கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 55

Page 1
“
* - L T L L L L L L L L TL TLT L L L L L L L L LS
·
ழும்புத் தம் சபை வரைவு பதிவு பெற்ற தமிழ் மொழிப்
கொ
 
 
 
 
 
 

。
。 曇
ழ்ச் சங்கம்
iளது) பண்பாட்டு அமைப்பு)
|

Page 2

"அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு '
திருவள்ளுவர்.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் (சபை வரைவுள்ளது)
சங்கங்களுக்கான அரச கட்டளைச் சட்டத்தின் படி பதிவு பெற்ற தமிழ்மொழிப் பண்பாட்டு அமைப்பு
தொடக்கம் : 22.03.1942 பதிவு எண் : எஸ் 73
55 ம் ஆண்டுக்கான ஆட்சிக் குழுவின் பொது அறிக்கை
திருவள்ளுவர் ஆண்டு :- 2027-28 Ժ.ւմ :- 1996
1. உறுப்பினர் தொகை
235 114
ஆயுள் உறுப்பினர்
சாதாரண உறுப்பினர்
2. கூட்டங்கள்
ஆட்சிக் குழுக் கூட்டம் :- 13 பொதுக் கூட்டம் :- 01 விசேட பொதுக்கூட்டம் :- 01 குழுக் கூட்டங்கள் :- 04

Page 3
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை
ஏட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர்
நினைவிலே நடந்து ஓர்ஏன மருப்பிலே பயின்ற பாவை
மருங்கிலே வளரு கின்றாள்.
- வரந்தருவார்.
முகப்புரை :
அன்பும் பண்பும் மிக்க தமிழ்ச் சங்க உறுப்பினர்களே வணக்கம்.
இன்று உங்கள் கையில் இருக்கும் இவ்வறிக்கை தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சியில் நாம் எடுத்துவைத்திருக்கும் இன்னொரு மைல் கல்.1996ம் 1997ம் ஆண்டுகளில் யாம் எமது சங்கத்தில் ஆற்றிய பணிகளையும் ஊக்குவிப்புகளையும் மற்றும் சங்கத்தோடமைந்த நிகழ்ச்சிகளையும் உங்கள் பார்வைக்கெனத் தந்திருக்கின்றோம். இவ்வாண்டு கொழும்புத் தமிழ்ச்சங்கம் பல நெருக்கடியான, தடுக்கி விழக்கூடிய பாதைகளின் ஊடாக தன் காலடிகளை மிகவும் கவனத்துடனும் நிதானத்துடனும் அணுகி புதிய சுவட்டினைத் தந்துள்ளது. இதனால் எங்கள் சங்கத்தின் பணிகள் பல இடைஞ்சல் காரணமாக இலக்கியத் துறை வளர்ச்சியிலும், உலகெங்கும் தமிழ் விழாக்கோலம் பூண்டு தமிழ் வளர்ப்பதிலும் பல தடைகளை யாம் தாண்டிக் கடந்தோம். அவ்விழிப்பான வழியமைப்பு வருங்காலத்தில் சங்கத்தின் முன்னேற்றத்தை அமைக்க நாம் கற்றுக்கொண்ட அனுபவங்களாகவே கருதுகின்றோம். 1997 ம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டிடப் பகுதியை எமது பெரும் சாதனையாகவும் நாம் கொண்ட திட சங்கற்பத்தின் நல்விளைவு என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். அடுத்து வரும் நிர்வாகத்தினர் இதன் தொடர்ச்சியைப் பேணி, வீறுநடை போட்டுத் தமிழும் தமிழரும் தமிழ்ச்சங்கமும் முன்னேறுவதற்கு FG) விதமான நற்பணிகளை மேற் கொள்ள வேண்டும் எனத் தமிழ் அன்னையையும் இறைவனையும் வேண்டுதல் செய்கின்றோம். இனி யாம் இயற்றிய பணிகளைத் தருகின்றோம்.
ஆண்டுப் பொதுக்கூட்டம் 1995
தமிழ்ச்சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 31.12.1995 அன்று நடைபெற்றது. அதிகளவிலான உறுப்பினர்கள் இதில் பங்கு பற்றினார்கள்.
2

இக்கூட்டம் ஆட்சிக் குழுவின் தீர்மானத்தின்படி சங்க நூலக மண்டபத்தில் சங்கத் தலைவர் இலக்கியச் செம்மல் திரு.செ. குணரத்தினம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கடந்த ஆண்டின் (1994) பொதுக் கூட்ட அறிக்கை, வரவு செலவுக் கணக்குகள், ஆட்சிக் குழு அனுமதி பெற்ற பிரேரணைகள் என்பன பொதுச் சபையின் அங்கிகாரத்தைப் பெற்றன.
நடப்பாண்டிற்கான காப்பாளர்கள், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைப் பொருளாளர் ஆட்சிக் குழு உறுப்பினர்கள், உள்ளக கணக்காய்வாளர், பகிரங்கக் கணக்காய்வாளர், ஒப்படைச் சபை உறுப்பினர்கள் ஆகியவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இக் கூட்டத்தின் அறிக்கையை முன்னர் பதவி வகித்த செயலாளர் அவர்கள் இதுவரை எழுதவில்லை. எம்மிடமுள்ள சில குறிப்புகளைக் கொண்டு இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டு இன்று உங்கள்முன் சமர்ப்பிக்கப்படுகின்றது.
விஷேட பொதுக் கூட்டம்.
சங்கத்தின் விஷேட பொதுக்கூட்டம் ஒன்று 26.01.1997 ல் நடைபெற்றது. சங்கத் தலைவர் திரு. செ. குணரத்தினம் அவர்கள் தலைமையில் சங்கக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 86 அங்கத்தினர், இதில் பங்கு பற்றினார்கள். இக் கூட்டம் விசேடமாக பொதுச் செயலாளர் க.இ.க. கந்தசாமி கல்விச் செயலாளர் திரு. சு. பேராசிரியர் ஆகிய இருவர் மீதும் கொண்டு வரப்பட்ட குற்றங்களைப் பொதுச் சபையின் கருத்துக்கு அறிவிப்பதும், அவ்விருவரையும் அவர்கள் வகிக்கும் பதவியில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் நீக்குவதற்காகவும் கூட்டப்பட்டது. இவ்விருவருக்கும் தம் மேற் சுமத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்கு மறுதலித்து விளக்கம் அளிக்கச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. திரு. க. இ.க. கந்தசாமி அவர்கள் இக் கூட்டத்தில் ஒரு மணித்தியாலம் வரை பேசினார். அதில் தான் இதுவரை காலமும் சங்கத்திற்கு ஆற்றிய பணிகளையும் தொண்டுகளையும் செயல்களையும் பற்றிப் பேசினாரே அன்றி, தன் மீது சுமத்தப்பட்ட தவறான முறையில் சங்கத்தின் நிதிக் கையாள்கையை தான் கையாண்ட முறைபற்றியோ, தான் அதில் சம்பந்தப்படவில்லை என்றோ மறுத்துரை செய்யவில்லை. அவ்வாறே திரு. சு. பேராசிரியருக்கும் விளக்கம் அளிக்கச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.பேராசிரியர் தம் மீது கொண்டு வரப்பட்ட நிதிக் குறையீட்டை சங்கத்திற்குத் திரும்பக் கொடுப்பதற்கான வாக்குறுதியை அளித்தார். இதன் பின்னர் சங்கத்தின் பெரும்பான்மை வாக்குகளால் திரு.க.இ.க. கந்தசாமி அவர்களும் திரு.சு. புேராசிரியர் அவர்களும் முறையே பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் கல்விச் செயலாளர்
3

Page 4
பதவியில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் நீக்கப்பட்டனர். அன்று 1995,1996 ம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கைகள் சகல உறுப்பினர்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.இவ்விரு ஆண்டுக் கணக்கு அறிக்கைகள் பொதுச் சபையில் அங்கீகரிக்கப்பட்டன.
இலக்கிய நிகழ்ச்சிகள். தைத்திருநாள் கவியரங்கு.
1997ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14ம் திகதி தைத்திருநாளில் 'அமைதிப் புறாவுக்கு ஓர் அழைப்பு’ என்னும் தலைப்பைக் கொண்ட பொருளில் கவியரங்கம் நிகழ்ந்தது. இலக்கியச் செயலாளர் திரு. ஜின்னாஹற் ஷெரிபுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக் கவியரங்கில், சங்கத் தலைவர் திரு. செ.குணரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் கவிஞர்கள் மு. பொன்னம்பலம், இ.தயானந்தா, அல். அசோமத், இரா.மயில்வாகனம் ஆகியோர் பங்கு ஏற்றனர். இதில் இளம் மாணவர்களாகிய செல்வர்கள் க. நிலக்ஷன், சே. அஸ்சியான் க. சேதுகாவலர், இ. வாமலோசனன், சிறந்த தம் கவிப் படைப்புகளைத் தந்தார்கள். பதில் செயலாளர் ஆ. பொன்னையா நன்றியுரை வழங்கினார். இவ்விழாவின் சிறப்பானது இதில் பங்கு பற்றிய யாபேரும் கவிதையில் தமது ஆக்கங்களைத் தந்தமையே.
சுவாமி ஞானப்பிரகாசர் 50 வது ஆண்டு நினைவு நாள்.
இலங்கைத் திருநாட்டின் தமிழ்ப்பேரறிஞரும், தமிழ் நாட்டில் பெருமதிப்பு பெற்றவருமான சுவாமி ஞானப்பிரகாசரின் 50 வது ஆண்டு நினைவு நாள் 20.4.1997 சங்கக்கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் திரு. செ.குணரத்தினம் தலைமை ஏற்று கூட்டத்தை நடத்தினார். இவ்விழாவில் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி மார்க்கஸ் பர்னாந்து அடிகளார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சுவாமி ஞானப்பிரகாசர் பற்றிய நினைவுப் பேருரையை தமிழில் நிகழ்த்தினார். அதி வணக்கத்துக்குரிய அடிகளார் அவர்கள் நீண்ட நேரம் நிகழ்த்திய பேருரை யாவருடைய கவனத்தையும் ஈர்த்ததோடு மனதிலும் எண்ணத்திலும் நன்கு பதிந்தது. அவருடைய தமிழ்ப் பேச்சு நன்றாகத் தமிழைக் கற்றறிந்த ஆய்ந்த ஒரு பெரும் புலவரின் பேச்சாக இருந்தது. இவருடைய பேச்சிலே வேற்றுமொழிக் கலப்பதென்பது இல்லை. மேலும் அடிகளார் சுவாமி ஞானப்பிரகாசரின் திருவுருவப்படத்தை திரை நீக்கம் செய்து வைத்தார். அவ்வுருவப்படம் கேட்போர் கூடத்தில் தொங்க விடப்பட்டுள்ளது. இவ்விழாவில் திரு. அருள் இராஜேந்திரன் அவர்கள் சுவாமி ஞானப்பிரகாசர் பற்றிய நூல் ஒன்றினையும் வெளியீடு செய்தார். அவரே அதன் ஆசிரியருமாவார். இந்நூல் தமிழ்ச்சங்கச்சார்பில்
4

வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து சொல்லேர் உழவர் திரு. அந்தனிசில் அவர்கள் 'தமிழ் எழுத்து வடிவங்கள்" என்னும் ஆய்வுரையை பலரும் வியக்கும் வண்ணம் நிகழ்த்தினார். அவ்வாய்வுரை பின்னர் வீரகேசரி நாளேட்டில் வெளியிடப்பட்டது என்பது இங்கு குறிப்பிட வேண்டும்.
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்களின் நினைவு நாள்.
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்களின் நினைவு தினமும், நினைவுப் பேருரையும் சங்கக் கேட்போர் கூடத்தில் 29.03.1997 ல் திரு. செ. குணத்தினம் அவர்கள் தலைமயில் நடைபெற்றது. அன்றைய தினம் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் திருவுருவப்படம் திரை நீக்கம் செய்யப்பட்டது. இவ்விழாவில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பற்றிய அறிமுக ஆய்வுநூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.இது தமிழ்ச்சங்க நிதியில் இருந்து அச்சிடப்பெற்றது. திரு. க. குமரன் நூலக செயலாளர் அவர்கள் மிகக் குறைந்த செலவில் சிறந்த முறையில் இந் நூலை அச்சிடுவித்துக் கொடுத்தார். அவருக்கு எம் நன்றி. இந்நூலின் ஆசிரியர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் இவ்விழாவின் போது சிறப்பாய் வாளராகக் கலந்து கொண்டு பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் திறமையையும், அவர் தமிழ் மொழிக்கும், இயல், இசை, நாடகம் மற்றும் தமிழ் துறைகளுக்கும் ஆற்றிய பணிகளைப் பற்றி நுணுக்கமான ஆய்வுரையை நிகழ்த்தினார். இவ்வாய்வு நூல் இந்து கலாச்சார பண்பாட்டுத் திணைக்களத்தாலும் வடகிழக்கு தமிழ் பகுதியினராலும் முறையே 50 பிரதிகள் வாங்கப் பெற்றன. அம்மட்டோடு அமையாது பல்கலைகழகங்களுக்கும் நூலகங்களுக்கும் எமது சங்கம் சில பிரதிகளை அன்பளிப்புச் செய்தமை இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.
கண்ணதாசன் நினைவு விழா
கவியரசர் கண்ணதாசனின் நினைவு நாள் விழா தமிழ் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் 1996ம் ஆண்டும் 1997 ம் ஆண்டும் ஜூன் மாதம் 26ம் திகதிகளில் கொண்டாடப்பட்டது. இலங்கை கண்ணதாசன் மன்றத்துச் செயலாளர் கவிஞர் கங்கை வேணியன் கண்ணதாசன் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து குத்து விளக்கும் ஏற்றி வைத்தார். கவியரசர் நினைவு தினத்தன்று வந்திருந்தோருக்கு சிற்றுண்டி வழங்கப் பெற்றது. மாணவர்களும் சங்க உறுப்பினரும் கண்ணதாசன் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
பொன்விழா போற்றிசை வெளியீடு
இந்நூல் இலக்கியச் செம்மலும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்
5

Page 5
தலைவருமான திரு. செ. குணரத்தினம் அவர்களால் கவிதை வடிவில் ஆக்கப் பெற்றது. இது கொழும்புத் தமிழ் சங்கத்தின் வரலாற்று நூலாகவும், தமிழ்ச்சங்கம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை தலைமை தாங்கியவர்களினதும், செயலாளர்களினதும் மன்றத்துப் பெரும் புலவர்களையும் தொகுத்து வரலாற்று ஆக்க நூலாக வெளியிடப்பட்டது. இதில் ஆசிரியரின் தமிழ்ப் புலமை கற்பனை வளம் சொல் வன்மை என்பன பெரிதும் வெளிக் கொணரப்பட்டதோடு இவ்வாறான ஒரு படைப்பைத் தந்த திரு. செ. குணரத்தினம் அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்நூலின் வெளியிட்டுவிழா 10.04.1996 அன்று சங்கக் கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் புரவலர்கள் புலவர்கள் அமைச்சர்கள் தமிழ்ச் சான்றோர்கள் பலரும் வருகை தந்து அவ்வெளியீட்டினையும் நூலையும் போற்றியும் புகழ்ந்தும் பாராட்டினார்கள். மேலும் தலைவர் திரு.செ. குணரத்தினம் அவர்கள் தமது செலவிலேயே இதனை அச்சு வாகனம் ஏற்றுவித்ததோடல்லாமல் இதன் வருவாய் (100000 ரூபா ஒரு இலட்சத்தினையும் சங்கக் கட்டிட நிதிக்காக அன்பளிப்புச் செய்தார். இந்நூலின் பிரதிகள் சில இன்னும் சங்கத்தில் உள.
கலேவலா காவியம்.
இக்காவியம் பின்லாந்து நாட்டின் பாரம்பரிய பண்பாட்டுக் காவியத்தின் தமிழாக்கம். 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" என்றார் பாரதி. பின்லாந்து நாட்டில் வசிக்கும் இதன் ஆசிரியர் தமிழ் அறிஞர் திரு.ஆர்.சிவலிங்கம் பதிப்பித்தற்கான முழுச் செலவையும் ஏற்றுத் தமிழ் சங்கத்தின் வெளியீடாகச் செய்துள்ளார். இதன் வெளியீடு 3.4. 1996 ல் கொழும்புத் தமிழ்ச்சங்கக் கேட்போர் கூடத்தில் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. இவ் வெளியீட்டின் போது பின்லாந்து நாட்டின் மதிப்புக்குரிய தூதுவர் அவர்கள் தமிழ்ச் சங்கத்திற்கு வருகை தந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இத்தகைய சிறந்த நூலை தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் கொண்டு சென்ற பெருமை எமது சங்கத்திற்குரியது. இக்காவியம் போன்று பிறநாட்டுக் காவியங்கள் தாய்நாடாம் தமிழகத்திலும் கூட இதுவரை வெளியிடப்படவில்லை எனச் சொன்னால் மிகையாகாது. இதன் ஆசிரியர் திரு. ஆர். சிவலிங்கம் அவர்களைப் பாராட்டுவதோடு, மேலும் பல ஆக்கங்களை அவர் படைக்க வேண்டும் என வேண்டுகிறோம். தமிழ் கூறும் நல்லுலகம் அவர் பணியை என்றும் பாராட்டும். நினைவு கொள்ளும். தமிழ்ச்சங்கம் இந்நூலின் பிரதிகளை பல்கலைக் கழகங்கள் நூல் நிலையங்கள் பலவற்றிற்கு அன்பளிப்பு செய்துள்ளது.

"தமிழ் சிங்கள இலக்கிய உறவு நூல் வெளியீடு.
தமிழ் சங்கத்தினால் வெளியீடு செய்யப்பட்ட பல நூல்களில், சங்கத்தின் துணைச் செயலாளரும் பன் மொழிப் புலவருமான திரு. த. கனகரத்தினம் அவர்களால் எழுதப் பெற்ற இலக்கிய உறவு’ என்னும் தமிழ் சிங்கள ஒப்பீட்டு இலக்கிய ஆய்வு நூலும் ஒன்று. திரு. த. கனகரத்தினம் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஓராண்டு காலமாக ஆற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இவ்வாசிரியர் இத்தகைய பணிகளை பல்வேறு கட்டங்களில் செய்துள்ளார். இதுமட்டுமன்றி கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதர் வகுப்புகளில் வடமொழியைப் பயிற்றுவிக்கும் பேராசிரியராகவும் விளங்குகின்றார். இந்நூலின் வெளியீடு சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இவரின் நேரடிச் செவ்வியையும் அன்று ஒலிபரப்புச் செய்தது. இந்நூலுக்கான சாகித்திய மண்டலப் பரிசி (1997) னையும் புலவர் த. கனகரத்தினம் அவர்கள் பெற்றார் என்பது பெருமைக்குரியதே. இவ்வெளியீட்டின் போது சிங்கள, தமிழ் அறிஞர் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில் இந்து தமிழ் கலாச்சார திணைக்களம் தனது அனுசரணையை வழங்கியது.
கந்தபுராணச் சிந்தனைகள் வெளியீடு
தமிழர் தெய்வம் முருகனைப் பற்றிய ‘கந்த புராணச் சிந்தனைகள்" என்னும் ஆய்வு நூல் சங்கக் கேட்போர் கூடத்தில் வெளியீடு செய்யப்பட்டது. இது சங்க வெளியீடாக மட்டுவிலைச் சேர்ந்த புலவர் ஆ. நடராசா அவர்களால் ஆக்கப் பெற்று வெளியிடப்பட்டது. நூலாசிரியரே சகல செலவுகளையும் பொறுப்பேற்று வெளியீடு செய்தார். மிகச் சிறந்த ஆய்வு நூலாக இருப்பதோடு சிந்தனைக்குரியதுமாய் விளங்குகின்றது. பல பேராளர்களும் புலவர்களும் இவ் வெளியீட்டின் போது சமுகம் அளித்து புலவர்.ஆ. நடராசாவைக் கெளரவித்தனர்.
கலிங்க மகோன் வரலாறு வெளியீடு
கலிங்க மகோன் வரலாறு என்னும் இந்நூல் மட்டக்களப்பை வதிவிடமாகக் கொண்ட செல்வி க. தங்கேஸ்வரி ( தொல்) சிறப்புப் பட்டதாரி அவர்களால் வரலாற்று ஆய்வு நூலாக 1997 ம் ஆண்டு சங்கக் கேட்போர் கூடத்தில் அறிமுக நூலாக வெளியீடு செய்யப்பட்டது. தலைவர் செ. குணரத்தினம் அவர்கள் தலைமை தாங்கினார். இது தமிழ் சங்க வெளியீடு. நூலாசிரியர் தனது செலவில் இதனை அச்சிடுவித்து வெளியீடு செய்தார். மிக அரிய பெரிய பொக்கிஷம் தமிழர் வரலாற்றின் ஒரு காலப் பகுதியாக விளங்குகின்றது.

Page 6
தாய்லாந்து சிறுவர்களின் நாட்டார் கதைகள் வெளியீடு
மொழி பெயர்ப்பு நூலாக புலவர் திரு. த. கனகரத்தினம் அவர்களால் ஆக்கப்பெற்ற தாய்லாந்து சிறுவர்களின் நாட்டார் கதைகள் என்ற சிறுவர்களுக்கான கதைகள் தேசிய நூலக அபிவிருத்தி சபையினால் சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. அதனை அச்சிடுவதற்கு 20,000 ரூபா நிதி அளித்து, பரிசளிப்பும் பாராட்டு விழாவும் நடத்தியது. வண்ணப்படங்களுடன் கூடிய அழகிய நூலாக குறுகிய காலத்தில் இந்தியாவில் அச்சிட்டு வழங்கிய திரு.க.குமரன் அவர்களுக்குப் பாராட்டுக்களை சங்கம் தெரிவிக்கின்றது. இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடு என்பது இங்கு கூறத்தக்கதாகும்.
தனியார் இலக்கிய வெளியீடுகளுக்கு உதவுதல்.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் இலங்கை வாழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் படைப்புகளையும் அவ்வப் போது வெளியீடு செய்வதோடு அமையாது அவர்களின் படைப்புக்களை வெளியீடு செய்யும் போது சங்கக் கேட்போர் கூடத்தை தந்து உதவுவதோடு அதற்கான உறுதுணைகளையும் முன்னின்று செய்து வருகின்றது. இவ் வரிசையில் "மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா அவர்களின் சிறுகதைத் தொகுதி வெளியீட்டினை வெகு விமரிசையாகக் செய்தது. பெரும் புலவர்களும் முற்போக்கு எழுத்தாளர் பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்நூல் இந்தியாவில் பதிப்பிக்கப்பெற்று கொழும்புத் தமிழ்சங்கத்தில் வெளியீடு செய்யப்பட்டது. இது எமக்குப் பெருமையே.
இதே வரிசையில் 23.2.1997 ல் சங்கக்கேட்போர் கூடத்தில் செல்வி.ம. தேவகெளரி அவர்கள் எழுதிய எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள்' என்னும் விமர்சன ஆய்வு நூல் வெளியீடு செய்யப்பட்டது. அன்று தலைமை தாங்கிய சங்கத் தலைவர் திரு. செ. குணரத்தினம் அவர்கள் திரு.டொமினிக் ஜீவாவின் இலக்கியப் பணிகள் பற்றி எடுத்துரைத்தார். ஈழநாட்டில் கடந்த 30ஆண்டுகளாக ஒரு முற்போக்கு இலக்கிய ஏடான "மல்லிகை" என்னும் மாத சஞ்சிகையை நடத்தி இந்தியாவிலும், ஈழத்து எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தியதோடு, மண்வாசனை மிக்க புதிய இலக்கிய ஆக்கங்களைப் படைக்க உதவியுள்ளார் என்ற முறையில் மல்லிகை ஆசிரியர், ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளார் எனப் பாராட்டினார். அன்னாருக்கு தமிழ்ச்சங்கச் சார்பிலும், தன் சார்பிலும், பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கெளரவித்தார்.
கவிஞர் சுபத்திரன் அவர்களின் கவிதைகளை கொண்ட கவிதைத்

