கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் அமைப்பு விதிகள்

Page 1
கொழும்புத்
(வரை
(1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் Eਗ கட்டளைச் சட்ட பதிவு இ (29.11.2000, 19.05.2006, 17.09.20
* உள்ளடக்
அமைப்பு
(பொதுச் சபையின் நிறைவேற்றிய
அங்கீகார
 

தமிழ்ச் சங்கம் யுள்ளது)
திகதி நிறுவப்பெற்று இலங்கை அரசின் த்தின்படி பதிவு செய்யப் பெற்றது) GAji GL. S.73
இேல் ஆகிகரிக்கப்பட்ட திருத்தங்கள் கப்பட்டுள்ளன.)
விதிகள்
மய்ப்பொருள்
LaBahlufd
திருத்தங்களோடு போதுச் சபையின் ம் பெற்றது)

Page 2

கொழும்புத் தமிழ்ச்சிங்கம்
(வரையறுக்கப்பட்டது)
(1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி நிறுவப்பெற்றது) 29.11.2000, 19.05.2006, 17.09.2008இல் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ii.
அமைப்பு விதிகள் பெயரும் அலுவலகமும்
இச் சங்கம் “கொழும்புத் தமிழ்ச் சங்கம் (வரையறுக்கப்பட்டது)” என அழைக்கப்படும். சங்கத்தின் பதிவு பெற்ற அலுவலகம் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்து இருத்தல் வேண்டும். அலுவலகம் இப்பொழுது வெள்ளவத்தையில் கொழும்பு - 06, உருத்திரா மாவத்தை வீதி வழியான 57ஆம் ஒழுங்கையிலுள்ள 7 ஆம் இலக்க சொந்தக் கட்டடத்தில் இருக்கிறது.
நோக்கங்களும் குறிக்கோள்களும்
சங்கத்தின் நோக்கங்களும் குறிக்கோள்களும் பின்வருவனவாதல் வேண்டும்:
தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் என்பனவற்றின் ஆக்கத்துக்காக உழைத்தல்.
தமிழ் மக்களின் அறநிலையங்களைப் பேணிக் காத்தல்.
i. சங்க உறுப்பினர்களின் ஒழுக்க நிலை, கல்வி நிலை
என்பன செம்மையுறுவதற்கேற்ற வாய்ப்புக்களை உண்டாக்குதல்.

Page 3
iv.
V.
கவின் கலைகளின் வளர்ச்சிக்கேற்ற வழிவகைகளைச் செய்தமைத்தல்.
நிகழ்கால சமுதாய மேம்பாட்டு, மாற்ற, எழுச்சி, வளர்ச்சி அசாத்திய சூழல் ஆகியவற்றுக்கேற்ப தமிழர் சமூகத்திற்கு உதவுதல்.
சங்கத்தின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும்
iv.
நிறைவேற்றும் வழிவகைகள்
சங்கத்தின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் நிறைவேற்றும் வழிவகைகள் பின்வருவனவாகும்:
சொற்பொழிவுகள், மாநாடுகள், விழாக்கள், நாடகங்கள் முதலியவற்றை ஒழுங்கு செய்து நடாத்துதல்
தொடர் விரிவுரைகளையும், கருத்தரங்குகளையும் நடாத்துதல்
நூல் நிலையங்கள், வாசிகசாலைகள், கல்லூரிகள், பிற நிலையங்கள் முதலியவற்றைத் தாபித்துப் பேணிவருதல்
நூல்கள், பருவ வெளியீடுகள், உட்பட ஆக்கங்களை வெளியிடுவதற்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்தல்: பிற மொழிகளிலுள்ள சிறந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் : சிறந்த தமிழ் நூல்களைப் பிறமொழிகளில் மொழிபெயர்த்தல், இவற்றை வெளியிடுதல்.
தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் நாகரிகம் என்பன பற்றிய ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல்.

: 3 : vi. தேர்வுகளையும் இலக்கியப் போட்டிகளையும் நடாத்துதல், கல்வியுதவி நிதி, பரிசில்கள், பதக்கங்கள், மற்றும் சான்றிதழ்கள் கொடுத்தல்
vii. பொறுப்பேற்கப்பட்ட அறநிலையங்களைப்
பேணிக்காத்து முகாமை செய்தல்
viii. உறுப்பினர்களின் நலன்கருதி சுற்றாடல் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதலும் சிறந்த சுற்றாடல் சூழலையும் வசதிகளையும் மேம்படுத்தலும்.
ix (அ)பன்முகப்பட்ட தமிழ்ப் பண்பாட்டை மதிக்கும் வண்ணமாகவும் அப்பண்பாட்டின் சகல அம்சங்களிலும் வளர்ச்சி, அபிவிருத்தி, ஒருங்கிணைப்பு என்பவற்றுக்காகவும் அர்ப்பணிப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் ஒன்றாக உழைத்தல்.
(ஆ)தமிழ் மொழியில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தியையும் ஆராய்ச்சியையும் ஊக்குவித்தல்.
(இ)தகவல் பரிமாற்றத்துக்கான மையநிலையமாகக் கொழும்பைக் கொள்ளுவதன் மூலம் தமிழ்மொழியை வளப்படுத்தி அதனைவளர்ப்பதற்காக தமிழ்க் கலாசார நிறுவனங்களுடன் ஒத்துழைத்தலும் ஒருங் கிணைத்தலும்.
х. சங்கத்தின் குறிக்கோள்களை எய்துவதற்கு அவசியமான ஏனைய நடவடிக்கைகளையும் எடுத்தல்.

Page 4
4.
4.
4.
5,
1
2
i
உறுப்பாண்மை
சங்கத்தில் உறுப்பாண்மையாதல்.
தமிழ் மொழியைத் தாயப் மொழியாகக் கொண்டுள்ளோரும் பாடசாலை மாணவர் அல்லாதோரும் பதினெட்டு வயது நிரம்பப் பெற்றறோரும் ஆகிய ஆண் பெண் அனைவரும் சாதி சமய வேறுபாடின்றி இச் சங்கத்தின் உறுப்பினராகலாம்.
ஆளொருவரின் விண்ணப்பம் ஆட்சிக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் அதற்குரிய உறுப்பாண்மைப் பணத்தை செலுத்திய நாளிலிருந்து அவர் பின்னகத்து 5. ைஇல் குறிப்பிட்டவாறு எத்தகைய உறுப்பாண்மைக்குப் பணம் செலுத்தினாரோ அத்தகைய உறுப்பாண்மையைப் பெற்றவராகக் கருதப்படுவார்.
உறுப்பாண்மை வகைகள்
கெளரவ உறுப்பினர், ஆயுள் உறுப்பினர், சாதாரண உறுப்பினர் எனச்சங்க உறுப்பினர் மூவகைப்படுவர்.
i. தமிழ் மொழிக்குப் பெருந்தொண்டாற்றியவர்களும்
சங்கத்தின் வளர்ச்சிக்கும் ஆக்கத்துக்கும் ஒப்பற்ற பெரும் பணி புரிந்தவர்களும் மாத்திரமே கெளரவ உறுப்பினராகத் தெரிவு செய்யப்படலாம். கெளரவ உறுப்பினர், நிறைவேற்றுக் குழுவின் தீர்மானத்தின்படி சங்கத்தின் பொதுக் கூட்டத்திலே வாழ்காலத்துக்குத் தெரிவு செய்யப்பெறுவர். சமகாலக் கெளரவ உறுப்பினர்களின் தொகை பதினைந்துக்கு (15) மேற்படாதிருக்கும் வண்ணம் அத்தகைய தெரிவு செய்யப்பட வேண்டும்.

i. சாதாரண உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினராக வருவதற்குத் தகுதியுடையவரான எவரேனும் ஆள் ஆயுள் உறுப்பாண்மைப் பணமாக ரூபா 3000/= கொண்ட தொகையைப் பூரணமாகச் செலுத்தி ஆயுள் உறுப்பினராக 6)!Մ(Մ)tԳպլք.
iv ஆண்டுதோறும் ரூபா 300/= கொண்ட தொகையை உறுப்பாண்மைப் பணமாகக் கொடுப்போர், சாதாரண * உறுப்பினராக வரமுடியும்.
V. ஆளொருவர் ஆயுள் உறுப்பினராகவோ சாதாரண உறுப்பினராகவோ சேர்த்துக் கொள்ளப்பட்டதும் அவ்வாறு சேர்த்துக் கொள்ளப்பட்டதற்கு உடனடுத்து வரும் நடப்பாண்டின் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அவரது வாக்களிக் கும் உரிமைகளையும் உறுப்பாண்மைக்குரிய ஏனைய உரிமைகளையும் பிரயோகிப்பதற்கு உரித்துடையவராவர். வாக்களிக்கும் உரிமை கொண்டிராத கெளரவ உறுப்பினர்கள் அவர்கள் தெரிவு செய்யப்பட்ட திகதியில் இருந்து வாக்களிக்கும் உரிமை தவிர்ந்த உறுப்புரிமைக்குரிய ஏனைய எல்லா உரிமைகளையும் கொண்டிருப்பர் எனினும் அவர்கள் காப்பாளர், துணைக்காப்பாளர் பதவிகளுக்கு மட்டும் தெரிவு செய்யப்படலாம். வேறு எந்தப் பதவிகளுக்கும் தெரிவு செய்யப்படுவதற்கு உரித்துடையவர்களாகார்.
wi. ஏற்கனவே சாதாரண உறுப்பினராக இருப்பவர்களும் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களும் மார்ச் மாதத்திற்குள் நாட்காட்டி ஆண்டிற்குரிய உறுப்பாண்மைப் பணத்தை செலுத்தியிருத்தல் வேண்டும். அவ்வாறு அவ் ஆண்டிற்குரிய உறுப்பாண்மைப் பணத்தை மார்ச் 31ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ செலுத்தியிருப்பின் 31 மார்ச்சில் இருந்தவாறான ஆயுள்

