கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதையல்ல நிஜம்

Page 1


Page 2


Page 3

රාශර්භඨය ශීඝ්‍රහී
கே. ஜி. மகாதேவா
గ్కి هاثوره
e? s 를
32/9 ஆற்காடு சாலை சென்னை 24 தமிழ்நாடு-இந்தியா

Page 4
KATHAIALLA NIJAM
By
K.G. Mahadeva
First Edition August 2007
Mithra : 145
ISBN 87 - 89.748 - 32 - 7
Publication Editor
Espo
Mithra Books are Published by Dr. Pon Anuro
Pages : 232 Rs,80
Printed & Published by Mithro Arts & Creations Pvt Ltd., 32/9 Arcot Road, Kodambakkam Chennai - 600 024. Ph : 2372 3182, 2473 5314 Email: mithrabooksGgmail.com

ள்ள்ர்ஜ்
ஈழநாடு என்றால் என்ன?
இது இலங்கையின் பெயர் மட்டுமல்ல; ஒரு தேசத்தின் - அதன் ஒரு மாநிலத்தின் முதல் தினசரிப்பத்திரிகையின் பெயர்.
தமிழ் மாநிலத்தில், தமிழர்களுக்காக கே. சி. தங்கராசா, கே. சி. சண்முகரத்தினம் சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு தேசியப் பத்திரிகையாக வளர்ச்சி கண்ட 'ஈழநாடு வின் 33 வருடகால சமுதாயப் பயணத்தில் பயனடைந்த பலரில் மூத்தவர்கள் சிலர் சுதந்திரப் பத்திரிகை யாளர்களாகவும், வேறு சிலர் தொழில் ரீதியாக பத்திரிகையாளர்களாகவும், பத்திரிகைகள் நடத்தியும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது, ‘ஈழநாடு வேர்களினதும், விழுதுகளினதும் மகத்துவமாகும்.
எனது முப்பது வருட காலப் பத்திரிகைத்துறை வாழ்க்கையில் இருபத்து இரண்டு ஆண்டுகள் ‘ஈழநாடு விலும், எட்டு ஆண்டுகள் கண்டி செய்தியிலும் நிறைவேறியது. இரண்டு பத்திரிகைகளிலும் கிடைத்த அனுபவம், ஏற்பட்ட தொழில் பக்தி; இத்துறையில் செம்மையாக உரமிட்டு இன்றும் உற்சாகமளித்துக் கொண்டிருக்கின்றன.
ஆடிய கால்களும், பாடிய வாயும் எப்படி "சும்மா இருக்காதோ அதேபோல், எழுதிய கைகளும் ஓய்ந்திருக்கா!
‘ஈழநாடு'வில் பணியாற்றிய காலத்தில் "இப்படியும் நடக்கிறது" தகவல் பத்தி எழுதிவந்தேன். இது வாசகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக, தினம் ஒரு சம்பவமாக, பல நூற்றுக்

Page 5
கணக்கான இதழ்களில் வெளியான நிகழ்வுகளை முத்துக்களாக மாலை தொடுத்திருந்தேன். ஒவ்வொரு தகவலும் உண்மையானது. அதன் பின்னணியில் கற்பனை எதுவுமின்றி நிஜம் மட்டும் ஒலித்தது. சில, சிரிக்க வைக்கும். சில, சிந்திக்கத் தூண்டும். வேறு சில திகைப்பூட்டும். இப்படியும் நடக்குமா?’ என்று கேள்வி எழுந்து, "இப்படியும் நடக்கிறது! என்று புருவத்தை உயர்த்தும் மண்ணின் பெருமைகள் பேசும் இவை நாட்டு நடப்புகளை மட்டுமல்லாது. சமூகநலத் தகவல்களையும் எதிரொலிக்கும்! ஒவ்வொரு நிகழ்வும் நிஜமானது. கற்பனை இருக்காது. பல துறைகளையும் அலசும் இப்பார்வையில், மூடிமறைக்கப்பட்ட உண்மைக்கதைகள் மட்டுமே தெரியும்
நாட்டுப் பிரச்சனையால், மூடையிலிருந்து சிதறிய ல்நல்லிக் கனிகள் போல் பல வெளிநாடுகளிலும் இன்று புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மண் குழந்தைகளுக்கு-பிள்ளைகளுக்கு ஈழத்திருநாட்டின் தமிழ் உரிமைப்போராட்ட வரலாறு தெரியாமல் போய்விடுமோ என்று அஞ்சும் சூழலில் தமிழ்-தாய்மொழியையாவது அறிந்துகொள்ளட்டும் என்று இப்பிள்ளைகளின் பெற்றோர் பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளும் இன்றைய காலகட்டத்தில், இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் பூமியில் போராட்ட வரலாற்று நிகழ்வுகள் தவிர்த்தி என்ன எல்லாம் m நடந்தன. தமிழர் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்பட்டார்கள், நசுக்கப்பட்டார்கள், நாட்டுநடப்பு எப்படி இருந்தது என்பதை கடுகளவாவது சிந்தித்துப் பார்க்க எனது இப்படையல் நிச்சயம் வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை.
யாழ்ப்பாணத்தில் இன்று நடப்பது இராணுவ ஆட்சி. நினைத்த நேரம் ஊரடங்குச் சட்டம் பாயும். மின்வெட்டு திடீர் திடீரென அமுலாகும். இப்படியான சூழலில், 1980-கள் முதல் 1990-ம் ஆண்டு வரை நான் எழுதிய 'இப்படியும் நடக்கிறது பத்தி, பல நூறு இதழ்களைத் தாண்டி யிருந்தாலும், சிரமத்தின் மத்தியில் எனது கைக்கு தபால் மூலமாகக் கிடைக்கப்பெற்ற 238-களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 மட்டுமே உங்கள் கைகளில் அச்சுப் பிசகாமல் அப்படியே சமர்ப்பிக்கப்படுகின்றன. எல்லா சம்பவங்களுக்கும் அதன் காலகட்டத்தை நினைவுபடுத்த திகதியிட்டு உறுதிப்படுத்தியுள்ளேன். இவற்றின் நவரசங்களைப் பொறுத்து, ஆண்டுகள் முன்பின் இடம்பெறுகின்றன. அனைத்தும் வெறும் தகவல்

களஞ்சியம் மட்டுமல்ல, நினைத்துப் பார்த்து சிலிர்க்க வேண்டியவை. எல்லாமே "ஈழநாடு வில் பிரசுரமானவைதான். சம்பவங்களின் தலைப்புகள் மட்டும் புதியவை.
26 ஆண்டுகளுக்கு முன்னர், ஐக்கிய தேசிய கட்சி அரசின் இரண்டு சிரேஷ்ட அமைச்சர்களான காமினி திஸநாயக்க, கிறில்மத்தியூ ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில் அரசு கமாண்டோ படையினரால் 1981-ஜூன், 1-ம் திகதி இரவு ‘ஈழநாடு - ஸ்தாபனம் முழுவதுமாகத் தீக்கிரையாக்கப்பட்டு, ஆறு நாட்கள் கழித்து ஈழநாடு பீனிக்ஸ் பறவைபோல மீண்டெழுந்ததும், "இப்படியும் நடக்கிறது பத்தியில், செய்தி தந்த ‘ஈழநாடு செய்தியானது' என்று சுனாமியாகக் கொந்தளித்த பரிதாபம்; மற்றும் 1986-ல் இலங்கை விமானப்படை கோண்டாவில் - தாவடி பகுதியில் முதல்தடவையாகக் குண்டுவீசி வேட்டையாடிய சம்பவம், 1987-ல் இந்தியப் படையினரால் 'அமைதி கொல்லப்பட்ட துயரம் போன்றவை இந்நூலில் இடம்பெறாவிட்டாலும், அடுத்த கதையல்ல நிஜம் - பகுதி 2-ல் விரிவுபடும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
"இப்படியும் நடக்கிறது பகுதியை தொகுத்து வெளியிடுமாறு முதலில் நினைவூட்டி, ஊக்கப்படுத்தியவர் எனது ஈழநாடு சக ஆசிரியர் - மூத்த பத்திரிகையாளர், இனிய நண்பர் - சசிபாரதி சு. சபாரத்தினம் ஆவர். அவர்களுக்கும்; இந்நூலுக்கு முன்னிடு வழங்கிய இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் பிரதிப் பணிப்பாளர் ஆ. சிவநேசச் செல்வன் அவர்களுக்கும், எனது நூல்களை தொடர்ந்து அச்சிட்டு வெளியிட்டுவரும் எஸ். பொ. வின் மித்ர' பதிப்பகத்தாருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்
அதே நேரத்தில், மற்றுமொரு ஈழத்துப்படைப்பாளிக்கும் நான் மிகவும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
மற்றவர்களின் எழுத்துக்களுக்கு மதிப்பளிக்கும் "செங்கை ஆழியான் படைப்புகளுக்கு, இலங்கை சாகித்திய மண்டலம் சரியாகவே மதிப்புக்கணக்கு போட்டு கெளரவித்திருக்கிறது. ஏழு தடவைகள் இந்த அமைப்பின் பரிசுகளை இவர் பெற்றுள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஆக்கியுள்ள இவரது இந்த ஆண்டுப்படையல் - குந்தியிருக்க

Page 6
ஒரு குடிநிலம் சிறுகதைத் தொகுதி: யாழ்ப்பாணம் 'கமலம் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. 'மித்ர வெளியீடான இவரது பத்துக் குறுநாவல்கள் கொண்ட 'ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொகுதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சியில் வெளியிடப்பட்டது. ‘ஈழநாடு’ காலத்தில் வெளிவந்த நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளைச் சேகரித்து வைத்திருக்கும் செங்கை ஆழியான் அவற்றைத் தொகுதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். செம்பியன் செல்வன் சிறுகதைகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பதுக்கும் அதிகமான சிறுகதைகளையும் மித்ர வெளியீடாக வெளிக்கொணரும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
செங்கை ஆழியானின் இலக்கிய சேவையின் இன்னுமொரு அடையாளம்தான் யாழ். இலக்கிய வட்டம். இந்த அமைப்பை 1960 -களில் உருவாக்கிய இரசிகமணி கனக. செந்திநாதன், மதுரகவி இ. நாகராஜன், யாழ்வாணன், கே. வி. நடராஜன் உள்ளிட்ட எழுவரில், செங்கை ஆழியான் முக்கியமானவர். இன்றுவரை இவர் யாழ். இலக்கிய வட்டத்தின் மூச்சுக் காற்றாய் இருந்து வருகிறார். சுதந்திரன் சிறுகதைகள், 'கலைச்செல்வி சிறுகதைகள், ஈழம் தந்த வித்தக எழுத்தாளர் 'முனியப்பதாசன் சிறுகதைகள் என ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு பெருமை சேர்க்கும் தொகுதி களையும் செங்கை ஆழியான் பெரிதும் முயன்று வெளியிட்டிருப்பது, அவரது இலக்கியப்பற்றினை எக்காலத்துக்கும் பறைசாற்றி நிற்கும்.
பல சிரமங்கள் மத்தியிலும், பொறுப்புடன் செயல்பட்டு, யாழ். பல்கலைக்கழக நூலகம், யாழ். பொதுசன நூலகம் ஆகியவற்றிலிருந்து எனது இப்படியும் நடக்கிறது புகைப்படப் பிரதிகளைப் பெற்று தமிழகம் அனுப்பிவைத்த ஈழத்தின் புகழ்பெற்ற படைப்பாளி டாக்டர். க. குணராசா செங்கை ஆழியான்) அவர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்.
- கே.ஜி மகாதேவா
"சுப்ரபாதம் 5, 8-வது குறுக்குத் தெரு, திருநகர், கருமண்டபம் திருச்சிராப்பள்ளி - 620 001.

எனது உயிரில் கலந்து உடலில் உறைந்து கனவில் மிதக்கும் எங்கள் வம்ச
குலவிளக்குகளாக மிளிரும் பேரன் - பேத்திகளுக்கு இந்நூல்
μα»Lμ6υ

Page 7

முன்னிடு
பத்திரிகைத் துறையிலே பயங்கரமான நெருடல்கள் - நெருக்கடி களின் மத்தியில் துணிவோடும், துடிப்போடும் பணியாற்றிய அன்பர் கே. ஜி. மகாதேவா தமது நினைவலைகளை இரைமீட்டு முன்னர் நூலாக வெளியிட்டிருந்தார். ஆற்றல் நிறைந்த ஒரு பத்திரிகையாளரின் நினைவலைகள் கடந்த காலத்தின் பழுதிலாத்திறன்களையும் மன அலசல்களையும் நினைவூட்டின.
யாழ்ப்பாணம் ஈழநாடு’ பத்திரிகைக் காரியாலயத்திலும், பின்னர் கண்டி செய்தி பத்திரிகை அலுவலகத்திலும் அவரைக்கண்டு பேசிய காலங்கள் மனதில் நிழல்களாகத் தெரிகின்றன. பத்திரிகைகளில் பணியாற்றும் காலங்களில் மனதிலே பட்டுத்தெறித்த அத்தனை விடயங் களையும், இப்பொழுது மகாதேவா (மகான்) வாசகர்களுக்காக தொகுத்துத்தர முற்பட்டுள்ளார். இவை எல்லாம் மனதைக்குடையும் சுவாரஸ்யமான சுகானுபவங்கள். -
வாசிப்பதில் நம்பிக்கை கொண்ட எனக்கு, மகான் எழுதிய இப்படியும் நடக்கிறது என்ற தொடர் எனது மறுவாசிப்புக்குத் தீனியாக அமைந்துள்ளது. புதுமைப்பித்தன் முதல், இப்பொழுது சுந்தர ராமசாமி என்ற வரிசையில் பலரும் எழுதியவற்றை உள்வாங்கிக்கொண்டிருந்த தருணத்தில் நண்பர் மகானின் நல்விருந்து எனக்குக் கிடைத்துள்ளது.

Page 8
இந்தத் தொடரில் துண்டு துணுக்குகளாக அவ்வப்போது வெளிப்பட்டவை வெறும் பத்தி எழுத்துகள் அல்ல. இவை மகானின் மனதில் இருந்து தோன்றிய மனக்குகை ஓவியங்கள்!
பத்திரிகை அலுவலகங்களில் அல்லது ஊடகங்களில் பணியாற்று பவர்கள் ஒருவகையில் பாக்கியசாலிகள், பரபரப்புகள், பதற்றங்கள், இப்பொழுது பயமுறுத்தல்களின் மத்தியில் பணியாற்றுபவர்கள். புதைந்து கிடக்கும் உண்மைகளைத் தேடுகின்றார்கள். உண்மைகளுக்கு மெய்மை களோடு உருவத்தைக் கொடுக்கும் ஊடகப்பணி, யதார்த்தப் பார்வையோடு வெளிப்படும்போது அவை அழியாச் சித்திரங்களாகி விடுகின்றன.
யதார்த்தத்தைச் சார்ந்த, யதார்த்தத்தைத் தாண்டிய படைப்புகள் மனித அறிவுக்கு விருந்தாக அமைகின்றன. பத்திரிகை அலுவலகத்தின் அன்றாடப் பணிகளின் மத்தியில் தினமும் நடைபெறும், மனதைக் கிளறும், உணர்வுகளைச் சீண்டும், ஆவேசத்தை ஏற்படுத்தும் சம்பவங்களை எல்லாம் இப்படியும் நடக்கிறது என்ற தொடரில் பதிவு செய்துவந்த மகான். எமது சமுதாயத்தின் வெட்டுமுகத் தோற்றத்தையே தரிசிக்க வைக்கின்றார்.
பத்திரிகை எழுத்துக்களின் மூலமோ அல்லது பத்தி எழுத்துக்களின் மூலமாகவோ மனித வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்த முடியுமா அல்லது மாற்றமுடியுமா என்ற கேள்வியை எழுப்பி ஆற அமர யோசித்துப் பார்க்க வேண்டிய கட்டத்திற்கு நாடும் நாமும் வந்துள்ளேம். அரசியல் மக்கிப் போயுள்ளது. அதிகாரம் குவிந்து போயுள்ளது. சமுதாயம் சிதைந்து கொண்டிருக்கின்றது. சரிந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு எழுத்துக்கள் மூலமாக "முண்டு கொடுக்க முடியுமா?
கலவரங்கள், வன்முறைகள், அழிவுகள், பேரழிவுகளின் மத்தியில் யாவற்றையுமே இழந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கவேண்டும். காலம் மாறும்போது புதிய சிந்தனைகள் உருவாகிக்கொண்டே இருக்கும். சிந்தனைகளின் ஊடாகப் பிறக்கும் புதிய உண்மைகளை அவ்வப்போது அலசிப்பார்த்தால் சமுதாயத்தை மட்டுமல்ல, வாழ்க்கையையே புரிந்துகொள்ள முடியும்.

பயன்படும் உண்மைகள் எல்லாம் ஒருவகையில் வாழ்க்கைத் தத்துவங்களாக மாறிவிடும். வாழ்க்கை என்பது ஒருவித பிரச்சினைதான். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சரியான பார்வைகளை வெளிப் படுத்த வேண்டும். மகானின் இந்த பத்தியினூடாக வெளிப்பட்டுள்ளவை, இப்பொழுது தமிழ் கூறும் நல்லுலக வாசகர்கள் மறுவாசிப்புக்கு விருந்தாக வெளிப்படுகின்றன.
நண்பர் மகான் சமுதாயத்தின் மீது நிரம்பிய பற்றுக் கொண்டவர். நமது காதிலே வந்து விழுந்தனவற்றையும், கவனத்தில் பட்டனவற்றையும் வெறுமனே காற்றோடு காற்றாகிப் போகவிடாமல் அவ்வப்போது பதிவு செய்து வைத்தனவற்றை இப்பொழுது வாசகர்களுக்கு விருந்தாகப் படைக்க முற்பட்டுள்ள ஒரு சொல்லோவியத் தொகுதியாகியுள்ளது. உண்மைகளை D péi அல்லது அலசி அவற்றினூடாக சொல்லோவியங்களை வடிப்பது ஒரு அற்புதமான அனுபவம்
பத்திரிகைகள் பத்தி பத்திகளாக செய்திகளைத் தாங்கி வந்தாலும், அவற்றின் பின்னணியை ஆழமாக அலசுவதற்கும் பத்தியெழுத்துக்கள் பக்கபலமாக இருக்கின்றன. கிசுகிசுச் செய்திகள், துணுக்குகள், சம்பவக் கோவைகள், விவரண எழுத்துக்கள், கார்ட்டுன்கள் வரை வகையறாக்களை வாசிக்கவும், சிந்திக்கவும் தூண்டும் பல பகுதிகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. பத்திரிகைகளில் ஆசிரியராக இருப்பவர்கள் அல்லது செய்தியாசிரியர், செய்தியாளர்களாக இருப்பவர்கள் நாளாந்தம் வேலைப் பளுவின் மத்தியில் மெல்லிய உணர்வோடு ஆழமாகச் சிந்திப்பவை பதிவு செய்யப்படும்பொழுது அவை அழியாத எழுத்துக்களாகின்றன. யாவும் அன்றாட அரசியல், சமூக, பொருளாதார, கலாசார நடைமுறைச் சம்பவங்களைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டுவனவாக உள்ளன.
ஒருகாலத்தில் ஈழத்துப் பத்திரிகைத்துறையில் ‘வீரகேசரி பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றிய வ. ரா. நடைச்சித்திரங்களை எழுதிவந்தார். பின்னர், நடைச்சித்திரம் என்ற பத்தி வடிவத்திற்கு மூலவராகவே கருதப்படும் வகையில் வ. ரா. எழுதிவந்தவை நடைச் சித்திரங்களை ஒரு இலக்கியவடிவமாக மாற்றின. குறிப்பாக, ஈழத்துப்

Page 9
பத்திரிகைத் துறையில் வி. கே. பி. நாதன், எஸ். டி. சிவநாயகம், கே.பி. ஹரன், டேவிட் ராஜு, கே. சிவகுமாரன் போன்றவர்கள் அவ்வப்போது பல விடயங்களைச் சிந்தனைச் சிதறல்களாக எழுதிவந்தனர். இந்த வரிசையில் வைத்தெண்ணக்கூடிய வகையிலே அன்பர் கே. ஜி. மகாதேவா ஊடுருவி என்ற பெயரில் எழுதிய 'இப்படியும் நடக்கிறது கணிப்பிற்குரிய தொன்றாகின்றது.
பத்திரிகைத்துறையில் அபார துணிச்சலோடு பணியாற்றிய மகாதேவா, தமது எழுத்துக்களை ஆவணப்படுத்த முற்பட்டுள்ளமை, அவரின் கடந்தகாலப் பணிகளை நினைவூட்டுவதற்கு வாய்ப்பாக அமை கின்றது. பத்திரிகைத் தொழிலிலிருந்து விடுபட்டு ஓய்ந்துபோயிருந்தாலும், ஓயாமல் சிந்தித்த இதயம் மீண்டும் தொடங்கும் மிடுக்குடன் வெளிப்படுவது மனதிற்கு இதமாக இருக்கின்றது. பல பத்திரிகைகளுக்கும் இன்றும் அவர் சுதந்திரப் பத்திரிகையாளராக எழுதிக்கொண்டுதானிருக்கின்றார்.
மகானின் மனதில்பட்டுத் தெறித்த எண்ணத் திவலைகள் இப்பொழுது தொகுதியாக உயிர்பெற்றெழுந்து வாசகர்களுக்கு விருந்தாகின்றது. இவருடைய அழியாத எழுத்துக்கள் தமிழ் நெஞ்சங்களை மீண்டும் கிளறவைக்கும் என்ற எனது நம்பிக்கை வீண்போகாது.
ஆ. சிவநேசச்செல்வன்
பிரதிப் பணிப்பாளர்,
பழமுதிர்ச்சோலை’ இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனம், க்யூ. 3/4, பாரதி மாவத்தை, முன்னாள் ‘வீரகேசரி, தினக்குரல் பிரதம மாளிகாவத்தை, ஆசிரியர்
6snuptibL - 10.

உள்ளுறை
ஈழநாடு தீக்கிரையான கொடுமை தமிழக செய்தியாளர் அனுபவம் தத்துவம் மாறியது விஷம் கக்கும் ஏடுகள் இனக்கலவர கட்டுரைகள் கறையான் சுவைத்த தமிழ் அஞ்சல் சேவைக்கு அமெரிக்க சான்றிதழ்" தமிழிசைத் தூதர் வதந்தி கிளப்பிய வதந்தி சுங்கம் கண்ட நீறு "தமிழ்ப்பொண்ணு அழக்கூடாது" ஜி.டி. நாயுடு துணிச்சல் எழுத்துக்கு ஆயிரம் ரூபா ரூபவாஹினியின் 'ரெறறிஸம்" வெடிக்கும் "எரிமலைகள் அநுரா எழுப்பிய பூதம் நிருபருக்கு 'டோஸ் கொடுத்த சாய்பாபா பாபாவின் மற்றுமொரு சக்தி நெடுமாறன் நெடுந்துாரம் யாழ். பற்றி கல்கத்தாவாசி தூங்கும் போராட்டம் தமிழகம் கொந்தளிப்பு துப்பாக்கி தூக்கிய ஆதீனம் ஒலி கொடிது! ஒளி கொடிது! அமைச்சர் விமலா வீசிய குண்டு கனா கண்ட காலங்கள்

Page 10
27.
28.
29.
3O.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
4O.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
5O.
51.
52.
53.
54.
55.
56.
5ア。
58.
s9.
6O.
61.
குருட்டு அதிர்ஷ்டம் வழிகாட்டும் குவைத்
சபாஷ் டாக்டர் ஐந்து பெண் பெற்றவர் ஆண்டியல்ல! தமிழ்ச்சேவையின் கழுத்தறுப்பு சுவாமியும் அமைச்சரும் நடுவீதியில் நடந்த யோகாசனம் தாய்மை செத்தது! வானொலியின் செய்தி வேகம் நாணயத்தின் இரு பக்கங்கள் ஈழநாடு பற்றி சிங்களப் பெண் இராணுவத்தின் தப்புத்தாளங்கள் உண்மைகள் உறங்காது தமிழும் சட்டமும் கே. எஸ். ராஜாவின் கைது இரகசியம் தானறியாச் சிங்களம் அன்றைய பி. பி.ஸி. ஈழத்தில் ஒரு அமெரிக்கா பி. பி. ஸி. யில் நெடுமாறன் திருக்குறள் இத்தாலியவாசியின் கண்ணிக்கடிதம் தமிழர் துயர்துடைக்க இசைமழை ஈழத்தவிலுக்கு சென்னை வானொலி விதித்த தடை! சாகத்துடித்த சிங்கள பாதிரியார் தமிழோசை சங்கரின் காலக்குரல் இப்படியும் நடந்தது. சிங்கள செய்திக் கணிப்பு பார்க்காமலே பார்த்தது கடிதவேகம் இது உண்மைகள் கசக்கும் தலைகுனிந்த சிங்களர் பாடசாலை பெயர் குட்டிமணி முதலையைப் பதம் பார்த்த இளம்பெண் பம்பாயை மிஞ்சிய கொழும்பு இப்படியும் ஒரு தற்கொலை துவேஷ பத்திரிகையாளர்

S2.
63.
64.
65.
66.
67,
68.
69.
7O.
71.
72.
73.
74.
75.
76.
לל
78.
79.
8O.
8.
82.
83.
84.
85。
86.
87.
88.
89.
9O.
91.
92.
93.
94.
95.
96.
சிரிப்போசிரிப்பு சசிபாரதிக்கு "கழுத்தறுப்பு தியாகப் புறா அரச அந்தஸ்து பாரீர் ஆசிரியர் அடையாளம் - வேட்டி? LDSROTGIFTLIGSulu...! தமிழ் அமுலாக்கம் பாரீர் ஆலய மணிக்கு தடை ஏர்மெயில் அலர்ஜி மாவலி விழுங்கிய தமிழ் மண் இடிஅமீனின் வெறித்தனம் ஜப்பானிய மதகுருவின் தமிழ்ப்போராட்டம் அகஸ்தியர் அன்று சொன்னது விதி யாரை விடும் வயதுக் கழுத்தறுப்பு உயரும் மனிதநேயம் அசலும் நகலும் பிளிட்ஸ் கணிப்பு இயக்கப்பெயரில் கொள்ளை யாழ். தந்தி அவலம் தொழில் இரகசியம் ஹோட்டல் மிருகத்தனம் U606UTLDL60L Susuld எம். பி. பற்றிய வதந்தி சி.வ.பா.த (5'çLD600fl'eSTüLS Lumir மனித நாணயம் திருச்சி சுத்தம் சுங்க அதிகாரியின் துவேஷம் பத்திரிகா தர்மம்' உயர் பதவி, தாழ்ந்த உள்ளம் யுத்த நாடாகிறது மிஸ்ஸாகும் மிஸ் காவியமான ஒவியம் நன்றிக்குப் பரிசு

Page 11
97.
98.
99.
OO.
1O1.
1O2.
O3.
O4.
O5.
1O6.
1O7.
OB.
O9.
11Ο.
111.
112.
13.
114.
115.
116.
17.
8.
119.
12O,
121.
122.
123.
124.
125.
126.
127.
128。
129.
13O.
31.
நாக்கு வழிக்க காசோலை ஆப்பிளுக்கு ஆப்பு திறந்த பொருளாதாரம் சவூதி சங்கதிகள் இப்படி ஒரு அபிஷேகம் தமிழ்ப்பெயர் சந்தேகம் அவதூறுக்கு பலகோடி நஷ்டஈடு கண்காணிப்பு கொலையாளிகள் பெயர் ஆசை விரும்பிகள் பெயர் மயக்கம் தமிழ் முழி பெயர்ப்பு இவருக்கே இப்படி செய்திப் பணி இது பத்திரிகை முத்திரை உடல் வர 45 நாள் ஆசிரியர் நாடகம் ஆங்கிலத் தமிழ் மனிதன் உயர்கிறான் வீதியில் படகுச் சேவை ஆயுதம் கேட்ட தொண்டமான் அரசு கண் துடைப்பு
தானறியா பனை அறிவு
இசையில் மயங்கிய கோழிகள் தப்புக் கணக்கு யாழ். பொலிஸ் என்றால் தலைநகர் பிஸினஸ் இதுவும் வெங்காயக் கதைதான் ராய்ட்டருக்கும் அடிசறுக்கும் அவசரக்குடுக்கைகள் தர்மிஷ்டம் வாழ்க வினாத்தாள் மோசடி இளைஞர்களின் வீதிப்போக்குவரத்து தமிழன் என்றால் தடை மனிதநேயமற்ற புறக்கணிப்பு
விமானப் பயண அறுவை

132.
133.
34.
135.
136.
137.
138.
139,
14O.
141.
42.
43.
144.
145。
146.
147.
48.
49.
15O.
151.
152。
153.
154.
55.
鲁56。
157.
S8.
159。
16O.
161.
162.
153.
164.
165。
166。
யாருக்கு யார்? யாழ். ஒரு வெளிநாடு உயர்ந்த கோபுரங்கள் மானங்கெட்ட கிரிக்கெட் கிரிக்கெட்டும் ரூபவாஹினியும் ருநீகாந்தின் விளாசல் 13 CSL-uri síscosTuumGBb éßrfēš685 இவர்தான் முறிநீகாந்த். அது வந்தால் கிலி ஆரியரத்னா கூறிய உண்மை இந்திராவை மறித்த இந்துக் கோவில் வணக்கம் போய் ஆயுபோவன் திருமணப் பத்திரிகை திருச்சி - அன்று
இங்கிலீஷ் ரீச்சர் கலவரத்தீயில் குளிர்காய்தல் மருண்டவன் கண்ணுக்கு நன்றி மறப்பது நன்றன்று சபாஷ் சங்கரி மண் பொன்னாகிறது இவர்களும் அவர்கள்தான்! ஊர் புறப்பாடு
இப்படியும் நிகழ்வுகள்
மனித மிருகங்கள் அரசியல் பேசிய இசையரசி ஒலிபரப்புதடை! கண்ணியமானவர்கள் பிரிட்டனில் அன்றும். டவுன் சென்றால் டவுன்! கடித - தந்திக் கதை இது தமிழர் என்றால் யாழ். தான் பாதுகாப்பு என்றாலே பீதி வழிகாட்டும் திருச்சி வானொலி சபாஷ் மாணவர்கள்
விறகு சந்தனமாகிறது!

Page 12
167。
168.
169,
17O.
171.
72.
173.
74.
175.
176.
177.
178.
79.
18O.
怡1。
182.
183.
184.
185.
186.
187.
188.
189.
190.
19.
192.
93.
194.
195.
196.
197.
198.
199.
2OO.
2O1.
மிகப்பெரிய இந்து ஆலயம் அரசின் கப்சிப் ஆள் பாரம் - கிலோ நிறை இலைமறைகாய் சேவை தரம் - பாதாளம் தரமான யாழ் வீடியோ நிழல் நிஜமாகிறது எதிரும் புதிரும் றொனிக்கு ஏற்பட்ட கிலி அஸ்பெஸ்டாஸ் அபாயம் பிரிவினை பார்க்கும் சிங்களர் பனை ஓலை கலைவண்ணம் அமெரிக்க பட்டத்தை தூக்கி வீசிய யாழ். தமிழன் அந்தஸ்து சமையல் குளிரும் எரிவும் 8.நா. புதுப்புது அர்த்தம் பெயர்க் குழப்பம் தூங்கா இரவுகள் நடைபாதை சீவியம் சோதிடம் மெய்க்கும் வேலி பயிரை மேயும் நவீன நீரோ நீதிசாவதில்லை அதிசயக் குஞ்சு இது க்கு பெரிய சிபார்சு உள்ளத்தில் நல்ல உள்ளம் கடல் திரவியம் கொள்ளையோ கொள்ளை யாருக்கு யார் பாதுகாப்பு? இப்படி ஒரு கிராமியத் தொழில் பிள்ளைகள் விற்பனை அவசியமில்லாத அவசரம் அன்றைய நாட்டுநடப்பு இதுவும் ஒரு சாதனை அதிசயதயால் சேவை

2O2.
2O3.
2O4.
2O5.
2O6.
2O7 .
2O8.
2O9.
21O.
21.
212,
213.
214.
215.
216.
217.
218,
219.
22O.
221.
222.
223.
224.
225.
226.
227.
228.
229.
23O,
231.
232.
233.
கேள்விப்பித்தனும் விளக்கப்பித்தனும் பதில்
நீதி சரிகிறது. கிரிக்கெட் மலரில் கிரினேட் சிங்களம் சர்வமயம் ஒரு வாசகரின் பலமுகம் தகவல் கொடுமை வாகனம்: 5, சேவை: 1 மருந்து மோசடி இப்படியும் ஒரு சாதனை உண்மை விளக்கம் விடியலுக்காக விடியும் வேளை கோட்டையில் கோட்டை வெற்றிடம் 150; விண்ணப்பம் பல ஆயிரம்
TGosm Ter! அன்றைய பாக். காஷ்மீர் அந்தநாள் பிரயான நினைவுகள் திடீர் கோவில் - பகீர் வேள்வி அகதிகளை நினையாத நெஞ்சங்கள் நானா கொக்கா கொழும்பில் அணுக்கப்பல் 'கார்டின் இருவருடப்பயணம் வானொலியின் தார்மீகம்" அதிசய ஆடு
அங்கும் இங்கும்! முரணான அறிக்கைகள் அதற்கு இப்படியா? இதுவும் அபிவிருத்திதான் புரியாத புதிர் ஓய்வூதியத்துக்கு ஓய்வு வீதிச் சீர்கேடு திட்டமிட்டுப்பிழைகள்

Page 13
Review
by
SriLanko Veteran Freelance Journalist
K.S. SIVAKUMARAN.
 

OF AN EASTERN EDITOR
Seldom could a man from the eastern province be given the honour of editing any Thamil journal either in Malayaham or Yaalpaanam. The late S.T. Sivanayagam was an exception, but he did it in Colombo. He was the editor - in - chief of the now defunct "Dinapathi” and "Chinthamani” published by the M.D. Gunasena Group. In the 'he' ').sland case of K.G. Mahadeva, it was (éoloméo Sšaily)
indeed a great honour for him.
19. 10.2005
I spent my childhood in Maddakkalappu between 1942 and 1953. I knew K.G. Mahadeva slightly; he was younger to me. One of his older brothers, Vivekanandan, was my classmate in St. Michael's College in town.
This man has written his "Reminiscences' in English. He now lives in Thiruchirapalli in Thamilnadu. The book is published by Mithra Arts & Creations Pvt. Ltd., 32/09, Arcot Road, Chennai 600024, India.

Page 14
The author says: "To read and get to know my book. My intention for releasing this book internationally in English is to make people in the rest of the world. I have taken efforts to reach out to the people through libraries, educational institutions and welfare organizations."
“I have tried to give my experiences, incidents, meetings and joys in a short and Sweet manner. I have brought out alongwith my story, the stories of those who worked and lived with me.”
Where did he work?
"Eelanaadu was an era. It has a history. It was a national newspaper, established by Thamil stalwarts with foresight. It was a risk taken by the K.C. brothers to show the world that a Thamil newspaper can be run by the Thamils, for the Thamils and in the Thamil province... “Eelanaadu alone is the base for the story I am writing.”
Before the emergence of Eelanaadu, there was the defunct Eelakesari. Eelakesari was the first regional paper in Thamil in this country.
Presently there is another newspaper by the name of "Emathu Eelanaadu', published from Yaalpaanam. It is a daily tabloid. Besides this, there are other provincial tabloids like Hayan, Valampuri and Eelanatham published from the peninsula. I understand that even in the east some tabloid newspapers are being published. Udhayan and Sudar Oli (published in Colombo) are

owned by the same management. The broadsheet Colombo Thamil dailies and weeklies are: Virakesari, Virakesari Vaara Veliyeedu, Thinakkural, Gnayiru Thinakkural, Thinakaran, Thinakaran Vaara Manjari and Navamani.
The writer traces briefly, the arrival and demise of Eelanaadu where he worked. "Started in 1959 as a weekly magazine and transformed into a bi-weekly in 1960 and daily in 1961... Well organized for 33 years, Eelanaadu wobbled after the ethnic trouble, shifted to many places, lost direction and finally stopped altogether... It is being published as a weekly and daily from Europe and Sri Lanka by the efforts of a few who had a regard for it.”
K.G. Mahadeva joined Eelanaadu at the age of 21 and became the editor of Cheithi (News), a weekly tabloid that was published from Mahanuwara at the age of 27. He rejoined Eelanaadu in a few years. He was the news editor of this paper in the 1970s. The paper, according to the author "reflected quality, honesty, aspirations, truth and spirituality. That was a golden period”.
A maverick but immensely talented creative writer from this country S. Ponnuthurai (a.k.a. Espo) in his foreword to KGM's book says:
“Black July 1983 is a day of historical importance in the lives of Eelam Thamils. The tragic memories it evokes, are countless. However, it was that very Black

Page 15
Day which provided the opportunity to prove the fact that the Thamils will rise, revitalized, like the phoenix from its own ashes, with their thirst for freedom multiplied manifold. That day was not the outcome of the sudden wrath of the Sinhalese. It was a cold blooded, well planned, massacre of innocence', sponsored and unleashed by the Jayawardene Government. It should be identified as such. KGM's book confirms with sufficient proof, that the foundation for this injustices was laid on June 01, 1981. In the course of that one day, the Jaffna library which housed the largest number of Thamil books in the whole of Asia, was burnt to ashes by the army, acting under orders from the Government. Eelanaadu, the daily which was the voice of the Eelam Thamils and their feelings was also consigned to flames.”
Espo continues: "Eelanaadu vas the symbol of the individualistic expression of the Eelam Thamils, dissociated from the domination of Colombo and the Sinhalese Government. It was necessitated by the need for the “national voice of the Thamils to be heard clearly and loudly. “Reminiscences' is the first work that records the government's efforts to suppress that voices. It also serves as an important document which reveals the truth of how the Thamils’ nationalistic fervour has not only survived but successfully emerged victorious from the repressive measures of the government in power. KGM has proved himself to be an exemplar of the intellectual history of Batticaloa (Maddakkalappu).”

K.G. Mahadeva had a stint in Cheithi, a tabloid published first in Colombo and then in Mahanuwara. The weekly was modelled on Blitz (the Mumbai weekly) in which K.A. Abbas wrote the famous last page Column. The managing editor was R.M. Nagalingam, a philanthropist and a connoisseur of the arts and culture. His son-in-law Prof. S. Santhirasekaram, an educationist of high order is attached to the University of Colombo. KGM also gives a few forgotten facts in regard to this avant garde tabloid. I too was a columnist for this tabloid in the late 1960s. My column was titled "Saruhuhal' (Dried Leaves). There were other notable writers like the late M. Thalayasingham, Prof. Kasinathan (now in Australia), “Pramma Gnani' (nomdeplume ofan internationally known psychologist and theoretician), George Santhirasegaran and a few others. KGM had omitted some of these names in his account of the contributors to Cheithi which he edited in 1967.
The book also includes in Thamil some of the reviews of his book in Thamil (Ninaivalaihal) on the same Subject.
The book is divided into four parts. He writes his own story of progress as a journalist plus coincidental incidents, experiences and personalities with whom he had associated in some way or other. It's very interesting reading. Students of journalism might find this book with photographs a valuable source material in gathering facts about some aspects of the print media in this country. .

Page 16
The story of "Eelanaadu' and an enterprising Editor K.G.M.
One of the pioneer provincial newspapers in contemporary times in our country was Eelanaadu, now folded up. And one of its editors was K.G.Mahadeva. He is now retired and lives in the Thamilnadu. He has brought out a book in English titled "Reminiscences'. Since he studied in Thamil medium, he admits he is poor in English. However, he managed to write in English the story of an important Yaalpaanam newspaper which began as a tabloid and then entered into broad- SĚaidy “)leuus,
t t. sheet forma d (čočoméo Séaičy)
The book is interest
ing even for an average 26. 10.2005 reader because it also reveals the personal adventures of an editor living dangerously in hard times.
And to special readers like students of journalism, this book reveals untold stories that Southern Sri Lanka was not familiar.
 

I with to glean from this book at least a few pieces of information and use them as excerpts. Editors in Colombo newspapers would certainly be interested in knowing what had happened to jounalists from the north in bringing out a newspaper.
Political and social scientists as well as journalists would remember that the Eelanaadu office was burnt as the leading public library in Asia - the Yaalpaanam public library was burnt on June 01, 1981. It was a sad story. There is a written record of the origin, growth and destruction of the library by K.C. Kularathinam. Excerpts from "Reminiscences” available from the author: K.G. Mahadeva, "Suprapatham”, 5, 8th Cross street, Thirunagar, Karumandapam, Trichy - 620 001, Thamilnadu, India.
"Started in 1959 as a weekly magazine and transformed into a bi-weekly in 1960 and daily in 1961, Eelanaadu' extended its national service in all directions.
Well organized for 33 years, "Eelanaadu” wobbled after the ethnic trouble, shifted to many places, lost direction and finally stopped altogether.” In 1990 itself "Eelanaadu” started straying from Chavakachcheri to Murugandi, then to Puthukudiyiruppu and was coming out from those places but could withstand only for a few years.” K.G. Mahadeva hailing from Maddakkalappu in the east joined "Eelanaadu” when he was 21 years old. He became the editor of “Cheithi", a weekly tabloid published from Mahanuwara when he was 27. He rejoined "Eelanaadu” in late 1970s as its News editor. K.G.M. continues: "The East-SriLanka National Paper

Page 17
Corporation Chairman, K.C. Thangarajah, his brother Dr. K. C. Shanmugaratnam, and their nephew B. Sivanandan were the founders and main shareholders.
The editorial staff had K.P. Haran as Managing Editor, S.M. Gopalaratnam as News Editor, Raja Ariyaratnam as the Weekly Editor. The sub editors were: T.M.Murugaiah, S. Perumal, S. Sabaratnam, K. Yoganathan and K. Ganeshalingam. Another staffer was A.V. Maniccam. Later Raja Ariyaratnam became the : editor of "Eelanaadu'.
The layout of pages was handled by Narayanaswamy. The Colombo correspondents were Pon. Balasundaram, Mahalingasiwam and Gamini Navaratne. Other notable correspondents were: S. Thiruchelvam, K. Krishnarajah, K. Rasalingam, R. Sundararaja Sarma, S.R. Gnanasundaram. A.N.S. Thiruchelvam. Kandaswamy, Balasingham, K. Thirulogamoorthy and S. Thillainathan. Later other sub editors were working: M. Manoharan, Peri Shanmuganathan, Selvi Gunamani, Selvi Pooranam, Parvathinathasivam, Kanagaratnam, Natarajah and S. Ganeshanathan. E.K. Rajagopal was another colleague.”
KGM writes: “In 1983, I was the Jaffna reporter for “Daily Mirror.” I earned the friendship of Peramunathilake who started "Lanka News Agency” after having worked as News Editor of "Lankadeepa", AP correspondent Patrick Crusz and Reuters editor Dalton de Silva... In 1982 an English weekly, "Saturday Review' was started in Jaffna. S. Sivanayagam was the editor and A.J. Canagaratna was assisting him.

S. Sivanayagam made use of my services for "Saturday Review”. On July 02, 1983, the government locked the doors of "Saturday Review” and sealed it. Though short -lived, the services of Sivanayagam made the rulers in the north and the Capital think.” S.Thiruchelvam who joined as official reporter of "Eelanaadu" gained experience, later joined "Thinakaran” and then served the SLBC.
Then he elevated himself as editor of "Eela Murasu', which was being published from Jaffna in the 1980s... Now he is the Editor of Information Bulletin, in Canada...” R. Prabaharan who had his training in "Eelanaadu” and served in it for a few years is now the Editor of “Virakesari' daily. Many youngsters joined "Eelanaadu and they were under my direct superviSO.
The list includes P. Ananthakrishnan (Ananth Palakidnar, now senior journalist with the “Daily News”), Senthilnathan and Sivaganeshan (now a senior journalist with "Thinakkural”). They had acumen to gather news and pen articles.
Their skill and popularity in the field of news writing today adds honour and merit to "Eelanaadu'... Some who have joined "Eelanaadu's family in the middle but worked hard, are now in the pinnacle of their glory. M. Kanamylnathan is editor of "Uthayan”.
S. Perumal is in 'Uthayan' weekly, S.K. Kasilingam is publishing books in France. S. Kuhanathan is running "Eelanadu” in France. E. Kandasamy works for a TV channel in France.

Page 18
The others were: A.S. Muruganandam, M. Parvathynathasivam, V.N. Balasubramaniam, A. Rajalingam and Benjamin Rajaratnam. The most interesting part in KGM's book is the Part 11 titled Incidents. The journalist's adventure amidst political turmoil and risky atmosphere is vividly written.
He was summoned by the late president Srimavo Bandarannaike during the regime of the late President J.R. Jayawardene for publishing an interview with her by Patrick Crusz who wrote it for the “Daily Mirror'. The interviewer had sent a copy of this to "Eelanaadu” as well.
I do not want to explain further because it would spoil your interest in reading how other media could misinterpret things. Political commentators in the media should read this episode in Thamil journalism. parts III and IV touch on the author contacts with VIPs local and abroad. The last section of the book includes excerpts of reviews in Thamil on his original book in Thamil.
It was called “Ninaivalaihal'. Those who reviewed were: “Thinathanthi' newspaper in Thamilnadu, Anthony Jeeva, "Sujatha' (a Thamilnadu writer), K. Gunarasa (Chengai Aaliyan), Maana Mackeen, Devakanthan, “IIakkiya”, “Kunkumam”, R.M.Nagalingam, P. Sribhavan and PU. Lenin.

FpHMC' Söß89JWMAr 98Mo89Ol
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே.
ஆமாம். நினைத்துப் பார்க்கின்றேன். அன்று இரவு மணி ஒன்பது பதினைந்தாகப் போகிறது.
இலங்கை வானொலி செய்திகளைக் கேட்டுவிட்டு இந்திய வானொலி (ஆங்கில) செய்தியைக் கேட்டுக் கொண்டி ருந்த நேரம். அச்சக ஊழியர் சிவனேசன் மேல் மாடிக்கு பதறப்பதற ஒடோடி வருகிறார்.
"பத்துப் பதினைந்து பேர் ஆயுதங்களுடன் வந்து முன் 'கேற்றை உடைக்கிறார்கள்." என்ற சிவனேசனின் குரலில் பயங்கரம் எதிரொலித்தது!
ஒரு கூடிணநேரம் கூட அங்கிருக்க விரும்பவில்லை. அருகில் இருந்த இயக்குநர் திரு. பா. சிவானந்தத்தைப் பார்த்தேன். அவர் எதையோ நினைத்துக் கொண்டிருந்தார், என்னுடன் அவர் வரவில்லை.
‘ராக்கெட் வேகத்தில் ஓடோடிச் சென்று நூறு யார் தூரத்தில் போய் வெளியே நின்றேன். ஐந்துநிமிடம் கூட

Page 19
கதையல்ல நிஜம் 34
சென்றிருக்காது. கட்டிடமும், சாதனங்களும் தீ வாயில் அகப்பட்டு, அந்த ஜுவாலை ஒரு தென்னை மர உயரத் துக்கு விண்ணை நோக்கி எழுந்து கொண்டிருந்தது!
அப்பப்பா. இரண்டு மூன்று மணிநேரத்துக்குள்ளேயே எல்லாமே பஸ்பமாகிவிட்டது!
‘ஈழநாடு’ கட்டிடத்துக்கு முன்பாக ‘கராஜி'ல் நின்ற ஊழியர்களின் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் எல்லாமே ஒன்றுக்கு மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்டு, அத்தனையையும் அக்கினிக்கு இரையாக்கி யிருந்தனர், அந்த அரச க்மாண்டோக்கள்!
இந்தக் கோரச்சம்பவம் நடந்தது 1981 ஜூன் மாதம் முதலாம் திகதி நடத்தியவர்கள் இலங்கை அரச கமாண் டோக்கள். தீக்கிரையானது உங்கள் ‘ஈழநாடு’!
உடல் முழுக்க தீக்காயங்களுக்கு இலக்கான இயக்குநர் திரு. பா. சிவானந்தம் ஆஸ்பத்திரியில் படுக்கையில் வீழ்ந்தாலும் அவரது மூச்சு ‘ஈழநாடு’ என்றே இருந்தது. அவருடன் சேர்ந்து தீக்காயங்களுக்காளானவர் ‘ஈழநாடு’ விநியோகப்பகுதி ஐயா. சச்சிதானந்தம்.
சிவானந்தத்தின் பெருமுயற்சியில், ஆறாவது நாளே ‘ஈழநாடு’ மீண்டும் வாசகர்கள் கையில் மலர்ந்தது. ஜூன் மாதம் முதலாம் திகதி கேட்ட மற்றுமொரு அதிர்ச்சிச் செய்தி:
தமிழ் மக்களின் தனிச்சொத்தான, ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழ்ப் புத்தகங்களைக் கொண்ட யாழ். நூலகம் எரிந்து கொண்டிருந்தது.
(3105.90)

35 கே.ஜி. மகாதேவா
தமிழக செய்தியாளர் அனுபவம்
சுதந்திரக் காற்று இப்பொழுது மெல்ல மெல்ல வீசத் தொடங்கியதும். அந்த நாள் நினைவுகள் மெதுவாக நகரத் தொடங்குகிறது.
1987 அக்டோபர் மாதம். நீண்டநாள் யுத்தத்தின் பின்னர் இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி யிருந்தனர்.
இந்தியப் பத்திரிகையாளர்களை விமானத்தில் அள்ளிக் கொண்டு வந்து தங்களது நடவடிக்கைகளை’க் காட்டினர்.
“யாழ்ப்பாணத்தில் நிலைமை இப்பொழுது நன்றாகவே இருக்கிறது. அங்குள்ள தமிழ் மக்கள் இந்திய இராணுவத்துக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மக்கள் நடமாட்டமும் சகல இடங்களிலும் தாராளமாக - சுமுகமாக உள்ளது. நேரில்தான் பார்க்கப் போகிறீர்களே."
இவ்விதமாக இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு விமானத்தில் வைத்து இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் கூறினார்கள்.
விமானம் தாழப் பறந்து சென்றது.
இந்த விமானத்தில் பிரயாணம் செய்த ஒரு இந்தியப் பத்திரிகையாளர், இந்தியத் தூதரக அதிகாரிகளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டபோது இப்படிச் சொன்னாராம்:
"வானத்தைப் பார்த்தேன். பூமியைப் பார்த்தேன். மனிதரை மட்டும் பார்க்கவில்லை."
தூதரக அதிகாரிகள் மூச்சு விட கொஞ்சநேரம் பிடித்ததாம்!

