கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிழக்காபிரிக்கக் காட்சிகள்

Page 1
桓目[[
-~ !!— |-|- |- |-- \,=}-· -| __| maem.|- 良自且捐巨 |-
 
 
 
 


Page 2


Page 3

கிழக்கா பிரிக்கக் காட்சிகள்
எ. எம். எ. அஸிஸ்
பாரி நிஜலயம்

Page 4
முதற் பதிப்பு, டிசம்பர்-1967 உரிமை பதிவு
விலை ரூபா
P A A R II N I Li A Y A MI
59, Broadway :: Madras-l.
Jeevan Press, Madras-.5 (1279)

சமர்ப்பணம்
மகளின் கணவனும் மருமகன் என்னைத் தன் மகளுகவே கடத்திய பெருந்தகை பிர யாணத்துப் பெருவிருப்பதனுல் காடு பல சென்றவர்; முஹம்மத் இஸ்மாயில் இப்னு முஹம்மத் அலி, ஜே. பி. அவர்களின் அன்பு நினைவுக்கு.

Page 5
நன்றியுரை
*மலேசியப் பிரயாணம்" என்ற தலைப்பில் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாகாட்டுடன் தொடர்புபடுத்தி, தினகரன்' பத்திரிகையில் நான் எழுதிய பிரயாணக் கட்டுரைகளைப் படித்து வந்த நண்பர்கள் சிலர், எனது முன் அனய பிரயாண அனுபவங்களையும் கட்டுரை களாக எழுதும்படி யோசனை சொன்னுர்கள். அதைப் பற்றிச் சிந்தித்தபோது எனது ஆபி ரிக்க அனுபவங்களை எழுதலாமென்று தோன் றியது. இலங்கையிலிருந்து ஆபிரிக்க நாடு களுக்குப் பிரயாணஞ் செய்தோர் சிலரே என் பதை நான் அறிவேன்.
கண்பர்கள் எனக்குக் கூறிய யோசனை யைக் கேள்வியுற்ற 'தினகரன்’ ஆசிரியர் இ. சிவகுருநாதன் அவர்கள், இன்றைய சர்வ தேச அரசியற் களரியில் முக்கிய அங்கம் வகிக் கும் ஆபிரிக்காவையும் அங்கு வாழும் மக்கள், அவர்களின் பிரச்சினைகள், ஆசாபாசங்கள் ஆகியவற்றையும் இலங்கை வாசகர்கள் குறிப் பாக இன்று தமிழ்மொழி மூலம் கல்வி பயிலும் மாளுக்கர்கள், அறிக்கு கொள்வது அவசிய மென்பதனல் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கு மாறு என்னைத் தூண்டினுர், கானும் தொடங் கினேன்.
கிழக்காபிரிக்காவில் ஒரு மாதம் சுற்றுப் பிரயாணஞ் செய்து பெற்ற அனுபவங்களே முப்பத்தொரு கட்டுரைகளாகி இந்நூலில் அத்

தியாயங்களாக இடம்பெற்றுள்ளன. மத்திய ஆபிரிக்க, தென் ஆபிரிக்க அனுபவங்கள், இன்ஷா அல்லாஹ், அடுத்து வெளியாகும்.
பெரும்பாலும் இங்கிலிஷில் எழுதப்பெற்ற இக் கட்டுரைகளைத் தமிழாக்கி உதவிய காவ லூர் ராசதுரைக்கு என் கன்றி. ஆயினும், இக் கட்டுரைகளிற் காணப்படும் வழக்கத்துக்குப் புறம்பான வாக்கிய அமைப்புக்கள், சொற் ருெடர்கள், வார்த்தைப் பிரயோகங்கள் இவற் றுக்கெல்லாம் நானே பொறுப்பாளி. இலங் கையில் இஸ்லாம்', "மிஸ்றின் வசியம்', 'தமிழ் யாத்திரை' ஆகிய என் பிற நூல்களை உவங் தேற்ற வாசகப் பெருமக்கள் இந் நூலையும் குற்றம் களைந்து, குணம் காடி ஆதரிப்பர் என கம்புகிறேன்.
இக் கட்டுரைகளைத் 'தினகரன்’ வார மஞ் சரியில் வெளியிட்டு உதவிய அதன் ஆசிரியர் திரு இ. சிவகுருகாதன் அவர்களுக்கும், சிறந்த முறையில் நூலைப் பதிப்பித்துத் தந்த பாரி நிலையத்தாருக்கும் எனது நன்றி உரியதாகுக.
எ. எம். எ. அஸிஸ்

Page 6
பதிப்புரை
ஈழ காட்டின் முஸ்லிம் மக்களிடையே தோன்றி அவ்வினத்து மக்களுக்கு அளப்பரிய தொண் டு கள் புரிந்து கொண்டிருப்பவர் ஜனுப் எ. எம். எ. அஸிஸ் அவர்கள். யாழ்ப் பாணத்திலே தோன்றி யாழ்ப்பாணத்தின் தமிழினை நன்கு பயின்றவர்கள். தமிழிற் பேசியும் எழுதியும் வருவதில் அதிக விருப்பங் கொண்டவர்கள். அவர்கள் எழுதும் கட்டுரை கள் வாரங்தோறும் இலங்கைப் பத்திரிகைகளை அணி செய்து வருகின்றன.
“இலங்கையில் இஸ்லாம்” என்னும் மகு டத்துடன் அவர்கள் எழுதிய நூலுக்கு, இலங் கைச் சாகித்திய மண்டலம் பரிசு வழங்கி யுள்ளது. “மிஸ்றின் வசியம்’, ‘தமிழ் யாத் திரை’ என அவர்கள் எழுதிய நூல்கள் இவ் வாண்டில் வெளிவந்துள்ளன.
அவர்கள் தமது சிறந்த நூலொன்றினை யாம் வெளியிடுவதற்கு இசைவு தந்தமைக்காக ஜனுப்பு அஸிஸ் அவர்களுக்கு எமது கன்றி யறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகின்ருேம்.
ஆசிரியரின் பிற நூல்களே ஆவலுடன் படித்துப் பயன்பெற்ற மக்கள் இந் நூலினை யும் பெற்றுப் படித்து எமக்கு ஊக்கம் அளிப் பார்கள் என நம்புகின்ருேம்.
பதிப்பாளர்.

:
5.
6. 7. 8.
9.
உள்ளடக்கம்
இருண்ட கண்டத்தில் உதய சூரியன் சாம்ராஜ்ய நாடுகள் அணியில் ஆசியச்
செல்வாக்கின் அறிகுறி மெள மெள இயக்கமும் மசாய் மறவரும் நைரோபி நகரில் நான்கு நாட்கள் கிக்கியு மண்ணில் கண்டி நினைவுகள் சூரியகாந்தியும் வெள்ளந்தியும் உகண்டா ராணி மாளிகையில் தாடியின் தாற்பரியம் கீன்யப் பருவதத்தை எதிர்கொள்ளல் ஈர் உருவகக் கதைகள் காண்டா மிருகமும் நீர் யானையும் கீன்யாவில் ஸாஹிரு மாணவன் வாழையோ வாழை கொழுந்து கிள்ளும் கோதையர்
இல்லாத் தேயிலைத் தோட்டம் கிராமிய நடனமும் நாடோடிக்
கதையும் மனுேரதப் பிரயாணம் புத்தம் புதிய கலைகள் இலங்கைச் சுதந்திரமும் உப்புச்
சோடாவும் அல்லாமா இக்பாலும் அஹ்தார்
இமாமும் விலாங்கு மனிதன் மலையைப் பரிசளித்த மகாராணி தாறுஸ்ஸலாத்தில் சி.சி.எஸ். நினைவுகள் தும்புக் கற்ருழைத் தோட்டத்திலே ஸ்வாஹிலி மொழியும் அறபுத் தமிழும் சுல்தானின் அரண்மனையில் கராம்புத் தீவிலே மொம்பாஸா வைசியர் வாஸ்கொடகாமாவுக்கு வழிகாட்டியவர் இங்கிலீஸ்காரர் கல்வி முறையின்
5FIT J6) 356T புகைப்படப் பிரச்சினை பிரியா விடை
0
5 20 25 5 37 43
54 60 67 72
84
9. 97 03
Υ09
Ill 6 23 30 37 丑43 50 56 1 63 70 178
35 9. 97

Page 7

இருண்ட கண்டத்தில் உதயசூரியன்
1.
ஆபிரிக்காவென்னும் மாபெரும் நிலப்பரப்புக்கும் எனக்கும் முதன்முறையாக கேரடித் தொடர்புண்டானது 1947ஆம் ஆண்டில் மிஸ்றின்-எகிப்தின்-வசியத்தால் கவரப்பெற்றுப் பத்து வார காலத்தை அக் காட்டிற் கழித்தபோதாகும். ஆயினும், கலாசார அடிப்படையில் கோக்குமிடத்து, மிஸ்ர் தேசம் ஆபிரிக்கப் பண்புகளிலும் மத்தியதரைக் கலாசாரப் பண்புகளே அதிகம் பொலிந்த தாக மிளிர்கிறது. 1947இல் மிஸ்ர் காடு அரசியல் ரீதி யாகத் தானும் ஆபிரிக்காவுடன் பிணைப்பற்றதாக விளங்கிற்று. இன்றே ஆபிரிக்க விவகாரங்களில் அதிக கரிசனையும் தீவிர ஈடுபாடுங்கொண்ட ஜனதிபதி காஸ் ரின் ஆட்சியில் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. அத்துணை துரிதமாக, தருவளி வேகத்திலே, ஆபிரிக்கக் கண்டத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
எனினும், 1947ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல வரு டங்கள் வரை சஹாருவுக்குத் தென்புறமுள்ள ஆபி ரிக்கா எனவும், இருண்ட கண்டமெனவும் வர்ணிக்கப் படும் இந்தப் பெரும் நிலப்பரப்பைத் தரிசிக்கும் வாய்ப்பு "எனக்குக் கிடைக்கவில்லை. இருண்ட கண்டமென்பது வெள்ளையர்கள் தட்டிய பெயராகும்; ஆபிரிக்க மக்களின் வர்ணத்தை முன்னிட்டோ, அக் கண்டத்தின் அநேக பகுதிகள் கண்டறியப்படா திருந்தமையாலோ இடப் பெற்ற இப் பெயர் காலகதியில் ஆபிரிக்காவின் அறி யாமை, காகரிக முன்னேற்றமின்மை ஆகியவற்றையுஞ்
Il -سس-279 TH

Page 8
10
சுட்டும் இழி-சிறப்புப் பெயராகப் பரிணமித்ததென லாம். என்னைப் பொறுத்தவரை, ஆபிரிக்கக் கண்ட மென்றதும் இஸ்லாத்துக்காகச் சித்திரவதையனுபவித்த ஹபவழி அபிஸ்ஸினியா அடிமை ஸைய்யிதினு பிலால் அவர்களின் நிஜனவே மனதில் உதிக்கும். இவர்களே கபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்ட இஸ் லாத்தின் முதல் முஆஹ்தீன் ஆவர்.
இந்த இருண்ட கண்டத்திலே சுமார் இரண்டு மாத காலத்தைச் செலவிடும் வாய்ப்பு 1954 ஆகஸ்ட், செப்டம் பர் மாதங்களில் எனக்குக் கிட்டியது. இந்த இரண்டு மாத காலத்தில் கீன்யா, உகண்டா, தங்கனிக்கா, ஸான், ஸிபார், தென் ரொடீஷியா, வடரொடீஷியா, தென் ஆபி ரிக்கா டொமினியன் ஆகிய நாடுகளுக்கு விஜயஞ் செய் தேன்.
இவற்றிலே கீன்யா, உகண்டா இரண்டும் இன்று சுதந்திர காடுகளாக விளங்குகின்றன. 1954இல் இவை யும் தங்கனிக்கா, ஸான்ஸிபார் ஆகியவையும் பிரிட்டிஷ் கிழக்கு ஆபிரிக்கா என்று பொதுப்படையாகக் குறிக்கப் பட்டு வந்தன. இன்று தங்கனிக்காவும் ஸான்ஸிபாரும் ஒன்று சேர்ந்து தன்ஸேனியா சுதந்திர நாடாக விளங்கு கிறது. தென் ரொடீஷியாவின் இன்றைய நிலை காம்; எல்லோரும் அறிந்ததே. வட ரொடீஷியா இன்று ஸாம் பியா என்னும் பெயரில் சுதந்திர நாடாகத் திகழ்கிறது.
கீன்யாவின் தலைநகராகிய நைரோபியில் நடை பெற்ற சாம்ராஜ்யப் பாராளுமன்றச் சங்க மாநாட்டிற்கு இலங்கைப் பிரதிநிதிகளில் ஒருவராகச் சென்றபோதே மேற்சொன்ன நாடுக2ளத் தரிசிக்கும் பேறு எனக்குக் கிடைத்தமையால் இந்தச் சங்கம்பற்றி ஒரு சில வார்த் தைகள் சொல்வது இங்கு பொருத்தமாயிருக்கும். சாம்

11
ராஜ்யப் பாராளுமன்றங்களின் சங்கம் 1911ஆம் ஆண் டில் ஸ்தாபிக்கப்பட்டது. (இதே ஆண்டிலேயே கானும் இம் மண்ணுலகில் தோன்றினேன். என்ருலும் இந்தச் சங்கத்தின் தோற்றத்துக்குள்ள முக்கியத்துவம் என் பிறப்புக்கு உண்டென்று நான் கருதவில்லை. இதனை மேற்படி மாாகாட்டின் முன்ருவது தொடர்க் கூட்டத்தில் பிரகடனஞ் செய்தேன். டொமினியன் அந்தஸ்துப் பெற்ற காடுகள் இச் சங்கத்தில் பூரண அங்கத்துவம் வகித்தன. அங்கத்துவம் பெறுவதற்கு வேண்டிய குறைந்தபட்ச தகைமை சம்பந்தப்பட்ட நாட்டின் ஆட்சி மன்றத்தில் உத்தியோகப் பற்றற்ற அங்கத்தவர்கள் பெரும்பான்மையினராயிருத்தல் வேண்டு மென் பது. 1947-48ஆம் ஆண்டுகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் சுதந்திரம் பெற்றன. இதன் விளைவாக, பாராளுமன்றச் சங்கத்து டொமினியன் கரு வூலம் முதன்முதலாக ஆசியச் சாயல் பெற்றது. ஆனல், அடுத்த ஆறுண்டுக் காலத்தில் ஆபிரிக்கக் கண்டத்தில் நிகழ்ச்த மாற்றங்களின் விளைவாக, ஆபிரிக்க காடுகள் பல முன்னணிக்கு வரலாயின. உலக ஸ்தாபனமாகிய ஐக்கிய காடுகள் ஸ்தாபனத்தின் வளர்ச்சியை நோக்கி ணுேமானுல், 1960ஆம் வருடம் ஆபிரிக்க காடுகளின் வியத் தகு ஆண்டாக மிளிர்க்தமையைக் காணலாம்.அந்த ஆண் டில் ஐ. கா. உறுப்பினர்களின் எண்ணிக்கை ஜூர வேகத் தில் ஏற்றமடைந்தது. இந்தப் புதிய உறுப்பு காடுகளில் அநேகமாக எல்லாம் ஆபிரிக்க நாடுகளே. அவ்வாண் டில், ஏகாதிபத்திய நாடுகள் ஆபிரிக்காவில் தமது ஏகாதிபத்தியக் கொள்கையைக் கைவிடும் நடைமுறை யைப் பின்பற்ற ஆரம்பித்தன. ஆசிய மக்கள் தம்மைத் தாமே ஆட்சிபுரியும் வல்லமையுடையவர்களென்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்த ஏகாதிபத்தியவாதி

Page 9
12
கள், ஆபிரிக்க மக்களுக்கும் அத்தகைய வல்லமையுண் டென்பதை ஒப்புக்கொள்ள மறுத்து வந்தார்கள். இக் நிலை 1960இல் துரிதமாக மாற்றமடைந்தது. ஆபிரிக்கா வில் பிரதான ஏகாதிபத்திய நாடுகளாக விளங்கிய பிரிட்டனும் பிரான்சும் தமது கொள்கையை மாற்றிக் கொள்ளவும், கறுப்பின மக்களுக்கு அதிக ஆட்சியுரிமை வழங்கவும் தீர்மானித்தன. இதன் பயணுக ஆபிரிக்க மக்களும் தம்மைத் தாமே ஆளும் வாய்ப்பினைப் பெறலா யினர். அடிமைகளாயிருந்த நிலை மாறி, தம்மை ஒரு காலத்தில் ஆண்டு வந்தவர்களுக்குக் கூட நிபந்தனை களும் கட்டளைகளும் விதிக்கும் வாய்ப்பினைப் பெற லாயினர்,
1954ஆம் ஆண்டில் மாற்றத்தின் சாயல் ஆபிரிக் காக் கண்டத்தில் ஆங்காங்கு காணப்பட்டே வந்தது. கீன்யாவின் மெள மெள இயக்கம் அப்பொழுது பிரபல மடைந்திருந்தது. ஜோமோ கென்யாட்டா அவர்கள் இவ் வியக்கத்தினரில் ஒருவரென்று கம்பிய பிரிட்டிஷார் அவரை முதலில் தடுப்புக் காவலில் வைத்தார்கள்; பின் னர் சிறையிலடைத்தார்கள். நாங்கள் மேற்படி மாநாட் டுக்குச் சென்றிருந்த சமயம் எல்லோரும் மெள மெள இயக்கம் பற்றியும் அவ் வியக்கத்தினரின் பயங்கர நட வடிக்கைகள் பற்றியுமே பேசிக்கொண்டார்கள். இன்ருே, இதே கென்யாட்டா கீன்யா நாட்டின் ஜனதிபதியாகவும், உஹ"று-சுதந்திர-உணர்வின் பிரதிபிம்பமாகவும் விளங்கிவருகிறர். ‘ஹறம்பேயே’ என்னும் அவரது தாரக மந்திரம் கீன்ய மக்கள் அனைவரையும் பிணைக்கும் அன்புத் தழையாக மிளிர்கிறது. ஹறம்பேயே என்ருல் ஸ்வாஹிலி மொழியில் “எல்லோரும் ஒன்றுபட்டு உழைப் போமாக’ என்று பொருள். உலகின் தலைசிறந்த இராஜ தந்திரிகளில் ஒருவர் என யாவராலும் புகழப்பட்டுவரும்

13
இவர் சாதிச் சச்சரவுகள், இனக் குழப்பங்கள் தப்பெண் ணங்கள் ஆகியவற்றுக்கு இடமளியாத சமரசக் கொள் கையைப் பின்பற்றி, கீன்ய மக்களின் தேச பிதாவென் னும் கெளரவத்தைப் பெற்றுள்ளார் 1954ஆம் ஆண் டில் மெல்லென வீசிய மாற்றக் காற்று அடுத்து வந்த சுமார் பன்னிரண்டு வருட காலத்தில் அவ்வப்போது சூருவளி வேகத்தை யடைந்ததென்பதற்கு கீன்யாவின் இந்த நிகழ்ச்சிகள் சான்ருகும்.
தென் ரொடிவழியாவின் கதை வேறு; கின்யாவின் கதைக்கு எதிர்மாறனது. கீன்யாவில் 60 000 வெள்ளை யர்கள் வசிக்கிறர்கள்: தென் ரொடீஷியாவில் 2,50 000 வெள்ளையர்கள். கீன்யாவில் வெள்ளையர்களுக்கும் கறுப்பின மக்களுக்கும் சமரச முண்டாக்க கென்யாட்டா முயன்று வருகிருர், ஆணுல் தென் ரொடீஷியாவிலோ இவ்விரு இனத்தவர்களுக்கும் காளுக்குநாள் பகைமை முற்றிவருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், 1954 ஆம் ஆண்டில் தென் ரொடீஷியாவின் பிரதமராயிருந்த கார் பீல்ட் ரொட் அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவது பொருத்தமென்று நினைக்கிறேன். குடி வகைகள் பரி மாறும் விருந்து வைபவங்களையும் பலர் கூடியிருக்கும் இடத்திற் சலசலவென்று பேசுவதையும் விரும்பாது, அமைதியான சூழலில் ஆர அமர இருந்து சம்பாஷணை செய்வதில் காட்டமுள்ளவரான இவரைப் பல தடவை சந்தித்தேன். நியூஸிலாந்தில் கிறிஸ்தவ சமயத் தொண் டில் ஈடுபட்டிருந்த இவர் அங்கிருந்து தென் ரொடீஷியா வுக்குக் குடி பெயர்க்தார். கல்ல கிறிஸ்தவராக விளங் கியமையால், ஆபிரிக்க மக்களின் அரசியல், சமத்துவ அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு அவற்றை ஆதரிப்' பவராக இருந்துவந்தார். இதன் காரணமாக இவர் கெடுங் காலம் பிரதமராக இருக்க முடியாது போயிற்று.

Page 10
14
1958இல் பிரதமர் பதவியை இழந்தார். தற்போதைய பிரதமர் இயன் ஸ்மித் அவர்கள் சட்டவிரோதமாகச் சுதக் திரப் பிரகடனஞ் செய்தபோது, ரொட் தமது எதிர்ப்பை வெளிப்படையாகவே தெரிவித்தார். ஸ்மித் அரசாங்கம் தமது பண்ணைக்கு வெளியே கடமாடக் கூடாதென்று கடந்த ஓராண்டுக் காலமாக இவருக்குத் தடை விதித் திருந்தது. சென்ற அக்டோபர் 18 முதல் இந்தத் தடை யுத்தரவு தளர்த்தப்பட்டிருக்கிறது போலத் தோன்று கிறது.
கென்யாட்டா, ரொட் இவ்விருவரது அரசியல் வாழ் விலும் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகள் கீன்யாவினதும் தென் ரொடீஷியாவினதும் மாறுபட்ட பண்புகளைப் பிரதிபலிக்கின்றன. எனினும், இவையிரண்டும் ஆபி ரிக்காவில் நிகழ்ந்துள்ள புரட்சிக்குச் சான்ருகும்.
கைரோபி மாநாடு நடைபெற்று 12 ஆண்டுகள் கழிக்கு விட்டன. இந்தப் பன்னிரண்டு வருட காலத் தில் ஆபிரிக்கா, இருண்ட கண்டமென்ற அவப் பெய ரைக் களைந்துவிட்டது. ஆபிரிக்கர்கள், “முதலில் அர சியற் சுதந்திரத்தை காடுங்கள். மற்றெல்லாச் சுதக் திரங்களும் தாமாகவே உங்களை நாடும்’ என்ற தத்து வத்திற்கேற்பத் தங்கள் விவகாரங்களைத் தாங்களே நிர்வகிப்பதென்று தீர்மானித்து விட்டார்கள்.
உறங்கிக் கிடந்த சிங்கம் கண் விழித்து எழுந்து தன் உடம்பைச் சிலுப்பிக்கொள்வதைப் போல, ஆபிரிக் காக் கண்டம் நீண்ட உறக்கத்தின் பின்னர் விழித் தெழுந்திருக்கிறது. இந்த எழுச்சியின் விளைவாக ஆபி ரிக்கரிற் பெரும்பாலானுேர் அரசியற் சுதந்திரம் பெற் றுள்ளார்கள். இந்தச் சுதந்திரத்தின் பலாபலன்களை அவர்கள் எல்லோரும் அனுபவிப்பார்களா அல்லது

15
ஒற்றுமையின்றிப் பிணக்குற்று, மறுபடியும் பிறர் அப கரித்துக்கொள்ள இடமளிப்பார்களா? எதிர்வரும் ஆண்டுகளில், ஆபிரிக்க மக்கள் தமக்கெனத் தனித் துவம் வாய்ந்த பண்பாடொன்றனை உருவாக்கிக் கொள் வார்களா? அத்தகைய பண்பாட்டின்-நீக்கிரோத்துவத் தின் Negrin.de-குளுதிசயங்கள் எவ்வாறு அமையும்? பண்டைப் பாரம்பரியத்தையும் கவீன தொழில் நுணுக்க உத்திகளையும் வெற்றிகரமாக இணைத்த பண்பாடாக அமையுமா? இவற்றுக் கெல்லாம் காலக்தான் பதில் சொல்ல வேண்டும்.
சாம்ராஜ்ய நாடுகள் அணியில் ஆசியச் செல்வாக்கின் அறிகுறி
2
சாம்ராஜ்யப் பாராளுமன்றச் சங்க மாநாட்டுக்கு இலங்கைப் பிரதிநிதிகளில் ஒருவனுகச் சென்ற சம்ப வத்தை நினைத்தால், லாகூர் ககரிலுள்ள அச்சிஸன் கல்லூரியும் அதன் அதிபரும் எனக்கு ஞாபகம் வருவது வழக்கம். 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி மாலை, மேற்படி கல்லூரியின் அதிபரும் முன்னை காள் இலங்கை வர்த்தக ஸ்தானிகராகக் கடமையாற்றிய வருமான நண்பர் ஸால்ஃபிகார் அலி ஷா அவர்களின் வசிப்பிடத்துக்கு வந்தபோதுதான் கைரோபி மாகாட்டுக்கு நானும் ஒரு பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்ட செய்தி அன்றைய தபாலில் வக்திருக்தது. சாம்ராஜ்ய உறவுகள் சம்பந்தமாக உத்தியோகப்பற்றற்ற முறையில் நடை பெற்ற ஐந்தாவது மாகாட்டுக்கு இலங்கைப் பிரதிநிதிகள் இருவரில் ஒருவனுகச் சென்ற கான், ஏனைய பிரதிநிதி
களைப் போல, மாகாட்டுக் களமான லாகூர், ஃபலெட்டிஸ்

Page 11
16
ஹோடடலில் தங்காமல், நண்பர் ஸ"எல்ஃபிகார் அலி ஷா அவர்களின் அழைப்பை ஏற்று, அவரது உத்தியோக வாசஸ்தலத்தில் என் மனைவி சகிதம் தங்கியிருக் தேன்.
சுமார் 175 ஏக்கர் விஸ்தீரணமுள்ள அச்சிஸன் கல்லூரியில் ஏறக்குறைய 350 மாணவர்கள கல்வி பயின்று வந்தார்கள். இவர்களிற் பெரும் பாலானவர் கள் விடுதி மாணவர்கள். இவ்வளவு பெரிய நிலப்பரப் பில் இவ்வளவு சொற்ப மாணவர்கள் தங்கியிருந்தமை யைக் கவனித்தபோது, ஒவ்வொரு மாணுக்கனுக்கும் அரை ஏக்கர் நிலப்பரப்பு விகிதப்படி இடவசதியளிக்கும் அபூர்வமான கல்லூரி அச்சிஸன் கல்லூரி என்ற மனக் கணிதம் என் நிஜனவில் ஆழப் பதிந்திருந்தது 1886 ஆம் ஆண்டில்,இந்தியாவின் சக்கரவர்த்தினியாகக் கோலோச் வந்த விக்டோரியா மகாராணியாரின் ஆட்சிக் காலத்தில், பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளால் இக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. பிரித்தானியரது அதிகாரத்தின் கீழ் இந்தியாவை ஆண்டு வந்த பல்வேறு சிற்றரசர்கள் மகாராஜாக்கள், ஜமீன்தார்கள் ஆகியோரின் பிள்ளை களுக்கு ஈற்றன், ஹருே முதலியவற்றை யொத்த கல்லூரியொன்றினை உருவாக்கு முகமாகவே பிரித் தானிய ஏகாதிபத்திய வாதிகள் இந்தக் கல்லூரியை நிறுவினர். ஆரம்பக் கட்டத்தில் ஒவ்வொரு மகாராஜாக் குஞ்சும் தனது பரிவாரமாக எத்தனை ஏவலாட்களைக் கொண்டு வரலாமென்ற வரைமுறை எதுவும் இருக்க வில்லையாம். எனவே, ஒவ்வொரு மகாராஜாவும் தமது ஆளணிப் பலத்தையும் அந்தஸ்தையும் பறை சாற்றும் பாங்கில் ஏட்டிக்குப் போட்டியாக ஏராளமான ஏவலாட் க2ள அனுப்பி வந்தாராம். இது பெரிய வில்லங்கமாகி விடவே கல்லூரி நிர்வாகிகள், ஒவ்வொரு மாணவனும்

17
இத்தனை வேலையாட்களுக்கு மேல் வைத்திருக்கலாகா தென்று விதி செய்யவேண்டியதாயிற்று. பின்னர் ஏவலாட்களே இருத்தலாகாதென்ற கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. இவ்விதமாக ஆளும் வர்க்கமொன்றினைப் பேணவும் போஷிக்கவும் ஸ்தாபிக்கப் பெற்ற இக் கல்லூரியை, பாகிஸ்தானின் தேசபிதாவாகிய காயிதே ஆஸம் முகம்மது அலி ஜின்னஹ் அவர்களின் அபிலாஷைக்கு அமைப, ஜனநாயக சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கலாலயமாக மாற்றிய மைக்கும் பணி என் நண்பர் ஸல்ஃபிகார் அலி ஷா அவர்களைச் சார்ந்திருந்தது. இவற்றை முன்னிட்டே நைரோபிமாநாட்டை நினைக்கும்போதெல்லாம் அச்சிஸன் கல்லூரியும் நினைவுக்கு வரும்.
1954 ஆகஸ்ட் 4 ஆம் திகதி காலஞ் சென்ற திரு. பேர்ணுர்ட் அலுவிஹார, திரு. வெலெகெதர, திரு. வி. குமாரசுவாமி ஆகியோரும் கானும் கொழும்பிலிருந்து விமான மார்க்கமாக கைரோபிக்குப் புறப்பட்டோம். விமானம் பம்பாயில் ஒரு சில மணி கேரம் தரித்து, மீண்டும் புறப்பட்டபோது, ஆஸ்திரேலியப் பிரதிநிதி கள் சிலரும் எம்முடன் அதே விமானத்தில் ஏறினுர்கள். இவர்களில் ஒருவர் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக் தார். இவர் என்ணுேடு பேச்சுக் கொடுத்து, ஆசிய மக்களின் மனப்பாங்கு எப்படிப்பட்டது என்று அறிய முயன்ருர், கான் ஆசிய மக்களுக்கென்று தனியான மனப்பாங்கொன்றுண்டா என்று கேள்வியை எழுப்பி னேன். அறபியர், சீனர், ஜப்பானியர், இந்தியர் எனத் தேசவாரியாகவும் இந்துக்கள், முஸ்லிம்கள், பெளத்தர் கள், கிறிஸ்தவர்கள் என மத வாரியாகவும் பிரிக் து கிடக்கும் ஆசிய மக்களுக்கு ஆசிய மனப்பாங்கு எனப் பொதுப்படையாக வர்ணிக்கத்தக்க தொன்றுண்டா

Page 12
18
என்றெல்லாம் விவாதிக்க ஆரம்பித்தோம். ஆயினும் திட்ட வட்டமான ஒரு முடிவுக்கு வந்தோம் என்று சொல் வதற்கில்லை. கலாசார அடிப்படையிலான இந்தப் பிரச்சினைக்கு நாங்கள் இருவரும் எப்படி ஒரு சில மணி கேரத்தில் தீர்வு காண முடியும். எனினும், இந்த உரை யாடலின் மூலமாகவும். லாகூர் மாாகாட்டில் விவாதிக்கப் பெற்ற விஷயங்களிலிருந்தும் ஒருண்மையைக் கிரகித்துக் கொண்டேன். இரண்டாவது உலக யுத்தத்தின் விளை வாகவும், சாம்ராஜ்ய அணியில் ஆசிய நாடுகளின் செல் வாக்குப் பரவியதன் பயணுகவும் ஆஸ்திரேலிய மக்கள் ஆசிய விவகாரங்களில் அதிக அக்கறை கொள்ளத் தலைப்பட்டனர் என்பதே அவ்வுண்மையாகும்.
5-8-54 அன்று காங்களும், கராச் நகரில் எம்முடன் சேர்ந்து கொண்ட பாகிஸ்தான் பிரதிநிதி டாக்டர் ஹலிஃபா சுஜாஹாத்தின் அவர்களும் கைரோபியை அடைந்தோம். கைரோபியைப் பற்றி எனக்கு உண்டான முதல் எண்ணம், அக் ககரம் தாவரச் செறிவிலும் சுவாத்தியத்திலும் கண்டி நகரை ஒத்ததென்பதே, இதனையிட்டு கான் வியப்படைந்தேன். ஏனென்றல் கைரோபியைத் தலைநகராகக் கொண்ட கீன்யா தேச மானது, அம்பாக்தோட்டை அல்லது மன்னுரைப் போல வரட்சியும், வெக்கையும் மிக்க பூமியாக விளங்குமென்றே கான் கம்பியிருந்தேன். எனினும் எனது முதல் அபிப் பிராயம் சரியனதல்ல வென்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன். இந்தத் தப்பபிப்பிராயம் ஏற்படுவதற்கு நானே பொறுப்பாளி என்று சொல்வதற்கில்லை. ஏனென்ருல், எனது சந்ததியைச் சேர்ந்த இலங்கை யர்களுக்கு ஆயிரிக்காக் கண்டம் ஒரு மூடுமக்திரமாக இருந்து வந்தது. தவிரவும், இலங்கைக்கு முதல் முறை யாக வரும் வெளிகாட்டார் ஒருவர், இந்தச் சின்னஞ்சிறிய

19
தீவில் பல்வேறு சீதோஷ்ண நிலைகளைக்கொண்ட பிரதேசங்கள் உண்டென்பதை அறியமாட்டாரல்லவா? அவ்விதமே மாபெரும் நிலப்பரப்பைக் கொண்டதாக விளங்கும் ஆபிரிக்காக் கண்டத்திலே உலகின் மிகப் பெரிய பாலைவனமாகிய சஹாரா உண்டென்று படித்த மையாற் போலும், அந்தக் கண்டம் முழுவதுமே ஏக சீரான வெப்ப சுவாத்தியமுடையதென்றும் அங்கு வாழும் மக்களெல்லோருமே கல்லெண்ணெய்க் கறுப்பர் கள் என்றும் கம்மில் அநேகர் எண்ணிவங்தோம்.
கைரோபி விமானத் துறையிலிருந்து வெளியேறிய ஒரு சில நிமிஷத்துள் விகோதமான ஒரு காட்சியைக் கண்டேன். கன்னங்கரிய தேகமுடைய ஒருவர் செக்கச் செவேலென்ற துறுக்கித் தொப்பியும், கட்டைக் காற் சட்டை ஷேர்ட்டும் வெள்ளை நிறமான நீளக் கைப்பட்டி யும் அங்ணிது, கடுத்தெருவில் நின்று வாகனங்களை கெறிப்படுத்திக்கொண்டிருந்தார். அவருடைய துறுக் கித் தொப்பியைக் கறுப்பு நிறக் குஞ்சம் அலங்கரித்தது. இத்தனை சோடினைகளுடன் காட்சியளித்த அந்தப் போலீஸ்காரர் காலில் எதுவும் அணியாது நின்றர்.
வெகு விரைவில் காங்கள் எல்லோரும் எமக்கென்று ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த ஹோட்டல் இரண்டையும் அடைந்தோம். ஒரு காலத்தில் வெள்ளையர்களின் பிரத்தி யேக உபயோகத்துக்கான கோட்டைகளாக விளங்கய இக்த ஹோட்டல்களில் எமக்கு இடம் ஒதுக்கப் பெற்றமை சாம்ராஜ்ய காடுகள் அணியில் ஆசிரியர் களின் அந்தஸ்து வலுப்பெற்று வந்தமையைச் சூசக மாக உணர்த்திற்று எனலாம்.

Page 13
மெள மெள இயக்கமும் மசாய்
மறவரும் l3 J
நைரோபி, கோர்போக் ஹோட்டலில் எனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையில் எனது பிரயாணப் பொருள்களையெல்லாம் ஒழுங்குபடுத்தி முடித்தபின் ஓய்க் திருந்த சமயத்தில், இரண்டு பேர் என்னைப் பார்க்க வந்திருப்பதாக ஹோட்டல் பரிசாரகன் அறிவித்தான். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் பாகிஸ்தான் வெளிகாட்டுச் சேவையிற் சேர்ந்து, கைரோபியில் பாகிஸ்தான் தூதரா லயத்திற் சில காலம் கடமையாற்றிய எனது நண்பர் கலாநிதி இமாம் அவர்களின் சிகேகிதர்களென்று அவ் விருவரும் தம்மைத் தாமே அறிமுகஞ் செய்து கொண் டார்கள். ஒருவர் பெயர் றவூஃப்; மற்றவர் அமீன். இரு வரும் வழக்கறிஞர்கள். சற்று கேரம் சம்பாஷித்த பின்னர், அன்று மாலை மீண்டும் வந்து, நைரோபி கக ரைச் சுற்றிப் பார்க்க என்னை அழைத்துப் போவதாகச் சொல்லி இருவரும் விடைபெற்றுச் சென்றர்கள்.
அன்று மாலை அவர்களுடைய காரில் ககரைச் சுற்றிப் பார்த்தேன். கண்ணைக் கவரும் வனப்பு மிக்க ாைநரோபி நகர் கம்பீரமான கட்டடங்களும் அகன்ற நெடுஞ்சாலைகளும் கொண்டதாகக் காட்சி தந்தது. பல் வேறு சாகியத்தவர்கள் அங்குவசிக்கின்றனர் என்பதைக் கண்டேன். 32 சதுர மைல் வீஸ்தீரணமுள்ள இக் ககரத் தில் 16,70,000 பேர் வசிக்கிருர்களென்று எனக்கு வழி காட்டிகளாக வந்த நண்பர்கள் சொன்னர்கள். இந்தச் சனத் தொகையில் 16,000 பேர் ஐரோப்பியர்; 56,000 பேர் ஆசியர்; 95,000 பேர் ஆபிரிக்கர். வெள்ளையர் நிலச்சுவான்

21
தார்களாகவும் நிர்வாகத் துறையில் உயர் அதிகாரி களாகவும் பெரும் பெரும் முதலாளிகளாகவும் விளங் கினர். ஆசியர்கள் இவர்களுக்கு அடுத்தபடியாக ககரில் செல்வமும் செல்வாக்குமுள்ளவர்களாக இருந்தனர். இவர் கள் பெரும் வியாபாரிகளாகவும் கொந்தராத்துக்காரர் களாகவும், இயந்திர இயக்குநர்களாகவும், சில்லறை வியாபாரிகளாகவும் கலைத்தொழிலாளர்களாகவும் விளங் கினர்கள். இந்த ஆசியர்களிற் பெரும்பாலானவர்கள் 19 ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில் மொம்பாஸாகம்பாலா ரெயில் பாதையினை நிர்மாணிப்பதற்காக இந்தி யாவிலிருந்து தருவிக்கப்பட்ட தொழிலாளர்களின் வழித் தோன்றல்களாவர். சொந்த நாட்டவர்களாகிய ஆபிரிக்கர் சமுதாயத்தின் அடித்தளத்தில் பாமரராய், விலங்கு களாய், வாழ்க்கை கடத்தி வந்தார்கள். சிலர் மட்டும் விதி விலக்காக வியாபாரிகளாயும், கமத் தொழில், சுகாதாரத் துறை மேற்பார்வையாளர்களாயும் தொழில் பார்ப்பதற் குப் பயிற்சி பெற்று வந்தார்கள். எனினும், இவர் களது முன்னேற்றம் ஆமை வேகத்திலேயே அமைக் திருந்தது. ག -
ஆபிரிக்கர் தோற்றத்தில் ஒரே இனத்தவர்கள் போலக் காணப்பட்டாலும், பல்வேறு பிரிவுகளைச் சேர்க் தவர்களாவர்; தனித் தனியான கிளை மொழிகளும் பழக்க வழக்கங்களும் உடையவர்கள். கீன்யாவில் மட்டுமே 200க்கு மேற்பட்ட தனித்தனிக் குலப் பிரிவுகள் உள்ளன. கைரோபி ககரில் வசித்த ஆபிரிக்கர்களில் யார் யார் எந்தெந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களென்று தங்களாற். கூட இனங்காண முடியாதென்று கூட வந்த நண்பர்கள் சொன்னர்கள். எனினும், சோமாலி இனத்தைச் சேர்ந்த பலர் கைரோபியில் வசிக்கின்றனர் என்று சொன்ன நண்பர்கள் அவர்களிற் சிலரை ஒரு மதுசூதியடியில் எனக்

Page 14
22
குச் சுட்டிக் காட்டினர்கள். இந்தக் சோமாலியர்கள் சோமாலிலாந்திலிருந்து குடிபெயர்ந்து கைரோபி வந்த வர்களாவர்; பெரும்பாலானவர்கள், கீன்யாவின் சுதேசி இனத்தவர்களைப் போலவன்றி, முஸ்லிம்கள். கீன்யச் சுதேசிகளில் முக்கியமானவர்கள் மசாய் குலத்தவர்களும் கிக்கியு குலத்தவர்களுமாவர். இவ்விரு குலத்தவர்களும் பூர்வ காலக்தொட்டே ஜன்மப் பகைவர்களாக இருந்து வந்தனர். சுதந்திரத்துக்கான கிளர்ச்சிகள் கடைபெற்ற சமயத்தில், மெள மெள இயக்கத்தைச் சேர்ந்த பயங்கர வாதிகளை அடக்குவதற்கு அரசாங்கம் இவ்விருசாராரின் பகைமையைப் பயன்படுத்தியது.
அதிர்ஷ்டவசமாக, இந்த மசாய் குலத்தைச் சேர்ந்த ஒருவர் தெருவழியே இராஜ கம்பீரத்துடன் கடந்து சென் றதை எனது நண்பர்கள் காண்பித்தார்கள். தலையில் செக்ாநிறக் களிமண் அப்பியிருந்த அவர், முடியைப் பெண் க2ளப் போலப் பின்னி விட்டிருந்தார். மசாயிகள் உண வுக்காக மிருகங்களைக் கொல்வதில்லையாம். ஏராளமான் வனவிலங்குகள் உள்ள போதிலும் அவர்கள் மாமிசப் பிரியர்களும் அல்லர். ஆயினும் விளையாட்டுக்காகவும் தமது தலையை அலங்கரிப்பதற்கு வேண்டிய பிடரி மயி ரைப் பெறுவதற்காகவும் சிங்கங்களை நீண்ட ஈட்டிகளால் கொல்வார்கள். மசாய் மக்கள் வீரத்துக்கு மிகுந்த மதிப் பளிப்பவர்கள். இவர்கள் கால் கடைகளின் உதிரத்தை யும் பாலையும் அருந்துவார்கள். இரத்தத்துக்காகக் கால் கடைகளைக் கொல்வதில்லை. பால் கறப்பதைப் போல, இரத்தத்தையும் ஏதோ ஒரு வகையாகக் கறக்தெடுக்கிறர் களாம். இதனுல் அவர்களது கால்கடைச் செல்வம் அழிந்து போகாதிருக்கிறது. இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, ஸ்கொத்லாந்திலும் பண்டை மலைகாட்டு மக்கள் கால் கடைகளைப் பேணும் பொருட்டு

23
அவற்றின் மாமிசத்தை உண்ணுது இரத்தத்தை மட்டும் வறுவல் செய்து உண்டார்கள் என்று அமீன் குறிப் பிட்டார்.
அன்று கிக்கியு குலத்தவர்கள் வாழும் பகுதிக்கும் சென்றேன். கீன்யச் சுதேசிகளில் மிகவும் முன்னேற்ற மடைந்தவர்கள் இவர்களே. பலர் கலைப் பணியாளர் களாகவும், வீட்டு வேலையாட்களாகவும் ஆசிரியர்களாக வும் தொழில் புரிந்து வந்தார்கள். கல்வித் துறையில் அரசாங்கம் போதிய அக்கறை காட்டவில்லை என்றும் விதேசப் பாதிரிமார்கள் தமது சம்பிரதாயங்கள் பலவற்றை இகழ்ந்து, அழித்து வருகிறர்கள் என்றும் கருதிய இவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் தமக் கென்று தனியாகப் பல பாடசாலைகளை நிறுவினர்கள். இதன் பயனுக கிக்கியு மக்கள் விழிப்புணர்ச்சி பெற்றர் கள். கான் சென்ற சமயத்தில் அவர்கள் வசித்த பகுதி முள்ளுக் கம்பிகளால் அடைக்கப்பட்டு, பலமாகக் காவல் செய்யப்பட்டு வந்தது. யுத்தக் கைதிகளை அடைத்து வைக்கும் தடுப்பு முகாம் போலக் காட்சியளித்த அப் பகுதி, மெள மெள இயக்கத்தைச் சேர்ந்தவர்களைத் காவ் லில் வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதென்று கண்பர் கள் சொன்னுர்கள்.
ஆபிரிக்க விடுதலையில் மெள மெள இயக்கத்துக்கு எவ்வளவு பங்கிருந்ததென்பது இன்னமும் பாரபட்ச மற்ற முறையில் ஆராயப்படவில்லை. ஏனைய விடுதலை இயக்கங்களைப் போலவே மெள மெள இயக்கமும் முன்னேற்றத்தைக் குறிக்கோளாக் கொண்டிருந்தது. சுதந்திர தாகம், வெள்ளையர்களின் ஆட்சியிலிருந்து விடுபட வேண்டுமென்ற வேட்கை, அவ் வியக்கத்தவர் களை ஆட்கொண்டிருந்தது. சமத்துவம் நிலவ வேண்டு மென்றும் நிற வெறி ஒழிய வேண்டுமென்றும் அவர்கள்

Page 15
24
சங்கற்பம் பூண்டிருந்தார்கள். எனினும் இவ் வியக்கம் பின்னர் கொள்ளைக் கூட்டத்தவர்களைப் போல மோச மான பல பயங்கர நடவடிக்கைகளிலும் இறங்கியது. பிற்போக்கான சில அம்சங்களும் அவ்வியக்கத்தில் இடம் பெருமலில்லை. காட்டுமிராண்டித்தனமானவை என்று விவரிக்கக் கூடிய சில சம்பிரதாயங்க்ள் அவ் வியக்கத் தவர்களிடையே தலைகாட்டின. ஆணுல், நாகரிகத்தின் உச்சாணிக் கிளையில் இருக்கும் காடுகள்கூட, சில சமயங் களில், காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடு கின்றன என்பதற்கு இரண்டாவது உலக யுத்த காலத் தில் ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் கடைபெற்ற பல சம்பவங்கள் சான்ருகவுள்ளன.
மெள மெள என்பது கீன்யாவில் ஸ்தாபிக்கப்பட்ட தீவிரவாத இரகசிய இயக்கமாகும். கிக்கியு குலத்தவர் களே பெரும்பாலும் இதில் பங்குகொண்டனர். இயக்கத் தின் நடவடிக்கைகளை வெளியிடுவதில்லையென்று சம்பிரதாய பூர்வமாகச் சத்தியம் செய்து கொடுப்போரே இவ் வியக்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். வெள்ளையர்களுக்கு விரோதிகளா கக் கிளம்பிய இவர்கள் கொன்று குவித்தவர்களில் வெள்ளையர்களிலும் சொந்த இனத்தவர்களே அதிக மானுேர், இதற்குக் காரணம் அவர்கள் இவ்வியக்கத்தவர் களின் சட்ட திட்டங்களுக்குப் பணிக்து கடவாமையே பாகும். இத் தீவிரவாதிகளை அடக்குவதற்குக் கீன்ய அரசாங்கம் அவசரகால சட்டத்தை 1952 அக்டோபர் அளவில் பிரகடனஞ் செய்தது. இதன் பின்னர் பயங்கர வாதிகளும் பயங்கரவாதிகள் அல்லாதவர்களும் ஈவிரக்க மின்றிக் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பது பலரின் கருத்தாகும்.

25
எது எவ்வாறிருப்பினும் தமது பிறப்புரிமையான கீன்ய நிலத்தில் செழிப்பான பகுதிகளை விதேசிகளான வெள்ளையர்கள் அபகரித்துக் கொண்டார்களென்று கீன்ய மக்கள் கருதியமையே அவர்களுடைய பயங்கர வாத இயக்கத்துக்கு அடிப்படையான காரணமாகு மென்று அமீன் கருத்துத் தெரிவித்தார். கீன்ய நிலப் பரப்பில் சுமார் 16,000 சதுர மைல் பிரதேசம் வெள்ளையர் வசம் இருந்ததென்று அவர் சொன்னுர்,
இவ்வாருக, நைரோபி, கீன்யா, ஆபிரிக்கா ஆகியன பற்றி இவ்விரு நண்பர்கள் மூலமாக நிறைய விஷயங் களை கான் அறிந்து கொண்டேன். எனது ஆபிரிக்க அனுபவங்களை எழுதிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத் தில், சுதந்திர நாடாகிய கீன்யாவில் இவ்விரு நண்பர் களும் எப்படி வாழ்கிருர்களோ என்ற எண்ணம் உண்டா கிறது. வழக்கறிஞர்களாக அன்று தொழில் புரிந்த இவர் கள் பிரிட்டிஷ் ஆட்சியாளராற் கைது செய்யப்பெற்ற கீன்யர் பலர் சார்பில் வழக்காடிஞர்கள். இன்று எத்தகைய தொண்டு புரிகிருர்களோ !
நைரோபியில் நான்கு நாட்கள்
14
நைரோபியில் கான் கழித்த முதலாவது நாளன்று ஆபிரிக்க விவகாரங்கள் பற்றி அதிகமாக அறிந்து கொண்டேன். நகரைச் சுற்றிக் காட்டுவதற்காக என்னை அழைத்துப் போன நண்பர்கள் இருவருக்கும் இது விஷ யத்தில் கான் நன்றி பாராட்ட வேண்டும். எமது உரை யாடல்களில் ஜோமோ கென்யாட்டாவின் பெயரும், ஐக் தாறு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வெளியிட்ட புத்
丑279一2

Page 16
26
தகமும் அடிக்கடி அடிபட்டன. “கீன்யப் பருவதத்தை 65ii (ositGitgio' - Facing Mount Kenya- GTGirgojlb பெயருடைய புத்தக மொன்றினை, கென்யாட்டா அவர் கள், லண்டன் நகரில் பேராசிரியர் மலினேவ்ஸ்கி அவர் களிடம் மனிதவியல்-Anthropology-படித்துக் கொண் டிருந்த காலத்தில் எழுதினர்.கீன்யப் புத்தகக்கடைகளில் இப் புத்தகம் கிடைக்காது போகவே நண்பர் யாரிட மாவது இரவல் வாங்கித் தருவதாகச் சொன்னர்கள். சொன்னபடி மறுநாள் அதைக் கொண்டு வந்தும் கொடுத்தார்கள். அரிய பல விஷயங்களே உள்ளடக்கிய அந் நூலைப் படித்து அசை போட்டதன் பயணுக அவரது இனத்தவர்களாகிய கிக்கியு மக்களின் பண்பாண்மை, குலாச்சாரங்கள் முதலியன பற்றிப் பல புதிய தகவல் க2ள அறிந்தேன். கிக்கியு மக்களின் உளப்பாங்கையும் உணர்ந்து கொண்டேன்.
மறுநாள் முழுவதும், உத்தியோகபூர்வமான முறை யில் ஏற்பாடு செய்யப் பெற்றிருந்த சுற்றுப் பிரயாணத் திற் கழிந்தது. இந்தச் சுற்றுலாவின் போது காங்கள் முதலாவதாகத் தரித்த இடம் நைரோபி ரெயில் தொழிற் சாலையாகும். நைரோபி நகரின் பூர்வோத்திரத்தை மன திற்கொண்டு இவ்விடத்தில் தரித்தமை, வெகு பொருத்த மானதென்றே சொல்லவேண்டும். சுமார் அரை நூற் ருண்டுக்கு முன்னர், கிக்கியு மலைப் பகுதியின் சகதி மிக்க சமதரையாகக் கிடந்த இவ்விடத்தைப் பிரிட்டிஷ் அரசாங்கம், அரசியல், குடியேற்ற ஆதிக்க, யுத்த, தங் திரங்களுக்காக லேக் விக்டோரியாவுடன் இணைக்கத் தீர் மானித்து, கம்பாலா-மொம்பாஸா ரெயில் பாதையை கிர்மாணித்தது. ரெயில் பாதை வேலையாட்கள் கூடார மடித்து வாழ்ந்த இடத்தில் நாளடைவில் வியாபாரிகளும் பிறரும் வந்து சேரவே, கீன்யாவின் தலைப்பட்டணமாக

27
வும் ஆபிரிக்காவில் அதிகமான சனத்தொகையைக் கொண்ட நகரங்களில் ஒன்ருகவும் மாறியது. இந்த காட் களில் விண் வெளியை வெற்றி கொள்வதில் வல்லரசு கள் சமாதானமான முறையிற் போட்டியிட்டு வருவ தைப் போல அந்த காட்களில் பிறநாடுகளைச் சுரண்டுவ தில் கான் முந்தி நீ முக்தி என்று அவை நின்றன. இதற்குப் பெரும் அனுசரணையாக விளங்கிய சாதனம் ரெயில் பாதையாகும். நைரோபி என்ருல் மசாய் கிளை மொழியில் கன்னிருற்று என்று பொருள். ரெயில்பாதை நிர்மாணித்த வழியில் கால் கடைகளுக்குத் தண்ணிர் காட்டக் கூடிய கன்னிர்ச் சுனையொன்று காணப்பட்ட மையே இப்பெயர் தோன்றுவதற்குக் காரணமாயிற்று இவ்விடத்திலே நல்ல சுவாத்தியமும் நிலவியமையால், புதையிரதத் தொழிற்சாலை நிறுவுவதற்கு ஏற்ற இடமா கத் தேர்ந்தெடுக்கப்பட்டது. காங்கள் போயிருந்த சமயத் தில், இத் தொழிற்சாலையில் ஆபிரிக்கர் பலர் தொழிற் பயிற்சி பெற்று வருவதை அவதானித்தோம். மேற் பார் வையாளராகவும், முகாமையாளராகவும் பொறுப்பான பதவிகளை ஏற்பதற்கு இவர்களுக்குப் பயிற்சியளிக்கிப் பட்டதை நான் அவதானித்தேன். ஆயினும் சுதேசி மக்க ளிலும் சீக்கியர்களே இத்துறையில் மிகுந்த தேர்ச்சியுள் ளவர்களாக விளங்கினர். ஆசிய மக்களில் சீக்கியர்கள் இயந்திரவியல் துறையில் அதிக திறமையுள்ளவர்களா கத் திகழ்ந்தனர் என்றும் அறிக்தோம்.
புகையிரதத் தொழிற்சாலையிலிருந்து ஆபிரிக்க மக் களுக்கான வீடமைப்புத் திட்ட மொன்றினைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டோம். ஆபிரிக்கச் சிறுவர்களுக் கான ஆரம்பப் பாடசாலைக்கு அருகே வீடமைப்புத் திட்டத்தைப் பார்த்த பிறகு தொழில்நுட்ப நிறுவனத் தைப் பார்வையிட்டோம். கொழும்பிலுள்ள தொழில்

Page 17
28
நுட்பக் கல்லூரியை ஒத்ததாக இந்த நிறுவனம் காணப் பட்டது.
மதிய போசனத்தின் பிறகு, ராஜிய கைரோஜி தேசீய நந்தவனத்தைப் பார்க்கப்போனுேம்.ாகந்தவனம் என்றதும் கொழும்பிலுள்ள விகாரமாதேவி கந்தவனம் போன்ற தொன்ருகும் என்று நான் நினைத்தேன். ஆனல் அந்த கந்தவனம் எமது யால (yala) காவல் வனத்தையொத்த தென்பதை விரைவில் அறிந்தேன். இத்தகைய காவல் வனங்கள் தங்கனிக்கா, உகண்டா, தென் ஆபிரிக்கா, ஆகிய இடங்களிலும் உண்டு. ஆனல் கைரோபியைப் போல,நகர் மருங்கிலேயே இத்தகைய வளம் அமைந்திருப் பதை உலகின் வேறெந்தப் பட்டணத்திலும் காணவிய லாது என்று நினைக்கிறேன். பல்வேறு வகையான காட்டு விலங்குகள் இங்கு சுயேச்சையாகத் திரிய விடப் பட்டுள்ளன. மோட்டார் வாகனத்திற் சுற்றிப் பார்க்க வசதியாக, வனமெங்கனும் அழகிய நெடுஞ்சாலைகள் பல அமைக்கப் பட்டிருக்கின்றன. சாயங்கால வேளை யிற் காரில் நாங்கள் போனபோது ஏற்கனவே பல கார் கள் நிற்பதைக் கண்டோம். எல்லோரும் சிங்கம், ஒட் டைச் சிவிங்கி, வரிக்குதிரை, நீர் யானை, காண்டாமிருகம் ஆகிய மிருகசாலைகளில் மட்டும் காணக் கூடிய விலங்கு களையெல்லாம் இயற்கையான சூழலிற் பார்த்துவிட வேண்டுமென்ற ஆர்வத்துடன் வந்திருந்தார்கள்.ஒரு கட் டத்திலே கருங்குரங்குகள் பல எமது காரைச் சூழ்ந்து கொண்டு எம்மை ஏற இறங்கப் பார்த்து இரசித்தன. மிருகக் காட்சிச்சாலையில் மனிதர்கள் வெளியே நின்று கூடுகளுக்குள் சிறைப்பட்டிருக்கும் குரங்குகளையும் பிற விலங்குகளையும் பார்ப்பது வழக்கம். ஆனல் இங்கோ தலைகீழான துழல், மனிதர்கள்தான் மூடி மறைக்கப் பட்ட கார்க் கூடுகளுக்குள் இருக்க, குரங்குகள்

29
வெளியே நின்று அவர்களைப் பார்த்து மகிழ்ந்தன. அன்று அந்தக் குரங்குகள் எம்மைப்பற்றி என்ன நினைத் தனவோ? யாரோ காட்டுமிராண்டுகள் என்றுகூட எங் களைப்பற்றி நினைத்திருக்கலாம். நைரோபி தேசியவனத் தில் சிங்கங்கள் மனிதருடைய பள பளப்பும் எண் ணெய் கெடியுமுள்ள கார்களுக்குப் பழகிவிட்டனவென் றும், அவற்றை உதாசீனம் செய்கின்றனவென்றும் எமக்கு அறிவிக்கப்பட்டது. உள்ளே மனிதர் இருக்கும் விஷயம் அவற்றுக்கு அனேகமாகத் தெரியாதென்றும் சொன்னர்கள். அன்றைய தினம் ஒட்டைச் சிவிங்கிகள், மான்கள், நீர் யானைகள், காண்டா மிருகங்கள் ஆகிய பல விலங்குகளைக் கண்டோம். சிங்கம்மட்டும் கண்ணிற் படவேயில்லை.
மறுநாள் சமீபத்தில் நிறுவப்பட்ட முஸ்லிம் மகளிர் பாடசாலையைப் பார்க்கப் போனுேம், சுன்னத் ஜமா அத் முஸ்லிம் சங்கமொன்றினுக்குச் சொந்தமான இந்தப் பள்ளிக்கூடத்திற் பயிலும் மாணவிகள் பஞ்சாபின் உடையணிந்திருந்தார்கள். இந்தப் பாடசாலைக்குச் சற் றுத் தொலைவில் ஆகாகானி முஸ்லிம் மகளிர் பாடசாலை அமைக்துள்ளது. அங்கு பயிலும் மாணவிகள் ஐரோப் பியப் பெண்களின் பாணியில் சட்டைகள் அணிந்திருங் தார்கள். -
அன்று மத்தியானம் பாகிஸ்தான் பிரதிநிதிகளும் கானும் கெளரவ இப்ராஹிம் நாதுர அவர்களின் இல்லத் தில் உணவருந்த அழைக்கப்பட்டிருந்தோம். அவரும் மற்றேர் இந்தியரான கெளரவ ஏ. பி. பட்டேல் அவர் களும் இரண்டு ஐரோப்பியர்களும் ஓர் ஆபிரிக்கரும் கீன் யாவில் சமீபத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த அமைச்சர வையில் உறுப்பினர்களா யிருந்தார்கள். இந்த விருக் அதுக்குக் கீன்யப் பிரமுகர் பலர் வந்திருந்தார்கள். இவர்

Page 18
30
களுடன் உரையாடியதிலிருந்து லாகூர் அச்சிஸன் கல் லூரியில் பத்துப் பன்னிரண்டு ாைநரோபி முஸ்லிம் மான வர்களும் கல்வி பயின்று வந்தார்களென்று அறிந்தேன். இந்த மாணவர்களில் பலர் எமக்கு விருந்துபசாரம் அளித்த நாதுர அவர்களைப்போல ஆகாகானைப் பின்பற் றும் ஹோஜா முஸ்லிம்களாவர். நைரோபியில் இவர்களே அதிக செல்வச் சிறப்பும் மேற்குலக மோகமுமுள்ளவர் களாகக் காணப்பட்டார்கள். இந்த மாணவர்களின் முன்னேர்கள் எல்லோருமே மகாராஜாக்களாகவும் நவாபு களாகவும் இருந்தார்களா என்பது சந்தேகத்துக்குரிய விஷயமே. என்ருலும் கீழ்ாகாட்டவர்கள் தமது ஆன் மாவை மேனுட்டவர்களிடம் அடகு வைத்ததன் பின்னர் சாதியடிப்படையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்றி ருந்த நிலை மாறி, பணத்தால் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற நிலை உருவாயிற்று.
எமது ஆபிரிக்க விஜயத்துக்குச் சில மாதங்களுக்கு முன்னர் மேன்மை தங்கிய ஆகாகான் அவர்கள் முக்கிய மான கொள்கைப் பிரகடனமொன்றை வெளியிட்டிருங் தார் என்று அறிக்தேன். தம்மைப் பின்பற்றும் இக் திய-ஆபிரிக்க முஸ்லிம்கள் தமது இந்தியப் பூர்வோத் திரத்தையிட்டுப் பெருமிதமடையலாம்; ஆணுல் அவர்கள் யாவரும் தாம் ஆபிரிக்க வாசிகள் என்பதை மறக்கலா காது என்பதே அவரது பிரகடனத்தின் சாரமாகும். இதன் விளைவாக இந்தியப் பெண்மணிகள் பலர் சேலை களைக் கைநெகிழ்ந்து வெள்ளைக்காரப் பெண்க2ளப் போலக் கவுண்-சட்டை அணியத் தலைப்பட்டார்களாம். இந்தத் துகில் மாற்றம் அவர்களுக்கு அழகு செய்ததாக எனக்குத் தோன்றவில்லை.

