கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலகத்தமிழர் ஆவணக்காப்பகம் ஓர் அறிமுகம்

Page 1
உலகத்தமிழர் ஆ
ஒர் அறி
குரும்பசிட்டி இரா திருமதி. பவளரான
S-VFR
உஅன்று கண்டியில் நடைபுெ வரலாற்றுத் துறை பேராசிரியர் :
 

ཡོད༽ வணக்காப்பகம்
முகம்.
கனகரத்தினம் ரி கனகரத்தினம்
ற்று ஆவனக்கண்காட்சியின் போது S. பத்மநாதன் அவர்களுடன்

Page 2

உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஒர் அறிமுகம்
ஆவணங்கள் என்பவை எழுத்து வடிவிலான சான்றாதாரங்கள் எனவும் இவைகளைப் பேணிப் பாதுகாத்து வைக்கப்படும் இடங்கள் காப்பகங்கள் என்றும் பொதுவாகக் கருதப்படுகிறது.
ஒரு பாரிய துறையின் மேலெழுந்த வாரியான பார்வை இது. அலி ஏ , மஸ்ருப் என்ற ஆய்வாளர் ஆவணக் காப்பகத்துறையை 5 பெரும் பிரிவுகளாக வகுக்கின்றார்.
(1) தொல் பொருள் ஆவணங்கள் -மட்பாண்டங்கள், நாணயங்கள், எலும்புக்கூடுகள் - சுருங்கக்கூறின் தொல்பொருளாய்வின் மூலம் பெறப்படும் அரும் பொருட்கள் அனைத்தும்.
(2) எழுத்து ஆவணங்கள் :-
கல்வெட்டுக்கள் மற்றும் எழுத்து வடிவிலான அனைத்தும்.
(3) ஒவிய ஆவணங்கள்:- பாறைகளில் வரைந்த படங்கள்,
செதுக்கிய ஒவியங்கள். சிற்பங்கள்
(4) ஒளி, ஒலி ஆவணங்கள்:- பல்வேறு நிகழ்வுகளைக் கொண்ட ஒலி,
ஒளிப்பேழைகள், நுண்ணிய சுருள் நாடாக்கள்.
(5) வாய் மொழி ஆவணங்கள்:-
மனித நினைவாற்றலை ஒலிப்பதிவு செய்த ஆவணங்கள்.
இப்படியான தரவுகளைத் தேடிப்பெற்றுப் பேணிப் பாதுகாப்பதே ஆவணக் காப்பங்களின் முக்கிய பணி என்போம். வரலாற்றைக் கையகப்படுத்தி வருங்காலச் சமுதாயத்துக்கு வழங்கும் இந்த மரபு ஒரு நவீன கண்டுபிடிப்பல்ல. கி.மு 3000-2800 களில் மொசப்பத்தேமியா நகரின் இயானா ஆலயத்தில் எழுதப்பட்ட களிமண் எழுத்துக்களே உலகில் கிடைத்த மிகத் தொண்மையான எழுத்தாவணம் எனக்கூறுவர்.
உலகத் தமிழர்களை மையமாக வைத்து, அவர்களின் புராதன வரலாற்று ஆவணங்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட அறிஞர்களால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. பல நூற்றாண்டு காலத் தமிழர் வரலாறு - எந்தவித வரலாற்று அடிச்சுவடுகளுமற்றதோர் இருள் படிந்த துனிய
(1)

Page 3
நிலையிலேயே காணப்படுகிறது.
திராவிடர்கள் எகிப்தியரின் வழித்தோன்றல்கள் என்று கூறுகிறது ஓர் ஆய்வு, இந்தியாவின் வடக்கேயிருந்து ஆரியர்கள் படையெடுப்புக்காரணமாகத் தெற்கே புலம் பெயர்ந்தவர்களே திராவிடர்கள் எனக் கூறுகிறது இன்னுமோர் கணிப்பு. திராவிடர்களே உலகின் மூத்த குடியினர்; கடற்கோளால் ஆழ்ந்து விட்ட குமரிக் கண்டமே தமிழரின் ஆதித் தாயகம் என்று கூறுகிறது பிறிதோர் ஆய்வு. ஆனால் நிலையான சான்றாதாரமாகக் கிடைத்திருப்பது மொகஞ்சதாரோ ஹரப்பா கண்டுபிடிப்புக்களே, இவை திராவிடர்களின் தொண்மையையும் அவர்கள் உலக நாகரீகத்தின் முன்னோடிகள் என்ற உண்மையையும் உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் "வாழும்" ஆவணங்களாகும். வரலாற்றை முறைப்படி தொகுத்து வைக்காத இனங்கள் இருண்ட கண்டமென வர்ணிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாட்டுப் பழங்குடியினர் என்பர். தமிழர்கள் இதற்கு விதிவிலக்கல்ல.
பிற்காலத்தில் திரட்டப்பட்ட பழம்பெரும் ஒலைச்சுவடிகளும், தமிழ் மன்னர் காலத்து வானளாவிய சிற்ப ஆலயங்களும், சாசனக் குறிப்புகளும், மடாலயங்களில் கிடைத்த தரவுகளும் தொல்பொருளாய்வு மூலம் கிடைத்த கலைச் செல்வங்களும் தமிழர் வரலாற்றை கணிக்க ஒரளவு உதவினும் பல காலக்கட்டங்களில் தகவல் பெற முடியாத தொய்வு நிலை காணப்படுவதுடன் தொடர்பு அறுந்தும் முழுமையற்றும் காணப்படுகிறது. இவை பண்டைய தமிழர் வரலாற்றின் நிலைப்பாடு. இன்று. ? இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பர். வரலாறு என்றால் என்ன? அது எப்படி அமையவேண்டும்? என்பதை இனிச் சுருக்கமாக நோக்குவோம்.
ஒரு தனி மனிதன் என்றால் என்ன - ஒர் இனமாக இருந்தால் என்ன - நடந்த நிகழ்வுகளை நெறிப்படுத்தித் தொகுத்து வழங் கம்படும் சான்றாதாரங்களையே வரலாறு என்று கூறுவோம். எந்த ஒரு நிகழ்வையும் பெரிதுபடுத்தியோ, மறைத்தோ, இட்டுக்கட்டியோ தொகுப்பது வரலாறே அல்ல. அவற்றைப் புனை கதைகள் என்றே அழைத்து விடலாம். எந்த ஒரு இனத்தையும் தாழ்த்தியோ, உயர்த்தியோ வரைபவை எல்லாம். வரலாறு ஆகிவிட முடியாது. அவை சுய புராணங்கள் என்போம். துர் அதிர்ஷட வசமாக தமிழர்கள் தம் வரலாற்றை - அதற்கான சான்றாதாரங்களை - முறையாகத் தொகுத்து வைக்காமல் விட்டு விட்டதால் தமிழின எதிரிகள் துழநிலையைத் தமதாக்கிக் கொண்டு பல புனைகதைகளைப் புனிதமாக்கிக் கொண்டு, அவற்றையே வரலாறு " எனப் பொன்முலாம் பூச, பொதுத்தொடர்பு சாதனங்கள் அவற்றை மேடைகளில் அரங்கேற்றம் செய்கின்றன. இன்னும் இந்த நிலை தொடர்கிறது.
(2)

திராவிட இனத்தை அரக்கர்கள் ஆக்கி, குரங்குகளாக்கி இதிகாசங்கள் பிறந்தன. தமிழர் பெருமளவில் வாழும் தமிழகம், இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமல்ல- தமிழர் குடியேறிய நாடுகளில் கூட இந்தப் புல்லர்களின் புலுடாக்கள் வரலாறு என்ற வடிவில் கொடி கட்டிப்பறக்கின்றன. ரு ஐனநாயக அரசு எண்றால், அங்கு வாழும் பல்லின மக்களையும் ரே கண்ணோட்டத்தில் நோக்குவதோடு மட்டுமல்ல - அவர்கள் பண்பாட்டு கருவூலங்களை - வரலாற்று ஆதாரங்களை அந்தந்த இனத்தின் பண்பு நிலைக் கொப்பப் பேணி பாதுகாத்துத் தருவது அதனோர் புனிதமான கடமையாகும். ஆனால் அனேக நாடுகளிர், மாற்று இன மக்களின் வரலாற்றுச் செல்வங்களை எல்லாம் குழிதோண்டிப் புதைத்து விடுகின்றன. அல்லது ஒரு தலைப்பட்சமாக அவற்றைத் தமதாக்கிக்கொள்கின்றன. ஆக, சர்வதேச மட்டத்தில் தமிழினம் பண்பாட்டுப் பின்னணியற்றதோர் இனமாகப் பின் தள்ளப்பட்டு வருகிறது. மாறாக, புதிய பல வரலாறுகள் தமிழின வரலாற்றுப் புதைக்குழிக்கு மேல் எழத்தொடங்கி விட்டன. இந்தச் சர்வதேச வரலாற்று மோசடி தடுத்து நிறுத்தப்படத் தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். வரலாறு இல்லாத இனம் தன்னை ஒரு நாகரீக இனமாகப் பிரகடனப்படுத்திவிட முடியாது.
மேலை நாடுகள் ஆவணக்காப்பகத் துறையில் பல ஆண்டுகளுக்கு முன்பே விழித்துக்கொண்டு விட்டன. ஒரு மாபெரும் புரட்சியே அங்கு ஏற்பட்டு விட்டது. பல்வேறு நவீன கண்டுபிடிப்புக் கருவிகள் இத்துறையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஒளிப்பட திரைப்படச் சாதனங்கள், பதிவு நாடாக்கள், கணிப்பொறிகள், நுண்சுருள்கள், நுண் ஒளித்தகட்டில் பகர்ப்பு எடுக்கும் கருவிகளென, நவீன சாதனங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு சமயம், தத்துவம், நாட்டியம், மருத்துவம், மொழி, இலக்கணம், சிற்பம், ஒவியம், சோதிடம் எனப் பல்வேறு துறைகளுக்கும் பயனர் படுத்தப் பட்டுத் தகவல் கள் திரட்டப்படுகின்றன. மனித நடவடிக்கைகள், பழக்க வழக்கங்கள் நடைமுறை கள் எனக் காலவெள்ளத்தால் மறைந்து போய்விடக்கூடிய அனைத்துமே நிர ந்தர ஆவணங்கள் ஆக்கப்பட்டு, வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஆவணக் காப்பகங்கள் வரலாற்று மாணவர்களை நோக்கி நகர ஆரம்பித்து விட்டன. அவர்களை ஊக்குவிக்க ஊர்திக்காட்சிகள் உலகெல்லாம் நடைபெறுகின்றன. புதிய ஆய்வாளருக்கு களம் அமைத்துக்கொடுக்க ஆவணக் கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த முயற்சிகளுக்கு மகுடம் வைத்தாற்போல, ஒத்த பாரம்பரியத்தைக் கொண்ட பல்வேறு உலக நாடுகளும் ஆவணக்கூட்டு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு கூட்டுறவு அடிப்படையில் புரட்சிகரமான மாற்றங்களைத் தோற்றுவித்து வருகின்றன.
(3)