Page 20
கதையல்ல நிஜம் 36
அடிக்குறிப்பு: அந்த தமிழகப் பத்திரிகையாளரின் பெயர்: திரு. சுபா சுந்தரம். சபாஷ் சுந்தரம் (ஒரு சின்னச் செய்தி: இத்தகவலை சுந்தரமே என்னிடம் சொல்லி யிருந்தார்)
(04.04.90)
தத்துவம் மாநியது
“காந்திஜியின் ‘மூன்று குரங்குகளின் தத்துவ பொம்மைகள் உங்களிடமிருக்கிறதா.?” என்ற கேள்வியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பூரீமான் பொது ஜனம்.
“ஒ. முன்ஹோலில் ஷோகேஸுக்கு மேலே 'ஜம்’ என்று இருக்கிறதே." என்றேன்.
"அதுசரி. அதன் இன்றைய தத்துவம் புரியும்தானே.” என்று கூறி, "தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே, தீயதைப் பேசாதே. என்பதுதானே அதன் அன்றைய தத்துவம்” என்றார் பூரீமான் பொதுஜனம்.
“அதற்கு இப்பொழுது என்ன அவசரம் வந்து விட்டது?" - நான் கேட்டேன்.
"அந்தச் சிலையை அகற்றிவிடுங்கள். அல்லது மறு பக்கம் திருப்பி வையுங்கள். அந்தத் தத்துவம் நமக்கு இப்பொழுது சரிவராது." என்றார் சற்று ரோஷத்துடன்.
"கண்ணும், காதும், வாயும் நமக்கு இப்பொழுது மிகவும் கூர்மையாக இருக்கவேண்டும். வானத்திலே வருவதை அவதானித்து ஒதுங்க கண்கள் கூர்மையாக இருக்கவேண்டும். ஏதாவது குண்டு சத்தம் கேட்கிறதா என்று கவனிக்க காதுக்குக் கூர்மை வேண்டும். அந்தப்பக்கம் எப்படி இந்தப்

37 கே.ஜி. மகாதேவா
பக்கம் எப்படி என்று ஊர் நிலைமைபற்றி அறிய வாய் வேண்டும்.” என்று விளக்கம்கூறி 'பொத்' என்று டெலி போன் றிசீவரை வைத்துவிட்டார் பூரீமான் பொதுஜனம்!
(0901.86)
விஷம் கக்கும் ஏடுகள்!
இலங்கையில் இனப்பிரச்சினையை எப்படியாவது தீர்த்து வைக்கவேண்டும் என்று வட்டமேசையில் பல தலைவர்களும் கூடி, மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு புறம் மறுபுறம் -
தலைநகரிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஆங்கிலப் பத்திரிகைகளில் சில, சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரி யாவது - தற்காலிகமாக ஆவது - தமது மரபை மாற்றிக் கொள்வதாக இல்லை.
நேற்று வெளியான ஒரு வாராந்த (ஆங்கில) ஏட்டின் சோதிடம் பகுதியில்; "இலங்கையில் அதிகமான துட்ட கைமுனுக்கள் பிறப்பார்கள்” எனும் தலைப்பில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது!
". இவ்வருடம் ஏப்ரல் மாதம் 7-ம் திகதி உதயமாகும் "மகாபூபதி ராஜயோகத்தை அடுத்து இந்த நாட்டில் மிகவும் வல்லமை பொருந்திய வீரர்கள் பிறப்பார்கள். மிகச் சக்தி வாய்ந்த இந்த போர் வீரர்கள் எதிர்ச் சக்திகளையெல்லாம் முறியடித்துவிடுவார்கள். ஆகவே ஏப்ரல் 17-ம் திகதிக்குப் பின்னர் துட்டகைமுனு, புறான் அப்பு, கெப்பிட்டிப்பொல போன்ற வீரர்களை நாம் வைத்திருப்போம் என்பது சோதிடர்களின் மதிப்பீடு.”
(1904.84)

Page 21
கதையல்ல நிஜம் 38
இனக்கலவர கட்டுரைகள்
பத்திரிகை - பத்திரிகையாளரின் சக்தி எத்தன்மை யானது என்பது நாம் கூறித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதல்ல. ஆனால் அரசாங்கங்களையே மாற்றி அமைத்ததும்; ஏன் - அமெரிக்க ஜனாதிபதியையே பதவியி லிருந்து அகற்றியதும் வோட்டர்கேற் விவகாரம்) பத்திரிகைகள் தான். நமது நாட்டில் என்ன நடக்கிறது?
வடக்கு மட்டுமல்ல; முழு நாட்டிலுமே “சுதந்திரக் காற்று இப்பொழுது வீசிக்கொண்டிருக்கும்போது, ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் மாதிரி கொழும்பு பத்திரிகைகள், அதாவது முன்னணி ஆங்கிலத் தினசரிகள் தினம் தினம் விஷத்தையே கக்கி வருகின்றன.
பிரச்னைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து வைக்கலாம் என்பதில் ஜனாதிபதி பிரேமதாசா மட்டுமல்ல, விடுதலைப்புலிகளும் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து பேச்சுக்களும் சந்திப்புகளும் நடைபெற்றுவரும் நேரம் பார்த்துத்தான், கொழும்பு ஆங்கில ஏடுகள் விஷமத் தனமான - மீண்டுமொரு இனக்கலவரத்தைத் தூண்டும் வகையில் செய்திகளும், ‘கார்ட்டூன்களும் வெளியிடுகின்றன.
ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
1983-ம் ஆண்டு ஜூலை மாதம் பிற்பகுதியில் கொழும்பு ஆங்கிலத் தினசரியில், ஆசிரியர் தலையங்கம் பக்கத்தில் இனத்துவேஷத்தைத் தூண்டும் வகையில் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அடுத்த நாள். இனக்கலவரம் வெடித்தது!
பத்திரிகைகளின் தொண்டு, மக்களை வழிநடத்திச் செல்வதுதான். அதற்காக, இன்று தோன்றியுள்ள நல்ல சூழலை

39 கே.ஜி. மகாதேவா
நாசப்படுத்தும் முயற்சியில் கொழும்பு ஆங்கிலத் தினசரிகள் குதிக்கக்கூடாது. பேனாவில் மை இருக்கத்தான் வேண்டும். ஆனால் அந்த மையில் விஷம் கலக்கக் கூடாது.
இது எமது - வடக்கின் குரலாகும்.
(06:04.90)
கறையான் சுவைத்த தமிழ்
பன்மொழிப் புலவர் என்றதும் அப்பாத்துரை அவர் களின் நினைவுதான் வரும். ஆனாலும், நம்மவர்கள் மத்தி யிலும் அந்தத் தகைமையில் ஒருவர் வாழ்ந்து கொண்டி ருக்கிறார் என்றால், அவர்தான் அருள்திரு. பாவிலுப் பிள்ளை அவர்கள்.
இலங்கையில் இன்று வாழும் கத்தோலிக்க குருமார் களில் ஒரு தமிழறிஞரான இவர், சில வருடங்களுக்கு முன்னர் ‘விவிலியமும் திருக்குறளும்’ எனும் நூலை வெளி யிட்டிருந்தார். மிகவும் பொறுப்புடன், சிரமப்பட்டு வெளி யிட்ட இந்நூலுக்கு தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு ‘கடுகளவுதான் இருந்தது!
மனமுடைந்த அவர்; யாழ்ப்பாணத்திலுள்ள “தொடர் பகத்'துக்கு நூல்களை அன்பளித்து: "எனது விவிலியமும் திருக்குறளும் நூலை யாழ். தொடர்பகத்தில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று அறிவித்திருந்தார். நாட்கள் நகரத் தொடங்கியதும், தமது நூலுக்கு எவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதை நேரில் அறிய “தொடர் பகத்துக்குச் சென்றிருந்தார். அங்கு அவர் கண்ட காட்சியை அருள்திரு. பாவிலுப்பிள்ளை அவர்கள் இவ்விதமாக வர்ணித்துள்ளார்:

Page 22
கதையல்ல நிஜம் 4o
“எனது நூலை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பைக் கேட்டு படையெடுத்து வந்தவர்கள் யார் தெரியுமா? சாட்சாத் கறையான்கள்தான்! பரவா யில்லை. கறையான்களுக்காவது எனது தமிழ் சுவைக்கிறதே என்பதில் எனக்குத் திருப்தி ஏற்பட்டது.”
சும்மா சொல்லக்கூடாது. தமிழ்நாட்டு சினிமா “குப்பைகளுக்கு நம்மவர்கள் கொடுக்கும் எல்லை கடந்த மதிப்பு, " எமது படைப்பாளிக்கோ அல்லது அவனது படைப்புக்கோ கொடுப்பதில்லை! தலைகுனிய வேண்டிய நிலை இது!
(23.05.90)
அஞ்சல் சேவைக்கு அமெரிக்க சான்றிதழ்
அமெரிக்க அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க சமஷ்டி விமான ஒட்டிகள் சங்கத்தின் பெறுமதிமிக்க சான்றிதழ், பருத்தித்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு வரவேண்டியிருந்தது.
நாட்கள் பல சென்றும் இச்சான்றிதழ் தமக்குக் கிடைக்காததினால் இதனை நினைவூட்டி அச்சங்கத்துக்கு பருத்தித்துறை இளைஞர் கடிதம் எழுதியிருந்தார்.
“.கவலை வேண்டாம், உங்கள் சான்றிதழ் எம்மிடம் பத்திரமாக இருக்கிறது. உங்கள் நாட்டு அஞ்சல் சேவை பற்றி எல்லோரும் தெரிந்ததே ஆகவே இலங்கைக்கு வெளியே ஒரு முகவரியைத் தாருங்கள். நாம் உங்களது சான்றிதழை அங்கு பத்திரமாக அனுப்பிவைக்கத் தயாராக இருக்கிறோம்" என்று பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
‘உலகிலேயே மிகவும் சிறந்த சேவைகளுள் எமது அஞ்சல் சேவையும் ஒன்று’ என்று அரசு அடிக்கடி கூறுவ தெல்லாம் கற்பனையா? ‘வாழ்க’ நமது அஞ்சல்சேவை!
(110284)

41 கே.ஜி. மகாதேவா
தமிழிசைத் தூதர்
பாழ். நகரில் இன்று மழை வருமா?
மழை நீரில் நனையாவிட்டாலும், செல்லப்பா குழுவினரின் தேனிசை மழையில் யாழ். மக்கள் இன்று நிச்சயம் நனை'வார்கள்!
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப்புலி களின் தலைவர் திரு. வே. பிரபாகரனுடன் சென்னையில் வைத்து நேரடித்தொடர்பு கொண்டு மெய்சிலிர்த்த தேனிசை செல்லப்பா, பின்னர் பாடிய எழுச்சிப் பாடல்கள் - தமிழீழ இயக்கப் பாடல்கள் தமிழர் வாழும் இடங்களிலெல்லாம் கணிரென்று ஒலிக்கத் தொடங்கிற்று.
தமிழக வானொலி நிலையங்களிலும், இந்தியத் தொலைக்காட்சியிலும், பிலிப்பைன்ஸ் வெரித்தாஸிலும் இவரது வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் அன்று தாராளமாக ஒலி - ஒளிபரப்பப்பட்ட போதிலும், விடுதலைப் புலி களின் போராட்டத்தை ஆதரித்த ஒரே காரணத்துக்காக இந்திய வானொலியும், இந்தியத் தொலைக்காட்சியும் தேனிசை செல்லப்பாவை முற்றாகப் புறக்கணித்து இருட்டடிப்பு செய்துள்ளன.
தமிழிசைத் தூதுவராக உலக வலம் வரும் தேனிசை செல்லப்பா பற்றிய ஒரு சிறு குறிப்பு: தேனிசை செல்லப்பா பிறந்த இடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநெல்வேலி யாகும். 'தினத்தந்தி நிறுவனர் சி. பா. ஆதித்தனார்தான் செல்லப்பாவுக்கு, ‘தேனிசை செல்லப்பா’ என்று பட்டம் வழங்கினார். இவர் இலங்கை வருவது இதுவே முதல் தடவை.
(2309,90)

Page 23
கதையல்ல நிஜம் 42
வதந்தி கிளப்பிய வதந்தி
தந்திக்கும் வதந்திக்கும் என்ன வித்தியாசம்? வதந்தி முன்னர் வரும், தந்தி பின்னர் வரும், மற்றையது; பிந்திவரும் தந்தியில் உண்மை இருக்கும். முந்தி வரும் வதந்தியில் பொய் மலிந்திருக்கும்!
விடுதலைப் புலிகள் தலைவர் திரு. பிரபாகரனைச் சந்தித்தபோது வதந்தி பற்றி மேலும் ஒரு உண்மை வெளி யாயிற்று.
நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், “வதந்திகளை வைத்து முடிவு எடுக்கக்கூடாது" என்று வலியுறுத்தி விடுதலைப்புலிகள் தலைவர் திரு. பிரபாகரன், தமக்கே தெரிய வந்த வதந்தி பற்றி ஒரு உண்மையை வெளியிட்டார்.
"எனது மகள் குறித்து ஒரு செய்தி வெளியானது. அப்பொழுது நான் தனித்தே இருந்தேன். வானொலிச் செய்தி கேட்டு எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. எனது மகள் பற்றிய செய்தியை நான் அறிந்தால், வேதனைப்படுவேன் என்று நினைத்து மறைத்துவிட்டார்களோ என்றுகூட நினைத்தேன். இந்த அளவுக்கு குழப்பம் நிறைந்திருந்ததற்குக் காரணமே வதந்திதான்" என்று திரு. பிரபாகரன் மனம் திறந்து, பளிச்சிடக் கூறினார்.
மகளைப் பற்றிய வதந்தியை மனம் விட்டுக் கூறினார் திரு. பிரபாகரன். ஆனால் திரு. பிரபாகரன் பற்றி வெளி வந்த வதந்திகள்.
நேற்றுப் பார்த்ததும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளி வந்தது.
(02.04.90)

43 கே.ஜி. மகாதேவா
சுங்கம் கண்ட ரீநு
அபுதாபியில் வேலைபார்த்த அந்த இளைஞர்; தாயகம் வந்து, விடுமுறை கழித்து, மீண்டும் அபுதாபி திரும்பினார். அபுதாபி விமானநிலையத்தில் வழக்கமான சோதனை நடைபெற்றபோது, அவரது கைப்பையும் பலத்த சோதனைக் குள்ளானது.
அந்தச் சின்னப்பை ஒரு கட்டத்தில் சாடையாகக் கிழிந்துவிடவே, அதிலிருந்து வெண்ணிறப் பொருள் கொட்டத் தொடங்கிவிட்டது.
சுங்க அதிகாரிக்கு ‘பொத்” என்று கோபம் வந்து விட்டது! என்ன நினைத்தாரோ தெரியவில்லை. 'ஆ. ஊ’ என்று அலறிய அவர் கண்கள் கோவைப்பழம் போல் சிவக்க. அந்த இளைஞரை ‘தர தர‘வென்று அழைத்துச் சென்று அறையொன்றில் அடைத்துவிட்டு ‘எச்சரிக்கை மணி’யை ஒலிக்க வைத்துக்கொண்டே உயர் அதிகாரி யிடம் ஓடினார்.
அடுத்த கட்டம், சுங்கப்பகுதி நிபுணர்கள்/ இரசாயன பரிசோதனை உயர் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அந்தச் சின்னஞ்சிறிய பையிலிருந்த வெண்ணிறப் பொருள் மிகவும் நுணுக்கமாகப் பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் அந்தப் பொருளில் எந்தவிதமான தீங்கும் இல்லை என்று ஊர்ஜிதப் படுத்தப்பட்டதும், அந்த இளைஞர். "வெரி சொறி” என்ற இருவார்த்தையுடன் சுங்க அதிகாரிகளினால் வெளியே அனுமதிக்கப்பட்டார்.
அந்த வெண்ணிறப் பொருள் என்ன? மந்திரமாவது நீறு. வானவர் மேலது நீறு. சுந்தரமாவது நீறு. துதிக்கப் படுவது நீறு. அந்தத் திருநீறின் சக்தி. வானவரிலும் மேலது என்பது, அந்தச் சுங்க அதிகாரிக்கு எப்படித் தெரியப் போகிறது?
(15.06.85)

Page 24
கதையல்ல நிஜம் 44
“தமிழ்ப்பொண்ணு அழுக்கூடாது”
நோர்வேயிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில். ".நோர்வே வருவதற்காக நான் சுட்டுநாயக்கா சர்வ தேச விமான நிலையத்துக்குள் நுழைந்தபோது என்னையும் அறியாமல் ஓர் இனம்தெரியாத பயம் ஏற்பட்டது. தனிமை. முதல் விமானப் பயணம். விமான நிலையச் சோதனைகள் அனைத்தும் முடிந்து உள்ளே பிரயாணிகள் அறையில் அமர்ந்தேன். எனக்குத் தெரிந்த ஒரு முகமாவது ஆறுதலுக்கு இருக்காதா என்று தேடினேன். ஒன்றுகூட இல்லை. எதை எதையோ எல்லாம் கற்பனை செய்து விம்மி விம்மி அழுதேன். அப்பொழுது ஒருவர் நெருங்கி வந்தார்.
"நீங்கள் தமிழ்ப் பெண்போல் இருக்கிறீர்கள். சரி தானே." என்று ஆரம்பித்து சுருக்கமாக விசாரித்த பின்னர். “என்னம்மா உங்களை நீண்ட நேரமாக அவதானித்தேன். இதுக்கெல்லாம் சும்மா அழலாமா. நீங்கள் தமிழ்ப் பொண்ணு. எதற்கும் தைரியமாக இருக்கணும். அதிலேயும் நீங்க யாழ்ப்பாணம் என்று சொன்னபோது இன்னும் துணிச்சலாக இருக்கணும். வெளிநாடு போகணும். சாதனைகள் ஏற்படுத்தணும். உங்க மண்ணுக்குப் பெருமை தேடித்தரணும்." என்று குழைந்து குழைந்து அவர் கூறியது எனக்குத் திடீர்த் துணிச்சலைக் கொடுத்து விட்டது!
"..எனக்குத்தான் உங்க ஊருக்கு வரச் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும் உங்களைப் பார்த்து நாலு வார்த்தை பேசியது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு." என்றுகூறி, ‘ஊர் நலம்’ பற்றி மிகவும் விசாரித்து ஒரு சிறிய அன்பளிப்பையும் வழங்கினார். யார் அந்த நபர்? அவர்தான் இலங்கை ரசிகர் களை ஈர்த்த (தமிழக கிரிக்கெட் டெஸ்ட் வீரர் பூரீகாந்த்." என்று எழுதுகிறார், யாழ். வேம்படி பழைய மாணவியும், கொக்குவிலைச் சேர்ந்தவருமான செல்வி உமா ராமநாதன்.
(12.1085)

45 கே.ஜி. மகாதேவா
ஜி.டி. நாயுடு துணிச்சல்
இந்தியாவின் ‘விஞ்ஞான மேதை” என்று வர்ணிக்கப் பட்ட அமரர் ஜி.டி. நாயுடு பற்றி நீங்கள் கேள்விப்பட்டி ருக்கிறீர்களா?
இவரது கண்டுபிடிப்புகள் எல்லாமே பிரபல்யம் வாய்ந்தவை மட்டுமல்ல; இந்திய அரசாங்கத்துக்கே பெரும் சவாலாக அமைந்ததுமுண்டு.
ஒரு தடவை இவர் “டிரான்சிஸ்டர்’ வானொலியைக் கண்டுபிடித்திருந்தார். அதன் விலை இருபத்தைந்து ரூபாய் என்றும் அறிவித்திருந்தார். ஆனாலும் இந்திய அரசாங்கம் இந்த வானொலி விற்பனைக்குத் தடை விதித்துவிட்டது.
சில மாதங்களுக்கு முன்னர் நான் கோயம்புத்தூர் (கோவை) சென்றிருந்தபோது, கோயம்புத்தூரிலுள்ள ஜி.டி. நாயுடு தொழில்நுட்ப நிறுவனத்தைச் சுற்றிப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. உள்ளே நுழைந்தால் எங்கும் எதிலும் சுத்தம் காணப்பட்டதுடன் பெரிய பெரிய மண்ட பங்களில் நாயுடுவின் கண்டுபிடிப்புகளும் இடம் பெற்றி ருந்தன. ஒரு மண்டபத்தின் நுழைவாயிலில் ஒரு அறிவித்தல் பலகை, அதில் பின்வருமாறு வாசகங்கள் இடம் பெற்றி ருந்தன:
“குப்பைகளை அல்லது கடதாசிகளை இம்மண்ட பத்தில் வீசினால் இந்த மண்டபம் முழுவதையும் நீங்கள் கூட்டிப் பெருக்கவேண்டும். இம்மண்டபத்தில் எச்சிலை உமிழ்ந்தால், மண்டபம் முழுவதையும் நீங்கள் நீர்கொண்டு கழுவி, சுத்தப்படுத்தவேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ இங்குள்ள ஒரு பொருளை அல்லது கருவியை நீங்கள் திருடினால் உங்கள் கரம் துண்டிக்கப்படும். அதற்குரிய நஷ்டஈடு வழங்கப்படும்!”
வாசகங்களைப் படித்ததும் மெய்சிலிர்த்துவிட்டது!

Page 25
கதையல்ல நிஜம் 46
இங்கும் பல இடங்களில் நாம் ‘சுத்தம் சுகம் தரும். திருடர்கள் கவனம்!” அறிவிப்புகளைப் பார்க்கின்றோம். ஆனாலும் ஜி.டி. நாயுடு தொழில்நுட்ப நிறுவனத்தின் துணிச்சல் மிகுந்த எச்சரிக்கை அமுலுக்கு வருமா?
(1705.90)
எழுத்துக்கு ஆமிரம் ரூபா
கவிஞர் பா. சத்தியசீலனைத் தெரியாதவர்கள் நம் மத்தியில் இருக்கமுடியாது.
அவர் வெறும் இலக்கியவாதி மட்டுமல்ல; குழந்தை களின் இதயங்களை பலகோணப் படைப்புகள் மூலம் “கொள்ளையடிக்கும்’ தனித்தன்மை பெற்ற பெரிய கவி உள்ளம் கொண்டவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கவிஞர் சத்தியசீலனின் 'அருளப்பர் அம்மானை' நூல் வெளியீட்டு விழா அல்லைப் பிட்டியில் சிறப்பாக நடந்தது.
முதல் பிரதி, இரண்டாம் பிரதி, மூன்றாம் பிரதி என்று குறிப்பிட்டவர்கள் வாங்கிக் கொண்டதும் விழாவுக்கு வந்திருந்த பிரமுகர் ஒருவரும் ஒரு "என்வலப்பை கையளித்து ‘அம்மானை' நூலொன்றைப் பெற்றுக் கொண்டார்.
"அட்சரலட்சம் பெறும் என்பது சற்று மிகையானது தான்; ஆனால் இந்த 'அம்மானை'யில் வரும் ஒவ்வொரு அட்சரமும் ஆயிரம் பெறும் என்று நிச்சயமாக நம்புகிறேன். இதனால் "முப்புறமும் கத்துகடல் முத்தமிடும் என்னுரரை." என்று தொடங்கும் முதலாவது வெண்பாவில் வரும் 'மு' என்ற அட்சரத்துக்காக (எழுத்துக்காக) இந்த ஆயிரம் ரூபாவை அன்பளிக்கிறேன். ஏற்றிடுக” என்ற வாசகங்

47 கே.ஜி. மகாதேவா
களுடன், ‘அம்மானை' வெளியீட்டு விழாவில் ஆசிரியர் சோமசுந்தரேசன் எனும் பிரமுகர் 1000 ரூபாவை என்வலப்பில் வைத்து உதவியிருந்தார்!
நல்ல கவிதையை நயக்கத் தெரிந்தவர்கள் அல்லைப் பிட்டியூரில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது ஒருபுற மிருக்க, கவிஞரின் கவிக்கு - ஒரு எழுத்துக்கு ஆயிரம் ரூபா என்றால். ஒரு சின்னக் குறிப்பு: ஆசிரியர் சோமசுந்தரேசன் தான், அல்லைப்பிட்டியில் 15 ஆண்டுக்கு முன்னர் நீச்சல் தடாகமொன்றை நிறுவியவர். வாழ்க!
(26.04.90)
ரூபவாஹினிமின் ஒரநிலம்)
கிடந்த திங்கட்கிழமை இர்வு “ரூபவாஹினி'யில் ஆங்கிலச் செய்திக்குப் பின்னர் "வொய்ஸ் ஒவ் ரெறறிஸம்’ (அதாவது, பயங்கரவாதத்தின் குரல்) இடம்பெற்றிருந்தது. தீவிரவாதிகளினால் உரிமை கோரப்பட்ட ‘பல்வேறு ரக' மரணங்களில் சம்பந்தப்பட்டவர்களின் நிழற்படங்கள் அவை.
அதாவது; பொலிஸ்காரர்கள், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் மின் கம்பத் தண்டனை பெற்ற ‘சமூக விரோதிகள்’ ஆகியோர் கொலையுண்ட நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அருமையான தொகுப்பு!
“ரூபவாஹினியில் பல லட்சம் மக்கள் இதனை நேரில் பார்க்கும்போது உணர்ச்சிவசப்பட்டிருந்தால். அல்லது மனமாற்றம் கண்டிருந்தால். அதனால் உண்டாகும் விளைவுகள்.? “ரூபவாஹினி நடவடிக்கை யுத்த நிறுத்தத்தை மீறிய செயல் அல்லது தூண்டிய செயல் என்று கணிக்க முடியாதா? (கண்காணிப்புக் குழுவுக்குச் சமர்ப்பணம்)

Page 26
கதையல்ல நிஜம் 48
காதோடு காதாக வடக்கிலும் கிழக்கிலும் இடம் பெற்ற வன்செயலின்போது இடியுண்ட கட்டிடங்கள். எரி யுண்ட - புதையுண்ட சடலங்கள். வெறும் சாம்பலான வீடுகள், மற்றும் கொள்ளைகள், பலாத்காரங்கள், ஆக்கிர மிப்புகள் போன்ற இன்னோரன்ன ‘உயிர்ப்படங்கள்’ இந்திய ஒளிபரப்புச் சேவையான தூர்தர்ஷனில் வெளிவருவது மட்டும் போர் நிறுத்த மீறலா? இதுவும் கண்காணிப்புக் குழுவுக்குச் சமர்ப்பணம்!)
(24.1085)
வெழக்கும் "எரிமலைகள்
Gosmtழும்புக்குப் போனால், 'நாலு (உள்நாட்டு வெளிநாட்டு) பத்திரிகையாளர்களைச் சந்திக்காவிட்டால் 'ஏதோ’ மாதிரி இருக்கும். (தொழிலே இதுதானே!)
பத்திரிகை அலுவலகங்களுக்கும் வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களுக்கும் சென்று இன்றைய நாட்டு நடப்புப் பற்றி தாராளமாக” கடந்த வாரம் விசாரித்தேன்.
குறிப்பாக ஒரு விஷயம் பற்றி துருவித் துருவிக்கேட்ட போது, எதையுமே கூறாமல் என்னிடமே கதை எடுக்கப் பார்த்தார்கள் உள்நாட்டுச் செய்தியாளர்கள்!
நம்நாட்டுச் செய்தியாளர்கள்தான் ‘கப்சிப்” என்றால் வெளிநாட்டுச் செய்தி நிறுவன நிருபர்களும் மூச்சு விடுகிறார் களில்லை! அந்தளவுக்கு அந்தச் செய்தி 'எரிமலை'யாகி யிருக்கிறது.
குறிப்பு: நான் அவர்களிடம் கேட்ட விஷயம் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் திரு. றிச்சர்ட் டி சொய்ஸா பற்றித்தான்.

49 கே.ஜி. மகாதேவா
மேலதிகக் குறிப்பு: திரு. றிச்சர்ட் டி சொய்ஸா கொல்லப்பட்டதும், அவரது நெருங்கிய பிரபல பத்திரிகை யாளர்கள் இருவர், நமக்கு ஏன் வம்பு என்று நாட்டை விட்டே ஓடிவிட்டனராம்!
அடிக்குறிப்பு; 'எரிமலை’கள் எதுவும் சொல்லிக் கொண்டு வெடிப்பதில்லை.
(3103.90)
அநுரா எழுப்பிய யூதம்
*கராச்சியில் ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டில் எமது ஜனாதிபதி அளித்த பேட்டி மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டியது.
“காஷ்மீர் மக்கள் தங்கள் நிலையைத் தாமே தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது இந்தியாவுக்கு எதிரானது. ஜனாதிபதியின் இக்கூற்று; தமிழ்நாட்டில் போய், யாழ்ப்பாண மக்கள் தமது நிலையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளவேண்டும் என்று கூறுவது போன்றது. காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பதுபற்றி காஷ்மீர் மக்களே தீர்மானிக்கவேண்டும் என்று கூறியதுபோல் வடக்கு, கிழக்கு பிரச்னையை வடக்கு, கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று கூறுவீர்களா? வட, கிழக்குப் பிரச்னையைத் தீர்ப்பதுபற்றி அப்பகுதி மக்களே முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கூறினால் ஏற்க முடியுமா?"
. இப்படிக் கேட்டவர் எதிர்க்கட்சித் தலைவர் திரு. அநுரா பண்டாரநாயக்கா.
பாராளுமன்றத்தில், வெளிவிவகார அமைச்சின் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தினை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில்தான் திரு. அநுரா மேற்படி ஐயத்தை வெளியிட்டார். (26.12.85)

Page 27
கதையல்ல நிஜம் 5O
நிருபருக்கு 'டோஸ் கொடுத்த சாய்UாUாl
பூரீ சத்திய சாய்பாபா அண்மையில் சென்னை வந்திருந்தபோது, சில பத்திரிகை நிருபர்கள் அவரைச் சந்தித்தனர்.
"சுவாமி, நீங்கள் கை அசைப்பினால் எவ்வளவோ அரிய பொருள்களை வரவழைக்கிறீர்கள். உங்களிடமுள்ள தெய்வீக சக்தியைப் பயன்படுத்தி நமது பிராந்திய கடல்நீர் முழுவதையும், எண்ணெய்க் கடலாக மாற்றினால் மக்களுக்கு எவ்வளவோ உபயோகமாக இருக்குமே. செய்வீர்களா?” என்று ஒரு நிருபர் கேட்டார்.
பாபா சிரித்துக்கொண்டே "ஆமாம், ஆமாம். நம் நாட்டில் பீடி குடிக்கிறவர்கள் தொகை ஏராளம். அவர் களில் ஒரு ‘புத்திசாலி” தான் புகைத்த ஒரு பீடித்துண்டை அந்த எண்ணெய்க் கடலில் வீசியெறிந்தால் எப்படியிருக்கும்?". என்று பாபா கூறியதும். நிருபரின் முகத்தில் நிறையவே எண்ணெய் வடிந்தது!
(14.0185)
பாUாலின் மந்துமொரு சக்தி
பாரத நாடு ஒரு புண்ணிய பூமி. யோகிகளும், முனிவர் களும், சித்தர்களும், சுவாமிகளும் வாழ்ந்த - வாழும் தேசம் edgil.
ஆனாலும் இத்தனை மகான்கள் மத்தியிலும் ஒரு பெரும் சாதனையை ஏற்படுத்தி, தேசம் தழுவிய ஒரு

51 கே.ஜி. மகாதேவா
பெருமையைப் பெற்றிருக்கிறார் பூரீ சத்திய சாய்பாபா அவர்கள்!
தாம் நிறுவிய சத்தியசாயி பல்கலைக்கழக வளவில் விண்வெளி ஆராய்ச்சி நிலையமொன்றை அமைத்து அதனை அடுத்தமாதம் இருபத்தோராம் திகதி திறந்து வைக்கின்றார்.
இதில் சிறப்பு என்னவென்றால், இந்தியாவில் பலவித மான நிறுவனங்களையும் சுவாமிகள் ஆரம்பித்திருந்த போதிலும் விண்வெளி ஆராய்ச்சிக்கென்று ஒரு பிரமாண்ட மான நிலையம் அமைத்து பல்கலைக்கழக மாணவர் களுக்கும் வேறு துறையினருக்கும் விண்வெளி ஆராய்ச்சியில் அறிவு வழங்க முன்வந்த முதலாவது மகான் இந்தியா விலேயே பூரீசத்தியசாய்பாபாதான்.
இந்த விண்வெளி நிலையத்தைக் கட்டிமுடிக்க பாபா வுக்கு ஏற்பட்ட செலவு இரண்டு கோடி ரூபா! நவீன இந்தியாவைக் கட்டி எழுப்பும் பணியில் விண்வெளி யுகத்திற்குச் சென்றுகொண்டிருக்கும் ராஜீவ்காந்திக்கு இது ஒரு உந்துசக்தியாக விளங்கும் என்று நிச்சயம் நம்பலாம்.
(1983)
நெடுமாறன் நெடுந்தாரம்
திரு. ப. நெடுமாறன் பற்றிய ஒரு கட்டுரை இதே பக்கத்தில் வருகிறது. அவரின் இரகசியப் பயணம் பற்றிய ‘ரிட்பிட்ஸ்’ இவை;
9 நெடுமாறன் இலங்கை வந்தபோது அவர் வசம் இருந்தவை: ஒரு சிறிய பை, இரண்டு சாரம், இரண்டு பனியன், இரண்டு சட்டை, இரண்டு
நீளக் கால்சட்டை.

Page 28
கதையல்ல நிஜம் 52
9 நெடுமாறன் இலங்கை வந்தது ‘புலிகள் தவிர அவர் மனைவி, பிள்ளைகள் மற்றும் யாருக்குமே தெரியாது.
O அவரது இலங்கைப் பயணம்: தரைமார்க்கம் 1,200
மைல். கடல் மார்க்கம் 300 மைல்.
O தனது டயணத்தை ஆரம்பிப்பதற்கு சில நாட் களுக்கு முன்னர்தான் தாடி வளர்க்க ஆரம் பித்தார். ஆனாலும் இதுபற்றி யாரும் "சீரியஸாக” நினைக்கவில்லை.
O ஊர் திரும்பியதும்தான் அவரது இரகசிய விஜயம் மனைவிக்குத் தெரிந்தது. மனைவி, குழந்தை களுடன் பழநி கோவிலுக்குச் சென்று விசேட அர்ச்சனை செய்ததுதான் முதல் வேலை!
(09.1285)
யாழ். பூந்நிகல்கத்தாவாசி
கிTல்நடையாக உலகைச் சுற்றிவரும் கல்கத்தாவைச் சேர்ந்த சாதனைவிரன் திரு. அருண் ருத்ரா கடந்த மாதம் இலங்கைக்கு வந்தபோது யாழ்ப்பாணத்துக்கும் நடை விஜயம் மேற்கொண்டது நீங்கள் தெரிந்ததே.
இலங்கையிலிருந்து தாய்லாந்து செல்லும் நோக்குடன் இந்தியா புறப்பட்ட அவர், 15-02-84 திகதியிட்டு மதுரையி லிருந்து எனக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். நேற்றுக் கிடைத்த அக்கடிதத்தின் சில பகுதிகள்:
"இராமேஸ்வரத்திலிருந்து கப்பல் மார்க்கமாக தலை மன்னார் வந்து கொழும்பு சென்று மாத்தறை, மட்டக் களப்பு, திருகோணமலை, மலையகம். கடைசியாக யாழ்ப்

S3 கே.ஜி. மகாதேவா
பாணம். என்று வந்தேன். இலங்கையின் எந்தப் பகுதியிலும் கிடைக்காத பண்பான வரவேற்பு யாழ்ப்பாணத்தில் கிடைத்ததை நான் மறக்கமாட்டேன். நான் கொழும்பு சென்றிருந்தபோது முதலில் இந்தியத் தூதரகத்துக்குப் போயிருந்தேன். அங்கு எனக்குக் கிடைத்த வரவேற்பு’ நான் இந்தியன் என்று கூறிக்கொள்ளவே வெட்கப்படும் அளவுக்கு இருந்தது! "நான் ஒரு இந்தியன். நான் இப்போது நின்று கொண்டிருப்பதும் இந்தியத் தூதரகத்தில்தான். ஒரு இந்தியனுடன் சாதாரணமாகக் கதைக்கவே இந்தியராகிய நீங்கள் வெட்கப்படுகின்றீர்கள் போலும்." என்று நான் உணர்ச்சிவசப்படும் அளவுக்கு தூதரகத்தின் சில அதிகாரிகள் அங்கு நடந்துகொண்டனர். நான் வாய்விட்டுக் கேட்டும் சிறிதளவு நிதிஉதவிகூட எனக்கு இவர்கள் செய்யவில்லை. ஆனால் இலங்கையின் எந்தப் பகுதியிலும் கிடைக்காத அன்பான உபசரிப்பும் வரவேற்பும் நிதிஉதவியும் யாழ்ப் பாணத்தில் சமூகப்பணியாற்றும் சில கழகங்களினால் கிடைத்தது. இந்த விபரம் நான் எழுதும் புத்தகத்தில் இடம் பெறுவது மட்டுமல்ல; எனது வாழ்க்கையிலும் மறக்க முடியாதது. யாழ்ப்பாண மக்கள் எனது நெஞ்சத்தில், இந்துக் கோவில்களின் உயர்ந்த கட்டிடங்கள் மாதிரி நிமிர்ந்து நிற்கின்றார்கள்."
(23.0284)
தாங்கும் போராட்டம்
லங்கைத் தமிழர் பிரச்னையில் தீவிர அக்கறை செலுத்தி வரும் தமிழக இளைஞர்கள், அங்கு புதுமையான முறையில் ‘போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இவற்றில் கடைசியாக அரங்கேறியிருப்பது - தூங்கும் இளர்ச்சி’!

Page 29
கதையல்ல நிஜம் S4
இலங்கைச் சம்பவங்கள் குறித்து மத்திய அரசு தூங்குவதாக கண்டனம் கூறும் இந்த இளைஞர்கள், சந்தடி மிகுந்த பஸ் நிலையத்தில் படுத்துத் தூங்குவதன் மூலம் தங்கள் அதிருப்தியை மத்திய அரசுக்குக் காட்டி வருகின்றனர்.
கோயம்புத்தூருக்கு அருகே பெதப்பம்பட்டி பஸ் நிலையத்தில் திரு. நாராயணசுவாமி நாயுடுவின் இந்திய விவசாயிகள், உழைப்பாளிகள் கட்சியைச் சேர்ந்த 25 ஊழியர்கள், இளைஞர்கள், திரு. வேணுகோபால் தலைமையில் மேற்படி தூதன கண்டனக் கிளர்ச்சியை நடத்தினர்! எப்படித் தெரியுமா?
இரவு எட்டு மணிமுதல் அதிகாலை நான்கு மணி வரை மேற்படி இளைஞர்கள் பஸ் நிலையத்தின் தரையில் தூங்கி இக்கிளர்ச்சியை நடத்தினார்கள். இவர்கள் அருகே இலங்கை அரசையும், இந்திய மத்திய அரசின் தூக்கத் தை'யும் கண்டிக்கும் சுலோக அட்டைகள் பல காணப் பட்டன.
(11.10.83)
தமிழகம் கொந்தளிப்பு
தமிழ்நாட்டுக்குச் சென்று கடந்த வாரம் திரும்பிய ஒருவர் - நமது வாசகர் - பின்வருமாறு எழுதுகின்றார்:
"தமிழகம் பூராவும், இலங்கைத்தமிழர் பற்றிய கண் காட்சி நடக்கிறது. முக்கிய சந்திகளில் எல்லாம், தாமாக இளைஞர்கள் இதுபற்றி ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். மாலையில் மக்கள் குடும்பம் குடும்பமாக கண்காட்சியைப் பார்க்கத் திரள்கிறார்கள். 1947ம் ஆண்டு தொடக்கம் ஈழத்தமிழரது அரசியல் வரலாறு, இனக் கலவர சம்பவம், வன்முறை அழிவுகள் புகைப்படங்களாக

55 கே.ஜி. மகாதேவா
விளக்கங்கள் எழுதப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தமிழ்நாட்டில், மூலைமுடுக்கெல்லாம் ஈழத் தமிழருக்கு ஆதரவு தரும் சுவரொட்டிகள் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. ஒரு சுவர்கூட விட்டுவைக்கப்பட வில்லை! குழந்தைகள் தொடக்கம் முதியவர்கள் வரை எல்லோரும் ஈழத்தமிழர் பற்றித்தான் பேசுகின்றார்கள். எதனையும் செய்யவேண்டும் என்று விமர்சிக்கின்றார்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால் தமிழ்நாட்டின் சகல பத்திரிகைகளிலும், இலங்கைப்புதினம் வந்தால்தான் மக்கள் விரைந்து வாங்குகின்றார்கள். தினசரி நமது புதினம் வராத ஏடுகளே அங்கு இல்லை."
(31.10.83)
துப்பாக்கி தூக்கிய ஆதீனம்
இலங்கைத் தமிழர் பற்றிய புகைப்படக் கண்காட்சி ஒன்று கடந்தவாரம் திருச்சியில் நடைபெற்றது.
இதில் சிறப்பான அம்சம் என்னவென்றால்; மதத் துறையில் இருதுருவங்களாகத் திகழும் திராவிடர் கழகமும், மதுரை ஆதீனமும் கலந்துகொண்டதுதான்!
வழக்கமாக வீரமணியிடமிருந்துதான் 'பீரங்கி’யை
எதிர்பார்க்கலாம். இதற்கு மாறாக ஆதீனத்தாரிடமிருந்து ‘ராக்கெட்' கிளம்பியது.
"தமிழனுக்கு உலகில் எங்கு அநீதி நடந்தாலும் அதற்கு செவிசாய்க்க ஆதீனம் அனைத்து தமிழ்த் தலைவர்களுடனும் சேர்ந்து இயங்கத் தயங்காது.” என்று குரல் கொடுத்த ஆதீனத்தார்; ஒரு கட்டத்தில் -
"நாம் துப்பாக்கி ஏந்தவும் தயார்” என்றுகூறி அவரது உதவியாளர் ஒருவரிடம் ஒரு பெரிய துப்பாக்கியைப்பெற்று

Page 30
கதையல்ல நிஜம் 56
அதனைக் கையில் தூக்கிப்பிடித்து கோஷித்துவிட்டு, மற்று மொரு உதவியாளரிடம் கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்று; “இது நிஜக் கைத்துப்பாக்கி; ஜேர்மனியில் செய்தது. ஆறு முறை சுடும். என் கூற்றுப் பிழையானால் யாரும் இதனைப் பரீட்சிக்கலாம்." என்றாரே பார்க்கலாம்! விண் அதிர்ந்தது!
நாம் ஏதோ நினைக்கின்றோம். ஆனால், தமிழ் நாட்டில் மட்டுமல்ல. முழு இந்தியாவிலேயே என்ன வெல்லாம் இப்பொழுது நடக்கிறது போல் தெரிகிறது.
உருத்திராட்ச மணிகளை வருடிய மதுரை ஆதீனத்தின் கைகளே துப்பாக்கிக் குண்டுகளை உருட்டுவதானால்..?
(0III.83)
ஒலி கொடிது! ஒளி கொடிது!
சந்தர்ப்ப சூழ்நிலைகள் சில நேரங்களில் கை கொடுத்ததும் உண்டு; காலை வாரிவிடுவதும் உண்டு!
அந்த நீண்ட தூர இரவு சொகுசு பஸ், வேகமாக ய்ாழ், நோக்கி விரைந்து கொண்டிருந்தது. பிரயாணிகள் பயத்தை மறந்து, வீடியோ படத்தை ரசித்துக் கொண்டி ருந்தனர். இரவு ஒன்பது இருபத்தைந்து இருக்கும். படத்தில் ஒரு நகைச்சுவைக் கட்டம்.
தன்னை ஏமாற்றிய ஒரு பங்களுர்க்காரரை நேரில் சந்தித்த ஒருவர், அவனைத் தண்டிக்கும் முகமாக, தனது பெயரை இணைத்து "சிங்கத் தமிழன் வாழ்க" என்று பத்துத் தடவைகள் உரத்துக் கூறும்படி கட்டளை இடுகின்றார். அவனும் “சிங்கத் தமிழன் வாழ்க." என்று கத்தத் தொடங்கு கின்றான். இச்சத்தத்தினால் முழு பஸ்ஸுமே 'அதிரு’கிறது!

5ア கே.ஜி. மகாதேவா
அட ராமா. இந்த நேரம் பார்த்துத்தானா பஸ், பொலிஸாரினால் நிறுத்தப்படவேண்டும்? இடமும் (சிங்களவர் ஊர்) சிலாபமாக இருக்கவேண்டும்?
பொலிஸார் பரபரப்படையுமுன்னரே பஸ் ஊழியர் ஒருவர் அவசரம் அவசரமாகப் பாய்ந்து சென்று ஒலி - ஒளியை சாமர்த்தியமாக நிறுத்திவிட்டார்!
(шо783)
அமைச்சர் விறலt வீசிய குண்டு
அமைச்சர் ஒருவர் பேசிய பேச்சுக் குறித்து இருவர் சுவாரஸ்யமாகக் கதைத்துக் கொண்டிருந்தனர்.
ஒருவர்: “கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் திருமதி. விமலா கன்னங்கரா ஒரு கூட்டத்தில் நல்லா பேசி இருக்கிறாரே."
மற்றவர்: "நானும் பேப்பர் பார்த்தனான். அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லையே."
ஒருவர்: "அப்படீன்னா பேப்பரை ஒழுங்கா படிக்கல்ல என்று சொல்லுங்க. அமைச்சர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? "யானையும் புலியும் காட்டில் ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளாமல் வாழமுடியுமானால், நாட்டில் ஏன் இரு வேறுபட்ட இன மக்கள் ஒன்றாகக்கூடி வாழமுடியாது." என்று அமைச்சர் விமலா கேட்டிருக்கிறார்.
மற்றவர்: "அது சரி. காட்டில் யானையும் புலியும் வாழ்ந்தாலும் ஒன்றாக வாழ்வதில்லையே. அதுபோல. இரு இன மக்களும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே."
(02.11.83)

Page 31
கதையல்ல நிஜம் S8
assist assist Lastwabit
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முன்னர் இலங்கை வானொலியாக இருந்தபோது, அரைமணி நேரம் நடைபெற்ற வர்த்தக ஒலிபரப்புச் சேவை மிகவும் புகழ் பெற்றது. அச்சேவையைத் திறம்பட நடத்தி, இந்தியாவிலும் இலங்கை வானொலியை அறிமுகப்படுத்திய பெருமை திரு என். மயில்வாகனனையே சாரும். விளம்பரத்துறையில் பல புதுமைகள்’ செய்தவர் அவர்.
இதுபோல இப்பொழுது குரல் வளமிக்க பி. எச். அப்துல் ஹமீத் ஒரு புதுமை செய்கிறார் - பொருத்தமாக,
இரவுச் சேவை இரண்டு - இரவின் மடியில்’ நிகழ்ச்சி முடிந்ததும் ‘பி. எச். இப்படி நம்பிக்கை கூறுகிறார்:
"நாளை விடியும்போது நல்ல பொழுதாக அமைய இறைவனை வேண்டி விடைபெறுவது." என்று பயபக்தி யுடன் சொல்கிறார். எத்தனை அர்த்தங்கள்!
(12.1.183)
குருட்டு அதிர்ஷ்டம்)
தேசிய லொத்தர் சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்தை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது செய்தியில் நேற்று முன்தினம் மாலை பின்வருமாறு வெளியிட்டது;
"அண்மையில் நிகழ்ந்த கலவரத்தின் பின்னர் யாழ்ப் பாணத்தில் சுவீப் டிக்கட் விற்பனை பெருமளவில் அதிகரித் துள்ளது. வாரந்தோறும் இந்த அதிகரிப்பு காணப்படுகிறது."

59 கே.ஜி. மகாதேவா
தெற்கில் எல்லாவற்றையும் இழந்து வெறும் கையுடன் வடக்கே வந்தவர்களின் ‘அதிர்ஷ்ட நம்பிக்கையைப் பிரதி பலிப்பதாக இச்செய்தி அமைந்திருக்கிறதல்லவா?
(13.11.83)
-வழிகாட்டும் குவைத்
நமது நாட்டின் செல்வம் என்ன?
பனைச்செல்வம் பொதுவானது என்றாலும்; இயற்கைச் செல்வம் எல்லாமே பாதுகாக்கப்பட வேண்டியதுதான் என்றால், அதனையும் மறுக்க முடியாது.
குவைத் நாட்டில் தொழில் பார்க்கும் நமது வாசகர் இ. தவகோபால் தமது மன உளைச்சலை பின்வருமாறு “கொட்டி”யுள்ளார்.
"மரம் வளர்ப்போம், மரம் வளர்ப்போம் என்று எவ்வளவுதான் இலங்கையில், குறிப்பாக நமது தமிழ்ப் பகுதி களில் கோஷித்தாலும்; மண்ணுக்கு மேல் வரட்சியான குவைத் நாட்டுடன் ஒப்பிடவே முடியாது! மரங்களை வளர்க்க இங்கு மேற்கொள்ளப்படும் பகிரதப் பிரயத்தனங்கள் வார்த்தைகளில் அடங்காது.
"குவைத் நாட்டின் வீதிகளின் நடுவே மரங்களை வளர்க்க அரச செலவில் தண்ணிரை பவுசர்’ மூலமாக அக்கறையுடன் ஊற்றுகின்றார்கள். பெற்றோலைவிட தண்ணிர் தான் விலை அதிகம்! ஆறு மாதம் மோசமான பணி; ஆறு மாதம் கடும் வெயில். அப்படி இருந்தும் மிகுந்த பிரயாசை யுடன் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மரங்களை அக்கறையுடன் வளர்க்கிறார்கள். இது மட்டுமல்ல; மாட்டுப் பண்ணை, கோழிப்பண்ணைகளுக்கு கோடை காலத்தில் (ஏ. ஸி) குளிர்சாதனம் பொருத்தியும்; பனிக்காலத்தில் (ஹீற்றர்) வெப்பமூட்டி வைத்தும் கண்காணிக்கின்றார்கள்.

Page 32
கதையல்ல நிஜம் SO
இத்தனையுடன் குருவி, பறவைகளை ஹோலந்து நாட்டி லிருந்து இறக்குமதி செய்கின்றார்கள்! நமது நாட்டில் என்ன இல்லை? எல்லாமே இருக்கிறது. நாம்தான் ஒன்றுமே செய்யாமல் இருக்கின்றோம்." என்று எழுதியுள்ளார்.
(26.1083)
8-U(to LitöLt)
சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த கே. இலட்சுமி என்பவர் பஸ் விபத்தில் மரணமானது பற்றியும், அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மாயமாக மறைந்தது குறித்தும் எழுதியிருந்தேன் அல்லவா?
அந்த நகைகள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக இப்பொழுது தகவல் கிடைத்திருக்கிறது.
அதுவும், விபத்து நடந்த செய்தி கேட்டு துடித்துப் போன ஆயுர்வேத பெண் டாக்டர் ஒருவர், மரணமான பெண்ணின் நகைகள் பறிபோய்விடக் கூடாதே என்று கருதி பத்திரமாக வைத்திருந்து, உரிய உறவினர்களிடம் ஒப்படைத்திருக்கின்றார்!
ஆயுர்வேத பெண் டாக்டரின் இப்பெருந்தன்மை யினால் பெண் இனத்துக்குப் பெருமை கிடைத்திருப்பதுடன் காரைநகரின் மதிப்பும் ஒருபடி உயர்ந்துவிட்டது!
(01.0783)

61 கே.ஜி. மகாதேவா
*ந்து பெண் பெற்றவர் ஆண்டியல்ல
ஜேர்மனியிலிருந்து ஒருவர், தமிழ் இளைஞர்கள் அங்குமிங்குமாக கொழும்பிலும் வேறு இடங்களிலும் கைது செய்யப்படுவது குறித்து யாழ்ப்பாணத்திலுள்ள தமது நண்பருக்கு இவ்விதம் எழுதியிருக்கின்றார்:
"ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டி யாவான். இது அந்தக்காலம். பெடியன்களை வைத்துக் கொண்டு யோசித்து மண்டையை உடைப்பதிலும் பார்க்க ஐந்து பெண்களைப் பெற்றிருந்தால் நல்லதுபோல் தெரி கிறது."
(02.0783)
தமிழ்ச்சேவைமின் கழுத்தநுப்பு
சிழத்துப் படைப்பாளி ஒருவரின் நூல் வெளியீட்டு விழா சம்பந்தமான செய்தி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ்ச்சேவையின் செய்திப் பிரிவுக்குச் சென்றிருந்தது.
காலை ஏழரை மணிக்கு ஒலிபரப்பாகும் மாகாணச் செய்திகளில் இடம்பெறுவதாக ஏற்பாடு. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. குறிப்பிட்ட நூலின் வெளியீட்டு விழாச் செய்தி, இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது!
இது ஒரு செய்தி, மற்றைய செய்தி -
தமிழகத்தின் 'குப்பை இலக்கியங்கள்’ என்று வர்ணிக்கப் பட்டு கடந்தகால இலங்கை அரசினால் கட்டுப்படுத்தப் பட்ட சஞ்சிகைகளில் வெளிவந்த சிறுகதைகளைத் தொகுத்து

Page 33
கதையல்ல நிஜம் 62
வெளியிடப்பட்ட ஜே. எம். சாலியின் சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா பற்றிய செய்தி, இலங்கை வானொலி செய்தியில் அதுவும், நண்பகல் ஒலிபரப்பாகும் முக்கிய செய்தியில் இடம், நேரம், காலம் ஆகிய சகல விபரங் களுடன் இடம் பெற்றிருக்கிறது.
அப்படியானால் இலங்கைப் படைப்பாளியின் நூல் வெளியீட்டு விழாவில் தஞ்சாவூர் பல்கலைக்கழக விரிவுரை யாளர், யாழ். பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்துகொள்வது செய்தி அல்ல; தமிழக எழுத்தாளரின் மூன்றாம் ரகக் கதைகள் வெளியீட்டுவிழாதான் இலங்கை வானொலியின் தரத்துக்குச் செய்தி!
காதோடு காதாக! ஈழத்துப் படைப்பாளியின் நூல் வெளியீட்டுவிழா செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கு குறிப்பிட்ட வானொலி அதிகாரி கூறிய காரணம் - "அவர் ஒரு கம்யூனிஸ்ட் எழுத்தாளர். ஐ டோன்ற் லைக் ஹிம்"
(23.0583)
சுவாமியும் அமைச்சரும்
மட்டக்களப்பு நகரமண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு முக்கிய பொதுக்கூட்டம் நடந்தது.
"இலங்கையில் இந்து சமயம் ஏதோ வளர்ச்சிபெற்று வருவதாகக் கூறமுடியாது. ஏனைய சமயங்களுக்குள்ள உரிமைகள் இந்துசமயத்துக்கு இங்கு கிடைத்துவிட்டதாக பெருமைப்படமுடியாது. இந்த அரசு இந்து சமயத்துக்கு முக்கியத்துவம் எதுவும் கொடுக்கவில்லை. மதமாற்றங்களும் -நடைபெற்று வருவது கவலையளிக்கிறது." என்று சுவாமிகள்
வருத்தப்பட்டார்.

