கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் எழுத்துகள்

Page 1


Page 2

தமிழ் எழுத்துகள்
நேற்று - இன்று - நாளை
ம. கங்காதரம்
di/% 6/i/%
41, அஞ்சலக வீதி 834, அண்ணாசாலை சாவகச்சேரி சென்னை

Page 3
பதிப்புரிமை : ஆசிரியருக்கு முதற் பதிப்பு : கார்த்திகை 1997
விலை:20/-
அச்சிடல் தயாரிப்பு: மறவன்புலவு க. சச்சிதானந்தன் காந்தளகம் 834 அண்ணாசாலை, சென்னை 600 002. G5IT606)Gué853 4505 Email: SachiGgiasmdSI.VSnl.net.in

பொருளடக்கம்
அறிமுகம்
முன்னுரை
சீர்திருத்தம் தேவையா?. . . . . . . . . . . .
எழுத்தின் வரையறை . . . . . . . . . . . . . ஒழுங்குள்ள வரிவடிவு . . . . . . . . . . . . ஏற்ற அடிப்படை . . . . . . . . . . . . . . . சீர்திருத்தக் கருததுகள் . . . . . . . . . . . .
பயன்மிக்க வரிவடிவம் . . . . . . . . . . . .
செயலாக்கம் . . . . . . . . . . . . . . . . . .
பிற்சேர்க்கை
அ. தமிழில் ஒலிப்பெயர்ச்சி . . . . . . . . . . . ஆ.சொல்லெழுத்து வரையறை . . . . . . . . . . இ. றோமன் எழுத்துகள் தமிழுக்கு ஏற்றவையா? ஈ. பழையதும் புதியதும் . . . . . . . . . . . . .
உ. ஒரே குத்துயரமுள்ள எழுத்துகள் ஊ.தமிழ் எழுத்துகளின் வரிவடிவ வளர்ச்சி.
சீர்குலைக்கப்பட்ட தமிழ் எழுத்தொழுங்கு . . .
11
24
28
32
42
46
55
62
68
83
93
94
95

Page 4
அறிமுகம்
உங்கள் கைகளில் இருப்பது, அநுபவம் மிக்க அறிவியல் ஆசிரியர் ஒருவரின் ஆக்கம். அவர் கணிதத்தையும் விஞ்ஞானத்தையும் பல்லாண்டு காலமாகப் படிப்பித்தவர். அதன் பேறாக, கல்வி எங்ங்ணம் நிகழ்கிறது என்பதை ஊன்றி நோக்கியவர்; நன்கு உணர்ந்தவர்.
கணித, விஞ்ஞான ஆசிரியராகிய திருவாளர் ம. கங்காதரம் அவர்கள், தமிழ் மொழி அறிவும் வாய்க்கப் பெற்றவர். இலக்கண, இலக்கிய ஈடுபாடும் பயிற்சியும் உடையவர். அதனால் நமது மொழியின் தொன்மை பற்றியும், அதன் இன்றைய நிலை பற்றியும் அவர் சிந்தித்துள்ளார். வட மொழியின் தொடர்பினாலே, நமது மொழி சில இழப்புகளைக் கண்டுள்ளது என்பதும் அவரது கருத்து ஆகும். அந்த இழப்புகள் ஈடுசெய்யப்படல் வேண்டும் என்பதும் அவருடைய விருப்பமாகும்.
அந்த வழியிலே சிந்திக்கும் பண்பு வாய்ந்த நம் ஆசிரியர், இன்று நம்மிடையே வழங்கும் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவத்திலே சில ஒழுங்கீனங்கள் உள்ளன என்று சுட்டிக் காட்டுகிறார். ஐ, ஒள ஆகிய இரண்டும் நமக்குத் தேவையில்லாத பிற்சேர்க்கை என்று விளக்கியுள்ளார். அவற்றின் இடத்தில் அய், அவ் என்னும் சேர்மானங்களே போதும் என்பதும் அவர் தம் கொள்கை ஆகும்.
மேலும், ஈ, ஊ என்னும் வரிவடிவங்களை உடையனவாக இப்பொழுது வழங்கும் நெடில்களில் ஒன்று தனக்குரிய குறிலாகிய இ என்பதன் வரிவடித்துடன் தொடர்பற்றும், மற்றையது தன்னுடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத ள என்னும் மற்றோர் எழுத்தின் வரிவடிவத்துடன் எவ்வித நியாயமும் இல்லாமற் பிணைக்கப்பட்டும் உள்ளமை பொருத்தமற்றது என்று காட்டுகின்றார். ஈ என்பது இ எனவும்

ஊ என்பது உ எனவும் மாற்றப்படுதல் நன்று என்பது ஆசிரியர் சுட்டிக் கூறும் தீர்வாகும்.
இவை உயிர் எழுத்துகளின் வரிவடிவம் பற்றியவை. மெய் எழுத்துகளைப் பொறுத்த மட்டில், இவற்றின் மேல் இப்பொழுது இடப்படும் புள்ளிகளை நீக்கிவிடுமாறு இவர் விதந்துரைத்து உள்ளார். அத்துடன் உயிர் மெய் எழுத்துகளைப் பொறுத்த வரையில், அவற்றின் இப்போதைய வரி வடிவில் வரும் உயிர்த்துணைக் குறிகளை நீக்கிவிடலாம் என்பதும் நமது ஆசிரியரின் கருத்தாகும். முன் சொன்னவாறு புள்ளி நீக்கிய மெய் எழுத்துகளை அடுத்து உயிர் எழுத்துகளை அப்படியே முழுமை ஆக எழுதிவிடலாம் என்பதும் இவர் காட்டும் வழியாகும்.
இந்தப் புதிய முறைப்படி, முந்திய பந்தியில் வந்த இறுதி வாக்கியம் பின்வருமாறு எழுதப்படும் :-
" மஉன சஒனனஅவஆறஉ பஉளளஇ நஇககஇயஅ மஎயயஎழஉததஉகஅளஅய அடஉததஉ உயஇர எழஉததஉகஅளஅய அபபஅடஇயஏ மஉழஉமஅயயஆக எழஉதஇவஇடஅலஆம எனபஅதஉம இவஅா கஆடடஉம வஅழஇயஆகஉம". இந்த மாற்றம் தமிழ் கற்கும் புதியவர்களுக்கு அந்தக் கற்றல் முயற்சியை எளிதாக்கும் என்பது கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதே. இந்த மாற்றத்தின் நலத்தீங்குகளையும் நய நட்டங்களையும் சீர் தூக்கிப் பார்ப்பது தமிழ் மக்களின் கடனாகும்.
மேலே காட்டப்பட்ட வரிவடிவ மாற்ற ஆலோசனையைத் தவிர, நவீன உலகின் தேவைகளுக்குத் தமிழை ஈடுபடுத்த முற்படும் போது தோன்றும் வேறு சில வில்லங்கங்களையும் நோக்கி அவற்றைத் தீர்ப்பதற்கான விதப்புரைகளும் இந்த நூலிலே தரப்பட்டுள்ளன.

Page 5
இவை எல்லாம் தமிழ் மொழியும், தமிழ் மக்களும் தேங்கி நில்லாது சீர் பெற்றுத் திகழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மாற்றங்கள் அனைத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கும் பழமைப் பிடிவாதங்களுக்கு மாறானவை. அந்த வகையிலே இவ்வாறான சிந்தனைகள் மேலும் மேலும் தோன்றிப் பரம்புவது வரவேற்கத் தக்கதே எனலாம்.
அத்துடன், மொழி வளர்ச்சி போன்ற செயல் முயற்சிகளை கொள்கை நிலையில் மட்டும் நின்று பாராது அவற்றின் நடைமுறை விளைவுகளையும், சிரமம் ஏதும் இருப்பின் அதனையும் கருத்திற் கொள்வது நல்லது. இவ்வித மாற்றங்களின் பொருண்மியப் பின்விளைவுகளும் பக்க விளைவுகளும் கூடமனங் கொள்ள வேண்டியனவே. எனவே இவற்றை உணர்ச்சி மயமாகவோ, முன் முடிவுகளுடனோ அணுகுதல் நன்றன்று. முழு மொத்தமான அறிவியல் நோக்கே சிறந்தது எனலாம்.
"செந் தமிழைச் செந்தமிழாய்ச் செய்திடலும் வேண்டும்’ என்றான் பாரதிதாசன். அத் திசை நோக்கிய முன்னெடுப்புகள் மேன்மேலும் பெருகட்டும்.
நீர்வேலி தெற்கு. இ. முருகையன் நீர்வேலி 1994. 04. 04.

முன்னுரை
நீண்ட வரலாறுள்ள தமிழ் மொழியின் எழுத்துகள் காலம் தோறும் வரிவடிவ மாற்றமடைந்துள்ளன. பண்டை நாட்களில் அதன் எழுத்துகளிடையே நிலவிய ஒழுங்கு கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குலைக்கப்பட்டது. வடமொழி எனப்படும் சமக்கிருதம் செல்வாக்கு மிக்கிருந்த காலத்தில் அம் மொழியின் உயிர் எழுத்துகளிடையே காணப்படும் புணரொலி எழுத்துகளுக்காக, தமிழ் உயிர் எழுத்துகளிடையே, ஐ, ஒள என்பன மிகையாகப் புகுத்தப்பட்டு, அவற்றின் ஒழுங்கு குலைக்கப்பட்டது. அன்றியும் சமக்கிருத உயிர் மெய் எழுத்துகளின் அமைப்பு முறையை அடியொற்றி, தமிழிலும் உயிர் மெய்களின் அமைப்பு மாற்றப்பட்டது. ஏட்டில் எழுத் தாணியால் எழுதியோரின் பணி எளிதாவதற்கேற்ப எழுத்துகளின் வரிவடிவு மேலும் சீர்குலைக்கப்பட்டது. இவ்வாறு பிறந்த ஒழுங்கற்ற எழுத்துகளே இன்று நம்மிடையே பயில்கின்றன. இன்றைய, எதிர்காலத் தேவைகளுக்கு இவ் எழுத்துகள் ஏற்றவையன்று என்பது வெளிப்படை. இதனைப் பலவாறு துருவி நோக்கியதன் விளைவே இச் சிறுநூல்.
எழுத்துச் சீர்திருத்த முயற்சிகளில் முன்னரும் பலர் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் அலசி ஆராயப்பட்டன. மின்மவியற் பொறிகளில் தமிழ் எழுத்துகளை இடர்ப் பாடின்றி எடுத்தாள்வதற்கு, முதலெழுத்து முறையே ஏற்றது எனத் தனது நேரடியான செயலறிவின் மூலம் காலஞ் சென்ற நண்பர் திருவே. கோ. தில்லைநாயகம் அவர்கள் எனக்குத் தெளிவுபடுத்தி இருந்தார். இவர் ஒரு மின்மவியற் பட்டயப் பொறிவலர். இவருடைய கருத்துகள் எனது சிந்தனையை மேலும் தூண்டின. தமிழ் நாடு பொது நூலகத்துறை இயக்குநராகயிருந்த திரு. வே. தில்லைநாயகம் அவர்களும், தமிழ் வளர்ச்சிக்கழக இயக்குநரான பேராசிரியர் கொண்டல் சு. மகாதேவன் அவர்களும் தெரிவித்த கருத்துகள் பொறிவலர்

Page 6
தில்லைநாயகத்தின் கருத்துகளுக்கு மேலும் வலுவூட்டின. முதலெழுத்து முறையே தக்கது என்னும் முடிவுக்கு நான் வருவதற்கு இவை அனைத்தும் தூண்டுதலாயமைந்தன.
மாற்றங்களைப் புகுத்தும் போது குழப்பம் விளைவதியல்பு. இதனை இயன்ற அளவு குறைக்கும் நோக்கிலும், பழமையின் தொடர்ச்சியாகப் புதுமையைப் புகுத்தும் நோக்கிலும், உயிர், மெய் ஆகிய இரு வகை எழுத்துகளினதும் வரிவடிவில் - ஈ, ஊ என்பன நீங்கலாக - மாற்றம் எதுவும் புகுத்தப்படவில்லை. எளிமை கருதி உயிர்மெய் எழுத்துகளின் அமைப்பில் மட்டும் மாற்றம் புகுத்தப்பட்டுள்ளது. பலர் கருதுவது போன்று இதனாற் பெரும் குழப்பம் விளைவதற்கு இடமில்லை. குழப்பம் ஏற்படுவதைக் குறைத்து, குறுகிய காலத்தில் எவ்வாறு இக் கருத்துகளுக்குச் செயல்வடிவம் தரலாம் என்பது பற்றியும் ஓரளவிற்குத் தெளிவாக எனது கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழியை வளம்படுத்துவதற்கு, மேற்கொள்ள் வேண்டிய சீர்திருத்தங்கள் வேறு பலவும் உள. அவற்றுள் சொல் எழுத்து வரையறை, ஒலிப்பெயர்ச்சி என்பன தலையானவை. இவற்றுள் ஒலிப்பெயர்ச்சி சற்று விரிவாகவே ஆராயப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துகளைத் தூக்கி எறிந்துவிட்டு, றோமன் எழுத்துகளை எடுத்தாளலாமேயென, ஒரு புடையாகச் சிந்திக்கும் சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். தமிழ் மொழிக்கு இவை ஏற்றவைதாமா என்பது பற்றியும் அலசி ஆராயப்பட்டுள்ளது.
இந் நூலிற் காணப்படும் கட்டுரைகளுட் பெரும்பாலான வற்றை ஒரு மொழியியல் அறிஞரின் கண்ணோட்டத்தோடு நன்கு துருவி ஆராய்ந்து, குறைகளைச் சுட்டிக்காட்டிப் பயனுள்ள கருத்துகள் பலவற்றைத் தெரிவித்த, யாழ் பல்கலைக்கழக மொழியியல் துறைப் பேராசான் திரு. சு. சுசீந்திரராசா அவர்களுக்கு நான் மிகப் பெருங்கடப்பாடுடையேன்.

யாழ், பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளர்களுள் ஒருவராகவிருந்த கவிஞர் இ. முருகையன் அவர்கள் எழுத்துச் சீர்திருத்தத்தில் மிகுந்த ஈடுபாடுடையவர். இவர் நம்மிடை யேயுள்ள தலை சிறந்த திறனாய்வாளர்களுள் ஒருவர் எனவும் போற்றப்படுபவர். கையெழுத்துப்படி முழுவதையும் நன்கு அலசி ஆராய்ந்து இச் சிறு நூலுக்குப் பெரு விருப்போடு ஒர் 'அறிமுகம் எழுதியுள்ளார். என் நன்றி அவர்க்குரியது. இச் சிறுநூலை அழகுற அச்சிட்டு உதவி அதனை வெளி யிடும் பெரும் பொறுப்பையேற்றுள்ள சென்னை காந்தளக உரிமையாளர் அன்பர் திரு. க. சச்சிதானந்தன் அவர்களுக்கும் நான் நன்றியுடையேன்.
தமிழ் மக்கள் பலதுறைகளில் வளர்ச்சி குன்றித் தேக்க நிலை அடைந்துள்ளனர். கண்மூடித்தனமான பழமைப்பற்றும், தொலை நோக்கின்மையுமே இதற்குரிய தலையாய காரணங்கள் எனலாம். இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் மிகையான பழமைப் பற்றுடையார் உள்ளத்தை உறுத்தும்; நடுநின்று தொலை நோக்கோடு எண்ண முடியாதாரின் உணர்ச்சிகளைக் கிளறும். தமிழினத்தின், தமிழ் மொழியின், எதிர்காலச் சிறப்பொன்றே குறிக்கோளாக, இக் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அறிவியற் கண்ணோட்டத்தோடு இவற்றை அலசி நோக்கித் தெளிந்த சிந்தையோடு செயற்பட்டு, தமிழை ஓர் ஆற்றல் மிக்க மொழியாக வளம்படுத்தி, வருநாளில் இவ் இனம் நனிசிறந் தோங்க வழிவகுப்போமாக.
நன்றி.
சரசாலை, ம. கங்காதரம்.
சாவகச்சேரி (இலங்கை) 15. O6. 1995

Page 7

1. சீர்திருத்தம் தேவையா?
மக்கள் தங்களுடைய கருத்தை ஒருவருக்கு ஒருவர் தெரிவிப்பதற்கு ஏற்ற கருவியாகப் பயன் படுத்தும் குரல் ஒலித் தொகுதியே மொழி எனப்படும். அடிப்படையில் உரையாடுவதற்குப் பயன் படுத்தப்படுவதே மொழி என்க. இவ்வாறு மொழிவதற்கு - உரையாடுவதற்குப் பயன்படுத்தப் படுவதனாலேயே அது 'மொழி' எனப்படலாயிற்று. பேச்சு மொழியில் இருந்து தோன்றி, அதற்கு அடுத்த நிலையில் இருப்பதே எழுத்து மொழி. மொழியை, வகுப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சில குரல் ஒலிகளே தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு மொழியும் தேர்ந் தெடுத்துள்ள குரலொலிகள் அதனை ஆளும் மக்களின் குரலொலிப்பின் இயல்பான தன்மைக்கு ஏற்ப மாறுபடும்.
கருத்தைப் புலப்படுத்துவது ஒலியேயன்றி எழுத்தன்று. இதனால் தேவைக்கு ஏற்ப காலம் தோறும் எழுத்துக்களின் வரி வடிவம் மாற்றம் அடையும். எளிதில் எடுத்தாளக் கூடியாவாறு அதன் வரி வடிவு அமையுமாயின் விரைவாகக் கற்பதற்கும், திறன் மிகுவதற்கும், இவற்றின் அடிப்படையாகப் பெரும் பயன் விளைவதற்கும் அது உறுதுணையாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது, இன்றைய தமிழ் வரிவடிவு இச்சிறப்புகள் எதுவுமற்றதாய் சிக்கல் மிகுந்த அமைப்புடையதாய்க் காணப்படுகின்றது. காலத்தின் தேவைக்கு ஈடு கொடுத்து இன்று மேலையர் பல துறைகளிலும் தீவிரமாக முன்னேறி வருவதற்கு அவர்களுடைய மொழியமைப்பு, குறிப்பாகச் சிக்கல் அற்ற வரி வடிவ அமைப்பு உறுதுணையாக இருத்தல் கண்கூடு. தமிழ் எழுத்துகள் எளிமையும், ஒழுங்கும்

Page 8
12 தமிழ் எழுத்துகள்
அற்றனவாய் சிக்கல் மிகுந்த மறை பொருட் தன்மை யுடையனவாக இருத்தலினாலேயே, அவை காலத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது பின்னடைந்து நிற்கின்றன. இதனால் அம் மொழிக்குரியோரும் பல துறைகளில் விரைந்து முன்னேற முடியாது பின்தங்கி நிற்கின்றனர்.
தமிழ் ஒரு தொன்மொழி. அதனால் அதன் வரி வடிவு காலம் தோறும் மாற்றமடைந்தே வந்துள்ளது. மிகப் பழைய தமிழ் வரி வடிவைப் பற்றிய தெளிவான கருத்து, இன்று வரை கிடைக்காவிடினும், கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதலாக வழக்கிலிருந்த தமிழ் எழுத்துக்களின் வரி வடிவைப் பற்றிய செம்மையான கருத்து நமக்குக் கிடைத்துள்ளது. பின்னாளில் சமக்கிருத ஒலிகளுக்காக உயிர் எழுத்துக்களுக்கிடையே ஐ, ஒள என்னும் புணரொலி எழுத்துகள் புகுத்தப்பட்ட போதும், நன்னூல் ஆசிரியரான பவணந்தி முனிவர் காலத்துக்குச் சற்று முன்பு வரையும் உயிர், மெய் எனப்படும் இருவகை எழுத்துகளும், அவற்றின் வரி வடிவங்களுமே தமிழ் நெடுங்கணக்கில் பயின்று வந்துள்ளன. பின்னாளில் உயிர் மெய் எழுத்துகளுக்கு, தனி வரிவடிவு வகுக்க முனைந்தோரே, இன்றைய வரிவடிவில் காணப்படும் கரை கடந்த சிக்கல்களுக்குக் காரணமாவர்.
இச் சிக்கல்களை நீக்கித் தமிழ் வரிவடிவை எளிமையுடைய தாக்கும் முயற்சிகள் காலம் தோறும் மேற்கொள்ளப்பட்டு: வந்துள்ளன. தொல்காப்பியர் காலத்தில் குற்றியலுகரம், குற்றிய லிகரம் ஆகிய இரண்டும் புள்ளி பெற்றே வழங்கி வந்தன. பின்னாளிலேயே இப் புள்ளிகள் நீக்கப்பட்டு ஏனைய உகர இகரங்களைப் போன்று எழுதப்படலாயின. 'ம' என்னும் எழுத்து சில காலம் 'ப' போன்று 'ப' என்றும் எழுத்தின் உட்பக்கத்தில் புள்ளி பெற்றே பயிற்று வந்தது. பின் நாளில் இவ் வழக்கு ஒழிக்கப்பட்டு இன்றுள்ள மாற்று வரிவடிவம் புகுத்தப்பட்டது. அகர உயிர் மெய்யோடு புள்ளி சேர்த்தே

ம. கங்காதரம் 13
ஆகார உயிர் மெய் எழுதப்பட்டது. சான்றாக 'கா' என்னும் உயிர் மெய் 'க." என எழுதப்பட்டு வந்தது. முற்றுப்புள்ளிக்கும் இதற்கும் வேறுபாடு தெரியாது மயங்க வேண்டிய நிலை ஏற்பட்டமையின், புள்ளிக்குப் பதிலாக 'ா' என்னும் ஆகாரக் கால் சேர்த்து எழுதும் வழக்கம் தோன்றலாயிற்று. 'எ, ஒ என்னும் குறில்களும் முன்னாளில் புள்ளி பெற்று பயின்று வந்தன. இப் புள்ளிகளை நீக்கி இன்றுள்ளவாறு இவற்றுக்கு முறையே கீழ்க் காலும், கீழ்ச் சுழியும் சேர்த்துச் சீராக்கிய பெருமை சமயத் தொண்டராகத் தமிழ் மண்ணுக்கு வந்த வீரமா முனிவர் என்னும் இத்தாலியருக்கே உரியது. ரகர உயிர் மெய் அந் நாளில் ஆகாரக் கால் போன்று 'ா' என்னும் வடிவினதாக இருந்தது. இன்றுள்ளவாறு இதற்குக் கீழ்க்கால் சேர்த்து வேறுபடுத்திக் காட்டியவரும் இவரே. மிக அண்மையில் பெரியார் இராமசாமி நாயக்கர் பரிந்துரைந்த சீரமைப்பு 13 எழுத்துகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இச் சிறுசீரமைப்பால் விளைந்த பெரும்பயன் எத்தகையது என்பதற்கு அச்சகப் பணியில் ஈடுபட்டு உள்ளோர் சான்று பகர்வர். இடைக் காலத்தில் ஏட்டோலை மீது எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட எழுத்தாணியின் இசைவாக்கத்திற்கேற்பச் சீர்குலைக்கப்பட்ட தமிழ் வரிவடிவு, இச் சிறு முயற்சியால் ஓரளவுக்கேனும் சீரடைந்துள்ளது என்பது உண்மையே. ஆயினும் இன்றைய வரிவடிவங்களில் காணப்படும் குறைபாடுகளை ஆய்ந்து நோக்கும் போது இச் சீரமைப்பு முயற்சியில் நாம் காற்கிணறு கூடத் தாண்டவில்லை என்பது புலனாகும். காலமாற்றத்தின் தன்மையை உணர்ந்து அம் மாற்றங்களுக்கு ஈடு கொடுத்தவாறு, தமிழ் இனம் விரைந்து முன்னேற உதவக்கூடியதாக, எளிமை, ஒழுங்கு, திறன் என்பன மிக்கதாகுமாறு தமிழ் வரிவடிவைச் சீராக்குவதற்கு முன் நின்று உழைக்க வேண்டிய கடப்பாடு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. இக் கடமையினின்றும் நாம் ஒதுங்கி நிற்போமாயின் எதிர்காலத்தில் நம் மொழிமையும் அதன் வழி இனத்தையும் இழப்பதற்கு வழி கோலிய பெரும் பழிக்கு ஆளாக நேரிடும். ஆகவே இவ் இழிநிலை

Page 9
14 தமிழ் எழுத்துகள்
தோன்றாதவாறு தடுப்பதற்கு, எஞ்சியுள்ள குறைகளையும் அகற்றித் தமிழ் வரிவடிவை முழுமையாகச் சீராக்கும் பணி தாமதமின்றி மேற்கொள்ளப் படுதல் வேண்டும். இப் பணியின் இன்றியமையாமையை உணர்ந்து செயலில் ஈடுபடுவதற்கு முன்னர், இன்றைய வரிவடிவங்களில் காணப்படும் குறைகளை நன்கு உணர்ந்து, தெளிதல் வேண்டும்.
குறைபாடுகள்: இன்று வழக்கில் உள்ள தமிழ் எழுத்துகளில் காணப்படும் ஒழுங்கீனங்களை, அடிப்படை அமைப்போடு தொடர்புடையவை, வரிவடிவ அமைப்போடு தொடர் புடையவை என இரு பெரும் பிரிவுகளுள் அடக்கலாம்.
அமைப்புக் குறைபாடு : உயிர், உயிர்மெய் ஆகிய இரு வகை எழுத்துகளிலும் இக் குறைபாடு உண்டு:
தமிழ் எழுத்துகளின் தோற்றம், வளர்ச்சி, வரிவடிவமாற்றம் என்பனவற்றைத் துறைபோக ஆராய்ந்த பல அறிஞர்களின் கருத்துப்படி முதன்முதலாகத் தமிழ் அரிச்சுவடி வகுக்கப்பட்ட போது உயிர் நெடில்களே முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதன் பின்னரே இவற்றின் குறுகிய ஒலிப்புள்ள, உயிர்க் குறில்கள் வகுக்கப்பட்டன. அ, இ, உ, எ, ஒ என்னும் இவ் ஐந்து குறில்கள் குறிக்கும் ஒலிகளே உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளில் அடிப்படை உயிர் ஒலிகளாக எடுத்தாளப்பட்டுள்ளன. இந்த ஒழுங்கைப் பின்பற்றியே, ஆங்கில மொழி உயிர்எழுத்துகளான a, 1, u, e, 0, என்பன வகுக்கப்பட்டன. ஒலிப்பெளிமை குன்றிய மெய் ஒலிகள் பின்னாளிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டன. உயிர் எழுத்துகளில் குறிலும், நெடிலும் பெருமளவிற்கு ஒத்த வடிவினதாக இருத்தலே நெறி. ஆனால் இன்று வழங்கில் உள்ள "ஊ" வின் வடிவமைப்பு இதற்கு முரண் ஆவது போன்றே, "இ" யின் நெடிலாய ஈ குறிலின் சாயல் எதுவுமன்றி முரண்பட்ட வடிவுடையதாகக் காணப்படுகிறது. இடைக்காலத்தில் ஏற்பட்ட வரிவடிவச் சிதைப்பே இதற்குக் காரணம். இன்று 'ஊ' என்னும் உயிர்

ம. கங்காதரம் 15
எழுத்தில் காணப்படும் ‘ள கல்வெட்டு எழுத்துகளில் இல்லை. அதற்குப் பதில் வேறொரு குறியீடே உள்ளது. இவ் வடிவே காலப்போக்கில் சிதைந்துள' ஆகியிருக்கலாம். எவ்வாறாயினும் "உ" வின் மேல் ‘ள இவர்ந்த நிலையில் உள்ள வரிவடிவு தனி ஒலி வடிவுடைய ஓர் உயிர் எழுத்துக்கு ஏற்றதன்று. இதனால் இவ் எழுத்து அமைப்புக் குறைபாடுடையது.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதலாக, கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை, கல்வெட்டுகளில் உயிர் எழுத்துகள் குறில், நெடில் என இணைந்தே காணப்படுகின்றன. கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே, நெடில் என்னும் பெயரில், சமக்கிருத உயிர் எழுத்துகளிடையே காணப்படும் புணரொலிக்காகவே 'ஐ' தமிழ் உயிர் எழுத்துகளிடையே புகுத்தப்பட்டிருத்தல் வேண்டும். இதைப் போன்ற மற்றொரு புணரொலி எழுத்தான 'ஒள' எப்போது புகுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. சமக்கிருத உயிர் எழுத்துகளில் காணப்படும் புணரொலி எழுத்துகளின் ஒலியையே இவை குறித்தலால், இவ் எழுத்துகள் இரண்டும் பெரும்பாலும் ஒரே காலத்தில் அல்லது சற்று முன் பின்னாகப் புகுத்தப் பட்டிருத்தல் கூடும் எனக் கொள்வதில் தவறேதும் இல்லை. ஏனைய உயிர்களைப் போன்று தனி ஒலிப்புடையனவல்ல ஆகலானும், இணையான குறில் இன்மையாலும், இவை பின்னாளில், திட்டமிட்டுப் புகுத்தப்பட்டவை என்பது உறுதியாகிறது. உயிர் எழுத்துகளைக் குறில், நெடில் எனக் கீழ் கண்டவாறு இரு வரிசைகளில்,
69 இ ஒ p s FF ஏ 8 ஒ ஒள
என ஒழுங்குபடுத்தும் போது, ஐ, ஒள, என்பன அவற்றுக்கு இணையான குறில் இன்றித் தனித்து நிற்பதைக் காணலாம். இதனால் இவை தமிழ் உயிர் எழுத்துகளின் வரையறையான ஒழுங்கமைப்பைச் சீர்குலைத்துள்ளன. அந் நாட்களில் நிலவிய

Page 10
16 w தமிழ் எழுத்துகள்
சூழ்நிலையில், சமக்கிருத மொழிக்கிருந்த கரை கடந்த செல்வாக்குக் காரணமாக, தமிழ் உயிர் எழுத்துகளின் சீரிய ஒழுங்கை விளங்கிக் கொள்ளத் தவறியவர்கள் இப் புணரொலி எழுத்துகளைப் புகுத்தியிருக்கலாம். தெளிவான மொழி அறிவுடையோர் செயலாக இது ஒருபோதும் இருத்தல் இயலாது. இவை உயிர் எழுத்துகளுக்கு மிகையானவை என்பதைத் தெளிவு படுத்தும் சான்றுகள் வேறு சிலவும் உள. அவை உரிய இடத்தில் பின்னர் காட்டப்படும்.
சிந்தனைத் தெளிவின்றிச் செயற்பட்டோரே 'ஒள' என்னும் எழுத்து இன்று ஏற்றுள்ள, வரிவடிவுக்குக் காரணம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும். ஒரு மொழியின் உயிர் எழுத்துகள் வரையறையான தனி ஒலிப்புடையனவாக இருத்தலே நெறி. தமிழ் எழுத்துகள் அத்தகைய ஒலி அமைப்புடையனவே. ஆனால், இடையில் புகுத்தப்பட்ட 'ஒள' என்னும் எழுத்தில், இரண்டு ஒலிகள் இணைந்திருப்ப தோடமையாது, தமிழ்தெடுங்கணக்கில் உள்ளனவும் வெவ்வேறு ஒலிப்புடையனவுமான, 'ஒ', 'ள' என்னும் இரு வேறு எழுத்துகளும் அதில் இணைந்து காணப்படுகின்றன. இவ்வாறு இணைந்துள்ள எழுத்துகள் 'ஒ–ள' எனவே ஒலிக்கப்படுதல் வேண்டும். ஆனால் அவை 'அவ்' என ஒலிக்கும் என அவ் எழுத்தைப் புகுத்தியோர் கூறிச் சென்றனர். இன்றும் நாம் இவ்வாறே இதனை ஒலிக்கின்றோம். எழுத்தின் அமைப்புக்குப் பொருந்தாத ஒர் ஒலிப்பை, கண்மூடி ஏற்குமாறு செய்து, பல தலைமுறைகளைச் சேர்ந்த தமிழ் மக்களை எண்ணும் திறனற்ற ஓர் இனமாக உலக அரங்கில் நிறுத்திய பெருமை இவர்களையே சாரும,
உயிர்மெய் எழுத்துகளில் இதனிலும் மிகுந்த குறைபாடுகள் பல உள. மெய்யோடு உயிர் இணையும் போது உயிர்மெய் தோன்றும். இன்றைய உயிர்மெய்களில், உயிர் எழுத்துக்குப் பதிலாக, ஒழுங்கற்ற உயிர்க் குறிகளே எடுத்தாளப்படுகின்றன.

