கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பக்திரசப் பாமாலை

Page 1
岳 նIb 曼 |AIEի GT
nëpër T-FT .
W.
M
嵩。
W
W.
WAW
 

இந்தி: ITEM LITT g TIIDATEDJIT

Page 2
وې
で
*
*
த*
*
فعد.
ܕܵܐܟ݂
இணை அனுசரணை 01. விஸ்வப் பிரம்ம ரூ வை.இ.எஸ் காந்தனர்
குருக்கள் (போரதீவு) 02. நடராஜா ஞானச்சந்திரன் (ராஜாஸ் புத்தக நிலையம் மட்டக்களப்பு)
03. பாலிப்போடி சச்சிதானந்தண் (லண்டண்) 04. விநாயகமுர்த்திறஞ்சிதமுர்த்தி (பட்டிருப்புகளுவாஞ்சிக்குடி) டி3 05. முத்துலிங்கம் கணேசராஜா (வெல்லாவெளி) } 06. முத்துக்குமார் செல்வராசா (மட்டக்களப்பு) 07. நடனபாதம் ஜெகதீசன் (மட்டக்களப்பு) 08. சி. யோகேஸ்வரன் (தலைவர் - இந்து இளைஞர் பேரவை) 09. ஆ. லோகேஸ்பரணர் (தலைவர் - சரீரம், தாளங்குடா) 10. தர்மலிங்கம் தேவதீபன் (ஆரையம்பதி) 11. ந. நவரெட்ணராஜா (மட்டக்களப்பு) 12. தம்பிமுத்து கோவிந்தராஜா (ஆரையம்பதி) 13. அ. விஜயநாதன் (கணேஷா ஜுவலரி, ஏறாவூர்) 14. சித்தாண்டி சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயம் 15. விஸ்வநாதன் - தங்கவேல்
விஸ்வநாதன் - சதானந்தம்
விஸ்வநாதன் - ஞமுனாதேவி
விஸ்வநாதன் - உதயதேவி ஆரையம்பதி
விஸ்வநாதன் - பத்மசிறி
விஸ்வநாதன் - குணசிறி
விஸ்வநாதன் - சந்திரசேகர்
பதிப்புரிமை : விஸ்வநாதன் பத்மசிறி (ஆரையம்பதி)
கவிஞர் செ. குணரத்தினம் (அமிர்தகழி)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அணிந்துரை
படித்தேன் இனித்தது நினைத்தேன் நெகிழ்ந்தது.
செவியாரக் கேட்ட தெள்ளமுதின் சுவையொக்கும் தெய்வீகப் பாடல்களை நூலுருவில் கண்ணாரப் பாக்கும் போது உள்ளம் ஆனந்தமடைகின்றது. அத்தெய்வீகப் பாடல்களைப் படித்தேன். அது ஒரு படி தேன். மனம் இனித்தது. பாடல் பிறந்த புனிதத்தலங்களையும், அமைந்த இடங்களையும் ஆழ்ந்து நினைத்தேன். அந்த உணர்வுகளால் நெகிழ்ந்தேன்.
கிழக்கிலங்கையின் இரண்டு விழி போன்ற தலைநகரங்கள் இப்பாடல் சார்ந்த பதிகளுக்கு உரித்தாகின்றன. "குரைகடலோதம் நித்திலங் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்த பெருமான்” அருளாட்சி செய்யும் திருகோணமலை திருக்கோணேஸ்வரமும், நிறை வளங்கள் குறைவின்றி பொலிந்திலங்கும் மட்டக்களப்பு தமிழகமும் இப்பதிகப் பாடல்களில் பதியப்பட்டிருக்கின்றன.
கிழக்கு எனும் கீர்த்தி பெற்ற வளம் கொழிக்கும் இப் பொன்னாட்டில் தலை திருமலை என்றால் இதயம் இம்மட்டுநகர் தேனாடு அல்லவா? இப்புனித பூமி மட்டக்களப்பா? அல்லது மட்டுக்களப்பா? நம் சிந்தனைக்குரியது. 1907ம் ஆண்டு முதல் 1930, 1935ம் ஆண்டுவரை வெளியிடப்பட்ட மட்டக்களப்பு சார்ந்த நூல்களில் "மட்டுக்களப்பு” என்றே பெயரிடப்பட்டிருந்ததை கண்ணுற்று இருக்கின்றேன். அதுவே இந்த இனிய பூ மிக்கு உரித்தான பெயராக மாறாதா என அகம்கொள் ஆசையால் பூ ரிக்கின்றேன். மருதமரக்கொப்புகளில் தேனிக்களால் கட்டிய வம்பறா தேன் வதைகளை கொப்புகளில் பாய்ந்து விளையாடும் குரங்கினங்கள் உடைத்துவிட அந்த உடைந்த வதைகள் மட்டக்களப்பில் பெருக்கெடுத்து ஒடும் பேராறுகளில் விழ பேராறு தேனாறாய்ப் பாய அவ்வாற்றில் துள்ளி விளையாடும் மீனினங்கள் அத்தேனைப் பருகி மதுமாந்திய மயக்கத்தில் அதிசய இசை ஒலிக்க அத்தேனிசையைக் கேட்டு பாவிசைக்கும் நாடல்லவா இம் மட்டூர் திருநாடு. (மட்டூர் - தேன் - களப்பு - தேன் கலந்த வாவி)

Page 3
இத்திருநாட்டின் புகழ் சார்ந்த அருள்வளம் நிறைந்த சுயம்புலிங்கப் பதிகள் மூன்று. கந்தவேள் குடிகொண்ட படைவீடுகள் ஏழு. சக்தி தலங்களோ எண்ணுதற் கரியது. இத்தகைய பதிகளில் முதலாவது சுயம்புலிங்கப் பதியாகிய கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர். இரண்டாவது பதியாகிய மாமாங்க ஈஸ்வரம். மூன்றாவது பதியாகிய கணபதிச்சரம் எனும் களுதாவளை, இம் மூன்று சுயம்புலிங்கப் பதிகளிலும் வீர சைவ மரபுநெறி வழிபாடு வழுவாமல் சிவனையே லிங்க வடிவாகக் கொண்ட கொக்கட்டிச்சோலை தலம் தனித்துவம் பெற்றது. மற்றைய இரண்டு தலங்களாகிய மாமாங்க ஈச்சரமும், கணபதி ஈச்சரமாகிய களுதாவளையும் சுயம்புலிங்கம் மறைக்கப்பட்ட விநாயகர் தலங்களாக
விளங்குகின்றன. ッ*ゾ
சித்தாண்டி சித்திரவேலாயுதர் திருப்பதி ஆதிகால வேல் வழிபாடு மறையாமலும் மட்டூர் மண்ணின் பழமை மறையாமலும் போற்றப்படும் தனிப்பதி. சிகண்டி மாமுனிவரின் தவபலம் பெற்ற பூ மி. அவரின் சமாதியிலே வேல் நின்று விளையாடி வினை தீர்க்கும் பதி இந்த நான்கு பதிகளும் தேனாடாம் மட்டுநகரின் திருப்பதிகளாக இந்நூலிலே போற்றப்பட்டு பாமாலையாகிய பதிகத்தால் துதிக்கப்படுகின்றன. மற்றை தலமாகிய திருக்கோணேஸ்வரம் இப்பதிகம் என்கின்ற பதக்கத்திற்கு முத்தாய் இழைத்த முத்துமணி ஆரமாகும்.
மட்டூர் தமிழகத்திற்கு உரித்தான உருவேறும் உருக்க இசைகொண்ட பா வடிவம் இக்காவடிப் பதிகம் பாடும் போது பரவசம் நம்மை ஆட்டும். கல்மனம் கரைந்து உருகும். அப்பதிகப் பாடலின் உயிர்ப்பு உடல் உருகும், உள்ளம் உருகும், உயிர் உருகும் அத்தகைய தெய்வீகப் பாடல்களே இந்த நூலில் 91 பாடல்களாக உருப்பெறுகின்றன. இப்பாடல்களை தித்திக்கும் தமிழால் இயற்றிய பெருமகன் எத்திக்கும் புகழ் கொண்ட சத்திய எழுத்தாளர் கலைமாமணி, கவிமாமணி, தமிழ்மணி கவிஞர் செ. குணரத்தினம். அவர் உலகறிந்த எழுத்தாளர் என் உள்ளம் அறிந்த பண்பாளர். அவர் கவிதை வற்றாத அமிர்தநதி ஊற்று. மட்டுநகர் ஆறுபோல் பேராற்றுப் பெருக்கு. அவர் இயற்றிய பதிகங்களை பாடும் பணியே பணியாய்க் கொண்ட எண் மானசீக மாணவன் தேனிசைக் குரலால் செவிமாந்த வழங்கும் விஸ்வநாதன் பத்மசிறி பணிவு, பக்குவம், இசைத்திறன், தவத்தால் வந்தவை, தனித்துவத்தால் பெற்றவை என்றும்
o lo

நல்லிதயங்களில் நிலைத்து நிற்பவை. விஸ்வநாதன் பத்மபூரீயின் குரலோடு இணைந்து பாடும் இசைக்குயில் இனிக்கும் தீங்குரலால் கானம் இசைக்கும் கலைமாமணி, மட்டுநகர் அன்னையின் தனிமகள் என் அன்பும் மதிப்பும் உரிய சாந்தினி, தர்மநாதன் இவர்கள் இருவரும் சேர்ந்து இப்பாடல்களைப் பாடி இசை இறுவட்டுகளாய் எமக்கு முன்னமே தந்துள்ளார்கள். இறுவட்டில் வந்தவை உருவெட்டாகிநூலுருப்பெறுகின்றன. காத்திரமான பணி, பாத்திரமான தனித்துவம். இத்தகைய உயர் நோக்கினையும் இப்பணியைச் செய்யும் இப்புனித ஜீவண்களையும் உளமாரப் போற்ற வேண்டியது நம்கடமை. பாடல்களை இயற்றினாலும், பாடித்துதித்தாலும் அது எல்லோரும் காதாரக் கேட்க, கணிணாரக் காண நிறைபணி ஆற்றவேண்டிய வள்ளல் பெருமக்கள் இப்பணிக்கு அள்ளி வழங்குவார்கள். இந்நூலின் ஆக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் இறைவன் துணையாக நின்று அரவணைப்பானாக. வற்றாத நம்மண்ணின் கவிவளம் ஊற்றான நம்மண்ணின் இசைவளம் மென்மேலும் ஓங்கிப் பெருகட்டும். எம் தலங்களின் சிறப்புக்கள் மனங்களில் பதியட்டும். அனைத்துக்கும் இறையருள் துணை புரியட்டும்.
பூரீ காளிபுரம், இவ்வண்ணம் பெரிய போரதீவு. விஸ்வப்பிரம்மம் 15.01.2009 வை.இ.எஸ். காந்தன் குருக்கள்.
e II e

