கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெரியாத பக்கங்கள்

Page 1


Page 2


Page 3


Page 4

p" স্বস্তু
தெரியாத பக்கங்கள்
சுதாராஜ்
19280
&
LANNOGS/Uriosy
234-B காங்கேசன் துறை வீதி யாழ்ப்பாணம்

Page 5
மல்லிகைப் பந்தல் வெளியீடு முதற்பதிப்பு : பிப்ரவரி 1997
C.
விலை: ரூபா :40/-
இந்தியாவில் கிடைக்குமிடம் : குமரன் பப்ளிஷர்ஸ் 79, முதல் தெரு, குமரன் காலனி, வடபழநி, சென்னை - 600 026.
அட்டைப் படம் : ரமணி

பதிப்புரை பார்க்கப் போனால் இந்த 1996 ஆண்டுத் துவக்க காலத்திலேயே - ஜனவரி, பிப்ரவரி மாதத்திலேயே - இந்தச் சிறுகதைத் தொகுதியான தெரியாத பக்கங்கள் நூல் வெளி வந்திருக்க வேண்டும். 'பித்தன்' அவர்களுடைய சிறுகதைத் தொகுதி வேலை முடிந்த பின்னர் இந்தத் தொகுதிக்கான ஆரம்ப வேலைகளை எல்லாம் சரிவர முடித்து விட்டேன். அட்டை எல்லாம் தயாராகிவிட்டது. முன்னுரையும் எழுதி முடித்தாகி விட்டது.
உங்களுக்கெல்லாம் தெளிவாகத் தெரிந்திருந்த அவல நிலை திடீரென யாழ்ப்பாணத்தைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. இரவுக்கிரவாகவே மக்கள் பெருங் கூட்டம் தமது வாழ்விடப் பிரதேசங்களை விட்டுப் புலம் பெயர்ந்து வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக காடு கரந்தையென அலைந்து ஏமலாந்தித் திரிந்தனர்.
மல்லிகைச் சாதனங்கள், உபகரணங்கள், வீடு வாசல்கள் அத்தனையையும் விட்டு வெளியேற வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இரவுக்கிரவே விட்டு வந்த பொருட் களில் இந்தச் சிறுகதைக் கையெழுத்துப் பிரதிகளும் அதற்கான உபசாதனங்களும் மல்லிகைக்குள் சிக்குப்பட்டுப் போய் விட்டன.
எனக்கு இவைகள் திரும்பக் கிடைக்கும் என்று துளிகூட நம்பிக்கையில்லை. மழை, தண்ணிரால் முற்றாகச் சேதப்பட்டு உருக்குலைந்து போய்த்தான் காட்சி தரும் எனநம்பி, இதைப் பற்றிச் சிந்திக்காமலே கொழும்பில் இருந்து எனக்குட்பட்ட இலக்கிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன்.
திடீரென ஒருநாள் அச்சுக் கோப்பாளர் சகோதரர் சந்திரசேகரத்திடமிருந்து கடிதம் வந்தது. இரும்பு அலுமாரிகள் இரண்டு அலுவலக ஒழுங்கைக்கு முன்னால் உடைத்துத் திறந்து போடப்பட்டிருந்தன எனவும், அதற்குள் இருந்த பல ஆவணங்கள் மழையில் நனைந்து, கடாதாசிகள் III

Page 6
இத்துப் போயிருந்தன எனவும் பைலுக்குள் முடங்கிப் போய்க் கிடந்த சிறுகதைத் தொகுதி எழுத்துப் பிரதிகளும் அட்டைப் படமும் சீரழிந்த போகாமல் அகப்பட்டன எனவும் அவர் அக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையைச் சொல்லுகின்றேன். அன்று எனக்கிருந்த மகிழ்ச்சி வார்த்தைகளுக்குள் அடங்காதது.
எழுத்துப் பிரதிகள், அட்டைப் படம் கைவசம் கிடைக்க என்ன வழி? இருக்கின்ற சூழ்நிலையில் மனைவி, மக்களின் கடிதங்களே ஒழுங்காகக் கிடைக்க வழி இல்லை. இத்தனைக்கும் மத்தியில் எழுத்துப் பிரதிகளைச் கொழும்பிற்கு எப்படித் தருவிப்பது? என்ன வழி?
இந்தச் சிக்கலுக்கு ஒரு வழி சமைத்துத் தந்தார், நண்பர் செங்கை ஆழியான். கொழும்பு வரும் யாரோ ஒரு நண்பரிடம் பத்திரமாகச் சேர்ப்பித்து, கசங்காமல் கொள்ளாமல் அவற்றை என்னிடம் சேர்ப்பிக்க வைத்தார் அவர்.
சகோதரர் சந்திரசேகரத்திற்கும் இலக்கிய நண்பர் செங்கை ஆழியானுக்கும் இந்தக் கட்டத்தில் எனது. மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
மல்லிகை அபிமானிகளுக்கு நண்பர் சுதாராஜ் ஒன்றும் புதியவரல்ல. மல்லிகைச் சஞ்சிகையில் இவர் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்துள்ளார். அத்துடன் மல்லிகைப் பந்தல் நிறுவனத்தினூடாக இவரது 'ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்’ சிறுகதைத் தொகுதி பல ஆண்டுகளுக்கு முன்னாக 1989ல் மலர்ந்து, மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளது.
இவரது சிறுகதைகள் மல்லிகையில் வெளிவந்த காலத்திலேயே இவரைப் பற்றிப் பலரும் வியந்து வியந்து என்னை விசாரித்துள்ளனர். 'மல்லிகைப் பண்ணை கண்டெடுத்த நல்லதொரு ஆரோக்கியமான படைப்பாளி வர்' என பாராட்டி எனக்குக் கடிதம் எழுதியவர்களும் உண்டு. இந்த இடத்தில் ஓர் உண்மையைக் கட்டாயம் சொல்லித்தானாக வேண்டும். நண்பர் சுதாராஜ் மல்லிகைப்
V

பண்ணையில் விழைந்த எழுத்தாளரல்ல. இவரைக் கண்டெடுத்து, உருவாக்கி உயிரூட்டியவர் “சிரித்திரன்' சிவாஞானசுந்தரம் அவர்கள். அவர்தான் இவரது முதற் சிறுகதைத் தொகுதியான 'கொடுத்தல்' நூலை வெளியிட்ட வர். இந்தத் தொகுதி பின்னர் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக் கொண்டது. அந்தக் கண்டு பிடிப்புக் கெளரவம் நியாயமாகவே சிரித்திரன் ஆசிரியரைச் சென்றடைய வேண்டும். இதுவே சரி. −
வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். இவரை இவருக்குரிய எழுத்து அந்தஸ்துடன் வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியது மல்லிகை எனச் சொல்லலாம். அந்தக் கணிப்பு ஒரளவுக்குச் சரியாகப் பொருந்தக் கூடும். அதன் தொடர்பாகவே இந்தத் தொகுதி வெளி வருகின்றது. மல்லிகையிலும் சரியாகவே இவரது திறமையைத் தெளி வாக இனங் கண்டு பயன்படுத்தி வந்திருக்கின்றேன்.
நண்பர் சுதாராஜ் அவரது எழுத்தையும் மீறின இனிமையானவர். ஆழமாகச் சிந்திக்கத் தெரிந்தவர். தேடல் முயற்சி கொண்டவர். இவரது சிறுகதைகள் ஒவ்வொன்றி லும் நாம் இதைக் கூர்மையாக அவதானிக்கலாம்.
பதினொரு கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. மல்லிகையில் வெளிவந்த கதைகளும் உண்டு. வேறு பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளும் இதில் அடங்கியுள்ளன. 'ஆனந்த விகடன்' போட்டியில் வென்று பரிசு பெற்ற கதையொன்றும் இதில் அடங்குகின்றது.
இவரது கதை சொல்லும் நடை பற்றி நான் சொல்ல வேண்டும். சரளமான இந்த நடை இவருக்கென்றே கை வந்த கொடை. இந்த நடையை இவர் கதைக்குக் கதை மெருகேற்றி வந்திருக்கின்றார். கதை சொல்லும் முறை கவர்ச்சியானது. சிந்திக்க வைக்கத் தூண்டுவது.
இலங்கையிலே எனக்கு ஒர் அனுபவம் உண்டு. 'மல்லிகைப் பந்தல்' வெளியீடுகள் வெளிவந்த கணத்தில் இருந்தே சுடச் சுட விற்பனையாகி விடுகின்றன. இது பலருக்கு ஆச்சரியம் கலந்த திகைப்பு. எனக்குக் கூட V

Page 7
ஆரம்பத்தில் இது புரியாத புதிராகவே இருந்தது தனியே இருந்து சிந்தித்துப் பார்த்த பின்னர் இப் புதிர் எனக்கு விளங்கத் தொடங்கியது. 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டின் சகல பிராந்தியங்களுடனும் தொடர்பு கொண்டு நான் உழைத்து வந்திருக்கின்றேன். எனது சுவறியுள்ள இந்த இலக்கிய நேர்மையை, விசுவாசத்தை - பலர் இதயபூர்வ மாகவே புரிந்து வைத்துள்ளனர். என்னுடைய நோக்கத்தை மதிக்கும் உணர்வாகவே எனது உழைப்பில் மலரும் நூல்களை வாங்கி என்னைச் சிறப்பிக்கின்றனர் என்ற முடிவுக்கே கடைசியில் நான் வர முடிந்தது. இது உண்மையும்கூட.
எனக்குப் பல வழிகளில் உதவி வரும் இளம் நண்பர் க. குமரன் அவர்களுக்கும் எனது நன்றி!
அட்டைப் படத்தை வெகு அழகாக உருவாக்கித் தந்த ஒவியர் 'ரமணி அவர்களுக்கும் படிகளை ஒப்பு நோக்கித் திருத்தித்தந்த திருமதி உமா ஜெயராஜசிங்கம் அவர்களுக்கும் எனது நன்றிகள் உரியவை.
12-2-97 - டொமினிக் ஜீவா
V

தெரியும் பக்கம்
அன்றாட வாழ்வில் எங்களுக்கு ஏதாவது தேவைகள். ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சந்தோஷமாகவும் சுகமாகவும், வாழவேண்டுமென விரும்புகிறோம். தேவை களைப் பூர்த்தி செய்ய இயல்பாகவே முயல்கிறோம். பிரச்சினைகள் தோன்றுகின்றன. எல்லோருக்குமே கஷ்டங்கள் உண்டு. ஏதாவதொரு கவலையேனும் உண்டு.
எங்களுடைய கஷ்டங்கள் கவலைகள் மட்டும் எங்களுக்குத் தெரிகின்றன. பிச்சினைகளின் அழுத்தம் மன நிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதன் தாக்கத் தினால் எழுகின்ற செயற்பாடுகள் சில வேளைகளில் எங்களோடு சேர்ந்த மற்றவர்களையும் பாதிக்கின்றன. இது எங்களுக்குத் தெரிவதில்லை. எங்களுடைய முகம் எங் களுக்கு நன்றாகவே தெரிகிறது. அதில் கோணல் இருந் தாலும் அதை ஏற்றுக் கொள்கிறோம். அதை அனுசரித்து வாழப் பழகிக் கொள்கிறோம். அல்லது அதுதான் சரி என நியாயம் கற்பிக்க முயல்கிறோம்.
மற்றவர்களை பார்த்தால் "இவனுக்கு என்ன குறை?” என்று தோன்றுகிறது. மற்றவர்களுடைய பிரச்சனைகளோ, கவலைகளோ எங்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரிவ தில்லை. மற்றவர்களுடைய தவறுகளைக் கண்டுபிடிக்க எங்கள் கண்களுக்கு ஒரு நேரம் தேவைப்படுவதில்லை. இவ்விசயத்தில் அவ்வளவு கூர்மையானவர்கள் நாங்கள். வாய் கூசாது விமர்சிக்கிறோம்.
ஆனால் எல்லாவற்றுக்கும் எல்லாப் பிரச்சனைகளுக் கும் இன்னொரு பக்கம் இருக்கிறது. சாதாரணமாகச் சிந்தித்து நோக்க முடியாத அந்தப் பக்கத்தை நின்று நிதானித்துப் பார்த்தால் எங்கள் இதயங்களில் கசிவு ஏற் படும். இரக்கம் சுரக்கும். அவர்கள் இன்னல்களைத் தீர்க்க ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று தோன்றும், நாங்க ளெல்லாம் பொல்லாதவர்கள் அல்ல. மனிதாபிமான உணர்வு மீட்டப்படும்போது நாங்கள் மற்றவர்களை அன்புடன் நேசிக்கிறோம்.
V

Page 8
இது ஒர் இயந்திரமான உலகம். வாழ்க்கை கூட இயந்திரமான ஒட்டத்துக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக் கிறது. எப்படியாவது எங்கள் வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. எங்கள் பிள்ளை குட்டிகளை அணைத்து ஆசையுடன் பேச முடிவதில்லை. ஆற அமர்ந்து அம்மா, அப்பா என்று இரண்டு வார்த்தை பேச நேரம் கிடைப்பதில்லை. இது கூடாது, நாங்கள் இப்படி இருக்கக் கூடாது. அப்படி எங்கள் சாதாரண கண்களுக்குத் தெரியாத பக்கங்கள்'தான் இப்புத்தகத்திலுள்ள எனது ஒவ்வொரு சிறுகதைகளுமாகும். இவை உங்களுக்கு 9 DfT 1600TLD.
இச்சிறுகதைகள் அவ்வப்போது பிரசுரமான சஞ்சிகை களின் பெயரும், வருடமும் கதைகளின் அடியில் குறிப்பிடப்பட்டுள்ளன. கதைகளைப் பிரசுரித்த சிரித்ரன், மல்லிகை, ஆனந்த விகடன், வீரகேசரி ஆகியவற்றின் ஆசிரியர்களுக்கு என் நன்றிகள்!
அடைக்கலம் சிறுகதை ஆனந்த விகடன் வைர விழாச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. அவர்களது 'ஒரு மெளனத்தின் அலறல்’ சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது. போட்டி அமைப்பாளர்களுக்கும் ஆனந்த விகடன் ஆசிரியருக்கும் நன்றி.
எனது ஒவ்வோர் கதைகளையும் விமர்சித்து ஊக்கமளித்து எழுத்துத் துறையில் உயரக் காரணமாயிருந்த அமரர் சிரித்திரன் ஆசிரியர் சுந்தர் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடைவன்.
மனமுவந்து இப்புத்தகத்தை நல்ல முறையில் தொகுத்து வெளியிடும் மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா அவர்களுக்கு என் அன்பான நன்றிகள் உரியன.
சுதாராஜ 5873, அனுராதபுர வீதி, புத்தளம், இலங்கை
VII

அணிந்துரை கலாநிதி. நா. சுப்பிரமணியன்
கலை இலக்கியம் என்பன இதயங்களின் அனுபவங் களின் திரட்சியை - இன்னொருவருக்குச் சிந்தாமல் சிதறாமல் தொற்ற வைக்கும் செயற்பாடுகள். அவைகளின் தரமான கலை இலக்கியப் படைப்பிலே படைப்பு மட்டுமே பேசும்; படைப்பாளி பேசமாட்டான்; பேசவும் கூடாது. படைப்பியலின் நுட்பம் இது. இந்த நுட்பத்தை உரியவாறு உணர்ந்து செயற்பட்டு வருபவர்களில் தனிக் கவனத்துக் குரிய ஒருவர் எழுத்தாளர் சுதாராஜ்.
படைப்பிலக்கியத் துறையில் 1970களில் அடியெடுத்து வைத்துத் தொடர்ந்து இயங்கி வரும் சுதாராஜ் (சி.இராஜ சிங்கம்) அவர்கள் பணி நிலையில் ஒரு பொறியியலாளர். புனை கதைத் துறையிலே சிறப்பாகச் சிறுகதையிலே தனிக் கவனம் செலுத்தி வருபவர். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுதிகளும் ஒரு நாவலும் இவரது கைவண்ணங்களாக வெளிவந்தள்ளன. 'தெரியாத பக்கங்கள்’ என்ற இந்தச் சிறுகதைத் தொகுதி இவரது ஐந்தாவது வெளியீடு.
குறித்த ஒரு உணர்வு நிலையை அல்லது மனச் சலனத்தை மையப்படுத்திப் புனையப்படும் சொற்கோலம் சிறுகதை. சொற்செட்டும் கட்டிறுக்கமும் இதன் சிறப் பியல்புகள். இக்கதைக்கலை தமிழிற் பயிலத் தொடங்கி ஏறத்தாழ நூறாண்டுகள் ஆகின்றன. ஈழ மண்ணிலே இதன் வரலாறு 1930தின் பிற்கூற்றில் தொடங்குகிறது. முதல் மூவர் எனப்படும் இலங்கையர் கோன்', 'சம்பந்தன்', சி.வைத்தி லிங்கம் ஆகியோரின் கைவண்ணத்தில் வடிவச் செம்மை யுடன் பயிலத் தொடங்கிய ஈழத்துச் சிறுகதை 1950-60களில் இம்மண்ணின் 'சமூக-பண்பாட்டுப் பிரச்சினைகளில் ஆழமாகக் காலூன்றத் தொடங்கியது. இதன் உடன் விளைவாக உருவமா? உள்ளடக்கமா? எது முக்கியம் என்ற விவாதம் ஓங்கி ஒலித்தது. இந்த விவாத அலை ஓரளவு ஒய்ந்து கலை-சமூக அக்கறை ஆகிய இரண்டும் சமநிலைக் கறுகள் என்ற உணர்வோட்டம் தலையெடுத்த காலப்
Χ

Page 9
பகுதியாக 1970களைக் குறிப்பிடலாம். சிறுகதையுலகில் சுதாராஜ் அவர்கள் அடியெடுத்து வைத்தபோது நிலவிய இலக்கியச் சூழல் இது. இந்தச் சூழலின் வரலாற்றுப் போக்கிற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடத்தக்க படைப்புக் களைத் தந்தவர்களில் ஒருவர் என்ற வகையிலேயே சுதாராஜ் நமது கவனத்துக்கு உரியவராகிறார்.
ஒரு படைப்பாளியைப் பற்றிய பார்வையிலே இரண்டு விடயங்கள் நமக்கு மிக முக்கியமானவையாகின்றன. ஒன்று அவரது தரிசனம்' அதாவது அவரது உலகைப் பற்றிய, சமூகத்தைப் பற்றிய - நோக்குநிலை. மற்றது அதனைப் படைப்புக்குள் இட்டு வரும் முறைமை. தம்மைச் சூழவுள்ள புறவுலகு சமூக-பொருளியல் தளத்தில் கட்டியமைக்கப் பட்ட உறவுகளைக் கொண்டது என்பதை சுதாராஜ் புரிந்து கொண்டுள்ளார். பாசம், பற்று என்பதெல்லாம் சமூகபொருளியல் முரண் நிலைகளுக்கு முன்னால் எப்படி வெளிவேஷங்களாகக் காட்சி தருகின்றன என்பது அவருக்கு நன்கு தெரிகின்றது. இவற்றைத் தனது படைப்புக் களில் உணர்த்தவும் முற்பட்டுள்ளார். இவ்வகையில் இவர் ஒரு யதார்த்தவாதி. ஆனால் ஒரு அரசியல் சிந்தனை யாளனது தளத்தில் நின்று மேற்படி முரண்பாடுகளுக்கு எதிராக அவர் குரல் கொடுக்க முற்படவில்லை. அன்பு, காதல், கருணை ஆகிய உணர்வுகளில் அமைதி காண விழையும் ஒரு ஆன்மிக அணுகுமுறையே இவரது ஆக்கங்கள் பலவற்றிலும் அடிநாதமாக அமைந்துள்ளது. இவ்வகையில், தம்மைச் சூழவுள்ள சமுதாயத்தின் முரண் பாடுகளைத் தோலுரித்துக்காட்டி விமர்சிக்கும் ஒரு சமூகப் பார்வையாளனது பணியையே சுதாராஜ் மேற்கொண்டுள் ளார். இந்தச் சமூக விமர்சனம் உணர்வுபூர்வமானதாக - வாசகரிடம் அனுபவத்தைத் தொற்றவைப்பதாக - அமைந்தமையே அவரது படைப்பாற்றலின் வெற்றியாகும். இவ்வாறான இவரது படைப்பாற்றலின் வெற்றிக்கு, 'மல்லிகைப் பந்தல்' வெளியீடாக மலர்ந்த ‘ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்’ என்ற தொகுதியி லுள்ள கதைகள் தக்க எடுத்துக்காட்டுக்களாகின்றன.
X

"தெரியாத பக்கங்கள்" என்ற தலைப்பில் அமைந்த இத் தொகுதியில் பதினொரு கதைகள் இடம்பெற்றுள்ளன. மல்லிகை, வீரகேசரி, ஆனந்த விகடன், சிரித்திரன் ஆகிய இதழ்களில் 1987-1997 காலப் பகுதியில் பிரசுரமானவை
இவை.
முயல்குட்டி, அடைக்கலம், மனோதர்மம் ஆகிய கதைகள் சுதாராஜ் என்ற கலைஞனின் கருணை உளப் பாங்கின் வெளிப்பாடுகள், பிராணிகள் மீதான அன்பு கலைத்திறனுடன் கதைக் கோலம் கொண்ட நிலை இவை. இவற்றுள் 'அடைக்கலம்' என்ற கதை ஈழத் தமிழரின் அகதி வாழ்வின் குறியீடாகவும் அமைந்த சிறப்புடையது. ஆனந்த விகடன் போட்டியில் முதற் பரிசு பெற்ற கதை என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஏனைய கதைகள் பொதுவாகச் சமகால சமூகத்தின் நேரடி விமர்சனங்களாகும். மேலே சுட்டியதுபோல சமூகபொருளியல் தளத்திலே அமைந்த உறவுகளில் பாசம், பற்று என்பன வேஷங்களாவதை "போவது நீதியில்லை; 'போகும் இடம்' ஆகிய கதைகள் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.
“கட்டின வீடு. வேண்டின காணியள். மினி பஸ். அனுப்பின காசு எல்லாம் அண்ணையின்ரை பேரிலை தான் இருக்கு; தற்செயலாய் அண்ணைக்கு ஏதும் நட்டந்திட்டால் எல்லாம் அண்ணை பெண்சாதிக்குத்தான் போய்ச் சேருமாம்; . உடனை வந்தால். என்ர பேருக்கு மாத்தியிடலாமாம். எண்டு தங்கச்சி பிறகும் எழுதியிருக்கிறாள். அதுதான் போக வேணும்"
(போவது நீதியில்லை)
‘மாமி! கட்டாயம் போகத்தான் வேணுமோ? எங்களோடை நில்லுங்கோ”
அம்மா சொன்னாள்:
"தனியத் தனிய இருந்தால் ஒராளுக்கோராள் பட்சமாயிருக்கலாம்"
(போகும் இடம்) XP

Page 10
யாழ் பிரதேச சமூக உறவுகளின் யதார்த்தத்துக்கு வெட்டு முகக் காட்சியாக அமையும் சான்றுகள் இவை.
குடும்பப் பொறுப்புக்களால் இளமைக் கனவுகளை இழந்து அம்மா என்ற கணிப்புக்கு உரியவளாகிவிட்ட ஒரு அக்காவின் கதை “மெய்ப் பொருள்' அதிகம் பெண்களைப் பெற்ற நடுத்தர குடும்பத்தின் அவலம் இக் கதையின் அடித்தளம். பெண்மையின் சலனம், காதல், ஏமாற்றம், சமாளிப்பு எல்லாம் சிந்தாமற் சிதறாமல் இந்தக் கதையிலே காட்சிக்கு வருகின்றன. பொருளியல் தேவைகள் குடும்ப உறவில் நிகழ்த்தும் உணர்வுத் தாக்கங்களின் ஒரு வெட்டு முகக் காட்சி ‘எங்கட அப்பா எப்ப வருவார்?" என்ற கதையாக விரிகிறது. போராட்டச் சூழலின் யதார்த்தங்கள் ‘விளக்கு' கதையின் பகைப்புலம். அவற்றின் மத்தியில் கணவன் மனைவி உறவின் பசுமையும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் தெளிவாகப் பதிவாகியுள்ளன. தலைப்புக் குரிய கதையான ‘தெரியாத பக்கங்கள்' வேலைக்காரச் சிறுமியொருத்தியின் உணர்வுகளுக் கூடாக சமூக மனிதர் கள் சிலரை இனங் காட்டுகின்றது. போராட்டச் சூழலில் அகதிகளாகி விட்டவர்களின் அவலக்கதை 'அகதியும் சில நாய்களும்'. சாதியுணர்வுப் பகைப்புலத்தில் சில மனித முகங்களைத் தரிசிக்க வைத்துள்ளது. 'அப்பாச்சியும் ஊன்று கோல்களும்' என்ற கடைசிக் கதை. அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கி நிற்கும் முதிய தலைமுறையின் உணர்வுகளின் பதிவாகவும் இக்கதை அமைகிறது.
சிறுகதையின் கூட்டமைப்பில் அதன் இறுதி வாக்கியம் தரவேண்டிய அழுத்தம் மிக முக்கியமான ஒன்றாகும். சுதாராஜின் பல கதைகளில் இந்த அமைப்புச் சிறப்பை அவதானிக்க முடியும். முன்னால் போவது நீதியில்லை', 'போகும் இடம்' ஆகிய கதைகளில் இருந்து எடுத்துக் காட்டப்பட்ட பகுதிகள் அவற்றின் இறுதி வாக்கியங்கள் என்பது நமது கவனத்துக்குரியதாகும். மேலும் "மெய்ப் பொருள்', 'எங்கட அப்பா எப்ப வருவார்?" கதைகளிலும் இறுதி வாக்கியங்கள் அழுத்தம் நிறைந்தனவாக அமைந் துள்ளன.
X

"அதிர்ச்சியில் உறைந்துபோன முகத்தில் மலர்ச்சியைக் கீறினாள்' என அமையும் "மெய்ப் பொருள்" கதையின் இறுதி வாக்கியம் கதை உணர்த்த வந்த அவலத்தை அதன் எல்லைவரை இட்டுச் செல்கின்றது.
சுதாராஜ் அவர்கள் தமது கதைகளுடாக எதனையும் எம்முடன் நேரடியாகப் பேசவில்லை; எதனையும் பிரசாரப் படுத்தவும் இல்லை. ஆனால் நிறையவே நமக்கு உணர்த்தி விடுகிறார். நமது உள்ளத்தில் வரண்டு விட்ட கருணை மீண்டும் ஊற்றெடுத்துப் பெருக வேண்டுமென அவர் விரும்புவது தெரிகிறது. நமது முதுகை - நமக்குத் தெரியாத பக்கங்களை - நோக்கி நமது பார்வையைத் திருப்ப விழைகின்றார். நமது சமூகத்தில் ஏன் இத்தனை அவலங்கள் என்று அவர் கேட்பது புரிகிறது. இனி பதில் சொல்ல வேண்டியது நாங்கள்.
சுதாராஜின் எழுத்துப்பணி மேலும் தொடர வாழ்த்தி நிறைவு செய்கிறேன்.
- நா.சுப்பிரமணியன்
முதுநிலை விரிவுரையாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
XIII

Page 11
1.1.
1.
உள்6ே1.
முயல் குட்டி போவது நீதியில்லை
அடைக்கலம்
மெய்ப்பொருள்
. எங்கட அப்பா எப்ப வருவார்
மனோதர்மம்
போகும் இடம்
விளக்கு
தெரியாத பக்கங்கள் அகதியும் சில நாய்களும்
அப்பாச்சியும் ஊன்றுகோல்களும்
XIV
பக்கம்
15
32
49
0ד
89 99
111 119 131
145

முயல் குட்டி
காலையில் வழக்கம் போலக் கத்தரிச் செடிகளுக்கு தண்ணிர் பாய்ச்சத் தொடங்கினேன். பாம்பு தலையை அசைத்தசைத்து வருவதுபோல, தண்ணிர் வாய்க்காலில் வந்துகொண்டிருந்தது. கால்களை எடுத்து வைக்கும்பொழுது "க்ளக்' எனக் கவ்விப் பிடித்தது. தண்ணிரை இன்னொரு பாத்திக்கு மாற்றியதும் ஏதோ ஒடியது போன்ற அரவம் கேட்டது. சற்று விலகி, குனிந்து கண்களைக் கூர்ந்து பார்த்தேன். ஒரு அடிமரத்துடன் பதுங்கிக் கொண்டு.
முயல் குட்டி! இவ்வளவு சிறிய குட்டியாக நான் இதற்கு முதல் முயலைக் கண்டதில்லை, நண்பன் தில்லையின் வீட்டில் முயல் வளர்க்கிறார்கள். கொழு கொழு எனத் திரட்சியாகப் பெருத்து வளர்ந்த முயல்கள். கம்பி வலையால் அடைக் கப்பட்ட கூட்டுக்குள் விடப்பட்டிருக்கும். கட்டித் தொங்க விடப்பட்ட இலை குழைகளை எவ்வித வியப்பும் இல்லாமல் அவை கடிக்கும். அண்மையிற் போய் வலையினூடாகப் பார்த்தால் கூடச் சற்றும் வெருட்சி யடையாமல் குழையை நறுக்கித் தின்று கொண்டிருக்கும். அந்த முயல்களைப் போல பால் வெள்ளையாகவோ, கறுப்பாகவோ இல்லாமல் இந்தக் குட்டி மண்ணிறமும் சாம்பல் கறுப்பும் சேர்ந்த ஒரு நரைத்த நிறமாக இருந்தது. அதனாலேயே அவற்றைவிட வடிவாகவும் இயற்கையோடு ஒன்றிப்போன மாதிரியும் இருந்தது. காய்ந்த இலைச் சருகுகளுள், மண்பொந்துகளுள் ஒழிந்து பிற மிருகங்களிட மிருந்து தப்புவதற்காகத்தான் காட்டு முயல்கள் அந்நிறத்தைக் கொண்டிருக்கின்றன போலும்.
பொதுவாக எனக்கு முயல்களைப் பற்றிய ஞானம் மிகவும் குறைவு. அதிலும், காட்டு முயல்களைப் பற்றி

Page 12
சுதாராஜ் 0 2
குறைந்தபட்ச ஞானமும் இல்லை. வீட்டைச் சுற்றியுள்ள காணித்துண்டுகள் பற்றையும் புதருமாக ஒரு சிறிய காடு போலத்தான். வீடு கட்டுவதற்காகப் பற்றைகளை வெட்டி காணியைத் துப்புரவு செய்தபொழுது ஞாயமான காட்டு, முயல்கள் இருந்ததாக வேலை செய்தவர்கள் முன்னர் சொல்லியிருக்கின்றார்கள். அதற்கு மேல் நான் அதுபற்றி அறிய முயன்றதில்லை. காட்டு முயல்கள் துடினமாகவும் பொல்லாதவையாகவும் இருக்குமென எனது அறிவுக்கு எட்டியவரை கருதியிருந்தேன்.
ஆனால் இந்த முயல் குட்டி பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது! ஒவ்வொரு மயிர்க்கணைகளும் நடுங்கு கின்றன. அதன் அடிவயிறும் கால்களும் தண்ணிரில் நனைந்து இருக்கின்றன. குளிரில் நடுங்குகிறதா அல்லது என்னைக் கண்டு பயத்தில் நடுங்குகிறதா என்று புரியவில்லை. பார்வை மிகவும் பயந்துபோன மாதிரித்தான் தோன்றியது. கையில் பிடித்திருந்த மண்வெட்டியைத் தூரப் போட்டேன். எனினும் அதன் நடுக்கம் தீரவில்லை. சின்னஞ்சிறு குட்டி. அதனால் பயப்படுவதாக இருக்கலாம்.
முயல் குட்டியைப் பிடிக்க வேண்டும் எனும் ஆசை இயல்பாகவே என்னுள் கிளர்ந்தது. பிடித்தால் என் குழந்தைக்குக் காட்டலாம் எனும் ஆர்வமும் ஒருபுறம் தூண்டியது.
குழந்தை முயல் குட்டியைக் கண்டால் சந்தோஷப் படுவாள். காகங்கள் குருவிகளைக் கண்டாலே அவளுக்கு புதுமையாயிருக்கிறது. குதூகலமடைகிறாள். மனைவி குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டும் பொழுதுகளில் வெளியே கொண்டு வந்து ஊரிலுள்ள காகங்களையெல்லாம், “காக்கா” “காக்கா” என அழைத்துக் காட்டுவாள். குழந்தை அவற்றில் என்ன விநோதத்தைக் காண்கிறாளோ! மதில் மேலும் மரங்களிலும் உள்ள காகங்களைத் திரும்பத் திரும்ப பார்த்த படியே சாப்பிட்டுத் தீர்த்துவிடுவாள். குயில், குருவி,

3 O தெரியாத பக்கங்கள்
மைனா எதைக் கண்டாலும் “க்கா-கா-ஆ" எனக் கையசைப்பாள். குழந்தைக்கு எல்லாம் இப்பொழுது "க்கா-கா-ஆ'தான். இது குயில். இது மைனா என்ற வேறுபாட்டைப் புரிய இன்னும் காலமிருக்கிறது. ஆனால் இதுமுயல் பறவைகளைப் போல "பறக்காமல் தாவித்தாவி, ஒடும் பிராணி. பறவைக்கும் முயல் குட்டிக்கும் உள்ள வேறுபாட்டைக் குழந்தை இலகுவில் புரிந்துகொள்வாள்.
பிடிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. ஆனால் எப்படிப் பிடிப்பது? அதன் வாயின் முன் இரு பற்கள் கூர்மையாக வெளியே தெரிகின்றன; கடிக்குமோ? முயல், கடிக்குமா என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. வீட்டுப் பூனை கடிப்பதில்லை; ஆனால் காட்டுப் பூனை கடிக்கும் என்று சொல்லுவார்கள். அதுபோல, காட்டு முயல் கடிக்கலாம். அவ்வளவு ஏன்? அணில்கூட பார்த்தால் எவ்வளவு சாதுவான பிராணியாகத் தெரிகின்றது; பிடித்தால் கடிக்கிறது. ஒரு சாயலுக்கு முயல் குட்டியின் மூஞ்சையும் (அந்த நீண்ட செவிகளைத் தவிர)அணிலை ஒத்ததுபோலத் தெரிகிறது. எனவே கடிக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. அல்லது தற்பாதுகாப்புக்காகவேனும் கடிக்க முற்படலாம்.
இது குட்டிதானே. 'கடிக்காது. பிடி' எனத் தள்ளியது மனசு, முயல் குட்டியைப் பிடிப்பதற்கு ஆயத்தமானேன். அதன் கழுத்தில் அமத்திப் பிடிப்பதுதான் நல்ல உபாயம் எனத் தோன்றியது. அப்படியானால் அது தலையைத் திருப்பிக் கடிக்க எத்தனிக்க முடியாது. தப்பி விடலாம்! ஆனால் கழுத்தில் அழுத்தினால் அது செத்துப் போகவும் கூடும்!
தில்லை முயல் கூட்டுக்குள் கையை விட்டு முயலின் செவியில் பிடித்துத் தூக்குவது நினைவில் வந்தது. 'முயலுக்கு அதன் பலமே செவியில்தான் இருக்கிறதஈம்' - அவன்தான் சொன்னான். பிறருக்குத் தெரியாத

Page 13
சுதாராஜ் 0, 4
விஷயமென்றால் தனது கையாலும் தாராளமாகப் போட்டுச் சொல்லக்கூடியவன் தில்லை என்பதால், அவன் சந்தோஷத்தைக் குழப்பாது சொன்னதைச் சரியெனக் கேட்டு வந்தேன். பின்னர் அதை மறந்திருந்தேன். இப்பொழுது அது நல்ல ஐடியாவாகப் பட்டது. செவியில் பிடித்தால் முயல் குட்டி கடிக்காது! அதன் செவியைப் பார்த்தேன். குத்தென மேலுயர்ந்து நல்ல வசதியாகத்தான் இருக்கின்றது. இரண்டு செவிகளையும் சேர்த்து ஒரு கையால் பிடிக்கலாம். அதற்கு வலிக்குமோ? செவியில் பிடித்துத் திருகினால் எங்களுக்கு வலிக்கின்றது. முயலுக்கு வலிக்காதா என்ன?
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் முயல் குட்டியைப் பிடித்த மாதிரிதான் என மனதைச் சமாதானப் படுத்தினேன். ஓடவிடாமல் ஒரே எத்தனிப்பில் பிடிப்பது, ஓடினாலும் விடாமல் துரத்திப் பிடிப்பது போன்ற திட்டங் களை வகுத்துக் கொண்டேன். முயல் குட்டியைப் பிடிப் பதற்கு நான் ரெடி சர்வ வல்லமையையும் சேர்த்துக் கொண்டு அதன்மேல் பாய்ந்தேன். அதுமிகச் சாதாரணமாக தாவி ஒடிச் சென்றது. இன்னொரு மரத்தடியோடு பதுங்கி நின்று திரும்பிப் பார்த்தது. ஒடிவிடுமோ என உள்மனம் சொல்ல. வலது கையை வெறுமனே வீசி, வீசி அதன் செவிகளைப் பிடிப்பது போல இரு தடவை ஒத்திகை பார்த்தேன். பின்னர் அவ்வாறு மிக நேர்த்தியாகச் செயற் பட்டேன்; "கீ கீ! கீ"
நினைத்ததுபோல அவ்வளவு கஷ்டமான காரியமாக இருக்கவில்லை. முயல் குட்டியைப் பிடித்துவிட்டேன்.
ரப்பர் பொம்மையை அழுத்தினால் ஒலிக்கும் குரலைப் போல முயல் குட்டி கத்தத் தொடங்கியது. அச்சத்தம் கேட்டு எங்கள் வீட்டு நாய் தூக்கம் கலைந்து ஓடி வந்தது. இது ஒரு பொல்லாத சாமான். பாம்பு, ஒணான், பூச்சி போன்ற ஐந்துக்களை வளவிற்குள் கண்டால் கலைத்துப்

5 0 தெரியாத பக்கங்கள்”
பிடித்துக் கடித்துப் போட்ட பின்னர்தான் மறுவேலை, பார்க்கும். இப்பொழுது முயல் குட்டியை என் கையில் கண்டதும் வலு உற்சாகத்துடன் தொங்கிப் பாய்ந்தது. கையை உயர்த்திப் பிடித்துக்கொண்டு வீட்டை நோக்கி ஒடினேன். நாயும் தொங்கி தொங்கிப் பாய்ந்தவாறு என்னோடு ஓடி வந்தது. நான் வீட்டுக்குள் நுழைந்தேன். நாய் மேற்கொண்டு வராமல் வாசலிலேயே பிரேக் அடித்தது -
அங்கு என் மனைவி நின்றுகொண்டு இருந்தாள்! “என்ன? என்ன? என்றாள். செவிகளைப் பிடித்த கையை நீட்டினேன். "முயல் குட்டி!" "எப்படி வந்தது?" "இரவு தாயோட புல்லுமேய வந்திருக்கும். தாய்போட்டுது போலை, இவர் கவனிக்காமல் தோட்டத்தி லேயே நின்றிட்டார்.”
"ஐயோ, பாவம்! தாய் எங்கையெல்லாம் தேடித் திரியுதோ தெரியாது”
"இல்லையில்லை! அதுகும் இஞ்சைதான் எங்கை யாவது ஒழிச்சிருக்கும்" என மனைவியை சமாதானப் படுத்தினேன். வீட்டையும் வீட்டோடு சேர்த்து சிறு தோட்டத்தையும் சுற்றிவர மதில் அமைந்துள்ளது. ஒரே ஒரு வழியான கேற்றுக்கூடாக நுழைந்து வந்து பின்னர் போகும் வழி தெரியாமல் தங்கியிருக்கலாம்,
முயல் குட்டி கத்தும் சத்தத்தில் குழந்தை கண்களை மூடிக்கொண்டு திரும்பி அம்மாவின் கழுத்தை கட்டிப் பிடித்திருந்தாள்.
"இஞ்சை பாரம்மா, முயல் குட்டி. என்ன பயம்* அப்பா பயப்பிடாமல் வைச்சிருக்கிறேன்தானே?" என

Page 14
சுதாராஜ் 0 - 6
குழந்தையின் கவனத்தைத் திருப்ப முயற்சித்தேன். அவள் திரும்பவில்லை. ی
முயல் குட்டி கால்களை உதறி உதறித் துடித்தது. துடிக்கிற துடிப்பில் செவிகள் அறுந்து விழுந்து விடுமோ எனத் தோன்றியது. கீழே சீமெந்துத் தரையில் விட்டேன். தாவி ஓடிச் சுவர் மூலையில் பதுங்கியது. வெளியே ஓடிவிடாதவாறு குறுக்காக நின்றுகொண்டு “பெட்டி ஏதாவது இருக்குதா?” என மனைவியிடம் கேட்டேன். - முயல் குட்டியை விடுவதற்கு.
பெட்டி ஒன்று தேடி எடுப்பதற்காக மனைவி குழந்தையை தம்பியிடம் கொடுத்து விட்டு உள்ளே போனாள்.
அந்தக் கணத்தில் நாய் வீட்டுக்குள் பாய்ந்தது. நாய் முயல் குட்டியைக் கலைக்க நான் இரண்டையும் கலைத்துக் கொண்டு ஒட, எங்களுக்கு பிறகால் தம்பி குழந்தையுடன் ஓடிவர.
- சூய் சூய், ஏய். அடீக்! அடிக். அங்காலை போ!. கீ, கீ, கீ இரண்டடி உயரத்தில் பூச்சாடியொன்று ஹோலின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு இடைவெளியூடு முயல் குட்டி ஒடி மூலையில் ஒதுங்க, மறுபக்க இடைவெளியூடு நாய் ஒடி அதைப் பிடிக்க, இரு பக்கமாகவும் ஒட முடியாது சாடியின் மேலாக எட்ட முனைந்து. முழங்கால் அடிபட தலை கரண்மாக விழுந்தேன்.
இந்த அமர்க்களத்தில் குழந்தை வீறிட்டு குளற ஆரம் பித்தாள். குழப்பம் நடப்பதை உணர்ந்து மனைவி ஒடிவர நாய் வாலை மடக்கிக் கொண்டு வெளியேறியது. நான் முயல் குட்டியைப் பிடித்துக் கொண்டேன். அதைப் பார்த்து பார்த்துக் குழந்தை உரத்து அழுது கொண் டிருந்தாள்.

7 0 தெரியாத பக்கங்கள்
முயல் குட்டியின் சேமம் எப்படியிருக்கிறது எனக் கவனித்தேன். அதன் முன்னங்கால் ஒன்றை நாய் பதம் பார்த்திருந்தது. நாயின் பல் விஷமாயிற்றே! முயல் குட்டி செத்துப் போய் விடுமோ?
எனது அடிபட்ட காலின்வலி உச்சம் தலைவரை ஏறுவது போலிருந்தது. பார்த்தால் முழங்காலில் ஒரு சதைத் துண்டை அப்படியே சீவி எடுத்தது போல, சீமெந்துச் சாடியின் கடின விளிம்பு பதம் பார்த்திருந்தது!
மனைவி மருந்து எடுத்து வந்து தந்தாள்; 'போடுங்கோ' என்று மிகவும் நன்றிப் பெருக்குடன் அவளைப் பார்த்துக் கொண்டு எனது காயத்துக்கு மருந்தைத் தடவினேன்.
“முதல் முயல் குட்டிக்குப் போடுங்கோ பாவம், செத்துப் போயிடும்" நான் இப்படி அதிகம் எதிர்பார்த்து பின்னர் அசடு வழிவது இது முதல் தடவையல்லத்தான். ஒருவாறு சமாளித்து, முயல் குட்டியின் காயத்துக்கும் மருந்தைப் போட்டு அதைப் பாதுகாப்பாகவிட ஒரு இடம் தேடினேன். நாய் வாசலிலேயே நின்றதால், பெட்டி எடுப்பதற்கு மனைவியை திரும்பவும் வீட்டுக்குள் அனுப்ப எனக்குத் துணிவில்லாதிருந்தது. குழந்தையின் தொட்டில் என் கண்களிற் பட்டது. அதுதான் சரியென முயல் குட்டியைத் தொட்டிலில் விட்டு, பரமதிருப்தியுடன் திரும்பினேன்.
அழுது ஒய்ந்து அமைதியாக இருந்த குழந்தை அதைக் கண்டு மீண்டும் குளறத் தொடங்கினாள். உடனே தொட்டிலிருந்து முயல்-குட்டியைத் தூக்க வேண்டிய தாயிற்று - அழுகையை நிறுத்த!
"பாவம் போகவிடுங்கோ. தாய் எவ்வளவு கவலைப் படும்?' என மனைவி சொல்ல நானும் அதற்கு இணங்கினேன். ஆனால் நாயிடமிருந்து அது தப்ப வேண்டுமே?

Page 15
சுதாராஜ். 8 ם
“இரவைக்கு நாயைக் கட்டி வைச்சிட்டு, முயல் குட்டியைத் தோட்டத்துக்கை விட்டால் தாய் வந்து கூட்டிக் கொண்டு போயிடும்” என மனைவி தனது ஆலோசனையை தெரியப்படுத்தினாள். அது சரியாகவே எனக்கும் பட்டது. அதுவரை முயல்குட்டியை ஒரு அறையுள் விட்டுப் பூட்டி விடலாம் எனத் தீர்மானித்திருந்தோம். •
அதன் பிறகுதான், கத்தரிக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த நினைவு திரும்பிவர. ஒடினேன். அங்கு எனது தேவையில்லாமலே தண்ணிர் ஒவ்வொரு பாத்தியாக உடைத்து, உடைத்து ஓடியிருந்தது. முயல்குட்டிக்கு பசியாக இருக்கும் என்ற யோசனையோடு திரும்ப வந்து
'பால் மிச்சம் இருக்கா?’ என மனைவியைக் கேட்டேன். “பசும்பால் கொடுத்தால் முயல்குட்டி வலி வந்து செத்துப் போகும்” என்றான் தம்பி. இவனும் தில்லையின் ஸ்டையிலைத்தான் பிடிக்கிறானோ என ஒரக்கண்ணால் பார்த்தேன்.
"உண்மையாத்தான்” என எனது பார்வைக்குப் பதில் சொன்னான்.
"அப்ப, பிள்ளைக்குக் குடிக்கிற பாலிலை கரைச்சு வைப்பம் ஒண்ணும் செய்யாது' என நானே முடிவெடுத்துக் கொண்டு லக்டோஜனை எடுத்து ஒரு பாத்திரத்தில் கரைத்தேன்.
"தட்டில பால் குடிச்சுப் பழக்கமில்லாமல் எப்படிக் குடிக்கும்?” என மனைவி கேட்க அலட்சியமாக "அது குடிக்கும்” எனச் சொல்லிவிட்டு அறைக்குப் போனேன்.
கதவைச் சற்றுத் திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டிப் பார்த்து, பின்னர் நுழைந்து கதவை மீண்டும் பத்திரமாகப் பூட்டினேன். முயல் குட்டி கட்டிலின் கீழ் ஒரு மூலையில் கடிபட்ட காயத்தை நக்கியவாறு இருந்தது.