ம. கங்காதரம் 17
இதற்கமைய மெய்யோடு உயிர்க்குறி இணையும் போது உயிர் மெய் பிறத்தல் வேண்டும். ஆனால் உண்மையில் நிகழ்வது என்ன? அகர உயிர்மெய்யோடு உயிர்க் குறி இணைந்தே உயிர்மெய் பிறக்கின்றது; இது இன்று ஒப்புக் கொள்ளப்பட்ட மொழியியல் நெறிகளுக்கு முற்றிலும் முரணானது. இந்த ஒழுங்கீனங்களைப் புலப்படுத்துவதற்கு ஏற்ற ஓர் எடுத்துக்காட்டாக, ககர உயிர் மெய்களின் அமைப்பை மட்டும் இங்கு நோக்குவோம்.
க என்னும் உயிர்மெய்: க் + அ = க என்பர். இந்த உயிர்மெய் பிறக்குமுன் அதன் பிறப்புக்கு அடிப்படையாக அமைந்துள்ள க், அ ஆகிய இரண்டு எழுத்துகளுக்கும் நிகழ்வதை நோக்குவோம். க் என்னும் மெய்யின் தலைப்புள்ளி நீக்கப்படுகிறது. எஞ்சியிருப்பது க. இதுவே ககர உயிர் மெய்யின் வடிவம். இவ்வாறாயின், மெய்யோடு புணர்ந்த அகர உயிருக்கு யாது நிகழ்ந்தது? அது இந்த வரிவடிவ மாற்றத்தில் எப்பங்கும் வகிக்காது மாயமாக மறைத்துள்ளது. 'க' என்னும் உயிர்மெய்யில் 'அ' வின வரிவடிவு கலந்துள்ள சுவடே இல்லை. 'அ' என்னும் உயிர் 'க்' என்னும் மெய்யோடு புணர்ந்ததால் மெய்யின் தலைப்புள்ளி நீக்கியது மட்டுமே வெளிப்படையாகத் தெரிகிறது.
'கா' என்னும் உயிர்மெய் : க் + ஆ = கா ஆகும் என்பர். 'க' என்னும் உயிர்மெய் பிறந்தவற்றை மேலே கண்டோம். இதனோடு ஆகார உயிரைக் குறிக்கும், 'ா' என்னும் கால் சேர்க்கப்பட்டு 'கா' என்னும் உயிர்மெய் பிறக்கிறது. இவ்விரு மாற்றங்களையும் ஒன்றாகத் தொகுப்பின் (க்+அ) + ஆ (ா) = கா என்றாகின்றது. இங்கு'ா', 'ஆ' விற்குப் பதிலாக எடுத்தாளப்படும் உயிர்க்குறி அதாவது க + ஆ (ா) = கா ஆகின்றது. உயிர்மெய் எழுத்தில், உயிர்குறி, மெய் எழுத்தோடு மட்டுமே இணைதல் நெறி. ஆனால் ஆகார உயிர் குறியான 'ா', 'க' என்னும்

Page 11
18 தமிழ் எழுத்துகள்
உயிர்மெய்யுடன் பின்னொட்டாக இணைந்தே 'கா' என்னும் உயிர்மெய் பிறந்துள்ளது. இதனை எவ்வாறு விளக்குவது?
உயிர்மெய்களின் தோற்றத்திற்குப் பயன்படும் உயிர் குறிகளும், அகர உயிரோடு எங்கும் ஒரே சீராக இணைவ தில்லை. இகர, ஈகாரங்களில் இவை மேல் விசிறிகளாக உள்ளன. உகர ஊகாரங்களில் அவை பல்வேறுவகையாக ஒட்டியுள்ளன. ஏகாரம், ஐகாரங்களில் முன் ஒட்டாகவும், எஞ்சியவற்றில் இரு வகை ஒட்டாகவும் அவை காட்சி யளிக்கின்றன.
எந்த நெறிகளுக்கும் அமைவாக இல்லாத, இந்த ஒழுங் கீனங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் ஓர் ஒழுங்குக்கு உட்பட்டதாக மாற்றப்படுதல் வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமே இல்லை.
வடிவக் குறைபாடு: ஐ, ஒள என்பன நீங்கலாக உயிர் எழுத்துகள் குறில், நெடில் என இணைந்தே உள்ளன. குறிலின் நீட்டம் நெடில் எனவும், நெடிலின் குறுக்கம் குறில் எனவும் கொள்ளப்படுதலின், இந்த இணை எழுத்துகளிடையே வடிவ ஒற்றுமை நிலவுதலே நெறி. இ, ஈ, உ, ஊ என்னும் இணைகள் நீங்கலாக, ஏனையவற்றில் இப்போதும் இந்த ஒழுங்குண்டு. இதனால், இவ் ஒழுங்குக்கேற்ப, இந்த இரண்டு இணைகளையும் வடிவ ஒற்றுமை உடையனவாக மாற்ற வேண்டும் என்பதையும் நாம் புறக்கணித்தல் இயலாது.
உகர, ஊகார உயிர்மெய்களில் உள்ள உயிர்க் குறிகள் அகர உயிர் மெய்யோடு முன்னொட்டாகவோ அல்லது பின் னொட்டாகவோ சேர்த்திராது, அதன் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளன. இவ் அமைப்பில் எத்தகைய ஒழுங்கும் இல்லை. ங், சு, பு, யு, வு, என்னும் ஐந்தும் ஒருவகை ஒழுங்கில் அமைந்தவை. கு, டு, மு, ரு, ளு, ழு என்னும் ஆறும் வேறு ஒரு வகை வடிவின. எஞ்சியுள்ள ஒது, து, நு, லு, று, னு,

ம. கங்காதரம் 19
ணு என்னும் ஏழும் பிரிதொரு வகையின. ஊகார உயிர் மெய்களும் இவ்வாறே வெவ்வெறு வகையாக அமைந் துள்ளன. கு, கூ என்பவற்றிடையே வடிவ ஒற்றுமை இல்லை. கு வின் வரிசையில் உள்ள ஏனையவை வளைந்த வில்லின் இறுதியில் சுழி சேர்ந்து எழுதப்பட இது மட்டும் தனிவடிவம் பெற்றுள்ளது. ஒரே உயிர் ஒலிப்புள்ள உயிர்மெய்களில் ஒரே வகையான உயிர்க்குறி சீராக இணைந்திருத்தலே நெறி, ஆனால் இவற்றிடையே அத்தகைய ஒழுங்கு ஏதும் இல்லை.
ரகர ஒற்று கீழ்க் காலின்றி ‘ர்‘ என எழுதப்படுகிறது. மெய் புள்ளி நீக்கிய வடிவமே ரகர உயிர்மெய்யாகக் கொள்ளப் படுதலின் ரகர ஒற்று ர வின் மீது தலைப்புள்ளி சேர்ந்து எழுதப்படுதல் வேண்டும்.
எத்தகைய விளைவு? இந்த ஒழுங்கீனங்கள் அனைத் தையும் கருத்தூன்றி நோக்க வல்லாருக்கு இன்றைய தமிழ் எழுத்துகளின் வடிவமைப்பில் காணப்படும் மலையணைய குறைபாடுகள் எளிதிற் புலனாகும். பண்டை நாளில் ஏட்டில் எழுதியோர், எழுத்தாணியின் இயல்பான ஓட்டத்திற்கு ஏற்ப எழுத்தின் வரிவடிவைச் சிதைத்து எழுதினர். இவ்வாறு வரிவடிவு திரிக்கப்பட்ட எழுத்துகளே இன்று நம்மிடையே வழங்கி வருகின்றன. பெருமாற்றங்கள் பல விரைவாகப் புகுந்து வரும் இந்நாளில் வளர்ச்சி, மேம்பாடு ஆகியனவற்றுக்காகத் தொடர்ந்து போராடி வரும் தமிழ் இனத்தின் எழுத்தாக இவை இருத்தல் தக்கதா? உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் என்பன அடங்கிய 247 வெவ்வெறு வரிவடிவ அமைப்புகளைப் பயின்று அவற்றை நினைவில் நிறுத்தி, உரிய நேரத்தில் உரிய இடத்தில் வழுவறப் பொருத்த வேண்டிய பெரும் சுமையைத் தமிழ் மொழியைக் கற்போர் சுமக்க வேண்டியுள்ளது. ஒழுங்கற்ற இந்த வரிவடிவங்களை நினைவில் சுமந்து, பயில்வதற்குச் சிறுவர்களும், பிறமொழியாளர்களும் எத்துணைத் துன்புற வேண்டியுள்ளது. இம் மொழியைக் கற்கப் புகுவோர் நெடுநாள்

Page 12
2O தமிழ் எழுத்துகள்
பெரு முயற்சி செய்தே அதனைக் கற்க வேண்டியுள்ளது. இதனால் பிற மொழியாளர்கள் இம் மொழியைப் பயின்று அதில் உள்ள அருங்கலைச் செல்வங்களை அறிந்துகொள்ள முன் வருதில்லை. சில அரை குறை மொழி பெயர்ப்புகளின் ஊடாகத் தமிழ் மக்களையும் தமிழையும் மேற்போக்காக எடை போடுவதோடு அவர்கள் மன நிறைவு பெறுகின்றனர்.
இம் மொழியின் எழுத்தமைப்பு, ஒரு நெறியான ஒழுங்குக்குட் பட்டதாக இருப்பின், அதனைக் கற்போரின் பணி எளிதாகும். இதனால் இம் மொழியில் உள்ள கலைச் செல்வங்களைக் கற்றறிய விழையும் பிற மொழியாளரும் இம் மொழியை விரும்பிக் கற்கும் நிலை தோன்றும். இம் மொழி உலகளாவி, விரைந்து பரவுவதற்கும் இதனால் வாய்ப்பு மிகும்.
மேலும், முன்னாளில் கல்வி என்பது மொழிக் கல்வியையே சுட்டி நின்றது. வீடுபேறு அடைதலே அதன் பயன் என மதவாதிகள் வரையறுத்துள்ளனர். ஆனால் இன்றைய நிலைமை இதனின்றும் முற்றிலும் வேறுபட்டுள்ளது. பல்வேறு அறிவுத்துறைகளிலும் அறிவீட்டுவதற்கான முதற்படியே மொழிக் கல்வி என்னும் கருத்து நிலை பெற்றுள்ளது. ஆதலின், மொழியறிவைப் பெறுவதற்காக மட்டும் முன்போல நீண்டகாலத்தைச் செலவிடுதல் பயனுள்ள ஒரு செயலாகாது. அந்நாளில் சமுதாயத்தில் உள்ள மிகச் சிலரே கல்வி பயில்வதற்கான வாய்ப்பு நிலவியது. ஆனால் இன்று அனைவருக்கும் கல்வி, வாழ்நாள் முழுமையும் கல்வி என்னும் உயர்ந்த கோட்பாடு உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந் நிலையில் மொழியை மட்டும் கற்பதற்கு, மிகுந்த அளவில் காலத்தையும், முயற்சியையும் செலவிடுதல், இனத்தின் வளர்ச்சி, மேம்பாடு என்பன பின்னடைவதற்குத் துணை நிற்கும் செயலாகவே அமையும்.

ம. கங்காதரம் 21
எளிய அமைப்புள்ள, மிகக் குறைந்த எண்ணிக்கை யுள்ள, எழுத்துகளும் மேலையர் இன்று எய்தி உள்ள வியத்தகு முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாகும். சேர்மானிய, ரூசிய மொழிகள் ஒவ்வொன்றிலும் 33 எழுத்துகளே உள்ளன. ஃபிரான்சு மொழியில் 24 எழுத்துகளே உள. இன்று உலகப் பொது மொழியாகிக் கொண்டிருக்கும் ஆங்கிலத்திற்கு 26 எழுத்துகளே உண்டு. இம் மொழிகளை எடுத்தாள்வதில் பல சிக்கல்களும் ஒழுங்கீனங்களும் உண்டு என்பது உண்மையே. ஆயினும் கால ஓட்டத்தில் புதிதாகப் பிறக்கும் பல தொழில் நுட்பக் கருவிகளில் இவற்றை எடுத்தாளுதல் எளிது. தட்டச்சு, தனியச்சு, வரியச்சு, தொலையச்சு, கணினி முதலிய கருவிகளில் இவற்றை இடர்ப்பாடின்றிப் பயன்படுத்தக் கூடியதாக இருத்தலின் காலம், முயற்சி என்பன வீணாகாது விரைவாகக் கருத்துகள் பரவ வாய்ப்பு மிகுதியாகின்றது. இதனால் வளர்ச்சி, முன்னேற்றம் என்பன எளிதில் கைகூடி வருவதற்கு அம் மொழிக்ளில் காணப்படும் சிறு தொகையான எழுத்துகளும் ஒரு வகையில் துணையாகின்றன.
அண்மைக்காலத்தில் யப்பான் மலைப்பூட்டும் அளவிற்கு முன்னேறி வருவது எங்ங்னம்? பல வல்லரசுகளை மிக விரைவில் பின்னணிக்குத் தள்ளிவிடக் கூடிய பெருவளர்ச்சி கைகூடி வருவது எவ்வாறு? இதற்குரிய காரணங்கள் பல. அவற்றுள் முக்கியமானவை இரண்டு எனலாம். ஒன்று யப்பானிய மக்களின் அயராத உழைப்புத் திறன், மற்றையது காலத்தின் தேவை நோக்கிச் சீராக்கப்பட்ட அவர்களுடைய மொழி. யப்பானிய எழுத்துகள், ஓவிய எழுத்துகளின் வகையைச் சேர்ந்தவை. எழுத்தைப் பார்த்தே பொருள் உணரலாம். இதனால் அம் மொழியைக் கையாளுவதற்கு 44,000 க்கும் அதிகமான எழுத்துகளை அறிந்திருத்தல் வேண்டும். இதன் விளைவாக நீண்ட நாட்கள் அல்லலுற்ற அம் மக்கள் கலப்பெழுத்துகளை ஒதுக்கிவிட்டு, சிறு தொகையான முதல் எழுத்துகளையே பயன்படுத்தத் தொடங்கினர். வெவ்வெறு தேவைகளுக்கென மூவகை எழுத்துகளை அவர்கள்

Page 13
22 தமிழ் எழுத்துகள்
பயன்படுத்தி வருகின்றனர். அன்மையில் நான்காவது எழுத்து முறை ஒன்றையும் புகுத்தியுள்ளனர். அதன் பின்னர் பல்வேறு துறைகள் அனைத்திலும் வியப்பூட்டும் அளவுக்கு அவர்கள் அடைந்துள்ள முன்னேற்றம் ஒரு தனிப்பட்ட வரலாறாகவே மலர்ந்துள்ளது.
ஆய்தம் நீங்கலாக ஐ, ஒள என்னும் புணரொலி எழுத்துகள் இரண்டும் உட்பட, இன்றும் 30 எழுத்துகளே தமிழில் உள்ளன. ஆய்தம் உட்பட 247 எழுத்துகள் என்பது மிகத் தவறான கணக்கீடு. உயிர், மெய், உயிர்மெய் என்பவற்றின் வரி வடிவங்களது கூட்டுத் தொகையை 246, இதனைப் பெறுவதற்காக இன்று நாம் 124 வரிவடிவங்களைப் பயன்படுத்துகிறோம். இடைக் காலத்தில் ஏட்டில் எழுத்தாணியால் எழுதியோரே, இந்த சிக்கலான வரிவடிவங்களை வகுத்துச் சென்றனர். இவற்றை மேலும் சுமந்து திரியாமல் சீராக்க வேண்டிய நாள் வந்துள்ளது. தமிழ் அறிஞரான வா.சே. குழந்தைசாமி அவர்கள் குறிப்பிட்டது போன்று, 'உயிரையும் மெய்யையும் பயன்படுத்தி, உயிர் மெய்களை அமைப்பதில் நம் முன்னோர் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்திச் சென்றனர். அதில் நாம் இதுவரை உழன்றது போதும், தொடர்ந்தும் உழல்வதற்கு ஏற்ற காரணம் எதுவும் இல்லை'.
இயல்பாக எளிதில் ஒலிக்கக்கூடிய, ஒலியமைப்பைப் பெற்றிராத மொழி நாளடைவில் மக்கள் நாவில் தவழாது ஏட்டளவில் நின்று விடும். இலத்தின், கிரேக்கம், சமக்கிருதம் ஆகிய மொழிகள் வழக்கற்று ஏட்டளவில் முடங்கிக் கிடப்பதற்கு இதுவே தலையாய காரணம். இவ்வாறே ஒலி நுட்பத்தோடு, எளிய வரிவடிவமும் அமையப்பெறாத எழுத்து முறையும் காலப் போக்கில் மக்களால் புறக்கணிக்கப்படும். துருக்கி, சீனம், யப்பானியம் ஆகிய மொழிகளுக்கும் நேர்ந்தது இதுவே. துருக்கி றோமன் வரிவடிவை ஏற்றுள்ளது. வேறு பல மொழிகளும் இதனையே ஏற்றுள்ளன. தமிழ் வரிவடிவு சீராக்கப்படாது. தொடர்ந்தும் இன்றுள்ளவாறு சிக்கல்

ம. கங்காதரம் 23
மிக்கதாகவே இருக்குமாயின், முன்னேறுவதற்கு வாய்ப்பு இருந்தவிடத்தும் எழுத்துகளின் அமைப்பு அதற்கு இடையூறாக இருக்கின்றது என மக்கள் உணரும் நிலை ஏற்படும் போது, இன்றைய வரிவடிவங்களைத் தூக்கி எறிந்து விட்டு வசதியுள்ளது எனக் கருதும் வேறொரு வரிவடிவைத்தேர்ந்து எடுப்பதற்கு அவர்கள் பின்நிற்க மாட்டார்கள். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமையக் கூடியவாறு இன்றுள்ள வரிவடிவங்களைத் தக்கவாறு சீராக்கிப் பெரும் பயன் விளைவிக்குமாறு அவற்றை எடுத்தாள்வதை விடுத்து, தொல்பெரும் மொழியின் தனித்தன்மை வாய்ந்த வரிவடிவைக் கைவிட்டு, மொழியின் ஒலியமைப்புக்கு இசைவாக அமையாத ஒலி அமைப்புள்ள வேறொரு வரிவடிவினை ஏற்றுத் தமிழ் மக்கள் அல்லற்படப் போகின்றனரா? இந்த இனம் இதற்கு இசையாது என்பதுண்மையாயின், எஞ்சியுள்ள சீர்திருத்தத்திற்கு ஏற்ற முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
சீர்திருத்தம் தேவையா என்ற கேள்விக்கே இடம் இல்லை."
"செய்தக்க அல்ல செயக் கெடும், செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.' (-குறள்)

Page 14
24 தமிழ் எழுத்துகள்
2. சீர்குலைக்கப்பட்ட தமிழ் எழுத்தொழுங்கு.
தமிழ் எழுத்துகளின் பண்டைய ஒழுங்கு இடைக் காலத்தில் சீர் குலைக்கப்பட்டது என்பது உண்மையே. அதற்குரிய சான்றுகள் பல உள. அவற்றுள் சில இங்கு எடுத்துக் காட்டப்படுகின்றன.
மிகப் பழைய தமிழ் எழுத்துகளைப் பற்றித் தெளிவான கருத்தேதும் இல்லையெனவும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதலாக வழக்கில் இருந்த தமிழ் எழுத்துகளைப் பற்றிப் போதிய விவரங்கள் கல்வெட்டுகளிலிருந்து கிடைத்துள்ளன எனவும் முன்னரே கண்டோம். * தமிழ் எழுத்துகளின் வகை, எண்ணிக்கை, வைப்புமுறை, வரிவடிவு ஆகியன பற்றித் தெர்ல்காப்பியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தொல்காப்பியர் வாழ்ந்த காலத்துக்குச் சற்று முன்பு வழக்கி லிருந்த தமிழ் எழுத்துகளைப் பற்றிய விவரங்கள் இங்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொருளைத் தெளிவாக்குவதற்குப் போதுமானவை.
தொல்காப்பியர் வாழ்ந்த காலத்தைப் பற்றிய சரியான கருத்து இதுவரை யாராலும் முன் வைக்கப்படவில்லை. தமிழ்க் க்லைக் களஞ்சியத்தில் அவர் கி.மு 10 ஆம் நூற்றாண்டுக் குரியவர் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழ் ஆய்வில் தீவிர ஈடுபாடு காட்டிய தேவநேயப் பாவாணர், அவர் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு என்பர். வேறு சிலர் அவர் கி.மு 5 

Page 15
26 தமிழ் எழுத்துகள்
எழுத்துகள் 12 என அவர் ஒருபோதும் கூறியிருக்க மாட்டார். கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை 10 உயிர் எழுத்துகளே தமிழ் நெடுங்கணக்கில் காணப்பட்டன. அவர் வாழ்ந்ததாகக் கூறப்படும் காலத்தில் வழக்கில் இருந்த எழுத்துகளையே அவர் தமது நூலில் குறிப்பிடுவாரேயன்றி, அவர் காலத்துக்குப் பின் வழங்கிய எழுத்துகளைப் பற்றி எவ்வாறு குறிப்பிடமுடியும்? ஆகவே அவர் உயிர் எழுத்துகள் 28 என்றே கூறியிருப்பார். முதல் நூற்பாவில் அவை 30 எனக் குறிப்பிடப்பட்டிருப்பது எவ்வாறு?
மெய் எழுத்துகளின் ஈற்றெழுத்து ‘ள' என்பதை
"ஞாகார முதலா “ள கார வீற்றுப்
புள்ளி யிறுதி இயைபெனப்படுமே”
என்னும் நூற்பா சுட்டிக்காட்டுகிறது. உயிர் எழுத்துகளிடையே புணரொலி எழுத்துகள் இரண்டினைத் திணித்ததோடமையாது சமக்கிருத மெய் எழுத்துகளின் ஒழுங்குக்கேற்ப, தமிழ் மெய்களின் ஒழுங்கை மாற்றவும் செய்தனர்.
ஓர் எழுத்தொலியின் கால அளவைக் குறிப்பதற்குத் தொல்காப்பியர் எடுத்தாண்ட சொல் 'அளபு' இரண்டொரு நூற்பாக்களில் இதற்குப் பதிலாக 'மாத்திரை' என்னும் சொல் காணப்படுகிறது.
'கண்ணிமை நெடியோன் அவ்வே மாத்திரை, நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே
என 7 ஆம் நூற்பாவில் உள்ளது. மற்றுமோர் இடத்தில் இச் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. ஏனைய நூற்பாக்களில் 'அளபு' என்னும் சொல்லே உள்ளது.
இடைக்காலத்தில் புகுத்தப்பட்ட 'ஐ', 'ஒள' என்னும் புணரொலி எழுத்துகள் குறிக்கும் ஒலிகள் முறையே அஇ, அஉ என்பனவற்றால் குறிக்கப்படும் ஒலிகளுக்கு இணையானவை

ம. கங்காதரம் 27
எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.
'அகரம் இகரம் ஐகாரமாகும் - நூற்பா 54 'அகரம் உகரம் ஒளகாரமாகும் - நூற்பா 55
என்னும் நூற்பாக்கள் இதனைப் புலப்படுத்தும், தொல் காப்பியர் வாழ்ந்ததாகக் கூறப்படும் காலத்தையும், ஐ, ஒள என்பன உயிர் எழுத்துகளுட் புகுத்தப்பட்ட காலத்தையும் ஒப்பிட்டு நோக்கின், அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் புகுத்தப்பட்ட இந்த எழுத்துகளின் ஒலிக்கிணையான ஒலிச் சேர்க்கையைப் பற்றி அவர் எவ்வாறு கருத்து வெளியிட்டிருக்க முடியும் என்னும் கேள்விக்கு இடம் உண்டாகின்றது
சமக்கிருத மொழியில் மெய்யோடு அகர உயிர் புணரும் போது, மெய் எழுத்தின் மெய்க் குறி அகற்றப்பட்ட வடிவமே அகர உயிர் மெய்யாகக் கொள்ளப்படுகின்றது. மெய்யோடு அகர உயிர் சேர்ந்துள்ளதைக் காட்டும் வடிவ மாற்றம் ஏதும் அதில் இல்லை. ஏனைய உயிர் மெய்களில், அகர உயிர் மெய்யோடு புணரும் உயிர் எழுத்தைக் குறிக்கும் உயிர்க் குறிகளே இணைக்கப் பட்டுள்ளன. இடைக்காலத்தில், தமிழ் உயிர் மெய்களின் அமைப்பு இதே அடிப்படையிலேயே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்றும் அந்த அமைப்புமுறையே நடைமுறையில் உள்ளது.
ஆரியர் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்த காலத்தில், சமக்கிருத மொழியமைப்பை அடியொற்றித் தமிழ் எழுத்துகளின் அமைப்பு, ஒழுங்கு என்பன சீர்குலைக்கப்பட்டதோடு, தொல் காப்பிய நூற்பாக்கள் சில திரிக்கப்பட்டு இருப்பதும் கண்கூடு. இத்தகைய இடைச்செருகல், திரிப்பு, சிதைப்பு ஆகியனவற்றின் ஆழ அகலங்களை நன்கு ஆய்ந்து, அவற்றை நீக்கி தொல்லிலக் கணமாய தொல்காப்பியத்தைச் செப்பனிடும் பணியில் ஈடுபடுதல் தமிழ் அறிஞர் தலையாய கடன்.

