கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்

Page 1


Page 2


Page 3

பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
சந்தியாபிள்ளை கீத பொன்கலன்
*செரோ” வெளியீடு
சென்னை
1987

Page 4
முதல் பதிப்பு - மார்கழி 1987 ušsis6ir-376+XXIV உரிமை ஆசிரியருக்கே
நூல் கிடைக்குமிடம்
காந்தளகம் 4. முதல் மாடி, ரகிசா கட்டிடம் 834 அண்ணா சாலை ിബrഞ്ഞ് 600 002.
தொலை பேசி 567 005
ஆசிரியர் : சந்தியாபிள்ளை கீத பொன்கலன்
Title of the Book Buddha Singalavarum
Sirupanmayinarum.
Author nnn S. Guy de Fontgalland (B.Th.)
以 M. A. (Soc.)
Elanguage - Tamil
Edition First
Publisher mennen CERRO, P. O. Box. 5001
Besant Nagar, Madras-90, India.
Copyright Holder www S. Guy de Fontgalland Size of the Book am Demy Octavo. Type point used — 10 point
Number of Pages - 400
Printers wn Rasakili Printers, Madras-20. Cover Design by Fr. J. L. Daniel, S. J.
Prices. In Rs. 751 =
SL. Rs. 125I=
US. S. 8

GLof LIGOOTib
சிறுபான்மை சமூகத்தவரது உரிமை போராட்டத் தில் தன்னலமற்ற வகையில் தீவிரமாகப் பங்கு பற்றிய வரும், 1985ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி இலங்கை இராணுவத்தினரால் அவரது "பங்கு இல்லத்திலேயே’ திட்டமிடப்பட்ட வகையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வரும், கடமை உணர்வு மிகுந்த துறவியும், எனது அருமை நண்பருமாகிய, மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந் திருந்த வண, பிதா மேரி பஸ்தியானது நாமம் என்றென் றும் மக்கள் மத்தியில் நீங்காது நிலைத்திருக்க இந்நூல் சமர்ப்பணமாகின்றது.

Page 5
அட்டைப்பட விளக்கம்
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மன்னனை "மகாசம்த" என்றே பெளத்த சமூக தத்துவம் குறிப்பிடுகின்றது. சுயநலம் கருதாது புத்தரது போதனைக்கும் தருமத்திற்கும் இணங்க ஆட்சிபுரிந்தால் மக்களது சம்மதமும் நிலைத்து நிற்குமென்பதே உள்ளடங்கும் பொரு ளாகின்றது. இவ்வித ஆட்சியையே 'தர்மிஷ்டம்” என்பர். தச. ராஜ-தருமத்திற்கும், பஞ்சசீல நெறிகளுக்கும் கட்டுப்படுத்தப்பட்ட மன்னராகவே இருப்பார்.
புத்தர் தன் சீடர்களுக்கு செய்துகொண்ட முதற் போதனையை *வாய்மைச் சக்கரத்தை இயக்குவித்தல்” எனக் கூறுவர். இதனாலே தான் சக்கரமும் ஆதிகாலந்தொட்டே பெளத்த சின்னமாகின்றது. தருமத்திற்கு இணங்க ஆட்சி நடத்துகின்றபடியால் பெளத்த மறை நூல்கள் மன்னனை “சக்ரவர்தின்’ என்றே குறிப்பிடுகின்றது. மெளரிய சக்கரவர்த்தி அசோகன் இதற்கு இலக்கணமாக இருந்த காரணத்தால் 'தர்மிஷ்ட” சமூகத்திற்கு அவனது சாம்ராஜ்யம் ஒரு விசேட உதாரணமாக இருந்தது.
இலங்கையிலும் 'தர்மிஷ்ட ஆட்சி புரிவேனெனக் கூறியதால் ஜே. ஆர். ஜயவர்த்தனா தலைமை தாங்கிய கட்சி பெரும் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அவரது செயற்பாடுகளும் அவ்வாறே அமைவதாகவும் காட்சியளித்தன. ஆனால் 1983ம் ஆண்டுக் கலவரம் முழு வேஷத்தையுமே கிழித்தெறிந்தது. நான்கு நாட்களாக மெளனம் சாதித்த ஜயவர்த்தனா கலவரங்கள் தொடங்கிய ஐந்தாம் நாள் தொலைக் காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு செய்தி விடுத் தார். அவர் உரையாற்றும்போது "தர்மசக்கரம்" பின்னணியிலிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாமும் அதே தர்மசக்கரத்தையே அட்டைப்படமாக தந்துள் ளோம். தச-ராஜ-தர்மத்தையும் பஞ்சசீலத்தையும் குறிக்கும் அதே சக்கரம் இன்று இலங்கையில் சிறுபாண்மையோரை அடக்கி ஒடுக்கும் சின்னமாகவும் இருக்கின்றது என்பதை வலியுறுத்தவே இவ்வாறு செய்கின்ருேம். ‘சிங்கள பெளத்தம்' எனச் சிங்கள சிந்தனையாளர் கூட்டம் இத்தத்துவத்தை வர்ணித்தாலும் அடக்குமுறைக்கு பெளத்தம் என்பதே பயன்படுத்தப்படுகின்றமையால் நூலை **பெளத்த சிங்கள வரும் சிறுபான்மையினரும்” எனப் பெயரிட்டுள்ளோம். சிறுபான் மையினர் எனக் குறிப்பிடுகையில் சிங்கள கிறிஸ்தவர்கள் உட்பட சிங்கள பெளத்தரல்லாத எல்லா இனங்களையும் குறிக்கும். 1883ம் ஆண்டு கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கருக்கு எதிராக ஆரம்பித்த வன்செயல் நூருண்டுகளுக்கு மேலாக சிறுபான்மையினர் மீது தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

அணிந்துரை
இலங்கையில் சமூகத்தின் மேல்மட்டத்திலுள்ளவர்கள் மத்தியில் சுதந்திர உணர்வு முதன்முதலாக ஏற்பட்ட காலங்களில் இனப்பாகு பாட்டிற்கே இடமில்லாமலிருந்தது. இதனால் ஒன்றுபட்டு நடத்திய சுதந்திர போராட்டத்தை சிதைய வைப்பதையே ஆட்சியிலிருந்த ஆங்கி லேயர் தம் நோக்கமாக கொண்டிருந்தனர். சிங்களவர்கள் மத்தியில் இருந்த சுதந்திர உணர்வு தமிழருக்கு எதிராகத் திருப்பப்பட்டது. வெறுப்புணர்ச்சி தீவிரமாக வளர்க்கப்பட்டது. தமிழர் கோரும் உரிமை களுக்கு வரலாற்று ரீதியாக ஆதாரமேயில்லை என்றனர். சிறுபான்மை யினத்தவரது விடயங்களில் நிதானத்தைக் கையாண்ட இடதுசாரித் தலைவர்கள் தன்னும் ஆட்சிபீடமேறிய அதிகார மோகத்தில் நிதா னத்தை இழந்தவர்களாயினுர்கள். தேசிய ரீதியாக தமிழருக்குக் கைகொடுக்கக்கூடிய சக்திகள் இல்லாது போனதும் தமக்கென ஒரு பிரதேசம் வேண்டும் எனும் கோஷம் நியாயமானதாகவே தென்பட் டது. போராட்டம் தீவிரமடையுந்தருவாயில் துப்பாக்கி மேலோங்கி யதும் அரசியலில் சாணக்கியத்திற்கு இடமில்லாது போய்விட்டது. வெற்றிடத்தில் அந்நியச் சக்திகள் புகுந்துகொள்ள முயற்சித்தன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கே பங்கம் விளைவிப்பதாக அமையும்.
யதார்த்த நிலையை நன்கு உணர்ந்தவர்கள் இலங்கைத் தமிழரது உரிமைப் போராட்டம் இந்திய பாதுகாப்பு நலன்களையும் அதன் அணிசேரா வெளிவிவகாரக் கொள்கையின் நலன்களையும் மீறலா காது என்பதை ஏற்கத் தயங்க மாட்டார்கள். சென்ற ஆடி மாதம் ஏற்படுத்திக் கொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமும் இதனையே உணர்த்துகின்றது. இவ்வித எல்லைக்குள் எமது மக்களுக்கு புனர் வாழ்வு தந்துதவி எதிர்காலத்தை நிர்ணயிக்க முயல்வதே அரசியல் ஞானம் மிகுந்த செயலாகும் ,
இலங்கைத் தமிழ் மக்களது பிரச்சினையை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமேயாகில் அது உரு எடுத்து வளர்ந்து முதிர்ச்சியுற்ற முழுவரலாற்றையே அறிந்து கொள்ளவேண்டும். இது இன்று நேற்று, தோன்றிய விடயமல்ல. வெவ்வேறு அம்சங்களைத் தனிமைப்படுத்தி உரிய தகவல்களைப் பெற்றெடுத்து பிரச்சினை உருவெடுத்து முதிர்ச் யுற்ற நிலையை கோர்த்தெடுக்க முயலவேண்டும். தொகுதிவாரியான பாராளுமன்ற ஆட்சிமுறையில பெரும்பாலான ஆசனங்களை பெற்

Page 6
Vy1
றெடுத்தே ஆட்சியைக் கைப்பற்றுவது அவசியமாகின்றதாகையால் பெரும்பான்மை சிங்களவர் மத்தியில் கட்சிகள் எவ்வாறு செல்வாக்குப் பெற முயன்றன என்பதை ஆராய வேண்டும். சிங்களவர்கள் மத்தி யில் எவ்வித நம்பிக்கைகள் வேரூன்றி உணர்ச்சிகளைத் தூண்டி தமிழ ரையே வெறுக்கச் செய்தது என்பதை ஆராய்வதே மூல முயற்சியா கின்றது. சிங்களவர்கள் தமிழரையும், இந்தியாவையும் எவ்வாறு கணிக்க முயன்றார்கள்? அவர்கள் மத்தியில் நிலவிய நம்பிக்கைகளை உருவாக்க முயன்றவர்கள் யார்? அரசியல் சந்தர்ப்பவாதிகள் இதனை எவ்வாறு தமக்கு சாதகமாக்கிக் கொள்ள முயன்றார்கள்? தமிழர்களது உரிமைகளைப் பறித்தெடுப்பதில் சிங்களக் கட்சிகளுக்கிடையே போட்டிகள் எவ்வாறு தீவிரத்தன்மையடைந்தன? ஏற்படுத்திய ஒப் பந்தங்கள் கொடுத்த வாக்குகளுக்கேற்ப நிறைவேற்றப்படாதது ஏன்? சர்வதேச அரசியல் பின்னணியில் இதன் தாற்பரியமென்ன? இவ்வித அரசியல் சூழலில் தமிழ் தலைவர்களும் போராளிக் குழுக்களும் எத்த கைய சாணக்கியத்தைக் கையாண்டிருக்க வேண்டும்? உரிய அரசியல் தந்திரங்களைக் கையாளத் தவறியது ஏன்? இவ்வித ஆராய்ச்சி தகுந்த பயிற்சியோடும், சிந்தனைத் தெளிவோடும், தேவையான தகவல்களைத் தேடும் விடாமுயற்சியோடும் கையாளப்பட வேண்டிய விடயமாகும். இத்தகைய முயற்சியின் விளைவாகவே 'பெளத்த சிங் களவரும் சிறுபான்மையினரும்” எனும் இந்நூலும் அமைகின்றது.
இதுவரை வெளிவந்த நூல்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு விடயத்தையோ அல்லது நடந்ததை நியாயப்படுத்தவோ இயற்றப் பட்டவையாகவே இருந்தன. பரந்த அடிப்படையில் நடந்தவை யாவற்றையும் ஒருங்கே இணைத்து விளக்க முயன்ற நூல்கள் தன்னும் ஆதாரத்திற்குரிய தகவல்களை விடாமுயற்சியுடன் தேடியெடுத்துத் தொகுத்து ஏற்புடைய, கண்ணோட்டத்தை அடக்குவனவாக இல்லை. தகுந்த பயிற்சிபெற்று பக்குவமடைந்த சமூகவியல் ஆராய்ச்சியாளர் பற்றாக்குறையே இதற்குக் காரணமாக அமைந்த தெனலாம். இதன் காரணத்தாலும் நூலாசிரியர் வண. பிதா. கீத பொன்கலனது முயற்சி முதலிடம் பெறுகின்றது. ஆய்வு முறைகளில் குறைபாடுகள் ஏதேனுமில்லையென சிபாரிசு செய்ய முன்வரவில்லை. தமிழரது பிரச்சினைக்குரிய புறக்காரணிகளது வெவ்வேறு அம்சங் களை புரிந்து கொள்ள உதவும் தகவல்களை பெரும் முயற்சி எடுத்து தேடித் தந்துள்ளார் என்பதற்கே முதலிடம் கொடுத்து நூலை வரவேற்கின்றேன்.
சிங்களவரது நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக நிலவிய நம்பிக் கைகள் யாவை எனும் விசாரணையில் பெளத்தசிங்களமே மூலமாகின்ற

vii
தென்றே கூறுகிறார். சிங்கள சிந்தனையாளர்களும், அரசியல்வாதி களும், பிரசாரகர்களும் இதன் பிடியினின்றும் விடுபட்டவராகவில்லை. புத்தபிரான் துன்பத்தினை அகற்றுவதற்கென போதித்த நால்வகை வாய்மைகள் திரித்துக் கூறப்பட்டு சிறுபான்மையோருக்கு துன்பத் தையே ஏற்படுத்தும் போர்கருவியாக மாற்றப்பட்ட வரலாற்றை தெளி வுபட விளக்குகின்றார். நாட்டில் நிலவும் நோய்க்குரிய மூலகாரணத் தை அகற்றுவித்தால் நோய் தீர்ந்துவிடும் என்பதே அவரது நம்பிக்கை ஆதாரத்தோடு விளக்கும் முயற்சி சிங்கள சிந்தனையாளருக்கு சவா லாகவே அமைகின்றது. அதேவேளை தமிழ் தலைவர்களுக்கும் யதார்த்த நிலை இதுவே என தெளிவுபடக் கூறப்படுகின்றது.
ஆசிரியர் வண. பிதா. கீத. பொன்கலன் இவ்வித ஆராய்ச்சிக்குப் புதியவரல்ல. மலையக மக்கள் மத்தியில் பயன் தரத்தக்க தொண்டு புரிவதற்கு ஒரு பெரும் ஆராய்ச்சி நிலையத்தையே வெற்றிகரமாக நடத்திய வரலாறு அவருக்கே உரியது. ஆராய்ச்சி நிலையமும் 1983ம் ஆண்டு திட்டமிட்டவகையில் தீக்கிரையாக்கப்பட்டது. அதனை யடுத்து தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாகச் சென்ற் இலங்கை தமிழரது விபரங்களை தேடியெடுத்து "பூரீ லங்கன்ஸ் இன் எக்சைல்’ எனும் தரமுடைய ஆங்கில நூலையும் வெளியிட்டிருக் கிறார்.
ஐரோப்பிய பல்கலைக்கழகப் பயிற்சியோடும் முன்பு ஆராய்ச்சி நூல்கள் வெளியிட்ட அனுபவத்தோடும் 'பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்” எனும் தமிழ் நூல் வெளிவருகின்றது. பல வகைகளாலும் தாக்கி அவமானப்படுத்தப்பட்ட தன் சமூகம் இன்ன லுறும் இத்தறுவாயில் தம் அவல நிலை எவ்வாறு ஏற்பட்டது என்பதை விளக்க நூலை அவசர அவசரமாக ஆசிரியர் வெளியிட் டுள்ளார். ஞானமில்லாது கலகம் பிறக்கலாகாது என்பதே அவரது நோக்கமாகின்றது. அரசியலில் அற்பத்தனத்திற்கோ சிறுபிள்ளை தனத்திற்கோ இடமளிக்கக் கட்டாது. தமிழன் இனிமேலாவது "அகதி’ எனும் அவமானப் பழிக்கு இலக்காக்கப்படாது என்பதே அவரது இன அபிமான வாயிலாகப் பிறந்த ஆவேசம்.
இந்நூல் பல வாசகர்களது சிந்தனையை தூண்டவல்லது. உண் மைகளை அறிந்து உணர்த்த உதவும். இவ்வித நூல்கள் பல வெளிவந்து தமிழ் மக்களது ஞானக்கண்களை விழிப்புடன் வைக்க உதவவேண்டும். அவ்வித பணிகளுக்கும் இந்நூல் முன்னோடியாக் நின்று வழி வகுக்கத்தக்கது. . ...
கலாநிதி வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன் B.A. (Cey); M. Phil (Lond); Ph.D. (Lancaster)

Page 7
நூன்முகம்
இலங்கையில் பல ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்ட மக்களது உணர்வுகள் வெடித்தெழுந்து வரலாற்றின் முக்கிய கட்டமொன்றை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மக்களது நடத்தைக்கு அடிப்படை யாகவுள்ள தத்துவ நம்பிக்கைகள், வன்செயல்களுக்குரிய காரணி களாகியவற்றை விஞ்ஞான ரீதியில் ஆராய வேண்டிய அவசியத்தை உணர்ந்தே ஆய்வு விசாரணையில் ஈடுபடலாயினோம். எம்மாலான முயற்சியின் பயனாகவே "பெளத்த சிங்களவரும் சிறுபான்மையின ரும்” எனும் நூல் வெளியாகின்றது.
சிங்கள அரசியல் சந்தர்ப்ப வாதிகளதும் அதிகார மோக வெறி காரணத்தால் தமிழ் பேசும் மக்கள் தாம் வாழும் நாட்டிலேயே இரண் டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்டார்கள். அவர்களது கைகளில் சுதந் திர இலங்கையின் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டதும் தமிழ் பேசும் மக்களது உரிமைகளைப் பறித்தெடுப்பதையே தமது பிரதான நோக்க மாக்கிக் கொண்டார்கள். இதுவே நாட்டின் கடந்த ஐம்பது வருட கால வரலாறாகவும் அமைகின்றது. அவர்கள் உருவாக்கி அமுலாக் கிய திட்டங்களே இன்றைய தமிழ் மக்களது அவல நிலைக்கு காரண மென்று கூறினால் அது மிகையாகாது.
அதிகார துஷ்பிரயோகம் காரணத்தால் தமிழ் மக்கள் மத்தியிலும் இனவாதம் தலைதூக்க ஆரம்பித்தது. இருசாரார் மத்தியிலும் துவேஷம் முதிர்ச்சியடைந்ததும் மோதல் தவிர்க்க முடியாத நிகழ் வாயிற்று. உயிர் சேதமும் பொருட் சேதமும் ஏற்படுத் தப்பட்டு உலகரங்கிலேயே அமைதியற்ற நாடெனும் பட்டையும் குத்தப்பட்டாகிவிட்டது. தம்மிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை களுக்கு சமாதான முறையில் தீர்வு காண முடியாத நிலையில் அயல் நாடாகிய இந்தியாவின் நடுவர் பங்கை மக்கள் நாடவேண்டிய சூழல் உருவாயிற்று. இதனையேநூலின் இரண்டாம் பாகம் விளக்க முயல்கின்றது. ,
தமிழ் பேசும் மக்களது பிரச்சினை பயங்கரவாதமும் வன்செயல் களுமே என வகைப்படுத்தும் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளியிட வேண்டிய அவசியத்தை உணர்ந்து பிரச்சினையையே இன்னதென இனங்கண்டு அது உருவாகி முதிர்ச்சியடைந்த வரலாற்றை ஆதாரப் பூர்வமாக விளக்க இந்நூல் முயற்சிக்கின்றது.

ix
தமிழ் தேசியமென்ற உணர்வு ஏற்படாத நிலையில், ஒற்றுமை யின்மையும், அரசியல் தலைவர்களது தவறான போக்குகளும் தேவைப்படும் கட்டங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இதனால் அவர்கள் நடத்திய போராட்டங்களும், “ சாதனைகள் ஈட்டியதாக இல்லை. போராளிகள் மத்தியிலும் அரசியலுக்கு முதலிடம் கொடுக் காத காரணத்தினால் தியாகங்களுக்குரிய பலன்கள் எட்டாது போயிற்று. இவற்றின் கூட்டுவிளைவாகவே நிலைமை சீரழிந் துள்ளது எனும் முடிவுக்கு வந்துள்ளோம்.
பெரும்பாலான ஆய்வு நூல்கள் ஆங்கில மொழியிலேயே வெளி வந்துள்ளன. இவை எம்முள் ஒரு சிலருக்கு மட்டுமே பயன்தரத் தக்கதாக இருந்தது. இக்குறையை நீக்கி "அனைவரும் பிரச்சினை யின் தன்மை இன்னதெனப் படித்து உணர்வதற்கென்றே தமிழ் மொழியில் இந்நூல் வெளியாகின்றது. அந்நிய மண்ணிலிருந்தே ஆய்வு நடத்த வேண்டியிருந்த காரணத்தினால் போதிய தகவல்கள் எட்டவில்லை என்பதும் வேதனையளிக்கின்றது.
மக்கள் மத்தியில் தொடர்பு கொண்டு உருவாக்கிக் கொண்ட கருத்துக்களையும், சேர்த்த தகவல்களையும் தொகுத்து. ஒழுங்கு செய்து பண்படுத்தி முழுமை பெறும் நோக்கத்தோடு விமர்சித்து உதவியோர் பலர். பெல்ஜியம் நாட்டின் லூவேன் பல்கலைக்கழகத் தில் கலாநிதி பட்டத்திற்குரிய ஆய்வோடு இதனையும் இணைத்து ஆராய அனுமதி தந்துதவிய பேராசிரியர் வெண்டர்வூட் அவர்களுக்கு முதலில் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வேடு அச்சேறிய மைக்கு உறுதுணையாக இருந்து உதவியவர்களை நான் போற்றா திருக்க முடியாது. இவர்களுள் தேவகி இராஜகோபால், லூயி ராசைய்யா, கனக சபாபதி, அல்போன்ஸ் மேரி, டி. ராஜா ஆகியோர் விசேடமாக குறிப்பிடத் தக்கவர்கள். அவர்களுக்கும் ஏனையோருக்கும் எனது மனமுவந்த நன்றியை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
சென்னை ச. கீத பொன்கலன் 1-12-87 B. TH. LIC. (Soc)

Page 8
1505
1619
1638
1656 .
1658
1796
1803
1815
1823
1825
1873
1883
1888 1911
1915
1919
காலவரிசை நிரல்
சிங்களப் பகுதிகளின் கரைப் பிரதேசங்களில் போர்த்துக்
கேயர் வேரூன்றிக் கொண்ட்னர்.
யாழ்ப்பாண தமிழ் இராட்சியத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றிக் கொண்டனர். ஒல்லாந்தர் மட்டக்களப்புத் துறையை கைபற்றினர். சிங்கள தாழ்நிலப் பிரதேசங்களை ஒல்லாந்தர் கைப்பற்றிக் கொண்டனர் யாழ்ப்பாண பிரதேசத்தை ஒல்லாந்தர் கைப்பற்றிக் கொண்டனர்.
1802 பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி சென்னை யிலிருந்து நிருவகித்தது. சாலைகள் அமைக்கும் பணிக்கென கவர்னர் பிரெட்ரிக் நோர்த்தினால் தமிழ் நாட்டிலிருந்து ஆட்கள் இறக்குமதி செய்யப்பட்டனர்.
கண்டி சிங்கள இராட்சியம் பிரித்தானியரிடம் ஒப்படைக்கப் பட்டது. கவர்னர் எட்வர்ட் பார்ன்ஸ் ஆரம்பித்த கன்னொருவ கோப்பித்தோட்டத்தில் மலையக தமிழ் மக்களின் சரித்திரம் உதயமாயிற்று
கங்காணிகள் மூலமாக இந்திய தமிழர்கள் இலங்கைக்கு
கொண்டு வரப்பட்டனர்.
தேயிலை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது (எலகந்துற
தோட்டம், ஹேவாஹெட்ட) கொட்டாஞ்சேனையில் கிறிஸ்தவருக்கு எதிராக பெளத்த பிக்குகளின் வன் செயல்கள். பிரித்தானியருக்கு எதிரான கண்டி புரட்சி. சட்டசபையில் உத்தியோகஸ்தர் அல்லாதோரும் தெரிவு செய்யப் பட்டார்கள்.
சிங்கள முஸ்லிம் கலவரங்கள்.
இலங்கை தேசிய காங்கிரஸ் தாபிக்கப்பட்டது.

1921
1928
1931
1935
1936
1937
1943
1944
1944 .
1945
1946.
1947
1948
1949
1951
தோட்டப்பகுதிகளில் துண்டு முறை ஒழிக்கப்பட்டது.
- 1929 டொனமூர் கமிஷன் சர்வசன வாக்குரிமையின்படி
சட்டசபை தேர்ந்தெடுக்கப்பட்டது. அமைச்சர் சபை உருவாக்கப்பட்டது.
முதலாம் சட்டசபை தேர்தல். லங்கா சமசமாஜ கட்சி (LSSP) தொடக்கப்பட்டது. இரண்டாம் சட்டசபை தேர்தல்.
எஸ். டபிலியு. ஆர். டி. பண்டாரநாயக்கா சிங்கள மகா
சபையைத் தொடக்கினார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (CP) தொடக்கப்பட்டது. ஜி.ஜி. பொன்னம்பலம் தமிழ் காங்கிரசை (TC) நிறுவினார்.
சிங்களமும் தமிழும் உத்தியோக மொழிகளாக சட்டசபை
ஏற்றுக்கொண்டது.
1945 - சோல்பரி கமிஷன். சிங்களமும் தமிழும் உத்தியோக மொழிகளாக்கும் விசேட கமிட்டி சட்டசபையில் தெரிவு செய்யப்பட்டது. M சோல்பரி அரசியல் யாப்பு. ஐக்கிய தேசிய கட்சி (UNP) தொடக்கப்பட்டது. பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் டி. எஸ். சேனநாயக்கா தலைமை தாங்கிய ஐ. தே. க. வெற்றி பெற்றது. பிரித்தானிய நாடு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிற்று. இந்திய வம்சாவழித் தமிழருக்கு இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்தினால் பிரஜாவுரிமை மறுக்கப்பட்டது.
ஜி. ஜி. பொன்னம்பலம் சேனநாயக்காவினது அமைச்சர் சபையில் சேர்ந்து கொண்டார். இலங்கை பாராளுமன்ற தெரிவு திருத்தச் சட்டத்தினால் இந்திய வம்சாவழித் தமிழரது வாக்குரிமை பறிக்கப் பட்டது. எஸ். ஜே. வி. செல்வநாயகம் சமஷ்டி (தமிழ் அரசு) கட்சியை (F. P.) தொடக்கினார்.
ஐ. தே. க. யிலிருந்து எஸ். டபிலியு. ஆர். டி. பண்டார
நாயக்கா இராஜினாமாச் செய்தார் w சிறிலங்கா சுதந்திரக் கட்சியை திரு பண்டாரநாயக்கா நிறுவினார்.

Page 9
xii
-س 1952
ܚܘ 1953
டி. எஸ். சேனநாயக்கா மரணமடைந்தார். டட்லி சேனநாயக்கா பிரதமரானார். பொதுத் தேர்தலில் ஐ. தே. க. வெற்றி பெற்றது. ஹர்த்தால்.
டட்லி சேனநாயக்கா இராஜினாமா. சர். ஜோன் கொத்தலாவலை பிரதமரானார். ஜி. ஜி. பொன்னம்பலமும், த. கா. உம் அமைச்சர் அவை யிலிருந்தும், அரசாங்கத்திலிருந்தும் விலகிக் கொண்டனர். * றிவோல்ட் இன் த டெம்பிள் பிரசுரமானது.
சிங்களத்திற்கும் தமிழுக்கும் உத்தியோக மொழிகளாக சம அந்தஸ்து வழங்க இருப்பதாக கொத்தலாவலை
அறிவித்திருந்தார்.
சிங்களம் உத்தியோக மொழியாகவும் தமிழ் மொழி "நியாயமான அளவு பயன்படுத்தப்படும்” என்பதுமே
சி. ல. சு. க. யின் மொழிக் கொள்கையென பண்டார
1954 ،--
سی، 1955
-س- 1956
1957 -
1958 -
நாயக்கா தெரிவித்தார். மேத்தானந்தாவும் குலரத்தினா வும் "சிங்களம் மட்டும்" போராட்டத்தை ஆரம்பித்தனர்.
கொத்தலாவலை பல்டியடித்துக்கொண்டு ‘சிங்களம் மட்டும் ஐ. தே. க. யின் உத்தியோக மொழிக் கொள்கை யாகுமெனத் தெரிவித்தார். மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) உருவாக்கப்பட்டது. பொதுத் தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணி கூட்டு தெரிவு செய்யப்பட்டது. பண்டாரநாயக்கா பிரதம ரானார். "சிங்களம் மட்டும்" மசோதா நிறைவேறியது. தமிழருக்கு விரோதமாக வன்செயல்கள் நடைபெற்றன.
ஆடி : தமிழர் நலன்களைப் பாதுகாக்க பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
புரட்டாசி : பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து
கண்டிக்கு ஜே. ஆர். ஜயவர்த்தனா பாதயாத்திரை. தமிழரசுக் கட்சியின் பூணூரீ எதிர்ப்புப் போராட்டம். பண்டாரநாயக்கா, "பண்டா-செல்வா ஒப்பந்தத்தை பின் வாங்கிக் கொண்டார். வைகாசி : தமிழருக் கெதிரான வன்செயல்கள். அவசர காலச் சட்டம் நிறைவேறி 1959 பங்குனிவரை
நீடித்தது.

1959
1960
1961
1962
1963
1964
xiii
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தமிழ் மொழி (விசேட உரிமைகள்) சட்டம் நிறைவேற்றப் பட்டது. - ஆவணி : பண்டாரநாயக்கா சுட்டுக் கொல்லப்பட்டார் டபிலியு. தகநாயக்கா பிரதமரானார். மார்கழி : பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. தை : நிருவாகம் சிங்களத்தில் மட்டும். தமிழரசுக் கட்சி வடக்கிலும் கிழக்கிலும் ஹர்த்தால் அனுஷ் டித்தது. பங்குனி : பொதுத் தேர்தல்; சிறுபான்மை வாக்குக ளோடு டட்லி சேனநாயக்கா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். சித்திரை : அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது; பாராளு மன்றம் கலைக்கப்பட்டது. ஆடி : பொதுத் தேர்தலில் பூரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது; திருமதி பண்டாரநாயக்கா பிரதம
TIT60TITIT. く ・ × பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டன. மாசி வடக்கிலும் கிழக்கிலும் தமிழரசு கட்சியின் சத்தி யாகிரக போராட்டம். தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசின் தபால் சேவையை ஆரம்பித்தது. யாழ்ப்பாணத்தில் இரண்டு வருட காலமாக இராணுவம் அட்டூழியம். தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து 6 மாத காலமாக தடுப்புக்காவலில். நீதிமன்ற மொழிச் சட்டத்தின் கீழ் கோர்டுகளில் "சிங்களம் மட்டும்”. இராணுவ பொலிஸ் ஆட்சி கைப்பற்றும் சதி அம்பலமா யிற்று.
பொருளாதார நிலை சீரழியத் தொடங்கிற்று.
ஆவணி : எம். ஈ. பி., ல. ச. ச. க. க. க. கொண்ட
இடதுசாரி முன்னணி அமைக்கப்பட்டது.
ஆணி : ல. ச. ச. க., பூரீ. ல. சு. க. இன் அரசாங்கத் தோடு கூட்டுச் சேர்ந்தது.
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம்.

Page 10
xiv
1965
1966
'968
1969
1970
1971
1972
கோடீஸ்வரன் மொழி உரிமை வழக்கு.
'மார்கழி : பூரீ ல. சு. க.-ல. ச. ச. க. கூட்டு அரசாங்கம்
பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
சேனநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தம்.
பொதுத் தேர்தலை அடுத்து தமிழரசுக் கட்சியினதும்,
தமிழ் காங்கிரசினதும் உதவியோடு டட்லி சேனநாயக்கா
‘தேசிய அரசாங்கம் அமைத்தல். தை 'நியாயமான அளவு தமிழ் மொழி பிரயோகம்’ சட்ட ஒழுங்குகள்.
சட்டத்தை எதிர்த்து பூரீ. ல. சு. க., ல. ச. ச. க., க. க.
ஆர்ப்பாட்டம். மாவட்ட சபை மசோதா பிரசுரமாகிற்று. ஆர். ஜி. சேனநாயக்கா சிங்கள மகாஜன பெரமுனயை (SMP) 5 TIš5 Tř. h− மாவட்ட சபை மசோதா அரசாங்கத்தினால் கைவிடப் பட்டது. Լ
அரசாங்கத்தினின்றும் தமிழரசுக் கட்சி விலகியது.
கோடீஸ்வரன் வழக்கில் 'பிறிவி கவுன்சிலின்” தீர்வு ஓரளவிற்கு சாதகமாக இருந்தது.
"வைகாசி பொதுத் தேர்தலில் பூரீ. ல. சு. க., ல. ச. ச:
க. க. க. கூட்டு முன்னணி வெற்றி.
திருமுதி பண்டாரநாயக்கா பிரதமரானார்.
சித்திரை * ஜனதா விமுக்தி பெரமுன (VP) கிளர்ச்சி.
“அவசரகாலப் பிரகடனம், ஆறுமாத காலமாகத் தொடரப்
. لقسامنا لا பிறிவிகவுன்சிலுக்கு அப்பீல் செய்யும் உரிமை நிறுத்தப் பட்டது. குடியரசுக்குரிய அரசியல் யாப்பு வரைவு பாராளுமன்றத் தில் சமர்ப்பிக்கப்பட்டது. தரப்படுத்தல் : சிங்கள மாணவருக்கும் தமிழ் மாணவருக் கும் மாறுபட்ட தரம் வேண்டப்படுதல். வைகாசி : தமிழர் ஐக்கிய முன்னணி (TUF) தொடக்கப் பட்டது. புதிய அரசியல் யாப்பு அமைக்கப்பட்டது. சிலோன் என்பது பூரீ லங்கா குடியரசாக மாறியது. பொருளாதார நெருக்கடி மேலும் வலுவடைந்தது.

1973
1974
1975
1976
1977
1978
1979
1981.
XV
பல்கலைக்கழக தெரிவில் தமிழ் மாணவருக்கெதிரான பார பட்ச முறைகள். - நீதி மன்ற மொழி (விசேட ஒழுங்குகள்) சட்டம். "சிறிமா-இந்திராகாந்தி ஒப்பந்தம்’ யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிசார் அட்டூழியம். தரப்படுத்தலும் மாவட்டக் கோட்டாக்களும். செல்வநாயகம் தனித் தமிழ் நாடு கோரத் தீர்மானித்துக் கொண்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டு தனித் தமிழ் நாடு அமைப்பதென உறுதி கொள்ளல். வட்டுக்கோட்டை தீர்மானம்.
ஆடி : பொதுத் தேர்தலில் ஜே. ஆர். ஜயவர்த்தனா
தலைமைதாங்கிய ஐ. தே. க. வெற்றி.
ஆவணி : தமிழருக்கெதிரான வன்செயல்கள்.
ஆவணி : பூரீ லங்கா ஜனநாயக சோஷலிச குடியரசின் புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி முறை நடைமுறையாக்கப்பட்டது. ஜயவர்த்தனா ஜனாதிபதியானார். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்டவிரோதமாக் கப்பட்டது. தரத்திற்கு 30%; மாவட்ட கோட்டாவாக 55%; பின் தங்கிய பிரதேசம் 16%
பயங்கரவாதப் தடுப்புச் சட்டம் நிறைவேறியது.
தமிழ்ப் பகுதிகளில் அவசரகால நிலை. யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவம். யாழ்ப்பாணத்தில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் இராணு வத்தினரால் கொல்லப்பட்டனர். ஆணி : யாழ்ப்பாணத்தில் பொலிஸ் இராணுவ வெறி "...D. இராணுவம் யாழ்ப்பாணத்தில் உள்ள பல கட்டடங்களுக்கு தீமூட்டியது. ۔ ۔ ۔۔۔۔ ஆனி-ஆவணி : இலங்கையெங்கும் தமிழருக்கெதிரானவன் செயல். யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டது (வைகாசி 31).

Page 11
xvi
1982 -
1983 -
سے۔ 1984
سسه : 1985
ஆனி : புதிய விடுதலை இயக்கங்கள் புரட்சிகர சபையை அமைத்து ஈழம் அமைப்பதற்கு இராணுவ போராட்டத் தையே கையாள வேண்டுமென்றனர். ஐப்பசி : ஜனாதிபதியாக திரு ஜயவர்த்தனா மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். கார்த்திகை : பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழ் புத்திஜீவிகளும் கத்தோலிக்க குருமாரும் தடுப்புக்காவலில், தேர்தல் மீதான சர்வஜன வாக்கெடுப்பு. வைகாசி : யாழ்ப்பாண நகரத்தை இராணுவம் மீண்டும் எரித்தது. ஆணி சடல பரிசோதனையின்றியும் மரண விசாரணை யின்றியும் சுட்டுக் கொன்று புதைக்க இராணுவத்திற்கு அதிகாரம். தமிழருக்கெதிரான வன்செயல்கள், கொலைகள், அட்டூழி யங்கள். தென்னிலங்கையிலிருந்தும் தோட்டப் பகுதிகளிலிருந்தும் தமிழர் வடக்கே தப்பியோடினர்.
ஆடி : இரத்தகளம். இந்திய வெளி விவகார அமைச்சர் நரசிம்மராவ் இலங்கை விஜயம். ஆவணி : எச். டபிலியு. ஜயவர்த்தனாவின் இந்திய
விஜயம். , மார்கழி : "இ" இணைப்பு (Annexure C) இந்திராகாந்தி.
ஜே. ஆர். ஜயவர்த்தனா சர்வகட்சி மகாநாடு (தை 1984-மார்கழி 1984) ஐப்பசி 31ம் திகதி-இந்திராகாந்தி படுகொலை, சித்திரை: ஈழ தேசிய விடுதலை முன்னணி அமைக்கப் பட்டது. வைகாசி : வடக்கு கிழக்கு எல்லைகளுக்கு வெளியே முதன் முறையாக சிங்களவர் தாக்கப்பட்டனர். (அநுராத புரத்தில்)
ஆனி : போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள். ஆடி : திம்பு பேச்சு வார்த்தைகளில் முதற் கட்டம்.
ஆவணி : திம்பு பேச்சுகளின் இரண்டாம் கட்டம்.
இந்திய இலங்கை உடன்பாடு (டில்லியில்)-பிரதேச சபை களுக்கு இடமளிக்கப்பட்டது.

-سن- 1986
س--- 1987
Xνii
புரட்டாசி: போர் நிறுத்தம். GibfiluGáisib disfit (Monitoring Committee). மார்கழி : த. ஐ. வி. கூ. இன் பிரேரணை (டில்லி உடன் பாடு) தை : திருமதி பண்டாரநாயக்காவின் குடியுரிமை மீட்பு.
95,000ம் மலையகத் தமிழருக்கு பிரஜாவுரிமை வழங்கச்
சம்மதம்.
ஆனி : அரசியல் கட்சிகள் மகாநாடு ஆரம்பம். 0 மார்கழி 19 பிரேரணைகள் (சிதம்பரம் குழுவின் பேச்சு வார்த்தைகளுக்குப் பின்).
தை பொருளாதாரத் தடை.
5glsoy : siGLG63(5ò (3L Ti (Operation Liberation) தொடுப்பதாக லலித் அதுலத்முதலி தெரிவித்தல், வைகாசி : ஒப்பரேசன் பூமாலை. ஆனி : ஒப்பரேசன் ஈகல். ஆடி : ஜே. ஆர். - ராஜீவ் ஒப்பந்தம். ஆடி : இந்திய அமைதி காக்கும் படை இலங்கை வந்தடைந்தது.

Page 12
உள்ளுறை
பக்கம் அட்டைபட விளக்கம் iv அணிந்துரை V நூன்முகம் viii காலவரிசை நிரல் Χ உள்ளுறை xviii அட்டவணைகள் xxii முன்னுரை 01.19 பெளத்த புனருத்தாரண இயக்கம் O2 விஜயன் - சிங்களவரின் தோற்றம் 04 சிறுபான்மையினரும் அரசியலும் O6 தோட்டத் தொழிலாளரும் அரசியலும் O7 முஸ்லிம்களின் நிலைமை 08 அரசாங்க குடியேற்றத் திட்டங்கள் 09 சிங்களம்-ஆட்சிமொழி 10 கல்வியும் வேலைவாய்ப்பும் 12 அகிம்சா போராட்டம் 13 அரச அடக்குமுறையும் தமிழர் எதிர்ப்பும் 14 வன்செயல் 16 இந்தியாவின் செயற்பாடு 17
பகுதி - 1 சிறுபான்மையினரின் உரிமை பறித்தல் அத்தியாயம் 1 : சிங்கள பெளத்த உணர்வும் பிக்குகளும் 20-36
1.1. வரலாற்றில் பிக்குகளின் பங்கு 20 1.2. மகாவம்சமும் விஜயனும் 22 1.3. சிங்கள பெளத்தம் 23 1.4. அரசும் பெளத்த பிக்குகளும் 30 1.5. சமயம் சார்ந்த அரசு 32 1 .. 6. பெளத்த சின்னங்கள் 33
அத்தியாயம் 2 : பாராளுமன்றத்தில் சிறுபான்மையோர்
சிறுபான்மையினராக்கப்பட்டமை 37-58
2.1. சிங்கள பிரித்தானிய உறவு 38 2.2. இலங்கை தேசிய காங்கிரஸ் 39
2.3. சட்டசபை தேர்தல் 40

xix
பக்கம் 2.4。 சோல்பரி கமிஷன் 41 2.5. சிறுபான்மையோரது குறைபாடுகள் 44
அத்தியாயம் 3 : தோட்டத் தொழிலாளரது உரிமை மறுத்தல் 59-91
3.1. மலையகத் தமிழர் 60 3.1.1. வர்த்தகப் பிரிவினர் 61 3.1.2. உயர் நுட்ப தொழில் வர்க்கத்தினர் 64 3.1.3 பிற இடங்களில் கூலி வேலை செய்வோர் 64. 3.1.4. தோட்டத் தொழிலாளர் 65 3.2. நாடற்ற நிலை 65 3.3. தோட்டத் தொழிலாளரது அரசியல் வலிமை 67 3.4. ஒருமைப்பாடற்ற நிலை. 70 3.4.1 . இலங்கை தமிழரும் மலையகத் தமிழரும் 70 3.4.2. இலங்கை தமிழர் . குற்றச்சாட்டு 73 3.4.3. இலங்கை தமிழரின் புறக்கணிப்பு 76 3.5. தேசிய மயமும் வேலையற்ற நிலையும் 79 3. 6. இன்றைய ஆட்சியில் தொண்டமான் 80 3.7. பெருந்தோட்டப் பகுதிகளில் வன்செயல்கள் 84 3.7.1 . 1986,வன் செயல்கள் 86 3.8. தோட்டப்பகுதிகளில் குடியேற்றம் 89
அத்தியாயம் 4 : இலங்கை முஸ்லிம்களின்
இன்றைய நிலைமை 92-105 4.1 ஜனத்தொகை 92 4.2 தேசிய பொருளாதாரமும் கல்வியும் 94 4.3 ஒடுக்கப்படும் நிலை 95 4.4 கிழக்கு மாகாணம்-தேர்தல் 79 4.5 முஸ்லிம்கள் மத்தியில் பீதி 98 4.6 முஸ்லிம்கள்-இஸ்ரேலியர் (மொஸாட்) 99 4.7 வன்செயல்கள் 1 OO 4.8 புதிய வழிமுறைகள் 103
அத்தியாயம் 5 : அரசாங்கக் குடியேற்றங்கள் 106-144
5.1. சுதந்திரத்திற்கு முன் 106 5.2. சுதந்திரத்திற்கு பின் 107 5.3, திருகோணமலை 108 5.4 மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் 114

Page 13
XX
பக்கம்
5.5. மன்னார் மாவட்டம் 118 5.6. வவுனியா மாவட்டம் 124 5.7. முல்லைத்தீவுமாவட்டம் 128 5.8. நிறைவேற்றப்படாத ஒப்பந்தங்கள் 131 5,9. கையாண்ட வழிமுறைகள் 134 5.10. வட, கிழக்கு . வெளியேயுள்ள தமிழர்கள் 138 5.11. முப்பது வருட குடியேற்ற திட்டங்கள் 141
அத்தியாயம் 6 : சிங்கள மயமாக்கல் 145-158
6.1 நாட்டின் சின்னம் 146 6.2. சிங்கள கொடி 146 6.3 சிங்கள மொழி மட்டும் 148 6.4 தமிழரும் வேலைவாய்ப்புகளும் 150 6.5. அரசாங்கத்தின் வேலை வாய்ப்புத் திட்டங்கள் 152 6.6, ஆசிரியர் நியமனம் 153 6.7. அரச சேவை 153 6.8. பொது நலத் துறை 157 6.9. தேசிய பாதுகாப்பு தடை 157
அத்தியாயம் 7 : கல்வியும் தமிழர் புறக்கணிப்பும் 159-171
7.1. அரசியலும் கல்வியும் 159 7.2. பல்கலைக்கழக வரலாறு 162 7.2.1 பல்கலைக்கழக அனுமதி 163 7.2.2. அறிமுகம் செய்த திட்டங்கள் 166
பகுதி - 11 இனப்பிரச்சினையும் இந்தியாவும் (1983-1987)
முன்னுரை 173-176
அத்தியாயம் 8 அரச பயங்கரவாதமும் போராளிகளும் 177-210
8.1. இராணுவ மயம் 177 8.2. பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டங்கள் 182 8.3. வெளிநாடுகளது உதவி 185 8.4 கட்டுப்படுத்தப்பட்ட வல்யங்கள் 196
8.5. ஈழப் போராளிகள் இயக்கம் 201

அத்தியாயம்
9.1. 9.2. 9.2.1. 9.3. 9.4. 9.5. 9.6. 9.7.
9 : இனப்பிரச்சினையும் இந்திராகாந்தியும்
(1983-1984) 1983-ம் ஆண்டுக்கு முன்
தமிழ்நாடு. இந்திராகாந்தி
இடையீட்டாளர்கள்
ஜயவர்த்தனா-இந்திராகாந்தி இணைப்பு"இ"
வட்டமேஜை மாநாடு இணைப்பு "ஆ" இணைப்புகளின் முரண்பாடுகள் மகாநாட்டில் பங்குபற்றியோர் 1984-ல் நாட்டின் நிலைமை
அத்தியாயம் 10 - 1985-ன் நிலையும் திம்புவும்
10.1. 10.2. 10.3. 10.4. 10.5. 10.6. 10.7.
அத்தியாயம் 11 :
11.1. 11.2. 11.3. 114, 11.5. 11.6. 11.7.
அத்தியாயம்
12.1. 12.2. 12.3. 12.4. 12.5. 12.6. 12.7. 12.8.
இலங்கை இந்திய தொடர்பில் திசைமாற்றம்
திம்புவில் போர் நிறுத்த நியதிகள் தமிழ்க் குழுக்கள் சமர்ப்பித்த பிரேரணைகள் அரசாங்கப் பிரேரணை நிராகரிப்பு
திடீர் முறிவு
திம்புவுக்குப் பின் த.ஐ.வி.கூ. திட்டம் - 1985
தமிழீழ ஆதரவாளர் அமைப்பு ராஜீவ் மீது அரசியல்.நெருக்குதல் இந்திய அரசாங்க கொள்கையில் திருப்பம் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் கண்டனம் அரசியல் கட்சி மகாநாடு பெங்களூர் பேச்சுவார்த்தை மார்கழி 19 பிரேரணைகள்
12 : 1987 - போரும் ஒப்பந்தமும் பொருளாதாரத் தடை
இராணுவத் தீர்வு இந்தியாவின் உணவு விநியோகம் ஜே. ஆர். ஜயவர்த்தனா - திசை மாற்றம் இந்திய-இலங்கை ஒப்பந்தம் 1987 ஒப்பந்தமும் இலங்கை பிராந்திய நிலையும் ஒப்பந்தமும் இலங்கை அரசியல் யாப்பும் மாகாணங்கள் நியமிக்கப்படும் வரலாறு
1986-ன் நிலையும் பேச்சுவார்த்தைகளும்
211-235 211 215 219
224
228 230 231 233
236-252
238 239 244 245 248 249 250
253-271
255 256 259 262 264 268 270
272-31
272 274 276 281 282 286 294 296

Page 14
xxii
12.9. ஒப்பந்தமும் புனர்வாழ்வும் 12:10 ஒப்பந்தமும் குடியேற்றமும் 12.11. ஒப்பந்தமும் மலையகத் தமிழரும் 12.12. ஒப்பந்தமும் தமிழரும் இறுதியுரை பார்வைக் குறிப்புகள் பின்னிணைப்புகள்
இணைப்பு 'அ' சிங்கள இனவாதம் - பிரச்சாரம் இணைப்பு "ஆ" அரசியல் கட்சி மகாநாட்டிற்கு
சமர்ப்பித்த வரைவு திட்டம் துணை நூல் பட்டியல் தமிழ் நூல்கள் ஆங்கில நூல்கள் பெயர் - பொருள் நிரல் திருத்தங்கள்
302 307 311 314
316 321
330-345 339
339 345-361 346
351
362
371

அட்டவணை
1.1.
2.1.
2.2.
2.3.
2.4.
3.1.
4.1.
5.1.
5.2.
5.3.
5.4.
5.5.
5.6.
5.7.
5.8.
6.1。
6.2.
6.3.
6.4。
6.5.
6.6.
7.1.
7.2.
1946-ம் ஆண்டு சமய விகிதாசாரம் சட்டசபை தேர்தல் முடிவுகள் 1931, 1936 தேர்தல் முடிவுகள் 1947 - 1977 தேர்தல் - சமூக விகிதாசாரம் (1947, 1960) பிரதான இனங்களின் மக்கள் தொகை
1901-1981 மலையகத் தமிழ் பிரதிநிதிகள் . 1948 முஸ்லிம்களது ஜனத்தொகை - 1981 குடிசன மதிப்பீடு - திருகோணமலை
(1827-1981) மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்கள் கிழக்கு மாகாணம் - சனத்தொகை
(1827-1981) மன்னார் மாவட்டம் - மக்கட் தொகை (1827-1981) வவுனியா மாவட்டம் - மக்கட் தொகை
(1827-1981) வறட்ப்சி பிரதேசத்தில் நீர்ப்பாசனம் பெரும்போகம் (1979-1980) விவசாய வெற்றுக் காணிகள் விகிதம்
(1978-1979) காணி அபிவிருத்தி திட்டம் அரச சேவையில் தமிழர் விழுக்காடு அரச சேவை - 1972 அரச சேவை - 1980
அரச சேவை உயர் நிருவாக நிபுணர்கள் 1981
பொதுநலத் துறை தேசிய பாதுகாப்பு படை - 1982 1971-ல் குறைந்தபட்ச புள்ளிகள் பல்கலைக் கழக அனுமதி 1969-1980
பக்கம்
27
40
43
50
53
69
93
109
117
119
125
129
139
140
142
151
154
155
156
157
157
165
167

Page 15
xxiv
7.3.
8.1.
8.2.
10.1.
10.2.
வரைவு 1.
வரைவு 2. வரைவு 3. வரைவு 4. வரைவு 5.
பல்கலைக்கழக அனுமதி 1980 - 1981 இராணுவச் செலவு (1977 - 1987) வரவு செலவு, அந்நிய முதலீடு,
பாதுகாப்புச் செலவு படகு மக்கள், இராமேஸ்வரம் இலங்கையில் அகதிகள் ஐப்பசி 1985 கிழக்கு மாகாணம் ஜனத்தொகை
(1827-1981) கிழக்கு மாகாணம் ஜனத்தொகை கிழக்கு மாகாணத்தில் இராணுவ முகாம்கள் வடக்கு மாகாணத்தில் இராணுவ முகாம்கள் குடியேற்ற திட்டங்கள்
168
181
183
237 237
120-121
122-123
217
218
373

முன்னுரை
இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின் அரசியல் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்ட காலகட்டமது. சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உருக்குலைந்து, சுதேச விடுதலை இயக் கங்கள் அங்கங்கு தோன்ற ஆரம்பித்தன. பின் விளைவுகளை அறி யாத அரசியல் சித்தாந்தங்கள் நாகரீக உலகில் முளைத்த காலம். இந்துமகா சமுத்திரத்தில், இந்திய உப கண்டத்தின் தென் கோடி யில் அன்று அமைதி நிலவிய நாடாகத் திகழ்ந்த இலங்கைத் தீவில், சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்பட்டதால் தழைத்தோங் கிய போராட்டத்தின் சாராம்சத்தை இங்கு தருவது எமது நோக்க மாகும.
போர்த்துகேயர் ஒல்லாந்தரின் ஏறக்குறைய 300 வருட ஆட்சியில் (1505-1796) பரம்பரையான நிலப்பண்ணை முறையிலும், சிங்களத்-தமிழ் உறவிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் தோன்ற வில்லை. தாழ் நிலப் பிரதேச அதிகாரம் வெளிநாட்டு ஆட்சி யாளர்களிடம் கைமாறிய பின்னும், நேரடி ஆட்சி இல்லாததால் விவசாய உயர்குடி மக்களைக் கொண்ட உள்ளூர் ஆட்சியாளர் தம் அந்தஸ்த்தையும் ஆட்சியையும் காப்பாற்றக் கூடியதாக இருந்தது மட்டுமன்றி தம் செல்வச் செழிப்பையும் உயர்த்திக் கொள்ளக் கூடியதாயிருந்தது.
1796 ஆம் ஆண்டு பிரித்தானியர் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றியபோது உள்நாட்டு அதிகாரம் வேளாள உய ர் குடி (கொவிகம) மக்களிடமும், முதலியார்களிடமும் இருந்தது. 1833ம் ஆண்டு வரை அரசியலில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
பிரித்தானிய கிழக்கிந்திய கொம்பெனியின் ஆட்சியில் இலங்கை சிங்களவர்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின் கரை

Page 16
2 0 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
யோரப் பகுதிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டு, சென்னையிலுள்ள தலைமை அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட பின்பே முதலியார் களின் அதிகாரம் களையப்பட்டது.
1798ம் ஆண்டு நடைபெற்ற பிரச்சனைகள் காரணமாக சென்னையை மையமாகக் கொண்ட ஆட்சிமுறை நிறுத்தப்பட்டு நாட்டின் நிருவாகம் படிப்படியாக அரசாங்க அதிபர்களிடமும் வரு வாய்த்துறை அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட்டன.
பிரித்தானியரது ஆங்கில மொழியை அரச கரும மொழியாக்க உதவும் நோக்கத்தோடு அந்நிய மிஷனரிமார் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் முதலிய பிரதான பட்டணங்களில் தம் பாடசாலை களைத் தொடங்கினர். படிப்படியாக மற்ற இடங்களிலும் பாட சாலைகள் தொடக்கப்பட்டன. கண்டிய சிங்களவருள் சிலர் எதிர்ப் புத் தெரிவித்த போதிலும், தமது சமூகத்தின் உயர் மட்டத்தினர் அந்நிய ஆட்சியாளருக்கு கைகொடுத்து உதவ முன்வந்தனர்.
பெளத்த புணருத்தாரண இயக்கம்
இவ்வியக்கத்தின் ஆரம்பம் 19ம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத் தைச் சேர்ந்ததாகும். பிரித்தானிய ஆதிக்கம் பரவத் தொடங்கிய தன் விளைவாக நாட்டில் ஏற்பட்ட சமூக கலாச்சார மாற்றங்களை வன்மையாக எதிர்க்கும் நோக்கத்தோடு ஆரம்பித்தது. பாரம்பரிய சிங்கள சமூக அமைப்பினின்றும் உற்சாகம் பெற்று, சிங்கள பெளத்த தேசியம் புத்துயிர் பெறுவதை சுட்டி நின்றது. பாரம்பரியமான மொழி, சமயம் கலாச்சாரமாகியவை மூலம் தமது தனித்துவத்தை யும் தன்மானத்தையும் நிலைநாட்ட முயன்றனர். -
பெளத்த கல்வியை பரப்பும் முகமாக 1880ம் ஆண்டு நிறுவப் பட்ட 'பெளத்த இறைஞான சங்கம்” சிங்களவர் மத்தியில் தோன்றி யுள்ள உணர்வு, சுய நிர்ணய உணர்வு ஆகியவற்றை வெளிப் படுத்தியது. அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒரு சமுதாயத்தை தோற்றுவிக்கவே இம் மறுமலர்ச்சியாளர் விரும்பினர். சுருங்கக் கூறின் சிங்கள பெளத்த பாரம்பரியத்தின் அடிப்படையில் ஒரு பொது நல அரசு அமையவேண்டுமென விரும்பினர்.
அரசியலமைப்புச் சீர்திருத்தவாதிகள் இயக்கத்தில் சேர்ந்துக் கொள்ள முடியாத நடுத்தர பிரமுகர்கள், பிரித்தானியர்களை எதிர்க் கும் ஏனைய இயக்கங்களாகிய, "தன்னடக்க இயக்கங்களில் (19031914), சேர்ந்து கொண்டனர். இது சிங்கள மக்கள் மத்தியில்

முன்னுரை () 3
படிப்படியாக வேரூன்றத் தொடங்கிற்று. "தேசிய எழுச்சி இயக் கத்தை" முன்னெடுத்துச் சென்ற அநகாரிக தர்மபாலா, 1864ல் கொவிகம உயர்குடியைச் சேர்ந்த வியாபாரியும் பெரும் செல்வந்தரு மான ஒருவருக்கு மகனாகப் பிறந்தவர். இவரின் பிறப்புப் பெயர் டேவிட் ஹேவாவித்தாரன என்பதாகும். மேல்நாட்டுக் கல்வி கலாச் சாரத்தை கைவிட்டு அருகாரிக (வீடற்ற) தர்மபாலா (பெளத்த தர்மத்தின் பாதுகாவலன்) என்ற பெயரை சூட்டிக்கொண்டு சமய சீர்திருத்த நடவடிக்கைகளிலும், பொதுநல சேவைகளிலும் ஈடுபட் டார், ஒரு கட்டத்தில், ‘வெட்கமின்மையும், வறுமையும், துன்பமும், சோம்பலுமே பிரித்தானிய ஆட்சியில் தலைவிரித்தாடுகின்றது” என் றார் தர்மபாலா. தர்மபாலா, பெளத்த எழுச்சியாளராக, சமூக சீர்திருத்தவாதியாக, தன்னலமற்ற தேசியவாதியாக **நல்ல” விவ சாய குடிமகனாக, எழுச்சி இயக்கத்தின் சின்னமாக தோற்றமளித் ġ5 FT FT .
சுதந்திரத்திற்கு முன் பெளத்த எழுச்சி இயக்கத்தில் குடியேற் றம் போன்ற சில கோரிக்கைகளை அரசியலமைப்புச் சீர்திருத்த இயக்கம் ஏற்றுக்கொண்டது. நாடு சுதந்திரமடைந்ததுடன் தோட் டத் தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்து சீர்திருத்தவாதி களை திருப்திப்படுத்தினர். பொதுவாகக் கூறினால் இலங்கை ஒரு பெளத்த சிங்கள நாடாக மாறியது. அநகாரிக தர்மபாலாவின் இந்த வாக்குறுதியைத்தான் இன்று சிறில் மத்யூ, பெளத்த பிக்குகள் போன்றோர் பரப்பி வருகிறார்கள். ... "..
பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்புச் சீர்திருத்த வாத குழுக்கள் மத்தியில் தம் கொள்கையை நிலைநாட்ட முடி யாது போன 'பெளத்த தேசிய இயக்கம்,” 1936ம் ஆண்டு "தனிச் சிங்கள அமைச்சரவை’ சட்ட சபைக்கு தெரிவானதும், மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாய காவின் தலைமையின் கீழ் செயல்பட்ட சிங்கள மகாஜன சபா சிங்கள இனவாதத்தை வலியுறுத்தும் இயக்கமாகச் செயல்பட்டது. இக்காலத்தில் இலங்கை சிங்களத் தலைவர்கள் ஓரளவிற்கு அதி காரம் பெற்றவர்களாக இருந்தனர். இப்புதுத் தலைவர்களில் பெரும்பாலானோர் தாழ்ந்த நிலப் பிரதேச புது கொவிகம குடியைச் சேர்ந்தவர்களாவர்.
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற ஆவல் கொண்ட தேசிய வாதக் குழுக்கள், தாம் ஆட்சிக்கு வந்தால், பண்டைக் காலத்தைப் போல் செல்வம் கொழிக்கும் நாடாக்குவதாக வாக்குக் கொடுத்தனர்.

Page 17
4 0 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
பழைய குளங்களை சீர்திருத்துவதாகவும், சமவெளிப்பகுதிகளி லெல்லாம் குடியேற்றத் திட்டங்களை ஏற்படுத்துவதாகவும், வாக் குறுதி அளித்தனர். இதுவே, 1931ம் ஆண்டு பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களில் அரசு திட்டமிட்டு நடத்த இருந்த குடியேற்றத்தின் ஆரம்பமாகும்.
முதன் முதலாக தமிழர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டு அவர்களது நிலங்களும் அபகரிக்கப்பட்டன. சு த ந் தி ர த் திற்குப் பின் சிங்களம் மட்டும் அரசகரும மொழியானதும், மலை நாட்டுத் தமிழர்கள் நாடற்றவர்களாகியதும், கல்வியில் பாரபட்சம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமாகியவை யெல்லாம் திரண்டு இனப் பிரச்சனையை இலங்கையில் உருவாக்கிற்று.
விஜயன்-சிங்களவரின் தோற்றம்
புராண இதிகாசங்களிலும் மரபுக் கதைகளிலும் பிரபுக்களை வர்ணிக்கும் வரலாற்று நினைவுறுத்தல்களிலும் இந்திய உப கண்டத்தினின்றும் எழக்கூடிய படையெடுப்புகள் ஏற்படுத்தும் அச்ச மும் பெரும்பான்மை இனத்தவரிடையே சிங்கள மிதவாத போக்கை ஏற்படுத்த உதவின. இவ்வித தீவிரப் போக்கு பெரும்பான்மை யோருக்கும் சிறுபான்மையோருக்கும் இடையே பிளவுகளை ஏற் படுத்தின. நாட்டின் வரலாற்றில் தென்னிந்திய மன்னர்கள் இடை யிடையே நடத்திய படையெடுப்புக்கள் இதனை நியாயப் படுத்த உதவிற்று.
நாட்டின் பெரும்பான்மை இனத்தின் வ ர ல | ற் றை விவரிப்பதாகக் கொள்ளும் புராண பதிவேடாகிய மகாவம்சத்தின் முற் பகுதியில் அடங்கும் கற்பனை விளக்கங்களும் புனைகதைகளுமே இவ் வித பழைமைக் கொள்கைப் போக்குகளுக்கு ஆதாரமாக இருந்தன. **வையகம் வாழ்ந்திட வழிகாட்டியவன் பூவுலகோரை கெறிப்படுத்தி சும்மாயிருக்கும் உயர் நிலையை அடைந்ததும், தேவர் மத்தியில் நிர்வாணனாய் சாய்ந்திருந்த உயர் ஞானியும், வாக்கில் உயர்ந் தோனும், அருகே நின்ற தேவேந்திரனிடம் கூறியதாவது, 'இலல” (Lala) நாட்டிலிருந்து சிங்கபாகுவின் மைந்தனாகிய விஜயன், தன் தொண்டர் எழுநூற்றவருடன் இலங்கையை வந்தடைந்துள்ளான். தேவேந்திரனே ! எனது நல்லறம் இலங்கையிலேயே நிலைத்து நிற் கும். ஆகவே, அவனையும் அவன் தொண்டர்களையும், இலங்கை யையும் பாதுகாப்பாயாக 1"? எனக் கூறப்பட்டதாக மகாவம்சம் விளக்குகின்றது.

முன்னுரை () 5
இக்கொள்கையின் உள்ளடக்கத்தை பின்வருமாறு சுருக்கிக்கூறலாம்:
(அ) உலக மக்களினின்றும் சிங்கள இனத்தவர் வேறுபட்டவர்.
(ஆ) அவர்களே இலங்கை மண்ணுக்குரியவர். ஆகவே அவர்
களே அங்கு வாழத் தகுதியுடையவர்.
(இ) சுற்றியுள்ள இனங்கள் நாட்டைக் கைப்பற்றும் ஆபத்துண்டு. தப்புவதற்கிடமில்லை. ஆகவே இனம் அழிக்கப்படும் ஆபத்து என்றும் உண்டு.
(ஈ) வரலாறு காலந்தொட்டு இலங்கையில் மட்டுமே பெளத்த தர்மம் புனிதமாகப் பேணப்பட்டுள்ளது. இதனால், நாடு தர்மத்துக்கு ஒளிமயமான எடுத்துக் காட்டாக உள்ளது.
(உ) உலகில் பெளத்த தர்மத்தை பேணி வளர்த்து பரப்பும் பொறுப்பு சிங்கள பெளத்தர்களிடமே அளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே சிங்கள பெளத்த கொள்கை வேறுன்றப்பட்டது.
இலங்கையில் இன ரீதியான அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ள ஓர் அம்சம் என்னவெனில் 'பெரும்பான்மை” "சிறுபான் மை’ எனும் மனப்பாங்கு நிலவுவதேயாகும். நாட்டின் ஜனத்தொகை யில் சிங்களவர் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகம் என்றாலும் அவர்கள் சிறுபான்மை மனப்பாங்கை கொண்டிருப்பதாக கூறப்படு கின்றது. இதற்கு காரணம் இந்தியாவில் ஐந்துகோடி தமிழர்கள் வாழ்வதாகும். பல சிங்கள இனவாதியர்களின் சிந்தனையில், இலங்கை, சிங்களவர்களின் நாடாக மட்டுமே கருதப்படுகின்றது. இலங்கை ஒரு பெளத்த நாடு எனவும் இவர்களால் உறுதிப்படுத் தப் படுகின்றது. பெளத்த உறுதிப்பாடு சிங்கள இ ன த் தனி த் துவத்தை உறுதிப்படுத்தப்படுவதாக இவர்கள் எண்ணுகின்றார்கள். நாட்டில் பெளத்த மதத்தை பாதுகாப்பதற்கு ஆண்டவனால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் சிங்களவர்களே என இதிகாசக் கதைகள் சிங்கள வர்களிடையே இன உணர்வை தூண்டி வளர்க்கும் கருவியாக இருந்து வருகின்றது. சிங்கள பெளத்தர்களின் வரலாற்று நூல் என அவர்கள் குறிப்பிடும் "மகாவம்சம்", இலங்கையை நாகர் களும், இயக்கர்களும் ஆண்ட காலத்தில் கெளதம புத்தர் ஒரு அக் கினி சுவாலையாகத் தோன்றி விஷ்ணுவுக்கு (சக்கரதெய்யொ) இலங் கையில் பெளத்தமதம் 5,000ம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டதாக கூறுகின்றது. அத்துடன்

Page 18
6 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
அந்தப் புனிதப் பணியை சிங்களவர்களே பொறுப்பேற்க வேண்டும் என புத்தர் கூறியதாகவும் மகாவம்சத்தின் ஒரு கற்பனை அத்தி யர்யம் தெரிவிக்கின்றது.
இந்த அடிப்படையில் துட்டகைமுணு எனும் சிங்கள அரசனுக் கும் எல்லாளன் என்ற தமிழ் அரசனுக்குமிடையே நடைபெற்ற போரில் துட்டகைமுணுவை பெளத்தத்தின் பாதுகாவலன் எனக்காட்டி தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவாதம் வளர்க்கப்பட்டு, தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றது. துட்டகைமுணுவுடன், பெளத்த மகாசங்கத்தினருக்கும் பெளத்த மதத்தை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் மகாசங்கத்தினரிடையேயும் இக்கருத்து வளர்ந்து வந்திருக்கின்றது. இதன் விளைவாக தமிழ ருக் கெதிரான இனவாதம், சிங்களவர் சிந்தனையில் (குறிப்பாக இந்த நூற்றாண்டின் இருபதாம் தசாப்தத்தில் ஏற்பட்ட பெளத்த மத புத்துயிர்ப்பின் பிறகு) ஒரு முக்கிய அம்சமாக இடம்பெற தொடங்கியது.
இந்தக்கொள்கை இன்று சிங்களப் பாடப்புத்தகங்கள் மூலமாகப் பரப்பப் படுகின்றது. அத்தோடு அரசியல்வாதிகளும் இந் த க் கொள்கையையே மக்கள் மத்தியில் மேடைப்பேச்சு, துண்டுப் பிரசுரங், கள் புத்தகங்கள் மூலமாக பரப்பியும் வருகின்றனர். விசேடமாக 1950க்குப் பின் பிறந்தவர்கள் மத்தியில் இவைகள் கூடுதலாகப் பரப்பப்பட்டு அதனை உண்மையென நம்ப வைத்து வழிநடத்திச் செல்கிறார்கள்.
சிறுபான்மையினரும் அரசியலும்
கைத்தொழில் புரட்சியோடு முதலாளித்துவம் வளர அரசியலும் முக்கியத்துவம் பெறுகின்றது. சர்வஜன வாக்குரிமை அறிமுகம் செய்ததும் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யக் கூடிய தாக இருந்தது. மக்கள் தேவைகளை கவனிப்பதற்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல. மக்களது அபி லாஷைகளை வெளிப்படுத்த அரசும் ஜனநாயக நிறுவனமாக மாறிற்று. ஆகவேதான் இவ்விதமான ஆட்ச்சிமுறை வரவேற்கத் தக்கது எனலாம்.
மக்கள் பங்குபற்றுவதனால் அரசு ஜனநாயக நிறுவனமாக மாறும் அதே வேளையில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தமது அதிகாரத்தை நிலைத்திருக்கச் செய்வதற்கு அரசியல் யாப்பு சீர் திருத்தம் மூலம், தமது ஆட்சி தத்துவத்தையே மக்கள்மீது திணிக்

முன்னுரை () 7
கவும் முயன்றனர். இலங்கையிலும், செல்வாக்குள்ளவர்கள் பிரித் தானிய ஆட்சியாளர்களோடு ஒத்துழைத்து டொனமோர் சோல்பரி ஆகிய அரசியல் யாப்புக்களை நடைமுறைப்படுத்தினர். இவை இரண்டும் சிறுபான்மை இனங்களுக்கு தகுந்த பாதுகாப்பு தருவன வாக இருக்கவில்லை. நாட்டின் பிரஜைகள் யாரென்பதும் மொழி சமய உரிமைகள் என்னவென்பதுமாகிய முக்கிய விடயங்கள் தன் னும் அங்கு விளக்கப்படவில்லை.
பூரண சுதந்தரத்திற்குப் பின் செல்வாக்குள்ள சிங்களவர்களி டமே அதிகாரம் முழுமையாக வழங்கப்பட்டதும், சிறுபான்மை இனத் தவரது நலன்களை பாதிக்கும் வகையில் பல சட்டங்கள் பாராளு மன்றத்தில் நிறைவேற்றப் பட்டன. இதனால் சிறுபான்மையோரது குரல் அங்கு மதிக்கப்படாது போயிற்று. சிறுபான்மையோர் அனுப விக்க வேண்டியிருந்த கேவலமான பாகுபாடுகளில் இதுவும் ஒன்றாக இருந்தது.
தோட்டத் தொழிலாளரும் அரசியலும்
1930ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையுள்ள தோட்டத்துறை யின் வரலாற்றை அவதானித்தால், நாட்டின் தொழிலாள வர்க்கத் தின் பெரும் பகுதியினரான இந்திய வம்சாவழியினருக்குரிய பொருளாதார சமூக நீதியும் ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்ட அசுர சம்பவங்களாகவே இருக்கின்றன. இவர்கள் தேயிலை, இரப்பர் தோட்டங்களில் சிந்திய வியர்வையின் பயனே பிரதான ஏற்றுமதிப் பண்டங்களாகும். இதுவே நாடு பெறும் அந்நிய செலா வணியின் பெரும் பங்குமாக இருக்கின்றது.
இவர்கள் மீது நடத்திய தாக்கம் பல வழிமுறைகளைக் கொண் டது. இதனால் கிராம நகர சபைகளிலும் பாராளுமன்றத்திலும் பிரதிநிதித்துவம் இழக்கநேரிட்டது. பெருந் தொகையினரை நாடற்றவராக்கி இறுதியில் பலவந்தப் படுத்தினார்போல் இந்தியா விற்கு நாடு கடத்தப்பட்டனர். நாட்டின் ஏனைய மக்களுக்கு கிடைத்த சம்பள, கல்வி, சுகாதார, சமூக நன்மைகள் இவர்களுக்கு மறுக்கப்பட்டன. 1970ம் ஆண்டுக் காலகட்டத்தில் உணவு விநி யோக வசதிகள் அளிக்காது பஞ்சப்பிணியில் சிக்கவைக்கப்பட்டனர். இறுதியாக 1977, 1981, 1983 ஆடி கலவரங்களில் சித்திர வதையும் மரணமும், மானபங்கம், கொள்ளை, தீவைப்பு முதலான வன்செயல்களுக்கும் ஆளாயினார்கள்.
இன்றுவரை அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டதாக இல்லை. அண்மையில் (1986ல்) ஏற்படுத்திய ஒப்பந்தம் தன்னும்முன்னைய

Page 19
8 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
குடிசன மதிப்பீட்டு விளையாட்டையே கடைப்பிடிப்பதாக இருக் கின்றது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் நாடற்றவர்களாகவே இருக்கின்றனர். 1947ம் ஆண்டுவரை தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கக்கூடியவர் களாக இருந்தார்கள். இன்றைய கணிப்பின்படி 14 பிரதிநிதி களைத் தெரிவு செய்ய உரிமை கொண்டவர். ஆனால் கிராமிய கைத்தொழில் அபிவிருத்திச் சபை அமைச்சராகவுள்ள திரு. தொண்ட மான் மட்டுமே இவர்களது பிரதிநிதியாக இருக்கின்றார். இவர் அமைச்சரவையில் அங்கத்தவராக இருப்பது தோட்டத் தொழி லாளரை விட ஜே. ஆர். ஜயவர்த்தனாவுக்கே நன்மை தரத்தக்கதாக இருக்கின்றது. ஜயவர்த்தனாவினது ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்யாதிருக்கும் அளவிற்கு தொழிலாளரை தம்வயப்படுத்தி வைத் திருக்கின்றார்.
1976ம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியில் கூட்டுத் தலைவர்களுள் ஒருவராக சேர்ந்திருந்தார். அன்று பாராளு மன்ற பிரதிநிதியாக இல்லாதிருந்ததே இதற்குக் காாணமாகும். இந்திய வம்சாவழியினர் இலங்கைத் தமிழ் மக்களோடு சேர்ந்து தம் அடிப்படை உரிமைகளுக்குப் போராடாது இருப்பதற்கு இவர் அமைச்சரவையில் சேர்ந்திருப்பதும் ஒரு காரணமாகின்றது. அவர் களை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் இலங்கைத் தமிழரது பிரச் சனைகளைவிட பாரதூரமானது,
முஸ்லீம்களின் நிலைமை
தமிழ் பேசும் மக்களது பலத்தைக் குறைக்கவே அ ர சாங்க ம் அவர்களை இலங்கைத் தமிழரென்றும், இந்திய தமிழரென்றும் சோனகர் என்றும் பிரித்து வைத்தது. ஒன்று சேர்த்துக் கணிப் பதற்கு இடமளித்தால் விகிதாசாரம் கூடி உரிமைப் போராட்டமும் வலுவடையும் என்று எண்ணியே இவ்வித சூழ்ச்சியைக் கையாண்ட னர்.
இலங்கையிலுள்ள முஸ்லீம்களை சமூக வரலாற்று ரீதியா க அணுகினால் மூன்று வகையானவர்கள் என்பது புரியும்:-
(1) 9ம் நூற்றாண்டு தொடக்கம் அரபு நாடுகளிலிருந்து வியா
பாரம் செய்ய வந்தவர்கள். (2) இந்தியாவிலிருந்து வந்தவர்கள்
(3) இஸ்லாமியராக மதம் மாறிய உள்ளூர் தமிழர். போர்த்து கேயரது எதிர்ப்பாலும் வாசனைத் திரவியங்களை தேடியும் கண்டி

முன்னுரை () 9
இராட்ச்சியத்துள்ளும் முஸ்லீம்கள் சென்று குடியேறினர். பின்பு உள் நாட்டுக் கலவரம் காரணமாக கண்டி மன்னனது உதவியோடு கிழக்கு மாகாணத்தில் குடியேற்றப்பட்டார்கள்.
ஆரம்பத்தில் தென்னிலங்கையில் உள்ளவர்கள் பெரும்பாலும் வியாபாரத்திலேயே அக்கறை கொண்டவர்களாக இருந்தார்கள். இதனால் ஆளும் கட்சிகளோடு ஒத்துழைத்து சலுகைகள் பெறக் கூடியவர்களாக இருந்தார்கள். இவர்களது ஜனத் தொகையும் கணிசமான அளவு பெருகியது. 1947ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தொட்டு பாரரளுமன்றத்திலும் ஜனத்தொகைக்கு ஏற்ற பிரதிநிதிகளைப் பெறத் தக்கவர்களாக இருந்தார்கள்.
ஆனால் தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் முஸ்லீம்கள் இவர்களைப் போல் வசதிபடைத்தவர்கள் என்று சொல்வதற்கில்லை. அற்பவருவாய் தரும் முயற்சிகளிலேயே ஈடுபட்டு வாழ்ந்து வருகிறார்கள். இவர் களும் தமிழரென்ற ரீதியில் சிங்கள பெளத்த கொள் ைக யா ல் பாதிப்படைந்துள்ளார்கள். பல தடவைகள் வன்செயல்களால் தாக் கப்பட்டுள்ளார்கள். காரணம் இவர்களும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே.
அரசாங்க குடியேற்றத் திட்டங்கள்
இலங்கை ஒரு பெளத்த நாடென்பதை நிலை நாட்டுவதற்கு எந்தெந்தப் பகுதியில் சிறுபான்மையினர் வாழ்கின்றார்களோ, அப் பகுதிகளில் எல்லாம் பெளத்த மக்களை அரசாங்க உதவியுடன் குடி யேற்றும் திட்டம், 1931ம் ஆண்டில் அமைக்கப்பட்ட முதல் மந்திரி சபையில் (சிங்கள), காணி அமைச்சராக இருந்த டி.எஸ். சேன நாயக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
நீர்ப் பாசன வசதியுள்ள நிலங்கள் கணிசமான அளவு இருந்த போதிலும், அதனை விடுத்து வறண்ட பிரதேசக் குடியேற்றத் திட்டக் கொள்கையை அமுலுக்கு கொண்டு வரப்பட்டது சட்டசபை அங்கத்தவர்கள் சிலரின் கண்டனத்துக்குள்ளானது.
சுதந்தரத்திற்குப் பின் தமிழர் வாழ் பகுதிகளில் குடியேற்றத் திட்டங்களை உருவாக்குவதே சிங்கள அரசியல்வாதிகளின் மனதில் நிலைத்திருந்தது. 1950ம் ஆண்டு முதன் முதலில் அமுல்படுத்திய பாரிய குடியேற்றத் திட்டம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிற்கு அருகேயுள்ள கல்லோயா திட்டமேயாகும். பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் அல்லை முதலிய பல குடியேற்றத் திட்

Page 20
10 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
டங்கள் இடம்பெற்றன. மன்னாரிலும், (பண்டிவிரிச்சான் நெடுஞ் சாலை) முல்லைத் தீவிலும் இது போன்ற குடியேற்றத் திட்டங்கள்
உருவாக்கப்பட்டன.
அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட இச்சட்டத்திற்கு தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையால் 1957ம் ஆண்டு ஆடிமாதம் 6ம் திகதி பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம் உருவாயிற்று வடக்கு கிழக்கு மாகாணங்களை சிங்களமயமாக்கும் கருவியாக குடி யேற்றத் திட்டங்களை பயன்படுத்தவோ அல்லது இப்பகுதிகளில் வாழும் தமிழர்களை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கோ இவ்வொப்பந்தத்தில் வாய்ப்பிருக்கவில்லை. ஆனால் இவ்வொப் பந்தத்தை சிங்கள மிதவாதிகளும் பெளத்த பிக்குகளும் கடுமையாக எதிர்த்தமையால் கைவிட நேர்ந்தது. (தற்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனாவும் இதனை எதிர்த்தவர்களில் ஒருவராவார். கொழும்பிலிருந்து கண்டிவரை கண்டன ஊர்வலம் ஒன்றினை இவர் 1957ம் ஆண்டு புரட்டாசி 4ம் திகதி நடத்தி னார்.) அதன் பின்னர் இக்குடியேற்ற திட்டங்கள் தொடர்ந்தும் தீவிரமாக செயல் படுத்தப்பட்டன.
தமிழருக்கு எதிராக விரோத மனப்பான்மையும் வன்செயல் களும் ஏற்ப்படுவதற்கு இதுவும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. அனைத்து இனக்கலவரங்களுக்கும் மூலகாரணத்தை ஒருவர் ஆராய் வாரேயானால் இப்புதுக் குடியிருப்புகளே காரணம் என்பதை எவ் வித சந்தேகமும் இன்றி நிரூபிக்க முடியும். இக்குடியேற்றத் திட்டங் களுக்கு அருகாமையில் வசிக்கும் தமிழ் கிராம வாசிகளே மீண்டும் மீண்டும் இவர்களது தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். சமீப காலங்களில் தமிழர்கள் அதிகமாக வாழும் மலை நாட்டிலும் இதே முறையை கையாண்டு வருகின்றார்கள்.
சிங்களம் ஆட்சி மொழி
1950ம் ஆண்டு டி எஸ். சேனநாயக்காவினது ஐ.தே. கட்சியில் இருந்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவினது சிங் க ள மகா சபா வெளியேறியதோடு, சிறுபான்மை மக்களுக்கு எ தி ரா க நடத்தப்பட்ட நாடகத்தின் அடுத்த காட்சி பரிணமிக்கின்றது. பண்டாரநாயக்காவை ஒரு தாராள மனப்பான்மையுள்ள ஜனநாயக வாதி எனலாம். ஆனால், இரு மொழிகளும் நான்கு இனத்தவர் களையும் கொண்ட மக்கள் ஒரு சிறு நிலப்பிரபுத்துவ வியாபாரக் கோஷ்டியின் பொருளாதார ஆக்கிரமிப்பு நிலவும் நாட்டில் கூட் டாக வாழ முயலுகையில், ஒரு மொழி, தேசியம் என்னும் சுலோ கத்தை மையமாகக் கொண்டு அரசியல் நடத்துவதின் தத்துவத்

முன்னுரை () 11
தையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் நன்கு உணர்ந் திருந்தார் எனக் கூற இயலாது, மறுபுறத்தில், நாடு சிங்கள இனத் திற்கே உரியது என்றும், தென்னிந்தியாவில் உள்ள த மி ழ ர் கள் இருக்கும்வரை தம் பாதுகாப்பிற்கு உறுதியில்லை என்று நிலவும் கருத்துக்களைத் தூக்கிப் பிடித்தால் பெரும்பான்மை இனத்தவர் தன் கட்சியின் அணியிலேயே திரண்டு அதன் அரசியல் ஆதிக்கத்தையும் உறுதிப்படுத்துவர் என்பதை மட்டும் நன்கு உணர்ந்திருந்தார். அதே வேளை, அந்நிய ஆட்சியின் கீழ் பாதிக்கப்பட்ட சிங்கள மொழி கலாச்சாரத்தோடு சுதேச சமய அரசியல் கலாச்சார நிறுவனங்களுக் கும் புத்துயிர் கொடுக்கும் ஜனநாயக அம்சங்களும் அவரது தேசிய உணர்வில் இடம்பெற்றன. ஆனால் சுதேச மென்பதை சிங்களத்தோடு மட்டுமே இனைத்துக் கொண்டதனால் வளர்ந்துவரும் தேசிய உணர்வினின்றும் ஏனைய இனத்தவர்கள் விலக்கப்பட நேரிட்டது. ஆகவேதான் ஏனைய சிறுபான்மையோரது நலன்களை மறு க் கு முகமாகவே பெரும்பான்மை சிங்களவரது நலன்கள் வழங்கப்படுவது எனும் இன சமய மொழி வெறி கொண்ட அளவிற்கு அவரது தேசியம் சீரழிந்தது.
பெரும்பான்மையோருள் பலர் தொடர்ந்தும் பரம்பரைக் குத்த கைக் காணிகளுக்கு உரிமை கொண்டதனால், அவர்கள் மத்தியில் தொழிலாள வர்க்கம் இருந்ததெனக் கூற இயலாது. தொழிலாளர் கள் எனக் கொண்டாலும் பொருட்படுத்தக் கூடிய அளவில் இல்லை எனலாம். இதனால் பண்டாரநாயக்கா போன்றோர் உருவாக்கிய இனவெறிப் போக்குகளுக்கு எதிரான பரந்த அணியில் சிங்களவர் களையும் திரட்டிக் கொள்ளலாம் என்பதற்கு வாய்ப்புக்கள் குறை வாகவே இருந்தன. அவர்களுள் 80% ஆக உள்ள நாட்டுப்புற விவ சாயிகள் சி.ல. சு. கட்சியுடனேயே உறுதியாக நின்றுக் கொண்டனர். இதனால் இடதுசாரிக் கட்சிகளோடு சேனநாயக்காவினது ஐ. தே. கட்சியும் முன்பு காணாத அளவு தோற்கடிக்கப்பட்டன. ஐ. தே. கட்சியின் தலைவர்கள் மேல்நாட்டு மோகம் கொண்டவர்கள் எனும் கருத்து நிலவியதாகவும், பண்டாரநாயக்காவினது சுதேசிய தோற் றத்தைத் கண்டு எடுபட்ட மக்களது ஆதரவை இழந்ததனாலும், தேர்தல் கிட்டும்போது மட்டும் சிங்கள தேசியம் பேசியது செல்லு படியாகவில்லை.
தனது இனவெறி போக்குகளுக்கேற்ப, சிங்கள மொழியை மட்டுமே அரச கரும மொழியாக்குவதென தன் வாக்காள ஆதர வாளர்களுக்கு பண்டாரநாயக்கா உறுதியளித்தார். இதன் விளை வாகவே சுதந்திரத்திற்குப் பின் சிறுபான்மையோரால் தொடரப்பட்ட போராட்டத்தின் அடுத்த கட்டம் ஆரம்பமாயிற்று. தமிழ், சிங்களம்

Page 21
12 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
பேசும் மக்களுக்கிடையே பூசல்களும் ஆரம்பிக்கத் தொடங்கின. வடக்கிலும் கிழக்கிலுமுள்ள தமிழ் பிரதேசங்களுக்கு தென்னிலங்கை யிலுள்ள தமிழர்கள் அகதிகளாக அனுப்பப்பட்டார்கள். தோட்டப் பகுதிகளிலும் வன் செயல்கள் ஆரம்பிக்கத் தொடங்கியதும் தமிழ் தோட்டத் தொழிலாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்துக்குள் குடி யேற ஆரம்பித்தனர்.
கல்வியும் வேலை வாய்ப்பும்
தொழில், நிர்வாக மொழியாக சிங்களம் இருக்கும்போது, சுயமொழி (Swabhasa) திட்டத்தின் கீழ் தமிழ்மொழி மூலம் கல்வி கற்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தமிழ் மாணவர்கள் உள்ளானார் கள். இத்திட்டமானது எவ்வித போட்டிக்கும் இடமின்றி சிங்களவர் களுக்கு தொழில் வாய்ப்பினை ஈட்டித்தந்தது.
தமிழ் மொழியையும் ஆட்சி மொழியாக்கப்படாத பட்ச்சத்தில் தமிழ்ப் பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்ப்பிப்பதற்கு இடமளிக்க முடியாதென தமிழ்ப் பெற்றோரும், பாடசாலை அதிகாரிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசின் கொள்கைகள் சிங்கள-தமிழ் இளைய தலைமுறையினரை பிரித்ததுமட்டுமன்றி, சிங்கள மாணவர் களும் மகாவம்சம் திரித்துக் கூறிய வரலாற்றைக் கற்கும் நிலையும் ஏற்ப்பட்டது.
1956ம் ஆண்டு முதல் அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழர் களை நியமிப்பது வெகுவாக குறைந்துவிட்டது. தரப்படுத்தல் மூலம் குறைந்த புள்ளிகள் பெற்ற சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களைவிட அதிக வாய்ப்புக்களைப் பேற்றனர். கல்வி அமைச் சினால் பல்கலைக் கழக அனுமதி சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட நான்குவகைத் திட்டங்கள் தமிழ் மாணவர்களைப் பாதித்து சிங்கள மாணவர்களுக்கு சாதகமாக அமைந்தன. இவை பெருமளவில் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதைக் கட்டுப்
படுத்தின.
சிங்களவரான பேராசிரியர் சீ. ஆர். டி. சில்வா தமிழ் மாணவர் களின் கல்விக்கு ஏற்பட்ட பேராபத்தையும் அதன் பின்விளைவு களையும் குறிப்பிடும்போது, . 'சிறுபான்மை மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதனால் நேரிட்ட பாதிப்பு பாரதூரமானது, பாடசாலை கள் அரசாங்கமயமாக்கப் பட்டதால் எழுந்த போராட்ட காலத்தைப் போல் அல்லாது சிங்கள தமிழ் மக்களிடையே இதனால் உருவா கிய பகைமையும் நம்பிக்கையின்மையும் இலகுவில் நீக்கக்கூடியன