Page 4
என்னுரை
நான் கல்வி பயின்ற காலத்தில் இந்து சமயத்தை ஒரு பாடமாகப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.
அரிவரி வகுப்பிலிருந்து எஸ். எஸ்.சி வரை மிஷன் பாடசாலைகளில் படித்த காரணத்தால் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்காது போயிற்று. இதனால் சமய அறிவு எனக்கு மிகக் குறைவாகவே இருந்தது.
நான் ஒரு கவிஞனாக - எழுத்தாளனாகப் பிரகாசிக்கத் தொடங்கிய போதுதான் சமய அறிவில் நான் குறைந்திருப்பது எனக்குப் புரிய வந்தது. அதன் பின் எனது பிள்ளைகளின் சமய நூல்களை எடுத்துப்படித்தேன். பத்திரிகை, சஞ்சிகைகளில் இடம் பெறும் சயம சம்பந்தமான ஆக்கங்களையெல்லாம் வாசித்தேன். ஆனாலும் நான் சமயத்தில் நினைத்த அளவிற்கு முன்னேற முடியவில்லை. சிறு வயதிலிருந்தே நான் சைவ சமயத்தை முறையாகக் கற்றுத்தேறியிருந்தால் ஆன்மீகம் சம்பந்தமான கவிதைகளையும் சிறப்பாக என்னால் எழுதியிருக்க முடியும்.
ஆயினும் கதிர்காமம் வாழுகின்ற வேலவா உன்னைக் காணாமல் வாடுகிறேன் ஒடிவா!, கந்தனுக்கு எந்தன் வந்தனம் - அவன் கழல்களிலே மணக்கும் சந்தனம் என்ற சில பக்திப் பாடல்களை எழுதி, இலங்கை வானொலிக்கு மெல்லிசைப் பாடல்களாக்க அனுப்பியதும், அவை வானொலியில் ஒலித்து என்னை மகிழ்வித்ததும் இப்போது நினைவிற்கு வருகின்றது.
இதன் பின்பு மட்டக்களப்பு அமிர்தகழி பூg மாமாங்கப் பிள்ளையார் திருத்தல நிர்வாகிககள் திருத்தல வரலாற்றைக் காவடிச் சிந்தாக எழுதும் படியும் அப்படி எழுதும் கவிஞர்களுக்கு பரிசு வழங்குவதாகவும் ஒரு திருவிழாவின் போது பொதுப் படையாக அறிவித்தார்கள். இதை ஒரு சவாலாக ஏற்று நானும் எழுதி ஒப்புவித. தேன். எனது காவடிச் சிந்துப் பாடல்கள் போட்டியில் தெரிவாகியது மாத்திரமல்லாது அந்தப் பாடல்களை நூலாக்கியும் எனக்குப் பெருமை சேர்த்தார்கள் கோவில் நிர்வாகத்தினர். இந்தப் பாடல்கள் வெளியாகிப் பலர் வாய்களிலும் முணுமுணுக்கத் தொடங்கிய வேளையில் தான் தம்பி பத்மசிறி அவர்கள் என்னை வந்து சந்தித்தார்கள்.

"ஐயா இந்தப் பாடல்களைப் போல மேலும் பல திருத்தலங்களைப் பற்றி நீங்கள் தான் காவடிச்சிந்து வடிவில் எழுதித்தர வேண்டும். உங்கள் பாடல்கள் தங்கு தடையில்லாமல் நீரோட்டம் போல பாட அழகாக அமைந்து விடுகிறது” என்றார்.
தம்பி பத்மசிறி அவர்கள் இனிமையாகப் பாடக் கூடியவர். இலங்கை வானொலியில் எனது பாடல்களையும் சேர்த்துபல கவிஞர்களின் பாடல்களையெல்லாம் பாடிப் புகழ் பெற்றவர். இவரது அண்ணனும் ஒரு தேர்ந்த பாடகர் இசையமைப்பாளர். ரூபவாஹரினியில் எனது பல பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு இசைக்குடும்பம் அவர்கள் குடும்பம்.
பத்மசிறியின் சந்திப்பும், திருத்தலங்களைப் பற்றிப் பாட என்னிடம் ஆவலோடு கேட்டதும் இறைவனது அனுக்கிரகமாக இருந்திருக்கலாம். முன்பின் யோசியாமல் நானும் ஒத்துக் கொண்டு அவர் கேட்ட களுதாவளைப் பிள்ளையார், கொக் கட்டிச்சோலைத் தான்தோன்றி ஈஸ்வரர், சித்தாண்டி முருகன் ஆகிய திருத்தலங்கள் மேல் பாடல்களை எழுதிக் கொடுத்தேன்.
இந்நிகழ்வு சுனாமி வருவதற்கு முன்பாக நடந்தது.
அதன் பிறகு தம்பி பத்மசிறிக்கும் எனக்குமிடையில் சந்திப்பு நிகழவில்லை. சுனாமி கழித்து இரண்டு மூன்று வருடங்களுக்குப் பின் திடீரென மீண்டும் பத்மசிறி என்னை வந்து சந்தித்தார் . நான் எழுதிக் கொடுத்த பாடல்களெல்லாம் எனக்கு மறந்தே போயிற்று. ஆனாலும் பத்மசிறி அவர்கள் கணிர் என்ற குரலில் மிக இனிமையாக அந்தப் பாடல்களை பாடிக் காண்பித்தார். எனக்கு ஒரே ஆச்சரியம், பாடல்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தது மட்டுமல்ல பாடல்களையெல்லாம் இறுவட்டில் பதிய வேண்டும் எல்லாவற்றையும் நூலாகவும் வெளிகொண்டுவர வேண்டும். என்ற அந்த உயர்ந்த எண்ணமும் அவரிடமிருந்து மறைந்து போகவில்லை. இவரிடம் கையில் நிறையப் பணம் இருக்கவில்லை ஆனாலும் தெய்வங்கள் எனக்கு வழிகாட்டும் என்ற அவரது நம்பிக்கை அதீதமாகவே இருந்தது. களுதாவளைப் பிள்ளையார், கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரம் பற்றிய பாடல்களைத்தான் முதலில் கேட்டார். பிறகு போகப் போக சித்தாண்டி முருகன், திருகோணமலை கோணேஸ்வரர் என்னும் பாடல்களையும்
0 V 0—

Page 5
எழுதித்தருமாறு என்னை விடாமல் பிடித்துக் கொண்டார். வீட்டுக்கு வந்து போகும் வேளைகளிலெல்லாம் அவரால் முடிந்த சிறுசிறு அன்பளிப்புகளையெல்லாம் எனக்கு அன் போடு தருவதில் பின்நிற்கவேயில்லை. பணம் இருப்பவர்களிடம் இப்படியான எண்ணம் தோன்றுவதில்லை மனம் இருப்பவர்களிடம் பணம் இருப்பதில்லை இவரது எண்ணம் ஈடேறுமா? கட்டாயம் ஈடேற தெய்வங்கள் துணை செய்யவேண்டுமென்று நானும் தெய்வங்களை வேண்டிக்கொண்டு அவர் கேட்டதையெல்லாம் உற்சாகமாக எழுதிக்கொடுத்தேன்.
இப்போது உங்கள் கைகளில் ஐந்து திருத்தலங்கள் பற்றிய காவடிச் சிந்துப் பாடல்கள் அடங்கிய நூல் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்கிறேன். என்னை விடவும் தம்பி பத்மசிறி மேலும் மகிழ்ச்சியடைவார். அவர், எண்ணம் போல இப்பாடல் நூலோடு சேர்த்து எல்லாப் பாடல்களுக்குமான இறுவட்டும் வெளிவரத் தயாராக உள்ளதாக அறிகிறேன். வருடக்கணக்காக அவர் ஒடித்திரிந்த ஒட்டமும், பட்ட கடனும் சொல்லவே முடியாது. ஆனாலும் சலிக்காமலும் களைக்காமலும் முயன்று வெற்றி கண்டது மாத்திரமல்ல என்னையும் விடாமல் எழுதத் தூண்டிய பத்மசிறி பல்லாண்டு காலம் வாழ்ந்து இசைக்கும், தமிழுக்கும் சேவையாற்ற இறையருள் கிடைப்பதாக,
இவ்வண்ணம் கவிஞர். செ. குணரத்தினம் 3ம் குறுக்குத்தெரு, அமிர்தகழி.
மட்டக்களப்பு.
o VI o

தொகுப்புரை
மட்டக்களப்பிலுள்ள சில திருத்தலங்கள் பற்றிய வரலாற்றை காவடிச் சிந்து வடிவில் எழுதி அவற்றையெல்லாம் நூல்களாக வெளிக் கொண்டுவர வேண்டும். அது மாத்திரமல்லாது எல்லாப் பாடல்களையும் இறுவட்டு வடிவிலும் பாடிப் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்தது.
எண்ணம் இருந்தால் மட்டும் போதுமா? அதற்காக நிறையப் பணமும் வேண்டுமல்லவா? எங்கே போவது? எப்படிப் பணத்தைப் பெற்றுக்கொள்வது? இரவு பகலாக எனக்கு இதே எண்ணம் தான். தெரிந்த பலரிடம் போய்க் கேட்டுப் பார்த்தேன். கிடைப்பதாயில்லை.
இது ஒரு தெய்வப்பணி எப்படியும் இறைவன் இதற்கொரு வழி காட்டுவான் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. அதனால் என் முயற்சியைக் கை விடாமல் தொடர்ந்தேன்.
முதலில் பாடல்கள் வேண்டும். அதை யாரிடம் கேட்பது ஏற்கனவே அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் மேல் கவிஞர் செ. குணரத்தினம் பாடி வெளிவந்த காவடிசிந்து நூல் என் கைவசம் இருந்தது. பாடிப்பார்த்தேன் அருமையான பாடல்கள். அவரிடமே முழுப்பாடல்களையும் கேட்டுப் பெற வேண்டுமென்று தீர்மானித்தேன். அதன்படி கவிஞரைப் போய்ச் சந்தித்து விசயத்தைச் சொன்னேன். அவரும் ஏற்றுக் கொண்டார். முதன் முதலில் களுதாவளைப் பிள்ளையார் மேல் நான் கேட்டபடி பாடல்களை எழுதித் தந்தார். அங்குமிங்கும் ஒடி ஒரு பாடாக அந்தப் பாடல்களை பெரும் சிரமத்தின் மத்தியில் இறுவட்டில் கொண்டு வந்தேன்.
மண்டூர் முருகன், ஆனைப் பந்திப் பிள்ளையார் திருத்தல வரலாறுகளையும் காவடிச்சிந்து நூலாக வெளிக் கொண்டு வர வேண்டும் என்பது எனது பேரவா. இரண்டும் இந்நூலில் இடம் பெற்றிருக்க வேண்டும். சில பல காரணங்களால் அவை தவறிப்போய் விட்டது. அவற்றையும் அடுத்தடுத்த பதிப்புக்களில் , புத்தகத்தில், இறுவெட்டில் சேர்த்துக்கொள்ள இறைவன் அருள் பாலிப் பார் என நம்புகிறேன். திருவிழக்கிட்டாரை தெய்வம் அறியும் என்பார்கள்.
oV!!o