Page 16
28 தமிழ் எழுத்துகள்
3. எழுத்தின் வரையறை
பேச்சு ஒலிகளைக் குறிப்பதற்காக வகுக்கப்படும் ஒலிச் சேர்க்கையுள்ள குறியீடே எழுத்து எனப்படும். இதனால் ஒரே பேச்சு மொழியைப் பல்வேறு வகையான எழுத்து முறைகளாற் குறிப்பிடுதல் சாலும். மொழி மாந்தன் படைப்பு: அதனை எழுதுவதற்குப் பயன்படும் குறியீடு ஆகிய எழுத்தும் அவன் படைப்பே. ஒர் எழுத்து குறிக்கும் ஒலி பல்வேறு நிலைகளில் திரிபடைவதுண்டு. இதனால் ஏற்படக்கூடிய மயக்கத்தினின்றும் விடுபட, எழுத்து, ஒலியியல் என்பன பற்றிய அடிப்படைக் கருத்துகளையேனும் நாம் அறிந்திருத்தல் வேண்டும்.
மொழியின் கூறுகள்: ஒலி, ஒலியன், அசை, சொல், தொடர் என்பன மொழியின் கூறுகளாகின்றன. ஒலி என்பது, ஓசையியல் ஆய்வாளர்களின் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப் படுவது. இதன் தனிக்கூறுகள் மேலை நாட்டு இசை வல்லார் பயன்படுத்துவது போன்ற, இசைக் குறியீடுகளாற் புலப் படுத்தப்படும். இத்தகைய ஒலி மொழியின் கூறாகப் பயன் படுத்தப்பட்டு வருவதற்கான சான்று எதுவும் இல்லை. வரையறையான ஒலியமைப்புள்ள மிகச் சிறு ஒலிக்கூறு ஒலியன் எனப்படும். ஒரு மொழிக்குரிய ஒலியன் வெறும் ஒலியன்று. ஆனால் ஓர் ஒலியின் முனைப்பான தனிக் கூறாகவே இது இருக்கும். மொழியைப் பேசுவோர் தம் பேச் சொலிகளில் அவற்றை வெளிக்கொணரவும், இனம் காணவும் பயின்றவர்களாக இருப்பர். உயிர், மெய் என்பன சேர்வதாற் பிறப்பது அசை. ஆனால், சொல்லில் அமைகின்ற அசைக்கும் அசை எழுத்துக்கும் பல நிலைகளில் ஒற்றுமை இருப்பதில்லை.

ம. கங்காதரம் 29
ஆகவே அசை என்பதைத் தக்கவாறு வரையறுப்பதாயின், 'பேச்சில் தொடர்ந்து வரும் ஒலியன்கள் ஒரே எழுத்தினால் குறிக்கப்படுதல்' என்றே கூறுதல் வேண்டும். தமிழில் உள்ள உயிர்மெய்கள், உயிர் ஒலியனும், மெய்யொலியனும் சேர்வதாற் பிறப்பவை. இவை அசை எழுத்துகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். உயிர்மெய் எழுத்துகள் அவற்றின் கூறுகளாகவுள்ள ஒலியன்களின் சேர்க்கையாற் பிறப்பதால், அசை எழுத்து எனத் தனிவகையான எழுத்தின்றியே தமிழ் மொழி மிகச் சிறப்பாக இயங்க முடியும். பொருள் புலப்படுமாறு அசைகள் சேரும்போது 'சொல்' பிறக்கும். சொற்களின் சேர்க்கையே தொடர். ஆனால் எழுத்துலகில் தொடர் மொழி எனவும் ஒன்று உண்டு. சுருக்கெழுத்து இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு தனி எழுத்து தனி உருபனையோ, சொல்லையோ குறிக்குமாயின் அது சொல்லியல் அல்லது உருபனியல் எழுத்து எனப்படும். இவற்றின் வேறாக, உருபொலியன் எழுத்து முறை, ஓவிய எழுத்து முறை என்பனவும் வழக்கில் உண்டு. சீன, யப்பானிய எழுத்துகளை ஓவிய எழுத்துக்கு ஏற்ற சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
சொல்லில் வரும் போது அயல் எழுத்துகளின் ஒலியமைப்புக்காரணமாக, ஒலியன் சற்றே ஒலித்திரிபடைவ துண்டு. இவ்வாறு திரிந்துள்ள ஒலி வடிவம் 'மாற்றொலியன்' எனப்படும். தமிழ் உட்படப் பல மொழிகளில் இவ் ஒலித் திரிபு நடைமுறையில் பொருட்படுத்தப்படுவதில்லை. இந்த உண்மையைக் கருத்திலிருத்திக் காணும்போது, தமிழ் எழுத்துகள் சிறந்த ஒலியன் எழுத்துகள் என்பது புலனாகும். ஆங்கில எழுத்துகளுக்கு இத்தனிச் சிறப்பு இல்லை. ஒலியனைப் பற்றிய இல் வரையறையில் இருந்து புலனாகும் ஓர் உண்மையுண்டு.

Page 17
3O தமிழ் எழுத்துகள்
அதாவது ஓர் ஒலியனுக்கு ஒரு அல்லது அதனினும் கூடிய ஒலிப்புண்டு. இந்த வேறுபட்ட ஒலிப்பு ஒரே ஒலியின் திரிபாகவே புலப்படும். சான்றாக இந்நாள், இந்து என்னும் சொற்களிலுள்ள ‘ந்’ என்னும் எழுத்தின் ஒலிப்பில் காணப்படும் நுண்ணிய வேறுபாட்டைக் கவனிக்க. இவ்வாறே கடகம் என்னும் சொல்லில் உள்ள இரண்டு 'க' வும் சற்றே வேறுபட்ட ஒலிப்புடையன. ஒலித்தல் வலிவின் அளவு பற்றி தமிழ் மெய் யெழுத்துகள், வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவன்கயாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே சொல்லில் உள்ள இந்த எழுத்துகளில் ஒன்றைத் தொடர்ந்து வரும் எந்த எழுத்தும், அதற்கு முன்னுள்ள எழுத்தின் ஒலிப்புக்கு இசைவாகச் சற்று திரிந்தே ஒலிக்கும். அன்றாட வாழ்வில், இத்தகைய நுட்பமான ஒலி வேறுபாடுகளை - மாற்றொலியன்களை - மக்கள் பகுத்துணர்வதில்லை. இதனை அடியொற்றியே தொல்காப்பியரும்.
"மொழிப்படுத்திசைப்பினும், தெரிந்து வேறிசைப்பினும், எழுத்தியல் திரியா தென்மனார் புலவர் *
எனக் கூறியுள்ளார். ஆகவே, தமிழ் மொழியிலுள்ள ஒரு தனி எழுத்தின் ஒலிப்புக்கும் சொல்லில் வரும் அதே எழுத்தின் ஒலிப்புக்குமிடையே பெரும் வேறுபாடெதுவும் இல்லை. இதனால் சொல் எழுத்துகளின் ஒழுங்கான ஒலிச்சேர்க்கையே, சொல் ஒலிப்பு: சொல்லொலிப்பு எழுத்துகளே சொல் எழுத்து. இதுவொன்றே தமிழ் மொழியின் எளிமைக்குப் போதிய சான்றாகும்.
தமிழ் மொழி எழுத்துகள் இன்றுள்ள நிலையில் வரிவடிவக்
* தொல்காப்பியம்: நூற்பா 53

ம. கங்காதரம் 31
குறைபாடுடையன என்பது உண்மையே. அவ்வாறு இருந்தும் தமிழ் மொழிக்குள்ள எளிமையும் ஒலிச் சிறப்பும் ஆங்கில மொழிக்கில்லை. ஆங்கில எழுத்துகளின் ஒலி சொல்லில் வரும்போது குறிப்பிடத்தக்கவாறு திரிபடையும்; முற்றிலும் வேறுபட்ட ஒலிப்புடையதாகும்; அன்றேல் ஒலிப்பே அற்றுப் போகும். ஒரே சொல்லில் வெவ்வெறு இடங்களில் வரும் ஒரே எழுத்தே வெவ்வெறு வகையான ஒலித் திரிபடையும். இதற்குச் சான்றுகள் பல உள. வேறுபடும் ஒலிப்பு, ஒலிப்பின்மை ஆகியவற்றைப் பின்வரும் சான்று நன்கு புலப்படுத்தும். Tact என்னும் சொல்லில் உள்ள C,k யின் ஒலிப்புடையது; Face என்பதிலுள்ள C,S இன் ஒலிப்புடையது; Acknowledge என்ப தில் அதற்கு ஒலிப்பே இல்லை. இத்தகைய குறைபாடு ஏதும் தமிழ் மொழியில் இல்லை. அதன் வரிவடிவில் இன்றுள்ள குறைபாடுகளை நீக்கி விடின், அது மிகச் சிறந்த மொழியாக உலக அரங்கில் வீறுநடை பயில்வதற்கு வாய்ப்பு மிகுதியாகும்.

Page 18
32 தமிழ் எழுத்துகள்
4. ஒழுங்குள்ள வரிவடிவு
பொதுவாக எந்தத்துறையிலும் சில அடிப்படை விதிகள் வரையறுக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் செயல்முறை அமையுமாயின், பயில்வதும் பயன்படுத்துவதும் எளிதாகும். அறிவியல் அணுகுமுறையின் அடிப்படையே இதுவாகும்'."
ஒரு மொழியின் வரிவடிவு தக்க அடிப்படையில் ஒழுங் குற அமையுமாயின் அதனை எடுத்தாளுதல் எளிதாவது போலவே, விரைந்து பெரும்பயன் பெறுவதற்கான வாய்ப்பும் மிகுதியாகும் என்றே இந்தத் தமிழ் அறிஞர் சுட்டிக் காட்டுகிறார். குகைக் கல்வெட்டுக்களிற் கண்டவாறு, தமிழ் வரிவடிவு ஓர் ஒழுங்குக் குட்பட்டதாகவிருந்தது. இடைக்காலத்தி லேயே இவ் ஒழுங்கு சீர்குலைக்கப்பட்டது. இன்று அது எந்த நெறிமுறைகளுக்கும் உட்படாத சிக்கல் மிக்க வரிவடிவ அமைப்புடையதாக மாறியுள்ளது. அண்மையில் புகுத்தப்பட்ட சிறு சீரமைப்பு, வரிவடிவ அமைப்பில் உள்ள குறைகள் அனைத்தையும் அகற்றி அதனை முழுமையாகச் செப்ப னிடுவதற்குப் போதியதன்று. இந்த இனம் தொழில் நுட்பத்துறையில், பல படி பின்தங்கி நிற்பதற்கு, அதன் மொழியில் உள்ள சீரற்ற எழுத்தமைப்பும் ஒரு காரணம் என்பதை நாம் மறத்தலாகாது. t
"ஓர் ஒலியன் - ஒரு வரிவடிவு : தமிழ் எழுத்து ஒலிகளின் அடிப்படையில் நோக்கும் போது, ஓர் ஒலியனுக்கு ஒரு வரி வடிவு என்பதே சரியான எழுத்தமைப்பாகும். ஐ, ஒள ஒழிந்த பத்து உயிர்களிலும், மெய்கள் அனைத்திலும் இந்த ஒழுங்கே
* முனைவர் வா.செ.குழந்தைசாமி : எழுத்துச் சீர்மை - அறிஞர் கருத்து
u : 183, 184.

ம. கங்காதரம் 33
இன்றும் உள்ளது. இவை, உயிர்மெய் எழுத்துகளைப் போல், சொல்லில் வருங்கால், அயலெழுத்தின் தன்மைக்கேற்ப ஒலித் திரிபடைவதில்லை.
இவ்வாறு சீராக்கும் போது உயிர் எழுத்துகளுட் சிலவற்றின் வரிவடிவிற் காணப்படும் சிறு ஒழுங்கீனங்களையும் களைதல் வேண்டும். புணரொலி எழுத்துகள் இரண்டும் நீங்கலாக, ஏனையவை குறில், நெடில் என இணைந்துள்ளன. இவற்றின் ஒலியமைப்பு, ஒரே ஒலியின் குறுக்கம் நீட்டம் என்னும் அடிப்படையில் அமைத்திருத்தலின் அவ்விணைகளின் வரிவடிவிலும், இதற்கேற்ற ஒற்றுமை நிலவுதலே நெறி. இந்த வடிவ ஒற்றுமை இ, ஈ, உ, ஊ என்னும் ஈர் இணைகள் நீங்கலாக ஏனையவற்றில் இப்போதும் உண்டு. குறில் நெடில் என்பன அடிப்படையில் ஒரே வரிவடிவுள்ளனவாய் இருப்பதும் நெடில், குறிலினின்றும் சிறுமாற்றத்தால் வேறு படுத்தப்பட்டிப்பதும் கண்கூடு. ஆனால் இ, ஈ என்பன வற்றிைேடயே இந்த ஒற்றுமையில்லை. ஈ என எழுதுவதற்குப் பதிலாக இதனை இ என இ’ யோடு அதன் வில்லில் சிறு சுழி சேர்த்து எழுதுவோமாயின், இரண்டிற்குமிடையே அடிப்படையான வடிவ ஒற்றுமை நிலவுவதோடு, குறில் நெடில் வேறுபாடும் புலனாகும். "ஊ" வின் அமைப்புச் சற்றே சிக்கலானது. 'உ' என்னும் உயிரும், 'ள' என்னும் உயிர்மெய்யும் அதிற்காணப்படுகின்றன. தனி ஒலியனான ஓர் உயிரைக் குறிப்பதற்கு இத்தகைய அமைப்பு ஏற்றதன்று, ஆகவே இதில் மிகையாகவுள்ள ‘ள' வை நீக்கிவிட்டு, 'உ' வின் வடிவு கெடாதவாறு, ‘ள' வின் சாயை அதில் தோன்றக் கூடியதாக அதன் மேற்புற வளைவில் சிறுகால் இறக்கி 'உ' என எழுது வோமாயின் குறில், நெடில் இரண்டும் அடிப்படை அமைப்பில் ஒற்றுமையுள்ள, தனிவடிவங்களாக மாறும்.
இன்று வழக்கில் உள்ள, ரகர மெய், சில ரகர உயிர் மெய்கள் ஆகியவற்றின் வரிவடிவத்திலும், ஒழுங்கீனங்கள்

Page 19
J4 தமிழ் எழுத்துகள்
உண்டு. மெய்யெழுத்திலும், இகர, ஈகார, உயிர் மெய்களிலும், கீழ்க்காலற்ற, ஆகார காலை ஒத்த, 'ா' என்னும் வடிவே பயின்று வருகிறது. ஏனைய இடங்களில் அது சரிந்த கீழ்க்காலோடு காணப்படுகிறது. ஒரே எழுத்தின் அடிப்படை வரிவடிவு, வெவ்வெறு எழுத்துகளில் இரு வேறு வடிவினதாகப் பயின்று வருதல் ஒழுங்கன்று. ஆகவே முன்னர் ஓரிடத்தில் குறிப் பிட்டவாறு, இது எல்லா எழுத்துகளிலும், சாய்ந்த கீழ்க்கால் உடையதாய் 'ர' என்னும் வடிவினதாக இருத்தலே நெறி.
மேலே குறிப்பிட்ட எழுத்துகளின் வரிவடிவில் ஓர் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகப் புகுத்தப்பட்ட இச் சிறு மாற்றங்களினால் எத்தகைய குழப்பமும் விளைவதற் கிடமில்லை. இ' யின் அமைப்பு மயக்கமூட்டாதது. ஏட்டில் எழுதுவோருட சிலர் இன்றும் இவ்வாறே எழுதுகின்றனர். உ என்னும் நெடில் அதன் முன்னைய வரிவடிவினின்றும் அதிகம் வேறுபடாமையும், “ள' வின் சாயல் அதில் இரண்டறக் கலத்திருப்பதும், குழப்பம் விளைவதற்கு இடம் அளிக்கமாட்டா. சரிந்த கீழ்க்காலோடுகூடிய 'ர' வின் வடிவமைப்பைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு இங்கு ஏதும் இல்லை.
உயிர் மெய்களின் அமைப்பில் ஒழுங்கு: எழுத்துகளுட் சிலவற்றின் வரிவடிவை, ஒரு நெறிக்கு அமைய ஒழுங்காக்கியது போலவே, ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் அடிப்படையில், அவற்றின் அமைப்பையும் மாற்றுவதே தக்கது. தமிழ் உயிர், மெய் என்பன தனி ஒலியன்களாக ஒலித்தலின், ஓர் ஒலியனைக் குறிக்கும் எழுத்துக்கு தனியொரு வரிவடிவு, என்னும் ஒழுங்கே நெறியானது. மெய் ஒலியன்களோடு உயிர் ஒலியன்கள் சேர்வதால் உயிர் மெய்கள் பிறக்கின்றன. ஆகவே, உயிர்மெய் எழுத்துகளில், மெய் ஒலியனுக்கு ஒன்று, உயிர் ஒலியனுக்கு ஒன்று என இரண்டு வரிவடிவங்களே இணைந்திருத்தல் வேண்டும். இரண்டினும் குறைதலோ, அன்றேல் கூடுதலோ ஒழுங்கின்மையையே குறிக்கும்.

ம. கங்காதரம் 35
இப்போது ‘உயிர்மெய்' என்னும் சொற்றொடரைச் சற்றே கவனிப்போம். உயிர் உள்ள உடல் அனைத்தும் உயிரினமாகும். மெய்யில் உயிர் தரித்த நிலையிலேயே உயிரினம் வாழ்கிறது. ஆகவே உயிரும் உடம்பும் சேர்ந்து இயங்குவன அனைத்தும் 'உயிர்மெய்" எனப்பெயர் பெறும்.'ப்ராண" என்னும் சமக்கிருதச் சொல் உயிரைக் குறிக்கும். இதனின்றும் பிறந்த ‘பிராணி என்னும் சொல்லே உயிரினத்தைக் குறிக்கும். உயிர்மெய் என்னும் சொற்றொடருக்குப் பதிலாகப் பலராலும் எடுத்தாளப் பட்டுவருகிறது. உயிரோடிணைந்து இயங்கும் உடல் அனைத்தும் ‘உயிர்மெய்' என்றே பெயர் பெறுதல் வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை. ஆனால் இதே சொற்றொடர் உயிர்மெய் எழுத்தைக் குறிக்கும் போது, உவமையாகு பெயராகிறது. "மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே' என்பது தொல்காப்பியர் கூற்று. உயிர் மெய்யில் - உயிர் உள்ள உடலில் - மெய்யே முதலிற் புலனாகும். உயிருடைமை பின்னரேயுணரப்படும். உயிர்மெய் எழுத்துகளும் இத்தகையவே, அவற்றில் மெய் ஒலி முதலிலும், உயிரொலி பின்னரும் செவிப்புலனாகும். இதற்கேற்ப, உயிர்மெய் எழுத்துகளில் மெய் முதலிலும், உயிர் பின்னரும் அமைதல் வேண்டும். ஆகவே மெய்யெழுத்தொலியோடு உயிர் எழுத்தொலி இணைவதாற் பிறக்கும் எழுத்து, ஒலி ஒழுங்கில் மெய்யுயிர்' ஆகின்றது. இதுவே திருத்தமான சொல்லாட்சி என்க. ஆயினும் 'உயிரேற்ற மெய்' என்னும் பொருளில் உயிர்மெய் எனலும் தவறன்று.
ஐ, ஒள தமிழ் உயிர்களுக்கு மிகை. இந்த இரண்டு எழுத்துகளும் உயிர் எழுத்துகளுக்கு மிகையானவை என்பது இதுகாலும் கூறியவற்றில் உரிய இடங்களில் சுட்டிக்காட்டப் பட்டது. இதற்குரிய காரணங்கள் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து நோக்கின் இதைப்பற்றி மிகுந்த தெளிவு பிறக்கும்.
வரலாறு, தமிழ் எழுத்துகளின் வரிவடிவ வளர்ச்சி, ஆகியவற்றின் அடிப்படையில் காணும் போது, கி.பி. 8 ஆம்

Page 20
36 தமிழ் எழுத்துகள்
நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே, சமக்கிருத உயிர்களிடையே காணப்படும் புணரொலிகளுக்காக, தமிழ் உயிர் எழுத்துகளின் சீரான ஒழுங்கைப் புறக்கணித்து அவற்றிடையே இந்த இரண்டு எழுத்துகளும் வலிந்து புகுத்தப்பட்டன என்பது புலனாகும்.
இவை உயிர்ப் புணரொலி எழுத்துகள் - இரண்டு வெவ்வெறு உயிர் ஒலிகளின் சேர்க்கையாற் பிறப்பவை. அவை முறையே அ-ய், அ-வ் என்னும் ஈர் ஒலியன்களின் சேர்க்கைக்கு இணையானவை. இரண்டு ஒலியன்களின் சேர்க்கையாற் பிறப்பவை அசை எனப்படும். ஆகவே தனி ஒலியன்களாக உள்ள தமிழ் உயிர் எழுத்துகளுக்கிடையே இவற்றுக்கு இடமில்லை. அவற்றை வலிந்து புகுத்தியதும் நெறியான செயலன்று.
சொல்லில் வரும் போது ஐ, ஒள என்பன ஒன்றரை அளபு ஒலிப்பே உடையன. இவை முறையே அஇ, அஉ என்பவற்றின் ஒலிப்பேயுடையன. இதை உணர்ந்த வீரசோழிய உரை ஆசிரியரான புத்தமித்திரனார், இ, உ என்னும் உயிர் எழுத்து களுக்குப் பதிலாக, சற்றே ஒத்த ஒலிப்புடைய ய், வ் என்னும் எழுத்துகளைச் சேர்த்து இவற்றை முறையே அய், அவ் என ஒலிக்கலாம் எனக் காட்டியுள்ளார். அய் = ஐ, அவ் = ஒள என்பன இணையான ஒலிகள், இந்த இரண்டு எழுத்துகளையும் வலிந்து புகுத்தியபின் அவற்றுக்கு நிலையான வாழ்வுதர முயன்றோரும் முயல்வோரும் இவை இணையான ஒலிகள் அல்ல எனச் சொல்லாடுவர். V
ஐ என்பது தமிழுக்கு மிகை என்பதும், அதுவோர் ஒலியன்று என்பதும் அ-ய் என்னும் இரு முதலொலிகளே உள்ளன என்றும் கொள்ள நேரிடும்.
'ஒள' மிகை என்பதும், அ - வ் என்னும் முதலொலி களாலாயது என்றும் கொள்ள நேரிடும்.

ம. கங்காதரம் 37
'தமிழில் உள்ள ஐ, ஒள என்னும் ஒலிகள் தம்மைச்சுட்டும் இடமும், அளபெடுக்கும் இடமும் தவிர, மற்ற இடங்களில் ஒன்றரை மாத்திரையளவே ஒலிக்கின்றன. அய், அவ் என்னும் கூட்டு ஒலிகளின் அளவே (அ - ஒரு மாத்திரை, ய், வ் ஒவ்வொன்றும் அரை மாத்திரை) ஒலிக்கின்றன. எனவே ஐ, ஒள என்பன, அய், அவ் என்பனவற்றின் வேறல்ல!' *
அன்றியும் ஐகார ஈறு பெற்ற பெயர்கள் விளி ஏற்கும் போது, ஆய் என நீண்டொலித்தல் இயல்பு. சான்றாக, தந்தை என்னும் பெயர் விளியேற்குங்கால் தந்தாய் என வரும். இச்சொற்களை முறையே தந்த் + ஐ எனவும் தந்த் + ஆய் எனவும் பிரிக்கும் போது ஐ, விளியேற்ற பின் ஆய் என நீண்டுள்ளதைக் காணலாம். அய் என்பதே உண்மையில் ஆய் என நீள முடியும். ஆகவே ஐ என்பது 'அய்' யினும் வேறன்று.
இதே கருத்தையே திரு வே. வெங்கடராசுலு ரெட்டியாரின் கூற்றும் வலியுறுத்தும்.
"ஐ கார ஈற்றுப் பெயர்கள் விளியேற்கும் முறையை நோக்கினும், ஐ, (முன்னிலை ஒருமை விகுதி) அய் என்பதன் திரிபே என்பது போதரும் . அன்னை என்பது அன்னய் என யகர ஈறாகும். அதன் ஈற்று அய், ஆய் என நீண்டு விளிக்கண் வருதல் இயல்பே. இங்கு கூறியவற்றால் ஐ என்பது அய் என்பதன் திரிபே என்பது நன்கு விளங்கும்'.
இவற்றுக்கு இணையாக ஆங்கில மொழியில் உள்ள உயிர் ஒலிகளை எடுத்தாளும் போது, இவ் எழுத்துகளின் குறைபாடு மேலும் புலனாகும். ஐ = அய் = ai, ஒள = அவ் = au என அவை ஒத்த ஒலிப்புடையனவாதல் காண்க.
* முனைவர் மு. வரதராசன், மொழியியல் Lu. 33, 35, 36
திரு. வே. வெங்கடராசுலு ரெட்டியார், திராவிட மொழிகளின் மூவிடப் Guust u. 52, 53.

Page 21
38 தமிழ் எழுத்துகள்
உண்மை இவ்வாறிருக்க, ஐ, ஒள என்பனவற்றை நீக்கினால், நன்மைக்குப் பதில் தீமையே மிகும் என்பர் சிலர். ஐ என்பது ஓர் எழுத்தொருசொல்லாதலின் இதனை விலக்கலாகாது என்பர் வேறு சிலர். இது எத்துணை ஒழுங்கீனமான அமைப்புடைய எழுத்து என்பது முன்னரே தெளிவுபடுத்தப் பட்டது. சீரான அமைப்புடைய ஒரேழுத்தொரு சொற்கள் பல தமிழில் உண்டு. சீரற்ற புணர் ஒலி எழுத்தாய ஐ யை இவற்றிடையே சேர்த்துக் குழப்ப வேண்டுமா? இதனை அகற்றினால், யாப்பில் சீர்கெடும்; தளைதட்டும் என்பாரு முளர். இக் கருத்து அத்துணைச் செம்மையானதன்று. ஐ, ஒள என்பன தனியொலி எழுத்துகளன்று என்றும், அவை புண ரொலி எழுத்துகளே என்றும் தெளிவுபடுத்திய தொல்காப்பியர், புத்தமித்திரனார் முதலிய தொல்லிலக்கணியரும், இற்றை நாள் மொழியியல் அறிஞர்களும், இவர்கள் குறிப்பிடும் வழுக்கள் தோன்றக்கூடும் என அறிந்திருக்கவில்லை என நாம் கருதலாமா? உண்மையில், ஐ, ஒள என்பன சீரின் இறுதியில் வரும்போதே பல நிலைகளில் தளைதட்டும். இக்குறைபாட்டை நீக்கித் தளை சீராக அமையுமாறு செய்வதற்கே. ஐ - அய் எனவும், ஒள - அவ் எனவும் குறுகி ஒலிக்கும் என்பதைக் குறிப்பிடுவதற்காக முறையே ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம் என்னும் ஒழுங்குகளைத் தொல்லிலக்கணியர் யாப்பிலக்கணத்தினுள் வலிந்து புகுத்துமாறாயிற்று. மொழியின் வளர்ச்சிக்கேற்ப காலம் தோறும் அதன் இலக்கணம் மாற்றமடைதல் இயல்பே. ஐ, ஒள என்பன நீக்கப்பட்ட பின், வழக்கிலிருக்கும் மொழியில் தோன்றும் இலக்கியங்களில் இருந்து, புத்திலக்கணம் பிறத்தலும் இயல்பே, ஆகவே, தமிழ் உயிர் எழுத்துகளின் ஒழுங்குக்கு உட்படாதவையும் சமக்கிருத உயிர் ஒலிகளுக்காகத் திணிக்கப்பட்டவையுமான, இந்த இரு ஒழுங்கற்ற புணரொலி எழுத்துகள், தமிழ் உயிர் எழுத்து களிடையே, தொடர்ந்தும் இருப்பதற்குத் தக்க காரணம் எதுவும் இல்லை.