31
இவ்வாருக மூன்று நாட்களை ாைநரோபி நகரிற் கழித்த பின்னர், நான்காம் நாள் உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பெற்ற கீன்யா, உகண்டா சுற்றுப் பிரயாணத்தை முன்னிட்டு, சாம்ராஜ்யப் பாராளுமன்றச் சங்க மாகாட்டு நிர்வாகிகள் அனுப்பியிருந்த பஸ்களில் ஏறிப் புறப்பட்டோம்.
கிக்கியு மண்ணில் கண்டி நினைவுகள் 5
சுமார் அரைமணி நேரத்தில் எமது பஸ் ாைகவாவுா கில்கில் ஆகிய பட்டணங்களைத் தாண்டி கக்குரு என்னு மிடத்தையடைந்தது. கைரோபியிலிருந்து கக்குரு வரை பஸ் பிரயாணஞ் செய்தபோது நீண்டு வளைந்து சென்ற சாலைகளின் இருமருங்கிலும் நான் கண்ட இயற்கைக் காட்சிகள் இலங்கையின் மலைநாட்டுப் பகுதியை நினை வூட்டின.அந்த மலைப் பிராக்தியத்துப் பெருஞ்சாலைகளின் அமைப்புக் கூட நமது மலைகாட்டுத் தெருக்களை ஒத் திருந்தது. வி2ள பயிர்களில் மட்டும் மாற்றத்தைக் கண்டேன்; கீன்யாவின் மலைப் பகுதிகளில், இலங் கையிற் போலவன்றி, தேயிலைக்குப் பதில் கோதுமை யும் சோளமும் விளைந்தன. இந்த கைரோபி-கக்குரு நெடுஞ்சாலேயே கீன்யாவிலுள்ள ராஜபாட்டைகளிலெல் லாம் சிறந்ததும் அகன்றதும் அழகானதுமாகும். இதற் குக் காரணமில்லாமலில்லை. பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகள் இலங்கையில் இயற்கை வளங் கொழிக்கும் மலை காட்டுப் பகுதிகளில் தோட்டக் துரவுகளை அமைத்து, அவற்றிலிருந்து கிடைத்த பிரயோசனங்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு வசதியாக அகன்ற

Page 19
32
நெடுஞ்சாலைகளைக் கட்டியதுபோலவே கீன்யாவிலுஞ் செய்திருந்தார்கள். ஆணுல் “லிப்டன் துரையின் தேயி லைத் தோட்ட’மென்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட இலங்கையில் இந்தத் தோட்டத் துரைமாரின் காட் டாண்மை டொனமூர் அரசியலமைப்பு கடைமுறைக்கு வந்ததுடன் அஸ்தமனமாகத் தொடங்கிற்று. கீன்யா விலோ சமீப காலம் வரை அது நிலைத்திருந்தது.
பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் இலங்கையை ஆண்ட காலத்தில், கண்டிப் பகுதியிலிருந்த, செழிப் பான காணிகளையெல்லாம் தவித்த முயல் அடித்தது போல் அரைக் காசுக்கும் காற் காசுக்கும் அபகரித்துக் கொண்டார்களென்று கண்டிய மக்கள் மனம் வெதும் பினர்கள். தரிசு நிலச் சட்டம் என்ற சட்டத்தை ஆயுத மாகப் பயன்படுத்திப் பொது கிலங்களை யெல்லாம் வெள் ளேயர்கள் ‘மண் கொள்ளையடித்தார்களென்று அவர் கள் குமுறினர்கள். கீன்யாவிலும் இதே பாணியில் காரியங்கள் நடைபெற்றிருந்தன.
றிவ்ட் பள்ளத்தாக்கு மாகாண அதிபரின் வீட்டில் மதிய உணவு அருந்தினுேம், விருந்துக்குப் பின்னர், தமது பரிபாலனத்திலுள்ள மாகாணத்தின் நிர்வாகம் பற்றி அவர் எமக்கு விளக்கினர். ஆபிரிக்கர்களின் ஆரோக்கியம், வேளாண்மை, கல்வி ஆகியவற்றின் முன்னேற்றத்துக்காக அரசாங்கம் ஆற்றிவரும் சேவை க2ளப் பற்றி விவரித்தார். அவருடைய பேச்சைக் கேட்டபோது 1935-37ஆம் ஆண்டுகளில் சிவில் சேவைப் பயிற்சியாளனுக நான் கழித்த காலம் மனவோடையிற் குமிழியிட்டது. அந்த மாகாண அதிபரின் கடை, உடை பாவனை, தாம் எடுத்துக்கொண்ட விஷயத்தை அவர் அணுகிய விதம், அவரது பேச்சுத் தோரணை யாவும் எனது மேற்படி பயிற்சிக் காலத்தில் மத்திய மாகாண

33
அதிபராயிருந்த ரி. எ. ஹொர்ட்ஸன் அவர்களை ஞாபக மூட்டின. பிரித்தானிய ஏகாதிபத்தியம் எங்கு வியாபித் திருந்தாலும் அங்கெல்லாம் நிர்வாக முறை ஒரே தன்மை யதாக அமைந்திருந்ததென்பதைக் கீன்யாவில் நிதர்சன மாகக் கண்டேன். கீன்யாவிலாயினும் இலங்கையிலா யினும் பிரித்தானிய நிர்வாகம் ஒன்றே என்பதற்கு மற்று மொரு சான்றும் கிடைத்தது. முன்னர் இலங்கையில் சிவில் சேவை உயர் அதிகாரியாக என்ணுேடு பணியாற் றிய சி. எச். ஹார்ட்வெல் அவர்கள் அப்பொழுது கீன் யாவின் பிரதம காரியதரிசியாகக் கடமையாற்றி வங் தார்.
தேநீர் அருந்திய பின்னர் என்னையும் பிரித்தானியப் பிரதிநிதிகள் இருவரையும் கீன்யத் தோட்ட முதலாளி ஒருவர் தமது அதிதிகளாகப் பொறுப் பேற்றுக்கொண் டார். வெள்ளையர்களின் ஆதிக்கத்திலிருந்த மலைப் பகுதிகளைப் பற்றி காங்கள் கேரில் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதிநிதிகளில் பலர் இவ்விதச் சிறு சிறு குழுக்களாக வெவ்வேறு பண்ணைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். கீன்யாவில் வாழும் வெள்ளையர்களையும் அவர்கள் கருத் துக்களையும் அறிவதற்கு இது நல்ல ஏற்பாடுதான் என் பதை கான் பெற்ற அனுபவம் நிரூபித்தது.
நெடுஞ்சாலையிலிருந்து பிரித்து, கி2ளத் தெருக்கள் வழியாகப் பிரயாணஞ் செய்தபோதும் இலங்கைக் காட்சி களே நினைவுக்கு வந்தன. கி2ளத் தெருக்கள் இலங் கையின் அன்றைய ருேட் கமிட்டித் தெருக்களை ஒத் திருந்தன. ஓரிடத்தில் எமது கார் சேற்றில் புதைந்து கின்றுவிட்டது. அன்று மழை நாள். தெருவெல்லாம் சேறுஞ் சகதியுமாகக் காட்சியளித்தது. கேரமோ இருள் கவ்வும் கேரம். இடமோ டிென மெள பயங்கரவாதி

Page 20
34
களுக்கு வாலாயமான இடம். ஆகவே எம்மை அழைத் துப் போன பண்ணை முதலாளி ஒரளவு பதற்றமடைக் தவராகக் காணப்பட்டார். கல்ல வேளையாக அவ்வழியே சென்ற இந்திய வியாபாரிகள் சிலர் காருக்குத் தோள் கொடுத்துத் தள்ளி உதவினர்கள். இருட்டிய பின்னர் தோட்டத்துப் பங்களாவை அடைந்தோம். அதுவும் இலங்கை மலைப் பகுதிகளில் ஹொட்ஸன் அவர்கள் சகிதம் நான் சென்ற ஐரோப்பிய பங்களாக்களைப் போலவே காணப்பட்டது. பண்ணையாளும் குடும்பத் தவர்களும் எம்மை உபசரித்த முறையும் அவ்வாறே.
அதிவிரைவில் இராப் போசன விருந்து ஆரம்ப மாயிற்று. இந்த விருந்துக்கு அயல் அட்டத்திலிருந்த வேறு தோட்டத் துரைமார் குடும்பத்தவர்களும் அழைக் கப்பட்டிருந்தார்கள். என்னுடன் வந்திருந்த பிரிட்டிஷ் பிரதிநிதிகள் இருவரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கியமான அங்கத்தவர்களாய் இருந்தமையாலேயே இந்த விருந்து இவ்வளவு விசேஷமாக நடைபெற்ற தென்று பிறகு அறிக்தேன். விருந்தின் போது காரசார மான சம்பாஷணைகள் நடைபெற்றன. அங்கு கூடி யிருந்த தோட்ட முதலாளிகள் எல்லோரும், மெள மெள இயக்கத்தவர்கள் விஷயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டுமென்று தாங்கள் நினைத்த கருத்தைத் தங்கு தடையின்றி வெளியிட்டார் கள். “எங்கள் மூலதனத்தையும் உயிரையும் பணயம் வைத்து வளம்படுத்திய இந்த நிலத்தை எங்கள் குழந் தைகள் சுவீகரிப்பார்களா? அல்லது காட்டுமிராண்டி களான சுதேசிகள் அபகரித்துக் கொள்வார்களா? அரசாங்கம் இது விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக் கிறது? மெள மெள பயங்கரவாதிகளை அரசாங்கம் முளையிலேயே கிள்ளியிருக்க வேண்டுமல்லவா? இங்கி

35
லாந்திலும கீன்யாவிலும் உள்ளவர்கள் இந்த விஷயத் தைக் கட்சி விவகாரமாக்காமல் வெள்ளையர்களின் ஜீவா தாரப் பிரச்சினையாகக் கருதி, கட்சி வேறுபாடுகளை மறந்து, ஒருமித்துச் செயலாற்ற வேண்டுமல்லவா? அதை விட்டு விட்டு ஜனநாயகம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் தத்துவார்த்தச் சம்வாதங்கள் புரிவது தவறல்லவா?’ என்றெல்லாம் அவர்கள் ஆக்ரோ சத்துடன் சொன்னர்கள். கிக்கியு மக்களின் நிலத்தைத் தாங்கள் அங்யாயமாக அபகரித்துக் கொள்ளவில்லே யென்றும் அவர்கள் பிற்போக்கான முறையில் ஒரு வகையான சேனைப் பயிர்ச் செய்கை மூலம் நாசமாக்கிய நிலத்தைத் தாங்கள் வளங்கொழிக்கும் பூமியாக்கியிருப்ப தாகவும் வாதிட்டார்கள். ஆசிய மக்களைப் போலவன்றி ஆபிரிக்கர்கள் நாகரிகமோ கலாசாரமோ இல்லாத காட்டு மிராண்டிகளென்றும் ஆசிய மக்களுடன் ஒப்பிட அருகதையற்றவர்கள் என்றும் மெள மெள இயக்கத் தவர்களே கீன்யாவை மீண்டும் அந்தகாரச் சேற்றில் ஆழ்த்த முயலுகிறர்கள் என்றும் நாகரிகமடைந்த மக்கள் அதனை அனுமதித்தலாகாதென்றும் குறிப்பிட்டார்கள் ஆசிய மக்களைச் சிலாகித்துப் பேசியமைக்கு அவ்விடத் தில் ஆசியப் பிரதிநிதியாக கான் இருந்ததே காரண மென்று எனக்குப் பட்டது. என்ருலும் அதை நான் வெளியே சொல்லவில்லை.
இந்த விவாதங்களெல்லாம் அச்சம் மண்டிய தழலில், கதவுகள், ஜன்னல்கள் யாவும் அடைக்கப்பெற்ற பங்களாவில் நடைபெற்றன. ஏனென்ருல் அந்தப் பிராந்தியம் மெள மெள பயங்கர வாதிகளின் கோட்டை களில் ஒன்ருக விளங்கியது. எந்த நிமிஷம் மெள மெள இயக்கத்தவர்கள் திடீரென்று குதித்துத் தம்மைக் கொன்று விடுவார்களோ என்று அவர்களெல்லோருமே

Page 21
36
பயந்தார்கள். முன்னெச்சரிக்கையாக ஒவ்வொருவரும் ஜன்னல் அல்லது கதவுக்கு அப்பால் உட்கார்ந்து கொண்டனர். தூர இடங்களிலிருந்து வந்தவர்கள் தற்பாதுகாப்பாகத் தமது கார்களில் நாய்களையும் துவக்குகளையும் கொண்டு வந்திருந்தார்கள். விருந்து முடிந்து விடை பெற்றபோது ஒவ்வொரு காரும் தனித் தனியாகப் புறப்படாமல், ஊர்வலம் புறப்படுவதுபோல ஒருமித்தே புறப்பட்டது. எனக்கு இவையெல்லாம் விநோதமான அனுபவங்களாக விளங்கின. இவ்வளவு பீதிக்கும் மனக் குழப்பத்துக்கும் மத்தியில் ஆண்கள் சரி, பெண்கள் சரி, எவரும் தமது தாய் காட்டுக்குத் திரும்பவேண்டுமென்ற நோக்கமுடையவராகக் காணப் படவில்லை. அந்த வகையில் அவர்களுடைய கெஞ்சுரத்தை மெச்சத்தான் வேண்டும்.
அன்றிரவு படுக்கைக்குப் போக வெகுநேரமாயிற்று. மற்றவர்கள் போன பின்னரும் பண்ணை முதலாளி குடும்பத்தவர்களும், நாங்களும் கீன்யாவின் எதிர்காலம் பற்றி வெகு நேரம் உரையாடினுேம், கீழ்மாடியின் ஒரு கோடியில் எனது படுக்கையறை ஏற்பாடாகியிருந்தது. மறு கோடியில் என் மற்ருெரு சகாவின் படுக்கையறை மற்றவர்கள் மேல் மாடிக்குப் போஞர்கள். சுமார் ஒரு மணித்தியாலத்திற்குப் பிறகு வீட்டு மின்விளக்குகள் யாவும் பாதுகாப்புக்காக அணைக்கப்பட்டன.
பிறந்த மண்ணைப் பிரிந்து, பல்லாயிரம் மைல் களுக்கு அப்பால், பயங்கரவாதிகள் தருழ்ந்த காடு போன்ற பிராந்தியத்திலே தன்னந்தனியணுக அகப் பட்டுக் கொண்டதை நினைத்தபோது மனதின் அமைதி தளம்பியது. எப்படியோ தூங்கி விட்டேன். ஆனல் திடீரென்று தோட்டத்து காய்களெல்லாம் பயங்கரமாகக்

37
குரைத்தன. என்னவோ ஏதோ என்று வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தேன்.
சூரிய காந்தியும் வெள்ளந்தியும்
6
கள்ளிரவில் காய்களிள் பயங்கரமான குரைப்பைக் கேட்டு விழித்துக் கொண்டதும் மெள மெள பயங்கர வாதிகளைப் பற்றிய எண்ணமே மனதில் தோன்றியது. வீடு முழுவதும் இருள் மண்டிக் கிடந்தது. மற்றவர்களே எழுப்புவதானல் அந்தக் கும்மிருட்டில் எந்தப் பக்கம் திரும்புவதென்றே தெரியவில்லை. கையிலிருந்த டார்ச் லைட்டை அடித்தால் வந்தவர்களுக்கு என் இருப்பிடத் தைக் காட்டிக் காட்டிக் கொடுப்பதாகிவிடும். வெளிச்சத் தைக் கண்டு அவர்கள் நேரே என் அறைக்கு வந்து விடுவார்கள். பண்ணை முதலாளி இத்தகைய அசம்பா விதங்களை எதிர்பார்த்துத் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்திருக்கக்கூடும். ஆணுல் அவரோ மேல் மாடியில் படுத்திருந்தார். தவிரவும், வெறுமனே நாய்களின் சத் தத்தை மட்டுமேஆதாரமாக வைத்துக்கொண்டு, குய்யோ முறையோ என்று ஓடிப்போய் விட்டுக்காரரை எழுப்பிய பிறகு, பாரதூரமாக எதுவும் நிகழாதிருந்தால் என் பாடு எப்படி இருக்கும். நான் மட்டுமன்றி என் காட்டவர்கள் எல்லோருமே கோழைகள் என்ற அவப் பெயர் உண்டாக வழி கோலியதாகாதா? இந்த நிலையில் எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன் என்று மனதைத் திடப் படுத்திக் கொண்டேன். சற்று நேரத்தில் நாய்களின் ஒலம் மெல்ல மெல்ல ஓய்ந்தது. அதனைக் கொண்டு மெள மெள வாதிகள் போய் விட்டார்களென்று அனு மானித்தேன்.

Page 22
38
காலையில் எழுந்தபோது, இரவு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தை மறக்க முடியவில்லை, காலை ஆகார வேளை யில் சாமர்த்தியமாக அதனைப்பற்றி விசாரித்தேன். நள்ளிரவில் வந்தவர்கள் மெள மெள வாதிகளேயென்று பண்ணை முதலாளி ஊர்ஜிதம் செய்தார். தமது பண்ணைக் கால்நடைகள் சிலவற்றை அவர்கள் துறையாடிச் சென் றர்கள் என்ருர், இரவு நடைபெற்ற விருந்தின் போது மெள மெள பயங்கர வாதிக2ள மு2ளயிலேயே கிள்ளி யிருக்க வேண்டுமென்பதற்கு ஆதாரமாகக் கூறப்பட்ட காரணங்கள் எல்லாவற்றிலும் இந்தச் சம்பவம் அதிக வலுவுள்ளதாக எனக்குப் பட்டது. ஆயினும் இலட்சிய அடிப்படையில் வெள்ளைக்காரப் பண்ணை முதலாளி மாரின் கருத்துக்கும் கிக்கியு மக்களின் கருத்துக்கும் சமரசம் காண முடியவில்லை.
பண்ணை முதலாளிமாரைப் பொறுத்தவரையில், அவர்கள் தமது மூலதனம், சம்பாத்தியம், சேமிப்பு யாவற்றையும் தமது பண்ணைகளிற் செலவிட்டிருந்தார் கள். பண்ணைகளை வளம்படுத்துவதற்காக வியர்வை சிந்தி உழைத்தும் வந்தார்கள். பெரும் பெரும் இயக்திரங் க2ள வாங்கி அவற்றைக் கொண்டு பண்ணைகளை இயங் திர மயமாக்கி யிருந்தார்கள். இது அவர்களுடைய வாதம்.
ஆனல் கிக்கியு மக்கள் விஷயத்தில் நிலம் அவர் களுக்குச் சேரவேண்டியது. அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி வெள்ளையர்கள் அந்த நிலத்தைத் தமதாக் கிக் கொண்டார்கள். கிக்கியு மக்களைப் பொறுத்த வரை யில் நிலம் வெறும் மண் அன்று; ஒரு முதலீடுமன்று. நிலம் அவர்களுக்குத் தாய் போன்றது. வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளைப் பெறுவதுடன், அமைதி ததும்பும் கிராமச் சூழலில் தமது மந்திர, ஆசாரச் சடங்கு

39
களே கடத்தவும் பூமித்தாய் அவர்களுக்கு இடமளிக்கிருள் என்பது அவர்களின் திடமான நம்பிக்கை. காலாதி கால மாக நிலைபெற்று வரும் அவர்களின் குலாசாரம் இக் கருத்தினை அக்கீகரிக்கிறது.
தர்ம சங்கடமான இந்தப் பிரச்சினையை மனதில் அசை போட்டபோது, முதலாவது உலக யுத்தத்தைப் பற்றி வரலாற்ருசிரியரொருவர் தெரிவித்த கருத்து நினைவில் மின்னியது. முதலாவது உலக யுத்தம் நியாயத்துக்கும் ஆயுதத்துக்கும் ஏற்பட்ட மோதலன்று; இங்கிலிஷ், பிரெஞ்சு மக்கள் கண்ட நியாயத்துக்கும், ஜெர்மன் மக்கள் கண்ட நியாயத்துக்கும் ஏற்பட்ட மோதலே என்று அந்த வரலாற்ருசிரியர் குறிப்பிட்டுள் ளார். கீன்யாவின் பிரச்சினையும் இத்தகையதே. வெள்ளைக்காரப் பண்ணையாளர் பக்கமும் நியாயமிருக் தது; கீன்யக் கிராமவாசிகள் பக்கமும் நியாயமிருந்தது. 1963 இல் கீன்யா சுதந்திரம் பெற்றதுடன் இந்தப் பிரச் சினைக்குத் தீர்வு ஏற்பட்டிருக்கிறது. காலத்தையொத்த சிறந்த நீதிபதி யார் உளர்? جمونہ: ء
அன்று காலை பண்ணையைச் சுற்றிப் பார்த்தோம் பைரேத்ரம் என்னும் வெள்ளந்திப் பயிர்த் தோட்டம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. வெள்ளந்திச் செடியின் டெயிஸி மலர் ஒத்த பூக்களைப் பறித்து, உலர வைத்து, கிருமிகாசினி தயாரிப்பதற்குப் பயன்படுத்துகிறர்கள். மலைப்பாங்கான இடத்தில் வளரும் இப்பயிர் கீன்யா வுக்குப் பெருக் தொகையான வெளிகாட்டுச் செலா வணியை ஈட்டிக் கொடுக்கிறது. வெள்ளேயர்கள் மட்டு மல்லாமல் மலைநாட்டில் வாழும் ஆபிரிக்கர்களும் இப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டிருந்தார்கள். இதனை இலங்கையில் உள்ளுர் மக்களும், அங்காட்களில், சிறு சிறு தோட்டங்களில் தேயிலைப் பயிர்ச் செய்கை மேற்

Page 23
40
கொண்டதற்கு ஒப்பிடலாம். இந்த வெள்ளந்தி ஒரு காலத்தில் இலங்கையிலும் பயிரிடப்பட்டு வந்தது இதன் மூலமாக இலங்கைக்கு ஓரளவு வெளிகாட்டுச் செலாவணியும் கிடைத்ததென்று அறிகிறேன். இப் பொழுது இது பயிரிடப்படாமைக்கு யாது காரணமா யிருக்கலாம் ? நிலமில்லாமையா? முயற்சியில்லாமையா ? அல்லது இந்த நிலத்தில் வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றனவா? எது எவ்வாறிருப்பினும் இச் செடி இலங்கையிலும் பயிரிடப்படலாமென்பது மட்டும் உண்மை.
பண்ணையில் என்னைக் கவர்ந்த மற்ருெரு தோட்டம் துரியகாந்தித் தோட்டமாகும். தரியகாந்தி யென்றதும் அதன் அழகிய மலரே நமக்கெல்லாம் நினைவுக்கு வரும். ஆனல் கீன்யாவில் சூரியகாந்திச் செடியிலிருந்து கால் கடைத் தீனியும், ஒருவகைச் சாயமும் அதன் விதையி லிருந்து எண்ணெயும் பெறப்படுகின்றன. பண்ணை முத லாளி சொன்ன பின்னரே இந்த விஷயங்களை யெல்லாம் அறிந்தேன். 1951 ஆம் ஆண்டில் கீன்யா துரியகாந்தி விதைகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் 1,84,000 பவுனை யும், வெள்ளந்தியினுல் 3,57,000 பவுனையும் சம்பாதித்த தென்பதை அறிந்து வியப்படைக்தேன்.
வெள்ளையர்களின் ஆதிக்கத்திலிருந்த மலைநாட்டுப் பகுதிகளைப் பற்றி எமது பண்ணை முதலாளி விரிவாக விளக்கினர். அங்கு பயிரிடப்படும் பிற பயிர்கள் கோதுமை, சோளம், ஒட்ஸ்-புல்லரிசி, பார்லி ஆகியன வாகும். இறைச்சி, பாற்பண்ணைப் பொருள்கள், தோல் முதலியனவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. பண்ணை கள் யாவும் ட்ராக்டர்கள் - இழுவை இயந்திரங்கள். மற்றும் உபகரணங்கள் மூலம் இயந்திர மயமாக்கப் பட்டிருந்தன. இப் பண்ணைகளில் ஆபிரிக்க மக்கள் கூலி

41
யாட்களாகவும், இயந்திரச் சாரதிகளாகவும் வேலைக் கமர்த்தப்பட்டிருந்தார்கள்.
அன்றிரவும் பண்ணையிலேயே கழிந்தது. மறுநாட் காலை, மற்றிரு பிரதிநிதிக2ளயும் விட்டுவிட்டு, கான் மட்டும் ஹஜ்ஜுப் பெருநாட் கொண்டாட்டங்களுக்காக கக்குரு நகருக்குப் புறப்பட்டேன். பண்ணை முதலாளி தமது காரில் என்னை அனுப்பி வைத்தார். கக்குரு ககரில் வேறு முஸ்லிம் பிரதிநிதிகளும் வந்திருர்தார்கள். எல்லோருமாகப் பெருகாளைக் கொண்டாடிய பின்னர் கிஸ"மு என்னுமிடத்தில் எமக்கென்று ஒழுங்கு செய்யப் பெற்றிருந்த ஹோட்டலையடைந்தோம்.
சற்று நேரத்தில் என்னைக் காண இலங்கையர் ஒருவர் வந்திருக்கிருர் என்ற செய்தி கிடைத்தபோது, பாலைவனத்தில் நீரூற்றைக் கண்டதைப் போன்ற மகிழ்ச்சியடைந்தேன். கீன்யாவில் இந்தியர்களே வர்த்த கர்களாகவும், தரகர்களாகவும் பெரும்பாலும் தொழில் புரிந்து வருகிறர்கள். இவர்களுக்கு விதிவிலக்காக விளங் கினர், என்னைக் காண வந்திருந்த இலங்கை கண்பர். காலியைச் சேர்ந்தவரான இவர் கிஸாமு என்னுமிடத்தில் இலங்கை இரத்தினக் கல் மற்றும் விகோதப் பொருள் க2ள வியாபாரஞ் செய்து வந்தார். நானறிந்த வரையில் வெளிநாடுகளில் வியாபாரத் துறையில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் அநேகமாக காலிப் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்களாகவோ, முஸ்லிம்களாகவோதான் இருக் கிருர்கள். பிரிட்டிஷ் ஆட்சி இலங்கையில் வேரூன்றிய காலத்தில் காலித் துறைமுகம் இலங்கையின் முக்கிய துறைமுகமாக விளங்கியமை இதற்குக் காரணமாக இருக்கலாமோ தெரியவில்லை. பண்டைக் காலத்தில் சாலமோன் இராசாவின்-சுலைமான் கபி அவர்களின்அரண்மனைக்கு இலங்கையிலிருந்து காலித் துறைமுகம்
I 297ー3

Page 24
42
வழியாக மயில்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆயினும் இது உண்மை தான என்பதற்கு நான் பொறுப்பாளியல்லன் ! இந்தியர் கள் சிலரைப் போல கீன்யாவிலேயே தமது சொந்த இனப் பெண் ஒருத்தியை வதுவை செய்ய வாய்ப்புக் கிடைக் காததாலோ, இலங்கையருக்கு இயல்பாகவுள்ள பிறந்த மண்ணிலுள்ள பாசத்தினலோ, அந்த இலங்கை அன்பர் கீன்யாவில் நிரந்தரமாகக் குடியேறது, வியாபாரத்தின் நிமித்தமாக மட்டும் தங்கியிருந்தார். என்ணுேடு பேசிய போது, எப்பொழுது இலங்கை திரும்பலாமென்ற ஆவல் மிக்கவராகக் காணப்பட்டார்.
கிஸ"மு என்பது நயான்ஸா மாகாணத்தின் பிர தான பட்டணமாகும். நயான்ஸா என்ருல் கீன்ய மொழி யில் ஏரியென்று பொருள். இந்த மாகாணத்திலேதான் உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரியாகிய விக்டோரியா ஏரி உள்ளது. பிரிட்டிஷ் கிழக்கு ஆபிரிக்காவின் மூன்று பிராந்தியங்களாகிய கீன்யா, உகண்டா, தங்கனிக்கா ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட இந்த ஏரி 6,000 சதுர மைலுக்கும் மேற்பட்ட விஸ்தீரணமுடையதாகும். இந்த விவரத்தை யறிந்ததும் எனக்கு மிகவும் பிரயோசன மாயிற்று. ஏனென்ருல், எனது சக பிரதிநிதிகள் எவரேனும் இலங்கையின் விஸ்தீரணம் என்னவென்று கேட்டால் நான், 25,332 சதுர மைல் என்று சொல்லாமல் விக்டோரியா ஏரிக்குள் ஏறக்குறையச் சரி கணக்காகத் தூக்கி வைக்கக்கூடிய அளவு விஸ்தீரணமுடையது என்று சொல்வேன்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விக்டோரியா மகாராணி யார் காலத்திலேதான் தனது மாட்சியின் உச்சத்தை யடைந்தது. எனவே கன்றி மிக்க பிரிட்டிஷ் மக்கள் அவர் பெயரைப் பல வகையாகவும் நினைவு கூர்ந்து வருகிறர்

43
கள். ஆகவேதான் உலகின் மிக உயர்ந்த அருவியும், மிக நீண்ட ஏரியும் அவர் பெயரைப் பெற்றுள்ளன. இலங்கையிற்கூட அவர் பெயரால், ஒரு பாலமும், பூங்காவும், விருத்தாப்பியர் மடமும் அமைக்கப்பட்டிருக் கின்றன. இவற்றில் பூங்காவின் பெயர் மாறிவிட்டது. இது போலவே ஏரியும், நீர்வீழ்ச்சியும் காலகதியில் தம் பெயரை இழக்குமோ யாரறிவார்?
உகண்டா ராணி மாளிகையில்
7
சாம்ராஜ்யப் பாராளுமன்றச் சங்கங்களின் மாகாட் டுக்கு ஐக்கிய ராஜ்யத்திலிருந்தும் ஏழு டொமினியன் நாடுகளில் ஆறிலிருந்தும், சுமார் 40 பிரதிநிதிகள் வங் திருந்தார்கள். இந்தியாவிலிருந்து மட்டுமே இந்தப் பிரயாணத்துக்கோ, சில நாட்களின் பின்னர் நடைபெற விருந்த நைரோபி மாநாட்டுக்கோ பிரதிநிதி எவரும் வர வில்லை. இதற்குக் காரணமென்னவாயிருக்குமென்று அறிய விரும்பினேன். கிழக்கு ஆபிரிக்காவில் இந்திய ஸ்தானிகராயிருந்த பூரீ அப்பா பீ. பாக்த் அவர்களுக்கும், கீன்ய அரசாங்கத்துக்குமுண்டான கருத்து வேறுபாடு காரணமென்று கேள்விப்பட்டேன். பூரீ பாங்த் ஆபிரிக்கர் களின் இலட்சியங்களையும், அபிலாஷைகளையும் ஆதரிப் பவராயும், ஆபிரிக்கத் தேசியவாதிகளுடன் தோழமை பூண்டவராயும் விளங்கியமையால் மலைப்பகுதிப் பண்ணைக்கார வெள்ளேயர்கள் அவரைச் சந்தேகக் கண் கொண்டு பார்த்தும், வெறுத்தும் வந்தார்கள். நாங்கள் கைரோபி செல்வதற்குச் சிலவாரங்களுக்கு முன்னர் பூரீ பாக்த் புதுடில்லி போயிருந்தார். கீன்ய அரசாங்கத்

Page 25
44
தின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்திய அரசாங்கம் உத்தரவிட்டதன் பேரிலேதான் புதுடில்லி திரும்பினுரா, அல்லது வேறு காரணத்தை முன்னிட்டுடில்லி சென்ருரா என்று சொல்ல முடியாவிட்டாலும், அவருடைய திடீர்ப் புறப்பாடு மர்மம் தழ்ந்ததாயிருந்ததென்று பிரதிநிதிகள் பேசிக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து, குடியேற்ற ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆபிரிக்க மக்கள் செய்து வந்த கிளர்ச்சிகள் விஷயத்தில் இந்தியாவின் கொள்கை என்ன என்பது பற்றியும் பிரதிநிதிகளுக்கிடையில் அடிக் கடி விவாதிக்கப்பட்டது. கைரோபியில் நடைபெற்ற விருந்து வைபவமொன்றிலே பிரதிநிதிகள் கைக்குக் கிடைத்த நூலொன்று இந்த விவாதத்துக்கு உரமூட் டியது. “ஆபிரிக்கா பற்றி நேரு’ என்னும் அந்த நூலிலே காலஞ்சென்ற ஜவஹர்லால் நேரு அவர்கள் 1938 ஜூலை முதல் 1954 ஜனவரி வரையான காலத்தில் நிகழ்த்திய இருபதுக்கு மேற்பட்ட சொற்பொழிவுகள் தொகுக்கப் பட்டிருந்தன. அதன் முன்னுரையில் காணப்பட்ட வாசகம் இது:
‘கடந்த பல ஆண்டுகளாக உலகின் பார்வை ஆபிரிக்கக் கண்டத்தின் மீதும், எழுச்சி பெற்று வரும் அதன் மக்கள் மீதும் படிந்திருக்கிறது. இரு நூற்ருண் டுக் கால ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெற்ற இந்தியா மேலும் பல நாடுகள் சுதந்திரமடைதல் வேண்டு மென விழைகிறது. இதற்குக் காரணம், ஒரு காட்டு மக்களை மற்ருெரு காடு அடக்கி ஆளுவது மனித வர்க் கத்தின் தன்மானத்துக்கு இழுக்கானவை எனவும், ஐக்கிய நாடுகள் சாசனத்தில் பிரகடனப்படுத்தப்பட் டுள்ள மனித உரிமைக2ள மறுப்பதாகும், எனவும் அதன் விஜளவாக, சமாதானத்துக்கும் முன்னேற்றத்துக்கும் பாதகமுண்டாகு மெனவும் இந்தியா கம்புவதேயாகும்."

45
ஆகஸ்ட் மாதம் 10ஆங் தேதியன்று கிஸ"மு ஹோட்டலில் நாங்கள் தங்கியிருந்த போது, ஆறு நாள் உகண்டா சுற்றுப் பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்த உகண்டா அதிகாரிகள் உகண்டா பற்றிய விவரங்க ளடங்கிய பொட்டலமொன்றினை ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். இந்தப் பொட்டலத்திலிருந்த தகவல்கள் உகண்டா பற்றி முழுமையாக அறிந்துகொள்ள உதவின என்று சொல்ல முடியாவிட்டாலும் அரை குறையானவை என்றும் சொல்வதற்கில்லை ! அத்துணை முன் யோசனை யுடன் அவை தொகுக்கப்பெற்றிருந்தன. 'உகண்டா பற்றி ஐம்பது உண்மைகள் என்ருெரு துண்டுப் பிரசுர மும் அப் பொட்டலத்திலிருந்தது. இந்தத் துண்டுப் பிரசுரத்தைக் கரைத்துக் குடித்ததில் உபயோகமான உண்மைகள் சில மனதில் பதிந்தன. இவற்றில் முக்கிய மானதொன்று, உகண்டா, கீன்யா போல பிரிட்டிஷாரின் ஆதிபத்திய நாடாக-(Colony)-இல்லாமல், அவர் களின் கண்காணிப்பில்-(Protectorate)-இருந்ததென்ப தாகும். ஆட்சி அமைப்பில் இருந்த இந்த வித்தி யாசம் காரணமாக, நிலபுலங்களைப் பொறுத்த வரையில் உகண்டா தனது சுயாதீனத்தைப் பாதுகாத்துக் கொண் டது. கீன்யாவில் வெள்ளையர்கள் செழிப்பான மலைப் பிரதேசத்தைத் தமதாக்கிக் கொண்டதைப் போல உகண் டாவில் நிலப் பிரச்சினை தோன்ற இடமிருக்கவில்லை. உகண்டாவில் என்டெப்பே என்னுமிடம் நிர்வாகத் தலை ககராகவும் அங்கிருந்து சுமார் 20 மைல் தூரத்திலுள்ள கம்பாலா என்னுமிடம் வர்த்தகக் தலைாககராகவும் விளங்குகின்றன. கீன்யாவை “முயற்சித் திருநாடு” என வர்ணிப்போர் உகண்டாவை எண்ணிலா எழில் சிந்தும் காடு என அழைப்பர். இலங்கையிலும் சுமார் நான்கு மடங்கு பெரியதான உகண்டா வளங் கொழிக்கும்

Page 26
46
பள்ளத்தாக்குகளையும் அடர்ந்த புதர்க் காடுகளையும், பேரிரைச்சல் மிக்க அருவிகளையும், எரிந்து திய்ந்த எரிமலைகளையும் கொண்ட நாடாகும். எரிமலைகளே தேவதைகளின் ஆலயமென்பது அங்குள்ள ஆதிவாசி களின் ஐதீகம். எஞ்சியுள்ள நிலப்பரப்போ மரகதப் படுதா போலக் காட்சியளிக்கிறது. இடையிடையே ஆறு களும், குளங்களும், பாலர் கதைகளில் வரும் பல்வேறு விநோத மிருகங்கள் யாவையும் இங்கு சர்வ சாதாரண
T9595 57GOTGUT D.
உகண்டாவின் முக்கியமான ஏற்றுமதிப் பொருள் கள் கோப்பியும் பருத்தியுமாகும். செம்பு கோபால்ட்(Coball)-சுரங்கங்களும் அங்கு உண்டு. கூட்டுறவுச் சங்கங்கள் மலிந்த நாடு உகண்டா. இச்சங்கங்களிற் சில, சொக்தமாகப் பருத்தி ஆலைகளை நிறுவி நிர்வகித்து
வந்தன.
கிஸ"முவிலிருந்து என்டெப்பேக்கு விமான மார்க்க மாக விக்டோரியா ஏரியைத் தாண்டி, ஒரு மணி நேரத் தில் போய்ச் சேர்ந்தோம். ஹோட்டலில் சற்று கேரம் இ8ளப்பாறிய பின்னர் மேன்மை தங்கிய தேசாதிபதி சர் அன்ட்ரூ கொஹென் அவர்களைச் சந்திப்பதற்காக அரசாங்க மாளிகைக்குப் போனுேம். இலங்கையிலுள்ள ராணி மாளிகைக்குத் தவிர வேறெந்த ராணி மாளிகை களுக்கும் கான் அதுவரை சென்றதில்லை. எனவே, 1948 ஆம் ஆண்டுக்கு முன்னர் கொழும்பு ராணி மாளி கையில் நிலவிய தழலே உகண்டாவிலும் நிலவுமென்று எதிர்பார்த்தேன். அதாவது தேசாதிபதியவர்கள் தமது உத்தியோக உடை அணிந்தவராக, மெய்க்காப்பாளர் ஆகியோர் புடைசூழ, ராஜ சம்பிரதாய பூர்வமாக நின்று எமக்குத் தரிசனம் அளித்தார்.

47
வளர்ச்சியடையும் நாடுகளுக்கு பிரிட்டிஷ் அரசாங் கம் பண வசதியும் தொழில் நுட்ப ஒத்தாசைகளை யும் அளிப்பதற்குப் பொறுப்பாக இருந்து வருகிறது. (வளர்ச்சியடையும் காடுகள் என்ற சொற்ருெடருக்கு அர்த்த புஷ்டியுள்ள வரலாறு உண்டு. ஒரு காலத்தில் வறிய நாடுகள் எனவும் அடுத்து வளர்ச்சி குன்றிய நாடு கள் எனவும் வர்ணிக்கப்பட்ட நாடுகளே இன்று வளர்ச்சி யடையும் காடுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன! இச் சொற்ருெடர்கள் யாவும் ஒரே பொருளைக் குறிக்கின்ற போதிலும், அவற்றின் பரிணுமம், மக்களின் மனுே பாவத்திலுண்டான மாற்றத்தைச் சுட்டுவதாகவுள்ளன. இந்த வகையில் பார்த்தால், “பெயரில் என்ன இருக் கிறது? ரோஜாவை வேறு பெயர் கொண்டு அழைத்தால் அதன் மணம் குறைந்து விடுமா?’ என்ற ஷேக்ஸ் பியரின் அமரத்துவம் வாய்ந்த பொன்மொழி பொய்த்து விட்டதென்றே சொல்ல வேண்டும்! ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பரிபாஷை ஷேக்ஸ்பியரைப் பிழைக்க வைத்து விட்டது!)
அன்று மாலை என்டெப்பே, என்ஸாமூஸி ஹில் என்னுமிடத்திலுள்ள உள்ளுராட்சி, சமூக அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தைப் பார்வையிடப் போனுேம். இந்த விஜயத்தின்போது நான் கண்டவற்றிலும் என் சக பிரதி நிதிகளில் ஒருவரான பேராசிரியர் எ. ஐ. மலான் அவர் களுடன் சம்பாஷித்த விஷயங்களே இன்றும் நினைவில் நிற்கின்றன. அவரது காடாகிய தென் ஆபிரிக்காவைப் பற்றியும் அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் இன ஒதுக் கீட்டுக் கொள்கை பற்றியும் அவர் பெருஞ் சிரத்தையுடன் விளக்கம் கூறினர். அவருடைய விளக்கத்தையும், மேற் படி நிலையத்தில் உகண்டாவின் உள்ளூராட்சி மன்றங் கள் பற்றிக் கொடுக்கப்பெற்ற தகவல்களையும் சீர்தூக் கிப் பார்த்தபோது, என் மனதில் தோன்றிய கேள்வி,

Page 27
48
உகண்டாவில் ஊக்குவிக்கப்படும் உள்ளுர் ஆட்சி உணர்வு தேசிய வாதத்தை வளர்க்குமா, அல்லது தடுக்குமா? குலாபிமானத்தைத் தூண்டுமா, அல்லது தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துமா? இதற்கு அங்கேயே பதில் காண முடியவில்லை.
தாடியின் தாற்பரியம்
ஆகஸ்ட் 10 ஆந் திகதியன்று காலை நாங்கள் எல்லோரும் குறிக்கப்பட்ட நேரத்தில் லூக்கிகோ எனப் படும் பாராளு மன்றத்தில் நடைபெறவிருந்த விசேஷ கூட்டத்தில் பங்குகொள்வதற்காக மெங்கோ என்னு மிடத்துக்குப் போயிருந்தோம். பாராளுமன்றத்தின் அமைப்பும் அன்றைய சோடினைகளும் இலங்கைக்கு வரும் வெளிகாட்டுப் பிரமுகர்களுக்குப் பொது வரவேற் பளிப்பதற்காகக் கொழும்பு மாநகரசபை செய்யும் ஏற்பாடுகளையும் சோடினைகளையும் நினைவூட்டின. கட்டி கீரோ-பிரதம மந்திரி அவர்க2ள எங்கள் எல்லோரையும் தமது தாய்மொழியாகிய உகண்டாவில் வரவேற்ருர், அவருடைய வரவேற்புரை இங்கிலிஸில் பெயர்க்கப் பட்டது. மண்டபத்தின் உள்ளும் புறமும் பெருந்திர ளான மக்கள் குழுமியிருந்தார்கள். அவர்களில் பெருங் தொகையான வாலிபர்கள் தாடியுடன் காட்சியளித்தார் கள். தமது கபாக்கா-மன்னர்-எட்வார்ட் வில்லியம் ஃபிரெடெரிக். டேவிட் வாலுகெம்பே முட்டேபி லுவாங் குலா முட்டேஸா, மேன்மைதங்கிய இரண்டாவது முட்டேஸா, அவர்களைப் பிரிட்டிஷ் தேசாதிபதியவர்கள் தேசப்பிரஷ்டம் செய்தமைக்குக் தமது ஆட்சேபத்தைத்

49
தெரிவிக்குமுகமாகவே அந்தத் தாடிகள் வளர்க்கப் பட்டனவாம். மேன்மை தங்கிய இரண்டாவது முட்டேஸா அவர்கள் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர். பிரிட்டிஷ் வாழ்க்கை முறையையும், இங்கிலிஸ் மொழியையும் கன்கு அறிந்தவர். இத்தகைய ஒருவர் பிரிட்டிஷ் மக்களுக்கும் ஆபிரிக்க இனத்தவர் களுக்கும் சுமுகமான உறவை வளர்க்கும் பாலமாக விளங்குவாரென்றே பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனல் கடந்த சம்பவங்கள் வேறுவிதமாக அமைந்தன. கீன்யா, உகண்டா, தங்கனிக்கா ஆகிய மூன்று Tாடுகளும் இணைந்த கிழக்கு ஆபிரிக்க சம்மேளனமொன்றினை ஸ்தாபிக்க, பிரிட்டிஷ் அரசாங்கம் விரும்பியது. இத்த கைய சம்மேளனத்தால் அரசியல், பொருளாதார விஷ யங்களில் உகண்டாவுக்கு அனுகூலம் ஏற்பட்டிருக்கும். ஆணுல் உகண்டாவின் தேசிய எழுச்சிக்கும் அதன் ஒரு பகுதியாகிய புகண்டாவின் தனியாட்சி உரிமைக்கும் பிரதிகூலம் உண்டாகியிருக்கும். எனவே கபாக்கா அவர்கள், சம்மேளனத்தினுல் உண்டாகக் கூடிய ஆபத்தை உத்தேசித்து, அதனை வன்மையாக எதிர்த் தார்கள். அத்துடன் நில்லாது, உகண்டாவுக்குச் சுதக் திரம் வழங்கும்படி கிளர்ச்சியுஞ்செய்தார்கள். இந்தக் கிளர்ச்சி பெரும் உபத்திரவமாகவே, பிரிட்டிஷ் அரசாங் கம், 1953 நவம்பரில், வருடத்துக்கு 8000 பவுண் பென்ச னில் அவரை இங்கிலாந்துக்கு காடு கடத்தியது. இச் செயல் எதிர்பாராத விளைவை ஏற்படுத்தியது ; மன்ன ரின் ஆட்சியையிட்டு அதிருப்தியடைந்திருத்தோர் கூட அன்னுரின் அபிமானிகளானர்கள்.
கட்டி கீரோவின் வரவேற்புரைக்குப் பிரதிநிதிகளில்
ஒருவர் தகுந்த முறையில் நன்றி தெரிவித்தார். ஐரோப் பியப் பாணியிலான உடையும், துறுக்கித் தொப்பியு

Page 28
50
மணிந்த ஆபிரிக்க அதிகாரியொருவர் நன்றியுரையை உகண்டாவில் பெயர்த்தார். துறுக்கித் தொப்பி அணிக் திருந்ததைக் கொண்டு அவர் முஸ்லிம்தான என்று தீர்மானிக்க முடியவில்லை. ஏனென்ருல் என்டெப்பே போலீஸ் வாத்தியகாரரும் ாைகரோபி பொலீஸ்காரரும் அத்தகைய தொப்பியணிந்திருக்கக் கண்டேன்.
மெங்கோவில் இந்த வரவேற்பு வைபவம் முடிந்ததும் கம்பாலாவுக்குப் புறப்பட்டோம். வழியில் மக்கறேறே என்னுமிடத்திலுள்ள கிழக்கு ஆபிரிக்க பல்கலைக் கல்லூரியில் தரித்து நின்ருேம். 1922ஆம் ஆண்டில் ஸ்தாபிதமான இந்தக் கல்லூரி உகண்டா மாணவர்க ளுக்கு மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் கிழக்கு ஆபிரிக்க மான வர்கள் அனைவருக்குமே பொதுவானதாக விளங்கியது. லண்டன் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட இக் கல்லூரியே, (துதான்) கார்ட்டும் முதல் (தென் ஆபிரிக்கா) ஜொஹானஸ்பேர்க் வரையுள்ள பரந்த பிரதேசம் முழுவதிலும் சர்வகலாசாலை அந்தஸ்துடைய ஒரே கல்லூரியாகத் திகழ்ந்தது. கொழும்புப் பல்கலைக் கல்லூரியை ஒத்திருந்த இக் கல்லூரி லண்டன் பல்கலைக் கழகத்தின் போதன முறையை இம்மியும் பிசகாது பின்பற்றி வந்ததென்று அறிக்தேன். பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தின் சாயல் கல்வித் துறையிலும் படிந்திருந்த மைக்கு இது சான்ருயிற்று. அக் கல்லூரியில் எண்ப துக்கு மேற்பட்ட குலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வந்தார்கள். இவர்களில் கிக்கியு குல மாணவர் களே அறிவாற்றல் மிக்கவர்களாக விளங்கினர்க ளென்று பேராசிரியர்களில் ஒருவர் கருத்துத் தெரிவித் தார். இதையிட்டு நான் வியப்படையவில்லை. ஏனென் ருல், ஆபிரிக்க-ஆசியா வரலாற்றை கோக்குவோமானுல், அறிவாற்றல் மிக்க இனக் கொழுந்தினரே, தேசிய

51
எழுச் சி க்கு வித்துான்றினரென்பதைக் காணலாம். பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களிற் பெரும் பாலானுேர், கான் கொழும்புப் பல்கலைக் கல்லூரியில் பயின்ற காலத்தில் பட்டம்பெற்ற இலங்கையர்களைப் போல, அரசாங்க உத்தியோகங்களையே காடினர். எம் முடன் வந்திருந்த நியூஸிலாந்துப் பிரதிநிதியொருவர் இக் கல்லூரியில்ாநிகழ்ந்த உண்மைச் சம்பவமொன்றைச் சொன்னுர்
மக்கறேறே பல்கலைக் கல்லூரியில் அரசியல் சார்பு டைய கிளர்ச்சிக்கார மாணவன் ஒருவன், சக மாணவர் களை ஒன்று சேர்த்து படிப்பு நிறுத்த மொன்றினை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தான். இச் செயல் அரசாங் கத்துக்குப் பெரிய இக்கட்டான நிலையை உண்டாக் கியது. இத்தகைய சம்பவம் பிரெஞ்சு ஆபிரிக்காவில் கடைபெற்றிருந்தால் அரசாங்கம் அந்த மாணவனைச் சிறைக்கு அனுப்பியிருக்கும். போர்த்துக்கேயே ஆபிரிக் காவிலென்றல் அவனுக்கு மரண தண்டனை கிடைத் திருக்கும். ஆனல் பிரிட்டிஷ் அரசாங்கமோ தனக்கேயுரிய போக்கின்படி அந்த இளைஞனுக்குக் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயில உபகாரச் சம்பளம் வழங்கிய தாம் ! .
அன்று மாலை கமுலங்கே என்னுமிடத்திலுள்ள பருத்தி உற்பத்திக் கூட்டுத் தாபனத்தின் தலைமைக் காரியாலயத்தைப் பார்க்கப் போனுேம், உகண்டாவின் பொருள் வளத்தில் முக்கியமான ஸ்தானம் வகிப்பது பருத்தியாகும். ஆபிரிக்க சுதேசி மக்கள் இதனைப் பயிரிட்டு வந்தார்கள். நமது நாட்டில் தலவாக்கொல்லே யில் உள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்தையும் அகல வத்தையில் உள்ள ரப்பர் ஆராய்ச்சி நிலையத்தையும்

Page 29
52
போல நமுலங்கேயில் பருத்தி ஆராய்ச்சி நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பருத்திச் செடியைத் தாக்கும் பீடைகளைக் கட்டுப்படுத்துதற்கும் சிறப்பான விளைச்ச லேப் பெறுதற்கும் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் பற்றி அங்குள்ள உத்தியோகத்தர்கள் எமக்கு விளக்கி ஞர்கள். இந்த நிலையத்தில் உயர் பதவிகளைப் பிரிட்டிஷ் காரரே வகித்து வந்தார்கள். அவர்களுக்கு உதவியாளர் களாக ஆபிரிக்கர்கள் வேலை பார்த்தார்கள். இது இலங்கையில் டொன்மூர் ஆட்சித் திட்டம் அமுலுக்கு வருமுன்னர் நிலவிய சூழலை எனக்கு நினைவூட்டியது.
கம்பாலாவிலிருந்து கமுலங்கே செல்லும் வழியில் சுதேசிக் கிராமவாசிகளின் வீடுகள் பலவற்றைத் தாண்டிச் சென்ருேம். ஆபிரிக்க வீடுகளுக்கே யுரிய உருவ அமைப்புக்கொண்ட இவ் வில்லங்களைச் சூழ வாழையும், கோப்பியும், பருத்தியும் செய்கை பண்ணப் பட்டிருந்தன.
மறுங்ாள் எமது சவாரி (Safast) ஆரம்பமாயிற்று. தென் ஆபிரிக்காவில், இந்தச் சவாரி” என்னும் சொல், ஆரம்பத்தில் கோட்டையைக் குறிக்குஞ் சொல்லாக விளங்கி, காலஞ் செல்லச் செல்ல, காவல் வனத்துக்கு விஜயஞ் செய்வதையும் குறிப்பதாயிற்று. இன்றே இச் சொல்லின் அர்த்தம் மேலும் புஷ்டி பெற்றிருக்கிறது. இம் மாதம் 8ஆங் தேதி வெளியான ஒப்சேவர்' பத்திரி கையில் இந்தியா செல்லும் சேலை மோகினிகளைப் பற்றிய தலையங்கத்தில் (Sasee Safasi) சேலைச் சவாரி என்ற சொற்ருெடர் பிரயோகிக்கப்பட்டுள்ளமை ஒரு சான்ற கும். ஸ்வாஹிலி மொழியிலிருந்து இங்கிலிஸ் மொழிக்குப் பரவிய இச் சொல் அறபுமொழிப் பூர்வீகமுடையதாகும். தமிழிலுள்ள சவாரி என்னுஞ்சொல்லும் அறபியிலிருந்து ஹிந்துஸ்தான் மொழி மூலமாக வந்ததா யிருக்குமோ?