63 கே.ஜி. மகாதேவா
சுவாமிகளை முதலில் வரவேற்ற அமைச்சர் திடீரென மேடைக்கு ஏறி, அங்கிருந்த அதிகாரியிடம் ஏதோ கூறினார்.
சுவாமிகள் அவரிடம் சைகைமூலம் வினவினார்.
"பேச்சை நிறுத்துமாறு பணிக்கிறார்” என்றார் அந்த அதிகாரி.
அங்கு நிரம்பி வழிந்த மக்களைப் பார்த்து சுவாமிகள், "நான் பேசவேண்டுமா? அல்லது நிறுத்தலாமா?" என்று Gösı'LTi.
"பேசுங்கள் பேசுங்கள்" - நகர மண்டபம் அதிர்ந்தது. சுவாமிகள் மேலும் ஒரு மணி நேரம் அருளுரைகள் வழங்கினார். "இராசு அமைச்சரும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
(24.03.83)
நடுவீதிமில் நடந்த யோகாசனம்
நேற்றுக்காலை ஐந்து மணி இருக்கும்.
கொக்குவில் கே.கே.எஸ். வீதிவழியாக வந்து கொண்டிருந்த சில இளைஞர்கள், வீதியில் வைத்து திடீரென வழிமறிக்கப்படுகின்றனர்.
விஷயம் புரியாது திகைத்துப்போன இளைஞர்கள், நல்லை ஆதீனம் செல்வதாகக்கூறவே, "அங்கு எதற்குச் செல் கிறீர்கள்” என்று கேள்வி தொடுக்கப்படுகிறது.
யோகாசன வகுப்புகளுக்கு என்று இளைஞர்கள் மீண்டும் பதிலளித்தனர். ஆனாலும் இளைஞர்களை "அவர்கள்’ விடுவதாக இல்லை. "யோகாசனம் என்றால் என்ன? அதனை இங்கேயே செய்" என்று கட்டளை பிறக்கிறது!

Page 34
கதையல்ல நிஜம் | 64
பயமும் பீதியும் கொண்ட இளைஞர்கள் பகிரங்க வீதியில் வைத்து சில ஆசனங்களைச் செய்து காட்டு கின்றனர். அதன் பின்னர்தான் ‘அவர்கள்’ அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்!
"யோகாசனங்கள் மிகப் புனிதமானவை, தெய்வாம்சம் பொருந்தியவை. இதனை, இராணுவத்தினர் நடுவீதியில் வைத்து கேலி செய்திருக்கிறார்களே." என்று நல்லை ஆதீன சுவாமி மனம் வருந்தினார். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வTசனை?
(28.0283)
தாய்மை செத்தது
கோப்பாய், அரசினர் ஆசிரிய பயிற்சி கலாசாலையைச் சேர்ந்த அந்த மாணவி - பயிற்சி ஆசிரியை ஓர் இளம் தாய். மூன்று மாதத்தில் ஒரு பெண் குழந்தை உண்டு. சுலபமாக மூன்று மாதங்கள் பிரசவ "லீவு’ எடுக்கமுடியும் என்றாலும், படிப்பைக் கருதி, தனது தாயின் அரவணைப்பில் குழந்தையை வீட்டில்விட்டு, கலாசாலை ஒய்வு நேரம் பார்த்து வீடு சென்று தாய்ப்பாலூட்டி திரும்பி விடுவார்.
பரீட்சைக்காலம். வழக்கம்போல் குழந்தைக்கு பசியாற்ற அந்தப் பெண் “லிவு’ கேட்டபோது, அதிபர் கொதித்துப்போய் தரமுடியாது என்று மறுத்துவிட்டார்! இந்தக் கண்டிப்பு பல தடவைகள் தொடர்ந்ததன் கொடுமை, அடுத்த மாதமே குழந்தை நிரந்தரமாக கண்களை மூடிக் கொண்டது!
அந்தப் பெண் அதிபரின் பெயரில்தான் ஆனந்தம் சாமியாடியதே தவிர தாய்மை செத்துப் போய்விட்டது போலும்! குழந்தையின் தாயின் பெயர் ரா. ராகினி
(0406.83)
0. 0 {}

65 கே.ஜி. மகாதேவா
இரண்டு தினங்களுக்கு முன்னர், ஒரு கலாசாலை அதிபரின் 'தாய்மை பற்றி எழுதியிருந்தேன் அல்லவா? இப்படியும் நடக்கிறது’ பத்தியின் இக்கண்டனக் குறிப்புகள் போட்டோ பிரதி எடுக்கப்பட்டும், போஸ்டர்களில் எழுதப் பட்டும், கலாசாலை வளாகச் சுவர்களை நேற்று அலங் கரித்திருந்தன!
(0706.83)
st 96ft 6i5ir 95 d5 &Qa5b
*சர்வட்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு தமிழர் விடுதலை கூட்டணி செயலாளர் நாயகம் திரு. அ. அமிர்தலிங்கமும், முன்னாள் திருகோணமலை எம். பி. திரு. ஆர். சம்பந்தனும் சென்னையிலிருந்து இன்று புறப்படுகின்றனர் என்று பிரிஐ. செய்தி தெரிவித்துள்ளது".
மேலே நீங்கள் படித்தது வானொலிச்செய்தி. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் இன்றைய தமிழ்ச்செய்தி அறிக்கையில் இது இடம்பெற்றிருந்தது.
ஒருவர் கதைத்தால் இரகசியம்; இருவர் கதைத்தால் பரம இரகசியம் என்பார்கள். இதனைச்சற்று தலைகீழாகப் பார்ப்போம்.
பரமபரம இரகசியம்: மேற்படி செய்தி ஓர் எழுத்துக்கூட மாற்றம் அடையாமல் நேற்று முன்தினம் இரவும், நேற்றுக் காலையும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்செய்தி அறிக்கைகளில் இடம் பெற்றிருந்தன.
காதோடு காதாக: திரு. அமிர்தலிங்கமும், திரு. சம்பந்தனும் நேற்று முன்தினம் பகலே கொழும்பு திரும்பி விட்டனர்!
(07.0284)

Page 35
водошфо даю 66
நாணயத்தின் இரு பக்கங்கள்
இது ஒரு குட்டிக் கதை அல்ல. உண்மைச் சம்பவம்.
நெல்லியடியிலிருந்து நேற்றுக் காலை சுமார் 7.15க்கு ஒரு பஸ், யாழ்ப்பாணத்தை நோக்கிப் புறப்படுகிறது. கடுகதி வேகத்தில் பஸ் வந்துகொண்டிருக்கிறது.
பஸ் பிரயாணிகளில் ஒரு இளைஞனும் இருந்தான்.
பஸ், காலை சுமார் 8.15 மணியளவில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததும் பஸ்ஸிலிருந்து எல்லோரும் இறங்கு கின்றனர். அந்த இளைஞனும் இறங்குகின்றான். ஆனால் அவனுக்கு ஓர் சந்தேகம்.
அவனது சட்டைப் பையினுள் ஒரு அனாமதேய ‘என்வலப்', அதுவும் ஓரளவு பாரமாக இருப்பதை அவன் உணர்கின்றான். தனிமையில் சென்று ‘என்வலப்பை பிரித்ததும் பாம்பை மிதித்தது போன்ற பிரமை!
நேராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் சென்று உயர் அதிகாரியுடன் தொடர்பு கொள்கின்றான். முறைப் பாடு பதிவுசெய்யப்பட்டு, அந்த ‘என்வலப் பொலிஸ் பாது காப்புக்குச் செல்கிறது.
அந்த ‘என்வலப்பில் இருந்தது என்ன தெரியுமா?
கத்தை கத்தையான பெறுமதிமிக்க ஐநூறு ரூபா நோட்டுக்கள்! உரியவர்கள் யாழ். பொலிஸ் அதிபருடன் தொடர்பு கொள்ளலாம்.
03.0784)

67 கே.ஜி. மகாதேவா
‘ஈழநாடு பூந்நி சிங்களப் பெண்
அண்மையில் தலைநகரில், நேர்முகப் பரீட்சை யொன்று நடந்தது.
நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த பல இளைஞர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.
கூட்டுத்தாபனமொன்றில் காலியாகவுள்ள ஒரு பதவிக்கு நடைபெற்ற மேற்படி பரீட்சையில் மூவர் நீதிபதிகளாகக் கடமையாற்றினர்.
அந்த இளைஞர் தமது ‘பைலுடன், நீதிபதிகள் முன்பாக நின்றார். பல ‘சேர்ட்டுபிக்கேட்டுகளும் கை மாறின.
நீதிபதிகளில் ஒருவர். "ஒ நீர் ‘ஈழநாடு’ பத்திரிகை யிலும் கடமையாற்றியிருக்கிறீர். ‘ஈழநாடு' யாழ்ப்பாணத்தி லிருந்துதானே வருகிறது.? அது தடை செய்யப்பட்டு விட்ட தல்லவா..?"
நீதிபதிகளில் மற்றவர்; “இல்லை. இல்லை. ‘ஈழநாடு’ ஒரு தேசிய பத்திரிகை. யாழ்ப்பாணத்திலிருந்து நீண்ட காலமாக வருகிறது. நீங்கள் கூறுவது ஒரு ஆங்கில (சற்றடே றிவியு') பத்திரிகை பற்றியது.”
உங்கள் காதுகளுக்கு மட்டும்; அந்த இளைஞரை முதலில் விசாரித்த ‘ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவரது கேள்வியின் சந்தேகத்தைத் தீர்த்த 'மற்றவர்’ ஒரு சிங்களப் பெண்மணி!
(0308.84)

Page 36
கதையல்ல நிஜம் 68
இராணுவத்தின் தப்புத்தாளங்கள்
Gynt.தனை நடத்துவதற்காக இராணுவ வீரர்கள் பலர் வவுனியாவில் ஒரு கிராமத்திற்குச் சென்றனர்.
செல்லும் வழியில் வீதியால் வந்த பையன் ஒருவனைக் கண்டனர்.
இராணுவ வீரர்கள் அப்பையனைத் தம்முடன் கூட்டிச்சென்று, "இப்பகுதியில் பெடியன்மார் வருவார் களாம். உண்மைதானா?” என்று கேட்டனர்.
"உண்மைதான் ஐயா" என்று பதிலளித்தான் அந்தப் பையன்.
"என்னத்தில் வருவார்கள்? எப்படி வருவார்கள்?" என்று கேள்விக்கணைகளைத் தொடுத்தனர் இராணுவத்தினர். “உங்களைப் போலவேதான். உப்பிடி ட்ரக்’கில்தான் வருவார்கள்." - பையன் சொன்னான்.
“எப்படித் துவக்கு கொண்டு வருவார்கள்?" "எல்லாம் உங்கட துவக்குப் போலவேதான் கொண்டு வருவார்கள்.” என்று பதில் அளித்த பையனை அவர்கள் பின்னர் விடுவித்துவிட்டனர்.
(30.0985)
உண்மைகள் உறங்காது
"திருகோணமலைக்கு அனுப்பப்பட்ட ஊர்க்க்ாவல்
படையினரில் ஒரு பகுதியினர் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களுடன் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டனர்.

69 கே.ஜி. மகாதேவா
"திருகோணமலை சென்ற ஊர்க்காவல் படையினரில் வேறு சிலர் ஊரைக் காவல் செய்வதில்லை.
"திறமையாகப் பயிற்சி பெற்ற சில ஊர்க்காவல் படை யினர் கூட, மாவட்டத்தை விட்டே வெளியேறி விட்டனர். காரணம்: பயங்கரவாதிகள் தாக்குவார்கள் என்ற பயம் தான்!
"சில ஊர்க்காவல் படையினர் தங்களது வீடுகளில் நித்திரை கொள்கின்றனர். இவ்விதம் நித்திரை கொள்ளும் போது அவர்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளையும் பத்திரமாகத் தங்களுடன் வைத்திருக்கின்றனர்.”
மேற்படி செய்தி வந்த நாளேடு "தி ஐலன்ட் (25.09.85) கொழும்பு பத்திரிகை.
உண்மைகள் எப்பொழுதும் உறங்குவதில்லை!
(27.09.85)
தமிழும் சCடமும்
மது அரசாங்கம் சகல மக்களையும் சமமாக மதித்து வருகிறது.
"வடக்கு, கிழக்கில் தவறான வழியில் இட்டுச் செல்லப் பட்டுள்ள இளைஞர்கள் தமது அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு ஏன் ஒருவரை ஒருவர் கொலை செய்ய வேண்டும், சுட்டுக் கொல்லவேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை.
"அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால், தமிழர் ஒருவரே பிரதம நீதியரசராகவிருக்கும் உயர்நீதிமன்றத்துக்குச் செல்லலாம். தமிழர் ஒருவர்தான் சட்டமா அதிபராகவும் இருக்கின்றார். தமக்குச் சாதகமாகத் தீர்ப்பையும் பெற்றுக் கொள்ளலாம்.”

Page 37
கதையல்ல நிஜம் 7O
இப்படிக் கூறியவர்: ஜனாதிபதி திரு. ஜே. ஆர். ஜெய வர்த்தனா. இடம்: மாளிகாவத்தையிலுள்ள வீடமைப்புத் திட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இலங்கை இஸ்லாமிய நிலையத் திறப்புவிழா வைபவம். ஜனாதிபதியின் கருத்து: நன்றி - ரூபவாஹினி (18.12.85 செய்தி)
ஒரு மயக்கம்: "தமிழர் ஒருவர்தான் சட்டமா அதிப ராகவும் இருக்கின்றார். தமக்குச் சாதகமாகத் தீர்ப்பையும் பெற்றுக்கொள்ளலாம்."
(2012.85)
கே. எஸ். ரா%ாவின் கைது இரகசியம்
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சந்தேகத்தின் மீது ஏராளமான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட பாவ கட்டம் அது.
கைதானவர்கள் காலி பூஸா’ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தக் காலி எல்லையில்தான் சில குற்றச்சாட்டுகளின் மீது "அவரும்” கைது செய்யப்பட்டார். விசாரணையின் பின்னர் "அவர்” பூஸாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
குறிப்பிட்ட தினம் ஆட்களோடு ஆட்களாக "அவரும்" முகாமுக்குள் நடந்து சென்றபோது; ஏற்கனவே அங்கு இருந்த தமிழ் இளைஞர்கள் சிலர் இவரை அடையாளம் கண்டு ‘அவர்’ பெயரைக் குறிப்பிட்டு ".வாங்க" என்று வாய்நிறைய வரவேற்றனராம்! பின்னர் என்ன நடந்திருக்கும்?
".ஒ நீதான் புலிகளின் தலைவனோ. நல்ல வரவேற்பு இருக்கிறதே." என்று ‘அவரை அழைத்துச் சென்ற ஒருவர் கோபத்தில் கூறி. நல்ல ‘சாப்பாடும்’ கொடுத்தாராம்!

71 கே.ஜி. மகாதேவா
யார் ‘அவர்’? அவர்தான் இலங்கை, இந்திய வானொலி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த “கடுகதி’ வேக அறிவிப்பாளர் கே. எஸ். ராஜா. இவர் பற்றிய மற்றுமொரு தகவல:
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இவர் கடமையாற்றி, பின்னர் பொலிஸாரினால் விசாரணைக் குட்படுத்தப்பட்டு வேலைநீக்கம் செய்யப்பட்டதற்குக் காரணம்; 1 பாரதியாரின் "சிந்துநதியின்." 2. "அக்கரையில் நீ இருக்க இக்கரையில் நானிருக்க.” 3 என்னதான் நடக்கும் நடக்கட்டுமே." ஆகிய மூன்று பாடல்களை முக்கிய நேரத்தில் ஒலிபரப்பியதுதானாம்!
(09.1185)
தானநியாச் சிங்களம்
“நெலும் மல்” என்றால் என்ன?
தமிழ்மொழி மட்டும் தெரிந்தவர்கள், தலையைச் சொறிய வேண்டியதுதான்! விஷயத்துக்கு வருவோம்.
அண்மையில் நடைபெற்ற க. பொ. த. சித்திரபாடம் முதலாம் பகுதி வினாத்தாளில் உள்ள இரண்டு வினாக் களிலும் இடம்பெற்ற கலைச்சொற்கள் யாவும் பரீட்சார்த்தி களுக்கு தலைச்சுற்றை ஏற்படுத்தியிருந்ததாம்!
வினாக்களில் தாமரைப் பூ என்று தமிழில் தரப் படாமல் “நெலும் மல்’ என்றும், இதுபோன்ற பிற சொற் களும் காணப்பட்டன! இதே நிலைதான் சமூகக்கல்வி பாடத்திலும்!
பரீட்சார்த்திகளுக்கு "மயக்கம்" ஏற்பட்டதற்குக் காரணம்; பரீட்சை மேற்பார்வையாளர்கள், உதவியாளர் களுக்குக் கூட அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிய வில்லையாம்.

Page 38
கதையல்ல நிஜம் 72
அடிக்குறிப்பு:- தாமரைப் பூவுக்கு, சிங்களத்தில் கூறுவது “நெலும் மல்’
(1912.85)
அன்றைய S. S. R.
பி. பி. ஸி. பற்றி புதிதாக நான் உங்களுக்கு எதுவும் கூறத்தேவையில்லை. சுடச்சுடச் செய்திகளை இன்று நமக்குத் தருவது பி. பி. ஸி. தான்.
பி. பி. ஸி. தமிழோசையில் நீண்ட காலமாக ஒலித்த குரல்கள் இரண்டு. ஒன்று சங்கர், மற்றையது ஆனந்தி. ஆனால் இன்று பல குரல்கள். அதுவும் நம்மவர்கள்.
வாரத்தில் ஐந்து நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை இலங்கை நேரப்படி இரவு 945 மணி முதல் 10.15 மணி வரையும் சிற்றலை 25, 41, 49 மீற்றர்களில் பி. பி. ஸி. ஒலிக் கின்றது. அறிவியலுக்கும் இலக்கியத்திற்குமே தமிழோசை முன்னர் அதிகநேரத்தைச் செலவிட்டு வந்தது. இப்பொழுது 20 நிமிடங்களுக்கு மேல் அரசியல் செய்திகளுக்கும், விமர் சனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாரம் அறிமுகமான குரல் திரு. ஏ. தாசீசியஸ் உடையது. தாசீசியஸ் தரமான நாடகக் கலைஞர். அவரின் ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற நாடகத்தை யாழ்ப் பாணப் பாடசாலை மாணவர்கள் இன்றும் பாராட்டு வார்கள். பாடநூற்குழுவில் பணியினைத் தொடங்கிய இவர் பின்னர் யாழ். மத்திய கல்லூரியில் நீண்டகாலம் ஆசிரியராகப் பணியாற்றி, நைஜீரியாவில் ஆசிரியப் பணி யினை மேற்கொண்டு இம்மாதம்முதல் பி. பி. ஸி. நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமாக அறிமுகமாகியுள்ளார்!
ஆனந்தி சூரியப்பிரகாசம், விமல் சொக்கநாதன், எஸ். பி. செல்வநாயகம், ஜெயலட்சுமி, ஏ. தாசீசியஸ்

73 கே.ஜி. மகாதேவா
ஆகியோர் இலங்கையைச் சேர்ந்த பி. பி. ஸி. தமிழோசை அறிவிப்பாளர்கள். இவர்களைவிட சங்கர் அவர்களுடன் கீதா - பாலா, மைதிரேலி கணேசன் ஆகியோரது குரலும் தமிழோசையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க தமிழோசையின் அளப்பரிய சேவை.
(14.12.85)
ஈழத்தில் ஒரு அமெரிக்கா
நிக்கவெரட்டியா பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது தொடர்பாக உரிமை கோரிய ஒரு இயக்கத்தின் செய்தி, பத்திரிகையில் வெளிவந்தது கண்டு ஒரு கூட்டம் விமர்சனம் செய்து கொண்டிருந்தது.
அந்த நேரம் பார்த்து அங்கு வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவர் நிலைமையைப் புரிந்துகொண்டு.
"..என்ன இருந்தாலும் எங்கட பொடியன்கள் அமெரிக்காவையும் விடல்ல. அங்கும் வெற்றிகரமாக கைவைத்துத்தான் இருக்கிறாங்க." என்று மகிழ்ச்சி கூறி விட்டுச் சென்றுவிட்டார்.
குழுமியிருந்த கூட்டத்தினருக்கு பெரியவர் குறிப்பிட்ட அமெரிக்க விஷயம் உடனடியாகத் தெரியவில்லை. பல நிமிடங்கள் கழித்துத்தான் பெரியவரின் ‘புதிர்’ புரிந்தது.
அவர் நினைத்தது. நிக்கராகுவா! (3105.85)

Page 39
கதையல்ல நிஜம் 74.
S. S. R. மில் நெடுமாறன் திருக்குறள்
பிரிட்டனின் ஒலிபரப்புச் சேவையான பி. பி. ஸி. பற்றி உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. காரணம் இந்தியச் செய்திகளுக்கு நம்மவர்கள் அடுத்த முக்கியத்துவம் கொடுப்பது, பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி களுக்குத்தான்.
ஆனால் பி. பி. Rக்கு ஒரு ‘பென்னம் பெரிய நூலகம் இருப்பது பலருக்குத் தெரியாது. அதிலும் ஒரு விஷயம்
இலங்கைக்கு அண்மையில் வந்துபோன காமராஜ் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ப. நெடுமாறன் அன்பளிப்புச் செய்த திருக்குறள் பி. பி. ஸி. நூலகத்தில் இருப்பதுதான்! இந்தத் திருக்குறள். திரு. நெடுமாறனுக்கு அவரது தந்தை கையெழுத்திட்டு அன்பளிப்புச் செய்த நூலாகும்!
திரு. நெடுமாறனின் யாழ்ப்பாண விஜயத்தை ‘பியிஸி, தமிழோசையில் “வாய்நிறையக் கூறிய திரு. சங்கர், திரு. நெடுமாறன் பி.பி.ஸி. நூலகத்துக்கு அன்பளிப்புச் செய்திருந்த திருக்குறள் விஷயத்தையும் ‘முடிச்சுப்போட்டு பெருமைபடச் சொல்லிவிட்டார்.
(13,1185)
இத்தாலியவாசிSன் கண்ணீர்க்கடிதம்
திரு. குயிடோ இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கு வயது இருபத்து ஒன்று இருக்கும். ஒரு வாரத்துக்கு முன்னர் இலங்கை வந்திருந்த அவர் தமது யாழ். நண்பர்

75 கே.ஜி. மகாதேவா
களைப் பார்க்க யாழ்ப்பாணம் வரப் புறப்பட்ட நேரத்தில், பெந்தோட்டையிலிருந்து 25.08.84 என்று திகதியிட்டு அவர் தமது யாழ். நண்பருக்கு அனுப்பிய கடிதத்தின் சில பகுதிகள்:
".உங்களை எல்லாம் நேரில் பார்த்து அளவளாவ ஆசைப்பட்டு இலங்கைக்கு ஓடோடி வந்தேன். கொழும்பு வந்து சேர்ந்ததும், உடனடியாகவே யாழ்ப்பாணம் வர விரும்பினேன். ரயில் நிலையம் சென்றேன். எத்தனை மணிக்கு யாழ்ப்பாணத்துக்கு ரயில் என்று விசாரித்தேன்.
"..என்ன யாழ்ப்பாணத்துக்கா? அங்கு ரயில் எதுவும் இப்பொழுது ஒடுவதில்லை. அநுராதபுரம் மட்டும்தான் ரயில் ஒடுகிறது." என்று பதிலளிக்கப்பட்டது. பஸ் நிலையம் சென்றேன். அதே பதில், தனியார் பஸ்கள், கார்கள் பற்றி அங்குமிங்கும் விசாரித்தேன். ரயில் நிலையத்தில் கூறியதிலும் பார்க்க பயங்கரமான காரணங்களைத் தெரிவித்து, யாழ்ப் பாணப்பகுதி மிகமிகக் கரச்சலான பகுதி என்றும், இங்கிருந்து பஸ்கள் எதுவுமே ஒடுவதில்லை என்றும் பயம்காட்டினர்! என்ன செய்யலாம்? ரயில் இல்லை. பஸ் இல்லை. கார் இல்லை. இந்த நிலையில், போக்குவரத்தே துண்டிக்கப் பட்டிருப்பதாக அச்சுறுத்தப்படும்போது நான் என்ன செய்யலாம்.? இந்தக் கடிதத்திலேயே ஆசை முத்தங்களைத் தெரிவித்து, கண்கலங்கிய நிலையில் விடை பெறுகின்றேன். இத்தாலியிலாவது நாம் சந்திப்போம்." என்று கடிதத்தில் முத்துக்களாக எழுதப்பட்டிருந்தது!
இவர் நேற்றுமுன்தினம் நாடு திரும்பிவிட்டார். இவர் ஆயிரத்தில் ஒன்றல்ல. நமக்குத் தெரியாமல் இவர் போல் எத்தனை.
(31.0884)

Page 40
கதையல்ல நிஜம் 76
தமிழர் துயர்துடைக்க இசைமழை
இலங்கைத் தமிழர் துயர் துடைக்க இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், பலவிதமான முயற்சிகள் - நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தெரிந்ததே. ஆனாலும், காதிலே விழாத செய்திகளும் உண்டு.
இலங்கைத் தமிழர் துயர் நீங்கவும், நிரந்தர சமாதானம் நிலவவும் வேண்டி தஞ்சைப் பெரிய கோவிலில் நாதஸ்வர 'மழை பொழியப்பட்டது!
நாதஸ்வரக் கலாநிதி வித்துவான் எம். பி. சேதுராமனும் மற்றும் பல சிறந்த நாதசுரக்கலைஞர்களும் இறைவனைப் பக்தியுடன் பிரார்த்தித்து, இரண்டு மணி நேரம் நாதசுர ‘அர்ச்சனை’ செய்தனர்.
இதே மாதிரி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் ஏராளமான நாதசுரக்கலைஞர்கள் ஒன்றுகூடி காணமழை பொழிந்தனர்!
இந்த இசை கானம், நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பையும் மெய்மறக்கச் செய்து, இறைவனிடமும் ஒலித் திருக்கும் என்று நேரில் பார்த்துப் பரவசமடைந்த பக்தர்கள் மெய்சிலிர்த்துக் கூறியிருக்கிறார்கள்!
(23.11.83)
ஈழத்தவிலுக்கு சென்னை வானொலி விதித்த தடை
தவில் மேதை என். ஆர். சின்னராசா அவர்களைத் தெரியாதவர்கள் நம் மத்தியில் இருக்கமுடியாது.

アァ கே.ஜி. மகாதேவா
நமது நாட்டின் புகழை தென்னிந்தியாவிலும் பரப்பி இசை உலகில் புகழ்க்கொடி நாட்டிவிட்டு நாடு திரும்பி யுள்ள அன்னாருக்கு இன்று காரைநகர் ஹரிஹரபுத்திர (ஐயனார்) கோவிலில் பாராட்டும், கெளரவமும் வழங்கப் படுகிறது.
தவில்மேதை சின்னராசா என்றதும் ஒரு சின்ன விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.
சென்னை வானொலி நிலையத்தில் பிரபல கிளாரினட் வித்துவான் ஏ. கே. ஸி. நடராஜனின் கிளாரினட் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏ.கே.ஸி.க்கு தவில் வாசிப்பவர் நம்மவர் சின்னராசாதான். அன்று ஒலிப் பதிவுக்குரிய நாள்.
“எனது பெயரைக் குறிப்பிடும்போது யாழ்ப்பாணம் சின்னராசா என்று சொல்லுங்கள்" என்று வானொலி நிலையத்தினரிடம் நமது தவில் மேதை சின்னக் கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாணம் என்றால் ‘அலர்ஜி யோ என்னவோ. வானொலி நிலையத்தினர் “யாழ்ப்பாணம்’ என்ற வார்த் தையைச் சேர்க்க மறுத்துவிட்டனர்.
விடுவாரா சின்னராசா? தவில் வாசிக்கமுடியாது என்று எழுந்துவிட்டார்.
ஏ.கேஸியும் ஒரு பெரும் கலைஞர்தானே! வானொலி நிலையத்தினரின் இந்தப் போக்கு அவருக்கும் பிடிக்க வில்லை, அவரும் எழுந்துவிட்டார்!
பின்னர் என்ன நடந்தது? தலையைச் சொறிந்து கொண்ட வானொலி நிலையத்தினர் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர். குறிப்பிட்ட நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பப்பட்டபோது வானொலி அறிவிப்பாளரின் குரல் இப்படி ஒலித்தது:
"ஏ.கே.ஸி. நடராஜன் கிளாரினட் வாசிப்பார். தவில் வாசிப்பவர் யாழ்ப்பாணம் சின்னராசா" தவில் மேதைக்கு நமது வாழ்த்துக்கள். (23.03.90)

Page 41
aabudbodab 78
சாகத்துடித்த சிங்கள பாதிரியார்
யாழ். பிரதான வீதியில் உள்ள அந்த மண்டபத்தில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஐக்கிய சமய ஸ்தாபனக் குழுவினரின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
முக்கியமான சில பிரச்னைகள் குறித்து அலசி ஆராய்ந்து கொண்டிருந்த அந்த உச்சக்கட்ட நேரத்தில் யாழ். நகரில் பெரியகடைப்பகுதியில் திடுதிப்பென்று நடை பெற்ற குண்டுவீச்சு, துப்பாக்கி வேட்டு சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.
".அந்த இடத்துக்குச் செல்லவேண்டும். நிலைமையை நான் நேரில் பார்க்கவேண்டும்.” இப்படித் துடிப்புடன் கூறினார் சிங்கள வண. பிதா ஒருவர்.
“போனால் சுட்டுக் கொன்றுவிடுவார்கள்." என்று கூறினர் இங்குள்ள சிலர்.
"சுட்டுக் கொன்றால்தான் நல்லது. அப்படியான தொரு செய்தி வெளிவந்தால்தான், சிங்களப் பாதிரி யாரையும் சுட்டுவிட்டார்கள் என்று உலகத்துக்குக் கூறலாம்." என்று மற்றுமொரு பாதிரியார் வாதாடியபோது.
"நீங்கள் நினைப்பது பிழை. உண்மை வெளிவராது. அதற்கு மாறாக சிங்களப் பாதிரியார் ஒருவரை புலி சுட்டு விட்டதாகத்தான் செய்தி வெளியே வரும்.” என்று ஒருவர் சொன்னதும், கூட்டத்தில் திடீர் அமைதி நிலவியது!
(190784)

79 கே.ஜி. மகாதேவா
தமிழோசை சங்கரின் காலக்குரல்
பி.பி.ஸி. தமிழோசை நிகழ்ச்சியைக் கேட்காதவர்கள் நம் மத்தியில் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அந்நிகழ்ச்சி நம்முடன் கலந்துவிட்டது.
கடந்த திங்கட்கிழமை (020490) பிபிஸி. தமிழோசையில் புலிகள் தலைவர் பிரபாகரனின் குரல் கணிரென ஒலித்ததை தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் ஆர்வத்துடன் கேட்டி ருக்கும்.
அந்தக்குரல் ஒலிக்க முன்னர், திரு. பிரபாகரனைப் பற்றிய வர்ணனையில்; "உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கெரில்லாத் தலைவர் பிரபாகரன்" என்று தெரிவித்தார் அறிவிப்பாளர்.
நேரம், காலம் அறிந்து செய்திபெறுவதில் - கூறுவதில் தமிழோசைக்கு நிகர் தமிழோசைதான்.
ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.
கடந்த வருடம் தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றிச்செய்தியை அறிவிப்பதற்கு முன்னர், தமிழோசை சங்கர் இப்படிக் குறள் பாடினார்:
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" vn
காலம் அறிந்து குரல் கொடுப்பதில்தான் எத்தனை தெளிவு! வேகம்!
(05:04.90)

Page 42
கதையல்ல நிஜம் 8O
இப்படியும் நடந்தது
யாழ்ப்பாணம் நோக்கி பஸ்ஸில் பிரயாணம்செய்த பெண்மணி ஒருவர் ஓரிடத்தில் சோதனைக்குள்ளானபோது, அவரது கைப்பையும் பரிசோதனைக்குள்ளானது.
சில நிமிட நேரத்தில் கைப்பை அப்பெண்ணிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதும் அந்தப் பெண் ‘ஓ’ என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டார்! காரணம்; அதற்குள் ளிருந்த சுளை சுளையான ‘தாள்கள்’ மறைந்துவிட்டன!
சம்பவம் அறிந்து, பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணிடம் வந்தார். விசாரித்தார். உடனடியாக ஸ்தல விசாரணை ஆரம்பமாகி அடையாள அணிவகுப்பும் நடந்தது!
குறிப்பிட்ட ஒரு நபரின் சட்டைப்பைக்குள் கையை வைத்து அந்தத் ‘தாள்களை’ அப்படியே அந்தப் பெண்ணிடம் அள்ளிக் கொடுத்தார் அந்த நல்ல உயர் அதிகாரி!
கையெடுத்துக் கும்பிட்டு, ‘தாள்களை'ப் பெற்றுக் கொண்ட அந்தப் பெண், வீடு போய்ச் சேர்ந்ததும்தான் எண்ணிப்பார்த்தார்.
என்ன ஆச்சரியம்! முதலில் கைமாறியது நாலாயிரம். பின்னர் பெண்ணின் கைக்குத் திரும்பியது ஏழாயிரம்! இடையில் வந்த மூவாயிரம்.? யார் வயிறு எரிந்ததோ!
(25.05.85)

81 கே.ஜி. மகாதேவா
சிங்கள செய்திக் கனிப்பு
"பஞ்சாப் பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்பட்டது குறித்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரதமர் ராஜீவ் காந்திக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்"
- அகில இந்திய வானொலி "இருபத்து நான்கு மணி நேரத்தில் பஞ்சாப் பிரச்னை தீர்க்கப்பட்டது" - இந்திய நடுநிலை ஏடுகள் பாராட்டு.
"பஞ்சாப் பிரச்னை குறித்து தீவிரவாதிகள் கருத்து வெளியிட மறுப்பு"
"பஞ்சாப் பிரச்னையில் தீவிரவாதிகள் எதிர்பார்த்த சுயாட்சி வழங்கப்படவில்லை”
- இலங்கை வானொலி “யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் நிற்கும் யாழ் தேவியின் என்ஜின் திறப்புகள் சனிக்கிழமை காலை பயங்கர வாதிகளினால் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ட ரூபவாஹினி. "பயங்கரவாதிகளினால் திறப்புகள் ஒப்படைக்கப் பட்டால், ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் வழமையாகலாம்”
- ரூபவாஹினி.
கொழும்பு “லங்கா புவத் (தீவிரவாதி - பயங்கர வாதி) செய்திக்கணிப்பு ஸ்தாபனம் வாழ்க!

Page 43
கதையல்ல நிஜம் 82
Uttis85tt (Déco Uttg55)
வெளிநாட்டு நிருபர்கள் என்றாலும் சரி, தென்னி லங்கைச் செய்தியாளர்கள் என்றாலும் சரி, யாழ்ப்பாணச் செய்தி என்றால்; அவர்களுக்கு ஒரு ‘புதையல் கிடைத்த மாதிரித்தான்.
இலங்கைப் படையினருக்கும் புலிகளுக்குமிடையே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வெளிநாட்டு நிருபர் எப்படியோ வடக்கே வந்து “நேரடி றிப்போர்ட்’ எடுத்து செய்தி வெளியிட்டாரானால். அது சர்வதேச செய்தியாகிவிடும்! இதேமாதிரி, இந்தியப்படையினருடன் புலிகள் யுத்தம் மேற்கொண்டபோது வெளிநாட்டுச் செய்தி யாளர் ஒருவர் இங்கு வந்து, நான்கு புகைப்படங்களுடன் ஒரு செய்தியும் வெளியிடுவாரானால் அதுதான் அன்றைய முக்கிய உலகச் செய்தி.
1987 அக்டோபருக்குப் பின்னர் செய்தியாளர்கள்; அதாவது இந்தியாவிலுள்ள உள்ளூர் - வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள்; புதுடில்லியோ அல்லது பங்களூரோ அல்லது சென்னையோ எங்கிருந்தாவது எந்தவித கட்டுப் பாடுகளுமின்றி, குறிப்பாக ‘விசா’ இல்லாமலேயே இந்தியப் படை விமானங்களில் யாழ்ப்பாணத்தை (பல நேரங்களில் விமானத்தில் பறந்தவாறே சுற்றிப் பார்த்து செய்தி அனுப்பியது நாம் அறிந்ததே.
இந்த நாட்டுப் பிரஜையான நாங்களே யாழ்ப்பாணத்தி லிருந்து கொழும்பு போக பல கெடுபிடிகள் இருக்க, அவர்கள் தாராளமாக கடல் கடந்து வந்து தகவல்கள் அனுப்பினார்கள். கயிறும் திரித்தார்கள். சும்மா சொல்லக் கூடாது. இங்கு வந்த அகில இந்திய வானொலி செய்தி யாளர்கள், அசல் மண்ணைக்கொண்டே கயிறை திரித்து விட்டார்கள்! இவர்கள் தகவல்கள் அனுப்பி, வானொலியில்

83 கே.ஜி. மகாதேவா
செய்திகளும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படும் போது அதைக்கேட்க சிரிப்புத்தான் வரும்!
நேற்று முன்தினம் வெளிநாட்டு நிருபர் ஒருவருடன் காங்கேசன்துறை போயிருந்தேன். இந்தியப்படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த இரண்டு இந்திய வானொலிச் செய்தி யாளர்களைச் சந்தித்தோம். அவர்கள் சொன்னது இதுதான்: “யாழ்ப்பாணத்தில் என்ன ஸார் இப்பொழுது நடக்கிறது? நேரில் பார்த்து றிப்போர்ட் அனுப்பலாம் என்றால் யாழ்ப்பாணம் செல்ல அமைதிப்படை அதிகாரிகள் அனுமதி மறுக்கிறார்கள் ஸார். நீங்களாவது ஏதாவது நியூஸ் கூறுங்களேன்."
(1103.90)
"கடிதவேகம் இது
இலங்கைத் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களுக்கான தகுதிகாண் பரீட்சை இம்மாதம் பன்னிரண்டாம் திகதி நடந்தது.
ஆனால் இப்பரீட்சைக்குரிய அனுமதி அட்டையும் நேர அட்டவணையும் கிடைத்தது இம்மாதம் பதினான்காம் திகதி அதாவது பரீட்சை நடைபெற்ற இரண்டு தினங்கள் கழித்து.
அருமையான கழுத்தறுப்பு!
(X 8 «Х»
சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனின் பரீட்சைப் புள்ளித்திரட்டு, அந்த மாணவனின் சொந்த (ஏழாலை) ஊர் விலாசத்துக்கு

Page 44
கதையல்ல நிஜம் 84
தபாலிடப்பட்டபோது, அந்தக் கடிதம் மிகுந்த ‘பிரசவ' வேதனைக்குள்ளாகி உரியவரின் பெற்றோருக்குக் கிடைத்தி ருக்கிறது.
காரணம்; அக்கடிதம் சென்னையில் இவ்வருடம் ஜனவரி மாதம் இருபத்து மூன்றாம் திகதி தபாலிடப்பட்டு ஏழாலைக்கு இவ்வருடம் அக்டோபர் மாதம் பதினான்காம் திகதி வந்து சேர்ந்திருக்கிறது!
தாமதித்துப் போவதற்கு ஆமை வேகம், நத்தை வேகம் என்று உதாரணப்படுத்துவதைக் கைவிட்டு இனிமேல் ‘கடித வேகம்’ என்றால் மிகவும் பொருந்தும்!
(21.10.85)
உண்மைகள் கசக்கும்
"மாணவர்களே! செய்தித்தாள்களைப் படிக்கவே படிக்காதீர்கள்! பயங்கரமான புளுகுகளையே செய்தித் தாள்கள் எழுதுகின்றன!"
இப்படிக் கூறியிருக்கிறார் திரு. ராஜீவ்காந்தி!
விஸ்வபாரதி பல்கலைக்கழகப் பேச்சின்போதே திரு. ராஜீவ்காந்தி மேற்படி கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
(நன்றி. குங்குமம்)
அடிக்குறிப்பு: திரு. ராஜீவ்காந்தி ஆட்சிக்காலத்தில் விஸ்வரூபம் எடுத்த போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலை, அதாவது 64 கோடி ரூபா லஞ்ச ஊழலை அம்பலப் படுத்தியது செய்தித்தாள்கள்தான். குறிப்பாக இந்து' என்று கூறலாம். இதன் எதிரொலியாக இந்து'வின் சக ஆசிரியர் திரு. என். ராம் சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டி ருந்ததும் தெரிந்ததே!

85 கே.ஜி. மகாதேவா
பிந்திக்கிடைத்த தகவல்: சென்னையிலிருந்து வெளி யாகும் ஜூனியர் போஸ்ட் (09:0390 முதல் பக்கச் செய்தியின் தலைப்பு இது:
"போஃபர்ஸ் ஊழல். லஞ்சம் வாங்கியவர்கள் யார் யார்? அரசுக்கு வந்துசேர்ந்துவிட்ட விஐ.பி. பெயர்ப் பட்டியல்!”
சும்மா சொல்லக்கூடாது; திரு. ராஜீவ் காந்தி கூறியது போல. செய்தித்தாள்கள் (உண்மைகள்) சிலருக்கு கசப்பாகத் தானிருக்கும்!
(2003,90)
தலைகுனிந்த சிங்களர்
இது ஒரு கடிதம். முதலில் கடிதத்தைப் படியுங்கள்.
"ஐந்து வருடங்களாக நான் சவூதி அரேபியாவில் கடமையாற்றி வருகின்றேன். ஆனால் கடந்த நான்கு மாதங் களாக சுமார் அறுபது தடவைகளுக்கும் மேலாக, இங்குள்ள அமெரிக்கர்கள், பிரிட்டிஷ்காரர்கள், அரேபியர்கள், இந்தியர்கள் மற்றும் பல்வேறு தேசத்தவர்களால் நான் ஒரு இலங்கைச் சிங்களவனா அல்லது தமிழனா என்று கேட்கப் பட்டுவிட்டேன்! முன்பெல்லாம் நான் என்னை, ஒரு சிங்களவன் என்றே பெருமையுடன் கூறிக்கொள்வேன். ஆனால், இலங்கையில் அண்மையில் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்டவர்கள் என்னைச் சிங்களவனா என்று கேட்டபோது ‘ஆம்’ என்று மிகுந்த சிரமத்துடனேயே கூறி வந்தேன். அப்போது அவர்கள் "அப்படியானால் உங்களுடைய ஆட்கள்தானா இலங்கையில் தமிழர்களைக் கொலை செய்கிறார்கள்?” என்று என்னிடம் திருப்பிக் .ேட்பார்கள். அதற்கு நான் பதில் சொல்லமுடியாது தலை குணிய வேண்டியதாக இருந்தது. எனவே, எதிர் காலத்தி

Page 45
கதையல்ல நிஜம் 86
லாவது இனவெறி பிடித்தவர்களுக்கு இடங்கொடாது ஒரு ஒற்றுமை மிக்க இலங்கையை நாம் கட்டி எழுப்புவோம்."
இக்கடிதம் வந்தது நேற்றைய "சன்' ஆங்கில நாளிதழில். எழுதியவர்; சவூதி அரேபியா றியாட்டைச் சேர்ந்த டி. என். பிரேமசிறி.
(08.12.83)
UMLFMF)80 9Ulvst GepDRåf
தமிழ்நாட்டில் இன்று ஐந்து லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகும் 'தினத்தந்தி’ பத்திரிகையில் வெளிவந்த செய்தி இது:
இலங்கைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணியின் பெயரை சேலம் அருகேயுள்ள பள்ளிக் கூடத்திற்கு தமிழ்நாடு சபாநாயகர் திரு. இராசாராம் குட்டினார்.
சிங்கிபுரம் என்ற கிராமத்தில் ஒரு லட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட பள்ளிக்கூடக் கட்டிடத்தை சபா நாயகர் இராசாராம் திறந்து வைத்தார். அந்தக் கட்டிடத் துக்கு இலங்கைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணியின் பெயரைச் சூட்டினார்.
“காலையில் இருந்து நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் என் எண்ணம் எல்லாம் இலங்கையில் நடக்கும் பேச்சுவார்த்தை நல்லபடியாக நடக்கவேண்டும் என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. வரும் போதே இலங்கை விடுதலைப்புலி குட்டிமணியின் பெயரை ஒரு பள்ளிக்கூடத்துக்கு சூட்டவேண்டும் என நான் எண்ணினேன். அதற்கு பொருத்தமான இடம் எது என்று அதிகாரிகளைக் கேட்டேன். அவர்கள் சிங்கிபுரத்தை தேர்ந்து எடுத்தார்கள். சிங்கிபுரத்துக்கு விடுதலைப்புலி குட்டிமணியின்

87 கே.ஜி. மகாதேவா
பெயரைச் சூட்டுவது மிகவும் பொருத்தமானது என்று நான் கருதுகிறேன்" என்று தமிழ்நாடு சபாநாயகர் திரு. இராசா ராம் பாடசாலை பெயர் சூட்டும் வைபவத்தில் தெரிவித்தார்.
(10.10.83)
முதலையைப் பதம் Uார்த்த இளம்Uெண்
அவள் ஒரு பாடசாலை மாணவி. ஒன்பதாம் வகுப்பில் கல்வி பெறும் அவளுக்கு வயது பதினான்கு.
விடுமுறை கழிக்க இவரது வீட்டுக்கு மூத்த சகோதரி கடந்த வாரம் வந்திருந்தார். ஒரு நாள்
இளையவள் வீட்டில் தையல் மெஷினில் சட்டை தைத்துக் கொண்டிருக்க, மூத்தவள் வீட்டருகிலுள்ள ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தாள்.
திடீரென அக்காவின் அலறல் சத்தம் பயங்கரமாக ஒலிக்கவே; கையிலிருந்த கத்தரிக்கோலுடன் ஓடினாள் இளையவள். அங்கு அவள் கண்ட காட்சி.
அக்காவின் கால்களை ஒரு முதலை கெளவி இழுத்துக் கொண்டிருந்தது! அந்த மாணவி என்ன செய்தாள்?
ஆற்றில் குதித்தாள். நீந்தினாள். முதலைக்கு அருகே தனித்துச் சென்று, தனது கையிலிருந்த கத்தரிக்கோலால் முதலையின் கண்ணை ஓங்கிக் குத்தினாள்.
முதலையின் கண்களிலிருந்து இரத்தம் பீறிட்டது. முதலை தடுமாறி தலைமறைவாகிவிட்டது.
சகோதரியை வாரி அணைத்துக்கொண்டு கரை சேர்ந்தாள் அந்த மாணவி!

Page 46
கதையல்ல நிஜம் 38
இது நடந்த இடம்: அம்பலாந்தோட்டை மாணவியின் பெயர்: சந்திராணி.
வீரம் எங்கு இருந்தாலும் பாராட்டத்தான் வேண்டும்.
(0109.84)
பம்பாயை மிஞ்சிய கொழும்பு
பம்பாய்க்கு ஒருதடவை நான் சென்றிருந்தபோது, குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு நண்பரொருவருடன் போயி ருந்தேன். அங்கு, ஒரு சிலமணி நேரத்துக்குள்ளாகவே உங்கள் தேவையைப் பூரணமாக நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம். “தேவை’ என்றால் நீங்கள் விரும்பும் ஒரு பொருள். ஒரு தஸ்தாவேஜ" நகலைக் கொடுத்தால் போதும். அணு அளவும் பிசகாமல், சாட்சாத் ஒரிஜினலாக கைக்குத் திரும்பி விடும்! அந்த அளவுக்கு பல துறைகளிலும் கைதேர்ந்த 'நிபுணர்’கள் பம்பாயில் இருக்கிறார்கள். ۔۔۔۔ـ
பம்பாயுடன் கொழும்பை ஒப்பிடலாமா? சர்வதேச போதைவஸ்துக்களின் சுதந்திரமான நடமாட்டம் பம்பாய் இங்கு பிச்சை வாங்கவேண்டும்! மூலைமுடுக்கெல்லாம் நாறுகிறது! தஸ்தாவேஜ"வைப் பொறுத்தமட்டில் இன்று அவசர அவசியமாகிவிட்ட ‘பாஸ்போர்ட் கதை எப்படி இருக்கிறது?
எந்தவிதமான முக்கிய தஸ்தாவேஜுகளும் இல்லாமலே ‘ஒரிஜினல்’ பாஸ்போர்ட்டுகள் கைக்கு சீக்கிரமாகவே (தொகையைப் பொறுத்து) வந்து விடுமாம். ஆனால் விமான நிலையத்தில்தான் வகையாக மாட்டிக்கொள்வீர்களாம். காரணம்- புகைப்படத் தலைமாற்றம், அடையாள அட்டை மாற்றம், பிறப்புச்சாட்சிப் பத்திரம் மாற்றம். ஏன், பிறந்த ஊர், பிறந்த திகதி எல்லாமே தலைகீழாகித்தான் உங்கள்

89 கே.ஜி. மகாதேவா
கைக்கு ‘பாஸ்போர்ட்’ வந்து சேருகிறதாம். எல்லா விபரங் களையும் நினைவில் வைத்திருக்க முடியுமா என்ன?
அவசர விஜயத்தை மேற்கொண்டு பின்கதவால் நுழைவோருக்கு இது சமர்ப்பணம்!
(23.03.85)
êðČUgaqib GB č986Toow!
தற்கொலைகள் எத்தனை வகைப்படும்?
கிருமிநாசினி, சுருக்கு, நீரில் குதித்து, தனக்குத் தானே தீக்குளிப்பு, ஒடும் வாகனம் முன். என்றுதான் நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாங்ஹொக்கில் பயங்கரமான முறையில் ஒரு தற்கொலைச் சம்பவம் நடந்துள்ளது!
பாங்ஹொக்கில் ஒரு புறநகர்ப் பகுதியில், முதலைப் பண்ணை ஒன்று இருக்கின்றது. பல நூற்றுக்கணக்கில் காணப்படும் இம்முதலைகளை வேடிக்கை பார்க்க, தினமும் ஏராளமான உல்லாசப் பிரயாணிகள் வருவார்கள்.
அதிகமான இராட்சத முதலைகள் வாயைப் பிளந்து கொண்டு வாழும் ஒரு குளமும் இங்கு உண்டு.
முதலைகளைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த உல்லாசப் பிரயாணிகள் மத்தியில் திடீரென சிறு சலசலப்புக் காணப்பட்டது! "நான் சாகப்போகிறேன். என்னைச் சாக விடுங்கள்." என்று ஒருவர் துடித்துக் கொண்டிருந்தார்! எப்படியோ, அங்கிருந்த சிலர் அவரை மடக்கிப்பிடித்து, ஆறுதல் கூறி தற்கொலை முயற்சியைக் கைவிடச் செய்தனர்.
பதினைந்து நிமிடங்கள் சென்றிருக்கும்; தடார்’ என்று அந்த பயங்கர இராட்சத முதலைகள் வாழும் குளத்தில் குதித்துவிட்டார் அவர்!

Page 47
கதையல்ல நிஜம் 90
பின்னர்.? அவ்வளவுதான்! பெரு முதலை ஒன்றின் வாயிலிருந்து சிதைந்த நிலையில் பிணமாக அவர் மீட்கப் பட்டார்.
அந்த முதலைப் பண்ணையின் நிர்வாகத்தினர்; "நாற்பது வருடச் சரித்திரத்தில் இப்படி ஒரு தற்கொலைச் சம்பவம் இங்கு நடந்தது இதுதான் முதல் தடவை. தவறிக் கூட ஒருவர் முதலைக் குளத்தில் விழுந்ததில்லை” என்று மூக்கில் விரலை வைக்கின்றனர்!
மேலதிக அதிர்ச்சி. தற்கொலை செய்து கொண்டவர் ஒரு பெண். வயது 25.
(2103,90)
துவேஷ பத்திரிகையாளர்
இம்முறை கொழும்புக்குச் சென்றபோது, தெற்கில் நாலைந்து ஊர்களுக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது.
குறிப்பாக இன்றைய யாழ்ப்பாணம் பற்றி 'வாய் நிறைய’ப் பேசி, ஒரு முறை தாங்களும் நேரில் விஜயம் செய்யப்போவதாக விருப்பம் தெரிவித்தனர்.
இவர்களில் இளைஞர்களும் இருந்தனர். வயோதிபர் களும் காணப்பட்டனர்.
“இது எங்கள் நாடு. நாங்கள் அனைவரும் இங்குதான் வாழப்போகின்றோம். என்ன பிரச்னை என்றாலும் பேசித் தீர்க்கவேண்டியதுதான். புலிகள் கேட்பது என்ன என்றாலும் அவற்றை அரசு முழு மனதுடன் கொடுத்து விடவேண்டியது தான். அதில் எங்களுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. என்ன விதத்திலும் நாட்டில் அமைதி நிலவவேண்டும். இதுவே இந்த நாட்டுச் சிங்களமக்களின் கருத்துமாகும்."