Page 5
: 6 :
மற்றும் சாதாரண உறுப்பினர்கள் அனைவரதும் தேர்தல்
இடாப்பொன்றை உறுப்புரிமைச் செயலாளர் தயாரித்து
அத்தாட்சிப்படுத்தி ஏப்பிரல் 30 ஆம் திகதிக்கு முன்னதாக
அதனை நிறைவேற்றுக் குழுவுக்கு சமர்ப்பித்தல்
வேண்டும். தலைவரினாலும் அல்லது செயலாளரினாலும்,
பொருளாளரினாலும் அது அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்.
இவர்களில் யாராயினும் ஒருவர் அத்தாட்சிப்படுத்த மறுத்தால், அத்தகைய மறுப்பு நிறைவேற்றுக் குழுவுக்கு
அதன் முடிவுக்கென அறிக்கையிடப்படுதல் வேண்டும்.
நிறைவேற்றுக் குழுவின் முடிவு இறுதியானதும்
முடிவானதுமாகும். உறுப்பினர் எவரும் பொதுச்
செயலாளருக்கோ அலி லது உறுப் புரிமைச்
செயலாளருக்கோ எழுத்திலான வேண்டுகோள் ஒன்றைச்
செய்வதன் மூலம் ஒவ்வோராண்டிலும் மே 1ஆம் திகதியில்
இருந்து 15 ஆம் திகதிக்கிடையிலான வேலை நாட்களில்
முற்பகல் 10 மணிக்கும் மதியம் 12 மணிக்குமிடையில் உறுப்பாண்மை இடாப்பைப் பார்வையிடுவதற்கு உரிமை உடையவராவார்.
i. ஓராண்டில் மார்ச் 31 ஆம் திகதியன்றுள்ளவாறாக அத்தகைய தேர்தல் இடாப்பில் அவர்களது பெயர்கள் தோன்றுகின்ற உறுப்பினர்கள் மாத்திரமே அவ்வாண்டில் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்ட த தரி லுமி அல்லது உடனடுத்து வரும் ஆண்டில் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் நடைபெறும் ஏதேனும் விசேட பொதுக் கூட்டத்திலும் சமுகமளித்து வாக்களிப்பதற்கு உரித்துடையவர்களாவர்.
i. ஓராண்டில் மார்ச் 31 ஆம் திகதியன்றுள்ளவாறாக தேர்தல் இடாப்பில் அவரது பெயர் காணப்படாத ஆள் எவரும், இதனகத்து அடங்கியுள்ள வேறு எவையேனும் ஏற்பாடுகள்

: 7 : எப்படியிருப்பினும், அவ்வாண்டில் ஏதேனும் பதவிக்கோ
நிறைவேற்றுக் குழுவுக் கோ பெயர் குறித் து நியமிக்கப்படுதலோ தெரிவு செய்யப்படுதலோ ஆகாது.
உறுப்பாண்மைக்கான விண்ணப்பம்
6. உறுப்பாண்மைக்கான விண்ணப்பம் விதித்துரைக்கப்பட்ட படிவத்தில் பொதுச் செயலாளருக்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். அத்தகைய விண்ணப்பம் தேர்தல் இடாப்பில் அவர்களது பெயர்கள் காணப்படுகின்ற, சங்கத்தின் ஆகக் குறைந்தது இரு உறுப்பினர்களினால் விதந்துரைக்கப்படுதல் வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக் கொண்டமை பற்றி விண்ணப்பகாரருக்கு அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள்ளாக உறுப்பாண்மைப் பணம் செலுத்தப்படுதல் வேண்டும்.
பெற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் யாவும் 7ஆம் பிரிவுக்கு அமைவாக உறுப்பாண்மைச் செயலாளரினால் பொதுச் செயலாளருக்கூடாக நிறைவேற்றுக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
ஆயுள் அல்லது சாதாரண உறுப்பினர் தெரிவு
7. i ஆயுள் அல்லது சாதாரண உறுப்பாண்மைக்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும் பொதுச் செயலாளரினால் உறுப்பாண்மைக் குழுவுக்கு அதன் விதப்புரைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு அந்த விதப்புரையுடன் சேர்த்து நிறைவேற்றுக் குழுவின் கூட்டத்தில் பரிசீலித்து முடிவெடுப்பதற்கென, அதனைப் பெற்ற திகதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் சமர்ப் பிக் கப்படல வேணி டும் . நிறைவேற்றுக்குழு எந்த ஒரு விண்ணப்பத்தையும் தக்க நியாயங்களுக்காக ஏற்கமறுக் கும் உரிமை கொண்டதாகும். எவ்வாறாயினும்

Page 6
(அ) விண்ணப்பகாரர் 12 ஆம் பிரிவின் நியதிகளின்படி இடைநிறுத்தஞ் செய்யப்பட்டவராக அல்லது 12 ஆம் பிரிவினர் நியதிகளினி படி முற் றாகவே உறுப்பாண்மையிலிருந்து நீக்கப்பட்டவராக இருந்தால்
(ஆ) விண்ணப்பகாரரின் நடத்தை சங்கத்தின் நலனுக்குத் தீங்கு ஏற்படுத்துமெனக் கருதப்பட்டால் அல்லது எந்நேரத்திலும் சங்கத்தின் மதிப்பைக் குறைப்பதாகக் கருதப்பட்டால்,
(இ) விண்ணப்பகாரர் தகுதி வாய்ந்த நீதிமன்றத்தின் கட்டளை ஒன்றின்மூலம் வங்குறோத்தானவரென அல்லது கடனிறுக்க வகையற்றவரென அல்லது சித்தசுவாதீனமற்ற ஆள் ஒருவரென வெளிப்படுத்தப் பட்டால்
(ஈ) குற்றவியல் குற்றமொன்றுக்கு தகுதி வாய்ந்த நீதிமன்றம் ஒன்றினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டால் அவரது விண்ணப்பத்தை ஏற்க மறுத்தல் வேண்டும்.
நிறைவேற்றுக் குழுவினால் விண்ணப்பம் மறுக்கப்பட்ட எவரேனும் ஆள் நிறைவேற்றுக் குழுவினால் மீளக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படுவதற்கென பொதுச் செயலாளருக்கூடாக நிறைவேற்றுக் குழுவுக்கு எழுத்தில் மேன்முறையீடு செய்யும் உரிமை கொண்டவராக இருப்பார். அத்தகைய சந்தர்ப்பத்தில் பொதுச் செயலாளர் நிறைவேற்றுக் குழுவின் அடுத்த கூட்டத்தில் மீளக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படுவதற்கென அவ்விடயத்தை முன்வைப்பார். மீளக் கருத்தில் கொண்டு எடுக்கும் போது நிறைவேற்றுக் குழுவின் முடிவு இறுதியானதும் முடிவானதுமாகும்.

10.
10. i
i. நிறைவேற்றுக் குழுவின் முதல் முடிவையும் மீளக்
கருத்தில்கொண்டு எடுத்ததன் பின்னரான முடிவு ஏதேனும் இருப் பின் அதனையும் பொதுச் செயலாளர்
விண்ணப்பதாரருக்குத் தாமதமின்றி அறிவித்தல் வேண்டும்.
விதிகளுக்கமைந்தொழுகுதல்
காலத்திற்குக் காலம் திருத்தப்படும் சங்கத்தின் இவ்விதிகளுக்கும் 21ஆம் பிரிவின் (Vi) ஆம் உட்பிரிவின் கீழாக்கப்படும் துணை விதிகளுக்கும் அமைய உறுப்பினர்கள் அனைவரும் அமைந்து நடத்தல் வேண்டும்.
உறுப்பாண்மைப்பணம் செலுத்தாமைக்கான தண்டம்
நாட்காட்டி ஆண்டின் மார்ச் மாதம் 31 ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ தமது உறுப்பாண்மைப் பணத்தைச் செலுத்தத் தவறும் சாதாரண உறுப்பினர் எவரும் அதைத் தொடர்ந்து வரும் ஏப்பிரல் முதலாம் திகதியில் இருந்து உறுப்பாண்மைக்கான சகல உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் இழந்துவிடுவார்.
இதனகத்து அமைப்பு விதிகளில் எவ்விடத்திலேனும் ஒப்பப்பணம் என வருமிடத் து அச் சொலி
உறுப்பாண்மைப் பணமென வாசிக்கப்படுதல் வேண்டும்.
உறுப்பாண்மையை மீண்டும் பெறுதல்
தமது உறுப்பாண்மைப்பணத்தைக் கொடுக்காமையினால்
உறுப்பாண்மையை இழந்தவர்கள் தாங்கள் கொடுக்க வேண்டிய உறுப்பாண்மைப்பண நிலுவைகளையும்

Page 7
10,
12.
ii
iv.
: 10 :
நிகழ்காலத்துக்குரிய உறுப்பாண்மைப் பணத்தையும் கொடுத்து மீண்டும் உறுப்பாண்மை பெறுவதற்கு உரித்துடையவராவார்.
இவ்வாறு கொடுக்கப்பட்ட பணத்தைப் பற்றி அடுத்துவரும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் பொருளாளர் அறிவித்தல் வேண்டும்.
உறுப்பாண்மையை இடைநிறுத்தல் அல்லது நீக்குதல்
. எவரேனும் உறுப்பினரின் நடத்தை சங்கத்தின் நலத்துக்குத்
தீங்கு விளைவிப்பதாகவோ சங்கத்தின் மதிப்பைக் குறைப்பதாகவோ கருதப்பட்டால் அவ்வுறுப்பினரின் உறுப்பாண்மையை குறித்த ஒரு கால எல்லைவரை இடைநிறுத்தி வைக்கச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவுக்கு அதிகாரமுண்டு.
உறுப்பினர் ஒருவர் தகுதி வாய்ந்த நீதிமன்றத்தின் கட்டளை மூலம் வங்குறோத்தானவரென அல்லது கடனிறுக்க வகையற்றவரென அல்லது சித் தசுவா தீனமற்ற ஆளொருவரென வெளிப்படுத்தப்பட்டால், அவ்வுறுப்பினர் நிறைவேற்றுக் குழுவினால் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கு உறுப்பாணிமையிலிருந்து இடைநிறுத்தப்படலாம்.
இடைநிறுத்தப்பட்ட உறுப் பினர் பொதுச் செயலாளருக்கூடாக பொதுக்கூட்டத்துக்கு மேன்முறையீடு செய்யும் உரிமையைக் கொண்டிருப்பார். பொதுக் கூட்டத்தின் முடிவு இறுதியானதும் முடிவானதுமாக இருக்கும்.
(1) ஆம் இலக்கம் (ii) ஆம் உட்பிரிவிற் கூறப்பட்ட காரணங்களுக்காக முறைப் படி அறிவித்தல்

