கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இவர்கள் வித்தியாசமானவர்கள்

Page 1


Page 2

இவர்கள் வித்தியாசமானவர்கள்
அந்தனி ஜீவா
பூபாலசிங்கம் புத்தக சாலை 340, செட்டித் தெரு, கொழும்பு - 11. தொலைபேசி 422321

Page 3
முதற்பதிப்பு i
விலை ரூபாய் !
TITLE SUBJECT
AUTHOR
NO. OF PAGES
PAPER
TYPE
BNDING
PRCE
PUBLISHERS
2000
40/-
EVARKAL VITHIYASAMANAVARKAL
: SHORT SKETCHES OF DIFFERENT PEOPLE
ANTONY.JEEVA
160
11.6 Kg. Cream worp
11 POINT
AR BOARD
RS. 40/-
POOPALASINGAM BOOK DEPOT 340, SEA STREET, COLOMBO - 11.
KUMARAN PUBLISHERS 3, MEIGAI VINAYAGAR STREET, VADAPALN, CHENNA - 600 026.

சமர்ப்பணம்
என் எழுத்துக்களை
பொன்னெனப் போற்றி
அச்சு வாகன மேற்றி
அனைவரின் பார்வையிலும்
சங்கமிக்க வைத்த
'தினகரன்' தேசிய நாளேட்டின்
முன்னைநாள் பிரதம ஆசிரியரும் கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவரும் பெருந்தகை திரு.இ. சிவகுருநாதனின்
பொற்கரங்களுக்கு இந்நூலை சமர்ப்பிக்கின்றேன்.

Page 4
அந்தனி ஜீவாவின் அக மலர்கள்
கலைஞன் என்பவன் தன் படைப்புகளின் ஊடாகத் தன்கால சமூகத்தின் உணர்வுகளைப் பதிவு செய்பவன். அதன் மூலம் தன் சமூகத்தின் உந்நதமான பண்பாட்டு மரபுகளை மேலும் செழுமைப்படுத்தி வளர்ப்பவன். இருளைக் குறைத்து ஒளியைப் பெருக்குபவன். சமூக ஆன்மாவின் மாபெரும் காலச் சிற்பி அவன்.
இந்த சிற்பி சமூகத்துக்கு விட்டுச் செல்லுவது தன்னுடைய பண்பாட்டுச் சாதனைகளை மட்டுமல்ல, வெற்றிகளும் தோல்விகளும் சாதனைகளும் வேதனைகளும் நிறைந்த தன் வாழ் வினையும் அவன் விட்டுச் செல்லுகின்றான். பல சமயங்களில் கலைஞனுடைய படைப்பு எச்சங்களைவிட, அவன் விட்டுச் செல்லும் வாழ்வின் எச்சங்கள் உயர்ந்தவைகளாக, பண்பாட்டு மதிப்பு மிகுந்தவைகளாக அமைந்து விடுகின்றன. கலையை விடவும் வாழ்வில் சத்தியம் மிகுதி.
தமிழ்ப் பண்பாட்டுலகத்தைப் பொறுத்தவரை இந்த உயிர்க் கூறு வாழ்வியல் சத்தியம் - பெருகும் அளவில் அலச்சியப் படுத்தப்படுகிறது. குறிப்பாகச் சமகாலக் கலைஞர்கள் பற்றிய தங்கள் உணர்வுகளைப் பதிவு செய்து வைக்கச் சக கலைஞர்கள் அதிகம் முன்வருவதில்லை. ஒரு சிலர் முன் வருகிறார்கள் - தம் காலத்து மாபெரும் சாதனையாளர்களைப் பதிவு செய்ய. ஆனால்

சாமானியக் கலைஞர்களையும் மதித்து, அவர்களைப் பற்றிய தங்கள் ஆரோக்கியமான அனுபவங்களைப் பதிவு செய்யப் பெரும்பாலானவர்கள் தங்கள் நேரத்தை ஒதுக்குவதில்லை : உழைப்பைச் செலுத்துவதில்லை.
இங்கே ஒரு கலைஞர் இருக்கிறார். மனிதன்!-ஓ, அந்தச் சொல் எத்தனை அற்புதமாக ஒலிக்கிறது! என்றானே மாபெரும் மானுடக் கலைஞன் கார்க்கி. அவனுடைய வழி வந்தவர் இவர். தன் காலத்தின் சக கலைஞர்களை எண்ணி எண்ணி வியக்கும் வண்ணச் சிந்தனைக்குச் சொந்தக்காரர். கலைஞர்களை மட்டுமல்ல, வெளியீட்டாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஆன்மீகவாதிகள், தொழிற்சங்கவாதிகள், கல்வியாளர்கள் - ஏன், கின்னஸ் நூலில் இடம் பிடிப்பதற்காகச் சாதனைகள் நிகழ்த்துபவரைக்கூட வியப்புடன் பதிவு செய்திருக்கிறார்.
இவருடைய பதிவுகள் வித்தியாசமானவை. பெரும்பாலும் தனக்கு நேரடியாகப் பழக்கமானவர்களையே பதிவு செய்திருக்கிறார். தன்னுடைய அந்த உறவின் ஊடாக அவர்களுடைய ஆளுமையை, சாதனைகளை, சிறப்பு அம்சங்களை, நல்லியல்புகளை, ஏன் குறைகளையும் ஏக்கங்களையும் கூட ரசிக்கும் வண்ணம் பதிவு செய்திருக்கிறார்.
இந்தப் பதிவுகள் முழுமையான வாழ்க்கைச் சித்திரங்கள் அல்ல. எடுத்துக் கொள்ளப்பட்ட மனிதர்களின் ஏதாவது ஒரு அம்சம் பற்றிய ஆய்வு பூர்வமான தகவல்களும் அல்ல. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உணர்வு நிலையில் - தான் அறிந்த மேன் மக்களைச் சிறப்பிக்க வேண்டும் என்ற பேராவலில் பிறந்த மானுடச் சித்திரங்கள் இவை. சித்திரங்களுக்குரியவர்களை மேலும் மேலும் ஆழமாகத் தேடித் துருவித் தெரிந்திட அவர்களின் அனுபவங்களில் தோய்ந்து, லட்சியங்களில் நிமிர்ந்து வாழ்வில் உயர்ந்திட இவை வாசகர்களைத் தூண்டும்.
முப்பது கட்டுரைகள் இத்தொகுதியில் உள்ளன. எல்லாமே 1948க்கும் 89க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை.

Page 5
அன்றைய, இலங்கை இலக்கிய - சமூகச் சூழலைப் புரிந்து கொள்ள அக்காலச் சூழலில் வாழ்ந்த சாதனையாளர்களின் குடும்பச் சூழல், கலைச்சூழல் இவற்றை உணர்ந்து கொள்ள இக்கட்டுரைகள் உதவும்.
கட்டுரை எழுதுவோர் பொதுவாக தான் ஆழ்ந்து ரசிக்கும், அல்லது முன்னோடியாகக் கருதும், அல்லது தன் கலைப் பார்வைக்கு தத்துவ நிலைக்கு - வலுசேர்க்கும் ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்து எழுதுவதே வழக்கம். இங்கே அந்த மரபு உடைபட்டிருக்கிறது. சாதி சமயம் கடந்த மனிதநேயப் பார்வையில் அகப்பட்ட சாதனையார்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். மொழியில் காழ்ப்போ, இனக்காழ்ப்போ சிறிதும் இல்லை. நாட்டு எல்லைகள் கூட இந்த விசாலமான பார்வையில் மறைந்துபோக, அண்டை நாட்டுக் கலைஞர்களும் கட்டுரைக் கொலுவில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இக்கட்டுரைகளின் ஆசிரியர் அந்தனி ஜீவா என்னும் மக்கள் கலைஞர் நாடறிந்த நடிகர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். இலங்கையின் மைய மலைமடிப்புகளுக்குள் முடங்கி முகம் இழந்து கிடந்த மலையக தமிழர்களுக்கு முகமெழுத முனைந்து நிற்போரில் ஒருவர். மலையக மக்கள் மீது - அவர்களின் உயர்வின் மீது - அளவற்ற காதலுடையவர். மலையக மக்களின் உயர்வுக்காக உழைத்தவர்களை - உழைப்பவர்களை - உச்சி மீது வைத்து மெச்சுபவர். கலையும், இலக்கியமும் மக்களுக்காகவே என ஓங்கிக் குரல் எழுப்புகின்றவர். இந்த நோக்கங்களோடு மலையக மக்கள் கலை இலக்கிய மன்றத்தினை ஒரு இயக்கமாக இயக்கி வருபவர்.
அந்தனி ஜீவா எனக்கு இருபது ஆண்டுகளாக நண்பர், தோழர், சக போராளி, சமீபத்து நான் இலங்கை சென்றிருந்தபோது அவரை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக இலங்கையில் பற்றி எரிந்து

கொண்டிருக்கும் இனக்கலவரத் தீயில் புடம் போடப்பட்ட 'மானுடன் அவர். , a.
இந்தத் தொகுப்பின் ஊடாக நான் அவரை இன்னும் நெருங்கிப் பார்க்கிறேன். தமிழ் மீது, தமிழன் மீது, கலை இலக்கியத்தின் மீது. மானுடத்தின் சாதனைகளின் மீது. எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கைத் தீவின் மக்கள் மீது. அவர் கொண்டுள்ள ஆறாக் காதல் என்னை பிரம்மிக்க வைக்கிறது.
அந்த இனிய மனிதரை வாழ்த்துகிறேன். அவர் விரல்களில் பூத்த இதழ் 'அக மலர்களைப் பாராட்டுகிறேன். எல்லாச் சங்கிலிகளும் நொறுங்கி, மனித குலம் பரிபூரண விடுதலையில் மலர்க. ஆம் இந்த யுகம் எழுக.
மணிகட்டிப் பொட்டல் அன்புடன் குமரி மாவட்டம் பொன்னிலன் 15.12.99 பொதுச்செயலாளர்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

Page 6
நினைத்துப் பார்க்கிறேன்
நினைத்துப்பார்க்கிறேன் நெஞ்சின் ஞாபக குறிப்புகளை புரட்டிப்பார்க்கிறேன். நினைவுகள் எங்கோ சிறகடிக்கின்றன, மனிதர்கள் எத்தனை, உலகம் அத்தனை என குறிப்பிடுவதைப்போல அத்தகைய மனிதர்களில் வித்தியாசமானவர்கள் எத்தனையோ பேர். - அவர்களை சந்தித்தது. பேசியது, பழகியது அத்தகைய இனிய நிகழ்வுகளை, மனப்பதிவுகளை நினைத்துப்பார்க்கிறேன்' என்ற தலைப்பில் தினகரன் வாரமஞ்சரியில் வாரந்தோறும் எழுதினேன். கட்டுரை அச்சில் வந்த பொழுது பலரும் படித்து பாராட்டினார்கள். இவைகள் நூலுருவில் வர வேண்டும் என இலவச ஆலோசனைகளையும், ! அறிவுரைகளையும் கூறினார்கள். பின்னர் இவை எல்லாம் காற்றோடு கலந்து கனவுகளாகிவிட்டது.
அண்மையில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் நானும் மல்லிகைப் பந்தல் வெளியீடான "மல்லிகை முகங்கள் வெளியீட்டு விழாவுக்காக அட்டன் சென்று திரும்பும்போது *க கால இலக்கியப் பதிவுகளை அசை போட்டு கொண்டு

அப்பொழுது நினைத்துப்பார்க்கிறேன்' கட்டுரைகளை தொகுத்து தந்தால் நூலுருவில் கொண்டு வரலாம் என்றனர். அதனை அடிக்கடி ஞாபக மூட்டினார். நண்பர் மேமன்கவி நூலாக வரவேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி உற்சாகப்படுத்தினார். பைல்களை புரட்டிப்பார்த்து பத்திரிகை கட்டுரைகளை தேடி எடுத்தேன். ஓரிரு கட்டுரைகள் கறையானுக்கு விருந்தாகிவிட்டன.
கட்டுரைகளை மீண்டும் ஒரு தடவை படித்த பொழுது, ஒரு புதிய தலைமுறையினருக்கு பல தகவல்களை இந்த கட்டுரை தரும் என்ற நம்பிக்கை பிறந்தது.
இந்த நூலில் இடம் பெற்றுள்ள கலை இலக்கிய வாதிகள் வித்தியாசமானவர்களாக தென்பட்டார்கள். அதனால், "இவர்கள் வித்தியாசமானவர்கள்' என்ற தலைப்பை இந்நூலுக்குச் சூட்டியுள்ளேன்.
இந்த நூலில் இடம் பெற்றிருப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சாதனையாளர்கள்தான். இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு நூல் வர வேண்டியது அவசியம். இந்த கட்டுரைகளை "தினகரன்" வாரமஞ்சரியில் பிரசுரித்து, எனது எழுத்து முயற்சிகளுக்கு ஊக்கமளித்த முன்னை நாள் தினகரன் பிரதம ஆசிரியர் திரு.இ. சிவகுருநாதன் அவர்களுக்கு முதல் நன்றி.
உதிரிப்பூக்களாக இருந்த கட்டுரைகளை மாலையாக தந்த பூபாலசிங்கம், பூரீதர்சிங் அட்டை அழகுற அமைத்த ஓவியர் பெசில் செபஸ் டியனுக்கும், கட்டுரைகளை தட்டச்சில் பதிப்பித்த செல்வி. ஏஞ்ஜலாவிற்கும், எங்கள் படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு செல்லும் பூபாலசிங்கம் புத்தகச் சாலை அதிபர் பூரீதர்சிங் மற்றும் முகம் தெரியாத வாசக நண்பர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள்.
அந்தனி ஜீவா "கொழுந்து" த.பெ.எண். 32 கண்டி, இலங்கை.

Page 7
இவர்கள் வித்தியாசமானவர்கள்
01.
O2.
03.
04.
O5.
O6.
O7.
O8.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
வண தனிநாயகம் அடிகளார்.
சி.வி. வேலுப்பிள்ளை.
கலையரசு. சொர்ணலிங்கம்.
பேராசிரியர் உவைஸ். அறிஞர். அந. கந்தசாமி. மார்ட்டின் விக்கிரமசிங்க. கே.டானியல். பெரியார் பி.டி. ராஜன். சரத் முத்தெட்டுவேகம. வி.கே. நவஜோதி.
ஆழிக்குமரன் ஆனந்தன்.
கவிஞர். ஈழவாணன்.
நடிகவேள் லடீஸ்வீரமணி.
டொமினிக் ஜீவா. வல்லிக்கண்ணன். சக்தி பாலையா. அ.ஸ். அப்துஸ்ஸமது. எஸ். அகஸ்தியர். வீ.கே. வெள்ளையன். எஸ்.எம். ஹனிபா. ராமு. நாகலிங்கம். எ.பி.வீ. கோமஸ். கார்த்திகா கணேசர். தமிழோவியன். கே.எஸ். சிவகுமாரன். சேர் ராசீக் பரீத். பூந்தான் யோசேப்பு. பேராசிரியர் மு.வ
நாடக மேதை டி.கே.எஸ்.
கலைவாதி கலீல்.
பக்கம்
17
23
28
33
58
42
47 50
55
60
65 72
77
81
85
90
94.
100
105
111
16
121.
125
130
135
140
14.6
153
159

1. வண. தனிநாயகம் அடிகளார் "ன்ெனை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்பது திருமூலர் வாக்கு. இந்த வாக்குக்கொப்ப தமிழுக்கே தன்னை அர்ப்பணித்து தமிழ்த்
தொண்டராகத் திகழ்ந்தவர் வண. தனிநாயகம் அடிகளார்.
அமரர் வண. தனிநாயகம் அடிகளார் உருவாக்கிய அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றம் முதன் முதலில் மலேசியாவில் 1964ல் ஆண்டு ஜனவரி மாதத்தில் கூடியதிலிருந்து, தொடர்ந்து சென்னை, பாரிஸ், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நான்கு தடவைகள் கூடிற்று. ஐந்தாவது மாநாடு அவரில்லாமலே மதுரையில் நடைபெற்றது. அமரர் தனிநாயகம் அடிகளும், அவரின் அயராத முயற்சிகளும் தணியாத ஆர்வமும் இருந்திருக்கவில்லையானால் தமிழை ஆய்வதற்கு இப்படியோர் அமைப்பே இருந்திருக்க முடியாது.
தமிழர் சிந்தனை
ஒளியுமிழும் கண்கள், புன்னகை தவழும் மலர்ந்த முகம், எடுப்பான தோற்றம், தூய வெண்ணிற ஆடை, எந்த நேரமும் தமிழின் வளர்ச்சி பற்றிய சிந்தனை, அத்தகைய பெருந்தகையான தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரைப் பற்றிய நினைவுகள் என் நெஞ்சில் பூக்கின்றன.
அவரை நினைத்துப் பார்ப்பதன் மூலம், அவரின் தமிழ்ப் பற்றையும், தன்னலமற்ற தொண்டுகளையும் மனங்கொள்வதன் மூலம் தமிழை எந்த உன்னத நிலைக்கு அவர் கொண்டு செல்ல விழைந்தார் என்பதை உணர்ந்து கொள்வதன் மூலம், அவர் உருவாக்கிய அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றத்தின் நோக்கங்களுக்கிணங்க, இனிவரும் நாட்களில் நமது பணிகளை நாம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பதே எமது நம்பிக்கையா யிருக்கிறது.
அத்தகைய பெரியாரை நினைத்துப் பார்க்கிறேன்.
தமிழறிஞர் வண. தனிநாயகம் அடிகளாரை முதன் முதலாகச் சந்தித்தது. இன்றும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது.

Page 8
இவர்கள் வித்தியாசமானவர்கள் 12
அப்பொழுது, நான் பாடசாலை மாணவன், பாடசாலை மாணவர்கள் சிலருடன் எங்கள் கல்வி கூடத்தின் தலைமை ஆசிரியையான சங்கைக்குரிய சகோதரி, தனிநாயகம் அடிகளாரைப் பார்ப்பதற்காக எங்களைக் கூட்டிச் சென்றார்.
பம்பலப்பிட்டி சென். பீட்டர்ஸ் கல்லூரியில் தனிநாயகம் அடிகளார் வந்து தங்கியிருந்தார்.
குறட்பாக்கள்
தமிழ் மாணவர்களான எங்களைக் கண்டதும் புன்னகை பூத்த முகத்துடன் வரவேற்ற அடிகளார் தமிழின் சிறப்பியல்புகளைப் பற்றியும், திருக்குறளின் பெருமையையும் எமக்கு எடுத்தியம்பியதும் அல்லாமல் மாணவர்களிடையே திருக்குறள் படிக்கிறீர்களா எனக்கேட்டு சில குறட்பாக்களைச் சொல்லும் படியும் கேட்டார்.
அந்த மாணவர் கூட்டத்தில் நான் ஒருவனே, உடனே பல குறட்பாக்களைத் தடுமாற்றமின்றி அடிகளாரிடம் ஒப்புவிக்கிறேன். வண. தனிநாயகம் அடிகளார் உற்சாகத்துடன் என்னை அருகில் அழைத்து, என்னை அன்புடன் தட்டிக் கொடுத்தவாறு, அவரிடமிருந்த அவர் இயற்றிய "தமிழ்த்தூது" என்ற நூலை எனக்குப் பரிசாக வழங்கினார்.
வண. தனிநாயகம் அடிகளார் வழங்கிய "தமிழ்த்தூது" என்ற நூல் தூத்துக்குடியில் ஜூபிலி அச்சகத்தில் 1954ம் ஆண்டு அச்சிடப்பட்டது. அந்த நூலைப் பெரும் பொக்கிஷமென நினைத்துப் பாதுகாத்து வந்தேன்.
ஆனால், 1981ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின்போது அதனை மறு பிரசுரஞ் செய்து வெளியிடுகிறோம் என கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் முக்கிய ஸ்தரான திரு. பாக்கிய முத்து அவர்களின் வேண்டுகோளின் பேரில் சென்னைக்கு விமானத் தபால் மூலம் அனுப்பி வைத்தேன்.

13 ܢ ܐ .܀ ܀ ܀ ܀ ܀ ܀ அந்தனி ஜீவா
தமிழ்த்தூது’ நூலும் மறு பிரசுரமாகவில்லை. அத்துடன் நான் பேணிப் பாதுகாத்து வந்த அந்த அடிகளாரின் அன்பளிப்புப் பிரதியும் என்னிடம் திரும்பவில்லை.
தமிழுக்குத் தன்னை அர்ப்பணம் செய்த இந்தத் தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரின் தமிழ்த்தூது' நூலை மறு பிரசுரஞ் செய்ய கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் மறந்து விட்டமை பெரும் வேதனைக்குரியதாகும்.
"தமிழுக்கொரு தனிநாயகம்' என்று பெருமைப்படும் அடிகளாரின் தமிழ்ப் பணிகளை மீண்டும் இரை மீட்கிறேன்.
உலகத்தமிழ்த் தரதர்
வண. தனிநாயகம் அடிகளார் உலக நாடுகள் பலவற்றிற்குத் தமிழ் தூதராகச் சென்றவர். ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், ஸ்பானிசம், மலாய், கிரேக்கம், சமஸ்கிருதம், போர்த்துகீஸ், ரஷ்யன், ஹீப்ரு, சிங்களம் முதலிய மொழிகளை எல்லாம் அவர் நன்கு அறிந்திருந்தார். இவற்றில் முதல் ஏழு மொழிகளில் எழுதவும், பேசவும் வல்ல விற்பன்னராகத் திகழ்ந்தார். இம்மொழிகளிலுள்ள இலக்கியங்களையெல்லாம் கற்றிருந்தார். எனினும், இத்தகைய மொழிகளுக்கிடையே அவரிதயத்தில் நின்று நிலவியது, அவரது தாய்மொழியான தமிழ் மொழியின் சிறப்புத்தான்.
"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்ற மகாகவி பாரதியின் வாக்குப்படி உலகின் பல பகுதிகளுக்கும் சென்று தமிழின் சிறப்பியல்புகளை, தமிழ் இலக்கியங்களின் மாண்பை, உலக இலக்கியங்களோடு ஒப்பியல் முறையில் எடுத்துக் காட்டிய பெருமை அடிகளாரையே சாரும்.
இன்று மேலைநாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழி, தமிழரின் பண்பாடு, கலாசாரம், வரலாறு, கலைகள் பற்றியெல்லாம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றனவென்றால் அதற்கு அத்திவாரமிட்ட பெருமை தனிநாயகம் அடிகளையே சாரும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.

Page 9
இவர்கள் வித்தியாசமானவர்கள் 4
தமிழர் பண்பாடு
தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்கள் சிலவற்றைச் சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். அவற்றை நம்மிலக்கியங்கள் பலவற்றில் தெளிவாகக் காணலாம். பரந்த உலக மனப்பான்மை ஒரு கொள்கை. ஆதலால்தான் புறநாநூற்றில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றும், வள்ளுவத்தில் “யாதானும் நாடாமல் ஊராமல்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. விருந்தோம்பல் ஒரு சிறந்த கொள்கை. பிறரன்பு ஈகை, தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் எனும் கோட்பாடு, என் கடன் பணி செய்து கிடப்பதே அகத்திணை புறத்திணை மரபு, மானமென்றால் உயிரைக் கொடுத்ததும் காப்பாற்றும் வேட்கை, மனத் தூய்மை விடாது முயலல் எனும் கொள்கை, யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நிகரற்ற மனநிலை, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் உயர்ந்த இலட்சியம் என்பன தமிழர் பண்பாட்டின் அரிய சில கோட்பாடுகளென்றே கூறலாம் என்று மூதறிஞர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் நினைவுச் சொற்பொழிவின்போது தனிநாயகம் அடிகளார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அடிகளார் அந்தச் சொற்பொழிவில்
"நம்மிலக்கியத்திலும் கலைகளிலும் தோன்றும் தாய்மொழிப் பற்றினைப்பற்றி நான் விரிவாகக் கூற வேண்டியதில்லை. சேக் கிழாருடைய பெரிய புராணத்தை நான் படிக்கும் பொழுதெல்லாம் அவருடைய உருக்கம் நிறைந்த தமிழ்ப்பற்று என்னுள்ளத்தைக் கவர்கின்றது. தமிழ் என்ற சொல் வருமிடங்களி லெல்லாம் அழகும், அன்பும் நிறைந்த அடைமொழிகளை அமைத்தே கூறுவார்."
மொழிப்பற்று
"பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய மறுமலர்ச்சி இம்மொழிப் பற்றை இன்னும் விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளது. வேதநாயகம் பிள்ளை, பரிதிமாக் கலைஞன்,

15 அந்தனி ஜீவா
சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள் போன்றவர்கள் இப்பற்றினைத்தம் நூல்களில் தெளிவாகக் காட்டுகின்றனர். பேராசிரியர் சேதுப்பிள்ளையின் நூல்களில் தமிழின் இனிமை பக்கந்தோறும் இனிக்கின்றது. ஆயினும் இம்மொழிப்பற்றினை பாரதியாரும், பாரதிதாசனும் என்றும் மறக்க முடியாத செய்யுட்களில் பாடியிருக்கின்றனர்."
பாரதியாரின் "செந்தமிழ் நாடென்னும்" செய்யுள் வரலாற்று உண்மை நிறைந்த அரிய செய்யுள்; அவருடைய 'யாமறிந்த மொழிகளிலே' என்னும் செய்யுள் தமிழர்கட்கு எழுச்சி தரும் செய்யுள். இவ்விரு செய்யுட்களையும் நம் சிறுவருடைய பாட நூல்களிலே எது காரணம் பற்றிச் சேர்க்காமலிருக்கிறார்களோ நானறியேன். நம் மொழிப்பற்றையும், நாட்டுப்பற்றையும் குறைப்பதற்காகவே இவ்விருட்டடிப்பு ஒரு சூழ்ச்சி என்று கருதுகிறேன்.
இவ்வாறு தனது கருத்துரையில் அடிகளார் தெரிவிக்கின்றார். அடிகளார் தம் வாழ்வை இறை பணியைவிட தமிழ்ப்பணிக்கே அர்ப்பணித்தவர். உலக மக்களின் மீட்புக்காக உயிர் கொடுத்த இறை மகனாம் கிறிஸ்துவின் அழைப்பை ஏற்று அவரின் அடிச்சுவட்டிலே தமது வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்தவர் தனிநாயகம் அடிகளார்.
அடிகளார் தமது திருமறைப் பணியைத் தமிழர் பண்பாட்டின் அடித்தளத்தில் இருந்தே ஆரம்பிக்க முயன்றார். தமிழர் பண்பாட்டின் தலைசிறந்த இலக்கியங்களாக விளங்கும் நூல்களாலான தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் என்பனவற்றிலிருந்தே அடிகளார் கைக்கொண்ட பண்பாட்டின் கொள்கைகள் விளக்கம் பெறுகின்றன.
யாவரும் கேளிர்
ஏசு கிறிஸ்து இவ்வுலகிற்கு கொண்டு வந்த நற்செய்தி அனைத்துலக மக்களுக்கும் உரியது என்பதை உணர்த்தவே

Page 10
இவர்கள் வித்தியாசமானவர்கள் 16
புறநூற்றில் வரும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பரந்த உலக மனப்பாமையுடைய கொள்கையை ஏற்படுத்தியனுப்பினார். அதனால் முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நடைபெற்ற போது வரவேற்புரையை ஆற்ற எழுந்த அடிகளாரின் உள்ளத்திலிருந்து உதடுகள் வழியாக முதன்மையாக வெளிவந்த சொல் இதுவேயாகும்.
ஒருமுறை அடிகளாரே உரோமாபுரியில் இறையியல் பயின்ற காலத்தின் நினைவுகளைக் குறிப்பிடுகையில், அங்கு இந்திய, மலேசிய குருத்துவ கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி வீரமாமுனிவர் தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்து தமிழ்ப் பணியாற்றியுள்ளார். வத்திக்கான் வானொலியில் முதன் முதலாகத் தமிழ் ஓசை பரப்பிட வழிவகை வகுத்து தமிழின் சிறப்பை அனைவரும் அறிந்திட உதவினார்.
தனிநாயகம் அடிகளார் உலகில் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் தமிழின் சிறப்பியல்புகளை, தமிழ்ப் பண்பாட்டின் மேம்பாட்டினைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்தியுள்ளார். உலக பல்கலைக் கழகங்களில் இந்திய இயல் அல்லது இந்தியப் படிப்பினைகள் என்றால் சமஸ்கிருத படிப்புக்களையே குறித்தன. தமிழ்மொழி அங்கெல்லாம் முக்கிய இடம் பெறவில்லை. அடிகளாரின் அயராத முயற்சியால் இன்று உலகின் பல பல்கலைக் கழகங்களில் திராவிட இயல் கற்பிக்கப்படுகின்றது. இதற்கு எல்லாம் அடிகளாரே காரணமாக விளங்கினார். தமிழியல் துறையை உயர்த்தினார்.
வேலணையில் நடந்த திருக்குறள் மாநாட்டில் கலந்துக் கொண்டு அவர் இறுதியாக சொன்ன சொற்கள், அவர் எவ்வளவு தூரம் தமிழ்ப்பற்றுக் கொண்டிருந்தார் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. "கண் பஞ்சடைந்து போகின்றது, கால்கள் நடக்க மறுக்கின்றன. ஆனால் தமிழ்ப்பற்று இன்னும் என்னோடு இருக்கின்றது" என்றார்.

17 அந்தனி ஜீவா
தமிழுக்காக வாழ்ந்த வண.தனிநாயகம் அடிகளார் அமரராகி விட்டாலும், தமிழ் மொழி உள்ள வரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். ஏனெனில் "தமிழுக்கு தொண்டு செய்வோர் சாவதில்லை" என்ற கவிஞன் வாக்கு பொய்ப்பதில்லை.
(7.10.1984)
2. சி.வி. வேலுப்பிள்ளை
கவிஞர்,
நாவலாசிரியர்
தொழிற்சங்கவாதி,
முன்னாள் தலவாக்கொல்லை பாராளுமன்ற உறுப்பினர்,
மலையக மக்களின் துன்ப துயரங்களை, அவர்களின் அவல
வாழ்வைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி உலகறியச்
செய்தவர், இத்தனைக் கும் மேலாக எல்லோருடனும்
இன்முகத்துடன் உறவாடும், உரையாடும் மனிதாபிமானி, இவர்
தான், சி.வி. என்று இரண்டு எழுத்துக்களால் அன்புடன்
அழைக்கப்படும் சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள்.
உடல் நலமில்லை
கடந்த ஒரு மாதகாலமாகத் தினசரி இவரைப்பற்றி நினைக்காத நாட்களே இல்லை. ஆம் இவரைப் பற்றி தினமும் நினைத்துப் பார்க்கிறேன். காரணம், இவர் கடந்த ஒரு மாதக் காலமாக சுகவீனம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருகிறார்.
வாரத்தில் ஒரு தடவை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ சி.வி.யுடன் தொடர்பு கொள்வதை ஒரு கடமையாகக் கொண்டிருந்த நான், வாழ்க்கையில் ஏற்பட்ட சில இழப்புகள் காரணமாக, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அவருடன் தொடர்பு கொள்ள முடியாது போய்விட்டது.

Page 11
இவர்கள் வித்தியாசமானவர்கள் 8
திடீரென்று 'தினகரனில் ஒரு செய்தி - சி.வி. சுகவீனமுற்று கொள்ளுப்பிட்டி டேர்டன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக. இச்செய்தியைக் கண்டதும் உடனே எனது கால்கள் கொள்ளுப்பிட்டியிலுள்ள வைத்திய விடுதியை நோக்கி விரைந்தன.
வைத்திய விடுதியில் நுழையும்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் திரு.பி.பெருமாள் சோகத்துடன் என்னை வரவேற்கிறார். சி.வி.க்கு என்ன? ஏதோவென்று உள்ளம் தவிக்கிறது.
இப்போது நிலைமை பரவாயில்லை. ஆபத்துக் கட்டத்தை தாண்டி விட்டார்!" என்கிறார் பெருமாள். இருவரும் அவரின் அறைக்குள் நுழைகின்றோம். மெதுவாகக் கண்ணைத் திறந்து பார்த்த சி.வி. தனது மெலிந்த கரங்களை அசைத்து அருகே அழைக்கிறார்.
அவரருகே சென்றதும் அவரது கரங்களை ஆதரவுடன் பற்றுகிறேன். அவரும் கையை இறுக்கிப் பிடிக்கிறார். "பயப்படாதீர்கள். என்று சொல்லுவதுபோல் நம்பிக்கையுடன் எங்களைப் பார்க்கிறார்.
அவரின் கரத்தைப் பற்றியபடி, என் நினைவுகள் எங்கோ சுழலுகின்றன! இதே கரம் அல்லவா. மலையக மக்களின் துன்பதுயரங்களை, சோகப் பெருமூச்சுகளை கவிதையாக அதுவும் தமிழில் அல்ல, 'தேயிலைத் தோட்டத்திலே...' என்று ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ள வலிமை மிக்க சிருஷ்டியைத் தந்த கரமல்லவா." என எண்ணிப் பார்க்கிறேன்.
LVITT TIL AT67tfo Maolása:56ir
'தேயிலைத் தோட்டத்திலே. என்ற சி.வி.யின் படைப்பு மலையகத் தோட்டப் பாட்டாளி மக்களின் துன்ப துயரங்களை, சோகப் பெருமூச்சுக்களை உழைப்பு ஒன்றைத் தவிர, வேறொன்றும் அறியாத, வாயிருந்தும் பேச முடியாத அந்த

9 அந்தனி ஜீவா
ஊமை ஜனங்களுடைய வாழ்வின் அவலங்களைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிச் சர்வதேச அரங்கில் அவர்களது நிலைமையை எடுத்துக் காட்டியது. இந்தப் புகழ்பெற்ற அமரகாவியத்திற்கு உலகப் புகழ் பெற்ற கலாமேதை மஞ்சு சிறீ ஓவியங்கள் வரைந்துள்ளார். கவிஞர் சக்தி பாலையா தமிழ் வடிவம் தந்துள்ளார்.
'மகலையகப் பாட்டாளி மக்களைப் பற்றி, உழைப்புக்கே தம்மை அர்ப்பணித்த அந்த மக்களைப் பற்றி எழுதத் தொடங்கி யதால்தான் என் எழுத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன! என்று என்னிடம் கூறிய அந்த மலையக மக்களின் மலைநாட்டின் மாணிக்கம் மக்கள் கவிமணி சோர்ந்துபோய், துவண்டு கட்டிலில் படுத்திருந்தார்.
அவரிடம் விடைபெற்று வீடு திரும்புகிறேன். அவரது நினைவுகள், அவரோடு பகிர்ந்துக் கொண்ட கலை, இலக்கிய அரசியல் சம்பவங்களைப் பற்றிய கருத்துகள் என் நெஞ்சில் பூத்து மலர்கின்றன.
மூன்று மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் அவர் வற்புறுத்தி அழைத்ததின் பேரில் அவர் வீட்டிற்குச் செல்கிறேன். ஏற்கனவே ஒரு தடவை அவர் இல்லம் சென்றிருந்தேன். அமைதியான சூழலில் அமைந்தது அந்த வீடு.
அவரும் நானும் பலதும், பத்தும் பேசி மகிழ்கின்றோம். ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் எழுதிய பத்திரிகை துணுக்குகளை என்னிடம் தருகிறார். அவரின் படைப்புகளைப் பார்த்து அவருடன் சிலவற்றைப் படிக்கிறேன். ஆங்கிலத்தில் மலையக உழைக்கும் மக்களிடமிருந்து நம் கால அரசியல் தலைவர்கள் வரை அவர் எழுதிய நடைச் சித்திரங்கள் சுவையான தகவல்களை நகைச்சுவையுடன் தருகின்றன.
அவற்றை கிண்டலும், கேலியுமாக எழுதியுள்ளார் சி.வி.
ஒருநாள் ஓய்வாக வந்து இங்கு தங்கி நீங்கள் இவற்றை வாசிக்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிடுகிறார். அத்துடன்

Page 12
இவர்கள் வித்தியாசமானவர்கள் 2O
தனது அனுபவங்களையும் கூறுகிறார். நேரம் போனதே தெரியவில்லை. சுவையான பகல் உணவை என்னுடன் பகிர்ந்து கொள்கிறார்.
'மலையக மக்களின் நல் வாழ்வுக்காக உழைத்து ஒரு பத்துப் பேரையாவது விருப்பு வெறுப்பின்றித் தெரிவு செய்து அவர்களைப் பற்றிய நூல் ஒன்றை வெளியிட வேண்டும். ஆறுதலாக வாருங்கள் அதற்குரிய குறிப்புகளைத் தருகிறேன்.
என்றார்.
ஆம். அவரது இதயத்தில் பல வித ஆசைகள் புதைத்திருந்தன. மலையக மக்களைப் பற்றிய வரலாறு, மலயக மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த பெரியார்களைப் பற்றிய தகவல்கள், மலையக இலக்கியப் படைப்புகள்; இவைகள் நூலுருவில் வெளிவர வேண்டும். அப்பொழுதுதான் இளைய தலைமுறையினருக்கு உண்மைகளை அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டும் என்பதே அவருடைய எண்ணம்.
மக்கள் கவிமணி சி.வி.யை சந்தித்துவிட்டுத் திரும்பும் பொழுதும். அவரது படைப்புகளைப் படிக்கும் பொழுதும், பாட்டாளி வர்க்கத்துக்காகப் போராடிய சிலி நாட்டுக் கவிஞன் பாப்லோ நெரூடா தான் என் நினைவுக்கு வருகிறார். சி.வி.க்கும், நெருடாவுக்கும் ஏதோ ஒரு வகையில் ஒற்றுமை உண்டு.
'பாலைவனத்தின், மலைப் பிராந்தியத்தின் சுரங்கக் கனியிலிருந்து, எனது தேச மக்கள் படும் துன்பங்களை ஏற்று சுரங்கச் செல்வங்களைச் சேகரிக்கிறார்கள். எங்களுடைய தேசத்தின் மக்களைப்போல் உலகின் எந்தப் பகுதி மக்களும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டதில்லை.
இவ்வாறு சிலிநாட்டு மக்களுக்காக நெரூடா புரட்சிகர கீதங்களை இசைத்தான். அதேபோல, தோட்டத் தொழிலாளர்கள் படும் கொடிய துன்பங்களைக் கண்டு மனங் குமுறிப் பாடினார் કી.eી.

21 அந்தனி ஜீவா
மனக் குமுறல்கள்
கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் மாத்திரம் எழுதவில்லை. வாழ்வற்ற வாழ்வு, உழைக்கப் பிறந்தவர்கள், எல்லைப்புறம், பார்வதி, வீடற்றவன், இனிப்பட மாட்டேன் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். பார்வதி, வீடற்றவன், இனிப்பட மாட்டேன் ஆகிய நாவல்கள் இவரால் தமிழில் எழுதப்பட்டவை. "ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதி வருவதால் தமிழில் எழுதுவது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் ஆங்கிலத்தில் எழுதுவதன் மூலம் நமது பிரச்சினைகள் பலரின் கண்களிலும் பளிச்செனப் படுகின்றன என்று சி.வி. அடிக்கடி கூறுவார்.
பேராசிரியர் கைலாசபதி அவர்களைப் பற்றி சி.வி. பெருமையுடன் கூறுவார். மலைநாட்டு எழுத்தாளர்களுக்கு ஒருகால கட்டத்தில் அதாவது, 54-60 களில் தினகரன் மூலம் களம் அமைத்து தந்தவர் கலாநிதி கைலாசபதி. மலையக இலக்கிய வரலாறு எழுதும்பொழுது இதனைக் குறிப்பிட வேண்டும் என்பார்.
இளமைத் துடிப்புடன் பதினேழு வயதில் கவிதை பாடத் தொடங்கிய மக்கள் கவிமணி சி.வி. இப்பொழுது எழுபது வயதை எட்டிப் பிடிக்கப் போகிறார்.
தனது வசந்த காலத்தை கவிஞராகவே ஆரம்பித்த சி.வி. ஆசிரியராக அமர்ந்து, பின்னர் தொழிற்சங்கவாதியாகி, ஏன் தல வாக்கொல்லைப் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மலையகப் பாடல்கள்
மலைநாட்டுப் பாடல்களில் சி.வி.க்குப் பெருவிருப்பம் உண்டு. நாட்டுப் பாடல்களை வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால் மலையக மக்களின் முழுமையான வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம்' என்கிறார் சி.வி. மலையக மக்களின் நூற்றைம்பது ஆண்டுகால வரலாற்றை 'மனித பிண்டம்' த ஹ்யூமன் கார்கோ) என்ற தலைப்பில் எழுதி வந்துள்ளார். இது இன்னும் முற்றுப்

Page 13
இவர்கள் வித்தியாசமானவர்கள் 22
பெறவில்லை. இந்நூல் முற்றுப் பெறுமானால் மலையக மக்களின் உண்மை வரலாற்றைத் தெரிந்துக் கொள்ளலாம். 'மனித பிண்டம்'என்ற இந்த நூலில் இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை இங்கு கூட்டி வந்து முதல் பூரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம்வரை உள்ள உண்மையான வரலாற்றைக் கூறும் சம்பவங்களை சி.வி. விபரமாகச் சித்தரிக்கின்றார். சி.வி.யின் பெயரை நிலைநாட்டும் வரலாற்றுப் பெருங்காவியமாக இந்நூல் திகழும் என்பதில் ஐயமில்லை. சி.வி. பூரண குணமடைந்து வைத்திய விடுதியிலிருந்து வெளியேறியவுடன், இந்நூலை எழுதி முடிக்க வேண்டும்.
மலையக கலை, இலக்கியப் பேரவை 1982ம் ஆண்டு மே மாதம் கொழும்பில் சி.வி.க்கு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் திரு.ஆர். சிவகுருதான் தலைமையில் நடத்திய பாராட்டு விழாவில் பேராசிரியர் கைலாசபதி 'மக்கள் கவிமணி' என்ற பட்டத்தை வழங்கி, சி.வி.யின் எழுத்தும், வாழ்வும் பற்றிய அரியதோர் ஆய்வுரை நிகழ்த்தினார். சி.வி.யின் படைப்புகளில் மனித நேயமே உயர்ந்து நிற்கிறது' என்று குறிப்பிட்டார்.
சத்திமாவாக்கு
ஆம், அவர் கூறியது பொய்யல்ல. சத்தியமான வாக்கு. அதனால் தான் சி.வி. தன் வாழ்க்கைத் துணைவியாக சிங்களப் பெண்மணியை மணந்து, ஒருமைப்பாட்டுக்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறார். இந்தக் கவி பெருமகனுக்கு ஒரேயொரு பெண் வாரிசு. தமிழ் இலக்கியத்திலும், நாட்டுப் பாடல்களிலும் அதிக ஈடுபாடு கொண்டு அதனை நேசிக்கும் நீங்கள் எப்படி சிங்களப் பெண்மணியை மணந்தீர்கள்?' என்று நண்பர் ஒருவர் ,கேட்டபொழுது, "அவர் ஒரு பெண் என்பதால்' என்று. சி.வி.
பதிலளித்தார்.
சி.வி. தொழிற்சங்கப் பணியைக்கூட இலக்கியப் பணி போலவே :எண்ணிச் செயல்படுகிறார். சி.வி, ஒரு மனிதாபிமானியான, மக்கள் கவிமணி. அதனால்தான் வைத்திய

23 、一 அந்தனி ஜீவா
விடுதியில் சிகிச்சை பெறும் சி.வி. என்னைக் காணும் போதெல்லாம், நண்பர்களைப் பற்றியும், கலை இலக்கிய முயற்சிகள் பற்றியும் ஆர்வத்துடன், அக்கறையுடன் விசாரிக்கிறார்.
'இறைவா' இவருக்கு நீண்ட ஆயுளைக் கொடு' என்று நம்பிக்கையுடன் வேண்டுகிறேன்.
2-9-1984
3. கலையரசு சொர்ணலிங்கம்
அன்று ஜோன் டீ சில்வா நாடக அரங்கில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கப் போயிருந்தேன். ஆனால் கலை நிகழ்ச்சியில் என் மனம் ஈடுபடவில்லை. என் நினைவுகள் எங்கோ சிறகடித்துப் பறந்தன.
நாடகத் துறையில் 1880-ம் ஆண்டு ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவ்வாண்டில் இலங்கைக்கு வந்த பம்பாயைச் சேர்ந்த எல்பின்ஸ்டன் நாடகக் கம்பெனியார் பார்ஸி இசை வடிவ நாடகத்தை இங்கு நடத்தியதனால் இந்த மாற்றம் ஏற்பட்டது. இந்த பார்ஸி குழுவினரின் நாடகங்கள் உள்ளூர்ப் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. பார்ஸி நாடகக் குழுவினரது நாடகங்களின் தாக்கமானது டவர் மண்டப சகாப்தத்தை உருவாக்கியது. ஜோன் டீ சில்வாவின் டவர் மண்டப நாடகங்களைச் சிங்கள மக்கள் திரண்டு வந்து பார்த்தார்கள். ஜோன் டீ சில்வா பண்டைப் பெருமைகளை ஒதுக்கிய நகர்ப்புற நவநாகரிக மக்களைத் தமது நாடகப் படைப்புகள் மூலம் தாக்கிக் கொண்டேயிருந்தார். ஜோன் டீ சில்வாவின் நாடகங்க்னி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தின.
s.svg as a 6div6orary
ஜோன் டி சில்வாவுக்கு நிகராக தமிழ் நாடக மேற்ழ்வின்

Page 14
/
இவர்கள் வித்தியாசமானவர்கள் 24
முன்னோடியாக கலையரசு சொர்ணலிங்கம் அவர்களைக் குறிப்பிடலாம். ஈழத்து நவீன நாடகத்தின் முன்னோடி எனவும் கலையரசு அவர்களை குறிப்பிடலாம்.
சிங்கள நாட்க மேடையின் முன்னோடிகளில் ஒருவரான ஜோன் டீ சில்வாவின் பெயரில் நவீன நாடக அரங்கு ஒன்று தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கிறது. காலங்காலமாக அந்த ஒப்பற்ற கலைஞனின் பெயரையும், பெருமையையும் அந்தக் கலைக்கூடம் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.
ஆனால்.தமிழ் நாடக மேடையின் முன்னோடியான கலையரசு அவர்களின் பெயரில் ஒரு கலைக்கூடத்தை அவர் வாழ்ந்த மண்ணில் அமைத்தோமா. என எண்ணிப்பார்க்கிறேன். காலம் முழுவதும் கலைக்காகத் தன்னை அர்ப்பணித்த அந்தக் கலைஞனின் பெயரால் நாம் ஏதாவது செய்தோமா என நினைத்துப் பார்க்கிறேன்.
நினைவுகள் நெஞ்சில் பூத்து புதிய உணர்வுகளைப் புஷ்பிக்கின்றன. கல்லூரி மாணவனாக ஏடு தூக்கிப் பள்ளி செல்லும் பராயத்தில், கலையரசு சொர்ணலிங்கம் அவர்களைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம்.
முதன் முதலில் கலையரசைக் கண்ட அந்தக்கால கட்டத்தின் நினைவுகள் என் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றது.
மக்கள் கலை மன்றம்
ஈழத்து இலக்கியத்தின் தனித்துவமிக்க வளர்ச்சியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அக்கறை கொண்டு செயலாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் அறிஞர் அ.ந. கந்தசாமி, எச்.எம்.பி. மொஹிதீன் போன்றவர்கள் கலைத்துறையின் வளர்ச்சியில் அக்கறை காட்டினார்கள். இதன் விளைவாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஒரு பிரிவாக மக்கள் கலைப் பெருமன்றம் உருவெடுத்தது.