Page 4
எனவே உலகெல்லாம் பரவிய தமிழர்களும் தாம் வாழும் நாட்டு அரசுகளை நம்பிக்கொண்டிருக்காமல், அந்தந்த நாடுகளில் தம் உரிமையை நிலை நாட்ட வரலாற்றை, பாரம்பரியக் கலை வடிவங்களை, பண்பாட்டு கருவூலங்களை , முதியோரின் நினைவாற்றல்களை முறையாகத் தொகுத்து ஆவணக்காப்பகங்கள் நிறுவ வேண்டும். தாம் வாழும் நாடுகளில் நடக்கும் வரலாற்றுத்திரிபு வாதங்களை உடனுக்குடனே மறுத்து ஆதார பூர்வமான உண்மையை நிலைநாட்ட, எம் இனத்தில் உள்ள அறிஞர்களும் புத்திஜீவிகளும் முன் வர வேண்டும். இந்தத்திரிபு வாதங்களுக்கு உரிய நேரத்தில் பதில் தராது நம் வரலாற்று அறிஞர்கள் அமைதியாகி விடுவதால் நம் இளைய தலைமுறையினரும் இவற்றை நம்பவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அண்மையில் கதிர்காமம் செல்லும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. அங்கே தமிழ் கடவுள் எனப் புராணங்கள் போற்றும் குமர னைத் தேடினேன். அகக் கண் கொண்டு தேடாது புறக்கண் கொண்டு தேடினேன். அந்தத் தமிழ் கடவுள் இருக்கும் இடமே தெரியவில்லை. இந்த வகையில் நாம் இழந்தவை கோடி! எனவே புத்தம் புதிய வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் தமிழினத்தின் மத்தியில் தோன்ற வேண்டும். வரலாற்று ரீதியாகத் தமிழ் இனத்துக்குச் சேரவேண்டிய உரிமைகளை நிலைநாட்ட முன்வரவேண்டும். இந்த முயற்சிகளுக்கு ஆவணக் காப்பகங்கள் அடித்தளமாக அமைய வேண்டும்.
வரலாற்றைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத் துவத்தையும், ஆவணக்காப்பகங்களின் பயன்பாட்டினையும் உணர்த்த ஒரு சம்பவத்தை இங்கு விளக்குவது பயனுடையது எனக் கருதுகிறேன். மொறிசியஸ் தீவில் தமிழர்கள் இன்று சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முக்கிய பெரும்பாண்மையினர் வட இந்திய மக்களாவர். இங்கு வாழும் தமிழர்கள் தென்இந்தியாவிலுள்ள தஞ்சாவூர், காரைக்கால், புதுச்சேரி போன்ற பகுதிகளிலிருந்து குடியேறியவர்களே. இருப்பினும், இந்த தமிழர்கள் தம்மை மலேசியத் தமிழர்கள் போல் போலித்தனமாக "இந்தியர்” எனக் கூறிக் கொள்வதில்லை. தாங்கள் தமிழர்கள், தங்கள் மதம் தமிழ்மதம் என்ற பக்குவ நிலையை- தமிழ் பேச முடியாத நிலையில்கூடக் காப்பாற்றி வருகிறார்கள். பெரும்பான்மை ஹிந்தி மொழி பேசும் வடஇந்தியர்கள் - தமிழர்கள் எவ்வளவு சுமூகமான முறையில் நடந்து கொண்டாலும் கூடத் தம் கருத்துக்களை கொள்கைகளை, ஆளுமையை அவ்வப்போது திணிக்க முயல்வதால் தமிழர்கள் மிகவும் எச்சரிக்கையாகவே வாழ்ந்துவருகிறார்கள்.
சில வருடங்களுக்கு முன் அங்கு வாழும் இந்தியர்கள் அத்தீவில் தாம் குடியேறிய 150 வருட நிகழ்வை மிகவும் கோலாகலத்துடன் கொண்டாட ஏற்பாடு செய்தார்கள். மொறிசியஸ் அரசே முன் வந்து இதில் பங்கு கொண்டு
(4)

விழாவின் வெற்றிக்கு முழு அளவிலான பங்களிப்பை வழங்கியது. விழாவுக்கு இந்திய ஜனாதிபதி அழைக்கப்பட்டிருந்தார். ஏறத்தாழ ஒரு வாரகாலம் மொரீசியஸ் தீவே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. இந்த நிகழ்வு அங்கு வாழும் தமிழர்களுக்குப் புதியதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த விழிப்புணர்வின் பிரதிநிதியாக, உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க மொரீசியஸ் கிளைத்தலைவர் மாணிக்கம் தங்கணமுத்து செயலில் இறங்கினார். ஆவணக் காப்பகங்களை அலசி மொரீசியஸ் தீவுக்கான தமிழர்கள் குடியேற்றம் 150 வருடங்களுக்கு முன் அல்ல, 250 வருடங்களுக்கு முன்னரே நிகழ்ந்துள்ளது என்ற உண்மையைத் தக்க ஆதாரங்களுடன் நிரூபித்தார். இதற்காக அவர் பிரான்ஸ் நாட்டு ஆவணக் காப்பகங்கள், மற்றும் புதுச்சேரி அரச ஆவணக்காப்பங்களுக்கும் சென்று தகவல்களைத் திரட்டினார். வட இந்திய மக்கள் வர்த்தகத்துக்கும் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்குமென மொரீசியஸ் தீவில் குடியேறுவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் பிரெஞ்சு, பிரிட்டிஸ் படைகளில் போர் வீரர்களாக அங்கு சென்று குடியேறியதைத் தக்க ஆதாரங்களோடு நிரூபித்து, தீவில் முதல் குடியேறியவர்கள் தமிழர்களே என்பதைப் பிரகடனப் படுத்தினார். அத்துடன் அவர் நின்று விடவில்லை.
எப்படி மொரீசியஸ் அரசு 150 வருடக் கொண்டாட்டங்களை முன்னின்று நடாத்தியதோ அதே போல் தமிழர்கள் குடியேறிய 250வது வருடத்தையும் விழாவாகக் கொண்டாட வேண்டும் எனக் குரல் எழுப்பினார். பல தமிழர் அமைப்புகளும் அவருடன் இணைந்து கொண்டன. அரசு அதிர்ந்தது. தன் தவறை உணர்ந்து கொண்டது. மொரீசியஸ் பிரதமர், திரு. தங்கணமுத்து அவர்களை அழைத்துத் "தவறு எப்படியோ நடந்து விட்டது. மொரீசியஸ் தீவுக்கு முதற் குடியேறியவர்கள் தமிழர்களே என ஒப்புக்கொள்கிறோம். ஆனால் முன்பே 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடி விட்டோம். இந்தப் புதிய கோரிக்கையால் அரசுக்குத் தர்ம சங்கடமான தொரு நிலை ஏற்பட்டு விட்டது. எனவே அமைதியான முறையில் அந்த விழாவைக் கொண்டாடுங்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.
அரசின் நிலைப்பாட்டை உணர்ந்த திரு. தங்கணமுத்து அவர்கள் அர சிடம் 3 கோரிக்கைகளை விடுத்தார்.
(1) பிரதமர் அவர்களே நேரடியாக விழாவில் பங்கு கொள்ள வேண்டும்.
(2) தமிழர் குடியேறிய 250வது ஆண்டை என்றென்றும் நினைவுகூரக் கூடிய வகையில் ஒரு நிலையான ஆவணமாக நினைவுஸ்துரபி ஒன்று நாட்டின் முக்கிய பகுதியில் நிறுவப்படவேண்டும்.
(5)

