கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரலாற்றில் இலங்கை கண்ட குமரி - பாகம் 1

Page 1


Page 2


Page 3
A『T禮』權的論*-_)~~■ R-T-7)_L〉닐치확
に

է Վ.
"تمي
இலங்தை சூலுற்றுட k - 나 is குUர்
"آیت"),ے
pë اساS
கொழும்பு தமிழ்ச்/
k இலங்கை தமிழ்மணி
ய்வு : 圆 목관, மானா மக்கீன்
5Y
இலக்கிய சிந்தனாமணி பதிவு ! ) k லேனா தமிழ்வாணன்எம்ஏ)
தபால் பெட்டி எண் : 1447 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017 தொலைபேசி 24342926 தொலைநகல் 20091-44-24345082 سمې மின் அஞ்சல் manimekalalடுeth.net SS
k மணிமேகலைப் பிரசுரம்

Page 4
CLJTJLLSLLLSLLLTTLJJLLLL LLJLLJLLLJLCSJJCLC LLLLCLJLCL C JCLL LLLLLL
TOEJO OYSLOeETeETyOE TiOYYiTLOAiETT TqG LGLGL LLOL GLJ LOkT LE JTO LOL
நூல் தலைப்பு
ஆசிரியர்
மொழி பதிப்பு ஆண்டு பதிப்பு விவரம்
உரிமை
தாளின் தன்மை
நூலின் -୬୩ ଗ୍ଧ
அச்சு எழுத்து அளவு
மொத்த பக்கங்கள்
வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
மான்ாாக்கின்
தமிழ்
2005
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
11.6 ..
கிரெளன் சைஸ் (12' x 18' செ.மீ)
10 புள்ளி
228
நூலின் விலை
ரூ. 7000 இலங்கை ரூ.27
அட்டைப்பட ஓவியம்
லேசர் வடிவமைப்பு அச்சிட்டோர் நூல் கட்டுமானம் GlaualLINLGLTri
ܗ
+"
afrTulu řĜ7aFaziraR7g7, அறபு எழுத்தணி ஜனாப் எம்.எஃப்.எம். ஃபாரிஸ் மாகொவு - இலங்கை கிறிஸ்ட் கம்ப்யூட்டர்ஸ், சென்னை ஸ்கிரிப்ட் ஆப்லெட் சென்னை தையல்
மணிமேகலைப் பிரசுரம், சென்னை

qTLYTLTTrJATLAJALAJALAJJAJJrJJASArrSLCLTSrST ACrTSCTSATSACLSLrSSAAA
இந்நூலின் ೪parPrirä மிளிர்ந்து இலக்கிய நெஞ்சங்களிக் இதயங்கவில்
இடம்பெற்று df?"..mr# {
ూr?
eeTSekeSkeeLSEeTSeTEeE SeeATeA EekeSeT eAeAJeAA EL AA J AA AL AAAA AAT TALA LLLL
அகில இலங்கை சமாதான நீதவான்
ஆல்லுற13
தெதியை வாங்கச் செய்ய புரங்கர்களையும், பிரமுகர்களையும் : அைையும் இந்தக் குளோபல் ஆண்டில், ஆய்வு நூலொன்றை தெளிவிடவும் |கிழா ாங்க்கவும் ቇù மனிதர் முன்வருவாரர்? அந்தார் அவை இறைவனது எண்ணப்படியும் திட்டப்படியும்
இலங்கைப் பிரமுகர், தொழில் அதிபர், அகில இலங்கை சமாதான நீதவான் அல்ஹாஜ் எம்.எம்.ாம். போயிக்
- LDİTGMTTLD586ğT
M

Page 5

ர் அண்
எப்பொழுதும் நஜ்ஜிதை நினைத்து நsoமே செயல்படும் அாகாவருக்குமே
அன்புக்கோ
அவர்கள் அன்பு க்கோர் „Sfæriræturrir '
втат எழுத்துக்களின் اتنې شيانگ
சக்தியாக நீடு - நெய்வாசல்
நெஞ்சங்கள் L'A-rr:FF --Afrr:III - L
பாதை அமைத்துத் தந்த
தம்ம ஊரு சேதி ஆசிரியர்
Cyrillard as 3)WFrgJ, Tr
அவர்களது மூத்த ( !(?
அல்ஹாஜ் அ. நஜிம் அண்னன்
±æfâr (தலைவர், நஜீம் பிரதர்ஸ் -
ஆங்காங் பாங்காக்)
Tarta - இனிமை - இரக்கச்
சிந்தை அனைத்தும் கொண்ட
அமைதி மாசிதர் ஆன்மிகச் செம்மல்.
அன்னாருக்கே இந்நூல்
SöÖCgpsló.

Page 6

இ‘அப்பாஹ்வே, ரஹ்மானே,
ጆ` ፰ அழயேன்மோர் கிருபை வைத்து/
பொப்வாத மற்ாரியத்தை
67/7657 06/01/Tuf alusioGa/
- மேனா ஹாஜியார் அப்பா அவர்களது
அறபுத்தமிழ் ‘கப்பல் முனாஜாத்தின் ஆரம்ப வரிகள். (மஹ்ளவியத் குற்றம்/தவறு/பாவம்) 8
*. ஒரு சமுதாயத்தின் முன்னைய வரலாறுகளையும் இன்றைய நிலையினையும் சிந்தித்துணராதார்க்கு எதிர்காலம் எழில்மிக்கதாக அமைவதில்லை. ஆகவே முந்தையோர் வரலாறுகளில் சிந்தையைச் செலுத்த வேண்டியது நம் கடனாகும்.’
- இறையருட் கவிமணி, தீன்வழிச் செம்மல் கலாநிதி, பேராசிரியர் (மர்ஹஅம்) கா. அப்துல் கபூர் : : அவர்கள்.

Page 7
‘. அறடபியர் உடற்பலம் வாய்ந்த பேரினமாக மாறியது இந்து மகா சமுத்திரத்தில்தான். அவர்களது வருகையால் ஏற்பட்ட நிலையான பெறு பேறுகளை இந்து சமுத்திரக் கடற்கரையோர நாடுகளில் காண முடிகிறது.
- ஆய்வாளர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார்.
. வாணிபத்திற்காக அறபு நாடுகளில் "ே இருந்து வருகை தந்தவர்கள், தமிழக, கேரளக் கடற்கரை ஓரங்களில் நிரந்தரமாக வாழ ஆரம்பித்தனர். இஸ்லாமிய சமயம் சார்ந்த வாழ்வியலை வரவு வைத்தனர்!
- பேராசிரியர் மு. அப்துஸ்ஸமது
தமிழ்த்துறை, ஹாஜி கருத்த இராவுத்தர் ஹவுதியாக் கல்லூரி, உத்தம பாளையம்.
 
 
 
 
 
 
 
 
 

லங்கையின் பழைய பெயர்களுள் ‘செரண்டீப்” எனும் பெயரும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.
இலங்கையை அறேபியர்களே செரண்டீப் (சேரன் தீவு) என அழைத்தனர்.
ஆரம்பகாலம் முதலாகத் தென்பாண்டி நாட்டு மக்கள் மட்டுமின்றித் தென் சேர நாட்டு மக்களும் இலங்கையிற் திராவிடக் கலாசாரத்தை வளர்ப்பதிற் பெரும் பங்காற்றியுள்ளார்கள் என்பதனை வரலாற்றாசிரியர்கள் அவதானித்து உள்ளார்கள்.
இலங்கையில் மலபார் மக்கள் (சேரர்) சிறப்பாக வர்த்தகங்கள் செழிப்புற்ற நகரங்களையும், துறைமுகங்களையும் அண்டிக் குடியேறியிருந்தனர். பெரிபுளுஸ் (கி.பி. 80), பிளினி (கி.பி 1ம் நூற்றாண்டு) முதலானோர் மலபார் (சேரர்) வணிகர்கள் தமிழகம், இலங்கை, பர்மா முதலிய நாடுகளிலிருந்து பொருட்களைப் பிறநாடுகளுக்குச் சந்தைப்படுத்துவதற்காக மலபார் துறைமுகங்களிற் குவிப்பதைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர்கள் குறிப்புக்களிலிருந்து மலபார் வாணிகக் குழுக்கள் இலங்கையின் கரையோரத்

Page 8
10
துறைகளில் வர்த்தக முயற்சிகளிலீடுபட்டிருந்தார்கள் என்பது தெளிவாகின்றது. சேரர், பாண்டியர் வர்த்தகக் குழுக்கள் யாவும் ஒரே கலாசாரத்தைப் பேணியதனாற் பிற்காலத்தில் இவர்களைப் பிரித்து அறிவது கஷ்டமான காரியமாகிவிட்டது. ஆயினும் சேர வர்த்தகக் குழுக்களுடன் நேரடியாக வாணிகத்தை நடத்திய அறேபியர்கள் இலங்கையைச் சேரர் பெயராலே ‘சேரன் தீவு’ என அழைக்கலாயினர். அறேபியரால் அறிமுகமான இப்பெயரை உரோமர்களும் தெரிந்திருந்தனர். “உரோம அரசன் ஜுலியன் காலத்திற் கி.பி. 361ல் செரண்டிபிலிருந்து ஒரு தூதுக் குழுவை வரவேற்றான்’ என்ற குறிப்புகள் இதனை எடுத்துக்காட்டுவனவாக உள்ளன.
இலங்கையிற் சேரநாட்டு மக்களைப்பற்றி கி.பி. 9ம், 10ம் நூற்றாண்டைச் சார்ந்த சின்பாத் மாலுமி (அறேபிய இரவுக் கதைகள்)யின் குறிப்புகளிலிருந்தும் அறியக்கூடியதாக இருக்கிறது. “சின்பாத் மாலுமியின் கப்பல் இலங்கையின் வட கரையிலுள்ள பெரிய மலை மீது மோதியதாகவும், அப்பொழுது மலபார் மக்களே அவரை உபசரித்ததாகவும், அவர்களுள் ஒருவர் அறேபிய மொழியிற் தேர்ச்சியுடையவராக இருந்தார் என்றும், மலபார் மக்கள் நீர்த்தேக்கமொன்றின் உதவியுடன் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர் என்றும், குறிப்பிடுகின்ற சின்பாத்தின் குறிப்புகளிலிருந்து அறேபியர்கள் நேரடியாக மலபார் மக்களுடன் இலங்கையிற் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பது புலனாகின்றது.
- சி. டபிள்யூ நிக்கலஸ், பரணவித்தான, ஜே.ஈ. டெனண்ட் முதலியோரின் குறிப்புகளைத் தொகுத்து திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம் வழங்கிய குறிப்பு நூல் : “இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக் கலாசாரமும் - 2001 பக். 81-82.
மணிமேகலைப் பிரசுரம்.

11
(தெக்கே பட்டினத்தில் கொழும்பு மணம்!)
தோப்பில் முஹம்மது மீரான்
‘தெக்கே பட்டினமாகிய தேங்காய்ப் பட்டினத்திற்கும், இலங்கைக்கும் இடையிலான தொடர்பு இன்று நேற்று துவங்கியதல்ல. பண்டுகாலம் முதற்கொண்டு ஏற்பட்ட தொடர்பு என்பதற்கு தேங்காய்ப் பட்டணம் மக்களிடையே புழக்கத்தில் உள்ள
மொழியே சான்று.
கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், உணவு,உடை, நடை அனைத்திலும் L6) og) is UT6 ஒற்றுமைகளை இரு தரப்பினர்களுக்குமிடையே காணலாம். என்னுடைய நாவல்களை வாசித்த இலங்கை நண்பர்கள் பலர், எங்கள் ஊரைப் பற்றி எழுதிய நாவல்போல் இருக்கிறதே என்று நேரிலும் கடிதம் மூலமும் என்னிடம் சொன்னது இதை உண்மைப்படுத்துகிறது.
எங்கள் மூதாதையர்கள் ஒரு காலத்தில் பிழைப்புத் தேடி சென்றிருந்த இடம் இலங்கை. பலர் அங்கேயே மடிந்துவிட்டனர். இலங்கைப்பெண்களை மணந்து அங்கே வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும் உள்ளனர். சில இலங்கைப் பெண்கள் இங்கேயே வாழ்ந்தார்கள்.
எங்கள் ஊரில் பெரும்பாலும் எல்லோரிடத்திலும் முன்பு கொழும்பு சிங்கம் மார்க்கு குடையும் இரட்டை ஜேப்பு இடுப்பு வாரும் காணலாம். இப்போது அந்த நாகரிகம் மறைந்துவிட்டது. கொழும்புக்கு போய் வருவோருக்குத்தான் ஊரில் மவுசு. கொழும்பு ராணி சந்தன சோப்பு, சைனா பாப்ளின் சட்டை துணி, மெளலானா லுங்கி, சங்குமார்க் லுங்கி, இவைகள் பெயர் பெற்றவை. இப்பவும் எங்கள் மூத்த தலைமுறையினரிடையே கொழும்புத் தமிழ்தான் பேச்சு வழக்கில் இருந்து

Page 9
12
வருகிறது. எங்கள் ஊரைச் சேர்ந்த பெரும்பான்மையினர் இலங்கைக்கு பிழைப்பிற்காக போய் வந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
கொழும்பிலிருந்து ஊர் வருபவர்களில் சண்டியர்களாகத்தான் வருவார்கள். ஊர் வந்த மறுநாளிலேயே வம்புச்சண்டை இழுத்து ஒரு ‘போத்தல் அடி நடத்தி ஒரு பரபரப்பை உண்டாக்கி விடுவார்கள்! கைலேஞ்சியை நாடாபோல் மடித்து தலைமுடி ஒதுக்கிக்கட்டி, சட்டைக்கு மேல் வேஷ்டி கட்டி, அதற்கு மேல் இரட்டை ஜேப்பு இடுப்பு வார் மாட்டி சண்டியர்களாக நடப்பதைக்கண்டு மக்கள் பயந்துபோய் ஒதுங்கி வழி விடுவார்கள். சிலர் தங்கப்பல்லும் கட்டியிருப்பார்கள். சின்ன வயசில் இவர்கள்தான் ஊரில் ஹீரோக்கள். கொழும்புக்குப் போய் வந்தவர்கள் ஊரில் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது சரளமாக சிங்களம் பேசுவார்கள். O
எங்கள் ஊரைச் சார்ந்த 'தங்ங்ள்’ சிலர் அடிக்கடி கொழும்பிற்கு போய் வருவதுண்டு. "கொழும்பு தங்ங்ஸ்’ என்று பெயர் பெற்ற தங்ங்ஸ் ஒருவர் ஊரில் வாழ்ந்திருந்தார். நான் அவரைப் பார்த்ததில்லை. அந்த கொழும்பு தங்ங்ளுடைய கபர் எங்கள் ஜ"ம்ஆப் பள்ளியை ஒட்டி வடபுறத்தில் தனியாகக் காணப்படுகிறது.
கொழும்பு பீங்கானும் சஹனும் கொழும்புக்காரர்களுடைய வீடுகளில் பெருமைக்குரிய தனி அடையாளங்கள். இலங்கைக்கும் எங்கள் ஊருக்கும் இடையிலான உறவுப் பாலம் இருநாட்டு பிரதமர்களுக்கிடையே நடந்த ஒப்பந்தத்தினால் தகர்ந்துவிட்டது. இலங்கையிலிருந்து வெறுமனே ஊர் திரும்பிய பெரும்பான்மையினர் வறுமையில் வாடினர். ஒரு சிலர் மட்டும் வாழ்க்கைக்கு வழி தேடிக் கொண்டார்கள்.
ஒரு காலத்தில் ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் தாய் தந்தையர்கள் கனவு காண்பது, மகன் கள்ளத்தோணி ஏறி அக்கரைக்கு சென்று சீமானாக திரும்பி வரும் இனிய காட்சி.
நான் சின்னவனாக இருக்கையில் எனக்கு ஒரே ஒரு ஆசை இருந்தது. கொழும்புக்குப் போகணும். தங்கப்பல் கட்டணும். கைலேஞ்சி தலையில் மடித்துக்கட்டி லுங்கி தூக்கிப்பிடித்துக் கொண்டு நடக்கணும். எதிரில் வரக்கூடிய துறையக்காரனுடைய நெஞ்சாம் பலகையில் ஒரு சிங்கள குத்து கொடுக்கணும்!ஆசை நிறைவேறவில்லை!
- இது இந்நூலுக்காக விசேடமாக எழுதப்பட்டது)

13
7ெங்கள் தந்தையாரின் ஆசியைப் பெற்ற இலங்கைப் பன்னூலாசிரியர் திரு மானாமக்கீன் அவர்கள் பல துறைகளிலும் கைவரப் பெற்று வெற்றி கண்டவர்
தற்பொழுது முஸ்லிம் சமூக வரலாறுகளை - குறிப்பாக இலங்கை, தமிழகத் தொன்மைத் தொடர்புகளை - எளிமையாக இனிமையாக அழகு தமிழில் ஆய்வு செய்து பாமரரையும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
அவரது முயற்சிகள், இலங்கை - கிழக்கரை இனிய தொடர்புகளில் ஆரம்பித்து, கீழக்கரைப் பண்பாட்டுக் கோலங்கள்' - நீடூர் நெய்வாசல் நெஞ்சங்கள்' - 'வரலாற்றில் இலங்கையும் காயல்பட்டினமும் எனத் தொடர்ந்து இப்பொழுது ‘வரலாற்றில் இலங்கை கண்ட குமரிக்கு வந்துள்ளது.
நான் அவரது ஆய்வுகளின் பதிப்பாசிரியனாக இருப்பதிலும், முஸ்லிம் சமுதாய மக்களுடன் இனிய நட்புப் பேணி வருவதிலும் பெரிதும் மகிழ்வடைகின்றேன்.
லேனா தமிழ்வாணன்

Page 10
14
* மவ்லவி, அஷ்-ஷெய்க் பி.எச்.எம். ஃபாயிஸ் முஹியித்தீன் மஹ்ழரி
- கோட்டாறு/கொழும்பு
* மவ்லவி எம். அப்துன் நளிர் ஆலிம், மிஸ்பாஹி -
தேங்காப்பட்டினம். * ஹாஜி ஸ"ஃபி ஏ.எஸ்.எம். ஹனிஃபா - குமரி மாவட்ட முஸ்லிம்
லீக் தலைவர். * ஆலிஜனாப் பி.எம். அப்துல் கரீம் - குளச்சல் இஸ்லாமிய இளைஞர் முன்னேற்றச் சங்கம் ஆலோசனைக் குழுத் தலைவர் மற்றும் குதுபிய்யத், பதர் மெளலூத் அறநிறுவன அமைப்பாளர். * ஆலிஜனாப் எஸ். முஹம்மது சுஹைல் பி.ஏ. குளச்சல் ஜமாஅத்
செயலாளர். முன்னை நாள் முனிசிபல் கவுன்சிலர். * திரு ST. மோகன், நூல் தயாரிப்பாளர். மணிமேகலைப் பிரசுரம்.
சென்னை - 17
* ஆலிஜனாப் கே.ஏ. அஹ்மது கபீர், 'தகவல் களஞ்சியம்’
இளங்கடை, கோட்டாறு. * ஆலிஜனாப் எம்.வை. செய்யது முஹம்மதுபாபு (அரோமாபாபு')
கோட்டாறு. * ஆலிஜனாப் எம்.நியாஸ், ஆசிரியர், “குமரி டுடே’ நாகர்கோவில். * ஆலிஜனாப் எஸ். முஹம்மது சுலைமான் - குளச்சல், * ஜனாப் ஏ.ஆர்.எம். அப்துல்நாளர் - குளச்சல்.
 

பரானாரக்கீலரீன் படைப்புகளில் சில.
"லைட் ரீடிங் முதல் பாகம்) "லைட் ரீடிங்’ இரண்டாம் பாகம்) பேனா முனையில் அரை நூற்றாண்டு (பழம்பெரும் எழுத்தாளர் திருச்சி குலாம் ரசூலின் வாழ்க்கை வரலாறு முஸ்லிம் டைஜஸ்ட் (உலகளாவிய தகவல் மஞ்சரி) என்னைக் கேளுங்கோ! இளைய தலைமுறையினருக்கு இனிக்கும் இஸ்லாமியக் கதைகள
இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார் இரு சமூகங்கள் - இருகண்கள்
மானாமக்கீன் கதைகள் நீடூர் - நெய்வாசல் நெஞ்சங்கள் இந்திய - இலங்கை எழுத்தாளர்களின் ஈகைப்பெருநாள் கதைகள
தியாகத் திருநாள் கதைகள் இலங்கை - கீழக்கரை இனியத் தொடர்புகள் கீழக்கரைப் பண்பாட்டுக்கோலங்கள் வரலாற்றில் இலங்கையும் காயல்பட்டினமும்
சிறுவர் பாலியல் கொடுமைகள்

Page 11
− உள்ளடக்கம்=-
1. குமரி 17
2. கோட்டாறு - ஒரு பார்வை . 30
தோரணமிடும் துணுக்குத் தகவல்கள். 36
3. தரீக்காத் தழைக்கச் செய்தோர். 38
ஆலிம்கள் முதல் ஆசாரிமார்கள் வரை.80
தோரணமிடும் துணுக்குத் தகவல்கள். 106
5. குமரித் தலைநகரில். 110
6. வரலாற்றுப் புகழ் குளச்சல். 119
7. பட்டினமாம் பட்டினம். 155
黑ཁྲི་:
4.
8. இனயம் - ஆளூரிலிருந்து
(கன்னியாகுமரி வரை. 193
விடைபெறும் வேளை . 224
 

17
வரலாற்றில் இலங்கை கண்ட தரர்
6
எநத ஒரு சமுதாயம தன் தொன்மை வரலாற்றுப் பெருமையை மறந்து விட்டதோ. அந்த அளவிற்கு அது
தன்னையே மறந்து விட்ட சமுதாயமாகும்.
கோட்டாறு சதாவதானி ஷெய்கு தம்பி பாவலரின் மகனார் ஆலிஜனாப் - கே.பி.எஸ். ஹமீது - “செந்தாமரை” பி.எஸ்ஸி. பி.எல், எம்.லிட்
- யாரை இது குறிக்கும் என்று யாருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.
இது, இன்னும் சிலவற்றையும் உணர்த்துவதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை!
கத்தாழைக்கும் குமரி என்றொரு பொருளுண்டு என்பது கற்றோருக்குத் தெரியும்
கடல் நடுவே இலங்கும் கவினுறு ஸ்ரந்தீப் - ஸெய்லான் என்ற இலங்கைத்தீவு அறியாது! புரியாது!

Page 12
18 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
மூன்று கடல்கள் சங்கமிக்கும் பரந்த நீர்ப்பரப்பு. பாரதத்துத் தமிழகத்தில். இந்தியாவின் தென் கோடியில்!
“ăsit 6ofuT (g, Lorf (p(pG Luft! Cape Comerin ஆங்கிலத்தில்!
இன்றையத் தமிழ்நாட்டின் ஒரு சின்னஞ்சிறு மாவட்டத்தின் பெயர்!
1956 நவ-1க்கு முந்திய நாட்களில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன் கேரள திருப்பாங்கூராகிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தானியக் களஞ்சியம்!
சேர சோழ பாண்டியர்கள் முப்பந்தல் போட்டு முடிதரித்து ஆண்ட பகுதி!
வீர கேரள வர்மாக்களும், விஜய நகர, மதுரை நாயக்கர்களும் ஆதிக்கம் செலுத்திய பகுதி!
ஆங்கிலக் கும்பினியாரும் போர்த்துக்கேய, டச்சு ஒல்லாந்தரும், அவ்வப்போது வந்து வந்து தொல்லை தந்த பகுதி! “எல்லையில்லா எழிலோடு அல்லுபகல் அலைமுழங்கும் 68கி.மீ. தூரம் நீண்டு செல்லும் கடற்கரை ஒருபுறமும்.
தென்றலோடு உடன்பிறந்த தென்பொதிகையின் மலைச்சாரல் மறுபுறமும்!
மேற்கிலே கேரளம்! கிழக்கிலோ நெல்லை!
- இதுதான் இன்றைய குமரியின் எல்லை! கேரள - மலையாளக் கரையினைப் பொறுத்தவரையில் அறபு நாட்டவர் தொடர்பானது ஆயிரமாயிரம் ஆண்டுகளைத் தாண்டி நிற்கும் வரலாறு

மானாமக்கீன் 19
C9 குமரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரள பூவாற்றின் கரையினில் நபி சுலைமான் (அலை) அவர்களின் கப்பல்கள் வந்து சென்றுள்ளன!"
C9 கி.பி. ஒன்றாம் நூற்றாண்டின் “பெரிப்ளுசில்’ என்பார் சேர நாட்டு துறைமுகங்களில் அறபுகளின் முகாம்கள் பல இருந்தன என்று பதித்துள்ளார்.
சைய்யது சுலைமான் நத்வி எழுதியுள்ள ‘அறபிகளுடெ கப்பலோட்டம்’ என்ற மலையாள நூலிலும் இத்தகவல் உள்ளது.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பேயே தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களுடன் அறபியர் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என உறுதியாகக் கூறலாம்’
இந்த வகையில், வஞ்சி நாடெனும் சேரநாட்டு வஞ்சியரை அறபுக்களுக்கு வரிக்கச் செய்து வாழ்த்துப்பா பாடிய கடலோரக் கேரளமே மலையாளக் கரை! வஞ்சி என்பது சேர நாட்டின் மறு பெயர்களில் ஒன்று!
Kerala had good contacts with the outside world, especially the
west, even before the christian era. Kodamgallur, Quilon, Cochin, Kazhikode, Cannanore, Kadalundi and Dharamadam were the important ports. Egypt, Asia Minor, Assyria, Babylonia, Greek, Rome and China all had trade with Kerala. Modern puvar, south of Trivandrum, is believed to have been visited by the ships of king Solomon in 1000 B.C.
- Kerala "Facts at Glance", page: 3 * Arabs began to come to Malabar years ahead of Alexander's Military
expedition.
Syed Amir Ali - Spirit of Islam PP IX-X - Muslim Movements in Kerala page. 11

Page 13
20 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அவர்கள் மாப்பிள்ளைகள் ஆனார்கள்! அவர்களுக்குப் பிறந்தோர் கலாஜிகள் ஆனார்கள்!
‘கலாஜிகள் என்றால் கறுப்பும் வெளுப்பும் கலந்த புது நிறம் எனப் பொருள்படும்."
அறபு - கேரளத் தொடர்புகள் இப்படி அமைந்து விட
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இஸ்லாம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, புதுப்பொலிவு பெற்றபோது. அந்தப் பேரொளியால் புதுப்பாதை கண்டவர்கள் பலர்!
அந்தப் பலரில் சிலர் பாரத நாட்டின் கடலோரங்களில் பாதம் பதித்தனர்! இஸ்லாமிய போதம் விதைத்தனர்!
இந்த வகையில் கேரள வாசிகளிடையே குறிப்பாக, குமரி மாவட்ட மக்களிடையே. இஸ்லாமிய கதிர்வீச்சு
இருமுனை தாக்கமாக விரிந்தது.
C9 வணிக நோக்கில் வந்த அறபுகள் பல்லினத் தமிழ் - கேரள பெண்களை மணமுடித்ததால். மாப்பிள்ளைமார்களாகிய ஆரம்ப காலத்தினர்!
C3 மாலிக் இபுனுதினார் போன்ற இஸ்லாமியப் பயணிகளாலும், இறைநேசச் செல்வர்களது மகத்தான சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்ற பிற்காலத்தினர்.
ஆனால் ‘அபூஹாஷிமா' இன்னொன்றை அடித்துச் சொல்லியிருக்கிறார்!
03 "KHALAZIS" - Dark And White Dr. Tara Chand "Influence of Islam
and Indian Culture' - P. 30.

மானாமக்கீன் 21
யார் அவர்? அடக்கமும், அன்பும், அற்புதமான எழுத்தாற்றலும் கொண்ட ஒரு குமரிமாவட்ட இலைமறைத்த கணி! ஆய்வாளரும் கவிஞருங் கூட இந்த நூலின் தோன்றாத் துணைகளுள் அவரும் ஒருவர். அன்னார், 2001ல் வெளியிட்டுள்ள “பெட்டகம்’ என்ற பெட்டகத் தகவல்கள் குமரியுடன் கொஞ்சிப் பார்க்கின்றன!
அவர் ஒரிடத்தில் இப்படிப் பதித்திருக்கிறார். C9 “குமரி மாவட்டத்தில் இஸ்லாம் எப்போது தோன்றியது
என்று வினா தொடுத்தால் ஆதம் (அலை) அவர்கள் காலத்திலேயே என்பது மிகச் சரியான பதிலாக அமையும்.
39 கடல் சீற்றத்தால் (நூஹ" நபிகால பிரளயம்) இந்தியாவிலிருந்து இலங்கை ஒரு தனித்தீவாகப் பிரிக்கப்பட்டு முன்பு இருந்த குமரிக் கண்டத்தில் தான் ஆதம் (அலை) இறங்கினார்கள். (அவர்கள் இறங்கிய இடம், பின்னர் தனித்தீவான இலங்கையில்)
- இந்தக் குறிப்புகள் இன்னும் சில வரலாற்றுப் பதிவுகளை அபிமானிகளுக்கு அள்ளி வழங்க வைக்கின்றன.
அதில் சில உங்களுக்குத் தெரிந்ததே. வேறு சிலவோ தெரியாதவை.
படித்து விடுகிறீர்களா?
இபுலிஸின் (சாத்தான்) துர்போதனையால் தவறிழைத்த ஆதம் (அலை) அவர்களையும் ஹவ்வா (அலை) அவர்களையும் வல்லோன் பூமியில் இறக்கி வைத்தான். ஹவ்வா (அலை) அவர்கள் இறங்கிய இடம் அறபு நாட்டின் ஜித்தா என்றும், ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பட்ட இடம் குமரிக்கண்டத்திலுள்ள 6 (5 D 63) 6) என்றும்

Page 14
22 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
வரலாற்றாய்வாளர்களும் ஆன்மிகப் பெரியார்களும் உறுதிபட எடுத்துரைக்கின்றனர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதை ஆதாரமாகக் கொண்டு, அல்லாஹ் பூமியில் முதன்முதலாக மனிதனை இறங்கச் செய்தது இந்தியாவில்தான் என்று இப்னு ஜுரைரும் ஹகமும் கூறுகின்றார்கள்.
தஜ்னா என்ற பெயர் பெற்ற இந்தியாவில்தான் ஆதம் (அலை) அவர்கள் இறங்கினார்கள் என்று அப்பாஸ் (ரலி) கூறியுள்ளனர் என்று ஜலாலுத்தீன் சுயூத்தி குறிப்பிடுகின்றார்.
உலகத்திலுள்ள நறுமணங்களிலெல்லாம் மேலான நறுமணம் இந்தியாவிலிருந்து வரக்கூடிய நறுமணம்தான், அங்குதான் ஆதம் நபி (அலை) முதன் முதலில் இறங்கினார்கள் என்று அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதம் நபி (அலை) அவர்கள் இந்திய மண்ணில்தான் இறங்கினார்கள்.
- அறிவிப்பவர்கள் : இப்னு ஸஅது - இப்னு அஸாக்கீர்
இந்தியாவுடன் இலங்கை இணைந்திருக்கும்போது ஆதம் நபி (அலை) அவர்கள் இறங்கினர்.
அறிவிப்போர் : பைஹகி மற்றும் தபா”
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களும் இக்கருத்தையே உரைக்கின்றனர்.
இஸ்லாமிய இதிகாசங்களும், ஆன்மிகப் பின்னணிகளும் இப்படி இருக்கும் பொழுது, தொல்லியலாளர்களோ, இப்படி ஊர்ஜிதம் செய்கின்றனர். ‘'ஆதிமனிதன் இப்பகுதிகளில் நாடோடியாக அலைந்து திரிந்திருக்கலாம்’ என்று!

மானாமக்கீன் 23
ஆனால், ஆதம் நபி என்று பெயர் குறிப்பிடப்படாமல்
இது எப்படி இருக்கு?
உண்மைகளை இன்னும் பூரணமாகப் புரிந்து கொள்வதற்கு கோடானு கோடிக் கால பூமியின் உருவாக்கம் தெரிய வேண்டும்.
ஆதியில் கொண்ட்வானா (Gondwana Land), அங்காரா (Angara) என இரு நிலக் கண்டங்களே இருந்திருக்கலாம் என நிலநூல் வல்லுநர் கருதுவர்.
இவற்றுள் கொண்ட்வானா இந்தியப் பெருங்கடலைச் சூழ்ந்திருக்கும் நிலப்பரப்புகளான தென் ஆப்பிரிக்கா, அரேபியா, தென்னிந்தியா, ஆஸ்திரேலியா தென் அமெரிக்கா மற்றும் அண்டார்டிக்கா முதலிய நிலப்பரப்புகளை உள்ளடக்கியிருந்தது. மற்ற கண்டமான அங்காரா ஆசியாவிற்கு வடக்கே அங்காரா நதியை அண்டி இருந்ததாகக் கருதினர்.
மேலும், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையேயிருந்த சமுத்திரமே காலப்போக்கில் அருகி இமயமலைச் சாரலாக உருவாகிற்று எனவும் கருதுவர். அதனோடு நூல் வல்லுநர் தம் உய்த்துணர்வு கொண்டு பல்வேறு காலங்களில் இப்புவியடைந்த வடிவ மாற்றங்களையும் வரைபடங்கள் மூலம் காட்டியிருக்கின்றனர்."
இவ்வாறு பல்வேறு காலங்களில் ஏற்பட்ட பெருங்கடற் பெருக்குகளினாற் கொண்ட்வானா நிலக் கண்டம் வெவ்வேறு கண்டங்களாகப் பிரிந்த பின்னரும், தென்னாப்பிரிக்காவையும்
04
'இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக் கலாச்சாரமும்' - திருமதி தனபாக்கியம் குணபால சிங்கம் எம்.ஏ, 2001 பக் - 22-27 மணிமேகலைப் பிரசுரம் சென்னை - 17

Page 15
24 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
தென்னிந்தியாவையும் பூச்சந்தியொன்று (1sthmus) இணைத்து வைத்திருந்ததாகக் கருதப்படுகின்றது. அதனை நிலநூல் வல்லுநர்கள் லெமூரியா (Lemuria) என்றழைத்தனர்."
அப்போது கன்னியாகுமரிக்கும் இலங்கைக்கும் இடையே கடல் என்பதே இல்லாமல் ஒரே நிலப்பரப்பாக இருந்தது. இலங்கை என்ற ஒரு தீவே அப்போது இல்லாதிருந்தது. குமரிக்கண்டம் (குமரிநாடு) என்றே பெயர் விளங்கிற்று. அக்கண்டத்தில் ஓடி வளம் கொழித்த பஃறுளி ஆறு பற்றி சிலப்பதிகாரமும் புறநானூறும் புகழ்ந்துரைக்கின்றன! ஆனால் பிற்காலங்களில் ஏற்பட்ட மூன்று முக்கிய கடல் கோள்களில் முதலாவதில் குமரிக்கண்டம் (குமரிநாடு) மூழ்கியது.
இக்கடல்கோளும், பைபிளில் நோவா எனக் குறிப்பிடப்படும் இக்கடல் கோளும், நூற் நபி (அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளமும் (கி.மு.2400) சமகாலத்தில் நிகழ்ந்ததாக நம்பப்படுகின்றது.
இக்கடல் கோளும், பின்னர், தென்னிந்தியாவின் தொடர்ச்சியாக இலங்கை, ஜாவா, சுமத்ரா வரை ஒரு பெருந்தீவு இருந்தது என்றும், இதுவே நாவலந்தீவு (சம்புத்தீவு) எனப் பழந்தமிழ் நூல்கள் குறிப்பிட்ட குமரித் தீவு எனவும் கருதுவர்."
இந்தக் குமரித்தீவின் அழிவினை மணிமேகலை காதை 9, வரி 17-22களிலும் காணலாம்.
OS
லெமூரியா - குமரிக்கண்டம் தொடர்பான மேலும் விவரங்களை அறிய 2gsayib saiassir. The Story of Atlantic and the Lort Lemuria - W. Scott, Elliot Lemuria - Lort Continent of Pacific-N.S. Cave storf. கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு-துர அப்பாத்துரையார் குமரிக்கண்டம் - சில புவியியல் உண்மைகள் - கொடுமுடி ச. சண்முகம்
O6
'தமிழகம்’ ந.சி கந்தையா பிள்ளை. கழக வெளியீடு சென்னை - ፲953.

மானாமக்கீன் 25
ஆக, இலங்கை ஒரு தனித்தீவாகிப் போனது.
அவ்வாறு ஆனபோதிலும், மடகஸ்கார் (ஆப்பிரிக்கா) தென்னிந்தியத் தீபகற்பம், இலங்கை ஆகிய நிலப்பகுதிகள் மண்படைச் சரிதவியலடிப்படையில் ஒரே இயல்பு பெற்றதாக இருந்தது - மட்டுமின்றி, - ஒரியல்புடைய - பாறைத் தொடர்ச்சிகளையும் கொண்டிருந்ததால் அவை முன்பொரு காலத்தில் ஒரு நிலப்பரப்பாகவிருந்து துண்டிக்கப்பட்டவை என்ற உண்மையை மேலும் வலியுறுத்துவனவாக அமைந்து Guruhoori'
நன்றாகவே வரலாற்றை மீட்டிவிட்டேன்! இன்னும் தொடர்ந்தால் என் எழுத்துக்களை விட்டு ஓடிவிடுவீர்கள்!
குமரியின் இப்போதைய தோற்றத்தைக் கண்டு களிப்போம்.
இந்தியத் தீபகற்பத்தின் தென்மேற்கு முனையில் அது
உள்ளது. முன் குறிப்பிட்டதுபோல் மூன்று கடல்களும் சங்கமிக்கும் இடமாக உள்ளது. இந்த அற்புதத்தை அதிகாலை வேளையில் சூரிய உதயச் சுடர் ஒளியில் காண கண் கோடி வேண்டும், கண்டிருக்கிறேன். பல காலங்களுக்கு முன் ஒரு காத்தே மாஜி நண்பருடன்
இதன் வடக்கிலும், வட - கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கு மற்றும் தென்மேற்கில், பெருங்கடல்களும், மேற்கில் சேரநாடு எனும் கேரளமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி சிரிக்கும் நால்வகை நிலங்கள் கொண்டது நாஞ்சில் நாடு. நாகர்கோவில் மாவட்டத் தலைநகர்.
* இலங்கையிற் தொல்லியலாய்வுகளும் திராவிடக் கலாச்சாரமும் -
திருமதிதனபாக்கியம் குணபாலசிங்கம், பக். 24

Page 16
26 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
திருவனந்தபுரம் 68கி.மீ தூரமே. இலங்கை வாசிகள் இங்குள்ள விமானதளத்தில் தான் கால்பதிக்க வேண்டும்.
இலங்கையர் அவர்களது தீவிலே அனுபவிப்பது போல அல்லது அவர்கள் கண்டு களிப்பது போல வழி நெடுகிலும் -
தென்னை மரக் கீற்றிடையே, வீசும் தென்றலிடையே நெற்கதிர்களின் தாலாட்டு (திரிபு படுத்தியதை மகாகவி பாரதி பொருட்படுத்த மாட்டார்)
இங்கிருந்து 110 கி.மீ. தூரத்தில் திருநெல்வேலி மேலப்பாளையம் போகிற வழியில் ஏர்வாடி ஆழ்வார் திருநகரையும் காயல்பட்டினமும் இணைத்து வரும் பாளையங்கோட்டை இங்கே நான் குறிப்பிட்டுள்ள ஏர்வாடி கிழக்கரை அருகில் உள்ளதல்ல)
இந்தக் குமரியில் உள்ள எழில் கொஞ்சும் ஊர்கள் சிலவற்றைத் தெரிந்து கொள்வது அவசியத்திலும் அவசியம்.
C9 கோட்டாறு - குளச்சல் - சூரங்குடி - திட்டுவிளை
ஆளூர் நாகர்கோவிலுக்கு அருகாமையிலும்,
C9 களியக்காவிளை, - திருவிதாங்கோடு - இரவிப்புதூர்க் கடை - தக்கலை ஆகிய ஊர்கள் தேசிய நெடுஞ் சாலையிலும் -
C9 தேங்காய்ப்பட்டினம் - பூத்துறை - புத்தன்துறை - இனயம் - வேர்க்கிளம்பி - மணலிக்கரை - கடையாலுமூடு - போன்ற ஊர்கள் நாகர்கோவிலுக்கும் தேசிய நெடுஞ்சாலைக்கும் வெகு தூரத்தில் அமைந்துள்ளன.
இவற்றோடு, கன்னியாகுமரி - மகாதானபுரம் - மந்தாரம்புதூர் - மாதவலாயம் - நவ்மியாபுரம் - கோட்டையடி -

மானாமக்கீன் 27
தெங்கம்புதூர் சவ்மியாபுரம் - குறுஞ்சாலியன்விளை - ஈத்தாம்பொழி - அத்திக்கடை - மணவாளக்குறிச்சி - மணவிளை - பெருவிளை - குலசேகரம் -
இவையெல்லாம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் இடங்கள். முக்கால்வாசி ஊர்களில் என் கால்கள் பதிந்தன. தேங்காய்ப்பட்டினம் போக இருந்த நேரத்தில் அவர்களில் பலரே என்னைத் தேடி நாகர்கோவிலுக்கு ஓடி வந்து விட்டார்கள்! s
மேற் குறிப்பிட்ட ஊர்கள் பலவற்றிலும் இலங்கையின் studio
அதுவும் தென்னிலங்கை, காலிப்பகுதியில் இருப்பது போன்ற பிரமை!
உபசரிப்பிலும், வரவேற்பிலும் ஒருவருக்கொருவர் போட்டி! சதித்திட்டங்கள்! (ஆளைக் காலி பண்ண அல்ல! ஆளுக்கு ஆள் விருந்தளித்திட0
இலங்கையுடன் நூற்றாண்டு காலத்தொடர்புகள் இருப்பதை பனநுங்கு போலச் சுவைத்து மகிழ்ந்தேன்.
முக்கியமாக - கோட்டாறு மூலமாக ‘ஆன்மிகப் புதையல் கிடைத்திருப்பதையும், குளச்சல், தேங்காய்ப் பட்டினம் வழியாக தூத்துக்குடியின் துணையோடு ‘சம்பை ஏற்றுமதிகள் கொடி கட்டிப் பறந்திருப்பதையும் புரிந்து மெய்சிலிர்த்தேன்.
அடுத்த பக்கத்தை ஆன்மிகத்திலிருந்து ஆரம்பிப்பதே அழகு. அவ்வாறே செய்கிறேன்.

Page 17
28 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
~ அதற்கு முன் கடல் கொண்ட குமரிக்கண்டம்’ பட வரைவையும் தற்போதைய குமரிமாவட்ட வரைபடத்தையும் இலங்கை அபிமானிகளின் அறிமுகத்திற்காக இங்கே அன்பளிக்கிறேன்.
ஓர் அடிக்குறிப்பு :
மேலே 'சம்பை' என்றொரு வார்த்தை வந்து விழுந்துள்ளது. விளக்கம் சற்று தாமதமாகத் தான் கிடைக்கும்!
எண்டயபுரம்
85%ລ46.up e
குமரி மாவட்ட வரைபடம்
 

மானாமக்கீன் 29
கடல்கொண்ட குமரிக் கண்டம்
تھ4 سے ہے کھچے رہی تھوڑھی
ടംമ്ബ് (ദ്രജ് می 4 تختی زیزی - کیت z - 42
8% 4ില്ക്ക് }ജ്bá ഷാജ്
>« .ظZ-ZZ عZ تجھ تلے ریڑیجی ۔ 3ے 64(le Gháമങ്ങ7 4-ஆம் ஆட்உடம்
(Z £.മാ6 ബZ£
('
జా
ஆல்திரேலியா
நன்றி ஆய்வுக் களஞ்சியம்

Page 18
30
கோட்டாறு -
இறை நேசச் செல்வர்களின் ஞானப்பாக்களின் குடிசை இவர்கள் மீட்டியது ஞானப்பாக்களின்
மோன யாழிசை சங்க காலம் தொட்டே சரித்திரம் பேசும் வாணிப வளாகம்! சரித்திர ஆய்வாளர்களின் சிந்தனைக்கு விருந்தாகும் தாமரைத் தடாகம்! மூன்று கடல்களின் சங்கமம் போல மும்மதத்தவரும்
வேறுபாடின்றிப் பழகும் தவபூமி!
- வாவர் ப. அதாவுல்லா, எம்.ஏ.
கோட்டாறு - ஒரு பார்வை
Tெனது அபிமானிகள் முதன் முதலாகப் பார்த்திட வேண்டிய ஊரைப் பற்றிய பாடலின் ஒரு பகுதியைத்தான் இப்பொழுது ரசித்தீர்கள்.
குமரித்தலைநகர் நாகர்கோவிலின் ஒரு பகுதியாகிய கோட்டாறை, கூத்தார்’ என்றனர், அறபியர். எகிப்தியரும்
 

மானாமக்கீன் 31
அப்படியே. ஆனால் கிரேக்கரான டாலமியும், பிளினியும் ‘கொட்டியாரா” (கொட்டார) என்றார்கள். வெள்ளையரோ “கோட்டார்’ என்றனர்,
உண்மையில், கோட்டாறு என்பதற்கு வளைந்து செல்லும் ஆறு' என்று பொருள்படுமாம். 'பழையாறு கரையில் அமைந்திருப்பதால், இப்பெயர் வந்ததாம். (இந்தப் பழையாறு, பஃறுளியாறு என முன் அழைக்கப்பட்டது)
இந்தக் கோட்டாறை மனோன்மணியம் சுந்தரனாரும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் புகழ்ந்து பாடியுள்ளதையும், நாம் மறக்க முடியாது.
கோட்டாறுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகாலச் சரித்திரம் உண்டு.
அத்தனையையும் இந்நூலில் பதிக்கப் புகுந்தால் வரலாறு கோட்டாறாக மாறி ஓடி ‘இலங்கை கண்ட குமரி அதில் மூழ்கி விடுவாள்! பாவம் அவள்!
இதன் வணிகப் புகழ் கண்டு பிரபல பிளினியும், தாலமியும் வந்து போயிருக்கிறார்கள். 'நாஞ்சில் நாட்டின் பெரிய ஊர் கொட்டியரா’ என்று 6 நூல்களில் பதித்திருக்கிறார்கள்.
காலத்தால் அழியாத கல்வெட்டுக்களிலே “கோட்டாறான மும்முடிச் சோழ நல்லூர்’ என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் என்ன துர்ப்பாக்கியம்; இப்போதைய வரைபடத்தில் நாகர்கோவிலுக்குள்ளேயே உள்ளடங்கிவிட்டது! பெயரைத் தேடிக் களைப்படையக் கூடாது!
இந்த ஊருக்குள்ளேயே ஊர்களாக இளங்கடை இடலாக்குடி (இடரில்லாக்குடி) என இரு குடியிருப்புகள்.

Page 19
32 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அதிலும் இளங்கடையை “சின்ன மக்கா’ என்றும் ‘இரண்டாவது பொன்னாணி’ என்றும் அழைக்கிறார்கள். ஒரு சிறந்த முஸ்லிம் ஜமாஅத் அப்பகுதியிலே அமைந்திருக்கிறது.
இன்றைய மிலேனிய ஆண்டிலோ எதிரும் புதிருமான இரு இஸ்லாமியக் கொடிகள்’ பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கின்றன. நேருக்கு நேர் கண்டேன்.
ஆனால் அன்று ஒன்றே ஒன்றுதான்!
ஒன்று என்றால் 8ஆம் நூற்றாண்டின் (கி.பி. 700) ஆரம்பப் பொழுதுகளில் ஓர் ‘அப்பா - ஹஸ்ரத் ஸெய்யிதுனா பாவாகாஸிம் (ஒலி) - அவர்கள், இங்கே இளங்கடைக்குள் நுழைந்த பொழுது
அப்பொழுது ஒரேயொரு சுன்னத் - வல் - ஜமாஅத் தான்!
கன்னியாகுமரி மாவட்ட கோட்டாறு, குளச்சல் முதல் -
திருநெல்வேலி மாவட்ட மேலப்பாளையம், தென்காசி முதல் -
தூத்துக்குடி மாவட்ட காயல்பட்டினம், ஏர்வாடி முதல்
இராமநாதபுர மாவட்ட கீழக்கரை ஈறாக -
இலங்கைத் தீவில் (ஸைலான் - ஸரந்தீவு) 99 விழுக்காடு வரை அப்படியே! அப்படியே!
மத்ஹபு ஷாஃபி ஈ
தரீக்கா காதிரிய்யா - ஆனால் கிளைகள் சில.
இந்தப் பின்னணியில் இலங்கை கண்ட குமரியை வெகு இலகுவாகப் பார்த்திடலாம்.

மானாமக்கீன் 33
ஹழரத் ஷெய்கு முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (பாக்தாத்) அவர்களே காதிரிய்யாவின் மூலப்பிதா என்பதிலிருந்து அனைத்து வரலாற்றையும் அபிமானிகள் அறிவீர்கள். அந்த வகையில் பேனா பக்கங்களை விரயமாக்க வேண்டியதில்லை.
எவ்வாறாயினும் ஒன்றைப் பதிக்க வேண்டும்.
‘வலிமார்களை பூமியின் முளைகளாக நாம் ஆக்கியிருக்கின்றோம்’ என இறைவன் திருமறையில் கூறுகிறான்.
'இறை இல்லங்களில் -
இறைவனைத் தியானிக்கும் புனிதத் தலங்களில்
குழுமியிருக்கும் “நாற்பதில் ஒருவர்
நல்லவலி’ என்பது
நாயக வாக்கல்லவா?
நாளும் வாழும்
நலமான மெய்யல்லவா?
- என்று, ஹதீஸைக் கவிதையாக்கியுள்ளார் வாவர் அதாவுல்லா.
உலகத்து முஸ்லிம் நாடுகளை ஒரு புறத்தே வைத்துவிட்டு நாம் வாழ்கிற இந்தியா - இலங்கை இரண்டை மட்டுமே சிந்தித்தாலே போதும், வலிகளின் வலிமை’ புரியலாம்!
இப்பொழுது இந்தியாவில் இருபது கோடிக்கும் அதிகமாக முஸ்லிம்கள். இலங்கையில் 2001-ல் 18 மாவட்டங்களில் எடுத்த கணக்கின்படி 1,351,434. எஞ்சிய பகுதிகளையும் சேர்த்தால் இன்னும் அதிகம்.

Page 20
34 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இவர்களெல்லாரும் அப்படி அப்படியே வானத்திலிருந்து முஸ்லிமாகக் குதித்தவர்களா?
இறைநேசச் செல்வர்களின் சேவைகளைப் பெறாமல், அந்த மெய்ஞ்ஞான மேதைகளின் வாழ்வையும் வாக்கையும் பின்பற்றாமல் வந்தவர்கள் இந்தத் தொகையில் எத்தனை பேர்?
அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டாம்! நினைவு கூரவும் வேண்டாம்! அகெளரவப் படுத்தாமலாவது இருக்கலாமல்லவா!
நல்லது. எனது பணியில் நான் பேனாவைப் பதிக்கும் பொழுது, ‘அப்பா பாவா காசிம் வலியுல்லாஹ் முதற்கொண்டு பல அப்பாமார்கள் அணி திரள்கிறார்கள்.
என்றாலும், ஸைலான் - ஸ்ரந்தீவில் காதிரிய்யாத் தரீக்காவைத் தழைக்கக் கோட்டாறிலிருந்து வருகை புரிந்தவர்களை மட்டும் நினைவு கூர்ந்திடவே பக்கங்கள் போதுமானதாக அமையும்.
அந்த வகையில் நாம் அறிமுகம் செய்து கொள்ளவேண்டிய முதலாமவர் யாராக இருப்பார்?
அடுத்த ஏட்டைத் திருப்பினால் தெரிய வரும். அதற்கு முன்னால் ஒரு சிறிய சிந்தனைச் சரத்தையும் (மதுரை மாநகரிலிருந்து வெளியாகும் சஞ்சிகை போல) தோரணமிடும் துணுக்குத் தகவல்கள் சிலவற்றையும் படித்துப் பாருங்கள்.

மானாமக்கீன் 35
மனிதனை வழிநடத்த மற்றொரு சக்தி தேவை!
C9 தாய் குழந்தையைப் பிரசவிக்கிறாள். பின் அவளே தன் மார்பகத்தை குழந்தையின் வாயில் வைத்து பாலூட்டிப் பழக்க வேண்டியவளாக இருக்கிறாள்.
C9 ஆனால் கன்றை ஈனும் பசுவுக்கு அந்தப் பணி இல்லை. பசுக் கன்றே தானே வலியச் சென்று பாலைச் சுவைத்துக் குடிக்கின்றது.
C9 ஒரு காகத்தின் மூலம் இறந்தவர் உடலைப் புதைக்கும் விதத்தை இறைவன் (காபீல் என்பவருக்கு) காட்டிக் கொடுக்கிறான்.
இவ்விதமே மனிதன் இன்னொரு சக்தியால் வழிநடத்தப் படவேண்டியவனாக இருக்கிறான். W
அல்லாஹ்வின் அருள் பெற்ற ஒளலியாக்களான, பெரியார்களின் சரித்திரங்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்களெல்லாரும் ஓர் ஆன்மிக வழிகாட்டியின் நிழலில் நிற்கிறார்கள்.
மார்க்கக் கல்வியில் தேர்ச்சி பெற்ற இவர்களே சரியான வழிகாட்டி, அறபி மொழியையும், அல்குர்ஆனின் நுட்பங்களையும் அறியாது, ஹதீஸ் கலையில் போதிய ஞானமற்று, வாழ்பவர்களாகிய நமக்கு, ஒரு சரியான வழிகாட்டி எவ்வளவு தூரம் அவசியமென்பதை சற்றே ஆராய்ந்து பாருங்கள்.
நல்லது. வாருங்கள், 3ஆம் ஏட்டைத் திருப்புவோம்.