25 அந்தனி ஜீவா
கலையரசு அவர்களைக் கெளரவிக்கும் முகமாக மக்கள் தலைப் பெருமன்றம் வழக்கறிஞர் சார்ள்ஸ் வெதக்கன் அவர்கள் இல்லத்தில் தேநீர் விருந்து அளித்துப் பாராட்டியது. அந்தப் பாராட்டு வைபவத்தில் கலாநிதி கா.சிவத்தம்பி, அமரர் அ.ந.க. எச்.எம்.பி., பிரேம்ஜி, ஈழத்துச் சோமு.பி.ராமநாதன் மற்றும் கலைஞர்கள் நடிகவேள் லடீஸ் வீரமணி, கலைதாசன், பி.எம்.சேகர், ஸ்ரனிஸ்லாஸ் போன்றவர்களுடன் நானும் கலந்து கொண்டேன்.
அந்த தேநீர் விருந்தின்போது, “ ஈழத்துத் தமிழ் நாடகம்" பற்றிய சுவையான கலந்துரையாடலும் நடைபெற்றது. கலையரசு அவர்களின் கண் பார்வையில் குறை ஏற்படும் வரை அவரே, கைப்பட கடிதம், பின்னர், நண்பர்கள் மூலம் கடிதம் எழுதித் தான் கையொப்பமிட்டு அனுப்புவார். அவரின் கடிதங்கள் சிலவற்றை இன்னும் நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
கலையரசு சொர்ணலிங்கம் அவர்களை நவீன நாடக மேடையின் பிதாமகர் எனக் குறிப்பிடுவார்கள். 1911-ம் ஆண்டு இலங்கையில் பம்மல் சம்பந்த முதலியாரின் சென்னை சுகுண விலாஸ் சபையார், கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் நாடகங்களை நடத்தினார்கள். இதனால் புதிய தாக்கங்கள் ஏற்பட்டன.
இதைப்பற்றிக் கலையரசு அவர்கள் தான் எழுதிய "ஈழத்து நாடகமும் நானும்" என்ற நூலில் "இது நடந்த 1911-ம் ஆண்டு ஜூன் 10-ம் திகதி ஈழத்து நாடக உலகில் புதிய சகாப்தம் ஆரம்பமாயிற்று எனலாம். அன்று தான் நாடகம் என்றால் எப்படி அமைக்கப்பட வேண்டும். நடிப்பு என்றால் எவ்வாறு இருக்க வேண்டும். பாட்டுப் பாடுவதன் நோக்கம் என்ன என்பன போன்றவை எல்லாம் புரிந்தன. பார்ஸி கம்பெனியின் தாக்கம் சுகுண விலாஸ் சபையாரின் இரண்டு முறை விஜயம் இது தமிழ் நாடக மேடைக்கு அத்திவாரமிட்டன எனக் கூறலாம்" என்றவாறு கூறுகிறார்.

Page 15
இவர்கள் வித்தியாசமானவர்கள் 26
சலையரசு சொர்ணலிங்கம் பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்களை "இலங்கை சுபேத விலாஸ் சபா" என்ற நாடக மேடையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பங்காற்றினார்.
இவரது நாடகத்தில் வைத்திய கலாநிதிகள், வழக்கறிஞர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றியுள்ளார்கள்.
முதுமையில் நடிப்பு
கலையரசு அவர்கள் 1960-ம் ஆண்டுக்கு பின்னர் கூட முதுமைப் பருவத்தில் நாடகத்தில் நடித்துள்ளார். அதே ஆண்டில் யாழ் பிரதேச கலா மன்றத்தினர் நடத்திய கலை விழாவில் இடம்பெற்ற "தேரோட்டி மகன்" என்ற நாடகத்தில் சகுனியாக நடித்து, பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இவரது 75 ஆவது வயதிலும் நாடகத்தில் நடித்ததை நாம் எண்ணிப்பார்க்கும்பொழுது வியப்பும் பெருமையும் அடையாமல் இருக்க முடியாது. கலையரசு அவர்கள் தமக்குக் கொழும்பில் விவேகாநந்த பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு வைபவத்தில் சகுனியாகவும், கூனியாகவும் நடித்துக் காட்டினார். இரண்டு பாத்திரங்களையும், அந்த பாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்து காட்டியதை நினைத்துப் பார்க்கும் பொழுது அவை என் மனக் கண்ணில் நிழற்படமாக தெரிகின்றன.
ஒருமுறை கலையரசு அவர்கள் நடிப்பைப் பற்றி என்னிடம் குறிப்பிடுகையில், "நடிப்பு எடுத்தாற்போல் எல்லோருக்கும் வரமாட்டாது. ஓர் எழுத்தாளரைப் போலவே நடிகனும் சமுதாயத்தை ஊன்றி நோக்க வேண்டும். ஒவ்வொருவரின் பழக்க வழக்கங்களையும் கூர்ந்து கவனித்து மனதில் பதிய வைத்து அவற்றை நாடகத்தில் பொருத்தமான பாத்திரங்களுள் புகுத்தி, மேடையில் ஏற்றிவிட வேண்டும். இதற்கும் கலையுள்ளமும், முயற்சியும் அத்தியாவசியம்" என்றார்.
கூனரியின் பாத்திரம்
கலையரசு அவர்கள் கூனியின் பாத்திரத்திற்காகக் கையாண்ட

27 அந்தனி ஜீவா
நடிப்பு உத்திகள் கோபம் வரும்போது மூக்குவிரிதல், வாயை ஓயாது சப்புதல், பேசும் விதம், சிரிக்கும் பாவனை, அனைத்தும் பன்னிரண்டு கிழவிகளின் பாவனைகளை நன்றாகக் கவனித்து ஒத்திகை செய்து கற்றவை என அவரே கூறியுள்ளார். இவ்விதமாகவே தான் ஏற்கும் பாத்திரங்களையெல்லாம் மேடையில் சித்தரித்துக் காட்டியுள்ளார்.
"கலையரசு அவர்களது நாடக முயற்சிகள் பட்டினவாசிகளுக்கு நாடகத்தை ஏற்புடையதான ஒரு கலைத்துறை ஆக் ற்று. பிற ஜனரஞ்சகக் காட்சிகள் இல்லாத அக்கால கட்டத்தில் இந்நாடகங்களுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. இவ்வியக்கம் முற்றிலும் மத்தியதர வர்க்கம் நிலைப்பட்டதே. மத்தியதர வர்க்கத்து ஒழுக்க சீலர்களுக்கு இழுக்கு வராவண்ணம் ஆண்களே பெண்வேடம் தாங்கினர். இவர்களது நாடகங்களில் சமூக உணர்வு இருக்கவில்லை. சமூகப் பிரச்சினைகள், தேசியப் பிரச்சினைகள் ஆகியன நாடகங்களில் இடம் பெறவில்லை. இவ்வியக்கத்தில் இவர்கள் தம் ஞான குருவான பம்மல் சம்பந்த முதலியாரை அரசியல் நோக்கில் பின்பற்றினார்கள் எனலாம். ஷேக்ஸ்பியர் நாடகங்களைத் தமிழ்ப்படுத்தித் தமிழில் நடிப்பதில் பெருமையுற்றனரேயன்றி, தமிழில் நாடகத்தைச் சமூக சக்தியாக்க் முனையவில்லை" என்று கலாநிதி கா.சிவத்தம்பி அவர்கள். 'மல்லிகை"யில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காலகட்ட நிலை அவ்வாறு இருந்தது. நாடகத்தில் நடிப்பதைப் படித்த உயர்மட்ட வர்க்கம் இழிவாகக் கருதியது. நாடகத்தில் பங்குபற்றுபவர்களை இழிசாதியினராக ஒதுக்கினர். இந்த நிலையை மாற்றியமைத்த பெருமை கலையரசு சொர்ணலிங்கத்தையே சாரும்.
குருநாதர் நினைவு
கலையரசு அவர்கள் நாடகக் கலைஞர்களைச் சந்தித்தால்
போதும். சின்னவர் பெரியவர் என்ற வேறுபாடில்லாமல் தனது
அனுபவங்களைக் கூறத் தொடங்கிவிடுவார். தனது குருநாதர்,

Page 16
இவர்கள் வித்தியாசமானவர்கள் 28
நாடகமேதை பம்மல் முதலியார் நாடகத்தை எவ்வாறு வளர்த்தார். நாடகம் எப்படி நடத்த வேண்டும், நடிகர்கள் எவ்வாறு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பது பற்றி பல மணித்தியாலங்கள் அறிவுரைபோல அனுபவங்களை எடுத்துக் கூறுவார்.
இளம் கலைஞர்கள் தங்களது நாடகத்திற்குக் கலையரசு அவர்களைத் தலைமை வகிக்க அழைத்தால். பல மைல் தூரத்தில் நடக்கும் நாடகத்திற்குத் தள்ளாத வயதிலும் கார் பிடித்துப் போய் நாடகம் முடியும் வரை இருந்துவிட்டு, பின்னர் நாடகத்தில் நடித்த கலைஞர்களை அழைத்து, அவர்கள் குறை நிறைகளை மனம் புண்படாதவாறு கூறி, அவர்களை உற்சாகப்படுத்தி விட்டுத்தான் திரும்புவார்.
நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஈழத்துத் தமிழ் நாடக மேடையின் பிதாமகனான கலையாக சொர்ணலிங்கத்தின் நினைவாக யாழ்நகரில் ஒரு நாடக அரங்கு உருவாகும் நாள் தான் ஈழத்துக் கலையுலகின் பொன்னாளாகும். இந்தக் கனவு நிறைவேறுமா? என நினைத்துப் பார்க்கிறேன்.
30-9-1984
4. பேராசிரியர் உவைஸ்
இரண்டு வருடங்களுக்கு முன்னால் பாணந்துறை ஜீலான் மகா வித்தியாலத்தில் மாணவர் மன்றக் கூட்டத்தில் சிறப்புரையாற்றும்படி ஆசிரியர் மொயின் சமீன் அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை மறுக்க முடியாமல் மாணவர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு அன்னை இந்திராவைப் பற்றி மாணவ மாணவிகளின் இதயங்களில் பதியக் கூடியவிதமாக உரையாற்றினேன்.
அந்தப் பாடசாலை அதிபரும், ஆசிரியரும், மாணவ மணிகளும் சிநேகயூர்வமான முறையில் என்னைத் தங்களின்

29 அந்தனி ஜீவா
ஒருவராகக் கருதி அன்பு காட்டினார்கள். அன்றைய மாணவ மன்ற நிகழ்ச்சிகளில் மாணவிகளின் விவாத அரங்கும், நாட்டார் பாடல் நிகழ்ச்சியும், நாடகம், சிறுகதை கவிதை அரங்கு போன்றவையும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. அன்றைய விழா ஓர் இலக்கிய விழாவாகவே நடைபெற்றது. இறுதியில் "மீண்டும் வாருங்கள்" என்று அன்புடன் விடை கொடுத்தனர்.
விழாவுக்குப் பின்னர், மொயின் சமீன் ஆசிரியர் இல்லத்தில் பகல் உணவை முடித்துக் கொண்டு நாங்கள் பலதும் பத்தும் பேசினோம். எங்கள் பேச்சு அதிகமாக இலக்கியம் பற்றியதாகவே இருந்தது. பாணந்துறையில் வாழும் பேராசிரியர் உவைஸ் அவர்களைப் பற்றியும் பேசிக்கொண்டோம்.
குழந்தையுள்ளம்
பின்னர், திரும்பி வருகையில் பேராசிரியர் பற்றிய எண்ணங்கள் நினைவில் மலர்ந்தன. சில வாரங்களுக்கு முன்னால் பேராசிரியர் உவைஸ் அவர்களைப் பார்க்க சட்டத்தரணி ஜனாப் எஸ்.எம்.ஹனிபாவுடன் சென்று அவரில்லத்தில் நீண்டநேரம் உரையாடினோம். பேராசிரியர் உவைஸ் அவர்கள் தாம் பதிப்பித்த சில நூல்களைத் தமது அன்பளிப்பாக வழங்கினார்.
சின்னஞ்சிறு குழந்தையைப் போல தாம் எழுதிய கவிதைகளை என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.
பேராசிரியர் உவைஸ் அவர்கள் இலங்கையில் மாத்திரமின்றித் தமிழ்நாட்டிலும் இலக்கியவாதிகள், கல்விமான்கள் மத்தியில் நன்கு அறிமுகமாகியுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழக இஸ்லாமிய பீடத் தலைவராகக் கடமையாற்றியுள்ளார். அடையாறிலுள்ள தமிழாராய்ச்சி நிறுவனம் இவரியற்றிய "இஸ்லாம் வளர்த்த தமிழ்" என்ற நூலை வெளியிட்டுள்ளது.
முஸ்லீம்கள் தமிழுக்குச் செய்த தொண்டுகளைப் பற்றி முதன் முதல் இலங்கையில் மாத்திரமின்றி தமிழ் கூறும் நல்லுலகுக்கும் உணர்த்திய பெருமை நமது பேராசிரியர் உவைஸ் அவர்களையே சாரும்.

Page 17
இவர்கள் வித்தியாசமானவர்கள் SO
இலக்கிய வானிலே ஓர் நிலா எழுந்து வருகிறதே உலா, எழுக வானிடையே பருதியென
ஏறு நடை வீறு பெற தமிழ் முனிவா தமிழிற்காய் பிறந்து தமிழிற்காய் வளர்ந்து தமிழிற்காய் வாழ்ந்து வரும் தகையீர் நின் நாள் முதல் தலைவரை தமிழுக்கு குருதி பாய்ச்சிறதே
இவ்வாறு பேராசிரியர்களைப் பற்றி மன்னாரைச் சேர்ந்த கலைவாதி கலீல் புகழாரம் சூட்டுகின்றார். அதே கவிதை வரிசையில், “காமராசர் கலைகூடத்தில் கண்களிலே ஒன்றாக, சேய் நாட்டைச் சேர்ந்த இந்தச் சிந்தனையாளர் உள்ளார். சேய்க்கே பெருமையெல்லாம் சேரும்" எனக் குறிப்பிடுகின்றார்.
வித்தி பாராட்டு
"கலாநிதி உவைஸ் பல்கலைக் கழகத்திற்கு வரும்போது சீறாப்புராணம் ஒரு தமிழ் காப்பியம் என்பது அவருக்குத் தெரியாது. அப்படியிருந்தும் அவரது அயராத முயற்சியின் பயனாக அவர் பல உண்மைகளை எடுத்துக் காட்ட முடிந்தது. எண்ணிறைந்த இஸ்லாமியப் புலவர்கள் மிகச் சிறந்த தமிழ் நூல்கள் பலவற்றை இயற்றியிருக்கின்றார்கள் என்பதும், நூல் அமைப்பு முறையிலும், நடையிலும், போக்கிலும் இந்நூல்களுக்கும் பேர்பெற்ற தமிழ் இலக்கியங்களுக்கும் வேறுபாடு அதிகம் இல்லை என்பதும் இந்நூல்களுக்குத் தலைவராக அமைவோர் வேறுவேறாக இருப்பினும் தமிழ் மரபுக்கு ஒத்தனவாக இவை அமைந்திருக்கின்றன என்பதும், கற்பனையாற்றலிலும், பொருட்சிறப்பிலும், சொல்லழகிலும், கவியமைப்பிலும் இஸ்லாமிய புலவர்களின் நூல்களும் அதி சிறப்புடன் விளங்குகின்றன என்பது மவர் செய்த ஆராய்ச்சியின் மூலம் நிலைநாட்டப்பட்டுள்ளன" என யாழ்

3. அந்தனி ஜீவா
பல்கலைக்கழக துணைவேந்தர் திரு.சு.வித்தியானந்தன் அவர்கள் வியந்து பாராட்டுகின்றார்.
பேராசிரியர் உவைஸ் அவர்கள் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பட்டதாரியாகி தற்காலிக விரிவுரையாளராக முதன்முதலில் தொழில்புரியத் தொடங்கி, பின்னர் ஸாஹிரா கல்லூரி ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். பரீட்சைத் திணைக்கள மொழிப் பெயர்ப்பாளராக சிறிது காலம் கடமையாற்றிய பின்னர், இலங்கை வணிகர் மன்ற மொழிப்பெயர்ப்புச் சேவையின் பிரதம ஆசிரியராகவும், தொடர்ந்து பன்னிரண்டு வருடகாலம் தொழில் பார்த்தார். இதே காலத்தில் வித்தியோதய பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையின் தலைவராக நியமனம் பெற்று பதினைந்து வருட காலம் அங்கும் கடமையாற்றினார். அதன் பின்னர் சிறிது காலம் முழுநேர வேலையாக ஆராய்ச்சிகள் செய்து, 1976-ம் ஆண்டு இலங்கை பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.
ஆராய்ச்சி ஆர்வம்
இருநூற்றுக்கும் அதிகமான இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் இருக்கின்றன என எடுத்துக்காட்டிய பெருமை நமது பேராசிரியர் உவைஸ் அவர்களையே சாரும். சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் இரண்டு இஸ்லாமிய நூல்களைப் பற்றி உவைஸ் அவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் உவைஸ் அவர்களால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டுகளைப் பற்றியே அவர் தொடர்ந்து ஆராய்ந்தார். இஸ்லாமிய அடிப்படையில் இருநூற்றுக்கும் அதிகமான தமிழ் நூல்களை ஒன்று சேர்ப்பதில் வெற்றி பெற்றார். இதனைத் தமது எம்.ஏ. பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரையாக சமர்ப்பித்து முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்
கொண்டார்.
இவரது ஆராய்ச்சிக் கட்டுரையை கல்ஹின்னை தமிழ்மன்றம் நூலாக வெளியிட்டது. இந்த நூல் வெளிவந்ததன் பின்னரே

Page 18
இவர்கள் வித்தியாசமானவர்கள் 32
இஸ்லாமிய தமிழ் இலக்கியம் ஒரு பிரிவு தமிழ் மொழியின் ஓர் அம்சமாக உள்ளது என்பதைப் பலரும் அறியத் தலைப்பட்டனர்.
இதன் பின்னர் பேராசிரியர் உவைஸ் "முஸ்லீம் தமிழ்க் காப்பியங்கள்" என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்களையும், வசன நூல்களையும் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேடிப் பெறுவதில் வெற்றி பெற்றார். இந்த ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்தே கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார்.
கலாநிதி பட்டம்
பேராசிரியர் உவைஸ் கலாநிதிப் பட்டம் பெற்றதைப் பாராட்டி, கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் விழா நடைபெற்றது. இந்தப் பாராட்டு விழாவில் அவர் எழுதிய தமிழ், சிங்கள, ஆங்கில நூல்கள் வெளியிடப்பட்டன. "இஸ்லாமும் இன்பத்தமிழும்" என்ற நூலைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அறிமுகம் செய்து வைத்தார். "தித்திக்கும் திருமுறையின்" சிங்கள மொழிப்பெயர்ப்பைக் கலாசார அமைப்பைச் சேர்ந்த திரு.கே.ஜி அமரதாச அறிமுகம் செய்தார். "முஸ்லீம் தமிழ் காப்பியங்கள்' என்ற ஆங்கில நூலைத் துணைவேந்தர் சு.வித்தியானந்தன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த பாராட்டு விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனாப் எம்.எம்.இஸ்மாயில் தலைமை வகித்தார். பேராசிரியர் தெ.பெ.மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து பிரபல கல்விமான்களும், எழுத்தாளர்களும் வந்து இவ்விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். மறுநாள் பேராசிரியர் உவைஸ் அவர்கள் பிறந்த ஊரான பாணந்துறையில் அவர் ஆரம்பக் கல்வி கற்ற ஹேனமுல்லையிலுள்ள ஜீலான் மகாவித்தியாலயத்தில் பாராட்டு வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
O7-04-1985.

அந்தனி ஜீவா
5. அறிஞர். அ.ந. கந்தசாமி
கொழும்பில் என்னை ஓர் இளைஞர் தேடி வந்தார். “கலாநிதி சபா" ஜெயராசா உங்களிடம் அனுப்பினார். இலக்கிய முன்னோடி அ.ந. கந்தசாமியைப் பற்றிய குறிப்புகளைத் தந்துதவ வேண்டும், அ.ந. கந்தசாமியைப் பற்றிய பல்கலைக்கழக ஆய்வுக்கு குறிப்புகள் தேவை என்றார்.
அந்தப் பல்கலைக் கழக மாணவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினகரன் வார மஞ்சரியில் சில வாரங்கள் தொடராக எழுதிய அறிஞர் அ.ந. கந்தசாமியைப் பற்றிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்ற கட்டுரையையும், மற்றும் அ.ந.க.வை பற்றி எழுதிய மற்றும் குறிப்புகளையும் கொடுத்து அனுப்பினேன்.
நினைவு நாள்
அதற்குச் சில தினங்களுக்கு பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிஞர் அ.ந. கந்தசாமியின் நெருக்கமான நண்பரான தான் தோன்றிக் கவிராயர் திரு.சில்லையூர் செல்வராசன் அவர்களைச் சந்தித்தேன். பெப்ரவரி மாதம் அ.ந.க.வின் நினைவு நாள் வருகிறது என நினைவூட்டினேன்.
நானும் சில்லையூரும் அ.ந.க.வைப் பற்றிய பழைய நினைவுகளை இரைமீட்டிப் பார்த்தோம். பின்னர், வீடு திரும்பிய பின்னர் அறிஞர் அ.ந.க.வைப் பற்றிய நினைவுகள் என் நெஞ்சில் திரைப்படம் போல் விரிந்தன.
நான் பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் அறிஞர் அ.ந.க.வைச் சந்தித்தேன். அவரை எனக்கு யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது ஞாபகமில்லை. அவர் அப்பொழுது தகவல் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்தக்கால கட்டங்களில் கவிஞர் சில்லையூர் செல்வராசன் ஷெல் கம்பெனியின் விளம்பரப் பிரிவில் உயர் உத்தியோகம்

Page 19
இவர்கள் வித்தியாசமானவர்கள் 34
வகித்தார். சில்லையூர் செல்வராஜனை எனக்கு அ.ந.க. தான் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அறிஞர் அ.ந.கந்தசாமியினது நட்பின் காரணமாக இலக்கிய
உலகின் ஒரு சகாப்தத்தின் பிரதிநிதிகளான படைப்பாளிகளையும்
விமர்சகர்களையும் கல்விமான்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது.
பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி, பிரேம்ஜி ஞானசுந்தரம், செ. கணேசலிங்கன், கே.டானியல், எச்.எம்.பி. முஹைதீன், என்.கே.ரகுநாதன், இளங்கீரன், டொமினிக் ஜீவா, ஈழத்துச் சோமு போன்ற அரிய மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் அவர்களோடு பழகவும் உறவாடவும் சந்தர்ப்பமும் கிட்டின. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கூட்டங்களில் அழைப்பில்லாமல் ஆஜராகிவிடுவேன்.
இதற்கெல்லாம் காரணம் அறிஞர் அ.ந.க. இலக்கியக் கூட்டங்கள் பற்றி எனக்கு முன்கூட்டியே தகவல் தந்து விடுவார். பெரிய படைப்பாளிகள் எல்லாரும் என்னை ஒரு சீடனாக நடத்தாமல் சக தோழனைப் போல நடத்தினார்கள். (5óiból 62/Júúly
அப்பொழுது பேராசிரியர் கா.சிவத்தம்பி வெள்ளவத்தையில் ருத்ரா மாவத்தையில் தங்கியிருந்தார். அங்கதச் சுவையுடன் பேசுவதில் வல்லவர். அவரைச் சந்தித்து உரையாடுவதே ஒரு சுகானுபவமிக் இருக்கும். முன்னோடிகள்
அறிஞர் அ.ந.க. எனக்கு உலக இலக்கியங்களையும், தலை சிறந்த படைப்பாளிகளைப் பற்றியும் அடிக்கடி எடுத்துக் கூறுவார். ஓர் எழுத்தாளன் எப்படி எழுத வேண்டும், அவன் எதற்காக எழுத வேண்டும், இதற்குத் தனக்கு முன்னோடியாக
இருந்தவர்களைப் பற்றி ஒருமுறை அறிஞர் அ.ந.க. குறிப்பிட்டது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றது.

35 அந்தனி ஜீவா
"பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூஸோ, வால் டயர் தொடக்கம், மாக்ஸிம் கார்க்கி, எஹ்ரென் பேர்க்' வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களைப் பற்றியும் இந்தச் செய்தியை எனக்குக் கூறினார். பேர்னாட்ஷாவின் எழுத்துக்களும், பேட்ரன்ட் ரஸல் எழுத்துக்களும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சனைகளுக்குத் தீர்ப்புக் காணும் பணியை அலட்சியம் செய்து விடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தில் உடனடிப் பிரச்சனைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை. உலகப் பண்பாடிய பாரதிதாசனும், சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாலான சேவைகளைச் செய்திருக்கிறார். இவ்வாறு தன்னை நெறிப்படுத்திய எழுத்தாளர்களைப் பற்றி அறிஞர் அ.ந. கந்தசாமி பெருமையுடன் குறிப்பிட்டார்.
மகாகவி பாரதியைப் பற்றி அ.ந. கந்தசாமி எப்பொழுதும் பெருமையோடு குறிப்பிடுவார்.
AVIII45 LD/gó”
un T3 முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சனைகளைப் பாடிய அதே வாயால் கண்ணன் என் காதலனையும் பாடினார்.
இதற்கு ஒரு விளக்கத்தையும் அ.ந.க. கூறினார். தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால், வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா?
'கத்தரித்தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகை பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ, அதன் கீழ் சென்று உட்காருவதில்லையா? 'எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும், காய்கறிகளும், கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும்.

Page 20
இவர்கள் வித்தியாசமானவர்கள் 36
'ரோசா மலர்களை மன நிறைவுக்காக நடும் தோட்டக்காரனை ரோசா மலர் நடுபவன் என்று சொல்லமாட்டார்கள். "தோட்டக்காரன்' என்று தான் அழைக்கப்படுவான்'
'பிள்ளையைத் தூங்க வைக்கையில் தாலாட்டு பாடுவோம். ஏற்றம் மிறைக் கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சி கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?"
இவ்வாறு சந்திக்கும் பொழுதெல்லாம் அறிஞர் அ.ந.க. பல அரிய கருத்துக்களை எனக்கு எடுத்துக் கூறுவார்.
பல நண்பர்கள்
அறிஞர் அ.ந.கந்தசாமிக்குப் பல்வேறு மாவட்டங்களில் நண்பர்கள் இருந்தார்கள். அறிவு ஜீவி முதல் சாமானிய மனிதன் வரை அவரை மனம் விட்டு நேசித்தனர்.
அறிஞர் அ.ந.க. பொது உடமைவாதியாக இருந்தாலும், பெரியார் ஈ.வே.ரா. மீது பெரும் பக்தி வைத்திருந்தார். அவரைப் பற்றி மணிக்கணக்கில் பேசுவார். பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டிருந்தவர்கள் பலர் அ.ந.க.வுடன் தோழமை பூண்டிருந்தனர்.
கம்யூனிஸ்டான திரு.பீட்டர் கெனமனும், திராவிட முன்னேற்றக் கழகத்தவரான திரு.இளஞ்செழியனும், சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த திரு.நாகலிங்கமும், அன்பு மார்க்கத்தைச் சேர்ந்த பூபதிதாசரும், கலாபிரியரான திரு.பாலச்சந்திரனும் அவருக்கு நண்பர்களாக இருந்ததில் வியப்பில்லையல்லவா?
நாடகத்துறையில் நடிப்பில் தலைசிறந்து விளங்கிய நடிகவேள் லடீஸ் வீரமணியின் திறமையை உணர்ந்த அறிஞர் அ.ந.க. ஒருவரே; அவருக்கு அன்பு காட்டியது மாத்திரமின்றி அவரது திறமைகளைப் பற்றிப் பலரிடம் எடுத்துச் சொல்லியும் அவரைப்

37 அந்தனி ஜீவா
படித்தவர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் புகழுக்குரியவராக்கினார்.
அதனால் நான் நடிகவேள் லடீஸ் வீரமணியும் அவரது மனைவியும் அறிஞர் அ.ந.கந்தசாமி மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது அவரருகில் இருந்து பணிவிடைகளைச் செய்தார்.
நல்ல வழிகாட்டி
என்னுடைய இன்றைய கலை, இலக்கிய முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாக, முன்னோடியாக நின்று உதவியவர் அறிஞர் அ.ந.க. என்பது சாத்தியமான உண்மையாகும்.
இன்று நான் நாடக உலகில் பிரகாசிப்பதற்குக் காரணம் அவரது அறிவுரைகளே. உலகப்புகழ் பெற்ற நாடகாசிரியர்களான இப்ஸெனையும், பெக்சாட்டையும், பேர்டோல் பிரட்ஜையும் பற்றி எனக்குச் சொல்லித் தந்தவர் அவரே.
தமிழ் நாடகமேடை நலிவுற்றுக் கிடக்கிறது. அதனால் நாடகத்துறையில் அதிக அக்கரை காட்ட வேண்டும் என எனக்கு ஊக்கமூட்டியவர் அறிஞர் அ.ந.கந்தசாமி எனக்கு மாத்திரமல்ல, இன்னும் பலருக்கு வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் இருந்துள்ளார். அந.க.வைப் பற்றிய நினைவுகள் இன்றும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன.
அறிஞர் அ.ந.க. மறைந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரின் நினைவு நிலைத்திருக்க ஏதும் செய்தோமா என்றால் பூஜ்யம் தான்.
இனிவரும் நாட்களிலாவது அவரைப் பற்றிய ஒரு நூலையாவது வெளியிட வேண்டும் என்று எனக்குள் கங்கணம் கட்டிக் கொள்கிறேன்.
02.02.1986

Page 21
இவர்கள் வித்தியாசமானவர்கள் 38
6. மார்ட்டின் விக்ரமசிங்க
"எழுதுகிறவன் கலைஞர்களில் சிறப்பானவன்' என்று ஒரு தடவை குறிப்பிட்டார் தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளனான ஜெயகாந்தன்.
மேலும், அதுபற்றி அவர் விளக்கம் தருகையில்,
'ஒரு கலைஞன் என்பவன் சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களை போல நலிந்து கிடப்பவன். மாறாத சமூகத்தில் பெண்ணை விட பரிதாபத்திற்குரிய ஜந்து கிடையாது, மாறிய சமூகத்தில் எழுத்தாளனை விட மாபெரும் சக்தியும் இல்லை என்கிற கருத்து இந்த நூற்றாண்டில் மனித ஜாதிக்கு வந்திருக்கிறது. அதனால்தான் எழுத்தாளனை அதுவும் எழுதுகிற படைப்பாளியை கலைஞர்களில் சிறப்பானவன்' என்று நான் கண்டுகொண்டேன்.
"பிகாஸோவின் ஓவியங்களை விடவும், பீதோவனின் இசைக் கோலங்களை விடவும், ஹஸ்யூகோவின் ஒரு வாக்கியம், கதேயின் ஒரு கடைச்சொல் உலக மக்களை எல்லாம் ஆட்டிப் படைத்து விடும். எழுத்தாளன் படைக்கும் இலக்கியம் காலா காலத்துக்கும் நிலைக்கும்.
இவ்வாறு எழுத்தாளன் ஜெயகாந்தன் சொன்ன சத்தியமான வார்த்தைகளை, நேரடியாக பார்த்து கேட்டு அனுபவிக்கும் சந்தர்ப்பம் கடந்த வாரம் கிடைத்தது.
சிங்கள இலக்கியத்தின் சிகரம் என வர்ணிக்கப்பட்டு மார்டின் விக்ரமசிங்கவின் நூறாவது ஜனன தினமும் நூற்றாண்டு விழாவும், கடந்த திங்கட்கிழமை (29-05-89) மாலை நவரங்கஹலை மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
எழுத்தாளர் மார்டின் விக்ரமசிங்கா உயிரோடில்லாவிட்டால், சிங்கள இலக்கியத் துறையில் அவர் எத்தகைய தாகத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதையும் அவரின் அருமை

39 அந்தனி ஜீவா
பெருமைகளையும், அவருடைய அருமை துணைவியார் நேரில் வந்து கேட்கும் பாக்கியம் கிடைத்தது.
சிங்கள இலக்கிய வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் மார்டின் விக்ரமசிங்க என்ற படைப் பாளி எத்தகைய பணியை செய்துள்ளார் என்பதனை நினைத்துப் பார்க்கிறேன்.
நினைவுகள் சிறகடிக்கின்றன.
எழுத்தாளர் மார்டின் விக்ரமசிங்கவின் முதலாவது "லீலா என்ற நாவல் அவரது 22 வது வயதில் பிரசுரமாகியுள்ளது. அவரது சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம் என்று நாற்பது நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.
எழுத்தாளர் மார்டின் விக்ரமசிங்கனின் எழுத்துக்கள் சிறப்பாகத் திகழ்வதற்கு அவர் பத்திரிகையாளராக பல ஆண்டுகள் பணியாற்றியமை காரணம் என்று கலா விமர்சகர்கள் கூறினார்கள். அதிலும் உண்மை இல்லாமல் இல்லை.
அவர் 1918ம் ஆண்டு லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினமின சிங்கள பத்திரிகையில் பணியாற்றத் தொடங்கியுள்ளார். 1925 ஆம் ஆண்டு முதல் கால் நூற்றாண்டு காலம் பத்திரிகையாளராகப் பணியாற்றியுள்ளார். அப்பொழுது தினசரி ஆசிரியத்தலையங்கம், கட்டுரைகள் எழுதி வந்தார்.
இதுவே, மார்டின் விக்ரமசிங்காவின் எழுத்தாற்றலுக்கு உறுதுணையாக அமைந்தது. அக்காலத்தில் பத்திரிகையாளர்கள் கையாண்ட எழுத்து நடையிலிருந்து இவரது நடை வித்தியாசப்பட்டது. இவருக்கு முன்பு நாவல்கள் எழுதிய பியதாச சிரிசேன, டப்ளியூ.ஏ. சில்வா போன்றவர்களில் வழமையான நடையிலிருந்து மார்ட்டின் விக்ரமசிங்க வின் நடை வித்தியாசப்பட்டது.
இதனையே பலரும் பின்பற்றத் தொடங்கினார்கள்.
இவர் வெறும் படைப்பாளியாக மட்டும் இருக்காமல் பழம்பெரும் சிங்கள இலக்கியங்களைப் பற்றி ஆராய்ந்தார்.

Page 22
இவர்கள் வித்தியாசமானவர்கள் 40
உண்மையாக கலாசாரம் என்பது நகரத்தை அடியொற்றியது அல்ல, அது கிராமத்தில் தான் தோன்றுகிறது என்பதைக் கண்டறிந்தார். அதனால் அவரது படைப்புகளில் கிராமிய மணமே அதிகம் வீசியது.
அதனால்தான் இவர் படைத்த கம்பெரலிய' என்ற நாவல் இவர் வாழ்ந்த காலப் பகுதியை நமக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நாவலில் கிராம மக்களின் வாழ்க்கை மண்வாசனையுடன் உயிர்த்துடிப்பாக காணப்படுகிறது.
இந்நாடு அந்நியர் ஆதிக்கத்தில் இருந்ததால் அதனால் கிராமப் புறங்களில் ஏற்பட்ட மாற்றங்களை இந்நாவல் சித்திரிக்கின்றது.
இந்நாவலைப் பற்றி நூலாசிரியர் மார்ட்டின் விக்கிரமசிங்க குறிப்பிடுகையில் "இக்கதைக்கு பின்னணியாக அமைந்த பிரதேசம் காலியிலிருந்து ஏறக்குறைய பத்து மைல்களுக்கு அப்பாலுள்ள காலி, மாத்தறை வீதியில் சிறிது தூரத்தில் காணப்படும் சிறு கிராமம். அக்கிராமம் இங்கு காட்டப்படுவது இன்று காணப்படும் தோற்றத்திலில்லை. இன்றைக்கு ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த உருவத்திலேயாம்.
அக்காலத்தில் கிராமத்தில் வாழ்ந்தவர்களின் ஒழுக்கம், தொழில்கள் அவற்றிற்கு ஆதாரமாயிருந்த பழக்க வழக்கங்கள் விருப்பு வெறுப்புகள், சிந்தனைகள், ஒழுக்கங்கள் என்பன மாறும் முறையினைக் காட்டும் முகமாக நான் செய்த முயற்சி சற்று நிறைவேறுவதற்குக் காரணம், நான் இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அக்கிராமத்தைவிட்டு நகரத்தில் குடியேறியமையே என உணர்கிறேன்.
இவ்வாறு 'கம்பெரலிய நாவலின் முன்னுரையில் 1944-ல் மார்ட்டின் விக்கிரமசிங்க குறிப்பிடுவது எத்தகைய உண்மை. 'கம் பெரலிய நாவலைப் படிக்க முடியாதவர்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் கம்பெரலிய தொலைக்காட்சி நாடகத்தை பார்ப்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

41 அந்தனி ஜீவா
இது போன்ற 'ம டெல் தூவா' என்ற நாவல் இளைய தலைமுறையினரைப் பற்றியும், கிராமிய பின்னணியையும் இந்த நாவல் சுட்டி நிற்கின்றது.
மார்ட்டின் விக்கிரமசிங்க நாவல், சிறுகதை போன்ற படைப்பிலக்கியங்களில் மாத்திரமின்றி, சிங்கள கலாசார பண்பாட்டியல் ஆய்வாளராகவும், இலக்கிய விமர்சகராகவும், பல பொதுவிடங்களை விஞ்ஞான ரீதியாக விமர்சிப்பவராகவும் திகழ்ந்துள்ளார்.
சிங்கள இலக்கியத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய கீர்த்தி இவரையே சாரும். இவரின் சிறுகதைத் தொகுதி ஒன்று 1958ல் ருஷ்ய மொழியில் வெளியாயிற்று. அதைத் தொடர்ந்து இவரின் ஏனைய படைப்புகள் கம்பெரலிய, கலியுகய மடெல் துவா என்பன வெளியாயிற்று. இவரது மடெல்துவா நாவல் சீன, பல்கேரிய, ஆங்கில, ரூமேனிய மொழிகளில் வெளிவந்துள்ளன.
மார்ட்டின் விக்கிரமசிங்க தனது சுயசரிதையை "பிறந்தநாள் முதல்" (உபன்தாசிட) என்ற தலைப்பில் மிக அற்புதமாக எழுதியுள்ளார்.
புராதன பெளத்த இலக்கியங்களைப் பற்றிய ஆழ்ந்த ஈடுபாடும், அறிவும் மார்ட்டின் விக்ரமசிங்கவுக்கு இருந்தது. அதனை ஆராய்ந்து பல கட்டுரைகளை சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவரது ஆழ்ந்த அறிவு வெளிப்படும் வண்ணம் ஒன்பது ஆங்கில நூல்கள் வெளிவந்துள்ளன.
சிங்கள இலக்கியத்தின் சிகரமாகத் திகழும் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் நூறாவது நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம்வரை ஓராண்டுக்கு கொண்டாடுவதற்கு அவரது நூற்றாண்டு விழாக்குழு ஒழுங்கு செய்துள்ளது.
சகோதர சிங்கள மொழியில் தலைசிறந்த படைப்பாளியும் சிந்தனையாளருமான மார்ட்டின் விக்கிரமசிங்காவின்

Page 23
இவர்கள் வித்தியாசமானவர்கள் 42
படைப்புக்களை தமிழில் அறிமுகப்படுத்துவது நமது கடமையாகும்.
O4O6.98
7. கே. டானியல்
பேனாவைக் கையில் வைத்துக்கொண்டு அந்தப் பேனாவுக்கு தீனி போட, சமூகத்தை மேலாக நோட்டமிட்டுத் தசை உணர்வுகளைப் பேனா வசப்படுத்தி எழுதுவது ஒரு வகை.
சமூகத்தில் நடமாடும் போது தற்செயலாக அகப்படும் ஒரு சம்பவத்தை வெறி மாடொன்றைப் பிடிப்பது போன்று பாய்ந்து பிடித்து ஒரு கைக்குள் அடக்கிக் கொண்டு, கால்களை இடறி நிலத்தைத் தடவி, பக்கத்தே கிடக்கும் கயிற்றினை எடுத்து அந்த வெறி மாட்டினைக் கட்டிப் போடுவது போன்ற விதத்தில் கையிலிருக்கும் கதையும், கதைப் பின்னலும் மனதிலிருந்து கலைந்து போய்விடுமோ என்ற ஏக்கத்தில் பேனாவை அவசரத்துடனும், ஆவேசத்துடனும் நகர்த்தி செல்வது இன்னொரு வகை.
சமூகத்தோடு சேர்ந்து மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து, அவர்களைப் படித்து அவர்களிடமிருந்து படித்தவைகளை இலக்கிய ஆளுகைக்குட்படுத்தித் தங்கள் சுமைகளைத் தாங்களாகவே எடுத்தெறியும் போதத்தை அவர்களுக்கு அளித்து இயல்பான முறையில் அவர்களை நகர்த்திச் செல்ல நிதானமாகப் பேனாவை ஓடவிடல் வேறொரு வகை. இப்படி எழுத்துக்களை மூன்று வகையாகப் பிரிந்துக் கூறுபவர் வேறு யாருமல்ல. நம்மவர்களிடையே மாத்திரமின்றித் தமிழகத்தில் தரமான வாசகர்கள், நல்ல படைப்பாளிகள் மத்தியிலும் நன்கு அறிமுகமாகியுள்ள கே.டானியல் தான்.
அவர் கூறும் மூன்று வகையான எழுத்துக்களில், அவருடையது எந்த வகையான எழுத்துக்கள் என்பதை, அவருடைய எழுத்துக்களைப் படித்த வாசகர்களுக்குப் புரியும்.

4. அந்தனி ஜீவா
'மக்களிடம் கற்பது, மக்களுக்கு கற்பிப்பது' என்ற கொள்கையில் உறுதியானவர் கே டேனியல். அண்மையில் இவருடைய 'பூமரங்கள்' என்ற குறுநாவல் ஒன்றைப் படித்தபொழுது, இவற்றைப் பற்றிய நினைவுகள் என் நெஞ்சில் பூத்தன.
யாழ்-இளம் எழுத்தாளர் சங்க மாநாடு யாழ்-நகரில் அறுபதுகளில் நடைபெற்ற பொழுது, முதன் முறையாக யாழ்ப்பாண மண்ணில் காலடிச் சுவழளைப் பதித்த பொழுது தான் கே.டானியல் என்ற எழுத்தாரை முதன் முதலாகச் சந்தித்தேன், உரையாடினேன்.
பின்னர் கவிஞர் பசுபதியுடன் ந்தித்து உரையாடியதாக ஞாபகம். அதன் பின்னர் கொழும்பில் எழுத்தாளரும், பத்திரிகையாளரும், அரசியல்வாதியான எச்.எம்.பி. முஹைதீன் இல்லத்தில் ஓரிரு தடவைகள் சந்திழ உரையாடியுள்ளேன்.
கவிஞர் ஈழவாணனின் 'அக்கிஸ் பூக்கள் அறிமுகவிழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொழுது கவிஞருக்குப் பதிலாகவும், பதிப்பாளர்களின் சார்பிழம் அந்த விழாவில் கலந்து கொண்ட போது, அந்த நூலைப் பற்றிக் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்த சமயம்,டோனியல் அந்த நூலைப் பற்றிச் சில அபிப்பிராயங்க;ை தனக்கே உரித்தான பார்வையில் சொன்னார். அந்த கருதுக்களினால் கேடானியல் மீது எனக்கோர் அபிமானம் ஏற்பட்டி
மறுநாள் கவிஞர் சில்லையூர் rெராசன் இல்லத்தில் பகல் விருந்தின்போது நானும் புதுவை ரத்தினதுரையும், கே. டானியேலும் இலக்கியம் சம்பந்தமாaருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
அப்போது சாதி ஒழிப்பு, மற்றும் உழைக்கும் மக்களின் போராட்டங்களில் எல்லாம் முன்னணிதளபதியும் ஆவேசமிக்க போராளியுமான கே. டானியலின் குழந்தை சுபாவத்தைக் கண்டேன்.