Page 5
(3) இந்த விழாவை நினைவு கூரும் அஞ்சல் தலை ஒன்று வெளியிடப்பட
வேண்டும். அத்தபால் தலையில் தமிழும் இடம் பெற வேண்டும்.
இந்த வேண்டுகோள்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. 1985ம் ஆம் ஆண்டு இத்தமிழர் நினைவாலயம் தலை நிமிர்ந்தது. மொரீசியஸ் தமிழரும் தலைநிமிர்ந்தனர். தாம் தீவில் முதல் குடியேறியவர்கள் என்பதால் தமிழர்கள் விஷேட சலுகைகள் எதையும் எதிர்பார்க்கவில்லை. நியாயமாகத் தமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கேட்டார்கள், பெற்றுக் கொண்டார்கள். அந்நாட்டு அரசும்-பெரும்பான்மையாக வட இந்தியர்களைக் கொண்டிருந்தும், தாம் பெரும்பான்மையினர், தாம் சொல்வதே சரி என்று கூறாது, புதுவிதமான புனைகதைகளைச் சோடிக்காது, பெருந்தன்மையோடு படி இறங்கி, வழிவிட்டுப் பெருமை பெற்றது.
இந்த நிகழ்வு உலகத் தமிழர்களைப் பொறுத்தவரை பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, வரலாற்றைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை - ஆவணக் காப்பகங்களின் தேவையை -
விளக்கி நிற்கிறது.
உண்மைகள் சில வேளைகளில் கசப்பாக இருக்கும். அனால் அது எண்றைக்கும் உறங்குவதில்லை. தமிழர்கள் குடியேறி வாழும் இன்னுமொரு தீவு பீஜி. ஜனநாயக ரீதியில் நடந்த தேர்தலை ஏற்றுக்கொள்ளாது, இங்கு வாழும் இந்தியர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைச் சட்டமூலம் குறை த்துக்கொண்ட ரபூக்கா, பீஜி நாட்டு சுதேசிய மக்கள் தலைவர். இந்தியர் கைக்கு ஆட்சி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ரபூக்கா போன்றோரின் மூதாதயரை இன அழிவில் இருந்து காப்பாற்றியது, குடியேறிய இதே இந்திய சமூகந்தான். இந்த உண்மையை FU NATION என்ற அந்நாட்டு ஏடு தனது அக்ரோபர் 1969 இதழில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறது. This is the story of why they were brought here - to make fiji and to save the Fijian people viable - a task that they have accomplished quite admirably. This is the story of the majority of Indians in Fiji. But not all.....
அன்றைய பீஜி கவர்னர் (1877) சேர். ஆர்தர் ஹோடன் குடியேற்ற அலுவலகத்துக்கு எழுதிய கடிதத்தில் மிகச் சிறுபாண்மையினத்தவர்களாக வாழும் சுதேசிய மக்களைக் கரும்புத்தோட்டங்களில் கூலிகளாக அமர்த்தினால் அந்த இனம் முற்றாகவே அழிந்து போய் விடும். எனவேதான் அவர்களுக்குப் பதிலாக இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைத் தருவித்தேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
(6)

இத் தகவலைத் தந்த "FUI NATION சாதாரண ஒர் ஏடு என்ற நிலையிலிருந்து ஒர் இனத்தின் கதையைக் கூறும் முக்கிய ஆவணமாக மாறிவிட்டதை நாம் கவனிக்க வேண்டும். பிஜி ஆவணக் காப்பகத்தில் திரட்டி வைக்கப்பட்டுள்ள சேர்.ஆர்தர் ஹோடனின் கடிதங்களைப்பார்வையிடவும் மேலும் தரவுகளைப் பெறவும் இந்த ஏடு ஒரு சிறந்த ஊடகமாகப் பயன்பட்டிருப்பதையும் நாம் உற்று நோக்க வேண்டும்.
இலங்கை மலையகத் தமிழருக்கெனத் தனியானதோர் ஆவணக்காப்பகம் தேவை என்ற ஒரு குரல் மிக அண்மையில் எழுப்பப்பட்டிருப்பது காலங்கடந்ததொரு குரல் எனினும் பெரிதும் வரவேற்கப்படவேண்டிய தொன்று. தேயிலைத் தோட்டங்கள் எல்லாம் நகரமயப்படுத்தப் பட்டுப் புதிய அலைகள் அங்கும் பாயத் தலைப்பட்டுவிட்டன. உடனடியாகவே தோட்டங்கள் தோறும் நினைவு வங்கிகள் திறக்கப்பட்டு, பழைய தலைமுறை யினரின் வாய் மொழி ஆவணங்கள் திரட்டப்படவேண்டும். மங்கி மறைந்து வரும் பாரம்பரியக் கலைகள் எல்லாம் ஒலிப்பதிவு செய்யப்படவேண்டும். எத்தனையோ தோட்டமக்களின் நினைவுகள் எல்லாம் தேயிலைச் செடிகளுக்குக் கீழே - புதைகுழிகளில் புதைந்து போய் விட்டன. திரும்பக் கிடைக்காத வர லாற்றுச் செல்வங்கள் அவை!
1854ம் ஆண்டளவில் தமிழகத்திலிருந்து கரிபியன் தீவுக் கூட்டங்களுக்குக் குடியேறிய நம் தமிழர் தம்முடன் எடுத்துச் சென்ற பறை, மத்தளம், கல்வம் ( வைத்தியர் மருந்து அரைக்கப் பாவிக்கும் சிறு குழவிகள்) என்பவற்றை குவாட்லோப் தீவின் தலைநகரான (BASSETERRE) பஸி தோரில் தான் பார்வையிட்டதாகக்குறிப்பிடுகிறார் இத்தீவுக்கு 1981ல் சென்று வந்த முன்னாள் புதுச்சேரி உள்துறை அமைச்சரான, மாண்புமிகு செளரிராசன். "அவர்கள் ஆடிக்காண்பித்த தெருக்கூத்து, நாடகங்கள் மற்றும் பாட்டுக்கள் எல்லாம் அன்றைய தமிழகத்தின் நாடகங்கள் தெருக்கூத்துகள் எப்படி இருந்திருக்கும் என்பதை விளக்குவனவாக அமைந்திருந்தன. அக் கூத்தின் கதை மதுரை வீரன் பொம்மியைச் சிறை எடுத்த கதை என்பதை உணர்ந்து கொண்டோம். ஆனால் அவர்கள் வேகமாகப் பாடிய தமிழ்ப் பாட்டைப் புரிந்து கொள்வது கஷ்டமாயிருந்தது" என்று கூறினார் திரு. செளசிராசன் அவர்களுடன் குவாட்லோப் சென்று திரும்பிய டாக்டர் ஆனந்தவேலு என்ற புதுச் சேரி தமிழர். இன்னுமொரு கரிபியன் கடல் தீவான மாட்னிக் தீவின் தலைசிறந்த பிரஞ்சு மொழிக்கவிஞரும் தமிழருமான திரு மிச்சேல் பொன்னம்மா (ஆண்) (MITCHLPONNAMMAH) வெளியிட்ட குடியேறிய தமிழரின் அவல வாழ்வு பற்றிய கவிதைத் தொகுப்பு: குவாட்லோப் தீவு தந்த பிரெஞ்சு மொழி SITGI Gorffluug TGI g6l6ar Grö L " (pigg TL6 (ERNEST MOUTHOSSAMY) அவர்கள் எழுதிய " ஒரு குடிமகன் அழுகிறான்" என்ற நாவல் போன்றவை
(7)

