கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆரம்பக்கல்வி

Page 1


Page 2


Page 3

PRIMARY EDUCATION
கல்வியியல் கலாநிதி ôf. /5/7. 256awŷflaw5/76f6woulübülowŵaDDawr

Page 4
நூல் ஆசரியர் முகவரி
பதிப்பு பதிப்புரிமை
அளவு
பக்கங்கள்
அச்சகம்
விலை
Title
Authơř
Address
Edition
Copy Right
Size
Pages
Printers
Prize
“ஆரம்பக்கல்வி’ கல்வியியல் கலாநிதி சநா. தணிகாசலம்பிள்ளை
“சுபஸ்தான்”
672, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம், இலங்கை.
இரண்டாம் பதிப்பு, ஒக்டோபர் 2008 ஆசிரியருக்கு
1-8
xvi + 104
கே.வி.எல் பிரிண்டஸ் 146-2/1, காலி வீதி, கொழும்பு-06.
ரூபா.300/=
“AArampakkalvi' (Primary Education)
Dr.S.N. Thanihasalampillai B.A.(Cey), Dip. in Edu., M.A.(Edu.), Diploma in Educational Management,
' Ph.D. in Education (Jaf.)
Visiting Lecturer University of Jaffna, NIE Visiting Scholar Intervention Service - Bowling Green state university
Ohio, USA - 1999
“Supasthan” 672, Kankesanthurai Veethy, Jaffna, Sri Lanka.
First Edition, April 1999
To the Author
1-8
Xνi + 104
K.V.L. Printers l46-2/l, Galle Road, Colombo-06.
RS. 300/=

வட்டுக்கோட்டை பிளவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை எனது ஆரம்பக்கல்வி ஆசிரியரான அமரர் செ. செல்லையா அவர்களுக்கு என் சமர்ப்பணம்.
ஆனாவை அழித்தழித்து மண்ணின் மீது அன்றெழுதிப் படிக்க வைத்த ஆசான் தெய்வம்
பேனாவைப் பிடித்தெழுதிப் பெரியோனாகப்
பேசவைத்த பெருமையவர் புகழின் உச்சம்
நானாக நலங்கள் பல விதைத்த மெய்யன் நன்றியுடன் செல்லையா நாமம் வாழ்த்தி
தேனாமென் “ஆரம்பக் கல்வி நூலை தெய்வமவர்க்கு அர்ப்பணித்தேன் தெளிந்தேன் ஐயா!

Page 5

உள்ளே .
ஆசியுரை
அணிந்துரை
மதிப்புரை
என்னுரை
இரண்டாம் பதிப்பின் முன்னுரை ஆரம்பக்கல்வியெனும் அத்திவாரம் ஆரம்பக் கல்விக் குறிக்கோள்களும், தேர்ச்சிகளும் ஆரம்பக் கல்வி சார்ந்த தேர்ச்சிகள் ஆரம்பக் கல்விக் கலைத்திட்டம் தேசியக் குறிக்கோள்கள்
அடிப்படைத் தேர்ச்சிகள்
ஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் தேர்வும் பயிற்சியும்
ஆரம்பக் கல்விப் பாடசாலைகள்
ஆரம்பக் கல்வி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அதிபர் முகாமைத்துவம்
ஆரம்ப கல்வி பாடசாலை நிர்வாகக் கட்டமைப்பு ஆரம்பக் கல்விப் பாடசாலை வகுப்பறை ஒழுங்குகள்
ஆரம்ப வகுப்பறையும் வளப்பிரயோகமும்
1
5
17
19
22
33
36
40
43

Page 6
பின்னடைவும் மெல்லக்கற்போரும்
குறைபாடுகளை இனம் காணாமை
போக்குவரத்துக் கஷ்டம்
ஆரம்பக்கல்விப் பாடத்திட்ட நடைமுறைகள்
ஆரம்பக் கல்வியும் மாணவர் சமூகமளிக்காமையும்
குழுக்கற்கை
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் சமூகத்தை ஈடுபடுத்தல்
சமூகத்தவர்களது உதவி
ஆரம்பக்கல்வி கற்பிக்கப்படும் பாடசாலைகளில் மேலெழும் பிரச்சினைகள்
ஆசிரியருக்கு கல்வி உளவியல் எவ்வகையில் உதவுகின்றது ஆரம்பப் பிரிவினர்க்குப் பொருத்தமான கற்பித்தல் முறைகள் கல்விச் சிந்தனையாளர்கள் சிலரின் ஆரம்பக் கல்வி பற்றிய கருத்து
வீட்டை அடிப்படையாகக் கொண்ட முன்பிள்ளைப்
பருவ விருத்தி
ஆரம்பக்கல்வியும் தரஉறுதிப்பாடும்
அபிவிருத்தி என்றால் என்ன?
புதிய கல்வி மறுசீரமைப்பின் அடிப்படையில் நவீன கற்றல் கற்பித்தல் முறைமைகள்
ஆரம்பக் கல்வியின் தரத்தை உயர்த்துதல்
46
49
50
51
53
54
55
57
59
64
67
7
80
9
97
99
O2