தொகுப்பு நூல் எமது சங்கத்தில் வெளியீடு செய்யப்பட்டது. திரு. சுபத்திரன் அவர்களின் சிந்தனையில் உருவான புரட்சிக் கவிதை இலக்கியம் இது என்பது யாவரும் அறிவர். இக் கவிதையின் அறிமுக விழாவை தமிழ்ச் சங்கம் செய்வித்து அவரின் ஆக்கங்களைக் கெளரவித்தது. சிறந்த படைப்பு நூல் பலரின் பாராட்டுதலையும் பெற்றது. இதில் சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் திரு. சோ. தேவராசா அவர்கள் புதுமையான விமர்சனத்தை வழங்கினார்கள்.
10.9.1997 சங்கக் கேட்போர் கூடத்தில் தில்லைச் சிவன் அவர்களின் ஆக்கமான 'அந்தக் காலக் கதைகள் என்னும் நூலின் அறிமுக விழா நடைபெற்றது.தலைவர் செ.குணரத்தினம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். புலவர்களும் புரவலர்களும் பேரறிஞர்களும் இவ்விழாவின் போது வருகை தந்து வெளியீட்டாளரைக் கெளரவித்தனர். பார்வையாளராக பலர் இதில் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நூலும் "மல்லிகைப் பந்தலின் வெளியீடு என்பது இங்கு சொல்ல வேண்டிய ஒன்று.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கலை விழாவும் நூல் வெளியீடும் சங்கக் கேட்போர் கூடத்தில் 29.9.97 ல் நடந்தது. பேராசிரியர் தில்லைநாதன் அவர்கள் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இலங்கை ஒலிபரப்புப் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளர் திரு. ஜோர்ஜ் சந்திரசேகர் எழுதிய 'வானொலியும் நானும்" என்னும் நூலின் அறிமுக விழா நடைபெற்றது. ஒலிபரப்புக் கூட்டுத்தாபன உறுப்பினர்களும் வேறு பலரும் வருகை தந்து மிகச் சிறந்த விழாவாகக் கொண்டாடினார்கள். இந்நூலின் ஆசிரியர் தனது சேவைக் காலத்தின் போது சந்தித்த பிரமுகர்களைப் பற்றியும் தனது அனுபவங்களையும் , படிப்போரைக் கவரும் முறையில் ஆக்கித் தந்துள் ளார்கள். வருங்கால சந்ததியினருக்கு இது ஒரு வழிகாட்டியாகவும், வானொலி பற்றிய ஆய்வு நூலாகவும் விளங்குவது நன்கு பாராட்டு தற்குரியது.
சங்கத்தில் முன்று கருத்தரங்குகள் நடைபெற்றன. 1. சமயங்கள் வளர்க்கும் தமிழ். 2. தமிழ் வளர்ச்சியில் தொலைத் தொடர்பு சாதனங்கள். 3. தமிழ் வளர்ச்சியில் மகளிர் பங்கு என்ற தலைப்புகளில் நடைபெற்றன. பலர் பங்குபற்றினர்.

Page 7
"விஞ்ஞானச் சுடர்” வெளியீடு
‘விஞ்ஞானச்சுடர் 3 பதிப்புகள்ன் வெளியீடு தமிழ்ச் சங்கக் கேட்போர் கூடத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மாணவர்களும் ஆசிரியர்களும் திரளாக வந்து இதில் கலந்து கொண்டனர். கல்விச் செயலாளர் திரு.சு. பேராசிரியர் இவ்வெளியிட்டின் மூலகர்த்தா, முக்கிய கவனம் செலுத்தி ஆக்கம் பெற உதவினார். இந்நூல் தற்கால மாணவருக்கும் ஆசிரியருக்கும் பல கருத்துக்களைப் புகட்டும் அறிவு நூலாக அமைந்துள்ளது.
கவிதைப் போட்டிகள்
1996ம் ஆண்டு நாவற்குழியூர் கலாநிதி கா.செ. நடராசா அவர்களின் நினைவாக ஒரு கவிதைப் போட்டியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தமிழ் சங்கத்தின் அனுசரணையுடன் நடத்தியது. பரிசு வழங்கல் சங்கக் கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது. இதன் முதற் பரிசு தமிழ்ச் சங்கத்தின் இலக்கியச்செயலாளர் டாக்டர் ஜின்னா செரிபுதீன் அவர்களுக்குக் கிடைத்தது. இது எமக்கு பெருமையே, மேலும் 1997ம் ஆண்டும் இந்நினைவு தினக் கவிதைப் போட்டியும் மேற்கொள்ளப்பட்டது. தூது அல்லது ஆற்றுப்படை மரபுக் கவிதை தழுவிய ஆக்கங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதனை தமிழ்ச் சங்கமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இணைந்து நடத்துகின்றன. முதலாம் பரிசாக 10000/ரூபாவும் இரண்டாம் பரிசாக 5000/ ரூபாவும் மூன்றாம் பரிசாக 2500/ரூபாவும் வழங்கப்படவுள்ளன. தற்போது இக்கவிதை இலக்கியங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட நிலையில் உள்ளன. விரைவில் தமிழ்ச்சங்கக் கேட்போர் கூடத்தில் பரிசு பெற்றோர் விபரமும் பரிசில்களும் வழங்கப்படும். இந்தப் பரிசுத் தொகையை கலாநிதி கா.செ. நடராசா அவர்களின் மகன் மகிழ்நன் தமிழ்ச் சங்கத்தினுாடாக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கினார்.
யாழ்பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு . சு. வித்தியானந்தன் நினைவு முத்திரை வெளியீடு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி. சு. வித்தியானந்தன் தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் ஆற்றிய தொண்டு அநேகம். அன்னார் யாழ் பல்கலைக்கழகத்தை வலுவுடைய ஒரு பல்கலைக் கழகமாக உருவாக்கிய பெருமைக்குரியவர். இவரின் சேவையை நினைவு கூரும் முகமாக தமிழ்ச் சங்கம் முன்பு நினைவு நாளை விழாவாக கொண்டாடியது. அவரின் பணிகளைப் போற்றி நினைவு கொள்வது தமிழர் ஒவ்வொருவருமுடைய கடப்பாடு. கலாநிதி சு.வித்தியானந்தன் அவர்களுக்கு நினைவு முத்திரை ஒன்றினை அவருடைய
10

நினைவு தினத்தில் வெளியிடுவதற்கான முயற்சியில் தலைவர் அவர்கள் தபால் தொலைத் தொடர்பு திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு கடிதமும் அனுப்பினார். அவருடைய கடிதமும் வேண்டுகோளும் திணைக்களத்தவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பேராசிரியரின் உருவம் பொறித்த முத்திரை ஒன்று வெளியீடு செய்து வைக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அதற்கான உருவப் படத்தினையும், அவர் வரலாறு பற்றிய தகவல்களையும் சங்கத்தின் சார்பில் தலைவர் கொடுத்துதவினார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்களைக் கெளரவிக்க கூட்டம் ஒன்று சங்கக் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. இதனை இந்து இளைஞர் மன்றம் ஒழுங்கு செய்திருந்தது. கொழும்புத் தமிழ் சங்கம் இக் கூட்டத்திற்கு வேண்டிய சகல ஒத்துழைப்பையும் வழங்கியது. தலைவர் செ. குணரத்தினம் அவர்கள் இக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்கு சிங்கள மொழி அறிவிப்பாளர்களும், கூட்டுத்தாபன ஊழியர் பலரும் மன்றத்தின் உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர். புரவலர்கள் பலர் அறிவிப்பாளர்களுக்குப் பொன்னாடை போர்த்தியும் தங்கப் பதக்கங்களை அணிவித்தும் கெளரவித்தனர். இக் கூட்டம் கலைஞர்களைக் கெளரவிக்க எடுக்கப்பட்டது போன்று வேறெங்கும் இவ்வளவு ஒற்றுமையாக செயற்பட்டதைக் காணவில்லை எனப் பலரும் புகழாரம் சூடினார்கள்.
இலங்கைக்கு வருகை தரும் தமிழ் பேரறிஞர்களை அழைத்து அவர்களின் பேச்சுக்களை தமிழ் மக்கள் அறிய வைப்பது இந்து தமிழ் கலாச்சாரத் திணைக்களத்தின் நெடுங்காலப் பணியாக அமைந்து இருப்பதை யாம் அறிவோம். தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்த கலாநிதி ஒளவை துரைசாமி நடராசா அவர்களின் பேருரை இராமகிருஷ்ணமிசன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. திரு. செ. குணரத்தினம் தமிழ்ச் சங்கத் தலைவர் தலைமை தாங்கினார். முனைவர் ஒளவை துரைசாமி நடராசா அவர்களின் பேச்சு யாவரும் போற்றும் வண்ணம் மிக்க கருத்துக்களோடு இருந்தமை சமூகம் அளித்தவர்களால் புகழப் பெற்றது. இது போன்று வரும் காலத்திலும் எமது சங்கம் பல சங்கத்தினருடன் இணைந்து விழாக்களை நடாத்தும்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் தமது வெளியீட்டினை நேரில்
வந்து பெற்றுக் கொள்ளும் படி தலைவருக்கு சிறப்பு அழைப்பை அனுப்பி இருந்தார்கள். அவர்களுக்கு எமது நன்றி.
11

Page 8
நவராத்திரி விழா (கலைமகள் விழா) 1997
1996ம் ஆண்டு சங்கத்தால் இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டா டப்பட்டது. முன்னாள் செயலாளர் திரு.க.இ.க. கந்தசாமி அவர்கள், கல்விக் கழக மாணவர்களுடன் அமைதியான முறையில் இவ்விழாவினைக் கொண்டாடினார். யாவருக்கும் பிரசாதம் வழங்கப் பெற்றது.
1997 ம் ஆண்டு சங்க அலுவலகத்தில் நவராத்திரி ஆரம்பத்தின் போது கும்பம் வைத்து தலைவர் செ. குணரத்தினம் அவர்களால் குத்து விளக்கு ஏற்றி ஆரம்பித்து வைக்கப் பெற்றது.
10.10.1997ல் வாணி விழா சங்கக் கல்வி நிலையத்தில் நடைபெற்றது. வருகை தந்த மாணவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.
கட்டிட நிர்மானம்,
எமது தமிழ்ச் சங்கத்தின் 2வது தொகுதியான நான்கு மாடிக் கட்டிடத்தின் கீழ் நிலை மாடத்தின் 'கொங்கிறீற்’ வேலைகளும் படிக்கட்டு வேலைகளும் முடிவுற்றுள்ளன. இதனால் கீழ் நிலை மாடியின் தளப்பகுதி கட்டப்பட்டு முடிவுற்றது. பூச்சு வேலைகள் காலதாமதமாய் உள்ளது. பணநிலைமை சீரடைந்த பின்னர் அவை தொடர்ந்தும் செய்யப்படும். முதலாம் மாடிக் கட்டிடம் சங்கத்தின் கேட்போர் கூடமாக அமைய இருக்கின்றது. இக் கட்டிடப் பகுதி முன்னாள் தமிழ்ச்சங்க தலைவர் பொ. சங்கரப்பிள்ளை ஞாபகார்த்த மண்டமாக அன்னாரின் புதல்வர்களால் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் முழுச்செலவுத் தொகையை அமெரிக்காவில் இருக்கும் அன்னாரின் பிள்ளைகள் தருவதாக முன்கூட்டியே வாக்களித்திருந்தார்கள். அவர்களிடம் தொடர்பு கொண்டுள்ளோம். வெகு விரைவில் அடுத்து வரும் நிருவாகத்தினர் இதனை செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம். 2ம் மாடிக் கட்டிடம் அமைத்துத்தர முன்வரும் அன்பர்களையும் தமிழ் விரும்பிகளையும் யாம் அணுகியுள்ளோம். அம்மாடியைத் தொடர்ந்து வரும்மற்றும் மாடிகளையும் வெகு விரைவில் கட்டி முடிப்பதென எண்ணங்கொண்டுள்ளோம். இம்மாடியும் தற்போதுள்ள நூலகப் பகுதியும் இணைக்கப் பெற்று நூல் நிலையப் பகுதி வருங்காலத்தில் விஸ்த்தரிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
முன்பு கட்டிட ஒப்பந்தக் காரருக்கு கொடுக்க வேண்டிய ரூபா 473213/= கொடுத்துள்ளோம். முன்புகட்டப்பட்ட பகுதிக்கான பண நிலுவை செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கொன்கிறீற் போட்ட பணம்
12