Page 6
குடியேறிய தமிழர்களின் அழியா ஆவணங்களாக்கப்பட வேண்டும். திரு. முத்து சாமி அவர்கள் தம் நாவலில் உருவாக்கிய ராமன், திமோலையோன் கதாபாத்திரங்கள் மூலம் அன்றய காலகட்டத்தில் நம் தமிழர்கள் 3 மாத நீண்ட கடற்பிரயாணம் செய்து நடைப்பிணங்களாகக் கரிபியன் கடற்கரை க்கு கொண்டுவரப்பட்ட சோகமயமான நிகழ்வுகளையும், சர்க்கரை ஆலைகளில் அவர்கள் சாறு பிழியப்பட்ட சக்கைகளாக வாழ்ந்த நரக வாழ்க்கையையும் நன்கு விளக்குகிறார். குவாத்லோப் நகரில் பிறந்து குடியுரிமை, வாக்குரிமைகளற்று வாழ்ந்த தமிழர்களுக்கு மட்டுமல்ல நீக்ரோ மக்களுக்குமாக், குரல் கொடுத்து, பிராண்ஸ் நீதி மன்றம் வரை சென்று போராடி வெற்றிகளைக் குவித்துக் கொண்ட வீரத்தமிழ் மகன் ஹென்றி சிதம்பரம் அவர்கள் வரலாறு உலகத்தமிழர்கள் முன் வைக்கப்படவேண்டும். இன்றும் இவர் பெயரால், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் கேப்ஸ் தேரின் (CAPSTERRE) முக்கிய வீதி ஒன்று "ஹென்றி சிதம்பரம் அவென்யூ" என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுமளவுக்கு இத்தமிழரின் சேவை இன வரம்புகளைக் கடந்து பயன்பட்டிருப்பதை வருங்கால இளஞ் சந்ததியினர் படித்து உணர்ந்து கொள்ளப் பாடப்புத்தகங்களில் அவை பதிவு செய்யப்படவேண்டும். தமிழகத் தமிழர்களால் ரினிட்டாட் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு நாட்டப்பட்ட முருங்கை மரங்கள் ரினிட்டாட் பல்கலைக்கழக வளாகத்தில், இன்றும் பூத்துக் குலுங்கி, விரிவுரை யாளர்களுக்கு உணவாகப் பயண் படுவதைவும், தலைநகரான போட் ஒப் ஸ்பெயின் பூங்காவில் கிடைத்த பனம் பழங்களிலிருந்து பனம் பாத்தி போட்டு, பனங்கிழங்குகளை மாற்று இனத்தவருக்கும் தந்து, அதன் சுவையை அவர்களுக்கு அறிமுகப்படுத்திய சுவாரஸ்யமான சம்பவங்களையெல்லாம் விளக்குகிறார் டாக்டர் விநாயக மூர்த்தி அவர்கள். இப்படித்தாம் குடியேறிய நாடுகளிலெல்லாம் தம் பண்பாட்டை கலைவடிவங்களை சமய வழிபாடுகளை, உணவு வகைகளை தாய்லாந்து, கடாரம், வியட்நாம். கம்போடியா, ஜாவா, சுமத்ரா, பாளி, சீனாவரை கொண்டு சென்ற வரலாறுகள் ஆராயப்படவேண்டும். "மூல் தண்ணி ( மிளகு தண்ணிர்) "கொலம் போ” (குழம்பு) இஞ்சி, கட்டு மரம் என ஏராளமான தமிழ்ச் சொற்கள் பூமிப்பந்தின் மூலை முடுக்கெல்லாம் பேசப்படும் மொழிகளில் சேர்ந்து கொண்டது எவ்வாறு ? இப்படிக் காடழித்து நாடுகண்ட (?) இனம்" இன்று சீரழிந்து சிறப்பழிந்து போனது எவ்வாறு? இவைகளுக்கான ஆதாரங்கள், தொல்பொருள் ஆவண வடிவமாக, வாய் மொழி ஆவண வடிவமாக, எழுத்து ஆவண வடிவமாக, ஒலி ஆவணங்களாகப் பேணிப் பாதுகாப்பதோடு, ஆய்வு மூலம் பெறப்படும் தரவுகளெல்லாம் பகிர ங்கப்படுத்தப்பட்டு, தமிழினம் உலக அரங்கில் மீண்டும் தலைநிமிர வழி காணப்படவேண்டும். இதற்கு உலகத் தமிழர் காப்பகம் அமைப்பதே ஒரே
வழி
(8)

இனி, இத்துறையின் முதற்படியாக, முன்னோடியாக எம்மால் ஆர ம்பிக்கப்பட்டுள்ள உலகத்தமிழர் ஆவணக் காப்பகம் தொடர்பான சில தர வுகளை முன்வைக்கலாம் என விரும்புகிறேன். 1956ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் திகதி இலங்கைத் தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத நாள். இந்நாளில் தான் சிங்களம் மட்டும் என்ற மசோதாவை எதிர்த்தும் தம் உரிமைகளைக் கோரியும் இலங்கைத் தமிழர் கொழும்பு பாராளுமன்றத்துக்கு முன் உள்ளி காலிமுத்திடலில் திரண்டு சத்தியாக்கிரகம் செய்த நாள். திட்டமிடப்பட்டு ஏவப்பட்ட காடையர் கூட்டம் தமிழ் சத்தியாக்கிரகிகளை அடித்து நொறுக்கினர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்லடிபட்டு இரத்தக் காயங்களுக்குட்பட்டனர். உடைகள் கூடக் கிழித்தெறியப்பட்டன. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உடைகள் எதுவுமின்றிப் பக்கத்தேயுள்ள சுற்றுலாப் பயணிகள் தங்கும் கால்பேஸ் ஹோட்டலுக்கு ஒட வேண்டிய நிலையேற்பட்ட நாள் இது. மறு நாள் செய்திப் பத்திரிகைகள் இவர்கள் தாக்குண்ட செய்திகளை, படங்களைப் பல பக்கங்களில் பிரசுரித்திருந்தன. வருங்காலத்தில் இலங்கை தமிழர்களுக்கு எப்படியான கெளர வம் இருக்கப்போகிறது - என்பதை முன்கூட்டியே கட்டியம் கூறிய இந் நிகழ்வு என் இதயத்திலும் இரத்தக் காயங்களை ஏற்படுத்திவிட்டிருந்தது. இன உணர்வால் உந்தப்பட்டு, ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிகள் கொண்ட படங்களை எல்லாம் கத்தரித்து அடிக்குறிப்பு எழுதிக் கோப்புக்களில் சேர்க்க ஆரம்பித்தேன். படங்களை மட்டுமல்ல - அவை தொடர்பான செய்திகளையும் சேகரித்தால் என்ன என்ற சிந்தனை எழுந்தது. தொடர்ந்து தமிழர் சம்பந்தப்பட்ட வரலாறுகள் அனைத்தையுமே சேகரிக்க வேண்டும் என்ற உந்துதல். "தமிழர்களுக்குத் தொடர்பான வரலாறு எதுவுமில்லை" எனப் பாடசாலை நாட்களில் எமது சரித்திர ஆசிரியர் அடிக்கடி கூறும் கருத்து - இத்துறையில் ஈடுபட்டு, என்னால் ஆன பங்களிய் பைத் தர வேண்டும் என்ற மனோவலிமையைத் தந்தது. இக் காலகட்டத்தில் குடும்ப நிலை காரணமாகத் தொழில் தேடி கண்டி நகருக்கு வந்து விட்டதால் - செய்திகளைச் சேகரிக்க - வருமானத்தில் ஒரு பகுதியை இப்பணிக்கு ஒதுக்க முடிந்தது. கண்டியில் உள்ள பழம் பத்திரிகை, போத்தல்கள் விற்கும் நாடார் கடைகள் எல்லாம் என்னைப் புண் முறுவல் பூக்க வரவேற்றுக் கெளரவிக்கத் தொடங்கின. வர லாற்றை சேகரிக்கும் பணி தொடர்ந்தது. எனக்கு இன்றும் நல்ல ஞாபகம் இருக்கிறது- வழக்கம் போலப் பழம் பத்திரிகைக் கடைகளை வலம் வந்த போது ஒரு கடையில் 1932ம் ஆண்டுப் பத்திரிகைகள் கட்டுக்கட்டாகப் பழுப்பேறிய நிலையில், தொட்டால் கிழிந்து விடும் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடைக்காரர் என்னைக் கண்டதும் உசாரானார். தள்ளு வண்டிகளில் அப் பத்திரிகைகள் ஏற்றப்பட்டு என் நண்பர் ஒருவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. பல வாரங்களாகத் தேவையான பகுதிகளை கத்தரித்து ஒட்டியதில் 4 பாரிய அல்பங்களையே தயாரிக்க முடிந்தது.
(9)

Page 7
இன்றைய நாட்களில் பத்திரிகைகளை ஆவணப்படுத்தும் பல அமைப்புகள் வெளிநாட்டு அரசு சார்பற்ற நிறுவனங்களினி பண உதவியோடு இயங்குகின்றன. எனினும் 1956ம் ஆண்டுகளில் நாம் ஆவணப்பணியை ஆரம்பித்த காலத்தில் இப்படியான அமைப்புக்கள் எதுவும் நம் தமிழர் மத்தியில் இருந்ததில்லை. இத்துறையின் முன்னோடிகளான எமக்கு இன்று வரை எந்த அரசு சார்பற்ற நிறுவனங்களும் உதவ முன்வந்ததில்லை. இருப்பினும், ஒரு சில நண்பர்கள் உதவியோடு எமது பணி தொடர்கிறது.
பதி திரிகைகளை வாங் கிதி தேவையான செய்திகள் அடையாளமிடப்பட்டு, அதன்பின் பத்திரிகையின் பெயர், திகதி என்பன குறிப்பிடப்படுகின்றன. பின்னர் அவை நறுக்கி எடுக்கப்பட்டு, பாரிய தாள்களில் திகதி வாரியாக, அழகாக ஒட்டப்படுகின்றன. இப்படி ஒட்டப்பட்ட தாள்கள் பின்பு புத்தகமாக்கப்பட்டு " இலங்கைத் தமிழர் சுதந்திரப் போராட்ட வர லாறு" என்ற பெயரிட்டுப் பேணிப் பாதுகாக்கப்படுகிறது. 1930 ம் ஆண்டிலிருந்து 1956 ம் ஆண்டுவரை யாழ்பாணத்திலிருந்து வெளிவந்த புகழ் பெற்ற வார ஏடான ஈழகேசரியின் 26 வருடகால ஏடுகளனைத்தும் போட்டோ பிரதி யாக்கப்பட்டு, எமது சேகரிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. 1900 ஆண்டிலிருந்து 1930 வரையிலான காலப்பகுதியில் வெளிவந்த, இந்து சாதனம் என்ற ஏடுகள் (தமிழ்/ ஆங்கிலம்) அனைத்தும் சுதந்திரன் என்ற ஏட்டின் ஆர ம்பகால இதழ் தொட்டு 1956 வரையிலான அனைத்தும் போட்டோப் பிர திகளாக்கப்பட்டு, எமது சேகரிப்புக்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து ஏடுகளையும் வெளியே எடுத்துச்சென்று போட்டோப்பிரதியாக்க அனுமதி அளித்த யாழ். பல்கலைக்கழகத்தினருக்கும் குரும்பசிட்டி சன்மார்க்க சபையினருக்கும் என்றென்றும் எமது நன்றிகள். இந்த ஆவணப்பணியின் முக்கியத்துவத்தையும், பல துறைகளில் என் இயலாமையும் புரிந்து கொண்டு, முக்கிய காலகட்டங்களில் யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் எண் சேகரிப்புக்களைப் பாதுகாப்பாக வைத்துத் தந்த உபவேந்தர், மறைந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களுக்கும் அவரின் மறைவுக்குப் பின் வளாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மறைந்த உபவேந்தர் துரைராஜா அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எமது மனங்கனிந்த அஞ்சலிகள்.
1962ம் ஆண்டில் என் வருங்காலத்துணைவியை நான் திருமணத்துக்கு முன் சந்தித்தபோது நான் கேட்டுக்கொண்டதெல்லாம், எனது இந்த ஆவணத்துறைக்கு உதவ வேண்டுமென்பதே. 1962ம் ஆண்டு என்னுடன் இணைந்து ஆவணப்பணியில் ஈடுபடத் தொடங்கிய அவர், நான் நடுநிசி வரை தாள்களில் ஒழுங்கு படுத்தும் நறுக்குகளையெல்லாம் மறு நாள் வேலையால் திரும்புமுன் அழகாக ஒட்டிமுடித்து தயாராக வைத்திருப்பார். இப்படிப் பல வருடங்கள் தொடர்ந்த எண் குடும்ப வாழ்வில் பல
(10)

