கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிழல்கள்

Page 1
ہے کہلاNN
3
ኵጂኒ
 


Page 2


Page 3

நிழல்கள்
சந்திரா தியாகராஜா
யதார்த்தா பருத்தித்துறை

Page 4
நிழல்கள் (சிறுகதைகளும், குறுநாவலும்)
ஆசிரியர் :- செல்வி சந்திரா தியாகராஜா
பதிப்புரிமை - ஆசிரியருக்கு முதற்பதிப்பு:- ஒகஸ்ட் 1988 பதிப்பாளர்:- யதார்த்தா
உதயன் புத்தக நிலையம் பருத்தித்துறை அச்சுப்பதிவு: நியூ எழு பப்ளிக்கேஷன் லிமிட்டெ
267, பிரதான வீதி,
யாழ்ப்பாணம்,
ஒஃவிபெற் அமைப்பு:- திவம் முகப்பு ஓவியம்:- கோ. கைலாசநாதன் முகப்பு பதிப்பு:- விஜயா அச்சகம், யாழ். விஃலு ரூபா: . 25一00

நிழல்கள்
இவை பொய்யானவை Miss6 நிஜங்களின் வித்தியாசமான வடிவங்கள்: கதிரவனின் se 68. பார்வையிலே விதம் விதமாய் அமையும் இவை இங்கு, என் சமூகப் பார்வையிலே
பதியும் நிழல்களாய்.
இவை பொய்யானவை அல்ல; நிஜங்களின் வித்தியாசமான வடிவங்கள்!
- ஆசிர்யர்

Page 5
- Yuk.
இத் தொகுப்பில் வெளியாகியுள்ள சிறுகதைகள் குறுநாவலை வெளியிட்டு, கெளரவித்த பத்திரிகைகள், சஞ்சிகைகளான ஈழமுரசு, ஈழநாடு, சிரித்திரன் ஆகியவற்றிற்கும் குறுநாவலிற்குப் பரிசளித்துக் கெளரவித்த யாழ். இலக்கிய வட்டத்தி கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், சந்திரா தியாகராஜா

da) நேரங்களில் சில நியதிகள்
“தேவன். தேவன்."
*கேற்’ வாயிலில் அவசரமான அழைப்புக்குரல் கேட்ட போது எட்டிப் பார்த்தேன். இரண்டு இளைஞர்கள் சைக் கிள்களுடன் நின்றிருந்தார்கள். நான் தயங்கி ‘கேற்"ஐ அண்மித்தபோது, . . .
“முகமத்.இல்லை. தேவன் நிற்கிறரோ? ஒருவன் தடு மாறிக் கேட்டான்.
"அவருக்குச் சரியான காய்ச்சல் தம்பி டொக்டரிட் டைப் போய் மருந்து எடுத்துக்கொண்டுவந்து சாப்பிட்டிட்டு இப்பதான் நித்திரையாகினவன்.' நான் அவனை எழுப்பு மனமில்லாமல் கூறியபோது அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து யோசித்தார்கள். அவர்கள் வியர்வையில் தெப்

Page 6
மாக நனைந்திருந்தார்கள். கால்கள் புழுதியில் தோய்ந்து வெளிறிப்போய்க்கிடந்தன. ஷேட் அதீத வேலையால் மிக வும் கசங்கிப்போயிருந்தது இருவரும் 'சாரம்"தான் அணிந் திருந்தனர். அவை சற்று முன்னர்தான் அழுக்காக்கப்பட் டவை போலத் தெரிந்தன. w
*அக்கா, கேக்கிறமெண்டு கோவியாதையுங்கோ, ஒரு அவசரமான கதை. ஒருக்கால் எழுப்பி விடுங்கோ’ அவன் தன் தலையை ஒரு கையால் கோதிவிட்டவாறே சுற்றுமுற் றும் பார்த்துத் தயங்கினன். மற்றவன் அடிக்கடி வீதியின் இரு பக்க எல்லைகளையும் நோட்டம்விட்டவண்ணம் நின்றி ருந்தான். நான் யோசித்தேன்.
"அக்கா, கெதியா. மற்றவன் பதற்றத்தோடு அவசரப் படுத்தினன்.
நான் உள்ளே நுழைந்து படுக்கையில் மல்லாக்காகக் கிடந்த தம்பியின் மார்பில் கையை வைத்துப் பார்த்தேன்" அனல் வாடை வீசியது! w
'தம்பி. இங்கை ஒருக்கால் கண்ணைத் திற' நான் அவனை மெல்லத் தட்டியபோது, அவன் திரும்பி ஒருக்களித் துப் படுத்துக்கொண்டான்.
‘என்ன மாதிரி இருந்தவன்..என்ன மாதிரிக் கொட்டுப்பட்டுப் போனன் ! ஆனவாயிலை ~சாப்பிட்டிருக்க மாட்டான். பாவம் சொகுசாய் வாழ்ந்தவன். (Fitill SGAD போது கூட கதிரைக்குத் தலையணை வைப்பான். அப்பிடிப் பட்டவன், எப்பிடி இரண்டு மாசமாய். ..இரண்டு உடுப் புகளோடை.? அதுதான் அவளுலை தாங்க முடியேல்லை ஆக்கும் ! சின்னப் பிள்ளை தானே-மீசைகூட அரும்பயில்லை! பதினஞ்சு வயசு தானே"
'தம்பி, உன்னட்டை ஆரோ ரெண்டு பெடியள் வந் திருக்கிருங்கள்; அவசரமாய் ஒரு கதையாம்.
2

நெற்றியைச் சுளித்தவன், மெல்லக் கண்களைத் திறந் தான். கண்கள் கோவைப் பழங்களாய் சிவந்திருந்தன.!
*ரெண்டு பெடியன்கள். ? ' வார்த்தைகளை முடிக் காமல், அவன் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்தான்.”
* 'கேற்றடியில உன்னத் தான் காத்துக்கொண்டு நிக்கிருங்கள்.... " நான் கூறிமுடிக்கமுன், வழுகிய 'சா ரத்தை இழுத்துக் கட்டிக்கொண்டு ‘கேற்’ வாயிலை நோக்கி அவசர்மாக ஒடிஞன். வ்ந்திருந்த இளைஞர்கள் அவனிடத் தில் மிக்வும் இரகசியமாக எவற்றையோ முணுமுணுப்பது
எனக்குக் கேட்டது.
ஐந்து நிமிடங்களில் தம்பி உள்ளே வந்து "ஷேட்'ஐ அணிந்து கொண்டு வெளியில் புறப்பட ஆயத்தமானன். போகிறவனை பின்னல் அழைக்கக்கூடாது என்பதற்காக, நான் அவசரமாக அவனருகில் ஒடினேன்.
“தேவா, இந்தக் காய்ச்சலோட.! ??? நான் அவ னைத் தடுக்கும் நோக்குடன் கேள்விக்குறியோடு பார்த்தேன்.
"அக்கா; சும்மாயிருங்கோ, அம்மா குசினிக்குள்ளை தா ~னே நிக்கிரு?. அவவுக்குச் சத்தம் காட்டாதேங்கோ
நான் உதில போறதும் வாறதுமாய் வந்திடுவன்' அவன் ‘சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு திரும்பினன்.
*உனக்கு இப்பவும் சரியாய்க் காய்ச்சல் காயுதடா என்ணெண்டாலும் தண்ணிக்குள்ளை மட்டும் இறங்கிப் போ டாதை; பிறகு சன்னி ஆக்கிப்போடும் ! " நான் மீண்டும் ஒரு தடவை அவன் கழுத்தில் கையை வைத்துப் பார்த் தேன்.
"தேவன் கெதியா." மீண்டும் அந்த இளைஞர்க வில் ஒருவன் குரல் கொடுத்தபோது, . , 8
3

Page 7
*அக்கா, பிளிஸ். கோவிக்காதேங்கோ' அவன் கன் னத்தைச் செல்லமாக அழுத்திவிட்டு ஓடி மறைந்தான். அவன் கைகள் பட்ட இடம் இன்னமும் சுடுவது போலவே இருந்தது.
"என்ன மாதிரி சொக்குப்ப்ொடி போட்டிட்டு ஒடிருன்!? எனக்கு ஆச்சரியமாகவும் அதேவேளை வேதனையாகவும் இருந்தது.
இரண்டு மாதங்களிற்கு முன்னர், அவன் திடிரென்று எங்கோ தலைமறைவாகி விட்டபோது,வீட்டிலுள்ள அத்தனை பேரும் எவ்வளவு துடித்துப் போனுேம் ? பின்னர் ஒரு நாள், கடைசித் தங்கை கடைக்குப் போகும் வழியில், தோள்ப்பையும் ஆளுமாக அவனைக் கண்டதாகச் சொன்ன போது நிறைய ஆத்திரப்பட்டோம். அப்போ தான் அவனது பாடசாலை நண்பர்கள் * சொன்னுர்கள்- முன்பு, அவன் பாடசாலை நேரங்களில், பாடசாலை மதிலால் பாய்ந்து வெளி யேறி எங்கோ போய் வருவானம். ஆனல், முன்பு நாங்கள் கேட்டபொழுது முற்று முழுதாக மறுத்து விட்டான்.
பின்னர், பாடசாலையுடையுடன் கடற்கரை வீதியில் நின்றதைக் கண்ட சிலர், அம்மாவிடம் மெலிதாக விஞவிய போது நாமனைவரும் அதிர்ந்து தான் போனுேம். எனக்கு விளங்கிவிட்டது அவன் இனிமேல் மனம் வைத்துப் படிக்க மாட்டான் என்று. அம்மா அவனை அடித்த போது அவன் அழவில்லை; மாருகச் சிரித்தான். கொஞ்சக் காலத்திற்குள் அவன் நிறையவித்தியாசமாகி விட்டான். குழந்தைப்பிள்ளை
போல் அழுவதையே மறந்து விட்டான்.
அவன் தலைமறைவாகி இரண்டு மாதங்களின் பின்னர் வீட்டுக்கு வந்த போது உடலாலும் சரி, உள்ளத்தாலுக்கரி உறுதியடைந்த தேவனுகவே காணப்பட்டான். அவன் எண் இணம், செயல் யாவும் ஒரே திசையில், ஒரே நோக்கிலேயே இருந்ததை என்ஞல் புரிந்து கொள்ள முடிந்தது. இரண்டு 4.

நாட்கள் இரவுப் படுக்கைக்கு வரவில்லை. மூன்ரும் நாள் காய்ச்சலோடு வந்தான். ஆனுல், முன்பு போல் அம்மாவின் மடியில் விழுந்து முனகுவதில்லை. எங்களிலிருந்து நிறையத் தூரம் விலகிவிட்ட மாதிரி கொஞ்சமும் ஒட்டிக் கொள்ளா மல் பாயை எடுத்துப்போட்டு, தன் பாட்டில் படுத்து விட் டர்ன் ! அந்தச் செயலும் நகர்வும் அம்மாவை மிகவும் வேதனைப்படுத்தியது.
“இவனுக்கு. வர வர பாசம் எண்டதே இல்லா மல் போச்சுது .' என்று அம்மா வேதனைப்பட்டபோது நான் தான் அம்மாவை ஒருவர்று தேற்றினேன். இருந்தா லும் என்னைத் தேற்றிக் கொள்ள என்னுல் முடியவில்லை !
உடைகளைத் தோய்த்துத் தரும்படி கூடக் கேட்காமல் அழுக்கோடு அவன் அணிய ஆயத்தமான போது, நான் தான் பேசிவிட்டு, வாங்கித் தோய்த்துப் போட்டேன்.நேர்த்துக்கு நேரம் அலங்காரம் பண்ணி, ‘சைக்கிளில் சுற்றித்திரிந்து கொண்டு இருந்தவன் இப்படி மாறிப்போனதென்னவோ கனவு மாதிரித் தான் இருக்கிறது !
நேற்று முன்தினம் “கொல்லுக் கொல்" லென்று இரு மியபோதும், அவன் எந்தவித ஆதரவையும் எம்மிடமிருந்து எதிர்பார்க்கவில்லைப் போலும். மிகவும் சாதாரணமாகத், தான்ே தன் மார்பைக் கைகளால் நீவிவிட்டுக் கொண்டது இன்னமும் என் கண்களில் நிற்கிறது. இரவு, ‘ கால்கள். ரெண்டும் வலிக்கிறது' என்று அவன் வாய் விட்டுக் கூறிய போது, அம்மா அவனது கால்களை உருவி விட்டவாறே கண்ணிர் சிந்தின. நீண்டமாதங்களின் பின்னர், அன்று தான் அவனும் கண்கள் கலங்கினன்.
இன்று காலையில் கூட, காய்ச்சலோடு எங்கோ போய் விட்டு வந்து, அவன் இருமித்துப்பிய பொழுது இரத்தமும் வெளியில் வந்தது. அதைக் கண்டதில் எனது பாதிப்பை
5

Page 8
உணர்ந்த நான், அது பற்றி அம்மாவிடம் எதுவும் சொல் லாமல் அவன் கைகளைப் பற்றி அழுதபொழுது, “உங்களுக்குப் பைத்தியம் ! இந்தச் சின்ன விசயத்துக் கெல்லாம் அழுநீங்களே ! எத்தனையோ பெரிய பிரச்சினை களையெல்லாம் எதிர் நோக்க வேண்டியிருக்கிற நாங்கள், இந் தச் சின்னப் பிரச்சினைக்காகக் குழம்பிப் போயிடக்கூடாது"
அவன் தத்துவம் பேசுகிற மாதிரிப் பேசிய போது நான் எதுவுமே பேசமுடியாமல் அமைதியாகிப் போனேன். அவன் மனம் ஏதோ ஒரு வழியில் மிகவும் செப்பனிடப் பட்டு விட்டது என்பது மட்டும் எனக்கு நன்முகப் புரிந் தது. டொக்டரிடம் போய் விட்டு வந்தவன், நெஞ்சில் சளி கூடிவிட்டதால் ஏற்பட்ட இரத்த வெளிப்பாடு பற்றி என்னிடம் விளக்கினன்.
மதியம், நான் சுடவைத்துக் கொடுத்த வெந்நீரை அசட்டை செய்து விட்டு, நல்ல குளிர் நீரில் குளித்துவிட்டு, எங்கோ வெளியில் போய் விட்டு வந்தான். எங்கள் புலம் பல்களின் விளைவாக, ஒரு நேரமாவது வீட்டில் வந்து அவன் சாப்பிடுவதே இப்போதைக்கு ஆறுதல் தான். இப்பவும் அநேகமாய் வந்திடுவான். அதுவரைக்கும் அம்மாவைச் சமா ளிப்பதுதான் கடினம் ! 'காய்ச்சலோடு அலைகிருனே...!” என்று புலம்புவா, அவனது மனப்போக்கும் சிந்தனையும் கஸ்டங்களும் எனக்குப் புரிகிறது. இருந்தாலும் அம்மாவின் மனம் பெற்றமணம் இல்லையா?
அவவின் புலம்பலைத் தடுப்பது தான் பிரச்சனையாக இருக்கும்.
நான் திரும்பிய போது "கேற்’ வாயிலில் மணியோசை கேட்டது. அவசரமாக விரைந்தேன்.
“அக்கா, தேவன் இதை உங்களிட்டைக் குடுக்கச் சொல் வித் தந்துவிட்டவர்' இளைஞன் ஒருவன் ஒரு மடித்த காகி
6

தத் துண்டைத் தந்துவிட்டு விரைந்து மறைந்தான். நான் ஆவல் மேலிட, அதனை அவசரமாகப் பிரித்தேன்.
‘அன்புள்ள அம்மா, குடும்பத்தார் அனைவருக்கும், நான் உங்களை விட்டு, வெகுதூரத்திற்குப் போக வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. நான் போகிறேன். என் காய்ச்சல் குணமாகி விடும். என் நண்பர்கள் எனக்குப் பெற்றவர்கள்’ மாதிரியுந் தான் ! எனவே பயப்படாதீர்கள். விரைவில், நாம் நமது சுதந்திர மண்ணில் சந்திப்போம். விடைப்ெறு கிறேன்,
அன்புடன்
தேவன்.
நான் அதிர்ந்து, சிலையாகி. பின்னர், மெல்.ல மெல்லத் தெளிவாகி. கண்களைத் துடைத்து விட்டுக்
கடிதத்தை மடித்தபோது, அம்மா சமையலறைக்குள் நின் றவாறே தேவனை அழைப்பது எனக்குக் கேட்கிறது.
ஈழமுரசு", அக்டோபர் 1986
7

Page 9
சிவப்புப் பொறிகள்
அன்றைய விடிகாலைப் பொழுது அவன் உள்ளத் தில் ஒருவித எதிர்பார்ப்பை விதைத்திருந்தது. காலைக் குளிர் நீரில் விறைத்துப்போன தன் கைகளைச் சூடுபறக்கத் தேய்த் துவிட்டான்.
'துரை. , தேத்தண்ணியைக் குடிமேனை" பார் வதியின் இதமான வேண்டுதல் மனதிற்குச் சுகமாக இருந்தது. ஆவிபறக்கக் கொதிக்கும் தேநீரை, மெதுவாக வாயால் ஊதிவிட்டு, சிறிதாக உறிஞ்சிக் கொண்டான்.
வானெலியில் ‘மாநிலச் செய்திகள்" ஆரம்பமாகியிருந் தது. ஒரு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு வசதி யாக அமர்ந்து கொண்டான்.
8

“யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றும் தொடர்ந்து மூன்ருவது நாளாக பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டது. அரச அலுவலகங்கள், பாடசாலைகள், கடைகள், தனியார் நிறுவனங்கள் யாவும் மூடப்பட்ட நிலையிலேயே. 9
“தம்பி.' துரை திடுக்குற்றுத் திரும்பிஞன். வாச லில் வடிவம் மாமி நின்றிருந்தாள்.அவனுக்குப் பகீரென்றது.
'தம்பி, இண்டையோட நாலாவது நாளாச்சு நா னுன்னை நாணயமானவன் எண்டு நம்பித் தான், வீட்டுச் செலவுக்கு வைத்திருந்த நானுாறையும் அப்பிடியே தூக்கித் தந்தனன். சாப்பாட்டுக்குத் தவிக்கிற தவிப்பைவிட என் ரை புருஷன் பிள்ளைகளுக்கு நடுவில நிண்டு பதில் சொல் லேலாமல் நான் தவிக்கிற தவிப்பைத் தான் தாங்க முடி யேல்லை" வடிவம்மாமி வாசற்கதவோடு அமர்ந்துவிட்டாள்.
சுடுதேநீர் சுவையிழந்து கசந்தது! அவன் நெற்றியை தேய்த்து யோசித்து விட்டு எழுந்து சமையலறை நோக்கி நடந்தான். தனது காதணிகளைக் கழற்றித் துடைத்துக் கொண்டு நின்ற பார்வதி இவனைக் கண்டதும் அவற்றைப் பொறுப்போடு நீட்டினள். པ་
"அம்மா! என்ன இது
"வடிவம் மச்சாள் எங் வாலுக்கிை வந்திருந்து இனிமேல் முணுமுணுக்க வேண் 716 ஆறகுகள் இங் கை கரைசேராமல் இருக்குதுகள் எண்டஐதீ இலண் டைக்கு விளம்பரப்படுத்தவும் வேண்டாம்?
அம்மாவிற்கே அறையலாம் போல அவனின் LD607th குறுகுறுத்தது!
"நான் பாடுபடுகிறதெல்லாம் இதுக்குத் தான? அவன் பொறுமையைக் கஷ்டப்பட்டுப் பற்றிக் கொண்டான்.

Page 10
“இண்டைக்கு .வெள்ளிக்கிழமை 1 ; இந்த அநி யாயம் நடக்கவேண்டாம். இண்டைக்குக் கடை திறக்க லாம் தானே? மூண்டு நாளாய் திறபடாத கடையில வியா பாரம் தாராளமாய் நடக்கும்; பின்னேரத்துக் கிடையில எப்பிடியும் சேர்த்துக் குடுத்திடுவன்’
துரை வாசலிற்கு வந்த போது வடிவம் மாமி போய்க் கொண்டிருந்தாள்.
“தம்பி. பின்னேரம் எப்பிடியும் என்ரை கையில வைச்சிடு' திரும்பிக் கூறியவள் “கேற்” வாயிலைத் தாண்டி விட்டாள்.
அவனுக்கு மனம் கனத்தது!
“இத்துடன் மாநிலச் செய்திகள் முடிவடைந்தன. 9 கடைசித் தங்கை மீனு, வானெலியின் அலைவரிசையை அவ
சரமாக மாற்றிக் கொண்டிருந்தாள்.
"... ... பொங்கும் பூம்புனல். '' இலங்கை வானெலி நிகழ்ச்சி இசைக்குறியைத் தொடர்ந்து ‘வாழும் வரை போ ராடு...வழியுண்டு என்றே பாடு." என்ற தென்னிந்
தியத் திரைப்படப் பாடல் இசைக்க ஆரம்பித்தது.
அவன் திறப்புக்கோர்வையை இடுப்பு வேஷ்டியில்செருகி விட்டு, ‘ஷேட் கைகளை மடித்து, கிழக்கே திரும்பிக் கண் களை மூடி, இறைதியானம் செய்து விட்டு நம்பிக்கையோடு வீதியில் இறங்கினன்.
"மேன.ராசா."
குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். சின்னத்தைக் கிழவி நடுங்கிய கரங்களில் பசுஞ்சாணத்தோடு நின்றிருந்
தாள்.
*கடைக்குப் போருய் போலை.
10

“ஒமாத்தை. சொல்லணை' அவன் தயங்கி நின்றன். " மதவடியில கூட்டமாய் வந்துகொண்டிருக்கிருங்க ளாம் ராசா” சின்னத்தைக்கிழவியின் கலக்கம் அவள் கண் களில் தெரிந்தது.
“அட . உது நெடுகத்தானே? அவங்கள் போடுவாங் கள். , நீ யோசியாமல் போணை' துரை மேலும் தாம. திக்காமல், திரும்பி சாதாரணமாக நடக்கத் தொடங்கி ஞன். சின்னத்தைக் கிழவி இன்னமும் தவிப்போடு திகைத்து நிற்பது அவனுக்குச் சிரிப்பையே கொடுத்தது.
ரவுனுக்குள் சனநடமாட்டம் குறைவாகவே இருந்தது பட்டியிலிருந்து திறந்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் துடிப்பும் படபடப்பும் அவர்களில் நன்கு தெரிந்தது.
துரை, தனது கடைக் கதவுகளைத் திறந்து நிலத்தைக் கூட்டி, காசு மேசையிலிருக்கும் சுவாமிப் படத்திற்குச் சாம் பிராணி போட்டுவிட்டு நிமிர்ந்த போது ஏனைய கடைக ளும் திறக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.
*தம்பி.பிறிஸ்டல் ரெண்டு வேணும்" சில்லறை லாச்சியில் விழ, பிறிஸ்டல் சிகரெட்டுகள் இரண்டு இடம் மாறின.
*புண்ணியம் கிடைக்குமண்ணு. ' வழக்கமான அழு க்குக் கிழவர்களுக்குப் பதிலாக, ஒரு சிறுமி தலையைச் சொ றிந்து கொண்டு அலுமின்யக் கிண்ணமொன்றுடன் எதி ரில் நின்றிருந்தாள். இவனுக்கு எரிச்சலாக வந்தது.
"புண்ணியம் கிடைக்குமண்ணு. நாங்கள் வவுனியா விலையிருந்து .
*அகதிகளாய் வந்திருக்கிறியளாக்கும். எனக்கு
வேலை, உங்கட பட்டாளத்துக்குக் காசு போடுறதாக்கும்!"
1.

Page 11
துரை தன் எரிச்சலை வார்த்தைகளில் காட்டி விட்டு, முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டான்.
"அண்ணு. , மூண்டு நாளாய் சாப்பாடில்லை; ஒரு வாய் தேத்தண்ணிக்கு மட்டும். "! சிறுமி கலங்கிய கண் களோடு கெஞ்சினுள். அவனுக்கு உள்ளம் தடுமாறியது! லாச்சியை இழுத்தான். ஐந்து ரூபாத் தாளொன்றும் ஒரு ரூபாக் குற்றிகள் இரண்டும் பத்துச் சதங்கள் நான்கும் இருந்தன. ஒரு ரூபாக் குற்றியொன்றை எடுத்து, மேசை யில் வைத்து விட்டு நகர்ந்தான்.
மனதிற்குள் இனம்புரியாத பாரம் வயிறு காலை உண வை எண்ணி உறுத்திக்கொண்டிருந்தது. மண் ‘கூசா வில் கிடந்த பழைய நீரை வாயில் ஊற்றிக் கொண்டு, ஒருவித வைராக்கியத்தில் அவன் தீவிரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.
நண்பகல் பன்னிரண்டு மணியான போது முந்நூற்றி அறுபது ரூபா சேர்ந்திருந்தது. அவன் சற்றுத் தெம்போடு காணப்பட்டான்.
"பின்னேரம் நாலு மணிக்கிடையில நானூறுக்கு மேல் சேர்த்துவிடும்"
மதியவேளைக்குப் பின் வியாபாரம் மீண்டும்குடுபிடிக்கத் தொடங்கியிருந்த போது யாழ்ப்பாண மினிபஸ் ஒன்று மூச்சுப் பிடித்தபடி வந்து, கிறீச்சிட்டு நின்றது. பாய்ந்தி றங்கும் ஜனங்களிடத்தில் ஒருவித பரபரப்பும் பதற்றமும் தெரிந்தன! அவர்கள் நடை வேகம் அதிகமாகி..அதிக மாகி 'ரவுன்" திடீரென்று கிலிப்பிடித்துத் தீவிரமாகக் கலை யத் தொடங்கியது!
"வாருங்களாம் . வாருங்களாம். 9.
12

கடைகள் மிகவேகமாக மூடப்பட்டுக்கொண்டிருந்தன துரை அவசரமாக மேசை “லாச்சியை இழுத்து, காசுத் தாள்களை அள்ளி, பெனியனுக்குள் திணித்து, சில்லறைகளை வழித்து பாக்கினுள் கொட்டிய போது, தூரத்தில் வித் தியாசமான வாகன இரைச்சல் கேட்கத் தொடங்கியது. கதவை இழுத்துப் பூட்டைக் கொழுவி விட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, குச்சு ஒழுங்கைகளினூடே திரும்பி ஓட்டமும் நடையுமாக வீட்டை வந்து அடையும் போது பார்வதியும் பிள்ளைகளும் ஏக்கத்துடன் காத்து நிற்பது தெரிந்தது!
o6T sisir Gomir primtarent...... ! வந்திட்டியே?"
‘அண்ணு, மதவடியில் நாலுபேர் விழுந்து கிடக்கின மாம்.; நாங்கள் உன்னை நினைச்சுத்தான் நல்லாப் பயந்து போனம்'
பல குரல்கள் வாசலில் ஒலிக்கத் தொடங்கிய போது அவன் பெருமூச்சு விட்டவாற்ே உள்ளே நுழைந்து கொண்
nr Gör.
பெனியனிற்குள்ளிருந்து எடுத்த பணத்தை எண்ணி, நானுாறைப் புறம்பாக வைத்தபோது ஆறுரூபா எஞ்சியது! அதனைப் பார்வதியின் கையில் வைத்து விட்டு, வடிவம் மாமியின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினன் தெரு முனையில் வடிவம் மாமி, தனது மாட்டைத் தேடிக் கயிற் ருேடு வருவது தெரிந்தது. . . .
‘மாமி. * அவன் காசை நீட்டினன். ‘துரை! நல்லகாரியம். என்ரை நாண்யத்தை யும் காப்பாத்திப் போட்டாய்...' மகிழ்ச்சிப் பூரிப்பினல்
வந்த வார்த்தைகளை பூரணமாக வெளியிட முடியாமல், திரும்பி நடக்கத் தொடங்கினுள் வடிவம் மாமி.
13

Page 12
துரை ஒருவித ஆழ்ந்த நிம்மதியோடு வீட்டை நோக் கித் திரும்பினன். இப்போ, அவன் நடையில் ஒரு தலை நிமிர்வும் திருப்தியும் சந்தோசமும் இருந்தது இவனைக் கடந்து சென்று கொண்டிருந்தவர்களின் பரபரப்பை இர சித்துக் கொண்டு வந்தவன் வீட்டை அண்மித்த போது O s a 8 o 3 X s பார்வதியும் மற்றவர்களும் விறைத்துப் போய் நின் றிருப்பது போல் தெரிந்தது!
**என்னம்மா...... என்ன விசயம்? ; ஏன் எல்லாரும் ஒரு மாதிரி நிற்கிறீங்கள்.?' துரை புரியாமல் யோ சனையோடு அவசரமாகக் கேட்டான். பார்வதியின் கைகள் படபடக்க, உதடுகள் துடிதுடித்தன!
6என்னம்மா... .சொல்லுங்கோவன்" இவனையும்மீறி இவனுக்கு இதயம் படபடத்தது.
*ரவுனெல்லாம் பற்றி எரியுதாம் ராசா. '' ri
வதியையும் மீறி அவள் குரல் வெடித்துக் கொண்டு வெளி யில் வந்தது.
*கட.வுளே... !! அம்மா.. es. . . . . ** அவன் கால் கள் பின்ன, தள்ளாடி, வாசற்படியில் அமர்ந்தான். தூரத் தே. கரும்புகை, சிவப்புப் பொறிகளோடு போட்டியிட் டுக் கிளம்பிக் கொண்டிருந்தது.
"துரை.துரை.ராசா." ஒலங்கள் பூமிக்குள் ளிருந்து வருவது போல.1.
அவன் மேலே அண்ணுந்து, கரிய வானத்தில், தெரி யாத புள்ளியொன்றைப் புரியாத பாவத்துடன் தேடிக் கொண்டிருந்தான்!
“சிரித்திரன், 1986, மூன்ரும் பரிசு

LDLGOLOGDuli கொளுத்துவோம்
வீட்டினருடஞன சம்பாஷணையை முடித்துக் கொண்ட DIT DIT GT6ồr மேசைக்கருகில் வந்தார். 2ሯ
“இது என்ன பேப்பேஸ் ?"
* அது . நான் எழுதின கதை மாமா வாசித் துப் பாருங்கோ’ அந்தப் பேப்பர் தாள்களைத் தூக்கிய மாமா நான் கூறியதும் சந்தோசமாக வாசிக்க ஆரம்பித் தார். w
நேரத்தைப் பார்த்த நான் அவசரமாக வீதியில் இறங்கி னேன்.
"எங்கை. பயணம் ? - வழியில் வந்த பக்கத்து வீட்டு ாமி விசாரித்ததும் தயங்கிய நான்,

Page 13
"கூட்டமொண்டு யாழ்ப்பாணத்திலை; அங்கைதான் போறன்" கூறிமுடிக்கமுன்,
* கூட்டமோ ? யாழ்ப்பாணத்திலையோ ? அதுக்கு. pë இங்கையிருந்து. தனியா. அடியாத்தை நல்லாயிரு க்கடி'மாமி வாயைப் பிளந்தாள். எனக்குப் பொத்து கொண்டு கோபம் வந்தது.
**ஏன் மாமி ? யாழ்ப்பாணத்துக்குத் தனியாத்தானே படிக்கப்போறன். பிறகு இதுக்கு மட்டும் ஒரு ஆள் தேவையோ ?"
“சுஜா, நீ யாழ்ப்பாணம் படிக்கப்போறனி எண்டு நல் லாவே தெரியுது. இங்கையிருந்து யாழ்ப்பாணம் போற அளவு தூரத்துக்கு வாயும் நீண்டிருக்கடி குமர்ப்பிள்ளை. தனியா, ஏதோ ஒரு கூட்டத்துக்குப் போகத்தான் அவசி யமோ எண்டுதான் கேக்கவந்தனன். பரவாயில்லை; கேட்டது என் தப்பு; நீ போயிட்டுவாம்மா' மாமியின் கிண்டல் பேச்சு என் ஆற்ருமையை மேலும் வளர்த்தது.
'951... . . . ஏதோ ஒரு கூட்டம் இல்லை மாமி ஒரு இலக்கியப் புத்தக வெளியீட்டு விழா” நான் நறுக்கென்று கூறினேன்.
“இலக்கியம்; பெரி.ய இலக்கியம்; எங்களுக்குத் தெரியாத இலக்கியம் 1. காலம் கெட்டுப் போச்சடி’ மாமி தனக்குள் முணுமுணுத்தவாறே என்னைக் கடந்து வேகமாக நடந்து, ஒரு வீட்டினுள் நுழைந்து மறைந்தாள்.
"சரியா.ன லூஸ் மாமி ' எனது கோபத்தை அந்த வரிகளில் அழுத்தமாகக் காட்டி முணுமுணுத்து
விட்டு, நான் பஸ் ஸ்ராண்டை நோக்கி நடக்கத் தொடங் கினேன்.
6

சிறிது தூரம் நடந்ததும், ஒரு ரியூட்டரி வாசலில் நின்ற ஒரு ஆசிரிய இளைஞனும், சில மாணவிகளும் எதைப் பற்றியோ கதைத்துச் சிரித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
“பாரடி அந்தக்குமரியளை! யாரோடை கதைக்கிறது;
எவடத்திலை நிண்டு கதைக்கிறதெண்டு ஒரு விவஸ்தையே
இல்லாமல். வாசலுக்கை . 1 காலம் கெட்டுப்போ ச்சடி."
நான் திடுக்குற்றுத் திரும்பினேன். ஒரு வயதான பெண் அருகிலொரு இளம் டெண்ணுடன் என்னைக் கடந்து முன்னேறினள்.
அவளது அந்தக் கீழ்த்தரமான கணிப்பீடு என்னை என் னவோ செய்திருந்தது. ‘அந்த ஆசிரிய இளைஞனும் தான், சிரித்துச் சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்கிருன். ஆனல் அந்த உரையாடல்களில் கறுப்புப் புள்ளி இடப்பட்டது அத் தப் பெண்களுக்குத்தான்! இந்தநியாயம் எனக்குப் பிடிக்க வில்லை. அதற்காக நியாயம் கதைக்கப் போனலும் "வாய் நீண்டுபோச்சுது' எண்டு சண்டைக்கு வருகிருர்களே!?? மனம் புழுங்கியது. நான் எனக்குள் பெருமூச்சு விட்டுக் கொண் டேன்.
நான் சந்திக்கு வந்து, அடுத்த வீதிக்குத் திரும்பிய பொழுது சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், வீதியின் ஒரமாக வந்துகொண்டிருந்த ஒரு அழகிய இளம் பெண் னின் அருகில் சென்று ஏதோ சொல்ல, ‘ஸ்டுப்பிட் . ராஸ்கல்' என்று திட்டிக்கொட்டிவிட்டு அவள் நடந் தாள். நான் அவர்களைக் கடந்து சென்றேன்.
சிறிது தூரம் சென்றதும் எதிரில் வந்த ஊர்ப் ப்ெரியவர் ஒருவரைக் கண்டதும் மெல்லத் தலையைக் குனிந்து கொண்டு உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டேன்.
* சுஜா ??
17

Page 14
* யாழ்ப்பாணத்துக்குப் போறேன். அங்கிள்"
* எதுக்கு ?? என்று கேட்க விரும்பாமல் நெற்றியைச் சுழித்துக் கொண்டே அவர் விடைபெற்றர்.
"அப்பப்பா..!" பார்வைகளைப் பார்த்தால், திரும்பி வீட்டிற்கே ஓடிவிடலாம் போல் இருந்தது.
‘என்ன மனிதர்கள் இவர்கள்? இந்த வீதியாலை எத் தனை ஆண்கள் போய்க்கொண்டிருக்கிருர்கள்; பெண்கள் மட்டும்தான் அனைவரது அவதானிப்புகளுக்கும், சிந்தனைக் கும் ஆளாகவேண்டுமோ? இவர்களுக்கு வேறு சிந்த னையே இல்லையோ?"
என் மனம் என்னுள் அல்லாடியது.
நான் பஸ் ஸ்ராண்டை அடைந்தபொழுது, யாழ்ப் பாண பஸ் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. ஒரு
இளைஞனின்அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தில் அமர்ந்த பொழுது அவர்,
*ஹலோ? என்ருர், திடுக்குற்ற நான் நிமிர்ந்த பொ ழுது, அருகிலிருந்தவரைக் கண்டு ஆச்சரியமடைந்தவாறே
*ஆ..ஹலோ” என்றேன். பிரபல எழுத்தாளர் சதுரா புன்னகை சிந்திக்கொண்டிருந்தார்.
“எங்கை ...... வெளியீட்டு விழாவுக்கோ?? நான் கேட் பதும்,
“ஒமோம்; நீங்களும் அங்கை தானே?" அவர் நம்பிக்கையோடு விசாரிக்க, நான் "ஆம்" என்று தலை யாட்டினேன்.
落兹 இன்விற்ரேசன் வந்ததோ. அல்லது பேப்பரில பார்த்தனிங்களோ ? ?
18

* இன்விற்ரேசன் காட் வந்தது" நான் கூறிவிட்டு 'விழாவிலை நீங்களும் பேசுவீங்களா? " - அவருடைய அரு மையான மேடைப் பேச்சுக்களை மனதில் வைத்தவாறே ஆவலுடன் கேட்டேன்.
'ம். பேசச்சொல்லிக் கேட்டால் பேசுவன்."
'ஆயத்தப்படுத்தாமல் a s. எப்பிடி உங்களாலே சட் டென்று பேசமுடியுது?"
அவர் மெதுவாகச் சிரித்துவிட்டு என்னைப் பார்த்தார்.
'நீங்கள். ஒரு கதையை எழுதிறதுக்கு முதல் கொஞ்சம் யோசிக்கிறீங்கள்; பிறகு எழுதத் தொடங்க, எழுத வேண்டியதெல்லாம் சரளமாய் வந்து அமைஞ் சிடுது. சிந்தனையும் பேனவும் இதுக்குப் பழக்கப்பட்டிட்டுது இல்லையா?. அதுமாதிரித்தான் இதுவும்; ஆரம்பத்தில கொஞ்சம் நிதானமாக வார்த்தைகளை விடவேணும். பிறகு மனசிலை தோன்றுகிறதெல்லாம் சரளமாய் வாயிலை வந்திடும்.
“எனக்கெண்டால், மனசில தோன்றுவதுகூடப் பல ருக்கு மத்தியில பேசவராமல் மறைஞ்சு போயிடும்" நான் ஏக்கத்துடன் கூறினேன்.
“சுஜா, அது ஒரு தாழ்வு மனப்பான்மையால வாறது. நாங்கள் பலருக்கு முன்னல பேசுகிறபோது பிழையாக எதையாவது பேசிவிடுவோமோ என்கிற பயம்! அந்தப்பயம் இருக்கக்கூடாது. எடுத்த எடுப்பில நிறையப் பேசவேணு மெண்டு நினைக்காமல், மனசில படுகிறதை சுருக்கமாய் நாலு வார்த்தையில பேசிமுடிச்சிட்டால், அடுத்தடுத்த தடவை கள் பேசிறபோது, பயம் தெளிஞ்சு, அதிகம் பேசக்கூடிய துணிச்சல் வந்திடும். அந்த விசயத்தை ஒருபயங்கரமாய் நினைச்சு, மனசைப் பாரமாக்கக்கூடாது; அதைச் சிம்பி
19