3.
14,
: :
கொடுக்கப்பட்டதும் பொதுக் கூட்டத்திற்கு சமுகமளித்து வாக்களிக்கும் உறுப்பினரின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப் பட்டதுமான தீர்மானத்தினால் உறுப்பினர் ஒருவரின் உறுப்பாண்மை நீக்கப்படலாம்.
உறுப்பாண்மைப்பணம் முதலியவற்றில் உரிமைகோரல்
சங்கத்துக்கு முற்பண்மாகக் கொடுக்கப் பெற்ற உறுப்பாண்மைப்பணத்திலோ, பணக்கொடையிலோ, பிற நன்கொடைகளிலோ உரிமை கோருவதற்கு எவருக்கும் உரிமையில்லை.
வாக்களித்தல்
கெளரவ உறுப்பினர்களுக்குச் சங்கக் கூட்டங்களில் வாக்களிக்கும் உரிமை இல்லை.
சங்கத்தின் அலுவற் கூட்டங்களுக்குச் சமுகமளிக்கும் ஒவ்வொரு ஆயுள் உறுப்பினருக்கும் ஒவ்வொரு சாதாரண உறுப்பினருக்கும் ஒரு வாக்குக்கு உரிமையுண்டு. எனினும் அவரது பெயர் பஞ்சாங்க ஆண்டின் மார்ச் மாதம் 31ஆம் திகதியன்றுள்ளவாறாகத் தயாரிக்கப்பட்ட தேர்தல் இடாப்பில் காணப்பட வேண்டும். இக்கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் தலைமை தாங்குபவருக்கு அவருக்குரிய வாக்குடன் அறுதியிடும் வாக்கு ஒன்றும் உண்டு.
பதிலிமூலம் உறுப்பினரெவரும் வாக்களிக்க முடியாது.

Page 8
: 2:
முகாமை
15. i. சங்கத்தின் அலுவல்கள் பின்வருவோரைக் கொண்ட நிறைவேற்றுக் குழுவொன்றினால் நிருவகிக்கப்படும். இதனகத்தின் பின்னர் சில வேளைகளில் இக்குழு “ஆட்சிக்குழு’ எனவும் குறிப்பிடப்படும்.
தலைவர் ஆறு துணைத் தலைவர்கள் பொதுச் செயலாளர் நிதிச் செயலாளர் துணைச் செயலாளர் துணை நிதிச் செயலாளர் உறுப்பாண்மைச் செயலாளர் நிலைய அமைப்புச் செயலாளர் கல்விப் பணிச் செயலாளர் நூலகச் செயலாளர் இலக்கியப் பணிச் செயலாளர் 23 குழு உறுப்பினர்கள்
9
6.
மேற்குறித்த குழு உறுப்பினர்களில் 20 பேர் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படுவர். மீதி 03 பேர் அந்த ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படும் தலைவரினால் முன்மொழியப்பட்டு ஆட்சிக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
i. நிறைவேற்றுக் குழுவின் பதவி தாங்குநர்களும் ஏனைய உறுப்பினர்களும் 18 ஆம் பிரிவுகளுக்கு அமைவாக ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு 16 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைவாக அடுத்தாணர் டு பொதுக் கூட்டம் முடிவடையும் வரை பதவி வகித்தல் வேண்டும்.

16.
(M)
13 : பதவியிலிருந்தோ நிறைவேற்றுக் குழுவின் உறுப்பாண்மையிலிருந்தோ நீக்குதல்
பதவிதாங்குநர் எவரேனும் அல்லது நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எவரேனும் பொதுக் கூட்டத்தில் அல்லது விசேட பொதுக்கூட்டத்தின் தீர்மானத்தால் அவரது பதவியிலிருந்து நீக்கப்படலாம். அப்படி நீக்கப்படும் போது பின் வரும் ஏற்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும்.
அவ்வாறு நீக்கப்படும் பதவிதாங்குநருக்கு அல்லது நிறைவேற்றுக் குழு உறுப்பினருக்கு அவர்தம் நிலைமையை விளக்கிப் பேசுவதற்குச் சந்தர்ப்பமளித்தல் வேண்டும்.
அப் பொதுக் கூட்டத்திற்குச் சமுகமளித்து வாக்களிக்கும் உறுப்பினரில் 2/3 பங்கினர் அத்தீர்மானத்துக்குச் சார்பாக வாக்களித் தாலி மட்டுமே அவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம்.
பதவியிலிருந்து நீக்கஞ் செய்யப்படவிருக்கும் எவ்வுறுப்பினருக்கும் அப்பிரேரணை முடிவுபற்றி இருவார காலத்திற்குள் அறிவித்தல் கொடுக்க வேண்டும். அவ்வாறு ஏற்படும் வெற்றிடம் எதுவும் 20ஆம் பிரிவின் நியதிகளின்படி நிரப்பப்படலாம்.
தலைவரைத் தவிர்ந்த ஏனைய பதவிதாங்குநர் அல்லது ஆட்சிக்குழு உறுப்பினர் எவரேனும் முன் அனுமதியின்றி தொடர்ச்சியாக மூன்று ஆட்சிக்குழுக் கூட்டங்களுக்குச் சமுகமளிக்காவிடின், ஆட்சிக்குழு அவரைத் தீர்மானமொன்றால் ஆட்சிக்குழுவினின்று நீக்கலாம். இவ்வாறு செய்வதற்கு, அத்தீர்மானங் கொண்டுவரப்படும் ஆட்சிக்குழுக் கூட்டத்திற்குச்

Page 9
iv.
: 14 : சமுகமளித்து வாக்களிப்போரில் 2/3 பங்கினர் அத் தீர்மானத்துக்குச் சார்பாக வாக்களித்தலும், அவ்வாறு நீக்கப்படப் போகிறவருக்கு அத்தீர்மானத்தைப் பற்றிய எழுத்திலான அறிவித்தல் இரண்டு கிழமைக்கு முன் கொடுக்கப்படுதலும் வேண்டும். இவ்வாறு ஏற்படும் வெற்றிடம் 20ஆம் விதிப்படி நிரப்பப்படும்.
16(1) ஆம் உட்பிரிவின் கீழ் நிறைவேற்றப்படவுள்ள
ஏதேனும் தீர்மானம் 14 ஆம் பிரிவின் கீழ் வாக்களிப்பதற்கு உரித்துடைய ஆகக் குறைந்தது 50 உறுப்பினர்களினால் பிரேரிக்கப்பட வேண்டும் அல்லது (ii)ஆம் உட் பிரிவினர் கரீழ் நிறைவேற்றப்படவுள்ள ஏதேனும் தீர்மானம்
ஆட்சிக்குழுவின் ஆகக் குறைந்தது பதின்நான்கு
உறுப்பினர்களினால் பிரேரிக்கப்படுதல் வேண்டும். இதுபற்றிப் பொதுச் செயலாளருக்கு எழுத்திலான அறிவித்தல் கொடுக்கப்பட வேண்டும். இவ்விடயம் பற்றி அடுத்துக் கூட்டப்படும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும். அத்தகைய தீர்மானம் பொதுச் செயலாளருக்கு எதிராக இருக்குமானால், அது தலைவரிடம் கொடுக்கப்பட வேண்டும். தீர்மானம் பெறப்பட்டதும் பொதுச்செயலாளர் அல்லது தலைவர் கூட்டத்தைக் கூட்டுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்குறித்த அடிப்படையில் ஒருவர் பதவியில் இருந்து அல்லது உறுப்பாண்மையில் இருந்து நீக்கப்படும் பட்சத்தில் தமது உறுப்பாண்மையை இழப்பதோடு தமது பதவியையும் இழந்துவிடுவார்.

17,
18.
i
(e)
(ஆ)
(3)
(FE)
: 15 :
காப்பாளர்களும் துணைக்காப்பாளர்களும்
கெளரவ அல்லது ஆயுள் உறுப்பினர் சங்கத்தின் காப்பாளராகத் தெரிவு செய்யப்படலாம். ஐந்துக்கு மேற்படாத கெளரவ அல்லது ஆயுள் உறுப்பினர்கள் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சங்கத்தின் துணைக் காப்பாளர்களாகத் தெரிவு செய்யப்படலாம். காப்பாளராக அல்லது துணைக்காப்பாளராகத் தெரிவு செய்யப்பட்ட ஆள் ஒருவர் 3 ஆண்டுகள் கொண்ட காலப் பகுதிக்குப் பதவி வகிக்கலாம். எனினும், அத்தகைய ஆள்;
ஓராண்டுக்கும் மேலாகச் சுகவீனமுற்றிருந்தால் ஓராண்டுக்கு மேலாக வெளிநாட்டில் வசித்தால் எழுத்து மூலம் பதவியைத் துறந்தால் சங்கத்தின் நோக்கங்களுக்கும் கெளரவத்துக்கும் முரணான முறையில் நடந்துகொண்ட காரணத்தினால் சமுகமாயிருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டுக்குக் குறையாத பெரும்பான்மை யினரால் பொதுக் கூட்டத்தில் ஆட்சிக்குழுவின் சிபார்சின் கீழ் பதவியிலிருந்து அகற்றப்பட்டால், அவர் பதவிவகிக்காதொழிவார்.
காப்பாளராக அல்லது துணைக்காப்பாளராகத் தெரிவு செய்யப்படும் ஆள் சங்கத்தின் கெளரவத்திற்கும் வளர்ச்சிக்கும் எல்லா வழிகளிலும் சங்கத்துக்குப் பெருந்துணை செய்யத்தக்கவராகவும் இருத்தல் வேண்டும்.
ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவு
இளைப்பாறும் ஆட்சிக் குழுவின் பின்வரும்