ஆசியுரை புதிய கல்விச் சீர்திருத்தத் திட்டத்தின்கீழ் செயல் மூலம் கற்றல் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளமையால் ‘ஆரம்பக்கல்வி அபிவிருத்தியானது செயற்றிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு
துறையாக விருத்தியடைந்து வருகின்றது.
ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் கல்விக்கான அடித்தளத்தை எடுத்துக் கொடுப்பது ஆரம்பக் கல்வியே. இந்தத் துறையில் தம்மை அர்ப் பணித்துள்ள ஆசிரியர்களுக்கும் , அதிபர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் பயன்படக்கூடிய நூல்கள் வெளிவர வேண்டும். அந்த வகையில் கலாநிதி சநா. தணிகாசலம்பிள்ளையினால் எழுதப்பட்ட “ஆரம்பக்கல்வி’ நூல், ஆரம்பக்கல்வி நுட்பங்களையும் திறன்களையும்
வெளிக்காட்டும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு-கிழக்கு மகாகாணக் கல்வி அமைச்சில் ஆரம்பக் கல்விக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளராக இருந்த பொழுது அவர் பெற்ற அனுபவமும், பட்டறிவும் இந்நூலை இவ்வளவு தூரம் பயன்படும் வகையில் அமைக்க உதவியிருக்க வேண்டும்.
இது போன்ற கல்வியியல் தொடர்பான பல நூல்கள் மேலும், மேலும் வெளிக்கொணரப்படுவதன் மூலம் “தமிழ் மொழியில் நூல்கள் இல்லை” என்ற வெறுமையை நீக்குவோம்.
காலத்தின் தேவை கருதிச் செயற்பட்ட கலாநிதி ச.நா. தணிகாசலம்பிள்ளையின் முயற்சியை வாழ்த்துகின்றேன்.
கல்வி, பண்பாட்டலுவல்கள், சுந்தரம் டிவகலாலா, விளையாட்டுத்துறை அமைச்சு, செயலாளர்.
வடக்கு, கிழக்கு மாகாணம் திருகோணமலை. 2005, 1998
(ix)

Page 7
அணிந்துரை
‘ஆரம்பக் கல்வியே உயர்கல்விக்கும் உவப்பான வாழ்க்கைக்கும் எம்மை உயர்த்தும் ஏணி’ என்பதனை இன்றைய கல்வியுலகம் உணர்ந்துள்ள நிலையில் ‘ஆரம்பக்கல்வி என்ற மகுடம் தாங்கிய இந்நூல் வெளிவருவது மிகவும் பொருத்தமானதே.
ஆரம்பக்கல்வியின் அவசியம் உணர்ந்த அனைவருக்கும் ஊக்கம்
தரும் ஒரு வழிகாட்டியாக - ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு கையேடாகப் பயன்தரும் சிறப்புடையது.
ஆரம்பக்கல்வியின் பால் நெருங்கிய ஈடுபாடும் அதன் வளர்ச்சியில் நிறைந்த ஆர்வமும் கொண்ட இந்நூலாசிரியர் மதிப்புக்கும், பெருமைக்கும் உரித்துடையவரான கலாநிதி சநா.தணிகாசலம்பிள்ளை அவர்கள் கல்விசார் உயர்பதவிகளில் படிப்படியாக உயர்ந்து கற்றல், கற்பித்தல் வாழ்நிலைகளில் அனுபவம் நிறையப் பெற்றவர்.
ஆரம்பக்கல்வியின் சிறப்புறு தேவை நிலைகளை இனங்கண்டு அதன் வழி கற்பிக்கத் தூண்டும் ஆசிரியர்களின் நெறி தேர்ந்து, ஆராய்ந்து எழுதப்பட்ட இந்நூல் ஆரம்பக்கல்வியை உயர்த்தும் பணியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ள அனைத்துக் கல்விச் செயல் வல்லுநர்க்கும் மிகுந்த பயன்தரும் என்பதில் ஐயமில்லை.
ஆரம்பக்கல்வி ஆசிரியராக, ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகராக, ஆரம்பக்கல்வி உதவிப் பணிப்பாளராக என்னை நானாக்கத் தூண்டிய நிலையில் இந்நூலுக்கு எனது அணிந்துரையைக் கேட்டு நின்ற மனப் பாங்கு ஆரம்பக் கல்வியை அவர் நேசித்த வகையின் வெளிப்பாடாகும்.
நூலின் உள்ளே பரந்து நிறைந்துள்ள யாவையும் ஆரம்பக்கல்விக்கு உரம் சேர்க்கும் வண்ணம் அணிசெய்யப்பட்டு உள்ளமையை இந்நூலை வாசிக்கும் யாவருமே உய்த்துணர்வர். −
மாறிவரும் சமூக அரசியல் மாற்றங்களுக்கு ஏற்புடையதாக கல்வியில் பெருகிவரும் புதிய சிந்தனைகளுக்கு வளம் சேர்க்கும் இந்நூல் வாசகர்களின் செயலூக்கத்திற்கு உறுதிதரும் என்பது நிச்சயமானதாகும்.
செ. மகேசு உதவிக்கல்விப் பணிப்பாளர், ஆரம்பக்கல்வி.
மகாணக் கல்வித் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம், திருகோணமலை. 2005. 1998
(x)

