கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆண்டுப் பொது அறிக்கை - 27

Page 1
"தமிழ் அழிந்திட்டால் த் நந்தமிழ் காப்பது நம் க
கொழும்புத் தமி
(அங்கீகரிக்கப் பெற்ற த
27 ஆம் ஆண்
"செல்வர்க்கழகு தம் சமூகத்
சங்கப் பணி மனே இல
தாலேபேசி - 8 37 59.
 
 
 
 

தமிழர் அழிவார் டன் அன்ருே! "
ழ்ச் சங்கம் தர்ம தாபனம்)
ரடறிக்கை
ந்தைத் தாங்குதல்"
, 7, 57 ஆம் ஒழுங்கை,
உருத்திரா வீதி, கொழும்பு - 6.

Page 2
கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆட்சிக்குழு உறுப்பினர், 1969.
ar IIIILuillsiltil t- திரு. இரா. சபாநாயகம் துனேக்காப்பாளர்- திரு. க ச அருணந்தி
பேராசிரியர் ஆ. வி. மயில்வாகனம் திரு. யோன் செல்லப்பா திரு. செ. இரங்கநாதன், கியூ. சி. திரு. வே. க. கந்தசாமி திரு. செ. நடராசா திரு. சோ. நடேசன், கியூ, சி. கலாநிதி, த, நல்வேநாதன் திரு. பி. நவரத்தினராசா, கியூ. சி. திரு. கே. சி. தங்கராசா திரு. வி. சிவசுப்பிரமணியம், நீதியரசர். திரு. பீ. ஆர் சாமுவேல் திரு. செள. தொண்டைமான், பா. உ. திரு. யே. ஆர். சின்னத் தம்பி திரு, யே, ம. இராசரத்தினம்
தலவர்: திரு. வ. அருளம்பலம் துணத்தலவர்:- திரு. கோ. ஆழ்வாப்பிள்ளே
திரு. மு. வைரவப்பிள்ளே திரு. இ. பொ. செல்லேயா திரு. கா. பொ. இரத்தினம், re. திரு. siis irt இரத்தினம் திரு. கீா.ஆ தவத்துரை திரு. வே. கணபதிப்பிள்ளே திரு. சி. ஆ. சுந்தையா திரு. சோ.நடராசா திரு. இ. நமசிவாயம் திரு. யேம்ஸ், தே. இரத்தினம் திரு. க. செ. நடராசா ஜனுப். எஸ். எம். கமால்தீன் திரு. க. நாகலிங்கம் திரு இ. பாஸ்கரவிங்கம் திரு. இ. சி. சோதிநாதன்
 

கொழும்புத் தமிழ்ச் சங்கம் 27ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டம் (27.12.69)
Harri
திருவள்ளுவராண்டு 2000, மார்கழி, 15 (29.12.68)தொடக்கம் 2001 மார்கழி 12 (27. 12, 69) வரையுள்ள காலம்,
ஆட்சி குழுக் கூட்டம்:
29. 12, 68 தொடக்கம் 27.12, 69 வரையுள்ள இக்காலத் நில் 9 ஆட்சிக்குழுக் கூட்டங்கள் நடைபெற்றன.
உறுப்பினர் நில:
இவ்வாண்டு சேர்க் சப்பட்ட ஆயுள் உறுப்பினரின் எண்ணிக்கை 3. சாதாரண உறுப்பினரின் எண்ணிக்ாக - 12. இப்பொழுதுள்ள ஆயுட்கால உறுப்பினரின்
எண்ணிக்கை - 83.
- 215.
சாதாரண உறுப்பினரின் எண்ணிக்கை
விழாக்கள், பொதுக் கூட்டம் முதலியன:
(1) சென்ற ஒப்பிறில் மாதம் தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானக் கிராமணியார் அவர்களே எமது சங்க ஆதரவில் கொழும்பிற் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அழைத்த பொழுது அவர் மனமுவந்து எமது அழைப்பை ஏற்று 15, 4, 69 மா8ல 6 மணிதொடக்கம் பம்பலப் பிட்டி, சரசுவதி மண்டபத்தில் "தமிழ் இலக்கியங்கள் காட்டும் வாழ்க்கை நெறி" என்னும் பொருள் பற்றி எமது சங்க ஆதரவில் ஓர் அரிய விரிவுரை ஆற்றினூர்கள். சங்கத் துஜனத் தலைவர் விரு மு. வயிரவப்பிள்ஃள அவர்கள் தலைமை தாங்கினூர்கள். பொ. சி. அவர்களுக்கும் அவர் எமது சங்க ஆதரவிற் பேசி புங்கு செய்வதற்கு உதவிபுரிந்த தமிழரசுக் கட்சியினருக்கும் ாங்கம் தன் உளம்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
திருச்சிராப்பள்ளி, ஜமால் முகம்மது கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் சி. நயினுர் முகம்மது, எம். ஏ. வர்கள் ஈழநாட்டிற் சுற்றுலாவுக்காக வந்தபொழுது எமது சங்க அழைப்பை அன்புடன் ஏற்று 'தமிழ் இலக்கியச் செல்வம்"

