கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காந்தி நடேசய்யர்

Page 1
""
بر روی |
 


Page 2


Page 3

காந்தி நடேசய்யர்
அந்தனிஜிவா,
D60)6OL85
வெளியீட்டகம்
57, மகிந்த பிளேஸ் கொழும்பு-ே ழறிலங்கா.

Page 4
GANDH || NATESAAR By Anthony Jeeva
Publication No. 10 First Edition November 1990
Published 8y Hill Country Publishing House 57, Mahinda Place Colombo - 6 Sri lanka
Printed At
Vox Populi Printers Keeranur - 622502 Pudukkottai - Dt.,
Price } 5-00 (இந்தியாவில்) விலை 10-00 (இலங்கையில்)
விற்பனை உரிமை : சிலிக்குயில் 21-கோதண்டபாணித்தெரு கும்பகோணம்-1.

முன்னுரை
அண்மையில் நான் வாசித்த ஒரு ஆங்கில நூலில் பின்வரும் வாசகம் ஒன்று கண்டேன்.
"அமெரிக்காவில் வெளிவந்த நீக்ரோ இலக்கியங் களை ஆராய்ந்த ஒருவர் கருப்பு மக்களை அடிமைகளாக வலுப்படுத்தி இழுத்துக்கொண்டு வந்த அடிமை வியாபாரிகள் கொடுத்த கசையடிகளிலிருந்து கசிந்த இரத்தத் திற்கு சமமான மையை எழுத்தாளர்கள் அவர்களது சோக வரலாற்றைத் தீட்டுவதில் செலவிட்டிருக்கி. நறார்கள் என்று வியந்திருக்கிறார்கள்."
ஆனால் மலையக வரலாற்றில் நூற்றைம்பது வருட காலமாக அவர்கள் பட்ட துன்பங்களை, துயரங்களை எழுத்தில் வடித்த இலக்கியங்கள் அற்ப சொற்பமே. இலங்கை வரலாற்றில் வளர்சியில், இந்தியத் தமிழர் களின் உழைப்பு ஆற்றிய பங்கு இமாலயப் பங்காகும். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளும் மன உறுதியோ மனத்தூய்மையோ பலருக்கு இல்லை. மண்ணைப் பொன்னாக்கும் மகா அற்புதம் தொழிலாளர்களிடம் மட்டுமே உண்டு. இலங்கையிலேயே ஒரு தொழிலாளர் பரம்பரையையே நிலைநாட்டி, ஒரு வர்க்க அரசியலுக்கு வழி சமைத்து இலங்கை மக்களிடமிருந்த வறுமைப் பிணியை ஒட்டி தாம் மட்டும் வறுமையை வரித்துக் கொண்ட ஒரு தியாகப் பரம்பரை மலையக மக்க ள்

Page 5
பரம்பரை. இலங்கை அரசும், சமுதாயமும் அவர். களுக்கு வாரி வழங்கிய பரிசு குறைந்த கூலியும், மறுக்கப்பட்ட மனித உரிமைகளும், இழிச் சொற்களும், பழிச்சொற்களும், அடக்கு முறையும், நாடு கடத்தலுமே யாகும். உழைக்கும் மக்கள் இன்று ஆட்சி பீடம் ஏறி அமருகின்ற இருபதாம் நூற்றாண்டிலே இ ன் று ம் இருட்டறையில் தள்ளப்பட்டுள்ள மக்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்களே. தென்னாபிரிக்க கறுப்பர் களும், அமெரிக்கக் கறுப்பர்களும் மலையகத் தமிழ்த் தொழிலாளர்களும் ஒரே வகையான வரலாற்றுக் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். அவர்கள் விடுதலையடைந்து சமத்துவம் பெறும் பொழுது தான் உலகத்தில் சமத்துவத்துக்கே வெற்றி கி ைட த் த து எனலாம்.
இந்த மக்களின் ஆரம்ப அடிமைத் தளைகளை அறுத்தவர்களை நினைவுகூருவது அவர்களின் எதிர் கால வெற்றிகளுக்கு அடிகோலுவதாகும். தனியொரு மனிதராக மலையக மக்கள் பட்ட அவதிகளிலிருந்து அவர்களை விடுவிக்க போர்க்குரல் எழுப்பிய முதல் வழி காட்டி கோ. நடேசய்யர் ஆவார்கள். கோ. நடேசய்யர் இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றிலும், மலையக மக்களின் வரலாற்றிலும் மிக முக்கிய இடம் பெறத் தகுதியுள்ளவர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டத்தில் மலையக மக்களுக்கு உப்பு, புளி, மிளகாய், அரிசி மட்டுமல்ல அரசியல் ஆர்வமும், உரிமை உணர்வு களுமே தமிழகத்தில் இருந்தே வந்தன. இந்த விடுதலை உணர்வுகளையும், சமத்துவ வேட்கையையும் மலையக மக்கள் மத்தியிலே பாட்டாலும், பேச்சாலும், போராட் டத்தாலும் கொணர்ந்து குவித்தவர் கோதண்டராம நடேசய்யர். தஞ்சைக்கரையிலிருந்து தமிழும், தரளமும் மட்டும் இலங்கைக் கரையைத் தழுவவில்லை. தலை நிமிர்ந்து உரிமைக்குக் குரலெழுப்பும் த ன் மா ன

உணர்வுகளும் வந்தன. இந்த இலட்சிய இறக்குமதிக்கு கால்கோள் கோலியவர் கோ. நடேசய்யர். அன்னாரிசு மறைந்த புகழை, மறைக்கப்பட்டபணியை தமிழகத்தில் நினைவூட்ட, வரலாற்று நன்றிக்கடனைச் செலுத்த நண்பர் அந்தனிஜீவா ஆற்றியுள்ள இந் த ப் பணி வாழ்த்தி வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும் தன் னாட்டின் பெருமை குன்றாமல், மலையக மக்களுக்காக ஓய்வின்றிப் போராடிய நடேசய்யரின் நாமம் தமிழகப் பெரியார்களின் வரிசையில் நிச்சயம் இடம் பெற வேண்டிய தொன்றாகும் கடல் கடந்த இந்தியர்களின் உ ரி ைம க ரூ க் குக் குரல்கொடுத்த பூரீ நிவா ச சாஸ்திரியை எவ்வாறு நாம் மறவாது நினைவு கூருகிறோமோ அதற்கு சற்றுஞ் சளைக்காது இலங்கை மலையக மக்களின் உரிமைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நடேசய்யர் அவர்களை நெஞ்சில் இருத்துவது முற்றும் பொருத்தமாகும்.
கோயம்புத்தூர் இர. சிவலிங்கம் 22-10-90 இயக்குனர்
நலிந்தோர் நல மையம்

Page 6
அணிந்துரை
கரும்பு தோட்டத்திலே - அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்துகின்றனரே ஹிந்து மாதர் தன் னெஞ்சு கொதித்து கொதித்து மெய் சுருங்குகின்றனரே
என பிஜித்தீவில் தமிழ்த்தொழிலாளர்கள் பட்ட துன்பத் தைப்பற்றி பாரதியார் பாடினார். அதேபோல 19ஆம் , 20ஆம் நூற்றாண்டு தொடக்க ஆண்டுகளில் இலங்கை யில் தமிழ்த் தொழிலாளர்கள் அடிமைகளாக, உரிமை கள் அற்று வாழ்ந்து வந்தார்கள். இவ்வாறு கொடுமை யாக நடத்தப்பட்ட இந்தியர்களுக்காக முதன்முதலில் இலங்கையில் உரிமை முழக்கம் செய்த பெருமை தஞ்சையில் பிறந்த கோ. நடேசய்யர் அவர்களை சாரும், மேலும் இலங்கையில் முதன்முதலாக தமிழ்த் தினசரி பத்திரிகையினை தொடங்கிய நன்மதிப்பும் இவருக்கு உண்டு. தொழிலாளத் தோழர்களை தலை நிமிாந்து நிற்க செய்த இந்த செயல் வீரர் சாதி மத பேதமின்றி, நலிவுற்ற மக்கள் அனைவருக்காகவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார். மேலும் இலங்கையில் மலையக இலக்கியத்தின் அடித்தளத்தை அமைத்து கொடுத்தவரும் காந்தி நடேசய்யர் அவர்கனே.
இலங்கை தொழிற்சங்க வரலாற்றில் இடம் பெற்ற கோ. நடேசய்யரின் வாழ் க் ைக பணியினைப்பற்றி சுருக்கமாகவும் அழகாகவும் இந்நூலில் படப் பிடித்துக் காண்பிக்கும் திரு. அந்தனிஜினாவை பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். திரு. நடேசய்யரின் சேவையை உலகத்தமிழர்கள் தெரிந்துகொள்ளவேண்டும், மேலும் அவர் சென்ற பாதையிலே நாமெல்லாரும் சென்று பொதுப்பணி செய்யவேண்டும் என்னும் ஆர்வத்துடன் திரு. நடேசய்யரின் நூறாவது பிற ந் த ந ர ன் விழா தொடங்கும் நேரத்தில் இந்நூலை வரைந்து வெளியிட் டிருக்கிறார். அவருக்கு நம் நல்வாழ்த்துக்கள்.
டாக்டர் எஸ். நாகராஜன் தமிழ்ப் பல்கலைக்கழகம் தலைவர் தஞ்சாவூர், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை.
 