Page 6
ஐந்து திருத்தலங்கள் பற்றிய பாடல்களையும் நூலாகத் தொகுத்து வெளியிடவும், இறுவட்டுக்களைப் பதிவு செய்யவும் நான் பட்ட வேதனைகளையும், சோதனைகளையும் யாரிடம் சொல்லி அழுவது?
இந்த நல்ல காரியத்திற்காக பலரிடம் கையேந்தி நின்ற போதும் உரிய வேளைக்கு அவ் உதவி கிடைக்கவில்லை. இருப்பினும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் நிதியே இதற்கு கிடைத்தது என்னும் போது மகிழ்ச்சி தருகிறது. என்னுடன் சேர்ந்து இறுவட்டில் பாடிய இசைக்கலைமணி திருமதி சாந்தினி தர்மநாதன் அவர்களுக்கும் அழகான அணிந்துரையை வழங்கிய வணக்கத்துக்குரிய விஸ்வப் பிரம்மபூg வை.இ.எஸ் காந்தன் குருக்கள் அவர்களுக்கும் பாடல்களை கேட்கும் போதெல்லாம் எழுதித்தந்த கவிஞர் செ. குணரத்தினம் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துரை, ஆசியுரை வழங்கிய மகான்களுக்கும் மற்றும் எனக்கு பக்க உதவியாகவிருந்து இந்த நூலும், இறுவட்டும் வெளிவர உழைத்த, சகலருக்கும் என்றும் எனது உளமார்ந்த நன்றிகள்.
எல்லாவற்றிற்கும் மேலாக இவையெல்லாம் வெளிவர எனக்குளிருந்து என்னை ஆட்டுவித்து, ஊக்குவித்த இறைவனுக்கே எல்லாப் புகழும் பெருமையும் சேர்வதாக.
இவ்வண்ணம் விஸ்வநாதன் பத்மசிறி ஆரையம்பதி,
மட்டக்களப்பு.
oVillo

வாழ்த்துச் செய்தி
இன்றைய உலகில் திருத்தலங்கள் மீதான பக்திப்பாடல்கள் பாமாலையாக வெளிவருவது மிகவும் அரிதாகும். பல்லவர் காலத்தில் பக்தி பாடல்களாக ஓங்கி ஒலித்தது. தொடர்ந்து வந்த காலங்களில் அவை குறைந்து கொண்டே வருகின்றது. இந்தக் காலகட்டத்த்தில் திருத்தலங்கள் மீதான பக்திப் பாடல்கள் பாமாலையாக வெளிவருவது மிகவும் பாராட்டத்தக்கதும், வரவேற்கத்தக்கதுமாகும் இப் பாடல்கள் பாடுபவர்களினதும் கேட்போரினதும் உள்ளத்தை உருக வைத்து இறைவன்பால் ஈர்க்கும் வல்லமை படைத்தவை அத்துடன் காலத்தால் அழியாதவையுமாகும்.
இப் பாடல்களை இயற்றிய கவிஞர் செ.குணரத்தினம் அவர்கள் . م
நாடறிந்த பெரும் புலவர். இவர் களுதாவளைப் பிள்ளையார் மீது இயற்றிய காவடிப் பாடல்களின் வரிகள் மிகவும் உள்ளத்தை உருக்குபவை. அவர் பிள்ளையார் மீதும் அவ்வாலயச் சூழல் மீதும் கொண்ட பக்தி மோகத்தின் வெளிப்பாடாக இப்பாடல்கள் மிளிர்வதைக் காணிகின்றேன். அத்துடன் தனது எளிய மொழி நடையில் தல வரலாற்றினையும் பிள்ளையாரின் அற்புதங்களையும் மெய்யுருகப் பாடியுள்ளார். இதனுடாக ஆன்மீக உணர்வினையும் பக்தியையும் மக்களுக்கு ஊட்டுவதைக் காண்கின்றேன்.
இதே போல இப்பாடல்களைப் பாடிய இலங்கை வானொலி புகழ் திரு.வி.பத்மசிறி அவர்களும், இலங்கை வானொலி ரூபவாஹினி சக்தி புகழ் இசைக்கலைமணி சாந்தினிதர்மநாதன் அவர்களும் தங்களது இன்ப குரலால் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டதுடன் பக்தி உணர்வினையும் ஊட்டியுள்ளனர்.
இவ்வாறான திறமைசாலிகள் மூவரையும் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஒன்று சேர்த்து இறுவட்டு வடிவில் மக்களுக்கு ஈந்துள்ளார். இதே போல பாடல் பெற்ற திருத்தலமான திருக்கோணேஸ்வரப் பெருமான், சித்தாண்டி சித்திர வேலாயுதப் பெருமான், கொக்கட்டிச்சோலை தான் தோன்றிஸ்வரர், மாமாங்கப் பிள்ளையார் மீதான பதிகங்களும் இவ் வெளியீட்டில் இடம்பெற்றுள்ளமை மேலும் காலத்தின் தேவையை உணர்ந்த
செயற்பாடாக அமைகின்றது. X

Page 7
இவ்வாறு தங்களது திறமைகளை சமூகத்திற்கு அர்ப்பணித்த கலைஞர்களை பாராட்டுவதுடன் இத்துடன் கடமை முடிந்தது என்றில்லாமல் மேலும் பல பதிகங்களை வெளியிடவும் பாடவும் எல்லாம் வல்ல களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் அருள வேண்டும் என பிரார்த்தித்து நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வண்ணம் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ക്രങ്ങബഖ് களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலனசபை.

பக்திரசம் கலந்த பாமால்ை நாயகனை வாழ்த்துகின்றோம்
பக்திரசம் என்கின்ற பாமாலையாக நமது உள்ளத்திற்கு ஐம்பதிகளின் ரகத்தை பாமாலையாக்கிய பல்ரச குரலவன் விஸ்வநாதன் பத்மசிறி எனும் ஆரூர் பெற்றெடுத்த சகோதரருடைய இப்புனிதமான நற்பணியை வாழ்த்துகின்றேன். பல்சமயமும் போற்றத்தக்க ரசிக்கத்தக்க விதத்தில் இது ஒர் சமய உண்ணத பாணமாக உருவாக்கி எமது மனங்களில் பாமாலையாக பருகத் தந்துள்ளதை எண்ணும்போது உளப்பூரிப்புடன் வாழ்த்துகின்றோம். கோணேசபதி, தான் தோன்றிச்சரப் பதி, சிற்றாண்டிப்பதி, மாமாங்கப்பதி , களுதாவளை சுயம்புலிங்கப்பதி ஆகிய புண்ணிய பதிகளின் ஐந்து பக்தி ரசப்பாமாலையை இந்துவாக வாழ்கின்ற நமது நாவில் பருகிட கிடைத்த இப்பேறை என்ன புண்ணியம் செய்த்ன நெஞ்சமே என்று வாழ்த்துகின்றோம் பாடலிலே பக்தி பரவசத்திலே ஓர் பாமாலை அதிலே உன்னதமான ஒர் புனித ரசம். இத்தனையும் கோர்த்து எமது உள்ளத்திலே எழுச்சியுடன் இருக்கின்ற சமய உணர்வை உயிர்பெறச் செய்துள்ள பத்மசிறி பாமாலை ஐம்பதிகளின் சிகரமே இப்பாமாலைப் பதிகளை ஆக்கிய கவிஞர் செ.குணரத்தினத்தின் சமய சிந்தனை எம்மை வியக்கவே வைத்துள்ளது. பாமாலையின் ரசத்திலே கலந்துள்ள இசைக்கலைமணிதிருமதி சாந்தினிதர்மநாதனின் குரல்வளச் சத்தத்தையும் பருகக் கிடைத்தில் மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம். மேலும் பல பாமாலை ரசங்கள் பாடவேண்டும். அவைகளை நமது இந்து மக்கள் சுவைக் வேண்டும் என்றும் இப்பாமாலையின் ஈஸ்வரன் இவர்களுக்கு துணையாக இருக்க வேண்டுமென்று சகவாழ்வு மன்ற சமயக்குழுக்களின் சார்பில் வாழ்த்துகின்றோம்.
“பருகிடுவோம் பத்மசிறியின் பாமாலை ரசத்தை”
இப்படிக்கு மட்/சகவாழ்வு மன்ற சமயக்குழுவின் சார்பில் தலைவர் Kதியாகராசா
o X o

Page 8
RAMAKRISHNAMISSION (Ceylon Branch) ASHRAMA & CHILDREN'S HOMES, OO 94 O65-2222752, Ramakrishnapuram, Batticaloa, Sri Lanka. E-mail rkmbatdeurekalik
வாழ்த்துரை பக்திரசப்பாமாலை சிறப்புற வாழ்த்துக்கள்
பகவான் ழரி ராமகிருஷ்ணரின் திருவருளால் நூல் வடிவிலும், இறுவட்டிலும் வெளிவரும்பக்திரசப்பாமாலையையும் (காவடிப்பாடல்கள்) அதனை முன்னெடுக்க உதவிய அனைவரையும் வாழ்த்துகின்றேன்.
ஆலயங்கள் தோறும் காவடியெடுக்கும் நிகழ்வானது காலங்காலமாக நமது சமயத்தில் இடம்பெறும் முக்கிய நிகழ்வாகும். இதற்காக அருட் கவிஞர்களால் காவடிப்பாடல்கள் திருத்தல மூர்த்திகளை முன்னிலையாக்கிபாடப்பட்டு வந்திருக்கின்றன.
அந்த வழியில் பல வருடங்களாக முயன்று ஐந்து திருத்தலங்களையும் அவைகளின் தல மூர்த்திகளையும் கொண்டு தொண்ணுறிற்கும் மேற்பட்ட பாடல்கள் யாக்கப்பட்டுள்ளன.
இதனை யாத்த கவிஞர். இசையமைத்துப் பாடிய கலைஞர்கள் மற்றும் இந் நிகழ்வை முன்னெடுத்துச் செல்லும் அடியார்கள் அனைவரையும் பாராட்டுகின்றேன்.
இந் நிகழ்வுகள் இனிதே நிகழ்ந்தேற பகவான் ழரீ ராமகிருஸ்ணரின் திருவருளை வேண்டிப்பிரார்த்தித்துநிறைவுசெய்கின்றேன்.
இறைபணியில், ഖn ഷിജു 0റ9 മറഞ്ഞല്ലേ?
சுவாமி அஜராத்மானந்தா
SWAM. AJARATMANAN:
Savan-in-Charge RAMAKRISHNAMiSSION, Ramukrishnupurum, Bortticaloa.
97 - O -- soC9
«oXllo»
 

காவடிச் சிந்து
களுதாவளைப் பிள்ளையார் பதிகம்
O1.
O2.
அழகுதுதிக் கையோனே அறுமுகனின் அண்ணனான
ஐங்கரனே எமைக் காக்கும் பிள்ளையாரே! பழகுதமிழ்ப் போலெங்கள் பக்கம் வந்து
பாவவினைதீர்ப்பவனே ஐயா வாவா களுவை நகர்தனிலிருந்து எங்கள் வாழ்வை
கண்ணாரக் கண்டுமனங் குளிர்ந்துநாளும் பழுதொன்றும் வாராமல் காக்க வேண்டும்.
பார்வதியின் திருக்குமாரா அருள் செய்வாயே!
வெள்ளிலைச் சடங்கு செய்து வணங்கிவந்த
வேடுவரின் தெய்வமாகி அருள்பாலித்தாய் பள்ளிகொண்டுகளுவை நகர்தன்னில் வாழும்
பக்தர்களின் குறைகளையும் தீர்த்து வைத்தாய் தொல் வினைகள் கழாமல் தொலைந்து போக
துணையாக எம்மோடு வாருமையா கல்லாகி இருந்தெமக்குக் கருணைகாட்டும்.
களுதாவளைப் பிள்ளையாரே அருள் செய்வாயே!
O Ol e