Page 3
எனும் பொருள்பற்றி, 6.5.69 அன்று பி. ப. 6 மணிக்கு பம்! பிட்டி, சரசுவதி மண்டபத்தில் எம்தி சங்க ஆதரவில் ஓர் அரி ஆராய்ச்சிச் சொற்பொழிவு நிகழ்த்தினர்கள். கூட்டக்கிற் ஜஞப் ஏ. எம். ஏ. அளபீஸ் அவர்கள் தலேமை தாங்கிஞர்கள் பேராசிரியர் நயினுர் முகம்மது அவர்களுக்கு எமது சங்கி பெரிதும் கடமைப்பட்டுள்ளது.
நாவலர் சில வழியனுப்பு விழா: (3) நாவலர் சபையினர் பூரீலழறீ ஆறுமுக நாவலர் அவர் களுக்கு எடுத்த சில ஊர்வலம் 24, 6, 69 அன்று கொழும் விவேகானந்த சபை மண்டபத்திலிருந்து புறப்பட்டபொழுதும் பம்பலப்பிட்டி, இந்துக் கணிட்ட பாடசாலே முன்றிவில் பொது அஞ்சளிக்காக வைக்கப்பட்டபொழுதும் எமது சங்க உறுப்பின பலர் கலந்து கொண்டனர். சங் சுத் தஃலவர் திரு. வ. அருளம்பஸ் தல மையிற் இந்துக் கனிட்ட பாடசாஃக்குச் சென்ற சங்க குழு சிஃக்கு மலர் மாலே சூட்டி அஞ்சவி செலுத்திற்று.
யாழ்ப்பாணம் திறந்த வெளியரங்கில் விசேட பந்த அண்மத்து 27. 6.69 தொடக்கம் 29,6, 89 வரை நடத்தப்பட்ட நாவலர்விழாவில் சங்கச் சார்பில் சங்கப் பொதுச் செயலாளரு வேறு சில உறுப்பினரும் கலந்து கொண்டனர்.
(4) தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலவர் மாண்பு மிக புலவ கா. கோவிந்தன் அவர்கள் திருக்கோணமலை நகராட்சிமன்றி த&lவர் திரு.எஸ் சிவானங்கள் அவர்களின் அழைப்பை ஏற்று திருவள்ளுவர் 2000 ஆண்டு விழாவிற் சிறப்புச் சொற்பொ வாற்ற வந்த பொழுது எமது சங்கம் பம்பலப்பிட்டி சரசுவ மண்டபத்தில் அன்னுருக்கு ஒரு பொது வரவேற்பளித்தது அவ்வைபவத்திற்கு நீதியரசர் மாண்புமிகு 3. திரைப்பிரானிய அவர்கள் கலேமை தாங்கினர், செல்வி அருந்த தி சிவசுப்பி மணியத் சின் தமிழ்த்தாய் வணக்க க் த டன் தொடங்கி
இலங்கைப் பாராளுமன்றப் பிரதிச் சபாநாயகர் திரு. மு. சி சிதம்பரம் பா. உ, தமிழ் மறைக்கழகத் தலேவர் பண்டித க.பொ. இரத்தினம் பா. உ. திரு சி. அண்ணும%, பா. உ. திரு எஸ். சிவானந்தன் திருக்கோனமலே நகராட்சிமன்றத் தலே ஆகியோர் புலவர் கோவிந்தன் அவர்களுக்குப் பாரட்டுன் வழங்கினர். ஈழ நாட்டுத் தமிழ் மக்கள் சார்பில் தமக்களிக் பட்ட பொது வரவேற்புக்கும் பாராட்டுரைகளுக்கும் நன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3
இதரிவித்த புலவர் கோவிந்தன் திருவள்ளுவர் பற்றி அரியதோர் சொற்பெருக்காற்றினுசி. சங்கம் பொதுச் செயலாளர் திரு ச. சரவணமுத்து நன்றியுரை கூறிஞர்.
ALI I tij gj சொற்பொழிவு:
5) தமிழ் நாட்டைச் சேர்ந்தவரும் முன்னர் ஈழத்திற் பல் லாண்டு வாழ்ந்தவரும் பல ஆராய்ச்சி நூல்களிள் ஆசிரியரு ான நுண்கலச் செல்வர் அ. இராகவன் அவர்கள் 9, 9, 69 பி. ப. 6 மணியளவில் வெள்ளவத்தை, சைவமங்கையர் வித்தி யாலய மண்டபத்தில் "கமிழர் பண்பாடு" எனும் பொருள்பற்றி ஓர் அரிய ஆராய்ச்சிச் சொற்பொறிவு சங்க ஆதரவில் நிகழ்த் திர்ைகள். சங்கத்துனே க் த&வர் திரு. மு. வயிரவப்பிள்ஃள நீஃமை வகித்தார். சங்கத்தின் இலக்கியக் குழுச் செயலாளர் திரு. இ. இரத்தினம் நன்றி தெரிவித்துப் பேசினூர்கள். திரு இரர்கள்ை அவர்கள் எம் சங்க ஆதரவிற் பேசுவதற்கு உதவி யளித்த இராகவன் வரவேற்புக் குழுவினர்க்குச் சங்கம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
காந்தி நூற்றாண்டுவிழா
(பி காந்தி சேவா சங்கத்தினரால் காந்தி நூற்ருண்டு விழா நிகழ்ச்சிகளிற் பங்குகொண்டு சிறப்புச் சொற்பெருக்காற்றவென விசேடமாக அழைக்கப்பட்ட தவத்திரு குன்றக் குடி அடிகளார் 26, 9, 69 மாலே 6.30 மணியளவில் பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் சங்க ஆதரவில், "சர்வோதயம்" எனும் பொருள் பற்றி மிக்க கருத்துப் பொதிந்த ஒரு சொற்பொழிவாற்றினுர் அடக விளார் பேசுவதற்கு முன் காந்தி சேவா சங்கச் செயலாளர் திரு. சி. க. வேலாயுதபிள்ளே அவர்கள் காந் நிசேவா சங்கம் %ய் ரிவரும் பணிகள் பற்றிச் சபையினர்க்கு எடுத்துரைத்து ாச்சங்க கிற்கு ஆதரவு நல்குமாறு வேண்டிக்கொண்டார். கட்ட த்திற்குச் சங்கத் தஃவா திரு. வ. அருளம்பலம் தலேமை வாசிக் கார், சங்கப் பொதுச் செயலாளர் திரு. ச. சரவணமுத்து நா க் கிரு குன்றக் குடி அடிகளாருக்கும் கூட்டத்தை ஒழுங்கு செய்ய உதவிய காந்தி சேவாசங்கதிற்கும் நன்றி தெரிவித்தார்.
விபுலானந்தர் சில வழியனுப்பு விழா:
(7) "யாழ் நூல்" வித்தகர் விபுலானந்த அடிகளாரின் முத் தமிழ், சமய, கல்வித் தொண்டை மறவாத தமிழ் அன்பர் சுள் அடிகளாருக்கு நினைவுச் சின்னம் அமைக்குமுகமாக மின்ஞரின் திருவுருவச்சிலேயை வடித்து அவர் பிறப்பிடமாகிய