முதிப்புரை
ஆரம்பக் கல்விக் கட்டமைப்பும், கற்பித்தலியலும், வினைத்திறனும் தொடர்பான ஒர் அகல்விரி gdias' lugoiladlu (COMPREHENSIVE) நூலாக இது கலாநிதி சநா.தணிகாசலம்பிள்ளை அவர்களினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதப் பெருமாண்புகளை ஆரம்ப நிலையிலிருந்தே மலரச் செய்யும் நடவடிக்கைகள் முன்பள்ளியிலே ஆரம்பித்து ஆரம்பக் கல்வியில் மலர்ச்சியடையச் செய்யும் செயல் முறையை மனங்கொண்டு இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்விப் பணிப்பாளர்கள் பலர் சிங்கள மொழியிலும், ஆங்கில மொழியிலும், பல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுவரும் இன்றைய காலகட்டத்திலே கல்விசார் தேவைகளை உள்வாங்கி இந்நூலாக்கம் தமிழ் மொழியில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை சமகாலத் தேவையாகவுள்ளது.
ஆரம்பக் கல்விக் கட்டமைப்புத் தொடர்பான பிரச்சினைப் பகுப்பாய்வு, இந்நூலாக்கத்தில் விதந்து குறிப்பிடப்பட வேண்டிய பிரதான பரிமாணமாகவுள்ளது. பிரச்சினைகளை இனங்காணுதல் என்பது தீர்வுகளுக்கான செயலமைப்புக்களையும், காட்டுருக்களையும் அமைப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாகும். பிரச்சினைகள் பற்றிய தெளிவின்றி கற்றல்-கற்பித்தற் கவிநிலையையும், ஆக்க விளைவுகளையும் (EFFECTS) ஏற்படுத்த முடியாது.
நவீன கற்பித்தலியலிலே “கற்றல்” என்ற எண்ணக்கருவுக்கும், “தொடர்பாடல்” (COMMUNICATION) என்ற எண்ணக்கருவுக்குமிடையே பல ஒப்புமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தொடர்பியக் கோவை (ENCODING) கோவைக் குலைப்பு (DECODINE) குறுக்கீடுகளும் தடைகளும், அறிவியல் விளக்கம், முதலாம் எண்ணக்கருக்களை நூலாசிரியர் எளிமையான சொற்கட்டுக்களினால் விளக்கியுள்ளார். கற்பித்தல் சம்பந்தமான தொடரியத்தை (SEQENCE) வடிவமைப்பதற்கு இந்த எண்ணக்கருக்கள் முக்கியமானவையாகும்.
மூளையின் தகவல் நிரற்படுத்தற் தொழிற்பாடு, உருவாக்கற் தொழிற்பாடு, உள்வாங்கும் தொழிற்பாடு, ஒளிரும் தொழிற்பாடு
(xi)

Page 8
முதலியவற்றை விளக்கிக் கற்றல்-கற்பித்தலை ஒழுங்கமைப்பதற்கும், மீள் ஒழுங்கமைப்பதற்கும், மதிப் பீடு, பின்னுாட்டல் முதலியவற்றைச் செய்வதற்கும் ஆசிரியருக்கு உளவியல் அறிவு இன்றியமையாததாகும். உளவியல் அறிவின்றி ஆரம்பக்கல்விக் கற்றலையும், கற்பித்தலையும், சீர்மியத்தையும் முன்னெடுக்க முடியாதென்பதை பயன் கொள் நோக்கிலிருந்து ஆசிரியர் விபரித்துள்ளார்.
சமூக இடைவினைகள், சமூகப்பரிமாற்றம், முதலாம் பரிமாணங்களால் ஆரம்பக் கல்வியை எவ்வாறு வளம்படுத்தலாம் என்பது பற்றிய அபிவிருத்தி முகாமைத்துவ அணுகுமுறையும் நூலாசிரியரினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய நிலையில் எமது ஆரம்பக்கல்வி எதிர்நோக்கும் மீளக் கற்றற் பிரச்சினை, இடைவிலகற் பிரச்சினை, குன்றிய பயன்நுகர்வுப் பிரச்சினை, பிரதிகூலக் குழுவினர் எதிர்கொள்ளும் பிரச்சினை முதலானவற்றுக்குரிய தீர்வாகப் பரிகாரக் கற்பித்தலின் செயற்பாடுகளை ஆழ்ந்து வலிதாக்கும் நடவடிக்கைகள் பற்றிய கருத்துக்களும் இந்நூலிலே முன்வைக்கப் பெற்றுள்ளன.
ஆரம்பக் கல்வி தொடர்பான செயல் அபிவிருத்தி முகாமைத்துவம், உதவுதல் வகை மேற்பார்வை, அறிக்கை, எழுச்சி, இயக்கம், முதலாம் அடைவுகளை உயர்த்துவதற்கான உபாயங்கள் இந்நூலிலே விவரிக்கப் பெற்றுள்ளன. அவற்றுடன் ஆரம்பக்கல்வியின் நோக்கங்களைத் தெளிவுபடுத்துதலும், கோட்பாடுகளைப் பரிசீலித்தலும் தெளிவுற ஆக்கப் பெற்றுள்ளன.
வாழ்க்கை அறிதகவுக் கல்வியை (LIFE COMPETENCY EDUCATION) எமது பள்ளிக் கூடங்களிலே அறிமுகப்படுத்திவரும் இன்றைய காலகட்டத்திலே அந்த எண்ணக்கரு ஆரம்பக் கல்வியிலிருந்தே முகிழ்த்தெழச் செய்யப்படுவதற்கு இத்தகைய நூலாக்கங்கள் இன்றியமையாதனவாகும்.
கல்வித்துறை, கலாநிதி சபா. ஜெயராசா யாழ். பல்கலைக்கழகம்.
25.05. 1998
(xii)