இழப்புக்களையெல்லாம் சந்தித்தும் பொறுமை இழக்காமல் பின்னணியில் நின்று உதவிய, உதவிக்கொண்டிருக்கின்ற எண் மனைவியை, இரு கரங் கூப்பி வணங்குவதில் ஒர் ஆத்ம திருப்தி
அரசியல் தொடர்பான சேகரிப்புக்களைத் தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளில் வெளிவந்த பல்துறைக் கட்டுரைகள், சர்வதேசத் தமிழர் மாநாடுகளில் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் என ஏறத்தாழ 6000 கட்டுரைகள் ஒட்டுப்புத்தகங்களாக்கப்பட்டு எமது காய்பகத்தில் இடம்பெற்றுள்ளன. 1980 ஆம் ஆண்டு மொரிசியஸ் தீவுக்குச் சென்றபோதும், றேயூனியன் தீவுத் தமிழர்களைச் சந்தித்தபோதும், பலதடவை மலேசியா, சிங்கப்பூர் சென்றபோதும் திரட்டப்பட்ட ஆவணங்கள் இவற்றுள் அடங்கும். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை தோற்றுவித்ததன் மூலமும் அந்த அமைப்பின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட "உலகத் தமிழர் குரல்" ஏட்டின் தொடர்பாடலாலும் கணிசமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. பீஜித் தீவுப் பெரியார் அப்பாப்பிள்ளை அவர்கள் தட்டெழுத்துப் பிரதிகளாக வெளியிட்ட "மித்திரன்” இதழில் பெரும்பகுதியும் அந்தமான் தீவில், மறைந்த திரு சு. ப. சுப்பிரமணியம் அவர்கள் தொடர்ந்து அனுப்பிவைத்த "அந்தமான் முரசு" ஏடுகளும், பர்மா நாட்டில், இந்தோனேசியா நாட்டில் வெளிவந்த ஏடுகள், சஞ்சிகைகளும் எமது உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் விரிவு பட உதவி உள்ளன,
இச் சிறு வெளியீட்டின் மூலம் உலகெலாம்பரவிய தமிழர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள்கள் இரண்டு. ஒன்று, இப்பணி தொடரப்பல ஆவணக்காப்பகங்கள் தமிழர் வாழும் நாடுகளிலெல்லாம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அவை கணணி மூலம் ஒரு முகப்படுத்த வேண்டும். இரண்டு எம்மால் சேகரிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் "நுண் சுருள்களாக" MICROFILM மாற்றி நிரந்தரமாகப் பேணப் பணம் படைத்த தமிழர்கள் முன் வந்து உதவ வேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி -
R, KANAGARATNAM, 128/8, GHETTY GARDENSMULGAMPOLA,KANDY, SRILANKA. BANK : HATTON NATIONAL BANK, KANDY
ACCOUNT = 18352
உசாத்துணை: யுனெஸ்கோ கூரியர், ஏப்ரல் 1985
(11)

Page 8
இணைப்பு
உலகத்தமிழர் ஆவணக்காப்பகம் நிறுவுவதற்கு முன்னேடியாக -
X எம்மால் ஆரம்பிக்கப்பட்ட உலகத்தமிழ்ப் பண்பாட்டு
இயக்கம்
அதன் கொள்கைகளைப் பரப்ப மலர்ந்த மாத
ஏடான "உலகத்தமிழர் குரல்"
X இதற்கு அனுசரணையாக எம்மால்
வெளியிடப்பட்ட "அலைகடல்களுக்கு அப்பால் தமிழர்” "உலகத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி” " மொரிசியஸ் தீவில் எங்கள் தமிழர்" " இறீயூனியன் தீவில் எங்கள் தமிழர்” என்ற தொடர் வெளியிடுகளி.
தமிழ்மக்களிடத்தே எமது கருத்துக்களைக் கொண்டு செல்லப்பயன்பட்ட பல்வேறு கண்காட்சிகள்
இவற்றின் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்கள் தந்திட்ட கருத்துக்களை உங்கள் பார்வைக்காக இத்துடன் இணைக்கின்ருேம்.
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை வளர்ப்போம்! உலகத்தமிழர்களைக் காப்போம்!
வரலாற்றை பதிவு செய்து வையகத்தில் தலைநிமிர்வோம்!
என்றென்றும்அன்புடன், குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் திருமதி. பவளராணி கனகரத்தினம் கண்டி இலங்கை 15.05.1996
(12)

உலகத்தமிழர் நிலை குறித்து நண்பர் கனகரத்தினம் வெளியிட்டு אל வரும் நூல்கள் தமிழ் இனத்துக்கோர் புதையல். பல அரிய கருத்துக்கள் நமக்குக் கிடைக்கின்றன.
- கலைஞர் மு. கருணாநிதி - ( இறீயூனியன் தீஷில் எங்கள் தமிழர்" என்ற நுாலுக்குத் தந்த வாழ்த்தில்)
முற்போக்கு எண்ணம் கொண்ட திரு. இரா. கனகரத்தினத்தை எனக்குப் பல வருடங்களாகத் தெரியும். அவரது இந்த முயற்சி வரலாற்று ஆசிரியர்களுக்குப் பெரிதும் பயன்படும். அவரது தொண்டினைப் பாராட்டித் தகுந்த முறையில் கெளரவிக்க முடியாதவர்களாக இருக்கிறோம். அவர் முயற்சி வெல்க என வாழ்த்துகிறேன்.
-மூதறிஞர், தமிழரசுத்தந்தை எஸ். ஜே. வி . செல்வநாயகம்.
(13)

Page 9
xk குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் என்கின்ற ஒரு தமிழ் மகனின் தனிப்பட்ட தமிழர்கலை, கலாசார, மொழி, இலக்கியம் பற்றிய திரட்டல் களஞ்சியம் இடம் பெறாத தமிழ்மாநாடுகளோ, தமிழை வைத்து அரசியல் நடாத்திய கட்சி மாநாட்டுக் கூட்டங்களோ கடந்த 30 ஆண்டுகளாக இல்லை என்றே கூறவேண்டும், அந்தத் தமிழ் மகனைப் பார்த்தாலே தமிழ் உணர்ச்சி பொங்கும். டாக்டர் ஊ.வே. சாமிநாதையர் போன்று இன்னொருவகையில் தொழிற்பட்டு வரும் தமிழ் உருவம் அவர்.
திசை 11. 05 1989
1974ம் ஆண்டு சனவரித்திங்களில் யாழ்ப்பாணத்தில்
நடைபெற்ற 4வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுக் கண்காட்சி அரங்கில், இடம் பெற்ற உலகத் தமிழர் பற்றிய கண்காட்சியை தமிழ்த்துாதர் வண. தனிநாயகம் அடிகளார் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கிறார்.
(14)
 

水 அலை கடல்களுக்கப்பால் தமிழர்" என்ற அவரது நூலைப்படிக்கும் போது அவர் எழுப்பும் குரலில், பிறக்கும் நீதியை - உரிமையை - அவசர அவசியத்தை உணர முடிகிறது. வாழ்ந்து கெட்ட இனம் - வாழும் இனம் என்ற பெருமையிலிருந்து விடுபட்டுச் செத்துக் கொண்டிருக்கும் இனமா எமது தமிழனம் என்ற அச்சம் நெஞ்சில் எழுகிறது. நாம் என்ன செய்து கொணி டிருக்கிறோம்? என்ற வினா நிமிர்ந்து நிற்கிறது. சிலர் எண்ணுகிறார்கள் - சிலர் மற்றவர்களுக்கு யோசனை கூறுகிறார்கள். வேறு சிலரோ செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் 'சொல்லாமலே செய்வோனாக உயர்ந்து விட்டார் திரு. இரா. கனகரத்தினம்.
* செய்தி ' 04 02 1973
వ్య#############
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க முதல் மாநாட்டுக்கு வருகை தந்த உலகத்தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு, அன்றைய தமிழக முதல்வர் எம். ஜி. ஆர் அவர்கள் சென்னை தாஜ் ஹோர்மன்டல் ஹோட்டேலில் தந்த மதிய விருந்தின் போது. டிசம்பர் 1977 (15)

