கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் கண்ட நவசீனா

Page 1

றிஞர் ஜே.பெர்குல்
66

Page 2

நான் கண்ட
ந வ சீனு
ஆக்கியோன் கே. வைகுந்தவாசன்
விஞ்ஞானப் பேரறிஞரும், உலக சமாதானக் கவுன்ஸில் உப-தலைவருமான
திரு. ஜே. டி. பெர்னல், F, R. S.
அவர்கள் முகவுரை கொண்டது.
விற்பனை உரிமை சிந்தனைப் ப திப்பகம் 27, பேந்தியன் சாலை,
GFarkT-8,

Page 3
முதற்பதிப்பு டிசம்பர், 1953
சமர்ப்பணம்
இலங்கை - சீன வர்த்தக ஒப்பக்
தத்தை உருவாக்கத் துணை புரிந்த சக்திகளுக்கு இக்நூல் சமர்ப்பணம்.
உரிமையுடையது

முகவுரை
இந்நூலாசிரியர் ஒரு பெரும் அதிர்ஷ்டசாலி. மூன்று மாத காலத்திற்குள் உலகின் பெரும்பகுதி மக்கள் வாழ்க்கை முழுவதிலும் கண்டதைவிட, இவர் அதிகம் கண்டிருக்கிருரர். இப்பெரும்பான்மை மக்களில் நானும் அடங்குவேன். உலக வரலாற்றின் ஓர் முக்கியமான கட்டத்தில் சீன, சோவியத் 5ாடுகளைப் பார்த்தும், இரு சமாதான மாகாடுகளில் பங்கு கொண்டும் இவர் பெற்ற அனுபவம் பெரிதும் போற்றற் பாலது. ஆனல் அனுபவத் தின் அனுகூலம் அதை அனுபவிக்கும் ஒருவரின் நுண்ண றிவைப் பொறுத்தும், அவர் குறிக்கோளைப் பொறுத்தும் தான் பயனளிக்கும்.
அனுபவம் வாய்ந்த அனேக சுற்றுப் பிரயாணிகளை விட திரு. வைகுந்தவாசன் கண்டவற்றைத் தெளிவாகவும் அழகுடனும் விளக்குகிருர், இலங்கை தூதுக் குழுவி னர்க்கோ, அன்றி தனக்கோ தனிப்பட்ட முறையில் நன்மை பயப்பதற்காக இந்தப் பிரயாணம் மேற்கொள்ளப் படவில்லை என்பதையும், இலங்கைப் பொது மக்கள் தம் அனுபவத்தைப் பெறவேண்டும் என்னும் நோக்கத் துடன் தான் பிரயாணம் தொடங்கப்பட்டது என்பதையும் கன்கு உணர்ந்திருக்கிருர், இப்பிரயாணம் நமக்குப் படிப் பிக்கும் பாடங்கள் வெள்ளிடைமலை போல் விளங்குகின் றன. உலக சமாதானத்தைவிட சீன, ருஷ்யா மக்கள் முழுமனதோடு ஆசிக்கும் பொருள் வேறு ஒன்றில்லை என்பதை இவர் கண்ட காட்சிகளும், சமாதான் மாநாடுகளும் எடுத்துக் காட்டுகின்றன. சமாதானம் நிலவினல் தான் தங்கள் காடுகளை சிறப்பான முறையில் புனருத்தாரணம் செய்ய முடியுமென்பதையும், மனித சமுதாயத்தை-இயற்கையை மாற்றியமைப்பதன் மூல மாக எழில் மிக்க, எல்லையற்ற வளம் பெற்ற வாழ்க் கையை நிர்மாணிக்க முடியும் என்பதையும் சீன, சோவிய மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
இத்தகைய மகோன்னத சமுதாயத்தைப் படைப் பதற்கு வேண்டிய ஆற்றல் சீன, சோவியத் மக்களிடம் உண்டு என்பதைத் தாம் கேரில் கண்டவைகளைக் கொண்டு

Page 4
V7 விரிவாக விளக்குகிருர் திரு. வைகுந்தவாசன். அரசியல், பொருளாதாரத் துறைகளில் ஏகாதிபத்யப் பிடிப்பகற்றி, முன்னுளில், "தாழ்வுற்று, வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு" நின்ற எந்த நாடும் துரிதமாக முன்னேறி, இத்தகைய ஒர் புது 5ாகரிகத்தைப் படைக்க முடியுமென்ற அறிவை இந்த அனுபவம் எடுத்துக் காட்டுகின்றது. இவ்வறிவு, பத்துக் கொழும்புத் திட்டங்கள் 15மக்கு அளிக்கக் கூடிய பலன்களிலும், அதிகப் பலன் கல்கக் கூடியது.
சோவியத் நாடுகளில் ஜார்ஜியா என்ற சிறு குடி அரசை இலங்கையுடன் ஒப்பிட்டு, ஒரு சிறிய நாடு கூட எவ்விதம் தன்னுடைய தனிப்பட்ட கலாச்சார வளர்ச்சியை, சோஷியலிச தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு அமையப் பெற்ற குடியரசுகளுடன் சேர்ந்து சாதித்தது . சாதிக்க முடியும் - என்ற உண்மையை உணர்ந்ததுதான் திரு. வைகுந்தவாசன் இந்தப் பிரயா ணத்தில் பெற்ற கடைசி அனுபவம். ஜார்ஜிய குடியரசின் தேயிலைத் தோட்டங்கள் பற்றிய விவரங் களும், குடியரசின் கூட்டுப்பண்ணைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கை வளமும் என் மனதில் நிலை பெற்று விட்டது. இலங்கைத் தோட்டத் துரைமார் பங்களாக்களில் நடத்தும் டாம்பீக வாழ்க்கையும், அதற்கு மாருகத் தோட்டத் தொழிலாளர்கள் வாழும் குருவிக் கூடுகளில் நிலவும் வறுமையும் இன்னும் என் மனத் திரையில் காட்சி அளிக்கின்றன. அழகின் சிகரமாக விளங்குகின்ற இலங்கை நாட்டின் பெரும் பொருள் வளம் அத்தனையும் அந்நாட்டு மக்களுக்காகப் பயன் பெற்றுப் பொலியும் அவ்வின்பக்காட்சி எப்படி யிருக்கும் என்று நான் எண்ணிப் பார்த்தேன். அங்கன் ஞள் வெகு தூரத்தில் இல்லை என்பதைப் பற்றி எனக்கு எவ்வித ஐயமும் கிடையாது. அம் முறையில் நாட்டை Rர்மாணிக்க விரும்புவோர் பிற5ாடுகளின் அனுபவங்களை அறிந்திருப்பவர்களாக விளங்க வேண்டியது அவசியம். அத்தகையோருக்குச் சிறந்த முன்னுரையாக இந்நூல் விளங்கும். - இலண்டன்,
5, மார்ச் 1953. ஜே. டி. பெர்னல்.

ஆசிரியர் குறிப்பு
நவ சீனத்திலும், சோவியத் நாடுகளிலும் மூன்று மாத காலமாகக் கண்டு, கேட்டுப் பெற்ற அனுபவங்களைப் பற்றி அவ்வப்போது குறிப்புக்கள் எடுத்து வைத்திருக். தேன். அவைதாம் இந்நூலமைவதற்கு அடிப்படை. நவ சினத்திற்கோ அன்றி சோவியத் நாடுகளுக்கோ போய்வந்த எந்தத் தமிழரும் தமது அனுபவத்தை நூலாக எழுதி வெளியிடவில்லையே என்ற குறையைப் போக்குவதற்காகவே இந்நூலே எழுதினேன். இன்ற்ைய நிலையில் இத்தகைய ஓர் நூல் மிகவும் அவசியம் என்று நான் எண்ணுகிறேன். இச்சிறு நூலைத்தான் நான் கடந்த சில வாரங்களில் உருவாக்கினேன். நான் எடுத்த குறிப்புக்களைத் தகுந்த முறையில் ஒழுங்கு படுத்தப் போதிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்க வில்லை. அதுமட்டுமல்லலாமல், அவற்றை கான் அப்படிச் செய்து முடிக்கவும் கருத வில்லே. ஏனென்ருல், இந்நூல் எந்த ஒரு தனிப் பொருளையும் பற்றிய விரிவுரையோ, விளக்க வுரையோ அல்ல. சுற்றுப் பிரயாண ஒழுங்குப்படி தினசரி நான் கண்டவற்றையும், நான் அங்கு என்ன செய்தேன் என்பதையும் விளங்க வைக்கும் ஒரு முயற் சியின் உருவமே இந்நூல். ஆகையினல், ஒரு பொருள் பற்றி பல முறை எழுத வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு கான் ஆளாகியுள்ளேன்.
இலங்கையின் பிரதிேயாக பீக்கிங் சமாதான மாநாட்டிலும், வியன்ன சமாதானக் காங்கிரசிலும் பங்கு பற்றிய அனுபவங்கள் பற்றி விளக்க இந்நூலில் ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளேன். இந்நூல் சீன மக்கள் குடியரசையும், சோவியத் நாடுகளையும் சரிவர உணர்ந்து கொள்ளப் பெரிதும் துணை புரியுமென்று நம்புகின்றேன்.
இலண்டன்,
28, ஜனவரி 1953 கே. வைகுந்தவாசன்.

Page 5
பதிப்பு  ைர தமிழில் பிரயாண நால்கள் பெருக வேண்டுவது அவ சியம். பிரயாணம் கல்வியின் ஒரு பகுகியாகும். இக் கருக்தை முக்கியமாகக் கொண்டு நண்பர் திரு. வைகுந்த வாசன் ஆங்கிலக்கில் எழுதிய நூலின் ஒரு பகுதியை வெளியிடுகிருேம்.
கிரு. வைகுந்தவாசன், இலங்கை அரசாங்க ஊழியர் சங்கக்கின் பொதுச் செயலாளராகக் கடமையாற்றியவர். முற்போக்கான சண்ணங்களேக் கொண்டிருந்தவர் என்பதற் காகவும், அரசாங்க ஊழியர் நல உரிமைகளுக்காகப் போராடி பதற்காகவும், அரசாங்கப் பதவியிலிருந்து நீக்கப் பட்டவர். அரசாங்கப் பணியில் பத்து ஆண்டுகள் கொண்டாற்றியவர். * மக்கள் குரல்" என்ற ஆங்கிலக்கிழமை இகழ் ஒன்றை ஆசிரியராக இருந்து நடக்கியிருக்கிருர்,
சிய, பசிப்பிக் சமாதான மாநாட்டின் அனேக் காரிய தரிசியாகவும், 1952-ம் ஆண்டில் வியன்னுவில் கடக்க சமா தானக் காங்கிரஸிற்கு, இலங்கைப் பிரசிங்கிகளில் Soyal 5 அம் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கடமை புரிந்தவர்.
இவர் சீனு, சோவியக் யூனியன், இலண்டன், பாரசீகம், சோம், எகிப்து ஆகிய இடங்களேப் பார்த்து வந்திருக்கிருர். இத்தமிழ் மொழிபெயர்ப்பைச் செய்து கொடுக்க கண்பர் கிரு. வ. பொன்னம்பலம், பி. ஏ. (ஆனர்ஸ்) அவர்க ளூக்கும், இதனேச் சரி பார்த்து உதவிய நண்பர்களுககும் எங்கள ஆதி உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளு கிருேம்,
இந்நூலே அழகிய முறையில் கொண்டுவர உதவி புரிந்த விநோதன்' அச்சகக் கொழிலாளர் சகோதரர்களுக் கும், வேறு பல வழிகளில் தக்க ஆலோசனேகள் تفكك تلميذه الأمر حتى புரிந்த விநோதன்' ஆசிரியை பண்டிகை. சா. சங்கநாயகி அம்மையார் அவர்கட்கும் எங்களது அன் புகனிந்த நன்றி யைக் தெரிவித்துக் கொள்ளுகிருேம்.
°′′′ முன்னணி வெளியீட்டகத்தார்.

|- |- .|- | –
|- ( - ( ) 그 |-
|-
| ,o :- "3니7A목역&업TEu原定ArT 民國-事gourr;七e忌吃│ │ │ │
- |-|- ! , -)p : |- - - - -r「T*T|-No sr.*sı | _ | sortos@legole ogsæHņās (gog, șofo priu-gae
『eシg grdQシ
|-
· @o@ gi-age; I) otorrig, seo, go , (, , , , , , ,|-
| ( )
, , .

Page 6
SuSuSuuSuuSuSuSuuSuuSuSuSuuSuSuSuuSuuSuSuSuuSuuuSuuu SuSuSuSuSuuSuSuSuSuuSuSuuSuSuSuuSuSuSuuSuuSuuSu
, یا -
šį
يستطي
s
2
그r
ಇನ್ನು:
R
NI
སྐྱེ་
སྒྲི
 
 
 
 

சீனுவுக்குப் புறப்பாடு
1952-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிக்கிங்கில் நடந்த ஆசிய பசிபிக் காடுகளின் சமாதான மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை அாதுக் குழுவினரில் ஒரு வராக நான் சென்றது, கவசீனத்தைப் பார்க்க எனக்கு வாய்ப்பளித்தது. இலங்கைத் தூதுக்குழுவைச் சேர்ந்த பத்து உறுப்பினரும் ஒன்று ய் பிரயாணமாகப் பல இடை யூறுகளால் முடியாமற் போய்விட்டது. ஆாதுக்குழுவின் தஃலவர் சுவாமி நாராவில தம்மரத்தினுவும், பூரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான திரு எஸ். டி. பண்டார காயக்கா அவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரு என். சண்முகதாசனும், செப் டம்பர் மாதம் ஆகும் நாள் புறப்பட்டனர். என் மனேவி யும் நானும் செப்டம்பர் மாதம் 13-ம் நாள் புறப்பட்டோம். குழுவினரில் ஏனேயோரான லங்கா சமசமாசக் கட்சியைச் சேர்ந்த திருவாளர்கள் டி. பி. ஆர். குணவர்த்தணுவும், வி. கிக்கடுவகேயும், டாக்டர் என். எம். பெரை ராவைக் தலைமையாகக் கொண்ட சமசமாசக் கட்சியைச் சேர்ந்த எட்மன் சமரக் கொடி (இலங்கைப் பாராளுமன்ற அங் கத்தினர்), டா க் டர் கெ க் டர் பெர்ணுண்டோவும், கொழும்பு நகராண்மைக் கழக உறுப்பினரான இரத்தின விரா (கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் செப்டம்பர் 1, 15-ம் காட்களில் சீனு நோக்கிப் பிரயாணமாயினுர்,
மனேவியுடன் நான் இலங்கையை விட்டு வான மார்க்கமாகச் சென்னே வழியாகக் கல்கத்தாவிற்கு அடுத்த

Page 7
காட்காலை போய்ச் சேர்ந்தோம். "டம்டம்" என் ற கல்கத்தா விமான நிலையத்தில் எண்ணற்ற சீன மக்களைக் கண்டேன். விசாரித்த அளவில் அவர்கள் அனேவரும் தங்கள் தாய்நாட்டிற்கு, வெளிநாடுகளில் வாழும் சீன மக்களின் பிரதிநிதிகளாக அக்டோபர் முதல் 15ாளன்று பீக்கிங்கில் கொண்டாடப்படும் சீன தேசிய விழாவில் கலந்து கொள்ளப் போகிருர்கள் என்பதை அறிந்து கொண்டேன். பீக்கிங்கை கோக்கித்தான் காங்களும் புறப் பட்டோம் என்பது அறிந்து அகமகிழ்ந்தனர் அங்கு கூடிய ஒனமக்கள் அனைவரும். "இலங்கையில் வாழ்கின்ற சீன மக்களின் பிரதிநிதிகள் யாராவது பீக்கிங்கிற்குப் போகின்ருர்களா?” என்று அவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். சீனர் சிலரே இலங்கையில் வாழ்வின் றனர் என்றும், அவர்களுடைய பிரதிநிதிகள் யாராவது வந்தார் களா என்பதை நிச்சயமாக கான் சொல்ல. முடியவில்லை என்றும் கூறினேன். தென்கிழக்கு ஆசியப் பிரதேசத்தில் ஒரு கோடிக்குமேல் சீனர்கள் வாழ்கின்ருர்கள் என்று கேட்டு அதிசயமுற்றேன். வெளிநாடுகளில் வாழும் சீன மக்கள் தங்கள் தாய்காடாகிய நவ சீனத்திடம் கொண்டுள்ள எல்லையற்ற ஆர்வம் சீனம் போய்ச்சேரும் வரை என் சித்தனேயைத் தூண்டிச் சுடர்விடச் செய்தது. அன்று நண்பகல் பி. ஒ. ஏ. ஸி. (B. O. A. O) விமான மூல மாக மாலை இரங்கூன் வந்தடைந்தோம். அடுத்தகாட் காலை பிரயாணம் தொடர வேண்டும் என்ற காரணத் தினுல், அன்று இரங்கூன் பட்டினத்தையும், அடுத்துள்ள புகழ் பெற்ற புத்த கோவிலையும் பார்த்தோம்.
இலங்கை அரிசித் தூதர்
அடுத்த காட் காலை இலங்கை அரசாங்கத்தின் சார் பில் பர்மாவுக்குத் தூதராகச் சென்ற திரு. சுசந்தா டி -

3
டொன்சேகா அவர்கட்கும், பர்மா நாட்டில் உள்ள சீன காட்டுத் தூதுவர் அவர்கட்கும் இடையே நடந்த அன்னி யோன்னியமான உரையாடல் கண்டு பேராச்சிரியத்துள் மூழ்கினேன். முப்பது வயதிற்குட்பட்ட வசீகரமான சீனத்தூதுவரின் தோற்றம் என்னைப் பெரிதும் கவர்ந்தது.
இலங்கைக்கு அரிசி வாங்கும் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக இலங்கைத்தூதர் சினவுக்கு எங்களுடன் வருகிருர் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். அவர் விமானத்தில் எனக்கு முன்னிருந்த இடத்தில் வந்தமர்ந்தது மகிழ்ச்சியூட்டியது. கான் பர்மா, சீனு ஆகிய நாடுகளைப் பற்றியும், எல்லாவற்றிற்கும் மேலாக அரிசி வாங்குவது பற்றிய விபரங்களையும் அவ ரிடம் அறிய வேண்டும் என்ற பேரவா கொண்டிருந்தேன். ஆகையினல், அவர் வந்து எனக்கு முன்னமர்ந்ததைப் பெரிதும் வரவேற்றேன். இலங்கைச் சட்டசபையில் அவர் முன்னுள் உபசபாநாயகராக இருந்தவர். அந்த காட் களில் இலங்கை ஊழியர் சங்கத்தின் பிரதிநிதியாக அவரைச் சக்தித்துள்ளேன். அவர் வேலையுடன்-அரிசி யுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட சமாதானக் குழு வினரின் பிரதிநிதியாக காங்கள் சீனவிற்குப் போகின் ருேம் என்று கூறியவுடன், அவர் மனமார ச் சிரித்தார். நாங்கள் பல பொருள்களைப் பற்றி உரையாடிக் கொண்டே போனேம். முக்கியமாக, சீன பற்றியும், குறிப்பாக அரிசி பற்றியும் பேசினேம். அரசாங்க அலு வலாளர்கள் ஒரு சிலரிடமிருந்தும், அரசியல்வாதிகள் சில ரிடமிருந்தும் பலத்த எதிர்ப்பைத் தாம்' எதிர்பார்ப்பதா யும், எனினும் பீக்கிங்கில் நடத்தப் போகும் சீன அரிசி வியாபார ஒப்பந்தம் இறுதியாக வெற்றியடையும் என்று தாம் கம்பிக்கையுடனிருப்பதாயும் அவர் தெரிவித்தார். குறுகிய மூன்ருண்டு காலத்தில் சமூக அமைப்பையே

Page 8
4
மாற்றி, பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தி வெளிகாடுகளுக்குத் தன்தேவைக்கு மிஞ்சிய அரிசியை அனுப்பத் தகுந்த முறையில் கவசீனத்தை நல்வழிப் படுத்திய சீனப் பெருமக்களைப் பெரிதும் புகழ்ந்தார்.
பர்மாவின் நிலைமை திருப்தியற்ற நிலையிலுள்ள தாக அவர் தெரிவித்தார். பர்மாவின் சில பகுதிகளில் என்ன தான் கடக்கின்றது என்று அறியாத நிலை யில் பர்மா அரசாங்கம் இருப்பதாக அவர் கூறினர். இவை எப்படியிருப்பினும், இலங்கையிலுள்ள குட்டை குழப்பும் அரசியல் சூழ்நிலையிலிருந்து தாம் விலகி யிருப்பதில் மகிழ்ச்சியே என்றும் அவர் கூறினர். சீன அரிசி பற்றிப் பேசும்போது, பர்மாவினுடைய பரந்த நெல்வயல் பரப்புக்கு மேலே பறந்து கொண்டிருந்தோம். எல்லையற்ற பரப்பு 1 வளம் பொருக்திய வயல்கள் ! ஏன் முன் போலவே பர்மாவிடமே நமக்கு வேண்டிய அரிசியை வாங்கக்கூடாது என்ற கேள்வி எழும்பி, என்னை ஆச்சரி யத்துள் மூழ்கடித்தது. திடீரென பர்மாவில் விளையும் அரிசி முழுதையும் உட்கொள்ளத் தக்க அளவிற்கு, ஒரே இரவில் அங்குள்ள மக்கள் தொகை இரட்டித்து விட்டது என்று யாரும் கூறிவிட முடியாது. பர்மாவிலுள்ள அமெரிக்கர் சிலர் டாலர் துணை கொண்டு பர்மா அரிசி அத்தனையும் வாங்குகிறர்கள். அரிசியின் ருசியே தெரி யாத அமெரிக்கர்கள் தாம் உட்கொள்ளுவதற்காக வாங்க வில்லை. ஆனல் எதற்காக வாங்குகிருர்கள் என்பது யாரும் கூற முடியாத ஒரு மர்மம்.
Y
எண்ணெய் எடுப்பதற்காக விமானம் தாய்லாந்தின் தலைநகரமான பாங்கொக் என்ற விமான நிலையத்தை வந்தடைந்து ஒரு மணி கேரம் கின்றது. அது மிக அழகிய தற்கால விமான நிலையம். தொடர்ந்து பிரயாணமாகி ஹாங்கொங்கை அன்று மாலை போய்ச் சேர்ந்தோம். விமா

5
னத்தை விட்டு வெளியேறியதும், திரு. பொன்சேகா அவர் களை வரவேற்க வந்திருந்த பாராளுமன்ற உணவிலாகா செயலாளர் திரு. வி. குமாரசாமி அவர்களை விமான கிலையத்தில் கண்டேன். சில அலுவாலளர்கள் பின் தொடர, அவர்கள் விமான நிலையத்தை விட்டுப் புறப் பட்டனர். W
ஹாங்கொங்கில் வரவேற்பு
மூன்று இளம் சீன நண்பர்கள் சீன சமாதானக் குழுவின் சார்பில் எங்களை வரவேற்றனர். டோங்சைசி, லீகுஎக்-சொங், தாங் எஸ். கு என்ற மூவருமே அவர்கள். முதலில் எங்களுக்கு வணக்கம் செலுத்தி வரவேற்ற டோங்சை-சியின் முகத்தை 15 ர ன் என்றுமே மறக்கமாட்டேன். அவருடைய முகம் கவ சீனத்தைப்பற்றி காம் படித்தவற்றையும் கேட்டவற்றை யும் ஒருங்கே சுடர் பரப்பி பிரகாசிப்பதுபோல் தோன் றியது. புத்திகூர்மையும், தன்னம்பிக்கையும் அவர் கண் களிலே ஒளி வீசின. S
ஹாங்கொங்கின் சுங்க இலாகா எங்களுக்கு எந்த வகையான தொல்லையையும் தர வில்லை. காங்கள் பீக்கிங் சமாதான மகாகாட்டுக்குச் செல்லுபவர்கள் என்று கூறிய வுடன் அந்த பிரிட்டிஷ் சுங்க அதிகாரி பாஸ்போர்ட்டை யும், பெட்டிகளையும் பார்த்ததற்கு வருத்தம் தெரிவிப்பவர் போலக் காணப்பட்டார். ஹாங்கொங்கின் பிரிட்டிஷ் அடிமை அரசாங்கம், அதற்குமேல் ஒரு தடையு * மின்றி அனுமதி தந்தது, சிங்கம் போன்ற சீன5ாட்டை எவ்வளவு மதிப்புடன் கடத்தத் தலைப்பட்டு விட்டது என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.
சீன நண்பர்கள் காங்கள் தங்கவேண்டிய "கவுலூன்" ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே பிலிப்

