கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மணி பல்லவம்

Page 1
Ķ
ķ
}
 


Page 2


Page 3


Page 4

மணி பல்லவம்
P • பரமசிவானந்தம்) •9ے
தமிழ்க்கலை இல்லம் சென்னை-30

Page 5
ஆகஷ்டு-1958
உரிமை:
ಗ್ಲ್ಲೆಲ್ಲ್ವು
- - حصصصيصلحهم----
முத்தமிழ் அச்சகம் காஞ்சீபுரம்.

முன்னுரை
சென்ற ஆண்டு கோடை விடுமுறையில் யாழ்ப் பாண நண்பர்கள் ஒரு கல்லூரி விழாவிற்கு வருக’ என்று அழைத்தார்கள். சென்று ஒரு வாரம் தங்கி னேன். பல இடங்களேக் கண்டேன். காணும் அதே வேளேயில் பல கருத்துக்கள் உள்ளத்து எழுந்தன. அவற்றின் தொகுப்பே இந்நூல்.
தங்கிய நாட்களில் ஒரு நாள் மணிபல்லவக் தீவிற்குச் சென்ருேம். அது பற்றிய தனிக் கட்டுரை இதில் இடம் பெற்றுள்ளது. அதன் சிறப்பு ப் பற்றியே இந்நூலுக்கு அப்பெயர் இட்டேன்.
இறுதியில் கல்லூரி விழாவில் நான் பேசிய கம்பராமாயணத்தை ஒட்டிய + மங்கையர் இருவர்' என்ற சொற்பொழிவு கட்டுரை வகையில் அமை கின்றது. எனவே, ஒரு கிழமையில் அங்கு யாழ்ப் பாணத்தில் கண்ட, கேட்ட பேசிய பொருள் பற் றிய சுருக்கமே இந்நூலாகிறது. பயண நூல் பல் கிப் பெருக வேண்டுமெனும் இந்நாளில் அவ்வரிசை யில் இந்நூலும் இடம் பெறும் என நினைக்கின்றேன்.
இந்நூல் வெளி வர உதவி புரிந்த அறிஞர் திரு. மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களுக்கு
என் நன்றி உரியதாக !
தமிழ்க்கலை இல்லம்,
சென்னே-30. e
31-8-58 அ. மு. பரமசிவானந்தம்.

Page 6

வான நெடுந்தெருவில்
அன்று (24-4-57) மீனம்பாக்கம் விமான நிலையத் தில் கூட்டம் அதிகமாய் இல்லை. காலை 10 மணிக்கு மேல் இரண்டொரு விமானங்களே வந்து போவதால் அவற்றில் பயணம் செய்பவரும், அவர்களே வர வேற்கவோ, வழியனுப்பவோ வருவோரும் மிகக் குறைந்த அளவிலேதான் இருந்தனர். எனினும், விமான கிலேயம் தனது தலை நிமிர்ந்த தோற்றத்தில் ஏ ற் ற ம் பெற்று விளங்கிற்று. நாங்கள் குறித்த நேரத்தில் விமான நிலையம் போய்ச் சேர்ந்தோம். இலங்கையிலிருந்து வந்து உடனே இலங்கை நோக்கித் திரும்பிச்செல்லும் அந்த விமானத்தில் (AIR CEYLON) நான் யாழ்ப்பாணம் செல்லவேண்டி யிருந்தது. வான்வழிப் பயணம் என்ருல் அஞ்சி அஞ்சி நின்ற காலம் ஒன்றிருந்தது. ‘எந்த வேளேயும் எதுவும் நிகழலாம் !" என மக்கள் அஞ்சியிருந்தார் கள். ஏன்? இன்றும் சிலர் அந்த நிலையில் உள்ளதை அறியலாம். எனினும், 13 நாளேக்குமேல் (சுமார் 34 மணி நேரம்) ரயிலில் இடிபட்டுச் செல்லும் கொடுமை யினும், யாழ்ப்பாணத்துக்கு 12 மணி நேரத்தில் வான் வழிச் செல்லும் இன்பப் பயணத்தை யார்தான் விரும்பமாட்டார்! இரயில்தான் என்ன வாழ்கிறது!" என்று கூறும் ஒலியும் நாட்டில் குறைந்துவிடவில்லை. ஆம் சென்ற இரண்டோர் ஆண்டுகளில் 'துரத்துக் குடி எக்ஸ்பிரஸ்' போன்ற வண்டிகளுக்கு ஏற்பட்ட கொடுமைகளும் பத்ராஜல’ப்படகுக் கொடுமையும் கண்டும் கேட்டும் பழக்கப்பட்ட இந்த மனிதனுக்கு

Page 7
2 மணி பல்லவம்
அவற்றினும் வான் வழிப்பயணம் பயம் குறைந்தது என்றுதானே தோன்றும் ? ஆம் ! குற்றம் யார்மேல தாயினும், அது போன்ற கொ டு ைம க ள் நாகரிக
நாடுகளில் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. மற்அறும் இந்தக் காலத்தில் மக்கள் "துணிவு உள்ளம்" வான்வழிப் பறப்பதைத் துர ண் டு கி றது. உலக மெங்கணும் விரைந்து செல்லும் வான ஊர்திகள் நாள் தோறும் வானில் வட்டமிட்டுக்கொண்டுதானே இருக்கின்றன ! இந்தப் பூமண்டலத்தை விட்டுச் சந்திரமண்டலம் முதலிய பிற மண்டலங்களுக்குத் தாவிச்செல்லும் ராக்கெட்டு விமானங்கள் வட்ட மிடத் தொடங்கும் இந்த நாளில் வான் வழிப் பறக்க அச்சமும் உண்டோ ? எனவே, வான ஊர்திகளின் எண்ணிக்கையும் பறக்கும் தொலைவும் நாள் தோறும் பெருகிக்கொண்டே இருப்பதில் வியப்பென்ன ?
இந்த எண்ணச் சூழல்களுக்கிடையில் நான் மீனம்பாக்கம் நிலையத்தில் என் யாழ்ப்பாணப் பய ணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலா னேன். பயணச்சீட்டு முன்னமே பெற்றிருந்தமையின் கேராக என் சாமான்களே எடுத்துச்சென்று கிறுத்து எடை குறித்துக்கொண்டேன். பின் மருத்துவரை நாடி அவரிடம் காட்ட வேண்டியவற்றைக் காட்டிவிட் டேன். இறுதியாகச் சுங்கச் சாவடியினர் என் சாமான்களைப் பார்வையிட்டனர்; அவற்றைப் பார்த் ததற்கு அடையாளமாக ஏதோ குறியை இட்டனர். அதே வேளையில் ‘புலி பொறித்துப் புறம் போக்கிய பழங்காலச் சோணுட்டின் கடற்கரைப் பட்டினமாகிய காவிரிப்பூம்பட்டினத்துச் சுங்கச் சாவடிகள் என் கினை விற்கு வந்தன. இப்போது தமிழ் நாட்டில் சுங்கச் சாவடிகள் பலவிடங்களில் இருந்தாலுங்கூட

வான நெடுந்தெருவில் 3
அவை எல்லாம் இந்திய அரசாங்கத்தின் நேர் மேற் பார்வையில் இருக்கின்றன அன்றே ! ஆகவே, தமி ழர் இலச்சினையாகிய புலியும் மீனும் வில் லும் பொறிக்கப்பெறுவ தெங்கே ! அப்படியே தமிழர் கையில் அந்த அதிகாரம் இருப்பினும், அவர்களும் அந்த இலச்சினையை எங்கே கொண்டுள்ளார்கள் ? "தமிழ் நாடு’ என்று தம் தாய்நாட்டை வழங்கக்கூட முடியாத அவல கிலேயிலே தானே தமிழர்கள் வாழ் கின் ருர்கள் ! அவர்கள் புலி பொறித்துப் புறம் போக்கும் பொருள்கள் யாவை ? சென்னை நகராண் மைக் கழகத்தார் அண்மையில் தமது கொடியில் இம்மூன்று பழைய இலச்சினைகளேயும் பொறித்துச் சென்னேயைத் தமிழர் தலைநகரம் என்று நிலைநாட் டிக்கொண்ட செயல், தமிழினம் இன்னும் செத்து விடவில்லை என்பதைக் காட்டுகிறது. இந்த நினைவு கள் ஒன்றன்பின் ஒன்ருகத் தொடர்ந்துகொண்டே வந்தன. எனினும், நான் அங்குச் செய்ய வேண்டிய செயல் முறைகள் அனேத்தையும் முறையாகச் செய்துவிட்டு, வெளியில் வந்து கின்றேன். அதே வேளேயில் இலங்கையிலிருந்து வந்த விமானமும் தரையில் இறங்கியது.
பத்தரைக்குத் திரும்பப் புறப்பட வேண்டிய அவ்விமானம் சிறிது காலம் தாழ்த்தே மறுபடி கிளம்பும் என அறிந்தேன்; என்னே வழியனுப்ப வந் திருந்தவர்களோடு சிறிது நேரம் பேசிக்கொண்டே யிருந்தேன்; குறித்த வேளேயில் வி மா ன த் தி ல் சென்று அமர்ந்தேன்; வழியனுப்ப வந்தவரிடம் விடை பெற்றுக்கொண்டேன். விமானத்தில் பாதி இடத்துக்கு மேல் காலியாகவே இருந்தது. பொது வாகக் கல்லூரி விடுமுறையின் போதும், கல்லூரி

Page 8
4 மணி பல்லவம்
திறக்கும் போதுந்தான் கூட்டம் அதிகமென்றும், மற்ற வேளைகளில் அத்துணை நெருக்கம் இராதென் அறும் கூறினர்கள். வாயிற்கதவு மூடப்பட்டது. சரி யாக 10-40க்கு விமானம் மீனம்பாக்கம் கிலையத்தை விட்டுக் கிளம்பிற்று.
விமானம் உடனே நேராக வானிலே பறப்பதில் லேயன்றே ! சிறிது தூரம் தனது இரு உருளேகள் மீதே கிலத்தில் சுற்றிச் சுற்றி வந்தது; பிறகு வான் வழிக் கிளம்பிற்று. வானில் கிளம்பிய விமானம் வட்டமிட்டுப் பின் தெற்கு நோக்கிப் புறப்பட்டது. மிகுந்த உயரத்தில் செல்லவில்லையாதலால், கீழே இடங்கள் நன்கு தெரிந்துகொண்டே இருந்தன. சென்னே நகரின் எல்லையைத் தாண்டிய உடன் சிறு சிறு குன்றுகளும் கிராமங்களும் தெரிந்தன. சிறிது நேரத்துக்கெல்லாம் கோவளத்தின் உப்பளம் தெரிக் தது. இந்திய அரசாங்கத்தார் இன்றும் உப்பின் மீது வரி விலக்குச் செய்யாத நிலை எனக்குப் பட் டது. இந்த உப்பின் வளந்தான் பழங்காலக் கோவின் வளமாகி-அரசர் செல்வமாகி-அதன் பெயராலேயே இவ்வூர் கோவளம் ' என்று பெயர் பெற்றதோ என்று எண்ணினேன். இந்த உப்பின் மீது வரியை நீக்கி, நாட்டு மக்களுக்குப் பெருஞ் சுமையைக் குறைக்க வேண்டுமென்று இருபத் தைந்து ஆண்டுகளுக்கு முன் அண்ணல் காந்தி தண்டி நோக்கி நடந்த காட்சி என் மனக்கண்முன் வந்தது. எனினும், கோவினுக்கு-ஆளும் அரசிய லுக்கு-வளம் கல்கும் அவ்வுப்பு வரியை உரிமை நாளிலும் நாம் செலுத்த நேர்ந்ததை கினேத்துக் கொண்டே கண்ணை மூடினேன்.

வான நெடுந்தெருவில் `ሩ 5
அதே வேளே யில் அந்த விமானத்தில் விருங் தோம்பும் கங்கை என் முன் பக்கத்தில் உட்கார்க் திருந்தவரை ஏதோ கேட்டது என் காதில் விழுங் தது. உடனே நிமிர்ந்து நோக்கினேன். அவள் அவரை ‘ஒயின், பிராந்தி, விஸ்கி, வேண்டுமா? என்ருள். அவர் தலை அசைத்தார். அடுத்து உட்கார்ந்திருந்த என்னிடமும் வந்து அந்த விமான கங்கை அவ்வாறே கேட்டாள். நான், ' இன்னும் தமிழ் மண்ணின் மீதுதானே பறக்கின் ருேம் ? எங் கள் எல்லையைக்கூடக் கடக்கவில்லையே! இதற்குள் இவை வேண்டுமா என்று கேட்கிருயே! எங்கள் நாட்டில் இவை இல்லை. எங்கள் காடு இவை வற்றிய நாடு (Dry State) என்பது உனக்குத் தெரி யாதா?’ என்றேன். அவள் உடனே, "ஓ! தெரி யும். உங்கள் நாடு வற்றிய நாடு என்பது கீழே பார்த்தாலே தெரிகிறதே! என்று வரண்ட தமிழ் மண்ணைக் காட்டினுள். ஆம். கோடையில் கொதிக் கும் 11 மணி வெயிலில் அதன் வற்றிய கிலை நன்கு புலப்பட்டது. அதற்குள் அவள், ' நான் வேடிக் கையாகச் சொன்னேன்; குறை கூறவில்லை. இங்கே நாங்கள் இவற்றைத் தேவையான வருக்குக் கொடுப் பது வழக்கந்தான்,' என்ருள். அதற்குமேல் நான் என்ன சொல்ல இருக்கிறது! எனக்குப் பின்னல் உட்கார்ந்திருந்த ஒருவர் அந்தப் பெண் சொன்ன அத்தனையும் வாங்கிக் குடித்தார் என நினைக்கின் றேன். அவரும் அவர் நண்பரும் அரைமணி நேரத் தில் இரண்டு மூன்று புட்டிகள் காலி செய்துவிட் டார்கள். இறங்கும் போது ஏழு எட்டு ரூபாய்க்குக் குறையாது கொடுத்தார்கள் எனக் கண்டேன். தமிழ் நாட்டின் மண்மீது பறக்கும் காலத்திலேயே குடியராகும் காட்சி வியப்பாகத்தான் இருந்தது!

Page 9
6 மணி பல்லவம்
விமானம் நிற்கவில்லை; விரைந்து பறந்தது. கீழே பார்த்தேன். பழம்பெருநகரமாயிருந்து, இன்று பாழ்பட்ட கடன் மல்லை தெரிந்தது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் கடற்கரைப் பட்டினமாய்ப் பல் லவர் வளம் பெருக்கி நின்ற அந்த மாமல்லபுரம், இன்று சிற்றுாராய்க் காட்சி தந்தது. ஊரிலிருந்து அந்தக் கடற்கரைக் கோயிலுக்குச் செல்லும் சிஅறு பாதையும் கடற்கரைக் கோயிலும் நன்கு தெரிந்தன. சிற்பங்களும் பிறவும் தெரியவில்லை. எனினும், அக் கடற்கோயில் வழி என் எண்ணம் நெடுந்தொலைவு பறந்தது. நான் பறக்கும் வேகத்தினும் என் எண் ணத்தின் வேகம் பெரியதன் ருே ! ஆனல், ஒன்று தான் வேறுபாடு. நான் விமான வழி முன்னுேக்கிப் பறந்துகொண்டேயிருந்தேன். நேரமும் திசையும் முன்னேக்கிச் சென்றன. ஆனல், என் எண்ணமோ, பின் நோக்கிச் சென்றது. ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் இம்மாமல்லபுரம் பெற்றிருந்த சிறப்பென்னே! 'கச்சிக் கிடந்தவன் ஊர்கடன் மல்லை’ என்று ஆழ்வாரால் பாடப்பெற்ற அந்த இறைவன் அதோ அந்தச் சிறு கோயிலில் எழுந்தருளியிருக் கிருன், ஆனல், அந்த நகரின் கிலை என்னுயிற்று ! ஊர் கிலை கெட்டதோடு கின்றுவிட்டதா என்ன ! பேருமல்லவா கெட்டுவிட்டது! நாடுகளேச் சாடி வெற்றி கொண்டு மாமல்லனய் விளங்கிய அந்த நரசிம்மன், தன் கினேவாகக் கலை வளர்த்த அந்தக் கலைக்கோயில்-மாமல்லபுரம் - இன்று மகாபலிபுர மாக அல்லவா காட்சி தருகிறது! மகாபலி சக் கரவர்த்தி’ என்ற புராண அசுர அரசனேடு சம்பக் தப்படுத்திப் பேசும் அளவுக்கல்லவா அதன் பெயர் மாற்றமடைந்தது! இதை கினேக்கும் போது, தமிழ்

வான நெடுந்தெருவில் 7
நாட்டு ஊர்கள் பல தம் நிலையும் பேரும் கெட்டுக் குலைந்து நிற்கும் காட்சியும் மனக்கண் முன் தெரிங் தது. கலங்கள் இயங்கும் மல்லை’ எனப் போற்றப் பட்ட அந்தத் துறைமுகக் காட்சி எங்கே ? எங்கே ? எங்கே?' என்று கேட்டது என் உள்ளம். இன்றைக் குக் கலங்களுக்கு’ எச்சரிக்கை செய்வதற்கென ஒரு கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளதன்றே! கப்பல்கள் அருகில் வரின் பாறைகளில் மோதிச் சேதம் நேரிடும் என அது எச்சரிக்கிறது போலும் ! ஆம். கடலுள் மாலவன் கோயில் இரண்டு மறைந்து விட்டனவாம். விரிந்து இலங்கையை நோக்கி இருந்த பெருநகரம்’ என்று சீன யாத்திரிகளுல் அன்று போற்றப்பட்ட பெருநகரம், க ட லு ள் ஆழ்ந்து இன்று சிற்றுாராய்க் காட்சி அளிக்கிறது. இந்த எண்ணங்களுக்கிடையில் வா ன ஊ ர் தி விரைந்து தெற்கு நோக்கிச் சென்றுகொண்டே யிருந்தது. என் உள்ளத்து வெம்மையைப் போக்கத் தானே என்னவோ, அவ்விமான மங்கை எனக்குக்
குளிர்ந்த பானத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
குளிர்ந்த பானத்தைப் பருகிக் கீழே நோக்கி னேன். விமானம் அதிக உயரத்தில் பறந்து சென்ற மையின் கீழே உள்ள இடம் தி ட் ட மா கத் தெரியவில்லை. கடற்கரையை ஒட்டியே விமானம் சென்றதால் ஒருபுறம் லேக்கடலும் மறுபுறம் கில மும் நன்கு தெரிந்தன என்ருலும், எந்த இடத்திற்கு மேலே போகிருேம் எ ன் பது தெரியவில்லை. ஆகவே, அந்த விமான மங்கையைக் கேட்டேன். அவள் ஏறக்குறையப் பாதித்தூரத்துக்குமேல் வங் தாகிவிட்டதென்றும், கீழே தெரிவது பெரும்பாலும் தரங்கம்பாடியை ஒட்டிய கடற்கரையாய் இருக்கும்

Page 10
8 மணி பல்லவம்
என்றும் கூறினுள். நான் எட்டிப் பார்த்தேன். கிலப் பரப்பில் ஒருகோடு தெரிந்தது. அக்கோடு கடலோடு கலப்பதையும் பார்த்தேன். அதுதான் காவிரி கடலோடு கலக்கும் காட்சியோ என எண்ணினேன். வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியும் அதன் கிளேயாய கொள்ளிடமும் இந்தக் கோடையில் வற்றிய கோடுகளாகத்தான் காட்சி அளிப்பன. அவை கோடுகளாய்த்தோன்றினும், அக்கோடுகள், வரலாற்றை எவ்வளவு தூரம் ஊடுருவிக் கிழித்து என் உள்ளத்தைத் தூண்டிவிட்டன என்பது என் ஞல் சொல்ல இயலவில்லை. நான் பறக்கும் உயரத்தி லிருந்து தமிழ் மண்ணைக் காண முடியாதபடி வெண் னிற மேகங்கள் மறைத்திருந்தன. அம்மேகங் களுக்கு மேல் நான் மேக வாகனனுய் வான் வழிச் சென்றுகொண்டிருந்தேன். அதே வேளையில் என் உள்ளம் நேராக என் கீழ் உள்ள கடல் அடியைத் துழாவிக்கொண்டிருந்தது.
ஆம் ! இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன் இக்காவிரி கடலொடு கலக்கும் இடத் தில் சிறந்திருந்த காவிரிப்பூம்பட்டினம் எங்கே P மரு வூர்ப் பாக்கமும் பட்டினப் பாக்கமும் இருவகையாகப் பிரிந்து எல்லா ஏற்றங்களையும் பெற்றுப் பெருமை யுற்று விளங்கிய அந்தப் பூம்புகார்ப் பட்டினம் எங்கே ? எட்டுத்திக்கிலுமிருந்து பிற நாட்டவரெல் லாம் வந்து கூட்டு வாணிபம் புரிந்து நாட்டு வளத் தைப் பெருக்கிப் பண்டமாற்றுச் செய்து பயன் பெற்ற அந்த அழகிய கடற்கரை நகரமெங்கே ? சோழ மன்னன் கரிகாற்பெருவளத்தான் சிறக்க வீற்றிருந்து செம்மை தவருது கோலோச்சி நின்ற அந்தக் கொற்ற வாழ்வின் தலைநகர் எங்கே? சதுக்க

வான நெடுந்தெருவில் 9
மும் சாலையும் சோலையும் சூழலும் நெருங்கி கிறைந்து வெம்மை மாற்றி வேனிலைத் தண்ணியதாக்கி விழா வாற்ற கல்ல சூழ்நிலையை உண்டாக்கித் தந்த அங் தப் பட்டினம் எங்கே ? எங்கே ? எங்கே?
இவ்வாறு என் எண்ணம் நீண்டுகொண்டே சென்றது. ஆம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிறக்க இருந்த அந்தப் பெருநகரத்தைக் கடல் கொள்ளே கொண்டது என் ப ைத இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன; வரலாறு பறை சாற்று கிறது. அந்த ஊர்-காவிரிப்பூம்பட்டினம்-இன்று ஒரு சிற்றுாராய் அங்கு ஒருபுறத்தே அதன் பண்டை வாழ்க் கை யை நமக்கு கினைவூட்டிக்கொண்டிருக் கிறது. அந்தப் பெ ரு 5 க ரம் கடலுள் அழிந்து விட்டது. அதை ஆழ்கடலுள் ஆழ்ந்து தேடிப் பார்க்க வேண்டு மென் று தமிழர்களெல்லாம் விரும்புகின்றர்கள். ஆனல், அந்தப் புதைபொருள் ஆராய்ச்சி செய்யும்-பழைய வரலாற்றைத் துருவி ஆராயும்-பகுதி தமிழர் கையில் இல்லையே! அது மத்திய அரசாங்கத்துக்கு உட்பட்ட பகுதியாயிற்றே!
* கடவுள் மாநகர் கடல்கொளப் பெயர்ந்த
வடிவேற் றடக்கை வானவர் போல விரிதிரை வந்து வியன்நகர் விழுங்க ஒருதனிப் போயினன் உலக மன்னவன்." (மணி.25:201-204) என்று இந்தப் பெருநகர் அழிந்த வகையினேயும் இதனே ஆண்ட மன்னவன் போன தனிமையையும் நல்ல உவமையைக்காட்டி உலகுக்குக் காட்டுகிறது மணிமேகலை. ஆம்! அந்த உண்மையை அறிந்து “தேடியாவது பார்க்கலாமே!" என்று சொல்லுவா ரையும் காணுேம்.