முன்னுரை () 13
அல்ல. சிங்கள, தமிழ் மக்களை உள்ளடக்கிய கிறிஸ்தவ மதத் தினரை போலல்லாது இல்ங்கை வாழ் தமிழர்கள் தமக்கென உரிய தேசிய உணர்வுகளை வளர்த்துக் கொண்டார்கள். கல்வித் துறையில் வாய்ப்புக்கள் எட்டாமல் போனது மொழி, வேலை வாய்ப்பின்மை முதலிய விடயங்களால் ஏற்கனவே உருவாகிய மூரண்பாட்டை இன்னும் தீவிரப்படுத்துவதாக இருந்தது. இருந்தும் பல்கலைகழக அனுமதிப் பிரச்சனையே யாழ்ப்பாண இளைஞர்களை ஒன்றுப்படுத்தியதெனபதும் தமிழர் ஐக்கிய முன்னணித் தலைவர் களை தனிநாடு கோரத் தூண்டியதென்பதும் தெளிவு 8.
அகிம்சா போராட்டம்
மக்கள் அடங்கா போராட்டம் எனும் அகிம்சா எதிர்ப்பு முதன் முதலாக 1952ம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரசால் ஆரம்பிக்கப் பட்டது. 1950ம் ஆண்டு தேர்தல் பதிவேடுகளிலிருந்து இந்திய வம்சாவழித் தமிழர்கள் நீக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் பாராளு மன்ற உறுப்பினரும் தொண்டர்களும் உண்ணாவிரதம் இருந்து சத்தியாக்கிரகம் நடத்தினார்கள். அன்று நிதி அமைச்சராக இருந்த ஜே. ஆர். ஜயவர்த்தனா கம்யூனிஸ்டுகளது தூண்டுதலிலேயே இது நடைபெறுவதாக குற்றஞ் சாட்டினார்.
மொழியை பொறுத்தமட்டில் அரசாங்கம் பாரபட்சமாக நடந்து கொள்கின்றது என 1952ம் ஆண்டு வவுனியா பாராளுமன்றப் பிரதி நிதியாக இருந்த சி. சுந்தரலிங்கம் அவர்கள் தன் பதவியை இராஜினாமாச் செய்தார். 1956ம் ஆண்டு அரசாங்கத்திலிருந்த தமிழ் அங்கத்தவர்கள் தம் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ப்பட்டு வரும் ஆபத்துகளில் இருந்தும் அதனை பாதுகாக்க தம் பதவிகளி லிருந்து வெளியேறினார்கள். தமிழ் அரசு ஒன்றை நிறுவி சம உரிமையோடு சிங்கள அரசோடு இணையவோ அல்லது விலகி சுய மாக இயங்கவோ போராடுவதென தீர்மானித்துக் கொண்டார்கள்.
1956ம் ஆண்டு ஆனிமாதம் 5ம் திகதி சிங்களம் மட்டும் அரச கரும மொழியாகும் மசோதாவை எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டார நாயக்கா பாராளுமன்றதில் சமர்பித்தார். 12 பாராளுமன்ற உறுப் பினர் உட்பட 200 தமிழ்த் தொண்டர்கள் இதனை எதிர்த்து காலி முகத்திடலில் அமைதியாகச் சத்தியாக்கிரகம் செய்தபோது பொலிசார் முன்னிலையில் சிங்களக் காடையர் கூட்டம் அவர்களை வன்மையாக தாக்கிற்று. அரசாங்கத்தின் ஆணைக்கு இணங்கவே பொலிசார் வாளாவிருந்தனர் எனக் கூறப்படுகின்றது. இதனையடுத்து கொழும் பிலும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலும், திருகோணமலை

Page 22
14 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
யிலும், கல்லோயாவிலும், மலைநாட்டின் பல பகுதிகளிலும் கலவரம் பரவிற்று. 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர் களுள் பெரும்பாலானோர் தமிழர். நாட்டின் வரலாற்றில் தமிழருக் கெதிரான வன்செயல்களின் ஆரம்பமும் இதுவே.
1958ம் ஆண்டு மார்ச் மாதம் சிங்களத்தில் பூரீ எழுத்தைக் கொண்ட அரசாங்க பஸ் வண்டிகள் வடக்கு கிழக்கு மாகாணங் களுக்கு அனுப்பப்பட்டபோது அங்கு சிங்கள பூரீ எதிர்ப்புப் போராட் டம் ஆரம்பிக்கப்பட்டது. அதே ஆண்டின் சித்திரை மாதம் பதிலடி கொடுப்பதாக சிங்கள கலகக்காரர்கள் தமிழர்களை தாக்கி அவர் களது கடைகள் பலவற்றையும் எரித்தனர். மலையகக்திலுள்ள பொகவந்தலாவையில் தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசார்மீது கல்லெறிந்தனர். அப்போது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தமையால் இரு தோட்டத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இவர்களது இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் 80,000 தொழிலாளர் கள் கலந்துகொண்டனர். இதற்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாக வடக்கிலும் கிழக்கிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
வன்செயல் இரத்தினபுரிப் பகுதிக்கும் பரவத் தொடங்கிற்று. பிரதமர் பண்டாரநாயக்கா இதற்கு தமிழரே காரணம் என்றார். தமிழ் மக்கள் அநீதிக்கு எதிராக அடங்காப் போராட்டம், பாராளு மன்ற பதவிகளை இராஜினாமாச் செய்தல், சத்தியாக்கிரகம், முதலிய அமைதிப் போராட்ட முறைகளை மேற்கொண்ட போது சித்திரவதை, கொலை, தீவைப்பு, கற்பழிப்பு, கைது செய்தலு மாகியவையே பதில் நடவடிக்கைகளாக இருந்தன. இவ்வாறே 1961லும், 1977லும், 1981லும், 1983லும் தொடர்ந்தும் நடந்தன. தமிழர் நடத்திய அமைதியான போராட்டங்களை அடக்குவதற்காக 1956ம் ஆண்டு தொடக்கம் சிங்கள அரசாங்கம் இராணுவத்தில் பலரை தேர்ந்தெடுத்து வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தது. இவ்வாறே அமைதியான முறையில் தமிழர்கள் காட்டிய எதிர்ப்புக்கு அரசினால் பயங்கரவாத அடக்குமுறையே கையாளப் பட்டது. மாற்றுவழி வேறேதுமின்றி தமிழர்களும் ஆயுதம் ஏந்த நேரிட்டது. -
அரச அடக்குமுறையும் தமிழர் எதிர்ப்பும்
தமிழ்மக்கள் சார்பில் முன்வைத்த கோரிக்கைகளை பெறத் தவறியபோது, திரு. செல்வநாயகம் தனிநாடு கேட்பதற்கென மக்கள் அனுமதியை நாடி நின்றார். 1975ம் ஆண்டு மார்கழி மாதம் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்றதும், அவர்

முன்னுரை () 15
கூறியதாவது ; 'அந்நிய ஆதிக்கத்துக்குட் படுத்தப்படும் வரை, தமிழர்களும் சிங்களவர்களும் வேறுபட்ட இறைமைக்கு உரியவர் களாகவே வாழ்ந்து வந்தனர். தமது விடுதலையையும் மீட்டு எடுக்கலாம் எனும் நம்பிக்கையுடனேயே சுதந்திர போராட்டத்தில் தமிழர்கள் முன்னின்று உழைத்தார்கள். ஐக்கிய இலங்கையில் சிங்களவருக்குச் சமமாக நின்று எமது அரசியல் உரிமைகளை பெற லாம் எனக் கடந்த 25 வருடங்களாக முயற்சி செய்தோம். ஆனால் அடுத்தடுத்து வந்துள்ள சிங்கள அரசாங்கங்கள் சுதந்திரத்தினின்றும் எழும் அதிகாரத்தைக் கொண்டே எமது அடிப்படை உரிமைகளை மறுத்து அடிமைப்படுத்திய மக்களாக்கிவிட்டன என்பது வருந்துவதற் குரியதாகின்றது. சிங்களவரோடு தமிழருக்கும் பொதுவாக உரிய இறைமையைப் பயன்படுத்தியே இதனைச் சாதித்தனர். ஆகவே இத்தேர்தல் வாயிலாக, தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட இறைமை யைக் கொண்டு தமிழ் ஈழம் விடுதலை அடையவேண்டுமென்பதே மக்கள் தந்துள்ள தீர்ப்பு என நான் கருதிக் கொள்வதை எனது மக்களுக்கும் நாட்டுக்கும் அறியத் தருகிறேன். தமிழர் விடுதலை முன்னணி சார்பில் மக்கள் இட்ட ஆணையை நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கின்றேன்” 4.
1976ம் ஆண்டில் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், தமிழ் பேசும் முஸ்லீம்களாகிய சிறுபான்மையோர் எல்லோரும் முதன் முறையாக வட்டுக் கோட்டையில் ஒன்று கூடியபோது, தமிழர் ஐக்கிய முன்னணித் தலைவர்கள் அதனை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக அமைத்துக் கொண்டனர். 1977ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் த. ஐ. வி. கூ. 18 ஆசனங்களைப் பெற்றெடுத் தது. தமிழ் மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதையும்; மதசார்பற்ற சோசலிச தமிழ் ஈழம் கோருவதைத் தவிர மாற்று வழியில்லை என்பதையும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் தெளிவாகக் கூறிற்று.
*.மொழி உரிமையிழந்து, குடியுரிமை இழந்து, தம் சமய உரிமை இழந்து, சிங்கள குடியேற்றங்களினால் தம் பாரம்பரியத் தாயகத்தையே இழந்து நிற்கும் தேசிய இனத்திற்கு மாற்றுவழி எது ? தரப்படுத்தலினால் உயர் கல்விக்குரிய வாய்ப்பு இழந்து, தொழில் துறையில் சமவாய்ப்பு இழந்து நிற்கும் தேசிய இனத் திற்கு மாற்று வழி எது? ஆட்சியாளரால் தூண்டப்பட்ட குண்டர் களாலும் பாதுகாப்பு படையினராலும் தாக்கப்பட்டு கொள்ளை யடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு தவிக்கும் தேசிய இனத் திற்கு மாற்றுவழி எது? தனித்துவத்தை நாடி திக்குத் தெரியாது நிற்கையில் அழிக்கப்படும் ஆபத்தையே காணும் தேசிய இனத்திற்கு

Page 23
16 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
மாற்றுவழி எது? நம் முன்னோர் சுயாட்சி புரிந்த எம் மாநிலத்தில் நாமே ஆட்சி செய்வோம் என திட்டவட்டமாகவும் அஞ்சா நெஞ் சத்துடனும் பிரகடனப் படுத்துவதே மாற்று வழியாகும். சிங்கள ஏகாதிபத்தியம் எம் மண்ணினின்றும் வெளியேற வேண்டும். த. ஐ. வி. கூ. எதிர்வரும் 1977ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய இனத்தின் இத்திட்டமான முடிவை சிங்கள அரசாங் கத்திற்கு பிரகடனப்படுத்துவதற்கு உரியது என்றே கணிக்கின்றது. ஆகவேதான் ஒரே தொடராக இணைந்துள்ள பாரம்பரிய பிரதே சங்கள் கொண்ட சுதந்தர, இறைமையுள்ள, மதசார்பற்ற சோசலிச தமிழ் அரசை நிறுவுவதற்கு மக்கள் அனுமதியை த. ஐ. வி. மு. நாடி நிற்கின்றது ”9.
இன்று நடைபெறும் வன்செயல்கள்
வன்செயல்கள் நாட்டில் ஏழுவகை உருவங்களை எடுத்துள்ளன :-
1. தமிழ் மக்களுக்கெதிரான சிங்கள கும்பலின் வன்செயல்கள். இது 1956ம் ஆண்டோடு ஆரம்பித்த 30 வருட வரலாற் றைக் கொண்டது.
2. தமிழ் மக்களுக்கெதிரான சிங்கள அரசின் வன்செயல்கள், 1961ம் ஆண்டு திருமதி சிறிமா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் நடத்திய அகிம்சைப் போராட்டத்தை தொடர்ந்து ஆரம்பித்த இப்போக்கு ஜய வர்த்தனாவின் ஆட்சியில் இன அழிப்பு நிலையை அடைந்து கொண்டிருக்கிறது.
3. அரசுக்கு எதிராக தமிழ் போராளிகளது வன்செயல்கள், இது ஜயவர்த்தனாவின் ஆட்சியிலே ஒழுங்கும் வலிமையும் பெற்றுக்கொண்டது.
4. தமிழ் போரரளிகளுக்கு எதிரான சிங்கள அரசின் வன்செயல் கள்-இதற்கு எதிராக எவரும் முறையிடுவதாக இல்லை. போராளிகளோ முறையிடுவது பற்றி அக்கறை கொண்ட வராக இல்லை.
5. சிங்கள மக்களுக்கு எதிரான போராளிகளது வன்செயல். இது மிகவும் அண்மையில் உருவாகிய போக்காகும். ஆனால் சிங்கள கும்பலும் அரசும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத் தும் வன்செயல்கள் சிங்களவரதும் உலகினதும் மனச்சாட் சியை தூண்டத் தவறிய சூழலில், இதுவித வன்செயல்கள் நடைபெறுவது வியக்கத்தக்கது என கூற இயலாது.

முன்னுரை () 17
3. சிங்களவரிடையே அதிருப்தியாளரது சிங்கள அரசுக்கு எதி ரான வன்செயல்கள்-இது ஜயவர்த்தனாவின் சர்வாதிகாரத் தன்மையினால் அண்மைக் காலங்களில் உருவாகிய புதிய போக்காகும்.
7. சிங்கள அரசினால் சிங்கள அதிருப்தியாளருக்கு எ தி ரா ன வன்செயல்கள் - இது ஜயவர்த்தனா ஆட்சியின் நிலையான போக்காக இருந்தும் இப்பொழுதுதான் தலைக்காட்டத் தொடங்கியுள்ளது. இதுவே பரிணமிப்பின் உச்ச நிலை யாகநின்று ஜயவர்த்தனா யுகத்தின் முடிவையே ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இத்தகைய ஆயுதம் தாங்கிய வன்செயல் மூலமே அரசுக்கும் கட்டுக்கடங்காத சிங்கள கும்பல்களுக்கும் ஒரு சில சிங்கள மக்களுக் கும் தமிழர் முதல் தடவையாகப் பதிலடி கொடுக்கக்கூடியதாக இருந்தனர். இப்பொழுது சிவில் யுத்த கட்டத்தை அடைந்துள் ளோம். இதில் 20,000 பேர் மாண்டிருக்கிறார்கள், 50,000 பேர் காயமுற்றிருக்கிறார்கள். கற்பனைக்கு அடங்காத அளவு உடமை களுக்கு சேதமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் செயல்பாடு
சிங்கள மிதவாத அரசாங்கத்துடன் தாங்கள் மே ற் கொண் ட பேச்சுவார்த்தைகளை, 1983ம் ஆண்டு ஆடி மாதம் இடம் பெற்ற வன்செயல்களுக்குப் பின் கைவிட்ட தமிழர்கள் இனப்படுகொலை யிலிருந்து தங்களை காத்துக்கொள்ள இந்தியாவையே முழுமையாக நம்பத்தொடங்கினர். இலங்கை நிலை குறித்து இந்தியா கடந்த காலத்தில் நடந்தது போலவே விரைந்து செயற்பட்டது.
1986ம் ஆண்டு வரை இந்தியா ஒரு மத்தியஸ்தராக இருந்து சிங்கள அரசையும், தமிழர்களையும் பேச்சு வார்த்தைகளில் ஈடு படுத்துவதற்காக முயற்சித்து வந்தது. நிரந்தர தீர்வு என்ற இலக்கை அடைய முடியாது போகவே இவ்வாண்டு (1987) ஆடி மாதம் தமிழர்களை பாதுகாக்கும் முழுப் பொறுப்பையும் இந்தியா ஏற்றுக் கொண்டது.
இந்த நான்கு வருட காலத்தில், அனைத்து கட்சி மகாநாடு, திம்பு பேச்சுவாத்தை, அரசியல் கட்சி மகாநாடு, கொழும்பு-டில்லி பங்களுர் பேச்சுவார்த்தை முதலிய பல்வேறு முயற்சிகள் எடுக்கப் பட்டன. இறுதியாகவே இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987ல் ஆடி மாதம் கைசாத்திடப்பட்டுள்ளது.

Page 24
18 0 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
இலங்கை தமிழர்கள் 1948ம் ஆண்டு தொடக்கம் பல்வேறு இன் னல்களையும், துயரங்களையும், அனுபவித்து வந்துள்ளனர். ஆகவே கூடியவிரைவில் இதற்கொரு முடிவைக் காணவே அவர்கள் விரும்பு கின்றனர். இனப் பிரச்சனை தோன்றக் காரணமாயிருந்த மூலக் காரணிகளை கண்டறியும் தீர்வாகவும், சிவில் யுத்த நி ைலக் கு இட்டுச் சென்ற அடிப்படை காரணங்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து அறிந்த தீர்வாகவும் அது அமைய வேண்டும். வன் செயல்களை மட்டும் நிறுத்திவிட்டு உத்தரவாதங்களையும், ஒப்பந் தங்களையும், உடன்பாடுகளையும் மீறுவதாகவுள்ள தீர்வாக இல் லாது இப்பிரச்சனையை முற்றாக தீர்க்கக்கூடிய ஒரு நேர்மையான முயற்சியாக இருக்கவேண்டும். ராஜீவ் காந்தியும் ஜயவர்த்தனாவும் சமீபத்தில் செய்து கொண்ட ஒப்பந்தம் தமிழர்களின் அடிப்படை உரி மைகளையும், தேவைகளையும் பூர்த்திசெய்யாவிடில் தனிநாடு கேட் பதை தவிர அவர்களுக்கு மாற்றுவழி ஏதேனும் இருப்பதாகத் தெரிய வில்லை. அல்லாவிடில் தமிழ் இனம் புத்தருக்கு பலி கொடுக்கப்பட்ட தாகி, இலங்கையும் நிரந்தரமான சிங்கள பெளத்த நாடாகிவிடும்.
முடிவுரை
“சிங்கள பெளத்தம்' என்ற கொள்கை பெளத்த சிங்களவர் அல்லாத ஏனைய மக்களை அந்நியர் என்றும் சிறுபான்மையினர் என்றும் பிரித்து வைத்தது. இதற்காக இம்மக்களை இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவழி தமிழர், சோனகர், கிறிஸ்தவர் (சிங்கள) என பிரித்து வைத்தனர். கடந்த காலத்தை சற்று திரும்பிப் பார்ப் போமானால் ஆளும் சிங்கள வர்க்கத்தினரால் இவர்களது உரிமை கள் படிப்படியாக பறிக்கப்பட்டு இருப்பதை அவதானிக்கக் கூடிய தாக இருக்கிறது. உரிமைகளுக்காக இவர்கள் வாதாடும் போதெல் லாம் அரச வன்முறையினால் தாக்கப்பட்டு பீதியின் காரணமாக அடக்கப்பட்டவர்களாக இருப்பதையும் காணக் கூடியதாக உள்ளது.
இவர்களுக்கு சிறுபான்மையினர் எனும் பெயர் சூட்டப்பட்டு பெரும்பான்மை மக்களின் கருணையால் கிடைக்கும் சில சலுகை களை பெற்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை இவர்களது அரசியல், சமய, பொருளாதார, சமூக-கலாச்சார வாழ்வினின்று அறியக்கூடியதாக உள்ளது. சிறுபான்மை சமூகத்தின் ஒரு பிரிவி னர் இந்த அடக்குமுறையை எதிர்த்து நடத்திய அகிம்சா போராட்டங் கள் தொடர்ச்சியாகவே தோல்வி கண்டதனால், சிங்கள அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர். இதனால் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டதேயன்றி வெற்றி தோல்வி எனும் முடிவை எவரும் எய்தவில்லை.

முன்னுரை () 19
இந் நிலையில் இந்திய அரசாங்கம் தனது செல்வாக்கினை பயன்படுத்தி, 1983ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இவ்விரு சமூகத்தவர்களையும் ஒன்று கூட்டி பேச்சுவார்த்தைகளின் மூலம் நிரந்தரமான தீர்வொன்றை ஏற்படுத்த முன்வந்துள்ளது.
இந்நூலின் வாயிலாக அடிப்படை உரிமைகளை இழந்த இலங்கை சிறுபான்மை மக்களின் பிரச்சனையை தோற்றுவித்த காரணங்களையும், 1983ம் ஆண்டு வன்செயலுக்குப் பின் இந்திய அரசாங்கத்தின் மத்தியஸ்தத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் என்பவற்றையும், அவை இலங்கை சமுதாயத்தின் அடிப்படை தேவைகளை எவ்வகையில் பூர்த்தி செய் கின்றன என்பதையும் ஆராய முற்பட்டுள்ளோம்.
ஆளும் வர்க்கச் சிங்கள மொழியில் போர் என்றாலும் போர். சமாதானம் என்றாலும் போர்
எதை நாம் பேச ? ஆளப்படுகிற சிங்கள மக்களோ வாய்மொழி இழந்து
முகங்கள் இழந்து அபினி தின்று மூச்சுமிழந்து
ஆளும் பேய்களின் நடைப் List 6D6 trias, இந்த மனிதன் விழிக்கும் வரைக்கும்
எவருடன் பேச ?

Page 25
முதலாம் அத்தியாயம்
சிங்கள பெளத்த உணர்வும் பிக்குகளும்
1902ம் ஆண்டு முதல் பெளத்த பிக்குகளால் ஆரம்பிக்கப்பட்ட சமூக சீர்திருத்த இயக்கங்கள் (Temperance movement) ஆரம்பத் தில் கலாச்சார துறையில் மட்டுமே கவனம் செலுத்தின. காலப் போக்கில் சிங்கள பெளத்த இன உணர்வை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் இயக்கமாகவே உருமாறின.
சிங்கள தேசம், சிங்கள இனம் எனும் போக்குகளைக் கொண்ட தற்கால சிங்களக் கொள்கையே இன்றைய பிரபுத்துவ கலாச்சார போக்காகவும் இருக்கின்றது. இத்தன்மை படைப்பு இலக்கியத்திலும், கலைகளிலும், வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளிலும் வெற்றிகரமாக ஊடுருவி நிற்கின்றது கடந்த நூற்றாண்டுக்குள் இச் சிங்களக் கொள் கையானது வரலாற்றை அவதானித்துப் பார்க்கும் முறையையே மாற்றியமைத்துவிட்டது எனக்கூறினால் மிகையாகாது.
1. 1. வரலாற்றில் பிக்குகளின் பங்கு
பெளத்த மதத்தையும் இனத்தையும் காப்பதே தங்களின் கடமை என்றும் அதனைத் தமக்கே உரியதாக்குகிறது போல பெளத்த பிக்குகள் காட்சியளிக்கின்றனர். பண்டைய அரசர்கள் எப்பொழுதும் அரசாங்க பிரச்சினைகளில் பெளத்த சங்கத்துடன் கலந்து ஆலோசனை செய் வார்கள் என்றும் உரிமை கோரப்படுகிறது. அரசியல்வாதிகளும் எப்போதாயினும் சமயக் கூட்டங்களில் உரையாற்றும் பொழுது இதனையே திரும்பத் திரும்ப சொல்வார்கள். கடந்த கால வரலாற்றை ஆழ்ந்து நோக்கினால், பெளத்தம் இலங்கையில் உன்னத நிலையில் இருக்கும் பொழுது சங்கம் எவ்விதமான பங்கை வகித்தது என்பது தெளிவாகும்.

சிங்கள பெளத்த உணர்வும் பிக்குகளும் () 21
கி.மு. 59ம் ஆண்டில் சிம்மாசனமேறிய துலத்தன் என்பவனை தெரிவதிலும் 12ம் நூற்றாண்டில் முதலாம் விஜயபாகுவுக்குப் பின் ஆட் சிப் பீடத்தில் அமர்ந்தவரை தெரிவு செய்வதிலும் சங்கத்தின் அங்கீகா ரத்தை பெற்றது போன்ற தொடர்ப்பற்ற சந்தர்ப்பங்களைத் தவிர வேறு எந்த வகையான தொடர்புகளும் பெளத்த குருமார்களுக்கு அரசியலில் இருக்கவில்லை. பெரும்பாலும் அரசர்கள் இளவரசர்கள் சேனைத் தலைவர்களிடையே தோன்றும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்ப தில் பெளத்த குருமார்கள் இடை முகவர்களாக இருந்தார்கள்-துட் டகைமுனுவிற்கும், சதாதிஸ்சவுக்குமிடையே நடந்த போரை தீர்த்து வைத்த கொடகந்த திசா, மகாதிஸ்ச வற்றகமுனிக்கும் அவனது சேனாதிபதிகளுக்குமிடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட இதற்குரிய சில உதாரணங்களாகும். அத்தகைய தீர்வுகள் நிகழ் வதற்கு இடை முகவர்களாக இருந்த பிக்குகளின் அறிவாற்றலும், கடமையுணர்ச்சியுமே காரணமாக இருந்தன. பிக்குகளுக்கும் அரசர் களுக்கும் உள்ள தொடர்ப்பு தனிப்பட்ட உறவே - இது இளவரசர் களுக்கு பயிற்சி அளித்ததன் பயனாக விளைந்தது எனலாம்
மாற்றமடைந்து வரும் காலங்களிலும் அதே கல்வியறிவு நிலை யைக் கடைபிடித்திருந்தால், இக்கால பிக்குகள் விரும்பும் மரியாதை யும் செல்வாக்கும் இயல்பாகவே அவர்களுக்கு கிடைத்திருக்கும். கிளர்ச்சியிலும் வன் செயலிலும் ஈடுபடுவது பின்னர் எழாதிருந்திருக் கும். சரித்திரப் பதிவேடுகளை ஆராய்ந்துப் பார்த்தால் அரசே பிக்கு களுக்கும் அவர்களது மடங்களுக்கும் விதிகளை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துகிறதேயல்லாது பிக்குகள் அரச கருமங்களில் ஈடுபடுவது என்பதற்கு இடமில்லாதிருப்பதைக் காணலாம். எடுத்துக் காட்டாக நான்காம் மகிந்தன் மிகிந்தலையில் பொறித்திருக்கும் கல்வெட்டில் பிரமாணங்களும் வழிமுறைகளும் துறவி மடங்களை எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதையே கூறுகிறது. *
மகாசேனனின் ஆட்சிக்காலத்தில் நிதி மந்திரி ஒருவர் திசா என்ற பெளத்த பிக்குவை துறவு வாழ்விலிருந்து நீக்கினார் என்றும் கூறப்படுகின்றது. 2 இந்தப் பதிவேட்டில் பெளத்த விதிமுறைகள் சீர்கெடும் போதும், ஒழுக்கம் கெடும் போதும் அரசன் அதனை உணர்ந்து புனிதப்படுத்துவான் என குறிப்பிடப் பட்டிருப்பது கவ னத்திற்குரியது.
விரும்பத் தகாதவர்களை பெளத்த பீடத்திலிருந்து வெளியேற்
றப்படுவதை நிரூபிக்கின்றது. இப்படியான புனிதப்படுத்தும் பணி களை செய்த அரசர்களின் பெயர்பட்டியல் பின்வருமாறு:

Page 26
22 0 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
மொகலான (5ம் நூற்றாண்டு), குமார தாது சேன (6ம் நூற் றாண்டு), Iம் மொகலான (7ம் நூற்றாண்டு), VII ம் அக்கபோதி (8ம் நூற்றாண்டு), 11ம் சேன (9ம் நூற்றாண்டு), IV, V காசியப்பன் (10ம் நூற்றாண்டு) Vம் புவநேக்கப்பாகு (14ம் நூற்றாண்டு), கீர்த்திசிரி ராஜசிங்க (18ம் நூற்றாண்டு)
மகாவம்ச வினய பிடகம் பிக்குகள் அரசுடன் இணைந்து நாட்டை அமைதியான முறையில் ஆட்சி புரிவதற்கு துணை செய்ய வேண்டும் என்றே, கூறுகின்றது. அது போன்ற நிலை இன்று உருவாகவில்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின், பெளத் த சாசனத்தை புனிதப்படுத்துதலே இப்போதைய தேவையாகின்றது.
1. 2. மகாவம்சமும் விஜயனும்
இந்நூலில் அடங்கும் விஜயன் கதை புதிய நாட்டில் ஏற்படுத் திய முதற் குடியேற்றத்தையே விபரிக்கின்றது. சிங்களவர், தாம் தனித்துவம் கொண்டவர் என்பதை அரசியல் ரீதியாக வரைவிலக் கணம் கொடுக்க முயல்வது இக்கதையின் சாராம்சமாகும், ஆட்சி செய்தவர்களையும் அவர்களுள் உயர்குலத்தவர்களாகவும் காட்ட முயல்கின்றது.
முதலாம் காசியப்பன் (கி.பி. 477-495) கட்டிய "சிகிரியா” கோட்டையில் அடங்கிய கட்டிடக்கலை வாயிலாக இத்தனித்துவக் கொள்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. அங்கு செதுக்கப்பட்டுள்ள மாபெரும் சிங்கத்தின் சிலையே மிகப்பிரதானமாகும். கோட்டைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயருக் கும், இதுவே காரணமாகும். அரச அந்தப்புரங்கள் கற்பாறையின் உச்சியில், அமைக்கப்பட்டிருந்தன. மன்னன் படிகளால் இறங்கி வரும்பொழுது சிங்கத்தின் குடலினின்றும் வாயூடாக வெளி வந் து தோன்ருமாப்போல் கட்டிடக்கலை அமந்துள்ைளது. இச் சிங்கன புரா ணக் கதையை பரப்புமுகமாக அரச குலத்தின் அதிகாரத்தை ஸ்தி ரப்படுத்தவே இவ்வித கலைப்படைப்புகள் பயன்படுத்தப்பட்டன. மறுபுறத்தில், பெளத்தர்களது சமய உணர்வுகளைத் தொடும் அள விற்கு புத்தரது வம்சாவழித் தொடர்பு கொண்டவர்கள் என்பதை யும் வற்புறுத்திக் கூறி, தமது அதிகாரத்தை நிலைநாட்ட ஆட்சி யாளர் முயன்றனர்?. அரச குலத்தைச் சாராதவர்கள் சிங்களவரெனும் தனித்துவத்தைப் பெற்றதும் மன்னன் வாயிலாக அல்லது ஏற்கனவே இவ்வித தொடர்பு கொண்ட குடும்பங்களின் வாயிலாகவே என்ப தனை இப்புராணக்கதை கூறுகின்றது. விஜயனோடு உடன் வந்த எழுநூற்றவர் அவனது பரிவாரங்களே. அவர்களுள் சிலர், அவனது

சிங்கள பெளத்த உணர்வும் பிக்குகளும் ) 23
அமைச்சர்கள் என்பதும் விசேடமாகக் குறிப்பிடப்படுகின்றது. பண் டைய இலங்கையில், அரச சேவை பிரமுகர்கள் நிலவுரிமை கொண்ட உயர் குலங்களிலிருந்தே தெரிவு செய்யப்பட்டனர். உயர்ந்த அரச பொறுப்புகளும் பரம்பரையாக குறித்த சில குடும் பங்களுக்குரியதாகும் போக்கும் உருவாயிற்று.4
வர்தகர்களும், சமூகத்தின் முக்கியமான அங்கமாக இருந்தனர். புராணக் கதையின் வேருெரு விளக்கத்தில் சிங்களவரை வர்த்தகர் களாகக் கொண்டதும் இப்பகுதியினரது முக்கியத்துவத்தை பிரதி பலிக்கின்றது. இதனால் சிங்களத் தனித்துவம் எனும் கொள்கை யூடாக ஒன்று சேர்க்கப்பட்டார்கள். பெரும்பாலும் நாட்டில் செல் வாக்கும் பலமும் வாய்ந்த குடும்பங்களையே "மஹா ஜன" என்று மகாவம்சத்தின் கதை வர்ணிக்கிறது எனவும் கூற இ ட முண்டு. 'மஹாஜனய' எனும் அதன் ஒசை யொத்த சொல்லின் இன்றைய பொருளைக் கொள்ளாது, 'பெருங்குடியினர்” என்பவர்களையே குறிப்பதாக நூலின் பண்டைய பிரதிகள் சுட்டுகிறன்ன. ஆகவே, கதை உருவாகிய அக்கால கட்டத்தில் சிங்கள உணர்ச்சி என்பதும் ஆட்சி செய்த வர்ககங்களின் உணர்ச்சிகளையே குறித்தது எனலாம். ஆரம்பகட்டத்திலாகுதல் இப்போக்கு குறித்த பிரதேச எல்லைக்குட் பட்டதாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் சிங்களவரது, முதற் குடியேற்றங்கள் கடம்ப (Kadamba, மல்வத்த), கம்பிர (Gambhira) (கனடற) நதிக் கரைகளையும் அவற்றை அண்டிய பகுதிகளையும் மட்டுமே உள்ளடங்கியதாகக் கதை கூறுகின்றது. கிழக்கிலும் தென்கிழக்கிலும் உருவாகிய குடியேற்றங்களின் தோற்றம் வேறு என செய்திப் பதிவு ஏடு குறிப்பிடுவதும் அவதானிக்கத் தக்கது.
13. சிங்கள பெளத்தம் (Ideology)
புராணக் கதையைத் தழுவிய வெவ்வேறு நூல்களுக்கிடையே தன்னும் (திவ்வியவாதன, மகாவம்சம்), அவற்றை இயற்றியவர் களது மாறுபட்ட சமூகப் பின்னணியை பிரதிபலிப்பதாகக் கருதக் கூடிய முரண்நிலைகளையும், அக்கால கட்டங்களில் சமூகச் செல்வாக் குடையோர் மத்தியில் நிலவிய முரண்பாடுகளையும் அரசியல் அதி காரப் போட்டியில் ஏற்படும் பிரச்சனைகளையும் சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றன. புராணக் கதையில் அடங்கும் 'சிங்கள உணர்வு' என்பதும் சாதிக்கொள்கையின் விளைவாகும். அடிமைத் தொழில் புரிந்த சாதியினர் சமூகத்தில் ஏற்கப்படாதிருந்ததே இதற்கு ஆதார id Tâlsürpğı. ÖFeyp5ğ56öT 955 Tg (dominant eliments) sufi கங்களை ஒன்றிணைத்து அரச குலத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு

Page 27
24 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
வரும் தேசியக் கொள்கையையும் மகாவம்சத்தின் விஜயன் கதை பிரதிபலிக்கின்றது.
சிங்கள தீபம் அல்லது சிங்களவரது தீவு என அழைக்கப்படத் தொடங்கியபோது குறித்த அரச குலத்தவரும் நாட்டாண்மை வர்க் கங்களும் முழுநாட்டின் மீதும் அதிகாரம் செலுத்துவதாகக் கருது வதையே இப்புதுப்பெயர் எடுத்துக்காட்டுகின்றது. பண்ணையர்கள், புலிந்தர்கள் (Pulindas) முதலிய ஏனைய சமூகத்தவர்களை கீழ் மட்டத்தவராக்குவதே இக்கொள்கையின் உட்கிடையாகின்றது. இவ் வித கொள்கையினை பிரகடனப் படுத்துவதற்கு வேண்டிய மகா வம்சம் போன்ற வரலாற்று ஏடுகள் நன்கு பயன்படுத்தக் கூடியன வாக இருந்தன. தென்னிந்திய படையெடுப்புகளும் இவ்வர்க்கங் களது அதிகார ஏகபோக்கிற்கு ஆபத்து விளைவிப்பதாக இருந்தன. பாண்டிய, பல்லவ, சோழ சாம்ராஜ்யங்கள் தென்னகத்தில் தோன்றி யதும், இவ்வித படையெடுப்புகள் அவர்களது அரசியல் அதிகாரத்தை மிரட்டுவதாக இருந்தன.
இந்த மிரட்டலால் உருவாகிய நிலையின்மையும் தூண்டிவிடப் பட்ட துவேஷத்தையும் வர்ணிக்கும் சிங்களக் கொள்கை இதனைத் துலக்குகின்றது. கொள்கைக்கேற்ற வரலாறும் எழுதப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது, புராண காலத்து விஜயன் தொட்டு வந்த மன்னர் கள் அனைவரும் முழு நாட்டையுமே ஆண்டவர்கள் என்பதே இவ்வித வரலாற்று ஏடுகளின் செய்திகளாகின்றன. பிராமிய (Brahmi) தென்னிந்திய கல்வெட்டுகள், இலக்கியங்கள் முதலியவை கூறும் ஏனைய ஆதாரங்களையும் கொண்டு மகாவம்சத்தை மீளாய்வு நடத்துவதன் மூலமே ஒன்றிணைந்த இராஜ்யத்தின் அரசியல் வளர்ச்சித் தொடரை புரிந்துக்கொள்ளலாம். மற்ற இலக்கியங்களின் வாயிலாகப் பெறும் தகவல் மூலம் ஆதிகாலத்தில் வெவ்வேறு மன் னர்களே வெவ்வேறு பகுதிகளை ஆண்டார்கள் என்பது தெளிவா கின்றது. அநுராதபுரத்தை ஆண்ட தேவானம்பியதீசன் இவர்களுள் ஒருவனாகவேயிருந்தான். மற்ற மன்னர்கள் இவனுக்குப் பணிந் திருந்தனர் என்பதற்கோ, நாடு முழுவதினையும் தன்னாதிக்கத்துக் குட் கொண்டுவர ஆசைப்பட்டவன் என்பதைத்தவிர வேறேதும் அந்தஸ்து கொண்டவன் என்பதற்கோ ஆதாரம் ஏதேனுமில்லை. சிங்களக் கொள்கை என்பதில் துட்டகைமுனுவின் படையெடுப்புக்கள் பெறும் பங்கும் முக்கியத்துவமும் (குறிப்பாக சமீபகால விளக்கங்கள்) இப்பின்னணி கொண்டே மீளாய்வு செய்தல் வேண்டும். துட்டகை முனுவுடன் போர் தொடுத்த எல்லாளன் வட இலங்கை முழுவதை யும் ஆண்டவனென்றும், மகாநாகன் மகாகாமத்தில் ஆதிக்கம்

சிங்கள பெளத்த உணர்வும் பிக்குகளும் () 25
நிலைநாட்டிய காலந்தொட்டு துட்டகைமுனுவின் முன்னுேர் முழு உருஹானையும் (Rohana) ஆண்டனரென்றும் மகாவம்சம் கூறு கின்றது.
பெளத்த சமயத்தின் நலன் கருதியே துட்டகைமுனு போர் புரிந்தானென வர்ணிக்கப்படுகின்றது. கூடித்திரிய வம்ச தர்ம வழக் கின் படியே எல்லாளனோடு போர் செய்தான் என்றும் அநுராதபுரம் கைப்பற்றப்படுவதோடு படையெடுப்பு வெற்றிகரமாக முடிவுற்றது எனவும் கூறுகின்றது. வட இராஜ்யத்தை ஆட்சிசெய்த தமிழன் நீதி வழுவாது ஆண்டான் என கருதப்பட்டபோதும், 'புன்னெறி” (Fase beliefs) கொண்டவன் எனும் காரணத்தாலேயே தென்பகுதி அரச குலத்தைச் சார்ந்த பெளத்த இளவரசன் அதனை வென் றெடுத்தான் எனக் கூறப்படுகின்றது. செய்திப்பதிவு ஏட்டாசிரி யர்களது (Chroniclers) இக்கருத்துக்கள் தற்கால வரலாற்று ஆய் வாளர்களது படைப்பின் போக்குகளையும் நிர்ணயிப்பதாக இருக்கின்றன. துவேஷ எழுத்தாளர்களும் இந்த படையெடுப்புகளை தமிழருக்கெதிராக சிங்களவர் நடத்திய புனிதப் போரெனக் காட்ட முயல்கின்றனர். தனது காலத்து நிலையே அதற்கு முற்பட்ட காலங்களுக்கும் பொருந்துவதாக சுமத்திக்காட்ட முயன்ற மகாவம்ச ஆசிரியர் தன்னும் கிடைத்த ஆதாரங்களோடு பொருந்தாத இக் கருத்துக்களை காட்டி விளக்க முயல்வதில் உள்ள சிக்கல்களை உணர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏடு தரும் சில தகவல்களின்படி தமிழரல்லாதோரும் துட்டகைமுனுக்கெதிராக போர் செய்தார்கள் என்பதை ஊகிக்க வைக்கின்றன. உதாரணம் கூறில், - துட்டகைமுனுவின் சேனைத் தலைவர்களுள் ஒருவனாகிய நந்திமித்தன் என்பவரின் உறவினர் எல்லாளனது சேனைத்தலை வருள் ஒருவராக இருந்தான் என்பதே .ே வட பகுதியை ஆண்ட மன்னனுக்கு எதிராகப் போராடிய துட்டகைமுனு ஒருங்கிணைந்த உருஹானை முழுவதையுமே ஆண்டானென மகாவம்சம் காட்ட முயன்றாலும் அதன் ஆசிரியர்கள் கையாண்ட ஆதாரங்களே முப் பத்திரு மன்னருடன் போர்புரிந்தான் எனும் விபரங்களையும் தரு கின்றன. முன்பு சுட்டிக்காட்டியதுபோல் ? பலம் வாய்ந்த இரா ணுவத் தலைவனாகிய துட்டகைமுனு பல சுயாட்சி புரிந்த பகுதிக ளோடு போர் புரிந்தே முழு இலங்கையையும் முதற்தடவையாக ஒருங் கிணைத்தான் என்பதுவே கிடைக்கப் பெற்ற ஆதாரங்கள் தரும் பொருந்தத்தக்க விளக்கமாகின்றது. அவன் தொடுத்த போர் சிங்களதமிழ் மோதல் என்பதற்கில்லை. முன்பு குறிப்பிட்டது போல், இலங்கை அபிமானம் என்பதுவும் அநுராதபுர மன்னர்களால் ஆளப்பட்ட ஒன்றிணைந்த இராஜ்யம் தோன்றிய பின்னரே அவ தானிக்கக்கூடிய அம்சமாகின்றது.

Page 28
26 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
துட்டகைமுனுவின் படையெடுப்புகளை விபரிக்கும்போது காணும் சிங்களக் கொள்கை என்பதுவும் பெளத்தம் பரவி நிலைநாட்டப் பட்ட போது வளர்ச்சிப் பெற்ற சமய தனித்துவத்தையே தெளிவாக பிரதிபலிக்கின்றது. தமிழருக்கெதிராக சிங்கள அரசை ஆதரிப்பது என்பதும் பெளத்தத்தை சிறப்பிக்க உதவும் எனும் கருத்தையே மகாவம்சமும் சூழவம்சமும் எடுத்துக்காட்டுகின்றன. மகாவம்சத்தில் துட்டகைமுனுவும், சூழவம்சத்தில் தாதுசேனனும் பெளத்தத்திற்குரிய அந்தஸ்தை மீண்டும் நிலைநாட்டவே தமிழருக்கெதிராக போர் தொடுத்தனரென வர்ணிக்கப் படுகின்றது. ஐந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த தென்னிந்திய படையெடுப்புகளை விபரிக்கும்போது நற் பிறவிகள் (ஜன குலின சப்பே-Jana Kulina Sabbe) எல்லோரும் வாழ்ந்த பகுதிகளை படையெடுத்தவரை கைகொள்ளவிட்டு உருஹ" ணையில் (Rohona) குடியேறினார்கள் என்றே சூழவம்சம் கூறு கின்றது. 8 தாதுசேனன் ஈட்டிய வெற்றியை விபரித்த பின்னர், "எதிரியால் அழிக்கப்பட்ட சாசனத்தை மீளவும் நிலைநாட்டினான்” என்றே அந்த ஏடு வலியுறுத்துகிறது. 9
நாட்டின் முக்கிய பகுதிகளில் தென்னிந்திய விரோத உணர்வே வலுப்பெற்றதாகக் காட்ட இதிகாசங்கள் முயல்கின்றன. ஆனால், அது நம்பக்கூடிய அளவிற்கில்லையென்றே கூறவேண்டும். இவ் வாறு கூறியபின் 'நற்பிறவிகள்” சிலர் தமிழ் மன்னரின் கீழ் கடமையாற்ற முற்பட்டனர் என்றும் கூறுகின்றது. ஆட்சி அதி காரத்தை கைப்பற்றியதும் 'தமிழரோடு சார்ந்து தன்னையோ சாசனத்தையோ காப்பாற்றாத நற்பிறவிகள்” மீது கடினமான தண் டனை விதித்தான் எனவும் கூறுகின்றது. 10 ஆனால் இக்காலத்து கல்வெட்டு பதிவுகளோ படையெடுத்தவரால் பெளத்த சங்கம் அழிக் கப் பட்டது என்பதை நிலைநாட்டுவதாக இல்லை. படையெடுத் தோர் மத்தியிலும் பெளத்தர்கள் சிலர் இருந்தார்களெனக் குறிக் கின்றது. அவர்களுள் சிலர் பெளத்த குருமாரை ஆதரித்த வள்ளல் களாகவும் இருந்தனர். அவர்களது மன்னருள் ஒருவரது பெயர் புத்ததாசன் என்பதாகவும் இருந்தது. 'புத்தரது அடியார்” என்பதே இப்பெயரின் பொருளாகும். 11 தென்னிந்தியாவில் சைவர்கள் தீவிரத் தன்மையடைந்து பெளத்தத்தையும் சமணத்தையும் வெறுக் கத் தொடங்கிய பின்னரே இலங்கை பெளத்தர்களும் தமிழர்களை தம் சமய விரோதிகளாக கணிக்க முற்பட்டனர். பல்லவ மன்னன் முதலாம் மஹேந்திரவர்மன் (கி.பி. 600-630) இயற்றிய சமஸ் கிருத நூல்களும் திருவாதவூரார் புராணம், பெரிய புராணம் முதலிய தமிழ் நூல்களும் பெளத்தர்களுக்கும் சமணர்களுக்கும் எதிராகக் கொண்ட வெறுப்பின் தீவிரத்தை உணர்த்துகின்றன.

சிங்கள பெளத்த உணர்வும் பிக்குகளும் () 27
பொதிமங்கையிலுள்ள பெளத்தர்களை வாதில் வென்று அவர் களை திருஞானசம்பந்தர் சைவசமயிகளாக்கினார் எனக் கூறப்படு கின்றது. மாணிக்கவாசகரும் சிதம்பரத்தில் இலங்கையைச் சார்ந்த பெளத்த துறவியோடு இவ்வித வாதம் நடத்தித் தலைகுனியச் செய்தாரெனப் படுகின்றது. 12 திருஞானசம்பந்தர் 7ம் நூற்றாண் டில் வாழ்ந்தாரென்றும் கூறுகிறார்கள். * ஆனால் இதற்கு முற் பட்ட காலங்களில் பெளத்தர்களுக் கெதிராக விரோத மனப்பான்மை நிலவியதற்கு ஆதரரம் ஏதேனுமில்லை. இதனின்றும் பெளத்த தனித்துவம் என்பது இலங்கையிலுள்ள பெளத்தர்களை தென்னாட்டி லும் இந்திய உபகண்டத்தின் ஏனைய பகுதிகளிலுமுள்ள சகசமயத் தவரோடு இணைக்க வைத்ததென்றே கூறவேண்டும். 7ம் நூற்றாண் டனவின் பின்னர் மட்டுமே சிங்களத்தளித்துவத்தை பெளத்தத்தோடு இணைக்கவும், தமிழர்களை பெளத்த சமயத்தின் எதிரிகளெனக் கருதவும் சூழல் முதிர்ச்சியுற்று வலுப்பெற்றது. 1946ம் ஆண்டு புள்ளி விபரத்தின்படி 14 சிங்களவர் அல்லாதோரும் பெளத்த சமயத்தை தழுவியுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. இதற்கு முன்பும் கூடுதலானோர் பெளத்த சமயத்தை தழுவினார்கள் என்று கூறுவதற்கு இடமுண்டு.
அட்டவணை 1.1 1946ம் ஆண்டு சமய விகிதாசாரம்
சமூகம் பெளத்தர் ದ್ವಿಸ್ಟಿಫಿಕೆ 3ళ్లు கிறிஸ்தவர்
சிங்களம் 91.9% 0.1% 0.1% 7.9% இலங்கைத்தமிழர் 2.6% 80.6% 0.2% 16.5% இந்தியத் தமிழர் 1.3% 89.3% 0.3% 8.1%
இலங்கைச் சோனகர் ( 0.7% 0.3% 97.7% 0.3%
மகாவம்சத்தையும் இதர நூல்களையும் ஆராயுமிடத்து சிங்கள உணர்வு என்பது குறித்த ஒரு மொழிப் பிரிவினரோடு மட்டும் பொருந்துவதென்றோ அல்லது குறித்த உடற்தோற்றத்தையுடை யோரை பிரதிபலிப்பதாகவோ இல்லை. 7ம் நூற்றாண்டின் பின்னர் மட்டுமே குறித்த சமய பிரிவினரோடு இணைக்கக் கூடியதாக இருக்கின்றது. தென்னிந்தியாவில் சைவம் தீவிர

Page 29
28 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
மடைந்து பரவி பெளத்த சமண சமயங்களை அகற்றியதுமே இதற்கு காரணம் எனலாம்.
சிங்கள உணர்வும் இக்காலகட்டத்தில் வைராக்கியத்துடன் நிலைத்து நின்றது என்பதும் சூழவம்சம் முதலிய நூல்கள் வாயிலா கத் தெளிவாகின்றது. கற்றறிந்த சில பகுதியினரிடையே தீவிர மாகவும் நிலவிற்று. வெவ்வேறு காலகட்டங்களில் சிங்களவரை ஒன்றிணைத்த காரணிகளை ஆராயும்போது சமூக அரசியல் அளவை களே பிரதானமானவை என்பது வெளிப்படையாகின்றது. அநுராத புர காலத்தில் ஆளும் வர்க்கத்தினரிடையே இருந்தது போன்று, புராணக் கதைகொண்டு வலுப்படுத்திய இணைக்கும் கொள்கை கண்டிய பிரபுக்கள் மத்தியில் காணப்படவில்லை.
ஐரோப்பியரது காலனி ஆட்சியோடுதான் சிங்கள உணர்வும் பாரதூரமான மாற்றத்தினைப் பெற்று இன்றைய கோலத்தை யடைந்துள்ளது எனலாம். காலனியாட்சி உருவாக்கிய புதிய வர்க் கத்தினர் தம் கோஷ்டி உணர்வினை பக்குவப்படுத்துவதில் ஐரோப் பிய சிந்தனைகளையும் தமது பாரம்பரிய கருத்துகளையும் நன்கு பயன்படுந்தினர். ஐரோப்பாவில் நிலவிய இனவெறிக் கொள்கை கள் இக்காலகட்டத்திலேயே உருவாகி நிலைநாட்டப்பட்டன. ஆசிய மொழிகளதும் வரலாற்றுகளினதும் ஆய்வு முடிவுகள் இவற்றை உருவாக்க உதவின.
மொழியுறவுகளை விளக்கும் கொள்கைகளை அடுத்து வந்த வையே இனவெறிக் கொள்கைகள், மொழிகளுக்கிடையே நிலவிய உறவுகள் ஒரே சந்ததியையும் அவற்றைப் பேசுவோர் ஒரே இரத்தத் தையும் பிரதிபலிப்பதாக விளக்கம் தர ப் பட்ட து. இவ் வித விளக்கங்களின் உதவி கொண்டே மொழியுறவுள்ள கோஷ் டியினருக்கும் அவர்களுக்கென உரியதாகக் கருதும் உடற் தோற் றத்தைக் (Physical features) கொண்டு வரைவிலக்கணம் தரப்பட்டது. சிங்கள தனித்துவம் தமிழ் தனித்துவம் என்பதுவும் இவ்விதமே இன அளவு கோள்களைப் பெறத் தொடங்கின. ஆனால் இக்கொள்கைகள் ஏற்கத்தக்கனவாக இல்லை. ஆரியம், திராவிடம் என்பன இன வகுப்பு களைக் குறிக்காது மொழி வகுப்புகளையே குறிப்பவையாகுமென "பண்டைய இலங்கையின் வரலாறு” எனும் நூல். இவர்களால் கையாளப்பட்ட கொள்கைகளை சரிவரத் திருத்த முயன்றது.
1920ம் ஆண்டளவில் சிங்கள மொழியில் வெளிவந்த இனவெறி
நூல்கள் தமிழ் விரோதப் போக்கைத் தீவிரமாகக் கையாண்டன. துட்ட கை முனுவிற்கும் எல்லாளனுக்குமிடையே நடந்த போர் சம்

சிங்கள பெளத்த உணர்வும் பிக்குதரற்திxடி
பவத்தை விசேடப்படுத்தத் தொடங்கினர். 1923ம் ஆண்டில் வெளி வந்த கவிதைகள் தமிழர் மீதிருந்த வெறுப்புணர்வையே வெளிக் கொணர்ந்தன. அடுத்து வந்த காலங்களில் நிலவிய சிங்கள உணர் வின் பிரதான அம்சமாகவே இப்போக்கு நிலவிற்று எனலாம்.
20ம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தோடுதான் சிங்களவர் மத் தியிலுள்ள மாற்று சமயத்தவரை வேறுபடுத்தும் முகமாக "சிங்கள பெளத்தயா' எனும் பதம் வழக்கில் வரத் தொடங்கிற்று. 1906ம் ஆண்டு அநகாரிக தர்மபால இச்சொல் தொடரை 'சிங்கள பெளத் தயா’ என்னும் பத்திரிகையில் முதன் முதலாகப் பயன்படுத்தினார். இவரே பெளத்த தேசிய இயக்கத்திற்கு புத்துணர்வு இட்டவர்.
பூர்ஷ்வாக்கள் தங்களுடைய அந்தஸ்த்தை நிலைநாட்டிக் கொள் வதற்காக இந்தச் ‘சிங்களக் கொள்கையை பயன் படுத் தி யது, போன்றே மக்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கு எதிராக பொங்கி யெழும் சந்தர்ப்பங்களை தவிர்ப்பதற்காகவும் பயன் படுத்தப்பட்டது.
இது வர்க்க உணர்வுகளையும், அரசை (state) சீர்குலைக்கும் தன்மையையும் உள்ளடக்கியிருந்தது. சுதந்திரம் பெற்றதும் இதனைப் படிப்படியாக பயன்படுத்தக்கூடியதாக இருந்தது. தமது முதலாளித் துவ கொள்கையை காப்பாற்றி அதிகாரப் பீடத்தில் தொடர்ந்து இருப்பதற்கு வேண்டியே மக்கள் மத்தியில் சிங்கள் பெளத்த கொள் கையை கட்டவிழ்த்தனர். தொழிலாளர் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தவும் உயர் வர்க்க உணர்வுகளை வளர்க்கவும் பயன்படக் கூடிய கொள்கையாக இருந்தது. சிங்கள மக்களை திருப்திப்படுத்த பின்வருவனவற்றை நடைமுறைபடுத்துவதாக உறுதி கூறினார்: கொழும்பில் பல இடங்களில் கூலி வேலை செய்த இந்திய மக்களை (மலையாளிகள்) திருப்பி அனுப்புவது, மலையக தமிழ் தொழிலா ாரது பிரிஜா உரிமையை மறுப்பதும் நாடு கடத்துவதும், சிங் க ள மொழியை அரச மொழியாக்குவது, பெளத்த சமயத்தை அரசின் சமயமாக்குவது. ஆனால் இவ்வித அரசியல் நடவடிக்கைகளோ, வ்றிய மக்கள் மத்தியில் உருப்படியான சமூக மாற்றங்களை உரு வ்ர்க்கவில்லை. அரசாங்க கொள்கைகளை நியாயப்படுத்தி அரசியல் அதிகாரத்தை தம்வயப்படுத்திக் கொள்வதற்காகவே சமயமும் மொழி யும் அரசின் நிறுவனக் கருவிகளாக சிங்கள ஆட்சியாளரால் பயன் டிடுத்தப்பட்டன. ஆகவேதான் பெளத்த பிக்குகளின் உதவி கொண்டு இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடெனும் கொள்கையினை அறிமைபடுத்த ஆட்சியாளரும் முனைந்தனர்.

Page 30
30 ) பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
1.4. அரசும் பெளத்த பிக்குகளும்
பண்டைய இலங்கையில் அரசன் மட்டுமே நிலவுடைமை கொண்ட வனாவான். அவர் காணிகளை அரச உத்தியோகத்தவர்களும் விகா ரைகளும் ஆற்றிய சேவைக்கு கைமாருக வழங்கி வந்தார். விகா ரைக்கு சொந்தமான நிலங்கள் அரச கட்டுப்பாடு வரிகளில் இருந்து விலக்கப்பட்டிருந்தன. பெளத்த துறவியர் எதுவித அதிகாரத்தை யும் கொண்டிருக்கவில்லை. நிருவாக அதிகாரமெல்லாம் விவசாய குடிமக்களிடமேயிருந்தன. இப்படி சமய சார்பற்ற ஆட்சிமுறை, அண்மையில் இயற்றப்பட்ட (1972) அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்டு பெளத்த அரசாக பிரகடனம் செய்யப் பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்கு மகா சங்கத்தின் ஆதரவு பெரிதும் இன்றியமையாதது என்று ந ன் கு உணர்ந்தன. சங்கத்தினரும் தாம் ஆதரிக்கும் அரசியல் கட்சி மேடைகளில் தோன்றி பிரித் ஓதி கொள்கை பரப்பு கூட்டங்களை தொடக்கிவைத்தனர். 1956ம் ஆண்டு பண்டாரநாயக்காவின் வெற்றி யுடன் பெளத்த தேசீய கொள்கை வேரூன்றியது. சங்கத்தின் ஒரு தீவிரவாதப் பகுதியின் அயராத உழைப்பே பண்டாாநாயக்காவின் வெற்றிக்கு காரணம் என்பதும் உண்மையாகும்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி, மார்க்சிய வாதிகளுடன் கூட்டு ச் சேர்ந்ததும், வசதியும் செல்வமும் படைத்த கண்டி பெளத்த துறவி யர், ஐக்கிய தேசீய கட்சியையே சார்ந்து நின்றனர். பெளத்த சமயம் அகிம்சை (உயிர் கொல்லாமை) என்ற புத்தரின் போதனையை முன் வைத்து மக்களை பெரிதும் வசப்படுத்தியிருந்தது. அதே வேளையில், தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பெளத்தரை தூண்டவும் தவற வில்லை. இது இலங்கையில் அதிகரித்துவரும் ஆயுத கொள்வனவினின் றும் அறியக் கூடியதாக உள்ளது.
விவசாய சமூகத்தில் ஓரளவிற்கு சமூக பொருளாதார முன் னேற்றம் கண்டு உயர் நிலைக்கு வந்தவர்களும், பெளத்த பிக்கு களும், சுதேச வைத்தியர்களும், சிங்கள பாடசாலை ஆசிரியர்களும், சிறு வியாபாரிகளும், மட்டுமே. தமிழ் மக்கள் அ ைடந்துள்ள உன்னத நிலையை எட்ட முடியாமல் போகவே அவர்கள் மீது பொறாமைக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
இந்த சிங்கள சமூகம் சிங்கள மறுமலர்ச்சி இயக்க கொள்கைய நியாயப் படுத்தி சிறுபான்மை தமிழ் மக்கள் உரிமைகளை அங்கீ கரிக்க மறுத்தது. தமிழ் பேசும் மக்கள் அன்னியர் என்ற உணர்வை சிங் கள மக்கள் மத்தியில் தோற்வித்தது. இலங்கை ஒரு சிங்கள பெளத்த

சிங்கள பெளத்த உணர்வும் பிக்குகளும் 3.
நாடு. ஏனையோர் அங்கு அங்கியராவர் எனும் கொள்கை பரப்பப்பட் டது. அன்று பெளத்த தேசீய உணர்வை முன்வைத்த 'அநகாரிக தர்ம பாலா’ என்ற பெளத்த சிங்களவாதியை முன்மாதிரியாகக் கொண்டுள்ள பெளத்த பிக்குகளே இன்று இனப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதில் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளார்கள். இது 1948ல் சர்வகட்சி மகாநாட்டில் தெளிவாகியது. புதிய ஆயுதப்படையினர் பெளத்த பிக்குகளின் ஆசியுடன் தமிழ் மக்களை நசுக்குவதற்கென தமிழ்ப் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டனர். எல்லா குடியேற்றத் திட்டங்களிலும் பெளத்த பிக்குகள் சிங்கள மக்களுடன் சென்று அங்கு பெளத்த விகாரைகளை எழுப்பி, இந்து கட்டிடங்களையும் பெளத்த நிலையங்களாக மாற்றி பெளத்த மதத்தை பரப்பி வருகின்றனர்.
அரசு முன்வைக்கும் எல்லா திட்டங்களுக்கும், யோசனைகளுக் கும் பெளத்த பிக்குகளின் அபிப்பிராயங்களும் ஆசியும் வேண்டப்படு கிறது. இதிலிருந்து அவர்கள் எத்தனை தூரம் அரசியலில் முக் கியத்துவம் பெறுகின்றனர் என்பது புலனாகிறது. 'ஆட்சிக்கு வந்தால் பெளத்த விகாரைகளை எல்லாம் கழிவுக் கூடங்களாக்கு வேன்” என சூளுரைத்த இடதுசாரி தலைவர் கலாநிதி. என்.எம். பெரேரா, 1970ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பின் திருமதி பண் டாரநாயக்காவுடனும் அவரது அமைச்சர்களுடனும் கண்டி தலாத மாளிகைக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தி மஹா சங்கத்தினரின் ஆசியை வேண்டினார். இதனால் இடதுசாரிகள் கூட சிங்க ள பெளத்த உணர்விலிருந்து விடுபடவில்லை என்பதும் தெளிவாகிறது. இவர்களும் இன்று தங்கள் நிலை இழந்து வலிமை மிக்க கட்சி களான ஐக்கிய தேசிய கட்சி, சிறீ லங்கா சுதந்திர கட்சி ஆகிய வற்றுடன் இணைந்து கொண்டார்கள். -
இந்த பெளத்த சிங்கள உணர்வு புத்தரின் போதனைக்கு நேர் மாறானவை. எல்ல்ா பெளத்த பிரிவினரும் ஒரு மனதாய் ஏற்றுக் கொள்ளும் புத்தரின் முதற் போதனையின் சாரமும் நிர்வாணம் எனப்படும் முக்தி நிலைக்கு மக்களை இட்டுச் செல்லும் 'எட்டு வழி கள்” ஆகும். அவையாவன; சரியான கண்ணோட்டம் “சரியான சிந் தனை, சரியான பேச்சு, சரியான செயல், முறையான வாழ்க் ைக, சரியான முயற்சி, சரியான கரிசனை. சரியான அவதானம், என்பனவாம்.
மேலும் எளியோர் சார்பாக நின்று பிராமண அட்டூழியங்களை, சாதி போதங்களை, முடியாட்சி முறையை எதிர்த்து வெளிப்படை யாக உபதேசித்தவர் புத்தபிரான். ‘மனித சமுதாயத்தை துன்பத் தின் பிடியிலிருந்து மீட்பதே எனது வாழ்க்கையின் முக்கிய பணி

Page 31
32 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
என்று புத்தபிரான் கூறியிருந்தார். இதில் ஒரு பெரும் சமூக தத்து வமே அடங்கியுள்ளது.
இன்று அவர் வாழ்ந்தால் பெளத்த தேசீய வாதத்திற்கு பெரும் சவாலாக இருந்திருப்பார்.
ஓ! சிங்கள பெளத்த மஹாசங்கமே!! புத்த பிரானின் எட்டு வழிப் பாதையை பின்பற்ற விழித்தெழு!!
1.5. சமயம் சார்ந்த அரசு (பெளத்தம்)
1972ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குடியரசு யாப்பில் இப் பிர தான கொள்கை போக்கும் பெரும்பாலும் உள்ளடக்கப் படுகின்றது. பெளத்த சமயத்திற்கு ** முதலிடம்” கொடுபடுவதொடு, அதனைக் காத்து வளம்பெறச் செய்தவற்கும். அரசு கடமைப் படுத்தப்படுகின் நிறது.
**1970ம் ஆண்டோடு நடைமுறையில் பெளத்தம் அரசின் சமய மாகின்றது” என, மைக்கல் றொபட்ஸ் இது சம்பந்தமாக கருத்துக் கூறுகிறார்.19. புத்த தர்மத்திற்கு சிங்கள மன்னராலும் பிக்கு களாலும் அளிக்கப்பட்ட முதலிடமும், புத்தி ஜீவிகள் மத்தியில் பிக்குகள் வகித்த பங்கும் சமயமே சிங்களவரின் பிரதான சின்ன மாக இருந்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டுகின்றது.
ஆனால், பெளத்தத்தை அரச சமயமாக்கிய விசித்திர செயலை தயாரித்து மக்கள் மத்தியில் திணித்தது புத்த சமய புனருத்தாரண இயங்கங்களேயாகும். புனருத்தாரண இயக்கங்களின் தோற்றத்தை சமூகவியல் ரீதியாக அணுகினால், சமயப்பற்று என்பது மட்டுமல்ல பொருளாதார நலனும் கலந்ததாக இருப்பதையும் காணலாம்.
குட்டிப் பூர்ஷ்வாக்களும் பணக்கார வர்க்கமும் மக்களது சமய உணர்வுகளைப் பயன் படுத்தினால் மட்டுமே உயர் அரச அதிகார பீடங்களை அடையலாமென்பதை உணர்ந்தார்கள். ஆனால் துன்பத் திற்குப் பற்றே காரணமெனும் பெளத்த தத்துவத்தில் பொருளா தார நலன்களுக்கு இடமில்லாது இருந்தது. ஆகவேதான் அதிகா ரம் பொருளாதார நலன்கள் எனும் தமது அற்ப ஆசைகளை நிறை வேற்ற புனருத்தாரண இயக்கங்களை தொடக்கி பெளத்தத்திற்கு புதிய விளக்கம் கொடுத்தனர். 'பெளத்தம்” மறுவுலகை வலி யுறுத்துகின்றது என்பதில்லை. மனித குலத்தின் நிறைவை அடை

சிங்கள பெளத்த உணர்வும் பிக்குகளும் D 83
யவும் மனித உரிமைகளை பூரணமாக நிலைநாட்டவும் உகந்த ஒரு சமூக அமைப்பின் வளர்ச்சியையே புத்தர் விரும்பினார்” என டி.சி. விஜயவர்த்தனா தமது நூலில் குறித்திருப்பதுவே முன் கூறிய கருத்து களை தெளிவு படுத்துவதாக இருக்கின்றது. "
1.6 பெளத்த சின்னங்கள்
பெளத்தம் அரச சமயமாகிய அதே வேளையில் அரசியல் கருவி யாக மாற்றியமைக்கப்பட்டு அது சக்தி தரத் தக்க வகையில் கட்சி களால் பயன்படுத்தப்பட்டது. அரசியலில் லாபமடையும் நோக்கத் தோடு சமய சின்னங்களினூடாக மக்களது சமய உணர்வுகளை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதைக் காட்ட முயல்வோம்.
கொழும்பு நகரில் முன்னர் "டறட் ரோட்” (Turret Road) என அழைக்கப்பட்ட வீதி தர்மபாலாவின் சிங்கள பெளத்த கொள்கையை நிலைக்க வைக்கும் முகமாக இன்று அநகாரிக தர்மபாலா மாவத்தை எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதன் மத்தியிலுள் நாற்சந்தி வளை யத்தில் ஒரு பெரிய "அரச மரம் இருக்கின்றது. (அரச மரத்தடி யிலேயே புத்தர் ஞானம் பெற்றார்). ஐந்தடியளவில் பெரும் "சிறீ லங்கா’ படத்தை உருவாகக் கொண்ட நான்கு சீமெந்து சிலைகள் நாற் திசைகளையும் பார்த்த வண்ணமிருக்கின்றது. ஒவ்வொரு படத்தின் மத்தியிலும் புத்தர் தந்த ஒரு போதனை செதுக்கப்பட்டுள்ளது: அவை யாவன, "முடித’ (அனுதாபம் கொண்ட இன்பம்), 'உபேக்கா" (நடு நிலைமை), "கருணா" (கருணை), "மெத்த’ (அன்பு). படங் களின் உச்சியில் பாரம்பரிய தேசிய சின்னமாகிய சிங்கத்தின் உருவம் மரபுக்கிணங்க செதுக்கப்பட்டிருக்கிறது. தனது காலொன்றில் வாள் ஒன்றினை உயர்த்திய வண்ணம் நிற்கின்றது. இச் சிமெந்து அமைப்பு எளியதானாலும் காத்திரமான உண்மை ஒன்றை உணர்த்தி நிற்கின்றது. இலங்கையை சிங்கள பெளத்தர்கள் தமது நாடாகவே கருதுகின்றனர். அதே வேளை அன்பு எனும் உன்னத நெறியோடு அதற்கு நேர் மாறானதை குறிக்கும் சின்னமொன்றும் கலந்திருக் கின்றது என்பதையும் சுட்டிக் காட்டலாம்.
வேறு உதாரணங்களும் உள. நாற்சந்தி வளையங்களிலும், பட்டணத்திலுள்ள சந்திகளிலும், அரசாங்கப் பாடசாலைக் கட்டிடங் கள் முன்னும், அரசாங்க மருத்துமவனைகளிலும், பேராதனை பல்கலைகழக வளாகத்தின் வாயிலிலும், கொழும்பு துறைமுகத் திலும் புத்தரது சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன. பெருந்தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டபின் அங்கும் புத்தர் சிலைகள் அறிமுகப் படுத்தப்பட்டன.

Page 32
34 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
சில சிலைகள் பிரமாண்டமானவை. உதாரணமாக உலகி லேயே மிகப்பெரிய புத்தர் சிலை தென்னிலங்கையிலுள்ள மாத் தறையில் உள்ள சிலைதான் என நம்பப்படுகிறது. ஆனால் உலகி லேயே மிகப் பெரிய புத்தர் சிலை 'லெஸ்ஹானியாவில்" உள்ளதுஇதன் உயரம் 71 மீட்டராகும். ஆப்கானிஸ்தானத்தில் உள்ள "பாமி யான்" என்ற ஊரில் வசிக்கும் கட்டிடக் கலைஞர்கள் கி.பி. 713ல் இச்சிலையை செய்ய ஆரம்பித்து 803ல் முடித்தனர். இது டாட்டு, மிங், குயிங்யீ ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமமாகும் இடத்தில் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் பிரமிக் கின்றனர். 18
இலங்கையின் ஜன சஞ்சாரமிக்க பிரதான இடங்களிலெல்லாம் புத்தர் சிலைகளும் அமைப்புகளும் நிறுவப்படுவது உலக விவகாரத் தில் சிங்கள பெளத்தரது தீவிர ஈடுபாட்டையே குறிப்பதாகவுள்ளது. நவீன பெளத்த தனித்துவத்தை வலியுறுத்தும் காட்சிக்கு எட்டிய சின்னங்களாகவே இவை அமைந்திருக்கின்றன. உதாரணமாக ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் சமயத்தை ஆராய்ந்த "டர்கைம்” (Durkeim) குறிப்பிடும் கொடிகளையும் மிருகங்களையும் (Totem) ஒத்ததாக இருக்கின்றது. இவையே தனித்துவத்தையும் வலியுறுத் துவன என்றார். பண்டாரநாயக்காவினது பெளத்தம் சார்ந்த கொள்கைகள் அவருக்குப் பெற்றுக் கொடுத்த மதிப்பைக் கண்ட ஐ.தே. கட்சியினர் தாமும் குறைந்தவரில்லை என்று காட்டும் நோக்கத்தோடு அவர்களது தேர்தல் வாக்குறுதியான பெளர்ணமி தினங்களைக் கொண்டே கிழமை நாட்களை கணிக்கும் புதிய முறையை 1966ம் ஆண்டு அமுல் படுத்தினார்.19 இம்முறை யானது சர்வதேச வர்த்தக உறவுகளை பாதித்தமையால் பல காலத் திற்கு நிலைத்து நிற்க முடியவில்லை. பெரும் நிறுவனங்களது வற்புறுத்தலும் இதனை நீக்குவதற்கு ஒரு காரணமாக இருந்தது.
அநுராதபுரம், கண்டி முதலிய இடங்களில் உருவாக்கப்பட்ட பிரதேசங்களும் அன்றாட அரசியல் சின்னங்களில் பெளத்த சமயம் வகிக்கும் பங்கினை வேறொரு வகையில் காட்டுவனவாகும். முக் கிய நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைக்கவோ முக்கிய வரலாற்றுக் சம்பவங்களை நினைவு கூரவோ பயன்படுத்தப்படுகின்றன, தலதா மாளிகை’க்கு காணிக்கையளிப்பது அல்லது யாத்திரை செல்வது அல்லது வேறேதும் புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்வது என்பதுவும் அரசியல்வாதிகளுக்கும், புதிய அமைச்சர்களுக்கும், வெளிநாட்டு தூதுவருக்கும் கூட அவசியமும் பயன்தருவதுமா யுள்ளது. சின்னங்களின் வாயிலாக பெளத்த சமயம் பெறும் முக்கியத் துவம் வலுவடைந்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

சிங்கள பெளத்த உணர்வும் பிக்குகளும் () 35
1978ம் ஆண்டு இந்தியாவிலிருந்து பெளத்த சின்னமொன்று மக்கள் வழிப்படுவதற்காக நாடு முழுவதும் அரச செலவில் கொண்டு செல்லப்பட்டது. நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள மக்கள் அனைவரும் இவ்வைபவத்தில் கலந்துக் கொள்ள தயாராகும்படி வேண்டப்பட்டனர். இவ்வூர்வலத்தை முடித்து வைக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. இச்சின்னம் முதற் தடவையாக நாடு வந்து சேர்ந்தமையால் மேற் கூறிய ஒழுங்கு முறைகள் நாட்டுப்புற மக்கள் அனைவரையும் கவரக்கூடிய தாக இருந்தது. ஐ. தே. கட்சியிலிருந்து விலகி (1950) பண்டார நாயக்கா தன் புதிய கட்சியை "தேசியத்தோடு இணைந்தக் கட்சி யாக காட்டிக் கொள்வதற்கு 'சிறி லங்கா” சுதந்திரக் கட்சியெனப் பெயர் இட்டார். புத்தர் சிலைகளில் ஆறுதலையும், ஆசிர்வாதத் தையும் அருளும் சின்னமாகிய கையையே தன் கட்சியின் சின்ன மாகக் கொண்டார்.
அரசியல் வாதிகளது கையில் பெளத்தம் ஒரு பலம் வாய்ந்த அரசியற் கருவியாகவே இன்றுள்ளது என்பதனையே இவையாவும் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும் இவ்வரசியல் வாதி கள் தாராள முதலாளித்துவ கொள்கையை ஆதரிக்கும் தனவந்தர் பகுதிகளை சார்ந்தவர்களே. ஆகவே, முன்பு விளக்கிய பெளத்தக் கொள்கை என்பதும் முதலாளித்துவ போக்குகளின் சார்புடையது என்றும், அதனை நியாயப்படுத்துவதாயும் வெவ்வேறு போர்வை களோடு அதனை வளர்க்க முயலும் அரசியல்வாதிகளுக்கு அதி காரத்தை கொடுத்து உதவும்.
சமயம் வெகுஜன உணர்வை வளர்க்கும் கருவியாகலாம். வெகு ஜன பங்கெடுப்பு என்பது அரசியல் உணர்வை வளர்க்கும் கருவி யானதும், வெகுஜன பங்கெடுப்பும் நிலையானதாகிய பின் சமயமும் ஒரு காரணி என்பது தேய்ந்து போய்விடும். அரசியல்.தனது பெறு மானங்களையே உருவாக்கிக் கொண்டு, அதன் பயன்களையும் தந்துக் கொள்ளும். இவை அரசியல், சமூக பொருளாதார துறை யையே சார்ந்தவையாக இருக்கும். சில குறிப்பிட்ட சமயம் சம்பந்த மான விடயங்கள் காலத்திற்கு காலம் அரசியல் முக்கியத்துவம் பெறுவனவாக இருந்தாலும், மக்கள் பங்குகொள்ளும் அரசியல் இயக்கத்தில் சமயம் ஒரு ஊன்றுகோலாக இருக்கவேண்டிய அவசி யமில்லை, என ஸ்மித் கூறுவதை மைக்கல் றெபர்ட்ஸ் சந்தர்ப்பம் காட்டுவது இங்கு பொருத்தமாகின்றது. 19 முடிவுரை
நாட்டின் அரசியல் வரலாற்றின் சிங்கள பெளத்தம் வேரூன் றிக் கொண்ட சாணக்கியத்தின் இரகசியத்தைக் கண்டோம். சிறு

Page 33
36 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
பான்மையோரை அந்நியரெனக் கருதவைக்கும் முயற்சியால் நாடு சிங்கள பெளத்தருக்கே உரியது எனும் கொள்கையும் தீவிரமாக வளர்க்கப்படலாயிற்று. ஆனால் இதற்கு ஆதிகால வரலாற்றில் ஆதாரம் இருந்ததாக இல்லை எனவும் கண்டோம். இன்றைய அரசியல்வாதிகளும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் மறைநூல் எனும் அளவிற்கு மதிக்கும் மகாவம்சம் தன்னும் கூர்ந்து ஆராய்ந் தால், சிங்கள பெளத்தக் கொள்கையை தூக்கிப் பிடித்ததாக இல்லை. உயர் குலத்தவர் மட்டுமே நாட்டை ஆள தத்துவம் வகுத்த செய் திப் பதிவேடு என்றே அதனைக் கருதலாம்.
சிங்கள பெளத்தம் எனும் சிறுபான்மையோரை விலக்கும் கொள்கை 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில்தான் தலை தூக்க ஆரம்பித்தது. பிரித்தானியர் காலத்தில் செல்வாக்குப் பெற் றிருந்த சிறுபான்மையோரை அரசியல் பொருளாதார சிகரங்களி னின்றும் தட்டி விழுத்துவதோடு ஆட்சி பீடத்தில் ஏறியவர்களை அதிகாரத்தோடு நிலைத்திருக்கச் செய்யவே இக்கொள்கை திட்ட மிட்ட வகையில் பரப்பப்பட்டது. ஜனநாயகப் போர்வையில் எவரும் சந்தேகப்படாத வகையில் சிறுபான்மையோரது அரசியல் குடியுரி மைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டன. சிறுபான்மையோர் மத்தி யில் அதிருப்தியையும் விரக்தியையும் ரற்படுத்தி பிரிவினைப் போக்கு களையும் உருவாக்க இதுவே காரணமாக இருந்தது எனலாம். ” புத்தர் இலங்கையில் பிறக்கவில்லை, அவர் சிங்களவரும் அல்ல, சிங்கள மொழியை பேசியவரும் அல்ல ஆகவே பெளத்த மதத்தை பாதுகாக்கும் போர்வையின் கீழ் இனவாதத்தை வளர்ப்பது வீணான செயலாகும்.20 என காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் திரு. காமினி திசாநாயக்கா கூறியது மேற்குறிப்பிட்டவைகளை உறுதிப் படுத்துகிறது.

இரண்டாம் அத்தியாயம்
பாராளுமன்றத்தில் சிறுபான்மையோர் சிறுபான்மையினராக்கப்பட்டமை
1931ம் ஆண்டு தொட்டு நடைமுறைபடுத்திய சர்வஜன வாக் குரிமையோடு மக்கள் தம் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் அதி காரத்தை பயன்படுத்தத் தொடங்கினார்கள். இதே வேளை புதிய (டொனமோர்) அரசியல் யாப்பில் முன்னர் சிறுபான்மையோருக்கு என ஒதுக்கிய பிரதிநிதித்துவ விகிதாசாரமும் ரத்துச் செய்யப்பட் டது. புதிய அரசியல் யாப்பில் போதிய அளவு ஜனநாயகத்துக்கு இடமளிக்கப்படவில்லையெனும் கரரணத்தால், யாழ்ப்பாண காங்கிரஸ், தேர்தலை பகிஷ்கரித்தது. இந்த இயக்கத்தோடு ஒத்துழைப்பதாக வாக்குக் கொடுத்த சிங்களத் தலைவர்களோ, அதனைச் சற்றும் பொருட்படுத்தாமல் தேர்தலில் போட்டியிட்டு தங்களை தெரிவு செய்வித்துக் கொண்டார்கள்: ஏனைய தமிழர் வாழ்கின்ற பகுதிகளான மன்னார்-முல்லைத்தீவு, திருகோணமலை-மட்டக்களப்பு கொழும்பு வடக்கு ஆகிய இடங்களிலும் தமிழர்கள் இதனைப் பொருட்படுத் தாது போட்டியிட்டனர்.
இவ்வித காரணங்களால் சிறுபான்மையோருக்கு சட்ட சபையில் இருந்த செல்வாக்கு திடீரென குறைந்துவிட்டது. புதிய சபையிலும் அமைச்சுப் பொறுப்புகளிலும் சிங்களவருக்கே தம் தொகைக்கு மிஞ்சிய பிரதிநிதித்துவம் கிடைக்கலாயிற்று. இந்திய சுதந்திர போராட்டத் தின் வேகம் இலங்கையிலும் பரவாதிருக்க பிரித்தானியரும் சிங்கள வர்களையே திருப்திப்படுத்த முயன்றனர். ஆகவேதான் சிங்களவர் களது அரசியல் அதிகாரம் பெருகத் தொடங்கியது எனலாம். சிங் களவர்களிடையே அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டால் இலங்கை தொடர்ந்தும் விசுவாசமாக அண்டி நிற்கும் நாடாகவே இருக்குமென பிரித்தானியர் நம்பிக்கை கொண்டார்கள். சிங்களவரது உணர்ச்சி

Page 34
38 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
வசப்படக்கூடிய மனோநிலையும் (சிங்கள பெளத்தக் கொள்கை) தம் ஆதிக்கத்தை அகற்றிக் கொள்ளும் போது மகாவம்ச மனப்பான்மை எவ்வாறு தாண்டவம் ஆடும் என்பதையும் பிரிக்கானியர் உணர்ந்த தாக இல்லை.
2. I சிங்கள் பிரித்தானிய உறவு
சிங்கள அமைச்சர்கள் காட்டிய மனப்போக்கும் ஒத்துழைப்பும் டொனமோர், சோல்பரி அரசியல் யாப்புக்கள் ஏற்படுத்திய மாற்றங் களை உருவாக்க உதவின. பிரித்தானியர் இந்தியாவை வி ட் டு வெளியேற வேண்டுமென இந்திய தேசிய காங்கிரஸ் போராடிக் கொண்டிருந்த வேளையில் சிங்கள அமைச்சர்கள் பிரித்தானியரது யுத்த கால முயற்சிகளுக்கு பெருமளவு ஒத்துழைப்பு நல்கினர். இலங்கை உற்பத்தி செய்யக் கூடிய மூலப் பொருட்கள் யாவற்றை யும் பிரிட்டனிலுள்ள யுத்த கால பண்டகசாலை அமைச்சுக்கு விற்கத் தயாராகவும் இருந்தனர். இவ்விதமாக கொடுக்கப்பட்ட ஒத்துழைப் பினாலேதான் பிரித்தானியர் நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. * 'இலங்கையும் இங்கிலாந்தின் ஒரு துண்டு ஆகுமென? ஒலிவர் குணதிலகா கூறி 'சிங்களத் தலைவர் களது அடிவருடித் தன்மையைக் காட்டிக் கொண்டபோது ஆட்சி செய்த பிரித்தானியரும் இத்தகைய விசுவாசம் உள்ளவர்களை ஏற்று அவரது இனத்திடம் மட்டுமே அதிகாரத்தையும் ஒப்படைக் கத் தீர்மானித்தனர்.
பிரித்தானிய மேலதிகாரிகளோடு ஏற்படுத்திக்கொண்ட தொடர் பும் சமுக உறவுகள் காரணமாகவும் டி.எஸ். சேனநாயக்காவும் ஒலிவர் குணதிலகாவும் சேர்ந்து முன்வைத்த கோரிக்கைகளுக்கு இணங்கி அவற்றுக்கேற்ப அரசியல் யாப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுத்தனர். இதன் விளைவாகவே அரசியல் அதி காரம் சிங்களவர் கைக்குச் சென்றடைந்தது. தம் , நலன்களையும் பாதுகாக்கக் கூடிய கூடிரத்துக்கள் யாப்பில் அடங்க வேண்டும் எனும் தமிழ் பேசும் மக்களது கோரிக்கைகளும் இதனால் புறக்கணிக்கப் பட்டன.
சுதந்திரம் வழங்குவதற்கு முன்பாகவே தோட்டத் தொழிலாளர் களது பிரஜா உரிமைகளை பறித்துக் கொள்வது சம்பந்தமாக டி.எஸ். சேனநாயக்கா பிரித்தானியரோடு இரகசியப் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டார் எனவும் கூறப்படுகின்றது. சுதந்திர இலங்கையில் பிரஜா இரிமை அற்ற தொழிலாளர்கள் என்பது பிரித் தானிய பெருந்தோட்ட உரிமையாளருக்கு நிம்மதி தரும் விடயமாகவே

பாராளுமன்றத்தில் சிறுபான்மையோர் . () 39
இருந்திருக்கும். ஆகவே டி.எஸ். சேனநாயக்காவின் தலைமையில் சிங்களவரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது என்பது தொடர்ந்தும் லாபம் தரத்தக்க சூழலை உறுதிப்படுத்துவதாக வேயிருக்கும். பிரித் தானிய ரோடு ஒத்துழைக்கும் சிங்களத் தலைவர்கள் சட்ட சபையில் செல்வாக்குப் பெற்றுக் கொண்டு இருக்கும் காலத்தில் சிங்கள பெளத்தமும் வேரூன்றத் தொடங்கிற்று. இந்திய சுதந்திர போராட் தின் தாக்கம் இலங்கையிலும் தேசிய இயக்கத்தினை வள ர் க் க உதவியது எனலாம். ஆனால் தேசியம் எனும் போர்வையில் சிங்கள பெளத்தமும் தீவிரமாகப் பரப்பப்பட்டது.
2.2 இலங்கை தேசிய காங்கிரஸ்
முதலாம் உலகப் போர் ஐரோப்பாவில் நடந்து கொண்டிருக் கையில் சிங்கள முஸ்லிம் கலவரம் ஒன்று ஏற்பட்டது (1915). இந்திய படையினரது உதவி கொண்டு பிரித்தானியர் அ த ைன ஈவிரக்கமின்றி அடக்கிவிட்டனர். இவ்வேளையில்தான் பிரித்தானிய தேசாதிபதியின் கடும் நடவடிக்கைக்கு எதிராக எழுந்த கண்டன இயக்கத்துடன் பொன்னம்பலம் இராமதாதன் முன் நின்று உழைத் தார். லண்டன்வரை சென்று முறையிட்டு சிங்களவர் சார்பில் பெரு மளவு நன்மைகளையும் பெற்றுக்கொடுத்தார். அவர் தம்பி அருணா சலம் அரசியல் மாற்றம் கோரும் தேசிய இயக்கத்திற்கு தலைமை தாங்கினார்.
*அரசியலில் எமது தேவைகள்" என தலையங்கம் கொண்ட பேருரை காட்டையே சுயாட்சி பற்றிச் சிந்திக்கத் தூண்டியது என சிங்கள வரலாற்று ஆராய்ச்சியாளரும் முழுமையாக ஏற்றுக் கொள் கின்றனர். இவரே இலங்கை தேசிய காங்கிரசை ஆரம்பித்து அதன் முதல் தலைவராகவும் இருந்தார். அவரது காலத்திலேதான் தேசிய காங்கிரசின் செல்வாககு உயர்ந்த கட்டத்தை அடைந்தது எனலாம். இதனால் சபையில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர் தொகையை கூட்டுவதற்கும் காலணி ஆட்சியாளர் விட்டுக் கொடுத் தனர். இக்கட்டத்தில்தான் சிங்கள பெளத்த இனவாதமும் தலை தூக்கத் தொடங்கிற்று, தலைநகரத்தில், அவர் போட்டியிட விரும்பிய போது அது பெரும்பான்மை இனத்தவருக்கே உரியது என அவரது சிங்கள சகாக்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர். வடக்கே சென்று தெரிவு செய்விக்கும்படியும் ஆலோசனை கூற முற்பட்டார்கள். எல்லா இனத் தவரையும் அடக்கிய தேசிய இயக்கமெனும் நம்பிக்கையோடு உழைத் தவர் அருணாசலம். அவரது சிங்கள நண்பர்களோ அதனை சிங்கள தேசிய இயக்கமாகவே கண்டார்கள். விரக்தியடைத்த நிலையில் காங்கி ரசின்றும் அருணாசலம் விலகிக் கொண்டார். தமிழர் சீர்

Page 35
40 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
திருத்தக் கழகத்தை ஆரம்பித்தார். பலகாலம் உயிருடன் வாழாது போகவே அக்கழகமும் நிலைத்து நிற்கவில்லை.
இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து அருணாசலம் விலகிய தோடு தமிழ் பேசும் மக்கள் தம் நலன்களைப் பாதுகாப்பதையே பிரதான போராட்டமாகக் கொண்டனர். பிரதிநிதிகள் ச பை யில் தமக்கு விசேட சலுகைகள் தரும்படி வேண்டினார்கள். சிங்களவரி டையே இனவாத அடிப்படையில் தேசியம் வளர்ந்து வருவது கண்டு அது தமக்குப் பாதகமாக அமையாதிருக்க தகுந்த பாதுகாப்புகளும் அரசியல் யாப்பில் அமைய வேண்டுமெனக் கோரினார்கள்.
2.3 சட்ட சபை தேர்தல்
சிறுபான்மையோரைத் திருப்திப்படுத்தாத காரணத்தாலும் போதிய ஜனநாயக அம்சங்களை அடக்கிக்கொள்ளாத காரண த் தாலும் 1931ம் ஆண்டு டொனமோர் யாப்பிற்கு அமைய நடத்தப் பட்ட தேர்தல் யாழ்ப்பாணத்தில் பகிஷ்கரிக்கப்பட்டது. 1931ம் 1936ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் சிறுபான்மையோரது ஜனத்தொகை விகிதாசாரத்திற்குரிய ஆசனங்கள் கிடைக்கப்பட வில்லை. பின்வரும் அட்டவனை இதனை தெளிவாக்குகின்றது.
அட்டவணை 2:1 சட்டசபை தேர்தல் முடிவுகள். 1931, 1936
பெரும் பான் ഞഥurf
கூட்டுத் தொகை
மொத் պւծ, %
தம
வருடம் சிறுபான்மையோர்
ವ್ಹೀಡ್ಲಿಲ್ಲ? 6T66T தமி|தமிiலிம் யோர்
1931 37 (80.43%) 3 1 3 9 (19.56%) 46 1936 39 (78%) 2 | 1 11 (22%) 50
1931ம் ஆண்டுத் தேர்தலோடு பெரும்பாலான அமைச்சுக்களை பெற்ற சிங்கள இனம், 1936ம் ஆண்டு தேர்தலை அடுத்து "முழுச் சிங்கள அமைச்சரவை"யை பெற்றெடுத்தது. நாட்டை ஆட்சிசெய்து வந்த பிரித்தானியரும் தமது எதிர்கால நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு சிங்களச் சார்பு நிலையையே கையாண்டனர்.
தமிழ் பேசும் மக்கள் கண்ட அவல நிலை மேற்குறித்த கட் டத்தோடுதான் ஆரம்பமாகிறது. அடுத்துவரும் ஐம்பது வருட வர

பாராளுமன்றத்தில் சிறுபான்மையோர் . D 41
லாறும் படிப்படியாக பலவீனப்பட்ட நிலையையே சுட்டுகின்றது. தலைவர்கள் சரணாகதி அடைந்தனர் அல்லது வி ட் டு க் கொடுத்துவிட்டனர் என்றே குற்றஞ்சாட்டப்பட்டனர். பணிந்ததாலோ விட்டுக்கொடுத்ததாலோ, தமிழ் பேசும் மக்கள் வருந்தத்தக்க நிலைக்கே தள்ளப்படடனர்.
2.4 சோல்பரி கமிஷன்
பிரதேசவாரியான தொகுதிகளும் சிறுபான்மையோருக்கு என ஏதோ அவர்கள் நலன்களையும் பாதுகாக்கக்கூடியது என்று கருதப் படும் கூடிரத்துகளும் டொனமோர் சீர்திருத்தத்துள் அடக்கப்பட்டு சட்டசபையில் சமர்பித்தபோதே தமிழ் பேசும் மக்களை பல வீ ன ப் படுத்தும் முதல் கட்டம் ஆரம்பமாகிறது. (இன அடிப்படையில் சம நிலை கிட்டுவதும் மேலதிக பிரதிநிதித்துவம் வழங்குவதுமே கோட் பாடுகளாக இருந்த முன்னைய அமைப்பு ரத்துச்செய்யப்பட்டது.) அந்தச் சட்ட சபையில் ஒரு வாக்கால் மட்டுமே புதிய சீர்திருத்தத் திட்டம் ஏற்கப்பட்டது ஒரு தமிழ்ப்பிரதிநிதி மட்டுமே அதற்கு சார் பாக வாக்களித்தார். அமைச்சர் சபை தயாரித்து முன்வைத்த மகஜரும் சோல்பரி கமிஷனரது அறிக்கையும் சிறுபான்மையோரது உரிமைகளை பாதுகாப்பதற்கு என்றே விரிவான கூடிரத்துகளைக் கொண்டனவாக இருந்தன. தொடர்ந்து எழுந்த அரசியல் யாப்பி லும் இவை இடம்பெற்றன. ஆனால் இவற்றை நடைமுறை படுத்தியபோது விளைந்ததை ஆய்வு செய்தால் ஒருவித பாதுகாப் பும் இருந்தததாகத் தோன்றவில்லை.
சிறுபான்மையோரது நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற் கென அமைச்சர் சபை முன்வைத்த மகஜர் பின்வரும் விடயங்ளை அடக்குகின்றது:-
1. மாகாண அடிப்படையில் பிரதிநிதிகள் தொகயைக் கணிப்பது.
2. 75,000 மக்களுக்கு என ஒரு ஆசனமும் அதோடு மாகா ணங்களில் உள்ள ஒவ்வொரு 1000ம் சதுர மைலுக்கு ஒரு ஆசனம்.
3. ஒவ்வொரு மாகாணங்களிலும் உள்ள தேர்தல் மாவட்டங் களில் தெரிவு செய்யப்படுவோர் தொகை இயன்ற அளவு சமமாக இருந்தால் அதே வேளை போக்குவரத்து வசதி களுக்கு ஏற்பவும், இலங்கை புவியமைப்புக்கு ஏற்பவும், இன அல்லது மக்கள் நலன்கள் வேறு படுவதற்கு ஏற் பவும் உடன்பட்ட கோட்பாட்டினை மாற்றியமைக்கவும் இட மளிக்கப்பட்டது.