Page 21
36 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
జ. தோரணமிடும் துணுக்குத் தகவல்க
6ir
காலி கோட்டையும் கோட்டாறும்
காலி (Galle) என்ற ஒரு வரலாற்றுப் புகழ்மிகு நகரம் இலங்கை - ஸ்ரந்தீவுத் தெற்கே!
இது அப்படியே கோட்டாற்றின் மறுபதிப்பு!
கோட்டாறிலிருந்து காலி போகிறவர்கள் திகைப்பார்கள்! அதேபோல காலியிலிருந்து கோட்டாறு செல்வோர் அதிர்ச்சி அடைவார்கள்!
எனக்கும் ஏற்பட்டது!
அக்காலத்தில் கால் பதித்த அறபுக்கள் அங்கும் இங்கும் நடமாடிய பொழுதுகளில் திட்டமிட்டு ஒரே மாதிரியாக அமைத்துக்கொண்ட வீதிகள்! வீடுகள்! பிற்காலத்தில் போர்த்துக்கேயனும் டச்சுக்காரனும் காலியில் கொஞ்சம் கைவைத்து காலித்தனம் செய்தான்!
மேனா ஹாஜியார் வாரிசுகளில்.
மேனா ஹாஜியார் பரம்பரையில் ஆண் வழி வாரிசுகள் போல் பெண்வழி வாரிசுகளிலும் ஆலிம்களும் பேராசிரியர்களும் உண்டு!
அவர்களுள், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா
கல்லூரியின் ஆரம்பம் தொட்டு, தமது வஃபாத் வரை அக்கல்லூரியின் முதல்வராகத் திறமையாக செயல்பட்ட மர்ஹ9ம்
 
 
 
 
 
 

மானாமக்கீன் 37
பேராசிரியர் நஸ்ருதீன் காதிரி MA, LLB, அவர்கள் முக்கியமாக நினைவு கூரத்தக்கவர்
காலிக் கன்னியர்
கோட்டாறு ஆலிம்கள் பலர் காலிக் கன்னியரைக் கரம்பிடித்து உறவுப் பாலத்தை உறுதிப்படுத்தியதும் உண்டு! கண்டி விடும்! கொழும்பு வீடும்!
கோட்டாறு உள்ளே நுழைந்தால் ஒரு ‘கண்டி வீடுகளும், வேறு "கொழும்புக்காரர் வீடுகளும் காணப்படுகின்றன! தைக்கியாப் பொறுப்புகள் இவர்களிடம்
இலங்கையில் தற்போது இயங்கும் கோட்டாறு தைக்கியாக்கள் அனைத்தினதும் நிர்வாகப் பொறுப்புகளை இலங்கை முரிதீன்களே ஏற்று நடத்துகிறார்கள்.
கோட்டாறு ரோடு
இலங்கையில் மாணிக்க விற்பனவுக்குப் புகழ்பெற்ற முஸ்லிம்களின் கேந்திரமான வேர்விளைக்கு அண்மிய அளுத்கமை - தர்ஹா நகரில் ரஜபுல் காதிரி (காலி அப்பா) திருமணப் பந்தம் ஏற்படுத்திக் கொண்டபொழுது, “கோட்டாறு ரோடு’ என்றே ஒன்று உருவானது. அதற்கு ஏற்பாடு ஒர் இஸ்மாயில் ஹாஜியார்! இப்பொழுது இங்கே “கோட்டாறு மன்ஸில் உள்ளது. தலைமுறையினர் துள்ளி விளையாடுகின்றனர்!
“கிழக்கே போறான்!”
குமரி மாவட்டத்தில் அக்காலத்தில் “கிழக்கே போறான்' என்ற குரல் சூரியன் எஃப்.எம்.போல எங்கும் எதிரொலித்தது.
எதற்காக? இலங்கை நோக்கிப் பயணப்பட்டவர்களை அப்படிச் சொன்னார்கள்!

Page 22
38
"... மெய்ஞ்ஞான மேதைகளின், வாழ்வையும், வாக்குகளையும் தெரிந்து கொள்ளவேண்டிய கட்டாயம் இல்லை என்று ஒரு சிலர் சொல்லி வருகின்ற இக்காலத்தில், அத்தகையப் பெரியோர்களான இறைநேசச் செல்வர்களின் சேவைகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம்
இருக்கிறது.”
மர்ஹ9ம் செய்யிது அப்துர் ரஸ்ஸாக் காதிரி ('அகரம்) அவர்கள்
தரீக்காத் தழைக்கச் செய்தோர்ஆண்டு-த
அவரது பெயர் சொல்வதற்கு இலகு. எழுதுவதற்கு எளிது. ஒரு ஞானமேதை. ஒரு சிறந்த புலவர்; ஒரு காமிலான ஷெய்கு!
அந்த 1840-ம் ஆண்டில் (ஹிஜ்ரி 1265) பிரிட்டிஷ்காரன் இலங்கையை ஆட்கொண்டிருந்த காலத்தில் அவர்கள் கொழும்பு வந்தார்கள். யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் ‘கொழும்புப் பெரிய பள்ளி’ எனப்படுகிற கொழும்பு - 12 புதியசோனகர் வீதி ஜூம்ஆப் பள்ளியில் தங்கிக் கொண்டார்கள். தம்மை ஒரு சாமான்யராகவே காட்டிக் கொண்டார்கள். அதே சமயத்தில் காதிரிய்யாத் தரீக்காவின் வளர்ச்சி - உயர்ச்சி என்பதில் அல்லும் பகலும் உழைக்கும் ஊழியராக ஆக்கிக்கொண்டார்கள்.
அப்பொழுதும் இப்பொழுதும், இந்தப் புதிய சோனகர் வீதியின் ஒரு சரி பாதி மெசன்ஜர் (Messenger Street) வீதியென அழைக்கப்பட்டு வருகிறது. ‘வாணிபத்தெரு’ என்றும்
 

மானாமக்கீன் 39
அக்காலத்தில் அழைக்கப்பட்டதுண்டு. "மெசன்ஜர்’ என்பதற்கு “சேதி சொல்பவர்' - தூதர்’ என்றெல்லாம் பொருள். அதற்குப் பொருத்தமாக அவ்வீதியின் மூன்று இல்லங்களை 'இஸ்லாமியச் செய்தி சொல்லும் இறை இல்லமாக மாற்றி அமைத்துக் கொண்டார்கள். -
இப்பள்ளி வரலாறு சம்பந்தமான பழைய கோப்புகள் பிரபல வணிகப் பிரமுகர் அல்ஹாஜ் ஏ. ஜெஎலீம் ஆர்ஃப் அவர்களிடம் இருப்பதாக ஒரு தகவல். இப்பொழுது இவரும், அல்ஹாஜ் எம்.எல்.எம். ஃபவ்ஸ் அவர்களும் பரிபாலனக்குழுவின் உயிர் நாடிகளாகத் திகழ்ந்து பிரதான நம்பிக்கைப் பொறுப்பாளராக நிர்வகிக்கின்றனர்.
அந்த ‘மஸ்ஜித் முஹியித்தீன்’ பள்ளி வாசல் இந்நூலின் அட்டையை அலங்கரிப்பதில் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும்.
இது, இப்போதையத் தோற்றம். ஆரம்பத்தில் சிறு வீடு போலவே அமைந்திருந்தது.
ஹிஜ்ரி 1270 (கி.பி. 1846)இல் நிறுவப்பட்ட இந்த மஸ்ஜித்தான், கோட்டாறு வழிவந்த காதிரிய்யாத் தரீக்காவின் கேந்திர நிலையமாக அமைந்தது.
அஷ் - ஷெய்க் முஹியித்தீன் காதிரி (மேனா ஹாஜியார்)
இதனை நிறுவிய முன்னோடியாக, முதல்வராகத் திகழ்பவர்களே மேற்காணும் பெயருடையவர்கள்.
இந்த இயற்பெயர் கொண்டவர்களை, ‘கோட்டார் ஷெய்க் என்றழைத்தவர்களும், ‘மேனா ஹாஜிர்பார் அப்பா’ எனச் சிறப்புப் பெயர் சொல்லி மகிழ்ந்தவர்களும் ஆயிரமாயிரம்!

Page 23
40 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இப்பெயர் ஏற்பட ஒரு விசித்திரமான காரணமுண்டு
இவர்கள் ஹஜ் கடமை முடிந்து ஊர் திரும்பியபொழுது, இவர்களில் அபிமானம் கொண்டோர் பல்லக்கில் தூக்கி வந்தனர். வழக்கமாக பல்லக்கு தூக்கி வருவோர் ‘அந்தாஹே மேனாஹே’ என்று ஒசை எழுப்பி வருவர். பல்லக்குக்கு ‘மேனா’ என்றும் சொல்வர். (தோப்பில் முஹம்மது மீரான் அவர்களது ஒரு கடலோரக் கிராமத்தின் கதை படித்த இலங்கை வாசகர்களுக்கு நினைவில் வருகிறதா?) ஆக, அதில் பவனி வந்த அப்பாவை ‘மேனா ஹாஜியார்’ என்றார்கள்! அதுவே சுருக்கப் பெயர் ஆகிவிட்டது. நாமும் அவ்வாறே அழைத்திடுவோமே!
பாட்டனார் - அஷ் ஷெய்க் முஹியித்தீன் ஸாலிஹஜூல் எகீனுல் காதிரி (ரஹ்). தந்தையார் - அஷ் ஷெய்க் சுலைமான் காதிரி. தாயார் - பாத்திமா பீவி, ஹிஜ்ரி 1202 - முஹர்ரம் 21-ல் உலக தரிசனம். உடன் பிறப்புகள் - மூவர். வாரிசுகள் - நான்கு
ஆண்களும் இரு பெண்களும்.
இவர்களது இளைய மகனாருக்குப் (அஷ் ஷெய்க் அப்துர் ரஸ்ஸாக் காதிரி) பிறந்த ஒரு புதல்வர் (அஷ் ஷெய்க் ஸெய்யிது ஸாலிஹ"ல் காதிரி) 101 வருட காலம் வாழ்ந்து கடந்தாண்டே (ஹி.1423/கி.பி. 2002) ஓய்வுறக்கம் கொண்டார்கள்.
மேனா ஹாஜியார் ஸ்ரந்தீவுக்கு 63-வது அகவையில் வந்து 87-வது வயதில் கோட்டார் மீண்டார்கள். இடைப்பட்ட 24 ஆண்டுகளில் பெரும்பகுதியும் இத்தீவிலேயே கழிந்தது ஒய்வுறக்கம் (ஹி 1292 துல்ஹஜ் 21 கி.பி. 18.1.1870).
காதிரிய்யாத் தரீக்கா கோட்டாறு வழியாக 163 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் காலூன்றிய பொழுது ‘மேனா ஹாஜியார் அப்பா’ அவர்கள் மொழிந்ததை இப்பொழுதும் மீட்டுப் பார்க்கலாம்.

Lorts TITLD556T 41
'அல்லாஹ்வைப்பற்றிய மக்களுடைய நெருக்கமான சிந்தனைக்கு தரீக்கா வழிநடத்தகிறது. எல்லாம் வல்லவனைப் பற்றிய சிந்தனையை வலுவடையச் செய்வதற்கு திக்ற, அவ்ராதுகள் ஆகியனவற்றை தரீக்காக்களில் அறிமுகம் செய்துள்ளோம்.'
இதை ஆயிரத்திலொரு வார்த்தையாக அன்றைய இளைய தலைமுறையினர் ஏற்றார்கள்.
இன்றைய இளைய தலைமுறைகளோ?
மன்னிக்கவேண்டும். நான் அலசாமல் உங்களிடமே விட்டு விடுகிறேன். மாற்றம் புரிந்த ஒன்றுதான்.
அன்று நமது மேனாஹாஜியார் அப்பா அவர்களது முதலாவது முரீதீன் கொழும்பு சுலைமான் லெப்பை மரக்காயர். முதலாவது கலீஃபா துவான் பாகூஸ். (அன்னாரது ஒய்வுறக்கம் மக்பரா - புதிய சோனகர் வீதிப் பள்ளிவாசல் வளாகத்திலேயே!) இவரது பெயரைக் கொண்டு பார்க்கிற பொழுது மலாயா வம்சாவளியாவார்.
அன்றைய ஸ்ரந்தீவில், சரியான வாகன வசதியற்ற காலகட்டத்தில், கால்நடையாகப் பல குக்கிராமங்களுக்கும் பயணித்து ஷரீஅத்தையும் தரீக்கத்தையும் போதித்தார்கள். முரீதுகளை எல்லாத் திக்குகளிலும் உருவாக்கினார்கள்.
இவர்கள் வெளியிட்ட “ஜம்ஹ9த் மாலை” என்ற நூல் தலைசிறந்த ஒரு ஸ9ஃபி இலக்கியமாகக் கருதப்படுகின்றது.
இந்நூல் பற்றி இரு பிள்ளைகளின் தந்தையார் ஒருவர் கருத்து கூறுகையில்,
*ஜம்ஹ9த் மாலை கறுப்பா சிவப்பா என்றுகூட எங்களுக்குத் தெரியாது. கண்ணிலேயே காட்டவில்லை காதிரிகள். ஆனால், எங்கள் உம்மா, அப்பா அவர்களது ‘கப்பல்

Page 24
42 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
முனாஜாத்தை பாடித் தாலாட்டித்தான் எங்களை ஆனந்த உறக்கம் கொள்ள வைப்பார்கள்!’
அவர் கூற்றில் அர்த்தம் நிறைய உண்டு.
ஆக, இப்போதுள்ளவர்கள் இத்தகைய இறைநேசச் செல்வர்களை உதறிவிடுதல், அல்லது உதாசீனப்படுத்தல் இலகுவாக இருக்கிறது.
சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களாக Б т lb
நமது பணியைத் தனி வழியில் தொடர்வோம்.
மேனா ஹாஜியார் அப்பா வாரிசுகள் -
முன் குறித்ததுபோல் -
அஷ்ஷொப்க் எல"லைமான் காதிரி
அஷ்ஷெய்க் முஹம்மது எலாலிஹ"ல் காதிரி
அஷ்ரஷெசய்க் அப்துல்லா எவிராஜ"தின்
அஷ்ஷொப்க் அப்துர் ரஸ்ஸாக் காதிரி
இந்நால்வரது இலங்கை - ஸரந்தீவுத் தொடர்புகள் எப்படி?
கொஞ்சம் பொறுமையோடு ஆய்வு செய்யலாம்.
முதல்வாரிசும் அவர்களது புதல்வர்களும்
ஹாஜி அஷ் - ஷெய்க் சுலைமான் காதிரி - மூத்த வாரிசு.
இவர்கள், தந்தையாரின் ஒய்வுறக்கத்தின் பின் கொழும்பு 12 மஸ்ஜித் முஹியித்தீனில் தரீக்காப் பணிகளில் ஈடுபட்டுத் தமது 83-ஆம் வயதில் ஊரில் ஒய்வுறக்கம் கொண்டார்கள்.

மானாமக்கீன் 43
இவர்களது பெயர் சொல்லப் பிறந்தவர்கள் மூவர்.
C அஷ் ஷெய்க் முஹம்மது முஹியித்தீன் காதிரி
CKC) அஷ் ஷெய்க் முஹியித்தீன் பாபு எலாஹிப் காதிரி
CKC) அஷ் ஷெய்க் ஃபழுல் முஹியித்தீன் காதிரி
இவர்கள் மூவரும் தந்தையார் வழியில் விஜயம் செய்து தரீக்காப் பணிகளில் சேவை செய்துள்ளனர்.
என்றாலும், இரண்டாமவர் அஷ் ஷெய்க் முஹியித்தீன் பாபு ஸாஹிப் அவர்கள் ஒரு சிறப்புப் பெற்றுள்ளார்.
இலங்கை - ஸ்ரந்தீவு வரலாற்றில் மாணிக்க விற்பன்னர்
மாபெரும் சமூக சேவையாளர் என்.டீ.எச். அப்துல்கழர்
அவர்களுக்கு ஒரு தனியிடம் வரலாற்றில் உண்டு. இலங்கை அரசு அஞ்சல் முத்திரை வெளியிட்டும் நினைவு கூர்ந்துள்ளது.
அத்தகைய பெருமகனாரோடு ஒன்றிணைந்து, ஒத்துழைப்பு பெற்று, கொழும்பு - 12, மெசன்ஜர் வீதி, மஸ்ஜித் முஹியித்தீனை இன்றைய நிலைக்குப் புனர் நிர்மாணம் செய்தது அவர்கள்தான்!
அத்தோடு மட்டுமல்ல, பிரபலமான கொழும்பு - 11, மூன்றாம் குறுக்குத் தெருவில் மேமன்பள்ளி வாசல் கட்டப்படுவதற்கு அத்திவாரம் இட்டவர்களும் அவர்கள்தான்.
1919-லிருந்து 1941 வரை (22 ஆண்டுகள்) சேவையாற்றி தரீக்கா விடயங்களில் விசேடக் கவனம் செலுத்திய சிறப்பானவர்.
இவர்களது தம்பியார் அஷ் ஷெய்க் ஃபழுல் முஹியித்தீன் காதிரி அவர்களும் 1942ஆம் ஆண்டில் வந்து பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களே.

Page 25
44 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இவர்தம் ஓய்வுறக்கத்தின் பின் மைந்தர் அல்ஹாஜ் மெளலவி ஃபாழில் அஷ் ஷெய்க் சுலைமான் காதிரி அவர்கள் 1953-ம் ஆண்டில் கால் பதித்து சிறந்த மார்க்க அறிஞராக முத்திரை பதித்தார்கள்.
ஹிஜ்ரி 1385 ஷவ்வால் 4ஸில் (1966) இவர்கள் கொழும்பிலேயே ஒய்வுறக்கம் கொண்டார்கள். புகழுக்குரிய மஸ்ஜித் முஹியித்தீன் வளாகத்திலேயே மக்பரா உள்ளது.
இவர்களது மகன்களாகிய ஃபழுல் முஹியித்தீன் எம்.ஏ., ஜனாப் ஹமீது முஹியித்தீன் பி.ஏ., பி.எல் இருவருள், முதலாமவர் முனைவரும் (கலாநிதி) பேராசிரியருமாவார் இளவல், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்.
இனி - மேனாஹாஜியார் அவர்களது இரண்டாவது புதல்வர், அஷ் - ஷெய்க் முஹம்மது ஸாலிஜ" காதிரி, மூன்றாவது புதல்வர் அஷ் ஷெய்க் அப்துல்லா எமிராஜுத்தீன் காதிரி.
இருவரும் இலங்கை - ஸரந்தீவில் தடம் பதிக்கவில்லை.
ஆனால், அஷ் ஷெய்க் எமிராஜ"த்தீன் காதிரியின் புதல்வர் அஷ் ஷெய்க் முர்சித் மெளலானா காதிரி வருகை தந்து தரீக்கா வளர்ச்சிக்காக சேவை செய்துள்ளதாக அறிய முடிகிறது.
அஷ் ஷெய்க் அப்துல் ரஸ்ஸாக் காதிரியும் வாரிசுகளும்
இவர்கள் தமது மூத்த இரண்டு சகோதரர்களின் வழிகாட்டலில் இலங்கை - ஸரந்தீவு வந்து முரீதீன்களைப் பெற்றார்கள்.

மானாமக்கீன் 45
வாழ்க்கையில் பெரும்பகுதியை இலங்கையில் கழித்து சிறந்த மார்க்க ஞானியாகவும், பெரும் மேதையாகவும் திகழ்ந்தார்கள். இறுதியில் தாயகத்தில்
ஒய்வுறக்கம் கொண்டார்கள்.
அன்னாரது மூன்று ஆண் மக்களுள் மூத்தவர் அஷ்ஷெய்க் முஹியித்தீன் காதிரி. தமது தந்தையாரது இறுதிப் பொழுதுகளில் தரீக்காப் " பணிகளை இலங்கை - ஸ்ரந்தீவில் முன்னெடுத்துச் சென்றார்கள். 1948-ல் தாயகம் சென்றபின் ஒய்வுறக்கம்.
நூற்றாண்டைத் தொட்ட பெரிய பாவா
அஷ்-ஷெய்கு அப்துற்றஸ்ஸாக் காதிரியின் இளைய புதல்வராகவும், மேனா ஹாஜியார் அப்பா அவர்களது அருமந்த பேரனாகவும் கடந்தாண்டு (2002) ஆகஸ்ட் திங்கள் வரையில் தமிழகத்திலும் இலங்கையிலும் உலா வந்த மெளலவி, ஃபாழில் அல்ஹாஜ் அஷ்ஷெய்க் ஸெய்யிது ஸாலிஹ் காதிரி அவர்களைப்பற்றிச் சொல்ல தனி நூலொன்றிலேயே வசதிப்படும்.
அப்படியும் இப்படியும், மேய்ந்து என
। ଶିଶ୩ ଗITର{ கூரலை நிறுத்திக் * கொள்கிறேன்.
ஹிஜ்ரிக் கணக்குப்படி பார்த்தால் நூறாண்டுகளைப் பூர்த்தி செய்த மாமனிதர்! கி.பி. ஆண்டின்படி 97 வரலாம். (கி.பி. 1905 / ஹிஜ்ரி 1322 - முஹர்ரம் - 26 / ஹிஜ்ரி 1423 - ஜ. அவ்வல்24 கி.பி. 2002 ஆகஸ்ட்- 4)

Page 26
46 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
ஒரு மவ்லவி ஆலிமாக சமுதாயத்திற்குச் சேவையாற்ற வந்த அன்னார், ஊர் ஜாமிஆ மஸ்ஜிதில் பேஷ் இமாமாக ஊதியம் பெறாமல் கடமையாற்றிய கண்ணியவான். இளங்கடை முஸ்லிம் சமுதாய செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவர் (1946).
1948-லிருந்து தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டு இறுதிப் பொழுதுகள் வரையில் இலங்கை ஸெரந்தீவில் இவர்களது தரீக்கா வழிநடத்தல் தொடர்ந்து நடந்திருப்பது சாதனையிலும் சாதனை!
தரீக்காத் தழைத்த ஊர்களுள் ஒன்றான இலங்கை, திஹாரி - தூல் மலையில் பெரிய பாவா அவர்கள் தலைமையில் சிறப்பாக நடத்தி வைத்த ஒரு திருமணப் படம் நாள் 16-10-1981), மணமகன் இன்று புகழ்பெற்ற ஒரு சமூகச் சேவையாளராகவும், திஹாரி இஸ்லாமிய அங்கயீனர்நிலையத் தலைவராகவும் திகழ்கிறார். அன்னார் அல்ஹாஜ் என் ஜிஃப்ரி ஹனிபோ அவர்கள். கால் நூற்றாண்டை அணுகும் அவருடைய மண வாழ்க்கை இன்னும் சிறக்க மீண்டும் வாழ்த்துவோம்.
 

மானாமக்கீன் 47
கிந்தோட்டை, பளவத்தை முதலிய இடங்களில் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட தைக்கியாக்கள் உள்ளன.
இலங்கையின், கொழும்பு - களுதிதுறை - தர்ஹா நகர் (அழுத்கமை), காலி, மாத்தறை, நீர் கொழும்பு - பலஹத்துறை, திஹாரி, கண்டி - உடுநுவர, கெலிஒய, எல்பிடிய மற்றும் பல பகுதிகளிலும் ஆயிரமாயிரம் முரீதீன்களின் உள்ளத்தில் உறைந்து புகழப்படுபவர்களாக அவர்கள் திகழ்கிறார்கள்.
நுவரெலியா என்ற ‘இலங்கை ஊட்டி’யின் டவுண் ஜ"ம்ஆ மஸ்ஜிதின் அடிக்கல் நாட்டும் வைபவமும், திறப்புவிழாவும் அவர்களைக் கொண்டே நிகழ்வுற்றதாக அறிய முடிகிறது.
கிந்தோட்டை (காலி)யில் பெண்களுக்கென்றே ஒரு தனி மஸ்ஜித் நிறுவப்பட்டிருப்பதும் இவர்களால்தான்!
‘தன்னை அறிவதன் தத்துவம்’ எனும் இவர்களது நூலாக்கத்தில், தரீக்கா வழி நடந்து மெய்வழி அடைய
ஆவலுறும் மக்களுக்கு நல்ல பல தகவல்கள் உள்ளன.
அகரம்’ என்ற சிகரம்
நால்வரையும் அறிமுகப்படுத்திக் கொள்ளப்போகிறோம். முதலில் மூத்த புதல்வரை
அஷ்ஷெய்க் அப்தல் ரஸ்ாக் காதிரி என்ற அவர்களை அகரம்’ என்றழைத்து மகிழும் மக்களை நேரில் கண்டு விவரம் சேகரித்தேன்.

Page 27
48 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
1930-ல் அவனி தரிசனம் பெற்ற 'அகரம்’ தாயகத்தில் ஆரம்பக்கல்வி கற்றுவிட்டு, வயது சுமார் பதினெட்டு ஆகும் பொழுது கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரியில் உயர்கல்விக்குச் சேர்ந்தார்கள்.
இத்தகவல் அறிந்ததும் எனக்குக் கால் நிலத்தில் படவே இல்லை!
ஏன்? நானும் அந்த ஸாஹிராக் கடலில் ஒரு சிறு துளியாயிற்றே!
தமது 63 ஆண்டுகால வாழ்வில் இலங்கை - ஸரந்தீவில் இருந்த காலங்கள் கொஞ்சமே! என்றாலும், அப்போதிருந்த அஷ்-ஷெய்க் அப்துல் காதிர் ஸ9ஃபிஹழரத் (காயல்பட்டினம்), காமா ஹழரத் ஆகியோரிடம் மார்க்க ஞானம் பெற்றவர்.
‘அகரம்’ என்ற பெயருக்குள் மறைந்து, ‘கலையமுது’ 'ஜிஹாத்’ ‘‘செப்பம்’ சஞ்சிகைகளை நடத்தி குமரி முஸ்லிம்களின் இதழியல் ஆற்றலை உணர்த்தினார்கள்.
தமது இஸ்லாமிய - இலக்கியச் சேவைகளுக்காக 'அல்லாமா - தாஜ"ல் மில்லத்’ ஆகிய விருதுகளைப் பெற்றவராக 2.12.1993-ல் ஓய்வுறக்கம் கொண்டார்கள்.
அன்னார் பல சமூக சேவை அமைப்புகளுடனும், கல்வி நிறுவனங்களுடனும் தொடர்புகள் கொண்டவர்களாகப் பதவிகள் வகித்து சமுதாயத்திற்குப் பெருந் தொண்டாற்றியவர்களாகப் பார்க்கிறேன்.
அத்தனையையும் விவரிக்க இயலாத இடப்பஞ்சம் இந்நூலிலே.
எவ்வாறாயினும், "அகரம் இப்ப இருக்கணும், அகரம் இருந்தால் இப்படி நடக்குமா? அகரம் இருந்திருந்தால் இப்படியா

மானாமக்கீன் 49
இருக்கும்?’ என்றெல்லாம் கோட்டாறுப் பெருமக்கள் பேசுவதைக் கேட்டு இப்பெருமகன் மீது பெருமதிப்பு ஏற்படுகிறது.
தந்தை வழியில் தனயன்!
அஷ் - ஷெய்க் செய்யித் ஸாலிஹ் காதிரி (பெரிய பாவா) : அவர்களது மூன்றாவது மகனார் அல்ஹாஜ் மவ்லவி ஃபாழில்அஷ் - ஷெய்க் பாபுல் ஹஅதா காதிரி அவர்கள். இவர் தற்சமயம் கொழும்பில்! தரீக்கா
மஸ்ஜித் முஹியித்தீனில்!
சுமார் இருபது ஆண்டுகள் கேரளா - திருவனந்தபுரம் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் அரபுப் பேராசிரியராகக் கடமை புரிந்துவிட்டு, தந்தை வழியில் இலங்கையில் தரீக்காவின் தலைமை பீடத்தில் உள்ளார்கள்.
அன்னாரின் ஆண்மக்களுள் இருவர். இலங்கையில் தந்தையாரின் நிழலில் தரீக்காப் பணி.
மூத்தவரான மவ்லவி பி.எச்.எம். ஃபாயிஸ் முஹியித்தீன் காயல்பட்டினத்து மஹ்ழராவில் புடம் போடப்பட்டவர் மஹ்ழரி. அமைதி, அடக்கம் ஆகியவற்றின் உருவம் அவர்
இலங்கைத் தென்பகுதியில் கோட்டாறு வழித் தரீக்கா கேந்திர நிலையமாகக்

Page 28
50 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
காட்சி தரும் மளுஹருஸ் ஸ"லஹா தைக்கியாவில் தரீக்காப் பணிகளை முன்னெடுத்துச் செல்கிறார்.
இத்தைக்கியா பற்றிய மேலும் தகவல்கள் பின்னர் கிடைக்கும்.
இதற்கு மிக அண்மியதாக உள்ள நுழாருல் காதிரிய்யா அரபுக் கல்லூரியில் ஒரு பேராசிரியராகவும் சிலகாலம் மவ்லவி ஃபாயிஸ் பணிபுரிந்துள்ளார். (இக்கலாசாலை 1982-ல், "காலி அப்பா’ நினைவாகக் கட்டப்பட்டு மவ்லவி அவர்களது தந்தையாரால் திறந்து வைக்கப்பட்ட ஒன்றாகும். 'காலி அப்பா பற்றி அறிய சற்று காத்திருங்கள்.
மேலும், மவ்லவி ஃபாயிஸ் இந்நூலின் ஆன்மிக ஆய்வுகளுக்குத் தோன்றாத் துணையாகத் திகழ்ந்தார். என் அவசரங்களுக்கு ஈடு கொடுத்தார். எந்த நேரத்திலும் என் தொ.பே.அழைப்புகளுக்குக் கிடைத்துக் கொண்டே இருந்தார். என் பேனாவின் உள்ளார்ந்த பாராட்டுக்கள் அவருக்கு.
இவரது சகோதரர் அப்துல் ரஸ்ஸாக் முஹியித்தீன் B.A., DPCS, ADAT ஆன்மிக சேவைத்துறையில் இலங்கையில் பணிபுரியாவிட்டாலும், தமது ‘உப்பா’ (மர்ஹஅம் அஷ்-ஷெய்க் செய்யிது சாலிஹ் காதிரி) அவர்களுடன் வந்து இலங்கைத் தரீக்காச் சேவைகளைக் கண்டு சென்றுள்ளார்.
J9|DL| நாடுகளில் 655 ஆலோசகராகப் பணிபுரிந்துவிட்டு தற்சமயம் நாகர்கோவிலில் “டிராவல் பாயிண்ட்’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். நாகர்கோவில் இஸ்லாமிய கலாசாரக் கழகத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார்.
அஷ்ஷெய்க் பாபுல் ஹஜூதா காதிரியின் மற்றொரு மகன், மவ்லவி பி.எச்.எம். முஹியித்தீன் அறாஸ் காதிரி ஜமாலி

மானாமக்கீன் 51
அகவையிலும் அனுபவத்திலும்
இளையவர். தந்தையாருக்கு உதவியாக கொழும்புக் கேந்திர நிலையத்தில் (மஸ்ஜித் முஹியித்தீன்) உள்ளார். எதிர்காலத்தில் நல்ல நிர்வாகியாகத் திகழக்கூடியவராக என் பேனாவின் பூ கண்களில் தென்படுகிறார். இவர் தமது வாழ்க்கைத் துணைவியாக இலங்கை - திஹாரியில் ஒரு நங்கையை அடைந்துள்ளார் என்பதும் மகிழ்வான தகவல். -
மற்றுமொரு தனயனும் தந்தை வழியில்!
ஆம்! பெரிய பாவா அஷ்-ஷெய்க் ஸெய்யித் ஸாலிஹ் காதிரி அவர்களது
இளைய புதல்வரும் தந்தை வழியில் தரீக்காவை வழிநடத்திச் செல்பவரே.
அல்ஹாஜ் மவ்லவி அஷ்-ஷெய்க் சுலைமான் முர் வித் முஹியித்தீன் காதிரி அவர்களை நேர்கான கோட்டாறு இல்லத்திற்கே சென்றது மிகப்பசுமை. ஏகப்பட்ட வரவேற்பு. கொழும்பில் தொலைபேசித் தொடர்பு கொள்ளவே வசதி ஏற்பட்டது.
தற்சமயம், குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமாத் தலைவராகவும், கோட்டாறு ஸெய்யிதுனா இப்ராஹிம் அறபிக் கல்லூரி அறங்காவலர் குழுச் செயலாளராகவும் உள்ள அவர்தம் சேவைகள் 1974-லிருந்து இலங்கை - ஸ்ரந்தீவுக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

Page 29
52 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
ஒரு முக்கிய அடிக்குறிப்பு :
அகரம் அப்துர் ரஸ்ஸாக் காதிரி அவர்களுக்கு அடுத்துப் பிறந்தவரும், மேற்படி இரு சகோதரர்களுக்கும் மூத்தவருமான மர்ஹசிம் சிராஜ"த்தீன் காதிரி பி.எஸ்சி, பி.டி.யும், அவரது புதல்வர் மர்ஹ9ம் நூஹ9ல் ஹக் பி.ஏ., பிஈடியும் சுற்றுலாப் பயணிகளாக மட்டும் இலங்கை வந்து போயுள்ளனர். தற்சமயம் நூஹ9ல் ஹக் ஹாஜி பாபு நாகர்கோவில் நகரசபை அங்கத்தவர்.
மேனா ஹாஜியார் அப்பா உடன்பிறப்புகள்
இத்தனை நேரமும், மேனா ஹாஜியார் அப்பா அவர்களது வாரிசுகளில் நால்வரில், சைலான் - ஸ்ரந்தீவுக்கு வருகை தந்து பணியாற்றிய இருவரையும், (அஷ் ஷெய்க் சுலைமான் காதிரி - அஷ்ஷெய்க் அப்துஸ்ஸாக் காதிரி) அவர்கள்தம் வழித் தோன்றல்களாய் வந்தவர்களையும் அறிமுகப்படுத்திக் கொண்ட நாம், மேனா ஹாஜியார் அப்பா அவர்களது உடன்பிறப்புகள் மூவரையும் தெரிந்திடுவோம். CKC) அஷ் ஷெய்க் ஹஸன்காதிரி CC) அஷ் ஷெய்க் அப்துல்லா ஹாதியுல் காதிரி
CC) அஷ் ஷெய்க் முஹம்மது ரஜபுல் காதிரி, (ரஜப் அப்பா)
மேனா ஹாஜியாரின் மூத்த சகோதரர்
அஷ் - ஷெய்க் ஹஸன் காதிரி என்ற இவர்கள், இலங்கையின் பல பாகங்களிலும் சேவை. பல ஊர்களில் மத்ரஸாக்கள் நிறுவியவர்கள். அதில் சில இன்று மஸ்ஜித்களாகப் பரிணமித்துள்ளன.

மானாமக்கீன் 53
இவர்களது சேவையை, அன்னாரது புதல்வர்கள் நால்வரில் மூத்தவர் மட்டும் (அல்ஹாஜ், அஷ் - ஷெய்க் அப்துல் காதிர் காதிரி) தொடர்ந்துள்ளார். அத்துடன், அவர்களது வாரிசுகளான அஷ் - ஷெய்க் முஹம்மது உதுமான் செய்யது ஹமீதுத்தீன் காதிரி, அஷ் - ஷெய்க் ஹஸனுத்தீன் காதிரி ஆகியோரும் கொண்டு சென்றுள்ளனர்.
அஷ் - ஷெய்க் ஹமீதுத்தீன் அவர்களது மக்பரா, கண்டி
உடுநுவர ஜாமியுல் மஸ்ஜிதுல் அக்பர் பெரியபள்ளிவாசல்
வளாகத்தில் உள்ளது. (இப்பள்ளி பற்றிய வரலாற்றுக் குறிப்பையும் இந்நூலில் காணலாம்).
இளையவர் அஷ்-ஷெய்க் ஹஸனுத்தீன் 'காதிரியின் மக்பராவும் கொழும்பில் உள்ளது எனத் தகவல். எந்த இடத்தில் என்பது ஒரு கேள்விக்குறி.
மேலும், மூத்தவரது மகனார், இப்னு ஸாஹிபு தம்பி அப்துல் காதிர் காதிரி அவர்களும் இலங்கையில் சேவையாற்றியவர்களே.
மேனா ஹாஜியாரது இரண்டாவது சகோதரர்
அஷ்-ஷெய்க் அப்துல்லாஹ் ஹாதி காதிரி என்ற இரண்டாவது சகோதரரும் தமையனாரைப் போல தரீக்காத் தொண்டில் இலங்கையின் L 6) பாகங்களிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
இவர்களது மக்பரா, கண்டிக்கு அடுத்த பெரிய நகரான மாத்தளையில், டவுன் ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் காணப்படுகின்றது.
காயல்பட்டினத்தின் பெரும் ஆலிம்களுடனும் பெரியார்களோடும் நெருங்கிய தொடர்புடையது

Page 30
54 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இப்பள்ளிவாசல் என்பதும், அவர்களுள் நால்வரது ஓய்வுறக்க இடங்களும் இங்கேயே உள்ளன என்பதும் நாம் நினைவில்கொள்ள வேண்டியவொன்றாகும். (எனது 'வரலாற்றில் இலங்கையும் காயல்பட்டினமும்’ நூலில் நிறைய விவரங்கள்).
அன்னாரது வாரிசுகள் மூவரின் சேவைகளும் இலங்கை - ஸ்ரந்தீவுக்குக் கிடைக்கவில்லை. எனினும், இளையவர் அஷ் - ஷெய்க் ஸஅலைமான் ஷாஹஅல்ஹமீது காதிரி அவர்களது புத்திரர்களின் தொண்டுகள் மட்டும் கிடைத்தன.
ஒருவர் : மெளலானா மவ்லவி,
அஷ் - ஷெய்க் அப்துல்லா ஹாதிகாதிரி. ஆ. நரரி (“ஹாதி பாவா”) 機
மற்றவர் : மெளலானா மவ்லவி, ஹாஜி ஷெய்க் முஹியித்தீன் அப்துல் காதிர் காதிரி பாக்கவி.
முன்னையவர் பாட்டனாரது பெயரிலேயே உலா வந்த சிறப்பான மார்க்க அறிஞர், சிறந்த பேச்சாளர்.
ஹி.1340-ல் (கி.பி. 1926) வருகை தந்து தமது 12 ஆண்டுகாலச் சேவையில், சிலும்பலை தைக்கியாவான “மழ்ஹறு
 
 
 

மானாமக்கீன் 55
துஸ் ஸ"லைமானிய்யா வளர்ச்சியில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார்கள். தாயகத்திலேயே ஓய்வுறக்கம்.
இவர்களைத் தொடர்ந்து இளைய சகோதரர். (அஷ்ஷெய்க் முஹ்யித்தீன் அப்துல் காதிர் காதிரி) 1941-ல் வருகை தந்தார்கள். 38 ஆண்டுகள் சேவை. இன்று நாம் காணும், காலி - களுவல்லை மல்ஹரஸ்ஸ"லஹாத் தைக்கியாவினதும், அதனைச் சார்ந்த ஏனையவற்றினதும் பொறுப்பாளராகவும், தரீக்காவைக் கொண்டு நடத்துபவராகவும் திகழ்ந்துள்ளார்கள்.
அடிக்கடி, அருகில் உள்ள சிலும்பலை (ஹிரும்புற) தைக்கியாவுக்கும் விஜயம் செய்து நல்ல வழிகாட்டல்களை வழங்கியவர்களுமாவார்கள்.
அத்துடன், புணரமைக்கப்பட்ட மேற்படி தைக்கியாவை ஹிஜ்ரி 1393-றபீஉல் அவ்வல் 01-ல் (1972-4-17) திறந்து சிறப்புச் செய்தார்கள்.
5.11.1912-ல் பிறந்த அன்னார், 16-9-1978ல் தாயகத்தில் ஓய்வுறக்கம் பெற்றார்கள்.
இவர்களது நான்கு புதல்வர்களுள் மூத்தவர் மெளலானா மெளலவி அல்ஹாஜ் ஷெய்க் முஹம்மது ஹிஃபதுல்லாஹ் காதிரி ரஹ்மானி அவர்கள் 20.10.1978-ல் இலங்கை வந்து தைக்கியாப் பொறுப்பேற்று, 18 ஆண்டுகள் தரீக்காப்பணி செய்து, மேற்படி காலி - களுவல்லை தைக்கியாவிலேயே ஒய்வுறக்கம் கொண்டுள்ளார்கள். (2.05.1996).
அன்னாரது வாரிசான அப்துல் காதிர் பாஹிம் காதிரி அவர்களும், சகோதரர்களுள் ஒருவரான ஆலிஜனாப் எஸ்.ஹெச்.ஏ. ஹினாயத்துல்லா சாகியும் இலங்கை - ஸ்ரந்தீப் மண்ணின் மணம் நுகர்ந்திருக்கின்றனர்.

Page 31
56 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
'காலி அப்பா' மேனா ஹாஜியாரின் இளைய சகோதரர்
காலி மாநகருக்கே பெரும் அருட்கொடை - என வர்ணிக்கப்படும் இவர்களது முழுப்பெயர். அஷ்-ஷெய்க் முஹம்மது றஜபுல் காதிரி. மேனா ஹாஜியார் அப்பா அவர்களது இளைய சகோதரர்.
‘ரஜப் அப்பா’ எனப் பக்திப் பரவசமாக அழைத்தார்கள் முரீதீன்கள்.
'காலி அப்பா’ எனப் பாசத்தோடு அனைத்து மக்களாலும் பேசப்பட்டார்கள்.
கோட்டாறில் ஹி.1225/கி.பி. 1810-ல் பிறந்த இவர்கள், இளமையிலேயே மார்க்க ஞானத்தில் அதிக ஈடுபாடும் தேர்ச்சியும் பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள்.
இலங்கையின் பல பகுதிகளுக்கும் கால்நடையாகவே பயணித்து சன்மார்க்க நெறிகளைப் பரப்பினார்கள்.
இன்று, காலி மாநகருக்குச் சமீபமாக, பிரதான
கொழும்பு வீதியில், மஹா மோதர - களுவல்லை என்ற இடத்தில் எல்லோரது பார்வையிலும் பட்டுப் பரவசப்பட வைக்கும் “மழ்ஹருஸ் ஸ"லஹா’ தைக்கியாப்பள்ளி, இவர்களது பெரு முயற்சியில் 118 ஆண்டுகளுக்கு முன் (ஹிஜ்ரி 1305) நிறுவப்பட்டவொன்றாகும்.

மானாமக்கீன் 57
காலி - களுவல்லை மழ்ஹருஸ் ஸுலஹா
இதுவே இலங்கைத் தென்பகுதியின் கோட்டாறு வழிவந்த காதிரிய்யாத் தைக்கியாவின் கேந்திர நிலையமாகத் திகழ்கிறது.
இதனைத் தொடர்ந்து காலிமாநகரின் மற்றுமொரு பகுதியான சிலும்பலையிலும் ('ஹிரும்புற) ஹிஜ்ரி 1308 கி.பி. 1891-ல் தரீக்காவை நிறுவினார்கள். ஆனால் தைக்கியா அமைக்கப்படவில்லை. அது அவர்களது மைந்தராலேயே கை கூடியது. (விவரம் அடுத்தடுத்த பக்கங்களில்).
இந்தச் சிலும்பலையில் தீவிர தரீக்காவாதியும் ஓய்வு பெற்ற கல்விமானும், எழுத்தாளருமான முதியவர் எம்.டீ. முஹம்மது அவர்களை நேர்முகம் கண்டபொழுது, “எமது ஊரைப் பொறுத்தவரை ஆன்மிகத்துறையில் வரலாற்று முக்கியத்துவமான ஆண்டு ஹிஜ்ரி 1308 தான். அப்பொழுது

Page 32
58 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
f
ரஜப் அப்பா அவர்களால் சன்மார்க்க நெறிமுறைகளைச் சரியானமுறையில் மக்கள் புரிந்துகொண்டனர்’ என்றுரைத்தார்.
‘இலங்கையில் நூற்றுக்கும் அதிகமான தைக்கியாக்களும், ஐம்பதுக்கும் அதிகமான பள்ளிவாசல்களும் நிர்மாணிக்கப் படுவதற்கு இப்பெரியார் காரணமாக இருந்தார்’ எனவும் முதியவர் எம்.டீ. முஹம்மது அவர்கள் ஒரு கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளார்.
சிலும்பலையில் தரீக்கா ஆரம்பித்து வைக்கப்பட்ட அதே ஆண்டு (ஹிஜ்ரி 1308/ கி.பி. 1891) ‘ரஜப் அப்பா’ அவர்கள் ஒய்வுறக்கம் கொள்ளச் சென்றது ஒரு பேரிழப்பே. அப்பொழுது வயது 83. அவர்களுடைய ‘மக்பரா அமைந்திருப்பது காலி - களுவல்லை “மழ்ஹருஸ் ஸ"லஹா’விலேயே!
இம் மகான் எமக்குப் புதையலாகத் தந்திருக்கும் அறபுத்தமிழ் நூல்களின் விபரம்.
தம்ஹ9த் மாலை - சபபு மாலை - ஞானப் பெண் - உடலறிவு பலஹ9க்கும் - ஆதியன. அத்தோடு, ராத்திபதுல் காதிரிய்யா - ராத்திபதுல் கமாலிய்யா - ராத்திபதுல் கெளதிய்யா முதலிய தி க்ரு, அவுராதுகளும் இயற்றி சீடர்களுக்கு அன்பளித்துள்ளார்கள்.
இவர்களது இல்லற வாழ்க்கையைப் பொறுத்தவரையில், தமிழகக் காயல்பட்டினம், இலங்கை அளுத்கமை (தர்ஹா நகர்). ஆகிய இரு இடங்களும் சிறப்புப் பெறுகின்றன.
காயல்பட்டினத்தில் செய்து கொண்ட திருமணத்தால் ஒரு சுலைமான் காதிரியை இலங்கை - ஸ்ரந்தீவுக்கு வழங்கினார்கள். (அடுத்த புதல்வர் இளவயதிலேயே வஃபாத்து)

மானாமக்கீன் 59
அளுத்கமை (தர்ஹா நகர்) சம்பந்தம் ஒரு மரக்காயர் லெப்பை ஆலிம் கதீப் குடும்பத்தாரால் கிடைக்கப்பெற்று மூன்று வாரிசுகள் உருவாகினர். அதில் மூன்றாவது மகனான அஷ்.ஷெய்க் அப்துல் காதிர் காதிரி அவர்களைத் தரீக்காவை வழிநடத்தப் பணித்தார்கள்.
முதலில் காயல்பட்டின வழித் தோன்றலின் பங்களிப்பைப் பார்த்திடவேண்டும். தந்தையார் ஒய்வுறக்கத்திற்குச் சென்ற ஹி. 1308/கி.பி. 1891-லேயே தரீக்கா விடயங்களைப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
காலி - சிலும்பலையில் நிரந்தரமாக ஒரு தைக்கியாவின் தேவை மிகவாக உணரப்பட்டது.
நிலம் ஒன்றை 'காலிமாமா' அப்துர் ரஹ்மான் அவர்களது தந்தை யூசுப் லெப்பை அன்பளிக்க முரீதீன்கள் முஹிப்பீன்கள் ஒத்துழைப்புடன் "அல்-மற்ஹறுதஸ் ஸ்"லைமானிய்யா’ தைக்கியா அமையப்பெற்றது.
****88ہجبر ہ..........
அல்-மழ்ஹறுதுஸ் ஸுலைமானிய்யா

Page 33
60 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இதில், ஹாஜி ஷெய்க் சுலைமான் காதிரிய்யின் அரும்பெரும் சேவைகள் 12 ஆண்டுகள்வரை கிடைத்தன.
இவ்வாறு தென்னிலங்கையில் மட்டுமல்ல, மலைநாட்டுக்கு அண்மிய பொல்கஹவெலை நகரத்தோடு ஒட்டிய ‘ஒருலியத்த’ கிராமம், பந்தாவைக்குப் பக்கமான “புதிய ஊர்’ கிராமம், பரகஹதெனிய என அறநெறிப் பணிகளை அவர்கள் தொடர்ந்தார்கள்.
இந்தப் பொல்கஹவெலையைத் தமிழ்ப்படுத்தினால், ‘தென்னை மர ஊர்’ என்று வரும், “பொல்’, தேங்காய், ‘கக’ மரம். உண்மையில் இப்பகுதியில் தென்னை மரங்கள் அதிகமதிகம்!
ஒய்வுபெற்ற கல்வி அதிகாரியும், நல்ல ஒலிபரப்பாளரும் எழுத்தாளருமான எனது நண்பர் ஏ.எல்.எம். ராஸிக் இவ்வூர்க்காரர். அருமையான தகவல்களுக்குத் தோன்றாத் துணையானார்!
ஆரம்பகாலத்தில் பொல்கஹவெல என்ற சிங்கள வட்டாரத்தில் முதல் முஸ்லிம் குடியிருப்பாக ஏற்பட்ட இடத்தை புதிய ஊர்’ என அழைத்தார்களாம். இங்கே முஹல்லம் மீராலெப்பை ஆராச்சி ஆக (ஊர்த்தலைவர்) இருந்தார். இதற்கருகில் பந்தாவை ஊர் உள்ளது. இங்கும் முஸ்லிம் குடியிருப்புகள் உண்டாகின.
முஹல்லம் மீரா லெப்பை ஆராச்சியின் மகனார் அகமது லெப்பை, அவரது புதல்வர்கள் யூசுப் லெப்பை, இபுராஹிம் லெப்பை முதலியோர் பரம்பரையாக இப்பகுதி முஸ்லிம் சமூக முதுகெலும்புகளாகத் திகழ்ந்தனர்.
மேலும் மர்ஹ9ம் இபுராஹி "பதிவாளர்’ என்ற மதிப்பான பதவியுடன் “கஃலிபா லெப்பை என்றும் ஆன்மிகப் பதவி வகித்தார்.

மானாமக்கீன் 61
இவர்களிருவருடனான அறநெறி வழித் தொடர்புகள் ஷெய்க் சுலைமான் காதிரி அவர்களுக்கும் அன்னாரது ஏகப் புதல்வர் அல்ஹாஃபிஸ், ஹிஃபத்துல் கரீம் அவர்களுக்கும் அதிகமாக இருந்தது.
இந்தப் புதிய ஊர்க் (பந்தாவை)காரர் மர்ஹ9ம் மீராலெப்பையின் பரம்பரை இல்லத்தில் வைத்துத்தான் ஷெய்க் சுலைமான் காதிரியின் ஒய்வுறக்கமும் ஏற்பட்டது. நாள் ; ஹிஜ்ரி 1326 - ஷஃபான் - 8/ 15.9.1908),
ஆனால், நல்லடக்கம் நடந்ததும், மக்பரா, அமையப் பெற்றதும் இங்கல்ல. பரகஹதெனியா என்னும் ஊரில். இது, குருநாக்கல் - மாவத்தகம தாண்டிய ஊர். இவ்வழியாகவும் கண்டியைச் சென்றடையலாம்.
அங்கே அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட, சிறிய அழகிய கனிமதஸ்ஸ"லஹா’த்தைக்கியாவில். இது, அங்கு கம்பீரமாகக் காட்சி தரும் ஜாமிஉல் அன்வர் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் உள்ளது.
இந்நிகழ்வை சுவைபட விவரிக்கிறார் ஒரு பெரியார்.
இப்பொழுதும் ஒர் இளைஞராக நூற்றாண்டை நோக்கியவராக குருநாக்கல் நகரில் வாழும் காயல்பட்டினவாசி அவர்!
எனது ‘வரலாற்றில் இலங்கையும் காயல்பட்டினமும் 11-ஆம் பக்கத்தை அலங்கரிக்கும் அன்னார், பெருமதிப்பிக்குரிய மு.கா. செய்யிது அஹமது அபூதாஹிர் 'ஆலிம்சா’ அவர்கள்!
இந்நூல் உருவாகும் சேதி கேட்டு வாழ்த்தனுப்பியதோடு
தமது மலரும் நினைவுகளை எழுத்தில் பதித்து (முதிய வயதிலும் கை நடுக்கமில்லை!) அனுப்பினார்கள் இப்படி:

Page 34
62 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
ரஜபுல் காதிரியின் காயல்பட்டின மணவாழ்க்கையில் பிறந்த சுலைமான் காதிரி சொளுக்கார் தெருவில் என் இல்லத்திற்குப் பக்கத்தில் குடி இருந்தார்கள் என எங்கள் ஊர்ப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்றைக்கும் என்னை குருநாக்கலில் பார்க்க வருகிற ஊர்க்காரர்கள் அப்படியே பக்கத்து ஊராகிய பரகஹதெனியா போய் அவர்கள் மக்பராவை ஸியாரத்துச் செய்யத் தவறமாட்டார்கள்.
அவர்களது கடைசி காலத்தில் பொல்கஹவலை பந்தாவையில் வஃபாத்தானார்கள். ஜனாஸாவை எங்கே அடக்குவது என்பதில் அந்த ஊர் ஜமாஅத்துக்கும், பரகஹதெனியா ஜமாஅத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு எங்கள் மாமாவே தீர்த்து வைத்தார்கள். அவர்களே அவர் காரில் பரகஹதெனியாவுக்குக் கொண்டுபோய் நல்லடக்கம் செய்தார்கள்
இன்றைக்கும் இவர்கள் 'கோட்டாறு பாவா’ என்று தான் (தந்தை வழியில்) அழைக்கப்படுகிறார்கள். ஆனால் தாய் வழியை நினைத்து காயல்பட்டின பாவா’ என்று யாரும் அழைப்பாரில்லை. இவர்களது வாழ்க்கை முழுவதும் காயல்பட்டினத்திலும் காலிமாநகரிலும்தான் கழிந்திருக்கிறது!
என் எழுத்துக்களின் பேரபிமானி, பெரியவர் - இளைஞர் - ஆலிம் மு.கா. செய்யிது அஹமது அபூதாஹிர் அவர்கள் எனது இந்நூலிலும் இடம் பெற்றுவிட்டதற்காக நெஞ்சம் நெகிழ்கின்றேன். அவர்களுக்கு நன்றி பாராட்டி மேலே பேனாவைப் பதித்துச் செல்ல அனுமதியுங்கள்.
அஷ் - ஷெய்க் சுலைமான் காதிரி ஓய்வுறக்கத்திற்குப் பிறகு ஏகப் புதல்வர் அல்ஹாஃபிஸ் செய்கு முஹம்மது

மானாமக்கீன் 63
ஹிஃபதுல்கரீம் காதிரி அவர்கள், பரகஹதெனிய கனிமதுஸ"லஹா'வைப் பொறுப்பேற்று தரீக்கா விடயங்களை முன்னெடுத்துச் சென்றார்கள்.
இவர்களால் பொல்கஹவெல ஒருலியத்த கிராமத்திலும் பள்ளிவாசல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.
இவர்களும் பத்தாண்டுகள் சேவையின் பின் ஒய்வுறக்கம் கொண்டு தந்தையாருக்கு அருகிலேயே தமது மக்பராவை அமைத்துக் கொண்டார்கள். (ஹி. 1336 - ரஜப் - 17/கி.பி. 1918).
‘ரஜப் அப்பா’ அவர்களது தமிழக வழித் தோன்றல்களின் சேவைகள் இவ்வாறு நிறைவு பெற -
இலங்கை - ஸ்ரந்தீவு அளுத்தமை (தர்ஹா நகர்) திருமண பந்தத்தின் வாரிசுகளான, மூன்று புத்திரர்கள், இரண்டு புத்திரிகளில்
CKC) அஷ் - ஷெய்க் ஹஸன் காதிரி - CKC) அஷ் - ஷெய்க் அப்துல்லா ஹாதி காதிரி - CCd அஷ் - ஷெய்க் அப்துல் காதிர் காதிரி
மூவரும் தந்தை வழியில் அறப்பணிகள் புரிந்தார்கள்.
மூத்தவரது வாரிசுகள் மூவர் : முறையே, ஷெய்க்
முஹ்யித்தீன் காதிரி - (இவர் மேற்படி தைக்கியாவிலும்,
களுவல்லை தைக்கியாவிலும் சேவை) அப்துல் ஹாதியுல் காதிரி
ரஜப் காதிரி ஆகியோர்.
இச்சகோதரர்களில் (மூத்தவரான) ஷெய்க் முஹ்யித்தீன் காதிரி அவர்களுக்கு மூன்று புதல்வர்கள் முறையே மவ்லவி ஷெய்க் நஸ்ஃபுல் ஹாஃபி பஹ்ஜி (3 பெண்கள்) ஷெய்க் முஹம்மது ஹஸன் (5 ஆண்கள் ஒரு பெண்) ஷெய்க் எஸுலைமான் (2 ஆண்கள், ஒரு பெண்) ஆகியோர்.