Page 9
குணவர்தன, எட்மன் சமரக்கொடி, டாக்டர் பெர்னண்டோ ஆகியோர் சிங்கப்பூர் மார்க்கமாக முன் கூட்டியே வந்து தங்கியிருந்ததைக் கண்டோம். ரத்தின வீரா, கிக்கடுவகே என்ற இரு சமாதானத் தூதுக் குழுவைச் சேர்ந்தவர்களும் வேறு விமான மூலம் காலம் தாழ்த்தி எங்களோடு வந்து சேர்ந்தனர். ஹாங்கொங்கி ஆலுள்ள ஒரு முற்போக்குத் தினத்தாளின் நிருபர் பேட்டி காண வந்திருந்தார். இலங்கையிலுள்ள அரசியல் கிலேமை பற்றியும், சமாதான இயக்கத்தைப்பற்றியும் கூறுமுன், பீக்கிங் மகாநாட்டில் கலந்து கொண்டு நவசீனத்தைப் பார்க்க கான் பெரு மகிழ்ச்சி யடைவதாக அவருக்குக் கூறினேன்.
ஆபாசத்தின் சிகரம்
அடிமை நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை, சீர்கேட்டின் சிகரமாக விளங்குவதை " கவுலூன்" ஹோட்டலில் கண்டேன். பிரிட்டிஷ் போர் வீரர்களு டன் நடனமாடிய சீன நங்கையர் பலர் வெளிறிய முகத் அதுடனும், சாயம் தீட்டப்பட்ட சிவந்த உதடுகளுடனும், வேறு யாராகிலும் கடனத்துக்கு வருவார்களோ என்ற அவாவுடனும் அந்த ஒட்டலின் மூலைகளில் அமர்ந்திருக் தனர். குலைந்த சிகையுடன் காணப்பட்ட அவர்களில் சிலர் குட்டிப் பிசாசுகள் போல காட்சி அளித்தனர். இத்தகைய நங்கையர் சிலரை அடுத்த நாள் ஹாங்கொங் பட்டினத்தைச் சுற்றி வரும்போது கான் கண்டேன். கவ சீனத்திலுள்ள மங்கையரைக் கண்ட பின்புதான் ஹாங்கொங்கில் வாழும் சீனப் பெண்களுக்கும், கவ சீனத்தில் வாழும் சீனப் பெண்களுக்குமுள்ள முரண் பாட்டைச் சரிவர உணர முடிந்தது. இந்த இரு சாராரும் சீனர் என்ற ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர் என்று கம்பவே முடியவில்லை. ஒரு சமுதாய அமைப்பைப்

?
பொறுத்துத்தான் எத்தகைய வளர்ச்சியும் இருக்க முடி யும் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
ஹாங்கொங் வீதிகளில் கான் போகும்போது, குழந்தைகள் உள்பட பல பிச்சைக்காரர் என்னைப் பின்தொடர்ந்தனர். சீனத்தில் வதிந்த இரண்டு மாதங்களிலும் ஒரு பிச்சைக்காரரைக்கூட கான் கண்ட தில்லை. ஹாங்கொங்கைச் சுற்றிப் பார்க்கும்போது, கேலியைச் சேர்ந்த ஓர் இலங்கையர் 5டத்தும் நகைக் கடைக்குச் சென்ருேம். அவர் வாழ்க்கையில் வளம் பெற்றவராகக் காணப்பட்டார். செப்டம்பர் 16-ம் நாள் இலங்கை தூதுக் குழுவினர் எழுவரும் நண்பகலுக்கு சிறிது முன்பதாக ஹாங்கொங்கைவிட்டுப் புறப்பட்டு, ஒருமணி நேரத்தில் சீன காட்டு எல்லையில் உள்ள இர யில் நிலையத்தை வந்தடைந்தோம். ஹாங்கொங்கைச் சேர்ந்த எல்லைக்குள் உற்சாகமற்ற நிலையில் கவலைக் குறி கள் முகத்தில் தோன்ற நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் வாலிபப் போர் வீரர்கள் அணிவகுத்துப் போன பரிதாபக். காட்சியைக் கண்டேன். தூக்குத் தண்டனைக்குள்ளாகிய மனிதர்போலக் காணப்பட்ட அந்தக் காட்சி என்னைப் பெரிதும் கலக்கிவிட்டது.
சீன மண்ணிலே.
சீன எல்லை இரயிலடியை நாங்கள் நெருங்கிக் கொண்டிருக்கும்பொழுது, சீன தேசிய கீதத்தின் ஒலி எங்களைத் தழுவித் தவழ்ந்தது. பட்டொளி வீசிப் பறந்த சீன தேசியக் கொடியை வணங்கியும், தேசியப் பாட்டுகளைக் கேட்டும் நான் பெற்ற மட்டற்ற மகிழ்ச் சியை இன்றும் என்னல் நினைவுக்குக் கொண்டுவர முடிகிறது. சீன எல்லை இரயில்வே நிலயத்தை வந்து சேர்ந்ததும், 15ாம் ஒரு புது உலகத்தையே வந்தடைந்தோம்

Page 10
8
என்ற எண்ணம் உண்டாயிற்று. காண்டனுக்குப் போவதற்கு இரயில் நிலையத்தில் அயல் கிராமங் களிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான சீன ஆண், பெண், குழந்தைகள் சகலரும் புகையிரதத் திற்காகக் காத்திருந்தனர். அவர்கள் எல்லோரும் தங்கள் வரும் காலத்தைப்பற்றி கம்பிக்கையுடையோர்களாயும், மகிழ்ச்சியுடையோராயும் காணப்பட்டனர். எளிய உடைகள் அணிந்திருந்தனர் எனினும், அவைகள் நல்ல முறையில் அணியப்பட்டிருந்தன. இரயில் நிலையமும், அதை அடுத்த நிலப்பகுதியும் மெச்சத்தக்க அளவுக்குச் சுத்தமாக இருந்தன. இரயில் நிலைய கட்டிடத்துக் குள் ஒரு பெரிய படிப்பகத்தில் எண்ணற்ற நூல்களையும், வெளியீடுகளையும் பிரயாணிகள் படித்தவண்ணம் காண்ப்
பட்டனர். பிரயாணிகளுக்கென்றே ஒதுக்கப்பட்ட களியாட்ட நிலையத்தில் கேரம் போன்ற பல விளையாட்டுக்கள் நடைபெற்றன. சீன சமாதானக்
குழுவின், காண்டன் கிளையிலிருந்து யாங், செல்வி சென் என்ற இரு சீன நண்பர்கள் எங்களை வரவேற்றனர். செல்வி சென் எமக்காக வந்த மொழிபெயர்ப்பாளர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவர் லண்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றமையினல், வெகு துரிதமாக ஆங்கிலம் பேசினர்.
யாங் என்றவர் கவசீனத்திற்கு எங்களை வரவேற்று வணக்கம் செலுத்தினர். சிறிது நேரம் பேசிய பின், எங்களைச் சாப்பிட அழைத்தனர். சீன மக்கள் சிறு குச்சிகள் கொண்டு சாப்பிடுவோர் என்ற காரணத்தினல், வைக்கப்பட்டிருந்த குச்சிகளை, எங்களில் சிலர் பயன்படுத் தினர். எங்களில் பலர் குச்சியால் சாப்பிட்டுப் பழக்கம் அற்றவர்கள் என்ற காரணத்தினல், பலருக்கு முள்ளும் கரண்டியும் வழங்கப்பட்டன.

இரண்டாம் அத்தியர்யம்
காண்டன் பிரவேசம்
தென் சீனுவில் உள்ள காண்டன் என்ற பட்டணம் 5ோக்கி அன்று மாலை பிரயாணமானுேம். நெற்பயிர், காய்கறி, பூக்தோட்டங்கள் அடங்கிய பரந்த வயல் பரப்புகளூடே நாங்கள் போய்க்கொண்டிருந்தோம். நவ சீனத்தில் நிலச் சீர்திருத்தம் நடந்ததின் காரணமாக, உழவர்கள் மத்தியில் உற்சாகம் பெருகியிருந்தது. அவ் வுற்சாகம் கெல் உற்பத்தியைப் பெருக்கப் பெரிதும் துணை புரிந்தது. மகிழ்ச்சியும், திருப்தியும் கொண்ட எண்ணற்ற கிராம மக்கள் வேலைகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டோம். சீனப் புகை வண்டிகளிலெல்லாவற்றிலும், கையாளப் படும் புதுமுறையென்னவெனில், ஒலிபெருக்கி மூலமாகப் பிரயாணிகளுக்கு அறிவிப்பு கூறுவதும், இன்னிசை வழங்குவதுமேயாகும். வண்டி இரயில் நிலையத்தில் நிற்கும்பொழுது, பிரயாணிகள் இரயில் வண்டியிலுள்ள மலக்கூடத்தை உபயோகிக்கக் கூடாதென்று கூறப்படு கிறது. காங்கள் இரவு 7 மணிக்குப் போய்ச் சேரும் ப்ொழுது, காண்டன் சமாதானக் குழுவினரால் அளிக்கப் பட்ட வரவேற்பு எம்மை எல்லாம் பிரமிக்கச் செய்தது. அலங்கரிக்கப்பட்ட இரயில் நிலையத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் கூடி எம்மை வரவேற்றனர். அழகான பூச்செண்டுகளுடன் சீன சாரண இயக்கத்தைச் சேர்ந்த இளைஞரும் சிறுமியரும் வண்டியருகில் வந்து எம்மை வரவேற்றனர். நூற்றுக்கணக்கானவர்கள் கெம்பீரமான தோற்றத்துடன் உடையணிந்து காணப்பட்டனர்.
காண்டன் சமாதானக் குழுவின் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் எம்மை ' சமாதானம் நீடூழி வாழ்க"

Page 11
10
என்ற இடி முழக்கத்தின் மத்தியில் வரவேற்று, பட்டணத் திலேயே பெரிதான ' விக்டரி" ஹோட்டலுக்கு அழைத் துச் சென்றனர். அங்கு காங்கள் அனைவரும், விரும்பி உட்கொண்ட ஒரு சிறந்த விருந்து உபசாரம் கடந்தது. அந்த உபசாரத்திற்குத் தலைமை தாங்கியவர் பேசுகையில், சமாதான சூழ்கிலையில்தான் மக்கள், காட்டை வளப்படுத்த முடியும் என்ற காரணத்தினல், சீன மக்கள் சமாதானத் தையே விரும்புகிருர்கள் என்பதை விளக்கினர். சமா தான இயக்கத்தின் முக்கியத்துவத்தையும், இலங்கை தூதுக் குழுவினர் வீடுதிரும்பியபின் தாம் கண்ணுரக் கண்டவற்றை கூறவேண்டிய அவசியத்தையும் வற்புறுத் தினர். விருந்து முடிந்தது. ஆர அமர்க்தோம். ரத்தின வீரா என்னை அதோ' என்று மறுபக்கம் காட்டினர். அங்கு கண்ட காட்சி என்னை மிகிழ்ச்சிமிக்க ஆச்சரியத் தில் மூழ்கடித்தது. எங்களுக்குச் சிறிது நேரத்திற்கு முன்பு சாப்பாடு தந்த ஹோட்டல் ஊழியர்கள் தம் தொழிலை முடித்தவுடன் சீனமக்கள் சகலரும் சரிநிகர் சமானமாக வாழ்கின்றனர் என்பதை அத்தாட்சிப் படுத்தும் முறையில், மெத்தை தைத்த ஆசனங்களில் உட்கார்த்து உரையாடிக் கொண்டிருந்தனர். சீனுவில் காம் காண விருக்கும் சீரிய சமத்துவ வாழ்விற்கு இது ஆரம்பக் காட்சிபோலும் ᏣᎢ ᎶᏛᎢ நான் எண்ணிக் கொண்டேன். மறுகாட் காலை அகில சீன நீச்சல் போட்டியைக் காணப் போயிருந்தோம். அங்கு குழுமி யிருந்த மக்கள் அனைவரும் ஒன்ருய் எழுந்து ஆரவாரித்து எம்மை வரவேற்றனர். சீனத்தின் பல பாகங்களிலிருந்தும், பல தொழில் செய்து வாழும் பலதிறப்பட்ட மக்களும் அப் போட்டியில் கலந்துகொள்ளுவது, சீன அரசாங்கம் பல திறப்பட்ட விளையாட்டுக்களுக்கும் காட்டிவரும் ஆதர வையே எடுத்துக் காட்டுகின்றது.

11
1911-ம் ஆண்டு டாக்டர் சன்யாட்-சென் தலைமையில் காண்டனில் கடந்த புரட்சியில் உயிர்நீத்த 73 தியாகி களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டு பொலிவுற்று விளங்கும் பூங்காவை அன்று கண்பகல் சென்று பார்த் தோம். மறைந்த மாவீரருக்கு சீன மக்கள் எவ்வகையில் மரியாதை செலுத்துகின்றனர் என்பதை அங்கு கூடி யிருந்த மக்கள் கூட்டம் காட்டியது. சன்யாட் - சென் நினைவுச் சின்னமாக 8000 பேர் அமர்ந்து பார்க்கத்தக்க மாபெரும் மண்டபத்தை அமைத்திருந்தனர். பேச்சாளர் மேடைமட்டும் கொழும்பு நகர மண்டபத்தில் பாதியள விருந்தது. வெளிநாடுகளில் வாழும் சீன மக்கள் திரட்டிய நிதிதான் அந்த மண்டபமாக மலர்ந்தது என்று கேட்ட வுடன் நான் ஆச்சரியமுற்றேன். நான் போன அன்று அந்த மண்டபத்தில் ரூமேனிய கலைஞர் சிலருக்கு வரவேற் பளிக்க முயற்சிகள் கடந்து கொண்டிருந்தன. சீனரூமேனிய காட்டு மக்கள் உறவு நீடூழி வாழ்க!" என்று, எழுதப்பட்ட பதாகைகள் வாயிலில் பொலிவுற்று விளங் கின. எங்களுடன் வந்த துறைமுகத் தொழிலாளர் சங்கத் தலைவரான "கிக்கடுவகே, சீனத் துறைமுகத் தொழி லாளர் சிலரைக் காணவேண்டுமென்று விருப்பம் தெரி வித்தார். மாலை 7 மணிக்கு துறைமுகத் தொழிலாளர் கூட்டம் தொடங்கி, நடுநிசிவரை கடந்தது. கூட்டம் முடிவடைய இவ் வள வு கே ர ம் சென்றமைக்கு முதற் காரணம் கிக்கடுவகே சிங்களத்தில் பேச, அதை பிலிப் ஆங்கிலப்படுத்த, அதைச் சீனத்தில் மொழி பெயர்த்து அதையும் காண்டன் மக்கள் பேசும் ஒருவகை யான மொழியில் கூறவேண்டி கேர்ந்ததேயாகும். சீன மொழி ஒரு வினுேதமான மொழி. எழுத்து 15டையில் சீனம் ஒரே மொழிதான் எனினும், பேச்சு வழக்கில் பாகு பாடுகள் காணப்பட்டன. கிக்கடுவகே பல கேள்விகள் கேட்டுப் பதில் தெரிந்து கொண்டார். சீனத் தொழிலாளர்

Page 12
13
வாழ்க்கைநிலை பற்றி பல , கேள்விகள் கேட்டார். செப்டெம்பர் 18-ம் நாள் ரெயில்வே தொழிலாளர் விடுதி கள், களியாட்டக் கழகங்கள், குழந்தை சுகாதார நிலையங் கள் முதலியவற்றைச் சென்று பார்வையிட்டோம். அனேத்தும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் காணப்பட்டன. குழந்தை நிலையமொன்றைப் பார்வையிடச் சென்ற பொழுது, சிறுவர்கள் இன்னிசை வரவேற்பு வழங்கினர். அவர்களின் சொகு சா ன சுகவாழ்வைக் கண்டு மகிழ்க்தோம்.
சுத்தமான வீதிகள்
கொழும்பைவிடப் பெரிதான பட்டணம் காண்டன். மக்கள் தொகையும். மிக அதிகம். அப்படி இருந்தும் காண்டன் பட்டணம் வெகு சுத்தமாக இருப்பது போற் றற்பாலது. வீதிவீதியாக வலம் வந்தோம். கூட வந்த நண்பர் சமரக்கொடி, தெருக்களின் எந்தப் பகுதியிலும் உணவுவைத்து அருந்த முடியுமே எனக் கூறினர். இது அந்தப் பட்டணத்தின் தெருக்கள் அத்தனையும் இருந்த சுத்தமான நிலையையே காட்டுகிறது. பட்டணத்தில் வாழும் மக்களுடைய உற்சாகமும், கேர்மையான ஒத்துழைப்புமில்லாமல், பட்டணத்தை இவ்வளவு சுத்த மாக வைத்திருப்பதென்பது முடியாத காரியமே. −
காங்கள் சில வீடுகளுக்குள் சென்ருேம். சென்ற இடமெல்லாம் தேநீர் தந்து வரவேற்றனர். சீனியோ, பாலோ, சீனவில் தேநீருக்குச் சேர்ப்பது கிடையாது. முதலில் அருந்துவது கஷ்டமாக இருந்தபோதிலும், சில நாட்களில் பழகிக்கொண்டோம். ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை மிகுந்த உற்சாகத்துடன் சமையலறைக்கு ஓடி தேநீர் கொணர்ந்தாள். வீட்டிற்குள் திரும்பவும் ஒடிய இச்சிறுமி, கையில் மாசே-துங்கினுடைய படத்

13
துடன் திரும்பி வந்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். சுதந்திரத்தையும், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், கெடு காளாகக் கஷ்டப்பட்ட சீன மக்களுக்குத் தேடித் தந்த எங்கள் தலைவர் " மாஒ சீன மக்கள் மனதில் வாழ் கின்ருர் என்று கூறினள். அக்குடும்பத்தைவிட்டு விடைபெற்றுக்கொள்ளும் பொழுது, அந்தக் குழக்தை என் மனைவியைக் கட்டி முத்தமுட்டுக் கூவினள். * இலங்கை சீன மக்கள் நல்லுறவு நீடூழி வாழ்க!' உலக சமாதானம் நீடூழி வாழ்க! தலைவர் * மாஓ கீழிே வாழ்க!" என்று ஆர்ப்பரித்தாள்.
மாலையில், கடைகளைச் சுற்றிப் பார்க்கப் போனுேம். விலைகள் குறிப்பிடப்பட்டு நிர்ணயித்துக் காணப்பட்டன. விலைகளைப்பற்றி விவாதிப்போர் யாரும் கிடையாது. பலதிறப்பட்ட பண்டங்களும் அங்கே கிடைத்தன.

Page 13
மூன்றம் அத்தியாயம்
ஷாங்காய் நகருக்குப் புறப்பட்டோம்
' unffà) 6 மணியளவில் காண்டன் நகர சமாதான குழுத் தலைவர், துணைத் தலைவர், சீன சாரணரியக்கத் தினர் அனைவரும் வழியனுப்ப, காண்டனேவிட்டுப் புறப் பட்டோம். இலங்கை தூதுக் குழு சார்பாக கிக்கடு வகே, காண்டன் சமாதான குழுத் தலைவருக்கு ஒரு மாலை சூட்டி, பதாகை ஒன்றையும் அன்பளிப்பாகக் கொடுத்தார், குறுகிய காலத்தில் பல நண்பர்களைப் பெற்ற நான் காண்டனைவிட்டுப் புறப்பட மிகவும்: கவலைப்பட்டேன். w
பிரயாண வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப் பெற்று இருந்தமையினலும், காட்சிகள் நம்மைக் கவர்ந்த மையினலும், காண்டனிலிருந்து ஷாங்காய் வரை போய்ச் சேர இரண்டுகாட் சென்ற பொழுதிலும், ஒருவிதமான துன்பமும் தோற்ருத முறையில் போய்ச் சேர்ந்தோம். சீன சமாதானக் கமிட்டி அங்கத்தினரான திரு. யங் அவர்களும் எங்களோடு பிரயாணம் செய்தார். அவர் தவிர, இரு மொழிபெயர்ப்பாளர்களும் (இருவரும் பெண் மணிகள்) எம்முடன் வந்தனர். அந்த யுவதிகள் இருவ ருள் ஒருவர் ஷாங்காய் பல்கலைக்கழக ஆங்கிலப் பட்ட தாரி எனவும், மற்றையவரும் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் எனவும் அறிந்தோம். விடுமுறை காலத்தில், மொழிபெயர்ப்பாளராக இருந்து சமாதான மகாகாட்டிற் குத் தொண்டுபுரிய முன்வந்த இவர்கள், சீனப் புரட்சியின் உண்மைத் தத்துவங்களை எடுத்து விளக்கினர். இடை யிடையே “மாசே-துங்' பற்றிக் கூறும்போதெல்லாம்,

15 அம்மாபெரும் தலைவர்பற்றி அவர்கள் கொண்டிருந்த பெருமை, எல்லையற்ற அன்பு, அபிமானம் முதலியன அவர்கள் கண்களில் பிரகாசித்தன.
* கோமின்-டாங்" நோட்டுக்கள்
இரயில் பிரயாணத்தின்போது திரு பண்டாரநாயக்கா வும், எட்மனும் கானும் பழைய சீனத்தில் ஆறு ஆண்டுகளுக்கு அதிகமாக இருந்தவரென்று 15ம்மிடம் கூறிய வோல்டர்ஸ்லே என்ற அமெரிக்கப் பிரயாணி யிடம் பேசிக்கொண்டே இருந்தோம். அவர் ஒர் பொறியியல் (இன்ஜினியர்) வல்லுநர். சீனுவில் பலவகையிலும், பல பாகங்களிலும் புரட்சிக்கு முக்தி யும் பிந்தியும் கடமையாற்றி சீனமொழியை சுலபமாகக் கற்றுக்கொண்ட இவர் பழைய சீனுவின் அரசாங்க நிலைமையை எடுத்துச் சொல்லும்பொழுது பயங்கர மாகவே இருந்தது. அந்தக்காலப் பொருளாதார சீர் குலைவை எடுத்துக்காட்ட அவர் கூறிய ஒரு கதையே போதுமானது. ஒரு முறை உணவருந்த ஹோட்டலுக்குச் சென்ற இவர், உணவு விலைப்பட்டியலைப் பார்த்துவிட்டு உணவு உட்கொள்ள அமர்ந்தார். அங்கேரத்தில் பரிமாறு பவர் உள்ளே வந்து விலைகள் இரட்டித்துவிட்டன என்று கூறினர். சாப்பாட்டின் முடிவில் விலை மூன்று மடங்: காகிவிட்டது. கோமிங்டான் கோட்டுக்கள் எப்படிப் பணவீக்கத்தினல் விஷமேறுவதுபோல பாதிக்கப்பட்டன என்பதை அனுபவபூர்வமாக எடுத்து விளக்கினர்.
* கவசீனத்தின் உணர்ச்சிகொண்ட மக்களை அமெ. ரிக்க அணுகுண்டல்ல ; உலகத்தின் வேறு எந்தவித சக்தியாலும் அழிக்க முடியாது' என்று கூறி, அத்தகைய நிலையை நிலைபெறச் செய்த அந்த புதிய ஆட்சி முறையைப் பெரிதும் பாராட்டினர். கொரியப் போர்

Page 14
16
பற்றிய உண்மையை அமெரிக்காவில் ஆட்சிபுரியும் பிற் போக்குக் கும்பல் வானெலி, பத்திரிகை முதலியவற்ருல் திரித்துக் கூறி, மக்களை ஏமாற்ருமல் உண்மையை அறிந்து கொள்ளவிட்டிருந்தால், அமெரிக்கப் பொதுமக்கள் தங் கள் அரசாங்கத்தின் இன்றைய கொள்கைகளை ஒரு போதும் ஏற்க மாட்டார்கள் என்றும் இந்த அமெரிக்க நண்பர் கூறினர். அமெரிக்கர் கொரியாவில் கிருமிப்போர் கடத்துவது உண்மைதான? என்று நான் கேட்ட கேள்விக்கு, 'அதில் எட்டுணையும் சந்தேகமேயில்லை” என்று பதில் கூறினர். 'அமெரிக்கப் பொதுமக்கள், ஆக்கிரமிப்பும் ஏகாதிபத்திய வெறியும் கொண்ட கொள் கையை அமுல் நடத்திவர என்றும் விட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் அவர் ஆவேசமாகக் கூறினர். இந்த அமெரிக்க 15ண்பரைப் பின்னல் சமாதான மகா காட்டில் அமெரிக்கக் குழுவின் உறுப்பினராக நான் கண்டபோது பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன்.
20-ம் தேதி மாலை சீனுவில் மட்டுமல்ல ; உலகத்தி லேயே பெரிய பட்டினங்களில் ஒன்ருன ஷாங்காய்' என்ற நகரில் இரயில் மூலமாக வந்தடைந்த எங்களுக்கு ஷாங்காய் சமாதானக் குழுவின் துணைத் தலைவர் சாயன், இன்னும் பலர் அமோகமான வரவேற்பு அளித்தனர். பீக்கிங் சமாதான மகாநாடு ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட பொழுதிலும், அவ்வாறு நடைபெரு மல் இருக்கவே உடனடியாக ஷாங்காய் விட்டு காங்கள் புறப்பட்டோம். 16 மாடிகள் கொண்ட ஒரு பெரிய ஹோட்டலில் தங்கி யிருந்தோம். ஷாங்காய் சமாதானக் குழுவினர் எமக்கும், யூேசிலாந்து ஆாதுக் குழுவுக்கும் விருந்துபசாரம் தந்து வரவேற்றனர். சாயன், சமாதான மகாகாட்டின் வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தார். திரு. எ. சி. மொன்றேற் என்ற நீயூசிலாந்து துரதுக் குழுத்

1?
தலைவர், இலங்கை சார்பில் பிலிப், எட்மன் ஆகிய இருவ ரும் வரவேற்புக்கு 15ன்றி கூறி, சமாதான இயக்கத்தை வலுப்பெறச் செய்வதாகவும், சீன மக்கள் சாதனைகளைப் பெரிதும் போற்றுவதாகவும் கூறினர்கள். இரவு ஆகாரத் துக்குப் பின்பு ஷாங்காயைவிட்டுப் புறப்பட்டுத் திங்கள் காலை 5 மணிக்கு ஒரு இரயில் நிலையத்தை வந்தடைக் தோம். ' சமாதானம் நீடூழி வாழ்க’ என்ற கோஷம் ஒலிக்க, குளிர் வாட்டும் காலை நேரத்திலும் இளங்குழந்தை கள் நூற்றுக்கணக்கில் கின்று வரவேற்ற அந்தக் காட்சி, கவசீனத்தின் புத்துணர்ச்சியை நன்ருக உணர்ந்து கொள்ளத் துணைபுரிந்தது.