என்னுரை இன்று கல்வியியல் பிரச்சினை பற்றிக் கதைப்பவர்கள் ஆரம்பக்கல்வி முறையாக அமையாததே காரணம் எனக் கண்டு கொண்டார்கள். அதற்குரிய நடவடிக்கையாக ஏனைய கல்வியில் எடுக்கும் செயற்பாடுகளுக்கு மேலாக ஆரம்பக்கல்வி மீது செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்றனர். எங்கள் இலங்கையில் ஆரம்பக் கல்வி மேம்பாட்டுக்கு 1999ம் ஆண்டு முதல் சகல இடங்களிலும் மேம்பாட்டுச்
செயற்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
யான் ஆரம்பக்கல்வியை கற்ற காலம் ஏழ்மை மிகுந்த காலம். வறுமையில் கற்க நிர்ப்பந்தித்த காலம். எனக்கு ஆரம்பக்கல்வியை ஊட்டிய எனது ஆசிரியத் தெய்வம் வட்டுக்கோட்டை பிளவத்தை திரு. செ. செல்லையா உபாத்தியாயர் ஆவார். அவர் ஏற்படுத்திய ஆர்வத்துடன் யான் அதிபராகப் பணியாற்றிய 1977ம் - 82ம் ஆண்டுகளில் பூநகரி மகா வித்தியாலயம், யா/குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் போன்ற பள்ளிக்கூடங்களில் இக் கல்விக்காக வலைப்பின்னலால் அடைத்த அறையையும் கொடுத்து ஆரம்பக்கல்வியை விருத்தியாக்க உதவியவர்கள் திருமதி ச. சதாசிவம், திரு. பொன் தில்லைநாதன், திருமதி அழகம்மா, திரு. சிவஞானம் போன்றோர் ஆவர். அவர்களது ஊக்குவிப்பும், கிளிநொச்சி, பரந்தன் கல்வி வட்டாரங்களிலும், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் வடக்கு-கிழக்கு மகாணக் கல்வி அமைச்சிற்கு உட்பட எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பக்கல்வி விருத்திக்குப் பொறுப்பாக இருந்த காலம் ஆரம்பக்கல்வி பற்றிச் சிந்தித்து அதற்கென நூலுருவாக்க வேண்டுமெனத் தூண்டியது. எனது செயற்பாட்டுக்கு களம் அமைத்துத் தந்தவர் வடக்கு-கிழக்கு மகாணக் கல்விச் செயலாளர் திரு. சுந்தரம் டிவகலாலா அவர்கள்.
(xiii)

Page 9
இத்துறைச் செயற்பாட்டிற்கு உதவியாக அமைந்தவர்கள் திரு. எஸ். மகேசு (ஆரம்பக்கல்விப் பணிப்பாளர்) அவர்களும் திருமதி பத்மினி ஜெயசுந்தரம் (ஆரம்பக்கல்வி பாட இணைப்பாளார்) அவர்களுமாவர். இவர்களுடன் எனது ஆரம்பக்கல்வி சம்பந்தமான கருத்துக்களை செம்மைபார்த்து உதவியவர் வடக்கு-கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சைச் சேர்ந்த உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ந. அனந்தராஜ் அவர்கள். இவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
இந்நூல் சிறு நூலாக உங்கள் கைகளில் உள்ளது. குறிப்பாக ஆரம்பக்கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மேற்பார்வை செய்பவர்களுக்கும் உதவக்கூடிய வகையில் ஆக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கல்வி எதிர்நோக்கும் இடர்ப்பாடுகள், அவற்றின் புதிய அணுகுமுறைகள், அவற்றின் மேம்பாட்டுக்கான ஆலோசனைகள் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவக்கூடியவையாகும்.
*சுபஸ்தான்’ 672, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். 02 I-222-2536
O7-02-1999 கலாநிதி ச.நா. தணிகாசலம்பிள்ளை
கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம்.
(xiv)