Page 15
ளாக நினைக்கவேணும்' அவர் ஒரு ஆசிரியர் போல் புத்
திமதி கூறினுர்,
எனக்கு அது புரிந்தது. நான் அதைப்பற்றியே சிந்தித்
துக் கொண்டிருந்தேன்.
“சுஜா, அப்போ நீங்கள் இந்த விழாவிலை சின்னதாக ஒரு வாழ்த்துரை வழங்குங்களேன் பார்க்கலாம்.'
“ஐயையோ, எவ்வளவுபெரிய ஆட்களுக்கு முன்னல. நான். நான். '"நான் தயங்க,
“பார்த்தீங்களா, பார்த்தீங்களா; இன்னமும் அந்தத் தாழ்வு மனப்பான்மை உங்களுக்குப் போகவில்லை! நீங்கள் பேனையாலை வெளிப்படுத்திற துணிவை, வார்த்தையாலை வெளிப்படுத்துங்கோ’ அவர் மீண்டும் மென்மையாக என் மனதைத் திருத்த முற்பட்டார்.
*சரி இண்டைக்கு நான் முயற்சி பண்ணுறன்." கூறிய பொழுது அவர் மகிழ்ச்சியோடு சிரித்தார்.
“gy Gör சிரிக்கிறீங்கள்' -நான் புரியாமல் கேட்டேன்.
“இல்லை; என்ரை மனுசி சொல்லுவாள் ‘நீங்கள் ஒரு ரீச்ச ராய் இல்லாவிட்டாலும், போற இடமெல்லாம் ரீச்சர் வேலை பார்ப்பீங்கள்! “ எண்டு. இப்ப இந்த. பஸ்சுக் குள்ளேயே தொடங்கிவிட்டன்; இல்லையா? " அவர் கூறிய தும் சிரிப்பு வந்தது.
நான் சிரித்துவிட்டுத் திரும்பியபொழுது, எனக்கு நேரே மறு புறத்து ஆசனத்தில் இருந்த இளைஞன் முறைத்துப் பார்ப்பது தெரிந்தது. * யார் அது? உற்றுப்பார்த்தேன். ஞாபகம் வந்தது. அவன் எங்கள் ஊர்க்காரன்தான். எப்டவோ ஒரு நாள் அண்ணுவுடன் கதைத்துக்கொண்டு நின்றபோது நான் கண்டிருக்கிறேன்.
20

"ஏன் இப்படி முறைக்கிறன்? எனக்குப் புரியவில்லை’ நான் தலையைக் குனிந்து கொண்டேன்.
பஸ், யாழ்ப்பாணத்தையடைந்த பதினைந்து நிமிடங் களில் நானும் எழுத்தாளர் சதுராவுமாக விழா மண்ட பத்தை அடைந்தோம். நாம் போகும்போது விழா ஆரம் பமாகியிருந்தது. ஒரு இலக்கியவாதி, மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து பலரது கருத்துக்கள், சர்ச்சைக்குரிய விட யங்கள்,நகைச்சுவைச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் எழுத்தாளர் சதுராவை விழாத்தலைவர் பேச அழைத்தார். அவர் மேடைக்கு ஏறும் பொழுதே பலர் ஆர்வமாக அவரது பேச்சைக் கேட்கத் தயா ரா இக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந் தது. கணிரென்ற கவர்ச்சியான குரலில், ரசமான வார்த் தைகளால் நூலின் குறை நிறைகளை அள்ளிவீசினர். என் அவதானம் பிசகாமல், அவர் பேச்சிலேயே நிலைத்திருந்தது! அவர் பேசி முடித்து மேடையிலிருந்து இறங்கியபோதும் என் வியப்பு மாருமலே இருந்தது.
இறுதியாக, "விரும்பியவர்கள் பேசலாம்' என்று தலை வர் கூறிய பொழுது, என்னைப் பேசும்படி சதுரா ஜாடை காட்டினர். நான் தயங்கினேன். அவர் கட்டாயப்படுத்தி னர். நான் எழுந்து சென்று நான்கு வரிகளில் வாழ்த்துரை வழங்கிவிட்டு வந்தமர்ந்த பொழுது வியர்த்துக் கொட்டி யது. சதுரா வாயை மூடிக்கொண்டு மெலிதாகச் சிரித்தார்.
விழா முடிவடைந்து வெளியில் வந்தபொழுது,
"பரவாயில்லை, நாலு வசனம் எண்டாலும் நல்லாத்
தான் இருந்தது" அவர் புன்னகையுடன் கூறிவிட்டுத் தனக்கு
அறிமுகமானவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த

Page 16
பொழுது நான் விடைபெற்றுக் கொண்டு பஸ் ஸ்ராண்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
பஸ் வீடு வந்து சேர்ந்தபொழுது வீட்டு வாசலில் அண்ணு நின்றிருந்தார். அவர் முகம் அசாதாரணமாக இருந்தது.
இப்ப. என்ன நேரம்?" அவரின் கேள்வியில் கடுமை தெரிந்தது கண்டு நான் திடுக்குற்றேன். நேரத்தைப் பார்த்தேன். . . . .
"ஆ. ஆறரை" அந்தச் சூழ்நிலை ஏற்படுத்திய பயத் தில் நாக்குளறியது.
* விழா எத்தினை மணிக்கு முடிஞ்சது ?* குரலில் அதே
கடுமை, V
‘ஐந்தே காலுக்கு" நான் உள்ளே போக எத்தனித்
தேன்.
“நில்லடி போகும்போது தனியாத்தான் போனியா?* குரலில் சீற்றம் மிகுந்திருந்தது.
* தனியாத்தான் போனனன். ' புரியாமல் விழித் தேன். ... "
* பஸ்சுக்குள்ளை . பக்கத்திலையிருந்து சிரிச்சுச் சிரிச்சுக் கதைச்சுக்கொண்டு வந்தவன் ஆரடி ?"
*அண்ணு! அவர். அவர். எழுத்தாளர் சதுரா; எதிர் பாராமல் பஸ்சுக்குள்ளை சந்திச்சோம்.”
'பளார்” என்ற ஒசையுடன் அவர் கைவிரல்கள் என் கன்னத்தில் பதிந்து மீண்டன. நிலைதடுமாறினேன்! கன்னம் பக பக" வென்று எரிந்தது. கண்ணீர் வரவில்லை. பதி லாக கோபம் பீறியது .
22

“செய்யிறதை நியாயத்தோடை செய்யுங்கோ' நான் கத்தினேன்.
" எனக்கு u é நீ நியாயம் சொல்லுறியா ?’ மீண்டும் “பளார்" என்ற ஒசையுடன் என் கன்னம் அதிர்ந்தது!
இப்போ ஆற்றமையில், வலியில் அழுகை வந்தது.
“எல்லாரும் திரும்பிப் பார்க்கிற அளவுக்குச் சிரிப்பு வாற மாதிரி. அப்பிடியென்ன கதைச்சனிங்கள் ?? அண்ணு மீண்டும் முறைத்தார். பதில் சொல்ல மனம் வரவில்லை. ஆத்திரத்தில் என் உதடுகள் துடித்தன. காறித்துப்ப வேண் டும்போல் மனம் துடித்தது. பஸ்சிற்குள் என்னை முறைத் துப் பார்த்த, எங்கள் ஊர் இளைஞனின் உருவம் என் மனக் கண்ணில் விகாரமாகத் தெரிந்தது.
* மிக மிக எளியவன்’ என் வாய் அவனை எண்ணி முணுமுணுத்தது.
“என்னடி கதைச்சனீங்கள்" அண்ணு மீண்டும் வெடித் 5ft it.
**ம்.என்ன..கதைச்சோமோ ? ரெண்டு பேரும் எப்போ மோதிரம் மாற்றிக்கொள்ளலாம் எண்டதைப் பற்றிக் கதைச்சோம்’ சட்டென்று ஆடிப்போன அவர், விழி பிது ங்க விசித்திரமாக என்னைப் பார்த்தார். நான் தலை குனிந்து நின்றேன்.
"என்ன துணிச்சலடி உனக்கு. ? ? - அவர் மீண்டும் வெறி பிடித்த சிங்கமாகப் பாய்ந்த பொழுது, சட்டென்று நான் விலகிக்கொண்டேன். . .
* யாரோ ஒருத்தன் சொன்னதை வைச்சு, ஏதோவித மாய்க் கற்பனை பண்ணிக்கொண்டு என்னை நாயாய் அடிக் கிறீங்களே! உங்களுக்கு வெட்கமாயில்லை ? உங்களுக்கு உங்
23

Page 17
கட தங்கச்சியைப்பற்றித் தெரியேல்லையே? என்னைப்பற்றி அப்பிடித் தப்பாய் நினைத்துச் சொன்னவனுக்கு நல்ல பதிலடி கொடுக்க உங்களுக்குத் தெரியேல்லையே? என்னைத்தான் அடிக்கத் தெரியுது. பெண்களுக்கெண்டு தெரிந்தவர்கள், சிநேகிதர்கள் யாருமே இருக்கக்கூடாது; அவையள் இந்த உலகை, மனுசரை சுதந்திரமாய்ப் பார்க்கக்கூடாது. அப்பிடித் தானே ? இப்ப நான், பெண்ணுய்ப் பிறந்திட்டேனே எண்டு மட்டுமில்லை, உங்கட தங்கச்சியாய்ப் பிறந்திட்டேனே எண் டும் வேதனைப்படுறன் ?
நான் என்னையும் மீறி விம்மி விம்மி அழுதேன். சிறிது நேரம் உணர்ச்சிகளற்று அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவர், சட்டென்று தலையைக் குனிந்தவாறே கேற்றைத் திறந்து கொண்டு வெளியில் எங்கேயோ போய்க் கொண்டிருந்தார்.
இவ்வளவு நிகழ்ச்சிகளையும் அவதானித்துக்கொண்டு வாசற்படியில் படுத்திருந்த எங்கள் வீட்டு நாய், இப்போ மெல்ல எழுந்து ஆசுவாசமாக உடலைக் குலுக்கி, வாலை அசைத்துக்கொண்டு என் கால்களிற்குள் வந்து நின்றபோது, அதன் தலையைத் தொட்டுத்தடவி விட்டேன். மனம் இலே சாகிக்கொண்டு வந்தது.
மாமா வாசித்து முடித்த அந்தச் சிறுகதையை மேசை யில் வைத்துவிட்டு, ‘ சுஜா, கதை நல்லாயிருக்கு; ஆனல் உன்ரை பெயரையே இந்தக் கதாநாயகிக்கும் போட்டிருக்கி றியே ? ? என்ருர்,
* ஏன் மாமா ? பெயர் நல்லாயில்லையா ? அப்ப. வேற ஒரு பெயரை மாத்திட்டால் போச்சு ’ நான் கூறிய தும் அவர் சிரித்தார்.
24

* அதுசரி; இப்ப எங்கேயோ போருய் போல கிடக்குது" மாமா விடய தேவையோடு விசாரித்தார்.
* யாழ்ப்பாணத்தில ஒரு இலக்கியக் கூட்டம் மாமா. அது தான்.” நான் கூறிவிட்டுப் புறப்பட ஆயத்தமா கிக் கொண்டிருந்தேன்.
* சுஜா நீ இப்பிடி இலக்கியக் கூட்டம். இலக்கியக் கூட்டம் எண்டு அடிக்கடி யாழ்ப்பாணம் போறது எனக் கென்னவோ நல்லதாப் படயில்லை. நீ. வயசுக்கு வந்த பிள்ளை ஊர் உலகம் ஒவ்வொண்டு சொல்லப் பிந்தாது. என்னவோ மனசில பட்டதைச் சொல்லிட்டன்; நான் ofrsD6öt ' Lost Dr. GLintuitenl".L-Trf.
நான் சிலையாக நின்றேன்.
ஈழநாடு, 1986.
25

Page 18
எரியும் தளிர்கள்
Pருதாஐன புகையிரத நிலையத்தில் கால் வைத்த பொ ழுது, நிலைய அதிபரின் விசில் ஊதி ஒய்ந்தது.
கனகராயர், செக்கிங் பொயின்ஸ் ஐயும் கடந்து, அவ சரம் அவசரமாக யாழ்தேவிக்குரிய நிலைய மண்டபத்தை அடைந்தபோது புகைவண்டி பெரிய ‘இழுபறி இரைச்ச லோடு நகர ஆரம்பித்திருந்தது. மூச்சிரைக்க ஓடிவந்தவர், கையிலிருந்த சூட்கேஸ் உடன் இரண்டாம் வகுப்புப் பெட்டி யில் தாவி ஏறினர்.
*அப்பாடா..!"
கடவுளேயென்று வெறுமையான ஆசனங்கள் மூன்று, நான்கு கண்களில் பட்டன. ஒரமாகவுள்ள ஒரு ஆசனத்தில்

ஆசுவாசமாக அமர்ந்து கொண்டவர் சுற்று முற்றும் பார் வையைச் செலுத்தினர். பொட்டு வைத்த முகங்கள் அங். கொன்றும் இங்கொன்றுமாய் எவற்றையோ இரசித்துக் கொண்டிருக்க, அறிமுகமற்ற ஆண்முகங்கள் இடையிடையே தெரிந்தன.
புகைவண்டி காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. வானத்தில், கிழக்கு மூலையில் சிவப் பாகச் சூரியக் கதிர்கள் சிரிக்க ஆரம்பித்திருந்தன. வேக மாகப் பின்னல் நகர்ந்து கொண்டிருக்கும் வயல்கள், தோட் டங்கள் தென்னந் தோப்புகள்.
காலையில் வேளையோடு எழுந்த அசதியில் கொட்டாவி ஒன்று வந்து உடலை உலுக்கியது. இருந்தாலும் பென்ஷன் அலுவல்கள் யாவற்றையும் பூரணமாக முடித்துக் கொண்டு திரும்புவதில் ஒரு திருப்தி!
இனியென்ன . வீட்டோடை இருந்து, குமருகளின்ரை அலுவலைப் பார்க்க வேண்டியது தான்; மனுசி செல் லத்துக்கும் உதவியாய்...
“ஊருக்குப் போவதில் தான் எத்தனை உற்சாகம்! ஷெல் விழுந்தாலென்ன பீரங்கி முழங்கினுலென்ன பிறந்த மண் னின் சுகமே ஒரு தனிசுகம் தான்!"
"இவ்வளவு காலமும் குடும்பப் பொறுப்பைச் செல்லம் கவனித்து வந்தாள். இனிமேல் நானும் அவளோட சேர்ந்து கவனிக்கலாம்; கடைசிக் காலத்திலை அவளுக்கும் ஆறுதல் வேணும் தானே?
'மூத்தகுமரை, புத்திசாலித்தனமாய்ச்-செல்லம் சரை சேர்த்திட்டாள்; மூத்தவன் பொடியளோடை போனதும்
ஒருவகையிலை திருப்தி தான்; எங்களாலை இயலுமானளவு
27

Page 19
பங்களிப்பை நாங்களும் செய்யத்தானே வேணும். இளைய வன் படிச்சுக்கிடிச்சு உத்தியோகமாயிட்டான் எண்டால், மற்றவளே ஒருமாதிரிக் கரை சேர்த்திடலாம்.கடைசி ரெண்டு குமருகளுக்கும் காலங்கிடக்குத் தானே; கடவுள் ஏதோ வழி விடுவான்"
கனகராயரின் கண்கள் ஜன்னலினூடாக வெளியே இயற் கையை மேய்ந்து கொண்டிருந்தாலும் மனம் முழுவதும் எதிர்காலக் குடும்பத்திட்டத்திலேயே லயித்திருந்தது!
சூரியன் முகம் காட்டத் தொடங்கி நீண்ட நேரமாகி விட்டிருந்தது.
'தல்குளி. · தலகுளி’ Graft Sh மிட்டாய்க் கூடை யுடன் ஒருவன் சிங்களத்தில் கூவத் தொடங்கியிருந்தான்.
“எள்ளுச்சாப்பாடு எண்டால் செல்லத்துக்குச் சரியான ஆசை, ஆனல் இதை எப்பிடி வாங்கிப் போறது? வேண்டாம்; ஊருக்குப் போனபிறகு, எல்லாம் ஆறுதலாய் விரும்பினதுகளைச் செய்யலாம்; இனி நான் அவளோடை தானே?
புகைவண்டி மாகோவில் நின்று, நகர ஆரம்பித்த போது தான், தன்னையுமறியாமல் நித்திரையாகி இருந்த வர் திடுக்குற்று எழுந்து நேரத்தைப் பார்த்தார். காலை 9.30 மணி ஆகிவிட்டிருந்தது! மெதுவாக வயிறு அழ, புஃபே க்குப் போஞர். வடை, தேநீரோடு காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மீண்டும் வந்து அமர்ந்தபோது, பத்தி ரிகைகள் விற்கும் பையன் ஒருவன் பக்கத்தில் நின்று விள்ம் பரம் செய்வது தெரிந்தது. கனகர்ாயர் திரும்பி, வீரகேசரி ஒன்றை இழுத்து எடுத்தார்.
*யாழ்ப்பாணத்தில், இராணுவத்தினருக்கும் பயங்கர வாதிகளிற்குமிடையில் நடைபெற்ற மோதலில் 8 பயங்கர
28

வாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு' -பெரிய தலைப்புச் செய்தியில் சிலிர்த்துப் போன கண்க ராயர் இறந்தவர்களின் பெயர் விபரங்களை அவசரமாகத் தேடினர். ஒருவித நிம்மதியின் மத்தியிலான பெருமூச்சு மனதில் இனம்புரியாதவொரு பாரம் . . . ‘என்ரை குலக்கொழுந்தை கடவுள் தான் காப்பாற்ற வேணும்; எவ்வளவோ கஷ்டப்பட்டுப் படிப்பித்து ஆளாக்கி விட்டன். குமருகளைக் கரை சேர்க்க முடியாமல் தத்தளித்து, அவனை ஒரு கையாய் நம்பியிருந்தன்; போனவன் போயிட் டான்; கடைசி வரைக்கும் சலிக்காமல் அவன் போராட வேணும்"
"நீ யோசியாதை ராசா; உன்ரை அப்பனும் தம்பியும் உயிரோடை தானே இருக்கினம். தங்கச்சிமாருக்குக் கை கொடுக்காமலே போடுவினம் . . " -ஆறு மாதங்களிற்கு முன்னர் ஏதோ அலுவலாய் மூத்தவன் வந்து, தனக்குள் கவலைப்பட்டபோது, செல்லம் அழுகையோடு அழுகையாக அவனுக்கு ஆறுதல் கூறியது அவர் ஞாபகத்தில் வந்தது. மனம் இரகசியமாய்க் கரைந்தது.
நீண்ட மனஓட்டங்களின் மத்தியிலே 11.30ற்கு வவுனி யாவிற்கு வந்து சேர்ந்த புகைவண்டியிலிருந்து இறங்கி ஒடிப்போய், பஸ்ஸில் ஆசனம் பிடிப்பதற்கிடையில் போ தும் போதுமென்ருகி விட்டது அவருக்கு!
வவுனியா தடைமுகாம், ஓமந்தைத் தடைமுகாம், ஆன யிறவுத் தடைமுகாம் ஆகிய பகுதிகளில் இறங்கி, நடந்து ஊர்வலம் போனதில் மூட்டு மூட்டாக வலியெடுத்திருந்தது! முல்லைத்தீவுப் பாதையின் சிறப்பினல், இடுப்பு ஒடிந்து விடும் போலிருத்தது! . . . .
*வீட்டுக்குப் போன, உடனை, இளையவனை ஒருக்கால் மணியன் கடைக்கு அனுப்பி, ஒரு "கால்" எடுத்து அடித் தால் தான் இந்த அலுப்புப் போகும்" * -
29

Page 20
கனசராயர் ஊர் மண்ணைக் கண்டதும் உசார் நிலைக்கு வந்துவிட்டார். பசியும் களைப்பும் பாறி உடல் தேறி விட் டது போன்ற உணர்வு! ,
தனக்குரிய பஸ் தரிப்பில் இறங்கியவர் சுற்று முற் றும் பார்த்தார். சந்திக் கடை வாசலில் செல்லம் தேங் காயோடு நின்றிருந்தாள்!
“செல்லம். s
திடுக்குற்றவள் “வருவியள் எண்டு நினைச்சனன்; காகம் கத்தினது . .' அலுங்காமல் சிரித்தாள். கன்னம் இடிந்து, கண்கள் குழிவிழுந்திருந்தமை இப்ப்ோ அதிகமாகித் தெரிந் தீது
“அது சரி. ஒருநாளும் கடைப்பக்கம் காலடி வைக்
காத நீ இண்டைக்கு என்ன புதினமாய்.
. *தேங்காய் வாங்க வந்தனன்.” மூடி மறைக்
கும் ஒரு சோர்வு!
*ஏன். இளையவனுக்கென்ன, இப்ப ஏ.எல். எக்ஸாம்
முடிஞ்சு, லீவு தானே? ; அம்மாவைக் கடையடியிலை காய வைக்கிற அளவுக்கு அவருக்கு வேலையோ?
செல்லம் தலையைக் குனிந்து கொண்டாள்.
அவளின் காதருகில் சிவப்பாகக் கன்றிப்போய்..! கனகராயருக்குச் சுருக்கென்றது.
“என்ன இது காதடியில. காயம்?
“அது சும்மா. விறகு கொத்துற போது ...”* சட்டென்று வார்த்தையை அரைகுறையில் அடக்கிக் கொண்ட செல்லம் மெல்ல நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்"
30

*நான்இனிமேல், ஊரோடைதானே, எல்லாரையும் வைச்சிருக்கிற இடத்திலை வைச்சிருந்தால் திருந்துவினம். அப்பன் ஊரிலை இல்லாட்டில், அம்மாவுக்கு வாலாட்டப் பாக்கிருங்கள்."
வீடு அண்மித்தது. விசுக்கென்று உள்ளே நுழைந்த செல்லம், வாசலுக்கு வந்ததும், அடக்கி வைத்திருந்ததெல் லாம் வெடித்து விடுவது டோல் விம்மி விம்மி அழத்தெ டங்கினுள். - W
செல்லம். என்ன இது? இப்ப என்ன நடந்
“இளையவன். இளையவனும் போயிட்டானப்பா, அங்கை போய்க் காலிலை விழுந்து கூட கேட்டுப் பார்த்தன்; அவையள் கூட எங்கடை மூத்தவன் இருக்கிறதை ஞாப கப்படுத்தி, புத்திமதி சொல்லிப் பார்த்தவை; அவன் ‘முடி யாது” எண்டிட்டான்.'
வாய் பேசமுடியாமல் உறைந்து போனவருக்கு வாச லோடு ஒட்டியவாறு, வரிசையாக, வளைந்து நிற்கும் மூன்று குமருகள் மட்டும் தெரிந்தது! • ,
சிரித்திரன், பெப்ரவரி 1987, முதற் பரிசு.
31

Page 21
தரிசு நிலத்து அரும்பு
இறக்கமான வளையில் தலையை மோதாமல், அவதான மாகக் குனிந்து, முற்றத்தில் இறங்கியபொழுது கிசு கிசு’ வென்று மெல்லிய சிலிர்ப்பான காற்று உடலைத் தழுவியது! நிமிர்ந்தபொழுது, ஈரமண்ணில் நின்றுகொண்டு மெதுவா கத் தலையசைக்கும் குளிர்ந்த பச்சைநிற வெண்காயத் தார் கள்; கொஞ்சம் எட்டிப் பார்த்தால், தோட்டப்பாதையோ ரமாக வரிசைக்கு நின்று ‘சல சல" வென்று ஒலியெழுப்பி ஆரவாரம் செய்யும் வாழை மரங்களினிடையாக நாணிச் சிரிக்கும் சூரியன்; வலது பக்கமாகத் திரும்பினல், தோட் டக் குடிசையை வளைத்துச் சிறைகொள்ளும் செவ்வந்திச் செடிகள். கூடவே மோதி நழுவும் மெல்லிய சுகந்தம்.
*அஃ.ப்பா !!"

'அக்கா, அஞ்சுமணியாச்சு; ஏறுங்கோ’ ராசன் கரியர் பூட்டிய சைக்கிளை வைத்துக்கொண்டு அவசரப்படுத்தினன்.
"இங்கை. இதிலை வந்துநிண்டு. இந்தத் தோட் டத்தை ஒருக்கால் வடிவாய்ப் பாரடா;~அசைய விடாமல் இழுக்கிறமாதிரி ஒரு அழகு...!! நான் மெதுவாக ஆச்சரி யப்பட்டேன்.
"கால் மணித்தியாலமாய் உதிலேயே நிண்டு ரசித்துப் போட்டீங்களெல்லோ. சரி; இனி வாங்கோ’ அவன் தனக் கேயுரிய நகைச்சுவைப் பாணியில் என் மனதைச் சீண்டினன். நான் இங்கு தங்கி நின்ற இந்த இரண்டு நாட்களில் அவன் எப்படிச் சீண்டியபொழுதிலும் எனக்குக் கோபம் வர வேயில்லை.! அப்படியொரு புதுமையான ரசனை எனக்கு அவனிடமிருந்தது! அரும்புமீசை. துடிப்பு நிறைந்த மகிழ்ச்சியான முகம். இளமையிலேயே முறுக்கேறிய உடல், ஆழ்ந்து நோக்கினல் கண்ணுக்குள்ளே இனம் தெரியாத மெல்லிய சோகம்! நன்முகச் சிரித்தான்; சிரிக்கவும் வைத்தான்!
இரண்டு நாட்களுக்கு முன்னர் நானும் அம்மாவும் யாழ் பட்டணத்திலிருந்து என் சிறியதாயாரின் இந்த தோட்டக் குடிசைக்கு வந்தபொழுது, வாழைப்பாத்திக்குத் தண்ணிர் மாறிக்கொண்டு நின்றிருந்த இவன்தான் "அம்மா.. பெரியம்மாவும் அக்காவும் வருகினம்.’’ என்று ஆரவா ரம் செய்துகொண்டு எங்களை வரவேற்றன். ஓடிவந்து எங் கள் கைகளில் தூங்கிய பயணப்பைகளை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியோடு வீட்டிற்குள் ஓடினன்.
“ ‘TnrFGör ..... டேய். வாய்க்கால் உடைக்குதடா ஒடடா. பாத்தியை மாத்திவிடு ' என்று வெண்கா யத் தார்களின் மத்தியில் நின்றுகொண்டு ச்த்தமிட்ட சித்
33

Page 22
தப்பாவின் கட்டளையை நிறைவேற்ற ஓடியவனும் இவன் தான்.
*ராசன். இங்கை ஒடிவாடா. பூசணியெல்லாம் மாடு உளக்குது; பிடிச்சுக் கட்டு" என்று கிணற்றடியில் நின்று சட்டிபானை விளக்கிக் கொண்டிருந்த சித்தியின் குர லுக்குக் குடல் தெறிக்க ஓடியவனும் இவன்தான்!
“மழை பெய்யப்போகுது. மிளகாய் வத்தலை அள் ளிக் கட்டடா" என்று அவசரப்படுத்திய பாட்டியின் ஆசையை நிறைவேற்றியதும் இவன்தான்.
"ஐயையோ. நேரம் போச்சுது; ஜானுவைக் கொண்டு
‘போய் கெதியாய் பள்ளிக்கூடத்திலை விட்டிட்டு வாடா'
என்று ஒற்றைக் காலில் நின்ற ராஜி அக்காவின் விருப் பத்தை நிறைவேற்றியதும் இவனே தான்!
இங்கு எல்லாமே இவன்தான்' என்று நான் இங்கு தங்கி நின்ற இரண்டு நாட்களில் நன்கு புரிந்துகொண்டு விட் டத்ணுலோ என்னவோ, இனம் புரியாதவொரு பாசம் அவ னில் எனக்கிருந்ததை மறுக்கமுடியவில்லை.
"இங்கை. பெரியம்மாவும் வந்திட்டா; அக்கா இன் னுமென்ன நிக்கிறியள் ?. மினக்கடாமல் ஏறுங்கோ" அவன் மீண்டும் அவசரப்படுத்தினன். நான் பைகளை (bags) சைக்கிளில் கொழுவிவிட்டு, பின்னல் கரியரில் ஏறிக்கொண் டேன். அம்மா கொஞ்சம் பயந்து, தன் பெரிய உடலுடன் சைக்கிள் பாரில் ஏறி அமர்ந்தபொழுது சைக்கிள் மெல்ல அசைந்ததை இவன் ஜாடை காட்டிச் சிரித்தான். நாம் விடை பெற்றுக்கொண்டு புறப்படும்பொழுது மாலை 5.30 மணியாகிவிட்டிருந்தது.
தோட்டப் பாதையால் சைக்கிள் மெல்ல நகரத் தொடங்கியது. குனிந்து அசையும் வாழை இலைகள் என் னைத் தழுவி விலகின.
34

“gir FGär......”
‘ என்னக்கா? " ‘இதெல்லாம் புளிவாழை தானே?? * இல்லை. . கப்ப லும் புளியும் கலந்து நிக்குது"
* எல்லாம் ஒரே மாதிரித்தானே இருக்குது எப்பிடி வித்தியாசம் கண்டு பிடிக்கிறது?"
“அங்கை பாருங்கோ. இதிலையிருந்து ஆருவதாய் நிக் கிற வாழை, கப்பல் வாழை; அந்த வாழை இலையின் ரை கீழ்ப்புறத் தண்டைப் பாருங்கோ வெள்ளை நிறமாய் இருக் கும். புளிவாழையெண்டால் இலைத்தண்டு. சிவப்பாய் தெரி யும்.' ராசன் வடிவாக விளங்கப்படுத்தினன். அவன் குறிப் பிட்ட வாழையை சைக்கிள் அண்மித்த பொழுது, அந்த வாழை இலையின் கீழ்ப்புற நடுத்தண்டுகளை நன்கு அவதா னித்து, அவனின் விளக்கத்தில் திருப்திப்பட்டுக் கொண் டேன்.
சைக்கிள் தோட்டவெல்லையைக் கடந்து ஒழுங்கைக்கு ஏறியது.
‘என்னடா இது ? தச்சடம்பன் பாதைகள் எல்லாம் இப்பிடிப் பள்ளமும் திட்டியும் தானே ?? சைக்கிள் பள் ளங்களில் விழுந்தெழும்பும் பொழுது நான் கேட்டேன்.
“ஏனக்கா. உங்கட யாழ்ப்பாணப்பக்கம் இப்பிடி யொரு பாதையுமில்லையோ ?
அவனின் அந்தச் சிரமமான கேள்விக்குப் பதில் சொல் லத் தைரியமில்லாததால், "ஒருக்கால். யாழ்ப்பாணப் பக்கம் நீயே வந்து பாரன்’ என்றேன் சிரித்தவாறே,
35

Page 23
"வரத்தான் எனக்கும் சரியான ஆசையக்கா! ஆனல். என்ரை அம்மா என்னை இங்கை கொண்டுவந்து விடேக்கை என்ரை பிறந்ததேதி, பிறந்தஇடம், அப்பாவின்ரை பெயர். ஒண்டையும் சொல்லாமல் போயிட்டா. அதால அடை யாள அட்டை எடுக்கேலாமல் இருக்குது. "சும்மா வந்த னெண்டால், ஆனையிறவிலை வைச்சு அமத்திப் போடுவாங் கள். அதுதான் யோசிக்கிறன்.'
'ஏன்டா கொம்மாவிட்டை ஒருக்கால் போய், எல்லாத் தையும் வடிவாய் கேக்கிறது தானே ...? ' ,
'அம்மா இருக்கிற இடம் தெரிஞ்சிருந்தால். நான் ஆடிக்கலவரத்துக்கு முன்னமே போய்ப்பார்த்திருப்பன் பஸ்சுக்குள்ளை வைச்சு வெட்டிப்போட்ட பிறகுதான் ‘அம்மா? எண்டவள் இன்ன இடத்திலை இருந்திருக்கிருளெண்டு தெரி யும். ' அவனின் குரல் திடீரென்று தொய்ந்து போனது. எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்ட மெல்லிய அதிர்ச்சியிலிருந்து நான் மீண்டவாறே, −
** Utref Göt ... உப்பிடியான பிரச்சினை உள்ளாக்கள்
அடையாள அட்டை எடுக்கிறதுக்கு ஏதோ ஒருவழி இருக் கத்தானே வேணும். பொறு. நான் ஆரையும் விசா ரிச்சுப் பாக்கிறன். ? நான் அவனின் சோகத்தை மாற்ற முயற்சித்தேன்.
* உண்மையாத்தான் சொல்லுறியளோ ? ?"
‘பின்ன. சும்மாவே சொல்லுறன்” அவன் மீண்டும் உசார் நிலைக்கு வந்துவிட்டதுபோல் எனக்குப்பட்டது.
சைக்கிள் ஒழுங்கையைக் கடந்து, முல்லைத்தீவு - மாங் குளம் பிரதான வீதியில் ஏறி, ஐந்துமைல் தொலைவிலிருக் கும், மர்ங்குளம் ரவுணை நோக்கி விரையத் தொடங்கியது. அங்குதான் சித்தியின் ஒருமகள் திருமணம் செய்து, புது
36

வீட்டில் குடியிருக்கிருள். அங்கு போய்த் தங்கிநின்று, அதி கால யாழ்ப்பாண பஸ் எடுப்பது சுலபம் என்பதனல் தான், பொழுது இருட்டிக்கொண்டு வந்துவிட்ட போதிலும் எங்கள் பயணம் தொடர்ந்தது.
சைக்கிள் இப்போது ஒலுமடு பேராத்துப் பாலத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. -
'பாலம் வருகுது. கொஞ்சத் தூரம் இறங்கி நடந்து தான் போகவேனும்" என்ருன் ராசன்.
“ஏண்டா. பாலம் உடைஞ்சு கிடக்குதே ??’ அம்மா கேட்டா.
“இல்லை . மரப்பாலம் தானே; மேடும் பள்ளமுமாய்
கிடக்குது. அதுக்குள்ளை சைக்கிள் ஒடேலாது' என்
முன் அவன்,
சைக்கிள் வேகம் குன்றைந்து, மெதுவாகப் பாலத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.
“இங்கையக்கா. யானையின்ர லத்திக் கும்பம் கிடக் குது; நேற்றிரவு இவிடத்திலை யானை வந்து போயிருக்கு” என்றவாறே வீதியின் இடது ஒரமாகக் கிடந்த யானை லத்தியை அவன் சுட்டிக்காட்டினன். மெல்லிய பச்சை நிறத் தில் முடியில்லாத தேங்காய் மாதிரி உருண்டை உருண்டை யாகக் காய்ந்து கிடந்த லத்திக் கும்பங்களை அவதானித்த நான், தலையை நிமிர்த்தியபோது “பகிர்’ என்றது - கறுப் பாக. பிரமாண்டமாக.
“டேய் ராசன். யானையடா... !!? அவசதழாகக் கத்தினேன்.
** 6Tršraps...? என்ருன் அவன் மெல்லிய பதற்றத்துடன்,
37

Page 24
'அங்கையடா. அங்கை பார். " வீதியின் இடது புறக் காட்டிற்குள், வீதிக்கு மிகவும் அண்மையாக, கரிய பெரிய யானையொன்று தனித்து நின்றிருந்ததைச் சுட்டிக் காட்டினேன்.
சைக்கிள் டாலத்தை அண்மித்து விட்டதால் சைக்கிளி லிருந்து மூவரும் இறங்கி, அச்சத்துடன் அடிக்கடி திரும்பித் திரும்பி யானையைப் பார்த்துக்கொண்டு அவசரமாகப் பாலத்தால் நடக்கத் தொடங்கினுேம்.
"தனியணுய் வந்திருக்குது ! போன வருசமும் இந்தப் பாலத்தடியிலைதான் ரெண்டுபேரை யானை அடிச்சது!..' என்று முணுமுணுத்தவாறே ராசன் நடையை மேலும் துரி தப் படுத்தினன். பயத்தினுல் என் கைகளும் கால்களும் உத றல் எடுத்தன்! நான் மெதுவாக ஒடத் தொடங்கினேன். சற்றுத்தள்ளி, எம்மோடு சமமாக யானையும் வந்துகொண் டிருந்தது.
சுமார் பதினைந்துயார் நீளமான அந்தப் பாலம் கடந் ததும் மீண்டும் மூவரும் சைக்கிளில் ஏறிக்கொண்டோம். சைக்கிள் நகரத் தொடங்கியதும், ராசன் புதுத் தெம்பு வந் தவனுக,
‘இனிப் பயமில்லை! டேய். கள்ளவடுவா. இங்கை ஏண்டா வந்தனி ? . வாறன் பொறு. ஆய் .ஹாய்' என்று அட்டகாசமாகக் காட்டுக் கூச்சல் போட்டவாறே யானைக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டு சைக்கிளை ஓடி சூறன். இதுவரை நடந்து வந்துகொண்டிருந்த யானை, நடையை மெல்ல நிறுத்தி, நின்று, திரும்பி மரங்களின் இடை வெளியால் எம்மைப்பார்த்து, காதுகளை விசுக்கென்று அடித்து. ஒலியெழுப்பியது .
“என் இதயம் ஒருகணம் நின்று, பின் "படபட" வென அடிக்கத்தொடங்கியது!
38

“அது. அது. எங்களைத்தான் பாக்குதடா' நான் பயத்தில் நாக்குளறினேன்.
யானை இப்போ, பத்து யார் இடைவெளியில் நமக்குப் பின்னுல், நாம் சென்றுகொண்டிருந்த பாதையை அண்மித்து வீதிக்கு ஏறியது. · · ,
'gags, it Guit... ருேட்டுக்கு ஏறிட்டுதடா, சைக்கிளை ஸ்பீட்டாய் ஒடு. ' நான் என்னை மறந்து கத்தினேன்.
“சும்மா பயப்படாதேங்கோ அக்கா; அது எதிர்க்காட் டுக்குள்ளை போயிடும்' என்ருன் அவன் மெதுவாகத் திரும் பிப் பார்த்தவாறே.
இப்போ யானை எமக்குப் பின்னே சுமார் பதினைந்து யார் தொலைவில், நடுவீதியில் நின்று காதுகளை விசுக்கிப் பிளிறியது!
*டேய். ராசன் . ராசன்'" நான் பயத்தினல் அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கத்தத்தொடங்கிவிட்டேன்.
“அது போயிடும். நீங்கள் விழுந்து போடாமல் அப் பிடியே இருங்கோ' என்றவாறே சைக்கிளை இயலுமான வரை வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்தான் அவன். எதிர்க்காற்று வீசியதால் சைக்கிள் நகர மறுத்து அடம் பிடித்தது.
யானை இப்போ நம்மை நோக்கி வீதிவழியாக நடக்கத்
தொடங்கியது.
"ஐயோ. எங்களிட்டைத்தான் அது வருது, ஐயோ ராசன் நாங்கள் இறங்கி ஒடுவமடா" என்று கத்தினேன். இப்போ சைக்கிள் ஆட்டம் கண்டது. அவனுக்கும் வியர்த் துக் கொட்டத் தொடங்கியதை, அவனது முதுகுப்புறம்
39

Page 25
எனக்கு உறுதிப்படுத்தியது. காற்றுடனும் பயத்துடனும் போராடமுடியாமல் சைக்கிள் வளைந்து, திரும்பிச் சரிந்தது!
நான் சைக்கிளில் இருந்து குதித்து ஒடத்தொடங்கி விட்டேன். அவன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடத் தொடங்கினன். அம்மா கடைசியாக ஓடிவந்து கொண்டி ருந்தா. மூவர் முகங்களிலும் மரணக்களை1
'அம்மா. கவனம் அம்மா' நான் குரல் கொடுத்த வாறே ஒடிக்கொண்டிருந்தேன். அண்ணளவாக ஒரு ஆறு நிமிடங்களின் பின்னர் திரும்பிப் பார்த்தபொழுது, யானை எதிர்க் காட்டிற்குள் இறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது இப்போ தான் மூவர் முகங்களிலும் பழைய களை பிறந்தது *அப்பாடா. ’ என்றவாறே மூவரும் நின்று ஒன்று சேர்ந்து கொண்டோம். மூச்சு வாங்கியது. பயம் மாறியபோது இனம் புரியாத சிரிப்பு வந்தது. விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டோம்,
பழையபடி சைக்கிள் மூவரையும் சுமந்துகொண்டு ாவுணை நோக்கி விர்ைந்துகொண்டிருந்தது.
*அக்கா, ஒரு பொம்பிளை இவ்வளவு வேகமாய் ஒடு றதை இண்டைக்குத்தான் நான் கண்டஞன்."
*சும்மாயிரடா; எனக்கு இப்பவும் அந்த ‘ஷொக் போகேல்லை? நான் சிரித்தேன்.
“லா. லா. லலலா. லா. லா. * அவன் இனிய மெட்டில் மெதுவாகப் பாடலிசைத்தான்.
சைக்கிள் மாங்குளம் ரவுணைக் கடந்து, வீட்டினுள் நுழைந்து, முற்றத்தில் கிறீச்சிட்டு நின்றது.
40.