Page 35
64 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
(இவர்களில் ஷெய்க் ஹஸன் அவர்களது 4-வது மகன் ஸெய்யிது ஸஃப்வான், காலி கோட்டை இப்ராஹீமிய்யா அறபுக் கல்லூரியில் தற்போது கற்கை)
இதேபோல், (அஷ்ஷெய்க் ஹஸன் காதிரியின்) இரண்டாம் மகன் ஷெய்க் அப்துல் ஹாதி காதிரி அவர்களுக்கு, ஷெய்க் ஹஸன், ஷெய்க் முஹம்மது எனும் இரு புதல்வர்களும் ரிஸ்மியா, ஸில்மியா எனும் இரு புத்திரிகளும் உண்டு. (இந்த ஸில்மியா இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் மிகவும் புகழடைந்தவர். என் எழுத்துக்களின் அபிமானி)
மூன்றாவது மகன் ரஜப் காதிரி அவர்களுக்கு ஒரு பெண் மட்டும். மேலும் தகவல்கள் கிடைக்கவில்லை.
அபிமானிகள் ஒன்றை நன்றாகக் கவனிக்கவேண்டும். ஒரே பெயர் திரும்பத் திரும்ப வரும். குறிப்பாக ரஜப் காதிரி! மூத்த பெரியவர்கள் மறக்கப்படாதிருக்க இப்பழக்கம் எல்லாச் சமூகத்தவராலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் நாம் ‘காலி அப்பா’ ரஜபுல் காதிரியின் இரண்டாவது, மூன்றாவது மக்களின் விவரங்களைப் பார்ப்போம்.
இரண்டாமவர் (அஷ்-ஷெய்க் அப்துல்லா ஹாதி) ஹஜ்ஜுக்குச் சென்ற சமயம் ஒய்வுறக்கம் கொண்டு ஜன்னத்தில் முஅல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்! பிறந்த ஒரு ஆணும் குழந்தையிலேயே இறந்து களுவல்லை தைக்கியாவில் நல்லடக்கம்.
மூன்றாமவர் (அஷ் - ஷெய்க் அப்துல் காதிர் காதிரி) மற்றவர்களைவிட மிகவும் ஞானவானாக இருந்த காரணத்தினால், தந்தைக்குப் பிறகு தரீக்காப் பொறுப்புகள் அவர்களைச் சார்ந்தது. 1928 ஆண்டு வரையில் கடமை

மானாமக்கீன் 65
புரிந்துவிட்டு ஒய்வுறக்கம் கொண்டார்கள்.
இவர்களது மக்பராவும் காலி களுவல்லை மழ்ஹருஸ்ஸ"லஹாவிலேயே உள்ளது - தந்தையார் ரஜப் அப்பா’ அருகில்
அன்னாருக்கு மூன்று மக்கள். ஷெய்க் ஜிப்ரி - ஷெய்க் ஷாஹ"ல் ஹமீது - ஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் -
இந்த சகோதரர்களில் அஷ் - ஷெய்க் ஷாஹ"ல் ஹமீத் அவர்களது ஓய்வுறக்கம் கண்டி - தெஹியங்கையில் என நூலொன்றில் குறிப்பு காணப்படுகிறது.
இவர்கள்தம் ஏகப்புதல்வர்தான் இன்று நாம் அளுத்கமை - தர்ஹாநகர் “கோட்டாறு மன்ஸி’லில் காணும் மவ்லவி, ஹாஜி, அஷ் - ஷெய்க் | முஹம்மது ஹிஃபத்துல் கரீம் காதிரி அவர்கள்.
தற்சமயம் அன்னாருக்கு இருக்கும் இரண்டு இலட்சியங்களில் ஒன்று : கோட்டாறு புகழ்பாடும் பழம்பெரும் அளுத்கமை (தர்ஹா நகர்) மஸ்ஜித் முஹியித்தீன் தைக்கியா கட்டடப்பணிகளை நிறைவேற்றி முடிப்பது. மற்றொன்று : காலி - களுவல்லை நுழாறுல் காதிரிய்யா அறபுக் கலாசாலை’-யின் வளர்ச்சி.
இறைவன் அன்னாரது எண்ணங்களையும்
திட்டங்களையும் நிறைவேற்றிட இறைஞ்சிடுவோம்.
இவ்வாறாக -

Page 36
66 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இலங்கை - ஸ்ரந்தீவுக்குக் கோட்டாறிலிருந்து காதிரிய்யாத் தரீக்காவைக் கொணர்ந்த முன்னோடியான “மேனா ஹாஜியார் அப்பா’ அவர்கள், அவர்கள்தம் வழித்தோன்றல்கள், உடன் பிறப்புகள் என அனைவரையும் எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
‘விட்ட குறை, தொட்ட குறை’ எதையும் யாரும் கண்டுபிடித்தால் சொல்லுங்கள். அடுத்த இரண்டாம் பாகம் இருக்கவே இரு+க்கிறது. இன்ஷா அல்லாஹ்.
மேலும் - மேற்படி 'அப்பா’ அவர்கள் வழியில் அல்லாமல் வேறு கோட்டாறு ஞானவான்களும் அறம் வளர்க்க வந்துள்ளதும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.
அவர்களில் ஒரு சிலரது அறிமுகங்களையும் அடுத்தடுத்த பக்கங்களில் தரவிழைகிறேன்.
அஷ் - ஷெய்க் கலைமான் காதிரி
கோட்டாறு ஷெய்க்மார்கள் மத்தியில் மூன்று
பெயர்களுக்குப் பெரிய மெளசு
ஒன்று ஷெய்க் முஹியித்தீன். மற்றொன்று : ஷெய்க் சுலைமான்.
இன்னொன்று செய்யது முஹம்மது ஸாலிஹ்
இப்பெயர்கள் திருப்பித் திருப்பி வழித் தோன்றல்களுக்கும் வாரிசுகளுக்கும் சூட்டப்பட்டுள்ளன.
யார், யாருடைய மைந்தர், யார், யாருக்குப் பரம்பரை என்பதில் என் பேனா பலவேளை தடுமாறியது. சமாளித்துவிட்டேன்!
இப்பொழுது அறிமுகமாகப் போகிற ஷெய்க் சுலைமான்

மானாமக்கீன் 67
காதிரியும் அப்படித்தான்!
“ஸாஹிபுஸ் சைலானி பாவா’ எனப் போற்றப்பட்ட ஷெய்க் முஹம்மது காதிரியின் புத்திரர்.
இலங்கை - கண்டி மாநகருக்கு, அண்மிய மாத்தளை நகரில் - உல்பத்துப்பிட்டிய என்பது ஒரு சிறிய கிராமம். இங்கே ஒரு 'மஹ்ழரதுஸ் ஸ"லைமானிய்யா தைக்கியாவை நிறுவி, அறம் வளர்த்து தம்மையே அர்ப்பணித்தவர்கள் அவர்கள்; அங்கேயே அவர்கள்தம் மக்பரா உள்ளது. (30.11.1946 / ஹி. 1365 - ஸ்பர்- 25)
இவர்தம் புத்திரர்கள் ஷாஹ் காதிரி, ஷெய்க் (வஹி) காதிரி ஆகியோராவர். (இரண்டாமவர் இலங்கையிலேயே ஒய்வுறக்கம். இடம் தெரியவில்லை).
‘திரு மெய்ஞ்ஞான சாகரத் திருப்பாடல் திரட்டு’ - இவர் இயற்றிய நூல்களிலொன்று.
கண்டி மாவட்டத்தில் அன்னாரது பிரதான கலிஃபாவாகத் திகழ்ந்தவர். ஒப்பாரும் மிக்காரும் இல்லா கண்டி தர்கா வித்துவான், வித்துவத் தீபம் அருள்வாக்கி ஆ.பி. அப்துல்காதிறுப் புலவர் அவர்களாகும்.
அப்புலவரேறுவின் ஆன்மிகக் குருவாகவும், அவரால் பாடப்பெற்ற “கோட்டாற்றுப் புராணம்’ உருவாகக் காரண கர்த்தாவாகவும் திகழ்ந்தவர்கள் ஷெய்க் சுலைமான் காதிரி அவர்களே!
இப்பொழுது கோட்டாறில் இவர்களது வாரிசான முகமது கவுஸ் சாகிப் வாழ்கிறார். மற்றொரு வாரிசு ஒலியுத்தின் காதிரி இலங்கையில் ஓய்வுறக்கம்.

Page 37
68 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அஷ் - ஷெய்க் ஷாஹ"ல் ஹமீது காதிரி
கண்டி மாநகருக்கு அடுத்த நகரமான கம்பளைக்கு அண்மிய வட்டதெனியாவில் கோட்டாறு ஷெய்காகப் புகழ்பெற்றுத் திகழ்ந்தவர் ஷெய்க் ஷாஹ"ல் ஹமீது காதிரி அவர்கள்.
‘வட்டதெனிய முஸ்லிம்களுக்கு ஒர் இறையில்லம் இல்லாக்குறையைத் தீர்த்து வைத்த ஷெய்க் - என வர்ணிக்கப்படுகிறார்கள்.
அஷ்ஷெய்க் செய்யது முஹம்மது ஆலிம் காதிரி
இவர்கள், மேற்படி அஷ் ஷெய்க் ஷாஹ~ல் ஹமீது அவர்களது தந்தையார். கண்டி - குருகொடையில் ஆன்மிக சேவையாற்றி அங்கேயே ஒய்வுறக்கம் கொண்டுள்ளார்கள்.
எஸ்.ஆர்.கே. பாவா ஹஸரத்
இவர்கள் அஷ் - ஷெய்க் ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் காதிரி எனப் பெயர் பெற்றிருந்தபோதிலும் மேற்படிப் பெயரே பிரபலமானது.
மேனாஹாஜியார் அப்பாவின் பேரரான அஷ்ஷைக் ஃபழுல் மொகிதீன் காதிரி அவர்களின் மருமகன் (இளையமகளாரின் கணவர்)
(கோட்டாறு சையதுனா இபுறாஹீம் அறபிக் கல்லூரியின் தலைவர் - அஷ் ஷைக் முயீனுதீன் காதிரி அவர்களின் சம்பந்தி எஸ்.ஆர். ஜமீல் சாகிபின் வாப்பா!
குளச்சலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸஜூஃபி ஹாஜி
ஏ.எஸ்.எம். ஹனிஃபா சாஹிப் இவர்களைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்துள்ளார்கள்.

மானாமக்கீன் 69
அப்போது, இலங்கை ஆளுநர் (கவர்னர்) மாளிகையில் பாதுகாப்பு உத்தியோகம் புரிந்த மேஜர் ஜெனரல் அப்துல் மஜீது அவர்களது மார்க்க ஆலோசகராகவும் ஆன்மிகக்குருவாகவும் இவர்கள் விளங்கியுள்ளார்கள்.
வட்டதெனியவில் பள்ளிவாசல் வக்புச் செய்த ஷெய்க் ஷாஹ"ல் ஹமீது காதிரி அவர்களுக்கும், ஆலிப் புலவரது வம்சாவளி செய்யது மீரான் பீவி உம்மா ஆகியோருக்கும் அருமந்தப் புதல்வர்.
1972-க்கு முன் சைலான் - ஸ்ரந்தீவில் சேவையாற்றி, பின் தாயகத்தில் வாழ்ந்து 1983-ல் ஓய்வுறக்கம்.
அஷ்-ஷெய்க் முஹம்மது அப்துஸ்ஸலாம் ஆலிம் காதிரி
1889-ல் கோட்டாறு தந்த இந்த ஆலிம் காதிரி அவர்கள், மலையகம் கண்டிப் பகுதியில் தரீக்காத் தழைக்க பாடுபட்டவர்களாவர்.
எப்பொழுது வந்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் கண்டி - பன்னலை பேருந்துப் பாதையில் அலபடகம சிற்றுாரில் 1942-ல் ஓய்வுறக்கம் கொண்டுள்ளதாகத் தகவல்.
அங்கு துல்க ஈஹ்தா பிறைழ 22-ல் கந்தூரி நடக்கிறது. அதே நாளில் மேலப்பாளையத்திலும் நிகழ்வு. (நூறுல் ஆரிபின் தைக்கியா).
‘மெய்ஞ்ஞான வினா விடை’ ‘‘மெய்ஞ்ஞான தாலாட்டு’ முதலிய ஞான நூல்களின் ஆசிரியர். ஞானமேதை ஹல்ஹாஜ் (ரஹ்) அவர்களது வரலாற்றையும் எழுதியுள்ளார்கள்.

Page 38
70 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
ஷேக் மதீனா ஸாஹிப்
அன்னார் இலங்கை - ஸ்ரந்தீவு வந்ததுண்டு. வேறு விவரமான தகவல்கள்பெற முடியவில்லை.
ஆனால், முன் பக்கத்தில் நமக்கு அறிமுகமான அஷ் ஷெய்க் முஹம்மது அப்துஸ்ஸலாம் காதிரியின் சின்னவாப்பா என அறிய வருகிறேன்.
இவ்வாறாக -
ஸ்ரந்தீப் - ஸைலான் என்கிற இலங்கைக்கும் குமரி மாவட்ட கோட்டாறுக்கும் இருக்கின்ற ஆன்மிகப்பிணைப்பு நேற்று இன்றுடன் முடிவடைந்த ஒன்றல்ல.
நாளையும் அது தொடரும், தொடரவேண்டும் என எதிர்பார்த்து மேலும் சில அறம் வளர்த்த ஆலிம்களையும் (இத்தலைப்பு ‘அபூ ஹாஷிமா' - முற்றம் - சுவடி ஆசிரியரிடமிருந்து கடன்!) “கோட்டாறு - நாகர்கோவில் கோமான்கள் பலரையும் பார்க்க அபிமானிகளை அழைத்துச் செல்ல விருப்பம்.
அதற்கு முன்பதாக, அடுத்தடுத்த பக்கங்களில், உடுநுவரை (கண்டி) தர்ஹாநகர் (அளுத்காமம்) கிந்தோட்டை (காலி) ஆகிய இடங்களில் உள்ள இறையில்லங்கள், ஆன்மிக நிலையங்களின் வரலாறுகளை ஒரு பார்வை பார்த்திட அபிமானிகளை அன்பாய் அழைக்கிறேன்.

மானாமக்கீன் 71
கோட்டாறு ஞானவான்கள் உருவாக்கிய
உடுநுவர ஜாமியுல் மஸ்ஜிதுல் அக்பர்
ಪರ್ಲಿಣಿ್ರಸಲಿ:ರ್ಕೆàರ್ಲಿಲಿ್ರ್ರಲಿಲಿ್ರ್ರಲಿಲಿ್ರ್ರಲಿಲಿ್ರ್ರಲಿಲಿ್ರ್ರಲಿಲಿ್ರ್ರಲಿಸರ್ಲಿಲಿ್ರ್ರಲಿಲಿ್ರ್ರಲಿಲಿ್ರ್ರಲಿಲಿ್ರಲಿಃ*
இலங்கை - மலை நாட்டில் மிக ஆரம்பத்தில் முஸ்லிம்கள் குடியேறிய பகுதிகளில் ஒன்றாக உடுநுவரைப் பகுதி அமைந்திருக்கின்றது. கம்பளை யுகத்தைச் சேர்ந்த கடலாதெனிய லங்காதிலக விகாரை (பெளத்தகோயில்) போன்ற பூர்வீகப் பெருமை மிகுந்த வரலாற்றிடங்கள் உருவாவதற்கு முன்பே இப்பகுதியில் முஸ்லிம் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும். லோ. தேவராஜா எழுதும் சில ஆதாரபூர்வமான குறிப்புக்களின்படி இவ்விகாரைகளின் நிர்வாகங்களில் முஸ்லிம் சமூகமும் பங்களிப்புச் செய்திருக்கின்றமை இக்கருத்துக்குச் சான்று கூறுவதுபோல் அமைந்திருக்கின்றது.

Page 39
72 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
கண்டிய சிங்கள மன்னர்களோடு உடுநுவரை முஸ்லிம்களுக்கு இருந்த உறவு மருத்துவத்துறை தற்போது வெலம்பொடை, பூவெலிக்கடை, தஸ்கர, நிவ் எல்பிட்டிய போன்ற இடங்களில் வதியும் வைத்தியப் பரம்பரையினரது வரலாறுகள் கண்டிய மன்னர்களுடனான தொடர்புகளை உறுதி செய்கின்றது.
உடுநுவரை எனப்படும் இன்றையப் பிரதேசம் சுமார் 35க்கும் அதிகமான முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கியிருக்கின்றது. இக் கிராமங்களில் பூர்வீகப் பெருமை மிகுந்த பகுதியாக கெற்றகும் புர' என அழைக்கப்படும் பகுதி அமைந்திருக்கின்றது. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக இப்பகுதி விதானையாக (கிராமத்தலைவர்) முஸ்லிம்களே இருந்து வந்திருக்கின்றமை இச்சிறப்பிற்கு ஒரு சான்றாகும்.
பரந்த உடுநுவரைப் பிரதேசத்தில் மிக ஆரம்பத்தில் உருவாகிய மஸ்ஜித், கெற்றகும்புரை எனுமிடத்தில் அமைந்திருக்கும் 'ஜாமியுல் மஸ்ஜிதுல் அக்பர்' என்ற ஜாமிஆ மஸ்ஜிதே என்பதற்கு தெளிவான சான்றுகள் உண்டு.
சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னால் இப்பள்ளிவாசல் தோன்றியிருக்க வேண்டும் எனக் கூறலாம்.
எலவுத்த கிராம நிர்வாக எல்லையோடு அதன் ஆரம்ப இடம் அமைந்திருக்கிறது. மண்ணாலான ஒரு திட்டுப்போல் இன்றும் அவ்விடம் காட்சியளிப்பதைக் காணலாம். அதனை மூத்தோர் பழையபள்ளி என அழைப்பதுண்டு.
நாளடைவில் இந்தியத் தென்னகத்திலிருந்து இஸ்லாமிய சன்மார்க்கப் பிரசாரத்திற்காக சமூகம் தந்த சன்மார்க்க மேதைகள் சிலரது தொடர்பை இப்பகுதி பெற்றுக் கொண்டது.
குறிப்பாக, உடுநுவரை முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய 'மேனா ஹாஜியாரப்பா'

மானாமக்கீன் 73
எனப்படும் கோட்டாறு அல்ஹாஜ் அவுர்செய்க் முஹியித்தீன் காதிரி அவர்களாகும். அவர்களது பெருமுயற்சியினால்தான் எகிப்திய கட்டடக் கலையோடு தொடர்புடைய முகப்பும் மினாராக்களும் அமைந்த பள்ளிவாசல் 1905-ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டது. இன்றும் பண்டைய கலை வடிவத்துடன் கூடிய மஸ்ஜித் உடுநுவரை முஸ்லிம்களின் பூர்வீகத்திற்கு சான்று கூறுவதைக் காணலாம். இடையிடையே அதன் திருத்த வேலைகள் கோட்டாறு ஞானவான்கள் பலரால் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அவர்களில் மிக முக்கியமானவர்களாக அவுர் - செய்க் முஹம்மது உதுமான் செய்யிது ஹமிதுத்தீன் காதிரி, மெளலவி ஃபாழில் ஹாஜி செய்க் சுலைமான் காதிரி ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டியவர்களாவர்.
ஹாஜி ஷெய்க் சுலைமான் காதிரி அவர்களது நீண்ட கனவின் நனவாகவே 1960-ம் ஆண்டளவில் 'அல் - மத்ரஸ்துல் ரப்பானிய்யா என்ற பெயரில் ஒரு பகுதி நேர அறபுக் கல்லூரியும் உருவாக்கப்பட்டது. சுமார் இரு தசாப்த காலமாக அதன் அதிபராக மர்ஹகும் ஓ.எல்.எம் இப்ராகீம் ஹஸ்ரத் அவர்கள் பணி புரிந்தார்கள். அம்மத்ரஸா உருவாக்கிய ஆன்மிக சிந்தனைகளின் தாக்கம் இன்றைய உடுநுவரை முஸ்லிம்களின் எழுச்சியின் ஆரம்பம் எனக் கூறுவது மிகையாகாது. ஒவ்வொரு காலத்திலும் மஸ்ஜிதின் நிர்வாகம் தென்னகப் பெரியார்களது வழிகாட்டலுடன் நடைபெற்று வந்துள்ளது.
இப்பெரும் மஸ்ஜிதோடு இணைந்ததாக மஸ்ஜிதின் காணி வளவினுள்தான் 'அல்-மனார் தேசிய கல்லூரி'யும் அமைந்திருப்பது பெருமைக்குரியதாகும்.
'இப்பள்ளிவாசலும் அல்-மனார் தேசிய கல்லூரியும்
உடுநுவரை முஸ்லிம்களின் இரண்டு கண்கள்' என முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க கூறிப் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு.

Page 40
74 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
மேலும் இம்மஸ்ஜிதின் சிறப்பிற்கு 6(L/cק60 ש Lמ சேர்ப்பதுபோல ஒரு கலாசார மண்டபமும் இணைந்து கொள்வதைக் காண யாரும் பூரிப்படையாமல் இருக்கமுடியாது. இம்மண்டபத்தின் மேல் மாடியில் மிக விரைவில் நூராணிய்யா அறபுக் கலாசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்ஷா அல்லாஹற்.
பிரதேச மக்களது சன்மார்க்க வைபவங்கள், மார்க்கப் பிரசங்கங்கள், திருமண வைபவங்கள், பொதுக் கூட்டங்கள் என்பனவற்றை கலாசாரப் பெருமையோடு நடத்துவதற்கு இம்மண்டபம் உதவ முன் வந்திருக்கின்றது.
இதனை உருவாக்கி நிர்மாணிப்பதில் முழுப் பங்கையும் வகிப்பவர், இன்றைய ஜாமியுல் மஸ்ஜிதுல் அக்பர் நிர்வாக சனாத் | தலைவரும், வணிகப் பிரமுகருமான அல்ஹாஜ் எம்.ஆர்.எம். பாருக் ஜே.பி. அவர்களாவர். அன்னார் அதன்
ஆயுட்காலத் தலைவருமாவார்.
அத்தோடு, ஆண்டுதோறும் ஹஜ்ஹ" யாத்திரிகர்களுக்கு அதிசயிக்கத்தக்க வசதி வாய்ப்புகளை வழங்கி அழைத்துச் செல்லும் “சேப்வே டிராவல்ஸ்’ (Safeway Travels) நிறுவனருமாவார்.
அன்னாரை இலங்கை அரசு, 2007ஆம் ஆண்டில் அரசு மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத் தலைவராகவும் நியமித்துக் கெளரவித்துள்ளது.
ஃபாறுரக் ஹாஜி சேவைகளால் உடுநுவர மக்கள் நன்றிக்கடன் பட்டவர்களாக உள்ளனர்.
- பூவெலிக்கடை அன்ஸார் எனக்காக தொகுத்ததது. நன்றி.
 

மானாமக்கீன் 75
தர்கா நகர் மஸ்ஜித் முஹியித்தீன் தைக்கியா
அயராத தரீக்கத் தஃவாப்பணியில் உதித்த நூற்றுக்கணக்கான பள்ளிவாயில்கள் தைக்கியாக்கள் வரிசையில் தர்கா நகர் பிரதான வீதியில் அமைந்துள்ள மஸ்ஜித் முஹியித்தீன் காதிரியா தைக்கியா மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.
மதிப்புக்குரிய "மேனா ஹாஜியார்’ (ஷெய்க் முஹியித்தீன் காதிரி) தர்ஹா நகருக்கு வருகை புரிந்த ஒரு சந்தர்ப்பத்தில் (ஹிஜ்ரி 1269) தற்காலிகமாக நிறுவினார்கள்.
அதன்பின் அவர்களது மூத்த சகோதரர் அஷ் - ஷெய்க் ஹஸன் காதிரி அவர்களால் ஊர்ப் பிரமுகர்கள் உழைப்பில் ஒரு நிரந்தரக் கட்டடம் கல்லினால் கட்டப்பட்டது.
■鞍
*WNళి?"
# ళ్ల
8 as also
தைக்கியாவின் உட்புறத் தோற்றம்

Page 41
76 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
தொடர்ந்து ரஜப் அப்பா’ அவர்களது புதல்வர் செய்க் அப்துல் காதிரி காலத்தில் பல முரீதீன்களால் பல பகுதிகளும் கட்டி முடிக்கப்பட்டு மும்மாடிக் கட்டடம் ஒன்றுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
அதற்கான அடிக்கல் மர்ஹ9ம், மவுலானா மவ்லவி ஸெய்யித் ஸாலிஹ"ல் காதிரி அவர்களால் நாட்டப்பட்டு (18.10.1994) பத்தாண்டுகள் நெருங்குகின்றன.
எனினும், கீழ்த்தளம் மட்டுமே பூர்த்தி (படத்தை முன்பக்கத்தில் பார்த்துவிட்டீர்களே) சற்றுமுன் அறிமுகமான மவ்லவி ஹிஃபத்துல் கரீம் காதிரி முனைப்போடு செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிறார்.
காலி - கிந்தோட்டையில்
மகளிர் தைக்கியா
y=O==G
 

மானாமக்கீன் 77
கிTலி, கிந்தோட்டை ஊரில் கோட்டாறு மஷாயிக்மார்களது முரீதீன்கள் பெருவாரியாக உள்ளனர். பெண்மணிகளுக்கென்றே "திக்ருகள்’, தியானங்கள் மற்றும் ஐங்காலத் தொழுகைக்காக அதுவும் காதிரிய்யாத் தரீக்காவின் பெண் சீடர்களுக்காக ஒரு தைக்கியா திகழ்ந்து கொண்டிருக்கிறது.
சுமார் 100 ஆண்டுகளாக, வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் காதிரிய்யா மகளிர் அணியினர் ஒவ்வொருவரின் இல்லத்திலும் நடத்தி வந்த “றாத்திப் மஜ்லிஸ்’, தற்போது இருபது ஆண்டுகளாக மேற்படி தைக்கியாவில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தைக்கியாவில் பெண்களது கலீபாவாக தற்போது ஸஃபிய்யதுன்னிஹ்மா மற்றும் உம்மு ஸ்ஃபிய்யா ஆகியோர் செயற்படுகிறார்கள்.
இந்தத் தைக்கியா அமையப்பெற்றுள்ள காணியை கிந்தோட்ட கொடை வள்ளல் அல்ஹாஜ் அப்துல் மதீன் அவர்கள் வழங்கியதோடு, அல்ஹாஜ் அன்வர் ஜே.பி. அவர்களது பெருமுயற்சியில் கட்டிடமாக உருவானது.
மேலும், முஹம்மத் ரிஸ்மி - முஹம்மது ஹிஸ்மி ஆகியோர்களது ஒத்துழைப்பில் நிர்வாகக் குழுவும் இத்தைக்கியாவின் முன்னேற்றத்திற்காக செயற்பட்டு வருகிறது.

Page 42
78 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இலங்கை - ஸரந்தீவில் தரீக்காச் செழிக்கச் செய்வதில் முன்னிற்கும் W இன்றையக் கலீஃபாக்களுள் (பிரதிநிதிகள்) சிலர்.
மஸ்ஜித் முஹ்யித்தீன் காதிரிய்யா தைக்கியா (27, மெசஞ்சர் வீதி, கொழும்பு - 12)
+ அல்ஹாஜ் கலிஃபா எம்.எச்.எம். ஸவாஹிர் காதிரி.
ஜாமியுல் மஸ்ஜிதுல் அக்பர் (கண்டி - உடுநுவர, கெற்றகும்புரை) + ஜனாப் கலீஃபா ஃபக்ருத்தீன் காதிரி மழ்ஹருஸ் ஸ்"லஹா தைக்கியா (களுவல்ல - காலி) th அல்ஹாஜ் கலிஃபா எம்.பீ.ஐ. மஹ்மூத் காதிரி + அல்ஹாஜ் கலிஃபா ஏ.ஆர்.ஏ. கரீம் காதிரி. I do அல்ஹாஜ் கலீஃபா ஏ.சி.எச்.எம். ரஸ்மி காதிரி.
மழ்ஹரத்துஸ் எஸுலைமானிய்யா தைக்கியா (ஹிரும்புரை - காவி)
eo மெளலவி, கலீஃபா ஏடபிள்யூ.எம். ரஃபீக் ஆலிம் O (பஹ்ஜி) காதிரி.
மழ்ஹருஸ் எல"அதா தைக்கியா (கிந்தோட்டை காலி) + ஜனாப் கலிஃபா முஹம்மது ஜகரிய்யா காதிரி. eo ஜனாப் கலீஃபா முனவ்விர் காதிரி
மற்றும் - மவ்லவி கலிஃபா முஹம்மது சலிம் ஆலிம் ஆகிய பலர். (முழுப் பட்டியலையும்
&. பூரணப்படுத்த இரண்டாம் பாகத்திலேயே வாய்ப்பு
R கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மானாமக்கீன் 79
పభజిళ్ల
ჯორჯია22კარჯჯააჯ
கோட்டாறில் அறிவுக்கூடம் ஸெய்யிதுனா இப்ராஹிம் அறபிக் கல்லூரியின் ஒரு தோற்றம், இதில் இலங்கைப் புரவலர்களின் உதவிக் கரங்களும் உறுதுணைப் புரிந்துள்ளன.
(a)

Page 43
80
“இன்று நாம் முஸ்லிம்களாக இருக்கிறோம் என்றால் நம்மை முஸ்லிம்களாக ஆக்கியவர்கள் இறைநேசச் செல்வர்கள். இவர்கள் வராமல் இந்தியாவில் இஸ்லாம் வரவில்லை என்பதே Alairedo. அதனாலேயே பெரும்பாலான முஸ்லிம்கள் தாங்கள் வந்த انواده மறவாது வலிமார்களின் மீது நன்றி உடையவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.”
'அபுஹாஷிமா அவர்கள் ‘பெட்டகம்" - "முற்றம் - "சுவடி ஆசிரியர்.
ஆலிம்கள் முதல் ஆசாரிமார்கள் வரை.
G
முதலில் துவங்குவது “எப்.எம்.” | |சென்னை - திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஒலிபரப்புகிற எப்.எம். அலைவரிசையா? அல்லது இலங்கைத் தென்றலா, சூரியனா, சக்தியா என்றெல்லாம் கேட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது!
இந்த எஃப்.எம். பண்பலை வரிசைகள் வானொலிப் பெட்டிகளில் வருவதற்குப் பலப் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ‘எஃப்.எம்’ இலங்கை ஸரந்தீவில் கொம்பனித்தெரு கீவ் ரோடு, கீவ் லேன் பகுதிகளில் வாழ்ந்தார்,
(இந்த இடத்தில், கொம்பெனித்தெரு பற்றியும் ஒரு வார்த்தை இதை 'சிலேவ் ஐலண்ட்’ (Slave Island) என்றழைத்தான் ஆங்கிலேயன். “கொம்பனி வீதிய’ என்றார்கள் சிங்களவர்கள். நாமெல்லாம் கொம்பணித் தெரு. எவ்வாறு

மானாமக்கீன் 81
கொழும்பு - 12 பகுதி குமரியின் செல்வர்களால் நிரம்பி வழிந்ததோ அதுபோலவே இந்த கொழும்பு - 02 பகுதியும். சாயாக்கடைகளும் நடத்தினார்கள். சாந்தி சமாதான வழிமுறைகளையும் கடைப்பிடித்தார்கள்)
நமது ‘எஃப்.எம்’ அவர்கள், ‘எஃப்.எம். இப்ராஹிம் லெப்பை என அழைக்கப்பட்டார். ‘சூஃபி லெப்பை என அழைத்தவர்களும் உண்டு.
இலங்கையில் முதிய நாளேடாக இன்றும் வந்து கொண்டிருக்கிற தினகரன்’ அலுவலகத்தில் ஒரு புரூப் ரீடர்! ஆனால் அந்தப் பதவி வெறும் பதவி. வயிற்றுப்பாட்டைப் போக்குகிற பதவி. மற்றபடி பெரும் ஆன்மிகவாதியாக, 'தினகரன்’ இதழை முஸ்லிம்கள் வாங்க வைக்கிற காரியக்காரராக, எங்களைப்போன்ற இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக இருந்தார்.
இன்று நான் பன்னூலாசிரியனாகப் பரிணமித்து, இந்த ஆய்வு நூலில் அவரையும் உள்ளடக்குவேன் என்பது 'அவனது எண்ணப்படியும் திட்டப்படியும். அல்ஹம்துலில்லாஹ்.
பெருமதிப்பிற்குரிய மர்ஹ9ம் ‘எஃப்.எம். அவர்கள் ஆலிமாக சனது பெற்றவர் எனச் சொல்ல முடியாது. ஆனால் ஆலிமாகவே வாழ்ந்து காட்டினார். அல்ஹாஜ"ம் அல்ல. ஆனால் ஹாஜியாரப்பாவாகவே அமைந்துபோனார்
அத்தோடு ஒரு சிறந்த எழுத்தாளராக, புலவராக, சிந்தனை வாதியாக, தரீக்காக்காரராக கொம்பனித்தெரு வட்டாரத்திலும் வெளியிலும் திகழ்ந்தார்.
தமிழகத்திலிருந்து எந்த எழுத்தாளரோ, அறிஞரோ, அறம் வளர்ப்பவரோ யார் வந்தாலும் சரி, 157ஆம் இலக்க கீவ் ரோடு நோக்கி ஓடுவார்கள்.

Page 44
82 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அது, மஸ்ஜிதுல் அக்பர் ஜும்ஆப் பள்ளிவாசல் முகவரி. அவ்வளாகத்தின் ஒரு சிறிய அறையில் அந்தக் குள்ளமான உருவம், புத்தகங்கள், கிதாபுகள், சஞ்சிகைகள் குவியல்களுக்கிடையில் மறைந்திருக்கும்.
அவர், கொம்பனித்தெரு வாசிகளுக்கு ஆற்றிய ஒர் அரும் சேவை அறநெறிப் பாடசாலை (குர்ஆன் மத்ரஸா) ஒன்றை முதன்முதலாக அவரது இளம் வயதில் ஆரம்பித்து நடத்தியது. பின்னர் அவர், அந்தப் பள்ளிவாசலில் 35 ஆண்டுகள் ஹல்கதுல் ஹலீமிய்யா மஜ்லிஸ் முகத்தமாக நடத்தி வந்தார். அன்னார் ஒய்வுறக்கத்திற்காகச் செல்லும்பொழுது 78ஆவது அகவை (1986).
தமது சிறந்த பணியாகப் பெருமைப்பட்டுக் கொண்டது தமிழ்ப் பாமாலையாக வந்த சுபுஹான மவ்லிது புகழாரத்தை மறுபதிப்புச் செய்தமையை!
கோட்டாறு - ஆளுர் இரு ஊர்களிலும் உற்றமும் சுற்றமும் உண்டு. தற்சமயம் மேற்படி பள்ளிவாசலில் இமாமாக உள்ள மவ்லவி இக்பாலின் அன்னையாருக்கு மாமா முறையுங்கூட.
என் போன்றவர்களுக்கு ஓர் ஆதங்கம்; இவர் புதையலாகச் சேர்த்த புத்தகங்கள் பாதுகாக்கப்படாமல் போனது!
வேதனை வேதனைதான். அமைதிக்கொரு எஃப்.எம்’ அவர்களை முன்னிறுத்தி இந்த நாலாம் ஏட்டைத் திறக்கிறேன். கொல்லம்மிளகு மஸ்தான்
கோட்டாறு சீறா செய்யது அபூபக்கர் புலவரின் வம்சாவளியில் கொல்லம்மிளகு மஸ்தான் என்றொருவர் (பெயர் தெரியவில்லை) இருந்தார்! இவர் ஒரு சூஃபி! துறவியாக அலைந்து திரியும் இவரை யாராவது விருந்துக்கு அழைத்தால்

மானாமக்கீன் 83
1 பக்கா (2 லிட்டர்) கொல்லம்மிளகு கேட்பார்! அதை அப்படியே கடலை கொறிப்பதுபோல. கொறித்துச் சாப்பிடுவார்! பின்பு 1 பக்கா பால் கேட்பார்! அதைக் குடித்துவிட்டு. மீண்டும் ஊர் சுற்றுவார்! இவரது அடக்கஸ்தலம் கற்பிட்டி புத்தளத்தில் உள்ளது.
"கொல்லாங்கொட்டை ஆலிம்சாவும்’ ‘சாஹிப் அப்பா”வும்!
தம் சொந்தப் பெயருடனும் செல்லப் பெயருடனும் கொழும்பு, கொம்பனித்தெரு தோலப்பத் தோட்டப் பள்ளியில் இமாமாகப் புகழ் பரப்பியவர்கள். பின், பினாங்கு - மலேசியா சென்றும் சேவையாற்றியவர்கள்.
தந்தையார் அசனார் சாகிபின் உறவினர்கள் இப்பொழுதும் தோலப்பத் தோட்டத்திலும் வாழைத் தோட்டத்திலும் இருப்பதாகத் தெரிகிறது.
ஆலிம்சா அவர்களது மகனார் ‘சாஹிப் அப்பா’ (எம்.சி. ஷாஹ"ல் ஹமீது) எண்பது அகவையில் கோட்டாறில் வலம் வருகிறார். ஊரின் முக்கிய நபராகவும்
திகழ்கிறார். இங்கே அவரது இளவயதுப் படம்.
இவரும் கொழும்பில் தொழில் பார்த்தவரே. 1945 - 52 களில் கொம்பனித்தெரு, ரைஃபிள் தெரு ‘எம்’ முஹம்மது அன் ‘என் மஹ்தூம் ஸ்டோர்ஸில் பணி.
இந்நிறுவனத்தின் முதலாளி சிராஜ் மொன்னா முஹம்மதுவும் கோட்டாறுவாசியே. துணைவி பீரும்மாள் கொல்லாங்கொட்டைக் குடும்ப நபர்.

Page 45
84 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
“கொல்லாங்கொட்டை என்றால் என்ன?
“பாட்டனார் தொழிலுக்காகக் கொல்லம் சென்று திரும்பும் போதெல்லாம் முந்திரிக்கொட்டை (கஜூ)யை மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்தார். அது வந்தது கொல்லத்திலிருந்து என்பதால் கோட்டாறுக்காரர்கள் 'கொல்லாங்கொட்டை’ என்றார்கள். அப்புறம் எங்களைக் "கொல்லாங்கொட்டை குடும்பமாக்கிவிட்டார்கள்!” என்கிறார் அக்குடும்ப அங்கத்தவருள் ஒருவர்.
அப்போதைய இலங்கைப் பிரதமர் சேனநாயக காலிமுகக் கடற்கரையில் போலிஸ் தலைவர் ரிச்சர்ட் அலுவிஹாரவுடன் குதிரைச்சவாரி செய்த நிலையில் கீழே விழுந்து இறந்த விஷயம், நீதியரசர் எஸ்.எம். அக்பர் - பார்வையாலேயே கொலைக் குற்றவாளியைக் கண்டுபிடித்துத் தீர்ப்பு சொன்ன சம்பவம் உள்ளிட்ட
கோட்டாறு முஹியித்தீன் பள்ளித்தெரு "தாவூதிஷெய்க் குடும்பத்து சேக் மைதீன் சாஹிபு ஆலிம் அவர்களது மகனார் மர்ஹ9ம் பஸ்லுதீன் ஆலிம் சாகிப்.
Sx8: நெல்லை மாவட்டம் தருவையில் * - இமாமாக இருந்த இவரை - இவரது மாணவர்களும் அபிமானிகளும் கொழும்புக்கு அழைத்துச் சென்றனர்.
1948 முதல் 1958 வரை பழைய சோனகர் வீதி ‘மஃனமுஸ்ஸஅதாவில் ஒஸ்தாக இருந்தார். (இது கீழக்கரை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் நிறுவியபள்ளி) 1958 முதல் 1979
 
 

மானாமக்கீன் 85
வரை பீர்சாகிப் தர்காவில் இமாமத் பணியிலும் இருந்தார். இதுவும் பக்கத்திலேயே.
கொழும்பில் இரண்டாம் திருமணம் செய்து அங்கேயே 1979-ல் காலமானார். கோட்டாறு - பணகுடி - நெல்லை - சாத்தான் குளம் ஜமாத்துகளில் இமாமாக இருந்த மர்ஹ9ம் சேக் மைதீன் ஆலிம் மிஸ்பாஹி இவரது மகனாராகும்.
புலவர், மர்ஹ9ம் ஸெய்யித் அபூபக்கர் ஆலிம் ஜிஸ்தி
பிரபல ஆலிம் புலவர் பரம்பரை. 毅
‘வாவாசி வைத்தியரின் பேர் சொன்னால் காவாசி வேதனை பறந்துவிடும்' - எனப் புகழப்பட்டவர் பாவா காஸிம் வைத்தியர். இவரது மகன் பண்டித மலுக்கு முதலி வைத்தியர். இவரது மகன் சீறா செய்யது அபூபக்கர் புலவர். இவரது வாரிசு அப்துல் காதர் ! புலவர். அவரது மைந்தர் கவிப்பண்டிதர் - -- கலீஃபா சாஹிபு செய்யது முஹியித்தீன் கவிராயர்.
அன்னாரது அருமந்தப் புதல்வரே அபுயக்கர் ஆலிம் ஜிஸ்தி.
கொழும்பு - காலி நகர்களில் மத்ரஸாக்களில் அறநெறி வளர்த்தவர். அறபு மொழி உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் கண்டிப்பாக இருந்தார். (இவரிடம் கற்றோர் பாக்கியவான்கள்!)
இவர் மணம் முடித்தது காலியில் பிறந்த பெண்மணியான ஆயிஷாபீவியை ஆனால், அவர் கோட்டாற்று வையாளி வீதி பிரபல காதிரிய்யா ஷெய்க் குடும்பத்தைச்

Page 46
86 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
சார்ந்தவர். அவர்தம் வாரிசு ஜனாப் பி.எஸ்.ஏ. காஜா முஹியித்தீன் இவர், தற்சமயம் “கோட்டாறு சீறா செய்யது அபூபக்கர் புலவர் நம்பிக்கை நிதியம்’ (டிரஸ்ட்) தலைவராகத் திகழ்கிறார்.
மேலும், மகளார் பீமா அவர்களது வாரிசை, எனது பெரும் அபிமரிானத்திற்குரிய கோட்டக்குப்பம் மெளலானா மெளலவி ஹாஜி அப்துஸ்ஸமத் நத்வி அவர்களது மகனார் மவ்லவி அப்துல் மாஜித் ரப்பானி மணமுடித்துள்ளார்.
முத்திரை பதித்த மூன்று தலைமுறையினர்
பல முனாஜாத்துக்களால் தமிழகம் - இலங்கையில் புகழீட்டினார் (மர்ஹ9ம்) முஹம்மது யூசுபு லெப்பை காதிரி.
அன்னாரது வாரிசு (மர்ஹ9ம்) “கெளது பாவா? ஷெய்க் முஹம்மது கவுதல் காதிரியும் கொழும்புத் தொடர்பு கொண்டிருந்தார்.
இவரது மகனார் (மர்ஹ9ம்) எம்.கே.எஸ். புஹாரி தமிழாக்கம் செய்த கீழக்கரை மாப்பிள்ளை லெப்பை (வலி), அவர்களது ‘ஹதிய மாலை அறபுத் தமிழ் நூல் அவரை அங்கும் இங்கும் அறியச் செய்தது.
எஸ்.கே.எஸ். குடும்பத் தொடர்புகள்
50களில் கொழும்பு - 12 ஆட்டுப்பட்டித் தெரு (இப்பொழுது சர் ரத்னஜோதி சரவணமுத்து மாவத்தை) உம்பிச்சி பள்ளிப் பகுதிகளில் காதர் மைதீன் காக்கா தேத்தண்ணிக்கடை மிகப்பிரபலம்.
அதை மர்ஹ9ம் காதர் மைதின் சாகிபும் அவர் மைந்தர் ஷெய்க் முஹம்மது சாகிபும் நடத்தினர்.

மானாமக்கீன் 87
இந்த ஷெய்க் முஹம்மது - நஜ்முன்னிஸா தம்பதியருக்கு எஸ்.கே.எஸ். முஹம்மது கெளல்ஸ் ஆலிம், எஸ்.கே.எஸ். குத்புஜமான் பாஜில் பாக்கவி என இரு புதல்வர்கள். இவர்கள் இப்பொழுதும் கொழும்புத் தொடர்புகளைக் கட்டிக் காத்த வண்ணம் உள்ளனர்.
மேற்படி எஸ்.கே.எஸ். கெளஸ் ஆலிம் தற்சமயம், கோட்டாறு மஸ்ஜிதுல் அன்வரில் இமாமாகவும் பாவாகாஸிம் ஒலியுல்லாஹ் மண்டபத்தின் மேலாளராகவும் கடமை குத்புஜமான் ஹஸ்ரத் செய்யதுனா இபுராஹிம் அறபிக் கலாசாலையில் பேராசிரியரும்கூட. மேலும், ! நாகர்கோவில் மீனாட்சிபுரம் அல்அமீன் ஜும்மா மஸ்ஜிதில் பேஷ் இமாம்.
JAOH - கமாலுத்தீன் மதனி
இப்படி அழைத்தால் யாருக்கும் சட்டென்று புரிந்து போய்விடும்.
ஒரு பன்னூலாசிரியராகவும், பிரபலமான இஸ்லாமிய சேவையாளராகவும் திகழ்கின்ற அன்னாருக்கு இலங்கை - ஸரந்தீவுத் தொடர்புகள் அதிகமதிகம்.
இதழாளர் ஜனாப் எம். நியாஸ் அவர்களுடன் இணயம் என்ற அந்த அழகிய இயற்கைச் சூழல் மிகு ஊருக்குள் நுழைந்ததுமே எனக்குச் சந்திக்கக் கிடைத்த முதலாவது ‘பிரபலம்’ அவரே! (அங்கு அநாதைச் சிறுவர் நிலையம் ஒன்றினைப் பரிபாலிக்கிறார். ஆனால் கோட்டாறு வாசியே).

Page 47
88 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
கிழக்கிலங்கையாம் திரிகோணமலை, கிண்ணியாவில்
சவூதி அரசு அனுசரணையில் நிறுவப்பட்ட முதல் ஜூம்ஆப்
பள்ளி வாசலின் ஆரம்ப வைபவத்தில் அதிதிகளில் ஒருவராகச் சமூகமளித்துவிட்டு அப்பொழுதே திரும்பியிருந்தார்.
தேநீர் உபசரிப்புக்கு அவர் தயார்! நான் தயாரில்லை. நேரத்தோடு போராட்டம்
மதனி அவர்களது தந்தையார் மர்ஹ9ம் சாஹ"ல் ஹமீது, அண்ணன் அப்துற் றஹ்மான், மாமா மூஎலி ஹாஜியார் அனைவருமே இலங்கை - இந்தியப் பாலத்தில் நடைபயின்றவர்கள்.
தற்போது, சின்னம்மா மகனார் (தம்பி) ஜனாப் ஹ"மாயூன், மைத்துனர் ஜனாப் மூஸி பெளஸ், இன்னொரு மாமா மூஸி முஹம்மது ஷரீபுத்தீன் உட்பட பல உறவினர்கள் அந்தப் பாலத்தில் ஆனந்தமான நடை! நடக்கட்டும்! எப்பொழுதும் நல்லவை நினைத்து நலமே சிறக்கட்டும்.
‘வளிலோ வழங்கிய கிழக்கிலங்கைவாசி
. . . . Rega xe f N i 8. к. i 98 wభxxసుఎxసభభwwwwభxభఖభAభ్యుx. asses on 8 A ... is assists, arts' &8x8 ssi, «8. &igit&3 ; *8x88šť9yš (8. ř. 8xůšky 8ůř
šasije 8.ašs 8. sea si
S.: gigsă sesséă į sFFF************FK - s* * * * * * * ***
gxwé: rinnarsso: ***å, so
*Krist.*
w8-xx-aa-waxw-W8xwm.
} భ***' ?} 芬>*...德炉,*:、...爆懿($...&.球° భx ' }, భk - ty»ಳ್ತಣ್ಣೀಟಿ}
**aaliaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
 
 
 
 
 
 
 
 
 
 

மானாமக்கீன் 89.
ஒரு கிழக்கிலங்கைக்காரர் (எந்த ஊர் என்பதுதான் புதிர்) வட இந்தியா பரலேவியில் (புனே பக்கம்) மவ்லவி பட்டம் பெற்றார்.
ஏ.எல். பதுறத்தீன் என்ற அன்னாரது சேவையை, கோட்டாறு ரஜபுல் காதிரி - காலியப்பா - நினைவாகக் கட்டப்பட்ட களுவல்லை, நுழாருல் காதிரிய்யா அறபிக் கலாசாலை பெற விரும்பி அதிபர் பதவியை வழங்கியது. (1982)
அவரது பணி எத்தனை காலம் நீடித்ததென்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. ஆனால், 1988-ல் கோட்டாறில் அவரை மக்கள் இதழொன்றின் நிறுவனராகக் கண்டு களிப்புற்றனர்.
அங்கு, சுன்னத் - வல் - ஜமாஅத் கொள்கை விளக்க சஞ்சிகையாக வெளியான 'வஸிலா அவர் ஆரம்பித்த சஞ்சிகையே!
இப்பொழுது என்னைப்போல நூலாய்வுப் பணிகளில் ஆர்வமாக உள்ள ஜனாப் எம்.எஸ். அபூபக்கர் அவர்கள் அவ்விதழின் ஆசிரியராகத் திகழ்ந்தார். இன்று ‘வளியீலா அவர் பெயருடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது!
இந்நிகழ்வுகள் நடந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகின்றன. இப்பொழுது இந்தக் கிழக்கிலங்கை மவ்லவியைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் எதுவும் கிடைக்குமா என பேனா எல்லோரையும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
கொழும்பில் தடம் பதித்த வேறு சில ஆலிம்கள் 米 மர்ஹஜூம் மவ்லவி செய்யது முஹம்மது ஆலிம் சாகிபு
米 மர்ஹ9ம் இப்ராஹிம் ஆலிம் சாகிபு (‘களச்சிக் கொட்டை
ஆலிம்சா) மருதானைப் பள்ளிவாசலில் இமாம்.

Page 48
米
வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
米 மர்ஹ9ம் முஹம்மது தாஹிர் ஆலிம் ஷா (வேம்படித் தெரு). முன்னைய கோட்டாறு முஸ்லிம் ஜமாஅத் தலைவர். கொழும்பில் மணம் முடித்து மனைவியையும் மக்களையும் கோட்டாற்றுக்கே அழைத்து வந்தவர்.
மர்ஹஅம் முத்துவாப்பா ஆலிம் சாகிபு (கச்சப்புறத்தெரு காஜா லெப்பையின் தந்தையார்) இவரால் கை தூக்கிவிடப்பட்டவர்கள் இப்பொழுதும் இலங்கையுடன் தொடர்புள்ளவர்களே!
மர்ஹ9ம் யூசுபு லெப்பை (மர்ஹ9ம் எஸ்.எம்.எஸ். மீரான் மைதீன் சாகிப்பின் தந்தை, ஆலிஜனாப் எம்.எஸ். கஜாவுதீன் அவர்களின் வாப்பப்பா)
மர்ஹ9ம் சேணி வீட்டு ஆதம்பாவா ஆலிம் சாஹிபு
மர்ஹலிம் அல்ஹாஜ் அப்துல் கனி ஹஸ்ரத், மவ்லவி ஜே. முகம்மது அதாவுல்லா ஜமாலி மவ்லவி ஃபாழில் ஹெச். பாபுசாஹிப் ரஹ்மானி மவ்லவி ஃபாழில் எஸ்.எம். அப்துல் நாசர் ஃபைஸி மவ்லவி ஃபாழில் ஜி.எஸ்.டி. ஹபீப் முஸ்தஃபா பாகவி மவ்லவி செய்யது அபூபக்கர் ஹஸ்ரத் (என் தேடலில் விட்டுப்போன அறிவுசார் ஆலிம்கள்
யாரும் இருப்பின் அவர்களும் அவர்தம் சந்ததியினரும் என் பேனாவுக்கு மன்னிப்பு வழங்கி, இரண்டாம் பாகத்திற்குத் தகவல் தர வேண்டுகிறேன்).
 

மானாமக்கீன் 91
நூற்றாண்டை நோக்கி “வாலிபர்கள்’ சிலர்.
01: ப. ஜஹ்பர் அலி
நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இரு 95 வயது வாலிபர்களை இளங்கடைச் சகோதரர் ஏ.கே. கபீர் கண்டுபிடித்துத் தந்ததற்கு என்ன கைமாறு செய்வேனோ?
ஆனால் நிழற்படங்கள் கிடைக்காது போனதில் கவலை.
பக்கீர் மைதீன் மரக்காயருடைய மகனார் ப. ஜஹ்பர் அலி அவர்களும், அசனார் சாகிபுடைய மைந்தர் அ. முகம்மது அனிஃபா சாகிபு அவர்களும் 95 அகவைகளைக் கடந்த வாலிபர்களாக - “கொழும்புக்காரர்களாக - கோட்டாறில் நடை பயின்று கொண்டிருக்கின்றனர்!
இவர்கள் இருவரினதும் கொழும்பு மலரும் நினைவுகள்’ அதி விசேடம்!
முதலில் ப. ஜஹ்ஃபர் அலி பெரியவரை அறிமுகப்படுத்திக் கொள்வோம்.
கோட்டாற்றில் பிரபலமான கன்னங்குளம் குடும்பத்தைச் சார்ந்தவர். 1945-ல் கொழும்பில் ஜப்பானியர் குண்டு வீசக் கூடும் என்ற அச்சத்தில் தாயகம் திரும்பிய பலருள் ஒருவர். கொம்பனித் தெருவில் பூக்குழிக் கடையில் கடமை பார்த்தவர். தமது 20 வயது முதல் 38 வரை இலங்கை வாசம்.
02 : அ. முஹம்மது அணிஃபா
இரண்டாமவரான ஆலிஜனாப் அ. முகமது அணிஃபா சாகிபு அவர்களும் 20 வயதில் கொழும்பு புறப்பட்டவர். கொம்பனித் தெருவில் கச்சிக் கங்காணிக் கடையில் வேலை பார்த்தவர். இரண்டாம் உலகப் போரின் பொழுது ஊர்

Page 49
92 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
திரும்பியவர், 'கொல்லாங்கொட்டை ஆலிம்சா' உறவினர். தற்சமயம் கோட்டாறு, முகம்மது நகரில் உள்ளார்.
03 : ஹாஜி எஸ்.ஏ. அப்துல் ஹமீது சாகிப்
கோட்டாறு, சுலைமான் அப்பா பள்ளித் தெரு செய்யது வீட்டு ஹாஜி எஸ்.ஏ. அப்துல் ஹமீது சாகிப் 83 அகவைகளைக் கடந்த நிலையிலும் மறக்காத மலரும் நினைவுகளின் கொள்ளிடம் அவரது இளமைக்கால நிழற்படத்தில் பால்வடியும்
தமது தந்தையார் செய்யது அசனார் சாகிபு, தாயார் மைதீன் பீவி உம்மா, தம்பி அபுல்ஹஸன் (மர்ஹ9ம்), தங்கை ஆயிஷா உம்மா (மர்ஹஅம்), சின்னவாப்பா (மர்ஹஜூம்) பீர்முகம்மது சாகிபு (கோட்டாறு கொழும்பு ஸ்டோர்ஸ் நிறுவனர்), மச்சான் மதார் சாகிபு (நாகர்கோவில் ராயல் ஹோட்டல்) தமக்கையாரின் கணவரும் லட்சாதிபதியானவருமான மச்சான் காளிம் பிள்ளை சாகிபு உள்ளிட்ட பல கொழும்புக்காரர்களை நமக்கு அடையாளம் காட்டினார்.
ஒரு மேலதிகக் குறிப்பு :
மேற்படி அப்துல் ஹமீது சாகிபுவின் தம்பியார், மர்ஹூம் அபுல்ஹஸன் சாகிபும் தமது 7 ஆவது வயதில் கொழும்பைக் கண்டவர் கால் நூற்றாண்டுக்கு மேல் இருந்தவர். 'சன்லைட்' சவர்க்கார வீவர் பிரதர்ஸில் தொழில், துணைவியார் மறியம் பீவியையும் இலங்கையைக் காண வைத்துள்ளார். தற்சமயம் இவரது மகளார் தவுலத் பீவி. எம்.ஏ, பிஈ.டி பட்டதாரியாக ஆசிரியைத் தொழில் பார்க்கிறார். பாராட்டுகிறேன்.
 

