கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவாமி ஞானப்பிரகாசர் சிந்தனையும் பணியும்

Page 1
198I (GLI
சுவாமி ஞானப்பிரகாசர் இலங்கை அரசாங்கம்
வாசிக்கப்பெற்ற
பதிப்பா
பேராசிரியர் க
ஞானப்பிரகாசர் நினைவு
 
 
 
 

னப்பிரகாசர்
பணியும்
El 22G) são
நினவு முத்திரையை , போது நடத்தப்பட்ட கருத்தரங்கில்
கட்டுரைகள்
岳f凸计· 1. இந்திரபாலா
விழா அமைப்புக் 5.
ITTIJIET .± ܠܐ ܓܪ

Page 2
கொழும்
இப்புத்தகம் திகதிக் கொடு

ல் நிலையம்
கீழே குறிக்கப்பட்டுள்ள
கு முன்பாக திருப்பிக் க்கப்படல் வேண்டும்

Page 3
சுவாமி ஞா
சிந்தனையும்
1981 மே
சுவாமி ஞானப்பிரகாசர் இலங்கை அரசாங்கம் வெளியிட்டே வாசிக்கிப்பெற்ற
திப்பாנL பேராசிரியர் கா
ஞானப்பிரகாசர் நினைவு
யாழ்ப்பு
19

னப்பிரகாசர்
பணியும்
22இல்
நினைவு முத்திரையை போது நடத்தப்பட்ட கருத்தரங்கில்
கட்டுர்ைகள்.
Sañurri :
, இந்திரபாலர்
விழா அமைப்புக் குழு Tayorb
8

Page 4
சுவாமி ஞானப்பிரகா சிந்தனையும் பணிய
முதற் பதிப்பு: மே 1981
புனித வளன்
ലെീ48: ஞானப்பிரக அமைப்புக் கு
uurrpuur7899r
uami @aanaዖዖeምܠܵܗ
i volume of på By the yar Organising. É at Íhe Deerasin release of the
snanapragasar.
First Edition: May 198 Editor; “ prof. Kiridir

፴፬ . மும்
கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பாணம் ாசர் நினைவு விழா தழு, ஆயர் இல்லம்,
ம்.
99or el
CSG Dy9
pers read af fje 5eminar organised i sinanapragasar ßommemoration mmittee, fishop's fouse, Jaffna liam äialt on the occasion of the ćommemorative žestage štamp of
29nd flag 1981.
páta

Page 5
பொருளட
1. முன்னுரை
2
வரலாற்ருராய்ச்சித் துறையில் சு6
3. மரபுவழித் தமிழ்க்கல்வியும் சுவா
4. ஈழத்திற் கத்தோலிக்கத் தமிழில
5. சுவாமி ஞானப்பிரகாசரும் மொ
6. சுவாமி ஞானப்பிரகாசரின் சீரிய

டக்கம்
வாமி ஞானப்பிர
காசருடைய தொண்டு I
மி ஞானப்பிரகாசரும் 9
21
fu fru6b 27
Fமயப்பணி 35

Page 6


Page 7
முன்னுரை
குவாமி ஞானப்பிரகாசர் மறைந்து மு டைய சிந்தனை, எழுத்து, பணிe இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. பிறந்த தின நூற்ருண்டு விழா ெ பணியை மதிப்பிடுவதற்கு ஒரு சந்தர்ப். நடைபெற்றிருந்தாலும், பொதுப்பட டொன்று இடம்பெருது போயிற்று. களும் முழுமையாக அச்சிடப்படாதை பணியைப் போற்றிவந்த வட்டத்துக் அடங்கி வந்துள்ளது.
இந்நிலையில் சுவாமிகளுடைய ரையை வெளியிட ஒழுங்கு செய்தபை அளித்துள்ளது. இதனல், ஒரு சிறிய ஞானப்பிரகாசருடைய சிந்தனையையும் காசர் நினைவு முத்திரை வெளியீட்டு வி பிரகாசர் பற்றிய முறையான, விஞ்ஞ வேண்டும் என ஆர்வங்கொண்ட இ கழகத்தினரிடம் ஒப்படைக்கத் தீர்மா அவர்களுடைய சீரிய நோக்கத்தினல், மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டி பெரியார்களைப் பற்றிய நினைவு மலர் கள் மட்டுமே இடம்பெற வேண்டும் 6 பணச் செலவில் வெளியிடப்படும் ம அதற்கு மாருக, ஞானப்பிரகாசர் பற் கொள்ளத்தக்கதாய் அமைய வேண்டு மதிப்பீடுகளை நூல்வடிவில் உடனே ( தக்க செயலே.
ஞானப்பிரகாசர்
சுவாமி ஞானப்பிரகாசர் மான கம் சாமிநாதபிள்ளை என்ற ஆசிரியருக்( வுக்கும் மகனகப் பிறந்தார். தந்தைய பாயில் வேலக்கைப் பிள்ளையார் கோ? யாற்றினர் என அறிகின்ருேம். ஆன குடும்பத்திற் பிறந்தவர். பிறந்தபே என்ற பெயரே இடப்பட்டது. ஞான கும்போது தந்தையார் வாந்திபேதி ே சைவப் பின்னணியிலிருந்து விலகக் க பிள்ளையாய் இருந்த போது தாயார் அ

முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் அவரு ஆகியவற்றைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி சில ஆண்டுகளுக்கு முன் சுவாமிகளுடைய காண்டாடப்பட்ட் பொழுது அவருடைய பம் கிடைத்தது. அந்நேரம் ஒரு கருத்தரங்கு
விஞ்ஞான ரீதியான, விரிவான மதிப்பீ கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை ம துரதிஷ்டமே. இதனல் சுவாமிகளுடைய குள் மட்டுமே அவரைப்பற்றிய பேச்சு
நினைவாக அரசாங்கம் ஒரு தபால் முத்தி D மீண்டும் ஒரு மதிப்பீட்டுக்குச் சந்தர்ப்பம் அளவிலாவது கருத்தரங்கு ஒன்றை நடத்தி, ம் பணியையும் மதிப்பீடு செய்ய ஞானப்பிர விழாக் குழுவினர் தீர்மானித்தனர். ஞானப் ானரீதியான மதிப்பீடொன்று இடம்பெற க்குழுவினர், அப்பொறுப்பினைப் பல்கலைக் னித்து, என்னை உதவுமாறு அழைத்தனர். பல வேலைகள் மத்தியிலும் இப்பொறுப்பை பதாயிற்று. வழமையாக நம்மவர் மறைந்த களை வெளியிடும்போது, வெறும் புகழ்மாலை ான விரும்புவதுண்டு. இதனல் பெருமளவு லர்கள் பயனற்றவையாய் முடிவதுமுண்டு. றிய இம்மதிப்பீடு அறிஞருலகம் ஏற்றுக் ம் என விழாக்குழுவினர் விரும்பியதோடு, வெளியிடவும் ஆவன செய்தமை போற்றத்
ரிப்பாயில் 1875 ஒகஸ்ட் 30இல் இராசசிங் நம் காடினர் சிற்றம்பலம் மகள் தங்கமுத்து ார் சைவ மதத்தைச் சேர்ந்தவர். மானிப் பிலின் முகாமையாளராகக் கூடக் கடமை ல், தாயார் புரட்டஸ்தாந்தக் கிறிஸ்தவ து ஞானப்பிரகாசருக்கு வைத்தியலிங்கம் ப்பிரகாசர் ஒருவயதுப் பிள்ளையாய் இருக் ாயினுல் அகால மரணமடைந்தமை அவர் ாரணமாயிருந்ததெனின், மூன்று வயதுப் ச்சுவேலியைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கரை

Page 8
மணம் முடித்தமை அவர் கத்தோலிக்கரா பணிபுரிய வழிவகுத்ததெனலாம். கத்தோ ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்
முதலில் அச்சுவேலியில் சூசையட் பயிலத்தொடங்கிய ஞானப்பிரகாசர் ஆ பதினெரு வயதளவில் மானிப்பாய் ெ அதன்பின் யாழ்ப்பாணம் சம்பத்திரிசியா வது வயதுடன் பாடசாலைப் படிப்பை நி! தேயிலைத் தோட்டத்திலே தங்கியபின், ! களத்தில் உத்தியோகம் பெற்ருர், ஆளு கைவிட்டு, கத்தோலிக்கத் திருச்சபையிே
இளமைப் பருவத்திலே தமிழ், ஆ கற்று, தமிழிசை, தமிழ் நாடகம், தமிழ் டிருந்த ஞானப்பிரகாசருக்குத் திருச்சன ஆராய்ச்சியறிஞராக மாறுவதற்கு வாய் திருக்காவிடின் ஞானப்பிரகாசரைப் பற் கூறலாம். 1901 இல் அவர் குருப்பட்ட குறைய அரை நூற்றண்டுக்காலமாக <毁 பூரணமாக உழைப்பதே அவருடைய 11
இலங்கையிலேயே முழுமையான அதிலும், சுவாமிகள் தேர்ந்தெடுத்த பாண வரலாறும் தொல்பொருளியலும் பெற்றிருக்காத காலம் அது. இரண்டா6 மொழியியல் (Linguistics) துரித வளர் யாழ்ப்பாண வரலாறே பல்கலைக் கழகத் பதுகள் வரை அமைந்தது. இந்நிக் கொண்டு, அவற்றில் முறையான பயிற் சார் நுட்பங்களைக் கற்றுத் தன்னுலான திற் கொள்ளவேண்டிய விஷயமாகும். கிருந்த பயிற்சிப் பின்னணியிலும் வைத் செய்யவேண்டும். சுவாமிகள் காலத்தி லே நாம் எவ்வளவோ முன்னேறிச் செ முடியாது. சுவாமிகளுடைய அணுகுமு கள் இல்லை என வாதாட வேண்டியதில் வேண்டியதுமில்லை. அவருடைய தொ பீடு செய்வதன் மூலமே சுவாமிகள் வ: வளர்த்துச் செல்லலாம்.
இத்தகைய ஒரு மதிப்பீட்டை இதில் உதவ முன்வந்த திரு. க. அரு பேராசிரியர் கா. சிவத்தம்பி, கலாநி அந்தனி ஜோன் அழகரசன் ஆகியோரு

ய் வாழ்ந்து, கத்தோலிக்கத்திருச்சீனக் லிக்கராக மாறிய போதுதான் அவருக்கு Iட்டது
பர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி ங்கிலக் கல்வி பெறுவதன் பொருட்டுப் மமோறியல் பாடசாலையிற் சேர்ந்தார். ர் கல்லூரியிற் கல்வி பயின்று, பதினேழா வத்தி, ஒரு சில மாத காலம் தானு ஓயத் 893இல் இலங்கைப் புகையிரதத் திணைக் ரல், மூன்று ஆண்டுகளுள் அப்பதவியைக் ல குருவாகச் சேர்ந்துகொள்ள நேரிட்டது.
ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளைக் க் கவிதை ஆகியவற்றில் ஈடுபாடு கொண் பயின் குரு, ப் பதவி ஒரு முழுமையான ப்புக்களை அளித்தது. திருச்சபையிற் சேர்ந் றி நாம் அறிந்திருக்க மாட்டோம் என்றே ம் பெற்ருர், அந்த ஆண்டு தொட்டு ஏறக் ராய்ச்சி, மதம் ஆகிய இரு துறைகளிலும் ணி ஆகியது.
பல்கலைக் கழகம் இல்லாத காலம் அது. துறைகளாகிய தமிழர் வரலாறு, யாழ்ப் , மொழியியல் ஆகிய துறைகள் வளர்ச்சி வது மகாயுத்தத்தின் பின்னர்தான் நவீன ச்சியடைந்து இன்றைய நிலையை எய்தியது. த்தினர் தொட்டுப்பாராத துறையாக அறு யில் சுவாமிகள் இத்துறைகளில் ஈடுபாடு சி இல்லாத போதிலும் தானக அத்துறை தொண்டினைச் செய்தமையே நாம் கருத் அவர்காலத்துப் பின்னணியிலும், அவருக் தே சுவாமிகளுடைய பங்களிப்பை மதிப்பீடு லிருந்து இத்துறைகளைப் பொறுத்தமட்டி ன்றுவிட்டோம் என்பதை எவரும் மறுக்க றைகளிலும் ஆராய்ச்சிமுறைகளிலும் குறை லை; குறைகளை எடுத்து மிகைப்படுத்த ண்டை குறைநிறைகளுடன் எடுத்து மதிப் ார்க்க முற்பட்ட துறைகளை நாம் மேலும்
யே நாம் இங்கு செய்ய முயன்றுள்ளோம். மைநாயகம், பேராசிரியர் க. கைலாசபதி, தி அ. சண்முகதாஸ், வண. பிதா கலாநிதி குே நன்றி.
பதிப்பாசிரியர்

Page 9
நல்லூர் அகம்வாழ்ந்த ஞ எல்லோரும் ஏத்தும் எங் அறியாதார் இந்த அகிலத் அறிந்தோரும் அறியார் அ சத்திய நெறிகண்டு சன்மr
முத்தி நகரின் முடிகண்ட
பாரிற் பயிலும் பன்மொழி வேரை அகழ்ந்து விதைகண்
ஏழை எளியவரும் இரந்து
6 1ாழ ஒளியேற்றி வளர்த்த
மாதுறவு வேண்டாது மண்
மாதுறவு பூண்ட மனிதப்
நாளும் நடமாடும் பல்கலை
வாழுந் தலைமுறைக்கு வா அறிஞர்குழு திரண்டு ஆரா நெறியிற் பிறளாது நிமிர்ந் அன்றறிஞர் செருமனியே இன்றீழ முத்திரைக்கண்
காலமாய் விட்டார் என்று
காலமதாய் மாறிவிட்டார் 6

ானப்பிர காசரென
பெருங்குருவை தின் மீதில்லை
வர்தம் அறிவெல்லை
ார்க்க வித்திட்டு
மெய்ஞ்ஞானி
யும் ஆராய்ந்து
ண்ட மாமேதை
ண்ணத் தாழ்ந்தவரும் * பொதுநிலவு
பொன்னத் தீண்டாது
புனிதகுரு
சேர் நற்கழகம்
ய்த்தவொரு நூல்நிலையம்
ாய்ந்த பொன்னேடு
துயர்ந்த மேருமலை
ார் அகழ்ந்திழைத்தவைரமணி இலங்கியொளி காலுகின்றர்
ரைத்தல் கற்பனையே
என்பதுதான் பேருண்மை.
தகவிப் Llyniau'r யாழ் ஜேயம்

Page 10


Page 11
தோற்ற 1875-08-30
 

மறைவு: 1947-01-22

Page 12


Page 13
வரலாற்ருராய்ச்சி சுவாமி ஞானப்பிரகா
- கதிரவேலு அருமைநாய (சிரேஷ்ட வரி
சிழத்தில் பல் கலை க் கழக ங் கள் ஸ்தா பிக்கப்பெற்று விஞ்ஞான முறையிலான வரலாற்ருராய்ச்சிகள் மேற்கொள்ளப்படு முன்னர் சமூகவிஞ்ஞானத் துறையிலான ஆய்வுகளில் அக்கறையுடன் ஈடுபட்டோர் அரசசேவையாளரும், அரச சேவையிலி ருந்து இளைப்பாறியோரும், சமயத் தலை வர்களுமாவர். இவர்கள் தமது சேவைக் காலத்தின்போது கிடைத்த தகவல்கள், சேவையாற்றிய பிரதேசங்களில் சேகரித்த விடயங்கள், ஒலைச்சுவடிகள் போன்ற வற்றை ஆதாரமாகக் கொண்டு சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட் டனர். ஈழத்தின் பத்தொன்பதாம் நூற் முண்டின் வரலாற்றை அறிவதற்கு அக் கால அரசசேவையாளர்கள் எழுதிய பல குறிப்புகள் இன்று சிறந்தமூலாதாரங்களாக விளங்குகின்றன. இந்நூற்ருண்டின் ஆரம்ப தசாப்தங்களில் வண. பிதா, எஸ். ஜி. பெரேரா, போல் ஈ.ஈ.பீரிஸ், ஜே.பி.லூவிஸ் போன்றேர் சிறந்த ஆய்வு நூல்களை எழு தியோராவர். இவ்வாராய் ச் சி யா ளர் க ளின் வரிசையில் வைத்தெண்ணக்கூடிய தமிழ் ஆராய்ச்சியாளர்களில் முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்ருேர் குறிப்பிடக்கூடியவர் கள். இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பெரும் பாலும் குறிப்பிட்டவொரு துறையில் விசேட சித்தி பெற்று அத்துறையிலேயே தமது ஆய்வுகளையும் நடத்துகின்றனர். சுவாமி ஞானப்பிரகாசர் போன்ற ஆராய் ச்சியாளர்கள் பல்துறையிலும் ஈடுபட்ட வர்கள். பன்மொழித்தேர்ச்சி படைத்த சுவாமி ஞானப்பிரகாசர் சொற்பிறப் பூாராய்ச்சி, தொல் பொருளியல், கத்தோ

த் துறையில் சருடைய தொண்டு
so B, A (hons) Cev"
மதிப்பாளர்)
லிக்கச் சமய வரலாறு, தமிழர் வரலாறு, சமய வரலாறு, தத்துவம் போன்ற துறை களில் ஈடுபட்டவர். பல்துறைப்பயிற்சி அவரது ஆராய்ச்சிகளுக்கு மெருகூட்டியது,
கத்தோலிக்கச் சமய வரலாறு
சுவாமி ஞானப்பிரகாசர் கத்தோ லிக்கத் திருச்சபையின் முழுநேர ஊழியர். எனவே அத்துறை ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டது இயல்பானதே; அத்துடன் சமய ஞானி என்ற வகையிலும், சமயத் தைப் பரப்புவதைத் தமது வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்ட வ ரெ ன் பதா லும் கத்தோலிக்கச் சமய விடயங்களில்
பாரபட்சமாகவிருப்பார் என்பது ஒாதிர் பார்க்கப்பட்டவொன்ரு கும், ஆணு ல்
வரலாற்ருசிரியன் என்ற நிலையிலிருந்து கத்தோலிக்கத் திரு ச் ச பை யி ன து வர லாற்றை எழுதியபொழுதும், விமர்சித்து விளக்கம் கொடுத்தஞான்றும் உண்மை விசுவாசி போன்று வரலாற்றிற்கு விசுவா : மாக நடந்துள்ளார். உண்மை வரலாற்மு சிரியன் தனது கைவசமிருக்கும் மூலாதா ரங்களால் கட்டுண்டவன். எனவே முடி புகள் தவருயின் மூலாதாரங்கள் நிறைவு பெருதனவாகவிருத்தல் வேண்டும்.
சுவாமி ஞானப்பிரகாசரது வர லாற்றுப்படைப்புகளில் மிகவும் முக்கிm LnITGOT GOLICDDIT di) A history of the Cut holic Church in Ceylon, I, Period of beginnings 1505-1602 (1924)என்பதாகும். போர்த் துக்கேயர் கால அரசியல், சமய வரலாற் றிற்குப் பேராதரவாக விளங்கும் இந்நூல் சுவாமி ஞானப்பிரகாசரதுவரலாறெழுதும் திறமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். பகுதிபகுதியாக ஆனல் விரிவாகப் போர்த் துக்கேயர் கால வரலாற்றை ஆராயும் இன்றைய எழுத்தாளர்கள் கூட் இந்நூல்

Page 14
款
பற்றி நல்லபிப்பிராயம் கொண்டுள்ளனர். சுவாமி ஞானப்பிரகாசர் அக்காலத்தில் எளிதாக யாவருக்கும் கிடைக்காத திருச் சபை ஆவணங்களையும் ஏனைய நூல்களை யும் துணையாகக்கொண்டு இந்நூலை எழுதி ஞலும் தமது நூல் பூரணத்துவம் பெற மாட்டாதென்பதை உண்மையான வர லாற்ருசிரியனுக்குரிய பண்புடன் மிகவும் அடக்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இந் நூலுக்கு அளித்த முகவுரையில் இதனை வலியுறுத்தியுள்ளார். 'இலங்கைத் திருச் சபையினது நான்கு நூற்ருண்டுக்கால வர லாற்றைச் செம்மையாகப் படம் பிடித் துக் காட்டுவதற்கு எம்மிடம் ஏற்கனவே இருக்கும் ஆதாரங்கள் மிகவும் சொற்ப மாகும். விடயத்தைப் பாரபட்சமின்றி நீதியான முறையில் ஆராய வேண்டின் லிஸ்பனிலும் றியோ ஜெனெய்ருேவிலு முள்ள துருப்பிடித்த சுவடிக்கூடங்களைக் குடைந்து, இலங்கையில் வெவ்வேறு காலங்களில் தொண்டாற்றிய சமயப் பிரிவுகளினது ஆண்டறிக் கை களை யும் கடிதத் தொடர்புகளையும் துளாவிப் பார்த் தல் வேண்டும். மேலும் திருச்சபை துன் புறுத்தப்பட்ட காலம்பற்றிப் புறவெளிச்ச மூட்டுவதற்காகக் கொழும்பிலும் அம்ஸ்
ரடாமிலும் உள்ள பெரும் ஆவணத் தொகுதிகளைக் கலந்தாலோசிக்க வேண் டும்.' இன்றைய ஆராய்ச்சியாளர்கள்
சுவாமி ஞானப்பிரகாசரது மேற்போந்த கருத்துக்கமைய இம்மியளவும் தவறுது தமது ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். சுவாமி ஞானப்பிரகாசர் குறிப்பிட்டது போல் அவர் ஆய்ந்த காலப்பகுதியினைப் பற்றி விரிவாக ஆராயின் தகுதி வாய்ந்த ஆராய்ச்சியாளரொருவரது வாழ்நாள் முழுவதும் செலவிட நேரிடும். தமது முடி புகளைப் பிறர்மீது திணிக்காது அவைகள் மேலும் ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும் தட யங்களாக விளங்க வேண்டுமென விரும் பினர். எனவே சுவாமி ஞானப்பிரகாச ரது வரலாற்று முடிபுகளை விமர்சிக்கும் ஆய்வாளர்கள் அவரது மேற்போந்த கருத்தினை மனங்கொளல் வேண்டும்.
சுவாமி ஞானப்பிரகாசரது வர லாற்று நடுநிலைமைக்கும், வரலாற்று

மனப்பான்மைக்கும் சிறந்த எடுத்துக் காட்டாக மிளிர்வது அவர் கத்தோலிக்க Fl மதமாற்றங்கள் பற்றி எழுதிய விமர்சனங்களாகும். கத்தோலிக்க மதமாற் றம் மக்களை நேரடியாகத் துன்புறுத்திச்
செய்யப்பட்டதென்றும், அந்நோக்குட னேயே இந்து பெளத்தஆலயங்கள் தரை மட்டமாக்கப்பட்டன என்ற பிரசாரக்
கருத்தைத் தெரிவித்த ஆங்கிலேய எழுத் தாளர்களான எமர்சன் ரெனண்ட் போன் ருேரை சுவாமி ஞானப்பிரகாசர் கண்டித் துள்ளார். ரெனெண்ட் போன்ருேரைப் பின்பற்றிக் குருட்டுத்தனமாக எழுதிய யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியர் ஆ. முத் துத்தம்பிப்பிள்ளையையும் அதே வகையில் கண்டித்துள்ளார். சமய மாற்றத்தையும், அதைச் செய்வதற்குக் கையாண்ட உத்தி களையும் வரலாற்றுப் போக்குடன் நோக் gt. பாரபட்சமற்ற முடிபுகளுக்கு வர வேண்டும்; கத்தோலிக்கச் சமய மாற்றம் வலுக்கட்டாயத்தின் பேரில் நடைபெற வில்லை; மூன்று Grillo)Gorpurrt 35ë FLDulu ஊழியம் செய்த குருமாரது உபதேசம் மூலமும் அரசாங்கம் அளித்த சலுகைகள் மூலமும் ஈட்டப்பெற்றது என்பது அவரது வாதமாகும். போர்த்துக்கேய அரசர்கள் தமது அதிகாரிகள் சமய மாற்றத்திற்கு ஒத்தாசை புரிய வேண்டுமென ஆணை பிறப்பித்தாலும் நடைமுறையிலது சாத் தியமாகவில்லை. நிர்வாகி களு க்கும் சமயக் குருமாருக்குமிடையே முரண்பாடு கள் மலிந்து காணப்பட்டன. முன்னவரது கொடுமைகளே போர்த்துக்கேயர் இலங் கையை இழந்ததிற்குக் காரணமென்பார் குவெய்றேஸ் பாதிரியார். இருப்பினும், சுவாமி ஞானப்பிரகாசர், போர்த்துக்கேய அரசாங்கம் புறசமயிகளுக்கெதிரா கக் கத்தோலிக்க சமயத்தவர்களுக்கு அளித்த வரிச்சலுகை, முன்னுரிமை, பதவி உயர்வு, கெளரவப் பட்டங்கள், சன்மானங்கள் போன்றவை துன்புறுத்தலுக்கு சமானமா னவை என்பதை மறுக்க முடியாதென்

Page 15
றும் அவை கொடுமையானதும் மனிதா பிமானமற்ற செயலென்பதையும் துணி கரமாகக் கூறியுள்ளார். உலக வரலாற்றை நன்கு படித்தறிந்தோர் உணர வேண்டிய நிகழ்ச்சிகளும் உள. இந்து பெளத்த ஆல யங் கள் தரைமட்டமாக்கப்பட்டதும், அச்சமயங்களின் குருமார்கள் துரத்தப் பட்டமையும் திட்டமிட்ட செயல்கள ல்ல; அவைகள் போர்க்காலங்களில் நடை பெற்ற சம்பவங்கள். பெரெண்டிக் (வயிரவ)கோவில், முன்னே ஸ் வர ம், தேவேந்திரமுனை விஷ்ணு ஆலயம் போன் றவை மாயாதுன்னையையும், அவன் மக னை முதலாம் இராசசிங்கனையும் வெற்றி கொள்ளமுடியாத காலகட்டத்தில் மக்கள் மத்தியில் கிலியூட்டுவதற்காவும் இச்சிங்கள மன்னர்களைப் பணியச் செய்வதற்காவும் தரைமட்டமாக்கப்பட்ட  ைவ க ளா கும். உலகில் பெரும் போர்கள் நடைபெற்ற போதெல்லாம் இவ்வொழுக்கமே கடைப் பிடிக்கப்பட்டது. சகோதர சமயங்களைச் சார்ந்த புத்த சைவ ஆலயங்களே போர்க் காலங்களில் இத்தகைய கதிக்குள்ளாயின வென்பதை எடுத்து விளக்கினர்.
கத்தோலிக்க சமயப் பரம்பலும் போர்த்துக்கேயரது அரசியல் செல்வாக் கின் முன்னேற்றமும் ஒன்றையொன்று தாங்கிச் சென்றதால் அரசியல் வரலாறும் இந்நூலில் கணிசமான இடத்தைப் பெற் றுள்ளது.
Catholicism in Jaffna (1926) 67 airp கைநூல் சத்தியவேத பாது காவ ல னின் ஆங்கிலப் பிரசுரத்தில் வெளி வந்த கட்டுரையின் மறு பிரசுரமாகும். கத்தோ லிக்க சமயம் யாழ்ப்பாணத்தில் புகுத்தப்" பட்ட காலம் தொடக்கம் 1923 வரையி லான காலப்பகுதிபற்றி மேலோட்டமாகக்" கூறும் இந்நூல் சில புள்ளி விபரங்களையும் வண. பொன்ஜீன் போன்றேரது சேவை கள் பற்றியும் குறிப்பிடுகின்றது.