9 () தெரியாத பக்கங்கள்
அதைக் கலையப் படுத்தாமல், படுத்து மெதுவாக உடும்பு நகர்வது போல கட்டிலின் கீழ் மெல்ல ஊர்ந்து தட்டுடன் பாலை அதன் முன் வைத்தேன். எனது கை அண்மித்ததும் ஒரு பாய்ச்சல் தாவியது; பால் தட்டு தட்டுப்பட்டு அதன் முகத்திலும் என் முகத்திலும் பால் தெறித்து நிலத்தில் ஒட, தட்டு கவிழ்ந்து போனது!
நான் சற்றும் தாமதியாது எழுந்து துரிதமாக இயங்கினேன். சிந்திய பாலை இரண்டாம் பேருக்குத் தெரியாது துடைத்துத் துப்புரவு செய்தபின் பதட்டப் படாமல் வெளியே வந்தேன். குசினியில் பாத்திரத்தை வைத்துவிட்டு நல்ல பிள்ளையாக நழுவ முயற்சிக்க.
“என்ன, முழுப்பாலையும் குடிச்சிட்டுதோ?’ என மனைவி கேட்டாள்.
ஓம்! ஒம்"
'பாவம் நல்ல பசிபோல
"ஒம் ஓம். பசி
தனது தோல்வியை மறைக்கவோ என்னவோ, "அது
சரி இண்டைக்கு வேலைக்குப் போகவில்லையா?” எனக் கதையைத் திருப்பினாள், மனைவி.
“எவ்வளவு நேரமாச்சு! ஒவ்வொரு நாளும் போற வேலைதானே, நாளைக்குப் போகலாம்"
உண்மையிலேயே இன்று வேலைக்குப் போக எனக்கு விருப்பமிருக்கவில்லை. முயல் குட்டியைப் போக விடுவது எனத் தீர்மானித்தாலும் உள்ளூர அது எனக்குச் சம்மத மில்லாமலிருந்தது. நான் அதை மிகவும் விரும்பினேன். அதன் பயத்தைத் தெளிவிப்பது, குழந்தைக்கு அதன்பால் உள்ள பயத்தைத் தெளிவிப்பது, நாயுடன் சகஜமாகப் பழக வைப்பது, இதையெல்லாம் மெல்ல மெல்ல சாத்தியமாக்க லாம். முயல் குட்டியை எங்கள் வீட்டில் வைத்து வளர்க்க
6) TD.

Page 16
சுதாராஜ் 0 10
வெளியே வந்து மனைவியிடம் சங்கதியைக் கூறினேன்; "முயல்குட்டி இன்னும் போகவில்லை!" இன்னும் போக வில்லை எனும் பொழுது இனிப் போகலாம் எனும் அர்த்தமும் தொங்கி நிற்கிறது. உண்மையில் அப்படியொரு கவலையும் என் மனதில் தொங்கி நின்றது.
“உங்கட நாய் விட்டுவைக்கப் போகுதோ?’ என மனைவி தன் சந்தேகத்தை கிளப்பினாள்.
“இண்டைக்கு முழுக்க நாய் அவிட்டு நிண்டது, ஒண்ணும் செய்யவில்லைத்தானே?"
-நாய் கத்தரித் தோட்டத்துள் போவதில்லை என்பது ஒரு காரணம். அதனுள் அசிங்கம் பண்ணக்கூடுமென ஆரம்ப முதலே போகவிடாமல் தடை செய்ததால், அது அந்தப் பக்கம் போவதில்லை. இதைவிட இன்னொரு விடயம்; நாய் முன்னர் மணிப்புறா, மைனா, புலுனி போன்ற பறவைகள் வந்தாலும் விடாது கலைக்கும். அந்நேரங்களில் நாயை அதட்டித் தடை செய்ததால் பிறகு அது அவைகளைப் பழகி விட்டது. இப்பொழுது மைனாக்களும், மணிப்புறாக்களும் சர்வசாதாரண மாக வந்து முற்றத்தில் தீன் பொறுக்கிச் செல்லுகின்றன. குயில் பூஞ்செடிகளில் வந்திருந்து கூவுகின்றது. கிளிகள் மிகப் பதிய வந்திருந்து பயிற்றங்காய் உடைத்துத் தின்கின்றன. இன்னும் பல சின்னஞ்சிறு குருவிகள் வீட்டுச் சூழலில் மிக இயல்பாகவே வந்து சத்தமிசைக்கின்றன. நாய் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு பேசாமல் படுத்திருக்கும்.
‘நாய் அறிவுள்ள ஜீவன், சொன்னால் கேட்டுப் பழகிவிடும்' என எனது நம்பிக்கையை மனைவியிடம் தெரிவித்தேன்.
குருவிகள் வந்து போவதுபோல, முயல்குட்டியும் வீட்டுத் தோட்டத்தில் நின்று வளராதா என்ற ஏக்கம் என் மனதில் படர ஆரம்பித்தது. a

11 0 தெரியாத பக்கங்கள்
இருண்டு விடிந்தது. காலை சந்தேகத்துடன் தான் தோட்டத்துட் சென்றேன். முயல் குட்டி என்னை ஏமாற்ற வில்லை. கண்டதும் மெல்ல மெல்ல காலடிக்கு வந்தது. இது ஒரளவு எனக்கு அதிசயம் தருவதாகவுமிருந்தது. இவ்வளவு சீக்கிரமாக என்னோடு சேர்ந்துவிடுமென நான் நினைத்திருக்க வில்லை. இருதடவை நாயிடம் கடிபட்டபொழுது காப்பாற்றி யிருக்கிறேன். அந்த நன்றியுணர்வா? ஒருவேளை தாயைப் பிரிந்த தனிமை இந்த முயல்குட்டியையும் வாட்டுதோ? எதுவோ, என்னால் தனக்கு ஒரு தீங்கும் நேராது என அது உணர்ந்து விட்டது எனப் புரிந்தது. இது எனக்குப் பெரும் ஆறுதல் அளித்தது. இனி அதைப்பழக்கி எடுப்பது சுலபம்.
மாலையில் வந்து, விட்ட குறையிலிருந்து புல்லைப் பிடுங்க ஆரம்பிக்க முயல்குட்டி கிட்ட வந்தது. எனது வேலையை விட்டு அதன் நடவடிக்கைகளை கவனித்தேன். புல்லைக் கடிப்பதும், பின்னர் என்னை நிமிர்ந்து பார்த்தவாறு சப்புவதுமாக இருந்தது. எங்காவது ஒளிந்து கிடந்து விட்டு நான் வந்திருக்கும் நேரங்களில் மட்டும் வந்து புல் சாப்பிடுகின்றதோ என்றுகூட எண்ணினேன். அந்த அற்ப சீவனின் மேல் தாளாத இரக்கம் சுரந்தது.
புல் பிடுங்கிய பகுதியைத் திரும்பிப் பார்த்தேன். ஒரே வெளியாக இருந்தது. இப்படியே முழுப் புல்லையும் பிடுங்கி விட்டால் முயல் குட்டிக்கு பாதுகாப்பாக இராதே எனத் தயக்க மேற்பட்டது. புல் இல்லாவிட்டால் போய் விடவும் கூடும். குருவிகளை ஆதரிப்பதற்காக செரி, கொய்யா, கஜ", மா போன்ற பழ மரங்களை நட்டு உண்டாக்கியதுபோல் முயல் குட்டிக்காகப் புல் வளர்ப்பது இன்றியமையாதது எனக் கருதினேன். -
வெறுங்கையோடு வருவதைக் கண்ட மனைவி கேட்டாள்; “ஏன் புல்லுப் பிடுங்கவில்லையா?”
"மாட்டுக்கு. இனிப்புல்லு. வேண்டிப் போடலாம்?

Page 17
சுதாராஜ் 0 - 12
இப்படித்தான் நடக்குமெண்டு நான் முதலே நினைச்ச னான்’ என்றாள் மனைவி. எனினும் அதை ஆதரிப்பது போன்ற அவளது சிரிப்பு என்னை மகிழ்வித்தது.
காலையில் வேலைக்கு போகவேண்டிய அவசரம் இருப்பதால், மாலை வேளைகளில் முயல்குட்டிக்காக என் நேரத்தை ஒதுக்கினேன். போய் வரம்பில் அமர்ந்து விட்டால் அது கிட்ட வரும். ஒரு சில நாட்களில் என்னோடு நெருக்கமாக பழகவும் ஆரம்பித்து விட்டது. எனது கையை விரித்து நிலத்தில் வைக்க உள்ளங்கையில் ஏறி நிற்கும். அடுத்து, அதன் மேலுள்ள குழந்தையின் பயத்தை தெரிவிப்பது எனத் திட்டமிட்டோம். கவனிக்கக் கூடியதாக மனைவி வைத்திருக்க வேண்டும். முயல் குட்டியைத் தூக்கி நெஞ்சோடு அணைப்பேன். அது அப்பிடியே அணைந்து கொள்ளும். அதற்கு முத்தம் கொடுப்பேன். என் தோளில் அதை நிற்க விட்டு கையை அசைத்து ஆடி குழந்தைக்கு விளையாட்டுக் காட்டுவேன். அதைக் கண்டு அவள் சிரித்து குதூகலித்தாள். கையை அசைத்து ஆனந்தமடைந்தாள். சரிப்பட்டு வரும் போலிருந் தது. இன்னும் சில நாட்களில் முயல் குட்டியை வீட்டுக்குள் கூட்டி வரலாம். நாயுடனும் பழகிவிட்டால் எல்லாம் சரி.
அடுத்த ஒரு லீவு நாளில் மத்தியானச் சாப்பாட்டின் பின் சற்று ஓய்வாகச் சாய்ந்திருந்தேன். பக்கத்து வெறும் வளவில் அடிளரிதுமளரியாகச் சத்தம் கேட்டது. ஆட்களின் கூக்குரல்கள்.
எழுந்து சென்று கிணற்று கட்டில் ஏறினின்று மதிலின் மேலாகப் பார்த்தேன். ஐந்தாறு பேர் எதையோ கலைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கைகளில் பெரிய பொல்லுகள் இருந்தன. சில நாய்களும் ஒடித்திரிந்தன. பற்றைக்குள் கற்களை வீசினார்கள்:
‘என்னவோ?’ என்ற சந்தேகத்தில் உரக்க குரல் கொடுத்து அவர்களிடம் கேட்டேன்.
{A sy 9
முயல

13 0 தெரியாத பக்கங்கள்
அப்போது என்னுடன் மனைவியும் கிணற்றுக்கட்டில் நின்றிருந்தாள். அவர்கள் சொன்னதைக் கேட்டு; “பிடிச்சால் விப்பினமோ தெரியாது ஒரு முயல் வேண்டினால் எங்கடை குட்டியோட துணையாய் நிற்கும்” என அபிப்பிராயித்தாள். நான் மீண்டும் உற்சாகமாக குரல் கொடுத்தேன்.
“முயல் பிடிச்சால் விப்பீங்களா?”
"ஓ, pill et54 unit” -பாட்டத்தில் போட்டுக்கிடந்த ஒரு கொழுத்த முயலை அதன் செவிகளில் பிடித்து தூக்கி உயர்த்திக் காட்டினான் துரங்கிச் செத்த மனிதனைப் போல தலை சரிந்து தொங்க கால்கள் சோர்ந்து தூங்க அது தோற்றமளித்தது.
"spCBut!” அதிர்ச்சியில் தடுமாறி கிணற்றுப்பக்கம் சரிந்த மனைவியை இழுத்துப் பிடித்தேன். இருவருமாக தொபுக்கடீர் என மறுபக்கம் விழுந்தோம்.
அந்த நேரமாகப் பார்த்து. எங்கிருந்தோ, தில்லை. என்னைத் தேடி வந்திருந்தான். நாங்கள் விழுந்து கிடப்பதைக் கண்டு, கிட்ட ஒடி வந்தான். அதற்குள் நான் அவசரப்பட்டு எழுந்து மனைவியின் கையைப்பிடித்து தூக்கினேன்.
அவள் அழாக்குறையாகச் சொன்னாள்; "அதுதான் முயல் குட்டியின் தாயோ தெரியாது!”
என்ன விசயம்?’ எனத் தில்லை கேட்க நான் விபரத்தைச் சொன்னேன்.
"(pugi இறைச்சி நல்ல ருசியாயிருக்குமே" என்றான். மீண்டும் "ஐயோ’ என அதிர்ந்தாள் மனைவி. நான் அவளை ஆறுதல் படுத்தினேன். “அவன் சும்மா”
“இவ்வளவு மினக்கெட்டு ஏன் பிடிக்கிறார்கள், அதோடை விளையாடவா?” என எங்களைப் பார்த்து ஓர்

Page 18
சுதாராஜ்" O 14
ஏளனத் தொனியுடன் தில்லை கேட்டான்.
“ஏன் முயலைப் பழக்கினால் அதோடை விளையாட லாம்தானே?' என அவனை மடக்குவது போலச்' சொன்னேன்; எங்கள் வீட்டு முயல் குட்டியின் கதையை
“எங்கை பார்ப்பம்?"
தோட்டத்துக்குள் கூட்டிச் சென்று வரம்பில் அமர்ந்து காட்டினேன். தில்லை சடாரென அதன் செவியைப் பிடித்துத் தூக்கினான்; "கீ கீ கீ”
“விடு, விடு, விடு. அதைவிடு” என நான் கத்தினேன். விட்டதும் தூர ஓடிப்போனது.
தேடிப் பார்த்தேன். மயிர்கணைகள் நடுங்க புற்களின் மறைவில் பதுங்கியிருந்தது.
"பார்த்தது போதும் வா" எனத் தில்லையை வெளியே கூட்டி வந்தேன். அவனது இன்னொரு குணவிசேடம்; ஒட்டினால் இலகுவில் விடான், காயைக் கழட்டி அனுப்பும் போது பொழுது பட்டுவிட்டது.
இரவு எட்டு மணியளவில் சாப்பிடுவதற்கு அமர்ந் தோம்.
தம்பி ஓடிவந்து, “முயல்குட்டி கேற்! முயல்குட்டி! கேற்றடி!' எனத்திக்கித் திணறினான். அதற்குமேல் அவனால் பேச முடியவில்லை. ஆனால் என்னால் ஊகிக்க முடிந்து.
“என்ன முயல்குட்டி போட்டுதா?" என்றவாறு எழுந்து ஒடினோம்.
எங்களை கண்டதும், நாய் கடவாயைச் சூப்பிக் கொண்டு நழுவி ஓடி கேற்றடியில் முயல் குட்டி இறைச்சித் துண்டுகளாகக டந்தது.
(மல்லிகை, 1987

போவது நீதியில்லை
தொழிற்சாலையைக் கவனிக்க ஒரு சுற்று நடந்துவிட்டு அலுவலகத்துக்குள் வந்ததும் வழக்கம்போலவே ஒரு சலிப்புணர்வு தலைகாட்டியது; செய்கின்ற வேலையிலேயே லயிப்பு அற்றுப் போவது போல. என்ன இது? பெருமூச்சொன்றுடன் கதிரையிலமர்ந்து மேசையில் வைக்கப் பட்டிருக்கும் குழந்தைகளின் படத்தில் கண்களைப் பதித்தேன். சலிப்பை அகற்றும் ஒரு முயற்சி இது. பிள்ளைகளின் மழலைகளும், விளையாட்டுகளும் நினைவில் வந்து மனதை குளிர்வித்தன. கடந்த விடுமுறை முடிந்து திரும்பப் பயணமாகி வந்தபோது எனது மகள் விசும்பியதும் கூடவே நினைவில் வந்தது.
"அப்பா! - போக வேணாம் அப்பா" மனதில் ஏறி வருத்தும் வேதனைச் சுமை. கடிதங்களில் அடிக்கடி மனைவி எழுதுவாள்; “எப்பதான் வெளிநாட்டு வேலைக்கு முழுக்குப் போட்டிட்டு வந்து எங்களோடை ஒன்றாய் இருக்கப் போறியள்?”
சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. என்ன செய்வது? வாழ்க்கைக்கு நிச்சயமாகப் பணமும் தேவைப் படுகின்றது! பணத்தைத் தேடி அரபுத் தேசம் வந்தால் வாழ்க்கையின் அர்த்தங்கள் மறைக்கப்படுவது போன்ற வெறுமை!
'Grrr!' மேசைக்கு முன் வந்து என் கவனத்தைத் திருப்பிய வனைப் பார்த்தேன். - ஏதோ பிரச்சனையோடு என்னைக் காண வந்திருக்கிறான். இந்த நேரத்தில் அவன் வந்தது

Page 19
சுதாராஜ் 0, 16
நல்லதாகப் போயிற்று என நினைத்தேன். எனது கவலை களை மறந்து அவனது பிரச்சினைகளில் மூழ்கலாம்! சற்று நேரம் ஊர்ப்பாசையில் கதைப்பது இதமாகவும் இருக்கும்.
“என்ன சுந்தரம்?
அவன் பதில் சொல்லவில்லை. முகம் இருண்டு போயிருந்தது. பொதுவாக அவன் சற்று இருண்ட முகக்காரன்தான். அல்லது. சொந்த நாட்டை விட்டு வேலை நிமித்தம் இங்குவந்து. இயந்திரங்களோடு இயந்திரமாய் எல்லோருடைய முகங்களும் இப்படி மாறிப் போகின்றனவோ? தொழிற்சாலை வேலைகளைக் கவனிக்க நடக்கும் பொழுது அவதானித்திருக்கிறேன். அந்த முகங்களில் மலர்ச்சி இல்லை!
அவர்கள் புன்சிரிப்பது வலிந்து செயற்படுவது போலிருக்கிறது. அவர்கள் வாடிய முகங்களுக்குள் பல கவலைகளும் ஏக்கங்களும் புதைந்து போயிருக்கின்றன.
பணத்தைத் தேட வந்தவர்கள். இயந்திரங்களோடு இரண்டறக் கலந்து; தொழில் செய்து. களைத்து, நேரத்துக்குச் சாப்பிட்டு, தனிக்கட்டிலில் படுத்து. ஒரு செயற்கைத்தனமாக வாழ்ந்தாலும் அவர்கள் முழுமையான மெசின்களாக இல்லாமலிருப்பது தான் பெரிய குறை இந்த மெசின்களுக் கெல்லாம் ஒவ்வொரு இதயங்கள் இருக்கின்றன. இவர்களால் ஒரு ஸ்விச்சை அழுத்தி கவலைகளை மறக்க முடியாது. தன்னை மறந்து சிரிக்க முடியாது. இன்னொரு ஸ்விச்சை அழுத்தி நிம்மதியாய் துரங்க முடியாது. வீடு வாசல்களையும், பிள்ளை குட்டிகளையும் விட்டு "பிழைப்பு” ஒன்றையே நோக்கமாகக் கருதி தூர தேசம் வந்து பிழைக்கிறவர்களின் மனநிலை எப்படியிருக்குமென்பது எனக்குத் தெரியும்.
ஒருவேளை எனது முகங்கூட அப்படித்தான் தோன்றக்
கூடும். இந்நினைவு வந்ததும் அதை அவனுக்குக் காட்டிக் கொள்ள விரும்பாமல் சட்டென முகத்தை மாற்றினேன்.

17 0 தெரியாத பக்கங்கள்
(ஸ்விச்சை அழுத்தி) - பளிச்சென ஒரு சிரிப்பை காட்டிய வாறு. “என்ன சுந்தரம்?” என்றேன்.
அது சிரிப்பு மாதிரி தெரிந்ததோ என்னவோ. அவன் எவ்வித முகப்பிரதிபலிப்பும் இல்லாமல் விறுகட்டை மாதிரி நின்றான். இதனால் எனது முகம் இருண்டு கொண்டு போனது. ஒருவாறு சமாளித்து மீண்டும் . (சோகம் ததும்பக் கேட்டேன்; “என்ன சுந்தரம்.? ஏதாவது பிரச்சனையோ?”
பதில் சொல்ல முயன்றபொழுது அவனது கண்கள் பனித்தன; நிறுத்திக் கொண்டான். நான் பேசவில்லை. அவன் நிதானமடைவதற்கு அவகாசம் கொடுத்தேன். ஏதும் துக்க செய்தியோடு வந்திருப்பானோ என்னவோ? அல்லது. கூட வேலை செய்கிறவர்கள் அறை நண்பர்கள் போன்ற யாருடனாவது தகராறு ஏற்பட்டிருக்கலாம். இருப்பது பிறநாடென்றாலும் வேலை செய்பவர்கள் அநேகமானோர் எங்களுடைய சனங்களாதலால் புடுங்குப்பாட்டுக்கு குறையிருப்பதில்லை.
ஆனால். சுந்தரம் சோலிசுரட்டுக்குப் போகாதவன் - தானுண்டு தன்பாடுண்டு என்றிருப்பான். சுமார் ஏழெட்டு வருடங்களாக என்னுடன் வேலை செய்கிறான். சின்னச் சின்ன விசயங்களையெல்லாம் ஒரு பிரச்சனையாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வருபவனுமில்லை.
என்ன விசயமெண்டு சொன்னாத்தானே எனக்கு விளங்கும். சொல்லு!" என ஆதரவாக அவனை வற்புறுத்தினேன்.
“சேர்!. நான் ஊருக்குப் போக வேணும்!” -இது நான் எதிர்பார்க்காத பதில். “என்ன ஊருக்கோ?” என ஆச்சரியப்பட்டேன்.
அவன் தலை அசைந்து ஆமோதித்தது. நான் மெளனமானேன். அவன் ஊருக்குப் போவதில் அவ்வளவு

Page 20
சுதாராஜ் 0 18
அக்கறை இல்லாதவன். இப்படி திடுதிப்பென்று வந்துபோக வேண்டுமென்று சொல்வது, குழப்பமாயிருந்தது. ஊரிலிருந்து ஏதாவது துக்க செய்திகள் தொலைபேசி அல்லது தந்தி மூலமாக வருவதானாலும், எனக்கு ஊடாகத்தான் அவனுக்கு கிடைத்திருக்கும். அப்படி ஏதும் வரவுமில்லை. இங்கு வேலை செய்பவர்கள் வருடத்துக்கு ஒரு முறை சொந்த நாட்டுக்கு விடுமுறையில் போய் வரலாம். அப்படி போக விரும்பாதவர்கள் விமான பயண ரிக்கற்றுக்குரிய பெறுமதி, மற்றும் விடுமுறைக்குரிய கொடுப்பனவு ஆகியவற்றை பணமாகப் பெற்றுக் கொள்ளும் ஒழுங்கு முறையுண்டு. வீட்டில் அக்கா தங்கைமாரின் மணப் பிரச்சனைகள் போன்ற பணப் பிரச்சினைகளை ஒப்பேற்றுவதற்காகச் சிலர் விடுமுறை யைத் தியாகம் செய்வார்கள். இன்னும் சிலர் "வெளியில் இருக்கையிக்கை எப்படியாவது கூடியளவு உழைச்சுக் கொண்டு ஊரோடை போய்ச் சேர்ந்திடவேணும்' என விடுமுறையைத் தவிர்த்து பணத்தை எடுப்பார்கள். அவர்களில் சுந்தரலிங்கத்தை குறிப்பிடலாம்.
தனிக்கட்டை வயது நாற்பதைக் கடந்துவிட்டாலும் இன்னும் கல்யாணமாகாதவன் மனைவி, பிள்ளை குட்டிகள் என நெருக்கமான குடும்ப ஈடுபாடுகளில் தங்கி இல்லாததும் அவன் விடுமுறையை ஆவலோடு எதிர் பார்த்து ஊருக்கும் போகாமலிருப்பதற்கு ஒரு காரணமா யிருக்கலாம் என எண்ணியிருக்கின்றேன். இப்பொழுது அவனிடத்தில் ஏற்பட்ட மன மாற்றத்துக்கு என்ன காரணமாயிருக்கும்?
ஒருவேளை கல்யாணம் செய்யப்போகிறானோ? ஆன படியாத்தான் அவனுக்கு பேச்சு தடைப்பட்டு ஆனந்தக் கண்ணிர் உகுத்திருக்கிறது! இந்தளவு வயதுக்குப் பிறகு கலியாணம் செய்யப் போகிறவனுக்கு ஆனந்தக் கண்ணிர் வராதா என்ன?

19 0 தெரியாத பக்கங்கள்
கால நேரத்தோடு கல்யாணம் செய்யாமல் இருப்பதும். அதனால் மற்றவர்களின் கேலிக்குரியவனாய் இருப்பதும் அவனைப் பாதிக்கிறதோ என்னவோ. என்னைப் பாதித்து அவன்பால் ஒரு பரிதாப உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அவனது தனிமை வாழ்வு ஒரு குறைபாடாக அல்லது, ஏதோ ஒர் காரணத்துக்காக அவன் ஒரு விரக்தி வாழ்வு வாழ்வது போன்று தோன்றுவதால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவனுக்கு இதுபற்றி "அட்வைஸ்" செய்ய முயன்றிருக்கிறேன். r
அப்பொதெல்லாம் எனது நியாயங்களுக்கு பிடிகொடா மல் அவன் நழுவுவது இப்பொழுது என் மனக்கண்முன் வந்தது.
“சுந்தரம் நெடுக இப்படியே இருந்து என்ன செய்யப் போறாய்?. நேர காலத்தோட கலியாணம் முடிச்சு, பெஞ் சாதி பிள்ளையோட குடும்பமும் குடித்தனமுமாய் இருக்கிற வனைத்தான் சமூகமும் மதிக்கும். அதிலை தான் வாழ்க்கை யின் அர்த்தமும் நிறைவும் இருக்கு”
". இப்ப அவசரப்பட்டு முடிச்சு. என்னத்தை காணப் போறம் சேர்?. கலியாணம் முடிச்சுப் போட்டு இஞ்சை வெளிநாட்டுக்கு வந்தவையெல்லாம் சந்தோசமாய்
இருக்கினமோ?. அதுகள் எங்கையோ. இவையள் எங்கையோ?.” என ஒரு போடுபோட்டு என்னையே தடுமாற்றுவான்.
"இல்லை. சுந்தரம் அது உனக்கு விளங்காது! ஒண்டாக இருக்கிறது மட்டும் தான் குடும்ப வாழ்க்கை இல்லை. கலியாணம் முடிச்சு பிள்ளை குட்டியை பெத்தாத்தான் அது உனக்கு விளங்கும்.” எவ்வளவு சுடக்கூடியதாகச் சொன்னாலும் அவனுக்கு சுடுபடாது.
“சேர்!. என்ரை தாய் தேப்பனும். சகோதரங்களும் தான் எனக்கு முக்கியம். அதுகளுக்காகத்தான் நான் உழைக்

Page 21
சுதாராஜ் 0 20
கிறேன்! முன்பின் தெரியாத ஒருத்தியைக் கலியாணம் முடிச்சுக் கொண்டு வந்து. அவளுக்கு உழைச்சுப்போட வேணுமெண்டு எனக்கென்ன விதியோ?”
“சுந்தரம்1. உன்ர் அப்பரையும் அம்மாவையும் வேறை வேறையா நினைக்க வருமோ? நீ நினைக்கிற மாதிரி முந்தி உன்ரை அப்பரும் நினைச்சிருந்தால் நீ இந்த உலகத்திலேயே வந்து பிறந்திருக்கமாட்டாய்! வாழ்க்கையிலே குடும்பம் கலியாணம் எல்லாம் ஒரு விதிதான்! தவிர்க்கக் கூடாத விதி!”
“ஒவ்வொருத்தனின்ரை வாழ்க்கையும் நேர் சீராய் அமைகிறதுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத் துணை முக்கியம்” - அவனது பாணியில் அவனுக்கு புரிகிறவிதமாக சொல்லிப் பார்ப்பதுண்டு.
'கலியாணம் முடிச்சு. ஒவ்வொருத்தியைக் கொண்டு வந்த பிறகு எத்தனை குடும்பங்கள் பிரிஞ்சு போயிருக் கெண்டு தெரியும் தானே சேர்!”
"நீ ஏன். பிழையான பக்கங்களை மட்டும் பார்க்கிறாய்? . உன்ரை அம்மாவைப் போல. தங்கைச்சியைப் போலை. எத்தனையோ நல்ல பொம்பிளையஸ் உலகத்திலே இருக்கினம் தானே?”
-தாய் சகோதரங்களில் அவனுக்குள்ள அபிமானத்தை சாதகமாகப் பாவித்து அவனை திருப்ப முயல்வேன். ஆனால், தனது பக்க ஞாயம் பலிக்காது என்ற கட்டத்தில் ஒரேயடியாக வெட்டி விடுவான்;
“நான் தான் கலியாணம் முடிக்கிறதில்லையேண்டிருக் கிறேன்! பிறகேன். சேர், வில்லங்கப்படுத்திறியள்?”
-அவனது பிடிவாதத்தை நினைத்து இப்போது சிரித்துக் கொண்டேன். வில்லங்கப்படுத்தியது வீண்போகவில்லை. நான் அடிமேல் அடி. அடித்ததிலும் பலன் இருக்கத்தான்

21 0 தெரியாத பக்கங்கள்
செய்திருக்கிறது! இந்தக் "கட்டைப்” பிரமச்சாரி (உயரமும் அப்படித்தான்) வழிக்கு வருவதற்கு எனது புத்திமதி உதவியிருக்கிறது என்பது ஒருவித பெருமையைத் தந்தது. கடைசியாக இந்த சுந்தரலிங்கம் கலியாணம் முடிக்கப் போகிறான். நல்ல விசயந்தான். வாழ்த்துக்கள். ஒரு சொந்த அண்ணனைப் போல என்னுள் ஒர் உணர்ச்சி பரவசம் தோன்றி. கண்கள் கலங்கியது. ஆவல் மேலிட, “என்ன சுந்தரம்?. கலியாணம் முடிக்கப் போறியோ?” எனக் கேட்டேன்.
இஞ்சி தின்றவனைப் போல அவனது முகம் கோணலாகி நெளிந்து. "சீ எனக்கென்ன விசரே?” என்று கேட்டான்.
என் தலையில் ஆழமான ஒரு போடு போட்ட மாதிரி இருந்தது. அதைப் பொருட்படுத்தாது;
“ஊருக்கு போறதுக்கு இப்ப என்ன அவசரம்?” என எனது ஆனந்தக் கண்ணிரை துடைத்தவாறு கேட்டேன்.
"அண்ணைக்குச் சுகமில்லை”
- வீட்டிலிருந்து கடிதம் வந்திருக்கக் கூடும். இப்படித்தான் கடிதங்கள் கிடைத்ததும். பிள்ளைக்குச் சுகமில்லை. மனைவியுடன் பக்கத்து வீட்டுக்காரர் சண்டை, கடன் தந்தவனின் தொல்லை. என ஏதாவது பிரச்சனை களை வாசித்துவிட்டு. ஒடி வருவார்கள்; கடிதங்கள் ஊரிலிருந்து கிடைக்க ஒரு மாதமாவது செல்கிறது. அதற்கிடையில் அந்தப் பிரச்சனைகள் அங்கே தீர்ந்திருக் கக்கூடும். பந்த பாசங்களை பிரிந்து கண்காணாமல் இருப்பதால் பிரச்சனைகளை அறிந்தவுடன் உணர்ச்சி குமுறலுடன் வருபவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்ப வேண்டியதும் ஒரு கடமை. அடுத்த ஓரிரு நாட்களுக் குள்ளேயே அவர்களுக்கு இன்னொரு கடிதம் கிடைக்கக் கூடும். “பிள்ளைக்கு இப்ப நல்ல சுகம்." எனச் சிரித்துக் கொண்டு வருவார்கள்.

Page 22
சுதாராஜ் 0 22
“என்ன காயிதம் வந்ததோ?” என சுந்தரலிங்கத்திடம் மிக ஆதரவாகக் கேட்டேன்.
“ஓம் சேர்! தங்கைச்சி எழுதினவள். அண்ணைக்கு மூளைக் காய்ச்சலாம்!”
-இதைச் சொன்ன பொழுது மீண்டும் அவன் கண்களில் நீர் ததும்பியது.
நான் மெளனம் அனுஷ்டித்தேன். மூளைக் காய்ச்சல் பொல்லாத வியாதி என்பது தெரியும். ஆளையே முடிக்கக் கூடியது.
சுந்தரலிங்கத்துக்கு எவ்வாறு ஆறுதல் கூறலாம் என யோசித்தேன். சகோதரங்கள் மேல் அவன் கொண்டிருக்கும் பாச உணர்வை நன்கு அறிந்தவனாகையால். இச்செய்தி யால் அவன் எப்படிப் பாதிக்கப்பட்டிருப்பான் என்பதை உணர முடிந்தது; குடும்ப நிலவரங்கள் பற்றி அவ்வப்போது நான் விசாரித்தறிவதுமுண்டு. அவனாகவும் சொல்வான்.
வயதான பெற்றோர், ஆசிரியத் தொழில் பார்க்கும் - மணமாகி இரு குழந்தைகளுக்குத் தந்தையான - அண்ணன் பல்கலைக்கழக பட்டதாரியாகி. பின்பு ஆசிரியத் தொழில் புரியும் தங்கை, ஒரு தம்பி. இதுதான் அவன் குடும்பம். பொருளாதார ரீதியாக மிகவும் கீழ்மட்டத்திலிருந்த குடும்பம், சுந்தரலிங்கம் வெளிநாடு வந்து உழைக்கத் தொடங்கிய பின்னர்தான் தலையெடுக்க ஆரம்பித்தது.
குடியிருந்த சிறிய வீடு திருத்தப்பட்டு வசதியான பெரிய வீடாக மாறுவதற்கும், பல்கலைக்கழகத்தில் தங்கை படிப்பதற்குரிய செலவுகளுக்கும். இன்னும் இது போன்ற நல்ல காரியங்களுக்கு சுந்தரலிங்கத்தின் வருமானம்தான் உதவியிருக்கிறது. அண்ணனின் தலைக்கு மேலிருந்த கடன் சுமைகளை இறக்குவதற்கும், அவன் பெரிதும் உதவியிருக் கிறான்.

23 0 தெரியாத பக்கங்கள்
“அண்ணை பாவம்! நான் தானே உதவி செய்யனும்!” எனக் கரிசனையோடு அவன் சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறேன். வெளிநாட்டுக்கு வந்த நாளிலிருந்து சுந்தரலிங்கத்தின் சம்பளப் பணம்கூட அண்ணனின் பெயருக்கே போகிறது.
"அவர் படிச்சவர். என்ன செய்ய வேணுமெண்டு தெரியும்” தான் எதிர்பார்ப்பது போல அண்ணன் நல்ல மாதிரி பணத்தை முதலீடு செய்கிறார் என்று சொல்லுவான். ஊரில் விலைபோன சில காணித்துண்டுகளை வேண்டி யிருக்கிறார். ஒரு மினிபஸ் வேண்டி ஓடவிட்டிருக்கிறார்.
"அப்ப. கொண்ணருக்கு இனி. வாத்தி உத்தியோகம் தேவையில்லை?” என விளையாட்டாக கேட்டிருக்கிறேன்.
“இல்லை. அந்தாள் நல்ல மனிசன். எல்லா கணக்கு வழக்கும் எனக்கு எழுதும்” என அண்ணனுக்காக பரிந்து கதைப்பான்.
புதிய மோட்டார் சைக்கிளுடன் அண்ணனும், மனைவி பிள்ளைகளும், தோற்றமளிக்கும் ஒரு போட் டோவை அண்மையில்தான் எனக்குக் காட்டியிருக்கிறான்.
இந்த இளம் மனைவி. ஒரு பாவமும் அறியாத புன்சிரிப்புடன் கணவரின் கையைப் பற்றிக்கொண்டு நின்றகோலம் நினைவுக்கு வந்தன.
“பிள்ளையஞக்கு எத்தனை வயசு?”
“மூத்த பெடியனுக்கு ஏழு இரண்டாவது பொம்பிளைப் பிள்ளை. ஐஞ்சு வயது”
படத்தில் பார்த்தபொழுது நல்ல வாட்டசாட்டமாகத் தோன்றிய மனிசனுக்கு மூளைக்காய்ச்சல் என்று சொல்ல. நம்ப முடியவில்லை.
"சாய். அப்படியிராது. நீ கவலைப்படாதை!” என்றேன். அவன் பட்டுக்கொண்டு நின்றான்.

Page 23
சுதாராஜ் 0 24
"டொக்டர்மார் உறுதியாய் சொல்லிப் போட்டினமோ? ஒருவேளை மூளைக்.காய்ச்சலாக இருக்குமென்று.சந்தேகப் பட்டிருப்பினம்.
பரிசோதிச்சுச் சரியாய் முடிவெடுக்க முதல். வீட்டிலை பொம்பிளையளைத் தெரியாதே. பயத்திலை எழுதியிருக் குங்கள்!"
சுந்தரம் பேசாமல் நின்றான்! எனது ஆறுதல் வார்த்தைகள் அவனைச் சமாதானப்படுத்தவில்லை என்று தெரிந்தது.
“எத்தனையாந் திகதி போட்ட கடிதம்?. போட்டு இப்ப மூன்று நாலு கிழமையிருக்கும்தானே? இம்மட்டைக்கு கொண்ணருக்கு சுகமாயிருக்கும் ஒன்றுக்கும் யோசியாதை"
“இல்லை சேர்! நான் ஒருக்கால் போய் பாத்திட்டு வந்தால் ஆறுதலாயிருக்கும்!”
எனது சொல்லை அவன் கேட்காமல் நின்றது சற்று எரிச்சலை ஊட்டியது.
நிர்வாகப் பதவியில் சொந்த நாட்டவன் இருக்கிறான் என்ற தைரியத்தில் சிலவேளைகளில் சிலர் அதிகமான சலுகைகளை எதிர்பார்த்து வருவதுண்டு. அதனால் என்னைச் சங்கடத்துள் ஆழ்த்துவதுமுண்டு. தொழிற்சாலை யில் முக்கியமான நிர்மாண திருத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. திட்டப்படி இன்னும் ஆறு கிழமைக்குள் இந்த வேலைகளை பூர்த்தியாக்க வேண்டும். சுந்தரலிங்கம் ஒரு முதல்தரமான மெக்கானிக், திறமையான தொழில்நுட்ப வல்லுனன். இந்த நேரத்தில் அவனைப் போக விட்டால் ஒருகை முறிந்த மாதிரித்தான்.
“சுந்தரம் அவசரப்படாதை! உனக்கு லீவுக்கு இன்னும் நாலு மாசம் தானே கிடக்கு . அப்ப போகலாம் - இஞ்சை முக்கியமான வேலையளும் கிடக்கு! கடவுள் இருக்கிறார்.

25 தெரியாத பக்கங்கள்
கொண்ணையை ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்!” - எவ்விதமாகச் சொன்னாலும் அவன் அசையாமல் நின்ற விதத்தை பார்த்தால் ஒரு முடிவு தெரியாமல் போகமாட்டான் போலிருந்தது.
“சரி, சரி. போ! யோசிச்சுப் பாத்து நாளைக்குச் சொல்லுறன்”
அவனை அகற்றுவதற்காகத்தான் நம்பிக்கையளிப்பது போல இப்படியொரு அரைகுறையான பதிலைச் சொன்னன். ஆனால் உண்மையில். ஊருக்கு போக அவனை அனுமதிப்பதில்லை என்றே மனதுள் தீர்மானித் திருந்தேன். கடிதத்தில் செய்தியை அறிந்தவுடன் இப்படிக் கலங்கி வந்திருக்கிறான். ஒரு சில நாட்களில் சரியாகி விடுவான் என்று கருதினேன். ஆனால்.
அடுத்த நாட் காலை முதல் வேலையாக எனது அலுவலக வாசலில் சுந்தரலிங்கம் வந்து நின்றான். கண்டதும் எனக்கு சற்று கோபம் மூண்டது.
"இண்டைக்கு. முடிவு சொல்லுறனண்டு சொன்னியள்.'- தயக்கத்துடன் எனது பார்வைக்கு பதிலளித்தான்.
"உன்ரை அலுவலை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க இஞ்சை எனக்கு வேற வேலையில்லையெண்டு நினைச் சியோ?. போ!. போய் கிடக்கிற வேலையைப் பார்!" ஒரு பாய்ச்சல். அவன் எதிர்பாராத பாய்ச்சல்தான். இந்தஉத்தி பலித்தது. என்னைப் பார்த்தபடியே பேச்சு மூச்சின்றி பின்பக்கமாக நகர்ந்து அறையை விட்டு நழுவினான். ஒரு அதிர்ச்சி மருந்து மாதிரி அவனது கலக்கத்தை இது தீர்க்கக்கூடும். ஊருக்குப் போகும் யோசனையையும் அவன் கைவிடக்கூடும். அவனது அண்ணன் சுகமாயிருப்பான் என்றே உண்மை சொல்லியது. அவனுக்கு அடுத்த கடிதம் வரும்வரை ஒருவாறு தாக்காட்டி னால் எல்லாம் சரியாகிவிடும்.

Page 24
சுதாராஜ் 0 26
அன்று வேலைகளை கவனிப்பதற்காக தொழிற் சாலையை சுற்றி வரும்பொழுது சுந்தரத்தைக் காணக்கூடிய பகுதிகளைத் தவிர்த்துக் கொண்டேன்.
காலையில் பாய்ந்த பாய்ச்சலில் ஊரையே மறந் திருப்பான் என எண்ணிக் கொண்டிருக்க மீண்டும் மாலை அறைவாசலில் வந்து நின்றான். என்ன சாட்டுச் சொல்லி அவனை கடத்திவிடலாம். என்று புரியாமல் குழம்பினேன். .
"சுந்தரம். பக்டரியிலை முக்கியமான வேலையள் நடந்து கொண்டிருக்கிறது. உனக்குத் தெரியும். இந்த நேரத்திலை போகவேணுமெண்டு. வந்து. நண்டு கொண்டு நிக்கிறாய். இது நல்லதுக்கில்லை. சில வேளையிலை ஒரே படியாய் அனுப்பிவிடுவார்கள். பிறகு வேலையுமில்லை. ஒண்டுமில்லை. போய் வீட்டிலை இருக்க வேண்டியது தான்!”
அடுத்த உத்தியாக இந்த பயமுறுத்தலைக் கையாண் டேன்.
“சேர் நீங்கள் மனம் வைச்சால் என்னவும் செய்யலாம்” பயமுறுத்தலுக்கும் அவன் பணிந்தது போலத் தெரிய வில்லை. எப்படியாவது ஊருக்கு போவதென்றே தீர்மானித்துவிட்டான் போலிருந்தது.
"நான் என்ன செய்யிறது?. என்ரை நிலமையும் உனக்கு விளங்க வேணும். என்னை நம்பி இந்த இடத்தில வைச்சவங்களுக்கு நான் விசுவாசமாய் இருக்க வேணும். இந்த வேலையை திட்டமிட்டபடி முடிச்சுக் கொடுக்க வேண்டியது. எங்கடை கடமை. இந்த நேரம் நீ எவ்வளவு முக்கியமான ஆள் எண்டு உனக்குத் தெரியும். உன்னை விட்டிட்டு நான் என்ன செய்யிறது?"
-இப்படிச் சொல்லிவிட்டு ஆவலுடன் அவனது முகத்தைப் பார்த்தேன். ஒருவேளை எனக்காகப் பரிந்தாவது

27 0 தெரியாத பக்கங்கள்
மனம் மாறக்கூடும். ஆனால் அவன் மாறாக சோகத்துடன் நின்றான்.
“இந்த நேரத்தில் போய். நீ லீவு கேக்கிறாய் எண்டு சொன்னால். ஒரேயடியாய் அனுப்பு எண்டுதான் சொல்லுவாங்கள். அதுக்கு நீ ரெடியோ?”
அவன் மெளனம் சாதித்தான். இந்த வழியில் ஆளைச் சமாளிக்கலாம் போலிருந்தது. பிறகு மெதுவாகச் சொன்னான்.
“வேறை ஒரு வழியுமில்லையெண்டால் என்ன செய்யிறது சேர்.? எப்படியாவது நான் போகவேணும்"
-ஆக அவன் வேலையைக் கைவிட்டுப் போவதற்கும் ரெடி! அவன் உணர்ச்சிவசப்படுவதைக் கண்கள் காட்டியது.
“சரி!. என்னால முடிஞ்சளவு ஹெட்ஓபிசிலை கதைச்சுப் பார்க்கிறேன். கவலைப்படாமல் போ!' என ஒருவாறு கூறி அவனை அனுப்பி வைத்தேன்.
அதுகூட அவனைச் சமாதானப்படுத்துவதற்காக சொன்ன வார்த்தைகள் தான்! ஆனால் அவனை ஊருக்கு அனுப்புவதற்கு எவ்வித ஒழுங்கும் செய்வது பற்றி நான் சிந்திக்கவேயில்லை என்பதுதான் உண்மை!
அடுத்த நாள் காலை, அலுவலக வாசலில் வந்து நிற்பானோ எனப் பயந்து கொண்டே வர. அவனைக் காண வில்லை! சற்று நிம்மதியாயிருந்தது. அவனது பகுதி இஞ்சினியரை அழைத்து சுந்தரத்தை கொஞ்சம் கவனித்து கொள்ளுமாறும், அட்வைஸ் பண்ணுமாறும் விடயத்தைக் கூறினேன். ஆனால், கடந்த சில நாட்களாக அவன் வேண்டாவெறுப்பாக வேலை செய்வதாக அவரிடமிருந்து பதில் வந்தது. அவனுடைய ஆற்றலும் குறைந்து விட்டது!
மாலை, வேலை முடிந்ததும் சுந்தரம் தேடி வந்தான்.

Page 25
சுதாராஜ் 0 28
அவனைக் கண்டதும் என் தலை சுற்றியது. கையினால் நெற்றியைப் பிடித்துத் தாங்கிக்கொண்டு மேஜையில் முகத்தைக் குனிந்தேன்.
“சேர்!. கரைச்சல் தாறனெண்டு நினையாதேயுங்கோ. உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்!” அழாக் குறையாக அவனது குரல் அனுங்கியதும் நிமிர்ந்து பார்த்தேன்.
“இப்ப என்னை என்ன செய்யச் சொல்லுறாய்?" "கெட் ஓபிசிலை. கதைக்கிறனெண்டு சொன்னியள்!"
"சுந்தரம். கொண்ணனுக்கு ஒண்டுமில்லை. ஏதாவது மோசமெண்டால் இம்மட்டைக்கு தந்தி வந்திருக்கும்! எத்தினை தரம் சொல்லிப் போட்டேன். கவலைப்படாமல் Gլ յո!'
“இல்லை சேர்!. அவருக்கு முந்தியும் ரெண்டு முறை இந்த வருத்தம் வந்தது."
“முந்தி வந்து மாறின வருத்தம் தானே. இந்த முறையும் மாறி விடும். கவலைப்படாதே"
"இந்த முறை கடுமையாம்! ஒரு மாசத்துக்கு மேல ஆசுப் பத்திரியில வைச்சிருக்கினம் டொக்டர்மாருக்கும் நம்பிக்கை யில்லைப் போலை.? எண்டு வீட்டிலை கவலைப்பட்டு எழுதியிருக்கினம்!”
“வீட்டிலை இருக்கறவைக்கு என்ன எழுதிறண்டு தெரியாது! சும்மா தேவையில்லாத விசயங்களை எழுதி. வெளியில தனிய இருக்கிறாக்களின் ர மன சை குழப்பிறதோ?.” எனச் சினந்து விழுந்தேன்.
சுந்தரலிங்கம் அழுவாரைப் போல நின்றான். அவனது. மனநிலையை உணராது கடுமையாக ஏசிவிட்டேனோ என்ற கவலை ஏற்பட்டது. பக்டரி வேலைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அவனது பாசத்துடிப்பிற்கு தலைவணங்கி." போகாவிட்டால் என்ன” என்ற அனுதாபமும் பிறந்தது.

29 0 தெரியாத பக்கங்கள்
“சரி நாளைக்கு ஏஜெண்டோட கதைச்சு ரிக்கற்றுக்கு ஒழுங்கு செய்யிறன். எப்பிடியெண்டாலும் ரெண்டு மூன்று நாள் செல்லும். யோசியாமல் போய் வேலையைச் செய்!”
ஆனால் சொன்னது போலச் செய்யவில்லை! சுந்தரத்தின் வீட்டிலிருந்து அடுத்த கடிதம் வரும்வரை தாமதிக்க வேண்டுமென, பின்னர் மனதுக்குள் எண்ணிக் கொண்டேன். கடிதத்தில் நான் எதிர்பார்க்கும் சுகசெய்தி வந்தால் எல்லாம் சுலபமாக முடியும். எனது பக்டரி வேலைகள் பாதிக்கப்படாது! சுந்தரலிங்கம் பழைய மனுசனாக மாறுவான். அந்த போட்டோவில் பார்த்த. இளம் மனைவியினதும், குழந்தைகளினதும் வாழ்க்கையில் இடி விழாது! ஆனால், அந்த எண்ணங்களிலெல்லாம் மண் போட்டு விட்டு அந்த ஜீவன் போய்ச் சேர்ந்து விடுமோ. என்ற பயமும் உள்ளூர அழுத்தியது!
அடுத்த சில நாட்கள். சுந்தரலிங்கம் வந்தபொழுது. பிளேனில் சீற் கிடைக்கவில்லை. எனக் கதை விட்டுக் கொண்டிருந்தேன். அன்றாடம் வரும் கடிதங்களை உரியவரிடம் சேர்ப்பிக்க முதல் ஒவ்வொன்றாகத் தேடிப் பார்ப்பேன். ஒரு கிழமையளவில் கடந்து வெள்ளிக்கிழமை யும் வந்தது - சுந்தரலிங்கத்துக்கு ஒரு கடிதமும் வரவில்லை. அநேகமாக, சனிக்கிழமை ரிக்கற் கிடைக்கக்கூடும். விரை வில் போகக்கூடியதாக இருக்கும் என சுந்தர லிங்கத்துக்கு ஒரு பொய்யைச் சொல்லியிருந்தேன். சனிக்கிழமை அவன் வரும்பொழுது சொல்வதற்கு என்னிடம் எவ்வித பதிலும் இல்லை.
மிகவும் சோர்வுடன். தாமதித்தே சனிக்கிழமை அலுவலகத்திற்குப் போனேன் - இதனால் காலையிலேயே வாசலில் நிற்கும் சுந்தரலிங்கத்தின் தரிசனத்தை தவிர்க்க லாம். ஆனால் நான் போகும் பொழுது அவன் வாசலி லேயே பழிகிடப்பது தெரிந்தது.