மானாமக்கீன் 93
04. அல்ஹாஜ் அப்துல் ஜப்பார்
வேம்படித் தெரு, காசியார் வீடு மர்ஹஅம் செய்யது முஹம்மது சாகிபின் மூத்தமகனார் அல்ஹாஜ் அப்துல் ஜப்பார் அவர்களும் பல இலங்கை அனுபவங்களையும் மலரும் நினைவுகளையும் உடையவர். 70 அகவை கொண்ட அன்னாரின் வசிப்பு தற்சமயம் கோட்டாறு முஹம்மது நகரில்.
எனது நெடுங்கர்ல நண்பர், கேம்ப்லாபாத் பீ.எம். ஷம்சுதீன் அவர்களது மூத்த சகோதரர் பத்ருதீன் ஹாஜியாரிடம் 20 ஆண்டுகள் சாரதியாக சாரத்தியம் செய்தவர்.
இலங்கையின் எல்லாப் பாதைகளும் சகல ஊர்களும் அத்துப்படி
இவருக்கும் பத்ருதீன் ஹாஜியாருக்கும் ‘முதலாளி - தொழிலாளி உறவாக அல்லாமல் பாசமுள்ள சகோதர
உறவாகவே இருந்துள்ளது.
அதனால்தான் முதலாளியும் பல தடவை விசிட் அடித்திருக்கிறார். அவர்தம் பிள்ளைகளும் (நூர் முஹம்மது - நிஜாமுத்தீன் - ஷிஹாபுதீன்) இன்றும் கடல் கடந்து பார்த்துச் செல்கின்றனர்.
மேலும், ஹாஜி பத்ருதீன் முதலாளி நினைவாக, தமது வாரிசுகளுக்கு ஹாஜியாரது பிள்ளைகளின் பெயர்களைச் (மஸாஹிமா - றிஃபாயா) சூட்டியுள்ளது அதிசயத்திலும் அதிசயம்!

Page 50
94 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
பொன் அரிப்புத் தெருவாசிகள்
01. அப்துல் கபூர் ஸாகிப் (எஸ்.எம். பாட்ஷா)
1947-லிருந்து 60 வரையில் கொம்பனித் தெரு வாக்ஸால் வீதியில் 60/2ஆம் இலக்கத்தில் வாழ்க்கை. தொழில் பிரபல தேயிலை நிறுவனங்களில் (புறுக் பாண்ட் --- ஹித் அன்கோ). இராப்பாடசாலைகளில் படித்து கல்வி அறிவு பெற்றார்.
இவரது மூத்த சகோதரி அகமது ஃபாத்திமா (70) தற்போது கொழும்புவாசி.
தற்சமயம், கோட்டாறு - மாலிக் தினார் பைத்துல்மால் உறுப்பினர். பொன் அரிப்புத் தெருவில் வசிப்பு. 68ஆவது வயதிலும் வள்ளியூர் - பக்கமுள்ள பாப்புலர் எஜூகேசன் டிரஸ்ட் (பி.ஈ.டி) அலுவலகத்தில் பணி.
02. முஹம்மது இக்பால்
இதே தெருவில் ஜனாப் முஹம்மது இக்பாலை தெரியாதோர் எவரும் இருக்க முடியாது! தாயார் ஐஸா (ஆயிஷா) பீவி உம்மாவை “கொழும்புக்காரி’ என்றே அனைவரும் சொல்வர்! ஆனால், கோட்டாறு வைச்சீன் வீட்டு குடும்பம்! வாழ்க்கைப் '* பட்டதோ - தேங்காப்பட்டினத்தில்!
வாழ்ந்ததோ. கொழும்பில்.
 
 

மானாமக்கீன் 95
ஜனாப் இக்பால் 1949-ல். தன் அறியாப் பருவத்தில் (வயது ஒன்று) இலங்கை வந்தவர். இவர்களின் குடும்பம் மொத்தமும் அப்போது கொழும்பில் இருந்தது! படித்தது ஸாகிறா கல்லூரியில் 1960-ல் குடும்பம் கோட்டாறு திரும்பிவிட்டது. இவரது அண்ணன் ஹலாலுதீன் கொழும்பிலேயே இருந்துவிட்டார். அவர் 1941-ல் பிறந்து கடந்த 2002 அக்டோபர் 1-ம் நாள் வபாத் ஆனார்.
கொழும்பு 4-ல் பிரபலமாகத் திகழும் 'கல்ப் லங்கா டிராவல்ஸ் நிறுவனத்தைத் தொடங்கியவர் அவரே. அன்னாரது துணைவி தாஹிரா ஹலாலுதீன், மகனார் இமாமுதீன் முதலியோர் இலங்கையையே நிரந்தரமாக்கிக் கொண்டுவிட்டனர்.
மேலும், முகம்மது இக்பாலின் தங்கை கமறுன்னிஷா தற்சமயம் மட்டக் களப்பு - கல்முனையில் குடும்பத்துடன், இக்பாலுக்கு பெண் கொடுத்த மாமனார் கோட்டாறு சந்தித்தெரு கம்மாலி வீட்டு மர்ஹ9ம் அப்துல்காதர் சாஹிபு, இலங்கை ராயல் நேவி போலீஸில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர்.
தமக்கையாரின் மகள் சகீலா பானுவும் கொழும்பையே புகுந்த வீடாக்கிக் கொண்டுவிட்டார்!
அக்காலத்தில் 5 பைசா (சதம்) ரிட்டன் டிக்கட்டில் கொம்பனித் தெருவிலிருந்து கொழும்பு - மருதானைவரை ரயில் பயணம் செய்தது பசுமை, மிகப்பசுமை முஹம்மது இக்பால் அவர்களுக்கு
03. அப்துல் மஜீது சாகிபு
69 வயதினரான இவர், தம் தந்தையார் பக்கீர் மன்னான் சாகிபு - (மர்ஹ9ம்) சாச்சா அப்துற்றஹ்மான் சாகிபு (90 வயது) ஆகியோர் கொழும்பு ஸபர் செய்து வந்ததை தெரிவித்தார்.

Page 51
96 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இவரும் தமது 13 வயது முதல் 20 வரை புறக்கோட்டை, குமார வீதி, சப்பல் லேன் சந்தில் சப்பாத்துக் கடையில் கடமையாற்றியுள்ளார்.
தற்சமயம் கொம்பனித்தெரு மியூஸ் வீதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொன்னரிப்புத் தெருவாசியான 85 வயது எம்.ஏ.எஸ். மைதீன் அவர்களது தங்கையையே அப்துல் மஜீது மணம் புரிந்துள்ளார். இவரது 3 ஆண்மக்களும் இலங்கை வந்து சென்றவர்களே!
இரு அப்துல் காதர்கள்
வட பகுதியான யாழ்ப்பாணத்தில் அடியெடுத்து வைத்த குமரி முஸ்லிம்கள் மிகக்குறைவு!
அதைத் தீர்க்க ஒரு எஸ்.எம். அப்துல்காதர் (80). இவர் அங்கே, பேங்க்சால் வீதியில் ஒரு மளிகைக் கடையில் பணி புரிந்திருக்கிறார். (கொழும்பு - 11லும் ஒரு பேங்க்சால் வீதியுண்டு).
மற்றொருவரான எஸ்.எம். அப்துல்காதர், ஆளுர்க்காரர். எஸ்.எம். ஷாஹ"ல் ஹமீது சாயாக்கடையில் (கொம்பனித் தெருவில்) 82 வயதைத் தாண்டியவர். தற்சமயம், கோட்டாறு ஹவ்வா நகரில். மீண்டும் இலங்கை மண்ணை மிதிக்க ஆசை வரத் தயாராகிறார்! இன்ஷா அல்லாஹ்.
இனி, சில இளைய தலைமுறைகளின் வழித்தடங்களைப் பார்ப்போம்.
 

மானாமக்கீன்
ஜனாப் எம். அப்துல் லத்தீஃப்
ஜனாப் எம். அப்துல் லத்தீஃப், கொழும்புத் தொடர்புள்ளவர். அடிக்கடி சென்று வருபவர். இவரது தந்தை கொம்பனித் தெருவில் கடை வைத்திருந்தார். இவர்களது உறவினர்கள் சிலர் இப்பொழுதும் நிறுவனங்களைக் கொண்டுள்ளனர்.
ஜனாப் அப்துல் லத்தீஃப் H.ܒܶܫܵܒ݂ ܐܲ அவர்களைப் பொறுத்தவரையில், மிக " முக்கியமான இருவர் அவருக்குத் தாய்மாமன்கள்!
ஒருவரை ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்திவிட்டேன்! அவர்தான் என் எழுத்துக்களுக்கு உந்து சக்தியாகத் திகழ்ந்த மர்ஹஅம் “எஃப்.எம்.” (இபுராஹிம்) அவர்கள்.
மற்ற தாய்மாமனோ இலங்கை வானொலியில், அல்குர்ஆன் விளக்கங்களுக்குப் பிரசித்தி பெற்றிருந்த மர்ஹஅம், ஹாஜி எம்.ஐ. அப்துல் ஹமீது நூரி
அன்னார் இலங்கை முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கிய ஆன்மிகப் பங்களிப்புகள் பக்கம் பக்கமாகச் சொல்லப்பட வேண்டியவை, பாராட்டப்பட வேண்டியவை, நினைவு கூர்ந்து நெகிழப்பட வேண்டியவை.
அவரால் குமரிமாவட்ட முஸ்லிம்களுக்கே தனிப் பெருமை. ஆனால் இன்றோ அவர்தம் முகவரி அவருடனேயே மண்ணோடு மண்ணாகிவிட்டது.
தாய்மாமா அவர்களை நினைவிற்குக் கொண்டுவர ஜனாப் அப்துல் லத்தீபுக்கு வசதி வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்ப்பு காலம் கனிய இறைதுணைக்கு இறைஞ்சுதல்கள்.

Page 52
98 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
*சாயிபும் சகோதரர்களும்
எதிர்பாராத ஒரு நிலையில் கோட்டாறு பாவா காஸிம் (வலி) திருமண மண்டபத்தில் ‘சாயிப் ஒருவரைச் சந்தித்தேன்.
சந்திப்பு ஒரு சில நிமிடங்களே. எனினும் தம் அணுகுமுறையால் யாரையும் கவரும் அந்த எஸ்.எம். கமாலுதீன் ‘சாயிப் பழகப் பேச இனியராக இருந்தார்.
கோட்டாறு ரஹ்மானிய்யாச் சங்கத் தலைவர், பிரபலமான சமூக சேவையாளர், நகர வணிகப்பிரமுகர், அரிமாச் சங்கத்தலைவர் என்றெல்லாம் அவர் மகுடங்கள் சூட்டப்பட்டவராக உள்ளார்.
அன்னாரும் அவர்தம் சகோதரர்கள் இருவரும் (எஸ்.எம். பெளஸ் - மவ்லவி எஸ்.எம். கனி என்ற சாகுல் ஹமீது ஆலிம்) தந்தையார் மூஸி ஹாஜியார் (ஜியாவுதீன் ஸாஹிப்) அவர்கள் வழித்தடத்தில் இலங்கை - ஸரந்தீவுத் தொடர்புகளால் உயர்ந்து சிறந்த வண்ணமுள்ளனர்.
சகோதரர்களுள் ஒருவரான பெளஸ் அவர்களை இப்பொழுதும் கொழும்பு - 1 வட்டாரத்தில் காண முடிகிறது. கோட்டாறில் முயன்றேன், முடியவில்லை.
அந்த வகையில். இலங்கை - குமரித் தொடர்புகள் அற்றுவிடாது பற்றிப்பிடித்து நிற்கிறார் எனச் சொல்லலாம்.
“நூறானியா மன்ஸில் சூறாஹாஜியார்”
ஹாஜி செய்கு அப்துல் காதிர் என்ற சூறாஹாஜியார் 1908ல் இலங்கையில் தடம் பதித்தார். இவரது தந்தையார் பாவா காஸிம் வைத்தியர். இவரது சிறிய தகப்பனார் மகான் ஹாஸ்பாவா (வலி) இவர்களின் மக்பரா தஞ்சை மாவட்ட திருவாரூர் பக்கம் கொடிக்கால் பாளையத்தில்!

மானாமக்கீன் 99
மேற்படி பாவாகாஸிம் வைத்தியர் மகன் சூறா ஹாஜியார், முதல் உலக யுத்தத்தின் போது பிரிட்டீஸ் அரசு இலங்கைக்குத் தருவித்திருந்த மலாயா முஸ்லிம் பட்டாளத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட மலாய் மிலிட்டரி பள்ளியின் கதீப் இப்பள்ளி கும்பினி தெரு ஜாவாலேனில் இப்பொழுது இருக்கிறது.
மேற்படி கதீபின் துணைவியார் மறியம் நாச்சியார் கோட்டாறு முஸ்லிம் ஜமாஅத்தின் முதல் தலைவர் மர்ஹ"ம் முகமத மைதீன் தரகனாரின் மூத்த சகோதரி இவரே ஹஜ்ஜ" க்குச் சென்ற முதல் பெண்மணி! - அதுவும் இலங்கையிலிருந்து பாய்மரக் கப்பலில். துணைவருடன்
அன்னாருக்கு 5 ஆண்கள் - 1 பெண். மர்ஹ9ம் ஷெய்க் அப்துல் கரீம் முதலாமவர். குடும்ப வியாபாரத்தை கொழும்பில் கவனித்தார். மகனார் ஜவ்ஹர் ஆலிம் கதீபாக தெகிவலை முஹியுத்தின் பள்ளியில்.
இரண்டாமவர் மர்ஹஅம் அஹ்மதஹஸன் கொலன்னாவை அரசுத் தொழிற்சாலையில் ஃபோர்மென். இவருடைய மகனார் ஜஹ்பர் சாதிக் அவர்கள் இப்பொழுது தெகிவலையில். அரசு சுகாதாரத்
திணைகளத்தில் கணக்காளராக - இருந்து, ஓய்வில் (தற்சமயம் கும்பினி < * தெரு ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத் Asa தலைவராக சேவை புரிகிறார்) ஜனாப் ஜஹ்பர் சாதிக்
இவர்தம் புதல்வர்கள் இருவரும் மகளாரும் சிறப்பான பதவிகளில் குடும்பப் பெருமையை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

Page 53
1OO வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
மூத்த மகன் ஆதம் மஸ்னவி சாதிக் பாகிஸ்தானில் இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராக இருந்து - இப்பொழுது இலங்கையில் வெளி விவகார அமைச்சின் பணிப்பாளராக உள்ளார். அதற்கு முன்பு பாரிஸில் முதல் செயலராகவும் இருந்தார்.
இரண்டாவது அஹ்மது முஸம்மில் சாதிக் திட்டப் பொறியாளராக அபுதாபியில் தொலை தொடர்
莎 துறையில். முன்பு ஆஸ்திரேலியாவிலும் பணி!
மகளார் திருமதி மஸீதா பஸ்லுல்ஹக் மெல்போர்ன் சர்வதேசப் பாடசாலையில் ஆசிரியை.
நல்லது சூறாஹாஜியாரின் மூன்றாவது மகனார் மர்ஹ9ம் ஹாஸ் சுல்த்தான் ஹாஸ் பாவாவின் பரமசீடர். நாலாமவர் மர்ஹ9ம் அப்துல் ஹமீது தன் மூத்த சகோதரருடன் குடும்ப வியாபாரத்தை கவனித்ததோடு F.X. பெரைரா அன்சன்ஸின் விற்பனையாளராகவும் திகழ்ந்தார். ஐந்தாவது மகன் மலுக்கு முகம்மது கோட்டாற்று சந்தித்தெரு சூறா வீட்டில் வாழ்ந்துள்ளார்.
இவர்களில் கடைசியான பெண்ணாகிய மர்ஹஜூம் ரஹ்மத் உம்மா மங்களலெப்பை என்று அழைக்கப்பட்ட அபூபக்கர் ஆலிமுக்கு வாழ்க்கைப்பட்டார். இவர் கும்பினித்தெரு வேக்கந்தை பள்ளியில் கத்தீபாகக் கடமையாற்றியவர். வாரிசுகள் இப்பகுதித் தோழப்பத் தோட்டத்தில் இன்றும்! இன்னும் சிலர் அணி திரள்கின்றனர்.
() மர்ஹ9ம் லெப்பை குட்டி சாகிபு என்னும் முகம்மது
கவுளில் காதிரி.
தற்போது முஹியித்தீன் பள்ளியில் பிலாலாக (முஅத்தீன்) சேவையாற்றும் ஜனாப் எஸ்.ஒ. முஹம்மது

மானாமக்கீன் 101
ஸாலிஹ் சாகிபின் தமையனார் மர்ஹ9ம் எஸ்.ஒ. அபூபக்கர், கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் வாழ்ந்தவர்.
() சுலைமான் அப்பாப் பள்ளித்தெரு, மர்ஹஜூம் அபுல்ஹஸன் அவர்களும் தம் வாழ்நாளில் பெரும்பகுதியை இலங்கையில் கழித்தவரே.
முஹியித்தீன் பள்ளித் தெருவில் வாழ்ந்த மர்ஹ9ம் நாகூர் அடிமை மகன் மர்ஹ9ம் சாகுல் ஹமீது சாகிபை "கொழும்புக்காரர்’ என்றே அழைப்பர்!
69 பெரிய தெருவில் ஒரு கொழும்பு லட்சாதிபதி
இருந்தார். ஏ.எம். முஹம்மது சாலி என்னும் காஸிம்பிள்ளை (மர்ஹஜூம்) கொழும்பில் லாட்டரியில் லட்சம் சம்பாதித்தவர். அவர் வீட்டை லட்சாதிபதி வீடு' என்பர்!
தற்சமயம் வேம்படித் தெருவில் இருக்கும் தம்ப்ரான் வீட்டு முஹின் சாகிபுக்கு வயது 75. பல ஆண்டுகள் கொழும்பு கொம்பனித் தெருவில் வாழ்ந்தவர். இவர் வேலை பார்த்தது தாய் மாமனார் சாகுல் அமீது சாகிபிடம். (முஹியித்தீன் பள்ளித் தெரு) இந்த சாகிபு, கொழும்புத் துறைமுகத்தில் காண்டீன் ஏலம் எடுத்து நடத்தியவர்.
கொழும்பும் கோட்டாறுமாக ஒரு காளத்தியப்பன்
இந்நூலில் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமே இடம் என்று
யாராவது எண்ணிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு அடுத்தடுத்த
பக்கங்கள் ஆச்சரியத்தை உண்டு பண்ணும்,
ஒரு காளத்தியப்பன் அவர்களிலிருந்து ஆரம்பம்!

Page 54
102 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இதில் எனக்கு சகோதரர் அகமது கபீருடன் உதவி, புதிய அபிமானியாகிய 'அரோமா பாபு’ அவர்கள். என் பொருட்டு அவர் திரு காளத்தியப்பனை கோட்டாறில் நேர்காணல் நிகழ்த்தினார்.
கண்டதும் கனிந்த முகத்தோடு, "வாங்க, வாங்க” என்று வரவேற்ற திரு. காளத்தியப்பன் அள்ளித் தந்த தகவல்கள் அனேகம்! கோட்டாறு பட்டாரியர் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசிக்கும் இவர் பிறந்தது கொழும்பில்..! 1939ல் பிறந்த காளத்தியப்பன் தனது 1% வயதில் தாயார் இசக்கியம்மாளை இழந்தார்! தந்தை வழி பாட்டியார் தானம்மாளின் பராமரிப்பில் வளர்ந்தார்! தந்தையார் திரு. சோமசுந்தரம் மறுமணமே செய்யாமல். தன் மகனுக்காகவே வாழ்வைக் கழித்தார்! தையல் வேலை செய்து குறைந்த வருவாயில் படிக்க வைத்து ஒரு க்ணக்காளராக ஆக்கின்ார். கடந்த கால நினைவுகள் அகத்திரையில் நிழலாட அரிய பல தகவல்களை அற்புதமாக உரைச்சித்திரமாகக் காட்டினார் திரு. காளத்தியப்பன்.
கொழும்பு எஸ்.ஈ. நத்கர் ராவுத்தர் நிறுவனத்தில் 1958 முதல் 1977 வரை கணக்காளராக (அக்கவுண்டன்ட்) பணிபுரிந்தவர்,
அப்போது இந்நிறுவனத்தின் முதலாளி ஜனாப் சேக் இஸ்மாயீல் என்னும் காரைக்குடி அன்பர். தற்சமயம் தனியாக அக்கவுண்டன்ட் தொழிலை நடத்தி வருகின்றார். அலுவலகம் கொழும்பு - 13, 37ஆம் இலக்க as60ā7600TTugj62O6fai (Brass Founder Street) a 6irang. குடும்பம் கோட்டாறில் உள்ளது.

LortsCTmund,56T 103
- இது, சகோதரர் ’அரோமா பாபு அவர்களது கைவண்ணம் தொடர்ந்து என் எழுத்துக்களையே படித்துக் கொண்டிருந்த அபிமானிகள் ஒரு மாற்றத்தைப் பெற பதித்தேன்.
பொற்கொல்லர் புதுக்கடை செல்வம்!
ஒருகால திருவிதாங்கூர் மன்னர்கள் ஆண்ட பண்டைய கோட்டாறில் அக்கசாலைகளும்*
பொன்மானிய வணிகர்களின் காசுக்கடைகளும் கலகலப்பை ஊட்டிக் கொண்டிருந்தன (இப்பொழுது நாகர் கோவிலில்)
அவற்றில் சம்பந்தப்பட்டோர் ‘ஆசாரிமார்கள்’ என்கிற விஸ்வகர்மாக்கள். இவர்களை இலங்கையில் “பொற்கொல்லர்கள் என்பர்! (எப்படித் தமிழ்?)
இவர்களும் ‘சாகிபுமார்களும்’ (முஸ்லிம்கள்) தொன்று தொட்டு மிகமிக அந்நியோனியம். நேசத்திற்கும் பாசத்திற்கும் எடுத்துக்காட்டு அவர்கள்.
அன்றைய இலங்கை வடபுலத்தில் காயல்பட்டின வாசிகளின் நகை மாளிகைகள் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தன. (குறிப்பாக ஏ.கே.எல். - எல்.கே. எஸ். கே.என்.எம். மீரான் சாகிபு, சாளையார் நைனா முஹம்மது நிறுவனங்கள், மேலும் வரலாறு அறிய எனது இலங்கை காயல்பட்டின நூல்)
இவற்றிலெல்லாம் இருந்த பலர் கோட்டாறுவாசிகளே!
* (அக்க சாலை - அரசாங்க நாணயங்கள் தங்கம் வெள்ளி - செம்பு)
தயாரிக்கப்படும் இடம்!கடமையாற்றுவார்கள், கண்காணிப்பாளர்கள், நிர்வகிப்பார்கள்)

Page 55
104 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
6(5 பதச்சோறாக திரு செல்வம் (64). 1947-களில் வடபுல யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இவர் தற்சமயம் தைக்கியாத் தெருவில் தங்க ஆபரணக்கடை வைத்திருக்கிறார்.
இலக்கம் 603, காங்கேசன்துறை வீதி, யாழ்நகரில் குடும்பத்துடன் வசித்து 1982-ல் திரும்பியவர்.
இன்னும் அவரது உறவினர் சிலர் யாழ்நகரில் இருந்தபோதிலும், அவர்களில் கணிசமானோர் புலம் பெயர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி போய்விட்டனராம்.
இவரது மகன் திரு சுந்தர் ராஜ் (36) யாழ்ப்பாணத் தமிழைப் பேசி கோட்டாறை ஒரு கலக்கு கலக்குகிறார்! இவரும் ஜெர்மனி போய் திரும்பி இருக்கிறார்!
திரு செல்வம் போன்ற வேறு சிலரை “குமரித் தலைநகரில் (அடுத்த ஏடு) சந்திப்பீர்கள். ‘அரசியல் அத்துப்படி அருள்ராஜ்!
இலங்கைத் தேசத்தந்தை டி.எஸ். சேனநாயகாவிலிருந்து சுதந்திரக்கட்சி பண்டாரநாயகா வரையிலான அரசியலில் அத்துப்படி திருமிகு ஐ. அருள்ராஜ் (67) அவர்கள். புளியன்வளை - மாதவ லாயத்தில் (ஆஹா! எப்படிப்பட்ட அழகிய வயல் வெளி ஊர்) வசிப்பு. சரளமான சிங்கள உரையாடல். ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகரிலுள்ள இலங்கை அதிதிகள் (கவனிக்கவும் ‘அகதிகள் அல்லர்!) பற்றி அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.
12-வது வயதில் கொழும்பு வந்த இவர், முதல் பணி செய்தது செபஸ்தியன் வீதி கிரவுண் அச்சகத்தில், இலங்கையில் வரலாறு படைத்த பிரதமர் - ஜனாதிபதி ஆர். பிரேமதாஸா வாழ்ந்து சிறந்த இல்லத்திற்கு அடுத்தது. அமரர் பிரேமதாஸா நடத்திய இரவுப் பாடசாலையில் இவரும் படித்துள்ளார்.

மானாமக்கீன் 105
பின் நாலைந்து இடங்களில் தொழில் பார்த்து வாழ்க்கையில் பெரும்பகுதியை இலங்கையில் கழித்தவர்.
வீரகேசரி’யுடன் இருவர்!
கோட்டாறு அருகிலுள்ள ஊட்டு வாழ் மடத்தைச் சேர்ந்த அமரர் வி. சுந்தர்ராஜ் இப்பொழுதும் வந்து
கொண்டிருக்கிற மூத்த நாளேடான ‘வீரகேசரி’யில் அப்பொழுது அச்சுக்கோப்பாளர்.
அவ்விதழில் ஞாயிறு தோறும் வெளியான சினிமாப் பகுதிக்குத் ‘தீனி’ கொடுத்துக் கொண்டிருந்த ‘சென்னை நிருபர்’ ஒரு கோட்டாறுக்காரரே!
அவர், கவிஞர் தே.பா. பெருமாள்!
()

Page 56
106 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
தோரணமிடும் துணுக்குத் தகவல்கள் 4
Kvanker ~ሩ....... పx
நாகர்கோவில் புலிகள் வசம்
குமரியின் நாகர்கோவிலல்ல!
இலங்கை - வடபுல நாகர்கோவில்! வடமராட்சிப் பகுதியில் இந்தப் பெயரில் ஓர் ஊர் உள்ளது. அது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது!
புத்தளம் அங்கும்!
குமரியில் ஒரு புத்தளம் இருப்பதுபோல, கொழும்பு அநுராதபுரம் பாதையில் முக்கியமான நகரம் புத்தளம்! முஸ்லிம்கள் செழிந்துள்ள இங்கே கீழக்கரை மண்வாசனை வீசும் இரண்டு இடங்களிலும் உப்பளம் இருப்பது அதிசயம்!
ஒரு 20 நிமிடம்தான்!
கொழும்பு - கட்டுநாயக்கா சர்வதேச விமானதளத்தில் புறப்படும் விமானம் திருவனந்தபுரத்தில் இறங்க எடுக்கும் நேரம் அரைமணிக்குக் குறைவானதே. வானத்தில் ஏறும் இறங்கும் நேரங்களைக் கழித்தால் ஒரு 20 நிமிடந்தான்!
இதிலிருந்து தெரிவது : இலங்கைத் தொட்டுவிடும் இடத்தில்தான் குமரி!
 
 
 
 
 

மானாமக்கீன் 107
அழகப்பபுரத்தில்.
இவ்வூரில் பல கிறித்துவ அன்பர்கள் உள்ளனர்.
அனைவரும் பழைய கொழும்புக்காரர்கள். கொழும்பைப்
போலத் தென்னந்தோப்புகள் நிறைய
யாழ் முருங்கைக் காய்!
தூத்துக்குடி மாவட்ட உடன்குடியில் பெருமளவு விளையும் யாழ். முருங்கைக்காய்க்கு குமரியில் மவுசு அதிகமோ அதிகம்!
இலங்காமணிபுரம்
இது, நாகர்கோவில் - குமரி நெடுஞ்சாலையில் உள்ளது.
யாழ்ப்பாணத்து நல்லூரும் குமரி மாவட்டத்தில்
‘இலங்கை மாகாளி அம்மன் கோயில்' - ஆரல்வாய் மொழியில்
ஈழ மின்னல்
முக்கூடற்பள்ளு’ என்றொரு இலக்கியம்! அதிலே தாமிர பரணியில் தண்ணிர் வரும் அறிகுறியாக கவிஞர் ஒரு பாடலைத் தருகின்றார்!
ஆற்று வெள்ளம் நாளைவர தோற்றுதே குறி. மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே.
இதிலே வரும் இரு மின்னல்களும் சங்கமிக்கும் இடம் குமரி மாவட்டம்
கல்வெட்டுகளில் ஈழம்!
ராஜராஜசோழன் இலங்கையையும் - குமரி மாவட்டப் பகுதிகளையும் ஒரே நேரத்தில் ஆண்ட மன்னன்! அவனது

Page 57
108 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
கல்வெட்டு சாசனங்களில் ஈழம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன! அதுவும் குமரி மாவட்டத்தில். குமரிமுனை அதிதி முகாம்கள்
கவனிக்கவும். இலங்கை அகதிகள் முகாம்களையே ‘அதிதி முகாமர்கள்' - என்கிறேன்!
குமரிமுனை அருகே உள்ள பெருமாள்புரம் - பழவிளை - களியக்காவிளை - நாராயண்விளை ஆகிய 4 முகாம்களில் இப்பொழுது இருப்போர் 2 ஆயிரம்! கண் - கண்ணு - கான்!
குமரி முஸ்லிம்கள் பலரது பெயரின் கடைசியிலும் இந்த மூன்றில் ஏதாவது ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும்!
முதலிரண்டும் “பழைய பாஷன்’ என்று, ‘கான்’ சேர்ப்பது அதிகரித்துள்ளது. ஆனால் இது வட - இந்திய உருது முஸ்லிம் பெயர் என்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை! தண்ணி குடிங்கோ
அப்படியானால் “சாயா (தேநீர்) குடியுங்கள்” என்று அர்த்தம்!
*முட்டிப் பணத்தில் மிலாத்
இலங்கையில் “தேங்காய்பட்டின மீலாத் கமிட்டி’ மிகப் பிரசித்தம். இது தங்ங்ஸ் பீர் முஹம்மது என்ற ஹோட்டல் அதிபர் தலைமையில் இயங்கியது.
பட்டினத்துக்காரர்களின் கடைகளில் ஒவ்வொரு ‘முட்டி வைக்கப்பட்டு ஒரு வருசம் வரை பணம் போடப்படும். மீலாத் நெருங்குகையில் “ஏகே.ஆர்’ என்றொரு நபர்

மானாமக்கீன் 109
அனைத்தையும் சேகரிப்பார்! பின் பட்டினத்தில் படுஜோராக விழா!
யாழ்ப்பாணப் புகையிலை
குமரி மக்கள் புகையிலையின் ஒரு ரகத்தை “யாழ்ப்பாணப் புகையிலை' என்றழைப்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.
கொல்லாங்கொட்டை
“காஷ்யூநட்” - என்ற ஆங்கிலத்தில் சொல்லும் முந்திரிக்கொட்டையை (கஜூ) குமரி மாவட்டப் பகுதிகளில் “அண்டி’ அன்பார்கள்! இந்த அண்டியை கோட்டாற்றில் 'கொல்லாங்கொட்டை’ என்கிறார்கள்!
இது - போர்த்துக்கீசியர்களால் தென்னகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது: அக்காலத்தில் பிரசித்திப் பெற்று விளங்கிய கொல்லம் துறைமுகம் வழியாக இந்த காஷ்யூநட்ஸ் இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் கொல்லத்தை இணைத்து “கொல்லங்கொட்டை” என்றார்கள்.
()

Page 58
110
“தனுஸ்கோடி இலங்கைக்கு மிக அருகில் இருப்பது உண்மை என்றாலும் (சேது சமுத்திரம்) கன்னியாகுமரிதான் இலங்கையோடு மிக அருகாமையில் இருந்திருப்பதாகத் தெரிகிறது. கன்னியாகுமரியை *ஆதி 6:ییy" என்றும் தனுஸ்கோடியை மத்திய சேது என்றும் Áმფ) pmasaj அய்யங்கார் கூறுகின்றார்.
- ஆதாரம் : “சேரநாடும் செந்தமிழும்’
குமரித் தலைநகரில்.
நியாயப்படி ஒரு மாவட்டத்தின் தலைநகரையே (நாகர்கோவில்) முன்னிலைப்படுத்தி இருக்கவேண்டும்.
ஆனால் கோட்டாறுதான் முதன்மையாகிவிட்டது.
ஏன்?
இரண்டாயிரம் - மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரதான வணிக கேந்திரமாக இருந்ததும் -
அன்றும் இன்றும் இஸ்லாமிய அறநெறி வளர்த்தும் வளர்த்துக் கொண்டிருப்பதும் கோட்டாறுதான்.
அவ்வாறே என் பார்வைக்குப்பட்ட வரையில் பார்த்துவிட்டேன்.
 

மானாமக்கீன் 11
இப்பொழுது இந்த 5ஆம் ஏட்டில் நாகர்கோவில் நகரத்திலும் இலங்கை மண்வாசனை நுகர்ந்தோர் யாரேனும் உள்ளனரா என்பதை ஊன்றிப் பார்க்கவேண்டும்.
இல்லாமல் என்ன!
நல்லதைச் செய்வதில் நாட்டம் கொண்டவர்
வள்ளலாரின் நெறிகளில் ஈடுபாடு கொண்டவராகவும், சமரச சுத்த சன்மார்க்க சபையின் தலைவராகவும் மீனாட்சிபுரத்தில் (நாகர்கோவிலின் முக்கிய கேந்திரப் பகுதி) நித்தம் நித்தம் ஆனந்த மனிதராகத் திகழ்கின்ற திரு நித்தியானந்தம் அவர்களைக் கண்குளிரக் காண்கிறோம்.
இன்று 70 அகவை. அன்று 16-ல் தமையனார் கணபதி ஆசாரியுடன் யாழ் மண்ணை மிதித்து, உழைத்து, உயர்ந்த மனிதர். இன்று மீனாட்சிபுரத்தில் புதிய தொழிற்கூடம்.
நடராஜன் - பொன்னம்மாள் தம்பதிக்குப் புத்திரராகப் பிறந்து, மகராஜபுரம் சுப்பையா மகள் சந்தனம் அம்மாளைக் கைப்பிடித்து, நடராஜன் - சுப்பிரமணியன் - சீதா ராமன் - ஜெயகுமார் - ஜெயந்தி - ஜெயலட்சுமி ஆகியோருக்குத் தந்தையாக விளங்குகின்ற திரு ந. நித்தியானந்தம் பெரியவர், ‘நல்லதைச் செய்வதில் நாட்டமுடையவர்; உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்பவர்’ என்றெல்லாம் மக்களால் வர்ணிக்கப்படுகிறார்.
வாழ்த்துகிறது பேனா. கொழும்பு தமிழ்ச்சங்

Page 59
112 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
புத்தேரி நடராஜன் ஆச்சாரி
காலஞ்சென்ற ராமசாமி ஆச்சாரியாரின் மூன்றாவது புதல்வர் நடராஜன் ஆச்சாரியார், தம் துணைவியார் சொர்ணம் அம்மாளுடன் யாழ்ப்பாணம் கண்ணா திட்டியில் குடும்பமாக வாழ்ந்தபோது, இவர் பிறந்தார். தற்போது வயது 47. இவரது அண்ணன்மாரில் திரு. கிருஷ்ணன் 55 வயதில் காலமானார். மற்றொருவர் திரு. சுப்பிரமணியம். வயது 50. இவர்கள் இலங்கையில் இருந்து தாயகம் வந்து. உள்ளூரிலேயே தொழில் நடத்துகின்றனர்.
சற்றுமுன் சந்தித்த திரு நித்தியானந்தம் இவர்களுக்குத் தாய்மாமா. அன்னாருடனேயே திரு நடராஜன் தொழில் புரிகின்றார்.
தியாகி பொன். காசி உதயம்
இன்று தமிழகத்தில் ‘தமிழன் தொலைக்காட்சி’ சக்கை போடு போடுகிறது. அருமையான நல்ல பெயரைத் தேர்ந்தெடுத்தவர்களைப் பாராட்டவேண்டும்.
& இதன் ஆணிவேரும், “வெப் தமிழன்
கேபிள் நெட் ஒர்க்சின் இயக்கமும் நாகர்கோவிலிலும், ‘தமிழன் கேபிள் நெட் ஒர்க்” வள்ளியூரிலும் இருப்பதைப் புரிந்தேன்.
இவற்றின் உரிமையாளராகவும் பங்குதாரராகவும் திரு கே. திருமேனி உதயம் (கே.டி. உதயம்) அவர்கள் செயல்படுகிறார்கள்.
 

மானாமக்கீன் 113
இவர் யார் என அறிந்தபொழுது இன்ப அதிர்ச்சி!
இப்பொழுது இலங்கையின் மூத்த நாளேடாகத் திகழ்கிற ‘வீரகேசரி’யிலும், நல்ல ஆங்கில தின ஏடாக வந்து இப்பொழுது வார வெளியீடாக வெளியாகும் “டைம்ஸ் ஆப் சிலோன்’ இதழிலும் கால் நூற்றாண்டுக்கு முன் கடமை ஆற்றிய திரு பொன் காசி உதயம் அவர்களின் புத்திரராக திருமேனி திகழ்கிறார்.
அருமைத் தந்தையாரைப் பற்றிய 'ஆயிரத்தெட்டு இலங்கைத் தகவல்கள் அவரிடம் உண்டு.
அவற்றில் தலையாயது, ‘தமிழுக்கும், இலங்கைத் தமிழருக்கும் சம அந்தஸ்து கொடு" என இறுதி மூச்சுவரை போராடிய டாக்டர் என்.எம். பெரேரா அவர்களுடன் தோளுடன் தோள் நின்று உழைத்தவர் திரு பொன். காசி உதயம்.
அது மட்டுமின்றி, டாக்டர் பெரேராவின் “லங்கா சமசமாஜக் கட்சி”யின் அரசியல் பீட உறுப்பினராகவும், அக்கட்சியின் ‘சமதர்மம்’ இதழின் ஆசிரியராகவும் அமர்ந்து பணியாற்றியவர்.
தாயகம் திரும்பிய பிறகு திரு கொச்சி மாநிலத்தின் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவராகவும், குமரி மாவட்டத்தில் முதல் தொழிற்சங்கம் ஆரம்பித்தவராகவும் “தின மலர்’ நாளேட்டில் தொடர்ந்து பல தொடர்களை எழுதிப் புகழ் பெற்றவருமாகத் திகழ்ந்துள்ளார்.
அன்னார் கட்டிமாங்கோடு “சந்தனவிலாச’த்தில் ஒய்வுறக்கம் கொண்டு 12 ஆண்டுகள். நினைவு நாள் 27.4.2003இல். இவர் நடைபயின்ற இலங்கை-குமரிப் பாலம் நன்றாகப் புதிப்பிக்கப்படவேண்டும்.

Page 60
114 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
பிரியம்’ மேலாளர் திரு ஜெயராஜ்
நாகர்கோவிலில் உள்ள பல திருமண மண்டபங்களில் ஒன்று ‘பிரியம்’.
பலருக்கும் பிரியமான அந்த மண்டபத்தின் மேலாளர் திரு பா. ஜெயராஜ் (51) அவர்கள்.
பிறந்ததும் வளர்ந்ததும் கொழும்பில்! படித்தது நுவரேலியா செயின்ட் சேவியரில். கொழும்பு - 12 ஆட்டுப்பட்டித் தெருவில் (இப்பொழுது சேர் ரத்னஜோதி சரவணமுத்து மாவத்தை) ரோஷன் கார்மன்ட்ஸ் ஆடைகள் நிறுவனத்தை நடத்தியவர்.
திருவாளர் காமினி (காமினி டைல்ஸ்) போன்ற சிங்கள அன்பர்களையும் சம்பாதித்துத் தாயகம் திரும்பியிருக்கிறார்.
சொல்லின் செல்வரது குழந்தைகளைக் கொஞ்சிய குமரி
இன்று பலரும் சொல்லின் செல்வர்கள்.
அன்று, அரை நூற்றாண்டுக்கு முன், இலங்கைக்கே ஒரே ஒரு சொல்லின் செல்வர்தான்!
இன்றைய ஈழத்தமிழர் எழுச்சிக்கு மூலபிதாவும், "தந்தை செல்வா’ என எல்லோராலும் அழைக்கப்பெறும் பெரியாருமான திருமிகு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அய்யா அவர்களால் இருபது வயது இளைஞராக இருக்கும் பொழுதே கண்டுபிடிக்கப்பட்டவர் திருமிகு செல்லையா இராஜதுரை அவர்கள்.
இப்போதைய இளைய தலைமுறைக்குப் புதிய பெயராக இருக்கலாம். நாற்பது ஐம்பது அகவைகளைக் கடந்தோருக்கு அப்படியா!

மானாமக்கீன் 115
இலங்கைத் தமிழின அரசியலில் அவர் ஒரு தனித்துவம். மேடையேறிப் பேசினால் தமிழ்த்தேன் சொட்டும் - அவர் மண் தேனகம் என்பதால் அல்ல.
தமிழே அவர். அவரே தமிழ்! *சொல்லின் செல்வர்' மிகப் பொருத்தமான பெயராக அமைந்து போனது.
இந்தத் ‘தேனகம்’ தமிழக அபிமானிகளைக் கொஞ்சம் யோசிக்க வைக்கும். வேண்டாம். இலங்கை - கிழக்கின் தலைநகர் மட்டக்களப்பையே அவ்வாறு என் போன்றோர் அழைப்போம்.
இப்பகுதிக்குப் பலமுறை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், இப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசு அப்பொழுதும் அரியாசனத்தில் இருந்த பொழுது இந்துக் கலாசார அமைச்சராகவும், பின்னர் மலேஷியத் தூதுவராகவும் அமர்ந்திருந்த செல்லையா இராஜதுரை அவர்களது புத்திரிகள் இருவரினதும் கல்விக் கண்களைத் திறக்கச் செய்தது நாகர்கோவில்!
இது எப்படி நேர்ந்தது?
அப்பொழுது தேனகமாம் மட்டக்களப்பு நகரில், “கிரேண்ட் ஈஸ்டர்ன் ஹோட்டலும் “சென்ட்ரல் ஹோட்டலும் மிகப் பிரசித்தம்.
இதன் நிறுவனர்கள், குமரியைச் சேர்ந்த வில்லுக்குறி
கிராமத்து எஸ்.எம். பெர்னாண்டோ, லூயிஸ் பெர்னாண்டோ என்ற அண்ணன் - தம்பிமார்!

Page 61
116 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இவ்விருவருக்கும் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக சொல்லின் செல்வரது புத்திரிகள் ரவீந்திராதேவியும், பூங்கோதையும் நாகர்கோவில் கான்வெண்டிலும் கிறித்துவக் கல்லூரி ஒன்றிலும் பி.யூ.சி. வரையில் படித்தார்கள். பின்னர், மூத்தவர் சென்னை எஸ்.ஐ.இ.டி.க்கும், இளையவர் ஸ்டான்லிக்கும் சென்றார்கள். அவர்கள் இப்பொழுது அமெரிக்காவிலும் (ரவீந்திரா தேவி யோகேந்திரா), மலேஷியாவிலும் (டாக்டர் பூங்கோதை மணிவண்ணன்) உள்ளனர்.
இவ்வாறு கல்வியைக் குமரிச் சகோதரர்கள் வழங்கிட, சொல்லின் செல்வரோ கலையை வளர்த்தார்!
எப்படி? நாகர்கோவில் ‘புல் புல் தாராஸ் இசைக்கலைஞர் திரு அய்யாவு அவர்களை அழைத்துச்சென்றார் தேனகத்திற்கு! நிகழ்ச்சிகள் நடத்த வைத்தார். நகர சபை மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அவரே தலைமை தாங்கி தங்க மோதிரமும் அணிவித்தார்!
அந்தக் காலங்கள் இனித் திரும்புவது எக்காலத்திலோ?
தற்சமயம் “சொல்லின் செல்வர் செல்லையா ராஜதுரை மலேஷியாவில் அமைதியான வாழ்க்கை.
ராயல் ஹோட்டல் மதார் சாகிபு
நாகர்கோவில் டவர் ஜங்சனில் பிரபலமாகத் திகழ்ந்த மேற்படி ஹோட்டலின் நிறுவனர் மர்ஹஜூம் மதார் சாகிபு அவர்கள். இதனை வெற்றிகரமாக நடத்துமுன், கொழும்பு -2, கொம்பனித் தெருவில் ‘சாயாக்கடை ஒன்றில் அலுவல் செய்து, அப்புறம் சொந்தமாகவே கடை நடத்தி வாழ்க்கையில் வெற்றி கண்டவர். இவர் கோட்டாறு வாசி என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மானாமக்கீன் 117
ஒர் இளைய தலைமுறை கொழும்பில்.
ராயல் ஹோட்டல் - ஹோட்டல் ஜ"பிளி குடும்பத்தின் ஓர் இளைய தலைமுறை இப்பொழுது கொழும்பில் ஒரு பொறுப்பான பதவியிலிருப்பதைப் பரவசத்துடன் பதிவு செய்கிறேன்.
அவர் எம்.எஸ். நாசர். கணனியியல் பட்டதாரி. 32 அகவை. எனது குடும்பத்து நன்றிக்குரிய துபாய் ஈ.டி.ஏ. நிறுவனத்தின் ஓர் அங்கமான “அஸ்கொன் கான்ஸ்ட்ரக்சன்” நிறுவனத்தின் நிதி முகாமையாளராகத் திகழும் நாஸர், கோட்டாறு மர்ஹ9ம் முஹம்மது ஷரீஃப் அவர்களது மைந்தர். அவரது ‘உப்பாவே (பாட்டனார்) சற்றுமுன் அறிமுகமான மதார் சாகிபு.
தென் ஆப்பிரிக்க உகாண்டாவில் வாழ்வு முன்னேற்றத்தைத் தொடங்கிய இந்த இளைஞர், ஒரு பிரபலமான நிறுவனத்தின் மூலம் இன்று கொழும்பில் வேர்விட்டு வளருவது குமரி மாவட்டத்திற்குப் பெருமை அளிக்கும் ஒன்று. வாழ்த்துக்கள்!
இவர்களையும் மறந்திட முடியாது!
பின் காணப்படும் குமரி மண்ணின் மைந்தர்கள் சிலர் இலங்கையைப் பற்றிப் பேசியும் எழுதியுமுள்ளனர். வேறு சிலர் வணிகத் தொடர்புகளும் வைத்தவர்கள்.
CKC> பன்மொழிப் புலவர், பன்னூலாசிரியர் கா. அப்பாத்துரை
- ஆய்வு
CEC> திரு கே.என். சிவராஜபிள்ளை - ஆய்வு.
CC திரு ஜே. ரிச்சர்ட் சாம் - (தினமலர்)

Page 62
118
வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இரணியல் கலை - எழுத்தாளர்
திரு ஜே. பிராங்ளின் - (கல்லூரி முதல்வர்)
அவரது தந்தையார்
திரு பி. விசுவநாதன்
திரு. சி. ரிச்சர்ட் பால்
திரு செ. சாமுவேல்
மேஜர் சாலமன்
திரு சுப்பிரமணியம் செட்டியார்
திரு கில்பர்ட்
திரு ஹியூவர் தனராஜ் திரு எஸ்.எஸ். ஆசிர்வாதம்
திரு பிலிப் தாஸ்
திரு பவுலின் (வில்லுக்குறி கிராமம்)
(a)

119
“பண்டம் மலிய வேண்டும் m எங்கும்
பயிர் செழிக்க வேண்டும்
சண்டைகள் ஓயவேண்டும் ---- అల్లా
சகோதரர் ஆக வேண்டும்
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதை ஒன்றிலிருந்து
வரலாற்றுப் புகழ் குளச்சல்
திமிழகத்தின் ஒரேயொரு இயற்கைத் துறைமுகம் அது.
இலங்கை - ஸரந்தீவில் உள்ள திருகோணமலையைப் போல! கேரளத்தின் கொச்சியைப் போல!
யவனரும் கிரேக்கரும் அறேபியரும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வந்திறங்கிய இடம். அறநெறி பரப்பத் தமிழகம் நோக்கி வந்தவர்களும் இவ்வழியையே பயன்படுத்தினர்.
அது வரலாற்றுப் புகழ் மிகு கடற்பிரதேசம்.
இன்று பார்த்தால் நம்பமுடியாது.

Page 63
120 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இந்திய அரசு கோடிக் கோடி மதிப்பில் மலேஷிய அனுசரணையுடன் என்னென்னவோ செய்ய இருப்பதாகச் சொன்னாலும் உருப்படியாக இன்னும் ஒன்றுமில்லை.
ஓர் இறங்குதுறை துறைமுகப்பாலம்) மட்டும் கட்டியும் கட்டப்படாமலும் உள்ளதைக் கண்டேன்.
சரி. முக்கிய விடயத்திற்கு வருவோம்.
'நமது ஊருக்கு குளச்சல் என்ற பெயர் வந்ததற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. நெல் விளைச்சல் அதிகமாக உள்ள இவ்வூருக்கு மக்கள் கொள்முதல் செய்யச் சென்றதால் இது கொள்ளச்செல்' எனப் பெயர் பெற்று பின்னர் குளச்சல் என்று மருவியது என்று சிலர் கூறுகின்றனர். 'குளச்சி' என்றால் ‘செந்நெல் விளையும் பூமி’ என்று பொருள்படும் எனவும், இங்கு அதிகமாகச் செந்நெல் விளைந்ததால் இது 'குளிர்ச்சி' என்று துவக்கத்தில் அழைக்கப்பட்டு பின்னர் குளச்சல் என்று மருவியது என்றும் வேறு சிலர் விளம்புகின்றனர்.
தண்ணிரும் மண்ணும் கலந்து இங்கு சேறாகக் குழைந்திருந்ததால் இதற்கு "குழைத்தல்' எனப் பெயரேற்பட்டு குளச்சல்' என்று மருவிற்று என்று பிற சிலர் சொல்கிறார்கள்.”
- என்றொரு குறிப்பை, ஜனாப் என்.எம்.என். உஸைனார் பிள்ளை என்பார் தந்துள்ளார். இவர், குளச்சல் முஸ்லிம் முஹல்லம் முன்னாள் தலைவர் (ஆதாரம் 1983-ல் முஸ்லிம் இளைஞர் அமைப்பு வெளியிட்ட முஹியித்தீன் பள்ளிச் சிறப்பு மலர்)
ஆனால், சொல் ஆய்வில் முக்குளித்து எழும்பும் தகவல் களஞ்சியம்’ கோட்டாறு சகோதரர் ஆலிஜனாப் கே. அகமது

மானாமக்கீன் . 121
கபீர் அவர்கள் இந்தப் பெயர் எப்படி ஏற்பட்டிருக்கும் என்பதற்கான சில குறிப்புக்களைத் தருகிறார். பார்க்கிறீர்களா?
குளச்சல் என்று மருவிய 'கொள்ளா - சேல் என்பதைக் கொஞ்சம் பிரித்தால், கொள்ளா என்பதற்கு கொள்ளாத ஏற்றுக்கொள்ளாத, எதைப்போட்டாலும் ஏற்காமல் திருப்பி கரைக்கே தள்ளிவிடுகிற' - என்று பொருள். 'சேல்' என்பது கடலைக் குறிக்கும். திருக்குறளில் சேல் என்பதைக் கடல் என்றே வள்ளுவர் காட்டியுள்ளார். அத்துடன், இன்றைக்கும் குளச்சல், தேங்காய்ப்பட்டினம் போன்ற கடலோர ஊர்களில் கொள்ளாது - இஞ்ச கொள்ளாது - சேல் ஆகிய மூன்று சொல் வழக்குகளும் ராஜநடை போடுகின்றன.
அத்துடன் கடலோரக் கிராமங்களான தேங்காய்ப் பட்டினம் -இனயம் - புத்தன்துறை மக்களும் கொளச்ச - என்றே சொல்கின்றனர். இந்த வார்த்தையின் வரலாறு நபி நூஹ9 (அலை) அவர்கள் காலத்துக்கே போகின்றது. தொல்காப்பியத்திற்கு முன்பே 'காப்பியம் பாடியது' என்று கூடச் சொல்லலாம்! 'கொள் - செல்' என்பதைச் சொல்லாமல் சொல்லும் அருமையான அடையாளமாக இந்தக் கொளச்சல் இருக்கிறது. ஆகவே, 'கொள் செல்' என்பது 'கொளச்செல்' ஆகி அதன்பின் 'கொளச்சல் ஆகியிருக்க வேண்டும்.
சகோதரர் கபீர் அவர்களுடைய கணிப்பு இந்த நூலிலேயே முதல் முதலில் முன்மொழியப்படுகின்றது. பெயர் ஆய்வு நடத்துபவர்களுக்கு நல்ல விருந்து
மேலும், இஸ்லாமிய இளைஞர் முன்னேற்றச் சங்கத்தாரின் வெள்ளிவிழா மலரில் (1996) ஜனாப் எம். நஜீமுத்தீன் எழுதியுள்ள கட்டுரையில் காணப்படுவது போன்று,

Page 64
122 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
நாய்கள் “குலைச்ச’ குரைப்பில் வெள்ளையன் “கெளச்சல்” என்றான் என்பதையெல்லாம் வேடிக்கைக்கதையாகவே கொள்ளமுடியும். மேலைநாட்டின் ‘கூயில்’ என்றான் குளச்சலை! அதுவே உண்மை!
பெயர் விளக்கம் இவ்வாறிருக்க -
இலங்கையை மனத்திலே வைக்கிற சம்பவமொன்று கி.பி. 1740ல் குளச்சலில் நடந்தது.
டச்சுத்தளபதி (ஒல்லாந்தர்) டிலனோய் இயற்கைத் துறைமுகமான குளச்சலைக் கைப்பற்ற படையோடு புறப்பட்டது இலங்கையிலிருந்துதான்!
(அதில் அவன் வெற்றி பெறவில்லை என்பதும், திருவிதாங்கூர் படைகளால் கைதானான் என்பதும், அந்த வெற்றியைக் குறிக்க சங்கு முத்திரை பதித்த ஒரு கல்தூண் நினைவுச் சின்னமாக குளச்சலிலேயே உள்ளது என்பதும் வரலாறுகள்).
இப்படி ஆழமான வரலாறுடைய இந்நகரத்தில், மாலிக் இபுனு தினார் கல் - பள்ளி, முஹையித்தீன் பள்ளி, றிஃபாயி பள்ளி, மீரான் பள்ளி, அக்கரைப் பள்ளி ஆகிய ஐந்துடன், பாபுல் ஹ"சைன் (வலி) தர்ஹாவும் ஊருக்குப் பெருமை சேர்க்கின்றன.
இவற்றில் கல் - பள்ளிக்குப் பாரம்பரிய வரலாறே உண்டு.
இந்நூலின் இடப்பஞ்சம் காரணமாகவும், புதுப்புது
ஆய்வுத் தகவல்கள் நிறையக் கிடைத்திருப்பதாலும் அவற்றை
விவரிப்பதைத் தவிர்த்துக்கொண்டுள்ளேன். இலங்கையுடன் தொடர்பில்லாததால் பொருத்தமற்றதுங்கூட

மானாமக்கீன் 123
எவ்வாறாயினும், ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டிய ஒரு தொன்மையான பள்ளிவாசல். சில கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அறபு எழுத்தணி முறைப்படி சித்திர வேலைப்பாட்டுடன் அவை உள்ளன. அவற்றில் ஒன்றுதான் “யாபத்தாஹ்” என்ற எழுத்தணி! இதற்கு ‘துவக்கம் - திறப்பு என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.
இப்பொழுது குளச்சல் ஜமாஅத் செயலராக இருக்கும் ஆலிஜனாப் எஸ்.எம். சுகைல், பீ.ஏ. அவர்கள் தந்த தகவலின்படி, இப்பள்ளிவாசலின் தரைதளத்தில் பதிக்கப்பட்டுள்ள பீங்கான் ஒடுகள் கொழும்புவாழ் குளச்சல் மக்களது சார்பில், மர்ஹ9ம் அப்துல் ரஹ்மான் அவர்களது ஏற்பாட்டில் நிகழ்வுற்ற ஒன்றாகும்! (இந்த அப்துல் ரஹ்மான் அவர்களைப் பற்றிய குறிப்புகள் தொடர உள்ளன)
''' பதினைந்தாயிரத்திற்கு மேல் மக்களைக் கொண்ட குளச்சல் முஸ்லிம் முஹல்லத்தில் சிலர் மத்தியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஜ"ம் ஆத் தொழுகை இப்புராதனப் பள்ளிவாசலில் மட்டுமே நடைபெறுகிறது. மற்ற நான்கிலும் இல்லை.
ஆகவே இங்குள்ள மக்கள் ஒவ்வொரு வெள்ளியன்றும் தோளோடு தோள் நின்று இறைவனை அடிபணிந்து
ஒற்றுமையைக் கட்டிக் காக்கிறார்கள்! மாவட்டமே
பெருமைப்படவேண்டிய விஷயம்.
மேலும், கடற்கரையை ஒட்டி உள்ள அக்கரைப் பள்ளியும் பிரசித்தி பெற்ற ஒன்றுதான்.
இப்பள்ளிக்கும் இலங்கைத் தொழிலதிபராக இருந்த ஒருவருக்கும் தொடர்புண்டு!