3
XXV years of Catholic Progress-The Diocese of Jaffna Under the Episcopate of Henry Joulain @t-görfio pro ĝiy uufff up tout urT 6837 ĝi, திருச்சபையின் பெரும்பாகத்துள்அடங்கும், சிறுதிருச்சபைகள் முதல் பெரியவை வரை யிலான விபரங்க்ளுக்கு உபயோகமானது. சாதியடிப்படையில் நிறுவப்பெற்ற திருச் சபைகள் பற்றியும், சாதிக்கலவரங்களின் போது ஏற்பட்ட சமய மாற்றங்களும் இதனுள் அடங்கும்.
இங்கு குறிப்பிட்ட நூல்களைத்தவிர யாழ்ப்பாண வைபவ கௌமுதியில் கத்தோ லிக்க சமயம் பற்றிக் காணப்படும் விடயங் களை சுவாமி ஞானப்பிரகாசரே கொடுத் துதவியிருக்க வேண்டும். சத்தியவேத பாதுகாவலனிலிருந்து எடுத்தாளப் பெற்ற மேற்கோள்கள் சமய வரலாற்றை விளக்க உதவுகின்றன.
கத்தோலிக்க சமய வரலாறு இந் நாட்டின் தற்கால வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாத பிரதான அம்சமாகும். அதை முறைப்படி அறிந்து கொள்வதற்கு சுவாமி ஞானப் பிர கா சர் ஆற்றிய தொண்டு கணிசமானது.
யாழ்ப்பாண வரலாறு
ஈழத்தில் வாழும் தமிழ் மக்களினது தொடர்ச்சியான வரலாறு இதுவரை எழுதப்படவில்லை. இதனை அறிந்து கொள் ள வேண்டிய அவசியத்தை அண்மைக் காலம் வரை சிலரேயுணர்ந்திருந்தனர். போதிய வரலாற்று மனப்பான்மை இல் லாத காரணத்தினுல் இச்சமூகம் சில வேளைகளில் தனது இலக்கைத் தவறவிட்டு விட்டதோவென்ற ஐயப்பாடும் தோன்ரு மலில்லை. வரலாறும் அதுபற்றிய விமர் சனமும் ஒரு சமூகத்தைச் சரியான வழி யிலிட்டுச் செல்வதற்கு மிக அவசியமாகும். எனினும் ஈழத்தமிழ் மக்களிடையே, குறிப்பாக யாழ்ப்பாண மக்களிடையே . பதினரும் நூற்றண்டு வரை பழைய

Page 16
4
வரலாற்று மரபுகளைத் தொகுக்க வேண் டிய அவசியம் பற்றிய உணர்வு இருக்க வில்லை. இந்நூற்ருண்டு முதல் எழுதப் பெற்ற மரபுவழிவந்த கதைகளே அண் மைக்காலம் வரை யாழ்ப்பாண வரலா றெனக் கொள்ளப்பட்டது. வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப்பாண �) ଘull &! மா?ல போன்ற நூல்களை ஆதாரமாகக் கொண்டு இந்நூற்றண்டின் முதன்மூன்று தசாப்தங்களில் வரலாற்று நூல்கள் எழு தப்பட்டன. அந்நூல்களில் முக்கியமான வைகளாகப் பின்வருவனவற்றைக் கொள் ளலாம். ஆ.முத்துத்தம்பிப்பிள்ளே 6T (LP திய யாழ்ப்பாணச் சரித்திரம் (1912) க.வேலுப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாண வைபவ கௌமுதி (1918) முதலியார் செ.இராசநாயகம் எழுதிய Ancient Jaffna (1926) சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய யாழ்ப்பாண வைபவ விமர்சனம். இந்நூல் களில் தர்க்கரீதியாகவும் விஞ்ஞான ரீதி யாகவும் எழுதப்பட்ட- நூல் சுவாமி ஞானப்பிரகாசரது யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்பது அறிஞர்களின் துணிபு. யாழ்ப்பாண வரலாற்றை ஆராய்ந்த அறி ஞர்கள் யாழ்ப்பாண வைபவ விமர்சனத் இன் துணிபுகளைப் பலவிடயங்களில் மேற் கோள் காட்டித் தமது கருத்துக்களை நிலை நாட்டியுள்ளனர். யாழ்ப்பாண வைபவ விமர்சனத்தைத் தவிர ஆங்கிலத்தில் Sources for the study of the history of Jafna: The forgotten Coinage of the Kings of Jaffna போன்ற பயன்தரு கட்டுரைகளையும், The Kings of Jaffna during the Portuguese period of Ceylon History (1920) என்ற நூலையும் எழுதியுள்ளார். இந்நூ ல் களும் கட்டுரைகளும் யாழ்ப்பாணப் பிர தேசத்தின் ஆதிகால தற்கால வரலாறு களை அறிந்து கொள்வதற்குப் பயன்படுத் தக் கூடியன.இந்நூல்களில் சுவாமி ஞானப் பிரகாசர் கூறிய கருத்துக்களும் துணிட களும் யாவும் இன்றைய ஆய்வாளர்க

ளான பேராசிரியர் கா.இந்திரபாலா, கலாநிதி சி.பத்மநாதன் போன்றேரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உதாரணமாக:
(1) யாழ்ப்பாண இராச்சியம் ஏழாம்
நூற்றண்டில் ஏற்பட்டது.
(2) யாழ்ப்பாணத் தனியரசைத் தோற் றுவித்தவன் சிறிநாகன் என்பவன். அவன் தமிழன்.
(3) யாழ்ப்பாண இராச்சியத்தின் தலை நகராக விளங்கிய சிங்கை நகர் வல்லிபுரத்திற்கு அண்மையிலுள்
ளது.
(4) யாழ்ப்பாணம் என்பது யாப்பாப் பட்டுண என்ற சிங்களச் சொல்
லின் திரிபு.
போதிய சான்றுகளுடன் மேற்கூறப்பட்ட கருத்துகள் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் பதின்மூன்றும் நூற்ருண்டிலேயே ஏற்படட் டதென பேராசிரியர் இந்திரபாலாவும் கலாநிதி பத்மநாதனும் கூறியுள்ளனர். சிங்கைநகர் நல்லூர் போன்று இன்றைய யாழ்ப்பாண நகரத்துக்குள்ளடங்கியபகுதி யாகவிருக்கவேண்டுமெனவும் uurt Luft Lil Gator என்பதற்கும் யாழ்ப்பாணத்தி ற்கும் தொடர்பில்லையெனவும் இவர்கள் கருதுகின்றனர். எனினும் யாழ்ப்பாண மன்னர்களான ஆரியச்சக்கரவர்த்திகளின் நாணயங்களில் சேது நந்தி பிறை பொறிக் 5. u L-GOLD G0 til அடையாளங் கண்டு கொளல்; பரராசசேகரன், செகராசசேக ரன் என்பது யாழ்ப்பாண மன்னர்களின் இம்மாசனப் பெயர்கள் என்ற கருத்தை நிலைநாட்டியமை, ஈழ ம், இலங்கை என்ற பெயர்கள் யாழ்ப்பாண இராச் சியத்திற்கும் உபயோகப்படுத்தப்பட்ட பெயர்கள் என்ற துணிபு, போன்றவற்றை இன்றைய ஆய்வாளரும் ஏற்றுக் கொண் டுள்ளனர்.

Page 17
யாழ்ப்பாண வைபவ கெளமுதி க. வேலுப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டது என்ற கருத்து பொதுவாக நிலவினலும் இந்நூலின் முதற்பகுதி, குறிப்பாக ஒல் லாந்தர் காலம் வரையிலான பகுதி சுவாமி ஞானப்பிரகாசரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்; அல்லது அவர் மேற்பார்வை யின் கீழ் வேலுப்பிள்ளை போதகரால் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். இந் நூலில் சில குறிப்புகள் 'ச. ஞா' வால் எழுதப்பட்டிருக்கின்றன. அத் துட ன் சத் தி ய வேத பாதுகாவலனிலிருந்தும் மேற்கோள்கள் ஏராளமாகவிருக்கின்றன. இவைகள் சுவாமி ஞானப்பிரகாசரது பங் களிப்புகளாகவிருக்க வேண்டும். அத்து டன் நூலாசிரியரான க.வேலுப்பிள்ளை அவர்களே நூல்முகத்தில் 'இது வண. 3Fm". (GIT GOTŮ JT55,TGFff (O.M.I.) 35 GJITb C.D. வேலுப்பிள்ளை (போதகர்) மெஸ் ச. குமார சுவாமி (கிளாக்கு) என்பவர்களின் பேரு தவி கொண்டு தனது பெயரால் இயற் றப்பெற்றதெனவும், முகவுரையில் . நாம் விசேட உதவி பெற்றவருள் சிறு பராயந்தொட்டு எமது நேசத்தைப் பெரி துமுவந்து பாராட்டி வந்த, வருகின்ற வண. சா. ஞானப்பிரகாசர்0.M.I.அவர்களே தலையாயினர். இப்புத்தகத்துக்காய் அவர் எமக்குச் செய்த உதவியும், எடுத்துக் கொண்ட பிரயாசையுமே, எம்மை அவ ருக்கு எஞ்ஞான்றும் கடமைப்படுத்தும்.’’ எனக் கூறுகின்றர். இவை சுவாமி ஞானப் பிரகாசர் எவ்வளவு தூரம் ஏனையோரை யும் வரலாற்றுத்துறையில் ஈடுபடத் தூண்டினர் என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
யாழ்ப்பாண இராச்சியம் 1621 இல் வீழ்ச்சியுற்ற பின்னர் வன்னிப்பகுதிகளில் வாழ்ந்த வன்னியர்கள் போர்த்துக்கேய ருக்கும் ஒல்லாந்தருக்கும் தொந்தரவு கொடுத்தனர். தமிழர் வரலாறு நிறைவு பெறவேண்டுமாயின் வன்னியர் வரலாறு விரிவாகப்படித்தல் வேண்டும். இவ்வர லாறு இன்று பலரின் ஆய்வு விடயமாக

S
மாறியுள்ளது. இவர்களுக்கும் சுவாமி ஞானப்பிரகாசர் முன்னேடியாக விளங்கு 66örg?iii. Nalla Mappana Vanniyan and the Grant of a Mudaliyarship 6tairsp 54. டுரைவன்னியர் வரலாற்றிற்கு இன்றியமை யாத மூலாதாரமாகும். தமிழில் காணப்ட டும் இவ்வோலையை சுவாமி ஞானப்பிரகா சர் தமது குறிப்புகளுடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். ஒல்லாந்தர் காலத்தில் வன்னிப் பிரதேசங்களில் நில விய நீதி நிர்வாகமுறை என்பன பற்றியும் வன்னி முதலிமாருக்குக் கிடைத்த சிறப் புரிமை, அதிகாரம், என்பன பற்றியும் இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
சமூக வரலாறு (பொது)
சுவாமி ஞானப்பிரகாசரது வர லாற்று ஆய்வுகளை மதிப்பீடு செய்யும் பேராசிரியர்களும் ஏனையோரும் தத்தமது ஆய்வுகளுக்கு எவ்வளவுதூரம் அவரது ஆய்வுகள் முன்னேடியாக விளங்கின என் பதிலேயே இதுவரை கவனஞ் செலுத்தி யுள்ளார். இது வரலாறு தொடர்ச்சியாக எழுதப்படாததினல் ஏற்பட்ட விளைவா கும். சுவாமி ஞானப்பிரகாசரது ஆய்வு களைத் தொகுத்து நோக்கின்-தூய வர லாறு அல்லாதது என்ற பாகுபாடின்றிஅவரது வரலாற்றுப் பங்களிப்பு பரவ லானது என்பது உணரப்படும். தமிழ்ச் சமூகத்தினரது பண்பாட்டம்சங்கங்களில் பெரும்பாலானவற்றைப் பிரதிபலிக்கும் விடயங்களுக்கே தர்க்கரீதியான விளக்கம் கொடுக்க முற்பட்டாரெனின் மிகையா காது. அரசியல் வரலாறு மாத்திரமன்றி தமிழ்ச் சமூக, சமய, மொழி வரலாற்றினை யும் செம்மைப்படுத்தும் வகையில் இவரது ஆக்கங்கள் அமைந்துள்ளன. அவர் காலத் தில் புகழ் பெற்ற அறிஞர்களது ஆய்வு களைத்தாங்கி வெளிவந்த Ceylon Antiquary and Literary Register, Journal of the Royal Asiatie Society(Ceylon Branch)3LIT Giro F(5 சிகைகளில் பல்வேறு விடயங்கள் சம்பந்த மாக அவர் எழுதிய கட்டுரைகள், குறிப்பு

Page 18
6
கள், விளக்கங்கள், திருத்தங்கள் அறிஞர் களால் வரவேற்கப்பட்டன.
சுவாமி ஞானப்பிரகாசர் கத்தோ லிக்கராகவிருந்த போதும் தமிழரது ஆதிச்சமயக் கொள்கைகள் அனுஷ்டான னங்கள் பற்றிய அறிவு படைத்தவர். இத ணுல் தமிழரல்லாதோரும் பிறரும் யாழ்ப் பாணத் தமிழர்களது சமூக சமய விடயங் சுள் பற்றித் தவருண விளக்கம் கொடுக்க முனைந்த போதெல்லாம் தவறுகளைச் சுட் டிக்காட்டித் திருத்தவுஞ் செய்தார். தமி ழரல்லாதோரை மாத்திரமன்றித் தமிழ ரையும் குழம்பவைத்த மிக முக்கியமான விடயம் யாழ்ப்பாணச் சாதியமைப்பாகும். யாழ்ப்பாணச் சமூக வரலாறு சாதிவர ரென்றல் மிகையாகாது. நிலமானிய அடிப்படையில் வேளாளன் மேலோங்கி யிருந்த வேளையில் தாழ்ந்த சாதியினர் மாத்திரமன்றி அவர் வணங்கிய தெய்வங் களும் சாதியடிப்படையில் பிரிக்கப்பட்டி ந்ேதன. இஷ்ட தேவதை வழிபாடு, குல தெய்வ வழிபாடு முறைகளைக் கொண்டு ஒவ்வொரு சாதியும் வாழ்ந்த குறிச்சிகளை அடையாளங்கண்டு கொள் ள லா ம். யாழ்ப்பாணம், வன்னி போன்ற பிரதே சங்களில் வாழ்ந்த மக்களினது பொது வழிபாட்டு மரபுகள், பழக்க வழக்கங்கள் சடங்குகள் பற்றி ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர் ஜே.பி. லூவிஸ் என்பவராவர். அவரது கட்டுரைகள் பலமுறை சுவாமி ஞானப்பிரகாசரது திருத்தங்களுக்குள்ளாகியது. எடுத் துக் காட்டாக யாழ்ப்பாண மாவட்ட மரபு கள் என்பதுபற்றி ஜே.பி. லூவிஸ் எழு திய கட்டுரையொன்றை விமர்சித்த சுவாமி ஞானப்பிரகாசர் கண்ணகி வழி பாடு செட்டிய சமூகத்தினது பிரத்தியேக வழிபாடல்லவெனவும், யாழ்ப்பாணத்தில் கண்ணகி வழிபாடு தனக்காரக் குறிச்சி, முகமாலை, புலோப்பளை தவிர அங்களுங் கடவை (மல்லாகம்) மாகியப்பிட்டி, அச் செழு, கோப்பாய், மட்டுவில் (பண்டித் தலைச்சி அம்மன்) போன்ற இடங்களில்

நடைபெறுவதைச் சுட்டி க் காட் டி னர். மேலும் நாச்சிமார் வழிபாடு பறையருக்கு மாத்திரம் உரித்தானதல்ல; யாழ்ப்பாணத் திலிருக்கும் பெரிய நாச்சிமார் கோவில் (வண்ணுர் பண்ணை) உயர்சாதியினருக்குச் சொந்தமானதென்றும் குறிப்பிட்டார். தவிர பறையர் மத்தியில் வல்லியக்கன் என்ற தெய்வத்திற்கே முதலிடமுண் டென்றும் அதற்குரிய கோவில்களையும் (அதே சந்தர்ப்பத்தில் பறையர் செறிந்து வாழும் கிராமங்களையும்) கிராமியப் பாடலொன்றின் மூலம் தெளிவுபடுத்தினர்:
கன்னபுரம் நின்று அந்நாள் நடந்து
கருதரிய ஏழாலை அதில் மீதுறைந்து புன்னலைக் கட்டுவன் அச் செளுக் கொப்
I புத்தூர் வறுத்தலைவிளான் பளையிரண் டும் மன்னர் சுளிபுரம் சங்கானை தோல்வரம் மற்றுமுள தேசங்களிலெல்லாமுறைந்து,
சுன்னகம் வாழவரு வல்லியக்கரசனை
தொழுவோர்கள் பலவினை தொலைந்து
போமே
வடமாகாண க் கிராமியக் கதை என்ற கட்டுரையொன்றில் எவ்வாறு இஷ்ட
தேவதைகள் சில சாதியினரது குல தெய் வங்களாக ஏற்றுக் கொள்ள ப் பட்ட ன என்ற விபரத்தைக் கூறுகின்றர். உதார ணம் அண்ணமார்-பள்ளர், ஐயனுர்கோவியர்; பெரியதம்பிரான் - வண் ணுர் இவைகளுக்குப் புறநடையுமுண்டு.
மேற்கூறப்பட்ட ஆக்கங்களைத்தவிர தமிழரின் பூர்வ சரித்திரமும், சமயமும் (1920) தமிழரின் ஆதியிருப்பிடமும் பழஞ்சீர்திருத்தமும் போன்ற நூல்களை யும் எழுதியுள்ளார். முன்னையதில் பழந் தமிழரது சமூக நிலை, சமய நிலை ஆகிய வற்றைப் பற்றியும் பின்னையதில் தமிழ ரின் தோற்றம் பற்றியும், விபரிக்கின்ருர், தமிழரின் ஆதி இருப்பிடம் மத்தியதரைக் கடற் பிரதேசமென்ற கொள்கையை

Page 19
நாட்ட முயலும் சுவாமி ஞானப்பிரகாசர் இந்நூலில் தமிழர் தோற்றம் பற்றிய பழைய கொள்கைகள் பலவற்றை ஆராய்த் துள்ளார். லெமூரியாக் கண்டக் கொள்கை மங்கோலிய, ஆஸ்திரேலிய பழங்குடிக் கொள்கை போன்றவற்றை ஆய்ந்து நிராகரித்துள்ளார். முன்னைய நூல் சத் திய வேத பாதுகாவலனிலும் பின்னையது செந்தமிழ் இதழ்களில் எழுதப்பட்ட கட் டுரைகளின் தொகுப்புக்களாகும்.
சுவாமி ஞானப்பிரகாசரது வரலாற் றுத் தமிழ் நடை பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகச் சமஸ்கிருதப் பீடத் தல்ை வர் திரு.வி.சிவசாமி பின்வருமாறு கூறு கின்ருர், 'தமிழ் மொழி தக்க இடத்தினைப் பாடத்திட்டத்திலோ, சமூக த் தி லோ பெற்றிராத காலத்திலே சுவாமிகள் g5 LDgil தாய் மொழியிலே தமது ஆய்வுகளை எழுதியமை குறிப்பிடற்பாலது. இன்று தென்னிந்தியத் தமிழரிலும் பார்க்க ஈழத்துத் தமிழர் ஒருவகையிலே பெருமைப் படத்தக்கவர்கள். ஆரம்பக்கல்வி தொடக் கம் பல்கலைக்கழகக் கல்வி - ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழ் போதனு மொழியாக எமது நாட்டிலே விளங்குகிறது. இவ் வகையில் எமது முயற்சிகளின் வெற்றி கள் எவ்வாறயினும், அவை தென்னிந் தியத் தமிழருக்கும் வழிகாட்டியாகவே அமைந்துள்ளதெனலாம். இதற்கு முன் னுேடியாகத் தனிப்பட்ட வகையிலே பெருந்தொண்டாற்றியவர் வரிசையிலே

7
ஞானப்பிரகாசர் பெருமிடம் வகிக்கிருர் என்பதில் ஐயமில்லை. அரசியல், சமூக, சமய வரலாறு பற்றிய நுண்ணிய ஆய்வு களைத் தர்க்கரீதியாகத் தமிழில் எழுதிக் காட்டியுள்ளார். தமிழினை ஆராய்ச்சி மொழியாக நடைமுறையில் எடுத்துக் காட்டியவர்கள் வரிசையில் இவருக்குக் குறிப் பி ட த் த க் க ஓரிட மு ன் டு . தற்கால ஆய்வு முறைகள் நன்கு அறிமுகப் படுத்தப்பட்ட காலத்தில் அவர் தமது ஆய்வு களை மேற்கொண்டாரெனினும் வரலாற்று ஆய்வுமுறைகளைப் பற்றி முறைப்படி பாடங்கேட்டவரல்லர். திரா விட மக்களின் Լlքւb பெருமைகளே வண. பிதா, ஹெரஸ் போன்ருேர் வாயி லாகக் கேட்டறிந்தவர். தமிழர் பெருமை களைத் தமிழருக்கும் ஏனையோருக்கும் எடுத்து விளக்க வேண்டிய நிலையிலேயே தமது ஆய்வுகளை மேற்கொண்டார். அவரைப் பொறுத்தவரை இவ்வாய்வு கள் ஆரம்ப முயற்சிகளே; வழுக்கள் இருப் பதில் வியப்பில்லை. ஈழத்தமிழர் வரலாற் றின் ஒரு காலகட்டத்தில் சமூகச் சேவைக் கெனத் தன்னை அர்ப்பணித்த சுவாமி ஞானப்பிரகாசர் பற்றிய மதிப்பீடுகள் அவர்காலச் சூழ்நிலை, தேவைகள் என்ப வற்றுடன் ஒப்பிட்டாராயப்படுதல் வேண் டும். ஈழத்தமிழர்கள் மத்தியில் வரலாற் றுணர்வும், வரலாற்று விமர்சனத் துறை யும் திருப்திகரமாக விருத்தியடையாத காலகட்டத்தில் அவராற்றிய பங்களிப்பு மகததானது.

Page 20


Page 21
மரபுவழித் தமி சுவாமி ஞான
- பேராசிரியர் க. கைல
சிற்சில துறைகளிலே முன்னேடியாகவும்,
புதுநெறி காட்டியவராகவும் விளங்கி யவர் சுவாமி ஞானப்பிரகாசர். தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகளும், நூல்க ளும் எழுதிய சுவாமிகள் பன்மொழிப் பண் டிதராகவும் இருந்தார் என்பது அனைவரும் நன்கறிந்ததே. மொழிநூல் ஆராய்ச்சியில் பெரும்புகழீட்டிய அவர் சுவிசேஷத்தொண் டிலும் தனிப்பெரும் தானத்தை வகித் தார். சில முக்கியமான கட்டுரைகளையும் நூல்களையும் ஆங்கில மொழியில் எழுதி வெளியிட்டாரெனினும் பெரும்பாலான வற்றைத் தமிழிலேயே எழுதினர். அவர் வாழ்ந்து செயற்பட்ட காலத்திலே ஆராய் ச்சி நெறிப்பட்ட சர்ச்சைகளும் வெளியீடு களும் பெரும்பாலாக ஆங்கிலத்திலேயே இடம்பெறுவதுண்டு. சிரிய, கருத்தார்ந்த விஷயங்களைத் தமிழிலே எழுதி ஆய்வுல கின் கவனத்தைக் கவர்ந்த சிலருள் சுவாமி ஞானப்பிரகாசர் ஒருவர்; சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். மேனட்டு அறிஞர் வழிவந்த ஆதாரங்களையும் ஆய்வுமுறைக ளையும் கையாண்ட அவர் தமிழ்க் கல்வியா ளரின் பெருமதிப்பையும் பெற்றர். செந் தமிழ், இந்துசாதனம், கலாநிதி, ஞாயிறு முதலிய சஞ்சிகைகளிலும் மதுரைத்தமிழ்ச் சங்கம், யாழ்ப்பாணத்து ஆரிய-திராவிட பாஷாவிருத்திச்சங்கம் முதலியவற்றிலும் அவரது கருத்துக்களுக்கு நிரம்பிய வரவேற் பிருந்தது. கத்தோலிக்கத் துறவியாயிருந்த விடத்தும் திருப்பனந்தாள் பூரீகாசிமடத் துத் தலைவர் ஞானப்பிரகாசரைக் கெளர


Page 22
20
களிற் கூறப்பட்ட செய்திகள் வரலாருகக் கருதப்பட்டன.
ஆங்கிலேயர் தமதாட்சியில் ஆங்கிலக் கல்வி முறையினை மெல்ல மெல்லப் புகுத் தினர். குருகுலக் கல்விக்குப் பதிலாகப் பள் ளிக்கூடங்களும், உயர்கல்லூரிகளும் நாள டைவில் பல்கலைக்கழகங்களும் கல்வி நிலை
1ங்களாயின. தமிழிலக்கிய, இலக்கண சாத்திரக் கல்வியுடன் வேறுபாடங்களும் இன்றியமையாதனவாயின. சிறப்பாகப்
பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதி யில் மரபுவழித் தமிழ்க் கல்வியாளரிடையே இரு பெரும்பிரிவு காணக்கூடியதாயிருந் தது. ஆங்கிலக்கல்வியால் பாதிக்கப்படா மல்சிற்சில பிரபந்தங்களையும், புராணங்க ளேயும், இலக்கணங்களையும் மாணுக்கருக் குக் கற்பித்ததோடு அவ்வப்போது தனிப் பாடல்களையும் இடைக்காலத்திலே பிரபலி யம் பெற்றிருந்த பிரபந்தங்களையும் இயற் றிப் புலவர்களாகவும், கவிராயர்களாகவும் வித்துவான்களாகவும் இயற்றமிழ்ப் போத காசிரியர்களாகவும் விளங்கினர் ஒரு பிரி வினர். திரிசிரபுரம் மீனுட்சிசுந்தரம்பிள்ளை விசாகப்பெருமாள் ஐயர், மழவை மகா லிங்கஜயர், புரசை சபாபதி முதலியார், தண்டபாணி சுவாமிகள், இராமானுசகவி ராயர், இருபாலை சேனதிராய முதலியார், சங்கரபண்டிதர், நல்லூர் சரவணமுத்துப் புலவர் போன்ருேரை இப்பிரிவின் பிரதி நிதிகளாகக் கொள்ளலாம்.
மரபுவழித் தமிழ்ப் புலமையோடு ஆங்கிலக்கல்வியறிவும் பெ ற் ற மையால், செய்யுளியற்றிக் காலந்தள்ளுவதைப் பெரி தாக மதிக்காமல் மொழி, சமூகம், சமயம் ஒழுக்கம் முதலியனபற்றி உரைநடையில் கட்டுரைகளும், நூல்களும் இயற்றுவதோடு புதுவதாகச் சிந்திக்கவும் தமிழ்மொழிக்கு அத்தியாவசியமாயுள்ள சீர்திருத்தங்களை மேற்கொண்டு அவற்றைப் பிரசாரஞ்செய் யவும் சிற்சில ஆராய்ச்சிகளை நிகழ்த்தவும் சிலர் தலைப்பட்டனர். வரலாறு, பூகோள