Page 9
O3.
O4.
O5.
தம்பியவன் முருகனுக்கு வள்ளியம்மன்
தக்கதுணை என எண்ணித் தகுந்த வேளை தும்பிக்கைநீட்டியானை வடிவில் வந்து
துரிதமுடன் திருமணமும் நிகழச் செய்தாய் உம்பர்களும் தொழுகின்ற உமாவின் மைந்தா உன்போல வேறுதுணை எமக்கேதையா உன்பாதம் பணிந்திட்டோம் ஐயாவாவா
களுதாவளைப் பதியமர்ந்த பிள்ளையாரே!
பழந்தமிழர் பண்பாட்டைப் பேணிக்காத்து
பக்தியுடன் சைவத்தை வளர்த்துநாளும் அழகுடனே வாழ்வமைத்து வாழுகின்ற
அழகுதமிழ்க் குலம் வாழும் பதியாம் எங்கள் களுதாவளையினிலே கோவில் கொண்ட
கஜமுகனே காலமெல்லாம் காக்க வேண்டும் தொழுதுன்னைக் கும்பிட்டோம் ஐயா வாவா.
துங்கக் கரிமுகனே பிள்ளையாரே!
வெற்றிலைக்குப் பேர் போன பூமியென்று
வேடுவர்கள் உரைத்ததனால் விருப்பம் கொண்டு பொற்பதத்தை நாம் தொழவே இங்கு வந்து
“பொலிகவளம்” என்றமர்ந்துகொண்டாயோநி? அற்புதங்கள் பல காட்டி அடியார் நெஞ்சில்
ஆனந்தக் கூத்தாடி அருள் பாலிக்கும் முற்றுமுழுதான தெய்வம் நீதான் ஐயா.
மூஞ்சுறு வாகனனே ரட்சிப்பாயே!
o O2 o

O6.
O7.
O8.
தாய்தந்தை உலகமென்றதத்துவத்தை
தரணியிலே எல்லோர்க்கும் எடுத்துக் காட்ட தாய்தந்தை இருவரையும் சுற்றிவந்து
தம்பிபகை கொள்ள மாங்கனியைப் பெற்றாய் வாய்பேசாச் சிறுவர்களைப் பேச வைக்கும்
வள்ளலெங்கள் பிள்ளையாரின் அருளைப்பாட வார்த்தையின்றித் தவிக்கின்றேன் வா வா ஐயா.
வந்தெமது வாழ்வுயர ரட்சிப்பாயே!
மழை வெள்ளம் புயல் வந்துதுயரப்பட்டோம் மாகடலும் சுனாமியாக வந்து கெட்டோம் பிழைப்போமா நாமினிமேல் என்று கேட்டு
பிள்ளையாரேநாம் உன்னைத்தெண்டனிட்டோம் அழுதிட்ட எங்கள் குரல் கேட்டு ஐயா
அருள்தந்து எமைக்காத்து அபயம் தந்தாய் பழுதொன்றும் வராமல் காலம் எல்லாம்.
களுவை நகர் பிள்ளையாரே காப்பாயப்பா!
பணமிருந்தும் பரிவுகாட்ட மறந்தேனய்யா
படித்தவரை மற்றோரை மதியா வண்ணம் மனம் போன போக்கினிலே நடந்தேனய்யா
மாயவாழ்வைநிஜமென்றே நினைத்தேனய்யா! இனசனத்தை நானொதுக்கி வாழ்ந்தேனய்யா
எனது செல்வம் அழிந்த பின்தான் விழித்தேனய்யா மனமுருகி வேண்டுகின்றேன் ஐயா வா வா - சுவாமி.
சுயம்புலிங்கப் பிள்ளையாரே அருள் செய்வாயே!
o 03 o

Page 10
O9
1O.
11.
அழகான மதுரை மரச் சோலையோரம்
அப்பனவன் அமர்ந்திருக்கும் கோலம் கண்டேன் குளமெங்கும் குமுதமல்லிபூத்திருந்து
குழந்தைகள் போல் குதூகலிக்கும் காட்சிகண்டேன். வளம் கொஞ்சும் களுவைநகர் வீதியெல்லாம் வழிந்துவரும் காவடிகள் ஆட்டம் கண்டேன் உளமெல்லாம் உன் நினைவில் களிக்குதய்யா. களுதாவளைச் சுயம்புலிங்கப் பிள்ளையாரே!
கற்பூரச் சட்டிதனைத்தலையில் ஏந்தி
கஜமுகாவுன் திருவடியை மனதில் எண்ணி பக்தரெல்லாம் கோயில் வாசல் வந்துநின்றால்
பரவசத்தால் மேனியெல்லாம் நடுங்குதய்யா! அற்புதங்கள் காட்டுமுங்கள் திருக் கோலத்தை அடியேனும் அனுதினமும் காணவேண்டும் கற்சிலைக்குள் இருந்தெம்மைக் காவல் செய்யும்.
களுதாவளைப் பதியமர்ந்த பிள்ளையாரே!
அறிவிழந்துநான் செய்த பாவமெல்லாம்
அருட் கடலே பொறுத்தருள வேண்டுமய்யா இனியெனக்கு உன் கழலைத் தொழுவதல்லால் இப்புவியில் வேறு பணி கிடையாதையா விழியிழந்த அந்தகன்போல் தவிக்கும் என்னை
வினாயகரே காத்தருள வேண்டுமப்பா அழிந்துடலும் போனாலும் எனது ஆவி.
அனுதினமும் உனைத்துதிக்க வரம்தா ஐயா
o 04 o

12.
வெள்ளியினால் செய்தலகு, முள்ளும் போட்டு
புள்ளிமயில் காவடியைத் தோளில் வைத்து சுள்ளென்று சுடும் வெயிலில் பாதம்திய
சுற்றிவந்தேன் உன்கோவில் வீதியெல்லாம் உள்ளமது உனைநினைத்தே உருகுதையா
உன்னையல்லால் வேறு துணை எனக்கு இல்லை பள்ளமதை நாடிவரும் மழைநீர் போல. பக்கம் வந்தெனது துயர்களைவாயப்பா
கொடிய நோய் வந்தென்னைவருத்திடாமல்
கொள்ளை, கொலை, குடி, களவு, காமத்திற்கு அடிமையாகிநாண் கெட்டு அழிந்திபாமல்
அனுதினமும் காக்கவேண்டும். ஐயா உந்தன் அடிதொழுதே காலமெல்லாம் வாழவேண்டும் அதனை விட வேறாசை எதுவுமில்லை அடியவனாம் எனையனைத்து அருள வேண்டும்.
ஐங்கரனே சுயம்புலிங்கப்பிள்ளையாரே!
-O 05 o

Page 11
O1.
O2.
OnööréîööõpôtGBoiooooo தான்தோன்றீஸ்வர் பதிகம்
4QNY
தான்தோன்றி ஈஸ்வரனே தரணி காக்கும் திருவே என் செல்வமே சிவனே ஐயா ! நானிந்தப் பூமியிலே வாழ்ந்து உன்னை
நினைத்துருகித் துதிக்க வழி செய்வாயப்பா ஏனிந்த வாழ்வென்று அலுத்து நெஞ்சம்
ஏங்கி நான் பரதவிக்கக் காத்தாயய்யா! வீனில்லை என் பிறப்பு உலக வாழ்வில்
விண்ணேகும் நாள்வரையும் அருள் செய்வாயே
வனவேடர் வணங்கி வந்த தெய்வமானாய்
வாழ்நாளில் எமைக்காக்கும் லிங்கமானாய் மனமெல்லாம் நிறைந்த இருள் போக்கிளங்கும்
மட்டில்லாப் பேரொளியாய்ப்பரவிநின்றாய் உணதருளால் கொக்கட்டிச்சோலையென்னும்
உயர் பதியைக் காணுகின்ற பேறும் தந்தாய் கணநாதா உன் பாதம் துதித்தேனய்யா
காலமெல்லாம் எனைக் காத்துரட்சிப்பாயே!
o 06 o
 

O3.
O4.
O5.
அறிவுதந்தாய் ஆற்றலுடன் அழகும் தந்தாய்
ஆடையணி ஆபரணம் பொருளும் தந்தாய் செறிவுடனேநிறைவான செல்வம் தந்தாய்
சீரான வாழ்வமைத்துச் சிறப்பும் தந்தாய் திரிகல நாயகனே எனது வாழ்வில்
சேமமுறநான் வாழும் காலமெல்லாம் துதிபாடி உனைப் போற்றும் வரத்தைத்தாராய்
தான்தோன்றி ஈஸ்வரனே அருள் செய்வாயே!
போர்த்துக்கல் தேசத்துப்படைகள் வந்து
போரிட்டு இலங்கையிதைப் பிடித்தபோது ஊரெல்லாம் இருந்த இந்து ஆலயங்கள்
உடைந்தழிய வெறிக்கூத்து ஆடிநின்றார் கூத்தனே உனது திருக்கோவிலுள்ளும்
கூசாமல் நிந்தை அவர் செய்தவேளை காத்துநீஅவர் செருக்கை அடக்கிவைத்தாய்
கணநாதா உன் பாதம் துதித்தேனய்யா!
கல்லாலே ஆனநந்தித் தேவர்தன்னை
காட்டியது புல்தின்னுமா என்று கேட்டபோது எல்லையில்லா ஒளிப்பிழம்பேஉனை நினைத்து
அர்ச்சகரும் ஆமென்று பதிலைச் சொன்னார் சொல்வதுபோல் நடப்பதில்லை மனிதர் வாழ்வில்
சிவனேயுன் அருளலே அடுத்தநாளே புல்தின்று எழுந்து சாணம் நந்திபோட
படை வீரர்திகைத்தோடச் செய்தாய் போற்றி
-o 07 o

Page 12
O6.
O7.
O8.
சக்தி சிவன் சரிபாதியாகக் கொண்ட
சிவனே உன் விளையாட்டே உலக வாழ்வு பக்தியுடன் உனைத்துதித்தால் பாவம் நீங்கும் பரமகதி அமைந்திடவும் பாதை தோன்றும் கத்தி வடிவான பிறை தலையில் சூடி
கங்கையையும் அளித்த பரம் பொருளே போற்றி எக்கதியும் எனக்கில்லை இறைவா வா வா
எழில் சூழும் கொக்கட்டிச்சோலையானே!
கொடிய நோய் எனைத்தாக்கி வதைத்தபோது கைவிட்டு வைத்தியரும் விலகிப்போனார் இடிவிழுந்த மரமாகி இறுதிநாளை
எண்ணி நான் தவிக்கையிலே என்னைக் காத்தாய் வடிவான காவடியைத் தூக்கித் தோளில் வைத்தபடி உன் வாசல் ஓடிவந்தேன் துடியிடையாள் பார்வதியின் மணாளவென்
துயர்நீக்கி எனைக் காத்துரட்சிப்பாயே!
இனப்பகையால் தமிழரினம் இன்னல் பட்டு
எக்கதியும் இல்லாமல் அலைதல் கண்டாய் மனம் விட்டு அழுதாலும் இலங்கைநாட்டில்
மருந்துக்கும் இரங்கிடுவார் யாருமில்லை தினம் தினமாய் மக்கள்படும் துயரம் பார்த்தும்
தெய்வமே பேசாமல் இருப்பதென்ன? உனை நாடி ஓடி வந்து கரம் குவித்தேன்
உமைபங்கா எமைக்காத்துரட்சிப்பாயே!
o 08 e