Page 10
冰 திரு. செல்வநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அவர்கள் திருமணத்தன்று வள்ளுவரும் வாசுகியும் போல் வாழுங்கள் என வாழ்த் தினேன்! இன்று அது நிதர்ஸனமானது கண்டு பெருமை கொள்கிறேன். இலங்கை பூராவும் அறிமுகமான இளைஞரான அவர் இலங்கையில் முதல் முதலாகத் தமிழ்த்தலைவர்களின் கருத்துக்களையும் சொற்பொழிவுகளையும் திரட்டித் தொடர்ச்சியாக மூன்று நுால்களை வெளியிட்ட பெருமைக்குரியவர்.
அமரர் அ. அமிர்தலிங்கம்
1977ம் ஆண்டு மார்கழித்திங்களில் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க முதல் மாநாட்டுக்கு வருகை தந்த உலகத்தமிழ்ப் பிர திநிதிகளுக்கு, கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையில் எழும்பூர் பெரியார் திடலில் தி.மு.க எடுத்த பெரு விழாவில். இலங்கை , மலேசியா, மொரிசியஸ், வியட்நாம் பிரதிநிதிகளும் காணப்படுகிறார்கள்.
(16)
 

se A very excellent way of ensuring future generation, the Culture &
history of their ancestors
- N.Marr. Western Australia k Most impressed by this exhibition
- Revd. Joseph A. Wicki
Gregorian,University, Rome.
米 I am very pleased to see so much energy and interest in the history
and culture of the tamil people displayed in Jaffna. Let there be more such work in the future."
-Dr. Brenda Beck, University of British Columbia, Vancouver, Canada.
Historians and scholars are indebted to this collection of living history, over the years. To those for whom tamil is the mother tongue and tamil culture their culture, this has a deep appeal. May this noble effort go from strength to strength"
-Prof. K.Nesiah, Sri Lanka.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில், திரு . இரா. கனகரத்தினம் அமைத்திருந்த உலகத் தமிழர் வரலாறு பற்றிய கண்காட்சி பலரின் கவனத்தையும் கவர்ந்தது.
- நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சித் தொகுதி (1) Luijgslid XV
*。 .தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்ய வேண்டும் என அவாவுற்றான் ஒர் அமரகவி அவாவுற்ற இக்கவிஞன் பழங்கவிதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும் என ஆசைப்பட்டான். அவன் அன்று கண்ட இக்கனவு இன்று நனவாகி அவனது ஆசையும் நிறைவேறிக்கொண்டு வருகிறது. பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, ஜெர்மனி, பிரித்தானியா, ஒலி லாந்து, பெல்ஜியம் , செக்கோஸ்லாவாக்கியா, ரஷ்யா, மலேசியா, பர்மா, இத்தாலி, சுவீடன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹங்கேரி, யப்பான், போர்த்துக்கல், ஸ்பெயின், சுவிற்சர்லாந்து, பிஜித்தீவு முதலிய உலக நாடுகளில் இன்று நம் தேமதுரத்
(17)

Page 11
தமிழோசை முழங்குகிறது. இந்நாட்டவர்கள் தமிழ் மொழியின் திறமான
புலமையால் அதை வணக்கம் செய்கிறார்கள்.
இது என்ன புதினம். இதைத் தானே எல்லாரும் திருப்பித் திருப்பிச் சொல்கிறார்கள். இதை எல்லாரும் போய்ப் பார்த்தார்களா? என்று நம் மத்தியில் பலர் இதுவரை கேள்விக்கணை தொடுக்காமல் இருந்ததில்லை.
ஆனால் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டையொட்டி, சுண்டிக்குளி மகளிர் கல்லுாரியில் நடைபெற்ற பொருட்காட்சியைச் சென்று பார்த்தவர்கள் எவருமே இந்தக் கேள்வியை இனி எழுப்பமாட்டர்கள். மகாநாட்டின் நுழைவாயிலேயே இந்தக் கேள்விக்குச் சந்தேக விபரீதமற உங்களுக்குப் பதில் கிடைத்து விடுகிறது.
அலைகடலுக்கப்பால் தமிழ் எப்படி வாழுகிறது எண்பதை அறியும் ஆவலுடன் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கண்காட்சிக் கூடத்துக்குள் நுழைகிறேன். கரும்பலகை ஒன்றில் உலகப்படம் ஒட்டப்பட்டிருக்கிறது. அதில் தமிழ் மணம் கமழுகின்ற உலக நாடுகளம் அடையாளமிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இதையடுத்து அம்பால் நகர்ந்தால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு இடங்களிலும், தமிழ், தமிழ்க் கலாச்சாரம் எந்த அளவுக்கு இந்த நாடுகளில் பரவியுள்ளது என்பதைப் படங்கள், அந்நாட்டு அறிஞர்கள் எழுதிய நூல்கள், சொற்பொழிவுகள், பத்திரிகை செய்திகள் ஆகியன தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன,
இங்கிலாந்திலிருந்து பிஜி தீவுவரை ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு மேற்படி சேகரிப்புகள் அழகாக ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒழுங்காக இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனேக மேலை நாடுகளில் உள்ள அறிஞர்கள் தமிழ் மொழியில் கொண்டுள்ள ஆர்வத்தையும் அவர்கள் தங்கள் பல்கலைக் கழகங்களில் அதற்கு ஒர் இடம் கொடுத்துள்ளமையையும் ஒரு சில நிமிடங்களில் உணர்ந்து கொள்வார்கள்.
பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றின் சேகரிப்புகள், ஆண்டுகள் குறிப்பிடப்பட்டு, பெரிய அல்பங்களில் ஒட்டிவைக்கப்பட்டிருந்தன. பல ஆண்டுகளாகச் சேகரித்துள்ள இந்தச் சேகரிப்புகள் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் பயன்படுபவையாகும். இந்த அரிய பணிக்காக, தமது நேரத்தையும் பொருளையும் கடந்த சில ஆண்டுகளாகச் செலவு செய்துவரும் குரும்பசிட்டி திரு. இரா. கனகர த்தினத்தையும் அவரது மனைவியாரையும் பாராட்டாது இருக்க முடியாது. ( ஈழநாடு 13.01. 1974)
(18)

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாடு மொறிசியஸ் 1980. மேடையில் குரும்பசிட்டி திரு . இரா. கனகரத்தினம், பண்பாட்டு இயக்க மொரிசியஸ் கிளைத்தலைவர் திரு . தங்கணமுத்து, தீவின் கவர்ணர், அமைச்சர் இரா. நெடுஞ்செழியன், தீவின் பிரதமர் சேர். சிவசாகர் ராம் குலாம், முன்னாள் தமிழக அமைச்சர்
அரங்கநாயகம் ஆகியோர்.
>k யாழ். குரும்பசிட்டி பல அறிஞர்களை உருவாக்கிய மண். அம்மண்ணின் புகழ் பெற்ற வழித்தோன்றல்கள் திரு. இரா. கனகரத்தினமும் அவரது துணைவியார் திருமதி. பவளராணி கனகரத்தினமுமாகும். எழுத்து உருவிலே சித்திர உருவிலே வரும் அனைத்தையும் திரட்டிப் பேணிப் பாதுகாத்து வரும் அவர்கள் முயற்சி பெரிதும் பாராட்டப்டவேண்டிய பணி. வரலாற்றுத் துறை க்கு இவை பெரிதும் பயன்படக்கூடியவை.
- பேராசிரியர் அம்பலவானர் சிவராசா .
(19)

Page 12
றேயூனியன் தீவுத்தமிழர்களுடன், ஆகஸ்ட் 1980
本 இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இண்றுவரையிலான அனைத்துத் தகவல்களையும் ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் சேர்த்து வைத்துள்ள இவர்களது சேகரிப்புக்களை நாம் பார்க்கும் போது பிரமித்துப் போகிறோம். எமது வியப்பை வெளிப்படுத்திய போது, தனது மனைவியின் அண்பான புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பை நன்றியுடன் குறிப்பிடுகிறார்.
சரிநிகர் ஏப்ரல் 1993
st ஈழத் தமிழர் வரலாறு - சரித்திர ( பத்திரிகை) க்குறிப்புக்களைப் பார்க்கும் போது உலகில் எந்த ஒரு தமிழனும் - தமிழ்த்தலைவனும் செய்து வைத்திருக்க முடியாத அற்புதப் பொக்கிஷம் என்று கூறத்தோன்றுகிறது. "நாண் பெற்ற செல்வங்களுள் மூத்த பெருஞ் செல்வம் இது" என்று பேணிவருகிறாா என்றால் பாருங்களேன். ஆண்டுகள் ஒடி மறைகின்றன. மீண்டும் ஒரு நாள் வழக்கமாக " கனகு" வைச் சந்திக்கிறேன். "என்ன வந்தாலும் வரட்டும் நான் ஆரம்பிக்கத்தான் போகிறேன்" என்று ஒற்றைக்காலில் நின்றார். இவரது பர ந்த முயற்சிகள், இதனால் ஏற்படப்போகும் தனிப்பட்ட நஷ்டங்கள், கஷடங்கள் பற்றி எனக்கு உள்ளூரப் பயமாய் இருந்தாலும் "இறங்கவேண்டியதுதான். பாராட்டுதல்கள். உங்கள் முயற்சி நிச்சயம் வெல்லும்” என்று கூறி வைத்தேன். இதன்பின் தான் உலகத் தமிழர் பாதுகாப்புக் கழகம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம். இந்த அமைப்பின் இலட்சியங்களைப் பரப்ப “உலகத்
(20)
 