Page 10
: 16 :
பதவிகளுக்கு அடுத்த ஆண்டு பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படுவதற்குப் பொருத்தமான தகுதியுடைய உறுப்பினர்களை ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கு ஐந்து (5) வாரங்களுக்கு முன்பெயர் குறித்து நியமித்து ஆண்டுப் பொதுக் கூட்ட அறிவித்தல் மூலம் அங்கத்தவர்களுக்கு அறிவித்தல் வேண்டும்.
தலைவர் ஆறு (06) துணைத்தலைவர்கள் பொதுச் செயலாளர் நிதிச் செயலாளர் துணைச் செயலாளர் துணை நிதிச் செயலாளர்
ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கு நேர் முந்திய இருபத்துநான்கு(24) மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதிக்குத் தொடர்ச்சியாக பிரிவு 15 (), (அ), (o), (9), (FF), (2-), (26u), (61), (6), (38), (69), (ஓ) இல் குறிப்பிட்ட பதவிகளுள் ஏதேனும் ஒன்றை வகித்துள்ள எவரும் இதனகத்து அடங்கியுள்ள வேறு எவையேனும் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும் அதே பதவிக்கு இளைப்பாறும் ஆட்சிக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படுதலோ அல்லது அத்தகைய ஒருவர் அதே பதவிக்கு போட்டியிடுதலோ முடியாது. ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கு நேர் முந்திய இருபத்துநான்கு (24) மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதிக்கு அதே பதவியை வகித்திராத வேறு எவரேனும் உறுப்பினர் பெயர், நியமன மூலம் பெயர் குறித்து நியமிக்கப்படலாம். ஆண்டுப் பொதுக்
கூட்டத்தில் சமுகமாயிருந்து வாக்களிப்பதற்கு உரித்துடைய (பிரேரிப்பவர், வழிமொழிபவர் உட்பட)

: 7 :
2 பேருக்குக் குறையாதோரின் கையொப்பங்கள் மூலம் ஆண்டுப் பொதுக் கூட்டத்துக்கு 14 நாட்கள் முன்னர் அதன் பிரதியொன்று தலைவருக்கும் மற்றொரு பிரதி பொதுச் செயலாளருக்கும் ஒப்படைக்கப்படல் வேண்டும். பெயர் நியமனமானது பிரேரிக்கப்பட்ட அபேட்சகரின் சம்மதத்துக்கான கையொப்பத்தையும் அவர் சங்கத்தின் ஆயுள் உறுப்பினர் அல்லது சாதாரண உறுப் பினர் என்பதற்கான உறுதியுரையையும் கொண்டிருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டவாறாக பெயர் நியமனமொன்று பெறப்பட்டாலொழிய, இளைப்பாறும் ஆட்சிக் குழுவினால் (i) ஆம் உட்பிரிவின் கீழ் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட ஆட்கள் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அந்தப் பதவிகளுக்கு நியமிக்கப் பட்டவர்களாகக் கருதப்படல் வேண்டும்.
மேல் ைை ஆம் உட்பிரிவின் கீழான பெயர் நியமனத்தின் விடயத்தில், ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தேர்தலுக்குத் தலைமை தாங்கும் தலைவரினால் தீர்மானிக்கப்படும் முறையில் வாக்களிப்பதன் மூலம் ஆள் ஒருவர் தெரிவு செய்யப்படுதல் வேண்டும். மேற்படி விடயம் தொடர்பாக (வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான முடிவு உட்பட) அத் தலைவர் செய்யும் முடிவும் தீர்மானமும் முற்றானதும் முடிவானதுமாதல் வேண்டும்.
மேலே உள்ள ஏற்பாடுகளின்படி செல்லுபடியுள்ள பெயர் நியமனம் எதுவும் செய்யப்படவில்லையாயின், ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அபேட்சகர்கள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்படலாம். தலைவர் முடிவு செய்யும் விதமாகத் தேர்தலும் நடத்தப்படலாம்.

Page 11
: 18 :
ஆட்சிக்குழுவின் சிபாரிசுகளை ஆட்சேபித்து எவரேனும் அக் கூட்டத்தில் தெரிவித்து பதியப்பட்டால் ஒழிய எந்த சங்கப் பதவிகளுக்கும் போட்டியிடவோ அல்லது வேறொருவரை முன்மொழியவோ அல்லது வழிமொழியவோ முடியாது. மேற்கூறிய தீர்மானத்தை எடுக்கும் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் பங்குபற்றாத ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும்.
சங்க உறுப்பினர் ஒருவர் இரு பதவிகளுக்கு மேல் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி உட்பட போட்டியிட முடியாது. பொதுக் கூட்டத்திற்கு ஒரு வார காலத்திற்கு முன் ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்களுக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வாக்களிப்பதற்குத் தகுதியுடையவர்கள் தமது தேசிய அடையாள அட்டையை தேர்தல் அதிகாரிகள் கேட்கும் பட்சத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்வருவோர் நிறைவேற்றுக்குழுவின் எந்தப் பதவிக்கும் அல்லது உறுப்பாண்மைக்கும் பெயர் குறித்து நியமிக் கப்படுவதற்கோ தெரிவு செய்யப்படுவதற்கோ தகைமையற்றவராவர்.
(அ) ஏதேனும் ஒப்பந்தத்தின் கீழ் அல்லது எத்தன்மையான வேறு எம்முறையிலேனும் பணவகையிலான ஏதேனும் நன்மையைச் சங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்ளுகின்ற ஆள் எவரும் அல்லது சங்கத்தின் ஆதனங்களுள் எதனையும் அனுபவிக்கின்ற அல்லது ஏதேனும் அத்தகைய ஒப்பந்தத் தை அலி லது உடன்படிக்கையைச் செய்து கொண்டுள்ளவரான

(ஆ)
(@)
(RF)
( )
19
ஆள் எவரும் அல்லது அத்தகைய எவரேனும் ஆளினால் தொழிலுக்கமர்த்தப்படுகின்ற எவரேனும் ஆள் ஒருவர்.
சங்கத்துக்குப் பணம் கொடுக்க வேண்டிய ஓர் உறுப்பினர்
சங்கத்தினால் அல்லது சங்கத்தின் சார்பில் அவரது நடத்தை புலனாய்வு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற உறுப்பினர் ஒருவர்
சங்கத்துடனான அத்தகைய உறுப்பினரின் கொடுக்கல் வாங்கல் எவையேனும் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முடிவுறாதிருக்கின்ற உறுப்பினர் ஒருவர்
சங்கத்தின் கெளரவத்துக்கு முரணாக நடந்தவர் அல்லது அவரைக் குறிப்பிட்ட பதவிக்கு தெரிவு செய்வது சங்கத்தின் கெளரவத்துக்கு முரணானது எனப் பெரும்பான்மையினர் தீர்மானிக்கும் பட்சத்தில்
ஏற்கனவே தமிழ்ச் சங்கத்தில் பதவி வகித்து பதவியைத் துஷபிரயோகம் செய்தவர்களும் அரசாங்க மற்றும் வேறு ஏதேனும் ஸ்தாபனங்களில் ஒழுக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுப் பதவி நீக்கப்பட்ட உறுப்பினர்களும் ஆட்சிக்குழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்படத் தகுதியற்றவர்கள் ஆவர்.
ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதிக்கு சங்கத்தின் உறுப்பினராக (ஒன்றில் ஆயுள்

Page 12
9.
: 20
உறுப்பினராக அல்லது சாதாரண உறுப்பினராக) இருந்துள்ளவரான ஆள் ஒருவர் மாத்திரம் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் பதவிக்குப் பெயர் குறித்து நியமிக்கப்படுவதற்கு அல்லது தெரிவு செய்யப்படுவதற்குத் தகுதியுடையவராவர். நிறைவேற்றுக்குழு உறுப்பினராக அல்லது வேறு ஏதாவது பதவிக்கு (தலைவர், பொதுச் செயலாளர் தவிர்ந்த) இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதிக்கு சங்கத்தின் உறுப்பினராக (ஆயுள் உறுப்பினராக அல்லது சாதாரண உறுப்பினராக) தொடர்ந்து இருந்துள்ளவரான ஆள் ஒருவர் மாத்திரம் பெயர் குறித்து நியமிக் கப்படுவதற்குத் தகுதியுடையவராவர்.
கணக்காய்வாளர்
ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அடுத்த ஆண்டுப் பொதுக் கூட்டம் வரை பதவி வகிப்பதற்காகச் சங்கக் கட்டளைச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் நியமனம் பெற்ற பகிரங்கக் கணக்காய்வாளராகவுள்ள ஒருவர் கணக்காளராகத் தெரிவு பெறுவார். கணக்காய்வாளர் பதவி ஆண்டுப் பொதுக் கூட்டத்துக்கு முன்னதாக வெற்றாகினால், அடுத்த ஆண்டுப் பொதுக் கூட்டம் வரை பதவி வகிப்பதற்காகக் கணக்காய்வாளர் ஒருவரைத் தெரிவு செய்து நியமிக்கும் உரிமை நிறைவேற்றுக் குழுவுக்கு உண்டு.
சங்கத்தின் உறுப்பினர் இருவர் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கெளரவ கணக்காய்வாளராகத் தெரிவு செய்யப் பெறுவர். கெளரவ கணக்காய்வாளர் பதவிகளுள் ஏதாவது வெறுமையெய்தினால் நிறைவேற்றுக்குழுவிலேயே அது நிரப்பப் பெறும்.