53
மொழியாராய்ச்சியாளர்கள் இதற்கு விடை காண்பார்க ளாக 1 அடியேனுக்கு அந்தத் தகைமை இல்லை.
எமது சவாரி வேட்டைச் சவாரியன்று; காட்சிச் சவாரியாகும் ! அன்று காங்கள் சிலர் கிச்வாம்பா ஹோட் டலில் தங்கினுேம், 20 பேருக்குப் படுக்கை வசதிகள் கொண்ட இந்த ஹோட்டல் எலிசபெத் ராணி கந்தவனத் தின் கட்ட நடுவே அமைந்திருக்கிறது. ஆகவே, அங்கு சுயேச்சையாகத் திரியும் விலங்குகளை ஹோட்டலில் இருந்தவாறே பார்த்துக் களித்தோம்.
அடுத்த காட் காலை கிலெம்பி சுரங்கங்க2ளப் பார்க்கச் சென்ருேம். இச் சுரங்கங்களிலிருந்து இரண்டு வருட காலத்தில் செம்பும் கோபால்டும் ஏராளமாகக் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டது. இங்கிருந்து போர்ட் போட்டல் என்னுமிடத்துக்குப் புறப்பட்டோம். டோரோ மாகாணத்தின் தலைப் பட்டணமாகிய இவ் விடத்திலும் மாகாண அதிகாரி எமக்கு மதிய விருங் தளித்தார். சொற்பொழிவும் நிகழ்த்தினுர், சுவையான அவருடைய விருந்துக்குக் கட்டணமாக, சொற்பொழிவு ரூபத்தில் அமைந்த நீண்ட வருடாந்தர நிர்வாக அறிக்கை போன்ற, உப்புச் சப்பற்ற உரையைக் கேட்க வேண்டியதாயிற்று. இந்த விருந்துக்கு டோரோ மகா ராஜாவும் பாரியாரும் சமுகமளித்திருந்தார்கள். மகா ராஜாவை அங்கு முக்காமா என்று அழைக்கிருர்கள். என் கண்களுக்கு இந்த மகாராஜா பழங்கால ரட்ட மாத்மயா போலக் காட்சியளித்தார். அன்று மாலை மகாராஜாவின் மாளிகைக்கு விருந்தினராகச் சென்ருேம். அவருடைய பழைய மாளிகை இலங்கையில் ரட்ட மாத் மயாமாரின் வளவுவ’ எனப்படும் ‘வளவுகளை ஞாபக மூட்டின. புதிதாகக் கட்டப்பட்டிருந்த மாளிகையோ இலங்கை மாகாண எஞ்சினியர்மாரின் பங்களாவை

Page 30
54
ஒத்திருந்தது. விருந்து முடிந்ததும் கிச்சு வாம்பா ஹோட்டலுக்குத் திரும்பினுேம்.
கீன்யப் பருவதத்தை எதிர்கொள்ளல் 9.
மறுநாள், ஆகஸ்ட் 15ஆங் திகதி, அன்றும் 'சவாரி' ஒன்று ஏற்பாடாகியிருந்தது. இந்த முறை, எலிஸபெத் ராணி தேசிய காவல் வனத்தில் கட்டாக்காலியாகத் திரியும் யானைகளைக் கண்டுகளிக்க ஒழுங்கு செய்திருக் தார்கள். இலங்கை மண்ணில் பிறந்த என்னை இந்தக் *கஜ-தரிசனம் உசுப்பவில்லை. ஆகவே அன்றைய தினத்தை ஹோட்டலிலேயே கழிக்க முடிவு செய்தேன். என்னைப்போலவே மற்ருெரு பிரதிநிதியும் இந்தச் சவாரிக்குக் கள்ளம் போட்டிருந்தமை எனக்கு மகிழ்ச்சி யளித்தது. இரண்டு கள்ளர்களுமாகக் காலை ஆகார வேளையில் வெகு சாவகாசமாக உட்கார்ந்து பலதும் பத்தும் பேசிக் களித்தோம்.
எங்கள் சம்பாஷணை மெளமெள இயக்கத்துக்குத் தாவியதும், அமெரிக்காவின் கூகுளுக்ஸ் கிளான் — Ku Klux Klan-gŅuudisasögyjs(35 b -95, fib(5 (pGiront பேதா பேதங்களை ஆராய முயன்ருேம். கீன்யா வின் மெள மெள இயக்கம் கீன்ய வெள்ளையர்களுக் கெதிராக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாகும். கூ குளுக்ஸ் கிளான் இயக்கமோ யூ. எஸ். ஏ. யின் தென் ராஜ்யங்களி லுள்ள கறுப்பின மக்களை ஒடுக்குவதற்கென்று முளைத்த இயக்கமாகும். 1915ஆம் ஆண்டில் ஆரம்பமான இவ் வியக்கத்தின் மூலகர்த்தா வில்லியம் ஜே. சிமமன்ஸ் என்பவராவர். ஜோர்ஜியா மாகாணத்தில் தோன்றிய

55
இவ் வியக்கம் காலகதியில் அமெரிக்கா முழுதும் படர்ந்தது.
இந்த உரையாடலின்போது, பண்டைக் காலத்து ஹஸின்கள் பற்றியும் கான் குறிப்பிட்டேன். ஹஸிஸின் என்னும் அறபுச் சொல்லிலிருந்தே அரசியல் கொலை காரன் என்னும் பொருள்படும் (ABassio) என்னும் இங்கிலிஸ் சொல் பிறந்தது. பன்னிரண்டாம் நூற்ருண் டில் சிலுவைப் படை வீரர்களுடன் சமர் புரிந்த ஹளபீ ஸின்கள் ஐரோப்பியச் சேனைத் தலைவர்கள் பலரை இரகசியமாகக் கொன்று குவித்தார்கள். தமது கட்ட2ள களைத் தமது சகாக்கள் எவ்வித கேள்வி நியாயமுமின்றி நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதற்காக இக் குழு வின் தலைவர் போதையூட்டும் பொருளான கஞ்சாவை வெகுதாராளமாகப் பயன்படுத்தினர்கள். கஞ்சாக் கிறக்கத்திலிருந்த வீரர்கள் தமது செயலின் களுகனத் தையுணராது தலைவர்களின் கட்டளைகளை நிறைவேற்றி ஞர்கள் في"
ஹஸிஸின்கள், மெள மெளகள், கூ குளுக்ஸ் கிளான் இயக்கத்தினர் ஆகிய மூன்று குழுவினருக்கும் மூன்று அம்சங்கள் பொதுவானவை. அவை: பரம மர்மம், உயிர்ச் சத்தியம், பீதியூட்டுஞ் சடங்குகள் என்பனதாகும்.
இந்திய சுதந்திரக் கிளர்ச்சிகளின் ஆரம்பக் கட்டத் தில், உயர்பதவி வகித்த வெள்ளேயர்கள் பலர் படு கொலை செய்யப்படுவதற்கு ஏதுவான வங்காளப் பயங் கரவாத இயக்கமும் மேற்சொன்ன பொதுப் பண்புகளு டையதாக இருக்திருக்கலாம். இந்த இரகசிய, பயங்கர வாத, புரட்சி இயக்கங்களைப் பற்றியும் அவை தோன்று வதற்கு ஏதுவான காரண காரியத் தொடர்புகளையும்

Page 31
56
எவராவது ஆராய்ந்திருக்கிருர்களோ தெரியவில்லை. இவ்வித ஆராய்ச்சியினை சாஸ்திரீய முறைப்படி மேற் கொள்வதற்கு உலக வரலாற்றில் உண்மைச் சம்பவங் கள் பல உள்ளன.
இந்தச் சம்பாஷணைக்குப் பின்னர், ஹோட்டலின் அமைதியும் இதமளிக்கும் சூழலும் உள்ளத்தை வசீகரிக் கவே, ஏதாவதொரு புத்தகத்தைப் படிக்கலாமென்று தோன்றியது. ஆறு காட்களுக்கு முன்னர் ாைரோபியி லிருந்து முன் யோசனையுடன் கொண்டு வந்திருந்த 'கீன் யப் பருவத்தை எதிர்கொள்ளல் (Facing Kenya Mount) என்னும் நூல் நினைவுக்கு வரவே அதனைப் படிக்கலா னேன்.
கிக்கியு குல மக்களின் வாழ்க்கை முறையைச் சித் திரிக்குமுகமாக ஜோமோ கென்யாட்டா எழுதிய இக் நூலுக்கு லண்டன் பல்கலைக்கழக மனிதவியல் துறைப் பேராசிரியர் மலினேவ்ஸ்கி அவர்கள் முன்னுரை எழுதி யுள்ளார். 1938 ஆம் ஆண்டில் வெளியான இந்நூல் 1953 ஆம் ஆண்டில் மூன்றுமுறை மறுபிரசுரஞ் செய்யப் பட்டது. 1952ஆம் ஆண்டில் கென்யாட்டா அவர்கள் கைதுசெய்யப்பட்டமையும் 53ஆம் ஆண்டில் அவருக்கு 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமையும் இங் நூலுக்கு மிகுந்த கிராக்கியை ஏற்படுத்தின.
கென்யாட்டாவைப் பற்றி கான் அறிந்திருந்த தக வல்கள் அவரின் நூலைக் கருத்தூன்றிப் படிக்கத் தூண் டின. 1893ஆம் ஆண்டில் ாைநரோபி நகருக்கு அண் மையில் கென்யாட்டா பிறந்தார். மக்தை மேய்ப்பவரின் மகனகப் பிறந்த கென்யாட்டா திடகாத்திரமான தேகக் கட்டுடையவராகத் திகழ்ந்தார். இளமைப் பருவத்தைக் கிக்கியு கிராமத்திலேயே கழித்த இவர் பிற கிக்கியு சிறு

57
வர்களைப்போல ஆட்டுத் தோலாலான ஆடையணிக் தும், ஈட்டி எறிதல், அம்பு எய்தல் ஆகிய குலப் பழக்கங் களைப் பயின்றும் வாழ்ந்தார். நைரோபி நகருக்கு அண் மையிலிருந்த ஸ்கொத்லாந்துப் பாதிரி பள்ளிக்கூடத் தில் இங்கிலிஸ் கற்றர். 1922ஆம் ஆண்டில் கிக்கியு மத்திய சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதிற் சேர்ந்து, சில வருடங்களில் அதன் தலைவரானர். 28இல் கிக்கியு மொழிப் பத்திரிகை யொன்றனை கடத்தினர். 1929இல் ஐரோப்பா சென்ற இவர் அடுத்த பதினேழாண்டு காலத்தை ஆபிரிக்காவுக்கு வெளியே கழித்தார். இந்தக் காலப்பிரிவில் லண்டன் ஸ்கூல் ஒவ் எக்கனுேமிக்ஸ்(London School of Economics) 6T6örgoilh Lugis,%uds solo லூரியில் கல்வி பயின்றர். 1945ம் ஆண்டில் பின்னுெரு காலத்தில் காணுவின் பிரதமராய் விளங்கிய குவாமே என்குருமாவுடன் சேர்ந்து, மாஞ்செஸ்டர் நகரில் அகில ஆபிரிக்க காங்கிரஸ் மாநாட்டை ஏற்பாடு செய்தார். இதன் பிறகு மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் மனிதவியல் பயின்ருர், இவ்வனுபவங்களுடன், 46 இல் கீன்யா திரும்பினுர், நமது இனத்தவர்களின் குலாசாரங்க2ஹ யும் பண்பாட்டையும் பாதுகாப்பதற்கு, பாதிரிமாரின் செல்வாக்கற்ற சுதந்திரமான பாடசாலைகள் இன்றியமை யாதவை என்பதையுணர்ந்து, அத்தகைய குறிக்கோளைக் கொண்ட ஸ்தாபனமொன்றிலே சேர்ந்து, தீவிரமாக உழைத்து, அந்த ஸ்தாபனத்துக்கு ஊனும் உரமுமூட்டி ஞர். (பாதிரிமாரிடம் கல்வி பயின்றவர்களும் தம் மதம் விட்டு கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர்களுமான சுதேசி மக்களே, இந்தியா, இலங்கை ஆகிய ஆசிய நாடு களிலும் தேசிய எழுச்சிக்கு முன்னின்று உழைத்தார்கள் என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டிய தொன்ருகும்.)
1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிட்டிஷ் அரசாங்
I 279ー4

Page 32
58
கம் கென்யாட்டாவைக் கைது செய்தது. ஆனல் வழக்கு விசாரணை நைரோபியில் நடைபெறவில்லை. எங்கோ ஒரு மூலையிலிருந்த கிராமமொன்றில் நடைபெற் றது. இக்த வழக்கை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்கள். பாவம் நீதி பதி! இருதலைக்கொள்ளி எறும்பான அவர் கென்யாட்டா குற்றவாளி எனத் தீர்ப்பளித்தால் மெள மெள இயக்கத் தவர்களால் கொல்லப்படுவார் என்றும், குற்றவாளி யல்லவென்று தீர்ப்பளித்தால் வெள்ளைக்காரப் பண்ணை யாளர்களால் கொல்லப்படுவாரென்றும் பேசிக்கொள்ளப் பட்டது.
கிச்வாம்பா ஹோட்டலில் கான் கென்யாட்டாவின் நூலைப் படித்துக்கொண்டிருக்த சமயத்தில் கென்யாட்டா சிறை வைக்கப்பட்டிருக்தார். எனது சக பிரதிநிதிகளில் காலஞ்சென்ற திரு. பேர்ணுட் அலுவிஹார உட்படச் சிலர் மெள மெள கைதிகளைச் சிறையில் சந்தித்து உரை யாடினர்கள். ஆணுல் எவருக்கும் கென்யாட்டாவைக் காணும் வாய்ப்புக் கிடைக்கவில்லை சுதேசி மக்கள் மத்தியில் அளப்பரிய மதிப்பைப் பெற்றிருந்த அவரை அரசாங்கம் கண்காணு ஊரில் மறைத்து வைத்திருந்தது. இன்றே இதே கென்யாட்டாவை எவரும் அணுகி உரை யாடலாம். அவரைச் சிறையிலிட்ட அதே வெள்ளையரின் இனத்தைச் சேர்ந்த மக்கின்சி என்பார் இன்று அவரு டைய மந்திரி சபையில் விவசாய அமைச்சராகப் பணி புரிந்து வருகிருர், “அந்தகாரத்தின் தூதன்' என்று வர்ணிக்கப்பட்ட அதே கென்யாட்டா இன்று ஆபிரிக் காவின் ஜோதியாகத் திகழ்கிருர், காலத்தின் கோலத்தை
என்னென்பது ?
*கீன்யப் பருவதத்தை எதிர்கொள்ளல்" என்னும் நூல் மனிதவியல் சம்பந்தமான நூலாகும். கிக்கியு மக்

b8力
களின் குடும்ப வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், நில ஆட்சி முறை, கல்வி, சடங்காசாரங்கள், தொழில் துறைகள் யாவும் அந் நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. பள்ளிப் படிப்போ, இலக்கியப் பாரம்பரியமோ இல்லாத போதிலும், உயரிய ஒழுக்க நெறிகளும் கட்டுக்கோப் பான சமுதாய அமைப்புமுடைய கிக்கியு மக்களைப் புற உலகத்தவர்கள் காட்டுமிராண்டிகளென வர்ணிப்பது எவ்வளவு அபத்தமென்பதைக் கென்யாட்டா வெகு தெளி வாக, பட்சபாதமற்ற முறையில் சித்திரித்துள்ளார். நூலாசிரியர் முன்னுரையின் முதல் வரிக்கான அடிக் குறிப்பில், ஐரோப்பியர்கள் (Ki Klyu) கிக்கியு-என எழுதுவது தவறென்றும் சரியான உச்சரின் படி Gekoyo-கெக்கோயோ-என்றே எழுதுதல் வேண்டு மென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அடிக் குறிப்பு அர்த்தபுஷ்டியுள்ள தென்பதை நூலைப் படித்து முடித்த தும் உணர்ந்துகொண்டேன். நூல் ஆரம்ப முதல் முடிவு வரை கிக்கியு மக்க2ளப்பற்றி வெள்ளையர்கள் கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களைத் தெளிவுபடுத்துவ தாகவே விளங்குகிறது. ዓ
அக்காட்களில் கீன்ய மக்களின் ஜீவாதாரப் பிரச்சினை யாக விளங்கிய நில உரிமைப் பிரச்சினை பற்றி கென் யாட்டா இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார். ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய விதத்தைச் சுவையான உப கதையொன்றின் மூலமாக விவரித்
திருக்கிருர்.

Page 33
ஈர் உருவகக் கதைகள்
முன்னுெரு காலத்தில் யானை ஒன்று ஒரு மனித னுடன் தோழமை பூண்டது. அந்த மனிதனுக்குக் காட் டின் எல்லையிலே சிறிய குடில் ஒன்று இருந்தது. ஒரு காள் புயல் காற்றுடன் பெரு மழை பெய்தது. அப் பொழுது யானை தன் நண்பனிடம் சென்று ‘அன்பனே! என் தும்பிக்கை இந்தச் சோனுவாரி மழையில் கனை கிறது. உன் குடிலில் எனக்குக் கொஞ்சம் இடம் தரு வாயா?’ என்று கேட்டது.
கண்பனின் நிலையைக் கண்டு இரங்கிய மனிதன், “என் பிரிய நண்பரே ! எனது குடில் மிகவும் சிறியது, ஆணுலும் உன் தும்பிக்கைக்கும் எனக்கும் போதுமான இடம் உண்டு, மெதுவாக உன் தும்பிக்கையை உள்ளே விடு,” என்ருன்.
யானை அவனைப் பார்த்து 'உன்னுடைய இந்தங்ல்ல செயலை கான் மறவேன், என்ருவது ஒருநாள் பிரதி உப காரம் செய்வேன்,' என்று சொல்லியது.
ஆணுல் உண்மையில் கடந்ததென்ன? தும்பிக் கையை உள்ளே விட்டதுமே மெல்ல மெல்லத் தலையை யும் முழு உடம்பையும் குடிலுக்குள் நுழைத்துக்கொண் டது. யானை, மனிதனைத் தூக்கி வெளியே எறிந்துவிட்டு தான் வெகு வசதியாக உள்ளே படுத்துக்கொண்டது. “நண்பர் ! உனது தோல் என்னுடையதைப் பார்க்கிலும் தடித்தது. மேலும் இந்தக் குடில் கம் இருவர்க்கும் போதாது. ஆனபடியால் நீ வெளியே நில். கான் என்

61
னுடைய மென்மையான உடம்பைப் பாதுகாத்துக்கொள் கிறேன்,” என்று மனிதனிடம் சொல்லியது.
தனது நண்பனின் கன்றிகெட்ட செயலைக் கண்ட மனிதன் முணுமுணுக்கத் தொடங்கினன். அதைக் கேட்டு, காட்டு விலங்குகள் எல்லாம் வந்து கூடின. மனிதனும் யானையும் வாக்குவாதப்படுவதை, சுற்றிவர கின்று கேட்டன. அந்தச் சமயத்தில் சிங்கமும் அங்கு வந்து சேர்ந்தது. ‘இந்தக் காட்டுக்கு நான் ராஜா என் பதை நீங்கள் அறியீரோ? எனது ராஜ்யத்தின் அமைதி யைக் கெடுக்க யார் அதிகாரம் தந்தார்?’ என்று கர்ச்சித் தது. காட்டு ராஜ்யத்தின் பெருந்தலைவர்களில் ஒன்றன யானை இதைக் கேட்டதும், மிகவும் விகயமான குரலில் “பிரபு! இங்கு யாரும் அமைதியைக் கெடுக்கவில்லை நான் குடியிருக்கும் இந்தக் குடில் யாருடையது என்பதுபற்றி இதோ இருக்கும் என் கண்டனுடன் சம்பாவழிக்கிறேன்,' என்று பதில் சொன்னது. தனது ராஜ்யத்தில் அமைதி யும் சமாதானமும் நிலவ வேண்டுமென்பதில் "அக்கறை யுடைய சிங்கம் ‘இதுபற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப் பிக்குமாறு விசாரணைக் குழுவொன்றை நியமிக்கும்படி எனது மந்திரியாருக்குக் கட்டளையிடுகிறேன்.” என்று கம்பீரமாக உத்தரவிட்டது. பின்னர், மனிதனை கோக்கி, “எனது ராஜாங்க அமைச்சர்களில் ஒருவரான யானை யாருடன் சுமுகமான உறவை ஸ்தாபித்தமைக்காக உன்னைப் பாராட்டுகிறேன். இனிமேலும் முணுமுணுக் காதே. உன்னுடைய குடில் இன்னமும் பறிபோகவில்லை. எனது விசாரணைக் குழு விசாரணையை ஆரம்பிக்கும் வரை பொறுத்திரு. விசாரணையின்போது உன்னுடை முறைப்பாட்டைச் சொல்லலாம் விசாரணைக் குழுவின் தீர்ப்பு நிச்சயம் உனக்கு மகிழ்ச்சியூட்டும்,” என்றது. சிங்கராஜாவின் இந்த இதமான வார்த்தைகளைக் கேட்டு

Page 34
62
மனிதன் அகமகிழ்ந்தான். தனது குடில் தனக்குக் கிடைத்துவிடும் என்று கம்பினன்.
இதற்கிடையில், யானையார் தனது எஜமானின் கட்டளைப்படி, ஏனைய மந்திரிமாருடன் சேர்ந்து விசா ரணைக் குழு வொன்றை நியமித்தது. கீழ்க்காணும் பெரியவர்கள் விசாரணைக் குழுவில் நியமனம் பெற்றர் கள்: காண்டா மிருகனுர், எருமையார், முதலேயார், மேன்மை தங்கிய கரியார்; கரியாரே (விசாரணைக் குழு வின் செயலாளர்) விசாரணைக் குழு உறுப்பினர்களைக் கண்டதும் மனிதன் ஆட்சேபம் தெரிவித்தான். தனது கட்சியைச் சேர்ந்த ஒருவராவது குழுவில் இடம் பெறல் அவசியமல்லவா? என்று கேட்டான். காட்டு ராஜ்யத் தின் நுணுக்கமான சட்ட திட்டங்களை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்த எவரும் அவனுடைய கட் சியில் இல்லாதபடியால் அது சாத்திய மல்லவென்று அவனுக்குப் பதில் கிடைத்தது. மேலும், விசாரணைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் * நீதி வழுவா நெறி யாளர் ” எனப் பெயர் பெற்றவர்கள்; பல்லும் ககமும் பல வீனமான மக்களின் கலன்ைப் பாதுகாப்பதற் கென்று ஆண்டவனுல் தெரிவு செய்யப்பட்டவர்கள். ஆகவே, அவர்கள் விஷயத்தை வெகு நுணுக்கமாக ஆராய்ந்து, பாரபட்சமற்ற வகையில் தீர்ப்பளிப்பார்கள் என்றும் அவனுக்கு உறுதியளிக்கப்படடது.
விசாரணை ஆரம்பமாயிற்று, கனம் தங்கிய யானை யார் முதலில் அழைக்கப்பட்டார். மிடுக்குடன் நுழைந்த யானையார் தமது வழக்கை உரைத்தார்; * கனவான் களே ! உங்கள் எல்லோருக்கும் தெரிந்த கதையைச் சொல்லி உங்களுடைய பொன்னுன கேரத்தை கான் மண் ஞக்க விரும்பவில்லை. எனது கண்பர்களின் கலஜனப் பாதுகாப்பது என் கடமை என்று நான் எப்பொழுதும்

63
கம்பி வந்திருக்கிறேன். இதுவே என் கண்பனுக்கும் எனக்கும் தப்பபிப்பிராயம் ஏற்படக் காரணம் என்று தோன்றுகிறது. தனது கொட்டிலைப் புயல் காற்று அள்ளிக்கொண்டு போகாமல் காப்பாற்றும்படி அவர் என்னைக் கேட்டார். கொட்டில் வெறுமையாயிருந்ததால் காற்று உள்ளே புகுந்தது. ஆகவே, என் நண்பனின் கலனுக்காக அந்த வெறும் இடத்தில் நானே அமர்ந்து, உபயோகப்படாதிருந்த இடத்தை நல்ல முறையில் உப யோகிக்க நேர்ந்தது. இத்தகைய சந்தர்ப்பத்தில் நீங் களும் அப்படியே செய்திருப்பீர்கள்.
கனந்தங்கிய யானையாரின் முடிவான சாட்சியத் தைக் கேட்ட பின், விசாரணைக் குழுவினர், கழுதைப் புலியார் மற்றும் வனப் பெரியார்களை அழைத்து விசா ரித்தனர். அவர்கள் எல்லோரும் யானையாரின் கட் சியை ஆதரித்தார்கள். பிறகு மனிதனை அழைத்து விசா ரித்தார்கள். அவன் தன் கதையைச் சொல்லத் தொடங் கினன். விசாரணைக் குழுவினர், அவனைத் தடுத்து நிறுத்தி 8 அகாவசியமான விஷயங்களைப் போட்டுக் குழப்பாமல் அவசியமான தகவல்களை மட்டும் சொல் லும். இந்த வழக்கு உண்டானமைக்கான காரணத் தைப் பற்றிப் பாரபட்சமற்ற பலரின் கருத்துக்களை ாகாங்கள் ஏற்கனவே கேட்டுவிட்டோம். நீர் ஒரேயொரு விஷயத்துக்கு மட்டும் பதில் சொல்லும், உம்முடைய குடிலில் வெறுமையாக இருந்த இடத்தில் யானையார் அவர்களுக்கு முன்னர் யாராவது குடியிருந்தாரா ?” என்று கேட்டார்கள். அதற்கு அவன் 'இல்லை, ஆணுல்-’ என்று சொல்லவாரம்பித்தான். விசாரணைக் குழுவினர் அவனே மேலும் பேச விடாது, விசாரணை முடிந்துவிட்டது. என்று அறிவித்தார்கள்; தீர்ப்புப் பின்னர் அறிவிக்கப்படும் என்ருர்கள். கனங் தங்கிய

Page 35
64,
யானையாரின் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட அறு சுவை விருங்தை அருந்திய பின்னர் மனிதனை அழைத் துத் தமது தீர்ப்பைத் தெரிவித்தார்கள்: ' பிற்போக் கான உனது சிக்தனையின் காரணமாக எழுந்த தப்பபிப் பிராயத்தினுலேயே தகராறு உண்டாயிற்று என்று காம் கருதுகிருேம். உனது கலனைப் பாதுகாக்கும் புனித மான கடமையை யானையார் நிறைவேற்றியுள்ளார் என் பதே எமது முடிவு. வெறுமையாக் உள்ள இடத்தை உபயோகப்படுத்துவது உனக்கே நன்மை என்பதாலும், அதனை உபயோகப்படுத்தும் அளவுக்கு கீ புத்திசாதுரி யம் இல்லாதவனுக இருப்பதாலும், உங்கள் இருசாரருக் கும் ஏற்ற வகையில் சமரசமான ஏற்பாடொன்றைச் செய்தல் அவசியம் என்று எமக்குத் தோன்றுகிறது" யானையார் அவர்கள் உனது குடிலைத் தொடர்ந்து ஆண்டு வரட்டும். ஆணுல், உன்னுடைய தேவைக்கு ஏற்ற மற்ருெரு குடிலை வேருேர் இடத்தில் அமைத்துக் கொள்ள நாம் அனுமதி வழங்குகிருேம். அதனை எவரும் அபகரிக்காமல் காம் பாதுகாப்பளிப்போம்.”
மனிதன், வேறு வழி இல்லாமையாலும் மறுப்புத் தெரிவித்தால் விசாரணைக் குழுவினரின் பல்லும் நகமும் தன்னைக் கிழித்துவிடும் என்று அஞ்சியமையாலும் அவர்களின் யோசனைப்படி மற்ருெரு குடிலை அமைத்துக் கொண்டான். ஆணுல், குடில் தயாரானதுதான் தாமதம் திருவாளர் காண்டா மிரு கனர் வந்து, அவனைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டு, அவனுடைய குடிலை அபகரித்துக் கொண்டார். இதனை விசாரிப்பதற்கென்று மீண்டுமொரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. முன்னைய தீர்ப்பே இம்முறையும் வழங்கப்பட்டது. இப் படியாகத் திருவாளர் எருமையார், திருவாளர் வேங்கை யார், திருவாளர் கழுதைப் புலி ஆக எல்லோருக்கும்

65
புதிய குடில்கள் கிடைத்தன. விசாரணைக் குழுவினுல் தனக்கு நன்மை உண்டாகா தென்பதைக் கண்ட மனி தன் தானே தீவிர கடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தான். பூமியில் திரியும் எதுவும் பொறியிற் சிக்கக் கூடியதே என்று தனக்குள் சொல்லிக் கொன்டான். அதாவது மனிதரைச் சில காலத்துக்குத்தான் ஏமாற்ற முடியும் கெடுகிலும் ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டான்.
இதற்கிடையில் காட்டு ராஜாக்களின் குடில்கள் பழு தடையவாரம்பித்தன. இப்படி இருக்கையில், மனிதன் ஒருநாட் காலை வெளியே சென்று பெரிதும் சிறந்ததுமான வீடொன்றைக் கட்டினன். திருவாளர் காண்டா மிருகனர் அதைக் கண்டதும் பாய்ந்து ஓடினர். அங்கே அவருக்கு முன்பே யானையார் போய்ச் சேர்ந்து தூங்கிக்கொண் டிருப்பதைக் கண்டார். இப்படியே வேங்கையார், சிங்க ணுர், கரியார், எருமையார், கழுதைப் புலியார். முதலை யார் எல்லோரும் கான் முக்தி நீ முந்தி என்று வந்து சேர்ந்தார்கள். இந்த நிலையில் வீட்டின் உரிமை பற்றி அவர்களுக்கிடையில் வாக்குவாதம் உண்டாயிற்று. வாய்ச்சண்டை முற்றி, அடி பிடியில் முடிந்தது. அந்தத் தருணம் பார்த்து மனிதன் வீட்டுக்கு கெருப்பு வைத்து விட்டான். வீடும் காட்டு ராஜாக்களும் எரிந்து தரைமட்ட மாயினர். *அமைதி காண்பதற்குச் செலவு அதிகம் தான். என்ருலும் பெறும் ' என்று சொல்லிக் கொண் டான். இதன் பிறகு, அவன் சக்தோஷமாக வாழ்க் தான்."
கென்யாட்டாவின் இந்த உருவகக் கதையைப்
படித்த இரண்டோர் ஆண்டுகளுக்குப் பின்னர், வெள்ளை யர்கள் மிஸ்ர், எகிப்து காட்டைக் கைப்பற்றிய

Page 36
66
விதத்தை விளக்கும் மற்றேர் உருவகக் கதையைப் படித்தேன். அதன் சுருக்கம் வருமாறு.
கொஹா என்ற பெயருடைய ஒருவன் (இவனை மிஸ் றின் தென்னலிராமன் எனலாம்) தனது வீட்டை வேருெருவனுக்குக் குத்தகைக்குக் கொடுத்தான். ஆனல் ஒரு நிபந்தனை விதித்திருந்தான். அந்த வீட்டின் சுவ ரொன்றிலே யுள்ள ஒர் ஆணியைத் தான் விரும்பிய போதெல்லாம் டார்வையிட அனுமதிக்க வேண்டு மென் பதே அந்த நிபந்தனை. இந்த நிபந்தனைபடி, குத்தகைக் குக் கொடுத்த மறுங்ாளே அவன் தனது ஆணியைப் பார்க்கப் போனுன், அப்பொழுது வீட்டுக்காரன் காலை ஆகாரம் அருந்திக்கொண்டிருந்தான். ஆகவே, வக்தவ னுக்கும் ஆகாரம் அளித்தான். மறுநாள் கொஹா மத்தி யான உணவருந்தும் நேரத்தில் ஆணியைப் பார்வை யிடப் போனன். மத்தியான உணவு கிடைத்தது. பிறகு இரவு கேரத்தில் போனன். இப்படியே கடைசி யாக வீட்டு எஜமானன் இல்லாமல் மனைவி மட்டும் தனி யாக இருக்கும் நேரத்திலும் போகத் தலைப்பட்டான்.
வீட்டுக்காரனுக்குப் பைத்தியம் பிடித்தது. அவனைச் சிகிச்சை நிலையத்துக்குக் கொண்டு சென்ருர்கள். அதன் பிறகு ஆணி பார்க்க வந்து கொண்டிருந்தவன் அவனுடைய மனைவியை ஆண்டதுமல்லாமல், அந்த வீடும் அங்குள்ள சகலமும் தனதே என்றும் உரிமை பாராட்டலாணுன்.
இந்தக் கதையை 1953 இல் மிஸ்றின் அமைச்சர் முகம்மது பவுஸி அவர்கள் அமெரிக்க வெளிநாட்டு மந்திரி ஜோன் பொஸ்டர் டல்லஸ் அவர்களுக்குச் சொன் னதாக மிஸ்றின் முன்னே நாள் ஜனுதிபதி கசீப் அவர் 6ir g5LD5. “l founSoir (SuTeig' (Egypt's Destlny) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

காண்டா மிருகமும் நீர் யானையும் 11
மறுநாட் காலை, ஆகஸ்ட் 16ஆந் திகதி, கிச்வாம் பாவை விட்டுக் கிளம்பி கஸெனியி விமானத் துறையை அடைந்தோம். விமானத் துறைக்குச் சென்ற காரில், முந்திய இரண்டு சந்தர்ப்பத்திலும் என் கூட வந்த அதே சக பிரதிநிதிகள் மூவரும் பிரயாணஞ் செய்தார்கள். ஒரு பிரிட்டிஷ் ஹொண்டுராஸ் பிரதிநிதி; மற்றவர் கனேடியப் பிரதிநிதி; மூன்ருமவர் ஆஸ்திரேலியப் பிரதிநிதி.
உகண்டியர்கள் கீன்யர்களைப் பார்க்கிலும் தேக புஷடியும் வாளிப்புமுள்ளவர்களாக விளங்கினர் என் பதை நாங்கள் அவதானித்தோம். நில வளமும் நீர் வளமும் ஓங்கியிருந்தமையே இதற்குக் காரணமென்பதை யும் கண்டோம். இதுபற்றி வாதப் பிரதிவாதங்களில் இறங்க இடந்தராது. வழி கெடுகிலும் மண்டிக் கிடந்த இயற்கைக் காட்சிகள் எம்மைத் தம்பால் ஈர்த்தன. இந்தக் காட்சிகளில் முக்கியமானவை குளங்தோறும் மிதந்து கொண்டிருந்த நீர் யானைகளாகும். இந்த நீர் யானைகள் கல்முனைப் பகுதிக் கண்டங்களுக்கு அண்மை யில் காணப்படும் நீர்த் தேக்கங்களில் மிதக்கும் எருமை மாடுகளை எனக்கு நினைவூட்டின.
ஆயினும் நீர் யானைக்கும் காட்டெருமைக்கும் தோற் றத்தில் மட்டுமல்லாமல் பருமன், எடை ஆகியவற்றிலும் பாரதூரமான மாறுபாடுகள் உள்ளன. பீப்பாய் போன்ற வடிவமுள்ள நீர் யானை அருவருப்பான தோற்றமும் "வார்-கோலி போன்ற வாயுமுடையது. யானைக்கு அடுத்தபடியாக உருவத்தில் பெரியதான நீர் யானையின் சராசரி எடை கான்கு தொன் ஆகுழ்

Page 37
68
நீர் யானையை முதன் முதலாக கான் கண்டது 1947 ஜனவரியில் காஹிரு-கெய்ரோ-மிருகசாலைக்குச் சென்றிருந்தபோதாகும். வகை தொகையான மிருகங் களைக் கொண்ட அவ்விடத்தில் செயற்கையான சிறிய தடாகமொன்றில் தன்னந்தனியாக அந்த நீர் யானை மிதந்து கொண்டிருந்ததைக் காண எனக்குப் புதுமையா யிருந்தது. அன்றைக்கு அதன் தமிழ்ப் பெயர் என்ன வென்று யாராவது கேட்டிருந்தால், “காண்டா மிருகம்’ என்று சட்டென்று பதில் சொல்லியிருப்பேன். ஏனென் ருல் அதுவரை நீர் யானையை கான் கண்டதில்லை.
காண்டா மிருகத்தைப் பற்றிப் பள்ளி நாட்களி லேயே கேள்வியுற்றிருந்தேன். குழந்தையாக இருந்த காலத்தில், “அதோ பேய் வருகிறது; சங்யாசி வருகிருன்’ என்றெல்லாம் பயமுறுத்தியதைப் போல, “காண்டா மிருகம் வருகிறது” என்று சொல்லியும் யாராவது என்னைப் பயமுறுத்தியிருக்கலாம். காண்டா மிருகத் தைக் கதாநாயகனுகக் கொண்ட பாட்டி கதை எதையும் நான் கேட்டிருக்கலாம்.
காண்டா மிருகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டும் நீர் யானையைப் பற்றிக் கேள்விப்படாமலும் இருந்தமைக்கு முன்னையது இந்தியா போன்ற காடுகளில் காணப்படு தலும் பின்னையது ஆபிரிக்காவுக்கு மட்டுமே பிரத்தி யேகமான விலங்காக இருத்தலும் காரணமாயிருக்க
6
நீர் யானை என்னும் சொல் பரிச்சயமில்லாத அங்கிய விலங்கினைக் குறிப்பதற்காக உண்டாக்கப் பெற்ற சொல்லாகும். இங்கிலிஸ் வார்த்தைகூட இத்தகையதே. (Hippopotamus) என்னும் இங்கிலிஸ் சொல் (Hippo, potomus) ஆகிய கிரேக்க சொற்களின் சேர்க்கையாகும்.

69
(Hippo) என்ருல் கிரேக்க மொழியில் நீர் (ஆறு) என்று பொருள். (Potomus) என்ருல் குதிரை. தோற்றத்தில் யானையை ஒத்த இந்த மிருகத்துக்குக் கிரேக்கர் நீர்க் குதிரை என்று பெயரிட்டமைக்கு, அந்தக் காலத்துக் கிரேக்கர் யானையை அறிந்திராமை காரணமாயிருக்க லாம். மாவீரன் சிக்கந்தர்-அலெக்சாந்தர்-முதன் முறை யாக யானையைக் கண்டபோது பிரமிப்படைந்தான் என்று படித்தது இச் சங்தர்ப்பத்தில் நினைவுக்கு வரு கிறது. (Hippopotamus) என்னும் சொல்லைச் சொல்லுக் குச் சொல் அர்த்தம் கண்டு நீர்க் குதிரை என்று பெயர்க் காமல் நீர் யானை என்று பெயர்த்தமை பொருத்தமே.
காண்டா மிருகத்தின் பிரத்தியேக அம்சமாக விளங் குவது அதன் கூரிய கொம்பாகும். மற்றும்படி காண்டா மிருகமும், நீர் யானையும் பழக்கமில்லாதவர்களுக்கு ஏறக் குறைய ஒன்று போலவே தோன்றும். இன்றைய மாண வர்களுக்கு நீர் யானையையும் காண்டா மிருகத்தையும் பிரித்து இனங் காண்பதில் இடர்ப்பாடு இருக்க நியாய மில்லை. காங்கள் பாடசாலையில் படித்த காலத்தில் அபூர்வமாக விளங்கிய திரைப்படக் காட்சிகள் இன் றைய மாணவர்களுக்கு அபரிமிதமாகக் கிடைப்பதால், அவர்கள் பூமி சாஸ்திரம், சரித்திரம், விலங்கியல், தாவர வியல் ஆகிய சகல விஷயங்களையும் திரைப்படங்களின் உதவியுடன் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக் கிருர்கள். படமாளிகைகளில் காண்பிக்கப்படும் திரைப் படங்கள் சிலவும் அவர்களின் அறிவு விசாலமடைய அனுசரணை புரிகின்றன. ஆனல் இத்தகைய படங்களில் விலங்குகளே பிரதான பாத்திரங்களாக விளங்கினுலும் பண வதுலை உத்தேசித்து, படத் தயாரிப்பாளர்கள் பாலுணர்ச்சியைக் கிளறும் காட்சிகளையும் சண்டைக் காட்சிகளையும் புகுத்தி விடுவதால், மாணவர்கள் படம்

Page 38
70
பார்ப்பது நல்லதுதானு என்ற கேள்வியும் சில சக்தர்ப் பங்களில் எழவே செய்கிறது. - * 1952 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள பல பாட சா8லகளைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தபோது கல்வி புகட்டுவதற்கு அங்கெல்லாம் திரைப்படக் கூடங் களும், தொலைக்காட்சிக் கருவிகளும் பரந்த அளவில் பயன்படுத்தப்படுவதைக் கண்டேன். நமது காட்டில் இத்தகைய வசதிகள் இன்னமும் பெருவழக்கில் கொண்டு வரப்படாமையால் அநேக மாணவர்கள் இன்றும் பழைய முறைப்படியே தமது பாடங்களைக் கற்று வருகிறர்கள். இலங்கையில் எல்லாப் பாடசாலைகளிலும் இத்தகைய வசதிகளை ஏற்பாடு செய்வது சாத்தியமற்றதாக இருக்க லாம். ஆணுல் இதற்கென மத்திய நிலையமொன்றினை அமைக்கலாம். விஞ்ஞானம் போதிப்பதற்கு மாத்தளை யில் இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுவது இங்கு நினைவுக்கு வருகிறது.
சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஸாஹிருக் கல்லூரியில் காட்டப்பட்ட படமொன்றும் இச் சந்தர்ப்பத்தில் என் நினைவுக்கு வருகிறது. பூமி சாஸ்திரத்தில் வரும் நிரைகோடு, நேர்க்கோடு ஆகிய வற்றை விளக்கும் அந்தத் திரைப்படத்தைப் பார்த்த போது இன்றைய சந்ததி மாணவர்கள் மீது எனக்குப் பொருமையே உண்டாயிற்று. காங்கள் படித்த காலத் தில் எழுத்து, வாசினை, கணிதம் ஆகியவற்றுக்கே முக்கியத்துவமளிக்கப்பட்டது!
சுமார் ஒன்றரை மணி நேர விமானப் பயணத்தின் பின்னர் ஜின்ஜா என்னுமிடத்தை அடைந்தோம். சுமார் ஐந்து மணித்தியாலத்தை அங்ககரையும் சுற்றுப்புறங் களையும் பார்வையிடுவதில் செலவிட்டோம். இந்தச் சுற்றுப் பயணத்தின்போது ஓவன் நீர்வீழ்ச்சி அணை

71
யைப் பார்த்தோம். கைல் நதி கீரை அதன் ஊற்று மூல மொன்றிலே மறித்துத் தேக்கி வைக்கும் இந்த அணை பூர்த்தியானதும் உலகின் மிகப் பெரிய மின்சார உற் பத்தி நிலையத்தைக் கொண்ட நாடாக உகண்டா விளங்கு மெனவும் அதன் பயணுக உகண்டாவின் தொழில் துறை சிறப்பாக வளமடையுமென்றும் எமக்கு விளக்கப் பட்டது.
1947 ஆம் ஆண்டில் சுமார் 10 வார காலம் மிஸ்றில் தங்கியிருந்து பல இடங்களையும் சுற்றிப் பார்த்தமையால் ாைல் கதியை மறித்துக் கட்டும் ஒவன் நீர்வீழ்ச்சி அணை மிஸ்றில் கான் கண்ட கைல்கதியை நினைவூட்டியது. மிஸ்றின் இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய முக்காலமும் கைல் நதியுடன் பின்னிப் பிணைந்ததென் பதைப் புத்தகங்கள் மூலம் படித்தும் கேரில் கண்டும் இருந்தேன். ஆயினும் ஜின்ஜாவில் அங்கதியைப் பற்றிப் பல புதிய தகவல்களை அறிந்தேன். எத்தியோப்பிய மலை முகட்டிலிருந்து ஆரம்பமாகும் நீல நைல் நதி ஒன்றும் லேக் விக்டோரியாவிலிருந்து தொடங்கும் வெள்ளை கைல் ஒன்றுமாக இரண்டு கைல் நதிகள் உண்டென்பதும் இவை இரண்டும் கர்தூமில் சங்கமித்து அஸ்வான் வழி யாக ஆறு முனைகளில் வழிகிறதென்பதும் கான் அறிந்த புதிய தகவல்களில் ஒன்ருகும். கைல் நதியின் ஊற்று மூலங்களுக்கும் அது சென்றடையும் இடமாகிய மத்திய தரைக் கடலுக்குமிடையேயுள்ள 3500 மைல் தூரத்தில் பல அணைக்கட்டுகள் உள்ளன. இவற்றில் ஒவன் நீர் வீழ்ச்சி அணையும் அஸ்வான் அணையும் அண்மைக் காலத்தில் அதிக பிரசித்தி பெற்றவையாகும்.
ஜின்ஜாவிலிருந்து விமானமேறிப் பதினைந்து நிமிட நேரத்தில் கிஸ"மு போய்ச் சேர்ந்தோம். ஆறு நாட் களுக்கு முன்னர் பிரிந்து சென்ற கீன்யாவுக்கு மீண்டும் வந்தடைந்தோம். w

Page 39
கீன்யாவில் ஸாஹிரு மாணவன்
12
கிஸ"மு ஹோட்டல் போய்ச் சேர்ந்த என்ஜன எதிர் பாராத அழைப்பொன்று காத்திருந்தது. சாம்ராஜ்யப் பாராளுமன்றச் சங்கப் பிரதிநிதிகள் குழுவிலிருந்த ஆறு முஸ்லிம்களையும் கெளரவிக்கு முகமாக, கிஸாமு பள்ளி வாசல் வளவில் வரவேற்புபகார மொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார்கள். கிஸாமுவில் பள்ளிவாசல் ஒன்றுண்டு என்ற விஷயம் எனக்கு அது வரை தெரியாதிருந்தது.
பள்ளிவாசல் வளவில் பெருங் தொகையானுேர் குழுமியிருந்தார்கள். அதிதிகளாகச் சென்றிருந்த காங் கள் அறுவரும் சொற்பொழிவு நிகழ்த்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். முதலாவதாக, பாகிஸ்தான் மக்கள் பிரதிநிதிகள் சபையின் உப சபாநாயகரும் சிக்தி முஸ் லிம் பிரமுகருமான கெளரவகஸ்தார் உரை நிகழ்த்தினுர். காதியானிகள் பற்றி ஒளிவு மறைவின்றி அவர் குறிப் பிட்ட சில கருத்துக்கள் சபையோர் மத்தியில் பரபரப் புண்டாக்கின. இந்தச் சலசலப்பு சற்று நேரத்தில் தணிந்தது. காதியானிகள் சிலரும் அங்கு பிரசன்னமா யிருந்தார்கள் என்பது இதனுல் தெளிவாயிற்று.
கஸ்தார் அவர்கள் காதியானிகள் பற்றிப் பேசா திருந்திருக்கலாமே என்று சக அதிதிகளில் ஒருவர் என் காதுக்குள் ஒதினர். பாக்கிஸ்தானின் அன்றைய நிலை வரம் அவரை அவ்வாறு பேசத் தூண்டியிருக்கலாம் என்று நான் அவருக்குச் சொன்னேன். அங்காட்களில் பாக்கிஸ்தானில் காதியானிகளுக்கு எதிரான பல இயக் கங்கள் இருந்தன. இவற்றில் ஒன்றினைச் சேர்ந்தவர்

73
கள் இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் காதியானிகள், பிற சமயத்தவர்களைப் போல, சிறுபான்மையினர் என்று பிரகடனஞ்செய்யுமாறு கிளர்ச்சி செய்தார்கள். செளத்திரி ஸப்ருல்லா கான் அவர்களைப் போன்ற உயர் பதவிகள் வகித்துவந்த காதியானிகளைப் பதவி நீக்கம் செய்தல் வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இக் கிளர்ச்சிகளின் விளைவாகப் பஞ்சாப் மாகாணத்தில் பல கலவரங்கள் கடந்தன.
பேசுவதற்கு என் முறை வந்தபோது, பிலால் (றலி) அவர்களின் சரித்திரத்தை எடுத்துக் காட்டி, ஆரம்ப கால முதலே இஸ்லாம் நிறவேற்றுமை பற்றிய பிரச் சினைக்குத் திருப்திகரமான தீர்வு கண்டிருக்கிறதென் பதை விளக்கினேன்.
இந்த வரவேற்பு வைபவத்துக்குப் பின்னர் மாலிக் நூர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்குப் போனுேம், பாகிஸ்தானைப் பிறப்பிடமாகக்கொண்ட நூர் அவர்கள் ஒழுங்கு செய்திருந்த இந்த விருந்து, கிஸ"மு வுக்குப் பதிலாக லாகூரில் கடைபெற்றிருக்கலாம் என்று சொல்லக் கூடிய வகையில், நூற்றுக்கு நூறு பாகிஸ்தான் உணவு வகைகளைக் கொண்டதாக அமைந் தது. பாஸ்மதி அரிசி கொண்டு தயாரிக்கப்பெற்ற பிரியாணி, கோழிக் கொர்மா-குறுமா-, ஆட்டிறைச்சி வறுவல், காரட் கிழங்குத் துவையல் முதலியன அங்கு பரிமாறப்பட்டன.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கீன்ய முஸ் லிம் ஒருவரைச் சென்ற மாதம் கொழும்பில் சந்தித்தேன். இவருக்குக் கிஸ"முவுக்கு அண்மையிலே ஒரு ஹோட்டல் உண்டு. கண்டியிலுள்ள முஸ்லிம் ஹோட்டலை யொத்த இந்த உணவுச் சாலைக்கு சுதந்திரத்துக்குப் பின்னர் கீன்ய நிர்வாகத் துறையில் அதிகப் பங்கு பெறும்
I 297ー5

Page 40
74
ஆபிரிக்க மக்கள் மிகுந்த ஆதரவளிக்கிருர்களாம். பிரிட் டிஷ் ஆட்சிக் காலத்தில், தமது காட்டுக்குச் சொந்தமில் லாத பிற உணவு வகைகள் கீன்யாவில் ஆதிக்கம் பெறு வதை இங்கிலிஸ்காரர்கள் விரும்பவில்லையாம்! கொளுத் தும் வெயிலிலும் தமது நாட்டு உடையான 'சூட்” அணிந்து, சுவாத்தியத்துக்கு ஏற்றவாறு உணவு கொள் ளாது, தமது காட்டு உணவுகளையே உண்டு வாழ்ந்த அவர்களின் மன வைராக்கியத்தையும் மரபுப் பற்றை யும் என்னென்பது!
ஆயினும் மாலிக் நூரின் விருந்தில் என்னைக் கவர்ந்த அம்சம் அங்குப் பரிமாறப்பெற்ற உண்டிகள் அல்ல; கறுப்பின முஸ்லிம்கள் இருவரும் அவ்விருந்திற் கலந்துகொண்டமையே. எனது ஆப்பிரிக்கப் பிரயா ணத்தில் கறுப்பின முஸ்லிம்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தமை அதுவே முதல் முறையாகும். எனவே வயிற்றுக்கு விருந்து ஈவதில் கவனம் செலுத்தாது அறி வுக்கு விருந்திய முற்படலானேன். என் நிமித்தமாகப் பாவம் அவர்களும் உண்டி சுருக்க வேண்டியதாயிற்று !
அவ்விருவரில் ஒருவர் ஆரம்பப் பாடசாலையொன் றிலே ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இங்கிலிஸில் தேர்ச்சி பெற்றிருந்த அவரிடம் பல விஷயங்களைக் கேட்டறிக்தேன். நியான்ஸா மாகாணத் தில் இஸ்லாம் பரவிய வரலாறு பற்றி விசாரித்தபோது, பிழைப்புத் தேடி மொம்பாஸா நகர் வந்தவர்கள் மூலமா கவே அது பரவிற்றென்று சொன்னுர், லேக் விக்டோ ரியா வழியாகப் பரவி யிருக்காதா என்ற என் கேள் விக்கு அவர் தகுந்த விடை தரவில்லை. பிற் காலத்தில் கியான்ஸா மாகாண முஸ்லிம் சங்கம் உருவாக்குவதற் குக் காரணகர்த்தராக விளங்கியவர் இவரே.

75
இவருடைய மருகரான அப்துல்லா சலீம் முதெயிஸி என்பவர் எனது மேற்படி பிரயாணத்துக்குச் சில ஆண்டு களின் பின்னர் கொழும்பு ஸாஹிருக் கல்லூரியில் விடுதி மாணவனுகச் சேர்ந்தார். உதைபந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய சலீமுக்குக் கொழும்பில் பல இரசிகர்கள். இந்தக் கியாதியின் காரணமாக எனக்குச் சில பிரச்சினை கள் எழுந்தன. இளம் பெண் ஒருத்திக்கு இந்தப் பங் தாட்ட காயகன் மீது மாளாத காதல். காதலினல் தீரம் பெற்ற அந்த அனுர்கலி தனது சலீமுக்கு ஒரு கடிதம் வரைந்தாள். காதல் என்ருலே கரைச்சல் என்றுதானே பொருள். பாவம் அந்தப் பெண் சலீமுக்கு வந்த காதல் தூது விடுதி அதிபர் கைக்கு எட்டியது. அவர் கடிதத்துடன் கேராக என்னிடம் வந்தார். உலக வழ மையை அனுசரித்து அந்த மடலைக் குப்பைக் கூடைக்கு அர்ப்பணித்தலே முறை என்று கான் சொல்ல அவரும் அவ்வாறே செய்தார். சலீமின் வளர்ப்புத் தந்தையின் ஸ்தானத்தில் இருந்த நான் வேறென்ன செய்ய முடியும்! தனது கடிதம் சலீமின் காதலைச் சம்பாதிக்கத் தவறி யதை எண்ணி, அந்தப் பெண் மன மடிவு கொண்க டாளோ? இன்னமும் காதல் கடிதங்கள் எழுதிக் கொண்டே இருக்கிருளோ ? நவீன போக்கை அனு சரித்து பத்திரிகைகளில் மணமகன் தேவை என்று விளம்பரம் செய்கிருளோ? தனக்கு இயல்பாயமைந்த எழுத்து வன்மையை வளர்த்து இன்று கவியரசியாகி விளங்குகிருளோ? நல்ல கணவனைப் பெற்றுக் குழந்தை குட்டிகளுடன் குடித்தனம் செய்கிருளோ யாரறிவார்?
அப்துல்லா சலீம் முதெயிஸிக்கு இந்தக் கடிதம் பற் றியோ தனக்கோர் அணுர்கலி இருந்தது பற்றியோ எதுவுமே தெரியாது. தெரிந்திருந்தால், மனைவியின் நிமித்தமாகப் பிரஜாவுரிமை பெற்று இங்கையிலேயே

Page 41
76
குடியும் குடித்தனமுமாகத் தங்கிவிட்டிருக்கக் கூடும்! 1964 ஆம் ஆண்டில் அஸ்ஹார் மாநாட்டுக்குச் சென் றிருந்த போது கீன்யப் பிரதிநிதியிடம் இவரைப் பற்றி விசாரித்தேன். குடிவரவு, குடியகல்வு இலாகாவில் உயர் பதவி வகித்து வரும் முதெயிஸி நியான்ஸா மாகாண முஸ்லிம் சங்கத்தின் முக்கிய உத்தியோகஸ்த ராக விளங்குகிறர் என்றும் இஸ்லாம் பற்றிய பாட நூல் ஒன்றினை எழுதியுள்ளார் என்றும் அறிக்தேன். இலங் கையையும் ஸாஹிருவையும் கன்றியுடன் நினைவு கூர்ந்து வருகிருர் என்றும் அந்தப் பிரதிநிதி சொன்னுர், ஸாஹிருவில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், முதெயிஸி, தமது தாய் நாடாகிய கீன்யாவில் கடை பெற்ற அரசியல் சம்பவங்களைக் கருத்துரன்றிக் கவ னித்து வந்தார். கீன்ய அரசியல் வானில் புதிய தாரகை யாகக் கிளம்பிய ரொம் எம்போயா அவர்களிடமிருந்து அடிக்கடி அவருக்குக் கடிதங்கள் வரும்.
முதெயிஸியின் பள்ளித் தோழர்கள் எவரேனும் இலங்கைப் பெண்ணின் ஒருதலைக் காதல் பற்றி அவ ருக்கு எழுதக் கூடும். என்றலும் தமது தாய் காட்டுக் கும் மக்களுக்கும் ஆற்றவேண்டிய தொண்டினை முன் னிட்டு விடுதி அதிபரின் சதியில் கானும் உடந்தையாக இருந்தமைக்காக என்னிடம் நஷ்ட ஈடு எதுவும் கேட்க மாட்டாரென்பது திண்ணம்!
குடி வரவு குடியகல்வு இலாகாவில் முதெயிஸி பாஸ்போர்ட், விசா முதலியன வழங்கும் அதிகாரியாக இருக்கிருராம், அவருக்கு அது தகுந்த வேலையென்றே சொல்ல வேண்டும். ஏனென்றல் இலங்கை வருவதற்கு வேண்டிய பிரயாணப் பத்திரங்களைப் பெறுவதற்காக மார்கோலிக்கும் நைரோபிக்கும் பல தடவை கஷ்டட்

77
பட்டுப் பிரயாணஞ் செய்தாரென்பதை நான் அறிவேன். இவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு அவருக்கும் கிடைத் தது இரண்டு மாதம் மட்டும் தங்கக் கூடிய தற்காலிக விசாவே, இலங்கை வந்து முறையான விசா பெறுவதற் கிடையில் சில காலங் கழிந்தது. இந்தக் கால எல்லைக் குள் கள்ளத்தோணியாகக் கருதப்பட்டு காடு கடத்தப் படும் ஆபத்து அவரைச் சூழ்ந்திருந்தது. இலங்கைக்கு வருவதற்கு அனுமதி பெறு முன்னர் பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டியிருந்தது. பல நாட்கள் பல ரைக் கண்டு பேசியதன் பின்னரே அனுமதி கிடைத்தது
இவ்வளவு அனுபவமுள்ள ஒருவர் பாஸ்போர்ட் அதி காரியாக வேலை பார்ப்பதென்ருல் பல பேருக்கு ஆபத் பாந்தவனுக இருப்பார் என்பதில் சங்தேகமில்லை. அஸ் ஹார் மாாகாட்டில் தான் சந்தித்த கீன்யப் பிரதிநிதி இதனை ஊர்ஜிதப்படுத்தினர்
மறுநாள் வழக்கம்போல அதிகாலையிலேயே எழுந்து விட்டேன். சக பிரதிநிதிகள் தமது வழக்கம்போல வெகு நேரம் பிக்தியே எழுந்தமையால் காலை ஆகாரத் துக்கு அவர்கள் வரவைக் காத்திருக்க கேர்ந்தது. இந்த இடைவேளையில் என் சிந்தனை முந்திய ஆறு நாட்கள் தங்கியிருந்த உகண்டாவுக்குத் தாவியது. உகண் டாவை நினைத்ததும் ஆபிரிக்காவைப் பற்றைக் காடு செறிந்த பாலை என்று அதுகாலவரை கொண்டிருந்த அபிப்பிராயம் அடியோடு மறைந்தது. உகண்டாவில் தான் கண்ட இயற்கைக் காட்சிகள் அவ்வெண்ணத்தை விரட்டியடித்தன. உகண்டா பற்றி என் மனதில் அழுத் தமாகப் பதிக்திருந்த ஒரு விஷயம் உகண்டாவுக்கும் வாழை மரத்துக்குமுள்ள கெருக்கமான பிணைப்பாகும்.

Page 42
வாழையோ வாழை
13
ஏனென்றல், எனது உகண்டா சுற்றுப்பிரயாணத் தின்போது, என்னைப் பொறுத்தவரையில், ஒரு கண்டு பிடிப்புச் சம்பவித்தது. புகண்டா மக்களாகிய பகண் டாக்களின் ஜிவாதாரம் வாழைக்காயே என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பாகும். இலங்கையர்களாகிய நமக்கு அரிசி எப்படியோ, பாலைவன வாசிகளாகிய பதவிய்யீன் களுக்குப் பேரீச்சம்பழம் எப்படியோ, கீன்யர்களுக்குச் சோளம் எப்படியோ, ஆஸ்திரேலியர்களுக்குக் கோதுமை எப்படியோ, ஐரிஷ்காரர்களுக்கு உருளைக்கிழங்கு எப் படியோ அப்படியே புகண்டாக்களுக்கு வாழை அத்தியர் வசிய உணவாக விளங்குகிறது. விளக்கமாகச் சொல்வ தானுல் வாழை இங்கு வாழைக்காயையும் அதன் மாவை யும் குறிக்கும். பகண்டாக்கள் வாழைக்காய் மாவைக் கொண்டு உயிர் வாழ்கிறர்கள். உகண்டாவில் இந்த 'அதிசயத்தை நான் கண்டுபிடித்த சமயத்தில், கமது மாத்தறை மாவட்டத்தின் ஓரிரு கிராமங்களிலே பிட் டுக்கு அரிசி மாவுடன் வாழை மாவும் கலந்து உபயோ கிக்கப்படுகிறதென்ற புதினம் எனக்குத் தெரியாதிருந் தது. மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த கண்பரொருவர் அண்மையில் இதனை எனக்குச் சொன்னுர், சொந்த காட் டில் கடக்கும் பல விஷயங்கள் நமக்குத் தெரியாமலே போய்விடுகின்றன. என்பதற்கு இது நல்ல சான்று. இப்படித்தான், முன்னர் மலேசியப் பிரயாணம்பற்றி எழுதுகையில், கம்பொங் சைலோங்கில் கான் கண்ட மேளத்தின் கதையும், தொழுகைக்கான அழைப்பாகிய பாங்கு சொல்வதற்கு முன்னுேடியாக அங்குள்ள பள்ளி வாசல்களில் மேளம் அடிப்பார்கள் என்றும், இந்த வழக்

79
கம் இலங்கையில் இல்லையென்றும் எழுதியிருந்தேன். அதைப்படித்த நண்பரொருவர், கல்முனைப் பகுதிப் பள்ளிவாசல்களில் இந்த நடைமுறை உண்டென்பது தனக்கு நிச்சயமாகத் தெரியுமென்றும் இன்ன பள்ளி வாசலில் அக்த வழக்கம் இன்றுமுண்டு என்றும் குறிப் பிட்டிருந்தார், நண்பர் குறிப்பிட்ட பள்ளிவாசலில் மேளம் இருக்கும்.விஷயம் எனக்குத் தெரியாமற்போனது ஆச்சரியந்தான் ஏனென்றல், யுத்த அவசரகால உதவி அரசாங்க அதிபதியாக கல்முனைப் பகுதியில் கான் கடமையாற்றிய காலத்தில் இதே பள்ளிவாசல் வளவில் ஜூம்ஆத் தொழுகைக்கும் சென்றிருக்கிறேன். இருந்தும் பாங்குக்கு முன்னர் மேளம் ஒலிக்கும் விஷயம் எனக்குத் தெரியாமற் போய்விட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில், மாபெரும் கணித மேதையும், விஞ்ஞான விற்பன்னருமாகிய சர். ஐஸ்க் நியூட்டன் அவர்களின் பொன்மொழி நினைவுக்கு வருகிறது:
“சமுத்திரக் கரையில் நின்று விளையாடிய பைய னைப் போலவே என் வாழ்க்கை கழிந்திருக்கிறது. சத் தியமாம் சாகரம் என்முன்னே விரிந்து, பரந்து கிடக்க, காணுே மழு மழுப்பான கூழாங்கற்களையும் அழகிய சிப்பிகளையும் தேடிப் பொறுக்குவதிலேயே என் வாழ்க் கையைச் செலவிட்டிருக்கிறேன்.” (நியூட்டனின் இதே கருத்தை, “கற்றதுகைம்மண்ணளவுகல்லாததுலகளவு' என்ற பாடல் வெகு கச்சிதமாக விளக்குகிறது.)
“l seem to have been only like a boy on the Seashore and diverting my self in now and than finding a smoother pebble or a prettier shell, than ordinary while the great ocean of truth lay all undiscovered before me.'