Page 24
இவர்கள் வித்தியாசமானவர்கள் 44
இத்தகைய அமைதியான உருவமா ஆவேசமான போராட்டவாதியாகத் திகழ்ந்தார் என நினைத்துப் பார்க்கிறேன். எழுத்தாளர் கே.டானியல் துடிக்கும் இளமைப் பருவமான 16 வயதிலேயே பொது வாழ்வோடு தன்னைப் பிணைத்துக் கொண்டார். யாழ்ப்பாண மண்ணுடன் இரண்டறக் கலந்திருந்த சாதிவெறித் தாக்குதலுக்கு இலக்காகி சாதி, அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும்பி, அந்தப் போராட்டங்களில் எல்லாம் முன்னணிப் போராளியாக முகங்கொடுத்துள்ளார்.
அதனால் டானியலின் எழுத்துக்கள் சாதியைத் தொடாமல் இருக்காது. அதனை விட்டு விட்டு அவரால் எழுத முடியாது என்று சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். இதனைப் பற்றி அவரே விளக்கமாகக் கூறுகிறார்.
"சாதியைத் தொடாமல் என்னால் சிருஷ்டிக்கப்பட்டவர்களைச் சரியாக இவர்கள் படிக்கவில்லை என்றுதான் அர்த்தம்'. "போராளிகள் காத்திருக்கின்றனர்' என்ற நாவலைப் படிக்காத அத்தகையோர் தினகரனில் ஞாயிறுதோறும் தொடராக வெளிவந்த 'முருங்கையிலைக் கஞ்சி' என்ற யாழ்ப்பாண விவசாய மண்ணின் கதையைப் படித்துப் பார்க்கட்டும்.
இவர்கள் சொல்வதுபோல, நான் எழுதும் சாதிப்பிரச்சனையை ஒப்புக்கொள்வதற்கு ஏன் மறுக்கின்றனர்? எதை இழந்தாலும் சாதி கெளரவத்தை இழக்க முடியாதிருக்கும் தமிழர் வாழ்க்கையை இவர்கள் தமிழர் பிரச்சனையாகக் கருதவில்லையா? தெரிந்து கொண்டு தான் என் மீது பழிசுமத்துகிறார்கள் என்றால் அது பெரும் அயோக்கியத்தனமாகும். மனதார இவர்கள் இந்த அயோக்கியத்தனததை விடும் வரை யாருமே தமிழர்களின் சரியான பிரச்சனைகளை உணர்த்தப்பட்டவர்களாக மாட்டார்கள்.
வடமாகாணத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதில் டானியல் முன்னணியில் நிற்பவர். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் எல்லாக் கிராமங்களிலும் இவரது காலடிச் சுவடுகள் பதிந்திருக்கும். தானும் ஒரு சலவைத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவன் என்பதை இவர் மறப்பதில்லை.

45 அந்தனி ஜீவா
ஆரம்ப காலங்களில் இவர் பல தொழில்களை பார்த்துள்ளார். சலவைத் தொழிலாளி, கள்ளுக்கொட்டில், கடல் தொழில், கூலித் தொழில், கால்நடை வளர்ப்பு, தீந்தை பூசல், குளிர்பான வியாபாரம், பழைய இரும்பு வியாபாரம், வெல்டிங், கடைச்சல் ஆகிய பல்வேறு தொழில்களை பார்த்துள்ளார். இதன் மூலமே இவர் பலவித படிப்புக் களைக் கற்றுள்ளார். இத்தனை தொழில்களைப் பார்த்ததால் தானோ என்னவோ இவரது படைப்புகள் சிறப்புடையதாகத் திகழ்கின்றன.
ஈழத்து சஞ்சிகைகளில் மாத்திரமின்றித் தமிழகத்துச் சஞ்சிகைகளான சரஸ்வதி, சாந்தி, தாமரை, ஜனசக்தி ஆகியவற்றிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. முதலாவது ‘டானியல் சிறுகதைகள்' இரண்டாவது 'உலகங்கள் வெல்லப்படுகின்றன’ என்ற சிறுகதை தொகுதி ; இந்தத் தொகுதிக்கு சாகித்திய மண்டல பரிசு கிடைத்துள்ளது.
எழுத்தாளர் டானியல் எழுதிய பஞ்சமர், போராளிகள் காத்திருக்கின்றன, கோவிந்தன், பூமரங்கள் ஆகிய நாவல்கள் வெளிவந்துள்ளன. பஞ்சமர் 1973-ம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளது. இவரது கானல், அடிமைகள் என்ற நாவல்கள் விரைவில் வெளிவர உள்ளன.
இவரால் எழுதப்பட்ட பஞ்சமர் நாவலின் முதல் பாகம் ஒடுக் கப்பட்ட மக்களின் எழுச்சிக்காகப் போராடிய குற்றத்திற்காகத் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த பொழுது எழுதியது. அந்த நாவலை எழுதி முடிக்கும் வரை அக்கிராம மக்கள் குடிக்கொருவராக நாள்வீதம் உணவளித்து ஒவ்வொரு நாள் பாதுகாப்பையும் கிராமத்தவர்கள் கூட்டமைத்து நேரம் வைத்துச் செய்த 'அந்தப் பணி தனக்காக அளிக்கப்பட்டதல்ல என்றும், தான் சார்ந்த கொள்கைக்காக அளிக்கப்பட்டதுவே" என்றும் அவர் இன்றும் மனம் திறந்து கூறுகிறார்.

Page 25
இவர்கள் வித்தியாசமானவர்கள் 46
கே.டானியலுக்கு பிடித்த எழுத்தாளர் பற்றி மகத்தான சிருஷ்டிகளைப் படைத்த மாமேதை மாக்ஸிம் கார்ச்சியைப் போலவே மக்களைப்பற்றி எழுதுவதிலே டானியல் ஆர்வம் காட்டுகிறார்.
"டானியலை நான் கடந்த முப்பது வருடங்களாக அறிவேன். டானியல் என்ற மனிதனையும் அவரது எழுத்தையும் இணைத்துப் பார்க்கும் பொழுது ஒரு உண்மை புலனாகின்றது. சமூக முற்போக்கு இயக்கத்தின் பல்வேறு அம்சங்களுள் ஒன்றான தீண்டாமை எதிர்ப்பியக்கத்தில் டானியல் ஈடுபாடு பூரணமானது. யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் பிரதான முரண்பாடாகச் சாதிக் கொடூரத்தையே டானியல் கருத்திற் கொண்டு வந்துள்ளார். டானியலின் அரசியல் போக்கினை இப்பண்பே தீர்மானித்துள்ளது' எனலாம்.
"டானியலின் எழுத்துக்கள் கிளப்பும் பல்வேறு பிரச்சினைகளுள் ஒன்று அவரது எழுத்துக்கள் வழியாக வரும் யாழ்ப்பாண சமூக உயிர்களைப் பற்றிய அடிநிலை மக்களின் பார்வையேயாகும்.
டானியலின் எழுத்துக்கு ஒரு நியாயப்பாடு உண்டு. யாழ்ப்பாண சமூகத்தில் சாதி காரணமாகச் சமூக ஒடுக்கு முறை இருக்கும் வரை டானியல்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். பிரச்சினையை மறைத்துக்கொண்டு இப்படி எழுதலாமா என்று கேட்பது நியாயமற்றது"
இவ்வாறு எழுத்தாளர் டானியலைப் பற்றி, நன்கு புரிந்துகொண்ட கா.சிவத்தம்பி கூறுகிறார்.
'மனிதன் எத்தனை அற்புதமானவன்' என்று சொன்னவர் படைப்பாளி மாக்ஸிம் கார்க்கி. அத்தகைய அற்புதமான மனிதர் தான் கே.டானியல்.
வறுமையிலே பிறந்து, வளர்ந்து, தன்னுடைய விடாமுயற்சியினாலும் உழைப்பினாலும் உன்னத நிலைக்கு

47 அந்தனி ஜீவா
வந்திருக்கும் கே. டானியல் இன்றும் அந்தச் சாமானிய மனிதனாகவே வாழ்கிறார். இயக்கத்தையும், எழுத்தையும் தம் இரு கண்களைப் போலவே நினைக்கிறார்.
கிராமப்புறத்தை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பி, அந்த மண்ணில் தனது காலடியை இறுகப்பதிக்க மனமற்ற எந்த ஒரு சிருஷ்டி கர்த்தாவும் மக்கள் பலமற்ற எந்த அரசியல்வாதியும் மக்கள் இலக்கியம் படைப்பது, மக்கள் பணி செய்ய முற்படுவது மிகவும் வேடிக்கையானது என்று டானியல் கூறும் கருத்துக்களைப் படைப்பாளிகள் மனதில் பதிய வைப்பது அவசியமாகும்.
தன்னுடைய ஆக்க இலக்கிய சிருஷ்டிகளைப் போலவே வாழ்க்கையிலும் இலக்கிய மனிதனாக வாழும் டானியலை இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்
14.10.1984
8. பெரியார் பி.டி.ராஜன்
அரை நூற்றாண்டுக்கு முன்னால் அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வந்தான் ஓர் இளைஞன். அவனுடைய குடும்பத்தில் ஏற்பட்ட சோக நிகழ்வு ஒன்றை மறக்கவே மனதிற்கு அமைதியைத் தேடி இலங்கையின் மத்திய பகுதியான மலைநாட்டிற்கு அவன் வந்தான்.
அவன் இலங்கை திருநாட்டிற்கு வரும்போது அவனோடு கூட வந்தவை அவனது குடும்பச் சொத்தான துணிச்சல், தன்மானம், அத்தோடு அவனது நெருக்கமான நண்பனாக ஹொக்கி மட்டை.
இளைஞனின் அறிமுகம்
துணிவும், தைரியமும், எதையும் சமாளிக்கும் நெஞ்சுரமும், கையில் ஹொக்கி மட்டையுமே அவனுடைய சொத்துக்கள்.

Page 26
இவர்கள் வித்தியாசமானவர்கள் 48
மலையகத்தின் தலைநகரான கண்டியில் ஹொக்கி விளையாட்டே அறிமுகமாகியிராத அக்காலத்தில் அதாவது 1934ல் கண்டி "ஹொக்கி கிளப்' என்ற கழகம் அமைத்து, விளையாட்டு மைதானங்களில் தன் திறமையைக் காட்டித் தன்னை அறிமுகமாக்கிக் கொண்டான்.
அந்த இளைஞன் வேறு யாருமல்ல,
கண்டி மாநகரில் தலை நிமிர்ந்து நிற்கும் கல்விக்கூடமான அசோகா வித்தியாலயத்தை நிறுவிய ஸ்தாபகரும், மலையகக் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றியவருமான பெரியார் பி.டி.ராஜன் அவர்கள் தான்.
நத்தார் விடுமுறைக்கு கண்டி மாநகருக்குச் சென்றிருந்த பொழுது, அசோகா வித்தியாலயா அதிபர் திரு.செ.நடராஜா அவர்களுடன் பெரியார் பி.டி.ராஜன் அவர்களைப் பார்க்க போயிருந்தேன். மலை தளர்ந்தாலும் மனந்தளராத பெரியார் ராஜன் தனது அருமைத் துணைவியாரின் மறைவால் மனந்தளர்ந்து போயிருந்தார்.
பல தடவைகள் பொரியார் ராஜன் அவர்களைச் சந்தித்திருக்கிறேன். கண்டியில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் முக்கிய பிரமுகராக அவர் காணப்படுவார். பெரியார் ராஜன் கலந்து கொள்ளாத எந்த நிகழ்ச்சியும் திலகமிடாத பெண்மணியைப் போலத்தானிருக்கும்.
பெரியார் ராஜனின் வெற்றிக்கெல்லாம் அவரது நிழலாய் இருந்த அவரது துணைவியாரின் மறைவு, பெரியார் ராஜன் அவர்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. ஆஜானபாகுவான அவரது தோற்றமும், கம்பீரமும், அருமைத் துணைவியின் மறைவினால், அவரைத் தளர்ந்து போய் சோகத்தை சுமக்க முடியாமல் நான்கு சுவர்களுக்குள் அமைதி வடிவாக அமர வைத்துவிட்டது.
அசோகர 7ெயான் விழா
இன்னும் இரண்டு மாதங்களில் அவர் உருவாக்கிய "அசோகா

49 அந்தனி ஜீவா
வித்தியாலயம்" பொன்விழாக்கான தயாராக உள்ளது. அந்த விழாவின்போது பழைய சிங்க நடை போட்டு வரும் ராஜனாக அவரைச் சந்திக்கலாம்.
கண்டியிலிருந்து கொழும்பு திரும்பும்போது பெரியார் ராஜனைப் பற்றிய நினைவுகளை மனம் அசை போட்டது.
நான் கல்லூரிகளில் கடமையாற்றும் போது கடமை யுணர்ச்சியுள்ள ஆசிரியனாகவும், சேவா மனப்பான்மையிலும், வாழ்க்கை நெறி முறைகளிலும் ஓர் இலட்சியவாதியாகவும் இருக்க முயல்கிறேன். ஓரளவு வெற்றியும் கண்டேன். ஆகையினாலே ஆசிரியர் வட்டாரத்தில் எனக்குப் பெருமதிப்பு கிடைத்தது என்றார்.
மானவர் விடுதி
பெரியார் பி.டி.ராஜனால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய மாணவ ஹாஸ்டல்' தேசிய மாற்றத்திற்கேற்ப "அசோகா மாணவ ஹாஸ்டல்' என்ற புதிய நாமத்தைச் சூட்டிக்கொண்டது. இப்பெயரைத் தெரிவு செய்தவர் இந்திய அரசியல்ஞானி ராஜாஜியாவார். 1951-ம் ஆண்டு முதல் அசோகா மாணவர் விடுதி ஒரு தேசிய ஸ்தாபனமாகத் திகழ ஆரம்பித்தது. 1960-ம் ஆண்டு இந்த மாணவர் விடுதியின் வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது.
மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறைகாட்டி, தனிமனிதராக ஒரு கல்வி ஸ்தாபனத்தைக் கட்டியெழுப்பிய பி.டி.ராஜன் அவர்களுக்கு 1965-ம் ஆண்டு சமாதான நீதவான் கெளரவத்தை அரசு வழங்கியது. அப்போது கண்டி நகர முதல்வராக இருந்த சபாநாயகர் திரு.ஈ.எல்.சேனநாயக்கா கண்டி நகரில் பி.டி. குடும்பத்தினரைச் சகல மரியாதைகளுடனும் ஊர்வலமாக அழைத்துச் சென்று நகர சபை மண்டபத்தில் தேநீர் விருந்தளித்துக் கெளரவித்தார்.
தரனைவிமரின் பேருதவி
'எனது வெற்றிகளிலும், தோல்விகளிலும் விசுவாசத்துடனும்

Page 27
இவர்கள் வித்தியாசமானவர்கள் 50
மலர்முகத்துடனும் பங்கேற்று ஆக்கப் பணிகளுக்கு உதவியும், ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கியும் வந்துள்ள எனது துணைவி திருமதி. புஷ்பம் ராஜன் அவர்களைப் பற்றிக் குறிப்பிடாவிட்டால் எனது பணி பூரணத்துவமடையாது என தனது துணைவியாதைப் பற்றிப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.
அவரது உடலோடு, உயிரோடு, உணர்வோடு, ஒன்றிவிட்ட துணைவியாரின் மறைவு பெரியார் பி.டி.ராஜனை நிலைகுலையச் செய்துவிட்டது.
கண்டி மாநகரில் தலை நிமிர்ந்து நிற்கும் கண்டி அசோகா வித்தியாலயம், கண்டி அசோகா மாணவர் விடுதி ஆகிய நிறுவனங்கள் பெரியார் ராஜனின் பெருமைப்படத்தக்க சேவைகளை எடுத்துச் சொல்லும். அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும். -
27.01.1985
9. சரத் முத்தெட்டுவேகம
மனிதன் என்னே அற்புதமானவன் என்று மாபெரும் இலக்கிய மேதை மாக்ஸிம் கார்க்கி சொன்னார்.
அந்த வார்த்தைகளுக்குரிய அர்த்தத்தைக் கடந்த வாரம் நேரில் கண்டேன்.
அந்த அற்புதமான மனிதரான காலஞ்சென்ற க்லவான பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சரத் முத்தெட்டுவேகமனின் இறுதிச் சடங்கின்போது அதனைக் காணக் கூடியதாக இருந்தது.
மக்கள் அந்த அற்புதமான மனிதனுக்குச் செலுத்திய கண்ணீர் அஞ்சலி என்றும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கும்.
அந்த சரத் என்ற அற்புதமான மனிதரைப்பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.

51 அந்தனி ஜீவா
வேதனையாக விடிவு
பத்தொன்பதாம் திகதி காலை விடியும் பொழுதே வேதனையாக விடிந்தது. காலை வானொலி செய்தியில் 'சரத் காலமானார்' என்ற செய்தி என் இதயத்தில் இடியாக இறங்கியது.
அந்தச் செய்தி பொய்யாய் இருக்கக் கூடாதா என என்னுள்ளம் விரும்பியது. தமிழ் மக்களுக்காக பாராளுமன்றத்தில் நம்பிக்கையாக ஒலித்த ஒரு சத்தியக்குரலும் ஓய்ந்தது என நினைக்க வேண்டியதாக இருந்தது.
அரசியல் வானில் சுடர்விட்டுப் பிரகாசித்த இளம் தலைவர் ஒருவரைக் காலன் இவ்வளவு அவசரப்பட்டுக் கவர்ந்திருக்கக் கூடாது.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான அமரர் சரத் அவர்களின் பேச்சை பல மேடைகளில் கேட்டுள்ளேன்.
பாராளுமன்றத்தில் சத்தியத்தின் குரலாக ஒலிக்கும் அவரது அனுபவ முதிர்ச்சிமிக்க உரைகளைப் பத்திரிகையில் படித்துள்ளேன்.
ஆனால்,
அவரோடு இரண்டு தடவை உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. ஒரு தடவை கண்டியிலும், இன்னொரு தடவை கொழும்பு இல்லத்திலும் அவரைச் சந்தித்தேன்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர், பாராளுமன்ற உறுப்பினர், சிறந்த குற்றவியல் சட்டத்தரணி. ஆனால் அவர் ஒரு சாமானியனாகவே விளங்கினார்.
சத்தியத்தில் குரல்
சத்தியத்தின் குரலாக விளங்கிய அமரர் சரத் அவர்களுக்கு எனது இறுதி அஞ்சலியைச் செலுத்த என் உள்ளம் விரும்பியது.

Page 28
இவர்கள் வித்தியாசமானவர்கள் 52
நண்பரும் வர்த்தகத்துறையில் ஈடுபட்டிருப்பவரும், மலையக & ର0} ର) ! இலக்கியத் துறைகளின் வளர்ச்சியில் ஆர்வமுள்ளவருமான திரு. இராமலிங்கத்திடம் இதுபற்றிப் பேசியபொழுது:-
அவருடைய வாகனம் திருத்த வேலைகளுக்காக கரேஜில் இருப்பதாகத் தெரிய வந்தது. இருவரும் பஸ்ஸில் சென்று எமது அஞ்சலியை செலுத்துவது என முடிவு செய்தோம்.
பிறகு இராமலிங்கம் தனது நண்பரான பாலாவிடம் இதுபற்றி தெரிவித்தபொழுது அவருடைய வேனில் செல்வது எனவும் இன்னும் ஓரிரு நண்பர்கள் வருவதாகவும் கூறினார்கள்.
வியாழக்கிழமை காலை இராமலிங்கம், நான், பாலா அவரது நண்பர்களான இன்னொரு பாலா, சிவா, ஒரு சிங்கள நண்பர் ஆகியோர் சகிதம் இரத்தினப்புரிக்குப் பயணமானோம். சுமார் ஒரு மணி அளவில் நாங்கள் சரத்தின் இல்லம் அமைந்துள்ள குருவிற்றயை அடைந்தபொழுது,
மக்கள் 67வள்ளம்
அங்கு மக்கள் வெள்ளம் அலை மோதிக் கொண்டிருந்தது. நாங்கள் சென்ற வேனை நிறுத்த முடியாத சூழ்நிலை,
வானம் கூட மழைத் தூற்றல்கள் மூலம் அஞ்சலியைச் செலுத்திக் கொண்டிருந்தது. நானும் இராமலிங்கமும் வேனை விட்டுக் குதித்து இறங்கி அந்த அற்புதமான மனிதருக்கு எங்கள் அஞ்சலியைச் செலுத்துவதற்கு விரைந்தோம்.
நண்பர்கள் பின் தொடர்ந்தார்கள்.
தீர்க்க தரிசனம்
அமரர் சரத்தின் பூதவுடலைத் தரிசிக்க வாய்ப்பில்லை. அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்கள்.

53 அந்தனி ஜீவா
அந்தப் பெட்டியை கரங்களால் தொட்டு அஞ்சலியைச் செலுத்தினோம். அப்பொழுது அங்கு காட்சியளித்த பெரிய பெனர் ஒன்றின் வாசகங்கள் என் விழிகளை விரியச் செய்தது.
'தோழர் சரத் நீங்கள் மரணமடையவில்லை, மரணித்து நாங்கள் தான்.
எத்தகைய தீர்க்க தரிசனமான வார்த்தைகள்.
பாராளுமன்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும் குரல் எழுப்பியவர் அல்லவா?
தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தடுக்க அரசாங்கம் கொண்டு வந்த அத்தியாவசிய பொது சேவைகள் சட்டம் பயங்கரவாத தடைச்சட்டம் என்பனவற்றைக் கடுமையாக எதிர்த்தார்.
அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணைகள் மீது எப்போதுமே ஒரு எதிர்வாக்கு இருக்கும். அது அமரர் சரத்தின் வாக்காகும். அதனால்தான் மக்கள் வெள்ளம் அவருக்குக் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தியது.
தோழர் அமரர் சரத்தின் பூதவுடல் அவர் வாழ்ந்த இடத்திலிருந்து இரத்தினபுரி நகர மைதானத்திற்கு வாகனம் மூலம் எடுத்து செல்லப்பட்டது.
அப்பொழுது அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்த வந்த ஏழை மக்கள் பதினொரு மைல் தூரத்தைக் கால்நடையாக அதுவும் வேகமாக நடந்து வந்த காட்சி இப்பொழுதும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.
தொழிலாளர்கள்
பதுளை, பண்டாரவளை, அட்டன், கொட்டகலை, தலவாக்கலை போன்ற பகுதிகளிலிருந்து வந்திருந்த தோட்டத்

Page 29
இவர்கள் வித்தியாசமானவர்கள் 54
தொழிலாளர்களிடம் அமைச்சர் சரத்தைப் பற்றிக் கேட்டபொழுது, அவர்கள் சொன்ன வார்த்தைகள் எத்தகைய சத்தியமானவைகள்.
"எங்களுக்காகப் பேசும் ஒருவர்; அதனால்தான் அவருக்கு எங்கள் அஞ்சலியைச் செலுத்த வந்தோம்"
"அவரை நாங்கள் பார்த்ததில்லை. ஆனால் அவர் எங்களுக்காகப் பேசுபவர்; அதனால்தான் வந்தோம்!"
அவரைக் கண்ணால் காணாத ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் அஞ்சலியை நேரில் செலுத்த அங்கு வந்திருந்தார்கள். அமரர் சரத்துக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் உள்ள தொடர்புகளை எண்ணிப்பார்க்கிறேன். 1979-ம் ஆண்டு
அரசியலமைப்புக்கு ஆறாவது திருத்தம் கொண்டுவரப்பட்டதுடன் எதிர்கட்சியான தமிழர் விடுதலை கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்றத்திலிருந்து
வெளியேற்றப்பட்டனர். அதற்குப் பிறகு தமிழ் மக்களின் குரலாக அமரர் சரத்தின் குரலே ஒலித்தது.
இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சனைகளில் பெரும் அக்கறை கொண்டிருந்தார்.
ஆதரவான ஒவி
அவர்களின் பிரஜாவுரிமை பிரச்சனைகளின் போது அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார். தோட்டத் தொழிளலாளர்களின் பிராஜா உரிமை, குடியிருப்பு, ஆண், பெண் சமசம்பளம் போன்றவற்றுக்குப் பாராளுமன்றத்தில் சரத்தின் குரலே சத்தியத்தின் குரலாக ஒலிக்கும்.
தோழர் சரத்தின் மறைவு இலங்கை வாழ் உழைக்கும் மக்களுக்கு ஒலிக்காது தமிழ் பேசும் மக்களுக்காக ஒலித்த தர்மத்தின் குரல் இனி ஒலிக்காது. அமரர் சரத் இன, மத, மொழி, பேதம் கடந்த மனிதாபிமானியாகத் திகழ்ந்தார். அவரிடத்தை இன்னொருவர் நிரப்ப நீண்ட காலம் பிடிக்கும்.

55 அந்தனி pair
ரஷ்ய இலக்கிய மேதை மாக்ஸிம் கார்க்கி சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தைச் சரத்தின் மறைவின்போது நேரில் தரிசித்தேன். அமரர் சரத் போன்ற அற்புதமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்த காலதேவன் நீண்ட காலம் எடுக்கிறான்.
அமரர் சரத் போன்ற இன்னொருவர் நம்மிடையே தோன்ற மாட்டாரா? என மனம் நினைக்கின்றது.
O8.06.1986
10. வி.கே. நவசோதி
மலையக மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை அமரரானவுடன் வானொலி, பத்திரிகை, தொலைகாட்சி போன்ற பொதுஜனத் தொடர்பு சாதனங்கள் அவரைப் பற்றிய செய்திகளை மிகச் சிறப்பாக வெளியிட்டு அவருக்கு உரிய முறையில் அஞ்சலி செலுத்தின.
சி.வி.க்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்னிடம் இந்தப் பணியை ஒப்படைத்ததனால் சிறப்பாகச் செய்ய முடிந்தது. இதனை பலரும் பாராட்டினார்கள். ஆனால், இந்தப் பாராட்டுக்கு என்னோடு உடனிருந்து செயல்பட்டவர் நண்பரும், தமிழறிஞருமான திரு.வி.கே.நவசோதி அவர்கள்.
சுவடிக்கூடத் திணைக்களத்தில் உதவி ஆணையாளரான திரு.நவசோதி, சி.வி. காலமானார், என்ற செய்தியை அறிந்ததும் இரண்டு நாட்கள் விடுமுறை பெற்றுக்கொண்டு மின்னல் வேகத்தில் செயல்பட்டார்.
இரதி அஞ்சவி
அத்துடன், தொழிலாளர் தேசிய சங்க முக்கியஸ்தர்களான
திருவாளர்கள் டி-அய்யாதுரை, பி.வி.கந்தையா, பி.பெருமாள்
ஆகியோர் காரையும், தொலைபேசியையும் தந்து சி.வி.க்கு
எந்தெந்த வகையில் இறுதி அஞ்சலி செலுத்த முடியுமோ அதற்கு துணை நின்றார்கள்.

Page 30
இவர்கள் வித்தியாசமானவர்கள் 56
மலையக நாட்டார் பாடல்களில் அதிக ஈடுபாடுள்ள நவசோதிக்கு மலைநாட்டுச் சமூகத்தின் மீது பற்றும் பாசமும் உண்டு. பலர் இவரை மலைநாட்டைச் சேர்ந்தவர் என்று
எண்ணுவதுமுண்டு.
எல்லாத்துறைகளிலும் கைவந்த கலைஞரும், தமிழறிஞருமான நவசோதி அவர்களைப் பற்றிய நினைவுகள் என் நெஞ்சில் பூத்தன. பழைய நினைவுகளும் என் நெஞ்சில் மலர்ந்தன.
1978ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருப்பூரில் நடைபெற்ற கலை, இலக்கிய பெருமன்ற மாநாட்டில் நான் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டபோது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவரான பேராசிரியர் நா.வானமாமலை வி.கே. நவசோதியைப் பற்றி என்னிடம் அன்புடன் விசாரித்ததோடு, இலங்கைவரும்போது அவரை நிச்சயம் சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆளுமை ஆற்றல்
கலை இலக்கியத்துறைகளில் ஆளுமையும், ஆற்றலும் கொண்டவரான நவ சோதி எல்லோருடனும் இனிக்கப் பேசிப்பழகும் சுபாவம் கொண்டவர். தான் ஒரு பல்கலைக்கழக பட்டதாரி, சுவடிக் கூட திணைக்கள உதவி ஆணையாளர் என்ற கர்வமும், வித்துவச் செருக்குமின்றிச் சாமானியரைப் போல சகலருடனும் பழகுவார்.
மாணவராக இருக்கும் போதே நவசோதிக்கு இலக்கியத் துறையில் அதிக ஆர்வம் : எழுதுவது, பேசுவது போன்றவைகளில் ஈடுபாடு , மாணவரான இவரைத் தந்தையார் வி. கணபதிப்பிள்ளையவர்கள் ஹெந்தளையிலுள்ள தொழுநோயாளர் மத்தியில் அப்போது வீரகேசரி ஆசிரியாக இருந்த கே.வி. ஹரன் அவர்களுடன் பேச வைத்துள்ளார்.
கொழும்பு வித்தியாலயத்தில் மாணவப் பருவத்தில் இருக்கும்போது "வெண்ணிலா" என்ற பத்திரிகையையும், பின்னர்

57 m அந்தனி ஜீவா
"தமிழோசை' என்ற இலக்கியத் திங்கள் இதழையும் வெளியிட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்தில் அருணாசலம் மண்டப விவாதக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். பல்கலைக்கழக மாணவர் சங்க சிறப்புக் கூட்டங்களுக்கு வெளியாரைக் கூப்பிடுவதே மரபு. ஆனால் நவசோதியின் சொல்லாற்றலால் இந்து சங்கமும், மாணவர் சங்கமும் இவரையே அழைத்து சிறப்புச் சொற்பொழிவாற்ற வைத்தன. அதனால் பிற்காலத்தில் மேடைகளில் மடை திறந்தாற்போலப் பேசுவதற்கு வழிகாட்டியாக அமைந்தது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் அங்கு இலக்கிய எழுச்சிக்கு வித்திட்ட முதலாவது சிறுகதைத் தொகுதியான 'கதைப்பூங்கா"வை செங்கை ஆழியானுடன் இணைப்பதிப்பாசிரியராக வெளியிட்டார். 'ஓடிப்போனவன்' என்ற இலங்கையின் முதலாவது சிறுவர் நாவலை எழுதி வெளியிட்டார்.
சிறுவர் இலக்கியத்தில் ஆர்வமுள்ள நவசோதி சிறுவர்க்கான பல கவிதைகள் எழுதியுள்ளார். சிறுவர்களுக்கான சிங்கள சிறுவர் கவிதைகளை மொழிபெயர்த்து ஈழநாடு இதழில் வெளியிட்டுள்ளார். வானொலி சிறுவர் மலர் நிகழ்ச்சியிலும் சிறுவர்க்கான நாடகங்களை எழுதியுள்ளார்.
திரு.நவசோதி இலங்கையிலும், இந்தியாவிலும் நடைபெற்ற ԼԱ 6ծ ஆராய்ச்சி மாநாடுகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியுள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்திலும், யாழ்ப்பாணத்திலும் நடைபெற்ற இரண்டு உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளில் மலையக நாட்டுப்பாடல்கள், மலையக தனிப் பாடல்கள், மொழி வழக்குப் பற்றி ஆய்வுரைகளை நிகழ்த்தியுள்ளார். தமிழ்நாடு காயல் பட்டினத்திலும் பண்டார நாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் நடைபெற்ற இஸ்லாமிய தமிழிலக்கிய ஆராய்ச்சி மாநாடுகளிலும் முஸ்லீம் அல்லாத நவசோதி கலந்துகொண்டு ஆய்வுரை நிகழ்த்தியுள்ளார்.

Page 31
இவர்கள் வித்தியாசமானவர்கள் 58
மட்டக்களப்பிலும், முல்லைத்தீவிலும் நடைபெற்ற இரு பிராந்திய தமிழாராய்ச்சி மாநாடுகளிலும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார்.
1971-ல் கேரள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது அகில இந்திய மொழியியலாளர் மாநாட்டில், பிரத்தியேக அழைப்பின் பேரில் இவரது ஈழத்து பேச்சுத் தமிழ் பற்றிய கட்டுரை ஆய்வுக்கு எடுக்கப்பட்டது.
வன. தனிநாயகம் அடிகள்
தமிழ் ஆய்வுக்கு வித்திட்ட தமிழறிஞரான பேராசிரியர் வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகளாருடன் தொடர்பு கொண்டதை நவசோதி அடிக்கடி பெருமையுடன் குறிப்பிடுவார். 1961-ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு மாணவராக அறிமுகமான நவசோதி தனிநாயகம் அடிகள் இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரும் தொடர்பு கொண்டதை நினைவு கூருகிறார்.
காலஞ்சென்ற பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து, ւն) 6նr அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றிய டாக்டர் சந்திரசேகரின் அழைப்பை ஏற்று. பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருந்தினராக நவசோதி கெளரவிக்கப்பட்டார். பின்னர் டாக்டர் சந்திரசேகரின் விருப்பத்திற்கிணங்க அவர் எழுதிய கலாயோகி ஆனந்த குமாரசாமி, சனத்தொகை வளர்ச்சி ஆகிய நூல்களை அவரின் அன்பளிப்பாய் ஏற்று வந்து ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர்களிடம் கையளித்தார்.
தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளில் ஈடுபாடுள்ள நவசோதி தமிழ்நாட்டில் தஞ்சையில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு இலங்கைக் குழுவுக்குத் தலைமை வகித்துச் சென்று சிறப்புரையும் ஆற்றினார். இலங்கையில் நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு விழாவிற்குத் தலைமை வகித்ததுடன் விழாச் சிறப்பு மலரின்

59 அந்தனி ஜீவா
ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். தந்தை பெரியாரின் நோக்கில் பெளத்த சமயத்தின் சிறப்பியல்புகளை இலங்கை தொலைகாட்சியான ரூபவாஹினியில் எடுத்துரைத்துள்ளார்.
தமிழராய்வுக்கு உதவி
தமிழ் ஆய்வுக்கும் வளர்ச்சிக்கும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார். ஸ்காண்டிநேவியா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற நாட்டுப் பல்கலைக் கழகங்களில் நடைபெற்று வரும் தமிழர் பண்பாடு, தமிழர் பிரச்சினை பற்றிய ஆய்வுக்கு பணியாற்றும் சுவடித்திணைக் களத்தின் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களைக் கொடுத்து வருகிறார். மற்றும் யாழ்: பொது நூலகத்திற்கு நூல் அன்பளிப்பு, பருத்தித்துறை சதாவதானி கதிரைவேற்பிள்ளை நூல் நிலையம், பாரதிதாசன் சனசமூக நிலையம் போன்றவற்றிற்கு ஆசியா பவுண்டேசனிலிருந்து நூல்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
இதுபோன்று இந்தோனேஷியா வாழ் தமிழர்களுக்காகத் தமிழ் நூல்களை அனுப்பி உதவியுள்ளார். அத்துடன் சென்னை தமிழகஈழ நட்புறவுக் கழகத்திற்கு இலங்கை நூல்கள், மலேசியா பல்கலைக்கழக இந்தியத்துறைக்கு இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள், தமிழக கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களுக்கு ஈழத்து இஸ்லாமிய நூல் விவரங்ககள் பர்மா சுயமரியாதை இயக்கங்களுக்கு நூல்கள் டில்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் சாலை இளந்திரையன் அவர்ளுக்கு 'ஈழத்து உழவுத் தமிழ்ச் சொற்கள்' சேர்த்து அனுப்புதல் போன்ற அரிய
பணிகளைச் செய்துள்ளார்.
A/60/ A4/256ir
இவரது படைப்புகள் ஈழத்து இதழ்களில் மாத்திரமின்றித் தமிழக இலக்கிய சஞ்சிகையான "தாமரை” பேராசிரியர் நா. வானமாமலை நடத்திய "ஆராய்ச்சி" சஞ்சிகை, மலேசியாவில்

Page 32
இவர்கள் வித்தியாசமானவர்கள் 60
வெளிவரும் "தமிழ்மலர்" ஆகியவற்றில் வெளிவந்துள்ளது. "இலக்கிய மகளிர் இதய வேட்கை" என இவரது இலக்கியக் கட்டுரைகள் சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்களின் "மணித்தாய் நாடும், மரதன் ஓட்டமும்" என்ற நூலை இரண்டாவது பதிப்பை வெளியிட்டுள்ளார். "நாட்டுப்பாடலில் மலையக வரலாறு" என்ற ஆய்வு நூலையும் வெளியிட்டுள்ளார். "பல்லவர் காலமும் பக்தி கோலமும்" என்ற இவரது சொற்பொழிவும் நூலுருவில் வெளிவந்துள்ளது.
பல்வேறு பணிகளுக்கு மத்தியில் தனது கலாநிதி பட்டப்படிப்புக்காக மலையக நாட்டார் பாடல்கள் பற்றி ஆய்வு செய்து வருவதுடன், சிங்கள மக்களின் நாடக முயற்சிகளுக்கு உந்து சக்தியாக உள்ள 'டவர் ஹோல்' வரலாற்றையும் எழுதியுள்ளார். அதுபோல தமிழர் நாடக வரலாறு எழுதப்பட வேண்டும் என்பதில் நவசோதி ஆர்வம் காட்டி வருவதுடன் 'ஜிந்துப்பிட்டி நாடக அரங்கு வரலாற்றையும் எழுதி வருகின்றார்.
பிரதமர் பிரேமதாசா அவர்கள் அண்மையில் ஜிந்துப்பிட்டிக்கு வருகை தந்த பொழுது மகாத்மா காந்தியின் ஜிந்துப்பிட்டி விஜயத்தைப் பற்றி தகவல் அளித்தார். இனிய தமிழ் மொழியில் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், தமிழ் ஆராய்ச்சியாளராகவும் விளங்கும் நவசோதியைத் தமிழறிஞர் என்றே அழைக்க வேண்டும்.
11. ஆழிக்குமரன் ஆனந்தன்
அண்மையில் சஞ்சிகை ஒன்றில் படித்த ஒரு செய்தி என்னை உரத்த சிந்தனையில் ஆழ்த்தியது. "வெளிநாட்டில் நீச்சல் துறையில் சாதனை புரிந்த விளையாட்டு வீரன் ஒருவனை, அந்நாட்டு மக்கள் பத்து மைல் தூரம் வரை தோளில் சுமந்து சென்று கெளரவித்துள்ளனர். அவனுக்கு அந்த நாட்டு தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது".
இதுதான் அந்த செய்தி செய்தியைப் படித்த பின்னர் என் நினைவில் வந்து நின்றவர் வேறு யாருமல்லர் - நம் நாட்டின் சாதனை வீரர் 'ஆழிக்குமரன் ஆனந்தன்" தான்.

61 அந்தனி ஜீவா
உலக சாதனைகளைப் பற்றி "கின்னஸ்' புத்தகத்தில் எட்டு இடங்களில் தன் பெயரை இடம் பெறச் செய்து, இலங்கையின் புகழைச் சிகரத்துக்கு உயர்த்திய பெருமை இவரையே சாரும். இந்த சாதனையாளனைப் பற்றிய நினைவுகளை அசைபோடுகிறேன்.
சாதனை வீரன் ஆனந்தனைப் பற்றிய பசுமையான நினைவு அலைகள் என் நெஞ்சில் மோதிப் பழைய எண்ணங்களை நினைவூட்டுகின்றன.
பாக்குநீரினை
1963ம் ஆண்டு பாக்கு நீரிணையை ஆனந்தன் என்ற பதினெட்டு வயது இளைஞர் 42 மணித்தியாலயத்தில் நீந்திக் கடந்தார் என்ற செய்தி பத்திரிகை வாயிலாக என் செவிகளுக்கு எட்டியது.
என் வயதை ஒத்த இளைஞர் செய்த சாதனையை நானே செய்து முடித்ததுபோல் மகிழ்ச்சியடைந்தேன். அப்போது என் மனதில் ஏற்பட்ட உணர்ச்சிகளை அவருக்குப் பாராட்டாக வரைந்தேன்.
இளம் வயதிலே, இத்தகைய சாதனை செய்த இளைஞரைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில், நானும் இன்னும் சில ஆர்வமுள்ள நண்பர்களும், அவரைக் கொழும்பு மாநகருக்கு அழைத்து தேநீர் விருந்தளித்து கெளரவிக்க விரும்பினோம்.
உடனே, ஆனந்தனுடன் தொடர்பு கொண்ட பொழுது அவரும் அந்த விழாவுக்கு இசைவு தந்தார். விருந்துக்கு தேதி குறிப்பிட்டு ஆனந்தனுக்கு அறிவித்து விட்டோம். விருந்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் 'கொழும் பில் கிறீன் லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் உடனே வந்து சந்திக்கவும்" என்று ஆனந்தனிடமிருந்து தந்தி ஒன்று எங்களைத் தேடி வந்தது.

Page 33
இவர்கள் வித்தியாசமானவர்கள் 62
நானும், கவிஞர் மலைத்தம்பியும் தந்தியுடன் கிறீன் லண்ட்ஸ் ஹோட்டலுக்குள் நுழைந்தோம். ஆனந்தன் அன்பாக வரவேற்று, விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த எங்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அந்த நிகழ்ச்சியை இரத்துச் செய்துவிடும்படி கூறுகிறார்.
எங்களுக்கோ அதிர்ச்சி. தேநீர் வருகிறது. நாங்கள் தேநீரை அருந்தாமல் அவரையே பார்க்கிறோம். தேநீரை அருந்தும்படி அன்பாக கூறியவாறு சில உண்மைகளை தெரிவிக்கிறார். கசப்பான உண்மையை உணர்ந்து சில விநாடிகள் திகைத்துப் போய் நிற்கிறோம். பிறகு நானும் கவிஞர் மலைத்தம்பியும் ஒரு முடிவுக்கு வருகிறோம்.
“நிச்சயமாக உங்களைக் கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்" எனக்கூறி விடை பெற்றோம்.
விருந்துபசாரம்
வெளியே வருகிறோம். என்ன செய்வது என்ற திகைப்பு. அன்பர் பூபதிதாசரின் இடத்திற்குப் போகிறோம். அங்கு தங்கியிருக்கும் திரு.இளஞ்செழியனிடம் விவரத்தைக் கூறுகிறோம். உடனே மூவருமான அன்பர் பூபதிதாசரிடம் எங்களின் தர்மசங்கடமான நிலையை விவரிக்கிறோம்.
அவர் புன்னகையுடன் தன்னுடைய வெண்தாடியைத் தடவிக் கொண்டு "விருந்து நிகழ்ச்சியைப் பற்றி கவலைப்படாதீர்கள்" எனக்கூறி உடனே தொலைபேசியை எடுத்து மருதானையில் உள்ள புஹாரி ஹோட்டல் மானேஜருக்கு 'போன்' பண்ணி ஏற்பாடு செய்கிறார்.
ஆழிக்குமரன் ஆனந்தனுக்கு அளிக்கப்பட்ட அந்த விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதன் பிறகு ஆழிக்குமரன் ஆனந்தனை நான் 1976ம் ஆண்டில் அவர் என்.ஸி.ஸி. மைதானத்தில் 260 மைல் தூரத்தை 147 மணித்தியாலயம் நடந்து சாதனை புரிந்த பொழுதுதான் அவரைக் கண்டேன்.

63 அந்தனி ஜீவா
அப்பொழுது நான் அவருடன் பேசவில்லை. தூரத்தில் இருந்து அவரது சாதனைகளைப் பார்வையாளர்களில் ஒருவனாக இருந்து பார்த்துவிட்டு வீடு சென்றேன்.
மீண்டும் 1977ல் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் ஓரிரு சாதனைகளைப் புரிந்ததை பத்திரிகை மூலம் அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். 1978ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி புதிய ஆண்டு மலரும் போது இரவு கால் பேஸ் திடலில் 128 மணித்தியாலங்கள் டுவிஸ்ட் நடனமாடி மறுமொரு சாதனையை நிலைநாட்டினார்.
அதன் பிறகு எனது இனிய நண்பரும், ஆழிக்குமரன் ஆனந்தனின் நெருக்கமான சகாவுமான பத்திரிகையாளர் ராஜகோபால் ஆனந்தனைச் சந்திக்க என்னை அழைத்து சென்றார்.
மீண்டும் ஆனந்தனுடன் எனது நட்பு தொடர்ந்தது. அப்பொழுதுதான் ஆனந்தனின் நெஞ்சில் உறங்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களை அறிய முடிந்தது.
இறுதிவரை சாதனை
சாகும்வரை ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்று அவரிடம் காணப்பட்ட ஆர்வம் என்னை வியப்படையச் செய்தது.
அவர் சொன்ன தகவல்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
பல்கலைக்கழக படிப்பை படித்துக் கொண்டு, வெளிநாடு சென்று டென்ஸிங்மலை ஏறும் பயிற்சிக் கல்லூரியில் தேர்ந்து பயிற்சிப் பெற்று, எவரட்ஸ் மலைச் சிகரத்தில் 24000 அடிகள்வரை ஏறியுள்ளார். மீண்டும் அந்த மலைச் சிகரத்தை தொடும் ஆசை அலைகள் ஆனந்தனின் நெஞ்சில் மோதிக் கொண்டிருந்தன.