நூல், கணிதம், வானநூல், நிலநூல், மொழிநூல் முதலியவற்றின் தாக்கம் இவர்களிடத்தே காணப்பட்டது. மேனட்டு ஆய்வுமுறைகள் இவர்களை வெவ்வேறு அன் விலும், வகையிலும் பாதித்தன. ஆறுமுக் நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை வெ. ப. சுப்பிரமணிய முதலியார், ஆர் ணல் சதாசிவம்பிள்ளை, பூண்டி அரங்கநாதி முதலியார், ஈக்காடு இரத்தினவேலுமுதலி யார், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, மு. இரா கவஐயங்கTர், கு. கதிரைவேற்பிள்ளை,திரு மயிலை சண்முகம்பிள்ளை போன்ருேரை இப் பிரிவின் பிரதிநிதிகளாகக் கொள்ளலாம்.
பத்தொன்பதாம் நூற்முண்டின் பிற் பகுதியிலும், இருபதாம் நூற்ருண்டின் முற் பகுதியிலும் இவ்விரு பிரிவினரும் பொதுப் பண்புகள் பலவற்றைக் கொண்டிருந்தமை யும் நினைந்துகொள்ள வேண்டியதே. ஒன்றையொன்று முற்முக விலக்கும் Lif வாக அவை அமைந்திருக்கவில்லை. உதார ணமாக ஆறுமுகநாவலர் இரு பிரிவிற்குள் ளும் அடங்கக் கூடியவராயிருந்தார். எனி னும் காலப்போக்கில் ஆங்கிலக் கல்விமுறை யின் செல்வாக்கும் பாதிப்பும் மிகுதியாக இரண்டாம்பிரிவினரின் ம  ைப் பாங்கு, அணுகுமுறை, ஆக்கங்கள் என்பவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலT யின. மரபுவழித் தமிழ்க்கல்வியை மாத்தி ரம் பெற்றிருந்தோர் பவணந்தியின் இலக் கணப்படி "முன்னேர் மொழிபொருளே யன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்' என்னும் விதியை வழுவின்றி அனு சரித்த னர். ஆங்கிலக்கல்வியினல் பாதிக்கப்பட்டவர்கள் முன்னேர் கூற்றுக்க ளையும், முடிபுகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் தமது காலத்து அநுபவத் திற்கும், அறிவுநிலைக்கும் ஏற்ப அவற்றை விமர்சித்துக் கொள்ளத்தக்கனவற்றை மட் டும் அங்கீகரித்தனர். உதாரணமாக, சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் வீரசோ ழியப் பதிப்புரையிலே அகத்தியமுனிவர்

Page 23
பற்றிய பெளராணிகச் செய்திகள் சிலவற் றையும், திராவிட மாபாடிய சிவஞான சுவாமிகளின் இலக்கண முடிபுகள் சிலவற் றையும் திறனுய்ந்து மறுத்துரைத்தார். மரபுவழித் தமிழ்க்கல்வியை மாத்திரம் பெற்றிருந்த கோப்பாய்ச் சபாபதி நாவ லர் தாமோதரம்பிள்ளையின் இவ்விமர்சன நோக்கினை வேதவழக்கொடு மாறுபட்ட தகாத செயலாகக் கண்டித்தார்.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே சுவாமி ஞானப்பிரகாசரின் (1875-1947) கல்வித் தொடர்புகளையும் தனித்தன்மைக ளேயும் நாம் நோக்குதல் வேண்டும். பிற் காலத்திலே இலங்கையில் மட்டுமன்றி பிற நாடுகளிலும் அவர் பெயர் பரவியது. ஆயி னும் அவரது இளமைக்காலம் யாழ்ப்பா ணத்திலேயே கழிந்தமையால் யாழ்ப்பா ணத்தில் அப்பொழுது நிலவிய மரபுவழித் தமிழ்க்கல்விப் பின்னணியில் அவரை வைத்து ஆராய்தல் தவழுகாது. அது அவசி யமுமாகும்.
மாணிப்பாயில் தலைமுறை தலைமுறை யாகக் கல்விமேம்பாடும் வேளாண்மை நல மும் மிக்கிருந்த குடும்பச் சூழலிலே பிறந்த வர் சுவாமி ஞானப்பிரகாசர். புரட்டஸ் தாந்தமும் சைவமும் விரவிய குடும்பங்கள் மானிப்பாயில் வாழ்ந்தன. உதயதாரகை பத்திராதிபராயிருந்த ஆர்ணல் சதாசிவம் பிள்ளை (1820-1896) நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1858-1917) ஆகிய இரு தமிழ் அறிஞரும் சுவாமிகளின் நெருங்கிய உறவினர்களாவர். சதாசிவம் பிள்ளை வட்டுக்கோட்டை செமினரி என வழங்கப்பெற்ற உயர்கல்வி நிலையத்திலே எட்டாண்டுகள் ஆங்கிலக்கல்வி பெற்றவ ரெனினும் இளமையிலும் பின்னரும் மரபு வழித் தமிழ்க்கல்வியையும் குறைவின்றிப் பெற்றவர். தமிழிலக்கண இலக்கியங்களி லும் புராண இதிகாசங்களிலும் நிரம்பிய புலமை வாய்க்கப் பெற்றிருந்தவரும் மாத கல் சிற்றம்பலப்புலவர் வழிவந்த இலக்கிய மரபைச் சேர்ந்தவருமாகிய க. சுப்பு:ஐயரி

டம் சதாசிவம்பிள்ளை வடமொழியையும் யாப்பிலக்கணத்தையும் சில புராணங்களை պւb கற்றுத்தெளிந்தார். செமினரியிலே சண்முகச் சட்டம்பியார் என வழங்கப் பெற்ற சு. சண்முகம் என்பவரிடம் தமிழ் கற்றர். சண்முகச்சட்டம்பியார் இருபா லைச் சேனதிராய முதலியாரிடத்திலே பாடங்கேட்டவர். சேணுதிராய முதலியார் ஆறுமுகநாவலருக்கும் ஆசிரியர் என்பது மனங்கொள்ளத்தக்கது. மரபுவழித் தமிழ்க் கல்வியைப் பொறுத்தமட்டில் சதாசிவம் பிள்ளை அன்று பெற்றிருக்கக்கூடிய மிகச் சிறந்த ஆசான்களிடம் பயின்ருர், முத்துத் தம்பிப்பிள்ளையும் கன்னுகம் முருகேசபண் டிதரிடம் பாடங்கேட்டவர். ‘இலக்கணக் கொட்டர்’ என்று அழைக்கப்பட்ட முரு கேசர் உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவர், நீர் வேவிச் சங்கர பண்டிதர் ஆகியோரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றவர். முத் துத்தம்பிப்பிள்ளை நெவின்ஸ் சிதம்பரப் 196irst ( 1820-1889) அவர்களிடமும் படித்தவர்.
சதாசிவம்பிள்ளை, முத்துத்தம்பிப் பிள்ளை ஆகியோருக்குக் காலத்தாற் சிறிது பிற்பட்டவரான ஞானப்பிரகாசர், அவர்க ளுக்குக் கிடைத்தது போன்ற மரபுவழித் தமிழ்க் கல்வியைப் பெறவில்லை. தாயாரின் மறுமணத்தையடுத்து அச்சு வே லிக் குச் சென்று கத்தோலிக்க மதத்தைத் தழுவிக் கொண்ட ஞானப்பிரகாசர் சிறிய தந்தை யாரான ச. தம்பிமுத்துப்பிள்ளையிடம் கற் றிருக்கக்கூடிய சிற்சில நூல்களைத் தவிர, குறிப்பிடத்தக்கவாறு எவரிடமும் பழந் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்ருர் எனக்கூறவியலாது. கத்தோலிக்க தமிழ் நாடகங்கள் பலவற்றை அச்சிற் பதிப்பித் தும், ஜனரஞ்சகமான பாட்டுக்களை இயற் றியும், சன்மார்க்கபோதினி என்னும் பத் திரிகையை (1884-ம் வருடம் முதல்)நடத் தியும் எழுத்துலகில் நடமாடிவந்த தம்பி முத்துப்பிள்ளைபால் ஞானப்பிரகாசருக்கு மட்டற்ற மதிப்பிருந்ததை நாம் அறிவோம்

Page 24
I 3
"அவரைச் சிறிய தந்தையாரென்று அழை க்க அஞ்சுகிறேன்; என் குருநாதன் என் முல் அது எனக்கு உகப்பாயிருக்கும்’ என்று ஒரு சந்தர்ப்பத்தில் சுவாமிகள் குறிப்பிட் டார்கள். தமிழ் வியாகரணம், யாப்பருங் கலக்காரிகை, உரிச்சொல் நிகண்டு முதலிய இலக்கண சம்பந்தமான நூல்களையும், இலக்கிய நூல்கள் பலவற்றையும் தம்பி முத்துப்பிள்ளை பக்குவமாக வெளியிட்டவர் என்பது உண்மையே. ஆயினும் அகஸ்மாத் தாக அன்றி குரு முறையாகச் சிறியதகப்ப னிடம் ஞானப்பிரகாசர் தமிழ்க் கல்வியைப் பெற்றிருப்பார் என்று கூறுவதற்கில்லை. சிறுவயதிலேயே செய்யுள் இயற்றும் விருப் பத்தையும் ஆற்றலையும் பெற்றிருந்தாரா யினும் அவற்றை வளர்த்தாரல்லர்.
(ஆங்கிலத்தையும் பத்தாம் வகுப் பிற்கு மேல் பாடமாகப் படித்தாரல்லர். சம்பத்திரிசியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த வேளையிலேயே புகையிரதப் பகுதி எழுதுவினைஞர் பரீட்சையில் தோற் றுவதற்காகக் கொழும்பு சென்றுவிட்டார். பின்னர் குருத்துவக் கல்வியின்போதே மீண் டும் ஆங்கிலத்தையும் அத்துடன் கிரேக்கம் இலத்தீன் முதலியவற்றையும் கற்றிருத்தல் வேண்டும். ஆகவே தமிழ் ஆங்கிலம் இரண் டையும் பாடங்களாக இளமையில் ஆழமா கக் கற்ருர் எனக்கூறமுடியாது.)
தமிழ்மொழி, வரலாறு, பண்பாடு, சமயம் முதலிய துறைகளில் கட்டுரைகளும் நூல்களும் எழுதிப்புகழ் பெற்ற சி. வை. தாமோதரம்பிள்ளை, கரல். விசுவநாத பிள்ளை, வி. கனகசபைப்பிள்ளை, தி. த. கனகசுந்தரம்பிள்ளை, தா. செல்லப்பா பிள்ளை, சு. சிவபாதசுந்தரம் முதலியோர் பட்டதாரிகள். கலைமான்னிப் பட்டத்துடன்
சட்டமாணிப் பட்டமும் பெற்றவர்கள் தாமோதரம்பிள்ளை, செல்லப்பாபிள்ளை
ஆகியோர். இவர்கள் ஆங்கிலத்தில் எழுதி னர். சுவாமி ஞானப்பிரகாசர் அத்தகைய பல்கலைக்கழகப் பட்டங்கள் எவையும் பெற் றவரல்லர். தமிழிலும் ஆங்கிலத்திலும்

தாமாகவே பலவற்றையும் கற்றுக்கொண் டவர். (அதனல் பாதகமான சில பண்புகள் விளைந்தன என்பதும் கருதத்தக்கது)
1901-ம் வருடம் மார்கழிமாதம் முத லாம்திகதி ஞானப்பிரகாசர் குருப்பட்டத் தைப் பெற்ருர், அவ்வாண்டிலிருந்து அடுத்த பத்தாண்டுகளுக்குச் சமயப்பணியே அவரைப் பெரிதும் கவர்ந்தது. செபதுரல் களின் போதாமையையும் அத்தியாவசியத் தையும் அநுபவரீதியாகக் கண்டறிந்த சுவா மிகள் வரிசையாகப் பல சிறு நூல்களை வெளியிட்டார். மருத மடுத் திருப்பதி யாத் திரிகர் துணை என்பதே அவர் எழுதிய முதல் நூல். இக்காலத்திலே சைவ சமய சாஸ் திரங்களையும், புராணங்களையும் ஆராய்ந் தார் என்று ஊகிக்கலாம். მშ) მuქმზyბytrô) ქ பெளத்த, சமயங்களைப்பற்றியும் பலநூல் களைக் கற்று அறிந்துகொண்டார். சமஸ் கிருத அறிவையும் விருத்திசெய்து கொண் டிருந்தமையால் உபநிடதங்கள், பகவத் கீதை முதலியவற்றையும் அம்மொழியிலே படித்தறியும் நிலையிலிருந்தார். இத்தகைய சூழலிலேயே சைவமும் மச்சமாமிசமும் (1912)என்னும் நூலின் முதற்படிவம் يp-(Bh வாகியது. அதனைத்தொடர்ந்து FOfi ஆராய்ச்சி சம்பந்தமாகப் பல கட்டுரைகளை எழுதினர். பாதுகாவலன், இந்துசாதனம் முதலிய பத்திரிகைகளில் வெளிவந்த கருத் துருவங்கள் தமிழிலும் வடமொழியிலும் இருந்த சமய நூல்களை அவர் ஆழமாகக் கற்றிருந்தார் என்பதைக் காட்டுகின்றன. &F奥心魏J ஆராய்ச்சியும் நேர்மையும் என்னும் நூல் இவ்வாராய்ச்சியிற்பெற்ற அநுபவத் தின் விளைவே எனல் பொருந்தும். t மொழிகளையும், பலதுறைப் பொருள்களை யும் நூல்களின் துணைகொண்டு சுவாமிகள் கற்றமைக்குச் சான்ருகப் புத்தக வாசிப்புப் பற்றி 1904-ம் வருடம் அவர் எழுதிய கட் டுரையைக் குறிப்பிடலாம்.
“இத்தேசத்து வாலிபரிற் பலர் பள்ளிக் கூடம் விட்ட உடனே படிப்பெல்லாம்

Page 25
முடிந்ததென்று எண்ணினற்போல் ஏடு கள் புத்தகங்களைக் கட்டிப் பூச்சிகள் வாசிக்கும்படி வைத்துவிடுவது வழக்கம். *வாலிபரே! உங்கள் படிப்பும் இதோடு முடிந்துவிட்டதென்று எண்ணுதிருங்கள். பள்ளிக்கூடம் விட்டபின்பு நீங்கள் வாசிக்கும் வாசிப்பினல்தான் அந்த விதை முளைத்து வளர்ந்து பூத்துக் காய் த்துக் கணியவேண்டும். ஆகையால் வாசிப்பைக் கை நெகிழாதிருங்கள்.' சொன்னவாறே வாழ்ந்த அடிகளாரின் வாசஸ்தலத்திலே புத்தகங்கள் குவியலாகக் கிடக்கும் என்று அவரோடு பழகியவர்கள் கூறியிருக்கின்றனர். சென்ற நூற்ருண்டின் பிற்பகுதியிலிருந்து மெல்ல மெல்ல வெளி வரத்தொடங்கிய தமிழ் நூல்களை எல்லாம் ஒழுங்காக வாங்கி வைத்துப் படித்தார். நெஞ்சேநின என்னும் நூலிலே சுவாரஸ் யமான சம்பவம் ஒன்று குறிப்பிடப்பட்டி ருக்கிறது.
“பண்டிதர் ஒருவர் சுவாமியாரிடம் வந்து, ‘சுவாமி! நீங்கள் தொல்காப்பி யம் என்ற இலக்கணத்தை யாரிடம் பாடங்கேட்டீர்கள் என வினவினுர். சுவாமியார் உடனே, "இளம்பூரணர், சேனவரையர், பேராசிரியர் நச்சினர்க் கினியர் என்போரிடத்தில் கற்றேன்’ என்று கூறிச்சிரித்தார். பண்டிதர்விழித் தார்.”*
தாமாகவே பழந்தமிழ் இலக்கணங்களையும் இலக்கியங்களையும் கற்றுக் கொண் டார் என்பதற்கு இதுவும் ஒரு குறிப்பாகும்.
தொடக்கத்திலே சமய சம்பந்தமான ஆராய்ச்சிகளிலே தீவிரமாக அவர் ஈடுபட் டிருந்தபொழுது சைவ, வைணவ நூல்களை நுணுக்கமாக ஆராய்ந்தார் என்பது காவ லன் பத்திரிகையிலே கட்டுரைகளாக வந்து பின்னர் தமிழரின் பூர்வ சரித்திரமும் சமய மும் என்னும் தலைப்பில் 1920-ல் வெளி வந்த நூலின் மூலம் அறியக்கூடியதாயுள் ளது. அவ்வாறே பிற்காலத்தில் செந்தமிழ்

翌3
என்னும் தென்னிந்திய சஞ்சிகையிலே அவர் எழுதிய தமிழரின் ஆதி இருப்பிட மும் பழஞ்சீர்திருத்தமும் என்னும் நூற் கட்டுரைகளும் அன்னரது பரந்த தமிழ். நூற்பயிற்சிக்கும் புலமைக்கும் சான்று பக ருகின்றன. நூல்களாக வெளிவந்தவற்றை மாத்திரமன்றி சிற்சில இலக்கிய, வைத்திய சோதிட ஏட்டுப்பிரதிகளையும் சுவாமிகள் முயன்று படித்தறிந்தார் என்று கருத இட முண்டு.
ஆயினும், தமிழ்மொழி ஆராய்ச்சி யிலே சுவாமிகள் மும்முரமாக ஈடுபடத் துவங்கியபின்னரே தமிழ் இலக்கிய இலக் கணங்களைப் பேரூக்கத்துடன் கற்ருர் என்று எண்ணத்தோன்றுகிறது. தேவையின் நிர்ப் பந்தம் ஒன்று உண்டன்றே. தமது முப்பத் தைந்தாவது வயதிற்கும் நாற்பத்தைந்தா வது வயதிற்குமிடைப்பட்ட காலத்திலேயே பழந்தமிழ் இலக்கியங்களைத் துறைபோகக் கற்ருர் என்று ஊகித்தல் தவருகாது. (1910-ம் வருடம் கு.கதிரவேற்பிள்ளையின் தமிழ்ப் பேரகராதி மதுரைத்தமிழ்ச் சங் கத்தினரால் வெளியிடப்பெற்றது. புதிதாக வெளிவந்திருந்த அவ்வகராதியை இடை விட்டுப் படித்துக் கொண்டிருந்த பொழுதே அவருடைய உள்ளத்தில் ஒரு கருத்து உதித் தது. தமிழ் அமைப்புற்ற வரலாறு (1927) என்னும் நூலுக்கு சுவாமிகள் ஆங்கிலத்தில் எழுதிய முகவுரையில் பின்வருமாறு குறிப் பிட்டிருக்கிருர்,
"...Finding the New Tamil Dictionary of Mr. C. W. Katiravel Pillai handy, I began turning its pages at random, for the mere curiosity of seeing what treatment certain obscure words of classical Tamil had received in the magnum opus of a great scholar. Soon my attention was drawn to an important fact which had never struck me so forcibly before : namely that the entire vocabulary of our peculiarly symmetric language (with the exception of a handful of imitative words) falls into a

Page 26
14
number of inter-related groups. Caldwell and others, indeed, had pointed out the fact with regard to a few scores of words: but I now began to see that this was the case with the whole vocabulary".
இந்நிகழ்ச்சி நடைபெற்றபொழுது சுவாமி களுக்கு வயது முப்பத்தைந்து. அவ்வேளை யிலிருந்தே பழந்தமிழ்ப் பனுவல்களை அதி கம் அதிகமாகக் கற்ருர் எனலாம்? சிவகாசி அருணுசலக் கவிராயர் செய்யுளில் இயற்றிய ஆறுமுகநாவலர் சரித்திரம் என் ம்ை நூலுக்கு பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை எழுதிய முன்னுரையிலே (1934) ஓரிடத்திற் பின்வருமாறு கூறியுள்ளார்.
'அவர்கள் தமது இருபத்து மூன்று வய சினுள்ளே தமிழிலுள்ள இலக்கண இலக்
கியங்கள், சமய நூல்கள், பன்னிரு சைவத்திரு முறை, புராணங்கள், தல மான்மியங்கள் . . . . . . . ஆகிய இவைகளை
யெல்லாம் கற்று முடித்துக் கொண்டார் கள். இவ்வளவு நூல்களையும் இந்த வய சினுள்ளே எப்படிக் கற்று முடித்தார்கள் என்பது ஒரு கேள்வி. ஆனல் இவைகளை யெல்லாம் கற்றுணர்ந்தவர்களென்பது அவர்கள் முதலிற் செய்த பிரசங்கங்க ளாலும், செய்த நூல்களாலும், அச் சிட்ட நூல்களாலும் விளங்கும்.'
நூற்கல்வியைப் பொறுத்தவரையில் சுவாமி ஞானப்பிரகாசருக்கும் இக்கூற்று ஏறத் தாழப் பொருந்தும் எனலாம். தமிழ் அமைப் புற்ற வரலாறு என்னும் நூலால், அக நானூறு, அகப்பொருள் விளக்கம், கம்ப ராமானம், ஐங்குறுநூறு, கந்தரந்தாதி, கலித்தொகை, கல்லாடம், திருக்குறள், குறிஞ்சிப்பாட்டு, சிலப்பதிகாரம், சிவஞான சித்தியார், சிவரகசியம், சீவகசிந்தாமணி, தணிகைப் புராணம், தாயுமான சுவாமி பாடல், திணைமாலை நூற்றைம்பது, திருக் கோவையார், திருநாவுக்கரசர் தேவாரம், திருமுருகாற்று படை, திருவாசகம்,திருவிளை பாடற் புராண்ம், சேந்தன்திவாகரம், நாலா

யிர திவ்விய பிரபந்தம், தேவாரத் திரட்டு, தொல்காப்பியம் (முழுவதும்), நற்றினை, நாலடியார், நான்மணிக்கடிகை, நெடுநல் வாடை, நைடதம், பட்டினப்பாலே, பதிற்றுப் பத்து, பரிபாடல், நன்னூல், பாரதம் (வில்லி புத்தூரர்), பிங்கல நிகண்டு, புறப்பொருள் வெண்பாமா?ல, புறநானூறு, பெரும்பா “ளுற்றுப்படை, பொருநராற்றுப்படை, மணி மேகலை, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம், வருணசிந்தா ம ணி, கந்த புராணம், முதலிய நூல்களைக் கற்ற றிந்த வர் என்பது தெரிகின்றது. சி.வை.தாமோதரம் பிள்ஜ்ள, உ.வே.சாமிநாதையர், வே.இராச கோபாலையங்கார், ரா.இராகவையங்கார் காசி.நாகலிங்க முதலியார், பொன்னம்பலி பிள்ளை, பா.மாசிலாமணி முதலியார், நா.கதிரைவேற்பிள்ளை, சுவா மி நா த பண்டிதர், அ.நாராயணசாமி ஐயர், கோ.வடிவேலுச் செட்டியார், சதாசிவம் பிள்ளை, ரா. சுப்பிரமணியக் கவிராயர், முதலியோர் பதிப்பித்து வெளியிட்ட நூல் களைச் சுவாமிகள் பயன்படுத்தியுள்ளார். தமிழ்ச் சொற் பிறப்பாராய்ச்சி ( 1932 ) என்னும் நூலால் மேற்குறிப்பிட்ட நூல் களையும் வேறு நூல்களையும் அவர் கற்றுப் பயன்படுத்தியமை தெரிகின்றது.
மரபுவழித் தமிழறிவையும் ஆங்கில மொழி இலக்கிய அறிவையும் இணைத்துச் செயற்பட்ட தமிழறிஞர்களிற் பெரும் பாலானேர் 1856-ம் வருடம் கால்டுவெல் பாதிரியார் வெளியிட்ட திராவிட மொழி களின் ஒபிலக்கணம் என்ற ஆங்கில நூலி னற் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். பொதுவாக இந்தியவியல் ஆராய்ச்சியிலும் சிறப்பாகத் தமிழியல் ஆராய்ச்சியிலும் ‘ஆரியர்-திராவிடர்” பிரச்சினை முக்கியத் துவம் பெறுவதற்கு அந்நூல் ஏதுவாயிற்று. தமிழின் தொன்மை, தமிழின் தனித்தன்மை பழந்தமிழ்ச் சமயம் வேத வழக்குகளின்றும் வேறுபடும் தன்மை, பிராமணரின் செல் வாக்கு, பழந்தமிழரிடையே சாதி வேற் றுமையின்மை முதலிய கருத்துகளும்