Page 65
124 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அவர், ஷெய்க் இண்டஸ்ரீஸ் எஸ்.எஸ். ஹமீது (மர்ஹ9ம்) அவர்கள். “வொண்டர் லைட் சவர்க்காரம் தயாரித்து மக்களை “வொண்டர்புல்” எனச் சொல்ல வைத்தவர்.
இவருக்குப் பூர்வீகம் திருவிதாங்கோடு. (இதுவும் குமரி மாவட்டத்திலேயே) என்றாலும் குளச்சல் அக்கரைப்பள்ளிக்கு ஐந்து தங்கும் விடுதிகளையும் ஆளூர் சேனாம்மாள் தர்ஹாவுக்கு இன்னொரு தங்கும் விடுதியையும் (மண்டபம்) கட்டிக் கொடுத்து நினைவில் நிற்கிறார். குளச்சலில் “மர்ஹஅம் சுலைமான் பிள்ளை நினைவு இல்லம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆளுரில் தாயார் பெயரில் நிறுவப்பட்டுள்ளது.
ஆலவிருட்சமாக வியாபித்துள்ள அடுமக்கண்ணு - அப்துல் ரஹ்மான் பரம்பரை
குளச்சல் பீச் ரோடு
அதில் நல்ல இயற்கைச் சூழலில் தென்னை மரங்கள் நிரம்பி உள்ள அந்த வீடு. அதை இலங்கைச் சிங்கள மக்கள் ‘வளவ்வ’ எனச் சொல்வார்கள்.
அங்கே கால்பதிக்க இரண்டு மூன்று முறை அதிர்ஷ்டம்
பெற்றேன். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியவர் இந்நூலின் புரவலர் ஹாஜி ஃபாயிக் மக்கீன்!
அவரது முன்னோர்கள் துள்ளி விளையாடிய இடமது!
எனக்குக் கிடைத்த தஸ்தாவேஜிக்களின்படி, அந்த முன்னோர்கள் மர்ஹ9ம் மைதீன் கண்ணு முதலாளியிலிருந்து ஆரம்பம். ஆனாலும் அன்னாருக்கும் முன்னோர்கள் குளச்சலில் வாழ்ந்திருப்பதாகத் தெரிகிறது.

மானாமக்கீன் 125
மேற்படி மைதீன் கண்ணு அவர்களுக்கு மேல மிடாலத்துப் படுவூரில் நிலபுலன்களும், வீட்டு மனைகளும் இருந்தன.
அந்த மனை ஒன்றில் அவரது மகன் குஞ்ஞரான் பிள்ளை பிறந்தார். இவர் படுவூர் குஞ்ஞரான் பிள்ளை என அழைக்கப்பட்டார்.
இப்பொழுதும் இக்குடும்பத்தினரது கபர்ஸ்தானங்கள் (அடக்க இடங்கள்) அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
குஞ்ஞரான் பிள்ளை மகன் செய்யது முஹம்மது. இவர் புதல்வர் பாபு ஹ"சைன் பிள்ளை (வாப்புச்சி முஹம்மது)
இவருக்கு பிறந்தார் முஹியித்தீன் கண்ணு. இந்த முஹியித்தீன் கண்ணுவுக்குப் புதல்வராக "அடுமக் கண்ணு’ தலையெடுத்தார்கள்.
இவர்களே இலங்கையில் 102 ஆண்டுகளுக்கு முன் “அடும கிளியரிங் ஏஜன்சீஸ் நிறுவியவர்கள்.
இன்றைக்கும் இந்நிறுவனப் பெருமை பேசி மகிழும் இலங்கையர் உள்ளனர்.
ஆரம்பத்தில் ‘அடுமக் கண் ஏஜன்சீஸ்’ என கொழும்பு - 13, செக்கடித் தெருவில் (இப்பொழுது கதிரேசன் வீதி) இயங்கி வெற்றிக்கொடி நாட்டிய பிறகு கொழும்பு -15, முகத்துவாரப் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.
இன்றோ அங்கு ஆலவிருட்சமாக விழுதுகள் விட்டு வளர்ந்துள்ளது.

Page 66
வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
1
2
6
முராத் கிளியரிங் ஏஜன்சீஸ் லத்தீஃப் கிளியரிங் ஏஜன்சீஸ் முஹம்மது கிளியரிங் ஏஜன்சீஸ் சுவைரா கிளியரிங் ஏஜன்சீஸ் மக்கீன் கிளியரிங் ஏஜன்சீஸ் அர்க்காம் டிரேடர்ஸ் அமார் டிரேடிங்
- எனப் பலப்பல கிளை நிறுவனங்கள். அல்ஹம்துலில்லாஹ்.
ஏற்கனவே குறித்ததுபோல் இந்நூலின் புரவலரும் எனது நீண்ட நாள் வாசக அபிமானியுமான ஹாஜி ஃபாயிக் மக்கீன் அவர்களுக்கும், அவர்தம் சகோதர சகோதரிகளுக்கும் அருமை ‘உப்பாவாக மர்ஹ9ம் அடுமக்கண்ணு அவர்கள் திகழ்கிறார்கள்.
‘உப்பா இலங்கை அபிமானிகளுக்குப் புரியாது. தந்தையின் தந்தையாகிய அப்பாவுக்கே ‘உப்பா! தாயின் தந்தைக்கும் அதுவே!
அத்தகையவரது வாரிசுகளின் விவரங்களைப் பார்த்து மகிழவேண்டும்.
அவர்களுக்கு 4 ஆண்களும், 3 பெண்களும்.
ck) ஆலிஜனாப் அப்துல் லத்தீப் cxc ஹாஜி அப்துல் ஹமீத் CS- ஹாஜி முகம்மது புஹாரி C金> ஹாஜி முகம்மது மக்கீன்
ஆகிய ஆண் மக்களும்,
CKS» பல்கீஸ் உம்மா
OG> ஜெமீலா உம்மா C உம்மு சலீமா
ஆகிய பெண் மக்களும் பிறந்தனர்.

மானாமக்கீன் − 127
இதில், முதலாவது மகனார் அப்துல் லதீஃபின் புதல்வர் ஹாஜி ஹில்மி அவர்கள் “லத்தீப் கிளியரிங் ஏஜன்சி’யை நடத்துகிறார்.
மூன்றாவது மகன் ஹாஜி முஹம்மது புஹாரியின் மூத்த புதல்வரது (ஹாஜி ஷாஃபிய்யி) மைந்தர் முஹம்மது, அவர்கள் “முஹம்மது கிளியரிங் ஏஜன்சி நடத்துகிறார்.
அடுமக்கண்ணு அவர்களது கடைசி வாரிசாகிய ஹாஜி முஹம்மது மக்கீன் பெற்றெடுத்த செல்வங்களோ எட்டு. அவர்களது விவரம்:
CKC) ஹாஜி பிஸ்ரி (சுவைய்யிரா கிளியரிங் ஏஜன்சி)
அன்னாருக்கும் குளச்சலுக்கும் நெருங்கியத் தொடர்புண்டு.
மர்ஹஅம் முஹின்
ஹாஜ்ஜா பிஸ்ரிய்யா ஹாபிஃழ்
ஹாஜி லியாக்கத் (மக்கீன் கிளியரிங் ஏஜன்சி)
ஜனாப் அஸ்லம்
மர்ஹஇம் சித்தி
மர்ஹஅம் முனிர்
ஹாஜி ஃபாயிக், அகில இலங்கை சமாதான நீதவான் (I.P. Al-ISLAND) (அர்க்காம் டிரேடர்ஸ், அமார் டிரேடிங், முராத் கிளியரிங் ஏஜன்ஸி.
தற்சமயம் மர்ஹ9ம் முஹின் அவர்களது புத்திரர் ஹாஜி மின்ஹாஜ் இந்நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பு வகித்து திறம்பட நிர்வகித்து வருகிறார் என்பது பெரும் பாராட்டுதல்களுக்குரிய ஒன்றாகும்.

Page 67
அடுமக்கண்ணு குடும்பத்தவர்களுடன் பங்காளிகளும் மற்றும் அபிமானிகளும் இடமிருந்து வலமாக - ஹாஜி ஏ.கே.எம்.மக்கீன், ஹாஜி ஏ.கே.எம். புஹாரி மூன்றாவதாக ஒரு பிரமுகர் ஜனாப் ஏ.கே.எம். லத்தீஃப், ஹாஜி அப்துல் ஹமீது ஜனாப் ஏ.ஆர்.எம். முஹிதீன் கண்ணு, ஆஸ்கின் ஹாஜி ஆகியோர்
காணப்படுகின்றனர்.
 

மானாமக்கீன் 129
குமரி மாவட்டத்தின் வரலாற்றில் புகழ்மிகு குளச்சல் மண்ணில் தவழ்ந்து, இலங்கை - ஸரந்தீவில் தடம் பதித்து, இந்திய - இலங்கைப் பாலம் அமைத்துவிட்ட அடுமக்கண்ணு பரம்பரை ஆலவிருட்சம்போல விழுதுகள் விட்டு குடும்பப் பெருமையை கட்டிக்காத்து வருகிறது.
எளிமைக் குணமும், இனிய சுபாவமும், பிறர் துயரம் தீர்க்கும் இதயமும், வழிமுறை எல்லாம் இஸ்லாமுமாக அப்பரம்பரையினரது வாழ்க்கை அமைந்துள்ளதைக் கண்டு என் பேனா பெருமைமிகு கொள்கிறது.
முக்கியமாக, அடுமக்கண்ணு (அடுமக் கிளியரிங் ஏஜன்சீஸ்) பரம்பரையின் இளைய ஆண் வாரிசான மக்கீன் ஹாஜியார் அவர்களைப் பற்றி இந்த (மானா) மக்கீன் அறிந்த ஒன்றைத் தெரியப்படுத்த வேண்டும்.
அது கொழும்பில் அல்ல. குமரித் தலைநகரில். நான் அங்கே ஆய்வுப் பணிகளில் மூழ்கியிருந்தபொழுது என்னைச் சந்திக்க வந்தவர்களிடம், இந்த நூலின் புரவலராகத் திகழ்கிற ஃபாயிக் மக்கீன் அவர்களைப் பற்றிக் குறிப்பதைக் கடமையாகக் கொண்டேன்.
அச்சமயம், குளச்சல் - மார்த்தாண்டம் இரண்டுக்கும் சொந்தக்காரரான ஸ்"ஃபி ஹனிஃபா ஹாஜி அவர்களும், கோட்டாறு அப்துல் ஜப்பார் அவர்களும் “அந்த மக்கீனுக்கு என்ன உறவு இந்த ஃபாயிக்?’ என்று கேட்டார்கள்.
“எந்த மக்கீன்?’ - என நான் விவரம் தெரியாதவன் போல வினா எழுப்ப -
70 அகவையைக் கடந்த இருவரும் இனிய நினைவலைகளில் மிதந்தனர்.

Page 68
130 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
‘என்றைக்குக் குளச்சலுக்கு வந்தாலும் என்னைக் காணாமல் போனதில்லை. இறையச்சமும், தப்லீகில் ஈடுபாடும் இளகிய இதயமும், சமூகப் பற்றுதலும், கொடைத்தன்மையும் கொண்ட மனிதர் மக்கீன்’ என்றார் ஸ"ஃபி ஹனிஃபா ஹாஜி.
அப்துல் ஜப்பார் ஹாஜியோ அன்னார் நடத்திய தொழிலை வர்ணித்தார்.
‘அந்தக்காலத்தில் இந்தியாவிலிருந்து தூத்துக்குடி வழியாக வருகிற சரக்குகளையும், தனுஷ்கோடி - மன்னார் மார்க்கமாக ரயிலில் கொழும்புக்கு வருகிற சரக்குகளையும் அடுமக் கிளியரிங் கம்பெனிக்காரர்கள் எடுத்துக் கொடுப்பார்கள். அவர்களுடைய சேவை, தொழிலில் நம்பிக்கைத் தன்மை எல்லோராலும் புகழப்பட்டது. அதன் முக்கியப் பங்காளி மக்கீன் ஹாஜியாருக்கு குளச்சலில் ஒரு காலும், கொழும்பில் ஒரு காலும் அவரையெல்லாம் நல்லாவே எனக்குத் தெரியும்’
“அந்த மக்கீன் ஹாஜி இப்பொழுது இருந்தால் வயசு என்னவா இருக்கும்?’
“நிச்சயமாக 85-ஐத் தாண்டும். அது சரி, நீங்க சொல்லுற ஃபாயிக் அவருக்குப் பேரனா இருப்பாரோ?’
நான் சிரித்த சிரிப்பு அந்த அறையைக் குலுக்கியது. எனக்கும் என்னுடன் இருந்த அருமைச் சகோதரர் எம்.ஏ.எஸ். சுலைமான் அவர்களுக்கு மட்டுமே, ஃபாயிக் பேரனா, மகனா என்பது தெரியும்!
நல்லது அபிமானிகளே! நான் மிகவும் பெருமையுடன் எனது புரவலரது தந்தையாரது நிழல் படத்தை நூலின் பின்னட்டையில் பதித்துக் கெளரவித்துள்ளதைக் காண்பீர்களாக. அத்துடன் இந்த நூலுக்காக இலங்கை, அடுமக் கிளியரிங் குடும்பத்தாரது, பிரத்தியேக நிழல் படம் ஒன்றை இதன் கீழ் வழங்கி மகிழ்வடைகிறேன்.

மானாமக்கீன் 131
LLLeLeLeLLeLLLLLLLLeeLLLLLLLLLLLeLeeLeLLLLLLLS
அதே சமயத்தில், தற்சமயம் இலங்கை - கொழும்பில் இக்குடும்பத்தின் மூத்த அங்கத்தவராகவும் நல்ல வழிகாட்டியாகவும் திகழும் (5 பெரியவரையும் அறிமுகப்படுத்திவிட வேண்டும்.
அன்னார் புரவலர் ஃபாயிக் அவர்களது மாமனார் அல்ஹாஜ் ஏ.எம். பாறாக் அவர்கள் ஒரு நல்ல ஆன்மிகவாதி. ஒரு சிறந்த தப்லீக் சேவையாளர் இஸ்லாமிய நூல்களில் பெரும்பாலானவற்றைப் படித்து மனத்தில் பதித்து வைத்திருப்பவர்.
அன்னாரது முதிய வயதிலும் இக்குடும்பத்தார் அனைவருக்கும் ஒரு தோன்றாத் துணையாகச் செயல்படுவதுடன், மேற்குறிப்பிட்ட சகல நிறுவனங்களுக்கும்

Page 69
132 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அவ்வப்போது ஏற்படுகிற கஸ்டம்ஸ் சிக்கல்களையும், பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் மதி நுட்பம் மிகுந்த மாமனிதராகவும் திகழ்கிறார்.
3. 畿
இ*
プ
அன்னார் அடுமக் கண்ணு அவர்களது ஏ.எம். பாறுரக் சகோதரர்.
இனி, நாம் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியது மர்ஹ9ம் அப்துல் ரஹ்மான் அவர்களை.
இப்பெரியாரும் அப்துல் ரகுமானும் இலங்கையுடன் தொழில் தொடர்பு கொண்டவர்களாக விளங்கினார்கள்.
இவர்களே மாலிக் இப்னுதினார் கல் பள்ளியின் தரை தளத்தை அழகுபடுத்த இலங்கையிலிருந்து பீங்கான் ஒடுகள் கொண்டு சென்று பதித்து பங்களிப்புப் புரிந்தவர்கள்.
மர்ஹ9ம் அப்துல் ரஹ்மான், ஒரு மூத்த மகனாலும் இளைய மகனாலும் இன்று குளச்சல் பகுதியில் நினைவு கூரப்படுகிறார்.
அந்த இரு மக்களும் 'எம் ஏஎஸ்’ என அழைக்கப்படுகிற ஹாஜி செய்யது முஹம்மது அவர்கள், ‘ஏ.ஆர்.எம்’ என அழைக்கப்படுகிற முஹியித்தீன் கண்ணு அவர்கள்.
என் சொந்த அனுபவம் ஒன்று: குளச்சல் பேருந்து நிலையத்தில் இறங்கி “எம் ஏ எஸ் வீடு’, ‘ஏ ஆர் எம் வீடு' என்று முச்சக்கர வண்டிக்காரர்களிடம் (ஆட்டோ) சொன்னாலே போதும், அவர்கள் நமக்குக் காட்டுகிற மரியாதையே தனி எந்தப் பேரமும் கிடையாது. கொண்டுபோய் விட்டு விடுகிறார்கள்!
தந்தையார் வழியில் மர்ஹ9ம் ஹாஜி “எம் ஏ எஸ் அவர்களும் 1956 வரை கொழும்புடன் தொடர்பு வைத்து
 
 
 

மானாமக்கீன் 133
“பார்வடிங் ஏஜன்சீஸ்’ நடத்தி நம்பிக்கையான நாணயமான வணிகம் புரிந்தவர்களே.
அவர்களது முக்கிய கிளியரிங் சேவை ஜவுளி
நல்லது. நாம் எம்ஏஎஸ் அவர்களது மற்றொரு பங்களிப்பைப் பார்ப்போம். அன்னாருக்கு சமூக சேவைகள் என்பதும் சர்க்கரை போல. ஒரு பட்டியல் இதோ -
வக்ஃப் போர்டு அட்வைசரிக் கமிட்டி தலைவர் குளச்சல் வீட்டு வசதி தலைவர் - குளச்சல் நகர சபை உறுப்பினர் - குளச்சல் இஸா அதுல் இஸ்லாம் தலைவர்
தந்தை வழியில் ஒரு தனையனும் இப்பொழுது செயல்பட்டு வருகிறார். அவர், முகமது சுஹையில் பீ.ஏ. அவர்கள். தற்சமயம் குளச்சல் ஜமாஅத் செயலாளர். முன்னாள் ஜமாஅத் பொருளாளர், முனிசிபல் கவுன்சிலர் அட்ஹாக் கமிட்டி கன்வீனர்.
இவரது தமையனார் முஹம்மது ஷிப்லி, இளையவர்கள் ஹாஜி முஹம்மது வியாது, முஹம்மது ஷாஃபி, முஹம்மது ஷாஜகான், முஹம்மது சுலைமான் முதலியோர் கொழும்பில் பல வணிகத் தொடர்புகளை வைத்திருக்கிறார்கள்.
இதில் ஜனாப் சுலைமான் அவர்களை என் பேனா எப்படி மறக்கும்? ஆய்வுக்குப் போகும் இடமெல்லாம் உதவிக்கு வந்த தோன்றாத்துணையாயிற்றே?
மேலும் ‘எம்.ஏ.எஸ். அவர்களுக்கு திருமதிகள் ஷம்சுல் ஹிதாயா, ஸ்ரபுன்னிஷா, ஸஹ்ராபானு, ஸ்னூபா என நான்கு பெண் மக்களும் பிறந்துள்ளனர்.
இவ்வளவையும் சொல்லிவிட்டு இம்மக்களைப் பெற்ற மகராசியை அதாவது, ‘எம்ஏஎஸ் அவர்களது துணைவியாரைச் சொல்லாதுவிட முடியுமா?

Page 70
134 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அன்னார் ஆமினா உம்மா. 70
அகவையை நெருங்கும் மாதரசி. திருவனந்தபுரத்து விமானதளத்தில் இறங்கி நகரத்திற்குள் நுழைந்த சில நிமிடங்களில், மணக்காடுவில், மணக்கும் ஆப்பம் சுடச்சுட வைத்துக் கொண்டு காத்திருந்த ‘ஒர் உம்மா’ அவர்கள் எனக்கு!
ஊனா" - என அழைக்கப்பட்ட அகமது கண்ணுவின் அருமந்த புதல்வி அவர்கள். செல்வம் கொழித்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் 10 மக்களைப் பெற்ற மகராசி என மீண்டும் பதிப்பதில் மட்டற்ற மகிழ்வடைகிறது Сшвот.
ஆமினா உம்மா அவர்களது அருமந்த புதல்வர்கள்
LL LAE LkMLL LqLLLLLMLL LqLLMLAL LqLLAEL LqeLCSA *
a
حنغ
羚
3.
鷲 7 ܡ݂ i 猪
t مبهم هم به های مهم هم به همین هم به همه همهمه இடமிருந்து வலமாக அமர்ந்திருப்போர்) ஜனாப் எஸ்.எம். சுஹைல், ஜனாப் எஸ்.எம். வஷிப்லி ஹாஜி எஸ்.எம். ஸியாத், நிற்போர்) ஜனாப்கள், எஸ்.எம். ஷாஜகான், எஸ்.எம். ஷாஃபி எஸ்.எம். சுலைமான்
 
 
 
 
 
 

மானாமக்கீன் 135
‘ஏ ஆர் எம்" - ஒரு சமுதாயக் கண்ணு
இனி நாம் மர்ஹ9ம் அப்துல் ரஹ்மான் அவர்களது இளைய மகனும், “எம் ஏ எஸ்’ அவர்களது தம்பியுமான ஒரு ‘சமுதாயக் கண்ணுவைக் கண்டு களிப்போம்.
அவரும் இலங்கை - ஸரந்தீவு தொடர்பு கொண்டிருந்தவரே! 16-4-1928-ல் பிறந்த அவர்களை ‘கண்ணு என்றும், “ஏ ஆர் எம்’ என்றும் மக்கள் அழைத்தார்கள். மர்ஹ9மான பிறகும் அவ்வாறே அழைத்து மகிழ்கிறார்கள்.
சிறுவயதில் கொழும்பில் தடம்பதித்த அவர்கள், பல ஆண்டுகள் அந்த மண்ணின் மணத்தை நுகர்ந்தார்கள், தொழிலும் செய்தார்கள். y
அதற்குப் பக்கபலமாக அவரது பெரியப்பாவாகிய அடுமக் கண்ணுவின் கடைசி மகன் ஹாஜி முஹம்மது மக்கீன் இருந்தார்கள்.
பின்னர், 1957-ல் குளச்சலுக்குத் திரும்பிய ‘ஏ.ஆர்.எம் அவர்கள் - அந்த 29ஆம் வயதிலிருந்து முஸ்லிம் சமுதாய மேம்பாட்டுக்காக முஸ்லிம் லீகில் கைகோர்த்துக்கொண்டார்.
ஒரே ஆண்டிற்குள் (1958) குமரி மாவட்ட தாய்ச்சபை அமைப்பாளராக கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களினால் நியமனமானார். அமைப்பாளர்களில் அவரே வயதில் குறைந்தவர்.
பல தடவை குமரி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராகக் கடமையாற்றிய ஏ.ஆர்.எம் அவர்கள், ஓய்வுறக்கம் கொள்ளச் செல்கையிலும் (09.01.1984) அப்பதவியிலேயே இருந்து புகழுடம்பு பெற்றார்கள்.

Page 71
136 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
19 ஆண்டுகளுக்கு முன் ‘மணிவிளக்கு’ பெப்ரவரி இதழில் ‘சமுதாயக் கண்ணு’ எனும் தலைப்பில் பின் காணப்படும் குறிப்பொன்றை ‘ஓர் இதயம் பதித்து நெகிழ்ந்தது.
தாய்ச் சபையின் வட்டாரத்திலே அவரை ‘கண்ணு’ என்றுதான் கனிவோடு எல்லோரும் அன்ழப்பார்கள். அந்தப் பெயருக்குரிய கனிவும் விநயமும் அவரிடத்தில் முத்தாக பொதிந்திருந்தன.
இந்தச் சமுதாயத்தின் கண்ணாகத்தான் குமரி மாவட்டத்தில் அவர் உலா வந்து கொண்டிருந்தார்.
சமுதாயம் தழுவிய எந்த பிரச்சனையானாலும் கண்ணுவின் கண்ணில் அது பளிச்செனப்படும்.
எவ்வளவு பரபரப்பான நிகழ்ச்சியாக இருந்தாலும் பணிவே உருவான அவர் மிக அமைதியோடு பிரச்சனைகளை அணுகி அவற்றைத் தீர்க்க ஓயாமல் பாடுபட்டு வந்தார்.
தாம் வாழ்ந்த நிலப்பரப்பிலே ஒரு நல்ல காரியம் முடியவேண்டும் என்பதற்காக தலைநகர் சென்னைக்கு எத்தனை முறை அவர் வந்து சென்றிருக்கிறார் என்று எண்ணிப்பார்த்தால் வியப்படையாமல் இருக்க (tpւգ-եւմո3մ.
அவர் பிறந்த ஊர் குளச்சலில் இருந்து சென்னைக்கு ஒருமுறை வந்து சென்றால் ஓராயிரம் மைல்களாகும். அவர் ஊரில் உயர்நிலைப்பள்ளி அமைக்க - உறவுமுறை முஹல்லாக்களில் ஒற்றுமை நிலைநாட்டப்பட - கலகம் விளைந்த பகுதிகளில் அமைதி ஏற்படுத்த பொதுவே குமரி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் கணக்கில் அடங்காதவை.

மானாமக்கீன் 137
எந்தக் காலத்திலும் குரலை உயர்த்திப் பேசாது - ஆனால் அதே நேரத்தில் தம் உணர்வுகளை அழுத்தமாக வெளிக்காட்டி செயல்பட்டு வந்த சமுதாயக் கண்ணு - குமரி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் ஏ.ஆர்.எம். என அழைக்கப்பட்ட முஹையதீன் கண்ணு ஆவார்.
அறபுக்கடல் அலை ஒசையிடும் குளச்சல் கடற்கரையில் முஸ்லிம் லீக்கின் பெயரால் இரு பெரும் மாநாடுகளை நடத்தி தன் செயல்திறத்தை வெளிப்படுத்தினார்.
குமரி மாவட்டத்தின் 30-க்கும் மேற்பட்ட முஹல்லாக்களும் ஒருங்கிணைந்து பணியாற்றும் இப்பணியில் அந்த ஒற்றுமைக் கயிற்றை வலிமையோடு முறுக்கேறச் செய்யும் சேவையில் தம்மைப் பூரணமாக இணைத்துக் கொண்டார்.
அந்த வரலாற்றின் ஓர் அத்தியாயம் சமுதாயக் கண்ணு ஏ.ஆர். முஹையதீன் கண்ணு அல்லாஹ் அவரை அங்கீகரித்து அருள்வானாக.
- இந்த எழுத்துக்கள் யாருடையதாக இருக்கலாம் என்பதை மிக இலகுவாக தமிழக முஸ்லிம் லீக் அபிமானிகள் உணர்ந்திடுவார்கள்.
இப்படி உணர்ச்சி பூர்வமாக எழுத ஒரு “சிராஜ"ல் மில்லத்’ அவர்களாலேயே இயலும்!
தலைவர், மர்ஹ9ம் அல்லாமா ஆ.கா. அப்துல் ஸ்மத் அவர்கள் எழுதி, பதித்து பத்தொன்பது ஆண்டுகள்! ஏதோ முந்தா நாள் குமரி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் முஹியித்தீன் கண்ணு வபாத்தானது போலவும், நேற்று சிராஜ" மில்லத் இரங்கற் கட்டுரை எழுதியது போலவும், இன்று நாம் படிப்பது போலவும் உணர்வு ஏற்படுகிறது!

Page 72
138 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
சமுதாயத்தின் துர்ப்பாக்கியம், இன்று இருவருமே கட்டாய ஒய்வுறக்கத்தில் உள்ளார்கள்.
மேலும், ‘சமுதாயக் கண்ணு ஏ ஆர் எம் அவர்கள் முஸ்லிம் லீகை குமரியில் கட்டிக் காத்ததுடன் நின்று விடவில்லை.
குளச்சல் முஸ்லிம் முஹல்லத்தின் தலைவர் - செயலாளர் - பொருளாளர் பதவிகளிலும் இருந்த அவர், முஸ்லிம் யங் மேன் அசோசியேசன் (M.Y.M.A.) ஒன்று தமது பிறந்தகத்தில் உருவாகவும் காரணமாக இருந்ததுடன், அதில் ஒரு நூலகம் அமைவதில் தீவிர சிரத்தை கொண்டார்கள். அதற்காகக் கொழும்பிலும் மற்றும் தமிழகத்தின் முக்கிய இடங்களிலும் உதவிகளைப் பெற்றார்கள்.
நாகர் கோவிலில் இன்று சிறப்புடன் திகழும் “இஸ்லாமியக் கலாசாரக் கழகம்’ அமையக் காரணமாக இருந்த முக்கியப் பிரமுகர்களில் அவரும் ஒருவர்.
தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபையின் செயற்குழு உறுப்பினராகவும், இருமுறை மாநில ஹஜ்ஜுக்குழு அங்கத்தவராயும் சேவையாற்றிய பெருமையும் அன்னாருக்கு உண்டு.
அக்காலங்களில் அவர்களது சேவை மக்களுக்கு இரவு
பகல் எந்நேரமும் கிடைத்தது என்று சொல்வார்கள்.
இன்று ‘ஏ ஆர் எம்’ பெயர் சொல்ல முஹம்மது நஜீப் - ஏ.ஆர்.எம். அப்துல் நாசர் - திருமதிகள் நளிபா ஹானிம், நளபீமா ஹானிம் ஆகியவர்களும் உள்ளனர்.
இவர்களில் ஜனாப் ஏ.ஆர்.எம். அப்துல் நாசர், பேராசிரியரும், பிரபல இலக்கியவாதியுமான கலாநிதி (முனைவர்)

மானாமக்கீன் 139
மர்ஹ9ம் கோட்டாறு பஸ்லு முஹியித்தீன் அவர்களது மூத்த மருமகனாவார்.
மேலும் எம் ஏ எஸ் - ஏ ஆர் எம் ஆகியோரது சகோதரி மர்ஹஅம் வியாத்துக்கண்ணு காலமாகிவிட, மற்றொரு சகோதரி திருமதி பல்கீஸ் உம்மா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் இச்சகோதரர்களது குடும்பத்தில் ஒரு முன்னை நாள் சட்டசபை அங்கத்தவரும் (எம்.எல்.ஏ.) இணைந்துள்ளார்.
அவர் வழக்கறிஞர் பி. முஹம்மது இஸ்மாயில் சாஹிப் எம்.ஏ.பீ.எல். அவர்கள் தற்சமயம் அகில இந்திய மதச்சார்பற்ற ஜனதா தள பொதுச்
செயலாளர்களுள் ஒருவர். (இவர்களைப் பற்றி பின்னும் அறிவீர்கள்). ஏ ஆர் எம்’
துணைவியாரது சகோதரரும், எம்ஏஎஸ், ஏஆர்எம் ஆகியோரது தாய்மாமன் மகனாருங்கூட.
இனி நாம், மற்றுமொரு பழம்பெரும் குடும்பத்தைப் பார்க்கப் போகிறோம்.
நன்னி வளாகம் நூர் முஹம்மது
‘நன்னி வளாகம் வீட்டு முதலாளி’ என்று சொல்வார்கள் மர்ஹ9ம் நூர்முஹம்மது அவர்களை,
அக்காலத்தில் இலங்கையுடனான ‘சம்பை (கருவாடு) ஏற்றுமதி வணிகத்தில் தனியிடம் வகித்தார். சிறப்பாகத் தொழில் செய்தார். நாணயமான வியாபாரி எனப் பெயரெடுத்தார்.

Page 73
140 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இந்த இடத்தில் ஒரு சுவையான தகவல்: 'உப்பாவை’ போல இந்த வார்த்தையும் இலங்கை அபிமானிகளுக்குப் புரியாது.
குளச்சல் - தேங்காய்ப்பட்டினம் - இணையம் போன்ற கடற்கரைப் பகுதி இடங்களில் 'சம்பை சர்வ சாதாரணம்.
வேறொன்றும் பெரிய அர்த்தமில்லை. கருவாட்டுக்கே அப்படியொரு அற்புதமான வழக்கு சொல். அக்காலத்தில் குளச்சல் - தேங்காய்ப்பட்டின மக்களுக்கு சம்பையும் சம்பை ஏற்றுமதியும் மிகப் பிரதானமான தொழில்.
நெய்மீன் (அப்படியென்றால் அரக்குளா - வஞ்சிரம்) நெத்தலி - காரை - பாரை - குதிப்பு - கொழுவை என்று வகை வகையான கருவாடுகள் துரத்துக்குடி, கொச்சின் வழியாகக் கொழும்பு போய்ச் சேர்ந்தன.
இலங்கைச் சிங்கள மக்களுக்குக் கருவாடு உணவு நம்முடைய கோழி பிரியாணிக்கு ஒப்பானது. குளச்சல் தேங்காய்ப் பட்டினவாசிகள் அனுப்பிய அரக்குளா நெய்மினும் நெத்தலியும் இல்லாத உணவும் உணவல்ல!
இவரது மகனார் மர்ஹ9ம் என்.எம்.என். உசனார் பிள்ளை அவர்கள் சுமார் 40 ஆண்டுகள் குளச்சல் முஸ்லிம் முஹல்லம் தலைவராகத் திகழ்ந்தார். முனிசிபல் கவுன்சிலராகவும் இருந்தார்.
இவர்களது நீண்டகாலச் சேவையைப் பாராட்டி, 1996-ல் வெள்ளி விழா கண்ட இஸ்லாமிய இளைஞர் முன்னேற்றச் சங்கத்தார் ‘தீன்வழிச் செம்மல்’ விருது வழங்கி கெளரவித்துள்ளார்.

மானாமக்கீன் 141
இவரது மகனாரும், நன்னி வளாகம் முதலாளியின் பேரனுமான, வழக்கறிஞர் ஜனாப் ஒ. நார் முஹம்மது பீ.ஏ. பி.எல். அவர்களே தற்சமயம் குளச்சல் முஹல்லத் தலைவராக வீற்றிருக்கிறார் என்பது பெருமைக்குரிய விடயம்.
*கூனா சேனா மூனா ஹாஜி
கூனா சேனா மூனா’ என்றும் கே.எஸ்.எம் என்றும் அழைக்கப்பட்டார், ஒரு பழம்பெரும் சம்பை ஏற்றுமதி வணிகர்.
இவரது பேரனார் ஜனாப் சாஹஅல் ஹமீது அவர்கள் ஒரு லயன்’ ஆகக் குளச்சலில் வலம் வருகிறார் என்று தகவல்!
வரட்டுமே! ཡོད།
தற்சமயம் தும்பு வியாபாரத்தில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல். ‘ஆனா நூவன்னா’ என்ற மோட்டார் சாகிபு
‘ஆனா நாவன்னா’ என்றும், “மோட்டார் சாகிபு’ என்றும் எல்லோரும் அழைத்ததனால் சொந்தப் பெயரே யாருக்கும் தெரியவில்லை. மறந்துவிட்டார்கள்!
ஆனால் நான் கண்டு பிடித்தேன். அன்னாரது பெயர் அநாஹ" கண்ணு.
இலங்கைக்கு வராத பொழுதிலும் இலங்கை வணிகர்களுடன் முன்னணிச் சம்பை வியாபாரியாகக் குளச்சலில் திகழ்ந்தார்கள். அவருக்கு முஸ்லிம் சமூகத்தில் பிரம்மாண்டமான செல்வாக்கு இருந்தது.
‘ராஜதர்பார் நடத்தினார். இருந்தாலும் ஏழை எளியவர்களுக்கும் அள்ளி வழங்கியவர் ஆனா நூவன்னா’ என்கிறார். 73 வயது சூஃபி ஹனிபா அவர்கள், இவரைப் பற்றி பின் சொல்ல இருக்கிறேன்).

Page 74
142 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இலங்கை வணிகத் தொடர்புகளுடன் குளச்சல் - நாகர்கோவில் பேருந்துப் போக்குவரத்து ஏ.என். டிரான்ஸ்போர்ட் ஆரம்பித்து, ‘மாவட்டத்திலேயே முதல் முஸ்லிம் பஸ் நிறுவனர்' எனப் புகழடைந்தார்.
இவரது தமையனார் ‘மண்டைக்காடு வைத்தியர்’ எனப் புகழ் பெற்றிருந்தாராம். இலங்கையில் காலி செல்லும் வழியில் உள்ள பாணந்துறை புறநகரில் 1950களில் வஃபாத்தாகி அடக்கம் செய்யப்பட்டதாகவும் சூஃபி ஹனிபா தகவல் பெயர் சட்டென்று அவருக்கு நினைவில் வரவில்லை.
நான்கு பங்காளிகள் நடத்திய ‘எஸ்.எம். கம்பெனி"
குளச்சலிலிருந்து இலங்கை வணிகத் தொடர்புகள் கொண்டிருந்த மற்றொரு பிரபல நிறுவனம் எஸ்.எம். கம்பனி இதற்கும் எனக்கும் பெரிய ஒற்றுமை! அது பிறந்த 1937-லேயே நானும் உலகம் பார்த்தேன்!
முதலாவது பங்காளியாக மர்ஹஜூம் எஸ். செய்யத முகம்மது அவர்களும்.
இரண்டாவது பங்காளியாக மர்ஹஜூம் ஒ.எ. நார் முஹம்மது அவர்களும்.
மூன்றாவது பங்காளியாக மர்ஹஅம் எம்.ஏ.பீர் முஹம்மது அவர்களும்.
நான்காவது பங்காளியாக மர்ஹ9ம் கே.எம்.பீர் முஹம்மது ('மீயன்னா பீயன்னா’) அவர்களும் இருந்துள்ளார்கள்.
நான்கு பங்காளிகளும் சிறந்த இலங்கை வியாபாரிகளாக குமரி மாவட்டத்தில் புகழ் பெற்றனர்.

மானாமக்கீன் 143
இவர்களது வாரிசுகளில் பலர் சமூக சேவைகளிலும் கல்வி இலக்கியத் துறைகளிலும், அரசியலிலும் தங்கள் பெயர்களைப் பதித்துள்ளனர்.
மர்ஹ9ம் எஸ்.எம். செய்யது முஹம்மது அவர்கள் 7 ஆண்களையும் 3 பெண் மக்களையும் பிள்ளைச் செல்வங்களாக அடைந்திருந்தார்கள்.
ஜனாப்களான முஹம்மது அப்துல் காதர் - ஷாஹ"ல் ஹமீது - மீரான் மாலிக் முஹம்மது - அஹமது - அப்துல் ரஹீம் - ஃபாத்திமா பீவி - ராஃபியாத் - முஹம்மது ஷாஃஈ - உவைஸ் ஆகியோரில் ஜனாப்கள் ஷாஹ~ல் ஹமீது, அப்துல் ரஹீம் ஆகியோர் பேராசிரியர்களாகப் பரிணமித்துள்ளனர். முன்னையவர் குளச்சல் ஷாஹ"ல் ஹமீது’ என அறியப்படுகிறார். தற்சமயம், சென்னை சீதக்காதி அறக்கட்டளையின் இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையத்தில் சேவை. பேராசிரியர் ரஹீம் புதுக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் ஏ.ஆர்.எம் அவர்களது மருமகனும் ஆவார்.
இரண்டாவது பங்காளி மர்ஹ9ம் ஒ.ஏ. நார் முஹம்மது அவர்களுக்கு பிறந்த எழுவரில் ஜனாப் என்.பீர். முஹம்மது நெய்யாற்றங்கரையில் கருவூலக் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு. இரண்டாமவர் என். ஷாஹ"ல் ஹமீது ஒரு டாக்டர். மூன்றாமவரான திருமதி ஆஸியா ஸைய்யத் அவர்களது புதல்வரே, 'ஆனந்த விகடன்’ மூலம் அறியப்பட்டுள்ள ‘குளச்சல் சித்தீக் ஐஸ்வர்யன்’! 2002-ல் ‘மணிச்சுடர் நடத்திய சிறுகதைப் போட்டியிலும் (‘மக்கத்து ஜம் ஜம் நீரும் பாண்டிபுரத்து நீர்மோரும்’) பத்தாயிரம் முதல் பரிசு பெற்றுள்ளார். இயற்பெயர் சாதிக். மற்றும், என். இஸ்பஹானி முஸ்லிம் யூத் பெடரேசன் செயற்குழு உறுப்பினருள் ஒருவராகவும், குளச்சல்

Page 75
144 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
ஜமாஅத் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர்களில் கடைசியானவர் ஜனாப் என். தாஸிம் ஒரு பி.எஸ்சி. பட்டதாரி.
மூன்றாவது பங்காளி மர்ஹ9ம் எம்.ஏ. பீர் முஹம்மது அவர்களது வாரிசான ஜனாப் பி.எம். அப்துல் காதர் அவர்கள் கொழும்பு, ஸாஹிராக் கல்லூரி பழைய மாணவர். ஊர் ஜமாஅத்தினதும் நகர முஸ்லிம் லீக்கினதும் செயலாளராக சேவையாற்றி ஒரு நல்ல சமூக சேவகராகப் பரிணமித்துள்ளார். இவரது வஃபாத்து ஒரு ஜ"ம்ஆவின் பொழுது, தக்பீர் நிலையில் ஏற்பட்டதென்பதை இன்றும் மக்கள் நினைவு கூர்ந்து புல்லரித்துப் போகின்றனர்.
நான்காவது பங்காளியான 'மீயன்னா பீயன்னா’ என்ற கே.எம்.பீர் முஹம்மது அவர்களது பிள்ளைகளில் நால்வரில் மூத்தவர், ஜனாப் பீ. முஹம்மது இஸ்மாயில் எம்.ஏ. பி.எல். முன்னை நாள் சட்டசபை உறுப்பினர். அவர்களைப் பற்றிய ஒரு குறிப்பை, குளச்சல் இஸ்லாமிய இளைஞர் முன்னேற்றச் சங்கத்தார் 1996-ல் வெளியிட்ட ஒரு வெள்ளி விழா மலரில் இப்படி கண்டேன்.
“தாயார், குளச்சலில் பாரம்பரியமிக்க ஆனா கானா குடும்பத்தைச் சார்ந்தவர்கள். தந்தை, சிறந்த வியாபாரி. குளச்சல் முஹல்லத்தில் முதல் பட்டதாரியென்ற பெருமை அவருக்குண்டு. குளச்சல் முஹல்லத் தலைவராகவும் இருந்துள்ளார்கள். பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர்கள். தமிழகத்தில் வாழும் எளிமையான வாழ்க்கை நடத்தக்கூடிய அரசியல்வாதி. குமரி மாவட்டத்தில் ஏன் தமிழகத்தினுடைய எல்லா அரசியல் கட்சிகளாலும் தூய்மையானவர் என்ற பெயரைப் பெற்றவர். நல்ல வழக்கறிஞர். எல்லா மக்களிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். பெருந்தலைவர் காமராஜரின் பேரன்பைப் பெற்றவர்.

மானாமக்கீன் 145
இதில் காணப்படுகிற ‘அரசியலில் தாய்மையானவர்’ என்ற வரி என் பேனாவை இன்னும் அதிசயத்திற்குள்ளாக்கி வைத்துள்ளது. w
மேற்படி இ. இ. மு. சங்கம், அதன் ஆலோனைக் குழுத் தலைவர் ஜனாப் பி.எம். அப்துல் கரீம் அனுசரணையில் 1996-ல் ‘தீன் வழிச் செம்மல்’ விருது வழங்கிச் சிறப்பித்தது மிகமிகச் சரியானதே!
தற்சமயம், அனைத்திந்திய மதச்சார்பற்ற ஜனதா தளப் பொதுச் செயலர்களில் ஒருவராகவும் (முன்னர் அ.இ. செயற்குழு உறுப்பினர்) குளச்சல் ஜமாஅத் தனித்துவ தீர்வுக்குழு (அட்ஹாக் கமிட்டி) அமைப்பாளராகவும் செயல்பட்டு தந்தை புகழ் நிலை நாட்டி வருகிறார்.
மேலும், முன் நாம் அறிமுகப்படுத்திக் கொண்ட எம்ஏஎஸ். ஏஆர்எம் ஆகியோரது தாய்மாமன் மகனும் ஒரு ‘சமுதாயக் கண்ணுவாகிய மர்ஹஜூம் ஏ.ஆர்.எம். அவர்களது துணைவியாரது உடன் பிறப்புமாவார்.
இவருக்கு அடுத்த இரு சகோதரர்களான ஹாஜி பி. சைய்யது முஹம்மது, பீ.இ. ஜனாப் பி. முஹம்மது அப்துல் காதர் பீ.இ. ஆகியோர் பொறியாளர்களாக ஜெர்மனியிலும் அபூதாபியிலும் உள்ளனர்.
கடைசியானவர் ஹாஜி பி. ஸ்க்கரிய்யா எம்.எஸ்சி.
விவசாயத் துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.
73 - வயது வாலிபர் சூஃபி ‘ஹனிஃபா’!
வயதில் மூத்தவர்களை அவர்கள் இருக்கும் இடம் போய் நேர்முகம் காண்பதுதான் சங்கையானது. எனக்கு அந்தக் கடமையைச் செய்ய விடவில்லை இந்த “வாலிபர்’!

Page 76
146 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
円 சூஃபி ஹனீஃபா என அறியப்பட்ட ஏ.எஸ்.எம். ஹனிபா ஹாஜி அவர்கள் நான் இருந்த இடம் நோக்கி - - நாகர்கோவிலுக்கே வந்துவிட்டார்கள்!
இவர்களது தந்தையார் செய்யது முஹம்மது வசித்த குளச்சல் மேற்கு வீட்டில் ஷெய்க் ஒருவர் தங்கி இருந்தார்களாம். அவர்கள் சூஃபித் தன்மை வாய்ந்தவர்களாம். அந்த வீடு சூஃபி வீடு' என பெயர் பெற, அதே இப்பொழுது 73 வயது பெரியவர் ஹனீபா அவர்களுடனும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
இவருடைய தந்தையார் அடிக்கடி தொழில் ரீதியில் இலங்கை வந்து செல்பவர். ‘சம்பை (கருவாடு)தான் பிரதான வணிகம். ‘எட்டுக் குதிரை பராமரித்துப் பார்த்தார்’ என அவர் பெயர் பெற்றிருந்தார்.
தந்தையாருக்கு பிறகு 1948லிருந்து மகனாருடைய இலங்கை தொடர்புகள் ஒரு பிரபலமான ஏ.பீ.எம். நூஹ" அவர்களது நிறுவனங்களுடன் பின்னிப் பிணைந்திருந்தது. (இந்த ‘கண்டி ராஜா’ பற்றிய தகவல்கள் தேங்காய்ப்பட்டினப் பகுதியில் இடம்பெற இருக்கிறது.)
அச்சமயம், இலங்கை முஸ்லிம் லீக் தலைவர் டாக்டர் எம்.சி.எம். கலீல் அவர்கள் மீது கொண்டிருந்த பற்றுதல், முஸ்லிம் லீகின் அபிமானியாக்கியது. தமிழக முஸ்லிம் லீகுடன் ஒட்டி உறவாடச் செய்தது. இதை எழுதும் நேரத்திலும் ‘சூஃபி” ஹனீபா ஹாஜி குமரி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர். அப்பதவிக்கு மிகப் பொருத்தமான மனிதர்.
கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் என்னுடன் செலவிட்டு ஆய்வுப்பணிக்குத் தகவல்களை அள்ளி
 
 

மானாமக்கீன் 147
வழங்கினார்கள். விடைபெறும் பொழுது ஒரு சிறு சன்மானத்தை வலுக்கட்டாயமாக வழங்கி “இது உங்கள் புத்தகத்திற்கு அட்வான்ஸ்’ என்றார்கள். அந்நிகழ்வை எந்த எழுத்தாளனும் மறக்கமாட்டான். (அட்வான்ஸ் எனது நிழலால் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது)
4 ஆண்களையும் (ஜனாப்கள் ஷாஜஹான் - ஷாஹ"ல் ஹமீது - செய்யது முஹம்மத - முபாரக் மொஹிதீன்) 3 பெண்களையும் பிள்ளைச் செல்வங்களாக அடைந்திருக்கும் ஸ"ஃபி ஹனீஃபா ஹாஜி தற்சமயம் மார்த்தாண்டம் ஊரில் வசிப்பு மூச்சு முழுவதும் முஸ்லிம் லீக் என்பதாக இருக்கிறது.
மர்ஹ"ம் வி.எம். செய்யது முஹம்மது
குளச்சல் - இலங்கை வணிகத் தொடர்புகள் கொண்டிருந்தவர். ஜமாஅத்தின் முன்னாள் செயலாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
அன்னாரது புதல்வர் வி.எம்.எஸ். கான் குளச்சல் ஜமாஅத் - குமரி மாவட்ட முஸ்லிம் லீக் - குமரி மாவட்ட முஸ்லிம் கூட்டமைப்பு ஆகியவற்றின் முன்னாள் தலைவராக ஒவ்வொரு காலகட்டத்திலும் கடமையாற்றி, தந்தையாரின் சேவைகளைத் தொடர்ந்துள்ளார். ஏ.என். பஸ் போக்குவரத்து உரிமையாளர் அ. நூஹ"க்கண்ணின் மகள் வழிப் பேரன்.
மர்ஹ"ம் ஹாஜி வி.எம்.ஸால்தான் கண்ணு
குளச்சல் - இலங்கை வர்த்தகத்தால் உயர்ந்த மற்றுமொருவர்.
அன்னாரது வாரிசுகளில் ஒருவரான ஜனாப் எஸ் நார் முஹம்மது குளச்சல் முஹல்லம் முன்னாள் செயலாளராகும்.

Page 77
148 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
*மரிச்சான்’ சாஹிபுவும் அவுலாப்பிள்ளையும்
இதுவரை நாம், அறிமுகப்படுத்திக் கொண்ட அனைவரும் ‘சம்பை என்கிற கருவாடு வணிகத்தில் "விண்ணர்களாகத் திகழ்ந்திருந்தனர்.
விசேடமாக இன்னும் இருவர் வேறொரு விதத்தில் இக்கருவாடு வியாபாரத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தனர்.
அவர்கள் - முஹம்மது கண்ணு என்ற மரிச்சான் சாஹிபும், அவுலாப் பிள்ளை சாஹிபும் ஆவர்.
குளச்சலின் மைந்தர்களான இவர்கள் அக்காலத்தில் கொழும்பின் பிரபல கருவாட்டுக் கடைகளாக விளங்கிய கேரளத்து தானா மூனா கம்பனி, பி.பீ. குஞ்சு மூசா கம்பனி ஆகியவற்றில் பிரதான விற்பனை முகவர்களாக (Sales Managers) Saspiss60Ts.
இவர்களது திறமையைப் பயன்படுத்தியே அந்நிறுவனங்கள் செல்வம் சேர்த்தன என்பதில் எவ்விதத் தவறும் இருக்க முடியாது.
தற்சமயம் குளச்சலில் பழைய பருத்திவிளை வீட்டில், “மரிச்சான் சாஹிபுவின் வளர்ப்பு மகனார் ஜனாப் என்.எஸ். ஹமீத் அவர்களைக் காண முடிகிறது.
அதே சமயத்தில், குளச்சல் முன்னைநாள் இளைஞர் முன்னேற்றச் சங்கத் தலைவரும், இப்போதைய ஆலோசனைக்குழுத் தலைவருமாகிய ஜனாப் பி.எம். அப்துல் கரீம் அவர்களது அன்னையாரது பெரிய தந்தையும் ஆவார். (கரீம் குடும்பத்தார் குறிப்புக்கள் தேங்காய்ப்பட்டினப் பகுதியில் - அடுத்த அத்தியாயம் - இடம்பெறுகின்றன).
இதேபோல அவுலாப் பிள்ளை ஸாஹிப் புகழ் பரப்ப இப்பொழுது குளச்சலில், அ.தி.மு.க. பிரமுகர் எஸ்.எம். பிள்ளை வாழ்கிறார்.