 
 
 
 
 
 
 
 
 

காந்தி நடேசய்யர்
தேயிலைக் காடுகளிலும் மலை முகடுகளிலும் தேயிலைக்கு பசுமையையும் தேநீருக்கு சாயத்தையும் தந்த மக்கள்
கொட்டும் பணியிலும், அட்டைக்கடியிலும் அடிமைகளாக வாய் பேச முடியாத ஊமைகளாக
விடியலுக்கு முன் உழைப்பிற்கு சென்று இருள் கவிந்த
பின், குடிலுக்கு திரும்புகின்ற இழிந்த நிலையில் 6 மாளி
TT
இலங்கையின் தேயிலை காடுகளில் இந்திய மண்ணின் மைந்தர்கள்
இருண்ட சூழ்நிலையில் ஆசை வார்த்தைகளை நம்பி அலைகட லுக்கு அப்பாற் சென்று.
காட்டையும் மேட்டையும், சீர்படுத்தி பசுமை பூத்துக் குலுங்கும் சித்திரச் சோலைகளாக இரத்த வியர்வைகளை சிந்தி பொன்கொழிக்கும் பூமியாக மாற்றியவர்களின் வாழ்வில்
ஒளியில்லை, வஞ்சிக்கப்பட்ட நிலைமையில் திக்கற்றவர் காாக, துன்பக்கேணியில் சோகப் பெ ரு ந் துயரத்துடன்
புந்தார்கள்.
இந்த இழிநிலை தொடர்ந்தது ஒன்றல்ல. இரண்டல்ல. நூறு ஆண்டுகளாக, அவர்களை வாழ்விக்க வந்த மாகனாக
ருகண்டுகிடந்த அவர்களின் வாழ்வில் ஓர் விடிவெள்ளியாக
தஞ்சாவூரைச்சேர்ந்த கோ. நடேசய்யர் வருகை தந்தார்

Page 7
இலங்கையில் தம் செ ந் த சகோதரர்கள் துயரப்
படுவதைக் கண்டார்.
மண்ணைக் கிண்டி, பொன்னை அள்ளிவரலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி வந்தவர்கள் அடிமைகளை விட மிகக் கொடுமையாக நடத்தப்படுவதைக் கண்டார்
மலைகள் சூழ்ந்த தேயிலைத் தோட்டங்களிலே சிறைக் கைதிகளைவிட கேவலமாக இந்தியர்கள் நடத்தப்பட்டார்கள்
இவர்களின் தலைவிதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார் கோ. நடேசய்யச்.
அதை செயல்படுத்தவும் முனைந்தார்.
மலை சூழ் ந் த தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்த இந்திய மக்களுக்காக, அ வர் க ைள ஓர் அணியில் திரட்டி அவர்களின் உரிமைகளுக்காக முதன் முதலில் தொழிற்சங்கம் அமைத்தவர்தான் கோ. நடேசய்யர்.
கோ. நடேசய்யர் ஒரு சகாப்த நாயகன்.
"இலங்கை நாட்டின் தொழிற் சங்க வரலாற்றிலும் அரசியல் நடவடிக்கைகளிலும், பத்திரிகை வெளியீட்டுத் துறையிலும், மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகளிலும் தம் பாரிய பங்களிப்பினால் முத்திரை பதித்துகொண்டவர்."
இவ்வாறு “தே ச பக் த ன் கோ. நடேசய்யர்' என்ற வரலாற்று ஆய்வு நூலில் மலையகத்தின் முன்னணி எழுத் தாளரான சாரல்நாடன் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் வாழ்ந்த இந்தியத் தமிழருக்காக மாத்திர மின்றி சமுதாய உணர்வோடு நலிவுற்ற மக்கள் அனைவருக் காகவும் குரல் எழுப்பிய பெருமகன் கோ. நடேசய்யர்.
8
 

நடேசய்யர் அவர்களின் வாழ்க்கை ஒரு சகாப்தத்தின் தொடக்கமாகும்
காட்சிக்குரியவராக இருப்பதற்கு இணைந்த ஆற்றல் படைத்தவர். நூற்றுக்கணக்கான செயற்கரிய செயல்களை ஆற்றிய பெரியார். பல சூழ்நிலைகளை சாமார்த்தியமாக வென்றார். நி க ழ் ச் சி க ஸ் அவரை சுற்றி வட்டமிட்டன நிகரற்ற தலைவராய் வி ன ங் கி ன ச். அவர் பல துறை களிலும் ஈடுபட்டார்.
அவர் ஒரு பத்திரிகை எ முத் தா ள ர், நூலாசிரியர். பிரசுரகர்த்தா, துண்டு பிரசுரம் எழுதுபவர். தொழிற் சங்கவாதி அரசியல் கிளர்ச்சிக்காரர் இவற்றிற்கு எல்லாம் மேலாக அவர் ஒரு அரசியல் அறிஞராக விளங்கினார்.
இவ்வாறு நடேசய்யரைப் பற்றி "மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை குறிப்பிடுகின்றார்.
இலங்கையின் அர சி ய லி ல், தொழிற்சங்கத் துறையில் பத்திரிகையியலில், ஆக்க இலக்கியத் துறையில் தனது சுவடு களை பதித்த கோ. நடேசய்யர் வரலாற்று புகழ்மிக்க தஞ்சா வூரில் 1891-ம் ஆண்டு பிறந்தவர்.
இளம் வயதிலேயே மகாகவி பாரதிய ஈரின் தேசிய உனா வை துண்டும் பாடல்களில் ஈடுபாடும். பெரியார் + வே.ரா வின் தீர்க்கதரிசனமான கருத்துக்களில் ஈடுபாடும் கம்யூனிஸ் சிததாந்தங்களில் நம்பிக்கையும் கொண்டவர் கோதண்டராம, நடேசய்யர்.
தேசபக்தியும், சுதந்திர ஆர்வமும் கொண்ட நடேசய்யர் 1907-ம் ஆண்டில் வங்காளப் பிரிவினைக் காலத்தில் இந்தி யாவில் பீறிட்டுக் கிளம்பிய தேசிய உணர்வின் காரணமாக தான் கற்றுவந்த ஆங்கில கல்வி மீது வெறுப்புக்கொண்டார்.
}

Page 8
அது வரை தான் கற்று வந்த ஆங்கில கல்வியை நிறு திக் கொண்டார். அதன் பிறகு தொழிற் கல் வி கற்று டிப்னோமா பட்டம் பெற்று தஞ்சாவூரில் கலிபானசுந்தரனா உயர்தர கலாசாலையில் போதனா ஆசிரியராக சிலகால
கடமையாற்றினார்.
1914-ம் ஆண்டில் "வர்த்தகமித்திரன்' என்ற பெயரி பத்திரிகை வெளியிட்டார்.
தஞ்சாவூரில் வர்த்தக வங்கியை தோற்றுவிப்பதற் முன்னின்று செயல்பட்டார். தென்னிந்திய வியாபாரிகளை
ஒன்று திரட்டினார்.
இதே போன்று தன் நண்பர் ஒருவரின் மூலம் இலங்கை யில் கொழும்பு மாநகரில் தென்னிந்திய வியாபாரிகள் சங்கத் தின் கிளை ஒன்றை ஆரம்பிக்கச் செய்தார். அப்பொழுது இந்திய வியாபாரிசுனே கொழும்பில் ஆதிக்கம் செலுத்தி னார்கள். தென்னிந்திய வியாபாரிகள் சங்கத்தின் ஆண்டு விழாவில் கலந்து கொள் வ தற் கா க 1919-ம் ஆண்டு நடேசய்யர் இலங்கை வந்தார்.
இலங்கைக்கு வருகை தந்த நடேசய்யர் மலை சூழ்ந்? தேயிலைத் தோட்டங்களில் வாழ்கின்ற இந்தியத் தொழி லாளர்களின் நிலையை நேரில் கண்டறிய விரும்பினார். அந்த கா லத் தி ல் தோட்டங்களில் வெள்ளைத் துரைமார்களின் ராஜ்யம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தோட்டகங்ளுக்கு வெளியார் யாரும் செல்ல முடியாத நிலை.
தோட்டங்களுக்கு புடவை வியாபாரிகள் செ ல் வ து வழக்கம். நடேசய்யர் புடவை வியாபாரியாக மாறினார். வியாபாரிகளுடன் சேர்ந்து தோட்டங்களுக்கு சென்றார்
IO
 
 
 
 
 

துன்பக் கேணியில் தன் மக்கள் படும் துன்ப துயரங் களை நேரில் கண் டறிந் தார். இந்தியா திரும்பியதும் இலங்கையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஒருசிறு பிரசுரமாக அச்சிட்டு விநியோகித்தார் தஞ்சாவூர் காங்கிரஸ் கமிட்டியிடம் தனது பிரசுரத்தையும் விளக்கமான அறிக்கையையும் சமர்ப்பித்தார். இந்தியமக்களின் மீட்சிக்காக செயல்படவேண்டும் என திட்டமிட்டார். மீண்டும் 1920-ம் ஆண்டு இலங்கைக்கு வந்தார்.
தேசநேசன் ஆசிரியர் :
இலங்கைக்கு வருகை தந்த நடேசய்யர் கொழும்பு நகரில் இந்தியர்களோடு சேர்ந்து இயங்க ஆரம்பித்தார்.
இலங்கை தேசிய காங்கிரஸின் நிர்வாகக்குழு உறுப் பினர்களாக இருந்த டாக்டர் ரட்னம், அருளானந்தம் ஆகிய இருவரையும் வெளியீட்டாளர்களாக்கொண்டு "தேசநேசன்" என்ற பத்திரிகையே ஆரம்பித்தார்.
"தேசநேசன்" என்ற பத்திரிகையே இலங்கையின் முதல் தமிழ் தினசரியாகும். இது 1921-ம் ஆண்டு வெளி வந்தது"
இதே ஆண்டு பிஜித்தீவிலிருந்து நாடுகடத்தப்பட்ட வழக்கறிஞரான டாக்டர் மணிலால் இலங்கை வந்தார். இவர் ஒரு குஜராத்தியர் தேசப்பற்று மிகுந்தவர், கம்யூனிஸ் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவர். மானுட நேயமிகுந்த ஒரு தீவிரவாதி.
டாக்டர் மணிலாலை நடேசய்யர் சந்தித்தார். இவரை தேயிலைத் தோட்டங்களுக்கு கூட்டிச்சென்று இந்தியர்கள் வாழும் நிலமையை சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் வாழும் இந்தியத் தோட்டத் தொழிலாளர் கருக்காக நடேசய்யரை போராடும்படி டாக்டர் மணிலால்
11