Page 11
O மணி பல்லவம்
எண்ணம் நீண்டது. எ ன் ரு லும், விண்வழி விமானம் சென்றுகொண்டே இருந்தது. திடீரென கிலப்பகுதியின் ஒரு மூலே தெரிந்தது. அங்கிருந்து கடல் மேலைத்திக்கில் நெடுந் தொலே வு புகுந்தது. தமிழ் நாட் டி ன் நிலப்பரப்பும் கடலுக்கு இடங் கொடுத்து விலகிவிட்டது. ஆம்! அந்த விலங்கிய கொ டு மை தானே கடல் மல்லை குறைய, பூம்புகார் அழியக் காரணமாயிற்று? மண்ணும் நீரும் மட்டு மன்றி, தமிழனே-ஆம்-இம்மண்ணில வாழும் மனிதனே செல் விரு ங் தோம் பி வருவிருந்து ? பார்த்துப் பார்த்துத் தன்னேயே மற்ற வருக்கு அ ன் புக் காணிக்கையாகவோ, அடிமையாகவோ, அன்றி அடைக்கலமாகவோ கொடுத்துக் கொடுத் துத் தானும் கெட்டு, தன் மொழி, கலே, நாகரிகம் பண்பாடு அனே த் ைதயும் இழந்து வாடி வதை கின்றன். அன்று மானம் வரின் வடக்கிருந்து உயிர் துறந்த அத்தமிழனே, இன்று மானம் இழந்து மதி கெட்டு வடக்கு நோக்கி வழிபார்த்துத் தன் வாழ்வை வளர்த்து க் கொள்ள வேண்டிய நிலைக்கு வந்து விட்டான் ! இவ்வாறு எண்ணிக்கொண்டே இருக் கையில் மேலைப்பக்கம் தெரிந்த தமிழ் மண் மறைய லாயிற்று. அதுதான் வேதாரணியம் என்றும், அதுவே கோடிக்கரையாய் உள்ளது என்றும் அறிக் தேன். அந்த கினேவிலேயே திருமறைக்காடு எப் பது வேதாரணியம் என மாறிற்று என்பதை கினேக்க மறக்கவில்லை என் நெஞ்சம். தமிழன் இப்படி ஊர் கெட்டு, பேர் கெட்டு, உற்ற பல பண்பாடுகளும் நல்ல நாகரிகங்களும் கெட்டு நலிவுறுகிருனே என்று எண்ணிக்கொண்டேயிருக்கும் அதே வேளையில் மேலையில் தெரிந்த கிலப்பரப்பு, மறைந்தது; லேக்

வான நெடுந்தெருவில் 11
கடல் காட் சி ய விரித்த து. அனைத்தையும் தன் வெம்மை தாங்கிய ஒளிக்கற்றைகளால் தோற்று வித்தும் மாற்றியும் அழித்தும் வருகின்ற அந்த வெங்கதிரோன் வானவீதியில் உச்சக்கோட்டைத் தொட்டுக்கொண்டிருந்தான்.
மேலைப்பக்கம் தோன்றிய கடற்காட்சியை விட் டுக் கீழ்ப்பக்கம் திரும்பினேன். உடனே கரை கண் ணுக்குப்பட்டது. நான் திகைத்தேன்! " ஒரு வேளே விமானமே திசை மாறிவிட்டதா! நமக்கு அது புரிய வில்லையா !” என்றெல்லாம் நினைத்தேன். உச்ச கிலையில் உள்ள சூரியனலும் திசை காட்ட முடிய வில்லை. நாம் சற்று முன் வரை பார்த்த அந்த நிலப் பரப்புத்தான் விமானம் திசை மாறியதால் இந்தப் பக்கம் வந்துவிட்டதா !” என ஐயுற்றேன். நல்ல வேளே, என் ஐயம் நெடுநேரம் நிற்கவில்லை! பக்கத் தில் இருந்தவர், தெரிவது யாழ்ப்பாணக் கரை என் அறும், விரைவில் இறங்கவேண்டுமென்றும் கூறினர். அதற்கேற்றற்போல, விமான நங்கையும் அனைவ ரையும் பாதுகாப்போடு இருக்கக் காப்புக் கட்டினை (Belt) அணிந்துகொள்ளச் சொன்னுள். கீழ்த் திசையில் தெரிவது யாழ்ப்பாணந்தான் என்று நிச்சயித்தேன். பன்னிரண்டு மணியைத் தொட்டுக் கொண்டிருந்த அந்த விமானக் கடிகாரமும் கரை தட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை கினேப்பூட்டிற்று. مر
இப்படி ஒரு பக்கம் தமிழ் க் க ைர மறைய, அதற்கு அடுத்து யாழ்பாணக்கரை தோன்றிய அக் நிகழ்ச்சியை நினைத்தேன். இதை முன்னமே யாரா வது கினைத்துப் பார்த்ததுண்டாரி' என்று கேட் டது என் மனம். ஏன் பார்த்ததில்லை?" என்ற

Page 12
12 மணி பல்லவம்
பதிலும் எழுந்தது. ஆம். இந்த இரு கரைகளேயும் இணைத்து நல்ல நீதியை மக்களுக்குப் புகட்டும் ஒரு பாடல் என் கினைவுக்கு வந்தது. \
உலகில் பற்றற்று வாழ்பவரே பரமனை அடை வர் என்பது எல்லாச் சமயங்களும் கண்ட உண்மை. * ஒரு வேலைக்காரன் இரண்டு எசமானருக்கு வேலை செய்ய முடியாது, என்பது விவிலிய நூலில் உள்ள வாக்கியம். உலகப்பற்றிலே உழன்று அதே நிலை யில் ஆண்டவனேயும் பற்ற முடியாது என்பதுதான் சமயங்களின் சாரம். உலகில் உழன் ருலும், அதில் பற்றுக் கொள்ளாது, உள்ளத்தை அவ்வுலகப் பொருள்களுக்கு உரிமையாக்காது, பற்றற்று வாழ் தலே இறை வாழ்வின் தொடக்கம் என்பதைக் கூருத சமயத் தலைவர் உண்டா ? அக் த ப் பற்றற்ற வாழ்வில் பரமன் அடி கிடைப்பது ஒரு புறம் இருக்க, உலகில் சுய நலம் ஒழிந்து, யான் எனது என்னும் செருக்ககன்று, காட்டாரெல்லாம் ல்ேவாழ்வு வாழ வழி ஏற்படுமல்லவா! ஆகவே, அந்த வாழ்வை நல்கும் இந்தச் சமய உண்மையைத் தள்ளிவிட முடியுமா?
இந்த உண்மையைப் பல வேறு சமயத்தவரும் பல வேறு வகையில் விளக்கிவிட்டுச் சென்றுள்ள னர். நம் நாட்டிலே துறவை அதிகமாக வற்புறுத் தும் நூல்கள் இடைக்காலத்தில் எழுந்தன. அவற் அறுள் இப்பற்று விட்டு இறைவன் பாதத்தைப் பற்ற வேண்டிய அவசியம் பல வாகப் பாரித்துப் பேசப்படு கின்றது. அற்றது பற்றெனில் உற்றது வீடு' என்று மிகச் சுருக்கமாகச் சொன்னர் கம்மாழ்வார்.
வள்ளுவர்,

வான நெடுந்தெருவில் 13
* பற்றுக பற்றற்ருன் பற்றினை ; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு ,'
என்று அழகாகப் பாடிச் சென்ருர், இவ்வாறு இறையருள் பெற, உலக பாசம் அல்லது பற்று அல்லது அவாக் கெடுதல் அவசியமானது என்று சுட்டிக் காட்டியதைப் பின் வந்த சமயத் தலைவர்கள் தத்தம் புராண வாயிலாகவும், அவற்றுள் காட்டும் உவமை வாயிலாகவும் விளக்கிவிட்டுச் சென்றுள் ளார்கள். மனம் உலகப் பற்றைப் பற்றி நிற்பதும், பின் அப்பற்றை விடுவதும், விட்டதும் அப்படியே இடையீடு இன்றி இ ைற வனே ப் பற்றிய பற்று உண்டாவதும் இயற்கை. இந்த இயல்பை ஒரு புலவர் ஒரு பயணத்துக்கு ஒப்பிட்டுக் காட்டுகின்ருர், தமிழ் மண்ணிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மிகுபழங் காலந்தொட்டுச் சிறு தோணிகளும், கட்டுமரங்களும், படகுகளும், ஏன்--கலங்களுங்கூடச் சென்றுகொண் டிருந்தன. நாடுகளுக்கிடையில் ஏ ற் பட்ட நெருக் கடிகள் இன்று அந்த கிலேயை வளர விடவில்லை. பழங்காலத்தில் இருந்த போக்கு வரத்து இன்று இல்லை. காரணம் என்ன ? இரு நாட்டுக்கும் இடை யில் ஏற்பட்ட மனக்கசப்பும், வீண் புகைச்சலுந்தான். அவற்றுடன் சுங்கச் சட்டங்களும் அவற்றின் வழி எழும் சோதனைக் கட்டங்களும் சேர்ந்துகொண்டன.
இக்காலத்தில் அத் துணை வெளிப்படைப் போக்கு வரத்து இல்லையாயினும், பண்டைக் காலத் தும் இடைக்காலத்தும் சிறு மரக்கலங்கள் இரு கரைக்கும் தாராளமாய்ச் சென்று வந்துகொண் டிருந்தன. அதை வணிகர் அறிந்ததோடு புலவரும் அ றி ந் தி ரு ங் த ன ர். எப்படி? அந்தக் கப்பல் ஓட்டத்தை உவமை கூறும் வகையில் என்னலாம்.

Page 13
4 மணி பல்லவம்
* மகாராசா துறவு" என்பது காலத்தால் மிகப் பிந்திய ஒருநூல்; துறவை வற்பு அறுத்தும் ஒருநூல்; அண்டமெலாம் கட்டி ஆளும் அரசன் அவ்வாழ்வால் தருக்காது, என்றும் துறக்கச் சித்தமாக இருக்க வேண்டுமென்பதை வற்பு அறுத் துவ து. அதில் அதன் ஆசிரியர், மனம் உலகப் பொருளேப்பற்றி நிற்பதை விட்டால், உடனே எப்படி இறைவனைப் பற்றிய உணர்வு தோன்றும் என்றும் குறிக்கின் ருர், அவ்வுணர்வை எப்படிக் காட்ட முடியும்? ஓர் உவ மையைக் கையாண்டார். ஆம். அதுதான் இந்த யாழ்ப்பாணக் கப்பலோட்டம். உள்ளம் மாறும் நிலையினைக் கனமான யாழ்ப்பாணத் துக் கப்பல் ஒட்டம் ' என்று உவ மிக் கி ரு ர். ஆம் கலனிற் செல்லும் போது தமிழ் நாட் டு க்க ைர தெரிந்து கொண்டே இருக்குமாம். ஆனல், ஒரு முனையில் நடுக்கடலில் இக்கரை மறையுமாம். உடனே மறுபுறம் நோக்கினல் யாழ்ப்பாணக் கரை தெரியுமாம். அது போல உலகப் பற்று இருந்துகொண்டே இருக்கும் வரையில் ஆண்டவன் பற்றைப் பெற முடியாது. ஆனல், இந்த உலக ப்ப ற் ஆறு நீங்கினல், உடனே மனத்தை வெட்டவெளியாக இருக்க இறைவன் விட மாட்டானும் ; உடனே அந்த வெற்று இடத்தை கிரப்பத் தானே வந்து தலையளி செய்து ஆட்கொள் வாணும்.
இம்மகாராசா துறவு கதையாய் இருந்தாலும், இந்த நல்ல உண்மையைக் காட்டியதற்காக நான் இதைப் போற்றினேன். கடலில் செல்லும் போது அவ்வாறு காட்சி தருகிறதோ இல்லையோ, நான் அறியேன். ஆனல், இதோ வான வழியில் அந்த உண்மையைக் கண்ணுரக் கண்டேன். தமிழ் மண்

வான நெடுந்தெருவில் 15
மறைய, யாழ்ப்பாண மண் தெ ரிங் த து. இந்தச் சிந்தனைக்கிடையில் நான் எவ்வளவு நேரம் இருந் தேனே என நினைப்பதற்குள் விமானம் தரையில் இறங்கிக் கதவும் திறக்கப்பட்டு இறங்கும் படியும் இணைக்கப்பட்டுவிட்டது. மணி 12-15 ஆயிற்று. நானும், யாழ்ப்பாணம் வந்துவிட்டோம் என்று நினைத்து இறங்கினேன்.
யாழ்ப்பாண விமான நிலையம் மிகச் சிறியது. சென்னை விமானத்தைத் தவிர வேறு விமானங்கள் அங்கு இறங்குவதில்லே போலும் ! நான் இறங்கி உள்ளே சென்றேன். என்னை அழைக்க விமான நிலையத்திற்கு நண்பர் ஞானசம்பந்தனரும் அவர்தம் தந்தையார் திரு நாகலிங்கம் அவர்களும் வந்திருந் தார்கள், விமான நிலையத்தில் வேற்று காட்டார் உள் புகவேண்டின் நடக்க வேண்டிய அத்தனே சடங் குகளும் ஒன்றன்பின் ஒன்ருக 15டந்தன. மருத்துவர் கண்டார். சுங்கச் சாவடியினர் சோதித் தன ர் . போலீஸ் காவலர் குறித்துக்கொண்டனர். பிறகு செல்க' என விடை தந்தனர். அதற்கிடையில் நான் மூன்று நான்கு ‘தாள்கள்’ நிறைவு செய்து கொடுத் தேன். இலங்கையிலிருந்து அதிக ப் பொருள் கொண்டுவர முடியாத காரணத்தால் நான் கொண்டு சென்ற இரண்டொரு பொருள்களேயும், பணத்தை யும் அவர்களிடம் காட்டிப் பதிவு செய்துகொண் டேன். மருத்துவர் நான் அங்குத் தங்கும் நாள் வரை இருநாளுக்கொருமுறை தங்கும் ஊரில் உள்ள மருத் துவரைக் காண வேண்டுமெனக் கட்டளையிட்டார். இலங்கையில் இது போன்ற அனுபவம் எனக்குப் புதியது அன்று. ஆகையில்ை, அவர் சொல்லியபடி நடப்பதாக இசைந்து வெளி வந்தேன். நண்பர்தம்

Page 14
6 மணி பல்லவம்
காரில் அமர்ந்தேன். அவர்கள் கொண்டு வந்த காப்பியைக் கொடுத்தார்கள். பின்பு அவர்கள் வண்டியைச்செலுத்த, வண்டி வட்டுக் கோட்டையை நோக்கிச் சென்றுகொண்டேயிருந்தது. நான் கடல் தாவி யாழ்ப்பாணத்திலிறங்கித் தரையில் செல்லும் நெறியில் என் உள்ளமும் அமைதியாய் உடன் ஓடி வந்துகொண்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் முதல் நாள்
விமான நிலையத்திலிருந்து வட்டுக்கோட்டையை நோக்கி வண்டி சென்றுகொண்டே இருந்தது. எனக்கு இலங்கை புதியது அன்றேனும், யாழ்ப்பா ணம் புதியதுதான். இலங்கைத் தீவு முழுவதையும் சுற்றிப்பார்த்த நான், எப்படியோ யாழ்ப்பாண எல் லையை மட்டும் மிதிக்கவில்லை. கண்டியும் கதிர் காம மும், இரத்தினபுரியும் காலியும், திரிகோண மலையும் அனுராதபுரமும், குளிர்ந்த நு வார லி யா வும் சிதைந்த பழைய சோழர்தம் தலே நகரங்களும், இலங்கைத் தலை நகராகிய கொழும்பும் 15ான் முன் னமே கண்டவை. அவற்றுளெல்லாம் இரண்டொன் றில் தவிர்த்து மக்களின் வாழ்விலும் பிறவகை யிலும் பெரும்பாலும் யாதொரு வேறுபாடும் காண வில்லை என்னலாம். மக்கள் பெரும்பான்மை பேசும் மொழி சிங்களம், சமய நெறியோ பெளத்தம், பழக்க மும் வாழ்க்கை முறைகளும் பெரும்பாலும் மேல் நாட்டு வாழ்க்கை கிலையைப் பற்றியன. இங்கோ, அனைத்திலும் வேறுபாடு என்பதை முன்னமே கேட்டறிந்துள்ளேன். நான் முன் இலங்கை சென்ற போது என் யாழ்ப்பாண நண்பர்கள் அங்கு வரு மாறு வற்புறுத்தியும், எனது கல்லூரிப் பணிகளும் பிறவும் இடை நின்ற மையின், அங்கே செல்லாது நேரே கொழும்பிலிருந்து வந்துவிட்டேன். இன்று அந்த யாழ்ப்பாண மண்ணில் சென்றுகொண்டே யிருந்தேன்.
2

Page 15
18 மணி பல்லவம்
யாழ்ப்பாணம் முழுக்க முழுக்கத் தமிழர் வாழும் நிலம் என்பது நான் அறிந்ததே. அதற்கேற்ப அங் குள்ள சமயமும் நிச்சயமாகப் பெளத்தமாய் இருக்க வழி இல்லை என்பதும் தெரியும். தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் பெளத்தம் தனி ஆட்சி செய்து தலை கிமிர்ந்து வாழ்ந்து வந்தது என்பதற்கு வரலாற்றுச் சான்று உண்டேனும், இன்று தமிழ் மண்ணில் அச் சமயம் வாழவில்லை என்பது சொல்லவும் வேண் டுமோ! ஏன் ? இந்திய நாட்டிலேதான் அச்சமயம் எங்குச் சிறக்க வாழ்கிறது? உரிமை பெற்ற இந்திய அரசாங்கச் சின்னமாகவும் கொடியாகவும் பெளத் தர்தம் தூபியும் ஆழியும் பொலிகின்றன என்ரு லும், அப்பெளத்தம் இந்திய நாட்டில் கால் கொள்ள வில்லையே! ஆம்! புத்தர் போற்றி வளர்த்த சமயம் அவர் பிறந்த பொன்னுட்டிலேயே கால் கொள்ள வில்லை. எனினும், அண்டைநாடுகளாகிய இலங்கை, சீனு முதலிய நாடுகளில் அது இன்றும் ஆணை செலுத்துவது கண்கூடு. இங்கு இலங்கை முழு வதும் கால் கொண்டுள்ள அச்சமயம் யாழ்ப்பாணத்
தில் நிலை பெறவில்லை.
யாழ்ப்பாணம் சைவர்கள் நிறைந்த பகுதி. சைவ ஒழுக்க நெறிகளும், வைதிக வாழ்க்கை முறைகளும் இன்றும் இங்கு நன்கு போற்றப்படுகின்றன. இந்த நாட்டில் பிறந்து சைவத்தையும் தமிழையும் ஒருங்கே வளர்த்த அறிஞர் பலர்; அறவோர் பலர். ஆறுமுக நாவலரைப் பற்றிச் சைவத்தமிழ் மக்கள் கினையா திருக்க முடியுமோ? தாமோதரம் பிள்ளை, கனகசபைப் பிள்ளை போன்ருர் தமிழுக்கும் சமயத்துக்கும் செய்த தொண்டுகள்தாம் எத்தனே! அண்மையில் துறவு நெறி பற்றி வாழ்ந்து, தமிழ் இசை உலகையே சிறக்க

யாழ்ப்பாணத்தில் முதல் நாள் 19
வைக்கும் யாழ் நூ லே எழுதிச் சென்ற அடிகள் விபுலானந்தரைப் பற்றித்தான் தமிழர் சிந்திக்காதிருக்க முடியுமா ? 'ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன் தமிழர்' என்ற தலைப்பிலே முதன்முதலாகத் தமிழர் காட்டு வரலாற்றை இலக்கியக் கண்கொண்டு ஆராய்ந்து வெளியிட்ட கனகசபைப் பிள்ளேயின் தொண்டினே கினேக்கும் போது யாழ்ப்பாணமும் உடன் இணைந்து வருதல் இயல்புதானே ? ஆம் ! இவ்வாறு பண்டும் இன்றும் தமிழுக்குத் தொண்டு செய்த அந்த யாழ்ப்பாண மண்ணில் செல்வது மகிழ்ச்சியை விளேத்தது.
தமிழன் இப்போது தன்னுடைய பல நல்ல இயல்புகளேயும், வாழ்க்கை முறைகளையும்--ஏன் ?-- பெயர்களையுங்கூட இழந்துவிட்டான் என்றே சொல் லவேண்டும். தமிழின் இசை கலத்தையெல்லாம் பரப்பிய பாணர், இன்று தமிழ் நாட்டில் இல்லை. கையில் சிறியாழையும் பேரியாழையும் பற்றிக் கொண்டு, மக்களும் மாக்களும்-புள்ளும் மரமுங் கூட-உய்த்து உணர்ந்து மகிழும்படி இசை எழுப்பி நின்ற அந்தப் பாணர்கள் பெயரால் பாடல்கள் உள் ளன. சிறுபாணுற்றுப்படையும், பெரும்பானுற்றுப்படையும் தமிழ் இலக்கிய உலகில் சாவா வரம் பெற்றவை யன் ருே ! ஆனல், அச் சிறுபாணரும் பெரும்பாண ரும் எங்கே ? தமிழ் நாட்டு மூலை முடுக்குகளிலும் அப்பாணர்களேக் காண முடியாதே! அவர்கள் இல் லாவிட்டாலும் அவர்கள் கைக்கொண்டிருந்த அந்த யாழ்கள்தாம் எங்கே ? அவை எப்படி இருந்தன என்பதைத்தான் காட்ட முடிந்தது. யாரால் ? யாழ்ப் பாணத்தார் ஒருவரால்-விபுலானந்த அடிகளால், யாழையும் அதை ஏற்அ வாழ்ந்த பாணரையும்

Page 16
20 மணி பல்லவம்
மறந்துவிட்ட தமிழ் நாட்டுக்கு இந்த யாழ்ப்பாணம் பெயரளவிலாவது அவர்தம் பண்டைப் பெரு மையை கினைவூட்டிக்கொண்டிருப்பதை கினைந்து மகிழ்ந்துகொண்டே சென்றேன். யாழ்ப்பாணத் திலே இன்று யாழும், அதை மீட்டும் பாணரும் இல்லையெனினும், அந்த யாழ்ப்பாணர் காலத்தில் நம் தமிழ் நாட்டில் கிலவிய பல நல்ல பண்புகள் இந்த நாட்டில் இன்னும் மறைந்துவிடவில்லை என் பதை ஓரளவு அறிந்துகொண்டேன். ஆம்! விமான நிலையத்தில் ஏற்றுச் சோதனையிட்டு அனுப்பிய நிலையும், என்னே அழைத்துச் செல்ல வந்த அன்பர் தம் பரிவும் அந்த உண்மையை நிலைகாட்டின. யாழ்ப் பாணம் மட்டுமன்றி, இன்னும் பல ஊர்களின் பெயர்கள் நல்ல தமிழ்ப் பெயர்களாகவே அமைக் திருந்த சிற் சில பகுதிகள் வழியாகக் கார் சென்று கொண்டே இருந்தது. கொதிக்கும் வெ ம் ைம விளேக்கும் கோடைக்கு யாழ்ப்பாணம் தமிழ்நாட்டை விடத் தாழ்ந்துவிடவில்லை என்பதும் நன்கு புல ணுயிற்று. அந்தக் கோடை வெயிலுக்கு இடையில் கார் வட்டுக்கோட்டையை நோக்கி விரைந்துசென்று கொண்டேயிருந்தது.
வரண்ட யாழ்ப்பாணத்தை அலங்கரிப்பன பனை மரங்களே. பார்க்கும் இடமெங்கும் பனைமரங்களே வானுற ஓங்கி கின்றன. இடையிடையே வேறு சில மரங்களும் துணையாய் நின்றன. விமான நிலையத்தின் பக்கத்தில் பலப்பல இடிந்த கட்டடங்களும், சிதைந்த சாலைகளும் தெரிந்தன. அவையெல்லாம் போர்க் காலத்தே இவ்விமான கிலேயம் ஒரு தளமாகப் பயன் படுத்தும் வகையில் அமைக்கப்பட்டன என்பதை விளக்கின. எத் த ஃன யோ இலட்சக் கணக்கிலும்

யாழ்ப்பாணத்தில் முதல் நாள் 21
கோடிக்கணக்கிலும் போர்க்காலத்தில் தற்காப்புக் காகவும், போர் தொடுப்பதற்காகவும் பணத்தைச் செலவு செய்ததை அறியாதார் யார் 1 சென்னைக் கடுத்த ஆவடியிலும் பிறவிடங்களிலும் இதுபோன்ற சிதைந்த கட்டடங்களேக் காண இயலுமே! இங்கு இந்தக் கட்டடங்கள் நெடுங் தொலைவு நெடுஞ் சுவர்களாகவும், சி ைதந்த தரைகளாகவும் காட்சி அளித்தன.
யாழ்ப்பாணத்துச் சாலை கள் அகலமானவை அல்லவேனும், மேடு பள்ளம் இல்லாதவை ; தார் இடப்பெற்றவை. ஆகவே, வண்டிகள் விரைந்து செல்லினும் ஆட்டமும் குலுக்க லும் இல்லாமற் செல்ல முடியும். பாதைகள் நேராகச் செல்லாது வளைந்து வளேந்து செல்கின்றன. ஆகவே, நல்ல பழக்கமுடையவர்களன்றி, மற்றவர் கார் முதலிய வேகமாகச் செல்லும் வாகனங்களே விரைந்து செலுத்துதல் இயலாது.
கார் விமான நிலை ய த் ைத விட்டு நெடுங் தொலைவு சென்றுகொண்டேயிருந்தது. வழியிடை இரண்டொரு சிற்றுார்களேக் கடந்தோம். சிற்றுார் கள் என்றதும் கமது காட்டில் வரிசையாகக் கட்டிய சிறுசிறு வீடுகளே மு ன் தோன்றும். இங்குச் சிற்றுார்களில் வீடுகள் சிலவே இருக்கும். எனினும், அவை தனித்தனியாக, பெருகிலப் பரப்புகளுக்கு இடையில் அமைக்கப் பெற்றவை. சுற்றிலும் வெற்றிடங்கள் கிரம்ப இருக்கும். அங்கிலத்தைச் சுற்றி அவரவர்தம் எல்லே அமைக்கப் பெற்றிருக்கும். சென்னையில் உயர்ந்த மாளிகைகளாகிய பங்களாக்" களுக்குச் சுற்றிச் சுவர் உண்டு. இங்கு அந்தச் சுற்றுச் சுவர்களுக்கு ப் பதில் பனை ஓலைகளும்

Page 17
22 மணி பல்லவம்
தென்னங்கீற்றுகளும் வரிசையாக வேயப்பெற்றிருக் தன; சுமார் ஆறு அடி உயரத்துக்கு, வரிசையாக ஒன்றன் மேல் ஒன்ருக அழகாகக் கட்டப்பெற்றிருக் தன. இந்த ஒலேச் சுற்றுச் சுவர்களுக்குள் பரந்த நிலப்பரப்பும், அதன் இடையிலே சிறுசிறு கட்டடங் களும் உள்ளனவாம். அந்த ஓலேகள் இவ்வாறு அழகிய முறையில் சுற்றுச் சுவராய் அமைந்த காட்சி எனக்குப் புதியது. ஒரு சிற்றுார் என்றல், அவ்வூர் எல்லே தொடங்கி அது முடியும்வரை இந்தச் சுற்றுச் சு வர் க ளின் தொடர்ச்சிதான் காட்சியளிக்கிறது. அதனுலேதான் அஃது ஊர் என்பது தெரிகின்றது. இடையிடையே உட்செல்லும் வாயில்கள் உள்ளன. ஆனல், பலவற்றுள் உள்ளிருக்கும் கட்டடங்கள் தெரியாதபடி, கிலப்பரப்பு விரிந்து உள்ளது.
வழியிடை இரண்டொரு பேரூர்களேயும் கடந் தோம். விமான நிலையத்துக்கும் வட்டுக்கோட் டைக்கும் இடையில் உள்ளது பன்னிரண்டு கல் தொலைவு என்ருர்கள். நாங்கள் வீடு சென்று சேரும் போது மணி இரண்டை எட்டிக்கொண்டிருந்தது. என் நண்பர்தம் வீடு பரந்த பரப்புக்கு இடையில் அமைந்த ஒரு சிறந்த கட்டடம். திரு. காகலிங்கம் அவர்கள் அறுபது வயதைக் கடந்தவராயினும், உள்ளத்திலும் உடல் உழைப்பிலும் இளேஞராகவே காணப்பட்டார்கள். அவர்களே காரினே ஒட்டிவரும் போது, அதைத் தம் வயமாக்கி வந்த நிலையும், அவர்கள் வீட்டில் செயலாற்றும் முறையும் அவர் தம் உள்ள இளமையை எடுத்துக் காட்டின. அவ ரும் மகனரும் அது வரை சாப்பிடவில்லை என்பதை அப்போதுதான் அறிந்தேன். பி ற கு மூவரும் உணவு கொண்டோம்.