Page 34
இவர்கள் வித்தியாசமானவர்கள் 64
சட்டம் பயின்ற ஆழிக்குமரன் 1970ம் ஆண்டில் இரண்டு வருட காலம் பிரபல சட்டத்தரணி திரு.ஏட்லி பெரேராவிடம் வழக்கறிஞராகப் பணியாற்றயுள்ளார். 1979 மே மாதம் 188 மணித்தியாலம் 1,486 மைல் சைக்கிளோட்டி சாதனை புரிந்தார். இந்த சாதனையை 'கின்னஸ் புத்தகத்தில் பதிய வைத்துக்
கொண்டார்.
இதே ஆண்டு டிசம்பர் 31ம் திகதி அன்று 136 மணித்தியாலம் பந்தைத் தொடர்ந்து அடித்து தமது பெயரை மீண்டும் 'கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்து கொண்டார்.
இந்த இரண்டு சாதனைகளையும் செய்யும் பொழுது தினசரி சில மணிநேரங்கள் அவர் சாதனை செய்யும் இடங்களுக்குச் சென்று அவரை உற்சாகமூட்டுவது எனக்கு வழக்கமாயிற்று.
இந்தச் சாதனைகளின் இறுதியில் எனது நண்பர்களுடன் சென்று அவருக்கு மலர் மாலை அணிவித்துக் கெளரவிக்கத் தவறவில்லை. சரித்திரம் படைக்கும் சாதனையாளனுக்குச் செய்யும் சிறிய காணிக்கையாயிற்று.
அத்துடன் எனது உள்ளம் திருப்திப் படாததால் எனது நண்பர்களிடம் சொல்லி அகில இலங்கை நடிகர் முத்துராமன் ரசிகர் மன்றத்தின் மூலம் ஹோட்டல் தர்ரபேனின் அவரைப் பாராட்டிக் கெளரவிக்க ஏற்பாடு செய்தேன். இதற்கு முன்னின்று உழைத்தவர்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகளான திருவாளர்கள் ஏ.எஸ்.பிலிப், வி.முனிஸ்வரன் ஆகியோர். 1980ல் மற்றும் ஒரு சாதனையைச் செய்து ஆழிக்குமரன் தன் பெயரை "கின்னஸில் பதிவு செய்து கொண்டார்.
தமிழ்நாட்டில்
பின்னர் தமிழ்நாடு சென்று 1981ல் அண்ணா நீச்சல் தடாகத்தில் 80 மணித்தியாலங்கள் தவளை போல் நீந்தியதன் மூலம் 'கின்னஸ் சாதனைப் பதிவேட்டில் ஏழாவது தடவையாகத் தன் பெயரை பதிவு செய்து கொண்டார்.

65 அந்தனி ஜீவா
1981ம் ஆண்டு கார் விபத்தொன்றில் சிக்கி, ஆறு மாதங்கள் நடமாட முடியாத நிலையில் படுத்த படுக்கையாகி, ஊன்று கோலின் உதவியுடன் நடமாடினார்.
அப்பொழுது அந்தக் கோலத்தில் அவரைச் சந்தித்த பொழுது, மீண்டும் சாதனைகள் செய்யப்போவதைப் பற்றி உற்சாகத்துடன் உரையாடினார்.
இந்த நிலையில்கூட 1982ம் ஆண்டு டிசம்பர் பிலியட்ஸ் தடியைத் தனது விரலால் 4 மணித்தியாலம் 8 நிமிடங்களில் 2520 தடவைகள் தூக்கி இறக்கி எட்டாவது தடவையாகத் தன்
பெயரை "கின்னஸில் இடம்பெறச் செய்தார்.
சாதனைகளுக்கு மேல் சாதனைகளைச் செய்து சரித்திரம் படைக்கும் இச்சாதனையாளரைப் பாராட்டி கலை இலக்கிய பத்திரிகை நண்பர்களால் 1983 ஜனவரியில் பம்பலப்பிட்டி ஹோட்டல் கிறீன்லண்ட்ஸ் மண்டபத்தில் பாராட்டு விழா நடத்தினர். அதில் அவரைப் பாராட்டி பேசினேன். இப்பொழுது கூட ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் சாதனையைச் செய்யும் முயற்சியையொட்டி லண்டனில் தங்கியுள்ள சரித்திரம் படைக்கும் சாதனையாளனுக்கு சுவாமி ஞானப்பிரகாசருக்கு ஜெர்மனி தபால் தலை வெளியிட்டுக் கெளரவித்ததைப்போல், உலகில் ஏதோ ஒரு நாடு முத்திரை வெளியிட்டுத் தன்னைப் பெருமைப்படுத்திக்
கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
17.06.1984.
12. கவிஞர் ஈழவாணன்
என் நண்பன்
ஈழவாணன்
இனிய பண்பாளன்,
வண்ணப்
பொன்மணிக்கவிதை

Page 35
இவர்கள் வித்தியாசமானவர்கள் 66
பாடும் புதுயுகப்புலவன்; கூட்டிக் கன்னல்போல் கனிபோல்,
தேன்போல் கற்கண்டின் சுவைபோல்,
பால்போல் நன்னயம் கொழிக்கும்,
இன்ப நறும்பாடல் பாடும்
நண்பன் இவ்வாறு கவிஞரான பாலபாரதி, தன் சக கவிஞரான ஈழவாணனை அறிமுகப்படுத்துகிறார்.
இனிய கவிஞரான ஈழவாணன் நம்மைவிட்டுப் பிரிந்து ஓராண்டு உருண்டோடி விட்டன. ஆனால், அவரது நினைவு நமது நெஞ்சை விட்டு இன்னும் பிரியவேயில்லை.
ஈழவாணன் என்ற மென்மையான இதயங்கொண்ட அந்தக் கவிஞனைப் பற்றிய நினைவுகளை இரை மீட்டிப் பார்க்கின்றேன்.
எதையும் ஓசைப்படாமல் செய்ய விரும்பும் அந்தச் சின்னஞ்சிறிய உருவம் பென்னம் பெரிய ஆசைகளை நெஞ்சில் தேக்கி வைத்திருந்தது என்பது அவரோடு நெருங்கிப் பழகிய நண்பர்களுக்குத்தான் தெரியும்.
கவிஞர் ஈழவாணனின் நினைவுகளை அசைபோடும் போது நெஞ்சில் இனம் புரியாத சோகம் இழையோடுகிறது.
அவரோடு பழகிய அந்த இனிய நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். நினைவுகள் சிறகடிக்கின்றன. அவர் தினபதி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியபொழுது மாலை வேளைகளில் பலதும் பத்தும் பேசியபடி நீண்ட தூரம் காலி வீதி வழியாக நடந்தே செல்வோம்.

67 அந்தனி ஜீவா
அப்பொழுது அவர் தெரிவிக்கும் கருத்துக்கள், தான் படித்துச் சுவைத்த ஆங்கிலச் சிறுகதைகள், புதுமையான பல தகவல்கள், சுவையான வெளிநாட்டுக் கவிதைகள் இவற்றைச் சுவைபடக் கூறுவார். அப்பப்பா. இவரிடம் இவ்வளவு விடயங்கள் அடங்கியிருக்கின்றனவா? என வியப்படைந்துள்ளேன்.
முதல் கவிதை
கவிஞர் ஈழ வாணன் தமது பதினைந்தாம் வயதிலே எழுத்துலகில் நடைபயில ஆரம்பித்துள்ளார். முதலில் ஆசிரியர் கடிதங்கள் தான் அவரின் ஆரம்பம். பற்பல செய்திகளைப் பாங்காகப் பிரசுரிக்கும் சுடச்சுடச் செய்திகளைச் சூக்குமமாய் எடுத்துரைக்கும் பண்பான ஒரு ஏடே பத்திரிக்கை என்பது.
இதுதான் ஈழவாணன் பத்திரிகை என்ற தலைப்பில் 1951-ம் ஆண்டு எழுதிய முதல் கவிதை, நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளையும், குறுங்காவியங்களையும் படைத்துள்ளார். 'அக்கினிப்பூக்கள்' என்ற பெயரில் அவரின் ஆளுமையை வெளிப்படுத்தும் கவிதைத் தொகுதி எழுபதுகளில் வெளிவந்தது. "அக்னி" என்ற பெயரில் கவிதை இதழொன்றையும் வெளியிட்டார்.
கவிஞர் ஈழவாணன் கவிதை எழுதுவதில் மாத்திரமின்றி "ஷாக்கோ' என்ற புனைப்பெயரில் பல்வேறு வகையான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். வானொலி யில் கவியரங்குகளுக்குத் தலைமை வகித்து கவியரங்குகளைச் சிறப்பாக நடத்தியுள்ளார். 'கலைக்கோலம்' நிகழ்ச்சியில் சிறப்பான முறையில் புத்தக விமர்சனங்கள் செய்துள்ளார்.
கவிஞர் ஈழவாணனின் 'அக்கினிப்பூக்கள் கவிதைத் தொகுதி வெளிவந்ததே ஒரு சுவையான சம்பவமாகும். 'கவசம்' சஞ்சிகைக் குழுவினருடன் நானும் இணைந்து செயல்பட்டபொழுதுதான் 'அக் கினிப் பூக்களை' நூலுருவில் வெளியிடும் முயற்சி
மேற்கொள்ளப்பட்டது.

Page 36
இவர்கள் வித்தியாசமானவர்கள் 68
அக்கினிப்பூக்களை எப்படியெல்லாம் சிறந்த முறையில் பதிப்பித்து வெளியிடலாம் என இரவுபகல் கனவு கண்டார் துரைராஜசிங்கம். அவருக்குப் பக்கத்துணையாக கனக பாலசுப்பிரமணியம் ஆலோசனை வழங்க எச்.எம்.பி.முகைதீன் அத்துடன் நானும் செழியன் பேரின்பநாயகமும் உதவினோம்.
கவிதைகள் அச்சுக்கோர்க்கப்பட்டு, பக்கங்களாக உருவாகி சரவை தயாரானவுடன் கவிஞர் ஈழவாணன் இதனை வாய்விட்டுப் படித்துக் காட்டுவார். பிழை திருத்தப்பட்டு அச்சுகோர்த்த பக்கங்களை அச்சகத்துக்கு எடுத்துச் செல்ல எச்.எம்.பி.யின் கார் துணை நிற்கும்.
அக்கினரிப்பூக்கள்
ଗt is ୫ ବର୍ଗt ஒவ்வொரு வருடைய படைப்ப்ை போல் 'அக்கினிப்பூக்கள் கவிதை தொகுதியை நூலுருவில் கொண்டுவர நாங்கள் செயல்பட்டோம். நாங்கள் சோர்ந்திருக்கும் வேளைகளில் கனக பாலசுப்பிரமணியம் தேநீரும், சிகரெட்டும் வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவார். கவிஞர் ஈழவாணன் ஆங்கிலத் திரை நட்சத்திரங்களின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களைச் சொல்லி, கலகலப்பூட்டுவார்.
அச்சகத்தில் கவிதைத் தொகுதியின் பதினாறு பக்கங்கள் அச்சிடப்பட்டு வந்த பொழுது கவிஞர் ஈழவாணன் அதனை எடுத்து தன் முதல் மழலைக் குழந்தையை ஆரத்தழுவுவதுபோல மீண்டும் மெளனமாக வாசித்து மகிழ்ந்தார். அந்த அச்சிட்ட பகுதிகளைத் தன் துணைவியாருக்கு எடுத்துக்கொண்டு போய்க் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
"புத்தகமாக உருவாகாதவரை அவற்றை வெளியே கொண்டு போகக்கூடாது. குறைப்பிரசவமாக அதை யாரும் பார்க்கக்கூடாது' என நண்பர் துரைராஜசிங்கம் கட்டளை போட்டுவிட்டார். ‘எப்படியாவது அச்சிட்ட பகுதிகளை மனைவியிடம் காட்ட வேண்டும்' என்று சின்னஞ்சிறிய குழந்தையின் ஆர்வத்துடன் என்னிடம் இரகசியமாகக் கூறினார். நானும் நண்பர் ஈழவாணனின்

69 அந்தனி ஜீவா
ஆர்வத்தைப் புரிந்துகொண்டு அந்தப் பதினாறு பக்கங்களை அவரிடம் கொண்டு வந்து கொடுத்து அவரது ஆசையை நிறைவேற்றினேன்.
முழுமையான 'அக்கினிப்பூக்கள் தொகுதி உருவாகியவுடன் முதற் பிரதி ஒன்றை தனது அபிமானத்திற்குரிய பத்திரிகை ஆசிரியரிடம் எடுத்துக்கொண்டு ஆசிபெற வேண்டும என்று அவர் சென்ற காட்சி இன்னும் என் மனக்கண்ணில் நிழற்படம் போல் தெரிகிறது.
பழைய நினைவுகள்
பழைய நினைவுகளை அசைபோட்டபடியே அந்த அக்கினி கவிஞனின் ஆத்ம ராகமான 'அக்கினிப்பூக்கள் கவிதைத் தொகுதியைப் புரட்டுகிறேன்.
பொன்மனதின் வாசலிலே
போட்டுவைத்த எழிற் கோலம்
புழுதியிலே வாழ்பவரின்
பொங்குகின்ற பெருமூச்சு
எண்ணமதின் மின்கிழிப்பு
எழுச்சிகளின் வார்ப்படங்கள்
இதயத்தின் வேதனைகள்
எரிந்துவரும் தீச்சுடர்கள்
இவ்வாறு கவிதை என்ற தலைப்பில் எழுதிய கவி வரிகளில் கூறுகின்றார். "இதயத்தின் வேதனைகள் எழுந்துவரும் தீச்சுடர்கள் என்கிறார்.
அந்த மென்மையான பூ போன்ற இதயங்கொண்ட கவிவாணன் தன் இதயத்து வேதனைகளை அக்கினியாக வடிக்கின்றார்.
இலக்கியத்தில் நமது கவிதைக்கு உன்னதனமான ஸ்தானம் உண்டு. ஆனால், அவை வெறும் ரூபலாவண்ணியத்தினாலோ அன்றி ஓசை நிரப்பிகளாகவோ உருவாக்கப்படுவதில்லை.

Page 37
இவர்கள் வித்தியாசமானவர்கள் 70
சமுதாயத்தை நிலைக்களனாகக் கொண்டு அதில் வேர்விட்டு எழும் விருட்சகமாக உந்தியெழும்போதுதான் இக் கால கவிதையின் நவீனத்துவம் மூச்சு விட முடியும் என்ற நோக்குடையவன் நான்.
இவ்வாறு தன் மன ஆதங்கத்தையே அக்கினிப்பூக்கள் கவிதைத் தொகுதியின் முன்னுரையில் வெளியிட்டுள்ளார்.
மனிதாபிமானரி
கவிஞர் ஈழவாணன் வெறுமனே சொற்சிலம்பம் ஆடும் கவிஞரல்ல. சமூகத்தைக் கூர்ந்து பார்த்து அதனை மிகவும் உன்னதமாக நேசித்த மனிதாபிமானி.
அதனால்தான்.
கூன் விழுந்த எண்ணத்தில்
குறைமாத பிரசவமாய்
குறுகுறுத்தனமான அரிப்பில்
கொட்டிவிட்ட குப்பையென
வான்கிழித்துப் பந்தலிடும்
வாய்ஜம்பப் பேச்சுகளால்
வருங்காலத் தலைமுறைக்கும்
வாழ்கின்ற சந்ததிக்கும்
வாழ்வேயில்லை.
என அக்கினியின் ஆவேசத்துடன் சாடுகின்றார். கவிஞர் 'சிந்தனையில் இளரத்தம் சீறட்டும்' என முழுக்கமிடுகின்றார்.
ஐம்பது வயதை எட்டிப்பிடிக்க ஓராண்டு இருக்கையில், கனவுகளுடன் வாழ்ந்த கவிஞர் அவரது மனைவிக்கும் தர்ஷினி, தர்ஷயன், தாரணன் என்ற மூன்று செல்வங்களுக்கும் விட்டுச் சென்றது அவரது கவிதைகளை மாத்திரம் தான்.
இறவாத காவியங்கள் படைக்க வேண்டும் என்று பென்னம் பெரிய கனவுகளை நெஞ்சில் சுமந்து திரிந்த கவிஞர் ஈழவாணன்

71 அந்தனி ஜீவா
இன்று நம்மிடையே இல்லை என்பது நம்பமுடியாத செய்தியாகத்தான் இருக்கின்றது. கவிஞர் ஈழவாணனின் கவிதா வீச்சையும், வீறுடன் அவர் சொற்களைத் தூவுகின்ற திறனையும் அவரது கவிதைகளில் கண்டு சுவைக்கலாம்.
கவிஞர் ஈழவாணனின் 'அக்கினிப்பூக்கள் தொகுதியின் கடைசிப் பக்கத்தில் ‘யாத்திரீகா என்ற தலைப்பில் காணப்படும் கவிதை வரிகள் என் நெஞ்சைத் தொட்டன.
காலச்சிறகுகளின்
கருக்கல் புகையிருட்டில்
தாளக் கீர்த்தனையின்
தனிப்பயண யாத்திரீகா
எனத் தொடங்கி
உன் பயணம் தனிமனிதன் உடன் கட்டை பயணமின்றி என் வர்க்கத்தோர் தொடரும் எதிர்கால தொடராகும்.
என்று முழங்கி, மீண்டும் அவர் தொடருகிறார்.
உன் பாட்டு தனிப்பாட்டாய்
ஒசையற்றுப் போகாது
உன்சுலோகம் ஒரு மனிதன்
உச்சரிப்பாய்ப்போகாது
உன் பின்னும் ஒர் கூட்டம்
ஓடிவரும், அக்கூட்டம்
மண்ணகத்தைப் பொன்னாக்கும்
மானுடத்தின் குரலாகும்.
ஆம். கவிஞரின் இந்த வார்த்தைகள் பொய்ப்பதில்லை. காலம் உள்ளளவும் நிலைக்கும்.

Page 38
இவர்கள் வித்தியாசமானவர்கள் 72
கவிதை ஆற்றல்
கவிஞர் ஈழவாணன் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரை இனங்காட்டும் 'அக்கினிப்பூக்கள் கவிதைத் தொகுதிகள் ஈழத்துக் கவிஞர்களிடையே அவர் பெயரை நிச்சயமாக வாழவைக்கும். அவரின் கவிதை ஆற்றலையும், எண்ணங்களின் வண்ணங்களையும் நம்மால் உணர முடிகிறது.
கவிஞர் ஈழவாணனின் இதயராகம் தான் 'அக்கினிப்பூக்கள் அக் கினியாய்ச் சீறி எழும் கவிஞரின் எழுச்சியினை இத்தொகுதியில் தரிசிக்க முடிகிறது. உன் பாட்டு தனிப்பாட்டாய் ஓசையற்றுப் போகாது ஆம். தனிப்பாட்டாக அல்ல, ஈழத்துச் சத்தியக் கவிஞர்களின் இதயமாக நிச்சயமாக ஒலிக்கும். வளர்ந்துவரும் ஒரு கவிதை தலைமுறைக்கு கவிஞர் ஈழவாணன் வழிகாட்டியாக நின்றார். அதனால் ஈழவாணன் என்ற கவிஞர் வாழ்கிறார் என்று நிச்சயமாக நம்பலாம்.
13. நடிகவேள் லடீஸ் வீரமணி
கலைத்துறையில் 40 ஆண்டு காலமாக உழைத்த எனக்குக் கிடைத்த பரிசுகள்.
வாழ்க்கையிலே வறுமை. வயிற்றிலே பசி.
வாழ முடியாமை. என்றாலும் எப்படியோ.
'அதற்கு மட்டும் கிடைத்துவிடும்.
பெருங்குடி மன்னர்கள் என்னை கண்டுவிட்டால் போதும் அவர்களின் அன்றைய விருந்தாளி நான்.

73 அந்தனி ஜீவா
மது வயிற்றுள் சென்றவுடன்.மதி வெளியேறிவிடும்.
இதன் பிற்கு.
சீரழிவு.சீரழிவு.இருந்த அலங்கோலங்களுக்கு மத்தியில் நல்ல சில இதயங்கள் என்னை நேசிக்கத்தான் செய்தன. அப்படி நேசிப்பவர்களில் நீயும் ஒருவன். ஏனென்றால் நாம் இருவரும் அறிஞர் அ.ந.க.வின். அறிவுரையில் வளர்ந்தவர்கள். அந்த அறிவுலக மேதையால் மதிக்கப்பட்டவர்கள்.
இவ்வாறு கூறியவர் வேறு யாருமல்லர், நாடறிந்த கலைஞரான நடிகவேள் லடீஸ் வீரமணிதான். ஆம் , அவரைப் பற்றி நினைக்கிறேன்.
அவரைப்பற்றிய நினைவுகள் நெஞ்சில் பூத்து மலர்கின்றன. வாழ்க்கைப்பள்ளரி W
அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய குறிப்புகளைச் சில வாரங்கள் தினகரனில் எழுதிய கட்டுரையின் கையெழுத்துப் பிரதியை படித்து விட்டு 'இறந்த பின்னர் எல்லாரும் என்னை மறந்துவிடுவார்கள். அதனால் நீ மாத்திரம் நிச்சயமாக எழுதுவாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு' என்று லடீஸ் வீரமணி கூறியது என் நினைவிற்கு வருகிறது.
நடிகவேள் லடீஸ் வீரமணியுடன் பேசிக் கொண்டிருந்தால் போதும், அவருடைய அனுபவங்கள் எத்தகையவை என்று உணரமுடியும்
ஒருமுறை நடிகவேள் லடீஸ் வீரமணியோடு பேசிக் கொண்டிருக்கும்பொழுது 'உங்களை மண்டைக்கனம் பிடித்தவன் என்கிறார்களே, உங்கள் குறைபாடுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளக்கூடாதா?’ என்றேன்.
‘என்னிடம் உள்ள குறைபாடுகளை நானே உணர்கிறேன். ஒப்புக்கொள்கிறேன். அதற்குப் பரிகாரமும் தேட நான்

Page 39
இவர்கள் வித்தியாசமானவர்கள் 74
முயன்றிருக்கிறேன். ஆனால், என்னுடைய குறைகளை கூறித்திரிந்தவர்கள்.என்னிடமுள்ள திறமையைப் போற்றத் தவறிவிட்டார்களே. என்று கூறிய நடிகவேள் லடீஸ் வீரமணி மீண்டும் தாமே தொடர்ந்தார்.
‘என்னிடம் உள்ள திறமையை நம்மவர் போற்ற வேண்டும். பாராட்ட வேண்டும். என் திறமைக்குரிய ஸ்தானத்தை எனக்குத் தரவேண்டும்.
இப்படி நான் நினைத்தால் அது தவறாகுமா? ஆனால் ஒன்று சொல்கிறேன். வாழ்க்கைப் பள்ளியில் நான் படித்த பாடங்கள், அனுபவங்கள் ஆயிரமாயிரம்.
"ஆழ்கடலுக்கடியில் அழகிய ரப்பர் பந்தைப் புதைக்க (փtդակւOn?
அதைப்போல் என்னைப் பற்றிக்குறை கூறுபவர்களால் என் திறமையைத் திரைபோட்டு மறைக்க முடியாது."
இவ்வாறு கொட்டித் தீர்த்தார் வீரமணி. அவரது கருத்துக்கள் நியாயமானவை. ஒரு கலைஞனுக்கு அவனுக்குரிய ஸ்தானத்தை அளிக்காவிட்டால் அவன் தவறு செய்வது இயல்பாகும். நடிகவேள் லடீஸ் வீரமணியின் நாடக அனுபவங்கள் வளர்ந்துவரும் நாடக உலகின் இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாகும்.
இதோ. அவரே அவரது அனுபவங்களைத் தொடர்கிறார். சிறுவயதில் ஆர்வம்
சிறுவயதிலே என் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து நடிக்க வேண்டும், பாடவேண்டும், அதைப் பார்த்துப் பிறர் பாராட்ட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. இதனால் யாராவது பார்த்தால் அவரைப் போலப் பேசி நடித்துக் காட்டுவேன். இதனால் என்னைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துவார்கள். இந்த ஆர்வம் என்னுள்ளத்தில் வளர்ந்து வந்தது.

75 அந்தனி ஜீவா
எனது கலையார்வத்தை எப்படி வளர்த்துக் கொள்வது என்று தெரியவில்லை. காரணம் போதிய கல்வியறிவில்லை. கொழும்பில் மேடையேறும் நாடகங்களைப் பார்ப்பேன். அது எனக்கு உற்சாகம் தராது. சினிமாவையே காப்பியடித்து நாடகமாக ஆடிக் கொண்டிருந்தார்கள்.
ஆனாலும். என்ன செய்வது. நாடகங்களில் நடிப்பதன் மூலம் எனது கலைப்பசியைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று எண்ணினேன். பல நாடக மன்றங்களுக்கு சென்று நடிக்க வாய்ப்புக் கேட்டேன். யாரும் எனக்கு நடிக்கச் சந்தர்ப்பம் அளிக்கவில்லை. என்னை எல்லோரும் முரடனாகவே மதித்தார்கள். இயற்கையிலேயே முரட்டுச் சுபாவம் என்னிடம் குடி கொண்டிருந்தது.
இதனால் எனக்கு நடிக்கச் சந்தர்ப்பம் தராத நாடக விளம்பரங்களைக் கிழித்தெறிந்தேன். நாடகம் நடக்கும்போது கூச்சலிட்டுக் குழப்பம் விளைவிப்பேன். இதை ஒரு பெருமையாக சில காலம் நினைத்திருந்தேன். இப்பொழுது அவைகளை நினைத்துப் பார்க்கையில் வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
அதற்குப் பிறகு. உயர்வடைவதற்குக் காரணம் என்ன? என்றேன். வீரமணி சிரித்துக்கொண்டே சிற்பியிலே முத்து, சேற்றிலே செந்தாமரை, குப்பையிலே குன்றுமணி, பாதையிலே வீரமணி என்றிருந்த என்னை உயர் மட்டத்திற்குக் கொண்டுவந்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள்.
ஆனால்..இன்னுமொரு வரையும் நான் நினைவு கூறவேண்டும். அவர்தான் நாடக நெறியாளர் சுஹைட் ஹமீட். மீண்டும். என் திறமையில் நம்பிக்கை வைத்து அவர் நெறிப்படுத்திய “பொம்மலாட்டம்', ரகுபதிராகவ ராஜாராம், வேதாளம் சொன்ன கதை, நந்தவனத்தில் ஆண்டிகள் ஆகிய நாடகங்களில் வாய்ப்பளித்தார் என்று பெருமையுடன் கூறுகின்றார்.

Page 40
இவர்கள் வித்தியாசமானவர்கள் 76
Aáé egoí" 62/1A Aá
நாடக நெறியாளர் சுஹைட் ஹமீட் நாடகங்களில் நடித்ததன் மூலம் ஒரு புத்தி ஜீவி வட்டத்திற்கு நடிகவேள் லடீஸ் அறிமுகமானார். கலா விமர்சகர்களின் பார்வை இவர்மீது திரும்பியது.
நடிகவேள் லடீஸ் வீரமணியைப் பற்றி நினைத்துப் பார்க்கையில். நாடகக் கலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அவர். தமிழ் நாடக மேடையில் விஸ்வரூப தரிசனம் தரும் ஓர் அபூர்வக் கலைஞர். நாடக மேடையின் சகல நுட்பங்களையும் அறிந்தவர். ஒப்பனை முதல் காட்சி அமைப்பு வரை இவருக்குக் கைவந்த கலையாகும். இன்று சிறந்த நடிகர்களாகத் திகழும் பலர் இவரின் பாசறையில் பயின்றவர்கள்.
நடிகவேள் லடீஸ் வீரமணியின் நடிப்பை 'பொம்மலாட்டத்தில் பார்த்துவிட்டு ஆங்கிலப் பத்திரிகைகள் கூட இவரது நடிப்பின் சிறப்பை விமரிசித்தன. தமிழகப் படைப்பாளி ஜெயகாந்தனின் "யாருக்காக அழுதான்?" கதையினை நாடகமாக்கி அப்பாவி ஜோசப்பாக நடித்து பலரின் பாராட்டைப் பெற்றார். வீரபாண்டியக் கட்டப்பொம்மன், நாடற்றவன், சலோமி, கங்காணியின் மகன், வீரத்தேவன், மனிதர், எத்தனை உலகம் அத்தனை ஆகிய நாடகங்களில் நடித்தும் நெறிப்படுத்தியும் உள்ளார். மேற்கூரிய நாடகங்களின் சில நாடகப் பிரதிகளையும் இவரே எழுதியுள்ளார்.
நாடகத்திற்கு உயிர்
1970-ம் ஆண்டு மேடையேற்றப்பட்ட கவிஞர் அம்பியின் "வேதாளம் சொன்ன கதை' என்ற கவிதை நாடகத்தில் நடிகவேள் லடீஸ் வீரமணியின் நடிப்பைப் பலரும் பாராட்டினார்கள். இந்த நாடகத்தில் லடீஸ் வீரமணியின் நடிப்புதான் நாடகத்திற்கு உயிரூட்டியது என்று நாடக விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
நடிப்புத்துறையில் மாத்திரமின்றித் தமிழர்களின் பாரம்பரிய கிராமிய கலைகளிலும் லடீஸ் வீரமணி சிறப்புற்று விளங்கினார்

77 அந்தனி ஜீவா
கவிஞர் மகாகவியின் 'கண்மணியாள் காதை" என்ற காவியத்தை வில்லுப்பாட்டு நிகழ்ச்சியாக வில்லிசைத்துப் பாடியுள்ளார். புலவர் விக்டோரியா இயற்றிய 'கப்பலோட்டிய தமிழன்’ வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நாடெங்கும் அரங்கேற்றியுள்ளார்.
ஒருமுறை லடீஸ் வீரமணி வில்லுப்பாட்டு நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிடுகையில், கவிஞர் வி.என். பெரியசாமி இயற்றிய 'வாழ்வின் வசந்தம்', வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைக் கொழும்பு கலைச் சங்கச் செயலாளரான கே.பாலச்சந்திரன் தயாரித்தளித்ததுடன் ஆங்கிலசிங்கள பிரமுகர்களையும் இந்நிகழ்ச்சியைப் பார்க்க வைத்துள்ளார். இதனை இலங்கையில் பல இடங்களில் அரங்கேற்றினார் என்றார்.
ஆரம்பக்காலங்களில் நடிகவேள் லடீஸ் வீரமணியின் நடிப்பைப் பார்த்து பாராட்டியது மட்டுமல்லாமல் மலையகத்தில் இவரை அறிமுகப்படுத்தி நடிகவேள் என்ற நாமத்தை சூட்டியவர் அப்போது திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக இருந்த இளஞ்செழியன் என்பது பலருக்கு இன்னும் தெரியாத உண்மை.
இத்தனை திறமைகளையும் தன்னகத்தே கொண்ட அபூர்வ ஆற்றல் வாய்ந்த கலைஞன் நடிகவேள் லடீஸ் வீரமணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் நடந்த சோக சம்பவங்களில் பின்னர் தமிழகம் சென்றுவிட்டார். அங்கும் பல வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றார்.
நாடகமேடையின் சகலகலா வல்லவனாகத் திகழ்ந்த நடிகவேள் லடீஸ் வீரமணி நாற்பதாண்டுகள் நாடக மேடையில் பெற்ற அனுபவங்களை நூல் வடிவில் தரவேண்டும். அஃது ஒரு பயனுள்ள முயற்சியாகும்.
23.09.1984
14. டொமினிக் ஜீவா
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கும், தமிழக எழுத்தாளர்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. இங்கே

Page 41
இவர்கள் வித்தியாசமானவர்கள் 78
தமிழ்நாட்டில் பொழுதுபோக்கு எழுத்தாளர்கள் இருப்பதுபோல, இலங்கையில் பொழுதுபோக்கு எழுத்தாளர்கள் என்று பெரும்பாலும் யாரும் இலர். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படையில் ஒரு சமுதாயப் பிரச்சனையை வைத்துத்தான் எழுதுகிறார்கள். வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாமல் எழுதும் வழக்கம் எங்கள் மத்தியில் இல்லை.
இலங்கையிலிருந்து மொத்தம் நான்கு தமிழ் நாளிதழ்கள் வெளிவருகின்றன. இந்த எல்லா இதழ்களும் எழுத்தாளர்களுக்கு மிக்க முக்கியத்துவம் தருகின்றன.
பிரதமரின் பேச்சு முதல் பக்கத்தில் நான்கு கலத்தில்
வெளிவந்தால் எழுத்தாளர்களின் கருத்துரைகளும் அதே முதல் பக்கத்தில் வெளியாகும்.
இப்படி தமிழக பத்திரிகை ஒன்றில் தனது கருத்தைத் துணிகரமாக வெளியிட்டவர் வேறுயாருமல்ல, நாடறிந்த படைப் பாளியான டொமினிக் ஜீவாதான்.
இலக்கிய நேசன்
இலக்கியத்தை இதயபூர்மாக நேசிக்கும், இவரைப்பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.
இருபது ஆண்டு காலத்தை எட்டிப்பிடிக்கும் ஒரு சஞ்சிகையை, தனி மனித சாதனையாக தொடர்ந்து நடத்தி வருகின்றார். 'மல்லிகை" என்ற மணமிக்க அந்த இலக்கிய மலருக்கு தமிழகத்தின் தரமான படைப்பாளிகள் மத்தியில் செல்வாக்குண்டு.
'மல்லிகை இதழைத் தம்முயிருக்கும் மேலாக நேசித்து வருபவர் டொமினிக் ஜீவா. ஓர் இலக்கியவாதி உண்மையாக இலக்கியத்தை நேசிக்கும் சத்தியத்துடன் மாதந்தோறும் சஞ்சிகையை அச்சிட்டு அதனைத்தானே சுமந்து, இலக்கியத்தை நேசிக்கும் இனிய நெஞ்சங்களை நேரில் தேடிப்போய்

79 அந்தனி ஜீவா
விநியோகித்து வருவதை நினைத்துப் பார்க்கிறேன். இதற்கு எல்லாம் என்ன காரணம் என எண்ணிப் பார்க்கிறேன். 'மல்லிகை சஞ்சிகை ஆதரவாளர்களை நேரில் தேடிப்போய் அவர்களுடன் பலதும் பத்தும் பேசுவதைத் தம் இலக்கியப் பணியாக, கடமையாகக் கருதி வந்துள்ளார்.
இலக்கியவாதிகளை அதுவும் தமது நெஞ்சங்களுக்கு நெருக்கமானவர்களைக் கண்டால் போதும் ரயில் நிலையமா? பஸ்தரிக்கும் இடமா? அல்லது முச்சந்தியா? எது என்றாலும் பரவாயில்லை. அவர்களைச் சந்தித்து குசலம் விசாரிக்கத் தவறமாட்டார்.
A6D62 - இலக்கியப் A/76) mā
பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற கலாநிதியாக இருந்தாலும், சாதாரண தெரு ஓரத்துப் பிரதிநிதியாக இருந்தாலும் அவன் இலக்கியத்தை நேசிக்கின்றான் என்றால் போதும், அவனை டொமினிக் ஜீவா நேசிக்கத் தவறமாட்டார்.
டொமினிக் ஜீவா என்ற படைப்பாளியை நம்நாட்டு எழுத்தாளர்கள், வாசகர்கள் மாத்திரமின்றித் தமிழக படைப் பாளிகளும் வாசகர்களும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் தமிழகம் சென்றுவருவதை ஓரிலக்கிய கடமையாக, ஒரு புனிதப்பணியாகக்கருதி, தமிழகம் சென்று, அங்குள்ள படைப் பாளிகள், பத்திரிக் கையாளர்கள், பதிப்பாளர்களை சந்தித்து, ஈழத்து கலை இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எடுத்துக்கூறி இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் தமிழ் இலக்கிய கலைப் பாலமாகத் திகழ்கிறார்.
இவரது முயற்சியால் இலங்கை எழுத்தாளர்களின் பல படைப்புகள் தமிழகத்தில் நூலுருவில் வெளிவந்துள்ளன. இவர் நடத்தும் 'மல்லிகை" சஞ்சிகையில் இலங்கை எழுத்தாளர்களின் பல உருவப்படங்கள் அட்டைப்படங்களாக வெளிவந்துள்ளன.

Page 42
இவர்கள் வித்தியாசமானவர்கள் 8O
டொமினிக் ஜீவாவின் கருத்துக்கு மாறுபட்டவர்களின் படங்களை கூட அவர்களின் இலக்கிய ஆளுமை கருதி அட்டைப் படமாகப் பிரசுரித்துள்ளார். இவருடைய தண்ணீரும் கண்ணீரும்' என்ற சிறுகதைத் தொகுதி 1961 பூரீலங்கா சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. தமிழக சஞ்சிகை தாமரை இவருடைய உருவப்படத்தை அட்டைப் படமாக வெளியிட்டுக் கெளரவித்தது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ் பிரதேச கிளையின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
மல்லிகை இதழை எவ்வளவு சிறப்பாக, இலக்கிய கனதியாக வெளியிடலாம் என தினசரி கனவு காணும் டொமினிக் ஜீவாவைப் பற்றிய நினைவுகளை அசைபோடுகிறேன்.
ஒர் அழர்வ குனம்
டொமினிக் ஜீவாவிடம் ஓர் அபூர்வ குணம் உண்டு. அதுதான் எதற்கு எடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு விடுவார். அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால் இந்தப் பழக்கம் அவரிடம் குடிக்கொண்டுவிட்டது. எப்படி உணர்ச்சிவசப்படுவாரோ அதைப் போலவே மறுநிமிடத்தில் அதை மறந்துவிடுவார்.
இன்னும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றது. நானும் டொமினிக் ஜீவாவும் ஒருமுறை ஜெயகாந்தனுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அங்கு பலவிதமான 'விருந்து உபசாரங்கள் நடைபெற்றன. எதிலும் பங்கு பற்றி பங்காளியாகாமல், மற்றவர்களின் மகிழ்ச்சியைத் தடைப்படுத்தாமல், உற்சாகத்தோடு உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஜெயகாந்தன் கூட டொமினிக் ஜீவாவை அன்பாக கடிந்துகொண்டார்.
ஒருமுறை டொமினிக் ஜீவா 'மல்லிகை’ பத்திரிகையை ஏன் நடத்துகிறேன் என்று தெரிவித்த கருத்து நினைவுக்கு வருகிறது.
நான் மல்லிகை சஞ்சிகை வெளியிடுவதன் நோக்கமே எனது முழுக் கருத்தையும் சொல்லவேண்டும். ஒரு தேசியமே எழும்பவேண்டும் , எமது சக்திகள் எல்லாம் ஒன்று

81 அந்தனி ஜீவா
திரளவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு உருவாகியது. தனிமரம் ஒருநாளும் தோப்பாகி விடாதல்லவா? வரதர் போன்ற பல்வேறு எழுத்தாளர்கள் பத்திரிகை நடத்தித் தோல்வி கண்டபோது ஏன் அதை நான் படிப்பினையாக எடுத்துக் கொண்டு ஒரு பத்திரிகையை வெற்றிகரமாக நடத்த முடியாது என எண்ணினேன். அந்த எண்ணத்தில்தான் 'மல்லிகை" பிறந்தது. மல்லிகையை அச்சிட்டவுடன், நான் செய்த முதற்காரியம் 'ஆனந்த விகடன் ஸ்தாபகர் வாசனின் முன் மாதிரியைப் பின்பற்றி எவ்வித கூச்சமுமில்லாமல் தெருவில் இறங்கி விற்க முற்பட்டதுதான். மல்லிகையின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம்'.
இதனால் தான் இன்றும் மல்லிகை வெற்றிகரமாக வெளிவருகிறது. தன்னுடைய மறைவுக்குப் பின்னர் கூட "மல்லிகை வெளிவர வேண்டும் என்ற அளவில் திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்துவருகிறார்.
'மனிதன் என்னே அற்புதமானவன்' என்று மார்க்ஸிம் கார்க்கி சொன்னார். அத்தகைய மனிதர்களில் ஒருவர்தான் டொமினிக் ஜீவா. இலக்கியத்தை நேசிப்பதைப்போல உண்மையான இலக்கிய வாதிகளையும் நேசிக்கும் நெஞ்சம் அவருடையது.
22.07.1984
15. வல்லிக்கண்ணன்
நான் எனது இலக்கிய நோக்குக்கு வரம்புகள் கட்டிக்கொண்டதில்லை. என் இரசனைக்கு வேலிகள் அமைத்துக் கொள்ளவில்லை. எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் எழுதப்படுகிறவை தரமானவையாக கலைத் தன்மையோடு விளங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆகலே நயமான எழுத்துக்கள் usT J M G) எக்காலத்தில் எழுதப்பட்டவையாயினும் என்னை ஈர்க்கும் சக்தி பெற்றவனாக இருக்கும்.

Page 43
இவர்கள் வித்தியாசமானவர்கள் 82
இரசிக்கும் எழுத்து
மணிக்கொடி எழுத்தாளர்கள் கதைகள் என்னை வசீகரித்தன. கல்கியின் நல்ல கதைகளை நான் இரசித்தேன்.
என்கால எழுத்தாளர்களான ரகுநாதன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, ராஜநாராயணன் எழுத்துக்களும் என்னை ஈர்க்கின்றன. அவர்களுக்குப் பிந்திய ஆ.மாதவன், நீல.பத்மநாபன், ஆதவன் முதலியோரின் படைப்புக்களை இரசிக்கின்றேன்.
மறுமலர்ச்சி இலக்கியவாதிகள், முற்போக்கு இலக்கியவாதிகள் இப்பிரிவுகளில் எவ்வகையைத் தேர்ந்து கொண்டவராக இருப்பினும், தரத்தோடு தனித்தன்மையோடும் புதிய பார்வையோடும் எழுதுகிற படைப்பாளிகள் என்னை ஈர்க்கிறார்கள்.
ஜெயகாந்தன் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும்.
இவ்வாறு மனந்திறந்து கூறும் இலக்கிய நெஞ்சம் வேறு யாருடையதுமல்ல. எழுபது வயதாகப்போகும் இலக்கியவாதி வல்லிக்கண்ணனதுதான்.
இலக்கியத்தை வாழ்வாகவும், தொழிலாகவும் கொண்ட வல்லிக்கண்ணன், எந்தவித ஆரவாரமுமின்றி சலசலப்பில்லாமல் இலக்கியப் பணியாற்றும் வல்லிக் கண்ணனின் இலக்கியப் பணிகளை நினைத்துப் பார்க்கிறேன்.
இவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர் நா.வானமாமலையாவார்.
இலக்கிய நெஞ்சம் கொண்ட வல்லிக்கண்ணன் அமைதியான சுபாவம் கொண்டவர். எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ள மாட்டார். இலக்கிய உலகில் எதிரிகளையே சம்பாதிக்காதவர் என்றே கூறலாம். இவருடைய இலக்கிய வாழ்க்கையைப் பற்றி இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள் அறிந்துகொள்ள வேண்டியது கடமையாகும்.

83 அந்தனி ஜீவா
எழுத்தாளர் மாநாடு
முதலாவது தமிழ் எழுத்தாளர் மாநாடு 1944ல் கோவையில் கூடியது. வ.ரா.தான் தலைவர். இந்த மாநாட்டில் ஒரு சுவையான சம்பவம் மகாநாட்டில் கலந்துகொண்ட எழுத்தாளர்கள் ஒவ்வொருவராக எழுந்து தங்களைத் தாங்களே அறிமுகம் செய்து கொண்டார்கள். அநேகர் புதுமையாகவும், சுவையாகவும் சுய அறிமுகம் செய்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட வல்லிக் கண்ணனும் தன்னைப்பற்றிக் கூற எழுந்தார்.
நான் தான் வல்லிக்கண்ணன்.
நையாண்டி பாரதி
சொனா முனா
சொக்கலிங்கம்
கொண்டயன்பிள்ளை
கோரநாதன்
மிவாஸ்கி
வேதாந்தி
c56,606 (Uri
தத்துவதரிசி
அவதாரம
இளவல்
ரா.சு. கிருஷ்ணசுவாமி
இப்படி வல்லிக்கண்ணன் அறிமுப்படுத்தியதும் பலருக்கு ஆச்சரியம்.
ஆரம்பகால எழுத்தர
இலக்கிய நெஞ்சம் கொண்ட வல்லிக்கண்ணனிடம் ஒரு பத்திரிகையாளர் 'உங்கள் ஆரம்பகால எழுத்து, சூழல், அரசியல்,

Page 44
இவர்கள் வித்தியாசமானவர்கள் 84
பொருளாதார, சமூக நிலைமை எப்படி இருந்தது? நீங்களும் சக எழுத்தாளர்களும் இலக்கியத்தில் அவற்றைப் பிரதிபலித்தீர்களா?
என்று கேட்டபொழுது வல்லிக்கண்ணன் அதற்கு விளக்கமாக பதில் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த நாட்களில் பத்திரிகைகள் மிகவும் குறைவு. புத்தக வெளியீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதைவிடக் குறைவு. எழுத்தாளர்களும் இப்போது போல் மிக அதிகமாக இருந்ததில்லை.
எழுதுகிறவர்களுக்கு 'ஆனந்தவிகடன் மட்டுமே பணம் தந்தது. 'கலைமகள் பெயர் பெற்ற எழுத்தாளர்களுக்கு மட்டுமே 'சன்மானம்' அளித்தது. எழுதுகிறவர்கள் குறைவாக இருந்தால் தரமான எழுத்துக்களை எழுதுகிறவர்கள் um IJIT 5 இருந்தாலும் பத்திரிக்கையில் தொடர்ந்து பிரசுர வாய்ப்பு பெறுவது எளிதாக இருந்தது.
இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம் அதுக்குப் பிற்பட்ட வருடங்கள் ஜனங்களிடம் பணப்புழக்கம் தாராளமாக இருந்தது. பணம் கொடுத்து புத்தகங்கள் வாங்கக்கூடிய தனிநபர்கள் நாட்டில் அதிகம் பேர் இருந்தார்கள்.
அரசியலில் தேசீய விடுதலை இயக்கம் மும்முரமாக இருந்தது. காந்தியின் தாக்கம் நாடு நெடுகிலும் பரவியிருந்தது. சமூகப் பிரச்சினைகள் சாதி, தீண்டாமை, விதவை மறுமணம், தாசி ஒழிப்பு போன்றவை சீர்திருத்த நோக்கில் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்த
85T G6) D.
இவற்றை 'கல்கி ஓரளவுக்குத் தன் எழுத்துக்களில் பிரதிபலித்தார். ராஜாஜி இந்நோக்கத்துடனேயே கதைகள் எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் 'மறுமலர்ச்சி இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொண்ட ‘மணிக்கொடி எழுத்தாளர்கள் இவற்றுக்கு இலக்கியத்தில் இடம் தேவையில்லை என்று கருதினர். நானும் 'மணிக்கொடி எழுத்தாளர்களின் வழியையே பின்பற்றினேன்.