750000/- இதில் 480000 ரூபாவை கொடுத்து விட்டோம். 270000 ரூபா வரை செலுத்த வேண்டியுள்ளது. இப்பணத்தை மாதம் தோறும் சங்க வருவாயில் இருந்து செலுத்தி வருகின்றோம். ஒப்பந்தக்காரர் திரு இலகுப்பிள்ளையின் ஒத்துழைப்பும் ஆதரவும் இப்பணிக்கு அவர் அளிக்கும் உதவிக்கும் எமது சங்கம் என்றும் கடப்பாடுடையது. கட்டிட நிர்மாணக் குழுவின் ஆக்கமும், ஊக்கமும், சங்கத் தலைவர், பதில் பொதுச்செயலாளர், பொருளாளர், ஆகியோரின் பங்களிப்பும் இதில் போற்ற வேண்டியுள்ளது. குறிப்பாக கட்டிடச் செயலாளர் திரு. ஜெ. திருசந்திரனின் பங்கு நினைவுகூர வேண்டியது. மேலானது.
கல்விப் பணி
கொழும்புத் தமிழ்ச்சங்கம் பல்லாண்டு காலமாக தமிழ்மொழி வளர்ச்சிக்கும் முத்தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருவது யாவரும் அறிந்ததே. தமிழ் மாணவருக்காக உயர்தர வகுப்புகள், கீழ் நிலை வகுப்புகள் சங்கத்தின் கல்விச் செயலாளர் மூலமாக 1996 ம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரை நடைபெற்று வந்துள்ளது. தமிழ் வகுப்புகள், ஆங்கில வகுப்புகள் சிங்கள வகுப்புகள், விஞ்ஞான வகுப்புகள், கணக்காளருக்கான வகுப்புகள், பொறியியல் வகுப்புகள் தையல் வகுப்புகள், கவின் கலை வகுப்புகள், கணனி வகுப்புகள் என்பன நடத்தப்பட்டு வந்தன வருகின்றன. 1997ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் கல்விப் பகுதியில் ஏற்பட்ட வருவாயில் குறை காணப்பட்டது. இதனால் கல்விச் செயலாளரின் மேற்பார்வையில் இருந்த இவ்வகுப்புக்களை மாற்றி வேறு நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழ்ச் சங்கம் கேள்விப் பத்திர மூலம் பெறப்பட்ட அதியுயர்ந்த பெறுமதியைத் தருவதாக கூறிய சங்க "ஆசிரியர் ஒன்றியத்திற்கு இப்பொறுப்பை ஒப்படைத்தது. இதன் மூலம் சங்கத்திற்கு நன்கொடை மிகக் கூடுதலாக கிடைத்தது. கிடைக்கின்றது. இஃது நிருவாக சபையினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு மேற் கொள்ளப்பட்டது. இன்று வரை எதுவித பிரச்சனையும் இல்லாமல் இவ் வகுப்புகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
இளம் சிறார்களுக்கான தமிழ் மொழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவை இலவச வகுப்புகள், தமிழ் மொழியில் சிறுவர்கள் போதிய தேர்ச்சியும் பயிற்சியும் பெற இவ்வகுப்புகள் உந்து துணையாக இருக்கின்றன.
வளர்ந்தவர்களுக்கான பண்டித பாலபண்டித “குப்புகள் ஆரிய
13

Page 9
திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத் தேர்வுக்கான வகுப்புக்கள் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இலக்கியம் இலக்கணம் ஆங்கிலம் , வரலாறு, வடமொழி, கவிதையாக்கம் என்பன இவ்வகுப்புகளில் சொல்லித் தரப்படுகின்றன. பண்டிதர் திரு.கா.செ. நடராசா, பண்டிதர் தா. ஆறுமுகம், பண்டிதர் ஆ. பொன்னையா, புலவர் த. கனகரத்தினம் பிள்ளைக்கவி வ. சிவராசசிங்கம் ஆகியோர் இதனைக் கொடுப்பனவுகள் எதுவும் ஏற்றுக் கொள்ளாமல் இலவச வகுப்புகளாக நடாத்தி வருகின்றார்கள். இருபாலாரும் இதில் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றார்கள்.
புலவர் தேர்வின்ைத் தமிழ்ச் சங்கம் நடத்துவதற்கேற்ற வகையில் அறிஞர்கள் பலர் கூடிப் பாடத்திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர். இது கல்வி கலாச்சார அமைச்சின் அனுமதி பெற்ற பின்னர் நடைமுறைப் படுத்தப்படும்.
சங்க அலுவலகம்
சங்க விசாரணைக் குழுவினரின் சிபார்சுகளுக்கமைய சங்கத்தில் நிர்வாக செயலாளராக இருந்த திரு.க.துரைரத்தினம் அவர்கள் இடை நிறுத்தம் செய்யப் பெற்று பின்னர் நிர்வாக சபையின் அங்கீகாரத்திற்கு அமைவாக வேலை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் சங்கத்தினைத் தாபன ரீதியாக செயற்படுத்துவதற்கு ஒரு சிறந்த அனுபவமிக்க நிர்வாக செயலரைத் தெரிவு செய்ய வேண்டி இருந்தது. எனவே பத்திரிகை விளம்பர மூலம் பெற்றுக் கொண்ட விண்ணப்பங்கள் பல பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வின் மூலம் நிர்வாக செயலாளர் திரு. கா. வைத்தீஸ்வரனை தெரிவு செய்து சேவையில் அமர்த்தினோம். இதனை ஆட்சிக் குழுவும் ஏற்றுக் கொண்டது. இந்த நியமனத்தின் மூலம் சங்க அலுவலகத்தில் நிரந்தரமான ஒருவர் இருந்து பணியாற்றுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இம்மாற்றம் சங்கத்தினை ஒரு தாபனமாக வளர்ப்பதற்கு முன்னோடியாக அமைந்துள்ளது.அலுவலகப் பாவனைக்கென இரும்பு அலுமாரி ஒன்றும் கொள்வனவு செய்யப்பட்டது.
எமது அலுவலகம் வாரத்தில் செவ்வாய்க்கிழமை முற்பகலிலும், வெள்ளிக்கிழமைகளிலும் வர்த்தக வங்கி விடுமுறை தினங்களிலும் நடை பெறுவதில்லை. ஏனைய நாட்களில் காலை 9.00 மணி தொடக்கம் 6.00 மணிவரை அலுவல்களுக்காக திறந்து இருக்கும்.
நிருவாக செயலரும் தட்டச்சு எழுத்தாளரும் சங்க அலுவலகத்தில் இருக்கும் புத்தகங்களின் கணக்கை எடுத்துள்ளார்கள். தேவைக்கு
14

அதிகமாக அச்சிடப்பட்ட சங்க வெளியீடுகள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை அரை விலைக்காகுதல் விற்பனைக்கான நடவடிக்கையை அடுத்துவரும் நிருவாகம் செய்யும் என எதிர்பார்க்கிறோம். இதைப் பரிசீலிக்க திரு. தி. கணேசராசா, திரு.த. கனகரத்தினம், திரு.க. குமரன் ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சிபார்சினை செய்துள்ளனர். இருப்பில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையும் அதன் பெறுமதியும் இங்கே தரப்படுகின்றன.
அலுவலக உபயோகத்திற்கென 2 மின்விசிறிகள் வாங்கப் பெற்றன. அவை இணைக்கப்பெற்றுள்ளன. நிர்வாகக் குழுவின் அனுமதி பெறப் பட்டது. முன்னாள் பொதுச் செயலாளர் இதுவரை சங்க ஆவணங்களை யோ,குறிப்புகளையோ, ஏடுகளையோ, அன்றி திறப்புகளையோ தரவில்லை என்பதைக் கூற விரும்புகின்றோம். இதனால் எமது சங்க அலுவல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
கட்டிடத் திருத்த வேலைகள்.
கல்விப் பணிக்கான மண்டபங்களிலும் மற்றும் நூலகத்திலும் ஏற்பட்ட மின்னொழுக்குகள் திருத்தப்பெற்றன. மின் விசிறிகள், வெளிச்ச இணைப்புகள் என்பன திருத்தப்பட்டன.கல்விப் பணிகளுக்கென அமைந்த பகுதிகளில் மறைப்புகள் செய்யப்பட்டன.சாளரங்கள் திருத்தப் பட்டு சாயங்கள் பூச வேண்டிய வேலைகள் தேங்கி இருக்கின்றன. அதனை வெகுவிரைவில் செய்து முடிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.
நூலகம்
யாழ் நூலகம் தீக்கிரையானதன் பின்னர் தமிழ் மக்களுக்குத் தேவையான பண்டைய இலக்கிய இலக்கண நூல்களையும் ஆய்வுகளையும் தற்கால நூல்களையும் தன்னகத்தே 16800 எண்ணிக்கையான தமிழ் நூல்களையும் கொண்டு விளங்குவது எமது தமிழ்ச் சங்க நூலகம். இந்நூலகத்தில் அங்கத்தினராக 547 பேர் இருக்கிறார்கள். இவர்களின் வாசித்தலுக்கான தேவையை இந்நூலகம் பூர்த்திசெய்வதோடு அங்கத்தவர் அல்லாதோர் நேரில் வந்து தமக்குத்தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் வழி செய்கின்றது. பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள், பல்கலைக் கழக மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் போன்றோர் இங்கு வருகை தந்து தமது தமிழ்த்தேவையை பூர்த்தி செய்கின்றார்கள். பொதுமக்களுக்குத் தேவையான இரவல் பகுதி ஒன்றும் இயங்கி வருகின்றது.
நூலக விஸ்த்தரிப்புக்கென சங்கம் 01 இரு' அலுமாரியையும், திறந்த ராக்கையையும் கொள்வனவு செய்தது. அத். டு எமது நூல்
15