யாழ்ப்பாணத்தில் முதல் நாள் 23
கோடையின் கொடுமையைப் பற்றி முன்னமே குறித்தேன். எனவே, நாங்கள் மாலை ஐந்து மணி வரையில் ஒய்வு பெற்றிருக்க வேண்டியிருந்தது. அவர்கள் வீட்டு வாயிலின் முகப்பில் வளர்ந்தோங்கிய வேப்பமரம் எங்கட்குச் சற்று ஆறுதல் தந்தது
என்னலாம்.
மாலை ஐந்து மணிக்குமேல் யாழ்ப்பாணம் நோக் கிப் புறப்பட்டோம். தமிழ் காட்டில் யாழ்ப்பாணம் என்று கேட்டால் அது ஒரு நகர்போன்றுதான் ஒலிக் கிறது. ஆனல், அது நகர் அன்று; மாவட்டமே யாகும். யாழ்ப்பாண மாவட்டத்தலைநகர் யாழ்ப்பாண நகராகும். எனவே, இலங்கையைத் தொட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பெருந்தீவே யாழ்ப்பாணத் தீவுதான். அதன் மத்தியிலே தலைநகராகிய யாழ்ப் பாணம் இருக்கிறது. அதைச் சுற்றிலும் தீவு முழு வதும் சிறியதும் பெரியதுமாகப் பலப்பல ஊர் கள் உள்ளன. நாங்கள் விமான நிலையத்திலிருந்து வட்டுக்கோட்டைக்கு வந்த போழ்து யாழ்ப்பாண நகரைத் தொடவில்லை; வேறு குறுக்கு வழியாக வந்துவிட்டோம்; எனவே, இப்போது திரும்பவும் வேறு வழியாகத்தான் யாழ்ப்பாணம் நோக்கிச் சென் ருேம். வட்டுக்கோட்டைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் எட்டுக்கல் தூரம் போலும்! இரண்டுக் கும் இடை யி லே சில சிற்றுார்கள் இருந்தன. வட்டுக் கோட்டைக்கு அண்மையில் அமெரிக்கப் பாதிரியாரால் நடத்தப் பெறும் ஒரு பெருங்கல்லூரி இருந்தது. அதில் பல மாணவ மாணவிகள் பயில் வார்களாம்; கல்லூரி யில் மாணவர் விடுதியும் உண்டாம். பாதிரியாருடைய தாய் நாட்டிலிருந்து
பெரும்பொருள் அங்கிலையத்துக்கு வந்துகொண்

Page 18
24 மணி பல்லவம்
டிருக்கிறதாம். கிறிஸ்தவர் தம் சமயம் தழைப்பதற் காகத் தம்மையே தியாகம் செய்வதோடு, தமது பொன்னையும் பொருளேயும் கொடுத்துச் செய்யும் சமயப்பணி உலகறிந்த ஒன்றுதானே? அவர் தம் சம யம் தழைக்க வேண்டும் என்ற தனி உணர்வினுலே தான் அவர்கள் அதைச் செய்கிருர்கள் என்று குறை கூறலாம். எனினும், அவ்வாறு கூடப் பிற சமயச் செல்வர்கள் செய்வதில்லை என்பதை நாம் அறிவோ மன்ருே ? அவர்தம் பணி வழி அப்படி அதிக எண்ணிக்கையில் யாழ்ப்பாண மக்கள் கிறித் தவர்கள் ஆகவில்லை என்று கூறினர்கள்.
யாழ்ப்பாண நகர் சிறியதுதான். வான் அளா விய கட்டடங்களே அங்குக் காண முடியவில்லை. கடைத்தெருவைத் தவிர்த்து மற்ற இடங்களெல் லாம் சுற்றுச் சுவர்களும், ஒலை அடைப்புக்களும் கொண்ட பரப்புக்குட்பட்ட வீடுகளே உடையனவா கவே இருந்தன. சில சில கட்டடங்கள் உயர்ந்து இருந்தன. எனினும், இரண்டு மூன்று அடுக்கு மாளிகைகளைக் காண்பது அரிதாயிற்று. தனி வீடுகளாயினும், அரசியல் அலுவலகங்களாயினும், உயர் மாளிகைகளாகவே இல்லை. நான் அன்று வழி முழுதும் எங்கும் உயர்தோற்ற மாளிகையைக் காணவில்லை. அந்தக் கிறித்தவக் கல்லூரியில் இரண்டொரு கட்டடங்கள் அவ்வாறு இருந்தன என நினைக்கின்றேன். கட்டட உயர்வு இல்லாக் கார ணம் என்ன என்று கேட்டேன். அவர்கள் ஒருவர் மற்றவர் கண்ணுக்குத் தென்பட விரும்பாத வாழ்க் கையே அதற்குக் காரணம் என்ருரர்கள் வீட்டைச் சுற்றிய பரப்பிற்கும் எல்லையில் சுவரைப் போன்று நெருக்கமாக ஒலை வேய்ந்திருப்பதற்கும் அதே கார

யாழ்ப்பாணத்தில் முதல் நாள் 25
ணம் கூறினர்கள். தனித்தனி வீடுகளில் வாழும் மக்கள் சற்றுத் தாராளமாக உலவவும், பக்கத்தில் உள்ள கிணறுகளில் மூழ்கவும் வசதியாக மற்றவர் அறியா வகையில் ஒலையால் மறைவு செய்யப்படு கிறது. அதே போன்று, ஒரு வீடு உயர்ந்த மாளி கையாகவும், மற்ருெ ன்று தாழ்ந்தும் இருந்தால் உயர்ந்த இடத்திலிருந்து மற்ற இடத்தில் வாழ் வார்தம் அன்ருட வாழ்வைக் காணமுடியும் அல்ல வா? அதுவும் தவறு என்பதனுலேயே அவ்வாறு ஒரே வகையில் உயரப் போகா மாளிகைகளேயும், சுற் அறுச் சுவர்களாக ஒலைகளேயும் அமைத்திருக்கிருர்கள் என அறிந்தேன். அதே நிலை யாழ்ப்பாண நகரிலும் இருந்தது. சில சில குறுந்தெருக்கள் வளைந்து வளேந்து சென்றன. அவை ஒரு பெருந்தெருவில் தொடங்கி, மற்ருெரு பெருந்தெரு வரை செல்லும் முறையினேக் கண்டேன். அவை மிகக் குறுகியவை. ஒரு வண்டி வந்தால் மற்ருெரு வண்டி அதைக் கடப்பது இயலாத செயல். வீடுகளில் வாயில் வழி களிலே சற்று விரிந்துள்ள இடங்களிலே தான் அவ் வாறு எதிர் வண்டிகள் கடக்க இயலும், இரண் டொரு குறுந்தெருக்கள் வழியாகச் செல்லும்போது அதைக் கண்டேன்.
யாழ்ப்பாணக்கடைத்தெரு அத்துணைபெரியது என்று சொல்ல முடியா வி ட் டா லும், எல்லாப் பொருள்களும் அங்குக்கிடைக்கும் வகையில் அக் கடைத்தெரு அமைந்திருந்தது. வெளி நாட் டு த் துணி வகைகளும், பிற பொருள்களும் கண்ணைக் கவர்ந்தன. இங்கு இறக்குமதிக்கு அதிகமான வரி இல்லாத கார ண த் தால் பல வெளி நாட்டுப்

Page 19
26 மணி பல்லவம்
பொருள்கள் இந்தியாவைக்காட்டிலும் விலை குறை வாகக் கிடைக்க வழி இருக்கிறது. மற்றும் இந்திய காட்டில் இறக்குமதி செய்யாது தடை செய்யப்பட்ட எத்தனையோ வகையான துணி மணிகளும், கார் வகைகளும், பிற பொருள்களும் இங்குக் கிடைக் கின்றன.
நாங்கள் கடைத்தெருப்பக்கம் செல்லும் போது மணி ஏழு. பல கடைகளே மூடத் தொடங்கிவிட்டார் கள். இரவில் நெடுநேரம் கடைகளே வைத்திருப்ப தில்லையாம். ஏழு மணிக்குள் பெருங்கடைகளெல் லாம் மூடப்பட்டுவிடுமாம். அன்றும் அவ்வாறு மூடிக்கொண்டிருந்தார்கள். சில கடைகளின் உள்ளே நுழைந்து பார்த்தேன். பல்வேறு வகையான பொருள்கள் அடுக்கடுக்காய்க்கண்ணையும் கருத்தை யும் கவரும் வகையில் விளங்கின." ைேடகள் மூடும் வேளேயாதலால் விரைந்து கல்:த் தெ ரு ைவ விட்டுப் புறப்பட்டோம்.
இருட்டிவிட்டமையின், வேறு எந்த இடத்தை யும் காண இயலாது என்ற எண்ணத்துடன் திரும் பலானுேம், வழியில் அங்கே உள்ள ஒரு சிற்றுண்டி விடுதியில் 'இட்டலி’ ‘தோசை' முதலிய சிற்றுண்டி களே உண்டோம், 15ம் நாட்டுச் சிற்றுண்டிகளே அவை. சுவையும் அந்த வகையிலேயே அமைக் திருந்தது என்னலாம். பின்பு அங்கேயே பாலும் பழமும் உண்டோம். பிறகு அங்கிருந்து வட்டுக் கோட்டையை நோக்கி வண்டி புறப்பட்டது. வழி யில் ஒரு கடற்கழியைக் கடக்கப் பாலம் அமைக்கப்
பட்டிந்தது. இரவு எட்டு மணி வேளையில் அந்தப்

யாழ்ப்பாணத்தில் முதல் நாள் 27
பாலத்தில் நிற்பது, கோடை வெயிலுக்குப் பின் குளிர்ச்சி பெறும் இன்பமன் ருே! ஆம்! சிறிது நேரம் அங்கே தங்கி அந்த இனிய கடற்க ர ற் ைற த் துய்த்துப் பின்பு புறப்பட்டு வீடு திரும்பினுேம், மணி யும் பத்தாகிவிட்டது. படுக்கைக்குச் சென்ருேம். வந்த களேப்பால் உறக்க அன்னேயின் அணைப்பிலே என்னை மறந்தேன்!

Page 20
வாழ்வும் வளமும்
யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர் வாழ்வு தமிழ் காட்டுத் தமிழர்தம் வாழ்வை ஒத்ததேயாகும். அவர்தம் இருப்பிட அமைப்பும், உணவும், உடை யும், பிற வகைகளும் தமிழ் நாட்டு முறைகளோடு ஒத்தனவாய் இருக்கின்றன. பள்ளிக்கூடங்களும் பிற கல்வி நிலையங்களும் இலங்கை அரசாங்க அமைப்பின்படி இயங்கி வருகின்றன. தமிழர் பெரும்பாலாராய் உள்ள இப்பகுதியில் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மிகுதியாய் உள்ளன. வாழும் தமி, ழருள் பலர் வைதிக நெறி வழுவா வாழ்க்கையையே மேற்கொள்ளுகின்றனர் என்னலாம். மேலை நாட்டு நாகரிகப் பண்பாடுகளும் பழக்க வழக்கங்களும் பிறவும் அவர்தம் வாழ்வில் விரவியுள்ளன என்ரு லும், அவற்ருல் அவர்தம் சமய வாழ்வு அவ்வளவு அதிகமாகப் பாதிக்கப்படவில்லை எனத்தெரிகிறது. சமயச் சடங்குகள் இன்னும் குறையாத அளவில் நடைபெறுகின்றன. சமயத்தில் சமரசம் காணும் மனப் பான்மை கூட இன்னும் சிலருக்கு இல்லை என்று கூறலாம். இங்கு ஒரு நிகழ்ச்சி எனது கினே வுக்கு வருகிறது :
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த யாழ்ப் பாணத்தில் சமய சம்பந்தமான ஒரு மாநாட்டிற்கு என்னைப் பேச்சாளனுக வருமாறு அழைத்தார்கள். நான் சமயத்தில் சமரசம் காண வேண்டும் என்ற கொள்கை உடையவன். அங்குள்ள வரோ, சமயத்
தில் உள்ள வேறுபாடுகளே அப்படியே பின் பற்ற

வாழ்வும் வளமும் 29
வேண்டுமென விரும்புபவர்கள் எனக் கேள்விப்பட் டேன். உடனே நான் எனது கொள்கைபற்றி அவர் களுக்கு விளக்கமாக எழுதினேன். சிறு தெய்வ வழிபாடுகளேக் கண்டிக்கவும், சாதி வேறுபாடுகளே சமயத்துறையில் நீக்கவும் வேண்டிய வழிதுறைகளே 5ான் வற்புறுத்துவேன் என்றும், அதற்கு இசைங் தால் நான் வருகிறேன் என்றும் எழுதியிருந்தேன். உடனே அப்படியாயின் நான் வர வேண்டா என்றும் யாழ்ப்பாணம் இன்னும் அந்தச் சீர்திருத்தத் துறை யில் முன்னேறவில்லை என்றும் எழுதிவிட்டார்கள். ஆம் ! அந்த யாழ்ப்பாணம் இன்று முழு அளவில் மாறிவிடவில்லை என்ருலும், பல வகைகளில் மாறி முன்னேறிக்கொண்டுதான் வருகிறது என்பதை நேரில் கண்டு அறிந்து மகிழ்ந்தேன்.
நான் தங்கியிருந்த நாட்களில் ஒரு நாள் ஞான சம்பந்தர் தம் உறவினர் வீட்டுக்கு நீத்தார் சடங்கின் பொருட்டுச் செல்ல வேண்டுமென்று சொன்னர். நான் அவர் பகல் பன்னிரண்டு மணியளவில் சென்று திரும்பு வார் என் கினேத்தேன். ஆனல், அவர் அன்று மாலை நான்கு மணி வரை என்னேடு கூடவே இருந்து பிறகு அந்த நிகழ்ச்சிக்குச் செல்லப் போவ தாகக் குறித்தார். அன் அறு பதிருைம் நாட்கடனும். பல அந்தணர்களுக்குத் தானம் வழங்குவார்கள். அவர்களுக்கெல்லாம் தானம் கொடுத்துச் சடங்கு களேயெல்லாம் முடித்து விட்டிற்கு வர மாலை நான்கு மணி ஆகுமாம். அதற்குப் பிறகுதான் மற்றவர் களுக்கு உணவாம். அது வரை உற்ருர் உறவினர் ஒன்றும் உண்ணு தி ரு ப் பார்கள் போலும் ! இவ்வாரு ன பழம்பெரு வைதிகச் சடங்குகள் அங்கு இன்னும் குறையவில்லை என்னலாம்.

Page 21
30 மணி பல்லவம்
யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுள் பெரும் பாலோர் சைவர் என்று குறித்தேன். எனினும், அந்த யாழ்பாணத் தலை நகரில் நல்ல சைவ உண வுச் சாலையோ உண்டிக் கடையோ காண்பது அரி தாய் இருந்தது. பெரிய ஒட்டல்கள் எல்லாம் மேலே காட்டு முறையில் குடிப்பழக்கங்கள் கொண்டவை; மாமிச உணவையும் உண்டியையும் த ரு ப ைவ. யாழ்ப்பாணத்து ஒரு மூலையில் ஒரு தமிழ் நாட்டுப் பார்ப்பனர் தோசையும் இட்டலியும் சுட்டு விற்றுக் கொண்டிருந்தார். அவருக்கு அ வ ற் ரு ல் நல்ல வருமானந்தான். உ ண வுக் கும் சிற்றுண்டிக்கும் புதியராகச் செல்பவர் அங்கே சற்றுத் திகைக்க வேண்டிய கிலேதான் உள்ளது. எனினும், விரும்பி வருக வென்று ஏற்று விருந்து புரக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு இடையில் அது ஒரு பெருங்குறை யாகத் தோன் ருது என்னலாம்.
இலங்கை காட்டிலேயே இப்போது மொழிக் குழப்பம் உண்டாயிருப்பதை யாவரும் அறிவர். இலங்கை வாழ் இந்தியர் பலர் தாய் நாடு நோக்கித் திரும்ப வேண்டிய கிலேயில் உள்ளனர் என்பதும் உலகறிந்ததே. இங்கிலையில் அங்கேயே பழங்காலங் தொட்டு கிலேத்து வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் நிலையும் சற்றுத் தாழ்ந்து தான் உள்ளது எ ன் ன ல |ாம். ஒரு வேளை வாழ்ந்த இந்தியரோடு இவர்களும் ஒன்றிக் கலந்தால் உயர வழி உண்டோ என்னவோ! அது திட்டமாகத் தெரியவில்லை. அவர் களும் அதை விரும்பவில்லையோ எனத் தெரிகிறது. இலங்கை வாழ் இந்தியர் என்னும்போது, அவ் விந்தியர் தமிழரே ஆவர். மிகு பழங்காலம் தொட்
1. இது 1947 ஏப்பிரல் நிலை

வாழ்வும் வளமும் 3.
டுத் தமிழர்கள் வாணிபத்தின் பொருட்டும், கலை நலம் காணவும் காட்டவும் பல வெளி நாடுகளுக்குச் சென்றுள்ளார்கள். அந்தத் தொடர்பு இந்நாள் வரை கிலேத்துத்தான் வந்திருக்கிறது. இன்று வெளி நாடுகளில் இருக்கும் இந்தியருட்பெரும் பாலோர் தமிழரே. கிழக்கே சையாம் சிங்கப்பூர் தொடங்கி, மேற்கே தென்னுபிரிக்கா வரையில் உள்ள இந்தியரில் நூற்றுக்குத் தொண்ணுாறு பேர் தமிழர் என்பதை அறியாதார் யார் ? உலகில் எப்பாகத் திலும் இன்று தமிழர் இருக்கின்றனர். ஆனல், வாழ வழிகாட்டியாக வளம் பெருக்கச் சென்ற தமிழர்கள் இன்று வாட்டத்துடன் தாய் 5ாடு திரும்புகின்ருர் கள். சையாமிலும் பர்மாவிலும் தமிழர்கள் வாழ்வும் வளமும் இழந்தவராகிய காட்சியும், வாடி வந்து கப் பலி ல் இறங்கிய காட்சியும் இன்னும் மனக் கண்ணை விட்டு அகலவில்லை. மலேயாவிலும் இன்று அவர்தம் கை தாழ்ந்துவிட்டது என்னலாம். மலே யாவும் சிங்கப்பூரும் முழு சுதந்தரம் பெற்ற பின் அங் குள்ள ஆறு லட்சம் தமிழர் கிலே என்னகும் என்று யாராலும் கூற இயலாது. தென்னுப்பிரிக்காவில் தமிழர் படும் பாடு தரணி அறிந்தது. இங்கு இலங் கையிலும் அந்த கிலேயே நிலவுகிறது !
இந்த அவல நிலை நீங்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். அது ஒன்றும் செய்யாது வாளா உறங்குகின்றது. வெளி நாட்டில் வாடும் தமிழர் அளவுக்கு வங்காளியரோ, குஜராத்தியரோ வாடுவார்களாயின், இந்நாள் இங் திய அரசாங்க நடவடிக்கை வேரு ய் இருந்திருக்கும் என்று சில அரசியல் வாதிகள் கூறுவது ஒரளவு உண்மையாகவும் இருக்குமோ என கி னே க் கத்

Page 22
32 மணி பல்லவம்
தோன் அறு கிற து. எப்படியாயினும், இத்தனை ஆண்டுகளாக இலங்கை வாழ் இந்தியர் பிரச்சி னைக்கு வழி காணுதிருப்பது வருந்தத்தக்க ஒன்றே யாகும். இங்கிலை யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர் களேயும் ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது என்னலாம். யாழ்ப்பாணத் தமிழர் இலங்கை அரசியலில் சிறுபான்மையர். எனவே, அவர்கள் எதையும் தங்கள் விருப்பம் போலச் செய்ய இயலாது. தமி ழும் சிங்களமும் சம உரிமையோடு வாழ்ந்திருந்த காலத்தில் மக்களும் மனநிறைவோடு வேறுபாடு இன்றி வாழ்ந்தார்கள். இன்று மொழிப் போராட் டத்தோடு, சமயப் போராட்டமும் கலந்துள்ளது என்னலாம். சிங்களவர் பெரும்பாலும் பெளத்தர். தமிழர்களோ சைவர்கள். பெளத்த குருமார்கள் தங்கள் மொழியையும் கொள்கையையும் பொது மக்களிடைப் பரப்ப முயல்கின் ருர்கள். அதன்வழி மக்கள் மனம் தம் சமயம், தம் மொழி என்ற பற்றில் திளேக்கிறது. ஜனநாயக நாளாகிய இன்று ஆள விரும்புவோர் அவ்வப்பொது மக்களது மனப்படி நடக்க வேண்டியுள்ளது. ஆகவே, பெருவாரியாக உள்ள சிங்களவர் வழி அரசாங்கம் செல்வதில் வியப் பில்லை யன்ருே !
இலங்கை வாழ் தமிழினமும் முழு ஒற்றுமை யோடு இருக்கவில்லை என்றனர் என் நண்பருட் சிலர். முழு ஒற்றுமையுடன் இருப்பின், இன்னும் பல நல்ல செயல்களேச் செய்து, பலவற்றைச் சாதிக்க முடியும் என்று சிலர் 15ம்பினர். தன்னலம் சிலரிடம் குடிகொண்டமையின், ஒரு சிலர் ஆளு வோருடன் இருப்பதாகவும் கூறினர். எ ன க் கு அவை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வாய்ப்பு

வாழ்வும் வளமும் 33
இல்லை. எனவே, இந்த அளவோடு இதை கிறுத்தி மேலே செல்கின்றேன்.
இந்த மொழிப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் ஓரளவு தமிழை வளர்க்கிறது என்பதே என் கருத்து. ஒடும் மோட்டாரில் தமிழ் எழுத்துக் களும், தமிழ் இலக்கங்களும் இருப்பதைக் கண் டேன். அது எனக்கு வியப்பாய் இருந்தது. தமிழ் 15ாட்டிலேயே இது காண முடியாத ஒர் அதிசயம். ஆங்கிலம் இந்தி ஆகியவற்றின் கீழ் எங்கோ ஒரு மூலையில் தமிழ் எழுத்தைக் காண்பதுதான் தமிழ் நாட்டின் தனிச் சிறப்பு. எனவே, இங்குக் காரின் எண்களும் தமிழில் இருப்பதைக் காண வியப்பு உண்டாகாமல் போகுமா? நண்பர்களே அது பற்றி விசாரித்தேன். அரசாங்கத்தார் சிங்களம் தமிழ் இரண்டிலும் எண்கள் இருக்கலாம் என்று விதித்த மையின், மொழிப் போராட்டக் காரணத்தால் சிறந்த தமிழ்ப்பற்று உடையவர்கள் தங்கள் கார் களின் எண்களைத் தமிழிலே யே அமைத்தார்கள் என அறிந்தேன். சிவநேயம் தந்த சூலையை வணங்கிய சைவராகிய திரு5ாவுக்கரசு காயனர் போன்று, இத் தமிழ்ப்பற்று உண்டாகச் செய்த மொழிப் போராட் டத்தை வாயார வாழ்த்தினேன்!
யாழ்ப்பாணத்து மக்கள் வாழ்க் கை முறை அத்துணைச் செழிப்புடையது என்று கூறமுடியாது. மக்களுள் பெரும்பாலோர் ஏழைகளே! அன்ருட வாழ்வுக்கெனப் பணியாற் அறுவோர் பல்லோர். உத்தியோக மு ைற யில் பணியாற்றுவோர்க்குத் தமிழ் நாட்டைக்காட்டிலும் சற்று அதிக மாகவே சம்பளம் கி ைட க் கி றது என்னலாம். எனினும்,
3.

Page 23
34 மணி பல்ல்வம்
அவர்கள் வாழ்க்கைத் தரத்துக்கு அதுவும் போத வில்லை என்பதே அவர்கள் கூற்று.
யாழ்ப்பாண நகர்ப்புறத்தை விட்டுக் கிராமங் களில் சென்று காணின், மக்கள் பயிர்த்தொழில் செய்வதை அறியலாம். யாழ்ப்பாண கில ப் பகுதி அத்துணைச் செழிப்புடையதன்று. எங்கும் பனே மரங் களே காட்சி தரும். ஆகவே, அங்கிலத்தைப் பாலே நிலத்தொடு சார்த் த ல் வேண்டுமன்றே ! எங்கும் வரட்சிதான். மின்சாரத்தின் துணைகொண்டு நீர் இறைத்துப் பயிரிடும் காட்சி பெரும்பாலும் இல்லை என்னலாம். வடபகுதியில், உள்ள நீரினே க்கொண்டு பல வகைக் காய்கறிகளேப் பயிரிடுகிருர்கள். கிழங்கு வகைகளுள் சிலவும் பயிராகின்றன. தமிழ் நாட்டுக் காய்கறிகள் இங்கும் அதிகமாகக் காணக் கிடைக் கின்றன. இவைகளேத் தவிர்த்து எள்ளு முதலிய நவதானியங்களும் பயிரா கி ன் றன. நல்ல மழைக் காலங்களில் த மி பூழ் (5 r ட் ைட ப் போன்று நெல் பயிராகும் வயல்களேயும் கண்டேன்.
யாழ்ப்பாணம் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட பகுதியாதலின், மீன் பிடிப்பே தொழிலாய் உள்ளது போலும் ! கைத்தொழில் துறையிலும் யாழ்ப்பாணம் அத்துணை முன்னேற்றம் பெறவில்லை என்னலாம். கனகேசன் துறை என்னுமிடத்தில் சிமிட்டித் தொழிற் சாலை ஒன்று இருக்கிறது. அது பெரியதேயாகும். எனினும், நாட்டின் தேவை முழுதையும் அது கிறை வேற்றிவிடும் என்று சொல்ல இயலாது. வேறு கைத்தொழில் வளர்ச்சிக்கான வழிதுறை ஒன்றும் அதிகம் இல்லை என்னலாம்.
வாணிபத்துறையில் கொளும் பு ைவ நோக்க யாழ்ப்பாணம் எங்கோ பின் தங்கித்தான் உள்ளது.

வாழ்வும் வளமும் 35
இங்குக் கடைத் தெரு என்பது மிகக் குறைந்த அளவிலேதான் உள்ளது. ஆயினும், வேண்டிய எல்லாப் பொருள்களும் கிடைக்கின்றன. வெளி நாட்டுப் பொருள்கள் பலவும் இங்கு வரவழைக்கப் படுகின்றன. அவற்றின் விலைக்ளும் தமிழ் நாட்டி லுள்ள வற்றைவிட மிகக் குறைவாகவே உள்ளன. உணவுப் பொருள்களின் விலைமட்டும் சற்று உயர்ந்து தான் உள்ளது. மக்களது உடையும் பிற பழக்க வழக்கங்களும் பெரும்பாலும் தமிழ் நாட்டவற்றை ஒத்தனவாய் இருப்பினும், சில பகுதிகளில் மேலை நாட்டு வாடை வீசுதலையும் இங்கே காண முடியும். மதுவிலக்கு இங்கு அமுலில் இல்லையாதலால், பல விடங்களில் உயர்ந்த வெளிநாட்டு மதுக் கடைகள் இருக்கின்றன. அவற்றுள் போவாரும் வருவாரும் பலராவர்.
கிராமங்களில் மக்கள் அமைதியாகவே வாழ் கின்ருர்கள். எங்கும் உயர்ந்த மாடி வீடுகள் இல்லை. யாழ்ப்பாண நகரிலேயே இரண்டடுக்கு மாடி வீடு களேக் காண்ப தரிது. அரசியல் அலுவலகங்களும் பிறவுங்கூட மாடிக் கட்டடங்களாய் அமையவில்லை என்னலாம். மக்கள் வாழும் வீடுகள் பரந்த நிலப் பரப்பின் இடையில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு வீட்டைச் சுற்றியும் இரண்டு மூன்று ஏக்கர் நிலங்கூட இருக்கும். அத்துணைப் பரப்பையும் எல்லையிட்டு, அழகாக ஒலைகளால் வேலி கட்டியுள் ளார்கள். சுற்றுச் சுவர்களே யாழ்ப்பாணத்தில் அதிகமாகக் காண முடியாது. ஆனல், அதனினும் அழகாகத் தென்னங்கீற்றுகளாலும் பனே ஒலை களாலும் வேலி அமைத்திருக்கும் காட்சி சிறந்த காட்சியாகும். நகரங்கள் கிராமங்கள் எல்லாவிடத்

Page 24
36 மணி பல்லவம்
திலும் இந்த எல்லை அமைப்பு நன்கு விளங்குகிறது. ஆயினும், சில இடங்களில் இந்த எல்லேக்கோடு பெருஞ்சாலைகளையெல்லாம் குறுகலாக்கித் தாரா ளப் போக்கு வரத்துக்குத் தடை செய்கிற து
என்னலாம்.
நான் தங்கியிருந்த வீட்டிற்கு உரியவர் ஒரு வழக்கறிஞர். ஆதலால், அன்ருடம் அவரிடம் பல வகையான வழக்குகள் வருவதைக் கண்டேன். பணம் பெற்று ஏமாற்றும் வழக்கமும், அதனுல் நீதி மன்றம் ஏறும் வழக்கமும் தமிழ் காட்டைப் போல இங்கும் சாதாரணம் போலும்! அதிலும், ஒன்றுமறி யாப் பெண்களே ஏமாற்றிப் பணத்தை வாங்கிக் கொண்டு பின்பு தர மறுக்கும் ‘நல்லவர்'களும் இருப் பதை அறிந்தேன்! ஒரு மூதாட்டியார்,வயது தொண் ணுாறு இருக்கும்-அவர் 15ம் வழக்கறிஞரைத் தேடிக் கொண்டு ஒரு நாள் மாலை மூன்று மணிக்கு வந்தார். அப்போது நீதிமன்றம் முதலியவற்றிற்கு விடுமுறை யாகையால், அவர் வீட்டிலேயே இருந்தார். மூதாட் டியார் சிறிது நேரம் ஏதேதோ பேசிக்கொண்டிருக் தார்; பிறகு தம் மடியிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினர். அதைப் படித்த பிறகு வழக் கறிஞர், “கோர்ட்டுத் திறந்ததும் ஆவன செய்யலாம்,' என்ருர், மூதாட்டியார் அதைப் பற்றி மிக அழுத் தமாகக் கூறி வற்புறுத்தினர்; பிறகு என்னென்ன வோ பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்ருர்,
உடன் கொண்டுவந்தது ஆாறு ரூபாய்க்கு எழு திய ஓர் ‘அண்டிமாண்டு’ என்றும், அந்தப் பணத் தைப் பெற்றவன் திருப்பித் தாராததால் வழக்குத் தொடரவேண்டும் என்றும் அந்தக் கிழம் கூறிற்று.