ம. கங்காதரம் 39
உயிர்மெய்; சீரான வரிவடிவம்: தமிழ் உயிர் மெய்கள் அசையியல் எழுத்துகளின் வகையைச் சேர்ந்தவையென நாம் முன்னரே கண்டோம். ஆகவே மெய் ஒலியன், உயிர் ஒலியன் என்பவற்றின் வரிவடிவங்கள் இதே ஒழுங்கில் இணைந்த அமைப்பே உயிர் மெய்யின் எளிய வரிவடிவ அமைப்பாகும். இவ்வாறு உயிர்மெய் எழுத்தை அமைப்பதே நெறி. ஆனால் இன்றைய உயிர்மெய் எழுத்துகளில் இவ்வொழுங்கு பேணப்பட வில்லை. இக் குறைபாடுகள் எவையென முன்னரே சுட்டிக்காட்டப்பட்டது. இக் குறைபாடுகளைக் களையும் போது, அவற்றின் வரிவடிவ அமைப்பு எவ்வாறு மாறும் என இனிக் காண்போம். ககர உயிர்மெய்யின் துணையோடு இதனை மீண்டும் ஆய்வோம்.
க்+அ = க என்பது இன்றுள்ள வழக்கு. மெய்யோடு உயிர் சேரும் போது, மெய்யின் தலைப்புள்ளி நீங்க, க என்னும் உயிர்மெய் பிறப்பதாகக் கருதப்படுகிறது. அகரம் சேர்ந்துள்ளது என்பதற்குரிய சுவடு எதுவுமின்றியே 'க' வில் அதை ஒலிக் கிறோம். இங்கு 'அ' ஒரு மறை பொருளாக உள்ளது. இதனால், இரண்டு ஒலியன்களின் சேர்க்கையால் பிறந்த ஓர் எழுத்தில், அவ் ஒலியன்களோடு எத்தொடர்புமற்ற ஒரு வரி வடிவே காணப்படுகிறது. இது பெரும் ஒழுங்கீனமேயன்றோ?
க்+ஆ = கா என்பதில், க என்னும் உயிர்மெய்யோடு, ஆகார உயிர்க்குறியாக எடுத்தாளப்படும் T என்னும் கால் சேர்க்கப்பட்டு கா பிறந்துள்ளது. க என்னும் உயிர்மெய்யில் மெய்யும் உயிரும் இணைந்துள்ளதாகக் கருதுகிறோம். இதனோடு, "ா' என்னும் கால் குறிக்கும் ஆகார உயிர் சேர்ந்து (க+ ஆ = க+ா = கா) மீண்டும் கா என்னும் ஓர் உயிர்மெய் பிறத்தல் விந்தையே. இந்த எழுத்தின் அமைப்பைப் பகுத்து நோக்கின், அதில் ஒரு மெய்ஒலியனும் இரண்டு உயிர் ஒலியன்களும் இணைந்திருப்பதாகக் கருதவேண்டிய நிலை ஏற்படும். ஆனால் ஓர் உயிர் மெய்யில் இரண்டு ஒலியன்களுக்கு மட்டுமே இடமுண்டு. இதற்கமைவாக இந்த

Page 22
40 தமிழ் எழுத்துகள்
எழுத்தைச் செப்பனிடுவதாயின், உயிர்மெய்யாகக் கொள்ளப் பட்டுள்ள க மெய்யெழுத்தாதல் வேண்டும். இதனை ஏற்றுக் கொள்ளும் இடத்து ககர உயிர் மெய்க்கு வேண்டிய புதிய அகர உயிர்க்குறி வகுக்கப்படுதல் வேண்டும்.
இந்த ஒழுங்கை, எஞ்சிய எழுத்துகளிலும் கடைப்பிடித்தால் இ, ஈ, உ, ஊ என்னும் உயிர்களுக்கு தனியான உயிர் குறிகள் வகுக்கப்பட்டு, மெய்யின் பின் அவை சேர்க்கப்படுதல் வேண்டும். கெ, கே, என்பவற்றில் உள்ள உயிர்க் குறிகள் மெய்க்கு முன் காணப்படுகின்றன. இவற்றை மெய்க்குப் பின்வருமாறு க,ெ க,ே என எழுத நேரும். கொ, கோ என்பவற்றில் இரண்டு உயிர்க்குறிகள் முன்னும் பின்னுமாக உள்ளன. இவற்றுக்குப் பதில் தனி உயிர்க் குறிகள் வகுக்கப்பட்டு, மெய்யின் பின் சேர்க்கப்படுதல் வேண்டும். இவ்வாறே ஏனைய உயிர் மெய்களிலும் மாற்றம் புகுத்தப்படுதல் வேண்டும். இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட எழுத்துகள் நடைமுறைக்கு வரும் போது, குறிப்பிடத்தக்க அளவு குழப்பம் விளையும். உயிர்க் குறிகள் புதிதாக வகுக்கப்பட்டு, வரிவடிவு சீராக்கப்படுவதே இதற்குக் காரணம். ஆகவே, மிகக் குறைந்த குழப்பத்திற்கே இடமளிக்கக் கூடியதாய், இன்றைய எழுத்து களைச் சீராக்க முடியுமா என ஆராய்ந்தறிதலே தக்கது.
ஆங்கில மொழியின் சொல்லெழுத்து, சொல்லொலிப்பு, என்பவற்றில் காணப்படுவது போன்ற கரைகடந்த ஒழுங்கீனம் தமிழ் மொழியில் இல்லை. தமிழ் உயிர்கள் இரண்டின் வரிவடிவில் சிறுமாற்றம், புணரொலி எழுத்துகளான ஐ, ஒள என்பவற்றை உயிர் எழுத்துகளில் இருந்தும் நீக்குதல், மெய் உயிர் என்பன வெளிப்படையாக அருகருகே அமைந்த உயிர் மெய் என்பனவே மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள். மக்கள் உணர்வுகளை உறுத்தக் கூடிய அளவுக்கு இவற்றால் பெரும் குழப்பம் விளைவதற்கு வாய்ப்பேதுமில்லை.
ஆகவே, கண்மூடித்தனமான பழமைப்பற்றை விட்டு, தேக்க நிலையில் இருந்து விடுபட்டு, சீரிய குறிக்கோளோடு

ம. கங்காதரம் 41.
மாற்றங்களை மேற்கொண்டாலே, முன்னேறுதல் சாலும். தமிழ் எழுத்துகளின் அமைப்பு, இந்த இனத்தின் முன்னேற்றத்திற்குத் தடைக் கல்லாகாதவாறு சீராக்கப்படும் போது, தவிர்க்க முடியாதவாறு தோன்றக்கூடிய சிறு குழப்பத்தைத் துணிவோடு எதிர் கொள்வதைத் தவிர, வேறுவழியேதும் நமக்கில்லை.

Page 23
42 தமிழ் எழுத்துகள்
5. ஏற்ற அடிப்படை
ஒரு மொழிக்குப் புதிதாக எழுத்துகளை வகுக்கும் போது அல்லது நடைமுறையில் உள்ள அதன் எழுத்துகளைச் சீராக்கும் போது, சில அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவல்ல பயன் மிக்க ஒரு கருவியாக அதனைப் படைப்பதாகவே அச்செயல் அமைதல் வேண்டும்.
தொன்று தொட்டு மொழியின் எழுத்துகள் இடு குறிகளாகவே இருந்து வந்துள்ளன. அன்றியும், இன்று மொழி யியலர்கள் எழுத்தமைப்புப் பற்றி வலியுறுத்தும் அடிப்படைத் தேவைகளுட் பல அந் நாட்களில் போற்றப் பட்டதில்லை. இந்திய மொழிகளுட் பல இன்று சிக்கல் மிக்க எழுத் துடையனவாக இருப்பதற்கு இதுவே தலையாய காரணம். ஆகவே மொழியியலர் அறிவியல் அடிப்படையில் வகுத்துள்ள ஒழுங்குகளைப் புறக்கணித்து, வழக்கிலுள்ள ஒரு மொழியின் எழுத்துகளைச் சீராக்குதல் இந் நாளில் பயன் விளைக்கும் முயற்சியாக அமையாது. இதனால் கால மாற்றத்துக்கு ஈடுகொடுக்கக் கூடியவாறு வளர்ந்துவரும் மொழியியற் கருத்துகளின் அடிப்படையில், எழுத்துகளைச் சீராக்கும் பணி மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
இச் சீரமைப்பு ஒரு மொழியை ஆளும் இனத்தின் மொழியியல், கல்வியியல், உளவியல், பொறியியல் தேவைகளை நிறைவு செய்வதாய் அமைதல் இன்றியமை யாதது. ஒரு மொழி அதனையாளும் இனத்தின் பண்பாட்டுக் கருவூலம் என்னும் பெரும் உண்மையை, இன்றும் பலர் தெளிவாக உணர்ந்து கொள்ளவில்லை. இவ் வகையில், மொழியும் அதனை எடுத்தாளப் பயன்படும் கருவியாகிய எழுத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை.

ம. கங்காதரம் 43
இதனால் ஒரு மொழியின் எழுத்துகளைச் சீராக்கும் போது அதனைத் தாய் மொழியாகப் பெற்றுள்ள மக்களின் சமூக நிலை, உணர்வு நிலை ஆகியவற்றையும் கருத்துள் கொள்ளுதல் வேண்டும்.
மொழியியல் தேவைகளின் அடிப்படையில் நோக்கும் போது, ஒரு மொழியின் அமைப்பைச் சீராக, தெளிவாக, எளிமையாகக் காட்டுவனவாக எழுத்துகள் அமைதலே விரும்பத்தக்கது. தமிழ் உயிர்களும், மெய்களும் ஒலியன் எழுத்துகளின் வகையைச் சார்ந்தவை. இன்றுள்ள நிலையிலும் உயிர், மெய் ஆகிய எழுத்துகளின் அமைப்பு, ஓரளவுக்கு எளிமையுடையது. பல வட இந்திய மொழி எழுத்துகளோடும் அரேபிய எழுத்தோடும் தமிழ் எழுத்துகளை ஒப்பிட்டு நோக்கும் போது இவ் உண்மை புலனாகும். இன்று தமிழில் வழங்கும் உயிர்மெய் எழுத்துகள், மெய்க்கு ஒரு வரிவடிவம், உயிருக்கு ஒரு வரிவடிவம் என இரு வரிவடிவங்க ளுடையனவாக அமையுமாயின், இன்றுள்ள ஏனைய குறை பாடுகளும் அகலும். அதாவது இன்றுள்ள சிக்கலான உயிர்க்குறிகளுக்குப் பதிலாகத் தனி வரிவடிவங்களைப் பயன் படுத்தும் போது, உயிர்மெய் எழுத்துகள் சீரான வடிவுடையன வாகும்.
எழுத்துகளைக் கையாண்டு கற்கும் முயற்சி எளிதில் விரைவாக நடைபெறக் கூடியவாறு வரிவடிவம் அமைதல் வேண்டும். மொழியியலர் விதந்துரைப்பது போன்று, கோல், சதுரம், வட்டம் முதலிய எளிய வடிவங்களால் தெளிவும் எளிமையும் உடையனவாக வரிவடிவு அமையுமாயின் இத் தேவை நிறைவுறும்.
எழுத்துகளைக் கையாளும் போது தேவைப்படுகின்ற உடல், உள முயற்சிகள் விரைவாகக் களைப்பூட்டி துன்பம் விளைப்பனவாக இருத்தலாகாது. எளிய வரிவடிவுடையனவாக

Page 24
44 தமிழ் எழுத்துகள்
எழுத்துகள் அமையுமாயின் சோர்வு ஏற்படுத்தும் இத்தகைய இடர்ப்பாடுகள் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை.
கால ஓட்டத்தில், பொறியியல், தொழில் நுட்பம், ஆகிய துறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து அம் மாற்றங்களால் விளையும் நற்பயன்களை விரைவிற் பெற்று முன்னேறுவதற்குரிய வாய்ப்பும் வசதியும் அளிப்பனவாக எழுத்துகளின் வரிவடிவு அமைதலே விரும்பத்தக்கது. இத் தேவை இன்று நன்குணரப்பட்டுள்ளது. இன்று மேற் கொள்ளப்பட்டு வரும் எழுத்துச் சீர்திருத்த முயற்சிகளுக்கு இதுவே தலையாய காரணம். தட்டச்சு, தனியச்சு, வரியச்சு, தொலையச்சு, கணினி முதலிய பொறிகளில், ஆங்கிலத்தைப் போன்று தமிழையும் எளிதில் எடுத்தாளக்கூடியவாறு அதன் வரிவடிவு செப்பனிடப்படுவதையே யாவரும் விரும்புவர்.
ஒர் இனத்தை இனங்காண பெரிதும் உதவுவது மொழி, இதனால் அது அவ்வினத்தினுடைய பண்பாட்டின் உறைவிடமாகவும் கருதப்படுகிறது. ஆகவே நீண்ட வரலாறும், சிறந்த பண்பாடுமுள்ள ஓர் இனத்தின் மொழிக்குத் தனித் தன்மையான எழுத்து இருப்பதும் ஏற்புடையதே. மொழிப் பற்று போற்றத்தக்க ஓர் இயல்பே. இதனால் ஓர் இனம் தனது மொழியைப் போற்றி வளர்ப்பதைத் தவறான செயல் எனக் கருதுவதற்கு இடமில்லை.
இங்கு விதந்துரைக்கப்பட்ட தேவைகள் அனைத்துக்கும் மேலாக, ஒர் இன்றியமையாத் தேவையும் உள்ளது. நடை முறையில் உள்ள எழுத்துகளைச் சீராக்க முற்படும்போது, குழப்பம் விளையும், பழமைக்கும் புதுமைக்கும் தொடர்பற்றுப் போகும் நிலையும் தோன்றலாம். இதனால் பல தலைமுறை யினருள் பெருமபர்லோர் தற்குறிகள் ஆகும் தீங்கு படரும். இவ்வாறு நிகழுமாயின், எழுத்துச் சீரமைப்பு பயனற்ற முயற்சி யாவதோடமையாது, தீங்கு விளைவிக்கும் ஒரு செயலாகவும்

ம. கங்காதரம் 45
அமையும். ஆனால் சீராக்கும் போது குழப்பம் விளைவதை முற்றாகத் தடுத்தலும் இயலாது. ஆகவே இயன்றவரை மிகமிகக் குறைந்த குழப்பத்திற்கு இடமளிப்பதாகவே இச் சீரமைப்பு முயற்சி இருத்தல் வேண்டும். இன்றுள்ள எழுத்துகளையே வேண்டியவிடத்துச் செப்பனிட்டு, நமது தேவையை நிறை வேற்றிக் கொள்வதே நாம் செய்யத் தக்கது. ஓர் இனத்தின் கற்றல் முயற்சிகள் பாதிப்படையாது இருக்க வேண்டுமாயின், சீராக்கப்பட்ட எழுத்துகள் ஒல்லும் வகை பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிறந்த பாலமாக அமைதல் இன்றியமையாதது.

Page 25
46 தமிழ் எழுத்துகள்
6. சீர்திருத்தக் கருத்துகள்.
இன்றைய தமிழ் எழுத்துகள் சீரற்ற அமைப்பும் வரிவடிவும் உடையன எனக் கண்டோம். இவற்றைப் பயன்மிக்கனவாக மாற்றியமைப்பதற்குச் சென்ற அரை நூற்றாண்டுக்கு மேலாக அவ்வப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அண்மையில் இம் முயற்சிகள் தீவிரமடைந்து வருவதையும் காணலாம். இன்றுவரை பல்வேறுவகையான சீர்திருத்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சீர்திருத்த முயற்சிகளை நெறிப்படுத்தும் அடிப்படைக் கோட்பாடுகள் சென்ற பிரிவில் நன்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் இந் நாள்வரை முன்வைக்கப்பட்ட சீர்திருத்தக் கருத்துகளை அலசி நோக்குதல் பயன்விளைக்கும் செயலாகும். இக் கருத்துகள் அனைத்தையும் நான்கு பெரும் பிரிவுகளுள் அடக்கலாம்.
96ð06 JULI TG63T.
1. இன்றைய உயிர்மெய் எழுத்துகளில் இணைந்துள்ள உயிர்க் குறிகளுக்குப் பதிலாக, தனி உயிர்க் குறிகளை வகுத்தல்
இன்று வழக்கிலுள்ள உயிர் மெய்களில், இகர, ஈகார, உகர, ஊகார உயிர்க் குறிகள் அகர உயிர்மெய்யோடு பிணைந்தே உள்ளன. இவற்றைத் தனியாக வடிவமைத்து, ஏனைய உயிர்க் குறிகளைப் போன்று, பயன்படுத்துவது. இந்த ஒழுங்குக் கமைய உயிர் 12, மெய் 18, ஆய்தம் 1, அகர உயிர்மெய் 18, உயிர்க்குறி 8 என எல்லாமாக 57 வரிவடிவங்களுள் தமிழ் எழுத்துகள் அடங்கும்.
இச் சீராக்கலுக்கமைய, இதுகாறும் ஒட்டியிருந்த நான்கு உயிர்க்குறிகள், பிரித்தெடுக்கப்படுகின்றன. இதனால் ஆய்தம் நீக்கலாக, 124 வரிவடிங்களுள்ள தமிழ் எழுத்துகள், 57

ம. கங்காதரம் 47
வரிவடிவங்களுள் அடங்கி விடுகின்றன. மிகுந்த வரிவடிவச் சுருக்கமும் ஏற்பட்டுள்ளதென்பதற்கு ஐயமில்லை. அன்றியும் புதிய குறியீடுகள் எவையும் மேலதிகமாகப் புகுத்தப் படாமையின், இன்றைய எழுத்துகளில் காணப்படும் அடிப்படை ஒழுங்கும் பேணப்பட்டுள்ளது. இதனால் பெருங் குழப்பமின்றியே இவற்றை எடுத்தாளலாம். இவை நீங்கலாக ஏனைய குறைபாடுகள் அனைத்தும் இவற்றில் உள. ஆகவே இதனை முழுமையான சீர்திருத்தமெனக் கொள்ள முடியாது.
இக் கருத்துகளை மேலும் செப்பனிடவிழைவோர், ஒகர, ஒகார, ஒளகார உயிர் மெய்களில் காணப்படும் இரண்டு உயிர்க் குறிகளுக்குப் பதிலாகத் தனி உயிர்க்குறிகள் வகுக்கப்படுதல் வேண்டும் என்பர். இது ஒருபடி முன்னேற்ற மானதெனினும், இதுகாறும் வழக்கிலிருந்த இரண்டு உயிர்க் குறிகளுக்குப் பதில் ஒரு புதிய உயிர்க் குறியை மட்டும் பயன்படுத்தும் போது தோன்றக்கூடிய குழப்பத்தைத் தவிர்த்தலியலாது.
i. முற்றிலும் புதிய உயிர்க்குறிகளை வகுத்தல்:
முனைவர் வா. செ. குழந்தைசாமி என்னும் தமிழ் அறிஞர் இத்துறையின் முன்னணியில் காணப்படுகின்றார். பொதுமை, ஒழுங்கு என்பன உள்ளதாக வரிவடிவை முழுமையாகச் சீராக்கும் நோக்கோடு பின்வரும் கருத்துகளை இவர் விதந்துரைத்துள்ளார்.
உயிர் எழுத்துகள் அனைத்தும் அகற்றப்பட்டு அவற்றுக்குப் பதில் அ மட்டும் அடிப்படை உயிராக எடுத்தாளப்படும் என்றும், இதனோடு ஏனைய உயிர்களின் ஒலிக்குரிய குறிகளைப் புதிதாக வகுத்துச் சேர்த்துக்கொள்வதால், ஏனைய உயிர் எழுத்துகளைப் பெறலாம் என்றும் இவர் கூறுகிறார். அவர் வகுத்தளித்த உயிர்க் குறிகளைச் சேர்க்கும் போது, அ நீங்கலாக ஏனைய உயிர்கள் பின்வரும் வடிவம் பெறும்.

Page 26
48 தமிழ் எழுத்துகள்
ஆ இ ஈ உ ஊ எ ஏ ஒ ஓ ஐ ஒள அா அ அ அ0 அல் அP அP அ0 அல் அய° அவரி
இங்கு மெய்ப்புள்ளி பாகைக் குறிபோல் அமைக்கப்படும். ககர மெய் க் - க° எனப்புதிய வடிவினதாகும். ஆய்தத்தின் அமைப்பில் மாற்றம் ஏதும் இல்லை. இப் புதிய உயிர்க்குறிகள் சேரும்போது, ககர உயிர் மெய்கள் பின்வருமாறு அமையும்*
க கா கி கீ கு கூ கெ கே கொ கோ கை கெள
க கா க க கல கஸ் கP கP கO கம் கய° கவ?
இம்முறைக்கமைய அடிப்படை உயிர் 1, உயிர்க்குறிகள் 9, அடிப்படை அகர உயிர் மெய்கள் 18, ஆய்தம் 1, என 29 வரிவடிவங்களே பயன்படுத்தப்படும்.*
மிகுந்த வரிவடிச் சிக்கனம் இம் முறையிற் பொதித்துள்ள தனிச்சிறப்பு எனலாம். மெய்ப் புள்ளிக்கு ஒலிப்பில்லை. மெய் எழுத்துகளில் அது தனியாக எடுத்தாளப்படுதலின் அதுவும் வரி வடிவங்களுள் ஒன்றெனக் கொள்ளப்பட்டது. ஒலிப் புள்ளன 29 வரிவடிவங்களே, ஐ, ஒள என்பவற்றை உயிர் எழுத்துகளின் வரிசையில் சேர்த்துள்ள போதும், அவை புணரொலி எழுத்துகளே என்பதை வரிவடிவச் சேர்க்கையால் பிரித்துக்காட்டியுள்ளார். அ, ய?, வ? என்பன வரையறையான தனி ஒலிப்புடையனவாதலின் அய?, அவ? என்பன குறிக்கும் எழுத்துகள் தமிழ் உயிர்களுக்கு மிகையானவை என அவர் சுட்டிக்காட்டுகிறார் எனலாம்.
இவ்வாறிருந்தவிடத்தும், வரிவடிவில் பொதுமையைப் புகுத்துவதற்கு இவர் மேற்கொண்ட முயற்சி முழுமை பெற
* முனைவர் வா.செ.குழந்தைசாமி எழுத்துச் சீர்மை - அறிஞர் கருத்து
U: 183, 184.

ம. கங்காதரம் 49
வில்லை. அ வக்கு தனிவரிவடிவு; ஏனைய உயிர்களுக்கு இரண்டு வரிவடிவு. இது ஒழுங்கீனமானதேயன்றோ? அன்றியும் குறிலின் உயிர்க் குறிக்குத் தலைப்புள்ளி இட்டே, நெடிலின் குறி வகுக்கப் பட்டுள்ளது. அ, அா என்னும் குறில் நெடில் இணையில், இந்த ஒழுங்கு புறக்கணிக்கப்பட்டதேன்? இவை யனைத்துக்கும் மேலாக, மெய் எழுத்துகளின் அமைப்பு நடை முறையில் உள்ள வேறுசில குறியீட்டு முறைகளோடு மயங்கு வதற்கான வாய்ப்புமுண்டு. 45° கோணம், 15° வெப்ப நிலை என்பன ஒத்த சொல்லாட்சி அன்றாட வழக்கிலுள்ளது. கணிதம், இயற்பியல் முதலிய துறைகளில், க° கோணம், ச? வெப்பநிலை எனப் பொதுக் கருத்துகளைக் குறிப்பதுண்டு. இவற்றை க் கோணம், ச் வெப்பநிலை என வாசிக்க நேர்வதைத் தவிர்த்தல் எவ்வாறு?
இன்றைய உயிர் மெய்களைப் போன்றே இவர் வகுத்துள்ள உயிர்மெய் எழுத்துகளும் வழு உடையன. மெய்யும் உயிரும் இணைந்து உயிர்மெய் தோன்றுவதற்கு பதில், அகர உயிர்மெய் யோடு உயிர்க்குறி சேர்ந்தே அது பிறக்கின்றது. இதனால் ஓர் உயிர்மெய்யில் மூன்று ஒலியன்கள் பிணைந்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இது ஒழுங்கீனமேயன்றோ? இவை அனைத்துக்கும் மேலாக எடுத்தாளப்படும் உயிர்க்குறிகள் அனைத்தும் முற்றிலும் புதியவை. இதனால் பெரும் குழப்பம் விளைவதையும், விரும்பிய முன்னேற்றம் கிட்டாது போவதையும் தவிர்த்தல் இயலாது.
i. புதிய உயிர்களைப் புகுத்தல்:
உயிர் எழுத்தின் வரிவடிவிலும் வேறுபட்டதாக உயிர்க் குறியிருக்குமாயின், காலப்போக்கில் மீண்டும் ஒருமுறை எழுத்தைச் சீர்திருத்த வேண்டிநேரிடும். இதனை நன்கு உணர்ந்ததினாலோ, அன்றோ, இன்று மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த முயற்சிகளின் தொடக்ககாலத்திலேயே, இப்போதுள்ள

Page 27
50 தமிழ் எழுத்துகள்
உயிர் எழுத்துகளுக்குப் பதிலாக, எளிதில் எடுத்தாளக்கூடிய, புதிய உயிர் எழுத்து வடிவங்களை வகுத்தல் வேண்டுமெனப் புலவர் குழந்தை என்னும் தமிழ் அறிஞர் கூறியதோடு அமையாது, புதிய உயிர்களின் வரிவடிவங்களையும் வகுத்துக் காட்டியிருந்தார். இவர் கருத்துப்படி ஐ, ஒள என்பன கூட்டொலி எழுத்துகளாகக் கணிக்கப்பட்டு உயிர் எழுத்துகளின் வரிசையிலிருந்து நீக்கப்பட்டன. இவர் வகுத்த திட்டத்தின்படி, புதிய உயிர் 10, மெய் 18, அகரஉயிர்மெய் 18, ஆய்தம் 1 என 47 எழுத்துகள் எடுத்தாளப்படும். வரிவடிச் சுருக்கம் மிகுதியென்பது ஒரு புறமிருக்க, புணரொலி எழுத்துகளான ஐ, ஒள என்பவற்றை அகற்றி, உயிர் எழுத்துகளுக்குப் புதிய வரிவடிவம் வகுத்தமை, ஒரு தனிச்சிறப்பேயாம். ஆனால் மெய்யோடு உயிர் புணர்ந்து உயிர் மெய் பிறப்பதற்குப் பதிலாக அகர உயிர்மெய்யோடு மீண்டும் உயிர் சேர்ந்தே உயிர்மெய் பிறக்கிறது. இன்றைய உயிர்மெய்களில் காணப்படும் அதே ஒழுங்கீனம் இங்கும் உள்ளமை கவனிக்கத்தக்கது. இதனால் இவர் மேற்கொண்ட முயற்சி முழு அளவிலான சீரமைப்புக்கு உதவவல்லதாக இருக்கவில்லை.
தமிழ் நாடு பொது நூலக இயக்குநராகவிருந்த வே. தில்லைநாயகம் என்பவரும், புதிய உயிர் எழுத்துகள் வடிவமைக்கப்பட்டு, இன்றைய உயிர் எழுத்துகளுக்குப் பதிலாகப் பயன் படுத்தப்படல் வேண்டும் என விதந் துரைத்துள்ளார். இவர் கருத்துக்கமைய புதிய உயிர்கள் 12, புதிய மெய்கள் (தலைப்புள்ளியற்றவை) 18, ஆய்தம் 1 என 31 எழுத்துகளே தமிழ் நெடுக்கணக்கில் இடம்பெறும்.
ஓர் ஒழுங்குக்குட்பட்ட சுருங்கிய வரிவடிவம் ஒன்றினை இவர் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எழுத்தமைப்பைப் பற்றி இவருக்குள்ள தெளிவான கருத்தையே இது புலப் படுத்துகிறது. புள்ளியற்ற மெய்களைப் பற்றிய இவருடைய கருத்து, மிகுந்த முன்னோக்குடையதென்பதற்கையமில்லை.