O9.
11.
சுடுமணலில் படுத்துருண்டு கோவில் சுற்றி
சிவனேயுன் திருவடியை மனதில் பற்றி கடும் துயரில் நான்தவிக்கும் தவிப்பை பார்த்தும்
கடுகளவும் இரங்காத நியாயம் என்ன? அடுத்தடுத்து என் வாழ்வில் துயரம் தானா?
ஆண்டவனேநானென்ன பாவம் செய்தேன்? விடமுண்ட கண்டனே நீல கண்டா.
வேளையிது எனைக் காத்து ரட்சிப்பாயே.
அழகுத் தேரேறி வரும் காட்சிகண்டேன்
ஆனந்தக் காவடிகள் ஆட்டம் கண்டேன் கலங்கி மனம் பக்தர் விடும் கண்ணிர் வெள்ளம்
கடல் போல பொங்கியெழும் கோலம் கண்டேன் வளமான கொக்கட்டிச் சோலை தன்னில்
வானுயர்ந்தகோபுரமும் கண்ணால் கண்டேன் உளமுருகித் தெண்டனிட்டேன் உமையாளோடு.
உன்னழகைநான் காண வேண்டும் வாவா
பன்றிக்குப்பால் கொடுத்தாய் தருமிகையில்
பாட்டெழுதிக் கொடுத்துவிட்டுப் புதினம் பார்த்தாய் எண் திசையும் அடக்கியாண்ட இராவணன் தன்
இசை கேட்டு மயங்கிநீ அருள் கொடுத்தாய் உன்னுடைய விளையாட்டு ஒன்றாரெண்டா
உமைபாங்கா நான் சொல்லி ஆறுதற்கு? என்னுடைய பாவவினைதீர்த்து வாழ்வில் ஈடேற்றம் காண அருள் புரிகுவாயே.
-o 09 eم-

Page 13
12.
13.
14.
நெல்வளமும்நீர்வளமும்நிறையப்பெற்று
நெஞ்சத்தை அள்ளுமெழில் இயற்கைகழ்ந்து சொல் பழமை மாறாது இனிமை சொட்ட
சுந்தரத்தேன்தமிழ் பேசும் மக்கள் வாழும் தொல்பதியாம் கொக்கட்டிச்சோலை தன்னில்
தான்தோன்றியாக வந்து கோவில் கொண்டு உள்ளமெலாம் நிறைந்தவனேசிவனே ஐயா
உனதடியைப் போற்றுகிறேன் அருள் செய்வாயே
சுடலையிலே நடனமிடும் சிவனே போற்றி
சுற்றுமிந்த ஞாலத்தின் தலைவா போற்றி விடமுண்டநீலகண்டம் தனிலே பாம்பை
விருப்புடனே அணிந்தவனே போற்றிபோற்றி இடம் தேடிக் கொக்கட்டிச்சோலை வந்து
எங்கள் குறைகேட்டருளும் இறைவா போற்றி தடம் புரண்டு தமிழர் வாழ்வுதவிக்குதய்யா
தருணமிது எமைக்காத்து ரட்சிப்பாயே.
பிறையதனை நெற்றியிலே அணிந்தாய்வாவா
பரம் பொருளே எமையாளும் இறைவா வாவா குறை காணும் மனிதர்களின் குற்றம் போக்கி குவலயத்தில் அவர் திருந்தி வாழ வாவா சிறைகளுக்குள் அடைபட்டு கண்ணிர் சிந்தி
செத்தழியும் தமிழ் இளைஞர் துயரம் பார் பார் சிறை மீண்டு அவர்கள் வர வேண்டும் மய்யா
சிவமே எம் கொக்கட்டிச் சோலையானே!
o 10 o

15.
16.
உனைப் பாடித்துதித்தாலே போதுமயப்யா
உள்ளமெலாம் தேனாக இனிக்குதயப்யா பனையளவு எனைப் பிடித்ததுன்பமெல்லாம் புல்நுனியின் பணிபோல மாறுதய்யா துணை யெனக்கு உன்னை விட்டால் யாருமில்லை
தில்லை நடராசரேவாவா ஐயா அணைத்தென்னை ஆட்கொண்டு இந்த ஜென்மம் நான் பிறந்த பயனடைய அருள் செய்வாயே.
உலகமெல்லாம் நிறைந்த பரம் பொருளே எங்கள் உள்ளமெலாம் நடனமிடும் சிவனே போற்றி பலகோடிப் பக்தர்களைத் தண்பால் ஈர்த்த
பரம்பொருளே கொக்கட்டிச்சோலையானே விலையுயர்ந்த அணிமணிகள் இருந்தும் கூட
விஷப்பாம்பை அணிந்தவனே இறைவா போற்றி அலைபாயும் நெஞ்சத்தை அமைதியாக்கி
ஆண்டவனே எனைக்காத்து ரட்சிப்பாயே.

Page 14
மட்டக்களப்பு அமிர்தகழி
மரீமாமாங்கப்பிள்ளையார் பதிகம்
O1.
O2.
வங்காள விரிகடலின் வலக்கை போலே
வற்றாமல் பாய்கின்ற வாவியோரம் சிங்காரத்தமிழர் குலம் சேர்ந்து வாழும்
சீர் பெறுநல் அமிர்தகழிப்பதியில் நாளும் மங்காத புகழ்பெறவே கோவில் கொண்டு
“மாமாங்கர்’ எனப் பெயரும் பெற்றாயப்பா துங்கக்கரிமுகனே வாவா ஐயா - சுவாமி
துயர்களைந்து எமைக்காத்துரட்சிப்பாயே
கொடியவனவிலங்குகளின் கூட்டத்தோடு
குடிவாழ்ந்த வேடுவரின் தெய்வமானாய் அடியவரின் துணையாக அகிலமெல்லாம்
ஆட்டுகின்ற சிவனாரின் புதல்வனானாய் துடியிடையாள் பார்வதியின் மகனாய்த் தோன்றி
தோகைமயில் வாகனனின் அண்ணனானாய் மிடிமைதனைப் போக்குதற்கே பணிந்தேனய்யா சுவாமி
மாமாங்கக் கணபதியே அருள் செய்வாயே!
o 12 o
 

O3.
O4.
O5.
கொக்கட்டி மரநிழலில் கோவில் கொண்டாய்!
கும்பிடுவோர் பாவத்தைத் தீர்த்து வைத்தாய் திக்கெட்டும் மணம்கமழும் சேறு கொண்ட
தீர்த்தத்தில் நீராடப் பேறும் தந்தாய் வக்கற்று வாழவழி இல்லாதோர்க்கு
வரமளித்துநின்னருளை நாளும் தந்தாய் முக்கண்ணன் திருக்குமரா முதல்வா வாவா - சுவாமி
மாமாங்கக் கணபதியே அருள் செய்வாயே
மட்டுநகர் மாநிலத்தை அரசு செய்த
மாதரசாள் மார்பினிலே இருந்த மச்சம் சட்டெனவே மாற்றியநற்தீர்த்தம் கண்டேன்!
சங்கரனார் சுயம்புலிங்கக் காட்சி கண்டேன்! துட்டர்களின் ஆணவத்தை அடக்கியாளும்
தும்பிக்கை ஆண்டவனின் கோலம் கண்டேன் பட்சமுடன்நின்பாதம் பணிந்தேனய்யா-சுவாமி
பாவவினை போக்கியருள் புரிகுவாயே
இராவணனைப் போர்க்களத்தில் பொருதுவென்ற
இராமபிரான் வந்தமர்ந்த தலத்தைக் கண்டேன்!
குறமகளைக் குமரனவன் மணம் முடிக்க
குஞ்சரமாய் உருவெடுத்தோன் கோவில் கண்டேன்!
திரள் திரளாய்த்திரண்டுவரும் அடியார் கூட்டம் திக்கெல்லாம் பாடுவதை நேரில் கண்டேன்!
கரம் குவித்தேன் மாமாங்கப்பிள்ளையாரே - சுவாமி
கணபதியே எனக்கருள வருகுவாயே!
o l3 o

Page 15
O6.
O7.
O8.
ஆடி அமாவாசையிலே தீர்த்தமாடி
அமிர்தகழிப்பதியினிலே அமிர்தமுண்டு பாடியுனைத் துதித்தாலே பத்தியோடு
பாவவினை எல்லாமே ஒடுமென்று தேடியுனைவருமடியார் கூட்டத்தோடு
திருக்கோவில் வாசலிலே வந்துநின்றேன்! ஆடுதுதிக்கையோனே ஐயா வாவா - சுவாமி
அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையாரே!
இலங்கையினைச் சுட்டெரித்த அனுமன் வாலில்
எழுந்தபெரும் தீயணைத்ததீர்த்தம் கண்டேன்! விலங்குகளே அலைந்தபெருங் கொடியகாடு
விண்வெளிபோல் மாறியவுன்தலத்தைக் கண்டேன்! அலைநடுவே அகப்பட்ட கலத்தைப்போலே
அடியேன் நான் மிகவருந்திவாடுகிறேன்! இலையெனக்கு வேறுகதிஐயா வாவா - சுவாமி ஏங்கி நான் தவிக்கின்றேன் பிள்ளையாரே!
தாய்தந்தை உலகமெனச் சொன்னாய் போற்றி தமிழ்ஞானக் கடலான முதல்வா போற்றி பேய்வாழும் சுடலையிலேநடனமாடும்
பெருமானின் கணங்களுக்கும் தலைவா போற்றி மாயவனார் மனம் நிறைந்த மருகா எங்கள்
மாமாங்கக் கணபதியே போற்றி போற்றி தாயிழந்த பிள்ளையைப்போல்தவித்தேனய்யா - சுவாமி
தருணமிது வந்து எனை ரட்சிப்பாயே!
o 4 o