வாழ்வும் வளமும் . . 37
பாவம்! இந்தத் தொண்ணுறு வயதில் இந்தக் தொல்லை எதற்கு? என்று எண்ணிற்று என் மனம். அத்துடன், 'பாவம்! இந்த வயதில் அவர்க்குப் பயன்படவேண்டிய அங் த ப்ப ண த் ைத வாங்கிக் கொண்டு யாரோ அவரை வயிற்றெரிச்சல் கொட் டிக்கொள்ளுகிருர்களே! என்றும் எண் ணினே ன். ஆனல், அந்த அம்மையாரைப் பற்றி வழக்கறிஞர் கூறியதைக் கேட்டு வியப்பெய்தினேன். அந்த அம் மையார் பெரிய செல்வரென்றும், அவருக்கு மூன்று பிள்ளைகளும் பெண் க ஞ ம் உள்ளார்கள் என்றும், அனைவரும் நல்ல நிலையில் இருக்கிருர்கள் என்றும், அவருக்கு வாழ்வில் ஒரு குறையும் இல்லை என்றும், ஆனலும், இப்படி ஏதாவது தொல்லேயை அவர் தேடிக்கொண்டேதான் இருப்பர் என்றும் அவர் கூறும் போது, 'பாவம்! வாழ்வில் ஓய்வு பெற்று அமைதி காண முடியாத அப்பாவி!' என நினைத்தேன். இப்படியே எத்தனையோ விதமான வழக்குகள் நான் தங்கியிருந்த நாட்களில் அவரிடம் வந்துகொண்டேயிருந்தன.
யாழ்ப்பாணத்திலிருந்து பலர் மலேயாவுக்குத் தொண்டு செய்ய நெடுங்காலமாகச் சென்றிருக்கின் றனர். அங்குச் சென்று அரசியல் பணியாற்றி ஒய்வு பெற்றவர் பென்ஷன் பெறுகின்றனர். அவர் கள் இறந்தாலும் மனேவியருக்குத் தொடர்ந்து அங் தப் பென்ஷன் வருமாம். அவ்வாறு பணம் பெறும் விதவையர் பலர் யாழ்ப்பாணத்தில் உள்ளனர். அவர்களைப் பலர் ஏமாற்றிப் பணம் பறித்து, கோர்ட்டு ஏற வைக்கும் காட்சி அன்ருடக் காட்சி என்பதை அறிந்தேன்.

Page 25
38 மணி பல்லவம்
வழக்கறிஞர் பணியில் மற்றென்று முக்கிய மானது தமிழ் நாட்டில் சொத்து மாற்றத்துக்கு ஆவணக் களரிகள் உள்ளன. யார் வேண்டுமான லும் எழுதி எடுத்துக்கொண்டுபோய் அங்குப் பதிவு செய்துகொள்ளலாம். பிறகு எப்போது வேண்டு மாயினும் அந்த ஆவணக்களரியிலேயே படிபெற்றுக் கொள்ளலாம். இங்கு அந்த நிலை இல்லை. எல்லா வற்றையும் வழக்கறிஞர்களே செய்ய வேண்டும். ஆயினும், எல்லா வழக்கறிஞர்களுக்கும் அந்த உரிமையை அரசாங்கம் தரவில்லை என்னலாம். ஊருக்கு ஒருசிலருக்கே அவ்வுரிமை வழங்கப்பட்டுள் ளது. அ வ் வ ழ க் க றி ஞ ரே பத்திரத்துக்குரிய ஸ்டாம்பு’ முதலியவற்றை வாங்கி, அவரே உரியவர் களிடம் கை எழுத்துக்களேப் பெற்று, அவரே மற்ற வற்றை முடித்து, நேராக ஆவணம் பதிவு செய்வ தைச் செய்து ஒரு படியை வைத்துக்கொள்ள வேண் டும். விற்ப வ ரோ, வாங்குபவரோ, அவரைக் கண்டே எல்லாவற்றையும் முடித்துக்கொள்ளலாம். இந்த முறை மக்களுக்கு எளிமையானதும் தொல்லை அற்றதுமாய் இருக்கிறது. தமிழ் நாட்டுக் கிராமங் களிலிருந்து மக்கள் எட்டுப் பத்துக் கல் துTரம் கடந்து ஆவணக்களரியை அடைந்து, அடைந்த அன்றே பதிவுசெய்யப்பெருது தொல்லைப்படவேண் டிய கிலைகள் அன்ரு டச் செயல்களன் ருே ! இங்கு அந்தத் தொல்லைகள் இல்லை. தத்தம் ஊரிலேயே அரசாங்க உரிமை பெற்ற வழக்கறிஞரிடம் நன்கு முடித்துக்கொள்ளலாம். பெண்களுக்கு இது மிக வும் நலம் தரும் வழக்கமாகும்.
யாழ்ப்பாணத்தில் கிறையப் பனைமரங்கள் உண்
டல்லவா! அவற்றிலிருந்து கள்ளும் பதருேம் இறக்

வாழ்வும் வளமும் 39
கும் காலம் நான் சென்ற காலமாகும், என்ருலும், தனிப்பட்டோர் தோட்டங்களில் அவை இறக்கப் பெறவில்லை. பனங்காய்கள் அப்போதுதான் தலை காட்டின. எங்கோ சிலவிடங்களில் பதநீர் இறக்கி ஞர்கள். யாழ்ப்பாணச் சைவர்கள் பெரும்பாலும் வைதிகச் சைவர்கள் ஆனமையின், அதைக் குடிப் பது இல்லையாம். நான் குடிக்க நினைத்தேன். ஒரு நாள் கீரிமலையில் மூழ்கிவிட்டுக் கனகேசன் துறைக் குச் சிமிட்டிச் சாலையைக் காணச்சென்றுகொண் டிருந்தோம். அங்கே பதநீர் இறக்கிக்கொண்டிருந் தார்கள். காங்கள் கேட்டோம். ஒரு குடுவையில் தங் தார்கள். அதனுடன் மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டுச் சாப்பிட்டால் நன்ருக இருக்கு மாம். கூட வந்த நண்பர்கள் அவ்வாறே செய்து தந்தார்கள். நன்ற கத்தான் இருந்தது. பதர்ே உட லுக்கு நலம் தரும் எளிய பானம் என்றேன். சென்னை அரசாங்கத்தார் அப்பதநீர் இறக்கும் தொழிலைப் போற்றி, பதநீரை விற்க ஏற்பாடு செய்கிருர்களல் லவா ! இங்கு யாழ்ப்பாணத்தில் அவ்வாறு செய்ய வில்லை. இவ்வாறு பருகுவதையே சிலர் தவருக நினைக்கின்றனர். 'பலர் காணவே பனைக்கீழ்ப் பாலைக் குடிக்கினும் கள்ளே என்பர்’ என்ற பாடல்தான் என் கினேவுக்கு வந்தது. ஆயினும் அன்அது காங்கள் பதநீர் குடித்ததை அந்தக் கிராமத்தில் பலர் கின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
மக்கள் வாழ்க்கை முறை பல வகைத்து. தமிழ் நாட்டைப் போலவே ஒரு புறம் மிக எளிய வாழ்வும், பக்கத்திலேயே படாடோப வாழ்வும் காணப்பட்டன. ஒருசிலர் நாகரிகத்தின் பேரால் வாழ்வை விழலுக்கு இறைக்கும் ரோக்குவதைக் கண்டேன். என் நண்பர்

Page 26
40 மணி பல்லவம்
அத்தகைய வாழ்க்கையைக் கண்டு கைந்தார். ஒர் இளம்பெண்மணி ஆரவார உடையுடன் அவரைக் காண வந்தார். அவர் முகமெங்கும் குறுமறுக்களும் வேனிற்காலக் கட்டிகளும் இருந்தன. உடல் நிலையி லும் வயதுக்கு மேற்பட்ட தளர்ச்சியும் சோர்வும் காணப்பட்டன. இந்தக் கிராமத்தில் இத்தகைய கிலே பெண்களுக்கு ஏற்படுவானேன் ?" என்று கேட் டேன். அவர் சுருக்கமாக, * நம் பெண்கள் இயற் கையோடு இயைந்து இயல்பான வாழ்வை வாழக் கற்றுக்கொள்ளாமைதான் காரணம், ' என்றர். கொதிக்கும் வேனிற்காலத்தில் சூடாகக் காப்பி யைக் குடித்துவிட்டு, சோம்பேறியாய் இரு க் து எல்லாவற்றிற்கும் பணியாட்களே அமர்த்தி, பாழா கப் படுத்துறங்கி, வெளியில் செல்லுங்கால் ஆடம் பரப் பூச்சுக்களும் மைகளும் பவுடர்களும் தம்மை அலங்கரிக்கச் செய்யும் கோலத்தில் அவர்களிடம் இயற்கை வாழ்வைக் காண்ப தெங்கே? இத்தகைய ஆடம்பர வாழ்க்கை யாழ்ப்பாணத்தில் இடைப் பட்ட சாதாரண வகுப்பாரிடத்திலும் நிரம்ப இருப் பதைக் கண்டேன்.
யாழ்ப்பாண மக்கள் மண முறையிலும் பெரும் பாலும் தமிழ் மணம் விசக் கண்டேன். தமிழ் நாட் டுப் பிராமணர்களைப் போலப் பெண்களைப் பெற்ற வர்கள் திண்டாட வேண்டும் போலும்! இன்று தமிழ் நாட்டில் பிராமணர் மட்டுமன்றி, பெரும்பாலும் முன்னேற்றச் சமூகத்தார் அத்தனை பேருமே இந்த நிலையில்தானே இருக்கின்ருர்கள்! இங்குப் பெண் ணைப் பெற்றவர்கள் அவர்களுக்கு மணமுடிக்க வேண்டுமானல் ஒரு கார், ஒரு மாளிகை, வேறு வாழ்விற்குத் தேவையான சாமான்கள் அனைத்தும்

வாழ்வும் வளமும் Z
தர வேண்டுமாம், சொத்துக்களெல்லாம் பெண் பேரிலேயே இருக்குமாம். பெண்ணுக்கு அனைத் தும் இருந்தும், விற்க உரிமை இல்லை போலும் ! தமிழ் நாட்டில் ஒரு பெண்ணுக்குப் பொருள் இருந் தால் அதை அவள் விருப்பம்போல விற்றுக்கொள் ளலாம் அல்லவா? அந்த உரிமை இங்கு இல்லை. கணவன் உத்தரவு இன்றியோ, கையொப்பமின் றியோ, மனைவி அச்சொத்தை ஒன்றும் செய்ய இய லாது. கணவன் அதைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளவும் முடியாது. ஒரு வேளே விவாக ரத்தின் மூலமோ வேறு வகையாலோ அத்தம்பதிகள் பிரிய நேரின், அச்சொத்து அப்பெண்ணுடன் பிறந்தகத் துக்கு உரியதாகச் சேர்ந்துவிடும். அங்கும் அவள் விருப்பம் போல அதை விற்க இயலாது. பெற்ற தங்தையார் அல்லது உடன்பிறந்தார் உதவியினலே தான் அதை விற்க இயலும். இப்படிப் பெண் ணுக்கு முழுச்சொத்துரிமை இல்லா வகையிலே தான் பொருள்நிலை உள்ளது. எனினும், ஒரு பெண் ணைக் கட்டிக் கொடுப்பதற்கு கிறையச் செல்வம் தேவை. இக்காட்டுத் தமிழ்ச் சமுதாயத்துள் காதல் மணம் பெருகி வளரவில்லை.
யாழ்ப்பாணத்தில் கல்வி கற்றவர் தொகை அதிகம் என்னலாம். ஒவ்வோர் ஊரிலும் சிறு சிறு தமிழ்ப் பள்ளிக்கூடம் உண்டு. அந்த ஊரிலே உள்ளவர்கள் அதை நடத்தும் பொறுப்பு ஏற்அறுக் கொள்ளுகின்றனர். அரசாங் க மும் வேண்டிய பொருள் உதவி செய்கின்றது. சிலவிடங்களில் அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்று நடத்தும் பள்ளிகளும் உள்ளன. இவற்றைத் தவிர, மேலை நாட்டுக் கிறித்தவப் பாதிரிமார்கள் தோற்றுவித்து வளர்த்துவரும் பள்ளிகளும் பல. யாழ்ப்பாணத்தில்

Page 27
42 மணி பல்லவம்
அவர்தம் முயற்சியால் பலர் கிறிஸ்தவராகியிருக்கக் கூடும் என்பது தெரிகின்றது. சிலர் கிறிஸ்தவராகா விடினும் அவர்தம் நடையுடை பாவனைகளேப் பின் பற்றி வாழ்கின்றனர் என்பதும் தெரிந்தது.
வட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஓர் அமெரிக்கக் கல்வி நிலையம் அப்பகுதிக்குச் சிறந்த பணியாற்றுகிறது என்னலாம். நெடுங்காலமாக அது அங்கே கின்று பலருக்குக் கல்வி வசதி அளித் திருக்கிறது. இன்றும் அது வளர்ந்துகொண்டே போகிறது. அந்த வட்டாரத்திலேயே அதுதான் உயர்ந்த பள்ளியாய்க் காட்சி அளிக்கின்றது. கிறித் தவப் பாதிரி மார்கள் வளர்க்கும் பள்ளிகள் இது போன்ற பல இங்குள்ளன. இந்துக்களும் சில பள்ளிகளே வைத்து வளர்க்கிருர்கள். சமயச் சார் பான பள்ளிகளும் வித்தியாசாலைகளுங்கூட உள் ளன. மொத்தத்தில் யாழ்ப்பாணம் கவ்வித் துறை யில் ஒரளவு முன்னேறிய பகுதி என்றே கூறலாம்.
15லத்துறையிலும் இப்பகுதி சிறந்துள்ளது. இலங்கை நாடு முழுவதுமே 5 ல த் து ைற நன்கு காக்கப்பெறுகின்றது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ் வொரு மருந்தகமும் மருத்துவரும் இருந்து நாட்டை ஒம்புகின்றனர். இந்த வட்டுக் கோட்டைப் பகுதி யிலும் அது போன்ற மருந்தகம் உண்டு. வெளியூரி லிருந்து வந்த நான் இரு நாளேக்கு ஒரு முறை அம் மருத்துவரைக் கண்டு வர வேண்டுமென்ற நியதி யின் படி கண்டு வந்தேன். வெளி நாட்டிலிருந்து வருபவர் மூலம் தொத்து வியாதிகள் பரவாதிருக்க இந்த ஏற்பாடு செய்திருக்கிருர்கள்.
மொத்தத்தில் யாழ்ப்பாண மக்கள் அமைதி கலந்த அன்பு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார் கள எணனலாம,

மணி பல்லவம்
நான் மணிமேகலையைப் பல ஆண்டுகளுக்கு முன் படித்த காலத்தில் இத்தீவைப்பற்றிச் சிந்திக்க நேர்ந்தது. இத்தீவு எங்குள்ளது? இதில் மணி மேகலா தெய்வம் தன் பெயர் கொண்ட மணிமேக லேயை வைத்த இடம் எத்தகையது? அதில் மக்கள் வாழ்க்கை உண்டா? புத்ததேவர் பாத பீடிகையும் கோமுகிப் பொய்கையும் உண்டா ? இவை போன்ற கேள்விகள் உள்ளத்தெழுந்தன. பலரைக் கேட்டும் பார்த்தேன். தக்க பதில் கிடைக்கவில்லை. ஒரு சிலர் ஜாவா'த் தீவுதான் மணி பல்லவம் என்றனர். ஒரு சிலர் வேறு சில தீவுகளேக் குறித்தனர்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு கனகசபைப் பிள்ளை அவர்கள் எழுதிய ஆயிரத்து எண்ணுாறு ஆண்டு களுக்கு முன் தமிழர்' என்ற நூலைப் பயிலும் வாய்ப் புக் கிடைத்தது. அந்த நூல் இன்று சைவசித் தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் அழகாக ஆங் கிலத்திலும் தமிழிலும் அச்சிடப்பெற்ற காரணத் தால் பலருக்கும் கிடைக்கின்றது. ஆனல், நான் படிக்க விரும்பிய அந்த நாளில் அதன் பிரதியைக் காண்பது கடினம். 1904ல் வெளி வந்த அந்த நூலின் பிரதி ஒன்று சென்னைக் 'கன்னிமாரா' நூல் நிலையத்தில் இருந்தது. அதில் அதுழைந்து தேடி னேன். அதைத் தனியாக எடுத்துப் பத்திரமாகப் பாதுகாத்தார் அந்நூல் கிலேயத் தலைவர். அதை வேண்டிப் பெற்று அங்கேயே பயின்றேன். அதில்

Page 28
44 மணி பல்லவம்
இம்மணிபல்லவத்தைப்பற்றிய குறிப்பு ஒன்று வங் தது. அதைப் பயின்றேன். காவிரிப்பூம்பட்டினத் திற்குத் தெற்கே 30 யோசஃனத் தூரத்திலே இந்திய கிலப் பரப்புக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட ஒரு தீவு மணிபல்லவம் என்பதைத் திட்டமாக அவர் எழுதியிருந்தார். மணிமேகலை, இத்தீவு புகார் என்ற காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தெற்கே முப் பது யோசனைத்துாரத்திலே உள்ளது என்பதை நன்கு காட்டுகின்றது. எனவே, இத்தீவு எங்குள் ளது என்பதை அறிய விரும்பினேன். ஓரளவு இலங்கைக்கும் இந்திய மண்ணுக்கும் இடையில் உள்ள தீவுகளுள் ஒன்ருகத்தான் இது இருக்க வேண்டும் என்ற முடிபுக்கு அந்தநாளில் வந்தேன். கனகசபைப் பிள்ளை அவர்கள் நூலிலே அத்தீவு யாழ்ப்பாணத் தீவுகளின் தொடரில் ஒன்ருகக் குறித்து எழுதியுள்ளார். அதை அறிந்த பின் அந்தத் தீவை எப்படியும் கண்டு சாத்தனர் காட்டும் குறிப்புக்கள் அங்கு உள்ளனவா என அறிய விரும் பினேன். அந்த விருப்பம் யாழ்ப்பாணம் சென்ற காளிலேதான் நிறைவேறியது.
யாழ்ப்பாணத்து நல்லன்பர்கள் ஒரு கல்லூரி இலக்கிய விழாவிற்கு என்னே அழைத்தார்கள். சென்று சில நாட்கள் தங்கியிருந்தேன். அங்குள்ள என் இரு மாணவ நண்பர் அங்காட்டு நலத்தையெல் லாம் காட்ட விரும்பினர். அவர்களோடு யாழ்ப் பாணத்தைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழல் கலந்த
1. Between Cylon & India was the island Manipallavam, on which there was one of the sacred seats of Buddha, then held in great veneration by all Buddhists. (The Tamils
Eighteen Hundred years ago. New Edition, Page 11.)
2. மணிமேகலை, VI:211-214.

மணி பல்லவம் 45
பல இடங்களையும் பார்த்தேன். கீரி மலையின் சுனே யில் ஆடினேன். சுன்னகம் முதலிய இடங்களையும் யாழ்ப்பாண நகரையும் கண்டேன்.
ஒரு நாள் காலை நண்பர்கள் அருகிலுள்ள ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டுமென் ருரர்கள். நான் வட்டுக்கோட்டையில் தங்கியிருந்தேன். அதன் அருகிலே ஊர்க் காவல்துறை என்னும் ஓர் இடம் உள்ளதென்றும், அது காணத்தக்கதென்றும் கூறி ஞர்கள். ஊர்க் காவல்துறை" என்ற பெயரே என் உள்ளத்தை மகிழ்வித்தது. தாயகமாம் தமிழ் நாட் டிலே எத்தனையோ ஊர்களின் பெயர்கள் பிறழ்ந்தும், சிதைந்தும், மாறுபட்டும் வழங்கும் இந்த நாளில் இங்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இடங்கள் நல்ல தமிழ்ப் பெயர்களோடு இலங்குவதை அறிய மகிழ்ந் தேன். யாழையும் அதை வாசிக்கும் பாணனையும் தமிழகம் மறந்துவிட்டது. யாழின் பெயராலும் அதை மிழற்றும் பாணன் பெயராலும் தமிழ் இலக் கியத்தில் பல பாடல்கள் உள்ளன. ஆயினும், பல தமிழர்கள் அவற்றைப்பற்றி அறியமாட்டார் கள். ஆணுல், இங்கு அந்த இர ண் ைட யுமே இணைத்து, “யாழ்ப்பாண நகர் கண்டு, அதைப் போற்றுகின்ருர்கள் தமிழ் மக்க ள். அதைப் போன்றே பல சிற்றுார்களின் பெயர்கள் நல்ல தமிழ்ப் பெயராகவே இருப்பது மனத்துக்கு மகிழ் ஆட்டிற்அ.
ஊர்க் காவல் துறை வட்டுக்கோட்டைக்கு ஆறு கல் தூரத்தில் உள்ள ஒரு பகுதி என்ருர்கள். காலையில் சிற்றுண்டி கொண்டு புறப்பட்டோம். யாழ்ப்பாணமே ஒரு பெருந்தீவு. ஏன்? இலங்கையே அப்படித்தானே? திருமறைக் காட்டைத் தாண்டி

Page 29
46 மணிபல்லவம்
நெடுகக் கடல் உள் புகுந்து வளேவை உண்டாக்கா திருக்குமாயின், இன்று தமிழகமும் இலங்கையும் இணைந்த கிலப்பரப்பாகத்தானே இருக்கும் ? யாழ்ப் பாணப் பெருந்தீவைச் சுற்றிப் பல சிறு சிறு தீவுகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றே ஊர்க்காவல் துறை. அங்கு மாற்ருரர்கள் கடல் வழி உள்ளே புகாதபடி காவலர் காவல் புரிவார்கள் போலும் ! அதனுலேயே அப்பகுதி ஊர் க் காவ ல் துறை யாயிற்று என நினைத்தேன். கடலிலே சில தீவுகள் தென்பட்டன. ஊர்க்காவல் துறை வந்ததும் அங் கேயே சிறிது நேரம் தங்கித் திரும்பவேண்டுமல்லவா என்றேன். அங்கேதான் நண்பர்கள் மற்ருெரு பயணத்தைக் கூறினர்கள்.
ஊர்க்காவல் துறையிலிருந்து இயந்திரப் படகு கள் அண்மையில் உள்ள தீவுகளுக்குச் செல்கின் றன. அத்துறை பெரிய துறைமுகம் அன்றேனும், கடல் வழிப் பல தீவுகளைப் பிணைக்கும் வாணிபத் தலமாயும், போக்குவரத்து கிலேயமாயும் இருந்தது. அருகிலே ஒரு கடற்படையின் சிறு தளப் பகுதியும் இருந்தது. அதற்கடுத்தாற்போல டச்சுக் காரர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு சிறு கோட்டை கடலில் மிதப்பது போன்று காட்சி தந்தது. ஒரு சிறு தீவின் குழுவில் இத்தகைய ஒரு தீவை அவர்கள் பாதுகாத்த திறன் வியத்தற்குரியதுதான். தீவு முழுதும் கோட்டிைதான். தனி வெற்றிடம் இல்லை. இவற்றின் எல்லைகளேயெல்லாம் தாண்டி இன்னும் சில தீவுகள் தென்பட்டன. அவற்றுள் ஒன்று நயினுர் தீவு’ என்றும் அதைப் பார்க்கப் போகலாம் என்றும் நண்பர்கள் கூறிஞர்கள். நானும் “சரி” என்றேன்.