91 கே.ஜி. மகாதேவா
இவ்வாறு ஒட்டுமொத்தமாக - ஒரு ஆர்வத்தின் தூண்டுதலால் (சிங்கள மக்களின் ஏகப்பிரதிநிதிகள் போல) கருத்து வெளியிட்டனர்.
ஆனாலும் ஒரு மூத்த சிங்கள பத்திரிகையாளரைச் சந்தித்து, நான் ஏற்கனவே சந்தித்த சிங்கள அன்பர்களின் கருத்தை வெளியிட்டபோது அவர் முகம் அவ்வளவாக விரியவில்லை. இவர் முன்னர், சிங்களத் தினசரி லங்கா தீப செய்தி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
சில ஆங்கில நாளிதழ்களில் விஷமத்தனமான கட்டுரைகள்- கார்ட்டூன்கள் வருவது பற்றி முன்னர் இங்கு குறிப்பிட்டிருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். ஆங்கில ஏடுகளே இப்படி என்றால்; இவற்றின் சகோதர சிங்கள நாளிதழ்களில்..!
(1604,90)
8f0eUrl ઈOિuા
ஹாஹ்ஹா.ஹி..ஹி..ஹி. மன்னிக்கவும். உங்களுக்குச் சிரிக்கத் தெரியுமா?
“பொம்பிளை சிரித்தாலும் போச்சு. பொயிலை விரிச்சாலும் போச்சு" என்பார்கள். நான் இதனைச் சொல்லவில்லை. சிரிப்பதனால் பல நோய்கள் தீருகின்றன என்று சுவீடன் நாட்டு டாக்டர் ஒருவர் கண்டுபிடித் திருக்கிறார். அதனைத்தான் உங்களுக்குச் சொல்ல வந்தேன்.
டாக்டர் லார்ஸ் ஜூங்டால், ஒரு சுவீடிஷ் டாக்டர். தாம் நடத்திய பரிசோதனைகளில்; சிரிப்பதன் மூலம், சிறு சிறு நோய்களை, குறிப்பாக வலிகளை முற்றாக நீக்க முடியு மென்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Page 48
கதையல்ல நிஜம் 92
கடந்த புதன்கிழமை செய்தியாளர்களிடம் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட மேற்படி டாக்டர்; "1987ல் ஆறு நோயாளர்கள்மீது பரிசோதனை மேற்கொண்டேன். இவர்கள் அனைவரும் கடுமையான கழுத்து, தோள், மூட்டு வலிகளினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தனர். இவர் களுக்கு பதின்மூன்று வாரகால சிகிச்சை அளித்தேன். சிகிச்சை என்றால் என்ன தெரியுமா? முழுக்க முழுக்க வாய் விட்டுச் சிரிக்கக்கூடிய துணுக்குகள், சஞ்சிகைகள், திரைப் படங்கள்தான் அவர்களுக்கு அளிக்கப்பட்ட 'மருந்து’கள். முற்றாகவே குணமாகிவிட்டனர்" என்று மகிழ்ச்சியுடன் கருத்து வெளியிட்டுள்ளார். “சிரிப்பே சிறந்த செல்வம்’ என்பது அவரது கண்டுபிடிப்பு.
உங்களுக்கும் இதுபோன்ற கழுத்துச் சுளுக்கு அல்லது தோள்மூட்டு வலி ஏற்பட்டால் சும்மா சிரித்துப் பாருங் களேன். சிரிப்பென்றால் உண்மையான சிரிப்பாக இருக்க வேண்டும். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் பாடியது போல அதிகாரச் சிரிப்பு. ஆணவச் சிரிப்பு. என்று இருந்து விடக்கூடாது.
(19.04.90)
சசிபாரதிக்கு இலக்கிய கழுத்தநுப்பு
அவர் ஒரு பிரபல பத்திரிகையாளர். எழுத்தாளர். "புள்ளிகளை ஆண்ட மன்னன்’ என்று கூடச் சொல்லலாம். அவர் நேற்று "கழுத்தறுப்பு’க்கு (மன்னிக்கவும், இலக்கிய உலகுப் புறக்கணிப்புக்கு) உள்ளாகியுள்ளார்.
நேற்று இலக்கிய அமைப்பொன்றின் கூட்டமொன்று நல்லூரில் நடைபெற்றது. ஆண்டுவிழாவாக நடத்த இருந்ததை மிகவும் இரத்தினச் சுருக்கமாக, ஆண்டுக் கூட்டமாக, புதிய நிர்வாகிகள் தெரிவுக் கூட்டமாக நடத்தினர்.

93 கே.ஜி. மகாதேவா
நான் மேலே குறிப்பிட்ட ‘அவர்’ அந்தக் கூட்டத் துக்குச் சற்றுத் தாமதித்துப் போனார்.
“என்ன நிர்வாகிகள் எல்லாம் தெரிவாகிற்றா." என்று கேட்டார். "ஒமோம்” என்று பதில் வந்தது.
இவருக்கு நிர்வாகிகள் தெரிவிலோ அல்லது செயற் குழுவிலோ ஓர் இடமும் இல்லை!
முகம் கறுத்து, மிகவும் கோபாவேசத்துடன் கூட்டத் தையே விட்டு (பல தடவைகள் அவரை புதிய நிர்வாகிகள் அழைத்தும்) வெளியேறி விட்டார்!
புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளர்: "சசிபாரதி” சு. சபா ரத்தினம்.
சில பிளஸ் பொயின்டுகள்' () 25 ஆண்டுகளையும் கடந்துவிட்ட அந்த யாழ். இலக்கிய அமைப்பின் ஸ்தாபகர் களில் ஒருவர் "சசி பாரதி. (2) அந்த இலக்கிய அமைப்பின் தலைவராக இருந்து திறம்படச் செயல்பட்டவர். (3) அமரர் இரசிகமணி கனக செந்திநாதனுடனும், அமரர் மதுரகவி நாகராஜனுடனும், யாழ்வாணனுடனும் கைகோர்த்து அந்த இலக்கிய அமைப்பே மூச்சு என்று வளர்த்தவர்.
சும்மா சொல்லக்கூடாது. பண்டைக்கால இலக்கியங் களைப் புரட்டிப் பார்க்கிறோம். ஆனால் பழைய இலக்கிய வாதிகளைப் புரட்டியே விடுகின்றோம்!
(1907.89)
தியாகப் புறாl
விடிவுக்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போது, பல தந்திரங்கள் கடைப்பிடிக்கப்படுவதுண்டு.
1917ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, இராணுவ இரகசியம் அடங்கிய

Page 49
கதையல்ல நிஜம் 94
முக்கிய செய்தி ஒன்றை ஒரு புறாவின் காலில் இணைத்து, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.
செய்தியுடன் புறா பறந்து கொண்டிருந்தபோது. ஜேர்மன் நாட்டு இராணுவ வீரர் ஒருவர் அந்தப் புறாவைக் குறி பார்த்துச் சுட்டுவிட்டார்.
மரணத்துடன் போராடிக் கொண்டே பறந்து சென்று தலைமை அலுவலகத்தில் இராணுவ உயர் அதிகாரி முன்பாக அவர் மேசை மீது புறா நின்றது. இரட்டிப்பு சந்தோஷ மடைந்த அந்த இராணுவ உயர் அதிகாரி அவசரம் அவசர மாக புறாவின் காலில் இணைந்திருந்த செய்தியைப் பெற்று, அதனை வாசித்துக்கொண்டே நன்றி கூறுவதுபோல் அந்தப் புறாவைத் தடவிக் கொண்டிருந்தார். கையில் ஏதோ கசிவு ஏற்பட்டதைத் திடீரென உணர்ந்த அந்த இராணுவ அதிகாரி, இராணுவச்செய்தியை வாசிப்பதை நிறுத்திவிட்டு புறாவைப் பார்த்தார்.
கையில் ஏற்பட்டது புறாவின் காலிலிருந்து கசிந்த இரத்தம்தான். ஆச்சரியத்துடன் அந்தப் புறாவை இராணுவ அதிகாரி அணைப்பதற்கு முன்னதாகவே, அது மரணத்தைத் தழுவிக்கொண்டது!
புறாவின் உடல் அழிய விடாமல் மிகவும் மரியாதை யுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. லண்டன் நூதன சாலைக்குச் சென்றால் இன்றும் அந்த தியாக விருது பெற்ற வீரப் புறாவை நீங்கள் பார்க்கலாம்!
(25.05.90)
அரச அந்தஸ்து பாரீர்
இந்த நாட்டில் தமிழ்மொழிக்கு அளிக்கப்பட்டி ருக்கும் அந்தஸ்து என்ன?

95 கே.ஜி. மகாதேவா
எங்களை (அதாவது தமிழர்களை)க் கேட்டால் தெரியும் என்ன பதில் சொல்வது என்று. ஆனால் அரசாங்கத்தைக் கேட்டால்.?
"இதென்ன விசர்க் கேள்வி! எங்களது சிங்கள மொழி யுடன் உங்களது தமிழுக்கும் அல்லவா சம அந்தஸ்து கொடுத்து, அரசகரும மொழியாக்கியிருக்கின்றோம்." என்று அரசு கர்ஜிக்கும்.
இதற்கு ஒரு சின்ன உதாரணம் அண்மையில் நடந்தி ருக்கிறது. இதனைச் சாதித்தவர்கள் இம்மண்ணின் மைந்தர் களான விவசாயிகள்தான்! சரி விஷயத்துக்கு வருவோம்.
மக்கள் வங்கியில் பதவி உயர்வு சம்பந்தமாக, அம்பாறை மாவட்ட கிழக்குக் கரையோரப் பிரதேச விவசாயிகள் சம்மேளனம் பிரதமமந்திரிக்கு மகஜர் ஒன்று அனுப்பி யிருந்தது. அதில் முக்கிய சில கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டிருந்தன. ஆனால் இம் மகஜருக்கான பதில் சிங்கள மொழியிலேயே கிடைத்தது. விவசாயிகள் சம்மேளனம் என்ன செய்தது?
"உங்களது பதில், சிங்களத்தில் அனுப்பப்பட்டுள்ளது. தமிழும் அரச கரும மொழியாக்கப்பட்ட பின்னரும் தமிழில் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு சிங்களமொழி மூலம் அனுப்பப் பட்ட பதிலை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எனவே உங்கள் கடிதத்தை இத்துடன் திருப்பி அனுப்பு கின்றோம். தயவுசெய்து பதிலை தமிழில் அனுப்பிவையுங்கள்” என்று மேற்படி விவசாயிகள் சம்மேளனம் பிரதம மந்திரிக்கு மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
ஒரு இனத்துக்கு பெயரளவில் எவ்விதம் அரச அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு மேற்படி விஷயம் (அதுவும் பெரிய இடத்துக் கடிதம்) சரியான மதிப்பீடு!
(30.05.90)

Page 50
கதையல்ல நிஜம் 96
88sfosteolyt orb - és.cgi?
"ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், எமது தமிழ்த் தேசிய உடையணிந்து பாடசாலைக்கு வரவேண்டும். குறிப்பாக, வெள்ளிக்கிழமையிலாவது, இத்தேசிய உடை அணியும் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்."
இவ்வாறு, வடபிராந்திய கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். சுந்தரலிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க எழுச்சி மகாநாட்டில் சொன்னாலும் சொன்னார். வேட்டிக்கே "வேட்டு வைக்கு மளவுக்கு கருத்துக் கணை”கள் எழத் தொடங்கிவிட்டன.
எழுச்சி மகாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் போதும், வெளியிலும் காதிலே கேட்டவை இவை:
"தேசிய உடை (அதாவது வேட்டி) கட்டினால்தான் தமிழ் ஆசிரியர் என்று பொருளா? அல்லது தனித்துவமா?
"ஆசிரியர்கள் புதிதாக வேட்டி அணியவேண்டும் என்றால் ஏற்கனவே காலம் காலமாக வேட்டி கட்டும் ஆசிரியர்களுக்கு ஏதாவது ‘ஊக்குவிப்பு போனஸ்’ கிடைக்குமா?
"புதிதாக வேட்டி கட்டுவதென்றால் வேட்டி வாங்க விசேட படி கிடைக்குமா?
"புதிதாக வேட்டி கட்டத் தொடங்கினால் இவருக்கு ஐம்பதாகி விட்டது' என்ற மனோநிலையை ஏற்படுத்தாதா? இந்த (மற்றவர்களின் கேலி) மன உளைச்சலினால் புதிதாக வேட்டிகட்டப்போகும் ஆசிரியருக்கு ஓரிரு வயது கூடாதா?
"ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த யோசனை? கல்வித்திணைக்கள ஊழியர்கள் அனைவருமே வேட்டிக் கட்டினால் என்ன?

97 கே.ஜி. மகாதேவா
*வேட்டி அணிவதென்றால். ஐம்பது வயதுக்குள் ஒரு கலாசாரம்? ஐம்பது வயதுக்கு மேல் ஒரு கலாசாரமா ?
"நீள் காற்சட்டை என்றால் ஒரு கிழமைக்கும் உபயோகிக்கலாம். வேட்டி என்றால் தினம்தினம் மாற்றி ஆகவேண்டுமே? ஏழை ஆசிரியர்களின் நிலை என்ன ஆகும்?” என்று கொந்தளித்தனர்.
பயிலுநர் ஆசிரியர் ஒருவர் கூறுகிறார்: வேட்டி கட்ட நாங்கள் தயார். வயது வித்தியாசமின்றி ஆசிரியர்கள் அனைவருமே வேட்டி அணிவார்களா?
(1106.90)
DGsatcéféU).
இம்மாத ஆரம்பத்தில் திருகோணமலையில் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ்த் தின விழா நடைபெற்றது.
போட்டியில் கலந்துகொண்ட வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் வில்லிசை நிகழ்ச்சி புறக் கணிக்கப்பட்டது துயரச் செய்தியாகும்!
திருமலை தமிழ்த் தினவிழாவில் கலந்துகொண்ட வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் வில்லிசை நிகழ்ச்சி எப்படி இருந்தது? "அற்புதமாக இருந்தது!" என்று சொன்னவர்கள் நாங்கள் அல்ல. பார்வையாளர்கள் மட்டு மின்றி, முதலிடத்துக்கு வந்து வெற்றிபெற்ற குழுவினரே புகழாரம் சூட்டியுள்ளனர்!
"உங்கள் நிகழ்ச்சி மிக அற்புதம். ஆனால் எமக்கு ஒரு குருட்டு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது" என்று அவர்கள் மனம் திறந்து பாராட்டியுள்ளனர். ஆனால் கிழக்கு மாகாண மத்தியஸ்தர்கட்கு மட்டும் ஏனோ பிடிக்கவில்லை!

Page 51
கதையல்ல நிஜம் 98
“ரூபவாஹினி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பல கல்விமான்களினாலும், பிரமுகர்களினாலும் பாராட்டப் பட்ட மேற்படி மாணவிகளின் வில்லிசை நிகழ்ச்சி, தமிழ்த் தினவிழா மத்தியஸ்தர்களுக்கு மட்டும் ஏன் கசந்தது? ஏன் இந்தக் காழ்ப்புணர்ச்சி? .
தமிழன் தலைநகரமாம் திருமலையில், தமிழன் தன் மொழிக்காக எடுத்த தலைசிறந்த விழாவில், அந்த இந்து மகளிர் மாணவிகள் தூக்கி எறியப்பட்டதற்குக் காரணம். (பச்சையாகத்தான் கேட்கின்றோம்). வடமராட்சியின் மூளை வளத்தை’ப்பற்றி அந்த வில்லிசையில் மிகவும் உயர்வாகக் கூறியதுதானா..? உங்கள் மனச்சாட்சியிடமே இதனை விட்டு விடுகின்றோம்!
(1206.90)
தழிழ் அமுலாக்கம் பாரீர்
அரசகரும மொழியான தமிழின் நிலை பற்றியும், அதன் அமுலாக்கம் குறித்தும் வாசகர்கள். நன்கு அறிவார்கள்.
2000ம் ஆண்டு யாவருக்கும் எல்லாம்’ போல்; தொடர்புகளனைத்தும் தமிழ்மொழியில் என்றாகிவிடும் என்று நீங்கள் மகிழ்கிறீர்கள் போலும்!
ஏன் 2000க்குப் போகிறீர்கள்? 1990லேயே நிற்போம்!
கல்வி ராஜாங்க அமைச்சர் திருமதி. ராஜமனோகரி புலேந்திரனின் முயற்சியால் அண்மையில் கல்வியமைச்சில் தமிழ்ப்பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் நோக்கங்களில் ஒன்று சுற்றுநிருபங்களைத் தமிழில் மொழி பெயர்த்து அனுப்புதல் என்றும் அறிவிக்கப்பட்டது.

99 கே.ஜி. மகாதேவா
நிலைமை இவ்வாறிருக்க, அந்தத் தமிழ்ப்பிரிவில் அண்மையில், கொழும்பில் அமைச்சினால் நடத்தப்பட வுள்ள அகில இலங்கைத் தமிழ்த் தினவிழா பற்றி பத்திரிகை யாளர்களுக்கு விளக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவருமே தமிழர்கள்தான். திருமதி ராஜமனோகரி தமிழில் பேசி அளவளாவினார். அமைச்சின் தமிழ் அதிகாரி ஒருவரும் இது பற்றி விரிவாக விளக்கினார். "தமிழ் மாணவர்களின் தமிழறிவை மேம்படுத்துதல்; அவர்களின் தமிழ்மொழித் தரத்தை உயர்த்துதல் என்பன இவ்விழா நடத்துவதன் முக்கிய நோக்கமாகும்” என்றார்
96)lft.
ஒரு சின்ன விஷயம். கொஞ்சம் அருகே வாருங்கள். அந்தத் தமிழ் அதிகாரி பேசியது சுத்த ஆங்கிலத்தில்தான்!
(1306,90)
ஆலயமணிக்கு
ஆலயமணியின் ஓசை என்ன செய்யும்?
இது ஒரு கதை அல்ல. மண்ணின் உண்மை நிலை, படித்துப்பாருங்கள்:
வடபகுதி ஆலயங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்யவும், பூசகர்கள் விதிமுறைப்படி பூசை செய்யவும் தயங்குகின்றனர்!
பூசைவேளையில் சைவ ஆலயங்களிலும் கிறிஸ்தவ ஆலயங்களிலும் மணிஓசை எழுப்பி மக்களுக்கு அறியச் செய்யும் முறை, காலாகாலமாக அனுசரிக்கப்பட்டு வந்த போதிலும் தற்பொழுது கேட்கும் மணிஓசை பாதுகாப்புப் படையினருக்கு தப்பாக ஒலிப்பதால், பூசகர்களும் பொது

Page 52
கதையல்ல நிஜம் OO
மக்களும் பல்வேறு விதமான விசாரணைகளுக்கு உள்ளா
கின்றனர். இதனால் பல ஆலயங்களில் மணிஓசை கேட்பது கூட இல்லாமல் போய்விட்டது.
ஊரடங்குச் சட்டவேளைகளில் ஆலயங்களில், பூசைகள், வழிபாடு நடைபெறுவது இல்லை. இதனால் ஆறுகாலப் பூசை நடைபெறும் சைவ ஆலயங்களில் விதி முறைப்படி பூசை, வழிபாடு செய்ய முடியாதநிலை ஏற்பட் டுள்ளது. தற்செயலாகப் பாதுகாப்புப்படையினர் வீதியில் வரும்போது கோயில்மணி கேட்டால் ஏற்படக்கூடிய எதிர் விளைவுகளை உத்தேசித்து, பல ஆலயங்களில் பெரியமணி ஒலிப்பதே இல்லை!
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தை வெள்ளிக்கிழமை தோறும் வழிபடும் அடியவர்கள் தொகை பல்லாயிரம். ஆனால் தற்பொழுது ஆலயச் சுற்றாடலில் அடியவர்களைக் காண்பதே அரிதாக உள்ளது. முருக பக்தர்களில் பலர் செல்வச்சந்நிதியானை வழிபடுவதை
மாதக்கணக்காக பின்போட்டுள்ளனர்! முருகனுக்கே வெளிச்சம்!
(050385)
ஏர்மெNல் அலர்ஜி
ஒரு காலத்தில் எங்கள் சீவியம் ‘மணியோடரில்’ தான் தங்கியிருந்தது.
அதாவது; உத்தியோகத்தின் நிமித்தம் குடும்பத் தலைவர் கொழும்பில் இருப்பார். மனைவி மக்கள் இங்கு இருப்பார்கள். மாதம் முடிய வரும் ‘மணியோடரில் சீவியம் நடக்கும். ஆனால் இன்று.?
உயிருக்குப் பயந்து, சர்வதேச நாடுகளில் தஞ்சம் இருப்போர் இங்கு அனுப்பும் காசோலைகள். டிராப்டு

1Ο1 Case). LDam(356am
களில்தான் பலருக்கு வாழ்க்கை ஒடுகிறது. நிலைமை இவ்வாறிருக்க.
ஏர்மெயில் பதிவுக்கடிதமே கிழித்து ஒட்டப்பட்டு வரும் லட்சணத்தில், வெளிநாட்டுக்கடிதங்கள் பத்திரமாக இங்கு வந்துசேரும் என்பதில் என்ன நம்பிக்கை?
'ஜாப்னா’ என்றால் ஒரு "அலார்ஜி'யாகிவிட்ட லட்சணத்தில் “ஏர்மெயில் கடிதங்களில் வரும் பண வாய்ப்புக்களை ஆவலுடன் எதிர்பார்ப்பது பொருத்தமாக இருக்காது என்று கவலைதெரிவிக்கும் தபால் உத்தியோ கத்தர் ஒருவர்; இடையில் நடக்கும் "அபேஸ்” குறித்து அறிந்து, அதற்கான வேறு மாற்று ஒழுங்குகளைச் செய்து கொள்வது நல்லது என்று யோசனை கூறுகிறார். சம்பந்தப் பட்டவர்கள் சற்று ஆழமாகச் சிந்திப்பார்களாக!
(23.0385)
மாவலி விழங்கிய தமிழ் மண்
இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த ஒரே ஒரு மாவட்டம் அம்பாறை மாவட்டம் என்பது பலருக்கும் தெரியும்.
ஆனாலும், 1956-ம் ஆண்டிலிருந்து நிலைமை மெதுவாக மாறி, மக்கள்தொகையும் உருமாறிவிட்டது.
மகாவலி ‘சி’ வலயத்திலிருந்து 93,000 பேரை - சிங்களவரை அதாவது ஒன்பது கிராமசேவகர் பிரிவுகளை அம்பாறை மாவட்டத்துடன் இணைப்பதன் மூலம், முஸ்லிம் மக்களின் விகிதாசாரம் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது.
இது மட்டுமல்ல; பாரம்பரியமாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்த காணிகளையும் இழந்து அநாதரவான

Page 53
கதையல்ல நிஜம் 1O2
நிலைக்கு கல்முனை கரையோர முஸ்லிம் தமிழ்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்!
முஸ்லிம் மக்களின் ஒரேயொரு மாவட்டத்துக்கு இக்கதி நேர்ந்த பின்னரும் முஸ்லிம் தலைவர்கள் மெளனமாக இருப்பதன் மர்மம் என்ன என்று கேட்கிறார் கல்முனை முஸ்லிம் அன்பர்.
மிகவும் நியாயமான கேள்விதான். மெளனம் கலையுமா?
(29.10.85)
இழ9றிஷின் வுெநித்தனம்
"இடி அமின் இப்பொழுது எங்கு இருக்கிறார்.?” என்று தொலைபேசியில் கேட்டார் பூரீமான் பொதுஜனம்.
"என்ன. புது ஞானம் பிறந்திருக்கிறது. ஏன், யாராவது இடி அமின் மறுபிறவி எடுத்திருக்கிறார்களா.." என்று கேட்டேன்.
"இல்லை. அவர்பற்றி ஒரு நூல் எழுதுகின்றேன். அதுதான் கேட்டேன்." என்று பதிலளித்த பூரீமான் பொது ஜனம்,
"அதுசரி. இடிஅமின் தனது கொடுங்கோல் ஆட்சியில் தனது எதிரிகளைக் கொன்றுகுவிக்கச் சில சந்தர்ப்பங்களில் துவக்குகள், வெடிமருந்துகளைப் பாவித்தது இல்லையாமே. எதிரிகளை நிலத்தில் குப்புறப்படுக்கவைத்து பெரும் சுத்திய லாலும் சம்மட்டியாலும் தலையில் அடித்து மண்டையை நொறுக்க வைத்துக் கொல்லுவார்களாமே. இதற்குக் காரணம் கேட்டபோது, வெடிமருந்துகளை வீணாகச் செலவழிக்கக் கூடாது என்பதற்காகவே இப்படியாக எதிரிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படுவதாக இடிஅமின் கூறுவாராமே. இது உண்மைதானா..?” என்று கேட்டார்.

1O3 (5.3. LD5mG3.56m
"நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். அது சரி ஏன் இப்பொழுது இதனைக் கிளப்புகிறீர்கள்.?” என்று நான் கேட்டதும், 'தொப்' என்று தொலைபேசி றிஸeவரை’ கீழே வைத்துவிட்டார்!
(2105.85)
%ப்பாணிய மதகுருவின் தமிழ்ப்போராeடம்
இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய மதகுரு ஒருவருக்கு, திடீரென ஒரு ஆசை பிறந்தது.
தினம் தினம் பத்திரிகைகளைப் படித்த அவர். தமிழ் மக்களின் உண்மையான நிலைமையை நேரில் தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்பினார் போலும்.
கொழும்பு நிலஅளவைத் திணைக்களத்துக்குச் சென்றார். யாழ்ப்பாணம் செல்ல விரும்புவதாகவும், அந்த மாவட்டத்தின் வரைபடமொன்றைத் தருமாறும் கேட்டார்.
நிலைமையைப் புரிந்துகொண்ட அத்திணைக்களத்தினர், அப்படியொரு வரைபடமும் கொடுக்கமுடியாது என்று கூறிவிட்டனர். ஜப்பானிய மதகுருவும் விடவில்லை. கண்டிப்பாக வேண்டும் என்று வாதாடினார்.
ஆனாலும் திணைக்களத்தினர் கடைசிவரை தங்களது முடிவை மாற்றவில்லை. அந்த மதகுரு என்ன செய்தார்?
திணைக்களத்தினரின் செயலைக் கண்டித்து ஆட்சேபித்து அந்த இடத்திலேயே கீழே அமர்ந்து, தனது
றபானை அடித்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார்! (24.0284)

Page 54
கதையல்ல நிஜம் 1O4.
அகஸ்தியர் அன்று சொன்னது
எழுத்தாளர்களில் பலரகம் உண்டு.
எழுதியவர்கள். எழுதுபவர்கள், சதா எழுதிக் கொண்டி ருப்பவர்க்ள்.
இவர்களில் அன்று முதல் இன்றுவரை முற்போக்கு வரிசையில் நின்றுகொண்டு பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு எழுதிக்கொண்டே இருப்பவர்களில் ஒருவர் எஸ். அகஸ்தியர் அவர்கள்.
இவரது "மண்ணில் தெரியுதொரு தோற்றம்” எனும் நாவலுக்கும் "நாட்டுக்கூத்து கலாநிதி கலையுலக வாழ்க்கை வரலாறு” கட்டுரைக்கும் 1983-ம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருந்தது. ஆனால்.
ஆண்டுகள் இரண்டாகி விட்டன. அகஸ்தியருக்கு பரிசுப்பணம் கைக்கு நேற்றுவரை கிடைக்கவே இல்லை!
இன்னுமொரு விஷயம்; சிறுகதை, நாவல் என்று பத்திரிகைகள், சஞ்சிகைகள் நடத்திய போட்டிகளில் அகஸ்தியர் பரிசு பெற்றிருந்தாலும், அவரின் கைக்கு பரிசுப் பணம் ஒன்றுமே கிடைக்கவில்லையாம்! எப்படிச் சங்கதி:
(Il-1285)
விதியாரை விடும்?
கிளிநொச்சியிலுள்ள திருநகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை ஆயுதப்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் திருமதி பெர்னாண்டோ மரியம்மா எனும் ஆசிரியை பலியானது வாசகர்கள் தெரிந்ததே.

1O5 கே.ஜி. மகாதேவா
இவர் நெடுத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
1985-ம் ஆண்டு மே மாதம் நெடுந்தீவுப் படகுச் சம்பவத்தில் 34 பேர் படுகொலை செய்யப்பட்டபோது முன்னாள் விலைக்கட்டுப்பாட்டு பொறுப்பதிகாரி திரு. யேசுதாஸன் அவர்களும் கோரமாக இப்படகில் வைத்து கொலை செய்யப்பட்ட துயரச் சம்பவத்தை நீங்கள் இலேசில் மறக்கமுடியாது.
திரு. யேசுதாஸனின் சகோதரிதான் திருமதி பெர்னாண்டோ மரியம்மா!
{} 8 (X
மட்டக்களப்பு, பார் வீதியில் கடந்த வாரம் நடந்த சம்பவத்தில் பலியான எட்டுப் பொதுமக்களில் செல்லப் பிள்ளை தியாகராசா (46 வயது) என்பவரும் அடங்குவார்.
குறிப்பிட்ட வீதியில் ‘சமூக விரோதி' என்று தெரிவிக்கப்பட்ட ஒருவருக்கு மின்கம்ப மரண தண்டனை வழங்கப்பட்டது சம்பந்தமாக நேரில் சென்று பார்க்க இவர் அங்கு சென்றிருந்தபோதே ஏனைய பொதுமக்களுடன் இவரும் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்.
செ. தியாகராசா யார் தெரியுமா? இவர் ஒரு கிராம சேவகர். "மரண தண்டனை விஷயமாக ஸ்தலத்தில் விசாரணை மேற்கொள்ள இவர் அங்கு சென்றிருந்தார்!
'விதி’ எப்படியெல்லாம் விளையாடுகிறது!
(14.11.85)

Page 55
கதையல்ல நிஜம் 1Ο6
வயதுக் கழுத்தநுப்பு
கினடா, பிரிட்டன் பொதுநலவரசுப் புலமைப் பரிசில் (1986-ம் ஆண்டுக்கான) விண்ணப்பங்களை உயர்கல்வி அமைச்சு கோரியுள்ளது.
இது சம்பந்தமான அறிவித்தல் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இம்மாதம் ஆறாம் திகதி வெளிவந்த அரசாங்க வர்த்தமானியில் இடம் பெற்றுள்ளது. முடிவு திகதி 27.09.85.
இதில் “சிறப்பு’ என்ன தெரியுமா?
ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் அறிவிப்பு விபரங்கள் சரியாக இடம்பெற, தமிழில் மட்டும் முக்கிய தகவல் பிழையாக வெளிவந்திருக்கிறது.
அதாவது. விண்ணப்பதாரிகள் 0.10.1985ல் முப்பத்து ஐந்து வயதுக்குக் குறையாதவராய் இருத்தல்வேண்டும் என்று தமிழ் அறிவித்தலில் வெளிவர, சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் விண்ணப்பதாரர்கள் 0.10.1985ல் முப்பத்து ஐந்து வயதுக்குக் குறைவானவர்களாக இருத்தல் வேண்டும் என்று வெளிவந்திருக்கிறது. அதாவது. வயது வரம்பு ஆங்கில, சிங்கள அறிவிப்புகளில் குறைந்தும்; தமிழ் அறிவிப்பில் கூடுதலாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது! அதாவது. (மன்னிக்கவும். "வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப் படத்தில் சிவாஜிகணேசன் அதாவது. அதாவது. என்று கேட்ட ஞாபகம் வந்துவிட்டது!)
வயது வரம்பில் ஏற்பட்ட பிழை; அதிலும் முக்கிய மர்க தமிழ் அறிவிப்பில் இடம்பெற்ற பிழைக்குக் காரணம். தமிழர் எவரும் புலமைப் பரிசில் பெறக்கூடாது என்பது தானே? அருமையான கழுத்தறுப்பு!
(2.10.85)

கே.ஜி. மகாதேவா לסן
உயரும் மலிதநேயம்
UTழ். குருநகர் வங்கியில், அரசு ஊழியருக்கு வேதனம் வழங்கப்பட்டு வருகிறது. ‘நான் முந்தி நீ முந்தி’ என்று மூத்தவர்கள் ஒடித்திரியும் காட்சி. பாவம் இப்படியும் நமக்கு ஒரு கொடுமையா என்று யோசிக்க வைக்கிறது.
இத்தனைக்கும் மத்தியில் “சிறப்புச் செய்தி’யும் இடம் பெறுகிறது.
நல்லூர்வாசி திரு. க. வாமதேவா. இவர், குருநகர் வங்கிக்குச் சென்று வேதனம் பெற்று வீடுசென்று கணக்கு பார்த்தபோது நூறு ரூபா கூடுதலாக இருந்தது! திகைத்துப் போனார் அவர்!
என்ன செய்வார் அவர்? கண்ணை மூடிக்கொண்டு மனைவியிடம் கொடுக்காமல், நேரே குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று, அங்குள்ள மேலதிகாரியிடம் தமக்குக் கிடைத்த மேலதிக நூறு ரூபா பற்றித் தெரிவித்து அந்தச் சுளையான காசை திருப்பிக் கொடுத்தார்.
யாழ்ப்பாணம் இப்பொழுது உயர்ந்துகொண்டே சென்று கொண்டிருக்கிறது!
(28.0884)
அசலும் நகலும்
கடந்த செவ்வாய்க்கிழமை பின்னிரவு.
கொழும்பு பொரளைப்பகுதியில், டி.எஸ். சேனநாயக்கா சந்தியில், இரு கார்கள் உரசிக்கொண்டன. அதாவது;

Page 56
கதையல்ல நிஜம் 1O8
முன்னே சென்ற காரை பின்புறமாக வந்த ஒரு கார் உரசி சிறுசேதத்தை ஏற்படுத்திவிட்டு முன்னேறியது. விடுவாரா முன்வந்த கார்க்காரர். துரத்திச் சென்று மடக்கிப்பிடித்த போது, சற்றுநேரம் வியந்தே போனார். காரணம்? உரசப் பட்ட காரில் இருந்தவர் பொலிஸ் அத்தியட்சகர். சேதத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர் உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர்!
சில நிமிடங்கள் ஒடிமறைந்திருக்கும். பொலிஸ் அத்தி யட்சகர் அந்த உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டரையும் கார் சாரதியையும் பொறளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். என்ன விஷயம் புரிகிறதா?
சேதப்படுத்திய காரில் வந்த உதவிப்பொலிஸ் இன்ஸ் பெக்டர் உண்மையிலேயே இன்ஸ்பெக்டர் அல்ல! பொலிஸ் சீருடையில் வந்த ஒரு நடிகர். அதாவது மாளிகாவத்தையில் இடம்பெற்ற ஒரு படப்பிடிப்பில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துவிட்டு அதே சீருடையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே மேற்படிச் சம்பவம் (அசலும் - நகலும்) நடந்தது!
ஒரு குறிப்பு: குறிப்பிட்ட அந்த நடிகர் தொலைச் காட்சி நாடகத்திலும் நடிப்பவர். அதுமட்டுமல்ல, புகழ் பெற்ற சிங்களப் பாடகரின் மகனும், பாடவும் கூடியவர்.
மேலதிகத் தகவல்: ஒரு திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரி வேடத்தில் பொலிஸ் சீருடையில் நடிப்பதென்றால் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் அங்கீகாரம் முன் கூட்டியே பெறவேண்டும். அதுமட்டுமல்ல; நடித்துவிட்டு பொலிஸ் சீருடையில் அவர் வெளியே நடமாடக்கூடாது. பிரயாணம் செய்யவும் கூடது. சட்டப்படி இது குற்றம்!
(02:03.90)

1O9 கே.ஜி. மகாதேவா
δείτεδίο δούι
இந்தியாவின் ஒரு கவர்ச்சிநகர் 'ஹாலிவுட்’ என்று வர்ணிக்கப்படும் பம்பாயிலிருந்து லட்சக்கணக்கான பிரதி களுடன் வெளிவரும் "பிளிட்ஸ்’ எனும் ஆங்கில வார ஏட்டை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?
முன்பின் "பிளிட்ஸ்’ தெரிந்திருந்தால் இந்த ‘பிளிட்ஸ்’ "ஸ்டைலும் உங்களுக்குப் புரியலாம்!
மகன் கொள்ளை என்றால் என்ன அப்பா?
அப்பா: கொள்ளையடிப்பதைக் கொள்ளை என்று சொல்வார்கள். அதாவது, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடு வோரை கொள்ளையர் என்று சொல்வதுண்டு.
மகன்: பயங்கரவாதம் என்றால் என்ன அப்பா?
அப்பா: பயங்கரவாத நடவடிக்கைகளைப் பயங்கர வாதம் என்று சொல்வார்கள்.
மகன்; அதுசரி அப்பா, கொள்ளையும் பயங்கர வாதமும் ஒன்றா அப்பா?
அப்பா தெரியாது மகனே.
மகன்; அப்படியென்றால், கொள்ளையர்களையும் பயங்கரவாதிகள் என்று சொல்லலாமா அப்பா?
அப்பா; அதுவும் தெரியாது மகனே.
(10.0584)

Page 57
கதையல்ல நிஜம் 11Ο
இயக்கப்பெயரில் கொள்ளை
அது ஒரு வர்த்தக நிறுவனம்.
திடீரென இருவர் நுழைகின்றனர்.
தங்களது இயக்கத்தின் பெயரைச் சொல்லி, "இயக்க வளர்ச்சிக்கு நிதி திரட்டி வருகின்றோம். பணம் தாருங்கள்" என்று கேட்கிறார்கள்.
வர்த்தக நிறுவனத்தில் இருந்த சிலருக்கு மூளை, மின்னல் வேகத்தில் வேலைசெய்யத் தொடங்கிற்றுப் போலும், அதன் எதிரொலி -
"இயக்கத்துக்கா பணம் வசூலிக்கிறீங்க. கள்ள நாய் களே." என்று சீறிப் பாய்ந்து; நிதி திரட்ட வந்த இரு வரையும் மடக்கிப்பிடித்து நல்ல சாப்பாடு’ கொடுத்து கட்டியும் வைத்துவிட்டார்கள்!
தங்களது “குட்டு வெளிப்பட்டுவிட்டது கண்டு அதிர்ச்சிக்குள்ளான அந்த இருவரும் தாங்கள் செய்த தவறுக்காக உண்மையைச் சொல்லி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டதன் பின்னர்தான் இருவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்!
காதில் விழுந்த செய்தி. அந்த இருவரும் வர்த்தக
நிறுவனத்தில் வைத்து புகைப்படம் எடுக்கப்பட்டார்களா? அந்த நிறுவனம் இருப்பது யாழ். ஸ்டான்லி வீதியில்.
(07.0384)

11 கே.ஜி. மகாதேவா
யாழ். தந்தி அவலம்
அவசரமாக நீங்கள் ஒருவருக்கு தந்தி அனுப்ப வேண்டும்.
அந்தத்தந்தி அருகில் உள்ள சுன்னாகமாகவும் இருக்கலாம். தூரத்திலுள்ள கொழும்பாகவும் இருக்கலாம். ஆகக்கூடியது ஏதோ ஒரு வெளிநாடாகவும் இருக்கலாம்.
மாலை ஆறுமணிக்குப் பின்னர், யாழ்ப்பாணம் பெரிய தபால் அலுவலகத்துக்கு மட்டும் மேற்படித் தந்தி களை அனுப்பப் போய்விடாதீர்கள்.
காரணம், மாலை ஆறுமணிக்குப்பின்னர் கவுண்டரில் தெரிவிக்கப்படும் ஒரே வார்த்தை -
"லைன் அவுட் ஒவ் ஒடர்! தந்தி போகாது!”
(X 8- 0x
மனச்சாட்சி யாரிடம் இருக்கிறது?
குண்டும் குழியுமாக இருக்கும் பொதுவீதிகளை பொது மக்களின் நலன்கருதி அவசரம் அவசரமாகத் திருத்தும் அதிகாரிகளிடமே உண்மையான இதயம் இருக்கிறது என்று பூரீமான் பொதுஜனம் கூறுகின்றார். ஆனால்.
மாசியிலும் மழைவரும் காலம் இது! கல்லைப் போட்டுத்தான் நிரப்புகின்றார்கள். பாராட்டுக்கள்.
ஆனால் தார்போட்டு வீதியைச் சரி செய்ய முன்னர், மழை பெய்து, கல்லும் ‘கரைந்து ஓடி, மீண்டும் குண்டும் குழியும் வராது என்பது என்ன நிச்சயம்?
பூரீமான் பொதுஜனம் கேட்பதில் அர்த்தம் உண்டு!
(12.0384)

Page 58
கதையல்ல நிஜம் 12
"தொழில் இரகசியம்
“Gosnt.ழில்’ எத்தனை வகைப்படும்?
இது ஒரு கதை அல்ல; உண்மைச் சம்பவம்! மருதானை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவுள்ள பஸ்தரிப்பு நிலை பத்தில் பஸ்ஸில் ஏறும்போது தமது அடையாள அட்டையைப் பறிகொடுத்த மாதகல்வாசி ஒருவர் 75 ரூபா செலுத்தி அதை மீட்டெடுத்துள்ளார்!
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் பயங்கர வாத தடைச்சட்டத்தின் கீழ் 8 மாதங்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமது மைத்துனரைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பிரஸ்தாப மாதகல்வாசி, மருதானை ரயில் நிலையத்திற்கு சமீபமாகவுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ் ஏறுகையில் தமது தேசிய அடையாள அட்டை பறிபோய் விட்டதைக் கண்டு அருகிலுள்ள தமிழர் ஒருவரின் தேநீர் கடையொன்றுக்குச் சென்று விஷயத்தைக் கூறினாராம்.
கடைக்காரரும், சில ‘பிக்பொக்கட் ஆசாமிகளை தமக்குத் தெரியும் என்றும் பிற்பகல் வந்தால் அவர்களுடன் கதைத்து அதை வாங்கித்தரமுடியும் என்றும் நம்பிக்கை அளித்துள்ளார். மாதகல்வாசி அங்கு பிற்பகல் செல்கிறார். ‘பிக்பொக்கட்’ பேர்வழி ஒருவர் அவ்விடம் வந்து அடையாள அட்டை தம்மிடம் இருக்கிறது என்று கூறி 200 ரூபா கேட்கிறார்!
வெலிக்கடை சிறையில் இருக்கும் மைத்துனரைப் பார்வையிடுவதற்கு அடையாள அட்டை அவசியம் என்றும் அது இல்லாவிட்டால் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தம்மிடம் 200 ரூபா பணம் கைவசம் இல்லை என்றும் அழாக்குறையாகக் கூறுகிறார் மாதகல்வாசி. கடைக் காரர் பரிந்து பேசியதன் பேரில் 75 ரூபாவைப் பெற்றுக் கொண்டு அந்த அடையாள அட்டையைத் திருப்பிக்

13 W கே.ஜி. மகாதேவா
கொடுத்துவிட்டு நகருகின்றார் அந்த ‘பிக்பொக்கட்’ ஆசாமி. எங்கு? அடுத்த பஸ்ஸில் “தொழில் பார்க்க!
(06,1285)
8ஆாcடல் மிருகத்தனம்
தென்னாப்பிரிக்காவில் நிலவும் இன ஒதுக்கல் கொள்கை, நமது நாட்டிலுள்ள சில ஹோட்டல்களிலும் அமுலில் இருக்கிறதா?
ஹிக்கடுவ கடலில் நீராடிக் கொண்டிருந்த இரு குடும்பத்தினர், தங்களது நண்பகல் உணவை அருகிலுள்ள ஹோட்டலில் சுவைக்க விரும்பி, ஹோட்டல் பணியா ளரிடம் தெரிவிக்கவே, "சாப்பாடு தரலாம்” என்று பதிலளிக்கப் ull-gil.
கடலில் நீராடிய அவர்கள், ஹோட்டலில் சாப்பிட முன்னர் அங்கு குளிக்க விரும்பினர். ஆனாலும் குளித்துக் கொண்டிருந்தபோதே திடீரென, உடைமைகளுடன் வெளியேறுமாறு அவர்களுக்கு உத்தரவு பிறந்தது!
"நாம் ஒரு குற்றமும் செய்யவில்லையே. நீங்கள் அனுமதி வழங்கித்தானே நாம் இங்கு வந்தோம்." என்று அவர்கள் நியாயம் கூறவே, மனேஜர் வசைமாரி பொழிந்தார்!
“ஏன் இப்படி தூஷண வார்த்தைகளால் ஏசுகின் நீர்கள். உங்களைப்பற்றி புகார் செய்யப் போகின்றோம்." என்று அவர்கள் கூறியதுதான் தாமதம். ஹோட்டல் பணி யாளர்கள், வெளியார் சிலர் சகிதம் மனேஜரிடமிருந்து நல்ல சாப்பாடு' கிடைத்தது!
மிருகத்தனமான முறையில் தாக்கப்பட்ட இரண்டு இந்தியர்களும், தங்களது குடும்ப சகிதம் பொலிஸ் நிலை யத்தில் புகார் செய்து நீதியை இப்பொழுது எதிர் பார்த்திருக்கின்றனர்!
(14,0383)

Page 59
கதையல்ல நிஜம் 4.
U898rDezoL SIööFuob
கண்டிப் பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகர் ஒருவர் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வந்து பனம் மட்டைகளைக் கொள்வனவு செய்து, அவற்றைக் கண்டிக்குக் கொண்டு சென்று, பனம் மட்டைகளைத் தும்புகளாக்கி, வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் அவர் நூற்று நாற்பது லட்சம் ரூபா பெற்றுக்கொண்டார். இது மட்டுமல்ல, வெளி நாட்டு ஏற்றுமதிக்கான "ஊக்குவிப்பு உபகாரப் பணமாக பதினான்கு லட்சம் ரூபாவையும் அரசிடமிருந்து தட்டிக் GoesteriLffr.
இந்த விபரத்தை வெளியிட்டவர் யாழ். மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினரும், யாழ். மாவட்ட தெங்கு பணம்பொருள் உற்பத்தி விற்பனவுக் கூட்டுறவுச் சங்கங் களின் சமாஜத் தலைவருமான திரு. சு. நடேசு. இடம்: பண்டத்தரிப்பு கிராமோதய சபையின் விசேட பொதுக் éin.I t-th.
வடபகுதி தொழில் அதிபர்கள், வர்த்தகர்களுக்கு இது சமர்ப்பணம்!
(14,0783).
எம். 5. பந்நிய வதந்தி
நேற்று மாலை நான்கு மணிமுதல் இதனை எழுதிக் கொண்டிருக்கும்வரை 'ஆபீஸ்" தொலைபேசியில் பலமான செய்தி ஒன்று தொடர்ந்து அடிபட்டது.
"அப்படி ஒன்றும் நடக்கவில்லை" என்று பதிலளித் தாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் விட்ட

115 கே.ஜி. மகாதேவா
பாடில்லை! கடைசியில், சம்பந்தப்பட்ட எம். பியுடனேயே தொடர்பு கொண்டேன்.
"கோணேஸ்வரத்தான் அப்படி ஒன்றும் கைவிட மாட்டான். சுகமாக இருக்கின்றேன்” என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார் அந்த திருமலை எம். பி.
(15,0783)
சிவ.பா.த.
வடபகுதியில் உள்ள அகதிகள் கிறிஸ்தவ இயக்கம், ஒரு கல்விநிலையத்தை ஆரம்பித்துள்ளது.
இதற்கு, “சிவபாத கல்விநிலையம்" என்று பெயர் குட்டப்பட்டுள்ளது.
இந்தப் பெயரில் அர்த்தம் எதுவும் உண்டா? சிங்களவரின் வன்செயலால் பாதிக்கப்பட்ட தமிழரின் கல்விநிலையம் என்பது இதன் அர்த்தமாம்!
Φεφιραιό Φιτύδ υιτί'
அண்மையில் தமிழ்நாடு சிவகாசியில், ஜனநட மாட்டம் மிகுந்த பகுதியில் ஒரு “கோப்பி பார்’ ஒகோ என்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த கோப்பிக் கடையின் பெயர் என்ன தெரியுமா? "விடுதலைப்புலி வீரன் குட்டிமணி காபி பார்".
தினசரி வருமானம் எக்கச்சக்கமாம்!
(07.10.83)

Page 60
கதையல்ல நிஜம் 116
daîoĝ5 (p(T&Tayö
இந்தியாவிலிருந்து திரும்பிய அந்தப் பெண் கொழும்பி லிருந்து ஊர் திரும்ப கடந்த சனிக்கிழமை “யாழ் தேவி”யில் ஏறினார்.
அவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர். கொடிகாமம் ரயில் நிலையத்தில் இறங்கி தனது உடைமைகளை சரி பார்த்தார். யாரோ தமது தலையில் சுத்தியலால் அடிப்பது போன்றிருந்தது! காரணம்
ஒரு “பேக்கை காணவில்லை! பல ஆயிரம் ரூபா பெறுமதிமிக்க பல பொருள்கள் அந்த “பேக்"கில் இருந்தன. “யாழ் தேவியோ யாழ்ப்பாணம் போய்விட்டது!
“அசந்து போய் ரயில் நிலையத்தில் அமர்ந்துவிட்ட அந்தப் பெண், தனது இழப்பை ரயில் நிலைய அதிபரிடம் கூறி, ஏதோ நம்பிக்கையில் ரயில் நிலையத்திலேயே காத்து
5ešTprriř.
யாழ்ப்பாணம் சென்ற யாழ் தேவி பின்னர் கொழும்பு திரும்பும் வழியில், கொடிகாமம் ரயில் நிலை யத்தில் தரித்தபோது ‘ரயில் கார்ட் டிடம் ரயில் நிலைய அதிபர் விசாரித்தார்.
"ஆசனத்திலிருந்த அந்த “பேக்"கை யாருமே கையாட
வில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறப்படும் போது "அனாதை"யாக இருந்த அந்த “பேக்” எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது." என்று அவர் கூறுகிறார்.
அடையாளம் காணப்பட்ட பின்னர் அந்த “பேக்” முழுமையாக அந்தப் பெண்ணின் கைக்கு மாறுகிறது! நாணயத்தின் இருபக்கமும் நாணயம் தான்!
(13.0183)

கே.ஜி. மகாதேவா לו1
திருச்சிசுத்தம்
ஆபாசத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் என்ன வித்தி st intayto:
வித்தியாசம் பெரிதாக ஒன்றும் இல்லை. (டிக்கெட்) பணத்தைக் கொடுத்தால் (ஆபாச) சினிமாவை உள்ளே பார்க்கலாம். பணத்தைக் கொடுக்காவிட்டால் அதனை வெளியே (ஆபாச) சுவரொட்டிகளில் கண்டுகளிக்கலாம்.
சிறுவர்கள் மனத்தில் அசிங்கமான பால் உணர்வு களைத் தூண்டிவிடுவது மட்டுமல்ல; நின்று பார்த்து, சர்ச்சை செய்யும் அளவுக்கு சினிமா ஆபாச சுவரொட்டிகள் நமது வளரும் சமுதாயத்தை இப்பொழுது மோசமாக்கிவிட்டி ருக்கிறது!
ஆபாச சுவரொட்டிகளை - பானர்’களை ஒழித்துக் கட்டமுடியாதா என்று மூளையைக் குழப்பிய திருச்சி பாவனையாளர் சங்கத் தலைவர், உதவிப் பொலிஸ் அதிபர், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் ஒன்று கூடி, திரையரங்கு அதிபர்களுடன் கலந்துபேசி, அசிங்கமான சினிமாப் போஸ்டர்கள் எதுவும் ஒட்டக்கூடாதென்றும், ஒட்டுவதற்கு முன்னர் ஒவ்வொரு சினிமாப்போஸ்டரும் காவல் துறையினரிடம் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது! இதுமட்டுமல்ல; கடந்த மூன்று மாதங்களாக திருச்சி எந்த ஆபாசப் போஸ்டரும் இல்லாமல் ‘சுத்தமாக இருக்கிறது!
திருச்சி நமக்கு வழிகாட்டுவதைப் போல, மிகவும் ஆபாச - கீழ்த்தரமான வார்த்தைகளைக் கொண்ட தமிழ் சினிமாப் பாடல்களை வானொலியிலிருந்து ஒழிக்க இலங்கை வர்த்தக ஒலிபரப்பு வழிகாட்டுமா?
(07.1283)

Page 61
கதையல்ல fജb 18
சுங்க அதிகாரிலின் துவேஷம்
பெற்றோர் நிச்சயித்த திருமண ஏற்பாடு அது. மணமகன் “பிரான்ஸ்", மணமகள் யாழ்ப்பாணம். ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில்லை. கடிதப் போக்குவரத்தும் கிடையாது. இருவரினதும் பெற்றோர் கூடி, “நாள் - கோள்’ பார்த்து முடிவு செய்திருந்தனர்.
மணமகள் திருமணத்துக்குத் தேவையான நகை களுடன் பிரான்ஸ் சென்று உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ தாலிகட்டவேண்டும். இதுதான் ஏற்பாடு.
அந்த மணமகளும் குறிப்பிட்ட தினத்தன்று விமான நிலையம் சென்று, " வழமையான விதிமுறைகளை அனுசரித்து 'ஓ கே’ பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், ஓர் அதிகாரி வந்து, “பிரயாணம் செய்ய அனுமதிக்கமுடியாது” என்று கூறினாராம். அப்பெண் காரணம் கேட்டபோது; "இத்தனை நகைகளையும் கொண்டு போகமுடியாது. இது கடத்தல் முயற்சி போன்றது” என்று பதிலளித்தாராம். அந்தப் பெண்ணும் விடவில்லை. "அப்படியானால் நகை களைக் கழற்றி வெளியில் நிற்கும் உறவினர்களிடம் ஒப்படைத்துவிடுகின்றேன். பிரயாணத்துக்கு அனுமதியுங்கள்” என்று கெஞ்சினாராம். அதற்கும் அந்த அதிகாரி இணங்கு வதாகத் தெரியவில்லை! இது ஒரு கடத்தல் முயற்சி என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாராம்.
தாலிக்கொடி, சில வளையல்கள், ஒரு சங்கிலி, காதில் தோடு இவைகள்தான் அந்த நகைகள். இறுதியில் என்ன நடந்தது? அத்தனை நகைகளுடனும் மணப்பெண் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்.
(09.1283)

119 கே.ஜி. மகாதேவா
பத்திரிகா தர்மம்'
ஒரு நாட்டின் ஐக்கியத்தை (தேசிய ஒருமைப்பாடு என்றும் சொல்லலாம்) கட்டிக் காப்பதில், தேசியப் பத்திரிகை களின் பங்கு எத்தன்மையானது?
"இது என்ன கேள்வி? ஜனநாயகத்தின் காவல் நாய்களே பத்திரிகைகள்தானே.” என்று நீங்கள் முணுமுணுப்பது ஒருபுறமிருக்கட்டும். நேற்று வெளியான ஒரு செய்தி ஒரு சின்ன சந்தேகத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது!
ஒரே பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகைகள் அவை. தமிழிலும் வெளிவருகிறது. ஆங்கிலத்திலும் வெளி வருகிறது. சிங்களத்திலும் வெளிவருகிறது. எல்லாமே தினசரிகள்தான்.
ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உரை பற்றிய செய்தி அது. அதுவும், ஜூலைக் கலவரம் சம்பந்தமானது. அவர் கூறிய அறிவுரை:
“மீண்டுமொரு ஜூலைக் கலவரம் வரக்கூடாது. தமிழ்க் கடைகளைச் சிங்களவர்கள் தாக்கியதால், சிங்கள வர்கள்தான் நஷ்டமடைந்தனர். தமிழரைத் தோற்கடித்து தாம் வெற்றிகண்டதாக சில சிங்களவர்கள் நினைத்தால் அது முட்டாள்தனமாகும்” என்று ‘பச்சையாகக் கூறி யுள்ளார் ஜனாதிபதி.
இது யாருக்கு அறிவுரை? சாட்சாத் சிங்கள மக்களுக்குத் தான்! அவர்கள்தான் இந்த அறிவுரையை பத்திரிகைகளில் பார்க்கவேண்டும், படிக்கவேண்டும். ஆனால் செய்தி வந்த விதமோ?
தமிழ்ப் பத்திரிகையில் அந்தச் செய்தி முதல் பக்கத் தலைப்புச்செய்தி. அதே நிறுவனத்தின் ஆங்கிலப் பத்திரி

Page 62
கதையல்ல நிஜம் 12O
கையில். வரிவரியாகப் படித்து, தொடர்ச்சிகளையும் பார்த்து, ஒரு படியாக ஏதோ ஒரு மூலையில் சில வசனங்களில் மூழ்கிக்கிடந்தது அந்தச் செய்தி. சிங்களப் பத்திரிகையில். பூதக்கண்ணாடி பிடித்தும் கண்ணுக்குப் புலப்படவில்லை! பத்திரிகை தர்மம் வாழ்க!
(170784)
உயர் பதவி தாழ்ந்த உள்ளம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பதினாறு முகாம் களில் ஏழாயிரத்துக்கும் அதிகமான அகதிகள் இருப்பது பழைய செய்தி.
இந்த அகதிகளில் பலர் குழந்தைகள். பிரசவத் தாய் மார்களும் உண்டு.
இவர்களுக்கு அவசியம் தேவைப்படும் பால் மா போன்ற உணவு வகைகளை அள்ளி வழங்க சில தர்ம ஸ்தாபனங்கள் முன்வந்த போதிலும், சில பெரிய “கரங்கள் தடுத்து நிறுத்தி "அவை தேவையில்லை" என்று உத்தர விடுகிறதாம்!
உயர்ந்த பதவிகள்; தாழ்ந்த உள்ளங்கள்!
யுத்த நாடாகிறது
பிரிட்டன் பத்து யுத்தக் கப்பல்களை விற்கவிருக்கிறது.
நவீன கருவிகளைக்கொண்ட இந்த யுத்தக் கப்பல்கள் மிகவும் “சக்தி” வாய்ந்தவை. இதன் பெறுமதி என்ன தெரியுமா? ஒரு கப்பலின் விலை நான்கு கோடி ரூபா வாகும்!