Page 15
நான்காம் அத்தியாயம்
பீக்கிங் வந்தடைந்தோம்
சீனச் சக்கரவர்த்திகளினது தலேநகரமாக அமைந்த பழமைமிக்க பீக்கிங் பட்டினத்தில் இன்றைய குழ்கிலே யில் சிறிது நாள் தங்கியிருக்கப் பெரிதும் விரும்பிய நாங்கள் காஃல 9 மணியளவில் பீக்கிங் வந்தடைந்தோம். சீன சமாதானக் குழுவின் சார்பில் பல சீன நண்பர்களும், சோவியத் யூனியன், இந்தியா ஆகிய நாடுகளின் சமாதான தூதர்களும் எம்மை வரவேற்கத் திரண்டிருந்த எண் னற்ற மக்கள் திரளிடையில் காணப்பட்டனர். இலங் கைத் தூதுக் குழுவின் தஃலவரான சுவாமி காரவில்லாவும், செயலாளரான தோழர் சண்முகதாசனும் ஒரு வாரம் முன் கூட்டியே பீக்கிங் வக்திருந்ததால் அவர்களும் அங்கே காணப்பட்டனர். இலங்கை துTதுக்குழுவினர் இரயில் நிலையத்தின் புறத்தே ஒரு புகைப்படம் பிடித்தபின், பீக்கிங் ஹோட்டல் போய்ச் சேர்ந்தோம்.
இந்தியா, பாகிஸ்தான், சோவியத் யூனியன், துருக்கி, இந்தோனே மரியா, பர்மா ஆகிய நாடுகளின் சமாதான தூதர்களும், இன்னும் மாநாட்டின் பிரதிகிதிகள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர், பீக்கிங்கிலுள்ள பெரிய ஹோட்டல்களில் ஒன்றன இந்தப் பீக்கிங் ஹோட் டலில் தங்கியிருந்தார்கள். எஞ்சிய பிரதிநிதிகள் சா தான விடுதி" என்ற ஹோட்டவில் தங்கினர். இது சமா தான மாகாட்டிற்கென ? வாரங்களில் கட்டி முடிக்கப் பட்ட ஒரு விடுதி. இது 10 அடுக்கு மாடி வீடுகளுடன், ஒரு சினிமா மண்டபமும் கொண்டு விளங்கியது. மா
 
 
 
 

*) No.()sae *** -) -)
- -*s.
,-)
,|-. .o 《)
! !!!
先 ae* .|-|- |- .-
——)
*北
—)
-- - - - o :
. . .
-- .|- .-. |- ***「-
No... · ()
劑
கிங் இரயில் கிலேய
பீக்
எடு
#ಪಕ್ಕಿಸಿ
|-|- |-- _ · |-|- |- |- |- |-|-|-
LL.
க்
*伊- || ---- |- *副函 |- ----|- ! |-- 忍T R* * 노」 | 湾野的||- |- 鸦舞 即傅”|- |-| ± -- No* 梁剧
|-)| |- 的 , ! 卡|- |-- 홍|- ||-|-|- |-| – '# |- | 念,,

Page 16
॥
1 - ܬܐ SS
. ܠ ܒ
恩
9.
d
|
s
卡
.
s
съ
s
s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாடு தொடங்கும்வரை, துர்துகோஷ்டிகள் வந்தவண்ண ாக இருந்தன. ஒவ்வொரு தூதுக்குழுத் தஃலவரிடமும் ஒவ்வோர் மோட்டார் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
அடுத்த சில தினங்களில் ஏஃனய சாதான குழுக் தஃலவர்களேச் சக்தித்து தனிப்பட்ட முறையிலும், கூட்டு முறையிலும் பொதுப் பிரச்&னகஃனப்பற்றியும், சமாதா னத்தை வளர்க்கும் வழிகள் பற்றியும் உரையாடினுேம் அத்தகைய விவாதங்களில், ஐவர் பாண்டேகு என்ற பிரிட்டிஷ்காரருடனும் (உலக சமாதானக் கவுன்சில் செயலாளர்), புகழ்பெற்ற துருக்கி நாட்டு நாஜிம் தறிக்மக் என்ற கவிஞருடனும் காங்கள் கடத்திய சம்பா ஷனேகள் எங்கள் அறிவை மிகவும் விசாலிப்பதாய்
அமைந்திருந்தன.
உலக சமாதான இயக்கம்பற்றி மாண்டேரும்ை,
)
தேசிய விடுதஃ:பற்றி ஹறிக்மத்தும் பேசியதைத் தொடர்ந்து க்டைபெற்ற விவாதத்தில் எட்மென் கேக்டர் ஆகிய இரு இலங்கை நாட்டவர்களும் அக்கரை
காட்டி பங்கு கொண்டனர்.
இலங்கை அமைச்சர் சந்திப்பு
இலங்கை சாதனக்குழு தங்கியிருந்த பீக்கிங் ஹோட்டலுக்கு 34-ம் நாள் மாவே இலங்கை வியாபாரக் குழுவின் துனேத் தஃவரான சுசக்தா ( பொன்சேகா வந்து எம்மைச் சந்தித்தார். "உங்கள் துரது அலுவல் எந்த வகையில் முன்னேறுகிறது?" என்று கேட்டதற்கு, வெற்றிபெறும் என்று பதிலளித்தார். இலங்கையில் அரிசிபற்றி பெரிய வட்டாரங்களில் நிலவிவரும் அபிப் பிராய பேதங்களேயும் எடுத்துக் கூறி, வந்த நோக்கம் சிறைவேறும் என்றும் அபிப்பிராயப்பட்டார். பீக்கிங்கி

Page 17
22
லுள்ள ' சர்வ தேசீய ஹோட்டலில் அடுத்தநாள்" கடக்க விருந்த ஒரு விருந்திற்கு இலங்கை சமாதானக் குழுவை யும் வந்து பங்குகொள்ளுமாறு வேண்டிக்கொண்டார். இலங்கை வர்த்தக அமைச்சரும், இலங்கை வர்த்தக தூதுக் குழுவின் தலைவருமான ஆர். ஜி. சேனநாயக்கா ஒரு சீன மொழிபெயர்ப்பாளருடன் வந்து விருந்துக்கு வரும்படி எம்மை அழைத்தார். 15ாம் இந்த அழைப்பை ஏற்ற பொழுதிலும், விருந்துக்குப் போவதா என்பது பற்றிய ஒரு முடிவிற்கு உடனடியாக வரவில்லை.
இலங்கை சமாதானக் குழுவைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தின் தூதுக்குழுவினது விருந்து உபசார அழைப்பை ஏற்றுக்கொள்ளலாமா? அது சரியா? என்பது பற்றி அபிப்பிராயபேதம் நிலவியது. எட்மனும், கெக்ட ரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று அபிப்பிராயப் பட்டனர். காரணம் இலங்கையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த காம் அங்கு அரசாங்கத்தின் விருந்து அழைப் புக்களை ஏற்க மறுத்திருக்கும்பொழுது, சீனவில் வந்து எதற்காக இலங்கை வழக்கத்தைக் கைவிட வேண்டு மென்று கேட்டனர். வேறு சிலர் அது வியாபாரக் குழு வின் அழைப்பு`அல்லவென்றும், அது தனிப்பட்ட முறை யில் தரப்பட்ட அழைப்பு என்றும், விரும்பினுேர் போக லாம் என்று அபிப்பிராயம் தெரிவித்தனர். இன்னும் சிலர் அரசாங்கத்துடன் அபிப்பிராய பேதமிருந்தாலும், சீனுவுடன் வியாபார வளர்ச்சி குறித்து வந்த ஒரு துாதுக்குழுவை முழுதாக ஆதரிக்க வேண்டுமென்று வாதித் தனர். சமாதானக் குழுவினர், அரிசி துTதுக்குழுவுடன் அளவளாவுவது, சீன அரசாங்கத்தைச் சிக்கிரமாகவே ஒரு வியாபார ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தூண்டும் என்றும் இவர்கள் கூறினர். இன்னும் இலங்கை சமா தான இயக்கத்தின் குறிக்கோள்களில் ஒன்று, சோவியத்

33
ருஷ்யா, சீன போன்ற நாடுகளுடன் வியாபாரத்தை அதிகரிக்கச் செய்வதாகும் என்றும், அத்தகைய ஒரு கல்ல கொள்கையுடன் வந்துள்ள தூதர்களோடு ஒத்துழை யாமல் இருப்பது தவறு எனவும் கருதினர். மீண்ட நேர விவாதத்தின் பின் அழைப்பை ஏற்றுக்கொள்வது என்று ஏகோபித்த முடிவிற்கு வந்தோம்.
பீக்கிங்கிலிருந்து 20 மைல் தூரத்திலிருந்த "செவெஸ், டியல்' என்ற கோடை மாளிகையைப் போய்ப் பார்த்தோம். அழகான கட்டிடங்கள், தடாகங்கள், எண்ணற்ற பூங்காக்கள்-இவையாவும் அன்று சீன. மன்னர்களுக்காக இருந்தன. ஆனல் இன்ருே அவை மக்கள் மயமாக்கப்பட்டுவிட்டன. ஒய்வுக்காக வந்து தங்கும் தொழிலாளர்களில் சிலரை இந்த மாளிகையில் கண்டேன்.
கவசீனத்தில் தொழிலாளர்கள் எந்தத் தொழில் செய்தாலும், அவர்கள் வந்தனை செய்து போற்றப் பட்டனர். V
நானும் அங்கே இருந்தேன்
அன்று மாலை " சர்வதேச ஹோட்டலில் கடந்த விருந்துபசாரத்திற்குப் போயிருக்தோம். அங்கு குமார சாமி அவர்கள் தம்முடைய வழக்கமான நகைச்சுவை யுடன் பேசினர். இலங்கையிலுள்ளோர் சிறுபிராயத்தில் சீனவைப்பற்றித் தெரிந்து கொள்வது சீன வெடியின் மூலமாகத்தான். குமாரசாமி அவர்கள் சீன வெடிகளை வீட்டிற்குக் கொண்டுபோகும்படி என் மனைவியிடம் தமாஷாகச் சொன்னர். அங்கு இலங்கை சமாச்சாரப் பகுதியினரால் இலங்கைத் திரைப்படம் ஒன்று காண்பிக் கப்பட்டது. பல சீன வெளிகாட்டு ராஜதந்திரிகள் வக்

Page 18
24
திருந்தனர். சேனநாயக்கா எங்களிடம் விடைபெற்றுக் கொள்ளும் சமயம், என்னிடம் கைலாகு கொடுக்க வந்த பொழுது, இலங்கை அரசாங்க ஊழியர் போராட்டத்தில் பொதுச் செயலாளராக இருந்த என்ன வேலையிலிருந்து சேனநாயக்கா அரசாங்கம் நீக்காவிட்டால், நான் பீக்கிங் கில் மந்திரியின் மதிப்பிற்கு உரியவனுக இருந்திருப்பேனு என்ற கேள்வி எனக்குள் தோன்றியது. அநீதியான முறையில், என்ன வேலையிலிருந்து நீக்காவிட்டால், நான் ஓர் ஏழைக் குமாஸ்தாவாக வாழ்ந்திருப்பேனே ஒழிய, பீக்கிங், மாஸ்கோ போன்றவை என் கனவிலும் தோன்றி *யிருக்கமாட்டா. சேனநாயக்காவின் பார்வை என்மீது படியும்போது, ஒரு தடவை கண்ணிமைத்தார். "நீயுமா இங்கே வந்திருக்கிருய்!” என்று கேட்பதுபோல, இருக் தது அவர் பார்வை. ஆம் ! நானும்தான் வந்திருக்கிறேன்! ஏழைக் குமாஸ்தாக்கள், பொதுமக்கள், தொழிலாளர் கள் வாழ்க்கையில் வளமும் சமாதானமும், வியாபார வளர்ச்சியும் வேண்டி நிற்கும் மக்கள் குலத்தின் பிரதிநிதியாக, பீக்கிங்கிற்கு வந்திருக்கிறேன் என்பது போல நானும் பார்த்தேன்.
சீனப் பெரும் சுவர்
ஒரு தனி இரயிலில் அடுத்த காட் காலை உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்ருன சீனப் பெருமதிலைப் பார்க்க சமாதானத் தூதர்களாகிய நாங்கள் அனைவரும் சென் றிருந்தோம். புகையிரதம் 10 மணிக்குப் பீக்கிங்கை விட்டுப் புறப்பட்ட இரண்டு மணி நேரத்தில், சீனப் பெரு மதில் எல்லையை வந்தடைந்தது. ஒரு மைல் கால் நடை யாகச் சென்ற பின், மதிலை ஏறப் பலர் முயற்சித்தும் சிலர் தான் வெற்றி பெற்றனர். மதில்மேல் நின்று பார்க்கும் பொழுது, மதிலமைப்பின் வளைவு கெளிவுகள் பல வெகு

25
தூரத்தில் தென்பட்டன. பல நூற்ருண்டுகளுக்கு முன் இவ்வளவு அருமையான ஓர் மதிலைக் கட்டியது ஒர் வினேதமே. ஆனல் கவசீனத்திலுள்ள பெருமதிசயம் பெருமதில் அல்ல; கவசீனத்தின் புதுமனிதனும் அவன் அமைத்த புது சமுதாயமுமே.
சக்கரவத்திகள், அவர் குடும்பத்தினர் வழிபட்ட " மோட்ச ஆலயத்தை” அடுத்த நாள் போய்ப் பார்த் தோம். இந்தக் கோவிலின் எல்லைக்குள் அன்று ஏழைகள் அடிவைக்க முடியாது. ஆனல் இன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் திரளும் அக்டோபர் முதல் தேசிய திருவிழா இங்கு 15டப்பதாக இருந்தது. சீனப் படை யினர் ஆயிரக்கணக்கில் அணிவகுத்து அதற்கான ஆயத் தங்களைச் செய்துகொண்டிருந்தனர்.
நான் ஹாங்கொங்கில் பார்த்த பிரிட்டிஷ் படை வீரருக்கும், இந்த கவசீனப் போர்வீரருக்கும் முகப்பொலி வில் எத்துணை வேற்றுமை ! சீன விடுதலைப் போர் வீரரைச் சீனமக்கள் கண்ணின் கருமணிபோல் போற்று கின்றனர். கன்னடத்தையினலும், தன்னலமற்ற தேசப் பற்றினலும், மக்களன் பை யும் அபிமானத்தையும் பெற்றுச் சென்ற இடமெல்லாம் சிறப்புடன் வரவேற்கப் படுபவராக இந்த வீரர்கள் காணப்பட்டனர். கொள்கைக் காக, தமது வாழ்க்கைக்காக, காட்டிற்காக, வருங்" காலச் சந்ததிக்காக தாம் போராடுகிருேம் என்பதை நன்கு உணர்ந்திருக்கின்றர்கள் இவ்வீரர்கள். இவர்களின் முகாம்கள் சுத்தமாகவும் அழகாகவும் அமைந்திருந்தன. அந்த வீரர்களை காங்கள் வணங்கினுேம்; அவர்களும் பதிலுக்கு வீராஞ்சலி செய்தனர்.
சீனத் தேசிய தினம் நெருங்கியது. அனைவரும் உணர்ச்சி வெள்ளம் பெருக, தோழமை உள்ளம்

Page 19
26
துடிக்க அங்கன்னுள் என்று வருமோ என ஏங்கிநின்றனர். தலைவர் மாசேதுங்கின் அழைப்பிதழ் எங்களை மட்டற்ற ஆனந்தத்தில் மூழ்கடித்தது. செப்டம்பர் முப்பதாம் நாள் மாலை ஏழு மணியிருக்கும். விருந்துபசார மண்டபத் தைச் சென்றடைந்தோம். நூற்றுக்கணக்கான விருந் தினர்கள், வெளி காட்டு ராஜதந்திரிகள், சிறந்த தொழி லாளர், சீன தேசிய இனங்களின் பிரதிநிதிகள், கலைஞர் கள், அரசாங்க ஊழியர்கள், இன்னும் எத்தனே எத்தனையோ பிரதிநிதிகள் மண்டபம் நிறைந்து வழிய கின்றனர். தலைவர் " மாஓ'வினிடம் சமாதானக் குழுத் தலைவர்கள் ஒவ்வொருவராக அறிமுகப் படுத்தப்பட்டனர். ஜனத்திரளின் மத்தியில், இலங்கை வியாபாரத் தூதுவர் சேனநாயக்காவையும் கண்டேன்.
தலைவர் 'மாஒ தந்த விருந்து
மணி ? இருக்கும். தலைவர் மாசே-துங் 2000 விருக் தினருக்கு மத்தியில் பேசத் தொடங்கினர். கையொலி எங்கும் எதிரொலித்தது. மக்கள் மனப்பீடத்தில் வீற்றிருந்து, எங்கெங்கும் அன்புடன் பேசப்படுகின்ற மாபெரும் தலைவனைக் காண, பல தலைகள் ஒன்ருேடு ஒன்று முட்டி, எட்டி, போட்டி போட்டன. சீன மக்களின், மனித குலத்தின் ஒப்பரிய தலைவரைச் சுற்றிச் சீன அரசாங்க ஊழியர்கள், பெருமந்திரிகள், முதல் அமைச்சர் செள-என்-லாய், தளபதி சூட்டே போன்ருேர்கள் காணப்பட்டனர். தலைவர் சில நிமிட நேரம் பேசினர். அது ஆங்கிலத்திலும், ஸ்பானிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது. குழுவினரை வரவேற்று சில வார்த் தைகள்; சீன மக்கள் வெற்றிபற்றி அவர் கருத்துக்கள். அதன் முடிவிலே " சீன மக்கள் ஒற்றுமை வாழ்க! சீன சோவியத் கல்லுறவு வாழ்க! சீன மங்கோலியக் குடியரசு

2?
மக்கள் ஐக்கியம் ஓங்குக ! உலக மக்கள் ஒற்றுமை நீடூழி வாழ்க’ என்ற கோஷங்களின் முடிவில், 2000 விருந்தின ரும் மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர்.
சில கிமிடங்களுக்குப்பின் ‘மாஓ'வின் அருகில் போய்ச் சேர்ந்து, உணர்ச்சியும் உற்சாகமும் தந்த அவர் முகத்தைப் பார்த்து மகிழ்ந்தேன். சீன முதல் அமைச்சர் செள-என்-லாய் விருந்தினர் மேசையருகில் வந்து உபசரித் துப் பேசினர். ரத்தின வீராவும் கானும் அவரைப் பின் தொடர்ந்தோம். சேயைப் பற்றும் தாயைப்போல எங்கள் மேசைக்கும் வந்தார். சீன அயல்காட்டு 15ல்லுறவை வளர்க்க வாய்த்த அந்த கல்ல தருணத்தை 5ழுவவிடாமல், சீன மக்களும் நாங்களும் அதனைப் பயன்படுத்தினுேம். அங்கன்னள் உண்மையாகவே ஒரு பெரு நாளாகும். பாட்டும், மட்டற்ற மகிழ்ச்சியும் பொங்க எங்கள் விடுதி வந்து சேர்ந்தோம்.
சீன தேசீயத் தினம்
அடுத்த நாள் காலை பீக்கிங் பட்டினத்தின் நடுப் பகுதியில் இருந்த ஒரு மைதானத்தில் தேசீய விழா 10 மணிக்குத் தொடங்க இருந்தது. அரைமணி நேரத்துக்கு முன்பு, பார்வையாளருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நாங்களும் போய் கின்ருேம். சமாதானத் தூதுக் குழுவி னர், அன்னிய அரசாங்கத் தூதுவர் அனைவரும் பார்வை யாளர் பகுதியில் காணப்பட்டனர். மணி பத்து இருக்கும். மாசே-துங் மக்திரியார் புடைசூழ கையொலி முழக்கத்தின் மத்தியில் வந்து நின்றர். படைத் தளபதி சூட்டே அணிவகுத்து கின்ற சேனையைப் பார்வையிட்டபின், உரை கிகழ்த்தினர்; அதையடுத்து சீனப் படையினர் அணி வகுப்பு நிகழ்ந்தது. போர்த்தளவாடங்கள், துப்பாக்கிகள், உலகத்தின் அற்புதமான படைக் கருவிகள் பல தாங்கி

Page 20
வீர கடை போட்ட சீனப் படையினர் தாம் உலகத்தில் எந்த வீர ரதிவீரர்க்கும் சஃனத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டினர்.
படை அணிவகுப்பைவிட, ஏராளமாகத் திரண்டு நின்ற சீன மக்களின் கூட்டம் என்ஃனப் பெரிதும் கவர்ந் தது. இலட்சக்கணக்கான மக்கள், கலேவர் 'மாஓ'வுக்கு மரியாதை செலுத்தி ஆர்ப்பளித்த காட்சியை என்னுல் என்றும் மறக்கமுடியாது. குழந்தைகளும், பெண்களும், ஆண்களும், தொழிலாளரும் குவிக்று நின்ருர்கள். நூற்றுக்கணக்கான கொடிகள், ஆலவட்டங்கள் காற்றில் அசைந்தன. கோஷங்கள் வானே எட்டின. ஒவ்வொரு வரது அகத்திலும் ஆலே விசிக் கொண்டிருந்த ஆனந்தம் முகத்திலே உணர்ச்சி மிகுந்த புன்னகையாக மலர்க் திருக்தது. அனேக்தும் இப்பொழுதும் என் மன தில் அப்படியே பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது. இக்காட் சியைப் பார்த்துக்கொண்டிருந்த போது, "எந்த மடையன் தான் சீன மக்கள் இன்னும் விடுதலே பெறவில்லேயென்று கூறுவான்? எந்தத் துரோகிதான் மாசே-துங் ஸ்டாலி இனுடைய கைப் பொம்nை என்று கூறுவான்?" என்ற அக்கேள்விகள் என் மனதில் ஊசலாடின. சிறுவர்கள் பலர் கையில் சமாதானப் புருக்களுடன் பட்டில்லா மகிழ்ச்சியோடு, ' 0ாசே-துங் வாழ்க!" என்று கோவு மிட்டு கின்றனர். இத்தனேயும் கண்டபின் சீன மக்களுடைய வருங்காலத்தைப்பற்றி எந்த அசடுதான் ஐயமுறமுடி/ம்? வெள்ளே உடையணிந்திருந்த அச்சிருர் கள் புருக்களேக் கையில் வைத்திருந்த தோற்றம் அவர்களே தேவதைகளேப்போல் தோன்றச் செய்தது. இக்காட்சி நிற்போர் மனதைக் கொள்ளே கொண்டு, ஒடியஃணத்து அச்சிருர்களுக்கு முத்தம் கொடுக்கலாமா என்று எண்ண்ச் செய்தது. கையின் குன்டன் சென்ற குழங்தைகள் சில
 
 
 
 

i
તે

Page 21
.... siÞ , , , , |- **专点nsoof wo
-
|-
-
|-
. . *處T@處可虎
|- |- |-
----
- ( )|-
)·----耀Nossae·
---- ■■------~~ || |- ----; , ---------
(
No
|-| |-
 
 
 
 
 
 

BÍ
சமயங்களில் அவற்றை வானத்தில் பறக்கவிட்டது கண் கொள்ளாக் காட்சி ஆகும். சில புருக்கள் கூட்டத்தின ரிடையே வலம் வந்து அமர்ந்தன. ஒரு புரு தஃலவர் "மாஓ' வினுடைய தோளிலே போயமர்ந்தது. ஐந்துமணி நேரம் அலுப்புத் தட்டாமல் நின்று பார்த்தோம். சிறுவர்கள் புருக்களே விடுதலே செய்த காட்சி, தஃலவன் 'மாஓ' பல நற்குண்டுகளாக சீன மக்களைப் பிடித்திருந்த நிலப் பிரபுத்துவச் சுரண்டல், வறுமை என்பவற்றின் கோரப் பிடிப்பினின்று அவர்களே விடுவித்துச் சுதந்த சூரியன் பிரகாசிக்கும் சுபீட்சப் பாதையில் வழிகடத்திச் செல் வதை என் கண்முன் பிடித்து நிறுத்தியது.
மைதானத்திலும், பட்டினத்தின் பல பாகங்களிலும் வாண வேடிக்கைகள் நடந்தன. பரந்த வெளிகளில் கடந்த நடனங்களேப் பார்க்கச் சென்றிருந்தோம். அங்கு எங்களே பும் ஆடவைத்து விட்டனர், அன்பின் மிகுதியினுல். சில: இலங்கைப் பாட்டுக்கள் பாடப்பட்டன. ரத்தினவிரா, சீன தேசிய கீதத்தைப் பாடியபொழுது, எல்லோரும் * அருமை ! அருமை ' என்று ஆர்ப்பரித்தனர். கள்ளிரவுவதை நடனமும் பாட்டும் தொடர்ந்தன. சீன மக்களுடைய உற்சாகம் எங்களே அந்த இடத்தை விட்டுச் செல்லாமல் தடைசெய்து விட்டது.