Page 26
சுதாராஜ் 0 30
‘என்ன பதிலைச் சொல்ல?
“நிண்டு கொள். ஏஜெண்டோட கதைச்சுப்போட்டு சொல்லுறன்!” அவனை வெளியே நிறுத்திட்டு உள்ளே போய் கதவைச் சாத்தினேன்.
தபால், அன்றைய டிலிவரி வரும்வரை தாமதித்தேன் - வழக்கத்துக்கு மாறாக நேரத்துடனே கடிதங்கள் வந்தன!
கடிதங்களை எடுத்துப் புரட்டினேன். நான் சற்றும் எதிர்பாராத விதமாக, நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கடிதம் வந்துவிட்டது!
“சுந்தரலிங்கம்!” - கடிதத்தைப்பார்த்து, என்னையறியா மலேயே பரவசப்பட்டுக் கொண்டு நின்றேன். சத்தம் கேட்டு சுந்தரலிங்கம் ஓடிவந்தான்.
“உனக்கு கடிதம் வந்தருக்கு." - கடிதத்தை அவனிடம் கொடுத்தேன். “வாசிச்சுப்போட்டு வந்து விசயத்தை சொல்லு!”
எனக்கு இருப்புக் கொள்ளவில்லை! அவனது வருகையை எதிர்பார்த்தபடி அலுவலகத்துக்குள்ளேயே குறுக்கும் நெடுக்கும் நடக்கத் தொடங்கினேன். கடவுளே நல்ல செய்தி கிடைக்கவேண்டும் -
“GBFrr?'
திரும்பிய பொழுது! சுந்தரலிங்கம் என் முன்னே நின்றான். m
“என்ன சுந்தரம் அண்ணைக்குச். சுகம் தானே?” -ஆவலுடன் கேட்டேன். அவன் கடிதத்தை மன்னிடம் நீட்டினான். அவனது கை நடுங்குவது போலிருந்தது. "இல்லை சேர். நான் போக வேணும்!” அதற்கு மேற்கொண்டு எதையும் விசாரிக்க எனக்கு விருப்பமில்லை. அவனாகவே சொன்னான்.

31 0 தெரியாத பக்கங்கள்
"டொக்கடர் மாரும். நம்பிக்கையில்லையெண்டு சொல்லிப் போட்டினமாம்!”
“எனக்கு உடனே அந்த போட்டோ நினைவில் வர, அதில் அவனது முகத்தை நினைவில் கொண்டு வர முயற்சித்தேன். அதைவிட, அந்தப் பெண்ணின் முகமும் பிள்ளைகளின் முகங்களும் வந்து நிழலாடின. இவர்களை யெல்லாம் தவிக்கவிட்டுப் போகப்போகிறேன். என்பது தெரியவந்து அந்த ஜென்மம் கூட இப்பொழுது கவலைப் பட்டுக்கொண்டு கிடக்கலாம்! சுந்தரலிங்கத்தை அனுதாபத் துடன் பார்த்தேன். இவன் போனால் தம்பி வெளிநாட்டி லிருந்து வந்திருக்கிறான் தான் இறப்பதற்கு முதல் எல்லோரையும் பார்த்துவிட்டுப் போகலாம். என்று அந்த ஜீவன் சந்தோசப்படுமா. அல்லது. தனது சாவு நிச்சயிக் கப்பட்டு எல்லோரும் கண்ணில் வைக்க வந்து குழுமுகின்ற சூழ்நிலையை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்குமா?
“சுந்தரம். டொக்டர் மாரும் கைவிட்டிட்டினம் எண்டால். இப்ப நீ போய் என்ன செய்யப் போறாய்? அப்பிடி ஏதாவது நடந்தால் அறிவிப்பினம்தானே. பிறகு போகலாம்!”
அவனது முதுகை அணைத்தவாறு ஆதரவாகக் கூறினேன். அடைபட்டிருந்த தொண்டையை செருமுவது போல மிகவும் முயற்சித்து அவன் கதை வெளிப்பட்டது.
“கட்டின வீடு. வேண்டின காணியள். மினிபஸ். அனுப்பின காசு எல்லாம் அண்ணையின்ர பேரிலைதான் இருக்கு தற்செயலாய் அண்ணைக்கு ஏதும் நடந்திட்டால் எல்லாம் அண்ணை பெஞ்சாதிக்குத்தான் போய்ச் சேருமாம். உடனை வந்தால். என்ர பேருக்கு மாத்தியிட லாம். எண்டு. தங்கச்சி பிறகும் எழுதியிருக்கிறாள். அதுதான் போக வேணும்.”
(வீரகேசரி 1989)

Page 27
அடைக்கலம்
நான் மனைவியைத் தேடி வீட்டுக்குள் சென்றபோது அவள் குளிப்பை முடித்து, அழகான சேலையில். சுவாமி தரிசித்து, பூச்சூடி, குங்குமப் பொட்டிட்டுப் புனிதமாகத் தோன்றினாள்.
"இந்த வீட்டுக்குக் குடிவந்த நாளிலிருந்து இப்ப தான் என்ர மனம் நிறைஞ்சிருக்கு” என்றேன்.
அவள் நாணம் மேலிட, “எப்பிடி வெளிக்கிட்டாலும் உங்களுக்கு ஏதாவது குறைதானே?. சரி, சரி!”
“இப்பவாது இந்தத் திருவாய் மலர்ந்தது போதும்!” எனத் தனது மகிழ்ச்சியை மனக்குறை போல வெளிப்படுத்தி னாள்.
yyy
"நான் அதைச் சொல்லயில்லை “பின்னை எதை?” என ஏமாற்றத்துடன் பார்த்தாள். “குருவிப்பிள்ளையன் கூடு கட்டு கினம்!”
"உண்மையாவா?' ஆச்சரியம் அவள் முகத்தில் மலர்ந்தது.
நகருக்கு அப்பால் அமைதியான சூழலில் இடமெடுத்து நாங்கள் வீடு கட்டியதற்கே ஒர் உட்காரணம் இருந்தது. இங்கு வந்த நாளிலிருந்து எங்களுக்குள் ஒர் ஆசை - எதிர்பார்ப்பு - இந்த வீட்டில் ஒரு சரணாலயம் போல் பிராணிகள் தானாகவே வந்து கூடுகட்டி வாசம் செய்ய வேண்டும் என்று. அதற்காக வீட்டைச் சூழ, பல பழ மரங்களையும் பூ மரங்களையும் வளர்த்து ஒரு சோலையைப் போல ஆக்கி வைத்திருக்கிறோம். மரங்களில் சிறிய தட்டுக்களை அடித்து வைத்து அவற்றில் சிறு தானியங்களைப் போட்டு விடுவோம். குருவிகள்

33 0 தெரியாத பக்கங்கள்
பழவகைகள் சாப்பிட வரும். பூக்களில் தேன் குடிக்கும். அணில் தானியங்களைப் பொறுக்கிச் செல்லும். ஆனால் ஒன்றுதன்னும் எங்கள் வீட்டில் கூடு கட்டிச் சீவனம் செய்யவில்லை.
மரங்களில் வந்திருந்து ராகமெடுத்துப் பாடுகின்றன. தங்களுக்குள் ஏதோ பேசி மகிழ்கின்றன. ஆனால் இரவில் நித்திரைக்கு எங்கோ பறந்துவிடுகின்றன. இது எங்களுக்கு ஒரு குறையாக இருந்தது. இப்போது அந்தக்குறை தீர்ந்தது போலோர் உணர்வில் என் பின்னே ஓடி வந்தாள் மனைவி. குருவிகளைப் பார்த்துவிட்டு மகள் சொன்னாள்; "அப்பா; உங்கட கொண்டைக்குருவியள்தான் கூடு கட்டு கினம். என்ன?”
அவற்றுக்குக் கொண்டைக்குருவி எனப் பெயரிட்டதே நாங்கள்தான் உண்மையான பெயர் தெரியாது.
ஒரு கையிலடங்கக்கூடிய சைஸ். நீளமான வால். மேற்கு பகுதி பிரவுண் நிறம், நெஞ்சின் கீழ்ப்பகுதி சாதுவான வெண்மை கலந்திருக்கும். வாலின் தொடக்க அடிப்பாகம் சிவப்பு. தலைப்பகுதி கறுப்பு. உச்சியில் எடுப்பான கொண்டை
விடியற்காலையில் முற்றத்தில் பிரம்புக் கதிரையைப் போட்டுச் சற்று நேரம் அமர்வேன். மகளும் வந்து என்னோடு இருப்பாள். அப்போது இந்தக் குருவிகள் வந்து மரக்கிளைகளில், ஒவ்வொரு கொப்பாக மாறி மாறித் தாவி
இருந்து பாட்டுப் பாடும்.
நானும் மெள்ள சீக்கா (விசில்) அடித்து அவற்றைப்
போல ஒலி எழுப்புவேன். மகள் விநோதமாகப் பார்ப்பாள்.
“என்னப்பா குருவியோடை கதைக்கிறீங்களா?”
“ஓமம்மா.”
“என்ன கதைக்கிறீங்கள்?”

Page 28
சுதாராஜ் 0 34
"எப்பிடி சுகமா இருக்கிறீங்களா?. என்ன பெயர். என்று கேக்கிறன்.”
“என்ன பெயராம்?"
“கொண்டைக்குருவி"
குருவிகளுக்கென வேண்டி வைக்கப்பட்டுள்ள 'சாமை, வரகு' போன்ற தானியங்களை மகள் எடுத்து வந்து வீசுவாள். நிலத்தில் தத்தித் தத்தி வந்து அவை தீன் பொறுக்கும்.
சில நாட்களில் குருவிகளைக் காணாவிட்டால், “குருவி யளைக் காணயில்ல. கூப்பிடுங்கோ" என மகள் கேட்பாள். நான் சீக்கா அடிப்பேன்.
சீக்கா சத்தம் கேட்டதும் அவை வந்துவிடும். சீக்கா ஒசைக்கும், சாப்பாட்டுக்கும் இடையில் அவை ஏதோ அர்த்தத்தைப் புரிந்து வைத்திருக்கின்றன.
நாங்கள் தூர நின்று கவனித்தோம். கொண்டைக்குருவி கள் இரண்டும் ஒவ்வொரு செடிகளாகப் பறந்து சென்றன. கூடலான செடிகளுக்கு உள்ளே சென்று சோதித்துப் பார்த்து வந்தன. ஒரு செடியின் இலை சடைத்த நான்கு கிளைகள் காற்றிலாடி மரத்துக்குப் பெலப்பில்லாமல் இருந்தமையால் 'சப்போர்ட்'டாக ஒரு கம்பை நாட்டி நாலு கிளைகளையும் சேர்த்துக் கட்டியிருந்தோம். குருவிகள் கூடு அமைப்பதற்கு அது பொருத்தமான இடமாக அமைந்துவிட்டது போலும். எங்கெங்கோ பறந்து சென்று தும்பு போன்ற மெல்லிய இழைகளைக் கொண்டு வந்தன.
“அட உண்மைதான்!” என்றாள் என் மனைவி. இப் போதுதான் நான் சொன்ன விஷயத்தை நம்புபவள்போல.
மகள் என்னிடம் ஒரு கேள்வியைப் போட்டாள்; “அப்பா! குருவி எப்பிடிக் கூடு கட்டுற இடத்தை டிசைட் பண்ணுவது?"

35 0 தெரியாத பக்கங்கள்
உடனே எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. வழக்கமாகவே நான் அப்படித்தான். அதற்காகத் தெரியாது" என்ற அர்த்தமல்ல; எதையும் சிந்தித்துச் சொல்லுவேன்.
“மறைவான. பாதுகாப்சிதை,இடமாகத் தேடி எடுக்கும்”
'ஏன்?
'அவையஞக்குப் பயம்! தி%ஒத் காப்பாற்ற வேணும்தானே?”
“என்ன பயம்.? குண்டு விழுமென்றா?”
“பெரிய பறவையள் பிடிச்சிடும் தானே?. பிராந்து வல்லூறு.”
அப்ப. பிளேனுக்கு? பிளேன் குண்டு போடும்
தானே?.
பிளேனுக்குப் பயமில்லையோ?”
அவளது கவலை எனக்குப் புரிந்தது. உள்நாட்டு யுத்தம் நடக்கிறது. விமானங்கள் திடுதிப்பென வந்து குண்டுகளை வீசுகின்றன.
“ஓமம்மா! பிளேனுக்கும் பயம்தான்! குண்டுச் சத்தம் அதுக்கு அதிர்ச்சியாயிருக்கும். முட்டை கலங்கும். குஞ்சு பொரியாது”
தென்னந் தும்பைச் சுருட்டி எப்படியோ அதை ஒரு வளையம் போல ஒட்டி அலகிலே தூக்கி வந்தன. தூர ஒரு மரத்தில் இரண்டும் இருந்து, எச்சரிக்கையாக நாலாபுறமும் நோட்டமிட்ட பிறகு ஒன்று தும்புவளையத் தைக் கொண்டு செடியிலுள்ளே போகும். அது மீண்டு வரும்வரை மற்றது எல்லாப் பக்கமும் நோட்டம் பார்த்த வாறே இருக்கும்.

Page 29
சுதாராஜ் 0 36
மூன்று நாட்களாக ஓய்வொழிச்சல் இல்லாது தூரத் தூரப் பறந்து சென்று ஒவ்வொரு தும்பாகக் கொண்டு வந்த வேலை முடிந்திருந்தமையால், மெதுவாகச் சென்று எட்டிப் பார்த்தேன். ஒரு பாதிச்சிரட்டையின் அளவில் மிக நேர்த்தியாகத் தும்பு வளையங்களை அடுக்கி அடுக்கி, மென்படுக்கையாக அந்தக் கூட்டை அமைத்திருந்தன.
“பாப்பம்! அப்பா, நானும் பார்க்க. காட்டுங்கோ!” என மகள் அங்கலாய்த்தாள். அவளைத் தூக்கி, செடியினுள் உயரத்திலிருந்த கூட்டை இலைகளை விலக்கிக் காட்டினேன்.
கொண்டைக்குருவிகள் இரண்டும் ஒன்றையொன்று அணைத்துக் கொண்டு தூர மரக்கிளை யிலிருந்து எங்களையே பார்த்துக் கொண்டிருந்தன.
நாங்கள் அப்பால் விலகினோம். கூடு அமைந்திருக்கும் அந்தச் செடியை வேறு பிராணிகள் அண்மித்தால் மின்னல் வேகத்தில் பறந்துபோய்த் தாக்கி அவற்றைக் கலைக்கும் குருவிகள். எங்களை நிதானமாகப் பார்த்துக்கொண் டிருப்பது ஆச்சரியத்தை அளித்தது. ‘எங்களால் தங்களுக்கு எவ்வித ஆபத்துமில்லை' என அவை நம்புகின்றன போலும்!
இது எங்களுக்கு நல்ல பொழுது போக்காக அமைந்து விடடது என்றே சொல்லலாம்! நாட்டில் யுத்த நடவடிக்கை கள் காரணமாக எனக்கு அலுவலகமும் இல்லை. பிள்ளைக்கு ஸ்கூலும் இல்லை. முற்றத்தில் கதிரையைப் போட்டு அமர்ந்துவிடுவோம்.
"G. S......'
புதிய குரல் கூட்டிலிருந்து கேட்டது. குருவி எத்தனை முட்டைகள் இட்டது, எத்தனை குஞ்சுகள் பொரித்தன போன்ற விவரங்கள் எங்களுக்குத் தெரியாது. அதைப் பார்க்கப்போனால் குருவிகள் குழப்பமடையக்கூடும்.

37 D தெரியாத பக்கங்கள்
மிரட்சியில் வேறு இடத்துக்கு மாறிப் போய்விடக்கூடும் என்பதில் நாங்கள் எச்சரிக்கையாக இருந்தோம்.
“கீ.கீ.கீ.”
"அநேகமாய் ரெண்டோ அல்லது மூன்று குஞ்சுகள் இருக்கும்" என எனது உத்தேசத்தைத் தெரிவித்தேன். ஒரு ஊகம்தான். தற்செயலாக அது ஒரே ஒரு குஞ்சாகவும் இருக்கலாம். பெரிதுபடுத்திச் சொன்னால் கேட்கிறவர்கள் சந்தோஷப்படுவார்கள் என்ற எண்ணம்.
"அப்பா குஞ்சுகளை நாங்கள் வைச்சு வளர்ப்பமா?
“வளரட்டும். இப்ப அதுகள் சின்னக் குஞ்சுகள் தானே!”
ஆனால் அதற்கு 'சான்ஸ்' இல்லாமற் போய்விட்டது. "ஒரு நாள் பகற் பொழுது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந் தேன். இரவு முழுவதும் ஒயாத குண்டுச் சத்தத்தினால் உறங்க முடியவில்லை. முகாமிலிருந்து ஏவப்படும் குண்டு எங்கெல்லாம் விழுந்து யாரையெல்லாம் பலியெடுக்கிறதோ என்ற பதற்றம். ஒரு வேளை அது இந்தப் பக்கமும் வந்து விழுமோ? மகளை கொங்கிறீட் ஃபிளாட்டின் கீழ் படுக்க வைத்துவிட்டு நானும் மனைவியும் விழித்துக் கொண்டிருந் தோம்.
காலையில் சத்தங்கள் ஒய்ந்திருந்தன. பத்திரிகையை வாசித்தவாறு கதிரையில் இருந்து அப்படியே கண்ணயர்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது தான் மனைவியின் குரல் கேட்டது. ጎ
“ஓடி வாங்கோ ஒடி வாங்கோ’ முற்றத்தில் நின்றவாறு மனைவி பதறிக்கொண்டு நின்றாள்.
"இஞ்ச ஒடி வாங்கோ" எழுந்த வேகத்தில் மகளையும் தூக்கிக் கொண்டு மறு பக்கமாகப் பதுங்கு குழியை நோக்கி ஓடினேன். குண்டு

Page 30
சுதாராஜ் 0 38
வீச்சு விமானம் வருவதாக இருக்கலாம். அதுதான் மனைவி
இப்படிப் பதறுகிறாள்.
நான் ஒடுகிற, ஒட்டத்தைப் பார்த்து மனைவி சினங்
கொண்டாள். “ஏன் இப்படிப் பயந்து சாகிறியள்?”
அப்போதுதான் நிதானித்துப் பார்த்தேன். விமானத்தின் இரைச்சல் ஏதும் கேட்கவில்லை. 'மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்.' என்ற கதைதான். அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் கையிலிருந்த மகளைக் கிடத்தி விட்டு. மனைவி அருகில் போனேன்.
“செண்பகம். குருவிக் குஞ்சு.” எனத் தடுமாறியபடி குருவிக் கூட்டுப்பக்கம் கையைக் காட்டினாள். என்னையும் பதற்றம் பிடித்துக் கொள்ளக் கூட்டை நோக்கி ஓடினேன்.
குருவிக்கூடு தும் புதும்பாகச் சின்னாபின்னமாகி யிருந்தது. குஞ்சுகளைக் காணவில்லை. யுத்த நடவடிக்கை யால் காணாமற்போன தங்கள் பிள்ளைகளின் கதி அறியாது பதறும் பெற்றோர்களைப் போல, பெரிய குருவிகளிரண்டும் அவலக் குரலில் கத்தியவாறு சுற்றிச் சுற்றிப் பறந்தன. பறந்து பறந்து தேடின. செண்பகம் கச்சிதமாகத் தனது வேலையை முடித்திருந்தது.
செண்பகம் பொல்லாத பட்சி. சிவந்த, அனல் கக்குவது போன்ற கழுகுக் கண்கள், குத்திக் கிழிக்கும் கூரிய சொண்டு (அலகு சிறிய பாம்புகளையும், விஷப் பூச்சிகளையும் தனது ஆகாரமாக 'லபக் கென விழுங்கக் கூடியது. பொதுவாக இது விஷ ஜந்துகளை ஒழித்துக் கட்டும் பிராணி என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால், ஒன்றும் அறியாத, அப்பாவி யான சிறு ஜீவன்களையும் சாப்பிட்டு ஏப்பம் விடுகிறதா?
நான் சோர்ந்து போனேன். மனைவி அழுவாரைப் போல நின்றாள். “குஞ்சு. செத்துப் போச்சா?” என மகள் கேட்டாள். அவள் கண்களில் நீர் துளிர்த்து வந்தது.

39 0 தெரியாத பக்கங்கள்
'யுத்த நடவடிக்கைகளால் நவம்பர் மாத இறுதிவரை வடபகுதியில் 16,545 வீடுகள் ச்ேதமடைந்திருக்கின்றன! எனச் சற்று முன்னர் வாசித்த பத்திரிகைச் செய்திகூட என்னைப் பெரிதாகப் பாதிக்காதது போலிருந்தது. அழுது குளறும் இந்தக் குருவிகளுக்கு எப்படி ஆறுதல் கூறமுடியும்?
மீண்டும் போய்க் கதிரையில் விழுந்தேன். தூக்கத்தி லாழ்ந்து ஏதோ அர்த்தமில்லாத அரைக் கனவுகளில் மூழ்கி விட்டேன் போலிருக்கிறது.
"ஓடி வாங்கோ! ஒடி வாங்கோ
முற்றத்தில் நின்றவாறு மனைவி திரும்பவும் பதறிக்
கொண்டிருந்தாள்.
"இஞ்ச ஒடி வாங்கோ. அந்தா பாருங்கோ! எவ்வளவு சின்னக் குஞ்சு! குருவிக் குஞ்சு!”
குருவிக் குஞ்சா? திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெரிய "கேற்றின் கதவு இடைவெளியூடு தத்தித் தத்தி வந்தது. அப்போதுதான் நடை பழகும் ஒரு குழந்தையைப் போல நடக்க முடியாது கஷ்டப்படுவது தெரிந்தது. எனினும் இங்கிதம் தெரிந்த ஒரு பெரிய ஆளைப்போல வாசலில் நின்று "கீ கீ’ எனக் கூப்பிட்டது. ‘உள்ளே வரலாமா? எனக் கேட்பது போல முனகியது. காதுக்குச் சரியாக எட்டாமல் முனகும் குரல்.
ஒடிப்போய் அதைத் தூக்குவதற்காகக் கையை நீட்டினேன். அப்படியே நிலத்தோடு படுத்துக் கொண்டது பயத்தில். கையிலெடுத்த போது உடல் நடுங்கிக் கொண் டிருந்தது. அதன் நெஞ்சு துடித்துக் கொண்டிருப்பதைக் கையில் உணர முடிந்தது. அப்போதும் முனகும் குரல் “கீ. 6....'
"அப்பா காட்டுங்கோப்பா பாப்பம்" என் மகள்.

Page 31
சுதாராஜ் 0 40
“எங்க பாப்பம்." என்ன, உங்கட. குருவிக் குஞ்சு தானே?’ என் மனைவி.
கையை மெதுவாக நீக்கிப் பார்த்தோம். அப்போதுதான். இறகுகள் முளைக்கத் தொடங்கியிருந்தன. மீன் செதில் களைப்போல •
“எவ்வளவு சின்னக்குஞ்சு" என மகிழ்ந்தவாறே, மகள் அதன் முதுகில் தன் விரலால் தடவினாள். அது உடலைச் சிலிர்த்தது. "கீ கீ”
பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. இந்த வீட்டுக்கு வந்த புதிதில் ஒரு தென்னை மரத் தடியில் எங்கள் கண்களில் முதலில் பட்டது. கலைக்கப் பட்டிருந்த ஒரு கூடுதான். தாறுமாறாய்ச் சிதறிக் கிடந்த தும்புகளை எல்லலாம் விலக்கி விட்டுப் பார்த்தோம். உள்ளே எதையும் காணோம். ஏதோ ஒரு துஷ்டப் பிராணி கூட்டை சம்ஹாரம் பண்ணியிருக்கிறது என்பது புரிந்தது. பாதிக்கப்பட்டது எதுவோ என்று நாங்கள் விசனித்திருக்கை யில்தான் அந்தச் சத்தம் வந்தது.
"கீச். கீச்.” என்ற மெல்லியதான சத்தம்.
ஒரு செடியின் பின்னால், மூலையில் அரண்டபடி காட்சியளித்தது ஒரு அணில் குஞ்சு. பெரிய அணிலைப் போல முழுமையாக ரோமம் முளைத்திருந்தாலும், தானாகத் தீன் எடுக்கும் வயது வந்திருக்கவில்லை. தாயைப் பிரிந்து தவிக்கிறது என்பதை மிகவும் ஹீனமான "கீச். கீச். சத்தத் தின் மூலம் அது காட்டியது. அதை மெதுவாக எடுத்து என் உள்ளங்கையில் வைத்துக் கொண்டேன். தன்னுடைய அழகிய வாலைச் சுருட்டிக் கொண்டு அடக்கமாகப் படுத்துக் கொண்டது. என் உடல் சூடு அதற்கு இதமாக இருந்திருக்க வேண்டும்.
அந்த அணில் குஞ்சுக்கு முதலில் ஏதாவது ஆகாரம் கொடுக்கவேண்டும் என்று நினைத்தவனாய், மகளை

41 0 தெரியாத பக்கங்கள்
அழைத்து ஃப்ரிஜ்ஜில் இருந்து பால் கொண்டுவரச் சொன் னேன். கிண்ணத்தில் இருந்து பாலை ஒரு இங்க் ஃபில்ல ரால் எடுத்து அந்த அணில் குஞ்சின் வாயில் விட்டேன். அது முகத்தை உதறி பாலைக் குடிக்கமாட்டேன் என்கிறது? என்று நான் விழித்தேன். அப்போது என் மனைவி 'உடம்புச் சூட்டில் தாய்ப்பால் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும்' என்று எடுத்துச் சொல்லிய பிறகுதான் உறைத்தது. அவள் சொன்ன மாதிரியே பாலை இளஞ்சூடாக்கிக் கொடுத்தபோது, அந்த அணில் குஞ்சு குடித்தது!
ஆகாரம் எடுத்துக் கொண்ட அந்த அணில் குஞ்சு, தன்னிச்சையாகப் போகட்டும் என கொண்டு போய் தென்னை மரத்தின் அடியில் விட்டேன். “கீச். கீச்.” என்று மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்ததே தவிர, மரம் ஏறிச் செல்ல அதற்குத் தெரியவில்லை. எங்களை ஒரு ஏக்கத் தோடு பார்த்தது அது. ‘என்னை இப்படியே அநாதையாக விட்டுவிடுவீர்களா?" என்கிற கேள்வி அதன் பார்வையில்.
இந்த அணில் குஞ்சை நாங்கள் வெச்சு வளர்ப்பம்ா? என மகள் ஆசைப்பட்டாள். அதற்கு 'இராமர்' என்ற பெயரையும் சூட்டிவிட்டாள். வெகு சீக்கிரத்தில் 'இராமர் எங்கள் குடும்பத்தில் ஒருவனாகிவிட்டான். தினமும் நாங்கள் சாப்பிடும்போதெல்லாம் அவனும் சுவாதீனமாகப் பக்கத்தில் வந்து அமர்ந்து, அதற்கு வைக்கும் உணவைத் தன் முன்னங்கைகளால் எடுத்துத் தின்னுவான். அந்தக் காட்சியே அலாதி அழகாக இருக்கும். அதைப் பார்த்து மகள் கைதட்டி ஆனந்தப்படுவாள்.
'உடலில் தெம்பும், பலமும் கூடிவிட்ட இராமரைச் சுதந்திரமாக உலவவிடலாம் என முடிவெடுத்தோம். அவனை இந்த முறை தென்னை மரத்தின் அடியில் கொண்டு போய் விட்டபோது, இதற்கு முன்னால் ஏதோ பயிற்சி பெற்றது போல், சரசர வென்று உச்சிக்குச் சென்றுதிரும்பி, எங்களைப் பார்த்து வாலைத் தூக்கித்

Page 32
சுதாராஜ் 0 42
தூக்கி ஆட்டி "கீச். கீச்.” என்றான். இனி என்னைப் பற்றிய பயம் வேண்டாம்" என அவன் எங்களுக்குச் சொல்வது போல் இருந்தது.
இந்த அனுபவம் மகளுக்கும் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.
"அப்பா அணிலைப் போல இதை நாங்கள் வைச்சு G) 1677 frus LJLDfT?”
என்னிடத்திலும் அந்த ஆசை தோன்றியிருந்தாலும், அது எப்படிச் சாத்தியமாகும் என்ற கவலையும் கூடவே
இருந்தது.
எனினும், "ஒமோம்! வளர்க்கலாம்" எனச் சொல்லி வைத்தேன்.
"ஐயோ பாவம் சின்னக்குஞ்சு தீனைக் கொத்திச் சாப் பிடக்கூடத் தெரிஞ்சிருக்காது. செத்துப் போயிடும்" எனத் தனது அச்சத்தைத் தெரிவித்தாள் மனைவி.
"விரலாலை கொண்டை திறந்து. ஊட்டி விடலாம் தானே?
"அதுக்கு என்ன சாப்பிடக் குடுப்பீங்கள்?"
"வரகு, சாமை, பழவகைகள்!”
“நல்லாய்த்தான்! நீங்கள் நினைக்கிறது மாதிரியில்லை! இது குழந்தை! பதப்படுத்தாமல் குடுத்தால் தொண்டை யிலேயே அடைச்சுச் செத்துப் போயிடும்!
அவள் இரண்டாவது முறையாகவும் "செத்துப் போய் விடும்' என்ற வார்த்தையைப் பாவித்ததும் நான் உஷாரடைந்தேன். குருவிக் குஞ்சை வளர்ப்பதானால் சாப்பாடு ஒரு பிரச்சனைதான். குருவிகள், குஞ்சுகளுக்கு என்ன ஊட்டுகின்றன என்று தெரியவில்லை. பூச்சி புழுக்களா அல்லது பழ வகைகளா..? அவற்றைத் தங்கள்

43 0 தெரியாத பக்கங்கள்
வாயிலேயே மென்று பதப்படுத்திக் கொடுப்பதாகவும் இருக்கலாம்.
பூச்சி புழுக்களை என் வாயில் போட்டு மெல்வதாவது. குருவிக்குஞ்சைக் கண்ட சந்தோஷத்தில் நாங்கள் கலகலத்துக் கொண்டிருக்க, கொண்டைக்குருவிகள் பறந்து வந்தன. எங்களைச் சுற்றிப் பறந்து கீச்சிட்டு முறையிட்டன. மரக்கிளையில் போயிருந்து பார்த்தன. சற்று வித்தியாசமான தொனியில் அழுவது போல குரலெழுப்பின. ஆ! இந்தக் குருவிகளெல்லாம் எவ்வளவு அருமையாகத் தங்கள் 'குதூகலத்தையும் மகிழ்ச்சியையும், வேதனைகளையும்,
சோகங்களையும் தெரிவிக்கின்றன.
தாயின் “குரல் கேட்டுக் குஞ்சு கத்தத் தொடங்கியது.
"பாவம் அதுக்குப் பசிக்குது போல. தாயும் வந்திருக்கு. விடுங்கோ போகட்டும்!”
ஒரு மரக்கிளையில் குருவிக் குஞ்சை விட்டோம். தாய்க் குருவி அண்மையில் பறந்துவர இது வாயைப் பிளந்து கொண்டு கத்தியது தாய் தீன் ஊட்ட எத்தனிக்கையில் எங்கிருந்தோ அந்தச் செண்பகம் பறந்து, குண்டு வீசப் போகும் விமானத்தைப் போல் குத்திப் பதிந்து தாக்க வந்தது. குருவிகள் இரண்டும் தொலைவில் பறந்து போயிருந்து அவலக்குரல் எழுப்பின. குஞ்சு "தொப்' வெனக் கீழே விழுந்தது. “கீ.கீ.”
அடைக்கலம் தேடி வந்த குஞ்சைத் திரும்பவும் அந்த யமனின் கையில் கொடுக்கப் பார்த்தோமே என்ற கவலையுடன் ஒடிப்போய்த் தூக்கினோம். நல்ல வேளை யாகக் காயமேதும் பட்டிருக்கவில்லை. குருவிக் குஞ்சைக் கையில் வைத்துக்கொண்டு. இனி என்ன செய்யலாம் என ஆராய்ந்தோம். அப்போது மனைவி ஒரு திட்டத்தைச் சொன்னாள்.

Page 33
சுதாராஜ் 0 44
“கிளிக்கூடு போல. கம்பி வலையால் அடைச்ச கூட்டிலை குஞ்சை விட்டு ஒரு மரத்திலை கட்டி விடலாம். வலையை ஓரிடத்திலை கொஞ்சம் நீக்கி பெரிய ஒட்டை ஆக்கிவிட்டால் தாய்க்குருவி அதற்குள்ளாலை எட்டித் தீன் குடுக்கும். குஞ்சு பறக்கக்கூடியதாய் வளர்ந்தவுடனே திறந்துவிடலாம்.”
இது நல்ல "ஐடியா'வாகப் பட்டது. நான் குதூகலத் துடன் சொன்னேன். "அப்ப எங்க வீட்டிலையும் ஒரு அகதி முகாம்,'
"அகதி முகாமோ. என்னவோ. அடைக்கலம் எண்டு வந்த ஜீவனைப் பாதுகாக்க வேண்டியது எங்கடி பொறுப்பு.”
இதற்குப் பிறகு நாங்கள் துரித கதியிற் செயற்பட்டுக் கூட்டிலே குஞ்சை விட்டு, மரக்கிளையில் கட்டினோம். இப்படிச் செயற்கையான கூட்டில் அடைபட்டிருக்கும் குஞ்சுக்கு ஊட்டுவதற்கு தாய்க்குருவி வருமா என்ற சந்தேகம் இன்னும் எனக்கு இருந்தது.
கொண்டைக்குருவிகள் ஒவ்வொரு மரமாகப் பறந்து பறந்து குஞ்சைப் பெயர் சொல்லி அழைத்தன. குஞ்சு வாயைப் பிளந்து குரல் கொடுத்ததும், ஒரு குருவி சட்டெனப் பறந்து வந்து கூட்டுக்கு அண்மையில் இருந்தது! கூட்டின் ஒவ்வொரு வலைக்கண்களுடும் முகத்தைச் செலுத்திச் செலுத்தி. உள்ளே நுழையப் பிரயத்தனம் செய்தது. அந்தப் பெரிய ஒட்டை. அதனூடு தலை மிக இலகுவாக உட்சென்றதும். இன்னும் கொஞ்சம் முயற்சித்து. ம்..ம். எனச் சிறகை ஒடுக்கி. இழுத்து உள்ளே போய்விட்டது. "அப்பாடா” என மூச்சு வாங்குவதற்குள் அதற்குள் பயம் பிடித்துக் கொண்டது போலும்? “பிள்ளையைச் சிறை மீட்க வந்து தானும் அகப்பட்டுக் கொண்டேனா? - குருவி வெளியேறுவதற்காகச் சிறகடித் துக் கூட்டுக்குள்ளேயே பறந்து பறந்து வலைக்கண்களில்

45 0 தெரியாத பக்கங்கள்
முகத்தைக் குத்திக் குத்தி அமர்க்களப்படுத்திக் கொண்
டிருந்தது.
ஒடிப் போய்க் கதவை திறந்தேன். "அப்பா ! திறக்க வேணாம்! ரெண்டையும் வளர்த்
தால். தாய், குஞ்சுக்கு தீன் குடுக்கும்தானே?”
“இல்லையம்மா! பாவம், அது பயப்படுது போகட்டும்"
கதவைத் திறந்ததும், எய்த அம்புபோல வெளியே பறந்து போனது.
ஆனால் தாய்ப்பாசம் யாரை விட்டது? சிறு பூச்சி புழுக்களைக் கொத்திக் கொண்டு திரும்பவும் கூட்டுக்கு அண்மையாக வந்திருந்து சோகமாக அழத் தொடங்கியது. மற்றது பக்கத்தில் வந்து வேறு தொனியில் பேசியது.
“கீக் கீக் பசியில் அழும் குழந்தைக்கு ஒரு புதிய குரலில் ஆறுதல் சொன்னவாறு மெள்ள மெள்ள ஒவ்வொரு கிளையாக முன்னேறி. எதற்கும் துணிந்தது போல் சட்டெனக் கூட்டுக்கு அண்மையில் பறந்து சென்று வலைக் கண்களுடு அந்தப் பெரிய துளையைத் தேடி "ம்.ம்." ஒரே மூச்சில் உள்ளே போய்விட்டது.
நாங்கள் ஆவலுடன் பார்த்தோம். “சரி சரி குஞ்சுக்குத் தீன் குடுக்குது” என துள்ளிக் குதித்து மகிழ்ந்தாள் மகள். குஞ்சுக்குத் தீனுரட்டிய பின்தான் குருவிக்கு அடுத்த பிரச்னை தெரிந்தது. இனி எப்படி வெளியே போவது? சிறகடித்து அதே எத்தனிப்பு: வலைக்கண்களில் முகத்தைக் குத்திக் குத்தி.
கதவைத் திறந்துவிட்ட போது கவனித்தேன்; பாவம், தாய்க்குருவியின் அலகுக்கு மேலாக, வலைக் கம்பியில் உரசிய சிதைவில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் அன்று முழுவதும் குருவி பலமுறை வந்து. தீன்கொடுத்து, வலைக் கண்களில் குத்திக் குத்தி

Page 34
சுதாராஜ் 0 46
வெளியே வரத் தவித்து. நாங்கள் திறந்துவிட பறந்து போனது.
இவ்வளவு தெரிந்த குருவிக்குப் பொறுமையாக இருக்கத் தெரியவில்லையே. வேலையில்லாத ஒருவன். வந்து திறந்து விடுவான் என்று புரியவில்லையேயென்ற கவலை எங்களுக்கு மாலைக்குள் அதன் முகத்துக் காயம் ஒரு புண்ணாக மோசமடைந்திருந்தது. எனினும் குருவி அதை லட்சியம் செய்யவில்லை.
அதற்குத் தன் தாய்ப்பாசம் பெரியதாக இருக்கலாம். அதனால் தன் முகப்புண்ணைப் பெரிதுபடுத்தாமல் வந்து போகலாம். ஆனால் இதை எங்களால் அலட்சியம் செய்ய முடியவில்லை. மறுநாள் மிருக வைத்தியரிடம் கேட்டு அதன் புண் ஆறக்கூடியதாக மருந்து வேண்டி வந்தோம்: அடுத்த முறை குருவி கூட்டுக்குள் வந்ததும் திறந்து விடுவதற்கு முன், பிடித்து அதன் புண்ணில் மருந்தைத் தடவிப் பறக்கவிட்டோம்.
“ஒட்டை பெரிசாய் இருக்கிறப்படியால்தான் குருவி கூட்டுக்குள்ளை போகுது! அதைக் கொஞ்சம் சிறுசாக்கி விடலாம். தலை மட்டும் உள்ளே நீட்டக் கூடியதாக”
தனது முன்னைய ஐடியா'வுக்கு ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தாள் மனைவி. எனினும் இதை உடனடியாக ஏற்றுக் கொள்ள எனக்கு இஷ்டமில்லை.
“அதெப்படி..? குஞ்சு அருகில் வந்து தீன் வாங்க வேண்டும்!”
"நீங்கள் அப்படிச் செய்து பாருங்கோவன்! ரெண்டு மூன்று முறைக்குப் பிறகு குஞ்சு தானாகவே பழகியிடும்" அவள் சொன்னது சிதான். இத்திட்டம் வெற்றி யளித்தது. கூண்டுக்கு உள்ளே போக முடியாமல் தலையை மட்டும் உள்ளே விட்டு க" வின் அழைப்பைக் கேட்டதும்

47 0 தெரியாத பக்கங்கள்
குஞ்சு முதலில் தயங்கி பிறகு பசி உந்தலில் தட்டுத் தடுமாறி தாயின் அருகில் வந்து தீன் வாங்கியது.
இப்போது எவ்விதக் கஷ்டமுமில்லாமல் அந்தச் சிறிய ஒட்டை வழியே தாய் தலையைவிட்டு தீனுரட்ட, குஞ்சு சாப்பிட்டு வளர்ந்து கொண்டிருந்தது. நாளும் பொழுதும் அதன் சிறகுகள் வளர்ச்சியடைந்து அழகான தோற்ற மெடுத்தன. ஓரிருமுறை அதைத் திறந்துவிட்டுப் பார்த்தோம். “பறக்குமா?
அதற்குச் சரியாகப் பறக்கத் தெரியவில்லை. சிறகடித்து மெள்ள உயரம் பறந்து கீழே விழும். திரும்பவும் கூட்டில் பிடித்துவிடுவோம். அது நல்ல வளர்ச்சியடையும் வரை!
அதை இப்போது குஞ்சு என்று சொல்லமுடியாது. அதனால் இப்போது பறக்க முடியும். 'திறந்து விடலாம்' எனத் தீர்மானித்தபோது மகள் கவலைப்பட்டாள்.
“வேண்டாமப்பா! அதை வைச்சு வளர்ப்பம்!
“அடைச்சு வைக்கக் கூடாது! பாவம் தானே.? திறந்து விட்டாலும் அது இஞ்ச நிண்டு வளருமம்மா” - மகளை ஆதரவாக அணைத்துக் கொண்டேன். கதவைத் திறந்து விட்டு அதையே பார்த்துக் கொண்டு நின்றோம்.
கூட்டிலிருந்தபடியே எங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்தது. சிறகைச் சிலிர்த்து உதறியது. மெள்ளத் தாவி கூட்டின் வாசலில் இருந்தது. சட்டெனப் பறந்து மரக்கிளைக்குப் போனது. அலகினால் ஒவ்வோர் இறகுகளாகக் கோதிவிட்டுச் சரிபார்த்தது. அங்கிருந்தபடியே எங்களைப் பார்த்து. கீ கீ” நன்றி! நன்றி!
அப்போது
"ச்ே. கீச்1 சத்தம் வந்தது. திரும்பிப் பார்த்தால் இராமர்! பரபரவென பாதி மரம் இறங்கி வந்து வாலைத் தூக்கித் தூக்கி எங்களைப் பார்த்துக் கத்தியது!

Page 35
சுதாராஜ் 0 48
கொண்டைக் குருவிக் குஞ்சை சுதந்திரமாகப் பறக்க விட்டதற்கு தன்னுடைய "கீச். கீச்! சத்தம் மூலம் எங்களுக்கு நன்றி தெரிவிப்பதுபோல் தோன்றியது!
மீண்டும் உற்சகமாக சரசரவென்று மரத்தின் உச்சிக்குப் போய் திரும்பிப் பார்த்தது.
இதற்குள் கொண்டைக் குருவிகள் இரண்டும் எங்கிருந்தோ பறந்து வந்து குஞ்சின் பக்கத்திலிருந்தன. குதுரகலத்தில் மகிழ்ந்து கத்தியவாறே குஞ்சுடன் சேர்ந்து வேறொரு மரத்துக்குப் பறந்தன.
ஒருவிதமான திருப்தியுணர்வும் ஆனந்த விம்மலும் என் நெஞ்சை நிறைக்க, பக்கத்தில் நின்ற மனைவியையும் மகளையும் திரும்பிப் பார்த்தேன். என்னடா இது! உத்யோகத்துக்காக நான் எந்தப் பிரதேசமெல்லாம் போய் வந்தாலும் சிணுங்காத என் மனைவி கண்கள் கலங்கிக் கொண்டு நின்றாள். மகள் வைத்த கண் வாங்காது குருவிகளைப் பார்த்தவாறே கையசைத்துக் கொண்டிருந்தாள்.
“Gou! 6Øou!”
“Gr ፰!”
(ஆனந்தவிகடன் 1991)

மெய்ப்பொருள்
லிஃப்ட் இல்லாத மாடியின் படிகளில் ஏறி மூன்றாவது தட்டுக்கு வந்து கோலிங் பெல்லை ஒலித்த போது வழக்கம் போல அப்பாதான் கதவைத் திறந்தார். இதை அவளுக்காக மனமுவந்து செய்யும் ஒரு உதவிபோல, இதற்காகவே காத்துக் கொண்டிருப்பவர் போல பெல் ஒலித்த மாத்திரத்தி லேயே கதவைத் திறந்து கண்களால் இரக்காமாகச் சிரித்துக் கொண்டு தோன்றுவார். அவருக்கு, இதயத்திலிருந்து சுரந்து வரும் இந்த இரக்கத்தைத் தவிர வேறு எதையும் தரமுடிய வில்லை. குடும்பத்தில் மூத்தவளாகப் பிறந்த இந்தப் பெண், நாற்பது வயதாகியும் இன்னும் ஒருத்தனுக்கு வாழ்க்கைப் படாமல் தன் குடும்பத்துக்காக உழைத்துப் போடுகிறாளே என அப்பா இரக்கப்படுவது போலிருக்கும்.
அலுவலகத்தில் நாள் முழுவதும் காய்ந்த அலுப்பு பஸ் நெரிசல்களில் நசுங்கிய மனம், மாடிப்படிகளில் ஏறிவந்த களைப்பு எல்லாம் அப்பாவின் முகத்திலுள்ள கருணையைக் கண்டதும் பறந்து விடும். அவர் முகதரிசனத்தைப் பெற்றுக் கொண்டே வீட்டினுள் நுழையும்போது ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.
உள்ளே வந்ததும், கதவை ஒசைப்படாது சாத்திவிட்டு வந்து அப்பா கதிரையில் அமர்ந்துகொள்வார். நாள் முழுவதும் அந்தக் கதிரையே அவருக்குத் தஞ்சம். அதனால்தான் அதற்கு அப்பாவின் கதிரை’ எனப் பெயர் வந்தது. வெளிக்கேட்காது அடங்கிப் போகும் குரலில் அடிக்கடி செருமுவார். யாருடனும் பேசுவது குறைவு. அப்படி இருந்தவாறே எத்தனை விடயங்களுக்காகக் கவலைப் படுகிறாரோ - வரிசையாகப் பெற்றெடுத்த ஐந்து பெண்களுக்கும் உரிய காலத்தில் கல்யாணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற கவலையில் தோய்ந்து, அவரது

Page 36
சுதாராஜ் 0 50
முகம் எப்போதும் மன்னிப்பு கோருவது போன்றதொரு பாவனையில் மாறிப்போய் விட்டது.
அறையுட் சென்று மேஜையிற் கைப்பையை போட்டாள். செருப்பை ஒரு பக்கம் கழற்றிவிட்டு கட்டிலில் நீட்டி நிமிர்ந்து படுத்தாள் அது டபிள்பெட் இரவில் அந்த கட்டிலை தங்கைகளில் ஒருத்தி சேர்ந்து பகிர்ந்து கொள்வாள்.
அம்பிகா பக்கத்தில் படுத்தாளென்றால் தொல்லை தான். உறக்கம் வரும்வரை அலுப்புக் கொடுப்பாள். வயதுக் குரிய பக்குவம் இல்லாதவள் போல சிறு பிள்ளை மாதிரி விளையாடும் பெண். இந்த வயதிலும் விளையாட்டும், வேடிக்கையும் இவளுக்கு வேண்டியிருக்கிறது. இப்பூவுலகில் முப்பத்தைந்து வருடங்களைக் கழித்த பெருமை இவளுக்கு உண்டு. அப்பாவுக்கு மூன்றாவது செல்வம்.
அம்பிகாவைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும் - இவளது நெஞ்சைக் கவலைகளே நெருடுவதில்லையா? படுத்திருக்கும்போது கொஞ்சுவாள். "ஆருக்கோ கிடைக்க வேண்டிய சான்ஸ் எல்லாம் எனக்குக் கிடைக்குது” என்று கூறிக்கொண்டே அவளை கட்டியணைத்துப் படுப்பாள்.
"அக்கா தான் எங்களுக்கு அம்மா” என அம்பிகா அடிக்கடி சொல்வாள். அம்பிகா சொல்வதைக் கேட்கும் போது சந்தோசமாகவும் இருக்கும். வேதனையாகவும் இருக்கும். உரிய காலத்தில் மணமுடித்திருந்தால் அவள் இப்போது மூன்று நான்கு குழந்தைகளுக்கு தாயாக இருக்கலாம். ஒரு நிஜமான அம்மா ஆகியிருப்பாள். ஆசைகளுக்கு ஒர் எல்லையில்லைப் போலிருக்கிறது. கல்யாணத்துக்கே ஒரு வழியைக் காணவில்லை. அதற்குள் நான்கு குழந்தைகள் என்றகணக்கு வேறு. அந்தக் கணக்கை நினைத்து மனதுக்குள் சிரித்தாள். அதுதான் அவளுக்கு மிகவும் சாத்தியமான காரியம், மனதுக்குள் சிரிக்க முடியும். மனதுக்குள் உரத்து அழமுடியும். மனதுக்குள் நினைத்து

51 0 தெரியாத பக்கங்கள்
துடிக்க முடியும். பொங்கிப் பொங்கிக் குமுற முடியும் - வெளியே வேறு விதமாகக் கீறிய ஒரு முகத்தைக் காட்டியபடி!
எட்டா மற்போன இல்லற வாழ்வு நினைவில் வருகையில் ஒரு வேதனையின் கொந்தளிப்பு மனதில் மோதுகிறது. அடுத்த கணமே மனம் சமாதானமும் அடைகிறது. அவள் மணமுடித்துக் கொண்டு போயிருந் தால். வாழ்வு இவர்களிலிருந்து பிரிந்து "தானும் தனது குடும்பமும்” என்றாகிப் போயிருக்கும். பிறகு, இந்தப் பெண்களை யார் ஆதரிப்பார்கள்? அம்பிகா, அவளை அம்மா என்று சொல்கிறாள். குடும்பத்தில் மூத்தவள் என்பதற்காக அப்படியொரு ஸ்தானத்தைத் தருகிறர்ளா அல்லது துணையற்ற தங்கள் வாழ்வில் அக்காதான் ஆதரவாகவும், துணையாகவும் இருக்க முடியும் என நம்புகிறாளா? கடவுளே இந்தப் பெண் ஜென் மங்களுக் கென ஒவ்வொருத்தன் வந்து வாய்க்கமாட்டானா?
தனக்கென இனி ஒருவன் வரமாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். இந்த வாடிப்போன முகமும், ஒட்டிய கன்னங்களும், குழிவிழுந்த கண்களும் யாருக்குத் தேவை?
'அக்கா கொஃப்பி"
திரும்பியபோது கையில் கோப்பியுடன் சாந்தா - அவளுக்கு நேர் இளையவள். பெண் என்ற பெயருக்கு இலக்கணமாக இந்த சிலையை செதுக்கிய சிற்பி ஒரு தவறு தலையும் செய்துவிட்டான். இதன் முகத்தில் சோகத்தை மட்டுமே வடித்து வைத்துவிட்டான். இது சிரிக்காதா என்று மீண்டும். மீண்டும் இதன் முகத்தைப் பார்க்கத் தோன்றும் இது சிரிக்காமலே குசினிக்குப் போய்விடும். அலுவலகத் தையும் குசினியையும் தவிர வேறு எதையுமே இது கண்டதில்லை. ஒய்வு ஒழிச்சல் இதுக்குத் தேவையில்லை இதன் முகத்தில் வார்க்கப்பட்டுள்ள சோகத்தை துடைத்துச் செப்பணிட ஒரு கை வந்து சேராதா?