20.
21.
: 21 :
நிறைவேற்றுக் குழுவின் வெற்றிடங்களை நிரப்புதல்
ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக நிறைவேற்றுக் குழுவில் பதவிகள் வெற்றாகினால் அவற்றை நிரப்புவதற்கு நிறைவேற்றுக் குழுவுக்கு உரிமையுண்டு.
நிறைவேற்றுக் குழுவின் கடமைகள்
நிறைவேற்றுக்குழுவின் கடமைகள் பின்வருவனவாகும்.
l
சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு வேண்டிய பணத்தையும் பொருட்களையும் சேகரித்தல்:
சங்கத்தின் வளர்ச்சிக்குரிய பணிகளை மேற்கொண்டு நடாத்துதல்
சங்கத்தின் ஆதனத்தைப் பேணிக்காத்து நிருவகித்தல்.
சங்கப் பணத்திலிருந்து தேவையான தொகையைச்
செலவு செய்ய இசைவளித்தல்.
கல்லூரிகள், மாணவரில்லங்கள் முதலியன நிறுவுதல், நூல்கள், மலர்கள், முதலியன வெளியிடுதல், ஆராய்ச்சிக் கழகங்கள் அமைத்தல். வகுப்புக்கள், சொற்பொழிவுகள் நடைபெறச் செய்தல்
சங்கத்தின் பணிகளைக் கொண்டு நடாத்துவதற்குத் தேவையான பணியாளர்களை நியமித்தல்,
தேவைப்பட்டால் விலக்குதல், தண்டித்தல் முதலியன்
சங்கத்தின் விதிகளுக்கு முரண்படாத வகையில்

Page 13
22.
(}9ع)
: 22 : துணைவிதிகளை ஆக்குதல். இத்துணை விதிகளை அடுத்துவரும் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பித்தல் வேண்டும். இத்துணை விதிகள் அடுத்த ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்படும் வரையும் அங்கீகாரம் பெற்றவை போன்று வலுவுடையனவாக இருக்கும். பொதுக் கூட்ட அங்கீகாரம் பெறுமுன் இத்துணை விதிகளின்படி செய்யப்பெற்ற செயலிகள் எவ்வகையிலும் பாதிக்கப்படுவனவாகர்
சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மேலதிகமாக தேவைப்படும் உபகுழுக்களை நியமித்தலும் வழிகாட்டலும்.
தலைவரின் கடமைகள்
தலைவரின் அதிகாரமும் கடமைகளும் , பின்வருவனவாகும்
தலைவர் பொதுவாகச் சங்கத்தின் பணிகள் எல்லாவற்றையும் மேற்பார்வை செய்து வழிகாட்டுதல் வேண்டும் அத்துடன் அதன் நலன்களையும் கெளரவத்தையும் காப்பாற்றுவதற்கு அவசியமான எல்லாக் காரியங்களையும் செய்தல் வேண்டும்.
(ஆ) சங்கத்தின் ஒவ்வொரு காரியம் தொடர்பாகவும் இந்த
(9)
அமைப் பு விதிகளின் ஏற்பாடுகள் இணங்கியொழுகப்படுவதனை அவர் உறுதிப்படுத்த வேண்டும்.
அவசர விடயங்களின் மீது முடிவு எடுப்பதற்கும் தாமதமின்றி நிறைவேற்றக்குழுவின் அங்கீகாரத்தை

23.
(F)
(s) )
(D611)
: 23 : நாடுவதற்கும் அவருக்கு உரித்துண்டு. ஆயின், எவ்வாறாயினும், அத்தகைய முடிவு அவ்வாறு அங்கீகரிக்கப்படாவிட்டால் அதன் கீழ் செய்யப்பட்ட செயல் எதுவும் செல்லுபடியாகாது.
பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக அவர் மறுத்தாலொழிய, சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் கூட்டங்களில் தலைமை தாங்குதல் வேண்டும்.
தேவைப்படும் போதெல்லாம், சங்கத்தின் முக்கிய ஆவணங்கள் தலைவரால் கையொப்பமிடப்பட வேண்டும்.
ஆட்சிக் குழுவின் தீர்மானங்களையும், முடிவுகளையும் நிறைவேற்றும் பிரதம நிர்வாகியாகத் தலைவர் விளங்குவார்.
தலைவர் இல்லாதபோது அல்லது தனது கடமைகளை ஆற்ற அல்லது நிறைவேற்ற இயலாதபோது ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்படும் துணைத் தலைவர்களில் ஒருவர் அக்கடமைகளைத் தற்காலிகமாக ஆற்ற உரித்துடையவராதல் வேண்டும்.
பொதுச்செயலாளரின் கடமைகள்
பொதுவாகச் சங்க அலுவலகத்தின் நிருவாகத்துக்குப் பொறுப்புடையவராவார். அத்துடன் தலைவரின் வழிநடத்தலுக்க மைய குறிப்பாகப் பின்வருவனவற்றுக்குப் பொறுப்பாக இருப்பார்:
சங்கத்தின் கூட்டங்களைக் கூட்டுதல் அவற்றின் நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தல் நிகழ்ச்சிக்

Page 14
24.
iv.
: 24 : குறிப்புகளைப் பதிவு செய்தல்.
சங்கத்திற்குரிய சகல ஆதனங்களையும் ஆவணங்களையும் பாதுகாத்தல்.
சங்கத்தின் பணியாளர்களின் வேலையை மேற்பார்வையிடல்
ஆட்சிக் குழுவின் கட்டளைப்படி சங்கத்தின் அலுவல்களை நடாத்துதல்
ஆட்சிக் குழுவின் கட்டளைப்படி சங்கத்தின் சார்பாகக் கடிதப் போக்குவரத்து செய்தல்
சங்கத்தினி குறிப் பேடுகளையும் பழைய கணக் கேடுகளையும் பொருளாளருக்குத்
தேவைப் படாத கணக் கேடுகளையும் பிறபத்திரங்களையும் பேணி வைத்திருத்தல்.
ஆண்டுத் திரட்டைச் சங்கப் பதிவாளருக்கு அனுப்புதல்.
துணைச்செயலாளரின் கடமைகள்
பொதுச் செயலாளர் தனது கடமைகளையும், பணிகளையும் ஏனைய கருமங்களையும் புரிவதற்கு துணை செய்தல் வேண்டும். மற்றும் பொதுச் செயலாளர் சமுகமளிக் காதபோது அவரினி கடமைகளை நிறைவேற்றுதல் என்பன துணைச் செயலாளரின் கடமையாகும்.

25.
25.
26,
i
: 25 :
உறுப்பாண்மைக் குழுவின் கடமைகள்
உறுப் பாணி மைக் குழுவினி செயலாளர் பின்வருவனவற்றிற்குப் பொறுப்பாகவிருப்பார்:
உறுப்பாண்மைக்கான விண்ணப்பங்கள் தொடர்பிலும் அமைப்பு விதியின் ஏற்பாடுகளுக்கிணங்க உறுப்பினர்களைச் சேர்த்தல், தொடர்பிலும் ஏனைய உறவுபட்ட கருமங்கள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட விடயங்களை பொதுச் செயலாளர் மூலம் ஆட்சிக் குழுவிற்கு சமர்ப்பித்தல்.
உறுப்பாண்மைக் குழுவின் செயற்பாடுகளை ஒன்றிணைத்தல். இதன் கூட்டம் ஒவ்வொன்றுக்கும் இவரே தலைமை தாங்குதல் வேண்டும். இவர் இல்லாதபோது கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குழுவின் வேறோர் உறுப்பினர் தலைமை தாங்குதல் வேண்டும்.
நிதிச்செயலாளரின் கடமைகள்
நிதிச் செயலாளர் பின்வருவனவற்றுக்குப் பொறுப்பாக இருப்பார்:
நிறைவேற்றுக்குழு வழிப்படுத்தியவாறு சங்கப் பணத்தைச் சேர்த்தல் பாதுகாப்பாக வைத்திருத்தல் செலவு செய்தல்.
ஆட்சிக் குழு அளித்த அதிகாரத்தின்படி சங்கப் பணத்தை ஒரு வங்கியிலேனும் பல வங்கிகளிலேனும் வைப்புப் பணமாக வைத்திருத்தல்.

Page 15
iv.
: 26 :
வரவு செலவுகள் யாவற்றுக்கும் சரியான முறையில் கணக்குகளை எழுதிப் பேணுதல்.
சகல பணியாளர்களுக்கும் கொடுக்க வேண்டிய சம்பளம் முதலியவற்றை உரிய காலத்திற் கொடுத்துச் சம்பள இடாப்பில் அவர்கள் இவற்றைப் பெற்றுக் கொண்டதற்கு அறிகுறியாக அவர்களின் கையொப்பங்களைப் பெறுதல்.
சட்டப்படியான சகல கொடுப்பனவுகளையும் (ஊ.சே.நி. ஊ.ந.நி. வரிகள் போன்றவை) காலந்தாழ்த்தாது கொடுத்தல்,
சங்கத்தின் கணக்குப் பரிசோதகர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தல்.
சங்கத்தின் செயற்பாட்டுப் பகுதி ஒவ்வொன்றிற்கும் பொறுப்பாகவுள்ளவர்களிடமிருந்து மாத வரவு செலவுத்திரட்டுகளைப் பெறுதலும், அவர்களிடமிருந்து சங்கத்துக்கு வரவேண்டிய பணத்தைச் சேர்த்தலும்.
ஒவ்வொரு மாத ஆட்சிக்குழுக் கூட்டத்திலும் அதற்கு முந்தைய மாதக் கணக்குகளை ஆட்சிக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்தல்.
தேவையான கணக்கேடுகளைத் திறந்து முறையாக வைத்திருத்தல் அவற்றைப் பாதுகாப்பாக வைத்தல் கணக்குகளுடன் தொடர்புபட்ட முக்கிய கடிதங்களைக் கோப்பிடல்
வரவு செலவு திட்டத்தைத் தயாரித்தல்.

xi.
27.
28. 1,
i
ii.
: 27 : ஆண்டுக் கணக்கு அறிக்கை தயாரித்தலும் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பித்தலும்,
துணை நிதிச்செயலாளரின் கடமைகள்
நிதிச்செயலாளருக்கு வேண்டிய உதவி செய்தல் நிதிச்செயலாளர் சமுகமளிக்காதபோது அவருடைய கடமைகளை நிறைவேற்றுதல் நிலுவையாக நிற்கும் உறுப்பாண்மைப் பணத்தை பெறவும், செலுத்தத் தவறிய உறுப்பினர்களின் பட்டியலை மூன்று மாதத்திற்கு ஒருமுறை உறுப் பாணி மைச் செயலாளருக்குச் சமர்ப்பிக்கவும் ஆவன செய்தல்.
நிலைய அமைப்புக் குழுவின் கடமைகள்
நிலைய அமைப்புக்குழுவுக்கு இக் குழுவின் செயலாளர் பொறுப்பாக இருப்பார் அவரின் கடமைகள் பின்வருமாறு. நிலைய அமைப்புக் குழுவின் செயற்பாடுகளை ஒன்றிணைத்தல். இதன் கூட்டம் ஒவ்வொன்றுக்கும் இவரே தலைமை தாங்குதல் வேண்டும். இவர் இல்லாதபோது கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குழுவின் வேறொர் உறுப்பினர் தலைமை தாங்குதல் வேண்டும்.
ஆட்சிக் குழுவின் கட்டளைப் படி சங்கத்தின் கட்டிடங்களையும், பிற அமைப்புகளையும் பராமரித்து முகாமை செய்தல்.
தளபாடங்கள், களஞ்சியப்பொருட்கள் முதலியன பொருட் பதிவேட்டில் வைக்கப்பட்டுள்ளதை நிச்சயப்படுத்தல்.