Page 43
80
நிற்க, பகண்டாக்கள் வாழைக்காயில் மாவு தயா ரிப்பதை நான் கேரிற் கண்டேன். மா மட்டுமல்லாமல் பீயர், சாராயம் போன்ற குடிவகைகளும் தயாரிக்கிறர் களாம். அநேகமாக ஒவ்வொரு வீட்டு வளவிலும் ஏராள மான வாழை மரங்களைக் காணலாம். மரச் சத்து அதிகமுள்ள காய்களைத் தேர்ந்தெடுத்து, காயவைத்து மாவாக இடிக்கிருர்கள். பனையோலையை மழைக்குக் குடையாகப் பிடிப்பதைப்போல, பகண்டாக்கள் வாழை இலையைப் பயன்படுத்துகிறர்கள்.
கீன்ய மண்ணில், கிஸ"மு ஹோட்டல் படுக்கையில் அரை நித்திரை வேளையில் இந்தக் கண்டு பிடிப்புப் பற்றி எண்ணங்கள் என் மனதில் வந்து மொய்த்தன. உகண்டாவில் கண்ட புதுமைகளைப் பற்றி கீன்யாவி லிருந்து அசை போட்டபோது, இலங்கையில் மூன்று தசாப்தங்களில் எனக்குப் பழக்கமான மூவரின் நினைவும் கூடவே தொற்றிக்கொண்டது. ஆயிரத்தித்தொளா யிரத்தி மூன்ரும், ஐந்தாம், ஆரும் தசாப்தங்களில் எனக் குப் பழக்கமான இம் மூவரும் என்னைப் பொறுத்த அள வில் வாழைக்காயுடன் தொடர்புபடுத்தப்படக் கூடிய வர்கள். ஆனல் ஒருவருக்கொருவர் தொடர்பற்றவர் கள். யாழ்ப்பாணம், சேகுமதார் பரிகாரி மாமா, செங் கற்படை சிக்கந்தர் காக்கா, மேன்மை தங்கிய ஹாஜி சத்தார் சேத் ஆகியோரே அம் மூவருமாவர். முதலா மவர் எங்கள் ஊரில் யூனுனி, ஆயுள்வேத வைத்தியரா யிருந்தவர்; எனது டாட்டனுரைப் பொறுத்தவரையில் சிறுபிள்ளை வைத்தியத்தில் ஒப்பாரு மிக்காருமிலா நிபுணராகத் திகழ்ந்தவர். சின்ன வயசில் எனக்கு மலே ரியா காய்ச்சல் வந்தால் பாட்டனர் உடனே சேகு மதார் பரிகாரி மாமாவுக்குத்தான் ஆள் அனுப்புவார். பரிகாரி மாமா வாதம், பித்தம், சிலேட்டுமம் ஆகியவற்றுக்கிடை

81
யில் நடைபெறும் துவந்த யுத்தம் பற்றி ஒரு கதாப் பிரசங்கமே நிகழ்த்திடுவார். அந்தப் பிரசங்கத்தைக் கேட் டுக் கொண்டிருந்தால், கசாயங்கள், பிறரின் முலைப் பாலிற் கலந்த குளிகைகள் முதலியவற்றை விழுங்கித் தீர்க்கவேண்டுமேயென்ற அரோசிக உணர்வெல்லாம் மாயமாய் மறைந்துவிடும்.
பரிகாரி மாமாவின் எண்ணம் வந்ததும் அவருடைய முதல் பத்தியத்தை நினைத்துக் கொண்டேன். மொங் தன் வாழைப் பிஞ்சுக் கறியும், குழைந்த சோறும் தான் பத்தியம். இந்தப் பத்தியத்தைப் பற்றி அண்மையில் எனது கண்பரொருவருக்குச் சொன்னபோது, அவர் ‘பதார்த்த துளுடாமணி’ என்னும் வாகட நூலிலிருந்து ஒரு சூத்திரத்தைச் சொன்னர்.
*மொந்தன் காய் வாயு சேர்க்கும்
உதிர் உடற்புண்ணைத் தீர்க்கும்’
என்பது அவர் சொன்ன வாகடம் பரிகாரி மாமா *பதார்த்தகுண சிக்தாமணி’ என்ற வாகட நூலைக் குறிப் பிட்டதாக எனக்கு ஞாபகம். மொந்தன் காயைப் பற்றி அந்த நூல் என்ன சொல்கிறதோ அறியேன். “பதார்த்த தடாமணி கதலி வாழையைத் தவிர மற்றெந்த வாழை யையும் பொதுவாகச் சிபார்சு செய்யவில்லை என்று கண்பர் சொன்னுர்.
'வாழை இளம் பிஞ்சன்றிக் கனி அருந்தேம்’ என்று தேரையர் வாக்கொன்றுண்டாம். இந்த வாக்கில் நிறைய உண்மையுண்டு என்றும் கண்பர் குறிப்பிட்டார். பகண் டாக்கள் இக்தப் புத்திமதியைக் கடைப்பிடித்து ஒழுகு கிருர்கள் என்று சொல்லவேண்டும். அங்கு வாழைப் பழத்திற்கு அதிக மதிப்பில்லை. இதனைக் கொண்டு தேரையர் “வாக்கு பண்டைக் கால முதல் புகண்டா

Page 44
82
மக்களுக்குத் தெரிந்திருந்ததென்ருே, புகண்டாவில் தேரையர் டி. ஆர். பி. காரராகச் சீவித்தாரென்றே நாம் முடிவு செய்தலாகாது!
பரிகாரி மாமாவின் நினைவு மங்கி மறைந்ததும் அதனிடத்தில் செங்கற்படை சிக்கக்தர் காக்காவின் நினைவு வந்தமர்ந்தது. இவர் சொந்தமாக வாழைத் தோட்டமொன்று வைத்திருந்தார் என்று ஞாபகம். கான் அரசாங்கப் பண்ணைகளைப் பார்வையிடச் செல்லும் காட்களில் இவர் என்னைக் கண்டதும் ஓடையின் ஓரத்தி லுள்ள தமது தோட்டத்திலிருந்து ஓட்டமும் கடையுமாக வந்து என்னை வரவேற்பார். கள்ளங்கபடமற்ற வெள்ளை யுள்ளம்படைத்த கிராம மக்களின் சான்ருகக் திகழ்ந்த இவர் கவி சொல்வதில் வல்லவராய் விளங்கினர். என் னைக் காணும் ஒவ்வொரு சக்தர்ப்பத்திலும் தமது தோட் டத்திலுள்ள நல்ல வாழைக்குலையாகப் பார்த்து வெட்டி, என் காரில் ஏற்றிவிடுவார். என்னுடைய மறுப்புகள் ஒன்றும் அவர் காதில் ஏற.
வாழைக் கனியை நினைந்ததும் மனதில் பளிச்சிடும் மூன்றமவர் ஒரு பிரமுகர். இலங்கையில் பாகிஸ்தான் காட்டின் முதலாவது ஸ்தானிகராக நியமனம் பெற்று கொழும்பு வந்த மேன்மை தங்கிய ஹாஜி சத்தார்சேத் அவர்களாவர். இவரிடமிருந்தே வாழைக்காய்ச் சீவலில் பொரியல் செய்யும் விதம்பற்றி அறிந்தேன். உருளைக் கிழங்குச் சீவலை நிகர்த்த இந்தப் பொரியல் கெடுகாளுக் குக் கெடாதிருக்கக்கூடியது என்பதையும் இவரிட மிருந்தே அறிந்தேன். அற்புதமான இந்தப் பொரியல் முறை சேத் அவர்களின் பிறந்த பூமியாகிய கேரளத் திலும்-மலையாளம்-பெரு வழக்கிலிருந்து வருகிறது.
வாழை, பற்றிய எனது சிக்தனை யோட்டத்தில், சிறுவனுயிருந்த காலத்தில் என் பாட்டனுர் எனக்கு

どこ;
வாங்கிக்கொடுத்த கார்ப்பட்டுச் சால்வையும் தோன்றி மறைந்தது. கேரளத்திலிருந்து தருவிக்கப்பட்ட அந்தச் சால்வை வாழைாகார்கொண்டு கெய்யப்பெற்ற தென்று அப்பொழுது அவர் சொன்னுர், வாழைகார் கொண்டு சால்வை கெய்யும் தொழில் கேரளத்தில் திருந்திய முறை யில் விரிவாக நடைபெறுகிறது என்று கேள்வி. பிலிப் பைன் வாசிகள் அன்னசி காரினுல் புஷ்ஷேர்ட்கள் தயாரிப்பதும் இங்கு என் ஞாபகத்துக்கு வருகிறது.
வாழையினுல் இன்னும் பல பயன்கள் உண்டு. வாழைத்தண்டு, வாழைப் பூ ஆதியன கறிக்கு உதவு கின்றன. வாழை இலையும், மடலும் உண்கலமாகப் பயன்படுகின்றன. வாழைச் சருகு பண்டங்களைச் சுற்றுவதற்குப் பயன்படுகிறது. வாழைாகார் மாலை தொடுக்கவும் கயிறு திரிக்கவும் உபயோகப்படுகிறது. இப்படி இன்னும் பல பயன்கள் வாழையினுல் உண்டு. பனையோ, தென்னையோ, வாழையோ அதிக பயனுள் ளது? இந்தப் பிரச்சினையைப் பாடசாலை மாணவர்கள் இலக்கிய மன்றங்களில் விவாதிக்க விடுவோமாக!
சோற்றுக்குப் பதில் வாழைக்காயைப் பயன்படுத்த் முடியுமா? இது பற்றி வைத்திய நிபுணர் ஒருவரை விசாரித்தேன். அவர் சோற்றில் உள்ள அளவு புரதச் சத்து வாழைக்காயில் இல்லை ஆதலால் அது முழுமை யான மாற்றுணவாக அமையாது என்ருர். இதற்காக வாழைமாவை நாம் பயன்படுத்தாது விடலாகாது. குறிப் பாக, அரிசிப் பற்ருக்குறையை நீக்க முயலும் இக் காலத் தில் வாழைமாவைக் கொண்டு தயாரிக்கப்படும் பிட்டு முதலிய பண்டங்கள் நல்ல துணை உணவுகளாக அமை யலாகாவா ?
வாழை பற்றிய இந்தப் பகற்கனவு அன்று (ஆகஸ்ட் 17 ஆங் திகதி) காலை முடிவின்றி நீடித்தது.

Page 45
84
காலை ஆகார நேரம் வந்ததும்தான் கனவு கலையலா யிற்று. காலை ஆகாரம் முடிந்த ஒரு மணி நேரத்தில் காங்கள் எல்லோரும் நியான்ஸா மாகாணத்தின் கெரிச்சோ மாவட்டத்திலுள்ள சொட்டிக் என்னுமிடத் துக்கு பஸ்ஸில் புறப்பட்டோம். கடல் மட்டத்திலிருந்து 6000-7300 அடி உயரமுள்ள சொட்டிக் பகுதி மழை வளம் நிறைந்த பூமி, தேயிலை செழிப்பாக வளரும் பகுதி; அன்றைய பிரயாணத்தின்போது, காம் முதலாவதாக *ஹைலன்ட் டி எஸ்டேட் என்னும் தேயிலைத் தோட்டத் தில் தரித்தோம்.
கொழுந்து கிள்ளும் கோதையர் இல்லாத் தேயிலைத் தோட்டம்
ஆபிரிக்க மண்ணில் தேயிலைத் தோட்டத்தைக் காணப்போகிறேன் என்றதும் மனம் துள்ளிக் குதித் தது. ஏனென்ருல் உலகின் இந்தப் பாகத்திலும் தேயிலை வளர்க்கப்படுகிறதென்ற சங்கதி எனக்குப் புதுசாக விருந்தது, என்ஜனப் பொறுத்தவரையில் தேயிலை சீனத் தில் உற்பவித்து ஆசியாவின் பிற பகுதிகளுக்கும் பரவி யிருந்ததேயல்லாமல், வேறு கண்டங்களுக்கும் குடி பெயரவில்லை. இப்படி இருக்கையில், இதோ ஆபிரிக் காவில் தேயிலைத் தோட்டமொன்றினைக் காணப் போகிறேன்.
ஹைலன்ட்ஸ் ரீ எஸ்டேட்” என்ற தேயிலைத் தோட் டமும் அதன் பெரியதுரையும்-சுப்ரிண்டனும் இலங்கை தேயிலைத் தோட்டங்களையும் பெரிய துரைமாரையும் உடனே எனக்கு நினைவூட்டின. பெரிய துரையின் கடை

85
உடை பாவனையாவும் இலங்கையிலுள்ள தோட்டத் துரைமாரின் போக்கு வாக்குகளிலிருந்து சற்றும் மாறு படாதனவாக விளங்கின. தேயிலைக்குப் புகழ்பெற்ற இலங்கையைச் சேர்ந்தவன் என்றதனுற் போலும். அந்தப் பெரியதுரை மற்றவர்களுடன் செலவிட்டதிலும் கூடுதலான நேரத்தை என்னுடன் செலவிட்டார். அவர் இலங்கைக்கு ஒருபோதும் வந்தவரல்லர். ஆயினும் இலங் கையின் தேயிலை உற்பத்தி சம்பந்தமான சகல அம்சங் களையும் வாசினை மூலமும் உரையாடல் மூலமும் கன்கு அறிந்திருந்தார். ஆயினும் என்னிடமிருந்து மேலும் பல விஷயங்களை அறிய முயன்றர். அவர் கேட்ட கேள்விகள் தேயிலைத் தொழில்பற்றி எனக்கிருந்த அறி வைப் பரீட்சிப்பனவாக எனக்குத் தோன்றின. தோன் றவே, கொழும்பு பல்கலைக் கல்லூரியிற் பயின்ற காலத் தில் எமது விரிவுரையாளர்களில் ஒருவர் சொல்லிக் கொடுத்த புத்திமதியைத் தக்க தருணத்தில் நினைவு கூர்ந்து கொண்டேன். “பட்டப் பரீட்சைக்கு எழுதும் போது உங்கள் அறியாமையை மறைக்கத் தக்க வகை யில் பதில் எழுதுங்கள்; முதல் வகுப்பில் சித்தி பெற விரும்பீனிர்களானல் உங்கள் அறிவைப் பறைசாற்றும் வகையில் விடை எழுதுங்கள், என்று அக்த விரிவுரை யாளர் சொல்லுவார். பெரியதுரை என்மீது கேள்விப் பாணம் தொடுத்தபோது, இந்தப் புத்திமதியின் முதற் பகுதிக்கு அமைய என் அறியாமையை வெளிக்காட்டாத முறையில் பதிலளித்தேன் ! தாவர விருத்தி பற்றியும் தொழிற் சங்க இயக்கம் பற்றியும் அவர் கேள்விகள் கேட்க எத்தனித்தபோது புத்திமதியின் பிற்பகுதிக்கு அமைய, இலங்கையின் அரசியல் அமைப்புப் பற்றியும் சாம்ராஜ்ய காடுகளுடன் இலங்கைக்கு உள்ள தொடர் புகள் பற்றியும் பேசி, சாமர்த்தியமாக அவரின் சிக்தனை

Page 46
86
யைத் திசை திருப்பி என் அறிவைப் பறைசாற்றினேன்! விதைகொண்டு தேயிலைச் செடி உண்டாக்குவது நல்லதா அல்லது நறுக்குக் கொண்டு உண்டாக்குவது நல்லதா என்ற தாவர விருத்தி சம்பந்தமான விஷயங்களோ தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிற் சங்க இயக்கம் எவ்வளவு ஆழமாக வேரோடி இருந்ததென் பதோ என் அக்கறைக்கு அப்பாற்பட்டவை.
தேயிலைத் தோட்டத்தை நினைத்தால் என் மனதில் பளிச்சிடும் விஷயம் யூனியன் ஹாஸ்டலிலே என் சக மாணவன் ஒருவன் அடிக்கடி முணுமுணுக்கும், தேயிலைத் தோட்டத்திலே.” என்னும் பாடலாகும். பாரதியின் “கரும்புத் தோட்டத்திலே.” என்னும் கவிதையைப் பின்பற்றி பூரீமதி மீனுட்சியம்மாள் என்ப வர் இந்தப் பாடலை இயற்றினராம். 'தந்திர முதலா ளிகள், தரகர், கங்காணிகள், தன்னலங் கருதுதல் குறைத்திடுவோம்” என்ற பாணியிலமைந்த இந்தப் பாடலை, மீனுட்சியம்மாள் தமது கணவரும் தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிற்சங்க இயக்கம் கிளைத் துப் படர வழி வகுத்தவர்களில் ஒருவருமான நடேசை யரின் கூட்டங்கள் துவங்குமுன்னர் பாடுவாராம். இந்தப் பாடலின் முழுப் பகுதியையும் பெற எவ்வளவோ முயன்றேன். நாளதுவரை கைக்கு எட்டவில்லை. எட்டிய தெல்லாம் இதே மீனுட்சியம்மாள், 1931இல் இயற்றிய *இலங்கையில் இக்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு’ என்னும் சிறிய செய்யுள் நூல் ஒன்றே.
ஹைலன்ட் தேயிலைத் தோட்டத்தில் கான் கண்ட வற்றையும் தோட்டத் துரையுடன் உரையாடியதன் மூலம் அறிந்தவற்றையும் கொண்டு, சுவாத்தியம், பயிர்ச் செய்கை முறை, நிர்வாகமுறை ஆகியவற்றில் கீன்யா வுக்கும் இலங்கைக்கும் அதிக வித்தியாசமில்லை

87
யென்பதை உணர்ந்தேன். கீன்யா, கெரிச்சோ மாவட் டத்திலுள்ள இந்தத் தேயிலைத் தோட்டம் கண்டி, மேல் புளத்கம பகுதியில் கான் கண்ட தேயிலைத் தோட்டங் களை ஒத்ததாயிருந்தது. இந்த ஒப்புமை பற்றிப் பெரிய துரையிடம் குறிப்பிட்டபோது அவர், ஒரு வித்தி யாசத்தைச் சுட்டிக் காட்டினுர், இலங்கையில் போல கீன்யாவில், தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களி லேயே நிரந்தரமாக வாழ்வதில்லை என்றர். வேலை தேடி வரும் தொழிலாளிகள் தத்தமக்கு ஒரு பெண் கொள்ளுவ தற்கு வேண்டிய பணத்தைச் சம்பாதித்ததும் தோட்டத் திலிருந்து வெளியேறி விடுவார்களாம். இது எனக்குப் பெரிய புதினமாக இருந்தது. ஏனென்றல் தோட்டத்துக் குச் செல்லும் வழியில் கொழுந்து கிள்ளும் கோதையர் சிலரைத் தூரத்தில் கான் கண்டேன். ஆகவே அதைப் பற்றிக் குறிப்பிட்டு, தோட்டத்திலேயே பெண்கள் இருக்கிறர்களல்வவா? என்று கேட்டேன். அவர்கள் பெண்கள் அல்லரென்றும் கீன்யாவில் ஆண்களே கொழுந்து கிள்ளும் வேலையைச் செய்கிறர்கள் என்றும் அவர் சொன்னுர், கான் கண்ட தொழிலாளர்களின்டி உடையும் தூரத்தில் வைத்து அவர்களைக் கண்டமையும் பெண்களே கொழுந்து பறிப்போர் என்னும் எண்ணம் என் மனதில் பதிந்திருந்தமையும் அவர்கள் பெண்களே யென்று எண்ண ஏதுவாயின என்று விளக்கினர். கொழுந்து கிள்ளும் தொழிலில் பெண்கள் ஈடுபடாமை யால் பெண்கள் சம்பந்தமான சிக்கல்களும் கீன்யத் தோட்டங்களில் இல்லை என்று அவர் கண்களைச் சிமிட் டிக் கொண்டு சொன்னர் 1 கொழுந்து கிள்ளுவதில் பெண்ணுக்கு ஆண் சளைத்தவரல்லவென்றும், ஆணுல் ஆண்கள் நிலையாகத் தோட்டத்தில் தங்கியிராமல், போதிய பணம் சம்பாதித்ததும் தமது கிராமங்களுக்குப் போய்விடுவதால், அடிக்கடி புதிதாக ஆட்களை வேலைக்

Page 47
88
கமர்த்தவேண்டி ஏற்படுகிறதென்றும் இதன் காரணமாக மிகுந்த செலவு உண்டாகிறதென்றும் குறைப்பட்டுக் கொண்டார். புதிதாக வேலைக்கு வந்தவரை வேலைக்குப் பழக்கி எடுக்கச் சிலகாலஞ் செல்லும், பழகிய சில காலத் துள் அவர் விலகி விடுவார். வேருெருவரை வேலைக்கு அமர்த்தினுல் அவர் கதையும் இதுதான். கொழுந்து கிள்ளும் தொழிலாளர் மட்டுமே இப்படியென்றில்லை. மற்றவர்களும் இப்படித்தான்.
இதற்குக் காரணம் ஒன்றே, தேயிலைத் தோட்டதில் வேலைக்குச் சேரும் ஆண்கள் போதிய பணம் சேமித் ததும் எதிர்கால மாமன்மாரைத் தேடிப் புறப்பட்டுவிடுகி றர்கள். மாமனுரை அடைந்து; பெண் கொள்வதற்கு வேண்டிய நிபந்தனைகளை நிறைவேற்றி, மண வாழ்வில் இறங்கிவிடுகிறர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் பெண் கொள்வதென்பது ஒரு முதலீடு மாதிரி. ஏனென் ருல், குடும்பத்தின் கமத்தொழில் முயற்சிகளுக்குப் பெண்ணே அச்சாணி; ஆண்களிலும் பார்க்கக் கூடுத லான அளவுக்கு அவள் உழைக்கிருள். பெண் கொள்வ தற்காகும் செலவு எவ்வளவு என்று கேட்டேன் பெரிய துரையிடம். அவரவர் அந்தஸ்துக்கு ஏற்ப மாறுபடு மென்றும் சராசரி, 8 பசுக்கள் 10 ஆடுகள் 20 ஜாடி மதுபானம் முதலியன ஒரு பெண்ணுக்குக் கிரயமாக அளிக்கப்படுகின்றனவென்று அவர் சொன்னர். இப்ப டிப் பொருள் கொடுத்துப் பெண் கொள்வது சக்தையில் ஆடுமாடு வாங்குவது போன்ற விஷயமென காம் கொள்ளலாகாது. கீன்யக் குலாசார அமைப்பில் மணப் பெண் என்பவள் பிரிக்க முடியாத, இன்றியமையாத ஓர் அங்கமாகத் திகழ்கிருள். அவளுக்கெனக் கொடுக்கப் படும் 'ஸ்திரீ தட்சிணை மணமகனது சங்கற்பத்தினது அறிகுறியாகவும், அவளது அந்தஸ்தின் சின்னமாகவும்

89
விளங்குகிறது.இந்த ஸ்திரீ தட்ச2ணயைப் பெண்ணின் தகப்பனுர் தமக்குரிய ஆதாயமாகவோ, வருவாயாகவோ கருதுவதில்லை. உறவினர்களுக்கிடையில் அது பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஆபிரிக்க மக்களிடையே நிலவும் இந்த ஸ்திரீ தட்சணை வழக்கத்தை இந்தியாவிலும் இலங் கையிலும் நிலவும் வரதட்சணை முறையுடன் ஒப்பு கோக்குவதற்கு இது தகுந்த சந்தர்ப்பமன்று.
தேயிலைத் தோட்டத்தைப் பார்வையிட்டு முடித்த தும் மதிய உணவுக்காக ஃபார்மேர்ஸ் கிளப் என்னும் தோட்டத் துரைமார் கழகத்துக்குச் சென்ருேம். இங்கும் இலங்கையின் சாயலையே கண்டேன். நெடுங்காலம் இலங் கைத் தேயிலைத் தோட்டங்களில் அனுபவம் பெற்ற இங்கிலிஸ்காரப் பெரியதுரை ஒருவர் என் அருகில் அமர்ந்து உணவுகொண்ட எதிர்பாராத சம்பவமும் அங்கு நிகழ்ந்தது.
கீன்ய அரசாங்கம் மாபெரும் விவசாய அபிவிருத்தித் திட்டமொன்றினை நிறைவேற்றுதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கடனுதவிபெறவிருப்பதாகவும், இந்தக் கடன் பணத்தில் ஒரு பகுதி ஆபிரிக்க மக்களுக்கே சொந்தமான, சிறிய தேயிலைத் தோட்டங்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படுமென்றும் இந்தப் பிரிட் டிஷ்காரர் மூலமாக அறிந்தேன்.
கீன்யா 1963ஆம் ஆண்டில் சுதந்திர நாடாயிற்று. 1960ஆம் ஆண்டில் 44,00,000 பவுண் பெறுமதியான தேயிலையை வெளிகாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இத் தொகை கீன்யாவின் மொத்த ஏற்றுமதி வருமானத் தில் 125 சதவீதமாகும். இன்றே கீன்யாவின் தேயிலைத் தொழில் வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் வளர்ந்துள் ளது. 1966ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதத்தில்
I279ー6

Page 48
90
மட்டுமே 40,00,000 பவுணுக்கு மதிகமான பெறுமதி யுள்ள தேயிலை கீன்யாவிலிருந்து ஏற்றுமதியாயிற்று.
இலங்கையிற் போலவே கீன்யாவிலும் தேயிலை பெருங் தோட்டங்களிலும் துண்டுக் காணிகளிலும் பயிரிடப்படுகிறது. சிறு காணிக்காரர்களின் எண் ணிக்கை 27,000 என மதிப்பிடப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஆபிரிக்கர்களே என்பது எனது ஊகம். 1969ஆம் ஆண்டில் அமுலாக்கப்படவிருக்கும் மூன்ரு வது அபிவிருத்தித் திட்டத்தில் இந்தச் சிறு காணிக் காரர்களுக்கு முதலிடமளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேயிலைத் தொழிலை அபிவிருத்தி செய்வதில் கீன்ய மக்களுக்கு வரையறை வகுக்கும் ஒரேயோர் அம்சம் உலகக் கிராக்கியேயன்றி வேறில்லை.
கீன்யாவின் இன்றைய பொருளாதாரத் திட்ட அமைச்சர் ரொம் எம்போயா அவர்கள் அண்மையில் இதனைச் சுட்டிக்காட்டினர். “கீன்யத் தேயிலை உற்பத் திக்குள்ள ஒரேயொரு தடை உலகக் கிராக்கியின் நிலை யற்ற போக்கே.” என்று அவர் சொல்வதிலிருந்து, உலகில் தேயிலைக்கு எவ்வளவு கிராக்கியுண்டோ அவ்வளவையும் சமாளிக்கக் கீன்யா தயாராயிருக்கிற தென்பதை நாம் ஊகிக்கலாம்.
இந்த நிலையைக் கீன்யா எவ்வாறு அடைந்தது? இலங்கையின் இன்றைய சூழலில் இதனை அறிவது இன்றியமையாததாகும்.

கிராமிய நடனமும் நாடோடிக் கதையும்
15
சொட்டிக் தோட்டத் துரைமார் கிளப்பில் மதிய போசனம் முடிந்ததும், கப்பாடெட் என்னுமிடத்திலுள்ள ராப் தெங்கெச்சா என்பாரின் வளவுக்குப் புறப்பட்டோம். அவ்விடத்தில் எங்களுக்கென்று தனி நிகழ்ச்சி நிரலே தயாராகியிருந்தது.
முதலில் கிப்ஸிஜி றிசேர்வ் என்னும் சுதேசிகளில் ஒரு பிரிவினருக்கான ஒதுக்கிடத்தைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினுேம். இது போன்ற ஒதுக்கிடங்கள் இதுவரை யில் எமக்கு வெகு பரிச்சயமாகியிருந்தன. முந்திய காட் களில் தெரு வழியாகச் சென்ற போது, கிக்கியு மக்கள் வாழும் ஒதுக்கிடத்தையும் மஸாய் மக்கள் வாழும் ஒதுக்
கிடத்தையும் கண்டோம். w
NA
நியான்ஸா மாகாணத்தின் கெரிச்சோ மாவட்டத்தி லுள்ள கிப்ஸிஜி ஒதுக்கிடம் சுமார் 1,000 சதுர மைல் விஸ்தீரணமும் ஏறக்குறைய 1,60,000 சனத் தொகை யும் கொண்டது. இலங்கையிற் போலவே கீன்யாவிலும் பிரிட்டிஷ் ஆட்சி ஆரம்பமான காலத்தில் வெள்ளைக் காரர்கள் தரிசு நிலங்களையும் கிராமவாசிகளின் பொது நிலங்களையும் முடிவுக்குரிய காணியென்று காரணம் காட்டி, தம்மிச்சை போலப் பராதீனப் படுத்தினர்கள். இவர்களைப் பின்பற்றி, பிரிட்டிஷ் முயற்சிகள், முதலீடு கள் முதலியவற்றின் விளைவாகத் தோன்றிய சாராயத் தவற2ணத் தொழில், பண்டங்களை ஏற்றிச் செல்லுக் தொழில் முதலியன மூலம் பெரும் பணமீட்டிய முதலாளி மாரும் காணி சுவீகாரஞ் செய்யத் தலைப்படலானுர்கள்.

Page 49
92
இத்தகைய மோசடிகளைத் தவிர்ப்பதற்காகவே மேற்படி
ஒதுக்கிடங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த ஒதுக்கிடங்களுக்கு இன்னுமொரு முக்கியத் துவமுண்டு. குறிப்பிட்ட ஓர் இன மக்களை வேறுபடுத் தும் கோக்கமாக அல்லது வேறுபடுத்தும் வகையில் அமையும் இந்த ஒதுக்கிடங்கள் பெரும்பாலும் அவ்வி னத்தவர்களின் தனித்துவத்தைப் பேணி, கலாசாரத் துறையில் மட்டுமன்றி, இனமென்ற வகையிலும் அவர் கள் அழிக்தொழிந்து போகாமல் தம்மைத்தாமே காத்துக் கொள்ள உதவுகின்றன. ஆணுல், தென் ஆபிரிக்கா போன்ற காடுகளிலோ இத்தகைய ஒதுக்கிடங்கள் இன ஒதுக்கல் கொள்கையை நிறைவேற்றும் கொத்தளங்க ளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
காம் பார்வையிட்ட கிப்ஸிஜி ஒதுக்கிடம் பாராட்டத் தக்க பல சிறப்பம்சங்கள் பொருந்தியதாக விளங்கியது. ஒவ்வொரு பண்ணையும் சுமார் 25 ஏக்கர் விஸ்தீரணமும் சுற்றிவர முள்வேலிகளும் கொண்டதாக அமைந்திருக் தது. ஒவ்வொரு பண்ணையிலும் சுமார் 2 ஏக்கர் நிலப் பரப்பு வீடுகள், பண்டசாலைகள், பழத் தோட்டங்கள் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. எமது குழுவில் சென்ற ஒவ்வொருவரும் குடிமனைப் பிராந்தியங்களில் இவ்விரண்டைப் பார்வையிட ஏற்பாடு செய்திருக் தார்கள். இவற்றின் துப்புரவும் குடியானவர்களிடம், காணப்பட்ட ஆர்வ உணர்வும் கமத் தொழில் பற்றி அவர்களுக்கிருந்த பரந்த அறிவும் எம்மைப் பெரிதும் கவர்ந்தன. உடனே எனக்குக் கல்முனை, சம்மாந்துறைப் பற்றுப் பகுதிகளில் மிகவும் பழக்கமான குடியேற்றத் திட்டங்கள் நினைவுக்கு வந்தன.

93
கிப்ஸிஜி குடியானவர்களும் அவர்களின் குடும்பத் தவர்களும் தமதுபண்ணைகளையிட்டுப் பூரிப்படைந்திருக் தார்கள் என்பதை அவர்களுடைய முகத்தோற்றம் எடுத் துக் காட்டியது. தமது பண்ணையை எமக்குக் காண். பிப்பதில் மகிழ்ச்சியடைந்தார்கள். கமத் தொழிற் பரி சோதகர் ஒருவர் எமக்கு மொழி பெயர்ப்பாளராக வந்து வாய்த்தார். அங்கு கையாளப்படும் சாகுபடி முறைகளை அப்பழுக்கற்ற இங்கிலிஸில் அவர் எமக்கு விளக்கினர். பணப் பயிர்கள் எனப்படும் துரித பலன் தரும் பயிரி னங்களையும் கால் கடைகளுக்கு வேண்டிய புல்லினங் களையும் சாகுபடி செய்வதற்கென்று சில பகுதிகளை ஒதுக்குதற்கு ஊக்கமளிக்கப்படுகிற தென்பதை அவ தானித்தோம். ஒரு காலத்தில் மக்தை மேய்ப்போராக இருந்து, மஸாய் மறவர்களின் ஆக்கிரமிப்பால் தமது மங்தைவெளிகளைக் கை கெகிழ்ந்து, வேறிடங்களுக்குக் குடிபெயர்ந்த இந்த கிப்ஸிஜி மக்கள், மனித வரலாற்றின் அடுத்த கட்டமாகிய சேனைச் சாகுபடி முறைக்கோ நிலப் பிரபுத்துவ ஆட்சி முறைக்கோ உட்படாமலே அறிவியல் யுகத்தில் காலடி வைத்தார்கள் எனலாம். இந்த அம் சத்தை, தென் ஆபிரிக்க சுதந்திரப் போராட்ட வீரரும், சமாதானத்துக்கான கோபல் பரிசு பெற்றவருமாகிய அல்பேர்ட் லுதுலி என்பார் ' என் மக்களைப் போக விடு'-Let my people go-என்னும் தமது நூலிற் பின் வருமாறு சுட்டிக் காட்டுகிருர்,
* ஆபிரிக்கர்களாகிய நாம் நாகரிகத்தில் 2000 ஆண்டு பின் தங்கியவர்கள் என்ற வாதம் அடிக்கடி கையாளப்படுகிறது. இது அசட்டுத்தனமான வாத மாகும். சென்றசந்ததியினர் விட்ட இடத்திலிருந்து தொடர வெள்ளைக்காரருக்கு மட்டுமே இயலும்; ஆபிரிக் கர்கள் மனிதவரலாற்றின் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு

Page 50
94.
冤密
கட்டமாக முன்னே றவேண்டும் என்பதே இந்த வாதத் தின் அடிப்படை. அப்படியானல் இராட்டினத்தைக் கண்டு பிடித்த பின்னரே ஆடை தயாரிக்கவும் அணிய வும் நாம் கற்றுக்கொள்ளவேண்டுமா? உட் சுவாலிப்பு இயந்திரத்தைக் கண்டு பிடித்த பிறகுதான் கார் ஒட்டக் கற்றுக் கொள்ளவேண்டுமா?’ லுதுலி அவர்களது இக் தத் தர்க்கக்தின் வலுவை விளக்கும் கல்ல சான்றுக ளாக, கைத் தொழில் துறையில் ஜப்பானிய மக்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தையும், தேயிலைத் தொழி லில் கின்ய மக்கள் பெற்றுள்ள வெற்றியையும் நாம் கொள்ளலாம்.
கிப்ஸிஜி பண்ணைகளில் சாகுபடி செய்யப்படும் பிர தான பயிரினங்கள் சோளம், உருளைக்கிழங்கு, பயறு வகைகள், சிறு தானியங்கள், கோதுமை, வெங்காயம் என்பனவாகும்.
கமத் தொழில் முயற்சிகளுடன் உள்ளூர் கால்நடை வளர்ப்புத் தொழிலைச் செம்மைப்படுத்தவும் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கெரிச்சோவிலிருந்து 16 மைல் தூரத்திலுள்ள கால் நடை அபிவிருத்தி நிலை யம் இதற்கான தகவல்கள் முதலியவற்றை கிப்ஸிஜி மக்களிடையே பரப்பி வந்தது. மண அரிப்பினுல் நிலம் விரயமாவதைத் தடுப்பதற்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. இத்தகைய நடவடிக்கைகளின் பயனக கிப்ஸிஜி மக்கள் பணத்தை ஆதாரமாகக் கொண்ட பொருளா தார அமைப்பினை நன்கு கிரகித்துக் கொண்டவர்களா கத் தோன்றினர். அவர்களிடையே நிலவும்நாடோடிக் கதையொன்று இந்த உண்மையைப் புலப்படுத்து கிறது.

95
* முன்னுெரு காலத்திலே ஏழை ஒருவன் வாழ்க்குச் வந்தான். அவன் மிகுந்த புத்திசாலி. ஒரு நாள் அவன் தனக்கென ஒரு குடில் அமைத்தான். கீழே கால் கடை களைக் கட்டவும் மேலே தானியங்களைச் சேகரித்து வைக் கவும் தக்கதாக பரண்-வீடாக அந்தக் குடிலே அமைத் தான்.
* பணக்காரன் ஒருவன் அக்தக் குடிலை விலைக்கு வாங்க முற்பட்டான்
* பத்து மாடுகள் தந்தால் குடிலைத் தருவேன்” என்ருன் ஏழை.
* என்னிடம் அவ்வளவு செல்வம் இல்லையே." * அப்படியானுல் மேலேயுள்ள பரணை மட்டும் நீ வாங்கிக்கொள். கான் கீழே என் கால் கடைகளுடன் சீவிக்கிறேன்” என்ருன் புத்திசாலியான அந்த ஏழை. பணக்காரன் அதற்கு இணங்கி, ஏழைக்கு மூன்று மாடு களைக் கிரயமாகக் கொடுத்து, பர2ண வாங்கிக் கொண் டான்.
சில காலத்தின் பின்னர் அந்த ஏழை பணக்காரனை அணிகி,
* நான் இவ்விடத்தை விட்டு வேறிடத்துக்குப் போகிறேன்; போகு முன்னம் குடிலின் என் பங்கைப் பிடுங்கி எடுக்கப் போகிறேன்’ என்றன்.
* அது எப்படி முடியும்? உன் பங்கைப் பிடுங்கினல் என் பங்கு கீழே சரிந்து விடுமே” என்ருன் பணக் காரன்,
* அதற்கு நான் என்ன செய்ய முடியும்? அது உன் பொறுப்பு என்ருன் ஏழை.

Page 51
96
**இந்த நிலையில் பணக்காரன் வேறு வழியின்றி, குடிலின் மறு பங்கையும் தானே வாங்க வேண்டிய தாயிற்று. ஏழை, தனக்குக் கிரயமாகப் பத்து மாடுகள் கேட்டான். பணக்காரன், அவற்றைக் கொடுத்து, குடிலை வாங்கிக் கொண்டான்.
6 இவ்வாருக, ஏழை தனது மதியூகத்தால் பணக் காரணுணுன்.”
பண்ணைகளைப் பார்வையிட்ட பின்னர் ராப் தெங் கெச்சா என்பரின் வசிப்பிடத்துக்குப் போனுேம். அங்கே அசல் இங்கிலிஸ் முறைப்படி தேநீர் விருக்தொன்று நடைபெற்றது. இந்தத் தேர்ே விருந்துக்கு ஆபிரிக்க அதிகாரிகள் பலர் தமது மனைவிமார் சகிதம் வந்திருக் தார்கள். விருந்து முடிவில் சுதேசி கடன நிகழ்ச்சி யொன்று இடம் பெற்றது. ஆனல் இந்த நிகழ்ச்சியில் ஆடப்பெற்ற கடனம் கிப்ஸிஜி மக்களின் மரபு வழி வந்த கடனம் தானு என்பது சந்தேகமே. எமது சகாக்களில் ஒருவர் அந்த கடனம் கந்தியர் கடனம் என்றர். “இதை எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்? கீன்யாவில் மட்டுமே 200க்கு மேற்பட்ட வெவ்வேறு குலங்கள் உள் ளன. ஒரு குலத்திலிருந்து மற்றக் குலத்தவரைப் பிரித் துக் காட்டும் அம்சம் எது?’ என்று நான் கேட்டதற்கு அவர், அந்தந்தக் குலத்தவர்கள் உபயோகிக்கும் ஈட்டி, கவசம் ஆகியவற்றின் உருவத்தையும் அலங்காரத்தை யும் கொண்டு ஒவ்வொரு குலத்தினையும் இனங் காண லாம் போலும் என்று அபிப்பிராயம் தெரிவித்தார். எது எவ்வாறிருப்பினும், இக் கடனத்தைப் பார்த்துக் கொண் டிருந்த போது, கிப்ஸிஜி மக்கள் எவ்வளவு துரிதமாக மங்தை மேய்ப்போர் என்ற நிலையிலிருந்து, அறிவியல் முறைப்படி கமத் தொழில் செய்யும் காகரிக நிலைக்கு

97
முன்னேறி விட்டார்கள். என்ற எண்ணம் என் மனதில் மேலோங்கி நின்றது. அன்று கடைபெற்ற நடனம் அவர்களின் பாரம்பரிய கடனங்களில் ஒன்ருக இருக்க லாம். ஆயினும் அவர்கள் அதைத் தமது அதிதிகளா கிய எமது மகிழ்ச்சிக்காக ஆடினரேயன்றி, தமது முன் னேர்களைப் போல, ஆசாரத்தின் பாற்பட்ட உணர்ச்சி வயப்பாட்டுடனும், பக்தி சிரத்தையுடனும் ஆடவில்லை என்று தோன்றியது.
மனுேரதப் பிரயாணம்
எமது பஸ் கெரிச்சோ நோக்கிப் போய்க்கொண்டிருக் கிறது. என் அருகே அமர்ந்திருக்கும் சக பிரதிநிதி ஆாங்கிக் கொண்டிருக்கிறர். கிஸாமு ஹோட்டலில் முக்திய இரவு நெடுநேரம் கண்விழித்திருந்ததன் விளைவு போலும். கீன்யாவிலும் உகண்டாவிலும் கண்டவற்றை யும் கேட்டவற்றையும் பற்றி அவரோடு கருத்துங் பரிமாற முயலுவதில் பிரயோசனமிராது. சவாரிப் பிரியர்களுக்கென்றே விசேஷமாகத் தயாரிக்கப்பட்டிருந்த எமது பஸ்ஸின் அகன்ற ஜன்னலூடாக இயற்கைக் காட்சிகளைப் பார்க்கலாமென்ருல்; இலங்கையில் உட புளதகம பகுதி ருேட்டுகளின் இருமருங்கிலும் காணப் படும் காட்சிகளே வழிநெடுகிலும், போதாக் குறைக்கு நேரமும் கருக்கிருட்டு, பேச்சுத் துணைக்கு ஆளோ, பார்வை இலயிப்புக்குக் காட்சியோ இல்லாத நிலையில் என் மனம் சுதந்திரப் பறவையின் கோலம் பூண்டு, காலம், இடம் இவற்றைக் கடந்து, சிந்தனுலோகத்தில் பறக்கவாரம்பித்தது. இவ்விதம் சிந்தனைச் சிறகு முளைக்

Page 52
98
கப்பெற்ற என் மனப்பறவை கெரிச்சோவிலிருந்து நீங்கி பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள இலங்கையில் வந்து குந்தியது. குந்திய இடத்தைச் சுற்றுமுற்றும் பார்த்தபோது, காலம் இருபதாம் நூற்றண்டின் இரண்டாம் மூன்ரும் தசாப்தங்களுக்கு இடைப்பட்ட பகுதி என்பதையுணர்த்தியது.
பஸ் ஏறுவதற்குச் சில நிமிஷங்களுக்கு முன் கான் கண்டு, உரையாடிய ஆபிரிக்க உத்தியோகத்தர்கள் இலங்கையில் டொனமூர் அரசியல் திட்டம் செயற்பாட் திேக்கு வந்ததையடுத்துத் தோன்றிய புதுவகையான சுகாதார, கமத்தொழிற் பரிசோதனை உத்தியோகத்தர் களே எனக்கு நினைவூட்டினர். இவர்கள் பொதுமக்களு டன் கெருங்கிப் பழகும் இயல்பும் அவர்களின் ஆசா பாசங்களில் அனுதாபங் காட்டும் பண்புமுடையவர்க ளாக. திருவாளர் பொதுஜனத்தின் சேவகர்களாக விளங்கினர்.
ஆணுல் இதற்கு முந்திய காலகட்டத்திலே, இந்த நூற்ருண்டின் இரண்டாம் மூன்ரும் தசாப்தங்களிலே நிலைமை எதிர்மாருக இருந்தது. அந்தக் காலத்து ‘இஞ்சிப்பெற்றர் மார் பட்டணத்தில் பெரிய பெரிய கல்லூரிகளில் இங்கிலிஸ், இலத்தீன் முதலியன படித்த வர்கள்; இங்கிலிஸ் உச்சரிப்பில் வாய்ஜாலம் மிக்கவர்கள்; கவாாகரிக மோஸ்தரில் உடை அணிவதிலும் அழகழகாக *டைகள் தரிப்பதிலும் கைதேர்ந்தவர்கள். பட்டணத் தில் இவர்களுடன் சக மாணவர்களாகப் படித்தவர்கள் டாக்டர்மாராகவும், எஞ்சினியர்மாராகவும், அப்புக்காத்து மாராகவும் பெரும் பதவிகள் வகிக்க, இவர்கள் படிப் பாற்றல் குறைந்தவர்கள் என்ற காரணத்தினுல் இரண் டாங்தர உத்தியோகங்களை காடவேண்டிய கிர்ப்பந்தத்

99
துக்கு ஆளானவர்கள். கல்விச் செல்வம் மட்டுமல்லாமல் பொருட் செல்வமும் சித்திக்கப்பெருத இவர்களுக்கு முதலாளிகளாவதற்கோ, கொழுத்த சீதனமுள்ள குமரியை வதுவை செய்து இங்கிலாந்து முதலிய தேசங் களுக்கு உல்லாசப் பிரயாணஞ் செய்யவோ பரிஸ்டர் போன்ற பட்டங்கள் பெற்று வரவோ வாய்ப்பு கிடைப்ப தில்லை. ஆணுலும் "ஆலையில்லா ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரையாம் என்பது போல, கிராமப் புறங்களில் பெரிய "கொம்புகளாக ஆர்ப்பாட்டஞ் செய்து வந்தார் கள். படிப்பாற்றல் இல்லாத குறையினுல் சமுதாயத் தின் உயர் மட்டத்துக்கு ஏறும், வாய்ப்பை இழந்து, திரிசங்கு சொர்க்க நிலையிலிருந்த இவர்கள் தமது விரக்தியை மூடி மறைப்பதற்கு வெகு ஜனங்களைத் துரும்பாக மதித்து கடத்தினுர்கள். ஊரின் ஒரு பகுதி யில் அம்மை கோய் ஆரம்பித்திருக்கிறது, என்று கேள்விப்பட்டாலே போதும்; அம்மை பெரியம்மையா சின்னம்மையா என்றுஆராய்ந்தறியும் ஆற்றலற்ற இவர் கள் உடனே சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்று அங் குள்ள துணிமணிகள் எல்லாவற்றையும் கெருப்பில் போட்டு எரித்துச் சாம்பலாக்கி விடுவார்கள், சில வேளை களில் கூரை கொட்டில்களைக் கூடத் தீக்கிரையாக்கி விடுவார்கள். இத்தகைய தொற்றுநோய்த்தொல்லைகள் இல்லாத சமயங்களில், கேரத்துக்குச் சாப்பிடவே வழியில் லாமல் திண்டாடும் ஏழைகளைப் பிடித்து, கிணறுகளுக்கு மதில் கட்டும்படியும், வீட்டிலிருந்து 200 யார் தூரத் துக்கு அப்பால் நவீன முறையில் கக்கூஸ் கட்டும்படியும் தொல்லை கொடுப்பார்கள்.
இந்தக் காரணங்களினுல், கிராமப்புற மக்கள் இவர் க2ள ஆபத்தான பேர்வழிகளாகக் கருதினரேயல்லாமல்,

Page 53
100
ஆபத் பாந்தவராக ஏற்கவில்லை; இவர்கள் விதித்த சட்ட திட்டங்களைப் பயத்தின் நிமித்தம் நிறைவேற்றினரே பல்லாமல், பற்றுறுதியின் காரணமாக நிறைவேற்ற வில்லை தலைமுறை தலைமுறையாகத் தாங்கள் கடைப் பிடித்து வரும் சம்பிரதாயங்கள் இந்தக் கலிகாலத் துணை மாரின் புதிய நடைமுறைகளைவிட மேம்பட்டவை என்று உறுதியாக கம்பினுர்கள். ஆகவே, அம்மைப்பால் கட்டுவது போன்ற விஷயங்கள் அந்த நாட்களில் அபசாரச் செயல்களாகக் கருதப்பட்டன. புனிதம் வாய்ந்த மனித உடம்பில் விலங்கு மற்றும் அங்ாநிய வஸ் துக்களைப் புகுத்துவது முறையா என்று அவர்கள் ஆட் சேபம் தெரிவித்தார்கள். சுகாதாரப் பரிசோதகர்களும் கிராம மக்களின் சமுசயத்தை வலுப்படுத்தும் வகையில் அசட்டுத் தனமான காரியங்களைச் செய்தார்கள். உதாரணமாக, பால் கட்டும்போது, சரியான சுகாதார கடைமுறைகளைப் பின்பற்ற மாட்டார்கள். இதனுல், பால் கட்டிய இடத்தில் கான்கு பென்னம்பெரிய கொப்புளங்கள் உண்டாகும். இக்தக் கொப்புளங்கள் சீழ் கட்டி, பழுத்து வெடித்து, ஆறுவதற்கு மாதக் கணக்காகும். உபத்திரவமும் சொல்லி முடியாது. பணக் காரர்கள் இந்த வில்லங்கங்களுக்கு அஞ்சி, பல தக்திரேர பாயங்களைக் கையாளுவார்கள். 'பிள் 2ளக்கு இப்போது சரியான காய்ச்சல் அடுத்தமுறை பார்ப்போம்” என்று நாளைத் தள்ளிப்போடுவார்கள். காசைக் கழஞ்சைக் கொடுத்து, பிள்ளைக்குச் சுகமில்லை என்று எழுதும்படி சொல்வார்கள். ஆணுல் இந்த நிலைமை 1934-35 ஆம் ஆண்டுகளில் இலங்கையெங்கும் மலேரியா பரவியதை அடுத்து மாறலாயிற்று. மலேரியா ஒழிப்பு இயக்கம் அளித்த மகத்தான வெற்றி மேல்காட்டு வைத்திய முறை மீது இலங்கை மக்கள் கொண்டிருந்த அவகம்பிக்கையை

101
அடியோடு விரட்டியடித்தது. இன்றே அம்மைப் பால் கட்ட மறுப்பவரைக் காண்பது புதுமை.
கிப்ஸிஜி பண்ணைகளில் கடமையாற்றிய சுகாதார, கமத் தொழில் உத்தியோகத்தர்கள், இலங்க்ையில் டொனமூர் அரசியல் திட்டம் அமுலிலிருந்த காலத்து உத்தியோகத்தர்களை ஒத்தவர்களோ என்று என்னையே கேட்டுக்கொண்டேன். வேறுபட்டவர்கள் என்ற எண் ணமே மனதில் உருவாயிற்று. ஏனென்ருல் ஜெர்மனி யில் ஹிட்லர் வீழ்ச்சியடைந்ததையும், ருஷ்ய அதிபதி ஸ்டாலின் உலகத் தலைவர்களில் ஒருவராக உயர்ந்ததை யும் அடுத்து, உலக அரங்கில் தருவளி வேகத்தில் மாற்றங்கள் ஏற்படலாயின. இரண்டாவது உலக யுத்தத்தின் விளைவாக பிரிட்டிஷாரின் குடியேற்ற ஆதிக் கக் கொள்கை புதிய வடிவம் பெற்றது. சுரண்டல் கொள்கையை மாற்றி சுதேசி மக்களின் சேமத்தில் அக்கறை காட்டும் கொள்கை தோன்றலாயிற்று. சாம்ராஜ்யத்தில் ஆசிய நாடுகளின் செல்வாக்கு மேலோங் கத் தலைப்பட்ட காலப்பிரிவினைச் சேர்ந்த மேற்சொன்ன ஆபிரிக்க உத்தியோகத்தர்கள் இந்த நூற்றண்டின் இரண்டாம் மூன்ரும் தசாப்தங்களைச் சேர்ந்த இலங்கை அரசாங்க உத்தியோகத்தர்களின் மனுேபாவமுடையவர் களாயிருப்பது சாத்தியமல்லதான். என்ருலும், அங் குள்ள விவசாயிகளுடன் கதைத்து என்னுடைய இந்த ஊகம் அறிவியல் அடிப்படையில் சரியானதுதானு என் பதை நிச்சயம் செய்துகொள்ள அவகாசம் கிடைக்க வில்லை. எனவே, அந்த உத்தியோகத்தர்களிடம் கேட் டறிந்த தகவல்களையும், என் மனதில் படிந்த எண்ணங் களையும் வைத்துக்கொண்டு பஸ்ஸில் இருக்தவாறே திடீர் முடிவுகளுக்கு வரவேண்டிய தாயிற்று.