தமிழர் குரல” மாத ஏடு. உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் ஐக்கியத்துக்காகவும், அவர்களின் மொழி, கலை, கலாச்சார மறுமலர்ச்சிக் காகவும் வெளியிடப்பட்டஇந்த ஏடு முதல் "கனகு" வால் தட்டச்சுப் பொறி மூலம் வெளியிடப்பட்டுப் பின்னர் அச்சு வாகனம் ஏறியது. "ஈழத்தில் தமிழர்களை ஒற்றுமைப் படுத்த முடிய வில்லையே. உலகத் தமிழர்களைஎன்று மூக்கால் அழுபவர்களைப் பார்த்து கனகு என்ன சொல்கிறார் தெரியுமா? இலங்கையில் இனத்துக்கும் மொழிக்கும் வரும் துயர் கண்டு குரல் எழுப்பத் தலைவர்கள் உண்டு. ஆனால் வெளிநாடுகளில் தமிழ் இனம் அழிந்து கரை ந்து கொண்டு போகிறது. அங்கு வாழும் நம் தமிழர்களின் பெயர் மட்டும் தமிழாக இருக்கிறதே தவிர, அந்தப் பெயரைத் தாங்கியவர்களோ வேறு மொழி பேசி, வேறு கலை, கலாச்சாரங்களால் மூழ்கடிக்கப்பட்டு வருகிறார்கள். இப்படி உலகெங்கும் சிறுபான்மையினராகப் பரந்து வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் அவசியம் தேவை. இந்த அமைப்பின் கொள்கைகளைப் பரப்ப "உலக தமிழர் குரல்" என்று விளக்கமளிக்கிறார். நண்பர் இரா. கனகரத்தினம் தமிழ் என்றால் சாவார். உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை ஆரம்பித்துப் பின்பு பண்பாட்டு இயக்கமாகப் பெயர் மாற்றி, இதற்காக யாழ் நகரில் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு வருகை தந்த கடல் கடந்த தமிழப் பிரதிநிதிகளை விரட்டிப் பிடித்து, டாக்டர். சாலை இளந்திரையனை தலைவராக இருக்கும்படி வற்புறுத்தி வெற்றியும் கண்ட கனகுவின் சரித்திரம் இலட்சிய வெறிபிடித்தது,
கே. ஜி. மகாதேவா, சுதந்திரன் 25.05.75
水 உலகத் தமிழர் பாதுகாப்புக் கழகம் அமைப்போம், உலகத் தமிழினத்தைக் காப்போம்" என்னும் உயரிய இலட்சியத்தை உயிர் மூச்சாகக் கொண்டு உழைத்துவரும், ஒப்பற்ற எழுத்தாளர் குரும்பசிட்டி இரா. கனகர த்தினத்தின் அரிய படைப்புத்தான் “அலை கடல்களுக்கு அப்பால் தமிழர்” என்ற எழுத்துப் பேழை. "அன்றொரு நாள்” என்னும் தலைப்பில் பண்டைத் தமிழினப் பெருயிைனைப் படம் பிடித்து காட்டும் பாண்மை நம் நெஞ்சை நெகிழவைக்கிறது. "தமிழர் புலப்பெயர்வின் பின்னணி தமிழ் இதயம் கொண்ட அனைவரையும் நிச்சயம் சிந்திக்க வைக்கும். "ஜனநாயகம் ஒரு சர்வதேச மோசடி" என ஈழத் தமிழர்களின் இன்னல்களை வைத்து தீர்ப்பளித்திருக்கும் பகுதி ஆசிரியர் திறனுக்கோர் எடுத்துக்காட்டாகும். "பீஜித் தீவில் தமிழ் மொழியை ஆரம்பப்பள்ளிகளில் கற்பிக்கக் கூடிய தமிழாசிரியர்கள் தட்டுப்பாடு பலகாலமாகவே நீடித்து வருகிறது" என்ற உண்மை நிலையினை இந்நூல் மூலம் தான் உணர முணடிகிறது. தமிழ் நலம், தமிழ் இனநலம் பேணுவதில் முன்னோடியாக விளங்கும் தமிழக அரசு ஆவன செய்யும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. ஆனால் நூலாசிரியருக்கு ஏன் இல்லாமல் போனது
(21)

Page 13
என்பதுதான் நமக்கும் புரியவில்லை. அலை கடல்களுக்கு அப்பால் வாழும் தமிழர்க்கெல்லாம் கூட நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் தமிழக அரசின் மீது அவநம்பிக்கை கொள்வது வருங்கால வரலாற்றில் தனியிடம் பெறும் தகுதி பெற்ற இலட்சிய எழுத்தாளர் ஒருவருக்கு அழகன்று என்பதனை மட்டும் நினைவூட்ட விரும்புகின்றோம்.
"காஞ்சி” ( நிறுவனர் : அண்ணா) தமிழ்நாடு 29 04, 73
४
20.05.1990 அன்று யாழப்பாணத்தில் "மொறிசியஸ் தமிழர் தினம் ” கொண்டாடப்பட்ட போது திருமதி. பவளராணி கனகரத்தினம் அவர்கள் மங்கள விளக்கேற்றுகிறார்.
දං தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற ஒவ்வொருவரும் தெரிந்திருக்கவேண்டிய செய்திகளை உணர்ச்சி குன்றாமல் தொகுத்து தந்திருக்கிறீர்கள். இந்தச் செய்திகளில் சில எனக்கே புதியவை. இந்தியத் தமிழகத்தில் உள்ளவர்களைப் பற்றியோ கேட்க வேண்டியதில்லை. அங்குள்ள பெரிய தமிழ் அறிஞர்களும் அரசியல் வீரர்களும் இவைகளில் ஒரு சிறு பகுதியைக்கூட அறியமாட்டார்கள. நல்ல கருத்துக்களைச் சரியான நேர தீதில் நினைவூட்டியிருக்கிறீர்கள். புதிதகம் உணர்ச்சி மயமாக நடக்கிறது என்பதோடு நிறைந்த பல விவரங்களையும் தருகிறது. உங்கள் (22)
 

உழைப்பைப் பாராட்டுகிறேன். தமிழர்கள் இட்ையே இத்தகைய உழைப்பாளிகள் பல துறையிலும் பெருக வேண்டும் என்பதே எண் பெரிய ஆசை. அப்படிப்பட்டவர்கள் அதிகமாக இல்லையே எண்பது தான் என் ஏக்கம், உங்கள் ஆர்வத்தாலும் உழைப்பாலும் தமிழனை விழிப்படையச் செய்கிறீர்கள.
A ulimi ---- *
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தையும், உலகத்தமிழா ஆவணக் காப்பகத்தையும் நிறுவியதைக் கெளரவிக்கும் முகமாக புதுச்சேரி மாநில பிரெஞ்சுத்தமிழர் பேரவை 1994 டிசம்பரில் தந்த வரவேற்பின்போது. மாநில முன்னாள் தலைமை நீதிபதி திரு. இராமலிங்கம், மாநிலக் கல்வி அமைச்சர், புதுவையை பிரதிநிதித்துவம் செய்யும் பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர் துபாய் குழந்தை, மதுரகவி ஆகியோருடன்.
ஈழத்தமிழர்களின பெருமையை உயர்த்துகிறீர்கள் மகிழ்ச்சி. உலகெங்குமுள்ள தமிழ்ச் சிறுபாண்மையினரின் பாதுகாப்புக்கும் அவர்கள் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் உலகத்தமிழ்ப் பாதுகாப்புகழகம் வழிகாட்ட வேண்டும். " பாதுகாப்புக் கழகம்" என்ற பெயரை விட “ உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்” எனப் பெயரிடுவது உலக அரங்கில் காழ்ப்பு உணர்ச்சிகளுக்கு
(23)