Page 22
ஐந்தாம் அத்தியாயம்
பீக்கிங் சமாதான மாநாடு
அடுத்த நாட் காலை (3-10-53) ஆசிய பசிபிக் பிராக் திய சமாதான மாநாடு தொடங்கியது. 37 5ாடுகளி லிருந்து வந்த 400 தூதர் இதில் பங்கு கொண்டனர். இவ்விழாவில் ஆஸ்திரேலியா, பர்மா, கனடா, இலங்கை, சில்லி, சீனு, கொலம்பியா, கோஸ்ட்டாரிக்கா, சைப்பிரஸ், ஈக்குவெடர், எல்சல்வெடோர், கெள திமாலா, கண்டு ராச், இந்தியா, இந்தோனேசியா, ஈராக், இஸ்ரேல், யப்பான், கொரியா, பாதெட்லாவோ, லேபோனன், மலேயா, மெக்சிக்கோ, மங்கோலியா, நியூசிலாந்து, நிக்க ராகுவா, பாகிஸ்தான், பனமா, பேரூ, பிலிப்பயின்ஸ், சிரியா, தாய்லாந்து, துருக்கி, ருஷ்யா, அமெரிக்கா, வியட் 15ாம் முதலிய நாடுகள் கலந்துகொண்டன.
மாநாட்டின் செயற்குழு விடுத்த பிரகடனத்தின்படி, ஆசிய பசிபிக் பிரதேசங்களில் வாழுகின்ற 160 கோடி மக்களின் சமாதானக் குரலே இம்மாநாடு.
உலக சமாதானக் கவுன்சில் துணைத் தலைவர் கப்பிரி யல் டி ஆர்போன்சியர், செயலாளர் ஐவர் மாண்டேகு, உல கத் தொழிற் சங்க சம்மேளனத்தின் செயலாளர் லியூகி கிராசி, ஆசிய, ஆஸ்திரேலிய வெளி விவகார உலகத் தொழிற் சங்க ஊழியர் திரான்டன், சர்வ தேசிய மாதர் ஜனநாயக சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலாள ரான கார்மன் சாக்தி, சர்வ தேசீய ஜனநாயக வழக்கறி ஞர் சங்கத்தின் பொருளாளரான லூசீனிபாவுவி ஒக்ஸ், உலக ஜனநாயக வாலிபர் சம்மேளனத்தின் உறுப்பின ரான சின் சான் சியாங், சர்வ தேசிய மாணவர் சங்கத் தின் துணைத் தலைவரான ரேவியல் இசி வேரியா முதலான

88.
பலரும் மாகாட்டில் கலந்து கொண்டனர். சர்வ தேசிய * ஸ்டாலின் பரிசு’ பெற்ற திருமதி மொனிக்கா வெல்டன் அழைக்கப்பட்டிருந்த விருந்தினரில் ஒருவராவர்.
தொடக்கக் குழுவின் பொதுச் செயலாளரான லியூ கிங்-கி, அதுவரை எடுத்துக்கொண்ட நடவடிக்கை பற்றிக் குறிப்பிட்டார். மாநாட்டுத் தலைவர்களாகச் செயலாற்ற சூங் சிங்-லிங் (சீன), டாக்டர் கிச்சுலு (இந்தியா), மொகமது இப்திகாருதீன் (பாகிஸ்தான்), கிரோசி மினுமி (ஜப்பான்), வல்வெர்டி (கோஸ்றரிக்கா) முதலியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மகிழ்ச்சி தரும் மேள வாத்தியம் முழங்க, சீன சாரண இயக்கத்தினர் தலைமைப் பீடத்தில் அமர்க் திருந்த அத்தனை பேருக்கும் மலர் தந்து மரியாதை செலுத் தினர். லியூகிங்-கி (சீன) மாகாட்டின் பொதுச் செயலாள ராகவும், ரோமேஷ் சந்திரா (இக்தியா), தோகோ கமேடா (ஜப்பான்), வேடும் கோசிகிகோவ் (ருஷ்யா), எஸ். காய் (பாகிஸ்தான்). ஜங் சுங் அன் (கொரியா) முதலியோர் துணைச் செயலாளர்களாகவும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.
திருமதி சன்யாட்-சென் சொற்பொழிவு
சூங் சிங்-லிங் என்ற திருமதி சன்யாட்-சென் அம்மை யார் பலத்த கையொலியின் மத்தியில், “இன்றைய யுத்தங் களை நிறுத்தி, சகல பிரச்னைகளையும் நேர்மையான முறை யில் தீர்த்து வைப்பது; மனித குலத்தைப் பெருமளவில் 15ாசம் செய்யும் ஆயுதங்களே உபயோகப்படுத்தக்கூடாது என்று தடை செய்வது; கலாச்சார, வியாபார வளர்ச் சிக்கு எதிரிடையாயுள்ள சகல தடைகளையும் முறியடித்து, சர்வ தேசிய ரீதியாகத் தொடர்பு கொள்ளுதல் ஆகிய

Page 23
3.
கொள்கைகளுக்காக மனித குலத்தை ஒன்று திரட்டி, சமாதானச் சூழ்கிலேயில் எந்த காடும், எம்முறையிலும் வாழ வழி வகுப்பது போன்ற உயரிய கொள்கைகளே நம் முடைய குறிக்கோள்கள்" என்று கூறி மாநாட்டைத் திறக்து வைத்தார். பீக்கிங் பட்டினத் தஃலவரும், சீன சமாதானக் குழுவின் துனேத்தஃலவருமான பெங் சென் மாங்ாட்டினரை வரவேற்ருர்,
டாக்டர் கிச்சுலுவின் தஃபையில் கூட்டிய ாராட் டிற்கு மாசே - துங், உலக சமாதானக் கவுன்சில் தஃலவர் ஜோலியக் கியூரி, உலக சமாதானக் கவுன்சில் உறுப்பின கும், சில்லி 6ாட்டின் புகழ்பெற்ற பாவலருமான பாப்லோ செரூடா, உலக சமாதானக் குழு உறுப்பினர் போல் ருேப் சன், உலக சமாதானக் கவுன்சில் பொதுச் செயலாளர் ஜின் லெப்பிக் முதலானுேர் அனுப்பிய வாழ்த்துரைகளே மகாராடு ஆரவாரத்துடன் வரவேற்றது. நிகழ்ச்சி நிரலே பம், கூட்ட ஒழுங்குகளேயும் ஏகமனதாக மாநாடு ஏற்றுக் கொண்டதன்பின், அதையடுத்துப் பலபேர் பேசினர். இங்கு திருமிதி சன்யாட்-சென், சீன துனே முதல் அமைச்சர் கோ-மோ-ஜோ, திருமதி மொனிக்க வென்டன், புகழ்பெற்ற இக்தியக் காங்கிரஸ் தஃவர் டாக்டர் கிச்சு லு, இக்தியக் கம்யூனிஸ்ட் தஃலவர் ஏ. கே. கோபரவன் ஆகிய பிரமுகர்களேச் சக்திக்க வாய்ப்புக் கிடைத்தது.
ஆங்கில எழுத்து வரி முறைப்படி ஆசனங்கள் ஒதுக் கப்பட்ட காரணத்தினுல், சீனத்திற்குப் பக்கத்தில் இலங் கைக்கு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. திருமதி சன்யாட் சென். கோ-மோ-ஜோ ஆகிய இருவரும் என்னுடைய ஆசனத்திற்குப் பின்னுள்ள ஆசனங்களில் அமர்ந் திருக்தனர். இதன் காரணமாக, அவர்களே ஒன்னொரு கTளும் சக்தித்து மரியாதை செய்யும் வாய்ப்பு எனக்குக்
 
 
 

- , , ------------ , ! ، ، ، ، ، ، - |- ! - |- |-|-|-
|-|-
gnog sợ,
|-
|- - - - "- -
*:: -! ) 'wiosffuriejął w og aeo
-------- |-|-
-
*_鬥- ? - ......... E ... oE圈) " :. –)-- ----- - , ! ,F-F()
. | + ||×
.
擂、

Page 24
: - - - !----- --------T T , , , , , , め*Q-』g£17.51 frog) : T !- |-)·|- - |- -|- s |
sooooooooooooooogoo osoɛ ɔ frio grīng, sgogi ossee--Hurmuş o govog |
岛追图gādh岛eng唱用阪砲砲与5qe&offse) #kog spośr-Trøjuin海鹰唱51,
------} () , ! 그 디디이= -|- =----|-- - - - - --臀! |-|----- - --------|-|-|----+----*-|-----! . . . . . !--.*** I - Eris..青11- “is- , , , ,
----- - - - - -
· - │ │ │
 
 
 
 
 
 
 
 

8ኛ
ைெடத்தது. ஆசிய, தென் பசிபிக் பிராந்திய நாடுகள் எல்லாவற்றினின்றும் அத்தனே தூதர்கள் வக் திருந்தது. சமாதான இயக்கத்தில் எவ்வளவு தூரம் அக்கறை பிறக் திருக்கிறதென்பதைப் பிரதிபலித்தது. அரசியல் கலேவர் கள். அறிவியல் வல்லுநர்கள், எழுத்தாளர்கள், ஓவியர் கள், தொழிற் சங்கத் தஃலவர்கள், பத் திரிகாசிரியர்கள், பெண்ணினத் தலேவர்கள், இன்னும் மனித குலத்தின் சகல வாழ்க்கைத்துறைப் பிரதிநிதிகளும் மாக ாட்டில் வங் தர்க் திருந்தனர்.
சீனத் துனேத் தஃலவர் கோ-மோ-ஜோ மேடை மீதேறி மாநாட்டின் இரண்டாவது நாள் வைபவங்களேத் தொடங்கி வைத்தபொழுது, அனே வரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர். அவருடைய பேச்சில் (1) ஐப் பானில் மீண்டும் ராணுவ வெறி தஃகாட்டாது தடுக்க ஜப்பானியப் பிரச்சினேயைப் பரிபூரணமாகத் தீர்த்துவைத் தல், (3) நீதியான-ஏற்றுக் கொள்ளத்தகுந்த முறை பல் கொரியப் போரையும், ஏஃனய பகுதிகளில் மூண் டுன் எ போர்களேயும் நிறுத்துவதற்குத் தகுந்த நடவடிக்கை எடுத்தல், (3) ஐந்து பிரதான வல்லரசுகளுக்கு மத்தி பிலும் ஒரு கிரந்தர சமாதான உடன்படிக்கையைச் செய்து கொள்வது, (4) உலக மக்கள்-உலக ந ாடுகள் சுதந்திரத்தைப் பாதுகாத்தல், (5) போர் வெறி யூட்டும் பிரச்சாரம், இனவெறுப்பைத் துரண்டுதல், சமாதான இயக்கத்தை நசுக்க முற்படுதல் முதலியவற்றைக் கண் டித்து அவற்றைச் சட்ட விரோதமாக்க வேண்டுவது முத வினைகளேப்பற்றிக் குறிப்பிட்டார்.
ஜப்பானியப் பிரச்சிஃனபற்றி தோகோ கமrடT
(ஜப்பான்), விக்டர் ஜேம்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகிய இரு
வரும் அறிக்கைகள் சமர்ப்பித்தனர். அன்று பிற்பகல் கொரியத் தூதுக்குழுத் தல்லவர் கொரிய யுத்தத்தைத்

Page 25
38
தீர்த்துவைக்க கொரிய மக்கள் கொண்டுள்ள கருத்துக் களைப் பின்வருமாறு கூறினர் :
(1) 1949-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஜெனிவா ஒப் பந்தத்தின்படி இருதரப்புக் கைதிகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அது தேசீய நடைமுறை வழக் கங்களுக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். இன்னும் கொரியாவில் உடனடியான சமாதான ஒப்பக் தத்தைச் செய்துகொண்டு, கிரந்தரமான சமாதான உடன்படிக்கையைச் செய்ய வேண்டும்.
(2) அமெரிக்கர்கள் கொரியப் பிரச்சினையில் தலை யிட்டதைக் கண்டிக்கிருேம். அவர்கள் கிருமி யுத்தம் தொடுப்பதையும், சமாதானச் சூழ்நிலையில் இருக்கின்ற பட்டினங்களையும் கிராமங்களையும் குண்டு போட்டு நாசம் செய்வதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். யுத்தவெறி யூட்டும் பாதகர்கள் தண்டிக்கப்பட வேண்டும். (8) கொரிய சமாதான உடன்படிக்கைக்குப்பின், கொரியாவிலுள்ள சீன தொண்டர் படைகள் உள்பட சகல அன்னியப் படைகளும் அக்காட்டை விட்டு வெளி யேறுவதன் மூலமாக அங்காட்டின் உள் நாட்டுப் பிரச் சினேகளுக்கு ஒரு முடிவு காண முடியும். மாநாடு பின்வரும் செயற் குழுக்களுக்கு முறையே தலைவர், துணைத் தலைவர்க ளாக நியமிக்கப்பட்டோரை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.
செயற் குழுக்களின் விபரம் :
(1) ஜப்பானியப் பிரச்சினை. (2) கொரியப் பிரச்சினை. (3) கலாச்சாரத் தூதுவர். (4) பொருளாதாரத் தொடர்பு.

39
(5) தேசீய சுதந்திரம். (6) ஐந்து வல்லரசுகள் சமாதான உடன்படிக்கை. (?) குழந்தைகள் முன்னேற்றம். (8) பெண்கள் கல உரிமை.
இந்தோனேஷியத் தூதுக்குழுவைச் சார்ந்த சொரோ சோ பொருளாதாரத் தொடர்புபற்றி ஓர் அறிக்கை சமர்ப்பித்தார். அவர் ஆசிய, பசிபிக் பிரதேசங்களில் வாழும் மக்கள் எண்ணிக்கை, இயற்கை வளம் ஆகிய" வற்றை எடுத்துக்காட்டி, ஏகாதிபத்திய அடிமைத் தனத்தினுல் ஏற்பட்ட செயற்கை வியாபாரத் தடைகளை நீக்குவதற்கான வழிமுறைகள் சிலவற்றைக் கூறி, இந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும், மக்கள் வாழ்க் கைத்தரத்தை உயர்த்தவும் பாடுபடுவதன் மூலமாகத்தான் உலக சமாதானத்தை நிலை நிறுத்த முடியும் என்பதை வற் புறுத்தினர். கனடாவைச் சேர்ந்த பின்லே மெக்கென்சியும், இந்தியாவைச் சேர்ந்த கியான்சந்தும் தொடர்ந்து அறிக் கைகள் சமர்ப்பித்தனர். அன்று பிற்பகல் இலங்கைச் சமா தானக்குழுவின் சார்பாக முதன் முதலில் பேசும் சந்தர்ப் பம் எனக்கு வாய்த்தது. அது பொருளாதாரப் பிரச்சினை பற்றிய ஓர் அறிக்கையாகும். இலங்கை தூதுக்கோஷ்டி சில தினங்களுக்கு முன்னதாக பிலிப் அவர்கள் பிரேரணையின் பேரில் என்னையே அந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி கேட்டமை எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. இருபது நிமிடங்கள் பேசிவிட்டு ஆசனத்தமர்ந்தபோது, திருமதி சன்யாட்-சென், கோ-மோ-ஜோ, பெங் சென் போன்றவர்கள் என்னைப் பாராட்டினர். அது எனக்குக் கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. ஏனெனில், அத் தகைய உயரிய மரியாதையைப் பெற கான் தகுதி உள்ள வனே என்று அஞ்சினேன்.

Page 26
40
தேசிய சுதந்திரம் பற்றிய அறிக்கையை, சில்லி நாட் டைச் சேர்ந்த திருமதி ஒல்கா பொல் பொப் விட் சமர்பித் தார். ‘சமாதானம், சுதந்திரம் என்ற இரண்டும், ஆசிய, பசிபிக் பிராக்தியங்களுக்கின்றியமையாதன" என்பதை வற்புறுத்தி அனேவரையும் கவரத் தகுந்த முறையில் ஏ. கே. கோபாலன் பேசினர்.
தகிரா மஷ்கார் என்ற பாகிஸ்தான் பெண்மணி மாநாட்டின் நான்காம் நாளில் பெண்ணின உரிமை பற்றியும், குழந்தைகள் பாதுகாப்புப் பற்றியும் பேசினர். அப்போது போர்க்காலத்தில் பெண்ணினம் எங்தெந்த வகையில் பாதிக்கப்படுகிறதென்பதையும், குழந்தைகள் படும் அல்லல்களையும் எடுத்துக்கூறி, சமாதானத்தின் மூலமாகத்தான் பெண்களின் நல உரிமையையும், குழந்தை களின் 5ல் வாழ்வையும் பேண முடியுமென்று வற்புறுத் தினர். அன்று பிற்பகல் லூயி விற்றன் என்ற அமெரிக் கப் பிரதிநிதி ஐந்து வல்லரசுகள் சமாதான உடன் படிக்கை பற்றி முக்கிய அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித் தார். அத்தகைய ஓர் உடன்படிக்கையின் மூலமாகத்தான் சமாதான ரீதியாகச் சகல பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஒரு புது உலகத்தைக் காண முடியுமென்று கூறினர். மர்காட்டின் ஐந்தாம் நாளன்று, துருக்கி நாட்டின் புகழ் பெற்ற கவிஞர் காஜிம் ஹிக்மத், உலக சமாதானக் கவுன்சில் செயலாளர் ஐவர் மாண்டேகு போன்ற பிரமுகர்களின் பேச்சைக் கேட்டோம். கொரிய யுத்தத்தைத் துருக்கி மக்கள் மிக வன்மையாகக் கண்டிப்பதைக் கவிஞர் எடுத் துக் காட்டி, சமாதானத்திற்காகவும், தேசிய விடுதலைக் காகவும் தங்கள் நல்லுயிர் ஈந்த தியாகிகளின் நினைவுக் காக ஒரு நிமிடம் மெளன மரியாதை செலுத்தும்படி சக ரையும் வேண்டினர். -

41
மகாநாட்டில் நிகழ்த்தப்பட்ட வன்மையும் கவர்ச்சி யும் கொண்ட பேச்சுக்களில் ஒன்று மலேய சுதந்திரப் போர் பற்றி, மாண்டேகு அவர்களால் நிகழ்த்தப்பட்ட தாகும். மலேயா மக்களுக்கு எதிராக வெள்ளை ஏகாதி பத்திய வாதிகள் மலேயாவிலே செய்யும் அநியாயம் ஒவ்வொன்றையும் தோலுரித்துக் காட்டினர். “பயிர்களே அழித்தல், கிராமச் சொத்துக்களைத் தரைமட்டமாக் குதல், கூட்டுத் தண்டனை முறை, கைதிகளைச் சித்திர வதைப் படுத்துதல், இறக்தோரின் பிணங்களைச் சீர்கெடுத் தல் ஆகியவை அனைத்தும் மலேயாவில் நிகழ்ந்து வரு கின்றன என்பதை பிரகடனப் படுத்த இந்த மேடையை நான் பயன்படுத்திக் கொள்ளுகிறேன். இவை ஒவ் வொன்றும் மாபெரும் குற்றமாகும். இவை ஒரு நாட்டின ரால் மற்ருெரு நாட்டின்மீது கையாளப்படுவதாக இருக் தால், அது சர்வ தேசிய சட்டங்களுக்கு முரண்பட்டவை என முடிவு கட்டப்படும். இங்கு சாட்டப்படுகின்ற ஒவ் வொரு குற்றமும் ஆட்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டவை. இவற்றைப் பற்றிப் பெருமையாக மார் தட்டிப் பேசுகிருரர்கள் அவர்கள். எனவே இவை வெறும் குற்றச்சாட்டுகள் அல்ல என்பது தெளிவு. தளபதி டெம்பிளரும் (மலேயா ஹைகமிஷனர்), அவருடைய பிரதம கையாளான விட்டின்டன் என்பவரும் போர்க் குற்றவாளிகளென நான் இங்கு பிரகடனம் செய்கிறேன். நூரம்பெர்க் வழக்கு விசாரணையின் முடிவில், தூக்கு மேடை ஏற்றப்பட்ட ஜெர்மன் குற்றவாளிகளுக்கு இவர் கள் எந்த விதத்திலும் குறைந்தவர்களல்லர். பிரிட்டிஷ் குடிமக்களுடைய புனிதப் பொறுப்பு மலேய மக்களுடைய மீதியான கோரிக்கைகளை ஏற்று இந்த யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆவன செய்தலேயாகும் என்று நான் பிரகடனம் செய்கிறேன்,” என்று அவர்

Page 27
43
முழங்கினர். மலாய் நாட்டின் நிலவரத்தைபற்றிப் பேசி, மலேயாவிலேயே வாழுகின்ற இலங்கை மக்கள் அறிக் ததைவிட அதிகப்படியான உண்மைகளே அவர் எடுத்து விளக்கிய பொழுது, இலங்கையிலிருந்து சென்ற நான் அதனே மிகவும் அக்கரையாகக் கேட்டதற்குக் காரணம், பல்லாயிரக்கணக்கான இலங்கையரும், தமிழர்களும் இங்கு வசிப்பதேயாகும். பரிசு பெற்ற மொனிக்கா வெல்டன் என்பவர், கொரியாவில் தாம் இரண்டாம். தடவையாகப் பார்த்த பல விஷயங்களைப் பற்றித் தமது அபிப்பிராயங்களை வெளியிட்டார்.
சோவியத் குழுத்தலைவர் அனிசிமோவ் சோவியத் மக்கள், ஆசிய, பசிபிக் பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுடைய உரிமைகளையும், சுதந்திரத்தையும், சமா தானத்தையும் ஆதரிப்பதாக எடுத்துச் சொல்லி, சோவி யத் மக்கள் சமாதானச் சூழ்நிலையில் புனருத்தார ணம் செய்யும் வகையையும், சமாதான இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் முறையையும் வெகு தெளிவாக எடுத்துக் காட்டினர். சோவியத் நாட்டின் உஸ் பெக் குடியரசைச் சேர்ந்த கோட்ஜோவ் அந்தக் குடியரசினுடைய சாதனைகளை எடுத்து விளக்கினர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நான்சி லாப்வூட் நான்கு பிள்ளைகளின் தாய்-கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்அனைவருடைய அனுதாபத்தையும் பெறும் வகையில் பேசி னர். சமாதானத் தூதர்கள் எட்டுச் செயற் குழுக்களில் தமக்கு விருப்பமான ஒன்றில் சேர்ந்து கொள்ள வேண்டிய நிலை இருந்தது. இலங்கைத் தூது கோஷ்டியி னர் எத்தனைச் செயற் குழுக்களில் பங்கு பற்ற முடியுமோ, அத்தனையிலும் சேர்ந்து கொள்வதற்காகத் தங்களை முறையே பிரித்துக் கொண்டனர். - :

43
மாநாட்டின் தலைமைப் பீடத்தின் முடிவின்படி, பொது அறிக்கைகள் சமர்ப்பித்தோர்கள் செயற் குழுத் தலைவர்களாகவும் துணை அறிக்கைகள் சமர்ப்பித்தோர் துணைத் தலைவர்களாகவும் ஏற்றுக் கொள்ளப்படவே, பொருளாதாரப் பிரச்சினை பற்றி ஒரு துணை அறிக்கை சமிர்ப்பித்த நான் பொருளாதாரக் கமிஷனின் உபதலை வன் ஆனேன்.
செயற் குழுக்கள் கடமையாற்றிய முறை
மாநாட்டின் ஆரும் நாளன்று பொருளாதாரச் செயற் குழுவில் 65 பிரதிநிதிகள் எல்லா நாடுகள் சார்பிலும் பங்கு கொண்டனர். அந்தப் பிரதிநிதிகள் மத்தியில் புகழ் பெற்ற பொருளாதார வல்லுநர்கள், பேராசிரியர் கள், தொழிற் சங்க, அரசியல் தலைவர்களும் காணப் பட்டனர். தலைமைப் பீடத்தின் மூலமாக மாநாட்டிற்கு இறுதியான அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன் செயற்குழு பல தடவை கூடியது.
முதற் கூட்டத்தில் நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டது. பல பிரதிநிதிகள் சொற்பொழிவாற்றினர்கள்.
செயற்குழுவின் தலைவரான சொரோ சோ தலைமை வகித்தார். கனடா தேசத்து பின்லே மெக்கன்சியும், 15ானும் முறையே இரண்டாவது மூன்ருவது நாட்களில் தலைமை தாங்கினுேம். தலைவரோ அல்லது எங்களில் எவருமோ பொருளாதார நிபுணர்களல்லர். சீன தேசத்து மிகச் சிறந்த பொருளாதார நிபுணரும், சர்வதேச வியா பார வளர்ச்சி சங்கத்தின் சீனக்குழுத் தலைவரும், சீன பாங்கியின் துணை அதிபருமான டாக்டர் சி சோ-டிங் செயற்குழுவின் செயலாளராகக் கடமையாற்றி வந்தார். செயற்குழு 5டவடிக்கைகளில் அவரது அனுபவமும் அறி