Page 27
கொள்கைகளும் கால்டுவெல், வழிவந்த மேனுட்டு ஆய்வாளர்களினல் பிரசித்தப் படுத்தப்பட்டவை. (இந்திய உபகண்டத்தை பிரித்தாளும் சூழ்ச்சியின் நுட்பமான வெளிப்பாடாகவும் ‘ஆரியர்-திராவிடர்’ சம்பந்தமான வாதப்பிர தி வா த ங் களை ஆங்கிலேய ஆட்சியாளர் பலர் கருதியமை க்குச் சான்றுண்டு.)இனத்தூய்மை, மொழித் அாய்மை, மதத்தூய்மை, என்னும் கோட் பாடுகள், கால்டுவெல் முதலாயினேரின் கருத்துக்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட தமிழறிஞர் பலரைப் பல தஸாப்தங்களாக ஆட்டிப்படைத்து வந்துள்ளன. வடமொழி, பிராமணிய எதிர்ப்பு என்ற அடிப்படை யில் வேளாளர் செல்வாக்கும் மேலோங் கியது. பேராசிரியர் ப.சுந்தரம்பிள்ளை, வேதாசலம்பிள்ளை ( மறைமலையடிகள் ), வெ. ப.சுப்பிரமணிய முதலியார், பண்டித சவரிராயபிள்ளை, தா.பொன்னம்பலபிள்ளை தா. செல்லப்பாபிள்ளை, வி. கனகசபைப் பிள்ளை, எம். எஸ். பூரணலிங்கம்பிள்ளை, கா. சுப்பிரமணியபிள்ளை, கே. என் சிவ ராஜபிள்ளை, முதலிய பலர் பத்தொன்ப தாம் இருபதாம் நூற்ருண்டுகளில் பழந் தமிழர் நாகரீகம், பழந்தமிழர் மொழி, பழந்தமிழர் சமயம் முதலியன தொடர்பா கத்தீவிரமிக்க கருத்துக்களைப்பிரசாரஞ் செய் தவர்கள். யாழ்ப்பாணத்திலும் தென்னித் தியாவிற் சில குறிப்பிட்ட இடங்களிலும் செல்வாக்குடன் விளங்கிய வைதிக சைவ சித்தாந்திகளையும், சமரச சன்மார்க்க நெறிநின்றவர்களையும் (சற்றுப்பிற்பட்ட காலகட்டத்தில் தோன்றிய தேசிய முற் போக்கு வாதிகளையும்) தவிர ஏறத்தாழ அனைத்துத் தமிழா ராய் ச் சியா ள ருமே ஏதோவொரு வகை யில் கால்டுவெல் விதைத்த கருத்துகளுக்குப் பலியானவர் களே. அத்தகையோரே தமிழ்க்கல்வி உல கில் செல்வாக்குடையோராயும் விளங்கி னர். இலங்கையிலே நாவலர் மரபில் வந்த காசிவாசி செந்திநாதையர், அ.குமார சுவாமிப்புலவர், சபாபதி நாவலர்,

ris
சு. சிவபாதசுந்தரம் முதல் நமது காலத்து பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஈருகவும் தமிழ் நாட்டிலே மா. சாம்பசிவபிள்ளை, வி.சிதம்பரராமலிங்கபிள்ளை, சி.கே.சுப்பிர மணிய முதலியார், கே.எஸ்.சீனிவாச பிள்ளை, வி. பி. காந்திமதிநாதபிள்ளை, சீர்காழி சோமசுந்தரப்பிள்ளை, முதல் நமது காலத்து க.வச்சிரவேல் முதலியார் ஈருக சில தமிழ்ப்புலமையாளர் ‘ஆரியர்திராவிடர்' பிரச்சினை என்ற பொறிக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளன ரெனினும், கடந்த ஒரு நூற்முண்டு காலத் தமிழியல் ஆய்வுகள் இன-மொழி-சமய வாதப்பிரதி வாதங்களாலும் தீவிர தூய்மை வாதத்தினுலும் நலிவுற்றுத் திசைதவறிப் போயின என்பதும் கவனத்திற்குரிய தொன்றே. பொதுவில் கூடியளவு ஒப்பியல் நோக்கும், பரந்த மனிதாபிமானமும் வாய்க்கப் பெற்றிருந்த சுவாமி ஞர்னப் பிரகாசரும் இவவாதப்பிரதிவாதங்களிலி ருந்தும், தமிழ்த\தொணமை வாதததினின் றும் விடுபட்டவரல்ல. ஆய்வுமுறைகளில் சிற்சில வேறுபாடுகள் இருபபினும்: அடிப் படையில் சுவாமிகளின் முடிபுகள காலடு வெல் வழிவந்த ஞானபுததரர்களுககுப் பெரிதும் இயைபுடையனவாகவே , இருந் தன. இதன இன்மினரு விதததலும கணடு கொள்ளக் கூடியதாயிருககறது. கடந்த மூன்று நான்கு தஸாப்தங்களாக தமிழத் தொன்மை வாதத்தை முனனினறு !bفژاړسا திய சி. இலக்குவனர், ஞா. தேவநேயப் பாவாணர், கா.அப்பாத்துரை, பாவலர் பெருஞ்சித்திரனுர், கீ. இராமலிங்கனுர் முதலியோர் சுவாமிகளின் மொழிநூல் ஆய்வுகளைப் போற்றிப் பேசுவதும் ஊன் றிக் கவனிக்க வேண்டியதே.
தனது காலத்து ஆய்வு நூல்களினல் சுவாமிகள் பாதிக்கப்பட்டமை தவிர்க்க இயலாததே. கால்டுவெல், மாக்ஸ் முல்லர், விட்னி, பீம்ஸ் முதலியோரின் இந்திய வியல் ஆய்வுகளோடு, வி.கனகசபைப்பிள்ளை

Page 28
16
டி. சவரிராயர், ப. சுந் தரம் பிள்ளை, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, வெ. ப. சுப்பிர மணிய முதலியார் போன்றேரின் நூல்களை யும் சுவாமிகள் அடிக்கடி தமது ஆக்கங் களில் மேற்கோள் காட்டுவதை அவதானிக் σουίτιο. எடுத்துக்காட்டாக, தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் என்னும் நூலிலே சாதியமைப்பைப்பற்றி வாதிடும் பொழுது சுப்பிரமணிய முதலியாரைக் குறிப்பிட்டு அவரது கூற்றுக்களை மேற் கோள் காட்டுகிருர்,
‘ஆரியர் வருமுன் அந்தந்த சனங்கள் அவரவர் வசித்த இடம் பற்றியே சாதிப் பேர் கொண்டிருந்தார்கள். தென்னிந்தி யாவாகிய திராவிட தேசத்தில் அவரவர் இருந்த நிலம் பற்றியும் தொழில் பற்றி யும் சாதிப்பெயர்கள் வழங்கி வந்தன. 4 O P. மனிதர்களையும் அவர்கள் வாழும் நிலம்பற்றி வகுத்தனரேயன்றி ஆரிய ரைப்போல் ஒருசாதி மேற்சாதி ஒரு சாதி கீழ்ச்சாதி என்று பேதம் ஏற்படுத் தினரல்லர்." " * v
Tamilian Antiquary எ ன் னு ம் இதழில் முதலியார் எழுதிய கட்டுரை யொன்றிலிருந்தே மேலுள்ள பகுதியை சுவாமிகள் எடுத்தாண்டுள்ளார். தமிழர் பழமை என்னும் ஆங்கில இதழை திரிசிர புரம் அர்ச். சூசையப்பர் கல்லூரியில் தமிழ்ப்புலமை நடத்திய தே.சவரிராய பிள்ளை (1859-1923) ஆசிரியராயிருந்து நடத்தியவர். ‘தமிழர் ஆரியர் கலப்பு’’ "சங்ககாலம்’, ‘தமிழ் மொழிநூல்’’, "பரத கண்டமா திராவிட இந்தியாவா?’’ “பாண்டவரும் தமிழ் மன்னரும்’ முத லிய பல கட்டுரைகளை எழுதிய சவரிராயர் கத்தோலிக்கர். சவரிராயரின் செல்வாக்கு சுவாமிகளிடத்து குறிப்பிடத்தக்களவு காணப்படுகிறது எ ன ல |ா ம். இ னி, வெ. ப. சுப்பிரமணிய மு த லிய ரா ர் (1857-1947) தமிழ் நாட்டிலே பிராமணர் எதிர்ப்பு இயக்கத்தில் முன்னின்றவர். இராமாயண உள்ளுறைப் பொருளும் தென் இந்திய சாதி வரலாறும். என்னும் நூலை

எழுதியவர். சவரிராயர் மறைமலையடிகளு டன் இணைந்து தனித்தமிழ் இயக்கம் வேகம் பெறக் காரணராயிருந்தவர். இத்தகை யோர் இயங்கிய ஒரு பின்னணியிலேயே சுவாமிகளின் மொழிநூல் ஆய்வுகளுக்கு வரவேற்பு இருந்தது என்பதும் முக்கிய
மான செய்தியாகும்.
அடிகளின் மொழிநூல், சமூகவியல், சமய ஆராய்ச்சிகளின் உள்ளடக்கம் இவ் வாறிருக்க அவரது தமிழ் நடை பற்றியும் சிறிது கூறுதல் அவசியம். கத்தோலிக்க பிரசாரகராய்த் திகழ்ந்த அச்சுவேலி தம்பிமுத்துப்பிள்ளையைச் சிறிய தகப்பன ராகப் பெற்றிருந்த ஞானப்பிரகாசர், எளிமையான மொழிநடையில் செய்யுள் களையும் உரைநடை நூல்களையும் எழுது வதைச் சிறிய பிராயத்திலிருந்தே கற்றுக் கொண்டார். கல்வியறிவு குறைந்த மக்க ளிடையே சுவிசேஷத் தொண் டு புரிந்த சுவாமிகள் சம்பாஷணைப் போக் கில் அமைந்த இலகுவான நடையையும் பெரி தும் கையாண்டார்.
தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் முதலிய முற்பட்ட நூற்கட்டுரைகளும் காவலன் பத்திரிகையில் வெளிவந்தனவா கையால், குறிப்பிடத்தக்களவு எளிமை யுடையனவாய் அமைந்தன. ஆனல் இலக் கிய, இலக்கண, மொழிநூல் கட்டுரைகளை கலாநிதி, ஞாயிறு, செந்தமிழ் முதலிய சஞ்சிகைகளுக்கு எழுதும்பொழுது அவரது நடை ஒரளவிற்குப் ‘பண்டித நடையை’’ ஒத்திருந்தது. முதலில் பேச்சு முறையை அநுசரித்த எளிமையான உரைநடைக்கு ஓர் உதாரணம் L_urTritlʼyGBl urTub.
“எட்டு வயது வரையில் தமிழிலே எங் கள் வேதப் பள்ளிக்கூடத்தில் நாலாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த எனக்கு, இங்கிலீஷ் கல்வியும் வேண்டு மென்று கருதி, அச்சுவேலி புருெட்டஸ் தாந்த தமிழ்ப் பள்ளிக்கூடத்திலே இங்கி லீஷ் அறிவும் ஒரு சொற்பமுள்ளவர்ாயி

Page 29
ருந்த பூரீ சின்னத்தம்பி உவாத்தியாயி ரிடம் காலைநேரங்களில் பாடமோத அனுப்பிக் கொண்டு வந்தார். அக் காலம் அச்சுவேலியில் இங்கிலீஷ் படிக் கும் பிள்ளைகள் ஒருவருமில்லை. சங்கீதத் தில் எனக்குள்ள விருப்பைக் கவனித்து பாடவல்ல சிலரைக் கொண்டு பாட்டுப் பழக்கிக் கொடுத்தார். ....அந்நாட்க ளில் 'கம்பர்வீட்டு அடுப்பும் கவிபாடும்’ என்றது போல சிறியதந்தையாரின் பாவன்மையை அடிக்கடி பார்த்து யானும் கவிபாடத் தொடங்கி விட்டேன் கவி இயற்றுவதிற்போல வசன நூல்கள் எழுதுவதிலும் சிறிய தந்தை யா ரின் சேர்க்கை வாசனையால் என்னையறியா மலே எனக்கு விருப்பு உண்டாவதா யிற்று. ..இதனல் இடையிடையே சிறு புதினச் சங்கதிகளை எழுதவும் எனக் குச் சமயம் உண்டாயிற்று. பதினுலு வயதளவில் ஒருமுறை அவர் தென்னிந் தியாவுக்கு அலுவலாய்ப் போயிருக்க யானே பத்திரிகையையும் (சன்மார்க்க
போதினி) நடத்தினேன். . இவை களெல்லாம் பிற்காலம் எனக்கெவ்வ வளவு உயிர்த்துணையாயின என்பதை
நினைக்குந்தோறும் இவற்றின் விதையை
என்மனதில் இட்டவரில் வாக்குக்கெட்
டாத நன்றியறிதலுணர்ச்சி பிறக்கிறது’ யோன் இராசா என்பவர் வெளியிட்ட தம்பிமுத்துப்பிள்ளையின் சரித்திர சூசனம் (1932), என்னும் நூலுக்கு சுவாமிகள் எழுதியனுப்பிய இளமைக்கால நினைவுகளி லிருந்து ஒரு சிறு பகுதியே மேலேயுள்ளது. இயல்பான-எளிமையான-நடையைக் கவ ளிக்கும் அதே வேளையில் அவர் கூறியுள்ள பொருளும் கவனிக்கத்தக்கதுதான்.
1932-ம் வருடம் வெளிவந்த தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி என்னும் நூலிலி ருந்து ஒரு பகுதியைப் பார்ப்போம்.
"புதியன புகவிடாது பெரும்பான்மை பண்டை உருவங்களையே காத்துக் கொள்ளும் சார்பொன்று. தமிழகத்துக் ഞ 3

፲?”
காணப்படுவது. இச்சார்பினுல் ஆரியத் தின் கண்ணும் இல்லாத நிரைப்பட்ட சொல்லொற்றுமை தமிழுக்குரியதாகும். ஆயின், தமிழ்ச் சொற்கள் ஒற்றுமைப் பட்டு ஒரு சில அடிகளினின்றும் கிளைத் தெழுந்து நிற்கும் பெற்றி அரிதின் உணரக்கிடத்தல் எ ங் நடன மெனி ல், தமிழ்ச் சொற் பிறப்புக் கட்டளைகளை வரையறுத்து நாட்டிவைக்க யாவரே னும் இதுவரையில் வெளிப்படாமையி ணுலாம். தொல்காப்பியர் தமது உரிச் சொல்லியல் ஆதிய சிலவிடங்களிலும், நச்சினர்க்கினியர் ஆதியாம் உரையா சிரியர்கள் ஆங்காங்கும் ஒரு சில சொற் கட்குப் பிறப்புக் காட்டிப் போயினர் அன்றே எனின், அது உண்மையே. ஆங்காங்கு தனித்தனியே காட்டப்பட் டிருப்பினும், சொற்கள் யாவும் பிறந்து வேற்றுருப்பட்டு நிற்றற்கு விதிகளாய் அமைந்த கட்டளைகளை ஆராய்ந்து காட்டுவோர் இல்லாதொழிந்தனர்.' ஆரியத்தைப் பார்க்கினும் தமிழ் சிறந் தது என்பது போன்ற அடிக்கருத்து இடம் பெறுவது ஒரு புறமிருக்க, மேலுள்ள பகுதி யிலே சுவாமிகளின் நடை, இடைக்கால உரைகாரரின் நோக்கையும் போக்கையும் பின்பற்றியிருப்பது வெளிப்படை. உரை யாசிரியர்கள் கடைப்பிடிக்கும் தடை, விடை முறையின் சாயலையும். இங்குக் காண லாம், சுவாமிகள் பிற்காலத்தில் செந் தமிழ் சஞ்சிகைக்கு கிரமமாக எழுதிய கட்டுரைகளில் இக் கடின நடைப்பாங்கு முனைப்பாகத் தெரிகின்றது. மரபுவழித் தமிழறிஞர்களும் வித்தியா ர் த் தி களும் பெரும்பாலும் எழுதும் மதுரைத் தமிழ்ச் சங்கத்து ஏட்டிலே எழுதுகிமுேம் என்னும் உணர்வு காரணமாக இத்தகைய பண்டித நடையில் சுவாமிகள் எழுதினரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது குறித்து அவரே சிந்தித்திருக்கிருர் என்பதற்கும் சான்றுண்டு. 'தமிழ் அடிச்சொல் இயல்பு' என்னும் முதல் அதிகாாத்தில் பின்வரு மாறு எழுதினர். r -

Page 30
8.
'தமிழ் நாட்டிலோ அவ்வாறன்று பேச்சிலெல்லாம் கொடுந்தமிழ் இயன்று வர, எழுத்தில் இதற்கும் இலக்கியத் தமிழுக்கும் இடைநின்ற ஒரு தமிழ் வழங்குகின்றது. இதனுல் முன்னேய செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் பாகு பாட்டோடு 'புத்தகத்தமிழ்’ எனவும் ஒரு பகுப்பு ஏற்படுவதாயிற்று. கொடுத் தமிழை விலக்கிப் புத்தகத் தமிழ் வழங் கும் நூலாசிரியர்களும், தத்தம் அறி வாற்றலுக்கு ஒப்ப செந்தமிழிலிருந்து சொற்களை தொடர்களை ஆங்காங்கு எடுத்து வழங்க ஏவப்படுவோராகின்ற னர்.செந்தமிழ்ச் செய்யுட்களையும்ஒரோவி டத்து மேற்கோளாக எடுத்தாளுகின்றனர் இதனல் தமிழ்மொழியில் வல்லுநராக விரும்புவோரெல்லாம் முத்திறப்பட்ட தமிழ்ச் சொற்களையும் அறிந்திருத்தல் வேண்டப்படுகின்றது.' --
‘புத்தகத் தமிழ்' என்பதற்கு வரைவிலக் கணமும் சமாதானமும் கூறும்பொழுது தான் கைக்கொண்ட கடின நடைக்குச் சமாதானம் சொல்லுகின்றரோ என்று நாம் கருதுமளவிற்கு அவ்விளக்கம் அவரது நடைக்குப் பொருந்து வ த ா யிருக்கிறது. உள்ளடக்கத்தில் பழமை போற்றும் பண்பு மேலோங்கவும் நடையிலும் பழைய முறை யிலான பண்பு அதிகரித்தது எனக் கருது தல் மிகையாகாது. நியாயதுரந்தரர்களாய் இருந்து கொண்டு தமிழிலக்கிய ஆய்வுல கிற்கு வந்த நாவலர் ச.சோமசுந்தரபாரதி murri (1879-1959), ரா.பி.சேதுப்பிள்ளை (1896-1961), கா. சுப்பிரமணியபிள்ளை (1888-1945), கு.கோதண்டபாணிப்பிள்ளை முதலியோரும் இத்தகைய பண்டித நடை யை வெவ்வேறு அளவிலே கைக்கொண் டனர். அடிப்படையில் அவர்களும் பழமை போற்றும் பண்பினராயிருந்தனர் என்பது மனங்கொளத் தக்கது.
சோமசுந்தர பாரதியார் முதலி யோரைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது இன்னுெரு செய்தியும் கூறத்தக்கதே.

சுவாமி ஞானப்பிரகாசர் முக்கியமான நூல்களை-மொழிநூல் சம்பந்தமான ஆக் கங்களை - வெளியிட்ட காலப்பகுதியில் பல்கலைக்கழகங்கள் அத்துறைகளில் போதிய ஆராய்ச்சிகளை மேற் கொண் டி ல, எஸ். கிருஷ்ண சுவாமி ஐயங் கார், பி.டி. சீனிவாச ஐயங்கார், வி. ஆர். ஆர். தீட்சிதர், நீலகண்ட சாஸ்திரியார் முதலிய வரலாற்றராய்ச்சியாளரும் அநவரதவிநாய suit airst, கே. என். சிவராஜபிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, பி.எஸ். சுப்பிர மணிய சாஸ்திரி, வே. வேங்கடராஜுலு ரெட்டியார் முதலிய தமிழாராய்ச்சியான ரும் சென்னை, அண்ணுமலைப் பல்கலைக்கழ கங்களில் பணியாற்றி வந்தனரெனினும் சுவாமி ஞானப்பிரகாசருக்கும் அவர்களிற் பெரும்பாலானேருக்கும் ஆய்வுரீதியான தொடர்புகள் இருந்தன என்பதற்கில்லை. பம்பாயில் இருந்த ஹீராஸ் பாதிரியாரு டனும் வேறு சிலருடனும் சுவாமிகளுக்குத் தொடர்பு இருந்ததெனினும், மொத்தத் தில் பல்கலைக்கழக ஆய்வாளர் சுவாமிகளின் ஆய்வுகளை அநுதாபத்துடன் நோக்கவில்லை" இது சுவாமிகளுக்கு ஒரு வகையில் நட்மாகவே அமைந்தது. அதே வேளையில் வேறுதொழில்கள் பார்த்துக் கொண்டு தமிழியல் ஆராய்ச்சியைப் பொழுது போக் காகக் கொண்ட பற்றர்வலர்கள் பலரே சுவாமிகளுக்கு உற்சாகமளித்து வந்தனர், இதனல் சுவாமிகளின் ஆய்வுகள் ஒரு அள விற்கு மேல் கூர்மையடைய முடியாத நிலைமை ஏற்பட்டதெனலாம். மொழிநூல் ஆராய்ச்சிகளே பொதுநிலையிலுள் ($ଶrt| | | ரால் பெரிதும் பாராட்டப் பெற்றமை யால், வரலாற்றியல் தொடர்பாகச் சுவாமி கள் செய்த குறிப்பிடத்தக்க சாதனைகளும் உரிய கவனத்தைப் பெறத்தவறின. கவி ஞருக்குரிய உற்சாகத்துடனும் மிகை யுணர்ச்சியுடனும் யோகி சுத்தானந்த பாரதியார் சுவாமிகளை'தமிழே யுலகத் தாய் மொழி யென்று பறையடித்தோதிய பன் மொழிப் புலவன்' என்று பாராட்டியதை

Page 31
வைத்துக்கொண்டே அவருக்குப் புகழ் தே டப் பல ரும் மு ற் பட்ட னர். உண்மையில் மொழிவெறி சுவாமிகளிடம் இருக்கவில்லை. தமிழின் தனிச்சிறப்பியல்பு களே ஆராய்ந்து கூறியவர் சுவாமிகள். ஆயினும் தனித்தமிழ்வாதியாக இருக்க வில்லை. தருக்கசாத்திரச் சுருக்கம் (1933), என்னும் நூலின் முகவுரையில் அவர் பின் வருமாறு எழுதினர்.
'தனித்தமிழே அன்றி வடமொழிச் சொற் கலப்புள்ள தமிழ் தக்கதன்று என விலக்குகின்ற நவீன நூலாசிரியர் சில்லோரது அபிமதத்தை இந்நூலினுள் மேற்கொண்டிலேம். ஆரியர் தமிழ்நாட் டினுள் நுழைந்த பின்னர் தமிழில் எழுந்தனவான சாத்திரங்கள், சிறுபான் மையாயினும் வடமொழிக் கலப்பின்றி இயலமாட்டாதன ஆகின்றன. வட சொற்களை அடியோடு நீக்கிவிடுவமா யின், தருக்கம் ஆகிய சில சாத்திரங்கள் இருந்த இடமுந் தெரியாமற் போய் விடும். இதனுல் அன்றே, வேண்டும் இடந்தோறும், இந்நூலின்கண், வட

9
சொற்களையும் எடுத்தாண்டிருக்கின்ற 60th. ''
இது விஷயத்திலும் வேறு சில அம்சங்களி லும் சுவாமிகளுக்கும் விபுலானந்த அடிக ளாருக்கும் (1892-1947) ஒப்புமையிருப் பது கண்கூடு, துறவிகளாயிருந்துகொண்டு மொழிப்பற்றுடன் பணிபுரிந்தவர்கள். அதே வேளையில் சமயப்பணியே தமது பிரதான குறிக்கோள் என்பதையும் மறக்காதவர்கள். ஒப்பியல் நோக்கில் ஆய்வுகளை நிகழ்த்திய வர்கள். தமிழியலுக்குப் பல வழிகளில் வளந்தேடியவர்கள். தமது சுயமுயற்சியின் வலுவினல் மரபுவழித் தமிழறிஞர்களின் மதிப்பைப் பெற்றவர்கள். இறுதியில் மரபு வழித் தமிழ்க் கல்வியாளராகவே கருதப் படும் அளவிற்கு அக்கல்வியின் விழுமியங்க ளோடு தம்மை இணைத்துக்கொண்டவர் கள். பல்வேறு கோணங்களிலிருந்து சுவாமி ஞானப்பிரகாசரை ஆராய்வதன் மூலம், அவரை நன்கு விளங்கிக் கொள்வது மட்டு மன்றி, நமது காலத்தில் தமிழியல் வளர் ந்த வரலாற்றையும் தெளிந்து கொள்ள லாம்.