வீட்டினுள் இருந்தவர்கள் வெளியில் ஓடிவந்து, மகிழ்ச் சியுடன் எம்மை வரவேற்றனர். நானும் அம்மாவும் உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக யானைக்கதையை ஆரம்பித் Gisst uħ. -
ராசன் வெளி முற்றத்திலேயே சைக்கிளுட்ன் நின்றி ருந்தான். -
*ராசன். நீயேண்டா நிக்கிருய் ? நல்லாய் இருண்டு போச்சு! அங்கை அம்மா காத்துக்கொண்டிருப்பா. நீ கெதியாய்ப் போய்ச்சேர்? சித்தியின் மகள் வீட்டு வாசலில் நின்றவாறே வெளியில் எட்டிப்பார்த்துக் குரல் கொடுத் தாள்.
**சரி.? அவன் தலையசைத்துவிட்டு கேற் வாயிலை நோக்கி நடந்து, பின் தயங்கி நிற்பது வாசல் கதிரையில் அமர்ந்திருந்த எனக்கு நன்கு தெரிந்தது.
* என்னடா ? . பிறகுமென்ன யோசிக்கிருய் ??? சித் தியின் மகள் வாசலோடு அமர்ந்தவாறே மீண்டும் குரல் கொடுத்தாள்.
*'பாவம்! நல்லாய்க் களைச்சுப் போட்டான். . நான் மனம் பொறுக்காமல் மெதுவாகக் கூறினேன்,
“உவன் உப்பிடித்தான் . கதை குடுத்தால், இங்கேயே மினக்கெடுவான்; அங்கை போய் மாடெல்லாம் பட்டியில சேர்க்க வேணும். அவன் போய்ச்சேரட்டும்." அவள் அவனை அனுப்பி வைப்பதிலேயே கண்ணுயிருந்தாள். அவன் திரும்பி எதையோ எதிர் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தான். நான் மெல்ல எழுந்து, முற்றத்தில் இறங்கி அவனை அண் மித்தேன். V
* ராசன் . என்ன யோசிக்கிருய் ?’ மெதுவாக, ஆதர வாகச் கேட்டேன்.
41

Page 26
"ஒண்டுமில்லையக்கா. நீங்கள். டோடுவியள்தானே?"
“ஓம். அதுக்கென்னடா இப்ப ? ' “இல்லையக்கா. நீங்கள் போகேக்கை நான் வழியனுப் நிக்கமாட்டன். அதுதான். '
“அதுக்கென்னடா. இப்ப வந்து வழியனுப்பி வச்சிருக் கிருய் தானே? " நான் சிரித்துச் சமாளித்தவாறே கேட் டேன்.
*சரியக்கா. சுகமாய் போயிட்டு வாங்கோ; கடிதம் போடுவியள் தானே ? ?"
*சுகமாய் போயிட்டு வாறத்திலையும், கடிதமூலமாய் குச லங்கள் விசாரிக்கிறதிலையும் எனக்கிப்ப நம்பிக்கை இல் ஆலயடா! " w
“அது சரியக்கா. முடியுமானளவு முயற்சி செய்யிறது. தானே.”*
‘சரி, கட்டாயம் முயற்சி செய்யிறன்.'
*ஊர் நிலைமையையும் மறவாமல் எழுதுங்கோ; காத் துக்கொண்டிருப்பன்.""
நான் ஆச்சரியம்ாக அவனைப்பார்த்தேன்.
“நான் சாகிறதுக்கிடையில ஒருக்காவாவது அந்தப் பக் கம் வருவன்தானே' -அவனது வார்த்தையில் தெரிந்த உறுதி, பார்வையிலும் தெறித்ததை அரைகுறை ஒளியில் அவதானிக்க முடிந்தது.
"அவனின் அடையாள அட்டை பற்றி அவசியம் விசா ரிக்க வேணும்' நான் உள்ளூரத் தீர்க்கமாக நினைத்துக் கொண்டபோது, “ராசன். இன்னும் போகேல்லையோ ? ?? என்ற குரல் வீட்டுக்குள்ளிருத்து வந்து நம் செவிப்பறை களில் அறைந்தது!
42

‘போயிட்டு வாறனக்கா'" அவன் அவசரமாக விடை பெற்றுக்கொண்டு சைக்கிளில் ஏறியபோது, இடுப்பிலிருந்து கற்றையாக நழுவிய கடதாசிச் சுருளை, சட்டென்று பற்றி பவன் மீண்டும் உள்ளே தள்ளிச் சொருகி விட்டுக் கொண்டான்.
“என்னடா. அது ? ' “கடுதாசிகள். ' அவன் மெலிதாய்ப் புன்னகைத்தான். “சிவப்பு அச்சாய் தெரியுது. ? "
"நாளைக்கு பஸ் ஏறேக்கை சந்திச் சுவரிலை வடிவாய்ப் பாப்பியள் தானே.”
சட்டென்று அதிர்ந்து டோன நான், “டேய் என்ன சொல்லுருய்?' -அவசரமாகக் கேட் டேன்.
* பிளிஸ், அவையளுக்குச் சத்தம் போடாதையுங்கோ. நான் போயிற்றுவாறன் " -மெலிதாகக் கூறியவன் தலையை அசைத்துவிட்டு சைக்கிளைத் திருப்பினுன்,
வாய் திறக்க முதல் சைக்கிள் வீதியில் ஏறிக்கொண் டிருந்தது. அவனின் ஷேட் வியர்வையில் ஒட்டிப் போயிருந் தது. தலே முடி கலைந்து பறந்து கொண்டிருந்தது!
சைக்கிளின் பின் சிவப்பு லேற் வேகமாக நகர்ந்து கொண் டிருக்க, நான் கேற் வாயிலில் நின்றவாறே உள்ளே திரும் பிப் பார்த்தேன்.
அவர்கள் சாதாரணமாகக் கதைத்துக்கொண்டிருந்
தார்கள்.
1986

Page 27

நிச்சயிக்கப்படாத fjJulfilki
குறுநாவல்

Page 28

*ண்விழித்த அவள் படுக்கையில் கிடந்தவாறே மெல் லத் திரும்பி, ஜன்னலினூடாகப் பார்வையைச் செலுத்தி ள்ை. வானம் சிறிது வெளுத்துக்கிடந்தது. பொழுது புலருவ தற்கான அறிகுறிகள் தெரிந்தன. அவள் தலையைத் திருப்பி, தலைமாட்டில் கிடந்த மணிக்கூட்டைப் பார்த்தாள். மணி 5.20 ஐக் காட்டிக்கொண்டிருந்தது. சற்றுத் தள்ளியுள்ள கட்டிலில் தூக்கத்திலிருந்த சுகந்தி புரண்டு படுப்பது தெரிந் தது. வீட்டில் யாரும் எழும்புவதற்கான அறிகுறிகள் தெரிய வில்லை. அவளுக்குச் சற்று நேரம் படுக்கையிலேயே கிடக்க வேணும்போலிருந்தது. இரு கைகளையும் தலைக்குக் கீழே மடித்து வைத்தபடி முகட்டைப் பார்த்துக்கொண்டிருந் தாள்.

Page 29
"பன்ரெண்டாம் திகதி.புதன்கிழமை ராம் வாருளும்' தாயார், தந்தையிடம் முதல் நாள் கூறியது அவள் ஞாபகத் திலேயே இருந்தது. இன்று புதன் கிழமை; பன்னிரெண்டாம் திகதி!
*ராமத்தான். இப்ப கனடாவிலையிருந்து கொழும் புக்கு வந்திருப்பார். "இன்டசிற்றி வர பன்னிரண்டு மணி யாகும்; அப்புறம்." அவளுக்கு முகம் சிவந்தது. தனிமை யின் இனிமையான நினைவுகளில் மனம் சிலிர்த்தது.
'சாந்தி. சாந்தி.எழும்பனை; எழும்பி. தேத்தண் ணியை ஊத்து; எனக்கு ஒரே அலுப்பாய்க் கிடக்குது . நல்ல பிள்ளையெல்லே. என்ன எழும்புநியே?" --சிவகாமி அடுத்த அறையிலிருந்து குரல் கொடுத்ததும் திடுக்குற்ற அவள், சிந் தனையிலிருந்து விடுபட்டவாறே படுக்கையை விட்டு எழுத் தாள்.
சத்தம் கேட்டுக் கண்விழித்த சுகந்தி, கைகளை நீட்டி மடித்து உளைவெடுத்தவாறே, "அக்கா. நேரமென் னக்கா?" என்றவாறே கொட்டாவி விட்டாள்.
*அஞ்சரையாகுது'
அவள் முறுகியவாறே, விலகிய போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு மறுபக்கம் திரும்பிக் கண்களை மூடிக் கொண்டாள். V
‘பாவம் ஏ. எல். ரெஸ்ற் வருகுதெண்டு இரவிரவாய் படிக்கிருள்; ஒரே அசதியாக்கும்! மனதிற்குள் நினைத்த வாறே சாந்தி முகம்கழுவப் போய்விட்டாள்.
தண்ணீரைக் கொதிக்கவைத்துவிட்டு, வெளியில் கிடந்த ஆட்டுக்கல்லில் வந்து உட்கார்ந்துகொண்டவளுக்குச் சுற்றிச் சுற்றி அதே நினைவாகவே வந்தது. அவள் கைகள் கன்னங் இ8ளத் தாங்க, சிந்தனைகள் சிறகடிக்க ஆரம்பித்தன.
48

ராம் வெளிநாடு போய் ஐந்து வருடங்களாகின்றன.
'இப்ப நல்ல்ா. வளர்ந்து, இன்னும் நல்ல சிகப்பாய்,
நிறைய சுருள் முடியோடை, கமல் மீசையோட. அழகா
" ..நல்ல அழகா. அவ்ஸ் மனம் அவனின் பழைய உரு
வத்தை மெருகுபடுத்திப்பார்த்தது.
அப்பொழுதெல்லாம்-அவளுக்குப் பதினறு வயதிருக்கும், அவனுக்கு இருபத்திரண்டு வயதிருக்கும்- நாயும் பூனையும் மாதிரி, ராமும் சாந்தியும் சண்டை போடாத நாட்களே கிடையாது. துடுக்கான அவள் வாயைக் கிளறிவிட்டு, ராம் அவளை ‘கறுப்பி. கறுப்பி" என்று கிண்டல் பண்ணுத நேரமும் கிடையாது. சதா நடைபெறும் அந்தக் கிண்டலும் சண்டை யும் வழக்கமாகிவிட்டதனல் பெரிய்வர்களுக்கு அவை பெரி தாகத் தெரியவில்லை. அவர்கள் ஒரு புறம் இவர்கள் ஒரு புறம்!
அன்று ஒருநாள் வெள்ளிக்கிழமை. சாந்தியும் சுகந்தியு மாகக் கோயிலுக்குப் போய்விட்டு வரும்வழியில், மாமியிடம் போய், மாமிக்கும் திருநீறு, சந்தனம் கொடுக்கலாமென் றெண்ணி அவர்களது வீட்டிற்குப் போனசமயம், வெளி ‘விருந்தா"வில் ராம் மட்டும் உட்கார்ந்திருந்தான்.
‘மாமி நிக்கிருவோ ?" என்று சாந்திதான் கேட்டாள். *தெரியாது’ ராம் அலட்சியமாகப் புன்னகையுடன் கூறியதும், அவள் உள்ளே எட்டிப் பார்த்தாள். உள்ளே யாரும் இருக்கவில்லை.
‘மாமாவும் இல்லையே ?' அவள் மீண்டும் கேட்டாள். *தெரியாது’ “இப்ப வந்திடுவினமே?
49

Page 30
*தெரியாதெண்டிறன்..!"
அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்தது.
‘ம். காலையில சாப்பிட்டீங்களா?" கோபத்தை அடக் கியவாறே சற்றுக் கேலியாகக் கேட்டாள்.
*" தெரியாது'
‘உங்களுக்கு மண்டையில மூளை இருக்கா?”
*தெரியாது'
*சரியா.ன மக்கு' சட்டென்று சினத்தோடு திரும்பிய அவள், w
'வாடி சுகந்தி, நாங்கள் போவம், மாமியும் மாமாவும் வந்த உடனே, நீங்கள் பிள்ளையைப் பெத்தீங்களா? இல்லை. கல்லைப் பெத்தீங்களா ? எண்டு கேக்கவேணும்' கூறிவிட்டு விறுவிறுவென்று கேற்றை நோக்கி நடக்கத் தொடங்கினுள்.
"சுகந்தியம்மா. கல்லு ஒருநாளும் கதைக்கமாட்டு தெண்டு அக்காவிட்டைச் சொல்லம்மா' ராம் சற்றே சத்த மாகக் கிண்டலாகக் கூறியதும், சட்டென்று நின்று வெட் டித் திரும்பிய சாந்தி,
“ஒஹோ! ஐயாவுக்கு ஒண்டும் தெரியாது; ஆனல் இது மட்டும் தெரியுமாக்கும். இதுக்கு . நோபல் பரிசு குடுக்காட் டில் உலகம் பொறுக்காதடி' அதே கிண்டலோடு கூற, சுகந்தி அடக்க முடியாமல் சிரித்தாள்.
"சுகந்தி., இவளின்ரை. நெற்றியில வைச்சிருக்கிற சந்த னம் எவ்வளவு அழகாய் பளிச்சென்று தெரியுது பாத்தியே! ...கருங்கல்விலை காகம் எச்சம்போட்டமாதிரி..!" ராம்
50

அடங்கிப்போய்விடாமல் மீண்டும் அபிநயத்தோடு கூறியதும் *குபுக் கென்று மீண்டும் சிரிக்க ஆரம்பித்த சுகந்தியைக் கோபத்துடன் முறைத்தவள்,
“எனக்குத் தெரியும்; அண்டைக்கு . நான் ஸ்கூலாலை வரேக்கை. மற்றப் பெடியங்களோடை சேர்ந்து, சித்திரா வோட சேட்டை பண்ணினதுபற்றி, நான் வந்து மாமாவிட் டைச் சொல்லிப்போட்டனெண்டுதானே இவ்வளவு நக்கல் பேச்சு!. நீங்கள் என்னைப் பழிக்கப் பழிக்க. நானும் நீங் கள் கேள்ஸ் ஓட சேட்டை விடுறதைப் பற்றி மாமாவிட்
டைச் சொல்லிக்கொண்டேயிருப்பன். அவருக்கு . தான் சிவப்பு எண்டதில, பெரி.ய மன்மதராஜா எண்ட நினைப் பாக்கும்! சரியா.ன லெவல்!" சாந்தி படபடவென்று
பொரிந்து தள்ளிவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் சுகந்தியை யையும் இழுத்துக்கொண்டு போய்விட்டாள்.
ஒரு தடவை, சாந்தி பாடசாலைக்குப் போய்விட்டுவரும் வழியில், ராமும் அவனுடைய சினேகிதர்களும் கூட்டமாக நின்றிருந்தார்கள். அந்தக் கூட்டத்தை அவள் கடக்கும் பொழுது,
“என்னெண்டாலும் . கறுப்பிலை ஒரு தனி . அழகு இருக்கடா..? ஒரு இளைஞனின் குரல் கேட்டுத் திடுக்குற்ற அவள், திரும்பிப் பார்த்தபொழுது, ராம் அலட்சியமாக நின்றிருந்தான். கோபமும் ஆத்திரமும் பொங்க அவள் வேக மாக நடந்து கொண்டிருந்தாள்.
வீட்டிற்கு வந்த வேகத்தில், தாய்- சிவக்ாமியிடம் கூடச் சொல்லாமல், செல்லநாதரின் வீட்டிற்குப் போய் முறையிட்டாள். அவள் சொல்லிமுடித்தபோது ராமும் வந் திருந்தான். ...
“டேய்! சந்திக்குச் சந்தி நிண்டு . ருேட்டாலை போற வாற பெட்டைகளைப் பார்த்து, சொட்டை நொட்டை
S1

Page 31
சொல்லுறதுதான் வாழ்க்கை எண்டு முடிவுபண்ணிட் டியோ?" செல்லநாதர் கோபமாகவே அதட்டினர்.
"ஐயா. அது. வந்து நாணில்லை ஐயா; நான் வாயே திறக்கயில்லை; வேணுமெண்டால் அவளையே கேட்டுப் பாருங்கோ’ ராம் தடுமாற அவளுக்குக் கோபம் மறைந்து சிரிப்பு வந்தது. கைகளால் உதடுகளை அழுத்திக்கொண் L-sf6f.
“சீ! . கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் சொல்லு றியே? . அவள் உனக்கு மச்சாளடா; ஆரோ தெரியாத ஒருத்தியை, ஆரோ தெரியாத ஒருவன் சேட்டை பண்ணி ஞலும் பரவாயில்லை . உன்ரைமச்சாளை உனக்குப் பக்கத்தி லேயே நிண்டு சேட்டை பண்ணிற அளவுக்கு நீ அவங்களை விட்டு வைச்சிருக்கிறியே!? ச்ெல்லநாதர் குறுக்கும் நெடுக்கு மாக நடந்தவாறே அவனை முறைத்தார்.
சட்டென்று அடங்கிப்போன ராம், “ஐயா, நான். அந்த நேரம் பேசாமல் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனல் .சாந்தி அங்காலை மறைஞ்சுபோனபிறகு, அவனுக்கு நல்ல ஏச்சுக்குடுத்தனன். இனிமேல் ஒருநாளும் என்ரை ஃப் ரெண்ட்ஸ் சாந்தியோட சேட்டை விடமாட்டினம்’ தயங் கியவாறே கூறிமுடித்தான்.
‘மாமா.நான் போயிட்டுவாறன்' சாந்தி பொங்கி வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் கஷ்டப்பட்டவாறே விடை பெற்றுக்கொண்டு போய்விட்டாள்.
அவனின் இருபத்துமூன்றுவது வயதில் அவன் வெளி நாடு போக ஆயத்தமானன். பயணம் போகும் தினத்தன்று சாந்தியின் தாய்தந்தையரிடம் விடை பெற்றுக்கொண்டு போவதற்காக அங்கு ராம் வந்திருந்தான். எல்லோரிடமிருந் தும் விடைபெற்றுக்கொண்டவன் , சாந்தியின் அருகில் வந்த
52

தும் 'காக்கைச் சிறகினிலே. பாடல் வரிகளை முணு முணுத்தவாறு வெளியேறியது அவளுக்கு இன்னமும் நன்ருக ஞாபகத்தில் இருந்தது.
அவளையுமறியாமல் அவள் உதடுகள் விரிய, மெல்லத் தலையைக் குனிந்தாள். வலது காலப் பெருவிரல் தரையில் கோலமிட ஆரம்பித்ததும் மனக்குயில் கீதம் இசைக்க ஆரம் பித்தது.
*சிவகாமி, சாந்தியின்ரை. சாதக ஒலையைக் கொண்டு வாவன்’
"அண்ணே, வீடு தூசி தட்டிக் கூட்டிக் கழுவேக்கை, அது 6ாங்கேயோ இடம்மாறிப் போச்சுது; நான் பிறகு பாத் தெடுத்துத்தாறன் . பொருத்தமென்ன பாக்கவேண்டி யிருக்கு? . அதெல்லாம் நல்லாய்ப் பொருந்துமண்ணை; ஆணுல்.இவள் கொஞ்சம் கறுப்பி; அவன் நல்ல சிவலை! அதுக் குத்தான் ராம் ஏதும் சொல்லுருனுே ?”
'கம்மா பேக்கதை கதையாதை கண்டறியாத கறுப் பும் சிவப்பும்தான்; ஏன் .உன்ரை கறுவல் மனுசனையும் க. .ப்போறனெண்டு நீ ஒற்றைக் காலிலை நிக்கேல்லையே .??
緣
"ச். சும்மா போங்கோ அண்ணை; அது .அவர் ஆம் lଆst...''
'நான் கட்டச் சொன்னல் அவன் கட்டத்தான் வேணும். எனக்கிருக்கிறது அவன் ஒருத்தன்தான்; அவனை எப்பிடியும் உன்ரை வீட்டுக்குள்ளைதான் மாப்பிள்ளையர்க்கு வன்; நீ யோசியாதை.'
முதல்நாள் சிவகாமியும் செல்லநாதரும் பேசிக்கொண் டவை அவள் நெஞ்சிலே கோலமிட்டன.
53

Page 32
ராமிற்கும் அவளுக்குமிடையிலான பழைய குறும்புத் தனமான விரோதங்களை நினைக்க, அவளுக்கு இப்பொழுது வேடிக்கையாகவே இருந்தது.
*அப்பவே. கறுப்பி.கறுப்பி எண்டு சொல்லிப் பழிக் கிறவர், இப்பவும் 'கறுப்பி எண்டு சொல்லிக் கல்யாணம் பண்ணமாட்டார் எண்டால் ?' மனதின் ஒரு மூலையில் அடிக்கடி அந்தக் கேள்வி எழாமலும் இல்லை.
*கல்யாணம் செய்யமாட்டார் எண்டால்...இப்ப என்ன வந்தது?; இவரைவிட வேற ஒருத்தனுமே எனக்கில்லாமல் போய்விடுவானே? அவ்வளவு பெரிய நடப்பிருந்தால் இருக் கட்டும்; எனக்கென்ன? அப்படியெழும் கேள்விகளுக்கு இப் படியொரு பதிலை அலட்சியமாகச் சொல்லிவிட்டு அமைதி யடைந்துகொள்வதில் அவள் மனம் ஆறுதலடைந்துவிடும்.
“அக்கா! இது . சரிப்பட்டுவராது; நீங்கள் அடுப்பில தண்ணி கொதிக்கவைச்சு, அரைமணித்தியாலமாகுது !" எதி ரில் நின்றிருந்த சுகந்தி கிண்டலாகக் கூறியதும் திடுக்குற்ற சாந்தி, சட்டென்று சிந்தனைகளிலிருந்து விடுபட்டு,
*ஏய்.எப்ப எழும்பினனி.?"புன்னகையுடன் தடுமாறி 6, -
“நானே?. நான் எழும்பி, பல்லு மினுக்கி, முகம் கழுவி, திருநீறு பூசி, ரீ குடிக்கிறதுக்காக வந்து நிக்கிறன். நீங்கள் நேரத்தைக் கணக்குப்பாருங்கோ" சுகந்தி கூறியதும் ஆச் சரியத்தோடு சட்டென்று இருக்கையை விட்டெழுந்த சாந்தி சமையலறைக்குள் ஒடிஞள்.
அடுப்பிலிருந்த கேத்தில் மூடி மேலெழுந்து ‘குப் குப் பென்று ஆவியை வெளியேவிட்டுக்கொண்டிருந்தது.
54

சாந்தி வீட்டைக் கூட்டிப் பெருக்க ஆரம்பித்திருந்தாள். வழமையை விட அக்கறையாக, அழகாக வீட்டைத் தூய் மையாக்கினுள். மேசை விரிப்புகள், கதிரைச் சீலைகளில் கவ னம் செலுத்தி அழகு படுத்தினுள். ஒட்டமும் நடையுமாகப் பூமரங்களுக்குத் தண்ணிர் ஊற்றி, அவற்றைக் குளுமைப் படுத்தினுள். கால்களும் கைகளும் பம்பரமாக அசைந்து கொண்டிருந்தன. அவளது ஒவ்வொரு செயல்களும் உற்சாக மாக, ஆர்வமாக, மிதமான எதிர்பார்ப்புகளுடன் நடைபெற் றுக்கொண்டிருந்தன. ராம், வீட்டிற்கு வந்தால் வீடு பளிச் சென்று அழகாக இருக்கவேண்டும் என்ற ஆசை அவளுள் நிறைந்திருந்தது.
அவள் நெற்றியில் வழிந்த வியர்வையைக் கைகளால் வாரிவிட்டுக் கொண்டாள்.

Page 33
“என்ன. இண்டைக்கு வேலையெல்லாம் தடல்புடலாய் நடக்குது " காலைக் கடன்கள முடித்துக்கொண்டு வந்த சிவராசர், முகத்தைத் துடைத்தவாறே ஆச்சரியமாகக் கேட்டதும், சாந்தி பதில் கூற முடியாமல் புன்னகையோடு தலையைக் குனிந்து கொண்டாள். சுகந்தி கண்களைச் சிமிட் டிச் சிரித்தவாறே,
"அப்பா.இண்டைக்கு ஆரோ விசிற்றேர்ஸ் இங்கை வரப்போகினம் போலை கிடக்குது’ விடயம் விளங்கிவிட்டது போல் சாந்தியைப் பார்த்தாள். தனக்குள்ளே நாணிப் போன சாந்தி, மீண்டும் புன்னகை சிந்திச் சமாளித்தவாறே காரியத்தில் கண்ணுயிருந்தாள்.
பாடசாலைக்குப் புறப்பட ஆயத்தமான சுகந்தி, வேலை களை முடித்துவிட்டு ‘அப்பாடா" என்று வந்தமர்ந்த சாந்தி யிடம்,
“அக்கா, இண்டைக்குக் கொஞ்சம் விடை சுடுங்கோ வன்' என்ருள் கெஞ்சலாக,
“ஏன் ? ? சாந்தி புரியாமல் வினவினுள்.
“ஏனே ?. ராமத்தானுக்கு வடை எண்டால் சரியான விருப்பமெண்டதை மறந்து போட்டியளே ? ' சுகந்தி கிண் டலாகக் கூறிவிட்டு, ஒட்டமும் நடையுமாகப் பாடசாலைக் குப் புறப்பட்டு விட்டாள். சாந்திக்கு, அவள் கூறியதி லிருந்து அவள் தன் மனநிலையைப் புரிந்து விட்டாளென்று நினைக்கும் பொழுது, வெட்கமாகவும் சிரிப்பாகவும் இருந்தது.
"சுகந்தி சொன்னமாதிரி கொஞ்சம் வடை சுட்டால் நல்லாய்த்தான் இருக்கும்" என்று எண்ணியவள் ஒசைப் படாமல் எழுந்துசென்று, உழுத்தம் பருப்புப் பேணியைத் திறந்து பார்த்தாள். அவள் ஆசைக்கு மோசமில்லாமல் பேணியில் உழுத்தம் பருப்பு நிறைந்திருந்தது.
56

'அம்மா. உழுந்து கொஞ்சம் ஊறப்போடட்டே?” தயங்கியவாறே தாயைக் கேட்டாள்.
"ஏன்.? என்னத்துக்கு?."
“வடை சுட்டுச் சாப்பிடவேணும் போலை ஆசையாய் இருக்குது; சுகந்தியும் ஆசைப்பட்டுக் கேட்டாள் ' உள் ளத்தில் எதையோ வைத்து, உதட்டால் எதையோ வெளி யிட்டாள். அவளது ஆசை அவளுக்கே வேடிக்கையாக இருந்தது.
*ஏன். மத்தியானச் சமையல் எல்லாம் முடிஞ்ச பிறகு ஊறப்போட்டால் கணக்கா இரவைக்குச் சுடலாம்; பிறகு பின்னேரம் ஆரும் வருவினம் போவினம்; அதுக்குள்ளை ஏன் கரைச்சலை ? சிவகாமி கூறியபொழுது, அதுவும் சரியென்றே அவளுக்குப் பட்டது. இருந்தாலும் அவன் பயணத்தால் வந்து, உடனே இங்கேயும் வருவானென்ருல் மனதிற்குப் பிடித்தமான எதையாவது கொடுத்து வரவேற்க வேண்டு மென மனம் துடித்தது.
மதியம் 12.00 மணி அடித்தபொழுது, அவள் குளித் துப் பொட்டுவைத்து, இரட்டைப்பின்னல் சடையுடன், அயர்ன் பண்ணிய, மடிப்புக்கலையாத அரைப்பாவாடை யும் சட்டையுமாக அழகாக இருந்தாள்.
மணிக்கூடு பிற்பகல் 3.30 மணியைக் காட்டிக்கொண் டிருத்தபோது அவளுக்கு நிம்மதியில்லாமல் இருந்தது. நேரம் செல்லச் செல்ல மனம் ஏனே துணுக்குற்றது. தற்போதைய பத்திரிகைச் செய்திகள் ஞாபகத்தில் வர, அவளுள் விதம் விதமான பய உணர்வுகள் தோன்ற ஆரம்பித்தன.
*ராமத்தான் கட்டாயம் இண்டைக்கு வருவன் எண்டு தானே கடிதம் எழுதியிருந்தவர் எண்டு மாமி சொன்னவ. ஒருவேளை இண்டைக்கு யாழ்ப்பாணம் வாற றெயினைக்
57

Page 34
கான்சல் பண்ணிப்போட்டாங்களோ? அவள் மனம் பல வாருக எண்ணிக் குழம்பிக்கொண்டிருந்தது. கையில் அகப் பட்ட ஒரு நாவலைத் தூக்கி வைத்துக்கொண்டு புலனை அதில் செலுத்த முடியாமல் அலட்டிக் கொண்டிருந்தாள்.
வியர்த்து, வாடிப் படித்த களைப்போடு பாடசாலையால் வந்த சுகந்தி, மேசை மீது புத்தகம் கொப்பிகளைத் தொப்
பென்று போட்டுவிட்டு, அருகிலிருந்த கதிரையில் s9.f5 TulunrF
மாக உட்கார்ந்து கொண்டாள்.
*அப்பாடா இண்டைக்கு ஒய்வில்லாமல், நோட்ஸ் எழு இனதி2லயே கைவலிக்குது” என்றவாறே விரல்களை நீவி விட்டுக் கொண்ட அவள்,
நாளைக்கும் நாளையிண்டைக்கும் முழுநேர ஊரடங்குச் சட்டமாம் அவங்கள் நினைச்சநேரம் ஊரடங்குச் சட்டம்போட பாடெல்லாம் எங்களுக்குத்தான். மாஸ்ரரும் விட்டால் தானே; மூண்டுநாள் படிப்பைச் சேர்த்து, ஒரு நாளிலேயே எங்கட மூளைக்குள்ளை செருகி விட்டிட்டார்.” என்று அலுத் துக் கொண்டபொழுது, திடுக்குற்ற சாந்தி,
“என்னது?. ஊரடங்குச் சட்டடோ?" பதற்றத்தோடு கேட்டாள்.
“பின்னையென்ன? இண்டைக்குப் பின்னேரம் அஞ்சரை மணிக்கே யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பெல் லாம் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருதாம்; நீங்கள் இங்கை றேடியோ கேக்கேல்லையே?. ஸ்கூலிலை உதைப் பற்றித்தான் ஒரே கதை.!. அது சரி, ராமத்தான் இன் னும் வரேல்லையே?’ ஆவலாகக் கேட்ட சுகந்தி, திரும்பிய பொழுது சாந்தி வானெலியை அவசரம் அவசரமாக முடுக் கியபடி நின்றிருந்தாள். -
58

வானெலியில் நிமிடங்களிற்கு நிமிடம், ஊரடங்குச் சட் டம் அமுல் செய்வது பற்றியே அறிவிக்கப்பட்டுக் கொண் டிருந்தது. சாந்திக்குக் கையும் ஒடவில்லை; காலும் ஒட வில்லை! அவளது மனநிலையைப் புரிந்துகொண்ட சுகந்திக்கு அவளைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. நிறைய அபிலாசைகளை மனதிலே தேக்கி வைத்துக் கொண்டு, தன் கரம் பற்ற இருக்கும் ஜீவனை எதிர்பார்த்து, ஏக்கம் நிறைந்த கண்களுடன் காத்திருக்குமந்தத் தேர்ற்றம் அவ ளுள் ஒருவித பச்சாத்தாபத்தையே ஏற்படுத்தியது. அவள் அக்காவிற்கு ஆறுதல் கூற முடியாமல் சிந்தனையோடு, உடை களே மாற்றுவதற்காக, அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
செல்லநாதரின் வீட்டிற்குப் போய்விட்டு வந்த சிவகா மியும் சிவராசரும் இனம் புரியாத பீதியில் நிலைகுலைந்தி ருப்பது தெரிந்தது. அவர்களிடம் ராம் பற்றிய ஏதாவது தகவல்களை அறிந்து கொள்ளலாமென ஆவலோடு ஓடிவந்த சாந்தியை, அவர்களது கலவரம் நிறைந்த முகங் கள் எதையுமே கேட்க வேண்டிய தேவைகளில்லாமல் மெளனமாக்கி விட்டன:
“கொழும்பில தங்கி நிக்கிறதுக்கு வசதியாய் ஒரு இட மும் இல்லையெண்டு. எப்பிடியும் இண்டைக்கு வந்திடுவன் எண்டு ஒண்டுக்கு. ரெண்டு கடிதம் போட்டவனும் ஆரோ சினேகிதப் பெடியனின்ரை காரில வாறன் எண்டு ஒருத்தரையும் ஸ்ரேசன் பக்கம் வரவேண்டாமெண்டு எழு தினதால, ஒருதரும் கூட்டிக்கொண்டு வாறதுக்கும் போக யில்லை; என்னபாடோ தெரியேல்லை.? சிவகாமி கேற் வாயிலூடாக ருேட்டைப் பார்த்தவாறே தனக்குத்தான்ே: முணுமுணுப்பது கேட்டதும், ‘ஆண்டவனே! அவருக்கு ஒரு ஆபத்தும் வந்திடக் கூடாது" என்று சாந்தி கடவுளை மன தார வேண்டிக்கொண்டாள். .
59

Page 35
“போனகிழமை, வெளி நாட்டிலையிருந்து வந்த தமிழ் பொடியங்களை கொழும்பிலை வைச்சு “அவங்கள்’ பிடிச்சுக் கொண்டுபோனது ஞாபகமிருக்கே? கொஞ்சப்பேரிட்டைச் சாமான்களைப் பறிச்சுக்கொண்டு விட்டிட்டாங்களாம்; கொஞ்சப்பேரை விடவேயில்லையாம். எனக்கு. அதுதான் யோசனையாய் இருக்குது..." சிவராசர் சாய்மனைக் கதிரை யில் சரிந்தவாறே பெருமூச்சுடன் கூறிக்சொண்டார்.
சாந்திக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது. பெற் ருேரின் முடிவினுல், கடந்த இரண்டு நாட்களுள், அவன் மீது உருவாகிவிட்ட ஒருவித அன்பும் பாசமும் இந்தத் தவிப்பு நிறைந்த எதிர்பார்ப்பில் இன்னுமின்னும் பன் மடங்கு அதிகரித்துக் கொண்டு போவது போன்ற உணர்வு அவளுள் தோன்றியது.
சுகந்தி நிமிடத்துக்கொரு தடவை கேற் வாசலுக்குச் சென்று பார்ப்பதும், உள்ளே வருவதுமாக இருந்தாள். வீதி வழியாகச் சென்றுகொண்டிருக்கும் வாகனங்களின் உறுமல் ஓசைகள் ஒவ்வொரு தடவையும் அவர்கள் பொறுமையை சோதிப்பவையாக இருந்தன.
*சாந்தி! நாலு மணியாச்சுது; அப்பாவுக்குத் தேத் தண்ணியை ஊத்திக்குடு” சிவகாமி கூறியபொழுது, சாந் திக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.
"இங்கை . எனக்கிருக்கிற யோசனைச்குள்ளை. இவைக் கொரு தேத்தண்ணி வேண்டிக்கிடக்குது! தனக்குள் முணு த்தவள் கொஞ்சமும் மனமில்லாமல் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
கொதிக்கவைத்த நீரைத் தேயிலையுடன் கலக்கும் பொழுது கைகளில் தெறித்த கொதி நீரினல் கைவிரல்கள் "பகயக" வென்று எரியத் தொடங்கியதும், அவள் வேதனை
60

யில் உதடுகளைப் பற்களால் அழுத்தியவாறே தொப்பென்று கேத்திலை வைத்துவிட்டு, உப்பு நீரில் கை விரல்களை நனைத்தாள்.
வெளியே கார் ஒன்று இவர்களின் வீட்டை வேகமாகக் கடந்து, ஒழுங்கை வளைவில் கிறீச்சிட்டு நிற்கும் ஒசை இவள் காதில் விழுந்ததும், காதுகளைக் கூர்மையாக்கிக் கொண் டாள். ஏதோ ஒருவித நம்பிக்கையில் சட்டென்று முகம்மலர அவசர அவசரமாகத் தேனீரைக் கலக்கிக்கொண்டு வெளி யில் வந்தவளுக்கு ஒரே ஆச்சரியம்! அம்மா, அப்பா, சுகந்தி யாரையுமே காணவில்லை. தேனீரை மேன்சயில் வைத்து விட்டு கேற் வாயிலுக்கு ஒடிச்சென்று எட்டிப் பார்த்தவ ளுக்கு ஆனந்தம் கரைபுரண்டது. கைவிரல்களில் ஏற்பட்டி ருந்த எரிச்சல் சட்டென்று குறைந்து விட்டது போன்ற உணர்வு! ஒழுங்கை வளைவிலிருக்கும் மாமன் செல்லநாதர் வீட்டு வாயிலில் கார் ஒன்று நிற்பதுவும், சிவகாமி, சிவ ராசர், சுகந்தி உட்பட செல்லநாதர், மற்றும் சில அயல வர்கள் காரை ச் சுற்றி நிற்பதுவும் அவளுக்குத் தெரிந்தது அவள் அந்த உருவத்தைத் தேடினுள். கண்களுக்குத் தெரி யவேயில்லை! *:
‘வந்திட்டார்; அவ்வளவும் போதும் தன் மனதைத் தேற்றிக்கொண்டவள் புதிய உற்சாகத்துடன் வீட்டிற்குள் திரும்பினுள். பாதங்கள் ஏனே தடுமாறின. மிகையான மகிழ்ச்சியில் உதடுகள் துடித்தன. அவள் திரும்பியபோது, சுகந்தி கேற்றைத் திறந்துகொண்டு மூச்சிரைக்க உள்ளே ஒடி வருவது தெரிந்தது.
அக்கா. அக்கா அவர் வந்திட்டார்? சந்தோசம்' ۔
கரைபுரள ஆவலாகக் கூறினள்.
“தெரியும் ' நாணம் கோலமிட சாந்தி தலையைக் குனிந்து கொண்டாள்.
6.