Page 54
102
இப்படித் திடீர் முடிவு செய்ததையிட்டு நான் கூச்ச மடையவில்லை. ஏனென்ருல் ‘வாழ்க்கை என்பது அறை குறை ஆதாரங்களின் அடிப்படையில் ஆணித்தரமான முடிவுகளுக்கு வருதல் ஆகும்.
“Life is the art of drawing sufficient conclusions from insufficient premises.'
என்று சாமுவேல் பட்லர் என்பார் சொல்லவில் லையா? எல்லா விஷயங்களையும் காமாக ஆராய்ந்து முடிவு செய்ய ஆயுட்காலம் போதாது. மேலும் “கடவுள் தானும் மாற்ற முடியாத கடக்த காலத்தை வரலாற்று ஆசிரியன் மாற்றிவிடுவான்,” என்று இதே சாமுவேல் பட்லர் இன்னேரிடத்தில் குறிப்பிட்டதாக நினைவு. நானே கல்ல வேளையாக வரலாற்று ஆசிரியணுகவன்றி மாணவனுகவே இருக்கிறேன் !
எமது பஸ் கெரிச்சோ ஹோட்டல் முகப்பில் நின் றதும் என் மனத்தேரின் சவாரியும் நின்றது. ஹோட்ட லில் இராப் போசனம் தயாராக இருக்தமையால், அதை முடித்துக்கொண்டு நேராகப் படுக்கைக்குச் சென்று விட்டேன். மற்றவர்களிற் பலர் ஹோட்டலைச் சூழ உள்ள தேயிலைத் தோட்டத் துரைமார்களின் அழைப்பை ஏற்று அந்தக்தத் தோட்டங்களுக்குப் புறப்பட்டுப் போனர்கள். இத்தகைய விருந்துகளில் நாகரிகமான முறையில், எவரையும் புண்படுத்தாமல், சம்பாஷணை புரியவேண்டும். இராஜ தந்திர சேவையில் உள்ளவர் களால்தான் இப்படிப்பட்ட அசுவாரஸ்யமான சந்தர்ப் பங்களில் வெகு காசுக்காக கடந்து கொள்ள முடியும். எனக்கு இந்தக் கலையில் போதிய தேர்ச்சியில்லை. தவிர வும் இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யும் முறை பற்றி மறுபடியும் யாராவது குறுக்கு விசாரணை செய்ய

103
வந்தால் என்ன செய்வது? இவற்றையெல்லாம் உத்தே சித்து, ஹோட்டல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு நிம்மதியாகப் படுக்கைக்குச் சென்றேன்.
மறுநாட்காலை (ஆகஸ்ட் 18) பஸ்ஸில் பிரயாணஞ் செய்து மாலை கைரோபியை அடைக்தோம். கைரோபியை அண்மித்த சமயத்தில் விநோதமான காட்சியொன்றைக் கண்டோம். பெண் ஒருத்தி பெருஞ் சுமை ஒன்றுடன் வந்துகொண்டிருந்தாள். இந்தச் சுமை அவளின் தலை யிலோ இடுப்பிலோ இருக்கவில்லை. கெற்றிக்கு மேலே தோல்பட்டி ஒன்றினைக் கட்டி சுமையை அதிலே கொண்டு, முதுகுப் புறமாகத் தொங்கவிட்டிருந்தாள். பாரஞ் சுமப்பதற்கு இந்த நடைமுறை கிக்கிய மக்களிடம் பெரிதும் பரவியிருந்தது. பொதுவாக கிக்கியு பெண் கள் கடுத்தர வயதையடையுஞ் சமயத்தில் இந்தத் தோல் பட்டி அவர்கள் தலையில் ஆழமான தழும்பு பதித்து விடு மென்று பின்னர் வாசித்தேன். சாதாரணமாக ஒரு கிக்கியு பெண்ணுல் சுமார் 200 இருத்தல் எடையை இப்படித் தூக்கிச் செல்ல முடியுமாம். w
கைரோபி ஹோட்டலை அடைந்தபோது, வீடு வந்து சேர்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
புத்தம் புதிய கலைகள் 17
பதினெரு நாட்களாக கீன்யா, உகண்டா இவற் றைச் சுற்றிப் பார்த்த பின்னர், ஆகஸ்ட் மாதம் 18 ஆங் திகதி மீண்டும் நைரோபி வந்து சேர்ந்தோம். 'கல்யா னப் பராக்கில் தாலி கட்ட மறந்தானும் ' என்றெரு காடோடிப் பழமொழி உண்டல்லவா? அதுபோலத்தான்

Page 55
104
சாம்ராஜ்யப் பாராளுமன்ற மாநாட்டுக் கென்று ஆபி ரிக்கா சென்ற கானும், இவ்வளவு காலமாக அதை விடுத்து வேறு விஷயங்களைப் பற்றிச் சற்று அதிக மாகவே எழுதிவிட்டேன். ஆகவே, இந்த அத்தியாயத் தில் சாம்ராஜ்யப் பாராளுமன்ற மாநாடு பற்றியே எழுதத் துணிந்துள்ளேன்.
மறுகாட் காலை, இன்று ஆஸ்திரேலியப் பிரதமரா யிருக்கும் மேன்மை தங்கிய ஹரல்ட்ஹோல்ற் அவர் களின் தலைமையில் மாகாட்டின் முதலாவது நிர்வாக சபைக் கூட்டம் ஆரம்பமாயிற்று. இந்தக் கூட்டத்தில் காலஞ்சென்ற பேர்ணுட் அலுவிஹார அவர்களும் நானும் இலங்கைப் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டோம். இக் கூட்டத்தில் செய்யப் பெற்ற முடிவுகளிலொன்று, எல் லாக் கூட்டங்களுக்கும் ஒருவரே தலைமை தாங்காது, ஒவ்வொரு கூட்டத் தொடருக்கும் ஒவ்வொரு காட்டுத் தூதுக் குழுவின் தலைவர் தலைமை வகித்தல் வேண்டு மென்பது, இதனைக் கேட்டதும் அலுவிஹார் அவர்கள் எங்கள் காட்டுப் பிரதிநிதியின் முறை வந்ததும் என் னையே அக்கிராசனராக ஏற்றுக்கொள்ளுமாறு பிரேரித் தார். அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த நான் இதைக் கேட்டதும் ஆட்சேபிக்க முயன்றேன். அவர் விட வில்லை. தூதுக் குழுவின் தலைவர் என்ற முறையில் அவரே அக்கிராசனர் பதவி வகிக்கவேண்டியவரென்று நான் வாதாட எண்ணியபோது, எப்பொழுதோ கேள்விப் பட்ட விகடத் துணுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. மரியாதைப் பண்பில் திளைத்த இரண்டு பிரயாணிகள், ரெயில் வந்ததும் “நீங்கள் முதலில் ஏறுங்கள்” “இல்லை யில்லை, நீங்களே முதலில் ஏறுங்கள்’ என்று ஒருவருக் கொருவர் சொல்லி வாதாடிக் கொண்டு நிற்க, ரெயில்

105
புறப்பட்டுப் போய்விட்டதாம். இவ்விதம் காங்களும் வாதாடினுல் இலங்கையின் சார்பில் தலைமை வகிக்க எவரும் இரார் என்றெண்ணிப் பேசாதிருந்தேன்.
மேற்சொன்ன ஏற்பாட்டின்படி, ஆகஸ்ட் மாதம் 27ஆந் திகதி கடைபெற்ற 8 ஆவது தொடர்க் கூட்டத் துக்குத் தலைமை வகிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத் தது. அன்றைய தொடர்க் கூட்டத்தில் ‘சர்வதேச விவகாரங்களும் பாதுகாப்பும்” என்னும் விஷயம்பற்றி விவாதிக்கப்பட்டது. எனக்கு முக்திய அக்கிராசனர் களின் சம்பிரதாயத்தைப் பின்பற்றி, கானும் அறிமுகம் போன்ற சிற்றுரையொன்றினை நிகழ்த்தினேன். 'இலங் கைத் தேசம் சனத் தொகையிலும் நிலப்பரப்பிலும் சின்னஞ் சிறியதேயாயினும் மகத்தான வரலாறும் மகோன்னதமான எதிர்காலமும் உடையது; தனது மண்ணில் கால் வைப்போர் அனைவரையும் தன்பால் ஈர்க் கும் வசீகரம் பொருக்தியது.” என்று எனது உரையில் குறிப்பிட்டபோது சபையோர் ஆரவாரம் செய்தார்கள் இதற்கு முக்கியமான ஒரு காரணம் நைரோபி செல்லும் வழியில் இலங்கையில் இரண்டொரு நாட்கள் தங்கிச் சென்ற ஆஸ்திரேலியப் பிரதிநிதிகள் நித்திய வனப் பொளிரும் தமது ஈழமணி நாட்டின் அழகைப் பற்றிப் பிற பிரதிநிதிகளிடம் சிலாகித்துப் பேசியிருந்தமை யாகும்.
சாம்ராஜ்யப் பாராளுமன்ற மாகாடு ஆகஸ்ட் மாதம் 21ஆங் திகதி காலை, நைரோபி பாராளுமன்றத்தின் சட்ட மன்ற மண்டபத்தில் கீன்யாவின் தேசாதிபதியும், கிழக்கு ஆபிரிக்கப் பொது ஆட்சிச் சபையின் தலைவரு மாகிய கெளரவ சர் எவலின்பேரிங் (Evelyn Baring) அவர்கள் தலைமையில் ஆரம்பமாயிற்று.
7 ستمے 279 I

Page 56
106
இந்த மாங்ாட்டில் இடம்பெற்ற விவாதங்களில் இரண்டு தடவை நான் கலந்துகொண்டேன். எனது முதலாவது உரை 23ஆம் திகதி காலைத் தொடர்க் கூட டத்தில் நிகழ்த்தப்பட்டது. அரசியல் வட்டாரங்களில் இன்று பலமாக அடிபடும் விஷயமாகிய “பாராளுமன் றத்துக்கும் அரசாங்க நிர்வாக அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு' பற்றி அன்றைய தினம் நான் பேசினேன். இந்தப் பேச்சை கான் முன் கூட்டியே எழுதித் தயாரிக்க வில்லை. சில குறிப்புக்க2ள ஆதாரமாகக் கொண்டு, முன்னைய உரைகளில் எழுப்பப்பெற்ற பிரச்சினைகளை ஒட்டியும், ஆதரித்தும், எதிர்த்தும் பிரதியெதுவுமின்றிப் பேசினேன். ஆணுல் மாலையில் ‘சாம்ராஜ்ய நாடுகளில் கூட்டுறவு” என்னும் பொருள்பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டபோது எழுத்துப் பிரதியொன்று தயா ராகக் கைவசம் இருந்தது. ஏனென்ருல் இது விஷய மாக கான் தெரிவிக்கும் கருத்துகள் எனது தனிப்பட்ட அபிப்பிராயமாகக் கருதப்படாமல் எனது காட்டு மக் களில் ஒரு பகுதியினரின் எண்ணமாகக் கொள்ளப்படு மென்று நான் கருதினேன். ஆகவே, என்முறை வந்த போது, எனக்கு முன்னர் உரையாற்றிய வேறு பலரின் முன்மாதிரியைப் பின்பற்றி, எழுத்துப் பிரதியை வாசித் தேன்.
பல்கலைக் கழகத்தில் நான்படித்த காலத்திலென்றல் இப்படிப் பிரதி பார்த்துப் பிரசங்கம் செய்யும் மரபு வழக்கி லிருக்கவேயில்லை. அத்தகைய பழக்கம் ஒருவரின் படிப் புக் குறைவைப் பறைசாற்றுவதாகக் கொள்ளப்பட்டது. இன்றே நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன் றைக்கு, முக்கியமான கொள்கைப் பிரகடனங்கள் எவை யும் எழுத்துப் பிரதியிலிருந்து வாசிக்கப்படாமல், வாய் மொழிக்குச் சொல்லப்படுவதரிது? இந்த கடைமுறை

107
வெகுஜன வழக்குப் பெறுவதற்கு வானெலியும், ஸ்தானி கர்களும் தம்மளவில் உதவியிருக்கிறர்கள் எனலாம்.
விக்டோரியா மகாராணி காலத்துப் போக்கு வாக்கு களும், கிளாட்ஸ்டன் மேடைப் பிரசங்கப் பாணியும், இன்று கர்நாடகமாகிவிட்டன எனலாம்.
இன்றைய பேச்சாளருக்குக் கண் பத்திரிகையில்; கால் மேடையில். ஏனென்ருல், பத்திரிகை மூலமாகக் கூடுதலான மக்களின் கவனத்தைப் பெற்றுத் தமது குறிக்கோளைச் சாதிப்பதே அவரது இலட்சியம்.
கிளாட்ஸ்டன் காலத்தில் மேடைப் பிரசங்க ஆற்றலுக்கு இருந்த மதிப்பு இன்று பிரசங்கப் பிரதி தயாரிக்கும் திறமைக்கு அளிக்கப்பட்டு வருகிறது. பார்க்கப் போனல், பேச்சைப் பிரதி தயாரிப்பதென்பது ஒரு தனிக் கலையாகும். மேற்கே மெத்த வளரும் புதிய கலைகளில் இதுவுமொன்று. இதையொத்த மற்ருெரு கவ கலை மொழி பெயர்ப்பு. இன்னென்று இரவல் குரல் கொடுத்தல் பிறிதொன்று, பிரயாணக் கலை. பேச்சு பிரதியின் சொல்லாட்சியும் பொருளும் பேசுபவரின் (அல்ல வாசிப்பவரின்) அறிவாற்றலுக்கு அப்பாற் பட்டதாயிருக்கலாகாது. வாசிப்பவராலன்றி வேருெருவ ரால் (இந்த வேருெருவரை இங்கிலிஸில் (Ghost-Writer) அதாவது தோன்ரு-எழுத்தாளர் என்பார்கள்) பேச்சுப் பிரதி எழுதப்படுவதாயிருந்தால் அந்தப் பிரதி வாசிப் பவரின் சொல்லாட்சி, கல்வி, அறிவாற்றல் முதலிய வற்றை மனதிற் கொண்டு தயாரிக்கப்படல் வேண்டும். அல்லாவிட்டால் வாசிப்பவர் வேருெருவரின் பிரதியையே ஒப்புவிக்கிருர் என்ற குட்டு வெளியாகிவிடும்! பிரதியில் கையாளப்படும் மேற்கோள்கள், விகடத் துணுக்குகள் ஆகியவற்றைப் பொறுத்த வரையிலும் மேற்சொன்ன விஷயங்கள் கவனிக்கப்படல் வேண்டும். பேச்சு யார்

Page 57
108
மனதைக் கவரும் பொருட்டு நிகழ்த்தப்படுகிறதென் பதும் பிரதி தயாரிப்பவர் மனதிற்கொள்ள வேண்டிய விஷயமாகும். இலங்கை போன்ற ஒரு சிறிய காட்டில் பிரமுகர்களாயுள்ளவர்களின் புலமை நிபுணத்துவம் முதலியன பெரும்பா லும் பகிரங்க ரகசியமாக விளங்கு கிள்றன. ஆகவே பிறரைக் கொண்டு தமது பிரசங்கங் க2ள எழுதுவிக்கும் பிரமுகர்கள் மேற்சொன்ன விஷயங் களைக் கருத்திற் கொள்ளாது தயாரிக்கப்பட்ட எழுத்துப் பிரதிக2ள வாசித்தால் பிடிபட்டுப் போவார்கள் !
எழுத்துப் பிரதிகளால் சில சமயங்களில் சங்கடங் கள் ஏற்படுவதுமுண்டு. 1959 ஆம் ஆண்டில் வார்ஸா நகரில் நடைபெற்ற பாராளுமன்றங்களின் மாநாட்டில் இத்தகைய சங்கடமுண்டானதை நான் அறிவேன். இலங்கையிலிருந்து சென்ற தமது சகாக்களில் ஒருவர் தமது பேச்சை முன்னரே தானகத் தயாரித்து, அந்தப் பிரதியை வெகு பத்திரமாகத் தமது காவு-பைக்குள் (Attache-case) வைத்திருந்தார். காலை உணவின்போது இந்தப் பையையும் கொண்டு சென்று மேசை மீது வைத் துக் கொண்டார். சிறிது நேரத்தில் நண்பரொருவருடன் உரையாடுவதற்காக வேருெரு மேசைக்குச் சென்ருர், நண்பரிடமிருந்து விடைபெற்றுச் சென்றபோது, தம் முடைய பையை மறந்து நண்பரின் மேசையிலிருந்த, ஒரே தோற்றமுள்ள வேறெரு பையைத் தூக்கிப் போனர். இருப்பிடத்துக்குப் போன பின்னரே தவறைக் கண்டு பிடித்த அந்தப் பிரதிநிதி, பிற்பகல் கூட்டம் ஆரம்பிக்குமுன் தமது பையை மீட்டுக் கொள்ளலாம் என்று எண்ணினர். ஆனல் இவருடைய பையைத் தவறுதலாக எடுத்துச் சென்றவரோ நாட்டைச் சுற்றிப் பார்வையிடுவதற்காக வார்ஸாவிலிருந்து பல மைல்
களுக்கு அப்பால் போய் விட்டார். கண்பர் எவ்வளவோ

109
முயன்றும் பையோ பிரதியோ கிடைக்கவேயில்லை. பிற்பகல் கூட்டத்துக்கு வருவாரோ, பேசுவாரோ என்று காங்களெல்லோரும் அவருடைய தோற்றத்தைப் பார்த் ததும் கவலைப்பட்டோம். ஆனல் அவரோ பிரதியில்லா மலே வெளுத்து வாங்கி விட்டார். அன்றைய கூட்டத் தில் அவருடைய பேச்சொன்றே சகலருடையவும் பாராட் டைப் பெற்றது.
இலங்கைச் சுதந்திரமும் உப்புச் சோடாவும்
18
ஆகஸ்ட் மாதம் 21ஆங் திகதியன்று சம்பிரதாய முறைப்படி ஆடம்பரமான சாம்ராஜ்யப் பாராளுமன்ற மாநாடு 28 ஆங் திகதி முற்றுப் பெற்றது. சர்வதேச மாாகாடுகளின் மரபை அனுசரித்து மாநாட்டு நிகழ்ச்சிகள் கடைபெற்ற கேரங்களைத் தவிர்ந்த மற்ற கேரங்கள் தேநீர் விருந்து, மதிய போசன விருந்து, இராப் போசன் விருந்து என்றிவ்வாருகப் பல்வேறு விருந்துகளில் கழிந்தன.
கமது காட்டிலும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் (Cocktail party) எனக் குறிப்பிடும் மதுபான விருக்தைக் கிழக்கு ஆபிரிக்காவில் (Sundowner) என்று குறிப்பிடு கிருர்கள். என்னைப் பொறுத்த வரையில் எந்த வகை யான "தண்ணிர்ச் சமா’’வும் அரேசிகமானதே. இந்தத் தண்ணிர்ச் சமாக்களில் மதுபான வகையருக்களுடன், கேக்குகள், இனிப்புப் பலகாரங்கள் நீங்கலாக ஏராள மான சிற்றுண்டிகள் பரிமாறப்படும். ஆணுல் தண்ணிர்ச் சமாவிலுள்ள ஒரு நன்மை என்னவெனில் உப்புச் சோடா

Page 58
110
தாராளமாகக் கிடைப்பதாகும். பள்ளிப் பருவத்தில் இனிப்பான கிறிம் சோடாவையோ லெம்னேட் சோடா வையோ விரும்பிப் பருகிப் பழக்கப்பட்ட எனக்கு இந்த உப்புச் சோடா வெகு காலமாக வேப்பங்காயாக விளங்கி வந்தது. இன்று விற்பனையாகிவரும் போட்டெல்லோ, கெக்டோ, கொக்காகோலா,பொவான்டோ, வெலான்டோ, விம்டோ ஆகிய பல்வேறு குளிர் பானுதிகள் கான் சிறுவனுயிருந்த காலத்தில் யாரும் கேள்விப்படாதன வாக இருந்தன. ஆனல், இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர், காட்டில் பல்வேறு ஸ்தானிகராலயங்கள் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, தண்ணிர்ச் சமாக்கள் அடிக்கடி நடைபெறலாயின. இதன் பின்னர் உப்புச் சோடா என் பிரியத்துக்குரிய பானமாயிற்று. ஏனென் ருல் இந்த வைபவங்களில் எனக்கு விருப்பமான தேநீரோ, ஐஸ் கோப்பியோ பரிமாறப் படுவதில்லையாத லால், மதுபானப் பழக்கமில்லாத நான் உப்புச் சோடாவை அல்லது பழரசப் பானத்தையே தஞ்சமடைய வேண்டியதாயிற்று. பொதுவாக ஒரேயொரு ரகமான பழரசப் பானமே வழங்கப்படும். அதுவும் பழச் சாரம் குறைந்ததாயும் சீனி மிஞ்சியதாயும் இருக்கும். இத்த கைய பானத்தை ஓர் அளவுக்கு மேல் பருக முடியாது. உப்புச் சோடா அப்படிப்பட்டதன்று. ஆகவே இலங் கைச் சுதந்திரத்தால் நான் அடைந்த பயன்களில் ஒன்று உப்புச் சோடாக் குடியணுக மாறியமையாகும். இது ஒரு நல்ல பயனென்றே கருதுகிறேன். சோடாவின் ஒளடதக் குணங்களை (1herapeutic qualities) யாவரும் அறிவர். ஆகவே அவற்றை இங்கு விவரிக்காது விடுகிறேன்.
இந்தச் சந்தர்ப்பத்திலே சோடா பற்றிய சுவாரஸ்ய மான கதையொன்றை இங்கு சொல்லலாம். ஒருவர் ஒரு நாள் சோடாவும் ஜின்னும் கலந்து பருகி வெறி வரப்

111
பெற்றர். மறுகாள் அவர் சோடாவும் விஸ்கியும் அருந்திப் போதையடைந்தார். மூன்ரும் நாள் சோடாவும் பிராங்கி யும் குடித்து மயக்கமுற்றர். இந்த நபர் தர்க்க நியாயம் நிரம்பக் கற்றவர். (நிரம்பக் கற்றவரென்ருல் விவேக மாகக் கற்றுத் தேறியவர் என்று நினைத்து விட ாதீர்கள்.) தர்க்க நியாய வாதத்தின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்று வருமாறு : அ-க-ச; அ-கா-ச; அ-கி-ச ஆகவே ச என்னும் மூல விளைவுக்கு 'அ' என்பதே மூல காரணம். இந்தத் தத்துவத்தின்படி சோடா-ஜின்போதை; சோடா-விஸ்கி-போதை, சோடா-பிராந்திபோதை, ஆகவே போதைக்கு நிமித்தப் பொருள் சோடாவே என்று அந்தக் குடிகார ஆசாமி முடிவு செய் தாராம்.
சோடாப் பிரியணுகிவிட்ட எனக்கு மாகாட்டு நாட் களில் கடைபெற்ற தண்ணிர்ச் சமாக்களால் அசெளகரிய மெதுவுமுண்டாகவில்லை. இந்தச் சமாக்கள் வழக்கமாக இரவு 8 மணிக்கு முன்னர் முடிந்துவிடும். ஆகவே இவற் றல் என் தூக்கமும் பங்கப்படவில்லை. wa
ஆகஸ்ட் மாதம் 19ஆங் திகதி மேன்மை தங்கிய கீன்யத் தேசாதிபதியவர்களின் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்து கவர்ச்சி மிக்கதாயும் இலங்கை இராணி மாளிகையில் கடைபெற்ற வைபவங்களை நினைவூட்டுவ தாயும் அமைந்தது; உகண்டாத் தேசாதிபதியின் இல்லத் தில் கடைபெற்றதைப் பார்க்கிலும் அதிக சம்பிரதாய பூர்வமானதாய் விளங்கிற்று. வெள்ளைக்காரப் பெரிய துரைமார் பலர் இந்த விருந்துக்கு வந்திருந்தார்கள். இவர்களில் கீன்யாவில் இரண்டு இரவு எனக்குப் புகலிட மளித்த தோட்டத் துரையும் காணப்பட்டார். இவர் என் ணுேடு கெடுநேரம் உரையாடினுர்,

Page 59
112
20ஆங் திகதியன்று நைரோபி நகராதிபதியவர்களின் *தாகசாக்தி வைபவம்” இடம் பெற்றது. 25ஆங் திகதி பாகிஸ்தான் ஸ்தானிகர், பிரதிநிதிகளாகிய எமக்கெனத் தேநீர் விருந்தொன்றை ஏற்பாடு செய்தார். இப்படிப் பல வைபவங்கள் குறைந்திருந்தால் பிரதிநிதிகளாகிய காங்கள் பட்டணத்தின் ஏனைய பகுதி மக்களுடன் பழக வும் ஆபிரிக்க வாழ்க்கை முறையை விவரமாக அறிந்து கொள்ளவும் அதிக அவகாசம் கிடைத்திருக்கும். ஆணுல் மெள மெள இயக்கம் தீவிரமடைந்திருந்தமையாலும், எமது பாதுகாப்புக்கு மாகாட்டை ஏற்பாடு செய்திருக் தவர்களே பொறுப்பாளிகளாக இருந்தமையாலும் போலும் வெகு கவனமாக அவர்கள் எங்களைக் கண் காணித்துக் கொண்டார்கள் !
மாகாட்டு நாட்களில் நடைபெற்ற பல்வேறு விருந்து வைபவங்களில் மூன்று என் மனதில் உரமாகப் பதிக் துள்ளன. ஏனென்ருல் இந்த மூன்று வைபவங்களும் ஆள் கணக்கின்படி சிறியவையாயினும் பல புதிய விஷ யங்களை அறிந்துகொள்ள எனக்கு வாய்ப்பளித்தன. சம்பிரதாயப்படி எதையும் பூசி மெழுகிப் பேசாமல், மனங் திறந்து பேசுவதற்கு இந்த வைபவங்களில் கலந்து கொண்டவர்கள் தயாராயிருந்தார்கள். இத்தகைய சூழல் நிலவியமைக்குத் தென் ஆபிரிக்கப் பிரதிநிதிகள் எவரும் சமுகமளிக்காதிருந்தமை முக்கிய காரணமெனலாம். ஆகவே ஆபிரிக்க விவகாரங்கள் பற்றியும் தென் ஆபிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கை பற்றியும் ஆசியர்களாகிய எமது கருத்துக்களை ஒளிவு மறைவின் றிப் பரிமாறிக் கொண்டோம்.
மகாதேசாதிபதியின் தேநீர் விருந்து வைபவம் நடைபெற்ற இரண்டு தினங்களுக்குப் பிறகு அவருடைய இல்லத்தில் இராப்போசன விருக்தொன்று கடைபெற்

113
றது. இக்த விருந்துக்கு ஒருசிலரே அழைக்கப்பட்டிருக் தார்கள். விருந்துக்கு முன்னரும் பின்னரும் கடை பெற்ற உரையாடல்களிலிருந்து, தேசாதிபதி சர் எவலின் பேரிங் அவர்கள், இன்றைய மிஸ்றின் சிற்பி யென பிரிட்டிஷார் போற்றும் குருேமர் பிரபுவின் கடைக்குட்டி மகன் எனவும், குருேமர் பிரபுவின் விருத் தாப்பியப் பருவத்தில் (அதாவது அறுபது வயதைத் தாண்டிய பின்னர்) பிறந்தவரென்றும் அறிக்தேன். குருேமர் பிரபுவைப் பிரிட்டிஷார் மிஸ்றின் சிற்பியெனக் கெளரவிக்கின்ற அதே சமயத்தில் மிஸ்ர் மக்கள் அவ ரைப் பழுத்த ஏகாதிபத்தியவாதியாகவும், மிஸ்ர் சுதந்தி ரம் பெறுவதற்குத் தடைக் கல்லாக நின்ற பரம வைரி யாகவும் கருதுகின்றனர். (முன்னர் சர் எவலின் பேரிங் என்று பெயர் பூண்டிருந்த) குருேமர் பிரபு சட்ட உரிமைப்படி ஆட்சித் தத்துவம் பெருவிட்டாலும், கடைமுறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மிஸ்றை ஆண்டு வந்தார். இவருடைய ஆட்சிக் காலத்தில் மிஸ்ர் தேசம் பெயரளவில் துறுக்கி சுல்தானின் நிர்வாகத்தி லிருந்தது; இவருடைய மகனுக்கும் தந்தையின் பெயரே. (எவலின் பேரிங் என்ற பெயரே)-சூட்டப்பட்டது. இந்த இரண்டாவது சர் எவலின் பேரிங்கின் இன்றைய பெயர் முதலாவது பரன்ஹோவிக் என்பதாகும். தென் ஆபிரிக்க ஸ்தானிகராலயத்தில் நிர்வாகத் துறைப் பயிற்சிபெற்ற இவர் அங்கிருந்து கீன்யாவின் தேசாதி பதியாக மாற்றலானுர்; கடை, உடை, பாவனைகளில் உகண்டா தேசாதிபதி கொஹன் அவர்களிலும் மாறு பட்டவரான இவரைப் பார்த்த மாத்திரத்தே, செல்வமும் செல்வாக்கும் படைத்த குடும்பத்தில் பிறந்தவரென்று சொல்லிவிடலாம். இவர் வசித்த இராணி மாளிகை உயர் வர்க்கத்தைச் சேர்ந்த இவருடைய இரசனையுணர்

Page 60
114
வைப் புலப்படுத்துவதாக விளங்கிற்று. பிரபு வம்சத் தைச் சேர்ந்த இவரின் மனைவியும் மற்ருெரு பிரபு வம்சத் தவரே. இதனை கோக்குமிடத்து, ஜனாாயகத்தின் தாயக மாகிய பிரித்தானிய காட்டிலும் சாதி வேறுபாடுகள் உண்டோ, என்று எண்ணத் தோன்றுகிறதல்வவா? ஆகவேதான் பிரபு-சீமாட்டி திருமணங்கள் அங்கு அதிகம் போலும்.
தேசாதிபதியவர்களின் இல்லத்தில் நடைபெற்ற விருந்திலும் மாறுபட்டதாக அமைந்தது. இலங்கைப் பிரதிநிதிகள் ஐவருக்கும் இலங்கையரான சுமணசிங்க அவர்கள் அளித்தவிருந்து, இலங்கையிலிருந்து பிரிக்கு வக்தூ 22 நாட்களே கழிந்திருந்தபோதிலும், ஐரோப்பிய, பாகிஸ்தான் உணவு வகைகளையே அன்றைய நிலையி லிருந்த எமக்குத் தேங்காய்ப் பச்சடியும்-பொல் சம் பொல்-சீனி சம்பலும் தேங்காய்ப் பால்கொண்டு தயாரிக்கப்பட்ட கறிகளும் சேர்த்துப் பரிமாறப்பட்ட விருந்து பாலைவனத்தல் நீர்சசுனையைக் கண்டதைப் போன்ற உணர்வையூட்டியது. சுவைகளை இனங்காணும் இந்த காக்கு இருக்கிறதே, அது உண்மையிலேயே அற்புதமான ஓர் உறுப்புத்தான். எலும்பில்லாத காக்கு என ஏளனமாக வர்ணிக்கப்படும் இந்த நாக்குக்கு எண்ணுக் கணக்கற்ற சுவைக் குமிழ்கள்-( (aste Bus)- உண்டு. காக்கு நரம்புகளின் அந்தமாகிய இந்தச் சுவைக் குமிழ்கள் மூளையுடன் இணைந்துள்ளன. நாக்கில் ஒரு பொருளை வைத்ததும் அதன் சுவை இன்னதென்று கண்டு பிடிப்பவை இந்தச் சுவைக் குமிழ்களே. இவற் றின் கண்டு பிடிப்பைப்பற்றி மூளைக்குங் தந்தி கொடுப் பவை காக்கு நரம்புகளாம். மேற்சொன்ன விருந்தில் பரிமாறப்பட்ட உணுவகைகளின் சுவை பற்றி தந்தி கொடுத்த நாக்கு கரம்புகளுக்குத் தேசாபிமானம் அதி

115
கரித்திருக்கும். ஏனென்ருல் அன்று எல்லா உணவு வகைகளும் இலங்கை மயம் !
இந்த விருந்தின்போது பல முக்கியமான தகவல் களை கான் அறிந்துகொண்டேன். இவற்றில் குறிப்பிடத் தக்கதொன்று வியாபாரத்தில் சில்லறை வியாபார மாயினுஞ் சரி மொத்த வியாபாரமாயினும் சரி இந்தியர் களும் பாகிஸ்தானியர்களுமே ஆதிக்கம் செலுத்துகிருர் களென்பதாகும். ஆபிரிக்க மக்கள் மிகவும் முன்னேற்ற மடைந்துள்ள கிப்ஸிஜி ஒதுக்கிடம் போன்ற பகுதிகளில் கூட இவர்களே வியாபாரத் துறையில் முதன்மை வகிக் கிருர்கள். இந்தக் கட்டத்திலே எம்முடன் இருந்த திரு. பேர்ணுட் அலுவஹார இலங்கையில் கண்டி பகுதியில் நிலவுய சூழலைச் சுட்டிக் காட்டினுர்,
மூன்ருவது விருந்து ாைகரேபியில் வசித்த இலங்கை யர்கள் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தாகும். இந்த விருந் துக்கு முன்னர் இலங்கை சிவில் சேவை அதிகாரிக ளாகப் பணியாற்றிய ஹார்ட்வெல், கொட்ஸால் இரு வரும் வந்திருந்தார்கள். நான் செனட்டராகி நைரோபி வந்திருந்ததைக் கண்டதும் இந்த வெள்ளையர்கள் இரு வரும் வியப்படைாதார்கள். சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை சிவில் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள்பற்றி அறிவதில் இருவரும் மிகுந்த நாட்டமுடையவர்களாகக் காணப்பட்டார்கள். இலங்கையர்களைப் பொறுத்த வரையில் குறிப்பிடத்தக்க மாற்றமில்லையென்றும், ஆனல் வெள்ளைக்காரர்களைப் பொறுத்தவரையில் நல்ல யோகம் அடித்திருக்கிறதென்றும் தமாவுாகச் சொன்ன கான், சிவில் சேவையில் என் சம காலத்தவரான வெள் ளேயர் ஒருவர் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் ஆபிரிக்க நாடொன்றில் தேசாதிபதியாக உயர நியமனம் பெற்றமையைச் சுட்டிக் காட்டினேன். இப்படி இன்னும்

Page 61
116
பல விருந்துகள் கடைபெற்றன. இவற்றிலெல்லாம் குறிப்பிடத்தக்கதாக என் மனதில் நிலைத்திருக்கும் விருந்து ஆகஸ்ட் மாதம் 25ஆங் திகதியன்று பாரிஸ்டர் அமீன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற சிறு விருந்தாகும்.
அல்லாமா இக்பாலும் அஹ்தார் இமாமும்
19
நியாயதுரந்தரர் அமீன் அவாகளின் இல்லத்தில் கடைபெற்ற விருந்து நினைவில் நிலைத்திருப்பதற்குக் சுாரணம் அங்கு பரிமாறப்பெற்ற உணவுகளல்ல. பாகிஸ்தானி சமையற்காரணுல் நூற்றுக்கு நூறு பாகிஸ்தானி முறைப்படி சமைக்கப்பட்ட உணவு வகை களை (ஆபிரிக்கா ) சோமாலி முஸ்லிம் பரிசாரகன் பரி மாறினன் என்பதும் காரணமன்று. எனது ஆபிரிக்க யாத்திரியில் இத்தகைய உணவுகளை எத்தனையோ முறை சுவைத்திருக்கிறேன். விருந்தின்போது கடை பெற்ற சம்பாஷணைகளின் நிமித்தமாகவே அவ்விருந்து மனத்தைவிட்டகலா திருக்கிறது. அன்றைய தினம் அமீன் அவரோடு பங்காளியாகத் தொழில் கடத்துபவ ரான றவூஃப், கான் ஆகிய மூவர் மட்டுமே விருந்திற் கலந்துகொண்டோம். இந்த விருந்தின்போது கடை பெற்ற உரையாடல் பூசி மெழுகுதல், மழுப்புதல், சுற்றி வ8ளத்தல் போன்ற நாகரிக சம்பிரதாயங்களற்றதாயும் விஷய ஞானம் செறிந்ததாயும் அமைந்தது.
கைரோபியில் கான் கால் வைத்ததுமே இருவரும் என்னைத் தேடி வந்து சந்திக்கக் காரணமாயிருந்தது எனக்கும் அவர்களுக்கும் கண்பராகிய கலாநிதி எஸ்.

117
அஹ்தார் இமாம் அனுப்பி வைத்த அன்பொழுகும் அறி முகக் கடிதமாகும். கைரோபியில் பாகிஸ்தான் ஸ்தானி கரின் காரியதரிசியாக இரண்டொரு வருடம் கடமை யாற்றி வந்த டாக்டர் இமாம் நான் கைரோபி செல்வதற் குச் சில மாதங்களுக்கு முன்னர் கராச்சிக்கு மாற்றம் பெற்ருர் காராச்சியில் பதவியேற்பதற்கு முன்னர் தமது மனைவியின் பிறப்பிடமாகிய கண்டி வந்து சில நாட்கள் தங்கினுர், குன்ரு எழில் கொழிக்கும் கம் ஈழவள நாட் டின் வனப்பில் மனதைப் பறிகொடுத்த இமாம் அவர் கள் இன்று இலங்கையராகவே வாழ்ந்து வருகிறர். இதை யிட்டு காம் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென் றல் இவருக்கு முன்னரும் பலர் இப்படி இலங்கையின் வசீகரத்தால் தம்வசமிழந்திருக்கிருர்கள். ஆணுல் அக்தக் காலத்தில் இலங்கை சுதந்திர நாடாக இருந்திருந்தால் அவர்களும் இலங்கையர்களாகியிருப்பார்கள்.) மிஸ்றி லிருந்து தேசப் பிரஷ்டம் செய்யப் பெற்ற அறபி பாஷா வின் சகாக்களில் ஒருவரின் மகனுன அலி புவாத் துல்பா என்பவர் "நித்தம் எழில் சிந்தும் நாடாம் இலங்கை’, Ceylon-the Land of Eternal charm- GT Gör goljub GDL Ju Jif'Gü ஒரு புத்தகமே எழுதியிருக்கிறர். அறபி பாஷா கூட, தம்மை இலங்கைக்கு காடு கடத்தப் போகிறர்கள் என்று கேள்வியுற்றதும் * பூலோக நந்தவனமாகிய மிஸ்றி லிருந்து கான் விரட்டப்படுகிறேன். ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களின் தரிப்பிடமாகிய புண்ணிய ஸ்தல மாம் இலங்கைக்குப் போகவிருக்கிறேன். இதனை ஒரு கற் சகுனமாக கான் கருதி வரவேற்கிறேன்.” என்ருர், இமாம் அவர்களும் இலங்கையின் அழகு தவழும் இயற் கைக் காட்சிகளால் அருட்சி பெற்று உறுது மொழி யில் கவிதையொன்றினை இயற்றியுள்ளார். ஹங்குரங் கெட்ட வாடி வீட்டின் முன் விருச்தையில் வீற்றிருந்து

Page 62
118
எதிரே கண்ட கண்கொள்ளாக் காட்சியால் மெய்மறந்த நிலையில் இப்பாடலை இயற்றினர்.
இமாம் அவர்கள் கண்டியில் தங்கியிருந்த சமயத்தில் அவரைச் சந்தித்த கான் கிழக்காபிரிக்காவுக்குப் பிரயாண மாக இருப்பதைப் பற்றி அவரிடம் குறிப்பிட்டேன். அவர் உடனே பல்கலைக் கழக விரிவுரையாளர் மாணவர் களுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுப்பதைப் போல, ஆபிரிக்காவைப் பற்றி எனக்கு ஒன்றல்ல இரண்டு மூன்று லெக்சர்களே அடித்தார். நியாயதுரந்தரர்க ளாகிய அமீனுக்கும் றவூஃபுக்கும் அவர் எழுதிய அறி முகக் கடிதத்தில் கவிஞர் இக்பால் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடுண்டு என்பதைச் சற்று அழுத்தமாகவே குறிப் பிட்டிருந்தார்.
றவூஃப் அவர்கள் பம்பாயைச் சேர்ந்த கொங்கணி முஸ்லிம். அவர்களின் மொழி மராத்தி இனமொழி. அமீரோ பஞ்சாபி முஸ்லிம். அவர் பேசும் மொழி பஞ்சாபி ஆயினும் இருவருக்கும் உறுது மொழி வெகு பரிச்சயம். கைரோபி ஹோட்டலில் என்னைச் சந்தித்தபோது எனக்கு உறுது தெரியாது என்றறிந்ததும் இருவரும் ஆச்சரிய மடைந்தார்கள். முஸ்லிமாக இருந்தும், இக்பால் பிரியனுக இருந்தும் உறுது மொழி தெரியவில்லை என்றதைக் கேட்டு அவர்கள் வியப்படைந்தைப் போலவே காஹிரு சென்றிருந்தபோது அறபு பேசத் தெரியாதென்றதும் ஆச்சரியப்பட்டார்கள். இஸ்லாமிய உலகில் எத்தனையோ மொழிகள் உண்டு என்பதை அழுத்தந்திருத்தமாக உணர்த்துவதற்குப் பிரயாணம் ாகல்ல சாதனம்தான்!
எமது உரையாடலில் முதல் எழுந்த கேள்வி உறுதுவோ பார்ஸியோ பாரசீகமோ தெரியாத கான்

119
எப்படி இக்பால் அபிமானியானேன் என்பதே. இந்தக் கேள்வி இஸ்லாமிய வரலாறு, என் சுயசரிதம் ஆகிய விஷயங்களுக்குச் சம்பாஷணையை இழுத்துச் சென்றது.
இலங்கை முஸ்லிம்கள் உறுது கற்க வேண்டிய தேவை ஏற்படாமைக்கான எனது விளக்கத்துக்கு இரண்டு குறிப்பிடத் தக்க திகதிகளை மையமாகக் கொண் டேன். இவை 1505 ஆம், ஆண்டும் 15 6 ஆம் ஆண்டு மாகும். 1505 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயர் இலங்கை வந்தனர். இவர்களின் வருகையையும் ஆதிக்கத்தை யும் தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம்களின் செல் வாக்கு வீழ்ச்சி யடையலாற்று. இந்த வீழ்ச்சியின் கார ணமாக இலங்கை முஸ்லிம்கள் வெளியுலக முஸ்லிம் களுடன் கொண்டிருக்த கலாசாரத் தொடர்புகள் யாவும் அறலாயின. இத்தகைய சூழல் உருவான பல ஆண்டு களுக்குப் பின்னரே, 15 26ம் ஆண்டிலேயே, பாபர் என் பவர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினர், முகலாய ஆட்சி வலுப் பெற்றதையடுத்தே, உறுது மொழி செல் வாக்குப் பெற வாரம்பித்தது. எனவே இலங்கை முஸ் லிம்கள் உறுது கற்க வழியில்லாது போயிற்று.
உறுது, இலங்கை முஸ்லிம்களின் வரலாறு ஆகிய வி ஷ யங் களி லி ரு ங் து எமது Fibun 69%00T அல்லாமா இக்பாலுக்குத் தாவியது. அல்லாமா இக்பாலைப்பற்றி முன்னரே நான் கேள்வி யுற்றிருந்தபோதிலும், 1937-41 ஆம் காலப் பிரிவில் வைத்திய இலாகாவில் சேவை புரிந்த சமயத்திலேயே அவரை இரசிக்கத் தொடங்கினேன். கார்கில்ஸ் கம் பெனிப் புத்தகப் பகுதி மனேச்சராயிருந்த நண்பரொருவர் கே ஜி. ஸெய்யிதைன் எழுதிய “ இக்பாலின் கல்விக் Qassroit Gods' qbaals Eductional Philosohy-GT63rgoyub

Page 63
120
புத்தகத்தை வாங்குமாறு என்னைத் தூண்டினர். இதன் பின்னர் தத்துவத்துறையில் இக்பாலின் ஒப்பற்ற படைப் பாகத் திகழும் “இஸ்லாத்தில் மதச் சிக்தனையின் புனருத் gfTgg00Tub'—The Reconstruction of Religious Thought on Islam-என்னும் நூலும் கைக்கு எட்டியது. பிற்பாடு *ஆன்மாவின் இரகசியங்கள்’ (தாதான்மியத்தின் அஹ LÉu Itius,Gir?) - Secrets of the Self-GTGötmo (5.12,u Gustafégs. மகிழ்ந்தேன். இந்த நூல்களின் வாயிலாக இக்பாலின் சிந்தனைப் பாங்கினை கான் அறிந்துகொண்ட போதிலும், எமது நண்பராகிய டாக்டர் அஹ்தார் இமாமைச் சந்திக் கும் வரை அவரின் கவிதா சக்தியை நான் சுவைக்க முடியவில்லை. 1941 இலோ 1915 இலோ இமாம் அவர் களின் நட்புக் கிடைத்த பின்னர் இக்பாலின் கவிதை களில் மணிக்கணக்கில் ஈடுபட்டு வந்திருக்கிறேன். இமாம் அவர்கள் இக்பாலின் செய்யுட்களை இங்கிலிஸில் மொழிபெயர்த்துச் சொல்வதுடன் நில்லாது, ஒவ்வொரு செய்யுளைப் பற்றியும் பயன் கொழிக்கும் நீண்ட பிரசங் கமே செய்வார். ஜெர்மன் மொழியிலும் தேர்ச்சி பெற்றவ ரான இமாம் ஜெர்மானிய தத்துவ ஞானியாகிய நீச்சே Nietzche-என்பாரும் அவருடைய அதி மனித -Superman-தத்துவமும் எவ்வளவு தூரம் இக்பாலைக் கவர்ந்துள்ளனவென்பதை எடுத்துக் காட்டுவார். அத் தகைய சந்தர்ப்பங்களில் இக்பால், இமாம் இருவருமே ஜெர்மன் சர்வகலாசாலைகளில் கலாநிதிப்பட்டம் பெற்ற வர்கள் என்ற நினைவு என் மனத்தில் எழும்.
இவ்விதமாக, சரித்திரம், சமயம், கவிதை, தத்துவம், மொழியியல் இவை பற்றியெல்லாம் தொட்டுத் தழுவிச் சென்ற எமது உரையாடலில் இதுவரை நானே அதிக மாகப் பேசிக்கொண்டிருந்தேன். ஏனென்றல், இவ்வளவு

121
நேரமும், கண்பர்கள் கேள்வி கேட்க கான் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். இனி அவர்களைப் பதில் கூறவைக்க வேண்டுமென்று எண்ணி, கிழக்கு ஆபிரிக்க முஸ்லிம்களைப் பற்றிச் சொல்லுமாறு கேள்வி கேட்டுப் பேச்சுத் திசையை மாற்றிவிட்டேன். ாைநரோபி ககரில் அநேக சோமாலி முஸ்லிம்கள் பலவேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும், சோமாலி முஸ்லிம்கள் கீன்யாவின் வட கிழக்கு எல்லைப் பகுதிகளிலேயும் வசிக் கின்றனர். என்றும், இவர்களின் வாழ்க்கை முறை அயல் பகுதிகளில் வாழும் கீன்ய ஆபிரிக்கர்களின் வாழ்க்கை முறையினின்றும் பெரிதும் வேறுபட்ட தென்றும் அறிந்தேன். இந்தப் பின்னணியில் பார்க்கும் போது சோமாலி மக்களுக்கும் கீன்யர்களுக்கும், சோமாலி மக்களுக்கும் எத்தியோப்பியர்களுக்கும் அடிக்கடி ஏம் படும் எல்லைத் தகராறுகளின் காரணத்தை ஓரளவுக்கு உணர முடிகிறது. சோமாலி 1960 ஜூலை 1-ந் திகதி சுதந்திர குடியரசாக உருப்பெற்றது. இத்தாலிக்குச் சொந்தமாயிருந்த சோமாலிலாந்தும் பிரிட்டிஷாருக்குச் சொந்தமான சோமாலிலாந்தும் இணைந்ததே இப் புதிய சோமாலிலாந்துக் குடியரசு. இதற்கு அண்மையில் பிரான்சுக்குச் சொந்தமான சோமாலிலாந்து இருக்கிறது. இங்குதான் உலகப் புகழ்பெற்ற ஜிபூதி துறைமுகம் அமைந்திருக்கிறது. அண்மையில் இந்தப் பகுதி பிரான்ஸோடு இணைந்து இயங்குவதா அன்றேல் பிரிக்கு இயங்குவதா என்பது பற்றிச் சர்வஜன வாக்கெடுப்பு கடைபெற்றது. . .
கிழக்கு ஆபிரிக்காவில் வாழும் இந்திய-பாகிஸ் தானி முஸ்லிம்களுக்கும் சுதேசி முஸ்லிம்களுக்கும் எந்த வகையான சமூகத் தொடர்புகளோ உறவு முறைகளோ இல்லையென்று எனது நண்பர்கள் குறைப்பட்டுக்
1279-8

Page 64
122
கொண்டார்கள். ஆணுல், இதற்கு மாருக, அறபு இன முஸ்லிம்களும் ஆபிரிக்க முஸ்லிம்களும் கெருங்கிய தொடர்புடையவர்களாக விளங்குகின்றனர் என்ருர் கள். இதிலிருந்து எமது சம்பாஷணை அறபு மக்களையும் சேர்த்ததான செமித்திக் இனத்தவர்களைப் பற்றியும் ஆரிய இனத்தவர்களையும் பற்றியும் வருணுசிரம தர்மத் தைப் பற்றியும் பின்னிப் படரலாயிற்று. இந்தச் சம்பாஷனைகளின்போது டாக்டர் இமாம் எம்முடன் இல்லாமை பெருங் குறையாகத் தோன்றியது. அவர் கூட இருந்திருந்தால் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் விரிவுரைகளே ஆற்றியிருப்பார். முற்ருகக் கறுப்பின மக்களையே கொண்ட சுதான் தேசமும் அறபு லீக்கில் அங்கத்துவம் வகிப்பதை அவர் கட்டாயம் சுட்டிக் காட்டியிருப்பார்.
ஆபிரிக்க விவகாரங்கள் சம்பங்மான எமது உரை யாடல்களின் போதும், எமது நண்பர்களில் ஒருவர், பிரிட்டிஷாரை ஆதரித்தார்; மற்றவர் கிக்கியு மக்களை ஆதரிப்பவராகக் காணப்பட்டார். இந்தக் கருத்து வேறுபாடு சம்பாஷணைக்குக் காரமும் சாரமுமூட்டிற்று. விளக்கம் கேட்கும் பாங்கில் இங்கொன்றும் அங்கொன்று மாகச் சில கேள்விகளைத் கேட்டுவிட்டு நான் பேசா திருக்க, அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் வழக்குப் பேசுவதைப் போல வாக்குவாதம் செய்தார் கள்.
சுமார் 4 மணி நேரத்தின் பின்னர், செவிக் குணவும் வயிற்றுக் குணவும் ஈந்த இந்த விருந்து முடிவடைந்தது. அன்றிரவு படுக்கைக்குச் சென்றபோது, என் மனதில் மேலோங்கி நின்ற நினைவு இக்பாலைப் பற்றியதாகும். இலங்கை அடங்கலாக முஸ்லிம் உலகம் முழுதிலும்

123
கீர்த்தி பெற்ற இந்தக் கவிஞரின் நினைவு தோன்றியதும் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் அரசியல் சாஸ்திர வகுப்பில் கான் கேட்ட முதலாவது விரிவுரை மனதில் பளிச்சிட்டது. அவ்விரிவுரையை நிகழ்த்தியவர் கலாநிதி ஏர்ணஸ்ட் பார்க்கர் Ernet Barker-அவர்கள். கருத்துக் களுக்குக் காலுமுண்டு, கையுமுண்டு என்னும் பொருளை விளக்கி அவர் உரையாற்றினர். இவ்விதமாக, முஸ்லிம் உலகுக்குப்புத்தம் புதிய சிந்தனைகளை விதைத்துச் சென்ற கவிஞர் இக்பால் அவர்கள் இறந்துவிட்ட போதிலும் அவருடைய கருத்துக்கள் காலும் கையும் முளைக்கப் பெற்று உலகிற்பரவி வருகின்றன.
விலாங்கு மனிதன்
20
மாகாட்டுப் பிரதிநிதிகள் வெவ்வேறு தேசத்தவர் களாக மட்டுமிருக்கவில்லை. வெவ்வேறு மனப்பாங்கும் இரசனை உணர்வுகளுடையவர் களாகவும் விளங்கினர் கள். இங்கிலாந்துப் பிரதிகிதிகள் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், எந்த நேரமும் ஆட்களைப் பிடித்துக் கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருப்பார். பத்திரிகை எழுத்தாளரான இவர், இப்படி கேரடிச் சம்பாஷணைகள் மூலம் தகவல் திரட்டித் தமது ஹோட்டல் அறைக்குத் திரும்பியதும் நீண்ட குறிப்புக்கள் எழுதுவார். இன்று கன்சர்வேட்டிவ் கட்சியில் தூண்களில் ஒருவராகத் திகழும் இவர் அந்தக் கட்சி ஆட்சிக்கு வர கேர்ந்தால் அமைச்சர் பதவி பெறல் கூடும். இவர் இப்படி செய்தி சேகரித்துக் கொண்டிருக்குஞ் சமயத்தில் மற்றப்

Page 65
124
பிரதிநிதிகளில் சிலர் மதுச் சாலையில் போய் உட்கார்ந்து தம்மையும் உலகையும் மறந்து விடுவார்கள். வேறு சிலர் மூலைக்கு மூலை உட்கார்ந்திருந்து பலதும் பத்தும் பேசுவார்கள். பிரிட்டிஷ் குழுவில் தொழிற் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இருந்தார், இவரைச் சூழ எந்த நேரமும் தொழில் சங்கவாதிகள் மொய்த்துக் கொண்டிருப்பர்கள். எப்பொழுதும் ஏதா வது கூட்டத்திற்கு இவர் ஏற்பாடுசெய்வார். உள்ளூர் வெள்ளைக்காரத் தோட்டத் துரைமாருக்கு இவருடைய நடிவடிக்கைகள் புண்ணிலே புளிவார்ப்பது போல இருந்தன. தொழிற் சங்க வரலாறுகளையும் கறுப்பின மக்களையும் தங்களுக்கு எதிராக அவர் தூண்டி விட்டுக் கொண்டிருப்பதாக அவர்களுக்குத் தோன்றியது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்னும் குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக்காம்பாக அவரைக் கருதினர்கள்.ஆசியப் பிரதிநிதிகளில் “டெனிஸ்’ ஆட்டப் புலி ஒருவர், டெனிஸ் மட்டையும் கையுமாக எந்த நேரமும் விளையாட்டுக்கு ஆளும் அரங்கும் தேடித்திரிந்து கொண்டிருந்தார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து வந்த மற்ருெருவர் சதா கமராவும் கையுமாகக் காட்சி யளித்தார். வடிவான ஒரு மரத்தைக் கூடவிட்டு வைக் காமல் கண்டதெல்லாவற்றையும் படம் பிடித்துக் கொண்டார். நைஜீரியப் பிரதிநிதி, ஒருவர் க றுப்பின மக்களின் உரிமைகளையும் சு தந்திர தாகத்தையும் வெள்ளையர்கள் மதித்துக் கனம்பண்ணவேண்டுமென் .9) பிரசாரஞ் செய்து கொண்டிருந்தார். இவரது பிரசாரத் தின் தீவிரம் பத்தொன்பதாம் நூற்றண்டில் ஆசியா வில் மதத்தொண்டு புரிய வந்த கிறிஸ்தவப் பாதிரிமாரின் தீவிரத்தை எனக்கு நினைவூட்டியது. மற்றேர் ஆசியப் பிரதிநிதிகளில் ஒருவர் காலை தோறும் செய்து வந்த

125
சிரசாசனத்தாலும் ஓம்! ஓம்! என்ற பாராயணத்தாலும் கவரப் பெற்று, அவருக்கு முன்னும் பின்னும் திரிந்தார். பாராயணத்தைக் கேட்டுப் பக்கத்து அறைகளில் இருந்த வெள்ளைக் காரர்கள் முணுமுணுத்துக் கொண்டதை அவரோ அவருடைய அபிமானியோ அறிய வில்லை 1 கல்லவேளையாக இந்த அபிமானி அந்தச் சிரசாசனயோகியைத் தமது குருவாக மதித்து, நமது ஈழவள காட்டுக்குப் பின் தொடர்ந்து வராது விட்டார். வந்திருந்தால் சீடரால் குருவுக்கு பல வில்லங்கங்கள் உண்டாகியிருக்கும்.
. . . . இப்படியாக ஒவ்வொரு பிரதிநிதியும் ஒவ்வொர் அக்கறையுள்ளவராக விளங்கினுர், இதைக் கவனிக்கும் போது, என்னைப் போலவே வேறெந்தப் பிரதிநிதியும் தமது ஆபிரிக்க அனுபவங்களை எழுத்தில் வடிக்க முற் பட்டிருந்தாராணுல், அவருடைய கட்டுரைகள் வேறு கண் ணுேட்டத்தில் அமைந்திருக்குமென்று தோன்றுகிறது. ஆழ்ந்து சிக்தித்தோமானுல், நாமெல்லோருமே யானை யைக் கண்ட குருடர்களுக்கு ஒப்பானவர்கள் என்பது புலனுகும். யானையைப் பார்க்கப் போன குருட்டர்கள் அதன் ஒவ்வொர் உறுப்பையும் தொட்டுப் பார்த்து விட்டு யானை இப்படி இருக்கும்; அப்படி இருக்கும் என்று முடிவு செய்தார்கள். காலைத் தொட்டவனுக்கு யானை உரலாகத் தோன்றிற்று; காதைத் தொட்டவ னுக்கு யானை முறமாக மாறிற்று; வாலைப் பிடித்தவன் யானையைத் துடைப்பத்துக்கு ஒப்பிட்டான். மனித வாழ்க்கையை (p(p60)Lott Inté5 s-90/Tu முயலும் வரலாற்ருசிரியரும் இந்தக் குருடர்களைப் போன்ருேரே சிலர் நில அமைப்புக்கும் சீதோஷ்ண நிலைமைகளுக்கும் முக்கியத்துவமளிக்க, வேறுசிலர் பொருளாதாரக் கட்டுக் கோப்புக்கு முதலிடமளிப்பர்.இன்னுஞ்சிலர் வரலாற்ருசிரி

Page 66
126
யர்கள் கலாசாரத்துக்கு முதன்மையளிப்பார். சத்திய தரிசனமென்பது மனிதனுக்குக் கானல் நீர்தானே?
மேற்சொன்ன வெவ்வேறு பொழுதுபோக்குகளோ அக்கறைகளோ இல்லாத பிரதிநிதிகளும் மாகாட்டுக்கு வந்தே யிருந்தார்கள். இவர்கள் தம்மை அதிகம் அலட்டிக் கொள்ளாமலே சம்பாஷணைகள் மூலம் விஷயங்களைக் கிரகித்துக் கொண்டார்கள்.
நியூஸிலாந்துப் பிரதிநிதி ஒருவருடன் நான் கெருங் கிய நட்புப் பூண்டேன், இரண்டாவது உலக யுத்தத் தின்போது போர்க்களம் கண்ட இவருக்குக் காலில் கடுங்காயம் ஏற்பட்டிருந்தது. இதன் பயணுக யுத்தத் தின் கொடுரத்தையும் தீங்கையும் நேரில் அறிந்திருந்தார். ஆகவே, எந்த யுத்தத்தையும் அவர் அடியோடு வெறுத்து வந்தார். ஆபிரிக்கச் சுதந்திர இயக்கங்களின் கியா யத்தை உணர்ந்தவராகவும் அவற்றை ஆதரிப்பவராக வும் காணப்பட்டார். இவருடன் கதைத்ததன் பயணுக கியூஸிலாந்தைப் பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். வெளிநாடுகளுக்குப் பிரயாணஞ் செய் யுஞ் சமயங்களில் அந்தந்த காட்டின் நில அமைப்பு, சனத் தொகை முதலிய விவரங்களை மனதில் பதித்துக்கொள் ளும் பொருட்டு சில சூத்திர முறைகளை கான் கையாளுவ துண்டு. நியூஸிலாங்தைப் பற்றிய எனது தத்திரம் இது: இலங்கையைப் போலவே கமத்தொழில் நாடாக விளங்கும் நியூஸிலாந்து இலங்கையிலும் சுமார் கான்கில் ஒரு பங்கு சனத்தையும் கான்கு மடங்கு நிலப்பரப்பும் கொண்டதாகும். ஆகவே, நியூஸிலாந்தினர் எங்களிலும் பதினறு மடங்கு பாக்கியசாலிகள் தாமே? இவர் (நியூ ஸிலாந்துப் பிரதிநிதி) தமது தூதுக் குழுவின் சகாக் களுக்கும் என்னை அறிமுகஞ் செய்துவைத்தார். இவர்

127
களின் சகவாசம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. ஆசியாவையும் ஆசிய மக்களின் சிந்தனைப் போக்கையும் (Asian Mind) அறிவதில் இவர்கள் மிகுந்த ஆர்வம் காட் டிஞர்கள்.
கனடாவின் சாஸ்கெச்சுவன் மாகாண ஆட்சி மன் றத்தின் பிரதிநிதியாக மாநாட்டில் கலந்துகொண்ட கெளரவ வூட்ரோ எஸ். லொயிட் அவர்கள் (முன்னைய ஆசிரியரும் ஆசிரியர் சம்மேளனத் தலைவருமாவர். கல் விப் பிரச்சினைகள் சம்பந்தமாக இவருடன் பல மணி நேரம் சம்பாஷித்தேன். இந்தச் சம்பாஷணைகளின் பய ஞகக் கல்விப் பிரச்சினைகள் உலகெங்கும் ஒரே இயல் பினவாக விளங்குவதை உணர்ந்தேன். மக்களின் காடு இனம், நிறம் முதலியன வேறுபட்ட போதிலும் போதன முறைகளும் வித்தியா இலட்சியங்களும், பாடசாலைகளில் மாணவர்க2ளச் சேர்க்கும், நீக்கும் வயதெல்லை இவற்றை யொட்டிய பிரச்சினைகளும் உலக முழுதுக்கும் பொதுவே. கல்வி என்பதன் அர்த்தம் மேலும் விரிவடைந்திருக்கிறது. சமுதாயத்தோடி2ணந்த தனித்தன்மை-Social Individuality-பற்றிய கொள்கை மேலும் பரவலான அங்கீ காரம் பெற்று வருகிறது. பிரச்சினைகள் இவ்விதம் பொதுமை பெற்றுள்ள போதிலும் அவற்றுக்கான பரி காரங்கள் பொதுவானவையாக அமைதல் இயலாது. ஒரு கால் மக்களின் கல்வி அபிலாஷை அவர்களின் வர லாற்று நியதியையும் சூழலின் தன்மையையும் அணு சரித்தே அமைகிறது.
லொயிட் அவர்கள் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த ஒருவர். உபகாரச் சம்பளங்களின் துணையால் மேல் படிப்புப் படித்த இவர், ஆசிரியராகப் பதவியேற்று படிப்பித்துக் கொண்டே தொடர்ந்து படித் தார்.