இரண்டாம் பதிப்பின் முன்னுரை
ஆரம்பக் கல்வியென்னும் இந்நூல் 1999ம் அண்டு முதற் பதிப்பாக 4000ம் பிரதிகள் அச்சிடப்பட்டன. ஆசிரியர்களுக்குப் பயன்படும் வகையில் அவ் வருடமே பதிப்பிக்கப்பட்ட அனைத்துப் பிரதிகளும் ஆசிரியர்களைச் சென்றடைந்தன. இன்றைய ஆரம்பக் கல்வித் தேவையை நிறைவாக்கத் தகுந்த கல்வி பற்றிய நூல்கள் தமிழில் அதிகமின்மை காரணமாக அதன் தேவையை உணர்ந்து ஆரம்பக்கல்வி நூல்கள் வெளிவரவேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன். இடைப்பட்ட காலத்தில் கல்வியியற் கல்லூரி மாணவர்களும் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி மாணவர்களும் இந்நூல் மறுபதிப்பு செய்யப்படவேண்டும் என்றும் நவீன எண்ணக்கருக்களை தாங்கியதாக வெளிவரவேண்டுமென்றும் வேண்டினர்.
அதனை நிறைவு செய்யும் நோக்குடன் இவ்விரண்டாம் பதிப்பு பத்து வருடங்களின் பின்பு வெளிவருகிறது. முன்னைய நிலையைவிட தற்கால நிலையை உணர்த்தவும் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கு மாணவர்களைத் தூண்டும் வகையில் ஆசிரியர்கள் தமது கற்பிக்கும் பணியைத் தொடர உதவுதல் இதன் நோக்கமாகும். இவற்றைக் கருத்திற்கொண்டே புதிய வடிவில் ஆங்காங்கே வர்ணப் படங்களுடன் இந்நூலைப் புதுப்பித்து வெளியிடுகின்றேன். இதற்கு உதவியவர்களான முன்னாள் ஆரம்பக்கல்வி உதவிப்பணிப்பாளரும் இந்நாள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அடிப்படைக் கல்வித்துறை அலகில் (GTZ BESU) ஆரம்பக்கல்விப் பாட நிபுணராகப் பணிதொடர்பவருமான திரு. செ. மகேசு அவர்களுக்கும், நூல் உருவை மாற்றக் கருத்தாலோசனை வழங்கியவரும் முன்னைநாள் அதிபரும் தற்பொழுது வடக்கு மாகாணக்கல்வி உதவிப்பணிப்பாளருமான திரு. ந. அனந்தராஜா அவர்களுக்கும் இந்நூலை புதுப்பித்துப் பதிப்பிக்கச் சிறப்பான வகையில் திருத்தியமைத்துத் தந்த கொழும்பு இராமநாதன் இந்துமகளிர் கல்லூரி ஆசிரியை திருமதி தர்சினி ஜயந்திரன் (B.A.Hons.) அவர்களுக்கும் அழகுற அச்சுப்பதித்த “கே.வி.எல் பிரிண்டஸ்" இனருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நூலைப் பயன்படுத்தும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் இந்நூல் மேலும் ஆக்கம் பெறத் தங்கள் கருத்தை எனக்கு முன்வைத்துதவுவார்கள்
என நம்புகின்றேன்.
கலாநிதி ச. நா. தணிகாசலம்பிள்ளை கல்வி முதுநிலை ஆலோசகர் 33-601, உருத்திராமாவத்தை, கல்வி அமைச்சு
வள்ளவத்தை. இசுறுபாய, இலங்கை. தொ.பே; 236103
25.07.2008
(xv)

Page 10
ஆரம்பக்கல்வி

ஆரம்பக்கல்வியெனும் அத்திவாரம்
ஆரம்பக் கல்வி என்னும் பதம் குறிப்பது யாதெனில், ஐந்து வயது பூர்த்தியடைந்த பிள்ளைகள் தரம்(ஆண்டு) ஒன்று தொடக்கம் தரம்(ஆண்டு) ஐந்து வரை பாடசாலையில் பெற்றுக் கொள்கின்ற கல்வியாகும். குழந்தையின் மனதில் கல்வி பற்றிய கவிவு (முதற்பதிவு) ஆரம்பக்கல்வி வகுப்புக்களிலேயே ஊட்டப்படுகின்றது. "இளமையிற்கல்வி சிலையில் எழுத்து” என்று ஒளவைப் பிராட்டியார் வலியுறுத்தி-யுள்ளார். குழந்தையின் மனதில் இளமையில் படிக்கின்ற விடயங்கள் நன்கு பதிந்து விடும். “எண்ணும் எழுத்தும் கண்ணெணத்தகும்” என்பதற்கிணங்க ஆரம்பகல்வி அமைதல் வேண்டும். குழந்தையின் இரண்டு கண்களாக எண்ணும் எழுத்தும் உள்ளன. எனவே இவற்றில் திறனும் ஆற்றலும் விருத்தியுற ஆரம்பக்கல்வி அவசியமான தொன்றாகும்.
குழந்தைகளின் சூழல் நிலைமைகளும், உடல் வளர்ச்சி, உள வளர்ச்சி, மனப்பாங்கு வளர்ச்சி என்பனவும் ஆரம்பக்கல்வி விருத்தியில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். இந்த வகையில் குழந்தையின் பெற்றோர்களாலும், பாதுகாவலர்களாலும் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படும் ஆரம்பக்கல்வி அதற்குப் பொருத்தமான கல்வி நிறுவனங்களின் மூலம் ஊட்டப்படுதல் வேண்டும். தாய், தந்தையர் தமது குழந்தைகளுக்குச் செய்யும் தலையாய பணி ஆரம்பக்கல்வியை ஒழுங்குற ஊட்டும் நல்லாசிரியர்களிடம் பிள்ளைகளை ஒப்படைத்தலாகும்.
பிள்ளையின் உரிமைகள் பாதுகாக்கப்படுதலும் அவர்-களின் தேவைகள் நிறைவு செய்யப்படுதலும் அவசிய-மாகும். ஆரம்பக் கல்விப்பருவத்தில் அவர்கள் பெறும் கல்வி இலவசமாக வழங்கப்படுதலும் வேண்டும். இவை பிள்ளை-களின் உரிமைகள் பற்றிய சாசனத்தில் வலியுறுத்தப்படும் விடயங்களாகும்.
ஆரம்பக் கல்வியானது குறித்த ஒரு வயதெல்லைக்குள் குறித்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் வழங்கப்படுகிறதெனினும் அக்காலப் பரப்பினுள் உள்ள-டக்கப்பட வேண்டிய கற்றல் கற்பித்தல் ஒழுங்கில் பிள்ளைகள் அடைய வேண்டும் என எதிர்பார்க்கப்படும் தேர்ச்சிகளை அடைவதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்படுதல் வேண்டும்.
ஆரம்பக் கல்விப் பாடத்திட்டமொன்றில் ஆரம்பக் கல்வியின் குறிக்கோள்களும் அதன் வழி பெறப்படும் தேர்ச்சிகளும் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றைப் பிள்ளைகள் பெறவேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஆரம்பக் கல்விப் பாடசாலைகளில் ஆரம்பக்கல்வி கற்பிக்கப்படுகின்றது.
(ச நா. தணிகாசலம்பிள்ளை - 1 - ஆரம்பக்கல்வி)