Page 36
42 0 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
தொகுதிகளைப் பிரித்தெடுக்கும் பொறுப்பை தேசாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட தொகுதி நிர்ணயக் கமிஷனிடம் ஒப்படைக்ப்பட்டது.? இந்த மகஜருள் அடங்கிய யோசனைகளின்படி வட-கிழக்கு மாகாணங்களில் 16 ஆச னங்களுக்கு இடமளிக்கப்படுகின்றது. உண்மையில் ஜனத் தொகை அடிப்படையில் 8 ஆசனங்களுக்கு ம ட் டு மே இடமிருந்தது. عبر
மேற்குறித்த மகஜரை சோல்பரி கமிஷனர் முன் சென்று விளக்கியவர்கள் 101 ஆசனங்கள் கொண்ட சட்டசபையின் 6 நியமன ஆசனங்களை விலத்தி, பெரும்பான்மை இனத்தவருக்கு 58ம், இலங் கைத் தமிழருக்கு 15ம், இந்தியத் தமிழருக்கு 14ம், முஸ்லிம்களுக்கு 8மாக ஆசனங்கள் சேரும் என வாதித்தனர்.3 நியமன ஆசனங் கள் உட்பட மொத்தத்தில் சிறுபான்மையோருக்கு 43 ஆசனங்கள் சேரும் என்றனர். மறுபுறத்தில் தமிழ்க் காங்கிரசினர் 6 நியமன அங்கத்தவர்களை சேர்த்துக் கொண்டாலும் 29 ஆசனங்களோடு கூடி யது 35 ஆசனங்கள் மட்டுமே கிட்டும் என்றனர்.4 மாற்று யோசனையாக, சமமாக பிரதிநிதித்துவம் பெறுவதற்கு என 50% ஆச னங்களை சிறுபான்மையோருக்கு என்றே ஒதுக்க வேண்டும் என்றனர். (**இதுவே ஐம்பதுக் கைம்பது” எனும் சுலோகமாக உருவம் எடுத் தது). ஏனைய சிறுபான்மை இனங்கள் இக்கோரிக்கைக்கு பூரண ஆதரவு கொடுக்காத போதிலும் அவர்களும் கணிசமான பிரதிநிதித் துவம் தரத்தக்க அமைப்பையே விரும்பினார்கள்.
சம பிரதநிதித்துவ கோட்பாட்டையும் இன அடிப்படைக் கோட் பாட்டையும் சோல்பறி கமிஷனர் ஏற்க மறுத்து விட்டனர். அமைச் சர் சபை முன்வைத்த யோசனைகளையே, சிறு மாற்றங்களோடு ஒரு சில புதிய அம்சங்களோடும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் g47ம் ஆண்டுக்குப்பின் நடந்த தேர்தல் முடிவுகள் சோல்பரியினர் எதிர்பார்த்திருந்ததை பொய்பித்து விட்டன. அமைச்சர் சபையினரது மகஜரை ஆதரித்தவர்களது எதிர் கூறலில் இருந்து விடயங்கள் மாறுபட்டதாகவே இருந்தன. அட்டவணை 2.2 இதனை உறுதிப்படுத்தும். -

[(%70-61)|(%ỹI' !) (%8ȚI) : __| | (%96'08)- - - | 891 · Isos; '&T Ț= *st* ***98Ț1161 tot |(%88'it)| (%96’s)|-(%46’ IT)(%IO · Z8)| ——————o 8Ț sốs 016 I (%78’81)| (%zzog) |||-(%46’IT) || !(%.gs • sg) , ? (**"__&g___) : 용달 :|8T+!ƐZȚg96 I (%03'61)| (%sz. 1)|-(%46' II)(%61'08) Țg I6% II o| 8T ZZI096 I. o+gs | Coos) | (%98’s)|-(%89’øT) || || (%0.8) |-_6s; l.3I |-91.9ĝ6 s : 9+65 ||''心道心T3)|(公的* 8)– (%89, ZI)%76’ 81,|- , 0%83T__oli Zg6 I +cs '海85) (%984)(%ỹ8 · 1.)(%89, 8T)(%1.g., II.)|- * : நிாரடி |-(%1.7’64)| (%18, 9)(%øg o OI)(%89 - ZI)(%A7:69)一七圈与圈足m顷心 9 + g6-劑鱷警河k书 8* .W1995(9gio quo)? Non 亡 « • 0I«I |9929七g顾9479 (%ỹI'88)| (%47, 9)(%8/, 's I)(%81. gs.) (%90'I 9)tīrı ış9$ , 十96- -s-ı-āgs offricaso . 9| 188 s† IĝI8gļo?Jigoko 剧)T혁헌ĮfigigË4,9119orņigo -|sirolloqırls Ingogs ($soccorgio9(3)(qī109$ digo qști-Tug'119org. 1993 gıcısıço urīmīgo1991 riqi@rito) =)-
『ZZ역이z헌TT시서헌페허헌헌이지니制히비히
『겨Tz레7-『기『1----------------------』
湖
go -

Page 37
44 0 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
அட்டவனை 2.2யில் கொடுத்துள்ள புள்ளி விவரங்களின் பிர காரம் அமைச்சர் சபையும் தொகுதி நிர்ணயக் குழுவும் சோல்பரி கமி ஷனர் எதிர்பார்த்தது எவையேனும் நிறைவேற்றப்பட்டதாக இல்லை. மாருக சுதந்திரம் கிடைத்து முதல் நடந்த தேர்தல் தொட்டு சிறுபான்மையோரது பிரதிநிதிகள் தொகை குறைந்து கொண்டே வந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
2.5 சிறுபான்மையோரது குறைபாடுகள்
2.5. 1. போராட்ட உறுதியின்மை:- டொனமோர் திட்டம் அமுல் நடத்திய காலம் தொட்டே தமக்குரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்பதை சிறுபான்மையோர் நன்கு உணர்ந்திருந்தனர். ஆனால் 1931ம் ஆண்டு முதன் முத லாக எதிர்த்து ஆரம்பித்த பகிஷ்கரிப்புப் போராட்டத்தை தொடர்ந்தும் நடத்தாமல் இடையில் கைவிட்டனர். 1936ம் ஆண்டு நடந்த தேர்தலில் கண்டனங்கள் எல்லாம் மறந்து தீவிரமாக பங்கு கொள்ள முன்வந்தார்கள். இதே போன்று நடத்தப்பட்ட போராட்டங்கள் அனைத்தும் காலப்போக்கில் வேகம் குறைந்தனவாக மாறிவிட்டன. உறுதிப்பாடு உடைய தாக இல்லாததால் சிறுபான்யோரது குறைகளை வெளிப் படுத்தக்கூடியதாக இருக்கவில்லை.
2.5. 2. சிறுபான்மையோர் தமக்கிடையே கருத்து ஒருமைப்பாடு கொண்டவராக இருக்கவில்லை:- கண்டன எதிர்ப்புக்கள் ஆரம்பித்ததும் எல்லோரும் ஒற்றுமையாக பங்கு பற்றி அதனை வெற்றி பெறத்தக்கதாக்க முயலவில்லை. சில சலுகைகள் பெறக்கூடிய சாத்தியக் கூறுகளை கண்ட தும் சுய நலத்துக்காகவே ஒரு சிலர் இனத்தின் பொது நலனையும் கைவிடத் தயாராக இருந்தனர். அகிம்சைப் போராட்டங்கள் தன்னும் பங்குபற்றக்கூடியவர் எல்லோரை யும் உள்ளடக்கக்கூடியதாக இருக்கவில்லை. ஒரு சிலரே இவற்றில் பங்குபற்றியதால் பெரும்பான்மையோரின் ஆதிக் கத் துக்குட்பட்ட அரசாங்கமும் அதனை முறியடிக்கக்கூடி யதாக இருந்தது.
2.5, 3. சிறுபான்மையோர் மத்தியில் போதிய அரசியல் சமூக உணர்வு இன்மை - மக்கள் தன்னும் சமூகத்தின் உரிமை களை வென்றெடுக்கும் பொறுப்பை பிரதிநிதிகளிடம் ஒப் படைத்து விட்டு தமது அற்ப தேவைகளை பூர்த்தி செய்

2.5.
பாராளுமன்றத்தில் சிறுபான்மையோர் . D 45
யும் முயற்சிகளிலேயே தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந் தனர். தமிழ் மக்கள் தாம் ஒரு இனம் என உணரவைப் பதற்கு ஒரு கொள்கை பாரம்பரியம் இல்லாதிருந்தது. ஏனைய சமூகத்தவர்களை நெறிப்படுத்தும் தத்துவம் இலங் கை தமிழ் மக்களிடையே இல்லாதிருந்தது. இதனால் யாழ் குடா நாடென்றும், வன்னிப் பிரதேசமென்றும், மட்டக் களப்பு, மலையகம் என்றும் பிரிவுபடுத்தப்பட்டவர்களாகவே இருந்தனர். ஒரு சமூகம் என்ற நிலையில் தம்மை நெறிப் படுத்த முடியாத காரணத்தினாலேயே இப்பிளவுகள் ஏற் பட்டன எனலாம்.
தமிழ் பிரதேசங்களது நிருவாகத்தை ஏனைய பிரதேசங் களோடு இணைத்து கொழும்பில் நிறுவிய காரணத்தினால் தொழில் வாய்ப்புகளை தேடி தலை நகரத்தை நோக்கியே சென்றனர். கொழும்பிலும் இதர பெரும் பட்டிணங்களிலும் நவீன வசதிகள் இருந்த காரணத்தினால் இவர்களில் பெரும்பாலானோர் தாம் பரம்பரையாக வாழ்ந்த பிரதேசங் களுக்கு திரும்பிச் செல்லவில்லை. ஆகவே பாரம்பரிய பிரதே சங்களின் அபிவிருத்தியை பற்றிச் சிந்திப்பதற்கு அவசிய மேற்பட்வில்லை. பரம்பரை பிரதேசங்களை விட்டு வெளி யேறியதனால் இவர்கள் சமூக அடிப்படையிலும் சிந்தித்தார் களில்லை. பெரும்பாலானோர் தம் சொந்த பிரச்சினை களை தீர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்கள். இதனை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயுள்ள இலங்கைத் தமிழர் மத்தியில் விசேடமாக காணக் கூடிய தாக இருந்தது. அற்ப லாபம் பெறலாம்எனும் நோக்கத் தோடு தேர்தலில் போட்டியிடும் சிங்களவர்களை ஆதரிக் கவும் தயாராக இருந்தனர்.
4. சிறுபான்மையோர் மத்தியில் தீர்க்க தரிசனம் இன்மை :-
முஸ்லிம் சமூகத்தவர் தவிர்த்து ஏனைய சமூகத்தவர்கள் கொழும்பு, தோட்டப் பகுதிகள் முதலிய இடங்களில் தம் இனத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் போதிய அளவு இருந்த போதும், அபேட்சகர் எவரையும் தேர்தலில் போட்டியிட நிறுத்தவில்லை. உதாரணமாக, கொழும்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழர் தொகை 9.8% இருந்தபோதும் அவர் களுள் எவரும் கட்சி ரீதியாகப் போட்டியிட முன்வரவில்லை. மறுபுறத்தில், 1981ம் ஆண்டு ஜனத்தொகை புள்ளி விபரங் களின்படி 8.3% மாக இருந்த முஸ்லிம்கள், கொழும்பு

Page 38
46 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
2.5.
மாவட்டத்தில் இருந்து 3 பிரதிநிதிகளைத் தெரிவு செய்யக் கூடியதாக இருந்தது. நுவரெலியா மாவட்டத்தில் இந்தி யத் தமிழர் 47.3% இலங்கைத் நமிழர் 13.6% மொத்தம் 60.8 வீகிதமாகவும் இருந்தபோதும் 3 அங்கத்தவர் கொண்ட தொகுதியில் ஒரு அங்கத்தவரை மட்டுமே தெரிவு செய்யக் கூடியவர்களாக இருந்தனர். பதுளை மாவட்டத்தில் 26.18 விகிதமாக தமிழர் தொகை இருந்தது. ஆனால் ஒருவரும் முன்வந்து போட்டியிடவில்லை. 1947ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் இது இரட்டை அங்கத்தவர் தொகுதி யாக இருந்தபோது ஒரு தமிழர் தெரிவு செய்யப்பட்டார். இச் சமூகத்தின் தலைவர்கள் கூட இதனை பொருட் படுத்தவில்லை. இதனின்றும் நாம் அறிந்துகொள்ள வேண்
டியது என்ன வென்றால் தமது உரிமைகனள வென்றெடுக்
கும் முயற்சியில் இவர்களிடையே பரஸ்பர நல்லுறவும் ஒற்றுழைப்பும் ஏற்பட்டதில்லை என்பதே.
தொழிலாளரது வாக்குரிமை பறிக்கப்பட்டது :- 1947ம் ஆண்டு தேர்தல் முடிந்தவுடன் சிறுபான்மையோர் மீது
திணித்த மாபெரும் அநீதி இதுவேயாகும். அமைச்சர் சபையின் திட்டத்தின்படி 14 ஆசனங்களையும் பெறுவ தாக இருந்தாலும், அவர்கள் பங்குபற்றிய முதலும் கடைசி யுமாகிய தேர்தலில் 7 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தன. இது அமைச்சர் சபை அவர்களுக்கென ஒதுக்கிக் கொடுக்க இருந்த ஆசனத் தொகையில் அரைபங்கு மட்டுமே. தோட் டத் தொழிலாளருக்குக் கிடைத்த இவ்வுரிமை தன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டங்களினால் மறுக் கப் பட்டது. அவர்களது பிரதிநிதிகள் வென்றெடுத்த ஆசனங்கள் எல்லாம் 1952ம் ஆண்டு நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலோடு சிங்களவருக்கே சென்றடைந்தது. இதனால் 1947ம் ஆண்டு பெரும்பான்மையோர் பெற்றி ருந்த 68 ஆசனங்கள் 1952ல் 75 ஆக அதிகரித்தது. தோட்டத் தொழிலாளரது வாக்குரிமை பறிக்கப்பட்டதோடு சிறுபான்மையோருக்கு பாராளுமன்றத்தில் இருந்த ஆசனங் கள் 28.42 விகிதத்தில் இருந்து 21.05 விகிதமாக குறைந்து விட்டது. மறுபுறத்தில், 1952ம் ஆண்டுத் தேர்தலுக்குப்
பின் பெரும்பான்மையோரது பங்கு அனமச்சர் சபைத் திட்
டத்தில் கணிக்கப்பட்ட 61.05 வீதத்தில் இருந்து 78.94 விகிதமாக உயர்ந்து பெற வேண்டிய தொகையை விட
அதிகரித்துவிட்டது. பாராளுமன்றத்தில் சிறுபான்மையோ

2.5.
பாராளுமன்றத்தில் சிறுபான்மையோர் . () 47
ரது பிரதிநிதித்துவ பலத்தைக் குறைத்துக் கொள்ளவும் தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதித்துவ பலத்தைக் குறைத் துக் கொள்ளவும் தொழிலாளரது குரலை அடக்கவும் சிங் கள அமைச்சர்களால் கையாளப்பட்ட சூழ்ச்சி என்றே இதனை விளக்கலாம். கணிசமான அளவுள்ள ஒரு இனத் தவரது வாக்குரிமையை பறித்துக்கொண்டு, அதே வேளை குடிசனத்தொகை அடிப்படையிலும் பரப்பளவு அடிப்படை யிலுமே தொகுதிவாரியான பிரதிநிதித்துவக் கோட்பாடு களை நியாயப் படுத்த முயல்வதும் உண்மையை மறைக் கும் வழிமுறை என்றே கூறவேண்டும்.8
தொழிலாளரது வாக்குரிமை பறிக்கப்பட்டதையும் சிறுபான் மையோர் பாராளுமன்றத்தில் பலவீனப்பட்டு வருவதையும் கண்டிப்பதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. எல்லா சிறுபான்மை இனங்களும் இதில் பங்குகொள்ளும் அளவிற்கு ஆதரவு கொடுத்ததாக இல்லை. மே லும் போராட்டத்தை வெகுஜன இயக்கமாக மாற்றியமைக்க முயற்சி எடுத்ததாகவுமில்லை. தலைவர்கள் தன்னும் இரண்டு வருடத்திற்குள் போராட்டத்தையும் கைவிட்டு புதிய சட்டங்களைத் தாமே ஏற்குமளவு தனித்தனியே தமது பிரஜாவுரிமைக்கு விண்ணப்பம் செய்துக் கொண்டனர். தொழிலாளர்களும் கைவிடப்பட்ட நிலையில் நாடற்றவரா னார்கள்.
. புதிய சட்டங்கள் :-
1954ம் ஆண்டின் இந்திய பாகிஸ்தானிய (பாராளுமன்றப் பிரதிநிதித்துவ) சட்டமும் அதே ஆண்டின் இலங்கை அரசி யல் யாப்புச் (விசேட ஒழுங்கு) சட்டம் இல. 35ம். இச் சட்டங்களை நடைமுறைப் படுத்தும் முகமாக பிரதிநிதிகள் சபையினரது தொகையை 105 பேராகக் கூட்டுவதாயும், இவர்களுள் முழு நாட்டையுமே ஒரு தொகுதியாகக் கொண்டு இந்திய பாகிஸ்தானிய பிரதி நிதிகளாக நால்வரைத் தெரிவு செய்வதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டது. இவ் வித ஒழுங்கு, சிறுபான்மையோர் நலனைக் காப்பதாக வுள்ள அரசியல் யாப்பின் 29ம் பிரிவினை மறுப்பதாகவே இருந்தது,
மேற்குறித்த விசேட ஒழுங்கு நிறைவேற்றப்பட வேண்டிய தாயின் அரசியல் யாப்பினை மாற்றியமைக்கும். 6GFL

Page 39
48 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
முறைகளைக் கையாளுவதாக இருக்க வேண்டும். தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தொகை அமைச்சர் சபை திட் டத்துள் சிபாரிசு செய்யப்பட்ட தொகையினின்றும் மிகவும் குறைந்ததாக இருந்தபோதிலும், அதனை நடைமுறை படுத்தவுள்ள சட்டமும் அமுல் நடத்தப்படாது போயிற்று. தோட்டத் தொழிலாளருக்கு உரிய பிரதிநிதிகள் தொகைக் குப் பதிலாக 1970ம் ஆண்டுவரை தேசாதிபதியால் நிய மிக்கப்பட்ட ஒரு பிரதிநிதிக்கே இடமளிக்கப்பட்டது. தமிழ் தோட்டத் தொழிலாளரது பிரதிநிதி என்று சொல்லக்கூடிய ஒரு பிரதிநிதி தன்னும் இருக்கவில்லை.
1977ம் ஆண்டு தேர்தலோடுதான் இச்சமூகத்திற்குரிய ஒரு பிரதிநிதி தெரிவு செய்யப்பட்டார். சந்தர்ப்பம் கொடுக்கப் பட்ட போதும் இச் சமூகத்தின் தலைவர்கள் முழு இனத் திற்கும் உரிய தொகையை வாதாடிக் கேட்டதாக இல்லை. இலங்கையில் தான் முதலாளிகள் சார்பான தொழிலாளர் தலைமை தம் சமூகத்தைக் காட்டிக்கொடுத்தது.
2.5, 7. பல அங்கத்தவர் கொண்ட தொகுதிகள் :- சிறுபான்மை இனங்கள் தம் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கென பல அங்கத்தவர் கொண்ட தொகுதிகளை சோல்பரி கமி ஷன் சிபாரிசு செய்தது. இதன் விளைவாகத்தான் நான்கு இரட்டை அங்கத்தவர் தொகுதிகளும், ஒரு மூன்று அங்கத் தவர் கொண்ட தொகுதியும் உருவாக்கப்பட்டன. ஆனால் தொகுதி நிர்ணயக் கமிஷன் எதிர்பார்த்தது நடைபெற வில்லை. உதாரணமாக, பலாங்கொடை இரட்டை அங்கத் தவர் தொகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு சிங்களவர்களே தெரிவு செய்யப்பட்டார்கள். தோட்டத்தமிழரது வாக்குரிமை பறிபோனபின் இரண்டு இரட்டை அங்கத்தவர் தொகுதிகளில் சிங்களவர்களே தெரிவு செய்யப்பட்டார்கள். இதனால் பாராளுமன்றத்தில் சிங்களப் பிரதிநிதிகள் தொகை மட்டுமே பெருகத் தொடங் கிற்று. சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளைக் கொள்ள வேண்டிய மூன்று அங்கத்தவர் கொண்ட மத்திய கொழும் புத் தொகுதியில், இதுவரை ஒரு தமிழரும் தெரிவு செய் யப் பட்டதாக இல்லை, ஆகவே, இவ்வித ஒழுங்கும் ஒரு பயனையும் தருவதாக இருக்கவில்லை. மூன்று அங்கத் தவர் கொண்ட தொகுதியாக மாற்றியமைக்கப்பட்ட நுவ ரெலியா-மஸ்கெலியா தொகுதியில் தன்னும் இரண்டு

2.5.
2.5.
பாராளுமன்றத்தில் சிறுபான்மை யோர். 0 49
தமிழருக்குப் பதிலாக ஒரு தமிழரே தெரிவுசெய்யப்பட்டார். இத்தொகுதி முன்னர் இருந்ததுபோல் தனித்தனி தொகுதி களாக இருந்திருக்குமேயானால் மூன்று தமிழ் பிரதிநிதி களை தெரிவு செய்யக் கூடியவாய்ப்பு கிடைத்திருக்கக்கூடும்.
. நியமன அங்கத்தவர்கள் :- எந்த ஒரு இ ன த் துக்
காவது போதிய பிரதிநிதிகள் இல்லாதிருக்கும் போது குறிப்பாக சிறுபான்மையோருக்கு, அவர்களுக்கென பிரதி நிதிகளை ஏற்படுத்துவதற்கென்றே இவ்வகை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இவ்வாறு நியமனம் பெற் றவர்கள் தம் இனத்தின் நலன்களைப் பற்றி அக்கறை கொண்டவர்களாக இருக்கிவில்லை. சிறுபான்மையோரது பிரச்சினைகள் எழும் போது இவர்கள், நியமித்த கட்சியின் கொள்கையையே ஆதரிக்க வேண்டியவர்களாக இருந்தார் கள். தமது இனத்தவரிடையே இவர்கன் செல்வாக்கற்று வர்களாகவும் இருந்தார்கள். ஏதோ ஒரு வகையில் தெரிவு செய்யப்பட்டிருந்தால் வாக்காளர் நலன்களைப் பற்றி சிறி தளவேனும் அக்கறை கொண்டிருப்பார்கள். ஆளும் கட்சியி னர் தமக்கு ஆதரவாக இருப்பவர்களையே நியமனம் செய் வார்கள்.
. கண்டிய சிங்களவரின் பிரதிநிதித்துவம் :-
சிங்கள பெளத்தக் கொள்கையின் உண்மையான பிரஜை கள் தாங்களேயென இவர்கள் எண்ணினார்கள். அதுமட்டு மல்ல. கலப்பற்ற இனமென்றும், பெளத்தமத பாது as Tai 60G. Tsirapsib, g, 5 Lá;5 rif (Sons of the soil) 6T6irplb தம்மை கருதிக்கொண்டார்கள். கரைநாட்டுச் சிங்களவரிலும் பார்க்கத் தாங்கள் உயர் குலத்தைச் சேர்ந்தவர் எனவும் எண்ணினர். தங்கள் தனித்துவத்தை நிலைநாட்டு வதற்க்கென இவர்கள் 1917ம் ஆண்டு கண்டிய தேசிய சபையை நிறுவினார்கள்.
1927ல், சமஷ்டி ஆட்சி முறையை ஏற்படுத்தி கண்டிய சிங் களவருக்கு முழுமையான பிராந்திய அதிகாரம் கொடுக் கப்பட வேண்டும் என்று இச்சபை வலியுறுத்தியது. சோல்பரி கமிஷனின் நில ஆட்சி சார்ந்த தேர்தல் தொகுதிகள் அமைக்கப்பட்ட பொழுது இவர்கள் கரைநாட்டுச் சிங்கள வர்களை விட கூடுதலான பிரதிநிதிகளை பெறக் கூடிய

Page 40
50 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
தாக
இருந்தது. அதற்குப்
பின் நடந்த தேர்தல்களில்
இந்திய வம்சாவழியினரின் இடத்தையும் இவர்களே பிடித்
துக் கொண்டனர்.
அட்டவணை 2.3. துக்காட்டுகிறது. இதனால் முன்னைய
இதை எடுத்
கோரிக்கையை
கைவிட்டு கரைநாட்டு சிங்களவரையும் தமது கொள்கை யின் கீழ் ஒன்றுபடுத்தி அதனை தீவிரமாக அமுல்படுத்தி
6Triassir.
அட்டவணை 2:3
தேர்தல்-சமூக விகிதாசாரம் (1947, 1960)
s தா. பி. ઈી இல இல இந் சி. 5. F. தமி. முஸ். தமி.
1946 ன் சனத் தொகை % 43.5 26.1 12.4 5.4 10.3
ஆசனங்கள் 32 36 13 7 7
ஆசனங் களின் % 33.7 37.9 13.7 7.36 7.36
1959 sit சனத் தொகை % 42.2 26.5 11.1 5.9 12.3 ஆசனங்கள் 57 65 18 11 O
ஆசனங் களின் % 37.74 43.04 1.92 7.28 O
2.5.10. அரசியல் யாப்பிற்கு திருத்தங்கள் :-
மாற்றங்களை
மானதாகும்.
ஏற்படுத்த
அரசியல் யாப்பில்
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு கொண்ட பெரும்பான்மை வாக்குகளே போது
பெரும்பான்மை வாக்குகளைத்
திரட்டக்

2.5.1.1.
பாராளுமன்றத்தில் சிறுபான்மையோர் . 0 51
கூடியதாக இருந்ததனால் சிறுபான்மையினரது பிரதிநிதி களைக் கலந்தாலோசியாமலே யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. மேலும் 1970ம், 1977ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் ஒரு கட்சிக்கே இவ்வித பெரும்பான்மையை திரட்டக் கூடிய ஆசனங்கள் கிடைக்கக் கூடியதாக இருந்தது. எதிர் கட்சியினர் பங் கும் அவசியமற்றதாகிவிட்டது. இதன் விளைவாகவே 1972ம், 1978ம் ஆண்டுகளில் சிறுபான்மையோரும் கலந்து கொள்ளாத வகையில் புதிய அரசியல் யாப்புகள் தயாரிக்கக் கூடியதாக இருந்தது. இவ்விரண்டு அரசியல் யாப்புகளை யும் தமிழர் ஏற்கவில்லை. ஒற்றையாட்சி என இன்றைய அரசாங்கம் வலியுறுத்துவதை வடகிழலுள்ள மக்கள் ஏற்க வில்லை.
சிறுபான்மையோருக்கென உள்ள ஒரே ஒரு பாதுகாப்பு. அரசாங்கமோ பெரும்பான்மை பகுதியினரோ, தாம் விரும்பி யதைச் செய்ய இருக்கும் போது எவ்வித பாதுகாப்பு ஒழுங்குகள் இருந்தாலும் அவை பயனற்றதாகவே போய் விடும். சோல்பரி கமிஷனர் தம் அறிக்கையில் பெரும் பான்மை சமூகத்தவர் பொறுப்புடன் நடந்து கொள்வார் கள் என எதிர்ப்பார்ப்பதாக கூறியிருந்தார்கள்.” சிங்கள பெரும்பான்மையினர், அநியாயமாக அல்லது பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர் என சந்தேகப்படுவதற்கே இட மளிக்காது மிகவும் கவனமாக நடந்து கொள்வார்கள் என் பதை எதிர்பார்க்கிறோம்" என அறிக்கையின் 178வது பந்தி கூறுகின்றது. இவ்வித நம்பிக்கையில்தான் சுதந்திர இலங்கைக்குரிய அரசியல் யாப்பு. தயாரிக்கப்பட்டது ஆனால், பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அங்கத்தவர்கள், சிங்களவராகிய தாம் ஒன்றுபட்ட நிலை யில் இயங்குவரென்றும், தமிழர்களை அடக்கி ஒடுக்குவோம் என்றும் கூறி மிரட்டுவதையெல்லாம் கொடுத்த வாக்குக்கு முரணான துரோகச் செயலென்றே கூறலாம்.
சோல்பரி கமிஷனர் அரசியல் யாப்பில் இலகுவாக புறக் கணிக்கக் கூடிய சில ஷரத்துக்களோடு சிறுபான்மையோ ரைப் பொறுத்தவரை பெரும்பான்மையோரது பொறுப் புணர்ச்சியையே ஒரேயொரு பாதுகாப்பாக விட்டுச் சென் றனர். இதுவே பாதுகாப்பு என்றால், பிரித்தானியர் தம்

Page 41
52 O
2.5.12.
2.5.13.
பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
ஆட்சியினின்று விட்டு விலகும் போது, தமிழர் தமக்கென ஒரு நாட்டை அன்றே கேட்டிருக்கலாம்.
சிங்களக் குடியேற்றம் :-
அரசாங்கத்தின் உதவியோடு தமிழ் பிரதேசங்களில் திட்ட மீட்ட குடியேற்றங்களை நடத்தியதனால், பாராளுமன்றத் தில் தம் பிரதிநிதிகள் தொகையை கூட்டுவிக்கும் முயற் சியில் புதுத் தொகுதிகளும் பிரித்தெடுக்கப்பட்டன. உதா ரணமாக ; அம்பாறை சேருவிலை. அதனோடு ஏனைய தொகுதிகளிலும் கணிசமான அளவு வாக்காளர்கள் அதி கரித்து விட்டனர். இவ்வாறு குடியேற்றுவிக்கும் போக்கு தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கின்றது.
தொகுதிகள் அதிகரிப்பு :-
1956 ஆம் ஆண்டு வரை 95 தொகுதிகளே இருந்தன. இத்தொகையின் அடிப்படையில்தான் சிறுபான்மையோருக்கு ஒதுக்கும் தொகையும் கணிக்கப்பட்டது. ஆனால் ஆசனங் களின் மொத்தத் தொகை 1960ம் ஆண்டுக்கும் 1970ம் ஆண்டுக்கும் இடையில் 151 ஆசனங்களாகவும், 1977ம் ஆண்டோடு 168 ஆசனங்களாகவும் பெருகிவிட்டது. இதனால் சிறுபான்மையோருக்கு சராசரி 10 ஆசனங்கள் மட்டுமே கூடுதலாகக் கிடைத்தது. ஆனால் பெரும்பான்மை இனத்தவருக்கோ கடந்த 4 தேர்தல்களில் மொத்தம் 55 ஆசனங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளது. விகிதாசாரத்தின் படி பாராளுமன்றத்தில் அவர்களுக்கு 80.95 விகிதமும் சிறு பான்மையோருக்கு 19.04 விகிதமுமே கிடைத்தது. அதாவது 1947ம் ஆண்டு தொடக்கம் 1977ம் ஆண்டு வரை சிங்கள வரின் பிரதிநிதித்துவம் நூறு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் சிறுபான்மையோரது பிரதிநிதித்துவம் 18.5 ஆகத் தான் கூடியுள்ளது.

பாராளுமன்றத்தில் சிறுபான்மையோர் . () 53
2. 5.14. சனத் தொகைப் பெருக்கம் :-
அட்டவணை 2:4 பிரதான இனங்களின் மக்கள் தொகை 1901-1981
இலங்கைத் இந்திய :முஸ்லீம் வருடம் | சிங்களவர் மிழர் வம்சாவழி 6ir
5ւDItք தமிழர் as
1901. 65.4% 26.7% 率 6.4%
1946 69.2% 11.0% 11.7% 5.6%
1953 69.3% 10.9% 12.0% 5.7%
婆 2Ꮻ **:፮”›› ቻኗ፻mቶaድx 1963 71.2% 11.1% 10.6% 6.3%
*. *A 1971. 71.9% 11.1% ; 9.4% 6.5%
1981 73.98% ** 12.6% ** 5.56% 7.12%
* 1901ம் ஆண்டுவரை தமிழர்கள் அனைவரும் இலங்கைத்
தமிழரென்றே கணிக்கப்பட்டனர்.
来x
உண்மையாகவே இந்திய வம்சாவழியினர் என்று கணிக் கப் படவேண்டியவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது கண்கூடு. இந்த விபரத்தின் அடிப்படையில் குடிசன புள்ளி விபரங்களை ஆராயும்போது இந்திய வம்சாவழித் தமிழரின் தொகை 7-8% எனவும் இலங்கைத் தமிழர் 10-12 % இருக்கக் கூடுமென கணித் தால் அது தவறாகாது. குடிசன மதிப்பீட்டில் இந்திய வம்சாவழித் தமிழரை இந்தியத் தமிழரெனக் குறிப்பிடுவது தவறு. ஆகவே தமிழர்களை பலவிதமாக பிரிக்காமல் கண்டிய சிங்களவரையும் தாழ்ந்த பிரதேச சிங்களவர்களையும் ஒன்று படுத்தியது போல் தமிழரெனக் கட்டாயம் அழைக்கப்பட வேண்டும்.
சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் சிங்களவர்கள் தொகை கூடிக் கொண்டே வருவதாக இருக்கின்றது. இயல்பான வளர்ச்சியை விட வேறு பல காரணங்களும் இருக்கின்றன.

Page 42
54
பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
. 1931ம் ஆண்டு வரை தமிழர்களென பதிவு செய்யப்பட்ட வர்கள் படிப்படியாக சிங்களவர்களாகிவிட்டனர். பெயர்
களும் மாற்றப்பட்டு அவர்களது பிள்ளைகளும் சிங்கள பாட சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனை நீர் கொழும்பு, புத்தளம் பகுதிகளில் காணலாம்.
. கிழக்கிலுள்ள வேட இனத்தவர்கள் ஆதிகாலம் தொட்டே
தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். சமீப காலங்களில் சிங்களவராக்கப்பட்டு பிரஜைகளுக்குரிய சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.
. சிங்களவரை பொறுத்தவரை குடுப்பக் கட்டுப்பாட்டுத் திட்
டம் செல்லுபடியாகவில்லை.
. புள்ளி விபரங்களையும் வசதிக்கு தக்க மாதிரி பயன் படுத்
திக் கொண்டார்கள்.
சிங்களவர்களது தொகைக்கு ஏற்ப சிறுபான்மையோரது தொகை கூடவில்லை. இதற்கும் பல காரணங்கள் உண்டு;
. 1928ம் ஆண்டு தொடக்கம் வெவ்வேறு சட்டங்களை அமுல்
செய்து கட்டாயப்படுத்தி பலரை நாடு கடத்தினர்.
. சிங்களம் மட்டும் மசோதா நிறைவேறிய காலம் தொடக்
கம் பறங்கியரும், படித்த தமிழர்களும் தாமாகவே நாட்டை விட்டு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து முதலிய நாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.
. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் சிறுபான்மையோர் மத்
தியில் மட்டுமே திணிக்கப்பட்டது - குறிப்பாக தோட்டப் பகுதி தமிழர்கள் மத்தியில் கட்டாயப் படுத்தப்பட்டது.
ஆனால் இது முஸ்லிம்கள் மத்தியில் செல்லுபடியாகவில்லை.
2.5.15.
ஜனத்தொகை புள்ளி விபரங்களில் இச்சமூகத்தினரது தொகை கூடியுள்ளதைக் காணலாம்.
அரசியல் யாப்பு மாற்றம்:- பெரும்பான்மை சமூகத்தவரது பிரதிநிதிகள் பாராளுமன் றத்தில் பெருகிக் கொண்டதானாலும் ஒரு கட்சிக்கே 1972ம், 1977ம் தேர்தல்களில் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தனாலும் தேவைக்கு ஏற்ப அரசியல் யாப்பை மாற்றி யமைக்கக் கூடியதாக இருந்தது.

பாராளுமன்றத்தில் சிறுபான்மையோர் . () 55
1972ம் ஆண்டு இடது சாரி ஐக்கிய முன்னனி 'சிலோன் என அழைக்கப்பட்ட நாட்டை "சிறீலங்கா” எனப் பெய ரிட்டு குடியரசாகவும் ஆக்கிக் கொண்டனர். குடியரசாக அறிவித்ததும் அரசியலமைப்புச் சட்டத்தில் மு த லா வ து அத்தியாயத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
**இலங்கை விடுதலை பெற்ற இறுைமையுடைய தன்
னுரிமையுடைய ஒரு குடியரசு. "இலங்கைக் குடியரசு ஓர் ஒற்றையாட்சி நாடு
* 'இலங்கைக் குடியரசில் இறைமை மக்களுடையது,
பாரம்படுத்த முடியாதது,”
பெளத்த மதத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. இத னோடு மொழி சம்பந்தப்பட்ட பல விடயங்கள் புதிய அர சியல் யாப்பில் இடம்பெற்றதனால் வட, கிழக்குப் பகுதி களில் இதனை வன்மையாக எதிர்த்தனர். 1970 ஆண்டு நடந்த பொதுத்தேர்தல் முடிவுகளின் படி வட மாகாணத் திலுள்ள 3,34,360 வாக்காளர்ளுகள் 16, 179 (Šuř மட்டுமே இதனை ஆதரித்தனர். கிழக்கு மாகாணத்தில் 3,42,518 பேரில் 79,323 பேர் மட்டு மே இதற்கு சார்பாக வாக்களித்தார்கள். மற்ற 7 மா காண ங் களிலும் 54.4 வித வாக்குகளே சார்பாக பெற்றார்கள். இதனின்றும் இடது சாரி முன்னணி அரசாங்கத்தின் புதிய குடியரசுக்குரிய யாப்பை வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களுள் பெரும்பான்மையோர் ஏற்க மறுத்து விட்டனர். என்பது தெளிவாகும். 1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் அரசி யல் யாப்பினை முழுவதையும் மாற்றியமைத்து நாட்டுக்கு *சிறிலங்கா ஜனநாயக சோசலிச குடியரசெனப் பெயரியிட் டது இதனையும் வட கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்கள் பெரும்பான்மையாக நிராகரித்துவிட்டனர். இத்தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 23,3 விகிதமும் ஏனைய 7 மாகாணங்களில் 55.5விகிதமும் மட்டுமே அரசுக்கு ஆதர வாகக்கிடைத்தது.
கடந்தகால வாக்கெடுப்புகளில் நின்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் ஒற்றை ஆட்சியை ஏற்க மறுத்து விட்டனர். என்று கூறிவிடலாம். அண்மைக்

Page 43
56 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
காலங்களில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளிலும் உரை யாடல்களிலும் இனப் பிரச்கினைத் தீர்வுககு இதனையே தமது நிபந்தனையாகவும் ஆக்கிக் கொண்டார்கள்.
2.5.16. சிறுபான்மையோர் பரவலாகவே வாழ்கின்றனர்
வட, கிழக்கு மகாணங்களையும், நுவரெலியா, புத்தளம் மாவட்டங்களையும் தவிர்த்து சிறுபான்மை இனங்கள் எங் கும் பரவலாகவே வாழ்கின்றனர். உதாரணமாக கண்டி மாவட்டத்தில் 25%, பதுளையில் 31.5% கொழும்பு, மாவட் டத்தில் 22%, மாதத்தளை மாவட்டத்தில் 20% மாகவும் வாழ்கின்றார்கள்.
இவ்வாறு பரவலாக வாழ்வதால் தமது பிரதிநிதிகளைத் தேர்தெடுக்கக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை. தொகு திகளை நிர்ணயிக்கும் போதும் இவர்களையும் பொருட் படுத்தியதாக இல்லை. தமக்கென கணிசமான அளவு வாக் காளர்களைக் கொண்ட தொகுதிகளாக இருக்காது எங்கும் பொருட்படுத்தப்படாத சிறுபான்மையினராகாவே இருக்கின் றனா.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடங்கப்படாத காரணத்தால், பலர் தொழில் தேடி சிங் களப் பகுதிகளுக்குச் சென்று விட்டனர். சென்ற இடங்களில் வாக்காளர் இடாப்புகளில் பதிவு செய்து கொண்டு சிங்கள அபேட்சகர்களுக்கே வாக்களிக்கின்றனர். பலர் அரச சேவை யில் உள்ளவர்கள். இவர்கள் மாற்றங்களுக்கு உட்பட்ட வர்களாகையால் நிலையாக நின்று தமது அரசியல் பலத்தை உறுதிப்படுத்த முடியாதும் இருக்கின்றனர். சிங்களம் மட் டும் அரச கரும மொழியானதும் கறுவாக்காட்டு வாசிகளும் வசதியுள்ளவர்களும் தம் பிள்ளைகளை சிங்களப் பாடசாலை களுக்கே அனுப்பி வைக்கின்றனர்.
முடிவுரை
1981ம் ஆண்டு சனத்தொகை புள்ளி விபரத்தின் படி பெரும் பான்மை இனத்தவராகிய சிங்களவர் 73.98 விகிதமாகவே இருந் தனர். ஆனால் பாராளுமன்றத்தில் இவர்களது பிரதிநிதிகள் 81.4 வீதமாகவோ இருக்கின்றர். இதன் விளைவாகவே அங்கு மூன்றில் இரண்டு பங்குள்ள தொகைக்கு மேலாக வாக்குகளை பெறக்கூடிய தாக இருக்கின்றது. தேர்தலில் மக்கள் ஒரு கட்சிக்கே பெரும்

பாராளுமன்றத்தில் சிறுபான்மையோர் . 0 57
ஆதரவு வழங்கினால் அக்கட்சிக்கு பாராளுமன்றத்தில் பலம் கூடி எதிர்கட்சிகளும் தம் கடமைகளைச் செய்ய முடியாது போகின்றது. சிறுபான்மையோரை நசுக்கி ஒடுக்குவதில் பெரும்பான்மையோர் மத் தியில் இயங்கும் கட்சிகள் ஒன்று சேர்ந்து விடுகின்றன. ஆட்சியில் இருக்கும் கட்சி சிறுபான்மையோருக்கு விட்டுக்கொடுக்க முயற்சிக் கும் போது எஞ்சியவர்கள் அதனை வன்மையாக கண்டிக்க முன் வருவர்.
மேற்கூறிய நிலை தொடர்ந்தும் நிலவுவதனாலேயே சிங்கள அரசியல் தலைவர்களோடு செய்து கொள்ளும் ஒப்பந்தங்களும் உடன்பாடுகளும் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை. இருபதாம் ஆண்டு காலங்களில் டாக்டர் ஐசாக் தம்பையா தலைமைதாங்கிய யாழ்ப் பாண அரசியற் கழகம் இனங்களுக்கிடையே சட்டசபையில் விகிதாசார அடிப்படை பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் இருப்பதற்காக இலங்கை தேசிய காங்கிரசோடு ஒப்பந்தம் செய்துக் கொண்டது. இ த ைன "மஹேந்திரா உடன்பாடு" என்பர். தமக்குச் சாதகமான சூழல் உருவா னதும் சிங்களத் தலைவர்கள் அதனை நிராகரித்து விட்டார்கள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக யாழ்ப்பாண மேயராக இரு ந் த வரும் சாமுவேல் செல்வநாயகத்தின் கட்சியில் பிரமுகராக இருந்த வருமாகிய, டாக்டர் தருமலிங்கம் தமது கட்சி சிங்கள அரசாங்கங் களோடு பத்துத் தடவைகள் ஒப்பந்தமோ உடன்பாடோ ஏற்படுத்தி யிருந்தது என பகிரங்கமாகக் கூறியுள்ளார். ஒவ்வொரு கட்டத்தி லும் சிங்கள அரசியல் வாதிகள் ஒன்றில் கொடுத்த வாக்கை காப் பாற்றாது நிராகரித்துவிட்டார்கள் அல்லது நடைமுறைப்படுத்த தம்மால் இயலாத நிலையில் இருப்பதாகக் கூறியும் உள்ளார்கள். இதனால் கட்சி ஏமாற்றமடைந்து இவ்வித உடன்பாடுகளில் நம் பிக்கை இழந்துள்ளது என்றும் கூறினார்.
தேவை ஏற்படும் போது சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் தலை வர்களோடு ஒப்பந்தமோ அல்லது உடன்பாட்டு இணக்கத்தையோ ஏற்படுத்த முன்வருவார்கள். தேவை நீங்குகின்றபோது அவற்றை நிராகரிக்கவும் தயங்கமாட்டார்கள். கடந்த கால அனுபவங்களை நினைவு கூர்ந்து அவதானிக்கும் போது இது அவர்களது சுபாவம் எனும் முடிவுக்கே வரவேண்டியிருக்கின்றது. கொடுத்த வாக்குகளை யும் கைவிட்ட வரலாறு மட்டுமல்ல, நலன் தரக்கூடிய சட்டங் களைத் தன்னும் நடைமுறைபடுத்துகையில் பெறக்கூடிய பலன்களை அடையாது செய்வதற்கும் நிருவாக மட்டத்தில் போதிய முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்திய வம்சாவழியினரை பாராளு மன்றம் நிறைவேற்றிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது ஏற்

Page 44
58 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
பட்ட அனுபவங்கள் இதற்குச் சான்றாகும். இச்சட்டம் இந்தியப் பிரதமராக இருத்த ஜவஹர்லால் நேருவாலும் அங்கீகரிக்கப்பட்டு இருந்தது. சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகையில் இந்திய தூதுவரும் இந்திய அரசாங்கமும் ஒரு சிறு பகுதியினர் மட் டுமே இலங்கைப் பிரஜைகளாக பதிவு செய்யப்பட மாட்டார்கள் என எதிர்பார்த்தனர்." இறுதியில், விண்ணப்பித்த 875,000 பேரில் 184,320 பேர் மட்டுமே இலங்கைப் பிரஜாவுரிமை பெறக் கூடியதாக இருந்தது. நடைமுறைப்படுத்தும் போது இவர்கள் பெறக் கூடிய நலன்களை அரசு நன்கு குறைத்துக் கொண்டது. நாற்பது ஆண்டு களாகியும் பல்லாயிரக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டும், இன் றும் நான்கு இலட்சம் பேர் பிரஜாவுரிமை பெற வேண்டியவர்களா கவே இருக்கின்றனர்.
இந்திய வம்சாவழித் தமிழர்கள் பட்டு அனுபவித்ததை போன்று நடைமுறைப்படுத்தாத வாக்குறுதிகள், உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் பலவற்றை உதாரணமாக வரிசைப்படுத்தலாம். இவற்றுள் தமிழ் பிரச்சினையை அறவே தீர்த்து வைப்பதாக கூறிய ஜயவர்த்தனாவின் தேர்தல் விஞ்ஞாபனம், ஜயவர்த்தனா-இந்திராகாந்தி ஒப்பந்தம் எனக் கருதக்கூடிய ஜி. பார்த்தசாரதியினது 'அட்டவணை இ’ அண்மைக் கால குத்துக் கரணங்களுக்கு உதாரணமாகின்றன. இவ்வித வர லாற்றுச் சூழலில் ஜயவர்த்தனாவுக்கும் ராஜீவ்காந்திக்கும் 1987ம் ஆண்டு ஆடி மாதம் 29ம் திகதி ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் முழும னையும் நடை முறைபடுத்தப்படுமா என்று சந்தேகப்படும் நிலையி லேயே சிறுபான்மையோர் (குறிப்பாக தமிழ் மக்கள்) வாழ்கின்றனர். தமிழ் மக்கள் தம் பிரச்சினை தீராது பீதியடைந்த நிலையில் வாழ் வதற்கு உரிமைகளை மீறாது இருக்க, ஒழுங்குகள் இல்லாமையே காரணமாகின்றது. ஆகவே நிலையான அரசியல் தீர்வு ஒன்று காணவேண்டுமாகில் பாராளுமன்றத்தில் சிறுபான்மையோரது பிரதி நிதிகள் மூன்றில் ஒரு பங்கிற்கு குறையாது இருக்கவேண்டும் என்பது ஒரு நிபந்தனையாக இருக்க வேண்டும். அல்லாவிடில் வட-கிழக்குப் பகுதிக்கு என தனி சட்ட சபையும் நிருவாகமும் இருக்கவேண்டும். சிறுபான்மையோர் விடயத்தில், அவர்களது அங்கீகாரம் இல்லாமல் மத்திய அரசுக்கு கொள்கைகளை மாற்றியமைக்கும் அதி கா ரம் வழங்கப்படாதிருக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களது முழு உரிமை களையும் வழங்கும் மத சார்பற்ற அரசு உருவாகும் போதுதான் இந்நிலையை உறுதியாக அடையலாம்.

மூன்றாம் அத்தியாயம்
தோட்டத் தொழிலாளரது உரிமை மறுத்தல்
இலங்கையில் குடியமர்ந்துள்ளோரும் பெரும்பாலாணொர் இந்தி யாவில் இருந்து வந்தவர்களே. ஆகவேதான், இந்தியா கருணைச் செயலாக உணவுப் பொருட்களை விமானங்களினின்றும் விழுத்தி யதை இலங்கை அரசு இந்தியாவின் 19வது படையெடுப்பு என வர்ணிக்கின்றது. அது அவ்வாறாகில், சிங்களக் குடியேற்றம் என் பது முதற்படையெடுப்பாக கருத வேண்டும் என இந்திய தூதுவர் தீட்சித் பதிலடி கொடுக்கும் முகமாக கூறினார்.
அந்நிய காலனித்துவம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, வியாபாரஞ் செய்வதற்கு வேண்டி, மக்கள் இந்தியாவிலிருந்து அடிக்கடி இலங் கைக்கு சென்று வந்திருக்கிறார்கள். முதன் முதலாக ஒல்லாந்தர் காலத்திலேயே வாசனைத் திரவிய தோட்டங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் (தமிழ்) வேலைக்கு கொண்டுவரப் பட்டார்கள் என்பதற்கு ஆதாரமுண்டு. பிரித்தானிய ஆட்சியாளர் காலத்தில் பெருந் தோட்ட பயிர் செய்கை ஆரம்பித்ததும், தோட்ட முதலாளிகளது வேண்டுகோளுக்கு இணங்க இந்திய தொழிலாளரை காலணி அரசாங் கம் வரவழைத்தது. கிடைக்கக்கூடிய பொருளாதார நன்மைகளே இந்தியர்களை வந்து சேரத் தூண்டிற்று.
நாட்டில் அக்காலத்திலுள்ள குடினசத் தட்டுப்பாடும் கூலி க் கு வேலை செய்யும் அவசியம் ஏற்படாத அளவிற்கு மன்னர் ஆட்சி கால நிலவுடமை குத்தகை முறையால் அனைவரும் தாமே காணி களில் பயிர் செய்யக் கூடிய வசதிகள் தொடர்ந்தும் இருந்தயாபடிலும் ஊர் மக்கள் கூலி வேலை செய்ய முன்வரவில்லை.

Page 45
60 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
இந்திய வம்சாவழி தமிழர் முதன் முதலாக 1828ம் ஆண்டு தொடக்கம் 1931ம் ஆண்டு வரையும் இலங்கைக்கு வந்தவர்களே. இவர்களின் சமூக அமைப்பு தமிழ் நாட்டில் வாழும் தமிழரின் வாழ்க்கை முறையையே ஒட்டியிருந்தது. இவர்களில் 70% வீதமா னோர் இன்று தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர். ஏனையோர் தோட்டங்களுக்கு வெளியே தொழில் புரிகின்றனர்.
3. மலையகத் தமிழர்
நாட்டின் அரசியல் யாப்பில் இவர்கள் "சமீப கால இந்திய வம்சாவழியினர்” என அழைக்கப்படுகின்றனர். அவர்களை பெரும் பாலும் "இந்தியத் தமிழர்" அல்லது "தோட்டத் தமிழர்கள்” என்றும் கூறுவர். "இந்தியர்” எனக் குறிப்பிடுவதில் அந்நியர் என்பதுவே உட்கருத்தாக இருந்து பதங்களின் வரைவிலக்கணத்தில் வற்புறுத் 'தப்படுகின்றது. அவர்களை அச்சுறுத்தவதற்காக பயன்படுத்தப்படும் "கள்ளத் தோணி" எனும் ஏளன வார்த்தையில் சமூகத்தில் அவர் களை ஏற்க விரும்பாத மனப்பான்மை உள்ளடங்குகின்றது. நாட் டின் தொழிலாள வர்க்கத்தினர் இடையே அன்றாட வாழ்விற்கு தம் தொழிலையே நம்பி வாழும் ஒரே சமூகம் தோட்டத் தொழிலாளர்க ளேயாவர். இதனால் இவர்களே தொழிலாள வர்க்க மெனும் பொரு ளுக்கு உரியவராவர். அவர்களை வேறுபடுத்தி அழைக்கப் பயன் படுத்தும் "தோட்டக் காட்டான்” எனும் ஏளன வார்த்தை சிங்கள தமிழ் விவசாய வர்க்கத்திற்கும் தமக்குமிடையேயுள்ள முரண்பாட் டைக் குறிக்கும். 'பண்பாடற்ற தோட்டக் கூலிக்காரன்” அல்லது தீண்டத்தகாதவன் என பொருள் படும் இவ்வார்த்தையை பூர்ஷ்வா மன்ப்போக்குள்ள முதலாளிகளும் ஏனைய தொழிலாளரும் அவர்களை நிந்திக்க வேண்டியே பயன்படுத்துவர்,
இந்திய தொழிலாளர் பற்றி அநகாரிக தர்மபாலா முறையற்ற வார்த்தைகளைப் பிரயோகப் படுத்தியுள்ளார். **ஆங்கிலேயர் ஆட் சியில் தென்னிந்திய கீழ் சாதியினர் நாட்டினுள் குடியேற அனுமதிக் கப்படுகினறனர்” என 1902ம் ஆண்டில் கூறியது இதற்கு ஒரு உதாரணமாகின்றது. இதே போன்று ஏனைய சிங்களத் தலைவர் களும் தோட்டத் தொழிலாளரை நிந்தனை செய்ன்தனர். ' கூலிக் காரன்” ஏனும் ஏளன வாத்தை பொதுவாகவே பயன்படுத்தப்பட் l-85. சமீபகால வம்சாவழியினர் இவர்களை பொதுவாக நான்கு பிரிவுகளாக வகுக்கலாம் :
1. வர்த்தகப் பிரிவினர்

தோட்டத் தொழிலாளரது உரிமை மறுத்தல் 61
2. உயர் நுட்பி ப தொழில்ரிவினர் 3. தோட்டத் தொழிலாளர்
4. தோட்டம் சாரா தொழிலாளப் பிரிவினர்
3.1. வர்த்தகப் பிரிவினர்
இவர்கள் பிரத்தானியரது வருகைக்கு முன்பாகவே வந்துசேர்ந்தவர் கள். வங்கித் தொழில், அடகு வியாபாரம், (நூற்றுக்கு மேற்பட்ட நாட்டுக் கோட்டை செட்டிகளது தாபனங்கள் இருந்தன), போக்கு வரத்து பண்டகசாலைகள், பண்ட உற்பத்தியும் விநியோகமும், ஏற்றுமதி இறக்குமதி முதலிய தொழில்துறைகளில் தம்மை ஈடுபடுத் திக் கொண்டனர். குஜராத்திய பெரும் வியாபாரத் தாபனங்களும் இருக்கின்றன. ஏனையோர் பெரும் வியாபாரம் செய்பவர்களா கவும், பெருந்தோட்டத் தேவைகளை விநியோகிப்பவர்களாகவும், சிறு கடைகளை நடத்துபவர்களாகவும், ஆலை (மில்) உடமையாளர் களாகவும் இருக்கின்றனர். நாட்டின் அரிசி இறக்குமதியில் 90% இவர்களது பங்காகும். (மிகுதிப் பங்கை ஐரோப்பியர் செய்தனர்). 1945ம் ஆண்டில் 750 செட்டியார்களது நிறுவனங்கள் இருந்தன. தோட்டப் பிரதேசத்திலுள்ள பட்டணங்களிலும் கொழும்பிலும் இவர்களும், தோட்டங்களின் பெரிய கங்காணிமாரது சந்ததியினரும் மட்டுமே வியாபரர முயற்சியில் ஈடுபட்டனர். 1930ம் ஆண்டிற்குப் பின்னர் இயற்றிய சட்டங்களால் இவர்களது செல்வாக்கும் எண்ணிக்கையும் குறைந்துக் கொண்டே வந்துள்ளது.
3.1 1, அ. விவசாய பங்கீட்டாணை:-
இவ்வாணையின்படி விவசாயப் பண்டங்களை இறக்குமதிசெய்வோர் அனுமதிப் பத்திரம் பெற வேண்டியிருந்தது. இதனைப் பெறு வதற்கு நிபந்தனையாக குறித்த உள்ளூர் உற்பத்திப் பண்டங்களை குறிப்பிட்ட விலைக்கே வாங்க கடமைப்பட்டனர். அரிசி, புளி, ஜவுளி இறக்குமதி செய்த வியாபாரிகள் இதனால் பாதிக்கப் பட்டனர்.
3.11. ஆ. விவசாய உற்பத்திப் பொருள் விநியோகிப்போர் ஆணை
இதனால் கிராமிய மட்டத்திலுள்ள சிறுகடை வியாபாரிகள் பாதிக்கப் பட்டனர். இவர்களுள் பெரும்பாலானோர் இந்தியாவிலிருந்து வந்த வர்கள். உள்நாட்டுப் பண்டங்களை வாங்குவதற்கு அனுமதி பத்தி ரம் தேவைப்படுவதோடு, அதற்குறிய பணம் வங்கி இருப்பில்உள்ள தாக காட்டவும்கடமைப்பட்டனர்.

Page 46
62 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
3.1. 1. இ. கடைகளை வரையறுக்கும் ஆணை :-
இதன் கீழ் மலையகத் தோட்டங்களிலுள்ள தென்னிந்தியரது சிறு கடைகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. மலைநாட்டு வர்த் தகர் சங்கம் தோட்டங்களில் சிறு கடைகள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதனால் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த கடைகளைத் தவிர புதிய கடைகளை அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளருக் கென கூட்டுறவு பண்டகசாலைகள் அமைப்பதும் தடைசெய்யப் பட்டது. தோட்டங்களுக்கு புறத்தேயும், (கிராமங்களிலும், மலை யகத்திலுள்ள பட்டணங்களிலும்) கங்காணிகளோ தொழிலாளரோ கடைகள் அமைப்பது தடைசெய்யப்பட்டது.
இச்சட்டங்கள் வாயிலாக தென்னிந்திய வர்த்தகரது நடவடிக்கை களுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. இலங்கையரல்லாதோர் மீது விதிக்கப்பட்ட விசேஷ வரிகளும், இலங்கையருக்கு தொழில்தேடிக் கொடுக்கும் முகமாக கடைகளில் பிறஊழியரைக் கட்டுப்படுத்திய தும், அவர்களது சுதந்திரத்திற்கு மேலும் எல்லை வகுப்பதாக இருந்தது.
3.1 1. ஈ. 1938ன் அத்தியாவசிய பண்டங்களை சேகரித்து காக்கும் ஆணை :-
யுத்தகாலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதற்காக இச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தனியார் துறைக்கெதிராக எடுக்கப் பட்ட நடவடிக்கையாகையால் தென்னிந்திய வர்த்தகர்களையே வெகுவாகப் பாதித்தது.
வர்த்தக துறையில் அன்று அவர்களது பங்கு பின்வருமாறு :
1. மொத்த விற்பனையாளர் தொகையில் - 90% 11. நடுத்தர வர்த்தகத் துறையில் - 60% III. சில்லரை வியாபாரம் - 40% இச்சட்ட அமுலாக்கலின் உடன் விளைவாக
1941 - 1942ம் ஆண்டுகளுக்கிடையில் பல தென்னிந்திய வியா
பாரிகள் தமது கடைகளைப் பூட்டிக்கொண்டு நாடு திரும்பினர். 3.1 1. உ. 1935ம் ஆண்டின் காணி சீர்திருத்தச் சட்டம் -:

தோட்டத் தொழிலாளரது உரிமை மறுத்தல் () 63
முடிக்குரிய காணியை நிலமற்ற விவசாயிகளுக்கும் மத்தியதர * 'இலங்கையர்” க்கும் சொந்தமாக்கிக் கொள்ள இடமளித்தது. ஆனால் இந்திய வம்சாவழியினரை இதனால் பயன்படாத அள விற்கு 'இலங்கையர்” எனும்பதத்திற்கு நுட்பமாக வரை விலக் கணம்கொடுக்கப்பட்டது.
3.1. 1. ஊ. மீன் பிடி ஆணை :- நாட்டின் கடல் எல்லைக்குள் தொ ழில் செய்ய விரும்பும் இலங்கையரல்லாதோரை அனுமதிப்பத்திரம் எடுத்துக் கொள்ளும்படி வலியுறுத்திற்று. இங்கும் திட்டவட்டமான வரைவிலக்கணம் கொடுத்து 'இலங்கையர்” அல்லாதோர் விலக் d5 6.
3.1. 1. எ. பஸ் போக்குவரத்துச் சட்டம் இல. 47; 1962 : இச் சட்டமும் அனுமதி வழங்குவதில் "இலங்கையர்க்கே முதலிடம் கொடுத்தது.
இச்சட்டங்களின் 'இலங்கையர்’ எனும் பதத்திற்குத் தரப்பட்ட வரைவிலக்கணத்தைக் கொண்டு நாட்டின் பொருளாதார முயற்சி களில் சுதந்திரமாக இயங்கும் உரிமைகளிலிருந்து இந்திய வம்சா வழியினர் விலக்கப்பட்டனர். உயர் மட்டத்தவரது இச்சட்டங்கள் இந்திய வம்சாவழித் தமிழரது "விரும்பத்தகாததும்" சட்ட விரோத" முமாகிய போட்டியை அகற்றிவிட்டால் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண இடமுண்டு என்பதைக் காட்டவே முயன்றன.
முப்பதாம் ஆண்டு காலங்களில் ஏற்பட்ட பொருளாதாரநெருக் கடியின் தாக்கத்தை தீர்க்கும் முகமாகவே இப்பாரபட்சக்கொள்கை கையாளப்பட்டது. இச்சட்டங்களால் இந்திய வம்சாவழி தமிழர் களே பாதிக்கப்பட்டனர். ஒரு சிலர் மட்டுமே வடஇந்தியாவை சேர்ந்தவராவர். இச்சட்டங்கள் நெருக்கடிப் பிரச்சனையை அணு கும் போதுஆட்சியாளர் எவ்வித மனப்பான்மையை கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகின்றது. பொருளாதாரத் துறையில் பாகுபாடு, நாடு கடத்தல் எனும் தீவிர நடவடிக்கைகளுக்கு முன்னோடியாகவுள்ள போக்கினையே இவை காட்டுகின்றன. சிறுபான்மை இனங்களை பொருளாதாரத் துறையில் ஒதுக்கிவிடும் நோக்கோடு உருவாகிய இக்கொள்கை இன்றுவரை தொடர்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது என்பதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இப்பாரபட்சக் கொள்கையை தொடர்ந்தும் கையாளுவதற்கு ஆட்சி புரியும் மேல் வர்க்கத்தினர் அரசியல் இராணுவ ரீதியான நசுக்

Page 47
64 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
கலையும், உரிமை பறித்தலையும் எவ்வாறு கைக்கொள்ள நேரிட்டது என்பதையும் அவதானிக்கலாம்.
3.1. 2. உயர் நுட்ப தொழில் வர்க்கத்தினர்
இவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமாகும். பெரும்பாலா னோர் பிரித்தானியரது காலத்தில் வேலைக்கு அமர்த்பட்டவர்கள். சுதந்திரத்திற்குப் பின் இச்சமூகத்தினின்றும் தெரிவு செய்தல் என்பது குறையத் தொடங்கியது. பிரித்தானியர் காலத்தில் தோட்ட உரிமையாளர்களாகவும், டாக்டர்கள், ஆசிரியர்கள், சட்டத்தரணி கள், சிவில் சேவை இராணுவம் முதலிய தொழில்களில் ஈடுபட்டி ருந்தவராகவும் இருந்தனர். கணிசமானோர் தோட்டத் துறையில் கந்தோர், தொழிற்சாலை, தோட்டம் முதலிய பகுதிகளில் உத்தி யோகத்தவராகவும் இருந்தனர். தோட்டங்கள் தேசியமயமாக்கப் பட்டதும் இவர்களது எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இன்று தோட்டத் துறையில் 70% சிங்களராவர்.
3.1. 3. பிற இடங்களில் கூலிவேலை செய்வோர் :-
இவர்கள் 1803ம் ஆண்டு கவர்னர் பிரெட்ரிக் நோர்த் அமைத்த கூலிப் பட்டாளத்தின் விளைவாக இங்கு இறக்குமதி செய்யப்பட்ட வர்களெனத் தெரிகிறது. பாதைகள், பாலங்கள், நீர்பாசனத் திட்டங் களில் முன்வந்து கடமையாற்றியவர்களாவர். 1931ம் ஆண்டுவரை துறைமுகம் ரயில்வே, நகரசுத்தி தொழில், சீவல் தொழில், ரிக்ஷாத் தொழில், குயவர், தையல்காரர், சவரத் தொழில், வண் ணார், கடைச் சிப்பந்திகள், வீட்டுவேலை முதலிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள். 1936ம் ஆண்டுக்குப்பின் இவர்களுள் ஆயிரக் கணக்கானோர் இத்தொழில்களில் இன்றும் ஈடுபட்டுள்ளனர். குறித்த எல்லாப் பிரிவினரையும் தோட்டம் சேரா தொழிலாளர் எனும் வகுப்புக்குள் அடக்கலாம். 1922ம் ஆண்டில் 1,16, 733 பேர் ஆண் களாகவும், 36,492 பேர் பெண்களாகவும் இருந்தனர்.
தோட்டம் சாரா இந்திய வம்சாவழியினர்
வருடம் மொத்தம்
92. i53,225 1931. 220,000 935 244,660
இப்புள்ளி விபரங்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்களையும்
தற்காலிக வதிவு அனுமதிப் பத்திரங்கள் வைத்திருப்போரையும் “ாள்ளடக்கவில்லை.

தோட்டத் தொழிலாளரது உரிமை மறுத்தல் 0 85
3.1. 4. தோட்டத் தொழிலாளர்
இந்திய வம்சாவழியினருள் பெரும்பாலானோர் இப்பிரிவினைச் சேர்ந் தவர்கள். 1823ம் ஆண்டு கவர்னர் எட்வெட் பார்ன்ஸ் பேராதெனி யாவுக்கு அருகாமையில் அமைத்த கன்னொருவ தோட்டத்திலி ருந்துதான் இவர்களது சரித்திரத்திற்கு அத்திவாரமிடப்பட்டது. 1936血 ஆண்டுவரை ஆயிரத்திற்கு : தோட்டத் தொழிலா ளர் - 726, பிற இடங்களில் வேலை செய்வோர் - 75, வர்த்தக வர்க்கம் - 68. தோட்டத் தொழிலாளர்கள் தோட்டப் பகுதியிலேயே န္တီးနှီး அவர்கள் அந்நியர்களென அப்போது கருதப்பட வில்லை. ஆனால் ஏனைய தோட்டம் சேரா இந்திய வம்சாவழி தொழிலாளர்கள் சிங்கள மக்களின் தொழில் வாய்ப்பிற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்பாளர்களெனக் கருதப்பட்டனர். 1921ம் ஆண் டில் இலங்கையிலுள்ள 692.000 இந்திய வம்சாவழியினருள் தோட் டத் தொழிலாளரும் அவர்களை நம்பி வாழ்பவரும் 536,000 ஆவர். இவர்களே குடியுரிமை பறிக்கும் சட்டத்தால் பாதிக்கப் படடவர் கள். .ܶܐ
1931ம் ஆண்டு தொடக்கம் இலங்கைக்கு இவர்களது வருகை இந்திய அதிகாரிகளால் நிறுத்தப்பட்டது. 1928ம் ஆண்டு தொடக் கம், நாட்டில் நிலையான நலன்கள் ஏதேனும் இல்லாததால் இந்தி யாவே அவர்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும், வாக்குரிமை வழங்கப்படாதென்றும் சிங்கள இன வெறியர்கள் வாதாடத் தொடங்கினர். பின்னர் தோட்ட துரைமார்கள் இந்தியாவி லிருந்து அவர்கள் மீண்டும் வரத் தொடங்க வேண்டுமென போராடி னார்கள். 1944ம் ஆண்டு வரை வருகை தொடர்ந்தது. அந்த ஆண்டுக்குப்பின் வந்தவர்களே சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எனக் கருதப்பட்டனர். 1964ம் ஆண்டு வரை அதிகாரிகளுக்கு தெரியாமலே ஆண்டுக்கு 5000 பேர் வந்து சேர்ந்தனர்.
3.2. நாடற்ற நிலை
பெரும்பாலும் தொழிலாளர் வர்க்கத்தைக் கொண்ட இவ்வினத் தின் பிரஜாவுரிமைகளை சுதந்திர இலங்கையில் ஆட்சிப் பொருப் பேற்ற முதல் அரசாங்கமே பறித்தெடுத்தது. நாம் அறிந்த மட்டில் தேசிய அரசொன்று தன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டங்களின் மூலம் தனது மக்களுள் 12.5 விகிதத்தினரது பிரஜாவுரிமையை பறித்தது இதுவே முதல் தடவையாகும். இலங்கை பிரஜாவுரிமைச் சட்டம் (1948ம் ஆண்டு 18 இல), அது விதிக்கும்

Page 48
86 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
நிபந்தனைகளுக்கு உட்படாதவர்களை நாடற்றவர்களாக்கியது. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில், கிராமச் சபை விடயங்களை விலக் கிய அரசியல் உரிமைகளைப் பொருத்தவரை, இத்தொழிலாளர்கள் சமமாகவும், நியாயத்துடனும் ஏற்கப்பட்டிருந்தனர். ஒரு சில சிங் களத் தலைவர்கள் தீவிரமாக எதிர்த்தபோதும், டொனமோர் கமிஷ னர் இத் தொழிலாளருக்கு வாக்குரிமை வழங்கினார்கள். 2
தொகை கணக்கு எனும் திருகு தாலத்தைக் கொண்ட காரணத் தால் 1986ம் ஆண்டு தை மாதம் ஏற்படுத்திய ஒப்பந்தம் கூட நாடற்ற பிரச்சனையை தீர்ப்பதாக தோன்றவில்லை. இந்திய பாகிஸ் தான் (பிரஜாவுரிமை) சட்டத்தின் கீழ் வர்த்தகர், மற்றும் உயர் தொழில் புரிவோர் போன்றோர் பிரஜாவுரிமை பெற்றுவிட்டார்கள். தோட்டத் தொழிலாளரும் ஏனைய தொழிலாளர்களும் இச்சட்டத் தினால் பாதிப்புக்குள்ளானார்கள். இதுவரை காலமும் நிறைவேற் றப்பட்ட ஒப்பந்தங்களின் பின், இன்றும் 200,000 மக்கள் நாடு கடத்தப்பட இருக்கின்றனர். இவர்கள் நாடுகடத்தப்பட்ட பின்னும் மேலும் பலர் நாடற்றவர்களாக இருக்கத்தான் போகிறார்கள். சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் கீழ் நா ட ற் ற வர் களி லிருந்து 1986 தை முதல் 1987 ஆடி மாதம் வ ைர 469 பேர் மாத்திரமே இந்திய பிரஜாவுரிமை பெறுவதில் அக்கரை காட்டினார்கள். இந்திய பிரஜாவுரிமைக் கோரி விண்ணப்பித்த சுமார் 50,000க்கு மேற்பட்டோர் விசாரணைக்கு சமூக மளிக்காமல் அக்கரையின்றி இருந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1983ம் ஆண்டு இனக்கலவரத்திற்குப் பின் கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மலையக தோட்டப் பகுதிகளுக்குச் சென்று மக்கள் நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் இலங் கைப் பிரஜாவுரிமை வேண்டுமென்றும் அதுவே இப்போதுள்ள தமது பிரச்சினை என்றனர்.
இப்பிரச்சினை தொடர்பாக நாட்டில் அடிக்கடி நிலவிவந்த பதட் டத்தின் காரணமாகவே பலர் இந்திய பிரஜாவுரிமைக்கு விண்ணப் பித்தனர். ஆனால் தற்போது நாட்டில் பிரச்சினைக்கு தீர்வு கண்டு அமைதி நிலவுவதால் இவர்கள் இலங்கைப் பிரஜாவுரிமை பெறுவதி லேயே நாட்டம் செலுத்தி வருகின்றனர் என்று சில தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்படி உடன்படிக்கையின்படி இது வரை 4,61,281 பேர் (இயற்கை அதிகரிப்புடன்) இந்தியா சென் றுள்ளனர். இன்னும் 1,30,567 பேர் இந்தியா செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. *

தோட்டத் தொழிலாளரது உரிமை மறுத்தல் () 67
தொகைக் கணக்கு எனும் அலட்சியம் கைவிடப்பட்டு இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படும் வரை இவ்விதமான போக்கினையே எதிர்பார்க்க முடியும்.
3.3. தோட்டத் தொழிலாளரது அரசியல் வலிமை (19311947) ヘ
1931ம் ஆண்டு நடந்த தேர்தலில் சட்ட சபைக்குத் தோட்டத் தொழிலாளர் 3 பிரதிநிதிகளை தெரிவு செய்யக் கூடியதாக இருந் தது. அட்டன் தொகுதிக்கு போட்டி இன்றி தெரிவுசெய்யப்பட்ட திரு. பெரிசுந்தரம், 4.5.1931ம் ஆண்டு தொடக்கம் 7.12.1935 வரை தொழில், கைத்தொழில், வர்த்தக அமைச்சராகவும் கடமை யாற்றியிருக்கிறார். 18.6.1931ம் ஆண்டு தலவாக்கொல்லையில் நடைபெற்ற தேர்தலில் எஸ்.பி. வைத்திலிங்கம் 3,975 அதிகப்படி யான வாக்குகளால் வென்றார். திரு. கோர்டன் பெலோஸ் (பிரத் தானிய தோட்ட அதிகாரி) 3,299 அதிகப்படியான வாக்குகளால் பண்டாரவளைத் தொகுதியை வென்றெடுத்தார். மாத்தளையில் திரு. எஸ், சுப்பைய்யா மூன்றாவது இடத்தையும் நுவரெலியாவில் திரு. ஜே.பி. இரத்தினம் இரண்டாவது இடத்தையும் பெறக் Зh-lq-ш தாக இருந்தது. ஏனைய தொகுதிகளில் தொழிலாளர்கள் இடதுசாரிகளையே ஆதரித்தனர். 1931ம் ஆண்டு மொத்தம் 100,000 தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களித்தனர்.
1936ம் ஆண்டு இரண்டாம் சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் தோட்டத் தொழிலாளர் பிரதிநிகள் இரண்டு ஆசனங்களைப் பெற் றனர். தலவாக்கொல்லையில் 12,866 அதிகப்படியான வாக்கு களால் திரு. கே. நடேச ஐயரும், அட்டனில் 8,708 அதிகப்படியான வாக்குகளால் திரு. எஸ். வைத்தியலிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர். இடது சாரி சிங்களவர்களாகிய ஆர். எஸ். குணவர்தனாவும் டாக்டர். என்.எம். பெரேராவும் தோட்டங்கள் அடங்கிய தொகுதிகளில் இத் தொழிலாளரது ஆதரவோடு மட்டுமே தெரிவு செய்யப்படக்கூடியதாக இருந்தது. மொத்தம் 1,45,000 தொழிலாளர்கள் வாக்களிக்கூடிய நிலையிலிருந்தனர். பதுளை, பாலங்கொடை, நுவரெலியா தொகு திகளில் முறையே வி. எஸ். சோமசுந்தரம், சி. வேலுப்பிள்ளை, எஸ், இராமைய்யா, போட்டியிட்டு சொற்ப வாக்குகளால் தோல்வி யுற்று இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.
1937ம் ஆண்டில் உள்ளூராட்சி அமைச்சராக இருந்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டார நாயக்கா தோட்டத் தொழிலாளரது கிரா

Page 49
68 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
மச் சங்க தேர்தல்களில் வாக்களிகும் உரிமையை அகற்றும் நோக் கத்தோடு கிராமக் கமிட்டிச் சட்டத்தின் கூடிரத்துக்களை மாற்றி யமைக்க முயன்றார். வரைவுப் பிரேரணையில் ஐரோப்பியரையும் பறங்கிகளையும் உள்ளடக்கும் அதே வேளையில் தமிழ் தோ ட் டத் தொழிலாளர் மட்டுமே விதி விலக்காகப்பட்டனர். இதனைக் கண் டித்த போது பாரபட்சமற்றது எனக் காட்டுவதற்காக சகல தோட் டத் தொழிலாளரும் இன பேதமின்றி விலக்கப்பட்ட சட்டம் நிறை வேற்றப்பட்டது. இவ்வாறு நிறைவேற்றியதும், தோட்டத் தொழி லாளரது தேர்தல் கள பலத்தைக் குறைக்கவே சிங்கள தேசியவாதி கள்; பதிவு செய்துக் கொள்வோர் 'நிரந்தரவாசி” எனும் நிபந்த னைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டுமெனும் திருத்தங்களைக்
கொண்டுவந்தனர்.
1945ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி ஐக்கிய தேசிய கட் சியின் தலைவர் டி. எஸ். சேனநாயக்கா, வாக்குரிமை என்பது நாட்டின் பிரஜைகளெனக் கணிக்கப்பட்டோரைத் தவிர்த்து ஏனைய தோட்டத் தொழிலாளருக்கு வழங்கப்பட மாட்டாதெனத் திட்ட வட்டமாகவே கூறிவிட்டார். V
1947ம் ஆண்டு, டொமினியன் அந்தஸ்து வழங்கிய சோல்பரித் திட்டத்தின் கீழ் நடத்திய பொதுத் தேர்தலில் இலங்கை இந்திய காங்கிரஸ் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேலும் 17 தொகுதி களில் இவர்கள் ஆதரித்த இடது சாரி அபேட்சகர்கள் தெரிவு செய் யப்பட்டனர். மொத்தமாகவுள்ள 95 தொகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சி 39.5% வாக்காளரது ஆதரவோடு 42 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியதனால் கூட்டு அரசாங்கம் அமைக்க வேண்டிய நிலை
ஏற்பட்டது.