Page 10
நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் இந்து கலாச்சார அமைச்சராக இருந்து அருந்தமிழ் பணி ஆற்றியவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மதிப்புக்குரிய திரு.பி.பி. தேவராஜ் அவர்கள் 50000/ ரூபா பெறுமதியான 5 இரும்பாலான அலுமாரிகளை அன்பளிப்புச் செய்தார். இந்நூலகத்தை செவ்வனே நடத்தவும் பராமரிக்கவும் என இதுவரை காலமும் நூலகர் ஒருவரே இயங்கி வந்தார். அவருடைய வேலைப் பளு அதிகமாக இருப்பதால் அவருக்குதவியாக உதவி நூலகர் ஒருவரையும் நியமித்துள்ளோம். நூலகம் காலை 9.00மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை திறந்திருக்கும். செவ்வாய், வெள்ளி, போயா அரசாங்க விடுமுறை தினங்களில் நூலகம் திறக்கப்படுவதில்லை. இது பொதுமக்களுக்கு அசெளகரியமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இத்தினங்களில் மாற்றீடாக வேறுவழிகளை எவ்வாறு கடைப்பிடிக்கலாம் என ஆலோசிக்கப்படுகின்றது. காலத்திற்குக் காலம் நூலகத்தின் கணக்கெடுப்பு நடைபெறுகின்றது. கட்டுகள் குலைந்து போன அரிய நூல்கள் மீண்டும் நல்ல முறையில் திருத்தியமைக்கப்பெற்றுக் கட்டப்படுகின்றன. சங்கம் இதற்கென குறிப்பிட்ட பணத்தொகையை செலவு செய்கின்றது.
பல தமிழ் வல்லாளர்கள் புரவலர்கள் நூல் நிலையத்துக்கு பல நூல்களைத் தாமே முன்வந்து அன்பளிப்பு செய்கின்றார்கள். இந்து கலாச்சாரத் திணைக்களமும், வட கிழக்கு தமிழ்த்துறைப் பகுதியினரும் பல அரிய நூல்களை அன்பளிப்பு செய்துள்ளனர். திரு. K.சண்முகலிங்கம் பணிப்பாளர் (இந்துசமய கலாச்சார அமைச்சு) அவர்கள் 238 அரிய நூல்களை அன்பளிப்பு செய்துள்ளார். இங்கு பல ஆய்வாளர்கள் வருகை தந்து தமக்கு தேவையான கருத்துக்களைச் சேகரிக்கிறார்கள் என முன்பு குறிப்பிட்டேன். இதில் மகரகமை தேசிய கல்லி நிறுவனம், இந்நூலகத்தை தமிழ்ப்பாட நூல்களின் ஆக்கத்திற்காகவும் தேசிய கல்வி நிறுவனம் சமய நூல் பாட ஆக்கத்துக்கும் பயன்படுத்தியது என்றால் நூலகத்தின் பெருமையும் சிறப்பையும் உணரக் கூடும் அன்றோ. நூல் நிலையம் விஸ்த்தரிப்புக்கான எண்ணம் எமக்கு உண்டு. வரப்போகின்ற கட்டிடத் தொகுதியின் இரண்டாம் மாடியும், தற்போது இயங்கும் நூலகமும் இணைக்கப்பெற்ற பின்னர் தமிழ் மக்களுக்கு நல்ல சேவையாற்றும் எனவும் நாம் நம்புகின்றோம். இந் நூலகத்தை யாம் விழாக்கள் கூட்டங்கள் ஆகியவற்றிற்கும் கேட்போர் கூடமாகவும் உபயோகிக்கின்றோம். கருத்தரங்குகளும் நடைபெறுகின்றன. இதனையும் வெகுவிரைவில் புதிய கட்டிடத் தொகுதியின் திரு பொ.சங்கரப்பிள்ளை நினைவு மண்டபம் நிறைவு பெற்றதும் அங்கு மாற்றவும் உள்ளோம்.
16

பத்திரிகைப் படிப்பகம்.
பத்திரிகை படிப்பதற்கென சங்கத்தால் பத்திரிகைப் படிப்பகம் ஒன்று ஆரம்பிக்கப்பெற்றது. தற்போது நூலகத்தோடு இணைக்கப் பெற்று அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பிரதான ஆங்கில தமிழ் நாளிதழ்களும், தமிழ் ஆங்கில வார இதழ்களும் சஞ்சிகைகளும் உள்ளன. சங்கம் தனது செலவில் இவற்றைக் கொள்வனவு செய்து உதவுகின்றது. அத்தோடு தமிழ் ஆர்வலர்கள் புரவலர்கள், அன்பளிப்பாகவும் இந்நூலகப் பத்திரிகை படிப்பகத்திற்கு வழங்கு கின்றார்கள். சமூக அமைப்புகள், வெளிநாட்டு தூதரகங்கள், மற்றும் பல உள்நாட்டு வெளிநாட்டு தமிழ்த் தாபனங்கள் இப்படிப்பகத்திற்கு நூல்களை அன்பளிப்புச் செய்து உதவுகின்றன. வெகுவிரைவில் புதிய கட்டிடம் அமையும் போது இப்படிப்பகம் அங்கு ஒரு தனியான அமைப்பாக அமையும். அதற்கென ஒரு கண்காணிப் பாளரையும் சங்கம் நியமித்து நன்மை செய்யும் என எதிர்பார்க்கின்றோம்.
கனடிய தூதராலய அன்பளிப்பு
எமது சங்கத்திற்கென கனடா நாட்டுத் துரதுவராலயம் ஒரு போட்டோ பிரதி எடுக்கும் இயந்திரத்தை அன்பளிப்பு செய்துள்ளது. இதன் இயக்கத்தை தானே கண்காணித்து வருகின்றது. சங்கத்தேவை களுக்கும் கல்விப் பகுதி தேவைகளுக்கும் மாணவர்களுக்கான பிரதி எடுக்கும் பணிகளுக்கும் இப்பிரதி பண்ணும் இயந்திரம் பேருதவியாக உள்ளது. இதன் பெறுமதி ரூபா 1,33000/ (ஒரு இலட்சத்து முப்பத்து மூவாயிரம்) ஆகும். இதனை அன்பளிப்புச் செய்த கனடா தூதுவருக்கும் அவர்களின் அலுவலர்களுக்கும் நன்றியுடையோம். இது போன்ற வேறு அன்பளிப்புக்களை வெளியில் பெற்றுக் கொள்ள வருங்காலத்தில் நடவடிக்கைகளைச் சங்கம் மேற்கொள்ளும். இந்த இயந்திரத்தை பெறு வதற்கு திரு. ஜெ.திருச்சந்திரன்அவர்கள் மிகவும் உதவினார்கள்.
சங்கத்தின் விளம்பரப் பலகை மீளமைத்தல்.
சங்கத்தின் நூலக விளம்பர பலகை 1983 ம் ஆண்டு தொடக்கம் விளம்பரப் படுத்தாமல் பின்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தது. இதனை 1997ம் ஆண்டு மீண்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என ஆட்சிக் குழு தீர்மானித்தது. அதற்கமைய சங்க வாசலுக்கருகாமையில் அப்பலகைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பலகையில் இருக்கும் தமிழ் வசனங்களுடன் ஆங்கிலமும் சிங்களமும் எழுதப்பட வேண்டும் எனப் பலர் அபிப்பிராயம் தெரிவித்தனர். ஆயினும், அதனை அவ் விளம்பரத்தில் எழுதிக்கொள்ள கால தாமதம் ஆகிவிட்டது. கூடிய விரைவில் ஆட்சிக் குழுவின் அங்கீகாரத்துடன் தமிழ், ஆங்கிலம்,சிங்களம், ஆகிய மொழிகளில்
17

Page 11
எழுதப்படும் என்பது எமது துணிபாகும்.
சங்கத்தின் தளபாட திருத்த வேலைகள்
தமிழ்ச்சங்கப் பாவனைக்கும் கல்விப் பாவனைக்கும் என சங்கத்தில் தளபாடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு சில வாங்கில்களும் பின்னிவிடப்பட்ட கதிரைகளும் உடைந்தும் உருக்குலைந்தும் காணப்பட்டன. இவற்றைத் திருத்தி மீண்டும் பாவனைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கதிரைகள் மீளவும் உபயோகத்திற்கான முறையில் திருத்தப்பட்டன.
கொழும்புதமிழ்ச்சங்கத்தின் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள். தொடர்ந்து கடந்த 4 வருடங்களாக இச்சங்கம் நைரோபியை தலை மையகமாகக் கொண்டு இயங்கும், ஐ.நா.தாபனத்துடன் தொடர்புகளைப் பேணி வருகின்றது. அத்தாபனத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஒரு அங்கத்தவராக இருக்கிறது. சூழல் இணைப்பு மத்தியஸ்தானம் பல்வேறு சஞ்சிகைகள் செய்தித்தாள்கள், உலக அரங்கில் நடைபெறும் சூழல் மகாநாட்டுச் செய்திகளை இலவசமாக அனுப்பி உதவுகின்றது.
இவை யாவும் எமது நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. உலகெங்குமுள்ள சூழல் பாதுகாப்புக் கழகங்களுடன் எமது சங்கம் தொடர்புகளைப் பேணி வருகின்றது. V
மேலும் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்துடன் இணைந்து சூழல் பாதுகாப்பு முயற்சியில் பல்வேறு கருத்தரங்குகளை நடாத்தியது. முதல்ாவது கருத்தரங்கு நீர்த்தட்டுப்பாடும் சக்திப் பிரச்சனையும்’ எனும் தலைப்பில் 3.5.1996 ல் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. கருத்து வழங்கியவர்கள்
(1)நீர்வளங்கள் - கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியை யோகா
இராஜநாயகம். (2)விவசாயத்தில் நீர்த்தட்டுப்பாடும் இதன் தாக்கமும் - நீர்ப்பாசன
திணைக்களப் பணிப்பாளர் எஸ். செந்தில்நாதன். (3)சக்தி விநியோகத்தில் நீர்த்தட்டுப்பாட்டுபிரச்சனை -இலங்கை
மின்சாரசபை எந்திரவியலாளர் ஆர். விமலகாந்தன். இலங்கை மின்சாரசபை இரசாயனவியலாளர் எஸ். பேராசிரியரின் தலைமையில் இரண்டாவது கருத்தரங்கு 1.6.1996நடை பெற்றது. போலியோ நோய் பற்றி டாக்டர் இ. சுந்தரலிங்கம் விரிவுரை நிகழ்த்தினார்.
30 - 6.1997 டாக்டர் ரி.அருளானந்தம் 'பாலியல் நடவடிக்கைகள் முலம் தொற்றுநோய்கள்" என்னும் விடயம் பற்றி விரிவுரை நிகழ்த்தினார்.
18

இத்தொடரில் நாலாவதாக கல்வி கற்பதின் நோக்கம் என்னும் விடயம் பற்றி 29.8.1997 ல் ஆர் செல்வராஜா (கல்வித் திணைக்களம்) அவர்கள் விரிவுரை நிகழ்த்தினார்.
"பெண் உரிமையும், தமிழர் கலாச்சாரமும்" என்னும் விடயம் பற்றி 26.9. 1997 ல் கலாநிதி செல்வி திருச்சந்திரன் உரை நிகழ்த்தினார்.
கருத்துரைகள் அனைத்தும் சங்க மண்டபத்தில் நடைபெற்றன. பெருந்தொகையான மாணவர்களும் பெரியோரும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இலங்கை விஞ்ஞான முன்னேற்றச்சங்கம் நிழற்படக் கருவி, ஒலி பெருக்கி முதலியவற்றை தந்து உதவியது. பிரபல வர்த்தகர் திரு.மா. தவயோகராஜா அவர்கள் பார்வையாளர்கள் அனைவருக்கும் சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் வழங்கி ஆதரவு நல்கினார்.
சங்கத்தின் வருவாய்கள்.
தமிழ்ச்சங்கத்தின் வருவாய்கள் பின்வரும் வகையில் கிடைக்கின்றன. கல்விப்பகுதி நன்கொடை நூலக அங்கத்துவம் நூல் விற்பனை, அன்பளிப்புகள் என்பனவற்றினால் வந்து சேருகின்றன. இவற்றில் கல்விப்பகுதியால் மாதாந்தம் ரூபா 53,000/ நன்கொடை வருவாயாகக் கிடைக்கின்றது. அங்கத்துவத்தாலும் ஓரளவு பணம் கிடைக்கின்றது. நன்கொடைகள் அன்பளிப்புகளாலும் பணம் பொருள் என்பனவற்றாலும் வருவாய்கள் கிடைக்கின்றன.
இந்து சமய கலாச்சார திணைக்கள அன்பளிப்புகள்.
மேற்படி திணைக்களம் ஆண்டுகள் தோறும்தமிழ் இந்து அமைப்புகளுக்கு பண அன்பளிப்புகளைக் கொடுத்து அவற்றின் செயற்பாட்டை ஊக்குவிக்கின்றது. 1996ம் ஆண்டு எமது சங்கப் பணிகளுக்கென ரூபா 20,000/யும் 1997ம் ஆண்டு ரூபா 10000 யும் அன்பளிப்பாக வழங்கியுள்ளது. எமது வெளியீடுகளையும் கெளரவித்து பிரதிகளையும் வாங்கிப் பேருதவி புரிந்து வருகின்றது.இந்து சமய கலாச்சாரத் திணைக்களப் பணிப்பாளருக்கும் அத்திணைக்கள அலுவலக ஊழியர்களுக்கும் எமது சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இவ்வுதவித் தொகையை அதிகரித்து வருங்காலத்தில் எமது பணிகள் ஓங்கி வளர அவர்கள் உறுதுணையாக நிற்பார்கள் என்பதில் எமக்குள் எதுவித ஐயமுமில்லை.
பொதுச் செயலாளருக்கு எதிரான விசாரணைகள்.
வருடங்கள் ஐந்துக்கு மேல் தமிழ்ச் சங்கத்தில் ஊழல், பணமோசடி
பற்றிய பிரசுாங்கள் பல வெளிவந்து கொண்டேயிருந்தன. இந்த
19