121 கே.ஜி. மகாதேவா
இக்கப்பல்களை எவரும் எளிதில் செலுத்த முடியாது. இதற்காக பிரிட்டன், விசேட பயிற்சியையும் இலவசமாக அளிக்கப்போகிறது.
இது மட்டுமல்ல; அயர்லாந்திலும் பிரிட்டனிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கவச வாகனங்கள் மற்றும் நவீன ஆயுதங்களையும் பிரிட்டன் ஒரு நாட்டுக்கு விற்பனை செய்யப்போகிறது.
நாடு: இலங்கை
(070285)
மில்லாகும் மிஸ்
"பெண் இனம் விடுதலை பெறவேண்டும். ஆணுக்கு பெண் அடிமையல்ல" என்று அன்று முழக்கமிடப்பட்டது இன்று தலைகீழாகி, கல்வி என்ன; விளையாட்டு என்ன. தொழில்துறை என்ன. மண்ணிலிருந்து விண் வரை ஆண்களைவிட பெண்கள் இன்று உயர்ந்துதான் நிற்கிறார்கள்!
இது நீங்களும் தெரிந்த விஷயம். புதிய தகவல் இது:
பெண்களுக்கு என்று தனியாக சிகரெட் இப்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது! இது வந்தது பிரிட்டன், அமெரிக்காவில் அல்ல. இந்தியாவில்தான்! சிகரெட்டின் பெயர் "மிஸ்" (செல்வி).
"மிஸ்’ என்பதை தவறவிடுதல் என்றும் கருதலாம் தானே?

Page 63
கதையல்ல நிஜம் 122
a5aTotDTGIT Gob
கொழும்பில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டி ருக்கும் சாள்ஸ் (22 வயது) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் 'ஓவியம் காவியமாகிறது’ எனும் தொடர் கதையை தாமே படித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார். இந்தக் கதையும் அவருடையதுதான்.
இதில் என்ன விசேஷம் என்றுதானே கேட்கிறீர்கள்? சாள்ஸ் இரு விழிகளையும் இழந்தவர்!
ப்ளஸ் பொயின்ற்: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் தமிழ் நிகழ்ச்சியில் விழி இழந்த ஒருவர் கதை சொல்வது இதுவே முதல் தடவையாகும்!
(03.03.90)
நன்றிக்குப் பரிசு
கிடந்த ஆண்டு நாட்டின் இக்கட்டான நிலையில் ரூபவாஹினி, வானொலி ஊழியர்கள் நிலைமை எப்படி இருந்தது என்று இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தது வாசகர் களுக்கு நினைவில் இருக்கலாம்!
தெற்கில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பீதி காரணமாக “சிங்களம்’ நிற்க "தமிழ் கடமைக்குப் போனது பற்றி எழுதி யிருந்ததும் வாசகர்கள் அறிவார்கள்.
ரூபவாஹினியின் தலைவர், பணிப்பாளர் நாயகம் இருவரும் தலைமறைவாகிவிட நிதிக்குப் பொறுப்பான நம்மவர் ஒருவர் தலைகொடுத்து ஆபத்தில் உதவியதை, நாட்டின் ‘அதிமேலிடம் நன்றியுடன் மறக்கவில்லை போலும்!

123 கே.ஜி. மகாதேவா
அந்த நன்றிக்குப் பரிசு.?
விமானப்படை அதிகாரி ஒருவரின் தகுதிவாய்ந்த அதிகாரத்தின் கீழ் இயங்கும் கூட்டுத்தாபனம், விரைவில் பணிப்பாளர் சபையின் கீழ் மீளவரப்போகிறதாம். தமிழர் ஒருவர் முதலாவதாகப் பெறும் ‘பணிப்பாளர் நாயகம்’ என்ற பதவி, அன்று தலைகொடுத்த “சற்குணமான நம்ம வருக்குத்தான் வழங்கப்படவிருக்கிறதாம்!
(24.04.90)
நாக்கு வழிக்க காசோலை
வெங்காயம் என்றால் “விஷயம்’ தெரிந்தவர்கள் நினைப்பது ஈ. வெ. ரா. பெரியாரை. மற்றவர்கள் கருதுவது. ஒன்றுமில்லாததைத்தான். ஆனாலும், பெரியார் சொன்னதும் இதே கருத்தைத்தான். அதாவது வெங்காயத்தை உரிக்க உரிக்க கடைசியில் ஒன்றுமே இல்லை என்பதுதான்.
மேற்சொன்னது ஈ. வெ. ரா. வெங்காயக்கதை. இப்போது நான் கூறப்போவது நம் ஊர்க் கதை.
வடபகுதி விவசாயிகள் பலர் விதைவெங்காயம் பெற விரும்பி "அதை இதை அடகுவைத்து ஆயிரம் ஆயிரமாகப் பணத்தைக் கட்டினார்கள். ஆனால் மாதங்கள் பல ஆகியும் விதை வெங்காயம் வந்தபாடில்லை, கப்பல் பார்த்த கதை தான்.
பொறுமை இழந்து, "வேண்டாம் விதை வெங்காயம் காசைத் திருப்பித் தாருங்கள்" என்று விவசாயிகள் கேட்டால், ப நோ. கூ. சங்கங்கள் ரொக்கப் பணத்துக்குப் பதிலாகக் காசோலைகளை வாரி வழங்குகின்றதாம்! “காசோலை களை நாக்கு வழிக்கவா..?” என்று அவர்கள் கேட்பதில் நியாயம் இல்லையா?
78.34)

Page 64
கதையல்ல நிறம் 124
ஆப்பிளுக்கு ஆப்பு
"ஒரு ஆப்பிளை தினமும் சாப்பிடுங்கள். டாக்டரே தேவையில்லை" என்பது முதுமொழி. ஆனால் சத்துணவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் ஆர்னால்ட் பென்டர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகிறார்:
"தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டர் தேவை யில்லை என்று யார் சொன்னது? இது படுபொய். ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் சுத்தமாக இருக்கும். அவ்வளவுதான். மற்றப்படி நோய்களைச் சுகப்படுத்தும் சக்தி எதுவும் ஆப்பிளிடம் இல்லை.
"காரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்று கூறியவன் உண்மையில் பைத்தியக்காரன்தான். காரட்டில் ‘ஏ’ விட்டமின் (உயிர்ச்சத்து) உண்டு. ஆனால் இந்த விட்டமின் மட்டும் உங்கள் கண்களைக் கூர்மைப்படுத்த உதவாது. மூக்குக் கண்ணாடிதான் சரி!
“வெள்ளைநிற முட்டையிலும் பார்க்க 'ஊர்' முட்டை நல்லதா? சுத்த முட்டாள்தனம். ஒட்டில்தான் நிறம் மாறுமே தவிர சத்து ஒன்றுதான்! ஆனால் ருசியில் மட்டும் மாற்றம் இருக்கும்.
*வெங்காயம் சாப்பிட்டால் சளி வராது" என்பது அசல் கற்பனை!
"மீன் சாப்பிட்டால் மூளை விருத்தியாகும்” என்று யாரும் சொன்னால் அதைவிட உலகத்தில் வேறு தமாஷ் இல்லை! மூளையை விருத்திசெய்யக்கூடிய சக்தியோ அல்லது உங்கள் ஞாபகசக்தியை வளர்க்கக்கூடிய சத்துணவோ மீனில் துப்புரவாக இல்லை!
"மதுபானம் பாவிக்க முன்னர் பால் அருந்துவது

125 கே.ஜி. மகாதேவா
நல்லதா? இது சரிதான். மதுபானம் பாவிக்க முன்னர் ஒரு கிளாஸ் பால் அருந்தினால் மதுவின் மயக்கம் குறைவாகவே இருக்கும். இறைச்சி வகைகளில் எங்களுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கிறது என்பது உண்மைதான். இவற்றை சாதாரணமாக கோதுமை, அரிசி, பார்லி, சோளம் போன்ற வற்றில் சுலபமாகப் பெற்றுவிடலாம்."
அடிக்குறிப்பு: பேராசிரியர் ஆர்னால்ட் இப்படிச் சொன்னால், நாங்கள் எதனைச் சாப்பிடுவது என்று முணு முணுக்காதீர்கள்! எமது கண்டுபிடிப்பு: எல்லாவற்றையும் கலந்து சாப்பிடுங்கள்! நன்றி: "தி ஸண்டே டைம்ஸ்’
(30.04.90)
திறந்த பொருளாதாரம்
ஐ. தே. க. அரசு பதவியேற்றதும், "திறந்த பொருளா தாரக் கொள்கை மூலம் நாட்டை வளமாக்குவோம்" என்று மார் தட்டியது.
கடந்த எட்டு வருட காலத்தில் அதன் சாதனை களை, சில உத்தியோகபூர்வ அறிக்கைகளை ஆதாரமாகக் கொண்டு “போர்வேர்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. படித்துப் பாருங்கள்.
“ஒவ்வொரு 10 பேரில் ஆறுபேர் உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டுக்குக் கீழே ரூ. 300க்கும் குறைவான வருமானத்துடன் வாழ்க்கை நடத்துகின்றனர். ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் தொழில் பார்ப்பதற்குரிய பருவத்தை யடைந்தபோதும் வேலையற்று அல்லது கடுமையான வேலைப்பளுவில் இருக்கின்றார். பாடசாலை செல்லாத ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒன்று போஷாக்கின்மை யால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எட்டுப்பேரில் ஒருவர் சித்த சுவாதீனமற்றுள்ளார். கவலை

Page 65
கதையல்ல நிஜம் 126
யாலும், விரக்தியாலும் இந்தநிலை காணப்படுகிறது. போதை வஸ்து மோகம், விபசாரம், பாலியல் நோய்கள், குற்றச் செயல்கள் என்பவற்றால் ஆண் - பெண் இருபாலாரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துர் நடத்தைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. கல்வியறிவின் தரம் குன்றிவருகின்றது. கல்வி பயில முன்வருவோர் தொகை வெகுவாகக் குறைந்து வருகின்றது. லஞ்சம், ஊழல் ஆகியன அவற்றின் முன்னைய சாதனைகள் யாவற்றையும் முறியடித்து ‘வெற்றி நடைபோடுகின்றன.”
திறந்த பொருளாதாரம் வாழ்க!
(1503.90)
சஆதிசங்கதிகள்
சிவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்களாகப் பணிபுரியும் வெளிநாட்டுப் பெண்கள் அங்கு வீடு சுத்தி கரிப்பு வேலையில் ஈடுபடும் வெளிநாட்டவரை எப்படி, எங்கு சந்தித்துக் கொள்கிறார்கள் என்பதை சவூதியில் வெளியாகும் அரபு மொழிப்பத்திரிகை ஒன்று கேலிச் சித்திரப் படம் மூலம் சுட்டிக்காட்டி உள்ளது.
'அல்றியாட்’ பத்திரிகையில் வெளியாகி இருக்கும் இக்கேலிச் சித்திரத்தில், வீதி சுத்திகரிப்பில் ஈடுபடும் வெளி நாட்டவர் ஒருவரை வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தனது வீட்டுவாசலில் வைத்துச் சந்தித்துக் கொள்வதாகப் படம் வரையப்பட்டு இருக்கிறது.
வீதி சுத்திகரிப்பில் ஈடுபடுபவர் குப்பை ஏற்றும் தள்ளுவண்டியுடன் வீட்டின் முன்பக்க வீதியில் துப்புரவு வேலையில் ஈடுபட்டு, தன்னை எதிர்பார்த்துக் காத்து நிற்கும் பணிப்பெண்ணைப் பார்த்துப் புன்முறுவல் செய்த வண்ணம் நிற்பதாகவும்; பணிப்பெண்ணின் வீட்டு எஜமான்,

127 கே.ஜி. மகாதேவா
"நமது வீதி மிக மிக அழகாக இருப்பதன் காரணம் - மர்மம் என்ன என்பது இப்போதுதான் புரிகிறது!" என்று தனது மனைவியிடம் கேள்வி எழுப்புவதாகவும் கேலிச் சித்திரப் படத்தில் வரையப்பட்டு இருக்கிறது.
சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கையரில் அதிகமானோர் விதி சுத்திகரிப்பு வேலையில் ஈடுபடுகிறார்கள். அதேபோல வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கைப் பெண்கள்தான் கூடுதலாகப் பணியாற்றுகிறார்கள். சங்கதி உங்களுக்குப் புரிகிறதா?
(25.1085)
ඕර්up ඉගී ඊIෆිජිඉබීb
அட்டன் பிரின்சஸ் தியேட்டர் சந்தியில், போக்கு வரத்துப் பொலிசாரின் வீதிச்சோதனை தினமும் ஜரூராக இருக்கும்.
சில தினங்களுக்கு முன்னர், சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகர்களுடன் சென்று கொண்டிருந்த ஒரு பஸ்ஸை வழிமறித்து, பொலிசார் சோதனை போட்டனர்.
என்ன ஆச்சரியம்; பஸ்ஸில் பல கலன்களில் சட்ட விரோத சாராயமான ‘கசிப்பு’ இருந்ததுடன் பஸ்ஸில் காணப்பட்ட இளம் யாத்திரிகர்களின் வாயிலும் ‘கசிப்பு' மணம் கமழ்ந்தது!
இது மட்டுமா? இந்த பஸ்ஸைத் தொடர்ந்து வந்த இரண்டு பஸ்களிலும் இதிலும் யாத்திரிகர்கள்தான்) 'கசிப்பு கலன்கள் தாராளமாக இருந்ததையும் பொலிசார் சுலபமாகக் கண்டுபிடித்தனர்.
பஸ்ஸிலிருந்து இளைஞர்கள் - அதாவது இளம் யாத்திரிகர்கள் அனைவரும் பொலிசாரினால் இறக்கப் பட்டு, வீதியின் நடுவே இருக்கும்படி பணிக்கப்பட்டனர்.

Page 66
கதையல்ல நிஜம் 128 பின்னர்? "வழிபாட்டுத் தலத்துக்குச் செல்லும் நீங்கள் மிருகங்களாகப் போகலாமா..?” என்று பொலிசாரினால் கண்டிக்கப்பட்டு, அத்தனை இளைஞர்கள் மீதும் ‘கசிப்பு அபிஷேகம்’ தாராளமாக நடந்தது! இதோடு மட்டும் பொலிசார் விடவில்லை. அந்த இளைஞர்களுக்கு "சாப்பாடும் (அடிதான்) கொடுக்கப்பட்டது!
வடக்கிலும் கசிப்பு மலிந்து போயிற்று. பகிரங்கமாக இப்படிச் சம்பவங்கள் இங்கும் நடக்குமா?
(1704.90)
தமிழ்ப்பெயர் சந்தேகம்
திருகோணமலையில் ஒரு விழா. விழாவில் பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர். திரளாக மக்களும் வந்திருந்தனர். சிறப்புப் பேச்சாளர் ஒருவரின் பெயர் அறிவிக்கப்பட்டு "இவர் சொற்பெருக்காற்றுவார்” என்று தெரிவிக்கப்பட்டது. அப்பிரமுகர் ‘மைக் முன் வந்து "பாரதியும் பாஞ்சாலியும்" பொருள் பற்றி மிக உயர்ந்த கருத்துக்களுடன் ‘விளாசி', சபையோரின் பாராட்டுதல்களைப் பெற்றுக் கொண்டார்.
விழா முடிந்தது. சில முக்கியமானவர்கள் மத்தியில், ஆச்சரியத்துடன் கூடிய ஒரு சின்னச் சந்தேகம். “சிங்கள வராக இருந்தும் தமிழில் அற்புதமாகப் பேசிவிட்டார்” இது தான் அந்தச் சந்தேகம். அந்தப் பேச்சாளர் யார் தெரியுமா? யாழ். மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் திரு. டிவகலாலா.
பெயரை வைத்து ஒரு சிங்களவர் என்று முடிவு கட்டிவிட்டார்கள். அது சரி; இப்புதுமையான பெயர் எப்படி வந்தது? அவரே ஒரு கூட்டத்தில் இப்படிக் கூறியிருக்கிறார்:
"இது எனது அம்மா வைத்த தமிழ்ப் பெயர்தான். என்னை வளர்த்து ஆளாக்குவதில் அம்மா கவனம் செலுத்

129 கே.ஜி. மகாதேவா
தினாரே தவிர, பிறந்த உடன் பெயர் வைப்பதில் அவர் அதிக அக்கறை காட்டவில்லை”
(27.04.90)
அவதாருக்கு பலகோடி நஷ்டஈடு
பத்திரிகைகளில் வெளிவரும் சில செய்திகளை, கட்டுரைகளைப் படிக்கும்போது, சில வாசகர்களுக்குப் பல கற்பனைகள் வருவதுண்டு.
"இப்படியும் நடக்குமா..? இது ஒரு டூப் செய்தி. இது எப்பவோ கேள்விப்பட்ட செய்தி. பேப்பர் விற்பனைக்காக நல்லா கயிறு திரிச்சிருக்கிறாங்க" இவ்வாறு பல கற்பனைகள் தோன்றுவது வழக்கம்.
ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. அதாவது; பத்திரிகை விற்பனைக்காக உண்மைக்குப் புறம்பாக செய்திகளை - கட்டுரைகளை வெளியிடுவது பொதுவாக பத்திரிகை களுக்கு முடியாத காரியமாகும். காரணம் அதன் தாக்கம் பயங்கரமானது! உதாரணத்துக்கு ஒன்று:
தன்னை அவமானப்படுத்தி கட்டுரை வெளியிட்டதாக ஒரு பத்திரிகை நிறுவனம் மீது குற்றம்சாட்டித் தொடரப் பட்ட வழக்கில், பிரபல வழக்கறிஞர் ஒருவருக்கு 136 கோடி ரூபா நஷ்டஈடு வழங்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்பிரபல வழக்கறிஞர், 1963-ம் ஆண்டு நடந்த கொலை சம்பந்தமான புலன் விசாரணையில் தலையிட்ட தாக குற்றம்சாட்டி அவருக்கு அவதூறு ஏற்ப்டுத்தும் விதத்தில், பல தொடர் கட்டுரைகளை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரித்திருந்தது.
இவ்வளவு பெரும் தொகையான நஷ்டஈடு வழங்கு மாறு ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்தமை இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Page 67
கதையல்ல நிஜம் 13O
அடிக்குறிப்பு: அந்தப் பிரபல வழக்கறிஞரின் பெயர் திரு. றிச்சர்ட் ஸ்பிரேக், அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா நீதிமன்றமே மேற்படி நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டது.
(06:05.90)
assistasticsöq985 to oustifassir
உல்லாசப் பயணிகளைக் கவர்வதற்கு என்ன செய்ய வேண்டும்? இதற்குப் பல விளக்கங்கள் கூறப்படலாம். ஆனால் பிரேஸிலில் என்ன நடக்கிறது தெரியுமா? வறிய, அனாதைக் குழந்தைகளை அங்கு கொன்று குவிக்கிறார்கள். அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி பிரேஸிலின் பல நகரவீதிகளிலும் அனாதைகளாகச் சுற்றித் திரிந்த 327 இளம் வயதினர் இவர்களில் சிலருக்கு வயது ஒன்பதுதான்) சுற்றி வளைக்கப்பட்டு சுட்டுத் தள்ளப் பட்டுள்ளனர்!
கொலையாளிகளின் பெயர்: ‘கண்காணிப்புக் குழுவினர்’. இக்குழுவில் இருப்பவர்கள் முன்னாள் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் இராணுவப் பொலிஸார். இந்தக் கொடுமை ஏன் நடக்கிறது?
பிரேஸிலின் பல நகரங்களிலுமுள்ள வீதிகளில் சுமார் எழுபது லட்சம் கைவிடப்பட்ட குழந்தைகள் உலாவுகிறார் களாம். இவர்களில் பலர் பிச்சை எடுக்கிறார்கள். சிலர், உல்லாசப் பயணிகளைக் கவரும் நகரப் பகுதிகளில் சிறு கத்திகளை தம் வசம் வைத்துக்கொண்டு "கைவரிசிை காட்டு கிறார்களாம். இதுபற்றி அங்குள்ள (உல்லாசப் பயணிகளைக் கவரும்) ஒரு வியாபாரி என்ன சொல்கிறார் தெரியுமா?
"இந்த அனாதைக் குழந்தைகளினால் எங்கள் தொழிலே பாதிக்கப்படுகிறது. உல்லாசப் பயணிகளையே தொந்தரவுக்குள்ளாக்கி விடுகிறார்கள். இவர்களைச் சரிக்

131 கே.ஜி. மகாதேவா
கட்டுவது எங்களுக்குப் பெரிய வேலையல்ல, "கண்காணிப்புக் குழுவை வாடகைக்கு அமர்த்தினால் போதும். அவர்களுக்கு ஆளுக்கு ஆயிரம் ரூபா இலங்கை நாணயப்படி) கொடுத்தால் போதும். கச்சிதமாக முடித்துவிடுவார்கள்."
அட கடவுளே! உல்லாசப் பயணிகளைக் கவர வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் வலம்வரும் வீதிகள் பளிச்சிட்டுக் காணப்பட வேண்டுமென்பதற்காகவும் இப்படியா குழந்தைகளைக் கொன்று குவிப்பது?
இந்த விபரத்தை வெளியிட்ட திரு. டேவிட் றைட்டுக்கு நன்றி. தகவல்: ஸன்டே டைம்ஸ்.
(1405.90)
பெயர் ஆசை விரும்பிகள்
தினசரிப் பத்திரிகைகளில் அல்லது வார - மாத சஞ்சிகைகளில் தங்களைப் பற்றி செய்திகள், கட்டுரைகள் வெளியிட விரும்புவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.
சிலர், விஷயத்தைச் சொல்லுவார்கள். ஆனால் தங்களின் பெயர் எக்காரணம் கொண்டும் வெளிவரக் கூடாது என்று 'தடை’ போடுவார்கள். வேறு சிலரோ தங்களின் பெயர் வெளிவரவேண்டும் என்பதற்காகவே எதை யாவது சொல்லி விஷயத்தை வெளிவரச் செய்துவிடுவார்கள். பின்னர் மாட்டியும் கொள்வார்கள். இவர்களில் இன்னு மொரு ரகத்தினரும் உண்டு. அதாவது, முக்கிய செய்தி யாளரைப் பிடித்து. "என்னப்பா. நம்மைப்பற்றி ஒன்றையும் பத்திரிகையில் காணோமே. ஏதாவது எழுதவேண்டியது தானே.” என்று காக்காபிடித்து காரியம் சாதிப்பவர்களும் உண்டு. இத்தனை பேர்களில் வேறு ரகத்தினரும் உண்டு. ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி மாதிரி எதையோ உளறிவிட்டு பின்னர் 'ஏன் தான் இப்படிச் சொன்னேன்’ என்று மண்டையை உடைப்பவர்களும் உண்டு.

Page 68
கதையல்ல நிஜம் 132
ஒரு சின்ன ஞாபகம். உகாண்டாவை ஆண்ட சர்வாதிகாரி இடிஅமின் தன்னைப்பற்றி பத்திரிகைகள், வானொலிகள் புகழ்பாடுவதை பெரிதும் விரும்புபவர்.
அவரது ஆட்சிக்காலம். சில நாட்களாக அவரைப் பற்றி சர்வதேச மட்டத்தில் ஒரு செய்தியும் வெளிவராதது அவர் மனதைப் பெரிதும் புண்படுத்தியது. யோசித்தார். கடைசியில் முடிவு எடுத்தார். என்ன நடந்தது? சர்வதேசப் பத்திரிகைகளில் எல்லாம் 'நியூஸ்’ ஒகோ என்று வந்தி ருந்தது! என்ன மாதிரியான செய்தி? அது இதுதான்.
"குளியலறை சென்ற இடி அமின் வழுக்கி விழுந்தார். எழும்ப முடியாமல் கஷ்டப்பட்ட இடி அமினை அவரது உதவியாளர்கள் சிரமப்பட்டு தூக்கிச் சென்றனர்.”
வழுக்கி விழவேண்டும். செய்தி வரவேண்டும் என்று முடிவு எடுத்து, உண்மையிலேயே இடி அமின் வழுக்கி விழுந்தார்தான். ஆனால் தமக்கு பாரிய அடி உடம்பில் கிடைக்கும் என்று அவர் யோசித்து இருக்கமாட்டார். எது எப்படியானாலும் அடுத்தநாள் பத்திரிகைகள், வானொலிகள் செய்தி வெளியிட்டது இடி அமினுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. (தகவல்: இடி அமின் வாழ்க்கைக் குறிப்புகள்)
இதே மாதிரியான நிலைதான் நமது அமைச்சர் ரஞ்சனுக்கும் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
இந்திய கடவுச்சீட்டு பெற்றுக்கொண்ட மலையகத் தமிழ்த்தோட்டத் தொழிலாளர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் போவதாகவும், மலையகத் தமிழர்களை நாடு கடத்த தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறு இந்தியாவை கேட்டுள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சன் 'அவிட்டு விட்டார் ஒரு செய்தியை. என்ன நடந்தது? ஏன் தான் சொன்னோம் என்று ஆகிவிட்டது அவருக்கு! அந்த அளவுக்கு இந்தியாவிலும், ஏன் - இலங்கையிலுமே 'பிறவுர்’ உண்டாகிவிட்டது!
‘பப்ளிஸிட்டி’ விரும்புவர்களுக்கு இப்படியும் ஆப்பு விழுவது உண்டு!
(15.05.90)

133 கே.ஜி. மகாதேவா
9Uut pä5stö
“உமா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டார்" இது தான் அந்தச் செய்தியின் தலைப்பு. இச்செய்தியில் தெரிவிக்கப்பட்ட விபரங்களின்படி, "உமாமகேஸ்வரனின் தந்தையும் தாயும் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளனர்" ஆனால் நடந்தது இதுதான்:
நடராஜாவும் மகேஸ்வரியும் கஹவத்தையைச் சேர்ந்த வர்கள். இவர்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பலன் எப்படியோ தெரிய வில்லை. குழந்தையின் பெயரைப் பதிவுசெய்து கொள்ளச் சென்றபோதுதான். "பூதம் புறப்பட்டது!
மேற்படிப் பெற்றோர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
"உண்மையைச் சொல்லுங்கள். நீங்க உமா மகேஸ் வரனின் சொந்தக்காரர்தானே.ம். சொல்லுங்க."
ஐந்து மணி நேரமாக குழந்தையின் பெற்றோர் துருவித்துருவி ஆராயப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
விஷயம் இதுதான்; பெற்றோரின் பெயர் நடராஜா மகேஸ்வரி. குழந்தையின் பெயர் உமாமகேஸ்வரன்! பெயரில் வந்த குழப்பம்தான் மேற்படி சம்பவம். இச்செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, செய்தியை அழகாகப் பெட்டி கட்டி வெளியிட்டு விற்பனையைப் பரபரப்பாக்கியது ‘திவயின’ (26.085) எனும் சிங்களத் தினசரி.
(020285)

Page 69
கதையல்ல நிறம் 134
தமிழ் முழி பெயர்ப்பு
உல்லாசப் பிரயாணிகள் சபை சம்பந்தமாக, பல வர்ண அறுபது சத முத்திரையை, தபால் பகுதி வெளியிட்டுள்ளது.
இதுபற்றிய சிறப்பை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் குறிப்பிட்டுள்ளனர். உல்லாசப் பிரயாணிகள் சபை (1975 - 1985) காலப்பகுதியை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பத்தாவது ஆண்டு என்று குறிப்பிட்டு; தமிழில் பத்தாம் நூற்றாண்டு அதாவது ஆயிரம் ஆண்டுகள் என்று மொழி (முழி) பெயர்க்கப்பட்டுள்ளது!
● (x- «Х»
கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலத் தினசரியில் இப்படி ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது:
‘பைலட் பிரேம்நாத்” சிங்களத் திரைப்படத்தில் ஹிந்தி நடிகை பூரீதேவி என்று புகைப்படம் இடம் பெற்றுள்ளது. ‘பைலட் பிரேம்நாத் சுத்தமான தமிழ்ப்படம். சிங்களத்தில் ‘டப்' செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் நடிகை பூரிதேவி ஹிந்தி நடிகையாக மாற்றப்பட்டுள்ளார். இதுதான் உண்மை. எப்படி இருக்கிறது சங்கதி?
(03.03.85)
இவருக்கே இப்படி
குருநகரைச் சேர்ந்தவர் ஏ. யேசுராசா. இவருக்கு இம்மாதம் ஒன்பதாம் திகதி (முத்திரையிடப்பட்டு) கல்

135 கே.ஜி. மகாதேவா
முனையில் வைத்து ஒரு பதிவுத்தபால் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில் இவரது விலாசமும், அனுப்புபவரது விலாசமும் மிகவும் தெளிவாகவும் சரியாகவும் இருந்தது. ஆனால் 13-ம், 14-ம் திகதிகளில் “வீட்டில் ஆள் இல்லை. விலாசம் பிழை” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டு மூன்று தடவைகள் தபாலகம் திரும்பிச் சென்றுவிட்டது. இதன் பின்னர் பதினாறாம் திகதி இவருக்கு அதே விலாசத்துக்கு ஒரு கடிதம் வந்திருப்பது சம்பந்தமாக தபாலகத்திலிருந்து அறிவித்தல் கடிதம் வந்தது. விழுந்தடித்துக் கொண்டு யேசு ராசா தபாலகம் சென்று விசாரித்தபோது அந்தப் பதிவுத் தபால் விஷயம் புரியவந்தது.
அடிக்குறிப்பு: () இது நடந்திருப்பது நமது ஊரில். (2) பெயர் விலாசம் சரியாக இருந்தும் திரும்பி இருக்கிறது. (3) மேற்குறிப்பிட்ட நமது ‘கதாநாயகன்’ ஒரு உதவித் தபால் அதிபர்!
இவருக்கே இப்படி என்றால் சாமானியமானவர் களுக்கு?
(23,1285)
98Fò8Sð Ufag)
வழக்கம்போல நேற்றுக் காலை, அந்தக் கொட்டும் மழையிலும் ‘ஓ’ என்ற இரைச்சலிலும் தொலைபேசி அழைத்தது.
“பொதுஜனம் பேசுகிறேன்." என்றார்.
"ஒரே முழக்கமாக இருக்கிறது. கொஞ்சம் பெலமா பேசுங்கோ." என்றேன்.
".இலங்கை அரசு தரப்பினருக்கும் தீவிரவாதக் குழுவினருக்குமிடையே பூட்டான் தலைநகர் திம்புவில்

Page 70
கதையல்ல நிஜம் 136
பேச்சு வார்த்தைகள் நடைபெறுமென்று இலங்கையிலே முதன்முதலில் செய்தி வெளியிட்டது ‘ஈழநாடு’ பத்திரிகை தான்.
".இதன் பின்னர், பூட்டானில் இனிமேல் இரு தரப்பினருக்குமிடையே சந்திப்பு நடக்காது என்று திட்ட வட்டமாகச் செய்தி வெளியிட்டதும் இலங்கையில் ‘ஈழநாடு’ பத்திரிகை ஒன்றுதான்.
"அதுமட்டுமல்ல; இனப்பிரச்னை சம்பந்தமான இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் இப்போதைக்கு நடக்காது என்று நாள், நட்சத்திரம்’ போட்டு, பிரதமர் ராஜீவ் காந்தியின் வெளிநாட்டு விஜயத்தை ஆதாரங்காட்டி, நறுக்குத் தெறித்தாற்போல இலங்கையில் முதலில் செய்தி வெளி யிட்டதும் ‘ஈழநாடு’ பத்திரிகைதான்.
ஆனாலும், இனப்பிரச்னை தொடர்பான பேச்சுக் களை மீண்டும் உடனடியாக ஆரம்பிக்கும் சாத்தியமில்லை என்று அரசு உயர் வட்டாரங்கள் இப்பொழுதுதான் நம்பிக்கை தெரிவித்துள்ளன. அதுதான் ‘ஈழநாடு’வின் அமைதியான, ஆனாலும் சலசலப்பற்ற முன்னோடியான செய்திகளை எண்ணிப்பார்த்தேன்." என்று பாராட்டினார் பூரீமான் பொதுஜனம்.
(11.0485)
பத்திரிகை முத்திரை
ஒரு பத்திரிகையின் சிறப்பு எதில் தங்கியிருக்கிறது?
‘ஆகக்கூடிய விற்பனையுள்ள ஒரே நாளிதழ்’ எனும் முத்திரையின் மூலமும் சில பத்திரிகைகள் தங்களின் கெட்டித்தனத்தைக் காட்டுவதுண்டு!

137 (35.23. LDSTGgeurt
நமது நாட்டில் மேற்படி முத்திரையைப்பதிப்பது ஒரு ‘பாஷன்’ என்று கூறலாம். ஆனால் லண்டனிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை இக் கவர்ச்சி’ முத்திரையை எப்படிப் பயன்படுத்தியது தெரியுமா?
"மண்ணிலிருந்து வெளியாகும். ஆகக்கூடிய பிரதிகளை விற்பனை செய்யும் ஒரே பத்திரிகை” என்று ‘முட்டை யிட்டிருந்தது!
ஜப்பானை உங்களுக்குத் தெரியுமா? அந்த அமைதி யான நாட்டிலிருந்து வெளிவரும் ஏராளமான பத்திரிகை களில் ஒன்றுதான் ‘மெயினிச்கி’. இதன் விற்பனை எவ்வளவு தெரியுமா? எத்தனையோ லட்சமாகும்! அதாவது, லண்டனில் “கொடி’ கட்டிப் பறப்பதாகப் பிரபல்யப்படுத்திய அந்தத் தினசரியின் பதிப்புகளையும்விட பன்மடங்கு அதிகமாகும்!
கொழும்பிலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கில ஏடு, மேற்படிச் செய்தியைப் பிரசுரித்து. "இந்த நாட்களில் நமது நாட்டின் சில செய்திப் பத்திரிகைகள் தங்களது ‘அதிக விற்பனை’ என்று சொல்லப்படுவதை பெரிதாகக் கருதி உரத்துக் கத்தும்போது, லண்டனிலிருந்து வெளிவரும் ஒரு செய்தி ஏடு.” என்று குறிப்பிட்டுள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால், மேற்படி கொழும்பு பத்திரிகையும் தனது பெயரின் கீழ், "இலங்கையில் ஆகக் கூடுதலான பிரதிகளை விற்பனை செய்யும் ஏடு” என்று முத்திரை பதித்திருக்கிறது!
(2108,84)
உடல் வர 45 நாள்
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு என்பது இப்பொழுது சர்வசாதாரணமாகும். ஆனால், இவர்களில் எத்தனை பேர் உயிருடன் திரும்புகின்றனர்? 'திரும்பினாலும் சடலமாவது உடனடியாகக் கிடைக்கிறதா என்பது. கவலைக்கிடமாக இருக்கிறது.

Page 71
கதையல்ல நிஜம் 138
எஸ். பூரீராகவன் காரைநகரைச் சேர்ந்தவர். ஒரு கிரேக்க கப்பலில், வானொலிக் கட்டுப்பாட்டாளராகச் சில மாதங்களுக்கு முன்னர்தான் வேலையைப் பொறுப்பேற்றார்.
காலனுக்கு இடமென்ன, நேரமென்ன? துபாய்க்கு அருகில் இவர் வேலைபார்த்த கப்பல் சென்று கொண்டிருந்த போது மாரடைப்பினால் காலமானதாக இவரது பெற் றோருக்கு அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், அன்னாரின் பூதவுடல் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிவைக்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கப்பல் உரிமையாளர்கள் செய்தி அனுப்பியிருந்தனர்.
உயிருடன்தான் இல்லாவிட்டாலும், பூதவுடலை யாவது காணமாட்டோமோ என்று ஏங்கினர் பெற்றோர். நிமிடங்கள் மணியாகி, நாட்கள் வாரமாகி, வாரங்கள் மாதமாகிவிட்டது. ஒரு தகவலும் இல்லை!
கடைசியாக, அன்னாரின் பூதவுடல் விமான மார்க்க மாக கடந்தவாரம் ஊர்வந்து சேர்ந்தது. நாற்பத்து ஐந்து நாட்களின் (ஒன்றரை மாதத்தின்) பின்னர்!
(27.0884)
ஆசிரியர் நாடகம்
அது ஒரு கல்லூரி கல்லூரி என்றால், கல்வித் துறையில் சுழி ஒடிய பலரைத் தோற்றுவித்த பெரும் நிறுவனம் என்றும் சொல்லலாம்.
இக்கல்லூரியில் சில நேரங்களில் ‘மாயஜால வித்தை' களும் நடந்து விடுகிறதாம்! உதாரணத்துக்கு -
வகுப்புகளில் மாணவர்கள் இருப்பார்கள். ஆனால் ஆசிரியர்கள் பலர் இருக்கமாட்டார்கள். ஆனால், ஆசிரியர் வரவு பதிவேட்டில் சகல ஆசிரியர்களின் கையொப்பமும்,

139 கே.ஜி. மகாதேவா
நேரமும் அதுவும் சாட்சாத் பாடசாலை நேரமும், திகதியும் பளிச்சென்று தெரியும்!
‘கண்கட்டுவித்தையை முறியடிக்கச் சில ‘ விரும்பிகள் துணிந்தனர்.
நலன்
ஒரு நாள், காலை ஒன்பது மணியிருக்கும். அந்த ‘நலன் விரும்பிகள் அந்தக் கல்லூரியின் வெளிக்கதவுகளை தாங்கள் கொண்டுவந்த பெரிய பூட்டுக்களினால் பூட்டி விட்டு அந்த இடத்திலேயே கப்சிப் பாக நின்றனர்.
உண்ட களிப்போ, நடந்த களைப்போ. வழக்கம் போல சர்வசாதாரணமாக கல்லூரி நோக்கி ராஜநடை போட்ட அந்த ஆசிரியர்களும், ஓர் அம்மணியும் வெளிக் கதவுகள் வழக்கத்துக்கு மாறாக மூடப்பட்டிருப்பது கண்டு முதலில் அதிர்ச்சி அடைந்து பின்னர், அங்கு நின்ற "நலன் விரும்பி’களைப் பார்த்ததும் வயிறு கலங்கிற்றாம்!
அந்த ஆசிரியர்களுக்கும் அம்மணிக்கும் தடயுடலான வரவேற்பு’ நடந்த பின்னர் "இன்று நான் லீவு” என்று சமாதானம் கூறி சிலர் தப்பமுயன்றனராம்.
அந்த ஆசிரியர்களின் தொடர்ச்சியான 'நாடகம்’ அன்றோடு முடிந்துவிட்டதாகக் கேள்வி. அதேநேரத்தில் ஏனைய சில கல்லூரிகளுக்கும் இது ‘சிவப்பு விளக்காக அமைந்துவிட்டது!
(23.0784)
ஆங்கிலத் தமிழ்
யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகள், பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். மாவட்ட கல்விப் பணிப்பாளர் இப்பொழுது வடபிராந்திய

Page 72
கதையல்ல நிஜம் 14o
கல்விப்பணிப்பாளர்) திரு. இ. சுந்தரலிங்கம் அவர்கள் ஆங்கில பயிலுநர் ஆசிரியர்களின் ஆங்கிலத் திறமை பற்றி ஒரு கதை சொன்னார்.
*ஆங்கில பயிலுநர் ஆசிரியராகக் கடமையாற்றும் ஒருவர் என்னிடம் வந்து தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கேட்டார். நியாயமான கேள்விதான். ஆனாலும் அவரின் ஆங்கிலப் புலமை எப்படி இருக்கிறது என்று சற்று ஊடுருவிப் பார்ப்பதற்காக ஆங்கிலத்தில் சில கேள்விகளைக் கேட்டேன்.
“முதல் கேள்வி: உமது பெயர் என்ன? 2-வது கேள்வி: உமது விலாசம் என்ன? இரண்டு கேள்விகளுக்கும் சரியாகப் பதில் சொல்லவே, மூன்றாவது கேள்வியைத் தொடுத்தேன். உமது தந்தையார் என்ன செய்கிறார்? இதற்கு அவர் "மார்க்கட்" என்று மட்டும் பதிலளித்தார். அடுத்த கேள்வி: "மார்க்கெட்டில் உமது தந்தையார் காய்கறிகளை விற்பனை செய்கிறாரா? அல்லது சாப்பிடுகிறாரா? என்று கேட்டதும்; அந்த ஆங்கில ஆசிரியர் "ஈற்றிங்" என்று பெருமையுடன் பதிலளித்தார்!"
“சின்னக் கேள்விகளுக்கே ஆங்கிலத்தில் விடை கூறத் தெரியாதவர்களும் ஆங்கில ஆசிரியர் பயிலுநர்களாக இருக்கிறார்களே என்று நேரில் அறியும்போது பெரிய கவலையாக இருக்கிறது." என்று கூறி முடித்தார் கல்விப் பணிப்பாளர் சுந்தர்’.
ஒ. ஆசிரிய சமூகமே. எமது இளைய சமுதாயமே உனது கைகளில்தான்! கவனியுங்கள்!
(2105.90)
மளிதன் உலர்கிறான்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் மயக்கமான நிலையில் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவரப்படுகின்றார்.

14 கே.ஜி. மகாதேவா
மயக்கம் சற்றும் தெளியாத நிலையில் அவரை ஆஸ்பத்திரி "வார்டுக்குக் கொண்டு செல்லும்போது அவரிடம் சுளைகளையாக ஏழாயிரம் ரூபா இருப்பதை ஆஸ்பத்திரி சாதாரணத் தொழிலாளி செல்லையா விஜயரத்தினம் கவனிக்கின்றார்.
அவர் என்ன செய்தார்? "பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்" என்ற பழமொழியை மாற்றி அமைத்து விட்டார்.
விபத்தில் சிக்கியவரிடமிருந்த ஏழாயிரம் ரூபாவையும் பத்திரமாக எடுத்து, ஆஸ்பத்திரி அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார் அந்தத் தொழிலாளி!
நூறு ரூபாவுக்கே கொலைவிழும் இன்றைய கால கட்டத்தில் அன்பர் செல்லையா விஜயரத்தினத்தின் நேர்மை. இமயமலை உச்சிக்கே சென்றுவிட்டது!
(05.0384)
வீதிமில் படகுச் சேவை
நிலத்திலும் நீரிலும் ஒடும் கார், ஜீப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதுபோல நிலத்திலும் சகதிகளிலும் குறுகிய தூரம் செயல்படும் ‘படகுகள் யாழ்ப்பாணத்தில் விரைவில் சேவையிலிடுபடும் என்று பூரீமான் பொதுஜனம் கூறுகின்றார்.
தினம் தினம் பாதசாரிகள் முதல் சகல வாகனச் சொந்தக்காரர்களிடமும், பிரயாணிகளிடமும் திட்டுகள்’ வாங்கிக் கொண்டிருக்கும் கே.கே.எஸ் வீதியில், யாழ் இந்துக் கல்லூரிக்கும் சிவதொண்டன் நிலையத்துக்குமிடையில்

Page 73
கதையல்ல நிஜம் 142
உள்ள குண்டு குழி நிறைந்த சகதிப்பாதையில் மேற்படி ‘படகின்' வெள்ளோட்டம் இன்றோ நாளையோ நடைபெற விருக்கிறதாம்! பெருந்தெருக்கள் திணைக்களத்துக்கு இது சமர்ப்பணம்!
(05.0384)
ஆயுதம் 8கcட தொண்டமான்
பதில்: "நான் ஆயுதங்களை எதுவும் சும்மா கேட்க வில்லை. பாதுகாப்புக்காகத்தான் கோரினேன். நாம் எப்பொழுதுமே பயந்துகொண்டு வாழமுடியாது. 1983ல், மக்கள் எல்லா இடங்களிலும் தாக்கப்பட்டனர். அப்பொழுது "எமக்குப் பாதுகாப்பு வேண்டும்" என்று கோரினோம். தாக்குபவர்களை விரட்டி அடிக்க மண்வெட்டிகளையும் அலவாங்குகளையும் பாவியுங்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இப்பொழுது சிங்களப் பகுதிகளில் ஏதோ எல்லாம் நடக்கிறது. அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப் பட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தோட்டத் தொழி லாளர்கள்தான் மிகவும் உதவியற்ற மக்கள்."
மேற்படி விபரம் நேற்றுமுன்தினம் ஐலண்ட்” பத்திரிகையில் ஒரு பேட்டியில் வெளிவந்திருக்கிறது. பதிலளித்தவர் அமைச்சர் எஸ். தொண்டமான்.
அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்வி: "தோட்டப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்று நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்?"
(12.0285)

143 கே.ஜி. மகாதேவா
அரசு கண் துடைப்பு
தமிழ்மொழிக்கு இந்த நாட்டில் அரசகரும மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்று அரசு 'கத்துவதும் ஆனால் முழுக்க முழுக்க நடைபெறுவது புறக்கணிப்புத் தான் என்றும் இங்கு பல தடவைகள் ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டியிருந்தோம்!
யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறு வதற்கு தமிழில் கொடுக்கும் ஆவணங்களுக்கு ஏன் ஆங்கில மொழிபெயர்ப்பு தேவை?
கடவுச்சீட்டைப் பெற விண்ணப்பிக்கும்போது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், திருமண அத்தாட்சிப் பத்திரம் போன்ற ஆவணங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு கோரப் படுகிறதே ஏன்? தமிழ்மொழி ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு மொழியா?
BATAIT Buot UGODT đ9ßa
வடமாகாண தெங்கு பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத்திலிருந்து துடிதுடித்து வந்த கடிதம் இது:
"பனை அபிவிருத்தி பற்றிய ஆய்வை நடத்த ஓர் வெளி நாட்டுக் குழு யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளதாக அறிகின்றோம். ஆனால் இவர்கள், கடந்த 17 வருடங்களாக இயங்கிவரும் எமது தெங்கு பனம்பொருள் சங்கங்கள் அனைத்தையுமோ அல்லது இச்சங்கங்களின் சமாசத்தையோ

Page 74
கதையல்ல நிலம் 144
அல்லது இச்சங்கங்களையும் சமாசத்தையும் வழி நடத்தும் தனிக்கூட்டுறவு திணைக்களப் பிரிவின் உயர் அதிகாரி களையோ சந்திக்கவில்லை. இந்த இலட்சணத்தில். இந்த ஆய்வை நடத்துபவர்கள் முழுமையான தகவல்களை எப்படிப் பெறமுடியும்?”
சம்பந்தப்பட்டவர்களுக்கு இது சமர்ப்பணம்!
(0906.90)
இசைNல் மயங்கிய கோழிகள்
இசையில் யார் மயங்குவர்?
இப்படிக் கேட்டால், இசையில் மயங்காதோர் உளரோ? என்று நீங்கள் பதில் அளிக்கலாம்.
நாதஸ்வர இசை(மழையில் நனைந்து வாழை மரங்கள் விரைவாக குலைபோட்டதாக முன்னர் செய்தி வந்தது.
வரண்டு போயிருந்த ஒரு குளத்தில் நின்று குன்னக்குடி வைத்தியநாதன் எழுப்பிய வயலின் இசையில் மயங்கிய மேகங்கள் நீரைச் சுரந்ததை அண்மைக்காலச் செய்தியாகப் படித்தோம். இப்பொழுது சீனாவிலிருந்து ஒரு புதிய செய்தி வந்துள்ளது. -
கிராமிய இசையில் மயங்கிய சீனக்கோழிகள் அதிகளவில் முட்டையிட்டு “கின்னஸ்’ சாதனை ஏற்படுத்தி யுள்ளன.
30,000 கோழிகள் மத்தியில் இதுதொடர்பாக மேற் கொள்ளப்பட்ட ஆய்வில்; இக்கோழிகள் அதிகளவில் முட்டை யிட்டதுடன் இசையின் தாளத்துக்கேற்ப, தலையசைத்து சிறகுகளையும் அடித்து மகிழ்ச்சி தெரிவித்தனவாம்.

