கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 25

Page 1
"எம்மை நன்ரு ய் இறைவு தம்மை நன்ருய்த் தமிழ்
கொழும்புத் த
25ஆம் ஆண்
சங்கப் பணி மனே, இல

பன் படைத்தனன் p செய்யுமாறே"
மிழ்ச் சங்கம்
டறிக்கை
, 7, 57ஆம் ஒழுங்கை,
ருத்திரா வீதி, காழும்பு - 6.

Page 2

கொழும்புத் தமிழ்ச் சங்கம்.
25 ஆம் ஆண்டறிக்கை.
திருவள்ளுவராண்டு 1998, ஆனி 17 (1 - 7 - 66) தொடக்கம் 1999
கார்த்திகை
7, (23 - 11 = 67) வரையுள்ள காலம்.
ஆட்சிக் குழுக் கூட்டம். 1 - 7 - 66தொடக்கம் 23 - 11 = 67 வரையுள்ள இக்காலத்தில் 9 ஆட்சிக்குழுக் கூட்டங்கள் நடைபெற்றன.
உறுப்பினர்.
fi . இவ்வாண்டு சேர்க்கப்பட்ட சாதாரண உறுப்பினர் தொகை - 21 சீவியகால உறுப்பினர் தொகை - இப்பொழுதுள்ள சாதாரண உறுப்பினர் தொகை - 56 சீவிய கால உறுப்பினர் தொகை - 65 விழாக்கள்;
1. சிலம்புச் செல்வர். மா. பொ. சிவஞானக் கிரா மணி
யார் அவர்களின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழா 6 - 8 - 66 இல் கொழும்பு, விவேகானந்த சபை, இலக்கிய மன்றம் ஆகியவற்றுடன் சேர்ந்து கொண்டாடப்பட்டது. இவ்விழா விவேகானந்த மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் திரு. வ, . அருளம்பலம் மா. பொ. சி. அவர்களுக்கு ஆசியுரை வழங்கினர்.
2. தமிழப் பெரியார் நினவு விழா: கு. வன்னியசிங்கம்,
சுப்பிரமணிய பாரதியார் வ. உ. சிதம்பரப்பிள்ளை, மறைமலையடிகள், திருவி கலியாணசுந்தரனுர் ஆகியோரின் நினைவு விழா 23 - 9 - 66 இல் சைவமங்கையர் கழகமண்டபத்திற் கொண்டாடப்பட்டது திருவாளர்கள் இ. இரத் தினம், எஸ். பொன்னுத் துரை, ஈழவேந்தன், எஸ். திருநாவுக்கரசு, செல்வி. எஸ். நாதன் ஆகியோர் பங்குபற்றினர். பாரதியார் பற்றிச் சொற் பொழிவு நிகழ்த்த அன்று சிறப்பாக அழைக்கப்பட்ட ‘தீபம்’ ஆசிரியர் நா. பார்த்தசாரதி அவர்கள் கூட்டத்துக்கு வரக் காலதாமதமாகியமையால் அவர் பேசுவதைக். கேட்கும் வாய்ப்பில்லாமற் போய்விட்டது. கூட்டத். துக்குச் சங்கத் தலைவர் திரு வ. அருளம்பலம் தலைமை தாங்கினர். பொதுச் செயலாளர் திரு ச. சரவண. முத்து நன்றியுரை கூறிஞர்.