Page 32


Page 33
ஈழத்திற் க
இப்பாரம்பரியத்தினே ஈழத் தமிழிலக்கியட்
அங்கமாக இனைத்து நோக்குவதற்கு மே ஒரு குறிப்பு)
- பேராசிரியர் கார்த்திகேசு
இறித்தவர்கள் எழுதிய இலக்கியங்கள் கிறித்தவம் பற்றிய எழுத்துக்கள் ஆகி யனவற்றை எழுதியவரின் தாய்மொழி யைக் கூடக் கவனிக்காதும், எழுதியவரின் அல்லது எழுதப்பட்டதன் கிறித்துவமத நிலைச்சார்பை (ருேமன்கத்தோலி க் கம், புரட்டஸ்தாந்தம் என்பனவற்றைக்) கவ னிக்காதும் கிறிஸ்தவம் தமிழுக்காற்றிய தொண்டு என்று பொதுப்படையாகக் கூறி விடும் மரபு ஒன்று தமிழ் இலக்கிய வர லாற்ருய்வாளர் பலரிடையே காணப்படுகி றது. தமிழ்க் கிறித்தவர்களின் மொழிப் பண்பாடு, மதப் பண்பாடு பற்றிய தெளி வின்மையே இத்தகைய ஒரு நோக்கினை வளர்த்துள்ளது எனலாம்.
கிறித்தவர்களின் மதப்பண்பாட்டினை ஆராயும்பொழுது ருேமன் கத்தோலிக்கத் துக்கும், கத்தோலிக்கம் சாராத மற்றைய கிறித்தவப் பிரிவுகளுக்குமிடையே பெருத்த வேறுபாடுகள் காணப்படுவதை அவதா னிக்கத் தவற முடியாது. இம்மதங்களை இலங்கையில் அறிமுகஞ் செய்துவைத்த அரசியற் சக்திகளின் பண்பாட்டுப் பின் னணி இம்மதங்கள்பற்றிய இலங்கை நிலைக் கணிப்பீட்டினை எத்துணை பாதித்துள்ளது என்பது முதல், கத்தோலிக்கத்துக்கும், பிற கிறித்தவப் பிரிவுகளுக்குமுள்ள அடிப்படை

பாரம்பரியம்
பொதுப்பாரம்பரியத்தினதும் மரபினதும் ற்கொள்ளவேண்டிய அணுகுநெறி பற்றிய
சிவத்தம்பி, M. A, Ph.D. --
வேறுபாடுகள் யாவை என்பதைத் திட்ட வட்டமாக அறிந்து அவை குறிப்பிட்ட இலக்கியங்களில் எவ்வாறு தெரிகின்றன என்பது வரை பல விடயங்களை நாம் அறிந்து கொள்வது அத்தியாவசியமாகும். கிறித்தவப் பிரிவுகளின் இலக்கியச் செல்வாக்குப்பற்றிய குறிப்புக்களில், முக் கியமாகப் பல்வேறு காலகட்டங்களிலும் எவ்வெப் பிரிவு முக்கியத்துவம் பெற்றிருந் தது என்பது பற்றிய கணிப்பீட்டில் அரசி யலில் எப்பிரிவினர் மேலாண்மையுடைய வர்களாக விளங்கினர் என்பதை ஆதார மாகக் கொண்டு அப்பிரிவினரின் ஆக்கங்க ளுக்கு முக்கியத்துவம் வழங்கிவிட்டு மறு பிரிவினர்பற்றி ஆழமான கவனம் செலுத் தாதும் விட்டுள்ளனர். இதனுல் போர்த் துக்கேயர் காலத்தில் கத்தோலிக்கத்துக் கும், ஒல்லாந்தர் காலத்தில் இறப்பிறமா துப்பிரிவுக்கும் ஆங்கிலேயர் காலத்தில் ஆங் கிலத் திருச்சபையினருக்கும், அமெரிக்க மிசனரிமாருக்கும் முக்கியத்துவம் கொடுத் துள்ளனர். போர்த்துக்கேயகாலத்தின் பின் னர் கத்தோலிக்கம் எத்துணை வன்மை யாக நின்று நிலவிவந்துள்ளது என்பது பற்றி அறிவதற்கு இத்தகைய அணுகு முறை உதவாது.
இப்பிரச்சனையிலிருந்து எம்மை விடு வித்துக் கொள்வதற்கு நாம் மத இலக் கியங்கள்பற்றி ஆராயும்பொழுது மக்களி

Page 34
*3
டையே இம்மதங்கள் பெறும் இடத்தை யும், மதங்களின் செல்வாக்கு வளர்ச்சிக் கும், தொடர்ச்சிக்கும் அந்த மதஇலக்கி யங்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்ப தையும் அறிந்துகொள்வது அத்தியாவசிய மாகின்றது.
எந்த ஒரு சமூக உருவாக்கமும் பூர ணப்படுவதற்கு அந்தச் சமூகத்தின் உணர் வுகள், நம்பிக்கைகள், உறவுகள், இலட்சி யங்கள் ஆகியனவற்றைப் மொழிக்குறியீடு கொண்டு காட்டும் இலக்கியம் அத்தியாவ சியமாகும். தமிழ்மக்களின் சமூக இயை பையும் தொடர்ச்சியையும் அறிந்துகொள் வதற்குத் தமிழ் இலக்கியமே நல்ல சான் ருகும். தமிழ் இலக்கியம் இல்லையெனில் தமிழ்ச்சமூக உருவாக்கம் பூரணமெய்தாது. அதேபோன்று தமிழ்க் கிறித்தவர்களைப் பொறுத்தவரையில் *தமிழ்" என்னும் "பொதுப்படையான ‘மொழிப்பண்பாட்டு’ Gil' l- g5 5. Git (language culture complex) அவர்கள் தொடர்ந்து கிறித்தவர்களாக இருப்பதற்கு அவர்களிடையே அதற்கான இலக்கியங்கள் இருத்தல் அவசியமாகும். அத் தகைய இலக்கியம் இல்லையேல் அவர்கள் தங் கள் நம்பிக்கைகளைப் பேணுவதற்கும், கைய ஸ்ப்பதற்கும், தங்கள் மத உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், அம்மதஈடுபாட் டைக் கையளிப்பதற்கும் வாய்ப்பிருக்காது.
எனவே ஈழத்தின் கத்தோலிக்கத் தமி ழிலக்கியப் பாரம்பரியம் என்பது அந்த மிக்கட்கூட்டத்தினரின் தனித்துவத்தையும் பொதுமையையும் எடுத்துக் காட்டுகின்ற பாரம்பரியமாக இருத்தல் வேண்டும். இந் தப் பாரம்பரியத்தை இனங்கண்டு கொள் ளாமல் வெறுமனே ஆசிரியர்களின் பெயர் களையும், ஆக்கங்களின் பெயர்களையும் அறிந்து வைத்திருப்பதிற் பெரும் பலன் இருக்கமுடியாது.
II
ஈழத்திற் கத்தோலிக்கத் தமிழிலக்கி யம் எத்தகைய சூழ்நிலையில் உருவாகி எவ் வெச் சூழ்நிலைகளில் பேணப்பட்டும், வளர்க்

கப்பட்டும் வந்துள்ளதென்பதை நன்குஅறி தல் அத்தியாவசியமாகும். அத்தகைய ஒரு முயற்சியில் இறங்கும் பொழுது, ஆசிரியர் ஆக்கங்கள்பற்றிய பட்டியல்களுக்கு அப்பா லான சமூகவரலாற்று முக்கியத்துவமுடைய சிலவிடயங்கள் பற்றிய தெளிவு இருத்தல் அத்தியாவசியமாகின்றது.
முதலாவது கத்தோலிக்கத் திருச் சபை முதன்முதலில் இலங்கைத் தமிழ்மக் களோடு தொடர்பு கொண்டபொழுது (1543 அளவில், தென்னிந்தியா வில் நடந்த மத நடவடிக்கைகளின் விஸ்தரிப் பாக யாழ்ப்பாணத்திலேயே அவர்கள் நட வடிக்கைகள் தொடங்கின) எத்தகைய அர சியற்ருெடர்புகளை வைத்திருந்தனர் என்ப தும் சுதேசப் பண்பாட்டை எவ்வாறு அணு கினர் என்பதும் முக்கியமான விடயங்களா கும். ‘இலங்கைத்தமிழர் பற்றிய போர்த்துக் கேய மனப்பான்மைகள் சில ' (15501658) என்னும் கட்டுரையில் பேராசிரியர் சி. ஆர். பொக்ஸர், இவ்வாரம்ப காலக் கத்தோலிக்கர்கள் (போர்த்துக்கேயர்) கதே சப் பண்பாட்டைச் சரிவர நோக்கவில்லை யென்றும், கிறித்துவப் பிரசாரத்துக்காக மாத்திரமே தமிழைப் படிக்கும் ஒருபண்பு காணப்பட்டதாகக் கூறுகிறர். தமிழகத் திற் கூடத் தத்துவபோதக சுவாமிகள் (1577-1656) ஒருவரைத்தவிர மற்றைய கத்தோலிக்கக் குருமார் இத்தகைய மனப் பான்மையைக் கொண்ட வர் களாகவே காணப்பட்டனர் என்று கூறுவர். பேராசி ரியர் அரசரத்தினம் அவர்களும் இக்கருத் தினை ஏற்றுக்கொள்வர்.
போர்த்துக்கேய ஆட்சிக்காலம்வரை (1658) இக்கூற்றுப் பொருந்துவதாகவிருக் கலாம். ஆனல் இலங்கையில் ஒல்லாந்த ஆட்சியில் கத்தோலிக்க மதம் பெருத்த ஆக்கினைகளுக்குட்படுத்தப்பட்ட பொழுது மக்கள் வாழ்க்கையிற் கத்தோலிக்கம் சுவ றியிருந்த தன்மை காரணமாகவே அது அழியாமற் தப்பியது எனலாம். ஆங்கிலேய ஆட்சிவந்தபொழுது இறப்பிற மா துக் கிறித்தவர்கள் மதம்மாறியது போன்று

Page 35
கத்தோலிக்கர்கள் ஒல்லாந்த ஆட்சியின் கீழ் மதம் மாறவில்லை. கத்தோலிக்கரின் இம்மத ஈடுபாடு தொடர்ந்து பேணப்பட் டது. ; பேணப்படுகிறது.
இப்பேணுகைக்கும், பெருக்கத்துக்கு மான காரணத்தை விளங்கிக் கொள்வதற் குக் கத்தோலிக்க சமூக அமைப்பை அறி ந்துகொள்வது அத்தியாவசியமாகின்றது. காலகட்டத்தில் அதிகாரப்பட்டு நிற்கும் மட்டக்களப்புப் பிரதேசம் கண்டி மன்ன ரின் ஆட்சியின்கீழ் வந்தது. எனவே இலங் கையின் வடபகுதியில் கத்தோலிக்கத்தின் சமூக அடிப்படையையே அறிந்துகொள்ள வேண்டும்.
கத்தோலிக்கருக்குப் பின்வந்த புரட் டஸ்தாந்திகள் தனிமனிதர்களை மதமாற் றஞ் செய்வதிலே அதிக ஈடுபாடு காட்டி னர். ஆனல் முன்வந்த கத்தோலிக்கரோ குடும்பங்களையே தமது மதமாற்றத்துக் கான கூறுகளாகக் கொண்டனர். 'குழு மம்' பிரதேச அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் அமைந்தது. பல்வேறு சாதியினரும் மதம் மாற்றப்பட்டனரெனி னும் ஒவ்வொரு சாதியினரும் பிரதேச நிலையில் மதம் மாற்றப்பட்டனர். உதார ணமாக அச்சுவேலியில் வெள்ளாளர் மதம் மாற்றப்பட்டனர் எனும்பொழுது ஒரு சுற்றுவட்டத்திலுள்ள சகல வெள்ளாளர் களும் மாற்றப்பட்டனர். மெதடிஸ்த, அமெரிக்கன் மிசனரிமார் இரண்டொரு குடும்பங்களையே மாற்றினர். மேலும் இத் தச் சாதிக் குழும மதமாற்றங்கள் பாரம் பரிய இந்துமதசமூகத்தில் முக்கியத்துவம் வகிக்காத குழுமங்களிடையே வன்மையாக
நிலைநிறுத்தப்பட்டது.
மேலும் மன்னர் போன்ற சில இடங் களில் பிரதேசத்தின் பெரும்பான்மையான பகுதி கத்தோலிக்கத்துக்குட் கொண்டு வரப்பட்டது.
சமூக மேல்மட்டத்தினர் குறைவாக வும், நடுநிலைப்பட்டவர்களும், கீழ்மட்டத் தினருமே அதிகமாகவும் மதம் மாற்றப்

تھتھ
பட்டபொழுது, இப்புதுமதம் தொடர்ச்சி யாகத் தொழிற்படுவதற்கு வேண்டிய இலக்கியங்கள் மேல்மட் ட த் தி னரின் தேவைகளிலும் பார்க்க ஒரு கீழ்மட்டத்தி னரின் தேவைகளைப் பூர்த்தி செய்வனவாக அமைதல் அத்தியாவசியம்.
அதாவது ஈழத்துத் தமிழ்க் கத்தோ லிக்கர்களின் சமூகப் பின்னணி அவர்களி டையே தோன்றிய இலக்கியங்களை எவ் வாறு நிர்ணயித்துள்ளது என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும்.
அடுத்து இம்மதக் குழுவினரிடத்தே இலக்கியக் கையளிப்பு (ஒருதலைமுறை மற் றைய தலைமுறைக்கு இலக்கியத்தைக் கைய ளிக்கும் முறை) எவ்வாறு நிகழ்ந்தது என் பது பற்றியும் தெளிவாக அறிந்து கொள் வது அவசியமாகும்.
அச்சு முறைமையினைத் தமிழுக்கு அறி முகஞ் செய்து வைத்தவர்கள் கத்தோலிக் கரேயெனினும், அக்காலத்தில் அச் சு முறைமை நன்கு பரவவில்லையென்பதையும், இலங்கையில் போர்த்துக்கேயர் காலத்தில் கத்தோலிக்கர்கள் தமிழில் எந்நூலையும் அச்சிடவில்லையென்பதையும், அ வ் வாறு நூல்கள் அச்சிடப்பட்டிருப்பினும், மிகமிகப் பெரும்பான்மையான கத்தோலிக்கர்எழுத் தறிவுப் பாரம்பரியமுடைய சாதிகளைச் சாராதவர்கள் என்பதையும் நாம் மனத் திருத்திக் கொள்ளுதல் அவசியம்.
இவ்விடயத்தில் சுவாமி ஞானப்பிர காசர் தரும் தகவல்கள் மிக முக்கியமான வையாகும். வண. சுவாமி ஹென்றி 44 GG) IT Gör (Dr. Henry Joulain U.M.I. Bishop of Jaffna 1898-1918) yourisGilgir கீழ் யாழ்ப்பாணத்தின் கத்தோலிக் கம் வளர்ந்த வரலாற்றைக் கூறும் XXV Years of Cathotic Progress 6TS9) lb SLDgi (5íT6élä) (1925), சுவாமி ஞானப்பிரகாசர் 1870க் குப் பின்னரே யாழ்ப்பாணத்தில் கத்தோ லிக்கர் அச்சுமுறைமையை வன்மையாகப் பயன்படுத்தினர் என்றும், 1834இல் கத்

Page 36
24
தோலிக்கர்கள் புரட்டஸ்தாந்திகளின் அச்சி யந்திரசாலைகளையே பயன்படுத்த வேண்டி யிருந்ததென்றும், அதற்கு முன்னர் புத்தகங் கள் எழுதப்பட்டதும் பிரதியெடுப்போரால் கையெழுத்துப் பிரதிகள் எழுதியெடுக்கப் பட்டனவென்றும் கூறுகின்ருர், அச்சுயந்திர வசதியில்லாமை காரணமாகத் தம்மைவிட அமெரிக்க மிசனரிமார் அதிக முன்னேற் றத்தைப் பெறக்கூடிய நிலையிலுள்ளன ரென யாழ்ப்பாணத்தின் உயர் கத்தோ லிக்கக் குருமார் கூறியுள்ளனர். இந்து மதத்தை எதிர்த்து வெளியீடுகளை விடுவதில் இவர்களிடையே ஒர் ஒற்றுமை காணப்பட் -து, அதனுலேதான் அமெரிக்க மிசன் அச்சகத்திற் கத்தோலிக்க நூல்களும் அச் சிடப்பெறலாயின. s
ஆயினும் அச்சுச்சாதனத்தின் முழுப் பயனையும் அனுபவிக்க முடியாத கூட்டத் தினரிடையே கத்தோலிக்கம் பரவியிருந்த மையும், அந்தக் கூட்டத்தினரின் எழுத்த றிவு வளர்ச்சிவேகம் பெரிதாகவிருக்கவில்லை யென்பதும் மிக முக்கியமான வரலாற்றுத் தரவுகளாகும்.
எனவே அத்தகைய நிலையினேரின் நிலைக்கு ஏற்ற இலக்கியங்கள் அத்தியாவ சியமாகின்றன.
இக்கட்டத்தில் இலக்கியங்கள் என் பன எழுத்து வடிவத்தினதாகவே இருக்க வேண்டியதில்லையென் ப தை யு ம், வாய் மொழி இலக்கியங்களும் மேலே குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்திசெய்யும் என்பதை யும் குறிப்பிடுதல் அவசியமாகும். இப்ப கைப்புலத்தின் பின்னணியிலேயே ஈழத்துத் தமிழ்க் கத்தோலிக்க இலக்கியங்களின் “தொகை’ பற்றியும், “மரபு' பற்றியும் ஆராய்தல் வேண்டும். S. w
III
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளத்தை ஒன்றுதிரட்ட முனைந்தவர்கள் தந்துள்ள ஆசிரியர் பெயர்களிலும், நூற்பெயர்களி லும் இலங்கைத் தமிழிலக்கியத்தில் இடம்

பெறவேண்டிய கத்தோலிக்கப் புலவர்களி னதும் ஆக்கங்களினதும் தொகையளவு வேறுபட்டேயிருந்து வந்துள்ளது. ‘ஈழத் துப் பூதன்றேவனர் காலந்தொடக்கம் கலாநிதி நடேசபிள்ளை காலம்வரையும் இலங்கையில் வாழ்ந்த சிறந்த தமிழ்ப்புல வர்களின் கவிதைக் களஞ்சியம்' என்ற விவரணத்துடனும் 'இந்நூல் ஈழத்துக் கவிதைகளின் களஞ்சியமாக மட்டுமன்றி ஈழத்துச் செய்யுளிலக்கிய வரலாற்று நூலாகவும் விளங்கவேண்டு மென் னு ம் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது' என்ற பதிப்பாசிரிய முகவுரையையும் கொண்டு வெளியிடப்பட்டுள்ள ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (1966) என்னும் நூலில் இடம்பெற்றுள்ள 143 புலவர்க ளுள் கத்தோலிக்கப் புலவர்கள் பத்துப்பே ருக்கும் குறைந்த தொகையினரே இடம் பெற்றுள்ளனர். அத்தொகுதியில் வந்துள்ள கத்தோலிக்க இலக்கியப் பாடல்களுட் பெரும்பாலானவை தொல்சீர் பிரபந்த வடிவிலே அமைந்துள்ளவையாகும்.
அந்நூலில் நிலைமை இதுவாக, ஒரு பிரதேசத்தின் தமிழ்ப்புலவர் சரித்திரத் தைத் தொகுத்துத் தந்துள்ள திரு. ம. பெஞ்சமின் செல்வத்தின் மன்னுள் மாதோட்டத் தமிழ்ப் புலவர் சரித்திரம் 1769-1976 என்னும் நூலில் தரப்பட் டுள்ள 51 புலவர்களுள் 43 புலவர்கள் கத்தோலிக்கர்களாகும்.
யாழ் கத்தோலிக்க அச்சகத்திலும், கொழும்புத்துறைக் கைத்தொழிற் பாட சாலை அச்சகத்திலும், அச்சுவேலி ஞானப் பிரகாச அச்சகத்திலும், மாதகல் தைரிய நாத அச்சகத்திலும் 1925வரை வெளிவந் துள்ள கத்தோலிக்க ஆக்க இலக்கிய நூல் களின் பட்டியலைச் சுவாமி ஞானப்பிரகா சர் முன்னர் குறிப்பிட்டுள்ள நூலிலே தந் துள்ளார். நூல்களின் தொகை 131ஆகும்.
கத்தோலிக்க மேலாண்மையுடை ய பகுதிகளின் பிரதேச இலக்கிய வரலாற்றை நுணுகி ஆராயும்பொழுது இன்னும் அதிக மான நூல்களை அறிய வரலாம். குருநகர்,

Page 37
சில்லாலை போன்ற இடங்களில் இதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்
டும்.
I V
கத்தோலிக்கர்களால் எழுதப்பெற்ற சமய நிலைப்பட்ட ஆக்க இலக்கியங்களை
ஆராயப் புகும்பொழுது, அவ்விலக்கியங்க ளுள் நாடகம், புலம்பல் போன்றவையே பெரும்பான்மையாக இருப்பதை அவதா னிக்கலாம். பெஞ்சமின் செல்வம் தந்துள்ள பட்டியலும், சுவாமி ஞானப்பிரகாசர் தந் துள்ள பட்டியலும் இவ்வுண்மையை நிரூ பிக்கின்றன. ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் காவிய பிரபந்த மரபுக்கே அதிக அழுத்தம் கொடுத்துச் செல்கின்றது. மன்னர் மாதோட்டப் பகுதியின் புலவர் வரலாற்றைத் தொகுத்த பெஞ்சமின் செல் வத்துக்குத் தமது ஆய்வு வட்டத்துள் வரும் புலவர்கள் கூத்தையே பெரிதும் ‘எழுது வது’* முக்கிய விடயமாகின்றது
'நூலிற் குறிப்பிடப்பட்டுள்ள புலவர் கள் புராணம் காப்பியம் போன்ற விரு தப்பா வகைகளுட் செல்லாது தனித்து நாடகங்களை மாத்திரமேன் யாத்தார்க ளென்றேர் ஆசங்கை வின எழுப்பப்படு வதுண்மையே. புராணுதி காவியங்கட்கு நாடகம் எத்தகைமையிலும் பிற்பட்ட தல்ல.
மற்ருெருவகையிற் பார் ப் போ மாயின் உயர்ந்த பொருளாழமுள்ள புராண காவியவகைகள் கற்றுத்தேறிய பேரறிஞர்க்கேயன்றிக் கல்லாதா ரு ம் கண்டுகளிக்கும் வாய்ப்புடைமை நாட கங்கட்கேயன்றி உயர் காவியங்கட் தில்லை.
இராம சரிதையைக் கம்பர் காவிய மாகப் பாட அதே சரிதையை அருணு சலக்கவிராயர் கீர்த்தனை நாடகமாக வும், திருச்செல்வர் சரிதையை அரு எப்பநாவலர் காவியமாகவும், குருகுல தாட்டுத் தேவர் நாடகமாகப் பாடிய தையும் சிந்திக்குக.
மேலும் மன்னர்ப் புலவர்களின் தடவடிக்கைகளே நோக்குமிடத்துச் சிலரேபன்றி ஏனையோர் ஆசிரிய மாணவ

25
முறையிற் கற்றவர்களல்ல, கற்கக்கூடிய சூழலும் அவர்கட்கிருக்கவில்லை. தான் தாமே தமக்கெட்டியவரை கற்றுக்கொண் டதுடன் அறிவுக்கெட்டாத சந்தேகங்களே மட்டுமே கற்றேரிடம் கேட்டறியும் பெற்றி
யுடையவர்களாகக் காணக்கிடக்சிறது. (uš5. ii & iii) • தொல்சீர் இலக்கிய மரபு பேணப்ப
டாததற்கு அமைதி காணும் பெஞ்சமின் செல்வம் அவர்களின் கூற்று நடந்த தவ றுக்கு விளக்கம் கொடுக்கும் தொனியில் அமையவேண்டுவதில்லை. ஏனெனில் ஈழத் துக் கத்தோலிக்கத் தமிழிலக்கியப் பாரம் பரியத்தின் ஆணிவேரே அதுதான். பெரும் பான்மையான கத்தோலிக்க மக்களின்
வாழ்க்கை நிலை காரணமாக அவர்கள் நாடகம் போன்ற அவைக்காற்று கலையை պւն, வாய்மொழிப்பாடல் மரபையும்
கொண்டே தங்கள் மத இலக்கியத் தேவை களைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். இது அப்பாரம்பரியத்தின் பலமேயன்றிப் பலவீனமன்று.
இந்நிலைமையை மனதிற்கொ ன் டு சைவப் பாரம்பரியத்தை நோக்கும்பொ ழுது சைவத்தின் தனித்துவத்தைப் பேணு வதற்குத் தோன்றிய இலக்கிய இயக்கம் வாய்மொழி இலக்கியப் பாரம்பரியத்தைப் புறக்கணித்து வைதீக உயர் இலக்கியப்பாரம் பாரியத்துக்கே இடம் கொடுத்தமை தெரிய வரும். அந்த இயக்கம் எழுத்தறிவுடைய நிலவுடைமையாளரையே தனது களமாகக் கொண்டிருந்தது.
ஒரே மொழிப் பண்பாட்டிலுள்ள ஒரு மதக் கூட்டத்தினருள் ஒருசிலர் தொல் சீர் இலக்கிய மரபையும், மற்றேர் வாய் மொழிப் பாரம்பரிய இலக்கிய மரபையும் பேணமுனையும்பொழுது அச்சமூகத்தில் நில வும் சமனற்ற வளர்ச்சி நன்கு தெரிய வரும்.
கத்தோலிக்க ஆக்க இலக்கியங்களைப் புரட்டஸ்தாந்த ஆக்க இலக்கியங்களுடன் ஒப்புநோக்கும்பொழுது அவற்றுக்கிடையே யுள்ள வேறுபாட்டுக்குச் சமூக அடிப்படை வேறுபாடே காரணம் என்பது புலனகும்.
* - 太

Page 38


Page 39
சுவாமி ஞானப்பிரகா
- கலாநிதி அ. சண்முக
1. முன்னுரை
ஈழ நாட்டிலே, தனிப்பட்ட முறை
யில் தமிழின் பல்வேறு துறைகளிலே ஈடு பட்டு, ஆய்வுகள் பல மேற்கொண்டு, அத் துறைகள் வளரத் தொண்டாற்றியவர்க ளென இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் மட்டக்களப்பு எமக்களித்த முத்தமிழ் வித் தகர் சுவாமி விபுலானந்தர்; மற்றவர் யாழ்ப்பாணத்து நல்லூர் பெற்றெடுத்த பன்மொழிப்புலவர் தவத்திரு சுவாமி ஞானப்பிரகாசர். சுவாமி ஞானப்பிரகாசர் மானிடவியல், வரலாறு, சமயம், சமூகவி யல், மொழியியல், தர்க்கம் ஆகிய துறை களிலே ஈடுபட்டார். அவருடைய ஈடுபாட் டினை எடுத்துக் காட்டுவனவாக அத்துறை களிலே அவர் எழுதிய நூல்கள், கட்டுரை கள், பிரசுரங்கள் ஆகியன விளங்குகின்றன. தான் கொண்ட கொள்கையை எத்தனை ஆதாரங்களால் நிறுவ முடியுமோ அத்தனை ஆதாரங்களையும் தன் ஆய்விலே முன்னி றுத்தி வைக்கும் பண்பினை முனிவரின் எழுத்துக்கள் எல்லாவற்றிலும் காணக்கூடி யதாயுள்ளது. அவர் ஈடுபட்ட துறைகளுள் மொழியியல் துறையே இவ்வாய்வுக் கட்டு ரையின் நோக்குக்கு எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது.
ஈழத்துத் தமிழ் மாணவர்களுக்கு மொழியியல் என்னும் நவீன அறிவியல் துறையை எடுத்துக்காட்டி, அதிற் பல ஆய் வுக் கட்டுரைகளை எழுதி விளக்கி புகழ்பெற் ஒர் காலஞ்சென்ற பேராசிரியர் க. கண பதிப்பிள்க்ள அவர்கள். அப்பேராசானுக்கு
1. apaut GrupÁSu proficir Quarrit: A History ( Fomorafo Straumüsgrasarardt: aSb மொழி ஆர

சரும் மொழியாய்வும்
கதாஸ், B. A., Ph. D. -
முன்னேடியாகவும், ஈழத்திலே மொழியி யல் ஆய்வுக்குக் கால்கோள் விழா நடத்திய வராகவும் திகழ்கிருர் அருட்திரு சுவாமி ஞானப்பிரகாசர். சுவாமி இதனைத் தன் னுடைய வாயாலேயே எடுத்துக் கூறியுள்
GiffTfi :
*மொழிநூல் வேறு, இலக்கணநூல் வேறு. முன்னையது தனிச் சொற்களின் இயல்பையும், அவை தம்முள் அ.ை யும் மாற்றங்களையும் கூறும். பின்னை யது சொற்கள் ஒன்றேடொன்று கூடும் போது முன்னிலை இறுதி நிலைகளிற் கொள்ளும் விகாரங்களை எடுத்தோதும். தமிழில் தொல்காப்பியம் முதலாய பல இலக்கண நூல்கள் எழுந்துள்ளன. மொழி நூல்களோ சமீபகாலத்தில் மட் டும் வெளிப்படத் தொடங்கின ஆகும். மாகறல் கார்த்திகேய முதலியார் இயற் றிய மொழிநூல்' (1913) இந்தநிலை யில் முதற் செய்த பிரயத்தனமாய் மேலும் பல திருத்தங்களுக்கு இடனய்க் கிடக்கின்றது. டாக்டர் பி. எஸ். சுப் பிரமணிய சாஸ்திரியார் சென்ற வரு ஷம் வெளியிட்ட தமிழ்மொழி நூல்1
உண்மையில் இலக்கண ஆராய்ச்சிநூலே அன்றி மொழிநூல் ஆகாது. எனது **தமிழ் அமைப்புற்ற வரலாறு' (1927) ‘தமிழ்ச் சொற்பிறப்பு ஆராய்ச்சி’ (1932) எனும் இரண்டும் யதார்த்த மான மொழி நூலினுக்குரிய அத்திவா ரங்களையிட்டன எனச் சொல்லலாம்.'9
f Grammatical Theories in Tamil Madras 1934 nto ui, 26