Page 67
128
இரண்டே இரண்டு சிறிய அறைகளைக் கொண்ட பாட சாலையில் தமது உத்தியோக வாழ்க்கையை ஆரம்பித்த இவர் நாளடைவில் பிரபலமடைந்து திறமை மிக்க கல்வி அமைச்சரானர். அடக்கமான குணமும் அமைதியான பேச்சுமுடைய இவருடன் பழகப் பழக அவரின் அறிவாற் றலும் சேவை உணர்வும் கன்கு புலனுகின.
மாநாட்டுப் பிரதிநிதிகளில் அகடவிகட வேலைகளில் தேர்ந்த சிலரும் காணப்பட்டார்கள். இவர்களில் ஒருவர் செய்த காரியம் மறக்க முடியாததொன்று. வெள்ளைக் காரப் பிரதிநிதி ஒருவர் அளவுக்கு மீறி எல்லோருக்கும் முகஸ்துதி செய்து வந்தார். பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு மீனைப்போல ஆபிரிக் கருடன் பழகும்போது அவர்கள் சார்பாகவும் வெள்ளைக் காரப் பண்ணையாளர்களுடன் உரையாடும்போது அவர் கள் பக்கமாகவும் பேசுவார். இதைக் கவனித்த விகடப் பிரியர் ஒருவர் இவருக்குத் தான் ஒரு பாடம் படிப்பிக்கப் போவதாக எங்கள் இருவரிடமும் முன்கூட்டியே சொல்லி வைத்தார். கீன்ய மக்திரி சபையில் இந்தியர்களின் பிரதிநிதியாக இரண்டு எம். எல். சிக்கள் நியமிக்கப் பட்டிருந்தார்கள். இவர்களில் ஒருவர் முஸ்லிம். இவரை அறிமுகம் செய்தவுடன் அந்த விலாங்கு மனிதன் உடனே பாகிஸ்தானைப் பற்றி ஒரேயடியாகப் புகழ்ந்து பேச ஆரம்பித்தார். முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்து பிரிந்தது மெத்தச் சரியென்ருர், சற்று கேரத்தில் அதே வைபவத்தில் காது அவர்கள் பட்டேல் என்ற பொய்ப் பெயரில் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். மனிதன் உடனே இந்தியாவைப் புகழ்ந்து துதிபாடத் தொடங் கினர். இந்தியா ஒருபோதும் பாகிஸ்தானைச் சும்மா விடாது என்று உபதேசம் வேறு செய்தார்! இந்தச் சம்

129
பவம் பிரதிநிதிகள் எல்லோருக்கும் தெரிய வந்ததும் ஒரே தமாஷாகயிருந்தது.
இலங்கைப் பிரதிநிதிகள் நால்வரில் காலஞ்சென் p பேர்ணுட் அலுவிஹார அவர்கள் கீன்ய ராணி மாளிகை யில் ஓரிரவு தங்கும் வாய்ப்புப் பெற்றர். சில வாரங்கள் கழித்து இலங்கை திரும்பிய பிங் இந்த மாநாடு பற்றி நாங்கள் நால்வரும் சிராவஸ்தியில் வாய் வார்த்தையாக அறிக்கை சமர்ப்பித்தோம். என்முறை வந்ததும் சொன் னேன்;
எனக்கு முன் பேசிய அலுவிஹார அவர்கள் முக்கிய மான ஒரு விஷயத்தைப் பற்றி ஒருவார்த்தை கூட உங் களுக்குச் சொல்லவில்லை. கீன்யத் தேசாதிபதி இல்லத் தில் கடைபெற்ற இராப் போசன விருந்துக்கு காங்கள் கால்வரும் அழைக்கப்பட்டோம். விருந்து முடிந்ததும் எல்லோரும் தத்தம் இருப்பிடங்களுக்குத் திரும்பினுேம் அலுவிஹாராவை மட்டும் இரவு தமது மாளிகையிலேயே தங்குமாறு மகா தேசாதிபதி கேட்டுக்கொண்டார். அன் றிரவு முழுதும் அவர் ராணி மாளிகையில் தங்கியிருக் தார். அங்கே என்ன நடந்தது? அதைப்பற்றி அவர் உங்களுக்குச் சொல்லவேயில்லை (இந்தக் கூட்டத்தில் எல்லோரும் நான் ஏதோ உருசிகரமான தகவலை வெளி யிடப் போகிறேன் என்று ஆவலோடு எதிர்பார்த்தார் கள்.) உங்களுக்கு மட்டுமல்ல எனக்குங்தான் சொல்ல வில்லை’ என்று கதையை முடித்து உட்கார்ந்தேன் !
கீன்யாவிலிருந்து புறப்படும் காள் நெருங்கியது. பலர் தமது மனைவி மக்களுக்கு நினைவுப் பொருள்கள் வாங்க ஒடித் திரிந்தார்கள். மாகாட்டுக்குப் பிற்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய நிரலை ஆராய்ந்த நான் நைரோபியி லிருந்து தாறுஸ்ஸலாமுக்கும், ஸான்ஸிபார், மொம்பாஸா

Page 68
130
முதலாம் இடங்களுக்கும் பிரயாணஞ் செய்ய ஏற்பாடாகி யிருந்ததை அறிந்து கொள்வனவு முயற்சியைத் தள்ளிப் போட்டேன். ஆனல் எனது சகாக்களில் ஒருவருக்கு அவ்வளவு பொறுமையிருக்கவில்லை. எங்கெல்லாமோ அலைந்து திரிந்து கடைசியாகச் சிங்கத்தின் தலையொன் றுடன் திரும்பி வந்தார்; இந்தச் சிங்கத் தலை இப் பொழுது அவர் வீட்டின் கோடிப் புறத்தில் தேடுவாரற் றுக் கிடக்கிறதாம். சிங்கத்தின் தலை அவருடைய பாரி யாரின் கெஞ்சத்தைக் கவ்வத் தவறியமையே இதற்குக் காரணம் போலும்.
மலையைப் பரிசளித்த மகாராணி
மாநாட்டுக்குப் பிற்பட்ட சுற்றுப் பிரயாணங்கள் ஆகஸ்ட் 29ஆந் தேதி ஆரம்பமாயின. பிரதிநிதிகள் யாவரையும் கான்கு குழுக்களாகப் பிரித்து, பிரயாண ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். எனது குழுவில் கான் ஒருவனே இலங்கையன், முந்திய காள் மாலை, இனி நைரோபி திரும்பேன் என்ற எண்ணத்தில் என் இனிய நண்பர்கள் றஊஃவ் அமீன் இருவரிடமும் கோர் போக் ஹோட்டலில் வைத்துப் பிரியாவிடை பெற்றேன். ஆணுல் ஒரு மாதத்தின் பின்னர் தென் ஆபிரிக்காவி லிருந்து இலங்கை திரும்பும் வழியில் மீண்டும் நைரோபி வர கேர்ந்தது. இவ்விரு நண்பர்களையும் எப்பொழு தாவது எங்காவது மீண்டும் சந்தியேன் என்பது என்ன நிச்சயம்! அல்லாஹ" அஹ்லம்-எல்லாம் அவனே அறி வான்
பிரதிநிதிகள் குழு நான்கும் தத்தம் சுற்றுப் பிரயா ணங்கள் முடிந்ததும் செப்டம்பர் 2ஆந் திகதி, ரொடீ

131
வழியா, லிவிங்ஸ்டனிலுள்ள விக்டோரியா ஃபோன்ஸ் ஹோட்டலில் வந்து கூடவேண்டுமென்று ஒழுங்கு செய் யப்பட்டிருந்தது. செப்டம்பர் 8ஆங் திகதி இறுதிக் கூட்டமும் விருந்தும் முடிந்த பின்னர் தத்தம் காடுகளுக் குப் புறப்பட வேண்டுமென்பது ஏற்பாடு.
ஏற்கனவே கீன்யா, உகண்டா ஆகிய காடுகளைச் சுற்றிப் பார்த்து விட்டமையால் இந்தச் சுற்றுப் பிர யாண காலத்தில் ஆபிரிக்கப் பெருநிலத்தின் வேறு சில காடுகளையும் சுற்றிப்பார்க்க வாய்ப்புக் கிடைத்தைவிட்டு கான் மகிழ்ச்சியடைந்தேன்.
காலை 8-30 மணிக்கு, எமக்கென்றே விசேஷமாக அமர்த்தப்பட்ட விமானத்தில் நைரோபியை விட்டுப் புறப்பட்டோம். இந்த விமானப் பிரயாணத்தின்போது பணிமுடி தரித்த கிளிமஞ்சாரோ மலையைக் கண்டுகளித் தேன். ஆபிரிக்காவின் அதியுயர்ந்த மலை இதுவே. இதில் குறிப்பிடத்தக்க விஷயம். பூமத்திய ரேகையி லிருந்து ஆக மூன்று டிகிரி உயரத்தில் அமைந்துள்ள இம் மலையின் உச்சியை வருடம் முழுதும் பனி கவிக் திருப்பதாகும். எனவே, உலகின் உஷ்ணமிக்க பகுதி யாகிய ஆபிரிக்காவில் பனித்திரை தரித்த மலையுச்சியைக் கண்டமை கிளுகிளுப் பூட்டும் அனுபவமாக எனக்கு அமைந்தது. ஆபிரிக்கக் கண்டம் எவ்வளவு பெரிய நிலப்பரப்பை யுடையதென்பதைக் கிளிமஞ்சாரோ மலை யின் சுமார் 45 மைல் நீளமும் 35 மைல் அகலமும் கொண்ட அடித்தளத்தினுல் ஊகித்துக் கொள்ளலாம்.
இந்த மலையைப் பற்றி ஆபிரிக்கர்கள் மத்தியில் பல ஐதிகங்கள் நிலவுகின்றன. இவற்றில் ஒன்று, இந்த மலையே தேவதையின் உறையுள் என்பதாகும். இந்த ஜதிகத்தின் காரணமாக ஆபிரிக்கர்களில் ஒரு சிலரைத்

Page 69
132
தவிரப் பிறர் இம் மலைமீது ஏறத் துணியார். மலையைக் காக்கும் துவார பாலகர்கள் கோபங்கொள்வாரென்பது அவர்களது நம்பிக்கை. இவ்வித நம்பிக்கை கிளிமஞ்சா ரோவுக்கு மட்டுமுரியதன்று. பண்டைக் கிரேக்கர்கள் ஒலிம்பஸ் மலையைப் பற்றி இதே நம்பிக்கை கொண்டவர் களாக விளங்கினர். தேவர்க்கு அதிபனும் ஸியஸ் வதி யும் இடமாக அவர்கள் ஒலிம்பஸ் மலையைக் கருதினர். இந்துக்கள் கைலாச மலையைப் போற்றி வருவதும், கம் நாட்டில் பாவா ஆதம் மலை-சிவனெளிபாதமலை-சரித் திரப் பிரசித்தி பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத் தக்கவை.
கிளிமஞ்சாரோ மலை சம்பந்தப்பட்ட கதையொன் றினை இங்கு கூறுவது பொருத்தம். பெரிய பிரித்தானி யாவின் மகாராணியும் இந்தியா மற்றும் பிரித்தானிய சாம்ராஜ்யங்களின் சக்கரவர்த்தினியுமான விக்டோரியா இந்த மலையை ஜெர்மானியச் சக்கரவர்த்தியும் தமது நெருங்கிய உறவினருமான வில்ஹெல்ம் என்பவருக்குப் பிறந்தநாட் பரிசாக அன்பளிப்புச் செய்தாராம். மேற்படி கெய்ஸர்-மன்னர்-விக்டோரியா மகாராணிக்கு ஆபி ரிக்காவில் இரண்டு பனிமலைகள் இருக்கின்றனவென் றும் தனக்கு அத்தகைய மலை ஒன்றுகூட இல்லையென் றும் குறைபட்டமையாலேயே மகாராணி தன்னிடமிருந்த மலைகளில் ஒன்றை அவருக்குப் பரிசாகக் கொடுத்தாராம்! வரலாற்று அடிப்படையில் இது உண்மையோ பொய்யோ' கானறியேன்! ஆயினும், அந்தக் காலத்தில் ஐரோப்பியர் கள் பிற நாடுகளை அந்தந்த நாட்டு மக்களின் ஆசாபாசங் களையோ விருப்பு வெறுப்புக்களையோ மதியாது தம்மிச்சையாகப் பங்கு போட்டார்கள் என்பதற்கு இந்தக் கதை சான்ருக அமைகிறது. மேலும், அண்மைக் காலம் வரை, இத்தகைய சம்பவங்கள் பல கடைபெற்றமைக்கு

133
வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன. 1661 ஆம் ஆண்டில் பம்பாய் நகரம் பிரிட்டிஷாருக்குச் சொந்தமானதே இத்தகைய தன்னிச்சையான செயலினல் தான். 1534 ஆம் ஆண்டு முதல் போர்த்துக்கேயரின் குடியேற்றப் பகுதியாக விளங்கிய பம்பாய் நகரத்தை இங்கிலாந்தின் இரண்டாவது சார்ள்ஸ் மன்னர் தமது போர்த்துக்கேய மனைவியின் சீதனத்தில் ஒரு பகுதி யாகப் பெற்ருர் என்பது வரலாறு. பரிசு, சீதனம் தவிர விற்பனை, குத்தகை ஆகிய பம்மாத்துக்களுக்கும் வரலாற் றில் பஞ்சமில்லை. பிரிட்டிஷாரே கீன்யாவின் ஒரு பகுதியை ஸான்ஸிபார் சுல்தானிடம் குத்தகையாகப் பெறவில்லையா ?
கனேடியப் பிரதிநிதிகளில் ஒருவருக்குக் கிளிமஞ் சாரோ என்ற பெயர் வெகு பரிச்சயமானதாய் இருந்தது. புகழ் பூத்த அமெரிக்கக் கதாசிரியரான காலஞ்சென்ற GrGooTGňo' GompórĚJGG) Ju Gör (Snows of Kilima jaro ) GTGöTampo கதையை அவர் படித்திருக்தாராம். அந்தக் கதையின் முகவுரையில் கீழ்வரும் வாசகம் காணப்படுகிறது. • t •
“கிளிமஞ்சாரோ என்பது பனி போர்த்த ஒரு மலை; 19,710 அடி உயரமானது. ஆபிரிக்காவின் மிக உயர்ந்த மலை இதுவே என்று சொல்லப்படுகிறது. இதன் மேற் றிசை முடி மஸாய் மொழியில் என் காஜே என் கயி-இறை யில்லம்-என்று அழைக்கப்படுகிறது. மேற்றிசைக் கொடு முடியின் அண்மையில் சிறுத்தையின் காய்ந்து உறைந்த பிணம் கிடக்கிறது. சிறுத்தை எதைத் தேடி இவ்வளவு உயரத்துக்கு வந்ததென்பதை எவரும் விளக்க 6)ამის8ის.**
சிறுத்தை பற்றிய குறிப்பு உண்மையோ எனக்குத் தெரியாது. தவிரவும் கிளிமஞ்சாரோ இந்தக் கதைக்கு ஒரு பகைப் புலமாக மட்டுமே அமைந்திருக்கிறது.

Page 70
134
விமானத்தில் எனக்கு அருகே தென் ஆபிரிக்கா, டர்பனைச் சேர்ந்த என். ஜி. ஈற்றன் அவர்கள் அமர்ந் திருந்தார். பாராளுமன்ற உறுப்பினரான ஈற்றன் தென் ஆபிரிக்கத் தொழிற் கட்சியின் அங்கத்தவர். 24 வருட காலம் தென் ஆபிரிக்கப் புகையிரதப் பகுதியிலும் துறை முகத்திலும் இயந்திர இயக்குநராகப் பணி புரிந்த இவர் காலக் கிரமத்தில் தொழிற் சங்க முக்கியஸ்தர்களில் ஒருவ ராக உயர்ந்தார். இவருடன் உரையாடியதன் பயணுக, தென் ஆபிரிக்கா பற்றியும் தென் ஆபிரிக்காவிலுள்ள ஆபிரிக்கானர்கள் பிரிட்டிஷார் ஆகியோருக்கிடையில் நிலவிய கருத்து வேறுபாடுகள் பற்றியும் பல விஷயங் களைக் கிரகித்துக் கொண்டேன். ஆபிரிக்கானர்--(Afrikaner)-எனப்படுவோர் யாவர் என்பதையும் இவர் மூலமாக விளங்கிக் கொண்டேன். தென் ஆபிரிக் காவில் வசிப்பவரும் பிரிட்டிஷ் அல்லாத வெள்ளையர் வழித்தோன்றலும் ஒல்லாந்து மொழியினடியாகப் பிறந்த சுதேச மொழியாகிய ஆபிரிக்கான்-(Afrikaans)-மொழி யைத் தாய்மொழியாகக் கொண்டவருமே ஆபிரிக்கானர் ஆவர். வம்சாவளியில் இவர்கள் எல்லோரும் ஒல்லாந்தர் அல்லர். சிலர் பிளேமியர்-(Flemish)--சிலர் பிரெஞ்சுக் காரர்; மற்றும் சிலர் ஜெர்மானியர். இந்த ஆபிரிக்கானர் களை போவர்-(Boer)-என்ற பெயராலும் குறிப்பிடு வதைக் கவனித்தேன். பொவர் என்னுஞ் சொல் ஆரம் பத்தில் ஒல்லாந்து வம்சாவளி வந்த ஆபிரிக்கானரையே குறித்து நின்றது. இந்தத் தகவல்களை அறிந்ததும் என் மனதில் அழுத்தமாகப் பதிந்த கருத்து, ஆபிரிக்காவில் வாழும் பிரிட்டிஷ்காரர்கள் பிரிட்டன், பிரிட்டிஷ், மகா ராணி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஆகியவற்றுடன் உரித்து முறையான உறவுணர்வுடையவர்களாக விளங்கிய போதிலும், ஆபிரிக்கானர்கள் மாறுபட்ட கண்ணுேட்ட

135
முள்ளவர்களாகக் காணப்பட்டனர் என்பதாகும். கலா சார அடிப்படையிலான தகராறுகள் எந்த ஒரு நாட்டுக் கும் தனியுரிமையல்ல என்பதை இதன் மூலம் ாகான் உணர்ந்து கொண்டேன். இத்தகைய தகராறுகளைக் கண்டு மலைப்படைந்து, பூனை கண்ணை மூடிக் கொண் டால் பூலோகம் இருண்டு விடும் என்ற மனுேபாவத்தில் அவற்றை முடி மறைக்காமல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே விவேகமான செயல்.
விமானம் தாறுஸ்ஸலாமை கெருங்கிக் கொண்டிருந் தது. இந்தப் பெயரைக் கேட்டதும், யாழ்ப்பாணம் இக்தக் கல்லூரியில் கான் படித்த காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த தாருல் இஸ்லாம் என்ற மாசிகை மனத் திரையில் மின்னி மறைந்தது. ஜனுப் பா. தாவூத்ஷா அவர்கள் வெளியிட்டு வந்த இந்த மாசிகையின் வசன கடையும், ஆசிரியத் தலையங்கங்களும் சிறப்புக் கட்டுரை களும் அங்காட்களில் என்னேப் பெரிதும் கவர்ந்தன. ஒவ்வொரு மாதமும் “எப்பொழுது வெளிவரும்’ என்று காத்திருந்து, வந்ததும் என் சாச்சாவிடம் இரவல் வாங்கிப் படிப்பது வழக்கம். அந்த நாட்களில், என்னைப் பொறுத்த் வரையில் வாசிஜனப் புத்தகங்களுக்குப் பெருத்த பஞ்சம் இருந்தது. ஆணுல் இன்றே வாசிப் பதற்கு எதுவுமில்லையே என்ற நிலை மாறி எதை வாசி யாது விடலாம் எனப் பகுத்தறியக் கற்றுக்கொள்ள வேண்டிய அளவுக்கு ஏராளமான பத்திரிகைகளும், சஞ்சிகைகளும், புத்தகங்களும் வெளி வருகின்றன தாறுஸ்ஸலாம் என்ருல் சாக்தியின் புகலிடம் என்று பொருள் என்பதை அறிந்திருந்தேன். பெயரைக் கொண்டே நகரம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியாயிருத்தல் வேண்டுமென்று தெரிந்து கொண்

Page 71
136
டமையால், இந்த நகரத்தைச் சுற்றிப் பார்க்க ஆவ லுடையவனுய் இருந்தேன்.
விமானத் துறையில் இறங்கியதும் வழக்கமான பரிசோதனைகள் எதுவுமின்றியே தாங்கள் வெளியேற முடிந்தது. சாம்ராஜ்யப் பாராளுமன்ற மாநாட்டுப் பிரதி நிதிகள் ஆனமையால் எமக்கு இந்தச் சலுகை கிடைத் தது. ஆங்குள்ள இலங்கையர் எதிர்பாராத வகையில் எனக்கு வரவேற்பளித்தார்கள் சற்று கேரத்தில், முன்னர் சிவில் சேவை உயர் அதிகாரியாக இலங்கை யில் பணியாற்றியவரும், அப்பொழுது தங்கனிக்கா நிதிக் காரியதரிசியாகக் கடமையாற்றி வந்தவருமான சீ. ஈ. தில்னி அவர்கள் என்னைச் சக்தித்துத் தமது இல்லத்தில் பகற் போசனம் அருந்த வருமாறு அழைப்பு விடுத்தார். தாறுஸ்ஸலாமில் தங்கி நிற்கும் நாட்களில் எனக்குத் தங்குமிட வசதி அளிக்க முன்வந்த ஜனுப் அமீர் கரீம்ஜி அவர்களுக்கு அவர் என்னை அறிமுகப் படுத்தினர். அமீர் அவர்கள், முதலில் எனது பெட்டி படுக்கைகளைத் தமது வீட்டில் வைத்து, களைப்புத் தீரத் தேர்ே பருகிய பின் பகற் போசனம் அருந்தப் போகலாம் என்று யோசனை கூறினர். அதன்படி அவருடைய காரில் போய், தேநீர் அருந்திவிட்டு, தில்னியின் வீட்டுக் குச் சென்றேன். வீட்டில் அவர் மட்டுமே இருந்தார். அவர் மனைவி பிரசவத்துக்காக ஆஸ்பத்திரிக்குப் போயிருக் தார். ஆகவே, கானும் அவரும் மட்டுமே சாப்பாட்டு மேசையில் எதிரும் புதிருமாக அமர்ந்தோம். இந்த மதிய போசன நிகழ்ச்சி என் மனதில் ஆழமாகப் பதிந்திருக் கிறது.

தாறுஸ்ஸலாத்தில் சி. சி. எஸ். நினைவுகள்
22
அன்றைய விருந்தின்போது எமது உரையாடல் இலங்கை சிவில் சேவையில் சுதந்திரத்துக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியதாக ஆரம்பித்தது. இது, எம் இருவரையும் பொறுத்த வரையில் தவிர்க்க முடியாத ஒரு விஷயமே. ஏனென்றல், ஒரு காலத்தில் இருவரும் சி சி. எஸ். பதவியில் அமர்ந்திருந்தோம் தில்னி சேவை யில் என்னிலும் மூன்று வருடம் மூத்தவராயிருந்தார். கால் பேஸ் புதிய கருமாலயத்தின் இரண்டாம் மாடியில் ஒரே அறையில் சுமார் ஆறு மாத காலம் இருவரும் வேலை பார்த்தோம். அவர் அரசாங்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டதிகாரியாகவும், நான் மேலதிக கட்டுப் பாட்டதிகாரியாகவும் கடமையாற்றினுேம், அமைச்சுக் களது நிரந்தரக் காரியதரிசிகளின் கடமைகள். பொறுப் புக்கள் பற்றி அன்றைய விருந்தின் போது விவாதித் தோம். இந்த நிரந்தரக் காரியதரிசிகளில் அநேகமாக எல்லோரும் முன்னைநாள் சிவில் சேவை அதிகாரிகளே. சோல்பரி அரசியல் திட்டத்தின் விஜளவாகவே நிரந்தரக் காரியதரிசி என்ற புதிய பதவி உருவாயிற்று. தில்னி அவர்கள் இந்தப் புதிய திட்டம் செயலாகுமுன்னரே பதவி உயர்வு பெற்று இலங்கையிலிருந்து வெளியேறி விட்டார். ஆகவே, அன்றைய பகற்போசன வேளையில் இந்தப் புதிய அமைப்பின் பலாபலன்களைப் பற்றி இரு வரும் பேசிக் கொண்டோம். எமது பேச்சில் முக்கிய மான சில சிவில் சேவை நண்பர்களின் பெயர்களும் அடிபட்டன என்பதைச் சொல்லவா வேண்டும்? இலங்கை சம்பந்தப்பட்ட முக்கியமான வேறு பல பிரச்
H 279-9

Page 72
138
சினைகளை யெல்லாம் மறந்து, சிவில் சேவை பற்றியே கதைத்தமையையிட்டு எம்மை யாரும் குறை கூற முடியுமா? கான் படித்த கட்டுக் கதையொன்று இங்கு சொல்லப் பொருத்தமானதென்று தோன்றுகிறது.
சுவிற்சர்லாந்து தேசத்திலே பல்வேறு நாடுகளையும் சேர்ந்த இராஜாங்கத் தூதுவர்களின் குடும்பத்திற் பிறந்த ஆண், பெண் மாணுக்கர்களுக்காக கடத்தப்படும் உயர் நிலைப் பாடசாலையொன்றிலே, ஒருமுறை யானையைப் பற்றி வியாசம் எழுதும்படி மாணவர்கள் பணிக்கப் பட்டார்கள். ஜெர்மன் தேசத்துப் பையன் யானையின் உருவியல், கருவியல், உடலியல், குடலியல் இவைபற்றி யெல்லாம் தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பெய்து கட்டுரையை வரைந்தான். இங்கிலிஸ் பையன் யாஜனயை வேட்டைப் பொருளாக வைத்துக் கட்டுரையை எழுதி னன். பிரெஞ்சு மாணவனே யானையின் காதல் உறவு, ஊட ல், கூடல், இல்வாழ்க்கை, மக்கட் பேறு இவை பற்றி வியாசம் எழுதினனும். இந்தக் கதை இம் மூன்று சாகியத்தவர்களினதும் குண இயல்பைப் புலப்படுத்து கிறதா அல்லவா என்பதை வாசகர்களே முடிவு செய்வார் களாக!
இது போலவே, லிவிங்ஸ்டனுக்கு ஆபிரிக்கா கிறிஸ் தவ மதப் பிரசாரஞ் செய்வதற்கு வாய்ப்பான பூமியாகத் தோன்றியது. சிசில் ருேட்ஸ் என்பவருக்கு ஏகாதிபத் திய விஸ்தரிப்புக்கும் அபிவிருத்திக்கும் வளமான பிர தேசமாக விளங்கியது. உயிரியல் நிபுணருக்கு, வேறெங் கும் காணுத அபூர்வமான பறவை, பூஞ்செடிகள் ஆகிய வற்றைக் கொண்ட கண்டமாகக் காட்சியளித்திருக்கும். இவ்வாறே அன்றைய தினம் தில்னி அவர்களுக்கும் எனக்கும் இலங்கை சிவில் சேவையுடன் மட்டுமே

139
தொடர்புடையதாகக் காட்சியளித்தது. ஆயினும் இன்றே சிவில் சேவிஸ் என்ற பெயரே அரசாங்க உயர் அதிகாரிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. அதனிடத்தை நிர்வாக சேவை என்னும் புதுப் பெயர் கைப்பற்றியிருக்கிறது.
இப்படி நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது தில்னி அவர்கள் இடையில் 'சஹனி’ என்று உள்ளே குரல் கொடுத்தார். வேலைக்காரப் பையன் எனக்கொன்று அவருக்கொன்ருக இரண்டு பீங்கான் களைக் கொண்டுவந்து வைத்தான். சஹனி என்ருல் பீங்கான் என்று நான் முடிவு செய்தேன். சுவாஹிலி மொழியில் 'சஹனி என்ருல் பீங்கான் என்று தில்னி சொன்னுர், நான் உடனே 'சஹன்" என்னும் சொல்லை நினைத்துக்கொண்டேன். நினைத்ததும் காலடியுஞ் சீரும் ஞாபகத்துக்கு வந்தன. இலங்கை முஸ்லிம் களிடையே காலடியுஞ் சீரும் ' என்னும் சொற்ருெடர் பின்வருவன வற்றைக் குறிக்கும். (1) கலியாவிருந்துகெய்ச் சோறு; (2) பொரித்த முழுக்கோழி, (3) கலியா - கத்தரிக்காய், வாழைக்காய் ஆகியவற்றைப் பொரித்து உருளைக்கிழங்குடன் சேர்த்துச் சமைக்கும் கூட்டு, (4) ஆட்டிறைச்சி என்பன. முஸ்லிம்களாகிய காம் கந்துர ரிக் களரியில் சுற்றவர அமர்ந்து உணவு கொள்ளப் பயன்படுத்தும் பெரிய தட்டம் சஹன் ' என்று அழைக் கப்படும். இந்தச் சொல் அறபுமொழிச் சொல் என்றும் ஆரம்பத்தில் பானையைக் குறிக்க உபயோகிக்கப்பட்டுப் பின்னர் தட்டத்துக்கும் பயன்படுத்தப்படுகிறதென்றும் பிற்பாடு அறிந்தேன். இலங்கையில் அறபுத் தமிழ்ப் பிரயோகத்தில் சஹன் என்னும் சொல் பெரிய தட்டத் தைக் குறிக்கிறது. சிறிய பீங்கானுக்கு றக்காவி என் னும் பதம் அநேகமாகப் பயன்படுத்தப்படும். றக்காவி

Page 73
140
என்ற வார்த்தை துறுக்கி, உறுது ஆகிய மொழிகளில், பீங்கானைக் குறிக்க உபயோகிக்கும் றிகாபி என்னும் சொல்லின் திரிபு ஆகும். சஹன் என்னும் சொல் ஸ்வாஹிலி மொழியிலும் அறபுத் தமிழ்ப் பிரயோகத் திலும் ஒரே பொருளைச் சுட்டி நிற்பது வரலாற்று அடிப் படையில் ஆழ்ந்த உண்மையைப் புலப்படுத்துவதாக எனக்குத் தோன்றுகிறது. ஒரே நூற்றண்டில் ஒரே குழுவைச் சேர்ந்த அறபு மக்கள் வாணி பத்தின் நிமித்தமாக கிழக்கு ஆபிரிக்கக் கரைக் கும் தென் இந்திய இலங்கைக் கரையோரங்களுக்கும் வந்திருப்பதைச் சுட்டுகிறதென்று எனக்குப் படுகிறது. டைமன்ட் ராஜா என வர்ணிக்கப்பட்ட காலஞ் சென்ற கலாநிதி ஜோன் தோபோர்ண் வில்லியம்ஸன் என்பரைப் பற்றியும் இந்த மதியபோசன உரையாடலின் போது முதல் முறையாக கான் கேள்விப்பட்டேன். உலகின் மிகப்பெரிய செல்வர் என்று கருதப்பட்ட இவரே வழின்யங்கா என்னுமிடத்திலுள்ள வாதுாயி வைரச் சுரங்கத்தைக் கண்டுபிடித்து தனக்குப் பெரிய
ஸ்வரியத்தையும் தங்கனிக்கா காட்டுக்குப் பெறுமதி மிக்க தொழில் துறையையும் தேடிக் கொடுத்தவராவர். க்னேடியராகிய இவர் மக்கில் பல்கலைக்கழகத்தில் பட் ட்ம் பெற்ற மண்ணுரல் நிபுணராவர். தமது ஆரர்ய்ச்சி களின்படி தங்கனிக்காவில் வைரச் சுரங்கம் இருக்க வேண்டுமென்று அவர் திடமாக Tம்பினுர். இந்த கம்பிக் கையை மட்டுமே பற்றுக்கோலாகக் கொண்டு மூன்று வருடமாகப் பசி, பட்டினி கிடக்து கண் துஞ்சாது உழைத்து வந்தார். கடைசியாக ஓரிடத்தைத் தேர்க் தெடுத்துத் தமது அறிவியல் திறமை முழுவதையும் பயன்படுத்தி ஆராய்ந்து, தான் ஊகித்தபடி வைரச் சுரங்க மிருந்ததைக் கண்டுபிடித்தார். மனநிறைவு கண்

141
டார். சங்கோஜமான சுபாவமும் சிக்கனமான பழக்கங் களுமுடைய அவரை விகோதப் பேர்வழி யென்று சிலர் கொண்டாலும், முன்மாதிரியான தொழில் அதிபர்ாகவும் புத்திசாதுரியம் மிக்க அதிகாரியாகவும் விளங்கினர். இலங்கையிலும் இவரைப் போன்ற ஒருவர் தோன்றுவா ரேல்...!
வில்லியம்ஸனிலிருந்து எமது உரையாடல், தங்க் னிக்காவில் தேசாதிபதியாயிருந்த சர். எட்வர்ட் துவை னிங் பால் தாவியது. இவரை எனது சக பிரதி நிதிக ளுடன் சேர்ந்து அவரின் இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு மறுகாள் கிடைத்தது. அப்பொழுது தில்னி அவர்கள் இவரைப் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் சரியானவை என்பது நிரூபணமாயிற்று. துவைனிங் அவர்கள் ஆபிரிக்க மக்களின் அபிலாஷைக2ள மதித்துக் கனம் பண்ணி வந்தார். சட்ட நிர்ணய சபையில் 7 ஐரோப் யர்களுக்கு 4 ஆபிரிக்கர் 3ஆசியர் என்றிருந்த விகிதாசர் ரத்தை 9; 9; 9 என்ற விகிதப்படி மாற்றியமைப்பதில் முன்னின்று உழைத்தவராவர். சனத் தொகை வாரி யாக ஆபிரிக்கர்கள் ஐரோப்பியரிலும் 300 மடங்கும் ஆசியப் ரிலும் 100 மடங்கும் அதிகமாவர். ஆசிரியர்களின் சார் பில் 2 அறபு மக்களும் 4 முஸ்லிம்களும் 3 இந்துக்களும் பிரதிநிதித்துவம் வகித்தல் வேண்டுமென்ற ஏற்பாடு ஆபிரிக்க மக்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. இதைப் பற்றிக் குறிப்பிட்டபோது துவைனிங் அவர்கள் ஐ. நா. சபையில் வி. கே. கிருஷ்ணமேனன் நிகழ்த்திய உரை யின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டினர். சகல இனத்த வர்களுக்குமே பொதுவான தேர்தல் தொகுதி அவசியப் மென்று மேனன் தமது பேச்சில் வாதாடினுர். துவை னிங் மேனனின் ஒவ்வொரு நியாயத்தையும் தகுந்த் ஆதாரங்களுடன், உணர்ச்சி வயப்பட்ட நிலையில்,

Page 74
142
சாத்தியமற்ற தென்று எமக்கு விளக்கினுர், கிருஷ்ண மேனனுடைய உரையின் ஒரு பகுதி இங்கு மேற்கோள் காட்டத்தக்கது:
* கல்வித் துறையில் ஐரோப்பிய மாணவன் ஒருவ ஞல் (தங்கனிக்கா) அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு 233 பவுண் செலவாகிறது; ஆபிரிக்க மாணவனுக்கு 84 பவு ணும் ஆசிய மாணவனுக்கு 31 பவுனும் ஆண்டுக்குச் செலவிடப்படுகிறது. முப்பது மடங்கு கூடுதலான பணம் செலவிட வேண்டிய அளவுக்கு ஐரோப்பியக் குழக்தை ஒவ்வொன்றும் முட்டாள் என்று காம் கொள்ள GuomTLDT ?”
துவைனிங் அவர்கள் சாதாரண மாவட்ட அதி காரியாகத் தொடங்கித் தேசாதிபதியாக உயர்ந்தவரா வர். ஆபிரிக்க மக்களை அவர்களின் சேரிகளுக்குச் சென்று சக்தித்து உரையாடும் வழக்கமுடையவர் என்று தில்னி மூலம் அறிக்தேன். தாறுஸ் ஸலாம் மற்றும் சுற்றுப் புறங்களில் இவ்விதம் மக்களை நேரடியாகச் சந்திக்கப் போகுஞ் சமயங்களில் மெய்க்காப்பாளர் எவரு மின்றித் தனியாகவே செல்வாராம். இந்த வகையில் அவர் இலங்கையில் வட மாகாண அதிபராயிருந்த துவைனம் அவர்களையும் வட மத்திய மாகாண அதிபராயிருந்த ஃபிரீமன் அவர்களையும் எனக்கு நினைவூட்டினுர், எனது ஆபிரிக்க யாத்திரை முழுவதிலும் துவைனிங் அவர் களின் இல்லத்தில் கண்ட படாடோபமற்ற எளிமைக் கோலத்தை வேறெங்கும் கான் காணவில்லை.
சில நிமிஷங்களின் பின்னர் எனக்குப் புகலிட மளிக்க முன் வந்த அமீர் கரீமஜி அவர்களின் வீட்டுக்கு ாகான் மீண்டபோது, அழகு தவழும் அவருடைய கேர்த்தி யான வீட்டில் காணப்பட்ட இஸ்லாமியக் கட்டட அமைப்பு அம்சங்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன.

143
இவருடைய மனைவி குல்ஸஅம் இலங்கையில் பிறந்து, படித்தவர் என்று அறிக்தேன். மதிய போசன வேளை யில் கான்கற்ற 'சஹன் ? என்னும் சொல் ஸ்வாஹிலி மொழி, அதன் இன்றைய அந்தஸ்து ஆகியனபற்றி அறிய வேண்டுமென்று தூண்டவே உத்தியோக பூர்வ மாக ஏற்பாடு செய்யப் பெற்றிருந்த சுற்றுப் பயணத் தைச் சற்று மாற்றி, தாறுஸ்ஸலாத்தின் பாடசாலைகள் சிலவற்றைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யமுடியாதா வென்று அமீரிடம் துணிந்து கேட்டேன். அவர் தாராள மனதுடன் இதற்கிசைக்ததுமல்லாமல், இதற்கான ஏற் பாடுகளைச் செய்யவும் முன் வந்தார். திறமை மிக்க வர்த்தக நிர்வாகியான அவர் உடனேயே ஆறேழு பேருக்கு போன்’ செய்து எல்லா ஒழுங்குகளையும் பூர்த்தி செய்த பின்னர், மறுநாளே கான் என் விருப்பம் போலப் பாடசாலைகளைச் சுற்றிப் பார்க்கப் போகலா மென்றர்.
தும்புக் கற்ருழைத் தோட்டத்திலே
23
உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பெற்ற அடுத்த நிகழ்ச்சிக்குச் சுமார் 4 மணித்தியாலம் இருந்தது. இடைவேளையை எப்படிக் கழிப்பது என்று அமீருடன் ஆலோசித்தேன். அவர் பல யோசனைகள் சொன்னுர். தாறுஸ் ஸ்லாத்துக்கு வெளிப் புறமாகவுள்ள சைஸல் தோட்டமொன்றினுக்குத் தாம் பங்காளியென்றும் அந்தத் தோட்டத்தைப் பார்த்து வரலாமென்றும் அவர் சொன்ன யோசனை என்னைக் கவர்ந்தது. அதற்கமைய, இருவரும் சுமார் ஒரு மணி கேரத்துள் கரிம்ஜி சைஸல் எஸ்டேட்டை அடைந்தோம்.

Page 75
144
இந்தத் தோட்டம் ஏறக்குறைய 10,000 ஏக்கர் விஸ் தீரணமுடையது, 1914-18இல் நடைபெற்ற முதலாவது உலக யுத்த முடிவில் தங்கனிக்கா ஜெர்மனியின் ஆதிபத் தியத்திலிருந்து விடுபட்ட கட்டத்தில் ஜெர்மன் ஸ்தாபன மொன்றிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டதாகும். ஜெர்மனியின் ஆதிபத்தியத்திலிருந்து விடுதலை பெற்ற தங்கனிக்கா லீக் ஒவ் கேஷன்ஸ் என்ற சர்வதேச மன்றத் றத்தின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. காங்கள் விஜயஞ் செய்த சமயத்தில் இந்தச் சர்வதேச மன்றத்தை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இடம் பற்றி யிருந்தது. ஆகவே, தங்கனிக்கா சட்டப்படி இந்த ஐ கா. ஸ்தாபனத்தின் நம்பிக்கைச் சொத்தாக, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. 1964ஆம் ஆண்டுக்குப் பின் தங்கனிக்கா ஸான்ஸிபாருடன் இணைந்து கன்ஸானியா என்னும் சுதந்திர நாடாகப் பரிணமித்திருக்கிறது.
அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யானமையால் தோட்டத்துத் தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது. தொழி லாளர்கள் ‘லயம்’களில் ஒய்வெடுத்துக்கொண்டிருக் தார்கள். ஆயினும், அமீர் தொழிற்சாலையையும் லயங் களையும் தோட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் எனக் குக் காண்பித்தார். சைஸல் தோட்டத்தை முன்னுெரு போதும் கண்டிராத எனக்கு ஒவ்வொரு காட்சியும் புதுமையாயிருந்தது.
சைஸஸ் என்பது ஒருவகைக் கற்றழையாகும். தமிழில் இதனைத் தும்புக் கற்றழை என்று அழைக்க லாமெனத் தோன்றுகிறது. கற்றழை, சைஸல் இனத் தைச் சேர்ந்த தாயினும் தன்ஸானியாவில் செய்கை பண்ணப்படும் சைஸல் கற்றழைதான் என்று சொல்ல

145
முடியாது. தும்புக் கற்றழை என்பது சரியான தமிழாக் கந்தான என்பதைத் தமிழறிஞர்கள் முடிவு செய்வார் களாக. இதுபற்றி, கடந்த சில காட்களாகப் பலரிடம் விசாரித்தேன். உலகம் பலவிதம் என்றபடி பலரும் பலவிதமாகப் பெயர் புனேக்து தந்தார்கள். ஒருவர் கடற் ருழை என்றர் இன்னெருவர் இழைத்தாழை என்ருர்; வேறெருவர் தார்த்தாழை என்ருர், மற்றெருவர் காரி ழைத்தாழை என்ருர்; மரபறிந்த ஒருவர் மரல் அல்லது அரலே சரியென்ருர்,
சிங்களத்தில் இது ஹனபத்த என்றழைக்கப்படு கிறது என்று ஒருவர் சொன்னுர், சிங்களக் கிராம வாசிகள் இதன் தும்பினல் செய்யப்பட்ட கயிற்றை ஏரில் மாடுகளைக் கடடுவதற்கு உபயோகித்து வந்தார்கள் என்றும் இவர் சொன்னுர், தீவுப் பகுதி, வெள்ளைக் கடற்கரைப் பக்கங்களில் இவ்வித கற்றழைகளை எனது பிள்ளைப் பிராயத்தில் கண்டதாக ஞாபகமிருக்கிறது. தன்ஸானியாவிற் போல, நமது நாட்டிலும் தொழில் அடிப்படையில் இதனைச் செய்கைபண்ணலாகாதா? &
தும்புக் கற்றழையின் பிறப்பிடம் மெக்ஸிகோ வாகும். 1833ஆம் ஆண்டளவில் இது அங்கிருந்து யூ. எஸ். ஏ, ஃபுளோரிடா மாகாணத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பரப்பப்பட்டது. இன்று இச் செடி உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்பட்டு வருகின்றது.
1893ஆம் ஆண்டில் கிராமம் பொருளியல் நிபுண ரான ஜெர்மானியர் ஒருவரால் இது தங்கனிக்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. இன்று உலகின் மொத்தத் தேவையில் அரைப் பங்கினைத் தன்ஸானியாவும் கீன்யா வும் உற்பத்தி செய்கின்றன. :

Page 76
146
கரிம்ஜி தோட்டத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிரை நிரையாகத் தும்புக் க bறழை கடப்பட்டிருக் தது. விஞ்ஞான உத்திகளை அனுசரித்து, கணக்குப்படி, இடைவெளிகள் விட்டு கடப் பெற்றிருந்த இச் செடிகள் ஒரே உயரமும் வளர்ச்சியுமுடையனவாகக் காட்சியளித் தன. இவற்றை முதன் முதலாகக் கண்டபோது அன்னசிச் செடிகள் என்றே நினைக்கத் தோன்றியது. ஆணுல் இங்கு அன்னுசிக் காயையும் காணவில்லை; கனி யையும் காணவில்லை. ஓங்கி வளர்ந்த செடியையும் உயர்ந்த தண்டுகளையுமே கண்டேன்.
கரிம்ஜி தோட்டத்துக்கு ஜெர்மானியர் ஒருவர் சுப்பி ரின்டனுக இருந்தார். தும்புக் கற்றழைச் செய்கையில் அவருக்கிருந்த அறிவையும் ஆற்றலையும் அமீர் மிகவும் சிலாகித்துப் பேசினர். எனக்கு அவரைச் சக்திக்கக் கிடைக்கவில்லை; அவருடைய உதவியாளையே சம்தித் தேன்.
தொழிலாளர்களுக்கான லயங்களைப் பார்வையிட்ட போது, அவற்றில் ஒன்றிலே பேயோட்டும் சடங்கு போன்ற நிகழ்ச்சியொன்று நடைபெறுவதைக் கண் டேன். கீன்யா, கெரிச்சோவிலுள்ள தேயிலைத் தோட்டங் களிற் போலவன்றி. இங்கு ஆண்களும் பெண்களும் . தோட்டங்களில் வேலை செய்கிறர்கள். ஆபிரிக்காவின் பல்வேறு இனத்தவர்களில் ஒரு சில இனங்கள் தும்புக் கற்றழைத் தோட்டங்களில் வேலை செய்வதைத் தமது ஜீவனுேபாயமாகக் கொண்டுள்ளன என்பதைக் கவனித் தேன்.
தும்புக் கற்றழை வரட்சியைத் தாக்குப் பிடித் து நிற்பதில் நிகரற்றது அதன் கார் உப்பு நீரின் பாதிப்பை எதிர்க்க வல்லது. ஆகவே கப்பற் கயிறு செய்வதற்கு இந்த கார் மிகவும் உகந்தது.

147
தும்புக் கற்றழை 12-18 மாதக் கன்ருக 4-8 அடி இடைவெளிக்கு ஒன்ருக 8-12 அடி அகலமான நிரை களில் கடப்படும். சுமார் 3 வருட வளர்ச்சியின் பின்னர் அதன் இலைகளை அடிப்புறத்திலிருந்து கத்தியால் அல்லது மெசினுல் வெட்டி எடுக்கிருர்கள். வெட்டிய இலைகளை இதற்கெனத் தயாரிக்கப்பட்ட கார் உரிக்கும் இயந்திரத்திலிட்டு, கார் உரிக்கிறர்கள். இவ்விதம் உரித் தெடுக்கும் காரினைத் தண்ணிரில் அலம்பித் துப்புரவு செய்தபின், வெயிலில் காயவைத்து, வகைப்படுத்தி கப்பற் கயிறுகளாகவும் சிப்பம் கட்டும் கயிறுகளாவும் இழை நூல்களாகவும் திரிக்கிறர்கள். சைஸல் தும்பு சாக்கு, பாய் முதலியன செய்வதற்கும் பயன்படுத்தப் படுகிறது. பிளாஸ்திக் தயாரிப்பதற்கும், மெத்தை முதலியன பொதிவதற்கும் இத்தும்பு உபயோகிக்கப் படுகிறது. தும்பு நீக்கிய இலையிலிருந்து ஹெசோஜென்என்னும் உபபொருள் கிடைக்கிறது. இதனைக்கொண்டு பலதரப்பட்ட மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் முக்கியமானது ஆபத்தான வேளைகளில் டாக்டர்கள் சஞ்சீவி மருந்தாகப் பயன்படுத்தும் கோட்டிஸோன் ஆகும்.
தும்புக் கற்றழை ஏற்றுமதி மூலம் தன்ஸானியா ஆண்டு தோறும் 15 தச இலட்சம் (1,50,00,000) பவுண் வெளி காட்டுச் செலாவணி சம்பாதிக்கிறது. எனினும் இப்பொழுது பிளாஸ்திக் போன்ற செயற்கைப் பொருள்கள் தும்புக் கற்றழைப் பொருள்களுக்குப் போட்டியாக வளருகின்றன.
அமீருடன் தும்புக் கற்றழைத் தோட்டத்தைச் சுற்றிப்பார்த்து முடிய எனது அடுத்த நிகழ்ச்சிக்கு கேரமாகி விட்டது. ஆகவே, அங்கிருந்து புறப்பட்டு,

Page 77
148
தேநீர் விருந்து நடைபெறவிருந்த இடத்துக்குப் போய்ச் சேர்க்தோம். போகும் வழியில் சம்பாஷணை அவருடைய வும் அவர் துணைவியுடையவும் சமுகமாகிய தாவூதி போரு இனத்தவர்களைப் பற்றிப் படர்ந்தது.
வியாபாரத்தையே தமது பிரதான பிழைப்பாகக் கொண்டுள்ள போரு சமூகத்தவர்கள் எமது சொந்த காடான இலங்கை உட்பட உலகின் பல பாகங்களிலும் சிதறிக்கிடக்கிருர்கள், வாழுமிடமெங்கும் சிறுபான்மை யினரிலும் சிறுபான்மையினராக விளங்கி வந்தாலும் தமது தனித்துவத்தையும் மரபு-ஆசாரங்களேயும் இன்றுவரை பேணிக் காத்து வருகிறர்கள். இவர்கள் மெளலான அமீறுல் முஃமினின் அலி அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வலியாகக் கொள்வர்.
இவர்களது கோட்பாட்டின்படி, அலி (றலி.) அவர் களுக்குப் பின்னர், "தந்தைக்குப் பின் தனயன்’ என்ற முறையை அனுசரித்து, பல இமாம்கள் நியமிக்கப்பட் டார்கள் இவ்விதம் நியமிக்கப்படும் இமாம்களிற் சிலர் சில சமயங்களில் பொது மக்கள் அறியாமல் அஞ்ஞாத வாழ்க்கையை மேற்கொண்டாலும் இமாம்களின் நிய மனத் தொடர்பு துண்டிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவர்களின் பிரதிநிதியாக தாயல் முத்லக் கடமைகளை நிறைவேற்றுவார். மார்க்கத் துறையில் போருக்களின் மூப்பராக விளங்கும் இமாம் தமது ஆயுட் காலத்திலேயே வாரிசாக ஒருவரை நியமித்துக் கொள்வார். இமாமின் பிரதிநிதியாகப் பதவி வகிக்கும் தாயல் முத்லக் அவர் களுக்கு தாவூதி போருக்கள் மிகுந்த முக்கியத்துவமளிக் கிருர்கள். அவரின் நிர்வாகத் திறனும், ஆத்மார்த்தத் தொண்டும் போரு சமூகத்தவர்களைப் பி2ணக்கும் பாசக் கயிறு தாவூதி போருக்க2ளப் பற்றி நண்பர் அமீரிடம் கேள்விகள் கேட்ட சமயத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்

149
னர் கொழும்பு ஸாஹிரு கல்லூரிக்கு விஜயஞ் செய்த தாயல் முத்லக் சங்கைக்குரிய கலாநிதி ஸையிதினு தாஹிர் ஸைஃபுத்தின் சாஹிப் அவர்களை அலிகார் முஸ் லிம் பல்கலைக்கழகத்தில் வேந்தராகவும் பதவி வகித்து வந்தார்.
போரு சமூகத்தவர்களே இலங்கை முஸ்லிம்கள் ருவுலிக்காரர் என்றும் குறிப்பிடுவதுண்டு. இது அலி வலியுல்லாஹ் என்ற (оят ற்றெடரின் திரிபு போலத் தோன்றினுலும் ருவுN என்னும் அறபுப் பதத்தின் திரிபேயாகும். ருஃபிழி என்னுஞ் சொல் சுன்னத் ஜமா அத் முஸ்லிம்களிடையே வழியா முஸ்லிம்களைக் குறிக்கும்.
அமீர் தமது வீடு வந்ததும் இறங்கிக் கொண்டார். கான் அவருடைய காரில் தேநீர் விருந்து நடைபெற விருந்த இடத்துக்குப் போனேன். விருந்துக்குத் தாய், தந்தை, குழந்தைகள் உட்பட சுமார் 40 இலங்கையர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் மத்தியில் இருந்தபோது, ாகான் மீண்டும் இலங்கையில் இருப்பதுபோன்ற உணர்வு எனக்கு உண்டாயிற்று. ஆயினும் இந்தப்பிரமை சுமார் இரண்டு மணி நேரத்துள் மறைந்தது.
அன்றிரவு, தாறுஸ்ஸலாம் மாாககர சபையினுல்” மாாகாட்டுப் பிரதிநிதிகளாகிய எமக்கு ஏற்பாடு செய்யப் பெற்ற விருந்துக்குப் போகிறேன் என்ற உவகையுடன் படுக்கைக்குச் சென்றேன்.

Page 78
ஸ்வாஹிலி மொழியும் அறபுத் தமிழும்
24
ஸ்வாஹிலி மொழியுடன் எனக்கு முதன் முதலில் பரிச்சயம் ஏற்பட்டது, எதிர்பாராத சூழ்நிலையிலாகும். 1935 ஜனவரி 29ஆங் திகதி இந்த அனுபவம் உண்டா யிற்று. லண்டனிலிருந்து இலங்கை திரும்புவதற்கு எப்பொழுது கப்பல் கிடைக்குமோ வென்று காத்துக் கொண்டிருந்த நான், செய்வதற்கு விசேஷமாக எதுவு மில்லாத நிலையில், பெயர் பெற்ற ஃபொய்ல்ஸ்-Fowlesபுத்தகசாலைக்குச் சென்று புத்தகங்களைப் புரட்டிக் கொண்டு நின்றேன். அதன்பின்னர் அங்கிருந்து வெளி யேறி, அக்கம்பக்கங்களிலிருந்த கடைகளைப் பார்த்தபடி கடந்தேன். ஒரு முடுக்கில் காலேந்து சிறிய புத்தகக் கடைகள் இருக்கக் கண்டேன். இந்தக் கடைகள் வழக்க மான புத்தகக் கடைகளைப் போலல்லாமல், மீதிப் புத்த assiasis Git — Re mainder Books—GứsibC5b 35 GOD - 35 GMT TT 35 விளங்கின.
புத்தகங்கள் வெளியிடும் பெரிய ஸ்தாபனங்கள் விற்று எஞ்சும் புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்குத் தள்ளிக் கழிப்பது வழக்கம். இப்படி விற்கப்படும் புத் தகங்களே மீதிப் புத்தகங்கள். இத்தகைய கடையொன் றிலே அறபு எழுத்துக்கள் துலாம்பரமாகப் பொறிக்கப் பெற்ற நூலொன்றைக் கண்டேன். அதை எடுத்துப் புரட்டிப் பார்த்தபோது, அது ஸ்வாஹிலி மொழி நூலென்பதும், இங்கிலிஸ் மொழிபெயர்ப்புக் கொண்ட தென்பதும் தெரிந்தது. அதன் ஸ்வாஹிலிப் பெயர் “உத்தென்டி வாம்வான குபோன’-குடும்பப் பெண் ணுக்கும்வான குப்போனுவின் புத்திமதி--என்பதாகும்.

151
அறபு மொழித் தலையங்கத்தில் எனக்கிருந்த அன்புத் தளையின் காரணமாக அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன்.
அறபு எழுத்துக்களால் அமைந்திருந்த தலைப்பைக் கூர்ந்து கவனித்தபோது, அது அறபேயல்ல என்பது புலனுயிற்று. பள்ளி நாட்களில் அறத் தமிழ் கற்றிருக் தமையால், அறபு லிபியில் எழுதப்படுவன வெல்லாம் அறபல்ல என்பது எனக்குத் தெரியும். உன்னிப்பாகக் கவனித்ததில், தென்னிந்திய, இலங்கை முஸ்லிம்களி டையே ஒரு காலத்தில் வழக்கிலிருந்த அறபுத்தமிழ் எழுத்து முறைக்கும் நூலின் தலைப்பிற் காணப்பட்ட எழுத்து முறைக்கும் நெருங்கிய ஒற்றுமை யிருந்தமை யைக் கண்டேன். ஆயினும் அது விஷயத்தை அப் பொழுது நான் மேற்கொண்டு ஆராயவில்லை
ஆனல், பின்னர் இலங்கைச் சோனகரின் தாய் மொழி பற்றிய பிரச்சினைகளும் அவற்றை யொட்டிய சர்ச்சைகளும் எழுந்த சமயத்திலும் அண்மையில், அற புத் தமிழின் வளர்ச்சி, தளர்ச்சி முதலியன பற்றி மேலும் அறிந்துகொள்ள முற்பட்ட போதும் மிகுந்த அக்கறை யுடன் இவ்விஷயத்தை ஆராய்க்தேன். இதன் பயணுக இந்த நூலுக்கும் கடந்த தலைமுறைகளில் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் மத்தியில் மிகுந்த மதிப்பைப் பெற் றிருந்த "பெண்புத்தி மாலை’ என்ற நூலுக்கும் கருத்தள வில் நெருக்கமான ஒற்றுமைகள் இருப்பதை உணர்க் தேன். உதாரணமாக, ஸ்வாஹிலி நூலின் 5ஆம் செய் யுளில் வரும்
*ஆண்டவன்ை ஏற்று, அவன் றஃமத்தை--கரு ணையை-இரந்து; அவன் ஆணைப்படி, அவனைப் பணிந்து வணங்குவோமாக."

Page 79
152
என்னும் பொருள்படும்
“When you have thus acknow-ledged
The name of God the Mighty
Then let us pray for his bout ty, As he the Lord shall deem fil'
செய்யுளின் கருத்து, 'பெண்புத்தி மாலை"யிலும் பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது:
*அல்லாஹ் ஒருவனை அஞ்சி வணங்கிக்கோ மயிலே
எல்லாமவன் என்றிருதயத் தெண்ணிக்கோ குயிலே." இதுபோலவே,
*பட்டுப் புனைக் து. பரிமளம் பூசி, கை கால்களுக் குக் காப்பணிக்து' என்றும், “புதுமணப் பெண்போலப் புருஷனை மகிழ்விப்பாயாக,” என்னும் பொருள் தரும்.
“Do you adorn yours-lf with finery,
That you remain like a bride, Put alklets upon your ankles And bracelets upon your aim"
வரிகளில் கருத்து, பெண்புத்தி மாலை'யில், *பட்டையுடுத்துப் பரிமளம் பூசிக்கோ மயிலே,
கட்டிய கொங்கைக்குக் கச்சு மிருக்கிக்கோ குயிலே, வார்ந்து முடித்து மணங்கள் பூசிக்கோ மயிலே, சேர்ந்து புருஷனைச் சிங்தை மகிழ்ந்துக்கோ குயிலே." என்னும் பாடலிற் காணப்படுகிறது. இப்படி மேலும் பல ஒற்றுமைகள் இவ்விரண்டு நூல்களுக்கு
ஆழ்ந்து சிக்தித்தோமானுல் இந்த ஒற்றுமையை யிட்டு வியப்படையத் தேவையில்லை. ஏனென்ருல் இந்த ஸ்வாஹிலி மக்களினதும் சோனகர்களினதும் கலா

153
சாரம் இஸ்லாமிய கலாசாரமேயாகும். மேலும் ஸ்வாஹிலி மொழிக்கும் அறபுத் தமிழுக்கும் கூட பல ஒற்றுமைகளை காம் காணலாம். அறபுத் தமிழில் அறபுச் சொற்கள். விரவிக் கிடந்தாலும் வசனங்கள் தமிழ் இலக்கணப் படியே அமையும். இவ்வாறே ஸ்வாஹிலி மொழியிலும் பல அறபுச் சொற்கள் இடம் பெற்ருலும் வசன ஆக்கம் கிழக்காபிரிக்கக் கரையோரங்களில் வழக்கிலிருந்த பாந்து -Bantu-மொழி மரபை யொட்டியே அமையும். அறபு அட்சரங்களால் குறிப்பிட முடியாத தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்கு கொக்கத்துகளை-நுகத்-குற்றுகளைஉபயோகிக்கும் வழக்கம் ஸ்வாஹிலி, அறபுத்தமிழ் இரண்டிற்கும் பொதுவாகும். அறபு லிபியில் எழுதப் பெற்றுவந்த அறபுத்தமிழ், தென் இந்தியாவுக்கும் இலங் கைக்கும் அச்சு இயந்திரம் வந்து சேர்ந்ததுடன் தமிழ் லிபியில் அச்சாகியது. அதுபோலவே ஸ்வாஹிலியும் பிரிட்டிஷாருடைய செல்வாக்கின் காரணமாக ரோமன் லிபியில் எழுதப்படலாயிற்று. முஸ்லிம் சாம்ராஜ்யம் கீர்த்தியின் சிகரத்தை அடைந்திருக்த காலத்தில் பல மொழிகள், அரபு லிபியிலேயே எழுதப்பெற்றன. இவற் றுள் மலாய், துருக்கி, உஸ்பெக் முதலிய மொழிகள் சில வாகும். இன்று மலாயும் துருக்கியும் ரோமன் லிபியைப் பயன்படுத்துகின்றன; உஸ்பெக் ருஷ்ய லிபியில் எழுதப் படுகிறது. ஆட்சிக்கும் மொழிக்கு முண்டாகும் பிணைப் பினை இந்தச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.
இன்று ஸ்வாஹிலி கிழக்காபிரிக்காவின் பிரதான மொழியாகவும் தன்ஸானியாவின் உத்தியோக மொழி யாகவும் கீன்யாவின் பிரதான அரச கரும மொழியாகவும் விளங்குகிறது. கிழக்காபிரிக்காவில் ஸ்வாஹிலி பெற் றிருக்கும் இந்த அந்தஸ்து தொடர்ந்து நிலைநிற்குமா என்பது கேள்விக்குரியது. எனினும் உலகின் அதிமுக்
1227- 0

Page 80
154
கியமான பன்னிரண்டு மொழிகளில் ஸ்வாஹிலியும் ஒன்று என்பதாக கான் எங்கோ படித்த ஞாபகமிருக் கிறது.
மொம்பாஸாவுக்கு அண்மையில் ஹெதாவு என்னு மிடத்தில் குடியேறிய முதலாவது அறபுக் கோஷ்டிபற்றி இங்கு குறிப்பிடல் பொருத்தமாகும். ஐக் தா வ து உமைய்யா ஹலீபா அப்துல் மாலிக் இபணு மர்வான் (கி. பி. 685-705) ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட உள்ாகாட் டுக் குழப்பங்களின் காரணமாகத் தப்பியோடிய (அறபு) அகதிகள் ஹெதாலிற் குடியேறினர்கள். இலங்கையில் பல்வேறு இடங்களிலும் (ஏழெட்டு இடங்களில்) வந்து குடியேறிய ஆதி அறபு மக்களும் இதே ஹலீபாவின் ஆட்சியில் ஹாஸிமியர்களுக்கு இழைக்கப்பெற்ற கொடு மைகளுக்கு அஞ்சி நாடு துறந்தவர்களேயாவர். அறபு காட்டின் இருப்பிடத்தைக் கவனிக்கும்போது, அக்காட்டு மக்களுக்கு இந்து மகா சமுத்திரத்தின் ஒரு பாரிசத்தி லுள்ள கிழக்கு ஆபிரிக்கக் கரையோரங்களும் மறு பாரி சத்திலுள்ள தென் இந்திய, இலங்கைக் கரைப் பகுதி களும் சம அளவிற் பழக்க முடையனவாக இருந்திருக்கு மென்பது புலப்படும். இதனைக்கொண்டு ஸ்வாஹிலிக் கும் அறபுத் தமிழுக்குமுள்ள அன்புத் தளையை ஊகிக் கலாம். ஸ்வாஹிலி மக்களினதும் சோனக மக்களின தும் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், இலக்கியங் கள் ஆகியவற்றில் மிகுந்த ஒற்றுமைகள் காணப்படு தலையும் காணலாம். இரு வகுப்பாரும் ஷாபிகளாக இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இத்துறையில் ஆராய விழையும் எவரும் அரசு, இங்கிலிஸ், தமிழ், ஸ்வா ஹறிலி ஆகிய நான்கு மொழிகளாவது தெரிந்தவராயிருத் தல் அவசியம். கம்மிடையே ஓர் அல் பைறுானி உள ரேல்..?