Page 3
தமிழ் மூலம் விஞ்ஞான பாடங்கள் கற்றல் என்னும் பொருள்பற்றி இலங்கைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆ. வி மயில் வாகனம் அவர்கள், 5. 10 - 66 இல் பேசிஞர்கள். சங்கம் ஒழுங்கு செய்த ஜி. சி. ஈ. சாதாரண பரீட்சைக்கான தமிழ் மூல விஞ்ஞானபாட மீட்டல் வகுப்புக்களைச் சைவமங். கையர் கழக மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கையிலேயே பேராசிரியர் இச்சொற்பொழிவையாற்றினர். விஞ்ஞானபாடங். களின் முக்கியத்துவம் பற்றியும் தமிழ் மூலம் அவற்றைச் கற்றல் எளிது எனவும் அவர் எடுத்துரைத்தார். சங்கத்தலைவர் அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
கி. வா. ஐகந்நாதன் 60 ஆம் ஆண்டு மணிவிழா, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் 1 - 9 - 66 இல் நடைபெற்ற மேற்படி விழாவில் சங்கம் பங்குபற்றியது. இவ்விழாவை கி. வா. ஐகந். நாதன் மணிவிழாக் குழுவினர் ஒழுங்கு செய்திருந்தனர். விழாக்கூட்டத்தில் சங்கத்தலைவர் திரு. வ. அருளம்பலம் அவர் கள் கி. வா. ஐகந்நாதன் அவர்களுடைய தமிழ்த் தொன் டைப்பாராட்டி அன் ஞ ருக்கு ஆசியுரை வழங்கிஞர்கள்.
‘சங்ககால வாழ்க்கை நெறி' என்னும் பொருள் பற்றி கி. வா. ஜகந்நாதன் அவர்கள் 6 -7- 67 இல் சங்கத்தின் அழைப்பின் பேரில் சிறப்புச் சொற்பொழிவாற்றிஞர்கள். சைவ மங்கயர் கழக மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்குச் சங்கத்தலைவர் தலைமை வகித்தார். சங்க இலக்கியங்கள் பற்றி. யும் அக்கால வாழ்க்கை முறைகள் பற்றியும் விரிவான ஆழ்ந்த கருத்துப் பொதிந்த ஒரு சொற்பெருக்கைக் கேட்கும், வாய்ப்பு அன்று எமக்குக் கிடைத்தது. கூட்டமுடிவில் திரு. ஈழவேந்தன் நன்றியுரைகூறினுர்.
நூல்நிலையமும்படிப்பகமும். இவ்வான்டு நூல் நிலையத்திற் சில ஆக்க வேலைகள் நடை. பெற்றுள்ளன. முன்னர் நூல்கள் உதவியவர்கள் பெயர்களையும் அந்நூல்களின் பெயர்களையும் கொண்ட பதிவேடு எழுதப்பட்டிருக் கிறது. புதிதாக வந்த நூல் களுக்காக இரு புதிய அலுமாரிகள் வாங்கப்பட்டுள்ளன.
திரு. இ. பொ. செல்லையா, திரு. சி. எஸ். நவரத்தினம், திரு. வே. சிவக்கொழுந்து, திரு. சோ. நடராச, திரு. சு. நாகரத் தினம் ஆகிய அன்பர்களிடமிருந்து அமெரிக்கத் தூதுவரகம் சோவியத்துத் தூதுவரகம் ஆசிய நிறுவகங்களிடமிருந்தும் நூல்கள் அன்பளிப்பாகக் கிடைத்தன. திரு. சு. நாகரத்தினம் அவர்கள் 500 க்கு மேற்பட்ட சிறந்த நூல்களைத் தந்து தவி. யுள்ளார். இவர் இச் சங்க ஆயுள் உறுப்பினராவர். சங்கம் 300 ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுள்ள தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை வாங்கியுள்ளது. பிரித்தானிய, அமெரிக்கா, சோவியத் துத் தூதுவர கங்கள் சங்கத்தின் வேண்டு கோளுக்கிணங்கத் தத்தம் சஞ்சிகைகளைப் படிப்பதற்கு ஒழுங்காக அனுப்பி வருகின்றன. W