Page 36
என்ன மாதிரி இருக்கிருர்?" என்று கேட்கவேணும் போல ஒரு துடிப்பு. ஏனே அடக்கிக்கொண்டாள்.
t “ஆளை ப் பார்த் தா ல் , . அ  ைட யா ள மே பிடிக்கமாட்டிங்கள் அக்கா; அசல் இங்கிலீஷ்காரன் மாதிரி! கார் நிறையச் சாமான்கள்!! எல்லாம் உங்களுக் குத் தானுக்கும் !" சுகந்தி கண்களைச் சிமிட்டிப் புன்னகை செய்தவாறே அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
*அசல் இங்கிலீஷ்காரன் மாதிரி. அந்த வார்த்தை கள் சாந்தியின் உள்ளத்தில் கீறல்களாக விழுந்திருந்தன. திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தவளுக்கு, எட்டாத விருட்சமொன்றில் ஏற ஆசைப்படும் ஒரு அவநிலை தன்னுள் உருவாகுவது போன்ற பிரமை! ஒரு தடவை தன்னையே கண்ணுடிக்குள் பார்த்துக் கொண்டாள். “கரு கரு வென்று சுருள் முடியும், மூக்கும் முழியுமாக முகம் அழகுதான். பரு வத்திற்கேற்ற இளமையும் குளிர்மையும் பொருந்தி நிற்கும் உடலும் அழகுதான்! ஆனல் நிறம்? சட்டிக்கறுப்பு இல்லை; இருந்தாலும். ராமின் இயற்கையான சிவப்பு நிறத் தோலோடு சேர்ந்த வெளி நாட்டு மிளிர்வு!"
“பொருந்தாது; பொருந்தவே பொருந்தாது. பார்த் தால் முகத்தைச் சுழித்து, சட்டென்று தலையை மறுபக்கம் திருப்பிக்கொண்டு, தானும் தன்பாடும் என்று .!"
அவளுக்கு யோசிக்க யோசிக்க ஒருவித ஏமாற்றம் மனதை அலைக்கழிப்பது போல் இருந்தது. சட்டென்று தூரத் தூர. வெகுதூரத்திற்கு விலகி, தனிமைப்படுத்தப்பட்டு விடுவது போன்ற பீதி! அவள் திரும்பி, சுகந்தியைப் பார்த் தாள், "அவள் சிவப்பாகக் 'குளுகுளு' வென்று.! சாந்திக் குப் பகீரென்றது!
சிவகாமியும் சிவராசரும் ஏதோ கதைத்துச் சிரித்துக் கொண்டு, வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.
62

* றெயின் லேற்ரும். நல்லகாலம். "அவங்க" ளிட்டை அம்பிடாமல் வந்து சேர்ந்திட்டான்! " சிவராசர் வெற்றிலையைத் துப்பிவிட்டு, வாயைத் துடைத்துக்கொண்டு விருந்தாவில் ஏறினர்.
"ஒமப்பா; எனக்கெண்டால் அதுதான் ஒரே யோசினை யாய் இருந்தது. அவனைப் பாத்தியளே. நல்லாய்ச் சிவத்து நல்லாய் உடம்பும் வைச்சு, 'மைனர் செயினும் ஆளுமாய் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறன்' சிவகாமி ஆச்சரியமும், பெருமையுமாய்க் கூறிக்கொண்டதும்,
*ம்ாப்பிள்ளை மாதிரியென்ன...? ; இனிமேல் அவன் எங் கட வீட்டுக்கு மாப்பிள்ளைதானே ?' சிவராசர் ஒருவித மகிழ்ச்சியோடு கூறுவது சாந்தியின் காதுகளில் விழுந்த பொழுதிலும் அவள் சலனமற்று இருந்தாள்,

Page 37
இரவு படுக்கையில் சரிந்த சாந்திக்கு, இமைகள் சரிய முடியாமல் தவித்தன. மனம் இனம் புரியாத வெறுமை உணர்வில் மூழ்கியிருந்தது. ராம் வரும்வரை உள்ளத்திலி ருந்த எண்ணங்களும் உவகை நிறைந்த கற்பனைகளும் ராம் வந்தபின் ஏனே தடுமாறிப் போயின ! அவன், வீட்டிற்கு வரும்போது நன்ருக வரவேற்க வேண்டுமென்றிருந்த எண் ணமும் மரத்துப் போனதில், உழுந்துப் பேணியிலிருந்த கவ னமும் கழன்று நீண்டநேரமாகிவிட்டிருந்தது.
"அவர் என்னைப்பற்றி நினைப்பாரா? நினைத்திருந்தால் பின்னேரம் அங்கை அம்மா போனபோது என்னைப்பற்றி விசாரித்திருப்பாரே? விசாரிக்கவில்லை! அப்போ. அவர் என்னை நினைத்துப் பார்க்கவேயில்லை!" அவளுக்கு வேதனை யாக இருந்தது.

"கனடாவிலை. எத்தினை வடிவான கேள்ஸ்சைப் பார் த்திருப்பார்; பழகியிருப்பார். ஆரையும் “லவ்" பண்ணியுமிருப் பார். இவருக்குப்ப்ோய் என்னைக் கட்டிவைக்க அம்மாவும் அப்பாவும் ஆசைப்படுகினம். வேற வேலையில்லையே! நான் 'மாட்டன்' எண்டு சொன்னுல் என்ன செய்வினம்? சாந்தி தனக்குத் தானே கேள்விகளைப் போட்டுக் கொண்டிருந்தாள்.
சுவர்க் கடிகாரம் பதினெரு தடவைகள் அடித்து ஓய் ந்த பொழுது, சுகந்தி அறைக்குள் நுழைந்து, தாழ்ப்பாளைப் போட்டுவிட்டுப் பாயை விரித்தாள். *
‘என்னக்கா? பத்து மணிக்கு முன்னமே படுக்கைக்கு வந்தனிங்கள்!. இன்னும் நித்திரை கொள்ளயில்லையே? ** ஆச்சரியமாகக் கேட்டவாறே படுக்கையில் சரிந்த சுகந்தி,
"ஓஹோ. இண்டைக்கு நித்திரை வராதுதானே! மனம் விட்டுக் கதைக்கவேண்டிய ஆளோடை இன்னமும் கதைக்கிறதுக்குச் சந்தர்ப்பம் வரயில்லை. அந்தக் கவலையிலை நித்திரை வராதுதானே' சிரித்தவாறே மறுபக்கம் புரண்டு படுத்தான். .
“ஏய். ; சும்மாயிரு' சாந்திக்கு எரிச்சல் எரிச்சலாக
வநதது.
“கண்டறியாத. மனம்விட்டுக் கதைக்கிற கதை, அவரோட எனக்கென்ன கதை வேண்டிக்கிடக்கு" தனக் குள் முணுமுணுத்த சாந்தி,
"சுகந்தி லைற்றை ஒஃப் பண்ணிவிடு, கண்கூசுது' என் றதும் சட்டென்று எதுவோ ஞாபகம் வந்தவளாகத் துள்ளி யெழுந்த சுகந்தி, அறைக்குள் இருந்த அலுமாரியைத் திறந்து எதையோ தேடினள்.
"என்ன தேடுருய்..?" சாந்திதான் கேட்டாள்.
65

Page 38
'நான் பின்னேரம் மாமா வீட்டடியாலை ராகினி வீட் டுக்குப் போகேக்கை, ராமத்தான் என்னைக் கண்டிட்டுக் கூப் பிட்டவர்." அவள் கூறவந்ததைக் கூறிமுடிக்காமல் அலு மாரியிலுள்ள பொருட்களைக் கிளறிக்கொண்டிருந்ததும், ஆர் வத்தோடு படுக்கையை விட்டெழுந்த சாந்தி,
“என்ன, என்ன கேட்டவர்? சொல்லி முடிச்சிட்டுத்; தேடன்" என்று சுகந்தியை அவசரப்படுத்தினள்.
*நான் தல்லாய் வளர்ந்திட்டனும். முந்திச் சின்னப் பெட் டையாய் இருந்தநான், இப்ப. பெரிய மனுசி மாதிரி தன் னைக் கண்டும் காணுத மாதிரிப் போறன் எண்டு குற்றஞ் சொன்னர். பிறகு. உங்களை எங்கையெண்டு கேட்டுப் போட்டு ஒரு கசற்பிஸ் தந்து ஒருத்தருக்கும் காட்டாமல் அதிலையுள்ள பாட்டுக்களை. உங்களைப் போட்டுக் கேக்கச் சொல்லிப் பகிடியாய்ச் சொன்னர். நான். அதைக்கொண்டு வந்து அவசரத்திலை இதுக்குள்ளை தான் செருகினனன், இப்ப
. காணயில்லையே!”* சுகந்தி கூறியவாறே யோசனை யோடு தேடினுள்
சாந்திக்குத் திடீரென்று தோன்றிய சந்தோசமான அதிர்ச்சியில் கையும் காலும் உதறல் எடுக்க, இனம் புரியாத பரவசத்தில் மனம் தத்தளித்தது.
‘என்னைப் போட்டுக் கேக்கச் சொல்லித் தந்துவிட்ட வரோ.?"ஆச்சரியமாக வாய்விட்டுக் கேட்டவள் ஆவலோடு தானும் சேர்ந்து தேடத்தொடங்கிள்ை.
“வெள்ளன. அப்பா இதுக்குள்ளை ஏதோ கிண்டிக் கிளறிக் கொண்டு நிண்டவர்; ஒருவேளை எடுத்திட்டாரோ?? சுகந்தி யோசனையோடு கூறினுள்
66

“அடிமக்கு! நீ அப்பவே கொண்டுவந்து என்னட்டைத் தந்திருக்கக் கூடாதே? கசற் கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் சாந்தி தங்கையைத் திட்டினுள்.
*நான் அதைக் கொண்டு வரேக்கை . அம்மாவும் அப் பாவும் உங்களுக்குப் பக்கத்திலை நிண்டவையெல்லே! அவர் ஒருத்தருக்கும் காட்ட வேண்டாமெண்டவர் , அப்ப நான் எப்படி உங்களட்டைத் தாறது?’ சுகந்தி குரலைத் தாழ்த்தி அழுது விடுபவள் போல் கூறினுள்
“சரி. வடிவாய்த் தேடு" சாந்தி கூறியவாறே அலு மாரியை ஒரு அலசு அலசினுள். அடியிலிருந்து கையில் தட் டுப்பட்ட கசற்பிஸ் ஐக் கண்டதும் அவளுக்கு மகிழ்ச்சி கரை புரண்டுகொண்டு வந்தது.
"சுகந்தி . என்ன கணநேரமாய் அறைக்குள்ளை லைற் எரி யுது? உங்கை என்ன செய்யிறியள்?’ சிவகாமி அடுத்த அறையிலிருந்து குரல் கொடுத்ததும்
“அது . என்ரை புதுக்கொப்பியொண்டு அந்த அலு மாரிக்குள்ளை வைச்சனன்; காணயில்லை; அதுதான் தேடுறன்” சுகந்தி நாசுக்காகக் கூறிவிட்டு நாக்கைக் கடித்தவாறே அலு மாரியைச் சரிப்படுத்தி விட்டாள்,
சாந்தி கசற்றை கசற் பிளேயரில் போட்டு வொல்யூமை மெதுவாகத் திருப்பிவிட்டு ஆவலோடு அருகில் காதைக் கொடுத்தாள். முதற் பாடல், காக்கைச் சிறகினிலே நந்த லாலா. உந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா." யேசுதாசின் குரலில் கணிரென்று ஒலித்தது. சுகந்தி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். சாந்திக்குக் கோபம் வர வில்லை; மாரூக வியப்பும் சிரிப்புமே ஏற்பட்டது.
'அக்கா. பாத்தீங்களே கசற்றிலேயே உங்களை நல் லாய் கழற்றியிருக்கிருர். இது க் கு நீங்கள் விடக்கூடாது,
67

Page 39
என்ன மாதிரியாவது நீங்களும் , அவரைக் கழற்ற வேணும்" சுகந்தி சிரித்தவாறே அபிப்பிராயம் கூறினுள்.
*சும்மாயிரன்; அடுத்த பாட்டைக் கேட்பம்." சாந்தி கூறி வாய் மூடமுன்.
*என்னது. ? இந்த நேரம் பாட்டுக் கேக்கிறீங்களோ? உங்கை. வெளியிலை அவங்கள்’ கூட்டமாய் வந்து நிற்பாங் கள். இப்ப பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்க உள்ளேயும் வந் திடுவாங்கள்’ சிவகாமி மீண்டும் குரல் கொடுத்தாள்,
“என்னம்மா..? மெதுவாத்தானே போட்டுக் கேக்கிறம். நீங்கள்தான் சத்தம் போட்டு, இப்ப, அப்பாவையும் எழுப் பப் போறியள்' சாந்தி கெஞ்சலாக வேண்டுதலோடு கூறி யதும், சிவகாமி ஒய்ந்துகொண்டாள்.
அடுத்த பாடல் ‘நினைவிலே. மனைவியென்று அணைக்கி றேன் அவளை இன்று. பாலசுப்பிரமணியத்தின் குரலில் ஒலித்த அந்தப்பாடலைக் கேட்டதும்,
“அக்கா, நான் படுக்கப்போறன் பாட்டு நீங்கள் மட்டும் கேட்க வேண்டியது' பகிடியாகக் கூறிய சுகந்தி, போர் வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுக்கையில் சரிந் தாள்.
“ஏய்! எழும்பியிரு; நான் தனியாய் இருந்து கேட்க என் னவோ ஒரு மாதிரி இருக்குது' சாந்திக்கு ஒரே வெட்க மாகவும் சிலிர்ப்பாகவும் இருந்தது.
“என்னக்கா நீங்கள். சரி அடுத்த பாட்டை மட்டும் இருந்து கேட்டிட்டு நான் படுத்திடுவன் எனக்கு நித்திரை வருது. மிச்சப்பாட்டுகளை நீங்கள் ராமத்தான் வீட்டிலை போய்ப் போட்டுக் கேளுங்கோ’ சுக்ந்தி நித்திரைக் கண் களுடன் பகிடியாகக் கூறினுள்.
68

அடுத்த பாடல் ‘காதல் மயக்கம்; அழகிய கண்கள் துடிக் கும்; ஆலிங்கனங்கள் பரவசம். பாரதிராஜாவின் புது மைப் பெண்ணும், பாண்டியனும் மனக்கண்ணில் ஓடிவர சட்டென்று பாடலை நிறுத்திவிட்டுப் படுக்கைக்கு வந்த சாந் தியை ஆச்சரியமாகப் பார்த்த சுகந்தி,
“ஏன் நிப்பாட்டிப் போட்டியள்? நல்ல பாட்டெல்லே? அவசரமாகக் கேட்டாள்.
“எனக்கும் நித்திரை வருகுது” சாந்தி கூறியவாறே லைற்றை அணைத்துவிட்டுப் படுக்கையில் சரிந்தாள். உண்மை யில் அவளுக்கு நித்திரை வந்துவிட்டதா? இல்லை; அதை மறைக்கத்தான் லைற்றை அணைத்துவிட்டாளே. அவளுக்கு அந் தப் பாடல்கள் மனதை மட்டுமல்ல, உடலையும் தாக்குவது போன்ற விசித்திரமான உணர்வுகளை ஏற்படுத்தின அவளுக் குத் தூக்கம் வரவில்லை. ஜன்னலினூடாக வந்த அரை நில வின் வெளிச்சத்தில் கண்களுக்குத் தெரியும் அத்தனை பொருட்களும் அலங்காரத் தோரணங்களாக அசைந்து கொண்டிருப்பது போன்ற பிரமை!
"ஏன். என்னைப் போட்டுக் கேட்கும்படி அந்தக் கசற் றைக் கொடுத்தார்? முதல் பாட்டுக்குக் காரணமிருக்குது. முந்தியிருந்த குறும்புத் தனத்திற்கு அந்தப்பாடல் சாட்சி! மற்றப் பாடல்கள். வேண்டுமென்றே எனக்காக. கரை காண முடியாத நாணம் அவளைப் பிய்த்தெடுத்தது.
‘பாட்டுக்களைக் கேட்டு. சுகந்தி என்ன நினைத்தாளோ? அவள் சுகந்தியின் படுக்கையை உற்றுப் பார்த்தாள். சுகந்தி நீண்டநேரமாக நித்திரையில் லயித்திருப்பது போல் அசை வற்றுக் கிடந்தாள்.
சாந்தியின் கண்கள் மூடிக்கொண்டாலும் சிந்தனைகள் மூடிக் கொள்ள மறுத்தன. நீண்டநேரம் உறக்கமின்றிப் படுக்கையில்
69

Page 40
புரண்டு கொண்டிருந்தாள். எழுந்திருந்து கவிதை எழுதவேண்டும் போலவும், மகிழ்ச்சியாகப் பாடவேண்டும் போலவும், உல்லாசமான எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. சுவர்க்கடிகாரம் ஒரு மணியை அடித்த பொழுது திடுக்குற்றவள், வற்புறுத்தலாக நித்திரையை வர வழைத்துக் கொண்டாள்.
பொழுது விடிந்த பொழுது, ஒருபடி அதிகமாகக் கொழுத்து விட்டது போன்ற உணர்வு அவளுள் ஏற்பட்டது. காலை வேலைகளை முடித்துக்கொண்டு, தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்த சாந்தி, நேரத்தைப் பார்த்தாள் கடிகாரம் 8.30 ஐக் காட்டிக் கொண்டிருந்தது
"சுகந்தி எங்கை? இண்டைக்கு ஊரடங்குச் சட்ட மெல்லே; ஸ்கூலும் இல்லை; ராகிணி வீட்டை படிக்கப் போயிட்டாளோ?" கேட்டவாறே சுகந்தியைத் தேடினுள். முதல் நாள் இரவு நடந்த சம்பவம் பற்றி சுகந்தி ஏதாவது கூறுவாளென எதிர்பார்த்தவளுக்கு சுகந்தியின் அமைதி ஆச் சரியமாக இருந்தது. :
*அவளுக்கு. நாளையிண்டைக்கு வகுப்பிலை ஏதே ரெஸ்ற் எண்டு சொன்னவள், அதுதான் விடிய எழும்பிப் படிச்சுக் கொண்டிருந்தவளாக்கும். அவளுக்குப் படிப்பு என்ருல் படி ப்பு; விளையாட்டென்ருல் விளையாட்டு, இரண்டையும் ஒன் முகக் கலந்து கொள்ளமாட்டாள் . மனதினுள் நினைத்த சாந்தி தங்கையை எண்ணிப் பெருமைப் பட்டுக்கொண் டாள்.
‘சாந்தி . அங்கை. உன்ரை மாமிக்கு ஏதோ. நாரிக் குள்ளை பிடிச்சுப் போட்டுதெண்டு நேற்றிரவு சொன்னவ பாவம்! ராமும் வந்து நிக்கிறன் .மனுசியால, ஒண்டும் செய்ய ஏலாமலிருக்கும். சுகந்தியும் ராகிணி வீட்டில படிக்கவெண்டு
70

போயிட்டாள். நானும் ஒழுங்கைகளுக்குள்ளாலையாவது கடைக்குப்போய் சாமன்கள் வாங்கிவர வேணும். கொப் பரும் இண்டைக்கு ஒபீஸ் இல்லைத்தானே எண்டிட்டு, தென் னங் காணியைப் பார்க்கப் போயிட்டார்; மத்தியானம் வர நேரத்துக்குச் சாப்பாடு குடுக்கவேணும்; ஆனபடியாலை. நீதான் போய் மாமிக்குக் கொஞ்சம் உதவி செய்து கொடுத் திட்டு வரவேணும். சரியில்லை. பக்கத்திலையிருக்கிறனுங்கள் பார்க்காமல் இருக்கக்கூடாது." சிவகாமி வேண்டுதலோடு கூறிவிட்டு, சமையலறைக்குள் நுழைந்துகொண்டாள். சாந் திக்குச் சந்தோசம் கரைபுரண்டது. அதனை வெளிக்காட் டாமல் மீண்டுமொரு தடவை தலையை வாரிப் பின்னிக் கொண்டாள். அவளுக்குப் பிடித்தமான நீலநிற அரைப் பாவாடையையும் சட்டையையும் அணிந்துகொண்டு கண்ணு டிக்குள் முகத்தைப் பார்த்தாள். முகத்தை இன்னுமொரு தடவை கழுவலாம் போலிருந்தது. கிணற்றடிக்கு ஓடியவள் மூன்ருந் தடவையாக முகத்தை நன்ருகக் கழுவிக் கொண் l-sTGT.
“Tasrar? இப்பதானே முகம் கழுவினய் போலை கிடத் தது.??? சிவகாமி நெற்றியைச் சுழித்தவாறே கேட்ட போது திடுக்குற்றவள்,
“அ. அது. இந்தப் பொட்டு நல்லாய் வழிஞ்சு போட் டுது' மனதினுள் தடுமாறியதை வெளிக்காட்டாமல் காரி யத்தைத் தொடர்ந்தாள் முகத்தைத் துடைத்து, சுகந்திக் குத் தெரியாமல் தன் பெட்டிக்குன் எப்பொழுதோ ஒளித்து வைத்திருந்த பொண்ஸ் பவுடரை அளவாகப் பூசி பொட்டை வைத்துக்கொண்டு கண்ணுடியில் பார்த்த பொழுது அவளுக்குத் திருப்தியாக இருந்தது.
‘அம்மா நான் போயிட்டு வரட்டே?'சாந்தி வாசலுக்கு வந்தவாறே குரல் கொடுத்தபோழுது,
7

Page 41
“கொஞ்சம் இங்கை வந்திட்டுப் போவன்; கிணற்றடி யில இருக்கிற வாளிகளுக்கை தண்ணி நிரப்பி வச்சிட்டுப் போணை. பிறகு. நீயும்போக, என்னுலை தனியா ஒண்டும் செய்ய ஏலாது, நல்ல தண்ணியும் அள்ள வேணும். s சிவகாமி கெஞ்சலாகக் கேட்டுவிட்டு தனக்குள் மெல்ல முணு முணுத்துக் கொண்டாள். சாந்திக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
*நான் நல்ல சட்டை போட்டிருக்கிறன்; இப்ப தண்ணி அள்ள ஸ்கேட் எல்லாம் நனைஞ்சு போயிடும்' தனக்குள் எரிச்சலோடு முணுமுணுத்த சாந்தி, நிதானமாகத் தண் ணிரை அள்ளி ஊற்றி, வாளிகளை நிரப்பி விட்டு, சிவகாமி யிடம் விடைபெற்றுக் கொண்டு மாமன் - செல்ல நாதர் வீட்டை நோக்கி ஒருவித ஆர்வத்தோடு நடக்கத் தொடங்
72

காலைவெயில் சுளிரென அடித்துக்கொண்டிருந்தது. தெரு, ஒரு வித அசாதாரண அமைதியில் வெறித்துக்கிடந்தது!
செல்லநாதரின் வீட்டை அண்மித்தபொழுது, சாந்திக் குத் தயக்கம் பிறந்தது. இதயம் படபடவென அடித்துக் கொண்டது. தன்னை ஒருதடவை பார்த்து, உடைகளைச் சீர்ப்படுத்திக் கொண்டாள். கேற்றைத் திறக்கும்பொழுது ஒருவித அச்சம் கலந்த நாணம் அவளைப் பற்றிக்கொண்டது. pu - *சாந்தியே. வாமேன' எதிரில் வந்து கொண்டிருந்த மாமி-ருக்மணி வரவேற்றபோது இவள் புன்னகை சிந்தினுள்.
“எனக்கு இருந்தாப்போலை நாரிக்குள்ளை பிடிச்சுப் போட்டுதணை; குனிய நிமிர ஏலேல்லை.” ருக்மணி இயலா மையுடன் அனுங்கியவாறே கூறிமுடிக்கமுன்,

Page 42
ஓம் மாமி. அம்மாவும் அப்பிடித்தான் சொன்னவ; உங்களாலே வேலையொண்டும் செய்ய ஏலாமலிருக்குமெண்டு, என்னைப்போய் உதவிசெய்து குடுத்திட்டு வரச் சொன்னவ. அதுதான். வந்தனன்’ மாமி மீதுள்ள அக்கறை மாமிக்குத் தெரியவேண்டுமென்ற எண்ணத்தில் சாந்தி அவசரமாகக் கூறினுள்,
*அப்பிடியோ! பின்னேப் பேந்தென்ன. நல்லதாய்ப் போச்சு; நான் இப்ப .இந்த நாரிப்பிடிப்புக்காகத்தான் சின் னத்துரைப் பரியாரியாரட்டை ஒருக்கால் போயிட்டு வருவ மெண்டு வெளிக்கிட்டஞன். அப்ப நல்ல பிள்ளை மாதிரி இந்த வீட்டு விருந்தைகளை ஒருக்கால் கூட்டி விட்டிட்டு, மத்தியானச் சமையலுக்கு . மேசையில வைச்சிருக்கிற தேங்காயையும் அடிச்சுத் திருவி விடணை. நான் அதுக்கிடை யில, போறதும் வாறதுமாய் வந்திடுவன்’ ருக்மணி மன் ருட்டமாகக் கூறிவிட்டு, கேற்றைத் திறந்துகொண்டு வெளி யில் இறங்கினுள்.
‘மாமி, போகேக்கை குச்சு ஒழுங்கைகளுக்காலை போங்கோ இண்டைக்கும் நாளைக்கும் ஊரடங்குச் சட்டம் எண்டபடியால வழிவழியே அவங்கள்’ நிப்பாங்கள். கவ னம்’ சாந்தி கூறிவிட்டு, ருக்மணி மறையும்வரை கேற் வாயி லிலேயே பார்த்தவாறு நின்றிருந்தாள்.
‘மாமிக்கும் அம்பத்தைஞ்சு வயசுக்கு மேலை ஆயிட்டுது தானே; அதுதான் திடீரென்று நாரிக்குள்ளையும் பிடிக்சுப் போட்டுது போலை; பாவம்! மனதிற்குள் நினைத்துக்கொண்ட சாந்தி கேற்றை மூடிவிட்டு முன்விருந்தாவில் ஏறியபொழுது உறுமிக்கொண்டு வந்த நாய் அவளருகில் வந்ததும் பழக்க தோஷத்தில் வாலை ஆட்டி, அவள் கால்களை நாக்கினல் நக்கிவிட்டு அப்பால் நகர்ந்தது. விருந்தாவின் ஒரு மூலையில் கிடந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறே செல்லநாதர்
74

நித்திரையாகிக் கிடந்தார். அவர் கைகளில் சிக்கியிருந்த ஒரு ஆங்கிலப் பத்திரிகை நழுவிய ரிலையில் சரிந்து கிடந்தது. கண்களில் கண்ணுடி சற்றுக் கீழிறங்கி சரிந்திருந்தது. சாந்தி உற்றுப் பார்த்தாள் - அவர் மெல்லிய குறட்டை ஒலியோடு தூக்கத்தில் கிடந்தார்.
‘மாமாவுக்கென்ன. கொடுத்து வைத்தவர். முந்த நாள் சேவையர் பென்சனும் எடுத்திட்டார். நேற்று அவரின்ரை உத்தம புத்திரனும் வந்திட்டார். சந்தோசத் திற்குக் குறைவிருக்காது; நிம்மதியாய் நித்திரை கொள்ளு முர். ஒரு நிமிடம் அவரைப் பார்த்தவாறு நின்றிருந்தவள் மனதிற்குள் பெருமூச்சு விட்டவா,ே ) ஹோலுக்குள் நுழைந் தாள.
*ஹோலுக்குள் என்றுமில்லாதவாறு ඉෂ புதிய நெடி வீசியது. வெளி நாட்டு சென்ற் நாசியைத் தழுவியது. அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
*ராமத்தான் எங்கை?" அவள் கண்கள் சுற்றிச் சுழன்று. அந்த உருவத்தையே தேடின - அவனைக் காணவில்லை. அவ ளுக்கு ஒருவித ஏமாற்றமாக இருந்தது.
“GGuaifuunt &ao எங்கேயும் போயிட்டாரோ?. இண்டைக்கு கேவ்யூ ருேட்டு வழியே ஒரு பெடியங்களும் நிக்கமாட் டாங்கள். அப்ப. இவர் எங்கை போனவர்?
அவள் அங்குமிங்குமாகத் தேடிய பொழுதும், ஹோலுக் குள் நிறைந்திருந்த ஏராளமான வெளிநாட்டுப் பொருட் களே மாறி மாறி அவள் கண்களில் தட்டுப்பட்டன. ஏற்க னவே அங்கிருந்த ரி. வி., றேடியோ கசற் செற், ரேபிள் ஃபான் என்பனவற்ருேடு இன்னும் புதிதாகப் பல பொருட் கள் சேர்ந்து ஹோலை நிறைத்திருந்தன.
75

Page 43
*ராமத்தான் என்னதான் குழப்படி என்ருலும் வீட்டுக் கென்று நிறையச் சாமான்கள் வாங்கிக்கொண்டு வந்திருக் கிருர் சாந்தி . மனதிற்குள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தாள்.
சமையலறையை அடைந்தவள், சமையலறைக்கு நேரே இருக்கும் அறையைத் திரும்பிப் பார்த்தபொழுது திடுக்குற் ருள். அறைக்கட்டிலில் ராம் குப்புறப் படுத்தபடி நித்திரை யாகிக் கிடப்பது தெரிந்தது . அவளுக்கு இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. வெற்று மேனியுடன் சாரம் மட்டும் அணிந்த நிலையில், முகத்தை மறு பக்கம் திருப்பி, தலையணை யைக் கைகளால் அனைத்தவாறு அவன் தூங்கிக் கிடந்தான்அருகில் சென்று பார்க்கவேண்டுமென மனம் குறுகுறுத்தது. கால்கள் பரபரத்தன. அறையை நோக்கி சற்று நகர்ந்தவள் வாசலில் நின்றவாறே அந்த உருவத்தை உற்றுப்பார்த் தாள்,
‘நல்லாய் சிவந்து, நல்லாய்க் கொழுத்து, கொஞ்சம் உயர்ந்த மாதிரியும் இருக்கிருர்,
பளிச்சென்று தெரியும் அவனது செந்நிற முதுகிலே அவள் கண்கள் ஒடி அலைந்தன. தோள்களில் மெலிதாய்ப் புரளும் சுருள் முடியின் இடையாகக் கழுத்திலே மின்னும் தங்கச் சங்கிலி அவள் கண்களுக்கு எடுப்பாகவே தெரிந்தது.
"இந்த நேரம் பார்த்து நித்திரையாக இருக்கிருரே? எழும்ப மாட்டாரா? அவளிற்கு மனதிற்குள் ஏக்கமாகவும் ஒருவித கோபமாகவும் இருந்தது.
"ஒருவேளை. உடம்புக்கு ஏதும் சுகமில்லையோ? பாவம் பயணக் களைப்பாய் இருக்கும் அவள் தன்னைத்தானே தேற் றிக்கொண்டாள். சமையலறைக்குள் நுழைந்தவள்மேசையில் 76

கிடந்த தேங்காயை எடுத்து, பலங்கொண்டமட்டும் சத்தமாக அடித்து உடைத்தாள். அந்தச் சத்தத்திற்குக்கூட அவன் அசையாமல் படுத்துக் கிடப்பது அவளுக்கு எரிச்சலையே ஊட்டியது."மளமள"வென்று தேங்காயைத் துருவத் தொடங் கியவள், இடையிடையே அவன் படுத்திருக்கும் அறையை யும் கவனிக்கத் தவறவில்லை. தேங்காய் துருவி முடிந்ததும் அதனை மூடிவைத்துவிட்டு வெளியில் வந்தாள். மாமி விருந்தாவைக் கூட்டிவிடச் சொன்னது அப்போதுதான் அவள் ஞாபகத்திற்கு வந்தது. தும்புத்தடியைத் தேடி யெடுத்து வீட்டைக் கூட்ட ஆரம்பித்தாள். ஒழுங்கற்றுக் கிடந்த பொருட்களை அழகாக அடுக்கி மேசைகளைத் துப்பர வாக்கி கூட்டி முடித்தபொழுதுருக்மணி வருவது தெரிந்தது.
‘மாமி என்ன நேரத்தோட வந்திட்டியள் ? பரியா ரியார் இண்டைக்கு நல்ல ஒய்வாய் இருக்கிருர் போலை. . சாத்தி கேட்டதும்,
“ஓம் மேனை . ஊரடங்குச் சட்டம் போட்டபடியாலை அங்கை சனமே இல்லை; எனக்கது நல்ல வசதியாய்ப் போட் டுது. ஒரு எண்ணெய் தந்துவிட்டவர். ஒவ்வொரு நாளும் பூசட்டுமாம்” ருக்மணி கூறியவாறே வந்து சமையலறை வாசலுக்கு அண்மையாக அலுப்போடு அமர்ந்து கொண் டாள்.
*அம்மாடி கொஞ்சத் துரம் போய் வாறதுக் கிடை. யில ஒரே களைப்பாய் இருக்குது சாந்தி, எனக்கொரு தேத் தண்ணி போட்டுத் தா மேனை' ருக்மணி உரிமையோடு கேட்டுவிட்டு முந்தானையை விரித்து, அதிலே சரிந்து, களைப் பினுல் கண்களை மூடிக்கொண்டாள்.
‘மாமி அப்ப வழியில நீங்கள் அவங்க'ளிட்டை அம்பிடேல்லேயே?."
77

Page 44
“அங்காலை. ஆலடிச்சந்தியிலை நிக்கிருங்களாம். இங்கா லுக்கு இன்னும் வரேல்லைப்போலை கிடக்குது; நான் அவங் களைக் காணேல்லை” என்றவள் சட்டென்று ஞாபகம் வந்த வளாக
"அதுசரி . இவன் ராம் எங்கை?. தலையிடிக்குது எண்டு சொல்லி, என்னட்டை தேத்தண்ணி வாங்கிக் குடிச்சுப் போட்டுப் படுத்தவன். காலமை சாப்பிடவுமில்லை. பசிக் கேல்லை எண்டிட்டான்” என்றவாறே ராம் படுத்திருக்கும் அறையை ஒரு தடவை எட்டிப்பார்த்துவிட்டு,
“அவன். நேற்று வந்தநேரம் தொடக்கம் வெளியில உலாத்திறத்துக்குத்தான் அந்தரப்பட்டுக்கொண்டு நிண்ட வன்; நான் விடேல்லை. இந்த நாளிலே ருேட்டாலை போற பொடியங்களுக்கு என்ன கதி ஏற்படுகுது எண்டு அவனுக்குத் தெரிஞ்சால்தானே!" தனக்குள் முணுமுணுத்துக்கொண்ட வள், ஒரு நீண்ட பெருமுச்சை விட்டவாறே மீண்டும் கண் களை மூடிக்கொண்டாள்.
‘ராமத்தானுக்குத் தலையிடியோ? பாவம்! இந்த நேரம் பார்த்து மாமிக்கும் நாரிக்கை பிடிச்சுப்போட்டுது; அவவாலை அவரைச் சீராகக் கவனிக்கவும் ஏலாமலிருக்கும் மனதிற்குள் அவஸ்தைப்பட்ட சாந்தி,
"ஏன் மாமி . அவருக்குத் தலையிடிக்கு என்ன குடுத்த, னிங்கள்? என்று கேட்க நினைத்து, மாமி என்ன நினைப்பாவோ என்ற எண்ணத்தில் எதையுமே கேட்காமல் அமைதி யாக தேனீரை ஊற்றத் தொடங்கினுள்.
‘மாமி - எழும்புங்கோ; இந்தத் தேத்தண்ணியைக் குடிச்சிட்டு நீங்கள் ஆறுதலாய்ப் படுத்திருங்கோ. நான் வந்தனன் மத்தியானச் சமையலைச் செய்து விட்டிட்டுப்
78

போறன் ." சாந்தி தேனிரை நீட்டியவாறே கூறியதும், ருக் மணி மகிழ்ச்சியோடு எழுந்து தேனீரை வாங்கிக் குடிக்கத் தொடங்கினுள்.
“நல்ல வேளை நீ வந்தது! நான். என்னெண்டு குனிஞ்சு நிமிர்ந்து அலுவல் செய்யப் போறன் எண்டு யோசித்துக் கொண்டிருந்தனன். அங்கை வீட்டில . ஆர் கொம்மாவே சமைக்கிருள்.? . .
“ஒம் மாமி; அதுக்கென்ன? அப்பாவுக் கிண்டைக்கு ஒஃபிஸ் உம் இல்லைத்தானே; அம்மா மளமள" வெண்டு சமைச்சுப்போடுவா’’
சாந்தி அடுக்களை வேலைகளைக் கவனிக்கத் தொடங் கிஞள்.
*சாந்தி உதிலை பேணிக்குள்ளை மைசூர் பருப்பு இருக் குது. அங்காலை உருளைக்கிழங்கு இருக்குது; ப்ரிஜ்ஜுக்குள்ளே கொஞ்சம் அகத்திப்பூவும் இருக்குது. அதுகளைக் கறியாக்கி பூவையும் சுண்டிப்போட்டு மாமாவுக்கும் கொத்தா னுக்குமாகச் சேர்த்து ரெண்டு முட்டையும் பொரிச்சு விடணை . அவனுக்கு மீன் இறைச்சி எண்டெல்லாம் வேணு மாக்கும், கடைகளெல்லாம் பூட்டு . அதுகளுக்கு நாணிப்ப எங்கை போறது?" ருக்மணி கூறியவாறே மீண்டும் சரிந்து அநாயாசமாகக் கண்களை மூடிக்கொண்டாள்.
சாந்தி சோற்றைக் காய்ச்சி, கஞ்சியை வடியவிட்டுக் கறி களைச் சமைக்க ஆயத்தமாகியபோது சுவர் மணிக்கூடு “டங்’ என்ற ஒலியை எழுப்பிவிட்டு அமைதியானது. எட்டிப்பார்த் தாள். மணி 10.30 ஐக் காட்டிக்கொண்டிருந்தது.
கொட்டாவி விட்டவாறே எழுந்த செல்லநாதர்,
79

Page 45
“அடி சக்கையெண்டானம். இண்டைக்குச் சாந்திதான் சமையல் போலை கிடக்குது " என்றவாறே வெற்றிலை சாப் பிட ஆயத்தமானுர்,
“ஓம் மாமா இடைக்கிடை எனக்கும் ரான்ஸ்வர் வரு குது பாத்தியளே?' சாந்தி பகிடியாகக் கூறியதும், வாய்விட் டுச் சிரித்த செல்லநாதர்.
'சாந்தி, மாமி என்னை எங்கை எண்டு கேட்டால் நான் உங்காலை பரஞ்சோதி வாத்தியார் வீட்டில கரம் விளையா டப் போயிட்டன் எண்டு சொல்லிவிடணை’ என்றவாறே கேற்றைத் திறந்துகொண்டு வெளியேறினர்.
சாந்தி சோற்றுப்பானையை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு கறிகளைக் கூட்ட ஆயத்தமானள். ராம் படுத் திருந்த அறைக்கதவு சாத்தப்படும் ஓசையைக்கேட்டபோது திரும்பிப்பார்த்தாள். ராம் துவாயைச் சுற்றிக்கொண்டு வெளியே வருவது தெரிந்தது.
"ஐயையோ எழும்பீட்டார் குளிக்கப்போருர் போலை கிடக்குது அவளுக்குக் கைகள் மெலிதாக நடுங்கின. இக யம் பழையபடி படபடவென அடித்துக் கொண்டது. ராம் சமையலறையை நோக்கி வருவது தெரிந்தது. அவளுக்கு வியர்த்துக் கொட்டிவிடும் போலிருந்தது. மெதுவாக நிமிர் ந்து பார்த்தாள். VA
‘ஓ முகமே மாறிட்டுது ! நிறைய மீசை வைத்திருக் கிருர் அதுதான் இவ்வளவு வித்தியாசமாய் இருக்குதாக்கும்" இருவர் கண்களும் சந்தித்தன. நாணத்தோடு தலைகுனிந்த அவளை ஆச்சரியமாகப் பார்த்த அவன், சட்டென்று முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டு வேகமாகக் கிணற்ற டியை நோக்கி நடக்கவாரம்பித்தான். அவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. எச்சிலை மென்று விழுங்கிக்கொண் LsT GIT.
80.