Page 9
உற்சாகமூட்டினார், இருவருமே இணைந்து போராடுவது என திட்டமிட்டனர். அதனை செயல்படுத்தவும் முனைந்தனர்.
இலங்கையிலுள்ள பிரிட் டி ஸ் வெள்ளைத்துரைமார் டாக்டர் மணிலாலை கண்டு பயப்பட்டனர். அவரை நாட்டை விட்டு வெளியேற்றுவதில் தீவிரமாக இருந்தனர். டாக்டர் மணிலால் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
1924-ம் ஆண்டு இலங்கையில் இந்தியர் வரலாற்றில்
புது அத்தியாயம் எழுதப்பட்டது. இலங்கையில் சட்டநிறுபன சபையில் இந்தியப் பிரதிநிதிகள் இருவருக்கு இடம் ஒதுக்கப் பட்டது.
இந்தியர்களை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த நடேசய்யருக்கு இது ஒரு சவாலாக அமைந்தது. தேர்தலில் நடேசய்யரும் போட்டியிட்டார். தனது தேர்தல் பிரச்சாரத் திற்காக "தேசபக்தன்' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார்.
இந்த தேர்தலில் ஆறுபேர் போட்டியிட்டனர் தேர்தலில் நடேசய்யர் வெற்றிபெற்றால் அது தமக்கு பெரும் ஆபத்தாக அமையும் என தோட்டத்துரைமார்கள் முடிவு செய்தனர். அதற்காக பணத்தை வாரி இறைத்தனர்.
தேர்தலில் நடேசய்யர் தோற்கடிக்கப்பட்டார். ஆண்ாலும் 2948 வாக்குகனைப் பெற்று மூன்றாவது இடம் பெற்றார். தனக்கு கிடைத்த வாக்குகளில் 2000 தோட்டத் தொழிலாளர் களுடையது என பகிரங்கமாகவே அறிவித்தார்
மீண்டும் ஆறுமாத காலத்தில் நடேசய்யர் தேர்தலை சந்திக்கவேண்டி வந்தது. தேர்தலில் வெற்றிபெற்ற இருவரில் ஒருவர் மரணமானார். இடைத்தேர்தலில் நடேசய்யர் போட்டி யிட்டு வெற்றிவாகை சூடினார்.
|

சட்டநிறுபன சபையில் நடேசய்யர் இந்தியத்தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பினார்.
தேசியத் தலைவர்களில் ஒருவராக க ரு த ப் படும் பொன்னம்பலம். இராமநாதன், போன்றவர்கள் இந்தியத் தமிழர்களை குடியேற்ற கூவிகள்" எனக்கூறி இவர்களின் உரிமைகளை மறுத்தபோது அதற்கு எதிராக நடேசய்யர் உரிமை முழக்கம் செய்தார்.
நடேசய்யரின் பணி அதிகமாயிற்று, தனது பத்திரிகை பணிகளை கவனிப்பதற்கு தமிழகத்தில் தந்தை ஈ.வே.ரா. பெரியாரின் "குடியரசு" பத் தி ரி ைக யி ல் பணியாற்றிய டி . சாரநாதன் என்பவரை வரவழைத்தார். இவர் பிற்காலத் தில் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கத்தினராக இருந்த டி . இராமானுஜத்தின் சகோதரராவார்.
தொழிற்சங்கப் பணிகள் :
இலங்கையின் தொழிற்சங்க தந்தை என கூறப்படும் டி.ர. குணசிங்காவோடு இணைந்து நடேசய்யர் தொழிற்சங்க பணிகளில் ஈடுபட்டார். தமிழகத்தில் திரு.வி.க.வின் தொழிற் சங்க பணிகளைப்பற்றி அறிந்திருந்த நடேசய்யர் தொழிற் சங்க வேலைகளில் அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டினார்
1928-ம் ஆண்டு குனசிங்காவின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ந டே சய் ய ர் அவரை விட்டு கினார். குணசிங்காவை எதிர்த்து தேசபக்தனில் பல கட்டுரைகள் எழுதினார்.
தொட்டங்களில் உழைக்கும் இந்தியத் தொழிலாளர் களுக்கு இழைக்கப்படும் இன்னல்களைக் கண்டு நடேசய்யர்
திரமடைந்தார். அவர்களின் உரிமைக்காக போராட அவர்கள் அனைவரையும் ஓரணியில் திரட்ட "அகில இலங்கை
13

Page 10
இந்தியத் தோட்டத் தொழிலாளர் சங்கம்" என்ற அமைப்பை ஏற்படுத்தினார். தனது செயற்பாடுகள் அனைத்தையும் தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு அர்ப் பணிக்க தீர்மானித்தார்.
இதுகாலம் வரை கொழும்பிலிலிருந்து இயங்கிவந்த நடேசய்யர் தோட்டத் தொழிலாளர்கள் வாழும் அட்டன் நகருக்கு தனது தலைமை அலு வ ஸ் கத் தை மாற்றிக் கொண்டார்.
நடேசய்யரின் பத்திரிகை, தொழிற்சங்கப் பணிகளுக்கு பெருந்துணையாக அ வருட ன் இருந்து செயல்பட்டவர் அவரது துணைவியரான திருமதி மீனாட்சிஅம்மையாராகும். தோட்டத்தொழிலாளர்களிடையே மகாகவி பாரதியாரின் பாடல்களை மீனாட்சி அம்மையார் இனிமையான குரலால் பாட நடேசய்யர் தொழிலாளர்கள் விழிப்புணர்ச்சி பெறும் வண்ணம் உன ர் ச் சி க ர மா ன சொற்பொழிவுகளை
நிகழ்த்துவார்.
குடை பிடிக்காதே செருப்புப் போடாதே வெள்ளை
வேஷ்டி கட்டி வெளியே வராதே! பத்திரிகை
படிக்காதே ! என்று தோட்டத் தொழிலாளர்களை வெள்னையர்களான தோட்டத்துரைமார்கள் அடக்கி ஒடுக்கி வைத்திருந்தனர்.
இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நடேசய்யர்
முழங்கினார்.
"பாட்டாளி தோழனே பயப்படாதே! தலை நிமிர்ந்து வெளியே வா! இந்த நோட்டிஸை படி! கள்ளக்கணக்கெழுதும்
கங்காணிகளுக்கு இடம் கொடுக்காதே! குட்டிச்சாக்கில் சம்பளத்தை எடுக்கும் மட்டித்தனத்தை எட்டி உதை! அரை
14
 

பெயர் போடுவதை எதிர்த்து நில்! பகல் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் லீவு உண்டு! அதை பயமின்றி கேள்! உன்னை மிரட்டும் வீணர்களுக்கு பயந்து உரிமையை விடாதே
ஊமைகள்ாய் வாழ்ந்த தோட்டத்தொழிலாளர்களிடையே நடேசய்யர் உரத்து முழங்கினார்.
அதுவரை அடிமைகளாக, வாய்பேச முடியாத ஊமை :னங்களாக வாழ்ந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் விழிப் படைபத் தொடங்கினார்கள்.
இதனால் நடேசய்யர் தோட்டங்களுக்குள் நுழைவது
தடை செய்யப்பட்டது.
தோட்டத்துரைமார்களின் உ த் த ர ைவ க் கண் டு நடேசய்யர் பயந்து பின்வாங்கிவிடவில்லை, தோட்டங்களுக்கு அருகில் உள்ள நகர்புறங்களில் கூட்டம்போட்டார். தோட்டங் களுக்கு அருகில் கம்பி முள்வேலிகளுக்கு அருகில், மீனாட்சி "ம்மையார் பாரதி பாடல்களைப்பாட, நடேசய்பர் தனது கம்பீரபான குரலில் தொழிலாளர்களுக்கு உணர்ச்சியூட்டும்
பிரசங்கங்களை செய்வார்.
தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் நடேசய்யரின் செல்வாக்குப் பரவியது. 1931-ம் ஆண்டு மே தினத்தில் அட்டன் நகரில் நடத்திய மே தினக்கூட்டத்தில் 5000 தொழி
ா எார்கள் கலந்துகொண்டார்கள்.
அந்தக் கூட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி "தொழி லா ள ர் க எளி ன் உரிமைகளும், கடமைகளும்' என்ற பிரசுரத்தை ஆயிரக்கணக்கில் அவர் களிடையே விநியோகித்தார்.
தோட்டத்தொழிலாளர்கள் நடேசய்யரை த ங் களி ன் ாட்சகராக வாழ்விக்க வந்த மகானாக கருதினார்கள்.
15

Page 11
பிரஸ்கேர்டில் போராட்டம் :
1936.si நடந்த அரசாங்க சபை தேர்தலில் நடேசய்யச்
போட்டியிட்டு மகத்தான வெற்றியை ஈட்டினார்.
நடேசய்யருக்கு எதிராக ஏரானமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும், தோட்டத்துரைமார்களும் அ ைர் க ளி ன் கையாட்களான கங்கானிமார்களும செயல்பட்டனர். ஆனால் நடேசய்யர் தொழிலாளர்களின் பலத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்து வெற்றி பெற்றார்.
இத்தேர்தலில்தான் இடதுசாரித் தலைவர்களான டாக்டர் என். எம். பெரேரா, பிலிப் குணவர்த்தனா என்ற இருவரும் முதன்முறையாக அரசாங்க ச ைபக் கு தெரி வானார்கள். தோட்டத்தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் அக்கறைகொண்ட இடதுசாரித் தலைவர்களான இவர்களு டன் சட்டசபையில் நடேசய்யர் இணைந்து செயல்பட்டார்.
அப்பொழுது அமைச்சராக இருந்த எஸ். டப்ளியு ஆர்" டி. பண்டாரநாயக்கா நடேசய்யரின் விவாதத்திறமைக்கும் அரசியல் விவேகத்திற்கும் தீர்க்கதரிசனமான கருத்துகளுக்கும் மதிப்பளித்தார்.
இலங்கையின் கண்டி மாநகருக்கு அருகிலுள்ள மடுள் -கலை பகுதியில் ரே லுகாஸ் தோட்டத்தில் தோ பஸ் என்ற தோட்டத்துரையின் கீழ் இருபத்துநான்கு வயது இளைஞ ரான பிரஸ்கேர்டில் சின்னத்துரையாக பணியாற்றினார்.
வெள்ளையரான பிரஸ்கேர்டில் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்கும் பொழுது கம்யூனிஸ் சித்தாந்தங்களில் ஈடுபாடு கொண்டவர். அதனால் தோட்டத் தொழிலாளர்களின் உழைப் புக் கேற்ற ஊதியம் வழங்கப்படாமல் அவர்களின் உழைப்பு உறிஞ்சப்படுவதைக் கண்டு மனம் வெதும்பினார். அந்த மக்களோடு மனிதாபிமான உணர்வோடுநெருங்கிப்பழகினார்.
 