(3)
நூல்களையும் பத்திரிகைகளையும் பயன்படுத்துவோர் தொகை இவ்வாண்டு கூடியுள்ளது. பல்வேறு அரசாங்க திணைக்களங்களின தும் நிறுவனங்களினதும் தமிழ் மொழி ஆக்கமுயற்சிகளுக்கும் உயர் தரத்தேர்வுகளுக்குத்தமிழைக்கற்பவர்களுக்கும் இந்நூல்நிலையம் பெரிதும் உதவி வருகிறது சிறப்பாகக் கல்வி நூல் வெளியீட்டுத் தினைக்களத்தினர் இந்நூல் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்"
நூல்கள் உதவியவர்களுக்கும், முக்கியமாகத் திரு. சு. நாகரத்தினம் அவ்ர்களுக்கும், அமெரிக்க, பிரித்தானிய, சோவிய. த்துத் தூதரகங்களுக்கும் சங்கம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது
நூல் நிலையத்துக்கு மேலும் பல நூல்களைத் தந்து உதவு வதுடன் நூல் நிலையத்தை நன்கு பயன்படுத்துமாறும் உறுப் பினர்களைச் சங்கம் வேண்டிக் கொள்கிறது.
தமிழ் வகுப்புக்கள்:
புலவர் கருளுலய பாண்டியஞர் அவர்கள் வாரத்தில் ஒரு
நாள் (நோன்மதி நாளுக்கு மூன்ரும், நாள்) பிற்பகல் 5 மணி முதல் 7 மணி வரையும் தமிழ் இலக்கண இலக்கிய வகுப்புக் கள் நடாத்தி வருகிருர்கள். இப்பொழுது தொல்காப்பியமும் சிவஞான பாடியமும் படிப்பிக்கப்பட்டு வருகின்றன. தமிழைக் கசடறக் கற்று ஆய்ந்தறிந்த இப்பெரும் புலவரிடம் பாடங்கேட்டல் ஓர் அரும்பேருகும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்து வோர் தொகை மிகச் குறைவாக விருப்பது விருந்தத் தக்கது.
தமிழ்மூல விஞ்ஞான பாட வகுப்புக்கள்.
கல்விப் பொதுத் தராதரப் பரீட் சைக்காகிய விஞ்ஞான பாட ங்களைத் தமிழ் மூலம் சிறந்த முறையிற் கற்பிக்கக்கூடிய ஆசிரி யர் மிகக்குறைவாக விருப்பதனல் தம் பிள்ளைகள் அப்பாடங். களை நன்கு படிக்க முடியவில்லையெனப் பல பெற்ருேரும் எமது. சங்க உறுப்பினர் சிலரும் தெரிவித்தமையால் -அக்குறையைப் போக்கும் நோக்கத்துடன் சென்ற திசம்பர் மாத ஜீ. சீ. ஈ. சாதாரண பரீட்சைக்கு உதவக்கூடிய வாரஇறுதி மீட்டல்வகு. ப்புக்களை, தகுந்த ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த விஞ்ஞானப்பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு பரீட் சார்த்தமாக பரீட் சைக்கு முந்திய இரண்டு மாதமும் நடத்தினுேம். நாம் எதிர்பார்த்ததிலும் பார்க்கப் பெரும் அளவான பாணவர் வகுப்புக்களிற் சேர்ந்து எமக்கு உற்சாகமளித்தனர். இவ் வகு. ப்புக்கள் சைவ மங்கையர் கழக வகுப்பறைகளில் நடை பெற்றன.
பல பெற்றோன் வேண்டுகோளின்பேரில் அடுத்துவரும் ஜீ. சீ. ஈ. பரிட்சைக்காகிய பின்வரும் பாடங்களில் இப்பொழுது மீட்டல், வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன: உயிரியல்