Page 12
ஊழல், பணமோசடி பற்றிய யாவும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் கெளரவ செயலாளராக இருந்த க.இ.க. கந்தசாமிக்கு எதிரான குற்றச் சாட்டுகளாகவும் தலைவர் என்ற முறையில் சங்கத் தலைவர் இவற்றை ஒழுங்குக்குக் கொண்டு வரவில்லை என்றுமே குறைகூறுவதாக இருந்தன. இவை சம்பந்தமாக 23.06.1993 ஆம் திகதி சங்க ஆட்சிக்குழு ஒரு விசாரணைக்குழுவினை நியமித்தது. சங்கச் செயலாளரின் ஒத்துழைப்பு இன்மைகாரணமாக இக்குழுவை விலக்கி வைத்து அதற்குப் பதிலாக மூவரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த குழு கூடி சில சிபார்சுகளை செய்தது. இருந்தும் முன்னைய குழுவும் தொடந்தும் கூடி தமது அறிக்கையையும் சமர்ப்பித்தனர். இக்குழுக்கள் எதுவித ஆதாரங்களும் பெறாத நிலையில் இவ்வறிக்கைகள் நிதர்சனமாக எவற்றையும் கண்டு அறியவில்லை. சங்கப் பொதுச் செயலாளரின் ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. ஆயினும் இவ்வறிக்கைகள் மூலம் சங்கத்தில் நிலவும் குறைபாடுகள் எடுத்துக் காட்டப்பெற்றன. அச்சிபார்சுகளில் ஒன்று ஒரு நிதிக்குழு அமைக்கப்பட்டு வரவு செலவுகள் பற்றி விசாரணை செய்ய வேண்டுமென்பதாகும். மற்றைய குற்றச்சாட்டுகள் பிரதானமாகச் சங்கப் பிரசுரங்கள் பற்றியே இருந்தன.
19.5.1996 இல் நடந்த ஆட்சிக்குழுக் கூட்டத்தில் 20.5.1996 நடைபெற இருக்கும் ஓம்படையார் சபைகூட்டம் பற்றியும், அதற்கு தலைவர், செயலாளர், பொருளாளர் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், அறிவிக்கப்பட்டது. அத்தோடு ஓம்படையார் சபையினரே விசாரணை நடத்தவுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் 20.4.1996 இல் எழுத்து மூலமான குற்றச்சாட்டுகள் தக்க ஆதாரங்களுடன் திகதியிடப்பட்ட தமது முறைப்பாடொன்றில் கல்விச் செயலாளர் சு.பேராசிரியர்,க.இ.க. கந்தசாமி ஆகிய பொதுச் செயலாளர் சங்கத் தேவைகளுக் கெனவும் சங்கப் பொதுச்செயலாளர் எனக் கையெழுத்திட்டும் தம்மிடம் 12.05.1991 ஆம் ஆண்டு ரூபா 31,000/மும் 10.06.1996 ஆம் ஆண்டு ரூபா 30,000/மும் பெற்றுக் கொண்டதாகவும், இத்தொகை சங்கச் சார்பாகவும் பெற்றிருந்தும், சங்கக் கணக்குகளில் காட்டப்படவில்லை யென்றும் இவற்றை விசாரித்து இப்பணத்தினைத் திரும்பப் பெற்றுத் தரவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமான கையெழுத்துப் பற்றுச் சீட்டுகளையும் காண்பித்ததோடு அவற்றின் படப்பிரதிகளையும் தலைவரிடம் ஒப்புவித்தார். இவற்றை விடப் பெருந்தொகையான பணத்தினைச் பொதுச் செயலாளர் காலத்துக்குக் காலம் சங்கத் தேவைகளுக்கும் தமது சொந்தத் தேவைகளுக்கும் என தம்மிடமிருந்து பெற்றிருந்தார் என ஆவணங்களுடன் சமர்ப்பித்தார்.
20

20.05.1996 ஒம்படையார் சபை கூடியது. இக்கூட்டத்தில் சங்கத் தலைவர் செயலாளர், பொருளாளர், அழைப்பின் பேரில் பிரசன்னமாக இருந்தார்கள். இக்கூட்டத்தில் ஒம்படையார் சபையினர் தாம் பகிரங்கக் கனக்காளர் இராசதுரை கொம்பனியின் அனுசரணையுடன் விசாரணை யொன்றை நடாத்தி உண்மைகளை அறிவதெனத் தீர்மானித்தனர்.
அதன் பின் நடந்த ஆட்சிக் குழு கூட்டத்தில் ஆட்சிக் குழுவிற்கு இந்த முடிபுகள் தெரிவிக்கப்பட்டதுடன் இந்த விசாரணை முடியும் வரை ஆட்சிக் குழு கூடுவதில்லையென்றும் தீர்மானிக்கப்பட்டது.
23.5.1996 இராசதுரை அன்ட் கொம்பனி பதிவுத் தபால் மூலம் எல்லா சங்க அங்கத்தவர்களுக்கும் ஏதாவது முறைப்பாடுகள் இருந்தால் சத்தியக் கடுதாசி மூலம் குறிப்பிட்ட திகதிக்கு முன்பு முறைப்பாடுகளைச் செய்யலாம் என அறிவித்தார்கள். இதன் பிரகாரம் 13 சத்தியக் கடதாசிகள் கிடைத்ததாக அறியப் பெற்றோம். அத்தோடு நம்பிக்கை நிதியத்தினரும் பகிரங்கக்கணக்காளரும் முறைப்பாடு செய்தவர்களையும் முறைப்பாட்டுக்குட்படுத்தப்பட்டவர்களையும் தனித்தனி அழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
3.09.1996 நம்பிக்கை நிதியத்தினரின் வேண்டுகோளின்படி ஆட்சிக்குழுக் கூட்டம் கூட்டப் பெற்றது. இக்கூட்டத்தில் இவர்கள் தமது அறிக்கையினையும், பகிரங்கக்கணக்காளரது அறிக்கையினையும் வாசித்து, விளக்கங்கள் தந்து அவற்றை தலைவரிடம் கையளித்தனர்.ஆட்சிக்குழு உறுப்பினர்களின் வேண்டுகோளின் படி அவ்வறிக்கைகளை ஆட்சிக்குழு ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. இவ்வறிக்கைகளின் பிரதிகள் ஆட்சிக் குழு உறுப்பினர்களுக்கு அன்றே அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வறிக்கையின் படி திரு.க.இ.க கந்தசாமியிடம் ரூபா61,900/அறவிட வேண்டுமென்றும் திரு. சு. பேராசிரியர் இடமிருந்தும் ரூபா 201,888ம் ரூபா 36,000 ம் அறவிடப்படும். பேராசிரியர் இத்தொகைகளைக் கட்டியுள்ளார். அத்தோடு தமது பதவியினையும் இராஜிநாமாச் செய்துள்ளார். இவ்வறிக்கைகளைப் பரிசீலிப்பதற்கென பின்போடப்பட்ட ஆட்சிக்குழுக் கூட்டம் 17/9/1996 இல் மீண்டும் கூடியது. 17/9/1996 இல் கூடிய ஆட்சிக்குழு பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழ்ச் சங்க வருவாயை பொறுத்த வரையிலும் முறையான கணக்குகளை நிருவகிக்கவில்லை என்பதை ஓம்படையாளர் சபையால் இங்கு விதந்துரைக்கப் பட்டது.திரு.க.இ.க. கந்தசாமி பொதுச்செயலாளர், திரு.சு. பேராசிரியர் கல்விச் செயலாளர் அவர்களும் இத்தகைய நிதிக் கையாள்கையில் பெருந்தவறு இழைத்துள்ளனர். எனவே அத்தகைய பணத்தொகை இருவரிடமிருந்தும் அறவிடப்படல் வேண்டும் என்பதையும், சங்கத்தின் நற்பெயருக்கும் கீர்த்திக்கும் ஊறு விளைவிக்க நடந்து
21

Page 13
கொண்ட இருவரையும் செயற்குழு அடுத்த ஆண்டுப் பொதுக்கூட்டம் அல்லது விஷேட பொதுக் கூட்டம் வரை அவர்களது சேவையைப் பெறக்கூடாது என்றும் இவர்களை இடைநிறுத்தி வைக்க வேண்டும் என்பதே அப்பிரேரணையாகும்.
இதன் பின் திரு.ஆ.பொன்னையா பதில் செயலாளராக பொதுச் செயலாளரின் வெற்றிடத்துக்கு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
26/11/1996 இல் 20 சங்க அங்கத்தவர்கள் திருத்தப்பட்ட விதி 16(1) கீழ் பொதுச் செயலாளர் க.இ.க. கந்தசாமியை சங்கத்தில் இருந்து நீக்குவதற்கென விசேட பொதுக் கூட்டம் ஒன்றினைக் கூட்டும் படி தீர்மானம் ஒன்றினைத் தலைவரிடம் சமர்ப்பித்தனர்.
இந்தத் தீர்மானத்தின் படியும் யாப்பு விதி 12(1) இன் கீழ் ஆட்சிக் குழுச் செய்த தீர்மானத்தினை உறுதிப்படுத்துவதற்கும் என முறையான விஷேட பொதுக் கூட்டம் ஒன்று 26/1/1997 திகதி நடைபெறுமென 27/ 12/1996 திகதியிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் உடனாகிய கடிதம் பதிவேட்டில் உள்ள ஒவ்வொரு அங்கத்தவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின் 26/01/1997இல் விசேட பொதுக் கூட்டம் இடம் பெற்றது. இக்கூட்டம் பொதுக் கூட்டமாகப் பின்வரும் காரணங்களுக்காகத் தலைவரால் கூட்டப்பட்டது.
(1) சங்க விதி திருத்தப் பெற்ற 16 (1) இன் படி முறையானி பிரேரணை யொன்றினைத் திரு.க.இ.க கந்தசாமி பொதுச் செயலாளாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தலைவரிடம் விடுத்த வேண்டுகோளின் படி கூட்டப்பட்டது. (2) அத்துடன் இக்கூட்டம் விசேட கூட்டமாகச் சில குற்றச் சாட்டுகள் காரணமாக பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் சங்க உறுப்புரிமையில் இருந்தும் சங்கத்தின் ஆட்சிக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட க.இ.க. கந்தசாமியின் நீக்கத்தை உறுதிப்படுத்தவென விதி 12(1) இன் கீழும் கூட்டப்பட்டது.
கூட்டத்துக்கு என்றுமில்லாதவாறு 82 அங்கத்தவர்கள் சமுகம் தந்தனர். இப்பிரேரணைகள் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்டு, திரு.க.இ.க கந்தசாமிக்கு விளக்கம் அளித்து பேசப் போதிய சந்தர்ப்பம் கொடுக்கப்பட்ட பின்னர் கூட்டத்துக்குச் சமூகம் தந்து வாக்களித்தவர்களில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையால் பிரேரணை நிறைவேறின. 44 பேர் சாதகமாகவும் 6 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.
27/1/1997 ஆந் திகதி இந்த பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட
22