Page 37
சுதாராஜ் 0 52
“வைச்சிட்டுப் போம்மா!. பிறகு குடிக்கிறேன்”
“கொஃப்பி ஆறப்போகுது கெதியிலை எழும்பிக் குடியுங்கோ’ மேஜையில் கோப்பியை வைத்துவிட்டு வெளியேறினாள் சாந்தா.
முகத்தை அலசிக் கொண்டு வரலாம் என எழுந்தாள். தண்ணிர் பட்டால் கொஞ்சம் உற்சாகம் ஏற்ப்படும். கண்ணாடியின் முன்னே சென்று தலையைக் கோதி விட்டாள். தலைமுடி நரைப்பதற்கு இது ஒரு வயதல்லத் தான் - ஆனால் கவலைகளும் பிரச்சனைகளும் கூடினால் முடி நரைக்குமாம்!
பிரச்சனைகள் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து வருகின்றன. இருபத்தொரு வயதிலேயே குடும்ப பாரத்தை பகிர்ந்து சுமப்பதற்காக உத்தியோகம் பார்க்க கொழும்புக்கு வந்தாள். உத்தியோகம் பிரச்சனைக்குத் தீர்வா அல்லது ஒரு பிரச்சனையா என்று இப்போது புரியவில்லை. உத்தியோகம் "பணத்தைத்' தருகிறது! எல்லாப் பிரச்சனை களின் அடிப்படையே அதுதானே! அப்பாவிடம் 'அது' இருந்திருந்தால் அவளை சம்பாதிக்க அனுப்பியிருக்க மாட்டார். நேர காலத்துக்கு ஒருத்தனின் கையில் பிடித்துக் கொடுத்திருப்பார். பணப்பிரச்சனையைத் தீர்க்கலாமென நுழைந்த உத்தியோகம் இப்போது பிரச்சனையாகத் தெரிகிறது. அதிகாலையிலேயே எழுவது, அசதி தீர முன்னரே அவதி அவதியாக சமைப்பது, பைப்பில் தண்ணிர் நின்று போக முதல் அல்லது அரை குறைத் தண்ணிரில் குளிப்பது, அந்த நேர பற்றாக் குறையில் உடுதுணிகள் பாத்திர பண்டங்கள் கழுவ வேண்டியது. மதியத்துக்கான சாப்பாட்டைப் பார்சலில் எடுத்துக் கொண்டு, எதையாவது வாயிற்போட்டு விழுங்கியது பாதி விழுங்காது பாதியாக மெசினைப் போல ஒடவேண்டும். பஸ்சிற்குள் முதுகை முறித்துக்கொண்டு நிற்க வேண்டும். அலுவலகத்தில் கண்டவனுக்கெல்லாம் புன்சிரிப்பில்

53 0 தெரியாத பக்கங்கள்
முகஸ்துதிக்க வேண்டும். தனக்கு சம்பந்தமேயற்ற பைஃல்களையெல்லாம் தலையில் போட்டுக் கிழிக்க வேண்டும். இவையெல்லாம் பணத்துக்காகத்தானே? மாலையில் வந்தால் திரும்பவும் சமையலும் துவையலும் காத்துக் கிடக்கிறது. சீ. இவைகளெல்லாம் என்ன சுமை:
இவை ஏன் தனக்கு சுமையாகப்படுகிறது என யோசித்திருக்கிறாள். அன்றாட கடமைகள், வாழ்வின் தேவைகள் என்பதை அறிவாள்.
உத்தியோகம் மனதின் ஒரு பாகத்தை நினைவு செய்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை- மற்றவர்களில் தங்கி யிருக்காமல் தனது தேவைகளுக்குத் தானே சம்பாதிப்பது.
ஆனால் பூஞ்செடிகளைப்போலவும் புள்ளினங்களைப் போலவும் அவளையும் இயற்கைதான் இவ்வுலகுக்கு தந்தது. பூப்பதையும் காய்ப்பதையும் இயற்கை அவளுக்குமாகத்தான் அளித்திருக்கிறது. கொஞ்சிக் குலவும், பறக்கும் இயல்புகளை இயற்கை அவளுக்கும் சேர்த்துத்தான் கொடுத்திருக்கிறது! நெஞ்சுக்குள் அனன்று அனன்று எரியும் இந்த அக்கினியை எப்படி அமுக்கி வைத்திருப்பது? இப்படி எரியும் ஜுவாலையை நெஞ்சுக்குள் சுமந்துகொண்டு வேறு கடமை களில் ஈடுபடுவது எப்படி?
அவளுக்குத் தெரியும். தங்கைகளும் சலித்துப் போனார்கள் என்று! அவர்களுக்கும் உத்தியோகம் தேவைப்படவில்லை. கல்யாணம் தேவைப்படுகிறது என்று எந்தப் பெண்தான் வாய் திறந்து சொல்வாள்? ... ',
அப்பாவுக்கு அவர்களை கரை சேர்த்திடவும் முடியவில்லை; ஒரு கரை காணும்வரை படிக்க வைக்கவும் முடியவில்லை. அப்பாவின் செல்வாக்கு அவர்களுக்கு ஏதோ சிறு சிறு உத்தியோகம் வாங்கிக் கொடுக்கத்தான் போதுமானதாக இருந்தது. அப்பா ஆரம்ப காலத்திலிருந்தே கொழும்பு உத்தியோககாரனாகத்தான் இருந்தார். ஒரு

Page 38
சுதாராஜ் 0 54
கிளறிக்கல் சேவன்ற் ஆக இருந்து கொண்டு, கொழும்பில் தனது சீவியபாட்டையும் பார்த்து. ஊரிலே குடும்ப செலவினங்களுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த இக்கட்டிலும் ஏன் ஐந்து பெண்களைப் பெற்றெடுத்தார் என்ற இரகசியம் அவருக்குத்தான் தெரியும் அல்லது அந்த இரகசியம் அவருக்குத் தெரியாதோ என்னவோ!
பாவம் அப்பா அவர்களுக்காக உழைத்துழைத்தே உருக்குலைந்து போனார். அரச சேவையிலிருந்து ஒய்வெடுத்த பின்னரும் தனியார் கொம்பனிகளில் அறுபத் தேழு வயது வரை வேலை செய்தவர். பிறகு, யாருக்கும் அவரைத் தேவைப்படாமற் போயிற்று பிள்ளைகளுக்குத் தனது துணை தேவைப்படுமென கொழும்பிலேயே தங்கிவிட்டார்.
வெளியே, முன்கூடத்தில் அப்பா செருமிக்கொண்டே படுத்திருப்பதைப் பார்த்தால், தங்களுக்கு காவலுக்காகப் படுத்திருப்பது போலிருக்கு. அந்தச் செருமல், இரவில் மட்டும் - தனது பிரசன்னத்தைத் தெரியப்படுத்துவது போல சற்று உரத்து. ஆனால் யாருடைய உறக்கத்தையும் இடையூறு செய்யாத மாதிரிக் கேட்கும். அப்பா இரவில் உறங்குவதில்லைப் போலிருக்கிறது. என்ன, இந்தப் பெண்களை யாராவது வந்து இழுத்துக்கொண்டு போய் விடுவார்கள் என்றா உறக்கம் கெடுகிறார்? அப்படி இழுத்துக் கொண்டு போனாற்தான் என்ன?
அம்பிகா ஒரு தடவை பச்சைப்படியே சொன்னாள். “பெட்டையஞக்கு வயது வந்துவிட்டால் துணைக்கு மாப்பிளையைத் தேடிக் குடுக்கிறதை விட்டிட்டு. அப்பா இன்னும் எங்களுக்குக் காவல் இருக்கிறார்.”
அம்பிகா இப்படி அப்பாவைக் குறை சொல்வது போலக் கதைத்தது உறக்கங்கள் தடைப்பட்டுப்போன ஒர் இரவிற் தான் - கட்டிலிற் படுத்திருந்தவாறே அலுவலக

55 0 தெரியாத பக்கங்கள்
கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தாள். சிலர் திருமணம் முடித்த கதைகளும் வந்தன. இவள் மேல் ஒரு கண் வைத்திருந்த நேசன் பின்னர் இன்னொருத்தியை முடித்துக் கொண்டான். அம்பிகாவை அது பெரிய இழுப்பாக வருத்தியது. தனக்கு மூத்த அக்காமார் இருக்கும்போது தான் எப்படிச் செய்வது என்று அவனிடம் கேட்டாளாம்!
“மடைச்சி! என்னட்டை ஒரு வார்த்தை சொல்லியிருக் கலாமே?. இப்பிடி ஓராளை ஒராள் பார்த்துக் கொண்டிருந் தால். எல்லோரும் கிழவியாய்ப் போறிங்கள்! வலிய வந்ததை வீணாய் விட்டிட்டியே!”
“இல்லையக்கா! அந்தாளுக்குத் தேவையான காசைக் குடுக்க உன்னட்டை வழியிருக்கோ? சீதனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஒருத்தன் வந்தால். அது அற்புதமெல்லோ!'
அவள் வாயடைத்துப்போனாள். பக்கத்திற் படுத்திருந்த் படியே அம்பிகாவின் தலையைத் தடவிக் கொடுத்தாள். மென்மையான குரலில். “அப்பா பாவம். நீ அவரைப் பேசாதை!” என்று மட்டும் சொன்னாள். அப்போது அம்பிகா மூக்கை உறிஞ்சி விம்மத் தொடங்கினாள். அந்த அழுகை அப்பாவைக் குறை சொன்னதற்காகவும் இருக்கலாம்.
அப்பா கோபம் கொள்ளப்படவேண்டியவரல்ல என்பது அம்பிகாவுக்குத் தெரியுமெனவும் அவளுக்குத் தெரியும். அம்பிகா ஆற்றாமையுணர்விற்தான் அப்படிப் பேசியிருக்கிறாள். அப்பா தங்களுக்காக அலையாத அலைச்சலில்லை. இந்தப்பிள்ளையளை ஒவ்வொருத்தன்ர கையில் பிடிச்சுக் கொடுக்கவேணும்' என இராப்பகலாக உறக்கமின்றித் திரிந்த வர்! அவரது துரதிஷ்டமோ அல்லது தங்கள் துரதிஷ்டமோ, மாப்பிள்ளை தேடத் தொடங்கிய போது அவளது வயது முப்பதை எட்டியிருந்தது. கொஞ்சமாவது பொருள் பண்டத்தைச் சேர்க்காமல் எப்படி

Page 39
சுதாராஜ் 0 56
கல்யாணம் பேசுவது - ஒரு புதுமொழி. பொருளிலார்க்கு இல்வுலகும் இல்லை - இவ்வுலகில் மாப்பிள்ளையும் இல்லை"
அவளுக்குத் தோதான வயதில் மாப்பிள்ளை தேடிய போது பணம் அதிகமாகத் தேவைப்பட்டது. பணம் குறையக்கூடிய இடங்களில் அவளைவிட அவளது தங்கை களைத் தேவைப்பட்டது. அவள் இருக்கும்போது அவளுக்குப் பின்னே வந்தவர்களுக்கு எப்படிச் செய்வது என்பது அப்பாவின் வாதம். இப்படியே காலங்கள் கரைய தங்கைகளின் வயதும் அதிகரிக்க. இப்படி. இப்படி. பல சாட்டுகள். கல்யாணச் சந்தையில் அவர்களது தகுதியைக் குறைத்து குறைத்துக் தடங்கல்களை ஏற்படுத்திவிட்டன. இப்போ, அப்பாவும் ஒய்ந்து போனார்.
முகத்தை அலசிக்கொண்டு வந்து கோப்பியை எடுத்தாள். அது ஆறிப் போய்த்தான் இருந்தது. ஆறிய கஞ்சி பழங் கஞ்சியாம். அது போலத்தான் கோப்பியும்! எல்லாமே அப்படித்தான்.
ஆறுதவற்கு முன்னரே குடிக்காமல் விட்டது அவளது தவறுதானோ? குடிக்க கிடைக்காமலே போவதைவிட ஆறிய பிறகாவது கிடைக்கிறதே என ஆறுதலடைய வேண்டியது தான். விரும்புவது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பலாம்.
கோப்பியை அருந்தியவாறு ஜன்னலூடு வெளியே பார்த்தாள். பறந்து போகக்கூடிய வானவெளி தெரிய வில்லை. அடுக்கடுக்காக நெருக்கமாக கட்டப்பட்ட மாடிக் கட்டிடச் சுவர்கள்தான் தெரிந்தன.
சில பழைய கட்டிடங்களில் சிற்பங்கள் கூடச் செதுக்கியிருக்கிறார்கள். நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெண் சிற்பங்கள்; அவர்களுக்குச் சிறகுகள் கூட இருக் கிறது. அகல விரித்துப் பறப்பது போல. கட்டிடங்களின்

57 0 தெரியாத பககங்கள
உச்சியில் முற்காலத்தில் பெண்கள் பறந்திருப்பார்களோ? ஏன். இப்போதும்தான் வீதிகளில் ”. அலுவலகங்களில். கடற் கரைகளில். வாகனங்களில் எல்லாம் பறக்கிறார்கள். அவர்களைப் போல் ஏன் அவளுக்கும் பறக்க முடியவில்லை?
அந்த மாடிகளின் உச்சியில் இலையுதிர்ந்த அன்ரனா மரங்கள்! அவற்றில் மலர்ந்திருக்கும் பறவைகள்! சிறு மொட்டுகளாக அமர்ந்திருக்கும் சிட்டுக்குருவிகள். காற்றில் வெடித்துப் பறக்கும் பூம்பஞ்சுகளைப் போல் "ஒன் யுவர் மாக் - கெற்-செற்-ரெடி-கோ” சொல்லி ஒரே நேரத்தில் அவையெல்லாம் எழுந்து பறக்கின்றன! அவைகளைப் போல ஏன் அவளுக்கும் பறக்க முடியவில்லை.
“அகிலா"
அப்பாவின் குரல் - திரும்பினாள்.
அறைக்கதவை நீக்கியபடி நின்றார். அவள் எப்போது வெளியே வருவாள் எனப் பார்த்துப் பார்த்து. பொறுமை கொள்ளாமல், தேடி வந்தவர் போல. திறந்த கதவினுாடு தோன்றினார். என்ன அலுவலாயினும், அப்பா யாரையும் தேடி அறைக்கு வருவதில்லை. தேவையானவர்கள் போய்த் தென்படும் வரையில் முன் கூடத்தில் அவரது கதிரையிலேயே தவமிருப்பார்.
“இந்தாம்மா" நீட்டிய அவர் கையில் . கடிதம்!
கடிதமென்றதும் நெஞ்சு ஒருமுறை திடுமென அடித்தது - ஊரிலிருந்து வந்திருக்கக்கூடும்; அம்மா எழுதியிருப்பாள் - அம்மாவின் கடிதங்களெல்லாம் பொருளாதாரப் பிரச்சனையைப் அடிப்படையாகக் கொண்டதாகத்தான் இருக்கும். அதனாற்தான் முதற் திடும்”. ஒவ்வொரு கடிதங்களிலும் தவறாமல் இந்தப் பிள்ளைகளெல்லாம். யாரிட்ட சாபமோ. நித்திய கன்னிகளாகவே இருக்கிறார் களே என அழுது ஒய்வாள். அம்மா எழுதுவதைப்

Page 40
சுதாராஜ் 0 58
பார்த்தாள். இந்தக் குறைகளைத் தீர்க்க ஒரு மார்க்கம் புரியாமல் அவளிடம் முறையிடுவது போலவும் இதற் கெல்லாம் அவள் தான் ஒரு வழிகாட்ட வேண்டும் என்பது போலவும் இருக்கும். வாசித்து முடித்ததும் பெருஞ்சுமை மனதில் ஏறி வருத்தும்.
ஊரில் அம்மாவுடனிருக்கும் கடைசிப்பெண்களிருவரும் தங்கள் வல்லமைக் கெட்டியவாறு ஏதோ சம்பாதிக் கிறார்கள் - பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது. தையல் வேலை. இங்படி . அவர்கள் பாட்டை பார்த்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு. எனினும் அம்மாவுக்கு இங்கிருந்தும் மாதாந்தம் அனுப்பி வைக்க வேண்டும். சற்று தாமதித்தாலும் கடிதம் வந்து விடும். அம்மா சீட்டுப் பிடிக்கிறாளாம். பிள்ளைகளுக்காகத்தான் சேமிப்பு. இந்தப் பெண்களை யாராவது ஒவ்வொருத் தனுடைய கையில் கொடுத்து கரை சேர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை அம்மாவுக்கு இன்னும் இருக்கிறது! அப்படி யொரு நம்பிக்கை தங்கைகள் எல்லோருடைய மனங்களிலும் ரகசியமாக இருக்கிறது என்பதும் அவளுக்குத் தெரியும். குருவிகளைப் போல அவர்களும் சேகரிக் கிறார்கள். பாங்க் புத்தகங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கட்டளையை அவள்தான் அவர்களுக்கு இட்டவள்;
"உழைக்கிறதையெல்லாம் செலவுகளுக்கெண்டு கொட்டாமல். உங்களுக்குங்களுக்கு எண்டும் ஏதாவது சேமிச்சு வையுங்கோ. ஒரு நேரத்திலை உதவும்.”
அவர்களெல்லாம் கனவுகண்டுகொண்டிருக்கும் அந்த அற்புதமான ஒரு நேரம் எது என்பதை கடவுளும் மறந்து விட்டாரோ என அடிக்கடி யோசித்திருக்கிறாள். அதனால் தனக்கென்று ஒரு பாங்க் புத்தகத்தைப் பற்றி அவள் எண்ணியதுமில்லை.
கடிதத்தை வேண்டுவதற்கே பயமாக இருந்தது. அப்பா, அறைக்கே தேடிவந்தபடியால் செய்தி பாரதூரமானதாக

59 O தெரியாத பக்கங்கள்
இருக்கலாம். அதைத் தாங்கிக் கொள்ளும் தைரியத்தை முதலில் மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். எல்லோரும் பெரியவர்கள் ஆகும்போது ஏன்தான் குடும்பத்தில் பிரச்சினைகள் பெருகுகின்றனவோ? அப்பா உழைத்துச் சாப்பாடு போட, மூக்குமுட்டும் வரை பிடித்துப் போட்டு சிறு பிள்ளைகளாக விளையாடித்திரிந்த நாட்கள் எவ்வளவு ஆனந்தமானவை! பருவம் மலர்ந்தபோது. எங்களுக்கும் ஒரு வாழ்க்கை வரும்' என்று.! எங்கள் குடும்பம் இப்படி அமையும்' என்று கனவு கண்ட நாட்கள் எவ்வளவு இனிமையானவை. அந்த நாட்களெல்லாம் கனவுகளாகவே போய்விட. இப்போது ஒவ்வொரு நாட்களும் ஏதோ பிரச் சனையைக் கொண்டுவருவது போலிருக்கிறது. கடிதம் வந்தால் வாசிக்க முதலே. ஊரில் என்ன பிரச்சனையோ. ஊரில் உள்ள தங்கைகள் ஏதாவது ஏறுக்கு மாறான காரியம் செய்திருப்பார்களோ என்றெல்லாம் திடும்! திடும்!
அப்பா அவளிடம் கடிதத்தை கொடுத்தபோது அவரது கைவிரல்கள் நடுங்கின. அவரது கண்களில் நீர் ததும்பி. சுருக்கமடைந்த கன்னங்களில் ஓடமுடியாது நின்றது.
“இந்தாம்மா!. சதானந்தன் எழுதியிருக்கிறான்!”
அவளுக்குப் புரியவில்லை.
“எந்த?”
“என்னம்மா சதானந்தனை மறந்திட்டியா?. நடராசன்ர மகன்.? பிரான்சுக்கு போனான்.”
“ஒ."
அப்பாவின் நண்பர் நடராஜாவின் மகனை அவள் மறந்துதான் போனாள். பத்தோ பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்தே அவனது பழக்கமும் தொடர்பும் விட்டுப் போயிற்று. ஊரில் அவர்களது வீட்டுக்கு அண்மையிற்தான் சதானந்தனின் வீடும் இருந்தது. விருத்தெரிந்த பருவம் முதலே அவர்கள் வீடே தஞ்சமெனக் கிடந்தவன். சேர்ந்து

Page 41
சுதாராஜ் 0 60
விளையாடுவான். ஒன்றாகச் சாப்பிடுவான். இந்த வீட்டில் ஒரு ஆண்பிள்ளை இல்லாத குறையைத் தீர்த்து வைத்தவன் என்றும் சொல்லாம். வீட்டுக்குத் தேவையான சகல உதவி களையும் செய்வான். கடை கண்ணிக்குப் போய் வருவான். பெண்கள் ஏதாவது அலுவலக வெளியிடங்களுக்குப் போகும்போது அவனும் துணையாகப் போய் வருவான்.
அப்போது அவளுக்கு வயது இருபதாக இருக்கலாம் என்று ஞாபகம். ஒரு மழை நாள் பொழுது. இருண்டு கொண்டிருந்த நேரம். ஒரே குடையில் அவளை நனையாது அழைத்து வந்த அவனது கை, ஒழுங்கையின் தனிமை வந்ததும் முதுகுப் பக்கமாக வளைந்து அவளது இடையை அனைத்தது.
இந்த வித்தியாசத்தை உணர்ந்ததும் அவள் சிலிர்த்துப் போனாள். நடுக்கத்துடன் அவனை விட்டு விலகி மழையில் விரைவாக நடக்கத் தொடங்கினாள். அவளை அழைத்துக் கொண்டே சதானந்தன் பின்னே ஓடிவந்தான். அந்த சம்பவத்துக்கு அன்றோடு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. அது அவர்களிருவருக்குமிடையில் மட்டும் இரகசியமாக இருந்து மறைந்தது. அதற்குப் பிறகு அவள் அவனை தவிர்த்துக் கொள்கிறாள் என்பதை உணர்ந்ததும் அவனும் விலகிக் கொண்டான். அவன் வழக்கம் போலவே வீட்டுக்கு வந்து போனாலும் அவர்களுக்கிடையில் ஒர் இடைவெளி விழுந்திருந்தது.
இது நடந்து இரண்டொரு வருடங்களின் பின் மீண்டும் அந்தப் பூதம் கிளம்பியது. அவள் கொழும்புக்கு வேலைக் காக வந்த புதிதில், சதானந்தன் தனது நிலைப்பாட்டை பூரணமாக விபரித்து ஒரு கடிதம் எழுதியிருந்தான். - அவளை மனப்பூர்வமாகக் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்ய விரும்புவதாகவும்
அவள் குழம்பிப் போனாள். சதானந்தனுக்கும் ஏறக்குறைய அவளுடைய வயதாகவே இருக்கும். ஏற்கனவே

61 0 தெரியாத பக்கங்கள்
நடந்த சம்பவம் அவ்வப்போது அவளுக்கு உள்ளக்கிளர்ச்சி களைத் தந்ததும் உண்மையே. எனினும் அதற்கு அவனது வயதுக் கோளாறுதான் காரணமென பெரிசுபடுத்தாமல் விட்டிருந்தாள். சதானந்தனின் காதற்கடிதம் மனப்போராட்டங்களில் மூழ்கடித்துத் தடுமாற வைத்தது. சிறுபராயம் கடந்து யுவப்பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் அந்தக் காலகட்டத்தில்தான் அவள் குடும்ப பொறுப்புக்களையும் சுமைகளையும் உணரத் தொடங்கி யிருந்தாள். வீட்டில் எல்லோருக்கும் வயிறாரச் சாப்பாடு போடுவதற்கே தனது உழைப்பு போதாது திண்டாடுகிறார் அப்பா. ஐந்து பெண்களையும் மடியில் நெருப்புப்போல கட்டி வைத்துக் கொண்டு அழுது தீர்க்கிறாள் அம்மா. இதையெல்லாம் கவனியாது அவள் சுயநலங் கொண்ட வளாக ஒருவனோடு தன்பாட்டைப் பார்த்துக் கொண்டு போய்விடலாமா? அவளது ஆருயிர்த் தங்கைகள் திசையே தெரியாத ஒரு பாதையில் நிற்பதைப் போலிருக்கிறது. இந் நிலையில் அவர்களைப் பிரிவதென்பது முடியாத காரியம். காதலாவது கல்யாணமாவது.
அவள் உழைக்கவேண்டும். இந்தக் குடும்பத்தின் நிலையை சற்றேனும் சீர்செய்து எல்லோருக்கும் ஒரு வாழ்க்கையை நிட்சயப்படுத்திக்கொள்வதற்கு அப்பாவோடு சேர்ந்து அவளும் உழைக்க வேண்டும்.
தனது முடிவை அவனுக்கு எழுதிவிட்டாள். பின்னர் அவன் தனது உத்தியோக நிமித்தம் கொழும்புக்கு வந்த போது சொன்னது ஞாபகமிருக்கிறது.” எண்டைக் கெண் டாலும் நீங்கள் ஒமெண்டு சொல்லுறவரை நான் காத்திருப் பேன்.”
இரண்டோ மூன்று வருடங்களின் பின்னர் பிரான்சுக்கு போய்விட்டதாக அறிந்தாள். இப்போது சதானந்தனின் கடிதம் அப்பாவுக்கு வந்திருக்கிறது!

Page 42
சுதாராஜ் 62
கடிதத்தின் சாரப்படி, பிரான்சில் நன்றாக உழைத்து தனது குடும்ப பொறுப்புகளையெல்லாம் தீர்த்து வைத்து விட்டதாகவும் இப்போது நல்ல வசதியாக இருப்பதாகவும் எழுதியிருந்தான். வீட்டில் பழகிய பழைய நாட்களை நினைவு கூர்ந்து எல்லோரையும் சுகம் விசரித்திருந்தான்! அப்போது என்னை உங்கள் மகன் போலக் கருதி நீங்களெல்லாம் என்மேல் அன்பு செலுத்தியதை மறக்க முடியாது. அப்படி நெருக்கமாகப் பழகியதாற்தான் உங்கள் கஷ்ட நஷ்டங்களையும் உணர்ந்திருக்கிறேன். நீண்ட நாட்கள் தொடர்புகள் இல்லாமல் இருந்தாலும், எங்கள் வீட்டிலிருந்து வரும் கடிதங்கள் மூலம் உங்கள் குடும்ப நிலைகளையும் அறிவேன். மகன் போலக் கருதிய என்னை மருமகனாக நீங்கள் ஏற்றுக்கொண்டால் இந்நிலையில் உங்களுக்கு உதவி செய்ய முடிந்ததே என்று சந்தோச மடைவேன். எனக்கும் வயது நாற்பதாகிறது. எனது எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்கவேண்டும். பிரான்சை விட்டு இன்னும் ஒரு மாதத்தில் வரத் தீர்மானித்துள்ளேன். கல்யாணம் செய்து கொண்டு ஊரோடு தங்கும் எண்ணம். எனது விருப்பத்துக்கு உங்களுக்கோ. அல்லது வீட்டில் வேறு யாருக்குமோ மறுப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் சீக்கிரம் வந்து சந்திப்பேன்! அவளது மெய் சிலிர்த்தது.
சற்று நேரம் மூச்சு வாங்க மறந்தவள்போல நின்றாள். "யூ ஆர் கிரேட்" என இதயத்திலிருந்து மூச்சு வெளிப் பட்டது. வரண்டு போயிருந்த இதழ்களை ஈரமாக்கின. மனம். காற்றில் வெடித்து பூம்பஞ்சாய்ப் பறந்தது. “ஒன் யுவர் மார்க்-கெற்-செற்-ரெடி-கோ" சொல்லி வான வெளியில் பறந்து போனது.
குளிக்கும்போது 11ாட்டு வந்தது. பாடிப்பாடிக் குளித் தாள். ஷவரைத் திறந்துவிட்டு ஆனந்தமாக நின்றாள். 'அப்பாவோட இதைப் பற்றிக் கதைக்க வேணும் அவளுக்கு சங்கடமாயிருந்தது. அபபா, எதுவானாலும் அவளோடு கலந்து பேசி, அவளுடைய ஆலோசனையைக் கேட்டுத்

63 3 தெரியாத பக்கங்கள்
தான் ஒரு தீர்மானம் எடுப்பார். அதுபோலத்தான் அவளும். ஆனால் இதைப்போய் எப்படி அவரிடம் கதைப்பது? ஒருவேளை அவராகவே அவளது விருபத்தைக் கேட்பாரோ? கேட்டால் நல்லதாகிப் போய்விடும். “சரி” உங்கட விருப்பப்படி செய்யுங்கோ! என்று சொல்லி விடலாம். கரும்பு தின்னக் கூலியும் வேண்டுமா - அப்பாவுக்கு அவளுக்கு சிரிப்பு வந்தது. அந்தச்சிரிப்பு மனதிலிருந்து உடைந்து மிக இயல்பாக உதிர்ந்தது. நெடுநாளைக்குப் பிறகு இப்படியொரு நிஜமான சிரிப்பு:
சுகமான சிரிப்பு.
இரவில் கட்டிலில் அம்பிகா அவளை அணைத்துப் படுத்தபோது கவலையாயிருந்தது. அம்மா மாதிரியாம்! அம்மா மாதிரிப் பெண்ணுக்கு கல்யாணம் கடிதம் வாசித்தவேளை முதல் புதுசாகப் பூத்த மலர்போல தன்னிடத்தில் பிறந்திருந்த புத்துணர்வையும் உற்சாகத் தையும் எண்ணி வெட்கமடைந்தாள். ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது? மந்திர வித்தைபோல, அந்தக் கடிதம் ஏன் தன்னை இளமை திரும்பச் செய்தது என எண்ணினாள். இந்தப் பிள்ளைகளெல்லாம் ‘எப்படியாவது போகட்டும்’ என்று கைவிட்டுப் போகலாமா?
அன்றைய இரவு உறக்கத்தைத் தர மறுத்தது. பல இரவுகளில்பல காரணங்களுக்காக உறக்கம் கெடுவதுண்டு. மனம் ஒடிந்து கவலையில் மூழ்கும் இரவுகள், ‘என்னடா வாழ்க்கை' என விரக்தியில் விழிக்கும் இரவுகள், கற்பனை நினைவுகளில், குருட்டு எண்ணங்களில் ஏங்கும் இரவுகள். அன்றைய இரவு சதானந்தனைப் பற்றிய பலவித நினைவு களைத் தந்தது.
எவ்விதமாக யோசித்தாலும் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்வதுதான் புத்திசாலித்தனம் எனத் தோன்றியது அவளுக்கு அவள் மணமுடிக்காமல் இருக்கும் காரணத்துக் காகவே தங்கைகளின் சம்பந்தங்கள் பலமுறை தடைப்

Page 43
சுதாராஜ் 0 - 64
பட்டிருக்கின்றன. இப்போது வரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திஅவள் முடித்துக்கொண்டால், தங்கைகளுக்கு வழிவிட்டதாகவும் இருக்கும். சதானந்தன் நல்ல வசதியாக இருப்பதாக எழுதியிருக்கிறார். ஒருவேளை அவர்கூட தங்கைகளின் கல்யாணங்களுக்கும் உதவி செய்யக்கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக, அவளுக்காக இருபது வருடங் களாகக் காத்திருப்பவரின் காதலை எப்படி உதாசீனம் செய்தவதா?
நாட்கள் ஒன்றிரண்டெனக் கடந்துகொண்டிருந்தன. அப்பாவோ இதுபற்றி மூச்சுத்தானும் விடவில்லை. கடிதத்தை அவளிடம் கொடுத்ததோடு சரி. தனது கடமை முடிந்து விட்டது என்பவர்போல் மெளனியாக இருக்கிறார். அவளால் இருப்புக்கொள்ள முடியவில்லை. இது அவளது 'கடைசி பஸ்" இதையும் கோட்டை விட்டுவிடலாமா?
மாலைகளில் வேளைக்கே வீட்டுக்கு வந்தாள். அறைக்குள்ளே அடைந்து கிடக்காமல் அப்பாவுடன் அடிக்கடி பேச்சுக் கொடுத்தாள். அப்பா கடிதத்தை வாசித்த பிறகுதானே அவளிடம்தந்தவர்? அதுபற்றி தனது அபிப் பிராயத்தை இன்னதை இப்படி என்றாவது சொல்லலாமே?
அப்பா, எத்தனையோ சம்பந்தங்களைப் பேசி பேசி. எதுவுமே நிறைவேறாமல் போனதால் மனமுடைந்து போனவர். “நான் ஒரு துர்ரதிஷ்டக்காரன். நான் பேசிக் கொண்டு வந்து இந்தப் பிள்ளையஞக்கு ஒரு நன்மையான காரியமும் ஒப்பேறவில்லை. இனிமேல் இந்தவிஷயத்தில் நான் தலையிடப் போறதில்லை” என முன்னொருமுறை சொல்லியிருக்கிறார். அதுதான் காரணமாக இருக்கலாம். அப்படியானால். அப்பாவுடன் தானாகவே இவ்விடயத் தைப் பேசுவதும் கூடாதுதானே என்றும் அவள் மனம் பேதலித்தது.
இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் யார்தான் இதைப்பேசி முடிவெடுப்பது? அப்பா இயலாத் தன்மை

65 தெரியாத பக்கங்கள்
யினால் முன்னர் அப்படிக் கூறியிருக்கலாம். பிள்ளையின் கல்யாண மென்றால் அப்பாவுடன் பேசாமல் வேறு யாருடன் பேசுவது? முதலில் அவரது சம்மதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்பாவின் மனப்பூர்வமான ஆசிர்வாதம் கிடைக்காமல் அவள் எதையும் செய்ய மாட்டாள். சரி. அப்பாவுடன் பேசலாம் என்றால் யாரை தூதுக்கு அனுப்புவது? தங்கைகளிடம் இதைச் சொல்லவே கூச்சமாக இருக்கிறது. இந்தப் பூனையும் பால் குடிக்குமா' என அம்பிகா சீண்டுவாள். வேறு வழியில்லையென்று தானாகவே போய் அப்பாவின் கால்களில் விழுந்து விடுவோமா? "எனக்கு இது வேண்டும். இது விருப்பம். அது விருப்பம்' எனச் சிறு பராயத்திற்கூட அப்பாவிடம் கேட்டதில்லை! என்னால் முடியாதப்பா. அவரே வந்து அப்பாவுடன் கதைத்துக் கொள்ளட்டும்! மாமனும் மருமகனும் பட்டபாடு எனத் தன்னைச் சமாதானப் படுத்துவது போல மனதுக்குள்ளாகச் சொன்னபோது அவளுக்கு ஒருவித இன்பக் குமுறல் ஏற்பட்டது.
அலுவலகம் முடிந்ததும் சில நாட்களில் மார்க்கட் டுக்குப் போய் தேவையான பொருட்களை வேண்டி வரும் போது பொழுது பட்டுவிடும். அசதியுடன் மாடிப்படிகளில் ஏறி பெல்லை ஒலித்தபோது கதவைத் திறந்தது. வழக்கத் துக்கு மாறாக ஒரு புதுமுகம்! கண் இமைத்து மூடிய கணப்பொழுதில். முன்னே புன்சிரிப்புடன் தோன்றுவது புதுமுகமல்ல. சதானந்தன் என்பது அவளுக்குப் புரிந்தது.”
மின் ஒளியில் சதானந்தனின் 'சேவ் செய்யப்பட்ட முகம் பளிச்சென ஜொலித்தது; "ஹலோ” தடுமாற்றத்துடன் ஒரு புன்னகையை வலிந்து உதிர்த்துவிட்டு விடுக்கென அறையுள் நுழைந்தாள்.
நாடி நரம்புகளின் துடிப்பு உடலெங்கும் மின்சாரம் போல் பரவியது. போன வேகத்தில் கதிரையில் அமர்ந்தாள். மூச்செடுக்கும் வீச்சு நெஞ்சை பிளந்துகொண்டே வெளி

Page 44
சுதாராஜ் 0 66
வரும் போலிருந்தது. நன்றாக கதிரையிற் சாய்ந்து கண்களை
மூடி, நிதானமாக காற்றை உள்ளிழுத்து இலகு நிலையடைய முயற்சித்தாள். உடல் நடுங்குவது போலவும் ஒருணர்வு
தட்டியது. கையிரண்டையும் சேர்த்து இறுகப் பொத்தி
னாள். “ரிலாக்ஸ். ரிலாக்ஸ்.” என மனதுக்கு கட்டளை யிட்டாள்.
என்ன இது? கடிதத்தைக் கண்ட நாள்முதல். 'சதா' எப்போது வருவார். வருவார் என்றுதானே அவள் ஏங்கிக் கொண்டிருந்தாள். அல்லும் பகலும் அலுவலகத்திலும் வீட்டிலும் படுக்கையிலும் அவரது நினைவுகளில்தானே ஊறிப் போயிருந்தாள். அவர் வந்ததும் எப்படி எப்படி யெல்லாம் பேச வேண்டும், என்ன பேச வேண்டும், என்ன மாதிரி ட்றெஸ்' செய்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்திருந்தாள். இப்போது ஏன் இந்தத் தடுமாற்றம்? கதவைத் திறந்து, "ஹலோ” என்று சொன்ன வருக்கு ஒரு வார்த்தைகூடப் பேசாமல் உள்ளே வந்து விட்டாளே! என்ன நினைத்திருப்பாரோ? இவள் பழைய அதே திமிர் பிடிச்ச அகிலாதான்’ என்று எண்ணியிருப் பாரோ? இல்லை! அகிலாவுக்கு திமிரில்லை!" என்று அவரிடம் யாராவது சொல்லமாட்டார்களா?
"அக்கா கொஃப்பி"
திரும்பிப் பார்த்தபோது, சாந்தா தொடர்ந்து கேட்டாள். “வந்திருக்கிற ஆளைத் தெரியுமோ?”
தெரியும்' என்பது போல அவள் தலையசைத்துப் புன்னகைத்தாள். 'கள்ளி' என்பது போல ஒரு சிரிப்பு சாந்தாவிடம் மலர்ந்தது. அந்தச் சோகமான முகத்திலும் ஒரு சிறிய மலர்வு நிகழ்ந்திருப்பதைக் காண முடிந்தது.
"அப்பா உங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என்றவாறு சாந்தா வெளியேறினாள்.

67 0 தெரியாத பக்கங்கள்
ஐயோ என்னால் முடியாதப்பா' எனத் திரும்பவும் நடுக்கம், சூடான கோப்பியை எடுத்து மடமடவெனக்குடித் தாள். பாத்றுாமுக்குட் சென்று குளிக்க ஆரம்பித்தாள். தன்னை மறந்து உடுத்த புடவையுடனே நெடுநேரமாக குளித்துக் கொண்டுநின்றாள். சதானந்தனின் முகத்தில் மட்டுமின்றி வீட்டிலுள்ள எவருடைய முகத்திலும் விழிப்பதே இயலாத காரியம்போற் தோன்றியது.வெளியே வரப் பயமாக இருந்தது. யாராவது வந்து கதவைத் தட்டுவார்களோ?
இந்த நேரத்தில் அம்மா கூட இருந்தால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும். உணர்ச்சிக் குமுறல்களைக் கொட்டி, ஒருமுறை அம்மாவை கட்டிப்பிடித்து அழுது தீர்க்கலாம். அம்மா அவளை அணைத்து, அழைத்துப்போவாள்.
"ட்ரெஸ் செய்துகொண்டு. வெளியே போகலாமா அல்லது அப்பா கூப்பிட்ட பிறகு போகலாமா எனச் செய்வதறியாது நின்றபோது அம்பிகா அறையுள் வந்தாள்.
"அப்பா. எவ்வளவு நேரமாய்ப் பார்த்துக்கொண்டிருக் கிறார் போங்கோ.”
வயது எத்தனையானாலும் கல்யாண மென்றதும் புதுமணப் பெண்ணுக்குரிய நாணமும் பக்குவமும் வந்துவிடும் போலும் - வலிந்த இயல்பை ஏற்படுத்தியவாறு முன்னே சென்று சதானந்தனுக்கு நேசமான புன்முறுவலை மலர்த்தி, கதிரையில் பவ்யமாக அமர்ந்தாள்.
சதானந்தன் முதலிற் கதையை ஆரம்பித்தார்.
பத்து பதினைந்து வருங்களுக்கு முன்னர் பார்த்த சதானந்தன் அல்ல அவர். முன்னைய துருதுருப்பு. குறும்புத் தனம் எல்லாம் காணமற் போயிருந்தது. மிக நிதானமாக கதைத்தார். முகத்தில் வசீகரிக்கும் பிரகாசம் தெரிந்தது அமைதியான ஆதரிக்கும் கண்கள்.

Page 45
சுதாராஜ் 0 68
அவளால் நிறையப் பேசமுடியவில்லை. தலையசைவில் அல்லது சுருக்கமாகச் சம்பாசித்தாள். கதைகள் வளர்ந்து விடயத்துக்கு வந்தார் சதானந்தன்.
“நான். அப்பாவோடை எல்லாம் கதைச்சிட்டன். அவருக்கு விருப்பம்தான். ஆனால் உங்களோட கதைச்சு முடிவெடுக்கட்டாம்."
அவள் பதிலளிக்கவில்லை. இதில் இனி முடிவெடுக்க என்ன இருக்கிறது என மனதுக்குள் நினைத்தாள்.
“பழைய சம்பவங்களை நினைக்கிறீங்கள் போல இருக்கு. அதெல்லாம் ஒரு விளையாட்டுப் புத்தி. அதைப் பெரிசுபடுத்தமாட்டீங்கள் எண்டு நினைக்கிறேன்!” எனச் சதானந்தன் சொன்னதும் அவள் அசந்து போனாள். உண்மையில் அச்சம்பவம் நினைவில் வந்துதான் இனி முடிவெடுக்க என்ன இருக்கிறது' என எண்ணிக்கொண் டிருந்தாள்.
“நோ. நோ." எனச் சிரித்து தனது நேசத்தை உணர்த்தினாள்.
“உங்களுக்குத்தான். என்னைப் பிடியாதே.? அதுதான் கதைக்க யோசனையாயிருக்கு."
இது என்ன சீண்டுதல் - புதுமணப் பெண்ணின் நாணம் திருமப வந்து தலையைக் குனித்தது. சதானந்தனும் மெளனமாக இருப்பதை உணர்ந்து மீண்டும் நிமிர்ந்தான். "சொல்லுங்கோ”
"நான் அனுப்பின கடிதம் பாத்தனிங்கள்தானே?” அவனது கண்கள் அபிநயித்தன.
"இனியும் காலத்தைக் கடத்தாமல். ஒரு கலியாணம் செய்து. நானும் குடும்பம், பிள்ளை குட்டி எண்டு வாழ வேணும். உங்கட குடும்பக் கஷ்டமும் எனக்குத் தெரியும்.

69 0 தெரியாத பக்கங்கள்
அந்தமுகத்தை நன்றி பெருகப் பார்த்துக் கொண்டே யிருந்தாள்.
“உங்களுக்கு ஆட்சேபணை இல்லையெண்டால். நான் அம்பிகாவைக் கட்டலாமெண்டு நினைக்கிறேன்."
மின்தடை ஏற்ப்பட்டு விளக்குக்ள் அணைந்தன. ஒரே
கும்மிருட்டு, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடிய வில்லை. ஒருவரையும் தெரியவில்லை. ஒரே ஒரு கணம்தான் மீண்டும் மின்சாரம் வந்து வெளிச்சமேற்பட்டது.
சடுதியாக இருளைப் பார்த்துஅந்த கணத்திலேயே வெளிச்சத்தைப் பார்த்ததால் அது இன்னும் பிரகாசமாக இருப்பது போலவுமிருந்தது.
அதிர்ச்சியில் உறைந்துபோன முகத்தில் மலர்ச்சியைக் கீறினாள்.
(வீரகேசரி 1992)

Page 46
எங்கட அப்பா எப்ப வருவார்
"அப்பா இண்டைக்கு வருவார்!" காலையிலிருந்தே அம்மா இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். கடந்த சில நாட்களாய் இதே பாட்டுத்தான்;
"அப்பாவைக் கண்டவுடனை அழக்கூடாது! கட்டிப்
பிடிச்சுக் கொஞ்ச வேணும்”
பிள்ளைக்கு சரியாக அப்பாவை ஞாபகமில்லை. அப்பா அப்பா' என அம்மா அடிக்கடி சொல்லும்பொழு தெல்லாம் ஒரு நிழலுருவம் மாதிரி அப்பாவின் தோற்றம் தெரிவது போலிருக்கும். அப்பா ஒருமுறை வந்து நின்றது. போனது எல்லாம் ஏதோ கனவுபோலத்தான்!
"இந்த முறை வந்து. பாத்தாரெண்டால் எவ்வளவு சந்தோஷப்படுவார்! நீங்கள் நல்லாய் வளர்ந்திட்டீங்கள் மூன்று வயசுப்பிள்ளை மாதிரியே இல்லை. எத்தனை கிழட்டுக்கதையள்!"
அப்பாவின் போட்டோவைக் கண்டால் இது அப்பா' எனப் பிள்ளைக்குச் சொல்லத் தெரியும். ஒருநாள் "அல்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அப்பா வின் படத்தைக் கண்டவுடன் "இந்தா. அப்பா" எனத் தொட்டுக்காட்டினாள். அதைப் பார்த்து எல்லோரும் சிரித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். "கெட்டிக்காரி” என்று அம்மா சொன்னாள். அது பிள்ளைக்கு நல்ல விளையாட்டாக இருந்தது. அதன் பின்னர் அப்பாவின் போட்டோ வைக்காணும் பொழுதெல்லாம் எல்லோருக்கும் காட்டிக் குதூகலிப்பாள்.
அதனால்தானோ. என்னவோ, அப்பா என நினைத் தால் பிள்ளைக்கு அவர் ஒரு படமாகத்தான் தெரிகிறார்.