155
அபூ றைஹான் முஹம்மத் பின் அஹ்மத் அல் பைறுானி என்பவர் வட இந்தியாவை ஆண்ட சுல்தான் மஹ்மூத் கஸ்னவியின் அபிமானத்துக்கு உரியவராக விளங்கினர். 11 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த இவர் சமஸ் கிருத மொழியைத் துறை போகக் கற்று, இந்து மக்க ளின் பழக்க வழக்கங்கள் பற்றி வெகு நுணுக்கமாக ஆராய்ந்து, கித்தாபுல் ஹிந்த்-இந்திய வைபவ நூல்என்ற நூலினை இயற்றினர். அறிவியல் முறை வழு வாது நுணுக்கமான முறையில் அவர் ஆக்கிய அக் நூலே இன்றைய வரலாற்ருசிரியர்களும் சமூகவியலாளர் களும் வியந்து போற்றுகிறர்கள்.
ஆகஸ்ட் 30ஆக் திகதி அமீர் அவர்களுடன் ஸ்வாஹிலிப் பாடசாலைகள் சிலவற்றைப் பார்க்கச் சென் றேன். அவர் என் வசதிக்காக அப்பகுதி லெவாலிதாறுஸ்ஸலாத்து அறபு மக்களின் தலையாரி-அவர்களை யும் அழைத்து வந்திருந்தார். பாடசாலைகளைச் சுற்றிப் பார்வையிட்ட சமயத்தில் பழக்க வழக்கங்களில் இலங்கை முஸ்லிம்களும் ஸ்வாஹிலி முஸ்லிம்களும் எவ்வளவு தூரம் கெருக்கமான தொடர்புகள் உடையவர்கள் என் பதைக் கவனிக்க முடிந்தது. குர்ஆன் பள்ளிக்கூடம் போன்ற மார்க்கப் பாடசாலை ஒன்றினைப் பார்க்கப் போனுேம், நாங்கள் போய்ச் சேர்ந்த சமயத்தில் சிறுவர் கள் எல்லோரும் உச்ச ஸ்தாயியில் ஆளுக்கொரு பாடத்தை மனனஞ் செய்து கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சியைக் கண்டதும் யாழ்ப்பாணத்தில் என் சிறு பிராயத்தில் கல்வி கற்ற அல்லாபிச்சை மாமா வுடைய பள்ளிக்கூடம் மனதிற் பளிச்சிட்டது. இங் கிருந்து அரசினர் ஆபிரிக்க மகளிர் பாடசாலைக்குச் சென்' ருேம். இங்கு 5ஆம் வகுப்பிலிருந்து ஸ்வாஹிலியும் இங்கி

Page 81
156
லிஸாம் படிப்பிக்கப்படுவதாகத் தெரிய வந்தது. 8 ஆம் வகுப்பிலிருந்து இங்கிலிஸே போதனு மொழி.
பாடசாலைகளைச் சுற்றிப் பார்த்து முடிந்ததும், தாறுஸ்ஸலாம் கலாசார மன்றத்தின் ஆதரவில் ஏற் பாடாகியிருந்த கூட்டத்திற்குச் சென்ருேம். இங்கு இலங் கையின் கல்வி முறைபற்றி நான் பேசினேன். எனது சகாவும் கனேடியப் பிரதிநிதியுமான ஃபெயர்வெதர் அவர்கள் "கனடாவில் அமெரிக்கச் செல்வாக்கு’ என்ற பொருள் பற்றி உரையாற்றினர் இந்தக் கூட்டத்துக்குக் கல்வி இலாகா அதிபர் திரு. எலிஸன் அவர்களும் வக் திருந்தார். இவர் கூட்ட முடிவில் என்னுடன் உரை யாடிய போது எனது பேச்சில் குறிப்பிட்ட விஷயங்கள் பற்றிப் பல கேள்விகள் கேட்டார்.
சுல்தானின் அரண்மனையில்
தாறுஸ்ஸலாம். இந்நகரம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. சாந்தியைக் குறிக்கும் இச்சொற்ருெடர் இறை வாக்காம் திருக்குர்ஆனில் வரவில்லையா? அங்கு இச், சொற்ருெடர் சுவர்க்கத்தைச் சுட்டுகின்றதல்லவா? கருத்துச் செறிவுமிக்க இச்சொற்றொடர் ஒருபுறம்.அதன் சுவாத்தியம், இயற்கைக் காட்சிகள், மரஞ் செடிகள், பச்சைப் பசேல் என்ற தோற்றம், துறைமுகம், இவை யாவும் கொழுப்பினை எனக்கு நினைவூட்டின. அமீரின் விருந்தோம்பும் பண்பும், துணையும், மனையும் அங்ககர் மீது எனக்குண்டான கவர்ச்சியைப் பிரியமாக மாற்றின. நட்பும், உணவும், வீடும், வசதியுமில்லாத ஊர் எவ்வளவு வசீகரம் பொருந்தியதாயினும் நமக்கு அதன்மீது பிரிய

157
முண்டாகாதல்லவா? தாறுஸ்ஸலாத்தில் நான் மகிழ்ச்சி யுடன் நாட்களைக் கழிப்பதற்காக அமீர் அயராது பாடு பட்டார். அவருடைய உறுதுணை இல்லாதிருந்தால் அந்தக் குறுகிய கால எல்லைக்குள் பாடசாலைகளை நான் சுற்றிப் பார்த்திருக்க முடியாது. அவருடைய இல்லத் தில் பரிமாறப்பட்ட தேநீர் சுவையை நான் மறக்க இய லாத வகையில் மிகச் சிறந்த இலங்கைத் தேயிலை அதற்கு உபயோகிக்கப்பட்டிருந்தது. ஆயினும் தாறுஸ் ஸலாத்தை விட்டு நீங்கவேண்டிய வேளையும் வந்தது. இது எதிர்பாராததொன்றன்று. இந்த உலகில் எல்லாம் அங்த்தியமே.
ஆகவே, ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அமீரின் காரில், அவர் சகிதம் தாறுஸ்ஸலாம் விமானத் துறைக் குக் கிளம்பினேன். எனக்கு விருந்து உபசாரம் செய்து என்னைக் கெளரவித்த இலங்கை அன்பர்களிற் சிலர் விமானத்துறைக்கு வந்திருந்தார்கள். பல வருடங் களுக்கு முன்னர் தாய்காட்டை விட்டுப் பிரிந்து தாறுஸ்டி ஸலாம் வந்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த இவர் கள் முதன் முதலாகச் சந்தித்த இலங்கைப் பாராளுமன்றி உறுப்பினன் கான் ஆகினேன். இந்த வகையில் என் சக பிரதிநிதிகளில் கான் அதிர்ஷ்டசாலி. ஏனென்ருல்; இலங்கையிலிருந்து என்னேடு கிளம்பிய அவர்கள் இரு வரும் வேறு சுற்றுப் பயணக் கோஷ்டியில் இடம் பெற் றிருந்தார்கள். நான் தாறுஸ்ஸலாத்திலிருந்து கிளம்பிய பின்னரே அவர்கள் அங்கு சென்ருர்கள். இதனுல் அங் கிருந்த இலங்கையர்கள் தமது சொந்த நாட்டவன் ஒரு வ்ஜனக் கண்டதனுல் உண்டான மகிழ்ச்சியையும் பரிவை யும் என்மீது காட்டினர்கள்.
காலை 9.30 மணிக்குப் புறப்பட்ட விமானம் சுமார் 45 நிமிஷம் கழித்து, ஏறக்குறைய 45 மைல்களுக்கு

Page 82
158
அப்பாலிருந்த ஸான்ஸிபாரை அடைந்தது. ஸான்ஸி பாரில் இறங்கியதும் அரசாங்க அதிகாரிகள் இருவர் எம்மை வரவேற்று, அழைத்துப் போக வந்திருந்தார். சற்று நேரத்தில் எமது கோஷ்டி சுல்தானின் அரண் மனையை அடைந்தது. மேன்மை தங்கிய சுல்தான் செய்யித் ஸேர் ஹலிஃபா பின்ஹர்ப் ஜி.சி. எம்., சீ, பி. ஈ. அவர்களும்-சுல்தானு-அரசி-அம்மையாரும் எம்மை வரவேற்றர்கள். சுல்தான் அவர்கள் ஒமானிய வம்சத் தைச் சேர்ந்தவர். அவருடைய மூதாதையர்கள் அறபுக் குடாக்கடலின் தென்கிழக்குக் கரையோரமாகவுள்ள ஒமான் காட்டின் தலைநகராகிய மஸ்கெற்றிலிருந்து குடி பெயர்ந்தவர்களாவர். இவற்றை அறிந்த கான் சுல்தானு அவர்கள் சுல்தான் அவர்களுடன் எனக்குத் தரிசனமளி யார் என்றே கம்பினேன். எங்களுக்குத் தெரியாமல் உப்பரிகையில் உட்கார்ந்து சாரளத்துக் கம்பிகளி னுரடாக எங்களைக் கவனித்துக் கொண்டிருப்பார் என்று எண்ணினேன். ஆணுல் அவரோ வெள்ளைக்காரப் பெண் போல உடையணிந்து, சுல்தான் அவர்கள் அருகில் நின்று, கைகுலுக்கி எம்மை வரவேற்றர். சுல்தானின் வம்சத்தைச் சேராதவரான சுல்தானுமன்னரிலும் பார்க்க வயதில் மிகவும் இளையவராகக் காட்சியளித்தார். இளம் பெண்ணைக் கைப்பிடித்தால் இளமை மீளும் என்ற கம்பிக்கையில் சுல்தான் அவரை மணஞ் செய்து கொண் டாரோ வென்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். இந்த இளமையைக் கட்டிக் காப்பதில் எத்தனை மனிதர் கள் எத்தனை விதமாக முயன்றிருக்கிறர்கள் காய கற்பம் தயாரித்துத் தருவதற்கென்றே அரண்மனையில் பிரத்தியேகமான ஹகீம்களை-வைத்தியர்களை-வேலைக் கமர்த்திய சுல்தான்கள்தாம் எத்தனை பேர்! இதை நினைக்கும்போது, பல்கலைக் கல்லூரியில் ஜெயதிலக

159
மண்டப விடுதி மாணவனுக படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு காள் பத்திரிகையில் வெளி வந்த செய்தி யும் அதனையிட்டு வரவேற்புக் கூடத்தில் மாணவர்கள் மத்தியில் அன்று முழுதும் நடைபெற்ற சம்பாஷணை களும் மனத்திரையில் நிழலாடுகின்றன. வொரெனேவ் (1866-1951) என்னும் மேல்காட்டு சத்திர சிகிச்சை நிபுணர் மனிதரின் இளமையைக் கட்டிக் காக்கும் காய கல்பமாக குரங்குகளின் சுரப்பிகளைப் பயன்படுத்தி வங் தார். இதனைக் கேள்வியுற்ற இந்திய மகாராஜா ஒருவர் அவரை விசேஷ விமான மூலம் இந்தியாவுக்கு வரவழைத் தார். இதுவே அந்தச் செய்தி.
மேற்படி அரச தரிசனம் முடிந்ததும் எமக்கு வழி காட்டியாக வந்த உத்தியோகத்தர் சுல்தானைப் பற்றியும் சுல்தானுவைப் பற்றியும் விவரமாகச் சொன்னுர். சுல்தானு அவர்கள் எமது விஜயத்துக்குச் சில மாதங் களுக்கு முன்னர்தான் பர்தா அணியும் வழக்கத்தைக் கைவிட்டாராம். 1879 ஆம் ஆண்டில் பிறந்த சுல்தான் கான் பிறந்த வருடமான 1911 ஆம் ஆண்டில் அரசகட்டி லேறினர். எனக்கும் அவருடைய ஆட்சிக்கும் ஒரே வயது! இவ்வளவு நீண்ட ஆட்சிக் காலத்தைக் கண்ட அவர் பிரிட்டனில் நடைபெற்ற மூன்று முடிசூட்டு வைபவங் களுக்கும் கேரிற் சென்று சமுகமளித்தாராம். அவ்வளவு தீர்க்காயுசு அவருக்கு.
சிறு பராயத்தில் சுல்தான் என்ருல் இஸ்லாமிய உலகம் முழுதுக்கும் ஹலிஃபா என முஸ்லிம்கள் பலராற் கருதப்பெற்ற மாட்சிமை தங்கிய இரண்டாவது சுல்தான் அப்துல் ஹமீத் அவர்களே மனக்கண்ணில் தோன்று வார். ஆனல் ஸான்ஸிபாரில் கான் கண்ட இந்தச் சுல்தானுே கபாக்காவையும் ஹைதராபாத் நிஜாமையும் இந்திய கவாபுகள், மகாராஜாக்களையும் நினைவூட்டினுர்,

Page 83
160
ஒரு குட்டி சுல்தானகவே அவர் எனக்குத் தோன்றினுர், முகலாய சக்கரவர்த்திகூட சுல்தான் என்ற பட்டத்தைப் பெறவில்லை. பாதுவடிா என்றே அவர் அழைக்கப் பட்டார்.
ஸான்ஸிபார் பிரிட்டிஷாரின் பரிபாலனத்தில் இருந்த படியால் இந்தக் குட்டி சுல்தான் அவர்களின் கைப் பொம்மையாகவே விளங்கினர். பிரிட்டிஷ் ஸ்தானிகரே அரச பரிபாலனம் செய்து வந்தார். சில நூற்றண்டு களுக்கு முன்னர்வரை, கிழக்கு ஆபிரிக்கக் கரையோரத் தின் பெரும் பகுதி ஸான்ஸிபார் சுல்தானின் ஆட்சிக் குள் இருந்து வந்தது. ஆனல், அந்தப் பரம்பரையில் வந்த சுல்தான் செய்யித் ஸேர் ஹலிஃபா பின்ஹர்ப் அவர் களோ பெரும் நிலப்பரப்புக்கு அதிபராக விளங்குவதற் குப் பதிலாக, பெரும் பெரும் பட்டங்களுக்கு அதிபதி யாகத் திகழ்ந்தார்! சுல்தானுக்கும் பிரிட்டிஷாருக்கும் நிலவிய சுமுக உறவுக்கு இப் பட்டங்கள் சான்று பகர்ந் தன. சுதந்திர இயக்கங்கள் முளைத்தபோது இந்த உறவு மேலும் இறுகியது. இத்தகைய உறவு சுல்தானைப் பொறுத்த வரையில் எவ்வளவு தூரம் இன்றியமையாத தாயிருந்ததென்பதைப் பிந்திய வருடங்களில் கடை பெற்ற சம்பவங்கள் நிரூபித்தன. இக் நிகழ்ச்சிகளை எண்ணும்போது 17ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த பிரிட் டிஷ் மன்னன் ஒருவன், மதச் சார்பான சீர்திருத்தங் க2ளச் சிபார்சு செய்த குழுவினரிடம் அக்காலச் சூழலைக் கிண்டல் செய்யும் வகையில் மேற்றிராணியார் இல்லை யேல் மன்னனுமில்லை” என்று சொன்னதை மேற்படி சுல்தான் ஓரளவுக்கு மாற்றி, ‘பிரிட்டிஷ் இறைமை இன்றேல் சுல்தான் ஆட்சியுமில்லை” என்று சொல்லி :யிருந்தால் பொருந்துமென்று நினைக்கத் தோன்று
கிறது.

161
சுல்தானின் மாளிகையில் சுவையான விருந்து அருந்திய பின்னர் சங்தையைச் சுற்றிப்பார்க்க அழைத் துச் செல்லப்பட்டோம். சந்தையில் விநோதப் பொருள் கள் விற்கும் பல கடைகள் இருந்தன. இவ்வளவு தொகையான விகோதப் பொருள்களையோ, விநோதப் பொருட் கடைகளையோ கான் வேறெங்கும் கண்டதில்லை; இந்த விகோதப் பொருள்கள் பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய காடுகளிலிருந்து தருவிக் கப்பட்டனவாக விளங்கின. செம்பு, பித்த2ளப் பாண் டங்கள், பாரசீகக் கம்பளங்கள், அறபு நாட்டு வாள், ஈட்டிகள், தந்தத்தினுலும், ஆமை ஒட்டினுலும் செய்யப் பெற்ற பொருள்கள் முதலியனவே அநேகமாக அங்குக் காணப்பட்டன. நமது இலங்கையில் செதுக்கப்பெற்ற கருங்காலி யானைகளையும் கண்டேன். பித்த2ள பதித்த மரப்பெட்டிகள் பல கடைகளில் இருக்கக் கண்டேன். ஆணுல் இவற்றை வாங்கி இலங்கைக்குக் கொண்டு வருவது சிரமமென்பதால் அதைப்பற்றி நான் அக்கறை கொள்ளவில்லை. ஆணுல் இத்தகைய பெட்டிகளுக்கு ஸான்ஸிபார் பிரசித்தி பெற்றதென்று எமது வழிகாட்டி மூலம் பின்னர் அறிந்தேன். இந்தப் பெட்டிகள் லாமு அல்லது அறபுப் பெட்டிகள் என்று குறிப்பிடப்படுகின் றன. ஆயினும் பெரும்பாலும் சூறத்திலும் பம்பாயிலுமே இவை தயாரிக்கப்படுகின்றன. அறபுப் பெட்டி அல்லது லாமு என்ற பெயர் வந்தமை பன்னெடுங்காலமாக இவை அறபு நாடுகளுக்கு இறக்குமதியாகி வந்தபடியா லாகும். இவற்றுக்கு உல்லாசப் பிரயாணிகளிடையே மிகுந்த கிராக்கியுண்டு. இதனுல் வியாபாரிகள் நல்ல மரத்தினுலான பெட்டிகளைப் பெரும் விலை கொடுத்து வாங்கவும் தயாராக இருக்கின்றனர். சிலர் அழுக் கடைந்த, சேதமுற்ற பழைய பெட்டிகளை வாங்கி வெகு

Page 84
162
நுட்பமாகப் புதுப்பித்து வைத்திருப்பார்கள். இவை பார்த்தால் புத்தம் புதியன போலவே காட்சியளிக்கும். வேறு சில வியாபாரிகள் போலி மரங்களை உபயோகித்து பெட்டிகளைத் தயாரிப்பார்கள். இந்த வகையான துர்ப் பழக்கங்களுக்கு நாடு, சாதி, மதம், இனம், வர்க்கம் என்ற வேறுபாடுகள் இல்லைபோலும். யாதும் ஊரே என்னும் தாரகம் இதற்கும் பொருந்தும் போலும்.
கடைத்தெரு வழியாகச் சென்றுகொண்டிருந்த போது பல்வேறு காட்டு மக்களைக் கண்டோம். அதனைக் கொண்டு கிழக்கு ஆபிரிக்காவின் கேந்திர நகரமாக ஸான்ஸிபார் விளங்குகிறதென்று யூகித்துக்கொண் டேன். அடிமை வியாபாரம், யானைத் தந்தம் ஏற்றுமதி செய்தல் முதலியவற்றுக்கு வாய்ப்பான துறைமுகமாக ஸான் ஸிபார் பன்னெடுங் காலமாக வழங்கி வந்திருக் கிறது. 1829ஆம் ஆண்டில் கிழக்கு ஆபிரிக்கச் சுல்தான் ஒமானிலிருந்து தமது தலைங்கரை ஸான்ஸிபார் தீவுக்கு மாற்றியதுடன் ஸான்ஸிபார் துறைமுகத்துக்கு இந்த மவுசு ஏற்படலாயிற்று. ஆபிரிக்கக் கண்ட ஆய்வுப் பயணத் தலைவர்களான புகழ்பெற்ற பேர்ட்டன், ஸ்பீக் ஆகியோர் ஸான்ஸிபார் தீவிலிருந்தே தமது யாத்திரை களை ஆரம்பித்தார்கள்.
ஸான்ஸிபார் தீவின் பெயரே அதன் மேற்றிசையில் அமைந்துள்ள பட்டினத்துக்கும் தட்டப்பட்டுள்ளது. இதுவும் பெம்பாவும் இணைந்து பிரிட்டிஷ் ஸான்ஸிபார் பரிபாலன மண்டலமென அழைக்கப்பட்டது.
ஸான்ஸிபார் தீவில் வாழும் அறபு மக்கள் பெரும் பாலும் ஒமானிய வம்சத்தவர்களே யென்றும் இவர்கள் பெரும்பாலும் நிலச்சுவான்தார்களாக விளங்குகின்றனர் என்றும் அறிந்தேன். இந்திய மக்கள் வியாபாரிகளாக

163
வும் ஐரோப்பியர்கள் அரசாங்க உயர் அதிகாரிகளாகவும் இருந்துவந்தனர். சுதேசிகளான ஸ்வாஹிலிகளோ பெரும் பாலும் தொழிலாளிகளாகவே விளங்கினர். இந்தப் பாகு பாடுகள் அந்தச் சமயதில் என் கவனத்தைக் கவரவில்லை. ஏனென்றல் அப்பொழுது பிரிட்டிஷ் கிழக்கு, ஆபிரிக்கா முழுவதிலும் இதே சூழலே நிலவி வந்தது. ஆணுல் சுதக் திரத்தின் பின்னர் இந்தப் பாகுபாடுகள் யாவும் துலாம் பரமாகத் தெரியலாயின.
எமது அடுத்த நிகழ்ச்சியாக பிரிட்டிஷ் ஸ்தானிக ராலயத்தில் விருந்து வைபவம் இடம்பெற்றது. சங்தை வலம் முடிந்த சற்று கேரத்தின் பின்னர் இந்த விருந்துக் குப் புறப்பட்டேன்.
கராம்புத் தீவிலே
26
இந்த விருந்து வைபவத்திற்கு ஸான்ஸிபார் இளவர சரும் வந்திருந்தார். இளவரசர் சரளமாக இங்கிலீஸ் பேசினர். எனவே நானும் அவரும் தங்கு தடையின்றி உரையாட முடிந்தது. தங்தைக்குப் பின்னர் அரச பதவி யேற்ற இவர் வழமைப் பிரகாரம் தமக்குப் பிறகு தமது மைந்தனுக்கு முறைப்படி முடிதட்டி அரியாசனத் தேற்ற முடியவில்லை. ஏனென்ருல் இவர் அரச பதவி ஏற்ற சில ஆண்டுகளில் இராஜ்யத்தில் புரட்சியொன்று வெடித்தது. இதன் காரணமாகச் சுல்தான் தமது பதவி யைப் பறி கொடுத்தார். ஆபிரிக்காவெங்கும் சுழன்ற டிக்கத் தொடங்கிய மாற்றக் காற்று ஸான்ஸிபாரில் வேகம்பெற்றுப் புரட்சிச் சூருவளியாகக் கொந்த ளித்தது. காங்கள் இளவரசரைச் சந்தித்த அன்று இத்

Page 85
164
தகைய சம்பவங்கள் நடைபெறுமென்று எவரும் நினைத் திருக்க முடியாது. இன்று ஸான்ஸிபார் தங்கனிக்கா வுடன் இணைத்து தன்ஸானியா என்னும் காடாகத் திகழ்கிறது. ஜூலியஸ் கயறேறே என்பார் அதன் தலை மைப் பீடத்திலமர்ந்து வழி நடாத்தி வருகிறர். இவர் கடைப் பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் அயல் நாடாகிய கீன்யாவின் தேசபிதா ஜோமோ கென்யாட்டா அவர்களின் கொள்கைகளினின்றும் பல அம்சங்களில் வேறுபட்டனவாகும். இவ்விரு தலைவர்களும் உகண்டா வின் தலைவராகிய ஒபோட்டேயும் முன்னர் பிரிட்டிஷ் கிழக்கு ஆபிரிக்காவாக விளங்கிய நிலப் பரப்பின் விதியை நிர்ணயித்து வருகிறர்கள். பொருளாதாரத் துறையில் ஒத்துழைப்புக் காண்பதற்கான நகல் திட்ட மொன்றில் இம் மூன்று காடுகளும் கைச்சாத்திடல் அவசியமெனும் கருத்து இப்பொழுது பிரசாரஞ் செய்யப் பட்டு வருகிறது. இத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டு அமுலாக்கப்படுவதன் பயணுக மூன்று நாடுகளும் ஒரு சம்மேளனமாகக் கூட்டுச் சேருமோவென்பது பொறுத் திருந்து பார்க்கவேண்டிய விஷயமாகும்.
இத்தகைய விருந்துகளில் கடைசியாக எப்பொழு தும் கோப்பி பரிமாறப்படும். ஸ்தானிகர் இல்லத்து விருந்திலும் இம் மரபு பேணப்பட்டது. இதன் பின்னர் பிரதிநிதிகளாகிய எங்களில் மூவரும் எமக்கு வழி காட்டி யாக வந்த அரசாங்க உத்தியோகத்தரும் காரொன்றில் ஏறிப் புறப்பட்டோம். வழிகாட்டி, பேச்சில் விருப்புடைய வராகக் காணப்பட்டார்; எமது கேள்விகளுக்குத் தங்கு தடையின்றிப் பதிலளித்தார். ஸான்ஸிபார் என்னுஞ் சொல் அறபு மொழியில் இஞ்சி என்னும் பொருள்தரும் ஸஞ்ஜயீல் என்னும் பதத்துடன் தொடர்புடைய தாவென்று நான் கேட்டதற்கு அவர் இல்லையென்று

165
விடையளித்தார். மாருக, ஸான்ஸிபார் என்ருல் ஸென்ஞ் அல்பர் அதாவது கறுப்பர் வாழும் கரையோரம் என்று பொருள்படுமென்றர். ஸ்வாஹ்றிலி என்னும் பதம் ஸ்வாகிப் என்னும் அறபுப் பதத்தி லிருந்து தோன்றியதென்றும், கரையோரத்தைக் குறிக் கும் ஸாஹில் எ ன் னு ஞ சொல்லின் பன்மை ஸ்வாஹில் ஆகுமென்றும் சொன்னுர். இதனையடுத்து, ஸ்வாஹிலி மொழியில் பன்மை சொல்லின் ஈற்றில் வராமல் முதலில் வருமென்றும் விளக்கினர். வாகனத் தைக் குறிக்கும் காரி என்றும் சொல்லின் பன்மை மகாரி ஆகும் என்றும் உதாரணம் காட்டினுர், எனக்கோ இந்த உதாரணச் சொல் அறபு மொழிச் சொல் போலவன்றி இந்துஸ்தானிச் சொல்போலத் தொனித் தது. ஆயினும் இக்துஸ்தானி மொழியில் எனக்கு பரிச் சயமில்லாமையால் கான் மொழியியல் பற்றிய விவாதத் தில் அவருடன் இறங்காதிருந்தேன்.
துறைமுகப் பக்கமாக எமது கார் போய்க்கொண்டி ருந்தபோது 'டவ்' எனப்படும் பாய்க்கப்பல்கள் பல நங்கூர மடித்திருக்கக் கண்டோம். இந்தக் கப்பல்கள் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் (டிசம்பர்-மார்ச்) இந்தியா, அறபு காடு பாரசீகம் முதலிய இடங்களிலிருந்து ஸான்ஸிபார் வந்து தென் மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் (ஏப்ரல்-அக்டோ பர்) தத்தம் காடுகளுக்குத் திரும்பிச் செல்லும் என்று அறிக்தோம். நிரை நிரையாக நங்கூரமடித்து நின்ற இந்தக் கப்பல்கள் கண் கொள்ளாக் காட்சியாக விளங் கின. இக் காட்சியைக் கண்டதும் என் மனம் ஓராயிர மாண்டுகள் பின்னடித்துச் சென்று அப்பாஸிய சாம் ராஜ்யத்தினதும் அதன் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த காடுகளினதும் மாட்சியைப் பார்க்க விழைந்தது. அந்தக் காலத்திலே, அறபு மக்கள் ஆபிரிக்காவின் கிழக்குக்

Page 86
166
கரையோர முதல் சீன காட்டுக் கரையோர மீருக வாணி பஞ் செய்து, சமுத்திரங்களைக் கட்டியாண்டு வந்தார் கள். இவ்விதம் பரந்து விரிந்த அவர்களின் செல்வாக் குக்கு கமது சொந்த நாடாகிய இலங்கையும் உட்படாம லில்லை. நவீன இயந்திர சாதனங்களோ, ராடார் போன்ற வானுெலிக் கருவிகளோ இல்லாமலே சமுத்திரா ேதவியை அடக்கியாண்டு கீர்த்தி பெற்ற அந்த முஸ்லிம் கடலோடி களே நினைந்ததும் மனம் புளகாங்கிதம் அடைக்தது.
கப்ப8லப் பற்றிய பேச்சு வந்ததும் எமது வழி காட்டி நான்கு வகையான படகுகளைப் பற்றி எமக்கு விளக்கினுர், அவை (1) எம்ரெபே (2) பத்தாலா (3) பக் களோ (4) பட்டிலி என்பனவாகும். இவற்றில் முதலா வது ரகத்தைச் சேர்ந்த மரக் கலத்தில் இரும்பு ஆணிகள் உபயோகிக்கப்படுவதில்லையாம். கிழக்கு ஆபிரிக்கா வுக்கே பிரத்தியேகமானவையாக விளங்கும் இந்த மரக் கலங்களுக்கு ஆணிக்குப் பதிலாகத் தும்புக் கயிறுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆணி பொருந்திய படகுகள் பற்றிய கர்ண பரம்பரைக் கதையொன்றுண்டு. இதன் படி காந்த மலைகள் படகுகளின் ஆணியைத் தம்பால் ஈர்த்துக்கொள்ளுமென்று அஞ்சியே கயிறுகளை உப யோகிக்கிருர்கள் என்று சொல்லப்படுகிறது. பத்தா லாவும் கரையோரக் கப்பலே, சமுத்திரம் தாண்டும் மரக்கலம் பக்களோ எனப்படும். மூன்று பாய்களைக் கொண்ட இக்கப்பல் சராசரி 300 தொன் எடையுடைய தாகும். இதன் அணியம் மாளிகை போல அழகுற அமைக்கப்பட்டிருக்கும். பட்டிலி எனப்படும் கப்பல் பக்களோவிலிருந்து பெருமளவு மாறுபட்டதல்ல. நவீன நீராவிக் கப்பல்களும் இயந்திராதிகள் சாதனங்கள் ஆகியவற்றின் அனுகூலங்களும் அபரிமிதமாகக்கிடைக் கும் இந்தக் காலத்திலும் இந்த மரக் கலங்கள் மறைந்து

167
போகாமல் அல்லது கணிசமான அளவு குறைந்து போகாமல் இருப்பது அதிசயந்தான். ஆயினும் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இவை நிலைக்குமோ ! பழைய மொடல் கார்களே புறக்கணிக்கப்படும் இக் காலத்தில் பண்டை நாகரிகத்தின் சின்னங்களான இந்த மரக் கலங்கள் எம்மாத்திரம்!
கம்பீரமாகக் காட்சியளித்த இந்த மரக் கலங்களில் ஒன்றிலே ஏறிப் பார்க்க கான் விரும்பினேன். ஆணுல் சிறிது நேரம் கழித்து மொம்பாஸாவுக்குப் புறப்பட ஏற்பாடாகியிருந்தமையால் எனது விருப்பத்தை மன துக்குள்ளேயே போட்டுப் புதைத்துக்கொள்ள வேண்டிய தாயிற்று.
எமது கார் துறைமுகத்தைத் தாண்டிப் பிரதான வீதியையடைந்து கராம்புத் தோட்டமொன்றினை கோக்கி விரைந்து கொண்டிருந்தது. பிரதான வீதியின் இரு மருங்கிலும் காணப்பட்ட காடசிகள் கொழும்புக் காலி ருேட்டை எனக்கு நினைவூட்டின. சிறிது நேரத் தில் கராம்புத் தோட்டத்தை அடைந்தோம. அன்று கராம்பு பறிக்கும் வேலை நடை பெருமை எனக்கு ஏமாற்ற மளித்தது. ஆணுல் எம்முடன் வந்த பிரதிநிதிகளில் ஒருவர் இதனைச் சற்றும் பொருட்படுத்தவில்லை. தென் னங் குரும்பையை முன்னர் ஒருபோதும் கண்டிராத அவர் தோட்டக் காவலாளி வீட்டு முற்றத்து மரத்திற் பறித்த குரும்பையை அப்படியே வெட்டி கோப்பையோ கிண்ணமோ இல்லாமலே இளநீர் பருகும் புத்தம் புதிய அனுபவத்தில் மூழ்கித் திளைத்தார். கராம்பு பறிப்பதை யும், உலர்த்துவதையும் சாக்கிலடைப்பதையும் காண விரும்பிய எனக்கு வேலை நடைபெருத தினத்தன்று தோட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டமை விசன மளித்தது. ஆயினும், வழி காட்டியிடம் கேள்வி கேள்வி

Page 87
168
யாகக் கேட்டு கராம்புச் செய்கை பற்றி அறிய முயன் றேன். இதற்குக் கூட சக பிரதிநிதி ஒருவருடன் நான் போட்டி போட வேண்டியதாயிற்று. ஏனென்ருல் அவர் தென்னஞ் செய்கை பற்றிக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். இந்தப் போட்டியில் தோல்வி எனக் கென்றே சொல்ல வேண்டும். ஆணுலும் பின்னர் மொம் பாஸாவில் கராம்புச் செய்கை பற்றி விளக்கும் நூல் ஒன்றினை வாங்கிச் சகல அம்சங்களையும் படித்து அறிந்து கொண்டேன். கரம்பினைப் பற்றி கான் அறிந்து கொண்ட விஷயம் தேயிலை ரப்பர் வெளிகாடு களிலிருந்து இலங்கைக்கு அறிமுகப்படுத்தப் பட்டதைப் போல ஜான்ஸிபாருக்கு அங்ாநியமான பயிர் என்பதா கும். 1832 ஆம் ஆண்டிலே தனது தலைாககரை மஸ்கற்றி லிருந்து ஸான்ஸிபாருக்கு மாற்றியவரான ஸையத் ஸஈத் பின் சுல்தான் அவர்களின் ஆட்சியின் போதே கராம்பு பரந்த அளவில் திட்டவட்டமான அடிப்படையில் ஸான்ஸிபாரில் செய்கை பண்ணப்படலாயிற்று. இந்து மகா சமுத்திரத்தின் மேற்குக் கரைப்பகுதியில் முக்கிய துறைமுகமாகத் தமது தலைாககர் மிளிரவேண்டுமென்று விரும்பிய இவர் அதுகாலவரை கிழக்கிக்திய நாடுகளின் விளை பொருள்களில் ஒன்ருக விளங்கிய கராம்பை ஸான்ஸிபாருக்கு அறிமுகப்படுத்தினுர், ஸான்ஸி பாருக்கு உத்தியோக பூர்வமாக ஒரு முறை விஜயம் செய்த இவர் அங்கே காராம்புச் செடிகள் சில தம்மிச்சை யாகச் செழித்து வளர்ந்ததைக் கண்டாராம். இதன் பின்னரே அங்கு அப்பயிரைப் பரப்ப அவர் முனைங் தார். கராம்புச் செய்கையைப் பரப்ப விரும்பிய சுல் தான் அவர்கள், முன் மாதிரியாக, தமது சொந்தத்தி லிருந்து ஆதனத்திலே 45 தோட்டங்களில் இப் பயிரைச் செய்கை பண்ண உத்தரவிட்டார். ஏனைய நிலச்சுவான்

169
தார்களும் தமது முன் மாதிரியைப் பின்பற்ற வேண்டு மென்று வற்புறுத்தினுர், தென்னம்பிள்ளை யொன்று பட்டுப் போனல் அல்லது வெட்டி வீழ்த்தப்பட்டால் அதனிடத்தில் மூன்று காரம்புச் செடிகள் கடப்பட வேண்டுமென்று கட்ட2ள விதித்தார். இந்தக் கட்ட 2ளக்குப் பணியத் தவறியவர்களின் காணி பறி முதல் செய்யப்பட்டது. f
கராம்புச் செடியின் மொட்டே காராம்பு. கராம்புச் செடி ஏழு அல்லது எட்டு வருடங்களில் மொட்டு விட ஆரம்பிக்கிறது. இந்தக் கட்டத்திலே அவற்றைப் பறித்து, தண்டு வேறு மொட்டு வேருகப் பிரித்தெடுக் கிருர்கள். இவ்விதம் பிரிக்கப்பட்ட மொட்டுகளைச் சிமெந்துத் தளத்திலோ பாய்களிலோ பரப்பி உலரவைக் கிருர்கள். மொட்டுக்கள் உலர கான்கு ஆறு காட்கள் செல்லும் கராம்பு வாசனைத் திரவியமாகவும் சில ரக சிகரெட்டுகளுக்கு மணமூட்டும் பொருளாகவும் உப யோகப்படுகிறது. காராம்புத் தண்டிலும் தரத்திற் குறைந்த கராம்பு மொட்டிலுமிருந்து பெறப்படும். கராம்பு என்ணெய் வாசணுதிகள் மருந்துகள் முதலிய வற்றுக்கும் பயன்படுத்துகிறது. உலகின் மொத்தக் கராம்பு உற்பத்தியில் 80 விகிதம் ஸான்ஸிபாரில் கிடைக்கிறது.
கராம்புத் தோட்டத்தைப் பார்வையிட்ட பின்னர், சுமார் 145 மைல்களுக்கு அப்பாலிருந்த மொம்பாஸா செல்வதாக விமானத்துறைக்குப் புறப்பட்டோம். வழியில் ஈரப்பலா மரங்கள் பலவற்றைக் கண்டபோது, கொழும்பிலுள்ள எங்கள் சொந்த வீடும் அங்குள்ள ஈரப்பலா மரமும் மனதில் தோன்றி மறைந்தன.
279

Page 88
170
சிறிது கேரம் கழித்து எல்லோரும் விமானத்தில் ஏறி அமர்ந்தோம் அப்படி உட்கார்ந்திருந்தபோது, என் மனம் விமானத்துக்கு முன்னரே பயணத்தைத் தொடங்கியது. ஆணுல் விமானத்தைப் போல மனது முன்னுேக்கிச் செல்லாது 15 ஆம் நூற்ருண்டின் இறுதிக் கட்டத்துக்குப் பறக்து சென்றது. வாஸ்கோடி காமா கள்ளிக் கோட்டைக்கு வருமுன்னர் தமிழகம் (சென்னை ராஜ்யம்) கேரளம் இலங்கை, மாலை தீவுகள் ஸான்ஸிபார், மொம்பாஸா முதலிய காடுகளுக் கிடை யில் நிலவிய வாணிப, கலாசார உறவுகளையும் அறபுத் தமிழ், ஸ்வாஹிலி, மஹல்லத் தீவு மொழிகளுக்கு உள்ள தொடர்புகளையும் பின்னிப் படர்ந்தது. இவ்விதம் கான் கால சஞ்சாரஞ் செய்து கொண்டிருக்க விமானம் மொம் பாஸாவையடைந்தது.
மொம்பாஸா வைசியர் 27
அதிவிரைவில் காங்கள் மொம்பாஸா விமானத் துறையை யடைக்தோம். விமானத்துறையில் இந்தியர் ஒருவர் என்னை வரவேற்று, மொம்பாஸாவில் தங்கி நிற்கும் வரை என்னை உபசரிக்கும் பொறுப்புத் தமக்கு அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். டாக்டர் எஸ். எ. கார்வே என்று தம்மை அறிமுகஞ் செய்து கொண்ட அவர் உடனடியாகவே தமது காரில் என்னை ஏற்றிக்கொண்டு வீடு விரைந்தார். பட்டினத் தெரு வழியாகக் கார் போய்க்கொண்டிருந்தபோது, அக்கம் பக்கத்துக் கடைகளைக் கவனித்தேன். அவற்றின் அமைப்பும் முன்புறத்தில் மாட்டப்பெற்றிருந்த பெயர்ப் பலகைகளும் பெரும்பாலான கடைகள் இந்தியர்க்கே

171
சொந்தமானவை என்பதைப் பறைசாற்றின. இக்கடை களில் அகேகமானவை குஜராத்தியர்களுடையவை என் பதையும் அவதானித்தேன். தென் இந்தியர் மொம்பாஸா வைசியர் கடை ஒன்றேனும் தென்படவில்லை.
டாக்டர் கார்வேயின் இல்லம் பட்டினத்தின் மத்திய பாகத்தில் அமைந்திருந்தது. முக்திய இரவு தாறுஸ்ஸ லாத்தில் தங்கியிருந்த (கண்பர் அமீரின்) இல்லத்துக்கும் டாக்டர் கார்வேயின் இல்லத்துக்கும் தோற்றம், அமைப்பு சுவர்ப் பூச்சு இவற்றில் மிகுந்த வேறு பாட்டைக் கண் டேன். அமீரின் இல்லம் இஸ்லாமியச் சிற்பச் சிறப்பம் சங்கள் பொலிந்த மாளிகையாகத் திகழ்ந்தது. இந்த இல்லமோ எதிர்மாருக, படாடோபமற்று எளிமைக் கோலம்பூண்ட மாடிவீடாக விளங்கியது.
வீடுபோய்ச் சேர்ந்ததும் கார்வே அவர்களின் மனைவி இன்முகம் காட்டி எம்மை வரவேற்றர். ஓர் ஆனும் ஒரு பெண்ணுமாக இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றே ரான அவர்கள் இரண்டு பிள்ளைகளும் குடியும் குடித் தனமுமாக இந்தியாவில் வசித்துவந்தமையால் ஸ்வா ஹறிலி இன வேலைக்காரன் ஒருவனுமாக அவ்வீட்டில் இருக்தார்கள். அமீரின் மாளிகையிற் போல இங்கு விருந்தினர்க்கெனத் தனியறையொன்று எங்கேரமும் ஒதுக்கப்பட்டிருக்க வில்லை. என் வருகையையறிந்த பின்னரே ஓர் அறையை எனக்காக ஒதுக்கி வைத்திருக் தார். இந்த அறையில் பூரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், மகாத்மா காந்தி, பூரீ லோகமான்ய பால கங்காதரதிலகர் ஆகியோரின் படங்கள் மாட்டப்பெற்றிருந்தன.
சிறிது நேரம் உரையாடிய பின்னர் தேநீர் அருந்தி னுேம், தேநீர் முடிந்ததும் பிரதிநிதிகளுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துக்குப் புறப்பட கேரமாயிற்று. டாக்டர் கார்வே என்னை விருந்து கடைபெறுமிடத்துக்கு.

Page 89
172
அழைத்துச் சென்ருர், விருந்து ஹாஜி இப்ருஹிம் அவர்கள் வீட்டில் ஏற்பாடாகியிருந்தது. இவர் மேமன் முஸ்லிம், மொம்பாஸா வணிகர்களில் முதன்மையான வர். இவருடைய மைத்துனரான டாக்டர் ஜுமா அவர் களே இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ். சேனாநாயக்கா அவர்களுக்குக் சிகிச்சை செய்வதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், விசேஷ விமானமூலம் வரவழைக்கப்பட்டவர். (ஆயினும் துரதிர்ஷ்டவசமாக அவர் வந்து சேருமுன்னர் பிரதமர். காலமாகிவிட்டார்.)
இந்த விருந்துக்கு ஐரோப்பிய வர்த்தகர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள், இந்திய வணிகர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகியோர் உட்பட ஆண் களும் பெண்களுமாகப் பலர் வந்திருந்தார்
6.
இவர்களில் தமிழ் பேசும் எவரையேனும் தென் இந்தியர் எவரையேனும் கான் எதிர்ப்படவில்?ல. இந்தியர்களில் அநேகமாக எல்லோருமே பம்பாய் இராஜ்யத்தைச் சேர்ந்தவர்களாயும் குஜராத்தி பேசுவோரா யும் விளங்கினர். கீன்யாவிலுள்ள நைரோபி, உகண் டாவிலுள்ள கம்பாலா, தங்கனிக்காவிலுள்ள தாறுஸ் ஸ்லாம், கராம்புத் தீவிலுள்ள ஸான்ஸிபார் ஆகிய பெரு நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமப் பகுதிகளிற்கூட இந்தியர்களே வர்த்தகத் துறையில் செல்வாக்குப் பெற்று விளங்கினர்கள். கிப்ஸிஜி ஒதுக்கிடத்திலும் மொத்த, சில்லறை வியாபாரம் சுமார் 40 இந்தியர் வசமே இருந்தது. சுருங்கச் சொன்னுல், சுமார் மூன்று வார காலம் நீடித்த எனது ஆபிரிக்கப் பயணத்தில் சென்ற விடமெல்லாம் இந்திய உபகண்டப் புத்திரர்கள், திரை

173
கடலோடியுக் திரவியந் தேடு' என்னும் முதுமொழிக்கு அமைய வாழ்ந்து வருவதைக் கவனித்தேன்.
ஆனல் ஒரு தமிழ்ப் பெயரையோ கொழும்பு, சிங்கப்பூர் மலாக்கா அல்லது கோலாலம்பூர் போன்ற நகரங்களில் கேள்விப்படக்கூடிய முஸ்லிம் பெயரையோ ஆபிரிக்கக் கண்டத்தில் நான் கேள்விப்படவில்லை. இதன் காரணம் என்னவோ?
அன்றைய தினம் காஜலயில் தாறுஸ்ஸலாத்தி லிருந்து புறப்பட்ட நேரமுதல் ஒய்வு ஒழிவில்லாத் சுற்றுப்பிரயாணங்கள் பல இருந்தமையால், நாங்கள் எல்லோரும் கன்ருகக் களைத்துச்சோர்வடைந்திருந்தோம். எமது சோர்வைக் கவனித்த டாக்டர் கார்வே அன்றிரவு கேரத்தோடு படுக்கைக்குச் செல்லுமாறு பரிவுடன் பணித் தார். படுக்கையில் இருந்தவாறே அன்றைய பிரயாண அனுபவங்களை அசைபோடும் பழக்கம் அன்றும் பீடித் தது. ஒரே காளில் மூன்று வெவ்வேறு ஆட்சிக்குட்பட்ட மூன்று நாடுகளில் பிரயாணஞ் செய்து முடித்த விந்தையை எண்ணி வியந்தேன். காலையில் தங்கனிக்கா, தாறுஸ்ஸலாத்தில் உணவு; மத்தியானம் ஸான்ஸி பாரில் பகற்போசனம், இரவில் கீன்யா, மொம்பாஸா விருந்து. எனினும் இந்த மூன்று நேரம் ஆகாரத்தில் ஒன்றைத் தானும் ஆபிரிக்கச் சுதேசியின் இல்லத்தில் உண்ணக் கிடைக்கவில்லை. காலை ஆகாரமும் இரவு விருந்தும் இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் வணிகர்களின் இல்லத்தில், பகல் உணவு பிரிட்டிஷார் ஒருவரின் மனை யில், இன்றே நிலைமை முற்ருக மாற்ற மடைந்திருக்கு மென்றே நம்புகிறேன். மூன்று வேளைப் போசனமும் மூன்று உயர் உத்தியோகத்தர்களால் வழங்கப் பெற்ரு லும் அம்மூவரும் ஆபிரிக்கர்களாகவே இருப்பர் என்பது திண்ணம்.

Page 90
174
இவ்விதம் அன்றைய நிகழ்ச்சிகளை அசைபோட்ட சமயத்தில் இரண்டு தலைமுறைக்கு முற்பட்ட பிரயாண முறைபற்றி என் பாட்டனுர் ராசாத்தி அப்பா சொன்ன சம்பவங்களும் நினைவிற் குமிழிட்டன. சாப்புச் சாமான் களுக்கு ஒடர் கொடுப்பதற்காகக் கொழும்பு செல்வதற்குக் ததிரைவண்டியில் பண்ணுகமம்-மாத்தளை வழியாகச் \சல்வார். பண்ணுமத்தில் காலாறி, கொழும்புப் பிரயாணத்தைத் தொடருவார். காலப் போக்கில் இதே பயணத்தை அப்போதிருந்த பிரிட்டிஷ் தேசாதிபதியின் பெயர் கொண்ட நீராவிக் கப்பல் மூலம் மேற்கொண்டா ராம். பின்னர் புகையிரதம் வரவே மீண்டும் தரை மார்க்கமாகப் பிரயாணஞ்செய்தாராம். மூன்று காள் நீடித்த இதே பிரயாணத்தை கமது தலைமுறையிலோ விமான மூலம் ஒன்றரை மணி நேரத்தில் பறந்து முடித் துக்கொள்கிருேம். காலையில் கொழும்பிலிருந்து புறப் படும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் தமது அலுவல்களை முடித்துக்கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு மீண்டும் கொழும்பு திரும்பிவிடலாம். காலச்சக்கரத்தின் சுழற்சி யும் வேகமடைந்து விட்டதுபோலும்.
மறுங்ாட் காலை, திருமதி கார்வே, அவரது வற்புறுத்தலின் பேரில் கான் தெரிவித்த விருப்பத்திற் கமைய; அசல் மராட்டிய முறைப்படி தயாரிக்கப் பெற்ற சப்பாத்தி, மீன் கறி ஆகியவற்றைப் பரிமாறினுர். ஐரோப்பிய உணவு வகைகளையே அதுவரை உண்டு சலித்துப் போன எனக்கு இவ்வாகாரம் தேவாமிர்தமாக இருந்தது. இந்தக் காலை ஆகார வேளையில் காங்கள் மூவரும் (அதாவது கார்வே தம்பதிகளும் கானும்) நிகழ்த்திய உரையாடல் கிழக்கு ஆபிரிக்காவில் மொத்த, சில்லறை வியாபாரத் துறையில் ஈடுபட்டுள்ள இந்தியர் களைப் பற்றியும் இத் துறையில் அவர்களே கோலோச்சு

175
வதற்கான காரணங்கள் பற்றியும் Gör Gori படர்ந்தது.
குஜாராத் மக்கள் பல நூற்ருண்டுகளாகவே ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரங்களில் வாணிபஞ் செய்து வந்துள்ளார்கள். கி. பி. 7ஆம் நூற்றண்டில் அறபுக் குடா-பாரஸிகக் குடா-ப் பிரதேசத்தில் இஸ் லாம் தழைத்தோங்கு முன்னர்கூட இவர்கள் கிழக்கு ஆபிரிக்காவுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந் தார்கள். அவர்களின் வாணிபச் செல்வாக்குக்கு இதனை ஒரு காரணமாகக் கொள்ளலாம். பல தசாப்தங்களாக, 1914-18 வரை நீடித்த முதலாவது உலக யுத்தகால மீருக, பிரிட்டிஷ் பவுண் அன்று இந்திய ரூபாயே கிழக்கு ஆபிரிக்க காணயமாகப் புழக்கத்திலிருந்தது. இதுவும் காரணமாயிருக்கலாம். சாதி அமைப்பில் நிலவிய சுயஉதவிமுறை; உலகின் பல்வேறு பாகங்களிலும் அவர் களுக்கு வர்த்தக ஸ்தாபனங்கள் நிலைபெற்றிருந்தமை யால் சுலபமான கடன் வசதி வாய்ப்புகள் கிடைத்தமை; காப்புச் சட்டக் கால நேர எல்லைகளையும் மீறிய அவர் களின் அயரா உழைப்புத்திறன்; பரம்பரை பரம்பரை யாக அவர்கள் பின்பற்றிவரும் தொழிற் பயிற்சி முறை; பயிற்சி இளைஞர்கள்மீது விதிக்கப்பெறும் கண்டிப்பான கட்டுப்பாடுகள், முதியோர் மீதுள்ள மதிப்புக் காரணமாகத் தகராறுகள். வழக்குக் கணக் குகள், பிணக்குகள் தோன்ருமை, தொழில் ஒன்றைத் தவிரப் பிற பொழுதுபோக்குகளிலோ, விளையாட்டு நிகழ்ச்சிகளிலோ சாதாரணமாக ஈடுபடா மரபு; பிரிட்டிஷ் அரசாங்கம் தன் சொந்த கலன் கருதி இவர்களுக்கு அளித்த ஆதரவு ஆகிய காரணங்கள் இத்தகைய வர்த் தக ஆதிக்கத்துக்கு வழி வகுத்திருக்கலாம். பிரிட்டிஷ் காரர்கள் ஆபிரிக்க மக்களுடன் கேரடியாக வா6ணிபஞ்

Page 91
176
செய்தலை விரும்பவில்லை. ஏஜென்ஸி ஹவுஸ் போன்ற ஸ்தாபனங்களை அவர்கள் நிர்வகிக்க இந்திய வணிகர் கள் கேரடி வியாபாரத்தை நடத்த முடிந்தது. கிழக்கு ஆபிரிக்காவில் இந்திய வாணிப ஆதிக்கத்துக்கு இவை தவிர்ந்த வேறு காரணங்களும் இருத்தல் கூடும்.
குஜராத்தியர்கள் வியாபாரத்தை ஒரு தொழிலாக விரும்பி கடத்தி வந்தனரென்றும் மராத்தியர்கள் அதனைப் புறக்கணித்து விவசாயத்தை நாடினர் என்றும் டாக்டர் கார்வேயுடன் அன்று காலை கடத்திய உரையா டல்மூலம் அறிந்துகொண்டேன். மராத்தியர்கள் அபூர்வ மாகவே வியாபாரத்தில் இறங்கினர். ஏன்? மராட்டியர் களைவிட, குஜராத்தியர்கள் சமுத்திரத்துடன் அதிக கெருக்கமுடையவர்களா யுள்ளமையாலா ? இந்திய சமுதாயத்தின் கால்வரண அமைப்பில் வைசியர்களே வணிகர்கள். ஆணுல் எல்லாக் குஜராத்தியரும் வைசியர் களா? இந்திய வர்த்தகர்கள் எல்லோருமே வைசியர் தாமா? இந்தக் கேள்விகளுக்கு இன்றும் என்னிடம் சரியான பதில் உண்டென்று சொல்வதற்கில்லை.
இவ் விஷயத்தைச் சில வாரங்களுக்கு முன்னர் பதுளை சென்றிருந்தபோது என் நண்பர் கவிஞர் அப்துல் காதர் லெப்பையிடம் விசாரித்தேன். அவர் வருணப் பிரிவில் வைசியர் பங்கு என்னும் பெயரில் கீழ்க்காணும் தொகுப்புச் செய்யுளை யாத்துத் தந்தார்:
வைசியர்க் கழகு வளர் பொருளிட்டல், திரைகடலோடியுங் திரவியக் தேடல், சிக்கன வாழ்க்கை தக்கதென் றேர்ந்து சேர்த்து வைத்தல் சேமித்து வைத்தல் ஒன்று பத்தாய் உயரச் செய்தல் இவ்விதஞ் சேர்த்த இருந்தனப் பெருக்கில் ஒதும் பிராமணர்க் குதவி செய்தல்

177
உறையுள் கொடுத்தல் உண்டி கொடுத்தல் கோயில் திருப்பணிக் கீதல் அன்னவும் இரப்போர்க் கீதல் அறச்சாலை தூக்கல் அரசர்க்குப் பொருள் அலகற்றளித்தல் ஆளும் வர்க்கம் கோலோச்சி நிற்க வரிகள் மூலமும் பரிசுக ளன்னவும்
பொருளும் பண்டமும் பொன்னும் மணியும் ஆடையும் அணியும் கோடின் றளித்தல் காட்டைக் காக்கக் கோட்டை கட்டவும் படைகளை வைத்துப் பரிபா லிக்கவும் அரசர்க் கரமனை புரிசை கட்டவும் சம்பளம் முதலிய உம்பளங் கொடுக்கவும் வரிகள் மூலம் தெரியக் கொடுத்தல் இன்ன பிறவும் வைசியர்க் குரிய வளமார் கடனும்,
பிரிட்டிஷ்காரர் தாம் கைப்பற்றிய பிரதேசங்களில் வாழ்ந்த பிரஜைகளைத் தமது பண்டங்களைக் கொள் வனவு செய்யும் வாடிக்கையாளர்களாக மாற்ற முயன் ருர்கள் என்று சிலர் சொல்வர். டச்சுக்காரரோஒல்லாந்தரோ-இதே மக்களைச் சிறந்த பணியாட்களாக மாற்ற முயன்றனர் என்பர். பிரெஞ்சுக்காரர் எல்லோரை யும் பிரெஞ்சுப் பண்பாட்டைத் தழுவும் கல்ல பிரெஞ்சு மக்களாக்க முயன்றர்களாம். இக் கூற்று முழு உண் மையாக இல்லாதிருக்கலாம். ஆயினும், இதில் உண் மையின் அம்சங்கள் இல்லையென்றும் சொல்ல முடியாது. இந்த அடிப்படையில் கோக்கினுல் இந்திய வர்த்தகர்கள் பிரிட்டிஷ்காரரின் கோக்கம் வெற்றி பெற, அதாவது தமது ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் யாவரும் தமது கொள்வனவாளராக மாறல் வேண்டுமென்ற கோக்கம் நிறைவேற, உதவினர் எனக் கொள்ளலாம்.

Page 92
வாஸ்கொட காமாவுக்கு வழி காட்டியவர்
அன்று காலை (செப்டம்பர் 1ஆந் திகதி) சாப்பாட்டு மேசையை விட்டு அகலுமுன்னர், எனக்கு விருக்தோம் பிய டாக்டர் கார்வேயிடம் வாக்குறுதியொன்றினைப் பெற்றுக் கொண்டேன். மறு காட் காலே உத்தியோக பூர்வமாக ஏற்பாடாகியிருந்த கீன்யக் கரைப் பகுதிச் சுற்றுப் பிரயாணத்திற் கலந்துகொள்ளாது மொம்பா ஸாவிலும் அதன் சுற்ருடல்களிலுமுள்ள பாடசாலை களைப் பார்வையிட எனக்கு ஏற்பாடு செய்து தரவேண்டு மென்ற என் வேண்டுகோளுக்கு இணங்கி, எல்லா ஏற் பாடுகளையும் செய்து கொடுப்பதாக அவர் வாக்களித் தார். தாறுஸ்ஸலாம் பாடசாலைகளைப் பார்வையிட்டது முதல், கீன்யப் பாடசாலை அமைப்பு முறையையும் ஸ்வாஹிலி மொழிக்குக் கீன்யப்பாடசாலைகளில் அளிக் கப்படும் அந்தஸ்துப் பற்றியும் மேலும் கேரில் அறிந்து கொள்ள ஆவலுடையவனுயிருந்தேன்.
சற்று நேரத்தில் டாக்டர் கார்வே தமது காரில் மாகாண ஆணையாளர் ஒஹாகன் அவர்களின் கங்தோ ருக்கு என்னை அழைத்துச் சென்ருர், ஏனைய பிரதி நிதிகள் எனக்கு முன்னர் அங்கு வந்து குழுமியிருக் தார்கள். ஓஹாகன் அவர்கள் மொம்பாஸா துறைமுகத் தைப் பற்றியும் அதன் பூர்வ வரலாற்றைப் பற்றியும் எமக்கு விளக்கினுர், எனது கிழக்கு ஆபிரிக்கச் சுற்றுப் பிரயாணத்தில் ஏற்கனவே பல தடவைகள் இத்தகைய குறிப்புரைகளைக் கேட்டுச் சலித்துப் போயிருந்தமையால்

179
ஓஹாகனின் விளக்கத்தைப் பெரிதாகக் கருதவில்லை. ஆணுல் கிழக்காபிரிக்காவில் இஸ்லாம் பரவிய வரலாற் றுடன் தொடர்புடைய பல விவரங்கள் அவருடைய பேச்சில் அடிபட்டதைக் கேட்டதும் கூர்ந்து கவனித் தேன். இதன் காரணமாக, மற்றெல்லா மாகாண அதிபர்களின் விளக்கவுரைகளும் மறந்துபோய் விட்டா லும் இவருடைய பேச்சு மட்டும் மனதில் ஆழப்பதிக் திருக்கிறது. சம்பாஷணைப் பாங்கில் அவர் தமது குறிப்புக்களைச் சொன்னமையும் அவர் பேச்சின் கவர்ச்சியும் இதற்குக் காரணமாகும். தாம் வெறும் நிர்வாக அதிகாரி மட்டுமன்றிச் சிறந்த கல்விமானு மென்பதை அவருடைய பேச்சு மூலம் உணர்த்தினர். அந்தச் சமயத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இலங்கை யில் பணியாற்றி வந்த டேர்னர் பெல், கொட்றிங்டன் போன்ற திறமைசான்ற படிப்பாற்றல் மிக்க நிர்வாகி களே நினைக்கலானேன்.
டாக்டர் கார்வே, அன்றைய சுற்றுப் பிரயாணத்தை ஏற்பாடு செய்திருந்தவர்களுடன் பேசி, மொம்பாஸாவி லிருந்து சுமார் 80 மைல்களுக்கு அப்பாலுள்ள மாலிக் தினி வரை என்னை அழைத்துப்போக அனுமதி பெற் ருர் என்னுடன் மற்ருெரு பிரதிநிதியும் வழி காட்டி ஒருவரும் சேர்ந்து கொண்டார்கள். ஏனைய பிரதிகிதிகள் மொம்பாஸா நகர எல்லைக்குளுள்ள விசேஷ ஸ்தலங்களை ஆர அமரச் சுற்றிப்பார்க்க ஏற்பாடாகி யிருந்தது.
ஓஹாகனுடைய விளக்கவுரையில் கான் கிரகித்த முக்கியமான விஷயம் கிழக்கு ஆபிரிக்காவின் ஆதி அறபு மக்களைப் பற்றியும் மறைந்த ககரமாகிய கெடி சம் பந்தப்பட்ட புதை பொருள்கள் பற்றியும் அவர் கொடுத்த தகவல்களாகும். 12ஆம் நூ ற்ருண்டு முதல் 17ஆம்

Page 93
180
நூற்ருண்டு வரை தழைத்தோங்கிச் சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய கெடி 7ஆம் நூற்றண்டில் அழிக் தொழிந்த புராதன ககரமொன்றின் மீது கட்டி எழுப்பப்
பெற்றதென கம்பப்படுகிறது. இந்தக் கெடி என்னும் ககரத்தை மறுகாள் கான் பார்வையிட ஏற்பாடாகியிருங்
தும், பாடசாலைகளைப் பார்வையிட விசேஷ ஒழுங்கு செய் திருந்தமையால் இந்த விஜயத்தைக் கைவிடவேண்டிய
தாயிற்று. கெடியில் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்ட
வற்றுள் பெரிய பள்ளிவாசல், நான்கு சிறிய மதுசூதிகள்,
சுல்தானின் மாளிகை, பிரமாண்டமான கல்லறைகள்,
விநோதமான முறையில் கட்டப் பெற்ற வாசஸ்தலங்கள்
முதலியன பற்றி ஓஹாகன் விசேஷமாகக் குறிப்பிட்
டார். ஆதி அறபு முஸ்லிம்கள் கி. பி. 684ஆம் ஆண்
டளவில் இங்கு குடியேறியிருக்க வேண்டுமென்று அவர்
தெரிவித்தார். இராக்கின் தேசாதிபதியா யிருந்த அப்
துல் மாலிக் பின் மர்வான், ஒமானின் சிற்றரசர்களான
சுலைமான், சயீத் ஆகிய இரு சகோதரர் மீதும் போர்
தொடுத்ததையடுத்து, அவ்விரு சகோதரர்களும் தமது
உற்ருர் உறவினர்களுடன் கறுப்பின-செஞ்ஜ்-மக்
களின் காட்டுக்குச் சென்று குடியேறி அங்கேயே மாண்
டனர். இதன் பின்னர்; அறபு முஸ்லிம் மக்களும் பார
சீக-பார்ஸி-மக்களும் வாணிப நோக்கங்களுக்காகவோ
குடும்பச் சச்சரவுகளாலும் மார்க்கப் பிரிவினைகளாலும்
எழுந்த உள்ளூர்க் கலவரங்களுக்கு அஞ்சியோ கிழக்கு
ஆபிரிக்கக் கரையோரங்களிற் குடியேறி வாழத் தலைப்
பட்டனர். இதன் விளைவாக அக்கரையோரங்களில் பல
பட்டினங்கள் தோன்றின. மொம்பாஸா, மாலிந்தினி
கில்வா, லாமு, செடி ஆதியன இவ்வாறு தோன்றிய பட்டினங்களிற் சிலவாகும். இவை தாறுஸ்ஸலாத்
தைப் போலவன்றி மிகப் புராதனமானவை.