மணிபல்லவம் 47
சரியாகப் பத்துமணிக்கு ஊர்க்காவல் துறையை விட்டு நயினர் தீவை நோக்கி இரு விசைப் படகுகள் புறப்பட்டன. நாங்கள் ஏறிய படகு நேராக நயினர் தீவுக்குச் செல்வதென்றும், மற்றது வழியில் சற்றுத் தள்ளி உள்ள மூன்று தீவுகளுக்கும் சென்று தபால் கொடுத்துக் கடைசியில் நயினர் தீவை அடையும் என்றும் சொன்னர்கள், நாங்கள் ஏறியிருந்த படகில் சுமார் நாற்பது பேர் இருந்தனர். ஆண்களும் பெண் களும் குழந்தைகளும் இருந்தார்கள். ஆனல், அவர் களுள் பெரும்பாலோர் பெளத்த சமயத்தைச் சார்ந் தவர்; சிங்களமன்றித் தமிழை நன்ருகப் பேசி அறி யாதவர். நான் அவர்களே ப்பற்றி என் நண்பர்களே உசாவினேன். தமிழர்களே பெரும்பாலாராயுள்ள இந்த யாழ்ப்பாணப் பகுதியில் இப்படி ஒரு சிங்களக் கூட்டத்தை நான் காணவில்லை. எனவே, இந்தச் சிங்களவர் யார்? எங்கே செல்கிருர்கள் ? என்றேன். இவர்களெல்லாம் நயினர் தீவுக்கு உரியவர்களா !” என்ற ஐயமும் பிறந்தது. நண்பர்கள் விளக்கினர் கள். அந்த நயினர் தீவில் ஒரு புத்தர் கோயில் இருக்கிறது என்றும், அது பெளத்தர்களுக்கு மிக முக்கியமான இடம் என்றும், அதைக் காணவே சிங் களவர் பலர் அங்கு நாள்தோறும் யாத்திரை செய் கின்றனர் என்றும் அறிந்தேன். சிங்களப் பெளத் தர்களுக்கு அது ஒரு புனிதத்தலம். புத்தர் தம் திருவடியை வைத்தருளிய நல்ல இடம் என்பது அவர்கள் முடிவு. எனவே, ‘ மாரனை வெல்லும் வீர ராகிய அப்புத்த தேவரைக் கண்டு தரிசிக்கவே அங்குத் திரள் திரளாகச் சிங்களவர்கள் வருகிருர் கள் என அறிக்தேன். அது வரையில் செல்லும் இடத்தைப் பற்றிச் சிங்தை செய்யாத என் மனமும்

Page 30
48 மணி பல்லவம்
சிந்திக்கத் தொடங்கியது. ஒரு வேளே இதுதான் மணிமேகலையில் வரும் மணிபல்லவமாக இருக் குமோ!' என்று கேட்டுவிட்டேன். என் நண்பர் களால் திட்டமாகப் பதில் உரைக்க முடியவில்லை. என்ருலும், ஒரு வகையில் அதுதான் மணிபல்லவ மாய் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வர அவர் /கள் சொற்கள் பயன்பட்டன.
கொந்தளிப்பற்ற அமைதியான கடல்; நாற் புறமும் தீவுகளின் காட்சி. 'தூரத்தில் தமிழ் நாட்டு மண் தெரியுமோ?’ என்று கேட்டேன். முப்பது கல்லுக்கு அப்பாலே உள்ள அம்மண் தெரியாது, என்றர்கள். உடன் வந்த சிங்கள மக்கள் எதோ பேசிக்கொண்டு வந்தார் க ள். அது எனக்குச்
சிறிதும் புரியவில்லை. எ ன் ரு லு ம், ஒரு சிறு
கூட்டத்தார் நெற்றியில் சந்தனப் பொட்டுடன் இருங் தனர். அவர்கள் தமிழ் பேசினர்கள். அவர்கள் புத்தரடியை வழிபடப் போவதாக இல்லை. அவர் கள் சைவர்கள். எனவே சிவ சம்பந்தமுடைய கோயி லுக்குத்தான் போகிருர்கள் என்று அறிந்தேன். அங்குப் புத் த ர் கோயிலைத்தவிர்த்து வேறு கோயில்கள் உள்ளனவா என அறிய விரும்பி னேன். அந்தத்தீவில் நாகபூஷணி என்ற அம்மன் கோயில் உண்டு என்ருர்கள். தீவு நெருங்கி வர வர அதைக் காண வேண் டு மென் ற உள்ளுணர்வு வளர்ந்தது. ஆதூரத்தே ஒரு கோபுரமும் தெரிந்தது. சைவசமய நெறி தவற வகையில் அக்கோயிலின் புறத்தோற்றம் காட்சி அளித்தது. என் எண்ணத் துக்கிடையில் படகு கரையை அடைந்தது. இடை யில் இரு புறங்களிலும் தீவு க ளி ன் வரிசைகள் கண்ணுக்கு விருந்தாய் அமைந்தன. இந்த நயினர்

மணி பல்லவம் 49
தீவு இடைப்பட்ட ஒன்று என்றும், இதைத்தாண்டி நெடுந்தீவு என்ற ஒரு பெருந்தீவும் மற்றும் இரண் டொரு சிறு தீவுகளும் உள்ளன என்றும் அறிக் தேன்.
படகு சரியாகப் பன்னிரண்டு மணிக்குக் கரை யில் கின்றது. அனைவரும் இறங்கினுேம், எதிரில் நாகபூஷணி என்னும் அவ்வூர் நாகம் ைம யின் கோயில் தென்பட்டது. அங்கு நேராகச் சென்ருேம். அன்று அத்தீவில் மணிமேகலை விழித்தெழுந்ததும் ஒரு புத்துணர்வு பெற்ருள் என்று சாத்தனர் கூறு கின்ருர், அது பற்றி நான் அது வரை உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஆனல் எனக்கே அத்தீவில் கால் ைவ த் த து ம் அக்கடுவெயிலிலும் ஒரு புத் துணர்வு பிறந்தது. ஆம்! அதுதான் மணிபல்லவ மாய் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு யாரையும் கேளாமலே வந்துவிட்டேன்.
இறங்கிய சிங்களவர் நேரே தெற்கு நோக்கி நடந்துகொண்டிருந்தனர். ஆடவரும், பெண்டிரும், குழந்தைகளும் அவ்வெயிலையும் பொருட்படுத்தாது சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் அனே வரும் சற்றுத் தள்ளியிருக்கும் புத்தர் கோயிலுக்குப் போவதாகச் சொன்னர்கள். நானும் என் நண்பர் களும் நாகம்மையின் கோயிலுக்கு ச் சென்ருேம். அக்கோயில் மூடப்பட்டிருந்தது. உச்சி வேளேப் பூசைக்குப் பன்னிரண்டரை மணிக்குத் திறப்பார்கள் என்றும், அப்போது காணலாம் என்றும் சொன் ஞர்கள். அதற்குள் நாங்களும் புத்தர் கோயிலைக் கண்டு வந்துவிடலாம் என்று நடந்தோம். வெயி லின் கொடுமையிலும் நாங்கள் ! தீநெறிக் கடும்பகை கடிந்த அப்புத்த தேவரது பீடிகையைக் காணப்
4.

Page 31
50 மணி பல்லவம்
போகும் மகிழ்ச்சியுடன் சென்ருேம். கோயிலே அடைந்தோம். முன்னரே சென்ற சிங்களப் பெளத்த யாத்திரிகர்கள் புறத்தூய்மை செய்துகொண்டு கோ யிலுக்கு அணியணியாகச் சென்றுகொண்டேயிருங் தார்கள், நாங்களும் அவ்வாறே கோயிலுள் புகுந் தோம். புத்த தேவர் காட்சி அளித்தார். பீடிகை மட்டும் தனியாக எங்கும் காணப்படவில்லை. எனி னும், உயரக் கட்டிய கோபுரத்தூபியில் * புத்த ஞாயிறு தோன்றிற்று.
புத்த ஞாயிறு தோன்றுங் காலத் திங்களும் ஞாயிறும் தீங்குரு விளங்கத் தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும் ; வானம் பொய்யாது மாநிலம் வளம்படும் ; ஊனுடை உயிர்கள் உறுதுயர் காணு; வளிவலம் கொட்கும் மாதிரம் வளம்படும்; நளியிரு முந்நீர் நலம்பல தரூஉம் ; கறவைகன் ருர்த்திக் கலநிறை பொழியும்; பறவை பயன்துய்த்து உறைபதி நீங்கா ; விலங்கும் மக்களும் வெரூஉப்பகை நீங்கும்; கலங்கஞர் நரகரும் பேயும் கைவிடும் ; கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் மன்னுயிர் பெருஅ; அந்நாட் பிறந்தவன் அருளறங் கேட்டோர் இன்னுப் பிறவி இகந்தோர் ஆதலின், போதி மூலம் பொருந்திய சிறப்பின் நாதன் பாதம் நவைகெட ஏத்துதல் பிறவி தோறும் மறவேன்!"
(LD6007. xii: 86-103) உண்மையில் என்னே மறந்தேன். புத்த ஞாயிறு தோன் அறும் காலை நிகழும் அற்புதங்களேப் பற்றிச் சாத்தனர் கூறிய அத்தனேயும் ஒன்றன்பின் ஒன்ருக

மணி பல்லவம் 5
என் உள் ளத் தி ைரயில் ஊசலாடின. நிலைத்து கின்றேன். மரமானேன். அதே வேளையில் சிங்களப் பெளத் த ர் அ ஃன வரும் அப்புத்த ஞாயிறு பொறித்துள்ள தூபியின் அடியில் வந்து மண்டி யிட்டு அமர்ந்தனர். அக்கோயிலில் இருந்த புத்த பிட்சு ஒருவர் தமக்கே உரிய அந்த மஞ்சள் காவி உடையுடன் தோற்றமளித்தார். அவர்கள் மொழி யில் பல மந்திரங்களேச் சொன்னர். அனைவரும் கூடவே சொல்லவேண்டும் என்பது முறை போலும்! சிலர் சொல்லினர். சிலர் முணுமுணுத்தனர்.
வணக்கம் முடிந்த பின் அப்புத்த பிட்சு தமது ஆச்சிரமத்துள் புகுந்தார். அவர் கன்கு தமிழ் பேசினர். அவரை அணுகி அப்புத்தர் ஆலயத் தைப்பற்றிக் கேட்டேன். அவர் அத்தீவே மணி பல்லவம் என்று திட்டமாகக் கூறினர். "கோமுகிப் பொய்கை எங்கே?' என்றேன். அக்கோயிலின் அண்மையில் அது முன்பு இருந்ததாகவும் நெடுநாட் களுக்கு முன்பே அது அார்ந்துவிட்டதாகவும், அந்த கிலம் இப்போது ஒருவர் உடைமையாய் இருக்கிறது என் அறும், புத்தர் பள்ளம் ' என்பது அதற்குப்பெயர் என்றும் கூறினர். அதன் பக்கத் திலேயே புத்தர் கோயில் மற்ருென்று, பீடிகையின் தோற்றத்தை கினேவுறுத்த அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர். அங்கு அக்கோயிலைப்பற்றியும், புத்த சமயம் பற்றியும் விளக்கும் ஒரு சிறு நூலையும் கொடுத்தார்.
பிறகு அவரை வணங்கி அவரிடம் விடை பெற்றுக்கொண்டு, புத்தர் கோயிலின் பக்கத்தி லுள்ள மற்ருெரு ? விகாரத்தை வலம் வந்தோம். அதிலும் புத்தர் எழுந்தருளியிருந்தார். ஆனல்,

Page 32
52 மணி பல்லவம்
அதன் பக்கத்திலேயே இந்துக்கள் போற்றும் மும் மூர்த்திகளும் காட்சி அளித்தார்கள். அது பற்றிக் கேட்ட காலை அங்குள்ள ஒருவரும் அதற்குத் தகுந்த பதில் கூறவில்லை. எனினும், பெளத் தம் இந்து சமயத்தின் ஒரு பிரிவே என்று பெருந்தலைவர்கள் அன்று மட்டுமன்றி இன்றும் பேசுவது என் உள்ளத் தெழுந்தது. ஆம். இ ைற வழிபாட் டி ல் வெறி கொள்ளாது, பிணைக்கும் அன்புே சிறந்தது என்ற உண்மை உணர்வுக்கு இவ்விடம் சான் ருகும் என கினைத் தே ன். எனினும், அச்சிங்கள நாட்டில் சமய அடிப்படையையும், அதன் வழித் தோன் அறும் மொழிக்காழ்ப்பையும் எண்ணும்போது நடுங்கினேன்! "இப்புத்த தேவரையும் மும்மூர்த்திகளேயும் ஒருசேர வணங்கும் சிங்களவர், தம் மனம் போன நெறியில் காழ்ப்புக்கொள்ளாது அன்பினைப் பற்றி வாழ்வார் ஆயின், ஈழ நாடு எத்துணை ஏற்றமுறும் !" என நினைத்தேன். அக் கினை ைவ நிறைவேற்றித்தர வேண் டு மென அப்புத்த தேவரை வழிபட்டுப்
பிரிந்தேன்.
மணி பன்னிரண்டரை ஆயிற்று. வெயில் கடு மையாய் இருந்தது. எங்களே ஏற்றிவந்த படகோட்டி ஒன்றரை மணி க்கு ஸ் திரும்ப வேண்டுமென்று கூறி விட் டான். எனவே, அதற்குள் காங்கள் நாகம்மையையும், புத்தர் பள்ளத்தையும் கண்டு புறப்பட வேண்டும். எனவே, விரைந்து நாகம்மை தி ரு க் கோயிலே அடைந்தோம். கோயில் பழுது பார்க்கப் பெறுகின்ற து. அவ்வூரைச் சேர்ந்த நல்ல வர்தம் முயற்சியால் கோயில் சீர் தி ருத்தம் செய்யப்பெறுகிறது. அண்மையில் முடியப்போகும் ஒரு தேரின் வேலையும் நடைபெற்றுக்கொண்டிருந்

மணி பல்லவம் 53
தது. அத்தேரினைச் செய்து முடிக்கத் தமிழ்நாட்டில் இருந்துதான் மரங்கொல் தச்சர்கள் சென்றிருக்கின் ருர்கள் என அறிந்தேன். அவர்களுள் ஒருவரோடு சிறிது நேரம் பேசினேன்.
கோயிலுக்குள் மணி ஓசை கேட்டது. பூசை தொடங்கி விட்டது. எனவே, நாங்கள் உள்ளே சென்ருேம். அங்கே நாகம்மையின் காட்சி சிந்தைக் கினிய காட்சியாய் இருந்தது. வணங்கி வழிபட்டோம். அங்கே அக்கோயிலின் வரலாறு பற்றிய ஒரு சிறு குறிப்பும் கிடைக்கவில்லை. எனினும், அது நாகர் வழிபாடு பற்றிய கோயிலாய் இருக்கலாம் என கினேத்தேன். அம்மைக்கு அமுதிட்டுப் படைத்த சோற்றுத் திரளாகிய பிரசாதம் ' எங்களுக்கும் கிடைத்தது. அதைக் கொண் டு வந்து ஒரு சிற்றுண்டி விடுதியில் வைத்துக்கொண்டு உண்டு பசி தீர்ந்தோம்.
கோயிலுக்கு வெளியே பூத்துத் தழைத்த வேப்ப மரங்கள் இனிய தென்றற்காற்றை வீசி மகிழ்வித்தன. சிறிது நேரம் அங்கே தங்கினுேம். அவ்வூரைச் சார்ந்த இரு நண்பர்கள் அங்கே வங் தார்கள். அவர்களுள் ஒருவர் அக்கோயில் அர்ச்சக மரபினர் என்றும், தமிழ்ப் பற்றும் பண்பாடும் உடையவர் என்றும் கூற அறிந்தேன். அவர் நான் இன்னுன் என்பதைக் கேட்டறிந்தார்; உடனே தமது வீட்டுக்கு வந்து உணவு கொண்டு செல்லுமாறு வேண்டினர். அவர் பெயர் காசி விஸ்வநாதர் என அறிக்தேன். அவர் கோயிலுக்குச் சென்று அந்த ஊர்பற்றியும் கோயில்பற்றியும் உள்ள தல வரலாறு நூல் ஒன்றை வாங்கிவந்து எனக்குக் கொடுத்தார்; அந்தத் தீவு மணிபல்லவம் என்பது பற்றியும், அது

Page 33
54 மணி பல்லவம்
15ாக நாட்டின் ஒரு பகுதி என்பது பற்றியும் எடுத் துரைத்தார்; அந்த 15ாக காட்டு மரபு பற்றிய வணக்கமே நாகம்மை வணக்கமாக இன்று சிறக் கின்றது எ ன் ப ைத யு ம் எடுத்துக் கூறினர். கோமுகிப் பொய்கைபற்றியும், பீடிகை பற்றியும் முன் புத்தர் கோயிலில் அறிந்த அவ்வுண்மைகளேயே அவரும் பிறரும் கூறினர்; அவை இருக்கும் இடத் தையும் காட்டினர்; கான் தூரத்தே இருந்து கண் டேன். அவருடன் இருந்த மற்ருெரு நண்பர் இராமலிங்கம் என்பவர். நான் அவரை நோக்கி, உங்களுக்கு இப்பெயர் எப்படி இட்டார்கள்?’ என்று கேட்டேன். அவர் அடுத்துள்ள நெடுந்தீவில் இருப்பவர். அவர்தம் தீவுக்கும் இராமேஸ்வரத்துக் கும் இடைப்பட்ட கடல் குறுகியது என்ருரர்கள். நெடுந்தீவுக்கும் இராமேஸ்வரத் தீவிற்கும் இடையில் கச்சத் தீவு" என்ற ஒரு தீவு இருப்பதாகவும், அங்கு இருந்து நோக்கினுல் இராமேஸ்வரக் கோபுரம் தெரி யும் என்றும் கூறினர். ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் கச்சத்தீவுக்குச் சென்று இராமலிங்கத்தை வழிபடுவதாகவும் உரைத்தார். எனவே, அவர் பெயரில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை அல்லவா! அன்று ஞானசம்பந்தர் தமிழ் நாட்டு மண்ணிலிருந்து இலங்கை நாட்டு மாதோட்ட நன்னகரைப் பாடிய பண்பாட்டின் வழி, இங்கல்லன்பர் கச்சத்தீவிலிருந்து இராமலிங்கத்தின் கோபுர தரிசனம் கண்டு போற்றி அவர் பெயருடன் வாழ்கின்ருர் என அறிந்து மகிழ்ந்தேன்.
மேலும் அந்த நாகத்தீவாகிய நயினர் தீவு ' எனும் மணிபல்லவத்தைப் பற்றி அறிய கினைத் தேன். அதற்குள் படகோட்டியின் ஒன்றரை மணி

மணி பல்லவம் 55
எல்லை வந்துவிட்டது. அங்கேயே தங்கிவிடலாமா என்றுகூட கினேத்தேன். எனினும், அடுத்து நான் யாழ்ப்பாணத்தில் ஆற்ற வேண்டிய பணி உடனே புறப்பட வைத்துவிட்டது. காசி விஸ்வநாதர் அவர் கள் சில குறிப்புக்களேச் சொன்னர்கள்; அத்துடன் தாம் கொடுத்த சிறு நூலில் பல குறிப்புக்கள் உண் டென்றும் அதைப் பார்த்துப் பல அறிந்துகொள் ளலாம் என்றும் கூறினர்கள். பிரிய மனமில்லாத வணுய் மணிபல்லவத்தையும், நாகம் ைமயையும், அவளை வழிபடும் கல்லன்பர்களேயும் விட்டுப் பிரிங் தேன். பட கில் ஏறி ஒரு புறத்தே உட்கார்க் தேன். கோடையின் கொடுமை தாக்கிற்று. எனி னும், ஒரு மூலையில் இருந்து அந்த நாகநாடு பற்றிய நூலைப் படிக்கலானேன். பல குறிப்புக்கள் கிடைத் தன. அவை யாவை ? அவை மணிமேகலை காட்டும் * Bக்க சாரணர் நாகர் வாழ்மலையோடு தொடர்புடை யனவா ? இவைகளேயெல்லாம் எண்ணிற்று என் மனம், படகு கடலில் செல்லத் தொடங்கிற்று. Fாகம்மையைத் திசை நோக்கித் தொழுதேன்.
மணிபல்லவம் பற்றியும், நாகர் நாடு பற்றியும் மணிமேகலையும், இலங்கைச் சரிதமாகிய மகாவமிச மும், புத்தசாதகக் கதைகளும், பிற கர்ண பரம் பரைக் கதைகளும் பலப்பல கருத்துக்களே எடுத்துக் காட்டுகின்றன. மணிமேகலையில் காணப்படும் நாகர் நாடு இதுதான் என்று திட்டமாகக் கூற முடியாது. ஆதிரை கணவனகிய சாது வன் கடலில் கலஞ் செலுத்துங்கால் அது கவிழ்ந்துவிட,
* நக்க சாரணர் நாகர் வாழ்ம?லப்
Luidss GF is 651916) | LJ Tir6)LDLJGir 9huis)Tit. ” என்பர் சாத்தனுர், சாரணர் என்ற சொல்லுக்

Page 34
S6 மணி பல்லவம்
குப் புக் த ருள் ளு ம் சமணருள்ளும் தவத்தால் சிறந்தவர் என்ற பொருள் உண்டு. அதன்படி பார்ப்பின், அத்தீவில் பெளத்தத் துறவிகள் இருந் தார்கள் எனக் கொள்ள இடமுண்டு. எனினும், நக்க ’ என்ற சொல் எதைக் குறிக்கின்றது ? ? நக்க சாரணர் என்ற தொடரே ஒருவகை நாகரைக் குறிக் கும் என்பது 'லெக்ஸிகன்’ உரை. நக்கர் என்பதற்கு கிர்வாணிகள் என்ற பொருளும் உண்டு. இது நிற்க.
அந்தச் சாதுவன் சேர்ந்த நாடு புத்தர் தருமம்
அறியாத நாடாக அன்ருே காண்கின்றது ?
* கள்ளடு குழிசியும் கருங்கறி மூடையும்
வெள்ளென் புணங்கலும் விரவிய இருக்கையும் எண்குதன் பிணவோடு இருந்தது என்ன? அங்காகர் நாட்டுக் குருமகன் இருந்தான் என்றன்ருே சாத்தனர் குறிக்கின்ருர் ? மேலும், அவன் சாதுவ னுக்கு
* நம்பிக்கு இ?ளயள்ஓர் நங்கையைக் கொடுத்து
வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும் "
எனக் கூறியதாகவுள்ளது. மேலும், அந்த நாகர் நாட்டு மக்கள் பாடை தமிழினும் வேருனதென்றும், சாதுவன் வல்லவன் ஆதலின், அவர் பேசியதை அறிந்துகொண்டான் என்றும் கூறப்பட்டுள்ளன. இவைகளையெல்லாம் நோக்கின், அந்த அநாகரிக நாகர் வாழ்க் த இடம் இம்மணிபல்லவ மாகாது என்று கொள்ளல் பொருந்தும், சாதுவன் வரலா றும் மணிமேகலை காலத்திலேயே நிகழ்ந்ததாதலின் அதற்குள் அங்காட்டு நிலையும் மொழியும் மாறிவிட் டன என்று கொள்ளவும் வழியில்லை. எனவே, சாதுவன் சென்ற நாகர் நாடு இந்நாகம்மை தங்கிய
நாகநாடு அன்று என்பது தேற்றம்,

மணி பல்லவம் 57
மேலும், மணிமேகலையில் அச்சாதுவன் கடலில் படகு கவிழப் பிழைத்துச் சென்று சாரணர் வாழ் மலைப்பக்கம் சேர்ந்தான் என்கின் ருர், ஆணுல் இங்கு இந்த மணிபல்லவத்தே மலை ஒன்றும் காண வில்லை. அன்று மணிமேகலை சென்ற மணிபல்ல வத்தும் யாதொரு மலையும் இருந்ததாகக் குறிப்பு ஒன்றும் காணவில்லை. எனவே, இவ்வகையிலும் இது சாதுவன் சென்ற நாகர் மலையினும் வேறு பட்டதாகி மணிமேகலை சென்றடைந்த மணிபல் லவமே என்பது வெளிப்படும்.
கனகசபைப் பிள்ளே அவர்கள் அந்தச் சாது வன் சார்ந்த நாகநாடு இலங்கைப் பெருந்தீவிற்குக் கிழக்கே உள்ளதென்று கூறுகின்றர். இம்மணிபல் லவமோ, அவ்விலங்கைக்கு மேற்கே பாம்பன் கட லில் உள்ளது. அவர் நாகநாடு கிழக்கில் உள்ளதென் நும், அது மக்களேத் தின்னும் நாகரிகமற்றவர்கள் வாழ்ந்த நாடென்றும், அத்தீவுக்கு அப்பாலேயே நாகபுரத்தைத் தலைநகராகக் கொண்ட சாவகம் என் னும் பெரு நாகநாடு இருந்ததென்றும், அங்காக காட்டை இந்திரன் பரம்பரையில் தோன்றிய அரசர் கள் ஆண்டார்கள் என்றும் குறிக்கின்ருர், அவர் கூற்றுக்கு மணிமேகலை என்ற இயலக்கியமும் யவன வணிகர் தாலமி போன்ருர்தம் குறிப்புக்
1. To the east of Ceylon were the islands inhabited by a race of Nagas Called Nakkasaranar or 'naked nomads, ', who were Cannibals, Beyond these lands was Chavakam, a large kingdom, the Capital of which was Nagapuram. The king of this Country claimed to be a decendant of the god Indra.

Page 35
58 மணி பல்லிவம்
களும் உறுதுணையாகின்றன. இவையெல்லாம் கக்க சாரணர் என்பதற்கு கிர்வாணிகளான அகாக ரிகர் என்று மேலே பொருள் க ன் ட ைத வலி யுறுத்துகின்றன. எனவே, இவைகளே யெல்லாம் வைத்துக்கொண்டு ஆராயின், சாதுவன் சென்ற காகர் நாடு இந்த மணிபல்லவமாகிய நாகநாடு அன்று என்பதும், அந்த நாகநாடு இ ல ங் ைக காட்டுக்குக் கிழக்கே, இப்போதுள்ள கிக்கோபார்த் தீவுகளோ, அவற்றின் பக்கத்தில் உள்ள வேறு எதுவோ என்று கொள்ளுதலும் பொருந்தும், அப்படியாயின், இந்த மணிபல்லவத்தை நாக காடு என்றும், நாகர் தீவு என்றும் வழங்குவதேன்? இதில் இருக்கும் தெய்வத்திற்கு நாகம்மை என்ற பெயர் வழங்குவானேன்? இதுபற்றி எல்லாம் ஆரா யின், சில உண்மைகள் விளங்கும். அவற்றை அங் குள்ளவர் கொடுத்த குறிப்புக்கள் ஒருவாறு எடுத் துக் காட்டுகின்றன.
இந்த மணிபல்லவத் தீவு பல வகை களில் பெயர் பெறுகின்றது. மணித்தீவு, மணி நாகத்தீவு, நாகத்தீவு, நாகநயினர் தீவு, நயினர் தீவு எனப் பல வகைகளால் இத்தீவு பண்டும் இன்றும் வழங்கப் பெற்று வருகின்றது. இதற்கு காகத்தீவு என்று பெயர் வந்ததற்கு ஒரு கதை வழங்குகிறது. இப் போதுள்ள நாகபூஷணி அம்மையின் கோயிலுக்கு வடக்கிலுள்ள பாம்பன் கடலில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நாகம் தன் வாயில் பூ ைவக்க வ் விக்
1. LD60øf) Guds&ad XVI: 15 & XXIV : j 64-170.
Ptolemy mentions three groups of islands inhabited by cannibals. Yule has identified them with the Nicobars, Nekkavaram of Marco Polo, Lakavaram of Rashid-du-din
Mi ceridle's Ptolemy, pp. 236-239).