71 C) தெரியாத பக்கங்கள்
"அப்பா இடைவேளைக்குப் பிளேனிலை வருவார்!"
"பிளேன்’ என்று சொன்னதும் நிலா ஒருமுறை நெஞ்சதிர்ந்தாள். பிளேன் வரும் சத்தம் தூரத்தில் கேட்கும் போதே நெஞ்சதிரும் பயத்தில் வீரிட்டுக் குளறும் வேளைகள் நினைவில் வந்தன.
"அம்மா!. ஊக்குங்கோ. ஊக்குங்கோ" அம்மா ஓடி வந்து தூக்கியதும், “பங்கல்! பங்கல்” (பங்கர்) என, பதுங்கு குழியைக் காட்டுவாள். அதற்குள்ளே ஒடிச் சென்று பதுங்கி விட்டால் சரி, பிள்ளையின் அழுகை நின்று விடும். ܕ
.குண்டுகளின் அகோரச்சத்தமும், அதிர்வும் நினைவில் வர. உடல் நடுங்குகிறது. குண்டுகள் வானத்தில் சீறி வருகை யில் அம்மா பிள்ளையை அணைத்துத் தூக்கிக் கொண்டு பாதுகாப்புத் தேடி ஒடுவாள். அப்போதெல்லாம் அதிகரித்த பயமும், அதிர்ச்சியும் அப்படியே நிலாவின் மனதில் பதிந்து வளர்ந்தன. விமானம் என்றால் குண்டு போடுகிற சாமான் என்றுதான் பிள்ளை நினைத்திருந்தாள்.
"அப்பா குண்டு போடுற பிளேனிலையா வருவார்?" அம்மாவைப் பார்த்துக் கேட்டாள் நிலா.
“இல்லையம்மா!,. அப்பா வேறை பிளேனிலை வருவார்!. அந்தப் பிளேன் குண்டு போடாது பயப் பிடாதையுங்கோ!”
இது நிலாவுக்கு புதினமாயிருந்தது;
"அப்பாவைக் கண்டவுடனை அழுவீங்களா?” அம்மா. கேட்டாள்.
A. ல்லை”
மாலை நேரம் போல நிலா தானும் தன்பாடுமாக விளையாடிக் கொண்டிருக்கையில் வெளியே கார்

Page 47
சுதாராஜ் 0 72
"ஹோர்ன்" ஒலித்தது! அதைக் கேட்டதும் அம்மா, சட்டென பிள்ளையைத் தூக்கிக் கொண்டு கேற்றடிக்கு ஒடினாள். அம்மாவுக்கு முன்னே நாய் ஓடி வந்து கேற்றில் முன் கால்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டு 'ஊ.ஊ.' என மகிழ்ச்சியில் அழுது கத்தியது.
கார் உள்ளே வந்து. கதவைத் திறக்க அப்பா இறங்கினார்.
நாய் அவர்மேல் தொங்கித் தொங்கிப் பாய்ந்து கைகளை நக்கியது. அப்பா அதைக் கவனியாதவர்போல. அம்மாவை அணைத்துக்கொண்டு கண்கள் கலங்கினார். பின்னர், கைகளை நீட்டி பிள்ளையைத் தூக்க எத்தனித்தார்.
அப்பா திடுதிப்பென வந்தது, நாய் குரைத்து ஆர வாரித்தது, அம்மா சட்டென பிள்ளையைத் தூக்கிக் கொண்டு பங்கருக்கு ஒடுவது போன்ற வேகத்தில் ஓடியது. குண்டு போடும் பிளேனில் அப்பா வரும் நினைவு. எல்லாம் சேர்ந்த அமர்க்களத்தில் நிலா பயந்து வீரிட்டுக் குளறியவாறு, அம்மாவின் கழுத்தைக் கட்டிப்பிடித்து முதுகுப் பக்கம் சாய்ந்தாள். அப்பா அந்தப்பக்கமாக ஓடி வந்து பிள்ளையைக் கொஞ்சுவதற்கு முயன்றார். பிள்ளை மூச்சடக்கி அலறினாள்.
"இதென்ன பழக்கம்?. அப்பாதானே? அழமாட்ட னெண்டு சொன்னிங்கள்.” என அம்மா பிள்ளையை அப்பாவிடம் கொடுப்பதற்கு முயற்சித்தாள்.
"சரி சரி. பிள்ளை பயப்படுகிறாள் போல. கொஞ்ச நேரத்திலே சரியாயிடும்” என்றவாறு அப்பா, அப்பால் GeF6öpfri.
"சீ அழக்கூடாது கெட்ட பழக்கம்” அம்மா கோபத் துடன் கூறியவாறு “வாங்கோ! அப்பா பிள்ளைக்கு என்ன கொண்டு வந்தவர் எண்டு பாப்பம்” என பிள்ளையின்

73 - O தெரியாத பக்கங்கள்
கவனத்தைத் திருப்புவது போல கூறிக்கொண்டு எழுந்து போய் அப்பா கொண்டு வநதிருந்த பெரிய 'பாய்க்கின் பிடியைப் பிடித்து இழுத்தாள். ஒரு மிருகத்தைப் போல அது கொற இழுவையில் வருவதைக் கண்டு பிள்ளை மீண்டும் பயந்து குளற ஆரம்பித்தாள்.
“பிள்ளையைக் குழப்பாமல், கொஞ்ச நேரம் வேறை பிராக்குக் காட்டி அழுகையை நிப்பாட்டுங்கோ" அப்பு பிள்ளைக்குப் பரிந்து பேசியவாறு வந்து நிலாவை வேண்டிக் கொண்டார்.
அப்பா குளிப்பதற்கு, அம்மா ஆயுத்தங்கள் செய்து கொடுத்தாள். துவாய் எடுத்துக் கொடுத்தாள். அப்பா குளிப்பதற்கு; துவாய் எடுத்துக் கொடுத்த சம்பவங்கள் நிலாவுக்கு நினைவில் வருவது போலிருந்தது. பெரிய துவாய் நிலத்தில் முட்டாதவாறு கைகளை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்துக் கொண்டு போகவேண்டும். துவாயை வேண்டிக் கொண்டு அப்பா, 'கெட்டிக்காரி" என்று சொல் லுவார். ஒரு நாள் துவாயைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஒடிப் போக அது அந்தச் சின்னக் கால்களுக்குள் தடுக்குப் பட்டு விழுத்தி விட்டது. அப்பா ஓடி வந்து தூக்கினார். பிள்ளை நிலத்தை காட்டிக் காட்டி அழுதாள். நிலத்துக்கும் துவாய்க்கும் நல்ல அடிபோட்டு நிலாவின் அழுகையை அப்பா நிறுத்தினார். அந்த அப்பாதானே. என்ன பயம்?
“இந்தச் சட்டை பிள்ளைக்கு. இது சிவப்புக்கார், நடக்கிற பொம்மை. பெரிய சொக்லட்."
அறையிலிருந்தவாறு அப்பா சொல்வது வெளியே கேட்டது.
“வாங்கோ போய் பாப்பம்! அப்பா, பிள்ளைக்கு நடக்கிற பொம்மை கொண்டு வந்திருக்கிறார்” என அப்பு நிலாவை அழைத்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தார். நிலா உள்ளே போகாது அறை வாசலில் நின்றாள். அப்பா

Page 48
சுதாராஜ் 0 74
'பாக்கிலிருந்து ஒவ்வொரு பொருட்களாக வெளியே எடுத்து வைத்தார்; “வாங்கா. இந்தாங்கோ”
நல்ல சிவப்பு, மஞ்சள், பச்சை வர்ணங்களில் விளை யாட்டுப் பொருட்கள், சொக்லட், சட்டை, சிறிய தொப்பி, கலர் பென்சில்கள். ww
“போங்கோ, போய் வேண்டுங்கோ!” அப்பு மெதுவாக முன்னோக்கித் தள்ளிவிட, பிள்ளை அப்பாவை நோக்கி நடந்து. அவருக்கு எட்டாத தூரத்தில் நின்று கொண்டு கைகளை மட்டும் நீட்டினாள். அப்பா சொக்லட் கவரை பிரித்தவாறு இருங்கோ இதிலை இருங்கோ' என மெதுவாக பக்கத்தில் நகர்ந்தார். நிலா அவரது தந்திரத்தை அறிந்து நழுவ முற்பட அம்மா டக்கென வந்து பிள்ளையை மடியில் இருத்திக் கொண்டு அமர்ந்தாள்.
அப்பா சொக்லட்டை ஒவ்வொரு துண்டாக உடைத்துக் கொடுத்தார். பிள்ளை ஒவ்வொன்றாகச் சாப்பிடும்வரையும் அலுக்காதவர் போல் பார்த்துக் கொண்டே இருந்தார். சற்றும் எதிர்பாராதவிதமாக, அவர் நிலாவின் கையைப் பிடித்துக் கொஞ்சப் போக பிள்ளை முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு ஒட்டமெடுத்தாள். இரவு படுக்கைக்குப் போன பொழுது பிள்ளைக்கு புதிய பிரச்சினை ஒன்று தோன்றியது; உறங்காது கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருந்தாள். அம்மா எவ்வளவு உத்திகள் செய்தும் பலனில்லை. அம்மாவின் மடியிற் கிடந்தவாறே யோசித்தாள்.
அப்பா எங்கே படுக்கப் போகிறார்? ஒரு வேளை இந்த அறைக்கே வந்து விடுவரோ?. இப்படி நினைத்துக் கொண்டிருக்கையிலே அப்பா, அம்மாவுடன் ஏதா கதைத்த வாறு அறையினுள் நுழைந்து கட்டிலில் அமர்ந்தார்.
“போங்கோ போங்கோ" அறைக்கு வெளியே கையைக் காட்டியவாறு பிள்ளை சிணுங்கத் தொடங்க அப்பா எழுந்து வெளியே ஓடினார்.

75 0 தெரியாத பக்கங்கள்
காலையில் நிலா உற்சாகம் பொங்க எழுந்தாள். ஸ்கூலுக்கு போக வேண்டும். நிறையப் பிள்ளைகள் வருவார்கள். எல்லாரோடும் சேர்ந்து விளையாடலாம்: ரீச்சர், வட்டமாக எல்லோரையும் நிறுத்திப் பாட்டுச் சொல்லித் தருவார். பாடிப் பாடி ஆடலாம்.
குளித்துக் கொண்டிருக்கையில் அம்மா கதை கொடுத் தாள்; 'பிள்ளையை இண்டைக்கு அப்பா ஸ்கூலுக்கு கூட்டிக் கொண்டு போவார் என்ன?
இல்லை. நான் அப்புவோட தான் போவன்!"
அம்மா எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லை. பிள்ளை அப்பாவோடு போக மறுத்துவிட்டாள். அப்புவை 'வாங்கோ’ என இழுத்துக்கெர்ணடு போய் சைக்கிளில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
"அம்மா டாட்டா'
"அப்பாவுக்கு சொல்லயில்லையா?”
நிலா அப்பாவைப் பார்த்து கையை மட்டும் அசைத்த வாறு ஒசையின்றி மறுபக்கம் திரும்பினாள்.
"டாட்டா! டாட்டா! போட்டு வாங்கோ! என அப்பா பாடாத குறையாகக் கத்தினார். "இனி சரிவரும் பிள்ளை சேர்ந்திடுவாள்!”
அப்பா எப்போதும் பிள்ளையைச் சுற்றிச் சுற்றியே வந்தார். காலையில் நிலா எழும் வரை பக்கத்திலே படுத்துக் கிடப்பார். எழுந்ததும் தூக்கிப் போவார். “வாங்கோ. தோட்டத்திலே நல்ல வடிவான பூக்களெல்லாம் பூத்திருக்கு Urlub”
காலையில் சில்லிடும் குளிரில் அப்பாவின் அணைப்
பில் இருந்து கொண்டு புதிதாகப் பூத்த ரோஜாக்களையும்; செவ்வந்திப் பூக்களையும் பார்க்கும் போது குதூகலமாக

Page 49
சுதாராஜ் 0 76
இருக்கும். விடியக்காலையில் ஒரு சிறிய குருவி வந்திருந்து வாலை ஆட்டி, ஆட்டி கீச்சிடும் குரலில் பாடும். குயில் கூவினால். அப்பா அதோட தானும் சேர்ந்து கூவி; விளை யாட்டுக் காட்டுவார். இன்னும் சில பறவைகள் சிறகை விரித்து ஒவ்வொரு கிளைகளாகத் தாவும். அப்பா சொல்லித் தருவார். இது சிட்டுக்குருவி, இது புலுனி, இது தேன் குருவி, இது மைனா.
ஒரு சோடி மைனாக்கள் ஒவ்வொரு நாளும் வந்து முற்றத்தில் தீன் பொறுக்கும். அவை இடுப்பை அசைத்து, அசைத்து மெல்ல நடந்து நடந்து, தீன் பொறுக்குவதைப் பார்த்தால் விளையாட வேண்டும் போலிருக்கும்.
“அதைப் பிடிச்சுத் தர்றீங்களா?” “பிடிக்கேலாதம்மா! கிட்டப் போனால் பறந்திடும்"
“øJ 6ör?” "அதுக்குப் பயம். அப்பா பிடிச்சுப் போடுவாரெண்டு. நீங்கள் அப்பாவைக் கண்டு பயப்பிட யில்லையா?. அது மாதிரித்தான்!”
அப்பா அலுத்துக் கொள்ளாமல் நிலாவின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லிக் கொண்டேயிருப்பார். ஒவ் வொரு விஷயங்களையும் சொல்லித் தருவார். ஒவ்வொரு சின்னச் சின்னக் கதைகளைப் போலச் சொல்லுவார். .
“அது அப்பாக்குருவி. மற்றது அம்மாக்குருவி. அது தான் சோடியாய் திரியினம்”
"அப்ப பிள்ளைக் குருவி?.” என அப்பாவின் கண் களைப் பார்த்துக் கேட்டாள் நிலா.
“பிள்ளைக் குருவி இந்தா இருக்கு" என நிலாவை இறுக அணைத்துக் கொண்டார் அப்பா.
நிலா அப்பாவுடன் நன்றாக அணைந்து கொண்டாள்.

77 0 தெரியாத பக்கங்கள்
இப்போது பிள்ளைக்கு அப்பாதான் எல்லாம். அப்பா தான் சாப்பாடு ஊட்டி விடவேண்டும். அப்பாதான் சட்டை அணிந்து விடவேண்டும். அப்பாதான் ஸ்கூலுக்கு கூட்டிப் போகவேண்டும்.
அப்பா பிள்ளையோடு ஒடி. விளையாட்டுக் காட்டுவார். "நான் ஒளிக்கிறேன். நீங்கள் தேடிப்பிடிக்க, வேணும், சரியா?”
நிலாவுக்கு இது புதுமாதிரியான விளையாட்டாக இருந்தது.
அப்பா பிள்ளையோடு தானும் ஒரு குழந்தையைப் போல ஒடித் திரிகிறார். வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடுவார். ஒடிப்போய் கட்டிலின் கீழாக. அல்லது கதவு இடுக்கில். சுவர் மறைவில் ஒளிந்திருப்பார்.
ஒடி. ஒடிக் கண்டு பிடித்ததும் வெற்றிப் பெரு மிதத்தில், பிள்ளை அப்பாவுக்கு அடி போடுவாள். அந்த அடியை எதிர்பார்ப்பது போல அப்பா அடிக்கடி நின்று முதுகை வளைத்துக் கொடுப்பார். அடி விழுந்ததும். பிள்ளையைத் தூக்கி அணைத்துக் கொஞ்சுவார்.
நிலாவுக்கு ஒரு புது விளையாட்டு தோன்றியது. அப்பா வுக்கு கையால் அடித்தாலே சந்தோஷப்படுகிறார். தடியால் ஒன்று போட்டால் இன்னும் சந்தோஷப்படுவார். தடி. தலை பெரிய தடியாக இருக்கவேண்டும். குசினியுள் அகப்பை கழன்ற பிடியொன்று இருந்தது. நல்ல பெரிய கொட்டன் பொல்லு போல. அதை எடுத்து வந்து அப்பா வைத் தேடினாள் நிலா அறையுட் கதவு இடைவெளியில் மறுபக்கம் பார்த்தவாறு நல்லவாகாக முதுகைத் திருப்பி வைத்துக் கொண்டிருந்தார், அப்பா! மெதுவாகப் பின்னே சென்று நன்றாக கையை ஓங்கி. ஒரு போடு!
ஆ. ஆ.!” அப்பா துடித்துக் கொண்டு எழுந்து முதுகை வளைத்துப்பிடித்தவாறு நின்று 'ஏனம்மா

Page 50
சுதாராஜ் 0 78
அடிச்சனிங்கள்?’ என அழாக் குறையாக் கேட்டார். நிலா ஏதோ தவறு செய்து விட்டதை அப்போதுதான் உணர்ந் தாள். பிள்ளையின் முகம் ஒடிக் கறுத்தது; சொண்டு விம்மியது.
“பறவாயில்லையம்மா!. நோகயில்லை.” அப்பா தூக்கியணைத்தார். நிலா அப்பாவின் கழுத்தை இறுககக் கட்டி அணைத்தாள். அப்பாவை இப்படி அணைத்துக் கொள்ளும் பொழுது நல்ல சுகமாக இருக்கிறது. அப்பா எப்போதுமே வீட்டில் இருந்தால் எவ்வளவு நல்லது!
பிள்ளையோடு சேர்ந்து விளையாடுவார். வெடிச்சத்தம் கேட்டால் எங்கிருந்தாலும் ஓடி வந்து தூக்கிக் கொள்ளு Gurrfr. &
“அது ஒண்டுமில்லையம்மா!. சீன வெடி கலியாண வீட்டிலை கொழுத்துகினம்”
"இல்ல ஷெல் அடிக்கிறாங்கள்!" அப்பாவை விட, பிள்ளைக்கு சத்த வித்தியாசத்தைக் கொண்டே வெடியின் ரகத்தைச் சொல்லுகிற பரிச்சியம் இருக்கிறது. வெடிச்சத்தம் கேட்கும்போது உலுக்குவது போன்றதொரு பயம் பிடிக்கிறது. ஓயாது குண்டுச் சத்தம் கேட்ட நாட்களெல்லாம் நினைவில் வருகின்றன. அம்மா வின் மடியில் நடுங்கிக் கொண்டே விடிய விடிய விழித்திருந்த இரவுகள் நினைவில் வருகின்றன.
"அது ஒண்டும் செய்யாதம்மா. அப்பா இருக்கிறன் தானே?. என்ன பயம்?.” என அப்பா தனது செஞ்சைத் தட்டிக் காட்டுவார்.
அப்பா இப்படிச் சொல்லி அணைத்துக்கொள்ளும் போது உண்மையாகவே பயமெல்லாம் பறந்து போகிறது. அப்பாவின் அரவணைப்பில் நல்ல பாதுகாப்பாக இருக்கும் தைரியம் கிடைக்கிது. y

79 0 தெரியாத பக்கங்கள்
அப்பா கொண்டுவந்த சொக்லட் ஒரு பெட்டியில் இருந்தது. ஒரு சொக்லட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு மிச்சத்தை மூடி வைப்பார். இப்பொழுது கடைசி சொக்லட் டையும் எடுத்துக் கொடுத்துவிட்டு வெறும் பெட்டியைக் காட்டினார்.
'இதுதான் கடைசி சொக்லட்”
“எனக்கு இது விருப்பம்!. இன்னும் வாங்கித்
தர்றிங்களா?”
“போயிட்டு அடுத்த முறை வரயிக்கை வேண்டி யாறன்!”
நிலா அதிர்ச்சியுற்று அப்பாவின் முகத்தைப் பார்த் தாள். பின்னர் கொஞ்சும் குரலில் சொன்னாள்.
"அப்பா! போகாதைங்க அப்பா"
“gr60 till bu Dr Ti?”
“எங்களுக்குப் பயம்” அப்பாவிடம் இருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.
காலை விடியும் பொழுது நிலாவுக்குக் குதூகலமாக இருந்தது. விழிப்பு ஏற்பட்டு விட்டாலும் படுக்கை அறையிற் கிடந்தவாறே நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள். ஏற் கனவே அம்மா எழுந்து குசினியில் அலுவல்களில் ஈடு பட்டிருந்தாள். இடயில் வந்து அப்பாவிடம் "எழும்புங்கோ. நேரம் போகுது” என்று சொன்னாள். அப்பா எழுவதற்கு மனமில்லாதவர்போல இன்னும் படுத்துக்கிடந்தார்.
வெளியே மரக்கிளையில் குயிலொன்று வந்திருந்து இகரிமையாகப் பாடத் தொடங்கியது. திறந்திருந்த ஜன்ன லூடு நிலா அதையே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டி ருக்க. அது ஏதோ நினைத்துக் கொண்டது போல ‘சட்' டெனப் பறந்து போனது.

Page 51
சுதாராஜ் 0 80
அம்மா வந்து பிள்ளையை அழைத்தாள். 'நிலா எழும்புங்கோ”
விடியக் காலையிலே வெளிக்கிடுவதானால் கோயிலுக் காக இருக்கும், அல்லது அம்மம்மா வீட்டுக்கு அம்மம்மா வீடு தூர இருக்கிறது. போகும் போது, காட்டுப் பாதையில் மயில் பார்க்கலாம்.
எல்லோரும் வெளிக்கிட்டதும் அப்பா நிலாவைத் தூக்கி அணைத்துக் கொண்டு வந்தார். பஸ் நிலையத்துக்கு வந்ததும் அப்பா அம்மாவை அணைத்துக் கொண்டு கண் கலங்கினார். நிலா அம்மாவின் முகத்தைப் பார்த்தாள். அம்மாவின் கண்களும் ததும்பிக் கொண்டிருந்தன. நிலாவுக்கு எல்லாம் புரிந்து விட்டது.
"அப்பா போகப் போகிறார்!’
அந்தச் சிறிய கண்கள் தீப்பிளம்புகளைப் போலச் சிவந்தன. நெஞ்சிலிருந்து உடைத்து வரத் துடிக்கும் குமுறல் "அப்பா எங்களை விட்டுப் போகப் போகிறார்”
அப்பா, நிலாவைக் கட்டியணைத்து முத்தமிட முனைந் தார். நிலா சட்டென மறுத்து மறுபக்கம் திரும்பினாள். பிள்ளையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு, அப்பா ஒடிப் போய் பஸ்ஸில் ஏறினார். எதையுமே கவனிக்காதது போல பஸ் ஒரு உன்னலில் அப்பாவை இழுத்துக்கொண்டு போனது. கையை அசைத்துக் கொண்டிருந்த அப்பா பின்னர் கண்களைத் துடைப்பது தெரிந்தது.
நிலாவின் குமுறல் வெடித்து அழத் தொடங்கினாள்.
அன்று வீடு வெறுமையாக இருப்பது போல நிலா வுக்குக் காட்சியளித்தது. கூட விளையாட யாருமில்லாதது போல உணர்ந்தாள். அப்பா நின்றால் சதா கலகலத்துக் கொண்டு நிற்பார். பூக்கன்றுகளைப் பார்க்கும்போது அழுகை வரும் போலிருந்தது.

81 0 தெரியாத பக்கங்கள்
அப்புவிடம் "அப்பா போயிட்டார். இனி நாங்கள் தனியைத்தான் இருப்பம்” என அடிக்கடி சொல்லியவாறு பிள்ளை கவலையில் மூழ்கியிருந்தாள். இரவு படுக்கைக்குப் போனபொழுது "அப்பா இல்லாமல் தனியப்படுக்கிறம்" என அம்மாவிடம் சொன்னாள்.
காலையில் எழுந்து முற்றத்துக்குச் சென்ற நிலா, திரும்ப அம்மாவை அழைத்த வாறு குசினிக்கு ஓடிவந்து பதட்ட மடைந்து கொண்டு நின்றாள். விசயத்தை சொல்ல முடியாது மூச்சு வாங்கியது.
"என்னம்மா? எதையோ கண்டு பயந்திட்டீங்களா?” அம்மா பிள்ளையை ஆதரவாகக் கேட்டாள்.
"இல்ல. அப்பாக் குருவியைக் காணயில்ல. வாங்கோ. காட்டிறன்" என அம்மாவின் கையைப் பிடித்து இழுத்து வந்தாள்.
முற்றத்தில் ஒரே ஒரு மைனா மட்டும் தீன் பொறுக்கிக் கொண்டு நிற்பதை நிலா அம்மாவுக்கு காட்டினாள்.
“அந்தா. பாத்திங்களா. அப்பாக்குருவியைக் காணவில்லை"
"இல்லையம்மா; இதுதான் அப்பாக்குருவி அம்மாக் குருவி முட்டை இட்டிருக்கு. குஞ்சு பொரிக்கிறதுக்காக கூட்டிலே இருக்குது. இது தீன் பொறுக்க வந்திருக்கு"
நிலா மெளனமாக அந்தக் குருவியையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
“s-gyu Lunt இனி எப்ப வருவார்?" அம்மா சற்று நேரம் யோசித்துவிட்டுச் சொன்னாள் "பிள்ளையின்ரை பேர்த்டேய்க்கு"
இரவு படுக்கும் பொழுது நிலா அம்மாவிடம்

Page 52
சுதாராஜ் 0 82
நினைவாகக் கேட்டாள், “எப்ப என்ட பேர்த்டே?” அம்மா நிலாவை அணைத்துக்கொண்டு சொன்னாள்; அப்பாவுக்கு கடிதம்' எழுதுவம். கெதியில்ை வாங்கோ "எண்டு:
"எழுதினால் வருவாரா?” “நான். பாட்டுப்பாடுறன் நீங்கள் படுங்கோ.” அம்மாவின் கை பிள்ளையை படுக்கை யில்-சாய்த்தது; தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு பிள்ளை கேட்டுக் கொண்டே கிடந்தாள். “காகிதம் எழுதினால் அப்பாவருவாரா?”
பிறகு அப்படியே உறங்கிப் போனாள். அடுத்த நாள் மத்தியான நேரம் போல நாய் கேற்பக்கம் நின்று குரைத்து ஆரவாரித்தது. அறையில் விளையாடிக் tகொண்டிருந்த நிலா ஓடிவந்து கேற்ற்டியைப் பார்த்தாள். "ஏனம்மா நாய் கத்துது? நான் நினைச்சன் அப்பா வாறrராக்கும்"எண்டு*
"அப்பா வர இன்னும் கனநாள் இருக்கு நீங்கள் "இஞ்சைவ்ாங்கோ! w
அம்மா பிள்ளையை உள்ளே அழைத்துச் சென்றாள்.
ஒவ்வொரு நாளும் அப்பாவின் நினைவுகளுடனே கழிந்தன, இரவில் அப்பா கனவுகளில் வருவார்."
தபால்காரன் வரும் நேரங்களிளெல்லாம் அம்மா கேற்றடிக்கு ஓடி வருவதை நிலா கவனித்தாள். 'போய் மூன்று கிழமையாச்சு!. இன்னும் ஒரு கடிதத்தையும் காண வில்லை!” அம்மாவோடு சேர்ந்து நிலாவும் ஓடிவந்து கடிதத்தை எதிர்பார்க்கத் தொடங்கினாள். ஸ்கூல் முடிந்து வந்தவுடன் அம்மாவிடம் கேட்பாள்."அப்பாண்டி காயிதம் வந்ததா?” ニー。
"வூரும்"

0 தெரியாத பக்கங்கள்
wiwa-....'
ஆனால், நாட்கள் சில கழிந்தன. கடிதம் வரவில்லை பொழுதுபடும் நேரம் அம்மா பிள்ளையையுட கையணைப்பில் தூக்கியவாறு முற்றத்தில் மெல்ல நடந்து கொண்டிருந்தாள். எதைப் பற்றியோ யோசிப்பவள் போல அம்மா அதிகம் கதைக்காமல் நடந்து திரிவது நிலாவுக் மனதில் கவலையை அளித்தது. 'அம்மாவின் முகத்:ை தனது சின்னக் கைகளால் திருப்பிக் கேட்டாள்
"அப்பா காகிதம் போடுவார்ா? "அவர் போனவுடனை போட்டிருப்பிர்ம்மா! தபாலிலைதான் சுணங்குது!”
நிலாவுக்குப் புரியவில்ல்ை."ஏன் தபால சுணங்குது: நிலாவின் கேள்விக்கு அம்மா பதில் சொல்லவில்லை வானத்தைக் காட்டிக் கதையை மாற்றினாள்.
"೨1557ಿ. பார்த்தீங்களா அம்புலிமாமா! அவரிட்டை கேப்பம் அப்பாவைக் கண்டீங்களா எண்டு"
நிலா பேசவில்லை. ', கேளுங்கோ, அம்புலிழா: அப்பூரவை: கண்டீங்களா?”
“அவருக்கு அப்பாவைத் தெரியுமா?” .
“ஓம்! அம்புலிமாமா அங்கை இருந்தபடியே எங்களை பார்க்கிறார்தானே? அதே மாதிரி அப்பாவையு பார்ப்பார்! அவருக்கு எல்லாம் தெரியும்.”
"அம்புலிமாமா. அப்பாவைக் கண்டீங்களாக நில வானத்தைப் பார்த்துக் கேட்டாள்.
அடுத்த நாள் பொழுது படும்போது நிலா மறக்காம அம்மாவிடம் கிேட்டாள்; “அம்புலிமாமா . பாப்பமா?
sgyLblont பிள்ளையைத் தூக்கிக்கொண்டு முற்றத்துக்கு

Page 53
சுதாராஜ் 0 83
போக, அவள் வானத்தைப் பார்த்துக் கேட்டாள்;
"அம்புலிமாமா அப்பா வருவாரா?”
"வருவார். பிள்ளையை விட்டிட்டு அவர் எப்படி தனிய இருப்பார்?" என அம்மா சொன்னாள்.
காலையில் விழிப்புற்றதும் நிலா அம்மாவைத் தேடி ஓடி வந்தாள். கிட்ட வந்து. எப்படி கேட்பது என்று தெரியாமல் யோசனையில் ஆழ்ந்தாள்.
"என்ன சொல்ல வந்தனிங்கள்?’ என அம்மா கேட்டாள்.
"அப்பா இனி வந்து. என்னை எப்படிக் கூப்பிடுவார்?" 'நிலா, எண்டுதான் கூப்பிடுவார். ஏன் கேக்கிறீங்கள்? "அப்பா என்னை நினைச்சிருப்பாரோ தெரியாது” "அப்பா பிள்ளையை ஒரு நாளும் மறக்கமாட்டார்! அங்கை படுக்கைக்குப் பக்கத்திலை பிள்ளையின்ரை பெரிய போட்டோ வைச்சிருக்கிறார்”
அம்மா வழக்கம் போல பிள்ளையைத் தூக்கியணைத் துக்கொண்டு கேட்டாள்.
"என்ன?. கனவு கண்டனீங்களா?” பிள்ளை பதில் பேசாது முகம் சிவந்து சிரித்து மழுப்பினாள்.
"இதிலை என்ன வெக்கம்? நானும் கனவு காணுறனான் தானே?” என அம்மா சொன்னாள்.
அன்று அப்பாவின் கடிதம் வந்தது. "அப்பா உங்களுக்கும் எழுதியிருக்கிறார்". என அம்மா நிலாவிடம் வாசித்துக் காட்டினாள்.
"என் அன்பு மகள் நிலாவுக்கு

85 0 தெரியாத பக்கங்கள்
கண் காணாத தேசத்தில் இருந்தாலும் கனவுகளில் எப்போதும் உங்களைக் காண்கிறேன்! தூர தேசத்தில் இருந்தாலும் என் மனம் தூர விலகாது
உங்களுடனே இருக்கிறது!
உங்களை எண்ணித்தான் என்
உயிர் மூச்சே இயங்குகிறது
அன்புள்ள அப்பா
நிலாவுக்கு சந்தோஷமாக இருந்தது. அப்பா தன்னை மறக்காமல் கடிதம் எழுதியிருக்கிறார்! பின்னர் அப்பாவின் கடிதங்கள் அடிக்கடி வந்தன.
ஒரு நாள் பெரியப்பா வீட்டுக்கு, அம்மாவுடன் நிலா சென்றிருந்தாள். பெரியப்பா அவர்களது தோட்டத்தில் மண்ணை வெட்டி வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு நாலு பிள்ளைகள். அந்த அக்கா, அண்ணன்மார் எல்லோரும் தோட்டத்தில் நின்று விளையாடிக் கொண்டிருந்தார்கள். நிலாவும் ஒடிப் போய் அவர்களோடு சேர்ந்து விளையாடினாள். பெரியப்பா அடிக்கடி பிள்னை களோடு சத்தம் போட்டுக்கொண்டு தன் வேலையில் ஈடுபட்டிருந்தார். “விளையாட்டை விட்டிட்டு புல்லைப் பிடுங்குங்கோ. பிள்ளையன்” புல்லைப் பிடுங்கிக் குவிப் பதே நல்ல விளையாட்டாக இருந்தது. அவர்கள் தங்களது அப்பாவுடன் விளையாடி விளையாடிப் புல்லைப் பிடுங்கினார்கள்.
அவர்கள் வீட்டில் சில மாடுகள் இருந்தன. கன்றுக் குட்டிகள் துள்ளி விளையாடின. நிலாவுக்கு வீட்டில் தன்னுடன் விளையாடுவதற்கு. கன்றுக்குட்டிகளுமில்லை ஒருவருமில்லை என்ற உணர்வு அரும்பி மறைந்தது.

Page 54
சுதாராஜ் 0 83 பெரியப்பா வேலையை இடையில் நிறுத்திவிட்டுவந்து அம்மாவுடன் கதைத்துக் கொண்டிருந்தார். பிள்ளைகள் தோட்டத்திலிருந்து ஓடிவந்து அவரது வியர்த்த தேகத்தில் கட்டிப்பிடித்து விழுந்த விளையாடினார்கள்.
அவர்கள் வீட்டிலிருந்து திரும்பிய போது பெரியப்பா நிறையக் காய்கறிகள் பிடுங்கி அம்மாவிடம் கொடுத்து விட்டார். வரும்போது நிலா அம்மாவிடம் கேட்டாள்.
“எங்கட அப்பா. எப்ப agaitř?" く
“egrouTubonit?”
“எனக்கு. எங்கட அப்பாவிலை விருப்பம்” அம்மா பேசவில்லை. நிலா மீண்டும் கேட்டாள்; “எங்கடி அப்பா. எப்ப வருவார்?" அம்மா பிள்ளையின் முகத்தைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
:: இரவு அம்மாவின் பக்கத்திலிருந்து சாப்பிடும் போது நெடு நேரமாக அம்மா, எதுவும் பேசாமல் சாப்பாட்ட்ை மெல்ல மெல்ல மென்றுகொண்டிருப்பதை பிள்ளைக் கவனித்தாள். நிலாவும் ஒவ்வொரு பருக்கையாகச் சோற்றைக் கொறித்துக்கொண்டு அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மாவுக்கு சாப்பாடு இறங்கவில்லைப் போலும் அந்த மெளனம் நிலாவுக்கு ஒருவித கவலையை ஊட்டியது.
"அம்மா! . நீங்க. அப்பாண்ட நினைவிலையா,
சாப்பிடுறீங்கள்?"
அம்மா நிலைகுலைந்து நிலாவைப் பார்த்தாள். பிறகு, மென்மையான குரலில் சொன்னாள்.
"ஓம்! -'ஏன் கேட்ட்னிங்கள்?”
"சும்மாதான்!”
அம்மா கண்கள்:சிவக்கக் கேட்டாள். riஃமூளுைழு

87 0ே தெரியாத பக்கங்கள்
"நீங்களும் அப்படியா" "ஓம்"என்றவாறு மென்மையாக சிரிப்பைக் காட்டி னாள் நிலா: அம்மா பிள்ளையைச் சமாதானம் செய்து படுக்கைக்கு கூட்டி வந்தாள். நிலா உறங்குவதற்காக அம்மா வின் மடியில் படுத்தாள். அம்மாவின் கை பிள்ளையைத் தட்டிக் கொடுத் தது. நீண்டநேரமாக பிள்ளைக்கு உறக்கம் ரவில்லை. அம்மா பாட்டுப் பாடவும் இல்லை. அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள். அம்மா கையில் சில தாள்களை வைத்து வாசித்துக் கொண்டிருந்தாள்.
"அப்பாண்ட காயிதமா?” அம்மா நிலாவைப் பார்த்து "ஓம்" எனப் புன்சிரித்த வ்ாறு தொடர்ந்தும் கடிதத்தை வாசித்தாள். நிலா இடையிடையே நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தாள். ” ” *** -- ༈ ༢༣:༡༣, ༣ 33 :་ : : آمنی w "அப்பா அங்கையிருந்து. அழுது. அழுது. கடிதம் எழுதியிருக்கிறார்” என நிலாவுக்கு அம்மா சொன்னாள். நிலா துடித்துப்பதைத்து எழுந்து உட்கார்ந்தாள்ஃ. "ஏன் அப்பா அழுறார்?. 'உங்கள்ை' நினைச்சுத்தான்! உங்களை விட்டிட்டு அப்பாவுக்கு தனிய இருக்கேலாதாம்!”
"அப்பா ஏன் அங்க தனிய இருக்கிறார்?" “காசு உழைக்க”
"grair?'
“உங்களுக்காகத்தான்!” நிலாவுக்குப் புரியவில்லை. எல்லாம் ஒரே குழப்பமாக இருந்தது. அம்மாவிடம் கேட்டுப் பார்த்தாள்.
“ørøör sntesi?”

Page 55
சுதாராஜ் 0 88
“உங்களுக்கு. சாப்பிட. மில்க் குடிக்க. புத்தகம் வேண்ட. வீடு கட்ட எல்லாத்துக்கும் காசு தேவைதானே?" நிலாவின் கண்கள் கலங்கிசிசிெவந்தன. சொண்டு துடிதுடித்தது. பெரிதாக மூச்சை இழுத்து நெஞ்சுக்குள் அடக்கினாள். விசும்பல். மெல்ல, மெல்ல விம்மி வெளிப் பட்டது. இமைகளில் மூட்டிய கண்ணிர் கொட்டியது.
“grootbpr?”
அம்மா கவனித்துவிட்டு பிள்ளையின் கன்னத்தைத் தடவியவாறு கேட்டாள்.
அதற்கு மேலும் அடக்கமுடியாமல் அழுகை நெஞ்சிலிருந்து உடைந்து வந்தது. மூச்சடக்கி அழுதவாறு அம்மாவின் மடியில் முகம் புதைத்தாள் நிலா.
அம்மா ஆதரவாகப் பிள்ளையை அனைத்துக் தடவிக் கொடுத்தாள். அழுகை குறைந்து வர, பிள்ளைக்கு உறக்கம் தழுவியது. அம்மா நிலாவின் முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள். விம்மலுக்கிடையே பிள்ளை சொன்னாள்.
“எனக்கு அப்பாதான் வேணும்"
(சிரித்திரன் 1992)

மனோதர்மம்
மூச்சு வாங்க வாங்க சைக்கிள் பெடலை மிதித்தார். விரைவாக வீட்டுக்குப் போகவேண்டும். வயதான மனைவி பின் நினைவுகள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. நோய் நிலைமை எப்படியோ. ஏதாவது சாப்பிட்டிருப் unrCarnrt
மருமகள் ஏதோ ஒரு வழி பார்த்து சாப்பாடு கொடுத்திருப்பாள் எனச் சமாதானமடைய முயன்றார். அடுத்த கணமே துணுக்குறும் மனசு, பாவம், அவள்தான் என்ன செய்வாள்? தன் மூன்று குஞ்சுகளின் வயிற்றுப் பாட்டையும் பார்க்க முடியாமல், தானும் மெலிந்து எலும்பும் தோலுமாகப் போனாள். பிள்ளைகளின் பட்டினி யைத் தாங்காமல் அவள் அடிக்கடி சொல்வதும் நினைவில் வந்தது.
"நாங்கள் தான் பெரியாக்கள் எப்படியாவது கிடக்கலாம் சின்னஞ்சிறுசுகள் என்ன செய்யும்?”
எவ்வளவு இலகுவாகச் சொல்லியாயிற்று. பெரிய ஆட்கள் எப்படியாவது கிடக்கலாம் என்று! எப்படிக் கிடப்பது? சைக்கிள் பெடலை மிதிக்க மிதிக்க இழைக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி வரை போய்த் திரும்புவதற்குள் பதினைந்து இருபது மைல் வரை அலைந்திருக்கிறார். 1
அப்புவுக்கு எழுபத்திரண்டு வயதானாலும் தளரா திருந்த மேனி. வேலை செய்து இறுகிய உடம்பு. இப்போது ஆட்டம் காண்கிறது. ஊட்டச்சத்து இல்லை. அன்றாடம் ஒருவேளை சாப்பிடக் கிடைப்பதே பெரிய புண்ணியம், பசி மயக்கம் கால்களுக்கு நடுக்கத்தைக் கொடுக்கிறது. தலை சுற்றுகிறது. எதிலாவது சற்றுப் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும். இளைப்பாற வேண்டும்.

Page 56
சுதாராஜ் 0 90
“ஏதாவது பாத்துக்கொண்டு வாறன்" எனக் காலையில்
புறப்பட்டு வந்தவருக்கு ஒரு இடத்திலும் பணம் புரளு வில்லை.
மனைவியின் நோய் பரிகாரம் செய்யப்படாமல் நாளுக்கு ஒரு வியாதியாகப் பரிமாணம் எடுக்கிறது. மூச்செடுக்கக் கஷ்டப்படுகிறாள். நெஞ்சுவலி. இருக்க, எழும்ப் யாராவது பிடித்துவிட வேண்டியுள்ளது. மிக முயன்று ஒவ்வொரு அடியாக அளந்து வைப்பது போலத்தான் நடக்கிறாள்:
இப்படிய்ே விட்டால் என்ன செய்யுமோ என அவருக் குப் பயமாக இருக்கிறது. ஒருவேளை தன்னைவிட்டு அவள் போயே போய்விடுவாளோ?
நல்ல ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் அவளைக் காட்டி வேண்டும். மருந்து எடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும்!
பல இடங்களிலும் அலைந்து, இறுதி முயற்சியாகத் தான் வேலை செய்யும் தோட்டக்காரரிடம் போனார்.8
“என்ன அப்பு: இந்த நேரம்?" விஷயத்தைச் சொன்னாt “ஒரு நூறு ரூபாய் தந்தியளெண்டிால். பிறகு வேலை செய்யிறதிலை கழிச்சுவிடலாம்"
அப்படி ஒரு கதைக்குச் சொன்னாரே ஒழிய, சம்பளல் எடுக்கக்கூடிய அளவுக்கு அங்கே அவருக்கு வேலை கிடைப்பதே மிக அருமை.
"நாங்கள் என்ன செய்யிறது? நாங்களும் உன்னைப் போலத்தான். ஒண்டுக்கும் வழியில்லாமல் இருக்கிறம்: ரெண்டு மரவள்ளிக்கட்டையை இழுத்துக் கொண்டு GBun 66örf” o

91 )ே தெரியாத பக்கங்கள்
யாரையும். நோகமுடியாது. தோட்டக்காரர் கதியும் அதேதான்! செடிகளுக்கு உரமில்லை.அடிக்க மருந்தில்லை. நீர் பாய்ச்ச எண்ணெய் இல்லை. யுத்தம் எல்லோரையும் உலுக்கிக் கொண்டு தான் இருக்கிறது.
சாப்பாட்டுப் பிரச்சனையாவது இப்போதைக்குத் தீரட்டும் என மரவள்ளியை இழுத்து கரியரில் கட்டினார். சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஏற பெடலை மிதித்தார். வீட்டின் கேற்றைத் திறப்பதற்கு முன்னரே அழைப்புக் குரல் வந்தது.
"அம்ம்..ம்மா!”
இந்த மாடு எப்படி மோப்பம் பிடிக்கிறதோ:
மாட்டுக்கு வயிறாரத் தீனி போட்டி நாட்களெல்லாம் போய் விட்டன. ஒரு வாயில்லாச் சீவனைக் கட்டி வைத்து, ஒழுங்காகத் தீனி போடவும் முடியவில்லையே என்ற குற்ற மனப்பான்மை ஒரு பக்கம் அப்புவின் மனதை வாட்டுகிறது.
கேற்றைத் திறந்தார். "அப்பு. அப்பு. ஓடிவந்த பேரப் பிள்ளைகளைக் கையில் பிடித்தவாறே முற்றத்துக்கு சைக்கிளை உருட்டினார். கரியரில் இருந்த பார்சலைப் பிள்ளைகள் சோதனை போட்டன.
"பொறுங்கோ! பொறுங்கோ! எடுத்துத் தாறன்!”
மரவள்ளிக் கிழங்கைப் பிள்ளைகளிடம் கொடுத்து விட்டுத் திண்ணையில் கண் சிமிட்டிக் கொண்டிருந்த கைவிளக்கை எடுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டிற்பக்கம் நடந்தார்: •
“மாடும் பாவம் மனிசரும் unrajiż?” * அவர் மனநிலை உணர்ந்தவள் போல, மனைவி சொன்ன வார்த்தை 'நெஞ்சுச் சூட்டைத் தணிவிக்காமல் இன்னும் குமுற வைத்தது.