மையையும் க.இ.க. கந்தசாமிக்கு பதிவுத் தபாலில் அறிவித்தும், சங்க உடமைகளையும் ஆவணங்களையும் சங்க உத்தியோகத்தரிடம் ஒப்புவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
இந்நிலையில் திரு.க.இ.க. கந்தசாமி இரண்டு வழக்குகளை கல்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
(1) திரு.செ. குணரத்தினம், கொழுப்பு தமிழ் சங்கத் தலைவரிடம் ரூபா 5 இலட்சம் நஷ்ட ஈடுகோரி 7.3.1997 திகதியிடப்பட்ட 1235 /97என்ற வழக்கு. இவ்வழக்கின் செலவு முழுவதும் தலைவரின் சொந்தப் பணத்திலேயே செலவு செய்யப்பட்டது. செலவு செய்யப்படுகின்றது. (2) திரு.செ. குணரத்தினம், கொழும்பு தமிழ் சங்கத் தலைவர் திரு.பொ. பரமபாதர் தமிழ்ச் சங்கம் பொருளாளர்,திரு. ஆ. பொன்னையா, பதில் பொதுச் செயலாளர், இவர்களுக் கெதிரான 2/5/ 1997 திகதியிடப்பட்ட வழக்கு. இவ்வழக்கு கோட்டாரின் தடை உத்தரவு கோரிய ( Injunction ) வழக்கு.
இவற்றுள் முதல் வழக்கு இப்பொழுதும் தவணை போடப்பட்ட நிலையில் உள்ளது.
மற்றைய வழக்கு திரு. க.இ.க. கந்தசாமியினால் மீள வாங்கப்பட்ட நிலையில் சில நிபந்தனைகளுடனும் மூன்று மாதத்துக்குள் பொதுக்கூட்டம் கூட்டப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடனும் சமரசம் செய்யப்பட்டது.
இவ்வழக்கு நீதிபதியின் சமரச ஏற்பாட்டுக்குச் சங்க நன்மை கருதி பிரதிவாதிகள் ஏற்க வேண்டிய நிலையில் இதனை ஏற்றனர் என்பது குறிப்பிடப் படவேண்டியவொன்று. அத்தோடு திரு.க.இ.க. கந்தசாமி இவ்வழக்கு முடிவில் சங்க வளாகத்தினின்றும் வெளியேற்றப்பட்டார். பொலிசார் மூலமாகப் பல பிரயத்தனங்களை எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவருடன் உடன் இருந்து வந்த அவரது நெருங்கிய உறவினரும் தக்க முன்னறிவித்தலொடு வெளியேற்றப்பட்டார் என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும்.
புலமைப்பரிசில்கள் 1996-97 ம் ஆண்டுக்கானவை:
சங்கம் காலத்துக்குக் காலம் புலமை பரிசில்களையும் தமிழ் வளர்ச்சிக்காக ஆக்கம் செய்தோர். ஆகியோருக்கும் பரிசில்களை வழங்கி கெளரவிக்கின்றது. 1996 ம் ஆண்டு பின்வரும் பரிசில் தமிழ்ச் சங்கத்தால் வழங்கப்பட்டன.
23

Page 14
1. புலமைப் பரிசில் - ரூபா 1000
பெறுபவர்கள் ; தம்பிப்பிள்ளை சசிகலாதேவி
த. சுகிந்தலோசினி பெனிற்றோ சுதர்சன். 2. நூலாக்கப் பரிசில்கள்
(அ) கலாநிதி க.சிற்றம்பலம் ரூபா 3000/-“யாழ்ப்பாணம் தொன்மை
வரலாறு” வழங்கியவர் ; தலைவர் செ. குணரத்தினம் (ஆ) இரா. சிவலிங்கம் - கலேவலா காவியம்
வழங்கியவர் ; முன்னாள் தலைவர் பொ. சங்கரப்பிள்ளை நினைவுப் பரிசில்
3. இலக்கிய நாடகங்கள்
(அ) அகளங்கன் -
இ. இரத்தினம் புலய்ை பரிசில் (ஆ) கதிர்காம பிரபந்தம்
சந்தனா நல்லலிங்கம் (இ) வைரவர் மான்மியம்
இரா , மயில்வாகனம்
4. ஆய்வுக் கட்டுரைப் பரிசில்கள்.
(அ) "பாரதி காட்டும் வாழ்வியல் முறை”
அகளங்கன் (ஆ) உரிச் சொல் பாகுபாடும் பயன்பாடும்
வேல்முருகு அம்பிகை (இ) பாரதி இலக்கியத் துறை
விஜயகுமாரி தங்கராசா
பல்வகைப்பட்ட பரிசில்கள் வழங்கி கலைஞர்களை, கவிஞர்களை, இலக்கிய கர்த்தாக்களை, ஆய்வாளர்களை நாம் கெளரவிக்கின்றோம். மாணவர் சமுதாயத்திற்கான போட்டிகள் தேர்வுகள் என்பன தவிர்க்க முடியாத காரணமாகவும் நாட்டு நிலைமை காரணமாகவும் செய்ய முடியவில்லை. அடுத்த ஆண்டு இவற்றை நடத்த வேண்டும் எனக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.
24

சங்கத்தின் உறுப்பினர் மறைவுக்கு அஞ்சலிகள். பேராசிரியர் அல்ஹாஜ் எம்.எம்.உவைஸ் அவர்களுக்கு அஞ்சலி எமது சங்கத்தின் மூத்த உறுப்பினரும் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக இஸ்லாமிய தமிழ்த்துறைத் தலைவராகவும் விளங்கிய மதிப்புக்குரிய பேராசிரியர் அல்ஹாஜ் எம்.எம். உவைஸ் அவர்கள் காலமான போது தலைவர் செயலாளர் ஆகியோர் நேரடியாகச் சென்று தமது அஞ்சலியைச் செலுத்தினர். அன்னாரின் குடும்பத்தினருக்கு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கவலையைத் தெரிவித்தனர்.
நீதியரசர் எச்.டபிள்யு. தம்பையா கியூ.சி அவர்களின் மறைவுக்கு அஞ்சலி.
முன்னாள் மேல் முறையீட்டு நீதி மன்ற நீதியரசரும் சிறந்த கல்விமானும் தமிழ்ச்சங்கத்தின் மூத்த உறுப்பினரும் காப்பாளரும், தமிழ் பணியை வாழ்நாளில் முதன்மையாக கொண்டவரும் ஆகிய திரு. எச். டபிள்யு தம்பையா அவர்களின் மறைவு குறித்து தமிழ்ச்சங்கம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றது. தலைவர் செ. குணரத்தினம் அவர்கள் நேரடியாகவே சென்று அஞ்சலி செலுத்தினார். சங்கத்தின் ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக அன்னாருக்கு சங்கத்தில் நினைவு கூட்டம் வைக்க முடியவில்லை. அவரின் ஆண்டு நினைவு நிறைவின் போது இக் கூட்டத்தினை வருங்கால ஆட்சிக்குழு நடத்த வேண்டும் என விரும்புகின்றோம்.
யாப்பு விதிகள் திருத்தம்
யாப்பு விதித் திருத்தங்களுக்கு என ஒரு குழு நியமிக்கப்பட்டது. திரு.க. நீலகண்டன் திருத்த யாப்பு விதிகளை ஆட்சிக் குழுவுக்கு வாசித்து விளக்கம் அளித்தார். பல விதிகள் திருத்தம் செய்யப் பெற்றிருந்தன. மேலும் சில புதிய விதிகளும் சேர்க்கப்பட்டிருந்தன. ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் இதனைச் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும் ஆண்டுப் பொதுக் கூட்டம் 31.12.95ல் வைக்கப்பெற்றது. இதில் இத்திருத்தங்கள் யாவும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவ்விதிகள் சங்கப் பதிவாளரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அனுமதித்து பதிலும் கிடைத்தது. அவ்வியாப்பு பலருக்கும் அச்சுப் பிரதிகளாக அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் யாப்பு விதிகளின் திருத்தம் ஒரு பூரணமான ஒன்றாக அமையவில்லை. புதிய யாப்பு நிர்ணயக்குழு முற்று முழுதான யாப்பு ஒன்றினை உருவாக்குதல் மிகவும் அவசியம்.
25

Page 15
நாட்டு நிலமையும் எமது பணிகளும்.
நாட்டு நிலைமை வேதனைக்குரியதாய் இருக்கின்றது. தமிழ்மக்கள் இன்று சொல்லொணாத்துன்பங்களுக்கு ஆளாகி தினம் தினம் இன்னல்களை காண்கின்றார்கள். யாழ்ப்பானம் திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார், வன்னிப் பிரதேசம் போன்ற இடங்கள் போர் நடைபெறும் இடமாகவும் போர்க்காலச் சூழலாகவும் ஆக தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாகவும் அநாதைகளாகவும் அல்லல் படுகின்றார்கள். துயர்துடைக்க வழியின்றி வருந்துகின்றார்கள். இந்நிலைமையில் இலங்கை அரசியல் தலைவர்களுடன் சங்கத் தலைவர் நேரில் சென்று எம் மக்களின் துன்பியலைப் பற்றியும் அரசியல் தீர்வுக்கான ஒத்துழைப்பு மார்க்கம் ஆகியவற்றைப் பற்றியும் கலந்துரையாடியுள்ளார். எமது பங்களிப்பை வேறு வகையில் செய்ய முடியாத நிலைக்கு நாம் ஆளாகி இருக்கின்றோம்."இந்த அடிமை வாழ்க்கை மாறிச் சுதந்திரமாக நாம் வாழ இறைவன் அருள் கிடைக்க வேண்டும்" இறைவா, எம் செயலாவது யாதொன்றும் இல்லை உன் செயல் என்றே உணரப்பெற்றோம். நீயே தமிழையும் தமிழினத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுவதன்றி மார்க்கம் வேறறியோம்.
நன்றியுரை
அன்றும் இன்றும் சங்கத்தின் வளர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் உழைத்த பெருமக்களை நினைவு கூர்ந்து அவர் நன்றியை மனதில் கொள்கின்றோம். நிதிகள்,அன்பளிப்பு பணம் நூல்கள் பொருள்கள் சஞ்சிகைகள் ஆலோ சனைகள் வழங்கியோருக்கும், இச்சங்கம் நன்றியைக் கூறக் கடப்பாடு டையது. காலம் நேரம் கடமை என்பதையெல்லாம் மறந்து சங்கத்தின் வளர்ச்சிக்கென அமைந்த ஆட்சிக் குழுவினருக்கும், விஷேட பொது கூட்டத்தின் போது பெருமளவில் வருகை தந்து சங்கத்தின் பணிகளுக்குத் தமது பங்களிப்பைச் செய்த சங்க உறுப்பினர்களுக்கும் நேராகவோ, மறைமுகமாகவோ உதவி செய்த நல்லவர்களுக்கும் தமிழ் அபிமானிகளுக்கும் எமது நன்றி. இந்நன்றி எஞ்ஞான்றும் மறப்போம் அல்லோம்.
நிறைவுரை
முச்சங்க முறைமையில் கொழும்பில் தாபிக்கப்பட்ட எமது கொழும்புத் தமிழ்ச்சங்கம் " இன்று உலகளாவிய ரீதியில் தமிழுக்கும் தமிழர்க்கும், பண்டைய பாரம்பரியம் மாறாது உழைத்து வருகின்றது. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்னும் இலக்கணச் சூத்திர மொழிக்கிணங்க எமது சங்கம் முன்னைய பழமைக்கும் பின்னைய புதுமைக்கும் இணைப்புப் பாலமாக தனது பணிகளைச் செய்து வருகின்றது. இயல் இசை நாடகம் ஆகிய
26