இதனால் தோட்டத்துரைமார்கள் இவர் மீது வெறுப்புக் கொண்டனர். இவரை இலங்கையைவிட்டு வெளியேற்று வதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக டழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பிரஸ்கேர் டில் நடேசய்யருடன் தொடர்பு கொண்டார். இடதுசாரிகளுடன் இணைந்து செயல்பட விரும்பினார்,
இதே கால கட்டத்தில் திருமதி கமலாதேவி சட்டோ பாக்யாய் இடதுசாரி தலைவர்களின் அழைப்பின் பேரில் இங்கைக்கு வருகை தந்திருந்தார். இந்திய தோட்டத் தொழிளாலர்களிடையே பல பொது கூட்டங்களில்,பேசினார்
நாவலப்பிட்டிவில் டாக்டர் என்.எம். பெரேரா தலை ா யில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் திருமதி கமலாதேவி பீப் முன் ை பிரஸ்கேர் டில் பேசவிரும்பினார். அவரை "ங்கு கூடியிருந்த இரண்டாயிரத்திற்கு அதிகமான மக்க முக்கு அறிமுகப்படுத்திய டாக்டர். என். எம். பெரேரா "ா,வெள்ளையர் உங்களுக்காக கண்ணிர்வடிக்கும்தோழர்'
நூறு கரடியனார். பிரஸ்கேர்டில் பேசும் பொழுது தோட்டத் தொழிலாளர் சுருக்காக நடேசய்யர் செய்துவரும் பணிகளை பாராட்டினார்
இனிமேல் பிரஸ்கேர்டிலை இங்கு வைத்தால் ஆபத்து, அவரை உடனடியாகநாடுகடத்தவேண்டும் என்று வெள்ளைத் துரை பார்கள் அவசரமாக கூடி தி ர் மா னித் தா ர் சு ஸ். அரசாங்க மும் அதற்கு ஆதரவு தெரிவித்தது.
அரசாங்க சபையில் நடேசய்யர் பிரஸ்கேர்டில் விவகாரத் தப்பற்றி பேசினார். பிரஸ்கேர்டிலை நாடு கடத்துவதற்கு ாநிாப்பு தெரிவித்தார். இடதுசாரித் த ைல வ ர் களும் ாடசய்யருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
17

Page 12
"அவர் கூட்டங்களில் தமிழில் பேசவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவருக்கு தமிழ் படித்து கொடுக்கவும் செய்தேன்" என்று பேசிய நடேசய்யர் தோட்டங்ாளில் துரைமார்கள் நடத்தும் கொடிய ஆதிக்கத்தை எடுத்துக் கூறினார்.
பிரஸ்கேர்டில் இலங்கையில் இருப்பது ஆபத்து எனக் கூறி அரசாங்கம் அவரை நாடு கடத்தியது.
- "F60) U LÚPáiv...
ஆறு ஆண்டுகள் சட்ட நிறுவன சபையிலும் (19251031) அதன் பி சபையிலும் இந்திய வம்சாவளி தமிழர்சளுக்காகவும், தொழி லாளர்களுக்காகவும் பிரதிநிதித்துவம் செய்தார் நடேசய்யர். சட்டசபையில் அவர் நிகழ்த்திய பேச்சுக்கள் ஒவ்வொன்றும்
வரலாற்று சிறப்புக்குரியது.
ன்னர் பதினொரு ஆண்டுகள் சட்ட
"கடல் கடந்த வெளி நாடுகளில் குடியேறிய இந்தியர் களின் தொகை 25 லட்சமாகும். இதில் 90 சதவிகிதத்தினர் தமிழர்களாவர். இவர்கள் பல பாகங்களிலும் குடியேறினார் கள். அவர்களின் குரல் காட்டில் அழுகின்ற கதறலாக அமைந்திருக்கிறது. இலங்கையின் 1871-ல் குடிசன மதிப் பின்படி 12 சதவிகிதத்தினர் இலங்கையில் பிறந்தவர்கள். 1921-ல் 21 சதவீதமாகவும் 1941-ல் 80 சதவீதமாகவும் இது அதிகரித்துள்ளது. இப்புள்ளி விவரங்கள் உங்களிடத்தில் இஸ்லாமல் இருக்கலாம். ஆனால் தோட்டத்துக்குப் பரட்டுக் களம் போய் நின்று இலங்கையில் பிநந்தவர்களை நான் கணக்கெடுத்திருக்கிறேன்" என முழங்கினார் நடேசய்யர்.
நடேசய்யரின் தீர்க்கதரிசனமிக்க வார்த்தைகள் 1940-ல் நவம்பர் மாதம் டில்லியில் நடைபெற்ற சமாதானப்பேச்சு வார்த்தை அவதானித்தால், அதன் உண்மை புரியும்.
18
 
 
 

இர்திய மக்களைப்பற்றி நடேசய்யர் நாடாளுமன்றத்தில் | 41 ல் எதைச்சொனாரோ அந்த அடிப்படையில் பின்னர் பட ஒப்பந்தங்கள் ஏற்பட்டன .
மீண்டும் ஒரு த ட ைவ இந்தியத்தமிழர்பற்றி பேசும் பொழுது, "இரண்டு வருடத்திற்குமுன்னர் இந்தியர் வரவை
கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் கொண் டு வந்த நீர்மானத்தை தோற்கடித்தீர்கள்.
இந்தியர்களின் வருகையை தடைசெய்யக்கூடாது என்று ன் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறீர்கள்.
உடல் உழைப்பை தருவதற்கு மட்டுமே இந்தியத் தொழிலாளி உங்களுக்கு வேண்டும், இந்தியனை இங்கு சமமாக வைப்பதில் விருப்பமில்லை. சேவகனாக வைப்பதி லேயே விருப்பம் இருக்கிறது.
இவ்வாறு கொந்தளிக்கும் அலைகடலென குமுறும் நடேசய்யர் இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசும்பொழுது,
இலட்சக்கணக்கான தொழிலாளர்களை இந் தி யா 1ற்றுக்கொள்ளாது என்று மட்டும் நினைக்காதீர்கள். இங்கு குடியேறியவர்களை விட அதிகமான வெளிநாட்டவர் இந்தி மா வில் இருக்கிறார்கள். வளம்கொழிக்கும் தஞ்சைவயல் 'ந்தை புறக்கணித்து விட்டு இங்கு தொழிலாளர்கள் வந்திருப்பது இந்தியாவுக்கு பொருளாதார இழப்பாகும்.
இவ்வாறு முழங்கிய நடேசய்யர் இலங்கை பல்கலைக் கழகம் பேராதனையில் அமையவேண்டும் என்று தீவிரமாக ா டி வெற்றிகண்டார்.
நடேசய்யர் பேச்சுகள் தனித்தன்மை வாய்ந்தவைகள், ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துக்கூறுவதில் வல்லவர்
19

Page 13
அவரது ஆங்கிலப்பேச்சு அனைவரையும் கவரும் சக்தி வாய்ந்தவை.
டொனமூர் ஆணைக்குழுவின் சிபார்சு குறித்த விவாதத்
தின் போது.
நாங்கள் எப்போதும் இந்நாட்டின் அபிவிருத்தியிலும், முன்னேற்றத்திலும் அக்கறைக்கொண்டிருக்கிறோம் இதன் அபிவிருத்தியிலேயே இந்தியத் தொழிலாளர்களினதும், இந்திய வியாபாரிகளினதும் வளர்ச்சி அமைந்துள்ளது என நாங்கள் கருதுவதே அதற்கு காரணம். அதனால்தான் இலங்கையோடு இணைந்து நின்று இந் நாட்டின் அரசியல் அபிவிருத்திக்காக போராடினோம். நாங்கள் சிறுபான்மை யினராக இருந்தாலும் இந்த சபையில் ஏனைய சிறு பான்மையாரோடு இனையாமலும், அரசாங்க அலுவலர்க ளோடு சேராமலும் தேசிய காங்கிரஸோடு சேர்ந்தே வாக் களித்தோம். சில காலத்திற்கு முன்னர் மத்திய மகாணத்தில் நடைபெற்ற இந்தியர்களின் மகாநாட்டில் டொனமூர் ஆனைக்குழு அறிக்கையில் தேசிய காங் கி ர ஸ்ே I டு இனைந்தே நான் செயல்பட வேண்டும் என்று கேட்கப்பட் டேன், தேசிய காங் கி ர ஸ் இந்தியத்தொழிலாளர்களின் வாக்குரிமையை ஆதரிக்கும் என நம்பினோம்.
எங்களின் நம்பிக்கை முழுதாக சிதறடிக்கப்பட்ட ஒரு வித்தியாசமான நிலையை இன்று காண்கிறோம்.
தோட்டத்தொழிலாளர்கள் உழைத்து உழைத்துச் சாக வேண்டியவனாகிறான். களுத்துறை பகுதிதோட்டம் ஒன்றில் "உழைத்து மrய்வதே எங்களின் வேலை ஏனென்று கேட்க எங்களுக்கு ஏது உரிமை' என்று எழுதியிருக்கும் வரிகளை 4. T G Tel T.
2O
 

கல்லறையில் பொறிக்கப்பட்டிருக்கும் இவ்வாசகங்கள் தாம் இந்நாட்டு வாழ் இந்தியத்தொழிலாளர்களின் தலை விதியாக அமைந்திருக்கிறது. அவனுக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ வாயை திறக்காமலேயே உழைத்துச் சாவதொன்றே அவன் செய்ய வேண்டியது.
நடேசய்யர் நாடாளுமன்ற சட்டசபையில் பேசியபொழுது கூர்ந்த மதி நுட்பத்துடன் வெளிப்படுத்திய ஒவ்3ொரு வார்த்தைகளும், தொலைநோக்கு பார்வையுடன் வெளியிட்ட கருத்துக்களும் இந்தியர்களின் வாழ்வில் இன்று வரை பெரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றும் இலங்கையில் இந்திய வம்சாவளியினர் அனுபவிக்கும் உரிமைகளுக்கு விதி திட்டவர் தஞ்சாவூரைச்சேர்ந்த கோ. நடேசய்யர் என்ற எண்மையை சு வ டி த் தி ைன க் களத்திலுள்ள பழைய பத்திரிகைகளும், நாடாளுமன்ற அறிக்கைகளும் சான்று பகர்கின்றன.
பத்திரிகைப்பணிகள் :
இலங்கையின் முதல் தமிழ் நாளிதழான தேசநேசன்" பத்திரிகையின் ஆசிரியப்பீடத்தை அலங்கரித்த பெருமை கோ. நடேசய்யரேயே ச்சாரும் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே தஞ்சாவூரிலே பத்திரிகை நடத்திய அனுபவம் ாடே பப்பருக்கு உண்டு.
நேசகேசன் (1921) தேசபக்தன் (1924) தொழிலாளி ( ' ) தோட்டத்தொழிலாளி (1917) மற்றும் உரிமைப்போர், நந்திரப்போர், வீரன், சுதந்திரன் என்று தமிழிலும் சிட்டிஷன் (') ஃபோர்வர்ட் (1926) இந்தியன் ஒபீனியன் (1936) தியன் எஸ்டேட் லேபர் (1929) என்று ஆங்கிலத்திலும் வெளிவந்த பத்திரிகைகள் அனைத்திற்கும் நடேசய்யச்
ஆசிரியராக இருந்து நடாத்தியுள்ளார்.
盛l