Page 4
4.
சிசிக்கு மாகாணம் காரைதீவுக்கு ஊர்வலமாக கொண்டுசென்று நாட்டுவதற்குமுன் வெள்ளவத்தை, இராமக்கிருஷ்ண மண்ட பத்தில் பொது அஞ்சலிக்காக 3. 10.69 அன்று வைத் திருந்த காலை கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவரின் தலைமையிற் சென்ற சங்கக் குழு சிலைக்கு மலர் மாலை அணிந்து சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தியது.
பாராட்டு:
(8) இலங்கை அரசாங்கத்தின் சாகித்திய மண்டலம் எனப் படும் இலக்கிய மன்றம் யாழ்ப்பாணம், வண்ணுர்பண்ணை நாவலர் பாடசாலைத் தலைமை ஆசிரியராயிருந்து சிறந்த தமிழ்த் தொண்டு புரிந்துவந்த வித்துவான் ந. சுப்பையாபிள்ளை அவர் களுக்கு “மன்றச் சான்றேன்" என்ற கெளரவப்பட்டம் வழங் கிக் கெளரவித்தமையைப் பாரரட்டு முகமாக கொழும்புத் தமிழ்ச் சங்கம் 10. 10, 69 அன்று மாலை பம்பலப்பிட்டி, கிறீன் லன்ஸ் விடுதியகத்தில் ஒரு சிற்றுண்டி விருந்தளித்தது. அப் பொழுது சங்கத் தலைவர் திரு. வ. அருளம்பலம் தலைமை வகித் தார். சங்கத்துணைத் தலைவர்கள் திரு. கோ. ஆழ்வாப்பிள்ளை திரு மு. வயிரவப்பிள்ளை, திரு. சோ.நடராசா ஆகியோரும் சங்க இலக்கியக் குழுச் செயலாளர் திரு. இ. இரத்தினமும் வித்துவான் சுப்பையாபிள்ளையின் தமிழ்ப் புலமை, ஆராய்ச் சித்திறன், தமிழ் இலக்கியத் தொண்டு ஆகியன பற்றிப் பாராட்டி அன்னருக்குப் பல்லாண்டு கூறினர். சங்கப் பொதுச் செயலாளர் நன்றி தெரிவித்தார்.
நூல்நிலையமும் படிப்பகமும்
நூல்நிலைய வளர்ச்சிக்க்ாக இந்த ஆண்டிலும் சங்கம் சில பணிகளைப் புரிந்திருக்கின்றது. 350 ரூபாவுக்கு நூல்நிலையத்திற்கு நூல்கள் வாங்கப்பெற்றன. நூல்நிலையத்திலிருந்த பழைய நூல்கள் சில திருத்திக்கப்படப்பெற்றன.
பேராசிரியர் திரு. ச. கணபதிப்பிள்ளை அவர்களது குடும் பத்தினர் பேராசிரியரது 8 நூல்களையும், பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் திரு. ஆ. கந்தையா அவர்கள் தாம் எழுதிய *திருக்கேதீசுரம்" என்னும் நூலையும், இச்சங்கத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவராகிய திரு. சி. ஆ கந்தையா அவர்கள் தாம்பதிப்பித்ததும், காலஞ்சென்ற தமது தந்தையார் இயற்றியதுமான "கதிரைமலைப் பதிகம், கதிர்காம மாலை" என்ற நூலையும் திரு. இ அம்பிகைபாகன் தான் ஆக்கிய ‘அம்பிப்பால்” என்ற நூலையும் அன்பளிப்பாக உதவினர்.