145 கே.ஜி. மகாதேவா
அகக்கண்ணால் நாம் காணும் இறைவனே இசையில் மயங்குகின்றான் என்றால், உயிரினங்கள் ஏன் மயங்க முடியாது என்று நீங்கள் முணுமுணுப்பது நியாயம் தான். (0103,90)
தப்புக் கணக்கு
சுழிபுரம், பண்ணாகத்தைச் சேர்ந்த ஓர் அம்மணி வந்தார். ஒரு கடிதத்தைக் கொடுத்தார். ஒருமுறை பார்த் தோம். புரியவில்லை. சிலரிடம் கொடுத்து அர்த்தத்தை அறிந்துகொள்ள முயற்சித்தோம். ஓய்வூதியம் சம்பந்தமான கடிதம் என்று மொழிபெயர்க்கப்பட்டது.
இதன் கதைதான் நேற்று வந்தது. தொடர்கதை இன்று நீடிக்கிறது. நேற்று காலை யாழ், செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது;
"சுழிபுரம் பண்ணாகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தனிச்சிங்களத்தில் ஒரு கடிதம் வந்ததாகவும், அதில் அவரது ஓய்வூதிய விதவைப் பணத்தை யாழ். செயலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறும், குறித்த கடிதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்துதான் அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இக்கடிதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தான் அனுப்பப்பட்டதென்ற கூற்று தவறானது. இக்கடிதம் கொழும்பிலுள்ள கணக்கு - கொடுப் பனவு பணிப்பாளரினால் எமக்கு விலாசமிடப்பட்டு அனுப்பப்பட்டதுடன், அதன் பிரதி மட்டும் தகவலுக்காக சுழிபுரம் பண்ணாகத்தைச் சேர்ந்தவருக்கு பணிப்பாளரினால் கொழும்பிலிருந்து நேரடியாக அனுப்பப்பட்டதாகும்."
தான் அறியாத சிங்களம் தனது பிடரிக்குச் சேதம் என்பது எவ்வளவு பெரிய உண்மை!
(09:02.84)

Page 75
கதையல்ல நிலும் 146
யாழ். பொலிஸ் என்றால்.
பாழ். மாநகரசபைக்குச் சொந்தமான "லொறி ஒன்று நேற்று நகரின் மூலைமுடுக்கெல்லாம் நுழைந்து குப்பைகளை ‘விழுங்கிக் கொண்டிருந்தது. நகரின் ஓரிடத்தில் இந்த லொறி வந்தபோது அசைய முடியாது போய்விட்டது. காரணம் போக்குவரத்துத் தடை லொறிக்குப் பின்னால் நின்ற ஒரு வாகனத்துக்குப் பொறுக்கமுடியவில்லை போலும். லொறி வழிவிடவில்லை என்று அந்த வாகனத்தில் வந்தவர் களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது!
வாகனத்திலிருந்தவர்கள் கீழே இறங்கினார்கள். “லொறி’யின் டயர்களின் காற்றைத் திறந்துவிட்டுச் சென்று விட்டனர்.
குப்பை லொறியில் கடமையாற்றியவர்கள் சும்மா இருப்பார்களா? குப்பை ஏற்றுவதை ‘அம்போ’ என்று நிறுத்திவிட்டு மேற்பார்வையாளரிடம் சென்று புகார் செய்தனர்!
காதிலே கேட்டது; அந்த வாகனத்தின் பெயர் பொலிஸ் ஜீப்.
0 0. 0.
மன்னிக்கவும் இது ஒரு “கிசு கிசு” செய்தி.
யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் ஒரு பெண் அழகான ஓர் குழந்தையை சில தினங்களுக்கு முன்னர் பெற்றெடுத்தார். விஷயம் இதுதான்; ஒன்றரை வருடத்துக்கு முன்னர் இப்பெண் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் குடும்பக் கட்டுப்பாட்டுக்குள்ளாகி, ரொக்”ப்பணமும் பெற்றுக்கொண்டவர்!
(080284)

147 கே.ஜி. மகாதேவா
தலைநகர் SRனஸ்
கொழும்பிலிருந்து "அவர்கள்’ ஒரு வானில் வருவார்கள்.
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கம்பெனிகளின் பெயரைக்கூறி, அந்தக் கம்பெனிகள் தங்களது உபஏஜண்டுகள் என்று அடித்துச் சொல்லி கிராமப்புறங்களில் 'பிஸ்னஸ்’ செய் வார்கள்.
"அவர்கள்’ எதிர்பார்த்த "பிஸ்னஸ்’ ‘ஒகோ’ என்று நடந்துவிட்டால், அவர்கள் கொடுக்கும் பற்றுச்சீட்டில்; "அடுத்தமுறை வரும்போது ஒரு வானொலிப் பெட்டி, ஒரு ‘ஷோகேஸ்" ஆகியவை இலவசமாக வழங்கப்படும்” என்று குறிப்பிடுவார்கள்.
முதல் மர்மம்; பற்றுச்சீட்டில் காணப்படும் பெயரில் கொழும்பில் மருந்துக் கம்பெனி எதுவும் இருக்காது.
இரண்டாவது மர்மம்; அவர்கள்’ வழங்கும் மருந்து களின் உண்மையான விலை 'யானை' விலையாகும்.
மூன்றாவது மர்மம்: இந்த மருந்துகள் காலாவதி யானவை. அதாவது மருந்து பாவிப்பதற்குரிய குறிப்பிட்ட காலப்பகுதியைக் கடந்தவையாகும்! மேலும் ‘அவர்கள்’ குறிப்பிடும் இலவச அன்பளிப்புகளும் வெறும் கண்துடைப்பு தான.
மக்களை நஞ்சூட்டும் இந்த மோசடி வியாபாரத்துக்கு இருவாரங்களுக்கு முன்னர் வேலணை வர்த்தக நிறுவன மொன்று ‘பலி’யாகியுள்ளது.
(28.284)

Page 76
கதையல்ல நிறம் 148
இதுவும் வெங்காலக் கதைதான்
யாழ்ப்பாண வெங்காய ஏற்றுமதி என்ன ஆச்சு?
"யாழ்ப்பாண வெங்காயம் துபாய் செல்கிறது" - இது தான் முதலில் வந்த செய்தி.
பின்னர்; “யாழ்ப்பாண விவசாயிகளுக்கு பெரும் அதிர்ஷ்டம்! வெங்காயத்தை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - என்று செய்தி வெளிவந்தது.
ஆனாலும் விஷயம் இத்துடன் முடிவடையவில்லை!
யாழ்ப்பாண வெங்காயத்தை மத்திய கிழக்கு நாடு களுக்கு ஏற்றுமதி செய்ய, ஏற்றுமதி ஊக்குவிப்புப் பணி யகத்தின் குழுவொன்று அங்கு புறப்பட்டுச் சென்றுவிட்டது ள்ன்றும், இக்குழுவின் மத்திய கிழக்கு நாடுகள் சுற்று விஜயம் முடிவடைந்ததும் யாழ், வெங்காயம் வான்மூலம் - மன்னிக்கவும் "பிளேன்’ மூலம் பறக்கும் என்றும் செய்தி s91.9-lull-gil.
ஆனால் இன்று - ஈ. வெ. ரா. பெரியார் வாக்கு பொய்க்கவில்லை.
யாழ். வெங்காய ஏற்றுமதி; பெரியாரின் வெங்காயக் கதையாக ‘அம்போ’வாகப் போய்விட்டது!
(14.0283)
நால்டேருக்கும் அடிசருக்கும்
யானைக்கும் அடி சறுக்கும் என்பாகள்.

149 கே.ஜி. மகாதேவா
நம் நாட்டுச் செய்திகளில் சர்வதேச செய்தி ஸ்தாபன மான 'ராய்ட்டருக்கும் சில சந்தர்ப்பங்களில் அடி சறுக்கி விடுகிறது!
மர்மத்துக்குள் மர்மமாகிவிட்ட உபாலி விமானம் பற்றிய செய்தியில்; உபாலி விமானம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை காலையில் சுடச்சுட செய்தி வெளியிட்டுவிட்டு மாலையில் தனது செய்தியை ‘ராய்ட்டர்’ பெருந்தன்மையுடன் வாபஸ் பெற்றுவிட்டது!
இதேமாதிரி; 1959 செப்டம்பர் மாதம் 1ம் திகதி ‘ராய்ட்டர்’ இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டதாக காலையில் சுடச்சுட செய்தி வெளியிட்டிருந்தது. ஆனாலும் சில மணி நேரத்துக்குள், சமாளித்துக்கொண்டு தனது செய்தியை (வாபஸ் பெற்று) புதுமெருகுடன் வெளியிட்டுவிட்டது. (பண்டாரநாயக்கா பிற்பகல்தான் காலமானார்)
இதில் ஆச்சரியம் என்னவென்றால்; 'ராய்ட்டர்’ வெளியிட்ட முதல் செய்தியை ஆதாரமாகக் கொண்டு தலைநகரிலிருந்து வெளிவரும் ஓர் ஆங்கிலப் பத்திரிகை தனது பிராந்திய பதிப்பில் பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டார் என்று தலைப்புச் செய்தியை அவசரமாக வெளியிட்டுவிட்டதுதான்.
(22.0383)
அவசரக்குடுக்கைகள்
. ஸி. ஈ. (உயர்தரம்) பரீட்சையின் சில பாடங் களின் கேள்வித் தாள்கள் முன்னதாகவே வெளிவந்து விட்டதாக செய்தி அடிபட்டது நீங்களும் அறிந்ததே.
இதில் பெரிய (பரம) இரகசியமும் உண்டு.

Page 77
கதையல்ல நிஜம் 15O
தலைநகரில் சில கேள்வித் தாள்கள் முன்னதாகவே வெளிவந்ததும், இவை அவசரம் அவசரமாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு ‘றோனியோ’ வடிவத்தில் பல பகுதி களுக்கும் சுற்று நிருபமாக அனுப்பப்பட்டன.
இதில் வேடிக்கை என்னவென்றால் -
தமிழ் மொழிபெயர்ப்பைப் பெற்றுக்கொண்ட பரீட் சார்த்திகள் சிலர் முழு வேகத்தில் ‘கரைத்துக் குடித்து' பரீட்சை மண்டபம் சென்று முழித்துக்கொள்ள வேறு சிலர், நிதானமாக - சொந்த அறிவுக்கிணங்க கேள்வி களுக்கு மறுமொழி எழுதித் திருப்தி கொண்டுள்ளனர்.
இதில் என்ன வேற்றுமை? முழு வேகத்தில் சென்ற பரீட்சார்த்திகள் “முட்டை' வாங்குவது நிச்சயமாம்! காரணம்; சிங்களத்திலிருந்து அந்தக் கேள்விகளை மொழி பெயர்த்ததில் முழி பிதுங்கிவிட்டதாம். அதாவது மொழி பெயர்ப்பில் ஏராளமான பிழைகளாம்! சப்பித் தின்றவர்கள்.
(12.1083)
தர்மிஷ்டம் வாழ்க
யாழ்ப்பாணம் பிரதம தபால் அலுவலகத்தில், தொலைபேசித் தொடர்புச் சேவை இப்பொழுது எப்படி இருக்கிறது?
அன்று, யாழ் - கொழும்பு தொலைபேசி “புக்" செய்தால், எட்டு மணி நேரம் என்பதுதான் வழக்கமான பதில், இன்று - நேரடித் தொலைபேசிச் சேவை. எண் களைச் சுழற்றினால் போதும். இலங்கை நமது கையில். ஆனால் எல்லோருக்கும் இது முடியுமா? வீட்டில் தொலை Gug இல்லாவிட்டால் தபால் அலுவலகத்துக்குத்தான் செல்லவேண்டும். ஆனால்; தப்பித் தவறி யாழ். பிரதம தபால் அலுவலகத்துக்கு மட்டும் போய்விடாதீர்கள். ஏன் தெரியுமா?

51 கே.ஜி. மகாதேவா
தந்தி, தொலைபேசி, விசாரணைக் கருமபீடம் இப்பொழுது இங்கு நிம்மதியாகத் தூங்குகிறது!
இங்கு அண்மையில் கொள்ளை நடந்ததும் நடந்தது தான். மக்கள் சேவை. கிலோ என்ன விலை என்று கேட்கப் படுகிறது. மேலும் விபரம் கேட்டால்.
“பொலிஸ் அறிக்கை வந்தால்தான் தொலைபேசி சேவை தொடரும்.” என்று பதிலளிக்கப்படுகிறது! தர்மிஷ்டம் எங்கு இருந்தாலும் வாழ்க!
(29.10.83)
வினாத்தாள் மோசடி
வினாத்தாள்கள் விற்பனைபற்றி நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?
கடந்த திங்கட்கிழமை யாழ். நகரின் பல இடங்களிலும் 'ஒகோ’ என்று பல விலைகளிலும் விற்பனையான இக் கேள்வித்தாள்கள் பற்றிய மர்மமும் பின்னணியும் இன்று தெரியவரும் என்றும் எழுதியிருந்தேன்.
நானும் நீங்களும் நினைத்தது முழுக்க முழுக்க சரியாகிவிட்டது. ஆனால் "கியூ வரிசையையும் மீறி முண்டியடித்துக் கொண்டு இந்த “றோணியோ’ அல்லது ‘போட்டோஸ்ரட் கேள்வித்தாள்களைப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்ட மாணவர்களும் மாணவிகளும்தான் "அம்போ’ என்றாகிவிட்டார்கள்.
தமிழ், கணிதம், சுகாதாரம் போன்ற பாடங்களுக் கான வினாத்தாள்கள் என்று கூறப்பட்டு இந்த "போலி’ வினாத்தாள்கள் விற்பனை செய்யப்பட்டன. இதன் விளைவு; டியூட்டரி என்றும் இரவு பகல் என்றும் விழுந்தடித்துக் கொண்டு ஒழுங்காகக் கல்வி பயின்ற இந்த மாணவ

Page 78
கதையல்ல நிஜம் 岱2
மாணவிகள், கடைசிநேர இந்த மயக்க குளிசையினால் விடைகளை சப்பித் தீர்த்தார்களே தவிர, தான் கற்ற கல்வியை மீட்கமுடியாது போய்விட்டது.
விற்பனையான எந்த வினாத்தாளாவது அடுத்தநாள் சோதனையில் கேள்வி உருவம் பெறவில்லை. மாறாக அத்தனையும் போலிதான்!
சந்தேகம் (1): யாழ்ப்பாணத்தில், பரீட்சைக்கு முதல் நாள் இடம்பெற்ற இந்த வினாத்தாள் விற்பனை ஒரு திட்ட மிட்ட மோசடியா? சந்தேகம் (2): தமிழ் மாணவ, மாணவி களின் கல்வியைப் பின்தள்ள கையாளப்பட்ட ஒரு செயலா? சந்தேகம் (3); கேள்வித்தாள் என்றோ அல்லது மாதிரி வினாக்கள் என்றோ எதுவுமே குறிப்பிடாமல் சுடச்சுட விற்பனை செய்யப்பட்ட இந்த வினாத்தாள் மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள். தெற்கிலும் தொடர்புடையவர்களா?
தெளிவுள்ளவர்களுக்கு மட்டும் இது சமர்ப்பணம். (22.1283)
இளைஞர்களின் வீதிப் போக்குவரத்து
யாழ். நகரில் வீதிப்போக்குவரத்து நடைமுறைகள் நேற்றுமுன்தினம் முதல் இளைஞர்கள் மூலமாக அமுலுக்கு வந்திருப்பது தெரிந்ததே.
சும்மா சொல்லக்கூடாது; போக்குவரத்து நடை முறைகள் சிறப்பாகச் செயல்படுகிறது. பொதுமக்களும் பூரண ஆதரவு வழங்கியுள்ளனர்.
முதல் நாள். வண்ணார்பண்ணை சிவன் கோவிலுக்கு முன்பாக, போக்குவரத்து நடைமுறைகளைக் கவனிக்கும் கண்காணிப்பு ஊழியர் மிகவும் உஷாராக இருக்கின்றார்.

53 கே.ஜி. மகாதேவா
திடீரென ஒரு வாகனம், மெதுவாக அவரை நோக்கி வருகிறது. அந்த கண்காணிப்பு ஊழியர் சைகை காட்டி நேராகப் போகவிடாமல் நிறுத்துகிறார். அந்த வாகனத்தைச் செலுத்தி வந்தவர், வெளியே தலையை நீட்டி. (அன்பாக). "டேய் நீயா. என்ன நேராகப் போகட்டா." என்று சிரித்துக் கொண்டே கேட்கிறார். கண்காணிப்பு ஊழியரோ மலர்ந்த முகத்துடன், "ஐயா தயவுசெய்து வலதுபக்கம் (கன்னா திட்டி வீதி வழியாக போங்கோ." என்று மிகவும் மரியாதை யாகக் கூறுகின்றார். காரும் அந்தப் பக்கமாக மெதுவாகத் திரும்புகிறது.
காதோடு காதாக: காரில் வந்தவர் முன்னர் யாழ். மாநகரசபையில் பெரிய பதவியில் இருந்தவர். அந்தக் கண் காணிப்பு ஊழியரும் அவருக்குத் தெரிந்தவர்தான்.
(22.0390)
தமிழன் என்றால் தடை
தராதரப் பத்திரமற்ற உதவி ஆசிரியர்கள் பதவிக்கு சில மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பங்கள் கோரப் பட்டிருந்தபோது, முந்தியடித்துக் கொண்டு ஏராளமான வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் ஒருவர் ஈஸ்வர பாதம். வடக்கைச் சேர்ந்தவர்.
குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பித்து, எழுத்து, நேர் முகம் போன்ற சகல பரீட்சைகளிலும் வெற்றிபெற்ற அவருக்கு; மூன்று வாரகால சேவை முன்பயிற்சிக்கு அழைப்பு வருகிறது. பயிற்சி பெறவேண்டிய இடம்; நீர்கொழும்பிலுள்ள ஆசிரிய பயிற்சிக் கல்லூரி. காலம், நேரம், இடம்பற்றி அதிகம் சிந்திக்காமல் ஒடுகிறார் நீர் கொழும்புக்கு.

Page 79
கதையல்ல நிஜம் 154
“சேவை முன்காலப் பயிற்சிக்கு நீர் தெரிவுசெய்யப் பட்டது சரிதான். ஆனால் உம்மை இங்கு அனுமதிக்க முடியாது." கல்லூரி அதிபர் சீறிவிழுகின்றார்! விபரம் புரியாத ‘நமது கதாநாயகன்’ கொழும்புக்குச் சென்று அமைச்சு அதிகாரிகளைச் சந்தித்து தமது நிலையை விளக்குகின்றார்.
“உம்மிடம் எல்லாத் தகைமைகளும் உண்டு. நீர் மீண்டும் நீர்கொழும்பு சென்று பயிற்சி பெறலாம்." என்று அமைச்சு உயர் அதிகாரி ஒருவர் அவருக்கு ஆறுதல் கூறி, அமைச்சின் எழுத்துமூலமான விசேட பணிப்புரையை வழங்கினார். "கதாநாயகன்’ மீண்டும் பயிற்சிக்கல்லூரி செல்கிறார். அதிபரிடம் பணிப்புரையை வழங்குகின்றார். அகமும் முகமும் கறுக்க அந்த உத்தரவைப்பெற்று, பயிற்சிக்கு அனுமதி அளிக்கின்றார். இருபது நாட்கள் பயிற்சி நடக்கிறது. பயிற்சியின் முடிவில், சான்றிதழ் வழங்கும் வைபவம் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெறுகிறது. நமது கதாநாயகன்’ தமது சான்றிதழை எதிர்பார்த்து உற்சாகத்துடன் காத்துநிற்கின்றார்.
என்ன அநியாயம்! பயிற்சி முடிந்த அனைவருக்கும் கையளிக்கப்பட்ட சான்றிதழ் இவருக்கு வழங்கப்படவில்லை. காரணம் யாழ். தமிழன்!
(2001.85)
மலிதநேயமற்ற புறக்கணிப்பு
"தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ. உன் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பிற் குறைவதுண்டோ” என்று ஒரு திரைப்படப்பாடல் a• 6öoTGS).
ஒரு காலத்தில் ‘ஒகோ’ என்று ஒலித்த இப்பாடலில் ஏராளமான கருத்துக்கள் உண்டு. இதே மாதிரியான நிலை

155 கே.ஜி. மகாதேவா
தான் ஓர் மாணவிக்கும் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் ஆசிரிய பயிலுநராக விண்ணப் பித்த ஒரு மாணவி; அங்கவீனர் என்ற ஒரே காரணத்துக்காக நேர்முகப்பரீட்சையில் விலக்கப்பட்டுள்ளார்!
ஜி. ஸி. ஈ. (சாதாரணதரம்) பரீட்சையில் எட்டுப் பாடங்களில் சித்தியடைந்த இம்மாணவி வடஇலங்கை சங்கீத சபையின் நான்காவது ஆண்டுப் பரீட்சையிலும் சித்திபெற்றவர். நேர்முகப்பரீட்சையில் விலக்கப்பட்ட இம்மாணவி தனது பரிதாபத்தை மேன்முறையீடு செய்யச் சென்றபோதும் ‘கதவு திறக்கப்படவில்லை!
அரசாங்க நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை 27 / 88ன் பிரகாரம் சகல திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங் களிலும் நியமனம் வழங்கப்படும்போது மூன்று வீத வெற் றிடங்கள் அங்கவீனர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐந்தாவது வயதில் ஒரு காலை இழந்து, செயற்கைக் கால் பொருத்திய மேற்படி மாணவி, ஆசிரியர் பயிலுநர் பரீட்சையில் மறுக்கப்பட்டார் என்றால் அவருக்கு கல்வியே கற்பிக்காமல் பாடசாலையிலிருந்து அன்றே விலக்கியிருக்க வேண்டும்! இந்தப்புறக்கணிப்பு மனிதாபிமானமுள்ளதாகத் தெரியவில்லை!
(06:03.90)
விமானப் பயண அநுவை
வெளிநாட்டிலிருந்து விமானத்தில் நீங்கள் தாயகம் திரும்புகின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கைவசமிருக்கும் சிறிய “சூட்கேஸ்’ அல்லது "பேக்” தவிர ஏனைய பொதிகள் நீங்கள் பிரயாணம் செய்த விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, வேறு ஒரு (சுழலும்

Page 80
கதையல்ல நிஜம் 156
"பெல்ட் ஏணி) வழியாக உங்களிடம் சுங்கப் பரிசோதனைக் காக வந்துவிடுகிறது.
வந்து குவியும் பொதிகளில் உங்களது உடைமையை இனங்கண்டு ‘கஸ்டம்ஸ்’ முன் ஆஜராகவேண்டியதுதான் அடுத்த கட்டம்.
இந்த இடைவெளிக்குள் உங்களது பொதியின் பாரம் திடீரெனக் குறைந்துவிடுகிறதாம்!
அதாவது, உங்களை அறியாமலே சில பொருட்கள் பொதியிலிருந்து மாயமாகிவிடுகிறதாம்! எப்படி?
பொதியின் ஏதேள் ஒரு ஒரப்பகுதி “பிளேட்’ அல்லது கூரிய ஆயுதமொன்றின் கீறல்பட்டு உடைமைகள் மிக வேகத்தில் வெளியே எடுக்க (திருடப்படுகிறதாம்!
(30.1.183)
யாருக்கு யார்?
பாடசாலைகளில் தமிழ்மொழி வளர்ச்சி எப்படி இருக்கிறது?
வடக்கு, கிழக்கு மாகாணங்களை விட்டுத்தான் கேட்கிறேன்.
வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய மாகாணங் களில் தமிழ்மொழி வளர்ச்சி படுமோசம் என்று சொல்லு வதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை.
கல்விஅமைச்சின் தமிழ்ப்பிரிவு கல்விப் பணிப்பாளர் திரு. வி. சபாநாயகம் அவர்களின் கணிப்பு இது;
"தமிழ்மொழிக் கண்காட்சி ஒன்று அண்மையில் பண்டாரவளையில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் திருவள்ளுவர், ஒளவையார் ஆகியோரின் படங்களும்

15ア கே.ஜி. மகாதேவா
வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியைக் கண்டுகளிக்க வந்த
தமிழ் மாணவர்கள் திருவள்ளுவரினதும் ஒளவையாரினதும்
படங்களைப் பார்த்துவிட்டு “யார் இவர்கள்?" என்று கேட்ட
போது எமக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது!”
எப்படி சங்கதி?
(03.04.90)
யாழ். ஒரு வெளிநாடு
Lத்திரிகையாளர்களை தகவல் திணைக்களம் கடந்த வருடம் புதுமாதிரி கெளரவித்திருந்தது.
அடையாள அட்டையைப் புதுப்பிக்கும் வகையில் இரண்டு புகைப்படங்களை இம்முறை கலர்ப்படம்) உடன் அனுப்பி வைக்குமாறு பத்திரிகை நிறுவனங்கள் கோரப் படவே, புகைப்படங்கள், உரிய பெயர் விபரங்களுடன் தாமதமில்லாமல் தகவல் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல அடையாள அட்டைகளும் சுணக்கமின்றி பத்திரிகை நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால்; ‘ஈழநாடு’ வின் கதை மட்டும் வேறுவிதமாக அமைந்துவிட்டது.
கடந்த வருடம் அனுப்பப்பட்ட அடையாள அட்டைகள் இவ்வருடம் ‘ஈழநாடு’ ஆசிரியர் பகுதியின ருக்குக் கிடைக்கவில்லை! அதாவது, “கழுத்தறுப்பு’ நடந்தி ருக்கிறது!
"ஏன் ‘ஈழநாடு’க்கு மட்டும் இந்தக் கெடுபிடி?” வாய்விட்டு நேரில் கேட்டோம்.
"மற்றைய பத்திரிகைகள் எல்லாம் கொழும்பிலிருந்து வெளிவருகின்றன. உங்கள் பத்திரிகை யாழ்ப்பாணத்தி

Page 81
கதையல்ல நிறம் 58
லிருந்து வெளியாகிறது." - நறுக்குத் தெறித்தாற்போல் பதில் கிடைத்தது.
"ஈழநாடு’ ஒரு தேசிய பத்திரிகை கால் நூற்றாண்டுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும்; நாம் புதிதாக உங்களிடம் அடையாள அட்டை கேட்கவில்லை. நாம் கேட்காமல் நீங்களாகவே கடந்த வருடம் வழங்கிய அடையாள அட்டையைப் புதுப்பிக்கவே, (அதுவும் நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க) விரும்பினோம். ஏன் இந்தப் புறக்கணிப்பு?”
"நோ. யுவர் பேப்பர் இஸ் கம்மிங் fப்புறம் ஜாவ்னா." - சுருக்கமான, ஆழமான பதில் கிடைத்தது.
"அப்படியானால். எங்கள் பத்திரிகையின் கொழும்பு நிருபர்களுக்கு அடையாள அட்டை கொடுத்திருக்கிறீர்களே." “யேஸ். அவர்கள் உங்கள் நிருபர்கள்தான். ஆனால் அவர்கள் கொழும்பில் இருப்பவர்கள்.” முடிவான பதில் இது. யாழ்ப்பாணம் என்றால் “வெளிநாடு’ என்றுதானே அர்த்தம்!
(25.0385)
உயர்ந்த கோபுரங்கள்
யாழ். மாவட்டத்தில் இத்தனை துயரச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான நேரத்தில்கூட, யாழ். மத்தியகல்லூரி மாணவன் தினேஷ் பற்றிய ‘ஈழநாடு’ உதவிச்செய்தி குறித்து பல குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
யாழ். சுண்டுக்குளி விதானையார் வீதியைச் சேர்ந்த கிறிஸ்ரி செல்வகுமார் (17 வயது) எனும் இளைஞர், எமக்கு நேற்று அனுப்பிவைத்த கடிதம் இது:

159 கே.ஜி. மகாதேவா
“03.08.84 அன்று உங்கள் பத்திரிகையில், யாழ். மாணவன் தினேஷின் உயிரைக் காப்பாற்ற யாரும் சிறுநீரகம் உதவுவார்களா என்று செய்தி பார்த்து மெய்சிலிர்த்தேன். தினேஷின் உயிரைக்காப்பாற்ற பதினேழு வயது நிரம்பிய நான்; எனது சிறுநீரகத்தை அன்பளிப்புச் செய்யத் தயாராக இருக்கின்றேன்."
உயர்ந்த கோபுரங்கள் என்று சொல்வது இதைத் தானா?
(07:08.84)
மானங்கெcட கிரிக்கெ:
"ஓ அந்த மானங்கெட்ட கிரிக்கெட்டை மன்னிக்கவும். அது கிரிக்கெட் அல்ல; அந்த ஒருவகையான விளையாட்டைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் எத்தனை வெறுப்புணர்ச்சி வருகிறது! அந்த மைதானங்களில் அத்தனை பொறுமையை எனக்கு எப்படிக் கடவுள் தந்தார் என்பதை இப்பொழுதும் நினைத்துப் பார்க்கின்றேன்; நம்பமுடியவில்லை! கவாஸ்கர் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசிதான்."
நீங்கள் மேலே வாசித்த பகுதி ‘ஒ. அந்தச் சில நாட்கள்’ எனும் புத்தகத்தில் 'அநுமார் எரித்த பூமியில்’ எனும் அத்தியாயத்தில் வருகிறது. நூலாசிரியர்: திரு. கபில்தேவ்.
கிரிக்கெடுேம் ரூபவாஹினியும்
இலங்கை - இந்திய இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் நேரடி ஒளிபரப்பு "ரூபவாஹினி'யில் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டது ஏன்?

Page 82
கதையல்ல நிஜம் ASO
“ரூபவாஹினி'யில் நேரடியாகப் பார்த்தால் விளை யாட்டரங்குக்கு வருகை தருவோர் குறைவு (கலெக்ஷன்) காரணமா? அல்லது. மத்தியஸ்தர்களின் பாரபட்சமான தீர்ப்புகளை டி.வி.யில் ரசிகர்கள் அச்சொட்டாகப் பார்த்து விடுவார்கள் என்ற காரணமா? அல்லது. இந்திய அணி யினரைக் கேலி செய்யும் “காட்டுக் கூச்சல்கள்’ ‘டி.வி.யில் பச்சையாக ஒளிர்வதை, மன்னிக்கவும், ஒலிப்பதை மறைக்கும் முயற்சி காரணமா..?
சும்மா சொல்லக்கூடாது. திரு. சுனில் கவாஸ்கரின் 1974 கசப்பான அனுபவம். SUNNYDAYS. கவாஸ்கரின் எழுத்து; உறுதியாக, அழுத்தமாக இப்பொழுது மீண்டும் ஒலிக்கிறது!
(0909.85)
குரீகாந்தின் விளாசல்
கண்டி, அஸ்கிரிய விளையாட்டரங்கில் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை இந்திய கிரிக்கெட் டெஸ்டில் நேற்று முன்தினம் இந்தியவீரர் பூரீகாந்த் (25 வயது) முப்பத்தெட்டு பந்து வீச்சில் நாற்பத்தேழு ஓட்டங் களை விளாசித் தள்ளிவிட்டார்!
இதுபற்றி ரூபவாஹினியில் நேரடி சிங்கள வர்ணனை யாளர் இப்படி வாய்விட்டுக் கூறினார்:
"குறுகிய நேரத்தில் இத்தனை ஓட்டங்களை தமது பக்கத்துக்குக் குவித்த பூரீகாந்தின் அபார விளையாட்டைப் பார்த்த மக்கள் நீண்டகாலத்துக்கு பூரீகாந்த் விளையாட்டை மறக்கமாட்டார்கள்."
பூரீகாந்த் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கொழும்பில் கோட்டை விட்டதை சரிக்கட்டும் விதத்தில் கண்டியில்

16 கே.ஜி. மகாதேவா
இவரது அபாரமான விளையாட்டு. தமிழ்நாடே பெருமை பெற்றமாதிரிதான்! குறிப்பாக தமிழக முதல்வர் எம். ஜி. ஆர். பூரிப்படைந்திருப்பார். காரணம்; எம்.ஜி.ஆர் பிறந்ததே கண்டி மண்ணில்தானே!
13 பேர் விளையாடும் கிரிக்கெe
கிரிக்கெட் போட்டியில் ஒரு பக்கத்தில் எத்தனை பேர் விளையாடுவார்கள்?
இலங்கை - இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை “டிவி”யில் கண்டுகளித்தவர்கள் சொல்கிறார்கள்; கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பக்கத்தில் பதின்மூன்று பேர் விளையாடு வார்கள் என்று! சரியா?
“SUNNYDAYS" ல் சுனில் கவாஸ்கர் இலங்கை பற்றி ஒளிவுமறைவின்றி குறிப்பிட்டிருந்தார். இந்த அனுபவம்; பூரீகாந்த்துக்கும், மனிந்தர்சிங்குக்கும் இப்பொழுது நிறைய ஏற்பட்டுள்ளதாம். மேலதிக இரண்டு விளையாட்டு வீரர்களும் யார்? நடுவர்கள் (1+2=13) தான்!
இவர்தான் ஆரீகாந்த்
மரீகாந்தைத் தெரியுமா? "ஒ" என்று கூறுபவர்களில் இருவகையினர் உண்டு. ஒன்று சினிமா நடிகர் பூரீகாந்த். மற்றவர்; கிரிக்கெட் டெஸ்டுகளில் ஓட்டங்களை விளாசித்
தள்ளும் பூரீகாந்த்.

Page 83
கதையல்ல நிலம் 162
எனது 'சப்ஜக்ட்’ நாயகன், கிரிக்கெட் வீரர் திரு. கிருஷ்ணாமாச்சாரி பூரீகாந்த்.
இவருக்கு தெய்வ நம்பிக்கை எக்கச்சக்கம், அதாவது, சாமி கும்பிடுவது - காலையில் மாலையில் மட்டுமல்ல; கிரிக்கெட் விளையாட்டின்போதும் மைதானத்தில் தெய்வத்தை நினைக்கத் தவறுவதில்லை.
கிரிக்கெட் களத்தில் நிற்கும்போது, கண்ணால் காணும் (பிரத்யட்ச தெய்வமான சூரியபகவானை அடிக்கடி பார்த்துக் கொள்வார்! அதாவது. அவரின் சிக்ஸருக்கும் பவுண்டரி களுக்கும் பின்னணியாக விளங்குவது சூரிய பகவான் தானாம்!
0. {0 0.
பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் டாக்டர் ரஞ்சித் அத்தபத்து இவ்வாறு நேற்று முன்தினம் கூறினார்: "பயங்கரவாதம் இன்று வடக்கில் மட்டுமல்ல; தெற்கிலும் பரவியுள்ளது.
"பத்து இளைஞர்கள் கத்தி, வாள்களுடன் இரவு
நேரத்தில் சென்று ஹெந்தலை அரசினர் வைத்தியசாலையில் உடைந்த கட்டில்களைத் தூக்கிச் சென்றுள்ளனர்"
(Κ004.84)
அது வந்தால் "கிலி
தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்தின் ஒலிபரப்புச் சேவை, நேற்றும் விட்டு விட்டு நீடித்தது.
நேற்று மாலை, ஐந்து மணி ஐந்து நிமிடம் இருக்கும்.
"நத்தார் தினத்தை முன்னிட்டு எமது ஒலிபரப்புச் சேவை மூன்று மணிநேரம் வரை நீடிக்கும்." இப்படி அறிவிக்கப்பட்ட பின்னர் மற்றுமொரு அறிவித்தல்.

163 கே.ஜி. மகாதேவா
".எமது இந்தச்சேவை தமிழில் மட்டுமின்றி சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இடம்பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன." என்று தொடர்ந்தது.
(12.1283)
{} 0. {0
கிடந்த வெள்ளிக்கிழமை காலை பத்துமணி இருக்கும். தொலைபேசியில் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து "அந்த இடம் உஷார் படுத்தப்படுகிறது.
மூலை முடுக்கெல்லாம் தேடுதல் வேட்டை சந்தேகத்துக் கிடமான இடங்கள் பலத்த சோதனைக்குள்ளாகின்றன. சிலர் கேள்விக்கணைகள் மூலம் துளைத்தெடுக்கப் LIGSRailpatri.
இத்தனையும் நடந்து இறுதியில்தான் உண்மை விஷயம் அம்பலத்துக்கு வந்தது. அதாவது, கிடைத்த தகவல் உண்மை அல்ல என்பது தெரியவந்தது.
இடம்: இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், கிடைத்த தகவல்: “புலி’ வந்து விட்டது என்பதுதான்.
(2111.83)
ஆரியரத்னா கூநிய உண்மை
அடுத்தமாதம், கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணத் துக்கு நூறுநாள் பாதயாத்திரை மேற்கொள்ளவிருக்கும் சர்வோதயத் தலைவர் கலாநிதி ஏ. ரி. ஆரியரத்னா, இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் யாழ்ப் பாணம் வந்தார்.

Page 84
கதையல்ல நிஜம் S4
தமது குழுவினருடன் நேற்றுக்காலை "ஈழநாடு”
அலுவலகம் வந்தார். பல கசப்பான உண்மைகளை மனம் விட்டுப் பேசினார்.
ஒரு கட்டத்தில்; கொழும்பு ஆங்கிலத் தினசரி யொன்றில் வெளியாகியிருந்த அவரது கருத்துக்கள் குறித்து, குறிப்பாக, கலாநிதி ஆரியரத்னா தெரிவித்திருந்ததாக இடம் பெற்றிருந்த “சிங்கள பெளத்த இரத்தம்." எனும் கருத்து பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதனை முற்றும் முழுவதுமாக மறுத்துவிட்ட கலாநிதி; இதுகுறித்து தாம் மறுப்புத் தெரி வித்ததாகவும் ஆனாலும் மறுப்பை அப்பத்திரிகை வெளியிட வில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்!
பத்திரிகை உலகில் என்ன எல்லாம், எப்படி எப்படி நடக்கிறது!
(18.11.83)
இந்திராவை ஹநித்த இந்துக் கோலில்
இந்தியாவில் ஒரிஸா எனும் மாநிலம் இருக்கிறது. இந்த மாநிலத்தில் பூரி எனும் இடமுண்டு. இந்த இடத்தில் புகழ்பெற்ற ஒரு ஆலயம் உள்ளது. இதன் பெயர் பூரி ஜெகநாதர் ஆலயம்.
கோவிலைப் புதுப்பிக்க நிதி தேவைப்பட்டது.
ஆலயத்தின் அறங்காவலர்கள் அண்மையில் கூடி ஆலோசித்தார்கள். முடிவு - ஆலய நிதி திரட்ட இந்தியப் பிரதமர் திருமதி இந்திராகாந்தியை கோவிலுக்கு அழைப்பது என்று அறங்காவலர்கள் ஒருமனதாகத் தீர்மானித்தனர்.
ஆனால் என்ன நடந்தது?
அந்தக் கோவில் அர்ச்சகர்கள் இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். “கோவிலுக்குள் இந்திரா

165 கே.ஜி. மகாதேவா
காந்தியை விடமாட்டோம்" என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம்: "கோவிலுக்குள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். இந்திராகாந்தி இந்து அல்ல. அவர் பிராமணப் பெண் என்றாலும் இந்திராவின் கணவர் பார்சி மதத்தைச் சேர்ந்தவர். இந்திராவும் பார்சி மதத்தைச் சேர்ந்தவராகவே ஆகிறார். ஆகவே இந்திராவை கோவிலுக்குள் விடமுடியாது” என்று அர்ச்சகர்கள் ஒரே அடியாகக் கூறிவிட்டார்கள்!
(08.11.83)
வணக்கம் போய் ஆயுபோவன்”
பொல்காவலை எம். பி. திரு. சுனில் ரஞ்சன் ஜெயக்கொடி “ரூபவாஹினியில் தமிழ், ஆங்கில செய்திகள் வாசித்து முடிந்ததும், பொதுவாக வணக்கம், குட்நைற் என்று கூறுவதற்குப் பதிலாக "ஆயுபோவன்’ என்றே சொல்ல வேண்டும். இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்."
ராஜாங்க அமைச்சர் கலாநிதி ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ்:
"இந்த ஏற்பாடு சில மாதங்களுக்கு முன்னர் நடை முறையிலிருந்தபோது, தமிழ் மக்களிலும் பார்க்க சிங்கள மக்களிடமிருந்தே கூடுதலான எதிர்ப்பு வந்தது. குட்நைற், வணக்கத்துக்குப் பதிலாக ஆயுபோவன் சொல்வது குறித்து ரூபவாஹினி ஊடாக, மக்கள் கருத்து அறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்."
"ஆயுபோவன்’ என்றால் சிங்களத்தில் "வணக்கம்’ என்று பொருள். அரசின் ‘தமிழ் - சிங்கள மொழி சம அந்தஸ்தின்’ லட்சணம் இது!
(பாராளுமன்றத்தில் நேற்றுக் கேட்ட குரல்கள் இவை) (5.1283)

Page 85
கதையல்ல நிலும் 166
திருமணப் பத்திரிகை
ஒரு பத்திரிகை, ஒரு சஞ்சிகை ஆரம்பிப்பது பெரிய புதுமை அல்ல. அதனைத் தொடர்ந்து நடத்துவதுதான் சவால்!
‘சவாலைச் சாதித்தவர்களும் உண்டு. சவாலுக்கு சரணடைந்தவர்களும் உண்டு. ஆனால் தமிழ்நாட்டில், ஆரம்பமோ. முடிவோ. எல்லாம் புதுமைதான்! இதில் "லேட்டஸ்ற்
திருமண ஏற்பாடுகளுக்கென்றே ஒரு பத்திரிகை இப்பொழுது வெளிவருகிறது. இதன் பெயர் ‘சுயம்வரம்’
'மணமக்கள் தேவை விளம்பரம் அதிகம் வரும் ஒரே தமிழ் இதழ்" என்று முதல் பக்கத்தில் மகுடம் சூட்டியிருக்கி றார்கள். இந்த சஞ்சிகையின் மற்றுமொரு சிறப்பு; இதில் வரும் ராசி பலன் கூட திருமணத்தை அடிப்படையாகக் கொண்டே வெளிவருகிறது!
(16.11.83)
திருச்சி- அன்று
அலமேலு ஹந்தாஸ், இது ஒரு புடவைக் கடையின் பெயர்.
இந்த ஜவுளி மாளிகை சில தினங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டது.
ஆரம்பவிழாவில் கலந்துகொண்டு கடையைத் திறந்து வைத்தவர் தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர் திரு.

167
எம். சிவசிதம்பரம். முதலாவது துணியை (புடவை?) வாங்கி, விற்பனையைத் தொடக்கி வைத்தவர் திரு. வீ ஆனந்தசங்கரி திறப்புவிழா நடந்த இடம்: திருச்சி.
07.11.83)
இங்கிலிஷ் இச்சர்
அது ஒரு சின்னஞ் சிறிய தீவு.
இத்தீவின் ஆங்கில ஆசிரியர்களின் மொத்தத்தொகை எண்ணாயிரம். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ஆங்கில ஆசிரியர்களில் இரண்டாயிரம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது!
அதாவது இவர்களுக்கு ஆங்கிலத்தைச் சரியாக எழுதவும் தெரியாது; பேசவும் தெரியாது! பேர் மட்டும் தான் இங்கிலிஷ் ரீச்சர்’!
வெளியே சொல்லாதீங்க; வெட்கக்கேடு! இந்தச் சின்னஞ்சிறிய தீவின் பெயர் இலங்கைதான். இந்தக் கண்டு பிடிப்பை உத்தியோகபூர்வமாக வெளியிட்டவர் கல்வி அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க
(9.11.83)
கலவரத்தீலில் குளிர்காய்தல்
இனக்கலவரத்தின் பின்னர் எரியுண்ட இல்லங்களைத் திருத்தச் சென்றவர்கள் - மிச்சம் சொச்சங்களை மீட்கச் சென்ற நம்மவர்கள் துரத்தப்படுகின்றனர்.

Page 86
கதையல்ல நிஜம் 168
குடியிருக்கலாம் என்று மீண்டவர்கள் பயமுறுத்தப் படுகின்றனர்.
இத்தனைக்குமிடையே; அந்தக் காணிகள், இல்லங்களை மீண்டும் இவர்களுக்கு’ வழங்கக்கூடாது என்று பகிரங்க சுவரொட்டிகளும்; "இவர்கள் திரும்பவும் வருகின்றார்கள்" என்ற அங்கலாய்ப்புகளும் வேறு!
எல்லாமே நடக்கிறது கொழும்பு தலைநகரில்!
(04.10.83)
மருண்டவன் கண்ணுக்கு
நமது நாட்டில் பத்திரிகைச் சுதந்திரம் எப்படி இருக்கிறது?
பலர் ‘ஒகோ’ என்று சொன்னாலும்; சிலர் றாத்தல், மன்னிக்கவும், கிலோ என்ன விலை என்று கேட்பதும் உண்டு!
இந்தச் ‘சிலரில் சிலரது மனக்கொதிப்புக்குக் காரணம் - "தமிழ்ச் தேசிய தினசரி ஒன்றைப் படிக்கும் (அடிப்படை?) உரிமைகூட எமக்கு இல்லையா?” என்பது தான்!
கால் நூற்றாண்டுக்கு மேலாக வெளிவந்து கொண்டி ருக்கும் ‘ஈழநாடு’ தமிழ்த் தேசிய தினசரியை பஸ்ஸிலும், மினி பஸ்ஸிலும் படித்துக் கொண்டிருந்த ஒன்பது பேர் நேற்று முன்தினம் வாகனங்களிலிருந்து கீழே இறக்கப்பட்டு நீண்ட விசாரணைக்குட்படுத்தப்பட்டதுடன் நேற்றுத்தான் மீண்டும் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்!
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். பத்திரிகைச் சுதந்திரம் வாழ்க!
(24.10.83)

169 கே.ஜி. மகாதேவா
நன்நிமறப்பது நன்றன்று
நன்றி உடையவர்கள் யார்? நாயா? மனிதனா? செய்தித்துறையில் நாம் படித்தது. நாய் மனிதனைக் கடித்தால் செய்தியல்ல! மனிதன் நாயைக் கடித்தால்தான் செய்தி.
‘ரைம்ஸ் ஒப் இந்தியா’ (செப்டம்பர் 20) தினசரியில் கொழு கொழு நாயின் புகைப்படத்துடன் வெளிவந்த விளம்பரம் இது:
"சுவீற்றி. உன்னை எப்படி மறப்பேன். நீ இறந்தது செப்டம்பர் 16ல். உன்னை மறவாத - ஜனார்த்தனன், நிர்மலா."
(01.10.83)
FUltiseġ fħafsf
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பாடசாலை களில் எத்தனை பாடசாலைகளில் தொலைக்காட்சி (டெலி விஷன்) பெட்டிகள் இருக்கின்றன?
கல்வி வசதிகளில் பின்தங்கிய நிலையில் இருக்கும் கிளிநொச்சித் தொகுதியில் உள்ள பாடசாலைகளில் தொலைக்காட்சி வசதிகள் கிடைக்க திரு. வி. ஆனந்தசங்கரி எம். பி. மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் எதிரொலி - கிளிநொச்சியிலுள்ள இருபத் தொரு பாடசாலைகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் அண்மையில் வழங்கப்படவிருக்கின்றன,
மூக்கிலிருந்து விரலை எடுக்கின்றீர்களா?
(03:02.83)

Page 87
கதையல்ல நிஜம் סלז
D&T 9UTsirkortö35)
மண்ணுக்குக் கீழேதான் தங்கமும், வைரமும், பொன்னும், மணியும் இருக்கிறது. ஆனால், மண்ணையே பொன்னாக்க உங்களால் முடியுமா?
கோழித்தீனிக்கு, கடலில் காணப்படும் சிப்பிகளும் அரைத்து மாவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவது பெரிய புதினமல்ல. e
சிப்பி மாவுடன் மண்ணும் கடுமையாக அரிக்கப் பட்டு, தாராளமாகக் கலக்கப்பட்டு ‘ஒகோ’ என்று விற்பனை செய்யப்படுகிறது!
(0402.83)
இவர்களும் அவர்கள்தான்
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இன்றைய கால கட்டத்தை, துண்டுப் பிரசுர யுகம்’ என்று கூறலாம்.
நமக்கும் ஒரு கையெழுத்துப் பிரசுரம் கிடைத்தது. அதில் கேட்கப்பட்டிருக்கும் ஒரே கேள்வி: “வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏஜன்சி நடத்தி, சுளை சுளையாகப் பணத்தைச் சுரண்டி, தலைமறைவாகி விட்டவர்களையும், பாடசாலைகளில் மாணவர்களுக்கு ஒழுங்காகப் பாடம் கற்பிக்காது, வகுப்புகளையும் ‘கட்’ பண்ணி, "டியூஷன்’ நிலையங்களுக்கு ஓடிச்செல்லும் ஆசிரியர்களையும் ஏன் சமூக விரோதிகளாகக் கொள்ள முடியாது?”
(03.03.83)

கே.ஜி. மகாதேவா 1 ל1
Dorf uW3ÖUMCol
நேரடித் தொலைபேசிச் சேவை (டிரெக் லைன்) ஆரம்பித்ததும் ஆரம்பித்ததுதான்; இப்பொழுது கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு போன்ற தூர இடங்களிலிருந்து பலர் அடிக்கடி விசாரிக்கின்றார்கள்.
இப்பொழுது அவர்கள் விசாரணை தினசரி நடக்கிறது.
அவர்கள் ஏதோ குசலம் விசாரிப்பதாக எண்ணி விடாதீர்கள்.
"யாழ்ப்பாணத்தில் நிலைமை ‘எப்படி இருக்கிறது? இன்று யாழ்ப்பாணம் புறப்படுகின்றோம். வழியில் ஏதாவது பிரச்சனையா.?” என்றுதான் அவர்கள் கேட்கிறார்கள்!
(0803-83)
இப்படியும் நிகழ்ஷகள்
"ட்ரிங். ட்ரிங்." வழக்கம்போல தொலைபேசி
அழைத்தது.
"ஹலோ யார் பேசுறிங்க. நீங்களா. பரவாயில்லை." அறிமுகமில்லாத குரல். ஆனால் மிகவும் ஆர்வத்துடன்
ஒலித்தது. அந்தக் குரல் தொடர்ந்தது:
“.ஒன்றுமில்லை; உங்கள் குரலை, பொதுவாக யாழ்ப்
பாணத்து தமிழ்க்குரலைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக யாருடனும் தொலைபேசியில் பேச முடியவில்லை. இங்கும் முன்னர் போல தமிழ் ஆட்கள்

Page 88
கதையல்ல நிலம் 172
இல்லை. இருருக்கும் சிலருடனாவது தமிழில் பேசுவது கஷ்டமாக இருருக்கிறது. புதினங்களைச் சொல்லுங்க."
இவ்வாறு வலிந்து குழைந்து பேசியது அந்த ஆண் குரல்.
தொலை00பேசியில் பேசியது யார்? எந்த இடத்தி லிருந்து?
லண்டைேனா, பாரிஸோ, நியூயோர்க்கோ இல்லை. சாட்சாத் திருகோணமலைதான்! ஒரு தமிழர்தான்! (29,0184)
மளித மிருகங்கள்
இனத்துவேஷத்தின் உச்சக்கட்டம் எது?
வெள்ளையரின் இரத்தம் கறுப்பர்களுக்குப் பயன் படுத்தக்கூடாது என்று தென்னாப்பிரிக்க அரசு கடந்த வாரம் ஒரு முடிவு எடுத்திருக்கிறது!
தென்னாப்பிரிக்காவில் உள்ளவர்கள் சிறுபான்மை வெள்ளையர், பெரும்பான்மையானவர்கள் ஆப்பிரிக்கர் (கறுப்பு இனத்தவர்)
மனுஷத்துவம் இல்லாதவர்களை எப்படி அழைப்பது? மிருகம் என்று கூறலாமா?
(01.0284)

173 கே.ஜி. wಹಗ್ಗ@ar
அரசியல் பேசிய இசையரசி
"பயங்கரவாதத்தினால் எதனையும் சாதித்துவிட முடியாது. பயங்கரவாதம் எந்த நாட்டில் தலை தூக்கினாலும் அது கண்டிக்கப்படவேண்டும். நாடு பிளவுபடுவதால், பிரிவினையால், பலன் எதுவுமே ஏற்படாது. எமது நாட்டிலும் பிரிவினையை வன்மையாக எதிர்க்கின்றோம்."
எந்த நாட்டு அரசியல்வாதி அல்லது தலைவர் இப்படிக் கூறியிருக்கிறார் என்று மண்டையைப் போட்டு உடைக்கா தீர்கள்.
அரசவிருந்தாளியாக இலங்கை வந்திருக்கும் எம்.எல். வசந்தகுமாரிதான், தகவல் திணைக்களத்தில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் மகாநாட்டில் மேற்படி கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.
காதோடு காதாக யாழ்ப்பாணத்திலும் திருமதி. எம்.எல். வசந்தகுமாரி இசைமாரி பொழிய இருந்தவர். திடீரென இந்த ஏற்பாடு ரத்துச் செய்யப்பட்டுவிட்டது. (160783)
ஒலிபரப்பு தடை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன யாழ்ப்பாணம் ஒலிபரப்பு நிலையம், அதாவது மண்டைதீவு ஒலிபரப்பு நிலையத்துக்கு என்ன நடந்தது?
வழக்கமாக கணிரென்று ஒலிக்கும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சிகளை வழக்கமான அலைவரிசையில் இப்போது கேட்க முடியவில்லை!