Page 14
22 காவைகிழார் கட்டுரைகள்
உத்திற்கு மு ர ஞ ண து என்பது. மற்றது இச் சட்டத்தின் விளைவாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த திரு. செ. கோடீஸ்வரனின் சம்பள உயர்வுகளேக் கொடுக்க வேண்டும் என்பது. இந்நாட்டில் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கெதிராக அப்போது ஆட்சி பீடத்திலி ருந்த அரசாங்கம் உயர்நீதிமன்றத்திற்கு அப்பீல் செய்தது. உயர்நீதி மன்றத்தீர்ப்பில் மாவட்ட நீதி மன்றத்தின் தீர்ப்பு சரியல்லவென கூறப்பட்டது. அத னேத் தொடர்ந்து லண்டனில் உள்ள பிரிவுக் கவுன் சலுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக அப் பீல் செய்து அறத்தின் அடிப்படையில் நீதியைப்பெற ஆவனசெய்து கொண்டிருக்கிறது அரசாங்க எழுது வினேஞர் சங்கம். இது இவ்வாறு இருக்க நீதி நியாயத் திற்கு புறம்பாக தனது பெரும் பான்மை பலத்தைக் கொண்டு சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த எதிர்ப்பை உதாசீனம் செய்து 1956 ஆண்டு தொடக்கம் ஆட்சிபீடத்தில் அமர்ந்த அத்தனை அரசாங்கங்களும் பிரச்சினேக்குரியசிங்களம்மட்டும் சட்டத்தைஅமுலாக்கி நாளாந்தம் தமிழ் பேசும் மக்களேயும் தமிழ் அரசாங்க ஊழியர்களையும் கஷ்ட நஷ்டத்திற்கு ஆளாக்கி வரு கின்றது. பெரும் பான்மையோர் தமது மொழியின் பெயரால் தமிழ் பேசும் அரசாங்க ஊழியர்களுக்கு துரோகம் செய்து கஷ்ட நஷ்டத்துக்குள்ளாக்கி உள்ளனர். இந்த ஏழாயிரம் அரசாங்க ஊழியர்களே நம்பியிருக்கும் குடும்பங்கள் நட்டாற்றில் விடப்படுமே என்பதை இந்நாட்டையாளும் அரசாங்கம் உணர மறுக்கிறது.
ஒரு மொழியைப் படிப்பது வேறு, ஒரு மொழியில் இன்னுெரு பாடத்தைப் படிப்பது வேறு. எடுத்துக் காட்டாக தமிழ் மொழி படித்த ஒருவருக்கு ஆங்கிலத் தில் தேர்ச்சிபெறுவது கடினம். ஆணுல் தமிழில் இலக் கியம் படித்த ஒருவன் தமிழிலேயே தர்க்க சாஸ்திரத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனிமொழிச் சட்டத்தின் விளைவு 2
தையும் படிக்கலாம். அவன் தர்க்க சாஸ்திரத்தை ஆங் கிலத்தில் படிக்க முடியாது. ஆங்கிலம் இந்நாட்டில் 150 ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்க மொழியாக விளங்கியும் நாட்டின் பலபாகங்களிலே ஆங்கிலேயர் பல பள்ளிகளையும் கல்லூரிகளேயும் நிறுவி ஆங்கில மொழி மூலம் கல்வி புகட்டியும் இடையருது முயன்ற போதும் ஏறத்தாழ நாட்டில் உள்ளவர்களில் 8 வீதம் பேர் மட்டுமே ஆங்கிலத்தில் ஓரளவுக்கு தேர்ச்சிபெற முடிந்தது என்பதை எல்லோரும் உணர வேண்டும். 150 ஆண்டு காலமாக ஆண்ட ஆங்கிலத்தில் ஏறத்தாழ ஆறு வீதம் மட்டுமே தேர்ச்சிபெற முடிந்ததானுல் குறுகிய மூன்று வருட எல்லைக்குள் எத்தனை வீதம் படித்து சிங்களத்தில் தேர்ச்சிபெற முடியும். உலகப் பேரறிஞர்களாகிய எச். ஜி. வெல்ஸ், ஜோர்ஜ் பெர் ணுட்ஷா போன்றவர்களே தம் தாய் மொழியாகிய ஆங் கிலத்தை விட வேறு மொழியில் பாண்டித்தியம் அடைய முடியாமல் போய்விட்டது என்று ஒப்புக்கொண்டுள் ளனர். மாமேதைகளின் நிலேயே அதுவாஞல் சாதாரண மக்களின் நிலை எதுவாயிருக்கும். விதிவிலக்காக பல மொழிகளைப் பயின்று அத்தனை மொழிகளிலும் பாண் டித்தியம் பெற்ற பன்மொழிப் புலவர்கள் இருந்திருக் கிருர்கள். இன்னும் இருக்கின்ருர்கள். சுவாமி ஞானப் பிரகாசர், தனிநாயக அடிகளார், சுத்தானந்த பாரதி யார் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இன்று ஆங்கி லத்தில் பாண்டித்தியம் பெற்றவர்களாக விளங்கும் ஒரு சிலரும் கூட தமது தாய்மொழியாகிய தமிழைத் தியா கம் செய்துதான் ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்ருர் கள் என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழ் பேசும் அரசாங்க ஊழியர்களின் நலனைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய தமிழ்த் தலேவர்கள் தமது கடமையைச் செவ்வனே செய்யத் தவறிவிட்டனர். சிங்களம் படிப் பதற்கு இன்னும் இரண்டு வருடகால அவகாசம் தாருங் கள் என்று அரசாங்கத்தைக் கேட்பது தூக்கில் தூக்கு

Page 15
மேற்கொண்டிருப்பவன்' என்று "எனது வாழ்க்கையின் நோக்கம்" என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
சட்டசபையையும், பத்திரிகையையும் நடேசய்யர் தொழி லாளர்களின் மு ன் னே ற் ற த் தி ற் கா க வும், மக்களின் அறியாமையை போக்கவும், அவர்கள் சமூகத்தில் விழிப்புற்று எழுச்சிபெறவும் பயன்படுத்தினார்
நடேசய்யரின் ஒவ்வொரு எழுத்தும் தொழிலாளர்களைப் பற்றியதாகவே இருந்தது. தொழிலாளர்கள் தேசபக்தன்" பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவி செய்ததன் நினைவாக தனது அச்சகத்துக்கு "தொழிலாளர் அச்சகம்" எனப்பெயர் கொடுத்தார்.
தொழிற்சங்கவாதி குணசிங்காவோடு கருத்து வேறுபாடு கொண்ட காலத்தில் அவரைப்பற்றி தேசபக்தன் முன் பக்கத்தில் கார்ட்டூனுடன் கண்டனக் கவிதைகளை பிரசுரித் தார். இவை நடேசய்யரின் எழுத்துவன்மைக்கு சான்றுபகரும்.
"குணசிங்கம் துரையே-எங்கள் பன மெங்கே உரையே ஏழை பிழைப்பதற்கு ஏற்பாடு செய்வே னென்று ஆளை விட்டு மிரட்டச் சொல்லி அஞ்சு சதம் வாங்கினீரே"
முன்னே கொடுத்ததற்கு முழு கணக்கும் சொல்லவேணும் பின்னேதும் சொல்வீரானால் பிழைவந்து சேரும் சொன்னோம்.
(தேசபக்தன் 9-1-1929)
தோட்டத் தொழிலாளர்களைப்பற்றி எழுதிய பொழுது
24
 
 

"இந்த மக்கள்
சிந்தும் வேர்வை
ரெத்தக் காசு.தானே. அடே
இரவு பகல்
உறக்கமின்றி
எய்த்துப் பறிக்கலாமா"
(தேசபக்தன் 5-2-1929)
நடேசய்யர் குணசிங்காவுடன் இணைந்து ஃபோர்வர்ட் (FORWARD) என்ற பத்திரிகையையும் தனது அரசாங்க பைக் காலத்தில் இந்தியர்களின் கருத்தை வெளிப்படுத்து தற்கு "இந்தியன் ஒபீனியன்" பத்திரிகையையும் பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் துன்ப துயரங்களையும் அவர் கரின் இருள் முடிய வாழ்க்கை நிலைமைகளையும் எடுத் பம்புவதற்காக "இந்தியன் எஸ்டேட் லேபர்" பத்திரிகை பயயும் ஆங்கிலத்தில் நடத்தினார். இதற்கு மு ன் ன ர் "சிட்டி என்" என்ற ஆங்கில பத்திரிகைக்கும் நடேசய்யர் ஆசிரியராக இருந்துள்ளார்.
நடேசய்யர் இறுதியாக பணியாற்றிய பத் தி ரி ைக சுதந்திரன்' என்ற நாளிதழாகும். அதில் பணியாற்றிய பொழுது "தோட்டத்தொழிலாளி" என்ற பத்திரிகையையும் "தாட்டத்தொழிலாளர்களுக்காக வெளியிட்டார்.
தேசபக்தன்' தினசரியை நடேசய்யர் நடத்தியபொழுது ரமுடைய பல்வேறு பணிகளுக்கு மத்தியில் ஆசிரியத் ாலமாங்கத்தை அவரே எழுதினார். அவரது எ முத் து ாகா மைக்கு சான்றாக அவை இன்று தேசிய சுவடி பாதுகாப்
கர்தில் பாதுகாப்பாக இருக்கின்றன.
இந்தியத் தொழிலாளர் துயர் இந்தியத் தொழிலாளர் சட்டம்
35