மானாமக்கீன் 149
இவரது ‘உப்பா’வே (தாயாரின் தந்தை) அவுலாப் பிள்ளை ஸாஹிப் அவர்கள்.
காஷியர் எம்.ஏ. முஹம்மது கண்ணு
ஒரு தலைசிறந்த நிறுவனமாகத் திகழ்ந்த ஏ.பி.எம். நாஹ"வில் காஷியராகக் கடமை புரிந்த எம்.ஏ. முஹம்மது கண்ணு தேங்காய்ப்பட்டினக்காரராக இருந்து குளச்சல் வாசியானார். (திருமணத்தின் மூலம்).
நூஹ" நிறுவனத்தின் அஸ்தமனத்தின் பின் இறுதி மூச்சு வரையில் - மரணிக்கும் சமயத்திலும் - சமூக உணர்வுடன் சமூகத்திற்காக தோள் கொடுத்தவர் என வர்ணிக்கப்படுகின்றார்.
மறைவு 14.22001ல் 75ஆம் அகவையில்.
இவர், இரு தடவை குளச்சல் ஜமாஅத் தலைவராகவும், குமரி மாவட்ட ஜமாஅத் கூட்டமைப்பின் அமைப்பாளராகவும் மாவட்ட ஜமாஅத் தலைவராகவும் குளச்சல் நகர இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகவும் திகழ்ந்துள்ளார்.
அன்னாரது புதல்வர் ஜனாப் எம்.ஏ.எம். பாறாக் ஜமாஅத் செயற்குழு அங்கத்தவராக உள்ளார்.
இனி நாம், கருவாட்டு வணிகம் தவிர்த்த, வேறு தொழில்களில் ஈடுபட்ட ஒரு சில குளச்சல்வாசிகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.
மர்ஹ9ம் மீரான் மைதீன் ஹாஜியார்
கொழும்பில் ஆரம்பத்தில் பெட்டிக்கடை வைத்து வளர்ந்து வாழ்க்கையில் உயர்ந்த ஒருவர் மீரான் மைதீன் ஹாஜியார். தாயகம் திரும்பி தமது குளச்சல் மண்ணில் தங்கு விடுதி ஒன்று நடத்தியும், நாகர்கோவிலில் சென்ட்ரல் உணவு

Page 78
150 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
விடுதியுடன் தங்கு விடுதி அமைத்தும் தொழில் நடத்தினார். அன்னார், தமது காலத்திற்குப் பிறகும் பெயர் நிலைக்க நல்ல காரியம் ஒன்றைச் செய்து மறைந்துள்ளார்.
அதுவே, ‘மீரானியாப் பள்ளிவாசல்!” குளச்சல், அண்ணா சிலை அமைந்துள்ள ஜங்சனில் அவர் சொந்த முயற்சியால் நிர்மாணித்துள்ள அப்பள்ளிவாசலில், அங்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் அபிமானிகள் முகம் பதித்திடத் தவறக்கூடாது. தற்சமயம் குடும்பத்தார் நிர்வகித்து வருகிறார்கள்.
‘சூனா - மூனா? - துனா மீயன்னா"
இந்தப் பெயர்களால் அழைக்கப்படும் இரு சகோதரர்கள் ஒட்டல் நடத்திப் புகழடைந்துள்ளனர்.
இவர்களது தேனீர்க்கடை (அல்ல, அல்ல, சாயாக்கடை) கொழும்பு, 2ஆம் குறுக்குத்தெரு சம்மாங்கோட்டுப் பள்ளிவாசலுக்குப் பக்கம் இருந்ததாகவும் எனக்குத் தகவல்.
இவர்கள் ஒருவரது வாரிசான ஜனாப் எஸ்.எம். சாஹ"ல் ஹமீது ஆரம்பகால தி.மு.க. முன்னணித் தலைவர். அக்கட்சியின் வளர்ச்சிக்காக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை குளச்சலுக்குக் கூட்டிவந்து நாடகம் நடத்தியவர். அண்ணா - கலைஞர் முதலானோரின் அன்பைப் பெற்றவர்.
மற்றொரு வாரிசான ஜனாப் எஸ்.எம். ஸஹாப்தீன் நாகர்கோவிலில் தொழில் நடத்துவதாகவும் தெரிகிறது. ‘மூன்று வீரர்கள் ஸ்டேசன் ஒட்டலில்
கொழும்பில் ‘கொம்பனித்தெரு’ என்றொரு இடம். Slave Island என்றான் ஆங்கிலேயன். இங்கு எல்லா இன மக்களும் வாழ்ந்தனர். இப்பொழுதும் குறைவில்லை. முக்கியமாக மலாய் இன முஸ்லிம்கள் அதிகம். அக்காலங்களில்

LortsoTTLDöésüT 151
பணம் லேவாதேவி செய்யும் 'காபூலி வாலா’க்களும் இருந்திருக்கிறார்கள். இங்கே “குமரி’யும் இல்லாமல் போவாளா? குளச்சல், தேங்காய்ப்பட்டின மைந்தர்களும் இருந்தனர்.
இங்கே தேங்காய்ப் பட்டினக்காரர் ஒருவருக்கு "ஸ்டேசன் ஒட்டல்’ என்றே ஒன்று இருந்தது. (மேலும் தகவல்களை அடுத்த தேங்காய்பட்டின ஏட்டில் தருவேன். பொறுத்திருங்கள்).
அந்த ‘ஆனானப்பட்ட ஒட்டலில், குளச்சல் வீராதிவீரர்கள் மூவர் இருந்தனர்!
அங்கே அவர்கள் என்ன செய்தார்கள்? ஒருவர், ஜனாப் அலியார் சாகிப் நீண்டகாலம் நிறுவனருக்கு நிர்வாகத்தில் உதவினார். ஊர் திரும்பிய பிறகு, தி.மு.க. பிரமுகரானார். நகரச் செயலாளராக பல காலம் பணியாற்றினார். தற்போது இவரது மகனாரை குளச்சல் நகர் மன்றத் தலைவராக (Municipal Chairman) unts iSCpTib.
மற்றவர், இக்பால் தெருவில் வசித்துக் கொண்டிருக்கும் ஜனாப் முஹம்மது கண்ணு ஆசான்! மேற்படி ஒட்டலில் கைதேர்ந்த ஆப்பம் மாஸ்டர்! இவர் சுடும் சுவைமிகு ஆப்பத்திற்குக் காலைவேளையில் ஒரு பெரும் கூட்டமே இருக்குமாம்!
இன்னொருவர், காமராஜ் சாலையில் வசிக்கும் ஜனாப் அபூபக்கர் அவர்கள். ஒட்டலில் உதவியாளராக ஒடியாடி பணியாற்றி நல்ல பெயர் எடுத்தவர்.
குறிப்பிடத்தக்க வேறு சிலர்.
இலங்கையுடன் தொடர்பு வைத்திருந்த குளச்சல்
வாசிகளில் குறிப்பிடத்தக்கவர்களாக இன்னும் சிலரது பெயர்களைப் பதிவு செய்கிறேன்.

Page 79
452 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
C9 *குளச்சல் பூதார் வீடு’ ஹஸன் சாஹிப், இவர்களது புதல்வர்கள் கரீம் சாஹிப் சகோதரர்கள் கொழும்பு - 14 அவ்வல்ஸாலிய்யா வீதியில் வதிவிடம். கிளியரிங் ஏஜெண்டாக விளங்கி தற்சமயம் வெளிநாட்டில். C9 ஜனாப் என்.எஸ். ஹமீது, தற்சமயம், குதுபிய்யத் மற்றும் பதர் மெளலூத் அறநிறுவன அமைப்பாளர்களுள் ஒருவர். C9 ஜனாப்கள், ஹாஜி ஏ. சாஹ"ல் ஹமீத், கே.எம். அபூபக்கர் ஆகியோர் தற்சமயம் மேற்படி அமைப்பில் செயற்குழு உறுப்பினர்கள்.
கொழும்பில் அறம் வளர்க்கும் குளச்சல் ஆலிம்
காயல்பட்டினம் மஹ்ழரா தயாரிப்பு, குளச்சல் இளப்பவிளை மவ்லவி ஜே.எம். ஜைனுல் ஆப்தீன் அவர்கள்.
இளவயது (37) ஆலிமான இவர், எம். ஜவ்ஃபர் - ஏ. முஹம்மது பீவி தம்பதியரது மகனாவார். முதல் ஆசிரியப்பணி நாகூர், அல் - ஜாமிஅதுல் ஹமீதிய்யா அறபுக்கல்லூரியில் - 23ஆவது அகவையில், அத்துடன் இரு பள்ளிவாசல்களில் இமாம். பின், கீழக்கரை ஜாமிஆ அருளிலிய்யாவிலும் (1992 - 1996), திருவிதாங்கோடு (குமரி மாவட்டம்) அல்-ஜாமிஉல் அன்வர் அறபுக் கல்லூரியிலும் (1997 - 2000) பேராசிரியர் பணி.
தற்சமயம், இந்தியாவின் அந்தருத் தீவைச் சேர்ந்த அஷ் - ஷெய்ச் அப்துர் ரஷித் தங்ங்ஸ் கொழும்பு - தெஹிவளை நகரில் நிர்மாணித்திருக்கும் அல்-ஜாமிஅதுல் ஹவ்திய்யா அறபுக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ஐக்கிய அறபு அமீரகத்தின் இந்திய முஸ்லிம் பேரவையின் அழைப்பில் சிறப்புப் பேச்சாளராகச் சென்று, அபூதாபி - துபை - ஸார்ஜா - அல்ஜன் ஆகிய நகரங்களில் சொல்லமுதம் வழங்கி முத்திரை பதித்த இவர், இலங்கையில்

மானாமக்கீன் 153
மூன்று ஆண்டுகளைக் கழித்த பிறகும் இலைமறைத்த கனியாகவே உள்ளார். யார் செய்த குற்றமோ?
ஓ! மறந்தேன். 5 சகோதரர்கள், 4 சகோதரிகளுடன் பிறந்த மவ்லவி ஜைனுல் ஆப்தீன் அவர்கள், தேங்காய்ப்பட்டினத்தில் துணைவியாரை (திருமதி நுஸையா) பெற்று, ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் தந்தையாக உள்ளார்.
இவரது சேவை இலங்கைக்குத் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துகிறது பேனா,
- இவ்வாறாக என் ஆய்வுத் தேடலில் என் சக்திக்கும் நேரத்திற்கும் ஒத்து வந்த வரையில் குளச்சல் - இலங்கைத் தொடர்புகளைத் தந்திருக்கின்றேன். என் பதிவில் வேறுபலர் விடுபட்டிருந்தால் அவர்களும் அவர்கள்தம் குடும்பத்தினரும் மன்னிப்புத் தந்து விவரங்களை உடன் அனுப்பித் தரவேண்டும். இருக்கவே இருக்கிறது இரண்டாவது பாகம்!
இனி, நான் எங்கே பயணம்?
ஒரு பட்டினம்’ நோக்கிப் பறக்க போகின்றேன்.
*பட்டணம்தான் போகலாமடி பொம்பள’ - என்று அக்காலத்தில் ஒரு பிரபலமான பாட்டு.
அதுதான் நினைவுக்கு வருகிறது இந்தப் பட்டினத்தை நினைத்தாலும்! ஆனால் என் நிழலையும் (துணைவியார்) அழைத்துச் செல்ல அருகில் இல்லை. ஆகவே உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல விருப்பம். வருவீர்கள் அல்லவா!
அதற்குமுன் இரு பழம்பெரும் பள்ளிவாசல்களின் தரிசனம் உங்களுக்கு.

Page 80
குளச்சல் மாலிக் இப்னு தினார் பள்ளிவாசல்
 

155
Ullas ILDIT: Litt 600TLost:
“கடற்கரையில் அமைந்த ஊர் பட்டினமாகும். சென்னைப் பட்டினம், நாகப்பட்டினம், விசாகப் பட்டினம், காவிரிப்பூம் பட்டினம் - என்பவை எடுத்துக்காட்டுகள்.
சென்னைப் பட்டணம், நாகப்பட்டனம் என்பவை தவறான சொற்கள்.
u l-tóOOTé QuO நகரைக் குறிக்குமாயினும் பட்டினத்தைப் பட்டணமாக்குதல் தவறு.”
கவிக்கோ - ஞானச் செல்வன் (தமிழ் அறிவோம்’
நூல். 12-ஆம் பக்கம்
பட்டினமாம் பட்டினம்!
தெக்கே பட்டினம்!
தேங்காய்ப் பட்டினம்!
இரண்டையும் கேட்கும்பொழுது பேனாவுக்கு ஒரு கிளுகிளுப்பு.
இருக்காதா பின்னே! இலக்கியத்தைத் தொடப் போகிறதே!
இந்தப் பட்டினம், நம் காலத்து சாஹித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்களது படைப்புக்களில் ‘தென்பத்தன்” என்று எப்படி எப்படியெல்லாம் வருகிறது. என்னென்ன பாடுபடுகிறது!

Page 81
156 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அவர் பிறந்த மண்ணில் அவரது தந்தையாரை அறிய நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருப்பதை என் அதிர்ஷ்டம் என்பதா பாக்கியம் என்பதா?
முதலில் பட்டினத்தின் பழம் வரலாற்றை ஒரு 'கழுகுப் பார்வை' பார்ப்போம்.
இதில், எனக்கு மீண்டும் ‘அபூ ஹாஷிமா உதவி. அவரது தொகுப்பான ‘பெட்டகம்’ நூலின் 189-190ஆம் பக்கங்களில் காணக்கிடைப்பதில் இருந்து நான் வழங்கும் தகவல்கள் இப்படி:
குமரி மாவட்ட மேற்கு கடற்கரையோரமாக அமைந்திருக்கின்ற எழில் கொஞ்சும் அழகிய ஊர் தேங்காய்ப்பட்டினம். கடற்கரை மிக அழகானது. பண்டைய தமிழகத்தின் நாற்பத்தொன்பது சிறு நாடுகளில் ஒன்றான தெங்கநாட்டின் தலைநகராக அமைந்திருந்த சிறப்பு பெற்ற ஊராகும் இது குமரிக் கடலில் ஏற்பட்ட கடற்கோளுக்குப் பின் வேணாட்டுடன்இணைந்து சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்தது அரபு வரலாற்றாசிரியர்கள் இவ்வூரை 'தென்பத்தன்' என்று அழைக்கின்றனர். 'குழந்தை நகர்’ என்று இதனை குஞ்சு மூசுப்புலவர் பாடுகின்றார். ‘தென்பட்டணம்’ என்று பாலகவி பக்கீர் ஸாஹிப் புலவர் பாடுகின்றார். சேர நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள துறைமுகப் பட்டினமாக இது திகழ்ந்த காரணத்தால் மலையாள வரலாற்றாசிரியர்கள் இதனை 'தெக்கேபட்டணம்’ என்று குறிப்பிடுகின்றார்கள்.
இந்தியாவில் இஸ்லாம் பரவிய காலத்திலேயே இவ்வூரிலும் இஸ்லாம் தோன்றிய காரணத்தால் மக்கள் இஸ்லாத்தின் அறநெறிகளை அறிந்தவர்களாக

மானாமக்கீன் 157
வாழ்வதில் வியப்பில்லை. இம்மண் பல மார்க்க மேதைகளை ஈன்றிருக்கின்றது. இங்குள்ள ஜும்ஆப் பள்ளியின் உட்புறம் அமைந்திருக்கின்ற கல்லுப்பள்ளி மாபெரும் இறைநேசச் செல்வரான மாலிக்இப்னுதினார் அவர்களால் கட்டப்பட்ட பள்ளியாகும். மாற்றுமத அன்பர்களும் நிரம்பப்பெற்ற ஊரில் மக்கள் நடத்தும் விழாக்கள் சமய நல்லிணக்க விழாக்களாகவே அமைகின்றன.
- இத்தகையப் புகழ் மிகுந்த ஊருக்கும் இலங்கைக்கும் - முக்கியமாக கொழும்பு மாநகருக்கும் - அதிலும் மிக முக்கியமாக கொழும்பு - 12 பகுதிக்கும் உள்ள நெருக்கம் அவ்வளவு இவ்வளவல்ல.
எனது சிறு வயதுக் காலம் கொழும்பு - 12லேயே கழிந்தது. எங்கள் தந்தையார் ஹல்ஸ்டாப் (கோட்டடி) வீதி 86ஆம் இலக்க இல்லத்தை வாடகைக்கு எடுத்து எங்களை வளர்த்தார். அந்த வீதியைச் சுற்றிலும் இருந்த தெருக்கள் - தட்டாரத் தெரு (இப்பொழுது பண்டாரநாயக்க மாவத்தை), புதுக்கடை (இப்பொழுது அப்துல் ஹமீத் வீதி), புதிய சோனகர் தெரு, மெசன்ஜர் வீதி (கோட்டாறு முஹியித்தீன் தைக்கியா இருக்கும் இடம்), குமார வீதி (புறக்கோட்டை - பெட்டாவில் உள்ளதல்ல. அது பிரின்ஸ் ஸ்ட்ரீட் இது பிரின்ஸஸ் கேட்) இப்படி அமைந்திருந்தன.
இவை அத்தனையிலும் ஆயிரமாயிரமாக நிறைந்திருந்தவர்கள் பட்டினத்துக்காரர்களே!
தொகை ஆயிரக் கணக்கில்தான் நூற்றுக்கணக்கில் அல்ல.
இவர்களில் ஒரு பகுதியினர் செய்த தொழிலில் முதன்மை பெற்றது, முழு இலங்கைக்குமான சம்பை (கருவாடு)

Page 82
158 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
வணிகம் என்றாலும் பெரும்பாலானோர், சாயாக் கடைகளிலும் பல சரக்கு கடைகளிலும்!
கொழும்பு - 12ல் தொழிலும் நடத்தினார்கள். குடும்பமும் வைத்துக்கொண்டார்கள்.
உண்மை! இன்றைக்கும் சந்ததியினர் துள்ளித் திரிகிறார்கள்!
இந்தப் பட்டினத்துக்காரர்களின் கொழும்புத் தொடர்புகளை நான் ஒரு மாபெரும் வணிகப் பெருமகனிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.
ለ ஆனால், அவரை இந்த ஊரில் நுழைப்பது சரியா தப்பா என்பதில் தடுமாற்றம் இருக்கிறது.
அபிமானிகள் தொடர்ந்து படித்து முடிவுக்கு வந்திடுக.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத *கண்டி ராஜா” மகன்
இந்தக் ‘கண்டி ராஜா' மகனை குமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான முஸ்லிம் ஊர்கள் பல தங்கள் மண்ணுடன் இணைத்துப் பேசுகின்றன. புகழ்ந்து தள்ளுகின்றன.
அவர் பிறந்தது பொழியூர் என்று ஒருவரும், புத்தம்துறை என்று மற்றவரும், தாயார் பிறப்பு இணையம் என்பதால் அங்கே இரண்டறக் கலந்திருந்தார் என இன்னொருவரும், குளச்சலுக்கு நெருக்கம், தேங்காய்ப்பட்டினத்து வணிக மைந்தர் என வேறு பலரும் பலவிதமான தகவல்கள்.
சூஃபி ஏ.எஸ்.எம். ஹனிபா (குமரி முஸ்லிம் லீக் தலைவர்) தோப்பில் முஹம்மது மீரான் போன்ற முக்கியமானவர்கள் அவரைப் பட்டினத்துடனேயே இணைத்துத் தகவல்கள் தந்துள்ளனர்.

மானாமக்கீன் 159
ஆகவே, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’
இலங்கை மலையகத்தின் எழில் கொஞ்சும் நகரமான கண்டியில் அவரது தந்தையார் பீரு முஹம்மது அரிசிக் கடைதான் வைத்திருந்தார். ஆனால் குமரி மக்கள் ‘கண்டி ராஜா என அழைத்துக் கெளரவித்தனர். அத்தனைச் செல்வாக்கு.
பிரபல கார்கோபோட் டிஸ்பாட்ச் கம்பனியின் கரிமடுவம் ஏஜெண்டாகவும் இருந்து ராஜ தர்பார் நடத்தி இருக்கிறார்.
தந்தையாருக்கு சற்றும் தரம் தாளாத தனையனாக பிறந்தார் நூஹ". பிற்காலத்தில் ஏ.பி.எம். நாஹ" என அறியப்பட்டார். மூன்று சகோதரர்களுக்கு மூத்தவராக பிறந்தார். இவரது எழுச்சியையும் வீழ்ச்சியையும் (எதிர்பாராத மரணத்தால்)
எழுத இந்த நூலின் அளவுக்கு இன்னொரு நூல் தேவைப்படும்.
ஆகவே, அங்குமிங்குமாகவே “கொறிக்கத்தான்’ இயலும்.
ஒரு கோட்டாறு மேனா ஹாஜியார் அப்பா அவர்களால் எவ்வாறு ஆன்மிகமும், தரீக்காவும் தழைத்து அதன் கேந்திர நிலையமாக மஸ்ஜித் முஹியித்தீன் கொழும்பு - 12, மெசன்ஜர் வீதி, 27ஆம் இலக்கத்தில் நிலைப்பெற்றதோ அவ்வாறே -
மெசன்ஜர் வீதி 91 அல்லது 130-ஆம் இலக்கத்தில் குமரி மண்ணின் மாபெரும் வணிகராக மர்ஹ"ம் நூஹ" உருவெடுத்தார். அங்கே குளுடோ ஹவுஸ் மென்பான நிறுவனம் ஆரம்பமானது. கொழும்புக்கு வெளியே திவுளுப்பிடியவில், “YE PEE YEM’ தேங்காய் எண்ணெய் ஆலை இயங்கியது. கடை 5-ஆம் குறுக்குத் தெருவில்.

Page 83
160 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
பின்னர், 139ஆம் இலக்க பேங்க்ஸால் வீதியில் மாபெரும் சம்பை (கருவாடு) இறக்குமதி நிலையமும் விற்பனைக்கூடமுமாக ஆகி, மர்ஹ"ம் நூஹ"வின் வணிக முயற்சிகளை உச்சாணிக்குக் கொண்டு போயிற்று. தேயிலை வியாபாரமும் இருந்ததாம்!
இந்த 139ஆம் இலக்கக் கிட்டங்கி வரலாற்றுப் புகழ் மிக்கது.
அந்தப் புகழ் எங்கிருந்து ஏற்பட்டுள்ளது என்றால் கிழக்கரை.
கப்பல்கள் ஒட்டிய அந்த மண்ணின் மைந்தரான வள்ளல் ஹபீபு அரசரது பூர்வீகச் சொத்து, 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
'வாழையடிக் கிட்டங்கி' எனப் பெயர் பெற்றிருந்த அதனை வள்ளல் ஹபீபு அரசரது பரம்பரையில் வந்த முஸ்தஃபா மரக்காயர் அவர்கள் பரிபாலித்தார்கள்.
இந்த முஸ்தஃபா மரைக்காயர் இன்று புகழுடன் இருக்கும் துபாய் ஈ.டி.ஏ - அஸ்கொன் நிறுவனங்களின் ஒரு வழிகாட்டி. இவரது மூத்த குமாரி, மூதாட்டி, வி.ஏ.எம். ஹதீஜத்துல் பாத்திமா இப்பொழுதும் வாழ்கிறார். இவர் ஜனாப் ஏ.ஜி.ஏ. அஹமது அப்துல் காதரின் துணைவி
இப்படி, மேற்படி வாழையடிக் கிட்டங்கியில் வாடகைக்கு இருந்து உயர உயரப் போன நூகு திடுதிப்பென்று வயிற்று உபாதையால் நோய் வாய்ப்பட்டு அதில் மீள முடியாமல் மறைகின்ற (14.1959) வரையில் அந்த உச்சியிலேயே இருந்தார். அதுவரையில் அவரை யாராலும் கீழிறக்க இயலவில்லை.

மானாமக்கீன் 161
அப்பொழுது இலங்கையில் பிரபலமாக இருந்த “GOLúb6iv 3&I'I SAGGlomt6ör” p5mTGGTG “SHIP MAGNATE DIES” எனச் செய்தி போட்டது.
“அவரே ஒரு சண்டியன் மாதிரிதான் கப்பல்கள் ஒட்டிய பெரிய ராஜா” என்கிறார் பட்டினத்து முதியவரான ஜனாப் வி.எம்.ஏ. அப்துல் காதர் அவர்கள்.
உண்மையிலும் உண்மை.
‘எபிஎம். நூஹ” ஷிப்பிங் சிலோன் லிமிடட் - தூத்துக்குடி, கொழும்புக்கிடையே செயல்பட்டது. டெலிஷன் என்ற ஜெர்மன்காரர் நிர்வகித்துள்ளார்.
‘ஈஸ்டர்ன் மாரிடைம்’ - மூலம் 5 கப்பல் கம்பனிகளின் இலங்கை ஏஜெண்டாகச் செயற்பட்டார். அப்பொழுது கொழும்புத் துறைமுகக் கடல் நீரில் இவரது வத்தைகளே (படகுகள்) ஒடி விளையாடின. ஒரு வத்தைக்கு ‘சித்தி வஜிஹா’ என தனது மூத்த மகளின் பெயரை வைத்தார். (இப்பொழுது அவ்வம்மையார் மினுவாங்கொடையில் ஒரு பிரபல தொழிலதிபரின் துணைவி).
இலங்கை - குமரி மாவட்ட கருவாட்டு வணிகத்தை தன் கையில் வைத்துக் கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட 1500 பேர் அலுவல் பார்த்தனர். அதில் பெரும்பாலானோர் குமரி மக்களே!
அவரிடம் வேலை பார்த்த ஒரு மானேஜரைப் பற்றி நான் சென்ற இடமெல்லாம் முதியவர்கள் மூட்டை கட்டி வைத்திருந்தனர் கதைகளை அவற்றை இங்கே விவரித்திட்டால் ஆய்வு அசிங்கப்பட்டுவிடும்.
நூஹ" அவர்கள் ஹஜ்ஜ"க்குச் சென்றதும் ஒரு தற்செயல். அதுவும் இறப்புக்கு இரண்டாண்டுகளுக்கு முன்.

Page 84
162 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
1957. ‘பாவப்பட்டவன் எல்லாம் போறான். நீ பணக்காரன் தருமவான். போனால் என்ன?’ என்று ஒரு பெரியவர் தைரியமாகக் கேட்கப் பயணப்பட்டார். அவருடன் யாத்திரை செய்த ஹோட்டல்காரர் மொஹிதீன் பிள்ளை ஷேக் அவர்களை இனையத்தில் இதழாளர் ஜனாப் எம். நியாஸ் சகிதம் சந்தித்து கடந்த கால நிகழ்வுகளை மலரச் செய்தேன்.
இந்த மாபெரும் மனிதருக்கு இலங்கை முஸ்லிம் லீக் தலைவர் டாக்டர் எம்.சீ.எம். கலீல் அவர்களை நிரம்பப் பிடித்திருந்தது. அவர் சார்ந்திருந்த அரசியலுக்கு (ஐக்கிய தேசியக் கட்சி - யானைச் சின்னம் - பச்சை நிறம்) கை கொடுத்து உதவினார். கொழும்பு மத்தியத் தொகுதியில் ஜெயிக்கவும் வைத்தார். இதே ஒத்துழைப்பை மற்றொரு தலைவர் ஃபளில் ஏ. கஃபூர் அவர்களுக்கும் வழங்கினார். இறக்கும் வரையில் அவருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். ஐ.தே. கட்சியின் தலைவராக உருவாகிக் கொண்டிருந்த ஜே.ஆர். ஜயவர்தனவின் வளர்ச்சியிலும் அக்கறை செலுத்தியவராக இருந்தார்.
இவ்வாறு பணமும் புகழும் பெற்றிருந்த ஹாஜி மர்ஹ~ம் நூஹ" தமது வாழ்நாளில் குவித்த செல்வத்தை என்ன செய்தார் என்றொரு கேள்வி அபிமானிகளுக்கு எழும்.
அவர் அந்தச் செல்வங்களை அப்படியே குமரி மண்ணிலே கொண்டுபோய் கொட்டினார்!
சரியான விவரங்கள் அறிய குமரி முழுவதிலும் இவரது நெருங்கிய உறவினர்களைத் தேடியலைந்ததில், மனைவி வழி தூரத்து உறவினரான ஹாஜி சூஃபி ஹனிஃபா அவர்களே (குளச்சல் - 6ஆம் ஏட்டில் பார்த்தோமே!) அகப்பட்டார்.
அதன்பின், அதிர்ஷ்டவசமாக, எனது தோன்றாத் துணைகளுள் முக்கியமானவரான சகோதரர், கோட்டாறு

மானாமக்கீன்
இளங்கடை அகமது கபீர், “இதோ கொண்டு வந்திருக்கிறேன் மைலாடி ஷாகுல் அவர்களை!’ என ஒருவரை முன் நிறுத்தினார்!
இவருக்கு மர்ஹ"ம் நூஹ"வின் சரித்திரங்கள் அத்துப்படி! அவரது உறவினர். ஆறாம் வயதில் கொழும்பு | வந்தவர் 22 வயது வரையில் நூஹ”வுக்கு விசுவாசமாக உழைத்துவிட்டு ஊர் نشناسنا திரும்பி, தொடர்ந்தும் அவருக்காகக் கடமை பார்த்தவர்.
அதாவது, சொத்துக்களைக் கவனிக்கும் பொறுப்பு. முக்கியமாக, ம்ைலாடியிலிருந்த, ஏபிஎம் எஸ்டேட் அவர் கண்காணிப்பில் இருந்துள்ளது. அதனாலேயே மைலாடி ஷாஹ"ல்’ ஆனார்! உண்மையில் கோட்டாறில் பிரபலமான வைத்தியரான தேங்காய்ப்பட்டினம் மைதீன் கண்ணு சாகிபு (மர்ஹ"ம்) புதல்வர் இவர்
முக்கியத் தகவலாக, “வ.உ.சி. ஒட்டிய கப்பலை வாங்கியவர் ஏ.பி.எம்.தான்’ என்றார். அத்துடன், டிவிஎஸ் நிறுவனத்தில் 50 லாரிகளை வாங்கப்போவது தானும், கணக்கப்பிள்ளையும் என்றும் சொன்னார். ஏடன், பாகிஸ்தான் போன்ற இடங்களுக்கு கருவாடு வாங்க நூஹ"வுடன் போய் வந்துள்ளவரும் இவரே!
கொழும்பில் நூஹ"வின் மரணச்செய்தி அறிந்ததும், உடனே தூத்துக்குடி வழியாக அவருடைய படகொன்றில் ஜனாசாவைக் கொண்டுவர முயன்றாராம்! அப்பொழுது இந்திய மனைவி இருந்தது பொழியூரில்.
இறப்புக்குப்பின் எந்தக் குடும்பத்திலும் ஏற்படுகிற சொத்துப் பிரச்சினைகள் ஏற்பட்டபொழுது சுமார் 18

Page 85
164 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
வழக்குகளில் ‘முகம் கொடுத்தவரும் இந்த மைலாடி ஷாஹ~லே!
இப்பொழுது இந்த மனிதர், தமது 65ஆவது அகவையில் புத்தளத்தில் (இலங்கைப் புத்தளமல்ல) ஒர் உப்பளத்தில் பணி ஒரு பெரிய பணக்காரரின் நெருக்கத்தைப் பயன்படுத்தி தனக்கென எதுவும் தேடிக்கொள்ளாத பிறவி உழைப்பே போதும் என்றிருக்கிற அதிசயப்பிறவி
மேலும், கொழும்பில் வாரிசுகளில் ஒருவரையும் சிரமப்பட்டு, பல நாட்கள் நேரங்குறித்து எனது பால்ய கலை - இலக்கிய நண்பர் தொழில் அதிபர் திரு வேலணை வீரசிங்கம் அவர்களின் கட்டாய ஏற்பாட்டில் சந்தித்தேன்.
ஆலி ஜனாப் எம்.என். அமீர் மிஃப்தார் என்ற அந்த நான்காவது மகனாரின் தகவலின்படி -
தந்தையார் நூஹ” எந்த கொழும்பு - 12 வட்டாரத்தில் வாழ்க்கையை ஆரம்பித்து உயர் நிலைக்கு வந்தாரோ அங்கே தட்டாரத் தெருவில் (இப்பொழுது பண்டார நாயக்க மாவத்தை) ஒரு வீட்டில் அவரும், அவரது சகோதரர்கள் சிலரும் (மூத்தவர் எம்.என். அமீர் ஹ"சைன், இரண்டாவது எம்.என். அமீர் முக்தார், இளையவர் எம்.என். அமீர் முபாரக்) வாழ்கிறார்கள். தாயார் உம்மு தமீமா அவர்களும் 69-ஆவது வயதில் 12.6.1998ல் மரணிக்கும் வரையில் அவ்வீட்டில் இருந்துள்ளார்கள்.
பெண்மக்களாகிய திருமதிகள் எம்.என். சித்தி வஜிஹா அவர்களும், எம்.என். சித்தி முஸம்மிலா அவர்களும், பிரபலமான மினுவாங்கொடை செம்பியன் பட்டாசு நிறுவன உரிமையாளர்கள் ஹாஜி ஏ.எச்.எம். மூனாஸ், ஏ.எச்.எம். கியாஸ் ஆகியோரது துணைவியர்களாக தந்தை பெயர் சொல்ல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மானாமக்கீன் 165
கீழக்கரை உரிமமாக இருந்துவந்த பிரபலமான 139ஆம் இலக்க பேங்சால் வீதி கருவாட்டுக்கடை ஹாஜி, பளில் ஏ. கபூர் குடும்பத்திற்கு தற்சமயம் உரித்துடையதாக இருப்பினும், இச்சந்ததியினரே வாடகை செலுத்திப் பாதுகாத்து வருவதாகவும் தெரிகிறது.
ஆக - குமரி மாவட்டத்து ‘கண்டி ராஜா வழி வந்த ஏ.பி.எம். நூஹ" ஹாஜி அவர்களது நினைவிற்குக் கொழும்பில் இதுவும், வீடொன்றும் மட்டுமே இருக்கின்றன.
மற்றபடி இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு நிரந்தரமாக எதையும் செய்ததாகத் தகவல் இல்லை.
குமரியில்கூட விரல் விட்டெண்ணத் தக்க இரண்டு மூன்று நற்காரியங்களே!
குளச்சலில் முஸ்லிம் வாலிபர் சங்கம் நிறுவ இடம் - புத்தன்துறை ஜமாஅத்துக்குக் காணிஇனயத்தில் துணைவியின் சொத்தை விலைக்கு வாங்கி பள்ளி வாசலுக்கு வக்புக் செய்தது; - அவ்வளவே
நாகர்கோவிலுக்கு 10 கி.மீ. தூரத்தில் உள்ள மைலாடியில் 100 ஏக்கருக்கு மேல் நிலபுலன்களும் -
புத்தன் துறையிலும் பொழியூரிலும் மதிக்க முடியாத கணக்கில் காணிகளும் -
பூவாறு தொடங்கி நாகர்கோவில் வரையும் - கருங்கல், குளச்சல், திருவனந்தபுரம் ஈறாகச் சொத்துக்களும் குவித்த மனிதர் நூஹ". அந்த மண்ணில் எங்காவது ஓரிடத்தில் ஒய்வுறக்கம் கொள்ள கொடுத்து வைக்காதவர் ஆனார்.
இன்று, கொழும்பு குப்பியாவத்தையிலோ மாளிகாவத்தையிலோ மண்ணறைக்குள்!

Page 86
166 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அது அல்லாஹ்வின் நியதியாயிற்று.
வாழ்ந்த காலத்தில் வாங்கிக் குவித்த பல ஏக்கர் நிலபுலன்கள் நிலைத்து நிற்கும்படியான நல்ல சமூக காரியங்களுக்குக் கிடைக்காது போனது சமுதாயத்தின் துர்ப்பாக்கியம்!
வாழும் பொழுது வள்ளலாகவும், ஏழைகளுக்கு இரங்கும் தர்மவானாகவும் இருந்த மனிதரிடம் மறைவுக்குப் பின் நின்று நிலைக்க என்னென்ன செய்யவேண்டும் என்பதை “சுற்றிச் சூழ்ந்திருந்த காகங்கள்’ சொல்லிக் கொடுக்காததன் விளைவு இன்று இரு நாடுகளிலும் இவரை மறந்தே மறந்துபோனார்கள்.
இது எந்தப் பணக்காரருக்கும் ஏற்படக்கூடாது இறைவா என என் பேனா இறைஞ்சுகிறது.
ஒரு குறிப்பு : வேறு குறிக்கவேண்டிய நல்ல காரியங்கள் நடந்திருப்பின் அறிந்தவர்கள் அறியத்தரலாம். ஓர் இணைப்பில் பதித்துவிடுகின்றேன்.
‘துறைமுகத்தின் பாவப்பட்ட கதாநாயகன்
இனி என் பேனா, என்னில் - இனிய எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரானின் தந்தையாரைக் | கெளரவித்துப் போற்றப் போகிறது.
மாபெரும் வணிகப் பெருமகனார் மர்ஹ9ம் ஏ.பி.எம். நூஹ" ஹாஜியைப் போன்றோ அல்லது குளச்சலில் கண்ட ‘சம்பை வியாபாரிகளைப் போன்றோ ‘ஒஹோ'வாக வாழ்ந்து மரித்த மனிதரல்லர்.
 

மானாமக்கீன் 167
இருப்பினும், அத்தொழிலில் தம்மை அர்ப்பணித்து எதிர்நீச்சலிட்டு வாழ்நாள் முழுதும் பெரும் பெரும் சோதனைகளைச் சந்தித்தவர்.
தமது 60-ஆம் வயதில் மாரடைப்பால் மரணித்த அன்றுங்கூட இலங்கையிலிருந்து தமக்குச் சேரவேண்டிய பணம் வராதா என்று ஏங்கிக் கிடந்த ஜீவன்! அப்பொழுது அவரிடமிருந்தது வெறும் பதினான்கு ரூபாய்கள்
அந்தத் தோப்பில் வீட்டுத் தலைவனுக்கு முதலில் அஞ்சலியைச் செலுத்திவிட்டு சொல்ல வேண்டியதைச் சொல்கிறேன்.
சகோதரர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்களது இரண்டாவது படைப்பான துறைமுகம்’ நாவலை இரு தடவை வாசித்தும் ஒன்றில் ஏமாந்தேன்.
அதில் ஒரு ‘பாவப்பட்ட கதாபாத்திரமாகச் சித்திரிக்கப்பட்டிருப்பது அவர்தம் தந்தையாரே என்பது புரியாமலே போனது!
எனது ஆய்விற்காக நாகர்கோவில், சாமித்தோப்பு திருமிகு பச்சைமால் அவர்களைச் சந்திக்கும் வரையில் அப்படியே!
“படைப்பிலக்கியம் - அனுபவம், கலைத்திறன்’ என்று தமிழாலயம் வெளியீடாக அவர் கொணர்ந்திருக்கும் கருத்தரங்கக் கோவையில் ‘துறைமுகம்’ மீரான்பிள்ளை வெளிச்சத்திற்கு வருகிறார்.
இந்த மீரான் பிள்ளை தோப்பில் முஹம்மது மீரானினதும், அவர்தம் 4 சகோதரர்களினதும் 3 சகோதரிகளினதும் அருமைத் தந்தை, இயற்பெயர்

Page 87
168 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
எம்.ஒ. முஹம்மது அப்துல் காதர்; ஊர் மக்கள் ‘குட்டிக் கண்ணு', என்றழைப்பார்கள். (இந்தக் குட்டிக்கண்ணு' பலருக்கும் உண்டு. முக்கியமாக 'அப்துல்காதர்’ எனும் பெயருடையோருக்கு!) “எம்.ஓ.எம்.’’ என இலங்கைச் சம்பை வியாபாரிகளிடையே அறியப்பட்டார்.
நான் மேலும் ‘கதை அளக்காமல்’ என தினிய தோப்பிலிடமே அபிமானிகளை விடப்போகிறேன். அவர் வழங்குகிற நிதர்சன உண்மைகளை நெஞ்சு கனக்க வாசியுங்கள்.
'நான் என்னுடைய அனைத்துப் படைப்புகளுக்கும் பின்புலமாக எடுத்துக் கொண்டிருப்பது என்னுடைய சொந்த கிராமமான தேங்காய் பட்டினத்தையும் அதன் மக்களையும்.
"வெளியான என் நான்கு நாவல்களில் முதலாவதாக வெளிவந்தது 'ஒரு கடலோரக் கிராமத்து கதை'அந்தக் கிராமத்தில் ஒரு நூற்றாண்டிற்கு முன்பு வாழ்ந்திருந்த முஸ்லிம் மக்களை மதத்தின் பெயரால் பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்கள் அடக்கி ஒடுக்கிக் கொண்டிருந்த ஒரு காட்டு தர்பாரை சித்தரிப்பதாகும்.
"இரண்டாவது நாவலான 'துறைமுகம்' 50 ஆண்டுகளுக்கு முன் கடல் தொழிலை மட்டும் நம்பி வாழ்ந்திருந்த அதே கிராம மக்களை கொழும்பு வியாபாரிகள் எவ்வாறு சுரண்டி அவர்களை வறுமையின் வாயில் வீசினார்கள் என்பதைக் காட்டுவதாகும். இந்த நாவல் அந்தக் கிராம மக்கள் வாழ்க்கைப் போராட்டத்தையும், போராடித் தளர்ந்த அந்த மக்களின் பொருளாதார வீழ்ச்சியையும் காட்டுவதாகும். \

மானாமக்கீன் 1 169
"துறைமுகம் என்ற பெயர் இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் வியாபாரத் தொடர்பின் குறியீட்டுப் பெயராகும். அல்லாமல், ஒரு குறிப்பிட்ட துறைமுகத்தைப் பற்றியல்ல.
"என்னுடைய ஊர் ஒரு கடற்கரை கிராமம், மக்களின் முக்கிய உயிர் வாழும் தொழில் மீன் வியாபாரம். கடலில் மீன்பாடுள்ள காலங்களில் மட்டுமே அந்தக் கிராம இல்லங்களில் அடுப்புப் புகையும். கடற்கரையிலிருந்து மீன் வாங்கி கருவாடாக்கி ஊரிலுள்ள நடுத்தர வியாபாரிகளுக்கு விற்பனை செய்வார்கள். இந்த நடுத்தர வியாபாரிகள் வாங்கிய சரக்குகளைக் கட்டுக் கட்டாகக் கட்டி தூத்துக்குடி துறைமுகம் வழி கொழும்புக்கு ஏற்றுமதி செய்வார்கள். 'ஏற்றுமதி என்றுதான் பெயர், ஏற்றுமதி என்றால் என்னவென்று கூட இந்த அப்பாவிகளுக்குத் தெரியாது. இதே கிராமத்தைச் சார்ந்த சிலர் கொழும்பில் விற்றுமுதல் கடை வைத்திருந்தார்கள். இவர்களுக்குத் தூத்துக்குடியிலும் கடைகள் உண்டு. இந்த நடுத்தர வியாபாரிகள் அனுப்பும் சரக்குகளுக்குச் சொந்தம் கொண்டாட எந்த ஆவணமும் இருக்காது. கருவாடு கட்டுகளுக்கு ரகம் alsTsfusras L7 போட்ட அடையாளங்களின் விபரம் அடங்கிய ஒரு 'கைத் தபால் மட்டுமே நடுத்தர வியாபாரிகள் லாரியில் தூத்துக்குடிக்குக் கொடுத்தனுப்பினார்கள். இந்த நடுத்தர வியாபாரிகளில் பெரும்பான்மையினர் துரத்துக்குடி பார்க்காதவர்கள். இதில் விந்தை என்னவென்றால் தூத்துக்குடியிலிருந்து கப்பல் மார்க்கம் கொழும்புக்குச் செல்லும் சரக்குகள் இந்த நடுத்தர வியாபாரிகளுடைய சரக்காக அல்ல அனுப்பப்படுவது. துரத்துக்குடி கடைக்காரர்கள்

Page 88
170
வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அவர்களுடைய கொழும்புக் கடைக்கு அவர்களுடைய சொந்த சரக்கை ஏற்றுமதி செய்வதாக ஆவணங்கள்
தயார் செய்து அனுப்புவார்கள். இவர்கள் இந்த நடுத்தர
வியாபாரிகளுடைய தரகர்கள்’ என்று தங்களைச் சொல்லி இந்த அப்பாவிகளை ஏமாற்றிப் பணம் அள்ளிக் கூட்டினார்கள்.
மீரான்பிள்ளையும் அவர் மகன் காசிமும்தான் துறைமுகம் நாவலின் மையமாகும். மீரான்டபிள்ளை சமய நம்பிக்கைகளிலும் பழமையிலும் ஊறி நிற்கும் பழமையாளர் கிராமத்திலுள்ள அறியாமையில் உள்ள எண்ணற்ற மக்களின் பிரதிநிதிகளில் ஒருவர். ஊரை எதிர்த்துக் கட்டுப்பாட்டை மீறி, வயதுக்கு வந்த திருமணத்திற்கு நிற்கும் தன் மகளின் எதிர்காலம் பற்றி ஆலோசனை செய்பவர் அவர் மகன்காசிம், படித்தவன், சிந்திக்கத் தெரிந்தவன். மதத்தின் பெயரால் அறியாமையில் கிடக்கும் தன் சக மனிதர்களின் மேன்மைக்கும், விடிவிற்குமாகப் போராடுபவன். அந்த ஊரிலேயே ஆங்கிலக் கல்வி கற்ற ஒரே இஸ்லாமிய இளைஞன் காசிம்தான்.
இந்த நாவலில் வரும் “மீரான் பிள்ளை' என்ற கதாபாத்திரம் என் தகப்பனாராகும். “காசீம்' என்ற கதாபாத்திரம் நானோ என் சகோதரர்களோ ஆவோம்.
பொருளாதார ரீதியாக நாங்கள் வீழ்ந்த நிலையில் இருந்து வந்தோம். என் தகப்பனார் அவருடைய முதல் மனைவியின் நகைகளை அடகு வைத்துக் கிடைத்த சொற்பத் தொகையைக் கொண்டு முதன்முதலாகத் துறையில் கருவாடு வாங்கச் சென்றார். இரவு கருவாடு ஏற்றிவந்த படகு கடலில் மூழ்கிவிட்டது. ஒரு படகு சரக்கு அப்படியே போய்விட்டது.

Lorrom LD5ésir 171
இந்நிகழ்ச்சியைத் துறைமுகத்தில் விரிவாகச் சொல்லியிருக்கின்றேன். நான் 'முத்தம்மா’ என்று அழைக்கும் என் தகப்பனாரின் மூத்த மனைவிக்குத் துறைமுகத்தைச் சமர்ப்பணம் செய்ததற்குக் காரணம் இதுவாகும்.
வேறு தொழில்கள் செய்ய வாய்ப்பில்லாத கிராமமானதால், பல கஷ்டங்களுக்கு இடையே என் தகப்பனார் கருவாடு வியாபாரம் தொடர்ந்து செய்து வந்தார். எப்போதும்போல் தூத்துக்குடி வழியாகக் கொழும்புக்குக் கருவாடு அனுப்பிக் கொண்டிருந்தாலும், அந்த வியாபாரத்தில் அன்றாட வாழ்க்கைதான் நடந்து வந்ததே தவிர அவரால் சேமிக்க முடியவில்லை. எப்பவும் பற்றாக்குறை.
துறை மக்களிடையே நம்பிக்கையுள்ள ஒரு வியாபாரியாக என் தகப்பனார் அறியப்பட்டார். துறைமக்கள், தகப்பனாருக்குத் தாராளமாகக் கடன் கொடுத்து வாங்கினார்கள். இந்நிலையில் கடற்கரையில் ஏராளம் அறுக்குலா மீன் (நெய்மீன்) பட்டுச் சொரிந்தது. பல பரிச்சயக்காரர்களிடம் இருந்து கடன் பற்றியும், எங்கள் வீட்டுப் பெண்களின் கழுத்திலும் கையிலும் கிடந்த தட்டு முட்டு நகைகளை அடகு வைத்தும், ஏராளம் அறுக்குலா மீன் வாங்கி வழக்கம் போல் தூத்துக்குடி வழி கொழும்புக்கு அனுப்பி வைத்தார். அன்று கொழும்புக்கு புறப்பட்ட கப்பலில் அதிக அளவு சரக்கு ஏற்றியிருந்தது. நாங்கள் அனுப்பியிருந்த கமிசன் கடை முதலாளியுடையது. அந்த முதலாளிக்கு அனுப்பப்பட்ட சரக்கில் அதிகச் சரக்கு எங்களுடையது.
காய்ந்த அறுக்குலா கருவாடு மீது அதிக பாரம் ஏற்றப்படுமாயின், அறுக்குலா நொறுங்கிப்போகும்.

Page 89
172
வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அதனால் எங்களுடைய அறுக்குலா கட்டுக்களைப் பாதுகாக்கக் கப்பலின் மேல் பகுதியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மிகுதியான பாரம் ஏற்றப்பட்டிருந்ததால், நடுக்கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாகக் கப்பல் மூழ்கும் அபாய அறிகுறி கண்ட உடன், கப்பலின் மேல் பகுதியிலுள்ள அனைத்துச் சரக்குகளையும் கடலில் வீசிவிட்டார்கள். இதில் எங்களுடைய எல்லா சரக்குகளும் கடலில் மூழ்கிப்போயின. எங்கள் ஈரக்குலையைப் பறித்துக் கடலில் வீசிய இந்நிகழ்ச்சியைத் துறைமுகத்தில் ஒரு தந்தி வாசகம் மூலம் காட்டியுள்ளேன். நெஞ்சைப் பிடுங்கி எறியும் இந்த இழப்புச் செய்தியைக் கேட்டு எங்கள் கண் முன்னால் எங்கள் தகப்பனார் துடித்ததைத்தான், தந்தி வாசகம் கேட்டு மீரான்டபிள்ளை துடிப்பதாகக் காட்டியுள்ளேன்.
எங்களிடம் எஞ்சியிருந்த அனைத்தையும் விற்றுக் கடன் அடைத்து விட்டு கடனாளியில்லாமலிருந்த என் தகப்பனார், மாரடைப்பால் இறக்கும் போது 60 ஆண்டுகால நீண்ட வியாபார வாழ்க்கையில் அவர் தம் பிள்ளைகளுக்காக மிச்சம் வைத்திருந்தது வெறும் 14 ரூபாய் மட்டுமே! இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன் என் தகப்பனார் என்னைப் பக்கத்தில் அழைத்தார், காகிதத்தைத் தந்து எழுதச் சொன்னார்; எழுதச் சொன்னது கொழும்பு முதலாளிக்கு எழுதிய ஒரு அந்திமக் கடிதமாகியிருந்தது என்று பிறகு தெரிந்துகொண்டேன்.
தம் குடும்பப் பொருளாதார நிலையையும், தாம் தினம்
தினம் தீ தின்று கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, ஒரு சிறு தொகை தந்தாவது உதவுங்கள்!" என்று,

மானாமக்கீன் 173
கெஞ்சிக் கேட்டுத் தகப்பனார் கடித வாசகம் சொல்ல சொல்ல, நான் எழுதினேன். சொல்லும்போது என் தகப்பனாரின் கண்களில் உருண்டு வந்த நீரால் அவருடைய மன வேதனையின் அடி ஆழத்தைக் கண்டேன். அந்தக் கடிதம் எழுதும்போதுதான்நாங்கள் ஏமாற்றப்பட்டோம்! என்ற உண்மை தெரிய வந்தது. தூத்துக்குடியில் இருந்து கொழும்பு முதலாளியின் 'சொந்த சரக்காகக் கப்பலில் ஏற்றிச் சென்றதால், எல்.ஐ.சி. நஷ்ட ஈட்டுத்தொகை அவருக்கு வழங்கியது! ‘எங்கள் சரக்கின் பெயரால் அவர் பெற்றுக்கொண்ட நஷ்ட ஈட்டுத் தொகையில் ஒரு சிறு தொகையையாவது, மிச்சமாகத் தந்து காப்பாற்றுங்கள்!' என்று என் தகப்பனார் கெஞ்சினார். கல் மனம் கரையவில்லை! என் தகப்பனாரை மீரான் பிள்ளையாக இந்த நாவலில் வடித்துள்ளேன். இந்தக் கதாபாத்திரப் படைப்பில் எந்தப் பொய்மையும் கலக்கவில்லை.”
என்ன, எனதருமை அபிமானிகளே, முன்னர் குறித்ததைப்போல நெஞ்சு கணத்ததா? இதயத்தில் பாரம் ஏறியதா?
ஒர் ஆய்வுநூலில் இலக்கியமும் பதியப்படுவது அபூர்வம். இந்தளவுக்கு சற்று நீண்டதான சோகச்சித்திரமாக இருந்தாலும் இலங்கையுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்த பட்டினத்து’ சாமானியர்களது உள்ளத்து உணர்வுகளின் படப்பிடிப்பாக உள்ளதைத் தவிர்க்க இயலவில்லை.
அதிசயம் என்னவென்றால், தோப்பிலின் தந்தையார் எம்.ஒ. முஹம்மது அப்துல் காதர் ஒரேயொரு முறைதான் கொழும்பு மண்ணை மிதித்திருந்தார்! மற்றபடி தொழிலைத் தன், பட்டினத்திலேயே நடத்தியிருக்கிறார்! மூத்தச் சகோதரரும் ஒருமுறை இலங்கையைப் பார்த்திருக்கிறார்.

Page 90
174 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
மற்றும் தோப்பிலின் தந்தையாரது மச்சான் ஒருவர் தனது மூப்பான வயதில் இப்பவும் கொழும்பில் மனைவி மக்களுடன் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது.
அத்துடன், வாப்பாவுடைய தாய் மாமனாரின் மனைவியும் இலங்கைவாசி. அந்த இலங்கை கண்ணும்மா பெற்ற மகளையே தோப்பிலின் சிறிய தகப்பனார் (குட்டியாப்பா) திருமணம் செய்துகொண்டார். “குட்டிம்மா’வாகிய அவர் இப்பொழுதும் பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இனியவரான தோப்பில், விசேடமாக இந்நூலுக்கென்றே எழுதிய ‘தேக்கே பட்டினத்தில் கொழும்பு மண’த்தை ஏற்கெனவே இந்நூலின் முன்பக்கங்களில் அபிமானிகள் நுகர்ந்திருப்பீர்கள் என எதிர்பார்த்து, பிரபலம் பெற்ற வேறு சிலரை அடுத்தடுத்த பக்கங்களில் அறிமுகப்படுத்திக்கொள்ள விழைகிறேன்.
நாவன்னா சேனா”வும் வாரிசுகளும்
குளச்சலில் அடுமக்கண்ணு, அப்துல் ரஹ்மான் வழிவந்த மக்கீன் ஹாஜியார், எம்.ஏ.எஸ். ஏயாரெம் ஆகியோரைப் போல், தேங்காய்ப் பட்டினத்திலும் ஒரு ‘நாவன்னா சேனாவும் அவர் வழிவந்த வாரிசுகளும் இலங்கையில் முத்திரை பதித்துள்ளனர்.
என். செய்யிது முஹம்மது என்னும் பெயர் கொண்ட அப்பெரியார் ஆரம்பகால வர்த்தகர்களுள் ஒருவர். வாழ்க்கையை கொழும்பு - 12. புதுக்கடையில் பலசரக்கு வியாபாரம் செய்வதிலிருந்து ஆரம்பித்து வளர்ந்ததைப் பார்க்கிறோம்.
மர்ஹ"ம்களான எஸ்.எம். பீர் முஹம்மது - ஹாஜி
எஸ்.எம். முஹம்மது நாஹ" - ஜனாப் எஸ்.எம். முஹம்மது யூசுஃப் - வாப்புக்கண்ணு என்ற அஹமது கண்ணு - ஹாஜி எஸ்.எம்.