181
கெடியை நோக்கி எமது கார் விரைந்து கொண் டிருந்த சமயத்தில் எம்முடன் வந்த வழிகாட்டி பற்பல விஷயங்களை எமக்குச் சொன்னர். கிழக்கு ஆபிரிக் காவின் பிரதான துறைமுகமாக விளங்கும் மொம்பாஸா, கீன்யா, உகண்டா ஆகிய நாடுகளின் தலைவாயிலாக tட்டுமன்றி வட தங்கனிக்கா, பெல்ஜியக் கொங்கோ, சுதான், பிரெஞ்சுப் பூமத்திய ஆபிரிக்கா ஆகிய காடு களின் தலைவாயிலாகவும் விளங்குகிறதென்று பெருமை யுடன் சொன்னுர், இன்று இங்காடுகள் யாவும் சுதந் திரம் பெற்றுள்ளமையால் நிலைமை மாறியுள்ளது.1950ஐ அடுத்து வெள்ளேயரின் ஆதிக்கத்துக்கெதிராக எழுந்த கிளர்ச்சியின் காரணமாக வலுவும் பிரசித்தமும் பெற்ற *அகில ஆபிரிக்க இயக்கம் மறைந்துவிட, அதனிடத்தில் ஆபிரிக்கத் தேசிய இயக்கம் தோன்றியுள்ளது. இக்த இயக்கமோ ஆபிரிக்க மக்களை நீக்க நீக்கிரோத்துவம் -Negritude-என்னும் நிறப் பண்பு காரணமாகத் தனித்தனியாக வசீகரித்தாலும், கிழக்காபிரிக்காவின் பல்வேறு காடுகளையும் ஒன்று சேர்க்க இதுகாறும் தவறி விட்டது. எனவே, ஆபிரிக்க அரசுகள் ஒன்றுட. னுென்று எத்தகைய உறவு பூணுமென்பது எதிர்காலத் தில் காத்திருந்து காணவேண்டிய விஷயமாக உள்ளது. அண்மைக் காலத்தில் ஆபிரிக்கக் கண்டத்திலே பிரிவினை இயக்கங்கள் தலை தூக்கி வருகின்றன. எல்லைத் தக. ராறுகள் ஆங்காங்கே வெடித் தெழும்புகின்றன. இவ் வெல்லைகள் ஆதிபத்திய நாடுகள் தமது வசதிக்காக வகுத்துக்கொண்ட எல்லைகளேயல்லாமல் ஒவ்வொரு காட்டுக்கும் இயல்பாயமைந்த எல்லைகளல்லவென்பது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
மொம்பாஸா துறைமுகத்தின் விஸ்தரிப்பு வேலை களைப் பற்றியும் மற்றுமோர் இறங்கு துறை நிர்மாணிக்

Page 94
182
கப்படுவதுபற்றியும் எமது வழிகாட்டி அறிவித்தார். மொம்பாஸர் நகரம் பழமையும் புதுமையும் பின்னிப் படர்ந்த பட்டினமாகத் திகழ்கிறது. துறைமுகத்தில் முதலாம் நூற்றண்டு மாக்கலங்களும் இருபதாம் நூற் ருண்டு இயந்திரக் கப்பல்களும் அருகருகே கங்கூர மடித்து நிற்பதைக் காணலாம். பட்டினத்தில் புராதன அறபுக் கட்டிடங்கள், போர்த்துக் கேயரால் கிர்மாணிக் கப்பட்ட கோட்டை கொத்தளங்களுக்கு மிடையே கவீன மாடி வீடுகளையும் காரியாலயங்களையும் காணலாம். இவற்றுள் 159 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரால் நிர்மாணிக்கப்பட்ட போர்ட் ஜீசஸ் என்னும் கோட்டை பிரமாண்டமானதொன்ருகும். பல இரத்தக் களரிகளைக் கண்ட இக் கோட்டை சுமார் ஒன்றரை நூற்றண்டு களாகக்-கிழக்காபிரிக்கக் கரையோரங்களிற் போர்த் துக்கேயர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அரணுக விளங்கி வந்தது.
கொஞ்ச கேரத்தில், மொம்பாஸாவிலிருந்து சுமார் 50 மைல்களுக்கு அப்பாலுள்ள கிலிஃபி என்னுமிடத்தை அடைக்தோம். வழியில் பல கவீன கட்டடங்க2ளயும் ஐரோப்பியரின் இல்லங்களையும், கடற்கரையோரமா யமைக்த விடுமுறைக்கால வசிப்பிடங்களையும் தாண்டிச் சென்ருேம். சைஸல தோட்டங்கள், தென்னக் தோப் புக்கள், கெல் வயல்கள் முதலியவற்றினைப் பகைப்புல மாகக் கொண்ட இக் கட்டடங்கள் ஐரோப்பியர்கள் கடைப் பிடித்துவரும் இன ஒதுக்கல் கடைமுறைகளையும் அவர்களின் இடாம்பீக வாழ்க்கையையும் பறைசாற்றி கின்றன,
கிலிஃபி நகரில் ஐரோப்பியரின் கிளப்' ஒன்றும் கமத்தொழில் ஆராய்ச்சி நிலையமொன்றுமுண்டு. பிரிட்

183
டிஷ் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் மலைநாட்டுப் பகுதி களில் காணப்பெற்ற “கிளப்பினை ஒத்த இந்தக் கிளப் பையும் விவசாய ஆராய்ச்சி நிலையத்தையும் பார்வை யிட்ட பின்னர் மேலும் சுமார் காற்பது மைல் தூரப் பிரயாணஞ் செய்து மாலிந்தினியை யடைந்தோம்.
மாலிந்தினி 1498ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தி யாவில் கள்ளிக்கோட்டை என்னுமிடத்திற் கரை சேர்ந்த சரித்திரப் புகழ்பெற்ற கடலோடியான வாஸ்கொடகாமா வுடன் கெருங்கிய தொடர்புடைய இடமாகும். ஏப்ரல் 7ஆந் திகதி மொம்பாஸாவிலிருந்து புறப்பட்ட வாஸ் கொடகாமா 14ஆங் திகதி மாலிக்தினி வந்து சேர்ந்தான். அந்தச் சமயத்தில் கரைப்புறக் குட்டிச் சுல்தான்கள் ஒற் றுமையின்றி ஒருவரோடொருவர் சண்டையிட்டு வந்தார் கள். இந்தப் பகைமை வாஸ்கொடகாமாவுக்குப் பெரிய அனுகூலமாயிற்று. போர்த்துக்கேயரும் தன் காட்டு மக்களைப்போல முஸ்லிம் க ளே யென்று கருதிய மொஸாம்பிக் சுல்தான் வாஸ்கொடகாமாவை வரவேற்று உபசரித்தான். அவனுடன் பகைமை கொண்டிருந்த மொம்பாஸா சுல்தான் வாஸ்கொடகாமாவை உபசரிக் காது விரட்டினன். மாலிந்தினி சுல்தானுே மொம் பாஸா சுல்தானுடன் கோபங் கொண்டிருந்தமையை முன்னிட்டு வாஸ்கொடகாபாவை வரவேற்று விருக்தோம் பிச் சிறப்பித்தான். இவனுடைய உதவியாலேயே வாஸ் கொடகாமா இந்தியா சென்றடைவதற்குத் துணையும் வழிகாட்டியுமான ஒருவனைச் சம்பாதித்துக்கொண்டான். இந்த வழிகாட்டி இப்னுமாஜித் ஆவர். இவரே பல பாகங்களைக் கொண்ட ‘கிதாபுல் பஃவாயித்’ என்னும் கடற்பயண இலக்கண நூலை 1490ல் இயற்றி முடித்தவ ராவர். இவர் வசமிருந்த இந்தியக் கரைகாட்டும் பட மொன்றினையும் திசையறி கருவியையும் கண்ட வாஸ்

Page 95
184
கொடகாமா ஆச்சரியமடைந்தான். வழித்துணையாக வும் மீகாமனுகவும் இவரைத் தன்னுடன் அழைத்துச் சென்ற வாஸ்கொடகாமா கப்பற் பிரயாணம் சம்பந்த மான தகவல்கள் பலவற்றைத் தெரிந்து கொண்டான். ஆயினும், எல்லா இரகசியங்களையும் தனக்குத் தெரி விக்கமாட்டாரென்று அறிந்ததும், அவருக்கு நிறைய மதுபானம் கொடுத்து, தந்திரமாக அந்த இரகசியங்களை அறிந்து கொண்டானென்று கம்பப்படுகிறது. குடி வெறியின் ஆதிக்கத்திலிருந்த போதிலும் மாஜித் தமது இரகசியங்களைத் தமது இனத்தவரான அறபு மக்களுக்கு விரோதமாகப் பயன்படுத்தலாகாது என்று வாஸ்கொட காமாவிடம் வாக்குறுதி பெற்ருராம். ஆயினும் இதன் பின்னர் சமுத்திரத்தின் மீது அறபு மக்களுக்கு இருந்த ஆதிக்கம் படிப்படியாகப் போர்த்துக்கேயர் கைக்கு மாறலாயிற்று. மதுவினுல் உண்டாகும் தீங்கு எத்த கையதென்பதற்கு மாஜித்தின் வாழ்வில் நிகழ்ந்த இச் சம்பவம் தக்க சான்ருகும்.
மாலிந்தினியிலிருந்து மொம்பாஸா திரும்பும் வழியில் மொம்பாஸாவுக்கு அண்மையிலுள்ள கிளப் ஒன்றில் தரித்தோம். இங்கு மாகாண ஆணையாளர் ஒஹாகன் பிரதிநிதிகளுக்கென்று ஒரு விருந்து ஏற்பாடு செய்திருர், தார். இந்த விருந்து முடிவில் சில சொற்பொழிவுகள் இடம் பெற்றன. இவற்றுள் கரையோரப் பகுதியின் லெவாலி-அறபுத் தலையாரி--நிகழ்த்திய உரை இன்றும் மனதில் பதிந்திருக்கிறது. கீன்யாவைத் தாயகமாகக் கொண்ட இவர் கீன்ய மலைகாட்டு வெள்ளேயர்களைப் போல, பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் கொள்கையைக் கண்டித்தும், ஆதிபத்திய ஆட்சிசம்பந்தமான கொள்கை யினைக் கட்சி அரசியலுடன் போட்டுக் குழப்பாமல், பிரிட்டிஷ் காட்டின் தேசிய பிரச்சினையாகக் கருதி வகுத்

185
தல் வேண்டுமென்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் கீன்ய தேசாதிபதியின் கருத்தை அனுசரித்து கடக்கவேண்டு மென்று வலியுறுத்தினர். இவருடைய பேச்சையும் தொனியையும் கேட்டபோது டொனமூர் அரசியல் திட் டம் அமுலுக்கு வருமுன் இலங்கையில் செல்வாக்குப் பெற்று விளங்கிய மணியகாரர், சட்டமாத்தயா, முதலியார், அதிகாரி, வன்னியா ஆகியோரை நினைத்துக் கொண்டேன். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடாதே !
அன்று மாலை மொம்பாஸா முஸ்லிம் கல்வி ஸ்தாப Gorgsgjd5God (old Gir(Smogir. (Mombasa Institute of Muslim Education)
இங்கிலிஸ்காரர் கல்வி முறையின்
சாயல்கள்
மொம்பாஸா முஸ்லிம் கல்வி நிலையத்தில் வகுப்பறை களைச் சுற்றிப் பார்த்தும், அதிபருடன் உரையாடியும் ஒரு மணித்தியாலத்துக்கும் சற்று அதிக கேரத்தைச் செலவிட்டோம். இக் நிலையத்துக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர் கருத்து மயக்கமுண்டாக்கக் கூடியதென்பதைச் சில நிமிடத்துள் உணர்ந்து கொண்டோம். முஸ்லிம் கல்வி நிலையமென்றதும் கலாசாரப் பல்கலைக் கழகம் போன்ற ஸ்தாபனமாக இருக்க வேண்டுமென்று எண்ணிய காங் கள், ரத்மலானை ஆதார தொழில் நுணுக்கப் பயிற்சி நிலையத்திலும் அந்தஸ்தில் சற்று உயர்ந்ததும் கட்டு பெத்த தொழில் நுட்பக் கல்லூரியிலும் அந்தஸ்தில் குறைந்ததுமான தொழிற் பயிற்சி நிலையத்தையே கண் டோம். மொம்பாஸாவிலுள்ள இந் நிலையம், கீன்யா, தங்கனிக்கா, உகண்டா, ஸான்ஸிபார், சோமாலிலாந்து
2 I -س-279 I

Page 96
186
ஆகிய காடுகளிலெல்லாம் உள்ள சகல இன முஸ்லிம் களுக்கும் பொதுவானதாகும்.
ஸான்ஸிபார் சுல்தான் அவர்களும் ஆகான் அவர் களும் அளித்த கணிசமான பண உதவியினைக் கொண்டு இக் நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. கலையழகும் கட்ட்ட் அழகும் பொலிந்த இக் நிலையத்தில் சகல கவின சாதனங் களும் உண்டு. இந்த வகையில் இலங்கையர்களாகிய காம் இக் கட்டடத்தைக் கண்டு பொருமைப்பட வேண்டு மெனலாம். ஆனல், மற்றெல்லா வகையிலும், அதாவது, ஆசிரியர்களின் திறமை, மாணவர்களின் படிப்பாற்றல், அவர்களின் அறிவுப் பின்னணி, சாதனை முதலிய விஷயங்களையிட்டு இலங்கையர்கள் நிச்சயம் பெருமைப் படலாம். இந் நிலையத்தில் என்னைப் பெரிதும் கவர்ந்த பகுதி கப்பற்றெழிற் பகுதியாகும். எனினும் பொதுப் படையாக, இக் நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவர் கள், கல்வித் தரம் குறைந்தவர்களாக விளங்கினரென்று இந் நிலையத்து அதிபர் குறைப்பட்டுக் கொண்டார். இதற்கு முக்கிய காரணம், அவர்கள் பல்வேறு பகுதி களைச் சேர்ந்தவர்களாயும் பல்வேறு முறைப்படி கல்விப் பயிற்சி பெற்றவர்களாயும் உள்ளமையாகும் என்ருர், இக் நிலையத்தில் வழியா சுன்னத் ஜமா அத்தவர் ஆகிய இரு பிரிவு முஸ்லிம்களும் ஆபிரிக்க, அறவு, இந்திய இன மாணவர்களும் கல்வி பயின்று வந்தமை குறிப் பிடத்தக்கது. கீன்யா சுதந்திரம் பெற்றதன் பின்னர் இந்த நிலையம் பெரும் மாறுதல்களுக்குள்ளாகியிருக்கலா மென்று தோன்றுகிறது.
காங்கள் தரிசித்த அடுத்த இடம் பாண்டிய ஞாப as Trigg fly53-605 i2hub--(The Pandya Memorial C11nic)-ஆகும். இந்த நிலையம் எனக்கு விருந்தோம்பிய

187
டாக்டர் கார்வேயின் அபிமானத்தைப் பெரிதும் கவர்ந்த ஸ்தாபனம். அரசாங்க சேவையிலிருந்து ஒய்வு பெற்ற கார்வே அவர்கள் தமது முழு கேரத்தையும் சக்தியையும் இந் நிலையத்தின் அபிவிருத்திக்காகவே பிரதிபலன் கருதாது செலவிட்டு வந்தார். பாண்டிய குடும்பத்தவர் களால் ஸ்தாபிக்கப்பெற்ற இந்தச் சிகிச்சைச் சாலைக்கு இந்திய முஸ்லிம்களும் இந்துக்களும் தாராளமாகப் பொருளுதவி கொடுத்திருந்தார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் இவ்விதம் ஒரு மனதாக உதவியளித்தமை குறிப்பிடத்தக்கதாகும். இங்கு தாதிமாருக்குப் பயிற்சி யளிப்பதற்கான வசதிகளும் புறம்பாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. கார்வே அவர்கள் இந்த வைத்தியசாலை யின் ஒவ்வொரு பகுதியையும் பெருமிதத்துடன் எனக்குக் காண்பித்தார். ஒவ்வொரு பகுதியின் ஸ்தானத்தையும் பணியையும் விளக்கினர். நானும் இலங்கையின் வைத்திய சேவைப் பகுதியில் சுமார் கான்கு வருட காலம்-1937-41 வரை-பெற்ற அனுபவத்தை ஆதார மாகக் கொண்டு அவரிடம் பல கேள்விகளை அடுக்கடுக் காகக் கேட்டு, கம் காட்டு அரசாங்கம் இலவசமாக வழங் கும் வைத்திய சேவையைப் பற்றி மறைமுகமாகப் புகழ் பாடப் பீடிகை போட்டுக் கொண்டேன்.
அன்றைய தினம், தனிப்பட்ட முறையில் வைத் தியம் செய்யும் முஸ்லிம் டாக்டராகிய ஹஸன் அவர் களின் மாளிகை போன்ற இல்லத்தில் நடைபெற்ற இராஜோபசார விருந்துடன் முடிவடைந்தது. இவ்விருக் தில் மாகாண அதிபர் ஒஹாகன் அவர்களை அன்றைய தினத்தில் மூன்ருவது தடவையாகச் சக்தித்தேன். அவர் சுதந்திரத்துக்குப் பிறகு இலங்கையின் அரசியல் பொரு ளாதார நிலைமைகள் பற்றி, அறிந்து கொள்வதில் மிகுந்த

Page 97
188
அக்கறை காட்டினுர். இவருடைய போக்கு வாக்கும் கடையுடை பாவனைகளும் கான் கண்டி உதவி மாகாண அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் இலங்கை மத்திய மாகாண அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய சிவில் சேவையாளர் ஈ. ரீ. டைஸன் அவர்களை ஞாபக மூட்டின. டாக்டர் ஹஸனின் இல்லத்தில் ஏராளமான விருந்தினர்கள் குழுமியிருந்தமையால் ஓஹாகனும் கானும் ஒரு மூலையில் போய் அமர்ந்து உரையாட லானுேம், இலங்கை அரசாங்க அதிபர்களின் வாழ்க்கை முறை, சேவை ஆகிய விஷயங்கள் பற்றியும் கிழக்கு ஆபிரிக்க மாகாண அதிபர்களின் பணி, வாழ்க்கை ஆகியன பற்றியும் ஒப்பு கோக்கும் பாங்கில் கருத்துப் பரிவர்த்தனை செய்து கொண்டோம். இவ்விருவகை அரசாங்க அதிகாரிகளும் பல அம்சங்களில் ஒருவரை யொருவர் ஒத்திருந்தமை, எனது மூன்று வாரச் சுற்றுப் பிரயாணத்தில் ஏற்கனவே என் மனதிற் படித்திருக் ததன் காரணமாக, வியப்பளிக்கவில்லை.
விருந்து முடிந்ததும் டாக்டர் கார்வே தமது காரில் என்னைத் தமது இல்லத்துக்கு அழைத்துச் சென்ருர், அன்றிரவு படுக்கைக்குச் செல்லுமுன் இருவரும் கெடு கேரம் பேசிக் கொண்டிருந்தோம். இந்தச் சம்பாஷணை யின் போது, மொம்பாஸாவில் தபால்காரன் என்னும் ஒருவன் இல்லை என்றும், சம்பந்தப்பட்டவர்கள் தபாற் கங்தோருக்குச் சென்றே தமக்குரிய தபால்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அறிந்து கொண்டேன். இந்த விஷயம், தபாற் கங்தோர்களும் உப தபாற் கங்தோர்களும் மலிந்த இலங்கையிலிருந்து சென்றிருந்த எனக்குப் பெரிய புதினமாக இருந்தது. இந்தத் தகவலை யறிந்த சில தினங்களில் மொம்பாஸாவை விட்டு நான் கிளம்பி விட்டமையால், இதைப் பற்றிய முழு விவரங்

189
களையும் விசாரித்தறிய முடியாது போயிற்று. இதனை இப்பொழுது தொடர்வது பயனற்றதாகும்.
மறுநாள், செப்டம்பர் 2ஆந் திகதி முழுவதையும் பாடசாலைகளைப் பார்வையிடுவதற்கென்று கான் ஒதுக்கி வைத்திருந்தமையால், உத்தியோகபூர்வமாக ஏற்பாடாகி யிருந்த கடற்கரைப் பகுதிச் சுற்றுப் பிரயாணத்துக்குக் கள்ளம் போட வேண்டியதாயிற்று. டாக்டர் கார்வே தமது வேலைகளெல்லாவற்றையும் விட்டுவிட்டு முழு கா8ளயும் என்னுடன் செலவிட்டார். காங்கள் முதலாவ தாகத் தரிசித்த கல்வி நிலையம் மொம்பாஸா, அல்லி தீனு விஸ்றம் உயர்நிலைப் பாடசாலையாகும். இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்ட இந்தப் பாடசாலைக்குக் கீன்ய அரசாங் கம் நிதியுதவி அளித்து, கல்வி இலாகா மூலம் அதனை மேற்பார்வை செய்து வந்தது. இந்த நடைமுறை டொனமூர் அரசியல் அமைப்பு செயலாகுமுன்னர் இலங் கையில் நிலவிய போதனு முறையை ஒத்திருந்தது. இப் பாடசாலையின் அதிபர் காஷ்மீரி லால் அவர்கள் எம்மை வரவேற்று, பாடசாலையைச் சுற்றி அழைத்துச் சென்று ஒவ்வொரு வகுப்பையும் காண்பித்தார். கடற்கரை அருகே கற்பாறையொன்றின் மீது இப் பாடசாலை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இங்கு இருக்தவாறே இந்து மகா சமுத்திரத்தையும் அங்கு நின்ற பல கப்பல் களையும் காம் காணக் கூடியதாயிருந்தது. பாடசாலை யின் இந்தியப் பண்பினை இந்தச் சூழல் உருவகப்படுத்திக் காட்டியதாக எனக்குப் பட்டது. இப் பாடசாலையின் பிரதான கட்டடம் ஒரு சிறு கோட்டை போலத் தோற்ற மளித்தது. இப் பாடசாலையை நினைத்ததும் இன்றும் மனக் கண்ணிற் பளிச்சிடுவது பிரதான கட்டடத்தில் எதிரே காணப்படும் சிலை ஒன்ருகும். இச் சிலை, இப் பாட சாலைக் கட்டடத்தை கன்கொடையாகக் கொடுத்துதவிய

Page 98
190
சேத் அப்துல் ரதல் அவர்களின் தந்தையாரின் சிலை என்று விளக்கி, அதன் சிறப்பைப் பலபடப் புகழ்ந்தார் கள். சிலை அமைக்கும். மரபு உண்மை முஸ்லிம் பண்புக்கு உகந்ததல்ல என்று எனக்குத் தோன்றிய போதிலும், அதனை எடுத்துக் காட்டுவது இங்கிதக் குறைவு என்றெண்ணிப் பேசாதிருந்தேன். இப் பாடசாலையின் இல்ல அமைப்பு முறை, மாணவ தலைவர்-(Prefects)- பாடத் திட்ட அமைப்பு முறை, பிற நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்படும் முறையாவும் 1920ஐ அடுத்த ஆண்டுகளில் இலங்கையில் நிலவிய கடைமுறைகளை ஒத்தனவாக விளங்கின. இது, இந்தியர் மீதும், இலங்கையர் மீதும் இங்கிலிஸ்காரரின் கல்வி முறையின் செல்வாக்குப் படிக் தமையை எடுத்துக் காட்டியது. இந்தக் கட்டுரையை எழுதும் சமயத்தில், தொலை தூரத்திலுள்ள மொம்பாஸா வில் அன்று காலை நான் கண்ட பாடசாலையையும் அதனைப்பற்றி நான் அறிந்த விவரங்களையும் அசை போடும்போது 'ஆசியப் புரட்சி”-The Revolt of Asiaஎன்னும் நூலின் ஆரம்பத்தில் கிறிஸ்தோபர் டோஸன் என்பவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் நினைவுக்கு வருகின்றன.
“ஆசியப் புரட்சி வெறுமனே அங்கிய ஏகாதிபத்தி யத்துக்கும் விதேச கருத்துக்களுக்கும் எதிரான கிளர்ச்சி மட்டுமன்று; கீழைத்தேய மக்களின் சிந்தனையினடியாக அரசியல் ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் ஏற்பட்ட ஒரு புரட்சியுமாகும். அரசியல் துறையில் அக்ாகிய ஆதிக்கத் துக்கு எதிராகக் கிளர்க்தெழுந்த ஆசிய மக்கள், கலா சாரத் துறையில் தமது முன்னேர்கள் முக்கிய பண்பு களெனப் பிறர் போற்றிய சிலவற்றைத் தகர்த்தெறிய வும் முற்பட்டார்கள்.”

191
டோஸனின் இக் குறிப்பு, அரசியல் முதிர்ச்சி பெற்ற இனக் கொழுக்தினர்க்குப் பொருந்துமெனினும், வெகு ஜனங்களுக்கும் பொருந்துமோவென்பது ஆராய்ச்சிக் குரியது.
புகைப்படப் பிரச்சினை
30
இந்த ஆசியப் புரட்சியின் விளைவாக, குருகுலப் பயிற்சி போன்ற பழைய கல்வி முறைகள் பல மெல்ல மெல்ல மறைந்தன. அவற்றினிடத்தில் இங்கிலிஸ் காரரின் பயிற்சி முறைகள் வக்தமர்ந்தன. எனவே, அரசியல் இனக் கொழுந்தினர் மேல் காட்டவரின் அரசியல் ஆதிக்கத்துக்கு எதிராக மட்டுமன்றித் தமது சொந்தப் பாரம்பரியங்களுக்கு எதிராகவும் போராடி ஞர்கள். ஆயினும், கல்வித் துறையின் சில பாரம் பரியங்கள் இவர்களின் புரட்சியையும் தாக்குப்பிடித்து நின்றன. இவ்விதம் நிலைத்து நின்றவற்றுள் குர் ஆன் பள்ளிக்கூட அமைப்பு முறையும் ஒன்றென்பதை மொம்பாஸாவிலும், தாறுஸ்ஸலாத்திலும் கண்டேன். இன்றே இந்த ஆசிய, ஆபிரிக்க நாடுகள் சுதந்திர நாடுக ளாக விளங்குகின்றமையால், ஒவ்வோர் இனத்தவர்கள் மதத்தவர்களும் தத்தம் கலாசார பாரம்பரியங்களைப் பேணிக் காப்பதற்கெனத் தனித்தனிப் போதனு முறை களைப் பின்பற்ருமல் காட்டின் பொதுவான கல்வித் திட்டத்திலேயே தத்தம் பண்பாடுகளுக்கான பாட போதனைகளையும் சேர்த்துக்கொள்ள முடிகிறது.
அல்லிதீனு பாடசாலையிலிருந்து, மொம்பாஸா ககரின் மத்திய ஸ்தானத்தில் அமைந்துள்ள கல்வி

Page 99
192
அலுவலகத்துக்குச் சென்று எ. ஜாத்மி அவர்களைச் சந்தித்தோம். கல்வி உதவி அதிபர் பதவிக்கு ஒப்பான உத்தியோக அந்தஸ்திலிருந்த ஜாத்மி அவர்களிடம் முஸ்லிம் சுதேசிகளின் கல்வி விவகாரங்கள் ஒப்படைக் கப்பட்டிருத்தன. எனினும் அறபிய கல்வி அதிபர் என்றே அவர் குறிப்பிடப்பட்டு வந்தார். இந்தப் பதவிப் பெயர். இலங்கை அரசினர் முஸ்லிம் பாடசாலைகளும் அவற்றை யொட்டிய பிரச்சினைகளும் என் மனத்தெழச் செய்தது.
ஜாத்மி அவர்களும் காமும் பட்டினத்துக்குச் சில மைல்களுக்கு அப்பாலிருந்த குர்ஆன் பள்ளிக்கூட மொன்றினைப் பார்க்கப் போனுேம். இப் பள்ளிக்கூடம் அமைப்பில் தாறுஸ்ஸலாத்தில் நான் பார்த்த பள்ளிக் கூடத்தையே ஒத்திருந்தது. எனினும் இங்கு கடந்த சம்பவமொன்று என் பழைய நினைவுகள் கிளர்ந்தெழ வைத்தது. இப் பள்ளிக் கூடத்து முஅல்லிம் சட்டம் பியார்-லெப்பை-எம்முடன் அமர்ந்து புகைப்படம் பிடித்துக்கொள்ள உடன்படவில்லை. இதற்குக் காரணம் அவருடைய பணிவும் கூச்சமுமல்ல; புகைப்படம் பிடிப்பது ஹரும்-விலக்கப்பட்டது.என்று அவர் கம்பியமையேயாகும். இதை உணர்ந்ததும் என் மனப் பறவை சிறகடித்துப் பல்லாயிரம் மைல்களுக்கும் அப்பால் உள்ள யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது. அங்கு வந்ததும் மீண்டும் பல ஆண்டுகள் பின்னடித்துப் பறந்து, அரை நூற்ருண்டுக்கு முற்பட்ட சூழலிலிருந்த யாழ்ப்பாணத்தை யடைந்தது. யாழ்ப்பாணம் பொது மராமத்து இலாகாவில் கணக்குப் பிரிவுக் கிளாக்காரகப் பணியாற்றி வந்த எனது சின்னப் பெரியப்பா சு. மு. அசனுலெப்பை ஆலிம் புலவர் அவர்களும் மேற்குறித்த முஅல்லிம் அவர்களைப் போல, புகைப்படம் எடுத்துக்

193
கொள்வதற்கு மறுத்து வந்தார் என்று யூசுபு சாச்சாசிற்றப்பா-சொல்லக் கேட்டிருக்கிறேன். இதன் விளை வாக இன்று அவர் புகைப்படம் எதுவும் எம்வச மில்லை. இவ்வாறே ஸாஹிரு கல்லூரி மெளலவி ஆசிரியர் ஒருவரும் சக ஆசிரியர்களுடன் சேர்ந்து புகைப்படம் பிடிக்க ஆட்சேபம் தெரிவித்து விலகிக் கொள்வார். புகை ப் படம் பிடிக்கும் விஷயம் என் பாட்டனுர் ராசாத்தியப்பாவின் தலைமுறையில் முஸ்லிம்களிடையே பாரதூரமான பிரச்சினையாக விளங் கியமையும் ஞாபகத்திலிருக்கிறது. ஒருமுறை என் பாட்டனர் இதுபற்றி யாழ்ப்பாண மக்களிடம் பெருமதிப் பும் பெற்றிருந்த மெளலானு ஒருவரிடம் தீர்ப்புக் கேட் டார். மெளலான அவர்கள் அக் கேள்விக்கு மற்ருெரு கேள்வியை மாறுத்தரமாக அளித்தார், “நீங்கள் நிலைக் கண்ணுடி முன் நின்று உங்களைப் பார்ப்பதில்லையோ?” என்பதே அது. அன்று ஆண்களே ஆசாரத்துக்கு, மாருனதென்று கருதி வந்த புகைப்படப் பிரச்சினை இன்று புகைப்படத்தில் உடம்பின் எந்தெந்த அவயவங் களைக் காட்டலாம் என்ற அளவுக்கு முன்னேறியிருக் கிறது! புகைப்படம் பற்றிய இந்தப் பிரச்சினை ஆராய்ச் சிக்குரியதேயாயினும் அது பற்றிய தீர்ப்பு என் ஆற்ற லுக்கு அப்பாற்பட்டது.
இங்கிருந்து மற்ருெரு பள்ளிக்கூடத்துக்குச் சென் ருேம். இப் பள்ளிக்கூடம் முன்னேயதைப் பார்க் கிலும் பெரியது. இங்கு கம் காட்டுக் குர்ஆன் பள்ளிக்கூடங்களில் கோலோச்சிய பிரம்புக்குப் பதில் அதும்புக் கற்றழை-சைஸல்-தும்பினுல் செய்யப் பெற்ற சிறு சவுக்கு ஆட்சி புரிந்ததைக் கண் டேன். இஸ்லாமிய கலாசாரம் தளர்ச்சியுற்று வந்த காலத்துக் குர்ஆன் பள்ளிக் கூடங்களிலே மாணுக்கரின்

Page 100
194
ஞாபக சக்தியைத் தீட்டுதற்குப் பிரம்பும் பலகையும் சாதனங்களாக விளங்கின. இக் காலகட்டத்தில், இலங்கை, இந்தியா, மிஸ்ர், கிழக்காபிரிக்கா உட்பட, முஸ்லிம் உலகமெங்கும் இதே நிலை இருந்து வந்த தென் பதை மேற்படி பாடசாலை விஜயம் எனக்கு நிரூபித்தது. ஆயினும், கல்வித் துறையைப் பொறுத்த வரையில், அறபுமொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருந்த பள்ளிக்கூடங்களும் பிற பள்ளிக் கூடங்களுக்கும் மாறு பாடிருந்த தென்பதையும் நாம் மறக்கலாகாது.
அடுத்து, அரசாங்க முஸ்லிம் ஆரம்பப் பாடசாலை யொன்றினைப் பார்க்கப் போனுேம். இங்கு இங்கிலிஸ் காரரான திரு. நற்றல் தலைமையாசிரியராயிருந்தார். இப் பள்ளிக்கூடத்தில் முதலாம் வகுப்பிலிருந்தே இங்கிலிஸ் இரண்டாவது மொழியாகப் போதிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னுர், இரண்டு வருடங்களுக்கு முன் யு எஸ். ஏ, டெக்ஸாஸ் மாகாணத்தில் எல்பாஸோ நகரிலும் இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் கண்ட மையால் இத் தகவல் எனக்குப் புதியதாகத் தோன்ற வில்லை. இலங்கையிலும் இதே முறை பின்பற்றப்படல் வேண்டுமென்று அக் காட்களில் கல்வி அதிபர் ஒருவர் யோசனை சொல்லி வந்தார். ஆயினும் பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கென்று உத்தியோக பூர்வமாக ஒழுங்கு செய்யப் பெற்றிருந்த மதிய விருந்து குறுக்கிட்டமை யால், வகுப்பொன்றினுக்குச் சென்று மாணுக்கர்களின் ஆற்றலை கேரில் அவதானிக்கவும் ஆசிரியர்களுடன் இப்போதன முறை பற்றி விசாரிக்கவும் அவகாசம் கிடைக்கவில்லை. s
சற்று கேரத்தில் மொம்பாஸா ருேட்டரி கிளப்பினர் எமக்கென்று ஏற்பாடு செய்திருந்த விருந்துக்குப் போய்ச்

195
சேர்ந்தோம். டாக்டர் கார்வே ருேட்டரி கழகத்தின் ஓர் உறுப்பினரானமையால் எம்முடன் சேர்ந்து கொண் டார். விருந்தின்போது எனக்குப் பக்கத்தில் உட்கார்க் திருந்தார். சுவையான உணவுடன் சுவாரஸ்யமான உரையாடலும் நடைபெற்ற அவ்விருந்தின்போது, பொம் பாஸா ருேட்டரி கழகத்துக்கும் கொழும்பு ருேட்டரி கழ கத்துக்கும் பல அம்சங்களில் ஒருமைப்பாடு உண்டென் பதை உணர்ந்தேன். இங்கிலிஸ்காரரது கல்வி முறை யின்-குறிப்பாக ஈட்டன், ஹரோ போன்ற தனியார் உயர் நிலைப் பாடசாலைகளின்-சாயல்கள் அவர்கள் ஆதிக்கத்துக்குட்பட்ட காடுகளிலெல்லாம் செல்வாக்குப் பெற்றிருந்ததைப் போலவே, அமெரிக்கரின் கலாசாரம் பரவியுள்ள இடங்களிலெல்லாம் ருேட்டரி கழகங்களும் தழைத்தோங்கி வருகின்றனவல்லவா என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.
இவ் விருந்தின் பின்னர், மொம்பாஸாவில் வதியும் இலங்கையர்கள் என்னை உபசரிக்குமுகமாக ஒழுங்கு செய்த தேநீர் விருந்து இடம் பெற்றது. இலங்கையர் ஒருவரின் இல்லத்திலேயே நடைபெற்ற இவ்விருந்துக்கு, தாறுஸ்ஸலாத்திற்போல, இலங்கையரின் மனைவி, மக்கள் சமூகமளிக்கவில்லை. மொம்பாஸாவில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சி வேரூன்றிய கட்டத்தில், கொழும்புத் துறைமுகம் அணைக்கட்டினுல் அரண் செய்யப்படா திருந்த காலத்தில், காலித் துறைமுகமே பெரிதும் உபயோகத்திலிருந்தமை இவ்விலங்கையர்கள் மொம் பாஸாவரை சென்று குடியேறுவதற்கு ஏதுவாக அமைங் திருக்கலாம். எனினும் என் பள்ளிப் பிராயத்திலும் பல்கலைக் கழக நாட்களிலும் இலங்கை வரலாற்றுக்கு

Page 101
196
முக்கியத்துவம் கொடுக்கப்படாதிருந்ததால், இது விஷயத்தில் கான் ஆணித்தரமாக எதுவும் சொல்வதற் கில்லை.
தேர்ே விருந்து முடிந்து சில மணி நேரங் கழித்ததும் டாக்டர் ரணு அவர்களின் இல்லத்துக்கு இராப் போச னத்துக்குச் சென்ருேம். டாக்டர் கார்வேயும் என் கூட வந்தார். இந்த விருந்து மிக அமைதியாக, ஒரு சில விருந்தினர்களுடன், நடைபெற்றது. சொந்தத்தில் வைத்தியம் செய்யும் டாக்டர் ரணு பஞ்சாபி முஸ்லிமாவர். இங்கு கடைபெற்ற இராப் போசனத்தின் போது பல்வேறு விஷயங்கள் எமது பேச்சில் அடிபட்டன. இக்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமுள்ள தகராறு பற்றி மட்டும் எவரும் பேசவில்லை. மற்றும்படி ஆபிரிக்கா வில் நிலவும் இன ஒதுக்கல் கொள்கை, பல்வேறு இனத் தவர்களும் சுமுகமாக வாழ்வதற்குக் கிழக்கு ஆபிரிக் காவில் மேற்கொள்ளும் முயற்சிகள், எழுச்சி பெறும் ஆபிரிக்காவில் வாழும் ஆசிய மக்களின் எதிர்காலம், மெள மெள இயக்கத்தின் பலாபலன்கள், தேசிய வாதத் துக்கும் இனவாதத்துக்கும் உள்ள பிணக்குகள் ஆகியன பற்றியெல்லாம் விவாதித்தோம். இவை இன்றும் பிரச்சினைகளாகவே இருந்து வருகின்றன வென்பது இச் சந்தர்ப்பத்தில் நினைவு கூரத்தக்கதாகும். மறுநாள், பிரதிநிதிகளாகிய காங்கள் லுஷோட்டோ போய்ச்சேர வேண்டியிருந்தமையால் டாக்டர் கார்வே கேரத்தோடு என்னைத் தம் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்ருர், இதனுல் எமது உரையாடல் இடை நடுவில் தடைப்பட்டது. அன்றிரவு படுக்கையில் இருந்தவாறே மொம்பாஸாவில் இன்னும் சில காட்கள் தங்க முடியு மானுல் எவ்வளவு நல்லது என்று நினைத்தேன். ஆயினும் பாராளுமன்ற மாகாட்டு நிகழ்ச்சிகளை வெகு கவனமாக

197
ஏற்பாடு செய்தவர்களின் திட்டங்களை நான் அனு சரித்தே தீரவேண்டியிருந்தது.
மறுநாட் காலை, செப்டம்பர் 3ஆங் திகதி, டாக்டர் கார்வே என்னை விமானத்துறை கொண்டு போய்ச் சேர்த் தார். சுமார் எட்டரை மணிக்கு விமானம் மொம்பாஸாவி லிருந்து கிளம்பியது. விமானம் பறந்து கொண்டிருந்த சமயத்தில் என் மனுேரதம் கடந்த காலத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. முஸ்லிம் சாம்ராஜ்யம் சீருஞ் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்த காலத்தில் அறபு வணிகரும் மாலுமிகளும் மொம்பாஸாவிலிருந்து அறபுக் குடாவுக்கும் அங்கிருந்து தென் இக்தியா அல்லது இலங்கைக்கும் பின்னர் மலாயாவுக்கும் கப்பல் மார்க்கமாகச் சென்று வாணிபஞ் செய்த பொற் காலத்தையெல்லாம் நினைவு கூர்ந்தேன். இதற்கிடையில் விமானம் மொம்போ என்னு மிடத்தை வந்து சேரவே என் மனுேரதப் பிரயாணமும் முற்றுப் பெற்றது. மொம்போ விமானத் துறையில் என்னையும் மற்றய பிரதிநிதிகளையும் லுஷோட்டோவுக்கு ஏற்றிப்போக லுஷோட்டோ மாகாண் அதிபரின் கார் வந்து நின்றது.
பிரியாவிடை
மொம்பாஸா விமானத் துறையி லிருந்து லுஷோட்டோ சுமார் இருபத்தைத்து மைல் தூரம். இரு மருங்கிலும் செழுமையான தாவர வர்க்கங்களும் இடை யிடையே வளமிக்க தோட்டங்களும் அடர்ந்த நெடுஞ் சாலையில் காரில் பிரயாணம் செய்தபோது சுகானுபவம் உண்டாயிற்று. தனியா க ச் சென்றிருந்தேனுகில்

Page 102
198
வழியில் இரண்டொரு தோட்டங்களில் தரித்து நின்று அவற்றின் சொந்தக்காரர்கள் யாவர், வேலை பார்க்கும் தொழிலாளர்கள் எத்தகையோர், பயிரினங்கள் எவை என்றெல்லாம் கேரில் அறிந்திருப்பேன். ஆனல் பிற பிரதிநிதிகளும் கூட வந்தமையால், எல்லோருக்கும் அனுசரணையாக அமையக் கூடிய வகையில் கவனமாகத் திட்டமிடப்பட்டிருந்த சுற்றுப் பயண ஏற்பாடுகளைக் குலேக்கும் துணிவு எனக்கு வரவில்லை. தவிரவும், ஆசியர்கள் சுயாகலத்தாற் பீடிக்கப்பட்டவர்கள், கட்டுப் பாடு குறைந்தவர்கள், கல்ல பழக்க வழக்கங்கள் தெரி யாதவர்கள் என்ற அபவாதம் உண்டாவதற்குக் காரண ஞய் இருக்கவும் நான் விரும்பவில்லை மொம்பாவி லிருந்து, லுஷோட்டோ செல்லும் வழியில் கான் கண்ட தோட்டங்கள் கோப்பித் தோட்டங்களாகவும் தும்புக் கற்றழைத் தோட்டங்களாகவும் இருந்திருக்குமென்றே கம்புகிறேன்.
சற்று நேரத்தில் காங்கள் லுஷோட்டோ சேர்க்தோம். பிரிட்டிஷ் பிரதிநிதிகளில் ஒருவரான திரு. ஃபிரெடெரிக் பெனெற், கனேடியப் பிரதிநிதிகளில் ஒருவரான திரு. ஆர். கோர்டன் ஃபெயர்வெதர் ஆகிய இருவரும் நானும் மாகாண அதிபர் திரு. ருெபர்ட் தோர்ண் அவர் களின் உத்தியோக வாசஸ்தலத்தில் தங்குவதற்கு ஏற் பாடாகியிருந்தது. பிற பிரதிநிதிகளில் பெரும் பாலா னேர் ககரத்தின் பெரிய ஹோட்டலிலே தங்கினர்கள். சிலர் வெள்ளைக்காரப் பிரமுகர்களின் இல்லங்களில் இடவசதி பெற்றர்கள்.
தோர்ண் அவர்களின் வீட்டில் எங்கள் மூவருக்கும் தனித் தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருக்தன. எனது அறை சொகுசாகவும் இடாம்பீகமான தளபாடங்கள்

199
கொண்டதாகவும் இல்லாவிட்டாலும் வசதியானதாக இருந்தது. தேநீர் பருகிக் களைப்பாறிய பின்னர் உத்தி யோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவுக்காக அண்மையிலிருந்த ஹோட்டல் ஒன்றினுக் குப் புறப்பட்டோம். ஏனைய பிரதிநிதிகள் எல்லோரும் அங்கு ஏற்கனவே வக்து சேர்ந்திருந்தார்கள். மதிய போசனம் முடிந்த பின்னர் மாவட்ட அதிபரின் கச்சேரி போன்ற கங்தோருக்குச் சென்ருேம். அங்கே மாகாண அதிகாரிகளினதும் பிரமுகர்களினதும் கூட்டமொன்று கடைபெற்றது. இக் கூட்டத்துக்கு வெள்ளேயர்கள், ஆபிரிக்கச் சுதேசிகள், அறபியர்கள், இந்தியர்கள் ஆகிய சகல இனப் பிரதிநிதிகளும் சமுகமளித்திருந்தார்கள். இந்தக் கூட்டம் இலங்கையில் ஒரு காலத்தில் தேசாதிபதியவர்களின் முதல் விஜயத்தையொட்டி, கச்சேரி தோறும், ஏற்பாடு செய்யப் பெற்ற மாகாணக் கூட்டங்களை எனக்கு கினைவூட்டியது. இக் கூட்டங் களில் எக்கச்சக்கமான கேள்விகளோ பதில்களோ இடம் பெரு. ஏனென்றல், பொறுக்கியெடுத்த பெரிய மனிதர்களே அங்கு பிரசன்ன மாயிருப்பார்கள். கீன்யா வில் போலவன்றி, தங்கனிக்காவில் அந்தச் சமயத்தில் ஓரளவு அமைதி நிலவியது. இதனைப் பங்கப்படுத்த அக் கூட்டத்திலிருந்த எவரும் விரும்பவில்லை என்பது எனக்கும் புலனுயிற்று. ஏனைய இடங்களிற் போல இங்கு மாகாண அதிபர் எமக்குச் சொற்பொழிவு நிகழ்த்தவுமில்லை. குழுமியிருந்த பிரமுகர்களுடன் கலந்து பழகிச் சுதந்திரமாக உரையாடும் வாய்ப்புப் பெற் ருேம். ஆயினும் பயனுள்ள தகவல் எதனையும் பலதரப் பட்டோர் குழுமியிருந்த அவ்விடத்தில் சேகரிக்க முடிய வில்லை. அறபு மக்கள் கீன்ய, தங்கனிக்கக் கரையோரங் களில் வர்த்தக ஆதிக்கஞ் செலுத்தியகாலத்தில், அவ்

Page 103
200
விரு நாடுகளின் உட்பகுதிகளுக்கும் ஊடுருவித் தமது காகரிகம், கலாசாரம் ஆகியவற்றைப் பரப்பினுர்கள். சுதேசி மக்களுக்கு ஸ்வாஹிலி என்னும் புதியதொரு மொழியையும் அறபு அரிச்சுவடியையும் வழங்கினர்கள். லுஷோட்டோ மாகாணம் இந்த ஊடுருவலின் தாக்கத் துக்கு கல்லதொரு சான்ருக விளங்குகிறது. அன்று பெனெற், ஃபெயர் வெதர், நான் மூவரும் மற்றவர்களி லும் அதிக சலுகை பெற்றவர்களாக விளங்கினுேம் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்ருல், மேற்படி கூட்டம் முடிந்ததும் தோர்ண் அவர்கள் எங்கள் மூவரை யும் நகரின் பல பாகங்களையும் சுற்றிப் பார்க்க அழைத் துச் சென்ருர், விஷயஞானமும் விவேகமுமிக்க அவரு டைய வழித் துணையுடன் இரவு வரை லுஷோட்டோ வைச் சுற்றிப் பார்த்தோம். இரவுப் போசனத்துக்கு முன்னும் பின்னும் அவரின் இல்லத்தில் காரசாரமான விவாதத்தில் காங்கள் ஈடுபட்டோம். கிழக்கு ஆதரிக்கா வில் பிரிட்டிஷ் ஆட்சி பற்றி நடைபெற்ற இந்த வார்த் தைச் சமரில் மாகாண அதிபரின் மனைவியும் சேர்ந்து கொண்டார். இப் பெண்மணி அவ்வப்போது தெரிவித்த கருத்துக்களிலிருந்து, தம்மளவில் அவரும் அறிவாற்றல் மிக்கவரென்றும் ஒக்ஸ்போர்ட் அல்லது கேம்பிரிஜில் படித்துப் பட்டம் பெற்றிருக்கவேண்டுமென்றும் ஊகித் துக் கொண்டேன். காட்டின் பிரச்சினைகளை அவர் நன்கு உணர்ந்திருந்தார். சர்வதேச விவகாரங்கள் பற்றியும் விவரமாக அறிந்திருந்தார். இந்தச் சம்வாதம் நடை பெற்றுக்கொண்டிருந்த வேளையில், (சுமார் பதின் மூன்று ஆண்டு காலம்) சிவில் சேவை உத்தியோகத்த ஞக இருந்த காலத்தில் என் சக உத்தியோகத்தர் ஒருவரிடம் காணப்பட்ட விசித்திரமான பழக்கமொன்று மனக் கண்ணில் தோன்றியது. சிவில் சேவையாளர்

201
பட்டியலில் முதல் வரிசையில் இடம் ப்ெற்ற சிரேஷ்ட் உத்தியோகத்தர் அவர். சிவில் சேவை உத்தியோகத்தர் களைத் தரப்படுத்து முகமாகத் தயாரிக்கப் பெற்று வந்த இந்தச் சிவில் இடாப்புக்கு அந்தக் காலத்திலிருந்த மதிப் புச் சொல்லுந்தரமன்று. இந்த இடாப்பில் ஒருவரின் பெயர் இடம்பெறுவது பெறற்கரிய பேருகவும் அந்தஸ்து உயர்வின் அடையாளமாகவும் பலராற் கருதப்பட்டு வந்தது. கான் குறிப்பிட்ட இந்தச் சிரேஷ்ட சிவில் உத்தியோகத்தர் முக்கியமான முடிவு எடுக்கவேண்டிய விஷயங்களடங்கிய பத்திரங்களை வீட்டுக்குக் கொண்டு போய், மனைவியுடன் கலந்தாலோசித்தே ஒரு முடிவுக்கு, வருவார். பெண்டாட்டியின் அறிவாற்றலில் அவ்வளவு கம்பிக்கை அவருக்கு! இந்த இடத்தில் இது பற்றிக் குறிப்பிடுவதைக் கொண்டு திருவாட்டி ருெபேர்ட் தோர்ண் அவர்களும் அப்படிப்பட்ட அந்தஸ்துப் பெற் றிருந்தார் என்று வாக்கர்கள் முடிவு செய்யாதிருப்பார் களாக! ஏனென்ருல் அந்தப் பெண்மணி தன்னளவில் நல்ல திறமைசாலி. திரு. தோர்ண் அவர்களும் எந்த விஷயத்தையும் தாமாகவே முடிவு செய்யும் ஆற்ற லுடையவராக விளங்கினர் ! நான் குறிப்பிட்டவரைப் போன்ற வேறு உத்தியோகத்தர்களும் இருந்தார்கள் என்றுகூட முடிவுசெய்ய வேண்டாம். இவருக்கு முன்னரோ பின்னரோ இத்தகைய ஒருவரை நான் கண்ட
βουβου.
நாங்கள் ஐவரும் குடியேற்ற ஆதிக்க விஷயத்தில் பிரிட்டிஷ் தொழிற் கட்சி கடைப்பிடித்து வந்த கொள்கை முதல் நிலக் கடலை உற்பத்தித் திட்டம் ஈருகப் பல 'விஷயங்களையிட்டு அன்றிரவு விவாதம் செய்தோம். நில்க்கடலை விளைச்சல் திட்டம் தொழிற் கட்சியின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மாபெரும் திட்ட ,
279-13

Page 104
202.
மாகும். இத்திட்டம் எவ்வளவு பிரமாண்டமானதென் பதை விளக்குவதற்குப் பிரிட்டிஷ் திறைசேரி 4,00,00,000 பவுண் வரையில் கஷ்டக் கணக்கில் எழுத கேர்ந்ததென்பதே போதுமானதாகும். பிரிட்டிஷ் மக்க ளுக்கு எண்ணெய், கொழுப்பு முதலியன வழங்குவதற் காகத் தங்கனிக்காவில் ஏராளமான நிலக்கடலையை விளைவிக்க உத்தேசித்த தொழிற் கட்சி அரசாங்கம், சுமார் முப்பது இலட்சம் ஏக்கர் நிலத்தில் சாகுபடியை மேற்கொண்டது. இதில் வியப்பென்னவெனில் இத் திட்டத்தை உருவாக்கியவர்கள் விளைச்சலுக்கு இன்றி யமையாததான தண்ணிரைப் பற்றியோ மழை காலங் களைப்பற்றியோ சிந்திக்கவில்லையென்பதாகும். ஆனையும் அறுகம் புல்லில் தடுக்கும் என்ற மாதிரி பிரிட்டிஷ் சிங்கமும் நிலக் கடலையில் தடுக்கி விழுந்தது!
இரவு சுமார் பதினுெரு மணிக்கு எமது உரையாடல் முற்றுப் பெற்றது. எனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அன்றிரவுபடுத்திருந்தபோது, கக்குரு என்னு மிடத்துக்கு அண்மையிற் கண்ட கீன்ய மலைப் பகுதித் தோட்டமும், தாறுஸ்ஸலாத்கில் உள்ள அமீரின் மாளிகை போன்ற வீடும், மொம்பாஸாவிலுள்ள டாக்டர் கார்வேயின் பகட்டற்ற எளிய மாடி வீடும் சலனப் படம் போல மனத்திரையில் நிழலாடி மறைந்தன. கான்கு இடங்களில் எனக்கு விருந்தோம்பிய கண்பர்களின் குணவியல்புகளையும் சாதனைகளேயும் ஒப்பு நோக்கிப் பார்த்துக்கொண்டேன். எமது தேயிலைத் தோட்டத்துப் பெரிய துறைமாரை ஒத்த கீன்ய மலைப் பகுதிப் பண்ணை யாளர்கள் மேலை காட்டுக் கலாசாரச் செல்வாக்கில் தமது சொந்தப் பாரம்பரியங்கள் பலவற்றைக் கைவிடாமலும் இருக்கும் போரு முஸ்லிம் குடும்பங்கள்; இக்து மத சம்பிரதாயங்கள் பிறழாமலும், பணமே கதியென்று

203
வாழ்வோரைத் தமது நண்பர்களாக ஏற்றும் அதே
சமயத்தில் பண ஆசைக்கு அடிமைப்படாமலும் வாழும்
மராட்டியர்கள்; பிரிட்டிஷாரின் குடியேற்ற ஆதிக்கக் கொள்கையை நிறைவேற்றித் தாம் பின்தங்கிய மக்கள்
குலத்தை நாகரிக உலகுக்கு அழைத்துச் செல்வதாக
கெஞ்சார கம்பும் வெள்ளைக்கார சிவில் சேவை உத்தியோ கத்தர்கள் இவர்கள் ஒவ்வொருவரின் ஆசாபாசங்கள்,
அபிலாஷைகள், அவசங்கள், அல்லல்கள் யாவற்றை யும் எனது சுற்றுப் பிரயாணத்தின் பயணுகப் பெற்ற
அனுபவங்களின் அனுசரணையுடன் அசை போட்டுக்
கொண்டேன்.
மறு நாள் செப்டம்பர் 4 அதிகாலையில் லுஷோட் டோவிலிருந்து மொம்பா சென்று அங்கிருந்து மத்திய ஆபிரிக்காவிலுள்ள வட ரொடீஷியாவைச் சேர்ந்த என்டோலாவுக்கு விமானத்திற் புறப்பட்டோம். சுமார் ஒரு மாத காலம் நீடித்த எனது கிழக்காபிரிக்கச் சுற்றுப் பிரயாணமும் முற்றுப் பெற்றது.
سسسسد O

Page 105


Page 106


Page 107
串
睦
。甄
آسے ہے۔
W_"l' " . - ہستہہ 9
SLSL LSLSLLLSLSLSLLSLSS LLLSLSL L LSLSL LLL L LLL L LL LLLLLLLLLLLS
曙
曙
曙
睦
நூலாசிரியர்
எ. எம். எ. அலீஸ்
ந | வ ல ர் பெருமான் தோன்றிய யாழ்ப்பானத் தில், வழக்கறிஞர் காழி யார் எஸ்.எம்.அபூபக்கர் அவர்களின் புத்திரராக
--11|- றியவர் இவர்.
இலங்கைச் சிவில் சர் புகுந்த முதலாவது முஸ்லீ முஸ்லீம் வாலிபர் மகா சபை இலங்கை ஆசிரிய சங்கத் பல்கலேக் கழகப் பேரவை பின் மேற் சட்டசபையாம் பல ஆண்டுகளாகப் பண இலங்கை அரசாங்க சே! உறுப்பினராக விளங்குகி
இளமைக் காலந்தெர் பேருக்கம் காட்டி வந்த இ: இஸ்லாம்" என்னும் தமிழ் 1933-ம் ஆண்டில் வெளி இலங்கைச் சாகித்திய ம கெளரவித்தது,
"The West Reapprai ஆங்கில நூல் 1964-ம் இவ்வாண்டிலே, $1 மிஸ் யாத்திரை' என்னும் தமி வந்திருக்கின்றன.
cket Printindal, he
 
 
 
 

SSLSLLLSLSLLLLLSLLLSLSLLLSLSLLLSLSLLLLLSLLLLLSLL LL LLLLL LLLL LLLLLLLLSLLL
臀
(C.C.S.) L.,5) நிரையிற் ம் இவரே ஆவர். இலங்கை பயின் ஸ்தாபகரா கவும்"அகில தலவராகவும், இலங்கைப் உறுப்பினராகவும், இலங்கை செனேட் உறுப்பினராகவும் ரி புரிந்த இவர் இப்போது வைக் கமிஷனில் (P. S. C.) 1று , ாடங்கியே தமிழ் மொழியிற் வர் எழுதிய "இலங்கையில் நூல் கன்னிப் படைப்பாக யிடப்பட்டது. அந் நூலுக்கு ண்டலம் பரிசு வழங்கிக்
5ed' என இவர் எழுதிய
is ஆண்டு வெளியாயிற்று.
றின் வசியம்", 'த மி ழ் ழ் நூல்கள் இரண்டு வெளி
LLLLSLLLLLSLLLLLSLLLSLSL LLSSLSLSL LSLSLLSLSS rm
Ar EP Fre, 9.5 TF1 o dri : - ).
FC SY