O9.
1O.
11.
ஆணவத்தால் தேவர்களை அடக்கியாண்ட
ஆனைமுகச் சூரனவன் தலையைக் கொய்து வானவர்கள் பயம் நீங்கி வாழச் செய்த
வள்ளலெங்கள் வினாயகரின் கருணை கண்டேன்! ஞாலமெல்லாம்நிறைந்தெம்மை ஆட்சிசெய்யும்
ஞானத்தின் திருவுருவே வாவா ஐயா! காலமெல்லாம் கண்ணிரில் வாழுகின்றேன் - சுவாமி
காத்தருள இது தருணம் வருகுவாயே!
வெள்ளியினால் செய்தலகுவாயில்குத்தி
விலாயிரண்டும் விறுவிறுக்கமுள்ளும் போட்டு புள்ளிமயில் காவடியைத்துக்கிவைத்து
புண்ணாக மேனியெலாம் நோகவந்தேன் உள்ளமெலாம்நின்னடியைநினைத்துவிம்ம
உதிரமெல்லாம் கொட்டமிகத் துடித்தேனய்யா மெல்லனவே என்னாவி பிரியுமுன்னே - சுவாமி
மாமாங்கக் கணபதியே வருகுவாயே!
கணநாதர் அணிந்த பிறைதன்னைப் பெற்றாய்
காசினியில் வினாயகனாய்ப் பேரும் பெற்றாய் குணநிதியாய்க் குருவாக ஞானம் பெற்றாய்
குன்றாடும் வேலவன் முன்மாம்பழத்தைப் பெற்றாய் மனம் மகிழச் சித்திபுத்தி மகளிர் தன்னை
மணம் செய்து தேவர்களின் வாழ்த்தும் பெற்றாய் மனமெல்லாம் உனை நினைந்து உருகுதப்யா - சுவாமி
மாமாங்கக் கணபதியே அருள் செய்வாயே!
o l5 o

Page 16
12.
13.
14.
வியாசர்மகா பாரதத்தின் கதையைச் சொல்ல
விருப்பமுடன் அதைக்கேட்டுதும்பிக்கையில் பெயர்த்தெடுத்ததந்தத்தால் எழுதிவைத்த
பெருமானே, காவிரியை முழுதாய் ஓர் நாள் அகத்தினார் கமண்டலத்தில் அடக்கிவைக்க
அதைத்தடுக்கும் எண்ணத்தில் காக்கையானாய் இகத்தினிலே எனக்கிரங்கி வருவாயப்பா - சுவாமி
இருவிழியும் நீர் சொரியக்கும்பிட்டேனே!
விண்தொடவே கோபுரங்கள் எழுப்பிவைத்தேன்
விலையுயர்ந்த அணிமணிகள் தேடிவைத்தேன் எண்ணிடவே முடியாத செல்வம் சேர்த்து
ஏவலரைக் காவலரைக் கூட்டிவைத்தேன்! கண்ணிறைந்த மனைவியுடன் மக்களோடும்
கவலையின்றிநான் வாழ்ந்து என்ன கண்டேன்? உன்னிடமே என்மனது ஓடுதய்யா - சுவாமி
என்மனதில் நிம்மதியைத் தருகுவாயே!
நானென்ற அகந்தைவெறிபிடித்துத்தள்ள
நல்லவரை மதியாமல் நடந்துகொண்டேன் ஏனென்று கேட்டவரை உதைத்துதள்ளி
இறைவனையும் பணியாமல் வாழ்ந்துகொண்டேன் பாவத்தை விலைகொடுத்து வாங்கியிந்த பாவிநான் படும்துயரம் போதுமய்யா! தேவர்துயர் தீர்த்தவனே வாவா தேவா - சுவாமி
தெண்டனிட்டேன் மாமாங்கப் பிள்ளையாரே!
o 16 o

15.
16.
தீராத மெய்வருத்தம் தாங்கொண்ணாமல்
தெருத்தெருவாய்நானலைந்துமெலிந்துபோனேன் நேராத தெய்வங்கள் எதுவுமில்லை
நித்தமும் நான் போகாத கோவிலில்லை பாராத வைத்தியங்கள், மருந்துமில்லை
படும்துயரம் தீரவொரு வழியுமில்லை! நேராகக் காவடியைத் தோளில்வைத்து-சுவாமி
நின்பாதம் ஓடிவந்தேன் அருள் செய்வாயே
சிலையான உன்னழகு மேனிகண்டேன்
சிங்காரத் தோற்றத்தின் பொலிவும் கண்டேன் அலையலையாய்த்திரள்கின்றபக்தர் கூட்டம்
ஏந்திவரும் காவடிதீச்சட்டி கண்டேன் குலையாத பக்தியுடன் கோவில் முன்னால்
கும்பிட்டகையோடு சிலையாய்நின்றேன் நிலையான உன்னழகைக் காண வாவா - சுவாமி
அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையாரே!
காவியுடைதரித்தபடிநிலத்தில் வீழ்ந்து
கடும்வெயிலில் உன் நாமம் மனதிலெண்ணி பாவிநான் மெய்யுருகப்படுத்துருண்டு
படும் துயரம் பார்ப்பதற்கு வரக்கூடாதோ பூமியிலே பிறப்பெடுத்த பலனைக் காணேன் பெருமானே என்னாவி போகுதய்யா சாமியென்று கையெடுத்துக்கும்பிட்டேனே - சுவாமி
மாமாங்கக் கணபதியே வருகுவாயே!
-O 7 O

Page 17
18.
2O.
பால் நிறைந்த காவடியைத் தூக்கித்தோளில் பக்தியுடன் வைத்தபடி வீதியெங்கும் பாலன் நான் நின்னருளைத் தேடித்தேடி
பவனிவரும் காட்சிதனைப் பாருமய்யா! நீலகண்டன் மடியினிலே நீயிருந்தால்
நின்னடியார் துயர்தீர்க்க வருவதெப்போ? வேளையிதே வெளிக்கிட்டு வாருமய்யா - சுவாமி
விநாயகரே மாமாங்கப் பிள்ளையாரே!
நாஸ்திகனாய்ப் பொய்வேடம் புனைந்து மண்ணில்
நான் பட்டதுன்பங்கள் போதும் போதும், ஆஸ்தினாய் எனைமாற்றி அறிவுதந்த
அருட்கடலேநின்பாதம் பணிந்தேனய்யா! பேச்சினிலும் மூச்சினிலும் உன்னைக் கண்டேன்
புயல்மழையும் இருள்வெயிலும் நிதானப்யா! காட்சிதந்து என்மனதைக் குளிரவைப்பாய் - சுவாமி
கணநாதர் திருக்குமரா அருளுவாயே!
கொடியபுயல் மழையடித்துவெள்ளம்போட்டு
குடிமனையை மரம்செடியை அழித்துச்செல்ல விடியளவும் நனைந்தபடி வீதியோரம்
விழுந்துழன்ற எம்முயிரைக் காத்துநின்றாய் படியளந்து எம்வாழ்வைத்தினமும் காக்கும் பரமசிவன் பாலகனே பிள்ளையாரே அடிதொழுதுநின்பாதம் துதித்தேனய்யா-சுவாமி
அமிர்தகழிக் கணபதியே அருள் செய்வாயே
o 8 o

21.
22.
23.
விக்கினங்கள் வராமல் எம்மைக் காத்து
வேதனையைத்தீர்ப்பதற்கு வேறுதெய்வம் திக்கெட்டும் தேடினாலும் கிடைக்குமோதான்
தில்லையிலே கூத்தாடும் சிவனார்மைந்தா ஒப்பரிய பெருச்சாளி வாகனத்தில் ஒயிலாகநியேறி இன்றேவந்து தப்பாமல் எனக்கு எழில் காட்சிதாராய் - சுவாமி
துடிக்குதப்யா என்னிதயம் அருள்செய்வாயே
கண்ணிருந்தும் அந்தகனாய் வாழ்ந்தேனய்யா!
கையிருந்தும் உனைத்துதிக்க மறந்தேனய்யா! நெஞ்சிருந்தும் உனை நினைக்காதிருந்தேனய்யா
நினைவிருந்தும் உனைப்பாடமறந்தேனய்யா! பஞ்சணையில் சுகம் கண்டு பணச்செருக்கால்
பண்பழிந்து என் வாழ்வைக் கெடுத்தேனய்யா தஞ்சமெனக்கினியெல்லாம் நீதானயப்யா - சுவாமி
தவிக்குமெனைக் காப்பாற்றிஅருள்செய்வாயே!
துள்ளிவிழும் அலைகளிலேதுடிக்கும் மீனும்
துறுகின்ற மழை, வெள்ளம் காற்றும் நீரும் புள்ளிமயில், புறாக்குயிலும் பருந்தும் பாம்பும்
புழுமண்ணும் வான்நிலவும் நெருப்பும் வாழும் பிள்ளைகளும், பெரியவரும் பேச்சும் மூச்சும் பிறப்பிறப்பும் எல்லாமும் நீதானப்யா உள்ளமழ உனை நினைத்துத் துதித்தேனய்யா - சுவாமி
9|Lóligbesus) uDITLDITTriasis 156ï606ITUITGgt
o 9 o

Page 18
24.
25.
26.
அழுதழுது விழியிரண்டும் நோகுதப்யா
அனல்தெறிக்கும் வெயில் நடந்து இரண்டுகாலும் பழுப்பேறிப்போய் நெஞ்சம்பதைக்குதய்யா
பகலிரவாய் உனைப்பாடித்துதித்துமுந்தன் நிழல்கூடக் காணாமல் தவித்தேனய்யா
நீயிருக்கும் அமிர்தகழிப் பதிதானெந்தன் விழிகளுக்கு விருந்தளிக்க வேண்டுமய்யா - சுவாமி
விரைந்தோடிவந்தென்னை ரட்சிப்பாயே"
ஒமென்ற பிரணவத்தின் வடிவமானாய்
உலகமெல்லாம் நிறைந்த பெரும் ஜோதியானாய் நானென்ற அகந்தைவெறிபிடித்த என்னை
நானிலத்தில் நல்லவழிநடக்கவைத்தாய் தேன்பாயும் மட்டுநகர் தேடி வந்தே
தீந்தமிழில் பாடுபுலவோர்கள் வாழும் மீன்பாடும் அமிர்தகழிப் பதியமர்ந்த - சுவாமி
மாமாங்கக் கணபதியே அருள்செய்வாயே!
தீராத நோய்தீர்க்கும் புனிதத் தீர்த்தம்
திருநீலகண்டனவன் சுயம்புலிங்கம் ஏராளம் பக்தர்களும் இருந்து பாடும்
எழிலான பட்டுமணல்தலமும் பெற்றாய் கூரானவேலேந்திக் குன்றிலாடும்
குணமான முருகனுக்கு அண்ணனானாய் மாமாங்கக் கணபதியே துதித்தேனய்யா - சுவாமி
மனமிரங்கி இதுதருணம் வருகுவாயே!
o 20 o

27.
28.
29.
முந்திமுந்திவினாயகனே முதற்பொருளே மூஞ்சூறு வாகனனே பிள்ளையாரே சந்திரனின் கேலிதனை அடக்கி அன்னான் சதாகாலம் தேயவைத்த எம்பிரானே! தொந்திவயிற்றோனே தொல்வினையைத் தீர்ப்பவனே
தும்பிக்கை ஆண்டவனே துதித்தேனய்யா! சந்ததமும் என்வாழ்வில் துயரம்தானா - சுவாமி
சித்திபுத்தி விநாயகரே அருள் செய்வாயே!
திருமாலின் சாபத்தைத் தீர்த்துவைத்தாய்
திருக்கயிலை போவதற்கு ஒளவையாரை திருக்கையால் சட்டனவே துக்கிவைத்தாய்
தேவர்களின் துயரத்தைப் போக்கிஉந்தன் திருவடியார் கூட்டத்தைக் காத்துநின்றாய்
திக்கெட்டும் ஆள்பவனே எனது நெஞ்சம் உருகுதையா உனைக்ாணத்தவிக்குதப்யா - சுவாமி அமிர்தகழி ஆண்டவனே அருள்செய்வாயே.
திருநீறும் சந்தனமும் உடலில் பூசி
தீச்சட்டிதனைத்துக்கித்தலையில் வைத்து உருவேறிப் பக்தியினால் உன்னைச்சுற்றும்
ஒருகோடிப் பக்தர்களில் நானுமானேன் பரதேசிநாணய்யா ஏழையானேன்
பாவியெனைப் பார்த்திடவோர் மனிதரில்லை வரமீந்து எனைக்காக்க வாருமய்யா - சுவாமி
அமிர்தகழிக் கணபதியே அருள்செய்வாய்.
o 21 e