தோட்டத் தொழிலாளரது உரிமை மறுத்தல் ) 69
அட்டவனை 31. மலையகத் தமிழ் பிரதிநிதிகள். 1948
- தமிழ் அதிகப்படி அபேட்சகர் தொகுதி வாக்ககளர் யான வாக்கு
1) எஸ்.எம். சுப்பையா | பதுளை 56% 11,467
2) குமாரவேலு கொட்டகலை | 73.8% 3,543
3) சி. ஆர். மோத்தா4 மஸ்கேலியா | 73.4% 5,137
4) ஆர். இராஜலிங்கம் நாவலப்பிட்டி 65% 1,442
5) வி.இ. கே.ஆர்.எஸ். நூரளை 68.3% 6,136
தொண்டமான்
தலவாக் 6) சி.வி. வேலுபிள்ளை கொல்லை 88.7% 9,170
7) கே.வி. நடராஜா Lu6oT LFT U ---
(சுயேட்சை) 666) 2,195
8) நடேசன் அப்புத்தலை | 63.8% (373)
பின் வரும் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர் இடது சாரிக் கட்சிகளையே ஆதரித்தனர்.
பகுதி தமிழ் வாக்காளர் விகிதம் கிரியெல்ல 15% நிவித்திகலை 24% ருவான்வலை 22%
தெஹியோவிட்ட 25%. 6
1960ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக தொழில ளர் காங்கிரசை சேர்ந்த வி. கே. வெள்ளையன் மஸ்கேலியாவிலும், அப்துல் அஸிஸ் மத்திய கொழும்பிலும் போட்டியிட்டு தொல்வியுற் றனர். தோட்டத் தமிழ் மக்களது வாக்குரிமை பறிபோனதே இவர் களது தோல்விக்கு காரணமாகும்.
வாக்குரிமை பறிக்கப்பட்டபின் 1952ம் ஆண்டு தொடக்கம் இந் திய வம்சாவழியினரின் பிரதிநிதியாக ஒரு அங்கத்தவர் நியமிக்கப்

Page 50
70 0 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
பட்டார். 1977ம் ஆண்டுவரை இவ்வித ஒழுங்கு இருந்தது. அந்த வருடம் நடந்த தேர்தலில் மூன்று அங்கத்தவர் கொண் ட தொகுதியான நுவரெலியாவில் எஸ். தொண்டமான் மூன்றாவது அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டார். மூன்று அங்கத்தவர் கொண்ட மத்திய கொழும்பு தொகுதியில் எம். எஸ். செல்லசாமி போட்டியிட்டு நாலாவதாக வந்து தோற்கடிக்கப்பட்டார்.
இன்றைய தோட்டத் தொழிலாளரது ஜனத்தொகைக்கேற்ப பாராளுமன்றத்தில் மொத்தம் 14 பிரதிநிதிகள் இருக்க வேண்டும். 1952ம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்க வேண்டிய தமிழர் தொகை குறைந்தமைக்கு இதுவே மூல காரணமாகும். மறுபுறத்தில் 72% உள்ள சிங்களவர்க்கு 81% ஆச னங்களுண்டு. ஆகவேதான் ஜனநாயக முறை எனும் போர்வையில் சிறுபான்மையினருக்கு எதிராக ஆட்சியாளர் எவ்வித சட்டத்தையும் நிறை வேற்றி தமிழரது உரிமைகளை பறிக்கக்கூடியதாக இருந் திது.
3.4 ஒருமைபாடற்ற நிலை இலங்கைத் தமிழர்-இந்திய வம்சாவழியினர்
வட, கிழக்கிலுள்ள தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இடையேயுள்ள உறவுகளில் தென்படும் முரண்நிலையை வலியுறுத்து வதாகவே பல வெளியீடுகள் வந்துள்ளன. மலையக மக்களது நிலைப் பற்றிச் சற்றும் பொருட்படுத்தாது, அவரிடமிருந்து வட கிழக்கு மக்கள் தம்மையும் வேறுபடுத்திக் கொண்டார்களென நிலைநாட்ட முயல்வதையும் அவற்றுள் காணக்கூடியதாக இருக்கின்றது. இது பொதுவாக நிலவும் கருத்தைத் தழுவியதாக இருந்தாலும், இரு இனத்தவருக்கிடையே காணும் முரன்பாடு என்பதும் உண்மையில் தவிர்க்க முடியாததொரு விளைவே. இந்த உண்மையை அலட்சிய மாக கைவிடாது, இவற்றுக்குரிய காரணமென்ன என்பதை பற்றற்ற வகையில் ஆராய்வது அவசியமாகின்றது. எமது கணிப்பில், பின் வரும் விடயங்களையே காரணங்கள் எனக் கொள்ளலாம்.
3.4. 1. அ, தோட்டப் பகுதிகள் தனியார் சொத்தாக இருந்ததனால் அயல் கிராமத்து சிங்களவர்கள் தன்னும் உட்பிரவேசிக்க முடியாத தாக இருந்தது. தோட்டத் தொழிலாளர்கள் கூட வெளியே சென்று குடியேற முடியாதிருந்தது. ஈரொட்டு வியாபாரம் என்பதற்கும் வெளி யார் அனுமதிக்கவில்லை. இவ்வாறு கூட்டுக்குள் அடைபட்டு இருந் ததனால் நாட்டில் தமக்குரிய நிலை என்ன என்பது பற்றி உணர

தோட்டத் தொழிலாளரது உரிமை மறுத்தல் 0 71
வும் தோட்டத் தொழிலாளருக்கு வாய்ப்பில்லாதிருந்தது. ஆகவே தமது நிலையிலிருந்து மீள்வதற்கு தாபன ரீதியாக ஒன்று பட்டுப் போராடலாம் என்பதையும் உணராதிருந்தனர்.
3.4. 1. ஆ. இவ்வாறு அடைபட்டு இருந்ததோடு, புவியியல் காரண மாகாவும் வட, கிழக்குத் தமிழ் மக்களோடு தொடர்ப்புக், கொள்ள முடியாதும் இருந்தனர். பெருந் தோட்டங்கள் இலங்கையின் மத்திய 19லைநாட்டிலேயே அமைந்திருக்கின்றன. அவற்றைச் சுற்றிவர வாழ்ப வர்கள் பெரும்பான்மைச் சமூகத்தவராகிய சிங்களவர். இதனால் தொலைவிலுள்ள வடக்கு கிழக்கு தமிழ் மக்களோடு நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்துவது முடியாதிருந்தது.
3.4. 1. இ. தோட்டத் தொழிலாளரைச் சுரண்டி வாழ்ந்த பெரிய கங் காணிகளும் வியாபாரிகளும் ஏனைய சங்கத்தவரோடு உறவுகள் வளர் விப்பதை விரும்பவில்லை. அவர்களோடு தொடர்பு கொண்ட கங்காணி களும் வியாபாரிகளும் அவர்களைப் போன்றே இந்திய வம்சாவழி யினராவர், தொழலாளர்களிடம் இருந்து சுருட்டிக் கொள்ளும் லாபத்தை தமக்குரிய ஏகபோக உரிமையாக்கவே விரும்பினார்கள். தோட்டத் தொழிலாளர் ஏனையோரிடமிருந்து ஒதுக்கப்படுவதை இக்காரணியும் வலுவடையச் செய்தது. "துண்டு முறை' எனும் சட்டத்தால் பெரிய கங்காணிமாரது கொ டு ைம க ஞ க் கு உள்ளான தொழிலாளர்களுக்கு 1921ம் ஆண்டு அதிலிருந்து மீள் வதற்கு சட்டசபை மூலம் பொன்னம்பலம் அருணாசலம் வழியமைத் துக் கொடுத்ததும் கூட இலங்கை தமிழர்கள் மீது வெறுப்புணர்வை வளர்க்க காரணமாக இருத்திருக்கலாம்.
3.4 1. ஈ தோட்டத் தொழிலாளர் வரத்தொடங்கிய காலத்திலிருந்து நூறு வருடத்திற்குப் பின்பாகவே ஆரம்பிக்கப்பட்ட தொழிற் சங்கங் கள் தம் தலைவர்களது தனி நபர் வழிபாட்டைக் கையாளும் அற்ப வழிமுறைகளைக் கொண்டவையாகவே இருந்தன. தோட்டத் தொழிலாளர் நாட்டின் ஏனைய தமிழ் மக்களோடு நெருங்கிய தொடர்பு கொள்ளக்கூடியதாக இருந்திருந்தால் இவ்வழிமுறையை கையாளுவது சுலபமாக இருந்திருக்க முடியாது. இவ்வித தொடர் புகள் எற்படாதிருக்கவே, இரு சாராருக்கும் இடையேயுள்ள வேறு பாட்டையும் பிரிவினையையும் நிலைத்திருக்கச் செய்ய தொழிற் சங்கங்கள் முனைந்தன.
3.4 1. உ. தாழ்த்தப்பட்ட குலத்தவர் என ஒதுக்கப்பட்டதாலும், பொருளாதார ரீதியாக அடக்கபட்டு கேவலமான வாழ்க்கை வாழ்

Page 51
72 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
ந்த காரணத்தாலும் தொழிலாள்ரிடையே தாம் தரம் குறைந்தவர் கள் எனும் உணர்வும் நிலவிற்று. வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் களுள் ஐம்பது சத விகித மட்டில் உயர் அந்தஸ்துப் பெற்ற குலத் தவர் இருக்கையில் தோட்டத் தொழிலாளர் பெரும்பாலும் அவற் றை விட மிகத் தாழ்ந்த குலங்களைச் சேர்ந்தவர்களாகவே யிருந்தனர். அவர்களை வேறுபடுத்தச் செய்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது எனலாம்.
3.4 1. ஊ. மலையகத் தமிழர்கள் 'இந்தியர்” என்றும் ஆகவே நாட்டிலுள்ள ஏனைய மக்களினின்றும் வேறுபட்டவர் என்று ஆட்சி யாளர் செய்த பிரசாரமும் அவர்களை விலத்தி வைப்பதில் பெரும் பங்கு கொண்டிருந்தது.
3.4 1. எ. தொழிற் சங்கத் தலைவர்கள் தனி நபர் வழிபாட்டுக் கொள்கையை வளர்த்தெடுப்பதில் செல்வாக்குப் பெற்ற இந்திய அரசியல் வாதிகளும், சினிமா நடிகர்களும் சேர்க்கப்பட்டனர். இத னால், இந்தியாவைச் சேர்ந்த அந்நியர்கள் எனவும், இந்திய நாட் டின் நலன்களுக்கே விசுவாசமாக உழைப்பவர்கள் எனவும் நாட்டில் நிலவிய பொதுக்கருத்தை இது வலுவடையச் செய்து, நாட்டு மக் களிடம் இருந்தும் வேறுபடுத்த, குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களிடமிருந்தும் வேறுபடுத்த, உதவிற்று.
3.4 1. ஏ. கல்வித் துறையிலும், ஏனையோருக்கு ஏற்ப வாய்ப்புக் கள் கொடுக்கப்படாத காரணத்தால் தரம் குறைந்தவர்களாகி இன் னும் விலத்தப்பட்டு அந்நியப் படுத்தப்பட்டவரானார்கள்.
3.4 1. ஒ. விலத்தப்பட்டிருப்பதை பெண் தொழிலாளர் மத்தியி லேயே முழுமையாகக் காணலாம். கணவனால் அடிமை என்றே கருதப்பட்டனர். இவர்களது சம்பளமும் இவர்களிடம் கொடுக்கப் படாது கணவனிடமே கொடுக்கப்பட்டது.
3.4 1. ஓ. வடக்கிலும் கிழக்கிலும் போதிய பொருளாதார முன் னேற்றம் ஏற்படாததனாலும், தொழில் வாய்ப்புக்கள் தேடிச் சென்று அங்குள்ள மக்களோடு இணைந்து வாழவும் முடியாது போயிற்று. மேற்குறித்த பொருளாதார சமூக காரணங்களால் இரு சமூகத்
தவரும் இணைந்து வாழ முடியாது போயிற்று என்பது தெளிவு. ஆனால் இரு சமூகத்தவரிடையே ஏதோ தனிப்பட்ட வெறுப்புத் தான் காரணம் என காட்ட முயலுகிறார்கள். இது முரண் நிலை களை ஸ்திரப்படுத்தவே உதவிற்று.

தோட்டத் தொழிலாளரது உரிமை மறுத்தல் () 73
3.4, 2. இலங்கைத் தமிழர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட் டுகள்
சமூக பொருளாதார முரண்பாடுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத் தப்பட வில்லை. மாறாக, உணர்ச்சிகளை தூண்டுவதாகவே பிரச் சார கோலமெடுத்தது. இதனால் இரு சமூகத்தவருக்கும் இடையே பகைமை ஏற்படும் அளவிற்கு வெறுப்பு வளர்ந்தது. பொருளாதார சமூக காரணிகளால் உருவான முரண்பாட்டின் அளவிற்கு பகைமை யும் வளர்ந்துள்ளது உண்மையே. ஆனால் மனித உறவு மட்டில் ஏற்பட்டுள்ள வெறுப்புத்தான் இவ்வித முரண்பாட்டிற்குக் காரண மெனத் தொடர்ந்தும் காட்ட முயல்வது இரு சாராருக்குமிடையே நிலவிவரும் ஒற்றுழைப்பின்மையை அகற்ற உதவாது. பகுப்பாய்வு செய்ய முற்படாதவர்கள் பின்வரும் இரு குற்றச்சாட்டுகளையே அடிக்கடி முன்வைப்பார்கள்.
அ. 1948ம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டத்தைக் கொண்டு தோட்டத் தொழிலாளரது பிரஜாவுரிமைகள் பறிக்கப்படும் போது அதனை எதிர்த்து வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்கள் தீவிர ஆர்பாட் டம் செய்யவில்லை,
ஆ. தோட்டங்களில் ஆசிரியர்களாகவும், லிகிதர்களாகவும் வேலை பார்த்த வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்கள் மலையகத் தமி ரது நலன்களில் அக்கரை கொள்ளவில்லை.
முதற் குற்றச்சாட்டில் ஒரளவு உண்மை அடங்கியுள்ளது என் பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு வாக்காளரது ஆதரவைப் பெற்ற தமிழ் காங்கிரசின் உறுப்பினர் ஒருவர், பிரஜா வுரிமைச் சட்டத்தை ஏற்று ஐ. தே. கட்சியினரோடு சேர்ந்து வாக் களித்தார். ஆனால், அதே வேளை, தமிழ் காங்கிரசைச் சேர்ந்த திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் இச்சட்டத்தைக் கண்டித்த தோடு, ஒரு சிலரோடு கட்சியிலிருந்தும் வெளியேறி தமிழரசுக் கட்சியை நிறுவினார். 'இன்று மலையக தமிழ் மக்களது கழுத் தில் கத்தி விழுந்தது. நாளை பாரம்பரியமாக வாழ்ந்த தமிழர்கள் மீதும் விழச் செய்யும்” என்றே கூறினார். இதனின்றும் வடக்கு கிழக்கு மக்களது ஏகோபித்த பிரதிநிதியாகவே தமிழ் காங்கிரஸ் கட்சி இருந்ததெனக் கூறமுடியாது. வெளியேறிய பிரிவினர் பிரஜா வுரிமைச் சட்டத்தை எதிர்த்து வெகுஜனப் போராட்டம் நடத்தா விட்டாலும், தமது கண்டனத்தை தெளிவுபடுத்தி அதற்குரிய கார ணத்தையும் திட்டவட்டமாக கூறியிருந்தார்கள்.
அரசாங்கத்தோடு பிரஜாவுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக் களித்த அதே தமிழ் காங்கிரசினர், முன்னர், சிங்கள பெரும்பான்மை

Page 52
74 L) பெளத்த சிங்களவரும் சிபான்மையினரும்
யினரோடு சிறுபான்மை இனங்களும் ஐம்பதுக் ஐம்பது வீதமாக அதி காரப் பங்குகொள்ள வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத் திருந்தனர். ஆனால் அது அப்போது நிராகரிக்கப்பட்டிருந்தது. அதே கட்டத்தில் பல சிங்களப் பிரிவினர் தோட்டத் தொழிலாளர் வாக்குரிமை பெறுவதையும் மறுத்து வந்தார்கள். ஆகவேதான் அரசாங்கத்தோடு சேர்ந்து வாக்களித்ததனால், வாக்குரிமை வழங்கு வது தமது நலன்களைப் பாதிப்பதாக இருக்குமெனக் கண்ட சிங்கள வருடன் தனக்கும் உடன்பாடு உண்டு என்றே காட்டிக்கொண்டார் எனலாம். இப்போக்குதான், ஏனைய சிறுபான்மையோரையும் பரந்து வளர்ந்துவரும் பாகுபாடுகளுக்குப் பலியாக்கும், எனும் ஆபத் தை விட, தொழிலாளருக்கு வாக்குரிமை வழங்குவதனால் ஏற்படக் கூடிய ஆபத்து’, என்பதே பாரதூரமானது என்றும் காட்டிக் கொண் டார். இதே தமிழ் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையோரது இன்றைய ஜனநாயக உரிமைப் போராட்டத்தில் கணிக்கத்தக்க அளவு பங்கு பற்ற தவறியும் விட்டது.
ஆழ்ந்து ஆராயும்போது, தமிழ் காங்கிரஸ் தலைமை தாங்கிய ஒரு பகுதியினர் மட்டுமே பிரஜாவுரிமைச் சட்டத்தை ஆதரித்தனர் என்பது தெளிவாகின்றது. ஆகவே, 1948ம் ஆண்டின் பிரஜாவுரி மைச் சட்டத்தை வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த தமிழர்கள் எல் லோருமே கண்டிக்கத் தவறினார்கள் எனக் கூறிவருவது முழுவதும் உண்மை என்பதற்கில்லை. சட்டத்தை ஆதரித்த பிரிவினரும் இங்கு வாழும் தமிழினம் முழுவதையும் பிரதிநித்துவப் படுத்தினார் கள் என்று கூறுவதற்கிடமில்லை. பெரும்பாலானோர் சட்டத்தின் விளைவுகள் இன்னதென்பதை ஆராய்ந்து அறியக்கூடியவராகவும் இருந்திருக்க முடியாது. இது சம்பந்தமாக போதிய அளவு விப ரங்கள் உணர்த்தப்பட்டவராகவும் இருக்கவில்லை. இதுவரை, ஒடுக்கி அடக்கப்படும் சிறுபான்மையினர் என்றே கேள்விப்படாத மக்கள் மீது சகோதரத்துவ உறவு கொள்வார்கள் என எதிர்பார்க் கவும் இடமில்லை,
இச்சட்டத்தினால் பாதிப்புற்ற தொழிலாளரே இதனை எதிர்த்து தீவிரமானதும் தொடர்ச்சியானதுமாகிய போராட்டம் ஏதேனும் நடத் தியதாக இல்லை. அவர்களுக்குத் தலைமை தாங்கியவர்களே இந் நிலைக்குப் பொறுப்பாவர். 8 விளைவுகளை விளக்கி தொழிலாள ரையும் ஒன்று திரட்டி ஆர்பாட்டம் செய்ய முயற்சிக்கவேயில்லை. இதற்குப் பதிலாக, தலைநகரமாகிய கொழும்பு நகரத்தில், ஒரு சில நடுத்தர வர்க்கத்தினரைக் கொண்டு அரைக்குறையாக ஒழுங்கு செய்த, விளைவுகளையும் ஏற்படுத்த முடியாத போராட்டத்தையே

தோட்டத் தொழிலாளரது உரிமை மறுத்தல் () 75
நடத்தினார்கள். 1946ம் ஆண்டு சனத்தொகை புள்ளிவிபரத்தின் படி இலங்கைத் தமிழரை விட இந்திய வம்சாவழி தமிழர்களே அதிக மாக இருந்தார்கள். இம்முயற்சி ஒருவித பயனையும் அளித்ததாக இருக்கவில்லை. தொழிலாளர் மத்தியில் பிரச்சினையைக் கொண்டு செல்லாதிருந்ததற்குரிய காரணத்தை ஆராய்ந்தால் மட்டுமே மூல இரகசியம் வெளிப்படும்.
இச்சட்டத்திற்கு எதிராக தொழிலாளரைத் திரட்டிப் போராடி யிருந்தால், அந்நிய செலாவணியில் 75% குறைந்து நாட்டின் பொருளாதாரத்தையே ஸ்தம்பிக்கக் கூடியதாக இருந்திருக்கும். அரசாங்கமும் இதனை முறியடிக்க முயன்றிருந்தால் சட்ட ஒழுங்கு களை நிலைநாட்டுவதும் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக இருந் திருக்கும். தமிழ் காங்கிரசுக் கட்சியில் இச்சட்டத்தை எதிர்த்த பிரிவினரும், வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளருக்கு ஆதர வாக, வடக்கிலும், கிழக்கிலும் உள்ளத் தமிழ் மக்களைத் திரட்டி, ஆர்ப்பாட்டம் செய்ய உற்சாகமளித்திருக்கும். தமது நலன்களைப் பாதிக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக சேர்ந்து போராடுவதில் இரு சமூகத்தவரும் ஒன்றிணைய ஆரம்பித்திருப் பார்கள். நாட்டின் அரசியல் நிலையும் சீரழிந்ததாகி அரசாங்கமும் விலகவேண்டி நேர்ந்திருக்கும். தொழிலாளரது தலைவர்களும் அர சாங்கத்தை வீழ்த்தி அதிகாரத்தைக்கூட கைப்பற்றக்கூடியதாக இருந்திருக்கும். அவ்வாறு இயங்காது விட்டதனால், இவ்விதப் போக்கினை தொழிலாளரது தலைவர்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகின்றது. ஆகவேதான் எவ்வித அவல நிலைக்குத் தள்ளப் பட இருக்கிறார்கள் என தொழிலாளரை உணரவைக்கும் பணியில் ஈடுபடவும் விரும்பவில்லை.
இதனாலேதான், இக் கால கட்டம் தொடக்கம் இ ல ங் ைக இந்திய காங்கிரசிலுள்ள தொழிலாளர் தலைவர்களுக்கும் அன்று ஆட்சியிலிருந்த ஐ. தே. க. த ைல வ ர் களுக்கு ம் இடையே இரு சாராருக்கும் நன்மை தரத்தக்க நல்லுறவு வளர்ந் தது என்பது வியக்கத்தக்க செய்தியாகவும் இரு ப் ப தி ல் ைல. தொழிலாளர் மத்தியில்பெரும் கட்சியாகஇருந்த இலங்கை இந் திய காங்கிரசை ஆதரித்த சக்திகளும் ஆட்சியிலிருந்த ஐ. தே. கட்சி யினருக்கு ஆதரவு கொடுத்த சக்திகளும், அரசாங்கத்தை ஆதரித்து வாக்களித்த தமிழ் காங்கிரசை ஆதரித்த சக்திகளும் ஒப்பிடுகையில் நிலச்சுவாந்தார்களாகவும், வியாபாரச் செல்வந்தர்களாகவுமே இருந் தார்கள் என்பதும் ஏதோ தற்செயலாக ஒழுங்கு செய்யப்பட்டதாக இருக்கவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, வடக்கிலும் கிழக்

Page 53
76 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
கிலும் உள்ள தமிழர்கள் 1948ம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட் டத்தை எதிர்ப்பதில் ஆதரவு தரவில்லையென பெரிதுபடுத்தி குற் றஞ் சாட்டிக் குறைகூற முயல்வது உண்மைக்கு முற்றிலும் முர னானதாகவே இருக்கின்றது. அதே சமயம் தங்களின் பிரச்சினை களுக்கு இவர்கள் இந்தியாவையே நம்பியிருந்தனர் என்பதும் குறிப் பிடத்தக்கது.
மாறாக, தோட்டத் தொழிலாளரது தலைவர்கள், உட்பட எல்லா இனத்தவரது நிலச்சுவாந்தார்களும் ஏனைய உயர் மட்டத் தவர்களும் ஒன்றிணைந்த வகையில் இச்சட்டத்தை எதிர்க்கவில்லை என்பதே உண்மையாகும். இதற்குப் பதிலாக, தொழிலாளரது வாக்குரிமையைப் பறிக்க எத்தனித்த அரசாங்கத்தின் செயல்களை ஏற்றுக் கொள்பவர்களாகவே இருந்தார்கள். ஆனால் இலங்கை இந்திய காங்கிரசின் பிசுபிசுத்துப்போன போராட்டத்தில் பங்குபற்றி யவரும் பிரஜாவுரிமைச் சட்டத்தினால் பாதிப்புற்றவருமாகிய நடுத் தர வர்கத்தினரும் தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்த பிரிவினரும், சிறுபான்மையோரது s2 f69pLD களைப் பிடுங்கி எடுக்கும் பாரபட்சமான சட்டங்களை எதிர்ப்பதில் தமக்கிடையேயுள்ள ஒருமைப்பாட்டை நன்கு உணர்ந்தவர்களாகவே யிருந்தனர்.
இந்திய வம்சாவழியினர் மத்தியிலுள்ள உயர் வர்க்கத்தினரது தலைமையையே தோட்டத் தொழிலாளரும் முழுமையாக நம்பி வாழத் தொடங்கியதே இச்சட்டத்தின் மிக வருந்தத்தக்கக விளை வாக இருந்தது. இத் தலைவர்களும் எக்கதியுமற்ற தொழிலாளரது பொருளாதார அரசியல் நலன்களைப் பாதுகாத்துக் கொடுப்பதைக் கைவிட்டு, தமது சுய நலன்களைப் பூர்த்திசெய்யும் நோக்கத்துட னேயே, ஆட்சியாளருடன் கூடி அரசாங்கத்தோடு இணைந்து நிற் பவர்களாக மாறிவிட்டனர்.
3.4. 3. இலங்கைத் தமிழரின் புறக்கணிப்பு
பொதுவாக சுமத்தப்படும் இரண்டாவது குற்றச்சாட்டு இரண்டு அம்சங்களைக் கொண்டதாக இருந்தது. ஆசிரியர்களாலும் ஏனைய வேலைகளில் அமர்த்தப்பட்ட இலங்கைத் தமிழராலும் தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் எனும் புகார் ஒன்று, இதே சமூகத்தைச் சேர்ந்த தோட்ட அலுவலர்களினால் இம்சைப் படுத்தப்பட்டது மற்றொன்று.

தோட்டத் தொழிலாளரது உரிமை மறுத்தல் () 77
ஆரம்பப் பாடசாலைகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென தோட்ட முதலாளிகளை அரசாங்கம் வற்புறுத்தும்வரை கல்வி வசதி கள் வழங்கப்படாமலே இருந்தது. தோட்ட முகாமையாளரும் ஆசிரியர் பணியில் ஈடுபடுபவராக அவர்களை மதிக்கவில்லை. மாறாக பெற்றோர் வேலைத் தளத்தில் இருக்கும்போது பிள்ளை களைப் பராமரிப்பவர்களாகவே கருதப்பட்டனர். பரம்பரைப் பரம் பரையாக சந்தர்பங்கள் மறுக்கப்பட்டு வந்த இச்சமூகத்தைச் சார்ந்த பிள்ளைகள், நவீன கல்விமட்டத்திற்குரிய வளர்ச்சியை பெற வேண்டுமாகில், அவர்களுக்கென விசேட பாடதிட்டம் தயாரிக்கப் பட வேண்டும். இவ்வித பணிக்கோ தோட்டப் பாடசாலைகள், தயாரான நிலையில் இருக்கவேயில்லை. ஆசிரியர்களுக்கு வழங்கிய சம்பளமும் அவர்களை உற்சாகப்படுத்தியதாக இல்லை. இதனால் இவ்வாசிரியருள் பலர் மனமுடைந்து விரக்தியுற்றவர்களானார்கள். பலர் வேறுகதியில்லாதவராகவே தம்மைக் கருதிக்கொண்டார்கள். ஏனையோர், சூழலை உணர்ந்தவர்களாக, தம் தொழிலின் மகத் துவத்தை பொருட்படுத்தாதவர்களாக மாறிவிட்டார்கள், கடமை களைச் செய்ய முன்வரா திருப்பதற்கு போதிய வசதிகள், சந்தர்ப் பங்கள் கொடுக்கப்படுவதில்லை என சாட்டுக் கூறுவதற்கு இடமில்லை யென்பதும் உண்மைதான். எவ்வித குறைபாடுகளுக்கிடையே கற் பிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். ஒரு வேளை, குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு இருந் தால், அதிகாரிகளும் போதிய சீர்திருத்தங்களை செய்திருப்பார்கள். இவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், அலட்சியமாக இருந்தனர் என எழுந்த குற்றச்சாட்டுக்கும் உரியவராகின்றனர். நிலைமை இவ்வாறு இருந்தும், ஒரு சில ஆசிரியர்கள் கடமை உணர்வோடு தொழில் புரிந்தார்கள் என்பதையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும். இவ்வித அயரா உழைப்பினால்தான் தோட்டப் பகுதியை சேர்ந்த நூற்றிஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல் கலைக் கழகத்தில் புகக் கூடியதாக இருந்தது. ஆகவே இவர்கள் மீது குற்றம் சுமத்த முற்பட்டவர்கள், தனிப்பட்ட ஒரு சிலர் தம் ஆசிரியக் கடமைகளைச் செய்யத் தவறினார்கள் என்பதுடன், திறமையுடன் கடமையாற்றக்கூடிய அளவு வசதிகளும், சூழலும் இருக்கவில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அதே வேளை தோட்டத் தொழிலாளரைப் போல் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கங்காணிகளும் ஏனைய உயர் உத்தியோகத்தர்களும் தம் பிள்ளைகளுக்கு சிறந்தக் கல்வியை பெற்றுக்கொடுத்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இவ்வித வாய்ப்புகளை பெற்ற வர்களே தோட்டங்களுக்கு திரும்பிச் சென்று ஆசிரியப் பொறுப்பு களை ஏற்றதாக இல்லை. ஆகவேதான், வடக்கிலும் கிழக்கிலு

Page 54
78 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
மிருந்து தமது குடும்பங்களையும், வாழ்ந்து பழகிய சூழலையும் விடுத்து கடமை புரிந்த ஆசிரியர்கள் பாராட்டப்பட வேண்டியவராகின் றனர். தோட்ட அலுவலர்களதும் ஏனைய உத்தியோகத்தவர்களதும் நிலை வேறு. அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த கடமையே தொழிலாளரை மேற்பார்வை செய்யும் அதிகாரிகளாகவும் முரண்படு பவர்களாகவும் இருக்கச் செய்தது. தொழிலாளரது எதிர்கால நலன் களையும் நிர்ணயிப்பதில் அதிகாரம் பெற்றவர்களாகவும் இருந்தனர். அதுமட்டுமல்ல. தோட்டத் தொழிலாளருக்கும் தோட்டத் துரைமாருக் கும் இடையிலிருந்து கடமையாற்றுபவர்களாகவும் இருந்தார்கள். இந்திய வம்சாவழியினரை சேர்ந்தவர்களும் இவ்வித தொழில் செய் ததினால் தொழிலாளரோடு இவ்விதமான தொடர்பினையே கொள்ள வேண்டியிருந்தது, கங்காணிகளும் இவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டி இருந்ததனால், இருசாராரும் தமக்குள் ஒன்று சேர்ந்து தொழிலாளரைச் சுரண்டி உழைப்பவர்களாகவேயிருந்தனர். இத னால் தொழிலாளரும் இப்பிரிவினரை சந்தேக கண்ணோட்டத்துட னேயே அணுகினார்கள். சில கட்டங்களில் தொழிலாளரது பகை மைக்கும் ஆளானார்கள். ஆகவே எங்கிருந்து வந்தவர்கள் என்பது பிரச்சினைக்குரியதாக இருக்கவில்லை. தோட்ட நிருவாகத்தில் எவ் விதப்பொருப்புகளை கையாண்டார்கள் என்பதே நம்பிக்கையின்மைக் கும் முரண்பாட்டிற்கும் காரணமாக இருந்தது.
தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிர மடையத் தொடங்கியதும் இலங்கைத் தமிழர் மீது சுமத்தும் குற்றச் சாட்டுகளது வேகமும் (தீவிரமும்) குறைந்து கொண்டே வருகின் றது. 1956ம் ஆண்டின் அரச கரும சட்டம் நிறைவேற்றப்பட்ட தும் இரு சாராரும் தம்முள் ஒற்றுழைப்பு அவசியம் என்பதையும் உணரத் தொடங்கினர். இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட காலங்களில் தோட்டத் தொழிலாளர் அதன் பாதக விளைவுகளை நன்கு உணரா திருந்தனர் என்றாலும், காலப்போக்கில் நடைபெற்றுக் கொண்டு வந்த சம்பவங்கள் அவர்களையும் உசார் படுத்திக் கொண்டே வரு கின்றது. தோட்டங்கள் தேசியமயமாக்கப் பட்டதோடு ஏனைய மக்களோடும் தொடர்புகள் உருவாகியதனால் இரு சமூகதவருக்கும் இடையேயுள்ள உறவுகளும் வலுப்பெற்று வருகின்றன. இதனோடு இனரீதியான வன்செயல்களும், முடிவுகள் எடுக்கவேண்டிய நிர்பந்த நிலையும் உருவாகிவிட்டது. தோட்டங்களிலேயே தொடர்ந்தும் இருப்பதா, இந்தியா செல்வதா, அல்லது வடக்கு கிழக்கு பகுதி களில் குடியேறுவதா என்பதே தீர்க்கப்படவேண்டிய பிரச்சினையா கின்றது. 1976ம் ஆண்டின் நட்சா (NADSA) திட்டத்தினால் வெளியேற்றப்பட்ட தொழிலாளர் பலர் தமிழரது பாரம்பரியப் பிர

தோட்டத் தொழிலாளரது உரிம்ை மறுத்தல் () 79
தேசங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் சேர்ந்து வாழத் தீர்மானித்துவிட்டார்கள். இதுவரை ஏறத்தாள 81,000 தோட்டத் தொழிலாளர்கள் அங்கு சென்றுள்ளார்கள்.
மலையகத் தமிழ் மக்களை பாரம்பரியத் தமிழர்கள் எவ்வாறு வரவேற்பார்கள் என்பதை பொறுத்தே இவ்விரு சமூகத்தவரது ஒருமைப்பாடு தங்கியுள்ளது. 1977ம் 1981ம் ஆண்டுகளில் நடந்த வன் செயல்களை அடுத்து இலங்கைத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த அநேக இளைஞர்கள் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை தமது பாரம் பரிய பிரதேசத்துக்கு அழைத்து குடியேற உதவினார்கள். இவ்வித சகோதர மனப்பான்மையும் கைகொடுத்துதவ முன்வருவதும் உறவு களில் ஏற்பட்டுள்ள ஒரு திருப்பமெனக் கூறலாம். இதுவே மலையக மக்கள் பெருந்திரளாக பாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் குடியேறு வதற்கு அத்திவாரமாக இருக்கும் என நம்பத் தூண்டுகிறது. அதே வேளை நோக்கம் மாசற்றதாக இருந்தாலும் குடியேறுவதில் பல இடர்கள் ஏற்படவே செய்யும். குடியேறிய பகுதிகளில் இரு சமூ கத்தவருக்கும் இடையே கணிசமான அளவு இணைப்பு ஏற்பட ஒரு தலைமுறைக்காலமாவது செல்லவேண்டும்.
"பாதுகாப்பு நிமித்தமாக மலையக மக்கள் வட-கிழக்கு மாகா ணங்களில் குடியேற வேண்டும். நாம் அவர்களது பிரச்சினைகளை தீர்த்துவைக்க தயாராக இருக்கிறோம். அவர்களது பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென மாவட்ட அபிவிருத்தி சபைகளில் நலம்புரி யானையாளரையும் நியமிக்க இருக்கின்றோம்.” என்று திரு அமிர் தலிங்கம் தெல்லிப்பலையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றி ல் கூறினார்.1
3.5 தேசிய மயமும் வேலையற்ற நிலையும்
இலங்கையில் இன்று இருபது சதவிகிதமானோர் (20%) வேலை யில்லாப் பிரச்சனையால் வாடுகின்றனர். இவர்களில் பெரும் பாலானோர் மலையக மக்களாவர். 1965ம் ஆண்டுக்கு முன் அவர் களுக்கு தொழில் ரீதியாக ஒரு பிரச்சிைனயும் இருக்கவில்லை 16 வயதை அடைந்த ஆண் பெண் இருபாலாருக்கும் வேலை பெறும் நிச்சயமிருந்தது. ஆனால் "தேசியமயம்” என்ற போர்வையின் கீழ் பெருந்தோட்டத்துறை "சிங்களமயமாக்கப்” பட்டபின் (1972-1975) நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தமிழர் மட்டுமே வகித் து வந்த அநேகமான பதவிகளில் சிங்களவர் அமர்த்தப்பட்டனர். இத னால் 90% உத்தியோகத்தர் சிங்களவர் என்ற நிலை தோன்றியது.

Page 55
80 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
அதுமட்டுல்ல பல சிறு, நடுத்தர தோட்டங்களில் 60% தொழிலா ளர்களும் சிங்களவர் என்ற நிலை வந்துவிட்டது.
1979ல் பிரதமராயும் பெருந்தோட்டத் துறைக்கு பொறுப்பாள ராயுமிருந்த இன்றைய ஜனாதிபதி திரு. ஜே. ஆர். ஜயவர்த்தனா அனுப்பி வைத்த சுற்றறிக்கை வேலைவாய்ப்பை பற்றி பின் வரு மாறு கூறுகின்றது.
1) பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த கிராம மக்களுக்கு முதலிடம்
கொடுக்கப்பட வேண்டும்.
2) புதிதாக வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மலையக மக்கள்
பிரஜாவுரிமை பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
ஆனால் 1978ம் ஆண்டு யாப்பு என்ன கூறுகிறது என்றால் 1989ம் ஆண்டுவரை பிரஜாவுரிமை பெற்றவர்களும், பெறாதவர் களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். எனினும் இதனை எவரும் நடைமுறை படுத்தாததால் இம்மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளா கின்றனர்.
1977ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொருளாதார திட்டத்தின் கீழ் பெருந்தோட்டத்துறை ஒரு வேலை வாய்ப்புக்களமாக மதிக்கப் பட்டது ஒரு தவறான நடவடிக்கையாகும். இதிலும் பெரும்பான்மை இனத்தவர்க்கே முன்னுரிமை என்ற நிலை தமிழர்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கியது.
வேலையின்மை, குறைந்ந நாள் வேலை, ஊழல், இளைஞர்கள் கைதாவது போன்ற பல்வேறு பிரச்சினைகளால் இன்று மலையக மக்கள் நசுக்கப்பட்டிருக்கிறார்கள். (இதனால் வெறுப்படைந்திருக் கிறார்கள்). தொழிற்சங்கங்களின் தலையீடின்றி இவர்கள் நடத்தும் திடீர் வேலை நிறுத்தங்கள் மூலம் தங்களது எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர் என்பதாகத்தான் நாம் என்ன வேண்டும்.
3.6. இன்றைய ஆட்சியில் தொண்டமான்
1977ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசும், தமிழ் காங்கிரசும், தமிழரசுக்கட்சியும் ஒன்று சேர்ந்து அவற்றின் தலை வர்களை கூட்டுத் தலைவர்களாகக் கொண்ட தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணியை உருவாக்கினர். சுதந்திர இறைமையுள்ளதும் மதசார்பற்ற சோசலிச அரசுமாகிய தமிழீழத்தை மீளவும் புனருத்தா

தோட்டத் தொழிலாளரின் உரிமை மறுத்தல் 0 84
ரணம் செய்து புதிய முறையில் இயங்குவதையே பிரதான கோரிக் கையாக கொண்டு இம்முன்னணி 1977ம் ஆண்டில் நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவதாக, தீர்மானித்தது. அதேவேளையில் இ. தொ. கா. தனிநாடு அமைப்பதில் தனது எதிர்ப்பையும் தெரி வித்துக் கொள்ள தவறவில்லை. -
1977ம் ஆண்டுத்தேர்தலில் 139 ஆசனங்கள் பெற்று பாராளு மன்றத்தில் 516 பெரும்பான்மையோடு ஜே. ஆர். ஜயவர்த்தனா ஆட் சியதிகாரத்தை ஏற்றார். எதிரணியில் த. ஐ. வி. மு. 18 ஆசனங்க ளோடு பிரதான கட்சியாயிற்று. மலைநாட்டுத் தமிழருள் திரு. தொண்ட மான் மட்டுமே போட்டியிட்டு 3 அங்கத்தவர் கொண்ட நுவரெலியா தொகுதியின் மூன்றாம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய் யப்பட்டார். 1974ம், 1975ம் ஆண்டு தேர்தல் தொகுதி நிர்ணயக் கமிட்டி முடிவின்படி 1971ம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டில் குறிப் பிடப்பட்ட மலைநாட்டுத் தமிழரென வகுக்கப்பட்டவருள் 43.3% இலங்கைப் பிரஜைகளாவர். 1974ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குடியரசு யாப்புத் திருத்தப் பிரேரணை ஒவ்வொரு தொகுதிக்குரிய குடிசனத் தொகையை 75,000ல் இருந்து 90,000 ஆக மாற்றிற்று. தொகுதிகள் 192லிருந்து 168க்குக் குறைக்கப்பட்டன. புதிய கணிப் பில் ஊவா, மத்திய மாகாணங்களில் மலைநாட்டுத் தமிழரது பிரதி நிதித்துவத்துக்கென ஆறு தொகுதிகள் கிடைத்திருக்க வேண்டும். இது ஏற்கப்படவில்லை. இ. தொ. கா. வும் ஒரு தொகுதியில் மட் டுமே போட்டியிட்டது.
த. ஐ. வி. கூ. பெற்ற ஆசனங்கள் அதனை எதிர்கட்சிகளின் பிர தான உறுப்பாக்கிற்று. தமிழரது ஐக்கியத்தின் பலத்தைக் கண்ட திரு. ஜயவர்த்தனா 1979ம் ஆண்டு திரு. தொண்டமானை அமைச் சரவையில் சேர்த்துக் கொண்டார். தொழில் அமைச்சர் பதவி கொடுக் காது கிராமிய அபிவிருத்தி அமைச்சராகவே சேர்த்துக் கொண்டார். த. ஐ. வி. கூட்டணியின் தலைவர்களுள் ஒருவராகிய தொண்டமான் பாராளுமன்றத்தில் வந்து சேர்ந்ததும் தோட்டத் தொழிலாளரர் மீது ஐ.தே.க. கடைபிடித்த கொள்கை மேலும் தீவிரமடைந்தது.
தோட்டத் தொழிலாளரைப் பொறுத்தவரை இ.தொ.கா. தலைவர் அரசாங்கத்தவராகியும் ஒரு வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக, மேலும் பல இடர்களுக்கு ஆளாகினர். 1977, 1981, 1983, 1984, 1986ல் தோட்டப் பகுதிகளில் தமிழ் பேசும் மக்க ளுக்கு எதிராக நடத்தபட்ட வன்செயல்களே இதற்கு உதாரணமாகும். ஜனாதிபதி ஜயவர்த்தனாவின் அரசாங்கத்தில் திரு. தொண்டம

Page 56
82 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
னைச் சேர்த்துக் கொண்டதுவே இத்தொழிலாளருக் கெதிரான வன் செயல்கள் தீவிரமடைந்ததிற்கு காரணமாக இருக்கலாம். அவர் ஆட்சி யாளருடன் சேர்ந்ததினால் ஜனாதிபதி ஜயவர்த்தனாவுக்கே நன்மை ஏற்பட்டது. கூட்டுத் தலைவர்களுள் ஒருவராக இருந்துக் கொண்டே அரசாங்கத்தோடு சேர்ந்ததனால் எதிரணியின் பிரதான கட்சியாக இருந்த கூட்டணியில் பிளவை ஏற்படுத்தி வலு குறைவித்தது ஒரு உதாரணமாகும். மலைநாட்டுத் தமிழர் மத்தியில் பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பெற்றவர்களது தொகை கூடக் கூட ஏனைய கட்சிக ளிடம் வாக்குகள் செல்லாது. ஐ.தே. கட்சிக்கு செல்லவைத்து ஜனாதி பதி ஜே.ஆர். ஜயவர்த்தனாவுக்கு உதவியளித்தார். 1982ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் அடுத்து வந்த 1982ம் ஆண்டு சர்வசன வாக்கெடுப்பிலும் இது நிரூபிக்கப்பட்டது.
1982ம் ஆண்டு மார்கழி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பதாக த.ஐ.வி.கூ. தீர்மானமெடுக்கையில் திரு. தொண்ட மானது இ.தொ.கா. திரு. ஜயவர்த்தனாவை ஆதரிக்கும்படி தொழி லாளரை வேண்டி நின்றது. நுவரெலியா மாவட்டத்தை உதாரண மாகக் கொண்டால்' வாக்காளர் தொகை 20.1% ஆக உயர்ந்துக் கொண்ட நிலையில், ஜனாதிபதி தேர்தலை நாடி நின்ற திரு. ஜயவர்த் தனாவுக்கே பெரும் ஆதரவு கொடுத்தது. ஜனாதிபதித் தேர்தலிலும் சர் வசன வாக்கெடுப்பிலும் முழு நாட்டிலேயே ஜ. தே. க. அதிகப் படியான வாக்குகள் பெற்ற இடங்கள் பின்வருமாறு:12
ஜனாதிபதித் தேர்தல் சர்வசன வாக்கெடுப்பு 1. நுவரெலியா - 63.01% 58.2% 2. கண்டி - 51.80% 47.09% 3. பதுளை - 58.51% 54.39%
பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களும் இ.தொ.கா. வை ஆதரிக்கும் ஏனைய இந்தியத் தமிழர்களும் இந்த மாவட்டங்களிலே வசிக்கின்றனர்.
சர்வசன வாக்கெடுப்பைப் பொறுத்தவரை, ஆட்சியாளரது காலத்தை மேலும் 6 வருடங்களாக நீடிக்கக் கோரியதை பெரும் பாலான கட்சிகளோடு சேர்ந்து த. ஐ. வி. கூ. எதிர்பிரசாரம் செய் கையில், திரு. தொண்டமான் மட்டும் அதனை ஆதரித்தார். மலை நாட்டுத் தமிழரது வாக்குகளில்லாமல், சர்வசன வாக்கெடுப்பில் அரசாங்கம் வென்றிருக்க முடியாது.

தோட்டத் தொழிலாளரின் உரிமை மறுத்தல் () 83
அமைச்சரவையில் திரு. தொண்டமான் சேர்ந்தது தொழிலாள வர்க்க எதிர்ப்பை பிளவுபடுத்த உதவிற்று. தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத சட்டங்களை இ. தொ. கா. ஆதரித்ததிலிருந் தும், 1980ம் ஆண்டு நாட்டின் அரசியலில் அவர்கள் அணுகிய முறை களிலிருந்தும் இது தெளிவாகின்றது. உதாரணமாக 1980ம் ஆண்டு நடந்த பொது வேலை நிறுத்தத்தில் ஏனைய தொழிற் சங்கங்கள் ஒன்று சேர்ந்தபோதும் இ. தொ. க. வை பங்குபற்ற விடவில்லை. அதே போன்று சம்பள உயர்வு போராட்டத்தில் தொழிலாளர்களது வற்புறுத்தலினாலேயே தொண்டமான் அதற்கு சம்மதித்தார். இந்த அரசாங்கத்தோடு ஒற்றுழைத்த காரணத்தினாலேயே 1981ம் ஆண்டு சர்வதேச உணவுத்துறையினதும் இணைந்த துறைகளினதும் தொ ழிற் சங்க சம்மேளனத்திலிருத்து இ. தொ. கா. நீக்கப்பட்டது.
ஒரு சில முக்கிய சட்டங்கள் வாயிலாக இத்தொழிலாளருக்கு சில சலுகைகள் கொடுக்கப்பட்டதாக இருந்தாலும், அவற்றை நடை முறைபடுத்துவதில் தொழிலாளரது அவசிய தேவைகள் பூர்த்திச் செய்யப்படுவது நோக்கமாக இருக்கவில்லை.
அ. 1978ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியல் யா ப் பி ல் பரம்பரையான பிரஜைகள் என்றும் பதிவு செய்யப்பட்ட பிரஜைகள் என்றும் இருந்த வேறுபாடு நீக்கப்பட்டது.
ஆ. அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதில் பத்து வருடகாலத் திற்கு நாடற்றவர் எனப்படுவோரும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
இ. 1978ம் ஆண்டு உள்ளூராட்சி சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் இ.தொ. கா. அபேட்சகர்கள் அட்டன், டிக்கோயா, தலவாக்கொல்லை தலத் தாபன சபைகளுக்கு தெரிவு செய்யப் பட்டனர். அதனோடு, முதல் மாவட்ட சபைத் தேர்தலில் இ. தொ. கா. வின் 5 பிரதிநிதிகள் கொழும்பு, நுவரெலியா, கண்டி, இரத் தினபுரி, பதுளைச் சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.
ஈ. இச்சலுகைகள் மலைநாட்டுத் தமிழரது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைத்ததாக இல்லை. ஆகவே அமைச்சர வையில் திரு. தொண்டமான் தொடர்ந்து இருப்பதனால் ஏதேனும் நன்மை கிடைப்பதாக இல்லை. உண்மையில் தொழிற் சங்கங்களின் தீவிரத் தன்மையை மங்க வைத்துவிட்டது. மலைநாட்டுத் தமிழரது நலன்களுக்கு மாறாகவே போய்க்கொண்டிருக்கிறது. 1982ம் ஆண்டு ஆட்சியாளரது காலத்தை நீடிக்கக் கோரிய சர்வசன வாக்கெடுப்பில் இ. தொ. கா. அங்கத்தவர்களை எதிர்த்து வாக்களிக்கும்படி திரு.

Page 57
84 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
தொண்டமான் வேண்டியிருந்தால் 1983ம் ஆண்டில் பொதுத் தேர் தல் நடைபெற்றிருக்கும். மலைநாடடுப் பகுதியில் கூடுதலானோர் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். தொழிலாளரது குரலின் வலிமை யும் ஓங்கியிருக்கும். பரந்த அடிப்படையில் நாட்டின் தொழிலாளரது இயக்க வளர்ச்சியை, அணுகும்போது, 1981ம் ஆண்டு நடந்த பொது வேலை நிறுத்தத்தில் திரு. தொண்டமான் தனது அங்கத்தவர்களை ஆதரிக்க விடாதது வேலை நிறுத்தத்தை முறியடிக்க உதவியதோடு தொழிலாளரது நிறுவனங்களை நசுக்கவும் அவர்களது போராட்ட வேகத்தை சீரழிக்கவும் உதவிற்று. திரு. தொண்டமான் ஐ. தே. க. யை சார்ந்தே நின்றாரென்றும், சிறீ லங்கா சுதந்திர கட்சி ஆட்சி யில் இருந்தபோது மட்டுமே தொழிலாளரோடு சேர்ந்து தீவிர ஆட்சி விரோதக் கொள்கையை கையாண்டாரென்றும் கடந்தகால நாட்டின் அரசியல் வரலாறு தெளிவுபடுத்துகின்றது.
ஐ. தே. க. ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் கட்டங்களில் தனது நலன்களும் அரசாங்கத்தின் நலன்களும் ஒன்றே என திருப்திபடும் நிலையே உருவாகும். அரச சார்பான தனது கொள்கைக்கு தொழி லாளரது ஆதரவையும் தேடிக் கொடுப்பார். ஐ. தே. கட்சிக்கு பணம் கொடுத்துதவும் அதே சமூக கூட்டத்தைச் சேர்ந்தவரென் பதே பெரும்பாலும் இதற்கு காரணமாக இருக்கலாம். இக்கூட்டமே இன்று நடைமுறையிலுள்ள பரந்த பொருளாதாரக் கொள்கையை நன்கு பயன்படுத்தி சாதாரண மக்களதும் ஜனநாயகத்தினதும் நலன்களுக்கு பங்கம் விளைவிக்கும் அளவிற்கு இலட்சக்கணக்காக பணம் சம்பாதிக்கின்றனர்,
3.1. பெருந்தோட்டப் பகுதிகளில் வன்செயல்கள்
தோட்டங்களில் வன்செயல்கள் என்பது 1958ம் ஆண்டு முதல் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. நாட்டில் இன ரீதியான வன்செயல்கள் நிகழும்போதெல்லாம் இந்திய வம்சாவழியினரே பெரும்பாலாக பாதிக்கப்பட்டனர். தொழில் தகராறுகளும் வன்செய லாக உருவெடுக்கும். 1959ம் ஆண்டு மொன்றி கிறிஸ்தோ தோட் டத் தொழிலாளர், அடிப்படை உரிமைகளை பயன்படுத்தும் முக மாக, தொழிற் சங்கம் அமைத்தபோது சிங்கள குண்டர்களது உதவியோடு, தோட்டத் துரை தனது துப்பாக்கியால் ஐந்து தொழி லாளர்களைக் கொன்று குவித்தான். பின்னர் தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தை முறியடித்தமைக்காக அங்கி ருந்த காவல் படையினருக்கு ரூ. 2,500/-ஐ இனாமாகக் கொடுத் தான.

தோட்டத் தொழிலாளர்களின் உரிமை மறுத்தல் 0 85
1977ம் ஆண்டு ஐ. தே. க. ஆட்சிக்கு வந்த நாள் முதலாக இன்றுவரை பல வன்செயல்கள் நிகழ்ந்து வருகின்றன. தோட்டப் பகுதிகளில் பல தொழிலாளர் மாண்டனர், பலர் காயமுற்றனர். உடமைகள் அழிக்கப்பட்டும், சூரையாடப்பட்டும் இருந்த நிலை. 1983ம் ஆண்டிற்குப் பின் வடக்கிலும் கிழக்கிலும் நிகழ்ந்தவை போன்று வன்செயல்கள் புதிய உருவம் எடுப்பதையும் அப்பகுதி இராணுவமயமாக்கப் படுவதையும் காணலாம்.
இலங்கையின் வடபுலத்தில் பதட்டம் நிலவத் தொடங்கிய காலத்தில் அரசின் அடக்குமுறையை எதிர்த்த தமிழ் இ ைள ஞர் தலைவர்கள் கைதான பின் மர்மமாக மறைந்து விட்டனர். விரக்தி அடைந்து ஜனநாயகத்தில் நம்பிக்கையையும் இழந்த மக்கள் இன்று எந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. முழு இலங்கையிலும் அரசியல் அமைதியின்மை வளர்ந்து கொண்டு போகும் இவ்வேளையில் புரட்சிக் கருத்துடைய மலை நாட்டு தமிழர்கள் முன் கூறியதுபோல் மர்மமான முறையில் மறையத் தொடங்கியுள்ளனர். இந்த மறைவு மலையக மக்கள் மத் தி யில் அரசின் கொள்கைகளில் அதிருப்தி ஏற்படுத்தியது மட்டுமல்ல, அரசு இவ்வித நடவடிக்கையில் இறங்கும் அதே அளவிற்கு மலையக மக் கள் மத்தியிலும் எதிர்ப்புணர்வு வளர்ந்து விட்டது என்பதைக் காட்டுகிறது.
அரசின் இந்தச் செயலை என்னவென்று சொல்வது? இப்படிப் பட்ட அடக்கு முறையால் வடபுலத்தில நிகழ்ந்த, நிகழ்கின்ற சம்ப வங்களில் இருந்து அரசு பாடம் படிக்கவில்லை என்பதா அன்றேல் வடக்கு கிழக்கில் நிகழ்வது போல் ஒரு சூழ்நிலையை மலையகத்தில் உருவாக்கவே அரசு முனைகிறது என்று கொள்வதா?
இலங்கையின் சிறுபான்மை மக்கள் பற்றிய அரசின் கொள் கையை ஒரு நேரடியான, அநாகரிக இனப்படுகொலை கொள்கை என்று கூற விரும்புகிறவர்கள், மலையகத் தமிழ் மக்களுக்கு எதிராக வளர்ந்துவரும் வனசெயல்கள் சிங்கள தமிழ் மக்களிடையே வளர்ந்து விட்ட இனக் குரோதம் என்ற தங்கள் வாதத்தை ஊர்ஜிதப்படுத்து கிறது என்று கூறினாலும், இதற்கு வேறு பல காரணங்களும் உண்டு என்பதே எம் கருத்து. முதலாவதாக இன்றைய அரசின் சூழ்ச்சிக் கொள்கைகள், மலையக மக்கள் மேல் நடத்தப்பட்ட தாக்கு தல்களின் கனாகனத்தை கணிக்க உதவியாக 1986ல் நடந்த நிகழ்ச்சி களைக் காலக்கிரமப்படி நிரல் படுத்தி தருகிறோம்.

Page 58
86 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
3.7.1 1986 - வன்செயல்
28.1.86 - தலைவாக்கொல்லை - சிங்களவரால் கடைகள் எரிக்கப் பட்டன.
01.2.86 - டிக்கோயா. தலவாக்கொல்லை - தோட்டத் தொழிலாளர் குண்டர்களால் தாக்கப்பட்டனர். ஒருவர் கொல்லப்பட்டார். சிங் களவருக்கும், தமிழருக்கும் சொந்தமான கடைகளும் வீடுகளும்
தீக்கிரையாக்கப்பட்டன.
02.2.86 - நுவரெலியா - ஒரு தோட்டத் தொழிலாளி போலிசா ரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
05.2.86 - அட்டன் - சிங்கள குண்டர்கள் தீவைத்ததால் மூவர் கொல்லப்பட்டனர். இ. தொ. கா. அலுவலர் தாக்கப்பட்டடார். 2 பாடசாளைகள் சேதமாக்கப்பட்டன. ஒரு தமிழ் வைத்தியர், ஒரு சட்டத்தரணி ஆகியோரின் வீடுகள் தீக்கிறையாக்கப்பட்டன.
09.2.86 - கினிகத்தேனை - தமிழ் தோட்டத் தொழிலாளி சிங்கள குண்டர்களினால் தாக்கப்பட்டார்.
14.2.86 - அட்டன் - ஆயுதம் தாங்கிய குண்டர்களால் பிரயாணம்
செய்துக்கொண்டிருந்த தமிழர்கள் கினிகத்தேனையில் தாக்கப்பட் L-60Tif.
17.2.86 - லிந்துல - பாதுகாப்பு படையினரால் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
28.2.86 - தலவாக்கொல்லை - விசேடப் படைப் பிரிவினர் சுட் டதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்தனர் 3 வயது ஜோசைய்யா ஜொசெப் கொல்லப்பட்டார்.
2.3.86 - நுவரெலியா - குண்டர்களால் வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டன.
3.3.86 - போகவந்தலாவை - துப்பாக்கிச் சூட்டினால் கிருஷ்ண ராஜா என்ற தோட்டக் கங்காணி கொல்லப்பட்டார். 6.3.86 - பிபிலை - ஆயுதப்படையினரால் 6 தொழி லா ள ர் கள் கைது செய்யப்பட்டனர். 9.3.86 - மஸ்கேலியா - பல தோட்டத் தொழிலாளர் ஆயுதப் படை யினரால் கைது செய்யப்பட்டனர்,

தோட்டத் தொழிலாளர்களின் உரிமை மறுத்தல் () 87
22.3.86 - மத்திய மலையகம் - 149 தொழிலாளர் கைது செய்
யப் பட்டனர்.
06.4.86 - மகாஒயா தோட்டம், நுவரெலியா - ஜே. எஸ். எஸ். அரசாங்கத் தொழில் சங்கத்தினர் தோட்டத் தொழிலாளரைத் தாக் கியதில் ஒருவர் கொல்லப்பட்டார், இருவர் காயமடைந்தனர்.
09.4.86 - அக்கரபத்தனை, நுவரெலியா - இராமசாமி சின்னத் தம்பி கைது செய்யபபட்டதை அடுத்து, 3,000 தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
20.04.86 - மாத்தளை - சிங்கள குண்டர்கள் கைக்குண்டு வீசிய தால் முன்னாள் நகரபிதா எஸ். தம்பிராஜ் கொல்லப்பட்டார், மனைவி படுகாயமுற்றார்.
21.5.86 - ரத்தோட்டை, மாத்தளை - 9 தொழிலாளர் ஆயுதப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
9.6.86 - நுவரெலியா - விமானப்படையினர் பல லயன்’களை சோதனையிட்டு பலரை கைது செய்தனர். பலரை துன்பத்திற்குள் ளாக்கினர்.
28.6.86 - தலவாக்கொல்லை - சிங்கள குண்டர்களின் தீவைப்பு செய்கையால் பல வீடுகள் எரிந்தன. ரூ. 50,000 பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டன.
3.7.86 - நுவரெலியா - சிங்கள குண்டர்களினால் கார் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. இ.தொ.கா பிரதிநிதி ஒருவரும் காரில் இருந்தார். பூண்டுலோயா - 28 கடைகளும், 35 வீடுகளும் சிங்கள குண்டர்களினால் தீக்கிரையாக்கப்பட்டன. 12 தமிழ் இ ைள ஞர் கைது செய்யப்பட்டனர். 500 தொழிலாளர் காவல் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் பயனாக கைதானோர் விடு விக்கப்பட்டனர்.
தலவாக்கொல்லை - சிங்கள குண்டர் தோட்டத் தொழிலாளர் களைத் தாக்கியதில் 6 பேர் காயமடைந்தனர்.
8.7.86 - கினிகம - தலவாக்கொல்லை ஆசிரியர் பயிற்சி பாடசாலை யில் இருந்து வீடு திரும்புகையில் இளம் ஆசிரியை குண்டர்களி னால் கற்பழிக்கப்பட்டார். பின்னர் நினைவிழந்த நிலையில் வைத் திய சாலையில் அனுமதிக்கப் பட்டார்.

Page 59
88 ) பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
11.7.86 - பூண்டுலோயா - அம்மன் கோவிலில் அமைந்திருந்த அகதிகள் முகாம் சிங்கள குண்டர்களால் தாக்கப்பட்டது.
28.7.86 - நுவரெலியா - நெடுந்தீவைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதி ரியார் கைதுசெய்யப்பட்டார்.
30.7.86 - அட்டன் - சிங்கள குண்டர்களால் தோட்டப்பகுதி சூறை ய்ாடப்பட்டு தீவைக்கப்பட்டது. உடமைகள் எரிக்கப்பட்டன. 12 லயன் அறைகள் தாக்கப்பட்டன.
9.8.86 - வட்டவலை, நுவரெலியா - 11 தோட்டத் தொழிலாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
3.9.86 - தலவாக்கொல்லை - குடியேற்றப்பட்ட சிங்களவர்களுடன் ஏற்பட்ட மோதலில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். காவல் நிலை யத்தின் முன் 800 பேர் ஆர்ப்பாட்டம் செய்ததன் பலனாக பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
16.9.86 - கினிகத்தேனை - சிங்கள குண்டர்கள் கைகுண்டு வீசி யதில் இருவர் காயமடைந்தனர். 15 வீடுகள் தாக்கப்பட்டன. இ.தொ.கா. அலுவலகம் தீக்கிரையானது.
18.9.86 - தலவாக்கொல்லை - 24 வயதுடைய ப. நவரட்சணசாமி என்பவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
22.9.86 - அக்கரபத்தனை - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
07.10.86 - அக்கரபத்தனை - செல்வி புஷ்பராணி (23), பாலசிங் கம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
31.12.86 - தமிழ்செல்வம் என்பவர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். 1,500 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த தன் பலனாக விடுவிக்கப்பட்டார்.
மேற் கூறப்பட்ட விபரங்களில் இருந்து, சிங்கள குண்டர்களின் உதவியுடன் தொடக்கப்பட்ட தாக்குதல்கள், பாதுகாப்பு படையினரை வரவழைக்கும் அளவிற்கு வளர்ந்து விடுகிறது. தாக்குதல்களில் கைக் குண்டுகள் போன்ற ஆயுதங்கள் பாவிக்கப்படுகின்றன. குற்றச் சாட்டுகள் ஏதுமின்றி பலர் கைதாகின்றனர். தொழிலாளர்கள் இத்

தோட்டத் தொழிலாளர்களின் உரிமை மறுத்தல் () 89
தாக்குதல்களையும், அரசாங்கத்தின் எதிர்தாக்குதல்களையும் எதிர்த்து நிற்பதில் தங்கள் அமைப்பான்மை திறனைக் காட்டியுள் ளனர். ஒரு தடவை சிங்கள குடியேற்றம் தாக்கப்பட்டது. பிறி தொரு சம்பவத்தில் தமிழ் கடைகள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக சிங்களவரின் கடைகள் தாக்கப்பட்டன. தொழிலாளர்களும், இளை ஞர்களும், கைது செய்யப்பட்டதும் வீரத் தொழிலாளர் குழாம் வேலை நிறுத்தம், காவல் நிலைய முற்றுகை என்று இறங்கியதன் பயனாக வேறு வழியின்றி, கைதானோர் விடுதலைச் செய்யப் பட்
அரசாங்க நடவடிக்கையின் போது தோட்டத் தொழிலாளர்களின் பதில் நடவடிக்கைக்கும் வடபுல மக்களின் பதில் நடவடிக்கைக்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கின்றதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
தொழிலாளருக்கே உரித்தான பாணியில் ஒரு முகப்படுத்தப்பட்ட ஜனநாயக இயல்புடைய, அரசாங்கத்திற்கு விரோதமான பதில் நடவடிக்கை அவர்கள் வகுப்பு இயல்புக்கு பொருத்தமானது மட்டு மல்ல, மிகப்பயனுள்ளதும் கூட. வடக்கு கிழக் கில் ஆயுத விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் போராளிகளுக்கு எதிராக ஆயுதப் படைகளை ஏவிவிடத் தயங்காத அரசாங்கம், ஆயு தம் ஏந்த திட்டமிட்ட ஜனநாயக சார்பான தொழிலாளரின் தொடர்ச்சியான எதிர்ப்புக் கண்டு வாளாவிருப்பது வியப்பாக உள்
ளது.
3.8 தோட்டப் பகுதிகளில் குடியேற்றம்
இன்றைய சிக்கலுக்கு கிழக்கில் வழி கோலிய அரசாங்கத்தின் திட்டமிட்ட குடியேற்றம் போன்று, தமிழ் தோட்டத் தொழிலாளர் பெரும்பான்மையாக உள்ள இலங்கையின் மத்திய மலையகத்திலும் அரசாங்கம் குடியேற்றத் திட்டங்களை அமுல் படுத்தி வருகின்றது. உதாரணமாக அட்டனுக்குக் கொட்டகலைக்கும் இடையிலுள்ள *" குடா ஓயா’வில் 300 ஏக்கர் தேயிலைத் தோட்டம் அழிக்கப்பட்டு 1,500 சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. அதே போல் அரசாங்கம் குடியமர்த்திய அக்கரபத்தனை, அக்கர மலை. ஆகிய இடங்களில் அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்ட சிங்களவருக்கு ஆயு தப் பயிற்சியுடன் ஆயுதங்களும் வழங்கப்பட்டன. இக்குடியேற்றங் களில் பாடசாலைககள், பெளத்த விகாரைகள் போன்றவைகளுடன் போக்குவரத்து வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவர் களின் பாதுகாப்புக் கருதி இராணுவ முகாமும் அமைக்கப்பட்டுள்

Page 60
90 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
ளது. திட்டமிட்டே தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி களை சிங்கள குடியேற்றங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவை இஸ்ரேலிய "கிபுட்' முறையில் அமைக்கப்பட்ட ஆயுதக் குடியேற்றங்களாகும்.
இந்த ஆயுதக் குடியேற்றத்தின் நோக்கம் தமிழ் தோட்டத் தொழிலாளர் பலத்தைக் குறைப்பது மட்டுமல்ல அவர்களை பயப் படுத்தவுமே. இனக் கிளர்ச்சி தோன்றும் போது இந்த குடியேற்ற வாசிகள் தங்கள் ஆயுதங்களை அருகில் உள்ள தமிழ் தோட்ட தொழிலாளிகள் பக்கம் திருப்புவார்கள் என்பதில் ஐயமில்லை, கடந்த காலங்களில் இனக்கலவரங்கள் இப்படி அரசின் குடியேற்றப்பட்ட கிழக்கு மாகாண குடியேற்ற திட்டங்களிலேயே ஆரம்பித்தன.
அரசாங்கம் கிழக்கில் கடைபிடித்த அதே குடியேற்றக் கொள்கை திட்டத்தை மத்திய மலையகத்திலும் கடைபிடிக்கிறது. இது இங் கும் விரைவில் இனக்கிளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
(լուց 6չյ60Մ
இலங்கை வாழ் இந்திய வம்சாவழி மக்களின் உரிமைகள் 1928ம் ஆண்டிலிருந்து படிப்படியாக பறிக்கப் பட்டு இன்னும் ஒரு சிலர் நாடற்றவர்களாக கருதப் படுவதற்கு பல காரணங்கள் a -6TG.
அ. அவர்களுள் பெரும்பாலானோர் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந் தவராவர், (இவர்களே நாட்டின் உண்மையான தொழலாள வர்க்கம்).
ஆ. மொழி சமய ரீதியாக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இ, தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதனால்,
ஈ. இந்நிலையை ஏற்படுத்தியவர்கள் பெளத்த புனருத்தாரண இயக் கத்தைச் சார்ந்தவரே. சிங்கள ஆதிக்கத்துக்குட்பட்ட அரசாங்கங்களை தம்வயப்படுத்தி இவர்களை அந்நியர் எனக் கருதச் செய்து மலை யகத்திலிருந்து அழித்தொழிப்பதே நோக்கமாக இருந்தது. இவர்கள் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களுக்குச் சென்றடை வதையும் பொறுத்திருக்க முடியவில்லை. 1983ம் ஆண்டு வரை அப்பகுதிகளில் அமைதியாகக் குடியேறிய 100,000 மக்களையும் சிங்கள பாதுகாப்புப் படையினரும் குண்டர்களும் தாக்கி வெளி யேற்ற முயன்றன்ர். M

தோட்டத் தொழிலாளரின் உரிமை மறுத்தல் L) 91
இந்த மக்களை இந்தியாவிற்கு நாடு கடத்துவதையே சிங்கள பெளத்த இனவெறி ஆட்சியாளர் விரும்புகிறார்கள். இவர்கள் தொடர்ந்தும் நாட்டிலிருந்தால் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தொகை பெருகி சிங்கள பெளத்தருக்குறிய நாடு எனும் தமது கொள்கையை மறுப்பதாகிவிடும் என்பதே காரணம். இங்கு இந்த மக்களின் உழைப்பால் நாடு பெறும் அந்நிய செலாவணியில் பெரும் பகுதியை தேடிக் கொடுத்து உதவிய சேவை மறக்கப்படுகின்றது.
மறுபுறத்தில் 160 ஆண்டுகளுக்கு முன்பே குடிபெயர்ந்து இலங் கைக்குத் சென்றடைந்தவராகையால் இந்தியாவில் தன்னும் சம வுரிமை கொண்டவராக ஏற்கப்படுவதில்லை. கட்டாயப் படுத்தி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டோரும் தாயகம் எனும் உணர்வில் இலங்கைக்கே திரும்பிச் செல்ல நினைக்கின்றனர். இலங்கை வாழ் இந்தியர், இந்தியரல்ல, இலங்கையரே எனும் ஜவஹர்லால் நேரு வின் கருத்தும் இதுவேயாகும்.
"கூடை தலைமேலே
குடிவாழ்க்கை கானகத்தில்’

Page 61
நான்காம் அத்தியாயம்
இலங்கை முஸ்லிம்களது இன்றைய நிலைமை
அரசியல் பொருளாதார அடிப்படையில் சிதறடித்து ஒதுக்கி விடும் கொள்கையை முறியடிக்கும் முயற்சியில் சிறுபான்மை இனங் கள் ஒருங்கிணைந்து, பொதுமக்களின் கொந்தளிப்பாக உருவாகு வதை அவதானித்த அரசாங்கம், அவர்களின் ஒற்றுமையை குலைக்கும் சாணக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதனை நிறைவேற்றிக் கொள்ள சமய உணர்வுகளை தூண்டி விட ஆரம்பித்து விட்டது. அடக்கி ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களின் இணைப்புறவை முறியடிப்பதற்கு தீவிர சமய உணர் வுள்ள முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு வசதியான முறைபாட்டுக் கருவிகளாக மாறும் ஆபத்து இங்கு எழுகிறது.
4.1 சனத் தொகை :
இந்திய, பாகிஸ்தானிய, மாலாயா, அரபு வம்சாவழியினர் இவர்கள் சுன்னி ஷாபி குருகுலத்தைச் சேர்ந்தவராவர். ஷாபி முஸ்லிம்கள் இலங்கைக்கு 9ம் நூற்றாண்டிலும் அதன் பின்புமே வரத் தொடங்கினார்கள்.
முஸ்லிம்களின் மொத்தத் தொகையினரான 1,140,000 பேர் களுள் 1,057,000 (93%) பேர் தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள். இந்த உண்மையை மறைப்பதற்காகவே இலங்கை அரசாங்கம், இஸ்லாமிய மதத்தைத் தழுவுவோருக்கு "சோனகர்' (Moors) என்ற நாமத்தைச் சூட்டியுள்ளது. நாட்டின் முஸ்லிம்களுள் 3,78,000 (38%) வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே குடியேறி விட்டனர். ஏனைய மாகாணங்களில் முஸ்லிம்களது தொகை 7,62,000

இலங்கை முஸ்லிம்களது இன்றைய நிலைமை () 93
(முஸ்லிம்களது விரிவான சனத் தொகை புள்ளி விபரங்கள் அட்ட வணை 4.1ல் காணலாம். அடைப்புக்குறியில் மாவட்ட சனத் தொகையில் முஸ்லிம்களது விகிதாசாரம் கொடுக்கப்பட்டுள்ளது).
அட்டவனை 41 முஸ்லிம்களது சனத் தொகை-1981(1)
மாவட்டம் முஸ்லிம்கள் மாவட்டம் முஸ்லிம்கள்
கொழும்பு 1,88,956 (8.3) கண்டி 1,25,646 (9.9) குருநாக்கல் 64,231 (5.1) கேகாலை 36,548 (5.1) களுத்துறை 62,781 (7.5) பதுளை 28,759 (4.2) புத்தளம் 50,246 (9.7) மாத்தளை 26,603 (7.2) கம்பஹா 47,850 (2.8)|நுவரெலியா 15,791 (2.8) அநுராதபுரம் 43,801 (7.1)|இரத்தினபுரி 15,441 (1.7) காலி 26,350 (8.2.)|அம்பாறை 1,61,754 (41.6) பொலனறுவை 17,621 (6.5) மட்டக்களப்பு 79,662 (24.0) மாத்தளை 16,358 (2.6)|திருகோணமலை 75,761 (29.0) அம்பாந்தோட்டை 9,833 (1.1)|மன்னார் 36,079 (26.1) மொனருகலை 5,750 (1.9) யாழ்பாணம் 14,169 (1.6)
வவுனியா 6,764 (6.9)
முல்லைத் தீவு 3,816 (4.9)
இந்த அட்டவணையின்படி நாட்டை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் பொழுது கொழும்பும் கரையோரப் பகுதிகளில் (முதல் பதி னொரு மாவட்டங்களில்) 5,13,772 பேரும், மலையகப் பகுதிகளில் (அடுத்த 6 மாவட்டங்களில்) 2,48,778 பேரும், கிழக்கு மாகாணத் தில் உள்ள 3 மாவட்டங்களிலும் 3,17,177 பேரும், வடக்கிலுள்ள 6 மாவட்டங்களிலும் 60,828 முஸ்லிம்களும் உள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் இருப்போர் யாழ்ப்பாண மாவட்டத்தோடு சேர்க்கப்பட் டுள்ளார்கள். இதிலிருந்து நாம் அறியக் கூடியது என்னவென்றால் முஸ்லிம்கள் நாடு முழுவதிலும் பரவலாக வாழ்கின்றார்கள் என்பதே. கொழும்பு, கண்டி, அம்பாறை மாவட்டங்களிலேயே இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்

Page 62
94 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
4.2 தேசிய பொருளாதாரமும் கல்வியும்
வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம்கள், பெரும்பாலும் விவசாயி களாகவும், கைப்பணியாளர்கவும், சிறு கடை வியாபாரிகளாகவும் வாழ்கிறார்கள். அரசாங்க சிற்றுாழியர்களும், எழுது வினைஞர்களும் ஓரளவிற்கு இவர்கள் மத்தியில் இருக்கிறார்கள். ஆனால் தென் னிலங்கையில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் பட்டணங்களில் வசிக்கும் வியாபாரிகளாகவும், தொழில் நுட்பத் துறையில் ஈடுபட் டிருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். குருநாக்கல், கண்டி, புத்தளம், மாவட்டங்களில் உள்ள சிலர் சிறிய அல்லது, நடுத்தர இறப்பர், தென்னந் தோட்ட உரிமையாளர்களாகவும், நெற்காணி வாசனை திரவிய நிலவுடமையாளராகவும் இருக்கிறார்கள். இதனால் வடக்கு கிழக்கில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர அல்லது கீழ்மட்டத்து வர்க்கத்தினராக இருக்கையில், தெற்கில் வாழ்பவர்கள் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பினராகவே இருக்கிறார்கள்.
வடக்கு கிழக்கில் உள்ளவர்களைவிட தென்னிலங்கையில் உள்ள முஸ்லிம்கள் வசதி படைத்தவராகையால் அரசியல் துறையிலும் செல் வாக்குப் பெற்றவர்களாகவே திகளுகின்றனர். உண்மையில் அரசி யல் பொருளாதாரத் தேவைகளைப் பொறுத்தவரையில் வடக்குகிழக்கில் உள்ளவர்கள் ஏனைய முஸ்லிம்களின்றும் பெருமளவு வேறு படுகின்றனர். ஆனால் தெற்கில் உள்ளவர்களது கருத்துக்களும் சுயநலன்களுமே முழு சமூகத்தினதும் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக வுள்ளது. ஆகவே "இஸ்லாமிய ஐக்கியம்” எனும் சுலோகம், சமய அனுஷ்டானத்தை மட்டுமே குறிக்கும் நிலையிலிருந்து, வசதியுள்ளவரது அரசியல் பொருளாதார நலன்களுக்கும் பயன்படுத் தப்படும் சுலோகமாகவும் மாறியுள்ளது.
வேண்டப்படும் தேவைகளில் கானும் வேறுபாடுகளைத் தவிர்த்து, கலாச்சாரமும் தீவிர வேறுபாட்டை ஏற்படுத்துகின்றது. வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம்மஞம் ஏனைய சமய நெறிகளைக் கடைப்பிடிக்கும் தமிழரோடு பொது அரசியல் பொருளாதார எதிர் காலத்தையே எதிர்நோக்கி வாழ்கின்றமையால் அவர்களோடு உறவு களும் பின்னிப் பிணைந்துவிட்டது. சில பகுதிகளில் சமூக அடிப் படையிலும் பொதுப்பாரம்பரியம் உள்ளவர்களாகவே இருக்கின்ற னர். தமிழரிடையே தம்மையும் ஒன்றாகக் கருதிக் கொள்கிறார் கள். எல்லா வகையிலும் பரந்த தமிழ் இனத்தின் உறுப்பினராகவே கருதத்தக்கவராவர். மறுபுறத்தில், தென்னிலங்கையிலுள்ளவர்கள், 1956ம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் அமுலான பின் தம் பிள்ளைகளை சிங்கள போதனா மொழியூடாக கல்வி கற்கும்படி

இலங்கை முஸ்லிம்களது இன்றைய நிலைமை () 95
உற்சாகப் படுத்துவதோடு, தமது எதிர்காலத்தையும் சிங்களவரது எதிர்காலத்துடன் இணைக்க முயலுகின்றனர். தமிழ்ப் பிரதேசங் களில் வாழும் முஸ்லிம்கள் அனுபவிக்கும் அடக்குமுறைகளை அவர் களும் அதேயளவு அனுபவிப்பதாகத் தோன்றவில்லை.
தமிழ் பிரதேசங்களில் வாழும் சக இனத்தவர்களுக்கு எட்டாத எத்தனையோ நன்மைகளும் வசதிகளும் தென்னிலங்கையில் வசிக் கும் முஸ்லிம்கள் பெறக் கூடியதாக இருக்கின்றது. தம் பிள்ளை களுக்கு கல்வி கற்பிப்பதில் ஆட்சி மொழியான சிங்களத்தையோ அல்லது தமிழ், ஆங்கில மொழிகளையோ தெரிந்தெடுக்கும் வாய்ப்பு இவர்களுக்கு கொடுக்கப்பட்டதால் இவர்கள் சிங்களத் தையே போதனா மொழியாக தெரிந்தெடுத்தது இதற்கு ஒரு உதாரணமாகும். சிங்களக் கட்சிகளோடு கூடி நின்றதனால் பாராளு மன்றத்திலும் தமது சனத் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதி நிதித்துவம் பெறத்தக்கதாக இருந்தது. 168 ஆசனங்களில் 12 ஆசனங்களைப் பெறும்போது சனத் தொகையின் 7.5%க்கு ஏற்ப ஆசனங்களும் 7.5% ஆகின்றன. பொருளாதாரத் துறையிலும், அரபு நாடுகளோடு கொண்ட சமுக கலாச்சார உறவுகள் காரண மாக அங்கு கிடைக்கும் தொழில் வாய்ப்புகளிலும் இவர்களுக்கே பெரும் பங்கு கிடைத்தது.
4.3 ஒடுக்கப்படும் நிலை
1948ம் ஆண்டு தொடக்கம் நிறைவேற்றப்பட்ட பாரபட்சமான சட்டங்கள் முஸ்லிம்களையும் பாதித்துள்ளன என்பது வெளிப்படை யாக தோற்றுகின்றது. 1948ம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டத்தின் கீழ் 26,000க்கும் அதிகமான இந்திய வம்சாவழி முஸ்லிம்கள் தமது பிரஜாவுரிமைகளை இழந்துள்ளனர். உதாரணமாக இன்று (1987) போக்குவரத்து அமைச்சராக இருக்கும் ஜனாப் எம். எச். முஹம்மது என்பவர்-இந்திய வம்சாவழியினர் ஆவர். பாட்டனார் தென்னிந்தி யாவிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஜனாப் முஹம்மதுவும் இப் புதிய சட்டத்தின் அடிப்படையிலேயே பிரஜா வுரிமை பெற்றிருந்தார்.
தேசியக் கொடியில் இஸ்லாமிய சமயத்திற்குரிய மதிப்பும் பிரதி நிதித்துவமும் கிடைத்ததாக இல்லை. முஸ்லிம்கள் தமிழ் பேசும் இனத்தவராகையால் அவர்களும் 1956ம் ஆண்டினது அரச கரும மொழிச் சட்டத்தால் பாதிக்கப்படுகிறார்கள். பெளத்தம் அரசின் மதமாக ஏற்கப்பட்டதனால் மற்ற சமயங்களைப் போல் இஸ்லாமிய சமயத்தின் அந்தஸ்தும் இரண்டாம் தரமாக்கப்பட்டுள்ளது. அர

Page 63
96 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
சாங்க உதவியோடு 1950ம் ஆண்டளவில் தொடக்கப்பட்ட கல் ஒயா திட்டமும் 1959ம் ஆண்டு தொடக்கப்பட்ட மதுறு ஒயா திட்டமும் அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்கள் தொகையின் சம நிலையை பாதித்ததோடு அங்கு தமிழரும் முஸ்லிம்களும் வசித்துவரும் நிலப் பரப்பையும் குறைத்துவிட்டது. அம்பாறை மாவட்டத்தில் 41.6 விகிதமுள்ள முஸ்லிம்களுக்கு குடிசனத்திற்கேப்ப நிலமெனக் கொண் டால் 728 ச. மைல் நிலப்பரப்புடமையாகக் கொள்ள வேண்டியவர் களுக்கு 272,ச மைல் பரப்பளவுள்ள நிலம் மட்டுமே ஒதுக்கப்பட் டுள்வது. சேருவிலைத் தொகுதியிலுள்ள முஸ்லிம்களுக்கும் இதே போன்று பாதகமான சனத்தொகை சமநிலை மாற்றங்கள் ஏற்பட் டுள்ளன,
அரசாங்கம், உண்மை நிலைக்கு மாறாக, இன வரலாற்று அடிப்படையில், வேறுபட்டவரெனக் கருதலாம் என்பதை ஏற்கச் செய்வதற்காக, முஸ்லிம்களை சோனகர்கள் (Moors) என்றே அழைத்துள்ளது. வட ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த அரபு பெர்பர் (Berbur) கலப்புச் சந்ததியினரே (சோனகர்) முவர்ஸ் எனப் படுவர். இலங்கை முஸ்லிம்கள் இனரீதியாக இவர்களுடன் (Moors) உறவுள்ளவர்கள் என்பதை ஏற்கச் செய்வதற்கு தரும் ஆதாரம் பொருட்படுத்தத் தக்கதல்ல. ஏதோ விஞ்ஞான பூர்வமான வரலாற்று ஆதாரம் தேடும் முயற்சியல்ல இது. அண்மைக் காலங்களில் தமி ழர் மத்தியில் பிளவு ஏற்படுத்தி பலத்தைக் குறைக்கவே அரசாங்கம் கையாண்ட இராஜதந்திரமாகும்.
தொடர்ந்தும் மயக்கத்தை ஏற்படுத்தும் நோக்கோடு, 1976ம் ஆண்டு தொகுதி நிர்ணயக்குழு "இந்திய முவர்ஸ்" என்பதை அகற்றி "இந்தியத் தமிழர்’ என்றும் முவர் என்றும் பிரித்துக் காட்டு கின்றது. தமிழ் பேசுவோர் எனும் காரணத்தினாலேயே தமிழரோடு அவர்களை இணைத்துக்காட்ட வேண்டியிருந்தது. இந்தியாவிலும் இவ்வித முவர் எனும் இனமொன்று உண்டு என்பதை இதுவரை அறியோம். தென்னிலங்கையில் உள்ள முஸ்லிம்கள் மொழி அடிப் படையில் தமிழ் அரசு உருவானால் தமது எதிர்காலம் பற்றியும், இன்று தாம் அனுபவித்து வரும் செளகரியங்களைக் காப்பாற்றுவது பற்றியும் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையை, அரசாங்கம் சாதுர்யத்தோடு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றது. முஸ்லிம்களது பிரச்சினையை இவ்வாறு திரித்து விளக்க முயல்வத னால் மொழிவாரியான தமிழரசு உருவாகுவதற்கு இடமில்லை என நிரூபிக்க முயல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இலங்கை முஸ்லிம்களது இன்றைய நிலைமை () 97
4.4 கிழக்கு மாகாணம்-தேர்தல்
மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த மாகாணத்தில், திரு கோணமலையில் மூன்று பாராளுமன்றத்தொகுதிகளும், மட்டக்களப்பில் நான்கு பிரதிநிதிகளைக் கொண்ட மூன்று தொகுதிகளும், அம்பாறை யில் ஐந்து பிரதிநிதிகளைக் கொண்ட நான்கு தொகுதிகளும் இருக் கின்றன. த. ஐ. வி. கூ., சேருவிலையும், அம்பாறையும் தவிர்ந்த ஏனைய பாராளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டது. தமிழரும் முஸ்லிம்களும் 33% உள்ள சேருவிலைத் தொகுதியில் சிங்க ள ஐ. தே. க. அபேட்சகர் வெற்றி பெற்றார். அரசாங்க குடியேற்றங் களினாலேயே சேருவிலையையும் அம்பாறையையும் ஐ. தே. க. வென்றெடுக்கக்கூடியதாக இருந்தது.
எஞ்சியுள்ள தொகுதிகளில் கூட்டணி 8 ஆசனங்களில் போட்டி யிட்டது. மட்டக்களப்பில் இரண்டு அபேட்சகர்களை நிறுத்தியது. நான்கு தொகுதிகளில் வெற்றிபெற்றார்கள். மூதூரைத் தவிர்த்து (இங்கு 280 வாக்கு வித்தியாசத்தில் மூன்றாம் இடத்தைப் பெற் றார்கள்) ஏனைய தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பெறக் கூடியதாக இருந்தது. கூட்டணி போட்டியிட்டு இரண்டாம் இடத் தைப் பெற்ற தொகுதிகள் மூன்றில் முஸ்லிம்களே அபேட்சகராக நிறுத்தப்பட்டனர்.
ஐ. தே. க. எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிட்டு ஆறு ஆச னங்களைப் பெற்றது. அவர்களுள் ஐவர் முஸ்லிம்கள் ஆவர். தமிழருக்குரிய பிரச்சினையை தாம் அறிவோம் என்றும் தாமதமின் றித் தீர்த்துவைப்போம் என்றும் இக்கட்சி கூறியதனாலேயே இவ் வாறு வெற்றிப் பெறக் கூடியதாக இருந்தது. இக்கட்சியின் அபேட் சகராக போட்டியிட்டு 545 வாக்கு வித்தியாசத்தால் வென்ற தமிழர், பல விவசாய இயக்கங்களோடு உழைத்து தம் சொந்த செல்வாக் கிலேயே வென்றார்.
தென்னிலங்கையில் மூஸ்லிம்கள் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். மத்திய கொழும்பில் ஐ. தே. க. அபேட்சராக ஒரு வரும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி இன்னொருவருமாக இரு முஸ் லிம்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். பொறளையில் ஐ. தே. க வேட்பாளராக ஒருவர் வெற்றிபெற்றார். கண்டி மாவட்டத்தில் உள்ள இரட்டை அங்கத்தவர் தொகுதியான ஹரிஸ்பத்துவில் ஒரு முஸ்லிம் ஐ. தே. க. வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார். இரட்டை அங்கத்தவர் தொகுதியான பேருவளையில் ஒரு முஸ்லி மும், புத்தளத்தில் ஒருவரும், பலாங்கொடையில் இன்னொருவரு

Page 64
98 ) பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
மாக வெற்றிப் பெற்றனர். இங்கு ஐ. தே. க. முஸ்லிம்களை ஆத ரித்தது. கூட்டணி போட்டியிடவில்லை.
4.5 முஸ்லிம்கள் மத்தியில் பீதி
நாட்டின் இன்றைய அரசியல் நிலையில், முஸ்லிம்களும் மிகப் பாதுகாப்பற்ற சிறுபான்மை இனமாக்கப்பட்டுள்ளனர். இந்த இனத்துக்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தென்படுகின்றன. இவர்களுள், வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் இனத்தவரோடு இணைந்து தமிழ் பிராந்திய போராட்டத்தில் ஈடு பட முன்வந்தவர்களே, தமது எதிர்காலம் பற்றி நம்பிக்கை கொண் டவராக இருக்கின்றனர். தென்னிலங்கையிலுள்ள சிங்களவர் மத்தி யில் பரவலாக வாழும் முஸ்லிம்களுக்கு மட்டுமே எதிர்காலம் பற்றிய பீதி வேரூன்றிவிட்டது. எதிர்காலம் உறுதியற்றது என இவர்கள் மத்தியில் வளர்ந்துவரும் பீதியினை பின் குறிப்பிடப்படும் அறிக்கை தெளிவு படுத்துகின்றறு.
(அகில இலங்கை முஸ்லிம் லீக் கின் தீர்மானம்)2
அ. சகல இனத்தவர்களையும், சமூகத்தவர்களையும், சமயத் தவர்களையும் இணைத்து ஒரு குடைக்குகீழ் கொண்டு வருவதற்கு வேண்டியே ஐ. தே. க. நிறுவப்பட்டதென்றும், அங்கு இன, சமய பாகுபாடில்லை என்றும், சமூக குல ரீதியாக விடயங்களை அணுகு வோருக்கு அங்கு இடமில்லை என்றும் அதி உத்தம ஜனாதிபதி அவர்கள் பிரகடனஞ் செய்ததையும்,
ஆ. இன சமய பாகுபாடின்றி நாட்டின் சகல பிரஜைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என அதி உத்தமர் உறுதியளித்ததையும் ஏற்று மதிக்கும் அதே வேளையில் :
நாட்டின் முஸ்லிம் சமூகத்தவரை பிரதிநிதித்துவப் படுத்தும் அகில இலங்கை முஸ்லிம் லீக் தனது மல்வானை மகாநாட்டின் 4 தீர்மானத் திற்கு ஏற்ப 1977 பொதுத் தேர்தலில் ஐ. தே. க. யை ஆதரித் ததையும், பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க உழைத்துக் கொடுத்ததையும், நினைவுபடுத்துகையில்;
முஸ்லிம்கள் கட்சிக்கு தந்து உதவிய ஆதரவை மதிக்கும் முக மாக, சமய கலாச்சார ரீதியாக முஸ்லிம் சமூகம் முன்னேறுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும், பாராளுமன்றத்தில் சபாநாயகர் அமைச்சர், பிரதேச அமைச்சர், கூட்டுத்தாபன தலை ர்கள் முதலிய உயர் பதவிகளில் முஸ்லிம்களை நியமனஞ் செய்த

இலங்கை முஸ்லிம்களது இன்றைய நிலைமை D 99
தையும் வாழ்த்துகையில் : இலங்கையில் ஐ. தே. க. அரசாங்கம் முஸ்லிம் இனத்தவரைக் கெளரவிக்கும் செயலையே பிரதான காரண மாகக் காட்டி முஸ்லிம் நாடுகளின் அரசாங்கங்களும், நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் இலங்கைக்கு ஏற்படுத்திக் கொடுத்த பெரும் நிதி உதவிகளையும் வேலை வாய்ப்புக்களையும் நோக்குகையில் :
மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல்களிலும், ஜனாதிபதி தேர் தலிலும், சர்வசன வாக்கெடுப்பிலும், நகர சபை தேர்தலிலும், இடைத் தேர்தல்களிலும், ஐ. தே. க. வினது வெற்றிக்கு முஸ்லிம் சமூகத்தவரது அயராத உழைப்பினை, ஞாபகப் படுத்துகையில் : இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதனை ஏற்றும் முஸ்லிம் சமூகத்தவர் பிரிவினை வாதிகளது கோரிக்கைகளை திட்டவட்டமாக கண்டித்ததும், இனக் கலவரங்களால் முஸ்லிம்கள் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அவை உருவாக்கிய அவசர கால நிலையில் அரசாங்கத் திற்குப் பூரண ஆதரவளித்தும் நின்றனர் என்பதனையும் மதித்து நிற்கையில்; அண்மைக் காலங்களில் அனுபவித்து வந்த சில உரிமை களையும் வசதிகளையும் இழந்திருப்பதோடும், தகுதி காரணத்தால் உரிமையோடும் அல்லது விசுவாசம், திறமை, விடாமுயற்சிக்குரிய பலனாகப் பெற்ற கெளரவமும், நம்பிக்கையும், பொறுப்பும் வாய்ந்த பிரதான பதவிகளை இழக்கவேண்டி நேர்ந்ததனாலும், முஸ்லிம் சமூகத்தவர் பாகுபாட்டிற்கு ஆளாகின்றனர் எனத் தென்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கையில்;
கெளரவ எம். ஏ. பக்கீர் மரைக்காயர் தன் பாராளுமன்ற சபா நாயகர் பதவியையும், கெளரவ எம். ஏ. அப்துல் கே. மஜித், கெள ரவ எம். எல். எம். அபுசாலியும் முறையே கொண்ட மட்டக்களப்பு இரத்தினபுரி மாவட்ட அமைச்சர் பதவிகளை விட்டு விலகவும் நேர்ந்த காரணங்களை நோக்கும் போது அகில இலங்கை முஸ்லிம் லீக் தனது ஆழ்ந்த கவலையையும், கைவிடப்பட்ட நிலையையும், மனச்சோர்வையும் தெரிவிக்கும் அதே வேளையில் :
முஸ்லிம்களை முட்டாள் வேலைக்கே உரியவரென ஒதுக்கும் போக்கினை நிறுத்திவைக்கும் நோக்கோடு முஸ்லிம்களை பாதிக்கும் அளவு நாட்டின் அரசியல் நிலையை அவதானித்து அதி உத்தம ஜனாதிபதியிடம் முஸ்லிம்கள் மத்தியில் நிலவி வரும் அச்சத்தை அறியத் தருவதாக தீர்மானிக்கின்றது.
4.6 முஸ்லிம்கள்-இஸ்ரேலியர் (மொஸாட்)
பொருளாதார அடிப்படையில் முதலாளித்துவ நாடுகளையே நம்பி வாழும் மணப்பாங்கு அதிகரித்து வருவதனால் பாலஸ்தீனிய

Page 65
100 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
விடுதலை இயக்கத்தோடு கொண்டுள்ள உறவுகளை புறக்கணிப்ப தும், எதிர்மாறாக இஸ்ரேலுடன் உறவுகளை வளர்ப்பதுமாகவே வெளிநாட்டுக் கொள்கையாக மாறி வருகின்றது. சியோனிஸத் திற்கு எதிராகவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் நடை பெறும் அரபு மக்களது போராட்டத்திற்கு என்றும் ஆதரவு கொடுத்து வந்த முஸ்லிம் மக்களுக்கிடையே, இவ்வித மனமாற்றம் ஆத்திரத் தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடன் அரசாங்கம் தொடர்ப்புக் கொண்டதற்கு முஸ்லிம்கள் கடைபிடித்த வெறுப்பு 1986, மாசி மாதம் 3ம் திகதி மட்டக்களப்பிலும், காத்தான் குடி யிலும் செங்கலடியிலும் அவர்கள் நடத்திய ஹர்த்தால் வெளிப்படுத் திற்று. *
இஸ்ரேலியரை 'விசேட நலன்” பிரிவினை ஆரம்பிக்க வைத் ததும், நாட்டின் விவசாய அபிவிருத்தி திட்டங்களில் பங்குபற்றச் செய்ததும் அரபு நாடுகளின் விமரிசனத்திற்கும், கண்டனத்திற்கும் இடமளித்தன. தாக்கங்களுக்கு ஆளாகிய சிறுபான்மைத் தமிழினத் திற்கு எதிராக இராணுவத்தினரைப் பயிற்றுவிப்பதில் இஸ்ரேலிய ஆலோசகர்களை பயன்படுத்துவதும் பெரும் கண்டனத்திற்கு இட மளித்தது. இதனால் இந்த பிற்போக்கு அரசாங்கம் தமிழ் பேசும் முஸ்லிம்களை தமிழ் மக்களுக்கு எதிராக மோதவிடும் அளவிற்கு மொஸாட்டின் பிடியில் சிக்கிக்கொண்டது.
முஸ்லிம்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ அங்கு "பிரித்து, ஆட்சி செய்து இஸ்லாமிய மக்களை அழித்துவிடுவது" எனும் கொள் கையையே மொசாட் கடைபிடிக்கின்றது என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும். இன்று இலங்கையில் வாழும் முஸ்லிம்களே இதற்கு இலக்காகி விட்டனர். இலங்கையிலுள்ள இஸ்லாமிய மக்கள் செழிப் புடனும், இன்பமாகவும், சமாதான விரும்பிகளாகவும் வாழ்ந்து வந்தார்கள் என்பதும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் மொசாட்டின் வருகையோடும் அவர்களது கீழ்த்தர திட்டங்களை கையாளுவதனாலும், இலங்கையின் இன்றைய இக்கட்டான நிலை யில் முஸ்லிம்கள் வெறும் கருவிகளாகவே பயன்படுத்தப் படுகின்ற னர். இஸ்ரேலிய மொசாட்டுக்கு எம். எச். முஹம்மது போன்ற துரோகிகள் கீழ்த்தரமான உதவிகள் செய்வதை நிறுத்தாவிடில், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக ஈடுசெய்ய முடியாத பாதிப்புகள் ஏற்படலாம்.
47 வன்செயல்கள்
முஸ்லிம்கள் மத்தியில் தமது நிலைப்பற்றி பீதியும் திட நம்பிக் கையின்மையும் எற்படுத்துவதற்கு இன்று நடைபெறும் விடயங்கள்

இலங்கை முஸ்லிம்களது இன்றைய நிலைமை () 101
மட்டுமே காரணமாகின்றன என்பதற்கில்லை. நாட்டின் அரசியல் உயர் மட்டத்தவர் வழமையாக்கிக் கொண்ட, சிறுபான்மையோரை ஒதுக்கிவிடும் போக்கினை 1915ம் ஆண்டு நடைபெற்ற இன வன் செயல்களிலேயே காணக் கூடியதாக இருந்தது. இந்த வன் செயல் களுக்கு அநகாரிக தர்மபாலாவும் அவரது சகாக்களுமே காரணமாக இருந்தனர். நாவலாசிரியர் பி. சிரிசேனா கரையோர முஸ்லிம் களோடு (Coastal Moors) தொடர்பு வைக்கக்கூடாதென சிங்களவரை
வேண்டியிருந்தார்.
இது, ஏதோ ஒரு தனிப்பட்ட தற்செயலான நிகழ்ச்சியெனக் கருதுவதற்கு இடமில்லை. 1972ம் ஆண்டு இங்கும் அங்குமாக முஸ்லிம் களுக்கு எதிராக பல வன்செயல்கள் நடைபெற்றன. இதில் கொழும் பின் மத்தியிலுள்ளதான கொம்பணித்தெரு மசூதி தாக்கப்பட்டது. அடுத்து, 1975ம் ஆண்டு மகியங்கனைக்கு அருகேயுள்ள பண்டாரகம எனும் முஸ்லிம் கிராமம் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. முஸ்லிம் களது 61 வீடுகளும், 7 கடைகளும் கொள்ளையடித்தப்பின் எரிக்கப்
பட்டன.
முஸ்லிம்களுக்கு எதிராக இங்குமங்குமாக நடைபெற்று வந்த வன்செயல்கள் 1976ம் ஆண்டோடு தீவிரமடைந்தன. அந்த வருடம் (முஸ்லிம்கள் கணிசமாக வாழும்) கம்பளை, பாணதுறை, நிக்க வெரட்டியா, உட்பட 40 இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். அதே வருடத்தில் மாசிமாதம், வடமேற்கு கரையோரத்திலுள்ள புத்த ளத்தின் மசூதியில், முஸ்லிம்கள் தொழுது கொண்டிருக்கையில் பொலி சாரினால் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு உடைமையான 27 வீடுகளும், 44 கடைகளும் 2 தும்பு ஆலைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அரசாங்கத்தில் பல முஸ்லிம் அங்கத்தவர்கள் அன்று இருந்த போதிலும் பரராளுமன்றத்தில் எவ ரேனும் இப்பாரதூரமான விடயத்தை பிரச்சினையாக எழுப்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதிலிருந்தே, முஸ்லிம்கள் தம்மையும் தமிழர்கள் என்றே கருதவேண்டிய நிலை உருவாகின்றது என்றே
கூறலாம்.
முஸ்லிம்களுக்கு என இன பண்புகள் உண்டு என்பதையும் அவர் களுக்கென புறம்பான வரலாறு உண்டு என்பதையும் ஏற்று, இத னால் முழுமையாக தமிழரோடு இனங்காணுவதில் பிரச்சினைகள் ஏற்படும் என்பதையும் உணர்ந்து, தமிழர்களுள் முற்போக்கானவர் கள் பலர் பரந்த தமிழ் பேசும் சமூகத்துள் முஸ்லிம்களது மூல அபிலாஷைகளையும் சேர்த்துக் கொள்வதில் முயற்சி செய்து வரு கிறார்கள்.