மானாமக்கீன் 175
முஹம்மது ஸாலிஹ் - ஹாஜி எஸ்.எம். முகம்மது கண்ணு என்று புகழ்பூத்த ஆறு ஆண்களும், ஒரு பெண்ணும் வாரிசுகள்.
புதல்வர்கள் அனைவரும் ‘சம்பையிலும் "சாயா’விலும் சரித்திரம் படைத்திட்டார்கள்.
அதிலும் மூத்தவர் எஸ்.எம். பீரு முஹம்மது பிள்ளை, 'தங்ங்ஸ்’ என்ற ஒரு கண்ணியமான பெயரைப் பெற்றுப் புகழ் பூத்தார்.
தந்தை வழியில் பலசரக்குக் கடை போடாமல் பேக்கரி வைத்தும், " கொழும்பு - 13 ஆட்டுப்பட்டித் தெருவில் (இப்பொழுது Cyst - - - இரத்தினசோதி சரவணமுத்து மாவத்தை) சாயாக்கடையும் ஆரம்பித்து, பின்னர் கொம்பனித்தெருவில் (Slave Island) தொடர்வண்டித் தரிப்பு நிலையம் எதிரில் சொந்தக்கட்டடத்தில் "ஸ்டேசன் ஹோட்டல்’ நிறுவி ஒஹோ என்று ஆனார்.
அந்த ஹோட்டலின் உரிமத்தை, குளச்சல்வாசியான தமது துணைவி ஃபாத்திமா பீவி அவர்களுக்கே வழங்கி மகிழ்ந்த மனிதர் அவர்.
குடும்பத்தார் 78ஆம் இலக்க மெசன்ஜர் வீதியில் சொந்த வீட்டில் வசித்தனர். தற்போது அதில் கொழும்பு பாலஸ் ஹோட்டல் அதிபர் பொழியூர் பீருக்கண் ஹாஜியார் வாழ்கிறார். (இவரும் எனது புரவலர்களுள் ஒருவர். பின்னர் குறிப்புகள் வரும்)

Page 91
176 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
வருவாய்க்காக ஹோட்டல் தொழில் இருந்ததே தவிர ஆன்மிகத் துறையிலும் பொதுத் தொண்டிலுமே அவர்தம் நாட்டம் மிகுந்திருந்தது.
உதாரணம் : அவரது ஸ்டேசன் ஹோட்டல் முகவரியில் (56, பிரிட்ஜ் வீதி, கொழும்பு -2) “தேங்காய்ப்பட்டணம் - கொழும்பு லஜனத்துல் முஹம்மதிய்யா லீக்” செயல்பட்டது.
'அருட்பணியாற்ற வேண்டும் என்ற பேரவாவோடு எமது மக்கள் ஒன்றுபட்டு 15.46-இல் லஜனதுல் முஹம்மதிய்யா லீக் ஸ்தாபித்து, நம் நாட்டின் சீர்திருத்தத்தை இலட்சியமாகக் கொண்டு பல்லாண்டுகளாக லங்காதீவில் வர்த்தகத்துறையில் ஈடுபட்டு சமூக சேவையில் கவன்மின்றி சிதறிக் கிடக்கும் மக்களை ஒன்றுபடச் செய்து அன்பு, தயை, கருணை, இரக்கச்சித்தம், பொறுமை, சாந்தம் என்ற இஸ்லாத்தின் மூலக்கொள்கைகளைக் கடைப்பிடித்து நடப்பதே லீன்ே குறிக்கோளாகும்.
- என 16 பக்கங்களில் 57 ஆண்டுகளுக்கு முன் அவர் வெளியிட்டுள்ள ஒரு கொள்கை விளக்கக் கையேட்டை இன்று பார்வையிடுகிற பொழுது அப்போதைய முஸ்லிம்களின் சமூக உணர்வைப் புரிய முடிகிறது. (அதன் முதல் பக்கத்தை எதிர்ப்புறத்தில் பார்வைக்குத் தந்துள்ளேன்.)
(மேற்படி லஜனதுல் முஹம்மதியா லீகின் தலைவராக ஏ.எஸ். மீரான்பிள்ளை - உபதலைவர் : கே.எஸ். மீரான் சாகிப் - காரியதரிசி: எஸ்.எம். பீரு முஹம்மது - உப காரியதரிசி: எஸ்.எம். அப்துல் காதர் - பொருளாளர்; எஸ்.எம். முஹம்மது நூஹ". இப்பட்டியலின்படி, அண்ணனும் தம்பியுமே செயலாளராகவும் பொருளாளராகவும் சேவையாற்றியிருப்பதாகத் தோன்றுகிறது. சபாஷ்)

மானாமக்கீன் 177
/ー 786 N
தேங்காய்ப்பட்டணம் கொளும்பு லஜனத்துல் முஹம்மதியா லீக் சட்டதிட்டம் 指唱沿举
இச்சங்கமானது தேக்காய்ப்பட்டணம் லஜனத்தால் முஹம்மதியா லீக் என்றழைக்கப்படும், 2 லிக் மூலஸ்தாபனம் கொளும்பில் இருக்க வேண்டும். 3 லீகின் நோக்கங்கள்
A] சமதி உலகாசடிகர் காததிமுல் அன்பியாமுஹம்மது (ஸஅ) அன்ஞரின்ஜெனன தினத்தைகொண்டாடுதல். (B) இஸ்லாமதத்தை தழுவவரும் அம்முஸ்லிங்களுககு உதவி
புரிதல் (C) 5 un 357 i Gráin முஸ்லிம் க்களின் தன்மையே கோரியும் வழை சகோதர சகோதரிகளின் விவாஹம் அனதே சிறு வரின்ஸுன்னத்து முதலான தற்க்கு வேண்ட உதவிபுரிதல் (1) டிை லீகின் அங்கத்தவரின் நற்பலங்களை கவனித்து
அவர்களே ஒன்றுபடச் செப்தல் (t) தேங்காய்ப்பட்டணம் வாசிகளான முஸ்லிம்களில் உண் டாகிற அனுசாரங்களே அகற்றி அவர்கள் தம்மில் எற்படு ம் சனடை சச்சரவுகளை பர் 3 சபை ஞாபமான தீர்ப்பின் الله عليه فريق لا عن تته لقى أثره - بـا (F) ஸ ஜூன்னது ஜமா டிக்க்கு விருக்கமல்லாத ராஸ்டிரீகமான
விஷயங்களில் க3லயிட்டு கிவற்த்திவருக்கல் (G) மதப்ரமான மற்று நன்மையான விஷபுங்களே கம்மிற்றியின்
தீர்மானப்படி செய்தல். (H) தேங்காய்ப்பட்டணத்தில் கிருவியிருக்கும் மீலா ச் ஷரீப்
கம்மிற்றிக்கி பின் துணநல்கி.ம் வேண்டிய உதவிபுரிர்
பலப்படுக்த கல் أصـ ܢܠ

Page 92
178 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
மேலும், தங்ங்ள் பீருமுஹம்மது பிள்ளை அவர்களுக்கு, இலங்கை அரசியல் வானில் சுடரொளி பரப்பிய இருவருடன் நட்பும் மிகவும் சிறப்பானது.
இலங்கை கண்ட ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜெயவர்தனாவும், ஆர். பிரேமதாஸாவும் அப்பொழுது அரசியலில் இளந்தாரகைகள்.
முன்னையவர் ஒரு சட்ட அறிஞராகவும், பின்னையவர் இராப்பாடசாலை ஆசிரியராகவும் அதே நேரத்தில் முனிசிப்பல் கவுன்சிலராகவும் சமூக சேவையாளராகவும் திகழ்ந்தனர்.
சட்ட சம்பந்தமான சகல விடயங்களுக்கும் ஆலோசனைகள் பெற்ற ஜே.ஆரும், சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகளைக் கற்றுக்கொள்ள “பிரேமாவும் பீருமுகம்மது அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். அந்த நெருக்கம் நீண்டகாலம் நீடித்தது. (சில சமயங்களில் ஸ்டேசன் ஹோட்டலில் "சாயா குடிக்க சட்டத்தரணி ஜெயவர்தனாவின் திடீர் விஜயமும் நடந்திருக்கிறது)
இன்றுள்ள சில மனிதர்களைப் போல அன்று அவருக்கு அந்த இளைய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நிழல்படமெல்லாம் எடுத்துக்கொள்ளும் எண்ணங்கள் எழாததால் நமக்கு ஓர் அபூர்வமாக அந்தக்காலப் படம் கிடைக்காமல் போனது
இவர்களது 5 ஆண் மக்களின் விவரங்கள்:
c ஜனாப் பி.எம். அப்துல் காதர் - கொழும்பு ஸாஹிரா மாணவர். யூனியன் பேங் ஆஃப் இந்தியா முன்னைநாள் அதிகாரி, கொழும்பு
Çcazə ஹாஜி பி.எம். முஹம்மது நூஹ" - ஸாஹிரா மாணவர்.
கணக்காய்வாளர் (ஆடிட்டர்)

மானாமக்கீன் 179
CKD ஹாஜி பி.எம். முஹம்மது யூசுஃப் - அமைப்பாளர் குளச்சல் குதுபிய்யத் அன் பதறு மெளலூத் அறநிறுவன அமைப்பாளர். தக்கலையில் கடை பள்ளிப்படிப்பு இலங்கையில்.
CKD) ஜனாப் பி.எம். அப்துல் கரீம் - 94 - 97களில் குளச்சல் ஜமாஅத் துணைத்தலைவர். தற்சமயம்
குதுபிய்யத் அன் பதறு மெளலூத் அறநிறுவனம் முதலியவற்றின் தலைவர்.
co ஜனாப் பி.எம். அப்துல் சலீம் - முன்னாள் குளச்சல்
தி.மு.க. செயலாளர்.
- இவர்களில் ஜனாப் பி.எம். முஹம்மது யூசுஃப், பி.எம். அப்துல்கரீம் ஆகியோர் இலங்கை மண்ணை மிதித்தவர்களாகவும் இப்பொழுதும் தொடர்புகள் உடையவர்களாகவும் உள்ளனர்.
A. இவர்கள் அனைவருக்கும் உள்ள ஒரு சிறப்பு - தந்தை வழியில் தேங்காய்ப் பட்டினமாகவும், தாய்வழியில் குளச்சலாகவும் இருப்பது!
மேலும் இச்சகோதரர்களது ஒரே சகோதரியான ஹாஜ்ஜா ஃபாத்தும்மா பீவியும், நமது பதிவில் வரவேண்டியவர்களே.
அடுத்து, 'நாவன்னா சேனாவின் இரண்டாவது புத்திரர், மர்ஹ9ம் ஹாஜி எஸ்.எம். முஹம்மது நாஹ" அவர்களது குறிப்பும், அவர்களுடைய வாரிசுகள் பற்றிய தகவல்களும்,

Page 93
180 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அன்னார் தூத்துக்குடி வழியாக இலங்கைக்குக் கருவாடு ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருந்த ஒருவராகும்.
தமையனாரைப் போல் சமூக சேவைகளில் நாட்டம் உள்ளவராகவும், நல்ல அமல்வாதியாகவும் திகழ்ந்தார். முன்னர் நாம் சந்தித்த சூஃபி ஏ.எஸ்.எம். ஹனிஃபா அவர்களுக்கு மாமனார் முறை.
அன்னார் கட்டிக்கொடுத்த முஹியித்தீன்பள்ளி தேங்காய்ப்பட்டினத்தில் பெருமைக்குரிய ஒன்றாக விளங்குகிறது. இப்பொழுதும் குடும்பத்தாரே பள்ளிவாசல் பரிபாலனத்தைப் பார்த்து வருகின்றனர்.
இவரது மக்களில் மூத்தவரான எம். ஷாஹ"ல் ஹமீது அவர்கள், திருவனந்தபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தம்பாளுர் ஜ"ம்ஆ மஸ்ஜித் மற்றும் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களில் பொறுப்பு வகிக்கக்கூடியவராக உள்ளார். திருவனந்தபுரம் வெஞ்ஞர மூடு எம்.இ.எஸ். பொறியியல் கல்லூரியில் செயலாளருங்கூட.
இவரது தம்பியார் எம். லியாக்கத் அலி, திருவனந்தபுரம் பவர் ஹவுஸ் ரோடில் சென்ட்ரல் லாட்ஜ் நடத்தி வருகிறார். (ஒருமுறை விசிட் அடிக்கவேண்டும்!) ரோட்டரி கிளப் செயல்பாடுகளில் ஈடுபாடுடையவராகவும் இருக்கிறார்.
‘நாவன்னா சேனா’ அவர்களது 3ஆவது புதல்வர் எஸ்.எம். முஹம்மது யூசுஃபும் சகோதரர்களைப் போலத் தொழில்துறையில் சிறந்தவரே.
இவரது ஆண் வாரிசு தற்சமயம் கேரளாவில் வசிப்பு. பெண்மக்களில் ஒருவர் (ரஃபீக்கா பீவி) நாகர்கோவில் பிரபல அலி ஜுவலர்ஸ் உரிமையாளர், லயன்’ முகம்மது அலி ஹாஜி அவர்களது துணைவியாராகும். (ஜனாப் அலி ஹாஜி திருவிதாங்கோடு கலைக்கல்லூரித் தலைவருமாவார்).

மானாமக்கீன் 181
நாவன்னா சேனாவின் நாலாவது புதல்வர் வாப்புக்கண்ணு என்ற அகமதுகண்ணு அவர்கள், ‘எஸ்.எம்.” நிறுவனத்தில் ஒரு கடுமையான உழைப்பாளியாகப் பெயரெடுத்தவர்.
திருமணமாகிய சில காலத்தில் காலமானதால் வாரிசு பாக்கியம் அற்றுப்போனது.
னி, ‘நாவன்னா சேனாவின் 5ஆம் 6ஆம்
ந s ک புதல்வர்களைப் பார்ப்போம்.
ஹாஜிகள் எஸ்.எம். முகம்மது ஸாலிஹ் எஸ்.எம். முஹம்மது கண்ணு ஆகிய இருவரும் தங்கள் சகோதரர்களைப் போன்று தொழில்வளம் பெருக்கியவர்களே.
தற்சமயம் ஹாஜி சாலிஹின் புதல்வர் எம்.எஸ். கபீர் அவர்களை நாகர்கோவில் குயின்ஸ் ரெஸ்டுரண்டில் எப்பொழுதும் காணலாம். அவரே அதன் உரிமையாளர். அத்துடன், "ஹை கவுண்ட் பைப் ஏஜெண்டாகவும் இயங்குகிறார்.
6-ஆவது புதல்வர் ஹாஜி எஸ்.எம். முஹம்மது கண்ணு அவர்கள், மம்ம கண்ணு' என்றும் ‘எஸ்.எம். ஹாஜியார்’ என்றும் அறியப்பட்டவர். தப்லீக் பணிகளில் ஈடுபாடு கொண்ட இவர்கள், நாகர்கோவில் கலாசாரப் பள்ளிவாசல், திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி ஆகியவற்றின் தலைவராகப் பதவி வகித்தவர். பெருந்தலைவர் காமராஜரின் உற்ற தோழர். குமரி மாவட்டக் கூட்டுறவுப் பேரங்காடியின் துணைத் தலைவராகவும் இருந்தவர். 1999-ல் மறைவு.
அன்னாரது புதல்வர் ஜனாப் அப்துல் நாஸர் அவர்கள், எஸ்.எம். லாட்ஜ்’ – ‘ஹோட்டல் லிம்ராஸ் ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

Page 94
182 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இரு பெண்மக்களில் மூத்தவரான தாஹிரா, திருச்சி சட்டக்கல்லூரி விரிவுரையாளரும் இலக்கிய ஆர்வலருமான வழக்கறிஞர் ஜனாப் நிஜாமுத்தீன் அவர்களை வாழ்க்கைத் துணைவராக அடைந்துள்ளார்.
இரண்டாவது மகளார் ஹஜ்ஜா கைருன்னிஷா, கணவர், டாக்டர் ஹாஜி ஜகபர் அலி எம்.எஸ் அவர்களின் துணைவியார். (மதிப்பிற்குரிய டாக்டர், சென்னையில், ராயப்பேட்டை மருத்துவமனையின் சிரேஷ்ட துணை சர்ஜன்)
பெரியார் ‘நாவன்னா சேனாவுக்கு 'ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு' என்று ஒரு புதல்வியும் கிடைத்தார். அவர், *ஃபாத்தும்மா பீவி என்ற 7ஆவது வாரிசு.
அன்னாரது துணைவர் ஹாஜி பி.எம். அடுமக்கண்ணு, இவரது ‘பி.எம்.எஸ். கம்பெனி, திருவனந்தபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் பிரபலம். தப்லீகிலும் ஈடுபாடு. இந்தத் தம்பதிக்கு 3 ஆண்கள் - ஒரு பெண். (ஹாஜிகள் முஹம்மது நூஹ" - லியாக்கத் அலி - இஸ்மாயில் - மும்தாஜ்).
ஆக - இலங்கையில் தொழில் வளத்தால் சிறந்தவர்கள் பிறந்த மண்ணில் கால் வைத்த பிறகு முடங்கிப்போய் விடாமல் வாரிசுகள் தலைமுறைகள் உயர்ச்சி பெறவும் வழி செய்ததுடன், சமுதாய உணர்வு மிக்கவர்களாகவும் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இந்த நாவன்னா சேனா குடும்பவழித் தோன்றல்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ‘நூவன்னா சேனா - என மற்றொருவர்!
தேங்காய்ப்பட்டினத்தில் ஒரு நாவன்னா சேன்ாவுடன், ஒரு ‘நாவன்னா சேனாவும் இருப்பதை அவரது மருமகன் "மினிட்
ஹாஜி' என்னைத் தேடி ஓடி வந்த பொழுது புரிந்து மகிழ்ந்தேன்.

மானாமக்கீன் 183
நூஹ” கண்ணு செய்யது முஹம்மது என்ற நூவன்னா சேனா கொழும்பு - 12, தட்டாரத்தெருவில் (பண்டாரநாயக மாவத்தை) பலசரக்குக் கடையிலிருந்து ஆரம்பித்து வாழ்க்கையில் உயர்ந்தவர்.
கொள்ளுப்பிட்டி முதலான பல இடங்களில் கடைகள் ஆறு நடத்திச் சிறந்தார்.
மாமா அவர்களைப் பற்றி ‘மினிட் ஹாஜி புகழ்ந்துரைக்கும் பொழுது, ‘தங்ங்ஸ் பீரு முஹம்மது அவர்களது தம்பி ஹாஜி எஸ்.எம். முஹம்மது நூஹ”வுக்குத் தொழில் பழக்கிக் கொடுத்த பெருமையுடையவர். இன்றைக்குக் கோட்டடி பள்ளத்தில், ஹல்ஸ்டோர்ஃப் இறக்கத்தில், பழைய சோனகர் வீதியில் காணப்படுகிற ‘இக்பால் ஹோட்டல் அவர் ஆரம்பித்ததுதான். பின்பு 5-ஆம் குறுக்குத் தெருவில் கருவாட்டுக்கடை ஆரம்பம் என விவரித்துக்கொண்டே போன பொழுது சுவையான கதையைக் கேட்பது போலிருந்தது.
நூவன்னா சேனா’ அவர்களுக்கு உட்ன் பிறப்புக்கள் நால்வர். (அப்துல் காதர் - பீரு கண்ணு - முஹம்மது கண்ணு - அடுமைக் கண்ணு). அனைவரும் கொழும்புத் தொடர்புடையவர்களே.
அவர் தம் வாரிசுகளாக 4 ஆண்கள் - 3 பெண்கள் பிறந்ததில், அபூபக்கர் என்ற அவாக்கர் பிள்ளை குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவராகக் கொழும்பில் தொழில் செய்திருப்பதை அறிய முடிகிறது.
"அவாக்கர் பிள்ளை’க்குக் கொம்பனித்தெருவில் கடை இருந்துள்ளது.
அதிலும், எஸ்.எம். ஹாஜியாருக்கும், பிரபல ஏ.பி.எம். நூஹ” அவர்களுக்கும் இடையே "மச்சான் - மச்சான்’ என

Page 95
184 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அழைத்துப் பழகும் பழக்கம்! தொழில்துறையில் மிகவும் நெருக்கம்.
இந்த இடத்தில், ஏற்கெனவே குறித்த ‘மினிட் ஹாஜி” என்ற மருமகனாரையும் சிறப்பாக அறிமுகம் செய்திட விழைகின்றேன்.
பழக இனியவரான 67 வயது எம். நூஹ" கண்ணு கொழும்பு -12-ல் சொந்தக்கடை வைத்திருந்தார். சில்வர் ஸ்மித் லேன் என்கிற தட்டாரத்தெரு ஒழுங்கையில் அது இருந்துள்ளது. 어의gl மட்டுமல்லாமல், இந்தக் கொழும்பு -12ல் பல இடங்களில் கடைகள் நடத்தி கொடிகட்டிப் பறந்திருக்கிறார். 20 ஆண்டுகள் தொழில். * ر
இவருடன் கிட்டத்தட்ட ஒருநாள் பொழுதைக் கழித்த பொழுது தேங்காய்ப்பட்டினக்காரர்களின் கொழும்பு செல்வாக்கை அக்குவேறு ஆணிவேராகத் தெரிய முடிந்தது.
பள்ளித்தோட்டம் - செயிண்ட் செபஸ்தியன் வீதி - வாழைத் தோட்டம் - நெல்வீதி (கிறீன் ஸ்டிறீட்) - ஆட்டுப்பட்டித் தெரு (வுல்பெண்டால் வீதி) - ஜெம்பெட்டா வீதி - செக்கடித்தெரு - செட்டியார் தெரு - மருதானை - மாளிகாவத்தை தெமட்டகொடை என்று வியாபித்திருந்திருக்கிறார்கள்.
இதில் முக்கியமானது, புதுக்கடை - பள்ளித்தோட்டம். இப்பகுதியில் வியாபாரம் மட்டும் செய்யவில்லை, குடித்தனமே நடத்தியிருக்கிறார்கள்! அவையெல்லாம் சட்டப்படி, முறைப்படி நடந்துள்ளன.
 

மானாமக்கீன் 185
அதுசரி. எனக்குத் தகவல்களைக் கொட்டிய இவர் ஏன் மினிட் ஹாஜி’யானார்?
நேரந்தவறாமை - இவருடைய தனிப்பெரும் சிறப்பாம்! எதிலும் நேரம்! எப்பொழுதும் நேரம்! எங்கள் திரு லேனா தமிழ்வாணன் அவர்களுடனும் என்னுடனும் கடுமையாகப் போட்டி போடக்கூடியவர்!
ஆகவே, அன்றைக்கும் இன்றைக்கும் இவர் எல்லோருக்கும் மினிட் ஹாஜியார்! இஸ்லாம் சொல்லிக்கொடுத்த முக்கிய நடைமுறைக்காக என் பேனா மனமார வாழ்த்துகிறது.
ஒர் ஆவன்னா சேனா”வும் உள்ளார்
'நாவன்னா சேனா - நூவன்னா சேனா’ வரிசையில் ஓர் "ஆவன்னா சேனாவும் உள்ளார்.
இவர் இயற்பெயர் ஆ. செய்யது கண்ணுவாக இருக்கவேண்டும்.
கொழும்பு 12, புதிய சோனகர் தெரு - மெசன்ஜர் வீதியில் அரை நூற்றாண்டுக்கு முன் டிராம்வண்டிகள் ஓடின. அதனால் குமரி மாவட்டக்காரர்கள் கம்பி ரோடு’ என வாய்க்கு லேசாக அழைப்பார்கள். இங்கேயும், இதற்கு அடுத்த பழைய சோனகர் வீதியிலும் திருநெல்வேலி செய்யது பீடி கம்பெனிக்கு பாக்டரி, அலுவலகங்கள் உண்டு. இதற்கு எதிரே "ஆவன்னா சேனா’
FTuu Tj356ooL!
அவர் அதை வெற்றிகரமாக நடத்திய பிறகு, மூத்த மகனார் ஏ.எஸ். மீரான்பிள்ளை பொறுப்பேற்று நடத்தினார்.
இவரது சகோதரர்களில் ஒருவர் ஜப்பானிலும், மற்றவர்,
ஜனாப் ஹஸன், சட்டத்தரணியாக (வக்கீல்) சென்னையிலும் உள்ளனர்.

Page 96
186 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
பிரபல புள்ளி ஹாஜி நூர் முஹம்மது
சம்பை ஏற்றுமதியில் ஒரு பிரபல புள்ளியாகத் திகழ்ந்தார் ஹாஜி நூர் முஹம்மது.
இவரது காலத்தின் பின், அன்னாரது மூத்த புதல்வர் ‘என்எஸ்’ என்ற என். செய்யது முஹம்மது தொழிலை முன்னெடுத்துச் சென்றார். இவரது சகோதரர்களான என். அப்துஸ்ஸமத் - என். முஹம்மது இருவரில் முன்னையவர் ஒரு ரோட்டரியனாகப் பளிச்சிடுகிறார்.
*கோவன்னா நூவன்னா'வும் smůla
கோயா பிள்ளை நூஹ" கண்ணுவாகிய இவர், சற்று முன்பு நமக்கு அறிமுகமான தங்ங்ஸ் எஸ்.எம். பீரு முஹம்மது பிள்ளை அவர்களது “ஸ்டேசன் ஹோட்டலை ஒராண்டு காலம் வாடகைக்கு எடுத்து நடத்தியுள்ளதாக ஒரு தகவல். பின் பாணந்துறை புற நகரில் ஹோட்டல் தொழில்.
ஞானி வீட்டு “மஸ்தான் குட்டிக்கண்ணு லெப்பை"
”தேங்காப்பட்டணம் வலிய பள்ளி’ என்னும் மாலிக் தினார் ஜும்ஆப் பள்ளி அருகில் “ஞானி வீடு' பிரபலம்.
இங்குள்ள மம்மூன்’ என்ற அவர்களது மாமனார் “மஸ்தான் குட்டிக்கண்ணு' என்ற முஹம்மது அப்துல் காதர் (மர்ஹ9ம் வெகுநாட்களாகக் கொழும்பு வாழைத் தோட்டத்திலுள்ள அரசு கோ - ஆப்ரேட்டிவ் சொஸைட்டியில் கடமையாற்றினார். பிற்காலத்தில் சாக்குப்பை வியாபாரமும் செய்துள்ளார்.
இவர், படைப்பிலக்கியவாதி தோப்பில் முஹம்மது
மீரானின் தந்தையாரது (ஒ.எம். அப்துல் காதர்) ஒன்றுவிட்ட தம்பி. (தந்தை வழியில்). இப்பொழுது மேலப்பாளையம்

மானாமக்கீன் 187
ஆலியா மத்ரஸாவில் உஸ்தாதாகப் பணிபுரியும் முஹம்மது அன்சார் ஆலிம் மிஸ்பாஹி இவரது மகன் வழிப் பேரர்.
அதேபோல், ஹாஜி அப்துல் நளிர் ஆலிம் அவர்கள் அன்னாருக்கு மகள் வழிப்பேரர்.
இவர்கள் இருவரும், என்றென்றும் என் நன்றிக்குரிய நீடூர் நெய்வாசல் நெஞ்சங்களின் ஆன்மிக அறிவுக்கூடமான மிஸ்பாஹ"ல் ஹ"தா தயாரிப்புக்கள்.
மேற்படி ஹாஜி அப்துல் நஸிர் ஆலிம் அவர்களது மூத்த வாப்பா மர்ஹ"ம் அப்துற்றஹ்மான் ஹாஜியும் கொழும்பில் இருந்தவரே. (இப்பொழுது அவர் பெயரில் ஞானி வீட்டிலே ஒருவர்! வயது 10. மேற்படி ஆலிமின் மகன்)
இந்த இடத்தில் ஒரு சிறப்பு குறிப்பொன்று :
ஹாஜி அப்துல் நளயீர் ஆலிம் மிஸ்பாஹி அவர்கள், அடக்கம் - அறிவாற்றல் மிகுந்த ஒருவர் என்னை நாகர்கோவிலில் பெருங்கூட்டத்துடன் தேடிவந்த தோன்றாத்துணை அன்னாரின் ஒத்துழைப்பாலேயே 'பட்டினத்துப் பதிவுகள் சிறப்பாக அச்சாகியுள்ளன. தற்சமயம் ஊரில் இமாமாக பணியாற்றுகின்ற அவர் பஹ்ரைனில் 9 ஆண்டுகள் சேவை புரிந்தவர் ஒருமுறை தமது நண்பனைக் காண இலங்கைச் சுற்றுலா வந்துள்ளார்.
குஞ்சு மூஸா குடும்பத்தினர்
இங்கே வாழ்ந்த அப்துல் காதர் அவர்களுக்கு 4 ஆண்கள், 2 பெண்கள், சேமக்கண் என்னும் செய்யது முஹம்மது - ‘சதாரம்’ நாஹ" கண் - நார் முஹம்மது - மஹ்மூது ஆகியோரில் நூர் முஹம்மது சிறுவயதில் இறக்க, மற்ற மூவரும்

Page 97
188 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
புதுக்கடையில் (அப்துல் ஹமீத் வீதி) பலசரக்குக் கடை வைத்திருந்தனர். அதுவும் ஓரிரண்டு ஆண்டுகள் அல்ல, 25 ஆண்டுகள்!
சேமக்கண் எனும் செய்யது முஹம்மத: இவர் இலங்கையிலேயே மரணம் அடைந்தார். இவருக்கு வாய்த்த துணைவியார் விய்யாத்தக்கண்ணு என்னும் பீவி ஃபாத்திமா, இன்றுவரை (சுமார் 35 ஆண்டுகளாக) ‘தொடர் நோன்பு’ நோற்றுக்கொண்டு வாழும் ஓர் அதிசயப்பிறவி! இவர்களுக்கு இரு பெண்கள், ஓர் ஆண்.
- சதாரம்’ நாஹ" கண்: சதா காலமும்* ۔۔۔۔
அதாவது எல்லா நேரமும் - இறைவணக்கத்தில் ஈடுபட்டு, கொடுக்கல் வாங்கல், பழகும் முறை அனைத்திலும் வேறுபட்ட மனிதராக இருப்பதால் பட்டினத்து மக்கள் ‘சதாரம்’ என அழைக்கிறார்கள். 16 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஒரே மகன் இப்பொழுது குடும்பமாக புருனேயில் உள்ளார்.
இவரது வஃபாத்து மிகவும் அதிசயிக்கத்தக்க வகையில் ஏற்பட்டதாக எனக்கு விவரிக்கப்பட்டது. நானும் மெய் சிலிர்த்தேன்.
நீங்களும் (குறிப்பாக இலங்கை அபிமானிகள்) அறிந்து வைத்திருக்க வேண்டியவொன்று:
来 இவர் தனது உறவினர் ஒருவரின் மரணத்திற்காக நண்பர்களுடன் கடற்கரை ஓரமாக வரும்போது திடீரென நண்பர்களிடம் “நீங்கள் முன்னால் போங்கள், நான் வருகிறேன்’ எனக் கூறி அனுப்பிவிட்டு, கடலோரத்தின்
 
 

மானாமக்கீன் 189
அருகாமையில் உள்ள ஆற்றில் ஒளுச் செய்தபின் இரண்டு ரக் - அத்துகள் தொழுத பிறகு தன் மேலங்கியை விரித்து நீட்டி நிமிர்ந்து படுத்தார். பின், தனது இரண்டு கைகளையும் நெஞ்சில் பதித்து திருக்கலிமாவை மொழிந்தார். அந்நிலையில் அன்னாரது ரூஹற் பிரிந்தது!
இவ்வாறு ஓர் அற்புதமான - அபூர்வமான இறப்பைத் தேடிக்கொண்ட 'சதாரம்’ அவர்களை எந்தப் பேனாவும் மறக்காது!
அன்னாரது தம்பியார் மஹ்மூது (62) இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 14 駐 ஆண்டுகளாக பஹ்ரைனில் பணி. மூன்று பெண் மக்கள் - ஒரு மகன். மூத்த மகளை மணம் செய்திருப்பவர், ஏ.எம். ஷம்சுத்தீன் ஆலிம் அவர்கள். பட்டினத்து ஜ"ம்ஆப் பள்ளி மதறசா ஆசிரியராகவும், எஸ்.எம். முஹம்மது !
நூஹ" ஹாஜி கட்டிய முஹியித்தீன் மஸ்ஜித் இமாமாகவும் கடமை புரிகிறார். மேற்கண்ட தகவல்களைத் தந்த சிறப்பும் அன்னாரையே சாரும். அல்ஹம்துலில்லாஹ்.
*செய்து கண்ணுவும்
*மம்ம’ கண்ணுவும்
“செய்து (செய்யது) கண்ணு என்பவர் கொழும்பு - 11
செக்கடித் தெரு ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிவிட்டு
ஞானிவீட்டு முஹம்மது அப்துல் காதருடன் இணைந்து கோ
ஆபரேட்டிவ் சொசைட்டியில் கடமை பார்த்தார்.

Page 98
190 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இவரது தாயாரின் தந்தை (உப்பா)யும் அப்பொழுதும் கொழும்பில் 'ரெம்ப தர்பாராம்!
மேற்படி கண்ணுவின் மைந்தர், 70 வயது எஸ். "மம்ம’ (முஹம்மது) கண்ணு அவர்கள் மூப்பான வயதிலும் என்னைத் தேடிவந்தது எனக்குக் கிடைத்த கெளரவம். அன்னார் மலரச் செய்த அக்கால நினைவுகள் நெஞ்சில் நிழலாடி பேனாவில் துள்ளாட்டம் போடுகின்றன.
அன்னார் மொத்தமாக 3 கடைகள் சொந்தமாக நடத்தி உள்ளதுடன், கொழும்பு மாளிகாகந்தையில் ஒரு துணைவியைத் தேடிக்கொண்டார்! ஆனால் அரசு கொண்டு வந்த சட்ட திட்டங்களினால் ஊர்வாசி ஒருவராலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்
குடும்பம் - ? மனைவியும் மக்களும் சுற்றுலாப் பயணிகளாகப் பட்டினம் பார்த்து பந்தபாசங்களைப்
புதுப்பித்துக் கொண்டனர். எனினும் நிரந்தரப் பிரிவு பிரிவுதான்.
இந்நிலை வேறு சிலருக்கும் ஏற்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் தனித்தனி சோகக்கதைகள்.
ஏகேஎஸ் - எல்கேஎஸ் நிழல்களில் பட்டினத்துப் பத்தர்கள்
வடபுலத்து யாழ்ப்பாணத்துக் கண்ணாதிட்டியில் பிரபல தங்க நகை மாளிகைகளாக அன்றிருந்தவை “ஏகேஎஸ் - எல்கேஎஸ் போன்ற நிறுவனங்கள் என்றும், அவை, காயல்பட்டின மண்ணின் மைந்தர்களுடையவை என்றும் முன்னைய ஏட்டிலேயே பதித்திருக்கிறேன். அவற்றில்
 

மானாமக்கீன் 191
கோட்டாறு பத்தர்கள் (பொற்கொல்லர்கள்) பங்களிப்பையும் பதிவு செய்துள்ளேன். இங்கே, பட்டினத்திலும் குறிப்பிடப்பட வேண்டிய ஒருவர்.
அவர், திரு பிச்சாண்டி ஆச்சாரி, சுப்பையா அவர்களது புதல்வர்.
திரு பிச்சாண்டி அவர்கள் மேற்படி நிறுவனங்களில் பணி புரிந்தவர். இவரது மாமா நடராஜா (துணைவி சரசுவதியின் தந்தை), மைத்துனர்கள் கணபதி, நித்தியானந்தம் (சரசுவதி அம்மாளின் தமையன்மார்) ஆகியோரும் இலங்கையில் தொழில் புரிந்தவர்கள். (ஏடு 6-ல் தகவல்கள்).
தற்சமயம், பிச்சாண்டி அவர்களது வாரிசு திரு தியாகராஜனை சென்னை, உஸ்மான் ரோடு லலிதா ஜ"வல்லரி மார்ட்டில் பார்க்க முடிகிறது.
வளம் பெற்ற வணிகருள் சிலர்
ஹாஜி ஜமாலுத்தீன் : முன்பு தேங்காய்ப்பட்டின ஜமாஅத் தலைவராக இருந்த இவர், மருதானை, ஆட்டுப்பட்டித் தெரு முதலிய இடங்களில் ஹோட்டல்கள் நடத்தியும், புதிய சோனகர் தெரு, பெரிய பள்ளிவாசல் பக்கம் பலசரக்குக்கடை வைத்தும் தொழில் செய்தார்.
லத்தீஃப் ஆலிம் : இவர்களது தந்தை ‘குட்டிக்கண்ணு' கொழும்பில் நாட்டாமையாக நாலாம் குறுக்குத்தெருவில் ‘ராஜ்ஜியம்’ நடத்தினார். (அது சரி “குட்டிக்கண்ணு' என்று எத்தனை பேருக்குத்தான் பெயர்). எம். பீருகண்ணு : “மொண்டி கங்காணியார்’ என்ற பெயரில் கண்டிராக்டராக வேலை பார்த்த இவர், மம்ம கண்ணு' என அழைக்கப்படுபவரது தாயாரது தந்தை. கொழும்பு லஜனத்து முஹம்மதிய்யா லீச் செயற்குழு உறுப்பினர். கொழும்பிலேயே

Page 99
192 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
கல்யாணம் 2 ஆண்கள், 2 பெண்கள். தற்சமயம் அவரது பேரப்பிள்ளைகள் (பாறுாக் - ஸம்ஸ் - புஹாரி) பழைய சோனகர் தெருவில் ஹோட்டல் நடத்துகிறார்கள். (இது, ஜனாப் எஸ். முஹம்மது கண்ணு வழங்கிய தகவல்).
"செயின்” என்னும் ஸெய்னுதீன் (70) - “குளத்துப்பள்ளி லெப்பை என்னும் செய்யது முஹம்மது (75) - டாக்டர் ஜெய்லானி (70) - (கொழும்பு ஸாஹிரா மாணவர்) குளச்சலில் திருமணம் புரிந்த எம்.ஏ. முஹம்மது கண்ணு - பி.எம். செய்யது முஹம்மது - நானா வீயன்னா’ என்ற யூசுஃப் ஹாஜி - “மூச்சு முட்டி ஹஸனார் குடும்பத்தினர் - கொழும்பு 2ஆம் குறுக்குத் தெரு சம்மாங்கோட்டுப் பள்ளிவாசலுக்கு முன் இக்பால் ஹோட்டல் நடத்திய ‘கூனா பீயன்னா' மற்றும் லஜனதுல் முஹம்மதிய்யா லீச் செயற்குழுவில் அங்கம் வகித்தவர்களான ஹாஜி எஸ்.எஸ். முஹம்மது கண்ணு - எம்.எம். பீருக்கண்ணு - செ. பீருக்கண்ணு - எம். செய்யது முஹம்மது - அ. முஹம்மது கண்ணு - எஸ்.எம். முஹம்மது கான் - எம். முஹம்மது கண்ணு - பி. சுல்தான் பிள்ளை - ஏ.ஏ. மீரான்பிள்ளை - எம். செய்து முஹம்மத கண்ணு - எம். மைதீன் பிள்ளைக்கண்ணு - எஸ். பீருக்கண்ணு - எம். மீரான்பிள்ளை முதலியோரும் கொழும்பில் வளம் பெற்றவர்களே!
ஒருவரது ஆதங்கம்! நாஹ"க்கண், பீருக்கண் - இதுதான் மரபுப் பெயர்கள்! நாஹ"கான், பீருக்கான் - இதுவெல்லாம் நவீன விழுதுகள்! வேரை மறந்த சமுதாயமாக மக்கள் மாறலாமோ? கண்ணுக்கும் கான் (உருது)க்கும் என்ன சம்பந்தமோ?
என்னை நாகர்கோவிலில் சந்தித்த ஒரு சாமான்யர்
(முஸ்லிம்) இப்படி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். என்னால் ஒரு புன்னகையையே பதிலாக வழங்க முடிந்தது!

193
இஸ்லாம் அழைக்கிறது!
“இஸ்லாத்தில் பிறப்பால் - நிறத்தால் - மொழியால் - குலத்தால் - எவரும் உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ முடியாது. இஸ்லாமிய மார்க்கத்தில் கடவுளுக்கும் மனிதஜக்குமிடையே இடைத்தரகர் எவருமில்லை.
இஸ்லாம் குறிப்பிட்ட மொழியினருக்கோ, பகுதியினருக்கோ, குலத்தினருக்கோ, நிறத்தினருக்கோ உரிய மார்க்கம் அன்று! அது மனிதகுலம் முழுமைக்கும் சொந்தமான முழுமையான வாழ்க்கைத் திட்டம்.”
இணயம் - ஆளுரிலிருந்து (கன்னியா)குமரி வரை.
நாகர்கோவில் இதழாளர் “குமரி டுடே” ஆசிரியர் எம். நியாஸ் நேர்காணல் திடீரென ஏற்பட்டு, அவரது பிறந்த மண்ணான இணயத்தைப் பார்க்க அழைத்துச் சென்ற பொழுது
இலங்கையின் அளுத்தகாமமும் (தர்ஹாநகர்), அதன் அருகிலுள்ள துந்துவைச் சிற்றுாரும், காலிச் செல்லும் வழியில் உள்வாங்கியுள்ள கிந்தோட்டை கிராமமே கண்களில்!. இயற்கையோடு இணைந்து நிற்கும் ஊர்.
நாகர்கோவிலிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ள இடம். முன்பு அறிமுகமான பிரபல தொழில் அதிபர் மர்ஹ"ம் ஏ.பி.எம். நூஹ” தாயார் பிறந்த ஊர். அருகில் நாம் ஏற்கெனவே கண்டிட்ட ‘பட்டினம்!

Page 100
194 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
போன நேரம் பொன்மாலைப் பொழுது.
“புதுப்பள்ளியில் அஸர் தொழுதுவிட்டுப் பழைய பள்ளியைப் பார்ப்போமே” என்றார் இனயம் நியாஸ்.
ஏன் மறுக்க வேண்டும்? அந்தச் சிற்றுாரிலும் ஒரு தெளஹிதுப் பள்ளி! அழகான தோற்றம்.
அப்புறம் ஆரம்பகாலப் பள்ளிவாசலுக்குப் போனோம். சில வெளவால்கள் பறந்தடித்து ஓடின! (என் மீது ஏன் தான் அப்படி அச்சமோ?)
భః ** +يت{
பழம்பெரும் இனயம் பள்ளிவாசல்
 
 

மானாமக்கீன் 195
பழையதுகளுக்கு எதிரான புதிதுகளின் தாக்கத்தை புரிய முடிந்தது.
“இந்தப்பள்ளி வகைக்காக மர்ஹ"ம் நூஹ" மனைவியார் தமக்குச் சொந்தமாக இருந்த தோப்பை வக்புச் செய்தார்’ எனக் குறிப்பிட்ட நியாஸ் மேலும் தெரிவிக்கையில்,
“என் தந்தையார் உட்பட இ ன ய த் து க் க |ா ர ர் க ள் பெரும்பாலானோருக்கு கொழும்பே ஜீவனோபாயமாக இருந்தது. எனது தந்தையார் எஸ்.எம். முகைதீன் பிள்ளை 闇 அவர்கள் கொழும்பில் 20 ஆண்டு காலம் இலங்கையில் பல்வேறு தொழில்களைச் செய்தவர். அவர்கள் அனைவரும் நன்கொடை கொடுத்து கட்டப்பட்டதாக்கும் இது” என்றார்.
யார் யாரெல்லாம் கொழும்பில் நன்கொடை கொடுத்தார்கள் என்பதற்கு என்னிடம் பட்டியலே இருக்கிறது - என்றார் இதழாளர் நியாஸ். பட்டியல் இன்ஷா அல்லாஹ் அடுத்த பாகத்தில்.
அவரது தந்தையார் மறைவு 67ஆவது வயதில் (7-11-1995).
நான் பள்ளிக்குள் நுழைந்த போது கதீபோ, பிலாவோ மிக்க அன்புடன் என்னை வரவேற்றார். இவர் இப்படியொரு பழம் பள்ளியைப் பரிபாலித்து வருவதற்குப் பாராட்டு மட்டும் போதாது, கைநிறைய வாரிவழங்கவும் வேண்டும்.
அங்கிருந்து கனத்த இதயத்தோடு திரும்பும் வழியில் ஓர் அழகிய இல்லத்தைக்காட்டி, “இதுதான் கொழும்பில் தங்க ஆபரணக்கடை வைத்திருந்த ஸாலிஹ் ஹாஜியார் இல்லம்’ என்றார் நியாஸ்.

Page 101
196 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
மர்ஹம் ஏ. எஸ்.எம். ஸாலிஹ் ஹாஜி
நினைவலைகள் ஓசை இட்டன!
என் எழுத்துக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய ஒருவரான அந்த மெசன்ஜர் வீதி ஸாலிஹ் ஹாஜியா? அமைதி, அடக்கத்திற்கு மற்றுமொரு
பெயரல்லவா அது
- --- 1 “நீங்க நினைத்தது சரி. ஆனால் இந்தப் பெரிய வீட்டில குறிப்பிட்டுப் பார்க்கும்படியா யாரும் இல்லை.
கிட்டத்தட்ட மூடப்பட்டுத்தான் இருக்கிறது’ - என்றார் சகோதரர்.
உண்மை. 96ஆம் இலக்க மெசன்ஜர் வீதி கொழும்பு - 12இல், புகழ்பெற்ற கோட்டாறு முஹியித்தீன் தைக்கியா எதிரில் தொழில் பார்த்த அந்த அப்துல் சுக்கூர் முஹம்மது ஸாலிஹ் அவர்கள் தமது பிறந்த மண்ணில் கட்டிய அழகிய இல்லத்தில் ஆளரவத்தைக் காண முடியவில்லை.
துணைவியார் சென்னையில், பிள்ளைகள் அனைவரும் கொழும்பில் அதே 96ல். ஒரு தங்கை மகன் மட்டும் (முஹம்மது மாலிக்) நாகர்கோவிலில் 'ஜ"வல் பாலஸ்’ நகைக்கடை நடத்துகிறார் என்ற தகவல்களைப் பின் தெரிந்தேன்.
அந்த நல்ல மனிதரது நிழற்படத்தைப் பிரகரிக்க வேண்டும் என்ற முயற்சியில் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் போனேன்.
இளைய தலைமுறைகளாக இருப்போர் இப்படிப்பட்ட பதிவுகளின் அருமை பெருமைகளை உணர்ந்து செயலாற்றிட வேண்டும் என்ற கருத்து ஏற்பட்டது.
 
 

மானாமக்கீன் 197
மர்ஹ"ம் ஸாலிஹ் ஹாஜியாரின் புத்திரச் செல்வர்கள் ஐவர். ஜனாப்களான எம்.எஸ்.எம். சித்தீக் (27) - எம்.எஸ். எம். ஃபாயிஸ் - எம்.எஸ்.எம். இர்ஷாத் - எம்.எஸ்.எம். றிஃபாய் - எம்.எஸ்.எம் ஆக்கில் ஆகியோரில் இரண்டாமவர் ஃபாயிஸ் இறையடி சேர்ந்து விட்டார். இளையவர் இர்ஷாத்தைச் சந்தித்துவிட்டு மூத்தவர் சித்தீக்கை நேர் கண்டேன். தந்தையாரைப் போலவே அமைதியும் இனிய சுபாவமும் கொண்ட இச் சகோதரர்கள் அவரது பெருமையை நிலைநாட்ட வேண்டும் என என் பேனா விரும்புகிறது. மேலும், இர்ஷாத்தும், றிஃபாயும் சென்னைப் புதுக்கல்லூரித் தயாரிப்புகள் என்பதிலும் மகிழ்வு.
ஹாஜி முஹியித்தீன் பிள்ளை சேக்
அடுத்து, நான் சென்ற இல்லம் 82 வயது எம். முஹியித்தீன் பிள்ளை சேக்
ஹாஜி அவர்களுடையது.
感”
இவரும், கோட்டாறு முஹியித்தீன் தைக்கியாவுக்கு அருகில் உள்ள சந்தியிலிருந்து (சிறு ஜங்சன்) ஆரம்பிக்கும் புதிய சோனகர் தெரு 102 ஆம் இலக்கத்தில், தனது தமையனார் w மூனா சேனா (எம். செய்யது முஹம்மது)வுடன் இணைந்து ஏகதர்பாராக நூரானிய்யா ஹோட்டல் நடத்தியவர். நான் நேர் கண்ட சமயம் சுகயினம். துணைவியார் தமது தள்ளாத வயதிலும் பணிவிடை. அந்தத் துணைவி, சமீபத்தில் (9.03.2003) நான் இழந்த என் அன்னையாரைப் போலவே உயரமும் உள்ளமும் உபசரிப்பும்.
இருவருமே கொழும்புக் கதைகளை அடுக்கிக் கொண்டே போனார்கள்.

Page 102
198 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அக்காலங்களில் ஹஜ்ஜ" யாத்திரைக்குப் பொறுப்பாக அகில இலங்கை முஸ்லிம் லீக் இயங்கியதையும், ஹஜ்ஜ"க் கமிட்டித் தலைவராக கோட்டாறு தரீக்காவாதிகளின் அபிமானியான ஹாஜி பளில் ஏ. கபூர் (பின் நாடாளுமன்ற உறுப்பினர்) செயற்பட்டதையும், பெரிய பணக்காரர் நூஹ"வுடன் யாத்திரை சென்றதையும் நினைவுகூர்ந்த ஹாஜி முஹியித்தீன் பிள்ளை சேக், அந்த 1957யில் கொழும்பு - ஜித்தா போகவும் வரவும் கப்பலுக்கு ரூ 686/13 (இலங்கை நாணயத்தில்) மட்டுமே செலவாயிற்று என்று அதற்குரிய ரசீதையும் காட்டினார்! ஹாஜி பளில் கபூர் கையெழுத்திட்ட கடிதத்தையும் கரட்டினார்.
ஆறு பிள்ளைகளின் (சுலைஹா பீவி - ருக்கியா பீவி - அப்துல் ரவீது (சவூதியில்) - நிஸார் ஆலிம் - நஜீமா - அப்துல் ரஹீம்) பெற்றோர்களாகிய இவ்வயோதிபர்களின் ஆனந்தமான தனிமை வாழ்க்கை என்னை ஈர்த்தது. அவர்களது ஒரு மகனாரை (நிஸார்ஆலிம் தவ்ஹீது) வழியில் செயல்படும் ஜனாப் மதனீயின் தாருர்ரஹ்மத் அனாதை நிலையத்தில் சந்தித்தது இப்பொழுது நினைவில்.
அக்காலத்தில் கொழும்பு-11, பேங்க்சால் வீதியில் ஒஹோவென்றிருந்த கேரள லங்கா போட்டோ நிலையத்தில் பிடித்த பெரிய அளவு நிழற்படத்தை இந்நூலுக்காக கவரிலிருந்து துணைவியார் தள்ளாடியபடி கீழிறக்கியபோது மாலை மாலையாகக் கண்ணிர். அவரே பிரேமை உடைத்து படத்தை என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் சொன்னது - "மகனே, நீ செய்கிறது நல்ல காரியமாக்கும். இனிமே கொண்டு கிதாபிலே இவர் இரிக்கட்டும்’
இதோ, இருக்கச் செய்து விட்டேன்.
சற்று, முன்பக்கத்தில் நிழற்படத்தைப் பாருங்கள்.

மானாமக்கீன் 199
தமிழகத்தில் அத்தனை அறிமுகமில்லாத் துருக்கித் தொப்பியுடன் ஹாஜி முஹியித்தீன் பிள்ளை
“அந்தத் தொப்பியில் அவ்வளவு விருப்பமா?’ என்றேன்.
“ஏணில்லாமல்? அண்டைக்கு லங்கா முஸ்லிம்களின் அடையாளமே அதுதானே! அதைப் போட்டால்தான் மதிப்பு பளில் கபூர் ஹாஜி அதில்லாமல் வெளியில் இறங்கவே மாட்டாரே!” என்று பதில்.
நான், அவருடன் அளவளாவும் சேதி அறிந்து இன்னொரு முதியவர் சிறுபிள்ளையாக ஓடோடி வந்தார்!
|
அவர் ஜனாப் ஈ.எம்.எ. அப்துல் காதர். வயது 70-75 இருக்கலாம். கொழும்பில் பலசரக்கு - ஹோட்டல் என்று ஆரம்பித்து 10-15 பேரை வைத்து பீடித்தொழிலும் பண்ணியிருக்கிறார். செய்யதுபிடிக்கு அவர் ஒரு ஏஜண்ட் இவரும் கொழும்பு - 12, புதுக்கடை - குமாரவீதி (பிரின்சஸ் கேட்) - பார்பர் ჯsა & வீதி என ஆட்சி நடத்தியிருக்கிறார்! |-
கொத்தனார்பிள்ளை பீர்முஹம்மது ஹாஜி - இதழாளர் இனயம் நியாஸின் தந்தையார் முகைதீன் பிள்ளை, - கிரேண்பாஸிலிருந்த ‘மூனா சேனா’, கல்லுக்குளி (பழைய சோனகர் வீதி) இப்ராஹிம் பிள்ளை - சுல்தான் - கண்ணு - முஹம்மது கண்ணு - நூர் முஹம்மது என்று இனயத்துப் புள்ளிகளது இலங்கை வரலாறு இந்த அப்துல் காதர் பெரியவருக்கு மனப்பாடம்!

Page 103
200 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
மேலும் - இப்பொழுது நாகர்கோவிலில் பிரபு ஹோட்டலாக உள்ளது முன்னர் ‘சிலோன் ஸ்டார்’ என மின்னியதாம். இதை நிறுவிய இனயத்து எச். செய்யது முஹம்மது, எச். முஹம்மது சாலிஹ் சகோதரர்கள் அக்காலத்தில் கொழும்பில், பஞ்சிக்காவத்தை (கொழும்பு-10) போன்ற பல இடங்களில் ஹோட்டல்கள் நடத்தியவர்கள் என்ற தகவலை குளச்சல் ஜனாப் பி.எம்.எம். அப்துல் கரீம் அளித்தார்கள்.
மிடாலம் மற்றொரு ஊர். இது குக்கிராமமாக இருந்தாலும் இங்கிருந்து கொழும்பு வந்த எம்.டி முஹம்மது கண்ணுவை ஈரோப்பியர் கண்ணு என்றார்கள். ஏன்? இவர், கொழும்பின் முக்கியத் தொடர்வண்டி நிலையத்திற்கு முன் உள்ள வீதியில் நடத்திய தாஹா ஹோட்டலில் அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்தான் நிறைந்திருப்பார்களாம்! மது அருந்த அல்ல, சுவை மிக்க அசைவ உணவு உண்ண
இதே மிடாலத்தைச் சேர்ந்த ஆர்.எம்.பி. முஹம்மது கண்ணு சம்பை ஏற்றுமதியில் வில்லாதி லில்லனாம்!
(சரி இனி எந்த ஊருக்கு அழைத்துச் செல்லலாம்?)
வாருங்கள் ஆளுருக்கு.
அந்த இயற்கை எழில்மிகு ஊரை நினைத்தாலும் பேசினாலும் எழுதினாலும் அவரே முதலில் நினைவில் வருவார். இளவயதிலேயே இறைவனது அழைப்பை ஏற்றுப் புறப்பட்டுவிட்ட அவர் பெயருடனேயே ஆளூர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய இதழியல் உள்ளளவும் பெயர் சொல்லப்பட வேண்டிய பெருமைக்குரியவர்.
வேறு யார்? “முஸ்லிம் முரசு’ ஜலால் அவர்கள் தான். அவர் மட்டும் இன்றிருந்தால் இந்த நூலின் வெளியீட்டு விழாவில் அவரே அறிமுகவுரை கொடுத்து வைக்கவில்லையே!