Page 89
கதையல்ல நிஜம் 174
காரணம் - தொழில்நுட்பக் கோளாறா? அல்லது இருட்டடிப்பா?
இப்பொழுதெல்லாம் பல வீடுகளில் சென்னையும், திருச்சியும்தான் கூடுதலாக ஒலிக்கிறது!
(28.0784)
கண்னிலமானவர்கள்
பாழ். பல்கலைக்கழகத்துக்கு 'ஸ்கூட்டரில் சென்று விட்டு யாழ். நகர் திரும்பியவர், ஏதோ நினைவாக தமது “பேர்ஸை தடவினார். தலையில் யாரோ சுத்தியலால் அடிப்பதுபோன்ற பிரமை ஏற்பட்டது!
“பேர்ஸை" காணவில்லை.
அதாவது எண்ணுறு ரூபாவும், தேசிய அடையாள அட்டை, வங்கி பற்றுச்சீட்டு உட்பட சில முக்கிய குறிப்புப் பத்திரங்களும் அந்தப் பெரிய ‘பேர்ஸி’ல் இருந்தது! எல்லாமே ஒரேநேரத்தில் தொலைந்துவிட்டன.
சில மணிநேரம் சென்றிருக்கும். ஒருவர் பத்திரமாக அந்தப் பேர்ஸை ஒப்படைத்ததாகக் கூறி உறவினர் ஒருவர், உரியவரிடம் ‘பேர்ஸை கையளிக்கின்றார். பேர்ஸுக்குள் இருந்தவை எல்லாமே, அப்படி அப்படியே காணப்படு கின்றன!
பேர்ஸுக்குரியவர் காரைநகரைச் சேர்ந்த ஏ. யோகேந்திரா. கண்ணியத்துக்குரியவர்; யாழ் பண்ணை ஆஸ்பத்திரியைச் சேர்ந்த எஸ். கதிர்காமராசா. யாழ்ப்பாணம் நிமிர்ந்து நிற்கிறது.
(070784)

1ア5 கூக்மேகாதேவா
லிட்டனில் அன்றும்.
செய்தி: லண்டன் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் வெளியே சென்றுவிட்டு தமது கல்லூரி இருப்பிடங்களுக்குத் திரும்பும்போது அவர்களின் புத்தகங்களுக்குள் மிரட்டல் கடிதங்கள் காணப்படுகின்றன.
"இந்தக் கடிதங்களில், இலங்கை ஒரு பெளத்த நாடு. அது இந்து நாடல்ல. எனவே அங்கு திரும்பிச் செல்ல உங்களுக்கு எந்தவித உரிமையுமில்லை. அங்கு செல்லும் எண்ணத்தை கைவிடவேண்டும்” என்ற வகையில் எழுதப் பட்டிருக்கிறது.
தகவல்; லண்டனிலிருந்து வெளியாகும் ‘கார்டியன்’ எனும் ஏடு.
(05.0584)
பவன் சென்றால் டவுன்!
அவசியம் வெளியிடுமாறு வலியுறுத்தி பூரீமான் பொதுஜனம் அனுப்பிவைத்த பாடல் இது.
நமது சுயதணிக்கையிலிருந்து தப்பிய இருவரிகளை மட்டும் இங்கு தருகின்றோம்:
".டவுனு பக்கம் போகாதீங்க. உங்களை டவுனாக்கி விடுவாங்க."
(1201.85)

Page 90
கதையல்ல நிஜம் 76
கழத - தந்திக் கதை இது
பTழ்ப்பாணத்திலிருந்து கரவெட்டி எவ்வளவு தூரம்? சரியாகப் பதினெட்டு மைல் ஆகும். அதாவது யாழ்ப் பாணத்திலிருந்து சைக்கிளில் கரவெட்டி போவதானால், ஆகக்கூடிய நேரம் இரண்டு மணி ஆகும்.
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செ. கந்தசாமி என்பவர் கரவெட்டியிலுள்ள தமது தந்தைக்கு யாழ். பிரதம தபால் அலுவலகத்திலிருந்து ஒரு தந்தி அனுப்பினார். தந்தி அனுப்பப்பட்ட நாள் கடந்த மாதம் இருபத்து எட்டாம் திகதி தந்தி அங்கு கிடைத்தது முப்பத் தோராம் திகதி!
யாழ். ஆஸ்பத்திரியில் கந்தசாமி கடுமையான நோய்
காரணமாக அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி கரவெட்டிக்கு கடந்த மாதம் 21-ம் திகதி அனுப்பிய கடிதம், ஒன்பது தினங்கள் கழித்து 30-ம் திகதிதான் கரவெட்டி போய்ச் சேர்ந்திருக்கிறது.
கிசுகிசு செய்தி: ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறி கரவெட்டி போய்ச்சேர்ந்த கந்தசாமிதான் கரவெட்டியில் கடிதத்தையும், தந்தியையும் பெற்றிருக்கின்றார்!
(0208.84)
தமிழர் என்றால் யாழ். தான்
யாழ்ப்பாணத்துக்கும், பேராதனைக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது?

1ァァ கே.ஜி. மகாதேவா
விஷயம் தெரிந்தவர்கள் உடனடியாகச் சொல்வார்கள் பல்கலைக்கழகங்கள் என்று. ஆனால் இந்த விஷயத்திலும் சில விபரீதங்கள் தலைதூக்கியுள்ளன.
பல்கலைக்கழகப் பரீட்சை அனுமதிப்பத்திரம் பெறுவது சம்பந்தமாக தெல்லிப்பளையைச் சேர்ந்த ஓர் மாணவி பதிவுத்தபால் மூலம் பேராதனை பீடாதிபதி அலுவலகத்துக்கு விண்ணப்பித்த கடிதம், என்ன நடந்ததோ தெரியவில்லை; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது.
இது பின்னர், யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி அலுவலகத்தில் பணிபுரியும் ஓர் அம்மணி மூலமாக பேராதனைக்கு அனுப்பப்பட்டது ஓர் புறம் இருந்தாலும்; தமிழர் என்றால் யாழ்ப்பாணம் என்பது மேலும் உறுதிப்படுத்தப்படுகிறதா என்ன?
பாதுகாப்பு என்றாலே திே
கொழும்பிலுள்ள பல பாடசாலைகளில் நேற்று முன்தினம் மாணவர் வரவு மிகக் குறைவாக இருந்தது. விசாரித்ததில்.
“பாடசாலைகளில் போதிய பாதுகாப்பு அளிக்கப் படும்” என்று அறிவிக்கப்பட்டதன் எதிரொலி என்று தெரிவிக்கப்பட்டது!
பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டால் பயம் எதற்கு? என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் கேட்கிறது. ஆனால் பெற்றோர் -
"புலி" வந்துவிடும் என்ற கிலிகொண்டுவிட்டனராம்!
(30.05.85)

Page 91
கதையல்ல நிஜம் 178
வழிகாcடும் திருச்சி வானொலி
நேற்றுக் Es).
ஏழரை மணிக்கு சற்றுப் பின்னர்; திருச்சி வானொலி நிலையத்திலிருந்து சினிமாப் பாடல்கள் ஒலித்துக் கொண்டி ருந்தன.
இடையில் ஒரு அறிவிப்பு. நிதானமான அந்தக்குரல், இப்படிக் கூறியது: ४
“.உங்களுக்கு ஒரு சிறிய விண்ணப்பம். இப்பொழுது பரீட்சைக்காலம். மாணவ, மாணவிகள் தங்களின் முழுக் கவனத்தையும் படிப்பில் செலுத்திக் கொண்டிருப்பார்கள். தயவுசெய்து உங்கள் வானொலியின் ஒலிஅளவைக் குறைத்து; மாணவ, மாணவிகளிள் படிப்பைக் குழப்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வானொலியின் ஒலிஅளவை குறைத்துக் கொள்வதன் மூலம், உங்கள் குழந்தைக்கு மட்டு மல்ல; பக்கத்து வீட்டுக் குழந்தைகளின் பரீட்சைக்கும் நீங்கள் பேருதவி செய்தவர்களாவீர்கள்."
காலையில் ஏழு மணிக்கே முக்கலும். முனகலுமுள்ள படுகீழ்த்தரமான - உணர்ச்சி கெட்ட பாடல்களை தினம் தினம் ஒலிபரப்பும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவைப் பகுதியினருக்கு இது சமர்ப்பணம்!
(28.0385)
FUTŷ DrawTQata66r
இடம்: வட்டுக்கோட்டை இந்துக் கல்லுரி. சாதனை: பன்னிரண்டு வாங்குகள், பதினெட்டு பேசைகள். பலன்:

179 கே.ஜி. மகாதேவா
கல்லூரிக்குத் தேவையான மேற்படி மரத்தளபாடங்களை அமைத்துக்கொடுத்த மாணவர்களில் மூவருக்கு இவ்வருடம் முழுவதும் வசதிக் கட்டண விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது. மேலும் பதின்மூன்று மாணவர்களுக்கு ஒரு தவணைக்கு வசதிக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மரவேலை வகுப்பு மாணவர்களின் மேற்படி சாதனை ஒரு, முன்மாதிரி என்று கல்வி திணைக்களம் சான்றிதழ் வழங்கியிருக்கிறது என்றால். பெரிய விஷயம்தானே!
விற்கு சந்தனமாகிறது!
தேவையான பொருள்கள் :
(1) அன்றாடம் அடுப்படியில் இரையாகும் வீரை விறகு, (2) மரத்தூள். (3) மனதுக்கு இதமளிக்கும் "கோலான்’ அல்லது விசேட ‘சென்ட்' வகை.
செய்முறை : வீரை விறகுக்கட்டையைச் சிறிய துண்டு களாக்கி எப்படியோ அரைத்து மா ஆக்கவும், மரத் தூளையும் அரை அரை என்று அரைத்து மாவாக்கவும். பின்னர், தேர்ந்தெடுத்த ‘சென்ட் வகையை தேவைப்படும் அளவில் கலந்து முப்பொருளையும் கூழாக்கிக் கொள்ளவும், இதனைச் சிறிய சிறிய “பொலித்தீன் பாக்கெட்டுகளில் பாதுகாப்பாக - நீண்ட காலத்துக்கு வைத்திருக்கலாம். எதற்காக இது?
"ஏன் சந்தனமாகப் பாவிக்க முடியாது?”
புதிர் போட்டிருப்பது உங்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள பூரீமான் பொதுஜனம். இதனை அவிழ்ப்பது அல்லது மூளையைப் போட்டுக் குழப்புவது. உங்கள் இஷ்டம்!
(17.0384)

Page 92
கதையல்ல நிஜம் 18O
மிகப்பெரிய இந்து ஆலயம்
உலகில் மிகப்பெரிய இந்து ஆலயம் எங்கே இருக்கிறது?
மிகப்பெரிய இந்து ஆலயம் என்றால்; நிச்சயமாக இந்தியாவில் அல்லது இந்து ராஜ்யமான நேபாளத்தில் தான் இருக்குமென்று நினைப்போம். சிலவேளை இந்தோ னேஷியாவையும் எண்ணிப்பார்ப்போம். ஆனால் நீங்கள் சிறிதும் நினைத்துப் பார்க்காத கம்பூச்சியாவில்தான் உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம் இருக்கிறது என்றால். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்!
கம்பூச்சியாவில், கோர்வார்ட் என்னுமிடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
சுமார் நாநூறு ஏக்கர் நிலப்பரப்பில் குடிகொண்டி ருக்கும் இந்த ஆலயம்; காலத்தால் அழியாமல் காட்சி கொடுப்பது அபூர்வம்தான்.
இதன் புனிதத்தன்மையைப் பேணிப்பாதுகாக்க முடியா விட்டாலும், ஆலயத்தின் சிறப்பினையும் பழம்பெருமை யையும் கண்டுகளிப்பதற்காகத் தினமும் பல நூற்றுக் கணக்கான உல்லாசப் பிரயாணிகள் இங்கு சென்றுவருவது மகிழ்ச்சியாக - மனநிறைவாக இருக்கிறது.
(1505,90)
அரசின் கப்சிப்
வடஆப்பிரிக்க நாடான டூனிஷியாலிலுள்ள பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமையகம் இஸ்ரேலிய போர்

181 (85.2. Desropshirt
விமானங்களினால் தாக்கப்பட்டு சுமார் எழுபது பேர் பலியானது நேற்றையச் செய்தி.
சைப்பிரஸ் தீவில் மூன்று இஸ்ரேலியர்கள் - அதாவது இஸ்ரேலிய நம்பர் ‘ஒன்’ உளவாளிகள் - அதாவது “மொஸாட்’ எனப்படுபவர்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கப்பிரதிநிதிகள் மூவரினால் - அதாவது பாலஸ்தீன போராளிகளினால் கொலை செய்யப்பட்டதற்குப் பதிலடி யாகவே டூனிஷியாத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய அரசு அறிவித்திருக்கிறது.
இக்கோரத்தாக்குதலை, அமைச்சர் அல்ஹாஜ் எம். எச். மொகமட் காரசாரமாகக் கண்டித்திருக்கிறார். இஸ்ரேலின் போக்கை வன்மையாகச் சாடியுள்ளார்.
ஆனால், இலங்கை வெளிநாட்டு அமைச்சோ அல்லது இலங்கை அரசாங்கமோ, இச்சம்பவம் நடைபெற்று எழுபத்து இரண்டு மணிநேரமாகியும் டூனிஷிய கோரம் பற்றி ‘மூச்சு’ விடவில்லை! கப் சிப் !
(04.10.85)
ஆள் பாரம் - கிலோ நிறை
பாழ். உள்நாட்டு வியாபார உதவி ஆணையாளர் திரு. சி. மார்க்கண்டு சில சுவை'யான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் நமக்குக் கூறியிருப்பதை 'தீபாவளி ஸ்பெஷலாகத் தருகின்றோம். படியுங்கள்; சிந்தியுங்கள்:
"நாம் கால் கிலோ நிறையுடைய ஒரு பொருளை வாங்கும்பொழுது அதில் 250 கிராம் இருக்கவேண்டும். இந்த 250 கிராமும் தனிப்படியாக இல்லை. 200 கிராமும் 50 கிராமுமாக இருபடிகள் இருக்கின்றன. யாழ். நகரில் உள்ள வியாபாரிகளில் சிலர் கால் கிலோவிற்கு 200 கிராம் ஒரு படியையே பாவிக்கின்றார்கள்.

Page 93
கதையல்ல நிறம் 182
"மரக்காலைகளில் கிலோ படிகளுக்குப் பதிலாக கல்லுகளையும், ஆள்ஏறி நின்றும் நிறுக்கிறார்கள்.
“மெட்றிக் அளவு நமது நாட்டில் 1980ம் ஆண்டி லிருந்து நடைமுறைக்கு வந்தது. ஆனால் சில அரசாங்கப் பாடசாலைககளில் இப்போதும் மெட்றிக் அளவு இல்லாத அடி, அங்குலத்திலேயே கேள்வித்தாள்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. கல்வி இலாகாவே இது விஷயத்தில் உதாசீனம் செய்கிறது!”
(12.1185)
6696D60335(d) é8-9s,
யாழ்ப்பாணம் பெரியகடைப்பகுதிகளை இப்பொழுது பார்க்கத் தேவையில்லை.
கடந்த காலங்களில் எத்தனையோ “நெருக்கடி’ களுக்கு மத்தியிலும் மூச்சுவிட்டு, எரியுண்ட சாம்பலின் மத்தியிலும் ‘உயிர் வாழும்’ அந்தக்கடைகளில் எல்லாம் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது.
ஆண்டுக்கு ஒரு தடவை தீபாவளி. அது போல இந்த வருடத்தில் காணும் மகிழ்ச்சியான காட்சி இது. இதிலும் ஒரு சிறப்புச் செய்தி இருக்கிறது! யாழ். பெரிய கடையினுள் ஒரு புடவை வியாபார நிலைய உரிமையாளர்கள்; தங்களது கடைகளில் விற்பனை யாகும் இறக்குமதி செய்யப்பட்ட கண்கவர் ஆடை வகை களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தை, தமிழ் மகளிர் அவையினால் நடத்தப்படும் ஒரு அகதி முகாமிற்கு அப்படியே அன்பளிப்பு செய்ய முன் வந்துள்ளனர்!
இப்படி இலைமறை காய்கள்’ எத்தனையோ!
(08ш85)

183 கே.ஜி. மகாதேவா
தரம் - பாதாளம்
"ரூபவாஹினி ரசிகன் - ஓர் இலட்சியக் கலைஞன்” என்று, தன்னை தொலைபேசியில் நேற்றுப் பகல் அறிமுகப் படுத்திய நமது வாசகர் ஒருவர் இப்படிக் கூறினார்:
"திங்கட்கிழமை இரவு ஏழேகால் மணிக்கு "ரூப வாஹினி'யில் ஒளிபரப்பப்பட்ட ‘கலையரங்கத்தில் இடம் பெற்ற தமிழ் நாடகத்தைப் பார்த்து, நமது கலையின் படு பாதாளத்தைக் கண்டு அசந்துபோன நான்; "நாடகத்தின் முதலாவது அங்கம் இது; இன்னும் தொடரும்" என்ற அறிவிப்பை வாசித்து மூர்ச்சித்து விட்டேன்! பலரிடம் இது பற்றி நான் விசாரித்ததில், சாதாரண ரசிகர்கள்கூட ஏமாற்றம் கண்டு இடையிலேயே ஒளியை அணைத்து விட்டதாக அறிந்தேன்."
“ரூபவாஹினித் தமிழ்ப் பகுதியினருக்கு சமர்ப் Lu63T bl
(04.0784)
ĝ5sudvar ayvy:ĝ. śīgény(
யாழ்ப்பாணத்தில் திரைப்படப் பயிற்சி நிலையம் எதுவும் இயங்குகிறதா?
படத்தின் பெயர். "கல்லூரி வசந்தத்தில்" வெறும் பொழுதுபோக்கு அம்சம் எதுவும் இல்லாமல், மாணவ சமுதாயத்தை வழிநடத்தக்கூடிய வகையில் படம் அமைந் திருக்கிறது.

Page 94
கதையம்ஸ் நிறம் 184
தயாரிப்பு: யாழ்ப்பாணக் கல்லூரி தமிழ் மன்றத்தினர். இயக்குநர், அதாவது டைரக்டர் யாழ்ப்பாணக் கல்லூரி மாணவன் வி. எஸ். நேசானந்தன். சும்மா சொல்லக்கூடாது; படம், வீடியோ படம் தான். ஆனால் தென் இந்தியாவின் தரமான திரைப்படங்களுக்கு நிகராக நிற்கிறது! சபாஷ்!
(160784)
நிழல் நி%மாகிறது
ஒடுமீன் ஓடி உறுமீன் வரும் வரைக்கும் வாடி இருக்குமாம் (அதாவது எதிர்பார்த்து இருக்குமாம் என்றும் சொல்லலாம்) கொக்கு. பின்னர் என்ன நடந்தது?
கொக்கின் நிலையைப் புரிந்து கொண்ட மீன் பதுங்கி விட்டதாம். பாவம் கொக்கு மீனை விழுங்க நினைத்து, திட்டம் பலிக்காமலேயே பட்டினி கிடந்து விழுந்து. அது செத்துப் போயிற்று! ஆனால் மீன்?
செத்துப்போன கொக்கைப் பார்த்து ஏளனம் செய்து, மெல்லத் தொட்டுப் பார்த்து சுவைத்துச் சென்றதாம்!
இது ஒரு புதுக்கதை மட்டுமல்ல; இலங்கையின் இன்றைய "மனுஷத்துவம்"
எதிரும் புதிரும்
மேதினமான நேற்று முன்தினமிரவு இலங்கை
வானொலியில், மேதின 'அதிர்வெடிகள் 'ஒகோ’ என்று ஒலித்தன. மும்மொழிகளிலும் வெவ்வேறு நேரத்தில் ஒரு

185 கே.சி. புஸ்காதேவா
மணி நேரம் ஒலிபரப்பப்பட்ட மேதின உரைகளை வானொலியில் கேட்டபோது, எதிர்க்கட்சிகள் வானொலியைத் கைப்பற்றிக்கொண்டனரோ என்று கூடச் சந்தேகம் எழுந்து விட்டது!
காதோடு காதாக காலிமுகத்திடலில் தாங்கள் ஆற்றிய உரைகள் ஏன் வானொலியில் இடம்பெறவில்லை என்று இரண்டு சிரேஷ்ட அமைச்சர்கள் எழுப்பிய புகார் இப்பொழுது வானொலி நிர்வாகப் பிரிவில் பெரும் ‘பூகம்பத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
"பேச்சைத்தான் விட்டாலும் விட்டார்கள் பரவா யில்லை. இவர்களும் பேசினார்கள் என்று சரி எங்களது பெயர்களைக்கூட சொல்லவில்லையே!” என்று இரு அமைச்சர்களும் தங்களது குற்றச்சாட்டில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள்!
(0305.83)
றொளிக்கு ஏற்படகிலி
A. W
முழு உலக நாடுகளையும் எடுத்துக் கொண்டால் சிங்களவர்கள் தொகை ஒருகோடியே இருபது லட்சம் பேர் தான்.
"தமிழர்களைப் பொறுத்தமட்டில் உலகநாடுகளில் ஆறு கோடிக்கும் அதிகமாக உள்ளனர்.
"குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் ஐந்துகோடி தமிழர்கள் இருக்கிறார்கள்.
"தமிழ்த் தீவிரவாதிகளுக்கு பலவழிகளிலும் உதவிகள் கிடைக்கிறது. ஆறு கோடித் தமிழர்களின் உதவிகளும் இவர் களுக்குக் கிடைக்கிறது. இந்த விஷயத்தை இங்குள்ள எதிர்க் கட்சியினர் உணரவேண்டும்.”

Page 95
கதையல்ல நிஜம் 186
இப்படிக் கூறியவர் யார்? நிதி திட்டமிடல் அமைச்சர் றொனி டி மெல்தான்.
696o9UoUMio 8UMWöl
உங்கள் வீட்டின் கூரை எப்படி அமைந்திருக்கிறது? ஓடா? அஸ்பெஸ்டாஸா?
அமெரிக்காவில்'இயங்கும் கல்வி நலக்குழுவின் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் செயல்படும் மருத்துவக் குழு, பெரிய உண்மையை இப்பொழுது கண்டுபிடித்தி ருக்கிறது!
அஸ்பெஸ்டாஸ் கூரை உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு, நுரையீரலில் புற்றுநோய் உட்பட நுரை யீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உண்டு என்று தெரிவித்துள்ளது! இதன் எதிரொலி என்ன தெரியுமா? பாடசாலைகள் உட்பட சகல கட்டிடங்களிலு முள்ள "அஸ்பெஸ்டாஸ்’ கூரைகளை உடனடியாக மாற்றும் படி அமெரிக்க கல்விக்குழு இப்பொழுது உத்தரவிட்டுள்ளது!
(05,1283)
Sரிவினை பார்க்கும் சிங்களர்
பிரயாணக் கட்டுரை என்றால், பொதுவாக வெளி நாடு சென்றால்தான் எழுதுவதுண்டு. ஆனாலும், எங்களைப் பொறுத்தவரை அதாவது, பாதுகாப்பு வலயத்தில் வசிப்பவர் களைப் பொறுத்தமட்டில் கொழும்பும், கண்டியும் நமக்கு “வெளிநாடுகள்'தான்!

187 கே.ஜி. மகாதேவா
கொழும்பில் ஒரளவு நிரந்தரமாக வசிப்பவர்கள் நிலை வேறு; அங்கு போய் சில வாரங்கள் தங்கியிருந்து ஊர் திரும்புபவர்கள் நிலை வேறு!
கொழும்பில் சில பத்திரிகை நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு நண்பர் என்னை வெளி நாட்டுப் பத்திரிகையாளர் ஒருவருக்கு அறிமுகப் படுத்தினார்.
"ஹி இஸ் ஒல்ஸோ ஏ fபோறின் ஜேர்னலிஸ்ட். என்றார் என்னைப்பார்த்து! எனக்குப் புரியவில்லை. அவருக்கும் புரியவில்லை.
"இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருக்கிறார். இங்கு வருவதற்கு ‘பாஸ்போர்ட்’ எடுக்காத குறை தவிர வெளிநாடு செல்வதற்குரிய ‘விசா பெற்றுத்தான் இவர் சட்டப்படி இங்கு வந்துள்ளார்” என்று எனது நிலையை தெளிவுபடுத்தினார்.
பாதுகாப்பு வலயத்தைவிட்டு ஒருவர் வெளியே செல்லவேண்டுமானால் ஒரு படிவம் நிரப்பி உதவி அரசாங்க அதிபரின் அனுமதி பெற வேண்டும்.
"இன்று (15ம் திகதி) காலை திரு. சிறில்மத்யூவின் கடைசிமகனைச் சந்தித்தேன். யாழ்ப்பாணத்தில் நடக்கும் உண்மையான புதினங்களை விரிவாகக் கூறினேன். கடுகளவும் நம்ப மறுக்கிறார்! படையினர் இவ்விதமும் நடப்பார்களா என்று கேட்டார். அந்த அளவுக்கு நமது படையினர் அநாகரிகமானவர்களல்ல என்று அவர் வாதாடுகிறார்."
நண்பர் கூறினார். சிறுகுறிப்பு: சில சந்தர்ப்பங்களில் இங்கு "அவர்கள்’ நடத்தும் அட்டகாசங்கள் பற்றி தென் பகுதியினருக்கு ஒன்றுமே தெரிவதில்லை!
உயர்மட்டத்தினர் பொழுது கழிக்கும் "கிளப்' ஒன்றுக்கு நண்பருடன் சென்றிருந்தேன். அங்கிருந்த பொறுப்பதிகாரி. "என்ன புதுமுகமாக இருக்கிறது." என்றார் நண்பரிடம். அறிமுகம் நடந்தது.

Page 96
கதையல்ல நிஜம் 188
"உங்களின் அடையாள அட்டையைத் தயவுசெய்து காட்டுவீர்களா..?" என்று அவர் நிதானமாக என்னைக் கேட்டதும். எனது நண்பரின் முகத்தில் எண்ணெய் வழிந்தது!
(190385)
UGaspar Go9o a68o9o>GØTid
தீபாவளி, கிறிஸ்மஸ், புதுவருடம், தைப்பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து மடல்களைக் காகிதத்தில் பல வர்ணங்களில் தயாரித்து விற்பனை செய்வது உலகறிந்த விஷயம். ஆனால் பனை ஒலையில் வாழ்த்து மடல்களைத் தயாரித்து உலக சாதனையை நிலை நாட்டியுள்ளது கோப்பாய் வட்டாரக் கல்வி மூலவள நிலையம்.
வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர் களுக்கு இவற்றை அனுப்பும்போது. இம்மடலின் பெறுமானம் அங்கு பல டாலர்கள்! ஏனெனில் பனை, தமிழ் மண்ணின் சொந்த மூலவளம்.
இன்றைய எமது பத்திரிகையின் முதல் பக்கத்தில் வாசகர்களுக்கு வாழ்த்துக் கூறும் படம் கோப்பாய் வட்டார கல்வி மூலவள நிலைய பனம் பொருள் கைப்பணிப் பிரிவின் பனை ஒலை வாழ்த்துமடல்தான். பனை ஓலையில் எத்தனை கலை வண்ணம்!

189 கே.ஜி. மகாதேவா
அமெரிக்க UEடத்தை தூக்கி வீசிய யாழ். தமிழன்
அந்தப் பிரமுகர், தமிழ்ச் சமூகத்தில் பெயர் பெற்றவர். "ராணி அப்புக்காத்து' என்றால் பொதுவாக விளங்கும்.
இப்பெரியவர், மனித உரிமை மீறல் சம்பந்தமாகக் கட்டுரைகளையும், ஆக்கங்களையும் "வெட்டொன்று துண்டு இரண்டாக எழுதிப் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.
இந்த ஆய்வு - ஆக்கங்களுக்காக அன்னாரைக் கெளரவித்து அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்று கலாநிதிப் பட்டம் வழங்கியது. ஆனால்.?
கலாநிதிப்பட்டத்தை அப்பெரியவர் ஏற்றுக்கொள்ள வில்லை.
(13,1285)
அந்தஸ்து சமையல்
அது ஒரு ஆடம்பரமான திருமண வைபவம். சாப்பாடு என்ன தெரியுமா?
ஐம்பத்து ஐந்து ஆடுகள், சுமார் ஆயிரம் கோழிகள்! அது மட்டுமல்ல! நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த முக்கிய வர்த்தகப் பிரமுகர்களுக்காக குடிநீர் முந்நூறு மைல் தூரத்துக்கு அப்பாலிருந்து பவுசர்’ மூலம் விசேடமாகக் கொண்டு வரப்பட்டிருந்தது. எங்கே எப்போது என்று குழம்பாதீர்கள்! யாழ்ப்பாணத்தில் இரு வர்த்தகப் பிரமுகர்களின் திருமண வைபவத்தில்தான் மேற்படி 'பிரியாணி’ மணந்தது!
அடிக்குறிப்பு: குடிநீர் கொண்டுவரப்பட்டது கொழும்பிலிருந்து. (09:05.83)

Page 97
கதையல்ல நிஜம் 190
குளிரும் எரிவும்
பல உயிர்களை விழுங்கிக் கொண்ட கட்டிடம் அது. கட்டிடத்தில் பரவிச் சிதறிக்கிடந்த தகரங்கள், இரும்புகள், பூட்டு இணைப்புகள். இப்படியாக பல்வேறு வகைப்பட்ட பொருள்களும் பூதக்’கண்ணாடி கொண்டு பொறுக்கி எடுக்கப்படுகின்றன. பொறுக்கியவர்களின் வயிறு குளிருகிறது. இதனைப் பார்த்தவர்களின் வயிறு எரிகிறது!
இந்த விபரம் உங்களுக்குப் பின்வந்த செய்திதான் என்றாலும், இடத்தைச் சொல்லும்போது. இப்படியும் சிலர் இருக்கிறார்களே என்று இதயம் அழுகிறது. பாதுகாப்பான இடமாகவிருந்து ‘சுடலையாகிவிட்ட அந்த இடம் அமைந்தது சுன்னாகம்தான்!
(22.0884)
8.நா. புதுப்பது அர்த்தம்
ge. நா. ஐ. நா. என்று ஆண்டாண்டுதோறும் அழுது என்ன பயன்?" என்று ‘ஈழநாடு' வாராந்த சர்வதேச அரங்கில் இவ்வாரம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது வாசகர்கள் அறிந்ததே.
இதனை ஆழமாகப் படித்த, நாயன்மார்கட்டு ப. மகேந்திரதாசன் புதுக்கவிதை ஒன்று அனுப்பி வைத் துள்ளார். அந்தக் கவிதை இது;
கண்டனத் தீர்மானங்களைக்
கணக்கின்றி மேடையேற்ற

191 கே.ஜி. மகாதேவா
எல்லோரும் சேர்ந்தமைத்த
ஐக்கிய
நாடக
FLIT !
(10.1085)
θυωτό δφύυύ
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் மேலும் இரு ‘புதியவர்கள்’ நியமிக்கப்பட்டுள்ளனரா?
இம்மாதம் பதினேழாம் திகதி வெளியான 'திவயின’ (சிங்களத் தினசரி - ஐலண்ட்’ குறுாப்) பத்திரிகையைப் பார்த்தபோது இப்படி ஒரு "மயக்கம்’ ஏற்பட்டது! இப்பத்திரிகையில், போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு உறுப்பினர் பட்டியலில் திரு. எம். சிவநாத, பேராசிரியர் சின்னத்தம்பி என்ற இருவரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. துருவி ஆராய்ந்ததில் திரு. சிவநாதன், பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோரே 'அவ்விதம்’ இடம் பெற்றிருந்தது தெரியவந்தது.
போர் நிறுத்தக் கண்காணிப்பு உறுப்பினர்களின் பெயரிலாவது சற்று உஷார் வேண்டாமா?
(22.Ꭵ0.85)
தூங்கா இரவுகள்
ந்தோனேஷியாவில் பாலி நகரில், 56 வயதுள்ள கெட்டுவெட்டான் என்று ஒரு நபர் இருக்கிறார்.

Page 98
கதையல்ல நிஜம் 192
இவரைப்பற்றி, அதாவது இவரது உடல் ஆரோக்கியம் குறித்து அறிந்துகொண்ட ஆராய்ச்சியாளர்கள், தலையைச் 'சொறிந்து கொண்டிருக்கிறார்கள்! காரணம்;
பதினெட்டுக் குழந்தைகளுக்குத் தந்தையான இவர், முப்பத்து ஒன்பது ஆண்டுகளாக தூங்காமல் (கயிற்றில் அல்ல, இமைகளை மூடாமல்) இருந்து வருகிறார்!
இவரது பொழுதுபோக்கு சஞ்சிகைகள் படிப்பது, வானொலி கேட்பது, பியானோ வாசிப்பது.
தூங்காமல் இவரால் எப்படி இருக்கமுடிகிறது என்பது பற்றி உடல்நல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். கெட்டுவெட்டான் இப்போது ஆராய்ச்சிக்குரிய மனிதராக இருக்கிறார்.
(080285)
நடைபாதை சீலியம்
இந்தியப் பெருநகரங்களில் ஒன்றுதான் கல்கத்தா. கல்கத்தா, மேற்கு வங்காளத்தின் தலைநகரம் ஆகும்.
கல்கத்தாவின் நடைபாதைகளில் வாழ்க்கை நடத்து வோரின் எண்ணிக்கை என்ன தெரியுமா?
பதினொரு ஆயிரம் அல்ல. பதினொரு லட்சம் ஆகும்!
(0705.90)

193 கே.ஜி. மகாதேவா
சோதிடம் மெய்க்கும்
அபிவிருத்தி லொத்தரில், அதாவது ‘சுரண்டல்’ லொத்தரில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
யாழ். நகரில் விற்பனை செய்யப்பட்ட மேற்படி லொத்தர் டிக்கட்டை ஒருவர் வாங்கினார். சுரண்டினார். என்ன ஆச்சரியம். சுளை சுளையாக எண்ணக்கூடிய ரொக்கம் கிடைத்தது!
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலத்துக்குப் பின்னர் மேற்படி லொத்தரில் பரிசுபெற்றவர், வேலணை சோதிடர் єїl. gт. 8Rougттgғт.
காதோடு காதாக: டிக்கட்டை இவர், இரு காலும் இழந்த ஒரு விற்பனையாளரிடம்தான் வாங்கினாராம். மற்ற விஷயம் - டிக்கட்டின் இலக்க எண்களைக் கூட்டிப் பார்த்து எண்சோதிடப்படிதான் அவர் வாங்கியிருக்கிறார்!
(130285)
வேலியலிரை மேயும்
°வேலியே பயிரைமேய்ந்த கதை' பற்றி பல கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட தொடர்கதை களில் இதுவும் ஒன்று.
இலங்கை விமானப் பணிப்பெண் ஒருத்தி, கட்டு நாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் திடீர்ச் சோதனைக் குள்ளாக்கப்பட்டபோது அவரிடமிருந்து ஏழு லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுக் கரன்ஸி நோட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது,

Page 99
கதையல்ல நிஜம் 194
அத்தனை கரன்ஸி நோட்டுக்களும் கைப்பற்றப்பட்டு இருபத்து இரண்டு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்
VLS
ஆனாலும், அபராதத்தைச் செலுத்த தம்மால் முடியாது என்று அம்மணி கூறவே அவர், நீர்கொழும்பு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டார்.
(28.04.90)
நவீன நீ8ரt
கொலைபேசி வமக்கம்போல அழைத்தது.
芝 ԱՔ p252gil ஒரு குரல்: "..என்னப்யா. வடக்கிலயும் கிழக்கிலயும்
மக்கள் தொடர்ந்து செத்துக் கொண்டிருக்கிறார்களே."
அந்தக் குரல் தன்னை இனம்காட்டிக் கொள்ளாமல்
தொடர்ந்தது:
"ரோமாபுரி எரிந்து கொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை மாதிரித்தான் இருக்கிறது."
ரோமாபுரி எது.? நீரோ மன்னன் யார்.?
(09.1085)
நீதிசாவதில்லை
திருகோணமலையில் இடம் பெற்ற 83 ஜூலை இனக்கலவரம் தொடர்பான வழக்கொன்றில் குற்றவாளி யாகக் காணப்பட்ட சிங்கள வாலிபரொருவருக்கு ஏழு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

195 கே.ஜி. மகாதேவா
எதிரி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, எதிரி மீது தயவுசெய்து கருணைகாட்டி, தண்டனையைக் குறைக்குமாறு நீதிபதியை வேண்டினார்.
"தமிழ் மக்களின் வீடுகளுக்குத் தீ வைத்த இந்த நபர், இதேபோல் தனது இனத்தைச் சேர்ந்தவர்களின் வீடு களுக்கும் தீவைக்கலாம்" என்று குறிப்பிட்டு தனது தீர்ப்பை உறுதிப்படுத்தினார் நீதிபதி.
வழக்கை நடத்தியவர் தமிழர். எதிரி சார்பில் ஆஜரானவர் தமிழர் நீதிபதி தமிழர்.
(130285)
அதிசய குத்சு
இப்பத்தியில் அடிக்கடி "சீரியஸ்’ தகவல்களைப் படிக்கும் உங்களுக்கு இன்று ருசிகரமான அதிசய - உண்மைச் சம்பவமொன்றைத் தருகின்றேன்.
வல்வெட்டித்துறையில், நெடியகாடு என்னுமிடத்தில் பாலசுப்பிரமணியம் மோகனகுமார் என்பவரது வீட்டில் அதிசயக் கோழிக்குஞ்சு “அவதரித்துள்ளது. இக்கோழிக் குஞ்சில் வழக்கம்போல இரு கால்கள் காணப்படுவதுடன், ம்ேலதிகமாக இரண்டு கால்கள் கோழிக்குஞ்சின் வால் இருக்கும் இடத்தில் அமைந்திருக்கின்றன. கோழிக்குஞ்சுக்கு நேற்றுடன் வயது பதினொரு நாட்கள் ஆகின்றன. ஏனைய சகோதரக் குஞ்சுகளுடன் திடகாத்திரமாக நடமாடுகிறது!
(0405.90)

Page 100
கதையல்ல நிஜம் 196
இது க்கு "பெரிய சிபார்சு
ஓர் பிள்ளையை பாடசாலையில் அனுமதிக்க Cவேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?
அந்தப்பிள்ளை கல்வியில் முன் நிற்கவேண்டும். அவ்வளவுதான். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அதுதான் நடப்பது இல்லையே! .
குறிப்பிட்ட பாடசாலையொன்றில் ஓர் பிள்ளைக்கு அனுமதி கோரப்பட்டது. வகுப்பில் அதிகமான பிள்ளைகள், தளபாடம் மற்றும் இடவசதிக்குறைவு காரணமாக அதிபரினால் அனுமதி மறுக்கப்பட்டது. அடுத்த கட்டம் என்ன? கல்வித்திணைக்களம்தானே?
மாவட்ட அமைச்சரின் சிபார்சுக் கோரிக்கையுடன் அந்த விண்ணப்பம் இப்பொழுது அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கோரப்பட்ட வகுப்பு: “கின்டகார்டின்’ எனப்படும் ஆரம்ப வகுப்பு.
06.03.84)
உள்ளத்தில் நல்ல உள்ளம்
யாழ். செயலக விசாரணைப் பகுதி கருமபீடத்தில் நேற்றுமுன்தினம் ஒரு தொகை ரொக்கப்பணத்துடன் வங்கிப் புத்தகம் மற்றும் தஸ்தாவேஜுகள் அநாதரவாகக் கிடந்தன!
இதனை முதலில் கண்டவர் தொழிலாளர் சங்ச பாழ். கிளைத் தலைவர் சி. ஆறுமுகம்தான்.

97 கே.ஜி. மகாதேவா
பணமும் தஸ்தாவேஜுகளும் யாழ். செயலக நிர்வாக உத்தியோகத்தர் க. நடராசாவிடம் ஆறுமுகத்தினால் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் உரியவரிடம் கையளிக்கப் பட்டது.
தெரிய வேண்டிய விஷயங்கள் () குறிப்பிட்ட பணத்தின் பெறுமதி ஆறாயிரம் ரூபா (2) முதலில் ஒருவர் உரிமை கோரினாராம். அவரை நிர்வாக உத்தியோகத்தர் கேள்வி மேல் கேள்வி கேட்கவே, அவர் மெதுவாக நழுவி விட்டாராம்!
சும்மா சொல்லக்கூடாது. சுயநலமற்ற நல்ல உள்ளங்கள் இன்றும் வாழத்தான் செய்கின்றன. ஆறுமுகத்துக்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம்.
(0803,90)
கடல் திரவிoம்
இலங்கையின் முக்கிய ஏற்றுமதி என்ன என்று கேட்டால், எந்தப் பிள்ளையும் தேயிலை என்று வாய் விட்டுக் கூறிவிடும்.
அதைவிட இன்று முக்கியமானது. இறால், கணவாய், நண்டு!
கடல் சூழ் யாழ். குடா நாட்டில் இறால், கணவாய், நண்டு ஓரளவு பரவாயில்லை. ஆனாலும், நண்டு பரவலாகக் காணப்படும் மன்னார் பகுதியில், ஒரு நண்டின் விலை என்ன தெரியுமா? பதின்மூன்று ரூபா ஆகும்!
திரைகடல் ஒடியும் திரவியம் தேடு படலத்தில், 'கடல் திரவியம்’ நண்டின் பெறுமதியும் இப்பொழுது முக்கியத் துவம் பெற்றுவிட்டது.
(12.0283)

Page 101
கதையல்ல நிஜம் 198
685(tsirssoBréal) 6985wtsir&soBot
உடுபுடவைகள், காற்சட்டைத் துணிவகைகள், எந்த ரகம் வேண்டும்?
கைக்கடிகாரங்கள் - எந்த ரகம், எத்தனை வேண்டும்?
விதம்விதமான வெளிநாட்டுப் பொருட்கள், ஆடம்பரச் சாமான்கள் - எத்தனை வேண்டும்?
வகைகளையும் அரை விலை, கால் விலைக்கு கொழும்பு பிரதானவீதி முதலாக பல இடங்களில் தாராள மாகப் பெற்றுக் கொள்ளலாம் இப்பொழுது எல்லாமே இனக்கலவர நெருப்பில் தப்பிப் பிழைத்து கொள்ளை போனவைதான்!
(03.10.83)
WMGöG wMst UMg)6MÖu?
பாழ். நகரிலுள்ள சில கல்லூரிகளில் பயிலும் சில மாணவர்களை, பெற்றோர் தினமும் கூட்டி வருகிறார்கள். கூட்டிச் செல்கிறார்கள்.
இதில் என்ன அதிசயம்? பாலர் பாடசாலை நேசறியில் படிக்கும்) பிள்ளைகளை பெற்றோர் கவனமாகக் கூட்டி வருவதும் கூட்டிச் செல்வதும் புதினமில்லையே என்று நீங்கள் நினைத்தால். நிச்சயம் நீங்கள் ஒரு அவசரக்காரர் தான.
நான் முதலில் கூறிய “பெற்றோர் பாதுகாப்பு நடப்பது பாலர் பாடசாலையில் அல்ல, ஜி. ஸி. ஈ. உயர் வகுப்பு

199 கே.ஜி. மகாதேவா
பயிலும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட உயிர் பாதுகாப்பு இது. உயர் வகுப்பு மாணவர்களை அக்கறையுடன் கூட்டிச் செல்லும் இந்தப் பெற்றோர், நண்பகல் உணவும் கொண்டு வந்து கொடுக்கிறார்களாம்.
{0 {0 0.
பாழ்ப்பாணம் பிரதம தபால் அலுவலகத்தில் விசாரணைக் கருமபீடத்தில் தொலைபேசித் தொடர்பு கொள்ள முடியாமலிருக்கிறது என்றும், இங்கு கொள்ளை நடந்த பிறகு தொலைபேசி சேவை தூங்குகிறது என்றும் கடந்த 29-ம் திகதி இங்கு எழுதியிருந்தேன் அல்லவா? நேற்று முதல் தொலைபேசிச் சேவை இங்கு மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டது! துண்டிக்கப்பட்ட மூன்று தொலைபேசிகளும் விழித்துவிட்டன.
(04.11.83)
இப்படி ஒரு கிராமியத் தொழில்
குடிசைக் கைத்தொழிலில், சாராயம் - சட்டவிரோத சாராய விற்பனையும் ஒன்றா?
இப்படி ஒரு சந்தேகம் உருவானபோது, புதிதாக ஒரு செய்தி நேற்று கிடைத்தது. அந்தத் தகவல் இதுதான்:
சட்டவிரோத சாராய விற்பனையில் அந்த “சிறு’ கிராமமே முழுக்க ஈடுபட்டிருந்ததாம்.
இதனையறிந்து வேதனைப்பட்ட இளைஞர் கோஷ்டி யொன்று, அக்கிராமத்துக்குச்சென்று முற்றுகையிட்டு, வீடு களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல நூற்றுக்கணக்கான சாராய போத்தல்களையும் பொதுவீதிக்குக் கொண்டுவந்து நடுவீதியில் உடைத்து நாசப்படுத்தினராம்.

Page 102
கதையல்ல நிஜம் 2OO
அதுமட்டுமல்ல; குறிப்பிட்ட வீடுகளுக்கும் சில கடை களுக்கும் சென்ற அந்த இளைஞர்கள்; "மக்களை தீயவழியில் ஈடுபடுத்தும் உங்களுக்கு இது கடைசி எச்சரிக்கை" என்று கூறியும் சென்றனராம்.
இந்த முற்றுகை ஐந்துமணி நேரம் வரை நீடித்தது என்றால் பாருங்களேன்!
(22.11.83)
லிள்ளைகள் விற்பனை
அகதிகள் முகாம் ஒன்றில் ஒன்பது வயதுச் சிறுமி முந்நூறு ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், “விற்பனை விஷயம் அகதிகள் சிலரின் காதுகளுக்கு எட்டவே. அந்தச் சிறுமி அவசரம் அவசரமாக எப்படியோ ‘கடத்தி வரப்பட்டு முகாமில் அதன் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டு விட்டது! இனித்தான் ‘கிளைமெக்ஸ்" ஆரம்பிக்கப் போகிறது!
ஒன்பது வயதுச் சிறுமி வந்து சேர்ந்த சில நேரத்தில், நேற்றுக்காலை, அந்தச் சிறுமியின் பதினொரு வயது அக்கா மீண்டும் அதே பேர்வழிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது!
(17.1283)
அவசியமில்லாத அவசரம்
அகதிகள் முகாம் ஒன்றில் முந்நூறு ரூபாவுக்கு ஒரு சிறுமி விற்பனை செய்யப்பட்ட சமாசாரம் பழைய கதை.
இது ஒரு புதிய கதை

2O1 கே.ஜி. மகாதேவா
ஒரு குடும்பத்தில் பசி, பட்டினி என்று வந்துவிட்டால் குழந்தைகள் விற்கப்படுவது பெரிய விஷயம் இல்லை. ஆனால் அகதிகள் முகாமில் ஒரு பிள்ளைக்கு தினசரி சமூக சேவைப்பகுதி ஒரு தலைக்கு 10 ரூபா வழங்குகிறது. அதாவது ஒரு பெற்றோருக்கு 8 பிள்ளைகள் இருந்தால், தலைக்குப் பத்து ரூபா வீதம் ஒரு நாளைக்கு 100 ரூபா அந்தக் குடும்பத்தின் பராமரிப்புச் செலவுக்காக, முகாமுக்குக் கிடைக்கிறது. இதுதவிர செஞ்சிலுவைச் சங்கம், றெட்பானா மூலம் மருந்துகள், பால்மா, துணிவகைகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றுடன் வர்த்தகர்கள், இளைஞர் கழகங்கள் அரிசி, தேங்காய் சேகரித்து இலவசமாகக் கொடுக்கிறார்கள்.
இந்நிலையில் அகதிகள் முகாமில், பிள்ளைகளை விற்பனை செய்யவேண்டிய அவசியம் ஏற்படத்தான் வேண்டுமா?
(1912.83)
அண்றைய நாCடுநடப்பு
இரண்டு குடும்பப் பெண்கள், மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தனர்.
ஒருவர்: அப்படி என்ன அந்த மனுஷனைப் பற்றிப் பெரிசா கதைக்கிறீங்க.
மற்றவர்; அந்த மனுஷன் அல்லவா பொறுப்புள்ள ஆம்பிள.
ஒருவர்: நீங்கள் சொல்றது விளங்கல்ல.
மற்றவர்; அந்த மனுஷன் சைக்கிளில் போகும்போது. சைக்கிளில் முன்பாக ஒரு பையில் அரிசி இருக்கும். ஒரு கையில் பெரிய தேங்காய் இருக்கும். சைக்கிளின் பின்புறம்

Page 103
கதையல்ல நிஜம் 2O2
விறகு இருக்கும். பெரிய தேங்காயையும், விறகையும் மனுஷன் எங்கிருந்துதான் இப்போ வாங்கிறாரோ தெரியல்ல.!
நாட்டுநடப்பு இன்று இப்படி அதிசயமாக இருக்கிறது!
(1702,84)
令 0. 40
நிற்பிட்டிமுனை எங்கிருக்கிறது தெரியுமா? உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ நற்பிட்டி முனை இருப்பது கல்முனையில்தான்.
நற்பிட்டிமுனை உப தபால் அலுவலகத்திலிருந்து பா. பூபாலரெட்ணம் என்பவர் யாழ்ப்பாணம் பா. கந்த சாமி என்பவருக்கு ஒரு தந்தியை தமிழில் அனுப்பி யிருந்தார்.
குறிப்பிட்ட தந்தியில் அனுப்பியவரின் விலாசம். நாய்ப்பட்டிமுனை என்றிருந்தது.
தந்தியில் உள்ள உபதபால் அலுவலக பெயரைப் பார்த்தேன். அதிலும் நாய்ப்பட்டிமுனை என்றுதான் இருந்தது.
நாய்ப்பட்டிமுனை இப்போது எங்கே இருக்கிறது? அஞ்சல் சேவையினருக்கு (நாய் வர்க்கம் மன்னிக்கட்டும்) இது சமர்ப்பணம்!
(1702.84)
இதுவும் ஒரு "சாதனை
வெள்ளத்தினால் ஒரளவு குண்டும், குழியுமாகி விட்ட பொதுவீதியைத் திருத்துவதற்கு எத்தனை நாட்கள் தேவை?