மணி பல்லவம் 59
கொண்டு வர, அதை ஒரு கருடன் கண்டதாம். அதற்குத் தப்ப அங்நாகம் ஒரு கல்லில் மறைய, கருடனும் விடாது சுற்றி வட்டமிட்டதாம். அது காலை அவ்வழிச் சென்ற தமிழருடைய வாணிகக் கப்பலில் உள்ளோர் இங்கிகழ்ச்சியைக் கண்டனராம். அவருள் ஒரு செட்டியார் கருடனே வணக்கத்தால் அப்புறப்படுத்தினராம். பின்பு நாகம் மலருடன் கடல் வழி இத்தீவிற்கு வந்து வழிபட, செட்டி யாரும் பின் வந்து வழிபட்டுத் தமிழ் நாடு சென்ற னராம். அதன் பிறகு அவர் அங்காகத்தால் நலம் பெற்ற ராம். இவ்வாறு நாகத்தால் பூசிக்கப் பெற்ற மையின் இத்தீவு நாகத்தீவு என்று பெயர் பெற்ற தென்பார் ஒரு சாரார். பாம்பு சுற்றிய கல், கருடன் கல் என்பன இத்தீவின் அருகில் உள்ளன என் அறும், அ டி ய வ ர் அவற்றை வணங்குகின்றனர் என்றும் கூறினர்.
இனி இத்தீவு நாக வழிபாட்டி ற்கு ப் பேர் போனதென்பது பலர் கருத்து. இந்திய மண்ணில்ஏன்-உலகிலேயே 15ாக வழிபாடு மிக்கபழமை வாய்ந்த ஒன்று என்பது ஆராய்ச்சியாளர் முடிபு. எனவே, இத்தீவில் நாக வழிபாடு உள்ளமையின், இது பழம் பெருநாகரிகமும் பண்பாடும் உடைய ஒரு தீவு என்று கொள்ளுவது பொருந்தும் என்பர். இங்குள்ளார் இந்த வகை வரலாற்றைக் கூறினர். இங்குள்ள கோவிலில் ‘நாகத்தம்பிரான்’ உருவம் ஒன்று இருந்த தாகவும் டச்சுக்காரர்கள் படையெடுப்பின் போது, தங்களிலும் சிறந்த பொருளாகக்கருதிய அவ்விக் கிரகத்தை இத்தீவில் வாழ்ந்த மக்கள் மாற்ருர் காணுத வகையிலே மறைத்து அண்மையிலுள்ள புளி யங் தீ வில் கொண்டு போய் வைத்தார்கள் என் அறும் கூறுகிறர்கள். தமிழ் நாட்டிலும் வட

Page 36
60 D60 Lidsdal
விந்தியாவில் சில பகுதிகளிலும் முகலாயர் படை யெடுப்பின் போதும் பிற அ ங் கியர் ஆதிக்கம் கொழித்த போதும் இந்து சமயக் கோயில் இடம் பெயர்ந்த வரலாற்றை அறிகின்ற நமக்கு இது புதுமையாகத் தோன்ருது அல்லவா? அந்தப் புளியங் தீவில் அவ்வுருவம் இன்றும் உள்ளதாகவும், நயினர் தீவிற்கு வருபவருள் பலர் அங்கும் சென்று அவ்வுருவத்தை வழிபடுவதாகவும் கூறினர்கள். நாகவழிபாடு பழங் கால த் தி ல் சிறந்தோங்கி யிருந்ததென்றும், காலப்போக்கில் அந்த நாகவழி பாடே இம்மணி பல்லவத்தில் நாகம்மை அல்லது நாகபூஷணி வழிபாடாக மாறிற்றென்றும் சொன்னர் கள். எனவே, நாகவழிபாடு ஆற்றும் இந்த நாகத் தீவிற்கும், நாகர் என்னும் இனத்தார் வாழ்ந்த அந்த நாகர் காட்டிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது நன்கு தெரிகின்றது. இனி இத் தீவில் புத் த ர் பிரான் கால் கொண்ட வகை எவ்வாறு? இதுவே மணிபல்லவமாயின், அந்த உண்மையையும் ஆராய்தல் வேண்டுமன் ருே?
மணிமேகலை இயற்றிய சாத்தனர், இங்குப் புத்த பீடிகை வந்ததற்குக் காரணம் காட்டுவர். இந்தத் தீவில் செம்மை சான்ற ஆதனம் ஒன்றிருந்த தாகவும், அதைப் பெற இரு 5ாக அரசர் தம்முள் கலகம் விளேத்ததாகவும் தெரிகின்றது. இருவரும் அதைப் பெயர்த்துத் தம் நாட்டுக்குக் கொண்டு செல்ல முயன்றனர் போலும் ! ஆயினும், ஒருவ ராலும் அதைப் பெயர்க்க முடியவில்லை. எனினும், ஒருவருக்கும் அதை விட்டுக்கொடுக்கவும் மனமில்லை. பெயர்த்துச் செல்ல முடியாவிட்டாலும், அந்த இடத்திலேயே இருந்தாவது அப்பீடத்தில் தங்க லாம் என்று அவருள் ஒவ்வொருவரும் கினேத்திருக்

மணி பல்லவம் 6
கலாம். இந்த கி னே ப் பின் வழி பொருமையும் பகைமையும் எழுவது இயல்புதானே ? ஆம் ! அவ் வாறே பகை முற்றி, அப்புனித இடத்திற்காகப் போரே உண்டாகிவிட்டது. இரு பெரும்படைகள், புத்தரின் புனிதமான ஒரு பீடத்துக்காக மாறுபட் டுக் கலகம் விளேக்கும் காட்சி கொடியதன் ருே ? போர் நீக்கி, பகை போக்கி, அன்பையும் அமைதி யையும் கிலே காட்ட வந்த அண் ண ல் புத் தர், அதைக் கண்டும் வாளா இருப்பரோ! தாமே வந்து அவர் இருவரையும் தலையளித்து ஆட்கொண்டு அருளி, போர் நீங்கச் செய்து அன்பு வழியால் அவர்களேத் திருத்தியதோடு, தாமே அத்தரும பீடத்தில் எழுந் தருளினர். அப்பீடத்திலிருந்து கொண்டே அவர் அறநெறியைப் போதித்தார். இவ்வரலாறு மணிமேகலை காட்டிய வரலாறு ஆகும்.
தேவர் கோன் இட்ட மாமணிப் பீடிகை பிறப்புவிளங்கு அவிரொளி அறத்தகை ஆசனம் கீழ்நில மருங்கின் நாகநா டாளும் இருவர் மன்னர் ஒருவழித் தோன்றி எமது ஈது என்றே எடுக்கல் ஆற்ருர் தமபெரும் பற்று நீங்கலு நீங்கார் செங்கண் சீவங்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனை வெஞ்சமர் புரிநாள் இருஞ்செரு ஒழிமின் மெது ஈது என்றே பெருந்தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் பொருவறு சிறப்பின் புரையோர் ஏத்தும் தரும பீடிகை" (மணிமேகலை. VI 53.63)
பெருந்தல முனிவன்-புத்தன். இதில் காகநாட்டி லிருந்து இருவர் வந்ததாகக் குறித்து, அவர்தம் நாட் கீழ் நிலமருங்கில் உள்ளதாகக் குறிப்பதால் அந்த நக்கசார ணர் 5ாகBாடு இலங்கைக்குக் கிழக்கே உள்ள நாடாகக் கொள்ளல் பொருந்தும்,

Page 37
62 மணி பல்லவம்
இவ்வாறு பேரிலக்கியம் காட்டும் வரலாற்றை இலங்கை வரலாற்றைக் கூறும் ம க ரவ மிசம் என்னும் நூலும் காட்டுகிறது. மகாவமிசம், மணி மேகலை காலத்துக்கு மூன்று நூற்ருண்டுகள் பிந்தி எழுந்த இலங்கை நாட்டு வரலாற்று நூல். அதில் அந்த இரு நாக வேந்தர் பெயர்கள் குறிக்கப்பெறு கின்றன. அவை குலோதரன்,மகோதரன் என்பனவாகும். எனவே, வேறு இரு நாக நாடுகளிலே வாழ்ந்த நாகர் த லை வர் க ள் பிற நாடுகளேச் சுற்றி வந்த காலத்து, எதிர் பாராது இங்கு வந்து, இத்தீவில் இருந்த மணிப்பீடத்திற்காகப் போரிட்டார்கள் என் பது தெரிவதால், இந்தத் தீவு அவர்களது நாகரிக மற்ற (6ாக காட்டினும் வேறுபட்டதென்பதும், இதுவே போதித் தலைவர் தங்கிய மணிபல்லவம் என்பதும் அறியக் கிடக்கின்றன.
இனி இத்தீவின் இன்றைய வழிபாட் டு முறையை நோக்குவோம் : இத்தீவில் புத்தர் வழி பாடும் நாகம்மை வழிபாடும் சிறக்க நடைபெறுகின் றன. இவ்விருவகை வழிபாடுகளும் நெடுங்கால மாகவே இருந்து வந்த ண என்று கொள்ளுதற்கு இடம் உண்டு. உலாந்தர்களாகிய டச்சுக்காரர்கள் பெளத்தர் கோ யி லை யும், சிவன் கோயிலையும் அழித்தார்கள் என்ற வரலாறும் வழங்குகிறது. இன்றுள்ள நாகம்மை கோயிலிலே கல்வெட்டுக்களும் உள்ளன. அவை இக்கோயிலின் பழமையை விளக்கு கின்றன. இந்த நாகத்தீவாகிய மணி ப ல் ல வ ம் முதலாம் பராக்கிரம பாகு என்னும் சிங்கள அரசன் காலத்தில் ஒரு பெருந்துறைமுகமாய் இருந்தது என்பதை இக்கோயிலில் உள்ள அவன் கல்வெட்டே எடுத்துக்காட்டிச் சான் அறு பகர்கின்றது. மேலும்

மணி பல்லவம் 63
இத்தீவின் அண்மை யிலே கண்டெடுக்கப்பட்ட பழம்பொருள்கள் இது பதின் மூன்ரும் நூற்ருண் டிலே சீன நாட்டொடு வாணிபத் தொடர்பு கொண் டிருந்தது என்பதைக் காட்டுகின்றன.
அக்காலத்திலெல்லாம் இன்றே போல இரு வகை வழிபாடுகளும் நடைபெற்று வந்தன என அறிகின்ருேம். இலங்கைத் தீவில் ஒருசேர பெளத்த, இந்து வழிபாடு நிகழிடங்கள் சில உள்ளன. அவற் றுள் தென்கோடியில் உள்ள கதிர்காமமும் வடகோடியி லுள்ள இம்மண்பல்லவமும் சிறந்த ைவ போலும் ! கதிர்காமம் சென்றவர்கள் அங்குள்ள கோயிலையும் வழிபாட் டு முறையையும் பிற நிகழ்ச்சிகளையும் கண்டு, அது கந்தர் கோட்டமா அன்றிப் புத்தர் கோட்டமா என்று ஐயுறுவர். அக்கோயிலில் உள்ள இறைவனேக் கதிர் காமக் கந்தன் என்றே பழங்காலக் தொட்டுச் சைவர்கள் போற்றி வழிபடுகிருரர்கள். ஆயினும், அக்கோயிலில் வழிபாடாற்றுபவர்கள் பெளத்த சமயத்தவர்களென்பர். பிற சைவக் கோயில்களில் காணும் ஆசாரங்கள் அங்கு இல்லை. வழிபாட் டு முறையும் அப்படித்தானே ? அதே வேளையில் அக்கோயிலின் பின் உள்ள அரசமரத்தடி யில் காணும் புத்தர் பாதங்களேப் பல பெளத்தர்கள் போற்றி வழிபடுகின்றர்கள். அரச மரங் தானே புத்தருக்கு அருள்ஞானம் தந்த போதிமரம்? எனவே, அதன் அடியில் உள்ள அவ்வண்ணல் அடியினை அச்சமய அடியவர்கள் போற் று கி ன் ரு ர் கள். இவற்றை நோக்க, பெளத்தம் இந்து சமயத்தின் ஒருபகுதியே என்ற கொள்கை வலியுறுத்தப் பெறு கின்றது. பரந்த பாரதகாட்டின் உரிமை வாழ்வுக்குப் பிறகு இந்தியராகிய நாம் அனே வருமே இன்று ஒரு

Page 38
64 மணி பல்லவம்
சேர விடுமுறை மூலமும் விழாக்களின் மூலமும் புத்த ஜயந்தியைக் கொண்டாடுகின்ருேமே !
ஆம் ! இந்த நினைவோடு மணிபல்லவத்தை நோக்கினேன். கதிர்காமத்தைப் போன்று ஒரே கோயிலில் இங்குச் சைவரும் புத்தரும் வழிபாடாற்ரு விடினும், இருவருக்கும் இது ஒரு புனித இடமாய் இருக்கிறது என்பதை மறுப்பார் யார்?
இத்தீவு அளவில் சிறியதாகும். சுமார் ஒரு கல் அகலமும் இருகல் நீளமும் கொண்டது இத் தீவு. இத்தீவில் பெளத்தமும் சைவமும் கால் கொண்ட போதிலும் இதில் பெரும்பாலும் சைவர் களே வாழ்கின்றர்கள். இங்குள்ள நாகபூஷணி அம்மைக்கு ஆண்டுதோறும் பெருவிழா நடைபெறு கிறது. ஆனி மாத நிறைமதி காளிலேதான் அவ் விழா நிறைவெய்துகிறது. தமிழ் நாட்டு விழா முறைக்கு ஏற்பவே கொடியேற்றப் பெறுகின்றது. பத்து நாட்களிலும் பெருவிழாக்கள் நடைபெறுகின் றன. அம்மை வாகனங்களில் ஏறித் திருவுலா வரு கின்றன ஸ். அவ்விழாவின் அங்கமாகிய தேரோட் டம் நடைபெறுவதற்காகவே இப்போது ஒரு தேர் செய்யப்பெற்று வருகின்றது. பழங்காலத்தில் செப்புத் தேரும் பவளத் தேரும் இக்கோயிலுக்கு இருந்தன எனவும், அவை அங்கியர் படையெடுப்புக் காலத்தில் அவர் கைப்படாதிருப்பதற்காகக் கடலி டை மூழ்த்தப்பட்டன எனவும் கூறுவர். எப்படி யாயினும், இவ்விழா முறை பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகின்றதென்பது உண்மை.
இவ்விழா வைகாசியை அடுத்த ஆனியில் நடை பெறுகிறது. இதற்குக் காரணம் என்ன ? வைகாசி

மணி பல்லவம் 65
விசாகம் புத்த பெளர்ணமியாகும். மணிமேகலைக்குத் தீவ தில கை அறவாழி வேந்தர் தோற்றும் அப் புண்ணிய நாளை வைகாசி விசாக நாளாகத்தான் காட்டுகின்ருள். அந்த நாளிலேதான் அமுத சுரபி தோன்றி மணிமேகலையை அடைந்தது. அந்த 5ாள் புத்தர்களுக்கெல்லாம் பொன்னுள். புத்தர் பிறந்த நாளும், புத்தர் அருள் ஞானம் பெற்ற 5ாளும் அந்த கன்னுள் என்றே கூறுவர். எனவே, புத்தர்களுக்கு வைகாசி விசாகமே சிறந்த நாளாகும். அதாவது, வைகாசிப் பெளர்ணமி தொடங்கி அவர்தம் சிறப்புக்கள் நடைபெறும் போலும் ! t 6) விடங்களிலும் நடைபெறும் புத்தர் விழா, இத்தீவி லும் அங்காட்களில் சிறப்புற நடைபெறுமன் ருே ? இங்குப் பெரும்பாலாராய் வாழும் சைவரும் அந்நாளே ஒட்டி, அதற்கடுத்தாற்போலத் தம் காகம்மையின் விழாக்களே அமைத்துக்கொண்டனரோ என்று கினேக்க இடமுண்டு, யாதொரு வேறுபாடும் காணு வகையில் கொள்கையளவில் வேறுபட்டுத் தாயும் சேயுமாய் அன்று வாழ்ந்த சமயங்கள் இரண்டும் ஒன்றி விழாவாற்றுவதில் வியப்பில்லையன் ருே ? காவிரிப்பூம்பட்டினத்தில் கடலாட்டு விழாவில் சமய வேறுபாடே காண முடியாதே ! அதே கிலே யில் இந்த மணிபல்லவத் தீவில் வாழும் சைவரும் பெளத்தரும் விழாவாற்றிச் சிறந்தனர் என்னலாம்.
இத்தீவு ஒரு தனித்த மூலையில் கடல் நடுவில்
இருந்தாலும், பல ஆயிரக் கணக்கான சைவரும்
பெளத்தரும் காணும் தலமாய் உள்ளது. இதில்
உள்ள மக்கள் விருந்தோம்பும் நல்லுள்ளங்கொண்ட
வர்கள் என்பதை இங்குத் தங்கிய சிறிதுநேரத்தில்
அறிந்தேன். இக்காட்டில்-புத்த பீடிகை பூத்த கன்
5

Page 39
66 மணி பல்லவம்
ஞட்டில்-வளம் குறையாது மக்கள் வாழ்கின்ருர்கள் என்னலாம்!
* பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி'
வள்ளுவ முதுமகன் புகார் நகரில் முரசறைந்து விழாச் செய்தியைக் கூறினன் என்பர் ஆசிரியர் சாத்தனர். அவர்தம் வாக்கின் வழியே நானும், இம் மணிபல்லவம் பசி, பிணி, பகையற்று, வசியும் வள னும் பெற்றுச் சிறக்க !' என வாழ்த்துகின்றேன்!

மங்கையர் இருவர் பழி ஏற்றவளும்-பழி தீர்த்தவளும்
தமிழ் நாட்டு இலக்கியங்களில் பெண்கள் சிறப் பாகவே போற்றப்படுகிருர்கள். தொல்காப்பியனர் காலம் தொட்டு இன்று வரை பெண்கள் நிலை பெரு மையாகத்தான் பேசப்படுகின்றது. இடைக்காலத் தில் சிற்சில வேளேகளில் பெண்களைப் பற்றிச் சிலர் இழிவாக எழுதி வைத்திருக்கின்றனர் எனினும், அவர்தம் எழுத்துக்கள் அழிந்து வருகின்றன என் பதை அறிகின்ருேம். மேலும் அறிவறிந்த நல்ல புலவர்கள் பெண் இனத்தைப் பெருமைப்படுத்தித் தான் பேசுகின்ருர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் காட்டுப் பெண் மையே தனிச்சிறப்பு வாய்ந்தது. பெண்டிர் கடவுளரையும் ஏவல் கொள் ளும் கற்பு நெறியைத் தமிழ் நாட்டு இலக்கியங்கள் பாராட்டிப் பேசுகின்றன. மன்னரும் மற்றவரும்ஏன்-கடவுளருங்கூட-வழி தவறி நடக்கும் காலத் திலெல்லாம் அவர்களுக்கு உண்மை நெறியினை எடுத்துக் காட்டி நாட்டை நேரிய வழியில் கொண்டு செலுத்திய பெண்கள் வரலாறுகள் நாட்டில் பலப் பல. எனவே, இந்நாட்டில் பெண்களே என்றும் இழிவுபடுத்தி ைவ த தி ரு ங் த ர ச்க ள் என்பது பொருந்தாது.
இந்த நிலையில் பிற நாட்டாருடைய காவியங் களேத் தமிழில் மொழிபெயர்த்த புலவர்களும் பெண் இனத்துக்கு ஏற்றம் கொடுத்தே பாராட்டுகின்றர்

Page 40
68 மணி பல்லவம்
கள். வடமொழி இலக்கியங்கள் பல தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. அவற்றுள் மிகப் பெரிய அள வில் போற்றப்படுவன இராமாயணமும் பாரதமும் ஆகும். அவ்விரண்டினுள்ளும் இலக்கியச் சுவையில் இராமாயணமே சிறந்தது என்பது ஒருதலை. இவ் விராமாயணத்தைச் செய்தவர் கம்பர். கம்பரைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரிந்துகொள்ள இயல வில்லை. கம்பரைப் பற்றி மட்டுமென்ன ! தமிழ் நாட் டுப் புல வர் வரிசையில் சிறந்தவர்களே ப்பற்றி - வள்ளுவர் முதல் கம்பர் வரை-விளக்கமாக அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. பிறந்த ஊர், வளர்ந்தகுலம், வாழ்ந்த வகை ஆகியவை பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஒன்றும் கிடையாது என்னலாம். நாட்டிலே கேட்டு அறியும் சில கதைகள் வெறுங்கதைகள் என்று ஒதுக்கிவிடத் தக்கனவேயன்றி வரலாற்றுக் கும் உண்மைக்கும் துணை செய்வன அல்ல. கம்ப ரைப்பற்றித் தமிழ் நாட்டில் வழங்கும் கற்பனேக் கதைகள் எத்தனையோ! அவர் பெயரைப்பற்றித் தான் எத்தனை காரணங்கள் ! இவை அனைத்தை யும் சரி என்று கொள்ளக்கூடிய ஆதாரங்கள் இல்லை. இங்கு நாம் அவற்றைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பதைவிட, அவர் தம் கவிதைவழிக் கொண்ட பொருளே ஆராய்வது பொருத்தமாகும்.
கம்பர் வடகாட்டுக் கதையைத் தமிழில் மொழி பெயர்க்க முன்னின் ருர், வடநாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் பழக்க வழக்கங்களில் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன. கதையின் அமைப்பி லேயே பல மாற்றங்கள் செய்யவேண்டிய கிலே கம்ப ருக்கு ஏற்பட்டது என்பதை வான்மீகியாரையும் கம்பரையும் ஒத்து நோக்கினர் நன்கு அறிவர்.

மங்கையர் இருவர் 69
கம்பர் ஆசைபற்றி அறையலுற்ற இந்த இராமா யணத்தை அவர் தம் நாட்டுக்கும் கலாசாரத்துக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ப மாற்றி அமைத்துக்கொண்டு விட்டார். இல்லையானல், அவர் கதை என் ருே அழிவுபட்டிருக்கும். எந்த இலக்கிய மும் அது பயிலப் பெறும் காட்டு மக்களது வாழ்வை ஒட்டி வழங்காவிட்டால் அழிந்து ஒழியும் என்பது வர லாறு கண்ட உண்மை. இந்த உண்மையை அறிந்த கம்பர், வான்மீகியாரது இராமாயணத்தையே மொழி பெயர்த்தார் என்ருலும், அதில் உள்ள கதைப் போக்கையும், அமைப்பையும் தமிழ் நாட்டு கிலேக் கேற்ப மாற்றி அமைத்துக்கொண்டார். காதல் வாழ்விஃனயும் கற்பு நெறியினையும் தமிழ்ப் பண்பாடு கெடாத வகையில் அமைத்துக்கொண்டார். அவர் காவியத்தில் பெண்களைத் தமிழ் நாட்டு முறைக் கேற்ப ஏற்றம் பெறப் பாடுவதை அனைவரும் அறி வர். அவர் பெண்டிர் பலரைச் சித்திரித்துள்ளார். சிதை தொடங்கி, மண்டோதரி வரை மகளிர் பலர் அவர் கைத்திறனுல் போற்றப் பெறுகின்றனர். அவருள் இருவரைப்பற்றி இன்று இங்குக் காணு தல் பொருந்தும் என எண்ணுகிறேன்.
தயரதன் வாழ்வே தனியானது; அவிழ்க்க முடியாத முடிச்சுக்களேயும், சிக்கல்களேயும் கிறையக் கொண்டது. மகளிர் பலர் அவன் வாழ்வோடு பிணைந்துள்ளனர். அவன் அறுபதினுயிரம் மகளிரை ம ண ந் தா ன் என்பர். இக்கூற்று உண்மையோ அன்றே என நாம் ஆராய வேண்டா. அவனுக்குக் கைகேயி, கோசலை, சுமித்திரை என்ற மூவர் அரச மகளிர் மனைவியராய் இருந்தனர் என்பது நன்கு தெரிகின் றது. கம்பரும் வான்மீகியாரும் இம்மூன்று மனைவி

Page 41
70 மணி பல்லவம்
யரையும் நன்கு சித்திரிக்கின்றனர். இம்மூவருள் ஒருத்தியாகிய கைகேயி-பாவம்!-மிக்க கொடுமை படைத்தவளாகக் காட்டப்பெறுகின் ருள். வான் மீகத்தை ஒட்டிக் கம்பர் தம் காவியத்தைப் புனேங் தார் எனினும், கைகேயியைப்பற்றிக் கூறும்போது வான்மீகியார் கூற்றின் ஒரு பகுதியைக் கம்பர் கூற வில்லை. அதன் காரணம் என்ன என்பதை நாம் ஆராய வேண்டா! ஒரு வேளே அவ்வழக்கம் தமிழ் காட்டில் இல்லை என்ற காரணத்தால் விட்டிருக் கலாம். இனிக் கைகேயியைப் பற்றிக் கம்பர் வழிக் காண்போம்:
கைகேயி என்றவுடன் பெரும்பாலும் கற்ற வரும் மற்றவரும் கருதுவது அவள் மிகக் கொடிய வள் என்பதுதான். கம்பர் அவள் மகன் வாக்கி லேயே, அவளே அறிமுகப்படுத்தும் வகையில் பாடும் பாடல் அனேவர் உள்ளத்திலும் கிற்கும் என்பது உறுதி.
* படரெலாம் படைத்தா?ளப் பழிவளர்க்கும்
செவிலியைத்தன் பாழ்த்த பாவிக் குடரிலே நெடுங்காலம் கிடந்தேனுக்கு
உயிர்ப்பாரம் குறைந்து தேய உடரெலாம் உயிரில்லா எனத்தோன்றும் உலகத்தே ஒருத்தி யன்றே! இடரிலா முகத்தா?ள அறிந்திலேயேல்
இந்நின்ருள் என்னை ஈன்ருள். * (குகப். 70) என்று பரதன் தன் தாயினேக் குகனுக்கு அறி வுறுத்துமுகத்தான் நமக்கெல்லாம் தன் அன்னே யைப்பற்றிக் கூறுகின்றன். இன்னும் சில பாடல்களி லேயும் கம்பர் கைகேயியை இவ்வாறே காட்டுகின் ருர், ஆனல், உண்மையில் கைகேயி இவ்வாறு பழிக் கப்படத்தக்க வளா? பழி வளர்க்கும் செவிலியா?