Page 66
102 0 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
அதே வேளை தனது நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு மட்டுமே முஸிலிம்கள் வேறு தமிழர்கள் வேறு எனக் கையாளுகின் றது என்பதும், உண்மையில் தமிழர்களைப் போல் முஸ்லீம்களுக் கும் எதிராக எந்தநேரமும் வன்செயல்களை கட்டவிழ்த்துவிடவும் தயாராக இருக்கிறதென்பதும், அரசாங்கம் அது கையாண்டு வரும் செயல்கள் மூலம் தெளிவுபடுத்துகின்றது.
இஸ்ரேலியரது நிலம் பறிக்கும் கொள்கை போன்று, இலங்கை யிலும் கையாளப்படும் இப்போக்கிற்கு, அண்மைக் காலங்களில், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களே, இலக்கா கின்றனர். கிழக்கு மாகாணத்தின் அட்டாளைச் சேனைப் பகுதி யிலுள்ள பொன்னாவெளியில் பரம்பரையாக வாழ்ந்து வந்த முஸ் லிம்கள் ஆயுதம் தாங்கிய சிங்களக் கும்பல்களாலும் பாதுகாப்பு படையினராலும் வெளியேற்றப்பட்டுவருவது இதற்கொரு உதார ணமாகும். அவர்கள் வெளியேறியதால் காலியான நிலங்களில் வெளிப் பிரதேசத்து சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் வறிய விவசாயிகளே யாவர். பரம்பரையாக தாம் வாழ்ந்த பகுதிகளில் இருந்து 'ஊர் காவல்படை' என்று அமைக்கப்படும் படையினரால் விரட்டப்படு வதை முஸ்லிம் அமைச்சர்களிடம் முறையீடு செய்துள்ளார்கள். அரசாங்கம் பிரச்சினையைத் தீர்த்து வைக்காவிடில், தமது உரிமை களை நிலைநாட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் தாம் இறங் கவும் தயாராக இருப்பதை கூறிவிட்டார்கள்.
எதிர்க்கட்சியிலும் அரசாங்கத்திலும் உள்ள முஸ்லிம் பிரதிநிதி கள் தமது தமிழ் அபிமானத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இது வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. கிழக்கு மாகா ணத்திலுள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினரை கட்டவிழ்த்து விட்டு பாரதூரமான விளைவுகளையும் அரசாங்கம் ஏற்படுத்துகின்றது என கொழும்பு மத்திய தொகுதி அங்கத்தவரான ஜனாப் ஹலீம் ஈஷாக (சிறீ லங்கா சுதந்திர கட்சி) குற்றஞ் சாட்டியுள்ளார். முல்லைத்தீவின் மாவட்ட அமைச்சரும் கிழக்கு மாகாணத்தில் கல் முனைத் தொகுதியில் பிரதிநிதியாகவு முள்ள ஜனாப் மன்சூர் 1971ம் ஆண்டு வெறுமனே பொருளாதார காரணங்களுக்காக ஏற்பட்ட கலவரத்தோடு இன்று நடைபெறும் விடுதலைப் போராட்டத்தை ஒப்பிட வேண்டாமென எச்சரிக்கை விடுத்தார். "தமிழ் சமூகத்தவருக்கு எதிராக திணிக்கப்பட்ட அநீதி களை அகற்றவே இளைஞர்கள் இன்று போராடுகிறார்கள்” என்று

இலங்கை முஸ்லிம்களது இன்றைய நிலைமை 0 108
கூறியிருந்தார். உதவி அமைச்சராகவும் 26 வருட அனுபவமுள்ள கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பிரதிநிதியாக ஜனாப் மஜீத் தன் தொகுதியின் ஹிங்குரான கரும்புப் பயிர் செய்கை நிலத்தில் 5000 ஏக்கர்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டதை வன்மையாக கண்டித்துள்ளார்.
தீகவாவியை அண்டிய பிரதேசத்தை புனிதப் பிரதேசமாக்கு வதாகக் கூறி அங்கு பரம்பரையாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களது நிலவுரிமையை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. நடந்தது என்ன வென்றால், வெளியேற்றப்பட்ட வெற்று இடங்களில், 560 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு தொகுதியின் சனத்தொகை விகிதா சாரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புனிதப் பிரதேசத்திற்கென 6 ஏக்கர் நிலம் மட்டுமே இன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கங் கள் குடிசனத் தொகையில் மாற்றங்களை ஏற்படுத்தும் கொள்கை யாக இந்த சூழ்ச்சியையே கையாண்டு வருகின்றன.
4.8 புதிய வழி முறைகள்
வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒருங்கிணைத்து தனி அரசு (கூட்டணி) கோரும் இவ்வேளையில், முஸ்லிம்கள் நான்கு திட்டங் களை முன்வைத்துள்ளார்கள். அம்பாறையை ஒரு முஸ்லிம் பகுதி யாகப் பிரிப்பது ஒன்று. தாம் பெரும்பான்மையாக உள்ள தமிழ் பிர தேசங்களை ஒன்றுபட இயங்க வைப்பது இன்னொன்று. தாம் சிறு பான்மையாகாத வகையில் வடக்கு கிழக்கு என இன்றுள்ள நிலையை மாற்றாது இருப்பது ஒன்று. தமக்கென ஒரு பிரதேச சபை வேண்டு மென்பது மற்றொன்று.
தமிழ் மொழி அடிப்படையில் உருவாக இருக்கும் அரசில் இஸ் லாமிய சமயத்தவர் எனும் அடிப்படையிலேயே பாகுபாடு காட்டி ஒதுக்கப்படலாம் என்பதே தயங்குவதற்குக் காரணமாகலாம். தமிழ் கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினரே. ஆனால் சமய அடிப்படையில் பீதியடையவில்லையே. ஆகவே சமயம் காரணமாக பாரபட்சம் என்பதற்கு ஆதாரமேயில்லை. சமயம் எனும் சாட்டுப் போக்கில் அரசாங்கம் சிறுபான்மையோரை பிளவுபடுத்தி அவர்களது உரிமை போராட்டத்தின் வேகத்தை தணிக்கும் முயற்சியில் முஸ்லிம்களை கருவியாக பயன்படுத்தவிடாது, சமய பீதியை அகற்ற உதவும் முழு இலங்கையுமே சமய சார்பற்ற அரசாக இருக்க வேண்டும் எனும் கோரிக்கைக்கே முஸ்லிம்களும் போராட வேண்டும்.
சிறுபான்மையோர் ஒதுக்கப்படுகின்றனர் என்பது மறுக்க முடி யாத வரலாற்று உண்மை. இவர்களுள் பெரும்பான்மையோர்

Page 67
104 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
தமிழ் பேசும் மக்களென்பதும் உண்மை. இதனை மாற்றியமைக் கும் போராட்டம் தமிழ் பேசும் மக்களது விடுதலைப் போராட்டம் என்றே இன்று முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. ஒதுக்கப்படும் மக்களென இனம் காணும் போது சமய கலாச்சார விடயங்களல்லமொழியூடாக மட்டுமே இச்சிறுபான்மையோர் ஒன்றாகின்றனர். சமய கலாச்சார அடிப்படையில் வேறுபடுவதினின்றும் விடுபட்டு எமக்கென ஒரு மொழியுண்டு எனும் உணர்வு ஏற்பட்டால் மட்டுமே போராட்டம் வெற்றி பெறும். சமயம், கலாச்சாரமென்பதை பொருட் படுத்தாமல் தமிழ் பேசும் மக்கள் என்பதனால் மட்டுமே ஒதுக்கப் படுகின்றமையாலேயே இப்போராட்ட யுக்தி பயன் தரத்தக்க அளவு முக்கியமாகின்றது. இவ்வித வரலாற்று பின்னணியில் முஸ்லிம் இனத்தவர்கள் தேர்ந்தெடுப்பதற்குரிய வழிவகைகள் பின்வருமாறு:
4.8. ஒருங்கிணைந்த வட-கிழக்கு மாகாணம்:-
வடக்கிலும் கிழக்கிலும் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்த்து வைக்க இரண்டு மாகாணங்களும் இணைந்து தமிழ் பேசும் மக்களுக்குரிய ஒரே உறுப்பாக இருக்க வேண்டும் எனக் கோரும் நிதானமுள்ள தமிழரோடு ஒன்றுபடுதல். சமய வேறுபாடுகளை மறந்து, ஒருங்கிணைந்த தமிழ் மாநிலம் வேண்டும் என, இந்த இக்கட்டான நிலையில் முன்வருவதென்பது, இந்த லட்சியத்துக்காக எல்லா சமயங்களையும் சேர்ந்த போராளிகளது தியாகங்களை மதிப்பதற்கு நம்மால் செய்யக் கூடிய சிறு உதவியாகலாம். சமா தானம் வேண்டுமெனக் கூறும் இயக்கங்களிடமும் இக்கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பும் படி வேண்டுகிறோம். இங்கு குடியேற வந்த சிங்கள மக்களிடமும், சிங்களப் பிரதேசத்தில் எவ்வாறு நமது மக்கள் அங்குள்ள மொழியையும் வாழ்க்கை முறைகளையும் ஏற்றுக் கொண்டனரோ, அவ்வாறே இங்கு எம்மோடிருந்து நடந்துக் கொள் ளும்படியும் வேண்டிக் கொள்கிறோம். இக்கட்டத்தில் இதனை ஏற்க மறுப்பவர்களிடம் உங்களுக்கு வசதியான இடங்களுக்குச் சென்று குடியேறும் சுதந்திரத்தை மதிப்பவர்கள் நாம் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.
4.8.2 வட-கிழக்கில் தனி மாவட்டம்
வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் அதே வேளையில் அதனால் முஸ்லிம்களுக்கென ஒரு தனி மாவட்டத்தை உருவாக்கிக் கொள்ளல். புவியமைப்பு ரீதியாக அன்டிய பகுதிகளல்லாத இடங் களையும் இதனுள் சேர்ப்பது என்பது முடியாது. இதனால் விலக்கப்

இலங்கை முஸ்லிம்களது இன்றைய நிலைமை () 105
படும் முஸ்லிம்களுக்கு இச்சலுகையினால் ஏற்கக்கூடிய நன்மைகள் எட்டாது என்பது ஒரு பெரும் குறையாகின்றது. 4.8.3 சிங்களப் பகுதியில் தனி மாவட்டம்
முஸ்லிம்களுக்குள் 62% மானோர் தமிழ்ப் பிரதேசங்களைச் சாராத சிங்களப் பகுதிகளில் வசிப்பதனால், அங்கு ஒரு முஸ்லிம் மாகா ணத்தை உருவாக்குவது. இதனை நடைமுறை படுத்துவதாகில் சமூக அரசியல் போக்குகள் இதர முஸ்லிம்களை இப்பகுதிக்கே சென்று குடியேறச் செய்யும். இவ்வாறு குடிபெயர்ந்து செல்வதென் பது சமூக பெருளாதார அரசியல் ரீதியான பேதங்களை இவர்கள் மத்தியில் உருவாக்கும். நாட்டின் இதர பகுதிகளோடு ஏற்படக் கூடிய உறவுகளையும் பாதிக்கும்.
முடிவுரை
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்த மொழிவாரியான தமிழ் அரசை ஏற்படுத்தப் போராடும் இக்கட்டத்தில் முஸ்லிம்கள் மத்தியில் திடீரென எதிர்ப்பு எழுவதென்பது கூர்ந்து ஆராயத் தக்கது. இதுவரை பாகுபாடும் ஒதுக்கலும் சமய அடிப்படையில் ஏற்பட வில்லை, மொழி காரணமாகவே ஏற்பட்டுள்ளன. இப்போராட்டத்தில் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களும் ஒன்று திரண்டிருக்கிறார்கள். ஆகவே இப்போராட்டத்திற்கு திடீர் ஆட்சே பணை என்பது எங்கிருந்து ஆரம்பித்தது என்பதே கேள்வி.
ஆட்சேபணை என்பது வட கிழக்கு பகுதியில் வாழும் முஸ்லிம் களிடம் இருந்து எழவில்லை, சிங்கள இனவெறியரோடு கூடி நின்ற ஒரு சில வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு உட்படாத முஸ் லிம்களே, தாம் அனுபவிக்கும் வசதிகளை இழக்க நேரிடும் என அஞ்சி இவ்வித ஆட்சேபணையை எழுப்பியுள்ளார்கள். அரசாங்கத் திற்கும், சாதகமாக இருப்பதனால், இதனையே முஸ்லிம்களது கோரிக்கை எனக்காட்டவும் அயராது முயலுகின்றது. இவர்கள் ஆட்சேபணை தெரிவிப்பதனால், தமிழ்ப் பிரதேசங்களில் அடக்கு முறை குறையப் போவதில்லை. அடக்குமுறையை அகற்றக் கோரும் தமிழ் அரசுக்கு நடைமுறைச் சாத்தியமுள்ள மாற்று யோசனைகளாகவும் இவை இருக்கவில்லை,
அரசாங்கத்திற்கும் தம்மை கருவியாக்கிக் கொள்ளாமல், சிங் களப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் சிங்கள அயலவரோடு தமது நலன்களும் ஒருமைப்பட்டு இணைகின்றது என உணரத் தொடங்கு வது நன்மை தரத்தக்கதாகும். தமது சமயத்தைச் சேர்ந்த தமிழர் பற்றிக் கவலைபடுவதனால், எல்லா தமிழ் மக்களது அபிலாஷைக ளையும் ஏற்றுக் கொள்ளும்படி அரசாங்கத்தையே வற்புறுத்தலாம்.

Page 68
ஐந்தாம் அத்தியாயம்
அரசாங்க குடியேற்றங்கள்
குடியேற்றம் என்றதும் வேறொரு நாட்டிலிருந்து புதிய ஒரு நாட்டில் குடியேறுபவர்களைக் குறிப்பதுவே வழமை. பிரித்தானியர் இலங்கையில் வந்து சேர்ந்தது இதற்கு ஒரு உதாரணமாகும். ஆனால் இலங்கையிலோ, இச்சொல்லுக்கு வேறொரு விளக் கம் தரப்படுகின்றது. அதாவது அரசினால், அரசின் செலவில் குறித்த ஒரு இனத்தவர் வாழும் பிரதேசத்தில் வேறு இனத்தவரை (சிங்கள வரை) பெருமளவில் கொண்டு வந்து குடியிருக்க வைப்பதையே இது குறிக்கும். இதனால், பல தகராறுகளும் வன்செயல்களும் உருவாகிவிட்டன.
பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசத்தின் பகுதிகளை மாற்று இனத்தவர் கைக்கொள்ள பெரும்பான்மையோருக்கு சாதகமாகவும் சிறுபான்மை இனமாகிய தமக்குப் பரம்பரையாக இருந்த குடிசன அமைப்பு பாதகமாகவும் மாறி வருவதால் தமிழ் மக்களுக்கு இது பெரும் பிரச்சனையாகவே வந்துள்ளது. எந்த ஒரு இனமும் தன் கலாச்சாரத்தையும், மொழியையும், சமூக - பொருளாதார அமைப் பையும் இனம் காண முயலும் போது வாழும் நிலம் முக்கியமா கின்றது.
5:1 சுதந்திரத்திற்கு முன்
1931ம் ஆண்டு நடந்த முதற்சட்ட சபைத் தேர்தலின் பின் அமைச்சர்களுள் பெரும்பாலோர் சிங்களவர்களாக இருந்தனர். இவர்களுள் டி. எஸ். சேனநாயகா காணி விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரே குடியேற்றத் திட்டங்களை தொடங்கி யவர். மேலதிகமான குடிமக்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்க

அரசாங்க குடியேற்றங்கள் () 107
வும், உணவு உற்பத்தியை பெருக்கவும் அரசின் செலவில் புதிய குடியேற்றத் திட்டங்களை தயாரித்து தரும்படி விவசாய காணி நிருவாகக் கமிட்டி சட்ட சபையால் பணிக்கப் பட்டது. பாழடைந்த பண்டைய கால நீர்பாசன குளங்களைத் திருத்தி அமைப்பதும் திட் டத்துள் அடங்க வேண்டியிருந்தபடியால், அருகாமையிலுள்ள காணி களும் மீட்கப்பட வேண்டியிருந்தது. கமிட்டியின் அறிக்கை 1932ம் ஆண்டு சமர்ப்பிக்கப் பட்டு சட்ட சபையில் விவாதம் 1939ம் ஆண்டில் முடிவடைந்தது. வரண்ட பிரதேச பகுதிகளே விசேடமாக தெரிந் தெடுக்கப்பட்ட பகுதிகளாக இருந்தன. ஈரலிப்புப் பிரதேசங்களில் போதிய நிலம் இருக்கும் போதும் வரண்ட பிரதேசத்தில் மக்களை கொண்டு குடியேற்றுவதை உறுப்பினர்கள் வன்மையாகக் கண்டித் தனர். தென் மாகாணத்திலும் 10,000க்கும் 15,000 ஏக்கருக்கு மிடையே, அறிக்கை சிபாரிசு செய்யும் செலவை விடக் குறைந்த செலவில், பயிர் செய்யலாம் என்பதைச் சுட்டிக் காட்டினார்கள். பொருளாதார சிக்கனத்தை விட அரசியல் நோக்கங்களே பிரதான மாக இருந்தபடியால் இவர்களது வாதங்களுக்கு சபை செவிசாய்க்க வில்லை. அறிக்கை சமர்பித்த திட்டத்தை நிறைவேற்ற 4 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு முன் புத்தள மாவட்டமும் அநுராதபுர மாவட் டத்தின் எல்லைப்புறங்களுமே இத்திட்டத்துள் அடங்கின. அவை
66
1) டெறகம, 2) எலஹெற, 3) காகம (பழைய).
4) காகம (புதிய) 5) கொட்டுக்கச்சி, 6) தப்போவ,
7) ரிதிபந்த எல, 8) பாரக்கிரம சமுத்திரம் 9) நாச்சதுவ
இங்கு பல சிங்கள விவசாயக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. நிலையாக குடியேறுவதற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 8 ஏக்கர் நிலமும் முதலாகப் பணமும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. தெரிந்தெடுக்கப்பட்ட நிலம் நீர்பாசன வசதியின்றி வரண்ட பகுதி களாக இருந்தமையால் சில குடியேற்றத் திட்டங்கள் சீராகவில்லை. வெகு தூரப் பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் இப்பிரதேசங் களில் வாழ தயாராக்கப்படவும் இல்லை,
5.2. சுதந்திரத்திற்குப் பின்
சுதந்திரம் அடைந்ததும் சிங்கள அரசியல்வாதிகளுள் பெரும் பாலோர் குடியேற்றத் திட்டங்களுக்கு புதிய உற்சாகம் ஊட்டினார்

Page 69
108 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
கள். தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் எல்லாம் பாரம்பரிய தமிழ் பிரதேசங்களே.
1966ம் ஆண்டு டட்லி சியர்ஸ் எனும் நிபுணரைத் தலைவராகக் கொண்ட சர்வதேச குழு ஒன்று குடியேற்றத் திட்டங்களின் நிலையை மதிப்பீடு செய்தது. தமது விசாரணை அறிக்கையில், "பெரும் குடியேற்றத் திட்டங்கள் பயன்தரத்தக்க நிலைபற்றி அடுத்தடுத்து வந்த அறிக்கைகள் முன்னமே சந்தேகம் தெரிவித்துள்ளன. 1974ம் ஆண்டை அடுத்து அமுல் நடத்தப்பட இருக்கும் மகாவெலி கங்கைத் திட்டம் முதலுக்குரிய லாபத்தை குறைவாக தருவதாகவேயிருக்கும்” ான எச்சரிக்கை செய்தார்.1
விமர்சனங்கள் கண்டனங்கள் எழும் என்பதை எதிர்பார்த்த சிங் கள அரசியல்வாதிகள் ஐ. எல். ஒ. அறிக்கை வெளிவருவதற்கு முன் பாகவே மகாவெலி அபிவிருத்தி சபையை உருவாக்கும் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி முடித்துக் கொண்டனர்.
1969ம் ஆண்டு மகாவலி திட்டம் சம்பந்தமாக வெளிவந்த முதல் பெருந் திட்டம் (Master Plan) 30 வருடத்திற்குள் செய்து முடிக் கலாமென எதிர்பார்த்தது. ஆனால் இன்றைய அரசாங்கத்தால் தொடக்கப்பட்ட "விரைவுபடுத்தும் அபிவிருத்தி திட்டம் ஆறு வருடத்திற்குள் செய்து முடிப்பதாக அதனைக் குறைத்துக் கொண் டது. 200 கோடி ரூபாவைக் கொண்ட பயங்கர செலவுடைய இத்திட்டம் 520,000 ஏக்கர்களை நீர்பாசனத்திற்கு உட்படுத்து வதையும் இலட்சக் கணக்கானோரை குடியேற்றுவதையும் எதிர் பார்க்கின்றது. ஆனால் அபிவிருத்தித் திட்டத்தின் பொறியியல் நிலைபாடு பற்றியும் உருவாக்கப்பட இருக்கும் விவசாய சமூகத்தின் தன்மைபற்றியும் ஐயப்பாடுகள் எழுப்பப்பட்டுள்ளன.? எது எவ்வா றாக இருப்பினும், திட்டங்களை அமுல்படுத்தி தம் ஆதரவாளர் களுக்கு காணி வழங்குவதே அதிகார மோகங் கொண்ட சிங்கள் அரசியல் வாதிகளுக்கு பிரதானமாகத் தென்படுகின்றது.
5.3. திருகோணமலை
குடியேற்றங்கள் தீவிரமாக ஏற்பட்டதனால் திருகோணமலை மாவட்டத்தின் இன அடிப்படையில் குடிசன அமைப்பு முறையே பாரதூரமாக மாற்றப்பட்டுவிட்டது. 1827ம் ஆண்டு மொத்தத் தொகை யினருள் 31.8% ஆக இருந்த தமிழர்கள் 1981ம் ஆண்டில் 23.4% ஆக குறைக்கப்பட்டுவிட்டார்கள். இதே நிலை அடுத்த பத்து வருடங் களுக்குத் தொடருமேயாகில் தமிழர் இப்பகுதியிலிருந்து அறவே ஒழிக்கப்படுவர்.

அரசாங்க குடியேற்றங்கள் ப 109
பின்வரும் அட்டவனை மூன்று இனத்தவரது விகிதாசாரத்தை தருவதாக உள்ளது.*
அட்டவணை 5:1 குடிசன மதிப்பீடு - திருகோணமலை மாவட்டம் (1827-1981)
வருடம் தமிழர் % முஸ்லிம்கள் % சிங்களவர் %
1827 15,663 81,8 3, 245 16, 9 250 1,3 1881 14,394 64, 8 5,746 25, 9 935 4, 2 1891. 17,117 66,4 6, 426 25,0 1,109 4,3 1901 i7,069 60,0 8,258 29, 0 1,203 4, 2 1911 17,233 57,9 9,714 32,6 1,138 3,8 1921 18, 586 54, 5 12,846 37,7 1,501 4,4 1946 33,795 44,5 23,219 30,6 ii,606 15,3 1953 37,517 44,7 28,616 34, i. 15,296 18, 2 1963 54,050 39,1 42, 560 30, 8 40,950 29,6 1971 71,749 38,1 59,924 31,8 54,744 29, 1981 93,510 36,4 74,403 29,0 86,341 33,6
பரப்பளவு சதுர கிலோ மிற்றர் 2618.2 (ச.கி.)
பிரசித்திபெற்ற இயற்கை துறைமுகம் இங்கு இருப்பதனாலும் திரு கோணமலை முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனால் இது தமிழ் பிர தேசமாக இருந்ததனால் மூல வளங்களுக்கேற்ப அபிவிருத்தியடைய வில்லை. 1977ம் ஆண்டு ஐ.தே.க ஆட்சிக்கு வந்ததும் விரிவடைந்த பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் சுதந்திர வர்த்தக வலையம் ஒன்றினை ஆரம்பிக்க இருந்த நேரத்தில் நிபுணர்கள் திருகோணமலையே அதற்கு உகந்ததென கூறியிருந்தும், தமிழ் பிரதேசம் என்றபடியால், அதனை அங்கு ஆரம்பிக்காது கொழும் புக்கு வடக்கேயுள்ள கட்டுநாயக்காவில் ஆரம்பித்தார்கள். காலப் போக்கில் சிங்களமயமாக்கப்பட்டதும் அவர்களது நன்மைக்காக துறை முகத்தை நன்கு பயன்படுத்துவார்களென எதிர்பார்க்கலாம்.
5.3 1. நீர்ப்பாசனத் திட்டங்கள்
சுதந்திரம் பெற்ற பின் திருகோணமலை மாவட்டத்தில் பல நீர்ப்பாசன குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவை ust 660T ;

Page 70
110 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
அல்லை நீர் தேக்குத் திட்டம், கந்தளாய் குள விருத்தித் திட் டம், முதலிக்குளம் (மொறவ) விருத்தித் திட்டம், பதவியக் குளம் புனருத்தாரன விருத்தித் திட்டம், (இக்குளம் வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்தாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை மாவட்டத்தின் பெரும் பகுதி நிலத்திற்கு நீர் பாய்ச்சும்), பெரிய விளாங்குளம் (மகாடிஷல் வேவ).
இத் திட்டங்களின் கீழ் உள்ள காணிகள் இலங்கையின் இதர பாகங்களிலுமுள்ள சிங்களவருக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. நிருவாகம் செய்யும் பகுதிகளை அனுராதபுர மாவட்ட எல்லைக்குள் கொண்டு சென்றதனால் பதவிக் குளத்தால் நீர் பாய்ச்சக்கூடிய திருகோணமலை மாவட்டப் பகுதிக் காணிகளை பகிர்ந்துக்கொடுக் கும் பொறுப்பும் அனுராதபுர மாவட்ட நிருவாகத்திற்கே மாற்றப் பட்டது. இதனால் மற்றப் பகுதிகளிலிருந்து சிங்களவரை குடியேற் றுவது வசதியாயிற்று.
திருகோணமலை மாவட்டத்தின் நீர்பாசனத் திட்டங்களுள் காணி பகிர்ந்துக் கொடுப்பதென்பது பின்வரும் அடிப்படையிலேயே நடைபெற்றது.
அ. அல்லை விஸ்தரிப்புத் திட்டத்தில் 65% சிங்களவருக்கும், 35% தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும், மட்டுமே கொடுக்கப்பட்டது.
ஆ. கந்தளை விருத்தித் திட்டத்தின் காணிகளுள் 77% சிங்கள வருக்கும் 23% தமிழ்பேசும் மக்களுக்கும் கொடுக்கப்பட்டது.
இ. முதலிக்குளம் (மொறவேவ) திட்டத்தில் ஓரளவுக்கு சம மாகப் பிரித்துக் கொடுத்திருந்தாலும் தமிழருக்கெதிரான வன் செயல் கள் நடந்தபோது தமிழர்கள் வெளியேற வேண்டிய நிர்பந்தத்திற் குள்ளானார்கள்.
ஈ. பதவியக்குளம் குடியேற்றத் திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்துள் அடங்கும் பகுதிகளில் காணிகள் முழுமனையும் சிங்களவருக்கே கொடுக்கப்பட்டது. வடமத்திய மாகாணத்துள் வரும் காணிகளும் சிங்களவருக்கே கொடுக்கப்பட்டது.
5.3, 2. காணி பங்கீடு
அரசாங்கம் நடத்தும் குடியேற்றத் திட்டங்களுள் தமிழ் பேசும் மக்களை வேதனைக்குள்ளாக்கும் காரணங்களுள் ஒன்றாகும் என்

அரசாங்க குடியேற்றங்கள் D 111
பதை ஐ. தே. க. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ள போதும், 1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின் குடியேற்றும் கொள் கை முன்னைய நிலையைவிட அதிதீவிரமாக அமுல் நடத்தப்பட் டது. பெரிய விளாங்குளம் (மகாடிவுல்வேவ) திட்டத்தைப் பொறுத்ந வரை, காணிகள் வழங்குவதில் அப்பகுதி மக்களது இன அமைப்பை மதித்து வழங்குவதாக வாக்குக் கொடுத்த போதிலும் முதற்கட்டத் தில் பின்வரும் அடிப்படையிலேயே காணிகள் கொடுக்கப்பட்டன :
சிங்களவர் - 348 காணிகள் (82.5%) தமிழர் 55 , , (13.0%) முஸ்லிம்கள் - 19 , , (4.5%)
திருகோணமலைப் பாராளுமன்றப் பிரதிநிதி கண்டனம் தெரிவித்த பின் பகிர்ந்து கொடுத்த வீதம் பின்வருமாறு :
சிங்களவர் - 372 காணிகள் (64.7%) தமிழர் -28.7( 9 165 -س%) முஸ்லிம்கள் - 38 9 ( 6.6%)
இங்கு சில பகுதிகளில் காணிகளின் பரப்பளவு தமிழ் பேசும் மக்களை பாதிக்கும் அளவு குறைக்கப்பட்டது. பகிர்ந்து கொண்ட விகித முறையும் பிரதேசத்தின் இன ரீதியான விகிதாசாரத்தைப் பொருட்படுத்தியதாக இல்லை. இங்கும் 165 காணிகளுள் குடியே றிய தமிழர்களது 36 வீடுகள் 1983ம் ஆண்டு ஆனி-ஆடி-ஆவணி மாதங்களில் நடந்த வன்செயல்களில் சிங்களவர்களால் எரிக்கப்பட்டு விட்டன.
பறயன்குளத்து 7ம், 8ம் பிரிவுகளிலும் முதலிக் குளத்திலும் (மொறவேவ) ஏனைய பகுதிகளிலும் குடியேறிய தமிழர்களது நிலத் தினின்றும் வன்செயல்களால் அவர்களை குடியெழுப்பியதும் சிங்கள வர்கள் அவற்றைத் தமக்கு உரியதாக்கிக் கொண்டார்கள். இவர் களில் பெரும்பாலானோர் அமைச்சர் ஒருவரது முயற்சியால் வெளி மாவட்டங்களில் இருந்து 1983ம் ஆண்டு ஆடி மாதத்திற்குப் பின் கொண்டுவரப்பட்டவர்கள். பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமது குடி யிருப்புகளுக்கு இன்று திரும்பிப்போக முடியாத நிலையிலேயே இருக் கிறார்கள். இதே போன்று 1983ம் ஆண்டு வன்செயல்களினால் திருகோணமலையிலிருந்து அனுராதபுரம் செல்லும் சாலை அருகே யும், 20 மைல்வரை உட்புரமாகவுள்ள சிவயோகபுரம், வெல்வேழி, கிதுலூற்று, பன்மதவாச்சி, பாரதிபுரம், பன்குளம், நொச்சிகுளம்

Page 71
112 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
முதலிய பகுதிகளில் வாழும் தமிழரது உடமைகள் நாசமாக்கப்பட் டன. இவை யாவும் திருகோணமலை முதலிக்குளமாகிய உதவி அரசாங்கப் பிரிவுகளுக்குள் வருவன. பாதிக்கப்பட்டு, திரும்பிப் போக முடியாமலும் உள்ள தமிழர்களுக்கு ஒருவித அரசாங்க உதவி யும் கொடுக்கப்படவில்லை. இவர்களது புனர்வாழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் ஏனைய சமூகசேவை இயக்கங்களும் எடுக்கும் முயற்சி களுக்கு சிங்கள அரசாங்க உத்தியோகத்தர்கள் தடையாகவே இருக் கின்றனர்.
கவத்திக்குடா, சீனக்குடா பகுதிகளில் வசித்த தமிழர்கள் வெளி யேற்றப்பட்டு அவர்களது இடங்களில் சிங்களவர்கள் குடியேறிவிட் டார்கள். 1983ம் ஆண்டு ஆனி-ஆவணி வன்செயல்களினால் கப்பல் துறையில் உள்ள தமிழரது உடமைகளை இராணுவத்தினரது உதவி யோடு சிங்கள குடியேற்றவாசிகள் அழித்து விட்டார்கள். இதனால் பாதிப்புற்ற தமிழர்கள் சமூகசேவை இயக்கங்களது உதவியோடு தமது வதிவிடங்களை கட்டியமைத்துக் கொண்டார்கள். ஆனால் 1984ம் ஆண்டு ஆடிமாதம் 4ம் திகதி கடற்படையினரும் இராணு வத் தினரும் சிங்கள உதவி காணி கமிஷனருடனும் சிங்கள கிராம சேவகருடனும் வந்து இவர்கள் கட்டிய 43 வீடுகளை அழித்து விட் டார்கள். இவர்களுள் 25பேர் அரசாங்க அனுமதி பத்திரங்கள் வைத்திருந்த போதிலும் இவ்வாறு செய்தார்கள்.
1983ம் ஆண்டு ஆடி மாதம் 24ம் திகதி திருகோணமலையி லுள்ள 500 தமிழ் அகதிகள் தாமிருந்த முகாம்களிலிருந்து இராணு வத்தினரால் பலவந்தமாக அரசாங்க பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு மலைநாட்டிற்கு கொண்டு சென்று அங்கு பல இடங்களில் சாலை யருகே இறக்கிவிடப்பட்டார்கள். இவர்கள் குடியிருந்த காணிகளில் சிங்களவரை குடியிருத்தும் நோக்கத்துடனேயே இவ்வாறு நடந்து
கொண்டார்கள்.
1983ம் ஆண்டு ஆனிமாதம் தொட்டு திருகோணமலையில் சிங்களவர்கள் பெருமளவில் அத்துமீறிக் குடியேறி விட்டார்கள். சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு :
அ. குச்சவெளி உதவி அரசாங்க பிரிவுள் திருகோணமலை - புல்மோட்டை சாலையில் புல்மோட்டை விவசாய அபிவிருத்தி கமிட்டி கட்டடத்து அருகேயிருந்து தென்னைமரவாடிக் கிராமத்துக்குத் திரும் பும் பகுதிகளில் புதிய காணிகள் விருத்தி செய்யப்பட்டு சிங்களவர் கள் சட்டத்துக்கு விரோதமாக குடியேறியுள்ளார்கள், இவர்களே

அரசாங்க குடியேற்றங்கள் 0 118
1984ம் ஆண்டு மார்கழி 2ம் திகதி தென்னைமரவாடி கிராமத்தைத் தாக்கி அங்குள்ள தமிழர்களது 165 வீடுகளையும், 7 கடைகளையும், பல வாகனங்களையும் எரித்து விட்டார்கள். இதனால் 147 குடும் பங்களைச் சேர்ந்த 749 தமிழர்கள் அயல் கிராமங்களுக்கு அகதி களாகச் செல்லவேண்டி இருந்தது.
ஆ. யன்-ஒயா அணைக்கட்டை நோக்கிச் செல்லும் சாலை அருகிலும் உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள தென்னை மர வாடிக்கு இட்டுச் செல்லும் சாலையருகிலும் புதிய காணிகள் அபி விருத்தி செய்யப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.
இ. திரியாய் கட்டுக்குளம்பத்து சாலையருகிலும், குச்சவெளி உதவி அரசாங்க அதிபர் பிரிவின் உள்ளூர் பகுதியிலும் மரமுந்திரி கை கூட்டுத்தாபனத்தினால் முந்திரி பயிரிடுவதற்கு எனும் சாட்டில் சிங்களவர்களை குடியேற்றுவதற்கென காணிகள் தயாரிக்கப்பட்டுள் ளன. அத்துமீறியும் சிங்களவர்கள் குடியேறியுள்ளார்கள்.
ஈ. சலப்பையாறு பகுதிகளில் சிங்களவரது அத்துமீறிய குடி யேற்றம் இன்னும் தொடர்ந்து நடந்துக் கொண்டேயிருக்கின்றது.
உ. அதே உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள கும்புறுபிட்டி யில் கொக்கு விழந்தான்குளம் எனும் புராதன குளமொன்று திருத் தியமைக்கப்பட்டது. காணிக் கச்சேரி ஒன்றை நடத்தி அப்பகுதி யில் காணியற்றோருக்குக் காணி வழங்குவதே ஏற்கப்பட்ட முறை யாகும். ஆனால் நடந்தது என்னவென்றால், வேறு மாவட்டங் களிலுள்ள சிங்களவர்கள் இங்கு அத்துமீறி குடியேற்றப்பட்டு விட் டார்கள். S.
ஊ. அதே பிரிவிலுள்ள கும்புறுப்பிட்டி பகுதியில் இளைஞர் சேவை அமைச்சிடம் இளைஞர் பயிற்சி முகாம் அமைப்பதற்கென காணி வழங்கப்பட்டது. பயிற்சிக்கென கட்டிடங்களும் எழுப்பப்பட் டன. இதற்கு முன்பாக அப்பகுதியில் காணியற்றோராகவுள்ள மக் களுள் நிலம் தேவைப்பட்டவருக்கே இக்காணிகளை வழங்கும்படி பாராளுமன்றப் பிரதிநிதி வற்புறுத்தினார். இவர்களுள் பெரும் பாலானோர் தமிழர்களும் முஸ்லிம்களும் ஆவர். இதற்கு மாறா சில பகுதிகள் சிங்களவருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. வீடுகள் கட்டுவதற்கும் அவர்களுக்கு வசதிகள் செய்துகொடுக்கப் பட்டுள் ளது.
எ. அல்லை கந்தளாய் சாலையோடும் புதிதாக கட்டிய பேர மட்டு குளம், வானாறு, வல்லைமட்டு முதலிய பகுதிகளிலும் வெளி

Page 72
114 )ெ பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
மாவட்டங்களிலுள்ள சிங்களவர்கள் பெருவாரியாக குடியேறியுள் ளார்க்ள்.
5.3.3. திருகோணமலை துறைமுகம்
1982ம் ஆண்டு வைகாசி 14ம் திகதி அரசாங்க அறிக்கையில் திருகோணமலை துறைமுக எல்லைகள் விஸ்தரிக்கப்பட்ட செய்தி அறிவிக்கப்பட்டது. குறித்த நிலங்களில் குடியிருந்த மக்களையோ பாராளுமன்றப் பிரதிநிதிகளையோ கலந்தாலோசித்ததாக இல்லை. இதுவரை துறைமுகத்தின் அதிகாரத்துள் 16 ஏக்கர் மட்டுமே பயன் படுத்தப்பட்ட போதிலும் 4000க்கும் 5000க்கும் இடையேயுள்ள ஏக்கர் நிலத்தை அரசு சுவீகரிக்கவுள்ளது. 1984ம் ஆண்டு துறை மும் அதிகார சபையின் கீழ் 5,500 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட் டது. இங்கும் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு அவர்களது இடத்தில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு விட்டார்கள்.
1980ம் ஆண்டு, உல்லாச பிரயாண அபிவிருத்திக்கென, திருகோணமலைக்கு வடக்கே 3ம் கட்டையிலிருந்து இறக்கக்கண்டி பாலம்வரையுள்ள எல்லாத் தனியார் காணிகளையும் அரசாங்கம் சுவீகரிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. இப்பகுதியிலுள்ள நிலங்கள் தமிழருக்கே உடமையாக இருந்தன. பலவிதமான பயிர் உற்பத்திக்குப் பயன்படுத்தியே வந்திருக்கிறார்கள். இந்த யோச னையை திருகோணமலை பாராளுமன்றப் பிரதிநிதி வன்மையாக கண்டித்ததினால் யோசனை கைவிடப்பட்டது. ஆனால் இத்திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு தமிழ் குடும்பங்கள் வெளியேற்றப்படும் ஆபத்திருக்கின்றது. அரசியல் யாப்பின் 6ம் திருத்தத்தோடு திரு கோணமலை மக்களுக்கு பாராளுமன்றத்தில் பிரதிநிதி இல்லாது போகவே, பாராளுமன்ற உறுப்பினரின் ஆட்சேபனையால் கைவிடப் பட்ட திட்டங்களை மீண்டும் புதுப்பித்து அமுல் நடத்தவும் தடை யின்றி குடியேற்றங்களை நடத்தவும் அரசாங்கத்திற்கு வசதியாகி விட்டது.
54. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள்
சுதந்திரம் அடைந்த பின், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப் புக்கு அருகேயுள்ள பட்டிப்பொலை ஆற்றின் பள்ளத்தாக்கிலேயே பெரும் குடியேற்றத் திட்டமொன்று முதன் முதலாக 1941ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பெயர் மாற்றப்பட்டு கல்லோயா பள்ளத்தாக்குத் திட்டம் என இதனை அழைத்தனர். இங்கு அம்பாறை எனும் புதிய நகரம் ஒன்று உருவாயிற்று. 50,000 ஏக்கர் நிலம் பயிர்

அரசாங்க குடியேற்றங்கள் () 115
செய்கைக்கு என வளமாக்கி, கல்லோயா பள்ளதாக்கு அபிவிருத்திச் சபை எனும் புதிய நிறுவனத்தின் கீழ், பாதயடிவட்டை, பக்கி யெல்லை, 13ம், 33ம், 35ம், 36ம், 40ம் காலனிகள் உட்பட பல சிங்கள கிராமங்களை உருவாக்கினார்கள்.
முன்பு மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்திருந்த இப்பகுதியை பிரித்து, அம்பாறை நகரத்தை மையமாக கொண்டு புதிய அம்பாறை மாவட்டத்தை 1963ம் ஆண்டு உருவாக்கினார்கள். இப்பகுதியின் அண்மையிலுள்ள அக்கறைப்பத்து, பொத்துவில், நிந்தவூர் பகுதி களிலும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றன. மட்டக்களப்பி லும் சிங்கள மீனவர் கிராமங்கள் அரசாங்கத்தினால் உருவாக்கப் பட்டன. புன்னைக்குடா இதற்கொரு உதாரணமாகும். மாதிரிக் கிராமங்கள் சிங்களவருக்கென்றே இங்கும் உருவாக்கப்பட்டன. (எ.கா-கெமுனுபுற)
அம்பாறை மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தினின்றும் பிரித் தெடுத்தபின் அப்பகுதிக்குரிய மாவட்ட நிருவாகப் பொறுப்பை மட்டக்களப்பு கச்சேரியிலிருந்து பிரித்தெடுத்து புதிய கச்சேரியிடம் ஒப்படைத்தார்கள். இதனால் மட்டக்களப்பு நகரத்தின் முக்கியத் துவம் மங்க ஆரம்பித்தது. நிருவாகப் பொறுப்பும் சிங்களவர்களி டமே கையளிக்கப்பட்டது. குடியேற்ற வாசிகளுக்கு வசதியாக இருக்கவே இவ்வித மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பரப்பளவிலும் 64.8% நிலம் பிரித்தெடுக்கப்பட்டது. புதிய மாவட்டமாகிய அம்பாறையில் குடியேறிய சிங் கள வர் கள் வாழும் பகுதிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பரம்பரை தமிழ், முஸ்லிம் கிரரமங்கள் இதனது எல்லைக்குட்பட்டதாகி அங் குள்ள மக்களும் இதன் நிருவாகத்திற்கே உட்படுத்தப்பட்டனர்.
வழமை போல் குமணை எனும் தமிழ் கிராமத்தில் ''L6 or டைய பெளத்த ஆலயம்" ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறி னார்கள். இதனால் இந்தக் கிராமம் "தீகவாபி" எனவும் பெயர் மாற்றப்பட்டு புனிதப் பிரதேசம் என்றும் அரசாங்கத்தினால் பிர கடனப்படுத்தப் பட்டது. இங்கு வாழ்ந்த தமிழர்களும், முஸ்லிம் களும் குடியெழுப்பப் பட்டார்கள். மாற்று நிலம் பெற்றுக்கொடுப் பது மட்டுமே அப்பகுதி பாராளுமன்ற அங்கத்தவரது பணியாக இருந்தது. பின்பு, 1981ம் ஆண்டு மாசி மாதம், தொகுதி நிர்ணயக் கமிஷனால் அம்பாறை தொகுதியும் ‘தீகமதுல்ல” தொகுதி எனவும் பெயர் மாற்றம் பெற்றது. அரசாங்கம் வற்புறுத்தியதனால், வர

Page 73
116 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
லாறும் அகழாய்வும் தந்த தகவல்களுமே தம்மை "தீகமதுல்ல' எனும் புதிய பெயர் இடும்படி செய்வித்தன என்று தொகுதி நிர்ணய கமிஷனும் கூறவேண்டியிருந்தது.
1983ம் ஆண்டு ஆடி ஆவணி மாத கலவரங்களின் பின் தென் னிலங்கையிலுள்ள (குறிப்பாக அம்பாந்தோட்டை, கம்பளை, அம் பாறை, பொலன்னறுவை) 30,000 சிங்களவர் இந்நிலங்களில் அத்து மீறிக் குடியேற கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட னர். இவ்வாறு பெருந்தொகையான சிங்களவரைக் குடியேற்றும் ஒழுங்குகளை, பொலன்னறுவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல புத்த பிக்கு ஒருவருமே முன்னின்று செய்தார்கள். நிலத்தை வளப்படுத்த புல்டோசர்களும், சிங்களக் குடும்பங்களை கொண்டு செல்ல மதுறு ஓயா திட்டத்தினதும், மலேரியா ஒழிப்புத் திட்டத் தினதும் ஜீப் வண்டிகளும், இ.போ.ச. பஸ் வண்டிகளுமே பயன் படுத்தப்பட்டன. ஆரம்பத்தில், புயலினால் பாதிப்புற்ற தமிழ் அகதி களுக்கென சர்வதேச உதவி நிறுவனங்கள் கொடுத்துதவிய கூடாரங் களை (Tents) இவர்களுக்கே கொடுத்து உதவினார்கள். பின்னர் 7,000 தற்காலிக உறைவிடங்கள் கட்டிக்கொடுக்கும் பணியை ஆரம்பித்துவிட்டார்கள். மகாவலி அபிவிருத்திச் சபையின் லொறி களும் காய்கறி முதலிய உணவுப் பண்டங்களை இவர்களுக்கு கொண்டு சேர்க்கப் பயன்படுத்தப்பட்டன.
வடமுனை, மதவானை, கழுவாஞ்சிக்குடி, கிரான் முதலிய கிராமங்களில் இருந்து 700 தமிழ் குடும்பங்களும், 200 முஸ்லிம் குடும்பங்களும் பலாத்காரப்படுத்தி வெளியேற்றப்பட்டதனால் மட் டக்களப்பு நகரத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளார்கள். இன்று இவ்விதமாக குடியெழுப்பப்பட்ட காணிகளில் அத்து மீறி குடியேறிய சிங்களவர்கள் வேளான்மை செய்து வருகிறார்கள். வடமுனை பிள் ளையார் கோவில் இன்று பெளத்த ஆலயமாக மாறியுள்ளது. இத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள திரு. கே. டபிலியு, தேவநாயகம், ஜனாதிபதி ஜயவர்த்தனாவிடம் முறையிட்டதன் விளைவாக 1983ம் ஆண்டு புரட்டாசி மாதம் 16ம் திகதி, 48 மணி நேரத்திற்குள் குடியேறியவர்கள் எல்லோரும் வெளியேற்றப்பட வேண்டும் எனும் உத்தரவைப் பிறப்பித்தார். ஆனால் இதனையும் பொருட்படுத்தாது அத்துமீறிச் குடியேறியவர்களுக்கு எதிராக ஜனாதி பதி ஜயவர்த்தனா அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நிலைமை இவ்வாறு இருக்க, வடமுனைப் பகுதிக்கு இன்னும் பல சிங்களவர்கள் வந்து குடியேறிக் கொண்டேயிருந்தார்கள். வட முனைக் குளத்தினின்றும் கால்வாய் வழியாக கல்குடாவுக்கு

அரசாங்க குடியேற்றம் 0 117
வரும் தண்ணீரும் இச்சிங்கள குடியேற்ற வாசிகளால் தடுக்கப் பட்டது. 1983. 11. 2ல், இதனை விசாரனை செய்வதற்கு என தகுதி வாய்ந்த அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டுமென்று அமைச் சரவை தீர்மானம் எடுத்தது. 1983. 11. 16ல் காணியமைச்சு குடி யேறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி ஜயவர்த்தனா உத்தரவும் பிறப்பித்தார். ஆனால் குடி யேற்றவாசிகள் தொடர்ந்தும் அங்கேயே பல காலமாக குடியிருந்து வந்தனர். இன்று அவர்களுள் பலர் வெளியேறிய பின்னரும், அவர் களது ஆக்கிரமிப்புச் செயல்களைக் கண்ட தமிழ் மக்கள் பீதியுட னேய வாழ்ந்து வருகிறார்கள்.
இவ்விதமாக மட்டக்களப்பிலும் நடைபெற்றதனால், ஜனத் தொகை விகிதாசாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் திட்டத்திற்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகவே இருக்கின்றது. இவ்வித குடியேற்றத் திட்டங்கள் மாற்றங்களை ஏற்படுத்திய காரணத்தினா லேயே மட்டக்களப்பு, அம்பாறை என இரு மாவட்டங்களாகப் f
வதற்கும் வசதியாக இருந்தது.
பின்வரும் ஜனத்தொகை அட்டவணை ஏற்படுத்தப்பட்ட மாற் றத்தினை தெளிவுபடுத்தும்.
அட்டவணை 5:2. மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்கள்
வருடம் மக்கட் தொகை விழுக்காடு
மட்டக்களப்பு அம்பாறை
g5. (p. F. த. (p. &ને, 827 69.5 30.2
1901. 55.0 37.3 5.2
1921 53.3 39.8 4.6 1946 50.3 42.2 5.8 1953 48.2 39.4 11.5 1963 72.2 23.4 3.4 23.8 46.5 29.4 1971 70.7 24.0 4.5 22.8 46.6 30.2 1981 72.0 24.0 3.2 19.9 41 .. 537.6

Page 74
118 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
இந்த அட்டவணையிலிருந்து 1953ம் ஜனத்தொகை புள்ளி விவரத்தின்படி ஒரு மாவட்டமாக இருந்தபோது சிங்களவர்கள் 11.5% ஆக இருந்தனர். பிரிக்கப்பட்ட மாவட்டத்தில் 1981ம் ஜனத்தொகை கணக்கின்படி 37.6 ஆக அவர்களது தொகை மாற்றியுள்ளது. இதி லிருந்து சிங்களவருக்கு இம்மாவட்டத்தில் முதலிடம் கொடுப்பதற்கு தொடர்ந்து குடியேற்றங்களை நடத்துவதால் எதிர்ப்புமின்றி இருப் பதற்கான அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்திருப்பது தெளிவாகின் D5l.
இந்த மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதே கிழக்கு மாகாணமாகின்றது. அநேகமான சிங்கள குடியேற்றங்கள் இப்பகுதி யிலேயே இடம் பெற்று வருகின்றன. 1827ம் ஆண்டு 75.65% ஆக இருந்த தமிழரின் மக்கட் தொகை விழுக்காடு இதனால் 1981ம் ஆண்டு 41.9% ஆக மாறியுள்ளது. கூடுதலான சிங்களக் குடி யேற்றங்களே இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. அட்ட வணை 3.3 இதனை தெளிவாக எடுத்தியம்புகின்றது. வரைவு 1ம், 2ம் அதனை மேலும் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.
5:5 up6ör6Ormt if Lomt 6inu Llih
1965ம் ஆண்டு மன்னுரிலுள்ள பண்டிவிரிச்சான் சாலையோரமுள்ள 6000 ஏக்கர் நிலம் அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு பகிர்ந்துக் கொடுக்கப்பட்டது. இதனைப் பெற்ற மக்களும் தனியார் வர்த்தக நிறுவனங்களும் காணிகளை நன்கு பண்படுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் 1984ம் ஆண்டு, கொடுக்கப்பட்ட நில உறுதிகள் ரத்து செய்யப்பட்டு மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திடம் காணிகள் ஒப் படைக்கப்பட்டதும் வெளிமாவட்டங்களிலிருந்து சிங்கள வேலையாட் கள் கொண்டுவரப்பட்டார்கள். இத்தொழிலாளர்கள் தமிழ் மக்களது வீடுகளுக்கு தீ வைத்து அவர்களை காணிகளிலிருந்து கலைத்தும் விட்டார்கள்.
சிலாபத்துறையிலுள்ள இராணுவ முகாமிலுள்ள பாதுகாப்புப் படை யினரது உதவியோடு சிலாபத்துறையிலும் மறிச்சுக்கட்டியிலும் பெரும் முந்திரிப் பண்ணை ஒன்றை மர முந்திரிகை கூட்டுத்தாபனம் ஆரம் பித்தது. சிலகாலம் சென்ற பின் பண்ணையை இலாபகரமாக நடத்த இயலாது எனக்கூறி காணிகளும் சிங்களவருக்கு பகிர்ந்துக் கொடுக் கப்பட்டது. ஊர் மக்களுக்கு அக்காணிகளில் ஒரு வித பங்கும் கிடைக்கவில்லை.
முருங்கன் கிராமத்திலும் சிங்களவர்கள் குடியேறிவிட்டார்கள். முன்பு இராணுவத்தில்-கடமையாற்றியவர்களுக்கு-அரசாங்கம் காணி

Zo ZoĻOZ“G L‘o6:L寸Ꮣ9it7*60* Ꭽ6 * #7Z89ɛ'ɛț7°Z6/?.*9/.*6į86 į. 9. ve/99*8; “Z6*8 #709G‘ Ģ Į ‘9/* 07.Z/Go8ț7* |! LLG?/ Vol.| 16 į 0 * #7€.09/’98“ į.| * G7OZ s. ‘9ț7“Z| * OZO69‘60° ||Oɛ L‘9ț7“G£96 į. ! ’88ZZɛ“Goo |Ɛo Lý868‘ / 9“ į.į, o 8 į.OLț7‘9ț70.寸‘守9°8£96 || ! ’68ț7Z0*60* į.Ɛ * ZG690‘9ț7“ į.寸:899ț7 ‘EZZ Ł Ł‘6Ł“Z9寸6 ! Ꭽ* 6ᏋZ66“GLGoog|ggo €0“ į.9:寸ț7ț7/*8LZ8“Z6“ į.įZ6 į 09*860ț7“OLZ * 9918. Lo 10“ į.GŁo 8606*9869° 28′ 1| 16 į. 9 s,o8£8ţţ “Z99° 19‘9Z6‘96Z:寸8LL'8Z09* 8/ o į106|| 9,1° 0890Zo Lg99 o 1910.Lo (89Y:寸Z Ľg‘L #7f7f7* 8ț7“ į.L68|| 99° 08į00“Cț79€” 1980Ꭽ "9ᎥᏃ.9:寸Lț76‘GGGG“ A.Zo !188 į. 99° €Z98 Go į į.G9° G/99/*#79Ɛ" |09?L寸9°9寸ALZ8|| % | 1,9oqışsayofi)%Įfigio% | worzow || • ••••••• || !oro
|
(1861-ZZ8I) odoluotoo low-o-qılony woului Qșđì sợ ç:ç lunsadoro-17ko

Page 75
120 O பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
வரைவு
e கிழக்ெ Lorrasrocar á ر؟ -سسس তেr", தொகை
8の தி
6d
4ሎQ
3O
20
に327 38 39 9 ()
e ao
g awan *5ö s
40 দ্রুম
% 女立 o ‰፭ ፶፪፻፭ ፳፰። 3 猫 擂 畿 TÄ 燃 搬 器 2. 娴 鳞
ı:R 穹领 s 器苔
臣 *ሖ$ : o撥 博器 懿 螺 ه 榭 韧 ❖2ኝይ O 》 ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

£) på;&5 lorom suurih - «Four ĝ@ 56025(1963-1983)
2如-g@@%n@巨?? 70-{0{s}porqueso – sous-Bootůų அ-அம்பாறை 60ー
†
*等 呎 む鞑
● 활 불교%es12:#
& ori stæń
广J强包蛋式
შხ ჯ
مہا ہو؟
al
Kr.& ܐà* ܛ .
Exterray
; -è'&é డి
q
t
གི་

Page 76
Sudoyray ll
ിഴ്ച unortarraiosrub — 9aoré, தொகை
e S\EQgnostrvo orneo AOK
ዩo T\ چراگاہ ۔۔۔۔۔
M 7O \ 3) س.مسGoos
e *ー--- aampm சிங்களவர் e N.
w
N
W
༄ - - - །
۔ ۔ جسے < a ܓܟ” ܐ sovo سمی ܠ” سم• سے so .صعلى م ’’سو سے ases * a. As
 

AO
o Lーイ
2O ܒ ܢ =ܡ
is
Ko
የሰ er 4.
G
So
十 因s盛@ unGnom品
N BO.
w
s *( ജ
4の。
-- . ܠ "
N 3O.
20
y
翡
i
அரசாங்க குடியேற்றம் () 123
அட்டவணை 5:3ம், வரைவு ஒன்றும் இரண்டும்,
கிழக்கு மாகாணத்தில் நடை பெற்ற அரசாங்க குடியேற்ற திட் டங்களை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இத்திட்டங்கள் அனைத்தும் அ ர சா ங் கம் கிழக்கு மாகாணத்தில் சிங்கள வரின் ஆதிக்கத்தை மேலோங்க செய்வதற்கும், தமிழரின் சனத் தொகை விகிதாசாரத்தை குறைக் கவுமே அமைக்கப் பட்டன.
அதே சமயம் தெற்கில் வன் செயல்கள் மூலமாக தமிழர்கள் முழுமையாக பல பகுதிகளிலி ருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் கள். எ.கா. அலவை, நித்தம் புவ, இன்னும் பல.
ஆனால் கிழக்கு மாகாணங் களில் சிங்கள குடியேற்றங்கள் அண்மையில் பாதிக்கப்பட்டப் பொழுது அவர்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக மீண்டும் அதே பகுதிகளில் குடியேற்றி வரு கிறார்கள். திட்டமிட்ட அரசாங்க குடியேற்றங்களே சிறுபான்மை மக்களது முக்கிய பிரச்சினை யாக இருக்கின்றது. முழுமை யாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக இருந்தால் பழைய குடியேற்றங்கள் யாவும் அகற் றப்பட்டு புதிய குடியேற்றங்கள் ஏற்படாதவாறும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை பிரச்சினைக்கு சமா தான தீர்வு காண முயலும் அனை வரும் இதனை நடைமுறைப் படுத்துவதாலேயே அமைதி ஏற் படுத்த முடியும்.

Page 77
124 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
களும் கொடுத்து ஆயுதங்களும் கொடுத்துதவியது. இவர்களே இன்று இங்கு கடமையாற்றும் இராணுவத்தினரோடு சேர்ந்து 1984ம், 1985ம் ஆண்டுகளில் முருங்கன் பகுதி வன்செயல்களில் ஈடுபட்ட தனால் பல தமிழர்கள் மாண்டனர். மடு சாலையோரம் மடு திருச் சபை சாலையோடும் பல சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட தனால் பறயனலங்குளத்திற்கும் முருங்கனுக்கும் இடையேயுள்ள மதவாச்சி - மன்னார் சாலைக்கு இருபுறமாக குடியேற்றங்களை ஏற் படுத்தி வவுனியா மாவட்டத்தின் மதவாச்கி பறயனலங்குளத்திற்கும் இடையேயுள்ள குடியேற்றத்தின் தொடர்ச்சியாக்குவதே அரசாங்கத் தின் நோக்கமாக இருக்கலாம். பேசாலையிலும் தலைமன்னாரிலும் பருவகாலங்களில் தென்னிலங்கையில் இருந்து சில மாதங்களுக்கு மட்டும் வந்து தொழில் செய்த சிங்கள மீனவருக்கு நிரந்தரமாகக் குடியேறுவதற்கு அரசாங்கம் பல வசதிகள் செய்து கொடுத்திருக் கிறது. பிடித்த மீனைச் சேகரித்து வைக்கவும், மீனவருக்குரிய மீன் பிடித் துறைகளும், வீடுகளும், கருவிகள் கொடுப்பதும் சந்தைப் படுத்தும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதுமாக இவர்களுக்கு மீன் பிடிக் கூட்டுத்தாபனம் உதவி வருகின்றது. ஆனால் ஊரிலுள்ள தமிழ் மீனவருக்கோ இவ்வித வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இவர்களுக்கு விசை படகுகள் வாங்குவது தடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கடல்களில் மீன்பிடிக்கக் கூடாதெனவும் இராணுவத் தினர் மிரட்டுகின்றனர்.
இராணுவத்தினரது மிரட்டல் காரணத்தால் உயிருக்கு அஞ்சி முழு பேசாலை கிராம மக்களுமே ஊரைவிட்டு வெளியேறி விட்டார் கள். இவர்களும் அயலிலுள்ள கிராமத்தவர்களும் அகதிகளாக இந் தியாவுக்குச் சென்று விட்டார்கள். இவர்கள் வெளியேறிய பகுதி களில் இராணுவத்தினர் சிங்களவர்களை குடியேற்றி வருகிறார் :56IT -
5:6 வவுனியா மாவட்டம்
வவுனியா மாவட்டம், பிரித்தானியரது ஆட்சிக்கு முன்னர் தமிழ் வன்னிய குறுநில மன்னர்களால் ஆளப்பட்ட பாரம்பரிய தமிழ் பிர தேசமாகும். வவுனியா தெற்கு உப அரசாங்க அதிபர் பிரிவு 1903ம் ஆண்டுதான் உருவாக்கப்பட்டது. கலாவேவாப் பகுதியிலிருந்து வந்து குடியேறிய சிங்கள மக்களது அலக்கலக்காக இருந்த கிராமங் களின் இணைப்பாகவேயிருந்தது.
வவுனியா தொகுதியைச் சேர்ந்த மகா ஹம்பலிய வேவ நெடுங் கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அடங்கியுள்ளது. இங்குள்ள அரசாங்க அதிபருக்கோ உதவி அரசாங்க அதிபருக்கோ தெரியாத

→yıll-suomenur 5:4 106örsoritř lorsul l-ib-mäsl:Qørsmæ (1827-1981)
வருடம்;5 சிங்களவர்%தமிழர்%முஸ்லிம்கள்% 1827*13,408|-—6,99452.26,41447.8 183-21348 T420.714,41567.5 6,63531.1 189124,5111700.716,59867. 77,64331.2 1901 || 24.9252010.816,84867.67,71531. O 191125,6036392.516,73165,38,09231.6 1921 25,5825382. 116,94966.38,00231.3 194631,5381,1863.819,62362.210,41033.0 195343,6892,1194.9 || 28,21464.613,13030.1 196360,1802,6204.4 || 40, 14066.717,26028.7 197177,7803,1754.152,95168.121,55027.7 19811,06,9408,7108.168,17863. 828,46426.6
*வவுனியா மாவட்டத்தின் ஒரு பகுதி உள்ளடக்கப்பட்டுள்ளது.

Page 78
126 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மை யினரும்
வகையில் சிங்களவர்கள் குடியேறுவதற்குரிய அனுமதிப் பத்திரங்கள் அனுராதாபுரி கச்சேரியால் வழங்கப்பட்டது. ஜனாதிபதி ஜயவர்த்தனா வுக்கும் காணி அமைச்சருக்கும் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் அறிவித்த போதும் இது பற்றி ஒருவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
1979ம் ஆண்டு மதவாச்சித் தொகுதியை சேர்ந்த மூன்று அர சாங்க அதிபர் பிரிவுகளை வவுனியா மாவட்டத்தோடு இணைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் தமிழர்களை சிறுபான்மையினராக்குவதே இதன் நோக்கமாக இருந்ததனால் அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சி தலைவராக இருந்த அ. அமிர்தலிங்கமும் இதனை வன்மையாக கண்டித்தனர். இதனையும் பொருட்படுத்தாமல் வவுனியாவிலுள்ள நான்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை ஒன்று சேர்த்து சிங்களவர்களை பெரும் பான்மையாக கொண்ட மாவட்டம் ஒன்றினை உருவாக்கும் நோக் கம் கொண்ட திட்டத்தை பொது நிருவாக அமைச்சு 1979ம் ஆண்டு ஆனி மாதம் அமுல் நடத்த தீர்மானித்தது. தமிழ் தலைவர்களது வன்மையான கண்டனத்திற்குட்பட்டதனால் இத்திட்டம் கைவிடப் பட்டது.
தடையின்றி சிங்கள குடியேற்றத்தை நடத்துவதற்கென, வவு னியா வடக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள படிக்கவகக் குளம், கச்சல், சமலங்குளம் கொக்கைசன்டிளம் ஆகிய கிராமங்கள் 1984ம் ஆண்டு புரட்டாசி மாதம் 20ம் திகதி தோடக்கம் வவுனியா தெற்கு சிங்களப் பகுதியோடு இணைக்கப்பட்டது. நெடுங்கேணியும் செட்டிக்குளத்தையும் சேர்ந்த கொக்கச்சங்குளம் வெப்பங்குளமாகியவை வவுனியா மாவட்ட சபையினது பணச் செல வில் திருத்தியமைக்கப்பட்டன. ஆனால் இப்பகுதிகளில், ஜனாதி பதியால் நியமிக்கப்பட்ட அமைச்சர் பல சிங்களக் குடும்பங்களை வெளிமாவட்டங்களிலிருந்து தருவித்து அரசாங்க உத்தியோகத்த வரது உதவியோடு குளங்களுக்கு அருகே குடியேற்றினார். குளங் களது தமிழ் பெயர்கள் போகஸ்வேவ, கொஹொம்பகஸ்வேவ என் னும் சிங்கள பெயர்களாக மாற்றப்பட்டுவிட்டன. அதே வேளை அங்கு குடியிருந்த தமிழ் மக்களை இராணுவம் பலவந்தமாக வெளி யேற்றி விட்டது. வழமையாக நடைபெறும் காணிக் கச்சேரி முறை களை கையாளாமல், விசேட சலுகையாக, காணி கமிஷனரது அனு மதியோடு மாவட்ட அமைச்சரது சிபாரிசுடனேயே காணிகள் சிங் களவருக்கு கொடுக்கப்பட்டன.
செட்டிக்குள பிரிவிலுள்ள பாவற்குளத் திட்டத்தின் கீழ் 119 காணி வழங்குவதில் 50 காணிகள் மட்டுமே தமிழருக்கு வழங்கப்

அரசாங்க குடியேற்றம் () 127
பட்டது. அப்பிரிவில் காணியற்றவருக்கே காணிகள் வழங்கப்பட வேண்டும் எனும் கொள்கை ஏற்கப்பட்டதாக இருந்த போதும், பிற இடங்களிலுள்ள சிங்களவருக்கு 50 காணிகள் கொடுக்பட்டது. செட்டிக்குளத்திலுள்ள வரிக்குடியூரில் அமைக்கப்பட்ட மா தி ரி க் கிராமத்தில் சிங்களவர் மட்டுமே குடியிருப்புக்குத் தெரிவு செய்யப் பட்டனர்.
செட்டிக்குள உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள பிராமணன் குளத்தில் வவுனியா பகுதியை சேர்ந்த 200 பேருக்கு 1700 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. இவர்கள் காணிகளைப் பண்படுத்தி குடி சைகள் கட்றி கிணறுகளும் தோண்டிய நிலையில் அரசாங்கத்தினால் அனுமதிப்பத்திரங்கள் ரத்துச் செய்து காணிகளில் ஓய்வு பெற்ற இராணுவத்தினர் குடியேற்றப்படுகின்றனர்.
வவுனியா மாவட்டத்திலுள்ள அரசாங்க சேவை வெற்றிடங்க ளுக்கு சிங்களவர்களே தெரிவு செய்யப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்குத் தமிழ் பேசத் தெரியாது. இவர்கள் சிங்கள குடியேற்ற வாசிகளது நலனுக்காகவே நியமிக்கப்படுகின்றார்கள். இதனால் தமிழருக்கு அரசாங்க நிறுவனங்களோடு தொடர்பு கொள் வது கடினமாகின்றது. தமிழ் பாடசாலைகளை விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப் படுவதில்லை. ஆனால் மாவட்ட வரவு செலவு திட்டத்தில் கல்விக்கென ஒதுக்கப்பட்ட பணம் முழுவதும் சிங்களப் பாடசாலைகளுக்கே செலவாகின்றன. 1984ம் ஆண்டில் வன்னித் தொகுதிகளாகிய மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள அரசாங்க அதிபர்களை மேற்பார்வையிடுவதற்கென ஒரு சிங்கள இணைப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். அரசாங்க அதிபர்களது அதிகாரம் வழங்கபட்டதோடு அவர்கள் ஆணையையும் மிஞ்சும் அதிகாரமும் இந்த இணைப்பு அதிகாரியிடம் வழங்கப்பட்டது. குடி யேற்றங்களை சுலபமாக ஏற்படுத்திவைக்க இந்த ஒழுங்கு மிகவும் வசதியாக இருக்கின்றது.
முடிக்குரிய காணிகளை மக்களுக்குக் கொடுப்பது காணி, காணி அபிவிருத்தி அமைச்சுக்குரியதாக இருந்தாலும் தேசிய பாது காப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியும் கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்யூவும் இவ்விடயத்தில் அதிக அக்கறை செலுத்தியுள்ளார் கள். இந்தப் பகுதிகளுக்குச் சென்றும் பார்வையிட்டுள்ளார்கள். வவுனியா மாவட்டத்திற்கென நெலுந்தெனியா எனும் சிங்களவர் உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். இவர் சிங்களவர் களை பெரும்பான்மையாக கொண்ட அனுராதாபுர மாவட்டத்தில் இருந்துக்கொண்டே குடியேற்ற நடவடிக்கையை வழி நடத்துகின்

Page 79
128 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
றார். குடியேற்றப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் செல்லும்போது அப்பகுதியின் அபிவிருத்தி நிலையை அறிவித்தவர்களும் பொறுப் புடையவர்களுமாகிய அரசாங்க அதிபரையோ அல்லது உதவி அரசாங்க அதிபரையோ கலந்தாலோசியாது திரு. நெலுந்தெனியா வினது உதவியையும் ஆலோசனைகளையும் மட்டுமே திரு. லலித் அதுலத்முதலி நாடுவார்.
5.7. முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீவு உதவி அரசாங்க அதிபர் பகுதியைச் சேர்ந்த கொக்கிளாய், அலம்பில், நாயாறு, கொக்குத்தொடுவாய், குமுள முனை ஆகிய பகுதிகளில் மீனவர் குடிசைகள் கட்டிக் கொடுக்கப் பட்டு சிங்கள மீனவர்கள் குடியேற்றப்பட்டார்கள். வழமையான வவுனியா, முல்லைத்தீவுப் பாதையை கடத்துமுகமாக இராணுவ உதவியுடன் பதவியாவில் இருந்து இப்பகுதிக்குப் புதிய தெரு வொன்று போடப்பட்டுள்ளது. இதுவரை அப்பகுதி மீனவருக்கே கிடைத்திராத "ஐஸ்" தொழிற்சாலை ஒன்றும் கட்டிக்கொடுக்கப் பட்டது. வெளிநாட்டு நிதி உதவியோடு பெருப்பிக்கப்பட்ட குளங் கள் காரணமாக தண்ணிமுறிப்பு, நீதுகைக்குளம், குறுந்தமலை, அமயங்குளமாகிய பகுதிகளில் காணிகளும் பயிர்செய்யக்கூடியதாக இருந்தது. இவற்றை மக்களுக்கு பகிர்ந்துக் கொடுக்கும் போது, தமிழர் வாழும் பகுதியாக இருந்தபோதும் 75% சிங்களவருக்கே கொடுக்க வேண்டும் என காணி அமைச்சு அங்குள்ள அரசாங்க அதிபரை பணித்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தெற்கேயுள்ள முல்லைத்தீவு உதவி அரசாங்க அதிபர் பகுதியில் உள்ள கிராமங்களில் 500 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. மட்டக்களப்பில் உள்ள வட முனையில் சட்ட விரோதமாக குடியேறிய 20,000 சிங்களக் குடும் பங்களை குடியேற்றவும் அரசு திட்டமிடுகின்றது. முல்லைத்தீவை பதவியாவோடு இணைப்பதற்கு சாலைகளும் பாலங்களும் அமைக் கப் பட்டும் விட்டன.
பாண்டியன்குளம் உதவி அரசாங்க அதிபர் பகுதி யி லுள்ள வவுனிக்குளம் மீன்பிடிப் பகுதிகளில் சிங்கள மீனவரை நிரந்தரமா கக் குடியேறச் செய்வதற்கு வீடமைப்புத் திட்டங்களும் தயாராகி விட்டன.
5.7.1 கென்ட் டொலர் பண்ணைகள்
1977ம், 1981ம் ஆண்டுக் கலவரங்களில் சிங்கள கும்பல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் தோட்ட தொழிலாள அகதிகள் தனியார் உட

gyı, LousDomit 5:5 ovojoufuum som sul-Lü-loặası’ Qørsmæ (1827-1981)
வருடம்永)சிங்களவர்%தமிழர்|%|முஸ்லிம்கள்% |1827*9,02851 75.7 801 1|94.3-----→→→→ -188115,5691,1577.413,164|84.61,1337.3 189115,5011,1997.713,03084.11,1397.3 190115,1591,1287.412,72684.01,0697.1 194 417,3361,84810.714,05981.11,2417.1 1921 18,7062,2151 1.814,97880.11,3457.2 | 1946|23,2463,87016.617,07173.42,1539.3 |195335,1125,92016.925,88173. 73,0208.6 |196368,50012,02017.551,41075.14,9007.2 |197195,24615,98116.772,259|75.96,6417.0 |1981%*95,90415,87616.6731,3376.36,6406.9 * மன்னார் மாவட்டத்தின் ஒரு பகுதி உள்ளடக்கப்பட்டுள்ளது. * தற்பொழுது இம்மாவட்டம் வவுனியா. முல்லைத்தீவு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

Page 80
130. D பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
மைக்குரிய கென்ட் (171 ஏக்கர்) டொலர் (243 ஏக்கர்) பண்ணை களில் குடியேற்றப்பட்டனர். கென்ட் பண்ணை 98 குடும்பங்களை யும் டொலர் பண்ணை 120 குடும்பங்களையும் ஏற்றன. பாட சாலைகள், திருச்சபைகள், கந்தோர்கள் கட்டுவதற்கும், கிணறுகள் கிண்டுவதற்கும், மா, தென்னை நடுவதற்கும், பால் பண்ணைகள் ஏற்படுத்துவதற்கும் தனியார் சேவை நிறுவனங்கள் அகதிகளுக்கு உதவியளித்தன.
1983ம் ஆண்டு ஆவணி 22ல் கிராம விஸ்தரிப்புக்கு எனக் கூறி அரசாங்கம் பண்ணைகளை வாங்கிக் கொண்டது. வழமையாக குளங்களுக்கும் ஆறுகளுக்கும் அருகேயுள்ள காணிகளே இத்திட்டத் திற்கு என தெரிவு செய்யப்படும். சிங்களப் பிரதேசத்தினுள் மத வாச்சி, அனுராதபுரம் போன்ற பகுதிகளில் போதிய நிலம் இருந் தும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள இப்பண்ணைகளை எடுத்துக் கொண்டதில் ஏதோ உள் இரகசியம் இருக்கத்தான் வேண்டும். நிருவாக விதிகளின்படி கிராம விஸ்தரிப்பு என்பது 'கிராமங்களில் விவசாயிகளைக் குடியிருத்துவது” என்றும் 'அப்பகுதியில் வசிப் பவருக்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும்’ என்றும் வரைவிலக் கணம் கொடுக்கப்பட்டுள்ளது. கென்ட், டொலர் பண்ணைகளைப் பொறுத்தமட்டில் இவ்விரு விதிகளும் கையாளப்படவில்லை. விவ சாயிகளுக்கு பதிலாக முன்னைநாள் சிங்கள சிறைக் கைதிகளே புனர்வாழ்வுக்காக குடியிருத்துவதற்கு என தெரிவு செய்யப்பட்டார் கள், கிராம விஸ்தரிப்பு என்பதற்காகவே பண்ணைகள் எடுக்கப் பட்டன; ஆனால் காணி நிருவாகத்தைப் பொறுத்தவரை புனர் வாழ்வு என்பது கிராம விஸ்தரிப்புத் திட்டங்களின் நோக்கத்துள் அடங்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போன்று அம்பாறை கந்தளாய், அல்லை, நிலாவெளி, புல்மோட்டை ஆகிய இடங்களில் கிராம விஸ்தரிப்புத் திட்டங்கள் விறுவிறுப்புடன் நடைமுறை படுத்
தப் பட்டன.
1984ம் ஆண்டின் முற்பகுதியிலேயே கென்ட், டொலர் பண்ணை களில் குடியேறியவர்களை பாதுகாப்புப் படையினர் தொல்லைப் படுத்த தொடங்கினார்கள். இது இப்பண்ணைகளோடு நிறுத்தப்பட வில்லை. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் குடி யேறிய அகதிகள் யாவரும் இது போன்று இம்சைப்படுத்தப்பட்ட னர். அரசாங்க மற்றும் கூட்டுத்தாபனங்களது சிங்கள ஊழியர் களும் பாதுகாப்புப் படையினரோடு சேர்ந்து மக்களை வருத்தத் தொடங்கினார்கள். 1984ம் ஆண்டு ஆவணி மாதத்தோடு கென்ட், டொலர் பண்ணைகளில் குடியேறியவர்களுள் அ ைர வா சிக் கும் மேலாக பயத்தின் காரணமாக வேறு இடங்களுக்கு சென்றுவிட்டார்

அரசாங்க குடியேற்றம் () 181
கள். 1984ம் ஆண்டு புரட்டாசி மாதம் சிறைக் காவல் படையினர் அங்கு சென்று மிஞ்சிய குடும்பங்களையும் கலைத்துவிட்டு முன்னை நாள் சிறைக் கைதிகளைக் குடியேற்றினார்கள்.
குடியேற்றப்பட்டவருக்கு அரசாங்கம் ஆயுதங்கள் வழங்கி உத விற்று. இவர்களுள் சிலர், 1983ம் ஆண்டு ஆடி மாதம் வெலிக் கடை சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய் ததில் சம்பந்தபட்டவர்கள். குடியேற்றப்பட்டதும் அயல் கிராமங்களி லுள்ள வீடுகளுக்குள் விரும்பியவாறு புகுவதும், உணவுக்காக மாடு களைக் கொள்ளையடிப்பதும், பெண்களை கற்பழிக்க முயல்வது மாக மிரட்டிக் கொண்டேயிருந்தனர். இவ்வாறு நடந்து கொண் டதன் விளைவாகவே 1984ம் ஆண்டு கார்த்திகை மாதம் தமிழ் போராளிகள் இப்பண்ணைகளை தாக்க நேரிட்டது.
5.8 நிறைவேற்றப்படாத ஒப்பந்தங்கள்
கடந்த நாற்பது வருடங்களாக தமிழ் பகுதிகளில் சிங்களவ வரைக் குடியேற்றிக்கொண்டு வந்தது வேதனைக்குரியதாகவே இருந் தது. இதுவே தமிழர்கள் நடத்திய போராட்டங்களின் முக்கியமான காரணங்களுள் ஒன்றாகவும் இருந்தது.
சில சிங்களத் தலைவர்கள் தமிழர்களுக்கென இனங் காணக் கூடிய தாயகப் பிரதேசம் இருக்கின்றது என்பதை ஏற்று, அவர் களது தலைவர்களுடன் ஒப்பந்தங்களும் செய்துள்ளார்கள்.
5.8. 1. பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம்
1957ம் ஆண்டு ஆடிமாதம் 16ம் திகதி பிரதமராக இருந்த
பண்டாரநாயக்காவும் தமிழர் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயக்க
மும் செய்துக் கொண்ட உடன்பாடு பின்வரும் வி டய ங் க ைள க்
கொண்டதாக இருந்தது.
குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை, பிரதேச சபைகளுக் குத் தரப்படும் அதிகாரங்களுள், அப்பிரதேசத்துள் குடியேற்றப்படு பவரை தெரிவு செய்வதும் அங்கு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பொறுப்பும் அடங்கும் என்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
கல்லோயா சபையின் கீழ் நிருவகிக்கப்படும் ப கு தி க ைள ப் பொறுத்தவரை தொடர்ந்தும் பரீசீலனைக்குரிய விடயமாகும் என் றும் ஏற்கப்பட்டிருந்தது. "
ஒப்பந்தம் ஏற்பட்டதும், 1957ம் ஆண்டு ஆவணி 16ம் நாள் பண்டாரநாயக்கா தான் விடுத்த அறிக்கையில், குடியேற்றத்தின்

Page 81
132 ) பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
ஊடாக வட கிழக்கு மாகாணங்களை சிங்களப் பெரும்பான்மை பகுதியாக்கவோ அல்லது வேறேதும் வகையில் தமிழ்பேசும் மக் களது நலன்களுக்கு விரோதமாக நடந்துக் கொள்ளவோ இடமிருக் காது’ எனக் கூறினார்.
* பெளத்த பிக்குகளும் 1957ம் ஆண்டு ஐப்பசி மாதம் 4ம் திகதி கண்டிக்கு எதிர்ப்பு யாத்திரை நடத்திய இன்றைய ஜனாதிபதியா கிய ஜே. ஆர். ஜயவர்த்தனா உட்பட பல சிங்கள வெறியர்களும் தீவிரமாக கண்டனம் தெரிவித்தமையால் பண்டாரநாயக்கா. செல்வ நாயகம் ஒப்பந்தம் அமுல் நடத்தப்படாது ஒதுக்கிவைக்கப்பட்டது. இதனையடுத்து தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் தொ டர்ந்தும் விறுவிறுப்புடன் நடக்கத் தொடங்கியது. 5.8, 2. சேனநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம்
எதிர்க் கட்சியில் இருக்கும்போது பண்டாரநாயக்கா - செல்வ நாயகம் ஒப்பந்தத்தை எதிர்த்த டட்லி சேனநாயக்கா 1965ம் ஆண்டு பிரதமராகையில் தமிழர் தலைவர் எஸ். ஜே. வி. செல்வ நாயகத்தோடு ஒப்பந்தம் செய்தார். இங்கு குடியேற்றம் என்பது இன்னும் திட்டவட்டமாக வரையறை செய்யப்பட்டிருந்தது.
வட கிழக்கு மாகாணங்களில் குடியேற்றத் திட்டக் காணிகள் வழங்குவதில் பின்வரும் விடயங்கள் கடைபிடிக்கப் படும் என்பதை திரு. சேனநாயக்கா ஏற்றுக்கொண்டார்.
அ. வடக்கு கிழக்கு மாகாணங்களில் குடியேற்றத் தி ட் டக் காணிகள் வழங்குவதில் குறித்த மாவட்டத்தில் காணியற்றோராக இருப்போருக்கே முதலிடம் கொடுக்கப்படும்.
ஆ. அடுத்து, வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கே வழங்கப்படும்.
இ. இறுதியாகவே ஏனைய இலங்கைப் பிரஜைகளுக்குக் கொடுக்கப்படும். இங்கும் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ் பிரஜை களுக்கே முதலிடம் கொடுக்கப்படும்.8
டட்லி சேனநாயக்காவினது பாராளுமன்ற ஆதரவாளர் சிலரது மிரட்டலினால், இந்த ஒப்பந்தமும் அமுல்நடத்தப் படவில்லை. ஆகவே, இதனைத் தொடர்ந்தும் தமிழ் தாயகத்தில் சிங்களக் குடி யேற்றம் தடையின்றி நடைப்பெறலாயிற்று. 5.8. 3. ஐ. தே. க. யினது தேர்தல் விஞ்ஞாபனம்
இன்று ஆளும் கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி 1977ம் ஆண்டு தன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குடியேற்றம் என்பது

அரசாங்க குடியேற்றம் () 183
தமிழ் மக்களை வருத்தும் பிரச்சினையாகும் என்பதை ஏ ற் று த் கொண்டது. ஆனால் பதவிக்கு வந்ததும் இந்த அரசாங்கமே கூடுத லான குடியேற்றங்களை உருவாக்கியுள்ளது.
1986.3.23ல் இரந்தெனிகலை நீர் தேக்குக் குள விழா முடிவில் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியதாவது, வடக்கிலும், கிழக்கிலும் நடக்கும் "போர்” முடிவடைந்ததும் திருகோணமலையில் யான் ஓயாத் திட்டத்தையும் அம்பாறையில் லகுகலத் திட்டத்தையும் அர சாங்கம் தொடக்கி வைக்க இருக்கின்றது. இது ஒரு சிங்கள நாடு. அவர்கள் சென்று குடியேற வேறோரு நாடு இல்லை. மகாவலித் திட்டம் இந்த நாட்டின் சிங்களவருக்கே உரியது. சிங்கள விவசாயி களே இதன் பெரும்பாலான நன்மைகளை அனுபவிக்க உள்ளார் கள்’. அவர் தொடர்ந்தும் கூறியதாவது, 'காலஞ்சென்ற டி. எஸ். சேனநாயக்காவும் சர். ஜோன் கொத்தலாவலையும் தலையிட்டி ருக்காவிடில் அநுராதபுரம், பொலன்னறுவைப் பகுதிகளில் சிங்கள வர்கள் இருந்திருக்கவே மாட்டார்கள். திரு. எஸ். டபிலியு. ஆர். டி. பண்டாரநாயக்கா இங்கு தமிழர்களையும் குடி யே ந் றிவைக்கும் யோசனை கொண்டவராகவே இருந்தார். ஆனால் திரு. சேன நாயக்காவும், சர் ஜோன் கொத்தலாவலையும் இதனை எதிர்த்துத் தடுத்தனர். பயங்கரவாதிகளது நடவடிக்கைகள் தடுக்கப்பட்டதும் ஜப்பானிய உதவியோடு வவுனியாவில் மொறகந்தத் திட்டம் ஆரம் பிக்கப்படும்.
1985ம் ஆண்டு தைமாதம் 8ம் திகதி, 30,000 சிங்களக் குடும் பங்களை இந்த வருடத்திலேயே வடக்கில் குடியேற்றி வைக்க திட்டங்கள் தயாராகிவிட்டன என அரசாங்கம் அறிவித்திருந்தது. அங்கு இரு இனங்களுக்கிடையே "சம தொகையை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படும். அடுத்த வருடம் இது யாழ்குடா நாட்டுக்குள்ளும் தொடரப்படும்.
1987ம் ஆண்டு முடிவடைவதற்குள் விரைவுபடுத்தப்பட்ட மகா வலித் திட்டத்தின் 'இ’ பிரிவில் 24,500 குடும்பங்கள் குடியேற்றப் பட இருக்கிறார்கள். இப்பிரிவின் புதிய பகுதிகளிலேயே இவர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த வருடம் 4,500 குடும்பங்கள் குடியேற்றப்பட இருக்கின்றனர். இது வரை, கேகாலை, குருநாக்கல், மாவட்டங்களிலிருந்தும் விக்டோரியா இரந்தெனிகலைப் பகுதிகளில் இருந்தும் 900 குடும்பங்கள் "இ" பிரிவில் குடியேற்றப்பட்டு விட்டன. இதுவரை கட்டிக் கொடுக்கப் பட்டுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையே விரைவு படுத்தப்பட்ட மகாவலித் திட்டத்தின் மிகப் பெரிய பிரச்சினையாக வுள்ளது என அறியப்படுகின்றது.