2O3 கே.ஜி. மகாதேவா
"அது, வீதியின் தூரத்தைப் பொறுத்தது." என்று நீங்கள் பதிலளிப்பது எனது காதுகளில் ஒலிக்கிறது. ஆனால் நான் கூறும் சங்கதி வேறு.
நமது பெருந்தெருக்கள் திணைக்களத்தின் அரும் பெரும் சாதனை இது: சுமார் நூறு யார் தூர வீதியைத் திருத்த பத்துநாட்கள் பிடித்திருக்கிறது! இடம்: யாழ். பிறவுண் வீதியில் ஒரு பகுதி. என்ன பரிசுக்கு சிபார்சு செய்யலாம்?
(13.0784)
அதிசய தபால் சேவை
வவுனியாவிலிருந்து ஒரு கடிதம் யாழ்ப்பாணம் வருவதற்கு எத்தனை நாட்கள் செல்லும்?
மூன்று நாட்கள்? சரி. இரண்டு நாட்கள் என்று வைத்துக் கொள்வோம்.
கொழும்பிலிருந்து கடிதம் யாழ்ப்பாணம் வருவ தானால்.?
"அதைக் கேட்காதீர்கள்” என்று நீங்கள் முணு முணுப்பது ஒரு புறமிருக்கட்டும். எனது கேள்வி:
ஜேர்மனியிலிருந்து ஒரு கடிதம் யாழ்ப்பாணம் வருவதற்குத் தேவைப்படும் நாட்கள் எத்தனை?
மேற்கு ஜேர்மனியில் உள்ள றொன்டென்பேர்க் எனுமிடத்திலிருந்து இம்மாதம் இரண்டாம் திகதி அனுப்பப் பட்ட ஒரு கடிதம் யாழ்ப்பாணவாசிக்கு இம்மாதம் ஏழாம் திகதி, அதாவது ஐந்து நாட்களில் கிடைத்திருக்கிறது!
(08:05.85)

Page 104
கதையல்ல நிலும் 2O4.
கேள்விப்பித்தலும் விளக்கப்லித்தலும்
சித்தன்கேணியைச் சேர்ந்த அன்பர் ஒருவர் (கேள்விப் பித்தன்' என்று குறிப்பிட்டுள்ளார்) பின்வரும் பாடலை "ஊடுருவி'யாருக்கு கேள்வி வடிவமாக அனுப்பி வைத் துள்ளார். பாடல் இதுதான்:
"வையம் மன்னுயிராக அம்மன்னுயிர்
உய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக்கு) ஐயமின்றி, அறங்கட வாதருள் மெய்யினின்றபின் வேள்வியும் வேண்டுமோ?" இதன்பொருள்; தன் ஆட்சியிலுள்ள மக்களைத் தன்னுயிராகவும் அவ்வுயிர்களுக்கு இடமான உடலாகத் தன்னையும் உணர்ந்து கொள்ளும் நீதியான மன்னன் அறத்தைக் கடந்து செல்லாமலும் சத்தியத்தில் நிலைபெற்றும் நிற்பானாயின் அவன் வேள்விகள், யாகங்கள் செய்து அடையத்தக்க சிறப்புகளும் உலகில் இருக்குமோ?
கேள்வியைக் கூறிவிட்டேன். பதில்? வாசகர்களிடமே விட்டுவிடுகின்றேன்.
(24.01.86)
பதில்
கடந்த வெள்ளிக்கிழமை சித்தன்கேணியைச்சேர்ந்த கேள்விப் பித்தனின் கவிதை வடிவில் அமைந்த கேள்வியைப்

2O5 கே.ஜி. மகாதேவா
பிரசுரித்து வாசகர்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்தது நினைவிருக்கலாம்.
வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த ‘விளக்கப்பித்தனின் பதில் கவிதை முதலில் கிடைத்துள்ளது. பதில் கவிதையும், விளக்கமும் அப்படியே தரப்படுகிறது.
“வையம் தன்னுயிர் என்னும் நினைப்பிலார் பொய்யும் தீதும் கொலைகளும் ஆற்றுவார் உய்யும் மாந்தர் உரிமைகள் நீக்குவார் செய்யும் வேள்வியில் நன்மையும் மேவுமோ?" - இதன் பொருள் இதுதான்:
"தன் ஆட்சியிலுள்ள மக்கள், தன்னுயிர் என்னும் நினைப்பின்றியும், பொய்யும் தீங்கும் கொலைகளும் புரிந்தும் / உய்தி பெறவேண்டிய மக்களின் உரிமைகளைப் பறித்தும் ஆட்சி செய்யும் மன்னன் செய்யும் யாகத்தால் சிறிதேனும் பயன் உண்டாகுமா?"
(2801.86)
நீதி சரிகிறது
தொலைபேசி அழைத்ததும் “ஹலோ” என்றேன். "பூரீமான் பொதுஜனம்" என்று பதில் வந்தது.
“உங்க பிள்ளை ஸ்கூலுக்கு போகிறதா.?” என்று கேள்வி பிறந்தது.
“பாடசாலை ஆரம்பித்து மூன்று வாரமாகிறது. அப்பிடி இப்பிடிக் கூட்டிப் பார்த்தா, பத்து நாட்கள் போயிருப்பார்கள். உயிர் பாதுகாப்புத்தானே முக்கியம்” என்றேன்.

Page 105
andboob 2O6
"அது சரி. நீங்கள் யாழ்ப்பாணம். உயிர் முக்கியத் துவத்தை உணர்ந்தவர்கள்" என்று பெருமூச்சுடன் பூரீமான் பொதுஜனம் கூறியதும் பெரிதும் மனவருத்தமாக இருந்தது. பெருமூச்சின் அந்தரங்கத்தைக் கேட்டேன். அவர் சொன்னார்:
“போனவார தெல்லிப்பளைச் சம்பவம் உங்களுக்கும் தெரிந்த விஷயம். தெல்லிப்பளைப் பகுதியில் முப்பது, முப்பத் தைந்து பாடசாலைகள் இருக்கின்றன. இவற்றில் மூன்று நான்கு, பெரிய பாடசாலைகள் ஆகும். போனவாரச் சம்பவத்தின்போது - அதாவது, பயங்கர வெடிச்சத்தங் களுடன் சன்னங்கள் அங்குமிங்குமாக வந்து விழுந்த நேரத்தில் - பல பாடசாலைகளில் மாணவர்கள் அல்லோல கல்லோலப்பட்டு ஒடித் தப்பிவிட்டனர். ஆசிரியர்கள்? ஒரு பாடசாலை ஆசிரியர்கள், சில மணி நேரம் வரை பார்த்து விட்டு மாணவர்களும் போய்விடவே, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறினார்கள். இப்பொழுது என்ன சங்கதி என்றால். அந்த ஆசிரியர்கள் நேரத்துடன் சென்ற காரணத்துக்காக பிறிதொரு நாளில் மேற்படி ஆசிரியர்கள் கடமைக்கு வரவேண்டும் என்று அழைக்கப்பட்டுள்ளனர்!
ஒ. ஆசிரிய உலகமே.!
(27.01.86)
ásfăš9a6c ipsofšo á6Fearc
ஒரு கை, கையில் காணப்படுவது ஒரு பொருள். அந்தப் பொருள்?
இம்மாத ஆரம்பத்தில் கொழும்பு சரவணமுத்து (சரா) விளையாட்டரங்கில் சென். தோமஸ் - றோயல் நூற்று ஏழாவது கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனைக் கெளரவிக்குமுகமாக “கிரிக்கெட் மலர்’ ஒன்று வெளியிடப் பட்டது. அந்த மலர், கிரிக்கெட் போட்டி சம்பந்தமானது.

2O7 கே.ஜி. மகாதேவா
அப்படியானால் அப்புத்தக படத்தில் காணப்படும் கையில் இருக்கவேண்டியது கிரிக்கெட் பந்து. ஆனால் இருப்பதோ சாட்சாத் ‘கிரினேட்’ மாதிரி இருந்தது!
றோயல் கல்லூரியிலும் சென்தோமஸிலும் கல்வி கற்ற பலர் பெரும் பிரமுகர்களாக இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள் என்பது ஒர் இரகசியமல்ல. இன்றைய ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் றோயல் தான். இதுபோல தந்தை செல்வா, அமரர் திருச்செல்வம் ஆகியோர் படித்தது சென். தோமஸ். ஆனாலும். அட்டைப் படத்தில் காணப்படும் "பந்து’ - கிரினேட் கதை - பின்னணி என்ன?
(180386)
சிங்களம் சர்வமயம்
இலங்கையில் சிங்களத்துடன் தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து உண்டு என்றும், வடக்கு கிழக்கில் தமிழ்தான் ஆட்சி மொழியாக இருக்கும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி அரசு சட்டம் நிறைவேற்றியதும், தமிழ்மக்கள் எவ்வித ஆரவாரமுமின்றி மனதுக்குள் சிரித்துக்கொண்டனர்.
சட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை நேரில் கண்டறிய யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தை ஒரு தடவை சுற்றி. மன்னிக்கவும், ஊடுருவிப் பார்த்தோம்.
கொழும்பிலிருந்து - கல்வி அமைச்சிலிருந்து யாழ். கல்வித் திணைக்களத்துக்கு வரும் கடிதங்கள், சுற்று நிருபங்கள் தனிச் சிங்களத்தில்தான் இருக்கின்றன.
சம்பந்தப்பட்ட ஒர் அதிகாரி, பாவம், ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டித்தான் இந்தச் சிங்களக் கடிதங்களைப் படிக்கின்றாராம்!

Page 106
கதையல்ல நிஜம் 2O8
சட்டம் ஒரு இருட்டறை, கழுதை என்பதெல்லாம் எப்படிப் பிழைக்கும்!
(07.0390)
ஒரு வாசகரின் பலமுகம்
தினசரிப் பத்திரிகைகளைக் கட்டி எழுப்புபவர்கள் யார் தெரியுமா? சாட்சாத் நிருபர்கள்தான். நிருபர்கள்தான் கருப்பொருள். அதனை மெருகூட்டுபவர்கள்தான் உதவி ஆசிரியர்கள்.
இந்த நிருபர்கள் - அதாவது செய்தியாளர்கள் சமாச்சாரமே வித்தியாசமானது! ஒரே நிருபர் அதே பெயரில் (சற்றுத் துணிச்சலானவர்) பல பத்திரிகைகளுக்கும் செய்தி யாளராக இருப்பதும் உண்டு. அதே நிருபர் பல பெயர் களில், பல பத்திரிகைகளுக்கும் செய்தியாளராக இருப்பதும் உண்டு.
இதனை முறியடித்திருக்கிறார் ஓர் வாசகர். முறியடித்தது மட்டுமல்ல; இரண்டு முன்னணித் தினசரிகளுக்கும் முடிச்சு’ போட்டிருக்கிறார்! சரி கதைக்கு வருவோம்.
தமிழ் - சிங்கள புதுவருடத்தை “தேசிய புது வருட மாக' மாற்ற தாம் முடிவு செய்திருப்பதாக ஜனாதிபதி பிரேமதாசா அறிவித்திருப்பதாக "சன்' ஆங்கிலப் பத்திரி கையில் தலைப்புச் செய்தி இடம்பெற்றிருந்தது.
‘வீக்கென்ட்” ஆங்கில வார இதழில் வெளியான ஒரு வாசகரின் கடிதத்தைப் படித்ததும் புல்லரித்தது. அதன் எதிரொலிதான், தேசிய புதுவருடம் பெயர் மாற்றம். "தமிழ் - சிங்களப் புதுவருடம் இனிமேல் தேசிய புது வருடம் என்று அழைக்கப்படும்” என்று ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்திருந்ததாக ‘சன்’ தலைப்புச் செய்தி கூறியது.

209 கே.ஜி. மகாதேவா
தகவல் ஒன்று: 'சன்’ பத்திரிகையின் சகோதர பத்திரிகை தான் ‘வீக்கென்ட்' (வார மலர்). 1803.90 வீக்கென்டில் வெளியான அதே கடிதம் ‘சன்’ பத்திரிகையிலும் (2003.90) வெளிவந்திருந்தது. இரு பத்திரிகைகளுக்கும் கடிதங்கள் எழுதியவர் ஒரே நபர்தான். ஆனால், “சன்’ பத்திரிகையில் வாசகரின் (பெயர்) ஜெறி வித்ய சேகர என்றும், வீக்கென்டில்’ அந்த வாசகரின் பெயர் ஜெஹி வைத்தியசேகர என்றும் காணப்பட்டிருந்தது. தகவல் இரண்டு: 'வீக்கென்ட்டில் கடிதம் எழுதியவரின் விலாசம் கொழும்பு - 13 என்று காணப் பட்டது. ஆனால் உண்மையில் அந்த வாசகரின் விலாசம் பொத்துஹர ஆகும். இந்த ஜெறி இருக்கிறாரே. இவர், ஐலண்ட்’ ஆங்கிலத்தினசரியில் அமிதா அபயசேகர எழுதும் பகுதிக்கு அடிக்கடி துப்புக்கொடுப்பவர்!
இரண்டு விலாசங்கள்; பெயரும் வித்தியாசம். பல பத்திரிகைகளுக்கும் எழுதுபவர். எப்படியோ வாசகர் புகுந்து விளையாடி ஜனாதிபதியின் சபாஷையும் பெற்றுவிட்டார்.
(26.03.90)
தகவல் கொடுமை
உங்களிடம் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இருக்கிறதா?
“இது என்ன விசர்க் கேள்வி?" என்று கேட்காதீர்கள். சற்று "சீரியஸாகத்தான் கேட்கிறேன், கொஞ்சம் கவனி யுங்கள்.
பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் யாழ். செயலகத்தில் பதியப்படும்போது, மூன்று பிரதிகள் நிரப்பப்படும். ஒரு பிரதி உங்களுக்கு. அதாவது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் சொந்தக்காரருக்கு இரண்டாவது பிரதி யாழ். செயலகத்தில் இருக்கும். மூன்றாவது மூலப்பிரதி கொழும்புக்கு தலைமைச்
செயலகத்துக்கு அனுப்பப்படும்.

Page 107
கதையல்ல நிலம் 21 Ο
ஒருசில புகார்கள்மீது யாழ். செயலகத்துக்கு 'திக்’ விஜயம் செய்தோம்.
பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்குச் சொந்தமானவரின் பெயர் செந்தூரன். யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்தவர். பிரிவு: யாழ்நகர் மேற்கு. இவருக்கு வழங்கப் பட்ட பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் பிறந்த திகதி 12,01988 என்றும் தாய் பிறந்தது 108.1986 என்றும் இருக்கிறது! கொழும்புக்கு அனுப்பப்பட்ட பிரதியில் என்ன இருக்கிறது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
தாய் பிறந்தது 1986 என்றால், இரண்டு வயதில் ஒரு குழந்தையைப் பிரசவித்த பெருமையை - கின்னஸ் சாதனையை மேற்படி தாய் பெறுகின்றார்.?
அடிக்குறிப்பு: உங்களிடம் “போலி” அத்தாட்சிப் பத்திரம் இருந்தால், தயவுசெய்து மேற்படி விஷயத்தை தூக்கி வீசிவிடுங்கள்;
(090390)
staStarb : 5, 8aFoQ :
பாழ். தபால் நிலையத்துக்கென இரண்டு மாதங் களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து ஐந்து புதிய வாகனங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் ஒரு வாகனம் மட்டும்தான் இப்பொழுது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது, யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட தபால்கள் அனைத்தும் இந்த ஒரே வாகனத்தின் மூலமாகத்தான் சேகரிக்கப் படுகிறது!
கொழும்பு - யாழ்ப்பாணம் ரயில்சேவை தங்கு தடையின்றி நடைபெறுகிறது. தபால் சேவையும் சீரடைந் துள்ளது. உள்ளதைக் கொண்டு நல்லசை செய் என்பார்கள்.

211 கே.ஜி. மகாதேவா
கையில் இருப்பதோ ஐந்து புத்தம் புதிய வாகனங்கள். ஒடுவதோ ஒன்று மட்டும். இது ஏன்?
மருந்து மோசடி
உணவுப் பொருள் மற்றும் மருந்து வகைகளில் நடக்கும் "மோசடி" பற்றி இருதினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? இது பற்றி யாழ். ஆங்கில மருந்து வர்த்தகர் சங்கச் செயலாளர் திரு. சிவஞானம் பூரீகணேஷன் அனுப்பி வைத்த கடிதம் இது:
"மருந்து வகைகள் எதுவானாலும் மருந்துக் கடை களில் - மருந்து விற்பனை நிலையங்களில் மட்டும் பெற்றுக் கொண்டால், காலாவதியான பொருள்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது. சகல ஆங்கில மருத்துவ வர்த்தகர்களும் எமது சங்கத்தின் இந்த அறிவுறுத்தலை கவனிக்கவும்."
(1703.90)
இப்படியும் ஒரு சாதனை
ஒரு கடவுச்சீட்டை (பாஸ்போட்டை") பெற்றுக் கொள்ள எத்தனை நாள் பிடிக்கும்?
சிலர் ஒரு மாதம் என்பார்கள். சிலர் ஒரு வாரம் என்பார்கள். இதிலும் சிலர் "மூன்றே நாட்களில் எடுக் கட்டுமா?" என்றும் சவால்விடுவார்கள். இது ‘சம்திங்கைப் பொறுத்த விஷயம்)

Page 108
கதையல்ல நிஜம் 212
6.
ஆனால் சில நிமிடநேரத்தில் உங்கள் ‘பாஸ்
போட்டை’ப் பெற்றுக்கொள்ள முடியுமா?
இந்தச் சாதனை வேறு எந்த நாட்டிலும் அல்ல; இலங்கையில்தான் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் நடமாடும் செயலகம்" கடந்தவார இறுதியில் புத்தளத்தில் இயங்கியது. அங்குதான் இந்த “கின்னஸ் சாதனை ஏற்படுத்தப்பட்டது.
(ஆதாரம்: நேற்றைய கொழும்பு ஆங்கில வார ஏடு) (24.03.90)
உண்மை விளக்கம்
யாழ். தபாலகத்தில் தரித்து நிற்கும் புத்தம் புதிய வாகனங்கள் பற்றி கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? இது குறித்து யாழ். தபால் அதிபர் "ஊடுருவி யாருக்கு அளிக்கும் விளக்கம்:
"யாழ். தபால் நிலையத்துக்கு கடந்த இருமாதங் களுக்கு முன்னர் ஐந்து வாகனங்கள் வந்தன. இவற்றில் நான்கு வாகனங்களின் “பற்றறிகள்’ கொழும்பிலிருந்து வரும் போதே செயலிழந்த நிலையில் இருந்தன. ஒரு வாகனத்தை மட்டுமே சேவையில் ஈடுபடுத்த முடிந்தது. ‘பற்றறிகள்’ தேவையென மேலிடத்துக்கு அறிவித்தும் இதுவரை எதுவித பலனும் கிடைக்காததால் நாம் 1800 ரூபா வீதம் இரு ‘பற்றிறிகளை உள்ளூரில் வாங்கி வாகனங்களுக்கு பொருத்தி இன்று சேவையில் ஈடுபடுத்தியுள்ளோம். ஆயிரம் ரூபாவுக்கு மேல் “பற்றிறிகளுக்கு செலவுசெய்யக்கூடாது என்பது மேலிடத்து நடைமுறைச் சட்டம். அதேநேரத்தில் மிகுதியாக இருக்கும் இரு வாகனங்களுக்கும், மாற்று நடவடிக்கை எடுத்து, அவற்றையும் விரைவில் சேவையில் ஈடுபடுத்த வுள்ளோம்."
(2503.90)

213 கே.ஜி. மகாதேவா
விடியலுக்காக விடியும் வேளை
Tன்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்” என்று அன்று பாடினார் பாரதியார்.
"என்று தணியும் இந்த வெளிநாட்டு மோகம்” என்று இன்று பாடலாம் போலிருக்கிறது.
"இந்தா அனுப்பப்போகிறோம். நாளைக்கு அனுப்பப் போகிறோம்." என்று பல வெளிநாடுகளுக்கு, இன்றும் நம்ம வர்கள் (பல லட்சங்களை வாரி வழங்கி) சென்று கொண்டு தானிருக்கிறார்கள்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் காலி வீதி வழியாக பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். பிரிட்டிஷ் தூதரகத்துக்கு எதிரே நீண்ட "கியூ. அப்பொழுது காலை ஐந்து மணி யிருக்கும்.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஆஸ்திரேலியா தூதரகம் முன்பாக பஸ்ஸில் செல்லநேரிட்டது. அங்கு பெருந் திரளானவர்கள் முண்டியடித்துக்கொண்டு "கியூவில் நிற்பதைக் காணமுடிந்தது. அப்பொழுது நேரம் காலை நான்கு மணி முப்பது நிமிடம்.
விடியலுக்காக அந்த விடியும் வேளையில் கால்கடுக்க காத்திருக்கும் நம்மவர்களைப் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருந்தது. (0704.90)

Page 109
கதையல்ல நிஜம் 214
eastcoudSo 'éastcol'
அது ஒரு 'பிஸி’யான அரச அலுவலகம்.
ரயில் பிரயாணச் சீட்டுகளை வாங்குவதற்கு “கவுண்டரில் பணம் கொடுத்தால் மிகுதிப்பணம் அதாவது சில்லறைகள் கிடைப்பது “கொஞ்சம் கஷ்டமாகத்தானி ருக்கும்.
சில சமயங்களில், மணிச்சத்தம் கேட்க முன்னரே (சரியான நேரம் வந்ததும்) ரயில் புறப்பட்டுவிடும்.
பயணிகளின் பெரிய பொதிகளைக் கண்டால் அங்குள்ள வாசலில் நிற்கும் சிங்கள ஊழியருக்கு அலர்ஜி’ போலும் உள்ளே போகும்போதும் சரி; வெளியே வரும் போதும்சரி; சாட்டுப்போக்குச் சொல்லி அப்பொதிகளைக் கொண்டு செல்லமுடியாது என்றும், சோதனையிடப்பட வேண்டும் என்றும் வற்புறுத்துவார்கள்! கைகள் ‘பரிமாறியதும் சிரித்துக்கொண்டே பொதிகளை அனுமதிக்கின்றார்கள்.
நீண்ட "கியூ! உங்களுக்கோ விரைவில் பயணச் சீட்டைப் பெறவேண்டும் என்று ஆர்வம். உங்கள் பரிதாபம் கண்டு வருவார்கள் ‘அவர்கள்’. பணத்தைக் கொடுத்ததும் சீட்டும் விரைவாக வந்துவிடும். அப்புறம்? தலையைச் சொறிந்து கொண்டு கையை நீட்டுவார்கள். சில சந்தர்ப்பங் களில் ‘அவர்கள்’ சீட்டுப் பணத்துடன் தலைமறைவாகி விடுவதும் உண்டு!
இதுதான் கொழும்பு கோட்டை ரயில் நிலையம்! T(05.05.90)

215 கே.ஜி. மகாதேவா
வெந்நிடம் 150; விண்ணப்பம் பல ஆயிரம்
சுகாதார சேவைப்பகுதியில் ஏற்பட்ட 150 வெற்றிடங் களுக்கு அண்மையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
எக்கச்சக்கமான விண்ணப்பங்கள் மலைபோல் குவிந்துவிட்டன!
விண்ணப்பதாரர்களில் சுமார் எண்பத்து ஏழாயிரம் விண்ணப்பங்கள், ஜி. ஸி. ஈ. (உயர்தரம் மற்றும்; ஜி. ஸி. ஈ. சாதாரணம்) தரத்தில் சித்தியடைந்தவர்களிடமிருந்து வந்தி ருந்தன.
வெற்றிடங்கள் எந்தப்பகுதிக்கு என்று நீங்கள் கவனிக்க வில்லையே! தொழிலாளர் தரத்திலான வெற்றிடங்களுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
UTé86øTT UTGIT
பTணின் விலை விரைவில் ஒரு ரூபா இருபத்தைந்து சதத்துக்கு வரப்போகிறது!
உணவு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. வீரசிங்க மல்லிமாராச்சி குறைந்தவிலையில் பாண் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இப்பாண் முதலில் கொழும்பு நகர்ப்புறத்தில் விற்பனைக்கு விடப்படும் என்றும், அதனைத்தொடர்ந்து ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும் என்றும் அமைச்சர் தெளிவாகக் கூறினார். இதன் நிறை நூறு கிறாமாகத் தானிருக்கும். இதுவும் அமைச்சர் சொன்னதுதான்!
(10.05,90)

Page 110
கதையல்ல நிஜம் ,216
đ96ărssoBoo UTåồ. a6Tsiĝßt
கTஷ்மீர் பிரச்சனை இப்பொழுது சூடு பிடித்து, ந்தியாவுக்குத் தலைவலி கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. ருககிறது
பூரீநகரிலிருந்து இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக வெளியேறிவிட்டனர்.
விட்டு விட்டுச் சண்டை நடைபெறும் ஜம்மு - காஷ்மீர் எப்படி இருக்கிறது என்று பார்க்கப்போகிறீர்களா? வாருங்கள.
என்ன. எல்லோரும் “கிளின்ஷேவ்”வுடன் இருக் கிறார்கள் என்று யோசிக்கிறீர்களா? இங்கு யாரும் தாடி வளர்க்கக்கூடாது. இங்குள்ளவர்கள் தங்களது வலது கையில்தான் கைக்கடிகாரம் அணியவேண்டும். (மூச்சு.! பாகிஸ்தானில் வலது கையில்தான் கைக்கடிகாரம் காணப் படும்)
இங்கு நேரம், அரைமணிநேரம் பின்னால் தள்ளி யிருக்கவேண்டும். அதாவது பாகிஸ்தான் நேரப்படியே இங்கும் நேரக்கணக்கு இருக்கவேண்டும்! என்ன. அழகு நிலையங்கள், சினிமா அரங்குகள், வீடியோ கடைகள். ஒன்றையும் காணோமே என்று கேட்கிறீர்களா? இவைகளை மூடித்தான் ஆறுமாதமாகிவிட்டதே. இன்று ஞாயிற்றுக் கிழமையாச்சே, விடுமுறை இல்லையா? சத்தம் போடா தீர்கள். இங்கு வெள்ளிக்கிழமைதான் விடுமுறை நாள். இந்தியப் பத்திரிகைகள் ஒன்றையும் பார்க்க முடிய வில்லையே என்று கவலைப்படுகிறீர்களா? சரியாய்ப் போச்சு! இந்தியப் பத்திரிகைகள் எதுவுமே இங்கு விநியோகிக்கப் படக்கூடாது!
சரி. சரி. வாருங்கள், குப்வாரா எனுமிடத்துக்குப் போவோம்.

217 கே.ஜி. மகாதேவா
இதென்ன தெருநாய்களின் கழுத்துகளில் பதக்கங்கள் தொங்குகின்றன? பதக்கத்தை நன்றாகப் பாருங்கள். அடேயப்பா. பதக்கங்களில் இந்திய நாய்கள்’ என்று எழுதப் பட்டிருக்கிறது!
அப்பப்பா. பார்த்தது போதும். நாடு திரும்புவோம்.
(08:05.90)
அந்தநாள் பிரயான நினைவுகள்
வடபகுதி ரயில் பிரயாணிகளின் நீண்டகால கஷ்டங் களை ஈடுசெய்யும் முகமாக ரயில்வே திணைக்களம் விசேட ரயில்சேவை ஒன்றை கடந்தவாரம் ஆரம்பித்தது.
கடந்த பதினெட்டாம் திகதி கோட்டையிலிருந்து முதலாவது சேவை ஆரம்பமானது. முதலில் சென்றது ‘மெயில்’. அதனைத் தொடர்ந்தது ‘விசேட ரயில்"
கோட்டை ரயில் நிலையத்தில்; “குறித்த சில புகை யிரத நிலையங்களில் மட்டும்தான் இந்த விசேட ரயில் நிறுத்தப்படும்” என்று 'ஸ்பீக்களில் அறிவிக்கப்பட்டதும் ரயில் பயணிகளுக்கு உற்சாகத்தை கொடுத்திருந்தது.
இந்த விசேடரயில், பொல்காவளையில், முதலில் சென்ற தபால் (மெயில்) ரயிலைப் பிடித்துவிட்டதும், ரயில் பயணிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
‘எப்படியும் மெயிலைவிட இரண்டு மணி நேரம் முந்திப் போய்விடலாம்’ என்று கற்பனையில் மிதந்தனர். பொல்கா வளையில் தரித்து நின்ற “மெயில் ரயிலிலிருந்து பலர் பாய்ந்து குதித்து, விசேட ரயிலில் தொற்றிக் கொண்ட்னர், பின்னர் என்ன நடந்தது? விசேட ரயிலுக்குப் பதிலாக "மெயில் ரயிலுக்குத்தான் முதலில் ‘பச்சை விளக்கு காண் பிக்கப்பட்டது.

Page 111
கதையல்ல நிஜம் 218
தொடர்ந்து. "நீ. முன்னாலைதான் போற. நான் பின்னாலைதான்.” பாடிப்பாடி, மன்னிக்கவும் ஒடி ஒடி அறிவிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் விசேட ரயில் தரித்து நின்று. அப்பப்பா.! விசேட ரயில் ‘சாதனை’ புரியும் என்று நினைத்த பிரயாணி களுக்கு கிடைத்தது வேதனைப் பிரயாண அலுப்புத்தான்.
(22.05.90)
திடீர் கோவில் - பகீர் வேள்வி
வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள கிராமம் அது. இங்கு ஓர் அம்மன் ஆலயம் இருக்கிறது. ஆண்டு தோறும் சிறப்பான முறையில் “வேள்வி நடைபெறுவது வழக்கம். ஆனால் இவ்வருடம் இந்தக் கோவிலில் மிருக பலி நடைபெறாதது, அந்தக் கிராம மக்களுக்கு ‘என்னமோ ஏதோ’ போல் இருந்திருக்க வேண்டும்.
அந்தக் கிராம மக்களில் சிலர் ஒன்று சேர்ந்தனர். குறிப்பிட்ட அம்மன் கோவிலுக்குப் பக்கத்திலுள்ள வளவு ஒன்றில் திடீர் வைரவர் 'ஆலயம்’ அமைத்து, வைரவர் சூலத்துக்கு முன்பாக வேள்வியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள்! அதுவும் திரை மறைவில் அல்ல.
மூன்று ‘டிவி படங்கள் தொடர்ச்சியாகக் காண்பிக்கப்
பட்டு, பெருந்தொகையான கிராம, அயற் கிராமமக்கள் புடைசூழ மிருக பலி அரங்கேற்றப்பட்டது. எண்ணிப் பார்த்த போது நாற்பத்து ஐந்து ஆட்டுத் தலைகள் காணப்பட்டன!
(01.0884)

29 G3at5.ed. LDasyTCBeaun அகதிகளை நினையாத நெஞ்சங்கள்
தினது அங்கத்தவர்களுக்கு மதிய போசன விருந்தளிக்க ஒரு சங்கம் ஒழுங்கு செய்துள்ளது.
இடம்: ஒரு பிரபல ஹோட்டல். அதாவது “எக்ஸ் பென்ஸிவ் ஹோட்டல்'. இலங்கையின் பிரபல கம்பெனி யொன்றின் ஆதரவில் விருந்து நடைபெறுகிறது.
ஒரு சின்னக் கேள்வி: இந்தத் தடல்புடல்’ விருந்துக்கு நான்கு இலக்க பெரிய தாள்கள் பத்துக்குமேல் போகப் போகிறதே. இந்தத் தொகையை, பெரிய மனசு வைத்து; எல்லாமே இழந்து, இருக்க இடம்தேடி வந்திருக்கும் தமிழ் அகதிகளின் ஆரோக்கிய வாழ்வுக்கு ‘அர்ப்பணித்தால் என்ன?
(23.10.85)
HMArM 98Mö8M!
“பிளேடு" களில் எது தரமானது? சிலர், செவன் ஓ குளக் என்பார்கள். சிலர் கிலேற் என்பார்கள். வேறு சிலர் பேர்மா ஷார்ப் என்பார்கள்.
இவற்றில் நீங்கள் எந்த ஒரு ரகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்; எல்லா பிளேடுகளையும் “ரூபவாஹினி மிஞ்சி விட்டது!
“ரூபவாஹினி'யில் நேற்று இரவு 7.15க்கு கலையரங் கத்தில் வீரமணி ஐயரின் நாட்டியநாடகம் ஒளிபரப்பப் படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Page 112
கதையல்ல நிஜம் 22O
7.15 அல்ல; 725க்கு ஏதோ ஆரம்பமானது. முதலில் சிங்களம் பின்னர் தமிழ் நடனம். அதன் பின்னர் சிங்கள நடனங்கள். தலைப்பும் இல்லை. முடிவும் இல்லை. வீரமணி ஐயரின் நாடகம் பற்றி எந்த அறிவிப்பும் கிடையாது.
அறுவை என்றால் இதுதான் அறுவை. “ரூபவாஹினி யின் நேற்றைய கழுத்தறுப்புக்கு எந்த ஒரு பிளேடும் தாக்குப் பிடிக்காது! (160284)
கொழும்பில் அணுக்கப்பல்
கிடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புத் துறைமுகத்தில் கரையிலிருந்து மூன்று மைல் தூரத்தில் நங்கூரமிட்ட அமெரிக்க அணு ஆயுதக் கப்பலான “கிற்றிஹோக்'கின் “சிறப்பு அம்சங்கள்’ என்ன?
யுத்தக் கப்பலின் எடை எண்பதினாயிரம் தொன். கப்பலின் மேல்தளப் பரப்பளவு நான்கு ஏக்கர். ஐயாயிரத்து முந்நூறுபேர் கடமையாற்றுகின்றனர். எண்பத்து ஏழு யுத்த விமானங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. இக்கப்பல், துறைமுகத்துக்கு வந்தபோது பாதுகாப்புக்காக இரண்டு நாசகாரிக் கப்பல்களும் கூட வந்துள்ளன.
இந்து மகா சமுத்திரத்தில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க ஏழாவது கடற்படையின் ஒரு பிரிவான இக்கப்பலின் நீளம் ஆயிரத்து அறுபத்து ஐந்து அடிகளாகும். உயரம் இருநூற்று எழுபத்து மூன்று அடிகள்.
இந்தக் கப்பலின் குதிரைச்சக்தி எவ்வளவு தெரியுமா? இரண்டு லட்சத்து எண்பதினாயிரம் ஆகும்!
இக்கப்பல் பதினேழு மாடிகளைக் கொண்டது; நீர்மட்டத்தின் கீழ் ஏழு மாடிகளும், மேல்பரப்பில் பத்து மாடிகளும் இருக்கின்றன. (11.1084)

221 கே.ஜி. மகாதேவா
'கார்டின் 2 வருடப்பயணம்
திருநெல்வேலி வடக்கைச் சேர்ந்த ஒரு பெண், ஈராக்கில் இருக்கும் தனது சகோதரர் மார்க்கண்டு ராஜேஸ் வரனுக்கு கடந்த எண்பத்து மூன்றாம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தேழாம் திகதி தீபாவளி வாழ்த்துக் கார்ட் அனுப்பி இருந்தார்.
இந்த வாழ்த்து அட்டை, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இம்மாதம் பதின்மூன்றாம் திகதி அனுப்பிய வருக்கு, அதாவது ராஜேஸ்வரனின் சகோதரியின் கைக்கே திரும்பி வந்துவிட்டது!
இந்த இடைவெளி காலத்தில் ‘ஈராக் நபர்" இலங்கை திரும்பி, பின்னர் ஜேர்மனிக்கும் சென்றுவிட்டார்!
சர்வதேச தபால் சேவை வாழ்க!
(1901.86)
வானொலின் தtரீகம்"
தமிழ்ப் பகுதிகளில் தலைவிரித்தாடும் சில சம்பவங்கள் பற்றிய செய்திகள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் துக்கு மட்டும் "அலர்ஜியா?
ஐந்து கண்டங்களிலுமுள்ள அத்தனை நாடுகளின் வானொலிகளும் இலங்கையின் வட, கிழக்குச் செய்திகளை உடனுக்குடன் ஒலிபரப்ப, நமது நாட்டு வானொலி மட்டும் புறக்கணித்து மெளனம் சாதிக்கிறது!

Page 113
கதையல்ல நிறம் 222
உலகத்தில் எங்குமே நடந்திருக்கமுடியாத மயிர் சிலிர்க்கும் கொடுரச் சம்பவம், நயினாதீவுக் கடலில் நடந்தி ருக்கிறது. சிங்கள கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 36 அப்பாவித் தமிழர்கள் பலியாகி முப்பத்து ஆறு மணி நேரம் தாண்டிவிட்டது. இலங்கை வானொலி. கப்சிப்!
ஜனநாயகம் வாழ்க! தார்மீகம் வாழ்க! செய்திச் சுதந்திரம் வாழ்க!
(1983)
அதிசய ஆடு
அது ஒரு கன்னி ஆடு. அண்மையில் முதல் குட்டியை ஈன்றது.
தாய் ஆட்டுக்கு நான்கு பாற் காம்புகள்! குட்டிக்கு மூன்று பாற் காம்புகள்! தாயின் அரவணைப்பில் அந்தக் குட்டி ஆடு, நான்கு பால் சுரப்பிகளிலும் பாலை சுவைத்து வயிற்றை நிரப்புகிறது.
வசாவிளான் தோலகட்டியைச் சேர்ந்த இ. சந்தியாப் பிள்ளையின் வீட்டிலிருக்கும் இந்த அதிசய ஆட்டையும் குட்டியையும் பெருந்திரளான மக்கள் பார்த்து, ரசித்து மகிழ்கின்றனர். r
(0401.86)
அங்கும் இங்கும்
திமது நாட்டில் தேர்தல் என்றால் போதும். கூட்டங்களில் மட்டுமின்றி சுவர்களிலும், விதிகளிலும் கூட பிரசாரம் நடக்கும்.

223 கே.ஜி. மகாதேவா
நமது அண்டைநாடான சிங்கப்பூரில் தேர்தல் என்றால் எப்படி இருக்கும் தெரியுமா?
தேர்தல் பிரசாரம் என்ற பெயரால் பொதுக்கூட்டம் நடத்தவும் கூடாது; ஒலிபெருக்கியுடன் சென்று வாக்கு வேட்டை நடத்தவும் முடியாது!
பொது இடங்களில் அதுவும் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் விளம்பரப்பலகைகளை (தொங்க வைக்கலாம். அதுவும் தேர்தல் முடிந்த 24 மணிநேரத்தில் அந்த விளம்பரப் பலகைகளை சம்பந்தப்பட்டவர்கள் அப்புறப்படுத்திவிட வேண்டும்!
(10.0583)
முரண்UCட அறிக்கைகள்
தொலைபேசி அழைத்ததும் றிஸிவரை எடுத்தேன். வழக்கமான குரல். பூரீமான் பொதுஜனம்தான் பேசினார்.
". போரில் எத்தனை வகை.?” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.
‘மனோகரா’ திரைப்படத்தில் காகா ராதாகிருஷ்ணன் ஒரு கட்டத்தில். “போரில் இரண்டு வகை உண்டு. ஒன்று, வைக்கல் போர். மற்றையது உண்மையான போர்." என்று கூறியது உடன் நினைவுக்கு வந்தபோதிலும், "சீரியஸாகக் கேட்கும் பூரீமான் பொதுஜனத்திடம் 'சீப்பாகப் போகக் கூடாது என்று கருதி, "என்ன திடீரென்று போர் எண்ணம் வந்துவிட்டது." என்று சமாளித்தேன்.
*டி. வி, வானொலி. உங்கள் பேப்பர்கள் எல்லாத் நிலேயும் இந்த வாரம் ஒரே போர் மயம்தானே.” என்று கூறி விஷயத்துக்கு வந்தார் பூரீமான் பொதுஜனம்.

Page 114
கதையல்ல நிஜம் 224
"அடுத்த ஆண்டை யுத்த ஆண்டாகப் பிரகடனப் படுத்தப் போவதாக பாராளுமன்றத்தில் பேச்சு அடி படுகிறது. ஜனாதிபதி வேறு இதனை அடித்துக் கூறுகிறார். கிழங்கு வகைதான் உங்களின் அடுத்தாண்டுச் சீவியம் என்று அமைச்சர் அம்மா வேறு விளக்கமாகத் தெரிவிக் கிறார். அப்படி என்றால் அடுத்த ஆண்டு ஒரே டுமீல்தான் என்று அர்த்தமா..?” என்று கேள்வி எழுப்பினார். நான் சற்றுப் பேசாமலிருக்க அவரே தொடர்ந்தார்.
"இப்பொழுது என்ன நடக்குது? யுத்தம் என்று கருதித்தானே அரசு முதலில் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்து, மீறல்களைக் கவனிக்க போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவையும் நியமித்து விசாரணைகள் நடக்கிறது. நிலைமை இப்படி இருக்க பிறகு ஏன் அடுத்த ஆண்டு யுத்தப் பிரகடனம்?" - நியாயமான கேள்விதான்.
(2004-85)
அதற்கு இப்படியா?
கைதடி, நாவற்குழி, கோயிலாக்கண்டி ஆகிய பகுதி களில் ‘எண்ணைப் படிவங்கள்’ காணப்படுகிறதா?
இவ்விஷயத்தில், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எத்தனை தூரம் கவனம் எடுத்ததோ தெரியவில்லை. ஆனால் நமக்குக் கிடைத்த பிரத்தியேகத் தகவல் இதுதான்;
கைதடி, நாவற்குழி வட்டாரத்தில் இரண்டு வாரங் களுக்கு முன்னர் வயல் வெளியில், பொதுமக்கள் பாவித்த இரண்டு கிணறுகளில் திடீரென எண்ணைப் படிவங்கள்’ காணப்பட்டன. கிணற்று நீரின் மேலே காணப்பட்ட ஒரு வகை எண்ணையைத் தொடர்ந்து மக்கள் ஆச்சரியப்பட்டு, தண்ணிர் அள்ளுவதை நிறுத்திக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கோயிலாக்கண்டியிலுள்ள பொதுக்கிணறு ஒன்றிலும் நீரின் மேற்பகுதியில் எண்ணை

225 கே.ஜி. மகாதேவா
காணப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அச்சம் கொண்டு அந்தக் கிணற்றிலும் குடிநீர் பெறுவதை நிறுத்திக் கொண் டுள்ளனர்.
காதோடு காதாக அடுத்தடுத்து மூன்று பொதுக் கிணறுகளிலும் காணப்பட்டது எண்ணெய்ப் படிவங்களா? அல்லது; குறிப்பிட்ட ஒருசாரார் இந்தக் கிணறுகளை, அதாவது, கிணற்று நீரைப் பயன்படுத்தக்கூடாது என்று இரவோடு இரவாக கிணறுகளில் எண்ணெய் ஊற்றினார் களா? இறைவனுக்குத்தான் வெளிச்சம்!
(24,0385)
இதுவும் அறிவிருத்திதான்
6) போக்குவரத்து சேவை, மினிபஸ் சேவை யாகவும் பரவலாக்கப்பட்ட பின்னர் பலருக்கும் பல ரூபத்தில் வேலைவாய்ப்புகள் கிடைத்தன.
இதில் ஒன்று - மினிபஸ்களுக்கு பிரயாணிகளைச் சேர்த்துக்கொடுப்பது. இவ்விஷயத்தில் தலைமன்னார் முந்திவிட்டதாகத் தெரிகிறது!
தலைமன்னார் துறைமுகத்திலிருந்து வெளியிடங் களுக்குச் செல்லும் சகல மினிபஸ்களுக்கும் பிரயாணி களைச் சேர்த்துக்கொடுக்கும் வேலையை தலைமன்னார் கிராமோதயசபை ஆரம்பித்துள்ளது.
இவ்வைபவம் ‘அப்படி இப்படி” என்று அங்குரார்ப் பணம் செய்யப்படவில்லை. கிராமோதய சபைத்தலைவர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மினி பஸ்களுக்கு பிரயாணி களைச் சேர்த்துக் கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கின்றார்! இதனையும் ஒரு வகையான 'அபி விருத்தித்திட்டம்’ என்று சொல்லலாமா?
(07:02.83)

Page 115
கதையல்ல நிஜம் 226
புரியாத புதிர்
அந்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கிளை ஒன்றுக்கு சொந்தமான கட்டிடம் இருக்கிறது. ஆனாலும், பல ஆயிரம் ரூபா செலவழித்துக் கட்டப்பட்ட இக் கட்டிடம் மனித பாவனைக்கு இல்லாமல் கட்டாக்காலி மாடுகளின் 'வசந்தமாளிகையாகத் திகழ்கிறது நீண்ட e676 DDITé95
சங்கத்தின் கிளைக்கு கட்டிடங்கள் எக்கச்சக்கமாக இருப்பதால் அந்தக் கட்டிடம் 'அம்போ’ என்று விடப் பட்டிருக்கலாம் என்று நீங்கள் கருதினால், நாமும் ஆறுதல் அடையலாம். ஆனால் மேற்படி கிளைக்குச் சொந்தமான சங்கக்கடை ஒன்று, ஒரு தனியார் கட்டிடத்தில், அதுவும் வாடகை செலுத்தி இயங்குவதைப் பார்க்கும்போதுதான்.! பண்டத்தரிப்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு இது éF Dritu uestorb!
(19.0883)
ஓய்வூதியத்துக்கும் ஓய்வு
அரசாங்க சேவையிலிருந்து ஒருவர் ஒய்வு பெற்றால் எத்தனை நாட்களில் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும்?
சங்குவேலியைச் சேர்ந்தவர் கே. சேனாதிராசா. காணி ஆணையாளர் திணைக்களத்தில் முப்பது ஆண்டுகள் சேவையாற்றிவிட்டு ஒய்வு பெற்றார். ஆண்டுகள் ஐந்தாகி விட்டன. ஆனால் ஓய்வூதியம் இன்னும் கிடைக்கவில்லை!
(200784)

227 கே.ஜி. மகாதேவா 6ë 8tëso
பாழ். மாவட்ட பொது வீதிகளின் சீர்கேடுகளை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிய வேண்டும் என்றல்ல. ஆனால் புதியதொரு சிக்கல் இப்பொழுது தலை தூக்கி யிருக்கிறது.
வீதிகள் தொடர்ந்து குண்டும் குழியுமாகக் காணப் படுவதால், சில வீதிகளில் பஸ் சேவைகளை நிறுத்துவது குறித்து யோசிக்கப்படுகிறதாம்.
சண்டிலிப்பாய் சந்தியிலிருந்து பண்டத்தரிப்பு கீரி மலை வீதியில் ஒரு மைல் தூரத்தின் "பயங்கர நிலை யினால் முதலில் இங்குதான் பஸ் சேவை நிறுத்தப்படுமோ என்று அஞ்சுகின்றனர். இந்தப் பழியை யார்தான் சுமக்கப் போகின்றார்களோ! (21,0784)
திட்டமிட்டு பிழைகள்
அண்மையில் பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய முதல் விஞ்ஞானத்தேர்வு (வெளிவாரி) தூய கணிதம் பரீட்சையில் (தமிழ்மொழி மூலம்) முக்கியமான பிழைகள் இருப்பதாக எமக்குப் புகார் கிடைத்திருக்கிறது.
மொத்தம் ஒன்பது வினாக்கள் கொடுக்கப்பட்டு ஆறு வினாக்களுக்கு விடை அளிக்குமாறு கோரப்பட்டிருந்தது. இந்த வினாக்களில், சுலபமாக பதிலளிக்கக்கூடிய ஐந்தாவது வினாவில்தான் பிழை இருந்ததாம். இது மட்டுமல்ல, தமிழ் மொழிபெயர்ப்பிலும் பிழைகள் மலிந்திருந்ததாம்.
"இந்தப் பரீட்சையில் நன்றாகச் செய்திருந்தாலும் எதிர்பார்க்கப்படும் புள்ளிகள் நிச்சயம் கிடைக்காது" என்று திட்டவட்டமாகக் கூறுகிறார், சம்பந்தப்பட்ட ஒரு மாணவர்! இதற்கு மாற்றுவழிதான் என்ன? (2504.90)

Page 116
கதையல்ல நிஜம் 228
கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா
நூலாசிரியர் கே.ஜி. மகாதேவா எழுதிய “நினைவலைகள்’ மற்றும் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் இரண்டினது வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் 23.7.2006ல் நடைபெற்றது.
மலையக கலை இலக்கிய பேரவையும் கலை இலக்கிய அபிவிருத்தி நிலையமும் இணைந்து, ஐ.டின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் நடத்திய இவ்விழாவுக்கு, 'தினக்குரல் தினஇதழ் ஆலோசகரும், மூத்த பத்திரிகையாளருமான ஈ.வி. டேவிட் ராஜூ தலைமை வகிக்க, தமிழ் கலைஞர் அபிவிருத்தி நிலையத் தலைவர் கலைஞர் கலைச்செல்வன் நூல்களை அறிமுகம் செய்துவைத்தார். பிரதம அதிதியாக பெ. இராதாகிருஷ்ணன் எம்.பி, கலந்துகொண்டார். வரவேற்புரையை மலையக கலை இலக்கிய பேரவை செயலாளர் அந்தனி ஜீவா நிகழ்த்தினார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் பிரதிப் பணிப்பாளர் ஆ. சிவநேசச் செல்வன், 'தினகரன்’ பிரதம ஆசிரியர் சிவா சுப்பிரமணியம் ஆகியோர் நூல்கள் பற்றிய கருத்துக்களை வழங்க, மட்டுநகர் எழுத்தாளர் சங்க செயலாளர் அன்புமணி சிறப்புரை ஆற்றினார்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக மாகாண சபை உறுப்பினர்களான சி.பி.வை. ராம், பீ. திகாம்பரம், ஷபீக் ரஜாப்டீன், பிரபா கணேசன் கலந்துகொள்ள, விசேட அதிதிகளாக கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் எம்.எச். மன்சில், கே.டி. குருசாமி, திருக்கேதிஷ்வரன் செல்வசாமி, கவிஞர் கங்கை வேணியன் ஆகியோரும் பங்கு பற்றி சிறப்பித்தனர். பல்வேறு தமிழ்த் தினசரிகள், சஞ்சிகைகளின் ஆசிரியர்கள் அவர்களது பத்திரிகைத் துறை வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளுக்காக கெளரவிக்கப்பட்டனர். நூலாசிரியர் கே.ஜி. மகாதேவா, தவிர்க்கமுடியாத காரணங்களினால் விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால், அவரது ‘பாக்ஸ்’ செய்தி வாசிக்கப்பட்டது.
- எஸ்.ஏ.

229 கே.ஜி. மகாதேவா
நூல் வெளியீட்டுவிழா ஆரம்பமாவதைத் தொடர்ந்து "ஞானம்'
சஞ்சிகை ஆசிரியர் திரு. ஞானசேகரன், 'மல்லிகை" ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா, ஐரி.என். பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் குத்து விளக்கேற்றுகின்றனர்.

Page 117
கதையல்ல நிஜம் 23O
co
மலையக கலை இலக்கியப் பேரவை செயலாளர் அந்தனி ஜீவா வரவேற்புரை நிகழ்த்த, மேடையில் (இடமிருந்து வலமாக) பாராளுமன்ற உறுப்பினர் பெ. இராதாகிருஷ்ணன், ஆ. சிவநேசச்செல்வன், ஈ.வி. டேவிட் ராஜு, புரவலர் ஹாசிம் உமர், 'தினகரன்’ நாளிதழ் ஆசிரியர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்.
'தினக்குரல்’ நாளிதழ் ஆலோசகர் ஈ.வி. டேவிட் ராஜு விழாவுக்
(5 நாளிதழ ஆ @
தலைமை வகித்து உரையாற்றுகின்றார்.
 
 

231 கே.ஜி. மகாதேவா
புரவலரிடமிருந்து திரு. இராதாகிருஷ்ணன் நூலைப் பெறுகின்றார். அருகில் 'தினகரன்’ சிவசுப்பிரமணியம்
புரவலரிடமிருந்து சிறப்புப் பிரதியை 'தினக்குரல் ஆசிரியர்
. தனபாலசிங்கம் பெறுகின்றார்.

Page 118
கதையல்ல நிஜம் 232
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் பிரதிப் பணிப்பாளர் ஆ. சிவநேசச் செல்வன் கெளரவிக்கப்படுகின்றார். அருகில் தமிழ்க் கலைஞர் அபிவிருத்தி நிலையம் தலைவர் கலைஞர் கலைச்செல்வன்.
ர்யாற்றுக் ன்றார்.
his b- சிவநேசச்செல்வீன்சிறிப்ைگی
 
 
 
 


Page 119
::ே r -ா
அமிே
sity = TA ASeALJ KK TTLL ASASA SuuuSLTSTS
of Fiji та, 5 ван
a as ,
التي تستهلاقة
G , li :551 : 1+ 轟轟 is a ཚོ་
· ng 苷 翠阜 垩 - 』 -- 、 * = 彗 上 - "
ܡ .
Turii re
pli f'p', UFFT
i "Fast f'
“Pli fr » pri Eo pri ju propo"
- - - - - , . 團
for Aoints