Page 16
28,
29,
ν,
(9Iع)
iv.
:28: மேலே (i)ன் கீழ் குறிப்பிட்ட பொருட்களைப் பற்றிய அத்தாட்சிப்படுத்திய ஆண்டுத் திரட்டுக்களைத் தேவைப்படும்போது சமர்ப்பித்தல்.
சங்கத்தின் நிலைய அமைப்புப் பற்றிய உபவிதிகளை ஆக்கவும், அதற்கான நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைப் பெறுதலும்
நூல்நிலையக் குழுவின் கடமைகள்
நூல் நிலையக் குழுச் செயலாளர் நூல் நிலையத்துக்குப் பொறுப்பாக இருப்பார். அவரின் கடமைகள் பின்வருமாறு:
நூல் நிலையக் குழுவின் செயற்பாடுகளை ஒன்றிணைத்தல், இதன் கூட்டம் ஒவ்வொன்றுக்கும் இவரே தலைமை தாங்குதல் வேண்டும். இவர் இல்லாதபோது கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குழுவின் வேறோர் உறுப்பினர் தலைமை தாங்குதல் வேண்டும்.
நூல் நிலையத்துக்குப் பொறுப்பாக இருத்தலும், பத்திரிகைகள், வெளியீடுகள், புத்தகங்கள் முதலியவற்றை கொள்வனவு செய்தலும், இரவல் கொடுத்தலும், அவற்றைப் பேணிக்காத்து வைத்தலும்,
தமிழியல் ஆய்வு முயற்சிகளை முன்னெடுத்தல்
ஆட்சிக் குழுவின் கட்டளைப்படியும், அஃது ஆக்கும் உபவிதிகளின்படியும் இவர் தமது கடமைகளை ஒன்றிணைத்தல் வேண்டும்.

30- (ஆ)
: 29 : இரண்டு மாதங்களுக்குள்ளாக ஒவ்வோராண்டும் டிசம்பர் 31ல் உள்ளவாறாக ஆட்சிக்குழுவுக்கு நூல்களைப் பற்றிய ஆண்டுத் திரட்டுகளைச் சமர்ப்பித்தல்.
கல்விக் குழுவின் கடமைகள்
கல்விக் குழுவிற்கு இக்குழுவின் செயலாளர் பொறுப்பாகவிருப்பார். அவரின் கடமைகள் பின்வருமாறு:
கல்விக் குழுவின் செயற்பாடுகளை ஒன்றிணைத்தல், இதன் கூட்டம் ஒவ்வொன்றுக்கும் இவரே தலைமை தாங்குவார். இவர் இல்லாதபோது கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குழுவின் வேறோர் உறுப்பினர் தலைமை தாங்குவார்.
சங்க வகுப்புகளுக்குப் பொறுப்பாயிருத்தல்.
சங்க வகுப்புகளுக்கு வரும் மாணவரின் ஒழுக்க சீலங்களை கவனித்தல்.
ஆட்சிக் குழுவின் பணிப்புகளின் கீழ் அல்லது இந் நோக்கத்துக் காக ஆக்கப்படக் கூடிய துணைவிதிகளின் கீழ் கடமைகளைப் புரிதல், கல்விச் செயற்பாடுகள் தொடர்பான கணக்குகளை நிதிச் செயலாளருக்குச் சமர்ப்பித்தல்.
கல்வித் திட்டங்களைத் தயாரித்தல்.

Page 17
29.
29.
(g)
iv.
(FE)
: 30
இலக்கியக் குழுவின் கடமைகள்
இலக்கியக்குழுவிற்கு இக்குழுவின் செயலாளர் பொறுப்பாகவிருப்பார். அவரின் கடமைகள் பின்வருமாறு: இலக்கியக் குழுவின் செயற்பாடுகளை ஒன்றிணைத்தல், இதன் கூட்டம் ஒவ்வொன்றுக்கும் இவரே தலைமை தாங்குவார். இவர் இல்லாதபோது கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட குழுவின் வேறோர் உறுப்பினர் தலைமை தாங்குவார்.
விழாக்கள், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், தேர்வுகள், போட்டிகள் ஆகியவைகளை ஒழுங்கு செய்தல்.
நூல்கள், பருவமலர்கள் ஆகியவற்றை அச்சேற்றவும் வெளியிடவும் ஒழுங்கு செய்தல்.
சங்கப் பணிகளைத் தமிழ் பேசும் மக்கள் அறிதற்கான வழிவகைகளை ஒழுங்கு செய்தல்.
நூல் நிலையக்குழு, கல்விக்குழு, இலக்கியப்
பணிக் குழு ஆகிய குழுக்களையும், வேறு உபகுழுக்களையும் மேற்கூறப்பட்ட ஏற்பாடுகளுக்கு
முரண்படாது ஆட்சிக் குழு காலத்துக்குக் காலம்
நியமிக்கலாம். அக்குழு ஒவ்வொன்றிலும், குறைந்தது ஐந்து உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும். தலைவர் பொதுச் செயலாளர், நிதிச் செயலாளர் ஆகியோர் அக்குழு ஒவ்வொன்றிலும் பதவி வழி உறுப்பினர்களாக இருப்பர். எந்தவொரு குழுவினதும் கூட்டத்தை ஆட்சிக்

3O.
31.
31 :
குழுவின் தலைவரது தீர்மானத்திற்கு அமைய பொதுச் செயலாளர் கூட்டுதல் வேண்டும்.
நிறைவேற்றுக் குழுக் கூட்டங்கள்
தலைவர் எழுதிக் கேட்கும் பொழுதேனும், தாம் தேவையெனக் கருதும் பொழுது நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களில் பதின்மர் நிறைவேற்றுக்குழுவைக் கூட்டுமாறு எழுதிக் கேட்கும் பொழுதேனும், பொதுச் செயலாளர் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவார். மாதத்திற்கு ஒரு முறையேனும் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நடாத்தப்படல் வேண்டும். நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திற்குப் பொதுவாக ஏழு நாட்களுக்குக் குறையாத அறிவித்தல் கொடுக்கப்படல் வேண்டும். மிக அவசரமான அலுவல்கள் பற்றி முடிவு செய்ய வேண்டியிருப்பின், பொதுச் செயலாளர் தலைவருடைய அங்கீகாரத்துடன் 7 நாள் அறிவித்தல் கொடாமலும் நிறைவேற்றுக் குழுவைக் கூட்டலாம்.
மேலே குறிப்பிட்ட முறைகளுக்கமையப் பொதுச் செயலாளர் நிறைவேற்றுக் குழுவை இரு வாரங்களுக்குள்ளே கூட்டத்தவறினால் தலைவர் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தைக் கூட்டலாம்.
நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திற்கான நிறைவெண் 14 ஆகும்.
ஆண்டுப் பொதுக் கூட்டம்
ஆண்டுப் பொதுக் கூட்டம் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கூட்டப்படல் வேண்டும். ஆயின், ஆட்சிக்குழு மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம்

Page 18
32,
: 32 :
கூட்டம் கூடுவதைத் தள்ளிப்போடலாம். இக்கூட்டத்திற் பின்வருவன நிறைவேற்றப்படுதல் வேண்டும்:
டிசம்பர் 31 ஆம் திகதியில் முடியும் முந்திய ஆண்டுக்குரியதும், பரிசோதிக்கப்பட்டதுமான கணக்கு அறிக்கை உட்பட நிறைவேற்றுக் குழுவின் வருடாந்த அறிக்கையை அங்கீகரித்தல்.
அடுத்த ஆண்டுக்குரிய காப்பாளர், துணைக் காப்பாளர்கள், சங்கத்தின் பதவி தாங்குநர், ஆட்சிக் குழு உறுப்பினர், கணக்காய்வாளர் என்போரைத் தெரிவு செய்தல்.
பொதுக் கூட்டம் நிகழும் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னர் அறிவித்தல் கொடுக்கப்பட்ட விடயங்களை ஆராய்தல். ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு 30 நாட்களுக்கு முன் முதல் அறிவித்தலும் 10 நாட்களுக்கு முன் நிகழ்ச்சி நிரலைக் கொண்ட கடைசி அறிவித்தலும் கொடுக்கப்படல் வேண்டும். ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கு நிறைவெண் 50 ஆகும். 18 (1) ஆம் பிரிவின் கீழ் ஆட்சிக்குழுவினால் விதந்துரைக்கப்பட்ட பெயர் நியமனங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டு அறிவித்தல் வேண்டும்.
விசேட பொதுக் கூட்டம்
நிறைவேற்றுக் குழு கூட்டுமாறு கேட்கும் பொழுது பொதுச் செயலாளர் விசேட பொதுக்கூட்டத்தைக் கூட்டுதல் வேண்டும். அவ்வாறு அவர் 15 நாட்களுக்குள் கூட்டத் தவறினால் தலைவர் விசேட பொதுக் கூட்டத்தைக் கூட்டலாம்.