Page 28
44
வும் எமக்குப் பெரிதும் பயன்பட்டது. சில சந்தர்ப்பங்களில் இரவு 5ெடு நேரம் வரைக்கும் செயற்குழு கடமையாற்றி வந்திருக்கின்றது. நீண்ட நேர விவாதத்தின் பின்பு, பிரேரணைகள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டன. ஏனேய செயற்குழுக்களும் அதிக அக்கரையுடனும், கல்லெண்ணத்துடனும், ஒத்துழைக்க வேண்டுமென்ற கோக்கத்துடனும் கடமையாற்றி வந்தன. ஏழாவது காள் இலங்கை தூதுக்குழுத் தலைவர் சுவாமி நாரவிலா, சமாதானத்திற்கும், வியாபாரத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றி எடுத்துக் கூறி, இலங்கையின் நல் வளர்ச்சிக்கு ஆசியாவில் சமாதானம் நிலவ வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினர். அடுத்துப் பேசிய பல ருள்ளும், அமெரிக்காவைச் சேர்ந்த திருமதிஅகிட்டா வில் காக்ஸ் என்பவர், இலட்சக்கணக்கான அமெரிக்கர்கள் கொரியப் போரை உடனடியாகத் தீர்க்க வேண்டு மென்று கோருவதை எடுத்துக் கூறினர்.
இந்திய, பாகிஸ்தான் கூட்டுப் பிரகடனம்
மாகாட்டின் எட்டாவது நாள் ஒரு பொன்னன சம்பவம். தலைமை தாங்கிய கோ-மோ-ஜோ இந்திய பாகிஸ்தான் கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டார். அமர்ந்திருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று மரியாதை காட்டி வரவேற்றனர். டாக்டர் கிச்சு லு இந்தியா சார்பிலும், பீர் மன்கி ஷரீவ் பாகிஸ்தான் சார்பிலும் முதன் முதலாகக் கையெழுத்திட்டு மேடை மேல் ஏறும் போது அளவு கடந்த வரவேற்புக் கிடைத்தது. அவர்களில் தொடர்ந்து பேராசிரியர் கியான்சந்த், ரவிசங்கர் வியாஸ், ரோமேஷ் சந்திரா ஆகி யோர் இந்தியாவின் சார்பிலும், செளகத்கயத்கான் அப்துர் ரகுமான், மீர் அப்துல் கயூம் ஆகியோர் பாகிஸ்தான்

委j,
சார்பிலும் கையெழுத்திட்டனர். இந்தியா பாகிஸ்தான் சமாதானத் தூதுக்குழுத் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆலிங்கனம் செய்த காட்சி கூடி இருந்த அத்தனே பேருள்ளத்திலும் ஆனந்த மடையைத் திறந்தது.
சரீபிற்கு, கிச்சுலு அவர்கள் ஒர் அழகான காஷ்மீர் பெட்டி ஒன்றையும், உயர்ந்த பட்டில் செய்யப்பட்ட "பீக்கிங் கோடை மாளிகை’ படத்தைத் தாங்கிய ஒரு பட்டுத்துணியையும் அன்பளிப்பாகவும், பீக்கிங்கில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியின் ஞாபக மாகவும் கொடுத்தார். பஞ்சாப் வழக்கப்படி சகோதரத் துவ சின்னமாக விளங்கத் தகுந்த பொன்னிறத் தொப்பி ஒன்றையும், பீக்கிங் ஞாபகார்த்தமாக ஓர் அழகிய மரப் பெட்டியையும் பாகிஸ்தான் பிரதிநிதி வழங்கினர். சகோதரத்துவ அன்பின் அறிகுறியாக மலர் மாலைகளை மாற்றிக் கொண்டனர்.
உருது, சீன, ஆங்கில மொழிகளில் ‘சமாதானம் நீடூழி வாழ்க’ என்று எழுதப்பட்ட ஒரு பதாகையையும், மலர் மாலைகளையும் கோ-மோ-ஜோ அவர்களுக்குத் தரப்பட்ட வுடன் பலத்த கையொலி நீடித்தது. செயற் குழுத்தலைவர் என்ற முறையில் நான் இந்தக் கூட்டுப் பிரகடனத்தை பெரிதும் ஆதரிக்கிறேன். “நல்லுறவும் கட்பு மனப்பான் மையும் இந்தப் பிரகடனத்தில் பிரதிபலிக்கிறது. நீண்ட காலமாகத் தீர்க்கப்படாதிருக்கின்ற காஷ்மீர் பிரச்சினே போன்ற ஏனைய பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கத்தகுந்த நல்லாதாரங்களைக் கொண்டிருக்கின்றது இந்தக் கூட்டு அறிக்கை. ஆகையினல், இது நமது மாகாட்டின் குறிப் பிடத்தகுந்த அம்சம் ' என்று கூறினர். இந்தப் பிரகட னத்தில் கையெழுத்திடும்போது கையொலி 10 நிமிடங் களுக்கு மேலாக நீடித்தது

Page 29
46
ஜபபானியரான கனி மொன் கற்காமுரு ஒன்பதாம் நாள் மாநாட்டில் தலைமை தாங்கி நிகழ்த்திய சொற்பொழி வின்போது, உண்மையான கலைப்பண்பாட்டின் பல அம்சங்களை, அமெரிக்க ஆக்கிரமிப்புக்காரர்களின் தூண்டுதலின்பேரில் ஜப்பான் அரசியலார் தாக்க முனை வதை வன்மையாகக் கண்டித்தார். ஜப்பானியத் தொழி லாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அறிவாளிகள் அத்தனைபேரும் ஒன்ருகத் திரண்டு ஜப்பான் காட்டின் தேசிய விடுதலை, கலாச்சார, சமாதான நல்வாழ்விற்காக இடைவிடாது போராடிவரும் வகையைக் கூறியபோது பிரதிநிதிகள் அத்துணைபேரும் ஆர்ப்பரித்தனர்.
இந்தியப் பாராளுமன்ற உறுப்பினரும், இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினருமாகிய பண்டிட் சதுர் நரே யிங் மாளவியா, கொரியா, வியட்நாம், மலாயா போன்ற் இடங்களில் ஆக்கிரமிப்புப் போர் வெறியர்கள் காட்டு மிராண்டித்தனமான 15ரவேட்டையிலும், மனித குலத்தை அவமதிக்கும் அநாகரீக, அக்கிரமங்களிலும் ஈடுபட் டுள்ளதை வன்மையாகக் கண்டித்தார்.
சின மக்கள் குடியரசுக்கு வாழ்த்துக் கூறிவிட்டு, யுத்தத்திற்கும் ஏகாபத்தியத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்துக் கூறி, ஐக்கிய முன்னணி முறையைப் பரந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்று இலங்கையின் சார்பாகப் பேசிய எட்மன் சமரக்கொடி கூறினர். பத்தாம் நாளில், முதலில் பேசிய திருமதி மஞ்சுரி சட்டோபாத்யாய ‘போர் 15டவடிக்கைகளாலும், பொரு ளாதார அழிவுகளாலும் நேர்ந்த நெருக்கடிக்கு இந்தியப் பெண்ணினமும், பிள்ளைகளும் பலியாகியுள்ளனர். இந்தத் தொல்லைகளை இனி நாம் பொறுக்க மாட்டோம். அவற்றை எதிர்த்துப் போராட-சமாதானத்தைக்காக்க

4?
முன்’ வந்துவிட்டோம்” என்று இந்திய மாதரினத்தின் சார்பாக முழங்கினர்.
சீன நாட்டில் வெகுநாட்களாக இருந்து அனுபவப் பட்டவரும், நியூசிலாந்து துணைத்தலைவருமான ரிவீ அலே, பழைய சீனத்தின் தன்மையையும், அதை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட மனித குலத்தின் ஒரே கம்பிக்கைச் சுடராக விளங்குகின்ற கவசீனத்தினுடைய புனருத்தாரணத்தை யும் எடுத்துக்கூறி விளக்கினர். கிருமிகள் பற்றிய வல்லுநர் டாக்டர் சென்வென்-குயி, கொரியாவிலும், வடகிழக்குச் சீனத்திலும் , அமெரிக்க விமானங்கள் தொடுத்து வருகின்ற கிருமிப்போர் பற்றித் தான் கண்ட உண்மைகளை எடுத்துக் கூறினர்.
பண்டார நாயக்கா அவர்கள், இலங்கையில் அமெரிக்க வெளி விவகார அலுவலகத்தினர் செய்து வருகின்ற கொடுமைகளையும் அம்பலப்படுத்தி, ஏகாதிபத்தியத் திற்கு எதிராக நடத்தப்படுகின்ற விடுதலைப்போர் உண்மையாகவே சமாதானத்திற்கு நடத்தப்படும் அறப் போர் என்று வற்புறுத்தினர்.
இருநூறுக்கு மேற்பட்ட ஆங்கிலோ-அமெரிக்கப் போர்க் கைதிகள் அனுப்பிய கடிதத்தில், கொரியப் போரை உடனடியாக நிறுத்தினுல் தான் தாம் வீடு போய்ச்சேர முடியும் என்று குறிப்பிட்டிருந்ததை மாகாட் டினர் வரவேற்றனர். மாநாட்டில் 37 நாடுகள் சார்பாக 351 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் என்று, மாநாட்டின் முடிவு நாளாகிய அக்டோபர் 13-ம் நாள் மாநாட்டின் பொதுச் செயலாளர் அறிவித்தார்.
மாநாட்டின் முன்பு இப்பிரகடனங்களையும், தீர் மானங்களையும் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, இவை தலைமைப்பீடத்தவரால் விரிவாக ஆராயப்பட்டது என்

Page 30
48
றும், முடிவில் தீர்மானிக்கப்பட்டவைகளை, செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தென்றும் மாநாட்டுத் தலைவர் பெங் சென் அறிவித்தார். மேலும் அவர், விரிவான உயர்ந்த கருத்துக்களை இவை பிரதிபலிக்கின்றது என்ருலும் கூட, மாநாட்டினர் மேலும், விவாதித்து, இறுதி முடிவுக்கு வரலாம் என்று கூறினர். ஏகமனதாக ஏற்றனர்
பல தீர்மானங்கள் மாகாட்டின் முன்பு சமர்ப்பிக்கப் பட்டன. உலக மக்களுக்கோர் வேண்டுகோள் ; ஆசிய பசிபிக் சமாதான மாகாடு ஐ. நா. சபைக்கு விடுத்த அறிக்கை : ஜப்பான், கொரியா, தேசீய விடுதலை பொரு ளாதாரத் தொடர்பு ; கலாச்சார உறவு; பெண்கள் நல வுரிமை ; குழந்தைகள் நலம் ; ஐந்து வல்லரசுகள் சமா தான ஒப்பந்தத்திற்காக முயற்சிகளைக் கூட்டுதல் : மக்கள் சமாதான மாநாட்டிற்கு ஆதரவு ; வெளி விவ காரக் குழுக்களை ஆசிய, பசிபிக் பிரதேசங்களில் ஸ்தாபித்தல் ஆகிய தீர்மானங்கள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்படும் போது, எல்லோரும் எழுந்து நின்று கை தட்டி வரவேற்றனர். ஒவ்வொரு தீர்மானமாக, பகுதி பகுதியாக விவாதம் 15டைபெற்று கைகாட்டுவதன் மூல மாக வாக்கெடுப்பு நிகழ்ந்தது. தீர்மானங்களின் சொற்க ளைச் சீர்படுத்தவோ, கருத்துக்களை உயர்த்தவோ கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு திருத்தப் பிரேரணைக்கும் உற்சாக மான வரவேற்புக் கிடைத்தது. தேசீய விடுதலை பற்றிக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆஸ்ரேலிய பிரதிநிதி கனன் மெயினர்டு சில கருத்து வேற்றுமை காரணமாக மறுத்தார். தலைவர் பென் செங்கினுடைய அறிவுரையின் பேரில் ஒரு சிறு கூட்ட்ாலோசனை நிகழ்ந்தது. துணைச் செயலாளர் ரோமேஷ் சந்திராவும், கனன் மெயினர்டும் கருத்தொருமித்த முறையில்

49
கொண்டு வந்த திருத்தப் பிரேரணையை ஏகமனதாக ஏற்றனர். எதிர்ப்பும் மறுப்பும் அற்ற முறையில் தீர்மானங்கள் பதினென்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று தலைவர் அறிவித்தவுடன், மண்டபம் முழுதும் ஆரவார ஒலியும், எதிரொலியும் கேட்டது. ஆசிய், பசிபிக் பிரதேச சமாதானக்குழு உறுப்பினர்களாய்ப் பின் வருவோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டுத் தலைமைக் குழுவில் அங்கம் வகித்தோரில் கிருஸ்தவ பாதிரி ஜேம்ஸ் எண்டி கொட் (கனடா), பாப்லோ கெரூடா (சில்லி), பாக்டென் ஆய் (கொரியா), போல் ருேப்சன் (அமெரிக்கா) முதலானவர்கள் இடம் பெற்றிருந்தனர்.
அத்துடன் ஆப்கனிஸ்தான், கேப்பாளம், காஷ்மீர் ஆகிய
மூன்று நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடங்கள் ஒதுக்கப் பட்டிருந்தன. தலைவர் சூங் சிங் லிங் (சீன), துணைத் தலைவர்கள் ஐ. அனிசிமோவ் (ருஷ்யா), சுவாமி ஜேம்ஸ் எண்டி கொட் (கனடா), காஜிம் ஹிக்மத் (துருக்கி), சுவாமி விக்டர் ஜேம்ஸ் (ஆஸ்திரேலியா), டாக்டர் இச்சுலு (இந்தியா), கோ-மோ-ஜோ (சீன), மட்சு மோதோ யீசிரோ (ஜப்பான்), பாக்டன்-ஆய் (கொரியா), போல் ருேப்சன் (அமெரிக்கா), பீர் மான்கி ஷரீபும், (பாகிஸ்தான்) தலைமைச் செயலாளராகவும், துணைச் செயலாளர்களுமாக மாநாட்டில் கடமையாற்றியோர் களே தலைமைக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தனே பேருடைய பெயர் பட்டிய லும் வாசிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது. தலைமைப் பீடத் தைச் சேர்ந்த டாக்டர் கிச்சுலு, உலக சமாதான இயக்கத் தின் வளர்ச்சிக்கு மாநாடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்க் தது என்று சுட்டிக்காட்டினர். வீடு திரும்பியவுடன் ஒவ் வொருவரும் சமாதான இயக்கத்தை வளர்ப்பதற்கும், இடைவிடாமல் தீர்மானங்களை நடைமுறைக்குக் கொண்டு
4

Page 31
50
வரவும் முயற்சி எடுக்க வேண்டுமென்று பிரதிநிதிகளை வேண்டிக்கொண்டார். பேச்சின் முடிவில், பலத்த ஆர வாரத்தின் மத்தியில் அனைவரும் எழுந்து நின்று தலைவ ருக்கு மரியாதை செலுத்தினர். வாத்திய ஒலி முழங்க, "சமாதானத்தைப் பாதுகாத்து' என்ற அழகான கீதம் பாட, மண்டபத்தின் பல பாகங்களிலுமிருந்து பல நிறப் பூச்செண்டுகளுடன் பச்சிளம் பாலர்கள் மாநாட்டின் மத்தியில் புகுந்தனர். இந்த இன்பக் காட்சிதான் மாநாட்டின் சிகரமாயமைந்தது. பிரமித்து கின்ற பிரதிநிதிகள் எழுந்தனர். ஆர்ப்பரித்துக் குழந்தைகளை அணைத்தனர். இத்தகைய மட்டற்ற மகிழ்ச்சியின் மத்தியில் ஆசிய, பசிபிக் சமாதான மாநாடு இனிதாக முடிவடைந்தது. பன்மொழிகளிலும் ஆர்ப்பாட்டங்கள், ஆரவாரங்கள், ‘சமாதானம் நீடூழி வாழ்க’ என்ற ஒலி, மாநாடு முடிவடைந்து விட்டது என்று தலைவர் கூறிய பின்பும், கெடுநேரத்துக்கு கின்று கிலவியது. வியட் நாம், மலேயா, கொரியப் பிரதிநிதிகளுக்கு, உலகத்தின் ஒப்பரிய பிரதிநிதிகள் அத்தனை பேரும் மலர் மாலை அணிந்து, கொடிகள் பதாதைகள் முதலியன வழங்கி கட்டித் தழுவி வரவேற்ற கண் கொள்ளாக் காட்சி என்றென்றும் மறக்க முடியாது. ஒவ்வொரு நாளும் சீனமக்களுடைய மத, இளைஞர், பெண்கள் கழகங்கள் சார்பில் மலர் செண்டு களைத் தலைமைக்குழுவினருக்குச் சமர்பித்ததும் குறிப்பிட வேண்டியதாகும்.

ஆரும் அத்தியாயம்
பீக்கிங்கில் பிற வேலைகள்
அக்டோபர் 13-ம் நாள் பழைய ஏகாதிபத்திய அரண் மனே முன்பு தைகோதீன் என்ற இடத்தில், மாநாட்டின் முடிவு விழாவை 50,000 மேற்பட்ட மக்கள் கூடிக்கொண் டாடினர். சமாதானக் குழுவினர் கூட்டத்தை வந்த டைந்த வழி நெடுக ஆயிரக்கணக்கான இளம் ஆண், பெண்கள். அணிவகுத்து கின்று ஆர்ப்பரித்தனர். வெண் தொப்பி அணிந்த யுவர்கள் அணிவகுப்பு, சீன மொழியில் சமாதானம் என்ற சொல்லை உச்சரித்த வண்ணம் காட்சி அளித்தது. பீக்கிங் சமாதானக் குழுவினரும், இன்னும் பிற குழுவினரும் கூட்டத்தில் பேசினர். கூட்ட முடிவில் இலங்கை உள்பட அக்ேக தூதுக் குழுவினர் சீனத்துக்கு நல்லெண்ணம் தெரிவிக்கும் முகமாகப் பல நன்கொடை கள் வழங்கினர். அன்று மாலை பீக்கிங் மேயர் பெங் சென் கொடுத்த வரவேற்பு விழாவில், எல்லாத் தூதுக்குழு வினரும் கலந்து கொண்டனர். அதன் முடிவில் ஒர் 15டனம் நடந்தது.
கூட்டாலோசனை
செப்டம்பர் 14-ம் திகதி தொடங்கி சில நாட்களுக்கு தூதுக் குழுவினர் பல கூட்டாலோசனை சபைகளிலும், மாநாடுகளிலும் கலந்து கொண்டனர். கவசீனத்தின் புதிய ஆட்சி கைக்கொள்ளும் வேலை திட்டங்கள் பற்றிக் கலந்தாலோசித்தோம். தொழிற் சங்கம், கல்வி, பெண்கள் நிலை, சட்ட அமைப்பு, பத்திரிகைகள், நிலச்சீர்திருத்தம் ஆகியவைகளில் கவசீனத்தின் புத்தாட்சி மேற்கொள்ளும் வழி முறைகளைப்பற்றி விவாதித்தோம். எல்லாக்

Page 32
岳、
குழுவினரும் எல்லாப் பொருள் பற்றியும் தெரிந்து கொள்
ளேக் காலம் போதாமையினுல் அவரவர் விரும்பிய ஆலோசஃனக் குழுக்களில் சேர்ந்து கொண்டனர். நான்
தொழிற்சங்கம், கல்வி, பத்திரிகைத் தொழில், பொருளா தாரம், வியாபரம் பற்றிய பிரச்சினேகளில் ஈடுபட்டேன்.
ஒவ்வொரு துறையிலும் சீன வல்லுநர்கள் சொற்பொழிவாற்றிய பின், ஐயங்களேத் தீர்த்து வைக்கும் முறையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டு, ஆதைத் தொடர்ந்து விவாத
மும் விகழ்ந்தது. அது போழ்து கவசீனத்தைப் பற்றியும்,
அதன் நேச நாடுகளேப் பற்றியம் செய்யப்பட்டு வரும் துர்ப்பிரசாங்களுக்குத் தகுந்த பதிலளிக்கப்பட்டது.
சீன கல்வி, தொழிற் சங்க சார்பில் அதன் த&லவர் பேசிய முதல் வாக்கியம் "காற்றும் சூரிய ஒளியும் காக்கு என்வளவு து" "ம் தேவையோ அவ்வளவு தூரம் அவசிய மானது சமாதானம்' என்பது இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த விவாதங்கள் எல்லாம் சீன மக்கள் சமாதான விரும்பிகள் என்பதையும், அதைப் பாதுகாக்க அவர்கள் எல்லாவகையான தட
வடிக்கைகளும் எடுத்து வருகிருர்கள் என்பதும் எவ்வித
சங்தேகத்திற்கும் இடம் இல்லாது என் இதயத்திலே பதிந்தது.
பிந்திங்கில் தங்கி இருந்த காலத்தில் I l:11 சீனத் திரைப் படங்களேயும், கதம்பக் கச்சேரிகளேயும், நாடக கிலேயங்களேயும் பார்வையிட நேர்ந்தது. கான் பார்த்த ஓர் நாடகம் 'வெண் கங்கை" (White Hailed iேrl) என்பது.
மாநாடு முடிவடைந்த சில தினங்களுள் பல்வேறு நாட்டினரும் கடிகர்களாக இல்லாத போதிலும்-பாட்டுக் கன் பாடி, நடனங்கள், நாடகங்கள் முதலியவற்றை திறம்பட நடித்துக் காட்டினர். இலங்கை சார்பாக
 
 

啡 ங் மாநாட்டில் ஆசிரியர் சொற்பொழி
ᏭᏯᏯ
. வாற்றுகிருர்,
ܘ ==
| |
-
-

Page 33

岳5
பண்டார நாயக்கா, ரத்தின் விரா, திருமதி வைகுந்த வாசன் ஆகியோர் பாட்டுக்கள் பாடி, கடனங்கள் கடத் திக் காட்டினர்.
கோ-மோ-ஜோ விருந்து
சீனக்கள் குடிஅரசின் துனே முதலமைச்சர், இலங்கை துதுக் குழுவினருக்கும்-சீன மக்களாட்சிக்கு படையில் வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை ஒட்டி, அதைக் கொண்டாடும் நோக்கத்துடன் ஒரு விரும் ஆபசாரம் வைத்து அதற்கு எங்களேயும் அழைத்திருங் தது எங்களே மிகவும் கெளரவப்படுத்தியது. திருமதிகோ - ாே - ஜோ, கோ - ாே - ஜோ, சீன வெளிநாட்டு வியாபார வளர்ச்சிக் கழக பொதுச் செயலாளர் சி-சோ- திங், அரசியல் சட்டக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரங் டி சுவாங் ஆகிய இன்னும் பலரும், எங்கள் தூதுக் குழுவைச் சேர்ந்த பதின்மரும் கலந்து கொண்டோம். இலங்கை-சீன நல்லுறவுக்கு வாழ்த்துத் தெரிவித்த கோாே-ஜோ, "மக்கட் தொகை சிறிதாக இருந்தாலும், பெரி தாக இருந்தாலும் பேதம் பாராட்டாது. எந்த காட்டையும் பகுந்த மதிப்புக்காட்டி நடத்த சீனகாடு தயாராக இருக் கின்றது. சீன-இலங்கை வியாபார ஒப்பந்தத்தைப் பொறுத்தலான ரயில், சீன நாடு இடையூறுகளே உண்டாக் கவோ அல்லது விசிலவாசிப் போட்டியிலேயோ ஈடுபட வில்ஃப், தங்களுடைய கொள்கை எல்லா மக்களுக்கும் முடிந்தவரையில் உதவி செய்வது தான். இலங்கைக்கு அரிசிைேண்டும். அது சீனுவிடம் கிடைக்கிறது. அக்கார னைத்தினுல் இலங்கைக்கு அரிசியை அனுப்ப சீனு தயா ராக இருக்கிறது. சீனத்திற்கு ரப்பர் வேண்டும். அது இலங்கையிடம் கிடைக்கிறது. சீனு அதை விலே கொடுத்து வாங்கத் தயார்' என்றுர். முடிவுரையில், "இருநாடுகளுக் கிடையேயும் ஏற்பட்ட இந்த ஒப்பந்தம் ஓர் புதிய சகாப்

Page 34
56
தத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது என்று கூறினர். இலங்கை சார்பாக சுவாமி காரவில்லா பதிலளித்தார். எட்மன் சமரக் கொடி அவர்கள் தன்னுடைய பேச்சில், "பீக்கிங் மிகவும் குளிரான பட்டினமென்று கேள்விப் பட்டதாகவும், அக்குளிரொன்றும் பீக்கிங்கில் தன்னைத் தாக்காமல் விட்டதற்குக் காரணம் தாம் எங்கு போன அலும் தமக்குக் கிடைத்த உற்சாகமான வரவேற்புதான்” GT6OrQPt.
மாநாடும், விவாதங்களும் முடிவடைந்தபின், பீக்கிங் கிலும் சீனத்திலும் உள்ள வேவ்வேறு பகுதிகளையும், பொருள்களையும் பார்க்கப் பிரதிநிதிகள் அழைக்கப்பட் டிருந்தனர். சிலர் தம் நாடு போய்ச் சேர்ந்தனர். பலர் சீனத்தின் பல பாகங்களையும் பார்வையிடுவதற்காக வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் தங்கியிருந்து பல பட்டினங்களையும், கவசீன வாழ்க்கையின் பல அம்சங்களே யும் கவனித்தனர். இலங்கையைச் சேர்ந்த பத்து உறுப் பினர்களில் நால்வர் சில நாட்கள் அங்கு கழித்துவிட்டுத் தாய்நாடு திரும்பினர். சண்முகதாசன், ரத்தினவிரா முதலியோரும் கவசீனத்தில் பின்னும் இரண்டு வாரம் தங்கிவிட்டு, நவம்பர் 7-ம் நாள் மாஸ்கோ கொண்டாட் டத்தில் பங்கு கொள்ள சோவியத் யூனியன் நோக்கிப் புறப்படவேண்டி இருந்தது. ஆகையினல், சீனக் கிராம மொன்றையும், பீக்கிங் பல்கலைக்கழகம், டீன்ஸ்டின், ஷாங்காய் போன்ற சில பட்டினங்களையும் பார்வையிடத் திட்டமிட்டோம்.
சீனக் கிராமம்
அக்டோபர் 16-ம் நாள் பீக்கிங்கில் இருந்து 20 மைல் தூரத்திலுள்ள பா-தா-சன் என்ற எண் கோணக் கிரா மம் போய்ச் சேர்ந்தோம். கிராமிய மக்கள் எங்களை வர

5?
வேற்றனர். அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில், அதன் தலைவர் வியாங்கூம் அவர்களைச் சந்தித்தோம். அவர் பின்வருமாறு கூறினர் : “ 449 குடும்பங்களில் 3098 ஆட்கள் வாழ்கின்றனர். அக்கிராமத்துக்கு 7293 மோ (1 மோ = ஏக்கர்) நிலம் சொந்தம். எம் நாடு விடுதலை பெறும் முன்பு 29 நிலப்பிரபுக்கள் 1619 மோ நிலத்தை ஆண்டு வந்தனர். சராசரியாக நிலச்சுவான்தார் குடும் பங்களில் உள்ள ஒரு ஆளுக்கு 13 மோ நிலம் சொந்தம். ஏனையோர்களுக்கு சராசரி 15 மோ நிலமே இருந்தது. 30 ஆண்டுகளுக்கு மேற்பட வேலை செய்த உழவனுக்குக் கூட, உண்ணவோ உடுக்கவோ போதியளவு வசதி கிடைக்கவில்லை. நிலப் பிரபுக்களுக்குப் பெருங் தொகை யான வரி கொடுக்க வேண்டி இருந்தது. நானும் நிலச் சுவான்தாருக்கு இடைவிடாது உழைத்து வந்தேன். என்னுடைய இரண்டு குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுப் பணமின்மையினல் இறந்தனர். கோமின்டாங் ஊழி யர்களுடன் சேர்ந்து நிலப்பிரபுக்கள் கொடிய செயல் களில் ஈடுபட்டனர். எங்களிடமிருந்த பொருள்களைப் பிடுங்கிக் கொண்டு பெண்களைக் கற்பழித்தனர். முன்பு நாங்கள் பட்ட துன்பம் சொல்லி முடியாது. 1948-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைவர் "மாஒ எமது அடி மைத் தளைகளை அறுத்தார். நிலமற்ற 233 விவசாய குடும்பங்கள், குடும்பத்திலுள்ள ஒருவருக்கு 3 மோ கிலம் வீதம் பெற்றுக் கொண்டனர். முன்னைய 23 நிலப் பிரபுக்கள் குடும்பங்களுக்குமாக 231 மோ நிலம் ஒதுக் கப்பட்டிருந்தது. இன்று அரசாங்கம் எங்களுக்குப் பலி விதத்தில் துணை புரிகிறது. 1937 மோதரிசு நிலம், பொன் போன்ற நெல் விளையும் நிலமாக மாற்றப்பட்டு விட்டது. முன்னுளில் 1 மோ கிலத்தில் ஒரு பிக்கில் (அளவு) தானி யம் விளைந்தது. இப்பொழுது 2த் பிக்கில் கெல் கிடைக் கிறது. ஏனைய துறைகளிலும் முன்னேற்றம் உண்டு.