Page 14
இடம்தராது என்பது எண் கருத்து. தமிழர் வாழும் பல்வேறு நாடுகளுடன் தொடர்பு கொள்ள, உலக நிறுவனங்களில் தமிழர் பிரச்சினைகளை சிறுபான்மையோர் பொதுப் பிரச்சினையாகச் சித்தரித்துப் பரிகாரம் காண, தமிழர் மொழி, பண்பாடு, நாகரிகம் இவையெல்லாம் உலக நாகரிகத்துக்கு அணி செய்வன என்பதைப் புலப்படுத்த இம்மன்றம் உதவலாம்.
டாக்டர் . சாலை, இளந்திரையன்
* செய்தி 19.03.1972
"உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற உடனடியாக உலகத் தமிழர் பாதுகாப்பு மணிறம் ஒன்று அமைக்கப்படவேண்டும். உலகத் தமிழாராய்ச்சி மண்றம் ஏற்படக்காரணமாக இருந்தவர்களும் இன்று "உலகத் தமிழர் பாதுகாப்பு மன்றம்" ஒன்று தேவையென்று குரல் எழுப்புவர்களும் ஈழத் தமிழர்களே! இன்றைய நிலையில் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தேவையை விட இது அவசரமும் அவசியமானதும் ஆகும் என ஒப்புக்கொள்கிறேன். உலகில் தமிழர்கள் தொடர்ந்தும் தமிழர்களாக வாழ்ந்தால் தான் அவர்கள் மொழி, கலை, கலாச்சாரம் பண்பாடுகள் பற்றிய ஆய்வும் பலன்களும் உரிய முறையில் சிற ப்புப் பெறும். அல்லாது விடின் இந்த ஆராய்ச்சிகளெல்லாம் " மணப் பெண் இல்லாத திருமணத்தைப்" போன்றே அமையும். தமிழ் மொழிப் பற்றுள்ள அறிஞர்களை உடனடியாக இந்தப் புனித பணியில் இறங்குமாறு அழைக்கிறேன். உலகத் தமிழாராய்ச்சி மன்றம் தமிழாராய்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்ட அமைப்பாகும். உலகில் தமிழாராய்ச்சித் துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்காக மட்டுமே இந்த இயக்கம் செயற்பட்டு வருகிறது. இந்த இயக்கம் சம்பந்தமாக வண. தனிநாயகம் அடிகளார் வெளியிட்ட கருத்தை நான் முற்றும் ஆதரிக்கிறேன். இப்படியான ஆராய்ச்சித் துறைகளையே நோக்கமாகக் கொண்ட ஒரு இயக்கம் உலகத் தமிழர் விஷயமாக ஏதும் உதவுமென எதிர்பார்ப்பதற்கு இல்லை. எதிர்பார்க்கவும் முடியாது. அப்படி ஈடுபட ஆரம்பித்தால் அது இயங்காமல் செயல் இழந்து விடும் நிலை ஏற்படக் கூடும். எனவே இந்த விடயமாகத் தனியானதோர் அமைப்பே தேவை. அது அரசியல் கலப்பில்லாததாக , தமிழர் வாழும் வெளிநாட்டு அரசுகளுடன் நட்புறவு ரீதியில் தொடர்பு கொண்டு தமிழ்ப்பணி. புரியும் திறமை வாய்ந்ததாக இயங்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் மொழி வளர்ச்சியில் ஈடுபாடு கொண்ட ஒரு அரசு இன்று இருந்தும் இத்துறையில் அது கவனஞ்செலுத்துவதாகத் தெரியவில்லை. பொதுவாக தமிழர் வாழும் பல நாடுகளில் தமிழ் மொழியைக் கற்பிக்க தகுந்த ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது இது போன்ற துர்ப்பாக்கிய நிலைக்கு ஒரு காரணம். இரண்டாவது காரணம் தமிழர் வாழும் நாடுகளில் தமிழும் ஒரு அந்தஸ்துப் பெற்ற மொழியாக அந்தந்த அரசாங்கங்களால் கெளரவிக்கப்படாதமை. இப்படியான
(24)

காரணங்களைத்தேடி ஆராய்ந்து திட்டவட்டமாகச் செயலில் இறங்க உலகத் தமிழர் பாதுகாப்பு மன்றம் மிகவும் அவசியமான தொன்றாகும்.
-பேராசிரியர் க.வித்தியானந்தன் செய்தி 20 o2 1972
f 米 குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் தம்பதிகளை எனது பல்கலைக்கழக நாட்களிலிருந்தே நான் நன்கு அறிந்தவன். தமிழ், தமிழ்மொழி ஆய்வுகளிலும் உலகத்தமிழர் நலன்களிலும் மிகவும் ஈடுபாடு கொண்டு அவர்கள் திரட்டிவரும் ஆவணங்கள் மிகவும் பெறுமதி மிக்கவை. எப்படியேனும் அவை பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியவை. யாழ்ப்பாணத்தில் நடந்த 4 வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டின் போது அவர்கள் மக்கள் பார்வைக்காக வைத்த ஆவணங்கள், உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றன. வண தனிநாயக அடிகளார் அவர்கள் கனகரத்தினம் தம்பதியரின் சேகரிப்புக்களைக் கண்டு மிக மனம் மகிழ்ந்ததோடு, மாநாட்டு ஆரம்ப நிகழ்ச்சியின் போதும் அதனைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். இத்தகைய பணிகளை அரச அமைப்புகள் செய்யும் என நாம் எதிர்பார்க்க முடியாது. உலகத்தமிழர் அனைவருக்குமான இந்த ஆவணக்காப்பகமுயற்சி வெல்க வென வாழ்த்துகிறேன்,
வரலாற்றுப் பேராசிரியர் எஸ் பத்மநாதன்.
பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணிகளைச் சில நேரங்களில் சில தனி மனிதர்கள் செய்கிறார்கள். பல்வேறு துறைகளில் நாம் இந்த நிலையைக் காண்கிறோம். இத்தகைய தனிமனிதர்களைக் காணும் போது வியப்பு ஏற்படுகிறது. இவர்களை உந்தித்தள்ளும் சக்தியாது என்ற திகைப்பு உண்டாகிறது. இவர்களுக்குத் தக்க அங்கீகாரமும் ஆதரவும் உதவியும் கிடைகிறதா என்ற அங்கலாய்ப்பும் எழுகிறது. குரும்பசிட்டியில் 'தமிழகம்' என்ற இல்லத்தில் வாழும் திரு. இரா. கனகரத்தினம் அவர்களைச் சென்று சந்தித்த போது, அவர் ஆற்றி வரும் பணியை நேரடியாகப் பார்த்தபோது மேற்கண்ட உணர்வுகள் தான் ஏற்பட்டன. பொறுமையான-ஆறுதலான - முடிவேயற்ற வேலை. இரவு, பகல் என்று பாராமல் எந்நேரமும் கடுமையாக உழைக்கும் திரு. கனகரத்தினம் தம்பிதிகளின் தணியாத ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அறிவுத் துறை, சமூகவியல், வரலாற்றியல் சார்ந்தவர்களின் பன்முக ஆதரவும் அவருக்குக் கிடைக்க வேண்டும்."
"உதயன் " 11. 05. 1990
*. உலகின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டுக் குடியமர்த்தப்பட்ட தமிழ்த் தொழிலாளர்களின் அன்றையஜலங்கள் இன்றைய நிலை முதலியன 2

Page 15
பற்றி வரலாற்று ரீதியாகவும் விரிவாகவும் இதுவரை ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. எனினும் இவ்வகையிலே தமிழ்த் துரதர் தனிநாயக அடிகளார், உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கப் பொதுச் செயலாளர் குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் முதலியோர், இனப்பற்றுதலினால் உந்தப்பெற்று மேற்கொண்ட பணிகள் பாராட்டத்தக்கவை. திரு இரா. கனகரத்தினம் அவர்கள் உலகத் தமிழர் தொடர்பாக வெளியிட்டுள்ள நுால்கள், கட்டுரைகள் ஆகியவற்றுட் சில வருமாறு:-
(1) அலைகடல்களுக்கு அப்பால் தமிழர் (1973) (2) உலகத்தமிழர்களின் ஐக்கியத்தை நோக்கி (1974) (3) றீயூனியன் தீவில் எங்கள் தமிழர் (1980) (4) மொறிசியஸ் தீவில் எங்கள் தமிழர் (1980) (5) உலகத்தமிழர் ஒருமைப்பாடு - சில நற்கூறுகளும் அணுகு முறைகளும் ( உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் 5 வது ( மதுரை ) மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை (1981)
- கலாநிதி க. அருணாசலம்.
எந்தவொரு தனி மனிதரும் ஏதாவது ஆசாபாசங்களுடன் வாழ்வது இயல்பானது. ஆனால் தமக்கென இலட்சிய நோக்குகளைக் கொண்டிருப்பது பலருக்கு இயல்பாக இருப்பதில்லை. ஒரு சிலரே சமுதாயத்துக்கும் தமக்கும் பயன்தரக்கூடிய இலட்சிய வெறியோடு தமது வாழ்க்கையையும் இணைத்துக் கொள்பவராக விளங்குவர். அவர்களுள் ஒருவரே குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் ஆவார். பிறரின் ஆர்வங்களினின்றும் அவரின் இலட்சிய நோக்குகள் வேறுபட்டனவாகும். உலகத்தமிழர் ஒற்றுமை, தமிழர் வாழும் நாடுகள் எங்கணும் தமிழ் மொழியும் தமிழ்ப் பண்பாடும் செழித்துத் தழைத்தல், தமிழியல் தொடர்பான ஆவணங்களைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததிகளுக்கு அளித்தல் - இவையே இவரது வாழ்வின் உயர் இலட்சியங்கள். இவ்விலட்சியங்கள் அவரது உணர்வோடும் வாழ்க்கை நெறியோடும் இர ண்டறக் கலந்து அவற்றினின்றும் திரு. கனகரத்தினத்தை வேறுபடுத்த இயலாத அளவுக்கு அவரை ஆக்கி விட்டன. குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் என்றதும் உடன் நமது நினைவுக்கு வருவது கண்ணாடி அணிந்த நெடிய தோற்றமுள்ள ஒரு மனிதரல்ல. பதிலாக தமிழ் கூறு நல்லுலகத்தின் ஒய்வொழிவில்லாத ஒரு நடமாடும் ஆவணக்காப்பகத்தின் நினைவுதான் நமது மனதில் தோன்றி மலரும். அத்தகைய தனித்துவச் செயற்பாடுகளைத் தம்மகத்தே இணைத்துக் கொண்ட தமிழ் கூறு நல்லுலகின் தனிமனிதராக அவர் விளங்குகிறார். .
கலாநிதி துரைமனோகரன் (தினகரன் 20 07 - 1994)
(26)


Page 16