Page 82
134 ) பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
5.9 கையாண்ட வழிமுறைகள்
புராதன பெளத்த விகாரைகளது இடிபாடுகளும் அகழாய்வுக் குரிய தலங்களும் இருக்கின்றன எனும் சாட்டுகளைக் கூறி சுற்றி யுள்ள காணிகளை அரசாங்கம் சுவீகரித்து பெளத்த விகாரைகளை யும் கட்டிக்கொடுத்துதவ, பெளத்த பிக்குகளும், சிங்களக் குடியேற்ற வாசிகளும் பின் தொடருவர். தமிழ் பிரதேசங்களில் சிங்களவர் களைக் குடியேற்ற கையாண்ட சமீபகால வழி முறைகள் இவ் வாறே நடத்தப்படுகின்றன. அகழாய்வு என்றப் பெயரில் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு அங்கு இராணுவ முகாம்களும் அமைக் கப்பட்டன.
5.9. 1. அகழாய்வும் பெளத்தமும்
இலங்கை சிங்கள பெளத்தருக்கே உரியது எனும் வெறி பிடித்த கொள்கையுள்ள அமைச்சர் சிறில் மத்தியூ தான் 1980.10.28லும் 1980.11.18லும் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகளில் வடக் கிலுல் கிழக்கிலும் பல பெளத்த ஆலயங்கள் இருந்ததாகவும் அவை அழியும் ஆபத்தில் இருக்கின்றன என்றும் தன் பிரச்சாரத்தை நடத்தினார். பாராளுமன்றத்திலும் வெளியிலும் இவ்வித தீவிர இயக்கத்தில் ஈடுபட்ட அமைச்சர் தமிழ் பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றுவதிலும் தீவிரமாகப் பங்குபற்றினார். 1983ம் ஆண்டு ஐப்பசி மாதம் 7ம் திகதி வடக்கிலும் கிழக்கிலும் மொத்தமாக 276 புராதன பொளத்த ஆலயங்கள் இருப்பதாகவும் அவற்றை அழிய விடாது காப்பாற்ற **யுனெஸ்கோ’வினது உதவியை நாடும் மகஜர் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்பித்தார். இதனைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பெளத்த அகழாய்வுத் தலங்கள் தோண்ட, ஆராய இருப்பதாகவும் அவற்றைச் சுற்றிவர பெளத்தக் குடியேற் றங்களை ஏற்படுத்த வேண்டுமென்றும் 1984ம் ஆண்டில் அகழாய் வுக் கமிஷனரும் வேண்டிக்கொண்டார். 9 இதே காலத்தில்தான் வண. மதிஹேபன்னசீஹ தேரரும் இவ்வித பெளத்த தலமெனப்படும் பகுதிகளில் பெளத்தரை குடியேற்ற வேண்டுமென கேட்டுக்கொண்
அகழாய்வு வேலைகள் நடை பெறும்போது, சைவ அல்லது வேறேதும் வைதீக சமயத்தோடு சம்பந்தப்பட்ட பொருட்கள் கண் ட்ெடுக்கப்பட்டால் அச்செய்தி கலாச்சார அமைச்சினால் நிர்மூலமாக் கப்படும். இங்கு அகழாய்வு அலுவலகத்தில் தமிழ் நிபுணர்களோ உத்தியோகத்தர்களோ எவரேனும் இல்லையென்பதும் குறிப்பிடத் தக்கது.
உதாரணமாக வவுனியாவிலுள்ள சமனலக்குளம் பிள்ளையார் கோவில் அருகே 1979ம் ஆண்டு தைமாதம் அகழாய்வு வேலை

அரசாங்க குடியேற்றம் () 135
கள் தொடங்க இருந்தபோது கலாச்சார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு மகாநாட்டில் அங்குள்ள பாராளுமன்ற உறுப் பினரது (தமிழ்) பிரதிநிதியும் கலந்துக்கொள்வதாக தீர்மானம் எடுக்கப்ட்டது. ஆனால் அகழாய்வு அலுவலகமோ கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. நிலத்தை தோண்டியபோது அம்பாள் விக்கிரகமும். சைவக் கோவிலோடு சம்பந்தபட்ட பொருட்களும் கண் டெடுக்கப்பட்டன. இவையாவும் அகழாய்வு அலுவலகத்தால் மறைக் கப்பட்டு விட்டன. ஒரு பெரும் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு பக்தர்கள் பிள்ளையார் கோவிலுக்கு செல்வதையும் தடுத்துவிட்டார்
56t.
தமிழ் பிரதேசங்களில் புத்தரது சிலைகள் நிறுவப்பட்டும் இத னைச் சுற்றிவர சிங்களவரைக் குடியேற்றுவதே இதன் பிரதான நோக்கமாக இருக்கின்றது. யாழ்ப்பாண பட்டணத்திலும், கர வெட்டி மாதிரிக் கிராமத்திலும், காங்கேசன்துறை, பிற டறிக் கோட்டை, மூதூர், வவுனியா சந்தி, ஆனையிறவு, மாங்குளம், பரந்தனாகிய இடங்களிலும் இவ்விதமாகவே நடந்துள்ளார்கள். ஜனாதிபதி ஜயவர்த்தனா இதனை அகற்றுவதாக வாக்களித்த போதிலும், வவுனியாவில் நிலவிய சிலை இதுவரை அகற்றப்பட வில்லை. மாறாக வவுனியாவுக்கு அண்மையிலுள்ள பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் "பெளத்த இடிபாடுகள்’ என்ப வற்றைக் கொண்ட அரும்காட்சியகம் ஒன்றையும் நிறுவியுள்ளார்
56.
5.9 2. பெளத்த ஆலயங்கள்
1981ம் ஆண்டு கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூ வவுனியா மாவட்டத்திலுள்ள கொக்கச்சன்குளம் பகுதிக்கு பெளத்த பிக்கு ஒருவரையும் பல சிங்களக் குடும்பங்களையும் கொண்டுவந்து சேர்த்தார். அப்பகுதியில் வாழ்ந்த பல தமிழ் குடும்பங்கள் பலவந்த மாக கலைக்கப்பட்டார்கள். பெளத்த ஆலயம் நிறுவப்பட்டதும் சிங்களக் குடியேற்றம் ஒன்றும் உருவாயிற்று. இதே பிக்கு அப் பகுதியில் பல சிலைகளை ஸ்தாபித்த பின் அதனை புனிதப் பிரதேச மென பிரகடனஞ் செய்தார். அரசாங்கமும், ஒரு படி முன்சென்று கச்சல் சமலன் குளத்தை சமனலவேவ என பெயர்மாற்றம் செய்து 1984.10.19ல் அதனை வவுனியா சிங்கள உதவி அரசாங்க அதி பரின் நிருவாகப் பகுதியோடு இணைத்தும் விட்டது.
1981ம் ஆண்டு மார்கழி மாதம் நெடுந்தீவிலுள்ள வெடியரசன் கோட்டையிலுள்ள தள ஆய்வுத் தலத்தில், அகழாய்வு அலுவலகம் மூன்று சுண்ணாம்புக் கல் பெளத்த தூபிகளைக் கட்டியது. ஒருவித புதை பொருள் ஆதாரமின்றியும் அத்தலத்தில் இவ்வித நடவடிக்கை

Page 83
136 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
எடுக்கப்பட்டது. ஊர் மக்களது கவனத்தையும் சந்தேகங்களையும்
எழுப்பாது இருப்பதற்காக தூபிகளை ஒன்றன் பின் ஒன்றாக இடை வெளிவிட்டுக் கட்டப்பட்டது.
மடு பாதையில் 30 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பிள்ளை யார் கோவிலை பெளத்த பிக்கு ஒருவர் அத்துமீறி புகுந்து அதனை பெளத்த ஆலயமாக்கிக் கொண்டார். சைவ ஆலயங்களை கைப் பற்றுவதில் இராணுவ பலத்தைக் கொண்டே உரிமையாளர்களை மிரட்டிக் கலைத்தனர். 1981ம் ஆண்டு மட்டக்களப்புக்குத் தெற்கே யுள்ள திருக்கோயில் உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த கஞ்சிரக்குடாவில் இராணுவத்தினர் ஊர் மக்களைக் கொண்டு அங் கிருந்த முருகன் ஆலயத்தின் கூரை ஒடுகளைக் கழற்றச்செய்து மூல விக்ரஹத்தையும் அகற்றுவதாக மிரட்டினர். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தமலைத் தண்ணி முறிப்பில் இருந்த சைவ ஆலயத்தை இராணுவத்தினர் கைப்பற்றினர். இப்பொழுது அது 'குறுந்து மகா ரஜ விகாரை’ எனும் பெளத்த ஆலயமாக மாற்றப் பட்டு விட்டது.
5.9 3. இராணுவ உதவி
1983ம் ஆண்டு ஆகஸ்ட் கலவரத்தின்பின் ஆயிரக் கணக்கா னோரை காணி அமைச்சினதும் ஏனைய அரசாங்க அமைச்சுகளின தும் வாகனங்களில் கொண்டு சென்று மட்டக்களப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக குடியேற்றியுள்ளார்கள். தமிழ் பாடசாலைகள் சிங்களப் பாடசாலைகளாகவும் சைவ கோவில்கள் பெளத்த கோவில் களாகவும் மாற்றப்பட்டுவிட்டன. இராணுவத்தினரின் நேரடி உதவி யோடு சிங்கள அரசாங்க உத்தியோகத்தர்கள் இம்முயற்சியில் ஈடு பட்டிருக்கிறார்கள். தமிழ் குடியேற்றவாசிகளது வீடுகளும் இவ் வாறே அழிக்கப்பட்டன. தமிழரது சொந்த நிலங்களும் கூட உல் லாசப் பிரயாணிகளது வருகையை வளப்படுத்துவதற்கென கட்டா யப் படுத்தி வாங்கப்பட்டது. அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் களது கண்டனத்தையும் பொருட்படுத்தவில்லை.
சமீப காலங்களில் அரசாங்கம் இராணுவத்தினரது உதவியோடு தமிழர்களை தாம் குடியிருந்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்றிய இடங்களில் தென்னிலங்கையிலிருந்து சிங்களவரைக் கொண்டு வந்து குடியேற்றியுள்ளார்கள். இவர்களுள் பலர் முன்னைநாள் கைதிகளா வர். சில கட்டங்களில் வெளியேற்றப்படும் தமிழர்கள் அரசாங்க வாகனங்களில் ஏற்றப்பட்டு எங்காவது சாலை ஓரங்களில் நிர்க்கதி யாக விடப்படுவார்கள். உதாரணமாக 1984.7.24ல் திருகோண மலையில் தஞ்சம் புகுந்த தமிழ் அகதிகள் பாதுகாப்பு படையினரால்

அரசாங்க குடியேற்றம் D 137
பலவந்தமாக வாகனங்கனில் ஏற்றப்பட்டு மலையகப் பகுதிகளில் சாலையோரங்களில் இறக்கிவிடப்பட்டார்கள்.
59. 4. சிங்கள அதிகாரிகளின் நியமனம்
சிங்களவரை தமிழர் வாழும் பிரதேசங்களில் குடியேற்றுவதோடு அங்குள்ள அரசாங்க உத்தியோகங்களுக்கும் பெரும்பாலாக சிங்கள வர்களே நியமிக்கப்படுகின்றனர். அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், காணி அபிவிருத்தி அதிகாரிகள், காவல் துறை அதிகாரி, உதவி காவல் துறை அதிகாரி, விசேட ஆணையாளர், மாவட்ட நீதிபதி உட்பட பெரும்பான்மையோர் சிங்களவர்களாகவேயிருக்கி றார்கள். பாதுகாப்புப்படை அதிகாரிகளும், அரசாங்க கூட்டுத் தாபண அதிகாரிகளும் அதே இனத்தவராக இருப்பார்கள். இதனால் தமிழ் மக்கள் தங்களது அன்றாட விடயங்களை அரச நிருவாகத் தோடு பூர்த்தி செய்யவோ அல்லது வன்செயல் குற்றங்களைப் பற்றி முறையிடவோ முடியாதிருக்கின்றன.
சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையிலும் சட்ட விரோதமாக சிங்களவர்களை திருகோணமலையிலும் மட்டக் களப்பிலும் குடியேற்றியுள்ளார்கள். இதே கொள்கை தோட்டப் பகுதிகளிலும் தேசியமயத் திட்டம் அமுலாகையில் அரசாங்கத்தால் கையாளப்பட்டது. இங்கு வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தும்போது வெளியிலிருந்து குடும்பங்களை கொண்டுவந்து குடியேற்றினார்கள். புத்தர் சிலைகள் மத்திய நிலையங்களிலும் சில சந்தர்ப்பங்களில் சைவக் கோவில்களிலும் நாட்டப்பட்டன. தோட்டப் பகுதி தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதும் இவ்வித நடவடிக்கைகள் சர்வ சாதாரணமாகவே தொடர்ந்தும் நடைபெற் றுக் கொண்டிருக்கின்றன.
5.9.5 தமிழர் வெளியேற்றம்
இந்தக் குடியேற்ற திட்டங்கள் எதிலும் தமிழருக்கு இடமளிக் கப்படுவதில்லை. பெரும்பாலும் சிங்கள பெளத்த குடியேற்றமாகவே இருக்கின்றன.
தோட்டப் பகுதிகளில் ஏற்படும் வன்செயல்களாலும் 1972ம் ஆண்டு அமுலாகிய காணி சீர்திருத்தச் சட்டத்தாலும் பெருந் தொகை தோட்டத் தமிழர்கள் விரட்டப்பட்டதனால் வடக்கிலுள்ள முடிக்குரிய காணிகளில் வந்து குடியேறினர். இவர்கள் பெரும்பாலும் வவுனியா மாவட்டத்திலேயே குடியேறினார்கள். ஒரு விதத்திலும் அரசாங்க ஆதரவு கிட்டவில்லை. சமூக சேவை இயக்கங்களே தனியா ர் நிலங்களில் குடியேறுவதற்கு ஆதரவு கொடுத்தன. 1981ம் ஆண்டு

Page 84
138 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
சனத்தொகை கணக்கின்படி வட மாகாணத்தில் குடியேறிய தோட் டத் தமிழர் தொகை 63,000 ஆகும். அரசாங்கம் இவர்களை சட்ட விரோதமாகக் குடியேறியவர்களென வர்ணித்து தோட்டங்களுக்கே மீண்டும் திரும்ப வற்புறுத்திற்று. அவர்கள் அதனை மறுத்தபோது பலவந்தமாக தோட்டப்பகுதிகளுக்கு கொண்டு சென்று தெருவோரங் களில் நிர்க்கதியாக விடப்பட்டனர். இவர்கள் தமிழ் பிரதேசங்களுக்கே மீண்டும் திரும்ப அல்லது இந்தியாவுக்கே செல்ல விரும்புகிறார்
56.
மகாவலித் திட்டத்தின் கீழ் திருகோணமலையிலிருந்து கிழக்குமேற்குக் கோடு சுட்டும் அபிவிருத்திக்குரிய காணித் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது. வவுனியா சென்றடைய இருந்த சர்சைக்குரிய வட மத்திய மாகாணக் கால்வாய்த் திட்டமும் இப்பொழுது கைவிடப் பட்டுள்ளது.
புதிய குடியேற்றத்திட்டங்களும் அவற்றுடன் எழும் பட்டணங் களும் இதனால் குடிசனப் பரவலில் ஏற்படும் மாற்றங்களும் தமிழ் பாரம்பரிய பிரதேசம் என பிரித்துக்காட்டக் கூடிய நிலை யையே மங்க வைக்கின்றன. அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் களோடு அமைச்சர்களும் சேர்ந்து சட்ட விரோதமாகத் தமது ஆதர வாளர்களை தமிழ் பிரதேசங்களில் குடியேற்றுகிறார்கள். பெரும் பாலும் திருகோணமலைக்குத் தெற்கேயுள்ள பகுதியில்தான் குடி யேற்றம் தீவிரமாக நடைபெறுகின்றது. நோக்கம் என்னவெனில் இனப்பிரச்சனைக்குரிய ஒப்பந்தம் ஏதேனும் ஏற்படும்போது நிலைமை தமக்கே சாதகமாக இருக்க வேண்டும் என்பதேயாகும். இன அடிப் படையில் சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றியமைப்பதே நோக் கம். அதே வேளையில் அரசாங்கத்துள்ளும் இது விடயமாக பிளவு கள் ஏற்பட்டுள்ளன.
5.10 வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயுள்ள தமிழர்கள்
1981ம் ஆண்டு புள்ளி மதிப்பீட்டின்படி மொத்தமாகவுள்ள 18.7 லட்சம் தமிழர்களுள் 27% அதாவது 5.1 லட்சம் பேர், வட, கிழக்கு மாகாணங்களுக்குப் புறத்திலேயே வசிக்கிறார்கள். இவர்களுக்குப் புறம்பாக பத்து லட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பாலாக தோட்டப் பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் மத்தியில் பிரஜாவுரி மைப் பெற்றவர்கள் தாம் சொந்தமாக வாங்கிய காணிகளிலிருந்து தேசியமயமாக்கப்பட்ட தோட்ட நிருவாகத்தினரால் பலவந்தமாக வெளியேற்றப் படுகிறார்கள். -

வேண்டும்.
அரசாங்க குடியேற்றம் 0 189
இலங்கை பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ள நாடு.
விவசாயம் பெரும்பாலும் வரண்ட பிரதேசம் எனப்படும் பகுதிகளி லேயே நடைபெறுகின்றது. இதற்கு நீர் மூல வளமாக இருக்க நீரை போதிய அளவு உறுதிப்படுத்த நீர் பா ச ன ம் இன்றியமையாததாகின்றது. இங்குதான் மகாவலித் திட்டம் என்பது நீர் பாசனத்திற்கும் அதனால் விவசாயத்திற்கும் அவசியமாகின்றது. ஆனால் தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தைப் பொறுத்தவரை இத் திட்டத்தை அமுலாக்குபவர்கள் வேண்டுமென்றே அவற்றை புறக் கணிக்கிறார்கள்.
அட்டவணை 56 வரட்சிப் பிரதேசத்தில் நீர்பாசனம் பெரும்போகம்; 1979-1980)
ܚܫܝܫ - ܗ ہے۔ عیہ --ســـــــــــــــــــحسب مستسمیہ
பகுதிகள்
சிங்களப்பகுதி
புத்தளம்
மொனறாகலை
அநுராதபுரம்
பொலன்னறுவை அம்பாந்தோட்டை
தமிழ் பகுதி யாழ்ப்பாணம் حي
வவுனியா மன்னார் திருகோணமலை
மட்டக்களப்பு
நீர்பாய்ச்சல் சராசரி காணி உடமை
விகிதம் ஏக்கர்
79.7 3. 4.
63.2 3.9
92.7 4.1
95.3 4.0
92.5 3.0
36.6 1.3
83.4 5.7
94.7 3.7
56.6 S.
2.7
30.4

Page 85
140 0 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
மேலுள்ள அட்டவணையிலிருந்து' மன்னார் மாவட்டத்தை தவிர்த்து, சிங்களப் பகுதிகளை விட தமிழர் வாழும் பகுதிகளிலேயே நீர் விநியோகம் மிகக் குறைந்ததாக உளது என்பதை அறியக்கூடிய தாக இருக்கின்றது. இதனால் பயிர்செய்யாது வெறுமனே உள்ள நிலப்பரப்பு பெரும்பாலும் தமிழரது பாரம்பரிய பிரதேசத்திலேயே இருக்கின்றது. இது இவ்வாறு இருக்க காணி உடமையை பொறுத்த வரையிலும் யாழ்ப்பாணமே மிகக் குறைந்த பரப்பையும் காட்டுகின் றது.
சிங்களப் பகுதியில் சராசரி நீர்பாசன வசதிகள் 84.68 ஆகவும் தமிழ் பகுதிகளில் 60.34 ஆகவும் உள்ளது. இது இப்படியிருக்க குடியேற்ற திட்டங்கள் அநேகமாக தமிழ் பகுதிகளிலேயே மேற் கொள்ளப் படுகின்றது.
அட்டவணை 57 விவசாய வெற்றுக் காணிகள் விகிதம் (1978-1979)
சிங்கள ஈரலிப்பு பிரதேசம்: கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை 10.3% சிங்கள வரண்ட பிரதேசம் :
அம்பாந்தோட்டை, மொனறாகலை, அம்பாறை, பொலன்னருவை, அநுராதபுரம், புத்தளம் - 11.8%
தமிழ் வரண்ட பிரதேசம் : யாழ்ப்பாணம், மன்னார், திருகோண மலை, மட்டக்களப்பு-20.6
ஈரலிப்பு பிரதேசம் கண்டி, மாத்தளை, நூரளை, பதுளை, இரத் தினபுரி, கேகாலை, குருநாக்கல் - 14.5%
(அகில இலங்கை ரீதியாக பயிர் செய்யாத காணிகள் வீதம் - 13.7%)
தமிழ் மக்கள் வாழும் வரண்ட பிரதேசத்தில் போதிய நீர் பாசன வசதிகள் இருக்குமேயானால் சன நெருக்கடியுள்ள யாழ் பாண மாவட்டத்தின் காணியற்ற மக்கள் ஏனைய தமிழ் பகுதி களுக்குச் சென்று குடியேறக்கூடியதாக இருக்கும். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு புறத்தேயுள்ள தமிழர்களும் இப்பகுதிகளில் வந்து குடியேறக்கூடியதாகவும் இருக்கும்.
சில சிங்கள பெளத்த வெறியர்கள்|*தேச வழமையில் அடங்கிய காணி விற்பனை விதிகள் சிங்களவருக்கு யாழ்ப்பாணத்தில் காணி வாங்க முடியாது தடுக்கின்றன என்ற தவறான விளக்கம் கொடுக்க முனைகிறார்கள். இத்தேச வழமைச் சட்டத்தின்படி கூட்டு உரிமை

அரசாங்க குடியேற்றம் () 141
யாளர்கள், கூட்டு முதுசகத்தார்கள், அயல்காணி உரிமையாளர்கள், வட மாகாணத்தில் தம் காணியை ஈடுவைத்துள்ளவர்கள் விலைப் படும் காணியை வாங்குவதற்கு முதல் உரிமையாளராகின்றனர். இது குறிப்பிட்ட இனத்தவரை விலக்குவதற்கு என இயற்றப்பட்ட சட்டமல்ல. விவசாய சமூகங்களுக்கே உரித்தான வழமையாகவே யுள்ளது. இன்று உரிமையாளர் விற்பனை செய்வதற்கு பகிரங்க மாக முன் அறிவித்தல் கொடுத்தாலே போதும். றோமன் டச்சு சட் டத்தின் கீழும் இவ்வித கருத்து அடங்கி இருப்பதைக் காணலாம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கண்டிச் சிங்களவரது பாரம் பரிய சட்ட விதிகளைப் போன்று தேச வழமையும் ஐரோப்பிய காலணி ஆட்சிக்கு முன் நிலவிய சட்ட முறையினையே குறிக்கும். யாழ்ப் பாண மாவட்டத்தில் உள்ள 'மலபார் குடிசனங்கள்’ எல்லோருக்கும் இது பொருந்தும். சிங்களவர்களுக்கும் யாழ்ப்பாணத்தில் காணிகள் வாங்க உரிமையுண்டு என்பதை விளக்கும் பல ஆய்வுக் கட்டுரை கள் சமீப காலங்களில் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டு ஐயப்பாடு களும் அகற்றப்பட்டுள்ளன. ஆகவே தொடர்ந்தும் இதனைச் சாட் டாக வைத்து அரசாங்கம் தனது செலவில் சிங்களவர்களை குடியேற் றுவதை தடைசெய்ய வேண்டும்.
5:1 முப்பது வருட குடியேற்றத் திட்டங்கள்
1935ம் ஆண்டினது காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 83 பண்ணைகளைக் கொண்ட 600,000 ஏக்கர்களில் கடந்த 30 வருட காலமாக வருடத்திற்கு சராசரி 2800 குடியேற்றவாசிகளாக குடி யேற்றப்படடு வருகிறார்கள். அட்டவணை 5:8, 1936-1966ம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்று வந்த குடியேற்றங்களின் தன் மையை எடுத்துக் காட்டுகின்றது.
1966ம்-1970ம் ஆண்டுகளுக்குரிய ஐந்தாண்டு திட்டத்தின்படி 312,000 ஏக்கர் நிலம் அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின் றது. (இதனுள் 60% மானது நீர்பாசன வசதியுடன் இருக்கும்). 1970ம் ஆண்டினை அடுத்து அபிவிருத்திக்கு உரிய புதிய காணிகள் ஏறத்தாள 10 லட்சம் ஏக்கர் கொண்டதாக இருக்குமென எதிர் பார்க்கப்படுகின்றது. இதில் 600,000 ஏக்கர் நீர்பாசன வசதியுடன் இருக்கும் 18. இன்று பயிர் செய்கைக்குரிய காணியின் விஸ்தீரணத் தின் அளவு மேலும் 13 லட்சம் ஏக்கர் காணிகள் பயிர் செய்கைக்கு உட்படுத்தப்படலாம் என்பதே இதன் பொருளாகும் (இதனுள் அரைப் பங்கு நீர்பாசன வசதிக்குட்பட்டதாக இருக்கலாம்) (தோட்ட பயிர் செய்கைக்குரிய காணிகள் இக்கணிப்பினின்றும் விலக்கப்பட்டுள்ளன) கடந்த 30 ஆண்டுகளுள் விருத்தி செய்யப்பட்ட 600,000 ஏக்கர்

Page 86
142 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
அட்டவணை 5:8 காணி அபிவிருத்தித் திட்டம்?
திட்டங்கள் காணிகளின் கொடுக்கப் argrateff
விஸ்தீரணம் பட்டவர் | பண்ணை
d 56 (ஆயிரம் 6ᎫᏯ5 o: விஸ்தீரணம் கர்கள்) (ஆயிரம்) (ஏக்கர்)
பெரும் குடியேற்றத்
திட்டங்கள் 287 59.7 4.8
நெற்காணி (நீர்பாசன) (182) (3.0) மேட்டு நிலம் (105) (1.8)
மேட்டு நில குடியேற்றம் 31 8.8 3.5 மத்திய வர்க்கத் திட்டங்கள் 147 ii. 5 12.7 இளைஞர் திட்டம் (1965) 7 2.9 2.5 விசேட குத்தகை (1965) 58 0.2 330,0
தரிசு நிலம் (1962) 70
மொத்த விவசாய
குடியேற்றங்கள் 600 83.2
கிராம விஸ்தரிப்புத் திட்டங்கள் (பெரும்பாலும்)
குடியிருப்பு) 1,264 587.4
காணிகளோடு ஒப்பிடுகையில் அபிவிருத்திக்கென எதிர்பார்க்கப்படும் காணிகள் இருமடங்காக உள்ளது. சாாசரி 6 ஏக்கர் அடிப்படை யில் மொத்தம் 2,00,000 குடும்பங்கள் குடியேற்றப்படலாம். இது எதிர்கால காணி அபிவிருத்தி நிலையையும் குடியேற்றப்படக்கூடிய நிலையையும் சுட்டுவதாக இருக்கின்றது. இது மகாவலித் திட்டத் தின் நீர்பாசன வசதிகளையும் நீர் வீழ்ச்சி மின்சக்தி வசதிகளையும் பொறுத்துள்ளதாகவும் இருக்கின்றது. குடியேற்றத்திற்குரிய காணி கள் பெரும்பாலும் வரண்ட பிரதேசத்திலேயே இருக்கின்றன.

அரசாங்க குடியேற்றம் () 143
(տկշճվ60)Մ
சிங்களப் பகுதிகளில் போதிய நிலமிருந்தும், தமிழ் மக்களது பாரம்பரிய பிரதேசத்தில் சிங்கள ஆதிக்கம் நிறைந்த அரசாங்கங் கள் குடியேற்றங்களை நிறைவேற்ற முனைந்தது தமிழ் சிறுபான்மை இனத்தின் ஜனத்தொகை விகிதத்தை பாதிக்கும் நோக்குடனேயே நடைபெற்றது என்பது எமது பகுப்பாய்வினின்றும் தெளிவாகிறது. இது கடந்த நாற்பது வருடங்களாக நடைபெற்றுக்கொண்டே வரு கின்றது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை (1959) சேருவிலை (1976) எனும் இரு பாராளுமன்றத் தொகுதிகள் சிங்களவருக் கென்றே ஒதுக்கப்பட்டதாகிவிட்டது. இவ்விரு தொகுதிகளுமே கிழக்கு மாகாணத்தின் 3,889 சதுர மைல் பரப்பளவில் 1,548 சதுர மைல்களைக் கொண்டதாகின்றன. இதனால் இவ்விரு தொகுதி களூடாக தமிழர் பிரதேசத்தில் கணிசமான அளவு சிங்கள மயமாகி விட்டது.
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வன்செயல்கள் எல்லாம் சிங்கள வர்கள் குடியேறிய பகுதிகளிலேயே ஆரம்பித்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்விதமாக குடியேற்றப் பட்டவர்கள் பெரும் பாலும் சமூகக் துரோகிகளும், மாஜி கைதிகளும் அரசாங்கத்தின் ஆதர வாளர்களுமாவர். அயலில் வாழும் தமிழ் மக்களை குடியெழுப்பி அவர்களது நிலங்களை அபகரிக்கும் நோக்கத்துடனேயே வன்செயல் களில் ஈடுபடத் தயாராக இருக்கிறார்கள்.
1956ம் ஆண்டு வன்செயல்களில் கல் ஒயா பள்ளத்தாக்குப் பகுதியே மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாக இருந்தது. 1958ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் பதவிய திட்டத்தில் குடியேறியவர் பல தமிழரைக் கொன்று அவர்களது உடமைகளையும் சூறையாடி னார்கள். இதே போன்று 1977ம் ஆண்டிலும் மன்னார், திருகோண மலை, வவுனியா, மட்டக்களப்பு பகுதிகளிலும் வன்செயல்கள் நடை பெற்றன. 1981ம் ஆண்டு வவுனியா திருகோணமலைப் பகுதிகளில் குடியேறிய தோட்டத் தமிழ் அகதிகள் சிங்களக் குடியேற்ற வாசி களால் தாக்கப்பட்டனர். இந்த வன்செயல்களில் எல்லாம் பாது காப்பு படையினரது ஆதரவு குடியேற்ற வாசிகளுக்கிருந்தது.
இவ்வாறு தமிழ் மக்கள் தாக்கப்படுவது என்பது 1983ம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே வருகின்றது. ஆகவே மொழியை போன்று சிங்களக் குடியேற்றமும் தமிழ் மக்களை பாதித்து வரும் பிரதான பிரச்சனைகளுள் ஒன்றாகும். அனைத்து குடியேற்ற திட்டங்களும் கீழ்காணும் முடிவுகளை அடைவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன என்பதை இந்த ஆய்வு தெளிவுபடுத்து கின்றது.

Page 87
144 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
அ. தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களில் ஜனத்தொகை மாற் றத்தை ஏற்படுத்துவது.
ஆ. இப்பிரதேசங்களில் புதிய மாவட்டங்களையும், தேர்தல் தொகுதிகளையும் ஏற்படுத்தல்.
இ. தமிழ் பிரதேசங்களில் பண்டைய பெளத்த தலங்கள் அக ழாய்வு செய்யப்பட்டன என்ற பெயரால் பெளத்த மதத்தை வேரூன் றச் செய்வது.
ஈ. இராணுவ முகாம்களை அமைப்பது.
உ. இப்பகுதிகளில் சிங்கள அரசு அதிகாரிகளை நியமித்தல்.
ஊ. இப்பிரதேசங்களில் எழக்கூடிய எதிர்ப்புக்களை அடக்கு வதற்கு ஏதுவாக முன்னாள் குற்றவாளிகளை இங்கு குடியமர்த் துவது.
எந்த சமூகமும் தான் வாழும் மண்ணின் உரிமையை வேறொரு இனத்திற்கு விட்டுக் கொடுக்க விரும்பாது. வாழ்க்து வரும் நிலம் தான் தனிப்பட்ட ஒருவரையோ அல்லது ஒரு சமூகத்தையோ தனித் துவப்படுத்துகிறது. தமிழரது இப்பிரச்சினையை சிங்கள அரசாங் கங்கள் ஒருக்காலும் தீர்க்க முயலவில்லை. விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களது ஒருமித்த கருத்தாகும்.

ஆறாம் அத்தியாயம்
சிங்கள மயமாக்கல்
சிங்களவர்களும் தமிழர்களும் இந்தியாவில் இருந்துதான் வந்தார் கள் என்பது நீருபிக்கப்பட்டு விட்டது. அதற்கு முன் இராவணன் வழித்தோன்றல்களே இருந்தார்கள் எனப்படுகின்றது. வேடர்கள் தானும் சேர (மலையாள) நாட்டு புலிந்தர்கள் இனத்தைச் சேர்ந் தவர்கள் எனக் கருதப்படுகின்றனர். ஆகவே, தமிழர்கள், மலை யாளத்தவர், கன்னடர், துழுவர் முதலிய தென்னிந்திய மொழிகள் பேசுவோர் மட்டுமல்லாது, தென் கிழக்கு ஆசியாவின் யாவகரும், வட இந்தியரும் காலத்திற்குக் காலம் வந்து குடியேறினார்கள் என்பது ஆதாரபூர்வமாக தெரிகின்றது. இவ்விதமாக வெவ்வேறு மொழிகள் பேசும் கூட்டங்கள் பல காலத்துத் தொடர்பு காரணத்தி னாலேயே, இலங்கையின் இரு பிரதான மொழிப் பிரிவினரோடு இரண் உறக் கலந்தனர்.
6ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் எனும் நூலில் சிங்களவர் எனும் பதம் இருதடவை மட்டுமே குறிப்பிடப் படுகின் றது. ஆகவே இந்த இரு மொழிப் பிரிவினரும் இந்தியாவின் மாறு பட்ட இரு பகுதிகளிலிருந்துதான் வந்ததாக கருதிக் கொண்டா லும் அவர்களது சமூக கலாச்சார இணைப்புகள் தென்னிந்தியத் தொடர்புகளையே சுட்டிக்காட்டுகின்றன. நாட்டில் தமக்கிடையே முழு இலங்கையும் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வருவதே அவர் கள் விரும்பியதாக இருந்தாலும், இரு வேறுபட்ட அரசுகளே ஆட்சி புரிந்தன. வெவ்வேறு கட்டங்களில் இரு சாராரும் தனித்தனியே ஒரே ஆட்சியின் கீழ் முழு இலங்கையையும் ஆண்ட காலங்களும் இருந்தன. இதனை மொழி சமய ரீதியான ஆதிக்கம் என கூற இய லாது. அரசியல் ஆதிக்கத்தை மட்டுமே நிறுவினார்கள். பிற்காலத் தில் குறிப்பாக ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் மட்டுமே சிங்கள பொத்த உணர்வு என்பது தன் சுய ரூபத்தைக் காட்ட முயன்றது.

Page 88
146 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
சுய நலன்களை பூர்த்தி செய்ய புராணக் கதைகளையும் கட்டுக் கதைகளையும் புனைந்து அவைகளை நன்கு பயன்படுத்தினர்.
6.1 நாட்டின் சின்னம்
சிங்களம் எனும் பதத்தின் பொருளை அறிந்துக் கொள்வதற்கு தென்னிந்திய அரச குலங்களின் சின்னங்களே உதவுவதாக இருக் கின்றன. பாண்டியருக்கு மீனாகவும், சோழருக்கும், நாகபரம்பரை யைச் சேர்ந்த சிந்துப் பிரிவினருக்கும் புலியாகவும், சாளுக்கியருக்கு பன்றியாகவும் சின்னங்கள் இருந்தன. சில தென்னிந்திய ஆளும் குடும்பங்களுக்கு சிங்கம் சின்னமாக இருந்ததென அறியக் கூடிய தாகவும் இருக்கின்றது. சிம்ம விஷ்ணு பரம்பரையைச் சேர்த்த பல்லவ மன்னருக்கு நந்தியே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட சின்னமாக இருந்தபோதிலும், நாணயங்களிலும் முத்திரைகளிலும் சில செப்பேடுகளிலும் சிங்கம் பொதிந்திருப்பதைக் காணக்கூடிய தாக இருக்கின்றது. உருவப்பள்ளி நன்கொடையிலும் 2 பிகிற செப்பேட்டிலும் செதுக்கப்பட்டுள்ள மிருகத்தின் உருவம் சிங்க மென இனங்காணப்பட்டுள்ளது. இதனை ஆதாரமாகக் காட்டி ஆரம்பத்தில் பல்லவ மன்னர்கள் சிங்கத்தையே சின்னமாக கொண் டிருந்தார்கள் எனவும் கூறப்படுகின்றது. சோழ நாட்டு குறுநில மன்னர் சிலரும் சிங்கத்தை தமது சின்னமாகக் கொண்டிருந்தனர். 8ம் நூற்றாண்டினது எனக் கொள்ளும் புண்ணியகுமர ஏடுகளும் 4 பஸ்தர் நாட்டைச் சேர்ந்த சந்திராதித்தியன் எனும் முதல்வனது ஏடு ஒன்றிலும் சிங்கமே சின்னமாக இருக்கின்றது. புண்ணிய குமரனும் சந்திராதித்தியனும் கரிகால் சோழனது வம்சா வழியின ரெனத் தம்மைக் கூறிக்கொண்டனர். இலங்கையை ஆண்ட அரச குலத்தவரும் இதே போன்ற சிங்கத்தை தமது சின்னமாக்கி அதே பெயரையும் தம் குலத்தின் பெயராகவும் ஆக்கியிருக்கலாம். இலங் கையில் நிலவியதைப் போன்று, தென்னிந்தியாவிலும் இ த ைன விளக்க பல பரம்பரைக் கதைகள் இருந்தன. உதாரணமாக சிந்த அரச குலத்தோடு சம்பந்தபட்ட பரம்பரைக் கதைகள் தம் சந்ததிக் குப் பெயர் வழங்கிய முன்னோர் ஒருவர் புலிகளால் வளர்க்கப்பட்ட வர் எனவும் கூறுகின்றன .
6.2 சிங்களக் கொடி
சுதந்திரம் கிட்டுகின்ற காலத்தில் மொழி, சமய ரீதியாக வேறு பாடுடைய நவீன நாடாக உயிர்த்தெழுகையில் எல்லா மக்களது விசுவாசத்தையும் தூண்டக்கூடிய வகையில் நாட்டின் கொடி அமைந் திருக்க வேண்டும். இதே சூழலைக் கொண்ட இந்திய நாடு அசோகசக்கரத்தை" அடங்கியுள்ள மூவர்ணக்கொடியை தன் தேசிய

சிங்கள மயமாக்கல் () 147
கொடியாக்கிக் கொண்டது. வரலாறு காலங்களில் தென்னிந்திய சின்னங்களில் ஒன்றாகிய சிங்கத்தை சிங்கள மன்னர்கள் தமது கொடியினில் அமைத்துக் கொண்டனர். அதே போன்று தமிழ் மன்னர்கள் நந்திக் கொடியை தமதாக்கிக் கொண்டனர். சிங்கம் சிங்களவரது கட்டுக் கதையை பிரதிபலிப்பதாகவும் நந்தி தமிழர் தொழுதேற்றும் பிராணியாகவும் இருந்தன.
கொடி தழுவிய விடயமே சிங்களவருக்கும் தமிழருக்கும் ஏற் பட்ட பிரச்சனையாக இருந்தது. சிங்களவர் வற்புறுத்திய சிங்கக் கொடியை தமிழர் ஏற்க மறுத்தனர். மத்திய இலங்கையில், பெரும் பாதம் ஒன்று பொதிந்துள்ளதாக கருதப்படும் ப ஸ் எம் ஒன்று கொண்ட மலையாகிய சிவனொளிபாத மலையை (Adam's Peak), சின்னமாக ஏற்கும்படி சில தமிழர்கள் ஆலோசனை கூறி னார்கள். பெளத்தர்களும் இந்துக்களும் முஸ்லிம்களும் புனித யாத்திரை செல்லும் இடம் அது. பெளத்த பாரம்பரியக் கதைகளில் பூமியில் புத்தரது பாதங்கள் இறுதியாக பட்ட இடமாகையால் 'பூனி பாதம்' எனப்படுகின்றது. சிங்களவர்கள் அதை 'சமணல" என அழைப்பர். 'சிவனொளி பாதம்" என்று இந்துக்கள் கூறுவார் கள். கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஆதமின் பாதம் பொதியப்பட்ட தாகக் கருதுவர்.
சிங்கக் கொடியை திணிப்பதில் முதற் பிரதமராகிய டி. எஸ். சேனநாயக்காவும் சக சிங்கள பாராளுமன்ற உறுப்பினரும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் தமிழர்களையும் முஸ்லிம்களை யும் பிரதிபலிக்கும் முகமாக இரண்டு துண்டுகளை . விரும்பினர். இதனால் இரண்டு துண்டுகள் சேர்க்கப்பட்ட சிங்கக் கொடியையே தேசியக் கொடியாக பாராளுமன்றம் 1948ம் ஆண்டில் ஏற்றுக் கொண்டது. கொடியானது சிவப்புப் பின்னணியில் FF6235 கால் ஒன்றில் வாள் எத்திய மரபுவழி உருவம் கொண்ட சிங்கத்தை அடக்கியுள்ளது. நான்கு முலைகளிலும் அரச மரத்தின் இலைகள் வரையப்பட்டிருக்கும். இதனோடு தமிழருக்கு காளி நிறத்திலும், முஸ்லிம்களுக்கு பச்சையிலும் இணைப்புக்கள் கொடுக் கப்பட்டது. முழுக் கொடியும் சிங்கத்திற்கு கொடுக்கப்பட்ட அதே மஞ்சள் நிறத்தில் கரையுள்ளதாக இருக்கும்.
தேசியக் கொடி என்பது உண்மையில் சிங்கள பெளத்த கொடி என்பதும் இதனால் தெளிவாகும். இது 1978ம் ஆண்டின் அரசியல் யாப்பிலும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. "2ம் இணைப்பில் குறிப் பிடப்படும் சிங்கக் கொடியே தேசியக் கொடியாகும்" என 8ம் கூரத்து கூறுகின்றது. சிறுபான்மையோருக்குரிய இரண்டு இணைப்

Page 89
148 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
புகளின் தேவையும் முக்கியத்துவமும் புதிய யாப்பினை ஏற்ற பாரளுமன்றத்தால் ஏற்கப்படாது கைவிடப்பட்டது.
6.3. சிங்கள மொழி மட்டும்
முதன் முதலாக இலங்கையிலே ஆட்சி மொழியென்ற கொள்கை உருவானது 1832ம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சியின் கீழாகும். அன்று தொட்டு 1958 ஆம் ஆண்டு வரையும் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது.
நாட்டு மக்களுள் 10% மட்டுமே ஆங்கிலம் எழுத பேச தெரிந் தோர் என்றாலும் சுதந்திரம் அடைந்து ஒன்பது வருடம் வரை, o|th மொழியே அரச கரும மொழியாக இருந்தது. ஆகவே "சுய பாஷையை" ஏற்க வேண்டிய அவசியம் உருவாயிற்று. சுதந்திரத் திற்கு முன்பான 1931 - 1944 சட்ட சபை காலங்களில் சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக ஏற்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கவில்லை. 1944ம் ஆண்டு மே மாதம், சட்ட சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஜே. ஆர் ஜெய வர்த்தனா தனது உரையொன்றில், குறிப்பிட்ட கால எல்லைக்குள் சிங்கள மொழியை அரச கரும மொழியாக்க வேண்டும் என பிரேசித் தார். தமிழ் மொழியும் அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என வி. நல்லையா முன் வைத்த திருத்தத்தை ஜே. ஆர். ஐய வர்த்தனா ஏற்றுக் கொண்டார். விவாதத்தில் பங்குபற்றிய எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா கூறியதாவது, "இனங்களுக் கிடையே நாம் அடைய விரும்பும் நல்லுறவையும் நம்பிக்கையை பும் கொண்டு வருவது அவசியம். ஆகவே இரு மொழிகளும் அரச கரும மொழிகளாக ஏற்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. நட்டமோ, ஆபத்தோ, சிக்கலோ எதுவும் இருப்பதாக எனக்குத் தென்படவில்லை”. திருத்த பிரேரணை 27 வாக்குகள் சாதகமாகவும் 2 வாக்குகள் எதிராகவும் பெற்று நிறைவேற்றப்பட்டது. ஆங்கிலத் தில் இருந்து சிங்களமும் தமிழும் அரச கரும மொழியாக மாற்றி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆராய 1945ம் ஆண்டு புரட் டாசி 20 ஆம் திகதி ஜே. ஆர். ஜயவர்த்தனா தலைமையில் குழு வொன்று அமைக்கப்பட்டது. 1957ம் ஆண்டு முதல் அரச சேவை யில் உள்ளோர் இரு மொழிகளிலும் கடமையாற்றக்கூடியவராக இருத்தல் வேண்டும் என்றும் பாடசாலைகளில் இரு மொழி களிலும் தேர்ச்சி பெறக் கூடிய வாய்ப்புக்கள் ஒழுங்கு செய்ய வேண்டும் என்றும் கமிட்டி சிபாரிசு செய்தது.
சிங்கள அரசியல்வாதிகளது ஆங்கில மோகத்தையும் கண்டித்து அரச அலுவலகங்களில் சிங்கள மொழியை பயன்படுத்த வேண்டு

சிங்கள மயமாக்கல் () 149
மென சிங்கள பெளத்த புத்துயிர் இயக்கத்தைச் சேர்ந்த திரு. சமர துங்க 1922ம் ஆண்டிலேயே வேண்டிக் கொண்டார். இவ்வித உணர்வு சிங்களவர் மத்தியில் விரைவாகப் பரவத் தொடங்கியதும் அதிகாரத்தை விரும்பும் அரசியல்வாதிகள் சிங்கள மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் மீண்டும் முதலிடம் கொடுப்பதையே தாம் விரும்புவதாக காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வித அரசியல்வாதிகளுக்கு சமய மொழிப்பற்று ஏற்படுவதெல் லாம் இருபதாம் நூற்றாண்டிலேதான் காணக்கூடியதாக இருந்தது. அவர்களுக்கு இட்ட பெயர்களே இதனை தெளிவு படுத்துகின்றது - உதாரணமாக, சொலமன் வெஸ்ட் றிட்ஜ்வே டயஸ் பண்டார நாயக்கா, ஜபனியர்ஸ் றிச்சர்ட் ஜயவர்த்தனா டொன் ஸ்ரீபன் சேனநாயக்கா. இவர்கள் மேலை நாட்டு சிந்தனைகளையும் கலாச் சாரத்யுைதம் முழுமையாக ஏற்றவர்கள். இங்கிலாந்திலிருந்து 1928ம் ஆண்டு படிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா தன்னை வரவேற்க வந்த மக்களிடம் சிங்களத்தில் பேச இயலாததையிட்டு மன்னிப்பு கேட்டார். அக் கட்டத்தில் அவர் ஐரோப்பிய உடை அணிய விரும்பும் கிறிஸ்தவ ராகவே இருந்தார். ஆனால் அரசியலில் இறங்கியதும் பெளத்தாாகி சிங்கள உடையையும் அணியத் தொடங்கி விட்டார். பெயரின் முதல் எழுத்துக்களை மட்டும் மாற்றியமைக்கவில்லை.
1951ம் ஆண்டு ஆடி மாதம் ஐ. தே. கட்சியிலிருந்து விலகிய வர் தனது சிங்கள மகா சபையையும் கலைத்து விட்டு சிறீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்ததார். இரு மொழிகளுமே அரச கரும மொழிகளாக இருக்க வேண்டுமென்பது கட்சியின் கொள்கை யாக இருந்தது.
1955 ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சர் ஜோன் கொத்தலாவலை இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்த்து வழங்க இருப்பதாகக் கூறினார். இந்தப் பேச்சை எல். எச். மேத்தானந்த திரித்து சிங்களவர்கள் தமிழ் கற்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் படுகிறார்கள் என்று பிரச்சாரம் செய்தார். இதற்கு ஆதர வாக பெரும் கிளர்ச்சியை உருவாக்கினார். இக்கிளர்ச்சியின் போது சிங்களம் ஒன்றே அரச மொழி எனும் கோஷத்தை எழுப்பினார். இதை எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா தமக்கு சாதக மாக்கி 1956ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இதை தமது தேர்தல் வாக்குறுதியாக பயன்படுத்தி வெற்றியும் பெற்றார்.
1956ம் ஆண்டு சிங்கள மொழி மட்டும் மசோதா பாராளுமன் றத்தில் நிறைவேறியது. பண்டாரநாயக்கா தலைமை தாங்கிய

Page 90
150 () பெளத்தசிங்களவரும் சிறுபான்மையினரும்
மகாஜன எக்சத் பெரமுன"வோடு ஐ.தே. கட்சியும் மசோதாவை ஆதரிக்க, இடது சாரி கட்சிகளும் தமிழ் கட்சிகளும் இதனை எதிர்த்து வாக்களித்தார்
ஜ. தே. க. அரசாங்கம் திரும்பவும் பதவிக்கு வருவதற்காக 1955 மாசி மாதம் நடந்த கட்சி பேரவைக் கூட்டத்தில் சிங்களம் ஒன்றே அரச மொழியென்று ஜோன் கொத்தலாவலை தாமாகவே பிரேரித்தார். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்ததும் 1958ல் நடந்த தேர்தலில் ஐ. தே, கட்சியால் வெற்றி பெற இயலாது போய்விட்டது. இந்த சட்டம் உருவாக்கப் பட்ட பொழுது டாக்டர் கொல்வின் ஆர். டி. சில்வா எச்சரித்ததாவது, 'இரு மொழி யெனில் ஒரே நாடு, ஒரு மொழியே எனின் இரு நாடுகள்",
ஏற்படக் கூடிய விளைவுகளை ஆராயாது, அதிகாரத்தை யே கைப்பற்றும் நோக்குடன் முதலாளித்துவக் கொள்கை கொண்ட அரசியல் கட்சிகள் இதனை ஆதரித்தன. இது நிறைவேறும் கட்டத்தில் தமிழருக்கெதிராக வன்செயல்கள் நடந்தன. இச்சட்டத்தை எதிர்த்து தமிழர்கள் காலி முக திடலில் "சத்தியாகிரகம்" செய்தபோது, ஐக்கிய L&& (psiirsTTSirf (Eksath Bikkhu Peramune) 5GM) AUGM) trusisir Fyj (J55ř7 டர்களால் அடித்து விரட்டப்பட்டார்கள். "தமிழ் மொழியை நியாய மான அளவு பயன்படுத்தல்" எனும் கஷரத்துக்களும் சிங்களம் மட்டும் மசோதாவில் இருத்தும் விலத்தப்பட்டது. இதனை அடுத்துத்தான் தமிழர்களது ஒருமைப்பாட்டினையும் எதிர்கால நலன்களையும் தீர்த்து வைப்பதற்காக சமஷ்டி ஆட்சி தீவிரமாக கோரப்பட்டது. பண்டாரநாயக்காவுக்கும் செல்வநாயகத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமும் பிக்குகளினது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் கைவிடப் பட்டது.
சிங்களம் சட்டபூர்வமாக ஏற்க்கப்பட்டதும் ஆங்கிலக் கல்வி கற்ற உயர்மட்டத் தமிழர்கள், பறங்கியர்கள், சிங்களவருள் ஒரு சிலர் நாட்டிலிருந்து வெளியேறி இங்கிலாந்திற்கும், அமெரிக்காவுக்கும், ஆவுஸ்திரேலியாவுக்குக் குடியேறச் சென்றனர். இப்புதிய சட்டத்தின் படி அரச சேவையில் பதவி உயர்வு பெறுவதற்கும், புதிதாக சேருவதற்கும் சிங்களம் கற்பது அவசியமாயிற்று. குறித்த தரத்தை அடையாவிடில் சேவையில் இருப்போருக்கு சம்பள உயர்வோ நிரந்தரமாக்கப்படலோ அல்லது புதிதாகச் சேரவோ வாய்ப்புக் கிடையாது.
5.4. தமிழரும் வேலை வாய்ப்புக்களும்
1956ம் ஆண்டு "சிங்களம்' நிர்வாக மொழியாக அமுலாக்கப் பட்டபின் தமிழர்களின் வேலை வாய்பு வசதிகள் படிபபடிப்படியாகக்

சிங்கள மயமாக்கல் () 151
குறைக்கப்பட்டன. சுதந்திரத்திற்குப் பின் அரசாங்க சேவையில் அமர்த்தப்பட்ட 82,000 பேருள் 30% விழுக்காடு தமிழர்களாவர். 1970ம் ஆண்டளவில் மொத்தம் 2,25,000 நபர்கள் அரசாங்கத் துறையில் தொழில் வாய்ப்பு பெற்றனர். இவர்களுள் 6% மட்டுமே தமிழர்களாக இருந்தனர். அட்டவணை 6.1 அரச சேவையில் தமிழர் விழுக்காடு?
தொழில் துறை 1955 1965 1970
நிர்வாகத் துறை 30 % 20% 5%
எழுது வினைஞர் (தபால், புகையிரத மருத்துவ, சுங்க இலாக்காக்கள்) 50 %. 30 % 5 %
தொழில் நுணுக்கத் துறை (மருத்து
T பொறியியலாளர், விரிவுரை 60% 30 % 10 % LI TTTii)
ஆயுதப் படையினர் 40% 30%. | 1
தொழிலாளர் பிரிவினர் 40%. 20 % 5%
1973ம் ஆண்டு உயர் நிர்வாக சேவைக்கு தேர்வு மூலம் எனக் கூறப்படும் முறையில் தெரிவு செய்யப்படும் 100 பேருள் 92 பேர் சிங்களவர்களாகவும், தமிழர் நால்வராகவும், முஸ்லிம்கள் நால்வரு மாகவே இருந்தனர். 1958ம் ஆண்டுக்குப் பின் ஸ்தாபிக்கப்பட்ட அரச தொழிற்சாலைகள், வர்த்தக கூட்டுத்தாபனங்கள் முதலியவை களே தொழில் வழங்கும் பெரும் நிறுவனங்களாக இருந்தன. சிங்களம் மட்டும் என்ற சட்டத்தால் தமிழர்களுக்கு இதிலும் கூட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 1958ம்-1970ம் இடையே பொதுத் துறை கூட்டுத்தாபனங்களால் 189,000 நபர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டிருக்கின்றது. இதில் 98% மானோர்
சிங்களவர்களே."
இலங்கையில் மிகப் பெரும் தொழில் வழங்குனராக விளங்கும் இலங்கை போக்குவரத்துச் சபை 1970ம் ஆண்டு வரை 32,000 பேரை வேலைக்குச் சேர்த்துள்ளது. இவர்களில் 98% சதவிகித மானோர் சிங்களவர்களாவர்.

Page 91
152 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
சிங்கள மொழியை பயிலாத தமிழருக்கு தனியார் துறையிலும் கூட சந்தர்ப்பம் கிட்டுவது மிக அரிதானது. அரசாங்க நிர்வாகத்தின் கீழ் செயல்படுகின்ற கூட்டுத்தாபனங்களில் தொழில் வழங்குவது தகுதி அடிப்படையின் கீழ் அமையாது அமைச்சரின் தெரிவின் பேரிலேயே நடைபெற்றது.
8.5. அரசாங்கத்தின் வேலை வாய்ப்புத் திட்டங்கள்
இத் திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்கள் சிங்களப் பகுதிகளில் பரவலாக தொடங்கப்பட்டன. ஆனால் தமிழ் பகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே இப்பயிற்சிக்கான வாய்ப்பிருந் தது. கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை என்ற இடத்திலேயே இந்த நிலையம் அமைந்துள்ளது. இதனால் தமிழ் இளைஞர்கள் தொழில் வாய்ப்பு பெறுவது கடினமாயிற்று. அரசியல் அதிகார சபை, வேலை வங்கி நிறுவனங்கள் மூலம் பெரும்பாலும் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களே மிகவும் பயனடைந்தனர்.
8.5.1. அ. தேசிய தொழிற்களப் பயிற்சிச் சேவை
அரசாங்க நிதி உதவியுடன் இயங்கிய கூட்டுத்தாபனங்களை தவிர்த்து தனியார் துறைகளும் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி தொழிற் பயிற்சி பெறும் வாய்ப்புக்களைக் கொடுத்துவந்தன. இங்கு தரத்துக்கே முதலிடம் கொடுக்கப்பட்டமையால் தெரிவு செய்யப்படுவது நியாயமாகவே நடைபெற்றது என்றும் கூறலாம். ஆனால், அரசாங் கம் இத்துறையிலும் தலையிட்டு, தேசிய தொழிற்களப் பயிற்சிச் சபை வாயிலாகவே தனியார் துறை நிறுவனங்களும் தெரிவு செய்ய வேண்டுமென ஆணையிட்டது. இன அடிப்படையில் பாகு பாடு நிலவியதனால் வேலை வாய்ப்புப் தேடுவதிலும், தொழில் நுட்பப் பயிற்சி பெறுவதிலும் தமிழர் ஒதுக்கப்படவே உருவான திட்டமாக இருந்தது. இதனால் க.பொ.த. (உயர்தர) பத்திரம் பெற்ற தமிழ் இளைஞர்கருள் 41% வேலையற்றோாாக இருந்தனர். அதே பிரி வைச் சேர்ந்த சிங்களவர்களுள் 29% மட்டுமே வேலையற்றோராக இருந்தனர்.1
ஆ. அரசியல் அதிகாரி
1970ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி மாவட்ட ரீதியாக அரசியல் அதிகாரிகளை நியமித்து வேலைவாய்ப்பு வசதி களும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. இதனாலும் தமிழர்கள் பாகு பாட்டிற்கு ஆளானார்கள்.

சிங்கள மயமாக்கல் () 153
இ. வேலை வங்கி
1977ம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சி ஆரம்பமானதும், வேலை வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழ் பிரதேசங்களில் மட்டுமே தமிழ் ருக்கு ஒரு சில வாய்ப்புக்களுக்கு இடமிருந்தன. அபிவிருத்தி திட் டங்கள் இல்லாத இடத்து வாய்ப்புக்கள் பெரிய அளவில் இல்லை. கிடைத்த வாய்ப்புக்களும் ஆளும் கட்சி ஆதரவாளருக்கு அல்லது லஞ்சம் கொடுத்தோருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.
கி.பி ஆசிரியர் நியமனம்
1971ம்-1974ம் ஆண்டுளுக்கிடையே அல்ஹாஜ் பதியுத்தீன் முஹம்மது கல்வி அமைச்சராக இருந்தப் பொழுது 22,874 ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டது. இவர்களில் 18,000ம் பேர் சிங்களவரும், 2,507 முஸ்லிம்களும், 1,807 தமிழர்களும் ஆவர். இந்த நான்கு வருடங்களில் 3,500 தமிழ் ஆசிரியர்கள் ஓய்வுப் பெற் றுள்ளார்கள் என்பதும் நினைவுறுத்தத்தக்கது. இதனால் தமிழ் ஆசிரியர் தொகை குறைக்கப்பட்டுள்ளதே அல்லாமல் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டதாக இல்லை. 1977ம் ஆண்டு இவ்வரசாங்கம் பதவி ஏற்பதற்கு முன் தமிழ் ஆசிரியர் நியமனம் 12% ஆக இருந்தது. இவ்வரசாங்கம் பதவி ஏற்ற பின் முதலாவது கல்வி அமைச்சராக இருந்த நிஸ்சங்க விஜேரத்ன காலத்தில் தமிழ் ஆசிரியர் நியமனம் 3% வீதமாக குறைக்கப்பட்டது. தமிழர் பகுதிகளில் ஆசிரியர் பற் றாக்குறை இருந்த போதும்கூட தமிழ் ஆசிரியர் நியமனங் களை வழங்காதிருப்பது சிங்கள அரசாங்கத்தின் இனவாத கொள் கையை காட்டுகின்றது. 1982ம் ஆண்டு மொத்த ஆசிரியர் தொகை பான 25,081 பேருள் சிங்களவர் தொகை 22,929 ஆகவும் தமிழர் தொகை 2,633 ஆகவும் இருந்தது.
3.7 அரச சேவை
பொதுத் துறையைச் சேர்ந்த பெரும் நிறுவனங்கள், தொழிற் சாலைகள் ஆகியவற்றில் பெரும்பாலானவை சிங்களப் பகுதியில் நிறுவப்பட்டன (மிகச் சிறு எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளே வட-கிழக்கு மாநிலங்களின் நிறுவப்பட்டன). இவற்றுக்குத் தேவை பான தொழிலாளர், ஊழியர், அதிகாரிகள் அந்தந்த வட்டாரங் களிலிருந்தே எடுக்கப்பட்டனர். எனவே, பொதுத் துறைப் பணி பாளர்- அதிகாரிகள் ஆகியோரில் சிங்களவரே மிகப் பெரும்பான்மை யோராக இருக்க முடிந்தது. அட்டவணை 6:2 தமிழர் மீது காட்டப்பட்ட ஒரவஞ்சனையை எடுத்துக்காட்டும்.

Page 92
154 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
அட்டவணை கி:2 அரச சேவை-1972
முஸ்லிம் 5T55ն ճնI
ssir யோர்
சிங்களவர் தமிழர்
1971ம் ஆண்டு மக்கட்
தொகை விழுக்காடு | 72% 20.5% 6.5% 1.0%
ஆட்சித்துறை, அலுவ லர் நிலை, தொழில்
நுணுக்க நிலை 67.7% 28.5% 2.5% | 1.25%
--
15.3% 2.2% 0.12%
ܒܝܡܐ =ܒܝ
நடுத்தரப் பணிகள் 81.2%
பள்ளி ஆசிரியர் | 81.5% 11.60% 6.6% 0.7%
சிறுமட்ட ஊழியர் 86.4% 10.60% 1.90% 0.77%
தொழிலாளர் 85%. 5 11.6% 2.0% 0.53%
| 82.83% 12.93% 3.53% 0.93%
1956ம் ஆண்டிற்குப் பின் ஆளும் கட்சி ஆதரவாளருக்கு வேலை வாய்ப்புக் கொடுப்பதற்கு வேண்டியே. இப்பகுதி விருத்தி செய்யப் பட்டது. இது சிங்களவருக்கு என்றே தொடரப்பட்டது. நிபுணத்துவ பகுதிகளைத் தவிர்த்து ஏனைய துறைகளில் சிறுபான்மையோருக்கு சனத் தொகைக்கு ஏற்ப வேலை வாய்ப்புக்கள் கிட்டவில்லை. அரச கரும மொழிக் கொள்கை காரணத்தால் சிறுபான்மையோர் விலக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். இங்கு சிங்கள மொழி மூலம் கல்வி கற்ற வர்களே சேர்க்கப்பட்டார்கள். நிபுணர்களாக இருந்த தமிழர்கள் தன்னும் கீழ் மட்டதிலுள்ள சிங்கள ஊழியர்களால் 1977ம்,

*Q唱司9085T *ná引
(GŁ”)(£ L’E)(Lț" | |)(LGotog)『シE』1g | 1 ||" |9 19"9#ff0" LZ899° 16' L- - - qī£) usuɑsɛfiugos, (89')(ZZ"C)(9ɛ'ɛ)(00°88)E」コセコ」gg Qg gguekm 6țys;G09"Eに89『B#88° 10′ s.Q増ョg Eg『世Egg」* km』ns Q場』n g搬コPQBFng (G9-)(Leo)(5ɛ'8)(90' L8)T'aeos@soristas p5) Ł8Of학력| ' || || ||Z09" L. 는 (8'환(£粗*鱷*錢モE」「ョ55コgg ! |--=- -------_ (£9')@德(26° 6)(8zo 98)Į sosiostao gorffði, Z0寸050"ZGŁ !"L95%;"Żg ***避*! Lol Trīsfissou ofī)Fயாடிபிஏ (59')(9寸,z)(gg: L없r)(go GŁ)qugè用唱己國1因而Uugg 9.s.99Ż守0g"업체GG 1"8"정gju風g, 城rn니m교昌는n「진 % Iாதம946:%) நகரgsா9ரி(%) புரிgr|(江) Insug목(星臣해ョ』「シ H——_--_ |-
=-= _.
LLCLYY0KS KTTSLCLL LYSLLL0 YL0YL0 LLLYLL LS0 LLLLLSKY

Page 93
156 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
1981ம், 1983ம் ஆண்டு கலவரங்களில் வன்மையாகத் தாக்கப்பட் டார்கள். இன்று நிபுணர்களுள் கணிசமானோர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று விட்டார்கள். 1985ம் ஆண் டுக்குப் பின் புள்ளி விபரங்கள் எடுக்கப்படுமேயானால் 1980ம் ஆண்டில் இருந்தவர்களை விட அரைப் பங்கினர் மட்டுமே தொடர்ந் தும் நாட்டில் இருக்கிறார்கள் எனலாம்.
உயர் நிர்வாக நிபுணத்துவ, பொறியியல் துறைகளில் இருப் போரே, அமைச்சுகள் தயாரித்த திட்டங்களை அமுல் செய்வதில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பவராவர். 1981ம் ஆண்டிலேயே தமிழர் தொகை இந்த மட்டத்தில் வெறும் 8% ஆகவேயிருந்தது. இதனால் இலங்கையின் நிருவாகத் துறையின் பிரதான பகுதியி னின்றும் சிறுபான்மை இனத்தவர்கள் விலக்கப்பட்டவராகவே இருந் தார்கள். தமிழ் பகுதிகளில் சில முக்கிய பொறுப்புக்களைக் கூட மொழி தெரியாத சிங்கள அதிகாரிகளே ஏற்று நடத்தினர். இவர் களே சிங்கள சூடியேற்றங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
அட்டவணை 8:4) உயர் நிருவாக நிபுனத்துவ, பொறி யியல் துறைகளில் வெவ்வேறு இனத்தவரது பங்கு'
சிங்களவர் தமிழர் எனையோர் விபரம்
(%) (%) (%)
இலங்கை நிருவாகச் சேவை (ဒ္ဒါပီစီ) -
அமைச்சுகளின் செயலா 2.
slri J; sit (95.12) (4.88)
திணைக்கள தலைமையதி 224 B காரிகள் (இயக்குனர் கமிஷ (79.15) (16.25) (4.59)
னர்கள் மட்டும்)
25 4. 1. மேலதிக செயலாளர்கள் (83.33) (13.33) (3.33)
. . . . ஏனைய செயலாளர்கள் (89.17) (7.50) (3.33)
... 86 5 ". கூட்டுத்தாபன தலைவர்கள் (88.66) (6.19) (5.15)
471 67 23
மொத்தம்
(89.24) (8.02) (2.73)

சிங்கள மயமாக்கல் 15
6.8 பொது நலத் துறை
1970ம் ஆண்டிற்குப் பின் கைத்தொழிற் துறைக்கே முதலிடம் கொடுக்கப்பட்டிருந்தது. தொழில் நுட்பத் துறைகளில் சிங்கள மொழி மூலம் கல்விப் பயிற்சி பெற்றவருக்கே பெரும்பான்மையான வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டன. புதிய தேவைகள் ஏற்பட்டதும், இவ்வித தொழில் வாய்ப்புக்களும் அதிகரிக்கப்பட்டன, இவை
யாவும் சிங்களவருக்கே உரித்தாகி விட்டன.
அட்டவணை 85, பொதுநலத் துறை 1982
விபரம் மொத்தம் சிங்களவர் தமிழர்
தபால், தந்தி தலைமை 蛙6 44 அதிகாரிகள்
அரசாங்க லிகிதர் சேவை 8,320 3,127 1.99
போக்குவரத்து
1. புகையிரத சேவை I 2()
2. லிகிதர் சேவை E8 82 | id 181 195 "חנBual־חE) .8
*( 4. சேவையாளர் 40 473 T
மருந்து தயாரிப்பாளர் } 구 T
6.9 தேசிய பாதுகாப்பு படை
காவல் துறையிலும், பாதுகாப்புப் படைகளிலும் 1970ம் ஆண் டுக்குப் பின் தமிழர்கள் தெரிவு செய்யப்படவேயில்லை. தொழில் துறையில் தமிழர்களுக்கெதிராக தற்போதைய அரசாங்கத்தால் கடை பிடிக்கப்படும் இன பாகுபாட்டை தேசிய பாதுகாப்பு படையில் தெளிவாக காணமுடிகிறது. அட்டவணை 6:6 தேசிய பாதுகாப்புப் படை 1982
திணைக்களம் சிங்களவர் தமிழர் தமிழர் ? காவல் துறை 16,050 O 5. 6 காலாற் படை 9,780 2 EO 3.3
கடற் படை 2,024 14 6.

Page 94
158 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
1983ம் ஆண்டுக்குப் பின் இது மேலும் குறைக்கப்பட்டு 1985ம் ஆண்டளவில் 520 பொலிசாரும், இராணுவத்தினர் .5 விகித மாகவே இருக்கின்றனர். இதனால் நாட்டின் பாதுகாப்பு முழுமை பாக சிங்களவரிடமே ஒப்படைக்கப்பட்டு இருப்பது கண்கூடு. அர சாங்கத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதமின்றி சிங்கள காடையர் களுக்கு பயந்து வாழும் நிலை தமிழர்களுக்கு உருவாயிற்று. ஏற் கனவே பாதுகாப்புப் படையிலிருந்த தமிழர்களுள் பலர், 1983ம் ஆண்டு முதல் தொடர்ந்து வரும் வன்செயல்களால் பாதிப்புற்று அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
மொழி முதலான காரணங்களால் அரச சேவையிலும் பொதுத் துறையிலும் பாகுபாடு நிலவுவதனால், தமிழர் சுய தொழில் முயற்சி களில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்கள். தமிழ் நாட்டு அகதிகள் முகாம் களில் உள்ளோருள் 98% சுய தொழில் புரிவோராவர் என்பதுவே இதற்குப் போதிய ஆதாரமாகும். மீன்பிடி, விவசாயம் முதலிய சுய தொழில் துறைகளிலும் அரசு தந்து உதவும் வசதிகளில் புறக் கணிப்பு நிலவுகிறது. வெளி நாட்டு மூலப்பொருட்கள் தேவை படும் பெரும் நிறுவனங்களுக்கு அனுமதிப் பத் தி ர மும் கிடைப்புப் பங்கும் (quota), தமிழருக்கு அனுமதிக்கப் படுவதில்லை. அதுமட்டுமல்ல. 1983 கலவரத்தில் பொருளாதார பலத்தை குறைக்க எண்ணி பிரித்தானியர் காலந்தொட்டு தாபிக்கப்பட்ட தமிழரது வியா பார நிலையங்களையும் தொழிற்சாலைகளையும் அழித்தொழிப்பதே நோக்கமாகவும் இருந்தது. 1958ம் ஆண்டு முதல் தொடர்ந்து வரும் வன்செயல்களாலும், சிறுபான்மையினர் தொடர்பாக அரசாங்கம் கடை பிடித்துவரும் பாரபட்சமான கொள்கைகளாலும், தமிழர் மத்தியி லிருந்து பெரும்பாலான அறிவு ஜீவிகள் இன்று தம் ஆற்றலை பஸ் வெளி நாடுகளின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்து வருகிறார்கள்

ஏழாம் அத்தியாயம்
கல்வியும் தமிழர் புறக்கணிப்பும்
சிங்களவரது நிம்மதியின்மையை உணர்த்துவதாகிய தென்னிந் திய படையெடுப்போருக்கும் சிங்கள மன்னருக்கும் இடையே பரம் பரையாக நடந்த போர்களே மாணவரது வரலாற்றுப் பாடப் புத் தகங்களில் வலியுறுத்தப்படுகின்றன. சிங்கள் தேசாபிமானம் என்ப தும் தமிழ் மன்னனாகிய எல்லாளனுக்கு எதிராக துட்டகைமுனு எனும் சிங்கள அரசன் ஈட்டிய போர்க்கள் வெற்றியையே மைய மாகக் கொண்டது. இரு இனங்களும் பல ஆண்டுகள் சமாதானமாக வாழ்ந்து வந்த காலங்கள் மறைக்கப்படுகின்றன. இன்றும், எமது சிறுவர்களை நாட்டின் நற்பிரஜைகனாக்கும் நோக்கத்தை நிறை வேற்ற இன ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வமான கல்வித் திட்டம் பாடசாலைகளில் இல்லை. அதிகமான பாடசாலை களில், ஏற்கப்பட்ட போதனா மொழிகளுள் ஒன்றில் மட்டுமே, கல்வி பயில்விக்கப்படுகின்றது. இதனால் இரு இனங்களையும் சார்ந்த சிறுவர்கள் ஒன்று கலந்து உறவுகளை வளர்ப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் அரிதாகிவிட்டன.
இலங்கை சுதந்திரம் அடைந்ததும் இலங்கைத் தமிழர்களுள் ஏறக்குறைய அரைப் பகுதியினர் வாழும் யாழ்ப்பான குடாநாட்டில் மாணவருக்கு சிங்களம் இரண்டாம் மொழியாக பயில்விக்கப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும். சிங்களம் மட்டும் அரச கரும மொழிச் சட்டம் 1958ம் ஆண்டில் நிறைவேறியதும், அதனைக் கண்டித்து ஆட்சேபனை தெரிவிக்கும் முகமாக பாடசாலைகளில் சிங்களத்தை படிப்பிக்கும் ஒழுங்கு கைவிடப்பட்டது.
7. அரசியலும் கல்வியும்
1931ம் ஆண்டு பெற்ற சர்வசன வாக்குரிமையோடும் 1948ல் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தோடும் பெரும்பான்மை இனத்தவர்

Page 95
160 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
மேலதிக அரசியல் ஆதிக்கம் பெற்றார்கள். 1931ம் ஆண்டின் டொன மூர் அரசியல் யாப்பு அமுலாகியதும், கல்வி உட்பட பல துறைகள் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளையுள்ள சட்ட சபைக்கே ஒப் படைக்கப்பட்டது. சமூகப் பிரமுகர் மத்தியில் கிறிஸ்தவரது செல் வாக்கு குன்றாது 48% ஆசனங்களைப் பெற்றிருந்த போதிலும், 31% ஆசனங்கள் பெளத்தர் வசமாயிற்று. அடுத்தடுத்து வந்த தேர் தல்களில் பெளத்தரது விகிதம் கூடிக்கொண்டே 1952ல் 57% ஆக வும், 1960ல் 66% ஆகவும் மாறிவர கிறிஸ்தவரது பங்கு முறையே 24% ஆகவும் 16% ஆகவும் குறைந்துவிட்டது. அரசியல் ஆதிக்கத் தின் மாற்ற விளைவினை உடன் காணக்கூடியதாக இருந்தது.
கல்வித் துறையில், 1961ம் ஆண்டு, கிறிஸ்தவ இந்து பாட சாலைகள் அனைத்தையும், இப்பகுதியினர் அரசாங்க நிருவாகத்தின் கீழ் கொண்டுவந்தனர். முன்னிலையில் உள்ள பாடசாலைகள் பெரும்பாலும் கிறிஸ்தவரது கட்டுப்பாட்டில் இருந்ததனால், சிங்கள மொழியை தாய் மொழியாகக் கொண்டவருக்கு மேலதிக வாய்ப்புக் கள் கொடுக்கும் நோக்கத்துடனேயே, ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களத்தையும் தமிழையும் போதனா மொழியாக்கினர். இதன் இறு திக் கட்டமாக, 1970ம் 1980ம் ஆண்டுகளுக்கிடையில் இலங்கைத் தமிழரை ஒதுக்கி பெளத்த சிங்களவருக்கு பலன் தரும் வகையில், உயர் கல்வி பெறக்கூடிய தகைமைகளையும் மாற்றியமைத்த னர்.2
7.1.1. பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டமை
1920ம் ஆண்டு முதல் பெளத்த புனருத்தாரண இயக்கத்தினர் கிறிஸ்தவர்களையும் அந்நியராகவே கணித்து கிறிஸ்தவ பாட சாலைகளுக்கு எதிராக பெளத்த மக்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத் தினர். அரசின் உதவி பெறும் பாடசாலைகளைக் கொண்டே கிறிஸ்தவர்கள் தம் சமயத்தை பரப்பி வருகின்றனர் என பெளத் தர்கள் சந்தேகப்பட்டார்கள். சீரான பாடசாலைகளை இவ்வாறு நடத்தி கிறிஸ்தவ இளைஞர்களுக்கு விசேட வசதிகள் கொடுத்துதவு வதாக எண்ணி அதனையும் நிறுத்திவிடலாமெனக் கருதினர். அரசு நிருவாகப் பொறுப்பை எடுத்த பின்பும், அதே ஆசிரியர்களோடும் பெரும்பாலும் அதே அதிபர்களோடும் பாடசாலைகள் இயங்கியபடி யால் கிறிஸ்தவர்களுக்கும், பெளத்தர்களுக்கும் இடையே நிலவிய உணர்ச்சி வேகம் எதிர்ப்பார்த்ததை விட விரைவாகவே மங்கிவிட் டது. சில கிறிஸ்தவ பாடசாலைகள் உதவி பெறாத தனியார் நிறு வனங்களாக இயங்க ஆரம்பித்தன. பல்கலைக்கழக அனுமதி சமய அடிப்படையில் இல்லாது தரத்திற்கேற்ப நடைபெற்றபடியால்,

கல்வியும் தமிழர் புறக்கணிப்பும் () 161
கிறிஸ்தவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புக்கள் குறைக்கப்பட்டன என்பதற்கில்லை. நாடுவார் தொகையும் மட்டுக்கிருந்தபடியால் அவர்களுள் கணிசமானோர் அனுமதியும் பெற்றனர். 1967ம் ஆண் டில் 14,779 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அரச பாட சாலைகளை பொறுப்பெடுக்க வேண்டும் எனும் தமது போராட்டம் வெற்றி பெற்றபடியால் பெளத்தர்களும் ஓரளவிற்குத் திருப்தியடைந் தனா.
7.1.2 சமூக பொருளாதாரமும் மாணவரும்
கண்டி சிங்களவர் தொகை 1946ல் 1,77,998 (25.6%) இருந்து 1971ல் 3,700,973 (29.1%) ஆகவும் நாட்டின் மொத்த சனத்தொகை 8,657,339 இருந்து 12,711,143 ஆகவும் பெருகிய படியால் கல்வி வசதிகள் தேவையும் அதிகரித்தது. மக்கள் தொகை பெருக்கத்தோடு அவர்களது தேவைகளும் பெருகத் தொடங்கின. ஈரலிப்புப் பிரதேசத்தில் உள்ள காணிகள் பெளத்த நடுத்தர வர்க் கத்திற்கு உரிமை கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. பயிர் செய்கையை நம்பி வாழ்ந்த நாட்டுப்புற மக்களுக்கு நிலத்தில் உரிமை இல்லாது போகவே பிழைப்பு வசதியற்றவராகி வேறு இடங்களில் வேலை வாய்ப்புத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டதும், உயர் கல்வியை நாட வேண்டி நேர்ந்தது.
பெளத்தர்கள் வாழும் பகுதிகளில் ஆங்கிலத்தை நீக்கி சிங்களம் போதனா மொழியாக்கப்பட்டதும் வெவ்வேறு மட்டங்களிலும் மாண வர் தொகை அதிகரித்தது. ஒன்பதாம் பன்னிரண்டாம் வகுப்பு களுக்கிடையிலேயே தொகை 65,000ல் இருந்து 225,000 ஆக உயர்ந்தது. வேலை வாய்ப்புத் தேடுவது கடினமாகி பாடசாலை பயிற்சி மட்டும் போதாதெனும் நிலை ஏற்பட்டதும் பல்கலைகழகங் களுக்கு அனுமதி கோருவோர் தொகை பெருகிற்று. 1960ம் ஆண் டில் 5,277 ஆக இருந்த தொகை 1969/70ல் 30,445 ஆக உயர்ந் தது. கிடைக்கக்கூடிய ஆசனங்களோ 1960ம் ஆண்டு 1,812 ஆக இருந்து 1970ல் 3,451 ஆசனங்களாக மட்டுமே கூட்டப்பட்டது.
7. 1.3. சமூகமும் உயர்கல்வியும்
இலங்கையில் உயர்மட்டக் கல்வியின் முக்கியத்துவமும் தொழிற் பாட்டின் நோக்கமும் நம்மை பிரித்தானியரது காலத்திற்கு கொண்டு செல்லும், குறிப்பாக ஆங்கிலம் போதனா மொழியாக இருந்த காரணத்தால், அப்பயிற்சி புதிய தொழில் வாய்ப்புக்களைத் தேடிக் கொடுக்க, சமூகத்திலும் மாற்றங்கள் ஏற்படலாயிற்று. தகுதிவாய்ந்த ஒரு சிலரை தேர்தெடுத்து உயர் மட்ட நிருவாக தொழில்நுட்ப

Page 96
162 ) பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
பொறுப்புக்களையும் ஏற்க உதவியது. சமூகத்தின் மேல்மட்டங்களை அடைவதற்காக ஒரு சிலர் தம் பிள்ளைகளை இங்கிலாந்திலேயே உயர் கல்வி பெறுவதற்காக அனுப்பிவைத்தார்கள். வேலையில்லா திண்டாட்டம் வலுவடைந்து வரும் ஏனைய மூன்றாம் உலக நாடு களைப்போன்று இலங்கையிலும் அதே நிலமை ஏற்பட்டு நல்ல ஊதி யம் தரத்தக்க உத்தியோகங்களுக்கு பட்டப் படிப்பு அவசியமாயிற்று. குடும்பத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் உயர் கல் விப் பயிற்சி, கடவுச் சீட்டின் அந்தஸ்து பெற்றதெனலாம். நீர் பாசன வசதிகள் எதுவுமில்லாத வரண்ட பிரதேசத்தில் வாழும் தமிழ ரைப் பொறுத்தவரை, பிள்ளைகளுக்கு கல்விப் பயிற்சி பெற்றுக் கொடுப்பதே குடும்பத்தில் செய்யக்கூடிய பெருங் தியாகச் செயலாக தோன்றிற்று. தகுதியுள்ளவரெனக் கண்டால் அவரது கல்விக்காக பெற்றோர் எவ்வித தியாகமும் செய்யத் தயாராக இருந்தனர். சமூ கப்படியில் முன்னேறிச் செல்ல விரும்பிய வறிய தமிழ் தொழிலாள சமூகத்தவருக்கு, கல்விப் பயிற்சியே சந்தர்ப்பம் தருவதாக இருந்தது. ஆனால் 1970ம் ஆண்டிற்குப் பின், கல்வித் துறையிலும் அரசியல் புகுந்ததனால், இவ்வித முன்னேற்ற வாய்ப்புக்களும் தடைபட்டன. பல்கலைக்கழகங்களுக்குச் செல்லவிரும்பும் 0.1% மாணவரது தொகை யில் தரப்படுத்துதலும், 20.6% சிறுவருக்கு கல்வி அறவே இல்லா மலும் இருக்கின்றது. கல்வியை பொறுத்தமட்டில் தோட்டத்துறை தமிழ் மக்களே மிகவும் வசதி குறைந்தவராவர். அவர்களுள் 45.88% படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். மிகச் சிலரே பல் கலைகழகப் பட்டப்படிப்பு பெற்றவர்களாக இருக்கின்றனர்.
7.2. பல்கலைக்கழக வரலாறு
இலங்கைப் பல்கலைக்கழகம் 1942ம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஆனால் 1870ம் ஆண்டு காலந்தொட்டே மருத்துவம், சட்டம், பொறியியல் பயிற்சி பெற உயர் கல்வி மட்ட வசதிகள் இருந்து வந் தன. லண்டன் பல்கலைக்கழகத்தின் "மெற்றிகுலேசன்” இன்டர் மீடியேட்" பரீட்சைகளுக்கு மாணவர்கள் தேற்றக்கூடிய வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டன. மேல் மட்ட பயிற்சியையும் மாணவர்கள் பெற விரும்பியதனால் 1905ல் கலை, சட்டம், விஞ்ஞானமாகிய துறை களில் வெளிவாரி பட்டம் பெறவும், 1911ல் மருத்துவம் சத்திர சிகிச்சைத் துறையில் வெளிவாரிப் பட்டம் பெறவும், காலனி அதி காரிகள் வசதிகளை ஒழுங்கு செய்ய அனுமதித்தனர். 1921ம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்ட பல் கலைக்கழக உயர் கல்வி (University College) ஆரம்பிக்கப்பட்டது. இது கல்வி இலாகாவின் பொறுப்பாகவேயிருந்தது. 1942ம் ஆண்டின் 20ம் இல. இலங்கை பல்கலைகழக சட்டத்தின் கீழ் இலங்கையின்

கல்வியும் தமிழர் புறக்கணிப்பும் () 163
முதல் பல்கலைகழகம் ஸ்தாபிக்கப்பட்டு, சுயாட்சியுடையதும், ஒற்றை நிறுவனமுடையதும் இருப்பு வசதியுள்ளதுமாகவே திட்டமிடப்பட் டது.8 1942-1952க்கும் இடையில் கொழும்பிலும் பின்பு பேராதனை யிலுமாக இயங்கிற்று.
1966ம் ஆண்டு உயர் கல்விச் சட்டம்4 நிருவாகத்தில் அடிப் படை மாற்றங்களை ஏற்படுத்தி தேசிய உயர் கல்விச் சபையிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன. 1981ம் ஆண்டு 8 பல்கலைக் கழகங்களுடன் ஒரு காலேஜ7ம் உருவாகியபோதும் நாட்டின் சனத் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப மாணவர் அனுமதி கூடவில்லை. யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் இரு tl (TLFFT6)6)S60) 6T. மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தாமல் பல்கலைக்கழகமாக உயர்த் தினர். மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இதுவரையிலும் செவ்வனே இயங்கத் தொடங்கவில்லை. 1977ம் ஆண்டுள்ள 8 பல்கலைக்கழகங் களிலும் மொத்தத்தில் உள்ள மாணவர் தொகை 12,768 ஆகும். அதாவது, நாட்டின் சனத் தொகையின் 0.1% மட்டுமே. 1981ல் 16,346 ஆக உயர்ந்தும் முழு சனத் தொகையின் 0.11% ஆகவே யிருந்தது. இன்று ஜனாதிபதியே உயர் கல்வி அமைச்சராகவும் இருக்கிறார். 'பல்கலைகழகங்களுக்குப் பொறுப்பாகவுள்ள மானியக் குழு’ முன்னைய தேசிய உயர்கல்விக் கமிட்டியினின்றும் பெயர் அள விலேயே வேறுபடுகின்றது.
7.2.1 பல்கலைக்கழக அனுமதி
1960ல் இருந்து மாணவர் தொகை அதிகரித்தபொழுது அன்று
அநேகமானோர் கலை பிரிவையே தெரிந்தெடுத்தனர். ஆனால்
இவர்களது தேவை விஞ்ஞான பிரிவாகவே இருந்தது.
1966ம் ஆண்டோடு கலைப்பட்டம் பெற்றவர்கள் தொகை பெருகி தொழில் வாய்ப்பில்லாதோரது தொகையும் வருடத்திற்கு வருடம் பெருகிக் கொண்டு போகவே விஞ்ஞான பீடங்களுக்கு அனுமதி கோருவதில் போட்டி வளரத் தொடங்கிற்று. ஆனால் 12ம் வகுப்பு வரை விஞ்ஞான பாடங்களில் பயிற்சி தரவல்ல பாடசாலைகள் மிகக்குறைவாகவேயிருந்தது. 1972ம் ஆண்டில் தானும் இவ்வசதி களுள்ள 209 பாடசாலைகளில், 98 பாடசாலைகள் (47%) தமிழரும் கீழ்நாட்டுச் சிங்களவரும் வாழும் வட மாகாணத்திலும், மேற்குமாகா ணத்திலுமேயே இருந்தன. 1969ம் ஆண்டில் விஞ்ஞான பீடங் களில் அனுமதி பெற்றவருள் 70% மாணவர் இவ்விரு மாகாணங் களையே சேர்ந்தவராக இருந்தனர். மதிப்புள்ள பொறியியல் மருத்துவ பீடங்களில் இலங்கைத் தமிழரும் கீழ்நாட்டுச் சிங்களவருமே
பெரும்பான்மையான ஆசனங்களைப்பெற்றனர்.