Page 57
கதாராஜ் 0 92
அவள் 'மணிசர்" என்று பொதுப்படையாகவே சனங் களின் கஷ்ட நிலையைக் குறிப்பிடுகிறாளா? வீட்டில் அரை வயிறு கால்வயிறுடன் போராடிக் கொண்டு நாட்களைக் கடத்தும் மனித ஜீவன்களைச் சொல்கிறானா? அவற்றின் வயிற்றை நிரப்புவதற்காக அல்லற்படும் தன் கணவனின் நிலையை எண்ணிப் பரிதாபப்படுகிறாளா. அல்லது நோயின் கடுமை தாங்காது தனக்காகவே வருந்துகிறாளா? அப்புவைக் கண்டதும் மாடு எழுந்து நிற்பதற்கு முயன்றது. அதன் கால்கள் உடலைத் தாங்கிக் கொள்ள முடியாதவை போல நடுங்கின. தென்னோலையை வெட்டிப் போட்டுவிட்டது போல விலா எலும்புகள் கீலம் கீலமாகத் தெரிந்தன. கால்கள், உடல், தலை எல்லாம் தனித் தனியாகப் பொருத்தப்பட்டவை போல. கேலிக்காகக் கீறிய சித்திரம் போல மாடு தோற்றமளித்தது.
அது அவரையே ஏக்கக் கண்களால் பார்த்துக் கொண்டு நின்றது. முறையிடுகிறது அதற்கும் பசி, அல்லது. ஏதாவது சுகவீனமாக இருக்குமோ? அதன் கண்களிலிருந்து வழிந்த நீர் தாடை வரை கோடிட்டிருந்தது. மாடு நாள் முழுதும் அழுதிருக்கிறது.
அப்புவின் வயிறு பற்றியெரிவது போலிருந்தது. இது மாடல்ல, பசு. வீட்டுக்கு லட்சுமி பதினேழு வருடங் களுக்கு முன்பாக இது ஒரு கன்றுக்குட்டியாக, வெள்ளை வெளேரென்று செல்லப் பிள்ளையாக வீட்டுக்கு வந்து சேர்ந்தது.
ஆரம்பத்திலிருந்தே மனைவிதான் ஆசைப்பட்டாள். “ஒரு மாடு வேண்டுங்கோ. வீட்டிலை பசு வளர்க்கிறது லட்சுமிகரம் பாலும் எடுக்கலாம்!
அன்றாடம் வேலைக்குப் போய் வந்து, வீட்டில் ஒரு மாட்டையும் வைத்துப் பராமரிப்பது கஷ்டம் எனப் பேசா மல் விட்டிருந்தார். ஐம்பத்தைந்து வயதில் உத்தியோகத் திலிருந்து ஓய்வு பெற்றதும் அந்த ஐடியா மீண்டும் தலை

93 0 தெரியாத பக்கங்கள்
தூக்கியது. அப்போது மகனுக்குக் கல்யாணமாகி மருமகளும் வீட்டோடு இருந்தமையால், பிள்ளைகளுக்குப் பால் தேவைப்பட்டது. ஒரு பசுவை வைத்துப் பராமரிப்பது தனக்கும் நல்ல பொழுது போக்காகவும் புண்ணியமாகவும் இருக்கும் என்று கருதினார்.
தனது பிள்ளையைப் போல அதைக் கவனிப்பார். அன்றாடம் குளிப்பாட்டுவார். மாட்டுக் கொட்டிலைத் தினசரி துப்புரவு செய்து, சாம்பிராணிப் புகை காட்டுவார். அதற்கு வயிறார உணவூட்டுவார். தடவிக் கொடுப்பார்.
"அது மாடு இல்லை. என்ரை மகள்" என்பார்.
மனைவி கேலியாக அவ்வப்போது சொல்வது கூட அவருக்குப் பெருமையாக இருக்கும்! “மனிசரைவிட மாட்டிலைத்தான் அவருக்குக் கவனம்கூட."
அந்த நாட்கள் நினைவில் வந்ததும் விம்மி அழ வேண்டும் போலிருந்தது. வீட்டுக்கு வந்ததிலிருந்து பன்னிரண்டு ஈற்றுவரை ஈன்று, இந்தக் குடும்பத்துக்குப் பால் கொடுத்து வளர்த்த தாய் அது! அதன கழுத்தை அணைத்துக் கொண்டு தடவினார்.
"இதென்ன, வந்த நேரம் முதல் மாட்டோடை பேசிக் கொண்டு நிக்கிறியள்?”
மனைவி பொறுமை இழந்து விட்டாள் என்பது தெரிந்தது. தோட்டத்திலிருந்து கொண்டு வந்த மரவள்ளிப் பழுத்தல் இலைகளை மாட்டுக்குப் போட்டுவிட்டு, வீட்டுத் திண்ணையை நோக்கி நடந்தார்.
“மாட்டுக்கு ஏதோ வருத்தம் போல இருக்கு காசு கிடைச்சுதெண்டால் மிருக வைத்தியரைக் கூட்டி வந்து காட்டலாம்!”
அப்படிச் சொன்னதிலிருந்து பணம் இன்னும் புரள வில்லை என்பதை மனைவிக்கும் உணர்த்திய மாதிரி யிருந்தது.

Page 58
சுதாராஜ் )ே -94
மனைவி எவ்வித அபிப்பிராயமும் தெரிவிக்காமல் மெளனமாக இருந்தான். திரும்பிப் பார்க்க அவளிடமிருந்து பதிலாக தொடர்ச்சியாக இருமலும் ஒரு பெருமூச்சும் வெளிப்பட்டன. a -
"விடியட்டும். எப்பிடியாவது காக் பிரட்டிக் கொண்டு ஒவாறன். டொக்டிரிட்டிைக் காடிடலாம்!”
காலை மலர்வது சற்று உற்சாகத்தைத் தருவது போலிருந்தது. இரவு முழுவதும் உறங்காமலிருந்த அசதி கலைவது போல் இருந்தது.
தொலைவில் ஒரு குயிலின் குரல் கேட்டது. பிறகு அண்மையாக வந்திருந்தது. அண்மையாக வந்திருந்து கூவியது. குயில்கள் தூரத்திற் கூவினாலும் கேட்க இன்ப மாயிருக்கும். முன்னரென்றால் குயிலுடன் போட்டி போட்டுக் கொண்டு பேரனைக் கூவச் சொல்வார். காலை யில் அந்த விளையாட்டு நல்ல குதூகலமாக இருக்கும். இப்போது அப்படிக் குதூகலம் இல்லை. மனசு சோகத்தில் மூழ்கியிருக்கும்போது குயில்களின் கீதம்கூடச் சோகமாகத் தான் கேட்கிறது.
மாத்தில், அண்மையில் பாடிக்கொண்டிருந்த குயில் அவலக் குரலெழுப்பியவாறு. வெருட்சியடைந்து பறந்தது. பெரிதாக இரைந்து வரும் ஒசை, முற்றத்தில் இறங்கி அண்ணாந்து பார்த்தார். பொம்பர்! V
அவரைக் கண்டதும் மாடு குரல் கொடுத்தது. "அம்ம்..ம்மா."
மாட்டடிக்குப் போய்ச் சாணத்தை ஒதுக்கித் துப்புரவு செய்தார். மாடு எழுந்து நின்றது. தென்னம்பிள்ளையில் ஒரு ஒலையை வெட்டிப் போட்டார். ஆவலுடன் ஒலை யைக் கடித்துச் சாப்பிடும் மாட்டை நெடுநேரமாகப் பார்த்துக் கொண்டு நின்றார். பிறகு, கிணற்றடிக்குப் போய்ச் செடிகளுக்கு நீர் பாய்ச்சினார்.

95 0 தெரியாத பக்கங்கள்
மனது எங்கெல்லாமோ ஓடியது. தனக்குத் தெரிந்த ஒவ்வொரு நண்பராக, நடராக நினைவுகூர்ந்தார். ஒரு நூறு ரூபாயாரிடமாவது மாற முடியுமானால் போதும். பெரிய காரியம்! ஸ்பெஷலிஸ்ட் டொக்டருக்கு ஐம்பது ரூபா தேவைப்படும். "பயப்படுவதுக்கு ஒன்றுமில்லை' என்று டொக்டர் சொன்னால் ஆறுதலாயிருக்கும். பாக்கிப் பணத்தில் மாட்டு வைத்தியருக்கு இருபது கொடுக்கலாம். முப்பது ரூபாவுக்கு அரிசி வேண்டலாம்.
அவரது சிந்தனையைக் குலைப்பது போல் வீட்டுக் குள்ளிருந்து அழுகுரல். ‘ஓ’ வென் கேட்டது. வாளித் தண்ணிரை அப்படியே போட்டுவிட்டு ஓடினார்.
பேரப்பிள்ளை குளறக் குளற முதுகில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான் தாய்.
"என்ன பிள்ளை? விடு விடு பிள்ளையளை இப்பிடியா போட்டு அடிக்கிறது?"
மருமகளின் ஆற்றாமை வெளிப்பட்டது. “மனிச்ர் படுகிற கஷ்டத்திலை. நினைச்ச'சாப்பாடு வேணுமெண்டு நின்றால் நான் என்ன செய்யிறது? விடிய எழும்பின நேரம் முதல். ‘புட்டு அவியுங்கோ. புட்டு அவியுங்கோ! ன்ண்டு நாண்டுகொண்டு நிக்கிறான். சொன்னாற் கேட்டாத்தானே?
"அதுக்கு என்னம்மா செய்யிறது? பிள்ளையஞக்கு எங்கட் கஷ்ட்ம் தெரியுமா?" :
"நான் என்ன கொடுமை செய்தன்? நான் என்ன கொடுமை செய்தன்?" அவள் குசினிப் பக்கம் திரும்பி, தலை தலையென அடித்துக் குமுறிக் குமுறி அழுதாள்.
அப்புவுக்கு அவளது நி பூப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

Page 59
சுதாராஜ் 0 96
அவளது கணவன் - அவரது மகன் இறந்துபோன அன்றும் இவ்வாறுதான் கதறினாள். நாட்டு நிலைமை களால் வேலையற்றுப் போயிருந்தவன், தோட்டங்களில் சென்று காய்கறி கொள்வனவு செய்து, காலையில் சந்தை யிற் கொண்டு போய் விற்பதைத் தொழிலாக மேற்கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தான். இப்படி ஒருநாள் அதி காலையில் எழுந்து, பிள்ளைகளின் முகத்தைக் கூடப் பார்க்காமல் போனவன், போனவன்தான். சந்தைக்கு அருகாமையில் பொம்பர் குண்டு வீசிய செய்தியறிந்து ஓடியவளுக்கு. அவனது சிதறிப்போன உடல்தான்.
"நான் என்ன கொடுமை செய்தேன்? நான் என்ன. கொடுமை செய்தேன்?”
அவளுக்கு யார் என்ன பதிலைச் சொல்ல முடியும்?
“சரியம்மா! அழாதை. இது உனக்கு மட்டுமா? ஊரோடை ஒத்ததுதானே!"
நூறு ரூபா கிடைத்தாலே போதும் எனக் காலையில் எண்ணியிருந்தவருக்கு, இருநூறு ரூபாயாவது பிரட்ட வேண்டும் என்று இப்போது தோன்றியது. மாவு வேண்டி வந்து, பிள்ளைகளின் விருப்பப்படி சாப்பாடு செய்து கொடுக்கலாம். அதுகளும் எத்தனை நாட்களுக்குத்தான் பச்சரிசிக் கஞ்சியையும் மரவள்ளிக் கிழங்கையும் தின்று கொண்டிருப்பது?
இருநூறு ரூபாய்! எந்தப் புண்ணியவான் தருவான்? Lurrrfhib GBL untesGunTib.
சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.
"அம்ம்..ம்மா."
மூச்சு வாங்க பெடலை மிதித்தார். எந்தப் பக்கம் போனது எனத் திசை தெரியாமல் ஒட்டினார்.

97 0 தெரியாத பக்கங்கள்
மாலை நேரமாக அப்பு வீட்டுக்கு வந்தார். எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அப்பு. அவருடன் இன்னுமொருவர் அவரை அழைத்துக் கொண்டு அப்பு மாட்டுக் கொட்டிற் பக்கம் போனார். திண்ணையில் நின்ற மனைவியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே அப்பு நடந்தார்.
“கண்டியே பிள்ளை! இவருக்கு மனிசரைவிட மாட்டி லைத்தான் கவனம் எண்டு சொல்லுவன்! அது பொய்யே? காசு எங்கையோ பிரண்டிட்டுது போல. இவ்வளவு பிரச்னையஞம் இருக்க. மாட்டுக்கு வைத்தியரைக் கொண்டு வந்திட்டார்.”
வந்தவர், மாடு எழுந்து நிற்பதற்கு உதவி செய்து அதன் விலா எலும்புகளையும், கழுத்தையும், வயிற்றையும் பிடித்துப் பரிசோதித்தார். அதன் இடுப்பில் ஒருமுறை தட்டினார். அப்போது மாடு மேனியைச் சிலிர்த்தது. பின்னர் அப்புடன் கதைத்துக் கொண்டே போனார். “பிறகு வாறன்!”
அவரை வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்த அப்புவிடம் மனைவி கேட்டாள்.
"ஆராள். வந்திட்டுப் போறது?” "யோசேப்பு!” "மாட்டு வைத்தியம் பாக்கிற ஆளோ?” 'இல்லை மார்க் கட்டிலை இறைச்சிக்கடை வைச்சிருக்கிற யோசேப்பு'
ஒர் அசாதாரண நிலைமை ஏற்படுவதை உணர்ந்தவர் போல, மனைவியின் முகத்தை உன்னித்து நோக்கினார். அந்த முகத்தில் ஒர் எரிமலை பொங்குவது தெரிந்தது.
"அது கிழண்டிப் போச்சு! இனி வைச்சிருந்து ஒரு

Page 60
சுதாராஜ் 0 98
பிரயோசனமும் இல்லை" - அப்பு சமாளிப்பாகக் கூறினார். எரிமலை வெடித்தது.
அப்பு நடுங்கிப் போனார். அக்கிரமங்களை அழித் தொழிக்கும் துர்க்கா தெய்வமே தன்முன் தோன்றியதைப் போலப் பக்தி பெருகியது. கைகளை உயர்த்திக் கூப்பினார்.
"அம்ம். ம்மா!
(ஆனந்தவிகடன் 1993)

போகும் இடம்
கடைசியாக, அம்மா கொழும்புக்கு வந்து சேர்ந்தாள். கடைசியாக என்று சொன்னால், அம்மா தனது வாழ்க்கை யின் கடைசி கட்டத்தில் கொழும்புக்கு வந்து சேர்ந்தாள் என்று அர்த்தமல்ல. ஒரு வகையில் பார்க்கப் போனால் இது அவளது வாழ்வின் கடைசிக் காலமும் தான்!
சரிக்கு சரி நாலு ஆண்களும் நாலு பெண்களுமாக எட்டுக் குஞ்சுகளை பெற்றவள் அம்மா. 'பிள்ளைகள் வளர்ந்து ஆளாவதைப் பார்க்க முன்னரே மனிசன் போய்ச் சேர்ந்திட்டுதே' என்ற கவலையும் ஏக்கமும் அம்மாவுக்கு எப்போதும் உண்டு. எனினும் அப்பா இல்லாத குறையே தெரியாமற் தான் பிள்ளைகளை வளர்த்தவள் அம்மா. வளர்ந்து ஆளானதும் பிள்ளைகள் அம்மாவை விட்டு பறந்து போயின. ஒரு பிள்ளையின் நல்ல காரியத்தை யேனும் அம்மாவுக்கு பார்க்கக் குடுத்து வைக்கவில்லை. பார்சலில் அனுப்பவது போல பெண்பிள்ளைகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்பவேண்டியதாயிற்று!
இத்தனை பிள்ளைகளைப் பெற்று வைத்துக்கொண்டு அம்மா எத்தனையோ கனவுகளைக் கண்டிருக்கிறாள். ஒரு காலத்தில் எல்லாம் பெற்றுப் பெருகி தன்னைச் சூழ இருப்ப தையும், பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சிக்குலவுவதையும் கற்பனைக் காட்சிகளாகக் கண்டிருக்கிறாள். இப்போது போட்டோக்களில் மட்டும்தான் அவர்களை காண முடிகிறது.
கனடாவில், ஜேர்மனியில், பிரான்சில் இருந்தெல்லாம் கடிதங்கள் வரும். அன்புள்ள அம்மாவுக்கு - அம்மா வீட்டோடு தனிய இருப்பது பிள்ளைகளுக்கு கவலையாம். நாட்டுப் பிரச்சனைகள் இவ்வளவு மோசமாக இருப்பதால் - அம்மாவின் பாடு எப்படியோ என்று யோசனையாக இருக்கிறதாம். வடபகுதிக்குச் சாப்பாட்டுச்சாமான்கள் வரத்

Page 61
சுதாராஜ் 0 100
தில்லை. விமானங்கள் குண்டு வீசுகின்றன. இனிமேலும் இருந்து கஷ்டப்படாமல் எப்படியாவது 'அந்தப் பக்கம்' வந்து விட்டால் நிம்மதியாக இருக்கலாமாம்.
அம்மாவின் மனது இதற்கெல்லாம் மசியாமற்தான் இருந்தது. இந்த ஊரையும் வீட்டையும் விட்டு அம்மா போக மாட்டாள். “நீங்கள் எங்கையெண்டாலும் நல்லாயி ருங்கோ பிள்ளையன். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என ஒவ்வொரு முறையும் பதில் எழுதுவாள்.
என்ன நேர்ந்ததோ. பிள்ளைகளை காணாமலே கண் களை மூடிவிடுவேனோ என்ற பயம் அம்மாவுக்கு தோன்றத் தொடங்கியது. அந்த நினைவில் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. இந்தக் கடைசி காலத்திலாவது பிள்ளை களுடன் போயிருக்கலாமே என்ற ஆசை முளைவிட்டது.
கொழும்பிலிருக்கும் மூத்த மகன் ஊருக்கு வருகிறவர் களிடம் கடிதங்கள் கொடுத்து விடுவான் - தம்பிமார் தங்கைமார் ரெலிபோனில் கதைக்கிறவர்களாம். 'அம்மா கொழும்பிலாவது வந்து நின்றால் பிறகு தங்களோடு கூப் பிட்டுக் கொள்ள வசதியாக இருக்குமென்று. அவர்கள் யாரும் ஊரோடு வரப்போவதில்லை. தானாவது போய்ச் சேர வேண்டியதுதான் - கொழும்புக்கு போனால் மூத்த மகனின் பிள்ளைகளையாவது பார்க்கலாம் என, அம்மா கடைசியாகத் தன் மனதை மாற்றிக்கொண்டு இந்த தள்ளாத வயதில் கொழும்புக்கு வந்து சேர்ந்தாள்.
மூத்த மகன் கட்டியது முறை மாமியின் மகளைத்தான். மாமி குடும்பத்தினர் கன காலத்துக்கு முன்னரே கொழும் பில் செற்றில்ட் ஆன ஆட்கள். மாமியின் மகளைக் கட்டிய தால் மகனின் வாழ்க்கையும் கொழும்போடு சேர்ந்து விட்டது.
அம்மாவைக் கண்டதும் கொழும்பு மாமி ஆரத் தழுவினாள். மருமகள் ஓடிவந்து கட்டியணைத்துக்கொண்டு கண்கள் கலங்கினாள்.

101 0 தெரியாத பக்கங்கள்
“எப்படி மாமி இதுக்குள்ளாலை வந்து சேர்ந்தனீங்கள். சரியான கஷ்டமாமே?”
“வள்ளத்திலையெல்லாம் வரவேணுமாமே..? சரியான சேறும் சகதியுமாம்! நீங்களும் அப்படியா வந்தினிங்க?" என கேட்டு மாமி, அருவருப்புணர்வில். சீவியத்திலே சேறையும் சகதியையும் காணாத மனிசியைப் போல முகத்தைச் சுழித்தாள். மகன் அம்மாவைக் கண்டதும் 'கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்தார்.
அம்மாவை எல்லோரும் விசித்திரமாக. அல்லது ஏதோ சாதனை புரிந்தவரை பார்க்கிற பிரமிப்புடன் பார்த்தார்கள். அவர்களை பொறுத்த வரை இத்தனை குண்டு வீச்சுகளுக் குள்ளும் இவ்வளவு காலமும் நிண்டுபிடித்து, இந்தப் பாதை யால் வந்து சேர்ந்தது எல்லாமே சாதனைகள்தான்.
அம்மாவின் வருகையால் எல்லோரும் மகிழ்ச்சி பரவசத் தில் ஆழ்த்தப்பட்டார்கள் போற் தோன்றினார்கள். அம்மாவுக்காக விசேடமாகச் சமையல் செய்யப்பட்டது. சாப்பாட்டை மேசையிற் கொண்டுவந்து படைத்தார்கள். அம்மாவை கதிரையில் அமரச் சொன்னார்கள். மாமி, மருமகள், மகன் பிள்ளைகள் எல்லோரும் வட்டமாக அமர்ந்தார்கள். அம்மாவுக்குச் கூச்சமாக இருந்தது. மகனும், மருமகளும், நான், நீ என முந்திக் கொண்டு அம்மாவுக்கு பரிமாறினார்கள்.
அம்மா தேடுவாரில்லாமற் கிடந்தவள். நினைத்த நேரம் சமைப்பாள். நினைத்த நேரம் சாப்பிடுவாள். யாரும் சாப் பிட்டாயா, கிடந்தாயா என்று கூடக் கேட்பதில்லை. சோற்றுக் கோப்பையை கையிலேந்தி சுவரோடு சாய்ந்து முழங்கால்களை மடக்கி அடக்கமாக இருந்தவாறு உண்பாள். இப்போது இந்த அபரிதமான கவனிப்பும், கதிரையும் அம்மாவுக்கு கூச்சமாக இருந்தது.
“விடு பிள்ளை. நான் போட்டுச் சாப்பிடுகிறேன்!”

Page 62
சுதாராஜ் 0 102
அவர்கள் விடுவதாயும் இல்லை. அம்மாவுக்குச் சாப்பாடு இறங்குவதாகவும் இல்லை.
வீட்டில் நடக்கும் கூத்துக்களைப் பார்த்தால் அம்மா வுக்கு இந்த லோகத்திலா இருக்கிறோம் என எண்ணத் தோன்றியது. ஒவ்வொரு தேவையும் ஒவ்வொரு சுவிச்சைப் போடக் கிடைக்கிறது! அடுப்புக்கு விறகு தேடிக்கொண்டி ருக்கத் தேவையில்லை. ஒரு சுவிச்சைப் போட்டு கறி சமைக்கலாம். 'பாத்றுாமை' எப்படிப் பாவிப்பது எப்படி "ஃப்ளஷ்" பண்ணுவது என்றெல்லாம் மருமகள் காட்டித் தந்தாள். அம்மாவுக்கு இதெல்லாம் ஒத்துவருமா என்று சந்தேகமாக இருந்தது. கிணற்றிலே வாளியால் அள்ளிச் சோரக் குளிப்பது போல் வருமா?
அம்மாவுக்குக் கொழும்பு கைலாயபுரியைப் போல இருந்தது. அம்மா கைலாயபுரிக்கு போனவளல்ல. அவளது ஞானத்துக்கு எட்டியவரை கைலாயபுரி என்பது சகல செள பாக்கியங்களும் நிறைந்த இடம். பகலைப் போல வெளிச்சம் இரவிலும் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.
ஊரின் இருள் சூழ்ந்த இரவுகளுடனும், பொழுதுபடு முன்னர் அடங்கிப் போகும் வாழ்க்கையுடனும் இந்த இரவாகியும் முடியாத பொழுதுகளை ஒப்பிட்டுப் பார்க் காமல் இருக்கமுடியவில்லை. அம்மாவின் மனதில் இன்ன வென்று புரியாத ஒருவித சோகம் நெருடுவது போலிருந்தது.
- ‘அம்மாவுக்கு நல்ல படமொன்று போட்டுக் காட்டுங்கோ” என மாமி சொன்னாள். வீடியோவும் ரீவியும் அம்மா காணாத விசயங்களாயிருக்கும் என்று ஒரு விளை யாட்டுணர்விற்தான் மாமி இப்படிக் கூறினாள். 'அம்மா குண்டு வீச்சுக்கள், சண்டைகள் நடந்த இடங்களில் இருந்த மையால் மன அதிர்ச்சியடைந்திருக்கக்கூடும். இப்படிப் படம் பார்ப்பது போன்ற வேறு பிராக்குகளில் ஈடுபட்டால் மனம் இலகு அடையும்’ என்று மருமகள் உற்சாகமாக படத்தைப் போட்டாள்.

103 0 தெரியாத பக்கங்கள்
சிம்மாசனத்தில் அமர்ந்திருப்து போல நெடுநேரம் கதிரையில் அமர்ந்திருப்பது அம்மாவுக்கு கஷ்டமாய் இருந்தது. கால்களை மடக்கிக்கொண்டு சுவரோரமாக சாய்ந்து இருப்பதிலுள்ள சுகம் இதில் இல்லை. தேவையான போது கால்களை நீட்டலாம் - மடிக்கலாம். அம்மாவுக்கு நாரிக்குள் பிடிப்பது போலிருந்தது.
"நான் கீழை இருக்கிறன். பிள்ளை” எனத் தனது ஆசையை மெல்ல வெளியிட்டாள்.
இதைக் கேட்டு மாமி துடித்துப்பதைத்துப் போனாள்.
“நல்ல கதை பேசுறிங்க! . யாராவது பாத்தின மெண்டால் என்ன நினைப்பினம்?. வெளிநாட்டுக்குப் போனால் கதிரையிலே தானே இருக்கவேண்டி வரும்? இப்பவே இருந்து பழகுங்கோ"
நீண்ட நேரமாக அப்படியே இருக்கமுடியவில்லை. படமும் முடியாமல் நீண்டு கொண்டிருந்தது. அம்மாவின் கால்கள் விறைப்பெடுத்தன. அக்கம் பக்கம் பார்த்தாள். எல்லோரும் படத்தில் லயித்துப் போயிருந்தார்கள். ஒரு காலை மெல்ல மடக்கி கதிரை விழிம்பில் பாதத்தை பதித்தாள்.
மாமிக்கு இதற்கொரு நேரம் தேவைப்படவில்லை. எப்படிக் கண்டாளோ! சற்றும் தாமதியாமல் மருமகனிடம் முறையிட்டாள்; “உங்கட அம்மா செய்யிற வேலையைப் பாருங்கோ” மகன் தனது மானமே பறிபோனவன் போல,
“என்னம்மா இது? , டீசன்ராய் இருக்கத் தெரியாதே! கதிரை என்னத்துக்கு உதவும்?. காலை கீழை போடுங்கோ" என்றார்.
பிள்ளைகளின் செளகரியத்துக்காக அம்மா எத்த னையோ தியாகங்களைச் செய்திருக்கிறாள். இது என்ன பெரிய விசயம்? மகனின் சந்தோசத்துக்காக அம்மா காலை கீழே போடவும் தயார். தலையைக் கீழே போடவும் தயார்.

Page 63
சுதாராஜ் 0 104
காலையில், அம்மா வீட்டு நினைவுகளில் ஆழ்ந்து போயிருந்தாள். ஊரில் எதையோ விட்டு வந்ததைப் போன்றதொரு தவிப்பு மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. அப்போது மிகப் பதிவாக ஒரு பிளேனின் இரைச்சல் கேட்டது. அம்மா பதறிக்கொண்டு எழுந்தாள்.
“பிள்ளை. பிள்ளை பிளேன். பிளேன்! பிள்ளையஸ் எங்கை?” என ஒடிப்போய் பேரப்பிள்ளைகளைத் தூக்கி னாள்.
இதைப்பார்த்து வீட்டில் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
“என்ன மாமி? இன்னும் ஊரில இருக்கிறதாய் நினைவோ?’ என மருமகள் கேட்டாள்.
“பிளேன் இஞ்சை ஒண்டும் செய்யாது. பயப்பிடா தேயுங்கோ" என மாமி சொன்னாள். அதில் ஒருவித ஏளனம் தொனிப்பது போலுமிருந்தது.
எனினும் மாமி சொன்னது பெரிய உண்மை என அம்மா நினைத்தாள். பறவை பறக்கும்போது எச்சமிட்டுச் செல்வதுபோல. ஓர் இலக்கில்லாமல் எத்தனையோ குண்டு களை விமானம் அங்கே போட்டிருக்கிறது. அப்படி இந்தப் பக்கங்களில் அது ஒரு போதும் குண்டு போடாது என்பது உண்மைதான். தென்பகுதிகளிலும் தீவிரவாத பிரச்சனைகள் இருப்பதாக பத்திரிகை செய்திகள் சொல்வது அம்மாவுக்குத் தெரியும். அப்படிச் சொல்லிக் கொண்டு இங்கெல்லாம் விமானம் குண்டு போடத் துணியுமா? அம்மா கற்பனை செய்து பார்த்தாள். விமானங்கள் சுற்றிச் சுற்றி வந்து குண்டு போட்டதால் இந்த மக்களெல்லாம் எப்படிக் கதி கலங்குவார்கள்! அலுவலகங்களெல்லாம் அல்லோல கல்லோலப்பட்டு ஸ்தம்பித்து விடும் குண்டுபட்டுச் சிதறிப் போனவர்களை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் மார்க்கெட் கூடுவது போல இங்கு கூடாது! குண்டு எந்தப் பக்கம் விழக்கூடும் என அண்ணார்ந்து பார்த்துக்கொண்டே

105 0 தெரியாத பக்கங்கள்
சைக்கிளில் போகும் துணிவு இங்கு யாருக்கும் வராது.
- அம்மாவுக்கு சற்று குழப்பமாக இருந்தது. எல்லா விசயங்களையும் ஏன் ஊர் நிகழ்வுகளோடு மனம் ஒப்பிட்டுப் பார்க்கிறது என நினைத்தாள். ஊரிலிருந்து வந்து விட்டாலும் தான் இன்னும் அங்கிருந்து விடுபட வில்லையா? அல்லது ஊரில் மக்கள் படும் அவலத்தை எண்ணி மனம் கலங்குகிறதா? அல்லது. ஒரு தேசம் என்று சொல்லிக்கொள்பவர்களின் இரு வேறுமாதிரியான நடைமுறைகளைக் கண்டு மனது தாங்கவில்லையா?
அம்மா யோசனையிலாழ்ந்தாள். பிளேனைக் கண்டு அம்மா பயந்து போய்விட்டாள் என்றே மருமகள் கவலைப் பட்டாள்.
"யோசியாதையுங்கோ! இனியென்ன. வெளிநாட்டுக்கு பிள்ளையளிட்டைப் போயிட்டால் இந்தப் பயம் ஒண்டு மில்லைத்தானே?"
கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற இடங்களிலுள்ள பிள்ளைகளுக்கு அம்மா கொழும்பு வந்து நிற்கும் செய்தி சொல்லப்பட்டதால் எல்லோரும் அடிக்கடிரெலிபோனில் கதைத்தார்கள். ஒவ்வொருவரும், தங்களோடு அம்மா வந்து இருக்க வேண்டுமென்றும், கடைசிக்காலம் வரையும் அம்மாவை ஒரு குறையும் இல்லாமல் வைத்துப் பார்ப்ப தாகவும் சொன்னார்கள். பிள்ளைகளின் அன்பில் அம்மா திளைத்தாள். ஒரு கதைக்குச் சொல்வதானால் கொழும்புக்கு வந்த நாள் முதலே அம்மாவுக்கு ஒருவித அன்புத் தொல்லைதான். அடுத்த வேளைக்கு என்ன செய்யலாம் என்று தலையைப் போட்டுடைக்கத் தேவையில்லை. நேரத் துக்கு நேரம் சாப்பாடு கிடைக்கிறது. தேநீர் கிடைக்கிறது. எனினும் அம்மாவுக்கு எதையோ இழந்துவிட்ட குறை. அது என்ன? அது என்ன?
அம்மாவுக்குச் சும்மா இருந்து பழக்கமில்லை. இந்த அறுபத்தெட்டு வயதுவரை அது அவளுக்கு சாத்தியப்பட

Page 64
சுதாராஜ் 0 108
வுமில்லை. பிள்ளைகளை பெற்று வளர்த்த காலங்கள் அம்மாவுக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதிகாலை நாலு மணிக்கே எழுந்துவிடுவாள். நாள் முழுவதும் ஓயாத வேலையில் மாய்ந்து. படுக்கைக்கு போக இரவு பன்னிரண்டு. ஒரு மனிையாகிவிடும். தனது வாழ்க்கையில் ஒய்வு என்பது வரவே வராதா என ஏங்கியிருக்கிறாள். இப்போது அம்மாவுக்கு ஒரு வகையில் ஒய்வுதான். சும்மா இருப்பது, ஆனால் இது அம்மாவுக்கு சுகமாயில்லை. தனது உயிர் வாழ்வுக்காக இன்னொருவர் மேல் தங்கியிருப்பது போலிருக்கிறது. இன்னொருவர் கையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது என்ன வாழ்க்கை? தண்ணிரென்றாலும், சாப்பாடென்றாலும் மற்றவர் இட்ட போதுதானே? தானாக இயங்குவதிலுள்ள தன்மான உணர்ச்சியற்ற வாழ்க்கை உப்புச்சப்பற்ற சாப்பாடு மாதிரிதானே? "மகனும் உறவினர் களும் வேறு ஆட்களா? அவர்களை இன்னொருவராக கருதுவது தவறோ’ என்றுகூட அம்மா நினைத்தாள். ஆனால். இயல்பாக மரங்களுடு வந்துவீசி ஓராட்டும் காற்று இங்கு இல்லை. விசிறியின் சுவிச்சைப் போட்டு காற்றை செயற்கைத்தனமாக எடுப்பது போல மனிதர்களின் உறவும் போலித்தனமானதா என்று அம்மாவுக்குச் சந்தேகம் தொடுகிறது.
அலுப்புத்தீர படுப்பதென்றாலும் மற்றவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். சிறிய வீடு - அறை வசதி குறைவாகையால் அம்மா முன் விறாந்தையிற்தான் படுப்பாள். விறாந்தை. வீட்டின் பொது நிகழ்ச்சிக்குரிய இடம். மற்றவர்கள் வீடியா படம் பார்த்து முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பின்னர்தான், அம்மாவுக்கு பாயைக் கொண்டுவந்து போட்டு விடுவார்கள். ஒவ்வொரு நாளும் அம்மாவினால் தூங்கிக் கொண்டிருக்க இயலவில்லை. ஒருநாள் அம்மா அறையிலிருந்து பாயை எடுத்து வந்ததாள். அவையள் படத்தைப் பார்க்கட்டும். நான் ஒரு பக்கமாய் படுப்பம்" என்ற எண்ணம்.

107 0 தெரியாத பக்கங்கள்
அம்மா பாயுடன் வருவதைக் கண்டதும் மாமியின் முகம் ஒடிக் கறுத்தது!
இதென்ன ஒரு மனேஸ் தெரியாத மனிசி" எனச்சினங் கொண்டாள். மகன் ஒடிவந்து பாயைப் பிடிங்கிக் கொண்டு உள்ளே போனான். “அலுப்பாயிருக்கு. ராசா” என அம்மா சமாளித்தாள்.
“என்னம்மா நாள் முழுவதும் வேலை செய்கிற எங்களுக்கே அலுப்பில்லை. சும்மாயிருக்கிற உங்களுக்கு என்ன அலுப்பு?" w
இரவு பகலென்றில்லாமல். ஒரு அலுப்பு சலிப்பென்றால் அம்மா திண்ணைக்குந்தில் சேலைத் தலைப்பை விரித்து 65) 565) L தலைக்குக் கொடுத்துக்கொண்டு சிவனே என்று படுத்துவிடுவாள் - ஊரில். ஒரு கண் உறக்கம் கொண்டு எழுந்தால், அலுப்பு இருந்த இடம் தெரியாமற் பறந்துவிடும்.
இங்கேயும் ஒரு நாள் பகற்பொழுதில் அம்மா அப்படி இயல்பாக படுத்து விட்டாள் - மகனும் மருமகளும் வேலைக்குப் போய்விட்ட நேரம், பிள்ளைகள் ஸ்கூலுக்கு; மாமியும் எங்கோ போயிருந்தாள். அம்மாவுக்கு கண்களை சுழற்றிக் கொண்டு வந்தது. பல நாட்கள் ஏங்கித் தவித்த தனிமை! அப்படியே சேலைத் தலைப்பை விரித்து சாய்ந்து விட்டாள்.
.காலில் யாரோ தட்டியது போலிருந்தது, விழித்துப் பார்த்தாள். முன்னே விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு மாமி
“என்ன இது? யாராவது இந்த வீட்டுக்கு வந்து பார்த்தால் என்ன நினைப்பாங்க?. இது என்ன வீடா, சத்திரமா?”
மாமி தனது காலினாற்தான் தன்னை தட்டி எழுப்பி ருக்கிறாள் என்பதை உணர்ந்ததும் அம்மாவுக்கு என் னவோ செய்தது மனத்துக்குள்ளே கிடந்து குமச்சலெடுத்

Page 65
சுதாராஜ் 0 108
தது - அம்மா யாருக்கும் அதைச் சொல்லவில்லை, மகனுக்குச் சொல்வதால் ஏதாவது தீர்வு கிட்டுமென்று நம்பிக்கையில்லை. மருமகள் நல்ல பிள்ளை - இதை அறிந்தால் கவலைப்படுவாள் சொல்ல வேண்டாம்.
மாதங்கள் இரண்டுக்கு மேல் ஒடியும் அம்மா வெளிநாட்டுக்கு போகிற காரியங்கள் எதுவும் ஒழுங்காக நடக்கவில்லை. வந்த நாட்களில் அடிக்கடி டெலிபோனில் கதைத்த பிள்ளைகளும் இப்போது எப்போதாவது ஒருமுறை கதைக்கிறார்கள். கனடாவுக்கா, ஜேர்மெனிக்கா எந்தப் பிள்ளை அம்மாவை கூப்பிடப் போகிறான் என்ற உடன்பாடும் அவர்களுக்குள் வரவில்லை.
"இவர்கள் நேரகாலத்துக்கு கூப்பிடவும் மாட்டாங்கள். செலவுசித்தாயத்துக் கெண்டு ஏதாவது அனுப்பவும் மாட்டார்கள்” - ஒருநாள் இரவு சாப்பாட்டு மேஜையில் மகன் இவ்வாறு கூறினார்.
அம்மாவுக்கு சாப்பாடு இறங்கவில்லை. என்னவோ செய்தது. அம்மா மகனுக்குப் பாராமாய் இருக்கிறாளா?
“கனடாவுக்கு போவதானால். விசா ஒழுங்குமுறை யெல்லாம் சரிப்பட்டு வர இன்னும் இரண்டு வருடங்களாவது செல்லுமாம். ஜேர்மனிக்கு போவதானால் ஏஜென்சிக்கு எக்கச்சக்கமான காசு கட்டினால் கள்ளமாக கொண்டு போய்விடுவார்கள் - அகதி’ என்று சொல்லி அந்த நாட்டிற்குள் நுழையலாம்!
அம்மாவுக்கு என்னவோ செய்தது. அம்மா அகதியா?
அம்மாவுக்கு அந்தக் கணத்தில். தான் போகவேண்டிய இடம் எங்கே என்பது தெளிவாகத் தெரிந்தது. தான்இழந்து போய்த் தவிப்பது, தனக்கு வேண்டியது எது என்பதும் புரிந்தது.
“பிள்ளை. நான் ஊருக்குப் போகப் போறேன்!”

109 0 தெரியாத பக்கங்கள்
மருமகள் அதிர்ந்து போனாள். அவளுக்கு கவலையா யிருந்தது.
"அம்மாவை போக வேண்டாமென்று சொல்லுங்கோ' எனப் பிள்ளைகளுக்குச் சொன்னாள்.
பிள்ளைகள் அழுதனர்.
"அப்பம்மா போகவேண்டாம். நில்லுங்கோ!”
"மனசார உன்னை விட்டுப் போறதெண்டால். கவலையாய்தானிருக்கு பிள்ளை. எண்டாலும் நான் கட்டாயமாக போகத்தான் வேணும்!”
இரவு மருமகன் வந்ததும் வராததுமாக மாமி தீ மூட்டினாள்.
"நாங்கள் இஞ்சை கொடுமையா செய்யிறம்.? அம்மா ஊருக்குப் போகப் போகிறாவாம்.
. உங்கட மற்ற பிறதேர்ஸ் நினைப்பினம் நாங்கதான் கலைச்சுப் போட்டமாக்குமெண்டு!"
மகன் அம்மாவுக்கு சமாதானம் சொல்லிப் பார்த்தார். அம்மா கேட்பதாயில்லை. மகனின் சினம் தலைக்கேறியது.
“என்னம்மா நாடு இருக்கிற நிலையில வாறதும் போறதும் எண்டால் லேசுப்பட்ட காரியமா. இத்தின வயசுக்குப் பிறகும். நீங்க நினைச்ச மாதிரி ஆட வேணுமெண்டு நாண்டு கொண்டு நிண்டால் என்ன செய்யிறது?”
அம்மாவுக்கு பரதநாட்டியம் தெரியாது, குச்சுப்படி பற்றிய அறிவும் இல்லை. வேறு எவ்விதமான ஆடற் கலையும் பழகியவளல்ல. ஆனால் நிறைய ஆட்டக்காரி களை பார்த்திருக்கிறாள். அவர்கள் ஆட்டங்களைப் பார்த்திருக்கிறாள். ஆடி ஒயும்வரை பார்த்திருக்கிறாள். அது அம்மாவை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.

Page 66
சுதாராஜ் 0 110
நிலம் விடியத் தொடங்கியது. அம்மா தனது வீட்டை நோக்கிய பயணத்துக்கு ஆயத்தமானாள். மகன் அழாக் குறையாகச் சொன்னார்;
"தாண்டிக்குளத்திலை பிரச்சனையாம். வவுனியாவுக்கு அங்காலை போகேலாது. என்னெண்டு போகப் போறியள்?”
"நான் எப்படியும் போயிடுவன் ராசா. நீங்கள் கவலைப் படாதெயுங்கோ!"
மருமகள் மன்றாட்டமாகக் கேட்டாள்.
‘மாமி! கட்டாயம் போகத்தான் வேணுமோ? எங்களோடை நில்லுங்கோ"
அம்மா சொன்னாள்;
"தனியத் தனிய இருந்தால் ஓராளுக்கொராள் Lit & Lon யிருக்கலாம்!”
(சித்திரன் 1993)

விளக்கு
சாப்பாட்டுக் கோப்பை மேஜையில் வைக்கப்பட்ட சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். மனைவி குசினியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது 'இருளில் தெரிந்தது. மின்சாரம் இல்லாமற்போன பிரதேசத்தில் நெடுநாளாக இருந்த புண்ணியத்தில் இருளில் தெரியும் வல்லமை யெல்லாம் வந்திருக்கிறதே என நினைத்தான்.
சத்தம் ஏற்படுத்தப்பட்டது அவனுக்காகத்தான். "சாப்பாடு வச்சிருக்கு. வந்து சாப்பிட்டுக்கோ’ எனச் சொல்வதற்குப் பதிலாகக் கையாளப்பட்ட உத்தி! அவன் சாப்பிடலாமா விடலாமா என்று யோசித்தான்.
சாப்பாடு இருட்டில் இருந்தது. அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகள் அவனையும் சாப்பாட்டையும் மாறி மாறிப் பார்த்தார்கள் - வீட்டிலுள்ள ஒரே விளக்கு அது. மண்ணெண்ணெய் விலையும் தட்டுப்பாடும் அதற்கு மேல் அனுபவிக்க வைக்க இல்லை. - பிள்ளைகள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவர்கள் போல விளக்கை எடுத்து வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டு அதனருகே அமர்ந்து படிப்பை தொடர்ந் தார்கள். அப்பா. வந்து சாப்பிடுங்கோ' என அவர்களும் மறைமுகமாக உணர்த்திய மாதிரி இருந்தது.
. மத்தியானம் போல விறாந்தையில் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தான். கை வறண்டு அன்று செலவுகளுக்கும் வகை புரியாதபோது அப்படி "பிறேக்டெளன்' ஆனவன் போலப் படுத்துவிடுவான் - மனதை கொஞ்சம் இலகு வாக்கும் முயற்சி இன்று அது முடியாத காரியமாயிருந்தது. கா:ைபில் வெளியே போனபோது. அவனைத் தேடி வந்த கடன்காரர் ஒருவர் ரோட்டில் வைத்தே பிடித்துவிட்டார்.

Page 67
சுதாராஜ் 0 112
“வேண்டின காசைக் குடுக்க வக்கில்லை. உடுப்பும் போட்டுக்கொண்டு வெளிக்கிட்டிட்டீரோ. ஊர் சுத்த?”
பட்ட கடனும் வட்டியுமாக தொகை எக்கச்சக்கமாக ஏறியிருந்தது. அவன் எதையோ சொல்லிச் சமாளிக்க முயன்றான். சன்னதம் உச்சத்துக்கு ஏறியவர் போல அவர் ஆடினார்.
"இண்டைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரியவேணும்!” நாலு பேருக்கு முன்னால் குனிந்த தலையை நிமிர்த்த முடியாமலே வீட்டுக்குத் திரும்பினான். முதுகுக்கு பின்னால் சொல்வது கேட்டது.
"இவங்களெல்லாம் ஒரு மனிசரெண்டு சீவிக்கிறாங்கள்"
- அந்த ஆள் எந்த நேரமும் வீடு தேடி வரலாம்; என்ன செய்யலாம், எப்படிக் கூட னை அடைக்கலாம் எனத் தலையைப் போட்டுடைத்தவாறு கிடந்தபோதுதான் மனைவி வந்தாள்.
"இப்ப படுத்துக்கிடந்தால் என்ன செய்யிறது?”
அவன் பேசாமலே கிடந்தான்.
“என்ன நான் கேக்கிறன். நீங்கள் காதிலை விழாத மாதிரிக் கிடக்கிறியள்?"
“இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்?
"நேரம் என்ன தெரியுமோ?. பிள்ளையஞம் பள்ளிக் கூடத்தால பசியோடை வருங்கள். எழும்பிப் போய் ஏதாவது சமான் சக்கட்டைப் பார்த்து வேண்டி வந்தால்தானே சமைக்கலாம்!”
"இதிலை நிண்டு விசர்க்கதை கதைக்காமல். போ”
அவள் போய்விட்டாள் அப்போது தொட்ட சூடு.
பிரச்சனைகளுக்கு அடிப்படை பணம்தான் எது வேண்டுமென்றாலும் அதுதான் தேவைப்படுகிறது.