85 அந்தனி ஜீவா
இலக்கிய வாழ்க்கை
சாகித்திய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளரான வல்லிக் கண்ணன் தம் வாழ்க்கையையே இலக்கியமாகக் கொண்டவர், திருமணமாகாத அவர், இலக்கியத்தையே இனிய துணைவியாக ஏற்றுக்கொண்டவர். இவருடைய வாழ்க்கையே இலக்கிய வரலாறாகும்.
‘வாழ்க்கை தான் எனது பாடநூல், மனிதர்களின் அனுபவங்கள் தான் எனக்கு அறிவூட்டும் தத்துவம். மனிதாபிமானமும் அன்பும் தான் எனது மதம்' என்று கூறும் இலக்கிய நெஞ்சம் படைத்த வல்லிக் கண்ணன் எழுத்துக்களை அனைவரும் படிக்க வேண்டியது அவசியமாகும்.
16.11.1986
16. “சக்தீ’ பாலையா
“புழுதிப்படுக்கையில்.
புதைந்த என் மக்களை போற்றும் இரங்கற்
புகழ்மொழி இல்லை. புழுதிலா அவர்களுக்கோர்
கல்லறை இல்லை. பரிந்தவர் நினைவுநாள்
பகருவாரில்லை."
s
"தேயிலைத்தோட்டத்திலே. என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுதியை சி.வி.வேலுப்பிள்ளையின் இதயதாகத்தை வெளிப்படுத்தும் வண்ணம் தமிழ் வடிவம் தந்தவர் கவிஞர் சக்தீ.த. பாலையா ஆவார். ஒரு கவிஞனின் ஆங்கிலப் படைப்பை மிகச்சிறப்பாக உயிர்த்துடிப்புடன் தமிழில் தந்தார் சக்தீ.

Page 45
இவர்கள் வித்தியாசமானவர்கள் 86
"சக்தி” விளக்கம்
இயற்கையாகவே கவித்துவம் மிக்க இவரைப் பற்றி தலைசிறந்த பத்திரிகையாளரான எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் குறிப்பிடும்பொழுது, “கவிஞரின் வீர உணர்ச்சி மிக்க கவிதைகள்" "சிதறிப்பாயும் தீப்பொறிக் கற்றை போன்றது" என்கிறார். மேலும் அவர் விளக்கும்போது, “கவிஞரின் கவிதா வேகத்தையும், அதற்கேற்ப அவர் பெயர் விளக்கம் பெறுவதையும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்." "கவிஞர் பாலையாவுக்கு முன்னால் இருக்கும் சொல் வெறும் சக்தி" அல்ல, அது "சக்தீ" கடைசி எழுத்து தீயன்னா' இதன் பொருள் என்ன?
"ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் உண்டு. ஒன்று பவர் (Power) மற்றது பெயர் (Fire). பவர் என்றால் சக்தி" பையர் என்றால் "தீ' பவரையும் பையரையும் சேர்த்து ஒரே சொல் ஆக்கியிருக்கிறார் இந்தக் கவிஞர். அதுதான் சக்தீ என்று கவிஞர் "சக்தீ! பாலையாவின் கவிதா ஆவேசத்தை படம் பிடித்து இக்கவிஞரைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி அறியாதிருப்பதை அழகாக சுட்டிக் காட்டியிருந்தார்"
மலையக இந்திய வம்சாவளி மக்களினதும் இதய உணர்வில் தேங்கிக் கிடக்கும் சுதந்திர, சமத்துவ வாழ்வின் ஏக்க உணர்வுகளை, இதயக் குமுறல்களை, எதிர்கால சுபிட்சத்தை, வலிமையை, தமிழ்மொழி கலை, கலாசாரப் பண்பாடுகளை ஊக் குவித் தி டவும், தமிழினத்திடையே ஊடுருவியுள்ள மூடப்பழக்க வழக்கங்களை அகற்றி ஒளிபெற்றுப் புதுவாழ்வு கண்டிடவும், எழுச்சிமிக்க தமது கவிதைகளால், கலைகளினால், தமிழினத்தை விழிப்புறச் செய்ய அயராது முயன்றவர் சக்தீ.
6ó) o L.
அறியாமையிலிருந்து விடுதலை பெற ஒவ்வொரு மனிதனும் சுய அறிவு, சுயநம்பிக்கை, சுயதெளிவு இவற்றை எய்திட வேண்டும் என்பது இவரது குறிக்கோள். தனிமனித சுதந்திரமே உலக சுதந்திரத்திற்கு வழிகாணுவதாக அமைகிறது. ஓவியக்

87 அந்தனி ஜீவா
கலையாலும், வண்ணப் பகுத் தாய்வினாலும் ஒளி-நிழல் பேதங்களை ஊன்றிக் கவனிப்பதாலும், சுய அறிவு எளிதில் உதயமாகிறது என்கிறார் கவிஞர் சக்தீ.
கவிஞர் அக ஆராய்வு செய்து "மனோதத்துவமும், கலையும், போதனாமுறையும்" என்ற நூலை 1956ம் ஆண்டு ஆரம்ப ஆசிரியர்களுக்காக எழுதி வெளியிட்டுள்ளார். "சொந்த நாட்டிலே" என்ற தலைப்பில் முதன்முதலில் இலங்கையின் தேசீய பாடல்களை பாடி நூலுருவில் பிரசுரித்தார். இவரது வீராவேசமான பாடல்களில் சுதந்திரதாகம் பிரதிபலிக்கிறது.
தனி வழிக் கவிராயர்
கவிஞர் சக்தீ பாலையா "தனிவழிக் கவிராயர்" என்ற பெயரிலும், வசனக் கவிதைகள் எழுதியுள்ளார். தான் தோன்றிக் கவிராயராகக் கவிஞர் சில்லையூர் செல்வராசன் கவிதா உலகில் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய நேரத்தில், கவிஞர் சக்தீ பாலையா தனிவழிக் கவிராயராகக் கொடிகட்டிப் பறந்தார். இலங்கை வானொலியில் இவரது கவிதைகள், மெல்லிசைப் பாடல்கள், பேச்சுக்கள் ஒலிபரப்பாகியுள்ளன. கவியரங்கங்களில் தலைமை வகித்து கவி அரங்குகளைச் சிறப்பாக நடத்தியுள்ளார். வள்ளலார் இராமலிங்க அடிகளார் மீது பெரும் பற்றுக் கொண்டுள்ள கவிஞர் வள்ளலாரின் மரணமில்லாத பெருவாழ்வு குறித்து வானொலியிலும், பத்திரிகைகளிலும் பேசியும், எழுதியும் வைத்துள்ளார்.
இலங்கை அரசின் நுண்கலைக் கல்லூரியில் கலையாசிரியராகப் பயிற்சி பெற்ற கவிஞர், ஆங்கிலக் கலையாசிரியராகவும், விரிவுரையாளராகவும், அரசாங்கக்கலைக் கல்லூரியில் பணிபுரிந்துள்ளார். மலைநாடு தந்த தலைசிறந்த ஓவியக் கவிஞர் என்று இவரைக் கலாவிமர்சகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். உயிரோவியம் தீட்டுவதில் வல்லவரான இவர், இன்றும் ஓவியராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் திகழ்கின்றார். தற்போது விளம்பர ஓவியராக விளங்கும் இவர்,

Page 46
இவர்கள் வித்தியாசமானவர்கள் 88 ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எழுதுவதில் ஆர்வமும் அக்கறையும் காட்டுகிறார்.
1949ம் ஆண்டு முதல் இவரது கவிதைகள் தினகரன், வீரகேசரி, சுதந்திரன், பின்னர் ஈழநாடு, தினபதி, சிந்தாமணி ஆகிய தேசியப் பத்திரிகைகளில் வெளிவந்தன. கவிதை மாத்திரமின்றி, கட்டுரைகள், ஓவியக் கலைஞர்கள் பற்றிய வரலாறுகளையும் எழுதியுள்ளார்.
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுத்துத்துறையிலும், கலைத் துறையிலும் சுதந்திரமாக ஈடுபட்டுள்ள கவிஞர் சக்தீ , 1956ல் ‘தமிழ் ஒலி' என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும், வீரகேசரியில் துணை ஆசிரியராகவும் பின்னர் “வளர்ச்சி" என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்து எழுதிய ஆசிரிய தலையங்கங்களை தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'திராவிடநாடு" மறுபிரசுரஞ் செய்துள்ளது. தேசிய தொழிலாளர் சங்கத்தின் “மாவலி" இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். தமிழ்நாட்டில் வெளிவந்த கல்கி, கல் கண்டு ஆகிய சஞ்சிகைகளில் இவரது எழுத்தோவியங்கள் வெளிவந்துள்ளது.
கவிஞர் சக்தீயின் ஓவியங்கள் இலங்கை கலாபவனத்தில் காட்சிக்காக வைக் கப்பட்டு, பாராட்டுக்களையும் , சான்றிதழ்களையும் பெற்றுத் தந்துள்ளன. இவரிடம் ஓவியப் பயிற்சி பெற்ற பலர் நாடு முழுவதிலும் ஆசியர்களாகவும், கலைஞர்களாகவும் புகழுடன் வாழ்கின்றார்கள்.
பத்து வயதில் கவி’
கவிஞர் சக்தீ பாலையாவுடன் பேசிக்கொண்டிருப்பதே ஒரு சுகானுபாவமாகும். அவரோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு திரும்பினால் ஒரு நூலகத்தில் நுழைந்து திரும்பிய அனுபவம் ஏற்படும். பத்து வயதிலேயே கவி பாடத் தொடங்கியுள்ளார். இவரது கவிதைகள் முதன்முதல் கதிர்காம கந்தன் மீது பாடப்பட்டவையாகும். இவரது பாடல்களை இவரது

89 அந்தனி ஜீவா
தாய்மாமனாரான இராமையா என்பவர் திருத்தி ஊக்கமளித்துள்ளார். சிவபக்தரான 9 Tm 60 LDu T உத்தியோகத்தராகப் பணிபுரிந்தாலும், தமிழ் வேதாந்த நூல்களில் அறிவுமிக்கவராக இருந்தார். இராமலிங்க வள்ளலார் மீது பற்றுமிக்கவராக இவர் விளங்கினார். ஆரம்பகால வீரகேசரியில் இவர் "மலைக்குருவி" என்ற பெயரில் எழுதியுள்ளார். பிள்ளைப் பருவத்தில் கவிஞர் எழுதிய பக்திப்பாடல்களை இலக்கண முறைகள் வழுவாது திருத்தியமைத்து நூலாக்கிய இராமையா அவர்களின் இல்லத்திற்கு இந்தியாவிலிருந்து வருகை தரும் புலவர்கள், அறிஞர்கள், துறவிகள் யாத்திரை மார்க்கத்தில் தங்கி பலநாள் விவாதங்களில் ஈடுபடுவார்கள்.
இளமையிலிருந்தே இவர்களின் வேதாந்த தத்துவங்களைக் கேட்கும் வாய்ப்பு கவிஞருக்கு கிட்டியது. இதனல் கவிதா சக்தியை வளர்த்துக்கொண்டு கவிஞர் உலகத் தத்துவ ஞானிகளில் ஒருவராக போற்றப்படும் கிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆசியைப் பெற்றுள்ளார். ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை மிக்க சக்தீ பாலையா தாகூரின் "கீதாஞ்சலி"க்குத் தமிழ்வடிவம் தந்துள்ளார். 'கவிதாஞ்சலி' என்ற கவிதா நூலையும் எழுதியுள்ளார்.
மலையக மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை grida).55ci) 6T(p5u "In the Ceylon Tea Garden" 6T6örp 56,605 நூலை தோட்டத் தொழிலாளர்களின் துன்ப, துயரங்களை அவர்களின் சோக பெருமூச்சுக்களை சி.வி.யின் இதயநாதத்தைச் சிதைக்கா வண்ணம் "தேயிலைத் தோட்டத்திலே" என்ற பெயரில் தமிழ் வடிவம் தந்துள்ளார்.
தரன்ட்ரியல் நாடகம்
சுதந்திர மனிதனாக கொழும்பில் சுயநம்பிக்கையுடன் ஓவியத் துறையை நம்பி வாழ்ந்து வந்த மானுடம் பாடிய வானம்பாடி பஸ் ஒன்றினால் 1981ம் ஆண்டு ஜூலை 11ம் திகதி மோதித் தள்ளப்பட்டு இரண்டு கால்கள்மீது ஏறி ஒடிய சக்கரங்களால் ஒரு

Page 47
இவர்கள் வித்தியாசமானவர்கள் 90
காலில் எலும்பு முறிந்து மரணத்துடன் பெரும் போராட்டம் நடத்திய கவிஞர் சக்தீ தனது தூய்மையான நம்பிக்கையாலும், துணிவாலும் குணமடைந்து, இன்றும் தன்நிலை தவறாது ஊன்று கோலுடன் உயிரோவியமாக உலாவி வருவது பெரும் வியப்பாக இருக்கிறது. சக்தீ மரணத்துடன் போராடி மறுபிறவி எடுத்து வந்துள்ளார் என்றே கூறவேண்டும்.
கடந்த 35 வருடங்களாக வாழ்க்யுைடன் போராடி வந்துள்ள கவிஞர் சக்தீ, தான் சேகரித்து வைத்திருந்த விலை மதிக்க முடியாத நூல்களை, தனது சிந்தனைகள், கவிதா களஞ்சியங்கள். தனது ஆராய்ச்சிக் கட்டுரைகள், அவரது உடைமைகள் அனைத்தும் 1983ம் ஆண்டு இடம்பெற்ற வன்செயல் 'அக்கினி' திருவிளையாடல்களின்போது செந்தீ நாக்குகளுக்கு இரையாகிவிட்டன. இந்தப் பேரிழப்பையும் தாங்கிக் கொண்டு கவிஞர் நண்பர்களைக் கண்டால் கல கலப்பாகப் பேசுவது அவரது துணிவையும் , தன்னம்பிக்கையையும் எடுத்துக் காட்டுகின்றது.
'மனிதன் என்னே அற்புதமானவன்' என்று ரஷிய இலக்கிய மேதை மாக்ஸிம் கார்க்கி கூறினார். அந்த அற்புத மனிதர்களில் ஒருவராக மலைநாட்டு மாணிக்கமாக கவிஞர் சக்தீ பாலையா திகழ்கிறார்.
12.05.1985
17. அ.எல. அப்துஸ் ஸ்மது
கண்டியில் நடைபெற்ற தமிழ்த்தினவிழாப் போட்டிகளை யொட்டி நடத்தப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் ஆக்க முயற்சிகளான சிறுகதைகளைத் தேர்வு செய்யும் நடுவர்களில் ஒருவராக நானும் கடமையாற்றினேன்.
சிறுகதைகளை தெரிவு செய்தபின்னர் நானும், பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி

91 அந்தனி ஜீவா
அருணாசலம், திருமதி லலிதா நடராஜா ஆகிய மூவரும் சிறுகதை எழுதிய மாணவ மணிகளுடன் அவர்களின் படைப்புக்களைப் பற்றி உரையாடினோம்.
அந்தச் சந்தர்ப்பத்தில் சிறுகதை எழுதிய ஒரு மாணவனிடம் கலாநிதி அருணாசலம் "உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவரின் பெயரைக் கூறுங்கள்" என்றார். அந்த மாணவரோ "அ.ஸ. அப்துஸ் ஸமது" என்றார். கிழக்கிலங்கையின் மூத்த எழுத்தாளரான அ.ஸ். அப்துஸ்ஸமதுவின் பெயரைக் கூறியவுடன் அந்தச் செய்தி எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது. இலக்கியப்பனரி
தமிழகத்திலிருந்து வெளிவரும் மாத நாவல்களைப் படித்து நமது மாணவ மணிகள் சிவசங்கரி, சுஜாதா, புஷ்பா தங்கதுரை போன்ற பெயர்களைத்தான் உருப்போட்டு வைத்துள்ளார்கள்.
ஆனால் அந்த மாணவனோ வித்தியாசமாக நம்மவர் ஒருவரின் பெயரைக் கூறியதும், அதுவும் நீண்டகாலமாக இலக்கிய உலகில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்தி, அமைதியாக இலக்கியப்பணி புரியும் அப்துஸ் ஸமதுவைப்பற்றிய நினைவுகள் மலர்ந்தன.
கிழக்கிலங்கையின் மூத்த எழுத்தாளரான அ.ஸ. அப்துஸ் ஸமது கடந்த 35 வருடங்களாக தன் இலக்கியப் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்.
அட்டாளைச்சேனை ஆசிரியப் பயிற்சி கலாசாலையின் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரியும் அப்துஸ் ஸமது ஐம்பதுகளில் இலக்கிய உலகில் தனது காலடிச்சுவடுகளைப் பதித்தார்.
பல ஆக்கங்கள்
1955ம் ஆண்டளவில் திருவாளர் இராஜ அரியரத்தினத்துடன் கொண்டிருந்த தொடர்பால் ஈழகேசரியில் "ஆடு கொடியானேன்" என்ற கிராமிய மணங்கமழும் கவிதை வெளிவந்தது.

Page 48
இவர்கள் வித்தியாசமானவர்கள் 92
இதனைத் தொடர்ந்து "சீறாப்புராணம்" பற்றிய இலக்கிய இரசனைக் குறிப்புக்கள் போன்ற கட்டுரைகள் இஸ்லாமிய இலக்கியத்திற்கு வலுவும் பொலிவும் ஊட்டின.
ஈழகேசரியில் வெளியான "பாத்திமாவின் நூதல் அழகு" என்ற கட்டுரை தமிழ்நாட்டு “மணிவிளக்கு" சஞ்சிகை ஆசிரியர் ஏ.கே. அப்துஸ் ஸமதுவின் மனதைத் தொட்டது. அதனை அவர் மறுபிரசுரம் செய்தார். பின்னர் "சீறாவின் இன்பம்" என்ற பெயரில் 1957ல் தமிழ்நாட்டில் அது நூலுருவில் வெளிவந்தது.
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, பாடநூல் ஆகிய பல்வேறு துறைகளில் இவர் தனது கைவண்ணத்தை காட்டி யுள்ளார். இஸ்லாமிய சமய பண்பாட்டியலை அறிமுகப்படுத்தும் இவரது கட்டுரைகள் இவரை இந்தியாவில் பிரபலப்படுத்தின. சீறா இன்பத்தைத் தொடர்ந்து 1959ல் "சுலைமான் பல்கீஸ்" என்ற நூல் வெளிவந்தது.
இஸ்லாமிய இலக்கிய நோக்கு, நபிமணி, கவிநயம் என்பன இவரது இலக்கியப் புலமையையும், விமர்சன ஆற்றலையும் வெளிப்படுத்தும் படைப்புகளாகும்.
புனை கதைத்துறை
புனை கதைத்துறையில் இவர் கணிசமான பங்களிப்பினைச் செய்துள்ளார். இவரின் சிறுகதைகள் அடங்கிய தொகுதியான "எனக்கு வயது பதிமூன்று” 1977ம் ஆண்டுக்குரிய சாகித்திய மண்டல பரிசினை பெற்றது. இவரது 'பணிமலர்" என்ற நாவல் வீரகேசரி நடத்திய நாவல் போட்டியில் மட்டக்களப்பு பிரதேசத்துக்குரிய நாவலாகப் பரிசுபெற்று தனிப்பிரசுரமாக வெளிவந்துள்ளது. கல் உறின்னை தமிழ் மன்றம் இவரது "கனவுப்பூக்கள்" நாவலை வெளியிட்டுள்ளது.
1981ல் அ.ஸ. அப்துஸ் ஸமதுவின் "கண்ணீர்ப்பூக்கள்" என்ற நாவல் தினகரனில் வெளியாகிறது. இலங்கை வானொலியிலும் தனது ஆளுமையை அ. ஸ .அ. நிலைநாட்டியுள்ளார்.

9.5 அந்தனி ஜீவா
வானொலியில் முஸ்லீம் நிகழ்ச்சியில் "இலக்கிய மஞ்சரி" என்னும் நிகழ்ச்சியை சிலகாலம் நடத்தினார்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பணிகளில் தன்னையும் இணைத்துக்கொண்ட அ.ஸ.அ. மட்டக்களப்பு தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கிளையின் தலைவராகச் செயற்பட்டதுடன் 1963ம் ஆண்டு கிழக்கிலங்கை பெருமைப்படும் வகையில் அறிஞர் சித்தி லெவ்வைக்குப் பெரும் விழா எடுத்தார். இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்து கல்விமான்களும், கலை இலக்கியவாதிகளும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
1961ல் அ.ஸ.அ.வின் சிறுகதை ஒன்றை மலையக மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தினகரனின் சகோதர ஆங்கிலப் பத்திரிகையான "ஒப்சேவரில்" வெளியிட்டுள்ளார்.
மூத்த எழுத்தாளர்
இலக்கியத்துறையில் மூத்த எழுத்தாளரான இவர், தனது இலக்கியக் கொள்கை பற்றி தனது சிறுகதைத் தொகுதியான "எனக்கு வயது பதிமூன்று' முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"இலக்கியம் ஒரு சமுதாயத்தின் பிரதிபலிப்பு. அதன் எழுச்சிக்குரல் அதன் எதிர்காலக் கனவுகளாகும். இந்த முறையில் என் சமுதாயத்தின் பிரத்தியட்சமான பிரதிபலிப்பாக நான் இக்கதைகளைப் படைத்துள்ளேன். சமுதாய நடைமுறைகள், போக்குகள் என்பவற்றிற்குக் கலைவடிவம் கொடுக்கும்போது தனிமனித சுயாதீனத்துக்கு ஏற்படும் தடைகளை மீறித் தன்னம்பிக்கையோடு முன்னேறும் பாத்திரங்கள் பலவற்றை நீங்கள் இக்கதைகளில் சந்திக்கலாம். தனிமனித உணர்வுகள் மதிக்கப்படத்தக்க வை. அத்தகைய சுயாதீனங்களும் , உணர்வுகளும் சமுதாயத்தினால் அழிக்கப்படக்கூடாது என்பது என் கருத்து. சமுதாயம் என்பது சிலவேளை அடிமைத்தனமான

Page 49
இவர்கள் வித்தியாசமானவர்கள் 94
ஒரு நெறியில் மக்களை வழிநடத்திச் செல்வதும் உண்டு.
அவர்களுடைய முற்போக்கு நோக்கங்களையும் செயல்முறைகளையும் அழித்து எதேச்சாதிகாரம் தலைதூக்கும் சந்தர்ப் பங்களில் இத்தனிமனித உந்துதல்களும்
அபிலாஷைகளும் மதிக்கப்பட வேண்டியனவாகும்" என்கிறார். கலைப் பட்டதாரி
ஐம்பது வயதைத் தாண்டிவிட்ட அ.ஸ.அப்துஸ் ஸமது அவர்கள் gi? (O5 பயிற்றப்பட்ட ஆசிரியரும், கலைப்பட்டதாரியுமாவார். இவருடைய எழுத்துக்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளன. 1979ம் ஆண்டில் பேராசிரியர் கலாநிதி எம்.எம். உவைஸ் தலைமையில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின்போது வெளியான 27 இஸ்லாமிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய 'பிறைப் பூக்கள்' தொகுதி அ. ஸ.அ.வின் முயற்சியால்தான் வெளிவந்தது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான அ.ஸ.அ.வின் மூத்தமகள் சித்தி றிஜா சிறுகதைத் துறையில் ஆர்வம் காட்டி வருகிறார். 'தினகரனிலும்' இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன. அ.ஸ.அ.வின் இலக்கிய அடிச்சுவட்டில் இருவரும் வளர்ந்து வருவார்.
எதிர்காலத்தில் அ.ஸ. அப்துஸ் ஸமதுவின் இலக்கியப் பணிகளை ஆய்வு செய்து தனிநூல் வெளியிடப்படவேண்டும் என்பது என் கருத்து. ر
22.12.1985.
18. எஸ். அகஸ்தியர்
தமிழ்நாட்டில் மாத நாவல்கள் வெளிவருவதைப்போல
இங்கும் மாத நாவல்கள் வெளியீட்டில் சிலர் அக்கறை
காட்டினார்கள். ஆயினும், அந்தத் துறையில் எவரும் துணிந்து கால் எடுத்துவைக்க முனையவில்லை.

95 அந்தனி ஜீவா
மாதநாவல் முறை
'சாந்தி' என்ற மாத நாவல் ஓரிதழுடன் உதிர்ந்துவிட்டது. ஆனால் 'ரஜனி' என்ற மாத நாவல் மிக வெற்றிகரமாக ஐந்து நாவல்களை வெளியிட்டுள்ளது.
திட்டமிட்டு எதைச் செய்தாலும் வெற்றி கிட்டும் என்பதற்கு ரஜனி' நாவல் உதாரணமாகும். நமது நாட்டில் கடந்த இருபது வருடங்களாகத் தனிமனித முயற்சியால் வெளிவரும் 'மல்லிகை" சஞ்சிகையைப்போல ரஜனி' நாவலும் தனிமனித முயற்சியால் வெளிவருகின்றது. இது தொடர்ந்து வெளிவர வேண்டும் என்பதே எமது ஆவலாகும்.
ரஜனி வெளியீட்டின் ஐந்தாவது அக்டோபர் மாத நாவல் நாடறிந்த பிரபல எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் 'கோபுரங்கள் சரிகின்றன என்ற நாவல். இந்த நாவலை, ஏற்கனவே தினகரனில் வாசித்துள்ளேன். ஆனால் நூலுருவில் முழுமையாகப் படிக்கும்பொழுது ஒரு புதிய சுவை ஏற்படுகிறது.
எழுத்தாளர் அகஸ்தியரை எண்ணிப்பார்க்கையில் பழைய எண்ணங்கள், அவரைப்பற்றிய நினைவுகள் என் இதயத்தில் சிறகடித்தன.
எழுத்தாளர் அகஸ்தியர் அவர்களைக் கடந்த இருபது ஆண்டுகளாக அறிவேன். அவர் ஓர் அசுரப் படைப்பாளி. சோர்வடையாமல் எழுதும் கரம் அவருடையது. அத்துடன், நண்பர்களைச் சந்தித்தால் போதும், தெருவோரம் என்றுகூடப் பார்க்கமாட்டார். மணிக்கணக்கில் பேச ஆரம்பித்துவிடுவார்.
எழுத்தாளர் அகஸ்தியர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் நீண்டகாலமாக, மலையகத்தின் தலைநகரான கண்டியில் தொழில் காரணமாக வாழ்ந்ததால் இவருக்கு மலையகத்துடன் நெருக்கமான பிணைப்புண்டு.

Page 50
இவர்கள் வித்தியாசமானவர்கள் 96
இலக்கிய ஆளுமை
மாத்தளை எழுத்தாளர்கள் ஒன்றுக் கூடி இவரை பல்கலைச்செல்வர் ஏ.பி.வி.கோமஸ் தலைமையில் கெளரவித்த விழாவில் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. சி.தில்லைநாதன், திரு அ.சிவராசா ஆகியோருடன் நானும் கலந்துகொண்டு இவரின் இலக்கிய ஆளுமையைப்பற்றி பாராட்டிப் பேசினோம்.
அந்தப் பாராட்டு விழாவில் அகஸ்தியர் பேசும்பொழுது, "மலையகத்தில் பதினேழு வருடங்கள் வாழ்ந்த நான், இலங்கையின் அதிஅற்புதமான நல்ல இதயங்கொண்ட பரிசுத்தமான மனிதர்களை இங்கு நான் சந்தித்தேன். அவர்களிடம் கற்றது அநேகம். என்னால் அதிகம் நேசிக்கப்பட்ட மனிதர்கள் அவர்கள். என்பால் பேரன்பு கொண்ட மலையக மக்களை என்றும் என்னால் மறக்க முடியாது" என்கிறார்.
ஒருமுறை எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் தன்னைப்பற்றி பேச்சுவாக்கில் குறிப்பிடுகையில்,
"யாழ்ப்பாணத்தில் ஆனைக் கோட்டையில் சவரிமுத்து அன்னம்மா தம்பதியின் மூன்றாவது கடைசி மகனாகப் பிறந்த நான், கீரிமலை சந்தன மாதா கோவிலடியைச் சேர்ந்த அக்னெஸ் நவமணி என்ற பெண்மணியை மணந்தேன். என் பாரச் சுமையெல்லாம் தனது பாரச் சிலுவையாக ஏற்று, எனக்கு உறுதுணையாக திகழ்ந்து வரும் மகாசக்தி என் அன்புத் துணைவியே' என்று கூறும் அகஸ்தியர், மீண்டுத் தன்னைப்பற்றித் தொடர்ந்தார்.
‘என் இலக்கியச் செல்வங்களைப்போலவே நவஜோதி, நவஜெகா, நவஜெகனி என்னும் புத்திரிகளும், நவஜீவா என்ற புதல்வரும் என் செல்வங்கள், என் எழுத்துக்களை பிரதிபண்ணி இலக்கியப்பணிக்குப் பங்களிப்புச் செய்பவர்கள் என் இனிய புதல்விகள்' என்கிறார்.

97 அந்தனி ஜீவா
அசுர எழுத்தாளர் என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் எஸ். அகஸ்தியர் ஓர் அற்புதமான மனிதர். கலை, இலக்கியத் துறையில் சகலத்தையும் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுபவர். கலைஞர்களிடம் தனியான அன்பு காட்டி உரையாடுவார்.
கலைத்துறையில் கர்நாடக இசையில் அதிக ஈடுபாடு உண்டு. மிருதங்க வித்துவான் அமரர் கா.செல்லையாவிடம் மிருதங்கத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனைக் கோட்டை புல்லாங்குழல் வித்துவான் அமரர் ஜி.வசந்தகுலசிங்க அவர்களிடமும் முறையாக பயின்று வானொலியிலும், பொது வைபவங்களிலும் அவருக்கு பக்கவாத்தியம் வாசித்ததைப் பெருமையாகக் குறிப்பிடுவார்.
கலைக்குடும்பம்
இவரது குடும்பமே ஒரு கலைக் குடும்பம். பாட்டன் அந்தோணி அக்காலத்தில் சேனாதிபதியாக நடித்து புகழ் ஈட்டியவர். மேடையில் உண்மையான குதிரையில் தோன்றி நடித்தவர். தந்தை சவரிமுத்துவும் அவர் காலத்தில் சேனாதிபதியாக நடித்தவர். அகஸ்தியரின் மூத்த சகோதரர் சிலுவைராசா 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கண்டி அரசன், சங்கிலி அரசன் என்ற அரச கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர். நாட்டுக்கூத்திலும், மேடை நாடகத்திலும் அகஸ்தியருக்கு அதிகமான ஆர்வம் உண்டு.
கடந்த முப்பத்திரண்டு வருடங்களாக இலக்கியப் பணியாற்றியவரும் அகஸ்தியர் 360 சிறுகதைகளும், 8 குறுநாவல்களும், 9 நாவல்களும், 40 வானொலி மேடை நாடகங்களும், 70 உருவகக் குட்டிக் கதைகளும், 100 தத்துவ, சித்தாந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும், உணர்வூற்றுடம் சமூகச் சித்திரங்கள், உரைச்சித்திரங்கள், இப்படி நூற்றுக்கணக்கான நூல்களாக வெளிவரக்கூடிய இலக்கியப் படைப்புகளும் "அசுர” வேகத்தில் படைத்துள்ளார்.

Page 51
இவர்கள் வித்தியாசமானவர்கள் 98
'இருளினுள்ளே குறுநாவல், 'நீ உணர்வூற்றுச் சித்திரம், 'திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கிறாள்', 'மண்ணில் தெரியிதொரு தோற்றம்', 'எரிநெருப்பில் இடைப்பாதை இல்லை, 'கோபுரங்கள் சரிகின்றன' ஆகிய நாவல்கள், நாட்டுக்கூத்துக் கலாநிதி பூந்தான்யோசேப்பு வாழ்க்கை வரலாறு ஆகியன அகஸ்தியரின் அச்சில் வெளிவந்த நூல்கள்.
தமிழ்நாட்டில் இவரது 'கடலும் கரையும்', 'கொக்குத்துவம்' ஒரு மனிதனின் மாகாவியம் 'ஒரு நூற்றாண்டின் இரு தமிழ் நாவல்கள் ஆகியன நூலுருவில் விரைவில் வெளிவருவதற்கு ஏற்பாடாகியுள்ளதாக அகஸ்தியர் அண்மையில் தெரிவித்தார்.
தமிழக முற்போக்கு படைப்பாளிகளுக்கு நன்கு அறிமுகமாகி யுள்ள அகஸ்தியரின் உருவப்படத்தை தாமரை 1970ம் ஆண்டு மே இதழில் முகப்போவியமாகப் போட்டுக் கெளரவித்தது. 1982ல் நம்மகத்து 'மல்லிகை" சஞ்சிகையும் அட்டையில் இவரது படத்தைப் போட்டுப் பெருமைப்படுத்தியது.
இலங்கையின் சகல இலக்கிய ஏடுகளிலும் தம் கை வண்ணத்தைக் காட்டியுள்ள அகஸ்தியர் தமிழக சஞ்சிகைகளான தாமரை, எழுத்து, கண்ணதாசன், கலைமகள்,
தீபம், ஜீவா ஆகிய இதழ்களிலும் எழுதியுள்ளார்.
1961ல் தினகரனில் வெளிவந்த ‘சவுந்தரி' குறுநாவலை கண்ணதாசன் ஆண்டு மலர் மறுபிரசுரஞ் செய்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நாவல்
1975ம் ஆண்டு இலங்கை அரசின் கலாசார அமைச்சின் கட்டுப்பாட்டில் இயங்கும் கலாசார கூட்டுறவுப் பதிப்பகத்தால் நடத்தப்பட்ட நாவல் போட்டியில் அகஸ்தியரின் ‘எரிகோளம் என்ற நாவல் சிறப்பான நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டு, நூலாக வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், விமர்சகர் ஒருவரின் பெரு முயற்சியினால் இது அச்சில் வராமல்

99 அந்தனி ஜீவா
தடுக்கப்பட்டது. இந்நாவல் 'எரிநெருப்பில் இடைப்பாதை இல்லை' என்ற தலைப்பில் தமிழகத்தில் வெளிவந்துள்ளது.
அகஸ்தியரின் 'கடல் அலைகள் குமுறுகின்றன என்ற சிறுகதை சிங்கள மொழியில் த.கனகரத்தினம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 'சிங்கள சிறுகதைகள்' என்ற தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
அகஸ்தியர் படைப்புகளின் உள்ளடக்கம் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மன அவலங்களையும் பிரதிப்பலிப்பனவாகவும், அவற்றிற்கான தீர்வுகளை காட்டுவனவாகவும் அமைந்துள்ளன. தனது காலப் பகுதியின் சமூகப் பொருளாதார, சித்தாந்த, அரசியல் பிரச்சினைகளை அவற்றிற்குரிய பகைப்புலன்களை மையமாகக் கொண்டு மிக நுணுக்கமாகச் சித்தரிப்பதில் வெற்றி கண்ட அகஸ்தியர், களத்திற்கேற்ப உரைநடையைக் கையாள்வதிலும், பாத்திரங்களின் இயல்பான பேச்சு, மொழியை ஒலிவடிவில் யதார்த்த பூர்வமாக வார்ப்பதிலும், குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு கிராமங்களிலும் நிலவுகின்ற பேச்சு வழக்கினை யதார்த்தங்களினூடாக வெளிக்கொணர்வதிலும் மிகவும் வல்லவர். அதுபோன்று மலையகப் பிரதேசங்களில் வழங்கிவரும் பேச்சு வழக்கினை கையாள்வதிலும் தனித்திறமை கொண்டவர்.
இவ்வாறு பேராதனை பல்லைக்கழக விரிவுரையாளரான அ.சிவராசா எம்.ஏ., அவர்கள் அகஸ்தியர் பற்றிய மதிப்பீடு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
எழுத்துலக அனுபவம்
எழுத்துலகில் அசுர படைப்பாளியாகத் திகழும் எழுத்தாளர் எஸ்.அகஸ்தியா, 'எனது எழுத்துலக அனுபவம்' என்று பெரியதொரு நூலை எழுதி வருகின்றார். இந்நூலில் தன்னுடைய இலக்கிய வாழ்க்கைப்பற்றி அகஸ்தியர் நினைத்துப் பார்க்கிறார். இந்நூலை படிக்கும் ஒவ்வொருவரும் அகஸ்தியரை நினைத்துப்

Page 52
இவர்கள் வித்தியாசமானவ கவ 100
பார்க்க வேண்டும். அத்தகைய ஓர் அசுரப் படைப்பாளியாக அகஸ்தியர் விளங்குகிறார்.
19. வீ.கே. வெள்ளையன்
மலையக மக்கள் பல்வேறு வகைகளில் தொடக்கத்திலிருந்தே வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு விடுதலை என்றால் என்பதைக்கூட அறியத்தரும் வாய்ப்புக்களை பிரிட்டிஷ் காலனி ஆட்சி மறுத்துவந்தது. தனிப்பட்ட சுயநலக்காரர்களாலும், சந்தர்ப்பவாதிகளாலும் இவர்கள் காலத்துக்குக் காலம் ஏமாற்றப்பட்டு வரலாயினர். இந்தச் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் தலையெடுத்தன. அவற்றினால் தொழிற்சங்கங்களும் பிறக்கத் தொடங்கின.
இவ்வாறு மலையகத்தின் பாட்டாளி மக்களைப்பற்றி, அவர்களின் துன்ப, துயரங்களைப்பற்றி, தான் வாழும் காலத்தில் தினமும் இரவும் பகலும் நினைத்துப் பார்த்த ஓர் அற்புதமான மனிதரைப்பற்றிய நினைவுகள் நெஞ்சில் பூத்தன.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் வாரம் மலையகத்தின் விடிவெள்ளியான அமரர் வீ.கே. வெள்ளையனைப் பற்றிய நினைவலைகள் நெஞ்சில் வந்து மோதும்.
இதயங்கவர் தலைவர்
மலையக மக்களின் இதயங்கவர்ந்த தலைவரான வீ.கே. 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் திகதி அமரரானார். அவரது மறைவைக்கேட்டு மலையகமே கண்ணிர் வடித்தது.
தோட்டத் தொழிலாளர்களின் உடன் பிறப்பாக, உயிர்த்துடிப்பாக விளங்கியவர் அமரர் வீ.கே.வெள்ளையன். தோட்டத்தொழிலாளர்களிடையே ஐக்கியம் வளரவேண்டும். தோட்டத்தொழிலாளர்கள் ஆற்றலும், அறிவுமுள்ளவர்களாகத்

101 அந்தனி ஜீவா
திகழ வேண்டும் என்பதில் அமரர் வெள்ளையன் கண்ணுங்கருத்துமாக இருந்தார்.
அமரர் வெள்ளையனை அவ்வேளை முதன்முதலில் அட்டன் மாநகரில்தான் சந்தித்தேன். அப்போது ஓரிரு வார்த்தைகளுடன் எங்கள் அறிமுகம் முடிந்தது.
மக்கள் நேசர்
'ஐஸே தொழிலாளர்களை எல்லோரும் ஏமாற்றத் தொடங்கி விட்டார்கள். படித்தவனும் ஏமாத்துறான், படிக்காதவனும் ஏமாத்துறான். உங்களைப் போன்ற இளைஞர்கள் பொதுநல நோக்கத்தோடு முன்வந்து மலையக சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்று உணர்ச்சியுடன் கூறுவார்.
மலையக மண்ணின் மைந்தனாகப் பிறந்த காரணத்தால் அமரர் வெள்ளையன் மலையக தோட்டப் பாட்டாளி மக்களைத் தம்முயிரினும் மேலாக நேசித்தார்.
பொகவந்தலாவ முத்து லெட்சுமி தோட்டத்தில் பெரிய கங்காணி-காளிமுத்து பெருமாயி தம்பதியின் இரண்டாவது மகனாக 1918ஆம் ஆண்டு வீ.கே.வெள்ளையன் பிறந்தார்.
ஆரம்பக் கல்வியை தோட்டப் பாடசாலையிலும், பொகவந்தலாவையிலுள்ள சென்.மேரீஸ் பாடசாலையிலும் பெற்று, பின்னர் கண்டி திருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்து உயர்கல்வி பயின்றார். வெள்ளையன் விளையாட்டிலும் மிக்க ஆர்வம் கொண்டவர். 1939ஆம் ஆண்டு கண்டி திருத்துவக் கல்லூரியில் ரகர் விளையாட்டுக்குழுவின் தலைவராகக் கடமையாற்றியுள்ளார்.
கல்வியை முடித்துக்கொண்ட பின் பல உத்தியோகங்கள் அவரை நாடி வந்தன. அவரோடு பயின்ற சக மாணவர்களில் Lu G) fit தோட்டத்துரை மார்களாகவும், கம் பெனி இயக்குநர்களாகவும், உத்தியோகம் வகித்தார்கள். ஆனால் இவர்

Page 53
இவர்கள் வித்தியாசமானவர்கள் 102
தன்னை நாடி வந்த உத்தியோகங்களை உதறித்தள்ளியதோடு,
தான் எந்தச் சமுதாயத்தில் பிறந்தாரோ அந்த சமுதாயத்துக்குத் தொண்டாற்ற வேண்டும் என மனதில் உறுதிக்கொண்டார்.
1941ம் ஆண்டு சிறிது காலம் பொக வந்தலாவ நகரில் கூட்டுறவுக் கடையில் பணியாற்றிய அவர், 1942ம் ஆண்டில் தொழிற்சங்கப் பணியில் தீவிரமாக ஈடுபடலானார்.
தொழிற்சங்கப்பனரி
அட்டன் மாநகரில் தொழிலாளர்கள் மத்தியில் இவர் கடுமையாக உழைத்ததன் காரணமாக அட்டன் மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து மத்திய கமிட்டியில் உதவிப் பொதுச்செயலாளராகப் பணியாற்றி வந்தார்.
1950ம் ஆண்டில் டிக் கோயா வணராஜா தோட்ட விசாரணையின்போது, தோட்டத்துரை திரு. சென்-கிளையாருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக தோட்டத்துரைமார் சங்கம் வெள்ளையனை எந்தப் பேச்சுவார்த்தையிலும் அனுமதிப்பதில்லை எனத் தீர்மானித்தது.
இந்தத் தீர்மானத்தை எதிர்த்து அட்டன் மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர்.
பல சிவற்றிகள்
1950ம் ஆண்டு சலங்கண்டி தோட்டம் கைமாறும்போது அங்குள்ள தொழிலாளர்களுக்குச் சேவைக்காலப் பணம் வழங்க வேண்டும் அல்லது கடந்தகால சேவையைப் புதிய முதலாளி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதன்முதலாகப் போராட்டம் நடத்தினார். இப்போராட்டத்தில் தோல்வி ஏற்பட்டதால் அங்குள்ள தொழிலாளர்களுக்கு உடனடியாக வேறு தோட்டங்களில் வேலை வாய்ப்புக்கள் தேடிக்கொடுத்தார்.

\03 அந்தனி ஜீவா
1949 க்கு முன் தோட்டத் தொழிலாளர்கள் வானொலி உபயோகிப்பதற்கு அனுமதி மறுக் கப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் 'ரேடியோ’ அனுமதிகோரி பொகவந்தலாவ கொட்டியாகொல தோட்டத்தில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார். அந்தக்கால கட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களுக்குக் காரில் செல்ல முடியாதிருந்த தடையையும் இவரே தகர்த்தெறிந்தார்.
1955ல் பொக வந்த லாவ கெம்பியன் தோட்டத்தில் கொழுந்தெடுக்கும் பெண்களின் தேயிலை இறாத்தல் நிர்ணயிக்க வேண்டும் எனப் பெரும் போராட்டம் நடத்தினார். இதன்மூலமே அட்டன் மாநிலத்தில் ஒருநாள் சம்பளத்திற்கு 23 இறாத்தல் கொழுந்தும், அதற்கு மேல் எடுக்கும் ஒவ்வோர் இறாத்தலுக்கும் சதக் காசும் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதை வென்றெடுத்தார்.
1956ம் ஆண்டு மடுல்கெல கிளாப் போக்கை தோட்டத்தில் கொழுந்து இறாத்தல் நிர்ணயிக்க 60,000 தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு வெள்ளையன் தலைமை தாங்கி வெற்றி தேடிக்கொடுத்தார்.
மகர நாடுகள்
1955 முதல் 1960 வரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகக் கடமையாற்றினார். 1956ல் காசல்றி நீர்த்தேக்கத்தின் காரணமாக நிர்க் கதியாக விடப்பட்ட ஆயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுவதோடு அந்த முதலாளிகளுக்குச் சொந்தமான வேறு தோட்டத்தில் அவர்களை குடியமர்த்த வேண்டும் என்றும் மத்தியஸ்தர் சபைக்கு அப்பீல் செய்து, வழக்கு நடத்த ஏற்பாடு செய்தார்.
1955ல் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தடி இலங்கை தொழிலாளர் ::
ரஷ்யா, டென்மார்க், இஸ்ரேல், நார்வே போன்ற நாடுகளில்

Page 54
இவர்கள் வித்தியாசமானவர்கள் 104
நடைபெற்ற தொழிற்சங்க மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். 1960 முதல் அவர் இலங்கை தொழிலாளர் காங்கிரசை விட்டு விலகும் வரை உபதலைவராகப் பதவி வகித்தார். அதன் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டு உழைத்தார்.
தொழிலாளர் தேசிய சங்கம்
தொழிற் சங்கத்தில் தொழிலாளர்களின் பங்கை விட வெளியார்களின் ஆதிக்கம் வேரூன்றியதுதான் காரணமாகவும், தொழிலாளர் சமூகம் , தொழிலாளர் சமூகத்தில் உயர்த்தப்படுவதற்குப் போதிய திட்டங்கள் இல்லாத காரணத்தாலும் தொழிற்சங்கம் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில், தியாகத்தில், அவர்களின் தலைமையில் இயங்க வேண்டும். தொழிற்சங்கம் அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் இன்றிச் சுதந்திரமாக செயல்பட வேண்டும். இது வெள்ளையனின் ஆசையும் நம்பிக்கையுமாகும்.
அதற்காகவே இ.தொ.காவை விட்டு வெளியேறி 1956ம் ஆண்டு தொழிலாளர் தினமான மே தினத்தன்று தொழிலாளர் தேசீய சங்கத்தை தொழிலாளி தலைமையில் அட்டனில் ஸ்தாபித்தார்.
அதன்பின்னர் கண்டியில் தொழில் நீதிமன்ற வழக்குக்காக வரும்போது அவரை பலதடவைகள் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.
வழியில் எங்கு சந்தித்தபோதும், உரிமையுடன் "ஐஸே" என்று
அன்புடன் அழைத்து உரையாடுவார். அப்பொழுதுகூட அவர் மலைநாட்டுத் தொழிலாளர் முன்னேற்றம் பற்றியே பேசுவார்
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பள முறை ஒழிக்கப்பட்டு மாதச் சம்பளம் வழங்க வேண்டுமென முதன்முதலாக குரல் எழுப்பியவர் அமரர் வீ.கே.வெள்ளையன் ஆவார்.