Page 97
164 ) பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
1970ம் ஆண்டுவரை 17 வயதுக்கு மேற்பட்டவரும் அனுமதிப் பரீட்சையில் தேர்வு பெற்றவருமே தகைமை கொண்டவராக இருந் தனர். விஞ்ஞான பீடங்களுக்கு பரிசோதனை முறையில் தேர்ச்சியும் பெறவேண்டியிருந்தது. 1953ம் ஆண்டிற்கு முன்னம் நேர் முகப் பரீட்சையிலும் தெரிவு செய்யப்பட வேண்டியிருந்தது. 1942ல் இருந்து 1946ம் ஆண்டு வரை கல்வி இலாக்காவே பரீட்சையை நடத்தி வந்தது, 1946ல் இதற்குப் பதிலாக பல்கலைக்கழகமே தனது அனுமதிப் பரீட்சையை நடத்தத் தொடங்கிற்று. 1964ம் ஆண்டு வரை பல்கலைகழகங்கள் அனுமதிப் பரீட்சையை தாமே நடத்தின. அதன்பின் கல்வி இலாக்கா நடத்திய கல்விப் பொதுத் தராதர பத் திர (உயர் மட்டம்) பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்களை, வெவ் வேறு துறைகளிலுள்ள ஆசனங்களுக்கு ஏற்ப, கூடுதலான புள்ளி கள் பெற்றவர்களையே அனுமதித்தினர். 1966ம் ஆண்டிலிருந்து மத்திய அனுமதி நிலையம் உருவானதும் பல்கலைக்கழகங்கள் தம் மாணவர்களைத் தெரிவு செய்யும் உரிமையை இழந்தன. இன்று பல்கலைக்கழக மானியக் குழுவே அனுமதி வழங்குவதை நிருவகித் தும் நெறிப்படுத்தியும் வருகின்றது.
1970ம் ஆண்டுவரை மட்டுமே, பல்கலைக்கழக அனுமதி தரத்தை அடிப்படையாக கொண்டு பகிரங்க போட்டியில் பெறத் தக்கதாக
பொறியியல் மருத்துவ பீடங்களில் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிக் கொள்கைகள் கையாளப்பட்டன. தரத்தையே அடிப்படை யாகக் கொண்டால் சிங்கள மாணவருக்குப் போதிய ஆசனங்கள் பெற இயலாது என சிங்கள பெளத்த இன வெறியர்கள் கருதி ார்கள். அந்த ஆண்டின் பொறியியல் அனுமதி விபரங்கள் வெளி யிடுவதற்கு முன்பாகவே 160 மாணவர்களுள் 100 தமிழர்கள் அடங்குவரென ஒரு கட்டுக்கதை வெளிவந்தது. இதனையே ஆதார மாக வைத்துக் கொண்டு அகில இலங்கை பெளத்த காங்கிரஸின் முகாமையின் கீழ் சிங்கள பெளத்த பிரசாரங்கள் தகுதி எனும் கொள் கையை கைவிட வேண்டுமெனக் கோரினர். இதன் விளைவாக சிங் கள மாணவருக்கு போதனா மொழி பாட அடைப்படையில் தமிழ் மாணவரைவிட அனுமதித் தகமைப் புள்ளிகள், கல்வி அமைச்சின் ஆணையினால், குறைக்கப்பட்டது. வேறுபடும் தகைமைப் புள்ளிகள் பின்வருமாறு:

கல்வியும் தமிழர் புறக்கணிப்பும் () 165
அட்டவணை 7:1 1971ல் குறைந்தபட்ச புள்ளிகள்
பீடங்கள் போதனா மொழி அனுமதிக்குரிய குறைந்த
புள்ளிகள்
566) சிங்களம் 187 தமிழ் (முஸ்லிம் உட்பட) 70
பொறியியல் -
பேராதனை, சிங்களம் 227 தமிழ் 250
பொறியியல் -
கட்டுபெத்தை சிங்களம் 212 தமிழ் 232
மருத்துவம், பல் சிங்களம் 229
மருத்துவம் (பேரா
தெனியா கொழும்பு) தமிழ் 250
உயிரியல் விஞ்ஞானம் சிங்களம் 175
(அனைத்து பல்
கலைக்கழகங்கள்) தமிழ் 181
விவசாயம் (பேரா தெனியா), பெளதிக
விஞ்ஞானம் சிங்களம் 183
(அனைத்து பல்
கலைக் கழகங்கள்) தமிழ் 204
கட்டிடக்கலை
(கட்டுபெத்தை) சிங்களம் 180
தமிழ் 194
பல்கலைக்கழகங்களில் வன்செயல், மிரட்டல், சூழ்ச்சி உட்பட, சிங்கள பெளத்தர்கள் தீவிரமாக வற்புறுத்தியதனால் முதற் தடவை யாக பகிரங்க போட்டி' எனும் அரசாங்கத்தின் கொள்கையைக் கைவிடப்பட்டு பொதுப் பரீட்சையில் வெவ்வேறு இனத்தவரது சாத னைக்கேற்ப சலுகைகள் கொடுக்கப்பட்டன. சிறுபான்மை இனம் இதனை வன்மையாகக் கண்டித்ததன் விளைவாக சிங்கள பெளத்

Page 98
166 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
தர்கள் தரம் குறைந்தவர்கள் என்பதும் வெளிபடுத்தப்படுகின்றபடி யால், ஏற்கக்கூடியதும் நியாயப்படுத்தக்கூடியதுமான கணிப்பு முறையை ஆட்சியாளர் தேட முற்பட்டனர். அடுத்து வந்த ஆண்டு களில் பல்கலைக்கழக அனுமதிக்காக வெவ்வேறு முறைத் திட்டங் களை கல்வி அமைச்சு உருவாக்கி அமுல் நடத்தியதனால் தமிழ் மாணவர் பாதிப்படையவே சிங்கள மாணவர்கள் கூடுதலான சலுகை கள் பெறலாயினர்.
7.2.7. அறிமுகம் செய்த திட்டங்கள்
1973 - தரப்படுத்தல்
1974 - தரப்படுத்தலும் மாவட்ட விகிதாசாரமும் (சில திருத்தங் களோடு) 1975 - தரப்படுத்தலும் 100% மாவட்ட விகிதாசாரமும் .
1976 - தரப்படுத்தலும் 70% புள்ளி - 30% மாவட்ட விகிதாசாரமும்
1978 - பீடங்களில் உள்ள ஆசனங்களுக்கேற்ப - அகில இலங்கை ரீதியாக தகுதி அடிப்படையில்30% மாவட்ட அடிப்படையில் 55%, பின் தங்கிய மாவடங்களிள் தரம் 15%.
1969ம் ஆண்டு தொடக்கம் 1980ம் ஆண்டு வரையுள்ள புள்ளி விவரங்களை பகுப்பாய்வு செய்தால் மட்டுமே வெவ்வேறு முறைத் திட்டங்களில் உட்கிடைகள் தெளிவுபடும். பின் வரும் பட்டியல், தரத்தின் அடிப்படையில் கல்வி பெறக் கூடிய தன் சுதந்திரத்தை இழந்த வரலாற்றை அட்டவணை 7:2, 7:3ல் விளக்கப்பட்டுள்னது.
இப்புள்ளி அட்டவணை (7.3), "இலங்கையில் பல்கலைக்கழக கல் வியும் பட்டதாரித் தொழில்களும்” எனும் ஆய்வு நூலில் இருந்து பெறப்பட்டது. இப்புள்ளி அட்டவணையோ அல்லது அதனை அடக்கியுள்ள முழு அறிக்கையோ இன்றைய பல்கலைக்கழக அணு மதிப் பிரச்சனையை பொருட்படுத்துவதாக இல்லை. இவ்வறிக்கை பல்கலைக்கழக மானியக் குழுவினது 1978ம் ஆண்டிற்குரிய புதிய அனுமதி திட்ட பிரேரணை பற்றி கருத்துக் கூறாமல் இருப்பது விசித்திரமாகவே இருக்கின்றது. இதனின்றும் சர்வதேச ஆய்வு நிலையங்கள் தன்னும் இலங்கை விடயத்தில் அரசியலில் இருந்து விலகி நடுநிலமை வகிக்க முடியாது இருப்பதும் தெளிவாகின்றது.
மேற்குறித்த அட்டவணையிலுள்ள கலைப் பிரிவு, விஞ்ஞானப் பிரிவு ஆகியற்றின் கூட்டுத் தொகை ஆசிரியரால் கணிக் கப்பட்டது. இந்த அட்டவணையில் யாழ்ப்பான மாவட்டத்திலுள்ள

Ɛ * 0†7* 0寸:0| * |Z * O| * || * 06 " I,|6°% 9G8Ɛ į.GZ ||£8 |Z{ļumg)1290919 L'8ɛ'ɛO“ ZO‘Zț7° Z./* į.寸:8Z“ ZO o fy | 9“ Į.% †789ț79f7†7Z寸98 |98ŁZ£6Ɛ į.qış9ayofi) ZO'8 || || 89” IZ | 0° 0 || || 6°07į, o 9 į Go 6Z8 * #7 | 9 ’889 ° / | € o GE | Go / | 8′ 68% svog i 607 | 9ZZ | 76Z981 | Zvg | col | 69ɛ | 281 | 188 | 94 i9 18Įfigio Z6° 18 IZț7°81 | 98 | vo 9/ | G o 16 | 7° 19 || 9° Z.6 || Zo 89668|9:09|寸88|449% Bzyz | 9Liv || || wɛ6 || || 890 | | ɛGOZ | ɛɛ61 | €LOZ | 089 | 9ZZZ | 619 || ZZGZ || 49VĮrto 119orwy
•æs | Ģgs | asaso | Ģgs | cesso | @go | teas* | @go••• |@g9q1199 |-|*劑韃 # ligi (9) 18/086||ț7/6 \,ƐƐ 6 ||ZLI LL61LL10L6||0/1696 ||
086 | -696||
ĢUTI@s@ ofio ?doɑ9oqon z'/ 1009091977ko

Page 99
அட்டவணை 7.3 பல்கலைக்கழக அனுமதி 1980-1981
மாவட்டங்கள்
sforgólůųů ross ($5&ú, 1, 2, 8, 12, 13, 14
|
கலைப் பீடம்
122, 116, 173, 55, 1 O1, 14273, 55, 84, 33, 21, 1 12
sŵėjęs ir sur los Lú)
சிங்கள ஈரலிப்புப் பிரதேசம் 5, 6, 10, 21 , 22, 23
140, 136, 232, 157, 321, 225100, 72, 94, 74, 445, 102
4. sups, L Lou G5æıb 2, 4, 7, 9, 1 1
| | |
116, 49, 124, 61 , 1 13
44, 17, 66, 02, 92,
த. வறண்ட பிரதேசம்
-(குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை லிருந்து கலை பீடத்திற்கு 173 மாணவர்களும், விஞ்ஞான பீடத்திற்கு 84 மாணவர்களும் தெரிந்தெடுக்கப் பட்டனர். இதே முறையில் ஏனையமாவட்டங்களுக்கான புள்ளி விபரங்களை அறிந்துகொள்க.)
15, 16, 17, 18, 19, 20, 24272, 23, 14, 47, 76, 95, 17245, 17, 06, 34, 46, 53, 08 1. கோகாலை7. அம்பாந்தோட்டை13. நுவரொலியா19. udus Lää56 fůLĮ 2. இரத்தினபுரி8. பதுளை14. கண்டி20. அம்பாறை 3. அதுராதபுரம்9. மொனராகலை15. u Tŷ ĽLJIrsborů21. களுத்துறை 4. பொலன்னறுவை10. குருநாக்கல்16. udsårsatirff22. கொழும்பு 5. காலி11. புத்தளம்17. வவுனியா23. கம்பஹா 6. மாத்தறை12. மாத்தளை18. திருகோணமலை24. முல்லைத் தீவு
வாசிக்கும் முறை ; இல. 8, - பதுளையி

கல்வியும் தமிழர் புறக்கணிப்பும் () 169
கலைப்பிரிவு மாணவர் தொகையே அதிகமானது (225) என்பதை விட தமிழர் பிரச்சினையை எவ்வகையிலும் சுட்டிக்காட்டுவதாக இல்லை. 1969/70ல் கலைப் பிரிவுகளின் மொத்த தமிழ் மாணவர் தொகை 176 (7.5%) தமிழ் மாவட்டங்களாகிய இல. 15, 16, 17, 18, 19, 20ம் 24யும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் கலைப் பிரிவு தமிழ் மாணவர் தொகை 534 (18.0%). இதனால் கலைப்பிரிவில் தமிழ் மாணவர் தொகை அதிகரித்தது. தமிழ் மாவட்டங்களிலுள்ள மொத்த விஞ்ஞான பீட மாணவர் தொகை 409 (21.58%). 1969/70ல் மொத்தம் 315 ஆக (39.8%) இருந்த தொகை சற்றுப் பெருகிய போதும் விகிதாசாரத்தை அவதானிக்கும் போது 1978ன் புதிய அனுமதி முறை சிங்கள மாணவருக்கே சாதகமாக இருந்தது.
சிங்கள மாவட்டங்களில் வாழும் தமிழர் பெரும்பாலும் இந்திய வம்சாவழித் தமிழர்களே. சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையானபடியாலும் அரசியல் பிரச்சினையினாலும் ஆரம்பக் கல்வி மட்டத்தில் சமநிலைக்கு வரமுடியாது இருக்கின்றனர். ஆனால், மாவட்ட ரீதியான சலுகையும் கிடைப்புப் பங்கும் கொடுக்கப்படும் எனும் போது, அவரது தொகையையும் உரிமைகளுக்காகச் சேர்த்துக் கணிக் கப்பட்டாலும், அவர்களுக்கு ஒரு வித பயனும் எட்டுவதில்லை. அவர்கள் வாழும் பிரதேசத்திலுள்ள பெரும்பான்மையான சிங்கள வருக்கே பாராளுமன்ற ஆசனங்களுக்கும் பல்கலைகழக அணு மதிக்கும் கூடுதலான சலுகைகள் கிடைக்கின்றன.
கடந்த இருபது ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் சிங்கள இனவாதிகள் நடத்திய ஆர்பாட்டத்தின் விளைவே. இதில் அவர் களே நன்மையடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் இந்திய வம்சா வழித் தமிழரும் இலங்கைத் தமிழருமே.
இவையாவும் பெளத்த மதத்தின் பெயரிலேயே நடை பெறுகின் றன என்பதும் விந்தையாகவே இருக்கின்றது. இங்கு மேல் நாட் டவருக்கென **பெளத்த பிரசுர சங்கம்” இயற்றி பிரசுரித்த 'மக் கள் வாழ்வில் பெளத்தம்” எனும் நூலில் இருந்து சில பகுதிகளை சந்தர்ப்பம் கூற விரும்புகிறோம்."
**.யாரோ கூறியதென்றோ வழமையென்றோ கூறி வாழ்க்கை நடத்த வேண்டியதில்லை. உங்களது குருநாதர் கூறி யது எனும் காரணத்தால் நம்பவேண்டிய அவசியமில்லை,”. சுயா தீனமாக சிந்திக்கக்கூடிய இடத்தில் மட்டுமே ஆன்மிக வளர்ச்சிக்கு இடமுண்டு. மத்திய கால ஈவிரக்கமற்ற விசாரணை முறைகள், கொடூரமான கொலைகள், வன்செயல்கள், வெ று க் கத் தக்கவைகள், இம்சை படுத்தல், நிரபராதிகளை கழுகில் ஏத்துதலும்

Page 100
170 0 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
அவர்களது மிருகத்தனமானதும் கோரமான சிலுவை யுத்தங் களையே நினைவுப்படுத்துகின்றன. இவையாவும் சமய ஆப்த வாக்கியமும் அதனோடு இணைந்த பொறுமையற்ற போக்கிலும் விடாப்பிடியான நம்பிக்கை கொள்வதன் விளைவே. தடையற்ற அமைதியான வகையில் சமூக அபிவிருத்தி என்பதும், ஒழுக்கம், அறிவு, கலை, விஞ்ஞானம், தத்துவமாகியவை பொறுமையும் சிந்தனா சுதந்திரமுள்ள நாட்டில் மட்டுமே பெறத்தக்கவை. சமய அல்லது அரசியல் ரீதியான அடிமை நிலையிலும் பொறுமைக்கு இடமில்லாத சூழலிலும் மக்களது சுதந்திரம் நசுக்கப்படும் நாடுகளி லும் அவற்றைப் பெற முடியாது. உண்மையான பெளத்த நாடு கள் எல்லாம் அன்பு நிறைந்த மனப்பான்மையுள்ளவையே. சமய நெறிகளை குருட்டுத்தனமாக ஏற்பதன் விளைவு அல்ல. மனிதன் தொட்டு மண்புழுவரை ஒரே விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட் பட்டவை என்பதை உணர்ந்ததன் விளைவு இது. ‘நான் எவ்விதமோ அவையும் அவ்விதமே. அவை எவ்விதமோ நானும் அவ்விதமே.” ஆகவே சகல ஜீவன்களுடனும் கொல்லாது, புண்படுத்தாது ஒருவன் தன்னை ஒருமுகப் படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய இலங்கையில், இவ்வித உண்மையான பெளத்த தின் நிலை தளர்ந்துவருவதாக இருக்கின்றது. இருபதாம் ஆண்டு வரை அநகாரிக தர்மபாலா போதித்ததே பெளத்தமாக ஏற்கப்படு கின்றது. ‘சிங்கள பெளத்தரை முயற்சியுள்ள முஸ்லிம்களை பார்த்து நடக்கும்படி அநகாரிகா வேண்டினார். இந்நாட்டு மக்களது நலன் களுக்கு பங்கம் விளைவிக்கும் அளவுக்கு பெருந்தொகையினர் தொழில் செய்கிறார்கள்’ எனும் காரணத்தால் இலங்கைத் தமிழரையும், இந்திய வம்சாவழித் தமிழரையும், முஸ்லிம்களையும் வன்மையாக கண்டித்து வந்தார்.
முடிவுரை
தரப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி 1970ம் ஆண்டுக்கு முன் தரத்தின் அடிப்படையிலேயே பல்கலைகழகங்களுக்கு அனுமதி வழங் கப்பட்டபடியால் இனப்பாகுபாடு என்பதற்கு இடமில்லாது இருந் தது. விகிதாசார கணிப்பின்படி அணுகினால், மருத்துவம், பொறி யியல் முதலிய சில பீடங்களுள், மொத்த சனத்தொகையில் தமிழ ருக்குள்ள வீதத் தொகையை விட அதிக ஆசனங்கள் கிடைத்தது என்பது உண்மைதான். ஆனால் இவை பாரபட்சமற்ற வகையில் தரத்தின் அடிப்படையில் பெறப்பட்டவை. 1970ம் ஆண்டுக்குப் பின் இம்முறையானது நிறுத்தப்பட்டு இன அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதி தரப்படுத்தப்பட்டது. தமிழ் இளைஞர்கள் மத்தியில் விரக்தி உருவாகி அரசுக்கு எதிராக வன்செயல்களிலும் பிரிவினை இயக்கங்களி லும் ஈடுபட வைத்த பிரதான காரணங்களுள் இதுவும் ஒன்றாகும்.

கல்வியும் தமிழர் புறக்கணிப்பும் () 171
பரீட்சைத் தாள்களைத் திருத்தும் தமிழர்கள் தமது இனத்த வருக்குச் சாதகமாக நடந்துக்கொண்டார்கள் எனும் குற்றச் சாட் டும் பல்கலைகழகத்தால் நியமிக்கப்பட்ட கமிஷன் ஒன்றினால் நிரா கரிக்கப்பட்டது. 1979ம் ஆண்டு தொழில் விஞ்ஞான விடய அமைச்சர் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிங்கள பேராசிரியர்கள் உட்பட எல்லோரும் ஒன்று சேர்ந்து பற்றற்றவகையில் உண்மையை நிலை நாட்ட "பொதுக் குழு' ஒன்று நியமிக்குமாறு வேண்டினர். ஆட்சியாளர் இவ்வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. இவ்வித விசாரணைக்கு இடமளிக்காதபோது புள்ளிகள் வழங்குவதில் இரு மொழிப் பிரிவிலும் சீர்கேடுகள் ஏதேனும் நடந்தனவா என்பதை அறிவது முடியாது போயிற்று. மறுபுறத்தில் குற்றச்சாட்டுகளை நிலைநாட்ட ஒழுங்குகள் செய்து கொடுக்காத நிலையில், பரீட்சைத் தாள்களைத் திருத்தும் தமிழர் மீது ஏமாற்றுக்காரர் எனும் அவதூறு சுமத்தப்பட்டதாகி இரு இனங்களுக்குமிடையே இருந்த உறவுகளுக் கும் பங்கம் விளைவிப்பதாய் முடிந்தது.
ஆகவேதான், வெவ்வேறு அரசாங்கங்கள் இவ்வித அநியாய முறைகளை நடைமுறைப்படுத்தி நிறுவனரீதியாக நிலைநாட்டிய வற்றை பின் வாங்கிக்கொள்ள வேண்டும். சிங்கள இனவெறியர்கள் தவறான புள்ளி விபரங்களைக் கொண்டு பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுவது நிறுத்தப்படவேண்டும். இதுவும் தமிழரது முறைப்பாடு களில் ஒன்றாகும்.

Page 101
இரண்டாம் பாகம்
இனப்பிரச்சினையும் இந்தியாவும் (1983 - 1987)

முன்னுரை
இலங்கையில் பெளத்த மதம் இரண்டாயிரத்து ஐநூறு வருடங் களுக்கு முன் கெளதம புத்தர் இந்தியாவில் போதித்த வினையும் வினைப்பயனும் (law of karma) என்ற வாழ்க்கை முறைக்கு முரண்பட்டதாக அமைகின்றது. து ன் பத் தி ற்கு பற்றே காரணம் என்றும் பிராமணரது ஆதிக்கத்தில் இருந்து தனது பிக்கு சீடர்கள் விடுபடுவதற்குரிய மார்கத்தையும் புத்தர் காட்டி யிருந்தார். இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் இலங்கையிலுள்ள பெளத்த குருமார்கள் தங்களின் உயர் நிலையை பயன்படுத்தி ஏனைய சமயங்களைச் சார்ந்தவருக்கு எதிராக பெளத்த மக்களி டையே துவேசத்தை வளர்த்து தம்மை பெளத்த சிங்கள இனத்தின் பாதுகாவலர் என்ற மனப்பான்மையை தோற்றுவித்தார்கள்.
இதனால் ஏனைய இனத்தவர்களை புறக்கணித்து இலங்கை தமக்கே உரியது என்ற பேராசை காரணத்தால் இன்று இலங்கையை துன்பம் சூழ்ந்துள்ளது. சில சிங்கள அரசியல் வாதிகள் மத்தியிலும் அவர் களது பெளத்த ஆதரவாளர்களது மத்தியிலும் இ க் கொள் ைக வேரூன்றிவிட்டது. 1977ம் ஆண்டு தொடக்கம் அண்மைக் காலம் வரை ஐ. தே. க. ஆட்சியில் அமைச்சராக இருந்த சிறீல் மத்தியூ என்பவர் சிங்களவர் மத்தியில் இந்த விஷமக் கருத்துக்களைப் பரப்பி வந்துள்ளார். தமிழருக்கு ஏதிராகத் துவேஷத்தை தூண்டுவிக்கும் வகையில் கூட்டங்கள் நடத்தியும் பிரசுரங்கள் வெளியிட்டும் வந்தி ருக்கிறார். இத்தகைய பிரசுரங்களில் அடிக்கடி கையாளப்படும் கருத்துக்கள் முன்னைய காலகட்டத்தில் தமிழரல்லாத ஏனைய சிறு பான்மையருடன் சிலபெளத்த சிங்களவர் முரண்பட்டுக் கொண்ட போது கையாளப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. (பின்னி ணைப்பு 'அ' பார்க்கவும்).
சுதந்திரம் பெற்றிருந்த காலங்களில் சிங்களவரோடு சேர்ந்து உழைத்த தமிழர்கள் தேசிய உணர்வு சிங்கள இன உணர்வாக

Page 102
174 ) பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
மாறுவதை அவதானிக்கத் தவறிவிட்டார்கள். பூரீமான் பொன்னம் பலம் அருணாசலத்தின் காலந் தொட்டே சிங்களவர்களை நம்பியி ருந்த தமிழ் தலைவர்கள் ஏமாற்றத்திற்கும் அவர்களது துரோகத்தனத் திற்கும் ஆளாகியுள்ளார்கள். நியாயமான கோரிக்கைகளுக்கு, காலப் போக்கில் வன் செயல்களே பதில் நடவடிக்கைகளாக மாறின.
1983ம் ஆண்டோடு இனத்திற்கு எதிரான வன்செயல்கள் தீவிர மடைந்தன. பெரும்பாலான சிங்கள மக்களிடமிருந்தோ, சட்ட ஒழுங்குகளை நிலைநாட்டும் நிறுவனங்களிடம் இருந்தோ பாதுகாப் புப் பெறத்தக்கதாக இருக்கவில்லை. முன்னைய வன் செயல்கள் போலல்லாது இம்முறை அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் களும் தீவிரமாக முன் நின்று தலைமை தாங்கினார்கள்.
அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற வன்செயல்கள் திட்ட மிடப்பட்டவையாகவும் ஒன்றோடொன்று இசைவுள்ளவையாகவும் இருந்தன. 1964ம் ஆண்டு கயானா நாட்டில் மத்திய புலனாய்வு துறை (CIA) ஏற்படுத்திய இனக்கலவரத்தை ஒத்ததாகவேயிருந்தன. இதில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் அமைச்சர்களாகிய ஆர். பிரேம தாசா, எம். எச். முஹம்மது, சிறில் மத்தியூ, காமினி திஸாநாயக்கா என்பவர்களுக்கு நெருங்கிய ஆளும்; கட்சி உறுப்பினர்களாகவே இருந்தனர். திட்டமிட்ட வகையில் தமிழர்களது பொருளாதார மூல அமைப்புக்கள் தாக்கப்பட்டன. அவை தாக்கப்பட்டதோடு தமிழ் மக்களும். மிருகத்தணிமான' -முறையில் கொலையும் செய்யப்பட் L-Irissir " -
சிங்களவர் ஆதிக்கமுள்ள அரசாங்கத்திற்கு. எதிராக தமிழர் நடத்திய அகிம்சா போராட்டங்கள் எல்லாம் ஒருவகை நன்மையும் விளைவித்ததாக இல்லை. இதன் காரணத்தினாலேயே நீண்ட கால மாக நிலைத்து வந்த பிரச்சினைக்கு இறுதித் தீர்வாக தனி நாடு கோரவேண்டியிருந்தது. மாற்று வழி வேறு இல்லாததால் இளை ஞர்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார்கள். மூல காரணத்தை ஆராயாமல் இதனை அடக்க 1972ம் ஆண்டு தொடக் கம் அரசாங்கம் தனது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது. 1979ம் ஆண்டு - மருமகன். பிறிகேடியர் வீரதுங்காவிடம் அரசன் ஆணையிடுவது போன்று யாழ்ப்பாணத்திலுள்ள தீவிரவாதிகள் அனை வரையும் ஒழித்துக்கட்டும்படி ஜனாதிபதி ஜயவர்த்தனா கட்டளை யிட்டார். போதிய இராணுவ ஆதரவுடன் கட்டளையை நிறை வேற்ற 6 மாத காலத்தை எல்லையாகவும் வரையறை செய்யப் பட்டது. இதன்படி, அதே வருடம் மார்கழி 31ம் திகதிக்கு முன்

முன்னுரை () 175
இது நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது. ஆனால் எதிர்பார்த்த தற்கு மாறாக, அரசாங்கத்தின் ஒவ்வொரு அடக்குமுறை நடவடிக் கையோடு தமிழர்களது பதில் நடவடிக்கைகளும் அதிகரிக்கவே தொடங்கிற்று.
1983ம் ஆண்டோடு தமிழரது பிரச்சினை புதியதோர் திருப் பத்தை அடைந்தது. உள் நாட்டு மட்டத்தில் இருந்து பல காரணங் களால் அது சர்வதேச விடயமாக்கப்பட்டு விட்டது. 1975ம் ஆண்டு தோட்டங்கள் தேசியமயமாக்கப்படும் வரை, இலங்கை அங்கு உற் பத்தியாகும் தேயிலைக்கே புகழ் பெற்றதாக இருந்தது. அதன் பின் அங்கு உல்லாச பிரயாணத் துறையும் பிரபல்யம் அடையத் தொடங் கியது. உலகில் இவ்வாறு பெயர் பெற்ற நாடு 1983ம் ஆண்டு நடைபெற்ற வன்செயலோடு உலகிலுள்ள மக்கள் தொடர்பு நிறு வனங்களது கவனத்தையும் ஈர்த்தது. நடைபெற்ற சம்பவங்களுக்கு விளக்கம் கொடுக்கையில், இலங்கையை இழந்த செர்க்கம் (Lost Paradise) என்றே வருணித்தார்கள்.
தமிழர்கள் தம் பாரம்பரியப் பிரதேசத்திலேயே பாதுகாப்பற்று இருக்கும் நிலை இக்கட்டத்தில்தான் முதற் தடவையாக நிகழ்ந்தது. மேலை நாடுகளுக்கும் அண்டை நாடாகிய இந்தியாவுக்கும் மக்கள் குடிபெயர்ந்து போக நேர்ந்தது. மற்ற நாடுகளும் இலங்கையில் நடைபெறும் விடயங்களைப் பற்றி அக்கறை கொள்ளத் தொடங் கினார்கள். வேறு வழி ஏதேனும் இன்றி தமிழர் தம்மை பாதுகாக்க வெளிநாடுகளது உதவியை எதிர்ப்பார்க்க நேர்ந்தது.
1977ம் ஆண்டோடு இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இன வன்செயல்கள் பற்றி இந்தியா கவலைப்படத் தொடங்கிற்று.
இந்திய வம்சாவழியினர் இலங்கையில் குடியிருந்து வந்ததும் இதனை நியாயப்படுத்த உதவிற்று. இதனை ஸ்திரப்படுத்த தமிழ் நாட்டு மக்கள் கொதித்தெழுந்ததும், அகதிகளாக 1,30,000 மக்கள் இந்தியா வந்து சேர்ந்ததும், உதவின எனலாம். இதனோடு, பிராந்திய அரசியல் நிலையில் இந்தியா கொண்ட அக்கறையும் இதனோடு பின்னிப் பிணைந்தாகியும் விட்டது.
கடந்த 45 வருடகாலமாக அரசியலில் ஈடுபட்டு வந்த ஜனாதி பதி ஜயவர்த்தனாவும் அவரது இன்றைய அரசாங்கமும், வேறு வழியின்றி, இனப் பிரச்சனையில் இந்தியாவின் நடுவர் நிலையை, ஏற்கவேண்டியே இருந்தது. ஆனால் திருமதி இந்திரா காந்தியின் மறைவோடு அவர் தன் கொள்கையை மாற்றிக் கொண்டார். இனப் பிரச்சினை தொடர்ந்தும் தீர்க்கப்படாதிருப்பதற்கு இந்தியாவே

Page 103
176 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
காரணம் என கூறவும் தொடங்கினார். திரு ராஜீவ் காந்தி அர சியல் பொறுப்புகளுக்கு புதியவராக இருந்த கட்டத்தில் இதனை கையாளத்தக்கதாக இருந்தது. ஆனால் திரு. ராஜீவ் அவர்கள் விடயங்களை நன்கு கிரகித்துக் கொள்ள தொடங்கியதும் இது வாய்க்காது போயிற்று. திரு. காந்தி அவர்களும் நடுவர் நிலை யைக் கைவிட்டு பிரச்சினையை தீர்த்து வைக்கும் அளவுக்கு உறுதி நிலையை அடைந்து விட்டார்.
நூலின் இப்பகுதியில், 1983ம் ஆண்டு தொடக்கம் இலங்கை யில் நிகழ்ந்தவற்றையும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் தீர்வு ஒன்றை அடையும்வரையும், ஒப்பந்தத்தை நடை முறை படுத்துவதிலும் இந்தியா ஆற்றிய பங்கினை ஆராய்வோம்.

எட்டாம் அத்தியாயம்
அரச பயங்கரவாதமும் போராளிகளும்
முன் கூறிய அநீதிகளை மிதவாதிகள் சாத்வீக முறையால் கண் டித்த போது, சிங்கள ஆதிக்கத்துக்குட்பட்ட ஆளும் க ட் சி யி ன ர் அவற்றை ஈவிரக்கமின்றி அடக்கி சிலரைக் கைதும் செய்தனர். இவ்வாறு எத்தகைய (சாத்வீக) எதிர்ப்பையும் முறியடிக்கலாம் என சிங்கள சமூகத்தவருக்கு நிரூபித்துக் காட்டப்பட்டது. இதனால் , தமிழருக்கு எதிராக வன்செயல்களில் ஈடுபடும் சிங்கள கும்பல்களுக் கும் ஆதரவு கொடுக்கப்பட்டது. அரசினதும் இராணுவத்தினதும் உதவியுடன் தமிழருக்கு எதிராக எதனையும் செய்துவிடலாம் என்ற மனப்பான்மை சிங்களவர்களிடையே மேலோங்கியது. இதனால் தான் 1956ம் ஆண்டு தொடக்கம் சிங்களவரது வன்முறை செயல் கள் சர்வசாதாரணமாகியது. 1977ம் ஆண்டிற்குப் பின் தமிழர் களுக்கு எதிரான வன்செயல்கள் என்பது சிங்களவரது வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது. வன் செயல்கள் ஒவ் வெ ர ன்றிலும் தமிழர்களே பலியாகி கொண்டிருந்தமையால் பதிலடி கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கவே இல்லை.
தமிழ் இளைஞர்கள் சாத்வீக அணுகுமுறையின் பயனின்மை யைக் கண்டு விரக்தியடையும் தறுவாயில் அவர்களுள் ஒரு சிலரை அடக்கி விட்டால் போதும் என்றே நினைத்தார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல தீவிரவாத இயக்கங்கள் வலுப்பெற்று சிங்களவர் களையே தாக்கத் தொடங்கியபோது 'கொட்டியா” (Tiger) என்ற நாமமே அவர்களை திகிலடையச் செய்தது.
8.1. இராணுவ மயம்
1961ம் ஆண்டு பங்குனி மாதம் திருமதி. பண்டாரநாயக்காவி னது அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி வடக்கிலும்

Page 104
178 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
கிழக்கிலும் நிலையாக இருப்பதற்கு என இராணுவத்தை அனுப்பி வைத்தது. இராணுவத்தினரது மிருகத்தனமான செ ய ல் க ைள அனுபவிக்கத் தொடங்கிய தமிழர்கள், பலாத்காரத்தின் மூலம் தம் மை பணிய வைக்கலாம் எனும் சிங்கள அரசாங்கங்களின் மன உறுதியையும் உணரத் தொடங்கினார்கள்.
1983-1987 ஆண்டுகளுக்கிடையில் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள எட்டு மாவட்டங்களிலும் 200 இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டன. 1985ம் ஆண்டில் தரைப்படை(42), கடற்படை(5), விமானப்படை(6), பொலிஸ் கமாண்டோபடை(96), நிலையில் இருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் 1986-1987 (ஆடி) ஆண்டுகளுக்கு இடையில் இரு நூறாகப் பெருகி விட்டது. 1985ம் ஆண்டு கணக்கின்படி ஏனைய 17 மாவட்டங்களிலும் 33 முகாம்களே இருந்தன. 1987ம் ஆண்டு ஆடி மாதம் நாட்டில் உள்ள மொத்த இராணுவத் தளங்களுள் வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமே 90 சதவிகிதமானவை இருந்தன. அரசாங்கம் தனது பிரஜைகளோடேயே போர் நடத்துவதை இது தெளிவாக்குகின்றது.
இவ்வித இராணுவத் தளங்களை அமைப்பதற்கு ஆட்களை தெரிவு செய்து பயிற்சியும் கொடுக்க வேண்டும். இவ்வித போக்கு 1977ம் ஆண்டிற்குப் பின் இதனால் வலுவடைந்தது. 1983ம் ஆண்டு ஆடி மாதத்தின் பின் பன்மடங்கு பெருகியது. 1980ம் ஆண்டு மொத்தமாக 15,000 ஆட்களே இராணுவத்தில் இருந்தனர். 1984ல் 16,000 ஆக உயர்ந்தது. (1985ம் ஆண்டு நிரந்தரப் படையினர் 21,560 ஆக உயர்த்தப்பட்டனர். 18,200 பேர் ரிசர்வ் படையின ராகவும், 14,500 பொலிசாராகவும், 5,000 பேர் ஊர் காவல் படையின ராகவும் இருந்தனர். 1984ம் ஆண்டுக்குப் பின்பு இராணுவப் படை யினர் தொகையை மாதத்திற்கு 2,000 பேர்களாக உயர்த்த அர சாங்கம் தீர்மானித்தது. இதற்காக வேண்டி பல தற்காலிக முகாம் களும் நிறுவப்பட்டன.?
கல்வி, தொழில், இளைஞர் அலுவலக அமைச்சும் கூட போர் நடத்தும் நோக்கத்திற்காக ஆட்களை தெரிவு செய்து பயிற்சி கொடுக்க பயன் படுத்தப்பட்டது. “படைபயிற்சி மாணவர்' (cadet) சேவைகளை ஆரம்பிக்கும் முகமாக பல பாடசாலைகள் இத் திட் டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. பாடசாலைகளில் மொத்தம் 4,000 படைப்பயிற்சி மாணவர்களில் இருந்து 400, மாணவிகள் உட்பட 10,000 பேராக உயர்த்தப்பட இருந்தன.8
1985ம் ஆண்டு திருகோணமலையில் புதிதாக ஆரம்பிக்கப் பட்ட இலங்கை இராணுவ பொறியியல் கல்லூரியில் (Sri Lanka

அரச பயங்கரவாதமும் போராளிகளும் () 179
school of military engineering) 361) is Das 56DJ L 60L. Gusri) is usi படைபிரிவைச் சேர்ந்த 116 பேர் தெரிவு செய்யப்பட்டு பயிற்று விக்கப்பட்டனர். 1985ம் ஆண்டு மாதம்பேயிலும், மாத்தளையிலும், இரண்டு பாடசாலைகள் இராணுவ பயிற்சி நிலையங்களாக மாற்றியமைக்கப் பட்டன. இங்கு சிங்க ள இளைஞர்களுக்கு கமாண்டோ பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. 150 உதவிக் காவல் துறை மேலாளர்களும் பயிற்றப்பட்டார்கள். ஒன்றரை வருடத் துக்குள் இரண்டு லட்சம் பேர்களுக்கு பயிற்சி கொடுத்து வடக்கில் குடியேற்றுவதற்கும் திட்டமிடப்பட்டது.
சிங்கள மக்களை தெரிவு செய்து பயிற்சி கொடுப்பதற்காக அர சாங்கம் சில சட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டது. 1985ம் ஆண்டு சித்திரை மாதம் சுடுவதற்கும், இராணுவ பயிற்சிக்கும் உரிய சட்டத்தின் 363வது பிரிவின் கீழ் சுடப் பழகும் ஒழுங்கு க ைள பாராளுமன்றம் நிறைவேற்றிற்று. இதன் கீழ் இலங்கை விமானப் படையினருக்குக் குண்டு வீசவும், ஏவுகணை தாக்குதல்களுக்கான பயிற்சியும் பெற அதிகாரம் வழங்கப்பட்டது.
1985ம் ஆண்டு ஐப்பசி மாதம் 10ம் திகதி நிறைவேற்றப்பட்ட துணைப் படையினர் திரட்டும் சட்டத்தின் கீழ் கட்டாய இராணுவ சேவை இலங்கையில் நடைமுறைபடுத்தப்பட்டது. 9 18 வயதுக்கு மேற்பட்ட இரு பாலாரையும் சம வீதமாக தேசிய ஆயுதம் தாங்கிய ** ரிசர்வ் படையில் சேர்க்கும் சட்டத்தை 'அவசரம்” என்று ம் ‘நாட்டின் நலனுக்கு உரியது' என்றும் விரைவாக நிறைவேற்றி னார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இச்சட்டத்தின் உள்ள டக்கத்தை நன்கு ஆராய சந்தர்ப்பம் கொடுபடவில்லை. இதனால் எதிர்க் கட்சியினர் வெளியேறி தம் ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.
இராணுவ பயிற்சி கொடுப்பதற்கு வசதிப்படுத்த அவசர கால சட்ட ஒழுங்குகள் செய்யப்பட்டன. உதாரணமாக :- 1985ம் ஆண் டின் 2ம் இலக்க அவசரகால சட்ட ஒழுங்கு, தகுதிவாய்ந்த அதி காரி மூலம் இராணுவ பயிற்சி நிலையங்களை அமைக்கும் அதி காரங்களை, குறித்த அமைச்சருக்கு வழங்குகின்றது. பயிற்சிக் குரிய நியதிகளைத் தயாரிப்பதையும், பயிற்சிக்குரிய வகை முறை களுக்கேற்ப ஆயுதங்கள், கருவிகள், உடைகள் வழங்குவதையும் குறித்த அதிகாரத்துள் சட்டம் அடக்குகின்றது.
8.1.2 புதிய பாதுகாப்புப் படைகள்
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இராணுவ தீர்வே முடிவானது என்ற ஜயவர்த்தனாவின் கணிப்பின்படி அதிக பணச் செலவில் பல புதிய படைகள் உருவாக்கப்பட்டன.

Page 105
i80 O பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
அ. ஊர் காவல் படை
இந்தப் படைப் பிரிவில் ஏறக்குறைய ஆயிரம் சிங்கள சமூக விரோதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குரிய ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. சிங்கள கிராம வாசிகளுக்கு பாதுகாப்பு என்ற போர் வையில் கிழக்கு மாகாணத்தில் கேந்திர ஸ்தானங்களில் அமர்த்தப் பட்டார்கள். இவர்கள் சிங்கள மக்களுக்கு பாது கா ப்பளிப்பதை விடுத்து இராணுவத்துடன் சேர்ந்தும், தனித்தும் தமிழருக்கெதிரான வன்செயல்களில் ஈடுபட்டனர். எ. கா: 1986ம் ஆண்டு பங்குனி 6ல் இவர்கள் கின்னியாவில் உள்ள ஒரு தமிழ் வீட்டில் புகுந்து ஒருவரை வெட்டிக் கொன்றனர். 9
ஆ. விசேட அதிரடிப் படை
1984ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 900ம் பேரைத் தெரிந் தெடுத்து இவர்களுக்கு கீனி மினி சேவை (KMS) மூலமாக பயிற்சியும் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு பிரித்தானிய முன்னாள் விசேட விமானப் படை பிரிவை சேர்ந்தவர்களாலும் பயிற்சியளிக்கப்பட்டது. இவர்களே இன்று கிழக்கு மாகாணத்தில் அநேகமான வன்செயல் களுக்கு காரணமாக இருக்கின்றார்கள். எ. கா:- 1886.1, 19ல் மட்டக்களப்பிலுள்ள இருதயபுரம் எனும் கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் 24 தமிழர்களை சுட்டுக் கொன்றனர். இப்படைக்கு ஜனாதிபதி ஜயவர்த்ளனாவின் மைந்தனே தலைமை தாங்கினார்.
இ. தேசிய உதவிப் படை
இலங்கை அரசாங்கம் 1985ம் ஆண்டு ஆவணி 7ம் தி க தி பத்தாயிரம் நபர்களை இராணுவத்திற்கு உதவுவதற்காக பொது மக்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யவுள்ளதாக அறிவித் த து. இதற்கென 1.85 கோடி ரூபாய் ஒதுக்கி வைக்கப்பட்டது. தங்களு டைய தொகுதிகளிலிருந்து ஆட்களை தெரிவு செய்து அனுப்பும்படி பாராளுமன்ற பிரதிநிதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்." இவ் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு சில பிரதிநிதிகள் 200-300 வரை யிலான நபர்களை தெரிவு செய்தனுப்பினார்களென 1985ம் ஆண்டு கார்த்திகை மாதம் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத் தில் தெரிவித்தார். இதற்காக பரவலாக்கப்பட்ட வரவு செலவு திட்டமிருப்பதை தெரிவித்தார்.
8.1.3. இராணுவச் செலவுகள்
1977ம் ஆண்டுக்கு முன்னர் பாதுகாப்புக்கு உரிய செலவை ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்தது. ஆனால் 1977ம் ஆண்

அரச பயங்கரவாதமும் போராளிகளும் () 181
டோடு செலவு அசுர வேகத்தில் பெருகத் தொடங்கியது. ஆகவே தான், தொழிற் சங்கங்கள் அரசாங்க சேவையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு கேட்டபொழுது கொடுக்க முடியாத நிலையில் பலாத்காரமாக முறியடிக்க வேண்டியதாயிற்று. வருடாந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் பணத்தோடு பெருகி வரும் பாது காப்புச் சேவைகளுக்கென பாராளுமன்றம் பல இணைப்புச் செலவு களுக்கும் அனுமதி வழங்கிற்று.
அட்டவணை 8.1 இராணுவச் செலவு 1977 - ரூ 50 கோடி 1978 - ரூ 56 கோடி 1883 - ლენ 197.7 , , 1984 - ரூ 232.9, 1985 - eit 619.6 , , 1986 - ரூ 869.6 , 1987 - ღუნ 1000 , ,
1987ம் ஆண்டு எதிர்பார்த்த செலவில், முதல் 3 மாதங்களில் மட்டுமே செலவு ரூ 500, கோடியை மிஞ்சிவிட்டது. இராணுவச் செலவுக்கு உரியது என காட்டப்படும் கணக்குகளில் அதனோடு இணைந்து வரும் ஏனைய செலவுகள் காட்டப்படுவதில்லை. எ.கா:- இராணுவத்தில் சேர இருக்கும் பாடசாலை மாணவருக்கு, இளைஞர் அலுவலகம் தொழில் வாய்ப்பு அமைச்சு கொடுக்கும் பயிற்சிச் செலவு கள், இராணுவச் செலவினுள் அடக்கப்படுவதில்லை. ஆனால் 1986ம் ஆண்டு மனித வளத்தைத் திரட்டி விருத்தி செய்வதற்கென ஒதுக் கப்பட்ட ரூ. 27.3 கோடியை இராணுவ பயிற்சி செலவுக்கே பயன் படுத்தப்பட்டது.
அரசாங்க அலுவலகங்களுக்கும், கூட்டுத்தாபனங்களுக்கும், கூட்டு றவு நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கென வர்த்தக தொழில் நிறுவன அமைச்சு ஒன்று உதயமாயிற்று. 1986ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ரூ. 5,84 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த அமைச்சு தன் பொறுப்புகளை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்துக்கொடுத்துள்ளது. எ.கா:- இலங்கை மண்பாண்டக் கூட்டுத் தாபனத்தினது பாதுகாப்புப் பொறுப்பு மாதம் ரூ. 1,26 300/- செல வில் சிட்னி டி சொய்ஸா (ஏஜன்சி) லிமிட்டட்டுக்கு இடம் கொடுக்கப் பட்டுள்ளது.8
இராணுவச் செலவுக்குறிய குறைகளை நிவர்த்தி செய்ய தேசிய பாதுகாப்பு நிதிச் சட்டத்தின் கீழ் 1985ம் ஆண்டு பங்குனி மாதம் தேசிய பாதுகாப்பு நிதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஜனாதிபதியின் நிதியிலிருந்தும் 600 கோடி ரூபா
வும் வேறொரு நிதியிலிருந்தும் 2400 கோடி ரூபாவும் இந்த நிதிக் கென மாற்றப்பட்டது. இப்பொழுது நாட்டு மக்களிடமிருந்தும்

Page 106
182 ) பெளத்த சிங்க்ளவரும் சிறுபான்மையினரும்
வெளிநாடுகளிடமிருந்தும் இதற்கென பணம் வசூலிக்கப்படுகின்றது. வெளி நாடுகளில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் இதனோடு நேரடி யாகச சம்பந்தப்படுத்தப் படுகின்றனர்.
வெளி நாடுகளில் இருந்து பெறும் நிதி உதவிகளும் இலங்கை அரசாங்கத்தினால் இராணுவச் செலவுக்கென்றே பயன்படுத்தப் படு கின்றது. இவற்றை அபிவிருத்தித் தேவைகளுக்கு ஒதுக்கினால் வெளி நாட்டு உதவிகளையும் கடன்களையும் நம்பி வாழ்வதை இயன்ற அளவு குறைத்துக் கொள்ளலாம். வரவு செலவு திட்டத்தின் பற்றாக் குறையையும், வெளிநாட்டு நிதி விபரங்களையும் இராணுவச் செலவு களையும் அட்டவணை 8.2 காட்டுகின்றது.
8.2 பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டங்கள்
தமிழர்களை விசேஷமாக துன்புறுத்துவதற்கென பல சட்டங்கள் தயாரிக்கப்பட்டன. நாட்டின் வன்செயல்கள் நிகழும் போதும் நாட் டின் பாதுகாப்பு எனும் பெயரில் அவசரகாலச் சட்டமோ அல்லது ஊரடங்குச் சட்டமோ பிரகடனப் படுத்தப்படும். ஆனால் உண்மையில் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கே இவை பயன்படுத்தப்பட்டன.
இந்தியாவிலிருந்து கள்ளமாக குடியேற வட கடற்கரையில் வந்து இறங்குபவர்களை தடுப்பதற்கென கள்ளக் குடியேற்றத்தை தடுக்கும் காவல்படை (TAFFI) ஒன்றை நிறுவும் விசேட சட்டம் 1952ம் ஆண்டு நிறைவேற்றப்பட்து. இச்சட்டத்தோடு பல முகாம்கள் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டன. இன்று பலாலியிலுள்ள இராணுவ முகாமும் அவ்வாறு தொடக்கப்பட்ட ஒன்றாகும்.
இப்பொழுது நாட்டிலுள்ள ஒரேயொரு காவல்தடை நிலையம் (Check Post) 26p60Tup6(36 2-6ir GTg5. 3 T 657 L - T b ui5 தக் காலத்தில் கள்ளமாக அரிசி கொண்டு செல்வதை தடை செய் வதற்கே இது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1956ம் ஆண்டோடு யாழ் குடாநாட்டுக்குச் செல்பவர்களையும் வெளியேறுபவர்களையும் அவதானிப்பதற்கென ஆயுதம் தாங்கிய காவல் தடை நிலையமாக மாற்றப்பட்டுவிட்டது.
8.2.1 பயங்கர வாத சட்டம்
இன்றைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததும் அநியாயத் திற்கென புகழ்பெற்ற பயங்கரவாத தடுப்புச் சட்டம் (தற்காலிக விதி கள்) 1979ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. மனித உரிமைகளை மறுக்கும் பல விதிகள் இச்சட்டத்துள் அடங்கும். இதன் கீழ் நீதி

-9|LI L6u6D6Jut 8:2 6uV6ų @*606ų Li si spirở(560 m), gyji suu (yngsố@iðLIITōjōfüųở Q&F606ų iħ
1978 || 1979 | 1980|1981|1982|1983198419851986 sursų @æsusų Li þpir&&5&op | 7,165|| 8,791 , 16,27414eee|2003.21,606 | 16,543 | 21,457 | 28,694 மொத்தச் செலவு18,853 | 21,521||30,34331,038|37.00046,816 | 47,313 || 59,498 || 67,000 அந்நிய முதலீடு 14,454 14,237 6,735 8,203essa hosso12,312 | 14,071 | 14,200 .*| メ பாதுகாப்புச் செலவு560411|1,080|1,100 | 1,428| .925|3,288|6,1968,855 வரவு செலவு பற்றாக்||· குறையில் அந்நிய| முதலீட்டு விகிதாசாரம்62.2 || 48.241. 4|55.2 || 43.8 || 50.7| 74.465.649.5 காப்புச் செலவின் %|- % வரவு செலவு பற்றாக்|/ குறையில் பாதுகாப்புச் செலவு %7.84. 76.6 | 7.4 || 7.18.9 || 19.9 \ 28.930.9 அந்நிய முதலீட்டில் பாது|| காப்புச் செலவின் %12.69.716.0 || 13.416.2 | 17.626.7062.4

Page 107
184 ) பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும் -
மன்றத்திற்கு மூன் ஆஜராகாது எவரையும் 18 மாதங்களுக்கு அமைச் சர் தீர்மானிக்கும் இடத்தில் தடுத்து வைக்கலாம். 16ம் பகுதியில், இம்சைக்கு உட்படுத்தப்பட்டவரென்றாலும், வாக்கிலோ எழுத்திலோ போலிசார் முன் ஒருவர் கூறியவை வழக்கு விசாரணைக்குரிய ஆதாரமாகக் கருதலாம் எனப்படுகின்றது. சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்த ஏடுகள் எவையும் நீதி மன்றத்தில் ஆதாரமாக சமர்பிக்கலாம் எனப்படுகின்றது.
'குற்றம்’ அல்லது சட்ட விரோதமான செயல் முதலிய சொற் களுக்கு இச்சட்டம் வரைவிலக்கணம் வழங்கும் போது கொலை, கடத்தல், சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் என்பவற்றோடு இனக்கலவரம் ஏற்படுத்தக்கூடிய சொற்கள், சைகைகள் எல்லாம் இவற்றுள் அடக்குகின்றது. இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி எனத் தீர் மானிக்கப்பட்டால் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப ஐந்து வருடத் திற்கும் இருபது வருடத்திற்கும் இடையில் அல்லது (வாழ்நாள் முழு வதும்) ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
இச்சட்டம் உலமெங்கும் கண்டிக்கப்பட்ட 1967ம் ஆண்டின் தென் ஆபிரிக்க "பயங்கர வாத சட்டம்" போன்றது. எங்கும் ஏற்கப்பட்ட சட்ட ரீதியான ஆட்சிக்கு உரிய கோட்பாடுகளையும் குற்ற விசா ரணைக்கு உரிய குறைந்த அளவு தராதரத்தையும் மீறுவதாக எமது இலங்கையின் இச்சட்டம் உள்ளது. நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போதுகூட இராணுவ பாதுகாப்பில் வைத்திருக்கலாம் என சட்டம் 1982ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டிருந்தது.
8.2.2 அவசர கால சட்டம்
புதிய அரசாங்கமும் அதிகாரப் பொ அப்புகளை ஏற்ற காலம் தொட்டு அவசர கால சட்டத்தின் கீழேயே ஆட்சி செய்து கொண்டு வருகின்றது. ஆனால் 1983ம் ஆண்டு வைகாசி மாதம் தொடக்கம் இன்றுவரை ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்தின் அனுமதி பெற் றுக் கொண்டே அவசர கால சட்டத்தின் கீழ் ஆளுகின்றது 1979á ஆண்டு ஆடி மாதம் 11ம் திகதிக்குப் பிறகு யாழ்ப்பாண மா.ட்டத் தில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்திய பின் குற்ற வரு ரணைக்குரிய சாதாரண சட்டங்கள் யாவும் ஒத்தி வைக்கப்பட்டு கைது செய்யவும், தடுப்புக்காவலில் வைத்திருக்கவும் சடலங்களை அவ்வப்போது அழித்துவிட இடமளிக்கவும் 69 அ வ ச ༡ ཆ T མ་ ஒழுங்கு விதிகளை நிறைவேற்றியுள்ளது. அவசரகால ஒழுங்குகள பயங்கரவாத தடைச் சட்டத்தினின்றும் வேறுபட்டதாக இல்லை. ஒரு

அரச பயங்கரவாதமும் போராளிகளும் () 185
வேளை அதனை விட நிலைமை மோசமானது என்றும் கூறலாம். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எவரையும் கைது செய்து விரும் பிய காலம் வரை எந்த இடத்திலோ எவ்வித நிலையிலோ வைத் திருக்க ஆணையிடக்கூடிய அதிகாரம் பெற்றுள்ளார் (ER-17). இவ் வித தடுப்புக் காவல் ஆணையை எந்த ஒரு நீதி மன்றத்திலும் எவ் வித காரணம் கொண்டும் விசாரணைக்கு எடுப்பிக்க முடியாது.
பயங்கரவாதச் சட்டத்தையும் அவசரகால ஒழுங்கு விதிகளையும் உள்ளடக்கிய அரசியல் கைதிகளை விடுவிக்கும் போராட்டத்தை சிங்களவரையும் உறுப்பினராகக் கொண்ட சிவில் உரிமை இயக்கத் தினர் (CROPP) நடத்தியபோது அரசாங்கம் அவர்கள் கருத்தை ஏற்கவில்லை.
அரசாங்கமே நியமித்த போர் நிறுத்தம் நெறிபடுத்தும் கமிட் டியின் இரு தமிழர்களும் தம் கருத்துகளுக்கு செவி சாய்க்கப் படுவதில்லை என்பதை உணர்ந்ததும் இராஜினாமா செய்துவிட் டார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டமும், அவசரகால ஒழுங்குகளும், சிவில் உரிமைகளுக்கும் அரசியல உரிமைகளுக்கும் சர்வதேச உடன்பாடு (ICCPR) காட்டும் சட்ட ரீதியான பாதுகாப்புக்களை மீறும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன. மறியலில் உள்ளவர்கள் தாம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் செய்தியை இனத்தவரிடம் தெரிவிப்ப தற்கு ஐ.நா. சபையின் மறியலில் வைக்கப்பட்டோர் சம்பந்தமான குறைந்த அளவு நியமங்கள் 92வது பகுதியில் வலியுறுத்துகின்றன. ஆனால் பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அவசரகால ஒழுங்குகளும் இதற்கு இடம் கொடுப்பதாக இல்லை.
8.3 வெளிநாடுகளது உதவி (ஆயுதம் வழங்குதல்)
1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பாக **தமக்குரிய பிரதேசங்களுக்கு பாதுகாப்பு வழங்க தமக்கிடையே இராணுவ உதவிகள் கொடுத்துதவவும்” 'இலங்கை இராணுவத் திற்குப் பயிற்சி கொடுத்து வளர்க்கவும்” பிரித்தானிய நாடும் இலங் கையும் பாதுகாப்யு வெளியுறவு ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டன இந்த ஒப்பந்தத்தின் அ டி ப் ப ைட யி ல் திருகோணமலையிலும் (கடற்படை), கட்டுநாயக்காவிலும் (விமானப்படை) பிரித்தானிய இராணுவத் தளங்கள் தொடர அனுமதி வழங்கப்பட்டும் இருந்தது. 1967ம் ஆண்டு இத்தளங்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டன."

Page 108
186 ப்ெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
ஒரு சில இலங்கை இரானுவத்தினருக்கும் பயிற்சி கொடுத் ததை விட, இவ்வொப்பந்தமும் பல ஆண்டுகாலமாக நடை முறை படுத்தியதாக இல்லை. ஆனால் 1983ம் ஆண்டு வன்செயல்களோடு பிரித்தானிய நாடு உட்பட நான்கு நாடுகளிடம் இருந்து இலங்கை இராணுவ ரீதியான உதவிகள் கேட்டது. அமெரிக்கா, பங்களா தேஷ், பாகிஸ்தான் ஏனைய மூன்று நாடுகளாகும். இச்செய்தி வெளி யானதும் இலங்கை இவ்வாறு கேட்கப் பட்டது என்பதை மறுத்தது. ஆனால் லண்டனிலுள்ள வெளி விவகார இலாக்கா இச்செய்தியை உறுதிப்படுத்திற்று.
8.3.1, பிரித்தானியர் உதவி
1984ம் ஆண்டு சித்திரை மாதம் விக்டோரியா அணைக்கட்டு திறப்பு விழாவன்று பாதுகாப்பு ஒப்பந்தம் இன்னும் நடை முறை யில் உள்ளதென பிரித்தானிய அரசாங்க தூதுவரிடம் ஜனாதிபதி ஜயவர்த்தனா நினைவுறுத்தினார். அதனிலும் ஒருபடி முன் சென்று பிரித்தானிய பிரதமர் மாக்றட் தட்சருக்கு கொழும்பில் 1985ம் ஆண்டு சித்திரை மாதம் 13ம் திகதி அளித்த விருந்துபசாரத்தில் 'ஜன நாயகத்தை நிலைத்திருக்க வைப்பதற்கு” பிரித்தானிய நாடு தன் துருப்புக்களை இலங்கையில் முகாம் அமைத்தும் வைத்திருக்க வேண்
டும் எனவும் பகிரங்கமாக வேண்டிக் கொண்டார்.
இலங்கை அரசாங்கம் பிரித்தானிய தனியார் கம்பெனிகளினின் றும் இராணுவ ஆயுதங்களை வாங்கியது. 1977ம் ஆண்டு இலங்கை யிடம் செவர்டன் கம்பெனி காவலுக்குரிய ஐந்து விசைப்படகுகளை ஒப்படைத்தது. 1980ம் ஆண்டு இராணுவ தளபாடங்களை விற்ப தற்குரிய ஒப்பந்தம் ஒன்றினை இலங்கையோடு பிரித்தானிய நாடு செய்து கொண்டது. சமீப காலங்களில் தாக்கும் துவக்குகளும், இலகு இயந்திர துப்பாக்கிகளும், துப்பாக்கிப் படகுகளும் ஏனைய ஆயுதங்களும் தளபாடங்களும் இலங்கை கொள்வனவு செய்தது.
பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு தாம் எவ்வித ஆயுதங் களும் வழங்குவதில்லை என்றும் தனியார் சந்தையில் மட்டுமே இலங்கை அரசாங்கம் தனக்குத் தேவையான ஆயுதங்களை பெற் றுக்கொள்கிறதென்றும் கூறி வருகிறது. இலங்கையில் இராணுவ சேவை புரியும் பிரித்தானியர் தமது இராணுவத்தைச் சேர்ந்தவர் களல்லர் என்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களினின்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதையும் கூறி வருகின்றது.

அரச பயங்கரவாதமும் போராளிகளும் () 187
அந்நிய நாடுகளுக்கு தம் நாட்டு தனியார் கம்பெனிகள் ஆயு தங்கள் விற்பதற்கு சில தடைகள் விதித்துள்ளதை அவதானிக்கும் போது இலங்கையோடு பிரித்தானிய நாடு எற்படுத்திய தொடர்பு நியாயப்படுத்தக் கூடியதாக இல்லை. ஆயுதங்கள், போர் கருவிகள் இராணுவ சிவிலியன் இருதரப்பினரதும் பயன்பாட்டுக்கு உரியவை யாகில், அவற்றை ஏற்றுமதி செய்வதற்கோ அல்லது பிரித்தானிய நாட்டின் ஊடாக அனுப்பி வைப்பதற்கோ, வர்த்தக இலாக்கா வினது அனுமதி பத்திரம் தேவை என்பதை சட்டம் வற்புறுத்துகின் றது. அனுமதிபத்திரமும் 12 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடி யாகும். அதற்கும் மிஞ்சுவதாகில் அது புதுப்பிக்கப்பட வேண்டும். தேசிய மயமாக்கபபட்ட பாதுகாப்பு உற்பத்தித் தொழில் நிறுவனங் களது ஏற்றுமதி தன்னும் இவ்வித கட்டுப்பாட்டுக்கு உள்ளாகின்றது. வெளிவிவகார பொது நல இலாக்காக்கள் அரசியல் விளைவுகளை ஆராயவும், திறைசேரியும் தொழில் துறையின் ஏற்றுமதிக் கடன் உறுதி இலாக்காக்களும் அவற்றின் நிதியுதவி அல்லது கடன் தேவை களை உறுதிப்படுத்துவதற்கு ஆராயவும், வெளிநாடுகள் கொள்வ னவு செய்ய விரும்பும் ஆயுதப் பட்டியல்கள் யாவும் பரிசீலனைக்கும் உட்படுத்தப்படுகின்றன.
8.3.2. இஸ்ரேலிய உதவி
1970ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதும், தேர்தல் விஞ்ஞாபனம் உறுதி மொழி கொடுத்ததற்கு ஏற்ப, திருமதி சிறிமா பண்டாரநாயக்காவின் அரசாங்கம் இஸ்ரேலிய தூதரால யத்தை பூட்டுவித்தது. பாலஸ்தீனியரது உரிமை சம்பந்தப்பட்ட ஐ.நா. சபையின் 242 வது தீர்மானத்திற்கு இஸ்ரேல் இணங்கி வராததே தூதுவர் உறவு துண்டித்ததற்கு காரணமாயிற்று. அதற்கு பிறகு இஸ்ரேலுடன் தூதுவர் உறவு புதுப்பிக்கப்படவில்லை. இஸ் ரேலியர் நாட்டுக்குள் வருவதற்கும் கடுமையான தடைகள் விதிக் கப்பட்டன. இது இவ்வாறு இருக்க, இன்றைய அரசாங்கம் பல நாடுகளை இராணுவ உதவி கேட்டும் எதிர்பார்த்த அளவு பதில் சாதகமாக வராத போது, 1983ம் ஆண்டு இஸ்ரேலியரது உறவை நாடிற்று. தொடர்புகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட போதும், 1983ம் ஆண்டு ஆவணி மாதம் அமைச்சரவை செயலாளர் ஜி.வி.பி. சமர சிங்க வினது இரகசிய பிரயாணத்திற்கு பின்புதான் பேச்சுவார்த்தை கள் ஆரம்பமாயின. பாலஸ்தினியர் பிரச்சினை சம்பந்தமான இரு நாடுகளது உத்தியோக பூர்வமான நிலைகளில் மாற்றம் எதுவும் ஏற்படாத போதிலும், இஸ்ரேலியரோடு இலங்கை அரசாங்கம் தன் உறவுகளை புதுப்பிக்கத் திர்மானித்துக் கொண்டது.

Page 109
188 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
1984ம் ஆண்டு வைகாசி மாதம் இஸ்ரேலுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டை தயாரிப்பதற்கு இராணுவ ஜெனரல் வேர் னன் வால்டர்ஸ்து சேவையை கொடுத்துதவி அமெரிக்காவும் இதில் பெரும் பங்கு கொண்டது. 1984ம் ஆண்டு வைகாசி 24ல் கொழும் பிலுள்ள அமெரிக்க தூதராலயத்தில் இஸ்ரேலிய நலன் பிரிவு அரம் பிக்கப்பட்டது. இதற்கு முன்பாகவே இஸ்ரேலிய நிபுணர்கள் இலங்கை இராணுவத்தினரை பயிற்றுவிக்கத் தொடங்கியதாக தக வல்கள் வெளியாகின. அதே ஆண்டு சித்திரை மாதம் இஸ் ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசியப் பகுதியைச் சேர்ந்த உத விப் பணிப்பாளர் டேவிட் மட்னாய் இந்த இஸ்ரேலிய நலன் பிரி வின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இவ்வித நடவடிக்கைக்கு எதிராக நாட்டில் பலத்த கண்டனங்கள் எழுந்தன. இதனுள் இஸ்லாமிய சமூகத்தவர் குறிப்பிடத்தக்கவர். ஆனால் அரசாங்கம் ஆர்பாட்டங்களை வன்மையாக நசுக்கி ஒடுக் கிற்று. மட்டக்களப்பிலுள்ள பள்ளிவாசல் முன் நடந்த அமைதி யான ஆர்பாட்டத்திற்கு எதிராக பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 20 பேர் மட்டில் காயமடைந்தனர். வேறு இடங்களில் நடந்த ஆர்பாட்ட ஊர்வலங்களை பொலிசார் கலைத்துவிட்டனர். அரசாங்கமும் அவசரகால ஒழுங்கு 14 (11)ம் விதியை பயன்படுத்தி பத்திரிகை தணிக்கை செய்து இஸ்ரேலிய நலன் பிரிவு செய்திகளை இருட்டடித்தது. 1984ம் ஆண்டு ஆனி மாதம் 9ம் திகதி நடை பெற்ற ஐ தே.கட்சி செயற்குழு கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி ஜயவர்த்தனா இஸ்ரேலிய நலன் பிரிவைத் தொடர்ந்தும் வைத் திருப்பதில் தாம் உறுதி கொண்டுள்ளதை வலியுறுத்தினார். ** முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தீர்மா னத்தை ஆதரிக்க விரும்பாவிடில் வெளியேறலாம் என்றுக் கண்டித் துப் பேசினால் வெளியேற்றப்படுவார்கள்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
ஆரம்பத்தில், இராணுவ பயிற்சி கொடுப்பதற்கு என இஸ்ரே லியர் நாட்டிற்கு வந்துள்ளார்கள் என்பது மறுக்கப்பட்ட போதிலும், கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் 'வின் பெய்த்” எனும் இஸ்ரேலிய உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனம் இலங்கை இராணுவத்தினரை பயிற்றுவிப்பதில் ஈடுபட்டுள்ளது என்பதை தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத்முதலி ஏற்றுக்கொண்டார்.1 அதே வேளை ** மொஸாட்” எனும் இஸ்ரேலிய உளவு இயக்கம் நாட்டில் நடமாடுகின்றது என்பதை மறுத்துவிட்டார். ஆனால் லண்டனிலுள்ள ஒரு கஞ்சிகை **வின் பெய்த்” ஐச் சேர்ந்த பல இராணுவ ஆலோசகர்கள் கொழும்புக்கு அருகேயுள்ள இராணுவ

அரச பயங்கரவாதமும் போராளிகளும் () 189
நிறுவனம் ஒன்றில் இலங்கைப் படையினரை பயிற்றுவிக்கும் செய் தியை பிரசுரித்தது.12
1984ம் ஆண்டு ஐப்பசி மாதம் 21ல் நலன் பிரிவின் நிரந்தர அதிகாரியாக “அக்ரயில் கார்பி’ எனும் இஸ்ரேலிய உயர் தூதுவர் பொறுப்பெடுத்தார். இலங்கையிலிருந்து விலகுவதற்கு முன், இஸ்ரேலோடு இலங்கை அரசாங்கம் 1983 ஆம் ஆண்டு வன்செயல் களுக்கு முன்பாகவே தொடர்பு கொண்டு விட்டது எனும் இரகசி யத்தையும் டேவிட் மட்னாய் வெளிப்படுத்தினார்.
இதுவரை இஸ்ரேலோடு நடைமுறையிலுள்ள வர்த்தக உறவுத் தடை ஜனாதிபதி ஆணையால் நீக்கப்பட்டது. இஸ்ரேலியர் சுதந் திரமாக வந்துபோக அனுமதிக்கப்பட்டனர். வெளிவிவகார உதவி அமைச்சர் டிறோன் பர்னான்டோ (Tyronne Fernando) 1985ம் ஆண்டு சித்திரை மாதம் பாராளுமன்றத்தில் தான் ஆற்றிய உரையில் இஸ் ரேலிய நலன் பிரிவினர் நாட்டுக்கு வர விசா தேவைபடாது என்பதை வெளிப்படுத்தினார். 1984ம் ஆண்டு வைகாசி முதலாம் திகதிக்கும் 1985ம் ஆண்டு மாசி மாதம் 28ம் திகதிக்கும் இடையில் மட்டுமே 78 இஸ்ரேலிய பிரஜைகள் நாட்டுக்குள் வர விஸா வழங்கப்பட்டது. 1986ம் ஆண்டோடு இஸ்ரேலியர்கள் எவரும் வந்து போக விசா தேவைபடாது என அரசாங்கம் அறிவித்தது.
இஸ்ரேலியர் இலங்கைக்கு வரத் தொடங்கியதும் தமிழ் பிர தேசங்களில் தொடரப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் மாற்றங் கள் ஏற்படுத்தப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இஸ்ரேலியர் ஆக்கிரமித்த "வெஸ்ட் பாங்க் பகுதியில் எவ்வித அர சியல் சமூக தந்திரங்கள்ை கையாண்டார்களோ அதே அணுகுமுறை களையே இலங்கை இராணுவமும் கையாளத் தொடங்கிற்று. ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டது. 18-35 வயதுக்கும் இடைப் பட்ட இளைஞர்கள் பெருந் தொகையாக கைது செய்யப்பட்டனர்.18 சில இடங்களை சற்றிவளைத்து பலர் கைது செய்யப்படடார்கள்.14
பல இடங்களில் இராணுவத்தினர் பெற்றோர்களுக்கு அவர் களின் மைந்தர்களை விசாரணைக்கு ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டனர். பொழுதுபடுவதற்கு முன்பாகவே திருப்பி அனுப்பப் படுவர் என வாக்குறுதியும் கொடுத்தார்கள். ஆனால் இவர்களுள் பெரும்பாலானோர் தென்னிலங்கைக்கு அனுப்பப்பட்டு சிறைகளிலும் முகாம்களிலும் அடைக்கப்பட்டனர்.

Page 110
190 0 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
கடற்படையினரால் கிராமங்கள் தொடர்ச்சியாக ஷெல் தாக்கு தலுக்குட்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண குடாநாட்டில் பருத்தித் துறையும், வல்வெட்டித் துறையும், மாதகலும் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தனவாகும். இஸ்ரேலியர் பாலஸ்தின மக் களுக்கு எதிராகச் செய்தது போல் முழுக் கிராமங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. அகதி முகாம்கள் தாக்கப்பட்டு பல கொலைகள் நடந்தன. தேடுவதும் அழிப்பதும் எனும் இராணுவ நடவடிக்கைகள் கையாளப் பட்டன. நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைத்திருப்பதும், விசாரணை நடத்துவதும், தடுத்து வைத்திருக்கையில் சித்திரவதை செய்வதும் சர்வ சாதாரண நிகழ்ச்சிகளாயின. சித்திரவதைக்கென நுட்பமானதும் ஈவிரக்கமற்றதுமான பல வழிமுறைகள் கையாளப் பட்டன.
8.3.3. அமெரிக்க உதவி
தன் இராணுவ தந்திரோபாயத் திட்டத்திற்கு இலங்கை தேவைப் படும் எனும் காரணத்தினாலேயே அமெரிக்கா இந்நாட்டின் மீது அக்கறை கொண்டதாக இருத்தது. 'இமெய்" (IMEI) இனது 1980ம் ஆண்டு காங்கிரசில் இலங்கைக்கு உதவி அளிக்கும் நோக் கம் அதன் இராணுவத்தின் தொழிற் திறனை ஸ்திரப்படுத்து வதற்கே’ என்றும் இதனால் எந்தவொரு வல்லரசையும் தேவைக்கு மிஞ்சி நம்பியிராத நிலை நீடிக்கும் என்றும் கூறப்பட்டது.19 சமீப காலங்களில் இலங்கையில் நிகழும் விடயங்கள் பற்றி அமெரிக்கா ஆர்வத்துடன் அக்கறை காட்டியுள்ளது. கடந்த இரண்டரை வருடங் களுக்குள் பல உயர்தர அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்தி ருக்கிறார்கள், 1983ம் ஆண்டு ஐப்பசி முதலாம் திகதி பாதுகாப்பு அமைச்சர் காஸ்பர் வெயின்பேர்கர் இலங்கைக்கு வந்திருந்தார். ஒரு வேளை, 1983ம் ஆண்டு ஆடி வன்செயல்களை அடுத்து இலங்கை இராணுவ உதவி கேட்டதும் வருகை தந்ததற்கு காரண மாக இருக்கலாம். தன் பிரயாணத் தொடரில் தேநீர் விருந்தில் கலந்துக் கொள்வதற்கு மட்டுமே கொழும்பில் சற்று தங்குவாரென கூறப்பட்ட போதிலும், இராணுவ விடயங்களும் உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.
வெயின்பேர்கரது விஜயத்தை அடுத்து அதே ஆண்டு கார்த்திகை மாதம் இராணுவ ஜெனரல் வேர்னண் வால்டர்ஸ் வந்திருந்தார். இராணுவ உதவி சம்பந்தமான ஒப்பந்தம் உருவாயிற்று என்பதை இவர் மறுத்துவிட்டார். 1984ம் ஆண்டு தை மாதம் 12ம் திகதி அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு கமிட்

அரச பயங்கரவாதமும் போராளிகளும் () 191
டியின் தலைவர் ஜோசப் அட்டப்போவின் தலைமையில் ஆறு அங் கத்தவர் கொண்ட தூதுக் குழு ஒன்று இலங்கைக்கு வந்தது. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின் நாட்டின் பாதுகாப்பிற்கு அமெரிக்க டொலர் 3,50,000/-ஐ உடனே நிதி உதவியாக கொடுப்பதற்கு தாம் சிபாரிசு செய்வோம் என அறிவித் தனர். 'இராணுவ மிதக்கும் கப்பலையும்” கடற்படைக்கு நவீன இராணுவ பயிற்சி வசதிகளையும் இலங்கை பெறு வ ைத அமெரிக்கா கருத்தில் கொள்ளும் என்பதையும் அட்டப்போ தெரிவித்தார்.17 வெளிவிவகார அமைச்சின் மத்திய கிழக்கினதும் தூர கிழக்கினதும் உதவி அமைச்சராகவுள்ள றிச்சட் மெர்பி என்பவர் 1984.10.26ல் இலங்கைக்கு விஜயம் செய்தார்.
இவ்வித விஜயங்கள் தவிர்த்து, ஜனாதிபதி ஜயவர்த்தனாவும் பிரதமர் பிரேமதாசாவும் அதுலத் முதலியும் இராணுவ உதவி கோரி அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். ஜனாதிபதி ஜயவர்த்தனாவினது விஜயத்தின் போது அமெரிக்காவினது கடற்படைக்கு தள வசதிகள் கொடுப்பதும் சம்மதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் இவ் வித ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படவில்லை எனவும் பின்பு மறுத்திருக் கிறார். எவ்வாறு இருப்பினும் திருகோணமலை நில எண்ணெய் பண்ணை உடன்பாடு மூலம் அமெரிக்க கடற்படை அத்துறை முகத் திற்குள் புகுவதற்கு வாய்ப்பு பெற்றுள்ளது. 10,000 தொன் அடங்கக் கூடிய 101 நில எண்ணெய் தாங்கிகளை கட்டி நில எண் ணெய் சேர்த்துவைக்கக் கூடிய வசதிகளை 1920ம் ஆண்டு காலங் களிலேயே பிரித்தானியர் கட்டி வைத்து விட்டார்கள். சிங்கப்பூர், மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகளை முறையே மையமாகக் கொண்ட ஒறோலியம் (பிரைவட்) லிமிடெட், ஒயில் ராங்கிங், (Oil Tanking) டிறாடிநாப்ட் (Tradinaft) எனும் முக்கூட்டு சர்வதேச வர்த் தக நிறுவனத்திடம் திருகோணமலை எண்ணெய்க் குளம் அபிவிருத்தித் திட்டம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த குத்தகையை பெறுவதற்கு வேண்டியே 1982ம் ஆண்டு முக்கூட்டு நிறுவனம் ஆரம்பிக் கப்பட்டதாகத் தென்படுகின்றது. கோஸ்டல் கோர்பரேஷன் ஒஃப் பெர் முடாவினது இணை நிறுவனமாகவுள்ள கோஸ்டல் கோர்பரேஷன் ஒஃப் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களே ஒறோலியம் (பிரைவட்) லிமிடட் எனும் நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் இதே கோஸ்டல் கோர்பரேஷன் ஒஃப் பெர்முடாவிற்கு அமெரிக்க கடற்படையோடு வர்த்தகத் தொடர்பு உண்டு எனும் காரணம் காட்டி இலங்கைப் பாராளுமன்றத்தில் கண்டனமெழ திருகோணமலைக் குத்தகை அக் கம்பெனிக்கு 1981ம் ஆண்டில் மறுக்கப்பட வேண்டி நேர்ந்தது.