113 0 தெரியாத பக்கங்கள்
பணத்தைச் சம்பாதிக்க தொழில் தேவைப்படுகிறது. தொழில் சரியாக அமையாவிட்டால் தொல்லைகள்தான் மிஞ்சுகிறது.
கார் சாரதியாயிருந்து சிறுகச் சிறுக உழைத்தவன். ஒடிச் சம்பாதித்து குடும்பத்தை நடத்தியவன். நாட்டு நிலமைகளும் எரிபொருள் தட்டுப்பாடும் காரைக் கட்டையில் ஏற்றிவிட்டன.
படித்துக் கொண்டிருந்த மகள் இடையில் நிறுத்தி "அப்பா வந்து சாப்பிடுங்கோ" என அழைத்தாள். வயதிற் குறைவானாலும் பெண் பிள்ளைகள் வீட்டின் தட்ப வெப்ப வித்தியாசங்களைத் துல்லியமாகப் புரிந்து கொள்கிறார்கள் போலிருக்கிறது!
- மத்தியானம் சாப்பிடாதது. அதனால் மனைவியும் சாப்பிட்டிருக்க மாட்டாள். அவளுக்காக வேனும் சாப்பிட் வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அவளது கோபத்தையும் புறக்கணிப்பையும் தாங்கிக்கொண்டு சாப்பிடுவது கஷ்டமாயிருக்கும். வானம் உம்மென இருண்டு போனால் அது எப்போது வெளுக்கும் எனத் தவிப்ப யிருக்கிறது.
- குடும்பம் பட்டினிப் படாமல் இருக்கத் தான் செய்த தொழில்களை நினைத்துப் பார்த்தான். யாழ்ப்பாணத்தி லிருந்து. மாங்குளம், வவுனியா வரை சைக்கிளில் சென்று இந்தப்பக்கம் இல்லாத பொருட்களைக் கொண்டு வந்து வியாபாரம் செய்திருக்கிறான். கட்டிய சுமையை கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு மழை. வெள்ளம், சேறு சகதியெல்லாம் சைக்கிளை உருட்டியவாறே வந்திருக் கிறான். உயிரைப் பணயம் வைத்து கடல் கடந்து செய்யும் வியாபாரம். ஆனால், பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைத்ததில்லை. இந்தப் பக்கம் பொருள்களை வேண்டும் போது ‘ஏனப்பா இப்படி கொள்ளையடிக்கிறாய்? என்றுதான் கேட்பார்கள். - அவர்கள் கையிலும் பணம்

Page 68
சுதாராஜ் 0 14
இல்லாத கஷ்டமாயிருக்கலாம். பலதடவைகளில் - பணத் தேவை நெருக்கும்போது - கொண்ட முதலுக்கே நஷ்டத்துக்கும் கொடுத்திருக்கிறான்; ‘ஒரு சேவையாவது இருக்கட்டும்!"
தொலைதூரம் சென்று விறகுவெட்டி வித்திருக்கிறான். விறகு வெட்டுபவர்களின் தொகை கூடியபோது வெட்டிய விறகை வீட்டுக்கே கொண்டுவர வேண்டியிருக்கிறது. காரை 'ஹயரிங் விடுவது போல தூர இடங்களுக்குப் போக வேண்டியவர்களை சைக்கிளில் வைத்து ஒடியிருக்கிறான். இப்போது சைக்கிளில் செய்த சம்பாத்தியங்கள் முடங்கிப் போயின, ஸ்கூட்டர்கள் மண்ணெண்ணெயில் ஒடத் தொடங்கிவிட்டன. அவ்வப்போது கைகொடுத்த மனைவி மக்களின் நகை நட்டுகளுக்கும் முடிவு வந்துவிட்டது. அடுத்து என்ன செய்யலாம் என சோர்ந்தபோது முடுக்கிவிட்டவள் மனைவிதான்.
"சும்மா கிடக்கிற நிலங்களை குத்தகைக்கு எடுத்து தோட்டம் செய்தால் என்ன?' அவள் அப்படி அபிப்பிராயம் சொன்னதற்குக் காரணம் உண்டு - ஏற்கனவே பூங்கன்றுகளுடன் நட்டிருந்த காய்கறிச் செடிகள் வளர்ந்து நல்ல பலன் தந்திருந்தன. அவைகூட அவனுக்கு நல்லதொரு செய்தியைக் கூறின.
மண்ணும் வானமும் வஞ்சனை செய்யாது. எல்லா இடமும் பெய்கிற மழை வடக்குப் பக்கம் என்ன காரணத் துக்காக இங்கு மட்டும் பெய்யாமல் போகாது.
சில தெரிந்தவர்கள்ளிடம் நிலங்களைப் பெற்று; மரவள்ளி, குரக்கன், வாழை, காய்கறிச் செடிகள் எனப் பயிரிட்டான். பசளையிட்டு பாத்திகட்டி மழையில்லாத போது மாய்ந்து மாய்ந்து தண்ணிர் இறைத்தான். பயிர்கள் வளர்வது மனதுக்கு தெம்பாகவும் அவற்றுடன் பாடுபடுவது மனதுக்கு இதமாகவும் இருந்தது. அவை பயன்தரும் காலம் வரை பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

115 0 தெரியாத பக்கங்கள்
பொறுமை என்பது ஒரு அளவுக்குத்தான் என்பது போல மகள் மீண்டும் தொனியை உயர்த்தினாள். "அப்பா! இப்ப வந்து சாப்பிடப் போlங்களா இல்லையா?”
வழக்கமாக மனைவியும் பிள்ளைகளும் ஒன்றாக அவனுடன் அமர்ந்து சாப்பிடுவார்கள். அது சந்தோஷ மாயிருக்கும். இப்படி மூட்டம் கவிந்துகொள்ளும் நாட்களில் அது சாத்தியமில்லை.
மகள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு முடிவு தெரிய வேண்டும் என்பதுபோல. அவன் மறுகதை பேசாது எழுந்து சென்று ‘வாயை மூடிக்கொண்டு’ சாப்பிட்டான்.
- முற்றத்தில் இறங்கியபோது மனது சொன்னது 'இனிச் சரிபட்டு வராது"
அவசர நடவடிக்கையாக ஏதேனும் செய்தாக வேண்டும். எங்காவது வெளிநாட்டுக்குப் போய் உழைத்து வரலாம் - ஒரு நண்பன் உதவி செய்வதாகவும் சொல்லி யிருந்தான்.
பஞ்சம் பிழைக்க வெளிநாடு போகவேண்டியதுதான். அந்த முடிவு நெஞ்சில் இன்னும் தவிப்பை ஏற்படுத்தியது - மனைவியையும் பிள்ளைகளையும் எப்படி கஷ்ட நிலையில் விட்டுப் போவது? அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும் என்று தோன்றியது.
அலையும் மனதுடன் வாசல் வரை நடந்தான். கேற்றைத் திறந்து முன்னே வீதியைப் பார்த்தவாறு வாசற்படியில் அமர்ந்தான்.
நிலவு இல்லாத இரவு. உங்களுடைய வேலைகள் நடந்தால் என்ன கிடந்தால் என்ன என்பது போல இருளைக் கொண்டுவந்து மூடிவிட்டது இரவு. வீடுகளிலும் விளக்கில்லை. வீதிகளிலும் வெளிச்சமில்லை.

Page 69
சுதாராஜ் 0 116
சனங்கள் இவை எதையும் சட்டை செய்யாதவர்கள் போல நடமாடிக் கொண்டிருந்தார்கள். லைட் இல்லாத சைக்கிள்கள் காற்றாகப் பறக்கின்றன. சூரியன் மறைந்து விட்டாலும் நட்சத்திரங்களின் ஒளியில் அலுவல்களைச் செய்ய மனிதர்கள் பழக்கப்பட்டு விட்டார்கள் போலும்! நட்சத்திரங்களின் ஒளி பூமியை வந்து சேர ஆண்டுக் கணக்கில் காலமெடுக்குமாம். இங்கு நேரப்போகும் கதியை ஏற்கனவே அறிந்துகொண்டு புறப்பட்டு வந்தீர்களா? நட்சத்திரங்களே. உங்களுக்கு நன்றி.
"என்ன. இங்கவந்து இருந்திட்டியள். நித்திரை எங்கை போச்சு?”
மனைவி!
அவன் மெளனம் சாதித்தான்.
'இதென்ன இருட்டுக்குள்ள இருந்துகொண்டு யோசினை?”
எழுந்தான்;
"நான் வேலைவெட்டி இல்லாமலிருக்கிறேனெண்டு தானே உனக்குக் கோபம்?"
"ஆர் சொன்னது?. நீங்கள் படுகிற கஷ்டம் எனக்குத் தெரியாதா?”
"அப்ப எதுக்கு கோபம். ஏசினத்துக்கா?”
"நான் அப்படி கோபத்தைக் காட்டாட்டி நீங்கள் சாப்பிட்டிருப்பீங்களா?. என்னையும் சாப்பிடச் சொல்லி கூப்பிட்டிருப்பீர்கள். ஒராளுக்கு அரை வயித்துக்கே போதாது சோறு. ரெண்டு பேரும் பங்கிட்டால். எந்த மூலைக்கு காணும்?”
அவன் அதிர்ச்சியுற்றான்; "நீ சாப்பிடயில்லையா?”

117 0 தெரியாத பக்கங்கள்
“டயட்டிங். பொம்பளையஸ் மெலியிறத்துக்காக டயட் பண்ணுகினமாம்! இது. நிர்ப்பந்திக்கப்பட்ட டயட்டிங்! இப்ப நான் மெலிஞ்சு. அழகாயில்லையா?”
நெஞ்சில் குமறலெடுக்க உணர்ச்சியை அடக்குவதற்கு சற்று நேரம் வேண்டியிருந்தது.
"நான் வெளிநாட்டுக்குப் போகலாமெண்டு நினைக் கிறன். ரெண்டு வருசத்துக்கு பல்லைக் கடிச்சுக் கொண் டிருந்துவிட்டு வந்தால். எல்லா பிரச்சனையளும் தீர்ந்திடும்.”
“உங்களுக்கென்ன பயித்தியமா? இங்க எத்தனை லட்சம் சனங்கள் இருக்குது? அதுகளெல்லாம் செத்தா போகப் போகுதுகள்? அதுகளுக்குள்ள நம்பிக்கை உங்களுக் கில்லையா? எல்லாம் சரிவரும். வாங்கோ" மனைவியுடன் வீட்டுக்குள் வந்தான். வீட்டிலுள்ள ஒரேயொரு விளக்கு தனது பணியைச் செய்து கொண்டிருந்தது. குறிப்பிட்டளவு இடத்துக்கு மட்டும் வெளிச்சம் காட்டும் விளக்கு. செய்யவேண்டிய கருமத்தை சரியாகக் காட்டுகிறது. அது போதாதா என்ன? படுக்கையில் சாய்ந்தபோது மனது இலகு நிலை யடைந்த உணர்வு தெரிந்தது. இருட்டில். ஆதரவுடன் கையைப் பற்றினான்.
அமைதியைச் சிதறடிப்பதுபோல் குண்டுச்சத்தம்! குட்டிமகன் விழித்துக்கொண்டு சொன்னான். "ஷெல் அடிக்கிறாங்கள்!”
ஏவப்பட்ட குண்டு எங்கு விழப்போகிறதோ யாரை பலியெடுக்கப் போகிறதோ என்ற நெஞ்சிடியுடன் ஜன்னற் பக்கம் பார்த்தான். வானளாவப் பளிச்சிட்ட வெளிச்சமும் நிலமதிரும் வெடிச்சத்தமும் உறக்கம் கலைந்த பறவைகளின் குரலும் சிறகடிக்கும் ஒசையும் கேட்டன.

Page 70
சுதாராஜ் 0 118 “இப்ப நிறையப்பேர் விழிச்சிருப்பினம். என்னப்பா?” என்றான் மகன்.
அவனுக்கும் அவ்வாறே தோன்றியது.
* : (வீரகேசரி 1994)

தெரியாத பக்கங்கள்
அந்த வீட்டின் வாசலுக்கு வந்து சைக்கிளை நிறுத்தி “இதுதான் வீடு, இறங்கு” என மாமன் சொன்னபோதுதான் நினைவு திரும்பியவள் போலானாள் பிரேமா.
சைக்கிளில் அமர்ந்தடியே வீட்டைப் பார்த்தாள் - பெரிய வீடு. முன் பின் தெரியாத இடம். மிரட்சியடைந்து முகம் மாறினாள்.
"பயப்பிடாமல் இறங்கம்மா” சைக்கிளை ஒரு பக்கமாக மதிலிற் சாத்தினான். “வா போகலாம்" பயமும் குழப்பமும் போகவிடாது தடுத்தன. பிரேமா சிணுங்கி மறுத்தாள். மாமன் சற்று அதட்டலாகப் பேசினான். “இந்தா. சொல்லிப் போட்டன். உள்ளுக்குள் வந்து அழுதுகொண்டு நிக்கக் கூடாது."
நீர்ப் பந்தத்துக்குட்பட்டவைபோல கால்கள் தயங்கித் தயங்கி அவன் பின்னே அடியெடுத்து வைத்தன.
மூன்று நாட்களுக்கு முன் மாமன் இதுபற்றி வீட்டில் கேட்டபோதுகூட கடைசியில் இப்படி வந்து முடியும் என்று பிரேமா நினைத்திருக்கவில்லை. அப்போது மாமனோடு அம்மா சன்னதம் கொண்டு எழுந்தாள்.
"அதுகள் இஞ்சை சாப்பிடாமல் கிடந்து செத்தாலும் பரவாயில்லை. இன்னொருத்தர் வீட்டிலை வேலை செய்ய விடமாட்டன்”
மாமன் விடவில்லை. எத்தனையோ சமாதானங்களைச் சொன்னான்.
"அக்கா. கொஞ்சமெண்டாலும் யோசிச்சுப் பார். அத்தானும் வருத்தக்காறன். நாலு குஞ்சுகளையும் வைச்சுக் கொண்டு. எத்தினை நாளைக்குத்தான் அரிசி இடிச்சும்.

Page 71
சுதாராஜ் 0 120
பாத்திரங்கள் தேச்சும் அதுகளைக் காப்பாத்துவாய்..?”
"நான் சொல்றது நல்ல இடம். அங்கை விட்டால் இவளெண்டாலும் மூன்று வேளையும் சாப்பிடுவாள். அதை விட்டிட்டு உன்னோடை வைச்சு எல்லாத்தையும் பட்டினி போட்டு பலி குடுக்கப் போறியோ?.”
“மாசா மாசம் முன்னூறு நானூறு ரூபா சம்பளம் போட்டுத் தருவினம். மறுக்காமல் ஒமெண்டு சொல்லக்கா"
இரண்டு நாட்களாக இப்படிப் பேசிப் பேசியே சம்மதிக்க வைத்து விட்டான் மாமன். பிரேமாவுக்கும் புத்தி சொன்னான்.
"நீ போய் வேலை செய்தாத்தானேம்மா. தம்பி தங்கச்சியவையும் சாப்பிடலாம்"
அந்த வார்த்தைதான் பிரேமாவின் மனதைக் கொஞ்சம் மசியவைத்தது. எனினும் முழுமூச்சுடன் வரவில்லை - தன்னியல்பில்லாமல் ஏதோ ஒரு கட்டளைக்கு உட்பட்டு இயங்குவதுபோல. பிரமை பிடித்தது போலத்தான் பிரேமாவின் மனநிலை இருந்தது.
'வா மணியம்!. சொன்னபடி கரெக் டாய் வந்திட்டாய்.”
வீட்டுக்காரரின் பேச்சில் மாமன் உச்சி குளிர்ந்தவன் போல அடக்கமாகச் சிரித்தான். பிரேமாவுக்கு எல்லாம் நெஞ்சுக்குள்ளே புகைச்சலை மூட்டிக் கொண்டிருந்தது. மலைப்புடன் வீட்டைப் பார்த்தபடி நின்றாள்.
அண்டை அயற் சிறுவர்களுடன் புளுதி அளைந்து ஒடி ஆடிய விளைாட்டுக்கள் இனி இல்லை. ஒலைக் குடிசையின் மண்குந்தில் நினைத்தபோது உருண்டு எழும் சுகம் இனி இல்லை. பசித்தால் அம்மாவிடம் கேட்கலாம். போட்டால் சாப்பிடலாம். இல்லாவிட்டால் அழலாம். அந்த சுதந்திரமும் இனி இல்லை. இவர்கள் இட்ட

121 0 தெரியாத பக்கங்கள்
வேலையைச் செய்து கொண்டு இவர்கள் போட்ட சாப்பாட்டைத் தின்று கொண்டு கிடக்க வேண்டியதுதான் - தன் வீடு, தான் என்ற உரிமை இனி இல்லை.
வீட்டுக்கார அம்மா பிரேமாவை ஏற இறங்கப் பார்த்தாள். “பெரிய பிள்ளையெண்டு சொன்னீர். இவவுக்கு பன்ரெண்டு பதின்மூண்டு வயசும் வராதுபோல. எங்கட பிள்ளையளைவிட ரெண்டொரு வயசுதான் கூட இருக்கும்” என அபிப்பிராயப்பட்டாள்.
மாமன் பிரேமாவின் தகுதிபற்றிக் கதையளக்கத் தொடங்கினான்.
"அவ ஆள் சின்னனெண்டாலும் எல்லா வேலையும்
நல்லாய் செய்வா. வலு சுட்டி!. இதுக்கு முதலும் ரெண்டு வீட்டிலை வேலைக்கு நிண்ட அனுபவமும் இருக்கு."
பிரேமாவுக்கு எரிச்சல் மூக்கு நுனிக்கு வந்தது. கோபத்தைப் பற்களுக்குள் கடித்து அடக்கினாள். “இந்த ஆளுக்கு வாய் திறந்தால் பொய்தான்"
“பிரேமா என்ர மருமகள்தான். ஒரு குழப்படி கரைச்சலுமில்லாமல் நிப்பா" என மாமன் வீட்டுக்காரருக்கு உறுதிமொழியும் வழங்கினான். "எண்டாலும். நீங்கள் என்ர கொமிசனைத் தந்திடவேணும்"
தன்னுடன் சேர்ந்து விளையாடிய அயவிலுள்ள வயது கூடியதும் குறைந்ததுமான பிள்ளைகள் சித்திரா, சுந்தரி, மல்லிகா போன்றோரின் நினைவு வந்தது. அவர்களையும் மாமன் வேலைக்கென பல வீடுகளிலும் கொண்டுபோய் சேர்த்து விட்டிருக்கிறான். கஷ்டப்பட்ட சனங்களுக்கு உதவி செய்வதாக அவனுக்கு அங்கு நல்ல பெயருமுண்டு! அந்தப் பொறியில் தானும் அகப்பட்டுப் போன கதிக்கு மெளன அஞ்சலி செலுத்திக் கொண்டு நின்றாள் பிரேமா.
வீதியில் ஒடும் செஞ்சிலுவைச் சங்க முதலுதவி வாகனமொன்றில் அவலமான சைரன் அலறல் கேட்டு.

Page 72
சுதாராஜ் 0 122
“எங்கையோ குண்டு போட்டிட்டாங்கள் போல. ஆரார் செத்தினமோ!' என வீட்டுக்காரர் பெருமூச் செறிந்தார். ※
பிரேமாவுக்கு அப்பாவின் நினைவு வந்தது. அப்பாவுக்கும் குண்டுதான் பட்டது. ஷெல் வெடித்துப் பறந்த துண்டு வயிற்றை வெட்டிக் கிழித்ததாம். ஆஸ்ப்பத்திரியிற் கொண்டுபோய் போட்டார்கள். ஒருமாதம் வரை கிடந்தார். தையல் போட்டு சுகப்படுத்தி அனுப்பி வைத்தார்கள். ஆனால் தொட்ட (பட்ட) சனியன் விட வில்லை. அடிக்கடி படுக்கையில் விழுந்தார். அவர் சுகதேகி யாக இருந்து உழைத்துப் போட்டவரை பிரேமாவும் எல்லா வீட்டுப் பிள்ளைகளையும் போல உண்டு உடுத்து இருந்தாள்.
அம்மா பாவம் - பிள்ளைகளுக்கு சாப்பாடு போட வேண்டும். அப்பாவை படுக்கையிலிருந்து எழுப்ப வேண்டும். மாடாக உழைக்கிறாள். ஆனால் அப்பாவாற் தான் எழ முடியவில்லை. அவரை ஆஸ்ப்பத்திரிக்கும் வீட்டுக்குமென்று கொண்டு திரியவும் முடியவில்லை - வாகன வசதியில்லை. ஊர்ப்பரியாரி ஏதோ கஷாயங் களெல்லாம் செய்து கொடுக்கிறார். அதற்கு ஏதாவது பலன் தெரிவதாகவும் இல்லை. நல்ல மருந்து வேண்டுமாம். இங்கே கிடையாதாம். கொழும்புக்குத்தான் கொண்டு போக வேண்டுமாம் - பரியாரி சொல்கிறார். கொழும்பு எந்த உலகத்தில் இருக்கிறது என யாருக்குத் தெரியும் என அம்மா புலம்புகிறாள். 'அட்பா! எங்களை எல்லாம் இந்தக் கதிக்கு ஆளாக்கி பேசாமற் ப்டுத்திருக்க உங்களால் எப்படி முடிகிறது?. நீங்கள் எழுந்து வரவேண்டும். அப்பா! உங்கள் செல்ல மகள் தன் வயிற்றுப்பாட்டுக்காகதானே உழைக்கப் புறப்பட்டிருக்கிறாள் தன் சின்னஞ்சிறு கால்களுடன். அது உங்களுக்குத் தெரியுமா?
- அழுகை உடைந்து வந்தது. பிரேமா வாய்விட்டு அழுதாள்.

123 0 தெரியாத பக்கங்கள்
'676ਰੰ6ਰ7 இது மணியம்?. விருப்பமில்லாத பிள்ளையை வற்புறுத்திக் கொண்டுவந்த மாதிரி இருக்கு?”
“என்னம்மா. அழக்கூடாதென்றெல்லே சொன்ன னான்!” - மாமன் அதட்டினான்.
பிரேமா விம்மல்களுக்கிடையே "அப்பா. அப்பா" என்று மட்டும் சொன்னாள். அதைக் கேட்டு மாமன் வீட்டுக்காரருக்கு மொழி பெயர்த்தான்.
“தகப்பன் கொஞ்சம் சுகமில்லாமல் இருக்கிறார். பிள்ளை அதை நினைச்சுத்தான் அழுறா!'
பிரேமா முயன்று குரலை வெளிப்படுத்தினாள் "அப்பாவைப் பாத்திட்டு ரெண்டு நாளைக்குப் பிறகு வாறன்!”
வீட்டுக்கார ஐயா யோசிப்பது போலிருந்தது. பிறகு
மாமனிடம் சொன்னார்.
"உன்ரை கொமிசனைத் தாறன்!. நீ அவளைக் கூட்டிக் கொண்டு போ. மனம் ஆறின பிறகு கொண்டுவந்து விடு"
மாமன் கடத்தினான் -
“இப்ப வேறை ஒரு அலுவலாய் போறனுங்கோ. பின்னேரம் திரும்ப வந்து வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போறன்!”
தனது கொமிசன் ஐநூறு ரூபாவைப் பெற்றுக்கொண்டு மாமன் புறப்பட்டான். பிரேமா குசினிக்குக் கூட்டிப் போகப்பட்டாள்.
வீட்டுக்கார அம்மா சமையலில் ஈடுபட்டாள். பிரேமா ஒரு பக்கமாக அடக்க ஒடுக்கமாக நின்றாள். வீட்டி லென்றால் அம்மாவுடன் சண்டை பிடிக்கலாம். அது சரியில்லை இது சரியில்லை என அடம் பிடிக்கலாம். இங்கே இவர்கள் சொன்ன சொற் கேட்கவேண்டும்.

Page 73
சுதாராஜ் 0 124
“இந்தார். இந்த வெங்காயத்தைக் கொஞ்சம் உரிச்சுத் தாரும் பிள்ளை”
- அம்மா சமைக்கும்போது வெண்காயம் உரிப்பது, காய்கறி வெட்டுவது, தேங்காய் துருவுவது போன்ற வேலைகளைச் செய்து கொடுக்க வேண்டும் போலிருக்கும், அது ஒரு விளையாட்டுப் போல. செய்ய வேண்டும் போல ஆசையாக இருக்கும். அம்மா அதற்கு விடமாட்டாள்.
“ஆய்க்கினைப் படுத்தாமல் போ பிள்ளை! நான் கைச்சுறுக்காய்ச் சமைச்சுப் போட்டு மா இடிக்கப் போகவேணும்"
அம்மா ஓரிடத்தில் இருக்க மாட்டாள். ஒரே ஒட்டம்தான். காலையில் ஒரு வீட்டுக்கு வேலைக்குப் போவாள். பிறகு வந்து சமையல், மாலையில் இன்னொரு வீட்டுக்கு ஒடுவாள். அவள் ஒரு மெஷின்.
அம்மா! எனக்கு நீ அதையெல்லாம் பழக்கியிருக்கலாம். என்னை நீ இப்படி இன்னொரு வீட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாயிருந்தால் ஏன் அவற்றைக் கற்றுத் தரவில்லை? நான் இப்போது என்ன செய்வேன்? ஏதாவது தவறு விட்டு இவர்களிடம் திட்டு வாங்குவதா?
பிரேமாவின் கண்களில் நீர் முட்டியது. அசுகையின்றிக் கண்களைத் துடைத்தாள். கட்டுப்படவில்லை. சட்டெனக் குனிந்து சட்டையிற் கண்ணிரை ஒற்றி எடுத்தாள்.
“என்ன பிள்ளை. வெங்காயம் உரிச்சுப் பழக்கமில் லையா?. கண் எரியுது போல?” வீட்டுக்கார அம்மாவின் அதட்டல்.
பிரேமாவுக்கு வீட்டுக்குப் போகவேண்டும் போலிருந் தது. அம்மாவிடம் இதையெல்லாம் சொல்ல வேண்டும்.
வெண்காயத்தைக் கையிலெடுத்தால் கை நடுங்குகிறது. அது பயத்தினால்ா பரிச்சயம் இல்லாததனாலா என்று

125 0 தெரியாத பக்கங்கள்
புரியவில்லை. வேலையில் இப்படி இப்படியெல்லாம் பிரச்சனை வருகிறது. எப்படிச் சமாளிப்பது என்று அம்மாவிடம் கேட்க வேண்டும். அம்மாவுடன் கூடச் சேர்ந்து வேலைக்குப் போய் வந்தால் நல்லது. சில நாட்கள் போனாலே பழகிவிடலாம். எப்படியாவது வீட்டுக்குப் போகத்தான் வேண்டும்.
“சரி. சரி. அதை வைச்சிட்டு எழும்பிக் கண்ணக் கழுவும்!”
வீட்டுக்கார அம்மா ஒரு பக்கட் நிறைய உடுதுணி களைக் கொடுத்துக் கழுவிவரச் சொன்னாள். ،"
அந்த பக்கட்டைக் காவிக்கொண்டு கிணற்றடிக்குப் போனாள் பிரேமா.
அதை வைத்துவிட்டு தலையிற் கைவைத்துக் கொண்டு அமரலாம் போலிருந்தது. அவளது உடுதுணிகளையெல்லாம் அப்பா தேய்ச்சுக் கழுவுவது நேற்றுப்போல கண்களிற் தெரிகிறது. அவர் பேசிய செல்லக் கதைகள் இப்போதும் காதுகளில் ஒலிக்கின்றன - 'என்ர குஞ்சுகளுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டான்' - அப்பா! இதோ உங்கள் குஞ்சு சிறகு முளைக்க முதலே இரை தேடிப் பறக்கிறது. சம்மதம்தானே?
துணியை எடுத்தபோது கைகள் நடுங்கின. சோப் எந்தப் பக்கமாகப் பிடித்து எப்படித் தேய்ப்பது என்றுகூடப் புரியவில்லை. கைக்குள் அடங்காது சோப் உயிர் மீனைப் போல நழுவி விழுந்தது. ஆண்டவனே வேலைக்காகச் சிறுமிகளைப் படைக்கும்போது அவர்களின் கைகளையாவது நீ பெரிதாகப் படைத்திருக்கலாம்.
அம்மா ஒவ்வொரு வீடாகப் போய் இவற்றையெல்லாம்: எப்படிச் செய்து முடிக்கிறாள் எனப் பிரமிப்புத் தோன்றியது. அந்தக்கணமே பிரேமாவின் கைகள் ஒர் இயந்திரத்தைப் போலத் தொழிற்படத் தொடங்கின.

Page 74
சுதாராஜ் 0 128
கண்கள் பக்கட்டினுள் நீரை உகுத்துக் கொண்டிருந்தன.
வீட்டுக்கார அம்மா வந்து பார்த்தாள். “என்ன பிரேமா. அழுதுகொண்டிருக்கிறீரோ. வேலை செய்யிறீரோ?. அதை வைச்சிட்டு எழுப்பும். நான் செய்யிறன்!”
அவள் ஏசுகிறாளா அல்லது இரங்குகிறாளா என்று பிரேமாவுக்குப் புரியாமலிருந்தது. குற்ற மனப்பான்மை உறுத்த பிரேமா சுருங்கிப் போய் நின்றாள்.
“முகத்தைக் கழவிப்போட்டு வாரும். சாப்பிட”
வீட்டு அம்மா ஒரு கோப்பையிற் சோற்றைப் போட்டுக்
கொடுத்தாள். பிரேமா ஒரு பக்கமாக அமர்ந்து சோற்றைக் கையிலெடுத்தாள்.
தம்பி தங்கைகள் இன்றைக்குச் சாப்பிட்டிருப் பார்களா? அம்மா சமைத்திருப்பாளா? சில வேளைகளில் அம்மா சமைப்பதில்லை. அரிசி கிடைக்காமற் போகும். மரவள்ளிக் கிழங்கு அல்லது பனங்கிழங்கு அவித்துத் தின்னத் தருவாள். ஆனால் சோறு. அதற்கு உவப்பான கறிகளுடன் சாப்பிடும்போது எவ்வளவு சோக்காய் இருக்கும்! இன்றைக்குச் சோறுதான் வேண்டுமென்று தம்பி அடம் பிடித்துக் கொண்டு கிடப்பானோ என்னவோ! பிரேமாவுக்குச் சோறு இறங்கவில்லை. தொண்டையில் அடைத்துக் கொண்டது போல நோவெடுத்தது.
"இதென்ன பிள்ளை. அப்பிடியே வைச்சுக் கொண் டிருக்கிறீர். சாப்பிடும்."
சாப்பிட வேண்டியிருந்தது.
வீட்டுக்கார அம்மா நனையவைத்த அரிசியைக் கொடுத்தான். "இதை இடிச்சுக் கொண்டு வாரும்"
பிரேமா சீவியத்தில் உலக்கை பிடித்து அறிவாளா?

127 0 தெரியாத பக்கங்கள்
இனி இதெல்லாம் பழகத்தான் வேண்டும். இனிச் சிறுபிள்ளையல்ல. தம்பி தங்கைகளை நினைத்துக் கொண்டு ஒவ்வொரு இடியாக இடித்தாள் - அவர்களும் என்னைப் போல் இன்னொரு வீட்டுக்குப் போய் இடிபடக்கூடாது.
வெளியே பிள்ளைகள் விளையாடினார்கள். ஒருவரை ஒருவர் அடித்து கூக்குரலிட்டு ஓடி. ஆ..! எவ்வளவு முஸ்ப்பாத்தி! தம்பியோடு விளையாடும்போது சிறு சிறு தகராறுக்கெல்லாம் அடிபட்டிருக்கிறாள். அம்மாவிடம் கோள் சொல்லி அடிவேண்டிக் கொடுத்திருக்கிறான் தம்பி! நான் இனி இந்த வேலைகளையெல்லாம் உங்களுக்காகச் செய்யப் போகிறேன். நீங்கள் வயிறு நிரம்பச் சாப்பிட வேண்டும். சந்தோஷமாய் இருக்க வேண்டும். அம்மா எப்போதும் சொல் வாள் உன்னைப் பார்த்தால் அப்பாவைப் போல என்று. அந்த முகம் உன்னிடம் இருக்கிறது. நீ எங்களுக்கு அப்பாவைப்போல இருப்பாயா? பதிலாக கண்ணிர் பொங்கி வந்தது. இடிப்பதை நிறுத்தி ஒரு கையால் முகத்தைப் பொத்தினாள் பிரேமா.
“என்ன பிரேமா..? எந்த நேரமும் அழுதுகொண்டு?. விட்டிட்டுப் போ. நான் செய்யிறன்!” " . .
பிரேமா அழுதாள். தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று அழுது தீர்க்க முயன்றாள். முடியாமல் அழுகை நீண்டு கொண்டிருந்தது. வீட்டுப் பிள்ளைகள் வந்து பார்த்தார்கள். “ஏன் அழுறிங்க?” பதில் பேசாத பிரேமாவைக் கண்டு கலவரத்துடன் அம்ம்ாவிடம் ஓடினார்கள். "அந்த அக்கா. அழுறா"
“அது தலைவிதி. ஊரிலையுள்ள தொல்லைகளை எல்லாம் என்ர தலையில கொண்டுவந்து சுமத்திறதுதானே அப்பாவுக்கு வேலை" என அம்மா சொல்வது கேட்டது.
ஐயா வந்தார். "என்னம்மா. ஏன் நெடுகலும்

Page 75
சுதாராஜ் 0 128
அழுகிறாய்?” பதிலாக பிரேமாவின் நெஞ்சு விம்மி விம்மி வெடித்தது. "அப்பா"
- இயலாமல் கிடக்கும் அப்பாவுக்கு வேண்டிய கருமங்களில் எதையாவது செய்து கொடுக்கும்படி எப்போதாவது அம்மா கேட்பதுண்டு. பிரேமா மறுத்து ஒடிவிடுவாள். விளையாட்டுப்புத்தி. இப்போது. அப்பா வுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து கொடுக்க வேண்டும் போலிருந்தது. அவருக்கு உணவூட்டிவிட வேண்டும். வெந்நீர் வைத்து குளிப்பாட்ட வேண்டும். இரண்டு நாட்களுக்கேனும் கூடஇருந்து கண்ணும் கருத்துமாகப் பார்க்க வேண்டும். எப்படியும் வீட்டுக்குப் போய்த்தான் ஆகவேண்டும்.
"அழாமல் சொல்லம்மா. அப்பாவுக்கு என்ன?”
"இன்னும் ரெண்டு நாளைக்கு இருக்கிறதே. பெரிய
காரியமாம். பரியாரியார் சொன்னவர்"
"சரி. அழாதை. உன்ர மாமன் மணியம் வாறனெண்ட வன்தானே. கூட்டிக் கொண்டுபோக?
“அவர் வரமாட்டார். நீங்கள் குடுத்த காசுக்குக் குடிச்சுப் போட்டுக் கிடப்பார்!"
அம்மா சத்தம் போட்டாள். “பாத்தீங்களே. அவளே சொல்லுறாள். அவன் வரமாட்டானென்று. இதுகள் திட்டம் போட்டே கிளம்பியிருக்குதுகள். முந்தி ரெண்டு வீட்டிலை நிண்டவள் எண்டு சொன்னவன்தானே. இப்படித்தான் ஒவ்வொரு இடமாய் விட்டு விட்டு நாடகம் ஆடி அவன் காசை வேண்டிக் கொண்டு போறான். நீங்கள் ஏமாந்து போய்க் கிடவுங்கோ.”
ஐயா அந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டு அப்பால் போனார். அம்மா தொடர்ந்து சொல்வது கேட்டது.
"அவளைப் பார்த்தால் வேலை செய்யிறவள் மாதிரித்

129 D தெரியாத பக்கங்கள்
தெரியவில்லை எனக்கு உதவியும் வேண்டாம். உபத்திரவமும் வேண்டாம். கொண்டு போய் விட்டிட்டு வாங்கோ!”
சற்று நேரத்தில் ஐயா வந்து சொன்னார். "வெளிக் கிடம்மா!. நான் கொண்டு போய் விடுறன்”
அப்போது அவர் வெகு ஆதரவாகவும் மென்மையாகவும் பேசியது பிரேமாவுக்கு கவலையளித்தது.
சைக்கிள் கரியரில் ஏறி அமர்ந்தபோது வீட்டு அம்மா வந்து இருபத்தைந்து ரூபா காசை பிரேமாவின் கையில் கொடுத்தாள். ஐயா கேள்விக்குறியுடன் பார்க்க.
"அவளைக் கொண்டு கொஞ்ச வேலை செய்விச்ச னான். திரும்ப வருவாளோ. மாட்டாளோ தெரியாது. இதைக் கொண்டு போகட்டும்.”
“சில்லுக்கை காலைக் குடுத்திடாமல் கவனமாய் இரு பிள்ளை” என அவதானம் சொன்னவாறு ஐயா சைக்கிளை மிதிக்கத் தொடங்கினார். மாமனைப் போல கனதுாரம் சைக்கிள் ஓடிப் பழக்கமில்லைப் போலிருக்கிறது. அவருக்கு இழைக்கிறது.
பொழுது பட்டுக் கொண்டிருக்கிறது. பாதை தெரிய வில்லை. மறைத்துக் கொண்டிருக்கும் அவரது முதுகுக்கு அப்பால் எட்டி எட்டிப் பார்த்து கிராமம் வந்ததும் வீட்டுக்குப் போகும் வழியைக் காட்டினாள் பிரேமா. தார் ரோட்டிலிருந்து மண் வீதியில் சைக்கிள் இறங்கி ஓடியது. ஒழுங்கையின் திருப்பத்தில் கண்ட சொர்ணம் மாமி 'எடி பிரேமா' என ஆச்சரியப்பட்டாள். பிரேமா ஒரு புன்னகையை உதிர்த்தபடியே போனாள். மாமி பிறகால் வந்து கொண்டிருந்தாள்.
சொந்த மண்ணும் பழகிய முகங்களும் மென்மையான குதுரகலத்தை பிரேமாவின் மனதில் ஏற்படுத்தியது.

Page 76
சுதாராஜ் 0 130
பூவரசங்கதியால்களில் நேர்த்தியாகக் கட்டப்பட்ட பனையோலை வேலி நீண்டு கொண்டிருந்தது. வேலி உள் வளைந்த வாசல் -
'இதுதான் வீடு" என, சைக்கிளை நிறுத்தச் சொல்லி இறங்கியபோதுதான் பிரேமாவின் கண்களுக்குத் தென்பட்டது - வாசலில் இரண்டு வாழை மரங்கள் கட்டப் பட்டிருந்தன. காய்க்குலையுடன். சின்னம்மா, பெரியம்மா, மாமி, மச்சாள் என உறவினரும் அயலவரும் வீட்டில் கூடியிருந்தனர். அப்பா எல்லோரையும் விட்டு தன்னையும் விட்டு போய்விட்டார் என்பது மட்டும் பிரேமாவுக்குத்
தெரிந்தது.
(மல்லிகை 1994)

அகதியும் சிலநாய்களும்
- குழந்தை மீண்டும் அழத்தொடங்கியது. வீரிட்ட
அழுகை, இரவு முழுதும் இதே கதைதான்.
அப்பன் எழுந்து வெளியே வந்தான். அப்பன் அவனது
இயற்பெயர். குழந்தையின் அப்பனும் அவன்தான்.
பொழுது ஏற்கனவே விடிந்து கொண்டிருந்தது நேரத்தோடு எழுந்த சில காகங்கள் முற்றத்திற்கு வந்திருந்து விடுப்புப் பார்த்தன. இரவு குழந்தை ஒவ்வொரு முறை அழுத போதும் அப்பனின் நித்திரையும் குழம்பியது அதனால் பொழுது விடியும் அசுகையே தெரியாம கிடந்திருக்கிறான்.
சிறியதொரு வாங்குபோல தொழிற்படும் மரக்கட்டை யில் ஆறப்போட்டுக்கொண்டு அமர்ந்தான் - அதையு வெட்டி அடுப்புக்கு வைக்காத வரையிற் சரிதான்.
சேவலொன்று பொழுது விடிந்துவிட்ட செய்தியை இப்போதுதான் வந்து (அறை) கூவல் விடுத்தது. அப்பன் இருக்கும் கோலத்தை நான்கு கோணத்திலும் நின்று திரும்பிப் பார்த்தது. 'கவலைகளை ஒருபக்கம் போட்டு விட்டு எழுந்திரு' என இன்னொரு முறை கூவியது. சேவல் யாரோ ஒரு வீட்டுக்குச் சொந்தமானதாக இருந்தாலு அயவிலுள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று இப்படி சம்பளமில்லாத உத்தியோகம் செய்யும் சேவையுணர்வை பார்த்ததால் அப்பனுக்கும் ஓர் உற்சாகம் தோன்றியது. ஆனால் அந்தக் கணநேர உற்சாகத்தையும் அழுத்து எந்தப் பக்கம் போடலாம் என்று புரியாத கவலைகள்.
வீடு வாசலை விட்டு உடுத்த உடுப்போடு ஓடிவந் கவலைகளை ஒருபக்கம் போட்டுவிடலாம். தனக்கு சொந்தமில்லாத இருப்பிடத்தில் அகதி எனும் பட்ட

Page 77
சுதாராஜ் 0 132
துடன் சீவிப்பது, வயிற்றுப்பாட்டுக்கு அவ்வப்போது நிவாரணம் என்ற பெயரில் மற்றவர் கையை எதிர்பார்த்து நிற்பது, அதையும் விட்டால் வேறு வழி இல்லாதிருப்பது போன்ற கவலைகளை எங்கே போடுவது?
குழந்தையின் அழுகை நாலு வீடுகளுக்குக் கேட்குமாப் போல இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. குடிசைப் பக்கம் திரும்பி மனைவியிடம் குரல் கொடுத்தான்.
"கமலம் பிள்ளை ஏன் அழுது?. பாலைக் குடுமன்!”
மூன்று மாதக் குழந்தைக்குப் பசியெடுத்தால் எப்போதும் ரெடியாக தாய்ப்பால் கிடைப்பது நல்லதொரு வசதியாகத்தான் இருக்கிறது. அந்த விஷயத்தில் அப்பன் தலையைப் போட்டு உடைக்கத் தேவையில்லை.
தனது கடமை முடிந்தது என்பது போல கைகளை அகல நீட்டி அலுப்பு முறித்தான். வயிற்றைத் தடவினான். வெறுவயிறு. விடிய எழுந்ததும் ஒரு தேத்தண்ணி யென்றாலும் சுடச்சுடக் குடித்தால் நன்றாயிருக்கும். பசி தெரியாது.
"கமலம் தேத்தண்ணி போடயில்லையா?” "அதுக்கு. சீனிக்கு எங்கை போறது?”
“வெறும் தேத்தண்ணியெண்டாலும் போடுமன். வயிறெல்லே. புகையிது!
தேநீருக்கு சீனி இல்லாத சங்கதி அப்பனுக்குத் தெரியும். அவனுக்கு அது தெரியுமென்பது அவளுக்கும் தெரியும். எனினும் ஒரு சம்பிரதாயம் போல தினமும் இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர்தான் தேநீர் தயாராகும்.
மனைவி மூத்த பிள்ளைகள் இரண்டையும் விரட்டுவது கேட்டது.
**டுள்க ைசயி (நர் ய்க்கினைப் படுத்தாமல்
ஞ ருதது ஆ

133 0 தெரியாத பக்கங்கள்
போங்கோ. அப்பாவோடை போய் கொஞ்ச விறகுதடி வெட்டிக் கொண்டு வாங்கோ. அடுப்புக்கு. வைக்க”
ஆய்க்கினை என்று அவள் தன்னையும் சேர்த்துத்தான் சொல்கிறாளோ என அப்பன் நினைத்தான். அவளும் ஒரு கையால் எத்தனை அலுவல் என்றுதான் பார்ப்பாள் அதுதான் சினப்படுகிறாள். அப்பன் பிள்ளைகளை அழைத்தான்.
“கத்தியை எடுத்துக்கொண்டு வாங்கோ. விறகு வெட்டுவம்"
சிறு மரக்கிளைகள், தடிதண்டுகள் சிலவற்றை வெய்யிலிற் காயப் போட்டிருந்தாள். அவற்றை அடுப்புக்கு வைக்கக் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி எடுக்கலாம்.
“ஒவ்வொரு தடியாய் எடுத்துக்கொண்டு வாங்கோ. நான் வெட்டிறன்!” எனப் பிள்ளைகளிடம் கூறியவாறு அப்பன் ஒரு கல்லில் அமர்ந்தான்.
காலை வெய்யில் கன்னத்தில் சுட்டது. சில மரக் கிளைகள் எட்டி எட்டி நிழல் தர முயன்றன. மரங்கள் வீசிய காற்று உடலைத் தழுவி சூட்டைத் தணிவித்தது.
தெருவில் ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது அதைத் தொடர்ந்து இன்னும் சில நாய்கள் குரைத்தன. அப்பனிடம் நாய் இல்லை.
முன்னர் அப்பனிடம் நாய் இருந்தது, அவனது சொந்தீ வீட்டில். சொல்லப்போனால் அதுதான் அவர்களது உயிரைக் காத்தது எனலாம். அன்று இரவிரவாக நாய் எதையோ கண்டதுபோல குரைத்துக் கொண்டிருந்தது. குரைத்துக் குரைத்து அழுதது. அப்பன் நித்திரை குழம்பி எழுந்து பார்த்தான். வாசல்வரை ஓடிப்போய் ஆவேசம் கொண்டது போல ஏன் குரைக்கிறது? பேய் பிசாசுகளின் நடமாட்டத்தை நாய்கள் இலகுவில் மோப்பம் பிடித்து விடுமாம். அயலில் இன்னும் பல நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன.

Page 78
சுதாராஜ் 0 134
“இந்த ராவிருட்டியிலை ஏன் இப்பிடிச் சேர்ந்து ஊளையிடுதுகள்?’ என யோசித்துக் கொண்டிருக்கும் போதே முதற்குண்டுச் சத்தம் கேட்டது. பிறகு சடார் சடாரென குண்டுகள் வந்து விழத் தொடங்கின. வீட்டுக்கு மேலாக விண்கூவிக்கொண்டு போகும் ஷெல்கள். அப்பன் பதற்றமடைந்தான்.
"எழும்புங்கோ. எழும்புங்கோ வாறாங்கள் போலை”
பெய்கிற மழையூடு துளிகள் படாமல் ஓட முடியுமா? ஒட வேண்டும். பிள்ளைகளைச் சுமந்து கொண்டு அப்பனும் மனைவியும் ஒடத் தொடங்கினார்கள். தலையில் குண்டுகள் விழக்கூடாது என ஆண்டவனை வேண்டிய வாறு. ஒடக் கூடியவர்களெல்லாம் அந்தக் கடற்கரைக் கிராமத்திலிருந்து ஒடிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.
அப்பனது நாயும் கூட ஒடி வந்தது. கொஞ்சத் தூரம் தான். பின்னர் நின்றது. அழுது ஊழையிட்டது. மீண்டும் திரும்ப ஓடியது. அந்த வீட்டை விட்டு வர அதற்கு விருப்ப மில்லையோ? வீட்டுக்குத் தான்தானே காவல் நாய், தானும் ஒடிப்போவது என்ன நியாயம் என்று நினைத்திருக்குமோ? அல்லது, எங்கேயோ போய் அகதியாக வாழ்வதைவிட சொந்த வீட்டிலிருந்து செத்தாலும் மேல் என நினைத் திருக்கலாம்.
இப்போது அதன் கதி என்னவாயிருக்கும்? மூன்று வருடங்களாகிவிட்டது. அந்த வீட்டிலேயே சாப்பாடின்றி அழுதழுது கிடந்து செத்துப் போயிருக்குமோ? வீடுகளெல் லாம் அங்கு தரைமட்டமாக்கப்பட்டு விட்டன என்றும் கேள்வி. அதைத் தாங்க முடியாமலும் அது தன்னை மாய்த்துக் கொண்டிருக்குமோ?
அல்லது, அதை அவர்கள் சுட்டும் போட்டிருக்கலாம்.
அப்பனின் மனம் வேதனைப்பட்டது. அது எங்காவது தப்பியொட்டி உயிருடன் இருக்க வேண்டும். ஒருநாள்

135 0 தெரியாத பக்கங்கள்
மீண்டும் சேர்ந்துகொள்ள வேண்டும் என மனசு வேண்டிக் கொண்டது.
குழந்தையின் அழுகைச் சத்தம் ஒரு பக்கம். நாய்கள் குரைக்கும் சத்தம் இன்னொரு பக்கம். அப்பன் எரிச்சலடைந்தான். விமானத்தின் கோரச் சத்தம் இப்போதுதான் மனிதக் காதுகளுக்குக் கேட்டது. மகள் சத்தமிட்டாள். “பொம்பர் வருகுது!”
மகள் ஓடிவந்து அப்பனுக்குப் பக்கத்தில் நின்றாள். விமானம் வட்டமிடத் தொடங்கியது. சத்தம் வரும் திக்கை அண்ணாந்து பார்த்தால் சூரியன் கண்ணுக்குள் குத்தினான். தென்னை மரங்கள் வானத்தைப் பார்க்க முடியாதவாறு மறைத்துக் கொண்டிருந்தன. ஆ. இந்தத் தென்னை மரங்களெல்லாம் பெரிய குடைகளாக குண்டு களைத் தாங்கும் சக்தி படைத்தவையாக மாறிவிட்டால் எவ்வளவு நல்லது! அந்த அற்புதம் நிகழவில்லை. இடி விழுந்தது. நிலமதிர பொம்பர் குண்டுகளைப் பொழியத் தொடங்கியது.
தாயைப் பற்றிக் கொள்ளும் குரங்குக் குட்டியைப் போல் மகள் நெஞ்சு நசுங்க அப்பனைத் தாவிக் கட்டிப் பிடித்தாள். அப்பன் கண்கள் பனிக்க தன் மகளை அணைத்துக் கொண்டான்.
மகனும் ஓடிவந்த அப்பனைக் கட்டிப் பிடித்தான். அவனது உடல் நடுங்குவதை தன் மேனியில் உணரக் கூடியதாயிருந்தது. இப்போது இவனுக்கு வயசு ஏழு. கொஞ்சம் விபரம் புரிகிறது. அந்த இருள் அகலாத அதிகாலையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிவந்த பயம் இன்னும் அவன் நெஞ்சில் படிந்திருந்தது. குண்டுகளை வீசி அட்டகாசம் புரிந்த பொம்பர் பின்னர் தெற்குத் திசை நோக்கிப் பறந்து போனது.