105 - அந்தனி ஜீவா
உழைத்து ஓய்ந்த காலத்தில் தொழிலாளர்கள் மற்றவர்களின் தயவில் வாழாது அவர்களின் இறுதிக் காலத்தை அமைதியாக கழிக்க சேவைக் கால பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததோடு நில்லாமல், நீதிமன்றத்தில் பல வழக்குகளையும் தாக்கல் செய்து வெற்றி ஈட்டிக்கொடுத்தார்.
இதுபோன்ற அரிய பணிகளை நாம் வாழும் காலத்தில் செய்தது மாத்திரம் அல்லாமல் பொதுத் தொண்டின் நிமித்தம் திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார். உண்மை, நேர்மை, கடமை மூன்றுக்கும் முக்கியத்துவம் அளித்த அமரர் வீ.கே. வெள்ளையன் மலையகத்தின் விடிவெள்ளியாக
திகழ்ந்தார்.
2.12.1984
20. எஸ்.எம். ஹனிபா
இன்றைக்கு ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் குறிஞ்சி நலிக் கிராமம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் ஊடாகச் செல்ல வேண்டியிருந்தது. பாதையில் செல்லும் பொழுது எட்டிப் பார்த்தாலே நெஞ்சு திடுக்கிடும் செங்குத்தான மலைகளினுடாகப் பாதைகள் சென்று கொண்டிருந்தன.
கல்உறின்னைக் கிராமம்
இத்தகைய பாதைகளில் புதிதாகச் செல்லும் எம்போன்றவர்களுக்கு அபாயகரமானதாகத் தோன்றினாலும் அப்பிரதேச மக்கள் அதற்குப் பழக்கப்பட்டு சர்வ சாதாரணமாக அப்பாதைகளைப் பயன்படுத்துவர். இத்தகைய செங்குத்தாக அமைந்துள்ள பாதைகள் வழியாகச் சென்று கல்உறின்னைக் கிராமத்தை அடைந்தோம்.

Page 55
இவர்கள் வித்தியாசமானவர்கள் 106
அன்று அந்த ஊர் ஒரு கிராமத்துக்குரிய சிறப்பியல்புகள் அனைத்தையும் கொண்டு விளங்கியது. அங்கு முஸ்லீம்களே மிகப் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அங்குள்ளவர்களில் அநேகர் கல்வி கற்றுத் தேர்ந்த பட்டதாரிகளாகவும், வைத்தியர்களாகவும் , ஆசிரியர்களாகவும், 、 Tö ஊழியர்களாகவும் விளங்குகின்றனர். அத்துடன் தலைசிறந்த எழுத்தாளர்களையும், ஆற்றல் மிக்க கலைஞர்களையும் நாணயமுள்ள வணிக மக்களையும் தோற்றுவித்த பெருமையும் கல்உறினைக்கு உண்டு.
எனக் கும் கல் உறினைக்கும் தொடர்பு ஏற்படக் காரணமாயிருந்தவர் அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா. அவர் கல்உறினையில் ஒரு தமிழ் மன்றத்தை ஆரம்பித்து தமிழை வளர்த்து வருகின்றார்.
இவ்வாறு பேராசிரியர் கலாநிதி உவைஸ் அவர்கள் கல்உறின்னையுைம், கண்டிமா நகரின் அருகிலுள்ள கல்உறின்னை என்ற கிராமத்தின் பெயரையும் இலங்கையில் மாத்திரமின்றி, தமிழ் நாட்டிலும் அறியச்செய்த பெருமைக்குரிய அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபாவைப்பற்றி பெருமையுடன் குறிப்பிடுகின்றார்.
எல்லாருடனும் இனிமையாக, சிரித்த முகத்துடன் உற்சாகமாக உரையாடும் தமிழன்பர் சட்டத்தரணி அல்உஹாஜ் எஸ். எம். ஹனிபா ஓசைப்படாமல் அமைதியாக எந்தவித சலசலப்புமின்றி இலக்கியப் பணியாற்றி வருபவர்.
தமிழ் மன்றம், கல் உறினை, கண்டி என்ற வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் அரிய இலக்கிய தொண்டாற்றிவரும் தமிழன்பர் அல்உஹாஜ் எஸ். எம். ஹனிபாவைப்பற்றிய நினைவுகள் நெஞ்சில் சிறகடிக்கப்படுகின்றன.
ஹனிபா உறாஜியார்
ஹனிபா உஹாஜியார் என்று எல்லாராலும் அன்புடன் அழைக்கப்படும் சட்டத்தரணி அல் உஹாஜ் எஸ். எம்.

107 அந்தனி ஜீவா
ஹனிபாவுடன் கடந்த சில வருடங்களாக பழகும் வாய்ப்பு கிட்டியது. தமிழையும் தமிழ் அறிந்தவர்களையும் நேசிப்பதில் தமிழன்பர் எஸ். எம். ஹனிபாவிடம் உரையாடிக்கொண்டிருந்த போது கல்உறின்னை தமிழ்மன்றம் எப்படி உருவாயிற்று என்று கேட்டேன். முதலாவது ஆண்டில் கொழும்பிலும், பின்னர் இரண்டாவது மூன்றாவது ஆண்டில் பேராதனை பல்கலைக் கழகத்திலும் பட்டப் படிப்பு படிக்கும் போது, விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டாது, அதிக நேரம் நூல்நிலையத்தில் புத்தகங்களை படித்துகொண்டிருப்பேன்.
ஒரு நாள் நூல்நிலையத்தில் புத்தகங்களைத் தட்டிக்கொண்டுபோன சமயம், தட்டெழுத்தில் அமைந்த பிரதியொன்றைக்கண்டேன். அதனை எடுத்துவாசித்தபொழுது, இதிலுள்ள அருமையான செய்திகள் தட்டெழுத்து பிரதியிலிருந்தால் எத்தனை பேர்தான் அறிவார்கள். இது ஏன் அச்சில் வெளிவரவில்லை என்ற எண்ணம் இழையோடியது. சரி அதனை எழுதியவருக்கே கடிதம் எழுதி அறிந்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன்.
முஸ்லீம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்ற உங்களின் அருமையான படைப்பு இன்னமும் தட்டெழுத்து பிரதியாக இருக்கிறதே. இதற்குக் காரணம் என்ன? ஏன் அச்சிட்டு வெளியிடலாகாது என்று அதனை எழுதியிருந்த கலாநிதி உவைஸ் அவர்களுக்கு கடிதம் எழதினேன்.
பின் அவரின் தொடர்பு ஏற்பட்டது. அந்த நுாலை யாரும் அச்சிட முன்வரவில்லை என அறிந்து பல்கலைக்கழகத்திற்காக மாணவனாக இருந்த நானே அதனைக் கண்டியிலுள்ள ஓர் அச்சகத்தில் அச்சிடக்கொடுத்தேன்.
நூலை வெளியிடும் பிரசுரத்திற்கு ஒரு பெயர் வைக்க எண்ணிணேன். மறுமலர்ச்சி மன்றம் என்று பெயர் சூட்டலாம் என நினைத்தேன். பிறகு எனக்கு அந்தப் பெயர் பிடிக்கவில்லை. ஆசானான கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களிடம்

Page 56
இவர்கள் வித்தியாசமானவர்கள் 108
சொன்ன பொழுது அவர் தமிழ் மன்றம் என்ற பெயரை வைக்கும் படி ஆலோசனை வழங்கினார். இப்படித்தான் தமிழ்மன்றம் உதயமானது என்றார், சிரித்தபடி ஹனிபா.
Luauuuóoof
பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் தனது இலக்கியப் பிரசுரப் பணியினைத் தொடங்கிய அல்ஹாஜ் எஸ.எம்.ஹனிபா கலாநிதி உவைஸின் முஸ்லீம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்ற ஆங்கில நூலை 1953ம் ஆண்டு வெளியிட்டார். இதுவே முதல் பிரசுரம், அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் எழுதிய இலக்கியத் தென்றல் எனும் நூல் வெளிவந்தது.
அடுத்த ஆண்டில் பேராசிரியர் லண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதி ஆய்வுக்காக சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரையை தமிழர் சால்பு என்ற பெயரில் வெளியிட்டார். இதனை தொடர்ந்து கல் உறின்னை தமிழ் மன்றம் இதுவரை 22 நூல்களைப் பிரசுரித்துள்ளது. இப்பொழது நூல் வெளியிடும் பணியில் தமிழன்பர் ஹனிபா தம்மை முழு மூச்சாக ஈடுபடுத்திக்
கொண்டுள்ளார்.
பாரதி நூற்றாண்டை முன்னிட்டு தமிழன்பர் ஹனிபா ஓர் அரிய பணியினைச் செய்தார். மகாகவி பாரதியாரைப்பற்றி சிங்களமொழி பேசும் மக்கள் அறியும் வண்ணம் பாரதியின் வாழ்க்கை வரலாற்றைச்சிங்களத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நூலின் பிரதிகளை தமிழகம் சென்று தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மேலவைத்தலைவர் திரு. மா. பொ.சி அவர்களிடம் நேரில் கையளித்தார்.
இலக்கியத்துறை
தமிழன்பர் ஹனிபா இளம் வயதிலேயே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டவர். பாடசாலை நாட்களிலேயே இலக்கியக்கட்டுரைகள் எழுதி தனது இலக்கிய ஆர்வத்தை

109 அந்தனி ஜீவா
வளர்த்துள்ளார். 1948ம் ஆண்டு சமுதாயம் என்ற சஞ்சிகையை வெளியிட்டுள்ளார். இதன் மூன்று இதழ்கள் வெளியாகியுள்ளன. அவரின் மேற்படிப்பு காரணமாக இச்சஞ்சிகை வெளியிடும் முயற்சி தடைப்பட்டது.
பல்கலைக் கழகக் கல்வியை முடித்துக் கொண்டு வெளியேறியதும் பத்திரிகைத் துறையில் புகுந்தார். 1958 ஆம் ஆண்டு தினகரன் ஆசிரியர் பீடத்தில் சேர்ந்து ஏழாண்டு காலம் பணியாற்றிய பின்னர் சகோதர பத்திரிக்கையான ஆங்கில தினசரி சிலோன் டெயிலி நியூஸ் பத்திரிகையிலும் ஒப்ஸே வர் பத்திரிக்கையிலும் சிலகாலம் பணியாற்றிவிட்டு, இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தில் செய்திப் பகுதியில் சேர்ந்து பொறுப்பாசிரியராக ஆறு வருடசேவையின் பின் விலகினார். அதன்பின் சட்டத்தரணியானார்.
தினசரி பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பல்வேறு கட்டுரைகள் எழுதிய இவர் இலங்கை வானொவியிலும் பல இலக்கிய சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். 1955ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு சென்ற பல்கலைக் கழக நல்லெண்ணத்தூதுக்குழுவில் அங்கம் வகித்த இவர் திரும்பிய பின் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த விவரணச் சித்திரங்களை அளித்துப் பாராட்டுப் பெற்றுள்ளார்.
சிபான்னாடை
கல்லூரியில் படித்த காலத்தில் இவரின் கல்வித் திறமைக்காகவும் இவரின் செயல்திறனுக்காகவும், இவருக்குத் தங்கப்பதக்கம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. இதனைப் பெரிய பேறாகப் கருதுகிறார். தமிழன்பர் எஸ்.எம்.ஹனிபா அதன்பின்னர் 1982ம் ஆண்டு கொழும்பு கலைச்சங்கம் இவரின் இலக்கியப் பணியை பாராட்டப் பொன்னாடை போர்த்தி, வெள்ளி கேடயம் வழங்கித் கெளரவித்தது. இதே வைபவத்தில் இவரது இலக்கியப்பணிக்குத் தூண்டுகோலாக இருக்கும் இவரது பாரியாருக்கும் வெள்ளியிலான குத்து விளக்கு வழங்கிக்

Page 57
இவர்கள் வித்தியாசமானவர்கள் 110
கெளரவித்தனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 1982ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டு முஸ்லீம் கவிஞர் மன்றம் இவரின் இலக்கியப் பணியைப் பாராட்டி, இவருக்குப் பொன்னாடை போர்த்திக்கெளரவித்தது. கலைமாமணி கவிஞர் கா.மு.ஷெரிப் தலைமை வகித்த இப்பாரட்டு விழாவில் தமிழ்நாட்டு முஸ்லீம் லீக் தலைவர் ஆ.க.அப்துஸ்ஸமது எம்.பீ அவர்கள் பொன்னாடை போர்த்தினார்.
பாரதி நூற்றாண்டை முன்னிட்டு மலையகத் தலைநகரான கண்டி மாநகரில் 1983ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக பேச்சாளர்கள் கலந்துகொண்ட பாரதி விழாவில் மலையக கலை இலக்கியப் பேரவையின் சார்பில் மலையக இலக்கிய முன்னோடி கே. கணேஸ் தமிழன்பர் ஹனிபாவிற்கு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.
பாரதி நூலை சிங்க ளத்தில் வெளியிட்ட இவரின் இலக்கியப்பணியைப் பாராட்டி, பிரதேச அபிவிருத்தி அமைச்சர் திரு. செ. இராசதுரை அவர்கள் இவருக்கப் பொன்னாடை போர்த்தி, தேநீர் விருந்தளித்துக் கெளரவித்தார். இலக்கியப் பணிக்காக இரண்டே ஆண்டில் நான்கு தடவை பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்ட தமிழன்பர் எஸ்.எம்.ஹனிபா, எவ்வித தற்பெருமையும் இன்றித் தம் இலக்கிய பிரசுரப் பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
பெருந்தன்மை
தமிழன்பர் எஸ்.எம்.ஹனிபாவின் இலக்கிய சேவைகளை நினைத்துப் பார்க்கையில் எழுத்தாளரும் கல்விமானுமான அ.ஸஅப்துல் ஸமது அவர்கள் இவருக்கு எழுதிய கடிதத்தில் உங்களுடைய அமைதியான இலக்கியப் பணியை மதிப்பவன் நான். நீண்ட காலமாக நீங்கள் ஆற்றிவரும் பணி காத்திரமானது. எனவே, இலக்கிய மஞ்சரிக்காக இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் சந்திக்க விரும்புகிறேன். உங்களுடைய தொடர்பு மகிழ்ச்சியைத் தருகிறது என்று குறிப்பிட்டார்.

111 அந்தனி ஜீவா
படைப்பாளியான தமிழன்பர் ஹனிபா தன்னுடைய நூல்களை அதிகம் வெளியிடாமல் ஏனைய படைப்பாளிகளின் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருவது பெருந்தன்மையைக் காட்டுகிறது. அவரது பணி தொடரட்டும்.
12.01.1985
21. ராமு. நாகலிங்கம்
இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினருக்குத் தனியானதொரு வரலாறு உண்டு. இச்சமூகம் பிரித்தானியர்களால் பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்காகத் கொண்டு வரப்பட்டது. அன்றிலிருந்து அவர்கள் பிரித்தானிய பெருந்தோட்டச் சொந்தகாரர்களின் நேரடிக் கண்காணிப்பிலேயே
இருந்தனர். மலைப் பிரதேசங்களின் சிங்கள கிராமத்தவர்களிடமிருந்து இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களின் வாழ்க் கையே மலைகளுக்குள்ளேயே
எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. மலைநாட்டு தமிழர்
இம்மக்கள் பெருந்தோட்டங்களில் வேலைக்கமர்த்தப் படுவதற்காகவே இங்கு கொண்டுவரப்பட்டனர். இவர்கள் ஆரம்பத்தில் கோப்பி, பின்னர் தேயிலையைப் பயிரிடக்கூடிய மலைப் பிரதேஷங்களான மத்திய, ஊவா, சப்பிரகமுவ மாகாணங்களில் குடியேறினார்கள். 150 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இவர்கள் தனியொரு சமூகமாக நிலைக்கொண்டுள்ளனர். காலப்போக்கில் சிலர் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சிறப்பாக நகரப்புறங்களுக்கும் சென்று விட்டனர். பெரும்பான்மையோர் முழுமையாக மலைநாட்டிலேயே வாழ்ந்தனர். இதனாலேயே இவர்களை மலைநாட்டுத் தமிழர் என அழைத்தனர். அதனால்தான் இவர்கள் படைத்தது, மலைநாட்டு இலக்கியமாக மலர்ந்தது.

Page 58
இவர்கள் வித்தியாசமானவர்கள் 112
மலைநாட்டு மக்களிடையே இலக்கிய ஆர்வத்திற்கும் எழுச்சிக்கும் வித்திட்ட பெருமை கோ. நடேசஐயரையே சாரும். தென்னிந்திய பிராமணரான நடேச ஐயர் தஞ்சாவூரில் அரசாங்க உத்தியோகம் பார்த்துவிட்டு பின்னர் பத்திரிகை ஒன்றில் பணியாற்றி இலங்கை வந்து தேசநேசன் என்ற தமிழ் தினசரிக்கு ஆசிரியரானார். தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டினார். அத்துடன் பாரதியின் பாடல்களைத் துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டுத் தோட்ட மக்களிடையே பரப்பினார்.
புதிய விழிப்புணர்வு
இவரை ஆதர்ஸமாகக்கொண்டு மலையக மக்களிடையே புதிய விழிப்புணர்ச்சி ஊட்ட இளைஞர்கள் பலர் முன் வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் மலைநாட்டுக் காந்தி என்றழைக்கப்பட்ட அமரர் ராஜலிங்க மாவார். அமரர் ராஜலிங்கத்துடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக சமுதாயப்பணியில் ஈடுபட்டவர் செய்தி ராமு. நாகலிங்கம்.
மலையக இலக்கிய வளர்ச்சிக்குத் தன் சக்தியை மீறிய பங்களிப்பை ராமு நாகலிங்கம் அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மையாகும்.
சில மாதங்களாக தமிழகத்தில் இருந்த நாகலிங்கம் மீண்டும் கண்டிக்கு வந்தது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தந்தது.
கடந்த மாதம் காங்கிரஸ் தொழிலாளர் நிறுவனம் சார்பில் அட்டனில் நடைபெற்ற மலைநாட்டு இலக்கியம் பற்றிய கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரை வாசித்துவிட்டு கண்டி திரும்பிய எனக்கு ராமு.நாகலிங்கத்தைச் சந்தித்தது புதிய உற்சாகத்தைத் தந்தது.
அவரைச் சந்தித்த அன்று மாலையே அவரது இல்லத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். இரவு நீண்ட நேரம் மலையக இலக்கியவளர்ச்சியைப் பற்றியே உரையாடினோம். எங்களது பேச்சிடையே அடிக்கடி வந்து போன பெயர் மலையக இலக்கிய

113 அந்தனி ஜீவா
முன்னோடி சி.வி.வேலுப்பிள்ளையின் பெயராகும்.
பிறகு என்னிடம் ஒரு பைலைத் தந்தார். தனிமையில் இரவு நீண்டநேரம் தூங்காமல் அந்த பையிலுள்ள கடிதங்களை மேலோட்டமாக படித்துப்பாாத்தேன். பைலில் உள்ள கடிதங்களும் பெயர்களும் என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்தின.
மறுநாள் அவரிடம் விடை பெற்று வந்த பொழுது ராமு. நாகலிங்கத்தையும் அவருடைய பையிலுள்ள கடிதங்களையும் அவற்றை எழுதியவர்களையும் நினைத்துப் பார்த்தேன். அப்பப்பா. அந்தக் கடிதங்களே எத்தகைய அனுபவங்களை கூறுகின்றன.
பாகு நின்ற தெனப் பேசும்
பண்பன் உளச்செம்மை
நாகலிங்கம் காட்டும்
நயம் கண்டேன்
-தாகமுறும்
அன்புடன் கண்டேன் வாழ்க
இவ்வாறு ராமு. நாகலிங்கம் அவர்களை 1951ம் ஆண்டு கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜெகநாதன் வாழ்த்தியுள்ளார்.
இராசு பாராட்டு
அன்புள்ள சகோதரா, நாடகத் தந்தை தவத்திரு சங்கரஸ்தாஸ்சுவாமி அவர்களுக்குத் தாங்கள் எடுத்த பெருவிழா சரித்திர நிகழ்ச்சியாகிவிட்டது. தமிழகம் மட்டுமல்ல, ஈழமும் இனிய தமிழின் ஒரு பகுதியான நாடகத் தமிழக்கு உழைத்த அறிஞரைக் கெளரவிக்கும் என்பதைச் செயல்மூலம் காட்டி விட்டீர்கள். தமிழுழகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் திரு. செ. இராசதுரை அவர்கள் மட்டுநகர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது 1965ம் ஆண்டு செய்தி பத்திரிகை மூலம் நாடகத்தந்தை தவத்திரு சங்கரதாஸ்

Page 59
இவர்கள் வித்தியாசமானவர்கள் 114
சுவாமிகளுக்கு மலர் வெளியிட்டு கண்டியில் விழா எடுத்தபொழுது அதனைப் பாராட்டி எழுதியுள்ள மடலில் வாசகங்களே மேலே உள்ளவை.
ராமு நாகலிங்கத்தினால் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கடிதங்களில் மனதில் பதிந்த பெயர்களை நினைத்துப் பார்கிறேன். எழுத்தாளர்களான அகிலன் சோ. சிவபாதசுந்தரம், கு. அழகிரிசாமி, நாராயண துரைக்கண்ணன், மாயாவி, ரஸவாதி, சிலம்புச்செல்வர் ம.பொ.சி. தமிழகத்தந்தை, வண தனிநாயக அடிகளார் நாடகமேதை டி.கே.சண்முகம், மலையக மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை, பேராசிரியர் கைலாசபதி, அறிஞர் அ.ந.கந்தசாமி-இப்படியொருபட்டியலையே எழுதிக்கொண்டு போகலாம்.
மனதைத் தொட்ட சம்பவம்
ஊரைச் சொன்னாலும் பெயரைச் சொல்லாதே என்பார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் மிகவும் கஸ்டமான நிலையில் தனது நிலையை விளக்கி ஒரு கடிதம் எழுதியுள்ளார். எழுத்தாளர் அகிலனிடம் வேண்டுமென்றாலும் எனது நிலையைக் கேட்டுப் பாருங்கள் என்று, மனதைத் தொடும் வார்த்தைகளில் எழுதியுள்ளார்.
அந்த எழுத்தாளரின் ஏனைய கடிதங்கள் சிலவற்றைப் புரட்டிய பொழுது அடிக்கடி தமிழகம் சென்ற ராமு. நாகலிங்கம் ஒவ்வொரு தடவையும் ரூபா 250 அனுப்பி வைத்துள்ளார் - ஒசைப்படாமல் உதவி செய்வதில் வல்லவர் ராமு. நாகலிங்கம்.
மாத்திரமல்ல, கலை மகள் ஆசிரியர் |5}نکے கி.வா.ஜெகநாதனுக்கு இலங்கையில் மணிவிழா எடுத்த சிறப்பு மலர் வெளியிட்டுக் கெளரவித்தார். அதற்காக அந்தக் காலத்தில் சொந்தப் பணத்தில் சுமார் பத்தாயிரம் ரூபாய் வரை செலவழித்துள்ளார். பாரதியாருக்கத் கண்டியில் ஆண்டு தோறும் விழாவெடுத்து பாரதியின் நினைவுகளையும் அவரது . கவிதைகளையும் மலைநாட்டு மக்களிடையே பரப்பியுள்ளார்.

115 அந்தனி ஜீவா
மகாகவி பாரதியின் வாரிசான பாரதிதாசனை நேரில் சந்தித்து மகாகவி பாரதியைப் பற்றிப் பல தகவல்களை தெரிந்து கொண்டுள்ளார். பாரதிதாசன் மறைந்த பொழுது, எழுத்தாளர் அகிலனுடன் முதன்முதலாக இவர் இல்லம் சென்று இலங்கை மக்களின் அஞ்சலியை அவருக்கு செலுத்தியுள்ளார்.
செய்தி சகாப்தம்
காந்திய பக்தரான நாகலிங்கம் காந்தீயக் கொள்கைகளை மலையகத்தில் பரப்ப நவஜீவன் என்ற பத்திரிக்கையைச் சில காலம் நடத்தியுள்ளார். பின்னர் அறுபதுகளில் செய்தி என்ற வாரப்பத்திரிக்கையைத் தொடங்கினார். முதலில் கொழும்பிலும், பின்னர் கண்டியிலிருந்தும் இப்பத்திரிகை வெளிவந்தது. மறைந்த சட்டத்தரணி பெரி. சுந்தரலிங்கம், கு. இராம சந்திரன், கே.ஜீ.மகாதேவா, கே.எப்.ராஜூ, மலைத்தம்பி போன்றவர்கள் இப்பத்திரிக்கை வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டிருந்தார்கள். மகாதேவாவின் காலத்தில் நானும் கொழும்பு நிருபராக பணியாற்றியதுண்டு.
மலைநாட்டு இலக்கிய வளர்ச்சிக்கு மாத்திரமின்றி ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கும் செய்தி பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, சில அவசர குறிப்புகள் என்று மு. தளையசிங்கம் எழுதிய தொடர் கட்டுரை ஈழத்து இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. செய்தி வெளிவந்த கால கட்டத்தை ஒரு சகாப்தமாகக் குறிப்பிடலாம்.
நாற்பது ஆண்டு காலம் மலையக கலை, இலக்கிய, சமூக வளர்ச்சிக்கு அரும் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் தொழிற்சங்கவாதியாகச் செயலாற்றிய நாகலிங்கம் பின்னர் வர்த்தகத் துறையோடு சங்கமமானார். எனினும் கலை இலக்கியத் துறைகளை மறந்துவிடவில்லை. யாழ்ப்பாணத்தில் 1951ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் விழாவில் மலைநாட்டின் பிரதிநிதியாக கலந்து சிறப்பித்தார். பின்னர் அந்த விழாவில் கலந்துகொண்ட கல்கி

Page 60
இவர்கள் வித்தியாசமானவர்கள் 116
ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தியின் அழைப்பை ஏற்று, சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் மலையகப் பிரதிநிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளார்.
தமிழக நாடக மேதை டி.கே.சண்முகம், கலைமகள் ஆசிரியர் ஜெகநாதன், சிலம்புச்செல்வர் ம.பொ.சி. எழுத்தாளர் அகிலன், இலக்கிய விமர்சகர் சிதம்பரரகுநாதன் ஆகியோரின் நெருக்க மான நண்பரான இவர் தமிழகத்திற்கும் மலையகத்திற்கும் ஓர் இலக்கிய பாலமாகத் திகழ்ந்துள்ளார். இவரைப்போன்ற ஒரு சிலராவது மலையக இலக்கிய வளர்ச்சிக்குக் கரம் கொடுக்க முன்வரவேண்டும்.
31.03.1985
22. எ.பி.வீ.கோமஸ்
ம் லையக கலை - இலக்கிய வளர்ச்சிப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த பொழுது மலையக இலக்கிய முன்னோடி சி.வி.வேலுப்பிள்ளை முதல் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் பெயர்வரை
எங்கள் சர்ச்சையில் அடிப்பட்டன.
மலையக இலக்கிய வளர்ச்சிக்குக் கால்கோள் நாட்டிய பலர் இன்று ஓய்ந்துவிட்டார்கள். சிலர் ஒதுங்கிவிட்டார்கள். சிலர் அவ்வப்போது தலைகாட்டுவதுடன் அஞ்ஞாத வாசத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ஒரே ஒருவர்தான் அன்று முதல் இன்றுவரை தேனியைப் போலச் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்.
மாலைமரில் கிரிக்கி?கட்
அவர் வேறு யாருமல்லர். கலை இலக்கியத்துறையில் பல்கலைச் செல்வராகத் திகழ்பவராவர். மலையகத்தின் பல்கலைச்செல்வர் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தினகரன் வாரமஞ்சரி இலக்கிய உலகத்தில் நாமம் சூட்டப்பட்ட ஏ.பி.வி.கோமஸ் அவர்கள்தான்.

117 t அந்தனி ஜீவா சில மாதங்களுக்கு முன்னால் ஏ.பி.வி.கோமஸ் தலைமை ஆசிரியனாகப் பணியாற்றும் மாத்தளை மந்தாண்டாவளை தமிழ் வித்தியாலயத்திற்கு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். அது ஒரு மாலை வேளை அப்பொழுது மாணவர்களுடன் மாணவராக கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார் அவர்.
கல்வி, கலை, கலாசாரம், சமூகம், சமயம், இலக்கியம், ஆகிய எல்லாத்துறைகளிலும் கைவந்தவராக ஓர் ஆல்ரவுண்டராக திகழ்கிறார் கோமஸ்.
மலையகத்தின் பல்கலைச் செல்வராக விளங்கும் ஏ.பி.வீ.கோமஸ் அவர்களைப் பற்றி மனம் அசைபோடுகிறது. எல்லாருக்கும் இனியவரான அந்த நல்ல வரைப் பற்றி நினைத்துப்பார்கிறேன்.
பேராசிரியர் கைலாசபதி அவர்களைப்பற்றி கோமஸ் சொன்ன சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கோமஸ் கல்வி பயின்ற பொழுது யாழ் துணைவேந்தரான கலாநிதி வித்தியானந்தன் அவர்களின் துரோகி நாடகத்தில் கதாநாயகன் அமரர் கைலாசபதி அவர்கள், கோமஸ் வில்லன் நாடகத்தில் வில்லன் கதாநாயகனைச் சுட கதாநாயகன் இறக்கிறார். மற்றும் இந்த நாடகத்தில் மட்டக்களப்பு சென்மைக்கல்ஸ் கல்லூரி அதிபர் திரு. கமலநாதன் மட்டக்களப்பு முன்னாள் மேயர் இன்று கல்வியதிகாரி தியாகராஜா, பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோர் அந்த நாடகத்தில் நடித்துள்ளனர். அதனை கோமஸ் தன் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகக் குறிப்பிட்டார்.
மாணவராக இருந்த காலத்தில் எழுத்துத் துறையில் காலடி எடுத்துவைத்த கோமஸ் தனக்கு ஆரம்பத்தில் ஊக்கமும், உற்சாகமும் அளித்தவர் என்று பிரபல பத்திரிக்கையாளரான திரு.எஸ்.டி.சிவநாயகம் அவர்களைப் பெருமையுடன் குறிப்பிடுகின்றார்.

Page 61
இவர்கள் வித்தியாசமானவர்கள் 118
தமிழகத்திலிருந்து வந்த தென்றல், முத்தாரம், ஹாம்லேண்ட், நம்நாடு திராவிடநாடு போன்ற சஞ்சிகைகளால் கவரப்பட்டு அந்தக் கருத்துகளில் மனம் ஒன்றிச் சமுதாய சீர்திருத்தவாதியாக, சீர்திருத்த இயக்கங்களில் தொடர்பு கொண்ட அறிஞர் அண்ணாவின் நீதி தேவன் மயக்கம், கலைஞர் கருணாநிதியின் தூக்குமேடை போன்ற நாடகங்களில் நடித்து தம் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் கோமஸ்.
மலையக கலை இலக்கியப் பேரவையின் தலைவராக ஏ.பி.வீ.கோமஸ் அவர்களும் செயலாளராக நானும் பணியாற்றிய காரணத்தால் கோமஸ் அவர்களை அடிக்கடி சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. அப்பொழுது அவர் சொன்ன அவரைப் பற்றிய சம்பவங்களை மீண்டும் நினைத்துப் பார்க்கையில் அவை என் மனத்திரையில் நிழற்படம்போல் ஓடுகின்றன.
உயர் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபொழுது காலி முகத்திடலில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் தமிழகப் பேச்சாளர்களான திரு.சி.பி.சிற்றரசு, தங்கப்பழம் போன்றோர் முன்னிலையில் பேசித் தமிழகப் பேச்சாளரின் பாராட்டுதலை கோமஸ் பெற்றுள்ளதுடன் இன்றைய மலையத்தின் முன்னணிப் பேச்சாளர்களின் ஒருவராகவும் திகழ்ந்தார்.
பேச்சுப்போட்டிகள்
மற்றும் உயர் வகுப்புகளில் பேச்சுப்போட்டிகளில் பங்கு பற்றித் தமிழ்-ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார். இன்றைய தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவரான திரு.அ.அமிர்தலிங்கம் அவர்கள் பேச்சுப்போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் குத்திவிட்டது அவரது மனதில் என்றும் நிழலாடிக்கொண்டிருக்கிறது.
பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி, பாடசாலை ஆசிரியராகப் கடமையாற்றிய பொழுது மாணவர்களுக்கு வெறும் கல்வியைப் படிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது

119 அந்தனி ஜீவா
நாடகம், பேச்சு, எழுத்து, விளையாட்டு ஆகிய துறைகளிலும் மாணவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வந்துள்ளார். இன்றைய மலையகத்தின் இளைய தலைமுறை எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உருவாக வழிகாட்டியாக இருந்துள்ளார்.
மலையகத்தின் நாட்டார் பாடல்களில் கோமஸ9க்கு அதிகம் ஈடுபாடு. நாட்டார் பாடல்களைத் தாள லயத்துடன்
பாடிக் காட்டும் பொழுது சுவையாக இருக்கும். நாட்டார்
七る牙gTGöT
பாடல்களைக் கொண்ட நெஞ்சமெல்லாம் நெறுைள் என்ற தலைப்பில் குறுநாவல் ஒன்றை "நீரில் எழுதி 2- QT6ITTT. ۔ حسی۔۔۔ ۔
கவியரங்குகளுக்கு கோமஸ் தலைமை தாங்குகிறார் என்றால் போதும் கவியரங்கு களைகட்டிவிடும். அழகிய நயமிக்க சொல் லடிவரிகள் மூலம் கவிஞர்களை உற்சாகப்படுத்துவதில் வல்லவர். ஐந்நூற்றாண்டுக்கு அதிகமான இவரது கவிதைகள் பத்திரிக்கைகளில் வெளிவந்துளளன. ஜெயம் என்ற பெயரிலும் இவரது ஆக்கங்கள் இடம் பெறுவதுண்டு. ஆனால் இதுவரை ஒரு கவிதைத் தொகுதியாவது நூலுருவில் வெளிவராதது பெரும் குறைபாடாகும்.
கலைக்குடும்பம்
இவரது குடும்பமே ஒரு கலைக்குடும்பமாகும். இவருடன் இவர் தனயன் நாடகத்தில் நடிப்பார். மகள் நடனமாடுவார். துணைவியார் நட்டு வாங்கம் செய்வதுடன் ஒப்பனையும் செய்வார்.
கலைநிகழ்ச்சிகளில் முழுக்குடும்பமே பங்கு பற்றுவது மகிழ்ச்சிக்குரியதாகும்.
நல்லொழுக்கம் மிக்க கிறிஸ்துவ குடும்பம் கோமஸின் குடும்பம். சிவராத்திரி நிகழ்ச்சிகளில் முழுமையாக முழுஇரவும் பங்குபற்றுவார்கள். ஒருமுறை வத்தளையில் நடைபெற்ற சிவராத்திரி நிகழ்ச்சிகளில் இவரும் இவர் குடும்பத்தினரும் இயல்,

Page 62
இவர்கள் வித்தியாசமானவர்கள் 120
இசை, நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்குப்பற்றிப் பலரின் பாராட்டைப் பெற்றனர். இவரின் வெற்றிக்கு எல்லாம் அடிநாதமாக விளங்குபவர் இவர் குடும்ப விளக்கான துணைவியார் மேரி கோமாஸாவார்.
எல்லா மதமும் சம்மதமே என்ற உயரிய கொள்கையுடைய ஏ.பி.வீ.கோமஸ் எழுதியுள்ள பத்துக்கதிகமான இஸ்லாமிய பாடல்களை இலங்கை வானொலி ஒலிபரப்பியுள்ளது. அன்பு, அறிவு, ஆற்றல் இந்த மூன்றுமே வாழ்க்கையின் இலட்சியங்களாக அமையவேண்டும் என்று அடிக்கடி கோமஸ் கூறுவார்.
கடந்த ஆண்டு 1983 பெப்ரவரியில் பதுளையில் ஊவா சமூக, பொருளாதார முன்னேற்ற நிலையம் (உஸ்கொட்) எழுத்தாளர் பயிற்சிக் கருத்தரங்கு ஒன்றை இரண்டு நாட்கள் நடத்தியது. நானும் நண்பர் கோமஸ9ம் நாடகம், கவிதை ஆகியவற்றைப்பற்றி விரிவுரையாற்ற அழைக்கப்பட்டிருந்தோம்.
இரண்டு நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்ற பயிற்சிக் கருத்தரங்களில் திரு. கோமஸ் கவிதையைப்பற்றிச் சிறப்பாக விளக்கம் அளித்ததுடன் மரபுக்கவிதை, புதுக்கவிதை பற்றி விளக்கமாக பயிற்சி வகுப்பொன்றையும் நடத்திக்காட்டினார். அந்தக் கவிதை வகுப்பைபற்றி நினைக்கையில் பத்திரிகைகளில் நாலுவரிக்கவிதை எழுதும் இளம் கவிஞர்கள் ஒன்று கூடி கோமஸ் அவர்களை அழைத்து கவிதை பற்றிய பயில் முறை வகுப்பு ஒன்றை நடத்துவது அத்தியாவசியமாகும்.
மலையகத்தின் பல்கலைச் செல்வரான ஏ.பி.வி,கோமஸ் அவர்களின் முயற்சியால் மலைநாட்டு உழைக்கும் வர்க்கத்தின் புதல்வர்கள் சிலராவது பல்கலைக்கழகத்தின் படிகளை மிதித்து பட்டத்தாரிகளாக உருவெடுத்திருக்கிறார்கள். இவரைப்போன்ற பத்து பேராவது மலையகத்தில் தோன்ற வேண்டும் என்பதே என் அவா.
12.08.1984

121 ی۔۔۔۔۔ அந்தனி ஜீவா 23. கார்த்திகா கணேசர்
அண்மையில் சிங்கள நாட்டிய நாடகம் ஒன்றைப் பார்க்கும் வாய்ப்புக்கிட்டியது. அந்த நாட்டிய நாடகத்தில் பழைய மரபு முறைக்குக் கூத்துக்கள், ஆடல் பாடல்கள், பழைய மரபு முறையைத் தழுவியதாக இருந்தன.
இந்த நாட்டிய நாடகத்தை பார்த்துவிட்டுத் திரும்பிய பின்னர், என் மனதில் மின்னல் எனப் பளிச்சிட்டு மறைந்தது. நடனத்தை நல்ல ஆக்க முறைகளுக்குப் பயன்படுத்திய ஒரு பெண்மணி கூறிய கருத்து.
நடனத்தை வெறும் பொழுது போக்காகக் கொள்ளாது ஆக்கமுறைகளுக்குப் பயன்படுத்துவதற்கு ஏற்ற கலையாக அதனைக் கொள்ளுதல் வேண்டும். எமது பழம் பெரும் கூத்துக ளில் உள்ள சிறந்த ஆடல் முறைகளை நாட்டு நடைமுறையில் எமதாக்கிகொள்ளாமையால் ஈழத்தமிழரின் ஆடல் எனும் பொழுதுபோக்கு வெறும் பரதமே எனக் கணிக்கப்படுகின்றது. இதனால் ஏற்படும் தீமையையும் நாம் கவனித்தல் வேண்டும். கலை முயற்சிகள்
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் கலையார்வத்துடன் இங்குள்ள கலைமுயற்சிகளைப் பார்க்கும்பொழுது இலங்கைத் தமிழர்களின் சிறப்பான ஆடற்கலை வடிவத்தினைக் காட்டுவதெனக் கூறி, பரதநாட்டிய கச்சேரியை மட்டுமே காட்டுவதெனில் அவர்கள் ஏற்கனவே இதைத் தென்னிந்தியாவில் பார்த்து இரசித்துவிட்டு இலங்கை வரும் பொழுது மறுபடியும் அதையே பார்ப்பதெனில் எமக்கு என்றொரு நாட்டிய மரபு இல்லை என்ற முடிவுக்கே அவர்கள் வந்துவிடுவார்கள்.
இவ்வாறு தன் மனதில் பட்ட கருத்துக்களை என்னிடம் தெரிவித்தவர் வேறு யாருமல்லர். இவற்றைத் தனது அனுபவ வெளிப்பாடாக கூறியவர் நாட்டியக்கலாநிதியான திருமதி கார்த்திகா கணேசர்தான்.