5
பிரித்தானிய, அமெரிக்க, இரசிய இந்திய தூதுவர கங் கள் தமது சஞ்சிகைகளை சங்கத்திற்குத்தொடர்ந்து அனுப்பி வருகின்றன. இந்த ஆண்டில் சங்கத்தின் வேண்டுதலுக்கிணங்கி மேற்கு யேர்மனி, யப்பான் ஆகிய நாட்டுத் தூதுவரகங்களும் தமது வெளியீடுகளை அனுப்பி வருகின்றன. இவர்கள் யாவருக்கும் சங்கம் நன்றி தெரிவிக்கின்றது.
நூல்நிலையத்தைப் பயன்படுத்துவோர் தொகை முந்திய ஆண்டிலும் கூடியிருப்பிலும் இத்தொகை மிகக் குறைவாகவே காணப்படுகிறது. பல அறிஞர்களுக்கும் கல்வி ஆர்வம் உள்ள வர்களுக்கும் நூல்நிலையம் உதவி வருகிறது. நூல்நிலையத்தையும் நூல்நிலையப் பயன்பாட்டையும் விரிவாக்கல் இப்போதைய கட்டட நிலையில் இயலாததாகும், பத்திரிகைகளையும் சஞ்சிகை களையும் சங்க உறுப்பினர் வாசிப்பதற்கு வைக்கக்கூடிய ஒரு வாசகசாலை ஒழுங்கு செய்ய முடியாமலிருப்பது குறிப்பிடத்தக் கது. சங்கத்தின் புதிய கட்டிடம் அமைந்ததும் நூல்நிலையம் நிறைவு நிலையை அடையும் என எதிர்பார்க்கலாம்.
தமிழ் வகுப்புக்கள்:
புலவர் சிவங் கருணுலய பாண்டியஞர் அவர்கள் தொட ர்ந்து தமிழ் இலக்கண இலக்கிய வகுப்புக்களை நடத்தி வரு கிருர்கள். இப்பொழுது வகுப்புக்கள் கிழமையில் ஒரு நாள் மாத்திரம் (நோன்மதி நாளிலிருந்து மூன்ரும் நாள்) நடைபெறு கின்றன. தொல்காப்பியம், சிவஞானபாடியம் முதலிய நூல் கள் படிப்பிக்கப்படும் இவ் வகுப்புக்களில் பள்ளிப்பராயத்தைத் தாண்டிய சிலர் மாத்திரம் பாடம்கேட்டு வருகின்றனர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் மிகச்சிறந்த அறிவுபெற்றுள்ள இப் பேரறிஞரிடம் பாடம் கேட்டல் கிடைத்தற்கரிய ஒரு பெரும் பேருகும் எனினும் இவ் வகுப்புக்களிற் சேர்ந்து படிப்போர் தொகை மிகக் குறைவாகவேயுள்ளது.
தமிழ் மூல விஞ்ஞானபாட வகுப்புக்கள்:
1969 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்திலும் திசம்பர் மாதத் திலும் நடைபெற்ற கல்விப் பொதுச் சான்றிதழ் (சாதாரண நிலை), திசம்பர் மாதத்தில் நடைபெற்ற கல்விப் பொதுச் சான் றிதழ் (உயர்நிலை) ஆகிய தேர்வுகளுக்குரிய தமிழ் மூல விஞ்ஞான பாடங்களிலும், தமிழ், சமயம், ஆங்கிலம் ஆகிய சாதாரண நிலைப் பாடங்களிலும் மீட்டல் வகுப்புக்கள் சங்கப்பணிமனையில்