Page 35
58
முன்னுளில் 130 மாணவர்கள் கிராமப்பள்ளியில் படித் தார்கள். அவற்றுள் 100 பிள்ளைகள் நிலப்பிரபுக்கள் குடும்பத்தையும், ஏனைய பண்க்கார விவசாயிகள் குடும்பத் தையும் சேர்ந்தவை. ஏழை விவசாயிகள் பிள்ளைகள் 30 தான். இன்ருே 394 மாணவர்கள். முன்னுளைய ஏழைக் குடும்பங்களில் இருந்து படிப்போர் எண் ணிக்கை பெருந்தொகை. முதியோர் கல்விக்காக பல வகுப்புக்கள் கடத்தப்படுகின்றன. படிப்பின்மையை 2, 3 ஆண்டுகளுக்குள் போக்கத் தீர்மானித்து விட்டோம். எங்கள் பண்ணைகளில் 31 கூட்டுறவுக் கழகங்கள் இருக் கின்றன. அவற்றுள் 3 விவசாய உற்பத்திக் கூட்டுறவுக் கழகங்கள்’ என்று விளக்கினர்.
கிராம நிர்வாக அலுவலகத்திலிருந்து ஒரு நடுத்தர விவசாயியின் குடும்பத்தைப் பார்வையிடச் சென்றிருக். தோம். ‘லி’ என்பது அவர்களுடைய குடும்பப் பெயர். அந்த வீட்டுத் தாய் தங்கள் மகிழ்ச்சி வாழ்வுக்குக் காரணம் தலைவர் ‘மாஓ’வும், மக்கள் விடுதலைப் படையும் தான் என்று பெருமிதத்தோடு கூறினள். தமக்கு விமோசனம் தந்த மக்களாட்சிக்கு தாய்மையின் வணக் கத்தைத் தெரிவித்தாள். விடுதலைக்கு முன்னதாக தாம் பட்ட அல்லல்களைக் கண்ணிர் சிந்த எடுத்துக் கூறி
ஒரு நிலப் பிரபுவின் வீட்டுக்குப் போக வேண்டும் என்று நாம் கேட்க, கிராமத் தலைவர் நம்மை மியூ குவாண். டா என்ற நிலப் பிரபுவின் வீட்டுக்கு அழைத்துச் சென்ருர், ஏனைய வீடுகளே விட மிகவும் பெரியதாகக் காணப்பட்டது, இந்த வீடு. நிலச்சீர்திருத்தம் செய்யப் பட்ட போதிலும், நிலப்பிரபுக்கள் வாழ்ந்த வீட்டு உரி மையை அது பாதிக்கவில்லை என்றறிக்தோம். முன்னேய வீடுகளிலேயே அவர்கள் வாழ்ந்தார்கள். நெடுநேரமாய்

59
அவருடன் பேசிக் கொண்டிருந்தோம். சில கேள்விகளைப் போடும் போதெல்லாம் அவர் சிறிது வெட்கப்பட்டார். கிலச் சீர்திருத்தத்தைப் பற்றி அவர் அபிப்பிராயம் என்ன என வினவினுேம். *தான் அதை முதலில் எதிர்த்ததாகவும், பின்பு நிலச் சீர்திருத்தத்தின் மீதியான தன்மையையும், ஏற்றுக்கொள்ளத் தக்க முறைகளை யும் நன்கு உணர்ந்ததற்குப் பின் ஆட்சியாளருடன் ஒத்துழைத்து, கிராமத்தை முன்னேற்றும் முயற்சிகளை எடுத்துக் கொள்வதாயும், ஆட்சியாளருடன் எல்லாத் துறைகளிலும் ஒத்துழைப்பதாயும்' கூறினர். மேலும்? "சினப் புரட்சிக்கு முன்பு 108 மோ நிலம் சொந்தமாக இருந்த அவருக்கு, நிலச் சீர்திருத்தத்தின் பின் 8 மோ கிடைத்த பொழுதிலும் தான் இன்பமான வாழ்க்கை நடத்தி வருவதாகவும், தானே வயலில் வேலை செய்து: மகிழ்ச்சியுடன் வாழ்வதாகவும்" கூறினர்.
கிராமப் பள்ளி
நாங்கள் பார்வையிடச் சென்றிருந்த பள்ளிக்கூடத் தின் தலைமை ஆசிரியர் 'வூடென்-கு, புரட்சிக்கு முன்பு நிலப்பிரபுக்கள் பிள்ளைகள் படித்த பள்ளியில் இன்று பெருவாரியான விவசாயிகளின் பிள்ளைகள் படித்து வருவ தாகக் குறிப்பிட்டார். அப்பள்ளிக்கூடம், 293 மாணவர் கள், 9 ஆசிரியர்கள், 37 அறைகளைக் கொண்டு விளங்கு கிறது. (1) நாட்டுப் பற்று, (3) தொழிலுக்கு வணக்கம், (3) விஞ்ஞானப் பற்று, (4) பொது மக்கள் உடமைகளைப் பேணுதல், (5) மக்கள் மீது அன்பு காட்டுதல் என்ற அடிப்படையில் அப்பள்ளிக்கூடக் கல்வித் திட்டம் இருக் தது. அன்று மாலை எட்மனும், கெக்டரும் இலங்கைக்குப் புறப்பட்டனர். ܫ

Page 36
60
கிருமிப் போர்
அக்டோபர் 17-ம் நாள் பீக்கிங்கில் நட்ந்த கிருமிப் போர் முறைக் காட்சிச் சாலைகளை 3 மணி நேரத்துக்கு மேல் பார்வையிட்டோம். கொரியாவிலும், வ்ட, கிழக்குச் சீனத்திலும் போடப்பட்ட கிருமிக் குண்டுகளைத் தாங்கள் உபயோகப்படுத்தியதாகவும், அக் கொடிய பாபச் செயல்களை ஒப்புக்கொள்வதாகவும், பிடிபட்ட அமெரிக்க அதிகாரிகள் செய்த சொற்பொழிவுகளை ஒலிப்பதிவுகள் மூலம் கேட்டோம். பிடிபட்ட அமெ ரிக்கர்களிடமிருந்து கிருமிப் போர் முறைக் குறிப் புக்கள் கொண்ட பல கையெழுத்துப் பிரதிகளைக் கண்டதின் பின் எவ்வகையான ஐயமுமின்றி கொரியப் போரில், அமெரிக்கர் கிருமிப் போர் முறையைக் கையாண்டனர் என்பது தெளிவாகின்றது. இதில், காட்சிச் சாலைக்கு வந்த ஆயிரக்கணக்கான மக்களில் ஒருவர்கூட மாறுபட்ட அபிப்ராயம் உடையோராக இருக்கவில்லை. கொரியாவில் கிருமிப் போர் முறை பற்றி சர்வதேச விஞ்ஞானக் குழுவினர் நடத்திய ஆராய்ச்சி பற்றிய திரைப்பட மொன்றை நாங்கள் கண்டோம். குழுவில் கடமை ஆற்றிய உலகப் பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் விபரம் பின்வருமாறு : டாக்டர் அன்ரியா அன்ரீன் (சுவீடன்), ஜின் மால்டெரி (பிரான்ஸ்), டாக்டர் ஜோசப் மீட்காம் (பிரிட்டன்), டாக்டர் ஒலிவீரோ ஒலிவோ (இத்தாலி), டாக்டர் சாமுவேல் பி. பெஸ்சோ (பிரேசில்), டாக்டர் என். என். சுகோவ் வெர்சிநிகோவ் (ருஷ்யா). இக்குழுவினர் பின்கண்ட முடிவைத் தெரிவித்
திருக்கின்றனர்.
"நேர்மையாகவும், விஞ்ஞான முறைப்படியும் செய்த ஆராய்ச்சிக்குப்பின், கொரிய, சீன மக்கள் கிருமிப் போர் முறைக்கு ~ இலக்காய் இருந்திருக்கின்றனர்.

61
என்று தெரியவந்தது. இந்தக் கிருமிப் போர் ஆயுதங் களை அமெரிக்கர் உபயோகப்படுத்தியிருக்கின்றனர். அமெரிக்கப் படையினர் கையாண்ட முறைகள் இரண் டாவது உலக யுத்தத்தின்போது, ஜப்பானியப் படையினர் கையாண்ட முறையின் வளர்ச்சியாகவே காணப்பட்டது. காங்கள் தர்க்கரீதியான பரிசீலனைக்குப் பிறகு, இந்த முடிவுக்கு வந்தோம். உலக மக்கள் அத்தனை பேரும் ஏகோ பித்துக் கண்டிக்கும் இந்தக் காட்டுமிராண்டிச் செயலை நடத்திக் காட்டியிருக்க முடியுமா என்று ஐயப்பட்ட போதிலுங்கூட, காங்கள் செய்த ஆராய்ச்சியின் விளை வாக, இது உண்மைதான் என்று தீர்மானிக்கும் துர திர்ஷ்டமான முடிவுக்கு காங்கள் வர 5ேர்ந்தது குறித்து மிகவும் வருந்துகிருேம்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கொண்டு மனித குலத்தை நிர்மூலமாக்குவதிலிருந்து தடுக்கவும், உலகத் தைப் போரிலிருந்து காப்பாற்றவும் எல்லா மக்களும் இரட்டிப்பு முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பீக்கிங் பல்கலைக் கழகம்
1898-ம் ஆண்டு நிறுவப்பட்ட பீக்கிங் பல்கலைக்கழக்த் தைப் பார்வையிட அக்டோபர் 19-ம் நாள் சென்ருேம். 1918-1919-ம் ஆண்டுகளில் இதே பல்கலைக் கழகத்தில் தலைவர் மாசே-துங் நூலகத்தர் ஆகப் பணிபுரிந்தார். அச் சமயம் ஒரு மாதத்திற்கு 8 வெள்ளி டாலர்களைச் சம்பள மாகப் பெற்று வந்தார். இதே பல்கலைக் கழக நூலகத் *தில் முதன்முதலில் 'மார்க்ஸிசம்' பற்றி ‘மாஒ அறியத் தொடங்கினர். பேராசிரியர் லீடா-செளதான் 'சினத் திற்கு மார்க்ஸிசத்தை முதலாவதாக அறிமுகப்படுத்திய வர். அவருடைய ஆதரவின் கீழ் தலைவர் மாசே-துங்

Page 37
Á2
ம்ார்க்ஸிசம் கற்கத் தொடங்கினர். அந்த நூலகத்தில் மா சே-துங் கடமை ஆற்றிய அறை, அவர் படித்த இடம், பயன்படுத்திய பொருள்கள் முதலியவற்றை கேரில் காங் கள் கண்டோம், பேராசிரியர் லீடா-செள 1927-ம் ஆண்டு வரை உபயோகப் படுத்திவந்த அறையையும் நேரில் பார்த்தோம். 1937-ம் ஆண்டு பேராசிரியர் லீடா-செளவும், 19 புரட்சி இயக்க மாணவத் தலைவர்களும் கோமின்டாங் வெறியர்களால் கொல்லப்பட்டனர்.
பீக்கிங் பல்கலைக் கழகத்தில், 5,000க்கு மேற்பட்ட மாணவர்கள், குறிப்பாக, விவசாய, தொழிலாளர் குடும்பங் களிலிருந்து அநேகர் வந்து படிக்கின்றனர். பல்கலைக் கழகத் தலைவர் பேராசிரியர் மா-இன்-சு எங்களை வரவேற்றுக் கூறிய உரையில், இலவசக் கல்வி நடைமுன்றயில் இருப்பதாகவும், தேவையான மாணவர்களுக்கு உபகாரச் சம்பளமும் கொடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித் தார். விடுதலை பெற்று 3 ஆண்டுகள் தான் ஆகிறது என்ற காரணத்தினுலும், விவசாயிகள், தொழிலாளர்கள் குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் பல்கலைக் கழகத்திற்கு நுழையத் தகுந்த கல்வியறிவு இல்லாததாலும், அவர்களுக் கென்று குறுகிய காலத்தில் போதிய கருத்தமைந்த ஒரு கல்வித் திட்ட்த்தை உயர்நிலைக் கல்வித் தகுதிக்கு அமைத் திருந்தனர். ஆட்சியாளர்கள் அறிவியல், நீர்ப்பாசனம் ஆகிய முன்னேற்ற திட்டங்களைப் பூர்த்தி செய்வதன் மூல மாக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தத் திட்ட மிட்டிருப்பதால், அத் திட்டத்திற்கு ஒத்த முறையில் தான் சீனக் கல்வித்திட்டம் நெருங்கிய தொடர்பு கொண்டிருக் தது. மிகவும் வளர்ச்சி பெற்ற அறிவியல் கலைகள் அத்த னையும் விடுதலைக்கு முன்பு ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டு வந்திருந்த போதிலும், அனைத்திற்கும் தற்போது சீன மொழி, பாடமொழியாதப் பயன்படுத்தப்படுகிறது. குறுகிய

63
3 ஆண்டுக் காலத்திற்குள் எத்தனையோ ஆங்கிலக் கல்வி நூல்கள் சீனத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆட்சி முறையில் தாய்மொழியை ஏற்க பல ஆண்டுகள் வேண்டும் என்று கருதும் இலங்கை ஆட்சியாளருக்கும், சீன அரசாங் கத்துக்கும் எத்துணை வேற்றுமை? பல ஆண்டுக் காலமாக முயற்சி எடுக்கப்பட்டு வந்துள்ள சிங்கள அகராதி இன் னும் உருப்பட்ட பாடில்லையே! பீக்கிங் பல்கலைக் கழகத் தில் பல்வேறு நாட்டு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இலங்கை போன்ற ஒரு சில காடுகளின் மொழிகளைத் தவிர, ஆசிய நாடுகளின் அரசாங்க மொழிகள் அத்தனை யும் அங்கு கற்பிக்கப்படுகின்றன. இலங்கை தன் தேசிய மொழிப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுமேயானல், பல்கலைக் கழகமொழிப் பட்டியலில் இலங்கை மொழியும் இடம் பெறும்.

Page 38
ஏழாம் அத்தியாயம்
டீன்ஸ்டின், ஷாங்காய், காங்சோ விஜயம்
அக்டோபர் 20-ம் நாள் இரயில் மூலமாக டீன்ஸ் டிஃன அன்று மாலே வந்தடைந்தோம். மூன்று பட்டினங் களே 10 நாட்களுக்குள் பார்வையிட்டு விட்டு மாஸ்கோ விற்கு காங்கள் செல்லவேண்டி இருந்ததனுல், எங்களுக்கு என்று ஒரு தனி வண்டியைக் கொடுத்திருந்தார்கள். இவ்வண்டி, நாங்கள் நிற்குமிடங்களில் நிறுத்திக் கொள்ளத் தகுந்த வசதியுடனும், திரும்பப் புறப்படும் பொழுது இரயிலுடன் இனக்கத்தகுந்த முறையிலும் அமைந்திருந்தது. நெசவுத் தொழிலாளருக்கும், அவர் கள் குடும்பங்களுக்கும் என்று ஒதுக்கப்பட்டிருந்த மருத்துவ விடுதி ஒன்றை நாங்கள் டீன்ஸ்டினில் கண்டோம், அதற்குப் பொறுப்பாக இருந்த மருத்துவ அதிகாரி, ஏனேய வைத்தியர்களுக்கும் எங்களே அறிமுகப் படுத்தி வைத்தார். பகுதி பகுதியாக அவ்விடுதியைப் பார்வையிட்ட காங்கள் மூன்று மணி நேரங்களுக்கு ாேலாக அங்கே தங்கியிருந்து பல நோயாளிகளுடன் பேசினுேம். அம்மருத்துவ விடுகி, தற்கால விஞ்ஞான சாதனங்களேயும், திறமையான ஊழியர்களேயும் கொண்டு விளங்கியது. 100,000 நெசவுத் தொழிலாளர்களுக்கும் அவர் தம் குடும்பங்களுக்கும் என்றே இந்த மருத்துவ விடுதி நிறுவப்பட்டது. இலவச மருத்துவ சலுகைகள் கிடைக்கும் இந்த இடத்திலும், கோயாளர் இடமின்றித் தவிக்கும் கிலே காணப்படவில்லை. கோயாளர் விரைவில் சுகம் பெறத் தகுந்த சகல விதமான வசதிகளும் அங்கு இருந்தன. வைத்திய கிபுணர்களினதும், ஊழியர்களின தும் சம்பள விகிதாசாரத்தைப் பற்றி விவாதித்தோம்.
 

. . . . . . .1
'
-
(
;
除
s
蒂·匣 长尾 甲 වූල්
.
羲
G४
宿
丽 g 열 bs 드ਰੂੰ ।
飞。面。 S) ,

Page 39
房路
}
ཐང་བློ་
SS)
甲。 岛
 

சுெ ■
, மிம்
Fge,நீசும்
மருத்துவ ஊழியர்கள் பெறும் கம்ய்னத்தின், இரட்டிப் பான தொகையைத்தான் டாக்டர்கள் பெறுகின்றனர். தொழிற்சாலேகள்
அடுத்த நாள் காங்கள் ஒரு சணல் தொழிற்சால்ே யைப் பார்வையிட்டோம். அங்கு 1.0ே0 தொழிலாளர்கள் முறையே மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு ஒன்றுக்குப் பின் ஒன்ருகக் கடமையாற்றி வந்தனர். விடுதலேக்குப் பின் உற்பத்தி 4 மடங்கு அதிகரித்துள்ளதாய் அதன் மேலதிகாரி கூறினுர், அங்கு தொழிலாளர்களுக்கென ஏற்படுத்தப்பட்டிருந்த சிற்றுண்டிச் சாஃகள், விஜன யTட்டு கிலேயங்கள், குழந்தை பராமரிப்பு t&லயங்கள் முதலியவற்றைப் பார்த்து GTங்கள் மிகவும் ஆச்சரியப் பட்டோம். முன்னுளில் ஜப்பானியர்களால் நடத்தப் பட்டுவந்த ஓர் காகிதத் தொழிற்சாலையையும் பார்த் தோம். விடுதலேக்குப்பின் உற்பத்தி அதிகரித்திருந்தது. விடுதலேகு முன் ஓர் தொழிலாளிக்கு 15 கில்லோகிரும் மாவு மாதச் சம்பளமாக இருந்தது, இப்பொழுது ?? கில்லோகிருமாக உயர்ந்து விட்டது. அத்தொழிற் சாவேயையடுத்து வயதான தொழிலாளர்களுக்கு ஒய்வு கேரப் பள்ளிகளும், சிறுவர்களுக்குக் கீழ்ப் பிரிவுப்பள்ளி களும், சுகாதார லேயங்களும், பாலர் மடுவங்களும்,
தொழிலாளர் வாழ்வதற்கு வசதியான வீடுகளும் அமைந்திருந்தன. வாடகை மிகக் குறைவு. ஒடு
அறைக்கு ரூபாய் 3 வசூலிக்கப்பட்டது. மணம் முடி யாத தொழிலாளர்கள் வாடகை ஒன்றும் செலுத்த வில்லே. தொழிற்சாஃ அதிபரின் சம்பளம், தொழிலாளி யின் சம்பளத்தைவிட இரண்டு பங்குதான் அதிகம். தொழிலாளர்கள் தொழிற்சால்ல விடுதிகளில்தான் தந்தி இருந்தார்கள். நூல் நெசவு செய்யும் தொழிற்சாலே ஒன்றில் 7,000 தொழிலாளர்கள் வேலே செய்தனர்.