மங்கையர் இருவர் 71
இராமாயணக் கதையை ஆழ்ந்து நோக்குவார் ஓர் உண்மையை நன்கு உணர்வர். கம்பரும் சரி, வான்மீகியாரும் சரி, கைகேயியை மிக்க கொடுமை வாய்ந்தவளாகக் காட்ட விரும்பவில்லை. எனினும் உண்மை அறியா உலகம் தூற்றும் மொழிகள் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனைக் கண்ணுல் கண்டே அவ்வாறு அவளேப்பற்றி எழுதியுள்ளார் கள். ஆயினும், அவளது ஆாய உள்ளத்தையும், அவ்வுள்ளம் கற்பெனும் திண்மை பெற்று கின்ற திறனையும், அதன் வழி என்றென்றும் தன் கணவ னேச் சார இருந்த பழியைத் தன் மேல் ஏற்றுக் கொண்டு, உலகம் தன்னைப் பழிக்கினும் கவலாது தன் கணவனது பெரும்பழியைத் துடைத்து கின்ற சிறப்பையும் அவர்கள் சுட்டிக்காட்டாது விட்டுவிட வில்லை. கம்பர் பாடல்களில் ஆழ்ந்து பார்த்தோ மானல், இவ்வு ன் ைம தெரியாமற் போகாது. வான்மீகியாரோ, 'கன்யா சுல்கம்' என்ற ஒரு பகுதி யையே காட்டிவிட்டுச் செ ல் கி ன் ரு ர். நடந்த உண்மைதான் என்ன ? உண்மை இதுதான் :
தசரதன் விரும்பியோ அன்றி வேறு காரணத் தாலோ ஆயிரக்கணக்கான பெண்களே மணந்திருந் தான் என்பது கதை. அதனல், தயரதன் பெண் களே மணப்பதில் சலிப்படையாதவன் என்பது நன்கு தெரிகின்றது. அவனைப்பற்றிப் பலவகையில் புகழ்ந்து பேசுகின்ற ஆசிரியர்கூட இந்த ஒன்றில் அவனேக் குறை கூரு திருக்க முடியாது. அத்துணைப் பேரளவில் அவன் மணந்து வாழ்ந்தது வெறும் புனேந்துரையேயாயினும், மூவர் மனைவியராய் இருந் தனர் என்பது மட்டும் உண்மையன் ருே ? மகப்பேறு காரணமாகவோ அன்றி வேறு எதற்காகவோ

Page 42
72 மணி பல்லவம்
அவர் மூவரையும் பட்டத்தரசியராக்கி வாழ்ந்து வந்தான். மூத்தவள் கோசலை என்பவள் வாழ்ந்த போதே தசரதன் கைகேயியை இளேயளாக வாழ்க் கைப்படுத்த விரும்பினுன் ; கைகேயிதன் தகப்பன் கேகய மன்னனே அடுத்து மகள் பேசினன். பட்டத் துக்கு உரியவளாய் ஒருத்தி இருக்க, வேறு எந்த மன்னன் தன் மகளே மற்ருெரு தனி மனைவியாகக் கொடுக்க இசைவான் ? கேகயனும் பெருமன்னன் தானே ? எனவே, மூத்தவள் இருக்கத் தன் மகளே மறுதாரமாகத் தசரதனுக்குக் கொடுக்க முடியாது என்று திட்டமாகச் சொல்லிவிட்டான் கேகயன். கைகேயிதன் அழகில் தன்னை இழந்த தசரதன், எப்படியாவது அவளே மணக்க விரும்பினன். அரசி யாக-பட்ட மகிஷியாக-இருப்பது தனக்குப் பின்னல் அவளுக்குப் பிறக்கும் மகன் மன்னனய் காட்டை ஆள்வதற்குத்தானே ? அந்த அரச வாழ்வையே கைகேயிக்கு வழங்கிவிட்டால் என்ன என கினைத் தான் தசரதன்; பின்பு என்னவாகும் என்பதை யும் எண்ணிப் பார் க் க வில் லை. அவன் தன் அயோத்தி நாட்டையே கைகேயிக்குக் 'கன்யா சுல்க' மாகக் கொடுக்க இசைந்து, அதைக் கேகயனுக்கும் அறிவித்துவிட்டான். பிறகு கேகயன் தன் மகள் கைகேயியைத் த ச ர த னு க் கு மணம் செய்து கொடுத்தான்.
'கன்யா சுல்கம்’ என்பது வடமொழி-அதன் பொருள் என்ன? கணவன் மணம் செய்துகொள் ளும் போது மனைவிக்குப் பரிசாகத்தரும் சொத்து. அது அந்தப் பெண்ணுக்குச் சொந்தமாகிப் பின் அவள் மக்களுக்கே உரிமையாகிவிடும். மக்களில்லை யானல், அவளுடைய தந்தை, சகோதரர் ஆகிய

மங்கையர் இருவர் 73
அவள் வமிசத்தோன்றல்கள் அதைப்பெற உரிமை உடையவர்கள். அவள் கணவனே, அவன் வழி வேறு சுற்றத்தாரோ அதில் உரிமை கொண்டாட இயலாது. அந்த முறையில் பார்த்தால், தசரதன் கன்யா சுல்கமாகக் கொடுத்துவிட்ட அயோத்தி அரசில் அவனுக்கு ஒரு வித உரிமையும் இல்லை. கைகேயி தன் வி ரு ப் ப ப் படி அவள் மகன் மூத் தவனுகி அரசாட்சியைக் கைக்கொள்ளும் வரையில் தசரதன் அயோத்தி அரசை ஆண்டான். மேலும், என்னதான் கே ன் யா சுல் க'மாயினும் கணவன் உள்ள வரையில் தன் உரிமையை அதன்மேல் நாட் டாது, நாடு போற்றும் நல்ல அரசனுய்த் தன் கணவன் வாழவேண்டும் என்ற கற்புடைப் பெண் டிர் கருதும் நல்லுணர்வோடு அவனையே ஆள வைத்தாள் கைகேயி; அத்துடன் அந்தப் பேரரச வாழ்வையும் போகத்தையும் தனக்கெனத் தனி உரிமை கொண்டாடாது தன் சகக்களத்தியரோடு இயைந்து வாழ்ந்தாள். அத் துட ன் அரசுக்கு உரியனுன தன் மைந்தனையே பாராட்டாது அவனி னும் மேலாக மூத்தவனுகிய கோசலை மைந்தன் இராமனைக் கண்ணின் மணியெனப் போற்றினுள்; அரசனுக்கு மா ற் ற ர | ல் இடர் வந்த போது, தானே போர்களத்தில் உடன் இருந்து உதவினுள். இவ்வாறு உண்மை மனைவியாய்-ஒழுக்கம் நிறைந்த வளாய், கணவன் நலத்திலும், அவன் குடும்ப நலத் திலும், அவன் காட்டு கலத்திலும் கண்ணுயிருந்த கைகேயியா பின்னர் இப்படி மாறினுள்? மாறின தற்குக் காரணம் என்ன ?
இந்த உண்மைகளெல்லாம் எப்படி அறிய முடி யும்? இது நல்ல கேள்விதான். ஆயினும், கம்பர்

Page 43
74 மணி பல்லவம்
பாடல்களைக் கொண்டே இவற்றையெல்லாம் நன்கு அறிதல் கூடும்; மற்றும் கதை நிகழ்ச்சியைக் கொண் டும் அறிய வழி இருக்கிறது. தசரதன் கடைசி வரை கைகேயியிடம் நீங்காக் காதல் கொண்டிருந்தான் என்பது உண்மை ; ஆயினும், மூத்த மகனுகிய இராமன்மேல் அதிக அன்பு வைத்திருந்தான் ; மேலும், தான் அயோத்தி அரசைக் கன்யா சுல்க’ மாகக் கொடுத்த இரகசியத்தை வசிட்டர் உட்பட யாவருக்கும் சொல்லவில்லை என்பதும் தெரிகிறது. எனவே, அவர்கள் மூத்தவனகிய இராமனுக்குப் பட்டம் கட்டாது பரதனுக்கு காடு உரியது என்று சொன்னுல் ஏற்றுக்கொள்வார்களா ? எனவேதான் பரதனே அவன் பாட்டன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அவன் இல்லாத சமயத்தில் இ ரா ம னு க் கு அயோத்தி அரசினை நல்க கிஃனத்தான் தசரதன். ஆயினும், உண்மைக்கு மாறுபட்டுத் தன் கணவன் செய்வதைக் கைகேயி விரும்பவில்லை. ஆனல், அதைக்கூட முதலில் அவள் எண்ணிப் பார்க்க வில்லை; கூனி எடுத்துக் காட்டிய பிறகே உண்மையை உணர்ந்தாள் ; கூனி கைகேயிதன் தாய் வீட்டிலே அவளுக்கு உடன் துணையாய் உதவி புரிபவளாய் இருந்திருப்பாள். எனவே தான் அவளுக்கும் *கன்யா சுல்க' உண்மை தெரிந்திருந்தது. தன் கணவனுக்கு வையம் உள்ளளவும் உண்டாகப் போகும் வசையினை கி னை த் தா ள் கைகேயி. வாய்மையும் மரபும் காக்கும் வள்ளலாகிய தன் கணவன், உலகமுள்ளளவும் கொடுத்ததை இல்லை என்று மாற்றிவிட்டான்' என்று வசை பெற்று வாழ்வதா என எண்ணிற்று அவள் உள்ளம். அக்கொடுமையை எண்ணிப் பார்க்க முடியவில்லை

மங்கையர் இருவர் 75
அவளால். ஆம் ! சிந்தித்தாள் - சிந்தித்தாள் - நெடிது சிந்தித்தாள். கடைசியில் அவளுக்கு ஒரே வழிதான் தோன்றிற்று. தன் கணவன் பழியற்ற வகை-வாய்மை உள்ள வணுக-உலகம் உள்ளளவும் போற்றப்பட வேண்டுமானல், தான் அந்தப் பாவத் தையும் பழியையும் ஏற்றுக்கொள்வதன்றி வே அறு வழி இல்லை என்பதைக் கண்டுகொண்டாள் ; தனக்கு அழியாப் பழி வரும் என்று அவள் கவல வில்லை. எப்படியும் தன் கணவன் பழியற்றவனுய் உலகில் காட்சியளிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டாள். அங் த நல்ல முடிவினல் தன் வாழ்வும் சீரும் இழக்க நேரும் என்பது அவளுக்குத் தெரியும். தன்னைப்பெற்ற மகனே பழிப்பான் என் பதையும் அவள் உணர்வாள்; உண்மை உணராத உலகத்தவர் என்றென்றும் தன்னை வசைச்சொற் களால் இகழ்வர் எ ன் ப ைத யும் உணர்வாள். என்ருலும், அ ைவ அனைத்தும் தன் கணவன் குற்றமற்றவன் - உலகம் போற்றும் உத்தமன்எ ன ப் படு வான் என்ற ஒன்றின் முன் ஓடி மறைந்தன. எனவே, அவள் தன் உள்ளத்தைக் கல்லாக்கிக்கொண்டாள்; எது வரினும், யார் கூறி னும் தான் கொண்டதில் மாற்றம் கொள்ளலாகாது என்று உறுதி பூண்டாள்; அந்த உறுதி வழியே கடைசி வரையில் வாழ்ந்து - செயலாற்றி - தன் கணவன் புகழை வாழவைத்துவிட்டாள். அவளேக் காட்டிலும் சிறந்த கற்புடைப்பெண் - அறத்தாஅ வாழ்ந்த செல்வி-நல்ல உள்ளத்தாள்-தியாகிவேறு யாரைக் காட்ட முடியும் ? அறிஞர்கள் ஆழ்ந்து எண்ணிப் பார்த்து முடிவு செய்யட்டும்

Page 44
76 மணி பல்லவம்
இராமனுக்குப் பட்டாபிஷேகம் நடத்தும் முயற்சி பல நாள் முயன்று, பலரும் கலந்து பேசிச் செய்யப் பட்டது அன்று. அது பெற்ற தாயரும் அறியா வகையில் தீடீரென ஒரு நாள் முடிவு செய்து மறு நாள் நடை பெற ஏற்பாடு செய்த நிகழ்ச்சி. பழங் காலப் புராண வரலாற்றிலும் சரி, இக்காலச் சரித வரலாற்றிலும் சரி, இது போன்ற ஒரு பட்டாபிஷேக நிகழ்ச்சியை யாரேனும் காட்ட முடியுமா? ஒரு மன்னன் தன் மகனுக்கு முடி சூட்டும் விழா உல கறிந்த விழாவன் ருே ? ஆனல், இ ரா ம னு க்கு இயைந்த விழா ஏன் அப்படி அவசரக்கோலம் ஆக்கப்பட வேண்டும் ? அது எப்படியாயினும், அந்த முடி சூட்டு விழாவைப் பற்றிக் கைகேயிக்கு முதல் முதல் உ ைரத்த வள் கூனிதான். ஆம்! அரசவையில் நடைபெற்றபேச்சு அந்தப்புரத்துக்கு எட்டவில்லை. கூனி எப்படியோ கேட்டறிந்தாள். அவள் கைகேயியுடன் தாய் வீட்டிலிருந்து வந்தவள் ஆதலால், அவள் நலத்தில் அக்கறை கொண்டு அறிந்தாள். அதைச் சென்று அவள்தான் முதன் முதலாகக் கைகேயிக்குக் கூறுகின்ருள். இது கிற்க.
அரசன் தசரதன் தன் மகன் இ ரா மனு க்கு அரசைத் தரப்போவதாகத் தடுமாறிப் பல மன்னர் தங்கிய தன் பேரவையில் கூறுகிருரன். பின்பு அனை வரும் இராமன் அரசன் ஆதற்கு ஏற்றவனே என்று கூறினர். அதற்குள் மன்னவன் சிங்தையில் தடு மாற்றம் உண்டாகிறது ; தான் சொல்லியது சரியோ தவருே எனக் கருது கி ன் ருர் ன். இராமனுக்கு உரியதல்லாத அரசைத் தான் அவன்மீது கொண்ட அ ன் பி ஞ ல் அவனுக்குத்தர இசைந்ததை எண் ணிற்று அவன் உள்ளம். எனினும், மற்றுமுள்ள

மங்கையர் இருவர்
மன்னவர்கள் அவன் அரசனதல் தகும் என்ருர் களே, அதன் காரணம் அறியின் அதன்படி ஒரு வேளே தன் மகனுக்கு அவ்வரசை உரிமையாக்க முடியுமா என எண்ணினன். அவர்களேயே காரணம் கேட்கிருன். இந்தத் தொடக்க நிலையிலேயே கம்பர் தசரதன் செய்ய கினேத்த தவற்றையும், அவன் உள்ளத் தடுமாற்றத்தையும் காட்டுகிருர், இதோ அவர் செய்யுள் :
* மகன்வயின் அன்பினுல் மயங்கி யான்இது
புகலநீர் புகன்றஇப் பொம்மல் வாசகம் உகவையின் மொழிந்ததோ, உள்ளம் நோக்கியோ, தகவென நினைந்ததுளத் தன்மை யால் 'என்ருன்.
(LD të 6 T. 81) இதில் அவன் தடுமாற்றம் கன்கு தெரிகின்றது. தான் தன் மகன் மேல் கொண்ட அன்பினுல் சொல் லிய வாசகத்தைத் துறந்து, பிள்ளைப்பாசத்தால் மயங்கிப் புகன்றதை நினைக்கிருன் அனைவரும் அதை ஏற்றுச் சரி என்பதற்கு என்ன காரணம் காட்டுகின்றனர் என அறிய கினேத்தான்; அதையே தானும் கைகேயிக்கோ - கேகயனுக்கோ காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்தான். அவன் எண் ணம் வெளிப்பட்டுவிட்டது. பிறகு அவர்கள் ஏதேதோ சொல்லுகிறர்கள். அவனும் அவற்றை ஏற்றுப் பாச மயக்கத்தால் சொல் தவறி இராமனுக்குப் பட்டம் கட்டுதல் என்ற முடிவினை அப்போதே உறுதி செய்துவிட்டான். இதிலே கம்பர் அவன் தவற்றினேக் காட்டிவிட்டாரல்லரோ ? அன்றேல், மற்ற வரை கோக்கி அவ ன் அவ்வாறு கேட்கக் காரணம் இல்லேயே ! இது கிற்க.

Page 45
78 மணி பல்லவம்
இப்பட்டாபிடேக நிகழ்ச்சியைக் கூனி கைகேயி யிடம் வந்து சொல்லுகின்ருள். கேட்ட கைகேயி முன்னைய நிகழ்ச்சிகளையெல்லாம் மறந்துவிட்டவ ளாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, தன் முத்துமாலை யைக் கூனிக்குப் பரிசாக அளிக்கின் ருள். அவள் உள்ளத்தூய்மையைக் கம்பர் இங்கு நன்கு காட்டி யுள்ளார். இராமனைத் தன் மகனுக உடைமையின் தனக்குத் தீங்கு வாராது என்கின்ருள் கைகேயி.
* விராவரும் புவிக்கெலாம் வேத மேயன
இராமனைப் பயந்தஎற்கு இடர் உண்டோ!'
(மந்தரை சூழ். 146) என்று பெருமைப்படுகிருள். கோசலை பெறுகின்ற
* மன்னவன் மன்னனேற் கணவன்; மைந்தனேல்
பன்னரும் பெரும்புகழ்ப் பரதன்; பார்தனில் என்இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு ?
(மந்தரை சூழ். 149) என்று தசரதனக் கணவனுகவும் பரதனை மைந்த ஞகவும் பெற்ற கோசலைக்கு இதனினும் மேலான சிறப்பு ஏது என்கின்ருள். இப்படி இராமனேத் தன் மைந்தனுகவும் பரதனேக் கோசலை மைந்தனுகவுமே பாராட்டுகின்ருள் கைகேயி. அவள் உள்ளம் கோச லையின் உள்ளத்தோடு ஒன்றிவிட்டது. மங்கை உள்ளமும் ஆற்றல் சால் கோசலை அறிவும் ஒத்த, என்று இதையே கம்பர் பேசுகின்ருரர். இக்கைகேயி இராமனுக்குப் பட்டம் என்றவுடன் நாயகமனைய மாலை நல்கியதில் வியப்பென்னே ?
ஆனல், கூனி அத்துடன் அ ைம ய வில்லை. இராமன் பட்டம் பெற்றல் அவன் தாயும், அவள் சுற்றத்தாரும், அவரைச் சார்ந்தாருமே பெருமை

மங்கையர் இருவர் ኀ9
பெறுவரென்றும்; கைகேயியும் அவளேச் சேர்ந்தோர் அனே வரும் சிறுமையுறுவரென்றும் காட்டுகிருள். அவற்றையெல்லாம் கேட்டும் கைகேயி மனம் மாற வில்லை. அதற்குப் பதில் கூனியைக் கடிகின்ருள் அவள்; இராமனேயும் பிறரையும் பழித்துரைத்த அவள் நாவை அறுக்க வேண்டும் எ ன் கி ன் ரு ள். மேலும்,
* எனக்கு நல்?லயு மல்லநீ; என்மகன் பரதன்
தனக்கு நல்?லயு மல்ல; அத் தருமமே நோக்கின் உனக்கு நல்?லயு மல்ல;வந்து ஊழ்வினை தூண்ட மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்!
(மந்தரை சூழ். 164) என்கின்ருள். ஆனல், கூனி அவற்றிற்கெல்லாம் அஞ்சாது மேலும் பேசினுள் ; பலப்பல பேசினள். ஆனலும், அவற்றையெல்லாம் பொருட் படுத்த வில்லை கைகேயி. கடைசியில் கூனி, தசரதன் தன் அயோத்தி அரசைக் 'கன்யா சுல்க”மாகக் கொடுத் ததையும், அது வழி வழி அவள் மக்களுக்கே உரிமையாகி வரவேண்டுமென்பதையும், அவ்வா றன்றேல், அரசனுக்கு என்றென்றும் பழி சேரு மென்றும் எடுத்துக் காட்டுகின்ருள். அவள் கூறி யதைக் கம்பர் வாக்கிலே காண்போம் :
* கெடுத்தொழிந்தனை உனக்கரும் புதல்வனைக் கிளர்நீர்
உடுத்த பாரகம் உடையவன் ஒருமகற் கெனவே கொடுத்த பேரரசு அவன்குலக் கோமைந்தர் தமக்கும் அடுத்த தம்பிக்கும் ஆம் ;பிறர்க்கு ஆகுமோ!' என்ருள்.
(மந்தரை சூழ். 175) இதற்குத் தன் ஒரு மகனகிய இராமனு க்கு க் கொடுத்த பேரரசு அவன் வழி வழிச் செல்லுமே யன்றிப் பரதனைச் சாராது. ஆகவே, அதைத்

Page 46
80 மணி பல்லவம்
தடுக்க வேண்டுமெனக் கூனி கூறியதாகப் பொருள் கொள்ளுவர் பலர். ஆனல், ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை புலப்படும். இந்தப் பாட்டைக் கேட்ட வுடனே கைகேயி மனம் மாறிவிட்டது என்று அடுத்த பாடல் கூறுகின்றது. அவர்கள் சொல் லும் பொருள் வழி ஆராய்ந்தால், முந்திய பாடல் களில் காணுத புதுக்கருத்து ஒன்றும் இதில் இல் லையே! பின்னர் ஏன் இதைக் கேட்டுக் கைகேயி மனம் மாறினுள் என்று கேட்கத் தோன்றுமல்லவா? ஆம் ! மறந்த கைகேயியை விழி க்க ச் செய்யும் பொருள் இதில் இயைந்து கிடக்கிறது. அது என்ன ?
* உன்னை மணந்துகொள்ளும் நாளில் தன் அயோத்தி அரசைத் தசரதன் உனக்குக் கன்யா சுல்கமாக ஈந்தமையின், அன்றே அந்த அரசு உன் மகன் பரதனுக்கு உரிமையானதுதான். இனி அது அவனுக்கும் அவன் வழி வருவார்க்கும் உரிமையாகு மல்லது பிறர்க்கு ஆகுமா ?’ என்று கேட்கின் ருள் கூனி. பிறர்க்காகுமோ ?” என்று அவள் கேட் பதே இப்பொருள் பற்றித்தான். மேலும், இராம லுக்கு இனித்தான் பாரினைக் கொடுக்கப்போகிருன் மன்னன். இதில் இறந்த காலத்தில் கொடுத்த பார் ' என்றே இருக்கிறது. மேலே கண் ட படி இராமனுக்குப் பார் கொடுத்த பொருள் கூறுவ ராயின், பிறர்க்காகுமோ ? என்ற தொடரி ன் பொருள் நன்கு புலப்படாதன் ருே ? எனவே, இப் பாட்டால் கூனி கைகேயி இராமன் பட்டம் சூடிக் கொள்ளப் போவதில் உண்டான மகிழ்ச்சிப் பெருக் கில், மன்னவன் வாக்கை மறந்ததையே கினைவூட்டு கின் ருள் என்பது பொருந்தும். ஆம் ! இதைக்

மங்கையர் இருவர் 8
கேட்டபின் நெடிது கினைத்த கைகேயி, மனம் மாறி ஞள் ; இல்லை; மாறிவிட்ட வளாக நடித்துப் பாவ மும் பழியும் ஏற்றுத் தன் கணவனே வாய்மையும் மரபும் காத்த வள்ளல் ’ ஆக்கினள் !
பின்பு அவன் சொல் தவரு திருக்க வழி என்ன என்று கூனியோடேயே ஆய்கின்ருள். கூனியும் தன் நாட்டுப் பெருமகள்-கைகேயி-தன் கணவனைக் காத்த புகழினப் பெறவேண்டும் என்று (1pէգ-65յ செய்து அவளது ஆய்வுக்குத் துணையானள். அவன் தந்த வரம் இரண்டு உள்ளன. ஒன்ருல் இராமன் காட்டுக்குச் செல்லவும், மற்றென் ருல் பரதன் முடி சூட்டிக்கொள்ளவும் செய்ய வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. ‘ஆம்! தன் அரசைத்தான் பெற் அறுக்கொண்டாள். இராமனேக் காட்டுக்கு அனுப் பியது ஏன் ?’ என்ற கேள்வியும் எழும். ஆணுல், கைகேயி அதையும் நெடிது யோசித்தே முடிவு செய்தாள். இராமன் காட்டிலே இருந்து பரதன் நாடாளும் கிலையில் அமைதி விளே யுமா ? பரதன் அயோத்தியில் அதிக நாள் தங்காமையினலோ அன்றி ஏணுே அவனேக்காட்டிலும் அக்காட்டு மக்கள் அதிகமாக இராமனிடம் அன்பு கொண்டிருந்தார் கள். ஒரு வேளே மக்கள் அவ்விராமன் வழி கின்று நாட்டை இரண்டாக்கினல் நலமின்றே என எண்ணி ள்ை கைகேயி. அவள் இராமனிடத்தில் அளவுக்கு மீறி-ஏன்-பரதனிடத்துள்ள அன்பினேக்காட்டிலும் அதிகமாகவே அன்பு கொண்டிருந்தாள் என்பது உண்மைதானே! அவள் அவ்வாறு மாறினுள் என் ரு ல், அது எப்படியாவது மன்னவன் பழியாளனுக வேண்டா என்பதற்காகவே ஆகும். அப்படி ஒரு வேளே மன்னவன் தான் வேண்டுவதை மறுப்பா

Page 47
82 மணி பல்லவம்
னயின், இராமனுக்கு முடி சூட்டுவதையே மேற் கொள் வானுயின், அவனே உலகம் பழிப்பதன் முன் -அப்பழிச்சொல் தன் செவிப் புகுமுன் - தான் இறப்பதாகவும் கூறுகின்ருள் கைகேயி. அதையும் அன்றே-இராமன் முடி சூட்டுமுன்பே-செய்தாக வேண்டும். இவற்றையெல்லாம் கம்பர்,
* நன்று சொல்லினே! நம்பியை நளிர்முடி சூட்டல்
துன்று கானத்தில் இராமனைத் துரத்தல் இவ் விரண்டும் இன்றுளய் தாவெனில் அரசன்முன் என்உயிர் துறந்து பொன்றி நீங்குதல் புரிவன்யான் ; போதிநீ," என்ருள்.
(மந்தரை சூழ். 183) என்று நன்கு விளக்கிக் காட்டியுள்ளார். பிறகு மேல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இவ்வாறு கம்பர் கைகேயியைத் தூய உள்ள முடையவளாகவே காட்டுகின்ருர், அவள் மனம் திரிந்த போது 'தேவி தூய சிந்தையும் திரிந்தது' என்றும், 'நல்லருள் துறந்தனள்’ என்றும் குறிக் கின்றர். எனவே, கைகேயி அருளற்றவளாகக் காட்டி உலகப் பழியைத் தன்மேல் ஏற்று, தன் கணவனே வழி வழி வரும் பழியினின்று காத்தாள் என்பது புலனுகும். இனி இக்கைகேயி தூயவள் என்பதைப் பிறர் வாக்குகளால் கம்பர் எவ்வெவ் வாறு காட்டுகிருர் என்பதைக் காண்போம் :
தசரதன் கைகேயி கேட்ட இரண்டு வரத்தை யும் அறிந்து தி டு க் கிட் டான் ; நல்ல வளாகிய கைகேயியா இப்படி மாறிவிட்டாள் !’ என்று கினேக் கின்றன் ; அவள் நல்ல வள் ; வேறு யாரோதாம் அவள் ம ன த் ைத மாற்றியிருக்க வேண்டும் !" என்று எண்ணுகின்றன் ; நீ திகைத்தது உண்டோ! பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சமுண் டே !