"ஏன். எதுவுமே பேசாமல் போருர்?. என்னை அவருக் குப் பிடிக்கேல்லையோ.. ? அப்ப. ஏன் சுகந்தியிட்டை அந் தப் பாட்டுக்கசற்றைக் குடுத்துவிட்டவர்? அப்ப. கற்பனை யில என்னைப் பிடிச்சுதாக்கும் ; இப்ப என்னை நேரில் பார்த்த உடனை பிடிக்கவில்லையாக்கும் அவளுக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது. -
"ஆம்பிளைகளை. நம்பவே கூடாது. அதுவும் வெளிநாட் டுக்குப் போயிட்டு வந்த உடனை அவையஞக்கு. தாங்கள் ஏதோ பெரிய ‘கொப்பு" எண்ட நினைப்பு பச்சைக் கள்ளர்; வம்புகள் 1 வந்த அழுகை அவளுக்குள் கோபமாக மாறியது.
"வீட்டுக்கு வந்திருக்கிருளே என்று கதைப்பமெண் டில்லை. பெரிய லெவலிலை பேசாமல் போழுர், நான் மட் டும் வலியப்போய்க் கதைப்பன் எண்ட நினைப்பாக்கும், வேற வேலையில்லை" சொடக் சொடக் என்று கைவிரல்களை நெட்டி முறித்துக்கொண்டாள்.
உருளைக்கிழங்கை அவிப்பதற்கு தண்ணிரைத் தேடி
ஞள். வாளி வெறுமையாகி இருந்தது. அவளுக்கிருந்த கோபத்தில் வாளியைப் போட்டுடைக்கலாம் போலிருந்தது.
"இப்ப. தண்ணிக்கு என்ன செய்யிறது? “அந்த லெவல் காரன்" அங்கை குளிக்கப் போயிட்டான். நான் போய் எப் பிடித் தண்ணிர் அள்ளுறது.? யோசித்து யோசித்து மூளை குழம்பியது.
'கறி ஆக்க நேரம் போகுது; இன்னும் சமைச்சு முடி யேல்லையோ எண்டு மாமி கேட்கப் போரு !”
‘மாமி மாமி தண்ணி முடிஞ்சுது மாமி என்ன செய்யிறது?’ அவள் ருக்மணியைத் தட்டியெழுப்பி, தண் ணிர் அள்ளுமிடம் தெரியாததுபோல் கேட்டாள்.
81

Page 46
* உங்கை எங்கட கிணற்றிலை தானே மேனை அள்ளி றணுங்கள்; இது நல்லதண்ணிதானே. முந்தித்தான் கொஞ் சம் உப்பாய் இருந்தது. இப்ப அது நல்ல சோக்கான தண்ணி" ருக்மணி சாதாரணமாகக் கூறிவிட்டு, மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். சாந்திக்கு எரிச்சல் எரிச்ச லாக வந்தது. பற்களால் உதடுகளை அடக்கிக்கொண்டாள்.
இப்ப என்ன செய்வது - ?

ராமைச் சந்திக்கும்வரை அவள் மனதிலிருந்த உல்லா சமான எண்ணங்கள் சற்று முன்னர் டொசுக்கென்று சிதை ந்துபோனதில், அவள் மனத்தளவில் மிகவும் தளர்ந்து போயிருந்தாலும் அதைத் தாங்கமுடியாத நிலையில் கோபக் கனலாய்க் கொதித்துக் கொண்டிருந்தாள்.
நாய்க்குப் பசியெடுத்ததாலோ என்னவோ, அது அடிக் கடி அடுக்களை வாசல்வரை வந்து வாலை ஆட்டி, நாக்கை நீட்டி மெலிதாக ஒலி எழுப்பிவிட்டுச் சென்றது.
ருக்மணி இருமியவாறே புரண்டு படுத்துக் கொண்டாள். சாந்திக்கு என்ன செய்வதென்றே தெரியாமலிருந்தது. மெல்ல எட்டி ஜன்னலினூடாகக் கிணற்றடிய்ை அவதா னித்தாள். ராம் குளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

Page 47
“இப்ப . எப்பிடி அங்கை போய் தண்ணி அள்ளுறது? அவள் யோசனையோடும் சினத்தோடும் தலையைச் சொறிந்து கொண்டாள். நேரம் போய்க் கொண்டிருந்தது! மேலும் தாமதிக்காமல் வாளியை எடுத்துக்கொண்டு கிணற்றடியை நோக்கி நடந்தாள். ராம் தன் உடல் பூரா வெளிநாட்டுச் சவர்க்காரத்தைப் பூசிவிட்டுக் கழுவிக் கொண்டிருந்தான். அவனை அருகில் கண்டவுடன் மீண்டும் அவள் இதயம் பட பட வென அடித்துக்கொண்டது. கால்கள் பின்னிக்கொண் டன. சிலவினடிகள் தயங்கிய அவள், கிணற்றடிப் படிபிலே பொத்தென்று வாளியைச் சத்தமாக வைத்தாள். சட் டென்று நிமிர்ந்து பார்த்த ராம், அவசரமாக விலகி நின்று கொண்டு, முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான்.
இந்தத் தடவையாவது அவன் ஏதாவது கதைப்பான் எனத் தன்னையறியாமலே எதிர்பார்த்திருந்த அவளுக்கு மீண்டும் தாங்கமுடியாத ஏமாற்றமாக இருந்தது. ஒருவித ஆதங்கத்தோடு அவனை நோக்கினுள். அவனது முகம் மறு பக்கம் திரும்பியிருந்ததால் அதில் தோன்றும் உணர்ச்சிகளை அவளால் ஊகிக்க முடியாமலிருந்தது. தளர்ந்துபோன அவள் தன் முகமாற்றங்களேக் கட்டுப்படுத்திக்கொள்ள, பற் களால் உதடுகளை அழுத்திக்கொண்டு மளமள" வென்று தண்ணீரை அள்ளி வாளிக்குள் நிரப்பிவிட்டு, வாளியைத் தூக்கிக்கொண்டு நடக்கவாரம்பித்தாள். வாளித்தண்ணீர் கைக்குக் கனமாக இருந்தது. ராமின் அலட்சியம் மனதிற் குக் கனமாக இருந்தது. ஒருகையால் பாவாடையை விலத் திப் பிடித்தவாறே நடந்துகொண்டிருந்தவள், தண்ணிர் வாய்க்காலைக் கடக்கும்பொழுது தடுமாறிச் சரிந்தாள். தண் ணிர் வாளி படீர் என்ற ஓசையுடன் சரிந்து, தண்ணீரை அப்பகுதி முழுவதும் பரப்பி விட்டது. நிலத்தோடு அடி பட்ட அவளின் முழங்கைப்பகுதி வலியைக் கொடுத்தது! அவள் எழ முடியாமல் முழங்கையைத் திருப்பிப் பார்த் தாள். இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. சறுக்கிப்போன
84

கால்களை இழுத்துக்கொண்டு எழும்ப எத்தனித்தவளை இரு கரங்கள் பற்றித் துர்க்கிவிட்டன! அவள் கலங்கிய கண்க ளோடு திரும்பிப்பார்த்தாள். எதிரில் ராம் ஈரத்தோடு நின்றிருந்தான். அவளுக்கு ஆச்சரியமாக, மகிழ்ச்சியாக, வெட்கமாக.1 சட்டென்று தலையைக் குனிந்துகொண் டாள்.
சரிந்துகிடந்த வாளியைத் தூக்கிய ராம், தண்ணிரை நிரப்பிவிட்டான். மீண்டும் தண்ணீர்வாளியைத் தூக்கப் போனவளைத் த்டுத்த ராம்,
“இன்னெரு தடவை விழுந்தெழும்பப் போறியா ..? * «-س சாதாரணமாகக் கேட்டான்,
முதல் தடவையாக, அவன் வாய் திறந்து அவளோடு பேசியது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் புன்ன கைக்க மறந்து, அவனையே புதுமையாகப் பார்த்தவாறு நின்றிருந்தாள்.
“தண்ணி வாளியை நான் தூக்கிக்கொண்டு வாறன்; நீ போ' என்றவன் துவாயினுல் உடலைத் துவட்டத் தொடங்கினன். அவளுக்கு எதுவுமே பேசுவதற்கு நா எழ வில்லை. அவள் மெளனமாகச் சமையலறைக்குத் திரும்பினுள்.
*ராமத்தான் நல்லாவே மாறிட்டார்! எவ்வளவு மென் மையாய் . அமைதியாய்க் கதைக்கிருர். ஆனல் . எனக் கிருக்கிற ஏக்கமும் ஆவலும் அவருக்கிருக்கிற மாதிரித் தெரி யேல்லையே? கசற் குடுத்தனுப்பினவர் என்னை முதன் முத லாய்ப் பார்த்தபோதும் ஏன் எதுவுமே பேசாமலிருந்தார்? இப்ப. கொஞ்சமும் சலனப்படாமல் என்னைத் தொட்டுத் தூக்கிவிட்டு. மிகவும் சாதாரணமாக..! அவளால் ராமைப் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது.
இடையிலே துவாயைச் சுற்றியபடி ஒரு கையில் சவர் க்காரப் பெட்டியும் மறுகையில் தண்ணீர் வாளியுமாக வந்த
85

Page 48
ராம், தண்ணீர் வாளியைச் சமையலறைக்குள் வைத்து விட்டு, மெளனமாக வெளியேறி தன் அறைக்குள் நுழைந்து கொண்டான். சாந்திக்குக் குழப்பமாக இருந்தது.
*சுகந்தியைத் தானகவே கூப்பிட்டுக் கதைத்தவர் ஏன் எனக்கு முன்னல மட்டும் இவ்வளவு அமைதியாய்..? முந் தியெல்லாம் . எந்த நேரமும் என்னுேடை சண்டை போட்டுக்கொண்டிருந்த இவர், இப்பமட்டும் ஏனிப்படி..?
அவள் கறிகளைச் சமைத்து முடித்துவிட்டு, வியர்வை வழியும் முகத்தோடு வெளியில் வந்தாள். ருக்மணி அடித் துப் போட்டது மாதிரி நித்திரையாகக் கிடந்தாள்.
“ւճուճ՝ ...'' மெதுவாகத் தட்டியெழுப்பினுள்.
நான் சமைச்சுப்போட்டன்; எழும்புங்கோ மாமி . ராமத்தான் காலமையும் சாப்பிடயில்லையெண்டு சொன்னி யள் . அவருக்கும் சாப்பாட்டைக் குடுத்து, நீங்களும் சாப் பிடுங்கோ, மாமா அங்காலை. பரஞ்சோதி வாத்தியார் வீட்டை போறனெண்டு சொல்லிப்போட்டுப் போட்டார்
சாந்தி புறப்பட ஆயத்தமானுள். வழுகிய முந்தானையை இழுத்து மூடிக்கொண்டு எழுந்த ருக்மணி,
“நல்ல பிள்ளை! இவ்வளவு சுறுக்காய் சமைத்துப் போட் டாய். இன்னும் பன்னிரண்டு மணிகூட ஆகேல்லைப் போல கிடக்குது. நானும் இதிலையே நல்ல நித்திரையாகிப் போனன் சமையலுக்குக் கொஞ்சநஞ்ச உதவி கூடச் செய்து தரேல்லை . ருக்மணி தன்னைத்தானே நொந்துகொண் L-IT-6ft.
'அதுக்கென்ன மாமி.? உங்களுக்கு ஏலாத நேரத்தில இந்த உதவியைக்கூட செய்ய விட்டால். பிறகென்ன?" சாந்தி மாமியைத் தேற்றிவிட்டு,
86

‘மாமி. அப்ப நான் போயிட்டு வரட்டே?” என்ற வாறு திரும்பினுள்.
'ஏன் ஏன் என்ன அவசரம்?. நிண்டு. மத்தியானம் சாப்பிட்டிட்டுப் போவன். இவ்வளவு நேரமும் அலுவல் செய்துபோட்டு பசியோடை போகப் போறியே மேன?" ருக்மணி அவசரமாகத் தடுத்தாள்.
“இல்லை மாமி. நான் வீட்டை.போய் ஆறுதலாய்ச்
சாப்பிடுறன்' அவள் விறு விறு' என்று கேற் வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினுள். அவளுக்குத் தொடர்ந் தும் அங்கு நிற்கப் பிடிக்கவில்லை. காலையில் அங்கு வந்த பொழுதிருந்த ஆவலும் எதிர்பார்ப்பும், ஒருவித ஏமாற்றத் தினுல் தானகவே அவளுள் அடங்கிப் போயிருந்தன. மனம் வெறுமையாக இருந்தது! அவள் முன் வாசலைக் கடந்த பொழுது எதிரில் ராம் நின்றிருந்தான். திடுக்குற்ற சாந்தி சலனங்களற்று நிமிர்ந்து நோக்கினள்.
அவன் அறையின் பின்புறமாக வெளியேறி, வீட்டின் முன்பகுதிக்கு வந்திருக்க வேண்டும்" அவள் தனக்குள் ஐஊகித்தவாறே சற்று விலகினுள்.
"சாந்தி சாப்பிட்டிட்டுப் போவன் ' அவன் அமைதி யாகக் கெஞ்சலாகக் கேட்டான் அவள் புதிராக மீண்டும் நோக்கினள்.
*உனக்கு. என்னில கோபம் போலை. **
அவள் தலையைக் குனிந்துகொண்டாள். அவளுக்கு இப் பொழுது அவனுடன் கதைக்க வேண்டுமென்ற ஆவலும் துடிப் பும் மீண்டும் கிளர்ந்தது. இருந்தாலும், இவனது இந்த நடவ டிக்கைகள் இவனது வெறும் மரியாதைக்காக மட்டும் இருக் கலாம் என்ற எண்ணத்தில் தனது உணர்வுகளை உள்ளுக் குள்ளேயே அடக்கிக் கொண்டாள்.
87

Page 49
“என்ன யோசிக்கிருய்?. நீ சாப்பிடாமல் போக நான் விடமாட்டன்' ராம் சட்டென்று அவளின் கைகளைப் பற்றி மெதுவாக உள்ளே திருப்பி விட்டான். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் அதை எதிர்பார்க்கவில்லை அவள் கரங்கள் நடுங்கின.
“ரா. மத்தான்...!" அவள் அதிசயமாக அவனைப் பார்த்தாள்.
**என்னை ... உனக்குப் பிடிக்கயில்லே எண்டால்.
சொல்லு, நான் உன்னைச் சாப்பிடச்சொல்லிக் கஷ்டப்படுத்த யில்லை." ராம் அமைதியாக, அதே வேளை அழுத்தமாக வும் கூறினன். அவளுக்கு அவனது அந்த வேண்டுதல் பிடித்தது.
"சாப்பிட்டுட்டுப் போறன் ." அவள் ஒருவித நாணத் தோடு உதடுகளை விரல்களால் அழுத்திக்கொண்டாள்.
‘போய். முகத்தைக் கழுவிக்கொண்டு வா’ அவன் அன்போடு கூறினன். அவள் ஆச்சரியம் மாருமலே புன்ன கையோடு கிணற்றடியை நோக்கி விரைந்தாள். .
“அம்மா. சாந்தி சாப்பிடாமல் போக, பேசாமல் விட் டிட்டு இருக்கிறியள்.? நான் அவளேப் போகவிடேல்லை" ராம் தன் தாயாரிடம் கூறுவது சாந்தியின் காதுகளில் விழுந்தபோது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
சாந்தி முகத்தைத் துடைத்து பவுடரைப் பூசிக்கொண்டு வந்ததும் 'அம்மா ரெண்டு பேருக்கும் சாப்பாட்டைப் போடுங்கோவன்' என்று ராம் கத்தினுன்.
“வேண்டாம் மாமி. நீங்களும் வந்திருங்கோ நானே சாப்பாட்டைப் போடுறன்' சாந்தி அவசரமாகக் கூறினுள்.
88

"ஐயோ மேன. எனக்குப் பசியே இல்லை நீங்கள் சாப் பிடுங்கோ! நான். இந்த எண்ணையைப் பூசிப்போட்டு தோய்த்துப்போட்ட உடுப்புகளை மடிச்சு வைச்சிட்டு வாறன்.? ருக்மணி கூறியவாறே நாரியைப் பிடித்துக்கொண்டு மெல்ல அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
சாந்தி ராமிற்கும் தனக்குமாகச் சாப்பாட்டைப் பரி மாறிவிட்டு, கதிரையில் அமர்ந்தாள். ராம் சாப்பிடத் தொடங்கியிருந்தான். ராம் அமர்ந்திருக்கும் கதிரைக்கு மிக அருகாக இவளுடைய கதிரையும் இருந்ததால், மெல்ல எழுந்து கதிரையைச் சற்றே நகர்த்தி, அமர்ந்து சாப்பிடத் தொடங்கினுள். ராம் மெலிதாகப் புன்னகை சிந்திக்கொண் டான். சில நிமிடங்கள் மெளனமாகவே கரைந்தன.
“சாந்தி. நீ நல்லா மாறிட்டாய் . * ராம் தான்
“நீங்களும் தான்." சாந்தி புன்னகையோடு கூறினுள்.
"ஏன் அப்பிடிச் சொல்லுருப்?"
“இவ்வளவு நேரமாய் என்னைப்பார்த்தும் பார்க்காத மாதிரி. பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டு." அவள் வேதனையோடு கூறினுள்.
“அது உனக்குக் கோபமா...?
'கோபம் இல்லாமல்.’
"அப்ப. ஏன் நீயாக ஆவது என்னுேட கதைக்காமல் இருந்தாய்?
“நீங்கள் பேசாமல் இருக்க. நானெப்படி..?”*
“அதுதான் சொல்லுறன்! நீ நல்லாவே மாlட்டாய்”
89

Page 50
*நானும் அதைத்தான் சொல்லுறன். நீங்களும் தல் லாகவே மாறிட்டீங்கள்'
அவன் சட்டென்று வாய்விட்டுச் சிரித்தான். அவளும் தொடர்ந்து சிரித்தாள். அவனுக்குப் புரைக்கேறியது. சட் டென்று இருக்கையை விட்டெழுந்த அவள்,
*இந்தாங்கோ. தண்ணியைக் குடியுங்கோ' அவசர மாகத் தண்ணீர்க் கிளாசை நீட்டினுள். தண்ணிரை வாங் கிக் குடித்தவன், கனிவோடு அவளைப் பார்த்தான். வினடி கள் சில கரைய, பார்வையின் வீரியம் தாங்காமல் தலை குனிந்த அவள் தொடர்ந்து சாப்பிடத் தொடங்கினள்.
“சாந்தி, நான் இவ்வளவு நேரமும் அந்தமாதிரி நடந்துகொண்டது எனக்கே சிரிப்பாய் இரு க் குது. எல்லாம் வேணுமெண்டு தான்"
அவள் சட்டென்று ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தாள்.
*நீயாகவே என்னுேடை கதைக்கிறதுக்கு ஆசைப்படுகி றியா எண்டு ரெஸ்ற் பண்ணத்தான்! கிணற்றடியில நின்ற போது என்ரை முகத்தைப் பாத்தியா?"
“முகத்தை. தீக்கோழி மாதிரி திருப்பி வைத்திருந் தால் நானெப்பிடிப் பார்க்கிறது."
“எனக்கு ஒரே சிரிப்பாகவும், அந்தரமாகவும், இருந்தது அதுதான் அப்பிடி முகத்தைத் திருப்பினுன்- இப்ப என்ன சொல்லுருய்?"
“நீங்கள். இன்னும் மாறவேயில்லை? அவள் சிரித்தாள்.
*நீ. மாறிட்டாய்"
“எப்படி
90

“அழகிலை. நிறத்திலை. சுபாவத்திலை!...”* *அதெப்பிடி?
“நல்லாய் வளர்ந்து நல்லவடிவாய் வந்திட்டாய். கறுப் பிலையும் ஜொலிக்கிருய் 1 முந்தியிருந்த வாயெல்லாம் குறை ஞ்சு அமைதியாய் மாறிட்டாய்” ராம் கூறியபொழுது அவ ளுக்குச் சிரிப்பு வந்தது. அப்படியே நீண்ட நேரம் கதைத் துக்கொண்டிருக்கவேண்டும் போலிருந்தது.
“நேற்று. கசற் கிடைச்சுதா? அவன் தான் கேட் டான்.
*கிடைச்சுது” அவள் நாணத்தால் முகம் சிவந்தாள்.
“fs... இப்பவெல்லாம் அடிக்கடி வெட்கப்படுகிருய்." ராம் புன்னகையோடு கூறியபொழுது அவளுக்கும் சிரிப்பு வந்தது.
“சாந்தி, நான் உனக்கெண்டு நிறைய சாறி துணிகள் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறன் பார்க்கப் போறியா?"
*ஏன். எனக்கு மட்டும்.?"
‘என்ன? கதைவிடுறியா? நான் இங்கை வாறதுக்கு ஒரு கிழமைக்கு முதல் அம்மா கடிதம் போட்டிருந்தவ. அதிலை எல்லாம் விபரமாய் எமுதியிருந்தா' என்றவன் தண்ணி ரைக் குடித்துவிட்டு உனக்கு. இதில சம்மதமா?' என ஆவலாகக் கேட்டான். அவளுக்கு வெட்கமாக இருந்தது.
*உங்களுக்கு...”*
*எனக்குச் சம்மதமில்லாட்டி உனக்கெண்டு சாறிஸ் எல்லாம் வாங்கிக்கொண்டு வருவனே?"
9.

Page 51
சாந்தி மகிழ்ச்சி பொங்க அவனை நோக்கினுள்,
“எனக்குச் சம்மதமில்லாட்டில்.இவ்வளவு ஆவலோடை இங்கை வந்து இண்டைக்குச் சமைத்திருப்பனே? இரு வரும் அடக்கமுடியாமல் சிரித்தபொழுது வாசலில் காலரவம் கேட்டது. சட்டென்று அவர்கள் அமைதியானர்கள். ருக்மணி தான் வந்து நின்ருள்.
“சாந்தி, வடிவாய்ப் போட்டுச் சாப்பிடணை; ராம், நீயும் வடிவாய் சாப்பிடு; உனக்கு மச்சமொண்டும் இல்லையெண்டு சாப்பாடு இறங்குதோ தெரியேல்லை. நாளைக்கும் ஊரடங் காம் ; இனிமேல் நாளையிண்டைக்குத்தான் ஏதும் இறைச் சியோ மீனே உன்ரை விருப்பத்துக்கு காய்ச்சலாம்' ருக்மணி மனவருத்தத்தோடு கூறியதும், m
“இல்லையம்மா. அங்கை நித்தமும் மச்சம்தானே. எனக்கு இங்கை மரக்கறி சாப்பிடத்தான் விருப்பமாயிருக்கு. சாந்தியின்ரை சமையல் என்ஆன எழும்பவே விடாதாம்?? ராம் கண்களைச் சிமிட்டியபொழுது, ருக்மணி சிரித்தவாறே,
“ஒ. அவள் எப்பிடிச் சமைத்தாலும் நீ சாப்பிட் டுத் தான் ஆகவேணுமடா" பகிடியாகக் கூறிவிட்டு, மெல்ல வெளியே சென்று தன் வேலைகளில் மூழ்கிக் கொண்டாள்.
'ச். சும்மாயிருங்கோ மாமிக்கு முன்னல இப்பிடிச் சொல்லுறதே?? சாந்தி வெட்கத்தோடு கண்டித்தாள்.
“என்னது. ம்ாமிக்கு முன்னல நான் கட்டியும் அணைப் பன் தெரியுமே???
“சீ..! என்ன கதைக்கிறீங்கள் ; ஆம்பிளைப் புத்தியைக்
காட்டுறீங்கள் பாத்தீங்களே." சாந்தி நாணித்தோடு சிரித்தவாறே எழுந்து கொண்டாள்.

செல்லநாதர் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வரு வது தெரிந்தது.
*நான் போகப் போறன்." சாந்தி புறப்பட ஆயத்த மானுள்.
“ஏய். அந்த சாறிஸ், துணிகள். ஒண்டையுமே பார்க் காமல் போகப்போறியே? கொஞ்சம் நில்லன்" ராம் அவ சரமாகக் கேட்டவாறே, அறைக்குள் ஒடிச்சென்று எடுத்து வந்த சொக்லேற் பக்கற்றை அவளின் கைகளில் மெதுவா கத் திணித்தான். .
“அங்கை . மாமா வந்திட்டார், இப்ப. துணிகளெல் லாம் பார்த்துக்கொண்டு நிக்கிறது கஷ்டமாயிருக்கும்.

Page 52
பின்னேரம் எங்கட வீட்டை வாங்கோவன். வாறபோது அது களையும் கொண்டு வந்தீங்களெண்டால் அம்மா அப்பாவுக் கும் சந்தோசமாயிருக்கும்" சாந்தி செல்லநாதரின் காதில் விழாதவாறு மெதுவாகக் கூறினுள்.
*ம். அதுவும் நல்ல ஐடியாதான். பின்னேரம் வீட்டில நிப்பாய்தானே?"
*பின்னை. நிக்காமல்.’
சாந்தி அவசரமாக விடைபெற்றுக் கொண்டு புறப் பட்டாள்.
“என்ன சாந்தி. சாப்பிடாமல் போருய் போலே?" செல்லநாதர் உள்ளே நுழைந்தவாறே திரும்பிக் கேட். போது,
“இல்லை மாமா, வடிவாய் சாப்பிட்டிட்டுத்தான் போறன். மாமி. பின் வளவுக்கை நிக்கிரு; மாமியிட்டை யும் சொல்லிவிடுங்கோ மாமா, நான் போட்டு வாறன்' என்றவாறே சாந்தி கேற்றைத் திறந்துகொண்டு வெளியில் இறங்கினுள். அவளது வீட்டுக் கேற் வாயிலில் சுகந்தி நின்று பார்ப்பது தெரிந்தது. அவள் வீட்டை அண்மித்ததும்,
*என்னக்கா?. காலையில வேளையோட வெளிக்கிட்ட னிங்களாம்; இன்னும் காணயில்லை எண்டு. அம்மா என் னைப் போய் ஒருக்கால் பார்த்து வரச்சொல்லி கரைச்சல் பிடிச்சுக்கொண்டு நிக்கிரு. நானும் கேற்றடிக்கு வர, நீங்க ளும் வாறியள்.”* சுகந்தி தன் கால்களிற்கு வேலையில்லை யென்ற மகிழ்ச்சியோடு கூறியதும்,
“ஏன். மாமா வீடு தானே, நானென்ன. அதுக்கிடை யில துலைஞ்சு போடுவனே? சாந்தி ஒருவித அதிருப்தியோடு
94

நெற்றியைச் சுளித்தவாறே கூறிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.
“அப்பிடித்தான் நானும் சொல்ல. அதுக்கு அம்மா சொல்ரு. முன்னையெண்டால் எவ்வளவு நேரமும் அங்கை நிக்கலாமாம்; ஆனல் இப்பவெண்டால், ராமத்தான் வந்து நிக்கிற படியாலை. கல்யாணத்துக்கு முதல் அங்கை போய் கணநேரம் நிக்கிறது வடிவில்லையாம்” சுகந்தி கூறிமுடிக்க முன்,
*ராமத்தான் நிண்டால் எனக்கென்ன? நான் மத்தி யானச் சமையல் வேலையெல்லாம் செய்து குடுத்திட்டு வாறன். மாமி பாவம் அவவாலை ஒண்டுமே ஏலாது!" சாந்தி சிவகாமிக்கும் கேட்கும் வகையில் சற்று உரக்கக் கூறிய வாறே அறைக்குள் நுழைந்துகொண்டாள். வெளியில் சிவ ராசரும் சிவகாமியும் ஏதோ முணுமுணுப்பது கேட்டது. அவள் கையிலிருந்த சொக்லேற்றை சாப்பிட மனம் வராமல் ஆசையோடு பார்த்துக் கொண்டாள். பிறகு, சுகந்திக்கும் கொடுத்துச் சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் மேசை லாச்சி யினுள் கவனமாக வைத்து மூடிக்கொண்டாள்.
“ Eпј,5. மாமிக்கு இப்ப நாரிப் பிடிப்பு ஏப்பிடியாம்?" விருந்தாவில் சுவரோடு சாய்ந்தமர்த்தவாறே வெற்றிலை யைக் குதப்பிக்கொண்டிருந்த சிவகாமி சத்தமாக வின வினள்.
"அவ. பரியாரியாரட்டைப் போய் எண்ணெய் வாங்கிக் கொண்டு வந்து போட்டிருக்கிரு; அதோட ஏதோ பத்திய மருந்தும் சாப்பிடுரு" சாந்தி அறைக்குள் நின்றவாறே பதில் கொடுத்தாள்.
*ராம். வீட்டில்தான் நிக்கிருனே? சிவகாமி மீண் டும் கேள்விக்கணை தொடுத்தாள்.
95

Page 53
'ஓம்."
‘என்னவாம் . என்ன கதைச்சவன்? “ஒண்டும். கதைக்கயில்லை"
*அப்பிடியோ ?? சிவகாமி ஒருவித ஏமாற்றத்தோடு ஆச்சரியப்படுவது தெரிந்தது. சாந்திக்குச் சிரிப்பு வந்தது. அவள் வெளியே வந்தபோது நல்ல வெய்யில் எறித்துக் கொண்டிருந்தது. அவளுக்குக் குளிக்க வேண்டும் போல் இருந்ததால் உடைகளுடன் கிணற்றடிக்குப் புறப்பட்டாள். ஒரு வாளி தண்ணிரை அள்ளி வார்த்த பொழுது உடலுக் குச் சுகமாக இருந்தது. ராம் பின்னேரம் வருவான் என்ற நினைப்பு அவளையுமறியாமல் அவளுள் குதூகலத்தை ஏற்ப டுத்தியிருந்தது. ஐந்து வருடங்களிற்கு முன்னர், ராம் வீட் டிற்கு வரும்பொழுது இல்லாத உணர்வுகள், சிந்தனைகள் எல்லாம் இப்போது அவளுள் ஏற்படுவதை எண்ணிப் பார்க் கும் போது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.
‘அவர். நான் பயப்பட்டதிற்கு எதிராகவே இருக்கி ருர், என்னை அவருக்கு நல்லாய் பிடிச்சுது போலை."
சற்று முன்னர் சாப்பிடும் பொழுது அவன் கதைத்த வையும் அவள் ஞாபகத்தில் வந்தபொழுது வெட்கமாகவும் சிரிப்பாகவும் இருந்தது.
"என்னக்கா? உங்கட பாட்டிலை சிரிக்கிறியள்!" கிணற் றடிக்கு வந்த சுகந்தி சந்தேகத்துடன் கேட்டபோது அவள் திடுக்குற்ருள். சுகந்தி கிணற்றுக் கட்டில் அமர்ந்து கொண்
Toir.
*அக்கா, உண்மையாகவே ராமத்தான் உங்களோட
ஒண்டுமே கதைக்கயில்லையே?’ சுகந்தி மிகவும் மெதுவாக 96

ஆதங்கத்துடன் கேட்டாள். சாந்தி கண்களைச் சிமிட்டினள். அவளுக்குச் சிரிப்பு வந்தது.
“நான் சும்மா வேணுமெண்டெல்லோ அம்மாவுக்கு அப்பிடிச் சொன்னஞன். அவர்.' வடிவாய் கதைச்சவர். முதலில. வேணுமெண்டு என்னேட கதைக்காமல், என்னை நல்லாய் வெருட்டிப்போட்டார். பிறகு நல். லாய்க் கதைச் சவர்; பின்னேரம் இங்கை வருவார்" புன்னகையோடு கூறியவள், -
"சுகந்தி, அவருக்கு உழுந்து வடை எண்டால் நல்ல விருப்பம். அவர் வந்தால் குடுக்கிறதுக்கு." சாந்தி சற்றுக் கவலையோடு கூறி முடிக்கமுன், V
‘யோசிக்காதேங்கோ, வடை ரெடி யாய் இருக்குது' சுகந்தி கூறியதும், சாந்தி ஆச்சரியமாக அவளை நோக்கி ஞள்.
“அக்கா, நீங்கள் மறந்தாலும். அம்மா தன்ரை மரு மகனை மறக்கவேயில்லை! அவ, நேற்றே ஒடக்கரையடிக்குப் போய், ஒரு வீட்டில தட்டை வடைக்குச் சொல்லிவைச்சு இண்டைக்குக் காலையில நீங்கள் மாமா வீட்டுக்குப் போன பிறகு, வடையையும் வாங்கிக்கொண்டு வந்திட்டா. எல் லாம். ராமத்தானுக்காகத்தான். எனக்குக் கூட, ராகிணி வீட்டாலை வந்தபிறகு தான் தெரியும்" சுக்ந்தியும் ஆச்சரி யத்துடன் கூறியபொழுது, சாந்திக்கு ஏனுே தாய் மீது அன் பும் பாசமும் பொங்கியது:
‘என்னதான் பிரச்சினை எண்டாலும், அம்மா அவர வர்க்குச் செய்ய வேண்டியதுகளை கால நேரம் பார்த்து, செய்துபோடுவா’ அவள் தாயை எண்ணி மனதிற்குள் பெருமைப்பட்டாள்.
"அக்கா, இண்டைக்கு ராமத்தான் இங்கை வர ஒரு விளையாட்டு விடுவமே?”
97

Page 54
“என்ன் விளையாட்டு.? அவர் எல்லாரையும் விட மேலாலை விளையாடிப்போடுவார்!"
*இல்லையக்கா; நீங்கள் அங்கை போனபோது முதலில 'உங்களை நல்லாய் வெருட்டினவர்தானே? அதுமாதிரி நாங் களும் ஒரு சின்ன வெருட்டல் விடவேணும். அவரின்ரை குறும்பை நாங்களும் கொஞ்சம் சோதிக்க வேணும்"
*என்ன மாதிரிச் சோதிக்கிறது??
‘அவர் வந்த உடனே நீங்கள் அறைக்குள்ளை Gւյր սնւն பேசாமல் இருந்திடவேணும். கொஞ்ச நேரத்துக்கு நீங்கள் வெளியில வரவே கூடாது. வடை, ரீ எல்லாம் நான் குடுக் கிறன்; பயப்படாதேங்கோ, அவர் கொஞ்ச நேரத்திலை. உங்களைக் காணயில்லையெண்டு தேடுவார்தானே. நான் உங்களை நித்திரையாய் இருக்கிறியள் எண்டு சொல்லுறன். அதுக்குப்பிறகு என்ன செய்யிருரெண்டு பாப்பமன்' சுகந்தி வேடிக்கையாக ஆர்வத்தோடு கூறினள்.
“ஐயையோ, அவர் வாறநேரம் நான் வீட்டில நிற்டன் எண்டு சொன்னனன். பிறகு. நான் இல்லையெண்டால் கோபமெல்லே வந்திடும்? சாந்தி அவசரமாகக் குறுக்கிட் டாள்,
"அதுக்கென்ன? பேறெங்கையும் போகாமல், நித்திரை தானே கொள்ளப்போநீங்கள். இதுவும் பிழையே? அவருக் கும் கொஞ்சம் கோபத்தையும் ஏமாற்றத்தையும் குடுக்க வேணும்" சுகந்தி விடாமல் வற்புறுத்தியதில் சாந்தியும் ஒப்புக்கொண்டாள்.
மளமளவென்று குளித்து முடித்த சாந்தி, அரைப்பாவா டையையும் சட்டையையும் அணிந்து, தன்னை அழகு படுத் திக் கொண்டாள். தேனீர் தயாரித்துக் குடித்துவிட்டு,
98

வீட்டைக் கூட்டி ஒழுங்கு படுத்திய பின்னர், வானெலியை முடுக்கிவிட்டாள். கொழும்பு ஸ்ரேசன் கரகரத்தது. அவள் முதல்நாள் ராம் கொடுத்தனுப்பிய கசற்றை எடுத்துச் சுழல விட்டாள்.
‘அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது." பாடல் ஒலிக்க ஆரம்பித்தபோது,
'அக்கா, ராமத்தான் ரேப் பண்ணியிருக்கிற பாட்டுக் கள் எண்டால்." வசனத்தை முடிக்காமலே சுகந்தி, புதி தாக நாட்டியிருந்த பூமரங்களுக்குத் தண்ணீர் தெளித்த வாறே கண்களைச்சிமிட்டி, உதடுகளைச் சுருக்கிக் குறும்பாகச் சிரித்தாள். சாந்திக்கு அவளது கிண்டல் வெட்கத்தை ஏற் படுத்தியது. அந்தப் பாடல்கள் உண்மையிலேயே வழக்கத் திற்கும் மாமுன புதியதொரு ரசனையை அவளுள் ஏற்ப டுத்தியிருந்தது. ஒவ்வொரு பாடலையும் திரும்பத் திரும்ப ரசித்துக் கேட்க வேண்டும்போல் அவள் மனம் ஆவல்ப்பட் டாலும் சுகந்தி கிண்டல் செய்வாளென்ற நினைப்பில் அக் கறையில்லாததுபோல் காட்டிக்கொண்டாள். கசற் பிளே யர் ஒய்ந்துகொண்டபொழுது வெளியில் கேற் திறபடும் ஓசை கேட்டது.
ராம் ஒரு பெரிய பையுடன் உள்ளே வருவது தெரிந்த போது அவளது இதயம் ஒரு கணம், படபடத்து, சாதாரண மானது. ராம் அவளுக்குப் பிடித்தமான நீலநிறத்தில் சாரம் அணிந்திருந்தது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மார்பு வரை திறந்திருந்த ஷேட்டின் வழியாகத் தெரியும் மைனர் செயினுடன் அவன் வந்த தோற்றம் அவளுக்குப் பெருமை யாக இருந்தது. அக்கம்பக்கத்தார் அவனை அவதானித் திருக்கவேண்டுமென்ற ஆதங்கம் அவளையறியாமலே அவ ளுள் கிளர்ந்திருந்தது. பக்கத்துவீட்டு மச்சாள், முதல்நாள் அவளுடன் கதைத்தபொழுது ‘ராம் மன்மதன் மாதிரி இருக்
99

Page 55
கிறனடி. நீ குடுத்துவைச்சவள் தான்." என்று பெருமூச்சு விட்டுக்கொண்ட சம்பவம் சட்டென்று அவள் ஞாபகத்தில் வந்தபோது உடல் புல்லரித்தது!
*அக்கா!. என்ன . ஜன்னலடியிலையே நிக்கிறீங்கள்? நான் சொன்னதெல்லாம் மறந்துபோட்டியளே?' சுகந்தி அவசரமாக ஒடிவந்து ஞாபகப்படுத்தியதும், திடுக்குற்ற அவள் நாக்கைக் கடித்துக்கொண்டு அறைக்குள் ஒடிச்சென்று கட்டிலில் மெதுவாகச் சாய்ந்துகொண்டாள்.

பக்கத்து வீட்டு நாய் குரைத்து ஓய்ந்தது.
வெளிவிருந்தாவில் இருந்த சிவராசர் ராமின் வரவை அவதானித்ததும் மகிழ்ச்சியுடன் “வாமேன. உள்ளைவா" என்றவாறே ராமை வரவேற்று, வரவேற்பறையில் அமர்த்தி அளவளாவுவது கேட்டது. சில நிமிடங்களில் சிவகாமியும் அங்கு வந்து கதைக்கத் தொடங்கினுள். பக்கத்து அறையாத லால் கதைகளை சாந்தியால் தெளிவாகக் கேட்கக்கூடியதா யிருந்தது.
"சாப்பிடுங்கோ. இவ்வளவும் சாப்பிட்டிட்டுத்தான் எழும்ப வேணும்"சுகந்தி ராமிற்கு வடையைப் பரிமாறினள்.