Page 16
இலங்கை சட்டசபை
பெரிய கங்காணிமார்களுக்கு ஓர் எச்சரிக்கை
பற்று சீட்டு தொலைய வேண்டும்.
அவிவிவேக குருவும் அவரது பரமானந்த சீடர்களும்
அரசியல் சங்கம்
பொக்கவாயனும், பொரிமாவும்
இலங்கை தமிழ்ப்பத்திரிகைகள்
டெய்லிநியூஸ் வேலை நிறுத்தம் கற்பிக்கும் பாடம்
இலங்கைக்கு சுயராஜ்யம்
மாதா கோவிலில் நடமாடும் பிசாசுகள்
பைசாசத்தின் அழுகுரல் என்பவை நடேசய்யர் எழுதிய ஆசிரியத் தலையங்கத்தின் சில தலைப்புகளாகும்
இந்திய ஜனங்கள் இலங்கை முழுவதும் சிறுபகுதி களாக பிரிந்திருக்கிறார்கள். அவர்களுக்காக பத்திரிகை கிடையாது. இருக்கும் இரண்டொரு பத்திரிகைகளையும் அவர்கள் வாசிப்பது கிடையாது.இந்தியர்களுக்கென பிரத்தி யோக சங்கம்கிடையாது. வகுப்பு பிரிவினைகளுண்டு. வியாபாரிகள் தொழிலாளர்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை. தொழிலாளரோ சாராயத்தவலையைத் தவிர வேறு காரியங் களில் தலையிடப் பிரியப்படுவதில்லை.
இந் நிலையில் இந்தியர்களை எவ்விதம் ஒன்றுபடுத்து வது? அவர்கள் கடமைகளை என்விதம் கற்பிப்பது? அவ்விதம் செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும்? 2000 தோட்டங் களுக்கு சென்று பிரச்சார வேலையை செய்ய எவ்வளவு பிரச்சாரகர்கள் வேண்டும்? எவ்வளவு துண்டுப் பிரசுரங்கள்
தேவை?
இலங்கை இந்தியன் என்ற பிரிவினை தோன்றுவது நாட்டின் துரதிருஷ்டம் என்றும் சில கால ம் வரையில் தோன்றியே தீரும்.
26

இந்தியர்கள் பெரும்பான்மையோர் மத்திய மாகாணத்தில் இருப்பவர்கள். மத்திய மாகாணத்தையாவது ஒற்றுண்பப்படுத் தினால் வருங்கால அரசியல் நிர்வாகத்தில் இந்தியர் ஞச்கு போதிய இடம் கிடைக்காமல் போகாது என்பது திண்ண மாம் .
என்ன செய்யப்போகிறீர்கள்?
இவ்வாறு இந்தியர்களை தட்டியெழுப்பும் வண்னம் தம் ஆணித்தரமான கருத்துக்களை ஆசிரியத்தலையங்கத்தில்
வெளியிட்டார்.
டேசய்யரின்நூல்கள் :
"இன்ஸ்யூரன்ஸ்"
"ஆயில் என்ஜின்கள்" வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் நிர்வாகமும் "வியாபார பயிற்சி நூல்' "வெற்றியுனதே"
நீ மயங்குவதேன் நரேந்திர பதியின் நரகவாழ்க்கை தொழிலாளர் அந்தரப் பிழைப்பு (நாடகம்) இந்தியா இலங்கை ஒப்பந்தம் தொழிலாளர் சட்ட புஸ்தகம்
கதிர்காமம்
அழகிய இலங்கை
PLANTER RAJ THE CEYON INDIAN CRISS
வைகள் நடேசய்யர் எழுதி வெளியிட்ட நூல்கள். முதல் புர் று புத்தகங்களும் நடேசய்யரால் இலங்கைக்கு வருவ /கு முன்னர் தஞ்சாவூரில் வைத்து வெளியிடப்பட்டதாகும்.
37

Page 17
"சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே கணக்கு பதிவு நூல், ஆயில் என்ஜின்கள் பம்புகளும் அவற்றை உபயோகிப் பதும் ஆகிய பலவகைகளிலும் பயன்படும் நூல்களை எழுதி யுள்ளார் என்பது பெருமைப்படத்தக்கதாகும். நடேசய்யரின் தமிழ்நடை தெளிவானது எளிமையானது"இவ்வாறு ஈழத்து இலக்கிய வளர்ச்சி (1964) என்ற நூலில் கனகசெந்திநாதன் குறிப்பிடுகிறார்.
"சோம்பேறிகளையும் விழி ப் புற் று ஊக்கங்கொண்டு உழைக்கத்தூண்ட வேண்டுமென்ற விருப்பத்தால் எழுந்தது. "வெற்றியுனதே! மக்களை மயக்க நிலையிலிருந்து தட்டி யெழுப்பி முன்னேறு என்ற வழியை காட்டுவதாக எழுந்தது. 'நீ மயங்குவதேன்' என்று தனது நூ ல் க ைள ப் பற்றி நடேசய்யர் குறிப்பிடுகின்றார்.
நடேசய்யர் நூல்களை தமிழில் மாத்திரம் எழுதவில்லை, தோட்டத்தொழிலாளர்களை தோ ட்ட முதலாளிமார்கள் முதலாளிகளின் கைக்கூலிகளான கங்காணிமார்கள் எப்படி அவர்களின் உழைப்பை உறிஞ்சுகிறார்கள் எ ன் ப ைத உலகிற்கு வெளிச்சம்போட்டு, உண்மையை எடுத்துக்காட்ட " தோட்ட முதலாளிகளின் இராஜ்யம்" எனற நூலை ஆங்கி லத்தில் எழுதி வெளியிட்டார்.
நடேசய்யரின் ஆங்கில நூலைக்கண்டு தோட்டத்துரை மார்களான வெள்ளையர்கள் அச்சங்கொண்டனர். அந்நூலின் ஆயிரக் க ன க் க ம ன பிரதிகளை வாங்கி தீயிலிட்டு கொழுத்தினார்கள்.
இலங்கை, இந்தியா, இங்கிலாந்து அரசாங்கங்களில் இந்நூல் பரபரப்பை ஊட்டியது "தொழிலாளர்களின் சட்ட புஸ்தகம்' என்ற நூலை 1929 ல் வெளியிட்டார். இந்த நூல் தொழிலாளர்களுக்கு பல விதங்களில் நன்மையை விளைவித்தது.
፶8
 

இந்த சட்டபுஸ்தகத்தின் பிரதிகளை பெரும் அளவில் தோட்டத்துரை மார்களின் கையாட்களான கங்காணிமார்கள் ாங்கி பதுக்கிகொண்டனர். இதனை அறிந்த நடேசய்யர் சுந்த நூலின் முக்கிய பகுதிகளை தொழிலாளர்களின் கடமைகளும், உரிமைகளும்' என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு, நேரடியாக தோட்டங்களுக்கு *ன்று தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ன்னர் தன் கைகளினாலேயே அவற்றை விநியோகித்தார். ஒம் 1939-ல் தொழிலாளர் சட்ட புஸ்தகத்தை மறுபடியும் ஈச்சிட்டு விநியோகித்தார்.
"சட்டம் அமுலில் இருந்தும் பல தொழிலாளர்களுக்கு இதன் நிபந்தனைகள் தெரியாதிருந்த காரணத்தால் தங்க ருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நன்மைகளே பெறா ருக்கிறார்கள். தொழிலாளர்களை சட்ட நிபுணர்களாக்க இப்புத்தகம் எழுதப்படவில்லை. அயோக்கியர்களிடம் அகப்பட்டுக்கொண்டு அவதிப்படாதிருக்க இது எழுதப்பெற்றது" ன்பதை மறக்கவேண்டாம்' என்று நூலின் முகவுரையில்
டேசய்யர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைவாழ் இந்தியத் தொ! லாளர்க்கெனச் செய்யப் டுள்ள எல்லா சட்டங்களைப் பற்றியும் இந்நூலில் குறிப்
ப்ப டுன் ாேது.
இந்நூலில் "சகோதரர்களுக்கு ஒரு வார்த்தை' என்று : ,ʻi, 7, I i JIJI iTL p:":l கிறார்.
இலங்கை தோட்டங்களில் வேலை செய்யத் தொழி பாளர்களாக உங்களை அழைத்து வரத்தலைப்பட்டு OO
வருடகாலமாகிறது. ஆரம்பகாலத்தில் பாய்க்கப்பலில் வந்து ஆறு நூற்றைம்பது மைல் நாடு வழியாக பட்டி னியாலும்

Page 18
பசி தும் வாடி உலர்ந்து வந்து புளிகள் வாழ்ந்த காடு ஆனை வெட்டித்திருத்தி தோட்டங்களாக்கினர்கள். அக்காலங் களில் கடன்பட்டும், அடிப்பட்டும் உதைப்பட்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டும் அந்நியர்களுக்கு உழைத்துகொடுத்தீர்கள் தோட்டக்காரர்கள் லட்சாதிபதி ஆனார்கள். இங்கிலாந்து செழிப்படைந்தது. இலங்கை சிங்கார நாடாயிற்று. பிரிட்டிஸ் காரர்களுக்கு செல்வம் கொடுக்கும் நாடாக இலங்கை ஆயிற்று. ஆயிரக்கணக்கான கார்கள் வரலாயிற்று. இந் நா டே செழித்தது. உங்கள் நிலைமைதான் என்ன? அன்றைக்கும் அடிமை. இன்றைக்கும் அடிமை. தேயிலைத்தூரில் தேங்காய் காய்க்கிறது, மாசி உண்டாகிறது, தங்ககாசு சம்பளம் என்று அழைத்து வரப்பட்ட உங்கள் முன்னோர்கள் தேயிலைத் நூர் களுக்கும், ரப்பர் மரங்களுக்கும் எருவானதை தவிர உங்க ளுக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்களா? கூலிக்காரன் என்ற பெயர் போய் விட்டதா? சிங்களவர்கள் கிராமவாசிகள் விவசாயிகள். இந்தியர்கள் கூலிகள் தான் என்ற கேவலமான பெயர் போயிற்றா? மானமிழந்து பின் வாழாமை முன்னி னிதே என்பது பழைய பழமொழி. உங்கள் மானத்தை காப் பாற்றிக்கொள்ளவேண்டிய காலம் வந்து விட்டது. உங்கள் மா ன த் ைத நீ நீ க ள் காப்பாற்றிக்கொள்ளபேண்டும். அ ந் நி ய ர் க ன் வந்து காப்பாற்றுவார்கள் என எண்ண
வேண்டாம்.
இலங்கை தோட்டங்கள் பல கம்பெனிக்குச் சொந்தம், கம்பெனிகளில் முதல் பலபங்குகளாய்ப்பிரிக்கப்பட்டிருக்கிறது" ஒவ்வொரு கம்பெனிக்கும் பல்லாயிரம் பங்குகள் உண்டு. இந்தியாவில் உள்ள கவர்னர்கள், வைஸ்ராய்கள். வேறு பெறும் உத்தியோகஸ்தர்கள் இங்கிலாந்திலுள்ள காமன்சபை சங்கத்தலைவர்கள், மந்திரிகள், மற்றும் அநேக செல்வாக் குள்ள பிரமுகர்கள் நீங்கள் வேலைசெய்யும் தோட்டங்களில்
BO
 