Page 11
அவ்வாறு கற்பிக்கப்படும் ஆரம்பக் கல்விப் பாடத்திட்டக் குறிக்கோள்களையும் தேர்ச்சிகளையும் பின்வரும் வகையில் தேர்ந்து குறிப்பிட்டுள்ளனர். ஆரம்பக் கல்விக் குறிக்கோள்களும், தேர்ச்சிகளும்
ஆரம்பக் கல்வியின் பொதுவான குறிக்கோள்கள் 1985ம் ஆண்டுப் பாடத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 1) அன்றாடக் கருமங்களுக்குத் தேவையான எழுத்து, வாசிப்பு, கருத்து
வெளிப்பாடு என்பன தொடர்பான திறன்களில் விருத்தி பெறுதல். 2) கொடுக்கல், வாங்கல் அன்றாட வாழ்க்கைத் தேவைகள் என்பனவற்றுக்கு அவசியமான கணிதஞ்சார் எண்ணக்கருக்கள் சார்ந்த திறமைகளில் வளர்ச்சியடைதல். 3) உறுதியான வாழ்க்கைக்கு அவசியமான அடிப்படைச் சுகாதார
அறிவினையும் பழக்கங்களையும் கைக்கொள்ளுதல் 4) பண்டங்களுடனான செயற்பாடுகள் முறைசார் அவதானங்கள், விஞ்ஞானபூர்வமான சிந்தனை, தம் சுற்றாடல் பற்றிய விளக்கம் என்பனவற்றுக்கு அவசியமான திறன்களைப் பெற வழிவகுக்கும் ஓர் அடித்தளம் இடப்படல். 5) பேச்சு அல்லாத சாதனங்கள் வாயிலாகச் சுதந்திரமாகவும், ஆக்கபூர்வ மாகவும் ஆய்வு ரீதியாகத் தம் கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளியிடுவதற்கான திறனைப் பெறல். 6) விஞ்ஞான பூர்வமான சிந்தனையையும் ஆக்கத் திறன்களையும் பெறல் 7) எதிர்காலக் கற்றல் செயற்பாடுகளுக்கு அவசியமான அடிப்படைப் பயிற்சியைக் கற்றுக் கொள்ளுதல். அத்தோடு திறமைகளும் ஈடுபாடுகளும் விருத்தியடைதல். 8) பெளதிக, சமூக, கலாசார சுற்றாடல் பற்றிய இலகுவான அறிவினைப்
பெறுதல். அவற்றை மதிக்கவும் பேணவும் தூண்டப்படுதல். 9) ஒத்துழைப்பு, விட்டுக்கொடுத்தல், துணிவு, பொதுச் சொத்துக்களைப் பேணல், சட்டத்துக்குப்பணிதல் போன்ற பண்புகளைப் படிப்படியாகத் தம்வாழ்வில் பயின்று கொள்ளுதல். 10) தேசிய ஒருமைப்பாடு, நாட்டுப்பற்று என்பன சார்ந்த நல்ல மனப்பாங்குகள்
விருத்தியுற வித்திடப்படல்.
ஆரம்பக் கல்விக்காக ஒரு புதிய பாடத்திட்டம் 1993ம் ஆண்டில் சமர்ப்பிக்கப் பட்டது. இப் புதிய பாடத்திட்டம் 1972ல் சமர்ப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாடங்களாலான கற்பித்தலை அடிப்படையாகக் கொண்டே அமைந்தது.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 2 - ஆரம்பக்கல்வி)