Page 5
... 6
நடைபெற்றுவந்தன. இவ் வகுப்புக்களுக்கு முன்னரிலும் பார்க் கக் கூடிய தொகையான மாணவர் வந்தமையினுல் மேலதிக இடவசதிகள் செய்யப்பட்டன.
ஈழத்தமிழர் வரலாறு:
ஈழத் தமிழர் வரலாறு எழுதப்பட வேண்டுமெனச் சில காலத்திற்குமுன் சங்கம் தீர்மானித்து அதற்கென ஓர் உப குழுவை நியமித்தபோதும் இதுவரை அவ்விடயமாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தமிழ் மொழி உரிமைக்கான நடவடிக்கைகள்:
அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத் தாபனங்கள் ஆகியன தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் சம்பவங்கள் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோதெல்லாம் சங்கம் சம்பந்தப் பட்ட தாபனங்களுடனும் தொடர்பான அமைச்சருடனும் தொடர்புகொண்டு ஏற்ற நடவடிக்கையெடுத்து வந்திருக்கிறது அரசாங்கத்தின் பண்பாட்டுத் திணைக்களத்திலாயினும் சாகித் திய மண்டலம் எனப்படும் இலக்கிய மன்ற அலுவலகத்திலா யினும் தமிழ்மொழி சம்பந்தமான விடயங்களைக் கவனிக்கக் கூடிய தமிழ் உத்தியோகத்தர் ஒருவராயினும் இல்லாமை பற்றி அத்திணைக்களகத்துடனும் கல்வி அச்ைசருடனும் எடுத்த நடவடிக்கைகளினல் இதுவரை எவ்வித பயனுமேற்படவில்லை
தமிழ்ப் பிரதேசங்களுக்காய பல்கலைக் கழகம்:
முழு நிறைவான பல்கலைக் கழகமொன்றைத் தமிழ்ப் பிரதேசங்களின் தேவைக்கென நிறுவவேண்டுமென்ற கோரிக் கைக்குச் சங்கம் ஆதரவளித்துத் தேசிய உயர் கல்விச் சபைக்கு விஞ்ஞாபன மொன்றை அனுப்பியுள்ளது. விரைவில் அக்கல்விச் சபை முன்சென்று நேரடியாகப் பேசுவதற்கும் நடவடிக்கை யெடுக்கப்படுகிறது. V
சங்கப் பணிமனை:
பணிமனையில் இடவசதி போதாமையால் இவ்வாண்டு மேலும் தாழ்வாரம் போன்ற ஒரு நீண்ட தற்காலிக அறை பணிமனைக்கு முன்புறமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் 150 பேர் வரையில் அமரக்கூடிய வசதிகளுண்டு. சிறு கூட்டங்களை இந்த அறையில் நடத்தலாம்.