ம. கங்காதரம் 51
இவருடைய திட்டத்திற்கமைய புதிய உயிர், உயிர்மெய் என்பன பின்வருமாறு அமையும்.
இன்றைய அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
உயிர் :
புதிய - IT P to 9 Q Q a) (; ) (a) 2 u%if :
ககர க கா கபி க ைக0 க9 க ெக ெக ைககே3) கடி)* உயிர் மெய்
இவர் வகுத்துள்ள புதிய உயிர் எழுத்துகள் உண்மையில் புதியனவல்ல. புதிய அகரம் இன்றைய அ வின் கடைப் பகுதியே. புதிய ஆ இன்றுள்ள அகரக்குறியேயாகும். இவ்வாறே ஏனையவை இன்றைய உயிர் மெய்களில் காணப்படும் உயிர்க் குறிகளின் செப்பனிடப்பட்ட வடிவங்களே. கிரந்த எழுத்துகளில் உகர ஊகாரங்களைக் குறிக்கும் குறியூடுகளே புதிய உகர, ஊகார உயிர்க்குறிகளாக எடுத்தாளப்பட்டுள்ளன. இவர் வகுத்துள்ள எழுத்தமைப்பு, எழுத்துகளுக்குரிய அடிப்படைக் கோட்பாடுகளுக்கு அமைவாக இருத்தல் மிகப் பெருஞ் சிறப்பு எனலாம். புணரொலி எழுத்துகளான ஐ, ஒள என்பன தனி யொலி எழுத்துகளான ஏனைய உயிர்களிடையே இருத்தலின் இவர் புகுத்த முயன்ற சீரமைப்பு, சற்றே கெட்டுள்ளது. புதிய உயிர் எழுத்துகளின் வரிவடிவில், பழைய உயிர், உயிர்க்குறி என்பவற்றின் சாயல் காணப்பட்ட விடத்தும் நடைமுறையில் அவற்றையெடுத்தாளும் போது, குறிப்பிடத்தக்க அளவு குழப்பம் விளைவதைத் தவிர்த்தலியலாது. ஐ, ஒள என்னும் புணரொலி எழுத்துகளை நீக்கி, எழுத்துகளின் வடிவம் இயன்ற அளவுக்கு பழமைக்கும் புதுமைக்குமிடையே நெருங்கிய ஒற்றுமை யுடையதாகுமாறு மீண்டும் செப்பனிடப்படுமாயின் இவருடைய சீர்திருத்தக் கருத்துகள் முதலிடம் பெறவல்லன.
* வே. தில்லை நாயகம். எழுத்துச் சீர்மை - அறிஞர் கருத்து. 1979, ப. 114

Page 28
52 தமிழ் எழுத்துகள்
iv. முதலெழுத்து முறை:
உயிர்க்குறிகள் அல்லது புதிய உயிர்கள் என்பதற்குப் பதிலாக இன்று வழக்கிலுள்ள உயிர் எழுத்துகளையே எடுத் தாளுதல், தலைப்புள்ளியை நீக்கி மெய்யெழுத்துகளைக் கொள்ளுதல், மெய்யோடு உயிர் ஒரே சீராகச் சேர்ந்து உயிர் மெய் பிறத்தல் என்பன இம் முறையிற் காணப்படும் தனிச் சிறப்பு எனலாம். தமிழ் வளர்ச்சிக் கழக இயக்குநராக இருந்த, கொண்டல் சு. மகாதேவன் இத்தகைய ஒழுங்குமுறையை முன்வைத்துள்ளார். இக்கருத்துகளுக்கும் வேதில்லைநாயகம் முன்வைத்துள்ள கருத்துகளுக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லை என்பதைக் கவனிக்க. ஒலை, எழுத்தாணி என்பன எழுதுவதற்குப் பயன்படும் கருவிகளாவதற்கு முன்னர், தமிழ் மொழி எவ்வாறு எழுதப்பட்டிருக்கும் என எண்ணிப்பார்க்க வல்லோரனைவரும், அவை இவ்வாறே எடுத்தாளப் பட்டிருத்தல் வேண்டும் என்னும் முடிவுக்கே வருவர். ஆகவே இவர் தெரிவித்துள்ள கருத்துகளில் குறிப்பிடத்தக்க புதுமை யெதுவுமில்லை. இந்த இரு வகை எழுத்து முறையிலும் ஒரே எண்ணிக்கையான (31) எழுத்துகளே உள. தில்லைநாயகம் புதிய உயிர்களைப் புகுத்த வேண்டும் என்கிறார்; மகாதேவனோ உள்ள உயிரெழுத்துகளையே எடுத்தாளலாம் என்கிறார். வேறுபாடு இவ்வளவே. மகாதேவன் வகுத்த முறைக்கமைய வழங்கிலுள்ள எழுத்துகளே எடுத்தாளப் படுவதால், இதனை நடைமுறையில் பயன்படுத்தும் போது மிகக்குறைந்த குழப்பமே விளையும்.
நன்னூல் ஆசிரியரான பவணந்தி முனிவருடைய காலத்துக்குச் சில நூற்றாண்டுகள் முன்வரை முதலெழுத்து முறையே வழக்கிலிருந்ததென்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உண்டு. மொழியியலில் மிகுந்த புலமையும், எழுத்துச் சீர் திருத்தத்தில் பெரும் ஈடுபாடுமுடையவராயிருந்த, பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து நம்மனைவரது கண்களையும் திறக்கவல்லது.

ம. கங்காதரம் 53
'ஆய்தம் போக முப்பது ஒலி எழுத்துகளே பழந்தமிழில் உண்டு. இதற்கு மேல் வரி எழுத்தில் வருவானேன்? 'கஆலஅங்கஅடஅநதஅ தஅமஇழ (காலங் கடந்த தமிழ்) என்பதைச் சுருக்க முயன்றதில் ஆ என எழுதாது 'ா' எனவும், இ என எழுதாது பி எனவும் எழுதினர். இப்படியே பிறவும். ஆனால் நாளடைவில் குழப்பத்திலும் பெருக்கத்திலும் முடிந்தது. இவற்றைத் தவிர்ப்பதே நம் தொண்டு. இருப்பன வற்றை வைத்து முயல்வதே சிறப்பு'* என அவர் கூறியுள்ளார்.
இதுகாறும் கூறப்பட்டவையனைத்தும், எழுத்தைச் சீர் திருத்தி அதனை எளிமையும் திறனும் மிக்க ஒரு கருவியாக மாற்றுவதைப் பற்றி, எண்ணும் திறனுடையோர், கருத்து நிலையில் முன்வைத்தனவேயாம். சீர்திருத்தக் கருத்துகளைச் செயற்படுத்த முனைத்தவர்களும், நம்மிடையே இருந்தனர். அண்மையில் காலஞ்சென்ற வே.கோ. தில்லைநாயகம் என்பவர் இத்தகையோரில் ஒருவர். யாழ் மாவட்டத்தில் உள்ள மட்டுவில் என்னும் சிற்றுரைச் சேர்ந்தவராகிய இவர் நீண்டகாலமாக இங்கிலாந்தில் வசித்து வந்த ஒரு பட்டயப் பொறிவலர். மின்மவியல், வானொலி ஆகிய துறைகளில் வல்லுநர். தமிழ் நெடுக்கணக்கைப் பயன்படுத்தி அச்சிடவல்ல ஒரு மின்மவியற் பொறியையும் வகுத்தவர். 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில், இதைப்பற்றிய இவருடைய ஆய்வுக் கட்டுரை ஒன்று வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக, முதலெழுத்து முறையினும் சிறந்த வேறொரு எழுத்துமுறை, இல்லையென்னும்
* தெ.பொ.மீ. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப்புரட்சி. பக். 19

Page 29
54 தமிழ் எழுத்துகள்
உறுதியான முடிவுக்கு வரலானார். தனது எண்ணங்களுக்குச் செயல் வடிவம் அளித்த, ஒரு பொறிவலரின் கருத்துகள் இவை. "நான் எழுத்துச் சீர்திருத்தத்திற்கே முற்றுப்புள்ளி வைத்து மூல (முதல்) எழுத்துகளைக் கொண்டே இயங்கக்கூடிய கணினி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறேன். நாங்கள் கதைக்கும் போது அச்சிடும் இயந்திரம் ஒரு கற்பனையன்று. இப்படிப்பட்ட எந்திரம் இன்னும் உலகத்தில் தோன்றவில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஓர் எந்திரம் செய்வதென்றால், இதைப் போல் பல நவீன எந்திரங்கள், செய்வதென்றால் மூல எழுத்து முறையை அனுசரித்தால் அன்றி முடியவே முடியாது!’ *
புணரொலி எழுத்துகளான ஐ, ஒள என்பவற்றை நீக்கி கொண்டல் சு. மகாதேவன் விதந்துரைந்த எழுத்துச் சீர்மையை மேலும் செப்பனிடின், மிகக்குறைந்த குழப்பத்துக்கே இடமளிக்கும், பெரும்பயனுள்ள எழுத்துச் சீர்மை கைகூடிவரும்.
இந்நாள்வரை அறிஞர்கள் முன்வைத்துள்ள சீர்திருத்தக் கருத்துக்கள் எழுத்தமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இணங்க, நன்கு துருவி ஆராயப்பட்டன. கொண்டல் சு. மகாதேவன், வே. தில்லைநாயகம் ஆகியோர் முன்வைத்த கருத்துகள், அடிப்படைக் கோட்பாடுகளுக்கு அமைவான வையாய் முன்னணியில் நிற்கின்றன. புதிய உயிர் எழுத்துகளைப் புகுத்துவதால் தோன்றும் குழப்பம் முதல் எழுத்துமுறையிற் தோன்ற வாய்ப்பில்லை என்பதை நாம் இங்கு கவனித்தல் வேண்டும். தலைப்புள்ளியற்ற மெய்யெழுத்துகள் இத் துறையில் பெரும் முன்னேற்றத்தையே சுட்டுகின்றன. ஓர் ஒலியனுக்கு, ஒரு வரிவடிவு என்னும் அடிப்படையில், உயிர்மெய் எழுத்துகளைச் செப்பனிடும் போது, எஞ்சியுள்ள ஒழுங்கீனங்களும் அகன்று சீரான வரிவடிவு பிறக்கும்.
* வே.கோ.தில்லை நாயகம். இந்த நூலாசிரியருக்கு வரைந்த ஒரு மடலில்
தெரிவித்துள்ள கருத்து. 5.6.81 பேர்க்சு, இங்கிலாந்து.

ம. கங்காதரம் 55
7. பயன்மிக்க வரிவடிவம்.
ஒரு மொழிக்குரிய எழுத்துகளைச்சீராக்கும்போது கருத்துள் கொள்ள வேண்டிய அடிப்படைத்தேவைகள் அனைத்தும் இதுகாறும் கூறியவற்றுள் பல்வேறு இடங்களில் தெளிவுபடுத்தப் பட்டன. வடிவமைப்பின்போது, எளிமை, தெளிவு என்பன கவனிக்கப்படவேண்டியவை. தமிழ் எழுத்துகள் அடிப்படையில் ஒலியன் வகையைச் சேர்த்தவையாதலின் அவற்றின் அமைப்பு இதற்கு இசைவாகவும் இருத்தல் வேண்டும். உயிர், மெய் என்பன வரையறையான தனி ஒலிப்புள்ள ஒலியன்களாதலின், ஓர் ஒலியனுக்கு ஒரு வரிவடிவு என்னும் அடிப்படை பேணப்படுதல் இன்றியமையாதது. இவ் அமைப்பொழுங்கு கடைப்பிடிக்கப்படும் போது, இரண்டு ஒலியன்களின் சேர்க்கை யால் பிறந்த ஐ, ஒள என்னும் புணரொலி எழுத்துகள் உயிரெழுத்துகளின் வரிசையில் இருந்து தாமாகவே விலகிவிடும். இவ்வாறு, உயிர், மெய் என்பன தனிவடிவமுள்ள தெளிவான அமைப்புடையன ஆதலின் உயிர்மெய் எழுத்துகளுக்கென மாற்றுவடிவங்கள் தேவையில்லை. பண்டைத் தமிழ் எழுத்துகளில் காணப்பட்டது போன்றும், இன்று ஆங்கிலம் உட்படப் பல மேலை ஐரோப்பிய மொழிகளில் கடைப்பிடிக்கப்படுவது போன்றும், மெய் எழுத்தையும் உயிர் எழுத்தையும் சேர்த்து, உயிர்மெய் எழுத்துகளை மிக எளிதில் பெற்றுக்கொள்ளலாம். இதனால் வரிவடிவைச் சுருக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி பெரு வெற்றியளிப்பதாக அமையும். அன்றியும் மொழியியற் தேவைகள், உறவுநிலை என்பனவும் இங்கு பேணப்படுகின்றன. திறன் மிகல், குழப்பமின்மை அல்லது மிகக் குறைந்த குழப்பம் என்பனவற்றுக்கு வாய்ப்பு மிகுவதையும் இங்கு கருத்துள் கொள்ளுதல் நன்று.

Page 30
56 தமிழ் எழுத்துகள்
ஒலியன் எழுத்துமுறை: இன்று வழக்கிலுள்ள உயிர் எழுத்துகளும், தலைப்புள்ளியோடு கூடிய மெய்யெழுத் துகளும் முதல் எழுத்துகள் எனப்படும். இவை எழுத்தமைப்புக் கோட்பாடுகளுக்கு அமைவாக இல்லையென்பது முன்னரே காட்டப்பட்டது. அவற்றுள் சில வடிவ ஒழுங்கும் அற்றவை. உயிர் எழுத்துகளில் இருந்து ஐ, ஒள என்பவற்றை அகற்றி, ஈ, ஊ என்பனவற்றின் வரிவடிவைச் சீராக்கி, மெய்யெழுத்து களில் உள்ள தலைப் புள்ளியையும் நீக்கிவிடின் மொழிக்குத் தேவையான எளிய அமைப்பொழுக்கு பிறக்கும். இவ்வாறு சீராக்கப்பட்ட எழுத்துகளை ஒலியன் எழுத்துகள் என்போம். எழுத்தமைப்பு, வரிவடிவு என்பவற்றை வரையறுக்கும் கோட் பாடுகள் அனைத்துக்கும் இசைவானவையாக இந்த எழுத்துகள் உள்ளன என்பது வெளிப்படை. இவற்றில் உயிர் 10, மெய் 18 என மொத்தம் 28 எழுத்துகளே உள. ஆய்தம் ஒரு சார்பெழுத்து. அது உயிருமன்று, மெய்யுமன்று. ஒலித்திரிபு களுக்காகவே அது பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இவ் ஒழுங்குக்கமைய, இவை,
உயிர் : அ ஆ இ இ உ உ எ எ ஒ ஓ
மெய் க, ங், ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல,
வ, ழ, ள, ற, ன
ககர உயிர்மெய் கஅ, கஆ, கஇ, கஇ 52-, 3592. , Solt,
க,ெ கஒ, கஒ.
என்னும் எளிய அமைப்புடையனவாகின்றன. இன்றைய எதிர்காலத் தேவைகள் அனைத்திற்கும் ஈடுகொடுக்க கூடியனவாய், எழுத்தமைப்புக் கோட்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட படிமுறையான சீரமைப்பின் விளைவாகவே இந்த 10 உயிர்களும், 18 ககர உயிர்மெய்களும் பிறந்துள்ளன. இன்று வழக்கிலுள்ள எழுத்துகளே வேண்டிய

ம. கங்காதரம் 57
விடத்துச் சிறு மாற்றங்களோடு எடுத்தாளப்பட உள்ளன. இதனால் பழமைக்கும் புதுமைக்குமிடையே மிக நெருங்கிய தொடர்பு நிலவும்.
இவ்வெழுத்துகள் நமது தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வனவாக இருத்தலின் இவற்றில் கரைந்துறையக் கூடிய, குறைபாடுகளை மட்டும் நன்கு அலசி ஆராய்ந்து, அவற்றால் விளையக்கூடிய தீங்குகளை எடைபோடுதல் பயன்விளைவிக்கும்.
ஐ, ஒள என்பன இன்றி முடியுமா? முடியும். இவை புணரொலி எழுத்துகள். வேறு பல குறைபாடுகளும் இவற்றுக்குண்டு. ஐ சொல்லின் மூவிடத்தும் வரும், அவ் விடங்களின் இதன் ஒலிப்பு, அ, ய் என்னும் தனி ஒலிகளின் கூட்டே. ஆகவே 'ஐ' என்பதற்குப் பதிலாக 'அய்' என்பதை எடுத்தாளுவதாற் தீங்கேதும் இல்லை.
'ஐயம் அடைந்தாள் அன்னை' என்னும் வாக்கியம்' 'அய்யம் அடயந்தாள் அன்னய்' என அமையும். ஒலிப்பே பொருள் விளக்கத்திற்கு அடிப்படை, எழுத்தன்று. ஆகவே எழுத்துமாற்றத்தால் பொருட் தெளிவின்மையேற்பட இடமில்லை. 'ஒள' சொல்லின் முதலில் மட்டுமே வரும். ஒளவை என்பது அவ்வை என எழுதப்படுதல் இன்றும் பெருவழக்காகவுள்ளது. இதனையே தொடர்ந்தும், கடைப் பிடிப்பதில் தவறென்ன?
புதுமையான சொல்லமைப்பாகுமே! எழுத்துகளின் வரிவடிவில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவுமில்லை. ஆகவே எழுத்தின் அமைப்பில் புதுமையில்லை. மெய்யெழுத்துகளுக்குத் தலைப் புள்ளியில்லை. இது வரிவடிவ அமைப்பில் சிறு மாற்றத்தையே குறிக்கிறது. ஆயினும் ஏட்டில் எழுதுவோர், மெய்யெழுத்துகளுக்குத் தலைப்புள்ளி வைப்பதில்லை யென்பதை நினைவுகூருதல் நன்று. உயிர் மெய்களில், மெய்யும்

Page 31
58 தமிழ் எழுத்துகள்
உயிரும் இணைந்திருப்பது புதுமையல்லவா? அது புதுமையன்று. மெய், உயிர் என்னும் ஒழுங்கில் அவை இணைந்தே இருக்க வேண்டும். இன்றைய உயிர்மெய்களின் அமைப்பே ஒழுங்கற்றது; புதுமையானது. புதிய அமைப்பு, இன்று வழக்கிலுள்ள எழுத்துகளினின்றும வேறு படுவதால், புதுமையாகத் தோன்றும். அவ்வளவே, சில நாள் பழகியதும் இப் புதுமை மயக்கம் அனைத்தும் நீங்கும்.
குழப்பம் விளையுமே! புரட்சிகரமாக, முற்றிலும் புதிய வரிவடிவங்களை வகுக்காமல் நடைமுறையில் உள்ள எழுத்துகளே, தக்கவாறு செப்பனிடப்பட்டு, எழுத்தமைப்புக் கோட்பாட்டுக்களுக்கமைவாக, மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குழப்பம் விளைவதை இயன்ற அளவுக்குத் தடுத்தல் வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம். எளிமை, திறன்மிகல் என்பவற்றுக்கு முதல் இடம் அளித்ததோடு, பழமைக்கும் புதுமைக்கும் இடையே நிலவவேண்டிய இன்றியமையா ஒற்றுமை பெருமளவுக்குப் பேணப்பட்டுள்ளது. புதிய எழுத்துகள் நடைமுறைக்கு வந்தபின் பழைய எழுத்துகளில் உள்ளவற்றை வாசித்துப் பயன்பெறுவதற்கு இதனூடாக வழிவகுக்கப்பட்டு உள்ளது. பன்மொழிப் புலவர் தெ. பொ. மீ. குறிப்பிட்டது போன்று, புரட்சிகரமான சீர்திருத்தம் அரை குறையாக கற்றவர்களையும் தற்குறிகளாக்கிவிடும். எனவே ஏனைய துறைகளில் பழமையைப் போற்றுவதைவிட, மொழிச் சீர மைப்பில் பழமையைப் போற்றுதல் நியாயத்தின் பாற்பட்டது. மொழியியற் கோட்பாடுகளுக்கு இசைவாகச் சீராக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும், சீர்திருத்தப்பட்ட எழுத்துகளில் இயன்றவரை பழமை பேணப்பட்டுள்ளது. நடைமுறைக்கு முரணானவை நிகழும்போது சிறுசலசலப்பு ஏற்படுதல் இயற்கை. இதைத் துணிவோடு எதிர் கொள்ளவல்லாரே முன்னேற்றப் பாதையில் ஏறுநடை பயில்தல் சாலும்.

ம. கங்காதரம் 59
சொல் எழுத்துகளுக்கு அதிக இடம் தேவைப்படுமே : இன்றுள்ள தமிழ் எழுத்துகளை எடுத்தாள்வதற்கு 124 வரிவடிவங்கள் பயன்படுத்தப்படுன்றன. இவ்வெழுத்துகளுட் பல தனி வரிவடிவினவாகவும், சில இரண்டு வடிவங்கள். இணைந்தனவாகவும் ஏனையவை மூன்று வரிவடிவங்கள் இணைந்தனவாகவும் காணப்படுகின்றன. ஆனால் இங்கு விதந்துரைக்கப்பட்ட ஒலியன் எழுத்துகளில் உயிர், மெய் என்பன தனிவரிவடிவுடையன. உயிர்மெய் எழுத்துகளில் இரண்டு வரிவடிவங்கள் மட்டுமே இணைந்துள்ளன. இதனால், ஒலியன் எழுத்துகளைக் கையாளும் போது இன்றுள்ளதைக் காட்டிலும் 20 முதல் 30 விழுக்காடுள்ள இடம் மிகுதியாகத் தேவைப்படும். இதனைத் தவிர்த்தல் இயலாது. சான்றாக, "பொறுமை பொருள் அளிக்கும்' என்பதில் 16 வரிவடிவுகளே உள்ளன. அதனை ஒலியன் எழுத்துகளில் எழுதினால் 'பலுறஉமஅய பஒரஉள அளஇககஉம" எனவாகும். இதில் 19 வரிவடிவுகளே உண்டு. இது ஏறத்தாழ 19 விழுக்காடு அதிகரிப்பாகும். உயிர்மெய்கள் அதிகமாகவுள்ள வாக்கியங் களில் வரிவடிவங்களின் தொகை இதனினும் கூடிய விழுக்காடுடையதாகும். எந்நிலையிலும் இது சராசரியாக 30 விழுக்காட்டிலும் அதிகமாகாது. ஒலியன் எழுத்துகளால் விளையக்கூடிய நற்பலன்களோடு ஒப்பிடுகையில் இது ஒரு குறைபாடாகவே புலப்படாது.
இன்று வழக்கில் உள்ள எழுத்துகளில் மேல் விகிறி, கீழ்க்கால், கீழ் விலங்கு என்பன உண்டு. இவை அகர உயிர் மெய்யின் அளவுக்கு மேலும் கீழும் அதிக இடத்தை அடைத்துக்கொள்ளும். ஒலியன் எழுத்துமுறையில் உயிர், மெய் எழுத்துகள் மட்டுமே எடுத்தாளப்படும். இவற்றில் எழுத்துகளுக்கு மேல் உள்ள பகுதியை அடைத்துக்கொள்ளும் கூறுகள் எதுவுமில்லை. கீழ் உள்ள பகுதிமட்டுமே சிறிதளவு அடைபடும். இதனால் நடைமுறையில் உள்ள எழுத்துகளிலும் பார்க்க, ஒலியன் எழுத்துகள் குறைவான குத்துயரத்துள்

Page 32
60 தமிழ் எழுத்துகள்
அடங்கிவிடுவதால், நிலைக்குத்தாக இடச்சிக்கனம் ஏற்படும். ஒலியன் எழுத்துகளை ஒரே குத்துயரமுடையனவாக வடி வமைப்பின் இன்றுள்ள எழுத்துகளுக்குத் தேவைப்படுவதிலும் பார்க்க நிலைக்குத்தாக மிகக்குறைந்த இடமே தேவைப்படும்.
ஒரு சொல்லைப் புதிய ஒழுங்கில் எழுதும்போது, முன்னரிலும் அதிகமான வரிவடிவங்களை எடுத்தாள வேண்டும். இதற்கு அதிக நேரம் தேவைப்படுவதியல்பே. ஆனால் இவ்வெழுத்துகளில் கொம்பு, விசிறி, கீழ் விலங்கு இன்மையால், அவற்றை எழுதுவதற்காகச் செலவிடும் நேரம் புதிய ஒழுங்கில் அதிக வரிவடிவங்களை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படலாம். ஆகவே இருவகை எழுத்துமுறையிலும் ஒரே சொல்லை அல்லது சொற்றொடரை எழுதுவதற்கு ஏறத்தாழச் சமமான நேரமே செலவாகும். அன்றியும் இன்றுள்ள எழுத்துகளைத் தட்டச்சிடும்போது கொம்பு, விசிறி, கீழ் விலங்கு, தலைப்புள்ளி என்பவற்றுக்காக அதிக நேரம் செலவாவது வழக்கம். ஒலியன் எழுத்துகளைப் பயன்படுத்தும் போது, இவ்வாறு நேரம் வீணாவது இல்லை. ஆதலால் இவ்வெழுத்து மாற்றத்தால் தீங்குவிளையக்கூடுமோ என நாம் ஐயுற வேண்டியதில்லை. ஓர் ஒழுங்கை விட்டு சிறிதளவில் வேறுபடும் மற்றொன்றைக் கடைப்பிடிக்கும் போது தோன்றும் சிறு குழப்பத்திற்கு மட்டுமே இங்கு இடமுண்டு. முன்னேற்றம் என்பது ஒருவகையில் நிலைமாற்றமே. மாற்றத்தை ஏற்கும் போது சிறிது அதிக முயற்சி வேண்டப்படலாம். ஒலியன் எழுத்துகளை எளிதில், விரைவாக பொறிகளில் எடுத் தாளலாமாதலின் அறிவுப்பரம்பல் மிகுதியாகி இனத்தின் வாழ்வு வளம்பெறுவதற்கு இவ்வெழுத்து முறை துணை நிற்கும்.
தமிழ் ஒலியன் எழுத்துகளும் ஆங்கில எழுத்துகளும்: ஆங்கிலத்தில் உள்ளது போன்றே தமிழ் ஒலியன் எழுத்துகளிலும், தமிழ் உயிர்மெய்கள், மெய், உயிர் என்னும் ஒழுங்கில் சீரான அமைப்புடையனவாகும். இதனால் ஆங்கில

ம. கங்காதரம் 61
எழுத்துகளை எடுத்தாளும் எல்லா வகையான தொழில் நுட்பக் கருவிகளிலும் தமிழ் ஒலியன் எழுத்துகளையும் தடையின்றி எளிதில் எடுத்தாளலாம். இதுவொன்றே இந்நாளில் தமிழினத்தின் முன்னேற்றத்திற்குப் பெருந்துணையாக அமையும்.
ஆங்கில எழுத்துகளைக் கையாள்வதற்குப் பெரிது, சிறிது என இருவகை எழுத்துகள் தேவை. அச்சுக்கு இருவகை, கையயெழுத்துக்கு இருவகையென நான்கு வகையான எழுத்துகள் வழக்கிலுள்ளன. கையெழுத்தை மட்டும் கருத்துள் கொண்டால் 26 எழுத்துகளுக்காக 52 வேறுபட்ட வடிவங்களை அறிந்திருத்தல் வேண்டும். தமிழ் ஒலியன் எழுத்துகளில் அத்தகைய குறைபாடு எதுவும் இல்லை. ஆய்தம் நீங்கலாக 28 வரையறையான தனி ஒலிகளுக்கு 28 வரிவடிவங்களே உள. இந்த எழுத்துமுறையின் தனிப்பெரும் சிறப்புக்கு இது வொன்றே போதிய சான்று எனலாம். ஆங்கிலம் ஒலி நுட்பம் அற்ற மொழி. ஒரேயெழுத்து பல நிலைகளில் பலவாறு ஒலிக்கப்படும். சொற்களில் உள்ள சொல்லெழுத்துகளுக்கும், சொல்லொலிப்புக்குமிடையே உள்ள தொடர்பு மிகக் குறைவு. இவ்வாறிருந்த போதும் அது இன்று உலகப் பொது மொழியாகி வருகின்றது. பிற மொழிகளோடு ஒப்பிடும் போது, ஒலிநுட்பம், சொல் நுட்பம், தொடர் நுட்பம் என்பனவுடையதாய், நூல் மரபுகளின்படி உலகிலுள்ள செம்மொழிகளில் ஒன்று என அறிஞர்களால் போற்றப்படும் தனிச் சிறப்பு தமிழ் மொழிக் குண்டு. இச் சிறப்பியல்பு காரணமாக ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழ் மிக முன்னேறியிருத்தல் வேண்டும். அது அவ்வாறு முன்னேறவில்லை. தடைக்கல் யாது? பல உள. இன்றைய சிக்கலான எழுத்தமைப்பும் வரிவடிவமும் இவற்றுள் தலையானவை. ஒலியன் எழுத்துமுறையில் இக்குறைகள் அனைத்தும் அகற்றப்படுகின்றன. உலகப் பொதுமொழியாகக் கூடிய பெரும் திறன் அதற்கு ஊட்டப்பட்டுள்ளது. இதற்குச் செயல்வடிவம் தந்து தமிழை உலக அரங்கில் ஏறுநடை பயிலச் செய்தல் நம் கடனன்றோ?