1993ம் ஆண்டில் இப் புதிய பாடத்திட்டம் தரம் (ஆண்டு) 1ல் அறிமுகஞ் செய்யப்பட்டது. 1994ல் ஆண்டு தரம் 2க்கும் 1996ல் ஆண்டு தரம் 4க்கும் இப்புதிய பாடத்திட்டம் அறிமுகஞ் செய்யப்பட்டது.
புதிய பாடத்திட்டம் வாயிலாக ஆரம்பக் கல்வி தொடர்பான தேர்ச்சிகள் இனங் காணப்பட்டுள்ளன. எழுத்து, வாசிப்பு, திடகாத்திரமான வாழ்வு, தொழில் நுட்பத்தைச் சார்ந்த தொழிற்பயிற்சி, வரலாற்றோடு இணைந்த உரிமைகள் தொடர்பான அறிவு, சமய ஈடுபாடு, நற்பண்பு, சுற்றாடல் பற்றிய விளக்கம், பிள்ளைகளின் அக்கறைகள், போஷாக்கு, தேசிய ஒருமைப்பாடு, விழுமியங்களின் வளர்ச்சி என்பன தொடர்பான சுருக்கமான ஓர் அறிமுகம் பின்வருமாறு இடம் பெறுகிறது.
ஆரம்பக் கல்வி சார்ந்த தேர்ச்சிகள்
ஆரம்பப் பாடசாலைப் பராயத்தில் மாணவர்கள் தாம் சுவீகரித்துக் கொள்ள வேண்டிய திறன்கள், உணர்வுகள், மனவெழுச்சிகள் என்பன சார்ந்த தேர்ச்சிகள் பின்வருமாறு அறியப்பட்டுள்ளன.
01. பேச்சு எழுத்து
சரளமாகக் கருத்துக்களைப்பரிமாறிக் கொள்ளல், வாசிப்பு, எழுத்து என்பவற்றுடன் எளிதான எண்களைக் கணித்தல் தொடர்பான திறன்களைப் பெற்றுக் கொள்ளல். தாய்மொழி தவிர நாட்டில் வழக்கில் உள்ள ஏனய மொழிகளின் எழுத்துக்களை இனங்காணும் திறமையைப் பெறுதல்.
02. திடகாத்திரமான வாழ்வு
உடல், உள, சமூகச் சுகநலனுக்கு அடிப்படையான பழக்கங்களையும் மனப்பாங்குகளையும் சிறு பராயந்தொட்டே வளர்த்துக் கொள்ளல். தனிப்பட்ட சுயமான சுற்றாடற் சுகாதாரத்துக்கும் அத்துடன் உகந்த அத்தகைய நடத்தைக் கோலங்களைக் கொண்ட வாழ்க்கையை நடத்திச் செல்வதற்காக ஏனையோரையும் வழிப்படுத்துதல்.
03. தொழில்நுட்பத்தைச் சார்ந்த தொழிற்பயிற்சி
எதிர்கால வாழ்வில் பிரவேசிப்பதற்கு அவசியமான திறன்கள் விருத்தி செய்யப்படல்,"புதிய தொழில்நுடபத்தை மதித்தல். இயன்றவரை அதனைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பளித்தல் ஆகியவற்றின் வாயிலாக தொழிலின் கெளரவத்தையும் உழைப்புச் சக்தியையும் பற்றிய விளக்கத்தைப் பெறல்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 3 - ஆரம்பக்கல்வி)

Page 12
04. வரலாற்றோடு இணைந்த அறிவைப் பெறல்
நாட்டின் உரிமைகளையும் தனித்துவத்தையும் இனங்-கண்டு கொள்ளல், அவ்வுரிமைகளைக் கட்டியெழுப்பிய தேசிய வீரர்களைப் பற்றிய விளக்கத்தைப் பெறல். அவ்வுரிமைகளை மதித்தல்
05. சமயத்தில் ஈடுபாடு கொள்ளலும் நற்பண்புகளைக் கடைப் பிடித்தலும் சமய வழிபாட்டு முறைகளைப் பயின்று கொள்ளல். தமது சமயத்தின் மீது ஈடுபாடு கொள்ளுதலும் ஏனைய சமயங்களை மதித்தலும். ஒரு நற்பிரசையாய் மிளிர வேண்டிய நற்பண்புகளை விருத்திசெய்தல், சமயஞ்சார்ந்த ஆசாரங்கள் பற்றிய நடை முறையான பயிற்சியைப் பெறல்.
06. சுற்றாடல் பற்றிய விளக்கம்
இயற்கையின் கொடைகளையும் மனிதனின் ஆக்கங்-களையும் வாழும் சுற்றாடலையும் பற்றிய அடிப்படை விளக்கத்தைப் பெறல். அதனூடாக விஞ்ஞான பூர்வமாகச் சிந்திக்க வழிப்படுத்தப்படல். இயற்கை வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற மனப்பாங்கை விருத்தி செய்து கொள்ளல்.
07. பிள்ளைகளின் ஈடுபாடுகளை வளர்க்க ஆவன செய்தல்
ஓய்வு நேரத்தை அர்த்தமுள்ளதாகவும் பயனுறுதியாகவும் செலவிடுவதைப்
போலவே இரசனையையும் விருத்தி செய்வதற்காகக் கவின் கலைச்
செயற்பாடுகள் மேம்படப் பாடசாலையை ஒரு விருப்பமான இடமாக அமைத்தல்
08. தேசிய ஒருமைப்பாடு
தேசிய தனித்துவத்தைக் காத்துக் கொண்டு பல்வேறு மதங்களைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளைப் பேசும் ஏனைய மக்களோடு ஒன்றி வாழுதல்.
09. விழுமிய வளர்ச்சி
கண்ணுக்குப் புலனாகும் ஏனைய புலனாகாத சுற்றாடல் மீது அன்பும், பரிவும் கொண்ட வாழ்க்கைக்குத் தம்மைப் பழக்கிக் கொள்ளல். பரஸ்பரம் அமைதியான வாழ்க்கையை உடைய ஒரு சமூகத்துக்காகத் தம்மைப் பழக்கிக் கொள்ளல்.
இத்தகைய உயரிய நோக்கங்களை உள்ளடக்கிய ஆரம்பக் கல்விப் பாடத்திட்டத்தின் அமுலாக்கமே ஆரம்பக் கல்வி எனலாம். பிள்ளைகளிடத்தில் இவை தொடர்பில் ஏற்படும் கற்றல் விருத்தியே ஆரம்பக்கல்விப் பரப்பின் சிறப்பை வெளிக்காட்டி நிற்கின்றது.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 4 - ஆரம்பக்கல்வி)