7
மண்டபமும் பிறகட்டடங்களும் அமைக்கச் சென்ற ஆண்டில் எடுக்கப்பட்ட முயற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக் கிறதாயினும் முன்னேற்றம் ஏற்படவில்லை. கட்டடக்கலைஞர் திரு. வீ. எஸ். துரைராசா அவர்கள் பெரும் சிரத்தை யெடுத்து அழகாகத் தயாரித்த திட்டப்படம் கொழும்பு மாநகர சபை யினுல் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. கட்டடத்தின் முற்பகுதியில் வர விருக்கும் மூன்று மாடிகளில் தளத்தையும் முதல் மாடியையும் முதலில் கட்டவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டு அதற்காகிய திரட்டும் வேலையிற் கவனம் செலுத்தப்படுகிறது இக்கட்டட அமைப்புப் பணியில் சங்க உறுப்பினர், தமிழ் அபிமானிகள் ஆகிய யாவரதும் ஒத்துழைப்பும் உதவியும் பெரிதும் தேவையாகும்
சங்க பணிமனையிருக்கும் 57 ஆம் ஒழுங்கையை அகலமான தாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி இன்னும் கைகூடவில்லை. இந்த வேலையைச் செய்து முடிக்குமாறு தொடர்ந்து மாநகர சபையைச் சங்கம் கேட்டுவருகிறது.
நன்றி:
இவ்வாண்டு சங்கம் மேற்கொண்ட பணிகளைச் செவ்விதிற் செய்துமுடிப்பதற்குப் பல்லாற்ருலும் உறுதுணையும் ஒத்தாசை யும் அளித்த சங்க உறுப்பினர்க்கும், சங்கத்தின் முயற்சிகளில் நேர்முகமாகவேனும் மறைமுகமாகவேனும் கலந்து பணிபுரிந்த ஏனைய அன்பர்க்கும், சங்க விழாக்களையும் கூட்டங்களையும் நடத் துவதற்குச் சரசுவதி மண்டபத்தைத் தந்துதவிய இந்துக் கல்விச் சபையினர்க்கும், சைவமங்கையர் கழகத்தினர்ச்கும், சிறந்த முறை யில் இலக்கண, இலக்கிய வகுப்புக்களை நடத்தி வரும் புலவர் சிவங் கருணுலய பாண்டியனர் அவர்களுக்கும், தமிழ் மூல விஞ்ஞான பாட மீட்டல் வகுப்புக்களையும் ஆங்கில, தமிழ் வகுப்புக்களையும் திறம்பட நடத்திய ஆசிரியர்க்கும், சங்கத்தின் அறிவிப்புகள் கூட்டங்கள், விழாக்கள் ஆகியன பற்றிய செய்திகளைத் தம் செய்தி இதழ்களில் வெளியிட்டுச் சங்கத்திற்கு ஊக்கமளித்த செய்தி இதழ் ஆசிரியர்களுக்கும் சங்க ஆட்சிக் குழு தன் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
வாழிய, தமிழ் மொழி, வாழிய, தமிழினம்
சங்கப் பணிமனை, ச. சரவணமுத்து, 7,57 ஆம் ஒழுங்கை, கெளரவ பொதுச் செயலாளர், உருத்திரா வீதி, ஆட்சிக் குழுவுக்காக. கொழும்பு-6,
17. I2, 1969.