முத்தமிழிற்கு அரும்பணி ஆற்றிவரும் தமிழ்ச் சங்கம், அடுத்துவரும் காலங்களில், தமிழ் துறையின் புதிய கண்ணோட்டத்தில் தனது பணி களைச் செய்யும். தாயகத் தமிழரும், இலங்கை வாழ் இன் தமிழரும் இதற்கு வழிகாட்டியாக விளங்கி எமது சங்கத்தின் வளர்ச்சிக்கு எல்லாவகையிலும் உதவ இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
"சாம் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்"
என்னும் தமிழ் புலவர் கூற்றை ஒவ்வொரு தமிழரும் மனங்கொண்டு தமிழுக்கும், தமிழர் மாண்புக்கும் உழைக்க வேண்டும் எனப் பிரார்த்திக் கின்றோம்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்"
‘வாழ்க தமிழ் வளர்க வையகம்"
'தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர்
- பாரதிதாசன்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்.
- பாரதியார்.
பண்டிதர் ஆ. பொன்னையா, பதில் பொதுச் செயலாளர் ஆட்சிக் குழுவுக்காக 1997ம்ஆண்டு ஒக்ரோபர் 26.
கொழும்புத் தமிழ்ச் சங்கம். 7, 57 ம் ஒழுங்கை, கொழும்பு O6
இலங்கை.
27

Page 16
கொழும்புத் தமிழ்ச்சங்கம் 1996
காப்பாளர்கள்
திருவாளர்கள். 1. பேராசிரியர் த. நடராசா 2. கலாநிதி எச். டபிள்யு தம்பையா 3. பேராசிரியர் எம்.எஸ். உவைஸ் 4. ஆர்.எம்.பழநியப்பச் செட்டியார். 5. சிவத்தமிழ்ச் செல்வி 7. தெ. ஈஸ்வரன்.
தங்கம்மா அப்பாக்குட்டி 6. சி. சின்னத்துரை ஜே.பி 8. த. நீதிராசா ஜே.பீ 9. 65). Çíಲ. துரைராசா 10. எஸ். கே. பொன்னம்பலம். 11. அல்ஹாஜ் எம்.என்.உஷாஜகான் 12. ஆ. சிவநேசச் செல்வன். 13. த. தருமராசா 14. ச. சர்வானந்தா.
தலைவர் ;
இலக்கியச் செம்மல் செ. குணரத்தினம்.
துணைத்தலைவர்கள்:-
1. திரு. எம். பீ.நடேசன் 2. திரு. ஆ. குணநாயகம் 3. திரு. வ. சிவராஜசிங்கம் 4. திரு. இரா. மயில்வாகனம். 5. திரு. பெ. விஜயரத்தினம் 6. அல்ஹால் எஸ்.எம். ஹனியா 7. திரு. த. அ. தேவதாசன் 8. திரு.ஆ. பொன்னையா 9. பேராசிரியர் சோ. சந்திரசேகரம் 10. திரு. தி. இ. சிவகுருநாதன். பொதுச் செயலாளர் :- திரு. க. இ.க. கந்தசாமி துணைச் செயலாளர் :- திரு.த. கனகரத்தினம். பொருளாளர் :- திரு பொ. பரமபாதன். துணைப்பொருளாளர் :- திரு.செ.தி. கனகலிங்கம்.
ஆட்சிக் குழு உறுப்பினர்கள்.
திரு வாளர்கள்.
1. இ. கருணாகரன் 2. ஜே. திருச்சந்திரன் 3. செ. பேராசிரியர் 4. ஆ.மா. இராசேந்திரன் 5. தி. கணேசராசா 6. ஆ. கந்தசாமி 7. சோ. தேவராசா 8. க. குமரன். 9. ஏ.எம். நகியா 10. சிற்றம்பலம் கந்தசாமி 11. ஏ. ஜே. செரிபுதீன் 12. ஆ. இரகுபதி பாலபூரீதரன் 13. அ. திருநாவுக்கரசு 14. கு. சோமசுந்தரம் 15. வ. சண்முகராசா 16. இ. வீரபாண்டியசர்மா. 17. சற்சொரூபவதிநாதன் 18. பா. கண்ணன். 19. எஸ். இராமதாஸ். 20. ஆ. தேசராசன்.
28

21. த. இராசரத்தினம் 22. க. உதயகுமார். 23. ச.பாலேஸ்வரன் 24. வீர சொக்கன். 25. பொ. இராமநாதன்.
உள்ளக கணக்காய்வாளர் :- திரு.கா. ஞானகாந்தன்.
திரு. த. கோபாலகிருட்ணன்
பகிரங்க கணக்காய்வாளர் :- மெசர்ஸ் ஜீ. இராசதுரை அன் கோ இலக்கியச் செயலாளர் :- டாக்டர் ஏ.ஜே. செரிபுதீன். கட்டிடநிலை அமைப்புச்
செயலாளர் :- திரு. ஜே. திருச்சந்திரன் நூலகச் செயலாளர் :- திரு. க. குமரன் கல்விச் செயலாளர் :- திரு.க. பேராசிரியர்
உறுப்புரிமைச் செயலாளர். திரு. க. உதயகுமார்.
சங்கப் பணித்துறைச் செயலாளர்
1. இலக்கியத்துறை
செயலர் : A. (Bu. G)éFrfulgië6öt
உறுப்பினர் திரு. வ. சிவராசசிங்கம்
திரு.த. கனகரத்தினம் திரு. ஆ. பொன்னையா திரு. கு. சோமசுந்தரம் திரு. சோ. தேவராசா திரு. இ. சிவகுருநாதன்.
2. நூலகத்துறை
செயலர் திரு. க. குமரன் உறுப்பினர். திரு. சு. பேராசிரியர்
திரு. சோ. சந்திர சேகரம். திரு. அருள் மா. இராசேந்திரம் திரு. இரா. மயில்வாகனம் திரு. எஸ். எம் கமால் தீன் திரு. ஆ. தேவராசன் செல்வி க. கணபதிப்பிள்ளை 3. கட்டிட அமைப்புத்துறை
செயலர் திரு ஜே. திருச்சந்திரன் உறுப்பினர் திரு. ஆ. தேவராசன்
திரு. செ. தி. கனகலிங்கம் திரு. எம். பி. நடேசன். திரு. ஆ. பொன்னையா
29

Page 17
4. கல்வித்துறை செயலர் உறுப்பினர்.
திரு. ஆ. குமாரசாமி திரு. த. கோபாலகிருஷ்ணன்.
திரு. சு. பேராசிரியர் திரு. செ. தி. கனகலிங்கம் திரு.க. உதயகுமார். திரு.வ. சண்முகதாசன் திரு. இ.செ.பாபுசர்மா. திரு.த. இராசரத்தினம்.
5. உறுப்புரிமை குழு
செயலர் உறுப்பினர்.
திரு. க. உதயகுமார். திரு. ஆ. இ. பாலசிறீதரன் திரு. செ. தி. கனகலிங்கம் திரு. ஆ. கந்தசாமி திரு. இ. கருணாகரன் திரு.கா. ஞானகாந்தன். திரு.இ. கணேசராசா
1996ம் ஆண்டு நூல்களின் அன்பளிப்பு விபரம்
திகதி
27.01.96 07.02.96 22.05.96
22.01.97 02.0297 06.02.97 17.02.97 26.02.97 01.03.97 29.04.97 23.04.97 07.05.97
பெயர் நூல்களின் எண்ணிக்கை திரு.வ. இராமையா 2 திரு கே.சுப்பிரமணியம் 12 திரு. கணேசலிங்கம் குமரன் 45 1997 ம் ஆண்டு நூல்களின் அன்பளிப்பு விபரம்
திரு.க. கந்தசாமி 1 திரு.திருமதி அ. சண்முகதாஸ் 09 திரு. யோகராஜா 02 திரு. செ. குணரத்தினம் ( தலைவர்) O2 திரு. யோ.கணேசன் ( ஆசிரியர் சங்கம்) 01. திரு. தேவராஜா ( சுண்ணாகம்) 01. திரு. த. கனகரத்திரனம் O2 திரு. செ. குணரத்தினம் (தலைவர்) O2 திரு. கே.சண்முகலிங்கம் இந்து சமய கலாச்சார
திணைக்களம்) 110
30

16.05.97 திரு. கே.சண்முகலிங்கம் இந்து சமய கலாச்சார
திணைக்களம்) 128 05.05.97 செல்வி சற்சொரூபவதி நாதன் O2 07.05.97 பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் (யா/
பல்கலைக்கழகம்) 02 10.05.97 பேராதனைப் பல்கலைக்கழகம் O2 10.06.97 திரு.வி.ப.வி. குமரன் ( நூலகச் செயலாளர்) O2 18.06.97 திரு. செ. குணரத்தினம் ( தலைவர்) 04 13.07.97 திரு. அகளங்கன். O1 16.07.97 திரு. செ. குணரத்தினம் ( தலைவர்) 06 23.07.97 திரு. செ. செந்தில் மனோகரன் 01. 23.07.97 திரு. அசோக்குமார் 05 23.07.97 திரு. நா. செல்லப்பா O2 27.07.197 திரு சமீம் O1 02.08.97 தி. விஸ்வநாத முதலியார் 03 10.08.97 திரு. சு.இ. இராசநாயகம் O2 25.08.97 பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் (யா/
பல்கலைக்கழகம்) 01. 1408.97 திரு. செ. குணரத்தினம் ( தலைவர்) 06 09.09.97 திரு.ஆ. பொன்னையா ப. செயலாளர். 14 09.09.97 திரு. செ. சொர்ணலிங்கம் 01. 29.09.97 திரு ஜோர்ஜ் சந்திரேசகரன் 02 05.10.97 திரு . ஆ. பொன்னையா 01.
கட்டிட நன்கொடைகள் 1996 -1997;
திரு. செ.குணரத்தினம் 25,000/- திரு. தி. கனகலிங்கம் 5000/. திரு. ஆர். ஞானகாந்தன் 1000/- திரு. எம்.பி. நடேசன் 5000/- யாழ் இந்து மகளிர் கல்லூாரி 3000/- திரு. ஜே. திருச்சந்திரன் 5000/- திரு. செ. குணரத்தினம் (புத்தக
விற்பனை மூலம்) 85361/- திரு.பெ. விஜயரத்தினம் 1000/- தேசிய கல்வி நிறுவனம் 2000/- பென்சினியர் சங்கம் 500/-
31

Page 18
திருமதி. தேவகெளரி சிறிகுமார் 500/-
விபகி 1000/- மானிப்பாய்மகளிர் கல்லூரி 500/- மாற்று நிறுவகம் 500/- கவிஞர் தில்லைச்சிவன். 500/-
நூலின் பெயர் பிரதிகள் பிரதி ஒன்றின்
விலை
1. திருக்குறள் 35 12.00 2. எனது யாழ்ப்பாணமே 40 10.00 3. வையா பாடல் 130 40.00 4. விபுலாநந்தம் 160 s 5. அலையருவி 75 6. ஜாதகக் கதைகள் 17 75.00 7. சிறுவர் பாடல்கள் 133 35.00 8. மலையருவி 22 9. கவிகற்பரசி 34 15.00 10. பொன்விழா போற்றிசை 34 150.00 11. ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சி 49 50.00 12. சிறிமத் பகவத் கீதை 31 50.00 13. பாவலர் சரித்திர தீபகம் 286 75.00 14. சங்கத் தமிழ் 517 150.00 15. பாலைக் கலி 50 40.00 16. மன்யோசு காதற் காட்சிகள் 122 125.00 17. நாம் தமிழர் 363 75.00 18. அம்மா சொன்ன கதைகள் 694, 50.00 19. அபிவிருத்தி புவியியல் பொருளியல் 257 6.00 20. இந்து நாகரீகம் ኤረ 35 35.00 21. அழகியது 36 22. அ. சின்னத்தம்பி அவர்கள் பேருரை 259 so 23. கருணாலய பாண்டியனார் வாழ்வும்
பணிகளும் 385 18.00 24. இணுவைச் சிவகாமியம்மை தமிழ் 68
32


Page 19
ŁALI LETIH-sisi,村— |
|현대험붙 院결합편·
融融
昌藏
-––1– -!!!!!!
- ()
¡¡¡¡¡¡¡¡No slų邻卡%下诹
கொழும்புத் தமிழ்ச்சங்கம் saeidae,
Gö7,57), sosission), Glās Ģints-6 (*) įsisirsroliša, siis)
 
 
 
 

ΕΤΗΡΙΕΤΑπ7 TITTET TIL WWWW