பங்காளிகள். உங்கள் உழைப்பினால் ஏற்படும் வாபத்தைக் கொண்டு அவர்கள் சாப்பிட்டு சுகிர்த்து உலகத்தை ஆளு கிறார்கள். உங்களால் அவர்கள் ராஜயோகம் அனுபவிக்கை யில் அவர்களுக்கு ராஜயோகம் கொடுக்கும் நீங்கள் உங்க இருக்கு வேண்டிய மனித சுதந்திரத்தையாவது பெற முயற் சிக்க வேண்டாமா? உங்களுக்கு ராஜயோகம் வேண்டாம், மோட்டார்கள் வேண்டாம், மாடமாளிகைகள் வேண்டாம். உல்லாச வாழ்க்கை வேண்டாம், நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்தும் உங்களுக்கு இரண்டு வேளை வயிறு நிறைய சோறாவது கிடைக்க வேண்டாமா? அதற்காக பாடுபடுவது குற்றமா? நீங்கள் வேண்டுவது மனிதருக்குள்ள உரிமைதான். மிருகங்களைப்போல் நடத்தப்பெறாமல், மனிதர்களைப்போல் தலைநிமிர்ந்து நடக்க உங்களுக்கு உரிமை வேண்டும். அந்த உரிமை இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா! நீங்கள் இ ன் றே யோசியுங்கள். இக்கட்டுரையில் சொல்லப்பட்ட கல்லாவற்றையும் கவனித்து வாசியுங்கள் வாசிக்கத்தெரிந்த வர்கள் வாசிக்கத்தெரியாதவர்களுக்குஎடுத்துச்சொல்லுங்கள். வல்லோரும் ஒன்று கூடுங்கள். அவ்விதம் நீங்கள் ஒற்றுமை படுங்கள் சங்கம் கூடுங்கள். அவ்விதம் நீங்கள் ஒற்றுமை பட்டுவிட்டதாகக் கண்டாலும் கேட்டாலும் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். சுதந்திர வீரர்கள் கூத்தாடுவார்கள். படங்களை அடிமைகளாக வைத்து உங்கள் இரத்தத்தை ா றிஞ்சும் இனத்தவர்களுக்கு வருத்தம்தான் அவர்கள் ஓர் சிறுபான்மையோர். அவர்கேைளப்பற்றி உங்களுக்கு கவல்ை வேண்டாம். ஆறறை லட்சம் பெயர்களை கவனிப்பதா? அல்லது நாலு ஐந்து ஆயிரம்பேர்களை கவனிப் ப த r இன்றே கூடுங்கள், சுதந்திரம் தேடுங்கள்.
நடேசய்யர் எழுதிய தொழிலாளர்சட்டபுஸ்தகம்தோட்டத் தொழிலாளர்களின் வேதப்புத்தகமாகவே கருதப்பட்டது.
31

Page 19
"இலங்கை இந்திய ஒப்பந்தம்' என்ற நூல் இலங்கையில் வாழ்ந்த இந்தியர்கள் சம்பந்தமாக இரண்டு அரசாங்கங் களும் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து எழுதப்பட்ட விளக்கங்கள் ஆகும்.
தொழிலாளர் அந்தரப்பிழைப்பு என்ற நூல் வசனமும் பாடலும் கூவந்த நாடக நூல். இது தொழிலாள்ர்களை பெரிதும் கவர்ந்தது இந்திய வம்சாவளிகளான பலையக மக்களின் படைப்பிலக்கிய முயற்சிகளுக்கு இந்த நூல் உந்துசக்தியாக இருந்தது. நடேசய்யரும் அவரது துனை விமார் மீனாட்சி அம்மையாரும் தோட்டம் தோட்டமாகச் சென்று. இந்த நூலின் வசனங்களை வாசித்து காட்டி யும், பாடல்களை பாடியும் தோட்டத்தொழிலாளர்களிடையே ஓர் விழிப்புணர் வையே ஏற்படுத்தினார்கள்.
"கதிர்காமம்' என்ற தலைப்பில் கதிர்காமத்தைப்பற்றிய வரலாற்று ரீதியான ஆதாரங்களையும், புராண வரலாறு வாய்மொழி தகவல்களைக் கொண்டு ஓர் நூலை எழுதி வெளியிட்டார். நடேசய்யர் கடைசியாக எழுதி வெளியிட்ட நூல் "அழகிய இலங்கை. இது இந்தியாவில் அச்சிடப்பட்ட நூல் இலங்கைப்பற்றிய அரிய தகவல்களைக்கொண்டது.
நடேசய்யரின் எழுத்தாற்றலையும் படைப்பிலக்கிய திறமையையும் அவரது எழுத்துக்கள் எமக்கு எடுத்து காட்டு கின்றன. அவர் எழுதி வெளியிட்ட நூல்களை கணக்கெடுத் தால் அவரின் இமாலய சாதனைகள் புரிந்து கொள்ளலாம்.
சகாப்த நாயகன் :
இலங்கை வாழ் இந்திய வம்சாளியினர்க்காக முதன் முதலில் உரிமைக்குரல் எழுப்பி இலங்கையின் முதல் தமிழ் நாளிதழையும் வெளியிட்டு சாதனைகள் பல புரிந்து சரித்தி Tத்தில் இடம்பெற்ற சகாப்த நாயகன்தான் கோ. நடேசய்யர்.
3.
 

இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் உரிமைக் காக போராட மலைநாட்டில் குடியேறி ஆக்க இலக்கிய ப ற் சி க ஸ் படைத்து "மலையக இலக்கியம்’ என்ற தனித்துவமிக்க இலக்கியம் உருவாக்குவதற்குபாதை அமைத்து கொடுத்தும் அந்தப் பாதையில் நடந்து சென்று மயைக ஆக்க இலக்கியத்தின் முன்னோடியாகவும் கோ. நடேசய்யச்
கழுகிறார். |-
கோ. நடேசய்யர் என்ற தனி பனிதனின் சாதனை இங்கை வாழ் இந் தி பா வம்சாவளியினரின் வரலாற்றில்
ாரு மைல்கல்லாக அமையும் ,
இலங்கையின் தேசிய வீரர்கள் வரிசையில் வைத்து க் ஆப்பட வேண்டியவர். அரசியல், தெ (ா ழி ற் சங்க ம், பத்திரிகை இந்த மூன்றிலுமே முத்திரைபதித்துக்கொண்டவர்
இத்தகைய பெருமைக்கும் சிறப்புக்குமுரிய மானுடம் பாடிய வானம் பாடியான நடேசய்யர், தழிழரசுக்கழகத்தின் நாலவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் வேண்டு'காளின் பேரில் "சுதந்திரன்' தினசரியின் ஆசிரிய பீடத்தில் அமர்ந்து, மீண்டும் கனல்கக்கும் தனது எழுத்தாற்றலை பயன்படுத்திய வேளையில்,
7-11-1947-ம் ஆண்டு ஐம்பத்தாறாவது வயதில் அமரரானார். அவரது இறுதிச்சடங்குகளை தமிழ் மக்களின் பதிப்புக்குரிய எஸ். ஜே.வி. செல்வ நாமாகமே முன் எனின்று நடத்தினார்.
தமிழ் வளர்த்த தஞ்சை மண்ணிலே பிறந்த நடேசய்யர், கங்கை மண்ணிலே மறைந்தார். அவரின் பூ த புெ டல் கொழும்பு கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கோ. நடேசய்யர் மரணமான மறுதினம் வெளிவந்த சுதந்திரன்’ பத்திரிகையில், அவரது புகைப்படத்தை முன் பக்கத்தில் பிரசுரித்து ஆசிரியத் தலையங்கம் தீட்டியது.
33

Page 20
இலங்கையில் முதன் முதலாக தினசரி தமிழ்ப்பத்திரிகை ஒன்றை வெயிட்டவரும் இவரே. இன்று இலங்கையிலும் இந்தியாவிலும் அவரிடம் பத்திரிகைத் தொழில் பயின்றவர் கள் அநேகருண்டு. இலங்கையிலுள்ள தமிழருக்கென ஒரு பத்திரிகை இல்லாதையிட்டு வருந்தி எங்கள் "சுதந்திரன்" பத்திரிகையை தமிழ் பெரியார்களைக் கொண்டு வெளிவரச் செய்த முக்கிய கர்த்தாவும் திரு. நடேசய்யர்தான்."
இவ்வாறு ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது
இலங்கை தமிழருக்கும். இந்தியத் தமிழ ரு க் கு ம் நடேசய்யரின் சுதந்திரன் ஆசிரியப் பணியோடு ஆரம்பித் திருக்கக்கூடிய தொடர்பு நடேசய்யரின் மரணத்தால் அற்ப ஆயுளில்முடிந்தது.
நடேசய்யரின் தீர்க்க தரிசனமான, தொலை நோக்குப் பார்வை கொண்ட கருத்துக்களை புரிந்து கொண்டிருந்தால் இந்த ஒரு மொழியைப் பேசிய இரு சமூகமும் என்றோ இணைந்து செயல் பட்டிருக்கும்.
இலங்கை வாழ் இந்தியத்தமிழர்கள் நடேசய்யரை தங்களை வாழ்விக்க வந்த மகானாக கருதினார்கள். இலங்கையின் மகாத்மாவாக அவரை வழிபட்டனர். காந்தி நடேசய்யர்' என்று அவரை அன்புடன் அழைத்துள்ளனர்.
அப்பெயர் ஒன்றே அவரின் சேவையை, மக்கள் அவர் பால் கொண்டிருந்த மதிப் பை வெளிப்படுத்துகிறது. காந்தி நடேசய்யர் இலங்கைத்தமிழரின் ஜீவ நாடியாக வுள்ளார். அவர் இதயத்தில் தமிழ்க் குருதி துள்ளி குதித் தோடியது.
ஆண்டிலும் அறிவிலும் முதிர்ந்தவர். விடா முயற்சி மிகுந்தவர். சேவா பக்குவம் பெற்றவர். ஏழை எளியவரிடம்
哥些

