹாஜி பி.ஏ. வாஹிட் ஜனாப் எம்.ஆர். விசுறுல் லாபி ஜனாப் என்.எம். புவாத் ஹாஜி ஏ.ஏ. ஜுவைஸ் ஹாஜி எம்.ஏ.எஸ்.எஸ். ஹமீத் ஹாஜி எச்.ஏ. ஹனான் ஜனாப் எஸ்.எம். ஹஸன் ஜனாப் ஏ.ஆர். ஜவுபர் சாதிக் ஹாஜி ஏ.எஸ்.எம். ஜாபிர் ஜனாப் எம்.எச். ஜெய்னுதீன் ஹாஜி எஸ்.எச்.எம். ஜாஹிர் ஜனாப் ஜெ.எம். ஜிப்ரி ஜனாப் எம்.எஸ்.எம். ஜுல்பிக்கார் அல்ஹாஜ் ஏ.ஏ. ஜுனைத் ஆலிம் அல்ஹாஜ் ஜே.ஏ. ஜவுஹர்தீன்
கண்டி ஹாஜி எம்.சி.எம். இலியாஸ்
கல்ஹின்னை
கவிமணி ஜனாப் எம்.சி.எம். சுபைர் கவிஞர் ஜனாப் எச்.எம். ஹலிம்தீன்
வரக்காமுற மெளலவி அல்ஹாஜ் எம். அஸ்ஹர் ஜனாப் யு.எல். தவ்பீக் ஜனாப் ஓ.எல்.எம். ரவுட் ஜனாப் எம்.ஐ.எம். மஃபூல் ஜனாப் ஓ.எம். ஜாபிர் ஹாஜி ஓ.எம். ஜாஹிர் ஜனாப் எம். ஹாரிட் மாபேரிய, பரகஹவெல ஜனாப் எம். ஐனுத்தீன் ஜனாப் எம். சலாஹாத்தீன் ஹாஜி ஏ.எச்.எம். முகுத்தார் ஜனாப் எஸ்.ஏ. ரபாக் ஜனாப் எஸ்.எச்.ஏ. லத்தீப் ஹாஜி ஏ.எம். ஹாஷிம் மாருக்கோன ரைத்தாவளை ஹாஜி எம்.எஸ்.எம். அப்துல்லா ஹாஜி ஏ.சி.எம். சல்மான் ஜனாப் எம்.கே.எம். ராசிக் ஜனாப் எஸ். ஜலீல் ஜனாப் எஸ்.எச்.எம். ஹாஷிம்
மானாம் பொடை
ஜனாப் ஏ.எல்.எம். ராசிக் ஹாஜி என்.எம். இல்யாஸ் ஜனாப் எஸ். ஜுனைத்
ஜனாப் யு.எல்.எம். ராசிக்
உள்பொத்தபிட்டிய ஹாஜி முகம்மது ஹனிபா லெப்பை ஜனாப் ஏ.எஸ்.ஏ. பரீட் ஜனாப் எம்.எச்.ஏ. ரஹீம்
கோட்ட கொட
ஜனாப் ஏ. அப்துல் ரஹ்மான் ஜனாப் என்.எம். இப்ராஹிம் ஜனாப் எம்.எம். ஜவாஹிர் ஜனாப் எம்.கே. அபுல் ஹஸன் ஹாஜி ஜெ.எம். ராசிக் ஹாஜி எஸ்.எம். சுபைர் நிக்கவட்டவான ஜனாப் எம்.ஐ.ஏ.ஹஸன் ரன்வெடியாவ, தேவாஹ*வ, நமட கஹவத்த
ஹாஜி ஏ.அப்துல் முத்தலிப் ஜனாப் ஏ.அப்துல் முனாப் ஜனாப் ஏ.எம்.தாஜுதீன் மெளலவி எம்.சி.முர்சலின் ஜனாப் எம்.ஜெய்னுல் ஆப்தீன் ஜனாப் யு.எல்.எம்.சித்தீக், மாதிப்பொல, எலமல்பொத்த
ஹாஜி எஸ்.எம்.இஸ்ஸாக் ஜனாப் டி.உசைன் மீரா சாஹிபு ஜனாப் ஏ.ஆர்.எம்.சர்தார் ஜனாப் ஆர்.எம்.சஹாப்தீன் ஜனாப் ஏ.ஸி.எம்.முனாஸ் ஜனாப் எம்.எஸ்.முஹ்சீன்
Page 146
ரத்தொட்ட
ஹாஜி எம்.ஜி.எம். இஸ்மாயில் ஜனாப் அப்துல் வஹாப் ஹாஜி கே. நஜ"ம்தீன் ஜனாப் எம்.எம். நஸார்தீன் ஹாஜி எம். ராஸிக் ஜனாப் ஏ.டபிள்யு.எம். ராசிக்
ஜனாப் என்.பி.எம்.இக்பால் ஹாஜி ஏ.எச்.எம்.பாச்சா ஜனாப் ஏ.ஏ.ஜலீல் ஜனாப் ஜே.முஸ்தபா ஜனாப் எஸ்.எச்.ஹாஜா மொஹிதீன்
நிக்ககொல்ல மெளலவி என்.எம். லரீப்
ஜனாப் எம்.ஜி.எம். லாபிர்
ஹாஜி. ஏ.அப்துல் அஸிஸ் d () & 8
ஜனாப் எம். ஜ"ஹார்த்தீன்
ஹாஜி. எஸ்.பி.ஏ.அஸிஸ்
மனிதனுக்கு நன்றிகூறாதவன் இறைவனுக்கு நன்றிகூறியவனாக
மாட்டான் என்பது ஹதீஸ். மாத்தளை மாவட்ட முஸ்லிம்களைப் பற்றிய விவரங்களைத் திரட்டுவதற்கு நான் முற்பட்டபோது, நிக்க
வட்டுவான, நாலியகனத்தரன்வெடியாவஆகிய மூன்று கிராமங்களுக்
குப் போகவில்லை. ஆனால் அக்கிராமங்களோடு தொடர்புடைய
பலரைச் சந்தித்து உரையாடினேன். மாத்தளை மாவட்டத்தில் உள்ள ஏனைய அத்தனை முஸ்லிம் கிராமங்களுக்கும் நேரடியாக சென்றேன்.
நூற்றுக்கணக்கான சகோதரர்களைப் பள்ளிவாசல்களிலே, பள்ளிக்
கூடங்களிலே, தனிப்பட்ட வீடுகளிலே, கடைகளிலே, பாதைகளிலே
சந்தித்து உரையாடினேன். அனைவரும் தமக்குத் தெரிந்தவற்றைக்
கூறினார்கள். இப்படி எனக்கு தகவல்களைத் தந்த அத்தனைப் பேர்க
ளின் பெயர்களையும் குறிப்பிடுவது இயலாதது. பெயர்கள் குறிப்பி டப்பட்டிருந்தாலும் சரி, குறிப்பிடப்படாது இருந்தாலும் சரி, இச்சமு தாய பணிக்கு உதவிய அனைவர் மீதும் தன் பேரருளைப் பொழிய வேண்டுமென்று எல்லாம் வல்ல அல்லாஹ்வைச்சிரம்தாழ்த்தி வேண் டுகின்றேன். இது ஒன்றே நான் அவர்கள் அத்தனைப் பேர்களுக்கும் செய்யக்கூடிய கைமாறு.
ஏ.ஏ.எம். புவாஜி
Page 147