Page 19
3O. உன்னையல்லால் வேறுகதி எனக்கு இல்லை
உமாபதியின் திருமைந்தா ஓடி வாவா மண்ணையள்ளி உண்டவனின் மருகா எங்கள்
மாமாங்கக் கணபதியே விரைந்து வாவா முற்பிறப்பில் செய்தவினை சுற்றிச் சுற்றி
மூண்டுநிதம் எனைப்போட்டுவாட்டுதய்யா இப்பிறப்பில் என்றாலும் கருணைகாட்டும் - சுவாமி
அமிர்தகழி ஆண்டவனே அருள் செய்வாயே!
a 22 o
 

சித்தானிடி சித்திர வேலாயுதர் பதிகம்
Ο1.
O2.
முத்துமுத்தாய்நெற்கதிர்கள் குலைகள் கட்ட
முயல் பன்றிவிலங்கினங்கள் அதனைமுட்ட தத்திநடைபயில்கின்ற மணிப் புறாக்கள்
தம்பாட்டில் நெல்கொறித்துச்சிறகுதட்ட தித்திக்கும் கனிமரங்கள் பழுத்துக் கொட்ட
தேன்தயிர்பால் கலந்தருவிவயலைச் சுற்றும் சித்தாண்டிப்பதியமர்ந்த சிவனார் மைந்தா
சித்திர வேலாயுதனே அருள் செய்வாயே.
வீரமுள்ளமறவர்குலம் செறிந்து வாழும்
விருட்சங்கள் நிறைந்து குளிர்நிழல்கள் கழும் பாரமுள்ள மனச்சுமையை இறக்கி வைத்து
பாசமுடன் மக்களெல்லாம் ஒன்று கூடும் சீர்பெறும் நற்சித்தாண்டிப்பதியில் வந்து
சிறப்புடனே கோவில் கொண்ட முருகா வாவா ஆருமில்லை துணையெமக்கு உன்போலயப்யா.
அல்லல் தீர்த்து எமைக் காத்து ரெட்சிப்பாயே.
o 23 o

Page 20
O3.
O4.
Օ5.
படைவீரர் எதிர்கொண்டு பாய்ந்து வந்தார்
பதறிநான் உனைத்தேடி ஓடி வந்தேன் கடைவீடு பொருளெல்லாம் எரிந்து போச்சு
கடுந்துன்பம் எனை வந்துகழ்ந்து போச்சு உடையில்லை உணவில்லை முருகா எந்தன் உயிர் மட்டும்தானப்யா இருந்ததப்போ படைவீரர் கண்களிலே படாமல் காத்தாய்
பார்வதியின் இளைய சித்தாண்டியானே.
சிகண்டி உனும் முனிவரோடும் சிறப்பும் பெற்ற
சித்தாண்டிப் பதியினிலே கோவில் கொண்டு அக இருளைப் போக்கியொளி பரவச் செய்து
ஆட்சிசெய்யும் அருட்கடலே போற்றிபோற்றி குறமகளைத்தினைப் புனத்தில் காதல் கொண்டாய்
குஞ்சரனின் துணையோடுமணமும் செய்தாய் அறம் பொய்த்துமக்கள் வாழ்வு அழியுதய்யா
ஆறுமுகா இன்றே வந்தருள்வாயப்பா.
பெற்ற மக்கள் பகையானார் பெரியோர் முன்னால் பெண்டாட்டி ஆனவளும் பிரிந்தே போனாள் உற்றவரும் பெற்றவரும் உதறித்தள்ளி
உதவாத பேயனென்று கழித்தே வைத்தார் எக்கதியும் எனக்கின்றி இந்த மண்ணில்
இறைவாநான் உன்பாதம் தேடிவந்தேன் அற்புதனே எனையேற்று ஆதரிப்பாய்
அழகுமுகம் காட்டியருள் புரிகுவாயே.
o 24 o

O6.
O7.
Ο8.
மயில் தோகைக் காவடியைத் தோளில் வைத்து
முதுகெல்லாம் விறுவிறுக்கமுள்ளும் போட்டு மனமெல்லாம் உனை நினைக்க கண்ணிர் விட்டு
மால்மருகா நின்பாதம் காண வந்தேன் இனப் பகையால் தமிழரினம் இலங்கை நாட்டில்
இன்னல்களை எதிர்கொண்டே வாழுதய்யா உனது கை வேலெறிந்து பகையை நீக்கி
உரிமையுடன் நாம் வாழ அருள் செய்வாயே
மூர்த்திதலம் தீர்த்தமெனும் மூன்றும் பெற்றாய்
மூவருக்கும் மேலான புகழும் பெற்றாய் நீண்டநெடும் கோபுரமும் நீயே பெற்றாய்
நெஞ்சமெலாம் நீக்கமறநிறைந்துகொண்டாய் பார்க்குமிடமெல்லாம் நீமயிலிலேறி
பறந்து வரும் காட்சியைநான் பார்க்க வேண்டும் பாரினில் நான் பிறந்த பயன் அடைவதெப்போ
பச்சைமயில் வாகனனே அருள்வாயப்பா
கையிருந்தும் உனைத்துதிக்க மறந்தேனய்யா காலிருந்தும் கோவில் வர மறுத்தேனய்யா பொய்யுடலை தினம் வளர்த்து காலமெல்லாம்
பூமியில் நான் அந்தகனாய்த்திரிந்தேனய்யா தெய்வமே சிற்றாண்டி முருகா உன்னை
தெரியாமல் வாழ்ந்து கெட்டுப்போனேனய்யா செய்த குற்றம் பொறுத்தருள வேண்டுகின்றேன் திருமுருகா எனைக்காத்து ரட்சிப்பாயே.
o 25 o

Page 21
O.
காணிநிலம் வீடுவாசல் பொருட்கள் தேடி
கைநிறையப் பணம் சேர்த்துச் செல்வனானேன் தேனினிய மொழி பேசும் மனையாளோடு தேவைக்கு ஏற்றளவு மக்கள் பெற்றேன் ஆனாலும் நிம்மதிதான் எனக்கு இல்லை
ஆண்டவனே இது என்ன வாழ்க்கை ஐயா வேலவனே சித்தாண்டியக் கந்தாவா வா
வாழ்வினிலே நிம்மதியை எனக்குத்தாதா
நிறைசெல்வம் வந்து வீட்டில் குவிந்தபோதும்
நித்தமும் நான் மிகிழ்ச்சியிலே குதித்தபோதும் இறைவனது செயலிதெல்லாம் என்றோர் நாளும் எண்ண மனம் எனக்கு வர இல்லை ஐயா குறைந்துசெல்வம் வற்றிப்போய் வீட்டில் பஞ்சம்
குடிகொள்ளும் போதினில்தான் எனது நெஞ்சில் இறையடியைத் தேடுதய்யா முருகா உன்னை
எந்நாளும் நான் நினைக்க அருள் செய்வாயே.
கந்தா உன் வாசலிலே பக்தர் கூட்டம்
கடலலைபோல் திரளுவதைக் கண்ணால் கண்டேன் சிந்து பாடி உனைத்துதித்து கோவில் சுற்றும்
திருவடியார் கூட்டத்தில் நானும் நின்றேன். வந்த வினை கழாமல் காப்பாயென்று
வாய்விட்டு உனையழைக்கும் குரல்கள் கேட்டேன் சுந்தரம் சேர் ஒளிவடிவே எம்மைக் காக்கும்
சித்தாண்டி வேலவனே அருள் செய்வாயே.
o 26 o

12.
13.
14.
எண்ண மனம் இனிக்குதய்யா உன்னைநாளும் எங்கெங்கு தேடினாலும் இன்னும் காணோம் வண்ண வடிவேலழகா ஏழை எந்தன்
வறுமைநிலை தொடர் கதையாய்ப் போனதென்ன? திண்ணமுடன் உனை நம்பி இங்கு வந்தேன்
தேன்தினை மா கையோடு கொண்டும் வந்தேன் எந்நிலையைக் கண்டு மனம் இரங்கொண்ணாதோ
எனதாவி போகுமுன்னே முருகா வா வா.
சித்தாண்டித் திருமுருகன் ஆலயத்தில்
சிறப்பாக நிகழ்கின்ற மயில் கட்டென்னும் அற்புதங்கள் நிறைந்த பெரும் திருவிழாவின்
அழகுதனை என்னவென்று சொல்வேனய்யா பொற்பதமாம் வேலவா உன் அருளை வேண்டி
புதிய மணத்தம்பதியர் ஆகும் காட்சி இற்றவரை எங்கிலும் நான் கண்டேனில்லை
இதைப் பாட இப்பிறவி போதாதையா.
என்னதான் துயர்துன்பம் வந்தபோதும்
எழில் முருகா உன்னருளால் மறைந்தே போகும் கண்ணை இமை காப்பதுபோல் எனது வாழ்வை
காத்து நீரட்சிக்க மறப்பதில்லை உன்னையல்லால் வேறு துணை எனக்காரய்யா?
உடலாவி எல்லாமே உனக்கே சொந்தம் முன் செய்த பாவவினைதீர்த்து என்னை
முருகா நீ அருள் புரிய வேண்டுமய்யா.
o 27 o

Page 22
15.
16.
நாவல் மரக்கிளையில் நின்று பழம் பறித்து
நீசுவைக்கும் வேளையிலே ஒளவை வந்து தா எனக்கும் பழமென்று கேட்டபோது
சுட்டபழம் சுடாத பழம் எதனைப்பாட்டி நானுனக்குதரட்டுமெனக் கேட்டு ஒளவை
ஞானத்தைச் சோதித்த குமராளங்கள் வாழ்வதையும் சோதிக்க வேண்பாமய்யா
வேலவனே சித்தாண்டிக் கந்தா போற்றி.
புயல் வெள்ளம் சுனாமியென்றுநாங்கள்பட்ட
பெருந்துன்பம் கொஞ்சமல்லஅதற்கும் மேலாய் புலம்பெயர்ந்து அகதியென்றபெயரும்பெற்று புழுவாகநாம் துடித்துப்போனோமய்யா நிலமில்லை வீடில்லைவாசலில்லை
நிம்மதியும் எமக்கில்லை பார் பார் கந்தா. குலதெய்வம் எங்களுக்குநிதான் ஐயா
கொடுமை நீங்கிநாம் வாழ அருள் செய்வாயே.
o 28 o
 