பாசம்கொண்டவர் தோட்டத்தொழிலாளர்களின் நலனை பே கனவிலும் கருதி உழைத்தப் பெரியார். தமிழன் என்றால் ஆண்மையுடன் முன்னேறு என்பதையே இலட்சியமாகக் கொண்டவர். இவ்வாறு சுதந்திரன் (8.11-47) ஆசிரியத் தலையங்கம் தீட்டியது.
தொறிற்சங்க தந்தையெனச் சொல்லலாகும் தூய தமிழ் பத்திரிகை ஆரம்பித்து எழிலாக முதன் முதலில் நடத்தி வந்தான் இந்நாட்டு அரச சபை அங்கம் பெற்றான்
எனக்கவிஞர் பி. ஆர். பெரியசாமி (தினகரன் -1950) பாராட்டுகிறார்.
"இலங்கை சட்டசபை அங்கத்தவர் அரசியல்வாதி, இலங்கையில் பத்திரிகை உலகிலும் நூல்கள் வெளியீட்டிலும் சாதனை புரிந்தவர் மலை ய க படைப்பிலக்கியத்தின் பிதாவும் அவரே ஆவார். சுதந்திர இலங்கையில் ஏற்படுத்தப் பட்டச் சில முற்போக்கு அரசியல் மாற்றங்களுக்கு முதலில் அடியெடுத்து கொடுத்தவரும் நடேசய்யராகவே விளங்கு கிறார், இவ்வாறு எழுத்தாளர் சாரல் நாடன் குறிப்பிடு கின்றார்.
மலை முகடுகளிலும், தேயிலைக் காடுகளிலும், தங்கள் வாழ்வை அர்ப்பணித்த மனித ஜீவன்களைப்பற்றி குரல் கொடுத்த மனித மாணிக்கமான கோ. நடேசய்யர் என்ற பெயர் ம ைல ய க ம் என்ற சொல் இருக்கும் வரையில் நிலைத்திருக்கும்.

Page 21
பதிப்புரையும் சில குறிப்புகளும்
1991-ம் ஆண்டு நடேசய்யரின் நூற்றாண்டாகும்.
செயற்கரிய சாதனைகள் செய்த நடேச ய் ய ரி ன் நூற்றாண்டை இலங்கையிலும் தமிழ் மக்கள் வாழும் அயல் நாடுகளிலும் நடத்த வேண்டும் என்பது எமது மலையக கலை இலக்கியப் பேரவையின் திட்டமாகும்.
இந்தியாவில் கோ. நடேசய்யர் பிறந்த தமிழ் நாட்டில் நூற்றாண்டு விழா நடத்துவது சம்பந்தமாக கலை இலக்கிய கல்வியாளர்களுடன் கலந்துரையாட தமிழகம் வந்தேன்.
முதலில் நடேசய்யர் பிறந்த தஞ்சாவூருக்கும் பின்னர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றேன்.
ஆறுகோடி தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில் ஆறு பேருக்காவது நடேசய்யர் பற்றிய தகவல்கள் தெரியவில்லை.
இதே நிலைமை தான் எழுபதுகளில் இலங்கையிலும் இருந்தது. ஒரு சில அறிவு ஜீவிகள் மாத்திரம் நடேசய்யரை ஒரு தொழிற்சங்கவாதி என்று அறிந்து வைத்திருந்தார்கள். அதுவும் கலாநிதி குமாரி ஜெயவர்வர்தனா எழுதிய THE RiSE OF THE LABOUR MOVEMENT IN CEYLON Tsiri) நூலின் மூலம் தான்.
கலாநிதி குமாரி ஜெயவர்தனா தனது தொழிற்சங்க வரலாற்று ஆய்வு நூலில் நடேசய்யர் பற்றிய ஓர் அத்தி யாயத்தை எழுதாவிட்டால் அவர் வரலாற்றில் மறக்கப் பட்டிருப்பார். அல்லது மறைக்கபட்டிருப்பார்.
எண்பதுகளில் மலையக கலை இலக்கியப் பேரவை நடேசய்யரின் அரசியல், தொழிற்சங்க பத்திரிகைபணிகளை

பலரும் அறியச் செய்வதற்காக பிரசார நடவடிக்கைகளை மற்கொண்டது. நடேசய்யர் பற்றிய கட்டுரைகளை நானும், நண்பர் சாரல் நாடனும் சஞ்சிகைகளிலும், நாளிதழ்களிலும் எழுதினோம். கண்டியில் முழுநாள் கருத்தரங்கு ஒன்றை தொழிற்சங்கவாதி தோழர் எஸ். நடேசன் தலைமையில் நடத்தினோம். அதில் கலாநிதி குமாரி ஜெயவர்தனாவும் கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து சா ர ல் நா ட ன் எழுதிய தேசபக்தன் கோ. நடேசய்யர்' என்ற வரலாற்று ஆய்வு த்ரல் LIL உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
இலங்கையின் முதல் தமிழ் நாளிதழின் ஆசிரி ய ர் நடேசய்யர் என்ற உண்மையை எழுத்தாளர் சாரல்நாடனே எடுத்துக்காட்டினார்.
நடேசய்யர் நூற்றாண்டுக்கு இன்னும் சில வாரங்களே
இருக்கும்பொழுது நடேசய்யரை தமிழகத்திற்கு அறிமுகம் செய்ஓ து நமது கடமையாகிவிட்டது.
தமிழகத்திலிருக்கும் மலையகத்திலிருந்து தாயகம் திரும்பிய நண்பர்களான டி.எஸ், ராஜா பன்னீர் செல்வம், ரா.பாலச்சந்திரன் ஆகியோர் நடேசய்யர் பற்றிய ஒரு சிறு பிரசுரத்தை எழுதும்படி தூண்டினார்கள்.
ஒரே நாளில் நடேசய்யர் பற்றிய காந்தி நடேசய்யர் என்ற நூலை எழுதினேன். இதிலுள்ள குறிப்புகளுக்கு ஆதாரமாக இருந் த து சாரல்நாடனின் "தேசபக்தன் Gamt. நடேசய்யர்' என்ற நூலே, ஒரு வரலாற்று தேவையை கருதி அதிலுள்ள குறிப்புக்களை கையாண்டேன். காலம் அவருக்கு நன்றி செலுத்தும். தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் நான் சந்தித்த அன்புள்ளம் டாக்டர் எஸ். நாகராஜன் அணிந்துரை வழங்கியுள்ளார்.
37

Page 22
அன்றுமுதல் இன்றுவரை என் எழுத்துப்பணியை பாராட்டி உற்சாக மூட்டும் திரு இர. சிவலிங்கம் வழங்கிய முன்னுரை காகவும், பின் அட்டையில் என்னைப்பற்றிய குறிப்புரை எழுதியதுமல்லாமல், அட்டைப்படம் சிறப்புற அமைய உதவிய மனே ரா விஸ்வநாதனுக்கும், டாக்டர். கே. ஏ. குணசேகரன் மூலம் அறிமுகமான கவிஞரும் அச்சக உரிமை யாளருமான திரு. சாந்தகுமாரன் அவர்கட்கும், குறுகிய காலத்தில் இந்நூல் வெளிவர துணை நின்ற அச்சக நண்பர் களும், தமிழகத்தில் நான் இருந்த நான்கு மாத காலம இலங்கையிலிருந்து அடிக்கடி மடல் மூலம் எனது பணிகள் தொடர உற்சாக மூட்டிய நண்பர் கள் சாரல் நாடன் சு. முரளிதரன், மேமன்கவி ஆகியோ ரு க் கும் எனது கலை இலக்கிய பணிகளுக்கு து ைண நி ன் ற துணைவி யாருக்கும் நன்றி கலந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சி. அந்தனிஜூவா 30-10-90
1991-1 ஆண்டு ஜனவரி முதல் ஓ ர |ா ன் டு க் கு கோ. நடேசய்யரின் நூ ற் ற ர ண் டு விழா இலங்கையில், தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் நடத்த விரும்புகிருேம்அத்துடன் மலையக இலக்கிய சஞ்சிகையான கொழுந்து நூற்றாண்டு மலர் வெளிவர உள்ளது இது சம்பந்தமான தொடர்புகளுக்கு நமது ம ைல ய க கலை இலக்கியப் பேரவையை தொடர்பு கொள்ளவும்
SECRETARY
Hill Country Art 8 Literary Assembly 57, Mahinda Pace
Colombo-6 Sri lanka.
38


Page 23


Page 24
ட அந்தனி ஜி
கிலே இலக்கிய துறை கால் நூற்றுண்டுகளாக அந்தணி ஜீவா இலங்சி தமிழ் இலக்கிய வளர் என்ர சஞ்சிகைக்கு ஆ
1978-ம் ஆண்டு திருப் தமிழ்நாடு ஆஃ) இலக்கி மகாநாட்டில் இலங்ை கலந்து கொண்டு தி "ஈழத்தில் தமிழ் நாட ஆகரம் வெளியீடாக
எழுபதுகளில் இலங்ை யில் 'அக்கினிப் பூக் தொழிலாளர் வர் சிறப்பாக சித்தரித்து
" பறக்காத கழுகுகள்" பாராட்டப்பட்டது. "அ இரு விருதுகளேப் ெ மேடையின் நம்பிக்ை இவர் இருக்கிதுர் என் கே. எஸ். சிவகுமாரன்
மகாகவி பாரதி நூது போது நாவலாசிரிய எழுதிய " மகாகவி ப நாடகத்தை இயக்கியு
மனோ வில்
COWER PRINTED B
ik ANUSHA PRINTERS, TRICHY

வா
ரயில் கடந்த
பணியாற்றி வரும் கை மலேயகத் ச்சிக்காக "கொழுந்து" ஆசிரியராகவிருக்கிருரர்.
பூரில் நடைபெற்ற யப் பெருமன்ரத்தின் க பிரதிநிதியாக கழ்த்திய உரை கம் " என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
க தமிழ் நாடக மேடை
கள்' என்ற நாடகம் க்கப் பிரச்னையை
காட்டியது.
நவ சிருஷ்டி என வேகள்" அரசின் பற்றது. தமிழ் நாடக கக்குரியவராக T விமர்சகர்
குறிப்பிட்டிருந்தார்.
*ருண்டு விழாவின் ர் இள்ங்கீரன் ாரதி' என்ற стят тт.
ஸ்வநாதன், திருச்சி
"-2. PHONE: 23248.