மங்கையர் இருவர் 83
என்றுதான் கேட்கின்றன். எ ன வே, தசரதன் கைகேயி இயல்பில் நல்ல வள் என்றும் எப்படியோ மாறிவிட்டாள், அன்றி மாற்றப்பட்டாள் என்றும் கூறுகின்றன். அப்படி அவளே மாற்றியது யாது என்பதைத்தான் அவனல் அறிந்துகொள்ள முடிய வில்லை. ஆயினும், உள்ளதைக் கம்பர் குறிப்பால் உணர வைக்கிருர். 'என்மேல் சார வேண்டிய வசை யைக் கைகேயிமேல் சாற்றி நான் புகழொடு மாய் வேன், என்கின்ருன் தசரதன்.
* ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம் ; என்சேய் வனமாள,
மாய்த்தேன் நான்போய் வானுல காள்வேன்; வசைவெள்ளம் நீந்தாய் நீந்தாய் நின்மகனுேடும் நெடிது!’என்ருன்.
(கைகேயி சூழ். 44) என்று கம்பர் காட்டுவது நோக்கத்தக்கது. இதற்கு முன்னர்க் கைகேயி பல வகையில் தன் கணவன் தன் சொற்படி அரசைத் தன் மகனுக்குத் தாரா விடில் அவனே உலகம் என்றென்றும் பழிக்கும் என்றும், அவனே சொன்னபடி கடவாவிட்டால் உலகில் வேறு யார் வாய்மையைக் காக்க முடியும் என்றும், அவ்வாறு சொல் மறுப்பது ஒரு வேளை ஆணையின் உரமாகலாமே ஒழிய அறமாகாது என் அறும் கூறிக் காட்டி, அவ்வாறு அறம் திறம்பி மற வழியில் பழி ஏற்று என்றும் தசரதன் வாழ கினேப் பானுயின், அக்கொடுமைகளேயெல்லாம் பார்த்துக் கொண்டு தான் வாழ விரும்பவில்லை என்றும், அத ஞல் தசரதன் என்றென்றும் வசையேற்று வாழ வேண்டியிருக்கும் என்றும் எடுத்துக்காட்டுகிருள். அவ்வாறு ஒரே பிடியாய் இருந்து உள்ளம் தடுமாற் றம் அடையாது தன் விழைவை நிறைவேற்ற கினேப் பதால் தனக்கு எப்பழி வரினும் வருக என்று

Page 48
84 மணி பல்லவம்
உறுதி கொள்ளுகின் ருள். இவையெல்லாம் கம்பர் பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன : * திசைத்தது மில்லை; எனக்குவந்து தீயோர்
இசைத்ததும் இல்ல;முன் ஈந்த இவ் வரங்கள் குசைப்பரி யோர்தரின் இன்றுகொள்வென்; அன்றேல் வசைத்திறன் நின்வயின் நிற்கமாள்வன்," என்றுள்.
(கைகேயி சூழ். 18) இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல்வேந்தன் ; தன்னே ரில்லாத் தீயவள் உள்ளம் தடுமாருள், * முன்னே தந்தாய் இவ்வரம் நல்காய்; முனிவாயேல்
என்னே மன்னு! யார்உளர் வாய்மைக்கு இனி?"என்றுள். (கைகேயி சூழ். 30) இரந்தான் சொல்லும் இன்னுரை கொள்ளாள் முறைஎஞ்சாள் மரந்தான் என்னும் நெஞ்சினள் காணுள் வசைபாராள், *சரந்தாழ் வில்லாய் ! தந்த வரத்தைத் தவிர்கென்றல்
உரந்தான் அல்லால் நல் அறம் ஆமோ? உரை,"என்ருள்.
(கைகேயி சூழ். 34) இப்பாடல்கள் எண்ணிப் பார்க்கத் தக்கன அல் லவோ ?
தசரதனே விட்டுப் பரதனை நோ க்கு வோம் : அவன் தன் தாயின் செயலுக்கு அவளேப் பல வகை யில் பழிக்கின்றன் ; முகம் கொடுத்துப் பேசவில்லை; கோசலையிடம் சென்று தான் அறியாத் தவறு எ ன் நூறு தன்னே நல்லவனுக்கிக் கொள்ளுகிருன், பாவம் ! தன் தாய் பழியை ஏற்று அச்சூரிய குலத் துக்கே என்றென்றும் அழியாது கிற்க இருந்த பழியை மாற்றினுள் என்பதை நன்கு அறியாத பிள்ளை அவன்! அவன் வாயிலாகவும் கம்பர் கைகேயி தன் செய்கையால் அ ற 1ெ5 றி க்கு க் குறையுண் டாகாது எனக் காட்டுகிருர், மன்னன் இறக்கவும்

மங்கையர் இருவர் 85
இராமன் காடு சென்றதும், தான் ஆள கினேப்பதும் கோளே அன்றி-கெட்டகாலமே அன்றி--அதனல் அறநெறி குறைவுபடாது என்கின்றன் பரதன்.
* மாளவும் உளன் ஒரு மன்னன்; வன்சொலால்
மீளவும் உளன் ஒரு வீரன் ; மேயபார் ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினுல் கோள்அலது, அறநெறி குறையுண் டாகுமோ ?”
(பள்ளியடை, 73.) என்ற கம்பர் பாடல் இவ்வுண்மையை விளக்குகிற தன்ருே ?
இவைகளுக்கெல்லாம் மேலாக இ ரா ம ன து சிந்தையும் செயலும்--ஏன்-சொல்லுங்கூடத்தான் அயோத்தி அரசுக்குத் தான் உரியவன் அல்லன் என்பதையே காட்டுகின்றன. தயரதன் அழைத்து
அயோத்தி அரசை ஏற்றுக்கொள்,' என்று கூறிய வுடன் இராமன் மனத்தில் போராட்டம் எழுந்து விட்டது. அது வரையில் அமைதியாய் இருந்த அவன் உளத் தே ஓயா அலே எழுந்துவிட்டது. அவன் தான் செய்வது முறையா-அறமா-என எண்ணி எண்ணிப்பார்க்கின்ருன், அரக் பரதனுக்கு உரியது என்பதை அவன் முன்னமே எவ்வாருே அறிந்திருக்கிருன். அதற்கேற்ற சூழ்நிலையிலேதான் பட்ட ம் சூட்டும் விழா உருவாகின்றது. இதை கினைத்துப் பார்க்கிருரன். தந்தை சொல்லைத் தட்ட வும் முடியவில்லே அவனுக்கு. அதே வேளே அரச ஞகப் போகின்ருேம் என்று மகிழவும் முடியவில்லை. எனவேதான், அவன் உள்ள நிகழ்ச்சி பற்றிப் - பாவம் - கம்பர் ஒன்றுமே சொல்லவில்லை. வசிட் டர், ! நாளே பட்டாபிடேகம், என்கின்ருர் 3)Trup னிடம். அவன் மகிழ்ந்தான, வெறுத்தான, அன்றி வேறு பேசினணு ? ஒன்றுமே சொல்லவில்லை கம்பர்.

Page 49
86 மணி பல்லவம்
அவனைச் சிந்திக்க விட்டுவிட்டார். பட்டம் " என்ற வசிட்டரே மேலே பல பாடல்களுள் அரசர் எவ்வெவ் வாறு இருக்க வேண்டும் என்று பே சு கி ன் ரு ர்; பேசிப் பிறகு அவன் உளத்தை அறியாமலே அரு கில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றுவிடு கின்ருர் வசிட்டர். இராமன் மனக்கருத்து என்ன என்று கூட எண்ணவில்லை வசிட்டர். ஆகவே, பட்டத்துக்கு முன் இராமனது உடன்பாட்டைப் பெருமலே-அவன் உள்ளப் போராட்டத்தை உண ராமலே-எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றுவிட்டன என்பது தெரிகிறது.
பின்பு இராமன் கைகேயிதன் வாயிலை கண்ணு கின் ருன்; தாயைக் காணும் சேயென விரைகின்ரு ன். அவளும் அது வரை தாயாய் இருந்தாள். நெஞ்சை மரமாக்கி மாற்ற இயலாதபடி கின்ற அவள் கூற் ருய் அவன் முன் தோன்றினுள் பரதன் நாடாள இராமன் காட்டுக்குப் போக வேண்டும் என்கின்ருள். அதைக் கேட்டதுங்தான் அவன் முகம் மலர்கின் றது. தங்தையின் கட்டளே அவன் உள்ளத்தை ஆட்டி அலக்கண் செய்தது. அவன் தந்தை சொல் லுக்கு அஞ்சியே முடி சூடிக்கொள்ள இசைந்தான் என்கின்ருர் கம்பர். அதற்கு முன் தயரதன் பல காரணங்களே முன் காட்டி முடி சூட்டு விழாவினைப் பற்றி இராமனிடம் கூறிய போது விருப்பு வெறுப் புற்று அரசன் பணியாகையால் மறுத்துரைக்க
அஞ்சினன் என்றே கூறுகின்ருர் கம்பர்.
* தாதை அப்பரிசு உரைசெயத் தாமரைக் கண்ணன்
காத லுற்றிலன் இகழ்ந்திலன் கடன் இதென்று உணர்ந்தும் *யாது கொற்றவன் ஏவியது? அதுசெயல் அன்ருே
நீதி யெற்கு!"என நினைந்துதன் பணிதலே நின்றன்."
(மந்திர. 72)

மங்கையர் இருவர் 87
இ ரா ம ன் அப்பட்டத்தை இகழ வேண்டியவன். அதுவே கடமை என்றும் அவன் உணர்ந்திருக் தான். அவன் அதைக் காதலிக்கவில்லை. கடமை என்று உணர்ந்தும் மறுக்கவில்லை. காரணம், அரச ஆணைக்கு அஞ்சியதே. அஞ்சித் தான் இசைந்த தாகவுங் காட்டிக்கொள்ளவில்லை. அரசன் சொற் படி நடக்கட்டும் என்றும் தன் வேலைமேல் சென்று விட்டான் அவன். இதை மேற்கண்ட கம்பர் பாட்டு நன்கு விளக்குகிறது அன்ருே? இந்த அச்சத்தைத் தாயாகிய கைகேயியிடம் கூட அறு கி ன் ரு ன். அக் கூற்றைக் கம்பர் தம் வாக்கிலே காட்டுகின்ருர் : தெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி இருளுடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்டூன், உருளுடைச் சகடம் பூண்ட உடையவன் உய்த்த காரேறு அருளுடை ஒருவன் நீக்க அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான்.
(கைகேயி சூழ். 296) என்பது கம்பர் பாட்டு. இதில் இராமனது விருப்ப மின்மை நன்கு விளங்குகின்றது. கைகேயி உள்ளம் அருள் உள் ள மாக க் காட்சி அளிக்கின்றது. இ ரா ம ன் முடி சூட்டிக்கொள்ள விரும்பவில்லை என்பதற்கு இதனினும் வேறு சான்று வேண் டுமோ? கைகேயி போலவே தான் மேலும் காட்டில் இருந்தால் மக்கள் வழி அமைதி குலேயும் என்று கண்ட இராமன், இன்றே மின்னுெளிர் கானம் போகின்றேன்,' என்று விடையும் கொண்டு புறப் பட்டுவிட்டான்.
பின்பு கோசலையிடத்து நிகழ்ச்சியைக் கூறுங் கால் அவள் வருக்தி வீழ, அ வ ஃள த் தூ க் கி கிறுத்திய இராமன், பரதன் ஆளவும் தான் காடே கவும் செய்த ஏற்பாடே நல்லது என்றும், அன்

Page 50
88 மணி பல்லவம்
றேல், அரசன் பொய்யன் ஆவன் என்றும் காட்டு கின் ருன் இராமன், கோசலை வருந்த இராமன் நாடாள் வானுயின் ம ன் ன ன் கொடுத்த வாக்கை கிறைவேற்ருத பொய்யன் ஆகானே !
* பொய்த்தி றத்தினன் ஆக்குதி யோபுகல்
மெய்த்தி றத்துநம் வேந்தனை? (நகர் நீங். 812) என்று கேட்கின்ருன் இராமன். மேலும் பரதன் அரசாள்வதனல் தந்தையை வாய் ைம யாள ன் ஆக்கினன் என்பதை,
* சிறந்த தம்பி திருவுற எந்தையை
மறந்தும் பொய் இலன் ஆக்கினுன் (நகர் நீங், 314) என்று காட்டுகின்ரு ன். இவ்வாறு எத்தனையோ இடங்களில் இராமன் பரதன் நாடாள்வதே முறை என்பதை வற்புறுத்துகின்றன். அ வ ற் ைற யெல்லாம் காட்டிக்கொண்டே சென்ருல் பேச்சு விரி யும். இறுதியாகப் பரதன் பிறந்ததனல் அயோத்தி அரசு அப்பரதனுக்கே உரிமையாயிற்று என்று கூறுவதைக் கண்டு மேலே செல்லலாம்.
அயோத்தியா காண்டத்து இறுதியில் பரதன் காட்டிடை வந்து இராமனை வேண்டும்போது, தான் அரசாள வர முடியாமைக்குப் பல காரணங்கள் காட்டுகின்றன். அவற்றுள் முக்கியமானது பரதன் பிறந்ததால் அவனே அந்த அயோத்தி அரசுக்கு உரிமை ஆனவன் என்பதே ! மேலும், தன் வாக் கினல் முன்னமே அதைப் பரதனுக்கு உரிமையாக்கி விட்டான் என்றும் கூறுகின்றன்.
* வரனில் உந்தைசொல் மரபி னுல்உடைத்
தரணி நின்னதென்று இயைந்த தன்மையால் உரனில் பிேறந்து உரிமை ஆதலால் அரசு நின்னதே; ஆள்க, என்னவே. (திருவடி. 111)

மங்கையர் இருவர் 89
இவ்வாறு பரதன் பிறந்தமையின் அயோத்தி அரசு அவனுக்கே உரிமையாயிற்று என்பதை வெட்ட வெளிச்சமாக இராமன் வாக்காகவே கம்பர் காட்டி விட்டார். இவற்ரு லெல்லாம் 15 T ம் அறிவ து ஒன்றேதான். அதுதான் தூயளாகிய கைகேயி தன் கணவன் பழி ஏற்காது என்றென்றும் வாய்மை யும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளலாய் வாழ வேண்டும் என்பதற்காக, என்றென்றும் தானே முன்னின்று பழியேற்றுத் தன் வாழ்வையும் வளத்தையும் கொண்ட கணவனேயும் இழந்து, மற்றவரோடு மாறுபட்டு வாழ்ந்தாள் என்பதுதான். அத்தகைய நல்ல வ&ள உலகம் உண்மை உணர்ந் தும் பழிக்குமாயின், அது அறத்தைப் பழிப்பதே யாகுமன்ருே ? தான் பழியேற்றுக் கணவனையும் குடி யையும் மரபையும் காத்த அக்கற்புச் செல்வியின் புகழ் வாழ்க’ என்று வாழ்த்தி மேலே செல்கின் றேன்.
தன் மேல் பழியேற்ற கற்பு நல்லாளைக் கண்ட நாம், தன் பழியினைத் தீர்த்துக்கொண்ட மற்ருெரு செல்வியையும் இராமாயணத்தில் இன்று காணப் போகிருேம். தன் கணவனைக் கொன்றவன் உடன் பிறந்தவனேயாயினும், அவனையும் விடுதலாகாது, பழிதீர்த்தேயாக வேண்டும் என்று உளத்தில் உறுதி பூண்டு, காலமும் இடனும் நோக்கிக் காத்திருந்து, கொண்டதை முடித்துப் பழிதீர்த்த காரிகை யார்? வேறு யாராக இருக்கக் கூடும் ? சூர்ப்பனகைதான். அவள் யாரை எவ்வாறு பழி தீர்த்தாள் ? பார்ப் போம் :
சூர்ப்பணகை இராவணன் உடன் பிறந்தவள். அவளாலேயே இராமயணத்தின் பிற்பகுதி நடந்தது

Page 51
90 மணிபல்லவம்
என்பர். அவள் காட்டில் இராம இலக்குவர்களேக் கண்டு, சீதையைப் பற்றி இராவணனிடம் கூறியிரா விட்டால், இராம இராவண யுத்தமே நேரிட்டிரா தன் ருே ? அவள் ஏன் அப்படிச் செய்தாள் ? இரா வணன் மேல் இருக்கும் அன்பினுலா, அவனிடம் சீதையைச் சேர்க்க கினைத்தாள்? இல்லை. சிலர் கினைப்பது போன்று இராமன் தன்னை மணக்கத் தடையாயிருந்தவள் சீதை ஆதலின், அவளே இரா வணன் மூலம் பிரிக்கக் கங்கணம் கட்டிக்கொண் டாளா? அதுவும் இல்லை. தான் மூக்க அறுபட்டதால் நேர்ந்த அவமானம் தாளாது அவர்கள் மேல் பழி வாங்கும் நோக்கத்தோடு இக்கொடுமை செய்தாளா ? இல்லை. பின்பு ஏன் இந்தக்கொடுமை நினைத்தாள் அவள் ? கம்பர் அதற்குக் காரணம் காட்டுகிருரர். இராவணவன் அவள் உடன் பிறந்தவன்தான் என்ருலும், அறிந்தோ அறியாமலோ அவன் தன் மைத்துனன-சூர்ப்பண கையின் கணவனைக் கொலை செய்துவிட்டான். அவள் கணவனுகிய வித்யுஜ் ஜிஹவன் ’ என்பவனைத் திக்கு விஜய காலத்தில்கால கேயரை வெற்றி கொண்ட காலத்தில்இராவணன் கொன்றுவிட்டான். தன் கணவன் இறந்ததை அறிந் தாள் சூர்ப்பண கை. இர்ா வணன் எவ்வளவோ மன்னிப்புக் கேட்டிருப்பான் அவளிடத்தில். என்ருலும், மனம் அமைதி பெற வில்லை அவளுக்கு. தன் கணவனேக் கொன்று தன் வாழ்வைக்கெடுத்த தமையனை அவன் குலத்தோடு அழிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண் டாள். ஆனல், அது அவ்வளவு எளியதன் அறு. பெண்ணுகிய ஒருத்தியால் என்ன செய்ய முடியும் ? எனவே, அதற்கெனக் காலம் பார்த்திருந்தாள்.

மங்கையர் இருவர் 91
பாரதயுத்தத்திலே உடன் பிறந்தவர் அனைவரையும் இழந்த சகுனி, துரி யோத ன னே க் குடியோடு கொல்லக் காலம் பார்த்திருந்து, பின்பு அவனுடன் அ வ னு க் கு வேண்டியவனுகவே இருந்து, அவ னுக்கு நல்லன போன்று அல்லாதன பலவற்றைச் சொல்லி, பாண்டவரைப் பகைக்க வைத்துப் பாரதப் போரையும் உண்டாக்கி, அனே வரையும் மடியவைத் தான் என்பதை அறிகிருே மன்ருே ? ஆம்! அதே நிலை யி லே தா ன் இங்கும் குர்ப்பண கை காலம் பார்த்திருந்தாள். அவளே இராமாயணச் சகுனி" என்று கூடச்சொல்லலாம். அவள் பார்த்திருந்த காலமும் வந்தது.
இராம இலக்குவர்களைப்பற்றி அவள் நன்கு அறிந்திருந்தாள் ; த ர ட ைகயின் இறப்பு நாளி லிருந்து அவ்வீரர்கள் வில்லாற்றலைக் கேட்டறிந் தாள். அவளோடு வாழ்ந்த மாரீசன் அவர்களேப் பற்றிப் பலவாறு சொல்லியிருப்பான். அவர்கள் காட்டுக்கு வந்ததையும் கேட்டிருப்பாள் அவள். அவர்கள் இராவணனே அழிக்க வல்லவர்கள் என் பதை அறிந்திருந்தாள். எனவே, அவர் க ளே க் கண்டு தன் கருத்தை நிறைவேற்றலாம் எனக் காட் டுக்கு வந்திருப்பாள். அங்கு இராமனைக் கண்டு கருத்தழிந்தாள் என்கின்றனர். அவள் உண்மை யில் அவ்வாறு இராமனே விரும்பினுளா, அன்றி அதை ஒருகாரணமாக வைத்து இருவருக்கும் போர் மூட்ட நினைத்தாளா என்று திட்டமாகச் சொல்ல முடியாது. இவ்வாறு கண் ட வர் மே ல் காதல் கொண்டு கருத்தழியும் ஒரு பெண்ணுகச் சூர்ப்ப னகை இருந்திருப்பாளானல், அவள் தன் இறந்த கணவனைப்பற்றிக் கவலைப்பட்டிருக்கவே மாட்டாள் ;

Page 52
92 மணி பல்லவம்
அவனைக் கொன்ற இராவணன் மேல் பழி தீர்க்கவும் கினேத்திருக்க மாட்டாள். ஒரு வேளே அது வரை கினைத்திருந்தாளாயினும், பிறகாவது அந்த எண் ணத்தை விட்டிருக்க வேண்டும். ஆனல், கடைசி வரையில் அவள் தன் பழி தீர்க்க நினத்த எண் ணத்தை விடவில்லை என்பது தெரிகிறது. எனவே, அவள் இராமன் மேல் காதல் உள்ளது போலக் காட்டியதெல்லாம் வெம்போருக்கு வித்தாகுமே யன்றி வேறன்று.
இவ்வாறு சூர்ப்பணகை இராமனே அணுகுங் கால் அவள் உள்ளம் எப்படி இருந்தது என்பதைக் கம்பர் காட்டுகின் ருர். அவள் கினைத்தது யாது ?
* நீலமா மணிமுடி நிருதர் வேந்தனை
மூலநா சம்பெற முடிக்கும் மொய்ம்பினுள் மே?லநாள் உயிரொடும் பிறந்து தான்விளை காலம்ஒர்ந்து உடன்உறை கடிய நோயனுள்."
(சூர்ப். சூழ், 8) இப்பாட்டில் அவள் கினேவும் செயலும் நன்கு வெளி யாகின்றன. எப்படியும் இராவணனை மூல நாசம் பெறச் செய்யவேண்டுமென்று, அவனெடு பிறந்து வாழ்ந்து காலம் நோக்கி, "உடன் பிறந்தே கொல் லும் வியாதி'யாய் இருந்தாள். ஆம் ! அவள் கருதி யதை முடித்துப் பழி தீர்த்துக்கொண்டதைப் பாரறியுமன் ருே ?
அவள் உள்ள நிலையினைக் கம்பர் அங்கங்கே காட்டிக்கொண்டேதான் செல்லுகின்றர். அவளும் அவள் போன்றவர்களும் இராவணன் பக்கத்தில் இருந்துகொண்டு தாங்கள் கருதியவாறே முடிக்க இருக்கின்ருர்கள் என்ற உண்மையைப் பின்னர் விபீடணன் வாக்கிலேயும், கும்பகர்ணன் வாக்கிலே

மங்கையர் இருவர் 93
யும் கம்பர் வைத்துக்காட்டத் தயங்கவில்லை. அறிவு காட்டி நன்மை தீமைகளே விளக்கி உரைத்து இரா வணனைத் திருத்துவார் இல்லை. உள்ளார் அவனை முடிக்கவே முன்னிற்கின்ருர் என்ற உண்மையைக் கம்பர்,
* கடிக்கும்வல் லரவும் கேட்கும் மந்திரம் களிக்கின் ருேயை அடுக்கும்ஈ தடாதுஎன்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி இடிக்குநர் இல்லை; உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை முடிக்குநர் என்ற போது முடிவன்றி முடிவ துண்டோ!' என்று எடுத்துக் காட்டுகின்றர். இது சூர்ப்பன கை போன்ரு ரைத்தான் குறிக்கிறது என்பதில் வியப் பொன்றும் இல்லையன் ருே P மற்றும், அவள் இரா வணனுடன் சீதையைப் பற்றிப் பேசும்போது இரட் டுற மொழிதலால் தன் கருத்தைப் பிறர் புரிந்து கொள்ளா வண்ணம் பேசு வ தும் உணரத்தக்க தன் ருே ? ? மாகத்தோள் வீரபெற்ருல் எங்ஙனம் வைத்து வாழ்தி ?’ என்று, எப்படி வாழ்வாய் ; வாழாது வீழத்தான் போகின் ருய் !" என்று தன் பழி முடிக்கும் காலத்தையன்றே அவள் குறிக்கின் ருள் ? ? அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கிலை உனக்கே ஐய!” என்ற தொடரிலும், முடிவில் பார்ப்பின் நன்மை அவர்களுக்கு அன்றி, உனக்கு இல்லை. \ உனக்கு முடிவே இஅறுதிதான்,' என்ற உண்மையை அவள் உள்ளம் புலப்படுத்திவிடுவதை அறியாதார் யார்?
இனி அவள் உளத்தின் கொடுமையை-பழி தீர்த்த பான்மையை-விபீடணன் அறிந்து வைத் திருப்பதை உணர்கின்ருேம். இராவணன் இராம னது அம்பு பட்டுப் போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கி ருன், விபீடணன் அவன் மேல் வீழ்ந்து புலம்புகின்

Page 53
94 மணி பல்லவம்
ருன், அவன் வாக்கில் குர்ப்பனகையின் வஞ்சகச் செயல் வெளிப்படுகின்றது. "யாராலும் கொல்ல முடியாத மைத்துனனைக் கொன்ற காரணத்தால், அன்றே உன்னைப் பழிதீர்த்துக்கொள்வதாக உதட் டைக் கடித்துக் காலம் பார்த்திருந்த உன் உடன் பிறந்தவள் பழி தீர்ந்து மகிழ்கின் ருளா ?' என்று கேட்கின்ருன் விபீடணன்,
* கொல்லாத மைத்துன?னக் கொன்ருய்என்
றதுகுறித்துக் கொடுமை சூழ்ந்து பல்லாலே இதழ்அதுக்கும் கொடும்பாவி
நெடும்பாரப் பழிதீர்ந் தாளோ! நல்லாரும் தீயாரும் நரகத்தார்
துறக்கத்தார் நம்பி நம்மோடு எல்லாரும் பகைஞரே ; யார்முகத்தே
விழிக்கின்ருய்? எளியை ஆணுய் !
(இரா. வதை, 227) என்ற கம்பர் பாட்டு இந்த உண்மையை எடுத்துக் காட்டுகின்றதன் ருே !
உண்மை இதுதான். இன்றேல், இராவணன் இறந்த பின் அனே வரும் அழுங்காலத்து அவள் உடன் இருப்பாளே! மண்டோதரி அழுவதைக் கேட்கின்ருேம். மாற்ருரோடு கலந்த விபீடணன் அழுவதையும் கேட்கின்ருேம். மற்றப் பெண்களெல் லாம் அழுது புலம்புகின் ருரர்கள். ஆனல், அவள் பேச்சைக்கூடக் காணுேமே ! தன் அண்ணனுக்காக எவ்வளவு பாடு பட்டதாகக் காட்டிக்கொண்டாள் ! அவன் மறைந்த பின் ஊராருக்காக ஒப்புக்காக வா வது அழ வேண்டாவா இல்லை! அவள் அழவில்லை. அதற்கு நேர் மாரு க, தான் கொண்ட எண்ணம் முற்றுப்பெற்றுவிட்டது என மகிழ்ந்திருப்பாள் ;

மங்கையர் இருவர் 95
பகைவனைக்கொண்டு பழி தீர்த்துக் கொண் ட ம கி ழ்ச் சி யில் எங்காவது தனிமையில் இருங் திருப்பாள். எனவே, அவள் இராமாயணத்தே பழி தீர்த்துக்கொண்ட காரி ைக யாக க் காட்சியளிக் கின்ருள் !
இவ்வாறு இராமாயணத்தில் வரும் இரு பெண் களின் "உன் ைம நிலையை உணர்ந்துகொள்ளாத பலர், இவ்விருவரைப் பற்றியும் பலப்பலவாறு பேசு கின்றனர். ஆழ்ந்து நோக்கின், உண்மை புலனுகும். இன்னும் இது போ ன் அறு பலப்பல சான்றுகள் ஒவ்வொன்றிற்கும் காட்டிக்கொண்டே செல்லலாம். எனினும், கால எல்லைக்குக் கட்டு ப் பட்ட 15ாம் இவ்வளவுடன் அமைய வேண்டுவதே ! ஆகவே, நான் இந்த அளவோடு பழி ஏற்றும் பழி தீர்த்தும் 15மக்கு நல்ல ஒரு காவியத்தை அளித்த இந்த மகளி ரைப் பற்றிக் கூறுவதை நிறுத்திக்கொள்ளுகிறேன்.
வணக்கம் !

Page 54
படித்தவை
வாணநெடுந்தெருவில்
யாழ்ப்பாணத்தில் முதல் நாள்
வாழ்வும் வளமும்
மணிபல்லவம்
மங்கையர் இருவர்
பக்கம்
17
28
43
67


Page 55


Page 56

*
鷺

Page 57