Page 4
(4)
இரசாயனவியல், பெளதிகவியல், தூய கணிதம், பிரயோக கணி. தம், ஆங்கிலம். இவ் வகுப்புக்கள் எமது சங்கப்பணிமனையிலேயே நடத்தப்படுகின்றன.
ஈழத் தமிழர் வரலாறு:
இவ்வரலாற்றினைத் தகுந்த முறையில் எழுதி வெளியிட வேண்டுமெனச் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட முயற்சி இன்னும் பயனளிக்காமலேயிருக்கிறது. ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த சில தமிழ் அறிஞர்களின் உதவியை நாம் நாடியபோதும் அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இந்நாட்டின் முன்னேற்றத்திற்கும் சுதந்திரத்திற்கும் தமிழ்ப் பெரி. யார்கள் ஆற்றிய அரும்பெரும் தொண்டுகளைப் பலர் மறந்தும் சில வரலாற்று ஆசிரியர்கள் வேண்டு மென்றே, அறியாமை - யினலோ, தமிழ்ப் பெரியார்கள் ஆற்றிய தொண்டுகளுக்குத் தம் நூல்களில் இடமளிக்காமலும் வருவதினுல் இத்தகைய ஒரு வரலாற்று நூல் அவசியமெனத் தமிழ்மக்கள் பலர் கருதுகின்றனர்.
தமிழ் மக்கள் உரிமைக்கான நடவடிக்கைகள்.
சில அரசாங்கத் திணைக்களங்கள் இலங்கை மத்திய வங்கி பாடசாலைகள், கூட்டுத்தாபனங்கள் ஆகியன தமிழை ஒதுக்குவதையறிந்து அவ்வப்போது நடவடிக்கை யெடுத்துவந்துள்ளது. எமது சங்கம். இந்நடவடிக்கைகளின் விளைவாகச் சில தற் காலிக நன்மைகளேற்பட்ட போதிலும் நிரந்தரமான நன்மை களுண்டாயினவா வென்பது சந்தேகமே. தெய்வம் விடை. கொடுத்தாலும் பூசாரி விடைகொடான் என்ற பாங்கில் அர. சாங்கம் தமிழ் மொழிக்குச் சில நியாயமான இடம் கொடுக் கும் நோக்கமுடையதாயிருந்தபோதிலும் ஆங்காங்கு முக்கிய நிர்வாக இடங்களில் அமர்ந்துள்ள அரசாங்கம் தாபனங்களின் ஊழியர் சிலர் அந்த நோக்கத்திற்கு எதிராகவே நடந்து கொள்கின்றனரெனத் தெரியவருகிறது. முக்கிய நிர்வாக இடங்கள் இப்பொழுது தமிழ் உத்தியோகத்தருக்குக் கொடுபடு. வதில்லையெனவும் தற்செயலாக அத்தகைய இடங்களின் தமிழ் உத்தியோகத்தர் இருந்தால் அவர்கள் தமிழ்பற்றி எதுவும் பேசவோ செய்யவோ பயந்து. வாளாவிருந்து விடுகின்றனர் எனவும் கருத்து நிலவுகிறது. தமிழ் மொழியைப் பேணவேண்டும் தமிழிலேயே இயன்றவரையில் அரசாங்கத்திடம் நமது அலுவல்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்ற உணர்ச்சி தமிழ் மக்களிடையில் மிகக்குறைவு போலத்தெரிகிறது. எமது சங்கம் எடுத்த பெரும் முயற்சி காரணமாக வெள்ளவத்தை அஞ்சல் நிலையத்திலிருந்து தந்திகளைத் தமிழில் அனுப்பும் வசதிசெய்யப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்துவோர் தொகை மிகக்குறைவு, இது தமிழ் மக்களின் தமிழ் மொழி பற்றிய உணர்ச்சி எத்தகையது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