Page 40
28
சுவாமியவர்கள் ஈழநாட்டு மொழியியல் ஆய்வுக்கு மாத்திரமன்றி, தமிழ்மொழியி
லாற்றுக்கு முன்னேடி'என்பதை நாம் ஏற் றுக் கொண்டோமெனினும், அவர் மொழி நூல் இலக்கண நூல் இரண்டுக்குமிடையே காணப்படும் வேறுபாடு என்ன என்று கூறி யது தற்கால மொழியியற் கோட்பாடுக ளுக்கு ஏற்றதல்ல என்பது இங்கு குறிப்பி டுதல் வேண்டும். அப்படியாயின், மொழி நூலுக்கும் இலக்கண நூலுக்குமிடையே யுள்ள வேறுபாடு யாது?
நாம் ஒரு நாளில் எமது பேச்சிலே எத்தனையோ வாக்கியங்களை உண்டாக்குகி ருேம். எம்முடைய வாழ்நாளிலே நாம் உண்டாக்கும் வாக்கியங்களோ கணக்கற் றன. எண்ணமுடியாத இவ்வாக்கியங்களை உண்டாக்க எமக்குச் சில எண்ணக்கூடிய மொழிவிதிகள் உதவுகின்றன. இவ்விதி களை நாம் உள்ளார்ந்தமாக அறிந்துள் ளோம். அதனல் ஒவ்வொரு தடவையும் நாம் பேசும்போது இவ்விதிகளை நினைத்துக் கொண்டுதான் பேசுகிருேம் என்பதல்ல. தமிழ்மொழிபற்றிய விதிகளை தமிழராகிய நாம் எம் உள்ளுணர்வால் உணர்ந்திருக் கிருேம். பிற மொழியாளர் ஒருவர் பிழை யாக ஒரு தமிழ் வாக்கியத்தைக் கூறியவு டன் தமிழ் இலக்கணத்தை வரன்முறையா கக் கற்காத எந்தத் தமிழனும் அவ்வாக்கி யப் பிழையை உணர்ந்துவிடுகிருன். இத னைத்தான் மொழிபற்றிய உள்ளுணர்வு என்கிருேம். ஆகவே இலக்கணம் என்பது மொழிக்கு அடிப்படையான வாக்கியங்களை யும், அவ்வாக்கியங்களிலே இடம் பெறும் உறுப்புகளையும் பற்றிய விதிகளை வகுத்துக் கூறுவதாகும். ஆனல் மீொழியியலோ அவ் விதிகளைப்பற்றியும், மொழி பேசுவோரின் உள்ளுணர்வு பற்றியும் பொதுவானவை
3. இது மொழியின் "பிறப்பாக்க" (generati சுருக்கமான விளக்கத்திற்குப் பார்க்க L pp. 43-46 w

யும், மொழிக்குமொழி சிறப்பானவையு மான கோட்பாடுகளை வகுத்துக் கூறுவதாக அமைகின்றது.
மொழி நூலுக்கும் இலக்கண நூலுக் குமுள்ள வேறுபாடுபற்றிய சுவாமியின் விளக்கம் எப்படி அமையினும் அவர் குறிப் பிட்ட இந்நூல்களும் தமிழர் ஒருவராலே முதன்முதல் தமிழில் எழுதப்பட்ட மொழி நூல்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. இவ்விரு நூல்களைவிட அவர் இத்துறையில் எழுதிய ஏனையவற்றையும் இச்சந்தர்ப்பத் தில் நிரைப்படுத்திக் காட்டுதல் பொருத்த மாக அமையும் என எண்ணுகிறேன். அவ ருடைய நூல்களாவன:
1. தமிழ் அமைப்புற்ற வரலாறு சுன்ன
கம், இலங்கை, 1927 2. தமிழ் சொற் பிறப்பா ராய்ச்சி, St. Joseph's Catholic Press, Jaffna 1932 3. தமிழ்மொழி ஒப்பியல் அகராதி (6 பாகம்) திருமகள் அழுத்த கம் சுன்னகம். 1938 4. தமிழ்மொழி ஆராய்ச்சி, கட்டுரைத் தொகுப்பு-1 ஞானப்பிரகாசர் ஆச்சிர மம் திருநெல்வேலி: யாழ்ப்பாணம். 5. An English-Tamil Dictionary (605
யெழுத்துப் பிரதி.)
அவருடைய ஆய்வுக் கட்டுரைகளாவன.
1. “The Origin of Language: A New
Theory' Madras Christian College Magazine Oct. 1929 .
2. The Proposed Comparative Tamil
Lexicon' - The Jaffna Catholic Guardian. 1929. PP. 1-34.
e) ப் பண்பு என மொழியியலாளர் கூறுவர். இது பற்றிய yons, J. Chomsky, Fontana Modern Masters, 1970.

Page 41
3. "Radical Relationship between the
Dravidian and Indo-European Languages' New Review. Nov 1936
4. "Some Laws of Dravidian Etymology"
The Anthropos Vol. xi. pp. 129-54
5. “The Dravidian Element in Sinhalese The Anthropos Vol. XXXii 1937. pp. 55 1-70
6. “Root Words of the Dravidian Group
of Languages'
7. "pedigree of Words." Pamphlet, 8. “Sumerian and Tamil' Pamphlet. 9. "Origin of the Tamil Language' 10. “Linguistic Evidence for the Common Origin of the Dravidians and Indo Europeans" Tamil Culturc Vol. ii: 1 Jan. 1953. p. p. 88-112
11. “Dravidian and Indo-European Langu
ages' New Review. 1936.
2. தொடர்புக் கோட்பாடு
2.1. திராவிட மொழிகளும், இந்தோஐரோப்பிய மொழிகளும் இரு வேறுபட்ட குடும்பங்களென அறிஞர் பலர் நிறுவியவி டத்து, அவ்விரு குடும்ப மொழிகளுக்கும் அடிப்படையாயமைந்த ஆதிச் சொற்கள் ஒரு வகுப்பினவே என்பது சுவாமி ஞானப் பிரகாசருடைய கொள்கையாகும். ஒப் பீட்டு மொழியியல் ஆய்வின்மூலம் இச் கொள்கையினை நிறுவப் பல கட்டுரைகளைச் சுவாமியவர்கள் எழுதியுள்ளார். இவரு டைய ஆராய்ச்சியினை விளங்கிக் கொள்வ தற்கு ஒப்பீட்டு மொழியியல் ஆய்வின் மூலம் இக்கொள்கையினை நிறுவப் பல கட் டுரைகளைச் சுவாமியவர்கள் எழுதியுள் ளார். இவருடைய ஆராய்ச்சியினை விளங் கிக் கொள்வதற்கு ஒப்பீட்டு மொழியி யல் ஆய்வுபற்றிய வரலாற்றினை மேலெ ழுந்தவாரியாக அறிந்துகொள்ளுதல் பய னுடையதாகும்.

29
பொதுவாகக் கூறுமிடத்து மொழி களுக்கிடையே காணப்படும் "ஒத்த பண்பு கள் இரு வகையின: சொற்களுக்கிடையே காணப்படும் ஒத்த பண்புகள், இலக்கண அமைப்புக்களிடையே காணப்படும் ஒத்த பண்புகள். தமிழையும் மலையாளத்தையும் ஒப்பிட்டு நோக்குவோமெனில், இரு மொழிகளிலும் பொதுவான பல சொற் கள் இருப்பதை நாம் அறியலாம். ஆனல் தமிழுக்கும் இந்திக்குமிடையே மிகச் சொற் பமான பொதுச் சொற்கள் இருப்பதையும் தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்குமிடையே எவ்விதப் பொதுச்சொற்களும் இல்லாம லிருப்பதைக் காணலாம். ஆகவே தமிழும் மலையாளமும் மிக நெருங்கிய தொடர்பு உடையன என்றும், தமிழும் இந்தியும் வெகு தூரத்துத் தொடர்பு S2.6ð) Hll 16ðs என்றும்; தமிழும் ஜப்பானிய மொழியும் தொடர்பில்லாதன என்றும் நாம் கூறு வோம். இரு மொழிகள் நெருங்கிய ‘தொடர்புற்றன’’ என்று கூறும்போது, அவ்விரு மொழிகளும் முன்னர் ஏதோ வொரு மொழியிலிருந்து வளர்ந்துள்ளன என்று கூறுதற்கொப்பாகும். அதாவது இவையிரண்டும் ஒரு குடும்ட மொழிகள் என்று இன்னுெரு வகையிலே கூறலாம். ஐரோப்பாவின் பெரும்பாலான மொழி களும், ஆசியாவின் பல மொழிகளும் இந்தோ-ஐரோப்பியக் கு டு ம் பத் தைச் சார்ந்தனவாயமைந்தன. இக்குடும்பத்தி லேயே ஜெர்மனிக், ஸ்லாவனிக்,ருேமான்ஸ், இந்தோ-ஐரானியன் கெல்றிக் போன்ற பல கிளைக்குடும்பங்கள் உள்ளன. வேறு சில மொழிக்குடும்பங்களாவன: செ மி ற் றிக், திராவிடம், பிர்னே-உக்கிறியன், சீனேதிபேத்தியம், அல்ற்ருய்க் என்பனவாகும்.
இவ்வாறு மொழிகளுக்கிடையேயுள்ள தொடர்புகளைக் கண்டறிந்து, அவற்றைக் குடும்பங்களாக இனங்கண்டுகொள் ஞ ம் ஆய்வு பத்தொன்பதாம் நூற்றண்டு மொழியியலாளர் பலரால் மேற்கொள்ளப் பட்டது. இத்தகைய ஆய்வு ஒப்பீட்டு மொழியியலாய்வு என அழைக்கப்பட்டது.

Page 42
30
மொழியை அறிவியலடிப்படையில் ஆராயும் தன்மை பத்தொன்பதாம் நூற் முண்டிலேயே ஆரம்பித்தது. வரலாற்று நோக்கில் மொழியை அணுகும் (p65 D வலுப்பெறத் தொடங்கியது. இந்நோக்கு மொழிக்கு மாத்திரமன்றி, சட்டம், வழக் கங்கள், நம்பிக்கைகள், சமூக பொருளா தாரக் குழுக்கள் ஆகிய எல்லா மனிதாய நிறுவனங்களுக்கும் பொருத்தமாய  ைம ந் தது. இவை யாவும் தொடர்ந்து மாற்றத் துக்குள்ளாவன. ஆகவே அவற்றின் தன் மைகளை ஒரு குறிப்ட்ட காலகட்டத்தில் சில கருது வயப்பட்ட கோட்பாடுகளுக் கமைய விளக்குவதைவிட, அவற்றின் வளர்ச்சிக் கட்டங்களையும் அவற்றிற்கான காரணிகளையும் விளக்குதலே பொருத்த DIT (gilb. இவ்வரலாற்று நோக்குப் பல மொழிகளின் பண்புகளை ஆயுமிடத்து அவற்றின் வளர்ச்சி நிலைகளையும் தொடர்பு நிலைகளையும் காணுதற்கு மொழியியலா ளரை ஊக்கியது.
இச்சந்தர்ப்ப்த்தில், இந்தியா வுக் கு வந்த மேலை நாட்டாரிடையே சேர் வில்லி யம் ஜோன்ஸ் போன்ற ஆராய்ச்சியாளரும் வந்து சேர்ந்தனர். இவ்வறிஞர்களுக்கு சமஸ்கிருத மொழி பெரு விருந்தளித்தது. அதற்கும் கிரேக்க லத்தீன் மொழிகளுக்கு மிடையே ஒற்றுமைகள் பல இருப்பதைக் கண்டறிந்தனர். இவற்றையொட்டி மேற் கொண்ட ஆய்வுகளின் பலனே இந்தோஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் தோற் றமாகும். தொடர்புள்ள மொழிகள் முன் னைய ஏதோவொரு மொழியின் உருவேறு பட்ட வடிவங்களாயமையினும், வரலT ற்று நோக்கில் பின்னேக்கிப் பார்க்கும் போது அம்மொழிகளுக்கிடையே வேறு பாடுகள் குறைவாகவேகாணப்படும் என்ற அடிப்படையில் ஆராயப்புகுந்த அறிஞர் கள், இரு மொழிகளிலே பல பொதுச்சொற் கள் இருப்பதால் மாத்திரம் அவை தொடர் புற்றன என்று கூறிவிட முடியாது என்றும், அம்மொழிகளின் இலக்கண அமைப்புகளில் காணப்படும் ஒற்றுமைகளே அம்மொழி
4. இது பற்றி விபரமாக அறிய, பார்க்க:
Cambridge: 1968. pp. 21-38.

கள் தொடர்புற்றன என்பதைக் தெளிவா கக் காட்டும் என்றும் கூறினர். சொற்களிலே ஒற்றுமை காணப்படின், அச்சொற்கள் தொடர்புற்ற அவ்விரு மொழிகளின் அடிப் படைச் சொற்களா என்பதை நோக்கவேண் டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்." இம்முறையிலேயே மேலைத்தேய ஒப்பீட்டு மொழியாய்வு வளர்ச்சியுற்று வந்தது.
2-2 தமிழ் அடிச்சொற்களே ஆதிச்சொற் கள் என்றும், அவ்வடிச் சொற்களினின்றே ஆரியச்சொற்கள் பிறந்தன என்பது சுவாமி ஞானப்பிரகாசருடைய கொள்கையாகும். தன்கொள்கையினை நிலைநிறுத்தப் பல்வேறு வகையான உதாரணங்களை எடுத்துக்காட்டி விளக்கிச் செல்கின்றர். அவற்றுள் ஒன் றினை அவருடைய கூற்றுக்களின் மூலமே இங்கு காட்டுகிறேன்.
“காற்றைக் குறித்தற்கு சமஸ்கிருதத் தில் வாத, வாயு எனுஞ் சொற்கள் உண்டு. இவ்வாதச் சொல்லே லத்தீனில் உவந்து-ஸ் (Ventus) எனவும், ஆங் கிலத்தில் உலின்ட் (Wind) எனவும், லித்துவேனியத்தில் உவெஜ-ஸ் (Weies( எனவும் நிற்கும் என்பர் ஐரோப்பிய மொழி நூலோர். இவ்வுருவங்களுக்கு அடி யாது எனத் தேடுங்கால் எமது தமிழ் ஊதையே என்று தோன்றும். ஊதை ஆதியில் ஊத என நின்றதென் பதற்கு மலையாளம் முதலிய பாகதங்க ளில் ஜகாரவிற்றுச் சொற்கள் அகர வீருய் நிற்பது சான்று. இனி உகரம் ஆதி வகரம் எனும் இரு ஒலிகளும் இதழ் குவித்து உயிர்ப்பு விடுவதினல் எழுகின் றமையால் ஒத்த பிறப்புடையன என் பது ஒலிநூல் முடிபு. தமிழில் உழல் (திரும்பு) எனும் சொல் (வள) வளை என வந்தது போல், எமது ஊதைச் சொல் வடமொழியில் உ-வாத என்ற கிய பின் வாத என நின்றது. அப்பால் உ-வாத இடையில் அநுநாசிகம் வரப் பெற்று உவாந்த, உவேந்த, உவெந்து-ஸ் எனக் காற்றிற்கு லத்தீனியச் சொல்லா
Lyons, J. Introduction to Theoreticait Linguistic

Page 43
யிற்று. உவெந்த் எனும் உருவந்தான் உவெஞ்ச, உவெஜ-ஸ் என லித்துவேனி யமாயிற்று.”*
இவ்வாறு சுவாமியவர்கள் எடுத்துக்காட் டும் உதாரணத்தை அரண்செய்யும் வகை யிலே சில மொழியியல்புகளைக் கோட்பாடு களாக முதலில் அவர் கூறியுள்ளதையும் நாம் மனங்கொள்ள வேண்டும். அக்கோட் பாடுகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்த GOTLD.
(அ) தமிழ்மொழி ஆரம்பத்தில் அ, இ, உ, எ எனும் நான்கு இடச் சுட் டுக்களை முதன்மையாகக் கொண்ட அடிச்சொற்களையே கொண்டமைந் திது.
(ஆ) இவ்வுயிர் முதற் சொற்களினின் றே மெய்முதற் செள்ந்கள் பிறந் தன. தாழம் எனுஞ் சொல் 'ஆழ’ த்தினின்று வந்ததென்றும், சால் ஆல் என்ற சொல்லின் திரிபு என் றும் உதாரணம் கTட்டுவர்.
(இ) தமிழ் உயிர் முதற்சொற்களே இந்தோ-ஐரோப்பிய மொ ழி ச் சொற்கள் பிறப்பதற்கான அடிச் சொற்களாகும்.
2. 3. இனி, சுவாமியினுடைய கொள்கை விளக்கத்தினை மதிப்பீடு செய்வோம். அவ ருடைய ஆய்விலே பல குறைபாடுகளை உட னடியாக எடுத்துக் கூற முடியுமெனினும் அதிலுள்ள சிறப்பினையே நான் இங்கு வலி யுறுத்த விரும்புகிறேன். தமிழ் அடிச்சொற் களினின்று சமஸ்கிருத, லத்தீன், லித்துவே னிய மொழிச்சொற்களைப் பெறுவிக்கும் முறையில், எனக்கு உடன்பாடு இல்லையெ னினும், சுவாமியவர்கள் எடுத்துக்காட்டி யுள்ள பல்வகைப்பட்ட உதாரணங்களி னின்று ஒர் உண்மை மறக்கமுடியாதவாறு புலப்படுகின்றது. அதாவது, திராவிடம்இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் சொற் களை மாத்திரம் எடுத்துக்கொண்டாலே,
5. தமிழ்மொழி ஆராய்ச்சி. பச். 8 6. இச் சுட்டுக்கள் பற்றி இக்கட்டுரையின் 3வும் 7. இவரைப்பற்றிய அறிய, பார்க்க: Lyons,

31
அவற்றுள் பல அடிப்படையான ஒற்றுமை களை இனங்கண்டு கொள்ளக் கூடியதாயுள் ளது. இவ்வொற்றுமையை மாத்திரம் வைத்துக்கொண்டு, ஒரு குடும்ப மொழியி லிருந்துதான் மற்றக் குடும்பமொழி தோன் றியது என்று கூறிவிடமுடியாது. இதுபற் றிப் பின்னர் - விளக்கப்படும். அ த ர் கிடையில் இவ்வொற்றுமைப் பண்பினை தொடர்ந்து விளக்கமாக ஆராய்வோம்.
மொழி ஆய்வில் இந்த நூற்ருண்டின் நடுக்கூற்றின் பின்னர் சில புரட்சிகரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. பேரா சிரியர் நோம் சொம்ஸ்கி" என்பவரே இத்த கைய புரட்சிகரமான கருத்துக்களை முன் வைத்தவராவர். அவருடைய கருத்துக்கி ளுள் ஒன்று பின்வருமாறு அமைகின்றது. தமிழ், ஆங்கிலம், சீனம், பிரெஞ்சு போன்ற குறிப்பிட்ட மொழிகளுக்கான இலக்கண விதிகளை நிச்சயப்படுத்தும் பொதுக்கோட்பாடுகள் எல்லா மனித மொழிகளுக்கும் பொதுவானவை. இப் பொதுக்கோட்பாடுகள் உயிரியல் அடிப்ப டையில் நிச்சயப்படுத்தப்படு கி ன் ற ன. அதாவது இப்பொதுக்கோட்பாட்டு அறிவு குழந்தைகளுக்குப் பெற்றேரிடமிரு ந் து பிறப்பியலடிப்படையில் கிடைக்கின்றது. மனிதமொழிகள் எல்லாவற்றுக்கும் பொது வான சில அடிப்படைத் தன்மைகள் உண்டு என்னும் சொம்ஸ்கியின் கருத்தை ஒட்டிப் பல்வேறு அறிஞர்கள் அவ்வடிப்படைத் தன்மைகள் எவை என்பதை ஆராய்வு திலே ஈடுபட்டுள்ளனர். அப்பண்புகளே ‘உலக மொழியியற் பண்புகள் (Linguistic Universals) என்று பெயரிட்டு ன் ள ன ர். சுவாமி ஞானப்பிரகாசருடைய ஆராய்ச்சி யிலிருந்து அவர் ஒப்பிட்டு ஆராயும் பல மொழிகளைப் பொறுத்தவரையில் சொல் லமைப்பிலே சில பொதுத் தன்ழைகள் வெளிப்படுவதை நாம் உணரலாம். உலக மொழிகளின் சொல்லமைப்பை ஒட் டிப் பொதுப்பண்புகளை ஆராய எண்ணு
பிரிவு கூர் . Chorns

Page 44
92
வார்க்கு இவருடைய விளக்கங்கள் துணை புரியுமென்பது எனது எண்ணம்.
இனி, ஊதை என்னும் தமிழ்ச்சொல்லி லிருந்தே வாத, வெந்துஸ், வின்ட், வெஜஸ் ஆகிய சொற்கள் பிறந்தன என் னும் சுவாமியின் கொள்கைக்கு அடிப்படை யாக அமைவது, 'தமிழ் உயிர்முதற் சொற்களே ஆரியச் சொற்கள் பிறக்கக் காரணமான அடிப்படைச் சொற்கள்’’. என்னும் அவருடைய கோட்பாடேஆகும். இக்கோட்பாட்டிற் காணப்படும் குறை பாடு தெற்றெனப் புலப் படு கி ன் ற து. சுவாமி அவர்களுடைய கோட்பாட்டின் படி ஆரம்பத்தில் உயிர்முதல் வேர்ச்சொற் களே இருந்தன என்றும், அவற்றினின்றே மெய்முதற் சொற்கள் பிறந்தன என்றும் கொள்ளப்படும். அப்படியாயின் இந்தோஆரிய மொழிகளில் உயிர்முதல் வேர்ச் சொற்கள் இருக்கவில்லையா என்னும் வின வுக்கு மறுமொழி கூறுவது கஷ்டமாகும். அத்துடன் மேற்படி ஊதைச் சொல்பற்றிக் கூறுமிடத்து சுவாமியவர்கள், ஊதைச் சொல் உத் எனும் அடிச்சொல்லிலிருந்து பிறந்தது என்று கூறுமிடத்து:
'இவ் உத் எனும் தலையடி உ எனும் சேய்மைச் சுட்டும் தாரவியஞ்சளமுஞ் சேர்ந்து உருவானது. சேய்மையாக்கு தல், முன்னகத் தள்ளுதல் எனும் பொருள் உளது. வடமொழியிலும் உத் (ud) எனும் உபசருக்கத்திற்கு மேலே, சேய்மையில் எனும் பொருள் இருத்த லையுங் காண்க.*
என்று கூறியுள்ளதை நோக்குக: ஊதை எனும் தமிழ்ச் சொல் உத் எனும் அடியி லிருந்து பிறந்தது என்றும், ஊதையிலிரு ந்து சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் சொற்கள் தோன்றின என்று சுவாமி அவர் கள் கூறினல், சமஸ்கிருத. உபசர்கமாகிய
8. தமிழ்மொழி ஆராய்ச்சி பக். 9.
. சுவாமி ஞானப்பிரகாசர் : தமிழ் அமைப்புற்ற 10. தொல். எழுத்து 31ஆஞ் சூத்திர உரையில்
எகரம் வினுட்பொருள் உணர்த்தலுங் கொ? 11. தழிழ் மொழி ஆராய்ச்சி பக். 4.

உத் என்பதிலிருது தமிழ் ஊதை, ஏனைய ஐரோப்பியச் சொற்கள் ஆகியவை தோன் றியிருக்கலாம் என்று கூறுவதும் தவருகி விடாது. ஏனெனில் ஒரு மொழியிலுள்ள இடைச்சொற்கள் அல்லது உபசருக்கங்கள் என்பன அம்மொழியின் அடிப்படை வடி வங்கள் என்று ஒப்பீட்டு மொழியியலாளர் கருதுவர். ஆகவே சமஸ்கிருத உபசர்க்க மாகிய உத், அம்கிொழியின் அடிப்படை உருவமாகும். அது தமிழ்மொழி ஊதையி லிருந்து பிறந்தது என்று சுவாமி அவர் களே கூறமாட்டார். அப்படிக்கூறின், அவ ருடைய கோட்பாடுகள் யாவுமே பிழைத்து விடும். ஏனெனில் "உ" வின் திரிபே ഉണ്ണ്' என்பது சுவாமியினுடைய கருத்தாகும்."
3. கால-இட சம்பந்தமும்
சொற்களும்
3. சுட்டெழுத்துக்கள் எனத் தமிழ் இலக்கணகாரர் g9ک وہ 9 وH. என்னும் மூன்று எழுத்துக்களையே கூறுவர். இம் மூன்று எழுத்துக்களுடன் எ என்னும் எழுத் தினையுஞ் சுட்டெழுத்தாகக் கூறுகிருர் நச் சினர்க்கினியர்.19 ‘அகரம் உகரம் இக ரம் எகரம் எனுஞ் சுட்டுக்களை முதல் அங்க மாகக் கொண்ட நான்கு சொற் கூட்டங் களிலுமே உயிர்முதற் சொல்லெல்லாம் அடங்கும்’11 என்பது சுவாமி ஞானப் பிரகாசரின் கொள்கையாகும். அத்துடன் இச்சுட்டுக்களின் பொருள்பற்றிக் கூறுமி டத்து,
‘இட்ம்பற்றியனவாய், தமிழ் மக்களின் ஆதிப் பேச்சுக்களாய், எந் தமிழ்மொழிப் பரப்பு முழுதினுக்கும் மூலவேர்களாய் நின்ற சொற்கள் இலக்கணவாசிரியரால் சுட்டுக்கள் என அழைக்கப்படுபவைக ளாம். இச்சுட்டுக்கள் அ, இ, உ என் னும் மூன்றுமே என்பது அன்னேர் மத
வரலாறு பக். 15 நச்சினுர்க்கினியர் 'தன்னின முடித்தல் என்பதஞள் ள்க’ என்று கூறுவர்.