Page 111
192 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
1984ம் ஆண்டின் இக்குத்தகையைப் பெற பல நாடுகள் டெண்டர் எடுத்திருந்தனர். நியாயமான அளவு செலவு குறைந்த டெண்டரை இந்தியாவும் சமர்பித்தது. ஒறோலியம் லிமிடட் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசி திகதிக்கு பின்பே டெண்டரை சமர் பித்த போதும் அதனையே இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண் டது. இந்த குத்தகையின்படி இலங்கை அரசாங்கத்தின் அனுமதி இல்லாமலேயே அந்நிய போர் கப்பல்களுக்கு நில எண்ணெய் விநியோகம் செய்ய இடமுண்டு.18
1985ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதி இலங்கையின் மேற்கு கரையோரமாகவுள்ள நாத்தாண்டியாவிலுள்ள தொடுவாவ (800 ஏக் கர்) இரணவில (200 ஏக்கர்) கிராமங்கள் 1983ம் ஆண்டு மார்கழி 10ம் திகதி செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தினால் அமெரிக்காவுக்கு வெளி யேயுள்ள மிகச் சக்தி வாய்ந்த வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா (VOA) டிரான்ஸ்மீட்டர் (Transmitter) நிறுவப்படவுள்ளது. இப்பிராந்தி யத்தில் உள்ள வேறெந்த ஒலிபரப்புக்களையும் தடை செய்யும் ஆற் றலும் அதற்கு உண்டு. செயற்கை தொலைத் தொடர்பு கிரகணங் களோடும் அதற்கு இணைப்பும் உண்டு. குறித்த கிராமங்களிலுள்ள 200 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. 19
தரை மட்டத்திற்கு வராமலேயே இந்து சமுத்திரத்தின் அடித் தளங்களில் தங்கி நிற்கும் ஏவுகணைகள் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் களுக்கு குறைந்த அதிர்வு அலைவரிசை (low frequency) செய்தி கள் ஒலிபரப்பும் சக்தி வொய்ஸ் ஒஃப் அமெரிக்காவுக்கு உண்டு என பாதுகாப்பியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இப்பொழுது ஏற்படுத்திய ஒப்பந்தம் 1951ம் ஆண்டு வொய்ஸ் ஒஃப் அமெரிக்காவோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விருத்தி யென்றே கூறலாம். முன்பு செய்து கொண்ட ஒப்பந்தம் போல் அல்லாது கொடுக்கப்படும் வசதிகளின் நிருவாகம், இயக்கம், பேணு தலாகியவற்றின் மீது இலங்கை அரசாங்கத்துக்கு எதுவித அதிகார மும் இல்லை. முன்பு செய்து வந்தது போல் ஒலிபரப்ப இருக்கும் பேச்சுகளது ஏடுகளை முன்கூட்டியே பதிப்பிடவும் முடியாது. அது மட்டுமல்லாது இணைந்த தொலைத் தொடர்பு இயக்க வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் அமெரிக்காவுக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டுள்ளது.*
திருகோணமலைத் துறைமுகம் இயற்கையானதும் பெரும் விஸ் தீரணம் கொண்டதுமாகும். வல்லரசுகளின் எந்தவொரு கடற்படைப்

அரச பயங்கரவாதமும் போராளிகளும் () 193
பிரிவையும் அடக்கக்கூடியதாக இருக்கின்றது. இரண்டாம் உலக யுத்தத்தில் பிரித்தானிய நாட்டுக்கு அது மிகவும் பயன் தரக்தக்கதாக இருந்தது. ஆகவே இதற்காகவும் தென் ஆசியாவிலும் இந்து சமுத்தினத்திலும் இராணுவ வாய்ப்புக்கள் தருவதினால் அமெரிக்கா அதன் மீது கண் வைப்பது என்பது வியக்கத்தக்க ஒரு செயலன்று. 1981ம் ஆண்டு அந்நிய போர் கப்பல்களது வருகைக்கு இருந்த தடை நீக்கப்பட்டதும் அமெரிக்கா தன் போர் கப்பல்களை வெவ் வேறு காரணங்கள் காட்டி அனுப்பி வைத்திருந்தது.
தளபதிகளது கூட்டு நிறுவனத்தின் தலைவராக இரு ந் த ஜெனரல் டேவிட் சி ஜோன்ஸ் (USAF) இயற்றி 1980ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட *மிலிட்டரி போஸ்சர் (Military Posture) எனும் அமெரிக்காவினது உத்தியோக பூர்வமான அறிக்கை ஒன்றில் திரு கோணமலையை அமெரிக்க இராணுவம் அனுபவிக்கும் தல வசதி களுள் ஒன்று என குறிப்பிடுகிறார்கள். சுட்டிக்காட்டிய போது, பிரசுரிக்கையில் ஏற்பட்ட பிழையென மழுப்பி விட்டார்கள்.21 இலங் கைக்கு பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலிருந்து வரும் ஆயுதங்கள் உண்மையிலேயே அமெரிக்காவில் இருந்து வரு வதாகவே ஊகிக்கப்படுகின்றது. நூறு துப்பாக்கி படகுகளும், 50 ஹெலிகொப்டர்களும் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் ஊடாகவே கொடுக்கப்பட்டுள்ளது என நம்பப்படுகின்றது,
8.3.4. பாகிஸ்தானிய தொடர்பு
1983ம் ஆண்டு வன்செயல்கள் நடைபெற்றவுடன் இலங்கை ஆயுதங்கள் கோரிய நாடுகளுள் பாகிஸ்தானும் ஒன்று. அதன் பின் ஒழுங்காக அதிகாரிகள் அடிக்கடி விஜயம் செய்வதும் ஆயுதங்கள் வந்து இறங்குவதுமாகவே இருந்தது. இலங்கையின் கடற்படை தளபதியுடன் வெளிவிவகார அமைச்சராகிய ஏ. சி. எஸ். ஹமீதும் பாகிஸ்தானுக்கு 1984ம் ஆண்டு விஜயம் செய்தனர். 1985ம் ஆண்டில் மாலைத்தீவில் நடந்த சார்க் மகாநாட்டை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்தார்.
ஜனாதிபதி ஜயவர்த்னாவே 1985ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருக்கிறார். பாகிஸ்தானிய ஜனாதிபதி ஜெனரல் ஷியா உல் ஹக் 1985ம் ஆண்டு மார்கழி மாதம் 12ம் திகதி இலங்கைக்கு உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண் டார். அச்சந்தர்பத்தில் இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தகம்

Page 112
194 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
ஆண்டொன்றுக்கு 6 கோடி டொலரிலிருந்து 20 கோடி டொலராக உயர்ந்துள்ளது என அறிவித்தார்.22 இதிலிருந்து இராணுவ உதவி யும் கணிசமான அளவு உயர்ந்திருக்கலாம் என எண்ணத் தோன்று கிறது. 1986ம் ஆண்டு "இந்தியா டுடே' எனும் சஞ்சிகை எழுதிய தாவது: 'பாகிஸ்தான் ஆயுதங்கள் கொடுப்பதோடு மட்டும் தன் தொடர்பை நிறுத்திக் கொள்ளவில்லை. கடந்த ஒரு வருடத்திற்குள் 1000ம் இராணுவ அதிகாரிகள், ஜூனியர் கமிஷன் அதிகாரிகள், வேறு மட்டங்களையும் சேர்ந்தவர்கள் கிளர்ச்சி முறியடிப்பு பயிற்சி, பீரங்கி ஜூனியர் கமாண்டோ பயிற்சி, அடிப்படை பயிற்சிகளை பாகிஸ்தானில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்கள் என நம்பப் படுகின்றது. விமான கடற்படை இயக்குனர்களையும் பாகிஸ்தான் பயிற்றுவிப்பதாகவும் கூறப்படுகின்றது.”*
பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்களுக்கு கறுப்பு நிற (uniform) உடை கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களே தமிழ்மக்களை கண்டதுண்ட மாக வெட்டியும், சுட்டும், காயப்படுத்தியும், பெண்களை கற்பழித்தும் உடமைகளை சேதப்படுத்தியும் வந்துள்ளார்கள் எனத் தெரிய வரு கின்றது.
8.3.5 சீன உதவி
நாம் முன்பு கூறியது போல் மக்கள் சீனக் குடியரசு 1983ம் ஆண்டுக்குப் பின் இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகித்து வந்துள் ளது.24 ஜனாதிபதி ஜயவர்த்தனாவின் தம்பியாராகிய ஹெக்டர் ஜயவர்த்தனாவினது விஜயத்திற்கு பின் அது மேலும் அதிகரித்திருக் கின்றது. 1984ம் ஆண்டு ஜனாதிபதி ஜயவர்த்தனாவும் சீனாவுக்கு விஜயம் செய்திருக்கின்றார். சீனாவும் வெளிநாட்டுத் தலையீட்டை யும் இலங்கை பிரிக்கப்படுவதையும் தாம் எதிர்பதாகவும் அறிவித் துள்ளது.
சீன விமானப்படை குழுவொன்று 1984ம் ஆண்டு ஆடி மாதம் கொழும்பு சென்றது. 1984ம் ஆண்டு அதே மாதம் அதுலத் முதலி யும் தொடர்பு தளபதி லெப்டினண்ட் ஜெனரல் திஸ்ச வீரதுங்காவும் சீனாவுக்கு சென்றார்கள்.28 சீன ஜனாதிபதி லி சின்னியினது உத்தியோக பூர்வ விஜயத்தோடு (1986.3.11) உறவுகள் உச்சக் கட்டத்தை அடைந்தன.26 அவர் இலங்கையின் நில ஒருமைப்பாடு, இறைமை போன்றவைகளை மட்டுமே தனது உரைகளில் குறிப்பிட்டி ருந்த போதிலும், ஆயுத பரிமாறல் பற்றிய இரகசிய பேச்சுவார்த் தைகளும் இடம் பெற்றன என்பதில் சந்தேகமில்லை.

அரச பயங்கரவாதமும் போராளிகளும் () 195
8.3.6. ஆயுதக் குவிப்பு
இலங்கை பல நாடுகளிடமிருந்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது. ஆயுதங்களை குவிப்பது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது, பல ஹெலிகொப்டர்கள், விமானங்கள், கவச வாக னங்கள், துப்பாக்கி படகுகள், இதர வகை ஆயுதங்கள் அனைத் தும் வாங்கப்படுகிறது. அத்துடன் தென் கொரியா, பெல்ஜியம், பிரிட்டன், அமெரிக் கா, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடு களில் உள்ள தனியார் கம்பெனிகளோடு ஆயுதக் கொள்வனவிற்காக தொடர்பு கொண்டுள்ளது. தென் ஆபிரிக்காவிலிருந்தும் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இராணுவ நடவடிக்கைக்கான வாகனங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை.
கடற்பரப்புகளை மேற்பார்வையிடும் விமானங்களையும், 22.மி.மி துப்பாக்கிகள் பூட்டிய (DACUR) டாகுர் வகுப்பு பாதுகாப்பு படகு களையும், 50 கலிபர் யந்திரத் துப்பாக்கிகளையும், கலில், (Gali) 5.56 மி.மீ. தாக்குத் துப்பாக்கிகளையும், உசி (Uzi) சிறு யந்திர துப்பாக்கிகளையும், கைக்குண்டுகளையும், கண்ணி வெடிகளையும் எலெக்ட்றோனிக் சர்வெய்லன்ஸ் சிஸ்ரமையும் (Electronic Surveiance System) இஸ்ரேல் கொடுத்திருக்கின்றது.27
1984.8.12லும் 1984.9.3லும் தென் ஆபிரிக்கா விமானம் பெருந் தொகையான ஆயுதங்களையும் ஏவு கருவிகளையும் கட்டுநாயக்கா விமான நிலயத்தில் இறக்கிற்று. 1985.2.8ல் இலங்கைக்குரிய ஆயுதங்களோடு போர்துக்கேய விமானம் ஒன்று திருவனந்தபுரம் (இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ளது) விமான நிலயத்தில் திடீரென இறங்கியபோது சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்த ப்பட்டிருந்தது. பின்பு அதனை இலங்கை செல்ல இந்திய அரசாங்கம் அனுமதித்து விட்டது.*
1984ம் ஆண்டு ஆரம்பக் கட்டத்தில் இலங்கை அரசாங்கம் இஸ் ரேலிடம் இருத்தும் பிரிட்டனிடமிருந்தும் இரு துப்பாக்கிப் படகு களை வாங்கியது. ஒன்றரைக் கோடி டொலர் பெறுமதியுள்ள 12 அமெரிக்க தயாரிப்பு பெல்ஜெட் றேஞசர் (Bell Jetranger) ஹெலி கொப்டர்களை சிங்கப்பூரிடமிருந்து முன்வேண்டுதல் செய்தது. அவை கொடுக்கப்பட்டும் விட்டன. பின்பு 9 பெல் ஹெலிகொப்டர்களையும் சிங்கப்பூரிடமிருந்து பெற்று துப்பாக்கிகளையும் பூட்டிக் கொண்டது.

Page 113
196 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
1984ம் ஆண்டு மார்கழி மாதம் மீண்டும் சிங்கப்பூரிடமிருந்து 3,600 dwt படகுகளையும் வாங்கிக் கொண்டது.29
1985ம் ஆண்டு வைகாசி மாதம் இஸ்ரேலிடமிருந்து ஆறு டுபார் (Dubar) கரையோரப் படகுகளை வாங்கிக் கொண்டு அவர் களைக் கொண்டே படகுகளை இயக்க இலங்கையர் சிலருக்கு பயிற்சியும் அளிக்கபபட்டது. இந்த 40kt படகுகளில் ஏவுகணைகளும் பூட்டப்பட்டுள்ளன. திருகோணமலை டொக்யாட் தளத்தில் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு ஏவுகணைகளை இயக்குவதற்கு இரண்டு இஸ்ரேலியர்களால் பயிற்சியளிக்கப்பட்டது. மேலும் பத்து மேற் பார்வை படகுகளை பிரித்தானிய நாட்டின் செளதாம்டனிலுள்ள கௌகார் ஹோல்டிங்ஸ் (Cougar Holdings) கம்பனியிடம் இருந் தும் இலங்கை வாங்கியுள்ளது.80
25 பவுண்டர் தள பீரங்கிகள் (கனமானதும் இடைக் கனமுள்ளதும்) 130 கிலோ மி.மீ. நடுத்தர பீரங்கிகள், றொக்கட் ஏவும் கிரனேடு கள், 10,000 எனக் கணிக்கப்படும் சிறு ஆயுதங்கள் (றைபிள்ஸ், இலகு யந்திர துப்பாக்கிகள், மோட்டார்கள்) எல்லாம் பாகிஸ்தான் இலங்கைக்கு கொடுத்திருக்கின்றது. ஆறு துப்பாக்கிகளைக் கொண்ட ஹெலிகொப்டர்களையும் கொடுக்க விருப்பதாக அறியப்படுகின்றது.8
1985ம் ஆண்டில் தென் ஆபிரிக்காவிடம் இருந்தும் இஸ் ரேலிடமிருந்தும் இலங்கை 150 கவச வண்டிகளையும் இராணுவத் தினரை கொண்டு செல்லும் வாகனங்களையும் வாங்கியது. ஆகாயத் திலிருந்து சுட்டுக் கெலிக்கவைக்கும் ஆறு (SIA) மார்செட்டி விமானங் களும் பாதுகாப்பு மேற்பார்வைக்காக 6 செஸ்னா (CESSNA) 337s விமானங்களும் இத்தாலியிடமிருந்து பெறப்பட்டன. இந்த வருடம் 50 ரோந்து படகுகளும் 40,000 நிலக் கண்ணி வெடிகளும் வாங்
கப்பட்டன.??
ஆயுதங்கள் குவிக்கப்படுவது தொடர்ந்து கொண்டே போகின் றது. நாட்டின் அபிவிருத்தியை பொருட்படுத்தாமலே அரசாங்கம் இதற்கென ஏராளமான பணத்தை வாரி இறைக்கின்றது.
8.4. கட்டுப்படுத்தப்பட்ட வலயங்கள்
தரையிலும் அதனை அடுத்துள்ள கடல் பரப்பிலும் மக்கள்
போய் வருவது தடையெய்யப்பட்டுள்ளது. இதனால் இராணுவத் தினர் சுதந்திரமாகப் போய்வந்து தட்டிக் கேட்பார் யாருமின்றி

அரச பயங்கரவாதமும் போராளிகளும் () 197
எவரையும் கொல்லவோ சித்திரவதை செய்யவோ முடிகின்றது. இராணுவத்தினரது பாதுகாப்பிற்கும் வட, கிழக்கிலுள்ள தமிழ் மக் களை பொருளாதார ரீதியாக நசுக்குவதற்கும் இது வசதியளிக் கின்றது. மீனவர் தொழில் செய்ய முடியாது. மேலும் எத்தனையோ தடைகள் தமிழ் மக்கள் மீது திணிக்கப் பட்டுள்ளது.
8.4. 1. தடைசெய்யப்பட்ட வலயம் உள்ளடக்குவன (Prohibited Zone)
அ. இது பெருக்கு ஏற்படும் காலங்களில் கடலுள் இருந்து தரைக் குள் நூறு மீட்டர் கொண்டதும், வற்றும் காலங்களில் தரையில் இருந்து கடலுள் ஐந்து மைல் தொலைவு கொண்டதுமாகிய கொக் கிளாய் குதிரமலை முனையோடு கிழக்கு வடகிழக்கு வடக்கு, நெடுந்தீவிற்கு மேற்கே தலைமன்னார் கரையிலிருந்து மேற்கே ஐந்து மைல் தொலைவில் தெற்கு நோக்கி குதிரமலை முனையின் மேற்கு வரையிலுள்ள கடற் பிரதேசத்தை உள்ளடக்கும்.
ஆ. யாழ்ப்பாண லகூன் (Lagoon) கடல்.
இ. பொன்னாலையில் இருந்து பருத்தித்துறை வரையுள்ள 25, மைல் தொலையுள்ள தெரு.38
8.4. 1. தடைசெய்யப்பட்ட வலயம் - விதி ஒழுங்கு
விதி ஒழுங்கு 4A84 மட்டுப்படுத்தப்பட்ட மீன்பிடித் தொழிலுக்கு இடமளிக்கின்றது. நிபந்தனைகள் பின் வருமாறு: அ. மு.ப. 4 தொடக்கம் பி.ப 4 மணிவரை மட்டுமே மீன் பிடிக்கலாம். ஆ. மு. ப. 4 தொடக்கம் பி.ப. 5 மணிவரை மட்டுமே மீன்பிடி வள்ளங்கள் கடலுக்குச் செல்லலாம்.
இ. மோட்டார் படகுகள் 11 குதிரை சக்திக்கு மிஞ்சியதாக இருத் தல் கூடாது.
ஈ. மீனவர் தொகை 1. மோட்டார் படகுகளில் 3 பேருக்கு மிகையாமல்,
2. இயந்திரப் படகுகள் 4 பேருக்கு மிகையாமல்,

Page 114
198 ) பெளத்த சிங்கள்வரும் சிறுபான்மையினரும்
8.4.1.2. மூன்றாம் கட்டளை அடுக்கு
அ) குதிரமலை முனையைத் தொடும் கடற்பரப்பு, காரைத்தீவு வடக்கின் முடிவு நடுக்குடாவும் அரிப்பு சிலுவத்துறைக்கு ஊடாக குதிரமலை முனைவரை செல்லும் மன்னார் மாவட்ட கடற்கரை.
ஆ) மன்னார் தீவின் மேற்கு தொங்கலில் இருந்து நடுக்குடாவரை, மன்னார் தீவுக்குத் தெற்கேயுள்ள ஒரு கடற்பிரயாண மீட்டர் வரை யுள்ள கடற்பாதை.
8.4. 1.3 ஆ பகுதி
1) பேசாலை, கேரதீவு, ஐலன்ட் பீக்கன், புங்குடுதீவு வெளிச்சவீடும்,
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களது கடற்கரை, கல்முனை, டெவல்ஸ் பொயின்ட் (Devis Point) விடத்தல் தீவி லிருந்து பேசாலை வரையுள்ள கடல் பரப்பைக் கொண்டது.
2) மன்னார் தீவின் மேற்கு எல்லையிலிருந்து பேசாலை வரை, மன்னார் தீவின் வடக்கு கடற்கரையோடு வடக்கை நோக்கி ஒரு கடற்பிரயாண மீட்டர் கடற்பாதை.
3.4.1.4. முல்லைத்தீவு வெளிச்ச வீட்டுக்கும் கொக்கிளாய் லகூனுக் கும் இடையேயான கடல் எல்லை, கரையோரப் பகுதியிலிருந்து ஏறக்குறைய 3 கடல் பிரயாண மைல்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள் ளது.84
8.4.2. யாழ்ப்பாண பாதுகாப்பு வலயம்
யாழ்ப்பாண பாதுகாப்பு எல்லை என்பது இராணுவ முகாம் அடங்கியுள்ள யாழ்ப்பாணக் கோட்டையைச் சுற்றி 1000 மீட்டர் விட்டதைக் கொண்டதாகும். (இதனைப் போன்றே வடக்கிலுள்ள இராணுவ முகாம்களைச் சுற்றியும் பாதுகாப்பு வலையங்கள் அமைக் கப்பட்டுள்ளன). பின்வரும் நிறுவனங்கள் (வேறு கட்டிடங்கள், நிறு வனங்கள் உட்பட) அதனுள் அடங்கும்.
எட்டு ஆஸ்பத்திரிகள் (யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரி உட்பட)? 9 பாடசாலைகள், மாநகரசபை அலுவலகம், மத்திய பேருந்து நிலையம்? கோவில்கள், 2120 கடைகள், 2681 வீடுகள், கூட்டுறவு தாபனம், தபால் கந்தோர், தொலைப்பேசி நிலையம் சந்தை, பொது நூல் நிலையம், பிரதேச போக்குவரத்துச் சபை, புகையிரத நிலையம், வங்கிகளது பிரதான கிளைகள், பெரும்பாலான

அரச பயங்கரவாதமும் போராளிகளும் () 199
அரசாங்க அலுவலகங்கள். உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மஜீஸ்ட்றேட் நீதிமன்றம் ஆகியன.
இந்த வலயத்துள் போக்குவரத்து கட்டுப்படுத்தப் பட்டதனால் 52,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோட்டையிலிருந்து எங்கு வேண்டுமானாலும் சுடும் அதிகாரம் உட்பட பாதுகாப்புப் படை யினர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரம் வளங்கப்பட் டுள்ளது.
8.4.3. 560bTé5/T600fllJL| 6216bulb (Surveiliance Zone)
கண்காணிப்பு பிரதேசம் என்பதும் பிரகடனப்படுத்தப் பட்டுள் ளது. சுண்டிக்குளம் தொடக்கம் தலைமன்னார் வரை வட கிழக்குக் கரை, வடக்குக் கரை நெடுந்தீவோடு தொடங்கி தலைமன்னார் வரையுள்ள மேற்குக் கரையிலிருந்து ஐந்து மைல் தொலைவிலுள்ள கடல் விஸ்தீரணத்துள் இப்பிரதேசம் அடங்கும்.
8.4.3. 1. நாட்டின் அதிகாரத்துக்குட்பட்ட கடல் வலயம்
இது கண்காணிப்பு பிரதேசத்தின் புறப்பகுதியையும் இந்திய இலங்கை கடல் எல்லையை உட்படுத்துவதோடு ஏனைய பகுதி களில் ஆதிக்கத்துக்கு உட்பட்ட கடற் பகுதியையும் உள்ளடக்குவ தாக உள்ளது. இங்கு, அ. தோணியிலோ கப்பலிலோ கண்காணிப்புப் பிரதேசத்துக்குள் எவரும் உட்பிரவேசிக்க இயலாது. அப்பிரதேசத் துள் எவரும் நடமாடவும் முடியாது.
ஆ. இலங்கை இராணுவத் தளபதி அல்லது அவர் நியமித்த அதிகாரியினது எழுத்தில் கொடுக்கப்பட்ட அனுமதியோடு அல்லாது எவரும் தோணியிலோ கப்பலிலோ நாட்டின் ஆதிக்கத்துக்குட்பட்ட கடற் பிரதேசத்துள் பிரவேசிக்கவோ அல்லது அங்கு நடமாடவோ முடியாது.
இ. கண்காணிப்பு பிரதேசத்துள் அல்லது யாழ்ப்பாண, கிளி நொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள எவ ராயினும் 15 குதிரை சக்திக்கு (Horse Power) மேல் உள்ள மோட் டார் படகை வைத்திருக்கவோ பயன்படுத்தவோ முடியாது.8

Page 115
200 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
8.4.4. நாட்டின் ஆதிக்கத்துக்குட்பட்ட வலயம்-அதன் விஸ்தீரணம்
இது பருத்தித் துறை தொடக்கம் கோமாரி வரை இலங்கையின் ஆதிக்கத்துக்குட்பட்ட கடற் பிராந்தியத்தைக் கொண்டதாகும்.
பருத்தித்துறை தொடக்கம் கோமாரி வரை இலங்கையின் ஆதிக் கத்துக்குட்பட்ட கடற் பிராந்தியத்தைக் கொண்டதாகும். பருத்தித் துறைக்கும் கோமாரிக்கும் இடையே மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட கடற்பகுதிகள் :
அ. குடர்புக் கிராமதித்லுள்ள புனித மேரி திருச்சபைக்கும் மருதங் கேணியிலுள்ள புனித அந்தோனியார் திருச்சபைக்கும் இடையேயுள்ள கடலுக்குள் 3 மைல் தொலைவு வரை.
ஆ. முல்லைத்தீவின் வெளிச்ச வீட்டிலிருந்து தெற்கே கல்லுறுவ திரியாய் கிராமங்கள் வரை கடலுக்குள் 3 மைல் தொலைவு வரை.
இ. எலிசெபத் முனையிலிருந்து (சல்லி சாம்பல் தீவு கிராமங்கள்) கெவுளியா வெளிச்ச வீடு-இதனுல் திருகோணமலையை அணுகும் பகுதிகளும், பாக்குடா, டச்சுக் குடா, கொட்டடியார் குடா, முதலிய வை அடங்கும். இவற்றில் இருந்து கடலினுள் 3மைல் தொலைவில் உள்ள கடற் பரப்பு.
ஈ. பனிச்சங்கேணி, தன்னித்தீவு தொடக்கம் வெண்டலூஸ் குடா வில் உள்ள பெரிய வட்டுவன் கிராமம் வரை கடலினுள் 3மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பு.
உ. கல்லாரில் இருந்து தெற்கே கல்முனை, காரைதீவு கிராமங்கள் வரைக்கும் கடலினுள் 3மைல் தொலைவில் உள்ள கடற் பரப்பு.
ஊ. பாலமுனை பனையாட்டிப்பிட்டி கிராமங்களில் இருந்து தெற்கே அக்கரைப்பற்று பட்டணம்வரை கடலினுள் 3மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு
8.4.5 பிரவேசிக்க முடியாத வலயங்கள் (No Go Zones)
1985ம் ஆண்டு ஐப்பசி 16ம் திகதி ஒதுக்கிய 72 காடுகளை பிர வேசிக்க முடியாத வலயங்கள் என அவசரகால ஒழுங்கு விதிகளின்

அரச பயங்கரவாதமும் போராளிகளும் () 201
கீழ் இலங்கை அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டது, உட்பிர வேசிக்க முடியாத பகுதிகளென்பவை 38 காடுகளையும், 20 வன விலங்கு பாதுகாப்பு வலயங்களையும், 14 தேசிய பூங்காக்களையும் கொண்டவை. பிரவேசிக்க முடியாத பகுதிகள் என்பவை 13 மாவட் டங்களுள் அடங்கும், வடக்கு கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரை பின்வருவோர் தகுதிவாய்ந்த அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்
856IT :
யாழ்ப்பாணம் - பிறிகேடியர் எச் வணசிங்க வவுனியா - பிறிகேடியர் எஸ். எம். ஏ. ஜய
வர்த்தணு முல்லைத் தீவு - லெப்டினன்ட் கர்னல் சி. என்.
அகங்கமா மன்னுர் - லெப்டினன்ட் கர்னல் என். ஜி. ஏ.
எல். சீ. டி. எஸ். விஜேசேகர கிளிநொச்சி - மேஜர் பி. திலகரத்ன திருகோணமலை - கடற்படை காப்டன் ஜே. ஜயசூரியா மட்டக்களப்பு - பொலிஸ் சுப்ரிண்டண்டன்ட்
டி. ஏ. பக்கீர் அம்பாறை - லெப்டினன்ட் கர்னல் என். சி. எம். எம். விக்ரமரத்ன
இத்தடைகள் மூலமாக தமிழ் மக்களை சரணடையச் செய்யலாமென அரசாங்கம் கனவு கண்டது. தமிழர்களது பொருளாதாரம் இதனால் சீர்குலைக்கப்பட்ட போதும் அவர்கள் சரணாகதியடைந்ததாகத் தோன்றவில்லை. இத்தகைய தடைகள் பாதுகாப்புப் படையினரின் மனப் பயத்தை எடுத்துக் காட்டுவதாகவே கருதவேண்டியுள்ளது. ஒருவிதத்தில் இது பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பிற்கே உரு வாக்கப்பட்டது எனக் கூறினுல் மிகையாகாது. ஏனெனில் இத்தடை கள் மூலமாக தமிழ் மக்களையோ, போராளிகளையோ வென்றதாக இல்லை. நாட்டின் பொருளாதாரம் தாக்கப்பட்டு நடுத்தர, கீழ் மட்டத்து சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டதே இதன் விளைவாக அமைந்தது.
8.5. FF ypů (GUIT UT IT6tifi8îr Lučistsib (Armed Eelam Organisations)
தமிழ் மக்களது விடுதலைப் போரட்டத்தின் ஒரு பிரிவினரா அல்லது அறம் மறுக்கும் சிறு நெறியினரா ?

Page 116
202 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
ஈழப் போராளிகள் இயக்கங்களின் கொள்கைகளும், நிருவாக அமைப்புகளும் கையாண்ட அரசியல் சாணக்கியமும் ஆராயுமிடத்து, அவற்றுள் இயல்பாகவே எழக்கூடிய குறைபாடுகளை காலத்தோடு உணர்ந்து நிவர்த்தி செய்யாவிடில், இக்கட்டான நிலைக்கு இழுத்துச் செல்வதாகவே அறிகுறிகள் இருந்தன. இவற்றேடு இணைந்து உருவாகக் கூடிய அரசியல் அலட்சிய நிலை, தமிழ் மக்களது விடு தலைப் போராட்டத்தையும் பின்வாங்கச் செய்வதாகவே இருந்தது.
8.5.1 ஜனநாயகப் போராட்டமா ?
தலைவர்களோ, அரசியற் பொருளாதாரத் துறையின் விதிகளை, விஞ்ஞான பூர்வமாக உணர்ந்தவர்களாக இருக்கவில்லை. இதனுல் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை குறிக்கோளற்றதாக திசை திருப் பும் போக்கிற்கு விரைந்து தம்மை பலியாக்கிக் கொண்டார்கள். அரசியல் சித்தாந்தமற்ற சூழலில், ஆயுதம் தாங்கி நிற்பதையே பெரு மிதப்படுத்தியதோடு சமூகமும் காட்டுமிராண்டி தனத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. அரசியல் சுதந்திரமும் ஆயுதத்திற்கு பணிய நேரிட் டது. இதனுல் போராட்டத்தை ஜனநாயக கோட்பாடுகளின் அடிப் படையில் இயக்குவதற்கும் பெருமளவில் இடமில்லாது போயிற்று. ஆயுதப் போராட்டத்தினின்றும் மக்களும் ஒதுங்கிக் கொண்டனர். வெகுஜன இயக்கம் வளருவதற்கும் மாற்று அரசியல், சமூக நிருவாக நிறுவனங்கள் உருவாகுவதற்கும், சமூகத்தில் நீதி வழங்கி ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், கையாண்ட கொள்கைகள் தடையாக இருந் தன. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தென் மேற்கு ஆபிரிக்க மக்கள் இயக்கம் ஆசியவற்றின் தரத்தினையும் மதிப்பினையும் ஒத்த எந்த விஞ்ஞான ரீதியாக இயக்கப்படும் விடுதலை இயக்கங்களும் பெறும் அனுதாபத்தையும் ஆதரவையும் ஒப்பிடுகையில், ஈழப் போராளிகளது இயக்கங்கள் சர்வதேச ரீதியாகவும் விலத்தி வைக்கப் பட்டவையாக வே இருக்கின்றன.
இன்று ஏற்பட்டுள்ள நிலை சீரானதல்ல என்பதனை விடுதலைப் போராட்டத்தை அவதானித்து வந்தவர்கள் எவரும் மறுக்கமாட்டார் கள். போராளிகளது இயக்கங்கள் கையாண்ட சிறுபிள்ளைத்தன மானதும், குளறுபடியானதும், அரசியலல்லாத வெறுமனே பிழையான மார்க்கமானதுமே சீர்குலைவு அடைவதற்கு உரியதாக இருந்தன என்பதையும் மறுக்கமாட்டார்கள்.
8.5.2 மக்களின் பங்கு?
ஆரம்பக் கட்டத்தில், குறிப்பாக 1983-ம் ஆண்டு ஆவணி மாத வன்செயல்களுக்கும் 1985-ம் ஆண்டு மார்கழி மாதத்திற்கும் இடையில்,

அரச பயங்கரவாதமும் போராளிகளும் () 203
தமிழ் மக்களது ஆதரவை போராளி இயக்கங்கள் பெற்றன என்பது உண்மைதான். தன்னலமற்ற வகையிலும் பெருமை படத்தக்க வகை யிலும் மக்கள் ஒத்துழைக்க முன் வந்தார்கள். அவ்வாறு இருந்தும் பொது மக்களுக்கும் போராளிகளது இயக்கங்களுக்கும் இடையே அனுதாபமும் ஒத்துழைப்பும் வளருவதற்குற்குரிய ஸ்திர உறவுக்கு இடமில்லாது இருந்தது. இன்று அந்த இடைவெளி அகன்று சென்று கொண்டிருப்பதையே நாம் காண்கிருேம்.
அதே வேளை மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டணித் தலைமைப் பீடத்திற்கும் போராளி இயக்கங்களுக்குமிடையே ஏற்பட் டுள்ள பிளவுகளும் அதே அளவு வெளிப்படையாக தென்படுகின்றது. ஆயுதங்களைக் கொண்டு அரசியல் விடயங்களுக்கு உடன்பட வைப் பதும் அடிக்கடி நிகழத் தொடங்கியதும் நிலைமை மேலும் மோச மடையத் தொடங்கிற்று எனலாம். இதனுல் மக்கள் கலக்கமடைந் தார்கள். காலஞ் செல்லச் செல்ல எல்லையை மிஞ்சுகிரார்கள் எனும் உணர்வே மக்கள் மத்தியில் வேரூன்ற ஆரம்பித்தது.
தமிழ் மக்களது தேசிய விடுலைப் போராட்டத்தின் இயக்கங்கள் என்றும் தாமே அதன் தலைவர்கள் என்றும் கூறிக்கொண்டு தன்னிச் சையாக செயல்படுவதில் போராட்டத்தை விஞ்ஞான ரீதியாகவும், கட்டுப்பாட்டுடனும் நடத்தத் தவறிவிட்டார்கள். இதனுல் மக்களது நம்பிக்கையை பெறத் தவறியதோடு நாட்டிலுள்ள அரசியல் கட்சி களதும் முற்போக்கு பகுதிகளதும் ஆதரவையும் பெற இயலாதவ ராகி விட்டனர்.
8.5.3 உலக தேசிய விடுதலை இயக்கங்கள்
பல தேசிய விடுதலை இயக்கங்கள் முன்னர் கண்டு அனுபவித்த நிலை போன்று ஈழப் போராளிகளது இயக்கங்களுக்கும் தமது தலைமை பீடத்தை அந்நிய மண்ணில் நிறுவ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தஞ்சம் கொடுத்த நாட்டின் வெளிவிவகார கொள்கை யோடு தன்னும் எவ்வித இசைவினை ஏற்படுத்த வேண்டும் என்பது உணராது, இதற்கு நேர்மாருன வகையில் அங்குள்ள உள்நாட்டு அரசியல் போட்டிகளோடும் தம்மை சிக்கவைத்துக் கொண்டார்கள். தமக்கு இவ்வித தொடர்புகளினுல் ஏற்படக்கூடிய ஆபத்தான விளை வுகளை உணராதவர்களாகவே இருந்தார்கள். உள்நாட்டு அரசியல் போட்டிகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தலாமெனப் பகற் கனவு கண்டார்கள். இதனுல் பரஸ்பர நல்லுறவு கைகொடுக்கும் மனப் பான்மை எல்லாம் எழுவதற்கு பதிலாக அவநம்பிக்கையையும்,

Page 117
204 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
சந்தேகங்களையும் கலந்த வகையில் ஒருவரையொருவர் கருவியாக்கிக் கொள்ளும் நிலையே உருவாயிற்று.
உலகில் புகழ்பெற்றுள்ள விடுதலை இயக்கங்களுக்கு ஆணிவேராக உள்ள மாக்ஸிச லெனினிச விஞ்ஞான பூர்வமான கொள்கைகளே தமது கொள்கைகளாக அமைந்துள்ளன எனக் காட்டிக் கொள்ள முயல் வதுப் ஏற்கத்தக்கவையாக இல்லை. இவ்வித போர்வைகளில் தாம் காட்சியளிக்க எத்தனிப்பதும் அவநம்பிக்கையை வலுப்படுத்துவ தாகவே இருக்கின்றன. மேலும், இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது சுயநலங்களை வளர்க்க முயலும் சக்திகள் இவர்களை தம் கருவி யாக்கிப் பயன்படுத்திக் கொள்ளவும் இப்போக்குகள் உதவக்கூடியன வாக இருக்கின்றன. வல்லரசுகள் சார்பற்ற மூன்ரும் உலக நாடு களின் முன்னிலையில் நின்று பாரதநாடு பணியாற்றுவதையும், அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என சோவியத் நாடு விடுத்துள்ள வேண்டுகோளை தீவிரமாக பாரதம் ஆதரிப்பதையும், அண்மையில் ஐ. நா. சபையும் ஏற்றுக்கொள்ளும் அளவில் சமாதானத்தை விரும் பும் சோவியத் மக்களோடு பாரதம் நட்புறவை மீண்டும் உறுதிப் படுத்தியதையும் கண்டு இச்சக்திகள் வெறுப்படைகின்றன. தென் ஆசியாவில் சீரழிவுகளை ஏற்படுத்துவதன் மூலம் இப்போக்குகளை மாற்றியமைக்கலாம் என்றே முனைகின்றனர். ஆகவேதான், ஈழப் போராளிகளது இவ்வித புரளிப் போக்குகளை தமக்கு சாதகமாக்கி, தமிழ் நாட்டிலும் அரசியல் சீரழிவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு என உணரத் தவறமாட்டார்கள் என்பதும் தெளிவாகின்றது. ஆயுதம் தாங்கிய இளைஞர்களது அரசியல் சிறுபிள்ளைத்தனத்தை நோக்குமிடத்து, இப்பிராந்தியத்தில் குளறுபடிகளை ஏற்படுத்தி வைக்க திட்டமிடும் அந்நிய சக்திகளோடு ஒத்துழைக்க தாம் விரும்பா விட்டாலும், வரலாற்றின் போக்கு இவர்களை அச்சக்திகளின் கருவி களாகவே மாற்றிவிடும்.
8.54 அரசியலும் போராளிகளும் ?
ஈழப் போராளிகள் இயக்கங்களின் தலைவர்களது அரசியல் ஞானத் தின் தரமும் போராட்டம் சீரழிவதற்கு பெரும் காரணமாக இருந்தது. எனலாம். அரசியல் ரீதியாக பிரச்சனைகளை அணுகாதது நன்மைகே என தலைவர்களின் அறியாமையை ஒருவராகுதல் வெளிப்படை யாகவே தெரியபடுத்தியுள்ளார். தேசிய விடுதலைக்கு அரசியல் தத்துவம் என்பது இடையூருகவே இருக்கும் எனத் தான் கருதுவதைக் காரணமாக காட்டி அது ஒரு நல்ல விடயமென்றும் தன்னைத் திருப் திப்படுத்திக் கொண்டார். ஏனையோரும் புரட்சிகர கட்சிகளில்

அரச பயங்கரவாதமும் போராளிகளும் 0 205
அல்லது வெகுஜன இயக்கங்களில் பங்குபற்றிய அனுபவம் இல்லாது தம் அரசியல் அறியாமையையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின் றனர். அண்மைக்கால சம்பவங்களைக் கொண்டு தென்னிலங்கையின் சிங்களப பெரும்பான்மையோர் மத்தியிலுள்ள ஒரு பகுதியினரோடு உறவுகள் ஏற்படுவதும் ஊகிக்கக்கூடியதாக இருக்கின்றது. இவர் களும் புரட்சியாளராக மாறிய நிலப் பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராகக் கொண்டு திட்டம் ஏதேனுமின்றி தோல்வி யையே விளைவாக்கும் ஆயுதப் போராட்டம் ஒன்றை 1971ம் ஆண்டு நடத்தியவர்களுள் தப்பிப் பிழைத்தவர்களும் அவர்களது ஆதரவாளர் களும் ஆவர்.
தமிழ் மக்களிடையே இளம் சந்ததியினர் ஆயுதம் தாங்கி போராட தீர்மானித்தது இலட்சியம் நிறைந்தது என்பதை மறுக்கவில்லை. போர்களத்திலும் தம் தியாக உணர்வையும் வீரச் செயலையும் நிருபித் திருக்கிருர்கள். ஆணுல் மன உறுதியும் இலட்சியமும் மட்டும் போதாது என்பதை வரலாறு காலந் தொட்டு மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே வந்துள்ளது. விஞ்ஞான ரீதியாக தயாரித்த திட்டமும் போராடும் இராஜ தந்திரமும் அவற்றை நடைமுறைப் படுத்த ஜனநாயக ரீதியான அமைப்புள்ள அரசியல் கட்சி ஒன்றை கை விட்ட நிலையில் இவை ஒரு மாற்று வழிமுறையாக வெற்றி ஈட்டித் தரவல்லன அல்ல.
தமிழ் மக்களிடையே செயற் திட்டங்களை விஞ்ஞான பூர்வமாக தயாரிக்கும் நிதான சக்தியொன்று உருவாக வேண்டிய அவசியம் தெளிவாகிக்கொண்டே வருகின்றது. போராளிகளது இயக்கங்கள் தமது திட்டங்களை இவ்வாறு எழும் சக்திக்குட்படுத்தி உருவாக்கப் படும் மாற்று அரசியல் நிறுவனங்களுக்கு ஊடாக மக்களின் தலை மைக்குள் கட்டுப்படாதுவிடில் இன்று நடைபெறும் கிளர்ச்சியானது தமிழ் மக்களது பகைமையையே தேடியதாகிவிடும். சர்வதேச அரங் கிலும் செல்வாக்கை இழக்க நேரிடும். தஞ்சம் புகுந்த அண்டை நாடாகிய இந்தியாவிலேயே உறவுகள் மங்கிக்கொண்டே வருகின்றன. இவ்வித காரணங்கள் காலப்போக்கில் ஒன்று சேர்ந்து இயக்கங் களையே முழுகையாக சீர்குலைத்துவிடும். ஆயுதம் தாங்கிய சிறு சிறு குழுக்களாகவே எஞ்சி நிற்பவர். மக்களை இம்சைபடுத்தும் கூட்டங் களாகவே மாறுவர்.
அரசியல் துறையில் அதிகாரம் கைப்பற்றபடுவதும் தீர்மானங்கள் எடுக்கப்படுவதும் அவை ஏற்படுத்தும் விளைவுகளும் தாக்கங்களும் என்பனவற்றை தாமே படித்து உணர விரும்பாத இயக்கங்கள்,

Page 118
206 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
மக்களை அரசியல் ரீதியாக வளர்க்க முயலாதது வியக்கத்தக்க ஒரு காரியமல்ல. இவ்வித முயற்சியில் ஈடுபட்டவர்கள் எனக் கூறினுலும் இவர்களே அரசியல் நடைமுறைகளை புரியாத நிலையில், மக்களைத் தயார் படுத்த எடுக்கும் முயற்சிகள் நோக்கங்களுக்கு மாருன விளைவு களையே ஏற்படுத்துவனவாக இருக்கும். இதன் விளைவாகவே மக்களும், அரசாங்கத்தின் இராணுவத்தினை விரட்டியடித்து தமிழ் பகுதிகளை மீட்பதில் ஈடுபடும் இயக்கங்களை வேண்டா வெறுப் பாகவே ஆதரித்தனர். மக்கள் தாம் இயக்கங்களோடு கொண்ட அனுபவத்தின் சாராம்சமும் இதுவேயாகும்.
8.5.6. இவர்களின் அணுகுமுறை
இயக்கங்கள் பிரச்சினைகளை அணுகும் முறை இவ்வாறு இருக் கையில், நிதி திரட்டுவதே பிரதானமாக இருப்பதும் இயல்பானதே. அரசாங்கமும் நுட்பமான நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தொடங்கியதும், இயக்கங்களும் அதற்கேற்ற வகையில் ஆயுதங்களை பெற நேர்ந்தது. பணத்தின் தேவையும் இதனுல் அதிகரித்துக் கொண்டே வர, இயக்கங்களும் கொள்ளை, பலவந்தமாக பறித்தல் கடத்தல், போதைப் பொருள் வியாபாரம் முதலிய சட்ட விரோத நடவடிக்கைளில் ஈடுபட முனைந்தனர். இவ்விதமாகப் பயங்கர பேர் வழிகளோடு தொடர்பு கொள்ளத் தொடங்கியதும் மக்களினின்றும் பிரிக்கப்பட்டார்கள். இதனுல் மக்களை அரசியல் ரீதியாக வளர்ப்பது என்பதும் முடியாத காரியமாயிற்று. மேலும், இயக்கத்து போராளி கள் தன்னும், பணம் தேடுவது ஒரு புறமாகவும் போர் புரிவது மறுபுறமாகவும் இருக்கையில் மக்களோடு தொடர்பு கொள்ளவும் அதன் வாயிலாக மாற்று அரசியல் நிறுவனங்கள் அமைத்து அவர்களை நெறிப்படுத்துவதற்கும் நேரமும் இல்லாது போயிற்று.
இதே அணுகுமுறைதான் இயக்கங்களுக்குள்ளும் கோளாறுகளை ஏற்படுத்தியது. உட்கட்சி ஜனநாயகம் இல்லாத காரணத்தால், ஆர் வத்தோடு இயக்கங்களில் சேர்ந்த அபிமானமுள்ள பல இளைஞர்கள் விரைவிலேயே விரக்தியடைந்தார்கள். தனி நபர் வழிபாடு வளர்ந் தது. கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்காது அவை தீவிரமாகவும் நசுக்கப்பட்டன. தட்டிக் கேட்டதன் காரணமாக அபிமானமுள்ள பல இளைஞர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெளியேற்றப்படுவதற்கு முன் இராணுவத்தினர் நடத்திய மிருகத்தனமான சித்திரவதை போன்று இம்சிக்கப்பட்டுள்ளனர்.
இயக்கங்களுக்கு இடையேயும் மோதல்கள் ஏற்படத் தொடங்கின. பயிற்சி பெற்ற பல இளம் தேசாபிமானிகள் இதனுல் உயிரிழக்க

அரச பயங்கரவாதமும் போராளிகளும் L) 207
நேரிட்டது. தம் பாரம்பரியப் பிரதேசங்களைக் காப்பதில் உயிரிழந்த இளைஞர்களது தொகை அளவு சகோதர இயக்கங்களினுல் இளைஞர் கள் உயிரிழக்க நேர்ந்தது என்ருல் ஏதோ திரித்துக் கூறப்படும் செய்தியாக இராது.
இவ்வித போக்குகள் கற்றறிந்து பக்குவம் அடைந்தோர் மத்தியில் இயல்பாகவே மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்கும். இவர்களும் போராட் டத்தினின்றும் முன்பாகவே அந்நியப்படுத்தப்பட்டு விட்டார்கள். இதற்கும் இரு காரணங்கள் இருந்தன. ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் அரசியல் அம்சத்தை பொருட்படுத்தாது போராட்டம் நடத்துவதை இவர்கள் ஏற்கவில்லை. இது தவறு என விமர்சிக்கும் வேளையில் மிரட்டப்பட்டதும் மற்றுமொரு காரணமாகும். துப்பாக்கி அவர்களுக்கு எதிராகவும் நீட்டப்பட்டது. ஒரு சிலர் இரவோடு இரவாக கொலையும் செய்யப்பட்டார்கள்.
புத்திஜீவிகள் இவ்வாறு அந்நியப்படுத்தப்பட்டதும் போராட்டம் சீரழிவதற்கு ஒரு காரணமாக இருந்தது. இவ்விதமாக விலத்தப் தப்பட்டவருள் முதியோரும் அடங்குவர். அவர்களது அரசியல் அணுகுமுறையில் சிங்களவரோடு கூடி வாழ்வதே மூலமாக இருந்தது எனக்கூறி தமிழ் மக்களை காட்டிக் கொடுத்தவர்களென சந்தேகம் எழுப்பினுர்கள். இதனின்றும், ஆதாரம் ஏதேனும் இல்லாத போதி லும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களை தேசிய விடுதலை போராட்டத்திற்கு துரோகம் விளைவித்தவர்கள் எனவும் குற்றஞ் சாட்டினார்கள். யார் துரோகி என்பதும் எவருக்கு எப்போது எவ் வாறு துரோகம் செய்தார்கள் என்பதும் விளக்கப்படுவதில்லை. நீதி யின் அடிப்படையில் விசாரணை ஏதேனுமின்றி விரும்பியவாறு குற்றஞ் சுமத்தி உயிர்களையும் பறித்துக்கொண்டார்கள்.
ஸ்தாபன ரீதியாக ஜனநாயகம் கையாளப்படாததால் இயக்கங் களில் பிரதேச ரீதியாகவும் பிரதிநிதித்துவம் பெற இடமில்லாது போயிற்று. இதனுல் குறிப்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தலைமை பீடத்தை தம் கைக்குள் வைத்திருப்பதாகத் தென்பட்டது. இதனுல் போதிய பிரதிநிதித்துவம் பெருத பகுதிகளில் அதிருப்தி ஏற்படத் தொடங்கியது. அனைவரையும் அணைத்து வைத்திருப் பதற்குப் பதிலாக, இது விடயமாக விமர்சித்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதோடு ஒரு சிலர் கொலையும் செய்யப்பட்டார்கள். பிரதேச ரீதியான அடக்கு முறைகளுக்கு இடமளித்ததனுலும் போராட் டம் இன்னும் வலுவிழந்தது.

Page 119
208 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
8.5.6. சர்வதேச தலையீடும் இயக்கங்களும்
இயக்கங்களுக்கு இடையே பிளவுகளும் குரோதங்களும் வளர வளர அந்நிய சக்திகளது தலையீடும் ஆரம்பிக்கத் தொடங்கின.
விடுதலைப் புலிகள் இயக்கமும் டெலோ இயக்கமும் தமக்குள்ளே நடத்திய பயங்கர மோதலோடு நிலைமை தெளிவாகின்றது (இதில் விடுதலைப் புலிகளே வெற்றியீட்டினர்கள்). டெலோ இயக்கத்தினர் மக்களை பல வழிகளிலும் துன்புறுத்தத் தொடங்கி, கொள்ளைகளி லும், பலவந்தமாக பணம் பறிப்பதிலும் ஈடுபட்டதும் விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பாக இருந்தது. தாக்குவதற்கு இதுவே காரணம் என்பததையும் அவர்கள் முழுமையாக நம்பியும் இருக்ககூடும். ஆனல் சொற்ப காலத்திற்கு முன்புதான், இலங்கைத் தமிழர்களை பாது காப்பதற்கென உருவாக்கப்பட்ட ஹிந்துஸ்தான் முன்னணியின் தலை வரான டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி நாடு கடத்தப்பட்டு அமெரிக் காவில் தஞ்சம் புகுந்திருக்கும் சீக்கிய தலைவரிடம் இருந்து தமிழர் களது விடுதலை இயக்கத்திற்கு அப்பிரிவினைவாதிகளது ஆதரவை தேடிக்கொண்டார் என்பதை அரசியல் அவதானிகள் பொருட்படுத் தாது இருக்க முடியாது. இச் செய்தி வெளியானதும் சீக்கிய இயக்கம் ஆதரவு தர முன்வந்ததை எல்லா இயக்கங்களும் மறுத்துவிட்டன. இவ்வித ஆதரவு தமக்கே தரப்பட இருப்பது என்பதை டெலோ மறுத்தது.
சீக்கிய பிரிவினைவாதிகள் டெலோவிற்கு ஆதரவு தர இருப்பது ஏற்கத்தக்கதாகாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. டெலோ இயக்கம் அழிக்கப்பட்டதில் இருந்து இதற்கு பின்னணியாக மாபெரும் திட்டமொன்று இருப்பதைக் காணலாம். இதற்கு பின்னுல் நின்று இயக்குபவர்கள் இக்கொலை செய்வித்த குற்றங்களில் இருந்து கைகளை கழுவிவிட்டு தொடர்ந்தும் சூழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். ஒரு சில காலமாக, நாட்டின் சிறுபான்மையினர் நடத்தும் போராட் டத்தில் ஜனநாயக சக்திகள் தலைதூக்குவதற்கு எதிராகவே, ஆயுதம் தாங்கிய போராளிகள் இயங்கி வந்திருக்கிருர்கள். இதனைச் சாட் டாக கொண்டு, விடுதலைப் போராட்டம் என்பது உண்மையில் பயங்கரவாதமே என ஜனதிபதி ஜயவர்த்தனாவும் கூறுவதற்கு வாய்ப் பாக இருந்தது. ஒரு சில ஆயுதம் தாங்கிய இயக்கங்களது சூழ்ச்சி களினுலும், அவர்கள் நிதி திரட்டக் கையாண்ட முயற்சிகளினாலும், தமது நிலையை நியாயப்படுத்த ஜயவர்த்தனா ஆட்சிக்கு வசதியாகி விட்டது. மக்கள் தமது அரசியல் அபிலாகூடிகளை நிறைவேற்று வதற்கென தம்மை தயார்படுத்திக் கொள்ளும் உரிமை தடுக்கப்படுவது.

அரச பயங்கரவாதமும் போராளிகளும் () 209
என்பது உலகெங்கிலும் உள்ள எந்த வொரு விடுதலை இயக்கத்திலும் காணமுடியாது.
நிக்கரகுவ மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக போர்புரியும் கொண்டிராஸ்", அங்கோலாவிலுள்ள யுனிட்டா (UNITA), மொசாம்பிக்கில் உள்ள எம். என். ஆர். (MNR) போன்று ஏகாதிபத்தியத்திடம் இருந்து உதவி பெறும் தேசத் துரோக இயக்கங் கள் மத்தியிலேயே இவ்வித மக்கள் விரோதப் போக்குகளைக் காணக் கூடியதாக இருக்கிறது. பத்து வருடங்களாக இயங்கி வருகின்ற போதும் உலகிலுள்ள பெரும் விடுதலை இயக்கங்களில் ஏதேனும் ஒன்றினதும் அல்லது எந்தவொரு நாட்டினதும் அங்கீகாரத்தை ஆயுதம் தாங்கிய ஈழப் போராளிகளது இயக்கங்கள் பெறத் தவறியதே நிலைமை தவருண போக்குடையது என்பதை தெளிவாக்குகின்றது. தமது ஆதிக்கத்துள் உள்ள பகுதிகளில், மக்களோடு இயக்கங்கள் கொள்ளும் உறவு முறைகள், இராணுவ ரீதியான பயங்கரத் தன்மை கொண்டதாகவே இருக்கின்றது. ஜயவர்த்தனா ஆட்சியின் அடக்கு முறைகளினின்றும் தம்மை மீட்டெடுப்பதைக் கைவிட்டு, தம்மை அடக்கி ஆளும் பயங்கர பூதமாகவே இயக்கங்கள் உருவம் எடுத் துள்ளன என்பதை வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்கள் உணர்ந்து வருந்துகிருர்கள். தமிழ் மக்களும், இயக்கங்களது காட்டிக் கொடுக் கும் போக்கு, அவர்கள் நடத்தும் கொள்கைகள், பணயக் கைதிகளாக் குதல் முதலிய செயற்பாடுகளினால் அஞ்சிய நிலையிலேயே வாழ் கிருர்கள். இவை எல்லாவற்றையும் விட இந்திய மக்கள் மத்தியில் நிலவி வந்த அனுதாபம் மங்கிக் கொண்டு போவதே குறிப்பிடத் தக்கதாக இருக்கின்றது. இயக்கங்களது போக்குகளைக் கண்டு அவர்கள் நடந்து கொள்வதில் இருந்து இதனை ஊகிக்கக்கூடியதாக இருக்கின்றது.
பாகிஸ்தானும், பங்களாதேஷாம் இந்திய வெளிவிவகார விடயங் களில் ஏற்படுத்திய அனுபவங்களைக் கொண்டு, தெற்கு எல்லை யிலும் இராணுவ சர்வாதிகார ஆட்சி உருவாகுவதின் ஆபத்தை இந்தியா நன்கு உணர்ந்து இருக்கும் என்றே கொள்ள வேண்டும்.
8.5.7. இந்தியா-நிலைமைக்கு ஏற்ற நடவடிக்கை
நிலைமை இப்படி இருக்க, இலங்கையின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, அங்கு நிரந்தரமான அரசியல் போக்குகளில் சிக்கிக் கொள் ளாது கை கழுவிவிடும் நோக்கோடு இந்தியா தன் நடுவர் நிலையை

Page 120
210 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
தீவிரப்படுத்தியுள்ளது. தஞ்சம் புகுந்துள்ள இலங்கையரது நடவடிக் கைகளையும் அவதானித்துக் கொள்ள முனைகின்றது.
ஆயுதம்தாங்கிய ஈழப் போராளி இயக்கங்களது கொள்கைகளா லும் நடவடிக்கைகளாலும் பெரும்பாலும் உருவாக்கப்பட்டுள்ள எல் லைக்குள் நின்று கொண்டு, தன் பிரதமர் இலங்கை அகதிகளுக்குக் கொடுத்த வாக்குறுதியை இந்தியா எவ்வாறு நிறைவேற்ற இருக் கின்ற தென்பது அவதானத்திற்கு உரியதாகின்றது.

ஒன்பதாம் அத்தியாயம் இனப்பிரச்சினையும்
இந்திராகாந்தியும் (1983-1984)
இலங்கையும், இந்தியாவும் பிரித்தானியர் ஆட்சியின் கீழிருந்து சுதந்திரம் பெற்றவையே. ஆனால் இந்தியாவின் சுதந்திர போராட் டமே இலங்கையின் சுதந்திரத்திற்கு வழி வகுத்தது எனலாம். சுதந் திற்கு முன் இரு நாடுகளுக்குமிடையே, விசேடமாக, வர்த்தக தொடர்புகள் நடைபெற்று வந்தன. எடுத்துக்காட்டாக இலங்கை இறக்குமதி செய்த பொருட்களுள் 50% மாக இந்தியாவிலிருந்தே பெறப்பட்டன. சுதந்திரத்திற்கு பின் இது படிப்படியாக குறைந்து விட்டது. சிங்கள அரசு. மேல் நாடுகளை நம்பி வாழத் தொடங்கியதே இதற்குரிய விளக்கமாக இருந்தது.
9.1. 1983ம் ஆண்டுக்கு முன்
1948ம் ஆண்டு மலையகத் தமிழர்களது பிரஜாவுரிமையை பறித் தெடுத்து நாடற்றவர்களாக்கியதும் அவர்களை இந்தியாவே பொறுப் பெடுக்க வேண்டுமென்பதை அன்று பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஏற்க மறுத்துவிட்டார். 1927ம் ஆண்டு இலங்கை விஜயத்தின் போது மகாத்மா காந்தி இம்மக்களைப் பற்றி குறிப்பிடுகையில் அவர் களை சிங்களவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் பாலில் சர்க்கரை கலந்தாற்போல் இனணந்து வாழ்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித் தார். ஆனால் சுதந்திரமடைந்த பின் இந்த இரு சமூகத்தவரது தொடர்பு நீரில் எண்ணெய் போலாகி விட்டது. 1962ம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரி (1 வருடங்கள்) சிறிமா பண்டாரநாயக்காவின்

Page 121
212 0 பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
வற்புறுத்தலுக்கு விட்டுக் கொடுத்து இம்மக்களை குத்து மதிப்பாக கணக்கிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த விடயத்தில் மலையக மக்களையோ இலங்கை வாழ் தமிழ் மக்களையோ அன்றி தமிழ் நாட்டு மக்களையோ கலந்தாலோசியாது இலங்கை அரசாங்கத் திற்கு விட்டுக் கொடுத்திருந்தார்.
இலங்கைத் தமிழருக்கும் பாக்கு நீரிணைக்கு அப்பால் தமிழ் நாட்டிலுள்ள 50 கோடி தமிழ் மக்களுக்குமிடையே உள்ள மொழி கலாச்சார உறவுகளை அறிந்திருந்த திருமதி பண்டாரநாயக்கா, தான் அதிகாரத்தில் இருந்த போது இலங்கையில் இயங்கி வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை தடை செய்தார். 1967ம் ஆண்டு தான் எதிர்க்கட்சியில் இருக்கையில், திரு. டட்லி சேனநாயக்காவையும் அதே நடவடிக்கையை எடுக்குமாறு வேண்டினார். 1976ம் ஆண்டு மீண்டும் பிரதமரானதும், இலங்கை தமிழரை தமிழ் நாட்டோடு தொடர்பு கொள்ளாது இருப்பதற்கு முயற்சி எடுத்தும் வந்திருந்தார். தமிழகத்தின் முதல்வராக இருந்த திரு. மு. கருணாநிதியின் இலங்கை வருகையை தடை செய்ததோடு இந்தியாவிலிருந்து விருந்தினராக வந்த இரா. ஜனார்தனனையும் நாடு கடத்தினார். தமிழ்நாட்டு பத்திரிகைகள், சஞ்சிகைகள், திரைப்படங்கள் இலங்கைக்கு இறக்குமதி யாவதை ஆரம்பத்தில் கட்டுப்படுத்தி அதனை அடுத்து முற்றாகவே தடை விதித்தார். தமிழ்நாட்டு கலாச்சார குழுக்கள் விஜயம் செய்வ தற்கும் விசா மறுக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழ்நாட்டு மக்க ளுடன் இருந்த தொடர்பை துண்டித்து, இந்திய மத்திய அரசாங்கத் துடன் தொடர்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார். ஆனால் இலங்கை இந்தியாவின் பெருந்தன்மையை பொருட்படுத்தாது விரோதக் கொள்கைகளையே தொடர்ந்தும் கடைப்பிடித்தது. 1962ம் ஆண்டு இந்திய-சீன எல்லை யுத்தம் நடைபெறும் போது பிரதமர் சிறீமா பண்டாரநாயக்கா இந்தியாவிற்கு சாதகமான கொள்கைகளை கொண்டிருக்கவில்லை என்பது உலகறிந்த உண்மை. அதே போன்று 1971ம் ஆண்டு கிழக்கு வங்காளம் பற்றி பாகிஸ்தான்-இந்திய உறவில் விரிசல் ஏற்பட்ட போதும் பாகிஸ்தான் துருப்புக்களை ஏற்றிச் சென்ற விமானங்கள் ட்ெடுநாயக்கா விமான நிலையத்தில் இறங்கி எரி பொருள் நிரப்பிச் செல்ல இலங்கை அரசு அனுமதித்தது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இலங்கை தமிழ் மக்களே இந்திய சார் பாக தீவிரமாக செயல்பட்டனர். சீன-இந்திய யுத்தத்தில் இந்திய படையில் சேர்ந்து பணிபுரியவும் இலங்கைத் தமிழர்கள் முன்வந்தனர்.1
இலங்கை தமிழருக்கெதிராக நடைபெற்ற வன்செயல்களைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஆர்பாட்டம் நடத்தினார்கள். 1958ல்

இனப்பிரச்சினையும் இந்திராகாந்தியும் () 213
பேரறிஞர் அண்ணா தலைமையில் இலங்கை தமிழருக்கு ஆதரவாக ஒரு பேரணி சென்னையில் நடத்தப்பட்டது. மூதறிஞர் இராஜாஜி இணைப்பாட்சியே இலங்கை தமிழர் இன்னல் தீர வழியென்று * சுதந்திரா’ பத்திரிகையில் எழுதியிருந்தார். இவை தமிழ் நாட்டில் சிறு அனுதாப அலைகளை மட்டும் எழுப்பினவேயன்றி இந்திய அரசின் கவனத்தைக் கவரத் தவறிவிட்டன. வன்செயல்கள் இலங் கையின் உள்நாட்டு பிரச்சினையாகவே கருதப்பட்டு வந்தன.
1970ம் ஆண்டளவில் வங்க மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தது போல் இலங்கை தமிழ் மக்களுக்காக இந்தியா குரல் கொடுப்பதற்கு தமிழ்நாடு பொங்கியெழ வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியினர் எதிர்பார்த்தனர். இந்த எண்ணத்தோடு 1972ல் தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வா அவர்கள் ஏனைய அங்கத் தவர்களோடும் தமிழ்நாடு சென்று அங்குள்ள அரசியல் தலைவர் களோடு தங்கள் பிரச்சினைகளை எடுத்து விளக்கினார்கள். ஆனால் அன்று அவர் புது டில்லிக்குச் சென்று பாரதப் பிரதமரை சந்திக்க விரும்பியிருந்து அதற்கான சந்தர்ப்பம் கிட்டவில்லை. இந்திரா காந்தி அம்மையார் இலங்கைக்கு வருகை தந்த போது அவரை தந்தை செல்வா சந்திக்க ஏற்பாடாகியிருந்தும் அதனை இலங்கை அரசு ரத்துச் செய்து விட்டது. 1972ம் ஆண்டு தமிழ்நாடு சென்று திரும்பிய தமிழரசுக் கட்சி அங்கத்தவர்கள் அனைவருக்கும் வெளிநாடு செல்லும் உரிமை மறுக்கப்பட்டது. 1978ம் ஆண்டின் பின்பே அவர்களுக்கு இச்சலுகை மீண்டும் வழங்கப்பட்டது.
9.1.1. இந்தியாவின் புதிய நிலை
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்செயல் கள் சம்பந்தமான தம் கவலையை இந்தியா பல தடவைகள் தெரிவித் திருந்தது. 1977 ஆவணி மாதம் அதிகாரத்தில் இருந்த மொரார்ஜி தேசாய் அரசாங்கமே முதல் தடவையாக இந்தியாவின் கவலையை தெரிவித்தது. அதே மாதம், இலங்கையில் வாழும் சக தமிழருக்கு அனுதாபம் தெரிவிக்கும் நோக்கத்தோடு சென்னையில் ஒரு நாள் ஹர்த்தாலை அனுஷ்டிக்கும்படி தி.மு.க. தலைவர் திரு. மு. கருணா நிதி வேண்டிக்கொண்டார். அது முழுமையாக நிறைவேற்றப் பட்டது என்றே கூறலாம். அதே வேளை அண்ணசாலையில் இருந்து இலங்கையின் உதவி தூதராலயம் வரை பெரும் ஊர்வலம் ஒன்றிணை யும் தி.மு.க. நடத்திற்று.
இந்திய வம்சாவழியினருக்கும் சில இந்திய பிரஜைகளுக்கும் எதிராக நடைபெறும் வன்செயல்களுக்கும் மிரட்டல்களுக்கும் எதிராக

Page 122
214 ) பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
அன்று காங்கிரஸ் தலைவராக இருந்த பிரம்மானந்த ரெட்டியும் பல இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் கண்டனக் குரல் எழுப்பி யிருந்தார்கள்? தன் கவலையை தெரிவிப்பதோடு நாடு மீண்டும் வழமையான நிலையை விரைவில் அடைய வேண்டுமெனத் தான் ஆவலுடன் இருப்பதாகவும் அன்று இலங்கை பிரதமராக இருந்த திரு. ஜே. ஆர். ஜயவர்த்தனாவிடம் தனிப்பட்ட செய்தி ஒன்றை பிரதமர் தேசாய் அனுப்பியிருந்தார். 'இலங்கையில் தமிழர்கள் பாது காப்பை உறுதிபடுத்த” மத்திய அரசாங்கம் இயன்றளவு முயற்சிக்கும் என்றும் தமிழக முதல்வர் திரு. எம். ஜி. ராமசந்திரனுக்கும் தி. மு. க. தலைவர் திரு. மு. கருணாநிதிக்கும் இந்திய பிரதமர் பதிலளித்திருந் தாா.
1978-ல் இலங்கைக்கு உத்தியோக பூர்வமான விஜயத்தை மேற் கொண்ட திரு. மொரார்ஜி தேசாயிடம் அன்று எதிர்க்கட்சி தலைவ ராக இருந்த திரு. அ. அமிர்தலிங்கத்திற்கு தமிழர் பிரச்சினையை விளக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இதன்பின் 1979-ல் எதிர்க் கட்சி தலைவரென்ற ரீதியில் தமிழ்நாட்டிற்கும் டில்லிக்கும் சென்ற பொழுது அரசாங்க விருந்தினராக வரவேற்கப்பட்டு தமிழர் பிரச்சி னையை இந்திய அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் எடுத்துக் கூறுவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவுமில்லாது இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சினையில் தாம் மத்தியஸ்தம் வகுக்கத் தயாராக இருப்பதாகவும் திரு. தேசாய் கூறியிருந்தார். இந்தியாவின் ஆதரவை நாடி நின்ற இலங்கை தமிழர் கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள். ஆணுல் இலங்கை அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
1980ம் ஆண்டு மீண்டும் இந்திராகாந்தி பதவிக்கு வந்ததும் அவரை சந்தித்து தமிழரின் பிரச்சினையை எடுத்துக்கூறுவதற்கு த.வி. கூ.க்கு வாய்ப்புக் கிடைத்தது. 1981ம், 1982ம் ஆண்டுகளில் நடந்த வன் செயல்கள், எ.கா. யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை, தமிழ் நாட் டிலிருந்து கதிர்காமத்திற்கு தலயாத்திரை செய்த தனபதியை கொலை செய்தமை, தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இத்தோடு இலங்கை அரசின் அடக்குமுறையின் காரணமாக வெளி யேறிய தமிழரும் விசேடமாக இளைஞர்களும் இங்கு பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். 1977ம் ஆண்டுக்குப் பின் இந்தியா முழுமை யாக தமிழரின் நிலையை படிப்படியாக உணர ஆரம்பித்ததும் இதன் காரணமாகவே 1983ம் ஆண்டளவில் அது நேரிடையாக தமிழர் பிரச் சினையை தீர்ப்பதற்கு முன்வந்தது.

இனப்பிரச்சினையும் இந்திராகாந்தியும் () 215
9.2. தமிழ்நாட்டு கொந்தளிப்பும்-இந்திராகாந்தியின் தீவிரமும்
1983ம் ஆண்டு ஆடிமாத வன்செயல்களை ஒரு கிழமைக்கு மேலாகவே இந்தியா கவனத்துடன் அவதானித்துக் கொண்டு வந்தது. இதற்கு முன்னமே தமிழர்கள் படுகொலை செய்யப்பட உள்ளார்கள் என்பதை உளவாளிகளது அறிக்கை மூலம் அறிந்து கொண்டது. ஆடி 19ம் திகதி வெளிவிவகார அமைச்சின் செயலாளர்-இலங்கைத் தூதுவர் பெர்னாட் திலகரத்னாவை அழைத்து யாழ்ப்பாணத்தில் நடை பெறும் சம்பவங்கள் பற்றி இந்திய அரசாங்கத்தின் கவலையைத் தெரிவித்தார். மரணவிசாரணையின்றி சடலங்களை தகனஞ் செய்ய உரிமை வழங்கும் புதிய சட்டம் விசேடமாக சுட்டிக்காட் டப்பட்டது. இந்தியா இவ்வாறு அக்கறை கொள்வதை ஆட்சேபித்து கொழும்பில் இந்திய எதிர்ப்பு ஆர்பாட்டம் வெறிகொண்ட நிலையை அடைந்தது. ஐந்து நாட்களுக்குப் பின் நடைபெற்ற அசுர வன் செயல்களில் இந்திய எதிர்ப்பும் விஸ்வரூபமெடுத்தது. இந்திய தூத ராலயம், இந்திய வங்கிகள், தமிழரல்லாத இந்தியர்களது வியாபார நிறுவனங்கள் கூட தீவிர தாக்குதல்களுக்கு உள்ளாயின. இலங்கை யில் நடைபெற்ற வன்செயல்களை கேள்வியுற்ற இந்தியர்கள்-குறிப் பாக தமிழ்நாட்டு மக்கள் கொதித்தெழுந்தனர்.
மிருகத்தனமான சம்பவங்களே தினசரிகளில் தலைப்புச் செய்தி களாயின. தமிழ் நாட்டில் தமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத் தையும் வெளிப்படுத்த மக்கள் தம் ஆடைகளில் கறுப்புத் துண்டுகளை இணைத்திருந்தார்கள். பஸ் வண்டிகளில் கறுப்புக் கொடிகளை பறக்க விட்டனர். இந்தியா தலையிட வேண்டும் என இந்திராகாந்தியை மக்கள் வற்புறுத்தினுர்கள். இலங்கையில் தமிழர் பாதுகாப்புடன் இருப்பதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும்படி வேண்டி, ஞர்கள். ஆடி 31ம் திகதி திரு. எம். ஜி. இராமசந்திரன் தலைமை யில் டில்லி சென்ற குழு இலங்கைக்கு ஐ. நா. பாதுகாப்புப் படையை அனுப்பும்படியும் வேண்டுகோள் விடுத்தது.
பத்திரிகையாளர் மகாநாட்டில் இலங்கை விவகாரம் பற்றி தாம் மிகவும் கவலைப்படுவதாக திருமதி இந்திரா காந்தி கூறியதும், உள் நாட்டு விடயங்களில் இந்தியா தலையிடுவதாக இலங்கை கண்டனம் தெரிவித்தது. தன் தூதராலயத்தில் தமது பிரஜைகள் மீதும் நடத்தப் படும் தாக்குதல்களை உள்நாட்டு விடயமென கருதுவதற்குஇடமில்லை யென இந்தியா பதிலளித்தது. அக்கூட்டத்தில் கூடியிருந்த இந்திய

Page 123
216 L) பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
பாராளுமன்றம் நடவடிக்கைளை விரைவு படுத்தும்படியும் வற்புறுத் திற்று.
நிலைமை மோசமான திருப்பத்தை அடைந்த அதே இரவு ஜனாதிபதி ஜயவர்த்தனாவுடன் திருமதி இந்திரா காந்தி தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டார். 1983ம் ஆண்டு ஆடி 29ம் திகதி தனது வெளி விவகார அமைச்சர் நரசிம்மராவோவை கொழும்புக்கு அனுப்பி வைத்து இந்திய அரசாங்கத்தின் கவலையை இலங்கை அரசாங்கத்துக்கு நேரில் தெரிவிக்கும்படியும், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் அங்கு நடந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களைப் பற்றி வேதனைப் படுவதையும் எடுத்து விளக்கும்படியும் வேண்டிக் கொண்டார். இலங் ைக சென்ற நரசிம்மராவிற்கு அகதிகள் முகாம்களை பார்வையிடுவது தடை செய்யப்பட்டிருந்தது.
புது டில்லியில் உள்ள வெளி நாட்டுத் தூதுவரிடம் இலங்கையில் எவரேனும் இராணுவ ரீதியாகத் தலையிட்டால் அதனை இந்தியா வுக்கு எதிரான செயலாக கருதப்படும் எனவும் ராவோ எச்சரித்தார். ஆவணி 2ம் திகதி தமிழ்நாட்டு அரசாங்கம் பொது வேலை நிறுத்தம் நடத்திற்று. மத்திய அரசும் ஆதரவு கொடுத்து வேலை நிறுத்தமும் வெற்றிகரமாக நடைபெற்றது.8
ஆவணி 5ல் பத்து நாட்களுக்குள் இரண்டாவது தடவையாக திரு. ஜயவர்த்தனாவிடம் திருமதி காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கையில் இந்தியா தலையிடாதென உறுதியளித்தார். அதே வேளையில் இலங்கையில் உருவாகிக் கொண்டிருக்கும் நிலை தங்களையும் பாதிக்கின்றது என்றும் கூறியிருந்தார்.
ஆவணி 7ம் திகதி, தமிழ் நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் திரு. பி. நெடுமாறனும் ஆயிரம் தொண்டர்களும் இலங்கைத் தமிழ ரைக் காப்பாற்ற உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக தமது இரத்தத்தால் கையொப்பமிட்டு சபதம் செய்தனர். மதுரையில் இருந்து 225 கி. மி. தொலைவிலுள்ள இராமேஸ்வரத்திற்கும் பாத யாத்திரை செய்து கடல் மார்க்கமாக தலைமன்னர் செல்வதே திட்ட மாக இருந்தது. இவர்களோடு பல சமயத் தலைவர்களும் ஒன்று சேர்ந்தனர். தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த இரு பாதிரி மாரும் இவர்களோடு பாத யாத்திரை சென்ருர்கள். அவர்களுள் பாதிரியார் யேசுதாஸ் என்பவர் தனது கைக்கடிகாரத்தை நன்கொடை யாக கொடுத்து உதவினுர். ஆவணி 15ம் திகதி காலை 8-40க்கு இராமேஸ்வரத்தைச் சென்றடைந்தனர். ஜனாதிபதி ஜயவர்த்தனா

áleě.6) Lotartogrěšo
•éag9. عكا users,
ysgol Slaf
MM ଘutt&gory
d 6 0ܗܶ are ef{ §සුෂුද්#ෂී
|査* هكه పీe్క
ဒုဗိန္ဓ+z::% ඒ இந்தப் - N L亮 ଠୋରUY ܓ ܓ "ܐ تر۔ ܓܢ--;
கி WAகலவாஞ்சிக்குடி ه اهم نامه »شامه صصها
rs که صی 秃 ണഞ്ഞ
வரைபடம்-3, கிழக்கு மாகாணத்தின் இராணுவ நிலையங்கள் (1986-ம் ஆண்டுக்கு முன்)

Page 124
218 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
வடக்இ மாகாணத்தில்
பாதுகாப்புப் படையினர்
Y. జఉష్ణో ઊnarદર્દી ઈ.g
R ଏଧା శ99గామిడి
- هلاشت ماه بهایی 责 కీడ్కిక##
} مختلانا آ127 خدا نکته
്ക് (
تشيه يوميجايا - كيه
ി,9:ം ീ {
**ஆதி
Qგა
S 芷” پس ثانیه به கிவிடுங்கன் e .േ. R கஃவுளிய
V-- *aரியலும்
வரைபடம்-2, வடக்கு மாகாணத்தில் இராணுவ நிலையங்கள்
(1986-ம் ஆண்டுக்கு முன்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இனப்பிரச்சினையும் இந்திராகாந்தியும் () 219
இதனை நிறுத்துப்படி திருமதி இந்திராகாந்தியை வேண்டியதும் தமிழ் நாட்டுப் பொலிசார் திரு. நெடுமாறனைக் கைது செய்தனர்.
9.2.1. இடையீட்டாளர்கள்
ஜனாதிபதி ஜயவர்த்தனாவுடன் திரு. ராவ் நடத்திய பேச்சு வார்த்தையில் நிவாரணத் திட்டத்தில் இந்திய அரசாங்கம் உடனடி யாக செய்யக்கூடிய விடயங்களும் ஆராயப்பட்டன. தென்னிலங்கையில் உள்ள அகதிகளை யாழ்ப்பாணம் அனுப்பிவைக்க ‘பாரத சீமா’ எனும் இந்தியக் கப்பல் அனுப்பப்பட்டது. இலங்கை அரசாங்கம் சந்தேகம் கொண்டதனுல் கப்பல் ஒரு கிழமையாகப் பயன்படுத்தப்படாமல் சும்மாயிருந்தது. இதனை மறைப்பதற்காக கப்பல் 450 பேரை மட்டுமே ஏற்றிச் செல்லக்கூடியதாக இருக்கின்றது என மழுப்ப முயன்றனர். 2000 மக்களை கொண்டு செல்லத்தக்க "சிதம்பரம்’ எனும் பெரிய கப்பலையே முதலில் அனுப்புவதாக இருந்தது. ஆனல் யாழ்ப்பாணத் துறைமுகத்தை இப்பெரும் கப்பல் அணுக முடியாது இருந்த காரணத்தினுலேயே சிறிய கப்பலை அனுப்பி வைக்க முடிவு எடுக்கப்பட்டது.
ஜனாதிபதியின் தம்பி எச். டபிலியு ஜயவர்த்தனா திரு. ராவ் அவர்களது விஜயத்தை அடுத்து புது டில்லி சென்ருர், திருமதி காந்தி யோடு சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இந்தியா நடு வராக நின்று செய்யக்கூடிய பணி ஆராயப்பட்டது. அதே வேளை நிவாரண வேலைகளைத் தொடருவதற்காக பத்து லட்சம் டாலர்களை இந்தியா கொடுத்து உதவுமென்றும் திருமதி காந்தி உறுதி கூறினர்.
இதனை அடுத்து திருமதி காந்தி தமிழ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினுர், அரசாங்கத்திற்கு எதிராக நிலை தளராது நின்று, 20 வயது கடந்த ஒவ்வொரு தமிழனுக்கும் இராணுவப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றும், தோட்டப் பகுதிகளை தனி மாவட்டங்களாகவிருத்தி செய்ய வேண்டும் என்றும் கூறிய தோட்டத் தொழிலாளரது தலைவர் திரு. தொண்டமானும் இந்த உரையாடலில் கலந்துக் கொண்டார்.
ஆவணி 16ம் திகதி, இலங்கை அரசாங்கத்திற்கும் த. ஐ. வி. கூ. க்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தி வைப்பதற்கு என தூதுவர் ஒருவரை அனுப்பி வைக்க தான் தயாராக இருப்பதாக திருமதி இந்திரா காந்தி ராஜ்ய சபையில் அறிவித்திருந்தார். அடுத்த நாள்

Page 125
220 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
புது டில்லியில் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் நிபந்தனை கள் ஏதேனும் வற்புறுத்தாதவரை இலங்கை அரசாங்கத்தோடு தமது கட்சி பேச்சுவார்த்தைகள் நடத்த ஆயத்தமாக இருக்கின்றது என திரு. அமிர்தலிங்கமும் தெரிவித்துக்கொண்டார்.
ஆவணி 25-ம் திகதி வெளிவிவகார கொள்கை திட்டமிடல் கமிஷனுக்குத் தலைவராக இருந்த திரு. ஜி. பார்த்தசாரதி இந்திய அரசாங்கத்தின் விசேட தூதராக கொழும்பு வந்து சேர்ந்தார்.
ஜனாதிபதி ஜயவர்த்தனாவின் விசேட தூதுவரோடு திருமதி காந்தி பேச்சுவார்த்தை நடத்திய பின் ஆவணி 12ம் திகதி பாராளு மன்றத்தில் தான் நடத்திய உரையில் ஐந்து யோசனைகளின் அடிப் படையில் தமிழ்த் தலைவர்களோடு கலந்துரையாட இலங்கை அரசாங் கம் தயாராக இருப்பதாக அறிவித்தார். அவையாவன:
-ஓரளவு சுயாட்சி ஏற்படுத்தத் தக்க வகையில் திட்டமிடப்பட்ட அபிவிருத்திச் சபைகளை நடைமுறைப் படுத்தல்,-தமிழை ஒரு தேசிய மொழியாக அங்கீகரித்தல்,-வன்செயலில் ஈடுபடுவதில்லை என்ருல் பொது மன்னிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல்,-தமிழ் இனத்திற்கு மத்திய பிரதேசமாகவுள்ள யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடமாடுவதை நிறுத்துதல்;-பயங்கரவாத தடைச் சட் டத்தை நீக்குதல். இதனுேடு, த.ஐ. வி. கூ. தன் பிரிவினைக் கொள் கையை கைவிட்டால் தடுப்புக் காவலில் உள்ளவர்களையும் குறிப் பிட்ட குற்றச்சாட்டு அடிப்படையில் விசாரனை நடத்தப்படுவோரையும் விடுவிப்பது பற்றி இலங்கை அரசாங்கம் கலந்துறையாடும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் தம் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவ தாயும் கூறினார்.
இந்த யோசனைகள் 'தமிழ் மக்களது அபிலாஷைகளை நிறை வேற்றுவதாக இருக்காது எனலாம்” என்று திருமதி. காந்தி, ஜனாதி பதி ஜயவர்த்தனாவிடம் தெரிவித்தார். அதே வேளை இலங்கையின் சுதந்திரம், ஐக்கியம் ஒருமைபாடாகியவற்றை ஆதரிப்பதாகவும், அயல் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என்றும் உறுதியளித்தார்.
இந்தியா நடுநிலைமை வகிக்க விரும்பியதை ஜனாதிபதி ஜயவர்த்தனா ஏற்றுக்கொண்டு புதுடில்லியில் திருமதி காந்தியை சந்திக்க கொழும்பு ஊடாக செல்லும் திரு. அப்பாப்பிள்ளை அமிர்த லிங்கத்துக்கு தாம் பாதுகாப்பு ஒழுங்குகளை செய்வதாகவும் வாக்களித்

இனப்பிரச்சினையும் இந்திராகாந்தியும் () 221
தார். இலங்கையின் தமிழர் வாழும் வடபகுதியினின்றும் 12 மைல் அகமுள்ள பாக்கு நீரிணையால் மட்டுமே பிரிக்கப்பட்டுள்ள தமிழ் நாட்டினது தலைநகராகிய சென்னையில் புதுடில்லி சென்று கொண் டிருந்த திரு. அமிர்தலிங்கத்துக்கு, ஆவணி 13ம் திகதி மாபெரும் வர வேற்பு கொடுக்கப்பட்டது. இலங்கையில் தமிழருக்கெதிராக நடந்த வன்செயல்களிலிருந்து தமிழ் நாடு கொந்தளிக்கும் நிலையிலேயே இருந்தது. இந்திய அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகள் போதா தென வெகுண்டெழுந்த சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு நடவடிக்கைளிைல் ஈடுபட்டனர். ஆகவேதான், இவ்வித உள்நாட்டு நெருக்குதல் காரணங்களும் திருமதி காந்தியின் நடுவர் முயற்சிக்கு பின்னணியாக இருந்தன என்பதையும் அவதானித்தல் வேண்டும்.
தமிழ் நாட்டு மக்கள் மத்தியிலும் கணிசமானுேர் இந்திய அரசாங் கத்தின் பதில் நடவடிக்கைகள் தமிழர் மீதும் இதர இந்திய வம்சாவழி யினர் மீதும் அனுதாபம் காட்டுவதாக இல்லையெனக் கொண்டனர். மாநிலத்தின் பிரதான எதிர்க் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், செயலாளராகிய இருவரும் தமிழ் நாட்டின் சட்டசபையிலுள்ள தமது ஆசனங்களை இராஜினாமச் செய்தனர். இலங்கை பிரச்சினை, மாநிலத்தின் ஆளும் கட்சியாகிய அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் பிளவுகளை ஏற்படுத் தும் ஆபத்துகளை உருவாக்கிற்று. கட்சியின் பிரதான கொறடாவாக இருந்த திரு. டி. ஆர். ஜனார்த்தனன், சகாக்கள் சிலருடன் தமிழ் நாட்டு மக்களது உணர்ச்சிகளை மதிப்பதாக இல்லையெனக் கூறி தனது பதவியை விட்டு விலகியதோடு திரு. எம். ஜி. இராமசந்திரன் நிறுவிய கட்சியினின்றும் விலகிக் கொண்டார்.
சென்னை வந்திருந்த திரு. அமிர்தலிங்கம், இந்திய அரசாங்கத் தோடு 1979ம் ஆண்டு முதல் தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறி யிருக்கிருர். தனது கட்சி பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை இழந்த போதிலும் இந்தியாவின் நடுவர் முயற்சியால் நிலைமை மாறி விட் டது என்றும் கூறியிருந்தார். புது டில்லி சென்று திரு. அமிர்தலிங்கம் திருமதி காந்தியோடு இரு பேச்சுவார்ததை தொடரையும், வெளிவிவ கார அமைச்சர் நரசிம்ம ராவோவுடனும் ஏனைய பிரமுகர்களுடனும் பல தடவை கலந்துரையாடல்களும் நடத்தினர்.
இதற்கு முன்பாகவே, தமிழருடன் உரையாடலை நடத்துவதற்கு நாட்டில் பாதுகாப்பாக இருக்கலாம் எனும் நம்பிக்கை அவர்கள் மத்தியில் உருவாக வேண்டும் என்றும் அவர்கள் குறைகளைத்

Page 126
222 () பெளத்த சிங்களவரும் சிறுபான்மையினரும்
தீர்த்துவைக்க சில நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ஜயவர்த்தனாவிடம் திருமதி காந்தி ஆலோசனை கூறிய தாக நம்பப்படுகின்றது. நாடு இருந்த நிலையில், இரு விடயங் களையும் அவசரப்பட்டுச் செய்து முடிக்கக் கூடியதாக இருக்கவில்லை. இதனுல் பேசுவார்த்தைகள் ஆரம்பிக்கவும் தாமதம் ஏற்படும் போல் தோன்றிற்று. இறைமையுள்ள தமிழ் அரசைக் கோருவதை கைவிட எ