33, i.
: 33 :
வாக்களிக்கும் உரிமையுடைய 50 உறுப்பினர்கள் தாங்கள் அக்கூட்டத்திற்கு சமர்ப்பிக்கவிருக்கும் தீர்மானத்தையேனும் தீர்மானங்களையேனும் குறிப்பிட்டு ஒருபொதுக்கூட்டத்தைக் கூட்டுமாறு எழுதிக்கேட்டால், அவ்வேண்டுகோள் கிடைத்த 15 நாட்களுக்குள்ளே பொதுச்செயலாளர் அதனை ஆட்சிக் குழுவிற்குச் சமர்ப்பித்தல் வேண்டும். ஆட்சிக் குழு கூட்டத் திகதியைப் பற்றியும் பிற விபரங்களைப் பற்றியும் முடிவு செய்யும்.
கூட்ட நிறைவெண்
32ஆம் விதிப் படி கூட்டப்படும் விசேட பொதுக்கூட்டத்திற்கு நிறைவெண் 50 ஆகும்.
விசேட பொதுக்கூட்டத்திற்கு 12 நாட்களுக்குக் குறையாமல் அறிவித்தல் கொடுக்கப்படல் வேண்டும்.
கூட்டம் நடாத்துதல்
34. கூட்டங்களைப் பற்றிய பொது விதிகள்:
1.
கூட்டத்தில் முடிவு செய்யப்பெறும் விடயங்கள் யாவும் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறுதல் வேண்டும். வேறுவகையாக முடிவு செய்யப்பட வேண்டுமென்று இவ்விதிகளில் குறிப்பிடப்படும் விடயங்களுக்கு இவ்விதி பொருந்தாது.
பொதுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பெறும் எந்த விடயத்துக்கும் உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்திக் காட்டுதல் மூலம் பொதுவாகத் தங்கள் வாக்குகளை அளிக்கலாம். எனினும், ஒரு
விடயத்தை முடிவு செய்ய வாக்களிக்கும்படி சபையினரைக் கேட்பதற்குமுன் இரகசிய

Page 19
: 34 :
வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமென்று உறுப்பினர்
யாரேனும் ஒருவர் வேண்டிக்கொண்டால், அவருடைய வேண்டுகோள் பற்றிச் சபையினர் செய்யும் முடிவின்படி தலைவர் நடக்கக் கடமைப்பட்டுள்ளார்.
இடையிடையே சங்க விதிகளை மாற்றவும், நீக்கவும், கூட்டவும், பொதுச் சபைக்கு உரிமையுண்டு. சங்க விதிகள் பற்றித் தீர்மானங்கள் கொண்டு வரவிருக்கும் உறுப்பினர், கூட்டத்திற்கு 21 நாட்களுக்கு முன்னர் பொதுச் செயலர்ளருக்குத் தங்கள் தீர்மானத்தைப் பற்றி அறிவித்தல் வேண்டும். சங்க விதிகளிற் செய்யப்பெறும் திருத்தங்கள் யாவும் சங்கக் கட்டளைச் சட்டத்தின்படி சங்கப் பதிவாளருக்கு அறிவிக்கப்படல் வேண்டும். சங்கப் பதிவாளரால் அத்திருத்தங்கள் முறையாகப் பதியப்பெற்ற பின்னரே அவை செல்லுபடியுடையனவாகும்.
சங்க விதிகளை, பொருள் கோடல் செய்வதில் அல்லது சங்கத்துக்கும், உறுப்பினருக்கும் அல்லது உறுப்பினருக்கூடாக நாடுவோருக்கும் எழும் பிணக்குகளை ஆட்சிக் குழு முடிவு செய்யும். ஆட்சிக் குழுவின் முடிவுகளை மாற்றுவதற்குப் பொதுக் கூட்டத்திற்கு உரிமையுண்டு. பொதுக்கூட்டம் முடிவு செய்வதற்கு முன்னர் செய்யப்பட்ட காரியங்களுக்கு ஆட்சிக் குழு பொறுப்பாகாது.
பொதுக் கூட்டத்தில் பங்குபற்றி வாக்களிப்போரில்
2.3 பங்கினர் உடன்பட்டாலன்றி அமைப்பு விதியைப்
பாதிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றுதல் முடியாது.
நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை

35.
: 35 : கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கு 5 உறுப்பினர்களைக் கொண்ட நம்பிக் கைப் பொறுப்பாளர் சபை ஒன்றிருத்தல் வேண்டும். இந் நம்பிக் கைப் பொறுப்பாளர் சபை இதனகத்து இதன்பின் “சபை” எனக் குறிப்பிடப்பெறும்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுள் உறுப்பினர் மட்டுமே சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப் பெறமுடியும். அவ்விதந் தெரிவு செய்யப் பெறுவதற்கு ஒருவர் தமது சம்மதத்தை எழுத்தில் தெரிவித்தல் வேண்டும்.
சபை உறுப்பினர்கள் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில்
பொதுக் கூட்டமொன்றில் தெரிவு செய்யப்பெற வேண்டும்.
சபை உறுப்பினர்கள் தங்களிலிருந்து சபைத் தவிசாளர் ஒருவரையும் துணைத் தவிசாளர் ஒருவரையும் சபைக்குச் செயலாளர் ஒருவரையும் தெரிவு செய்வர்.
சபை உறுப்பினர் ஒருவர் மரணத்தினால் அல்லது பதவி துறத்தலினால் அல்லது பதவியிலிருந்து அகற்றப்படுவதனால் மாத்திரமே பதவி வெறிதாகும். அல்லாவிடின் அவர் மூன்று வருடகாலத்துக்குப் பதவி வகிப்பார்.
சபை உறுப்பினர் ஒருவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித் து எந்நேரத்திலும் தனது பதவியைத் துறக்கலாம்.
நிறைவேற்றுக் குழுவின் விதப்புரையின் பேரில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்கூட்டிமொன்றில்

Page 20
Χίν.
: 36 :
அதற்கு வருகை தந்து வாக்களிக் கும் உறுப்பினர்களில் 2/3 பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பெற்ற தீர்மானத்தின் மூலம் சபையின் எந்த உறுப்பினரும் பதவியிலிருந்து அகற்றப்படலாம்.
சபையின் வெற்றிடம் எதுவும் ஏற்படுமிடத்து 'அ'து ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தின் தேர்தலினால் நிரப்பப்படும்.
உடலியலாமை அல்லது இலங்கையில் இல்லாமை ஆகிய காரணங்களுக்காகச் சபையின் உறுப்பினர் ஒருவர் தற்காலிகமாகத் தனது பதவிக்கான கடமைகளை ஆற்றவியலாதவிடத்து நிறை வேற்றுக்குழு அவரது இடத்திற்கு பதில்கடமையாற்ற வேறொருவரைத் தெரிவு செய்யலாம்.
தனது காலத் தவணை முடிவில் பதவியிலிருந்து ஓய்வுபெறும் உறுப்பினர் ஒருவர் மீளவும் தெரிவு செய்யப்பெறுவதற்குத் தகவுடையவராவார்.
சபை உறுப்பினர்களில் வெற்றிடம் இருக்கும் காரணத்தினாலோ அல்லது உறுப்பினர் ஒருவரின் தேர்தலில் ஏதேனும் குறைபாடு இருக்குங் காரணத்தினாலோ சபையின் எச்செயலாவது அல்லது எந்நடவடிக்கையாவது வலிதற்றதாகாது.
சபையின் எக்கூட்டத்துக்கும் நிறைவெண் மூன்றாகும்.
தவிசாளர் இல்லாதவிடத்துத் துணைத் தவிசாளர் சபையின் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவார்.
சபையின் கூட்டத்தில் தீர்மானத்துக்கு எடுக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் அக் கூட்டத்திற்கு

: 37
வருகைதந்து வாக்களிக்கும் உறுப்பினரின் பெரும்பான்மை வாக்குகளினால் முடிவு செய்யப்படும். வாக்குகள் சமமாக இருக்கும் பட்சத்தில் தலைமை தாங்குபவருக்கு அறுதியிடும் வாக்கு ஒன்றுண்டு.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அசைவுள்ளனவும் அசைவற்றனவுமான எல்லா ஆதனங்களும் சபையின் உடைமையில் இருக்கும்.
சபை பின்வரும் அதிகாரங்களைக் கொண்டிருக்கும். (அ) கொள்வனவு, நன்கொடை, மரணசாசன உரிமை
மாற்றம் முதலியன வழியில் அல்லது வேறு வழியிற் கொழும்புத் தமிழ்ச் சங்கம் பெறும் அசைவுள் ள அலி லது அசைவற் ற ஆதனங்களைக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஏற்கவும் உடைமை கொள்ளவும்
(ஆ) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் எந்த
(g))
ஆதனங்களையும் விற்பனை செய்யவும், ஈடு வைக்கவும், வாடகைக்கு விடவும், குத்தகைக்குக் கொடுக்கவும், பரிமாறவும் வேறு வழியிற் பயன்படுத்தவும்
தனது கருத்தின்படி தகுதியெனக் காணும் அளவிலும் முறையிலும், விதிகள் நிபந்தனைகளுக்கு ஏற்பவும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தேவைகளுக்காகக் காலத்திற்குக்
காலம் அதன் தற்றுணிவின்படி பணம் கடன்
படவும் அதன் பொருட்டுப் பிணைகள், உண்டியல்கள், வாக்குறுதிச் சீட்டுக்கள், தொகுதிக் கடன் முறிகள், உறுதிகள், ஏனைய ஆவணங்கள் எண் பற்றை வழங்கவும்

Page 21
36,
: 38 :
அதிகாரமுண்டு
எனினும் (XVi) ஆம் உட்பிரிவின்படி சபைக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைச் சபை, ஆட்சிக் குழுவின் ஒருங்கிசைவின்றி நிறைவேற்றுதலாகாது.
சபையால் ஆக்கப்பெறும் ஆவணங்கள் யாவும் சங்கப் பொதுச் செயலாளரின் பொறுப்பில் இருக்கும்.
சங்கத்தின் தலைவர் சபையின் பதவிவழி உறுப்பினராக இருப்பார். இவரை (1) ஆம் உட்பிரிவிற் கொடுக்கப்பட்ட உறுப்பினர் தொகையில் சேர்த்துக் கொள்ளுதலாகாது. (xi) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட நிறைவெண்ணின் நோக்கத்துக்காக அவரைச் சேர்த்து எண்ணப்படுதலாகாது. சபைச் செயலாளரினால் கூட்டப்படும் எல்லாக் கூட்டங்களுக்கும் வரவழைக்கப்பட்டால், பொதுச் செயலாளர், நிதிச் செயலாளர், உறுப்பாண்மைச் செயலாளர் ஏனைய பதவி தாங்குநரும் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்களும் சமுகமளிக்க வேண்டும்.
பல்லினமானவை
பொதுக்கூட்டத் திகதிக்கு 10 நாட்களுக்கு முன்னரும் அதற்கு 20 நாட்களுக்குப் பின்னரும் பதியப்பெற்ற அலுவலகத்தில் உள்ள விளம்பரப் பலகையில் ஆண்டுக் கணக்கறிக்கை பார்வையிடுவதற்கு வைக்கப்பட வேண்டும்.