Page 40
68
அதே இடத்தில் விடுதலைக்கு முன்பு 4,000 பேர்தான் வேலை செய்தனர். உற்பத்தி 100 சத வீதம் அதிகரித்து இருந்தது. அந்தத் தொழிற் சாலையிலுள்ள தொழிலா, ளர் குடும்பங்களுக்கென்றே 100 வீடுகளும் கட்டப்பட்டு இருந்தன. ஓய்வு நேரத்தில் இளைப்பாறுவதற்கென ஒரு தனி விடுதி அமைக்கப்பட்டிருந்தது : வாரமொரு முறை திரைப் படங்கள் பார்க்கவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. 70% க்கு மேற்பட்ட தொழிலா ளர்கள் பெண்களாக இருந்த காரணத்தினுல், அவர்களுக் கெனப் பிரசவ விடுதிகளும், பாதுகாப்பு இல்லங்களும் பெரிய அளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அத்தொழிற் சாலையில், 138 ஆதர்ஸனத் தொழிலாளர்களும், சீன முழுமையிலும் சிறந்த தொழிலாளராகப் பொறுக்கி, எடுக்கப்பட்ட ஒருவரும் கடமையாற்றி வந்தனர். புதிய நிர்வாக அமைப்பு வந்ததன் பின்பு பல வசதிகளோடு, குளிர்ச்சி தரும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. ஓய்வு 5ேர வகுப்புக்களில் தொழிலாள மாணவர்கள் தொகை 4,000 இத்தகைய கல்வி திட்டத்தின் நோக்கம், 1952-ம் ஆண்டு இறுதியில் தொழிலாளர் மத்தியில் இருந்து கல்வி அறிவின்மையை ஒழித்துக் கட்டுவதேயாகும். தொழி லாளர் குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளியைப் பார்வை யிட்டோம். கல்வி இலவசம்.
ஷாங்காயில்
அக்டோபர் 21-ம் நாள் புறப்பட்டு இரண்டு காட் களில் ஷாங்காய்க்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கு கிங் கொங் உணவு விடுதியில் தங்கியிருந்தோம். அன்று மாலை திருமதி சன்யாட்சன் அம்மையார் அவர்களால் கடத்தப்பட்டுவரும் சீனப் பொது5லச் சங்கத்தின் ஆதர வின்கீழ் உள்ள ஒரு பாலர் பள்ளியைப் பார்வையிட் டோம். அங்கு 2-லிருந்து 7 வயது வரைக்குள்ள பிள்ளை

69
கள் வாழ்ந்து கற்று வந்தனர். அந்தக் குழந்தைகளுக்கு தாய்நாட்டுப்பற்று, விஞ்ஞான ஆர்வம், மக்களிடம் மதிப்பு, தொழிலுக்கு வந்தனம், பொதுச்சொத்துப் பேணல் ஆகிய உயரிய பண்புகள் போதிக்கப்பட்டு வந்தன. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குழந்தை கள் வீடு சென்று வருகின்றனர். மாதம் ஒரு முறை பெற் ருேர்கள் கூடி குழந்தைகளின் பிரச்சினைகள் பற்றி விவாதித்து வந்தனர். ஷாங்காய் பட்டினத்தில் மாத்திரம் இது போன்ற பள்ளிகள் 5,000 இருந்தன.
அன்று மாலை, பீக்கிங் சமாதான மாகாட்டின வெற்றியைக் கொண்டாட இருபதினுயிரம் மக்கள் திரண் டிருந்த ஒரு மாபெரும் கூட்டம் 15டைபெற்றது. கூட்டத் துக்குப் போகும் வழி நெடுக மனித வெள்ளம், ‘சமாதானம் நீடூழி வாழ்க’ என்று கோஷித்தது. வெவ்வேறு குழுக் கள் சார்பில் 30 பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசினர். பேசிய அத்தனை பேரையும் ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் வரவேற்ற தன்மை சீனமக்கள் சமாதானத்தில் கொண் டிருந்த அசைக்க முடியாத பேரார்வத்தை எடுத்துக் காட்டியது. கூட்டத்தில் இளைஞர்களோடு வயோதிகர் களும் கூடியிருந்தனர். w
34-ம் நாள் காலை ஷாங்காயிலுள்ள தொழிலாளர் கலாமன்றத்தைப் பார்வையிடச் சென்றிருந்தோம். அங்கு கடமையாற்றிய ஊழியர்கள் எண்ணிக்கை 100. விடுதலைக்கு முன்பு அந்த மண்டபம் பெருமுதலாளி களுடைய உணவு விடுதியாக இருந்தது. 1950-ம்ஆண்டு அக்டோபர் முதல் நாள் அன்று அது தொழிலாளர்களின் கலாமன்றமாக மாற்றப்பட்டது. அன்று தொட்டு நாள் தோறும் 10,000 தொழிலாளர்கள் வந்து போகின்றனர். அந்த நிலையத்தில் கல்வி, பிரச்சாரம், சொற்பொழிவுகள், தொழிலாளர் சாதனைகள், கலாச்சாரப் பகுதி, விளை

Page 41
?O
யாட்டு, நூலகம், ாேட்டினுடைய சாதனைகள் பல; கலைக் கண்காட்சிகள் முதலிய பல பகுதிகள் உள்ளன. காங் கள் இந்தப் பகுதிகள் அனைத்தையும் பார்வையிட்டதன் பின், சீனப் பொதுமக்கள் தங்கள் காலில் தாங்கள் நிற்கத் தலைப்பட்டுவிட்டனர்; உலகம் அதை உணரும் காள் வெகுதூரத்திலில்லை என்பதை அறிந்தோம். 5வசீனம் மூன்று ஆண்டு காலத்திற்குள் மிகத்துரிதமாக வாழ்க்கை யின் பல்வேறு துறைகளிலும் பிரமாண்டமாக முன் னேறி இருப்பது குறிப்பிடத்தக்கதாக இருந்தபோதிலும், சீனமக்கள் சகல துறைகளிலும் முழுவளர்ச்சி பெற்று விட்டார்கள் என்று தீர்மானித்து விடுவது தவறு. என்ருலும், 50 கோடி மக்களைக் கொண்ட ஒரு புராதன மான இனம் விமோசனமடைந்து, மகத்தான ஆக்கத் திறமையும், ஆற்றலும், வீராவேசம் நிறைந்த உணர்ச்சி யும் கொண்டு மனித குலத்தின் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கும் பொன்னன பாதையில் முழுமூச்சோடு ஈடுபட்டுள்ளது என்பதை உணர்ந்தாக வேண்டும்.
ஒரு கர்லத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து சீனத்துக்குச் சகல விதமான சாமான்களும், இயந்திரங் களும், மின்சாரக் கருவிகளும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. அமெரிக்கர்களுடைய பொருளாதார முற்றுகை யின் நன்மையால், இன்று சீனத் தொழிலாளர்கள் இந்தப் பொருள்கள் அனைத்தையும் தங்கள் காட்டில் செய்து கொள்ளுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரும்பெரும் சாதனைக்கு அமெரிக்கர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். தாங்கள் இறக்குமதி செய்ததை விட, அதிகமான பொருள்களை மாத்திரமல்லாமல் சிறந்த பொருள்களையும் அவர்கள் இப்போது உற்பத்தி செய் வதைப் பற்றியும், தொழிலாளர்களுடைய வேலைப் பளு வைக் குறைக்கத்தகுந்த இயந்திர சாதனைகளைப் பற்றியும்,

?I
அவர்கள் மிகவும் பெருமையுடன் எடுத்துக் கூறினர். இந்த மகத்தான சாதனைகள், சீனத்தொழிலாளிகள் தங்கள் உடலையும், ஆவியையும் தொழிலுக்கு அர்ப்ப ணித்து அதிசயிக்கத்தக்க ஆர்வம் கொண்டிருந்ததின் 5ேரான விளைவாகும். எந்த ஒரு நாட்டின் ஆட்சி முறை யில் தனக்கும் ஒரு பங்கு உண்டு என்று எவனெருவன் உணர்கிருனே, அந்த நாடும் அதன் உற்பத்திப் பெருக்க மும் கட்டாயமாக முன்னேறும். இந்தக் கலாமன்றத்தைத் தவிர, 833 தொழிலாளர் கழகங்கள் ஷாங்காய் பட்டினத் தில் மட்டும் இருக்கின்றன.
அன்று மாலை ஷாங்காயிலுள்ள 50 தொழிற்சாலே களில் ஒன்றைப் பார்வையிட்டோம். 1,200 தொழிலாளா களில் 75% பெண்களாக இருந்தனர். மீதி உள்ள தொழிற்சாலைகளைப் போலவே இந்தத் தொழிற்சாலை யிலும் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை வசதிகள் அனைத் தும் செய்யப்பட்டிருந்தன. அந்தத் தொழிற்சாலையில் உயரிய சம்பளம் 1,000,000 யென்னும், குறைந்தது 4,000 யென்னுமாக இருந்தது. சராசரி 6,000,000 யென்னுக இருந்தது.
வீட்டு வசதித் திட்டம் அக்டோபர் 35-ம் நாள், ஷாங்காயின் சுற்றுப்புறத்
திலுள்ள சோ யாங் வில்லா என்ற இடத்தில் ஒரு பெரிய வீடு கட்டும் திட்டத்தைக் கண்டோம். 167 தனித்தனி குடியிருப்புக் கட்டிடங்கள் ஏற்கனவே பூர்த்தியாகி யிருந்தன. இன்னும் அனேக வீடுகள் இதை அடுத்துக் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. பூர்த்தியடைந்த 167 தனித்தனி கட்டிடங்கள் ஒவ்வொன்றிலும் 6 குடும்பங்கள் வசிக்கத்தகுந்த வசதி இருந்தது. 1,008 தொழிலளா குடும் பங்கள் இப்புதிய கட்டிடங்களில் வாழ்ந்தனர். பாலை

Page 42
22
வனமாகக் கிடந்த இப்பகுதியில், ஒரு சிறு ககரம் தன் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துகொண்டு, ஒரு சோலைவனமாகக் காட்சி தந்தது. அங்ககளில் மத்திய கூட் டுறவுப் பண்டகசாலை, உணவுச்சங்தை, 1,000 மாணவர் களுக்கு மேலுள்ள ஓர் உயர்நிலைப்பள்ளி, 500 பிள்ளை கள் கொண்ட ஒரு பாலர் பள்ளி, ஒரு பொதுகுளிக்கு மிடம், ஒரு தொழிலாளர் கலாமன்றம், ஒரு திரைப்பட கிலேயம், பலபொழுது போக்குக் கழகங்கள், நூலகங்கள், சகல வசதிகளுமுள்ள ஓர் மருத்துவ விடுதி முதலியன இருந்தன. 153,400 சதுர மீட்டர் நிலப்பரப்பில் இந்தச் சிறுநகரம் வளர்ந்து வருகிறது. ஒரு சில மாதங்களுக் குள் வெற்று நிலம், சதுப்பு நிலம் என்று ஒதுக்கப்பட் டிருந்ததெல்லாம். பூங்காவனம் போலப் பொலிவுறும் புதிய நகரங்கள், சீனத்தின் காலாதிக்குகளிலும், அதி சயிக்கத்தக்க வேகத்திலே தோன்றி வருகின்றன.
அத்தகைய வீடுகள் விரைவில் கட்டப்படுவதோடு மாத்திரமில்லாமல், சுகாதார முறையில் அழகாகவும் அமைக்கப்படுகின்றன. இவ்வீட்டு வசதித் திட்டமானது, ஒவ்வொரு அறைக்கும் குறைந்த பட்சம் 6 மணி நேரம் சூரியவெளிச்சம் கிடைக்கத் தகுந்த முறையில் நிர் மாணிக்கப்பட்டுள்ளது, அவரவர் தேவைகசூத் தகுந்தபடி வீடுகள் கொடுக்கப்படுகிறதே அல்லாமல், உத்தியோகப் பதவிக்குத் தகுந்தபடி அல்ல. தொழிலாளர் தங்கள் சம்பளத்தில் 5% அல்லது 7% வீதத்தைத் தான் வாடகைக் காகச் செலவிடுகின்றனர். விடுதியை நடத்தும் பொறுப்பு தொழிலாளருடையதே. காங்கள் பார்த்த பல விடுதிகள் ஒன்றில் 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றிருந்தது. அது'கணவன், மனைவி, குழந்தை, மாமியார் கொண்டது. - கணவன் ஒரு ரொட்டிக் கிடங்கில் வேலை பார்த்து மாதத் திற்கு 500,000 யென் பெறுவதாயும், மனைவி வேலை செய்

73
வேதில்லை என்பதையும் அறிக்தோம். அங்கு இரு அறை களும், ஒரு சமையலறையும் குளிக்குமறையுமிருந்தன. சில கட்டிடங்களில் ஒரே சமையல் அறையை இரண்டு குடும்பங்கள் உபயோகப்படுத்தி வந்தன. அறைகள் யாவும் வெகு அழகாகவும், வெளிச்சம் முதலிய வசதி களுடனும் விளங்கின.
கூட்டுறவுப் பண்டக சாலையிலும், உணவுக் கடைகளி லுள்ள உணவுப் பொருள்களின் வகைகளையும், அவை வைக்கப்பட்டிருந்த சுகாதார முறைகளையும் பார்த்து வியப்படைந்தோம். ஒரு ஈ கூட எங்கும் தென்படவில்லை. இவ்விடுதியிலிருந்து தொழிலாளர் சுகாதார விடுதி ஒன்றைப்பார்வையிடச் சென்ருேம். சீனமக்கள் அரசியல் மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு ஆதர்ஸனத் தொழி லாளி இவ்விடுதியில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார். புதிய சீனத்தின் சிற்பிகளில் ஒப்புயர்வற்று விளங்கும் இந்தத் தொழிலாளியை கேரில் சந்தித்து அளவளாவும் வாய்ப்பைப் பெற்றது எங்களுக்குப் பெருமிதமளித்தது. புதிய சீனத்தின் கர்த்தாவாகிய தொழிலாளியை-ஏன் புதிய வாழ்வை-பொன் யுகத்தைக் கண் குளிரக் காண் பதில் தான் எத்துணை ஆனந்தம் 1 பிக்கிங் சமாதான மாகாடு ஆரம்பித்த அதே காளில் தான் இந்தச் சுகாதார விடுதியும் திறந்து வைக்கப்பட்டது. ஷாங்காய் தொழிற் சங்கத்தாரால் நடத்தப்படும் இந்த சுகாதார விடுதியில் 183 படுக்கைகளும், ஒரு டாக்டரும், 18 மருத்துவ தாதி களும் உண்டு. ஆதர்ஸனத் தொழிலாளருக்கும், தொழில் திறம் படைத்தோருக்கும் முதலிடம் கிடைத்தது. தங்கி இருக்தோருக்கு மிகச்சிறந்த உணவு கிடைத்தது. பால், பழம், முட்டை, இறைச்சி, முதலியன கொடுக்கப்படு கிறது. ஒரு காளைக்கு “டிராம் வண்டியில் போய்வருமளவு பணம்தான் தொழிலாளர் அங்கு பெயருக்காகக் கொடுத்

Page 43
P4
தனர். சுகாதார விடுதியில் ஒய்வு பெறும்போது, தொழிலா ளர்களுக்கு முழு சம்பளத்தோடு விடுமுறை கிடைக்கிறது. அன்று மாலை அரசாங்கம் கடத்திவரும் ஒரு நெச வுத் தொழிற்சாலையைப் பார்வையிடப் போயிருக்தோம். சீனத்தில் தனி நபர்கள் கடத்தும் தொழிற்சாலைகளும் அரசாங்கம் கடத்தும் தொழிற்சாலைகளும் உண்டு. தொழிலாளரைப் பொறுத்தமட்டில் எந்தத் தொழிற் சாலேயில் வேலை செய்தாலும், சகலவித வசதிகளும் கிடைத்தன.
இந்தத் தொழிற்சாலையிலும், 4,000க்கு 70 வீதம் பெண்களாகவே இருந்தனர். புதிய ஆட்சியின் பின் இங்கும் 100% வீதம் உற்பத்திப் பெருக்கம் ஏற்பட் டுள்ளது. சம்பளம் கூடிய தொகை 1,110,000 யென் களும், குறைந்த தொகை 400,000; சராசரி 700,000 யென்களுமாகும். 23 டாக்டர்கள் தொழிலாளர் சுகம் பேண பணியாற்றுகின்றனர். 1931-1945 வரை ஜப்பானி யரும், 1945-49 வரை கோமிங்டாங் ஆட்சியினரும் கடத்திய இந்தத் தொழிற்சாலை இன்று மக்கள் கைக்கு மாறியுள்ளது.
நாங்கள் அக்டோபர் 26-ம் நாள் புறப்பட்டு கான்ஷோ என்ற அழகிய பட்டினத்தை வந்தடைக் தோம். இது, தடாகங்களும், இயற்கை வனப்புக்களும் கூடிய எழில் மிக்கப் பட்டினம். சீனத்திலுள்ள அழகிய இடங்களுக்கு இது சிகரம் போன்றது. இங்கு 15ாம் பார்த் தவற்றுள் முதலாவது, இரயில் தொழிலாளர் சுகாதார விடுதியே. விடுதலைக்கு முன்பு இந்தக் கட்டிடம் ஒரு கிலப் பிரபுத்துவ மேலதிகாரியின் வீடாக இருந்தது. இரயில்வே யின் ஆதர்ஸனத் தொழிலாளர் இங்கு இரண்டு வாரத் துக்கு வந்து ஓய்வெடுப்பது வழக்கம். இப்படி வருவோர்கள் சுகம் பெறுவதோடு “மாத்திரமல்லாமல், தங்கள் அறிவை

?5
வளர்ப்பதற்காகப் படித்தும், விவாதித்தும் பலன் பெறு கின்றனர். இவர்கள் மீண்டும் வேலைக்குப் போகும்போது, இந்த அரிய அறிவு பெரிதும் பயன்தரும்.
பெளத்தாலயம்
அக்டோபர் 27-ம் நாள் காலை காங்ஷோவிலுள்ள பெரிய பெளத்தாலயத்துக்குப் போனேம். எங்கள் தூதுக் குழுவைச் சேர்ந்த புத்த பிக்கு சுவாமி கார வில்லா, புத்தமத பிக்குகளைப்பற்றித் தேவாலய குருமாருடன் பேசினர். கோமிங் டாங் ஆட்சியின் கீழ்த் தாம் பட்ட தொல்லைகளைச் சொல்லி, புதிய சீன அரசாங்கம் கோவிலைத்திருத்தக் கொடுத்துதவிய பண உதவியைப் பற்றியும் குருமார்கள் பாராட்டிக் கூறினர். பூரண மத சுதந்திரம் 5வசீனத்தில் நிலைபெற்றுவிட்டது என்றும், மதத்தின் பேரில் மக்களைச் சுரண்டும் சுதந்திரம் ஒருவருக் கும் கிடையாது என்றும் கூறினர். பீக்கிங்கிலும், சில புத்த கோவில்களை நாங்கள் பார்த்தோம் என்று கேட்டு புத்த தலைமைக்குரு அகமகிழ்ந்தார்.
அன்று மாலை காங்ஷோவிலிருந்து இலங்கைக்கு ஸ்வாமி காரவில்லாவும், கெக்கடுவகேயும் புறப்படும் போது சீனமக்களும், சாரணர் இயக்கத்தினரும் ஆயிரக் கணக்கில் கூடி இலங்கைத் தூதுக் குழுத்தலைவரை வழி அனுப்பினர். பாக்களும் வாழ்த்துக்களும் வண்டி புறப் படும் வரையில் தொடர்ந்தன.
எஞ்சிய உறுப்பினர்கள் அக்டோபர் 38-ம் நாள் புறப்பட்டு 30-ம் தேதி காலை பீக்கிங் வந்தடைந்தோம். அக்டோபர் 21-ம் நாள் பீக்கிங் கண்காட்சிச் சாலையில், கனத்த இயந்திரங்களையும், விவசாயப் பொருட்களையும், கம்பளி, அச்சுத் தொழில், திரைப்பட இயந்திரங்கள், கைத்தொழில் பொருட்கள் முதலியனவும் வைக்கப்பட்

Page 44
?6
டிருந்ததைக் கண்டோம். இவை யாவும் பீக்கிங் சாதனை கள். இந்தக் கண்காட்சி, சீனமக்கள் தங்களுக்கு வேண் டியதைத் தாங்களே உற்பத்தி செய்யும் செயல் திறத் தைப் பட்டவர்த்தனமாக நிரூபிக்கிறது.
சின்குவா பல்கலைக் கழகம்
அன்று 15வம்பர் முதல் நாள். 1938-ம் ஆண்டு வரை அமெரிக்கர்களால் கடத்தப்பட்டு, அமெரிக்க ஆசிரியர்கள் ஆதிக்கம் கிறைந்ததுமாயிருந்த 43-ம் ஆண்டு விழா முடிவடைந்த சின்குவா பல்கலைக் கழகத்தைப் போய்ப் பார்த்தோம். 1938 ஆண்டு தொடக்கத்தில் தேசிய பல்கலைக்கழக மாக்கப்பட்டு, அமெரிக்கச் செல்வாக்குக் குறைக்கப்பட்டது. அது ஒரு பொறி இயல் கழகம் (டெக்கனிக்கல்) என்றும், இப்போதுள்ள கல்வி முறை அமெரிக்க முறையினின்று மாறுபட்டதென்றும், இந்தக் கல்வித் திட்டத்தின் கீழ் மாணவருக்கு ஆராய்ச்சி உரிமை. வழங்கப்பட்டிருக்கிறது என்றும், பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் கூறினர். புதிதாகக் கண்டு பிடிக்கும் முறைகளையும் அதன் முன்னேற்றங்களைப்பற்றிய வளர்ச்சிகள் பற்றியும் இந்த பல்கலைக் கழகம் சீன காட்டிலுள்ள ஏனைய தொழிற் சாலைகளுக்கு அறிவித்து, அவர்கள் அனுபவங்களையும் யோசித்து வருகிறது. மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படவில்லை. ஆனல் மாதா மாதம் உபகாரச் சம்பளம் மாணவர் களுக்குக் கிடைக்கிறது. அரசாங்கத்திலிருந்தும், சீன காட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இதில் சேர்ந்து படிக்கின்றனர். அதில் 18% வீதம் பெண்களும், 22% வீதம் தொழிலாளர் குடும்பத்தினருமாவர். தற்போது அந்தக் கழகத்தில் 5,800 மாணவர்களும், 500 ஆசிரியர்களும் உள்ளனர். அந்தப் பல்கலைக் கழகத்தைப் பெரிதாக்க கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்

??
பட்டுள்ளன. அதன் புதிய கட்டட நிர்மாணிப்பில் ஆசிரி யர்கள், மாணவர்கள் தலைமையில் 6,000 தொழிலாளிகள் க்லந்து கொண்டார்கள். 4 ஆண்டுப் பயிற்சியின் பின்பு மாணவர்கள் தொழில் வல்லுநர்களாகத் (என்ஜினியர்) தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகின்றனர். தொழிலாள வர்க்க மாணவர்களைப் பல்கலைக் கழகங்களில் சேர்ப்பதற். கெனக் குறுகிய காலத்தில் பயிற்சி தரப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட 500 மாணவர்கள் சென்ற கோடைக் காலத்தில் சேர்க்கப்பட்டனர் என்று பல்கலைக் கழகத் துணைவேந்தர் சொன்னர். படித்து முடிந்து விட்டதும், வேல்ை தேடும் படலத்தில் அல்லல் படும் தொல்லை மாணவர்களுக்கு அறவே கிடையாது என்று மேலும்
கவசீனத்தைப் பற்றி எங்கள் அபிப்ராயங்களை பீக்கிங் ரேடியோவில் பேசும்படி கேட்டனர். நவம்பர் 2-ம் நாள் நான் ஆற்றிய சொற்பொழிவுகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. 、・・
சீனத்திற்குப் பிரியா விடை நவம்பர் 2-ம் நாள் இரவு கவசீனத்தில் சில மணி நேரம் மட்டும் தான் காங்கள் தங்க நேரம் இருந்தது. இதற்கிடையில், எங்களுக்கு ஒரு பிரிவுபசார விருந்து 15டைபெற்றது. அடுத்த நாட்காலை 15ாங்கள் விமான மூலம் மாஸ்கோவிற்குப் புறப்பட வேண்டியிருந்தது. எங் களுடன் தொடர்பு கொண்டிருந்த சீன நண்பர்கள் அங்கு வந்திருந்தனர். எங்கள் தூதுக் குழுவைச் சேர்ந்த பிலிப், பண்டார நாயக்கா, சண்முகதாசன், இரத்தின வீராவும், நானும் என் மனைவியும், சீனத்து மக்களை வாயார மன மாரப் புகழ்ந்து பாராட்டினுேம். சோஷியலிச புது உல கத்தை நோக்கிப் பொன்னன புது வாழ்வின் பாதையிலே அரிய பெரிய சாதனைகளுடன் கம்பீர் நடை போட்டு முன்

Page 45
னேறும் ஆசிய ஜோதியை அங்கம் சிவிர்க்க வாழ்த் தினுேம், வணங்கினுேம், போற்றினுேம், ஏகாதி பத்திய ஆதிக்கத்திலே தத்தளிக்கும் அடிமை 5ாட்டு மக்களுக்கு ரவசீன மக்களின் சாதனேகளும், உதாரண மும் ஆர்வம் மிக்க ஆதர்ஸ் மலே என்றும், கீழ்க் திசையில் விடுதலே தவறி, வறுமை மிஞ்சிக் கிடக் கும் மனித குலத்தின் விமோசனத்திற்கு கவசீனம் 15ல்ல தொரு ஆரம்பம் என்று ஆசிய மக்களின் சார்பாகக் கைகூப்பினுேம். தாய்நாடு திரும்பியவுடன், WFÉ [ኸ፩ ! சீனத்திலே நாம் கண்ணுரக் கண்ட உண்மைகளே எந்த சக்திகளுக்கும் அஞ்சாது, யதார்த்தமாக எங்கள் மக் களுக்கு எடுத்துக் கூறுவோம். எங்கள் நாட்டில் உண்மைச் சுதந்திரமும், சுயாதீனமும், சுபீட்சப் புது வாழ்வும் காண்பதற்கான போராட்டத்திலே இரட்டிப்புச் சக்தியோடு பணியாற்ற சபத மேற்கிருேம் என்று எமது இறுதி பிரதிக்ஞையை எடுத்தோம். நல்லுறவு எற்படுத்த இயக்கம் கடத்தவும், இலங்கை, சீன மக்களிடையிலுள்ள புராதான கலாச்சார, பொருளாதாரத் தொடர்பைக் கட்டி வளர்க்கவும் உறுதி கொண்டோம், அக்தப் புனித நாட்டில் தங்கி இருந்த இரண்டு மாத காலத்தில், சீனமக்கள் காட்டிய அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றியறிதஃலத் தெரிவித்தோம்.
யோ-டாய்-கொங், பேராசிரியர் சாங்-டிங்-சுவாங் போன்ருேர்கள் பேசும்போது, இலங்கை-சீன நட்புறவு நீடு கிலேத்து வாழும் என்ற நம்பிக்கையை எங்கள் துரது ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார்கள். அவர்கள் சீனத் திலிருந்து இலங்கைக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பும் நாளே எதிர்பார்த் திருப்பதாகவும், நாங்கள் தூது வந்த நோக்கம் வெற்றி மேல் வெற்றி விளேக்கும் என வாழ்த் துக்கூறி வழி அனுப்பினுர்கள்.
ܒܘ.
 