Page 56
“ஒ. பிறகென்ன? எனக்கு விருப்பமான சாமான்! இப்படி வைச்சீங்களெண்டால், நான்'ட்றே”யையும் சேர்த்துச் சாப்பிட்டுப்போடுவன்' என்று ராம் கூறியபோது அனைவரும் சிரித்துக்கொண்டனர். வரவேற்பறையின் கலகலப்பு கட்டி லில் படுத்திருந்த சாந்திக்கு ஏனே ஏக்கமாக இருந்தது.
*அப்ப . திரும்ப இனிமேல் எப்ப போறது?’ சிவகாமி தான் கேட்டாள்.
'ரெண்டு மாசத்திலை எப்பிடியும் போகவேணும்!"
‘அப்பிடித்தான் அண்ணையும் சொன்னவர்; அதனுல தான் அதுக்கிடையில எல்லா விசயத்தையும் முடிச்சிட வேண்டுமெண்டு பாக்கிறம்” சிவகாமி கூறி முடிக்கமுன்,
“என்ன. ராம்? உனக்கு .அதிலை யொரு பிரச்சினையும் இல்லைத்தானே? சிவராசர் குறுக்கிட்டார்.
“இல்லையில்லை; அம்மா எல்லாம் .முதலே விபரமாய் எழுதியிருந்தவ; நான் அந்த முடிவோடைதான். அங்கை வீடெல்லாம் அரேன்ஜ் பண்ணிக்கொண்டு ->ந்திருக்கி றன்’’.
*அப்ப. இவளையும் கூட்டிக்கொண்டு போகப்போறன் எண்டிருய்...? சிவராசர் கேள்விக் குறியோடு நோக்கினர்.
“ஓம் மாமா ரெண்டு மாசத்தில போனல் பிறகு எப்ப வருவனெண்டு சொல்லத் தெரியாது. சாந்திக்கும் ‘பாஸ்போட்” எல்லாம் ஆயத்தமாய் இருக்குதெண்டு அம்மா சொன்ன ."
'ஒமோம்; அவளுக்கும் எனக்கும் இருக்குது. நாங்கள் ரெண்டு பேரும் ஒருக்கால். இந்தியாக் கோயில்களுக்கு
102

போறதெண்ட ஐடியாவிலை ஒல்கன்றி Lutr GioG3 u TL - எடுத்தனங்கள். பிற  ெக ங்  ைக இந்த நாட் டு ப் பிரச்சினைகளால கொழும்புக்கே போக ஏலாமல் இருக் குது..!"சிவராசர் கூறிமுடிக்கமுன்,
*ராம். அப்ப . அவளை அங்கை கொண்டுபோய் வைத் திருக்கிறதாலை ஒரு பயமும் இல்லையே?’ சிவகாமி ஒாகவித ஏக்கத்தோடு கேட்பது சாந்திக்குப் புரிந்தது. அவளுக்குச் சிசிப்புவந்தது. −
“இல்லை மாமி. அதில என்ன பயம்? நான் கூடவே இருப்பன்தானே. அக்கம் பக்கம் வேற 'ரமில்ஸ்" உம் இருக்கி னம். அவையஞக்கெல்லாம் சொல்லிப்போட்டுத்தான் வந்த னன். அவையள் எங்களை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பி னம்?
“း •• ••• .......... •••’ ``
“இப்ப .இங்கை இருக்கிறதைவிட அங்கை இருக்கி றது எவ்வளவோ பாதுகாப்புத்தானே.”
“ஒ. அது சரி. சிவராசர் ஒப்புக்கொண்டார். சிவ காமியின் சஞ்சலம் ராமிற்குப் புரிந்ததாலோ என்னவோ,
‘மாமி., அங்கை . நான் வேலைக்குப் போனலும் சாந்திக்கு ஒரு பயமுமே இருக்காது. வீட்டில சகல வசதியும் செய்திருக்கிறன்; நாலு நாளிலை அவளுக்குப் பழகீடும்" என்று ஆறுதல் கூறுவதுபோல் கூறிவிட்டு,
"மாமா, இந்தாங்கோ ரவுசர் குளோத்ஸ்? என்ற வாறே நான்கைந்து வெளிநாட்டுத் துணிகளைப்பையிலிருந்து எடுத்து, அவர் கையில் திணித்த ராம்,
"சுகந்தி இந்தா. இதில ஒன்பது சாறிஸ"ம் "பிள வுஸ் பீஸ்'உம் இருக்குது. உனக்கு. அக்காவுக்கு.
103

Page 57
அம்மாவுக்கு. சரிதானே' என்றவாறே சுகந்தியிடம் அந்த வெளிநாட்டுப் பையை நீட்டியபோது, சுகந்தி நன்றியோடு பெற்றுக்கொண்டாள். w
"சுகந்தி. அதுக்குள்ளை சொக்லேற் பக்கற்ஸ் உம் இருக்குது. சாப்பிடுங்கோ’ ராம் கூறிவிட்டு மீண்டும் மாமன் மாமியாருடன் சம்பாஷணையில் ஈடுபட்டுக்கொண் டான்.
"கல்யாணத்துக்கு முன்னமே, வெளிநாட்டுக்குப் போற கதையெல்லாம் கதைக்கிருர். ஆனல். என்னை எங்கை யெண்டு .இன்னும் ஒரு சொல்லுக் கேட்கவேயில்லையே! ஒருவேளை.என்னை .சும்மா ஒரு மாற்றத்துக்காகத்தான் கட்ட ஆசைப்படுகிருரோ? கட்டின் உடனேயே கனடாவுக் குக் கூட்டிக்கொண்டுபோறதெண்டால். சாந்திக்கு ஒரே யோசனையாக இருந்தது.
47 நாட்கள். சினிமாப் படம் மாதிரி. இவளுக்கும் ஏற்கனவே கனடாவிலை ஆரும் வெள்ளைக்காரிகள்...!"
*அக்கா; இங்கை பாருங்கோ; எல்லாம். நல்ல வடி வான சாறிகள் ! ராமத்தான் சரியான ஆளக்கா; நான் கூடின பங்கு சட்டைகள்தான் போடுறணுன் எண்டு அவ்வளவு தெரியாதே? அவர் உங்களுக்கெண்டுதான் இதையெல்லாம் வாங்கிக்கொண்டு வந்திட்டு . சும்மா எங்களைப் பிளிஸ் பண்ணுறதுக்காக என்ரை பெயரையும் அம்மாவின்ரை பெயரையும் இதிலே சேர்த்திருக்கிஞர்!" சுகந்தி சாறிகளைக் கட்டிலில் போட்டுவிட்டு முணுமுணுப்பதைப் பார்த்தபோது சாந்திக்குச் சிரிப்பு வந்தது. சொக்லேற் பக்கற்றை உடைத்து இருவருமாக மளமளவென்று சாப்பிட்டார்கள்.
− சுகந்தி, அவளை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டிவிட்டு மீண்டும் வரவேற்பறை சம்பாஷணையில் சேர்ந்துகொண்டாள்.
104

வெளியில் கேற் திறபடும் ஓசை கேட்டது. எல்லோரும் எட்டிப்பார்த்தார்கள். அவசரம் அவசரமாக உள்ளே வந்து கொண்டிருந்த செல்லநாதர்,
*அட. ராமும் இங்கேயே நிக்கிறன்! இங்கை. சிவ காமி."என்றவாறே சிவகாமியுடன் உள் விழுந்தாவிற்கு வந்தார்.
*சிவகாமி, எங்கை. இவளின்ரை ஒலை தேடியெடுத்துப் போட்டியே? . . . . ." . .",
“ஓமண்ணை. அவரோடை கதைச்சுக்கொண்டிருங் கோவன். எடுத்துக்கொண்டு வாறன்’
சிவுகாமி அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
“எனக்கு நிக்க நேரமில்லை; நீ கெதியாய் கொண்டுவா” என்று உரத்துக்கூறிய செல்லநாதர்,
"கறுப்பையாச் சாத்திரியார் நேற்று மத்தியானந்தான் மட்டக்களப்பாலை வந்தவராம். எனக்கு. அவர் வந்தது இப்பதான் தெரியும். ஊரடங்குச் சட்டம் இருந்தாலும். ஒழுங்கைகளுக்குள்ளாலேயாவது போய் விசயத்தைக் கவ னிக்கவேணும். பிறகு. நாளும் சுணங்கிப் போடும்” என்ற வாறு அறை வாசலுக்கு வந்தவர், சிவகாமி கொண்டுவந்து கொடுத்த, சாந்தியின் சாதக ஒலையைப் பெற்றுக்கொண்ட தும், .
"என்னெண்டாலும் பொருத்தங்களை ஒருக்கால் வடி வாய்ப் பார்த்தால்தான் மனசுக்கு நிம்மதியாய் இருக்கும்” என்றவாறே திரும்பினர்.
“அது சரியண்ணை. சுகந்தியின்ரை விசயம் என்ன மாதிரி?’ சிவகாமி அவசரமாக மெதுவாகக் கேட்டபொழுது சாந்தி காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டாள்.
105

Page 58
"ஒமோம்; நல்லவேளை! ஞாபகப்படுத்திப்போட்டாய். அவன். தனராஜின்ரை ஓலையும் கறுப்பையா சாத்திரியா ரிட்டை தான் இருக்குதெண்டு தகப்பன் - ராமலிங்கம் சொன்னவன். கையோடை சுகந்தியின்ரையையும் வாங்கித் தரச் சொல்லி நேற்றுச் சொல்லிவிட்டவன்; நான் மறந்து போனன். எங்கை .அவளின்ரையையும் கொண்டுவா’ என்று செல்லநாதர் அவசரப்படுத்தியதும் சிவகாமி ஓட்டமும் நடையுமாக சுகந்தியின் ஒலையையும் எடுத்துக் கொடுத்தாள். செல்லநாதர் விடைபெற்றுக்கொண்டுபோவது தெரிந்தது.
"ஒஹோ. சுகந்திக்கு தனராஜ் மாஸ்ரரைப் பேசினம்
போலகிடக்குதுபரவாயில்லை; அவர் நல்லவர்; குடிகிடி இல்லையெண்டுதான் கேள்விப்பட்டனன். ராமத்தானின்ரை கிளாஸ்மேட் ஆக இருக்கவேணும்".
சாந்திக்கு அந்த சம்பந்தம் மிகவும் பிடித்தது. சுவர் மணிக்கூடு ஐந்து தடவை ஒலியெழுப்பி ஓய்ந்துகொண்டதும் அறைக்குள் இருந்த சாந்தி, பொறுமைமீறி எழுந்துவெளியே வந்தாள். ஜன்னலினூடாக வரவேற்பறையை எட்டிப் பார்த்தபோது ராமும் சிவராசரும் சாதாரணமாகக் கதைத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. சுகந்தி வில்லங்கமாக வரவேற்பற்ை வாசலிலேயே நின்றிருந்தாள்.
pTrTith. தன்னைப்பற்றி எதுவுமே விசாரிக்காமல் சாதா ரணமாகக் கதைத்துக்கொண்டிருப்பது சாந்திக்கு எரிச்ச லையே கொடுத்தது.
இவருக்கு உண்மையாகவே என்னிடம் அன்பும் ஆர்வ மும் இல்லையோ? அப்படியிருந்திருந்தால். வீட்டுக்கு வந்த இவ்வளவு நேரத்திலை. என்ன எங்கையெண்டு கேட்டிருக்க லாமே? அம்மா, அப்பா கலியாணம் பேசிப் போட்டினமே எண்டதுக்காக சும்மா போலியாக அனுசரிச்சு நடக்கிருர், அவ்வளவுதான்",
O6

அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. ‘விறுவிறு' வென்று அறைக்குள் நுழைந்து, பொத்தென்று கட்டிலில் விழுந்தாள். தலையணையைக் கட்டியணைத்தவாறே பிடிவாத மாகக் கண்களை மூடிக்கொண்டாள். மனப்புழுக்கம் குறை வதாயில்லை! சட்டுச் சட்டென்று கோபமும் வெறுப்பும் வந் தாலும் ஒருவித ஏக்கமும் கூடவே இருப்பதை அவளால் ஒதுக்க முடியவில்லை!

Page 59
ராமும் சிவராசரும் மிகவும் சுவாரஸ்யமாக, சம்பாஷணை யில் இறங்கியிருந்தார்கள்.
"மாமா, தென்னந் தோட்டமெல்லாம் இப்ப. என்ன பாட்டிலை இருக்குது?’
*அது. நீ கனடாவுக்குப் போகேக்கை காய்க்காமல் நிண்டதெல்லே? இப்ப. கடவுளேயெண்டு நல்லாய்க் காய்க் குது. அந்த எட்டுப் பரப்புத் தென்னந் தோட்டமும் இல் லாட்டில், இந்தநாளையில எங்கட வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கவே ஏலாமல்தான் இருக்கும்'.

"ஏன் மாமா. உங்களுக்கு நல்ல சம்பளம்தானே? ரெண்டு பெட்டைகளோடை, அவ்வளவும் போதாதெண்டே சொல்லுநீங்கள்?"
“அட, நீயுமொண்டு நாளாந்தம் சாப்விட்டுக் கொண் டிருந்தால் மட்டும் போதுமே? ரெண்டு குமருகளை வைச் சிருக்கிறதெண்டால், இந்த நாளையில. ரெண்டு பாதாளக் கிடங்குகளை வெட்டி வைச்சிருக்கிறமாதிரி. நாங்கள் அதுக் குள்ளே குதிச்சால்தான் அதுகளை வாழவைக்கலாம். அதுகள் வாழுறது . யாழ்ப்பாணத்திலை எண்டதை மறந்து போட் டியே?. கொஞ்சம் பொறன். கலியாணப் பேச்சுக்கள் சூடு பிடிக்கேக்கைதான். பெண்ணைப் பெத்தவை எவ்வளவு உழைக்கவேணுமெண்டு உனக்குத் தெரியும்.”
"மாமா, நீங்கள் எதை வைத்து அப்பிடிச் சொல்லுறி யள் எண்டு எனக்கு விளங்குது. யாழ்ப்பாணத்தில வாழுற குமர்ப்பிள்ளைகள் பலர், நல்ல திறமையும் அறிவும் அழகும் இருந்தாலும் கூட நல்ல மணவாழ்க்கையை அமைச்சுக் கொள்ள முடியாமல் சீரழிஞ்சு போறதும் எனக்குத் தெரி யும்.'"
"ராம், இப்பிடித்தான் எல்லாப் பெடியங்களும்! இந்த நியாயமில்லாத நிலைமைகளை நல்லாய்ப் புரிஞ்சுகொண்டும் அவையஞக்கெண்டு கலியாணம் வரேக்குள்ளை . புரிஞ்சு கொண்ட அத்தனையையும் தூக்கிப் பிறகால வைச்சுப் போட்டு புரியாத மாதிரிப் பிடிவாதமாய் நிக்கிருங்கள்! இதிலை என்ன பிரயோசனம்?. உண்மையைச் சொல்லுறன் ராம்; நான் இப்ப ரெண்டு குமர்ப்பிள்ளைகளுக்குத் தகப்பன் எண்டு நினைச்சுக் கதைக்காமல் ஒரு சாதாரண நடுநிலை மனுச ணுய்த்தான் நிண்டு கதைக்கிறன். மாப்பிள்ளை குடுக்கிறவைக் குத்தான் புத்தி போச்சுதெண்டால், மாப்பிள்ளையாய் போறவையளுக்குப் புத்தி எங்கை போகுது? போன மாசமும்
109

Page 60
இந்த ஊரிலை ஒரு கலியாணம் நடந்தது. பெடியன் ரெக்னிக்கல் ஒவீசர். பெட்டை ஏ.எல். வரையும் படிச்ச வள்; அவளுக்குக்கீழை இன்னும் மூண்டு குமருகள் இருக்குது கள்! சீதனம் . எவ்வளவு தெரியுமே? எழுபத்தையாயிரம் காசு; பெட்டைக்கு வேண்டிய நகைகள்; மாப்பிள்ளை வீட் டாருக்குப் பிடிச்சமாதிரி வீடு! இப்ப . அந்தப் பெட்டை யின்ரை தகப்பன் அரைவாசியாய்ப் போனன்! அவன் ஒரு கிராஜ்வேட் ரீச்சர் . இருந்தும் என்ன சுகத்தைக் கண்டான்? கஷ்டப்பட்டுக் சேர்த்து ஒருத்தியைத்தான், கரைசேர்த் தான். இனி. மற்றதுகளின்ரை பாடு என்ன? . இதுகளை யெல்லாம் யோசித்துப் பாக்கிறபோது, உண்மையாகவே எனக்கு வயிறு பத்தி எரியுது! கடவுளேயெண்டு என்ரை பிள்ளைகளுக்குக் கலியாணம் செய்துவைக்க போதுமான வசதிகள் என்னட்டை இருக்குது. ஆனலும் எல்லாருக்கும் அப்பிடி வசதிகள் வந்துவிடுமே?.." சிவராசர் ஒருவித ஆற்றமையுடன் மூச்சுவிடாமலே கூறினர்.
"மாமா, நானெண்டு சொல்லட்டேஎேன்னைப் பொறுத்த வரையில . புதிசாய் கலியாணம் செய்யிறவையஞக்கு புறம்பாய் வாழுறதுக்கு ஒருவீடு அவசியம் தான். அதுக் காக சீதனமாய்க் காசு, இனும் எண்டெல்லாம் வாங்கிறது சுத்த அடாவடித்தனம் எண்டு நினைக்கிறவன் நான். வீடு கூட . பெண்வீட்டாரை வற்புறுத்திக் கேட்கக் கூடாது. அவையஞக்குத் தரக்கூடிய வசதியிருந்தால் வாங்கலாம்; இல்லாவிட்டால், இருபக்கத்தாரும் ஒண்டாச்சேர்ந்து, ஒரு வீட்டு வசதியைக் கொடுக்கல்ாம். அதுதான் முறை எண்டு நானே எனக்குள்ளை யோசிக்கிறதுண்டு; ஆனல், நான் யோசிக்கிற மாதிரி எல்லாரும் யோசித்தால். நீங்கள் சொன்னமாதிரியான அவலங்கள் வரவே வராது."
“என்ன. மாமனுக்கும் மருமகனுக்குமிடையில விவா தம் போலை கிடக்குது?" சிவகாமி இடையில் வந்து குறுக் கிட்டாள்.
110

'இல்லை மாமி, அப்பிடியொரு விவாதமுமில்லை; சும்மா எங்கட அபிப்பிராயங்கள்தான்' ராம் சிரித்தவாறே கூறினன். r
திடீரெண்று அவசரமாக எழுந்த சிவராசர் நேரத்தைப் பார்த்துவிட்டு,
*ராம், நீ இவையோட கதைச்சுக் கொண்டிரு. நானெ ருக்கால் உவர் ராமலிங்கத்தாரைச் சந்தித்துக் கொண்டு வாறன்' என்றவாறே எழுந்து, சேட்டை மாட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டார். . . .
"சுகந்தி, அத்தானுக்கு அல்பங்களை எடுத்துக் காட் டன்' என்றவாறே சிவகாமியும் ஏதோ அலுவலாக உள்ளே நுழைந்து கொண்டாள்.
சில வினுடிகள் வரவேற்பறை நிசப்தமாக இருந்தது. சுகந்தி அல்பங்களைக் கொண்டுபோய் ராமிடம் கொடுத்த பொழுது,
"சுகந்தி, சாந்தி எங்கை போயிட்டாள்?' என்று அவன் மிக மெதுவாக ஆவலுடன் கேட்டான். சுகந்தி வாய்க்குள் வந்த சிரிப்பை அடக்கியவாறே, “அவ நித்திரையாய் இருக் கிரு” என்று சொல்வது சாந்திக்குக் கேட்டது. சாந்தி மிக அவதானமாக அவர்களின் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
‘ரித்திரையோ ? நான் இங்கை வருவனெண்டு அவள் சொல்லயில்லயே?*
"சொன்னவதான். அதுக்கென்ன இப்ப?”
*ம். நல்ல நித்திரையே?
1 11

Page 61
“பின்ன. கூடாத நித்திரையே கொள்ளுறது?"
சாந்திக்குச் சிரிப்பு வந்தது. அவள் தலையணையை மார் போடு அணைத்தவாறே எழுந்து, சுவரோடு சாய்ந்தமர்ந்து கொண்டாள். சுகந்தி சிரிக்காமல் பதில் சொல்வது அவ ளுக்கு வேடிக்கையாக இருந்தது.
*என்னடா இது?" என்று சூள்கொட்டிய ராம், "நான் வந்திருக்கிறதாய் போய் அவளிட்டை ஒருக்கால் சொல்லி விடன்" என்று அவசரப்படுத்தினன்.
“சொன்னலும் அவ எழும்பமாட்டா. சும்மா. உந்த அல்பங்களைப் பாருங்கோ ராமத்தான்" சுகந்தி சின்னப் பிள்ளைத்தனத்துடன் அலட்சியமாகக் கூறினுள். ராமிற்குக் கோபம் வந்ததில் சட்டென்று முகம் சிவந்தது.
"இதென்ன. கண்டறியாத அல்பம் ? நீ இப்ப சாந் தியை எழுப்பி விடுறியோ இல்லையோ? அவன் சற்று அதட்டலாக விஞவினன்
‘என்ன ஒரு மாதிரி வெருட்டுறீங்கள்? அம்மாவிட்டைச் சொல்லிப்போடுவன் தெரியுமே?" சுகந்தியும் சளைத்துப் போகாமல் இறுக்கமாகவே நின்ருள்.
'போடி அம்மாவிட்டைச் சொன்னலென்ன. நான் தேய்ஞ்சு போடுவனே? நான் அவளைக் கட்டப்போறவன்; தெரியுமே? ராம் விட்டுக்கொடுக்காமல் அதிகாரத் தோர ணையில் பேசியபோது, சுகந்தி பயந்துபோனுள். ராமிற்கு அவளது பயம் சிரிப்பையூட்டியது.
“என்ன யோசிக்கிருய்? போய் சாந்தியைக் கூட்டிக் கொண்டு வாணை1'சற்றுக் குழைந்த குரலில் ராம் கூறியது,
சுகந்திக்குக் கிண்டலோ, உண்மையோ எனப் புரியாமல்
112

இருந்த பொழுதிலும், அவள் மெதுவாகத் திரும்பி, சாந்தி யின் அறைக்குள் நுழைந்து சாந்தியை அழைத்தாள். சாந் திக்குப் பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது.
சாந்தி வந்தபொழுது ராம் சிரித்தான். அதன் அர்த் தம் இருவருக்குமே பூரணமாகப் புரியாமல் இருந்தது.
“என்ன சுகந்தி?. இவள் நித்திரை செய்த மாதிரியே தெரியேல்லை!" ராம் மீண்டும் குறும்பாகச் சிரித்துவிட்டு எதிர்பாராத விதமாக சாந்தியின் கையில் பட்டென்று கிள் ளினன். வலியோடு முனகிய சாந்தி சட்டென்று விலகினுள்.
“இரண்டுபேரும் சேர்ந்து எனக்குக் காது குத்துறிங் களோ? கள்ளிகள்!?? ராம்பரிகாசமாகக் கூறியபோது சாந் தியும் சுகந்தியும் ஒருவரையொருவர் திரும்பிப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
*ராமத்தான்! நீங்கள்." சாந்தி யோசித்தாள்.
“நான் வாறபோது. நீ இந்த ஜன்னலடியிலை நிண்ட னியோ, இல்லையோ? உண்மையைச் சொல்லு' ராம் கேட்ட போது சுகந்தி தலையைக்குனிந்து மெதுவாகச் சிரித்தாள். சுகந்தி நாக்கைக் கடித்தவாறே மறுபக்கம் திரும்பினள்.
'நீங்கள் ஜன்னலைப் பார்த்தமாதிரித் தெரியேல்லையே! அப்ப எப்பிடி என்னைக் கண்டனிங்கள்.?” சாந்தி தலை நிமி ராமலே சந்தேகத்தோடு கேட்டாள்.
“எனக்குக் கழுகுக்கண் தெரியுமோ? சும்மா நடக்கிற போதும் மூலை முடுக்கொண்டும் தப்பாது' ராம் மீண்டும் பரிகாசமாகச் சிரித்தான்.
"சுகந்தி, பாத்தியே? நான் அப்பவே சொன்னன். இவர் எல்லாருக்கும் மேலாலை விளையாடுவார் எண்டு."
113

Page 62
சாந்தி கூறி முடிக்கமுன், சுகந்தி வெட்கம் தாளாமல் மெல்ல உள்ளே நழுவிக்கொண்டாள்.
*ராமத்தான், உங்களுக்கு இவ்வளவு கழுகுக்கண் ணெண்டு தெரிஞ்சிருந்தால் இப்பிடி."
*சும்மா . வில்லங்கமாய்க் கட்டிலிலை படுத்திருக்காமல், உண்மையாகவே நித்திரை கொண்டிருப்பாயாக்கும்"
*சும்மா போங்கோ, உங்களோட இப்ப கூடக் கதைச்சு வெல்ல ஏலாது!”
“ஒத்துக் கொள்ளுறியோ??
*என்ன செய்யிறது? இப்பவே ஒத்துக்கொள்ளப் பழகத் தானே வேணும்!"
'நீ முந்தி மாதிரி இல்லாமல். இப்பிடி அடங்கிப் போறதைப்பார்க்க. எனக்கு ஆச்சரியமாய் இருக்குது!"
சாந்தி மெல்லச் சிரித்தாள்.

விநாடிகள் சில ஒருவித தவிப்போடு விலகின. ராமினது பார்வையின் வீரியத்தை அவளால் சமாளிக்க முடியாமல் இருந்தது. அவள் மீண்டும் தலேயைக் குனிந்தாள்.
*சாந்தி."
“ub...””
“உங்கட தென்னந்தோட்டத்தை ஒருக்கால் பார்க்க வேணுமெண்டு ஆசையாய் இருக்குது. பார்த்துக்கொண்டு வருவமே?”
சட்டென்று அவள் நிமிர்ந்துபார்த்தாள்.
“என்ன பாக்கிருய்?"

Page 63
*இல்லை. தனியாவோ??
“நீயும் கூட வா'
*அதுதான் . என்னுேட தனியாவோ?’’
“ஏன்? வந்தாலென்ன? உதிலைதானே? உந்தக் குச்சு ஒழுங்கையால போனல் வலுகிட்டத்தானே".
"அது சரி; ஆக்கள் எல்லாரும் பாப்பினமெல்லே?" சாந்தி தயங்கிக் கூறினுள்.
“பார்த்தாலென்ன? சும்மா.தென்னந் தோட்டத்தைப் பாக்க ஆசையாய் இருக்குதெண்டால்."
“சரி வாங்கோ’ என்றவாறே போகத் திரும்பிய சாந்தி,
'பின்படலையால போவம் உள்ளாலை வாங்கோ' என்று.அவன அழைத்தபடி வீட்டின் பின்புறத்தை நோக் கிச் சென்ருள்,
“வீடெல்லாம் நல்லாய் பெருப்பிச்சுப் போட்டியள்! என்ன?? ராம் வீட்டின் பகுதிகளைச் சுற்றிச் சுழன்று பார்வையிட்டவாறே நடந்தான்.
“ஓம்; எப்பிடி வீடு?. வீடு உங்களுக்குப் பிடிச்சுதே?. இந்த வீடு எனக்குத்தானே" சாந்தி ஆவலோடு கூறினுள்.
“உனக்கு எழுதியாச்சுதோ?"
“இல்லை; இனிமேல்தான் எழுதுவினம். எங்களுக்குத் தும்பளையிலும் ஒரு பழையவீடு இருக்குதுதானே. முதலிலை
16

அந்த வீடு தான் எனக்குத் தாறதெண்டு இருந்தவையள். அது .நாலுபரப்புக் காணி. இது மூண்டு பரப்புத்தானே! ஆனலும் எனக்கென்னவோ இந்த இடந்தான் பிடிச்சுது. பின்னைச் சரியெண்டு அம்மாவும் அப்பாவும் விட்டிட்டினம்".
"அப்ப. கொம்மாவும் கொப்பரும் பின்னுக்கு எங்கை இருப்பினம்?"
“அவையள். தும்பளைக் காணியில ஒரு பரப்பை எடுத்து சின்ன வீடு கட்டி இருக்கப்போகினமாம்” " சாந்தி பகிடி யாகக் கூறினுள்.
“ஏய்! உனக்கெதுக்கு வீடு? எங்கட வீடு எனக்குத் தானே. பேசாமல் வீடு வேண்டாமெண்டு சொல்லிவிடு . வேணுமெண்டால், தென்னந்தோட்டத்தில வாற அரை வாசியை மட்டும் வாங்கலாம். அது . பின்னுக்கு நல்லாய் உதவும்" ராம் நிதானமாக, அக்கறையோடு அபிப்பிராயம் தெரிவித்தான்.
*ராமத்தான் சும்மா வாற வீட்டை வேண்டாமெண்டு சொல்லுறதே?" அவனது அபிப்பிராயத்தைக் கேட்டு ஆச் சரியமடைந்த சாந்தி தனது அபிப்பிராயத்தைத் தெரிவித் தாள்.
*சும்மா.தேவையில்லாமல் ஏன் கடமைப்பட வேணும்? நான் தனிப் பிள்ளை? எனக்கு வீடு வசதியெல்லாம் இருக் குது. பிற்காலத்தில கொம்மாவும் கொப்பாவும் இருக்கிற துக்கும் ஒரு வீடு இருந்தால் அவையளுக்குச் சுகந்தானே. விரும்பினுல் அவையள் சாகிறபோது எழுதித் தரட்டும்”.
"ராமத்தான்..!" அவள் ஆச்சரியத்தோடும் வியப் போடும் கனிவாக அவனை நோக்கினுள்.
117

Page 64
“6T6irer சாந்தி?. ஏன் இப்பிடிப் Luitdiscipli?' g tub சந்தேகமாகக் கேட்டான்.
*நீங்கள் . மற்ற ஆம்பிளைகளை விட வித்தியாசமாய் இருக்கிறீங்கள். நான் குடுத்துவைத்தவள்’ சாந்தி குரல் தழுதழுக்கக் கூறினுள்.
*ஏய் . இதுக்குப்போய் பெரிதாய் உணர்ச்சிவசப்படு றியே? இது. என்னைப் பொறுத்தவரையில ஒரு மனிதாபி மானமுள்ள மனிசன் செய்யிற விசயம்’
“இல்லை ராமத்தான். எங்கட அம்மாவுக்கு . தும்பளை வீடுதான் சீதனமாய்க் குடுத்த வீடு! நானும் சுகந்தியும் அந்த வீட்டிலதான் பிறந்தனுங்கள். பிறகு, அப்பா கஷ்டப் பட்டுச் சேமித்த காசிலைதான் இந்த வீடு கட்டினணுங்கள். தென்னந்தோட்டக்காணி .பாட்டா சாகிறபோது அப்பா வுக்கு எழுதிக் குடுத்ததாம். இதொண்டும் இப்ப எங்களுக்கு இல்லாட்டால் . நான் கூட இவ்வளவு துணிவாய் உங்க ளோட கதைச்சிருக்கமாட்டன்; அப்பிடியொரு தாழ்வு மனப் பான்மை எனக்கு இருந்திருக்கும். ஆனல். இப்பதான் யோசிக்கிறன்; இப்பிடியான வசதிகள் எங்களுக்கு இல்லாமல் இருந்திருந்தாலும் கூட, நான் கொடுத்து வைத்தவளாய்த் தான் இருந்திருப்பன்' சாந்தி நின்று நிதானமாகக் கூறியது ராமிற்கு வேடிக்கையாக இருந்ததோ, என்னவோ மெல்லச் சிரித்தவாறே குறும்பாக அவள் கன்னத்தில் கிள்ளினுன், சட் டென்று தடுமாறிப்போன சாந்தி,
'ச்.என்ன இது? அம்மா கண்டாலும்." செல்லமா கக் கடிந்தபோதே, சமையலறையிலிருந்து சிவகாமியின் குரல் கேட்டது.
*சாந்தி. இங்கையொருக்கால் வந்திட்டுப் போ".
118

*ராமத்தான் தென்னந்தோட்டத்தைப் பார்க்கப் போருராம்; காட்டிப்போட்டு வாறனம்மா’ சாந்தி கிணற் றடிப் பக்கம் நின்றவாறே பதில் குரல் கொடுத்துவிட்டு,
*ராமத்தான், கெதியா வாங்கோ' என்றுஅவசரப் படுத்தியவாறே பின்புறப் படலையைத் திறந்துகொண்டு வெளியேறினள். ×
மேற்கே சூரியன் மெல்ல மெல்ல அஸ்தமித்துக்கொண்டி ருந்தான். அந்தச் குச்சு ஒழுங்கையில் பல வயோதிபர்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். பின்புறப் படலையைத் திறந்த ராம், ஒரு கையால் சாரத்தைத் தூக்கிப் பிடித்த வாறே ஒழுங்கையில் இறங்கி சாந்தியின் பின்னல் நடக்கத் தொடங்கினன்.
ஒழுங்கையால் சென்று கொண்டிருந்த சிலர் இவர்களை வினேதமாகப் பார்ப்பது சாந்திக்குக் கூச்சமாக இருந்தது. இவர்கள் சேர்ந்து செல்வதைக் காண்பதற்கு சில அயல் வீட்டு வேலிகளும் சேவை செய்தவண்ணம் இருந்ததை அவள் கவனிக்கத் தவறவில்லை. கல்யாணத்துக்கு முன்னரே ராமுடன் சேர்ந்து அப்பிடிப்போவது அவளுக்கு ஒருவித ஒழுங்கீனம்போல் இருந்தாலும், மனதிற்குள் ஒருபுறம் பெருமையாகவும் இருந்தது. அவள் திரும்பி ராமைப் பார்த் தாள். அந்த உயரமான உடலின் தோளைத்தான் அவளால் நேராகப் பார்க்கமுடியும். அவள் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.
‘'என்ன பாக்கிருய்?" ராம் நடந்தவாறே கேட்டான்.
“என்ரை சிநேகிதப் பிள்ளைகள் எல்லாரும் . வீட்டு வேலிக்குள்ளாலை எங்களைத்தான் பாக்கினம்" சாந்தி மெல் லக் கிசுகிசுத்தாள்.
19

Page 65
*அப்பிடியோ..? அவன் சட்டென்று அவளின் தோள் களில் கையைப்போட்டு, தன்னேடு சேர்த்திழுத்துக்கொண்டு நடந்தான்.
*ராமத்தான்! என்ன இது? எல்லாரும் எங்களைத்தான் பாக்கினம். விடுங்கோ’ அவள் சட்டென்று விடுவித்துக் விலகினுள். அவனது அபரிதமான துணிச்சல் அவளுக்கு என்னவோ போலிருந்தது.
"பின்னையென்ன. நாங்களென்ன ‘கு’ விலை யிரு ந் து வந்த ஆக்களோ? இப்பிடிப் புதினம் பாக்கிறதுக்கு!’ ராம் புன்னகையோடு கூறினன்.
“அதுக்கு . இப்பிடியே செய்யிறது. தென்னந் தோட் டத்துக்கு வாங்கோ. தரவேண்டியதைத்தாறன்" அவள் செல்லமாக அதட்டியவாறே உதடுகளைம் பற்களால் அழுத் திக் கொண்டாள்.
அவர்கள் தென்னந்தோட்டத்திற்குள் நுழைந்தபொ ழுது தோட்டத்தில் சற்று இருள் பரவியிருந்தது. தென்னை யோலைகள் ஒவ்வொன்றும் உல்லாசமாக மெல்ல மெல்ல அசைந்து குளிர்ந்த காற்றை இதமாகப் பரப்பிக்கொண்டு நின்றன. -
“ஓ ஃபைன்! தென்னந்தோட்டத்தைப் பார்க்க எவ்வ ளவு ஆசையாய் இருக்குது பச்சைப்பசேல் என்று மரம் முழுக்கத் தேங்காய்' ராம் ஆச்சரியமாகப் பார்த்து நின் றன். சாந்தி பட்டென்று அவனது தொடையில் கிள்ளி ஞள்.
“சீ. ஐயோ!. ” அவன் திடுக்குற்று முணுமுணுத்த வாறே அவளின் கைகளைப் பற்றிப் பிடித்தான்.
*ழுேட்டிலை வாறபோதும் உங்களுக்குப் பகிடியே? அவை யள் எல்லாரும் நாளைக்கு என்னைப் பழிக்கப்போகினம்!"
120

அவள் சிணுங்கினள். அவன் பற்றிப்பிடித்த அவளது கை களை விடாமலே சட்டென்று இழுத்து, இறுக அணைத்துக் கொண்டான். அவள் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை!
*ச் . விடுங்கோ..? அவள் திமிறிஞள்.
‘விடமாட்டேன்' அவன் ஒருவித வெறியோடு மாறி மாறி அவள் கன்னங்களில், உதடுகளில், கழுத்தில், மார் பில் முத்தங் கொடுத்தான். −
'ம். விடுங்கோ. பிளிஸ்." அவளுக்குப் பயத்தில் கண்கள் கலங்கின உடல் நடுங்கியது. உதடுகள் துடித்தன . அவனது கைகள் அவளுடலை உடும்பாகப் பற்றியிருக்க, உத டுகள் அ~ள் மேனி முழுவதும் விளையாடின அவள் தன்னை விடுவித்துக்கொள்ள எடுத்த முயற்சியில் சுழன்று தடுமாறிக் கீழே சரிந்தாள். ராம் தன் இடுப்பில் கைகளை ஊன்றிய வாறே புன்னகையோடு அவளைப் பார்த்து நின்றன். அவள் மிகவும் பயந்து போயிருந்தாள். மருட்சியோடு அவனை நிமிர் ந்து நோக்கினுள். அவளுக்கு ஏணுே அழவேண்டும் போல இருந்தது. எச்சிலை மென்று விழுங்கிக்கொண்டாள். விழுந்த வேகத்தில் கால் பெருவிரல் வலித்தது.
"கால் வலிக்கு தா?" அவன் மெல்லக் குனிந்து கேட்டு விட்டு அவளருகில் அமர்ந்து கொண்டான். அவள் சட் டென்று கோபத்தோடு விலகி அமர்ந்தாள். அவன் கண் களை இமைக்காமல் அவளையே பார்த்திருந்தபோது, அவள் வெறுப்போடு தலையைக் குனிந்து கொண்டாள். அவளுக்கு மெலிதாக மூச்சு வாங்கியது. உடல் வியர்த்துக் கொட் էգ-Այ3;].