Page 63
இவர்கள் வித்தியாசமானவர்கள் 122
நாட்டியகலாநிதியான திருமதி கார்திகா கணேசர் அவர்களைச் சந்தித்து உரையாடிய நினைவுகள் நெஞ்சத்தில் பூக்கின்றன. அவரோடு நாட்டியக் கலை பற்றி உரையாடுவதே ஒரு சுகானுபவமாகும். பாரதி கண்ட புதுமைப்பெண்மணியாக, நாட்டியத் துறையில் புரட்சிகரமான கருத்துகளைக் கொண்ட இலட்சியப் பெண்மணியாக அவர் திகழ்கிறார்.
நாட்டியக் கலாநிதி திருமதி கார்திகா கணேசர் எழுதிய காலந்தோறும் நாட்டியக்கலை என்ற நூல் தமிழக அரசின் பரிசைப்பெற்றுள்ளது. திருமதி கார்திகா, நாட்டியக்கலாகேசரி பத்மபூரீ வழுவூர் ராமையாப்பிள்ளையிடம் குருகுல முறையில் நாட்டியம் பயின்று இன்று நம் நாட்டில் புகழ்பெற்ற நாட்டிய நர்த்தகியாகத் திகழ்கிறார்.
பிரதேஷ அபிவிருத்தி அமைச்சு நடத்திய மகாகவி) பாரதி நூற்றாண்டு விழாவில் பாரதியின் பாடல்களைக் கொண்ட கலைஞன் கனவு என்ற பெயரில் நாடகம் ஒன்றைத் தயாரித்து அளித்தார். மீண்டும் இந்நாட்டிய நாடக கலை, இலக்கிய பத்திரிகை நண்பர்களின் மகாகவி பாரதி நூற்றாண்டு விழாவில் மேடையேறியது. தமிழகத்து இசைமேதை எம.பீ.சீனிவாசன் இதற்கு இசையமைத்திருந்தார்.
நாட்டியத்துறையில் புதிய சகாப்தத்தைப் படைக்க விரும்பும் திருமதி கார்திகா வெறும் நடன நர்த்தகியல்ல. நாட்டியத்துறையில் ஆக்கக் கலைஞராகத் திகழ்கிறர். இவரோடு நடனம் சம்பந்தமாக உரையாடியதை மீண்டும் நினைத்து இவரை மீட்டிப்பார்கின்றேன்.
நீங்கள் தூய்மையான பரத கலையில் நாட்டுக்கூத்தை கலப்பதாகக்குறை கூறுகிறார்களே அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று ஒருமுறை கேட்டேன்.
ஒ.அப்படியா என்று புன்னகையுடன் கேட்டுவிட்டு, நீண்ட
விளக்கத்தை தருகிறார்.
நான் முறையாக நாட்டியம் பயின்றவள். எல்லோரும் போகும்
ஒரே பாதையில் போகவிரும்பாமல் சில புதிய முயற்சிகளை

123 அந்தனி ஜீவா
மேற்கொள்ள விரும்புகின்றேன். நான் முதன்முதலில் தயாரித்த இராமாயண நாட்டிய நாடகத்தில் வடமோடி ஆடல்முறையைப் புகுத்தினேன். பல்கலைக்கழக துணை வேந்தரான கலாநிதி பேராசிரியர் சு. வித்தியானந்தன் தயாரித்த நாட்டுக்கூத்துகளில் பங்கு பற்றிய மெளனகுருவின் உதவுயுடன் வடமோடி ஆடல்முறையை எனது ஆடல்முறையுடன் இணைக்கமுடிந்தது'
நாட்டுக்கூத்த/
நம்மவர்களில் சிலர் நாட்டுக்கூத்து என்றால் இழிவான தென்றும், நாட்டுக் கூத்து என்றால் அதனைப்படித்தோர், பட்டினத்தோர் பார்க்கவே என்றும் வெளிநாட்டவர்கள் அதனைப் பார்த்தால் நம்மைக் குறைவாக நினைப்பார்கள் என்றும் நம்பினார்கள். இதனால்தான் 1974ம் ஆண்டு பரதத்தையும் கூத்தையும் ஒன்றிணைத்து இராமயணத்தை மேடையேற்றிய பொழுது, பரதத்தின் பொது காவலாளர்களாகத் தம்மைக் கருதிக்கொண்ட சில பெண்மணிகள் நான் நாட்டியத்தில் கலப்படம் செய்வதாகக் குறை கூறினார்கள். நான் இதைப்பற்றிக் கவலைப்படாமல் இதனையே ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு நடனக் கலையை மக்கள் கலையாக எடுத்துச்சென்றேன். என்னுடைய முயற்சிக்கு ஆதரவும் வரவேற்பும் இருப்பது கண்டு வேறு சிலரும் இதுபோன்ற முயற்சிகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
திருமதி கார்திகாவின் கருத்துரைகள் பயனுள்ளவை. மீண்டும் அவரே தொடங்குகிறார்.
"எழுத்தாளர்கள் எப்படி நாட்டுக்கு நல்ல கருத்துகளைச் சொல்ல விரும்புகின்றார்களோ அதைப் போல நாட்டியக் கலைஞர்களும் தமது நடனம் என்ற ஊடகத்தின் மூலம் நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டும்"
நான் இடையில் குறுக்கிட்டு பரதநாட்டியம் ஓர் அழகான கலை. ஆனால் மக்களுக்குப் பயன்படவேண்டும். மக்களுக்குப் பயன்படாத எந்த ஒரு கலையும் அழிக்கப்படவேண்டும் என்று

Page 64
இவர்கள் வித்தியாசமானவர்கள் 124
என்னிடம் வங்கநாடக மேதை பாதல் சர்க்கார் கூறியதைக்
குறிப்பிடுகிறேன்.
"நாட்டியக்கலையை மக்களிடம் கொண்டு செல்வதில் நான் வெற்றியடைந்துள்ளேன்' என்று கூறியவாறு அவரது அனுபவத்தை தொடருகிறார்.
"இலங்கைக் கலைவளர்ச்சியில் எனது படைப்புகள் தவிர்க்க முடியாதவை என்பது நாடறிந்த உண்மையாகும். நாம் தயாரிப்பதற்கு வேண்டிய கருப்பொருள்கள் ஏராளம். தனி ஒரு தயாரிப்பாளரால் எல்லாவற்றையும் செய்து விட முடியாது. இளந்தலை முறைக் கலைஞர்களே இதில் தயங்காது ஈடுபட வேண்டும். அப்பொழுதுதான் கலையும் விருத்தியடையும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நாட்டியம் அல்லது நாடகம் என்று கூறிக்கொண்டு பார்த்துச் சலித்துப்போனவற்றை மீண்டும், மீண்டும் பார்வையாளர்களிடம் காட்ட இனிமேல் முடியாது. நாம் ஏதோ மேதாவிகள் பார்வையாளர்கள் ஆட்டு மந்தைகள் என்ற போக்கினை விடுத்து பார்வையாளரும் அடிப்படையில் கலையுணர்வு கொண்டவர்களே அவர்கள் முன் எதையும் கொட்டி விட முடியாது என்ற மதிப்புணர்வுடன் செயல்படவேண்டும்" என்கிறார் திருமதி கார்த்திகா.
கலைத்துறையில் நாட்டிய நாடகங்கள் மூலம் பல சாதனை களைத் திருமதி கார்த்திகா செய்துள்ளார். பன்னிரண்டு நாட்டிய நாடகங்களைத் தயாரித்தளித்துள்ளார். இராமாயணம், உதயம், கிருஷ்ணலீலா, சக்திகனல் போன்றவை அவை. இந்த நாட்டிய நாடகங்களில் சில, பல தடவைகள் அரங்கேறியுள்ளன.
கலைப்பயணம்
நாட்டியக்கலை கற்கும் பெண்மணிகள் அரங்கேற்றத்துடன் தங்கள் கலைப்பயணத்தை முடித்துக்கொள்கின்றனர். இதற்காகக் பெருந்தொகையான பணத்தைச் செலவிடுகிறார்களே என்று என் ஆதங்கத்தை தெரிவிக்கிறேன்

125 அந்தனி ஜீவா
பரதக் கலையைத் தொழிலாகக் கொள்ளும் பெண்களும் அரங்கேற்றத்தை நடத்துகின்றனர். இத்தகைய அரங்கேற்றத்தினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல பயனுண்டு. இதைத்தவிர ஆடற்கலையை அழகிய கலை என்ற ரீதியில் கற்க முன்வந்த பெண்களில் சிலரும் அரங்கேற்றம் எனும் விழாவினை எடுத்து தமது கலைப்பணிக்கு முடிவு கட்டுகின்றனர். இவர்களில் பலர் பரதக் கலையை மேடைக் கலையாக ஆடுவற்குப் பயன்படுத்துவதற்கும் ஏற்ற பயிற்சியினைப் பெறாதவர்கள். ஒரு கச்சேரிக்கு மட்டும் வேண்டிய உருப்படிகளை நெட்டுருப்பண்ணி ஆடி அரங்கேற்றத்தை முடித்துக்கொண்டவர்கள். தனி மனிதனது அபிலாஷைகளின் வெளியீடான இத்தகைய பொழுதுபோக்கு அரங்கேற்றங்களினால் சமூகத்திற்கு ஏதும் தீமை ஏற்படின் அதை நாம் கண்டித்தே தீரவேண்டும் என உறுதியுடன் கூறுகிறார் திருமதி கார்த்திகா.
நாட்டியக்கலாநிதி திருமதி கார்த்திகாவின் கருத்துக்களை, நாட்டிய நாடக வளர்ச்சிக்காக அவர் தரும் சிந்தனைகளைப் பார்க் கையில் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகக் காட்சியளிக்கிறார்.
19.08.1984
24. தமிழோவியன்
மலையகம் நம்மிடம் வராது. மலையகத்தை நாம் தான் தேடிச் செல்லவேண்டும். இத்தகைய தாரக மந்திரத்தை நினைவில் நிறுத்தி .
மலைச் சிகரங்களையும் . தேயிலைகாடுகளையும் தேடி வானம்பாடிகளாக சிறகடிப்பதே எங்கள் கடமையாகிவிட்டது.

Page 65
இவர்கள் வித்தியாசமானவர்கள் 126 இலக்கிய சந்திப்பு
அண்மையில் அப்புத்தளையில் நடைபெற்ற மலையக எழுத்தாளர்களின் இலக்கிய சந்திப்புக்காக முதல்நாள் கொழும்பிலிருந்து புறப்பட்டு, இரண்டாவது நாள் காலை விழா நேரத்திற்கு மண்டபத்தினை அடைந்துவிட்டேன்.
விழாவிற்கு எனக்கு முன்பே சென்று காத்திருந்தவரான கவிஞரும் மலையக இலக்கிய முன்னோடியுமாகிய நண்பர் என்னை அன்புடன் வரவேற்றார்.
அவர் வேறுயாருமல்லர்
அவர்தான் மலையக இலக்கிய முன்னோடியான தமிழோவியன்.
விழா முடிந்து நுவரெலியாவில் நடைபெற்ற ஓர் இலக்கிய கலந்துரையாடலுக்காக நண்பர் சாரல்நாடன் மாத்தளை வடிவேலன் கவிஞர் சு. முரளிதரன் ஆகியோருடன் வாகனத்தில் சென்றபோது தமிழோவியனைப்பற்றிய நினைவுகளே என் நெஞ்சில் சிறகடித்தன.
மலையக இலக்கியமுன்னோடிகளில் ஒருவரான பழைய தலை முறையைச் சேர்ந்தவரான தமிழோவியன் இன்றும் எழுத்துத் துறையில் தம்முடைய கைவண்ணத்தைக் காட்டி வருகின்றார்.
இலக்கியத் தகவல்கள்
எழுத்தாளர் தமிழோவியனுடன் பேசிக்கொண்டிருந்தால் போதும் மலையக இலக்கிய முயற்சிகளைப்பற்றி அற்புதமான தகவல்களை அறிந்துக்கொள்ளும் வாய்ப்புக்கிட்டும்?
ஒருதடவை அவரிடம் மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை காலம் முதல் எழுதி வருகிறீர்களே, அதுபற்றியும் மலைநாட்டுக் கலை மன்றம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டிருக்கிறீர்களே அதைப்பற்றிக் கூறுங்களேன் என்று கேட்டபோது,

127 V− அந்தனி ஜீவா
நண்பர் தமிழோவியன் மிகவும் உற்சாகமாக நமது நாட்டில் 1956ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றம் எல்லா வகையிலும் பல்வேறு பட்ட விளைவுகளை உண்டுபண்ணியது. அதுவே மலையக மறுமலர்ச்சி நோக்கம் கொண்ட இளைஞர்களிடையே கூட்டுணர்வை ஒரு கூட்டுக்குரலாக வெளியுலகம் உணர, ஒலிக்க வைத்தது. அதே காலக்கட்டத்தில் ஆங்கிலத்தில் எழுதிய சி.வி.யின் எழுதுகோல் தமிழிலும் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கியது. மலையகத்தின் புதுச் சிந்தனைவேகம் கலையார் வம், எழுத்தார்வம், எல்லாம் ஒன்று திரண்டு ஈழத்து இலக்கிய உலகம் மலையக இலக்கியம் என்பதை இனங்காணச் செய்ய வேண்டும் என்பதே மலைநாட்டுக் கலைமன்றத்தின் நோக்கமாக அமைந்தது.
மலைநாட்டுக் கலைமன்றம்
மலைநாட்டுக் கலை மன்றம் நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் கூடியபோது மாவட்டத்தின் மருத்துவ அலுவலராக அப்போது பணிபுரிந்த நந்தி அவர்கள் எழதிய கடிதம் மன்றத்தாரிடையே ஒரு பெரும் வரவேற்பை பெற்றது.
மலையகத்தில் திறமைமிக்க கலைஞர்கள் எழுதும் ஆற்றல் உள்ளவர்களும் மறைவாக நிறைந்து கிடக்கிறார்கள். அவர்களை வெளியுலகத்திற்கு இனம் கண்டுகொள்ள வைப்பது புதிதாகத் தோன்றியுள்ள இம் மன்றத்தின் முதற் u 6Golf uLu T 35 அமையவேண்டும். அதற்கு எனது ஒத்தாசை என்றும் உண்டு என்று நந்தி எழுதிய மடலை பொ.கிருஷ்ணசாமி வாசித்தார்.
சி.வி.வேலுப்பிள்ளை, கே.கணேஷ் பொ.கிருஷ்ணசாமி போன்றவர்கள் எங்களுடன் இணைந்து செயல்பட்டனர். அதன்பயனாக திருச்செந்தூரனின் கல்கியில் வெளிவந்த உரிமை எங்கே? என்ற கதை, சண்முகநாதனின் குத்துக்கல் என்.எஸ்.எம். ராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து வடிவேலனின் செங்கரும்பு சி.வியின் நடைச்சித்திரங்கள் இப்படி அருமையான சில எழத்தோவியங்களைப் பார்த்தும் படித்தும் சுவைக்கும்

Page 66
இவர்கள் வித்தியாசமானவர்கள் 128
சந்தர்ப்பத்தை நமது நாளேடுகளும் வார ஏடுகளும் தமிழகப்பத்திரிகைகளும் ஏற்படுத்திக்கொடுத்தன. மலைநாடு என்ற சொல்லைப் பழக்கத்தில் கொண்டுவந்தது மலைநாட்டுக் கலைமன்றம்தான். மலையகப் படைப்புகள் இலக்கியத் தரங் கொண்டவை என்பதை இந்த நாட்டில் நிலைநாட்டியதே அமரர் சி.வியின் தலைமை தான் என்று பெருமையுடன் கூறுகிறார் தமிழோவியன்.
67tufzatif a.af.
தமிழோவியன் மீண்டும் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களைப்பற்றி பெருமையுடன் கூறுகிறார்.
பெரியவர் சி.வி.வேலுப்பிள்ளை பரந்த மனங்கொண்டவர். எவராவது எழுதிக்கொண்டுபோனாலும், அதனை வாசித்துப் பாராட்டுவார், பொறாமையுடன் பார்க்காமல் பூரிப்புடன் நோக்குவார். பண்புடன் பழகும் அவரால் மலையகப் படைப்பாளிகள், தொழிற்சங்கவாதிகள், கலையார்வம் மிக்கவர்கள் எல்லாம் பயனடைந்துள்ளார்கள். தினகரன் பத்திரிகையில் எம்மவர்கள் எழுத்துக்கள் இடம்பெற பெரியவர் சி.வி.தான் காரணம் என்கிறார் தமிழோவியன்.
இன்று தோட்டமொன்றில் பொறுப்புவாய்ந்த களஞ்சியப் பொறுப்பாளராக இருக்கும் தமிழோவியன் ஆரம்பங்களில் வழிபாட்டு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஆசிரியராகப் பணியாற்றியபொழுது எழுத்துத் துறையில் ஆர்வமிக்க பலரை ஊக்கம் கொடுத்து உருவாக்கியுள்ளார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் உருவாகக் காரணமானவர்களில் இவரும் ஒருவரேஇன்று மலையக கலை இலக்கியப் பேரவையின் துணைத்தலைவராக இருந்து செயல்படுகின்றார்.
முதலாவது மலையக சிறுகதைப்போட்டியில் வெறி என்ற சிறுகதையை எழுதிப் பரிசு பெற்றுள்ளார். கவிதை நாடகம் ஆகிய துறைகளில் காட்டிய ஆர்வத்தை சிறுகதைத்துறைகளில் மிகவும் குறைவாக காட்டியுள்ார்.

29 அந்தனி ஜீவா
ந/கத்துறையில்
இவரது குடும்பமே ஒரு கலைக்குடும்பமாகும். இவரது சகோதரர்கள் நாடகத்துறையில் நடிப்பதில் ஈடுபாடு கொண்டிருந்தனர். ஏழிசை மன்னர் எம்.கே.ஆர். ராமசாமியின் அண்ணா எழுதிய வேலைக்காரி என்ற நாடகத்தை எல்லாம் மலையகத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பே மேடையேற்றியவர்கள் நன்கு பாடும் ஆற்றல் கொண்டவர்கள்.
கால மாற்றத்தையும் நாட்டின் சூழ்நிலை யையும் கருத்திற்கொண்டு, மலையகத்தையும் பின்னணியாக வைத்து தமிழோவியன் பல நாடகங்களை எழுதினார்.
ஏட்டிக்குப்போட்டி, மதிமயக்கம், மனமாற்றம், தியாகி, காதலியின் வெற்றி, கலைப்பித்தன், வாழும்வழி எனப் பல நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார்.
தமிழக எழுத்தாளர் பி.சி.கணேசனின் எழுத்தாளன் காதலி என்ற நாடகத்திற்கு இவர் எழுதிய பாடல்கள் தெளிவத்தை கண்ணதாசன் நூலகத்தவர்கள் நூலுருவில் வெளியிட்டுள்ளன. இந்தப் பாடல்கள் பலருடைய பாராட்டைப்பெற்றுள்ளன.
தமிழோவியன் நல்ல மேடைப்பேச்சாளராவார். அதைப்பற்றி அவரிடம் ஒரு தடவை கேட்டபோது,
கிழக்கிலே அமைச்சர் இராசதுரை சொல்லின் செல்வராக விளங்கினார், கல்லூரி இலக்கிய விழாக்களிலும் பொது மேடைகளிலும் அறிமுகமாகி எங்கள் இருவரது தொடர்பும் நட்பும் பல வழிகளில் இணைந்து நிற்கின்றன. கவிஞர் நீலாவணன், திமிலைத்துமிலன் என்றும் வடக்கில் தேவன்,புதுமை லோலன், மகாகவி என்றும் விரிந்தது என்று கூறுகிறார்.
இன்று மலையக இளைய தலைமுறை எழுத்தாளர்களிடையே நம்பிக்கை நட்சத்திரங்களாகத் தென்படுபவரில் ஒருவர் தமிழோவியன். மற்றவர் சாரல்நாடன். இவர்கள் இருவரும் அறுபதுகளில் எப்படி சுறுசுறுப்புடன் இயங்கினார்களோ

Page 67
இவர்கள் வித்தியாசமானவர்கள் 130
அதேபோல மீண்டும் மானுடம் பாடும் வானம் பாடிகளாக சுறுசுறுப்புடன் மலையகமெங்கும் சிறகடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
மலையக இலக்கிய முன்னோடி தமிழோவியனைப்பின்பற்றி பழைய படைப் பாளிகள் மீண்டும் செயல்பட முன்வரமாட்டார்களா என்று நினைத்துப் பார்க்கிறேன். நினைவுகள் எங்கோ சிறகடிக்கின்றன.
10.01.1988
25. கே.எஸ்.சிவகுமாரன்
சில தினங்களுக்கு முன்னர் என்னை சந்தித்த கலை இலக்கிய நண்பர்கள் கொழும்பில் அரங்கேற்றப்பட்ட நாடகம் ஒன்றினைப்பற்றியே கேட்டார்கள்.
இந்த நாடகம் இன ஐக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்த கதை எனது கதைக்கு நாடக பிரதியாக்கம் கொடுத்தவர் மலையகத்தின் முக்கிய கவிஞரான சு.முரளிதரன். நாடகத்திற்கு நாங்கள் வைத்திருந்த தலைப்பு மானுடம் வெல்லும்; ஆனால் பின்னர் ஒன்று எங்கள் ஜாதியே என பெயரிடப்பட்டது.
தமிழ் நாடகம் பற்றிச் சிங்களக் கலைஞர்கள் பேசுவதற்கு
முக்கிய காரணம் இந்த நாடகத்தைப்பற்றி வெளிவந்திருந்த
ஆங்கில விமர்சனம் இந்த விமர்சனத்தை எழுதியவர் கலாவிமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன்.
இன்று தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்களைப்பற்றி தமிழ் தெரியாத சிங்கள, ஆங்கில விமர்சகர்கள், கலைஞர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் கே.எஸ்.சிவகுமாரன், ஆங்கிலத்தில் தரும் விமர்சனமும் அறிமுகமும்தான்.
ஒருதடவை கண்டியில் நடைபெற்ற சினிமா கருத்தரங்கில் எனது காத்திரமான கருத்துரையை செவிமடுத்த கலாவிமர்சகரும்,

S1 அந்தனி ஜீவா
ஆய்வாளருமான திரு. றெஜிசிறி வர்தனா அவர்கள் உங்களைப் பற்றி நான் அறிவேன் என்று கலை, இலக்கியப்பணிகளைப்பற்றி சொன்னார். வியப்பால் என் விழிகள் விரிந்தன.
பின்னர் அவரே ஆச்சரியத்திற்கு விளக்கம் அளித்தார்.
கே.எஸ்.சிவகுமாரன் மூலம் அவரின் ஆக்கங்களை படித்ததன் மூலம் உங்களை அறிந்து வைத்துள்ளேன். எத்தகைய எதிர்பார்ப்புமின்றி அற்புதமான சேவைகளை இவர் எங்களுக்கு செய்திருக்கிறார்.
சின்ன சின்ன உதவிகளுக்கு கைமாறு எதிர்பார்க்கும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதர்; மனித நேயமிக்க கே.எஸ்.சிவகுமாரன் வித்தியாசமான மனிதர்.
கே.எஸ்.சிவகுமாரன் ஆரம்பத்தில் 1956ல் சுதந்திரன், யங் ஒப்சேர்வர், ஜூனியர் விகடன், ஜூனியர் நியூஸ், சிலோன் சினிமா, வீரகேசரி, தினகரன், தமிழ்சினிமா, (சென்னை) போன்ற தமிழ் ஆங்கிலப்பத்திரிகைகளில் எழுதிவந்தார். வீரகேசரியில் திரை மறைவில் இசை வழங்குவோர் என்ற தொடர் கட்டுரைகளையும், பின்னணிப் பாடகர்களின் குரல் ஒற்றுமை தமிழ் திரைப்படபாட்டுகளில் மேலைத் தேச இசையின் செல்வாக்கு போன்ற விஷயங்கள் பற்றி கட்டுரைகளையும் ஏழுதி வந்தார். அந்த கால கட்டத்தில் சிறுகதைகளையும் எழுதி வந்தார். அவை தினகரன், தமிழின்பம், கதம்பம் போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் இடம் பெற்றன.
தினகரன் வார மஞ்சரியில் நாவலாசிரியர் வரிசையில் வரதராசனாரின் இடம், எனக்கு பிடித்த நூலாசிரியர், சார்ள்ஸ் டிக்கின்ஸ் என்ற கட்டுரை பாராட்டைப் பெற்றன. அறுபதுகளில் எழுத்து, சரஸ்வதி, தீபம் போன்ற தமிழக சஞ்சிகைகளில் விமர்சனம் சம்பந்தமான கட்டுரைகள் எழுதியுள்ளார்.

Page 68
இவர்கள் வித்தியாசமானவர்கள் 132
செய்தி வார இதழில் சி.வி.வேலுப்பிள்ளை, மு.தனபாலசிங்கம், தர்மு சிவராமு, காசிநாதன், சாரல்நாடன் போன்றோர் எழுதிய காலகட்டத்தில் சருகுகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வாராவாரம் எழுதிவந்தார்.
அறுபதுகளில் இரு வாரத்துக்கொருமுறை திரைப்பட விமர்சனம். புத்தக விமர்சனம் போன்றவற்றை இலங்கை வானொலி தமிழ்ச்சேவையில் ஒலிபரப்பி வந்தார். பின்னர், கலைக்கோலம், கலைப்பூங்கா போன்றவற்றை விமர்சனங்கள் செய்து வந்ததுடன், செய்தியின் பின்னணியில் செய்தி சுருள் போன்ற வானொலி நிகழ்ச்சிகளையும் தொகுத்து ஒலிபரப்பினார். ரூபவாகினி தொலைக்காட்சியில் ஊர்க்கோலம் என்ற நிகழ்ச்சியை முதன்முதலில் ஒலிபரப்பபட்டபொழுது அச்செய்திகளை முதலில் தொகுத்து கொடுத்ததும் இவரே.
வானொலியில் செய்தி மொழிப்பெயர்ப்பாளராக ஆரம்பித்து செய்தி ஆசிரியராக பதவி உயர்வும் இவர் பெற்றிருந்தார். வானொலி வர்த்தக சேவை தமிழ் அறிவிப்பாளராகவும், ஆங்கில தேசிய சேவை அறிவிப்பாளராகவும் தமிழ் ஆங்கில செய்தி வாசிப்பாளராகவும் கே.எஸ்.சிவகுமாரன் பணிப்புரிந்தமை பலருக்கு தெரியாது. ஆங்கில சேவையில் கலை சஞ்சிகை (ஆர்ட்மேகசின்) என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இதில் ஆங்கில, சிங்கள, தமிழ் கலை, இலக்கியங்களை பற்றிய விவரங்களை தொகுத்து வழங்கினார்.
கலை விமர்சகராக அறியப்படும் கே.எஸ்.சிவகுமாரன் தொடர்பில் துறையிடை தனது சிறப்பான பங்களிப்பினை நல்கியுள்ளார். த ஐலண்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் சிறப்பம்சங்கள் பகுதியின் பிரதி ஆசிரியராகவும் கல்சர் என்ற பக்கத்தின் தொகுப்பாளராகவும் இருந்து மூன்று மொழிகளின் கலை இலக்கிய வாதிகளை விமர்ச்சித்திருக்கிறார். எனது நாடகங்கள் பற்றிய விமர்சனங்களை இலக்கியப்பணிகளைப்பற்றி தமிழ் தெரியாத ரசிகர்களுக்கு இவரின் எழுத்துக்கள் மூலம் சென்றடைந்துள்ளது.

133 அந்தணி p:
முதல் சந்திப்பு/
எனது முதல்நாடகமான முள்ளில் ரோஜா எழுபதுகளில்
மேடையேறியது. நாடகப்பிரதியாக்கம் தயாரிப்பு நெறியாள்கை போன்றவற்றை நானே ஏற்றிருந்தேன்.
அந்த நாடகம் நாடக கலைஞர்களிடையே பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது.
சிங்கள நாடக தயாரிப்பாளரான தயானந்த குணவர்தன எனது நாடகத்தையும் எனது முயற்சிகளையும் பாராட்டி என்னை ஊக்குவித்தார்.
எனது நாடகம் பற்றி அவருக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன்.
டெயிலி நியூஸ் பத்திதிகையில் விமர்சனம் வந்ததாக குறிப்பிட்டார்
பின்னர் அந்த பத்திரிகையை தேடி எடுத்து படித்து பார்த்தபொழுது எனது முகமும் முகவரியும் தெரியாத விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் அந்த விமர்சனத்தை எழுதியிருந்தார்.
அந்த நாடக அரங்கேற்றத்தில் பல தவறுகளை சுட்டிக்காட்டியதுடன் இறுதியில் எனது முயற்சி பற்றி நம்பிக்கை யான சில வார்த்தைகள் கூறினார்.
அந்த நம்பிகை வார்த்தைகள் அதுவும் ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்த வாசகங்கள் எனக்கு ஒரு உந்து சக்தியாக அமைந்தது.
அதற்குப் பின்னர் நாடக அரங்குகளில் இலக்கிய
கூட்டங்களிலும் அடிக்கடி நாங்கள் சந்தித்தாலும் ஒரு புன்னகையுடன் எங்கள் சந்திப்பு முற்று பெற்றுவிடும்.

Page 69
இவர்கள் வித்தியாசமானவர்கள் 134
இனிமையான சுபாவம் கொண்ட கலா விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன், அமைதியான சுபாவம் கொண்ட மனித நேயமிக்கவர்.
கொழும்பில் நடைபெறும் இலக்கிய கூட்டங்களில் எல்லாம் இவர் காணப்படுவார், அமைதியான பின் வரிசையில் அமர்ந்து கருத்துக்களை செவிமடுப்பார்.
இலக்கிய விமர்சனங்கள் செய்யும்பொழுது எழுத்தாளரின் மனம் புண்படாமல் கருத்துக்களை நாசுக்காக கூறுவார். தனது மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி எடுத்துக் கூற தயங்கமாட்டார்.
முற்போக்கு, பிற்போக்கு சலசலப்புக்கு மத்தியில் எந்த அணியிலும் சாராமல் அமைதியாகவே தன் இலக்கிய பயனத்தை தொடர்பவர்.
கலா விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் தனக்கு என்று கொள்கையும் லட்சியமும் கொண்டவர். ஆனால் நூல்கள் விமர்சிக்கும்பொழுது தனது கருத்தினை திணிக்கமாட்டார். நல்லதை நல்லதென்றே மனந்திறந்து பாராட்டுவார்.
ஜப்பான் நாட்டில் இருக்கிற நாகசாகிப் பல்கலைக்கழகத்தில் வெளிவரும் சஞ்சிகையில் கலா விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் பேட்டி ஒன்று வெளிவந்தது.
அந்தப் பேட்டியின்போது இலங்கையின் தமிழ் இலக்கியம் இலக்கிய கர்த்தாக்கள் குறித்து சிறப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்தப்போட்டியின் போது பேராசிரியர் கைலாசபதி அவர்களைப்பற்றி குறிப்பிடும்பொழுது இலங்கையின் இலக்கிய உலகிலும் கற்றவர் உலகிலும் அங்கீகரிக்கப்பட்டவர் விஞ்ஞான சமூகவியல் முறையில் தனது அறிவைப் பலரிடத்தும் பரவவிடுவதிலும் முன்நின்றவர் என்கிறார்.

135 அந்தனி ஜீவா
தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிராத தமிழ் மொழியை வாசிக்கமுடியாத சகோதர சிங்கள எழுத்தாளர்கள், ஆங்கிலம் தெரிந்த ரசிகர்கள் விமர்சகர்கள் தமிழ் இலக்கியத்தையும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணியாக திகழ்பவர் கலா விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன், இவரின் பங்களிப்பை எவரும் மறுத்துவிட
(Մծlգաո Ցl.
25.12.1988
26. பெருந்தகை சேர் ராசீக் பரீத்
தனது தலைவர்களைக் கெளரவிக்க மறந்துவிடும் ஒரு சமூகம் தலைவர்களை உருவாக்கும் சக்தியை இழந்துவிடும் என்று கூறப்படுகிறது என்று மர்ஹம் ஏ.எம்.ஏ.அஸிஸ் அவர்கள் ஒரு சமயம் மொழிந்தார்கள். அதனால்தான் முஸ்லீம் மக்களின் பெருந்தலைவராகத் திகழ்ந்த பெருந்தகை சேர் ராசீக் பரீத் அவர்களையும் அவரின் சேவைகளையும் அவர் வாழும் காலத்திலேயே அந்தச் சமூகம் வாழ்த்திக்கெளரவித்தது.
தன்னலமற்ற தலைவர்
ஒவ்வொரு சமூகத்திலும், பெருந்தகை சேர் ராசீக் பரீத் போன்ற தன்னலமற்ற தலைவர்கள் தோன்றவேண்டும்.
இன்று ஈழத்து இஸ்லாமிய சோனகப் பெருங்குடி மக்கள் நாட்டில் தலைநிமிர்ந்து அறிஞர்களாகவும், ஆசிரியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், மருத்துவர்களாகவும், சட்ட வல்லுனர்களாகவும் எல்லாத் துறைகளிலும் கை வந்த கலாவிற்பன்னர்களாகவும் திகழ்வதற்குக் காரண கர்த்தாக்களாக விளங்கிய இரு பெரும் தலைவர்களை இஸ்லாமிய சமூகம் போற்றிப் புகழ்கின்றது. ஒருவர் அறிவுக்கு உயிர் கொடுத்த அறிஞர் ஏ.எம்.ஏ.அஸிஸ், மற்றவர் பெருந்தகை சேர் ராசீக் பரீத்.

Page 70
இவர்கள் வித்தியாசமானவர்கள் 136
சோனக பெருங்குடி மக்களின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த பெருந்தகை சேர் ராசீக் பரீத் தமது தள்ளாத வயதிலும் துடிப்பான இளைஞரைப்போல அந்த சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளை நினைத்துப் பார்க்கிறேன்.
பெருந்தகை சேர் ராசீக் பரீத் அவர்களையும் அவரின் தேடிக்கிடைக்காத நூல்களைக் கொண்ட நூல் நிலையத்தையும் பார்க்கவேண்டும் என்ற அவாவின் காரணமாக, சுவடிக்கூட உதவி காப்பாளர் திரு. வி.கே.நவ ஜோதி அவர்களுடன் பமபலப்பிட்டியில் பரீத் பிளேஸில் அமைந்துள்ள அவரது இல்லம் சென்றேன்.
சமூக அக்கறை
பெருந்தகை சேர் ராசீக் பரீத் அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமாயிருந்த திரு. நவசோதி அவர்கள், என்னை அவருக்கு அறிமுகப்படுத்தியதும் என்னைப்பற்றி அதிய அக்கறையுடன் விசாரித்த பின் எங்களிடம் தமது சோனக சமூகத்தைப்பற்றி பல அரிய தகவல்களைக் கூறினார்.
பின்னர் ஒரு தடவை அவரைச் சந்தித்து உரையாடிய பொழுதும் தனது அனுபவங்களை ஒரு சிறு பிள்ளைக்கு எடுத்துச் சொல்வது போல எடுத்துச்சொன்னார்.
பெருந்தகை சேர் ராசீக் பரீத் அவர்களின் அனுபவங் களிலிருந்தும் ஒவ்வொரு இளைஞனும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதைப்போல ஒவ்வொரு சமூகத்திலும் சேர் ராசீக் பரீத் போன்றவர்கள் தோன்றி அச்சமூகத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழவேண்டும்.
பெருந்தகை சேர் ராசீக் பரீத்தின் தந்தையார், பாட்டனார் ஆகியோர் முஸ்லீம் சமூகத்துக்கு அரும்பெரும் தொண்டாற்றிய தால் அவர்கள் வழிவந்த பெருந்தகை சேர் ராசீக் பரீத் அவர்களும் பெரும் பணியாற்றியுள்ளார்.

37 அந்தனி ஜீவா
கல்வி வளர்ச்சிக்காகப் பெருந்தகை சேர் ராசீக் பரீத் முன்னின்று உழைத்துள்ளார். முஸ்லீம் பெண்களுக்காக ஒரு பாடசாலையை நிறுவ இலங்கை சோனக மகளிர் சங்கம் முயன்று கொண்டிருந்த வேளையில் நான்கு கட்டங்களை கொண்ட அரை ஏக்கர் நிலத்தை அன்பளித்தார்.
627tusisofluid
பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரி போன்று திஹாரியிலும் கஹட்டோ விட்டயிலும் முஸ்லீம் பாடசாலை நிறுவதற்கு அரசாங்கத்தைத் தூண்டினார். முஸ்லீம் கல்வி முன்னேற்றத்தை வலுப்படுத்தித் துரிதப்படுத்த அரசாங்க சபையில் பல பிரேரணைகளைக்கொண்டு வந்ததோடு வேறு துறைகளிலும் தனது சமூகம் பாதிக்கப்படுவதையும் புறக்கணிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி, அவற்றிற்குப் பரிகாரம் தேடும் வகையில் பல உரைகளை நிகழ்த்தியதுடன், அவைகளைச் செயல்படுத் தியுள்ளார்.
சோனக விளையாட்டுக் கழக தலைவராக சேர் ராசீக் பரீத் பணியாற்றிய காலத்தில் அவ்விளையாட்டுக்கழகத்திற்காக ஒரு கிரிகட் மைதானம் அமைக்க ஒரு காணித் துண்டைப் பெற்றுக் கொடுத்து, பார்வையாளரை அரசாங்கம் நிறுவ உதவிகளையும் செய்தார்.
மாநகர சபையிலும் அரசாங்க சபையிலும் முஸ்லீம்களின் முன்னுரிமைக் காக, இஸ்லாமிய தர்மங்களுக்காகப் போராடியதுபோல, செனட் சபையிலும் அவரது முதலாவது உரை முஸ்லீம்களின் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்தியது. 1948 ஜனவரி 22ம் திகதி வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது முஸ்லீம்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உறுதியான உத்தரவாதம் கேட்டுப் பாராட்டினார்.
வேண்டுகோள்
தங்க முட்டையிடும் வாத்து தொடர்ந்து உயிர் வாழ

Page 71
இவர்கள் வித்தியாசமானவர்கள் 138
அரசாங்கம் முழுத்திறமையிடனும் செயலாற்ற வேண்டுமென, நான் வர்த்தகச் கமூகத்தினைச் சேர்ந்தவன் என்ற முறையில் எண்ணுகிறேன். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இருந்தே அரசாங்கம் அதன் நிர்வாகத்தைக்கொண்டு செல்லத் தேவையான பணத்தைப் பெறுகிறது என்று சுட்டுக்காட்டி முஸ்லீம்கள் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கிணங்க வாழ்க்கை நடத்த அரசாங்கம் உதவவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பெருந்தகை சேர் ராசீக் பரீத் அவர்கள் பெருந்தோட்டத் துறையில் உழைக்கும் தொழிலாளர்ளின் குழந்தைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளார்.
625/It's affo/Tif
கெளரவ உப தலைவர் அவர்களே நீங்கள் இச்சபையில் உரையாற்றும்போது பெருந்தோட்ட பள்ளிகளில் சிறார்கள் 3ம் தரம் மட்டுமே கல்வி பயில்கிறார்கள் என்று குறிப்பிட்டீர்கள். முன்னைய கல்வி அமைச்சில் நானிருந்ந போது பெருந்தோட்டப்பள்ளி மாணவர்களின் கல்வி விடயத்தில் நான் பெரும் ஈடுபாடு கொண்டேன். பிரச்சனையின் கோணத்தை உங்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டேன். இரண்டாம் தரத்தில் சித்தியெய்தியதும் அவர்களது பெற்றோர் அவர்களைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப விருமபுகிறார்களில்லை என்பதைக் கண்டோம்.
எல்லாப் பெற்றோர்களும் இப்படியானவர்கள் என நான் கூறவில்லை. தமது பிள்ளைகளை தொடர்ந்தும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பும் சில பெற்றோர்களும் இருக்கலாம். ஆனால் பெரும்பான்மையினரோ மகன் தோட்டத்தில் வேலை செய்து, காசு சம் பாதிக்க விரும்புகிறான் என்று கூறி அவனைப் பள்ளிக்கூடத்திலிருந்து விலக்கிக் கொள்வார்கள். ஆனால், உண்மை என்னவெனில் தமது பிள்ளைகளைத் தோட்டத்தில் வேலைக்கமர்த்தி அவர்களது ஊதியத்தைத் தாம் பெறப் பெற்றோர் விரும்புகின்றனர் என்பதே. எனவே, இச் சிறுவர்களைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பிவைக்க அவர்களது பெற்றோரை நிர்பந்திக்க்கூடிய சில வழிகளை வகுக்கவேண்டும் என நான் நினைக்கிறேன்.

139 அந்தனி ஜீவா
தேவைப்படின் அவர்களுக்கு ஒரு வகையான தண்டனை கூட கொடுக்கலாம். அதேவேளையில் இம்மாணவர்களது கல்விக்காகத் தரமான பாடசாலைகள் அமைக்கப்படவேண்டுமென்ற உங்களது கூற்றுடன் கெளரவ உப தலைவர் அவர்களே நானும் இணக்கம் தெரிவிக்கிறேன்.
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் படித்து முன்னுக்கு வரவேண்டும் என பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். பெருந்தகை சேர் ராசீக் பரீத் அதற்கான பல திட்டங்களையும் வழிவகைகளையும் சமர்ப்பித்தார்.
67மரைனரவரி ஆசிரியர்
முஸ்லீம் சமூகம் என்றுமே மறக்கமுடியாத இன்னுமொரு பெருஞ்சேவையை சேர் ராசீக் பரீத் செய்துள்ளார். முஸ்லீம் அரசினர் பாடசாலைகளில் மெளளவி ஆசிரியர்களை நியமித்ததே
பெருந்தகை சேர் ராசீக் பரீத் சோனகர் என்போரைத் தனிச் சமூகமாக இனங்காட்டி இராவிட்டால், அவர்கள் பண்டைக் காலந்தொட்டே இலங்கையில் வசித்துவந்தவர்கள் என இனம்காட்டியிராவிட்டால் முஸ்லீம் என்ற பொது வகுப்பு மட்டுமிருந்து வந்து இந்திய முஸ்லீம்களா? அராபிய முஸ்லீம்களா என்று கேள்வி எழுப்பப்பட்டு இன்று சோனகரும் நாடற்றவர்களாக இருந்திருப்பார்கள்.
இதனால் சோனகர், முஸ்லீம்கள் என்ற கொள்கை மூலம் முஸ்லீம்களிடையே வேற்றுமையையும், பிரிவினையையும் ஏற்படுத்துகிறார் என்று கூட ஒரு காலத்தில் குற்றஞ்
FT LIL L. LITT.
இன்று இலங்கை முஸ்லீம்கள் அல்லது இலங்கைச் சோனகர் சுதந்திரத்துடன் தலைநிமிர்ந்து நடக்கக் காரணமாயிருந்த சேர்
ராசீக் பரீத்தின் தீர்க்கத்தரிசனமாகழிகrற்றதாகிர் புரிந்துகொண்டு நன்றி பாராட்டினார்கள்.

Page 72
இவர்கள் வித்தியாசமானவர்கள் 140
(gonga L/7 to6ørøTIŤ
சேர் ராசீக் பரீத் சந்தேகமின்றி இலங்கைச்சோனகர்களின் முடிசூடா மன்னராவார். கடந்த 50 வருட காலத்தில் அவர் சோனகரை ஒரு சமுதாயமாக கட்டி எழுப்பினார். இன்று இலங்கையின் எல்லா சமூகத்தினரின் அன்பையும் அபிமானத்தையும் சோனகர் பெற்றுள்ளனர். சோனகர்களின் உயர்ச்சிக்கான ஆக்கபூர்வமான ஒரு திட்டத்தை வகுத்துள்ளார். இன்று இத்திட்டத்தினால் ஏற்பட்டுள்ள நன்மைகளை எண்ணற்ற சோனக இளைஞர்களும் யுவ திகளும் நுகர்ந்து கொண்டிருக்கின்றனர். இலங்கையின் ஏனைய சமூகங்களுக்கு நேர் சமமாக ஏழைச் சோனகர்களும் இடம் வகிக்க வழி வகுத்த சோனகக் கல்வி திட்டத்தின் ஸ்தாபகர் சேர் ராசீக் பரீத் ஆவார். இவ்வாறு கலாநிதி தஹாநாயக்கா குறிப்பிட்டுள்ளார்.
ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலமாக இலங்கை முஸ்லீம்களின் தன்னலமற்ற தலைவராக ஒளிவிட்டுப் பிரகாசித்த பெருந்தகை சேர் ராசீக் பரீத் அவர்களின் சேவையை முஸ்லீம் சமூகம் என்றென்றும் மறக்காதென்பது திண்ணம்.
17.02.1985.
27. பூந்தான் யோசேப்பு
பூந்தான் நாட்டுக்கூத்து கலைஞன், நாடக சிரோன்மணி, நாடகக் கலாநிதி, நாடகக்கூத்துச் சக்கரவர்த்தி, நாட்டுக்கூத்து பேரொளி, கலை வேந்தன், கலைஞானபூபதி, இசைபுலவர், நாடக மாமன்னன், தச விருது நாட்டுக் கூத்துக் கலைக்காவலன், கலைக்குரிசில், நாட்டுக்கூத்து பேராசிரியர் திலகம், நாட்டுக்கூத்து மாமேதை, நாட்டுக்கூத்துத் தந்தை, நாட்டுக்கூத்து கலாநிதி.
இத்தகைய புகழ்பெற்ற பட்டங்களைப் பெற்ற கலைஞன் வேறு யாருமல்லர் நம்மிடையே வாழ்ந்து மறைந்த நாட்டுக்கூத்து கலாநிதி பூந்தான் யோசேப்பு தான்.