Ο1.
O2.
அழகழகாய்க் கடலலைகள் நுரைப்பூ கொய்து
அப்பனவன் காலடியில் தினமும் வைத்து தொழுகின்ற வேளையெல்லாம் தென்றல் காற்று
தூய்மையுடன் மலையேறி வாழ்த்துச் சொல்லும் இளையவரும் முதியவரும் இயற்கை கொஞ்சும்
எழிலான காட்சிதனைக் கண்டு உள்ளம் குழைந்து சிவன் தரிசனத்தைக் கண்டு துள்ளும்
கோணமாமலையமர்ந்த குருவே போற்றி
ஆசைகளை அகற்றி நெஞ்சை சுத்தமாக்கி
அம்மை அப்பன் நினைவதிலே முழுமையாக்கி பூசை புனர்க்காரங்கள் செய்து வாழ்வில்
பிறப்பெடுத்த புண்ணியத்தை அடையவேண்டி ஏறுபடி ஏறியேறிக் கோவில் வந்து
எம்பெருமான் தரிசனத்தைக் காண்பதற்காய் ஆருமற்ற அனாதை நான் வந்தேனய்யா
அருள் புரிந்து எனைக் காத்து இரட்சிப்பாயே.
o 29 o

Page 23
Ο3.
O4.
O5.
இல்லையய்யா வேறுதெய்வம் உன்னைப்போல இராவணனார் வணங்கிவந்த எம்பிரானே தொல்லைபல சூழ்ந்தாலும் அவற்றைநீக்கி
தூய்மையுடன் நான் வாழச் செய்ய வேண்டும் கல்மலையில் கடலோரம் கோவில் கொண்டு
காலமெல்லாம் அடியவரைக் காக்கும் தேவா உள்ளமது இரங்கியென்னைப் பாருமய்யா
உம்பர் தொழும் கோணேசத்தம்பிரானே
ஈசனே உமையவளாம் சக்திதன்னை
இணைத்துடலில் பெண்ணுக்கு பெருமை சேர்த்த நேசனே இந்துமதத்தலைவா போற்றி
நினைவெல்லாம் உன் நினைவே வேறொன்றில்லை பாசமுடன் மக்கள் குறைதீர்த்துநாளும்
பகலிரவாய்க் காவல் செய்யும் தெய்வம் நீயே காசினியில் தமிழர்படும் துயரம் போக்கிக்
காக்க வேணும் கோணேசத்தம்பிரானே.
உம்பர் தொழும் முக்கண்ணா சிவனே போற்றி
உலகமெல்லாம் நிறைந்த ஆடல்கலையே போற்றி சம்மந்தர் அப்பர் தேவாரம் பாடி
சந்தோசம் கொண்ட பரம் பொருளே போற்றி இம்மண்ணில் எழுந்த இனப்போரால் நாட்டில்
இருப்பதற்கே முடியாமல் தமிழரெல்லாம் கொண்டுயிரை ஓடுகின்ற பரிதாபத்தைக்
கண்டு மனம் இளகாமல் இருப்பதென்ன?
-o 30 o

O6.
O7.
O8.
ஊருக்கு உபதேசம் செய்வார்தங்கள்
உள்ளத்தின் மகிழ்ச்சியொன்றே பெரிதாய்க் கொண்டு பேருக்கும் புகழுக்கும் வாழ்வார் மற்றோர்
பெருமைகளை மதியாமல் நடப்பார் இந்தக் காதகரின் முன்னாலே கவலையோடு
காலமெல்லாம் வாழ்வதுதான் கஷ்டமய்யா கதுவாது அறியாத மக்கள் எல்லாம்
சேவித்து உனைத் துதிக்க அருள் செய்வாயே.
எழில் கொஞ்சும் திருமலையில் கோவில் கொண்டு
எல்லையற்றபக்தர்களின் துன்பம் நீக்கி வழிவழியாய்க் காத்தருளை வளங்குமெங்கள்
வள்ளலாம் சிவனடியை வணங்குவோரின் குடி மூழ்கிப் போவதில்லை கொடிய பகை சூழ்வதில்லை
கோணேசப் பெருமானின் கடாச்சமின்றி செடி பூண்டும் தளைப்பதில்லை சுவாமி இந்த செகத்தினிலே எல்லாமே நீதான் ஐயா.
ஏராளமாக மந்தி மான்கள் கண்டேன்
இருமருங்கும் வளர்ந்த மரம் செடிகள் கண்டேன் கூரான வாள் கொண்டு மலையை வெட்டிக்
கொண்டு போக எத்தனித்த இலங்கை மன்னன் பேர் விளங்கும் இராவணன் வெட்டைக் கண்டேன்
பெருமானுன் ஆலயத்தின் கலசம் கண்டேன் சீரிலங்கை நாட்டினிலே இது போல் எந்தன்
சிந்தை கவர் காட்சியெங்கும் கண்டேனில்லை.
-O 31 o

Page 24
O9.
1O.
11.
ஒருவருக்கும் தீமை நெஞ்சில் நினைத்தேனில்லை
ஒமென்னும் பிரணவமே உள்ளமெல்லாம் இருந்தென்னை ஆட்டுவிக்கும் அதிசயத்தை
இவ்வுலகில் யாரிடம் நான் சொல்லிமாழ்வேன் திரிசடையோன் திருக்கழலே தஞ்சமென்று
தினம் தினம் நான் கோணேசர் திருத்தலத்தில் இரவுபகல் கிடக்கின்றேன் கருணை கொண்டு
இது சமயம் எனைக்காத்து அருள் செய்வாயே.
பன்றிக்கு தாயாகிப் பசியாறப் பால் கொடுத்தாய்
பாண்டியனின் சந்தேகம் பறந்துபோகக் கவிதொடுத்தாய் குன்றின்மேல்நின்றாடப்பிள்ளையவன் குமரனுக்கு வழி
சமைத்தாய் கொடிய பாம்பின் விசம் குடித்து தேவர்களை காத்துநின்றாய் கண்முன்னே நரிகளை நீ பரிகளாக்கி உன்னடியான்
கருணையாளன் மாணிக்கவாசகரின் கவலை தீர்த்தாய் என் மனதின் துயர் கழைய எதுசெய்தாய் சொல்லுமைய்யா?
இன்றே வந்தெனைக் காத்துரட்சிப்பாயே.
திருநீலகண்டனென்றபெயரைப்பெற்றாய்
தில்லையிலே திருநடனம் செய்து நெஞ்சில் திருக்கூத்தன் என வணங்கும் பேறும் தந்தாய்
திருமாலும் பிரமாவும் திருவடி முடியைத் தேட உருமாறித்தோற்றுவரப் புதுமை செய்தாய்
உலகமெல்லாம் நீக்கமற நிறைந்த எங்கள் திருகோணமலைப் பதியினிலே கோவில் கொண்ட
தெய்வமே எமைக்காத்து இரட்சிப்பாயே.
o 32 o

12.
13.
14.
ஆகமங்கள் ஒர்பதத்தை ஆண்மாக்களின் பொருட்டு
அருளியவாகலம் பிடித்த சுடர் படையான் காலக் கடவுளே சிவனே எங்கள்
கற்பனைக்கும் எட்டாத சோதி வடிவானவனே ஒலங்கள் இந்நாட்டில் ஓய்ந்துதமிழரெல்லாம் உன் நிழலில் சந்தோசம் காண வேண்டும் காலம் பதிலெமக்கு கட்டாயம் சொல்லுமென்று
காத்திருக்க வைக்காமல் அருள் செய்வாயே.
கோபுரங்கள் மூன்றாக இருந்த கோயில்
கொடுங்கடலின் சீற்றத்தால் அழிந்து போச்சாம் ஆனாலும் அதில் பாதி அடியா ரெங்கள்
ஆசைக்கும் பூசைக்கும் அழிந்திடாமல் காப்பாற்றிநாம் வணங்க வழியும் செய்தாய்
கணநாதாநின்திரு விளையாட்டு ஒன்றா ரெண்டா யாவுமே நாம் நலமாய் வாழத்தானே
நாம் வணங்கும் கோணேசா போற்றி போற்றி
எருதேறும் வாகனனே எழில்மேனி சிவந்தவனே
இந்துமதப் பரம்பொருளே! எமையாளும் நாயகனே வரும் விதியை மாற்றிவைக்கும் வல்லமை பெற்றவனே
விபூதியை உடலெல்லாம் பூசிக் கழுத்தினிலே அரவத்தை ஆபரணம் ஆக அணிந்தவனே
அகிலம் நிறைந்தவனே புலித்தோல் புனைந்தவனே குருவே எம் கோணமாமலை அமர்ந்த பெருமானே
கும்பிட்டேன் எங்கள் குலம் தளைத்தோங்கச் செய்வாயப்பா
o 33 o

Page 25
15。
16.
உள்ளமெலாம் நிறைந்தவனே உம்பர் தொழும் பெருமானே ஊரெல்லாம் கோவில் கொண்டு உலகையே காப்பவனே எல்லோரும் சமமென்று எண்ணி அருள் புரியும்
ஈசனே உனை வணங்க என்ன தவம் நான் செய்தேன் குள்ள மனம் கொண்டோர்க்கும் குரோதத்தை வளர்ப்போர்க்கும் குறைவின்றி அருள் புரிந்து அவர் தீயகுணத்தை மாற்றி நல்லவராய் வாழவைக்கநல்லருளைக் கொடுப்பவனே நாளெல்லாம் உனை நினைத்துநான் வாழ அருள்
செய்வாயே.
கல்லான உள்ளமதைக் கரைய வைத்தாய்
கவலைகள் நிறைந்த வாழ்வைக் கணிய வைத்தாய் பள்ளத்தில் வெள்ளநீர் பாய்வதைப்போல்
பரிவு கொண்டு எனக்கருளை அள்ளித்தந்தாய் கண்ணார நான் காணும் பொருளிலெல்லாம் காட்சிதந்து எனையாளும் ஈசா போற்றி சென்மனச் செல்விக்காக மண் சுமந்த
கோணமாமலை வாழும் இறைவா போற்றி
 

༦,བ་ ༧་ ་ ཧ tسغ ΜετάέάμιξήέΕέτίίΕήΕξ8 &> - C * ري
象

Page 26
சிந்து
tags
36
 

இயந்திர தொழில்நுட்பம் மூலம் நகைகள்` ' உடனுக்குடன் ஸ்திருத்த்படும் ܬܐ
இது ” كيف لا
<ர
N பிரதான வீதி,
N \ R = வாழைச்சேனை.
தொ. பே. 0655370328, 0773768948
鼎
ைேறப்கரணங்கள்விற்கற்ரும்
ܐܢܝܢ ܒܪ- ܫܝ
தங்கம்பொன்வெளிவின்திேகளு
விலுையில் இறுதிகப்படும் குறித்ததவணையில் இல்2சூர2 இபரிநகைகள்செய்துகொடுக்கப்படும்
மார்க்கட் வீதி, களுவாஞ்சிகுடி. 077 4901921

Page 27
MD 19339,
Dealers in uality
 

தங்கநியாயமானவியை
nayagam Road
cada.
55.2997.077.447
MHE ----
noting