Page 66
10
*சாந்தி. கோபமா? " ராம் மெதுவாக மன்னிப்பு வேண்டும் தோரணையில் கோட்டான். அவள் மெளனமாகத் தலை குனிந்திருந்தாள்.
*சாந்தி. கதைக்கமாட்டியா?" அவன் மீண்டும் ஆதங் கத்தோடு கேட்டான். அவனது அந்தக்குரலைக் கேட்ட போது, அவளுக்குக் கோபம் மெல்ல மாறி, பரிதாப உணர்வே ஏற்பட்டது. அவள் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
‘சாந்தி, வெளியிலை என்னைப் பார்க்கிறபோது ஒரு குறும்புக்காரன் மாதிரி மட்டும்தான் உனக்குத் தெரியுது. உண்மையைச் சொல்லப்போனல். எனக்குள்ளை நீயே நிறைஞ்சிருக்கிருய். அம்மா எங்கட கல்யாணம் பற்றி எழு தின பிறகு . என்ரை கனவுகள், கற்பனைகள் எல்லாமே நீயாத்தான் இருக்கிருய் ! ஒவ்வொரு நிமிசமும் நான்

உன்னுேடயே இருக்கவேணும் போலை ஒரு தவிப்பு. ஐ மீன். இந்த நிமிசமே உனக்குத் தாலி கட்டிப்போட்டு, மனைவி யாக்கிப் போடவேணும் போலை ஒரு துடிப்பு!"
*சாந்தி. சின்ன வயசில நாங்கள் சண்டை போட் டாலுங்கூட, நான் கனடாவுச்குப் போறவரைக்கும் ஏதோ ஒரு வகையிலை நாங்கள் சந்திக்காத நாட்களேயில்லை! அந் தளவுக்கு ஒட்டிப்போன வாழ்க்கை. அதனுலதான் நான் தயங்காமல். ; நீ என்னைத் தொட்டபோது என்ரை உணர்ச்சிகளை என்னல கட்டுப்படுத்த முடியேல்லை. ஏதோ பலமான உரிமை இருக்கிற மாதிரி .."
ராம் அசையும் தென்னேலேகளை அமைதியாகப் பார்த் திருந்தான். சற்று முன்னர் இருந்த கோப உணர்வுகளெல் லாம் அவளையறியாமலே பொசுங்கிப்போக, இனம் புரியாத ஒரு வேதனையுணர்வோடு அவள் ராமைப்பார்த்தாள். அவ ளுக்கு அவன் மார்பில் முகம் புதைத்து அழவேண்டும் போலிருந்தது.
*சாந்தி. இன்னும் கோபமே?" ராம் திரும்பி மெல் லக் கேட்டபோது அவளுக்குப் பொசுக்கென்று அழுகை வந்தது, அவனின் வலது கரத்தைப் பற்றியவள், தன் கன் னத்தோடு சேர்த்தழுத்தி விம்மத் தொடங்கினுள்.
“சாந்தி! என்ன இது? அழுறியா?.' ராம் அவள் தலையை மெல்ல வருடியவாறே கேட்ட பொழுது,
"உங்களுக்கு. உங்களுக்கு என்னிலை கோபமில்லையே?? என்றவாறு அவள், அவனின் மார்பில் தலைசாய்த்தாள்.
“எனக்கென்ன கோபம்? நீ தான்." என்று ராம் மெல்லச் சிரிக்க. அவளும் சேர்ந்து சிரித்துக் கொண்ட போது அவன் குனிந்து அவள் நெற்றியை முத்தமிட்டான்.
123

Page 67
தென்னை மரங்களில் வந்து குந்தியிருந்த சில கிளிகள், இந்த இளம் ஜோடிகளைப் பார்த்ததாலோ என்னவோ கீச்சுக் கீச்சென்று ஒலியெழுப்பியவாறே சிறகடித்து மீண்டும் பறந்து போயின.
"சரசர"வென்று ஒலியெழுப்பியவாறே தென்னையிலிருந்து பொத்தென்று விழுந்த காய்ந்த தென்னுேலை இவர்களை உர சிவிட்டபோது, திடுக்குற்ற சாந்தி சட்டென்று எழுந்தாள். அவளுக்கு சற்று முன்னர் தானிருந்த நிலை வெட்கத்தை ஏற்படுத்தியது. அவளது உடல் காரணம் புரியாமல் நடுங் கியது. உணர்வுகள் ஏனே தவித்தன.
“போவமே?." அவள் தலையைக் குனிந்தவாறே நாணத் தோடு கேட்டாள்.
"இங்கை இருக்கப் பிடிக்கயில்லை எண்டால் போகலாம்” ராம் மண்ணைத் தட்டியவாறே சாரத்தை மடித்துக் கொண்டு எழுந்தான்.
*"அப்பிடி.யில்லை.; அம்மா தேடுவா’ சாந்தி அவனை நிமிர்ந்து பார்க்க முடியாதவளாய்க் கூறினள். مر
“நாளைக்கு. வீட்டுக்கு வாவன்; படம் போட்டுப் பாப் பம்’ ராம் கைகளைப் பின்னுல் கட்டியவாறே முன்னல் நடந்துகொண்டு ஆவலாகக் கேட்டான்.
9
“என்ன படம்?" சாந்தியும் அவன் பின்னல் நடந்த வாறே கேட்டாள்.
“என்ன படம் போட்டால் உனக்கு விருப்பம்? ராம் திருப்பிக் கேட்டான்.
“உங்களுக்குப் பிடிச்சதை நானும் பாக்கிறன்” இருவரும் தோட்டத்தின் வாயிலை அண்மித்தபோது, வேகமாக வந்த சைக்கிள் ஒன்று கிறீச்சிட்டு நின்றது.
24

“தனராஜ்! ஏண்டாப்பா இந்த ஓட்டம் ஒடுருய்? ராம் மெல்லச் சிரித்தவாறே கேட்டுக்கொண்டு வெளியில் இறங்கினன்.
*நான் நாளைக்கு உன்னட்டை வரவேணுமெண்டு இருந்தஞன்." ராம் கூறிமுடிக்கமுன்,
“டேய். நாலு ஆமெட் கார் வந்து எங்கட ஒழுங் கைச் சந்தியிலை வரிசையாய் நிக்குது; அவங்கள் அங்கங்கு இறங்கி நிக்கிறங்கள்" தனராஜ் மூச்சு வாங்கக் கூறினன். அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. இவர்களைக் கடந்து இன்னும் சில இளைஞர்கள் வேகமாக எங்கோ ஓடிக்கொண் டிருந்தார்கள். அவர்கள் முகம், பீதியால் நிலைகுலைந்திருந் 卢安·
“தணு என்ன சொல்லுருய்?. ராம் புரியாமல் கேட்டான்.
"வீடுகளுக்குள்ளே புகுந்து செக் பண்ணப் போருங்கள் போலை கிடக்குது ஊரடங்குச் சட்டம் போட்டிருக்கிற நேரமாய்ப் பார்த்து வந்திருக்கிருங்கள்; வீட்டுக்குள்ள வைத்தே எல்லாப் பெடியங்களையும் பிடிக்கப் போருங்கள் போலை கிடக்குது. அதுதான். நான் வீட்டுக்குப் பின்பக் கத்தாலை பாய்ஞ்சு ஓடிவந்திட்டன். நீயும் உங்கை நிக்கி றது நல்லதில்லை; என்னுேட ஒடிவா:இல்லாட்டால் ஆபத்து’! தனராஜ் அவசரப் படுத்தினன்.
சாந்திக்குப் பகீரென்றது. இதயம் படபடவென அடித் துக் கொண்டது.
*ராமத்தான் நீங்கள் இங்கை நிண்டால். உண்மை யாய் ஆபத்துத்தான். தஞ மாஸ்ரரோட எங்கையாவது ஒடித் தப்பிறதுதான் நல்லது. அவங்கள் போனபிறகு வர லாம். உங்க. உடம்பைப் பார்த்தால். கட்டாயம் பிடிச் சுப் போடுவாங்கள்; கெதியாய் ஒடுங்கோ ராமத்தான்." அவள் திகிலோடு பரபரத்தாள்,
125

Page 68
*சாந்தி நீ. நீ." ராம் என்ன செய்வது என்று புரி யாமல் தடுமாறிய போது,
* நான். அவங்கள் இங்கால்ப்பக்கம் வாறதுக்கிடை யிலை வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திடுவன். நீங்கள் யோசியா மல் ஒடுங்கோ ராமத்தான்' அவள் காலில் விழாத குறை யாக அவனது கைகளைப் பிடித்துக் கெஞ்சினுள், அடுத்த நிமிடமே தனராஜின் சைக்கிளில் ராமும் ஒடிமறைந்தான்.
சாந்தி ஒரளவு நிம்மதியடைந்தாலும், ஒருவித பயத் தில் தவித்துக் கொண்டுதான் இருந்தாள்.
‘எங்கட அம்மா அப்பாவுக்கு வரப்போகிற ரெண்டு மருமக்களும் ஒண்டாய் போகினம். பிள்ளையாரே ! அவைய ளுக்கு ஒண்டும் வராமல் காப்பாற்றிப்போடு சாந்தி மன திற்குள் பிரார்த்தித்தவாறே அவசரம் அவசரமாக வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினுள்.
அக்கம் பக்க வீடுகளில் ஒலித்துக் கொண்டிருந்த வானெலி ஒசைகள் நிறுத்தப்பட்டு, ஊர் ஒருவித அசாதாரண நிசப்தத்தில் மூழ்கியிருந்தது.
சாந்தி வீட்டினுள் நுழைந்தபோது,
'அக்கா! வந்திட்டீங்களே ராமத்தான் எங்கை அவங் கள் உந்தச் சந்தியிலை வந்து கூட்டமாய் நிக்கிருங்களாம். கொஞ்சப்பேர் ருேட்டுக்கரை வீடுகளுக்குள்ளை புகுத்து செக் பண்ணுருங்களாம்’ சுகந்தி கலவரத்துடன் அவளருகில் ஒடி வந்தாள்,
"சாந்தி, ராம் எங்கை போட்டான்? உங்கை. அவங் கள் வந்து வீடுவீடாய்ப் புகுந்து, எல்லாப் பெடியங்களை யும் பிடிக்கிருங்களாம்" சிவராசர் பீதியுடன் பரபரத்தார்.
26

"அவரும் தனராஜ் மாஸ்ரருமாய் அந்தப்பக்கமாய் எங்கையோ ஒடினம்; தனராஜ் மாஸ்ரர்தான் அவரையும் கூட்டிக்கொண்டு போருர்,” சாந்தி கூறியபோது, சிவராச ரும் எதிரில் வந்துகொண்டிருந்த சிவகாமியும் ஒருவித ஆறு தல் பெருமூச்சை விட்டுக் கொண்டார்கள்.
அவர்கள் வீட்டினுள் பூழைந்துகொண்டதும்,
“அக்கா தனராஜ் மாஸ்ரரும் ராமத்தானும் ஒண் உாவே போகினம்..?' ஒருவித அக்கறையோடு சுகந்தி மெல்ல விஞவியதும்,
"ஒம், பயப்படாதை சுகந்தி. உன்ரை ஆளுக்கும்.சரி என்ரை ஆளுக்கும்சரி ஒண்டும் நடக்காது' சாந்தி புன்ன கையோடு கூறியதும், சுகந்தி நாணத்தை மறைக்கத் தலை குனிந்தாள்.
*அதுசரி சுகந்தி, தனராஜ் மாஸ்ரரின்ர விசயமெல் லாம் முதலே உனக்குத் தெரியும்போலை கிடக்குது??? சாந்தி சந்தோசமாகக் கேட்டவாறே உள்ளே நடந்தாள்.
*தெரியும் அம்மாவும் மாமாவும் கதைச்சதை நானும் கேட்டுக் கொண்டிருந்தனன்" சுகந்தி வாய்க்குள் சிரித்த வாறே அப்பால் நகர்ந்தாள்,
வெளியில் ஊர் நாய்கள் மாறிமாறிக் குரைத்துக் கொண்டிருந்தன. ஒழுங்கைச் சந்தியிலிருந்து வாகனங்கள் புறப்பட்டுப்போகும் ஒசை கேட்டபொழுது, வீட்டிலிருந்த அனைவரும் நிம்மதிப் பெரு மூச்சொன்றை விட்டுக்கொண் Lntries gir.
‘எங்கடை ஒழுங்கைப்பக்கம் அவங்கள் வரேல்லை; ருேட் டுப் பக்கம் மட்டுந்தான் செக் பண்ணினவங்கள் போலை கிடக் குது. இனிமேல். நாளைக்கு விடியத்தான் என்ன நடந்த
127

Page 69
தெண்டு தெரியும்’ சிவராசர் கூறியவாறே சாய்மனைக் கதி ரையில் அனுயாசமாகச் சாய்ந்து கொண்டார்.
"இடி விழுவாங்கள். இருந்தாப்போலை வந்து, உங்கை எத்தினை பெடியளைப் பிடிச்சுக் கொண்டு போனங்களே தெரியேல்லை?" சிவகாமி ஆற்றமையில் கூறிவிட்டுப் பெரு மூச்சு விட்டவாறே சமையலறைக்குள் துழைந்து கொண்டாள்.
சாந்திக்குப் பசியே தெரியவில்லை!
*ராமத்தான் எங்கை நிக்கிருரோ தெரியேல்.ை பாவம் எங்கடை வீட்டுக்கு வந்தவர், திரும்பிப் போறதுக்கிடையி லையே ஒடவேண்டியதாய்ப் போச்சு து; இரவு என்ன சாப் பிடுருரோ? சாந்திக்கு உள்ளூர வேதனையாக இருந்தது. அவள் தனக்குப் பசிக்கவில்யென்று சிவகாமியிடம் சொல்லி விட்டு, அறைக்குள் சென்று கட்டிலில் சரிந்துகொண்டாள்.
மணிக்கூட்டில் மணி எட்டைத் தாண்டிக் கொண்டி ருந்தது சாந்திக்கு உடல் அசதியாக இருந்தாலும் நித்திரை வருவதாக இல்லை. கைகளைக் குறுக்காக நெற்றியில் போட் டவாறே முகட்டைப் பார்த்தபடி யோசித்துக் கொண்டி ருந்தாள்.
*கல்யாணம் ஆன உடன. ராமத்தான் சொன்ன மாதிரிக் கனடாவுக்கு ஒடித்தப்பி விடவேணும். இங்கையி ருந்துகொண்டு ஒவ்வொரு நாளும் இப்பிடியே பயந்து. பயந்து. எப்படிச் சந்தோசமாய் வாழுறது? ராமத்தான் என்னிலை உயிரையே வைத்திருக்கிருர். அங்கை போய் சேர்ந் திட்டமெண்டால், ரெண்டு பேரும் ஒரு நிம்மதியான, சந் தோசமான வாழ்க்கையை வாழலாம்" சாந்தி தனது எதிர் காலம் பற்றிப் பலவாருக யோசித்துக் கொண்டிருந்தாள்.
சுகந்தியும் நேரத்தோடு வந்து படுத்துக்கொள்வதைப் பார்க்கும்போது, சாந்திக்கு ஆச்சரியமாக இருந்தது.
28

“ஏன் சுகந்தி? இண்டைக்குப் படிக்கேல்லையே?’ சாந்தி மெல்லத் திரும்பிக் கேட்டாள்.
"ஒரே அலுப்பாய் இருக்குதக்கா’ அவள் எதிர்க் கட்டி வில் புரண்டுகொண்டாள். சுகந்தியும் எதைப்பற்றியோ யோசிக்கிருள் என்பது சாந்திக்குப் புரிந்தது.
"அவளுக்கும் கல்யாணம் பேசப்படுகுது எண்டு தெரிந்த பிறகு. கொஞ்சமாவது யோசிக்காமல், கற்பனை பண்ணு மல் இருப்பாளே? ஆண்களெண்டாலும் நாலுபேரோடை கதைத்துச் சிரித்துப் பொழுதைப் போக்குவினம்; பெண்க ளெண்டால் இப்பிடித் தங்களுக்குள்ளேயே எல்லாத்தையும் கற்பனை பண்ணிச் சந்தோசப்பட்டு, துக்கப்பட்டு. தங்க ளுக்குள்ளேயே அனுபவிச்சுக் கொள்ளுவினம்; அதுதானே இயல்பு!"
சாந்தி மறுபக்கம் புரண்டு படுத்துக் கொண்டாள்.
'சாந்தி. , நித்திரை கொள்ளுறதெண்டால், லைற்றை அணைச்சு, கதவைப் பூட்டிக்கொண்டு படுங்கோ’ சிவகாமி குரல் கொடுத்த போதுதான் சாந்தி திரும்பிப் பார்த்தாள். கதவு பூட்டப்படாமல் இருந்தது. வழக்கமாக இந்த இரண்டு வேலைகளையும் சுகந்திதான் இறுதியாகச் செய்து கொள்வாள். இன்று அது நடைபெருமல் இருந்தது சுகந்தியின் மணவோட்டத்தைச் சாந்திக்குப் புரிய வைப்ப தாயிருந்தது. சாந்தி எழுந்து, கதவைப் பூட்டி லைற்றை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள்.
தூரத்தில் எங்கோ, ஒரு வீதி நாய் ஊளையிட்டுக் கொண்டிருந்தது.

Page 70
11
ஆதவனின் காலைக்கதிர்கள் சாந்தியின் கன்னத்தை அள்ளியபோது, அவள் திடுக்குற்றுக் கண்விழித்தாள். நேரம் 7.00 மணியைத் தாண்டிக்கொண்டிருந்தது. இரவு நீண்டநேரம் கண் விழித்திருந்ததில் நித்திரை அவளை அப் படி அடித்துப் போட்டு விட்டிருந்தது அவள் அவசரமாகப் படுக்கையை விட்டெழுந்து அறைக்கு வெளியே வந்தபோது, சிவராசர் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வருவது தெரிந்தது.
"அப்டா., காலமை வேளையோட எங்கை போயிட்டு வாநீங்கள்?' சாந்தி கண்களைக் கசக்கியவாறே ஒருவித எதிர்பார்ப்புடன் கேட்டாள்,

*ராமும் தனராஜ"ம் நேற்றிரவே வீடுகளுக்கு வந்திட் டினமாம். எனக்கு தேற்றிரவு முழுக்க அவங்கள் ரெண்டு பேரைப் பற்றியும் யோசினைதான். அதுதான். விடிய நேரத் தோடயே போய் வீட்டில நிக்கினமோ எண்டு பார்த்துக் கொண்டு வந்தனன்.”* சிவராசர் மகிழ்ச்சியுடன் கூறிய வாறே தன் அலுவல்களில் கவனத்தைக் செலுத்தத் தொடங்கினர். சிவராசரின் அக்கறை சாந்திக்குப் புரிந்த பொழுது சிரிப்பு வந்தாலும், இருவரும் வீட்டிற்கு வந்து விட்டார்கள் என்பதை அறிந்தபொழுது பெரிய நிம்மதி யாக இருந்தது.
சாந்தி மளமளவென்று வீட்டு வேலைகளைக் கவனித்து முடித்துவிட்டு வந்தபொழுது, மணி ஒன்பதிற்கு மேலாகி இருந்தது. பனி வெயில் சுளிரென்று தகித்துக் கொண்டிருந் தது. சுகந்தி ரியூசனுக்குப் போய்விட்டிருந்தாள். விடுமுறை நாளானதால் சிவராசரும் தென்னந்தோட்டத்திற்குப் போய்விட்டிருந்தார். சிவகாமி, சிவராசரின் அலுவலக உடைகளை அள்ளிப்போட்டு வைத்துத் துவைத்துக் கொண்
டிருந்தாள். கொல்லைப்புறத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்
கும் இரண்டு ஆடுகளும் பசியில் கத்திக்கொண்டு நின்றன.
"அம்மா ஆட்டுக்குக் குழை வெட்டிப் போடட்டே?” சாந்தி கேட்டவாறே கத்தியையும் பெட்டியையும் எடுத் துக்கொண்டு ஆயத்தமானுள்.
*உங்கை குழை ஒண்டும் இல்லைப் பிள்ளை; வெட்டின கதியாலெல்லாம் இப்பத்தானே தழைச்சு நிக்குது. தென் னங் காணிக்குள்ளை கிடந்த குழைகளும் வெட்டி முடிஞ் சிது.” என்றவாறே சிவகாமி யோசித்தாள்.
“மாமா வீட்டு வளவுக்குள்ளை நிறைய முள்முருக்கு நிக்குதம்மா.” சாந்தி ஆவலாகக் கூறினுள்.
131

Page 71
*அப்பிடியே? அப்ப. ஒருக்கால் ஒட்டமும் நடையு மாய்ப் போய், அதிலை வெட்டிக்கொண்டு வாவன்; நல்ல பிள்ளை..? சிவகாமி கெஞ்சலாகக் கூறிவிட்டு, மீண்டும் தன் வேலையில் மூழ்கிக் கொண்டாள். மகிழ்ச்சியில் உள்ளம் துள்ள, இரகசியமாய் நாணிக் கொண்ட சாந்தி,
'மாமா வீட்டிலை படம் போடப்போகினம் எண்டும் சொன்னவையள்; அதையும் எத்தினை மணிக்கெண்டு கேட் டுக்கொண்டு வந்திடலாம்' சிவகாமிக்குக் கேட்கக் கூடிய விதத்தில் படம்பற்றி நாசூக்காகக் கூறியவாறே புறப் lift 6.
“அது. படம் பின்னேரம் தான்ே போடுவினம்; அதுக் குப் . பிறகு போகலாம்; இப்ப, சுணங்காமல் வந்துசேர்’ சிவகாமி கூறுவது அவள் காதுகளில் விழுந்தபோது அவ ளுக்குச் சுருக்கென்றது.
"அம்மாவுக்கு நான் ராமத்தானுேட கண்டபடி கதைக் கிறதும் அவ்வளவு விருப்பமில்லைப் போலை கிடக்குது. அவ வுக்கு மரியாதையும் கெளரவமும் தான் முக்கியம். அது தான், கலியாணத்துக்கு முதல் நாங்கள் பழகிறதை விரும் பயில்லைப் போல கிடக்குது: ஒரு பாட்டிலை. அதுவும் சரி தானே. சாந்தி தனக்குள் யோசித்தவாறே செல்லநாதர் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தாள்.
செல்லநாதரின் வீட்டை அண்மித்தபொழுது நாய் குரைத்தது. கேற்றைத் திறந்து உள்ளே நுழைய, வாலை ஆட்டிய நாய் அவள் கால்களை நக்கிவிட்டு மெதுவாகப் போய் ஒரு மூலையில் படுத்துக்கொண்டது.
முன் கதவு அகலத் திறந்திருந்தது. யாரும் உள்ளே இருப்பதற்குரிய அடையாளங்கள் தெரியவில்லை. அவள் ‘மாமி**** என்று அழைத்தவாறே உள்ளே நுழைந்தாள்
32

சமையலறைக் கதவு சாத்தப்பட்டிருந்தது. யாரையும் காண வில்லை. ராமின் அறையை மெல்ல எட்டிப்பார்த்தாள். ராமையும் காணவில்லை! அவளுக்கு ஏனே ஏமாற்றமாக இருந்தது. கையில் கிடந்த பெட்டிக்குள் கத்தியைப் போட் டுக் கொண்டு கிணற்றடிப்பக்கம் நடந்தாள். ஒழுங்கை வீதி யில் சிலரின் சிரிப்போசை கேட்டது. மதிலோடு கிடந்த கொங்கிறீற் கல்லில் ஏறி, மெல்ல எட்டிப்பார்த்தாள். நேற்று ராமுடன் சேர்ந்து போகும்பொழுது வேலியால் பார்த்துக்கொண்டிருந்த அதே முகங்கள். அவள் சட் டென்று கீழே குனிந்துகொண்டாள்.
“சாந்தியக்கா. ஏன் ஒளிக்கிறீங்கள்? ; நேற்று எங்கட ஒழுங்கையெல்லாம் ஃபைன் ஆய் இருந்திது” சுகந்தியின் சினேகிதி-கலா, கிண்டல் பண்ணிக்கொண்டு போக, இவள் நாக்கைக் கடித்துக்கொண்டாள். அவர்களது சிரிப்போசை மெல்ல மெல்லத் தூரத்திற்குப் போய்க்கொண்டிருந்தது.
சாந்தி கொழுக்கைத் தடியை எடுத்து, முருக்கங் கிளையை வளைத்து, குழைகளை ஒடிக்கத் தொடங்கினள். திடீ ரென்று இடையில் ஏற்பட்ட குறுகுறுப்பான ஸ்பரிசத்தி ஞல் திடுக்குற்று கைகளை விட்டபொழுது, முருக்கங்கிளை விசுக்கென்று மேலே எகிறியது. திரும்பிப் பார்த்தாள். ராம் புன்னகையுடன் அருகில் நின்றிருந்தான். அப்போது தான் குளித்து மாற்றிய சாரமும் ஈரம் துவட்டிக் கலைந்த தலையு மாக நின்றிருந்தான். அவனது வரவு அவளுக்கு உள்ளூர ஆனந்தமாக இருந்த பொழுதிலும் பொய்க்கோபத்துடன் தலையைத் திருப்பினுள்.
*"ஏய்! என்ன இது? என்ன கோபம்?' அவன் மீண் டும் சீண்டினன். அவள் எதுவும் பேசாமல், மீண்டும் கிளை யை வளைத்து, குழையை ஒடிக்கத்தொடங்கினள்.
*நான் முழுகிப்போட்டு. உங்கட வீட்டுக்குத்தான் வர ஆயத்தப் படுத்திக்கொண்டு நி எண் டன ன். நீயே
133

Page 72
வந்திட்டாய்;பிறகென்ன? .' ராம் குஷியாகக் கூறியவாறே துவாயால் தலையைத் துவட்டத் தொடங்கினன். சாந்தி எதுவும் பேசவில்லை.
“என்ன இது? காளி சிலை மாதிரி உக்கிரமாய் நிக்கி முய்? . வீட்டிலை ஏதும் பிரச்சினையே?’ ராம் புரியாமல் கேட்டான்.
“வீட்டிலை இல்லை; ருேட்டிலைதான் பிரச்சனை" சாந்தி சட்டென்று திரும்பிக் கூறினுள்.
"என்னது? ரூேட்டிலயோ..? என்ன பிரச்சினை?"
“நேற்று. தென்னங்காணிக்குப் போகேக்க என்ன வேலை பாத்தனிங்கள்? கலா என்னை நல்லாய்ப் பகிடி பண் னிப்போட்டுப் போருள். எல்லாப் பெட்டைகளும் சிரிக் கிருளுகள்."
*ப்பூ ! இதே பிரச்சனை? நானும் என்னவோ ஏதோ எண்டு பயந்திட்டன். ஏன். அவையள் உதுகளே பார்த் துக்கொண்டு இருக்கிறவையளாம்?. கனக்கக் கதைச்சால் ருேட்டாலை உன்னைத் தூக்கிக் கொண்டும் போவன் தெரி யுமே? வேணுமெண்டால் அதையும் வந்து பாக்கச் சொல்லு"
*ம். இது கனடா இல்லை!"
"அது. எனக்கும் தெரியும்" கூறியவாறே ராம் அவள் தலேயில் செல்லமாகக் குட்டினன்.
“ஐயையோ. மாமி.’’ என்று சத்தமாகக் கத்திய வாறே, அவள் தன் தலையைத் தடவி விட்டுக்கொண்டு சிணுங்கினுள்.
134

*ஏய். ஏய். கத்தாதை; சனமெல்லாம் ஒடி வரப் போகுது."
*பின்னையென்ன. எனக்கு உண்மையா நோகுது" அவள் சிணுங்கியவாறே அவன் கையில் கிள்ளினுள்.
*நீ. சும்மா சும்மா என்னைக் கிள்ளினல் நான் என்ன செய்வனெண்டு தெரியுந்தானே?"
*என்ன செய்வியள்?. ஏதும் செய்தால் நான் மாமி எண்டு கத்துவன்'
*நீ இப்ப நாயாய்க் கத்தினுலும் மாமி வரமாட்டா : மாமியும் மாமாவும் கோயிலுக்குப் போயிட்டினம் தெரியுமோ? V
“அதுக்கென்ன. பக்கத்து வீட்டு ஆக்களெண்டாலும் ஒடி வருவினம் தானே?
“ஒஹோ. தங்களுக்கு அப்பிடியும் ஒரு எண்ணம் இருக்கிறதோ? என்று நாடகப் பாணியில் அபிநயம் செய் தவாறே, அவளை வேண்டுமென்றே இழுத்து அணைத்தான். அவள் வேகமாக அவனைத் தள்ளிவிட்டு ‘மாமி. மாமி”* என்று வீறிட்டுக் கத்த, அவன் பயத்தினுல் விலகிக்கொ ண்டு பற்களை நெருமியவாறே ஓடிப்போய் வீட்டிற்குள் நுழைந்து கொண்டான்.
சிரிப்பை அடக்கிக்கொண்ட சாந்தி, ஒடித்த குழை ளைச் சேர்த்து அள்ளிக்கொண்டு வாசலுக்குவர, ஒழுங்கைச் சந்திக்கு அருகாமையில் படபடவெனத் துப்பாக்கி வேட் டுக்கள் கேட்க ஆரம்பித்தன. திடுக்குற்றவள், பயத்தினுல் கைகள் உதறல் எடுக்க, குழைப்பெட்டியைத் தொப்பென்று கீழே போட்டுவிட்டு ஹோலுக்குள் ஒடினள். மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்க சுற்றிப்பார்த்தவாறே ராமைத் தேடினுள்.
135

Page 73
ராம் ஒரு கதிரையில் அமர்ந்திருந்தவாறே, ஒரு ஆங்கிலப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான்.
“அங்கை சுட்டுக் கேக்குது. நீங்கள் இங்கை புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறீங்கள்." சாந்தி அவனருகில் போய் நின்று படபடத்தாள்.
*நான் வாசித்துக் கொண்டிருந்தால் உனக்கென்ன செய்யுது? நீ போய் மாமி. மாமி எண்டு கத்திக்கொண்டு நில்லன்” ராம் கோபமாகக் கூறிவிட்டு மீண்டும் புத்தகத் தில் கண்களை ஒடவிட்டான். அவனது செய்கை, அந்தக் கலக்கத்தின் மத்தியிலும் அவளைச் சிரிக்கவைத்தது.
“என்ன ராமத்தான்? நான் சும்மா பகிடிக்குத் தான்ே அப்பிடிச் செய்தனன்.” என்றவாறே அவள் அவனது தோளில் கையை வைத்தாள்.
*பின்னை யென்ன சும்மா தொட்டால்கூட ஏதோ உயி ரையே விடுற மாதிரி நிக்கிருய் ' ராமிற்குக் கோபம் மாறி யது. மெல்லச் சிரித்தான்.
சந்தியில் வாகன இரைச்சல்கள் கேட்டன.
*ராமத்தான் . எனக்குப் பயமாயிருக்குது!’ அவள்
“உது. சும்மா சனத்தை வெருட்டிறதுக்கு வெடி வச் சிட்டுப்போருங்கள்; உவங்களுக்கும் குறிபார்த்துச் சுடத் தெரியுமே?. அங்கை, றக் எல்லாம் போற சத்தம் கேட் குது" என்றவாறே ராம் அவளின் கைகளைப் பற்றினன்.
"உவங்களின்ரை கெட்டித்தனமெல்லாம் உங்களுக்கு எப்பிடித் தெரியும்?"
36

“எப்பிடித் தெரியுமோ?. நான் கனடாவிலை இருந் தாலும் இந்த நியூஸ் எல்லாம் எங்களுக்குச் சுடச்சுட வரும். போதாததிற்கு நேற்று தனராஜ"ம் கணக்கப் புதி னங்கள் சொன்னவன்"
“அப்ப நாங்கள் கனடாவுக்குப் போனலும் இந்த நியூஸ் எல்லாம் அறிஞ்சு கொண்டிருக்கலாம்"
*பின்னை. நீ கனடாவைப் பற்றி என்ன நினைச்சாய்? நீ வாவன். நிறையப் புதினமெல்லாம் காட்டிறன்.?
*அது சரி, எப்பவாம் கல்யாணம்?"
*உனக்கும் அவசரமே?" ராம் செல்லமாக அவள் கன் னத்தைத் தட்டினன். அவள் நாணத்தோடு சிரித்தவாறே அவனிருக்கும் கதிரையின் கைப்பிடியில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
*சாந்தி, கல்யாணம் நடக்குதோ நடக்கேல்லையோ, நான் கனடாவுக்குப் போகேக்க உன்னையும் கூட்டிக்கொ ண்டு போடுவன்; அவ்வளவுதான்."
“பார்த்தீங்களே, உங்களுக்கும் அவசரம் தானே?"
*பின்னை. இத்தனை வருசமாய் ஒரு பொம்பிளையைக் கூடத் தொட்டுப் பார்க்காமல் பிரமச்சாரியாகவே இருக்கி றன். எனக்கு இருபத்தெட்டு வயசாச்சுது. இனிமேலும் பொறுக்க ஏலுமே?” -
“ம். நான் வரமாட்டன் எண்டால்."
*துரக்கிக்கொண்டு போயிடுவன்?.
இருவரும் சிரித்தார்கள். சாந்தி மெல்ல எழுந்தான்.
137

Page 74
*ராமத்தான், நேரமாகுது; நான் போகப்போறன்?? என்றவாறே புறப்பட ஆயத்தமானுள்.
*பின்னேரம் நாலுமணிக்குப் படம் போடுவம்’ ராம் கூறியதும், “என்ன படம்?” என்ருள் ஆவலாக.
*அது. இனிமேல்தான் யோசிக்கவேணும்'
“ஏன். ஒரு மணிக்கே ஸ்ராட் பண்ணுங்கோவன்"
"ஐயையோ! ஒரு மணிக்கெண்டால். ஐயாவும் அம்மா வும் இங்கைதான் நிற்பினம். நாலு மணியெண்டால். ரெண்டுபேரும் எங்கையாவது வெளிக்கிட்டு விடுவினம்; அப்ப. நாங்கள் ஃபிறீ தானே?"
*ஒஹோ! அப்பிடியோ ஏன். தான் சுகந்தியையும் கூட் டிக்கொண்டு தானே வருவன்'
“ஐயோ! அவளை எதுக்கு இங்கை? நீ மட்டும் தனியா
өпт**
“கடவுளே நான் மட்டும் தனியா வர. வீட்டிலை அம்மா என்ன நினைப்பா? சாந்தி கூறியதும் ராம் சிரித் தான்.
*சாந்தி,ஒண்டு செய்வமே?தனராஜ்ஜயும் வரச் சொல்லி விடுவம். எதிர்பாக்காமல் சந்திக்கிறமாதிரி. சுகந்தியையும் அவனையும் ஜொயின் பண்ணி விடுவம்” ராம் கூறியபோது சாந்திக்கு சிரிப்பு வந்தது.
“நீங்கள் சரியான ஆள்தான். ; கல்யாணம் பேசப்படு குது எண்ட உடனேயே. அவையள் ரெண்டு போையும் பழக்கப்படுத்தப் பாக்கிறீங்கள்."
‘நன்மைக்குத்தானே? சுகந்தி எங்களை டிஸ்ரேப் பண் ணவும் மாட்டாள். அவளுக்குத் தனிமையும் போயிடும்; வருங்கால மாப்பிள்ளையோட அவள் கதைச்சதுமாகும்’
138

“டிஸ்ரேப் பண்ணுறதுக்கு என்ன இருக்கு அப்பிடி யென்ன வெட்டி விழுத்தப் போlங்கள்?"
*நீ. வாவன்; நான் வெட்டி விழுத்திறன்'
*ம். சரி.? அவள் விடைபெற்றுக்கொண்டு புறப் பட்டாள்.
ヘー・ "அம்மா, ஐயா வர நேரமாகும் என்னைத் தனியா விட் டிட்டு அவசரப்பட்டுப் போருய்.” ராம் அதிருப்தியோடு கூறினன்.
“ப்ளிஸ். ராமத்தான்; அம்மா பேசுவா. பின்னேரம் வருவன் தானே" சாந்தி போய்விட்டாள்.

Page 75
12
நேரம் ஒரு மணியாகி விட்டிருந்தது. நல்ல வெயில் நேரமாக இருந்த போதிலும் மேகம் ஏனுே இருண்டு கிடந் தது. சாந்தியும் சுகந்தியுமாகச் சேர்ந்து மதிய உணவை அருந்திவிட்டு, ஹோலுக்குள் வந்து ஒய்வாக அமர்ந்து கொண்டார்கள்.
“மழை பெய்யப்போகுது போலை கிடக்குது' சிவகாமி கூறியவாறே இவர்களருகில் வந்து அமர்ந்துகொண்டாள். அவள் கூறிய வாய் மூடமுன், பொத்துக்கொண்டு வந்த மழை பொலபொலவென்று பொழிய ஆரம்பித்தது.
"இதென்ன. புதினமாய்க் கிடக்குது? பங்குனியிலை கொட்டிற மழையைப் பாருங்கோ' சிவகாமி ஆச்சரியத் தோடு நாடியில் கை வைத்தாள்.