Page 33
62 தமிழ் எழுத்துகள்
8. செயலாக்கம்
பெரியார் இராமசாமி நாயக்கர் பரிந்துரைத்தவாறு பதின்மூன்று எழுத்துகளின் வரிவடிவில் மாற்றங்கள் புகுத்தப் பட்டுள்ளன. கண்மூடித்தனமான பழமைப்பற்றும் தெளிவற்ற சிந்தனைப்போக்கும் உடையோர் இம்மாற்றங்களுக்கு எதிராகப் பெரும் போரே தொடுத்திருந்தனர். இவ்வாறிருந்த போதும் மாற்றங்கள் புகுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன. இம் மாற்றத்தால் எத்தகைய பெரும் பயன் விளைந்துள்ள தென்பதற்கு தட்டச்சிடுவோரும், அச்சகங்களில் எழுத்துக் கோப்போரும் சான்று பகர்வர்.
தமிழ் மொழியிலுள்ள உயிர்மெய் எழுத்துகள் முழு அளவில் சீர்திருத்தி அமைக்கப்பட வேண்டியவை என்பதில் இன்று இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. எத்தகைய மாற்றங்களைப் புகுத்துவதென்பதிலேயே இன்றுவரை ஒருமித்த கருத்து எண்ணும் திறமுடையாரிடத்துக் காணப்பட வில்லை. இவர்களுள் பலர் முன்வைத்த கருத்துகளைக் காய்தல் உவத்தல் இன்றி அலசி நோக்கியதன் விளைவாகவே, ஒலியன் எழுத்துகளுக்கமைய தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்துவதே நமக்குள்ள ஒரேயொரு சிறந்த வழி என்பது புலனாயிற்று.
தேவை யாதென நாம் உணர்ந்துள்ளோம். இதனை நிறைவு செய்வதற்குப் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகளும் தெளிவு படுத்தப்பட்டுள்ளன. விரைவாகச் செயற்பட்டு கருதிய பயனைப் பெறுதலே எஞ்சியுள்ளது. வளர்ச்சி, மேம்பாடு என்பன மாற்றங்களில் அடிப்பிறப்பவை. ஆகவே அஞ்சாமையோடு செய்ற்பட்டுப் பயன்பெறுதலே செயல் திறனுள்ள ஓர் இனத்தின் பணி ஆகும். அவ்வாறன்றி, தயங்கிநிற்பதோ, ஒத்திவைப்பதோ முன்னேறத் துடிக்கும் ஓரினத்தின் இயல்பாகாது.

ம. கங்காதரம் 63
அன்றியும் ஓர் இனத்தின் முன்னேற்றம் கருதி முன் வைக்கப்படும் பயன்மிக்க கருத்துகள் செயல்வடிவம் பெறாது ஒழியுமாயின், கருத்துநிலையில் மேற்கொள்ளப்பட்ட பெரும் முயற்சிகள் அனைத்தும் வீணாகும். எண்ணுந் திறனுடையாரின் ஆற்றலை வீணாக்கும் போது, மக்களின் திறமை மலர்ந்து சமுதாயத்துக்குப் பயன் விளைவிக்க முடியாது நலிவுறும் ஒரு நிலையே எஞ்சும். இதனால் இனத்தின் மேம்பாடு தவிர்க்க முடியாதவாறு பின்னடையும்.
இவையனைத்துக்கும் மேலாக, தமிழ் மக்களாகிய நாம் கருத்துள் கொள்ளவேண்டியது .ஒன்றுமுண்டு. தமிழ் இனம் தமிழ் மொழி என்பவற்றின் மலர்ச்சி, மேம்பாடு முதலியவற்றை விரும்பாத ஒரு கூட்டம் நம்மிடையே கரந்துறைவதை மறந்து விடலாகாது. ‘உடன் பிறந்தே கொல்லும் வியாதி' என்பது போல, மொழியழிப்புப் பணியில் நீண்டகாலமாக ஈடுபட்டு வரும் இவர்களைப்பற்றி விழிப்பாக இருக்க வேண்டிய பொறுப்பும் நமக்குண்டு. இவ்வாறு விழிப்போடு செயற்பட் டாலே, தடைகளை விலக்கி, முன் சென்று பெரும்பயன் பெறுதல் சாலும்.
நெடுங்காலமாக வழக்கிலிருந்த ஒரு துறையில் சிறிது காலத்துக்கு முன்னர் பெரும் மாற்றம் புகுத்தப்பட்டது. பிருத்தானிய இம்பீரியல் அளவை முறை ஃபிரான்சிய மீட்டர் அளவை முறைக்கு மாற்றப்பட்டதையே நாம் இங்கு குறிப்பிடுகிறோம். பெரும் குழம்பம் விளையும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். அதற்கு முற்றிலும் மாறாக, மிகக்குறுகிய காலத்தில், மிக வெற்றிகரமாக அம்மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனை நோக்கும் போது, இன்று வழக்கிலுள்ள எழுத்துகளையே வேண்டியவிடத்துச் சிறிதளவில் செப்பனிட்டு தெளிவுமிக்கப் புதிய ஒழுங்கில் அவற்றை எடுத்தாள்வதால் எத்துணைப் பெரும் குழப்பம் தோன்றிவிட முடியும்?

Page 34
64 தமிழ் எழுத்துகள்
ஒத்துழைப்பும் கருத்துப்பரம்பலும் இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு, தமிழ் உலகின் - குறிப்பாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. அண்டை நாடுகளின் ஒத்துழைப்போடு இத்திட்டத்திற்குச் செயல் வடிவம் தரும் பெரும் பொறுப்பு தமிழகத்திற்கே உரியது. ஒலியன் எழுத்து முறை எனப்படும் இம் முதலெழுத்துமுறை நடைமுறைக்கு வருமுன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இம்மாற்றத்தைப்பற்றிய தெளிவான விளக்கம் பெறுவதற்கேற்ப கருத்துகளைப் பரப்புவதில் தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். மக்கள் தொடர்புக் கருவிகளாகிய செய்திஇதழ், வானொலி, தொலைக்காட்சி முதலியன இத்துறையில் பெரும் பணி ஆற்ற முடியும். எழுத்து களுட் சிலவற்றின் வரிவடிவில் புகுத்தப்பட்ட சிறுமாற்றங்களும் உயிர்மெய் எழுத்துகளின் புதிய அமைப்பும், அன்றாடம் மக்கள் கண்ணிற்பட்டு நெஞ்சில் நிலைநிற்பதற்கும், அவை சொல்ல மைப்பில் எடுத்தாளப்படும் முறையை அறிந்து தெளிவதற்கும், தக்கமுயற்சிகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
கல்வி நிலையங்களின் பணி இத்திட்டம் வெற்றி பெறுவதற்குக் கல்வித்துறையின் ஒத்துழைப்பு மிக மிக இன்றியமையாதது. புதிய எழுத்துமுறை புகுத்தப்படும் அதே காலத்தில் முதல்நிலை வகுப்புகளில் சேர்ந்து பயில்வோருக்கு இந்த எழுத்துமுறையால் எத்தகைய இடர்ப்பாடும் தோன்றாது. இது நடைமுறைக்கு வந்த பின் கல்வியைத் தொடங்குவோரின் நிலையும் இதுவே. 28 எழுத்துகளே அடங்கியுள்ள தமிழ் அரிச்சுவடியை மிக எளிதில் பயின்றுகொள்வர். இவர்களுக்குத் தேவைப்படும் பாட நூல்கள், துணைநூல்கள் முதலியன உரிய காலத்துக்கு முன்னரே முதலெழுத்துகளில் அச்சிடப்பட்டு தயாராக இருத்தல் வேண்டும். பெரும்பாலோர் பொதுக்கல்வி முடிவில் அல்லது அதன்முன்னர் கற்றலை நிறுத்திக்கொள்வதால், ஐந்தாம் அல்லது ஆறாம் ஆண்டிலிருந்து பழைய எழுத்து களையும் கற்றுத்தருதல் வேண்டும். பழைய எழுத்துகளில்

ம. கங்காதரம் 65
உள்ள நூல்களை வாசித்துப் பயன்பெறுவதற்கு இவ் ஒழுங்கு இன்றியமையாதது.
புதிய எழுத்துமுறையைப் புகுத்தும் போது, தொடக்க நிலைக்கு மேலுள்ள பல்வேறு படிகளிலும் பழைய எழுத்துகளே வழக்கிலிருக்கும். புதிய எழுத்துமுறை நடைமுறைக்கு வந்துள்ள காலத்திலிருந்தே அதனைப் பயின்று இரண்டாண்டு காலத்துள் இவ் வெழுத்துமுறையைப் பயன்படுத்தித் தமது கல்வியைத் தொடரும் திறனை அவர்கள் பெறுதல் வேண்டும். புதிய எழுத்துமுறையை இடையில் பயன்படுத்தத் தொடங்கியோரில் எத்தனையாண்டுக்குக் குறைவான தேர்ச்சியுள்ளோருக்கு பொதுத் தேர்வுகளில் புதிய எழுத்துமுறையைப் பயன்படுத்து வதினின்றும் விலக்களிக்க வேண்டும் என்பதை அப்போதுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் முடிவு செய்து கொள்ளலாம். பொதுமட்டத்துக்குமேல், பழைய எழுத்துகளையே பயன்படுத்தி வருவோர் அனைவரும் மிக விரைவாகப் புதிய எழுத்து முறையை எடுத்தாளப் பயின்று அதனையே மேல்நிலைக் கல்வியைத் தொடர்வதற்குப் பயன்படுத்துமாறு ஒல்லும் வகை ஊக்கமளித்தல் வேண்டும். புதிய எழுத்துமுறையில் குறிப்பிடத் தக்க சிக்கல் ஏதும் இல்லை ஆதலின் புகுத்தப்படும் மாற்றம் சிக்கல் எதுவுமின்றி மிக எளிதில் கைகூடும் என்ப்து உறுதி.
அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு குறுகிய சேவைக் காலப் பயிற்சிகள் அளித்து விரும்பிய திறனை அவர்கள் விரைவிற் பெறுவதற்கு வழிவகுக்கலாம். இவ்வாறே பொது மக்களும் இவ் எழுத்துமுறையில் தேர்ச்சியடைவதற்குத் தக்க வழிகளை வகுத்தல் அரசின் கடன். ஆர்வமுள்ளோர் பிறருதவியின்றியே இதனைக் கையாளப் பயின்று கொள்வர். மொழிவழி நம் இனம் முன்னேற்றம் அடைவதற்கு இந்த எழுத்துச் சீர்மை தேவை என்பதை மக்கள் நன்கு உணரும்போது அவர்கள் இத்துறையில் தேர்ச்சி பெறுவதற்கு எதிராக அமையக் கூடிய எத்தடையும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகமாட்டாது.

Page 35
66 தமிழ் எழுத்துகள்
துணைமுயற்சிகள் : முதலெழுத்துமுறை அறிமுகப் படுத்தப்படும் காலத்திலிருந்தே புதிய வெளியீடுகள், பழைய சுவடிகளின் புதிய பதிப்புகள் என்பன இவ்வெழுத்துமுறையில் அச்சிடப்படுதல் வேண்டும். இவ்வாறே அன்றாடம் மக்களுக்குத் தேவைப்படும் நூல்களனைத்தும் முதலெழுத்து முறைக்கு மாற்றப்படுதல்வேண்டும். முதலெழுத்து முறையில் அச்சிடப் பட்ட நூல்கள் மிகுதியாகத் தேவைப்படும் ஒரு சூழ்நிலை தோன்றும் போது பழைய எழுத்துமுறையில் உள்ள நூல்கள் யாவும் புதிய எழுத்துமுறையில் மாற்றம் பெறுதல் விரைவடையும்.
இப்பணியின் ஒரு கூறாக, ஒரு புதிய தமிழ்ச் சொற் களஞ்சியம் வகுக்கப்படுதல் வேண்டும். முதலெழுத்து முறையில் வகுக்கப்படும் இக் களஞ்சியத்தில், சொற்களின் சொல்லெழுத்துகள் வரையறுக்கப்பட்டு, அவற்றை இருவகை எழுத்துமுறைகளிலும் தருதல் வேண்டும். இயன்றவிடத்து சொற்களின் வேர், தண்டு என்பவற்றையும் தெளிவாகக் குறிப்பிடுதல் பயன் விளைவிக்கும். 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். முதன் முதலிற் தோன்றிய சொற்களனைத்தும் ஏதேனுமொரு காரணம் பற்றியே தோன்றியிருக்கும். காலப் போக்கில் சொல் லொலிப்பில் ஏற்படும் சிதைவு, திரிபு முதலியவற்றால் அவை உரிய பொருளைப் புலப்படுத்த முடியாநிலை எய்தும். இதனால் பின்னாளில் அவற்றை எதிர் கொள்வோர் இச் சொற்களனைத்தும் இடு குறிகளேயெனக் கருதும் நிலை ஏற்படும். இந்நிலை ஏற்படாது தவிர்ப்பதற்கு, இயன்றவிடத்து சொற்பிறப்பு, பிறந்த போது அது சுட்டிய பொருள் என்பனவற்றைப் பற்றிச் சிறு குறிப்பேனும் இடம் பெறுதல் இன்றியமையாதது.
இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துகள் முடிவானவையல்ல. இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு மேற்கொள்ளப்

ம. கங்காதரம் 67
படும் முயற்சிகள் எவ்வாறிருத்தல் வேண்டுமென்றே இங்கு பருமட்டாக விளக்கப்பட்டுள்ளது. உரிய குறிக்கோளை அடைவதற்கு ஏற்றவாறு இத்திட்டத்தின் எல்லாக்கூறுகளும் நன்கு பகுத்தாராயப்பட்டு வரையறையான கால அடிப்படையில் செயற்படுத்தப்படுதல் வேண்டும். திறமைமிக்க அறிஞர், செயல் வல்லுநர், ஆள்வினை மிக்கோர் முதலிய பல்திறத்தாரும், ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு மிக்கப் பெரும் பணி இது எனின் அது மிகையாகாது.

Page 36
68 தமிழ் எழுத்துகள்
அ. தமிழில் ஒலிப் பெயர்ச்சி.
'பிறமொழிகள் பலவற்றில் உள்ள ஒலிகளுள் சில தமிழில் இல்லை. அதனால் அம்மொழிகளில் உள்ள சொற்களுள் சிலவற்றைத் தமிழில் ஒலிபெயர்த்து எழுதுதல் இயலாது. இக் குறையை நீக்க, அவ்வொலிகளுக்குரிய புதிய எழுத்துகளை வகுத்துத் தமிழில் சேர்த்துக்கொள்ள வேண்டும்' என்னும் குரல் அடிக்கடி ஒலித்து வருகிறது. இக் கோரிக்கையை நன்கு துருவி ஆராய்வோம்.
ஓர் இனமக்கள் வாழும் நாட்டின் தட்பவெப்பநிலை, அவர்களது ஒலிக்கும் உறுப்புகளின் தன்மை ஆகியனவற்றிற் கேற்றதாகவே அவர்களுடைய மொழியிற் பயிலும் ஒலியும் அமையும். இதனாலேயே அவர்கள் தம் மொழி ஒலிக்கு இசைவாக இல்லாத பிறமொழி ஒலிகளைத் தம் ஒலிப்புமுறைக்கு ஏற்பத்திரித்து ஒலிப்பர். இது பழைய காலத்துக் கருத்து என்றும் இப்போது ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை என்றும் சிலர் கூறுவர். இதனைச் சற்று அலசி நோக்குவோம். ஆங்கில மொழி உலகின் பல பாகங்களிலும் வழங்கிவருகிறது. அதன் சொல் ஒலிப்பு முறை நாட்டுக்கு நாடு சற்றுத்திரிந்திருப்பதை யாவரும் அறிவர். இங்கிலாந்திலேயே தென் லண்டனில் ஒரு வகை ஒலிப்புமுறையும், வட லண்டனில் அதனினும் சற்று வேறுபட்ட ஒலிப்பு முறையும் நிலவுவது ஏன்? இங்கிலாந்தின் ஏனைய பகுதிகளிலும், உவெல்சு நாட்டிலும் சற்று வெவ்வெறான ஒலிப்புமுறை பயில்வதற்குக் காரணமென்ன? அமெரிக்கர்களின் ஆங்கிலச் சொல்லொலிப்பு, இங்கிலாந்திலுள்ளதினும் பலபடி வேறுபட்டிருப்பதை அறியாதார் யார்? இலங்கையில் ஒலிக்கப்படுமாறே அம்மொழிச் சொற்கள் இந்தியாவிலும் ஒலிக்கப்படுகின்றனவா? தமிழ் மொழி யாழ்ப்பாணத்தில்

ம. கங்காதரம் 69
ஒருவாறும், மட்டக்களப்பில் சற்று வேறுபாட்டுடனும் ஒலிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கோவை ஆகிய இடங்களில் காணப்படும் தமிழ்ச் சொல்லொலிப்பிடையே ஒற்றுமையில்லை. காரணம் என்ன? ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழும் மக்கள் தமக்கு இயல்பாக எளிதில் கைவந்துள்ள ஒலிப்பு முறையையே கையாள்வர். இதனை மாற்ற முற்படுதல் பயன்விளைவிக்காது.
ஒரு மொழியின் ஒலியமைப்பை ஆள்பவர்களும், சொற்களைப் படைத்து அவற்றை ஒலிப்பவர்களும், சாதாரண மக்களேயன்றி நூற்புலமை மிக்கோரல்லர். ஆங்கிலச் சொற் களஞ்சியத்தின் தொகுப்பாசிரியர்களாக இருந்த மொழியியல் அறிஞர்கள் இதைப்பற்றித் தெரிவித்துள்ள கருத்துகளை ஈண்டு நோக்குக. நூற்புலமை மிக்கோர் புதிய சொற்களைக் கண்டு பிடிப்பதோ புனைந்து உருவாக்குவதோ இல்லை. அவை தாமாகவே தம் போக்கில் திடுமெனப்பிறக்கும். அவற்றின் பொருள், சொல்லொலிப்பு, சொல்லெழுத்து என்பனவற்றைப் பற்றியும் அவர்கள் எதுவும் கூறுவதில்லை. பொதுமக்களே தமக்குத் தோன்றியவாறு இவையனைத்தையும் வரையறுப்பர்!"
இந்த உண்மைக்கு முரணாக, பிறமொழிச் சொற்களை அவற்றின் உண்மையான ஒலிப்புக்கெடாமல் இன்னொரு மொழியில் எடுத்தாள மேற்கொள்ளும் முயற்சி பயன் விளைவிக்காது. ஆங்கில மொழித் தேர்ச்சியுடையோர் HOSPITAL என ஒலிப்பது பொதுமக்கள் நாவில் 'ஆசுப்பத்திரி என ஒலிக்கும். ENGLISH இங்கிலிசு’ ஆக திரிபடையும். தமிழ் மொழி பேசுவோருக்கு இத்தகைய ஒலிப்பே இயல்பானது. இதுவே அவர்கள் நாவில் நிலைபெற்று வாழும்.
* Wilfred Funk and Norman Lewis: 30 days to a more powerful
vocabulary. Washington Square Press - Edition 1961 page - 122.

Page 37
70 தமிழ் எழுத்துகள்
ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் நமக்கு மிக நெருக்கமானவை. இம் மொழிகளில் தமிழ் சொற்கள் எவ்வாறு திரிபடைகின்றன எனக் காண்க. "யாழ்ப்பாணம்’ என்னும் சொல் ஆங்கிலர் நாவில் யாவ்னா' எனப் பெரும் ஒலித்திரிபோடு பயிலும். 'ழ்' என்னும் தமிழ் மெய்யின் ஒலி ஆங்கிலத்தில் இல்லை. இச் சொல்லில் உள்ள ஏனைய ஒலிகள் அனைத்தும் அம்மொழியில் உண்டு. யாழ்ப்பாணம்' என்னும் சொல்லின் ஒலிப்புக்குக் கிட்டிய ஒலிப்பையேனும் (YARLPANAM) புலப்படுத்துமாறு சொல்லோ, சொல்லொலிப்போ வகுக்கப்பட வில்லை. எத்தகைய ஒலித் தொடர்புமற்ற JAFFNA என்னும் சொல்லே எடுத்தாளப்படுகிறது. இவ்வாறே தூத்துக்குடி TUTICORIN எனவும், நீலகிரி - NILGIRIS எனவும் பெரும் ஒலித் திரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. ஆங்கில மொழியின் ஒலி யமைப்புக்கு இசைவாகவே இச்சொற்களின் ஒலி சிதைக்கப் பட்டுள்ளது. இதைத் தடுத்தலியலாது. மேற்கு ஐரோப்பிய மொழிச் சொற்கள் கூட ஆங்கிலத்தில் இனந்தெரியாதவாறு ஒலித்திரிபடைந்துள்ளன. செர்மனி நாட்டின் உண்மையான QLuff. DEUTSCHLAND. Qg| -2,éléléogélé) GERMANY 95 g ciTGTS). FRANCAIS - FRANCE 6T60Talib, NIPPON - JAPAN 6tó016qub, ESPANA-SPAIN 6tó016qub, MUNCHEN - MUNICH Gr6076qub ஆங்கிலத்தில் பெரும் ஒலித்திரிபுக்குள்ளாகியுள்ளன. இவ்வாறே LONDON என்னும் ஆங்கிலச் சொல் ஃபிரான்சு மொழியில் LONDRES என வழங்கும். ENGLAND - ANGLAISE எனச்சிதையும். அயல் மொழியாகிய சிங்களத்தில் யாழ்ப்பாணம் - யாபனய எனத் திரிய தமிழ் - தெமள ஆகியுள்ளது. இம் மொழியிலும் 'ழ' இல்லை. ஆனால் ‘ள உண்டு. ஓரளவிற்கு இணையான ஒலிப்புள்ள இவ்வெழுத்து இருந்த போது சிங்களர் யாபனய' என்றே ஒலிக்கின்றனர். இவ் ஒலிப்பு முறையே இவர்களுடைய மொழியின் ஒலியமைப்புக்கு இசைவானது. இதனை மாற்ற மேற்கொள்ளும் முயற்சி பயனளிக்குமா? உண்மை இவ்வா றிருக்க தமிழ் மட்டும் பிறமொழி ஒலிகளை வழுவற ஒலிப்பதற்குப் புதிய எழுத்துகளை வகுத்துக் கொள்ள வேண்டுL

ம. கங்காதரம் 71.
என மல்லாடுதல் அறிவுடைமையாகுமா? மொழிகள் தோறும் சில ஒலிகளேனும் வேறுபட்டனவாகவேயிருக்கும். உலகிலுள்ள மொழிகள் அனைத்திலும் பயிலும் எல்லா ஒலிகளும் ஒரு மொழியில் இருத்தல் வேண்டுமென எதிர்பார்த்தல் அறிவுடைமை அன்று.
அன்றியும் எம்மொழியிலும் சொல்லில் வரும் எவ்எழுத்தும் அயல் எழுத்துகளின் ஒலிப்புக்கு ஏற்ப சற்றே ஒலித்திரிபடையும். இத்தகைய ஒலித்திரிபுக்கு நடைமுறையில் மதிப்பில்லை. அதனால் இவ்வாறு திரிந்து பிறக்கும் ஒலிகளுக்கு எழுத்து வகுக்க வேண்டியதில்லை. மற்றொன்றையும் நாம் இங்கு கவனித்தல் வேண்டும். ஒரு மொழியில் இல்லாதனவாய் இன்னொரு மொழியில் உள்ள ஓர் எழுத்தின் தனிப்பட்ட ஒலிப்பையல்ல, அது அம்மொழிச் சொல்லில் வருங்கால் ஏற்கும் ஒலிப்பையே நாம் கருத்துள் கொள்ளுதல் வேண்டும். தனி எழுத்தில் எத்துணைச் சிக்கலான ஒலிப்புடையனவாக அவையிருப்பினும் உரையாடுங்கால், முயற்சிச் சிக்கனம், எளிமை நாட்டம் ஆகிய காரணங்களினால் குறைந்த முயற்சி யோடு எளிதாக ஒலிக்கக்கூடிய ஓர் ஒலியாகவே அவற்றின் ஒலி திரிபடையும். இவ்வாறு திரிக்கும் இயல்பு மக்கள் அனைவருக்கும் பொதுவானது. இதன் அடிப்படையிற் காணும் போது தமிழ் மக்களின் பொதுவான சொல்லொலிப்பு முறைக்கு இசைவாகவே பிற மொழி எழுத்தொலிகள் தமிழிற் திரிபடையும். ஆகவே பிற மொழியிலுள்ள தனி எழுத்துகளின் ஒலிகளுக்காக தமிழில் புதிய எழுத்துகளை வகுப்பினும் நடைமுறையில் கருதிய பலன் கிட்டப் போவதில்லை.
ஸ், ஜ, ஷ, க்ஷ, பூரீ என்னும் கிரந்த எழுத்துகள் தமிழுட் திணிக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துகள் முப்பது என்று வரையறுக்கப்பட்டபின் தமிழ் நெடுங்கணக்கில் சேராத இந்த எழுத்துகள் எந்த அடிப்படையில் எடுத்தாளப்படுகின்றன? இவை சமக்கிருத ஒலிகளுக்காக வகுக்கப்பட்டவை. நாகரி

Page 38
72 தமிழ் எழுத்துகள்
எழுத்துகளை நேரடியாக தமிழ் எழுத்துகளோடு கலந்து எழுத முடியாதாதலின் தமிழ் எழுத்துகளின் வரிவடிவினை ஒத்த இந்தக் கிரந்த எழுத்துகள் வகுக்கப்பட்டு மனம்போனவாறு தமிழுட் கலந்து பயன் படுத்தப்படுகின்றன. ஒரு மொழிக்குரிய தென வரையறுக்கபபட்ட எழுத்துகளுக்கு மேல் வேறு மொழி எழுத்துகள், தமிழ் தவிரிந்த வேறு எந்த மொழியிலும் பயன்படுத்தப்படுவதற்கான சான்று எதுவும் இல்லை. தொல் பெரும் மொழியாகிய தமிழ் இவ்வாறு சீர்குலைக்கப்படுவதை இந்நாள்வரை யாரும் கவனிக்காததேன்? பிறமொழிச் சொற்களை எடுத்தாளுதல் நெறியானது; ஆனால் மொழிக்குரிய தல்லாத வேறு எழுத்துகளை விரும்பியவாறு பயன்படுத்துவதை எவ்வாறு ஏற்பது?
கூடி, பூரீ, என்பன முறையே "ட்ச, சிறி' என்பவற்றின் ஒலிப்புடைய புணரொலி எழுத்துகள். ஆகவே இவை தமிழுக்கு மிகை. தமிழ்ச் சொற்களில் வரும் க, ச, த, ப என்னும் வல் எழுத்துகள், அயல் எழுத்துகளின் ஒலிப்புக்கு ஏற்ப நான்கு வகையாகத் திரியும். சான்றாக, பின்வரும் சொற்களில் 'க' பெறும் வேறுபட்ட ஒலிப்புகளைக் கவனிக்க. காகம், தங்கம், மக்கள், வெல்க. ஒவ்வொரு சொல்லிலும் இவ் எழுத்துக்கு நுட்பமான ஒலி வேறுபாடுண்டு. இவ்வாறு 'க' ஏற்கும் வேறுபட்ட ஒலிகள், அதன் மாற்றொலியன்கள் எனப்படும். அன்றாட வழக்கில் பொதுமக்கள் இத்தகைய நுட்பமான ஒலி வேறுபாட்டைக் கவனிப்பதில்லை. ஏனைய மூன்று எழுத்து களின் நிலையும் இதுவே. இந்த அடிப்படை உண்மையைக் கவனிக்கத் தவறியதனாலேயே, இந்த எழுத்துகள் ஒவ்வொன்றின் நால்வகை ஒலிப்புக்காகச் சமக்கிருத மொழிகள் நால்வகை எழுத்துகள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு 'ச' வின் மாற்றொலியன்களுக்கு வகுக்கப்பட்ட எழுத்துகளே ஸ், ஜ, ஷ, கூஷ் என்பன என்க. 'க' வின் மாற்றொலியன்களில் ஒன்றுக்காக ஹ பயன்படுத்தப்படுகின்றது. இவையே கிரந்த எழுத்துகளின் வடிவில் தமிழில் திணிக்கப்பட்டுள்ளன. இவை தமிழுக்குத்

ம. கங்காதரம் 73
தேவைதானா? சமக்கிருத மொழியில் முரட்டு, அதாவது ஒலி உறுப்புகளை வருத்தும் - புணரொலி மெய்கள் மிகப்பல உள. இவ்வாறு ஒலிப்புறுப்புகளை வருத்தும் ஒலிப்புள்ள மொழியாக வகுக்கப்பட்டதனாலேயே, அன்றாடம் பேச்சு மொழியாகப்
பயில முடியாது அது ஏட்டளவில் முடங்கிவிட்டது.
பிறமொழிச் சொற்களின் இலக்கணத்தைத் தொல் காப்பியரும் அவருக்குபின் வந்த இலக்கணியரும் கூறியுள்ளனரெனவும் அச் சொற்களுக்குரிய ஒலியன்களுக்குப் புதிய எழுத்துகளை வகுத்தல் வேண்டும் என்றும் சிலர் கூறுவர். தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்களுக்கு இலக்கணம் கூறிய தொல்காப்பியரும் பிறரும் அச் சொற்கள் எவ்வாறு தமிழில் பிறமொழி எழுத்தின்றி ஒலித்திரிபடைதல் வேண்டுமென்பதைக் கூறி, அவ்வாறு திரிபடைந்த சொற்களுக்கே இலக்கணம் வகுத்துள்ளனர். இவர்கள் வகுத்த இலக்கணங்களில் புதிய ஒலிக்கு இடமில்லை. அதனால் புதிய ஒலியன்களுக்கும் அவற்றைக் குறிக்க புதிய எழுத்துகளுக்கும் இடமேயில்லை. சமக்கிருத மொழிக்குப் பொருந்தும் இக்கருத்துகள் ஆங்கிலம் உட்பட ஏனைய மொழிகளுக்கும் பொருந்தும். கிரந்த எழுத்துகள் தமிழில் எடுத்தாளப்படுவதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இங்கு கவனிக்க.
தொகுத்து நோக்கின், சமக்கிருத ஒலிகளுக்காகத் திணிக் கப்பட்ட கிரந்த எழுத்துகள், ஐ, ஒள என்பன மட்டுமன்றி ஏனைய எம் மொழியின் ஒலிக்குமுரிய எழுத்துகளுமின்றி தமிழ் வாழும். இவ் உண்மையைப் புறக்கணித்து, பிறமொழி ஒலிகளுக்கென புதிய எழுத்துகள் புகுத்தப்படின், அவ் எழுத்து களின் ஒலிப்பு மிக விரைவில் தமிழில் உள்ள ஓர் இணையான ஒலியின் நிலைக்குத் திரியும். ஆங்கிலம் முதலாய பிற மொழிகள் ஏனைய மொழிச் சொற்களை எவ்வாறு ஒலித்திரிபோடு ஏற்றுக்கொள்கின்றனவோ, அவ்வாறே தமிழும், தனது ஒலிப்புக்கேற்ப, வேண்டுமிடத்து பிறமொழிச் சொற்களை ஒலித்திரிபோடு ஏற்கும்; ஏற்கவேண்டும்.