மானாமக்கீன் 2O1
ஆனால் ஒரு மனதிருப்தி. மர்ஹ"ம் ஜலால் 1977ம் ஆண்டு அக்டோபரில் இலங்கை வந்துள்ளார்கள். 'மினாராக்கள் நிமிர்ந்து நிற்கின்றன’ எனும் சிறுகதை தொகுதி வெளியான பின் புறப்பட்ட பயணம் அது ஒரே ஒரு முறை விஜயம்,
இங்குள்ள சேனா அம்மாள் தைக்கியா அருமையான தென்னந் தோப்புக்கு மத்தியில் இல்லம் ஆ அமைத்திருப்பதால் ஒய்வெடுக்க வசதியாக இல்லங்கள் உண்டு. அத்தோடு இலங்கை “வொண்டர் லைட்” 8 சவர்க்காரத் தயாரிப்பாளர், ஷெய்கு இண்டஸ்ட்றீஸ் எஸ்.எஸ். ஹமீது மர்ஹ"ம் நிர்மாணித்துள்ள மண்டபமும் உண்டு. (இத்தகவல் ஏடு -5லும் இடம்பெற்றுள்ளது.)
திருவனந்தபுரத்திலிருந்து தொடர்வண்டியில் வந்தால், நாகர்கோவிலை அடைய 10 கி.மீ. தூரம் இருக்கையில் ஆளூர் வரும்.
1 முஹம்மது புஹாரி மாஸ்டர்
இங்கிருந்து மிக இளவயதில் இலங்கை மண்ணை மிதித்த பெருமை, அதுவும் கிழக்கிலங்கை, கல்முனையில் | கால்பதித்த பெருமை - அப்பொழுது 24வயது வாலிபராக விளங்கிய செய்யிது முஹம்மது புஹாரி அவர்களையே சாரும்.

Page 104
202 > வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அதுவும் காயல்பட்டினம் வழியாக நடந்திருக்கிறது. எனதருமைப் பள்ளித்தோழர் ஹாஜி எம்.எம். முத்து வாப்பா அவர்களது மாமனார் ஹாஜி எம்.எம். உவைஸ் அவர்கள் துணையோடும் நடந்திருக்கிறது.
ஆலிஜனாப் நைனார் முஹம்மது ஆலிம் அவர்களது மகனாக 1918 மார்ச் - 1ல் பிறந்த மர்ஹ"ம் செய்யது முஹம்மது புஹாரி, நாகர்கோவிலில் கற்று, தந்தையாரது காயல்பட்டினத் தொடர்புகளினால் அஸ் - ஸெய்யித் ஹஸன் மெளலானா அவர்களின் கல்முனை நிறுவனத்தில் கணக்காளரானார்!
அறிவாற்றலும், அழகிய கையெழுத்துடையவராகவும் திகழ்ந்த அவரை எம்.எம். உவைஸ் ஹாஜி இலங்கை அழைத்து வந்தார் (1942) கல்முனைவாசிகளின் அபிமானியானார்.
ஆனால் புஹாரி மாஸ்டராகப் புகழ்பெற வேண்டியிருந்ததால் இறைவனது எண்ணப்படியும் திட்டப்படியும் தமிழக அரசுப்பள்ளி ஆசானானார்!
இருந்தாலும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கிற நீண்ட விடுமுறைகளில் கல்முனையையும் கணக்குகளையும் மறக்கவில்லை!
எட்டு மக்களைப் பெற்றெடுத்து அனைவருக்கும் கல்வியறிவு வழங்கிய ஒரு தந்தையான புஹாரி மாஸ்டர், அவர்களில் மூன்றாமவரை புகழ்மிகு இலங்கை காலி மாநகருக்கே வழங்கி உயர்ந்துள்ளார்!
இறுதிக்காலங்களை சென்னை, புதுப்பேட்டையில் மகளாருடன் கழித்தபடியே 1423 - ரமழான் - 22ல் (28.11.2002) 84ஆவது அகவையில் இறைவனடி சேர்ந்தார்கள்.

மானாமக்கீன்
காலி- கோட்டையில் ஆளுர் அப்ழலுல் உலமா!
ஒரு புஹாரி மாஸ்டர் அவர்களால் ஆளூர் பெருமை கொள்ள வேண்டும் என்றால், ஒரு றஃபீக் அஹ்மது அப்ழலுல் உலமா அவர்களால், நூற்றாண்டு கண்ட காலி, கோட்டை அல் - பஹ்ஜத்துல் இபுராஹிமிய்யா | பெருமிதப்பட வேண்டும்.
மர்ஹ"ம் செய்யிது முஹம்மது புஹாரி அவர்களது மூன்றாவது புதல்வரான இவர், இப்பொழுது 49ஆவது அகவையில் (1954-ஜுன்-20) மேற்படி அறபுக் கலாசாலையின் துணை அதிபராகவும், உருதுப் பேராசிரியராகவும் திகழ்கிறார்கள்.
தந்தையாரது காயல்பட்டினத் தொடர்புகளால் மஹ்லறத்துல் காதிரிய்யா வில் மூன்றாண்டுகளும், கூத்தாநல்லூர் மன்பவுல் உலாவில் 4 ஆண்டுகளும் கற்று மெளலவி ஆலிம் (உலவிய்யு) பட்டம் பெற்றார். பின்பு, வேலூர் அல் - பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் ஈராண்டுகள் பயின்று ஃபாஜில் பாக்கவி பட்டமும் பெற்றார்கள். இக்காலகட்டத்தில் அப்ழலுல் உலமா என்ற அரசுத் தேர்வும் எழுதி முதல் தரத்தில் பட்டம் பெற்றார்கள்.
அன்னார் முதன் முதல் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பை காயல்பட்டின மஹ்ழராவே வழங்கியது. இங்கிருக்கும்பொழுதே மதுரை, காமராஜர் பல்கலைக்கழக அஞ்சல்வழி கல்வி மூலம் பி.ஏ. பட்டமும் பெற்றார்கள்.
அதன்பின்னும் அறிவாற்றலை அதிகரித்துக் கொள்ள பின்னிற்கவில்லை!

Page 105
204 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
1991-92களில் வட - இந்திய அலிகாரில் எம்.ஏ. அறபுத்தேர்வும் எழுதினார்கள்.
இவரது மஹ்ழரா சேவைக்காலத்தில், இலங்கை - சிங்கப்பூர் - மலேசியா - பினாங்கு போன்ற பன்னாட்டு மாணவர்களும் பயின்றுள்ளனர் என்பது பெருமைக்குரிய விடயம்.
மேலும் - 1999லிருந்து 4 ஆண்டுகள் குமரியில் உள்ள திருவிதாங்கோடு ஊரில் இயங்கும் அல் ஜாமிவுல் அன்வர் அறபுக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார்கள். இதன்பின்னர் தான் இவரது சேவையை காலி - கோட்டை இபுராஹிமிய்யா பெறும் பாக்கியத்தைப் பெற்றுள்ளது.
6
‘எங்கள் அப்பா செய்யது அஹமத் அவர்களை ஆளூரில் அறியாதவர் யாருமில்லை. கண்ணியம், கட்டுப்பாட்டை அவரிடம் கற்க வேண்டும். பெங்களூரில் ஒதி முடிக்கும் வரை விடுமுறை காலமெல்லாம் அப்பாவோடு கழித்த அனுபவத்தில் இதைப் பெருமையாகச் சொல்கிறேன்’ - என்றார் அவர்.
தந்தையர்களையே புகழாத தனயர்கள் வாழும் இக்காலத்தில் தந்தையின் தந்தையை நினைவுகூரும் ஒரு பேரப்பிள்ளையைப் பார்த்தேன். அவரது வளமான சேவை தொடர வாழ்த்துகிறேன்.
அன்னாரது சகோதரர்களில் ஒருவர், ஜனாப் முஹம்மது இக்பால் தற்சமயம் நாகர்கோவில் அரசுத் தலைமை மருத்துவமனையில் முதன்மை மருந்தாளராகவும் மற்றவர் ஆவிக் ஹ"சைன் சென்னை எழிலகத்தில் வணிகவரி இலாகாவிலும் பணி. ஃபாதுல் அஷ்ஹஃப், முஹம்மது அப்துல்காதிர் ஆகியோர் அங்கேயே வியாபாரம். கடைசியானவர், அப்துல் மாலிக் (எம்.காம்) அறபகத்தில்,

மானாமக்கீன் 205
முஹம்மது இஸ்மாயில் ஆலிம்
லுக்மானுல் ஹக்கீம் என்ற ஆலிம் பெருந்தகைக்கு மகனாக 1915ல் பிறப்பு. இளமையில் சில ஆண்டுகள் தமிழகத்தில் பணிபுரிந்து விட்டு கண்டிப்பகுதி மாத்தளையில் நீண்டகாலம் பணி புரிந்தார்கள். இறுதிக் காலத்தில் ஆளூரிலேயே பணியாற்றி 2002ல் வஃபாத்தானார்கள்.
அப்துர் ரஹிம் லெப்பை
இவர்கள் தனது இளமைப் பருவத்திலிருந்து கொழும்பு - கொம்பனித் தெரு தோழப்பைத் தோட்டத்து ஹனஃபிப் பள்ளியில் இமாமாகப் பணி புரிந்தார்கள். மக்களிடம் நல்ல மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருந்தார்கள். இறுதிக்காலம் வரை இங்கேயே பணியாற்றிவிட்டு தனது பிறந்தகத்தில் ஒய்வுறக்கம் கொண்டார்கள். முஹம்மது இபுராஹிம் லெப்பை
இமாம் அப்துர் ரஹீம் லெப்பை அவர்களுக்கு முன்போ பின்னோ ஆளூர் இபுராஹிம் லெப்பை என்பாரும் கொம்பனித்தெரு தோழப்பைத் தோட்டப் பள்ளிக் கதீபாக இருந்த தகவலும் கிடைத்தது. அப்துர் ரஷிது ஆலிம்
கண்டிப்பள்ளிவாசல் ஒன்றில் (அனேகமாக காயல்பட்டின செல்வாக்குடைய ராஜவீதி, முஹியித்தீன் தைக்யாவாக இருக்கலாம்) 1960களில் இவர்கள் கடமையாற்றி 1978ல் ஆளூரிலேயே ஒய்வுறக்கம் கொண்டார்கள். ஒரு சிலர் வேறு துறைகளில். ஏ.சி. மன்சூர் லெப்பை : கொழும்பு -12, வாழைத் தோட்டப் பகுதியில் வாழ்ந்து சித்து வேலைகளாலும், மாந்திரீகத்தாலும்

Page 106
2O6 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
நோய் நிவாரணங்கள் செய்ததாகச் சொல்லப்படுகிறது. 1993ல் ஊரில் மறைவு.
எஸ்.எம். ஷாஹ"ல் ஹமீது கொம்பனித் தெருவில் சாயாக் கடை வைத்து தேங்காய்ப்பட்டினக் கடைக்காரர்களுடன் போட்டி போட்டிருக்கிறார்! அப்பொழுது கோட்டாறு செய்யது முஹம்மது மகன் அப்துல் காதிரும் அவரின்கீழ் பணி.
வண்டல் வடக்கு சூரங்குடி
மர்ஹ"ம் பக்கீர் சாஹிபு இலங்கையோடு தொடர்பு கொண்டிருந்தவர். அவரது துணைவியார் மர்ஹ"ம் அஹ்மது நாச்சியார் காயல்பட்டின வம்சாவளி காயல் வாசிகளின் இலங்கை தொடர்பு கடலளவு இல்லையா..?
இத்தம்பதிக்கு 5 ஆண் மக்களில் செய்யது முஹம்மது, செய்யது கண்ணு, அசனார் பிள்ளை, நாகூர் மீரான் ஆகியோர். இவர்களில், மர்ஹ~ம் பி.எஸ். நாகூர் மீரான் பிறப்பால் கொழும்புக்காரர். இவரது தாயார் வாப்பம்மா கண்ணும்மா ஆகியோர் இலங்கையரே.
இவர்தம் புதல்வர் பேராசிரியர் பி.எஸ்.என். ஷாஹ"ல் ஹமீது ஹாஜியார். சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பணிநிறைவு கண்டு ஒய்வில்!
ஜனாப் செய்யத முஹம்மது
இவ்வூரில் இன்னொரு குடும்பத்தில் 80அகவை மைதீன் பீவியைச் சந்தித்த பொழுது தமது தந்தையார் மர்ஹ"ம் மைதீன் சேக் முஹம்மது மற்றும் பாட்டனார் நூறுண்பிள்ளை கொழும்பு கிட்டங்கித் தெருவில் இருந்ததை தெரிவித்தார். மேற்படியாரது
 

மானாமக்கீன் 2O7
மருமகள் திருமதி சம்ஸாத் தனது தந்தையார் மர்ஹ"ம் முஹம்மது மைதீன் பல்லாண்டுகளாக யாழ் நகரில் பணிபுரிந்ததை பெருமையுடன் குறிப்பிடுகிறார்.
இந்த வடக்கு சூரங்குடியில் 88 அகவையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜனாப் செய்யது முஹம்மது 90 அகவையில் உள்ள ஜனாப் பஞ்சாயம் அப்துல்காதரும் - சூரங்குடி குருநாக்கல் ஹாஜியார் முஹையதீன் சாஹிபு (மர்ஹ"ம்) கடையில் கடமை புரிந்தவர்கள்.
நம்பாளி முதல் வள்ளவிளை வரை.
நம்பான் இருப்பது நாகர்கோவிலிலிருந்து 40 கி.மீ. தொலைவில். கடற்கரையோர ஊர். இங்கிருந்து ஒரு தாடிவாலா (பட்டப்பெயர்) கொழும்புக்கு வந்து ஆட்டுப்பட்டித்தெருவில் (வுல்பெண்டால் ஸ்டிரீட்) சாயாக்கடை போட்டிருந்தாராம். இன்னொருவர் 'முன்ா மூனா’ புதுக்கடையில் ஒட்டல் - சகோதரருடன், இன்னும் பலர் இருப்பதாக அச்சுக்குப் போகும் நேரத்தில் தகவல் பெற்றேன். அடுத்த 2ம் பாகத்தில் எதிர்பாருங்கள்.
இனி பூத்துறையை எட்டிப்பார்ப்போம். கடற்கரை ஒரமாக அமைந்துள்ள அழகிய அமைதியான ஊர்.
இங்கிருந்து உருவான மர்ஹ~ம் பி.ஏ. பீர்முஹம்மது கண்ணு ஆரம்பத்தில் தூத்துக்குடியில் போர்வர்டிங் ஏஜண்டாகவே வாழ்க்கையை ஆரம்பித்தார். இவருடைய “பிஏபி’ நிறுவனம் பின்னர் கொழும்பில் கமிசன் ஏஜண்டாக மாறியது.
தமது சகோதரர்கள் நால்வருடன் (மர்ஹ"ம் ஹாஜி பி.ஏ. செய்யது முஹம்மது - மர்ஹ”ம் ஹாஜி பி.ஏ. நூஹ" கண்ணு

Page 107
208 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
மர்ஹ"ம் ஹாஜி பி.ஏ. முஹம்மது கண்ணு இவருக்கு 4 சகோதரர்களும் 4 சகோதரியரும் இரண்டு தம்பிமார் (மர்ஹ"ம் ஹாஜிகள் “சேமக்கண்ணு' என்ற பி.ஏ. செய்யது முஹம்மது, பி.ஏ. நூஹ” கண்ணு) இலங்கையில் இவருடன் தொழில் செய்திருக்கின்றனர்.
மூன்றாமவர் மர்ஹஜூம் ஹாஜி பி.ஏ. முஹம்மது கண்ணு கேரளாவில் சட்டசபை உறுப்பினராக இருந்தவர். இளையவர் பி.ஏ., முஹியித்தீன் குஞ்சு.
அடுத்து, இரவி புத்தூர்க்கடை.
பழமை வாய்ந்த முஸ்லிம் ஊரான இங்கே 73-வயது எம். அப்துல்காதர் அவர்களைச் சந்திக்கலாம். தன் 16ஆவது வயதில் கொழும்பு வந்து 186/1 - பேங்க்சால் வீதியில் சாயாக்கடை வைத்திருந்தவர்.
கீழக்கரை - காயல்பட்டினவாசிகளுக்கும், முன்னைநாள் அமைச்சர் அல்ஹாஜ் பெளஸிக்கும் நன்கு அறிமுகமான பெயர்.
பின்வரும் ஊர்களில் உள்ளோரும் இலங்கை வாலாக்களாக இருந்திருக்கின்றனர்.
கடையாலுமூடு : இங்கு வாணியக் குடிவீட்டு மர்ஹ~ம்
பீர் முஹம்மது கொழும்பு சென்றவர். அவரை, “கொழும்பன் பீர் முஹம்மது” என்றே ஊரில் அழைப்பார்களாம்.
குலசேகரம் இவ்வூர் சாஹ"ல் ஹமீது என்பவர் கொழும்பில் இருந்துள்ளார்.
வள்ளவினை : இங்கிருந்தும் ஒரு சாஹ"ல் ஹமீது தந்தையார் பக்கீர் கண்ணு.

மானாமக்கீன்
பொழியூர் பீர்கண்ணு ஹாஜியார்
குமரிமாவட்டத்து எந்த பட்டித் தொட்டியிலும், எந்த மூலை முடுக்கிலும் ஒரு பீர் கண்ணு இருக்கவே
செய்வார்!
இந்தப் பெயரில் அக்கால - இக்கால மக்களுக்கு ஒரு மயக்கம்!
இங்கே ஒரு பொழியூர் fi கண்ணு
இந்தப் பொழியூர் குமரி மாவட்டத்திற்குள் சேர்க்கப்படாமல் கேரள குமரி எல்லையில் கொஞ்சி விளையாடுகிறது!
வெறும் வர்ணனை அல்ல! போய்ப் பார்த்தால் புரியும் அந்த அளவுக்கு இயற்கை அன்னை கொஞ்சி மகிழ்கிறாள். போனால் வர மனம் வராது.
இந்தக் கிராமத்திலிருந்து 64 ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கை மண்ணை மிதித்த பீர்கண்ணு ஹாஜி ஆன்மிக உள்ளங்களுக்கும், இலக்கிய நெஞ்சங்களுக்கும் மிகவும் நெருங்கியவர்.
நல்லிதயம் படைத்தவர்; நல்லதையே நினைப்பவர்; கொழும்பின் மிகப் பிரபலமான இரண்டாம் குறுக்குத் தெரு சம்மாங்கோட்டுப் பள்ளி டிரஸ்டிகளில் ஒருவர் என்ற அந்தஸ்தினால் இந்த, கேரளக் மலையாளக் கரையோர மனிதர் உயர்ந்து நிற்கிறார். அன்னாருக்கு மூத்த சகோதரர்கள் மூவர். (ஜனாப்கள் செய்யது முகம்மது - காதர் - சாலிஹ்).

Page 108
210 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
ஆரம்ப காலத்திலிருந்து ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர். பீரு கண்ணு ஹாஜி 82களிலேயே இலங்கைப் பிரஜை.
கொழும்பில் பிரபல வணிக நிறுவனங்களாகத் திகழ்ந்த குமரியின் எஸ்.எம். கம்பெனி, பி.ஏ.பி, ஏபிஎம் போன்றவற்றின் நிறுவனர்களுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தார்.
தேங்காய்பட்டினத்தைச் சேர்ந்த பிரபல ஒட்டல் அதிபரும், சமூக சேவையாளருமான எஸ்.எம். பீர் முஹம்மது பிள்ளை இவரது ஆருயிர் தோழர். அன்னார் கொழும்பு -15, பாலத்துறையில் மரணித்த பொழுது நண்பருக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடமைகளை முன்னின்று செய்தார்.
அதே நண்பருடைய 76-78ஆம் இலக்க மெசன்ஜர் வீதி இல்லத்தைக் கிரயம் கொடுத்து வாங்கி இன்று அமைதி வாழ்க்கை வாழ்கிறார். அவரது 6 ஆண் மக்களையும் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். அருமையாக ஒரே ஒரு புதல்வி.
பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளரும், கொழும்பு - 15 மாதம்பிட்டிப் பள்ளிப் பரிபாலன சபைத் தலைவருமான “செம்பியன் திரேட் எஸ்.எம். ஹஸன் முஹம்மது
ஹாஜி இவரது சம்பந்தி!
இந்த வகையில் இலங்கை - தமிழ்நாடு - கேரளா மூன்றுக்கும் உறவுப்பாலம்.
கொழும்பு - 11, பேங்க் சால் வீதி அத்தியா அதுஷ் ஷாதுலிய்யா தைக்கியா, பொழியூர், வள்ளவிளை, மேடை வளாகம், காஞ்சாபுரம், குளத்தூர் என்றெல்லாம் இறை இல்லப் பணிகளுக்குத் தோள் கொடுத்துள்ளார்.

மானாமக்கீன் 211
விசேடமாக பொழியூரில் நான் கண்ட தைக்கியா. இவர் பெயரை என்றும் சொல்ல அழகாக அருமையாக அமைந்துள்ளது. எல்லாம் வல்லவன் அவருக்குப் பிணி இல்லாப் பெருவாழ்வை வழங்கிட இறைஞ்சுதல்கள்.
அழகுத் தமிழுக்கோர் அப்துல் கபூரும் அமைச்சர் அன்வரும்
“இறையருட் கவிமணி' - என அதிராம்பட்டின மக்களால் பட்டம், ‘தீன்வழிச் செம்மல்’ என குளச்சல் இஸ்லாமிய இளைஞர் முன்னேற்றச் சங்கத்தார் பட்டம், ‘தமிழ்ச் செல்வம் - என மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தினரால் பட்டம்.
- இப்படியெல்லாம் அவர் அழைக்கப்பட்டாலும், ‘அழகுத் தமிழுக்கோர் அப்துல்கழர்’ என்று சென்னைப் பல்கலைக்கழகத் தலைவர் டாக்டர் சி. பாலசுப்ரமணியம் சூட்டியது தான் அருமை!
இந்நூல் அச்சுக்குப் போகும் கடைசி நிமிடங்களில், குளச்சல் இஸ்லாமிய இளைஞர் முன்னேற்றச் சங்கத்தார் 26.5.2003ல் தங்களது 32ஆம் ஆண்டு விழாவில் எனது இலக்கிய ஆய்வுச் சேவைகளுக்காக ‘தீன்வழிச் செம்மல்" பட்டம் வழங்கிப் பாராட்டியது. .--
இறையருட் கவிமணி சுமந்திருந்த ஒன்றை நான் என் சிரசில் சுமக்கச் செய்தனர்!
இது நியாயமா? என்பதனை என் தமிழக அபிமானிகளுக்கே விட்டு விடுகிறேன்.

Page 109
212 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
ஆனால் 20க்கு மேற்பட்ட நூல்களைப் பிரசவித்து விட்ட நான் பெரும்பாலானவற்றில் தமிழக தமிழ் பேசும் மக்களையே சிந்தித்துச் செயலாற்றியிருக்கிறேன்.
அந்த வகையில் மேலும் செயல்பட இதுவொரு நிச்சயமான உந்து சக்தி!
நல்லது. தொடர்ந்து ‘தீன்வழிச் செம்மல் குறிப்பு.
அப் பேரறிஞரை திருவிதாங்கோடு பெற்றெடுத்தது; தக்கலை தத்தெடுத்துக் கொண்டது. இறுதி ஆண்டுகளில் எனது புரவலர் ஃபாயிக் அவர்களும் அடியேனும் அவர்களை நேர்முகம் கண்டு, எலுமிச்சை பானம் பருகியது பசுமை!
தக்கலையில் அவர்களது 'அந்திமந்தாரையைச் (மக்ரிப் வேளை) செலவிட்டது மிகப் பொருத்தம். ஏனெனில் தத்துவக் கவிஞர் பீரப்பா ஜொலித்து மறைந்த தவத்திரு மண்ணல்லவா!
அவர்கள் தம் அருமை இளவல், பேராசிரியர் கா. முகம்மது பாறாக் அவர்கள் ஒரு மெய் சிலிர்க்கும் தகவலை கோட்டாறு கே.ஏ. கபீர் மூலம் எத்தி வைத்தார்கள்.
சகோதரர்களின் தந்தையார் "காவன்னா’ என்ற காட்டு பாவா சாகிபு அவர்கள் இலங்கையில் வாழ்ந்தவர்களாம்! அவரைத் தக்கலை பீர்கண்ணு கங்காணியார் அழைத்துச் சென்றாராம்.
இப்பொழுது புதிர் விடுபட்டு விட்டது! அவர்கள் இறுதிக்காலம் வரையில் இலங்கை முஸ்லிம்கள் மீது - குறிப்பாக இலக்கியவாதிகள் மீது அடங்காக் காதல் கொண்டிருந்தது இதனால்தானோ!
குலசேகரப்பட்டினப் பெரியவர், எனது ஆரம்ப எழுத்துக்களின் உந்து சக்தி, மர்ஹ9ம் எஸ்.எம். ஸஹாப்தீன்,

மானாமக்கீன் 213
சமாதான நீதவான் 96 குமாரவீதியில் சமுதாயக் கண்மணிகளாகத் திகழ ஒரு குழுவையே உருவாக்கிச் செயல்பட்டார்கள்.
அவர்களது ஏற்பாட்டில் ஆண்டுதோறும் புறக்கோட்டை வணிக கேந்திரத்தில் நிகழ்வுற்ற மீலாத் வைபவம் ஒன்றுக்கு (சுமார் 40-45 ஆண்டுகளுக்கு முன்) வருகை தந்ததிலிருந்து இலங்கை முஸ்லிம்கள் இதயத்திலும் இடம்.
முக்கியமாக, இப்போதைய இலங்கை அரசின் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அப்துல் ஹமீத் முஹம்மத் அஸ்வர் அவர்களது நெஞ்சில் அது ஆழமான நட்பாக மிளிர்ந்தது. நெருங்கிய இலக்கியச் சிந்தனைகளுக்கு வித்திட்டது. இது, விரல் விட்டெண்ணத்தக்க ஒருசில 'பேனாக்காரர்களுக்கே தெரியும்.
அழகழகான கடிதங்களை அவர்கள் பரிமாறிக் கொண்டார்கள். சிலவற்றை என்னிடம் காட்டி நெகிழ்ந்திருக்கிறார்கள் இறையருட் கவிமணி! (இரண்டொன்றைக் கவர்ந்து வராது போனதில் கவலை)
இறைவா! இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்கள் சார்பில் அன்னாரை உன் சுவர்க்கப்தியில் நிரந்தரமாக்கி அருள்பாலித்திட இறைஞ்சுதல்கள்.
ஒரு நெருடல் :
அவர்களது இளவல் அபிமானத்திற்குரிய பேராசிரியர் பாறுரக் அவர்கள் முதலாண்டு நிறைவு மலரொன்றை வெளியிட்டு அசத்தியிருக்கிறார்கள். ஆனால். ஆனால்..? இலங்கைத் தொடர்புகளைப் பதிக்கத் தவறியே, தவறிப் போனார்களே! ஏன்?

Page 110
214 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
ஒர் இசைக்கோவுக்கு திருவிதாங்கோடு மண்ணின் வாசம்!
நாகர்கோவிலிலிருந்து 18 கி.மீ. தொலைவில், திருவனந்தபுரம் நெடுஞ்சாலையிலிருப்பது திருவிதாங்கோடு. பண்டைய வேணாட்டின் ஒரு பகுதியாக விளங்கி குமரியின் தலைநகராகவும் விளங்கியது.
இவ்வூரின் வாசம் இலங்கை இசைக்கோ ஒருவருக்கு! அவர், சமாதான நீதவான் (ஜேபி) என்.எம். நார்தீன் அவர்கள்!
12, 13 அகவைகளில் இலங்கை வானொலி 'சிறுவர் மலர்’ நிகழ்ச்சியில் அவரும் நானும் அறிமுகமானபொழுது நான் எழுத்து! அவர் பாட்டு!
அப்பொழுதெல்லாம், அவர் R(5 புலவர் பரம்பரை என்பதும், “வேர்கள்’ திருவிதாங்கோடு என்பதும் புரிபடாமலே போனது!
1940-50களில், அலியார் முஹியித்தீன் புலவர் புறக்கோட்டை ‘பங்க' சாலையில் (கிட்டங்கி) கடமை. அவரது புதல்வர் நெய்னா முஹம்மது பிரபல காசன்கம்பர்பேச் நிறுவன ஊழியர். ‘சிலம்புப் புலவர்’ என்றால்தான் யாரும் அறிவர்.
இவரது மகனாரே “இசைக்கோ’ நூர்தீன், இன்றையப் பொழுதில் அவர் ஒரு நல்ல, வெற்றிகரமான தொழில் அதிபர்.
ஆனால் அன்றைய இளம் வயதில் வானொலியில் ‘சிறுவர் மலர்’ நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பாடகராக மாறிய அவர், இன்றும் இசை மழையில் நனைந்து நிற்பவரே! இந்த ஆண்டு (2003) இலங்கை வானொலியின் மீலாத் விசேட ஒலிபரப்பில் 45 நிமிட நேர இசைக்கச்சேரி அவருக்கு ஒரு கிரீடம்!

மானாமக்கீன் 215
அவரது தனித்திறமை இஸ்லாமிய கீதப் பாடகராக இருப்பதோடு நல்ல பாடலாசிரியருங்கூட !
ஹாஜி நூர்தீனுக்கு ஒரு தமையனாரும் உள்ளார் அவரும் “அருள் இசைத் தென்றல்’ பட்டம் பெற்றவரே! ஒரு மூத்த வானொலிக் கலைஞர். அந்த என்.எம். முஹம்மது அலி ஹாஜியைத் தெரியாத கொம்பனித் தெருவாசிகளே இல்லை!
இந்தச் சகோதரர்களே ‘அருள் இசைமுரசு’ ஈ.எம். ஹனிஃபா அவர்களை இலங்கை ஸெரந்தீவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் என்பதை யார் மறந்தாலும் என் பேனா மறக்கவே மறக்காது!
சகோதரர்கள் இருவரினதும் வாரிசுகள் முழுக்கவும் இலங்கையில் வேரூன்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
ஒருவர் சட்டத்தரணியாகவும், கொழும்பு மாநகரசபை உறுப்பினராகவும் உள்ளார். மற்றவர்கள் தொழில் துறைகளில் உயர்ந்து சிறந்து நிற்கிறார்கள்.
சிக்கலை தீர்க்கும் தக்கலை
“சொல்லத் தகுமல்ல இப்பொருளை.” - என்று சொல்லிக் கொண்டே பக்தர்களின் சிக்கல்களைத் தீர்க்க வல்ல தீன் வழியின் அகமியங்களை தேன்தமிழில் வடித்துத்தந்த தக்கலை அப்பாவின் முன்னிலையில். வரலாற்றில் இலங்கை கண்ட குமரியின் அரங்கேற்றம்! அனைத்தும் அவன் எண்ணப்படியும் திட்டப்படியும்! அன்று இலங்கை வானொலியில் வாழைத்தோட்டம் அப்துல்காதர் அவர்களால் ஒலித்த ஞானப்புகழ்ச்சிப் பாடல் இப்போது என் காதுகளில் ரீங்காரம்! வாராவாரம் கொழும்பு கும்பினி தெருவில் தோழப்ப

Page 111
216 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
தோட்டத்திலும் மக்கள் முன்னிலையில் பீரப்பாவின் பாடல்கள் பாடப்படும் நிகழ்வுகள் பிரபலம்! அதில் முக்கியப் பங்கேற்பு தங்ங்ஸ் எஸ்.எம். பீர் முஹம்மது, பீர்கண்ணு கங்காணியார்.
தக்கலை மண்ணின் மூலம் இலங்கையில் தடம் பதித்தவர்களது தகவல்கள் இந்த ஆய்வில் குறிப்பிடத்தக்க அளவுக்கு இடம் பெறாவிட்டாலும் தொடர்ந்து வரவிருக்கும் இரண்டாம் பாகத்தில் விரிவாக தெரியவிருக்கின்றீர்கள்! இன்ஷா அல்லாஹ்!
இலங்கைக்குக் குமரி அனுப்பிய பாகவதர்!
இப்பொழுது இந்த ஆய்வின் எல்லைக்கு அருகே நிற்கிறோம்.
அதாவது, பாரதத்தின் தென்கோடியாக குமரிமுனையாம் கன்னியாகுமரிக்குப் பக்கமாக
 
 

ԼՈh6ÙTாமக்கீன் 217
மகாதானபுரம் ஒரு குக்கிராமம். (இதைப் பஞ்சலிங்கபுரம் என்று சொல்வார்களோ) இச்சிற்றுாரிலிருந்து ஒரு பாகவதர். அவரும் இலங்கை மாண்புமிகு அமைச்சர் அப்துல் ஹமீத் முஹம்மது அஸ்வர் இதயத்தில்!
ஆண்டு 1979, இலங்கை முஸ்லிம் தலைவருள் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவரும், என் ‘குருவிக் கூட்டுக் குடும்பம்’ காலமெல்லாம் அமைதி நிம்மதியுடன் தங்கிட ஓர் இல்லிடம் வழங்கி ஓய்வுறக்கம் கொண்டிருப்பவருமான வேர்விளைப் பெருமகனார் - இலங்கை நாடாளுமன்ற முன்னை நாள் சபாநாயகர், மர்ஹ"ம் அல்ஹாஜ் எம்.எ. பாகீர் மாக்கார் அவர்கள் நல்ல இஸ்லாமிய இலக்கியவாதியுங்கூட
அவரது வழிகாட்டலிலும், தலைமைத்துவத்திலும் அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடு ஏற்பாடுகள் ஒஹோவென்று! செயலர், இப்போதைய நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் அஸ்வர் ஹாஜி அவர்களே! அவருக்குப் பின்னால் ஒரு படை
எங்களில் சிலரை விமானதளத்திற்கு அழைத்துச் செல்கிறார் அவர். “மாநாட்டில் பாட ஒரு பாகவதர் வருகிறார்’ - எனத் தெரிவிக்கப்படுகின்றது.
“வந்திருப்பது எம்.கே. தியாகராஜ பாகவதர், ஹொன்னப்ப பாகவதர் என்றெல்லாம் 'தினகரனில் போட்டுத் தொலைக்காதே! இவர் ஹ"சைன் பாகவதர்’ - என என்னிடம் சீரியஸாகச் சொல்கிறார் அவர். (அப்பொழுது நான் வத்தளை ஊர் நிருபர்).
“பொதுவாகவே கர்நாடக இசையை நமது சமுதாயம் அவ்வளவாக ஆதரிப்பதில்லையே! அஸ்வர் ஹாஜி இவரை ஏன் பிடித்தார்?’ - இப்படியெல்லாம் என் சிந்தனை.

Page 112
218 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
ஆனால் அடுத்தநாள் மாநாட்டு இசைமேடையில் நடந்த அதிசயம் என்ன?
‘முஸ்லிம் முரசு’ ஆசிரியர் மர்ஹ"ம் ஆளூர் ஜலால் அந்த ஹ"சைன் பாகவதர் மறைவில் பதித்ததைத்தான் இங்கே திருப்பிப் பதிக்க வேண்டும்.
“அந்த இசைமனிதர், தமது கனிரென்ற குரலால்
உணர்ச்சி ததும்ப அல்லாஹ்வையும் ரகுலையும்
உதடுகளில் ാഖഴ്ച அடித்தொண்டையிலிருந்து
இதயத்தை வெளிக்கிளப்பி மெய்யுருகிப் பாடும்போது
பார்க்கும் விழிகளெல்லாம் கண்ணீரில் முக்குளிக்கும்.
அந்தக் குரல்வளம் அல்லாஹ் அவருக்குக் கொடுத்த
அருட்பேறு
தக்கலை பிரப்பா, குணங்குடி மஸ்தான், உமறுப்புலவர்,
காஸிம்புலவர், ஷேகனாப் புலவர், ஷேகுத்தம்பிப்
unavoi, உதுமான் நைனார் புலவர் போன்ற இஸ்லாமியத்
தமிழ்ப் புலவர்களின், ஞானிகளின் மெய்ஞ்ஞான விருத்தங்கள்
நடமாடிய நாவு அவருடையது.”
அன்று, அந்த இஸ்லாமிய இலக்கிய மாநாட்டு இசைக் கச்சேரியிலிருந்து அவருக்கு ஆயிரமாயிரம் அபிமானிகள்
கிடைத்தனர். இலங்கை வானொலி அவரைத் தத்து எடுத்துக் கொண்டது.
தமது திறமைகளை இலங்கை முழுமைக்கும் தெரிய வைத்த அஸ்வர் ஹாஜியை அவர் வாழ்நாளில் மறந்தாரில்லை. இறுதிப் பொழுது வரையில் இதயத்தில். இவரும் அப்படியே!

மானாமக்கீன் 219
11273ல் ‘தீன் இசைச் சுடர் - என மலேசியாவில் பட்டம் பெற்ற பாகவதர் ஹ"சைன் அவர்களை நினைக்க - பெருமை பேச அவர்தம் வாரிசுகளாக பீர் முஹம்மது - கஸ்நபர் அலி - பறக்கத் பேகம் முதலியோரைக் காண்கிறோம்.
தந்தையாரின் புகழால் அவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள்.
நல்லது. இந்நூலின் கடைசி ஏடுகளில் மணலிக்கரையில் காற்று வாங்கிவிட்டு கன்னியாகுமரி போய்விடுவோம்.
“அப்படியெல்லாம் இலேசாக காற்று வாங்கிவிட்டுப் புறப்பட முடியாது. அவ்வளவு அழகான ஊர். சிறப்பாக இஸ்லாம் இம்ன்ணில் வளர்ந்தது. குமரியின் நல்லதொரு ஜமாஅத் இங்கே உள்ளது’ - என ஆவலைக் கிளப்பி விட்டார்கள் "அபூ ஹாஷிமா”வும், அரோமா பாபு அவர்களும்!
உண்மை. மிக அழகான ஒரு பள்ளிவாசலைத் தரிசித்தேன். முழுக்கவும் சுன்னத் - வல் - ஜமாஅத் அடிப்படை. இங்குள்ள இளைஞர் நற்பணி மன்றமும் பெயருக்கேற்றாப் போல நல் பணிகளை ஆற்றி வருவதை அறிந்தேன்.
இங்கு 82 அகவையில் ஹாஜி ஏ. பீர்கண்ணு சாஹிப் தந்தையார் அப்துற் றஹ்மான் சாகிப். தமது 18வது வயதில் கொழும்பு வந்தவர், ஹோட்டல்களில் பணி. 1942-43 யுத்தகாலத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பகல் பொழுதில் ஜப்பானிய விமானங்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு குண்டு போட்டபொழுது அவர் உள்ளே பதுங்கு குழியில் பதுக்கம்! இதற்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஹோட்டல் சொந்தக்காரர்.
துறைமுகத்திற்கு எதிரிலேயே ‘பதுரிய்யா ஹோட்டல்’. கிறேன்பாசிலும் அதே பெயரில், புறநகர் களுத்துறையில்

Page 113
220 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
பாரிஸ் ஹோட்டல்' 56-56ஆம் இலக்க வேக்சால் வீதியில் (கொம்பனித்தெரு) வசிப்பு. தற்சமயம் இவர் நாகர்கோவில் தாமஸ்நகர் - சிக்கந்தர் தெருவில் வசித்து வருகிறார்.
ஆய்வின் எல்லை கன்னியாகுமரி!
*வரலாற்றில் இலங்கை கண்ட குமரி ஆய்வில் கடைசி கடைசியாகக் காணப்போவது அந்தக் (கன்னியா) குமரியைத் தான்!
இந்தியத் திருநாட்டின் தென்கோடி முனை! தென்றல் தவழ்ந்திடும் தொன்மையான சுற்றுலாத் தளம்.
அறபிக் கடலும் வங்கக் கடலும் முட்டி மோதிக் கொண்டு இவளை முத்தமிட வருகையில், அதிரடியாய் இடையே புகுந்து இந்தியப் பெருங்கடல் அரவணைத்துப் பாதுகாக்கும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்!
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னால், “சுப்ஹ்வையும் (சூரியோதயம்) மக்ரிபையும் (சூரிய அஸ்தமனம்) இந்தப் பெருங்கடல்களின் சங்கமத்தில் பாரப்பா பார்’ என்று என் இளவயதில் ஊடுருவிய சாத்தே நண்பர் அப்துல் ஜபார் அழைத்துப் போனார். அது அற்புதமான அனுபவம். இன்றும் ஆயிரமாயிரமாக மக்கள் கூட்டம் மொய்க்கிறது.
ஒரு காலத்தில் கன்னியாகுமரி அருகிலுள்ள லீபுரம், துறைமுகமாக இருந்தது! தற்போது சின்னமுட்டம் லீபுரத்திற்கும் இலங்கைக்கும் சரக்குப் போக்குவரத்து நடந்துள்ளது!
திரு ஜே.எஸ். சந்திராவும் குடும்பத்தாரும்
திரு ஜே.எஸ். சந்திரா பெருந்தலைவர் காமராஜரோடு மிகமிக நெருக்கமானவர். குமரிக்கு வருகின்ற பிரமுகர்கள் - சந்திக்கும் முக்கிய நபர்களில் இவரும் ஒருவர்!

மானாமக்கீன் 221
திரு ஜோஸப் பர்னாந்து அவர்களின் புதல்வர் திரு ஜே.எஸ். சந்திரா அவர்கள் இளம் வயதிலேயே இலங்கை சென்று உழைத்து சம்பாதித்து பெயரும் புகழும் பெற்றவர்! இயல்பிலேயே தொண்டுள்ளம் கொண்டிருந்தவர். சமுதாய முன்னேற்றத்திற்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும். பாடுபட்டவர்.
பல பொதுநல அமைப்புகளில் பொறுப்புகள் வகித்து அருந்தொண்டாற்றியவர். அனைத்துத் தரப்பினருக்கும் அன்பானவராக இருந்த காந்தியவாதி.
நகைச்சுவை உணர்வு நிரம்பப் பெற்றவர். ஆழமும் அர்த்தமும் மிக்க பல சொற்பொழிவுகளால் அவ்வப்போது மக்களின் மனங்களைக் கவர்ந்தவர்.
1964ல் “நெல்லை குமரி பிரமுகர்களின் அறிமுகம்’ என்றொரு தொகுப்பேட்டை தயாரித்து வெளியிட்டவர்! அதற்கு இன்றும் வரவேற்பு (இரண்டாம் பதிப்பை எதிர்பார்க்கின்றோம்)
*எலக்ஷன் எக்ஸ்பிரஸ்’ என்னும் மாதம் இருமுறை ஏட்டினை பாளையங்கோட்டையில் வைத்து நடத்தி வந்தார். 'தலைவர் காமராஜர் வாழ்த்துமடல்’ என்னும் நூல் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது! “வர்த்தக உலகம் - வர்த்தக நோக்கை மறந்து இலவசமாகவே வெளியிட்டு விநியோகிக்கப்பட்டது!
அரசு அவ்வப்போது அறிவிக்கும் சலுகைகள் - எல்லா தரப்பு மக்களுக்கும் தெரியச் செய்து - மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். உடல் ஊனமுற்றோர் முதியோர், அகதிகள், நலிவுற்ற ஏழைகள் ஆகியோருக்காக அரும்பாடுபட்டார்! இதற்காக தமிழக அரசு வழங்கும் உதவிகளும் சலுகைகளும் உள்ளிட்ட சில நூல்களை இவரது நினைவாக வெளியிட்டுள்ளனர்!

Page 114
222 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
இவர் 1979-ஏப்ரல் 6ம் நாள் இறைவனடி சேர்ந்தார்! இவரது இலங்கைத் தொடர்புகள் பற்றி விரிவாக அறிய திருமதி மரியம்மாள் வர்மாவை சந்திக்க சென்றிருந்தோம்! அன்னாரும் ஓராண்டுக்கு முன்பு 2002ல் இறந்துவிட்டதாக சொன்னார்கள்.
ஜே.எஸ். சந்திரா அவர்களது குடும்பத்தினர்களான திருவாளர்கள் ஜேசு மோகன்தாஸ் எம்.ஏ. ஜேசு அமலதாஸ், ரூபின் தாஸ் ஆகியோர் சென்னையில்.
திரு ஜோஸப் சந்திராவின் புதல்வியார் ஒர் ஆசிரியை, சிறந்ததோர் சமூகசேவகி, வானொலி டிவிக்களில் பல நிகழ்ச்சிக்ள் நடத்தி வருபவர்
இதே கன்னியாகுமரியில், ஜனாப் ஏ.எம். சதக்கத்துல்லாஹ் (67) தற்போதைய முஸ்லிம் ஜமாஅத் செயற்குழு உறுப்பினர், 7ஆவது வயதில்; (1944) கொழும்பு வந்தவர். அப்பொழுது தந்தையார் அபூசாலிஹ் லெப்பை, அநுராதபுரம் - நொச்சியாகமை பள்ளிவாசல் இமாம். அதன் முதல் இமாமும் அவரே.
சதக்கத்துல்லா இளமைப்பருவத்திலேயே அந்த ஊரில் மளிகைக்கடை போட்டவர். “லெப்பைக்கடை என்றே பெயர் ஏற்பட்டது. தற்போது இவரது மருமகன் (மச்சினன் மகனார்), ஜனாப் எம்.டீ.எம். அமானுல்லாஹ் களுத்துறையில் இருந்து வருகிறார்.
மற்றொருவர் ஜனாப் கெளதுல் ஹமீது (74). தற்போது கன்னியாகுமரி, ஹைகிரவுண்ட் ‘அமிர்த பவன்’ இல்லத்தில் வாழும் இவரும் ஒரு மளிகைக்கடைக்காரரே.
1941ல் இலங்கை வந்து, முன்னையவரது தந்தையைப் போலவே நொச்சியாகமைப் பகுதிக் கடைகளில் பணிபுரிந்துள்ளார். 1948ல் புத்தளத்தில் 1958ல் களுத்துறையில்.

மானாமக்கீன் 223
சிறந்த பொதுநல ஊழியராக வர்ணிக்கப்படும் இவர், கன்னியாகுமரிப் பள்ளிவாசல் முத்தவல்லியாகவும் இருந்துள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ் என் ஆய்வுப்பணியை இந்த முன்னைநாள் முத்தவல்லி முதியவருடன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன். நான் “விடைபெறும் வேளை’ வந்துவிட்டது. பக்கத்தைத் திருப்புங்கள் தயவுசெய்து!

Page 115
படப்பிடிப்பு : குளச்சல் இபுராஹிம்
விUை0ெg0 லுே6ை1
Uஷ்ய கிராமத்து மொழி ஒன்று.
ஒரு வெளிச்சத்தைப் போடும்பொழுது நிழல் பின்னாலேயே விழும். அபிப்ராயங்களும் கருத்துக்களும் அப்பழயே. அது நிழலாக நமது மரணம் வரையில் வந்து கொண்டிருக்கும். - இவ்வாய்வு நூலுக்கும் இது பொருந்தும். எனினும் அவை எனக்குப் புதியதன்று.
கீழ்நாடுகளில் முஸ்லிம்களின் பாரம்பரியப் பண்பாடுகளும் வரலாறுகளும் மங்கி மண்ணோடு
 

மானாமக்கீன் 225
மண்ணாகிக் கொண்டிருக்கும் ஒருவேளையில் இந்த முயற்சிகளைச் செய்கிறேன்!
குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் என்
ஆய்வின் மற்றொரு பக்கமும் உண்டு. அது, “பெட்டகம்’
என்ற ஒரு வரலாற்று நூலில் வந்துள்ளதற்குப்
பொருந்துகிறது.
“குமரி மாவட்ட முஸ்லிம்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இன்னமும் சாதாரண நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். சிறு ஹே/7ட்டல்கள் நடத்தியும் மற்றும் எடுடபிடி வேலைகள் செய்தும் பலர் காலம் கழிக்கின்றனர். இவர்கள் விட்டுப் பெண்கள் பாய் முடைதல், தையல் மற்றும் கூலி வேலை செய்தல் பே7ன்றவற்றின் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
ஒருபுறம் பங்கள7க்கள் یےy 6007 762 / )4ریخZZ/ நடத்தின7லும் மறுபுறம் குடிசைகள் தங்கள் இல்ல7மையை வெளிச்சம் பே7ட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
சரியான வேலை வ/7ய்ப்பு/மின்றி தங்குமிட வசதிகளுமின்றி பெரும் ட/7ல7ன மக்கள் வறுமையில் உழன்று வருவதை த7ர7ள7ம7கக் காணமுடிகிறது.
இதற்கு உதாரணமாக ம7லிக் தினார் நகர் அருகிலமைந்துள்ள7 குடியிருப்புகளை7யும், சாஸ்திரி

Page 116
226 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
நகர், இடைகரை Z6240//zن Z762/ص/zz لاییa 67 z/ab)62402ف/ இடங்களில் குடிசைகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களை7க் கூறல7ம்.
இந்த மக்களின் அவலநிலை ம7ற வசதிபடைத்த ஜம7அத்துக்கள் சில முற்பே7க்குத் திட்டங்கள் தீட்டி அரசு உதவிகளைப் பெற்றுத் தருவதிலும் வேலை வாய்ப்புகளை7 உருவாக்கித் தருவதிலும் زیر 202ی /67a azzo ضZ/abz/z -(6/62a727z توaooaa7z/z/z -627 (aXصی மக்கள் விரும்புகிற7ர்கள்.”
- இந்தக் குறிப்புகள் நான் விடைபெறும்
வேளையில் மனத்தை என்னவோ செய்கின்றன.
காலம் ஒரு புதிய கலங்கரை விளக்கத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும்.
இந்நூல் ஆய்வுப் பணியில் நான் மூழ்கியிருந்த காலங்களில், தொலைதுாரத்தில், பங்களாதேஷ், சிட்டகாங் மருத்துவக் கல்லூரியில் கற்கும் ஒரே அருமை மகள் அஞ்சானா, "தந்தையே, தஹ்ஜத்துத் தொழுகைகளில் உங்கள் பணிக்கு இறைஞ்சுதல்கள் - என்று தெரிவிக்காத நாளே இல்லை.
அதேபோல, ஒரே அருமை மகன் அஸிம் அஹமது, அவருக்கேயுரிய அமைதி, அடக்கத்தோடு இருகரம் உயர்த்தி!
என் நிழல் - ? அவரது பங்களிப்புகளைத் தெரிவிக்க ஏடும் போதாது. பேனாவின் மையும் காணாது! எனக்குத் துன்பங்களைவிட கவலைக்

மானாமக்கீன் 227
கருமேகங்களே அதிகம். அப்பொழுதெல்லாம் அவற்றை அகற்றி ஒதுக்கிடும் வெண்முகில் துணைவியார் நார் மின்ஷா.
என் குடும்பத்து இம்மூவர் போக, வெளியில், கோட்டாறு இளங்கடையில் ஒரு காஜா முகையத்தீன் அஹமது கபீர் (கே.ஏ.கபிர்) அவர்கள், ஆய்வின் ஆரம்பக் கட்டங்களில் அபூஹாஷிமா என்ற ஓர் இலை மறைத்த கனியால் அறிமுகம் செய்விக்கப்பட்டு, இந்நூல் வெளியாகும் இறுதி நிமிடங்களில் கூட என் தோன்றாத்துணைகளில் முதன்மை!
காரசர் ரமான கருத்து மோதல்களுக்கு ஈடுகொடுத்து, இடியாக முழங்கும் என் இயல்பு, அப்புறம் குழந்தையாக மாறிடும் பண்பு ஆகியனவற்றைப் புரிந்து அமைதி, அடக்கம் காத்து ஆய்வுக்குத் துணைநின்ற அஹ்மது கபீர் அவர்களை என் பேனா என்றும் மறந்திடாது.
அவருக்கும் எனக்கும் உதவிக் கரம் நீட்டிய எம்.வை. ஸெய்யது முஹம்மது பாபு (அரோமா பாபு) என்ற ஓர் இளைஞரையும் என்னால் மறந்திட இயலாது. சமுதாயப் பணிக்காக சம்பாத்தியங்களைத் தியாகித்துப் பணியாற்றிய அவரது பண்பு மற்றவர்களுக்கு இருப்பது அபூர்வம். அன்னாரது இரு சக்கர வாகனம் ஆய்வுக்கு ஒடிஓடி ஒடாய்த் தேய்ந்தது.
இந்நூலுக்குப் புரவலராக இறைவன் ஏற்பாடு செய்த அகில இலங்கை சமாதான நீதவான் அல்ஹாஜ் எம்.எம்.எம். ஃபாயிக் அவர்களை ஆரம்பப் பக்கத்திலேயே

Page 117
228 வரலாற்றில் இலங்கை கண்ட குமரி
அறிமுகப் படுத்திவிட்டேன். அதேபோல இங்கே, துணிவே துணை என வாழ்ந்து என் போன்றவர்களை கலை - இலக்கிய வாழ்வில் ஜொலிக்கச் செய்த அமரர் தமிழ்வாணன் அவர்களை நினைவு கூரும் அதே வேளையில், அவரது மைந்தர்கள் திருமிகு லேனா - ரவி ஆகியோரும், அவர்கள்தம் குடும்பத்தினரும் என்னில் காட்டுகின்ற பரிவும் பாசமும் பதிவுச் செய்யப்பட வேண்டும் - இதயத்தில்.
ஆரம்பக் காலத்திலிருந்து என் நூல் முயற்சிகள் ஒரு சிறந்த பதிப்பாக மிளிர்வதற்கு உறுதுணை புரியும் இனிய சகோதரர் குமரி பா. ஜான் கிறிஸ்டோபர் (கிறிஸ்ட் கம்ப்யூட்டர்ஸ், சென்னை) எப்பொழுதும் நெஞ்சில் இருக்கிறார்.
அனைத்தும் அவனது எண்ணப்படியும்,
திட்டப்படியும்.
|ޝޯވަ4ހީހ| B-54-1/2, N.H. FLATS, ഭ്
COLOMBO - IO.
SRI LANKA. (Oney,70áázý Ph : 0094 - 1-332225 سے ~\ e-mail : manamackeen Gyahoo.com


Page 118


Page 119
சத்திரம் படைத்
الاعر ܒ ܒ ܒ ܕܠ ܥ ܒ ೨೨][೨] ವಿಹಾರ!
 
 

U]]