Page 79
சுதாராஜ் 0 136
எதையோ சாதித்துவிட்ட திருப்தி அதற்கு இருக்கக்கூடும். அதை ஒரு பெருமையான விடயமாக அது கருதவும் கூடும். அதனாற்தான் அடிக்கடி இந்தக் காரியத்தைச் செய்கிறது.
- குழந்தை குண்டுச் சத்தத்தில் திடுக்குற்று வீரிட்டுக் குளறுவது கேட்டது. அப்பன் எழுந்து குடிசைக்குள் போனான்.
“எந்த நேரமும் ஏன் பிள்ளை அழுகுது? ஏதாவது வருத்தமோ?” என மனைவியிடம் கேட்டான்.
"வருத்தமுமில்லை. ஒண்டுமில்லை. பசி" “பசியெண்டால். பாலைக் குடுக்கலாம்தானே? "நான் என்ன வைச்சுக்கொண்டு குடுக்காமலிருக்கிறனா? ஆன சாப்பாடு சாப்பிட்டாலெல்லோ. பால் இருக்கும். பாலைக் குடுத்தால். உமிஞ்சி பாத்திட்டு தள்ளிவிட்டிட்டு. குளறுறான். நான் என்ன செய்யிறது?”
அப்பன் சற்று நேரம் பேச முடியாதவனாய் நின்றான். பின்னர் மிகத் தாழ்ந்த குரலில் சொன்னான்.
“பிள்ளைக்குப் பால் குடுக்கிறனி. எனக்கு இல்லாட்டி யும் பரவாயில்லை. வடிவாய் வயிறு நிறையச் சாப்பிட்டி ருக்கலாம்தானே..?
அவள் அப்பனை பரிதாபமாகப் பார்த்தாள். அழுவதா சிரிப்பதா என்று தெரியாத பார்வை.
“போங்கோ!. போய் நடக்கக்கூடிய அலுவலைப் பாருங்கோ!”
நடக்கக்கூடிய அலுவலா. "என்ன?” “பால் மா வேண்டினால். கரைச்சுக் குடுக்கலாம்!”
அப்பன் இன்னொரு எதிர்பாராத தாக்குதலுக்குள்ளாகி நின்றான்.

137 D தெரியாத பக்கங்கள்
“பால்மா கிடைக்காது கமலம். எங்கை போய்த் தேடிறது?”
ஒரு சாட்டுத்தான்! பொருட்களுக்குள்ள தடை தட்டுப்பாட்டை ஒரு சாட்டாக வைத்துத்தான் சொன்னான். மனமிருந்தால் இடமுண்டு. பணமிருந்தாலும் இடமுண்டுதான்!
“எங்கையாவது பாத்து. வேண்டியாங்கோ. பிள்ளை அழுகுது. இப்பிடியே பட்டினி போட்டு சாகடிக்கிறதா?” வேறு வழியின்றி மனைவியிடம் சரணடைந்தான் -9յւնւյ6նr.
"கமலம். அதுக்கிப்ப காசுக்கு எங்கை போறது?"
"நான் எத்தனையோ தடவை சொன்னனான். வேண்டாம் வேண்டாம். எண்டு கேட்டாத்தானே?. அழிக்கக்கூடாது பாவம். பாவம். எண்டு சொன்னியள்! இப்ப இந்தப் பாலன் பசியிலை துடிக்கிறதை பார்த்து நான் எப்பிடித் தாங்கிக் கொண்டிருக்கிறது?”
கரு தங்கிய போது அவள் வற்புறுத்தியது உண்மைதான். 'ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு போடவும் வழியில்லை. அகதிகளாய் இருந்துகொண்டு பிள்ளையும் வேணுமா? கருவை அழித்து விடலாம்" என்று.
அப்பன் சம்மதிக்கவில்லை. அகதிகள் என்றால்..? பிள்ளை பெறக்கூடாதா..? எந்த அகராதியில் இருக்கு?. அதெல்லாம் சமாளிக்கலாம் எனத் தடுத்து விட்டான்.
மனைவி சேலையில் முகத்தைப் புதைத்து விம்முவது தெரிந்தது.
"சரி. சரி இப்ப என்ன. பால்மா தானே வேணும்?. வேண்டியாறன். அழாதை"

Page 80
சுதாராஜ் 0 138
அப்பன் வெளியே வந்தான். பெண் சாதியின் கண்ணிரைத் தாங்க முடியவில்லை. நிலைமையைச் சமா ளிப்பதற்காக வேனும் அப்படிச் சொல்ல வேண்டி யிருந்தது. இனி? நிவாரணப் பொருட்கள் கிடைத்தால், சீனி, பருப்பு போன்றவற்றை விற்று இப்படியான இக்கட்டு களைச் சமாளிக்கலாம். இப்போது நிவாரணமும் ஒழுங் காகக் கிடைப்பதில்லை. பல காரணங்கள் சொல்லு கிறார்கள்.
வேலி அடைத்தல், தோட்டம் கொத்துதல் போன்ற இன்னோரன்ன கூலி வேலைகளுக்கும் போய் அப்பன் சம்பாதிப்பதுண்டு. ஆனால் கிழமையில் ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாக இருக்கிறது. இந்த விசித்திரத்தில் பால்மா வேண்டுவதா?
சரி. பார்க்கலாம்! ஏதோ ஒரு வழி கிடைக்கும். வீடு வாசலை விட்டு ஓடிவந்து யாழ்ப்பான நகரையண்டிய பகுதிகளில் நின்றபோது தனக்குச் சொந்தமான இடத்தையும் தந்து அதில் குடிசை போட்டு உதவியதும் ஒரு புண்ணியவான்தானே? அப்படி நல்ல மனசுள்ள சனங்கள் யாராவது கிடைக்காமலா போய்விடுவார்கள்?
அப்பன் கிணற்றடிப் பக்கம் போனான். கைகால் அலம்பிக் கொண்டு கடைத்தெருவுக்குப் போய் வரலாம். "அப்பா!. இந்த வாழைக்குலை எப்ப பழுக்கும்?” பிற, கால் வந்த மகன் கேட்டான்.
கிணற்றடியில் சில வாழைகளை நட்டிருந்தான்
அப்பன். அதில் ஒரு வாழை குலை ஈன்றிருந்தது. சிறிய குலைதான். கப்பற்குலை. காய்கள் பெருத்து பருமனா யிருந்தன.
கிணற்றடிக்கு வரும் வேளைகளிலெல்லாம் மகன் தவறாமல் இந்தக் கேள்வியைக் கேட்பான்.
"அப்பா!. இந்த வாழைக் குலை எப்ப பழுக்கும்?"

139 0 தெரியாத பக்கங்கள்
பொறி தட்டியது அப்பனுக்கு, காய்கள் முற்றித்தான் இருக்கின்றன. வெட்டி வைத்தால், பழுத்துவிடும். י
தலையைக் குனிந்து இந்தா வெட்டு" எனக் கழுத்தை நீட்டிக்கொண்டு தியாகம் செய்யத் தயாராய் நின்றது வாழை.
“கத்தியை எடுத்துக்கொண்டு வா. வெட்டுவம்”
மகன் மகிழ்ச்சி பொங்கத் துள்ளினான். கைகளைத் தட்டிக் குதூகலித்தான். “பழுத்திட்டிதாப்பா?”
பிள்ளையை ஆதரவாக அணைத்துக் கொண்டான் அப்பன்.
"குட்டித்தம்பி பசியிலை அழுகிறான். பால்மா வேண்ட வேணும். அப்பாட்டைக் காசில்லை. இந்த வாழைக் குலையை வித்திட்டு வேண்டுவம். என்ன?”
தலை மெளனமாக அசைந்து சம்மதித்தது. வேதனை அப்பாவின் தொண்டையை அடைத்துக் கொண்டது. சின்னஞ்சிறுசுகளானாலும் கஷ்ட நிலையை உணர்ந்து என்ன மாதிரி பக்குவமடைந்து விடுகிறார்கள்!
வாழைக் குலையை எடுத்து கொண்டு புறப்பட்டபோது மனைவி தன் ஏக்கத்தைக் கொட்டுவது கேட்டது.
"இந்தப் பிள்ளையள் அது பழுக்கும். பழுக்கும் எண்டு எவ்வளவு ஆசையோட காத்துக் கொண்டிருந்ததுகள்!”
நிலாவும் இல்லாமல் நட்சத்திரங்களும் இல்லாமல் ஒரு பூதத்தைப்போல இரவு வந்து மூடிக் கொண்டது. எந்தப் பக்கம் திரும்பினாலும் இருள் அமுக்கிக் கொண்டிருந்தது. மாலையிலிருந்தே பொழுது மப்பும் மந்தாரமுமாகத்தான் இருந்தது. மழை வருமோ என்ற பயம் அப்பனுக்கு குடிசை தாங்காது. ஒழுகும். பச்சைக் குழந்தையையும் கொண்டு எந்தத் தாழ்வாரத்தில் ஒடி ஒதுங்குவது என்ற கவலை. பாவம் குழந்தை, இப்போது ஒரு பூனைக் குட்டியைப் போல

Page 81
சுதாராஜ் 0 140
உறங்குகிறான். பால்மா குடித்தது வயிறு நிறைந்திருக்கிறது. மழை வந்து அதன் உறக்கம் கலையக் கூடாதே எனக் கலக்கமாயிருந்தது.
தொலைவில் கேட்கும் குண்டுச் சத்தங்கள் தங்கள் இருப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தன.
"இவங்களுக்கு ரா விருட்டியிலையும் நித்திரை யில்லையோ..?” என மனைவி முணுமுணுப்பது கேட்டது. siggil பதில் தேவைப்படாத கேள்விதான். பதிலும் அவளுக்கு தெரியாததல்ல. இருளில் கிடக்கும்போது குண்டுச் சத்தங்கள்: பயத்தை தருகின்றன. பிள்ளை குட்டிகளை எண்ணிய கலக்கம். அதனாற்தான் அலுத்துக் கொள்கிறாள். s
அப்பன் தான் விழிப்பாகவே கிடப்பதை ஒரு செருமல் மூலம் அவளுக்கு உணர்த்தினான். அது அவளுக்கு கொஞ்சமாவது தைரியத்தை அளிக்கும்.
- குழந்தை அருண்டு எழுந்து அழத் தொடங்கினான். கை விளக்கைக் கொளுத்திப் பார்த்தபோது வயிற் றோட்டமாகியிருப்பது தெரிந்தது.
“பால்மா குடிச்சது. முதற் பழக்கம்தானே. அதுதான் வயிற்றைக் குழப்பியிருக்கு. சரியாகியிடும்" என அப்பன் ஆறுதல் சொன்னான்.
அது சரியாகவில்லை. இரவிரவாக வயிற்றுப்போக்கு இருந்தது. அதிகாலையில் வாந்தி எடுக்கவும் தொடங்கி யிருந்தான்.
காலை வெளிச்சமானதும், ஒரு சந்தேகத்தில் பால் மாவைத் திறந்து பார்த்த மனைவி “கடவுளே இந்த அநியாயத்தைப் பாருங்கோ" எனப் பதறினாள்.
மிக உன்னிப்பாகப் பார்த்தாற்றான் தெரிகிறது;

141 0 தெரியாத பக்கங்கள்
மெல்லிய நூல் கனத்தில் சிறுசிறு-புழுக்கள். பால் மாவுடன் கலந்துகொண்டு. இந்தப் பக்கம் அனுப்பப்படும் பால் மா வகைகள் பழுதடைந்திருக்கின்றன என்றும் கடைக்காரர்கள் கலப்படம் செய்கிறார்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பத்திரிகைச் செய்திகளை வாசித்தபோது அவை வெறும் செய்திகளாகத்தான் தெரிந்தன. அவற்றின் உண்மை பொய்யைப் பற்றி அப்பன் கவலைப்பட்டதேயில்லை. இப் போது அவை செய்திகளாக அல்லாமல் நிஜரூபமெடுத்து அவனது நெஞ்சைப் பிடித்து உலுக்கின.
"ஐயோ. இந்தப்பால் மாவை எத்தனை தரம் பிள்ளை களுக்குக் குடிக்கக் குடுத்திட்டன். என்ன செய்யுமோ?”
மனைவி விம்மலெடுத்து அழுதாள்;
“பிள்ளையைக் கொண்டு போய் டொக்டரிட்டைக் காட்ட வேணும்"
அப்பன் அழுவாரைப்போல நின்றான்.
அடிமேல் அடி விழுகிறது. எந்தப் பக்கம் திரும்பி னாலும் அடியும் இடியுமாகத்தான் இருக்கின்றது.
"அழாதை கமலம்! அந்தப் பால் மாவைத் தா!. கடைக்காரனிட்டைக் குடுத்திட்டு காசை வேண்டியாறன். பிள்ளையை டொக்டரிட்டைக் காட்டலாம்!"
கடையில் மக்கள் பொருட்களை மொய்த்துக் கொண்டிருந்தார்கள். கடைக்காரன் பத்துக்கைகளால் எல்லோருக்கும் படியளந்து கொண்டிருந்தான். முழி மட்டும் பக்குவமாக பணத்தைப் பரிசோதித்துப் பார்த்துப் பார்த்து லாச்சியில் பூட்டியது.
அப்பன் போய் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றான். ஆட்களுக்கு முன்னிலையில் கேட்டு குழப்பமேற்படுத்தக் கூடாது. எல்லோரும் போகட்டும்.
ஆனால் நேரம் நீண்டுகொண்டிருந்தது. பொறுமை யில்லை. “தம்பி!”

Page 82
சுதாராஜ் 0 142
கடைக்காரன் கவனிக்கவில்லை. தம்பி’ என அழைத்த தும் சரியில்லையோ எனப் பட்டது. காரியம் ஆக வேண்டுமென்றால் கொஞ்சம் மரியாதையாகத்தான் பேச வேண்டும். எப்படியாவது பால் மாவிற்குரிய பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவனுக்கும் தனது வயதுதான் இருக்கலாம். பரவாயில்லை. "அண்ணை'
“என்ன வேணும் உங்களுக்கு?” "இந்தப் பால் மா. இஞ்சை தான் வேண்டினனான். சரியில்லை.”
கடைக்காரரின் முகம் இருட்சியடைந்தது, பின் சுதாரித்துக் கொண்டது.
“நிணடு கொள்ளும். வாறன். மற்றவையை விட்டிட்டு” "அப்பன் மிகப் பயபக்தியுடன் ஒதுங்கி நின்றான். நின்றவர்களும் வந்தவர்களும் போகும் வரை பொறுமை யாக நின்றான். பொறுமை பூமியைவிடப் பெரியது என அப்போது புரிந்தது. அவ்வளவு கனதி. பிள்ளைக்கு என்ன பாடோ என்ற துடிப்புடன் பொறுமையைக் கடைப் பிடிக்கும் காரியத்தைச் செய்யவே ஓர் அபார பொறுமை (திறமை) வேண்டும் போலிருந்தது.
“சரி. உமக்கு என்ன வேணும்?” ஒரு வழியாக அவனது கடைக்கண் பார்வை அப்பன் மேல் விழுந்தது.
“இந்தப் பால் மா. சரியில்லை. பழசு. புழுப் பிடிச்சிருக்கு. இஞ்சதான் வேண்டினது."
"அதுக்கு நான் என்ன செய்யிறது?. பக்கற் அடைச்சுத் தானே இருந்தது?"
'அடைச்சுத்தான் இருந்ததுங்கோ. எண்டாலும் இஞ்சை பாருங்கோ. இதை எப்பிடிப் பிள்ளைக்குக் குடுக்கிறது?"

143 ல் தெரியாத பக்கங்கள்
"குடுக்கேலாட்டி. வேற இடத்திலை வேண்டிக் குடுமன்!” V
"நான் உங்களைக் குறை சொல்லயில்லையுங்கோ. இதை வைச்சுக்கொண்டு என்ர காசைத் தந்தால் பெரிய உதவி.”
“என்ன பகிடி விடுகிறீரா?. வித்த சாமான் திருப்பி எடுக்கேலாது போம் காணும்!”
"ஐயா!. இதைக் குடிச்சு பிள்ளைக்கு வயித்தாலை அடிக்குது'
“அதுக்கு?. டொக்டரிட்டைக் கொண்டு போறது தானே? ஏன் இஞ்சை வந்தனிர்?”
“அதுக்குத்தான் ஐயா!. டொக்டரிட்டைக் காட்டி றதுக்கு கையிலை காசில்லை. இதை வைச்சுக்கொண்டு என்ர காசைத் தாங்கோ'
“வழியில்லாட்டி. ஏன் பிள்ளைப் பெறுகிறனிங்கள்?" அப்பனின் வாய் அடைத்துப் போனது. நெஞ்சுக்குள் மூண்டுகொண்டிருந்த கனல் ஜுவாலையிட்டு எழுந்தது நிதானித்து அடங்கினான்.
“உங்களுக்கு புண் ணியம் கிடைக்கும். நீங்கள் முழுக்காசும் தரவேண்டாம். நீங்கள் பாதி நான். அரைவாசிக் காசையெண்டாலும் தாருங்கோ.”
"இப்பிடி யாவாரம் செய்தால். நான் கடையைத்தான் இழுத்து மூடவேணும். ஒரு சதமும் தரேலாது. இதிலை நிண்டு விசர் கதைகதைச்சு என் ர நேரத்தை மினக்கெடுத்தாமல் போம்!”
ஜுவாலை பற்றி எரிந்தது. அதில அப்பன்தானே எரிந்து கொண்டிருந்தான்.
"இந்தார். இதையும் வித்துக் காசாக்கு"

Page 83
சுதாராஜ் 0 144
பால் மா பாக்கட்டை மேஜையில் போட்டுவிட்டு அப்பன் படியிறங்கி நடந்தான்.
சில நாய்கள் குரைத்தன.
தொலைவில் விமானச் சத்தம். வட்டமிட்டது. குண்டு போடத்தான். பிள்ளைகளை நினைத்துக்கொண்டு ஒட்டமும் நடையுமாக வீட்டுக்குப் போனான் அப்பன்.
அண்மித்தபோது அந்தத் தெருவிலும் சில நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன.
அப்பனின் குடிசையிலிருந்து அழுகைக் குரல் கேட்டது.
- அது குழந்தையின் அழுகையல்ல.
(சிரித்திரன் 1994)

அப்பாச்சியும் ஊன்றுகோல்களும்
வாசலில் படுத்திருந்த நாய் திடுமென எழுந்தது. ஒரு பார்வை பார்த்தது. சரிதான் தொலைந்தோம்' என அவன் நினைக்கையில் வாலை ஆட்டிக் கொண்டு ஓடி வந்தது. தலையை பதித்து காலை நக்கியது. அதன் தலையில் தட்டிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
படிக்கட்டு காலில் தடக்கியது.குனிந்து காலை தடவிக் கொண்டு விறாந்தையிலேறி நடந்தான். மனசில் தயக்கம். வரவேற்பு எப்படியிருக்குமோ. ஒருவேளை அப்பாவைக் காண நேர்ந்தால் விளைவுகள் எப்படியிருக்குமோ?
எப்படியிருந்தாலென்ன? அப்பாச்சியைப் பார்க்கத் தானே வருகிறான். அப்பாவுக்குத் தாயென்றாலும் அவனுக்குப் பேத்தி, பேத்தியிடம் பேரனுக்கு இல்லாத உரிமையா? நடந்தான்.
முற்றத்து மரத்தில் காகமொன்று கொப்பு மாறி இருந்து கரைந்தது. அவனை முதலில் கண்டது மாமிதான்.
"விடியக் காலமையிருந்தே. காகமொன்று ஓயாமல் கத்திக் கொண்டிருக்கு ஆரோ வராதவையள் வரப்போகின மெண்டு சொல்லிக் கொண்டிருந்தனான்.”
காய்கறி நறுக்கும் அலுவலை அந்தப்பட்டியே விட்டு சேலைத் தலைப்பில் கையைத் துடைத்தவாறு வந்தாள் ԼDITւճ,
“இப்பதான் வழி தெரிஞ்சுதாக்கும்?” மாமியின் பொய்க் கோபம் இதமாயிருந்தது. புன்னகைத்து அன்பைத் தெரி வித்தாள்.
மாமியின் பிள்ளைகள் வந்து கூடினர். ஆளுக்கொரு விடயமாக குசலம் விசாரித்தனர். அவனது வருகை

Page 84
சுதாராஜ் 0 146
எல்லோருக்கும் சந்தோசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவனது கண்கள் அப்பாச்சியைத் தேடின. வீட்டு தளவாடங்கள் இடம் மாறி இருந்தன. தூசி தட்டப்படாத படங்கள் சுவரில் தொங்கிக் கொண்டு. இன்னும் நாங்கள் இருக்கிறோம் எனும் பரிதாபப் பார்வையுடன் நிலைக் கண்ணாடி தெற்குப் பக்கச் சுவருக்கு மாறியிருந்தது. பாவனைக்கு உதவாத அல்லது பாவனை முடிந்து போன பண்டங்கள் ஒரு பக்கமாக தூக்கிப் போடப்பட்டு.
அப்பாச்சி ஓர் ஒரமாக இருந்தாள். கூனிக்குறுகி கால்களை மடித்து சுவருடன் சாய்ந்து வீட்டிலேற்பட்ட எந்த ஆரவாரங்களும் தன்னைப் பாதிக்காதது போல. ஒரு தனி உலகத்தில் இருப்பது போல.
அந்தக் கோலம் அவன் நெஞ்சைப் பிடித்து உலுக்கியது. இந்த ஆறு வருடத்துக்குள் எப்படி மாறிவிட்டாள்! முதுமை இப்படி திடுதிப்பென வந்து அடித்துப் போட்டுவிட்டு போய்விடுமா?
அப்பாச்சியின் பக்கத்தில் ஒர் ஊன்றுகோல். சுவரில் சாத்தப்பட்டு - ஒரு காவலனைப்போல அது தலையை நிமிர்த்திக் கொண்டு நின்றது.
அவன் தலையைக் குனிந்து கொண்டு போய் அப்பாச்சிக்கு பக்கத்தில் அமர்ந்தான். மெல்ல குரல் கொடுத்து அழைத்தான்.
"அப்பாச்சி"
அப்போதுதான் ஒரு கனவுலோகத்திலிருந்து மீண்டது போலத் தலைநிமிர்ந்தாள். முகத்தில் பலவிதச் சுருக்கங்கள். கீறிவிட்டதுபோல கோடுகள். கண்கள் அகல விரிந்தன. கைகளை மெல்ல உயர்த்தி குரல் வந்த திக்கில் நீட்டினாள். சக்தியற்று நடுங்கும் கைகளை அங்குமிங்கும் அசைத்தாள்.
அப்பாச்சிக்கு கண் தெரியவில்லை.

147 () தெரியாத பக்கங்கள்
அந்த கைக்குள் தன் முகத்தைக் கொடுத்தான். அப்பாச்சி அவனது சொக்கைத் தடவினாள். இரு கைகளாலும் விரல்கள் நடுங்க நடுங்கத் தடவினாள். கண் கலங்கி அழுதாள்.
“ஆரது? வசந்தரனே. வசந்தன். வசந்தன். என்ற அப்பூ” எனச் சொல்லிக்கொண்டே அவனது முதுகை அணைத்துத் தடவினாள்.
"ஏன் அப்பாச்சி கண் தெரியவில்லையோ?” “தெரியாமல் போச்சு அப்பு!”
பேசுவதை நிறுத்தி சத்தமாக பெருமூச்செறிந்தாள். ‘எல்லாம் முடிஞ்சுது’ என்பதுபோல அல்லது தனது இயலாத் தன்மையை காட்டுவதுபோல கைகளை அபிநயித்தாள்.
"ஆக்கள் போறது வாறது. சாடைமாடையாய். ஒரு அசைவு மாதிரித் தெரியும். இன்னாரெண்டு சொல்ல இயலாது?”
"டொக்டரிட்டை காட்டயில்லையோ?”
“காட்டினது கண்ணாடியும் எடுத்துக் கொடுத்தது. அது போட்டும் தெரியுதில்லையாம்' -மாமிதான் பதில் சொன்னாள்.
"ஒப்பிரேசன் செய்தாத்தான் சரி வருமெண்டு டொக்டர் சொல்லுறார். மனிசி கேட்டாலெல்லோ, பிடிச்சிராவி! வேண்டாமென்று நிக்குது
அவன் அப்பாச்சியின் கையை ஆதரவாகப் பிடித்தான். மென்மையாகச் சொன்னான்: “ஏன் அப்பாச்சி. பயமா? சின்ன ஒப்பிறேசன்தானே. என்ன பயம்? ஒப்பிறேசன் செய்திட்டால் கண் தெரிய வரும். நல்லதுதானே?”
“ஏனப்பன்? அதெல்லாம் வீண் செலவணை.

Page 85
சுதாராஜ் 0 148
வேண்டாமப்பு. இண்டைக்கோ நாளைக்கோ எண்டு இருக்கிறனான். இப்படியே ஒரு பக்கத்திலே கிடந்திட்டுப் Gunranub!”
அப்பாச்சி தன் தள்ளாத வயதை உணரத் தலைப்பட்டு விட்டாள். தன் காலங்கள் முடிந்துவிட்டன என்பது 3CD5 விரக்தியுணர்வாக அவள் மனதில் படிந்து போய்விட்டது. தான் எதற்கும் பயனில்லாதவள். யாருக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாது எனக் கருதித்தான் போலும் ஒதுங்கி யிருக்கிறாள். எப்படியாவிது அவளை சிகிச்சைக்குச் சம்மதிக்க வைத்து பார்வையை திருப்பிக் கொண்டுவர வேண்டும் என நினைத்தான். ܫ
"வசந்தன். அம்மா எப்படி இருக்கிறாள்?” அம்மா மீது அப்பாச்சி கொண்டுள்ள பிரியம் அவனுக்குத் தெரியும்.
அப்பாச்சி கிராமத்தில் தன் மகளோடு (மாமி) இருந்தாலும் கிழமைக்கு ஒரு தடவையாவது அம்மாவைப் பார்க்க வருவாள். அப்போதெல்லாம் யாழ்ப்பாணம் ரெளணுக்கு அடிக்கடி பஸ்சேவை இருந்தது. மாமியின் மகள் சுகந்தியை துணைக்கு அழைத்துக் கொண்டு அப்பாச்சி வருவாள்.
சனிக்கிழமைகளில் (சுகந்திக்கு ஸ்கூல் இல்லாத நாட்கள்) அப்பாச்சியை நிச்சயம் எதிர்பார்க்கலாம். வீட்டு வாசலில் இருந்து வீதியைப் பார்த்துக் கொண்டிருப்பான். தலையில் ஓர் நார்க்கடகத்தை சுமந்து கொண்டு கையில் சுகந்தியையும் பிடித்துக் கொண்டு அப்பாச்சி வீதியின் திருப்பத்தில் இறங்கும்போது துள்ளிக்கொண்டு ஒடுவான்.
அப்பாச்சி தன் சேலைத் தலைப்பில் முடிந்து வைத்திருக்கும் இனிப்புச் சரையை எடுத்து அவனிடம் கொடுப்பாள். சுகந்தியின் கையைவிட்டு அவனது தோளைப் பிடித்துக்கொண்டு வருவாள். எப்போதுமே தோளைத்தான் பிடித்துக் கொள்வாள். அணைப்பது

149 0 தெரியாத் பக்கங்கள்
போலவுமிருக்கும். தாங்கிக் கொள்வது போலவுமிருக்கும். அப்பாச்சிக்கு ஒரு ஊன்றுகோலைப்போல தான் நடப்பதாக கற்பனை செய்வான். அதில் சந்தோஷ மாயிருக்கும்.
வீட்டில் வந்து கடகத்தை இறக்கி வைத்தால். இராச வள்ளிக்கிழங்கு, பனங்கிழக்கு, மரவள்ளிக்கிழங்கு மற்றும் கிராமத்திலிருந்து புதுச்செழிப்புடன் வந்திருக்கும் மரக்கறி வகைகள் இத்யாதி அம்மா வந்து பக்கத்தில் அமர்ந்து கொள்வாள். அப்பாச்சி கடகத்திலிருந்து ஒவ்வொரு பண்டமாக எடுத்து அவளிடம் கொடுப்பாள். எதை எதை எப்படிச் சமைக்கலாம் என பக்குவம் சொல்வாள். அம்மா நல்ல ச்மையல்காரி. சாப்பிடும்போதெல்லாம் அப்பாச்சி அம்மாவைப் புகழ்வாள்.
"இப்படி. ஆருக்கும் சமைக்கத் தெரியாது பிள்ளை"
இராசவள்ளிக்கிழங்கிற்கு சீனியும் பாலுமிட்டு அவித்துச் சாப்பிடுவது அவனுக்குப் பிடிக்கும். அதில் கொஞ்சம் சவ்வரிசியும் சேர்த்துவிட்டால் மணி!
ஒவ்வொரு முறை அப்பாச்சி வரும்போதும் இராச வள்ளிக்கிழங்கும் தவறாது வரும். சீசன் கடந்தாலும் தேடிப் பிடித்து வாங்கி வந்து விடுவாள்.
அவனது கண்கள் பனித்தன. அதை யாருக்கும் காட்டிக்கொள்ள விரும்பாமல் கண்களில் தூசிபட்டது போலத் துடைத்துப் பாசாங்கு செய்தான்.
"என்னப்பு. கேக்கிறன். பேசாமலிருக்கிறாய். அம்மா எப்பிடி இருக்கிறாள்?”
“சுகமாய் இருக்கிறதா. அம்மாதான் என்னை அனுப்பிவை. உங்களை உங்களை பார்த்துக் கொண்டு வரச்சொல்லி.” بر
அம்மா சில நாட்களாக நச்சரிக்கத் தொடங்கியிருந் தாள். "அப்பாச்சியைப் போய்ப் பார்த்துவிட்டு வா தம்பி"

Page 86
சுதாராஜ் 0 150
அதற்கு அவன் கிண்டல் செய்வான்.
"அப்பாச்சியையோ? அப்பாவையோ? ஆர்ைப் போய்ப் பார்க்கச் சொல்லுறீங்கள் அம்மா?”
அது என்ன மாதிரியான பிரதிபலிப்பையும் அம்மா வின் முகத்தில் காட்டியதில்லை. எவ்வித உணர் வலைகளையும் வெளிகாட்டாது தன் சோகங்களையெல் லாம் தன் நெஞ்சுக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்ள அம்மா கற்றுக்கொண்டதும் இந்த ஆறு வருடங்களில்தான்.
அப்பாச்சியைப் பார்க்க போகிற சாட்டில் அப்பாவை யும் அவன் பார்த்து வரட்டும் என உண்மையிலேயே அம்மா கருதியிருக்கலாம். அதனால் அப்பாவுக்கும் மகனுக்குமிடையில் உறவு மீண்டும் புதுப்பிக்கப்படாதா என்ற ஏக்கமும் அவள் மனதில் இருந்திருக்கலாம்.
அப்பா, அம்மாவையும் தங்களையும் பிரிந்து போன தற்கு ஏதோ ஒருவகையில் தான்தானே காரணம் என்ற உணர்வு அவன் நெஞ்சில் குத்திக்கொண்டேயிருக்கிறது.
அமைதியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கைப் படகு அவனது திருமணப் பேச்சுகளுடன்தான் ஆட்டம் காணத தொடங்கியது./
அவனுக்குக் காதல்! அப்பாவைப் பொறுத்தவரை அவள் யாரோ ஒரு பெண்! அந்தக் கல்யாணத்துக்கு அவர் சம்மதமில்லை. வீடு அமர்க்களப்பட்டது.
அந்த நாட்களில் ஒருநாள் அப்பாச்சி அவனை தனிமை யில் அழைத்துக் கேட்டாள்:
"வசந்தன். ஆரடா அது பெட்டை.? அவளைத்தான் முடிக்க வேண்டுமென்று நிக்கிறியாம்?”
அப்பாச்சியின் முன்னிலையில் மெளனியாயிருந்தான். குடும்பத்தில் எல்லோரிடத்திலும் பற்றுபாசம், அக்கறை

151 0 தெரியாத பக்கங்கள்
கொண்ட மனிசி. வீடு இரண்டுபடுவதை பொறுக்க முடியாது கேட்கிறது. என்ன பதிலைச் சொல்ல?
அப்பாச்சியின் அடுத்த கேள்வி அவனைத் தூக்கி நிறுத்தியது.
“எப்பிடி வடிவான பெட்டையே.? எங்கட சுகந்தியை விட வடிவே.?"
கேள்விக்குறியுடன் அப்பாச்சியைப் பார்த்தான். காதல் வடிவிலா பிறக்கிறது? அல்லது அப்பா சொல்வதுபோல வயதுக் கோளாறினாலா? அதற்கும் மேலாக ஏதோ ஒன்று சொர்க்கத்திலோ அல்லது வேறு எங்கையோ அதை நிர்ணயித்து விடுகிறது.
அவனது வாழ்க்கையில் பார்த்த, பழகிய பெண்களில். ஏன் அவள் மட்டும் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி னாள்? அவளுக்காக எதையும் எதிர்த்து நிற்கும் சக்தியைக் கொடுத்தது என்ன?
யோசித்துப் பார்த்திருக்கிறான்.
பச்சைப் பாவாடை சட்டையும் செம்மஞ்சள் தாவணியும் கூந்தல் நிறைய மல்லிகை மலர் கொத்துமாக அந்த அம்மன்கோவிலில் தரிசித்த அந்த சின்னஞ்சிறு பெண்ணை பிறகு அவனால் மறக்க முடியாமற் போனது உண்மைதான்.
பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணம் அப்பாவுக்கு இருந்தது. சரியோ தவறோ அவனது மனதிலும் அது அப்படியே பதிந்து போனதற்கு அப்பாதான். காரணம். அது போன்ற ஒரு பெண்ணைக் காண நேர்ந்தபோது அவளைத் தன் பெண்ணாக மனசு தீர்மானித்து விட்டிருக்கலாம்.
சந்தர்ப்பவசமாக அல்லது சந்தர்ப்பத்தை வசப்படுத்திக் கொண்டு பின்னர் பழகிய ஏழோ, எட்டு வருடங்களில்

Page 87
சுதாராஜ் 0 152
அவள் இயல்பாகவே மனைவி என்ற ஸ்தானத்தை அடைந்திருந்தாள்.
குயிலொன்று தொலைவில் இருந்து தனிமையாகப் பாடியது. அந்தக் கீதத்தல் சோகம் இருந்தாலும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல இனிமையும் இருந்தது. அதில் லயித்ததில் நினைவுகள் தடைப்பட்டன. அடுத்த கணமே அப்பாச்சியின் மூன்றாவது கேள்வி நினைவில் வந்தது. “அவள் என்ன சாதி?”
“பெண் சாதி!” - சற்று சினத்துடன்தான் சொன்னான். சாதி இரண்டொழிய வேறில்லை. ஆண் சாதி, பெண் சாதி என்ற கருத்துப்படத்தான் அப்படிச் சொன்னான். அதில் இன்னொரு கருத்தும் 'மனைவி' என்ற அர்த்தத்தில் தொனிப்பதை பின்னர்தான் உணர்ந்தான்.
அப்பாச்சி தன் கைகளை உயர்த்தினாள்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவள் போல் கைகள் நடுங்கின. அவனை கும்பிடுவது போல கைகளைப் பிடித்துக்கொண்டு அப்பாச்சி கண்கலங்கினாள்.
“என்னவோ தம்பி. நீ படிச்சனி. நல்லது கெட்டது தெரியும். ஆனால் அவளைக் கண்கலங்க வைச்சிடாதை.! கொப்பன் பின்பு அவளைத் திண்டு கைகழுவிப் போடுவான்!”
அப்பாச்சி அவள் எனக் குறிப்பிட்டது அம்மாவைத் தான். அப்பா எடுத்ததற்கெல்லாம் அம்மாவையே குறை குற்றம் சொல்வதுண்டு. அப்பாச்சி சொன்னது சரி. அம்மா. தினமும் அப்பாவிடம் ஏச்சு வேண்டினாள்.
“நீ வளர்த்த வளர்ப்பு சரியில்லை”
அவன் குழம்பிப் போனான். செய்வதறியாது திகைத்து
நின்றான். தடுமாறி நிற்கும்போது வழிகாட்டி ஆதரிக்க வேண்டிய பெரியவர்கள் கோலைத் தூக்கிக்கொண்டு

153 0 தெரியாத பக்கங்கள்
எதிரே நிற்கிறார்கள். அம்மா என்னாலே அழுது தீர்க்கிறாள். இப்படியே காலங்கள் கழிய அவனுக்குத் தாடி முளைக்கத் தொடங்கியிருந்தது.
இன்னொரு முறை வீட்டுக்கு வந்திருந்தபோது (அல்லது வந்து) அப்பாச்சித்ான் அவனை மீண்டும் தூக்கி நிறுத்தினாள்.
“என்னடா வசந்தன்? இதென்ன கோலம்? ஏன் யோசித்துக்கொண்டு திரிகிறாய்?"
அப்பாச்சி தைரியம் ஊட்டின்ாள். “நான் சொல்லுறதைக் கேள்! பொம்பிள்ளைப் பிள்ளை விசயம். பிறகு பழி பாவம் வரக்கூடாது. போய் அந்தப் பிள்ளையை முடிச்சுக்கொண்டு வா! மற்றவையளைப் பற்றிக் கவலைப்படாதை."
அந்த மருந்து வேலை செய்தது. அவன் துணிந்து அப்பாவிடம் கதைத்தான். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதுதான் வாழ்க்கையின் உன்னதமான தத்துவம். அப்பா சொன்னார்:
“யாரையும் ஏமாற்றக் கூடாது. நீ வாக்குக் குடுத்தவ ளையே போய் கலியாணம் செய். அதுதான் சரி. ஆனால் வீட்டிற்கு கூட்டி வரக்கூடாது. கூட்டி வந்தால் நான் வெளிக்கிட்டிடுவேன்.”
என்ன இது? கலியாணம் செய்து வீட்டுக்கு கூட்டி வராமல் வேறு எங்கு போவது? கல்யாணம் காரணமாகி குடும்பத்தில் ஒவ்வொருவரும் பிரிந்து போவதென்றால் பிறகு ஏன் கலியாணம்?
“அதெல்லாம் போகப் போகச் சரிவரும்" அவன் மணமுடித்து மனைவியை கூட்டி வந்தான்.
அப்பா வெளியேறிவிட்டார். தன்னையோ அப்பாச்சி யையோ யாரும் பார்க்க வரக்கூடாதென்ற உத்தரவு வேறு.

Page 88
சுதாராஜ் 0 154
அதனால் அப்பா தனக்கு தண்டனை அளித்தாரோ, அம்மா வுக்கா அல்லது எல்லோருக்கும் தண்டனை அளித்துக் கொண்டாரா என்பது இன்னும் அவனுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.
அவன் முகத்தை திருப்பி வெளியே பார்த்தான். மரங்கள் ஆடாமல் அசையாமல் அணிவகுத்து நிற்கும் மரங்கள். காற்று வீசும் அறிகுறியில்லை. இதம் இல்லை. எனினும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காற்றை சுவாசித்து வாழும் மரங்கள்.
வெயில் சுடுகிறது. எரிச்சல் எனினும் வெயில் தேவைப்படுகிறது. வெயிலை எதிர்நோக்கி தலையை உயர்த்தி வளரும் மரங்கள்; நிலத்தில் எங்கோ எல்லாம் வேரை புகுத்தி எப்படியாவது நீரை உறிஞ்சி வளரும் மரங்கள.
இவற்றைப் பார்க்க ஆறுதல் ஏற்படுகிறது. வாழ்க்கையின் அர்த்தங்களை தன்னகத்தே கொண்டுள்ள மரங்கள். இயற்கை
சுகந்தி தேநீர் கொண்டுவந்து பக்கத்தில் வைத்தாள். நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஆறமுதல் எடுத்துக் குடியுங்கோ" என்றாள். அந்தக் கரிசனைக்குக் கட்டுப்பட்டு குழந்தை போல தேநீரை எடுத்துப் பருகியபோது அது தொண்டையிலிருந்த நோவையும் கழுவிக்கொண்டு உள்ளிறங்குவது போலிருந்தது. அப்பர்ச்சி அவனது நாடியை எட்டித் தன்பக்கம் திருப்பிக் கேட்டாள்.
"வசந்தன். அந்தப் பிள்ளையை இஞ்சை கூட்டிக் கொண்டு வரமாட்டியே .பார்க்க ஆசையாயிருக்கு."
கூட்டி வரலாம்தான். ஆனால், "அப்பா.” எனத் தயங்கினாள்.

155 ) தெரியாத பக்கங்கள்
“அவன் கிடக்கிறான். நீ கூட்டிக்கொண்டு வா"
அப்பாவை இப்படி. அவன் இவன் என்று பேச அப்பாச்சி ஒருவரால் மட்டும்தான் முடியும். இவ்வளவு நாள்களும் தன் மனைவியைக் கூட்டி வந்து அப்பாச்சிக்கு காட்டாமல் விட்டது தவறுதானே என்று தோன்றியது.
அதுசரி மனைவியை அப்பாச்சி பார்க்க வேண்டு மென்கிறாள். எப்படிப் பார்ப்பாள்? இதுபோலத் தன் கைகளால் ஸ்பரிசித்து. உணர்ந்து. அதுபோதுமா?
எப்படியாவது அப்பாச்சியை கண் சிகிச்சைக்குச் சம்மதிக்க வைத்து.
அப்பாச்சியை பார்க்க வந்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவன் வெளிநாட்டுக்குப் போகப் போகிறான். நாட்டில் யுத்தம் காரணமாக அவனது தொழில் விைட்டுப் போயிருந்தது. அதனால் பொருளாதாரக் கஷ்டம் வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தான். சீக்கிரத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கை.
போவதற்கு முதல் அப்பாச்சியை ஒருமுறை பார்த்த தாகவும் பயணம் சொன்னதாகவும் இருக்கும் என்ற நோக்கமும் வந்ததில் இருந்தது.
பயணம் போக முதல் அப்பாச்சியின் கண்சிகிச்சைக்கு ஒழுங்கு செய்ய வேண்டும் என்பதை ஒரு உறுதி போலவே மனத்தில் எடுத்துக் கொண்டான்.
எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற்ற போது அப்பாச்சி அவனது கையைப் பிடித்துக்கொண்டு விடாமல் அழுதாள்.
"இந்தப் பிள்ளையெல்லாம். இப்படித் திக்கு திக்காய் போச்சுதுகளே!"
அப்பாச்சியின் ஏக்கத்தை உணர முடிந்தது. சொல்ல எத்தனிப்பதும் புரிந்தது. தன் கடைசிக் காலத்தில்.

Page 89
சுதாராஜ் 0 156
ஒவ்வொரு பக்கமாகப் பிரிந்திருக்கும் பிள்ளைகுட்டிகளின் நிலமையைத் தாங்க முடியவில்லை. எல்லோரையும் ஒன்று சேர்க்கும் வல்லமையை அவனிடத்தில் எதிர்பார்க்கி றாளோ என்னவோ! பேச முடியவில்லை, கையை விடுவித்துக் கொண்டு நடந்தான்.
"வசந்தன்! அதுகும் என்ரை பிள்ளைதான்! போறதுக்கு முதல் கட்டாயம் கூட்டி வந்து காட்டு"
அப்பாச்சி என்னும் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. வந்து விட்டன்.
வீட்டுக்கு வந்து இரண்டொரு நாட்களுக்குள்ளேயே வெளிநாட்டு வேலைக்கு அழைப்பு வந்தது. அவசரமாகப் போகவேண்டும்.
இந்த அவசரத்துக்குள் வேறு எந்த அலுவலும் முக்கிய மானதாகப் படவுமில்லை. பொருளாதார நெருக்கடி வேலை விடயத்தை பின்போடவும் முடியவில்லை. அப்பாச்சியின் ஆசையை நிறைவேற்ற மனைவியையாவது அழைத்துப் போகலாம். அப்பாவின் கண்ணில் பட்டால் என்ன ஆகுமோ எனும் தயக்கம் ஒரு பக்கம். சரி, கண் சிகிச்சை அது இது எல்லாவற்றையும் பிறகுவந்து பார்க்கலாம் என வேலைக்குப் போக முடிவெடுத்தான். நியாயங்களெல்லாம் சுயநலம் கலந்த சந்தர்ப்பவாதம்தானோ என்றும் தோன்றியது.
வேலைக்கு வந்து சேர்ந்து; அவன் கடிதம் எழுதி, வீட்டிலிருந்து பதில் கடிதம் வர கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. அம்மா எழுதியிருந்தாள்: ...i.4
“தம்பி. நீ போன அடுத்த நாள் அப்பாச்சி செத்துப் போனா என்னைச் செத்த வீட்டுக்கும் வரக்கூடாதென்று சொல்லிப் போட்டினம். அவற்றை சகோதரங்களும் என்னைக் கூட்டிக்கொண்டு போய் காட்ட வேணுமெண்டு

157 0 தெரியாத பக்கங்கள் நினைக்கையில்லை. நான் அப்பாச்சியிலே வைச்சிருந்த பட்சம் இவையஞக்கு எப்பிடித் தெரியும்? வீட்டிலை இருந்து என்ர பாட்டிலை அழுதன்."
அம்மாவைப்போல அவனும் எங்கோ ஒரு கண்காணாத தேசத்திலிருந்து அப்பாச்சியை நினைத்து அழுதான். இப்போது அந்த நினைவுகள் மட்டும் அவனிடத்தில் மிஞ்சிப் போயிருக்கின்றன.
(6SirQstrf 1995)

Page 90
பின்பக்கக் குறிப்பு கதாராஜ் வாழ்க்கைக் குறிப்பு
பெயர் :- சிவசாமி இராஜசிங்கம்
தந்தை : சிவசாமி
தாய் : இராசம்மா
மனைவி: குமுதா
பிள்ளைகள்: தேனுகா, ஆருத்ரா, அனந்தன், அனுஷன். கல்லூரிப்படிப்பு: யாழ் இந்துக் கல்லூரி. மேற்படிப்பு: இலங்கைப் பல்கலைக் கழகம், கட்டுப் பெத்த வளாகம், மொரட்டுவ. தொழிற்துறை: பொறியாளர்.
பணிபுரிந்த நாடுகள்: ஈராக், குவைத், பகிஸ்தான், இத்தாலி, கிரீஸ், யெமன், அல்ஜீரியா, இந்தோனேசியா.
தற்போதய பணி : உற்பத்தி முகாமையாளர். லிபெக்சிம் சிமென்ற் - இந்தோனேசியா.
எழுத்துத்துறை : பிரவேசம் : 1971-ம் ஆண்டு முதற் சிறுகதை : "இனி வருமோ உறக்கம்?"

நூல்கள் :
1. பலாத்காரம் (1977) சிறுகதைத் தொகுப்பு
2. இளமைக் கோலங்கள் (1981) நாவல் - வீரகேசரிப்
பிரசுரம்.
3. கொடுத்தல் (1983) - சிறுகதைத் தொகுப்பு -
சிரித்திரன் பிரசுரம்.
4. ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள் - (1989) சிறுகதைத் தொகுப்பு - மல்லிகைப் பந்தல் வெளியீடு
விருதுகள் / பரிசுகள்:
1. “கொடுத்தல்' - 1981 - 1990 காலப்பகுதியில் வெளியான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சாகித்திய விருது - "இலக்கிய வித்தகர்” فــا فـالا இலங்கை அரசின் இந்து சமயக் கலாச்சார அமைச்சினால் வழங்கப்பட்டது.
2. “ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்" 1989ம் வருட சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பரிசு யாழ் இலக்கிய வட்டம்.
3. “அடைக்கலம்" சிறுகதை ஆனந்த விகடன் வைர
விழாப் போட்டியில் பரிசு பெற்றது.

Page 91


Page 92


Page 93
சுதார
தான்,
போல்
பரந்த அனுபவம் ெ
1971ல் எழுத்து இளமைக் கோலங்கள்
ரம், கொடுத்தல், ஒரு பொழுதுகள் ஆகிய
எழுதியவர்.
"கொடுத்தல் சி
யின் சாகித்ய மண்ட
விகடன் வைர விழ
மேலும் பல பரிசுக
கலாசார அமைச்சின
பட்டமும் பெற்றவர்
 
 
 
 

பாத பக்கங்கள்
பாது இந்தோனேசியாவில் றியியலாளராகப் பணிபுரியும் ாஜ் ஈராக், குவைத், பாகிஸ்
கிரீஸ், யெமன், அல்ஜீரியா *ற நாடுகளிலும் பணிபுரிந்து பெற்றவர்.
லகில் பிரவேசித்த ஆசிரியர் i என்ற நாவலையும் பலாத்கா தநாளில் மறைந்த இருமாலைப்
சிறுகதைத் தொகுதிகளையும்
றுகதைத் தொகுதி இலங்கை -ல் விருது பெற்றது. ஆனந்த ாப் போட்டிப் பரிசு உட்பட 1ள் பெற்றதுடன் இந்து சமய ால் 'இலக்கிய வித்தகர்' என்ற
r. ܡܒ ܒ ܒ=----