Page 39
74 தமிழ் எழுத்துகள்
ஆங்கில மொழிச்சொற்கள்: முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் அறிவியல் துறை மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளது. பல்வேறு மொழிகளிலிருந்தும் புதிய கருத்துகளை விளக்கும் சொற்கள் பல ஆங்கிலத்தில் கலந்துள்ளன. இச்சொற்களுள், பெரும்பாலானவை கிரேக்க மொழியினின்றும் பெறப்பட்டவை. சிறுபான்மையாக, இலத்தீன், ஃபிரான்சு, செர்மன், சமக்கிருதம் முதலிய மொழிகளிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு ஆங்கில மொழி தன்பால் சேர்த்துக்கொண்ட பெரும்பாலான சொற்களில் மூலமொழிச் சொல்லின் சாயல்கூட இருப்பதில்லை. அன்றியும் புதிதாக வகுக்கப்பட்ட சொல்லில் உள்ள சொல் எழுத்துகளின் ஒலிச் சேர்க்கைக்கு இசைவாக சொல்லொலிப்பு இருப்பதில்லை. தன் மொழியிலேயே சொல் எழுத்துகளுக்கு ஏற்ற சொல் ஒலிப்புடையனவாக அவை இருப்பதில்லை. இத்தகைய சொற்களை தமிழில் மட்டும் சற்றேனும் ஒலித்திரிபின்றி ஒலிக்க வேண்டும் என வலியுறுத்த முனைவது ஏன்? உலகிலுள்ள மொழிகள் அனைத்தும், தாம் கடனாளும் பிறமொழிச் சொற்களைத் தமது மொழியொலிப்பு முறைக்கு இசைவாக ஒலித்திரிபுடனேயே ஏற்கின்றன. பிறமொழிச் சொற்களை வரையறையின்றிக் கடனாண்ட ஆங்கிலம் தன்பாலில்லாப் பிறமொழி ஒலிக்காக ஓர் எழுத்தையேனும் சேர்த்துக் கொள்ளவில்லை. பிறமொழி ஒலிகள் அனைத்தையும் தன்னிடமுள்ள 26 எழுத்துகளுடனேயே திரித்து ஒலிக்கிறது. பல நிலைகளில் பிறமொழி ஒலிகளுக்கு இணையான தனது ஒலிகளைக் கூட அது பயன்படுத்துவதில்லை. ஆங்கிலத்தோடு ஒப்பிடின் தமிழ் மிகக் குறைந்த பிறமொழிச் சொற்களையே கடனாண்டுள்ளது. தமிழ் நீங்கலாக, ஆங்கிலம் உள்ளிட்ட ஏனைய மொழிகளுக்குப் பிறமொழி ஒலிகளை உரியவாறு ஒலிக்க வேண்டிய தேவையே இல்லைப் போலும். இது வியப்பாகவில்லையா?
ஒரு மொழியின் கட்டமைப்புப் பேணப்பட வேண்டு மாயின், அதன் ஒலியமைப்பு - காலம் தோறும் அது சற்றே.

ம. கங்காதரம் 75
திரிபடையுமாயினும் - பேணப்படுதல் வேண்டும். இதனை வழுவற உணர்ந்து தெளிந்ததாலேயே, சமக்கிருதச் சொற்கள் தமிழில் வருங்கால்
'வட சொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்பதற்கிணங்க அச் சொற்கள் ஒலித்திரிபெய்தும் எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். தொல்காப்பியர் காலத் தமிழின் நிலையினின்றும் இன்றைய தமிழின் நிலை வேறுபாடுடையது எனச் சிலர் சுட்டிக்காட்டலாம். இன்றைய தமிழின் நிலை வேறுபாடுடையது என்பது உண்மையே. ஆனால் சமக்கிருத மொழியிற் காணப்படாத பிற மொழி ஒலிகள் மிக அரிதாகவே உள்ளன. ஆகவே, அந்நாளில் சமக்கிருத மொழி ஒலிகளுக்காக வகுக்கப்பட்ட ஒழுங்கு இந்நாளில் அம்மொழி ஒலிகளே மலிந்துள்ள பிறமொழிச் சொற்களுக்கும் பொருந்துமல்லவா? பிற மொழி ஒலியை, அது ஒலிக்குமாறே ஏற்கவேண்டியதில்லை யென்பதால் அவ் ஒலிக்குப் புதிய எழுத்து வகுக்க வேண்டிய தில்லை என்பதும் பெறப்படும். அன்றியும் தொல்காப்பியருக்குப் பின் வந்த பவணந்தி முனிவரும், தற்பவம், தற்சமம் என்னும் ஒழுங்குகளுக்கமைவாகவே சமக்கிருத சொற்கள் தமிழில் ஒலித்திரிபடையும் என வரையறையாகக் கூறியுள்ளார்.
இக் கட்டுப்பாடுகள் இந் நாள் மொழிக்குப் பொருந்தாது என்றும், ஆங்கிலம் பிறமொழி ஒலிகளுக்காகப் புதிய எழுத்து களைச் சேர்க்காவிடினும், தமிழ் அவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறும் மொழியியல் அறிஞர்களும் நம்மிடையே உளர்.
* தொல்காப்பியம் : நூற்பா 884

Page 40
76 தமிழ் எழுத்துகள்
". . . . . . . . மேலும், தமிழ் போன்ற பிறமொழிகளில் இருந்து எழுத்துகளை ஆங்கிலம் கடன் வாங்காததற்குக் காரணம் தமிழ் ஆளப்பட்டோரின் மொழி, அவர்கள் மொழி ஆண்டவர்களின் மொழி, ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட போது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியனே அஸ்தமிக்காது என்னும் கவுரவம் உடையவர்களாகவும் இருந்தார்கள். எனவே குடிமக்களுக்கு மொழி எளிமையாக இருக்கவேண்டும் என்று ஆள்வோர் தங்கள் மொழியைத் திருத்திக் கொண்ட வழக்கு பெரும் பான்மையும் இல்லை. அதனால் ஆங்கில மொழியைச் சுட்டிக் காட்டுவது தவறான வாதமே.' *
ஆங்கிலேயர் ஆட்சிக்குட்படாத மக்கள் அந் நாளிலும் இருந்தனர். இந் நாளிலும் உளர். இவர்களுடைய மொழிகளிற் பயிலும் ஒலிகளுட் சில ஆங்கிலத்தில் இல்லை. கரைகடந்த பிறமொழிச் சொற்களைக் கடனாண்ட ஆங்கிலம் அச்சொற்களின் செம்மையான ஒலிப்புக்காக பிறமொழி ஒலிகளுள் சிலவற்றை யேனும் கடனாண்டிருக்கலாமல்லவா? அன்றியும் தமிழர் இப்போது ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டவரல்லர். ஆகவே அவர்களுடைய தொல் பெரும் மொழியிற் காணப்படும் சிறப்பொலிகளுக்காகவேனும் புதிய எழுத்துகளை வகுத்துக் கொண்டிருக்கலாமல்லவா?
அன்றியும் ஒலிபெயர்க்க வேண்டியவிடத்து, ஒரு மொழி ஓர் ஒழுங்கையும், இன்னொருமொழி மற்றோர் ஒழுங்கையும் கடைப்பிடிக்கலாம் எனத் தெளிந்த சிந்தையுடையார் ஒரு போதும் கூறமுற்படார். இக்கருத்தை நோக்குவோருக்கு ‘விளக்கின் அடியில் இருள்' என்னும் முதுமொழி நினைவிற்கு வராமற் போகாது. "ஆங்கிலம் மிகக்குறைந்த சொற்களையே கடனாண்டது. (உண்மைதானா) தமிழில் மிகுதியான ஆங்கிலச்
* முனைவர் செ.வை: சண்முகம் எழுத்துச் சீர்திருத்தம்
முதற்பதிப்பு 1978. ப. 109.

ம. கங்காதரம் 77
சொற்கள் உள்ளன. ஆகவே தமிழில் இல்லாத ஆங்கில ஒலிகளுக்குப் புதிய எழுத்துகள் வேண்டும் என்பாருமுளர். ஒலிப்பெயர்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒரு பொதுவான ஒழுங்கு பற்றியதே நம் முன்னுள்ள சிக்கல். கடனாளப்படும் சொற்களின் எண்ணிக்கையை அடியொற்றி இதற்குத் தீர்வு காணவேண்டும் என்னும் கருத்தை எவ்வாறு ஏற்பது? இதனை ஏற்பதாயின், கரைகடந்த பிறமொழிச் சொற்களைக் கடனாண்டுள்ள ஆங்கிலமன்றோ, பிறமொழி ஒலிகளுக்குப் புதிய எழுத்துகளை வகுத்திருத்தல் வேண்டும். அவ்வாறு செய்யாது அது பிறமொழிச் சொற்களை மனம் போனவாறு திரித்து ஏற்றுக்கொண்டுள்ளதே.
ஆங்கிலத்தில் உள்ள அறிவியற் கலைச்சொற்களை திரிந்த ஒலிப்போடு தமிழில் எடுத்தாண்டு பழகிய மாணாக்கர்கள் ஆங்கில மொழி மூலம் உயர்கல்வியைத் தொடர நேரும் போது சரியான சொற்களை இனம்காண முடியாது இடர்ப்படுவர், எனவும் நம்மிடையே ஒரு கருத்துண்டு. பிறமொழிச் சொற்கள். இனம் தெரியாதவாறு ஆங்கிலத்தில் திரிக்கப்படுவது போன்று. தமிழில் ஆங்கில மொழிச் சொற்கள் திரிபடைவதில்லை. தமிழ் மூலம் கல்வி பயிலத் தொடங்கி ஆங்கிலத்தின் மூலம் உயர்கல்வி பெறவல்ல திறமையுள்ள ஒருவர் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் ஒலிபெயர்த்துக் கூறும்போது தோன்றும் சிறு ஒலித்திரிபினால் அவ் ஆங்கிலச் சொல்லையே இனம்காண, முடியாது அல்லற்படுவார் எனக் கூறமுற்படுதல், அன்னார் திறமையைக் குறைவாக எடைபோட முற்படுதலேயன்றி வேறன்று.
ஒலிப்பெயர்வு: ஒரு மொழியில் இல்லாதனவும். இன்றியமையாதனவுமான பிறமொழிச் சொற்களையே ஒலிப்பெயர்ச்சி செய்தல் வேண்டும். ஏறத்தாழ இச் சொற்கள் அனைத்தும் பெயர்ச்சொற்களாகவே இருக்கும். மக்கட் பெயர்கள், அல்லது அவற்றோடிணைந்த சிறப்புப் பெயர்கள்,

Page 41
78 தமிழ் எழுத்துகள்
இடுகுறி காரணப் பெயர்கள், காரண சிறப்புப் பெயர்கள், பன்னாட்டுக் கலைச்சொற்கள் என ஒலிபெயர்ப்புக்குரிய பெயர்ச்சொற்களைப் பருமட்டாக நான்கு வகையாகப் பிரிக்கலாம். இவை நீங்கலாக ஏனைய அனைத்தும் மொழி பெயர்ப்புக்குரியன. மொழிபெயர்ப்பே வேண்டியதில்லை; பிற மொழிப் பெயர்ச்சொற்கள் அனைத்தையும், ஒலி பெயர்த்து எடுத்தாளுதலே தக்கது என்பாரும் உளர். இவ்வாறு செய்யின், நடைமுறையில் மொழி எவ்வாறு பாதிப்புறும் என்பதைப் பற்றி நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். பொது மக்களாற் படைக்கப் பட்டு, உலகவழக்கில் பயின்று, பின் ஏடேறியுள்ள பல்லாயிரக் கணக்கான தமிழ்ச் சொற்கள் இன்று தேடுவாரற்று மண்மூடிக் கிடக்கின்றன. எளிய சொற்கள், சிறு வடிவின, ஆழ்ந்த பொருளுடையவை; அன்றாடம் எடுத்தாளப்பட்டாலன்றி இவை இருந்தும் இறந்தவையேயாம். ஒரு மொழியில் இயல்பாகப் பிறந்து பொருள் விளக்கிய சொற்களைப் புறக்கணித்துவிட்டு, அவற்றுக்குப் பதில், பிறமொழிச் சொற்களை ஒலி பெயர்த்து எடுத்தாளவேண்டும் என்போர், தம்மையறியாமலேயே தம்மொழிக்கும் இனத்திற்கும் கேடு சூழ்பவர்களாகின்றனர். தமிழ்ச் சொற்களுட் பல வழக்கிறந்தமைக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் தலையாயது கரைகடந்த சமக்கிருதச் சொற் கலப்பு. தமிழில் மிகுந்த பொருட் செறிவுள்ள சொற்கள் இருக்கையில், அவற்றைப் புறக்கணித்து பிறமொழிச் சொற் களைக் கடனாளுதல், மொழிப் பற்றும் இனப்பற்றும் உடையார் செயலன்று.
எவற்றைக் குறிப்பதற்குப் பிறமொழிச் சொற்களை' ஒலிப்பெயர்வோடு கடனாள்வது என்பதுபற்றி வரையறையான ஒரு கருத்திருத்தல் வேண்டும். அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஆங்கிலச் சொற்களான கார், லொறி, மோட்டார், டைனமோ முதலியவற்றை ஒதுக்கிவிடுதல் சாலாது. இவ்வாறே ஏனைய மொழிகளிலிருந்தும் சில சொற்கள் தமிழில் இரண்டறக்கலந்துள்ளன. காபன், குளோரீன், ஏக், லீற்றர், மீற்றர்

ம. கங்காதரம் 79
முதலிய அறிவியற்கலைச் சொற்கள் உலகனைத்துக்கும் பொதுவானவை. இவற்றுக்குப் பதில் தமிழ் சொற்களைப் புனையும் முயற்சியும் பயனளிக்காது. தமிழில் இல்லாத அல்லது தமிழில் புதிதாகப் புனைய முடியாத இன்றியமையாப் பிற மொழிப் பெயர்ச் சொற்களுக்கே ஒலிபெயர்ப்பு தேவைப்படும். ஏனைய அனைத்தும் மொழி பெயர்ப்புக்குரியன.
பேச்சு மொழிக்கும் எழுத்துமொழிக்குமிடையே மிகக் குறைந்த வேறுபாடிருத்தலே நன்று. தமிழ் மொழியின் ஒலியமைப்புக்கும், மக்களின் செம்மையான சொல்லொலிப்பு முறைக்கும் இசைவாகவே பிறமொழிச் சொற்களின் ஒலி பெயர்ப்பு அமைதல் வேண்டும். அவ்வாறு ஒலிபெயர்க்கப்படும் சொற்களே காலப்போக்கில் ஒலித் திரிபின்றி வாழும். பிறமொழி எழுத்துகளுள் சிலவற்றுள் நுட்பமான ஒலிவேறுபாடிருத்தல் கூடும். இத்தனி எழுத்துகளின் தனிப்பட்ட ஒலிப்பை வழுவறப் பெயர்த்து எழுத வேண்டியதில்லை. அவை சொல்லில் வருங்கால் எவ்வாறு ஒலிக்கின்றனவோ, அதற்கிணையாக அல்லது அண்ணளவாக ஒலிபெயர்ப்பதே போதுமானது. இன்று நமது மொழியிற் பயிலும் பிறமொழிச் சொற்களின் ஒலிபெயர்ப்பு இவ்வொழுங்குகளுக்கமைவாகவே உள்ளது. இதனையே தொடர்ந்தும் கடைப்பிடிப்பதில் தவறென்ன? சான்றாக.
சமக்கிருதம் தமிழ்
ஹிர்தய இதயம், இருதயம் ஹனுமன் அனுமான் பங்கஜம் பங்கயம், பங்கசம் ஷண்முக சண்முகம் ஸ்வாமி சுவாமி, சாமி
u56 பட்சி

Page 42
8O தமிழ் எழுத்துகள்
ஆங்கிலம் தமிழ்
ENGLAND இங்கிலாந்து BRITAN பிரித்தானியா AFRICA ஆபிரிக்கா RUSSA ரூசியா NEWTON நியூட்டன்
என்னும் சிலவற்றைக் காட்டலாம். இவற்றுள் அளவுகடந்த ஒலித்திரிபோ, பொருள் மயக்கமோ இல்லை. இந்நாள் ஒலி பெயர்ப்பிலும் இதே ஒழுங்கு பேணப்பட்டு வருகிறது.
HYDROGEN ஐதரசன் NTROGEN நைதரசன் PROTON புரோத்தன் ARCHEMEDES ஆர்க்கிமிடிசு
என்பவற்றைச் சான்றாகக்காட்டலாம். இவ்வாறு தமிழ்மொழி ஒலிப்பு முறைக்கேற்ப பெரும் ஒலித்திரிபின்றி ஒலிபெயர்ப்பின், பிறமொழி ஒலிகளுக்காக, தமிழில் புதிய எழுத்துகள் வேண்டும் என்னும் கூக்குரலுக்கு இடமேது?
தமிழ் மொழியின் ஒலிப்பரப்பை விரிவாக்கல்: அறிவியல் வளர்ச்சி காரணமாக, புதிய ஒலிப்புள்ள சொற்கள் பல ஆங்கிலத்தினூடாகப் பெரும் ஒலித்திரிபோடு நமக்குக் கிடைக்கின்றன. ஆங்கிலத்தினூடு பெற்ற ஏனைய சொற்களைப் போன்றே இவற்றையும் சிறு ஒலித்திரிபோடு எடுத்தாளலாம். தவிர்க்க முடியாதவாறு தோன்றும் இத்தகைய ஒலித்திரிபை மேலும் குறைப்பதற்குத் தமிழ் எழுதுகளுள் சிலவற்றின்

ம. கங்காதரம் 81.
ஒலிப்பரப்பைச் சார்பெழுத்தாகிய ஆய்தத்தின் உதவியோடு மேலும் விரிவாக்கிக்கொள்ளலாம். குற்றியலிகரம், குற்றியலுகரம் என்பனவும் ஒலித்திரிபுக்கு உதவ வல்லன எனத் தொல்லிலக் கணியர் கூறியுள்ளனர். ஆய்தம் இப்போதும் ஒலித்திரிபுக்குப் பரவலாகப் பயன் படுத்தப்பட்டுவருகின்றது. ஏனைய இரண்டையும் ஒலித்திரிபுக்குப் பரந்த அளவில் பயன்படுத்து வதற்குப் புலமை மிக்க அறிஞர்கள் வழிகாட்டவேண்டும்.
ஆய்தத்தைப் பயன்படுத்தி ஹ, ho என்பவற்றின் ஒலிப்பை ஃக எனக் குறிக்கலாம். ஹனுமன் - ஃகனுமன் எனவும் HARAPPA ஃகாரப்பா எனவும் எழுதப்படும். Pha, fa என்பன குறிக்கும் ஒலியை ஃப என்பதாற் குறிக்கலாம். Photo - ஃபோட்டோ எனவும் Faraday - ஃபரடே எனவும் எழுதப் பெறும், ச வின் ஒருவகை ஒலிப்பான ஸ, sa என்பவற்றை ஃச என்பதால் வழுவறக் குறிக்கலாம். சமஸ்கிருதம் - சமஃக்கிருதம் என அமையும். தமிழிலில்லாதனவெனப்படும் பிறமொழி ஒலிகளுக்காகப் புதிய எழுத்துகளைப் புகுத்தி, எழுத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதற்கு வழிகோலி, சிக்கல்களைத் தோற்றுவிப்பதைவிட தமிழ்மொழிக் கேயுரிய சார்பெழுத்துகளான ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகியனவற்றைத் தேவைப்படும் ஒலித்திரிபு களுக்குப் பயன்படுத்துதல் மொழி வளர்ச்சிக்கு ஆற்றும் பெரும் தொண்டன்றோ? ஆங்கிலத்தைப் போன்று தமிழும் எப்போதும் குறைந்த எண்ணிக்கையுள்ள எழுத்துகள் உள்ளதாக வேயிருக்கும்.
மொழி வளர்ச்சியின் தன்மைக்கேற்ப ஒரு மொழியின் இலக்கணக்கட்டுப்பாடுகள் தளர்தல் இயல்பு. ஆகவே இயன்ற அளவுக்குக் குறைந்த ஒலித்திரிபோடு ஒலிபெயர்ப்பதற்கு உதவியாக, சொல்லுக்கு முன்வரா எழுத்துகள் பற்றிய கட்டுப்பாட்டை இயன்ற இடங்களில் எல்லாம் தளர்த்துதல் பயன்விளைவிக்கும். ROMAN என்பதை "உரோமன்' என

Page 43
82 தமிழ் எழுத்துகள்
எழுதாது றோமன் என எழுதின் அது ஆங்கிலச் சொல் லொலிப்புக்கு மிகக் கிட்டிய ஒலிப்புடையதாகும். இவ்வாறே ROBERTறொபேட்(டு) என எழுதப்படலாம். இவ் ஒழுங்கின்படி மேலும் பல சொற்களின் ஒலித்திரிபைக் குறைக்கலாம்; அல்லது முற்றாக அகற்றலாம்.
தமிழ் மொழி தமிழின மக்களுக்கு மட்டும் உரியதன்று: ஏனைய மொழிகளைப் போன்றே அது யாவருக்கும் உரியது. ஆனால் ஒரு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களன்றி ஏனையோர் அதனைப் பேணி வளர்க்க முற்படுவார்களா?
இதுகாறும் கூறியவற்றால் ஒரு மொழியின் ஒலிப்பு முறைக்கு ஏற்ப ஒலிபெயர்ப்பு மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்பதும், அதற்கமைய பிற மொழிச் சொற்கள் சிறிதளவு ஒலித்திரிபுடனேயே தமிழில் எடுத்தாளப்படும் என்பதும் பெற்றாம். சிக்கலற்ற எளிய ஒலிப்புடைய தமிழ் மொழியைப் பேணி, அதற்கு வளம் சேர்ப்பதற்கு இத்தகைய ஒழுங்குகளைப் பேணுதல் தமிழ் மக்களின் தலையாய கடனாகும்.

ம. கங்காதரம் 83
ஆ. சொல்லெழுத்து வரையறை.
பொருளுள்ள ஒரு சொல்லை அமைக்கப் பயன்படும் எழுத்துகள் சொல் எழுத்துகள் என்ப்படும். இவ்வாறு அமைக்கப்பட்ட எழுத்துகளை இணைத்துச் சொல்லாக்குதல் எழுத்துக் கூட்டல் எனப்பெயர் பெறும். இன்றைய எழுத்து மொழியில் ஒரு சொல் பலவாறாக எழுதப்படுவதுண்டு. எழுத்துகள் - எழுத்துக்கள், வேர்வை - வியர்வை, வெயில் - வெய்யில் என்பன இத்தகைய சொல்லெழுத்து வேறுபாடுகளைக் காட்டும் சொற்களுள் சில. ஆங்கிலம் ஒலிக்குழப்பமும், சொல் எழுத்துக் குழப்பமும் மலிந்த ஒரு மொழி. ஆயினும் சொல்லொலிப்புக்கேற்ப அதன் சொல்லெழுத்துகள் மனம் போனவாறு மாற்றப்படுவதில்லை. தமிழ் மொழியின் சீரான வளர்ச்சிக்கு இத்தகையதொரு கட்டுப்பாடு உறுதுணையாக அமையும். தமிழ் எழுத்துகள் பெருமளவிற்கு ஒலியனியல் எழுத்துகளின் வகையைச் சேர்ந்தவை. ஆதலால் அன்றாட வழக்கில் இவை குறிப்பிடத்தக்க ஒலித்திரிபடைவதில்லை, திரிபு ஏற்படினும் அது புறக்கணிக்கப்படத் தக்க அளவு மிகச் சிறியதாகவேயிருக்கும். இதனால் சொல்லொலிப்புக்கு இசை வாகவே சொல் எழுத்துகள் அமையும். அவற்றை வரையறுத்தல் மிக எளிதாகும்.
ஒலியே மொழிக்கு அடிப்படை ஒலிக்குரிய குறியீடே எழுத்து, சொற்கள் எழுத்தால் அமைவன. ஆகவே சொற் பொருள், ஒரு சொல்லின் ஒலிப்பு - உச்சரிப்பு - வழியதே என்பது வெளிப்படை ஒலிக்க வாசிக்கும் போது, சொல் ஒலி ஏனைய ஒலிகளைப் போன்று எளிதில் உணரப்படும். ஆனால் மனத்துள் வாசிக்கும் போது, சொல் எழுத்துகளின் ஒலிச் சேர்க்கை - அதாவது சொல்லொலி - அகச் செவியினூடு உணரப்பட்டே, சொற் பொருள் புலனாகும். பிறர் வாசிப்பதை

Page 44
84 தமிழ் எழுத்துகள்
அல்லது பேசுவதைச் செவிமடுக்கும் போது சொல்லெழுத்தைப் பற்றிய உணர்வு இருப்பினும் பொருள் உணர்வதற்குச் சொல்லொலிப்பே காரணமாகின்றது. பெரும்பாலான ஆங்கிலச் சொற்களில் அவற்றின் சொல்லொலிப்பு, சொல் எழுத்துகளின் ஒலிச் சேர்க்கையாக இருப்பதில்லை. இதனால் அம்மொழியில் சொல் எழுத்துக்கும் சொல்லொலிப்பிற்கும் பெரும்பாலும் தொட்ர்பிருப்பதில்லை. இத்தகைய குறைபாடு தமிழில் இல்லை. இச் சிறப்பியல்பு காரணமாக, தமிழில் சொல்லெழுத்துகளை வரையறுத்தல் மேலும் எளிதாகின்றது.
தமிழ்ச்சொற்கள், தமிழில் ஒலிபெயர்க்கப்பட்ட பிறமொழிச் சொற்கள் ஆகிய இருவகைச் சொற்களிலும் சொல் எழுத்துகள் வரையறுக்கப்படுதல் வேண்டும்.
எந்நலம் என்னலம் முந்நாள் முன்னாள் முந்நூறு முன்னூறு
முதலிய சொல் இணைகள் ஏறத்தாழ ஒரே ஒலிப்புடையன வாயினும் சொற்பொருள் வேறுபாடுடையன. ஒன்றை மற்றொன்றாகக் கருதி மயங்காதவாறு சொல் எழுத்துகள் மட்டுமன்றிச்சொற்பொருளும் வரையறுக்கப்படுதல் வேண்டும்.
பேர் பெயர் தேதி திகதி தேனீர் தேநீர் எண்ணை எண்ணெய்
பழமை பழைமை
பதட்டம் பதற்றம்

ம. கங்காதரம் 85
முதலிய சொற்கள் அன்றாட வழக்கிலும், இந் நாள் இலக்கண வழக்கிலும் வேறுபாடு எதுவுமின்றி பயின்று வருகின்றன. ஒரே பொருளுடையனவும், ஏறத்தாழ ஒரே ஒலிப்புடையனவுமான இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட சொற்கள் இருத்தல், வரையறையற்ற மொழியமைப்பையே புலப்படுத்தும். ஆதலால் இவற்றுள் பொருளுள்ள சொற்களுக்கு வரையறையான சொல்லெழுத்துகளை வகுத்தளித்தல் வேண்டும்.
இன்றைய இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு என்பன பண்டைய இலக்கிய வழக்கிலிருந்து வேறுபட்டுள்ளதால், பல சொற்கள் இன்று ஒலித்திரிபடைந்து அதற்கிசைவாகச் சொல்லெழுத்தில் மாற்றமும் அடைந்துள்ளது. இதனால் பழைய இலக்கியங்களில் தோய்ந்துள்ளோரும் ஒரே சொல்லை வெவ் வேறு சொல்லெழுத்துகளால் குறிப்பிடுவர். காலப்போக்கில் சொல் ஒலிப்பில் ஏற்படும் திரிபுக்கேற்ப, சொல்லெழுத்தும் மாற்றமடைதல் இயல்பு. வளர்ச்சி அடையும் துடிப்புள்ள மொழிகள் அனைத்திலும் இதனைக் காணலாம். அமெரிக்க வழக்கில் ஆங்கிலச் சொல்லெழுத்துகள் அடைந்து வரும் மாற்றம் இதற்கொரு சான்று. ஆகவே பழைய இலக்கிய மரபுகளை விடாப் பிடியாகப் பற்றி கொண்டிராமல், வேண்டிய இடத்து பேச்சுமொழி, இலக்கிய வழக்கு ஆகியவற்றை அடி யொற்றியே, சொல்லும், சொற்பொருளும் வரையறுக்கப்படுதல் வேண்டும். உயிர்த் துடிப்புள்ள ஒரு மொழியில் பேச்சு வழக்கு, எழுத்துவழக்கு ஆகியவற்றிற்கிடையே மிகக்குறைந்த வேறு பாடே இருக்கும்; இருக்க வேண்டும். அன்றேல் பேச்சு வழக்கில் எளிமை பெற்றுள்ள மொழி நிலைபெற்றுவிட, எழுத்து மொழி ஏட்டளவோடு முடங்கிவிடும் அல்லது பிறிதொரு மொழியாகக் கிளைக்கும்.
நெடுங்காலத்துக்கு முன்னரே, தமிழிற் கலந்துவிட்ட சமக்கிருதச் சொற்கள் பல இருவகைச் சொல்லெழுத்துடைய னவாகக் காணப்படுகின்றன.