Page 6
HT tf 5 h f j j j h hi 1968திசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைய
செலவு செய்தித் தாள்கள் 62. 05 மின்சாரம் 242. 10 அச்சுக்கூலி, கடுதாசி முதலியை 304. 35 போக்கு வரவு தட்டெழுத்துச் செலவு 127. 70 மாநகரசபை வரி 328. 90 அத்தாட்சிப்படுத்திய மாதிரிப் படங்கள் 31.00 s கணக்கியற் செலவு 50.00 ܟ தொலைபேசி, தபாற் செலவுகள் 401 35 விழாக்களும் கூட்டங்களும் 1,679.80 பத்திரிகை விளம்பரம் 22.00 காணி துப்பரவுசெய்த செலவு 173.95 சாந்தா சேகரிப்பாளர் கழிவு 104.89 செலவு போக எஞ்சிய வருமானம் 11, 322.00
14,950. 09
1968, திசம்பர். 31ல் உள்ளபடி பொறுப்பு மூலதனக் கணக்கு சென்ற ஆண்டு ஐந்தொகைக் செ6 கணக்குபடி 44, 306. 49 s கூட்டி: நடப்பு ஆண்டு செலவு L போக எஞ்சிய வருமானம் 11, 322.00 55, 628, 49 நூல்நிலைய வைப்புப் பணம் செ சென்ற ஆண்டு ஐந்தொகைக் 5 as கணக்குப்படி 65 00 اسحاق கூட்டி நடப்பு ஆண்டு வைப்புகள் 15, 00 80.00
செ
S600
செ
6
நிட
செ
és 6
மின் தெ
செ
556
இல ඒ:5650 இ6 956 96 is 65
55, 708. 49
எமது இன்றைய தேதிய அறிக்கைக்கு அமைவாகச்
சரியென உறுதிப் படுத்துகிருேம்.
கொழும்பு, ஜி இராசதுரை (ஒப்பம்)
1969, திசம்பர் 17ம் தேதி, சாட்டேட் கணக்காளர்.