141 அந்தனி ஜீவா
பாரம்பரிய கலை
நமது பாரம்பரிய கலைச் செல்வமான நாட்டுக் கூத்து கலையை, இலங்கையில் சுமார் ஐமபதாண்டுகளுக்கு முன் யாழ்ப் பாணத்திவிருந்து திருகோணமலை, மன்னார் வரை கொண்டு சென்று அதனுடைய மகிமையை எழுபதுக்கு மேற்பட்ட கிராமங்களில் அறிமுகப்படுத்தி, அங்குள்ள கலையார்வமுள்ள வர்க்குக் கூத்தைப் பழக்கி, அந்தக் கலையை அழிந்துவிடாமல் பாதுகாத்த பெருமைக்குரிய கலைஞர்தான் நாட்டுக் கூத்துக் கலாநிதி பூந்தான் யோசேப்பு.
நாட்டுக்கூத்துக் கலாநிதி பூந்தான் யோசேப்பு அவர்களை 1974ம் ஆண்டு சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது.
சங்கிவியன் கூத்து
வைத்திய கலாநிதி ஆனந்தராஜன் அவர்கள் தலைமையில் இயங்கிய இலங்கை முத்தமிழ்க் கழகம் கொழும்பில் இரண்டு நாட்கள் நடத்திய முத்தமிழ் விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக பூந்தான் யோசேப்புவின் சங்கிலியன் நாட்டுக்கூத்து இடம் பெற்றது.
நாட்டுக்கூத்து நடைபெற்ற அன்று காலையில் நிகழ்ந்த நாடகக் கருத்தரங்கில் ஈழத்தில் தமிழ் நாடகம் என்ற தலைப்பில் நான் உரையாற்றுகையில் நாட்டுக்கூத்து பற்றியும் எனது உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டேன்.
இந்தக் கருத்தரங்கு நடைபெற்ற பொழுது முன் வரிசையில் அமர்ந்திருந்த பூந் தான் யோசேப்பு கூர்ந்து அவதானித்துக்கொண்டிருந்தார். நான் பேசி முடித்ததும், என்னைத் தன்னருகே இருந்த இருக்கையில் அமரச்செய்து என்னைப்பற்றி அதிக அக்கறையுடன் விசாரித்தார். பின்னர் கருத்தரங்கு முடிந்ததும் நாட்டுக்கூத்து கலாநிதி பூந்தான் யோசேப்பு அவர்களுடன் நீண்டநேரம் உரையாடி அவரின் கலையுலக சேவைப்பற்றித் தெரிந்து கொண்டதுடன் அன்று

Page 73
இவர்கள் வித்தியாசமானவர்கள் 142
முழுவதும் அவருடன் இருந்து நாட்டுக்கூத்து முடியும்வரை அவர் எவ்வாறு தன் ஆற்றலை வெளிப்படுத்தினார் என்பதையும் அறிந்துகொண்டேன்.
இன்று நாட்டு கூத்துக் கலாநிதி நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர் விட்டுச்சென்ற நாட்டுக்கூத்துக்கலையை அழியாமல் பேணிப் பாதுகாப்பது அவரின் வாரிசுகளின் கடமையாகும்.
அந்த நாட்டுக்கூத்து மேதையிடம் பழகியது, உரையாடியது, அவர் கூத்துக் கலையைப் பற்றி தெரிவித்த கருத்துக்கள் ஆகியவற்றை மீண்டும் இரை மீட்டிப் பார்க்கிறேன்
2000 தடவை
நாட்டுக் கூத்து கலாநிதி பூந் தான் யோசேப்பு தமது கலைக்குழுவினருடன் இரண்டாயிரத்து அதிகமான தடவைகள் பல நாட்டுக் கூத்துக்களை நாடு எங்கும் மேடையேற்றிப் பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் அபிமானத்தையும் , பாராட்டையும் பெற்றுள்ளார். நாட்டுக்கூத்து என்றால் பூந்தான் யோசேப்பு என்று கூறுமளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருக்கிறார்.
பூந்தான் யோசேப்பு நாடகங்களில் அரச பாத்திரங்களை ஏற்று, மிகச் சிறப்பாக தமது முத்திரையை பதித்துள்ளார். நாட்டுக் கூத்துகளில் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடிப்பதுடன் நாட்டுக்கூத்து நாடகங்களுக்கு கலைஞர்களை தெரிவு செய்து நாட்டுக் கூத்தை நெறிப்படுத்தி அண்ணா வியார் ஸ்தானத்தைப்பெற்ற முதற் கலைஞராக விளங்குகிறார்.
பூந்தான் யோசேப்பு தமது இருபத்தோராவது வயதில் முதல் முதல் நாட்டுக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி நடிக்கத் தொடங்கியுள்ளார். சஞ்சுவாம் என்ற நாட்டுக் கூத்தில் ஏரோது அரசனாக நடித்துப் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

143 ’ அந்தனி ஜீவா புதிய மரபுகள்
நாட்டுக்கூத்தில் நடிகனே LTգ நடிப்பது மரபு. நாடகத்தில் இரவு முழுவதும் அரசன், கதாநாயகன், கதாநாயகி ஆகிய மூன்று பாத்திரங்களை ஒரு தனி நடிகர் நடிக்கவேண்டும். இதுவே மரபு. இதனைப் பூந்தான் யோசேப்பு தகர்த்தெறிந்தார். நாட்டுக்கூத்தில் புதிய மரபுகளை புகுத்தினார். அதாவது ஒவ்வொரு பாத்திரத்திற்கும் இருவர் அல்லது மூவர் என்று வகுத்து, நடிக்கும் கூத்தில் கையாண்டார். இதில் வெற்றியும் கண்டார்.
இதனால்தான் கொழும்பில் அரங்கேறிய சங்கிலியன் நாடகத்தில் முதலில் சில்லையூர் செல்வராசனின் மைந்தன் திலீபனும், இடையில் சில்லையூர் செல்வராசனும் கடைசியாக பூந்தான் யோசேப்பும் முறையே தோன்றி மிகச் சிறப்பாக பாடி நடித்தார்கள்.
1936 ம் ஆண்டில் இளவாலைக் கிராமத்து மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அக்கிராமத்திலுள்ள பழந்தலை முறைக் கலைஞர்களையும் இணைத்து தேவ சகாயம்பிள்ளை நாட்டுக்கூத்தை நெறிப்படுத்தி மேடையேற்றிய யோசேப்பு அந்நாடகத்தின் மூலம் அண்ணாவியார் என்ற ஸ்தானத்தைப் பெற்றுக் கொண்டார்.
ஒலிபெருக்கி மக்கள் பழக்கத்தில் வராத காலத்தில் முழுஇரவும் மூன்று பாத்திரங்களை ஏற்றுப் பாடுவது என்பது சாதாரண விஷயமல்ல, அதுவுமின்றி ஒரு பாத்திரத்தை மூன்றாகப் பிரித்துப் பாடும் அக்காலத்தில் பூந்தான் யோசேப்பு மூன்று பாத்திரங்களையும் ஏற்றுப்பாடி நடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.
இவரின் திறமைகளை சக கலைஞர்களே பெரிதும் போற்றி இவரைப் பாராட்டியுள்ளனர்.
aos visió 66f ató
யாழ்ப்பாண ஆசனக்கோவில் முன்றிலில் கலைஞர்களும்

Page 74
இவர்கள் வித்தியாசமானவர்கள் 44 பொதுமக்களும் குழுமியிருக்க யாழ்ப்பாணத்து ஆயர் வணக்கத்துக்குரிய வதியாகுயிள்ளை அவர்கள் பூந்தான் யோசேப்புவின் கலைத் திறமையைப் பாராட்டி மலர்க்கீரீடம் சூட்டி மகிழ்ந்தார். இதனை தன் வாழ்க்கையில் கிடைத்த பெரும் மதிப்பிற்குரிய கெளரவம் என அடிக்கடி பூந்தான் யோசேப்பு கூறுவார்.
நாட்டுக் கூத்து சக்கரவர்த்தி பூந் தான் யோசேப்பு போன்றவர்களின் அயராத உழைப்பினாலும் ஆற்றலினாலும் இக் கூத்துக்கள் அழியாவண்ணம் பாதுகாக்கப்பட்டு நகர்ப்புறங்களிலும் புது மெருகுடன் மேடையேறுகின்றன. சங்கிலியன், ஞானசெளந்தரி நாடகங்களில் பூந்தான் அவர்கள் பாடி நடித்த பாங்கு என்றும் மெச்சக்கூடியது என்று சக கலைஞனைப்பற்றி நடிகமணி வி.வி.வைரமுத்து பெருமையுடன் குறிப்பிடுகின்றார்.
பழம்பெரும் புலவர்களால் எழுதப்பட்ட நாட்டுக்கூத்துச் சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் - கிராமப்புறங்களில் கவனிப்பாரற்று கிடந்த இந்தப் புதையல்களை தேடிப்பிடித்துப் பாதுகாத்து வைத்துள்ளார் பூந்தான் யோசேப்பு.
இதனை நூல் வடிவில் வெளியிட்டு அழியாமல் பாதுகாக்கவேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும்.
அலங்கார ரூபன், அணு உருத்திரன், மூவிராசாக்கள், ஊசேன் பாலந்தை, சங்கிலியன், செனகப்பு, சம்பேதுரு, சமபாவிலு.
மத்தேஸ். மவுறம்மா, திருஞான தீபன், இம்மானுவேல் நொண்டி, கருங்குயில் குன்றம், நொருங்குண்ட இதயம், சஞ்சுவரம், யூதகுமாரன், கற்பருபவதி, பங்கிராஸ் செபஸ்தியார், மருதநாட்டு இளவரசி, ஞான சவுந்தரி ஆகிய இருபது நாடகங்களை நாட்டுக் கூத்துக் கலாநிதி பூந்தான் யோசேப்பு பொக்கிஷங்களாகப் பாதுகாத்து வந்துள்ளார்.
இந்த இருபது நாடகங்களை விட எஸ்தாக்கியார் தேவசகாயம் பிள்ளை விஜேயமனோகரன் மரியதாசன் மனம்போல் மாங்கல்யம்

A5 அந்தனி ஜீவா
ஞானசவுந்தரி ஆகிய நாடகங்களே நூல் வடிவில் வந்துள்ளன. நூல்வடிவில் வெளிவராத சில நாடகங்களை நூலுருவில் கொண்டு வர பூந்தான் யோசேப்பு எடுத்த முயற்சி திரு. மு.வி.ஆசீர்வாதம் அவர்கள் மறைவினால் தடைப்பட்டுவிட்டது. இதனை நிவர்த்தி செய்ய கலை உள்ளம் கொண்ட உள்ளங்கள் முன்வரவேண்டும்.
சில அறிவுரைகள்
நான் பல நாடகங்களில் பல்வேறு வேடங்களில் நடித்தும் பாடல்களைப் படித்தும் வருவதை மக்கள் அறிவார்கள். நாடகங் களில் நான் பாடல்களைப் படிக்கும்பொழுதும் நடிக்கும்போதும் ஆற்றும் கிருத்தியங்களை நோக்கும் இடத்து இது புரியும். பொறு மையும் நிதானமும் இருப்பதை அவதானிக்கலாம். நாடகம் பழகு வோர் பாடல்களைப் படிக்கும்போது கசடறக் கற்க வேண்டும். ரசிகர்கள் விளங்கிக்கொள்ளத் தக்கவாறு வசனங்களைப் பேச வேண்டும். பாட்டுகளும் சொல் விளக்கமாக பாடவேண்டும்.
பாட்டில் ஓர் அடியும் வசனத்தில் ஒரடியும் பாடமாக்கிவிட்டு நடிக்கத் தொடங்கினால் அது முடியாத காரியம். நடிக்கும்போது தனக்கு வழங்கிய பாத்திரத்தின் குணாம்சங்களையும் இயல்புகளையும் மனதில் உருப் போட்டுக் கொண்டு அப்பாத்திரங்களாகவே தன்னையும் நினைத்துவிடவேண்டும்.
நான் ஓர் அரசன். நான் ஒரு வேடன், நான் ஒரு பிசாசு, நான் ஒரு சாம்புவன் என்று அப்பாத்திரங்களின் குண இயல்பினராக மாறவேண்டும். பாட்டோ வசனமோ பாடமின்றி மேடையேறி பாட்டுக்கொப்பி பார்ப்பவரை எதிர் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.
மேடையில் ஏறியவுடன் வெட்கம் துக்கம் கூச்சம் எதுவுமின்றி நடிகர் திருப்தியாய் நின்று படிக்கவேண்டும். பொதுவாக எந்தப் பாத்திரமேந்தும் நடிகர்களும் இவற்றைக் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டும். இவற்றைக் கவனிக்காமல் அரைகுறையாகப் பழகிவிட்டு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் மேடையில்

Page 75
இவர்கள் வித்தியாசமானவர்கள் 146
நின்று திக்குமுக்காடிவிட்டு பழக்கிய அண்ணாவியில் நொட்டை சொல்வது அர்த்தமற்றது.
பூந்தான் யோசேப்பு அவர் கூறிய இந்த வார்த்தைகளை கலைஞர்கள் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டும். நாட்டுக்கூத்துக் கலாநிதி பூந்தான் யோசேப்புவின் கருத்தை ஒவ்வொரு கலைஞரும் நினைத்துப் பார்க்கவேண்டும்.
30.12.1984
28. பேராசிரியர் மு.வ.
எனது பள்ளிக்கூட நாட்களில் நான் அதிகம் படித்த நூல்கள் பேராசிரியர் மு.வரதராசனாருடையவை. அவருடைய கள்ளோ பாவியமோ, அகல்விளக்கு, பெற்றமனம் போன்ற நாவல்களை எத்தனையோ இரவுகள் கண்விழித்துப் படித்துச் சுவைத்திருக்கிறேன்.
அவரது கரித்துண்டு நாவல் ஓர் ஓவியக் கலைஞனின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டும் நாவல், கரித்துண்டு கொண்டு ஓவியம் வரையும் ஓவியரைப் பின்னணியாகக் கொண்ட இந்த நாவலை நான் பல தடவைகள் படித்துச் சுவைத்துள்ளேன்.
அண்மையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியைத் தாண்டிப் போகையில் பேராசிரியர் மு.வ. அவர்களின் நினைவு நெஞ்சில் தலைதூக்கியது. பேராசிரியர் மு.வ. வின் முயற்சியால் பச்சையப்பன் கல்லூரி எத்தகைய சிறந்த மாணவமணிகளை உருவாக்கித் தந்துள்ளது.
எளிமைத்தோற்றம்
பேராசிரியர் மு.வ. அவர்கள் இலங்கை வந்திருந்த பொழுது அவரை சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பேராசிரியர் அவர்கள் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த அவரது

147 அந்தனி ஜீவா
மாணாக்கரான திரு. கந்தையா அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்திருந்தார். அப்பொழுது அவரை நேரில் சென்று பார்த்து உரையாடியது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. அவருடைய நூல்களைப் போலவே அவரும் எளிமையாகக் காட்சியளித்தார்.
பேராசிரியர் மு.வ.வின் நூல்களில் அட்டைப்படம் மிகவும் எளிமையாகவே காணப்படும். கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் ஏன் நீங்கள் அட்டைப்படம் போடக்கூடாது என்று கேட்டபொழுது அவர் புன்னகையுடன் உங்கள் ஆசை புரிகிறது. ஓவியர்கள் பலரை நான் அறிவேன். ஓவியர்களிடம் அட்டைப்படம் வரையச்சொன்னால் அதில் ஓவியர்கள் கவர்ச்சி என்ற பெயரில் பல வண்ணங்களில் பெண்மையை மதியாது கெடுத்து விடுவதுண்டு. பிறகு நாம் மறுத்து படம் வேண்டாம் என்று சொல்ல இயலாது.
நூலில் இடம் பெறும் எளிமையை இலக்காகக் கொண்ட இலட்சியங்களுக்கு முரணாக அட்டைகளோ முகப்புச் சித்திரங்களோ இருந்துவிடக்கூடாதல்லவா? என்றார்.
பேராசிரியர் மு.வரதராசன் அவர்கள் தம் படைப்புகளில் கருத்துக்களுக்கே முக்கியத்துவம் அளித்தார். அவரது படைப்புகள் அனைத்தும் கருத்துக் களஞ்சியமாக சிந்தனைப் பெட்டகமாக திகழும்
இன்றைய இளைய தலைமுறை மாணவ மணிகள் எத்தனை பேர் மு.வ நூல்களைப் படித்திருப்பார்கள் என்றால் பூஜ்யம்தான். இன்றைய இளந்தலைமுறையினருக்கு சுஜாதாவும், சிவசங்கரியும், சாண்டில்யனும் அறிமுகமான அளவு மு.வ.வின் படைப்புகள் அறிமுகமாயிராது. கவர்ச்சிக்குத்தான் இன்று முக்கியத்துவம் ஆனால் காலங்காலமாக காலத்தை வென்று இப்படைப்புகள் நிற்கப்போவதில்லை. எத்தனையோ பேர் சிறுகதை எழுதினாலும் புதுமைபுத்தனுக்கும், ஜெயகாந்தனுக்கும் உரிய இடத்தைக் கைபற்ற முடியவில்லை அல்லவா?

Page 76
இவர்கள் வித்தியாசமானவர்கள் 148
மு.வ என்ற இரண்டு எழுத்துக்குரிய பேராசிரியரின் சிறப்பியல்புகளை நினைத்துப் பார்க்கிறேன்.
எளிய குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்து சிந்தனைச் சிறப்பால் பிறர் நெஞ்சில் நிறைந்து, வாழ்வால் பலருக்கும் பயன்பட்டு, தொண்டால் என்றும் நின்று வாழுபவர் பேரறிஞர் மு.வ. என் வாழ்க்கை
பேராசிரியர் மு.வ அவர்கள் தம் வாழ்க்கையைப் பற்றி அவரே எழுதிய சில வரிகள்.
என் வாழ்க்கை படிப்படியான முன்னேற்றங்கள் உடையது. திடீர் மாற்றங்களோ, சரிவுகளோ இல்லாதது.
வடஆற்காடு மாவட்டத்தில் திருப்பத்தூரில் பிறந்தேன்.
பாட்டனார் உழவர். பெரியதனக்காரர். தந்தை வியாபாரம் செய்தவர். நானே குடும்ப வட்டாரத்தில் முதல் பட்டதாரி.
எளிய குடும்பத்தில் பிறந்தவரும் உழைப்பால் உயரமுடியும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் பேராசிரியர் மு.வ. அவர்கள்.
மு.வ.வின் வாழ்வில் இரண்டு பெரியவர்களுக்கு சிறந்த இடமுண்டு. இதனை மு.வ. அவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அவருள் ஒருவர் அவரை வளர்த்துப் பரிவு காட்டிச் சீராட்டிய அருமைப் பாட்டியார் நரசம்மாள். மற்றொருவர் அவரை இளமையிலே இனம் கண்டு இலக்கிய உலகில் பேரசானாகத் திகழ்வதற்கு வழிகாட்டிய ஒளிவிளக்கு திரு.வி.க. அவர்கள்.
திரு.வி.க. ஒரு வானம்பாடி, வெள்ளாடை சூழ்ந்த மெல்லிய உடலும் புலமை பொலிவு பெற்ற அழகிய முகமும் அருள் பெருகும் கூரிய விழியும் பெற்ற வானம்பாடி சமரச வானம்

149 அந்தனி ஜீவா
கண்டுகளிக்கும் வானம்பாடி தமிழகம் தழைக்க உலகம் உய்யப் பொதுமை மழை பெய்யுமாறு வாழ்த்துப்பாடும் வானம்பாடி என திரு.வி.க. வைப்பற்றி எழுதிய நூலில் மு.வ. குறிப்பிட்டுள்ளார்.
கற்பனைத்திறம்
கற்பனைத்திறம் அமைந்த மு.வ. தொடக்க நாளில்
கவிதைகளும் இயற்றினார். குழந்தைப்பாட்டுகள் என்ற பெயரில் நூலுருவில் வெளிவந்துள்ள செய்தி பலருக்குத் தெரியாது.
தென்னை மரமே கேளாய்
தென்னை மரமே கேளாய்
உன்னை வளர்த்தவர் அப்பா,
என்னை வளர்த்தவர் அம்மா,
உனக்கு வயது ஆறே
எனக்கு வயது ஆறே
நீ வளர்ந்த உயரம்
நான் வளரவில்லை.
நீ கொடுப்பாய் இளநீர்,
நான் கொடுப்பதென்ன?
ஆனாலும் என்னை அன்பாய்
அன்னை வளர்த்தலைப் பாராய்.
இந்தப் பாடல் குழந்தைப் பாட்டுக்கள் என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. கவிதைத்துறையை விட உரைநடையை மு.வ. பெரிதும் விரும்பியுள்ளார். இதனைப்பற்றி மு.வ. தமது மாணவர் மின்னூர் சீனிவாசனிடம் மனதைத் திறந்து
காட்டியுள்ளார்.
என் இளவயதில் உன்னைப்போன்ற இளைஞனாக இருந்த சமயம், நிறையப் பாடல்களாக எழுதிப் பார்த்தேன். கலித்தொகை நூலைப் படித்துவிட்டுத் தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் என்றெல்லாம் அமைத்து இயற்றினேன். சிலர் என் மேல் அன்பு காரணமாக ஊக்கப்படுத்தினார்கள். ஆனால் எனக்கென்னவோ

Page 77
இவர்கள் வித்தியாசமானவர்கள் 50
மலர்முகத்துடனும் பங்கேற்று ஆக்கப் பணிகளுக்கு உதவியும், ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கியும் வந்துள்ள எனது துணைவி திருமதி. புஷ்பம் ராஜன் அவர்களைப் பற்றிக் குறிப்பிடாவிட்டால் எனது பணி பூரணத்துவமடையாது என தனது துணைவியாதைப் பற்றிப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.
அவரது உடலோடு, உயிரோடு, உணர்வோடு, ஒன்றிவிட்ட துணைவியாரின் மறைவு பெரியார் பி.டி.ராஜனை நிலைகுலையச் செய்துவிட்டது.
கண்டி மாநகரில் தலை நிமிர்ந்து நிற்கும் கண்டி அசோகா வித்தியாலயம், கண்டி அசோகா மாணவர் விடுதி ஆகிய நிறுவனங்கள் பெரியார் ராஜனின் பெருமைப்படத்தக்க சேவைகளை எடுத்துச் சொல்லும். அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும்.
27.01.1985
9. சரத் முத்தெட்டுவேகம
மனிதன் என்னே அற்புதமானவன் என்று மாபெரும் இலக்கிய மேதை மாக்ஸிம் கார்க்கி சொன்னார்.
அந்த வார்த்தைகளுக்குரிய அர்த்தத்தைக் கடந்த வாரம் நேரில் கண்டேன்.
அந்த அற்புதமான மனிதரான காலஞ்சென்ற கலவான பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சரத் முத்தெட்டுவேகமனின் இறுதிச் சடங்கின்போது அதனைக் காணக் கூடியதாக இருந்தது.
மக்கள் அந்த அற்புதமான மனிதனுக்குச் செலுத்திய கண்ணிர் அஞ்சலி என்றும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கும்.
அந்த சரத் என்ற அற்புதமான மனிதரைப்பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.

51 அந்தனி ஜீவா
வேதனையாக விடிவு
பத்தொன்பதாம் திகதி காலை விடியும் பொழுதே வேதனையாக விடிந்தது. காலை வானொலி செய்தியில் 'சரத் காலமானார்' என்ற செய்தி என் இதயத்தில் இடியாக இறங்கியது.
அந்தச் செய்தி பொய்யாய் இருக்கக் கூடாதா என என்னுள்ளம் விரும்பியது. தமிழ் மக்களுக்காக பாராளுமன்றத்தில் நம்பிக்கையாக ஒலித்த ஒரு சத்தியக்குரலும் ஓய்ந்தது என நினைக்க வேண்டியதாக இருந்தது.
அரசியல் வானில் சுடர்விட்டுப் பிரகாசித்த இளம் தலைவர் ஒருவரைக் காலன் இவ்வளவு அவசரப்பட்டுக் கவர்ந்திருக்கக் கூடாது.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான அமரர் சரத் அவர்களின் பேச்சை பல மேடைகளில் கேட்டுள்ளேன்.
பாராளுமன்றத்தில் சத்தியத்தின் குரலாக ஒலிக்கும் அவரது அனுபவ முதிர்ச்சிமிக்க உரைகளைப் பத்திரிகையில் படித்துள்ளேன்.
ஆனால்,
அவரோடு இரண்டு தடவை உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. ஒரு தடவை கண்டியிலும், இன்னொரு தடவை கொழும்பு இல்லத்திலும் அவரைச் சந்தித்தேன்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர், பாராளுமன்ற உறுப்பினர், சிறந்த குற்றவியல் சட்டத்தரணி. ஆனால் அவர் ஒரு சாமானியனாகவே விளங்கினார்.
சத்தியத்தில் குரல்
சத்தியத்தின் குரலாக விளங்கிய அமரர் சரத் அவர்களுக்கு எனது இறுதி அஞ்சலியைச் செலுத்த என் உள்ளம் விரும்பியது.

Page 78
இவர்கள் வித்தியாசமானவர்கள் 152
பச்சையப்பன் கல்லூரியில் படித்து வளர்ந்து, பச்சையப்பன் கல்லூரியில் பெரும் பணியாற்றிய பேராசிரியர் மு.வ. படத்தைத் திறந்து வைக்க பேரறிஞர் அண்ணாவை அழைத்தார்கள். அண்ணா ஆட்சியில் இருந்த காலம் அது. அண்ணா உடல்நலம் குன்றி இருந்தார். ஆனால் மு.வ.வின் படத்தை திறந்து வைக்க ஒப்புக்கொண்டார்.
அறிஞர் அண்ணா
பச்சையப்பன் கல்லூரியில் புரட்சிகவிஞர் பாரதிதாசன் படத்தைக் கலைஞர் மு. கருணாநிதியும், பேராசிரியர் மு.வ. படத்தை அறிஞர் அண்ணாவும் திறந்துவைத்தார்கள். அறிஞர் அண்ணா பேசும்பொழுது தமிழ் மொழியைப் பற்றியும் அந்த இரு பெரியார்களைப் பற்றியும் தொடங்கியதாலே உடல்நிலையை மறந்து, நான் பேசவேண்டும் என்று கருதியதை விடக் கொஞ்சம் நீண்ட நேரம் பேசிவிட்டேன் எனக் குறிப்பிட்டார்.
பேராசிரியர் மு.வ. செய்திருக்கின்ற பெருந்தொண்டுகளைப் பற்றிய சிறப்புரையாற்றிய அறிஞர் அண்ணா அவர் செய்திருக்கின்ற பெருந்தொண்டுகளுக்கு நாம் காட்டக்கூடிய கைமாறு, அவருக்கு நாம் ஆற்றக் கூடிய நன்றிக் கடன் திருவுருவப்படங்களைத் திறந்து வைப்பதன்று, அவர் பெயரால் மன்றங்களை அமைப்பது மட்டுமன்று. அவர் எவ்வழியில் தமிழை வளர்த்தாரோ, அவ்வழியில் நின்று நாமும் நம்மாலான அளவிக்குத் தமிழை வளர்ப்போம் என்று உறுதிக்கொள்வதும் அந்த தமிழ்மொழி மூலமாகப் பெற்றத்தக்க கருத்துக்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் அதனைப் புகுத்த வேண்டும் என்பதும் நாம் மேற்கொள்ளவேண்டிய உறுதியாகும்.
டாக்டர் மு.வ.அவர்களைப் பார்த்துவிட்டு அவர்களுடைய ஏடுகளைப் படித்தால், இந்த சாந்த புருஷரா இவ்வளவு புரட்சிக்கரமானகருத்துக்களை எழதியிருக்கிறார். உண்மைதானா? என்று எண்ணிப் பார்ப்பார்கள். அப்படித் தோற்றத்திலேயும் தன்மையேலேயும் அமைதியே உருவாக இருந்துகொண்டு அந்த

153 அந்தனி ஜீவா
அமைதியைக் துணைக் கொண்டு ஆர்வத்தை உடன் வைத்துக்கொண்டு தமிழ் மக்களுக்கு வழிகாட்டியாகப் அரிய கருத்துக்களை அவர் தந்துள்ளார். அந்தப் பெரியாருடைய திருவுருவப்படம் இந்த இடத்தில் திறந்து வைக்கப்படுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டார் அறிஞர்
96 of 600TT.
அறிஞர் அண்ணாவின் கருத்துக்கு இசைய அவருடைய மைந்தர்கள் மூவரும் டாக்டர்கள், தங்கள் தந்தையின் நினைவாக சென்னையிலுள்ள அமைந்தகரையில் பேராசிரியரின் பெயரால் மருத்துவமனை ஒன்றை நிறுவியுள்ளனர்.
தாய்மொழி வாழும் வரை பேராசிரியர் நினைவுகள் தமிழ் நெஞ்கங்களில் வாழும்.
4.1.1984.
29. நாடகமேதை டி.கே.எஸ்.
கடந்த வாரம் பழைய பைல்களை புரட்டிக்கொண்டிருந்தேன். அதில் கடிதங்கள் வைத்திருந்த பைலைப் புரட்டிப் பார்த்தேன். அதிலிருந்த கடிதங்களை மீண்டும் வாசித்துப் பார்க்கையில் மிகவும் சுவையாகவும் அற்புதமாகவும் இருந்தது. அந்தக் கோவையிலிருந்த கடிதங்களில் நாடகமேதை டி.கே.சண்முகம் அவர்களின் கடிதங்கள் மிகவும் சுவையாகவும் , கண்ணியமிக்கவையாகவும் அவரே கைப்பட எழுதிய கடிதங்கள் யாவும் இருந்தன.
மேதையின் கடிதம்
நாடகமேதை டி.கே.சண்முகம் அவர்களால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கடிதங்கள் அந்தக் கடிதங்களில் உள்ள கருத்துக்கள் காலத்தை வென்று நிலைக்கக் கூடியவைகள், நான் நாடகத்துறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆரம்ப காலங்களில், தமிழகத்து நாடகமேதையான

Page 79
இவர்கள் வித்தியாசமானவர்கள் 154
டி.கே.சண்முகம் அவர்களுக்கு ஏதோ ஓர் ஆர்வத்தில் கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து பல பக்கங்களில் தமது அனுபவங்களை எடுத்துக்கூறும் கடிதம் வந்தது. அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
பின்னர் அவர் இறக்கும் வரை எந்தக் கடித நட்பு மடல் விடுதூதாகத் தொடர்ந்தது. அந்தக் கடித நினைவுகளையெல்லாம் இன்று மீட்டுப்பார்க்கையில் ஒரு சுகானுபாவமாக இருக்கிறது. அவர் கடிதத்தில் கூறிய அறிவுரைகள் பல நாடக உலகில் என்னை நல்வழியில் நடத்திச் சென்றுள்ளன. அரிய கருத்துக்கள்
நடிகரெல்லாம் ஆற்றல்மிக்க எழுத்தாளராகி விடுவதில்லை. அப்படியே, ஆற்றல் மிக்க எழுத்தாளரெல்லாம் புகழ் மணக்கும் நடிகராகிவிடுவதில்லை. இந்த இரண்டு ஆற்றல்களும் அவ்வை சண்முகனாரிடம் நிறைவு பெற்று விளங்குகின்றன என்று ஒரு முறை தமிழக சட்டமேலவைத்தலைவர் திரு.ம.பொ.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். நாடகமேதை அவ்வை சண்முகம் அவர்கள் தமது நாடக வாழ்க்கையை நாடக வாழ்க்கை என்ற தலைப்பில் நூலாக எழுதிவெளியிட்டார். ஒவ்வொரு நாடக நடிகருக்கும் அவசியம் படிக்கவேண்டிய நூல் அது. அதில் அரிய பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கை வருகை
நாடகமேதை டி.கே. சண்முகம் அவர்களின் குழுவினர் 1928ம் ஆண்டில் இலங்கைக்கு முதன்முதலில் வந்துள்ளனர். கொழும்பில் ஜிந்துபிட்டி மண்டபம் இப்பொழுது உள்ள முருகன் தியேட்டரில் நாடகங்களை மேடையேற்றியுள்ளனர்.
அப்பொழுது கொழும்பில் நாடகம் நடைபெறும் பெரிய தியேட்டர் ஒன்று தானிருந்தது. அதுதான் ஜிந்துபிட்டி மண்டபம். சுமார் இரண்டாயிரம் பேர் தாராளமாக உட்காரக்கூடிய நாடக அரங்கம். தரை இல்லை. அதற்கு பதிலாக ஏறக்குறைய ஆயிரம்

155 அந்தனி ஜீவா
பேர் வசதியாக உட்காரக்கூடிய முறையில் காலரி அமைத் திருக்கிறது. 5,4,3,21 எனக் கட்டணம் வைத்து ஐந்து வகுப்புகள் பிரித்திருக்கிறார்கள். இந்தக் கட்டணம் நாங்கள் தமிழ் நாட்டில் அந்த நாளில் கேள்விபடாத கட்டணம். நாடகக் கொட்டகை இருந்த இடம் ஒரு பெரிய சுற்று வட்டகைக்குள் காலணிபோல தனி இடமாக இருந்தது. கொட்டகை இருந்த வட்டகைக் குள்ளேயே சுமார் பத்து வீடுகளுக்கு மேலிருந்தன. முதல் வீடு எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வீட்டில் குடியேறினோம். அடிக்கடி நாடகங்களை ஒத்திகை பார்க்கவும், பகல் நேரங்களில் விளையாடவும் கொட்டகை எங்களுக்கு வசதியாக இருந்தது. தம்பி பகவதி, கே.ஆர். ராமசாமி, பிரண்ட் ராமசாமி, சகஸ்ரநாமம் இவர்களை எல்லாம் சாப்பாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில் கொட்டகையில் தான் பார்க்கலாம்.
நாடகமேடைமுழுவதும் பலகை போட்டு, அடியில் ஒரு ஆள் உயரத்துக்கு வசதியாக இடமிருந்ததால் வெயில் படாது ஓடி விளையாடுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டோம். பகல் நேரம் முழுவதும் அங்கு தானிருப்போம் என்று நாடகமேதை டி.கே.எஸ் தமது இலங்கை விஜயத்தைப்பற்றி குறிப்பிடுகிறார்.
கலைவாணரின் கற்பனை
கொழும்பில் ஒருநாள் டி.கே.எஸ். குழுவினரின் மனோகரா நாடகம் நடந்தது. வழக்கம் போல கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வசந்தனாக நடித்தார். அவர் எந்த நாடகத்திலும் கற்பனையாக ஏதாவது வேடிக்கை செய்வார். அவரும் டி.கே.எஸ். ஸின் சின்னண்ணாவும் இதுபற்றித் திட்டமிட்டு முடிவு செய்து கொள்வார்கள்.
மனோகராவில் நந்தவன காட்சி நடைபெற்றது. வசந்தன் கல்லாசனத்தின் கீழே ஒளிந்திருந்தது, மனோகரன் தன் தாயார் பத்மாவதியிடம் சபதம் செய்வதை கேட்கும் காட்சி அது. பத்மாவதி போன பின் விஜயாள் வந்து மனோகரனை விளையாட அழைக்கிறாள். மலர் மாலையால் அவனைக் கட்டி இருக்கிறாள்.

Page 80
இவர்கள் வித்தியாசமானவர்கள் 156
இந்தச்சமயத்தில் ராஜப்பிரியன் வந்து மனோகரனைக் கேலி செய்கிறான். வசந்தன் கல்லாசனத்தின் கீழிருந்து வெளியே வருகிறான். முதுகு வளைந்து போய்விட்தாக புலம்புகிறான். அவனுடைய பைத்திய செயல்களைக் கண்டு எல்லோரும் சிரிக்கிறார்கள். வசந்தனின் தாய் வசந்தசேனை வருகிறாள். அவன் தன் தாயிடம் புகார் செய்கிறான். மனோகரனும், விஜயாளும் தனியே ஒரு புறம் நின்று சிரிக்கிறார்கள். உடனே வசந்தன்,
அண்ணாத்தே நீ அந்தப் பெண்ணை வச்சிக்கிட்டு சிரி, நான் இந்தப் பொண்ணை வச்சிக்கிட்டு சிரிக்கிறேன் என்று தன் தாயை கட்டிக்கொள்கிறான். இதை மேலும் எல்லாரும் சிரிக்கிறார்கள்.
கலைவாணர் பேசிய இந்த வசனம். பம்மல் சம்பந்தநாரின் நாடகத்தில் இல்லை என்.எஸ்.கே.கற்பனையையாகப் பேசியது. இந்த வசனத்துக்குச் சபையில் பெருத்த கைதட்டல் எழுந்தது. காட்சி முடிந்ததும் நாடக காண்ட்ராக்டர் யாழ்ப்பாணம் சண்முகம் பிள்ளை உள்ளே வந்தார். என்.எஸ்.கிருஷ்ணனை கூப்பிட்டார்.
என்னப்பா, மனோகரன் மனைவியை வைத்துக்கொண்டு சிரித்தால், வசந்தன் தன் தாயை வைத்துக்கொண்டு சிரிப்பதாகச் சொல்வதா? என்னதான் பைத்தியகாரனா இருந்தாலும் தாய்க்கு மரியாதை கொடுக்க வேண்டாமா?
சண்முகம் பிள்ளையின் கேள்வி இது. என்.எஸ்.கிருஷ்ணன் அவர் இவ்வாறு கேட்பார் என்று எதிர்பார்க்வில்லை. இருந்தாலும் கேட்டபின் நிலைமையை சமாளிக்க வேண்டுமே.
ஆசிரியர் சம்பந்த முதலியார் அப்படித்தான் எழுதியிருக் கிறார். அதைத்தான் பேசினேன் என்றார் கலைவாணர்.
யாழ்ப்பாணம் சண்முகம் பிள்ளைக்கு கோபம் வந்துவிட்டது. என்னப்பா, கதையளக்கிறாய்? சம்பந்த முதலியாரை எனக்கு தெரியாதா? நான் இப்பொழுது தானே மனோகரன் நாடகம் பார்க்கிறேன். அவருடைய நாடகத்தையே நான் தானே இங்கு நடத்தினேன். எனக்குத் தெரியாதா? என்றார். என.எஸ்.

157 அந்தனி ஜீவா
கிருஷ்ணன் இதன் பிறகு வாதாடவில்லை. நான் தவறாக பேசிவிட்டதாகக் கூறி, அவரிடம் மன்னிப்பு வேண்டினார். கலைவாணர் அவ்வாறு அடங்கிப் போனதும், மன்னிப்பு கேட்டதும் எங்களுக்கெல்லாம் வியப்பாக இருந்தது. அவர் எங்கள் குழுவிலிருந்த காலம்வரை மன்னிப்பு கேட்டது இதுதான் முதல் தடவை. எல்லோரும் கலைவாணரைப் பாராட்டினோம். இவ்வாறு பல அனுபவங்களை கடித வாயிலாக எனக்குத் தெரிவித்தவர் நாடகமேதை டி.கே.எஸ் அவர்கள்.
AMAZaicó.......
மகாகவிபாரதியின் பாடல்களை தேசீய சொத்தாக்க வேண்டும் என்று முன்னின்று செயல்பட்டார் நாடகமேதை டி.கே.சண்முகம் ஆவார்.
டி.கே.எஸ் குழுவினரின் பில்உறனன் என்ற நாடகத்தில் பாரதி யாரின் தூண்டிற் புழுவினைப்போல என்ற பாடலை நாட்டியப் பாடலாக அமைத்திருந்தனர். அப்பாடல் பில்உறணன் படமாக்கப் பட்டபோது, திரைப்படத்திலும் சேர்க்கப்பட்டு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
இது பற்றி, பாரதி பாடல் உரிமை சம்பந்தமாக ஏ.வி.எம்.அவர்களிடமிருந்து பில் உறணன் படத்திலிருந்து அப்பாடலை நீக்கிவிட வேண்டுமென்றும், அப்பாடலுடன் படம் திரையிடப்படுமானால் தான் நஷ்டஈடுகோரி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வக்கீல் நோட்டீஸ் டி.கே.எஸ்சுக்கு வந்துள்ளது.
பாரதி பாடல்கள் தமிழ்நாட்டின் பொதுச்சொத்து என்றும், அவற்றிற்கு தனி மனிதர் உரிமை கொண்டாடுவதை ஒப்புக்கொள்ள முடியாதென்றும் டி.கே.எஸ். பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுபற்றி டி.கே.எஸ். எழுதிய கடிதத்தில் சென்னையில் பாரதி பாடலை நாட்டின் பொதுச்சொத்தாக்குவது சம்பந்தமாக பேராசிரியர் வ.ரா.பரவி சு.நெல்லையப்பர், தெ.போ.மீனாட்சி

Page 81
இவர்கள் வித்தியாசமானவர்கள் 158
சுந்தரனார் ஆகியோரை நானும் என் ஆத்ம சகோதரர் நாராயண துரைகண்ணனும் சந்தித்துப் பேசினோம். எங்கள் முயற்சிகள் வெற்றி பெற அப்பெரியவர்கள் மூவரும் நல்லாசிகள் கூறினார் கள். அன்றிரவு நாராயண துரைக்கண்ணன், வல்லிக்கண்ணன் இருவருடனும் கடற்கரை சென்று பாரதி பாடல் விடுதலை முயற்சி பற்றி இரவு 12 மணி வரை உரையாடினோம். மறுநாள் இரவு 10 மணிக்கு வல்லிக்கண்ணன், நாராயண துரைக்கண்ணன் ஆகியோருடன் பாரதி விடுதலைக்காக திருநெல்வேலி யாத்திரை புறப்பட்டோம்.
பாரதியின் துணைவியார் செல்லம்மா பாரதி அவர்களையும், அவரது மூத்த மகள் திருமதி தங்கம்மா பாரதி அவர்களையும் அவர்கள் இல்லத்திற்கு சென்று சந்தித்தோம். பாரதி பாடல்களைத் தேசத்தின் பொதுச் சொத்தாக்குவதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று திருமதி தங்கம்மா பாரதியும் அதில் கையெழுத்திட்டார். அதன்பின் நெல்லை நகரசபைத் தலைவர் திரு.ப.ரா. அவர்களைக்கண்டு பேசினோம். இரவு தாமிரப்பரணி சிந்து பூந்துறையில் நாங்களும் மற்றும் நெல்லை எழுத்தாள நண்பர்களும் கூடினோம். பாரதியின் கவிதைகளை நான் உரத்த குரலில் பாடி எல்லாரையும் மகிழ்வித்தேன்.
மறுநாள் பிற்பகல் பேராசிரியர் அ.சீ.ரா.அம்பாசமுத்திரம் சென்றார். மற்ற நால்வரும் ஊருக்கு திரும்பினோம். திண்டுக் கல்லில் நண்பர் கே.பி.கணபதியை வழியனுப்பிவிட்டு மற்ற மூவரும் கோவை வந்து சேர்ந்தோம். மறுநாள் இரவு வல்லிக் கண்ணன், நாரண துரைக் கண்ணன் இருவரும் சென்னைக்குப் புறப்பட்டார்கள். புனிதமான பாரதி விடுதலைப்பயணம் வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்தி அவர்களிருவரையும் வழியனுப்பி வைத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார் டி.கே.எஸ். அவர்கள் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் நாட்டுக்குழைத்த மேதையாக விளங் கியுள்ளார். அவரது அனுபவங்களை ஒவ்வொரு கலைஞனும் கற்றுணர வேண்டும். 臀
05.05.1985.

159 அந்தனி ஜீவா 30. கலைவாதி கலீல்
பாரதி நூற்றாண்டு விழா தொடங்குவதற்குச் சில தினங்கள் இருக்கின்றன.
நான் எழுதிய ஈழத்தின் தமிழ் நாடகம் என்ற நூலின் வெளி யீட்டு விழாவை ஓட்டல் தப்ரபேனில் ஏற்பாடு செய்திருந்தேன். கவியரங்கு ஏற்பாடு
வெறும் புத்தக அறிமுக விழாவாக நடத்தாமல் பாரதி நூற்றாண்டு கவியரங்கத்தை அதில் ஏற்பாடு செய்திருந்தேன்.
விழாவுக்கு தலைவர் அமைச்சர் திரு.செ.இராசதுரை அவர்கள். கவியரங்கத்திற்குத் தலைமை தாங்க தான் தோன்றிக் கவிராயரான சில்லையூர் செல்வராசனை ஏற்பாடு செய்திருந் தேன். ஆனால், அன்று எதிர்பாராத விதமாக சில்லையூர் செல்வராசன் வரவில்லை. ஏனைய கவிஞர்கள் எல்லாரும்
வந்துவிட்டார்கள்.
அங்கு வருகை தந்திருந்த கவிஞர்கள் அனைவரும் எனது நெஞ்சிக்கு நெருக்கமானவர்கள்.
யாரைத் தலைவராகப் போடுவது எல்லாவற்றையும் சமாளிக்கக்கூடய ஒருவரைப்போடவேண்டும்.
கவிஞரும் எழுத்தாளருமான கலாவதி கலீலை போடுவது எனத் தீர்மானித்தோம்.
கலை வாதி கலீல் எனது அன்பான வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு விட்டார்.
அன்றைய கவியரங்கு விழாவிற்கு மகுடம் வைத்தது போல் அமைந்தது.
கவியரங்கில் மலைத் தம்பி கவிதை பாடும் பொழுது பட்டினியால் செத்த பாரதிக்கு தப்ரபேனில் விழா என்று நகைச்சுவை கலந்து நையாண்டியாகக் கேட்டார்.

Page 82
இவர்கள் வித்தியாசமானவர்கள் 160
affa?ftaf
சபையிலே சிரிப்பொலி. மலைத்தம்பி பாடி முடித்ததும் தலைமை வகித்த கலீல் எழந்தார்.
பாரதிக்கு இல்லாத தப்ரபேன் வேறு யாருக்கு.? பாரதி இல்லாத தப்ரபேனைத் தகர்த்தெறிவோம். என்றார். மண்டபமே கரவொலியாக சலசலப்பும் கலகலப்பும் ஏற்பட்டன.
மற்றொரு கவிஞர் கவிபாடும்போது பாரதியின் கவிதை வாத்தியார் (எம்.ஜி.ஆர்) GJ T ul Gio u ft i LT 85 ës கேவலப்படவேண்டும் என்றார்.
சபையில் சிரிப்பொலி.பின்னர் தலைக்கவி கலீல் பாடும்போது
வாத்தியததின் வாயுக்குள் பாரதி பாடல்கள் நுழைந்ததால் தனது பாமரனின் செவிக்குள் நுழைந்தது என்றார்.
கரகோசத்துக்கு கேட்கவா வேண்டும்.
தலைமைக்கவிஞரின் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு எல்லாமே சுவையாகவும் கருத்தாழத்துடனும், அனைவரையும் கவரும் விதத்திலும் இருந்தன.
கவிஞர் கலைவாதி கலீல் ஒரு கட்டத்தில் அமைச்சருக்கு இரண்டு மனைவிகள்.எனக்கூறி நிறுத்தினார்.
அமைச்சர் தர்மசங்கத்துடன் கவிஞரைப் பார்த்தார்.
அவையே வியப்புடன் அமைச்சரையும் கவிஞரையும் மாறிப் மாறிப் பார்க்கிறது.
ஆன்ாலும் அமைச்சருக்கு இரண்டு மனைவிகள்.ஒன்று தமிழ் என்றாரே,
அமைச்சர் முதல் அனைவ்ரும் கரவொலி எழுப்பி மகிழ்ந்தனர்.


Page 83
<号4B5
இலங்கை இலக்
தொடர்புடையவர். மலை பின்னரே இவருடைய செய பெற்றன. கவனிப்பும் க விழிப்புற்று வீரியத்துடன் 80களின் ஆரம்பத்திலும் இ கெடுபிடிகள் காரணமாய் மலையக இலக்கியத்தை பேரவை மூலம் உயிர்ப்பி மலையக வெளியீட்டகம்' சிந்தனைகள்' என்னும் 1996க்குட்பட்ட பத்தாண் வெளியிட்டுள்ள சாதனைன முடியாது. இலங்கைத் தமி என்னும் சின்னஞ்சிறு ஆ வெளியிட்டுள்ளார். இந்த நாடகம்', 'அன்னை இந்திர விபுலானந்தர் ஆகிய நான் இவர் நாடகத் துறையில் பரிசுகள் பெற்ற நாடகாசிரி பேரவையின் செயலாளர்
வாகவும், மலையக இலக் முடியாத சுவடுகளைப் பதி:

னி ஜீவா
கியத்துடன் நீண்ட காலத் யக இலக்கியப் பிரவேசத்தின் ல்கள் ஆளுமை கொண்டன. வீறு ரிசனையும் பெற்றன. 80களில் கிளம்பி 70களின் பிற்கூற்றிலும் னப் பிரச்சினை மற்றும் அரசியல் சோர்ந்து போய்க் கொண்டிருந்த மலையகக் கலை இலக்கியப் ந்துக் காட்டியவர் அந்தனி ஜீவா, மூலம் 1986ம் ஆண்டு 'சி.வி. சில சாரல் நாடனின் நூலிலிருந்து டுகளில் பதினைந்து நூல்களை 2ய யாராலும் குறைத்து மதிப்பிட பிழ் இலக்கியத்தில் "மலையகம்' ங்கில நூலையும் அண்மையில் இரண்டுடன், 'ஈழத்தில் தமிழ் ா', 'காந்தி நடேசய்யர்', 'சுவாமி குடன் ஆறு நூல்களின் ஆசிரியர் அரசு விருதுகள் உள்ளிட்ட பல பர், மலையகக் கலை இலக்கியப் ா. ஈழத்திலக்கியத்தில் பொது கியத்தில் குறிப்பாகவும். மறக்க த்தவர்.
- - .
。
தெளிவத்தை ஜோசப்