37
38,
39.
: 39 :
விலகுதல்
சங்கத்திலிருந்து விலக எண்ணும் உறுப்பினர் தம்முடைய கருத்தைப் பொதுச் செயலாளருக்கு எழுத்தில் அறிவித்தல் வேண்டும். பொதுச் செயலாளர் அவருடைய கடிதத்தை நிறைவேற்றுக் குழுவில் சமர்ப்பித்தல் வேண்டும். நிறைவேற்றுக்குழு இதனை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து அந்த உறுப்பினர் தமது உறுப்புரிமைகளை இழந்தவராகக் கொள்ளப்படுவார். சங்கத்திலிருந்து விலகியவர் தமது உறுப்பாண்மைப் பணத்தின் எப்பகுதியையேனும் திருப்பிப் பெறல் (ptgust.
ஆதனத்தைப் பயன்படுத்தல்
சங்கத்தின் வளவுகளையும், ஆதனத்தையும் எவரும் சங்கத்தின் அனுமதியின்றிப் பயன்படுத்தல் முடியாது.
பதிவாளருக்குரிய திரட்டுக்கள்
ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் சங்கப் பதிவாளருக்கு பின்வருவனவற்றைப் பொதுச் செயலாளர் அனுப்புதல் வேண்டும்.
(அ) சங்கக் கட்டளைச் சட்டம் (105 ஆம் அத்தியாயம்)
பிரிவு 8(1) (ஈ) என்பதில் குறிக்கப்பட்ட விடயங்களுடன் சங்கக் கட்டளைச் சட்டப்படி நியமிக்கப்பட்ட பகிரங்கக் கணக்காய்வாளராற் பரிசோதிக்கப்பட்ட டிசம்பர் 31 ஆம் திகதியில் முடியும் முந்திய ஆண்டுக்குரிய சங்க வரவு செலவு, நிதிகள், உடைமைகள் முதலியவை
பற்றிய திரட்டு.

Page 22
40”...
41.
: 40 :
(ஆ) கணக்காய்வாளருடைய அறிக்கையின் பிரதி ஒன்று.
(9)
மார்ச் 31ஆம் திகதியன்றுள்ளவாறாக சங்கத்தின் உறுப்பினரின் தொகையைக் குறிக்கும் அறிக்கை.
வங்கிக் கணக்குகள்
சங்கத்தின் வங்கிக் கணக்குகள் "தலைவராலும் அலி லது நிறைவேற்றுக் குழு நியமிக் கும் பிரதித்தலைவர் ஒருவராலும் நிதிச்செயலாளராலும் நிருவகிக் கப்படும் . நிதிச் செயலாளர் செயற்படவியலாத நிலையில் துணை நிதிச் செயலாளர் அவருக்குப் பதிலாக வங்கிக் கணக்குகளை நிருவகிக்கலாம்.
நிதி மீளாய்வு மதியுரைக் குழு
நம்பிக்கை பொறுப்பாளர் சபையானது ஆண்டுதோறும் நிதி மீளாய்வு மதியுரைக் குழுவொன்றை நியமிக்க வேண்டும்.
இந்நியமனம் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தை உடனடுத்து நடாத்தப்படும் முதலாவது சபைக் கூட்டத்தில் செய்யப்பட வேண்டும்.
இக்குழு, 19 (i) ஆம் பிரிவுக்கமைவாக, ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இரு உள்ளகக் கணக்காய்வாளர்களையும், சபையினால் நியமிக்கப்படும் ஏனைய ஒருவரையும் கொண்டிருக்கும் குழுவின் தலைவரும் குழுவின் செயலாளரும் குழுவினால் தெரிவு செய்யப்பட வேண்டும்.

ίν.
(9)
: 4 :
கணக்காய்வுத் துறையில் அனுபவமுள்ள சங்க உறுப்பினர் இக் குழுவுக்கு நியமிக்கப்படலாம்.
கணக்குப் புத்தகங்கள் முறையாகப் பேணப்பட்டு வருகின்றனவா எனவும் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட கணக்குக் கூற்றுக்கள் செம்மையானவையா எனப் பரிசீலித்தலும் சபைக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதும் பின்வரும் கருமங்கள் தொடர்பில்
காலத்துக்குக் காலம் சபைக்கு அறிக்கைகள்
சமர்ப்பிப்பதும் இக்குழுவின் கடமையாதல் வேண்டும்.
சபையின் விதிகளுக்கு இணங்கவராத ஏதேனும் செலவினம்.
(ஆ) முறைகேடாகச் செய்யப்பட்ட ஏதேனும் முதலீடு.
(g))
(ዙ)
(D-)
(SSI)
ஆதனத்தைப் பாதுகாப்பதில் அல்லது பராமரிப்பதில் உள்ள எதேனும் ஒழுங்கீனம்,
முறையாகப் பேணப்படாத ஆவணங்களும் ஆதனப் பதிவேடுகளும்.
சங்கத்தின் உள்ளகக் கணக்குக் கட்டுப்பாட்டு முறைமையில் கொணி டு வரப் படவுளர் ள சீர்திருத்தங்கள்.
சங்கத்தின் ஆதனம் அல்லது நிதி அலுவல்கள்
தொடர்பான எவையேனும் ஒழுங்கீனங்கள்.
குழு அறிக்கைகளின் பிரதிகள் ஆட்சிக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Page 23
42.
: 42 :
நிதிக் கட்டுப்பாடு
பத்தாயிரம் (10,000/=) ரூபாவும் அதற்கு மேற்பட்ட சகல கொடுப்பனவுகளும் முடியுமானவரை காசோலை மூலம் கொடுக்கப்படல் வேண்டும். ஆயினி எவ்வாறாயினும் விதிவிலக் கான சந்தர்ப்பங்களில் பத்தாயிரம் (10,000/=) ரூபா முதல் ஒரு இலட்சம் (100,000/=) ரூபா வரையான பணத்தொகை தலைவரின் சம்மதத்துடன் திறந்த காசோலையாகக் கொடுக்கப்படலாம். அத்தகைய கொடுப்பனவை உடனடுத்து நடைபெறும் ஆட்சிக் குழுவினதும், நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையினதும் கூட்டத்தில் அத்தகைய கொடுப்பனவு பற்றிய விபரங்களைத் தலைவரும் நிதிச் செயலாளரும் சமர்ப்பிக்க வேண்டும். t
நிதிச்செயலாளர் இடைநேர் செலவுகளுக்காக 5,000/= ரூபாவுக்கு மேற்படாத சிறுகைச்செலவுக் காசை வைத்திருக்கலாம்.
சங்கத்தின் நிதியாண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி அதே ஆண்டுடிசம்பர் 31 வரையிலானதாகும்.
நிதிச்செயலாளர் ஒவ்வோராண்டும் நவம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் (அல்லது விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் அத்தகைய நீடித்த காலப்பகுதிக்கு முன்னர்) அடுத்த நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து ஆட்சிக்குழுவினதும், நம் பிக் கை பொறுப்பாளர் சபையினதும் அங்கீகாரத்தைப் பெறல் வேண்டும். சபையினால் ஆட்சேபிக்கப்படும் எந்த விடயமும், ஆட்சிக்குழுவின் கூட்டத்தில் சமூகமாயிருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் 2/3 பங்கினரின் பெரும்பான்மை

: 43 :
மூலம் அங்கீகரிகப்பட்டாலொழிய, அது வரவுசெலவுத் திட்டத்திலிருந்து நீக்கப்படல வேணி டும் . ஆட்சிக்குழுவின் அங்கீகாரத்தைப் பெறத் தவறிய விடயம் எதுவும், சபையின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தாலும், வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக் கப்படுதலாகாது. விதிவிலக் கான சந்தர்ப்பங்களில் குறை நிரப்பு மதிப்பீடுகளும் இதே முறையில் அங்கீகரிகப்படலாம்.
சங்கத்தின் செலவுகள் ஒவ்வொன்றும் உரிய அதிகாரம் இன்றி மேற்கொள்ளப்படலாகாது. வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் குறித்த செலவரிற் கான ஏற்பாடு இருந்தால் அல்லது குறைநிரப்பு மதிப்பீட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தால் மட்டுமே செலவொன்றை மேற்கொள்ளலாம். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் ஆட்சிக் குழுவின் விசேட அங்கீகாரத்துடன் செலவொன்று மேற்கொள்ளப்படலாம்.
ஆயின் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், சங்கத்தின் தலைவரும் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தவிசாளரும் அதற்கான தமது அங்கீகாரத்தை வழங்கினாலொழிய, 100,000/= ரூபாவுக்கு மேற்படாத செலவினம் எதுவும் செய்யலாகாது. அத்தகைய செலவினம் பற்றிய விபரங்கள் அடுத்து வரும் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ் அமைப்பு விதிகளில் மேலே கூறப்பட்ட செலவினங்கள் சம்பந்தமான ஏற்பாடுகள் தவிர்ந்த எல்லாச் செலவுகளும் ஆட்சிக்குழுவின் சாதாரண பெரும் பாணி மை . அங்கீகாரமினி றிச் செய்யப்படுதலாகாது. நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையில் அங்கீகரிக்க மறுக்கப்பட்ட எந்த செலவின விடயமும் ஆட்சிக் குழுவினால் மீள் பரிசீலனை

Page 24
: 44 : செய்யப்படுவதற்கென அனுப்பப்படுதல் வேண்டும். ஆட்சிக் குழுவின் 2/3 பங்கினரின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் மாத்திரமே அத்தகைய செலவினத்தைச் செய்ய முடியும்.


Page 25
இல7, 57வது ஒ தொலைபேசி இல 011 2353759
E-mail-familisarlig
Web. www.coli

புழுங்கை, கொழும்பு -08
தொலை நகல் 011 23$1381
amcolombogyahoo.com
ymbola Inilisangarn.com