) )))) II il) alsT-T)ijs)5 1ம் ஆண்டுக்குரிய வரவு செலவுக் கணக்கு.
வரவு
உறுப்பினர் சாந்தாப் பணம் 381 -25 சீவியகால உறுப்பினர் 1. 000-00 1,381. 25 நன்கொடைகள்-கட்ட - நிதி 11,423.45 நன்கொடைகள்-பொது 1,920.00 பலவித வருமானம் 44. 25 இலங்கை வங்கி சேமிப்பு வட்டி 177.30 ஞ்சல் அலுவலகச் சேமிப்பு வட்டி 3. 84
14,950. 09
யான ஐந்தொகைக் கணக்கு,
இருப்பு காணியும் கட்டடங்களும் ன்ற ஆண்டு ஐந்தொகைக் ாக்கின்படி 28, 771.50 ட்டி: நடப்பு ஆண்டு செவுகள் 1, 078.63 29, 850. 13
தளபாடம் முதலியன ன்ற ஆண்டு ஐந்தொகைக் "க்கின்படி 3, 456, 49 ப்பு ஆண்டு கொள்வனவு 539. 31 3,995. 80
காற்றடி ܗܝ ன்ற ஆண்டு ஐந்தொகைக் ாக்கின்படி S00.00
புத்தகங்கள் ன்ற ஆண்டு ஐந்தொகைக்  ைக்கின்படி 1.234.86 .ப்பு ஆண்டுக் கொள்வனவு 340. 3 1, 575, 17
цD6n)fї SLSLSLSLSLSLSLSLSLS ன்ற ஆண்டு ஐந்தொகைக் னக்கின்படி 246. 70
வைப்புப் பணம் ாசாரம்-சென்ற ஆண்டு ஐந் ா கைக் கணக்கின்படி 100.00 ܚ
சில்லறைக் கடன்கள் ன்ற ஆண்டுஐந்தொகைக் ாக்கின் படி 197. 85
]ங்கை வங்கி சேமிப்புக்
ாக்கில் 5,968. 18 0க்கை வங்கி நடப்புக்
எக்கில் 9, 653. 34 ருசல் அலுவலக சேமிப்புக்
ணக்கில் 170. 77
யிருப்பு 3, 450. 55 19, 242, 84
55, 708.49
மேற் கூறிய கணக்கு விபரம் சரியென உறுதிப்படுத்துகிறேன். வை. பொன்னுச்சாமி (ஒப்பம்) கெளரவ பொருளாளர்.

Page 7

பொதுச் செயலாளர்: திரு. ச. சரவணமுத்து
துணச் செயலாளர் திரு. க. குமாரசிங்கம் பொருளாளர்: திரு. வை. பொன்னுச்சாமி உதவிப் பொருளாளர்; திரு. தி. சி. கணேசலிங்கம் உறுப்புரிமைச் செயலாளர்: திரு. த. சுப்பிரமணியம் இல்லச் செயலாளர்: திரு. சு. க. ச. பொன்னுத்துரை நூல்நிலையப்பொறுப்பாளர்: திரு. க. கந்தசுவாமி இலக்கியக்குழுச்செயலாளர் திரு. இ இரத்தினம் கட்டிடக்குழுச்செயலாளர்: திரு. த. நடேசுவரன்
ஈழத்தமிழர்வரலாற்றுக் குழுச் செயலாளர்: திரு. கு. பூரணுனந்தா
ஆட்சிக்குழு உறுப்பினர்:
திரு ச. இ. அப்புத்துரை திரு. பெ. கணபதிப்பிள்ளை திரு. செ. வேலாயுதபிள்ளை திரு. வே. வல்லிபுரம் திரு. த, கனகரத்தினம் திரு. வே. இராசமாணிக்கம் திரு மா. க கனகேந்திரன் திரு. க. சி. குலரத்தினம் திரு. கி. இலகடி மணன் திரு. ஐ. குமாரசுவாமி திரு. பெ. கணநாதபிள்ளை திரு. வ. நடராசா திரு. செ. நடராசா திரு. சி. பாலச்சந்திரன் திரு நா. சுப்பிரமணியம் திரு. அ. வி. மயில் வாகனம் திரு. வி. ம. தியாகராசா திருமதி. மகேஸ்வரி பாலகிருஷ்ணன் திருமதி. தருமவதி திருநாவுக்கரசு திரு மு. க. நடராசா திரு. க. சச்சிதானந்தன் திரு. இ. அம்பிகைபாகன்
கெளரவ கணக்காய்வாளர்:
திரு. வே. தம்பு திரு. சி. பாலசுந்தரம்
பிரசித்த கணக்காய்வாளர்:
திரு. ஜீ. இராசதுரை

Page 8

-—
இராசா அச்சகம் வெள்ளவத்தை.
musim