Page 45
மாயினும், யாம் எகரம் எனும் நான் காவதோர் சுட்டையும் அவற்றேடு சேர்த்தல் வேண்டு ம்....... ப ண் டை நூலாசிரியரானேர் எகரத்தைச் சுட்டா கத் தெளிக்காமை மட்டுமன்று, தாம் எடுத்தாண்ட அகரமாகிய சுட்டுக்களின் பூர்வ அர்த்தங்களையும் விளக்க அக்கறை யில்லாதோராயினர். தமிழரின் புரா தன சொல்வழக்குகளை ஒப்புநோக்கித் துருவி ஆராயுங்கால், அகரம் முதற் கண் அண்மையையும், உகரம் சேய்மை யையும் இகரம் கீழுறுந் தன்மையையும் எகரம் மேலுறுந் தன்மையையும் சுட்டு கின்றனவாமென்பது பெறப்படும்.'"
என்று சுவாமி குறிப்பிடுகிறர். சுவாமியி g)1600 uu மேற்படி கூற்றுக்களிலிருந்து மூன்று முக்கிய உண்மைகள் புலப்படுகின் றன. ஒன்று தமிழ் இலக்கணகாரர்(தொல் காப்பியர் தொடக்கம் ஆறுமுகநாவலர் வரை எகரத்தைச் சுட்டெழுத்தாகக் குறிப் பிடாதபிழை சுட்டப்பட்டமை. இரண்டு, சுட்டுக்களின் பொருள்பற்றித் தமிழ் இலக் கணகாரர் விளக்காமை. தமிழ் இலக்கண காரரோ உரையாசிரியர்களோ சுட்டெ ழுத்துக்களின் இட சம்பந்தமான பொருளை விளக்கினரில்லை. இவர்களுள் சிவஞான முனிவர் ஒரு நுண்ணிய விளக்கங் கொடுத் திருப்பதை இங்கு குறிப்பிடவேண்டும். சுட் டெழுத்துக்கான உதாரணங்களில், அவன் இது போன்ற சொற்களையும், அம் மனி லன், இப்பக்கம் போன்றவற்றையும் ஒப்பு நோக்கிப் பார்க்கும்பொழுது முதல்வகை யான சுட்டெழுத்துக்களைத் தம்முள்ளே கொண்ட சொற்களாயமைய இரண்டா வது GGOstigi சுட்டெழுத்துக்களைத் தனிச் சொற்களாக (அதாவது அம்மனி தன் எனும்போது அம்மனிதன் என இரு சொற்களாகப் பிரிக்கப்படும். ஆனல் அவன் அவ்வாறு பிரிக்கப்படக் கூடியதல்ல)க் கொண்டுள்ளன. இந்நுண்ணிய வேறுபாட் டினைச் சிவஞானமுனிவர் அகச்சுட்டு என் றும் புறச்சுட்டு என்றும் கூறுவர்." இவ்
12. தமிழ் அமைப்புற்ற வரலாறு பக். 11-12, 13. நன்னூல். சிவஞானமுனிவர் விருத்தியுரை 14. இதுபற்றிய விபரத்துக்கு: 1yons, 1. 1ntr

33
விளக்கத்தினைத் தவிரத் தமிழ் இலக்கண காரர் சுட்டுக்களின் உண்மைப் பொருளை விளக்காமையைச் சுவாமி ஞானப்பிரகாசர் ஏற்றுக்கொள்ளத் தக்கமுறையில் எடுத்துக் கூறியுள்ளார். மூன்று, தமிழ்ச் சுட்டுகளுக் குச் சுவாமியவர்கள் பொருள் கூறியமை.
இதனைச் சிறிது விளக்கமாக நோக்குவோம்.
சுட்டுதலை ஆ ங் கி லத்தில் 'Deictic" என்பர். இச்சொல் கிரேக்கச் சொல்லாகிய ‘deixis’ எ ன் ப தி லிருந்து பிறந்தது. கிரேக்கத்தில் "deixis’ என்ருல் சுட்டு தல்’, ‘காட்டுதல்’ என்னும் பொருள் படும். "சுட்டுதல்’ என்னும் கருத்துத் தற் கால மொழியியலாளரால் இலக்கணக் கூறுகளுடன் தொடர்புபடுத்திக் குறிக்கப் படும். * எந்த மொழியிலாவது ஒரு கூற் றினை ஒருவர் கூறும்போது, அக்கூற்று ஒரு குறிப்பிட்ட இடத்திலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலுமே உண்டாக்கப்படுகின்றது. அதாவது, ஒரு குறிப்பிட்ட கால-இட சம் பந்தப் பின்னணியிலேயே அக்கூற்று இடம் பெறுகின்றது என்பதாம். இக்கால- இட சம்பந்தத்தினை அடிப்படையாகக் கொண் டே சுவாமி ஞானப்பிரகாசர் தமிழ்ச் சுட் டுக்களின் பொருளைப் பொருத்தமாகக்
கூறியுள்ளார்.
3-2 தமிழ்ச் சுட்டுக்களாகிய அ, இ, உ, எ ஆகியவற்றின் பொருளே எடுத்துக் கூறுமிடத்துச் சுவாமி ஞானப்பிரகாசர் கால-இட சம்பந்தத்தினை மாத்திரமே கொண்டார். அவருடைய ஆய்வு நோக் குக்கு அது பொருத்தமாக அமைந்திருக்க லாம். ஆனல், சுட்டுக்களின் பயனை நன்கு நாம் விளங்கிக்கொள்ள *பேசுவோர்-கேட் குநர் தொடர்பினையும் மனங்கொள்ளுதல் வேண்டும். நாம் உரையாடும்போது, பேசு பவர் ‘நான்’ ஆகவும், கேட்குநர் 'நீ ஆக வும் இருத்தல் இயல்பு. ஆகவே பேசுபவர் தன்மையிலும்’, கேட்குநர் 'முன்னிலையி லும் குறிப்பிடப்படுவர். ஆகவே பேசுநர்
oduction to Theoretical Linguistics pp: 275-8.

Page 46
34
கேட்குநர் தொடர்பிலே கால-இடத் தொடர்பு சாதாரணமாக ஒன்ருகவே இருக்கும் (சில "அசாதரண சந்தர்ப்பங் களும் உண்டு; தானே தனக்குள் பேசிக் கொள்ளுதல், தொலைபேசியில் பேசும் போது கேட்குநரும் பேசுநரும் ஒரே இடத் தில் இல்லாமல் இருத்தல் போன்றன). பேசுபவரோ, கேட்பவரோ சிலவேளை மூன் ருமவரைக் குறிப்பிடுதல் உண்டு. ‘மூன்ரு மவர்", அதாவது 'படர்க்கையிலிருப்பவர் சிலவேளை பேசுபவருக்கு அண்மையில் அல் லது இருவருக்குமே சேய்மையில் இருக்க லாம். படர்க்கையில் இம்மூவகை வேறு பாடுகளையும் நுண்ணிதாக இ, உ, அ ஆகிய மூன்று சுட்டுக்களும் பெரிதும் பயன் படுகின்றன. இந்த ஆள் என்னும்போது பேசுபவருக்கு அருகிலிருப்பவரைக் குறிக்க உந்த ஆள் கேட்பவருக்கு அருகிலிருப்பவ ரைக் குறிக்கும். அந்த ஆள் பேசுபவர் கேட்பவர் ஆகிய இருவருக்குமே அப்பால் உள்ளவரைக் குறிக்கின்றது. பேசுபவரைப் பொறுத்தமட்டில் உந்த ஆள், அந்த ஆள் ஆகியன சேய்மையைக் குறிப்பனவாகவும் இந்த ஆள் அண்மையைக் குறிப்பதாகவும் அமையும். இவ்வாறு “பேசுநர்-கேட்குநர்’ தொடர்பு சம்பந்தமாகச் சுட்டுக்கள் பெறும் பொருளைச் சுவாமி ஞானப்பிரகா சர் ஏற்கனவே எடுத்துக் கூறியுள்ள காலஇட சம்பந்தத்துடன் தொடர்புள்ள பொருளுடன் சேர்த்து நோக்குதல் பயனு டைத்தாகும்.
4. ஞானப்பிரகாசருடைய
மொழியாய்வின் நோக்கு
4. 1. ஈழநாட்டிலே பன்மொழிப் புலவர் கள் என நால்வரை முக்கியமாகக் குறிப் பிடலாம். அவர்கள் சுவாமி விபுலானந்தர், சுவாமி ஞானப்பிரகாசர், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, தமிழ்த்தூதர் வண. பிதா. சேவியர் தனிநாயகம் அடிகள் ஆகி யோராவர். அவர்கள் தாமறிந்த மொழி களிலே ‘தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணுேம்' என்று கூறினல் அங்கு அனுபவ உண்மை புலப்படுவதை நாம்
Y ܔ

காணலாம். சுவாமி ஞானப்பிரகாசர் தமிழ்மொழியில் மிகுந்த பற்றுடையவர். அப்பற்றின் காரணமாகத் தமிழ்மொழி யின் சிறப்பை அறிவியல் முறையிலே மொழியாய்வின்மூலம் வெளி ப் படுத்தத் துணிந்தார். இது ஒன்றே அவருடைய ஆய்வின் நோக்காக இருந்தது. தமிழ் மொழிபற்றி எத்தகைய ஆய்வினை மேற் கொண்டாலும் இந்நோக்கிலிருந்து அவர் தவறினரில்லை. தமிழ் அமைப்புற்ற வர லாறு என்னும் நூலினை தொடங்கும் போது,
'அமிழ்தினும் இனியது என அறிஞர் போற்றும் எம் அரிய தமிழ்மொழியின் கட் பொருந்திய அழகுகளுள் ஒன்று யாதெனில், அதன் பன்னூற் று த் தொகைப்பட்ட சொற்களிற் பெரும் பாங்கானவை தம்முள் இனங்கொண்ட கூட்டங் கூட்டமாய் இயலுதலாம்.'
என்று கூறுவர். தமிழின் இயல்புகளை ஆய்வு முறையிலே எடுத்துக்கூற முற்பட்டபோதி லும், அவ்வியல்புகளின் பெருமையினைத் தானே தன்னுள் வியந்தும் ரசித்தும் எழு தும் தன்மையுடையோராய் விளங்கினர் சுவாமியவர்கள்,
4. 2. தமிழிலே பற்றுடையவராக அவர் ஆய்வு செய்ய முயன்றதினல், சிலவேளை களில் அவருடைய விளக்கங்களில் அறிவி யல் வாதத்துக்குப் பதிலாக உணர்வு மேலோங்குவதை அவதானிக்கக் கூடியதா யுள்ளது. இதன் காரணமாகச் சில சந் தர்ப்பங்களிலே, தக்க சான்ருதாரங்களு டன் நிரூபிக்க முடியாத கூற்றுக்கள் சில் வற்றையும் அவர் கூறியிருத்தலையும் நாம் காணமுடிகின்றது. எப்படியிருப்பினு ம், சுவாமி அவர்களுடைய தமிழ் மொழி ஆராய்ச்சியிலே பல புதிய நுண்ணிதான கருத்துக்கள் எமக்குத் தரப்பட்டுள்ளன. அவை மொழியியல் மாணவர்க்கு விருந் தளிப்பனவாகும். அவற்றைப் பொன்னே போல் நாம் போற்ற, சுவாமி ஞானப்பிர காசர் நம்மிடையே சாகாவரம் பெற்று வாழ்வார்.
ܠ ܐ

Page 47
சுவாமி ஞான சீரிய சட
- கலாநிதி வே. அந்தனிஜான் அ
கிறீஸ்தவம் காட்டும் சமயப்பணி:
கிறீஸ்தவம் என்பது தனி மனிதன் தன்னைச் சுற்றிக்கட்டி எழுப்புகின்ற கோபுரம் அல்ல. 'என் தம்பிக்கு நான் என்ன காவலாளியா?" என்று கேட்பவன் கிறிஸ்தவன் அல்லன், !
அடுத்தவன் மேல் அக்கறை கொண்டு அன் பினுல் அவனை அணைக்கும், இணைக்கும் பாலமே கிறீஸ்தவமாகும். சமுதாயம் ஒதுக்கியவர்களை உயர்த்துவதும், நலிந் தோர்க்கு நற்செய்தி நவில்வதும், ஒடுக்கப் பட்டோர்க்கு உரிமை வாழ்வு வழங்குவ தும் கிறீஸ்தவ பணியாகும். *
'சின்னஞ்சிறிய என் சகோதரருள் ஒரு வனுக்கு நீங்கள் இவற்றைச் செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள்’’ என்று இயேசுவும் சமயப்பணியின் கொடு முடி சமூகப்பணியில் படிந்திருப்பதை எடுத்துரைப்பார். *
கிறிஸ்தவத்தை விவிலிய அறிஞர் ஒருவர் இவ்வாறு விளக்குகிருர்: ‘ஒருவர் மனுக்குலத்துக்காக கிறிஸ்துவில் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து, மீண்டும் மனுக்குலம் கிறிஸ்துவில் மகிமை பெற உயிர் பெற்று எழுவதே கிறிஸ்தவமாகும்.’’ For Christianity can be defined as the laying down of ole's whole life for markind in Christ, so that in Christ it may rise again in glory (Bright, Christians and World Freedom. Sheed and Ward, London. 1966 p. 17)

ாப்பிரகாசரின் DuüLIGOf
ழகரசன் அடிகள் M. A., Ph.D. -
ஞானப்பிரகாசர் கண்ட சமயப்பணி:
சிறு வயது இருந்தே தாழ்த்தப்பட்ட வர் மேல் இரக்கம் காட்டியவர் ஞானப் பிரகாசர். சமுதாயத்தின் மேல் தட்டில் உள்ளவர்களை மதித்து வாழ வேண்டும் என அறிவுரை கூறும் அறநெறிச் செல் வராக விளங்கினர். சிறுவயதிலே ‘ம்ானிப் பாய்த் தம்பி’ என செல்லமாக அழைக் கப்பட்டவர் ஞானப்பிரகாசர். அவர் எப் படி -சாதித் திமிரும், குலப்பெருமையும் கொண்ட தன்னைத் திருத்தினர் என சந்தி யாப்பிள்ளை என்பவர் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கின்ருர்,
‘'நீர் தாழ்த்தப்பட்டவர்களை எடே, எடி வா, போ என்று கூப்பிடாமல் சகோதர நேசத்துடன் தம்பி, தங்கைச்சி இங்கே வாரும் என்று அழைத்தால் ஆண்டவ ருக்கு அதிக பிரியமாயிருக்கும் என்று போதனை புகட்டி விட்டார். அந்தநாள் தொடக்கம் இன்றைக்கும் அப்படியே பேச்சிலும் கிரிகைகளிலும் நடந்து வரு கின்றேன்.”*
இப்படி இயல்பாகவே சிறுவயது முதல் ஒடுக்கப்பட்டவர்மேல் இரக்கம் கொண்ட ஞானப்பிரகாசர், குருவான தும் வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவர்க ளுக்கும், வாழ்க்கை வசதி இல்லாதவர் களுக்கும், சமுதாயத்தால் சுரண்டப்பட்டு நசுக்கப்பட்டவர்களுக்கும், தொண்டு புரி வதே தமது சமயப் பணியின் தலையாய பணி எ ன த் தெளிவாகக்கண்டார். குருவாக வந்த ஓர் இரு ஆண்டுகளிலே யாழ்ப்பாணத்தில் சாதிக்கொடுமை என்ற

Page 48
36
சில்லுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் சிக்கிச் சீரழிவதைக்கண்டு மனம் நொந்தார். கிறீஸ்தவர்களையும், கிறீஸ்தவர் அல்லா தாரையும் அது ஆட்டிப்படைப்பதைக் கண்டு தன் "25 வருட கத்தோலிக்க au GITrifểSF”(XXV years of Catholic Progress) என்ற சமய ஆராய்ச்சி நூலில் எவ்வாறு சாதி உணர்வு தமிழனின் இரத்தத்தில் ஊறி -யுள்ளது என்பதை இவ்வாறு எடுத்துக் கூறு
வார்.
"In Jaffna you may work other miracles but not the one of dissipating the unchristian atmosphere of “Caste' which may be said to permeate the very being of the Tamil man - Such is the tyranny of prejudice nurtured through centuries and millenniums!' *
சாதிப்பாகுபாடு, தி ரு ச் ச பை க்கு உள்ளேயும், திருச்சபைக்கு வெளியேயும் உள்ள பரம விரோதி எனக் கண்டு, அதனைப் பூண்டோடு ஒழிக்கப்பாடுபட்டார் 1910-ஆம் ஆண்டில், யாழ்நகரத்திலுள்ள "தாழ்ந்த சாதியைச் சேர்ந்த இளைஞர் களுக்கென 'புனித அந்தோனியார் பாது smrGuổiv” ’ (St. Anthony’s i atronage) GT Gör sp ஒர் இயக்கத்தை அருட் செல்வர் குரு Ga Itai (Bro. Groussault) 6TGirLauri 5plain னர். இந்த இயக்கத்தை அன்று புனித 9Cl56tliuri (St. John's Church) Luigiair முதல் பங்குத்தந்தைகளாகக் கடமை ஆற்றிய ஞானப்பிரகாச சுவாமியும், ஜென் (Jenn) அடிகளாரும் வர வேற் ருர் கள். கோயில் வளாகத்தில் இந்த இயக்கத்தை நிறுவிச் சாதிக்கொடுமைகளைத் தகர்க்க அரும்பாடுபட்டார்கள். *
இந்தியாவில் தீண்டாமை, சாதிக் கொடுமை போன்ற சமூக நோய்களை வேரோடு அறுக்கப் போராடியவர்கள் அண்ணல் காந்தி, அம்பேத்கார், பெரி யார், அறிஞர் அண்ணு போன்றவர்களா வர். இக்காலத்தில் அன்னை தெரேசாள் ஒடுக்கப் பட்டோருக்கு ஒளிமயமான

வாழ்வை வழங்கி வருகின்றர். இவர்களைப் போன்று இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் துணிவும், நேர்மையும், தொலை நோக்கும் கொண்டு, சமுதாயத் தின் பின்தங்கியவர்களுக்குத் தன்வாழ்வை முற்ருக அர்ப்பணித்த அமலமரித்தியாகி கள் திருக்கூட்டத்தைச் சேர்ந்த, கத்தோ லிக்க துறவி ஞானப்பிரகாசர் ஆவார். அன்று யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பிற சமயத்தினர், அன்று இருந்த தாழ்த்தப் பட்ட மக்களுக்குப் புல்லுக்குக் கொடுக் கின்ற மதிப்பைக்கூட கொடுக்கவில்லை, என்பதை இவ்வாறு ஞானப்பிரகாசர் மனம் நொந்து கூறுவார். 'பிற்படுத்தப் பட்ட மக்கள் உங்கள் சமயத்தைச் சேர்ந் தவர்கள் என்று நீங்களே பெருமை பாரா ட்டுவதில்லை. வழிபாட்டிற்கு உங்கள் கோயில்களைத் திறந்து விடுவதில்லை. எங்கள் ஆலயங்களிலாவது அவர்கள் வந்து வழிபாடு நடத்தட்டும்' என்று சிம்மக்குரல் கொடுத்தார் ஞானப்பிர
காசர். "
ஆதியிலே தமிழ்ப்பண்பாடு சாதி பேதம் கற்பிக்கவில்லை. சாதி சழக்குகள் இடையிலே தமிழ் இனத்துக்குள் புகுந்து தமிழனைக் கெடுத்துவிட்டன. பிற்படுத்தப் பட்டவர்க ளின்சமயம் சாதிக் கலப்பற்ற தமிழ்ச் சமய மாய் இருக்கட்டும். கிறிஸ்தவத்தின் துணைகொண்டு அவர்களின் உண்மை வடி வமாகிய பழைய சமயநிலைக்கு அவர்களைக் கொண்டுவரும் புத்துலகச் சிற்பியாக நான் விளங்குவேன் எனச் சிங்கநாதம் செய்தார் சுவாமி ஞானப்பிரகாசர். *
ஏழையின் பசிக்குச் சோறு போடாத சமயம் அவனுக்குச் சொர்க்கத்தைத் தர முடியுமா? என வினவுவார் சுவாமி விவே கானந்தர். போதிய உடையோ, அன்ருட உணவோ இல்லாத சகோதர சகோதரி யாரேனும் இருந்தால், தேவையானது ஒன்றையும் கொடாமல், ஒருவன் அவர் களைப் பார்த்து “சுகமாகப் போய் வாரு

Page 49
ங்கள், குளிர் காய்ந்து கொள்ளுங்கள், பசியாற்றிக் கொள்ளுங்கள்.’’ என்பான கில் பயன் என்ன? என்று கேட்பார் புனித இயாகப்பர். ‘நான் பசியாய் இருந் தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள். ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள், 10 போன்ற ஏழை எளியவர்களுக்குச் செய்யும் அன்பின் சேவை என்ற அளவு கோலை வைத்தே மனுக்குலத்தை இறுதி நாளில் தீர்ப்பிடு வார் என்ற கிறிஸ்தவ கொள்கையில் ஊறிய ஞானப்பிரகாசர், கல்வி வாசனை இல்லாத, நாகரிகம் அடையாத, பாமர மக்களோடு, தன் சமயத்தைச் சாராத மக்கள் மத்தியில் வாழத்திட்டம் தீட்டி ஞா.
தாழ்ந்தவர்களை உயர்த்துவதற்கு அவர் களை விட்டு ஒதுங்கியிருந்தால் உயர்த்த முடியாது. அவர்களோடு ஒட்டி உறவாட வேண்டும். அவர்களோடு ஒருவனுக வேண்டும். எனவே அவர்கள் மத்தியில் வறுமையிலும், துன்பத்திலும்பங்குபெற தன் நீண்ட பயணத்தை மேற்கொண் டார். மேலும் இவ்விடங்களில் ஞானப் பிரகாசர் போய் சமயத்தொண்டு செய்ய முன், 1877 ஆம் ஆண்டில் பொன்ஜின் ஆண்டகையும், 1902 ஆம் ஆண்டில் யூலன் ஆண்டகையும் இந்து மக்கள் வாழ்ந்த கிராமங்களில் மறை பரப்பும் நிலையங் d56ir (Mission Centres), Srisai).56 airpo 1526 until 5 air (Centres of Christian life)3C5 ga)
வற்றிற்கு வித்திட்டிருந்தார்கள்." 1
புதுவாழ்வு வழங்கும் புத்துலகச்சிற்பி
1904 ஆம் ஆண்டு நல்லூருக்குக் கிறிஸ்தவ பணிசெய்ய ஞானப்பிரகாசர் அனுப்பப்பட்டார். நல்லூரைத்தன் முக் கிய பணித்தளமாக அமைத்துக்கொண்டு 37 கிராமங்களில் சமயப்பணி செய்து,

ஏறத்தாழ் 3,000 கிறிஸ்தவர்ல்லாதவர் களை கிறிஸ்தவ மறையைத் தழுவச் செய் ததாகக் கூறப்படுகின்றது."
ஒடுக்கப்பட்டோர் வாழ் வ தற்கு நிலங்களை வாங்கினர். போயிட்டிக்கு அரு கில் ஒரு ஊரையே வாங்கி, கோயில் கட்டி குடியேற்றமும் செய்து வைத்தார். வடபகுதியில் முதல் குடியேற்றம் நல் லூர் சுவாமி ஞானப்பிரகாசருடைய எண்ணத்திலே முகிழ்த்த ஒன்ரு கும். அன்று யாழ் மறை மாவட்டத்துக்கு ஆய UT IT 5 இருந்த யூலன் ஆண்டகை பெயரால் குடியேற்றம் செய்த ஊருக்கு 'யூலனுார்' ( Julanur ) GT Gör g), GO LJ AL ii கொடு த்து அழைத்தார்.18 மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் கொடுத்து உதவினுர், மக்களின் சமூக பொருளாதார நிலை சுவாமிகளின் உதவி யால் உயர்ந்தது. சாதிக் குப்பைக்குள் புழுக்களைப்போல் நெழிந்தவர்கள், சுவாமி களின் சமயத்தொண்டினல் சுதந்திரக்காற் றைச் சுவாசித்தனர்.
ஏற்கனவே பாரம்பரியமாக gh சமயத்தில் ஊறினவர்களை, தலைசிறந்த இலக்கியக் கருவூலங்களைக் கொண்டவர் களை, ஒரு புதிய சமயத்துக்குள், ஒரு புது வாழ்வுக்குள் கொண்டு வரும்போது ஒருவர் பல தொல்லைக்குள் ஆளாவது இயல்பு. தாழ்ந்தவர்களை அடக்கி ஆளும் மேட்டுக்குடியினர், ஒடுக் கப் பட் டோ ர் உரிமை வாழ்வுபெற்று, சுதந்திரமாகத் திரிவதைப் பொறுக்கமாட்டாமல் புதிய சமயத்தைத் தழுவினவர்களுக்கும், இவர் களை வழிநடத்திச் செல்லுகின்றவர்களுக் கும் தொல்லை கொடுப்பது உலகம் அறிந்த உண்மையாகும். அடிகளாரும் இப் பொது விதிக்கு விலக்கல்ல. அடிகளார் நல்லூ ரிலே சமயப்பணி செய்யமுன் பல ஆண்டு களுககு முனனரே தான் ஆசிரியராய் இருந்த 'அமலோற்பவ இராக்கினித் அாதன்' என்ற சஞ்சிகையில் தான் Wor.