Page 45
86 தமிழ் எழுத்துகள்
ஆநந்தம் ஆனந்தம் அநுபவம் அனுபவம் விநாயகர் 6960TITLu5ff; சந்நிதி சன்னிதி அந்நியர் அன்னியர்
என்பன இத்தகைய சொற்களுட் சில. இவற்றுள் உள்ள நகர, னகர ஒலிகளுக்கிடையேயுள்ள வேறுபாடு புலனாவதில்லை. ஆதலின் இவற்றில் புணர்ந்துள்ள அடிச்சொற்களின் அடிப்படை யிலேயே இவற்றின் சொல்லெழுத்துகள் வரையறுக்கப்படுதல் வேண்டும்.
கலாசாரம் கலாச்சாரம்
19ygiTyth பிரச்சாரம்
முதலிய சொல்லிணைகளுள் ஒன்றில் வல்லினம் மிகும் வழக்குண்டு. வல்லினம் மிகாச் சொற்களே ஏற்புடையவை.
பிறமொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட கலைச் சொற்கள் பலவற்றிலும் சொல்லெழுத்து வேறுபாடுண்டு. குறிப்பாகத் தமிழ்நாட்டில் மொழிபெயர்க்கப்பட்ட கலைச் சொற்கள் இலங்கையில் அவ்வாறு பெறப்பட்ட சொற்களின் சொல்லெழுத்துகளின்றும் வேறுபடுகின்றன. மொழிபெயர்க்கப் படும் கலைச் சொற்கள் தமிழ் பேசும் உலகுக்குப் பொது வானவை. ஆதலின் இவை நாடு தோறும் சொல்லெழுத்தில் வேறுபடுதல், காலப்போக்கில் விரும்பத்தகாத விளைவுகளுக்கு இடமளிக்கும். இதே கருத்து ஒலிபெயர்க்கப்படும் சொற்களுக்கும் பொருந்தும்.

ம. கங்காதரம் 87
இவ்வாறு வேறுபட்ட சொல்லெழுத்துகளோடு கூடிய சொற்கள் பல உள. இவற்றைத் தொகுத்து வகைப்படுத்தி சரியான சொற்களையும், அவற்றின் சொல்லெழுத்துகளையும் வரையறுப்பதற்கு, தமிழ் மொழி மேம்பாட்டில் நாட்டமுள்ள தமிழியல் அறிஞர்கள் முன்வருதல் வேண்டும். இப்பணியும் எழுத்துச் சீர்திருத்தத்தின் ஒரு கூறாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கே இக் குறைபாடுகள் இங்கு, தொட்டுக்காட்டப்பட்டன.
பலர் நினைப்பது போன்று பொதுமக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்குப் புலமை மிக்கோர் மட்டும் நூல்களைப் படைப்பதில்லை. சாதாரண கல்வியறிவுடையாரே, இலக்கியம், வரலாறு, அரசியல் முதலிய பல்வேறு துறைகளில் எழுதுகிறார்கள். அன்றாடம் வாழ்க்கைக்குத் தேவையான பலதுறைகளில் ஈடுபட, மொழிக்கல்வி துணையாவதை மறத்தலாகாது. ஆகவே பழைய இலக்கிய வழக்குகளை மட்டும் அளவு கோலாகக் கொண்டு இன்றைய எழுத்து மொழி வழக்குகளை எடை போடுவதும், பல நிலைகளில் அவற்றைப் புறக்கணிப்பதும் நெறியன்று. பேச்சுமொழியின் தன்மை, அதற்கும் எழுத்து மொழிக்கும் உள்ள உறவு, மொழிக்குரிய ஒலி அமைப்பு முதலியனவற்றை ஒருங்கு நோக்கியே சொல்லெழுத்துகளை வரையறுத்தல் வேண்டும். இவ்வாறு மொழியின் ஒலியமைப்புக்கு இசைவாகவுள்ள ஒலிகளின் அடிப்படையில் வரையறுக்கப்படும் சொல்லெழுத்துகளே திரிபின்றி நிலைபெற்று வாழும்.

Page 46
88 தமிழ் எழுத்துகள்
இ. றோமன் எழுத்துகள் தமிழுக்கு ஏற்றவையா?
இன்று வழக்கிலுள்ள தமிழ் எழுத்துகள் சிக்கலான அமைப்பும் ஒழுங்க்ற்ற வரிவடிவமுடையன என்பதும், அவை சீராக்கப்பட வேண்டும் என்பதும், முன்னரே நன்கு தெளிவு படுத்தப்பட்டன. தமிழ் முதலெழுத்துமுறை ஆங்கில எழுத்து முறையைப் போன்றது. பல நிலைகளில் அதனினும் மேலான எளிமையும், சிக்கனமும் உடையது. இதனை அறியாதோரும், எழுத்துச் சீர்திருத்தத்தின் ஆழ, அகலங்களை உணரமுடியா தோரும், தமிழ் எழுத்துகளுக்குப் பதில் றோமன் எழுத்துகளை எடுத்தாண்டு இன்றுள்ள சிக்கலில் இருந்து விடுபடலாமென்பர்.
றோமன் எழுத்துகளை ஏற்றுள்ள மொழிகள். மேலை ஆரிய மொழிகளாகிய ஐரோப்பிய மொழிகள் அனைத்தும், றோமன் எழுத்துகளையே ஏற்றுள்ளன. இவற்றுள் பல ஆங்கில மொழியிற் பயன் படுத்தப்படும் இருபத்தாறு எழுத்துகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. இதனினும் கூடிய அல்லது குறைந்த எழுத்துகளையே அவை எடுத்தாண்டு வருகின்றன. அமெரிக்க மொழிகள் பலவற்றிலும் இதே நிலையே நிலவுகிறது. இம் மொழிகள் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. அதனால் அவற்றின் அடிப்படை ஒலியமைப்பில் குறிப்பிடத்தக்க வேறுபாடெதுவும் இல்லை. இதன் விளைவாக, மொழிகள் தோறும் எழுத்துகளின் ஒலி வேறுபடுவதால் தோன்றும் சொல்லொலிப்புச் சிக்கலுக்கும் அதிக இடமில்லை.
ஆபிரிக்க மொழிகளுட் சிலவும் றோமன் எழுத்துகளை ஏற்றுள்ளன. இவை சிக்கலான வரிவடிவுடையன. அன்றியும் அவற்றிற்கென ஒரு தனித்தன்மை, நீண்டகால வரலாறு, இலக்கிய வழக்கு என்பன இல்லை. ஆகவே தமக்குற்ற இடர்களினின்றும் விடுபடும் நோக்கில் றோமன் எழுத்துகளை எடுத்தாண்டுள்ளன.

ம. கங்காதரம் 89
ஆசியாவின் தென் மேற்குப் பகுதியில் துருக்கியும், தென் கிழக்கில், இந்தோனேசியா, ஃபிலிப்பினா முதலிய மொழிகளும் றோமன் எழுத்துகளையே ஏற்றுள்ளன. இந்தோனேசிய மொழி, றோமன் எழுத்துகளுக்குரிய ஆங்கில ஒலிப்புக்குப் பதிலாக, தன் மொழி ஒலிகளையே வழங்கியுள்ளது. இதனால் ஆங்கில ஒலிப்புமுறையில் தேர்ச்சியுடையார் இந்தோனேசிய மொழிச் சொற்கள் பலவற்றைச் செம்மையாக ஒலிக்கமுடியாது இடர்ப்படுவர். இதேநிலை றோமன் எழுத்துகளைத் தழுவிக் கொண்ட ஏனைய மொழிகளிலும் காணப்படுகின்றது. கி.பி. 5 ஆம் நூற்றாண்டு முதலாக 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இந்துக்கள், முகமதியர்கள், ஐரோப்பியர்கள் ஆகியோர் இதே ஒழுங்கில் அந் நாட்டின் மீது மேலாண்மை செலுத்தி வந்தனர். இதனால் அந் நாட்டு மக்களின் மொழியும் காலம் தோறும் மாற்றமடைந்தே வந்துள்ளது. ஏறத்தாழ 250 மொழிகள் அங்கு பயின்று வந்துள்ளன. இந் நிலையிலேயே இங்குள்ள மொழிகளுள் பல அண்மையில் றோமன் எழுத்துகளை ஏற்றுள்ளன. இவற்றுள் எதுவும் இலக்கிய வளம் மிக்கத்தொன் மொழி என்னும் பெருமைக்குரியதன்று.
இனமும் மொழியும் : ஒர் இனத்தை ஏனைய இனங் களிலிருந்து பிரித்தறிவதற்குப் பெரும்பாலும் மொழியே கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. எளிமைவாய்ந்த சீரிய ஒலிப்புடைய மொழி குறிப்பிடத்தக்க ஒலித்திரிபின்றி இயல் மொழியாய் நெடுங்காலம் நின்று நிலவ வல்லது. இத்தகைய ஒரு மொழியின் வரிவடிவு காலம் தோறும் தேவைக்கேற்ப மாற்றமடையினும், தன் ஒலியமைப்புக்கு இசைவாக இல்லாத வேறொரு வகை எழுத்தை ஏற்க முற்படாது. தனக்கேற்ற ஒரு சீரிய வரிவடிவை அமைத்துக் கொள்ளவே அது முற்படும். இன்றைய எழுத்துச் சீர்திருத்த முயற்சிகள் அத்தகைய ஒரு தேவையின் வெளிப்பாடேயன்றி வேறன்று. சமக்கிருத மொழி அரசவைகளில் செல்வாக்குடையதாயிருந்த காலத்தில் அம்மொழிக்கு முதன்மை தரவிழைந்தோர் தமிழில் உள்ள தமிழ் ஒலி உயிர் எழுத்துகளிடையே சமக்கிருத ஒலிகளுக்குரிய ஐ. ஒள என்னும் புணரொலியெழுத்துகளைப் புகுத்தியுள்ளனர். இவை நீங்கலாக உயிர் எழுத்துகள் குறில், நெடில் என இணைந்த

Page 47
90 தமிழ் எழுத்துகள்
சீரான அமைப்புடையன. மெய் எழுத்துகளும் வரையறையான ஒலிப்புடையன. இவ் அடிப்படையில் நோக்கின் ஏனைய மொழிகளுக்கில்லாத தனிச்சிறப்பு தமிழுக்குண்டென்பது புலனாகும். தமிழினின்றும் கிளைத்த, மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலிய திராவிட மொழிகள் கூட, வரம்பு கடந்த சமக்கிருத மொழிக்கலப்பினால், தம்மியல்பு திரிந்து தமிழினின்றும் பெருந்தொலைவு விலகியுள்ளன. தமிழ் மட்டும் பெரும்பாதிப்புக்குள்ளாகாது தனித்து வாழ்கின்றது. இன்றைய தேவைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு வரிவடிவம் அதற்கு இருப்பதும் ஏற்புடையதே. அன்றியும் ஒரு மொழி அதனையாளும் இனத்தின் பண்பாட்டுக் கருவூலம் என்பதையும் மறத்தலாகாது. ஒலியமைப்பு, ஒலியின் குறியீடான எழுத்து, அதன் வரிவடிவு என்பனவும், மொழியின் கூறுகளாகின்றன. ஆகவே தனித்தன்மை மிக்க, தமிழுக்குத் தனியெழுத்துமுறை இருப்பதில் தவறேதுமில்லை.
எத்தகைய விளைவு? : தமிழ் எழுத்துகள் அனைத்தும், பெரும்பாலும் ஒலியனியல் எழுத்துகளே என்பது முன்னரே தெளிவுபடுத்தப்பட்டது. இதனால், தமிழிலுள்ள உயிர்மெய் எழுத்துகள் தனி எழுத்துகளாகக் கருதப்படா வரையறையான ஒலிப்புள்ள மெய், உயிர் என்பவற்றின் சேர்க்கையாற் பிறந்த கூட்டெழுத்துகளாகவே கொள்ளப்படும் இவை, அசை யெழுத்துகள் எனப்படும். ழ, ற, ன, என்பன தமிழுக்கு மட்டுமே யுரிய சிறப்பொலி எழுத்துகள். 'தொழிலாளி என்னும் சொல்லை றோமன் எழுத்துகளில் THOLLAL என்றே எழுதவேண்டும். ஆங்கில ஒலிப்புமுறைக்கமைய இது 'தொலி லாலி என்றே ஒலிக்கப்படும். சொல்லின் வெவ்வெறு இடங்களில் வரும் L வெவ்வேறு ஒலிப்புடையதெனக் கற்றுத்தருதல் பயன் விளைவிக்காது. இதனால், காலப்போக்கில் சொற்கள் சிதைவுற்று பொருளற்ற ஒரு ஒலிக்கூட்டமாக மாறுவதை யாரும் தடுத்தலியலாது.
றோமன் எழுத்துகளை எடுத்தாளலாமென்போர், அவ்வெழுத்துகளின் ஆங்கிலமுறை ஒலிப்பையே கருத்துட் கொள்வர். 'அ' வின் ஒலிக்கிணையாக, ஆங்கிலத்தில் காணப் படும் ஒலி A என்னும் ஒலியியற் குறியீட்டினாற் குறிக்கப்படும்.

ம. கங்காதரம் 91
இந்த ஒரே ஒலியை a, u, Ou, Oe, OO, Wo, o-e என்பன சொல்லின் வெவ்வெறு இடங்களில் பிறப்பிக்கவல்லன. இவ்வாறே இ' யின் ஒலிக்கிணையான ஒலியை i, a, e, u, y, O என்னும் தனியெழுத்துகளும் ai, ui, ia, ee, ie, oe, ei, ea, ey, s-s என்னும் எழுத்திணைகளும் பிறப்பிக்கவல்லன. ஏனைய ஒலிகளின் நிலையும் இத்தகையதே. இவ்வாறு ஒரே ஒலி வெவ்வேறு எழுத்துகள், அல்லது எழுத்திணைகளால் பிறப்பிக்கப்படும் ஒரு மொழியின் எழுத்துகளில் தமிழ் சொற்களை எழுதும்போது அவற்றின் சரியான சொல்லொலிப்பு, எப்போதும் கிடைக்குமென நாம் எதிர்பார்க்கலாமா? சான்றாக, 'முல்லை நிலம்' என்னும் தமிழ் சொல் றோமன் எழுத்துகளில் MULLA NILAM என எழுதப்படும். ஆங்கில ஒலித்திட்டத்தின் படி 'ஐ' யின் ஒலிக்காக இங்கு எடுத்தாளப்படும் ai தனி உயிராயின் "இ" எனவும், புணரொலியுயிராயின் 'ஐ' எனவும் ஒலிக்கும். இதனால், 'முல்லை நிலம் 'முல்லி நிலம்' எனவும் பிறமொழியாளர் நாவில் ஒலித்திரிபடையும், u என்னும் எழுத்து உ, அ என்னும் தமிழ் எழுத்துகளின் ஒலியாகவும் புலப்படும். ஆகவே uppu என்பது 'உப்பு' என்றோ ‘அப்பு' என்றோ ஒலிக்கப்படலாம். இவற்றைக் கூர்ந்து நோக்கும் போது, சொற்கள் ஒலித்திரிபடைவதோடமையாது, முற்றிலும் வேறுபட்ட பொருளுடையனவாக மாறுவதும் புலப்படும். மொழிக்கு அடிப்படை ஒலி, சொற்களின் ஒலிப்புத் திரிபெய்துமாயின் மொழி எவ்வாறு பாதிப்புறும் என எண்ணிப்பார்க்க.
ஆங்கிலத்தில் ஒரேஒலி வெவ்வேறு எழுத்துகளால் அல்லது எழுத்திணைகளால், பெறப்படுவது போலவே, ஒரேயெழுத்து வெவ்வேறு சொற்களில், ஒரே சொல்லின் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு ஒலிப்புடையதாகும். சான்றாக, பின்வரும் சொற்களின் தொடக்கத்தில் வரும் a இன் ஒலிப்பு வேறுபடுமாற்றைக் கவனிக்க. act - அ, art - ஆ. aim - எ, age - ஏ. இதே எழுத்து வேறு உயிர் அல்லது மெய்யோடு கூடி சொல்லின் இடையில் வரும்போது, இவற்றிலும் வோறான ஒலிப்புடைதாகும். இத்தகைய ஒலி வேறுபாடுகளுக்கு இடம் அளிக்கும் றோமன் எழுத்துகளில் ‘ஆடு' என்னும் எளிய

Page 48
92 - தமிழ் எழுத்துகள்
தமிழ்ச்சொல் adu என எழுதப்பெறும். மேற்கூறியவாறு a யின் நால்வகை ஒலிப்புக்களை மட்டும் நாம் கருத்துள் கொள்வோ மாயின், இச் சொல் 'அடு', 'ஆடு', 'எடு’, ‘ஏடு எனப் பலவாறு பல பொருள்படத் தமிழில் ஒலிக்கப்படலாம். இந்தக் குழப்பநிலை தோன்றுவதைத் தவிர்ப்பதற்கு, ஓர் எழுத்து எய்தும் ஒலிவேறு பாட்டைக் காட்டும், வெவ்வேறு குறியீடுகளை அவ் எழுத்தோடு சேர்த்துக்கொள்ளலாம் எனச் சிலர் கூறுவர். ஒலிக்குரிய குறீயீடேஎழுத்து; ஒலி வேறுபாட்டைப் புலப்படுத்த ஒரே யெழுத்தோடு வெவ்வேறு குறிகளைச் சேர்க்கும் போது, வெவ்வேறு எழுத்துகளே பிறக்கின்றன. ஒரேயெழுத்து எய்தும் நால்வகை ஒலிக்காக அதனை நான்கு எழுத்துகளாகப் பெருக்கும் நிலை ஏற்படுகிறது. றோமன் வரிவடிவிலுள்ள ஏனைய எழுத்து களாகப் பெருக்கும் நிலை ஏற்படுகிறது. றோமன் வரிவடிவி லுள்ள ஏனைய எழுத்துகளும் இவ்வாறே பல எழுத்துகளாகப் பல்கிப் பெருகுவதை யாரும் தடுத்தலியலாது. தமிழ் எழுத்துகளின் ஒலித்தேவைகளுக்காக, 26 றோமன் வரிவடிவ எழுத்துகளை பல்நூற்றுக்கணக்கில் பெருக்கிக்கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்படும். அன்றியும், கையால் எழுதும்போது ஒலி வேறுபாடுகளைக் காட்டும் குறியீடுகளையும் சேர்த்தும் எழுதுதல் அத்துணை எளிதாக இராது; எழுதும் வேகமும் குன்றும்.
ஆகவே இன்றைய தமிழ் எழுத்துகளில் காணப்படும் சிக்கல்களுக்கு, றோமன் வரிவடிவு சரியான தீர்வன்று என்பது, இதுகாறும் கூறியவற்றாற் பெறப்படும். ஒலியனியல் முறைக்கு அமையச் சீராக்கப்பட்ட எழுத்துமுறை நமது இன்றைய எதிர் காலத் தேவைகள் அனைத்திற்கும் ஏற்றதென்பது, இதனாற் பெறப்படும். தனித்தன்மையுள்ள ஒருவரிவடிவு, வரையறை யான ஒலிப்புள்ள எழுத்துகள் என்பன தமிழினத்தின் தனிப்பெரும் சொத்து. எளிமை மிக்க ஒலியமைப்புடையதாக இருத்தலினாலேயே, தமிழ் மொழி இன்றும் மக்கள் நாவில் உயிர்த் துடிப்போடு தவழ்கின்றது. இதனால் தமிழ் மொழியின் ஒலியமைப்புக்கு இசைவான ஒலியமைப்பற்ற பிறமொழி ஒலிகள் தமிழிற் கலப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடப்பாடு நமக்குண்டு. அன்றியும், இவையனைத்தையும் நன்குணர்ந்து செயற்பட வேண்டிய பெரும் பொறுப்பும், தமிழ் மக்களாகிய நம் அனைவருக்கும் உண்டு.

ம. கங்காதரம் 93
ஈ. பழையதும் புதியதும்.
இன்றைய எழுத்துகளில்
தேக்கநிலையில் இருந்து விடுபட்டு முன்னேற விரும்பினால் மாற்றத்தை ஏற்றேயாக வேண்டும். மாற்றம் புகுத்தப்படும் போது குழப்பம் விளையும். அதனைத் துணிவோடு எதிர் கொள்ள வல்லாரே முன்னறே முடியும் தயங்கி நிற்போருக்கு முன்னேற்றமும் இல்லை, முன்னேற்றத்தாற் கிட்டும் சிறப்பும் இல்லை.
சீராக்கப்பட்ட முதலெழுத்துகளில்
தஏககஅ நஇலஅயஇல இரஉநதஉ வஇடஉபஅடடஉ மஉனனஏறஅ வஇரஉமபஇனஆல மஆறறஅததஅய ஏறறஏயஆகஅ வரெனடஉம. மஆறறஅம பஉகஉததஅபப அபு உம பஒதஉ கஉழஅபபஅம வஇளஅயயஉம. அதஅனஅயத தஉணஇவஓடஉ எதஇரகஒளளஅவஅலலஆரஏ மஉனனஏறஅ மஉடஇயஉம. தஅயஅங்கஇ நஇறபஒரஉககஉ மஉனனஏறற அமஉம இலலஅய; மஉனனஏறறஅததஆல கஇடடஉம சஇறஅபபஉம இலலஅய.

Page 49
§ 109 QJ ||9 fi [[9 (19 ITM (IT]] | ĴIT19|| 95 IŲ9 T14G) {? [9] Q ! Ţo,o & & IS) || 9|
■创!创朗印%卫示卫门
u9os@șđìDı9 u9u9đĩ) tirns@@@ sg)&

உருமாற்றம் கொண்டு வளர்த்து வரும் உயிரெழுத்துகள்
○ Q 2 2 Q 2 NAN 行), 이 어 더 3.1 이 行나 주 이 5, 行, 이 乙/YY冬d/Q/ 2ミく2/2へa/s/ 十小r中正了中风、 GO CO CO «O GO GO
C のへ QQ
の「○ C ? Qミ○。CQ
N N N & 다. 이 r1 t이 유니1 이 이 이
马约c窗函 QV & CN cụ S-几乎乐中乐平 © o so «O 것 원) 정치적 이용어정 것이것 것 어武) 장 이왕 아직 C%
C#, C여 C형 Ca & C3 (校, (%) 影88% 可可 可 이 이 이 이 四马自知 2N 2 2/ SN 乐乐乎所 O eo go &
역의 지어 R거 어퍼 ~이와 이것 이의 그저의 그최 어 어최 회 이회 회
L 0 0 0 0 0 0 0 0 L 0 0 S 0 0 0 0S S 0 L0 0 0 0 0 0 0S 0S 0 0 S 0

Page 50
நூற்ருண்டு க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
ась з | + C d Ћ С I h L U Ч Ј, * v) ӧ 9 vh Я Г as 2 | + [ "トCIトl し U レ「v も“ s கி.பி. 3 + d Z N n U U L (? ΟΥ கி.பி. 4 h S b L. UCs ce S to a. 5 || + C c C 3 3 n U et VU || N) ô Co oli sh as e i 2 l b U Coco o (p 1 2 } (O) 1 ق له آ را وی را (۲ رق ( [ رع h || 7 بوده a 9. 8 1 ». « 6 l-e o n - «o cu o & co r1 7 so ala. 9 || || г. Ј 8 - “J А Н - се од 7 о -у се га “ од 4.3. 10 † 2 S & " , h - Lo Qo 7 N -J q o? 2. a. به را از مهله به 1 رقم می را را 6 T" . ق به کوه . || 11 .dl.l S.L. 12 3 2, d (3 - o % nu U0 ou 1 no 2.J 4e r1 41 al آo || 1 مه له رم T لی وی را ره ۶ مه -با ق d لا" f || 13 . اگاه S.S. 14 if n g 3 - a) ay h u uo u T ay U up at 7 ay a.S. 15 9 ч е S - " , , и о“ то е и от 2 от &.S. 16 5 u S З ц- ам в ”2 L Lo zи п өo eЈ цр ат 7 6, ‘. ... 17 а пы ё 5 - «и 5 дъ U LouЈ л «о ли чg тл со ал a.s., 18 || 35 hj 3 S5 - Gay B 5 U Lo u TJ Go 2 u 8 m m) a A.S. 19 & f & Ö |- er 5 5 L L0 U r s • 9 s. mær

பிழை திருத்தம்
பக்கம் ճմ(էք திருத்துக
12 28 பயிற்று பயின்று 19 1. பிரிதொரு பிறிதொரு 23 8 விளைவிக்குமாறு விளைக்குமாறு 25 நூற்பாவில் 4 மரவின் மரபின்
51 5 莎 se 62 கீழிருந்து 4 மாற்றங்களில் மாற்றங்களின் 63 கீழிருந்து 9 மீட்டர் மீற்றர் 70 கீழிருந்து 6 போது போதும் 72 6 தவிரிந்த தவிர்ந்த 72 கீழிருந்து 8 மொழிகள் மொழியில் 81 8 ho ha 81 5 சமஃக்கிருதம் சமஃச்கிருதம் 85 12 அடைந்துள்ளது அடைந்துள்ளன
12 நீக்குக
92
றோமன்.ஏற்படுகிறது

Page 51


Page 52
LLL K S LLLLS SLLLL LL LLLLLLLLYSSGLS