 
 
 

|| , ، ، ، "s니7w守 | {{Nogog sognerrosofo
| (!wogae-ig) ogystę
| &osoɛ '(√ægfore) saessae 占也4-e句心岛ng巨蛋ns*)==*Â,
also:(『W WTTE *_*(* **
- - - - - - - :
g g g Q」eg『シ
**
|| Borog)neologog평:5
| , !
|- |- | | – |- - - - -|- , , - ( ) ----|-| | |- , ! | |- | –|- |-|-|-

Page 46
பொருளாதாரத் தொடர்புபற்றி இந்நூலாசிரியர் பீக்கிங்
மாநாட்டில் செய்த சொற்பொழிவு VA
தலைவரவர்களே, சகோதாப் பிசதிகிதிகளே, நண்பர்களே
இலங்கை சமாதானப் பிரியர்கள் சார்பில் சரித்திர முக் கியத்வம் பெற்ற இந்த மாநாட்டை வாழ்த்துகிறேன். இலங் கையைப் பொறுத்தமட்டிலுள்ள சில முக்கியப் பிரச்சினை களை உங்களுக்கு எடுத்துக்கூற இருக்கிறேன்.
யுத்த முஸ்தீபுக்களின் விளைவாகவும், வதந்திப் போரின, லும், யுத்தத்தின் பயனகவும் உலகநாடுகளின் சாதாரண வியாபாரத் கொடர்புகள் அற்றுப்போயின. நாடு களுக்கிடையே வியாபாரத் தொடர்பு வளர்வது ஒருவருக் கொருவர் நன்மை பயப்பதோடு, சமாதான க்தைப் பாது காக்கப் பெரிதும் துணை புரிகிறது என்பது வெள்ளிடைமலை.
இன்று உலகத்தில் யுத்த பீதி அதிகரித்திருக்கிறது. அதன் பயணுக உலகமும் பிளவுபட்டுக் கிடக்கின்றது. இதன் விளைவாகப் பிளவுபட்டுள்ள நாடுகளின் பொருளா தார நிலை பெரிதும் பாகிக்கத்தகுந்த அளவிற்கு வியா பாரம் குன்றியிருப்பது மிகவும் கவலைக்கிடமானது. தன் னுடைய கொள்கைகளை ஏற்றும், தன்னைப் பின்பற்ருத நாடு களுக்கெதிராகவும் அமெரிக்க அரசாங்கம் எடுத்துக் கொண் டுள்ள நடவடிக்கைகள்-அமெரிக்க அரசாங்க ஆக்கிரமிப்புக், கொள்கைகளைத்தான் தெட்டத்தெளிவாக எடுத்துக்காண் பிக்கிறது, அரசியலமைப்பும் கருத்தும் மாறுபட்ட நாடுக ளுடன வியாபாரம் செய்ய மறுப்பதுடனில்லாது, யுத்தத் தினுல் பாதிக்கப்பட்ட நாடுகளையும், அடிமை நாடுகள் சிலவற் றையும் பொருளாதார உதவியின் பெயரால் அமெரிக்க அர சாங்கம், தன் சொற்படி 15டக்கும்படியும், வேறு நாடுகளுடன் வியாபாரம் செய்யாமலும் தடுத்து வைத்திருக்கின்றது. இத்தகைய ஒருமுக வியாபாரத் தொடர்பு தனி நாடுகளைப் பெரிய அளவிற்கு பாதிக்கின்றது.
இலங்கையைப் பொறுக்கமட்டில் இந்தக் கொள்கை என்ன பலாபலன்களைத் தந்திருக்கின்றது என்பதைச்
சிறிது கவனிப்போம் எங்களுடைய வெளிநாட்டு வியா

a
, . 81
பாரம் பெரிய அளவிற்குப் பிரிட்டன், அமெரிக்கா என்ற இரு நாடுகளுடன் தான் 1950-ம் ஆண்டு வரை நடந்து வந்தது. இதன் அடிப்படை நோக்கம், அடிமை நாட்டிலுள்ள விளை பொருள்களை ஆளும் நாட்டிற்கு அனுப்பி, உற்பத்திப் பொருட்களாகக் திரும்பவும் திணிக்கும் ஏகாதிபத்திய முறையை அடிப்படையாகக் கொண்டது என்னலாம். ஏகாதி பக்கிய யுத்த முஸ்தீப்பு அதிகரிக்கவே எங்கள் நாட்டின் பொருளாதார முறை சீரழிந்தது.
யுத்த தளவாட உற்பத்தி அதிகரிக்கவே அடிமை நாடுகளுக்கு வேண்டிய பொருட்களைக் கொடுத்து உதவ முடியவில்லை. மேலும் அதிகமாகப் பேசப்பட்டு வரும் முன்னேற்றத் திட்டங்களுக்குத் தந்துதவிய இயந்திர சாத னங்களும் கூட, நிறுத்தப்பட்டு விட்டன. அதே சமயத்தில், நாங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிவந்த விளைபொருட்களின்
விலைகளும் வீழ்ச்சியடைந்தன.
எங்கள் ஏற்று மதிப் பொருட்களுள் முதலிடம் பெற்றுள்ள சப்பரை இதுவரையில் வாங்கிவந்த அமெரிக்கா, தனது ஏகபோக உரிமையைப் • பயன்படுத்தி, ாப்பரின் விலையை வீழ்ச்சியடையச் செய்தது. ரப்பரை வாங்க மறுத்ததோடு, எங்கள் நாட்டிலிருந்து அவர்கள் வாங்கி வந்த பொருட்கள் மிகக் குறைந்துவிட்டன. 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 294 லட்சம் ரூபாய் பெறுமதியுள்ள ாப்பரை வாங்கிய அமெரிக்கா, 1951-ம் ஆண்டு செப்
டெம்பர் மாதம் வரை 25 லட்சம் ரூபாய்களுக்கே ரப்பர்
வாங்கியது.
இது எங்களுடைய பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்தது. ஏற்று மதிப் பொருட்களான சப்பர் போன்ற பொருட்களின் விலை மிக மோசமாக வீழ்ச்சி அடைந்தது. இலங்கையின் தேசீய வருமானம் தேக்கு, தேயிலை, ாப்பர் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தான் தங்கியிருக் கிறது. இவற்றில் ஏகாவதொன்றின் விலை வீழ்ந்துவிட்டால் அது எவ்வளவு தூரம் இலங்கையின் பொருளாதாரத்தைப்
6

Page 47
82
பாதிக்கும் என்பது சொல்லாமலே புலகுைம். சென்ற காலத்தில்கூட, சப்பர் விலை வீழ்ச்சி அடைந்த சமயங்களில், சம்பள வெட்டு, வேலை நீக்கம், சமூக முன்னேற்றத் திட்டங் கள் கிறுத்தப்படுதல் முதலான காரியங்கள் நடைபெற்றுள் ளன. ரப்பர் விலைச்சரிவின் காரணமாக ரப்பர் தேயிலைக் தோட்ட முதலாளிகள், தொழிலாளர் சம்பளக்கில் 38% சத வீதம் குறைக்க முயற்சித்தனர். கிலைமை இன்னும் சீர் குலையுமேயாயின் தோட்டங்கள் மூடப்படுவதோடு, பெரும் பாலான மக்கள் வேலை இல்லாக் திண்டாட்டத்தால் பாதிக் கப்படுவர்.
இந்தச் சீரழிவு தடுக்க முடியாதது அல்ல. இன்று எமது ஏற்று மதிப் பொருட்களை விற்கவும், வேறு நாடுகள் வாங்கவும் தயாராக இருக்கின்றன. வதந்திப்போர் காரண மாகப் புதிய சீனு, சோவியத் யூனியன் போன்ற நாடுகளுடன் நாங்கள் வியாபாரம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டிருக் கிருேம். ஆனல் இந்த இரு நாடுகளும் இலங்கையி லிருந்து தங்களுக்கு வேண்டியவற்றை வாங்கவும், அவர் களுக்கு வேண்டியவற்றை விற்கவும் தயாராக இருக்கின்றன. ஆனல் அமெரிக்க அரசாங்கமோ இலங்கை, சீன, ரஷ்யா வுடன் வியாபாரக் தொடர்பு வைத்துக்கொண்டால், உட னடியாக அமெரிக்கா, இலங்கைக்குக் கரும் பொருளாதார உதவிகளை நிறுத்தி விடுவதாக மிரட்டுகின்றது.
இலங்கை மக்களின் ஒன்று பட்ட வற்புறுத்துதலின் பேரில் மேற்படி நாடுகளுடன் வியாபாரத் தொடர்புக்கு இருந்த தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. இத ல்ை இந்நாடுகளுடன் எங்கள் சப்பர் வியாபாரம் மிகவும் அகி கரித்துள்ளது. சென்ற ஆண்டில் சீனவே எமது ரப்பரை வாங்கும் முதல் நாடாக விளங்கியது. சீன, சப்பசை வாங்கி யதின் மூலமாக, எமது நாட்டின் விலைச்சரிவைத் தடுக் து நிறுத்தி, பெரிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஒாள விற்குத் துணை புரிந்தது.
நாங்கள் சீனுவிற்கு சப்பர் விற்றதன் பயனுக, சப்பர் விலை எந்த அளவிற்கு மாற்றமடைந்துள்ளது என்பதை

88
ஒரு சிறு உதாரணத்தின் மூலம் எடுத்துக்காட்ட முடி யும். இவ்வாண்டு செப்டம்பர் 18-ம் நாள் கொழும்புத் துறைமுகத்கில் போலந்தைச் சேர்ந்த கப்பல் சீனத் திற்கு சப்பர் ஏற்றிக் கொண்டிருந்தது. முதல் தா ாப்பரின் விலை 160 சதம், சீனவிற்கு ரப்பர் வாங்கிக் கொண்டிருந்த வியாபாரிகள் வாங்காமல் விடவே, அன்று காலையிலேயே ரப்பர் விலை ஒரு ரூபாய் 15 சதமாகக் குறைந்து விட்டது. இது கிட்டத்தட்ட சப்பரின் உலகச் சந்தை விலையை அடுத்திருந்தது. அன்று பிற்பகல் சீன விற்கு சப்பர் வாங்கும் வியாபாரிகள் திரும்பவும் வாங்கத் தலைப்பட, விலை ஒரு ரூபாய் 60 சதமாகி விட்டது. இதி லிருந்து அறியத்தக்கது என்னவெனில், எமது பொருட் க%ள விற்க வேறு இடம் இருப்பதோடு மாத்திரமல்லாமல், அது லாபம் தரத்தக்கதாகவும் இருக்கிறது என்பதும் தான். எங்கள் இறக்குமதிப் பொருட்களைப் பொறுத்தவசை யில் கூட, இந்க உண்மை பொருந்தும், எங்கள் உணவுத் தேவைகளில் * பங்கை இறக்குமதி செய்கிமுேம். அண்மை யில் எமக்கு அரிசி அனுப்பிக்கொண்டிருந்த நாடுகளின் உள் நாட்டு நிலைமை சீர்குலைந்தமையிலுைம், அமெரிக்கா டாலர் களைக் கொடுத்து அரிசி வாங்கி விட்டதன் காரணமாகவும், எமது அரிசித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போயிற்று. இதன் பயனகவும், மக்களுடைய வற்புறுத்த வின் காரணமாகவும், இலங்கை அரசாங்கம் அமெரிக்க எதிர்ப் பையும் பொருட்படுக்தாமல் அரிசி வாங்கப் பீக்கிங்கிற்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பியுள்ளது. இக்குழு ஆசியாவின் சமா கானக்கை கிலைநிறுக்கப் பெரிதும் துணை புரிந்துள்ளது. இலங்கையிடம் சீனுவிற்கு விற்க ரப்பர் உண்டு ; அதே போன்று சீனவிடம் இலங்கைக்கு விற்க அரிசி உண்டு. இந்தப் பண்டமாற்றைவிட, இருநாடுகளுக்கும் நன்மை பயக்கத்தக்க வழிகள் உண்டா ? S.
அடிமை நாடுகளிலுள்ள மக்களைப் பாதிக்கின்ற இன் னெரு பிரச்சினை, இயந்திர ஏற்றுமதியே. சுரண்டல் மூலம்
நாசஞ்செய்யப்பட்ட நாடுகள் நலம்பெற வேண்டுமாயின்

Page 48
84
தொழில் வளம் பெருகவேண்டும். இவற்றைச் சாதிக்க அடிமை நாடுகளுக்குத் தொழில் வளம் மிகமிக அவசியம். தொழில் வளத்தைப் பெருக்க அடிமை நாடுகளுக்கு இயங் திர உதவிதந்து உதவ ஆங்கிலோ-அமெரிக்கர் மறுத்து வரு கின்றனர். இக்கொள்கை இலங்கை மக்கள் நலனுக்கு மாறு பட்டது. கொழும்புத் திட்டம்' என்ற பெயரால், பெரும் பெயர் கொண்ட கண்துடைப்புத் திட்டங்களை, ஏகாதிபத்திய வாதிகள் உண்டாக்கியுள்ளனர். மேலெழுந்தவாரியாக ஆரா யும்போது, இத்திட்டங்களின் போலித்தன்மை புலகுைம். கொழும்புத் திட்டத்தை உதாரணத்திற்குப் பார்ப்போம். இது அமெரிக்கர்கள் பண உதவி தருவார்களென்ற நம் பிக்கை மீது கட்டப்பட்டது. நான்கு அம்ச உதவிக்கிட் டம் போன்ற ஏமாற்றுத்திட்டம்கூட, இதற்கு ஒருவிதப் பொருளுதவியையும் அளிக்கவில்லை.
கொழும்புத் திட்டக்தைப் பொறுத்த வரையில், பிரிட் டன், எமக்கு வரவேண்டிய பணக்கின் ஒரு பகுதியையாவது தரும் என்ற நம்பிக்கையுண்டு. இரண்டாவது உலக யுத்தத் தின்போது எம்மிடமிருந்து வாங்கிய பொருட்களுக்குப் பணத்தைக் கொடுக்காமல் முடக்கி வைத்திருந்தது. அத னைப் பிரிட்டன் பல தவணைகளில் எமக்குக் கருவதாகச் சம்மதிக்கும் கண்துடைப்புத் திட்டமே தான் கொழும்புக் திட்டம்.
இத் திட்டத்தின்கீழ் உள்ள எல்லாத் துணைத் கிட்டங் களும் எம்மைப் பொருளாதார அடிமைப் பாட்டினின்றும் விடுவிக்கத் தக்கவையல்ல. திட்டத்தின் எல்லா அம்சங்க ளும், போக்கு வரத்து, விவசாயம் ஆகியவற்றின் வளர்ச்சிக் குத் தான் உதவுகின்றனவே கவிர, தொழில் வளத்தைப் பெருக்கத் தகுந்த அம்சம் எதுவுமே கிடையாது. உலகப் பாங்கிப் பிரதிநிதிகள், இலங்கையின் தொழில் வளக்தைப் பெருக்கக் கூடாதென்றும், விரிந்த அளவில் விவசாயக்தைக் கூட்டத் திட்டமிடுவது சரியல்லவென்றும் அபிப்ராயம் தெரி வித்திருக்கின்றனர். அடிமை நாடுகளினுடைய பொருளா தாாத்தைத் தங்களுக்குக் கீழ்ப்படுத்தும் ஏகாதிபக்தியத்

85
திட்டத்தின் ஒரு பகுதியே இது. இதை நாங்கள் எடுத்துக் காட்டியவுடன், இலங்கை அரசாங்கம் மூலதனத்தைத் தேடிக் கொள்வது மிகமிகக் கடினமென்று காரணம் காட்டு கிறது. யுத்த தளவாட உற்பத்தியின் மூலம் தொழில் வளத்தை நாசமாக்க விரும்பும் நாடுகளில் தான் இயங்கிச சாதனத் தட்டுப்பாடு ஏற்படும். அாகிர்ஷ்டவசமாய் இயங் கிர சாதனங்களைப் பெறவேண்டிய நிலையும் இங்காடுகளின் மீது சார்ந்து கிடக்கின்றது. இாங்கூனில் நடைபெற்ற இ. சி. ஏ. எப். இ. (E. C. A. R. E) மாநாட்டில் சோவியத் தூதர், உலகத்திற்கு வேண்டிய இயந்திர சாதனங்களைத் தரவும், பொருளாதாரத் துறையில் பின்தங்கியுள்ள நாடுகளைத் தொழில் வளமுடையதாக மாற்றவும் தயார் என்று கூறினர். ஆனல் இத்தகைய வாய்ப்புக்களை, இலங்கை அரசாங்கம் பெற முடியாதபடி அமெரிக்க அரசாங்கத்தின் பயமுறுத்தலும், வியாபாரத்தில் தலையிடுதலுமான போக்குத் தடைசெய்து விட்டன. இதனுல் உலகத்தின் சரிபாதி நாட்டோடு பிணங் கிய முறையில் வாழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பின்தங்கி யுள்ள நாடுகளை வளர்ச்சி அடையச் செய்வதும், வியாபாரத் தொடர்பு கொள்வதும், பொருளாதார ஒத்துழைப்பும் தான் உலகத்தில் யுத்த அபாயத்தைக் குறைக்கச் செய்வதாகும் என்பதை நாங்கள் நன்கு உணருகிருேம, சமாதான இயக்கச் தின் சார்பில், அமெரிக்க அரசாங்கத்தினுடைய கட்டுப்பாட் டைத் தளர்த்தவும், எல்லா நாடுகளுடனும் வியாபாரத் தொடர்பு கொண்டு நட்புறவை வளர்க்க வற்புறுத்தவும் வேண்டியது அவசியம். மாஸ்கோவில் நடந்த உலகப் பொரு ளாதார மாநாட்டிற்கு இலங்கையினின்றும் ஒரு ஆளதுக் குழுவை அனுப்ப முடிந்தமைப்பற்றி பெருமகிழ்ச்சி தெரி விப்பதுடன், அதன் பயனுக இலங்கைக்கும், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சோவியத் யூனியன், சீன போன்ற நாடுகளுக்குமிடையில் வியாபாரம் அதிகரித்துள்ளது என் பதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். முடிவாக, எனக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் உள்ள
சிபார்சுகளை மனதார ஆதரிக்கின்றேன்.

Page 49
86
ஆசிரியர் பீக்கிங் வானெலியில் பேசியது.
அருமை நண்பர்களே !
நவசீனவில் ஒரேயொரு 'ஈ'யைத்தான் கண்டேன். ஒரு பிச்சைக்காரனைக் கூட காணவில்லை. கவலை கிறைங்க முகம் ஒன்றைக் கூட காணவில்லை. ஒரு மாதத்திற்கு மேல் சீனத்தைச் சுற்றிப் பார்த்து உங்கள் நாட்டைப்பற்றி அறிந்து கொண்டேன். இாந்தாருமில்லை ; துன்புற்முரு மில்லை. ஐரோப்பாவிற்குச் சமமான நிலப்பரப்பும், 50 கோடி மக்களும் நவசீனத்திலுண்டு என்பது ஞாபகத்திலிருக்கிறது. மூன்று ஆண்டுகட்கு முன்பு இந்த நாட்டில் கவலை குடி கொண்ட முகங்கள், ஒடு தாங்கிய “கை” கள், 'ஈ'க்கள் முக லானவற்றின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அப்படி ஏதா வது அற்புதம் நிகழ்ந்தது என்று எண்ணுகின்றீர் களா? இல்லை. உண்மையில் சீனமக்கள் தங்கள் வாழ்வின் வளத்தைக் கண்டு பிடித்துக் கொண்டனர். மக்களனைவரும் ஒரே குரலுடன் தங்கள் அருமைத் தலைவர் மாசே-துங்" கின் அழைப்பிற்குப் பதில் கூறினர்.
சீனமக்கள் சமாதானம் விரும்புபவர்கள். அவர்கள் மூச்சில் சமாதானம் ஒலிக்கின்றது. சமாதானத்தை விரும்பும் உலக மக்கள் அனைவருக்கும் நட்புக் கரத்தை நீட்டுகின்றனர். இத்தகைய உணர்ச்சியின் பிரதிபலிப்பு ஆசிய, பசிபிக் பகுதிகளின் சமாதான மாநாடாக மாறியது. பீக்கிங்கை விடச் சிறந்த மற்முேர் இடம் இம்மாநாட்டை நடத்தக் கிடைத்தே இருக்காது. உலக நாடுகளினது சமா தான இயக்கங்கள் வெகு துரிதமாக முன்னேறுவதற்குக் காரணம் நவசீனத்தின் சாதனைகளும், அவற்றைப் பேண சீனமக்கள் கொண்டுள்ள சமாதான ஆர்வமுமே தவிர, இம் மாநாடல்ல என்பது என் கருத்து.
சீன சமாதானக் குழுவின் ஆழ்ந்த அறிவும், அச் தலைவர்களினுடைய சாதனத் திறமையும் தான் இம்

8?
மாநாட்டை வெற்றி பெறச் செய்தன. 37 நாடுகளிலிருச்து வந்த பல்வேறு கருத்துக்களையுடைய 400 பிரதிநிதிகள், ஏகோபித்து எத்தனையோ தீர்மானங்களை ஏற்றுக்கொண்ட -னர் என்றல், அது சமாதானத்திற்கும் சீன மக்களுக்கும் உள்ள பெரும் சாதனை வெற்றியைக் காட்டுகின்றது. இந்த மாநாட்டின் மகத்தான சாதனைகளை (முழுதும் உணர்த்த சில காலம் செல்லலாம். இந்தியா, பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஒரு கூட்டு அறிக்கையைச் சமர்ப்பித்ததுடன், இருநாடுகளுக்கு மிடையேயுள்ள சகல பிரச்சினைகளையும் சமாதான முறையில் தீர்த்துக்கொள்ள முயற்சிகள் எடுப் போம் என்று வாக்குறுதியும் செய்து கொண்டனர்.
எழுத்தாளன் என்ற முறையில், தினத்தாள்கள், சஞ்சி கைகள் போன்ற பிரசுரங்களைப் பார்த்துப் பெரிதும் கவர்ச்சி அடைகிறேன். சுவர் ஒட்டிகள் மக்கள் மத்தியில் பெற் முள்ள செல்வாக்கைக் கண்டு மக்கள் பொது விவகாரங் களில் காட்டும் அக்கரையைக் கணிக்க முடிகிறது.
உலக சமாதானக்தை உறுதிப்படுத்தும் மிக முக்கிய மான காரணம், சீனத்திற்கும், புதிய ஜனநாயக நாடுகளுக்கும், சோவியத் யூனியனுக்குமிடையில் ஏற்பட்டு வளர் ந்துவரும் நல்லுறவே என்பது தெளிவாம். சோவியத் யூனியன் மக்கள் மீது சீன மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பையும் மதிப்பை யும் நவசீனத்தில் நன்கு பார்க்க முடிகிறது. ஸ்டாலின் என்ற சொல்லைக் கேட்டவுடன் சீனக்குழந்தைகள் உள்ளத்தில் ஏற் படும் உவகை கண்டு களிக்கக் தக்கது. ፥
வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் நம்பமுடியாத அளவிற்கு ஏற்பட்ட முன்னேற்றத்துக்குக் காரணம், மக் களும் அரசாங்கமும் ஒன்முகியதே. மூன்று ஆண்டுகளில் நீங்கள் சாதித்தகை, வேறு எந்த வழியிலும் சாதிக்க முடி யாது. சீனநாட்டுத் தலைவர்களின், அறிவினல் நூற்முண்டு கள் ஒரு சில ஆண்டுகளாகச் சுருக்கப்பட்டுள்ளன.
சீனநாட்டு மக்கள் வியாபாரம், கலாச்சாரம் என்ற ரீதியில் உலக நாடுகள் அனைத்துடனும் காட்டி வருகின்ற

Page 50
88
அவாவானது பரஸ்பரம் நன்மை பயப்பதோடு, உலக சமா தானத்துக்குப் பெரிதும் துணை புரிகின்றது.
உலக மக்கள் தொகையின் நாலில் ஒரு பங்கு உள்ள சீனநாடு, இன்னும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் இடம் பெறவில்லை. இந்த ஸ்தாபனம், அமெரிக்க அரசாங்கத்தின் கைப்பொம்மையாக இருந்து வருவகையேதான் எடுத்துக் கர்ட்டுகிறது. இது மிகவும் அர்த்தமற்றதும், பொறுக்க முடி யாததுமான சம்பவம். இதற்குக் காரணம், சிறு பார்மோசா தீவில் வாழுகின்ற ஒரு அமெரிக்க அடிவருடியை சீன மக்க வின் பிரதிநிதி என்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் சொல்லுவது தான். இத்தகைய அடாத செயல் ஒன்றை உலக மக்கள் எக்தனை காலம் பொறுப்பார்கள் ? ஐக்கிய நாடு கள் ஸ்தாபனத்தின் பெயாால் நடத்தப்படும் கொரிய யுத் தத்தை இவர்கள் எவ்வளவு காலம் விட்டுக் கொண்டு
இருக்கப் போகிமுர்கள் ?
மனித குலத்திற்கு எதிராகச் செய்யப்படும் குற்றங்கள், கொலைகள் அத்தனைக்கும் முடிவு காலம் கிட்டிவிட்டது. ஆதிக்க வெறி கொண்டு திரியும் அமெரிக்க அரசாங்கத்தின ரின் யுத்தக் கொள்கைகளை உலக மக்கள் அனைவரும் நன்கு உணாத்தலைப்பட்டு விட்டனர். V
சீனத்திலிருந்த ஈக்கள் அழிக்கப்பட்டதுபோல, அமெ ரிக்காவிலுள்ள கொடிய சக்திகளும், அதனுடைய கைக்கூலி களும் 'அழித்து ஒழிக்கப்படுவர் என்பது திண்ணம். இதைச் செய்வதற்கு சோவியத் யூனியனும், நவசீனுவும், சமாதானத்தை விரும்பும் மற்ற நாடுகளுக்கு வழிகாட்டி களாக விளங்கும் என்பது உறுதி.
சமாதானத்தை விரும்பும் உலக மக்கள் சக்தி ஓங்குக ! அவர்கள் ஒற்றுமை நீழிே வாழ்க!
Vinodan Press, 33, Jones Street, Madras-1.


Page 51
, 1 ட்டுகிறது. 3'
ད། ཟ
சிந்தனே தான் GTi
ܨܡܘ , 「 「
। :
හීක්‍ෂත්‍ව0×∞
FృFFF్న
 
 

'ங்கோவன்
ܐ ܗ . , . תח ח ,).ീ 1 ותיה (ה
ܨ ܒ . זה דוחן שווי דיו, ול
கரிசுத்தின் உயிர்
। ।।।।