Page 50
38
இருந்த துன்பத்தை முன் கூட்டியே எழுதி யிருந்த கவிதை இங்கு குறிப்பிடத்தக்கது.
'சித்திரவேதனைப்பட்டுச் சிந்தியே உதிர
வெள்ளம் சத்திய மறைக்காய் உயிர்-தந்த வேத
சாட்சிகள்போல் நித்தியம் நான் உம்முடைய-நேசத்துக் காக மகிழ்ந்து எத்துணைத் துன்பத்தையுங்கை-ஏற்க
வரம் அருளிரோ?’**
புதிய மறையைப் பரப்புவதில் புதனி சி ன் ல ப் ப ரை ப் போ ல புனித ச வே ரியா ரை ப் போ ல துன்புற்ருர், அடிகளார் பணிசெய்த இடங்களில் ஒன் முன உரும்பிராயில் 1916 ஆம் ஆண்டில் ஒலைக்குடிசையால் ஒரு கோயிலைக் கட்டி (னர். 107 பேர்களைக் கத்தோலிக்க மறை யில் சேர்த்தார். இதனுல் மேல் மட்டத் தார் இவரை எதிர்த்தனர். மாற்றுச் சம யத்தினர் பல தொல்லைகளை இவருக்குக் கொடுத்தனர். சுவாமியின் நண்பர்கள் உரும்பிராயில் அடிகளார் இருப்பது பெரும் ஆபத்தைக் கொண்டுவரும் என் றனர். அப்போது யாழ் ஆயராக இருந்த யூலன் ஆண்டகை ஞானப்பிரகாச சுவாமி யை அழைத்து "கொந்தளிப்பு அடங் கும் வரை அவ்வூரில் இருந்து வேறிடஞ் சென்று உமது வேலையைத் தொடங்கலாமே என்று கூறியபோது 'புது ஆடுகளை ஆபத் தான நிலையில் விட்டு மேய்ப்பவன் வில குவது கோழைத்தனம். எனது உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் நான் அவ்வூரை விட்டு விலக எண்ணவில்லை. நீங்கள் ஆணையிட்டால் அதற்குப் பணிய நான் தயாராய் இருக்கிறேன். என்றர். இந்த வீர வார்த்தைகளைக் கேட்ட ஆண்டகை மகிழ்ச்சியோடு அவரை உரும்பிராய்க்கு அனுப்பி வைத்தார்."
அடிகள் பணிசெய்த உரும்பிராய் கிரா மம் அவருடைய தலைமகள்(Eldest daughter) எனப்போற்றப்படுகிருள்.தான் சமயப்பணி

செய்த இடங்களையும் மக்களையும் எவ் வளவு தூரம் தாயைப்போல நேசித்தார் என்ருல் ஒரு முறை உரும்பிராயில் Lu Goof? செய்த போது இவருக்குத் துணையாக அனுப்பப்பெற்ற மதுரநாயகம் அடிகள் அவ்வூர் மக்களின் சண்டை பிடிக்கும் சுபாவத்தையும், தூஷண வார்த்தைகள் பேசுவதையும் சகிக்காமல் வேறு இடம் செல்லும் முகமாக ஞானப்பிரகாச சுவா மியிடம் முறையிட்டாராம். அப்போது சுவாமி அவர்கள் மதுரநாயகம் அடிகளை உ ற் று ப் பார் த் து ** பிள்ளை பெற்ற வருத்தம் பெற்றவளுக்கல்லவா தெரியும். உனக்கு எப்படித் தெரியும்?”என்று கேட்ட நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் உள் ளம், ஒடுக்கப்பட்டோர் மேல் கொண்ட தாயுள்ளம் அல்லவா? இன்று அடிகள் பணிபுரிந்த உரும்பிராய் ஒரு கத்தோ லிக்க குருவையும், கன்னியர்கள் பலரை யும் தரும் அளவுக்கு சமயத்துறையில் முன்னேறியிருக்கின்றது. அடிகளார் ஒலைக் குடிசையால் கோயில் எழுப்பிச் சம யத் தொண்டு செய்த மானிப்பாய், மூளாய், முலவை, உரும்பிராய், நல்லூர் போன்ற இடங்களிலெல்லாம் இன்று கற் கோயில்கள் காட்சி அளித்து நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் சமயப்பணியை பறைசாற்றிக்கொண்டு நிற்கின்றன.
அறியாமையை அகற்றிய ஆசான்
புதிதாகப் புதுச்சமயத்தில் சேர்ந் தவர்கள் தங்கள் சமயக் கொள்கைகளில் வேரூன்றி நிற்பதற்காகத் தான் கட்டிய கோயில்களுக்கருகே சிறு பாடசாலை களையும் நிறுவினர். அங்கு மறைக்கல் வியைக் குழந்தைகளுக்கும், வயது வந் தோர்க்கும், வாழ்க்கையில் வழுக்கி விழுந்தோர்க்கும் சமய வகுப்புகளை நடத் தினர். தானும் போதித்தார். தன்னேடு உடன் பணிசெய்த குருக்களையும், மறைக் கல்வி ஆசிரியர்களையும் இப்பணியில் ஈடு படுத்தினர்.17 கிறிஸ்தவ கொள்கைகளை

Page 51
நன்கு பரப்பும் நல்ல கருவிகளாகப் பாட சாலைகளைப்பயன் படுத்தினர். ஏற்கனவே, குருவாக வர முன்னரே, திருத்தொண்ட ாாக (Deacon) இருக்கும் பொழுது மறைக்கல்வி புகட்டுவதில் நாட்டம் கொண்டிருந்தார். 1901-ம் ஆண்டில் யாழ் புனித மரியாள் பேராலயத்தில் 'பெண்களின் பாதுகாவலர்' (Patromage for girls) என்ற குழு மூலம், மறைக் கல்வி பெற வாய்ப்பில்லாத பெண்களை எல்லாம் ஒன்று திரட்டி, அவர்களுக்கு சமயக்கல்வி போதித்து வந்தார் என்பது ஈண்டு குறிப்பிடத்த்க்கது.18 மேலும் 12 தமிழ்ப்பாடசாலைகள் அவர் பார்வையில் இயங்கின. அப்பாடசாலைகளுக்குச் சென்று கத்தோலிக்க சமய அறிவை மட்டிடுவதி 31ம், மாணவர்களோடு ஒரு நிமிடவா வது கலந்துரையாடுவதிலும் அவர் தவ றியதே இல்லை.19 ஆசிரியர்கள் சம்பளத் துக்காக வேலை செய்யாமல், பாடத்திட் 1.த்தை முடிக்க வேலை செய்யாமல், கட வுள் பக்தியும், நல்லறிவுமுள்ள ஒரு சமு தாயத்தை உருவாக்க வேண்டும் GT65T நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் ஆசிரி யர்களைக் கேட்டுக் கொள்வார். கிறிஸ்த வரல்லாதோர்க்கும் கல்வி புகட்டுவது கிறிஸ்தவ சமூகப் பணிகளுள் ஒன்ருகும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் சுவாமி அவர்கள்.
“தர்க்கப் பிரசங்கத்தின் தந்தை”
w புதிதாகக் கத்தோலிக்க சமயத்தில் சேர்ந்தவர்களின் விசுவாசத்தை உறுதிப் படுத்தவும், கத்தோலிக் க ர ல் லா த வர் களுக்குக் கத்தோலிக்க சமய அடிப்படை உண்மைகளைப் பிரச்சாரம் செய்யவும் தர்க்கப்பிரசங்கம் ( Dialogue Sermons - in French Conference Dialoguee) 67 gir in ஒரு பொது முறையைக் கையாண்டார். கவர்ச்சியான முறையில், கத்தோலிக்கர் அல்லாதோருக்குக் கத்தோலிக்க சமய உண்மைகளைப் போதிக்கும் நல்ல பய

39
னுள்ள முறை '' இந்தத் தர்க்கப்பிரசங் கம்' என ஞானப்பிரகாச சுவாமியாரே கூறியிருக்கின்ருர்.99 நல்லூர் சுவாமி ஞான பிரகாசர் சமயப்பணி செய்த கத்தோ லிக்க வாழ்வு நிலையங்களிலும் (Centres of Catholic life or Mission Centres) LD(i) போன்ற பொதுத் திருத்தலங்களிலும், கோயில் திருநாட்களுக்கு முன் மூன்று நாட்களுக்குத் தர்க்கப் பிரசங்கங்கள் நடைபெறும். -
தர்க்கப் பிரசங்கத்தின்
தனிச் சிறப்பு
பொதுவாக இது இரவில், திறந்த வெளியில் இடம் பெறும். இரண்டு அலங் கரிக்கப்பட்ட மேடைகளில் இரண்டு குருச் கள் நின்று கொண்டு, ஒருவர் கத்தே லிக்க சமயத்தைப் பற்றிக் கேள்வி கேட் கிற ஒரு அடக்கமான மாணவனைப் போல வும், மற்றவர் கத்தோலிக்க குருவாக இருந்து கொண்டு கேள்விகளுக்குப் பதில் கொடுப்பவராகவும் இருப்பார். இடை வேளையில், மத்தளம், வீணை கொண்டும் சமய சார்பான இன்னிசைகள் முழங்கப் படும். இந்நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க நாடெங்கும் இருந்து பிற சமயத்தினர் பெருந்திரளாக வந்திருப்பர். ‘தர்க்கப் பிரசங்கம்' ஒரு சிறந்த கலையாகும். இந்தக் கலையில் ஈ டு படுகின்ற வர் களுக்கு பொது மக்களைப்பற்றிய அறிவு, மொழித்திறமை, உவமைகள், நகைச் சுவை, மக்களின் குருட்டு நம்பிக்கைகள் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். கத் தோலிக்க சமய உண்மைகளை விளக்கு வதற்கு 'தர்க்கப் பிரசங்கத்தை' நன்கு பயன்படுத்தி அதன் தந்தையாகவும் விளங்குகின்றர் நல்லூர் சுவாமி ஞானப் பிரகாசர். பிற சமயத்தினரின் கேள்வி களுக்கும், தாக்குதல்களுக்கும் விளக்கம் அளிக்கும் நோக்கத்தேடு 'குருவில்லாத வித்தை’ ‘மெய்பாதி பொய்பாதி"

Page 52
46
** க ன க் குண் டு வ ழ க் குண் டு ' "மாதாவோ - அம்மனே?’’ போன்ற இருபத்தினலுக்கும் மேற்பட்ட தர்க்கட் பிரசங்க பிரசுரங்களையும் வெளியிட்டி ருக்கின்றர் • . . .
சுவாமி ஞானப்பிரகாசர் தன்னு டைய சமயப்பிரசாரத்திலே பிற சமயங் களைச் சாடி இருக்கின்ருரே. இது சரியா எனச் சிலர் கேட்கின்றனர். அவர் வாழ்ந்த காலம் சமயப் பூசல் நிறைந்த காலம். இங்கிலாந்தில் கத்தோலிக்க மறைக்கு எப்படி ஒரு நியூமனே இலங்கையில் புத்த சமயத்திற்கு அனகாரிக தர்ம LiTaunt (36) T இந்து சமயத்திற்கு ஒரு ஆறுமுக நாவலரோ? அப்படியே கத்தோ லிக்க மறு மலர்ச்சிக்கு ஒரு நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசராகும். பியூனிக் சண்  ைட யி ல் ( In Punic War ) உரோமர்களுடைய மனநிலை எப்படி இருந்தது என்ருல், 'நீ சமாதானத்தை விரும்பினல் சண்டைக்கு ஆயத்தம் செய்’ என்பதாகும். இருபதாம் நூற்றண்டின் இடைக்காலம் சமயப் பொறுமை நில வும் காலம், இக்காலத்தில் இந்தத் தத் துவம் பொருந்தாது. ‘எதிரியைத் தாக் குவதே நல்ல பாதுகாப்பாகும்’’ என்ற கால கட்டத்தில் வாழ்ந்தவர் சுவாமி அவர்கள். தன் காலத்தில் தனக்குச் கிடைத்த சமயப் பாதுகாப்பு முறைகளைப் ( Apologetical Method) Luigi Lu (556 சமயப்பணி செய்தார்.
திருமறையின் சிம்மக்குரல்
r"
திருமறையின் கருவூலங்களை தன் சீரியதிருவுரைகள் மூலம் இலங்கையின் பல பாகங்களிலும், தென் இந்தியாவி லும் ஆற்றியுள்ளார். படித்தவர்கள், பாமரமக்கள் அனைவரையும் தன் அரிய திரு வுரை க ளா ல் கவர்ந்திருக்கின்ருர், மறையுரையாற்றுவோர் தங்கள் தாய் மொழியில் புலமை பெற்றிருத்தல் வேண் டும் என இளம் குருக்களுக்கு அறிவுரை

வழங்கியிருக்கின்றர். நல்ல சிறந்த பிர சங்கங்களுக்கு ஒருவர் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், பக்தி இலக்கியம் போன்றவற்றில் அடிப்படை அறிவும் புலமையும் பெற்றிருத்தல் வேண்டுமென வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந் திருக்கின்றர். இளம் குருக்கள் தங்கள் மறையுரைகளை எழுதித் தன்னிடம் காட்டித் திருத்திய பின்னரே திருவுரை களைக் கோயிலில் நிகழ்த்த அனுமதி வழங் குவார். இவர் எழுதிய ஞான ஒடுக்கப் பிரசங்கம் தவக்காலப் பிரசங்கம் போன்ற நூல்கள் பேர் பெற்றவை.
இலங்கையின் தமிழ் கத்தோலிக்க இயக்கங்களின் முன்னுேடி
இலங்கையின் ‘நூதன நட்சத்திரம்' எனப் போற்றப்பட்ட சாங்கோ பாங்க சுவாமிகள்(யாக்ாகாமே கொன்சால்வெஸ் கபிரியேல் பச்சேக்கு போன்ற வெளி நாட்டுக் குருக்கள் ஈழத்தில் சமயப்பணி செய்தபோது சில கத்தோலிக்க நூல்களை வெளியிட்டிருந்தார்கள். ஆனல் ஞானப் பிரகாசரைப்போல் ஏராளமான சமய நூல் களை எழுதி, கத்தோலிக்க எழுத்துலகில் ஒரு மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர் வேறு யாரும் இல்லை. 1902 ஆம் ஆண் டில் ஞானப்பிரகாசர் சுவாமிகள் ஊர் காவற்றுறையில் துணைப் பங்குக் குரு Guits ( Assistant parish priest) 9Cl5.ii.5 போது, இரவல் கொடுக்கும் நூல 3,56),5 ( Lending Library ) -g, U h பித்து வைத்தார்.?? தனிநாயக அடிகள் தூத்துக்குடியில் தமிழ் இலக்கியக் கழ கத்தைத் தோற்றுவிக்கு முன்னரேசுவாமி ானப்பிரகாசர் கத்தோலிக்க இலக்கிய வளர்ச்சிக்கு எழுச்சியூட்டினர். குரு மடத்தில் படிக்கும் காலத்திலேயே கொலின் அடிகளாரின் தூண்டுதலாலும் ஆதரவாலும், கத்தோலிக்க சமய சார் பான வெளியீடுகளை வெளியிட்டு வட இலங்கையில் சமயப்பணி செய்தார். சிறி

Page 53
தாக ஆரம்பிக்கப்பட்ட இப்பணி, ஞானட் ps, Tifri 1901 இல் குருவான பின் நூற்றுக்கணக்கான கத்தோலிக்க சமய வெளியீடுகளுக்கு வித்திட்டன,
கத்தோலிக்க இதழ்கள்
'அமலோற்பவ இராக்கினி தூதன்' (Messenger of Our Immaculate Queen) at airp மாத இதழை 1897 இல் தொடங்கினர். இது தமிழில் கத்தோலிக்க பாதுகாவல னின் மாத இணைப்பு இதழாக ( monthly Supplement ) @6)J Gif7 6J 5 g/ கொண்டிருந்தது. 1905 இல் இருந்து இதே இதழ் ஆங்கிலத்திலும் வெளி வந் தது. கத்தோலிக்க பாதுகாவலன் வாரப் பத்திரிகையாக 1912 ஆம் ஆண்டு வெளி வர ஆரம்பித்ததும் 16 ஆண்டுகளாக வெளி வந்த ‘அமலோற்பவ இராக்கினி தூதன்' நிறுத்தப்பட்டது. இந்த இத ழின் ஆசிரியராகப் பல்லாண்டுகள் பணி புரிந்த பெருமை ஞானப்பிரகாச சுவாமி
யைச் சாரும்.28
கத்தோலிக்க பாதுகாவலன்
இலங்கையில் வெளிவரும் தலை சிறந்த கத்தோலிக்க வார இதழ் "கத் தோலிக்க பாதுகாவலனுகும்' ஞானப் பிரகாச சுவாமியின் மேற்பார்வையிலும், உதவியுடனும் இருபது ஆண்டுகட்கு மேல் இப்பத்திரிகை இயங்கி வந்திருக் கின்றது. ஆங்கிலத்தில் வெளிவந்த பாது காவலனுக்கும் ( Guardian ) ஒரு முறைக்குமேல் ஆசிரியராக இருந்து பணி புரிந்திருக்கின்றர்.24 சென்னையிலுள்ள "கத்தோலிக்க ஊழியன்’ என்ற இத ழிலும் 1938 ஆம் ஆண்டில், ‘ஆண்டவர் சரித்திரம்" பற்றி தொடர் கட்டுரைகள் எழுதி வந்திருக்கின்ருர்,**

4.
வழிபாடு - விவிலிய - திருமறை நூல்கள்
*எனது பூசைப் புத்தகம்’ (இந்தியாவில்
இத்தகைய நூல் வெளிவரமுன் இலங் கையில் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது)
'திவ்விய பூசை மகத்துவம்', 'புதிய ஏற்பாட்டில் பலி’, ‘கத்தோலிக்க திருச் சபையும் அதன் போதகங்களும்', 'ஆண்
டவர் சரித்திரம்', 'ஆதி காலத்துப் பாப்பு மார் சரித்திர சங்கிரகம்’ (Ahistory of the early Popes) Saivasu GScipiisg.) '' போன்ற வழிபாடு, விவிலியம், திருமறை போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட சமய நூல்களைப் படைத்துள்ளார். கிறிஸ்து நாதர் சரித்திர ஆராய்ச்சி ( Life of Christ Critically Examined ) எ ன் ற இயேசுநாதர் பற்றிய ஆராய்ச்சி நூல் தமிழ் உலகில் தோன்றிய தலை சிறந்த நூல்களில் ஒன்ருகும். இலங்கை, யாழ்ப் பாண கத்தோலிக்க சமய நிலைமையைப் பற்றி மூன்று அரிய நூல்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கின்றர்கள்.
1. (25 ஆண்டு கத்தோலிக்க வளர்ச்சி) XXV years of Catholic Progress, Jaffna. 2. (யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்கம்)
Catholicism in Jaffia. ' 3. (இலங்கையில் கத்தோலிக்க திருச்
சபையின் வரலாறு) A history of the Catholic Church in Ceylon
இவர் பதிப்பித்தும், மொழி பெயர்த் தும் வெளியிட்ட கிறிஸ்தவ நூல்கள் முப் பதுக்கும் மேற்பட்டவையாகும். **யோசேவாஸ் முனிவர் சரித்திரம்' ‘சத்திய வேதபோதகச் சுருக்கம்', ‘லுார்தில் நடக்கும் அதிசயங்கள்’’ போன்ற நூல்கள் அவற்றில் ஒரு சிலவா
கும. «

Page 54
49
சமய இலக்கியத்தில் ஒரு கண்டுபிடிப்பு
‘ஞான உணர்ச்சி' என்ற சிறுநூல் சிற்ப்பான தமிழ் நடையைக் கொண்ட ஒரு கிறிஸ்தவ நூலாகும். இந்த நூலின் அரிய நடையைக் கண்டு தேம்பாவணி செய்த வீரமாமுனிவரே இந்த நூலையும் செய்திருக்க வேண்டும், எனப் பல்லாண் டாகத் தென் இந்திய அறிஞர்களெல்லாம் நம்பி இருந்தனர். “ஞான உணர்ச்சி’ என்ற கிறிஸ்தவ நூலை வீரமாமுனிவர் எழுதவில்லை. ஈழநாட்டில் கத்தோலிக்க பணி செய்த "யாக்கோமே கொன்சால் வெஸ்” என்ற சாங்கோ பாங்க சுவாமிகளே எழுதினர். அவரே இந்நூலின் ஆசிரியர் என முதன் முதலாக இந்தச் செய்தியைக் கூறினவர் நம்முடைய ஈழத்து நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரே98
நாடகம்
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் கிறிஸ்தவ நாடகங்களில் நா ட் ட ம் கொண்டு சம்பத்திரிசியார் கல்லூரியில் கல்வி பயின்ற போது எஸ்தாக்கியர் நாட கத்தில் நடித்து அனைவரின் பாராட்டை யும் பெற்றவர். குருவானதும் கிறிஸ்தவ நாடகங்களை ஊக்குவித்தார். கோயில் திருநாட்களில், திருமறைக்காகச் செந்நீர் சிந்தி உயிர் நீத்த புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை அரங்கேற்றியிருக்கின்றர். நாடக மன்றங்களை ஊக்குவித்திருக்கின் முர். சுவாமி அவர்கள் இரண்டு கிறிஸ்தவ நாடகங்களைத் தமிழிலும், SF(ab 5 TTLகத்தை ஆங்கிலத்திலும் எழுதினர். அந் நாடகங்களின்பெயர்களும்; அவை எங்கே கிடைக்கும் என்ற செய்திகளும் கிட்ட வில்லை. திருநெல்வேலியில் நடந்த இயேசு நாதர் பாடுகள் பற்றிய ஒரு நாடகத்தை அவர் பார்த்துச் சொன்ன கருத்துக்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை, 'ஆயிரம் பிரசங்கங்களை

யும், ஞான ஒடுக்கங்களையும்விட இயேசு நாதர் பற்றிய ஒரு நாடகம் மிகுந்த பக்தி நிலையைக் கொண்டு வரக்கூடியதாகும்." (One passion show makes more devotional impact than a thousand sermons and retreats)?* 1946 ஆம் ஆண்டு முகமாலைபுனித பிலோமினள் கோயிலில் நடந்த ஒரு கத் தோலிக்க நாடகத்தில் சுவாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புச் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
பக்தி இயக்கங்கள்
(அ) நற்கருணை ஆராதன இயக்கம்
(Association of the adoration of the Blessed Sacrament) 1901-ம் ஆண்டில் யாழ், புனித மரியாள் பேராலயத்தில் இருகத்தோலிக்கர் களான திரு. பிலிப்ஸ், திரு.மோசேஸ், இருவரின் துணை கொண்டு 'நற்கருணை ஆராதனை இயக்கத்தைத்' தொடங்கினர் அடிகள். இப்பக்தி இயக்கத்தின் நோக்கம் பல குடும்பங்களை ஒன்ருகத் திரட்டி "நற் கருணையில் இருக்கும் இயேசு நாதருக்கு ஒரு மணி 5ே ம் ஆராதனை செலுத்துவ தாகும். -
(ஆ) 'குடும்ப வாசக சபை'
(Family Reading Library)
நல்ல கத்தோலிக்க குடும்பங்களை உருவாக்குவதற்காக ‘‘குடும்ப வாசக சபை'யைத் தோற்றுவிக்க மார்சலின், ஆசீர்வாதம் போன்ற அடிகளார்க்குத் துணை செய்தார். இவர்கள் குடும்ப வாசக சபை மூலம், மாதந்தோறும் நல்ல அறி வுள்ள குடும்பங்களுக்குப் பயன்தரக் கூடிய சிறிய வெளியீடுகளை வெளியிட்ட
GTi. 2 9
(இ) திரு இருதய ஆண்டவர் 6.
(Confraternity of the Sacred Heart)
1902 ஆம் ஆண்டு சுவாமி ஞானப் பிரகாசர் ஊர்காவற்துறையில் துணைப்

Page 55
பங்குத் தந்தையாக இருந்தபோது, பங் (353 35 iš GM35 ‘‘ 335 Tfpgj’’ ( DA RAT) என்பவரின் ஆதரவுடன் இப்பக்திச் சபையை உருவாக்கினர். இச் சபையைக் கத்தோலிக்கர்களின் சமய ஆர்வத்தையும் பக்தியையும் தூண்டுவதற்காகவே ஆரம் பித்தார்.
(ஈ) உள்ளூர் கத்தோலிக்க உண்மை பரப்
பும் சபை
(Local Catholic Truth Society)
யாழ்ப்பாணத்தில், 1905 ஆம் ஆண்டு, தைத் திங்கள், கொலின் அடிக ாாரின் தலைமையில் ‘உள்ளூர் கத்தோ லிக்க உண்மை பரப்பும் சபை' ஆரம்பிக் கப்பட்டது. சுவாமி ஞானப்பிரகாசர் இச்சபையின் தலைவராகத் தெரிவு செய் யப்பட்டார். இச்சபையில் இருந்து மாசித் திங்கள் 1905 ஆம் ஆண்டிலேயே, முதல் கத்தோலிக்க வெளியீடு வெளி வந்தது 1925 ஆம் ஆண்டு வரையும் 19 கத்தோ லிக்க வெளியீடுகள் வெளி வந்திருக்கின் தறன. 'குடும்ப வாசக சபையிலிருந்து ஏழு (7) வெளியீடுகளையும் இச்சபை வெளி யிட்டிருக்கின்றது."
குறிப்புகள்
ஆதி ஆகமம். 4:9
லூக்காஸ். 4:19 மத்தேயு. 25:31-46
அமுது 'நெஞ்சே நினை' யாழ் மறை மாவட்டக் கழகம். யாழ்ப்பாணம்
975 i. 35.
5. Gnana Prakasar, XXV years of Catho
lic Progress, Jaffna. 1925, p. 40 6. Gnana Prakasar, op. cit, 40
7. David H. S. Nallur Swami Gnana Prakasar as a Religious Missionary (Manuscript p. 4)

43
முடிவுரை
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் ஒரு சராசரி மனிதன் அல்லன். அவர் சரித் திரம் படைக்கும் சமயப் பேரறிஞன். ஒடுக்கப்பட்ட்ோர் மத்தியில், ஒலைக்குடி சையில் வாழ்ந்தார். மாட்டு வண்டியில் பயணம் செய்து மறைப்பணி செய்தார். சவேரியாரைப் போன்று, சின்னப்பரைப் போன்று உயிருக்குப் பலமுறை ஆபத்து வந்தும் தன் சமயப்பணியிலிருந்து விலகா மல் இருந்தார். தான் வசித்த ஒலைக்குடி சைக்குள் மழைத்தூறலிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு கையில் குடை யும், மறு கையில் பேனவையும் பிடித்துக் கொண்டு எழுத்துப் பணியை மேற் கொண் டார். இத்தனை இன்னல்களுக்கிடையே மலைபோல் மறைப்பணியையும், இமயம் போல் இலக்கியப் பணியையும் செய்த ஒருவரை நினைத்து வியந்து போற்றி நிற்கின்ருேம். கிறிஸ்தவம் உள்ளவரை, கிறிஸ்தவர்களின் உள்ளத்திலும், தமிழர் களின் நெஞ்சத்திலும் வாழ்ந்து கொண்டு இருப்பார் நல்லூர் சுவாமி ஞானப்பிர
காசர்.
* David op. cit. p. 4 9. இயாகப்பர். 2:15
10. மத்தேயு, 25:35-36
1 1, Joseph Fernando S. Brief Record of a Crowded Life, Lord Kitchener Colombo, 1926 p. 6.
12. Stanislaus F. J., Gnana Prakasar and the Missionaryad paganos Vire Oblate Life. December Ottawa - 1980. p.263
13. அமுது, Op. cit., ப. 69
Il 4. S9Cypģ5. op. cit., Lu. 6 9
15. ஜெகநாதன் ‘தலைமகள்' புனித மிக்கேல் ஆலய புனிதப் படுத்தல் நினைவு மலர். உரும்பராய் 1978 ப. 8

Page 56
44
16. மதுரநாயகம் ரி. ஏ.ஜே 'என் அணு பவம்”* சுவாமி ஞானப்பிரகாசர் நூற்ருண்டு நினைவு மலர். ஞானப் பிரகாசர் நூற்ருண்டு விழாக்குழு. கொழும்பு. 1975. ப. 76
17. Stanislaus, op. cit, p. 266
18. Gnann Prakasar, op, cit., p. 42 19. Зжурфі ор. cit., p. 75 20. Gnana Prakasar, op. cit., p. 193 21. Stanislaus, op. cit., p. 266 22. Gnana Prakasar op. cii, , p. 46 23. Ibid, p. 209
24. Ibid,
புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பா

25.
26.
27.
28.
25.
30.
சுவாமி ஞானப்பிரகாசர், ‘ஆண்ட வர் சரித்திரம் முதற் பாகம், புனித வளனர் அச்சகம், 1938 ப. முன்னுரை ஞானப்பிரகாசர் g5 LÊì Up Gì Lp (7 Jp ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு 1 கட்டுரை 'இலங்கைக் கத்தோலிக்க மிஷெனறிமாரும் தமிழும்' ஞானப் பிரகாசர். ஆச்சிரமம். திருநெல்வேலி யாழ்ப்பாணம். 1973.ப. 71 Joseph Fernando, op. cit, p. 15 Stanislau, op. cit., 268 Edmund Pieris Missionapy and Scholar
சுவாமி ஞானனப்பிரகாசர் நூற்ருண்டு நினைவு மலர். 1975.ப. 15
Gnana Prakasar, op. cit, p. 35
zsortb.

Page 57


Page 58