(5) சங்கப்பணிமனை.
பணிமனையில் இவ்வாண்டு ஒரு புதிய மலசலகடமும் ஒரு பெரிய அறையும் கட்டப்பட்டுள்ளன. சங்க ஆட்சிக்குழுக் கூட்டம், தமிழ் வகுப்புக்கள் முதலியன நடக்கும் பொது அறைக்கு மின் விசிறியும் மேலதிக விளக்குகளும் போடப்பட்டுள. ஒரே நேரத்தில் இரண்டு கூட்டங்களோ வகுப்புகளோ நடத்” தக் கூடியதாக மேசை, வாங்கு முதலிய தளபாடங்களும் செய்யப்பட்டுள. சங்கப் பொதுக்கூட்டங்கள், விசேட கூட்டங் கள் ஆகியவற்றையும் சங் டிப் பணிமனையிலேயே நடத்தக் கூடியதாக ஒரு மண்டபம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுவருகின்றன. இந்த மண்டபத்தை அமைக்கச் சங்க உறுப்பினர், தமிழ் அபிமானிகள் யாவரதும் ஒத்துழைப்பும் பண உதவியும் பெரிதும் தேவை.
சங்கப் பணிமனையிருக்கும் 57 ஆம் ஒழுங்கை மிக ஒடுங்கியதாக விருப்பதஞலும் மழைகாலத்தில் வெள்ளம் தேங்கிச் சேருக, விருப்பதஞலும் இரவில் வெளிச்சமில்லா திருப்பதனுலும் எமது சங்க நடவடிக்கைகளுக்குப் பெரும் இடைஞ்சல் விளைகி" கிறது. இந்த ஒழுங்கையை விசாலமாக்கித் திருத்துமாறு கொழு ம்பு மாநகரசபையை வற்புறுத்தி வருகிருேம்.
சங்கத்தின் அலுவல்கள் இப்போழுது பெருகிக் கொண்டு. வருவதானுல் ஒரு தொலைபேசி அவசியம் வேண்டுமென ஆட்சிக். குழு தீர்மானித்ததன் பேரில் அவ்வாறு ஒன்றைத் தந்துதவுமாறு தொலைபேசித் திணைக்களத்திற்கு விண்ணப்பம் செய்துள். ளோம். விரைவில் இது கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி
மேலே குறிப்பிட்ட பணிகளைச் செவ்விதிற் செய்து முடிப். பதற்குப் பல்லாற்ருலும் உறுதுணையாயிருந்த உறுப்பினர்க்கும், சங்கத்தின் முயற்சிகளில் நேர்முகமாகவும் மறை முகமாகவும் கலந்து கொண்டு பணிபுரிந்த ஏனைய அன்பர்க்கும், சங்கத்தின் விழாக் களையும் கூட்டங்களையும் நடாத்துவதற்குத் தங்கள் மண்டபத்தைத் தந்ததுதவிய சைவ மங்கையர் கழகத்தினர்க்கும், சிறந்த முறையில் தமிழ் வகுப்புக் சளை நடத்தும் புலவர் பாண்டியனுர் அவர்களுக்கும், எமது வேண்டுகோளுக்கிணங்கி விஞ்ஞான ஆங்கில பாட மீட்டல் வகுப்புக்களைச் சிறப்புடனும் பெரும் சிரமத்துடனும் நடத்திவரும் ஆசிரியர்க்கும், சங்கத்தின் இப்புதுச் சேவைக்குப்பெரும் ஆக்கமும் ஊக்கமுமளித்த உறுப். பினர், மாணவர் பெற்றேர் ஆகியோர்க்கும், சங்கத்தின் அறிக்கைகள் தீர்மானங்கள் முதலியவற்றைத் தம் செய்தித்தாள்களில் வெளியிட்டு எமக்கு ஊக்கமளிக்கும் ஆசிரிர்களுக்கும் சங்கத்தின் உளம் கனிந்த நன்றி உரியதாகுக.
வாழிய தமிழர் 1 வாழிய தமிழ் மொழி வாழி தமிழ்ச் சங்கம்!
7, 57 ஆம் ஒழுங்கை, ச. சரவணமுத்து,
கொழும்பு - 6 கெளரவ பொதுச் செயலாளர் ? 3 - l 1 - 67. ஆட்சிக்குழுவிற்காக.