"அம்மா, அது. நான் இண்டைக்குப் புதிசாய் நட்ட பூமரத்துக்காகத்தான் பெய்யுது.." சுகந்தி சிரித்தவாறே கூறினுள். முற்றத்தில் மலர்ந்து நின்ற ருேஜா மலர்களின் மெல்லிய இதழ்களில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஒருவித ஆர்வத்துடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சாந்தி, வெளியில் கேற் திறபடும் ஓசை கேட்டதும் எட்டிப் பார்த்தாள். செல்லநாதர் மழையில் நனைந்தவாறு அவச ரம் அவசரமாக உள்ளே வருவது தெரிந்தது.
“என்னண்ணை. அவசரமாய் வாறியள்? மழைக்குள்ளை யும் நனைஞ்சுபோட்டியள் போலை கிடக்குது" சிவகாமி கேட்டவாறே கதிரையை இழுத்துப் போட்டாள். கதிரை யில் அமர்ந்த செல்லநாதர், மழையில் நனைந்த தலையைக் கைகளால் கோதியவாறே,
*எங்கை. உன்ரை மணிசனைக் காணேல்லை?" என்ற வாறே சுற்றுமுற்றும் பார்த்தார்.
"அவர். இப்பதான் சாப்பிட்டவர்; அலுப்போடை படுத்திருக்கிருர், ஏன். என்ன விசயம்? 96.Jg prCup?" சிவகாமி நெற்றியைச் சுழித்தவாறே விஞவினள்.
“ஒ; அவசரந்தான். நீ அவரையும் எழுப்பிக்கொண்டு வாவன், செல்லநாதர் ஏதோ முக்கியமான விடயம் கதைக்கப் போகும் பாவனையில் கட்டாயப் படுத்தினர். சாந் திக்கு அவரின் அசாதாரண நிலை ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தியது.
*சாந்தி , மாமாவுக்குத் தேத்தண்ணி ஊத்திக் கொண்டு வாணை"சிவகாமி குரல் கொடுத்ததும் அவள் தயங் கித் தயங்கிச் சமையலறைக்குள் நுழைந்தாள்.
கண்களைக் கசக்கியவாறே வெளியில் வந்த சிவராசர்,
141

Page 76
*என்ன சம்மந்தியார்? நாளெல்லாம் குறிச்சாச்சுதே?" என்று கேட்டவாறே செல்லநாதரின் அருகில் ஒரு கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டார். சிவகாமி சிவராசரின் பின்னல் வந்து நின்று கொண்டு,
*அண்ணை விசயத்தைச் சொல்லுங்கோவன்' என்று அவசரப் படுத்தினுள்.
“நாளெல்லாம் குறிச்சாச்சுது பாருங்கோ. ஆனல் சேரப்போற சோடிகள்தான் இப்ப மாறுபட்டு நிக்கிது கள்.” செல்லநாதர் மெல்ல இழுத்தார். சாந்திக்குப் பகீ ரென்றது. அவள் கரங்கள் நடுங்க, சமையலறை வாசற் கதவைப் பற்றியபடி நின்றிருந்தாள்.
*சம்மந்தி. என்ன சொல்லுறியள்?.”* சிவராசர் புரி யாமல் நெற்றியைச் சுளித்தார்.
*சாந்தியின்ரை ஒலையும் ராமின்ரை ஒலையும் எலியும் பூனையும் மாதிரித்தானும் இருக்குமாம். துப்பரவாய் பொருத் தமில்லையாம். இது ரெண்டையும் ஒண்டு சேர்த்தால் வில் லங்கம்தான் வருமெண்டு சாத்திரியார் அடிச்சுச் சொல்லிப் போட்டார்.’’ செல்லநாதர் கூறியபோது சிவராசரும் சிவ காமியும் அதிர்ச்சியுற்றனர்.
*அண்ணை. நீங்கள் அப்பிடியெண்டால் கார்த்திகேசு சாத்திரியாரிட்டையும் கொண்டுபோய்க் கேட்டுப் பார்க் கேல்லையே?..? சிவகாமி அதிருப்தியோடு அங்கலாய்த் தாள்.
"நீயும் ஒண்டு, கறுப்பையா இப்பிடியெண்டு சொன்ன உடனேயே நான் எனக்குத் தெரிஞ்ச அத்தனை பேரட்டை போய்க் கேட்டுக் கொண்டுதான் வாறன்’ செல்லநாதர் கூறியதும்,
142

*அப்ப. இப்ப என்ன செய்யிறது? சிவராசர் நிலை குலைந்துபோய்க் கேட்டார்.
'சிவகாமி. இது பிழைச்சுப் போட்டுதெண்டு நீங்கள் யோசிக்கத் தேவையில்லை;ராமின்ரை ஒலை சுகந்தியின்ரை ஒலை யோட நல்லாய்ப் பொருந்துதாம். அது மாதிரி. தனரா ஜுக்கும் சாந்திக்கும் அசல் பொருத்தமாம். இப்ப என்ன வந்திட்டுது? எப்பிடிப் பார்த்தாலும் ஒண்டுக்குள்ளை ஒண் டுதானே? செல்லநாதர் அவர்களைத் தேற்றுவது போலக் கூறினர்.
*அண்ணை. ராம் ரெண்டு மாசத்திலை கனடாவுக்குப் போறதுக் கிடையில, கலியாணத்தை. முடிச்சுப் போட வேணுமெண்டு சொன்னியள். ப்பிடியெண்டால்இ எல்லாம் பிழைக்கப்போகுதே?" சிவகாமி கு ழ ப் பத் தோடு விஞவிஞள்.
“ஏன் பிழைக்கப்போகுது? முந்திப் பிந்தியெண்டு வைக் காமல். உன்ரை மூத்தவளின்ரையையும் இளையவளின் ரை யையும் ஒரே மேடையில முடிச்சிட வேண்டியதுதான். ராம் போகேக்கை. சுகந்தியையும் கூட்டிக்கொண்டு போயிடலாம்' செல்லநாதர் ஒருவித ஆர்வத்தோடு கூறினர்.
*அது நல்ல ஐடியா தான் சிவகாமியும் சிவராசரும் ஏககுரலில் சம்மதம் தெரிவித்தனர்.
சாந்தி செல்லநாதரிடம் தேனீரை நீட்டினுள். அவள் உள்ளம் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தது. அப்ப டியே அவர் காலில் விழுந்து கதறியழவேண்டும் போல மனம் துடித்தது. அவளை மீறியெழுந்த உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த, உதடுகளைப் பற்களால் அழுத்திக் கொண்டாள் அவசரமாக அறைக்குள் நுழைந்துகொண்டவள் கட்டிலில்
143

Page 77
புரண்டு, தலையணையில் முகம் புதைத்தாள். வெடித்துக் கொண்டுவந்த அழுகையில் தலையணை ஈரமாகிக்கொண்டி ருந்தது.
“எனக்கும். தனு மாஸ்ரருக்கும். ஓ ! ராமத்தான்." அவளால் கற்பனை பண்ணிப் பார்க்கவே இயலாமல் இருந் தது. பச்சைக் குழந்தையாய்ப் பரிதவித்து, விம்மி விம்மி அழுதாள்.
*வாற இருபத்தேழாம் திகதி நல்ல நாளாம்" செல்ல நாதர் தான் கூறினர்.
*இண்டைக்குப். பதினருந் திகதியாச்சுது. இன்னும் பத்து நாள்தானே இருக்குது’. சிவகாமி விசனப்பட்டாள்.
**அதுக்கென்ன. நினைச்சால் நல்ல வடிவாய் முடிக்க லாம்" செல்லநாதர் கூறியவாறே விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்.
"அக்கா. " சுகந்தியின் கைகள் சாந்தியின் தோள்க ளிலே ஆதரவாகப் பதிந்தபொழுது, அவள் தலையை நிமிர்த் தினுள்.
*சுகந்தி சுகந்தி." அவள் சுகந்தியின் கைகளைப் பற்றிக்கொண்டு குலுங்கி அழுதாள்.
*அக்கா, என்ன இது? கண்ணைத் துடையுங்கோ?*
*சுகந்தி எனக்கிந்த முடிவைத் தாங்க முடியேல்லை! அம்மாவிட்டைச் சொல்லு சுகந்தி’ சாந்தி தன் கண்களைத் துடைத்தவாறே கெஞ்சினுள்.
"அக்கா, நாங்கள் இப்ப எதைச் சொன்னலும் அம்மா அப்பா ஒத்துக்கொள்ளவே மாட்டினம். அவையஞக்கு.
144

இப்பவும் நாங்கள் குழந்தைப் பிள்ளைகள் எண்ட எண்ணந் தான்! எங்களை ஒரு சொல்லுக்கூடக் கேட்காமல், அவை யள் எடுத்த முடிவின்ரை விளவுகளை அவையளே அனுப விக்கட்டும். நாங்கள் செய்ய வேண்டியதுகளை நியாயத் தோடை செய்வம்'
*சுகந்தி! நீ. நீ என்ன சொல்லுருய். ?”
*அக்கா, இந்த முடிவு இவையளாலை மட்டும் தான் நிச்சயிக்கப்பட்டது. நி யா ய மா ன மு டி வொ ன் டு. ஏற்கனவே ஆண்டவனுலை நிட்சயிக்கப் பட்டிருக்கும்’
"சுகந்தி எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை"
*அக்கா, நாங்கள் வழக்கம் போலை ஒண்டுமே தெரியாத மாதிரி. சாதாரணமாய் மாமி வீட்டை படம் பார்க்கப் போவம், அங்கை போய், ராமத்தானிட்டை எல்லா விச யத்தையும் சொன்னல் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க 9 6ջյւb''
"சுகந்தி, இப்பிடி டிருை இடியைக்கேட்ட பிறகு என்னல ஒண்டுமே செய்ய ஏலாதாம் நான் எந்த உரிமையோட, எந்த நம்பிக்கையோட அவரைப் பார்த்துக் கதைக்கிறது? நான் வரேல்லை சுகந்தி. நீ போறதெண்டால் போயிட்டு வா; எனக்கு. தலையெல்லாம் ஒரே பாரமாய் இருக்குது...!"
சுகந்தி மேலும் அவளை வற்புறுத்தாமல் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.
சாந்திக்கு தன் மனம் அமைதிபெற, ராமைச் சந்திக்க வேண்டும் போல மனம் துடித்தது!
செல்லநாதரின் வீட்டுக்குப் போயிருந்த சுகந்தி, அரை மணி நேரத்தில் திரும்பியிருந்தாள். சாந்திக்கு அது
145

Page 78
ஆச்சரியமாக இருந்தது. ஏதோ அசாதாரணமாக நடந் திருக்கவேண்டும் என மனம் கூறியது.
*சுகந்தி!. நீ படம் பாக்கேல்லையே??? சாந்தி தான் கேட்டாள்.
“இல்லை. படம் போட்டால்தானே பாக்கிறதுக்கு!’
*ஏன், ೨೨
*உங்களுக்காகவே போட வெளிக்கிட்ட படம்! நீங்கள் வராவிட்டால் . ராமத்தான் ஏன் போடப்போகிருர்?"
*சுகந்தி உண்மையாய்த்தானே?”
"நான் போனபோது அங்கை - ராமத்தானும் தணு மாஸ்டரும் நிண்டவையள். நீங்கள் வரயில்லை எண்ட உடனை a & 4 ராமத்தானுக்கு மூட் அவுட்டாப் போச்சுது! நீங்கள் ஏன் வரயில்லையெண்டு என்னைப் பிச்சுப் பிடுங்கிக் கேட்கத் தொடங்கிட்டார். நான். தனு மாஸ்ரரும் நிற்க. நடந்த
உண்மையெல்லாத்தையும் அப்பிடியே சொல் லிப் போட்டன்?
*சுகந்தி..??
*அக்கா, ஏன் பயப்படுறியள்? தணு மாஸ்ரர் கூட எங் களுக்குத்தான் சப்போட். ராமத்தான் இண்டைக்கு இரவு மாமாவிட்டைத் தன்ரை விருப்பத்தைச் சொல்லிப் பார்க் கப் போருராம். அதுக்கு. மாமா ஒப்புக் கொள்ளா விட் டால் , நாளைக்கு ராமத்தான் இங்கை வருவாராம்” சுகந்தி கூறியபோது சாந்திக்கு ஒரு வித நிம்மதியாகவும் ஆறுதலாகவும் இருந்தது:
அன்றைய இரவு படுக்கைக்குச் சென்ற அவளுக்குத் துக்கமே வரவில்லை.
146

*ராமத்தான் மாமாவோடை கதைக்கிற விசயம் வெற் றியாய் முடிய வேணும். ராமத்தான் கெட்டிக்காரன். எப்பிடியும் மாமாவைச் சம்மதிக்க வைச்சிடுவார். சாதகப் பொருத்தமென்ன வேண்டிக் கிடக்கு?, எங்கட மனசுக்குள்ளை இருக்கிற பொருத்தம்தானே உண்மையான பொருத்தம். இந்த மனசு. ராமத்தானைவிட இன்னெருவன்ரை மனசை நினைச்சுப் பார்க்காது. மாமாவுக்கு அதை நல்லாய் விளங் கப்படுத்த வேணும்"
சாந்தி பல விதமாக எண்ணியெண்ணி. மன அமைதி யின்றித் தவித்துக் கொண்டிருந்தாள். பொழுது எப்போது விடியும். முடிவு எப்போது தெரியும்? என்ற ஆவல் அவ ளைத் துளைத்துக்கொண்டிருந்தது.
ஏதோ ஒருவித நம்பிக்கையில் கண்களை மெலிதாக மூடிய வள் மீண்டும் கண்விழித்தபோது பொழுது விடிந்திருந்தது"
மணி எட்டு அடித்தபோது சிவராசர் அலுவலகத்திற்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார். சுகந்தி, ஒரு தண்பியாக இவ ளுக்கு ஆறுதல் கூறிவிட்டுப் பாட'ாலைக்குப் புற்ப்பட்டுவிட் டாள். சிவகாமியும் கடைக்குப்போயிருந்தாள். யாரும் வீட் டில் இல்லாத அந்தத் தனிமை ஏனே அவளுக்குப் பயமாக இருந்தது. அவள் கதிரையில் சாய்ந்தபடி அண்ணுந்து முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
வெளியில் கேற் திறபடும் ஓசை கேட்டது. ராம் அவசரம் அவசரமாக உள்ளேவந்துகொண்டிருந்தான். சாந்திக்கு இத யம் படபடவென அடித்துக்கொண்டது. சட்டென்று கதி ரையிலிருந்து எழுந்துகொண்டாள்.
*வியர்க்க விறுவிறுக்க வாருர். என்ன முடிவைச் சொல் லப்போருர்?.”
147

Page 79
"சாந்தி. கொப்பர் போட்டாரே? கொம்மா எங்கை' சுற்றுமுற்றும் பார்த்தவாறே ராம் பதற்றத்துடன் கேட்
டான்.
“ஒருதருமில்லை. நான்தான் தனிய நிக்கிறன். ஏன் ராமத்தான்? ஏன்பதற்றப்படுநீங்கள்? சாந்தி நெற்றியைச் சுளித்தவாறே மெதுவாகக்கேட்டாள்.
“சாந்தி, நேற்று சுகந்தி, இங்கை நடந்த எல்லா விசய மும் சொன்னவள். நான் நேற்று இரவு முழுவதும் ஐயா வோடை சண்டைதான்! ஐயா கடைசிமட்டும் மசியவே மாட்டாராம். கடைசியில . அவர் சந்தேகப்படாதபடி . நானும் அவரோட ஒத்துப்போறமாதிரி பணிஞ்சுபோயிட் டன், நாங்கள் இப்பிடியே இருந்தால். எல்லாருமாய்ச் சேர்ந்து வாற இருபத்தேழாம் திகதி எங்களைக் குழப்பியடிச் சுப் போடுவினம், நான் மாட்டன் எண்டு சொன்னுலும், ஐயா புத்திசாலித்தனமாய் உனக்கும் தனுவுக்கும் விசயத்தை முடிச்சுவிட்டிடுவார். நான் நாளைக்கே கொழும்புபோய் கனடாவுக்கு ஓடித் தப்பப்போறன்’
*ராமத்தான்?
"நான் தனியா இல்லை; உன்னையும் கூட்டிக்கொண்டு தான்’’.
“அ. ராமத்தான் .?!'சாந்தி அதிர்ச்சி மேலிட, நிலை குலைந்துபோய் அவனை ஏறிட்டு நோக்கினுள்.
*சrந்தி. இப்ப கனக்கக் கதைக்க நேரமில்லை. உனக்கு நான் வேணுமெண்டால், உன்ரை பாஸ்போட்டையும் ஐடென்ரிற்றி காட்டையும் மட்டும் எடுத்துக்கொண்டு;
148

நாளைக்குக் காலமை ஆறுமணிக் கொழும்பு பஸ்சுக்கு ஆயத் தமாய். அஞ்சு மணிக்கே உந்த ஒழுங்கைச் சந்திக்கு வா; நான் காரோடை நிற்பன்; சரிதானே? ஐயா இப்ப இங்கை வந்தாலும் வருவார். ஆனபடியாலை நான் போட்டுவாறன், சொன்னதுகளை மறந்திடாதை' ராம் கூறியவாறே அவசர மாக விடைபெற்றுக் கொண்டு வெளியேறினன்.

Page 80
13
சாந்தி மிகவும் ஆடிப்போயிருந்தாள். அவளுக்கு மூளையே இயங்க மறுத்தது. திடீரென்று ஏற்பட்டுவிட்ட திகைப்பில் சிந்தனைகள் சீர்பெருமல் எங்கோ தடுக்கி விழுந்து கொண் டிருந்தன.
‘கடவுளே! எல்லாரையும் பகைச்சுக்கொண்டு, கனடா வுக்குப் போய்"1" அவளுக்குக் கற்பனை பண்ணிப் பார்க் கவே பயமாக இருந்தது.
*ராமத்தானத் தவிர வேற ஒருத்தரை என்னல கல் யாணஞ் செய்ய ஏலாதெண்டிறது உண்மைதான். ஆனல். அதுக்காக. அம்மா, அப்பா, சுகந்தி எல்லாரையும் தலை குணிய விட்டிட்டுப் போய் வாழுற அளவுக்கு. நான் ஒரு வாழ்க்கையைத் தேடவேணுமே? ஊர்பேச, உலகம் சிரிக்க,

நாளைக்குச் சுகந்தியின்ரை வாழ்க்கை என்ன கதியாகும்? வேண்டாம் இந்த முடிவு வேண்டவே வேண்டாம் அவளுக் குத் தலை வலித்தது. பித்துப் பிடித்துவிடும் போல் இருந்தது.
பின்னேரம், சுகந்தி பாடசாலையால் வந்தவுடன் சாந்தி சாந்தி காலையில் நடந்த சம்பவங்களுடன் தன் மனக்குமு றலையும் அவளிடம் இரகசியமாகக் கொட்டி அழுதாள்.
"அக்கா, ராமத்தான் எடுத்த முடிவுதான் நல்ல முடிவு நான் அதை மனப்பூர்வமாய் வரவேற்கிறேன்." என்று சுகந்தி கூறிமுடிக்கமுன்,
"சுகந்தி! நீயும் இதுக்கு ஒத்துக் கொள்ளுறியே?" சாந்தி வியப்போடு விஞவினுள்.
"அக்கா, ராமத்தானுக்கு உங்களிலை அன்பும் அக்கறை யும் இருக்கிற படியால்தான் இப்பிடியொரு முடிவை எடுத் திருக்கிருர், இப்படிப்பட்ட ஒரு உள்ளத்தை இழந்தபிறகு. இங்கையிருந்து எதைத்தான் சாதிச்சுப்போடுவியள் எண்டு சொல்லுங்கோ. வாற இருபத்தேழாம் திகதி. ராமத்தா னுக்குக் கல்யாணம் நடக்காவிட்டாலும், உங்களுக்கும் தன மாஸ்ரருக்கும் கலியாணம் எண்டு நிச்சயித்துப் போட்டி னம்! உங்களுக்கு முடிச்சால் தான், ராமத்தானை வழிக்குக் கொண்டு வரலாமெண்டு. இப்ப மாமா ஒடித்திரியிருர்"
சாந்தி எதுவுமே கூறமுடியாமல் விம்மி விம்மி அழு தாள்.
“அக்கா, இதிலை. அழுது ஆகப்போறது ஒண்டுமே யில்லை; முதலிலை கண்ணைத் துடையுங்கோ'
"சுகந்தி. நாங்கள் இந்த முடிவை எடுக்கிறதாலை உன்ரை எதிர்காலம்..?"
151

Page 81
“அக்கா, அதைப்பற்றி நீங்கள் பயப்படவே வேண்டாம். நீங்கள் கனடாவுக்குப் போனலும், எனக்கும் தணு மாஸ்ர ருக்கும் கலியாணம் நடந்தே தீரும். பொருத்தமோ பொருத்தமில்லயோ நடக்கத்தான் போகுது. உங்கட விச யம் தெரிஞ்ச உடனை என்னைக்கட்டிறதுக்கு மற்றவை பின் வாங்கினுலும் தணுமாஸ்ரர் பின்வாங்கமாட்டார். அவருக்கு நேற்று, எல்லா விசயமும் விளக்கமாய் நானும் ராமத்தா னும் சொன்னனங்கள். அவர்கூட இந்த முடிவுக்கு நிச்சய மாய் சம்மதிச்சிருப்பார்.”
சாந்தி எண்ணச் சுமையோடு பெருமூச்சொன்றை விட் டுக் கொண்டாள்.
*அக்கா, நான் சொன்னதெல்லாத்தையும் நல்லாய் யோசித்துப் பார்த்து, மனப்பூர்வமாய். ஒரு திடமான முடிவை எடுங்கோ'
இரவு முழுவதும் சாந்தி கண்விழித்த நிலையிலேயே படுக்கையில் கிடந்தாள்! நெஞ்சம் முழுவதும் அன்றைய சம்ப வங்கள் ஊமைச்சுமைகளாய் அவளை அழுத்தியிருந்தன. அவ ளுக்கு அழுகை வரவில்லை! முகட்டைப் பார்த்தபடி அசையா மல் கிடந்தாள்! நடுநிசியின் நிசப்தத்தில் ஒரு பல்லி மட்டும் அடிக்கடி சூள் கொட்டிக்கொண்டிருந்தது, நேரம் செல்லச் செல்ல .ஏனே அவள் இதயம் வேகமாக அடிக்கத் தொடங் கியது. சட்டென்று எல்லா யோசனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ராமிடம் ஒடிச்சென்று இந்த முடிவை மாற் றும்படி கூறி, கதறி அழவேண்டும் போல் மனம் துடித்தது!
"உனக்கு நான் வேணுமெண்டால்." அன்று பகல்
வியர்க்க விறுவிறுக்க, ராம் கூறிய அந்த வார்த்தைகள் அவள் ஞாபகத்தில் வர, சட்டென்று அவளின் மனத்துடிப்பு அடங் கிப்போவதுபோல இருந்தது. நீண்டநேர மனப்போராட்டத் தின் பின்னர் ஒரு உறுதியான முடிவை எடுத்துக்கொண் LITGT.
152 .

பொழுது புலருமுன் படுக்கையிலிருந்து எழுந்த அவள், ஒசைப்படாமல் முகம் கழுவி, தலைசீவி, பொட்டு வைத்து, உடை மாற்றிக்கொண்டு, ஆயத்தமாக எடுத்துவைத்த பொருட்களுடன் அடிமேல் அடிவைத்து, அறைக்கு வெளியே வந்தபொழுது சுகந்தியும் அவள் பின்னல் டுேவது தெரிந்தது. சாந்திக்கு ஏனே அழுகை வந்தது.
“அக்கா, அழாதேங்கோ; யோசிக்காமல் போங்கோ: இப்ப. சத்தம் கேட்டு அம்மாவும் அப்பாவும் எழும்பப் போகினம்’ சுகந்தி மெதுவாக அவள் தோளைத்தொட்டு ஆறுதல் கூறினுள்.
அவர்கள் பின் கேற் வழியாக வெளியேறி, ஒழுங்கைச் சந்திக்கு வரும்பொழுதும், பொழுது இருளாகவே இருந்தது. மெல்லிய நிலவொளியில் உற்றுப் பார்த்தனர். சந்தியில் ராம் நிற்பது தெரிந்தது.
"சுகந்தி." அவளின் கைகளைப் பற்றிய சாந்தி, அவ ற்றை விட மனமில்லாமல் ஒரு கணம் தயங்கி, பின். விட் டுவிட்டு விறுவிறுவென்று ராமை நோக்கி நடந்தாள். வீதி யின் ஒதுக்குப்புறமாக, இருளோடு இருளாக ஒரு கார் நிற் பது தெரிந்தது.
*சாந்தி." மகிழ்ச்சியோடு குரல் கொடுத்த ராம், அவ ளின் கைகளைப்பற்றி அணைத்தவாறே காரின் பின் இருக் கையில் ஏறி அமர்ந்து கொண்டான். இவள் ஏறும்பொழுது திரும்பிப் பார்த்தாள். சுகந்தி கையசைப்பது தெரிந்தது.
கார் மெல்ல உறுமிக்கொண்டு புறப்பட்டது. சாந்தி பின்னே திரும்பி காரின் பின்புறக் கண்ணுடியூடாக வெளியே பார்த்தாள். இவள் காரிற்குள் இருந்தவாறே கையை அசைத்தாலும், அது சுகந்தியின் கண்களுக்குத் தெரியாது என்ற நிலையில் இவளுக்கு ஏனே அழுகை வந்தது.
153

Page 82
*சாந்தி." ராம் ஒருவித சந்தேகத்தில் குனிந்து, அவள் முகத்தைப் பார்த்துவிட்டு, “அழுறியா?" என்ருன் ஆதர வாக. இவள் தலையசைத்தாள். ராம் அவளின் வலது கரத்தை மெல்லப்பற்றி, தனது கைகளுக்குள் சிறைப்படுத்திக்கொண் டான். அந்த ஆதரவும் அன்பும் அவளின் மனச் சுமையை ஒரளவு குறைப்பதாயிருந்தது.
அவள் நிமிர்ந்து பார்த்தபோது திடுக்குற்ருள். காரில் ட்றைவருக்கு அருகில் இன்னுமொருவர் இருப்பது அப்போது தான் அவளுக்குத் தெரிந்தது. தெரு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில், சாந்தியின் பார்வை போன திசையைப் புரிந்துகொண்ட ராம்,
*முன்னுக்கு இருக்கிறது. எங்கட தணு மாஸ்ரர்" என் முன். அவளுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந் திது.
'எனக்கு இந்த ஐடியாவைச் சொல்லித் தந்ததே அவன்தான். நேற்றுப் பின்னேரமே . இவன் தன்ரை சிநேகி தன் ஒருவனைப் பிடிச்சு. யாழ்ப்பாணத்திலை, கொழும்பு பஸ் சீற் ரெண்டுக்கு புக் பண்ணிப்போட்டான். இப்ப. இந் தக் கார் அரென்ஜ் பண்ணினதும் இவன்தான். இவனின்ரை உதவிகளை நாங்கள் எண்டைக்கும் மறக்கக் கூடாது சாந்தி’ ராம் உணர்ச்சிவசப்பட்டுக் கூறியதும், சாந்தி மெல்லத் தலையைக் குனிந்தாள்.
'ராமத்தான்." அவள் மெல்லக் குரல் கொடுத்த பொழுது, அவன் அவளருகில் குனிந்தான்.
‘நாங்கள்போனபிறகும். இதே அக்கறையோட தன மாஸ்ரர், சுகந்திக்கு வாழ்வு கொடுப்பாரா? சாந்தி கேட்ட தும் ராம் புன்னகை சிந்தினுன்.
S4

*சாந்தி, எங்களை விட. அவனுக்கு அவளிலை அக்கறை இருக்குது. ஏனெண்டால் அவன்ரை மனசிலை இப்பகூட இருக்கிறது சுகந்திதான். அவனே என்னட்டை சொன்ன வன்' ராம் கூறியபோது சாந்திக்கு ஒருவித நிம்மதியாக இருந்தது.
கார் யாழ்ப்பாணத்தை அடைந்தபொழுது நேரம் 6-00 மணியாகிக்கொண்டிருந்தது: யாழ்ப் பா ன ர வு னில் கொழும்பு பஸ் புறப்பட ஆயத்தமாக நின்றுகொண்டிருந் தது. ராம் தனது நீளமான பெரிய வெளிநாட்டு சூட் கேஸைத் தூக்கியெடுத்து கொழும்பு பஸ்ஸில் ஏற்றினன்.
‘ராம், போய் சேர்ந்த உடனை கடிதம் போட்டிடு" தன ராஜ் குரல் தழுதழுக்கக் கூறிவிட்டு ராமின் தோளைத் தட் டிக்கொடுத்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன.
கொழும்பு பஸ் ஹோர்ண் அடித்ததும், ராம் சாந்தியை யும் கூட்டிக்கொண்டு உள்ளே ஏறி இருக்கைகளைத் தேடினன் அவர்களது சீற் பின்பக்கம் ஒதுக்குப்புறமாக இருந்ததால் அவர்களுக்கு அது வசதியாக இருந்தது.
பஸ் மெல்ல உறுமி நகரத் தொடங்கியது. தனராஜ் கையசைத்துக்கொண்டிருந்தான். பிரிவுத் துயர் நெஞ்சை அழுத்த, இருவரும் கையை அசைத்துவிட்டு மெளனமாய் இருந்தார்கள்.
பஸ் பளையைக் கடந்துகொண்டிருந்தது. சாந்தி ஜன்னலி னுரடாக வெளியே எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். எண்ணங்கள் வீட்டைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந் தன.
"இப்ப. அம்மா தேத் தண்ணி போடுறதுக்காக என் னைக் கூப்பிட்டு அலுத்து, எழுந்து வந்து, அறைக்குள் பார் த்து. என்னக் காணேல்லை எண் டு யோ சித் து;
155

Page 83
சுகந்தியை எழுப்பிக் கேட்டுப் பார்த்து, வீடெல்ல்ாம் தேடிப்பார்த்து., ஏங்கிப்போய் அப்பாவை எழுப்பி. அப்பாவும் பல தடவை சத்தமாய்க் கூப்பிட்டுப்பார்த்து முடிவிலை சரியாய்ப் பயந்து, மாமா வீட்டை ஒடிப்போய் முறையிட்டு . மாமாவும் தன்ரை மகனைக் காணயில்லை எண்டு துள்ளியடிக்க. ஊரெல்லாம் ஒண்டு கூடி " அவ ளுக்குக் கற்பனை பண்ணிப் பார்க்கவே கண்கள் கலங்கின. அவள் தலையைச் சாய்த்தவாறே மறுபுறம் திரும்பிக் கொண்
டாள். V பஸ் எந்தவித ஒசையும் எழுப்பாமல் சவர்க்கார நழுவ லாகப் பறந்து கொண்டிருந்தது. காற்றின் வேகத்தில் அவள் கூந்தல் மெல்லக் கலைந்து பறந்து கொண்டிருந்தது. அவளது கூந்தலின் தவிப்பைப் போலவே அவள் மனமும் தவித்துக் கொண்டிருந்தது.
*சாந்தி" குரல்கேட்டுத் திரும்பினுள். ராம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“பயமாயிருக்கா..?"
அவள் தலையை அசைத்து விட்டுக் குனிந்து கொண்டாள்.
"நாங்கள் இண்டைக்கு . கொழும்பில என்ரை ஃப் ரென்ட் வீட்டில தங்கி நிண்டு, விசயத்தை அவையஞக்குச் சொல்லிப்போட்டு, பிளேன் ரிக்கற்றுக்கு அலுவல் பார்க்க வேணும். எப்பிடியும் மூண்டு நாளைக்குள்ளை கனடாவுக்குப் போய்ச் சேர்ந்திடுவம். அங்கை போனல் பிறகென்ன? கவ லையே இல்லை! எல்லா வசதியும் இருக்குது. இங்கை எங்கட அம்மா ஐயா அவை கொஞ்ச நாளைக்கு எங்களிலை கோபமாய் இருந்தாலும். கொஞ்ச நாள் போக எல்லாம் சரியாய் போயிடும்" ராம் அவளைத் தேற்றுவது போலக் கூறிக்கொண்டதும், அவள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மெளனமாய் தலையைக் குனிந்து கொண்டாள்.
156

*சாந்தி, வாயைத்திறந்து ஏதாவது கதையேன்" அவன் அவளது முகத்தைத் திருப்பி, ஏக்கமான வேண்டுதலோடு கேட்டான்.
ராமின் கண்கள் சிவந்து போயிருப்பதை அப்போது தான் அவள் கண்டர்ள்.
*ராமத்தான்! ஏன். ஏன் உங்கட கண்கள் ரெண்டும் இரத்தச் சிவப்பாய் இருக்குது? கேட்க நினைத்தவளுக்கு வார்த்தைகள் வாயோடு அடங்கிப் போக,
*ராமத்தான் ' என்று முனகியபடி அவன் தோளோடு சாய்ந்து கொண்டாள். அவளை மெல்ல அணைத்த ராம் திடுக் குற்றுப் போனன்
“சாந்தி! ஏன் உன்ரை உடம்பு இவ்வளவு சூடாய்
கொதிக்குது? அவசரமாக அவளது கழுத்திலும் நெற்றி யிலும் கையை வைத்துப் பார்த்தான்.
*சாந்தி உனக்குக் காய்ச்சலா?? ராம் பதற்றத்தோடு கேட்டான்.
*இல்லை. இரவு பூரா நித்திரை விழிச்சதாலை ஒரே அலுப்பாய் இருக்குது” சாந்தி அவன் தோளிலிருந்து தலையை எடுக்காமலே மெதுவாகக் கூறினுள்.
‘'நீ ஒண்டும் யோசிக்காமல் கொஞ்சநேரம் இப்பிடியே நித்திரையைக் கொள். நிலைமையைப் பார்த்து, வவுனியா விலை டிஸ்பிறின் வாங்கிப் போடலாம்" ராம் அவளைத் தன் மார்போடு அணைத்துப் படுக்கவைத்தான். அந்த அணைப்பின் சுகத்தில் அவள் மெல்ல மெல்ல தன் துயரச் சுமைகளே இறக்கிவைத்துவிட்டுத் தூங்கிப்போஞள்.
பஸ்ஸிற்குள் இருந்த கசற் பிளேயர் மெதுவாக சினி மாப் பாடல்களை இசைக்க ஆரம்பித்திருந்தது. t
157

Page 84
சாந்தி கண்விழித்த பொழுது ராமின் கை அவள் தலையை அணைத்தடடி இருந்தது. இரவு நித்திரை விழித்த தன் விளைவாக அவளையறியாமலே அவள் நீண்ட நேரம் நித்திரையாகிப் போனது இப்போது தான் அவளுக்குத் தெரிந்தது. மெல்ல எழுந்து, திரும்பிப்பார்த்தாள். ராமின் தலை சீற்றின் சாய்மனையிலிருந்து நழுவி மெல்ல மடிந்து போயிருந்தது. அவனும் தன்னை மறந்து நித்திரையில் ஆழ் ந்து போயிருந்தான்.
'பாவம் ராமத்தானும் என்னைப்போலை இரவு முழுக் கக் கண் விழித்த படியே யோசித்துக் கொண்டிருந்திருப் பார்!’ அவளுக்கு அவனில் ஒருவித பச்சாத்தாபம் ஏற்பட் டது. அவள் மெல்ல நிமிர்ந்து சாய்ந்தமர்ந்தவாறே, ராமின் தலையை நிமிர்த்தி, தன் தோளோடு சாய்த்துக் கொண்டாள்.
வெளியே மதிய வெயில் தகித்துக் கொண்டிருந்தது.
பஸ் வவுனியா ரவுணில் வட்டமடித்துக் குலுங்கி நின்ற
போது, ராம் கண்விழித்துக் கொண்டான். கொட்டாவி விட் டவன் நேரத்தைப் பார்த்துவிட்டு,
"சாந்தி, வவுனியா வந்திட்டுது போலே" என்றவாறே அவள் நெற்றியில் கைய்ை வைத்துப் பார்த்தான், அவளுக் குக் காய்ச்சல் தணிந்திருந்தது.
பஸ்ஸில் இருந்தவர்கள் எல்லோரும் மெல்ல மெல்ல இறங்கி ஒவ்வொரு கடைகளிற்குள் நுழைவது தெரிந்தது,
"வா சாந்தி. போய் ஏதாவது சாப்பிடுவோம்" ராம் மெதுவாக அவளை அழைத்தான்.
இருவருமாக, இறங்கி ஒரு ஹோட்டலில் நுழைந்து கொண்டனர்.
58

மீண்டும் பஸ் புறப்படும்பொழுது வெயில் சற்றுத் தணிந்து, கருமுகில்கள் சூரியனை மறைத்திருந்தது.
பஸ் பிரதான வீதியால் கொழும்பு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
“என்ன? வடிவாய் சாப்பிட்டனியா?" ராம்தான் கேட்டான்.
'பின்னை. விடுவேனு??? சாந்தி சற்றுக் கவலை மறந்த நிலையில் பகிடியாகக் கூறினுள். அவளது முகமாற்றம் ராமிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவன் மெல்லக் குனிந்து, அவள் இதழ்களை முத்தமிட்டான்.
"ஐயோ, அங்கை. ஆக்கள் எல்லாரும் பாக்கினம்" அவள் செல்லமாகக் கண்டித்தாள். பஸ்ஸில் மீண்டும் சினி மாப் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தது. பசியெல்லாம் அடங் கிப் போனதில் இருவருமே உற்சாகமாக இருந்தார்கள்.
*ம். கனடாவுக்குப் போனபிறகு நீ என்னதான் சொல் லித் தப்பப் போழுயெண்டு பாப்பம்" - ராம் புன்னகை யோடு கூறியதும் அவள் நாணத்தோடு மறுபுறம் திரும்பி சூள்ை.
பஸ் உல்லாசமாக வவுனியாவைப் பிரிந்து கொண்டி ருந்தது.
திடீரென்று, தூரத்தில் வந்துகொண்டிருந்த ஒரு மினி வானின் வித்தியாசமான வேகம், எல்லோர் கவனத்தையும் ஈர்த்த கணத்தில், கொழும்பு பஸ்ஸின் வேகம் குறைந்து, அது தயங்கி நகர்ந்து கொண்டிருந்தது.
ட்றைவர் ஒருவித சந்தேகத்துடன் தலையை வெளியே நீட்டினன். அண்மித்துக்கொண்டிருந்த மினி வானிலிருந்து
159

Page 85
நிறுத்தற் கையசைப்புத் தெரிய. கொழும்பு பஸ் மெது வாக ஒரத்தில் தரிக்கவும், அருகில் வந்து வான் கிறீச்சிட்டு நிற்கவும் சரியாக இருந்தது.
“பாவற் குளத்தடியிலை பெடியள், பதினறுபேரை முடிச் சிட்டாங்களாம் . பஸ்சைத் திருப்பண்ணை.' வான்
ட்றைவர் பதறிப் பதறிக் கூறினன் .
சாந்திக்குப் பகீரென்றது.
வானிலிருந்த அனைவர் முகங்களிலும் மரணத்தை வெல் லும் தீவிரமும் அவசரமும் தெரிந்தது.
*அவங்கள் வெளிக்கிடுறதுக்கிடையிலை அங்காலை கடக்க ஏலாதே?" பஸ் ட்றைவர் வெளியே நீட்டிய தலையை எடுக்காமலே நப்பாசையோடு அவசரமாகக் கேட்டான்
"அவங்கள் எல்லாப் பக்கத்தாலையும் வெளிக்கிட்டிட் டாங்களாம் . நீ." என்று வாசலில் நின்று உரத்துக் கூறிய வான் கிளினர் வசனத்தை முடிக்காமலே சினத்து டன் தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொள்ள,
“சரி, பஸ்ஸைத் திருப்பு நாங்கள் போறம்" என்ற ட்றைவர் கையை அசைத்துவிட்டு, வான ஸ்ராட் செய் தான். அது திடுமென்று கிளம்பி, அசுர வேகத்தில் பறக்கத் தொடங்கியது.
'தம்பி, அப்பிடியெண்டால் ஏன் மினைக்கெடுருய்? பஸ் ஸைத் திருப்பு.’ பஸ்ஸில் இருந்த ஒரு முதியவர் பதற்றத் துடன் குரல் கொடுத்தார்.
*ராமத்தான்.' சாந்தி நாக்குழற, நடுங்கும் கரங் களால் ராமின் கையினைப் பற்றிக்கொண்டாள்.
60

“பயப்படாதை சாந்தி. . நானும் இருக்கிறன்தானே தைரியமாயிரு." ராம் அவளைத் தன் தோளோடு சேர்த் தணைத்து அமைதிப்படுத்தினன், சொற்ப நேரத்திற்குள் வியர்வையில் தெப்பமாகி விட்ட ராமின் ஷேட், அவனின் நிலையை அவளுக்கு உணரவைப்பதாயிருந்தாலும், அவனின் அணைப்பு அவளுக்குப் பயத்தைக் குறைப்பது போலிருந்தது.
“கெதியாத் திருப்பண்ணை." பஸ்ஸிற்குள்ளிருந்து மீண்டுமொரு குரல் ஆற்ருமையில் வெளிப்பட்டது.
ட்றைவர் பஸ்ஸை உடனடியாகத் திருப்பமுடியாமல் திணறிக்கொண்டிருந்தான்.
திடீரென்று அண்மையில் வேட்டொலிகள் கூடவே வித்தியாசமான வாகன இரைச்சல்கள்! "
“வாருங்கள் போலை கிடக்கு." பஸ்ஸில் இருந்த இளைஞனெருவன் விழிகள் பிதுங்கக் கூறியவாறே அவசர மாக எழுந்து, தன் பயணப் பையுடன் வெளியில் குதித்து காட்டுப் புறமாக ஓடத் தொடங்கினன். இவ்வளவு நேர மும் அமைதியாக இருக்கையிலேயே அமர்ந்திருந்த பிரயா ணிகள் இப்போ சட்டென்று எழுந்து, இறங்க முயற்சித்த தில் பஸ்ஸின் ஒடுக்கமான வாசல்கள் அடைபட்டு, அனைவரும் தெரிபடத் தொடங்கினர்.
றைவரும் கிளினரும் நிலைமையைச் சமாளிக்க முடியா மல் ஆடிப்போயிருந்தனர்.
ராம், சாந்தியை இழுத்துக்கொண்டு, பலங்கொண்ட மட்டும் பிரயாணிகளை இடித்து, விழுத்திக்கொண்டு கீழே குதித்தான். சனக்கும்பல் சிதறி. அல்லோல கல்லோலப் tul-...
எதிலோ தடுக்கி, செருப்புகள் தூர எகிறி விழ, தலை குப்புற விழப்போன சாந்தியை எட்டி அணைத்த ராம்,
16

Page 86
“கவனம் சாந்தி. ஸ்பீட்டாய் ஒடு.’ என்றவாறே அவளின் வலது கரத்தைப் பற்றிக் கொண்டு இறக்கமான காட்டின் செங்குத்தான பாதையால் சறுக்கி ஒடத் தொடங்கினன்.
“ராமத்தான். பாஸ்போட்..? சாந்தி அவனுடன் இழுபறிபட்டு ஓடியவாறே மூச்சிரைக்கக் கேட்டாள்.
*அது பஸ்ஸிலை. பாக்கிற் குள்ளை. போகட்டும்..??
"ஐடென்ரிற்றிக் காட்..?" “அது இங்கை பொக்கற்றுக்குள்ளை" “ஆவ்.ஈச்சம் முள்ளு." சாந்தி காலின் வலி தாளா மல் முனகியவாறே ராமின் கையை மேலும் இறுகப் பற்றிஞள்.
உயரத்தில் ஒரு காட்டுக் குருவி பெரிதாகக் கீச்சிட்டு இவர்களைக் கடந்து பறந்து போனது.
*களைக்குது. ராமத்தான்." அவள் ஒட முடியாமல் கண்கள் கலங்கினுள்.
வேட்டொலிகள் மிகவும் அண்மித்திருந்தன.
'நீண்டிடாதை சாந்தி. இன்னும் கொஞ்சத்தூரம்?
நெற்றியில் எதுவோ படீரெண்று மோத, “ஊ' என்று ஒலமிட்ட ராம், ஒருகணம் கதிகலங்கி, பின் நீட்டிக்கொண் டிருந்த பெரிய மரக் கிளைகளிலிருந்து விலகி, ஒரு கையால் நெற்றியை அழுத்தியவாறே தொடர்ந்து ஓடிக்கொண்டி ருந்தான்.
162

9s
*ராமத்தான்.” சாந்திக்கு நெஞ்சம் கலங்கித் தவித் தது. அவனைக் கட்டியணைத்துக் கொண்டு கதறியழ வேண் டும் போல கரங்கள் துடித்தன ஆயினும், எதுவுமே செய்ய முடியாத நிலையில், மனத்தவிப்புகள் யாவும் உள்ளே அமுங் கிக் குமுற, கண்களிலிருந்து கண்ணிர் குபுகுபு வென்று பொங்கி வழிந்தது.
தூரத்தில் ஒரு காட்டு ஓநாயின் இடைவிட்ட ஊளை ஒலி.
இவர்கள் நிச்சயமானதொரு நம்பிக்கையுடன் இறுகப் பற்றிய கரங்களை மட்டும் விட்டு விடாமல் ஓடிக்கொண் டிருந்தார்கள்.
(1984/85 இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக்
குறுநாவற் போட்டியில் 2ம் பரிசு பெற்றது)

Page 87


Page 88


Page 89
lsts பர். 19 قيود عام
를
leg