Page 5


Page 6
ஜி. இராசதுரை பி.
சாட்டேட்
கொ
கொழும்புத் தமிழ்ச்
1966 திசம்பர் 31ம் தேதியுடன் முடிவடையு
 ெச ல வு
ரூ - ச சந்தா சேகரிப்பாளர் கழிவு 249-89 கூட்டங்களும் விழாக்களும் 354-8 மாநகரசபை வரி 23S-91 மின்சாரம் 184-20 செய்தித் தாள்கள் 52-40 அச்சுக்கூலி, கடுதாசி முதலியன 89-1 அஞ்சல் தந்திச்செலவு 172-30 திருத்த வேலைகள் 62-20 வகுப்புகள் 7-90 கணக்கியற்செலவு 50-00 பலவிதச் செலவு இணைக்கப்பட்டுள்ள பட்டியற்படி 45-35 பெயர்ப்பலகை மைதீட்டல் 83-30 செலவுபோக எஞ்சிய வருமானம் 3,575-03
ლხ. 5,262-40
1966, திசம்பர் 31இல் உள்ளபடி
பொறுப்பு
மு தனக் கணக்கு:
சென்ற ஐந்தொகைத் தாளின்படி 31,910-38
கூட்டி; செலவுபோக எஞ்சிய வருமானம் 3,575-03 35,485.41
நூல் நிலைய வைப்புப் பணம்:
சென்ற ஐந்தொகைத் தாளின் படி 35.00
கூட்டி மேலதிகம் 15-00 50-00
es. 35,535-41
LLLSLLL iLLLSLLLLLLLL LT TC TT TL LS LT TTTTLTT TYT0T LCCLTT :ரியென உறுதிப்படுத்தப்பட்டது.
ஜி. இராசதுரை, சாட்டேட் கணக்காளர் கொழும்பு, 967, நவம்பர், 20ஆம் தேதி.
* தட்டச்செழுத்துச் செலவு
தேங்காய் பிடுங்கியது கண்ணுடி ஓடுகள்
S
தோட்டம் துப்பரவு செய்த திருத்தவேலைகள் (கூரையும் பூ
சில்லறைச் சாமான்கள் சீமேந்தும் மணலும்

ஏ. (லண்), எப். சீ. ஏ. கனக்காளர்
ழும்பு. F 3 (bl6s) as
ம் ஆண்டுக்குரிய வரவு செலவுக் கணக்கு
ளது) வெள்ளவத்தை
வ ர வு
ரூ - ச உறுப்பினர் சந்தாப் பணம் 1,068-00 தன் கொடைகள் 1,760-00 கட்டிடநிதி நன்கொடைகள் i,800-39 பலவித வருமானம் 80-15 இலங்கை வங்கிக் கட்டுப் பணக் கனக்கு வட்டி 535.46 ஆஞ்சல் அலுவலகச் சேமிப்புக் கணக்கு வட்டி 18-40
கு 5,262-40 டியான ஐந்தொகைக் கணக்கு
இருப்பு
காணியும் கட்டடங் ஞம்
சென்ற ஐந்தொகைத் தாளின்படி 22,255 00 நளபாடம் முதலியன
சென்ற ஐந்தொகைத்தாளின் படி 2,271-73
டிட்டி அலுமாரி வாங்கியது 75-00 2,446-73 நூல்கள்:
சென்ற ஐந்தொகைத் தாளின்படி 923-65 உட்டி: மேலதிகம் 3-50 927-15 26)ff:
சென்ற ஐந்தொகைத்தாளின் படி 246-70 nவப்புப் பணங்கள் :
fesör SF trgurub O0-00 ல்லறைக்கடன்கள்:
சென்ற ஐந்தொகைத் தாளின் படி 197-85 ாக: கையில் 1,023.37 இலங்கை வங்கி நடப்புக் கணக்கில் 2,550-06 இலங்கை வங்கிச் சேமிப்புக் கணக்கில் 5,629-06 அஞ்சல் அலுவலகச் சேமிப்புக் கணக்கின் H5949س
ay . 35.535.
சரியென உறுதிப்படுத்தப்பட்டது.
வை. பொன்னுச்சாமி கெளரவ பொருளாளர்
25-05
4-5)
20-00
ģ 23.00 பட்டும்) ိနှိုဂို 22-85
ტოსნ. 1453.

Page 7


Page 8

TTöm -叫崎于品山, வள்ளவத்தை