ஆரம்பக் கல்விக் கலைத்திட்டம்
ஆரம்பக் கல்விக் கலைத்திட்டம் தேசிய கல்விக் கொள்கைகளுக்கு அமைவாகவே தயாரிக்கப்படுகிறது.
தேசிய கல்வி நிறுவகத்தினால் ஆரம்பக்கல்வி தொடர்பிலான ஆய்வுகளும் வெளிநாடுகளின் கல்விக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஆரம்பக்கல்விப் பாடவிதானங்கள் தொடர்பிலான ஆய்வுகளும் * இலங்கையில் வாழும் பெரியார்களினதும், ஆரம்பக்கல்வி ஆய்வாளர் களினதும் கல்வியியலாளர்களினதும் ஆரம்பக் கல்வி தொடர்பிலான கருத்துக்களும் விதப்புரைகளும் * ஆரம்பக்கல்வியில் ஈடுபாடு கொண்டுழைக்கும் ஆசிரியர்களினதும் கருத்துக்களும் விசேட கவனத்தில் எடுக்கப்பட்டே ஆரம்பக்கல்விக் கலைத்திட்டம் உருவாக்கம் பெறுகின்றது.
தாய்மொழி, கணிதம், சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள், சமயம் சார்ந்த ஒழுக்கங்கள், என்பன குறித்து ஆரம்பக் கல்விச் சிறார்கள் விசேட கவனம் செலுத்திக் கற்க வேண்டும். என்ற நோக்கில் பாடத்திட்டத்தில் இப்பாடத் துறைகள் உள்ளடக்கப்படுகின்றன. அத்துடன், வாய்மொழி, ஆங்கிலமும், வாய்மொழி சிங்களமும், சிறுவர்களின் கற்றல் செயற்பாடுகளில் இடம்பெற வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இவை யாவும் கற்றல் கற்பித்தல் செயலொழுங்கில் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் விசேட கவனம் செலுத்தி ஆரம்பக்கல்விக் கலைத்திட்டம் உருவாக்கப்பட்டுப் பாடசாலைகளினூடாகச் செயற்படுத்தப்படுகின்றன.
தேசிய கல்விக் குறிக்கோள்கள் பற்றிய அறிவு, அவை ஆரம்பக் கல்விக் கலைத்திட்டத்தின் ஆக்கத்தால் பாடத்திட்டத்தினுள் வியாபித்துள்ளமை, கல்விக் குறிக்கோள்கள், தேசிய குறிக்கோள்களை நிறைவு செய்யும் வகையில் சிறுவர்களின் ஊடாக வெளிக் கொணரப்பட வேண்டும் என எதிர்பார்க்கப் படுகின்றது. V−
எனவே தேசிய குறிக்கோள்கள் பற்றிய அறிவு அவை ஆரம்பக்கல்விக் கலைத்திட்டத்தினுள் செறிந்துள்ள வகை சார்ந்த தெளிவு என்பன கலைத்திட்டம் உருவாக்கம் பெறும் நிலையில் உணரப்படுகின்றன.
எமது கல்விக் கொள்கைக்குள் கவனத்தில் கொள்ளப்படுகின்ற தேசிய கல்விக் குறிக்கோள்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை ー5 - ஆரம்பக்கல்வி)

Page 13
தேசியக் குறிக்கோள்கள்
தேசிய கல்வி முறைமையானது தனிநபருக்கும் சமூகத்துக்கும்
பொருத்தமான பெரும்பாலான தேசிய இலக்குகளை அடைவதற்கும்
தனிநபர்களுக்கும் குழுவினர்களுக்கும் உதவி செய்தல் வேண்டும்.
கடந்த காலங்களில் இலங்கையின் பெரும்பாலான கல்வி அறிக்கைகளும் ஆவணங்களும் தனிநபர் தேவைகளையும் தேசிய தேவைகளையும் நிறைவு செய்வதற்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளன. சமகால கல்வி அமைப்புகளிலும் செயன்முறைகளிலும் வெளிப்படையாகக் காணப்படும் பலவீனங்கள் காரணமாக நிலைபேறுடைய மனித விருத்தியின் எண்ணக்கரு திட்ட வரம்பினுள் கல்வியினுடாக அடையக்கூடிய பின்வரும் இலக்குத் தொகுதியினை தேசிய கல்வி ஆணைக்குழு இனங்கண்டுள்ளது.
(1) தேசிய பிணைப்பினையும் தேசிய முழுமைப் பாட்டினையும் தேசிய
ஒருமைப்பாட்டினையும் எய்துதல். (i) வியாபகப் பாங்குடைய சமூக நீதியை நிலை நிறுத்தல் (i) ஒம்பக் கூடியதொரு வாழ்க்கைப் பாணி ஓம்பக் கூடிய வாழ்க்கைப்பாங்கு என்பதனைச் சிறக்கச் செய்தல். இட்து 2000ஆம் ஆண்டுக்கும் அதற்கு அப்பாலும் உயிர் நிலையாய் விளங்கக் கூடியது. அக்காலம் மனித வர்க்கத்தின் வரலாற்றில் முதன்முதலாக வளியும் நீருந்தானுங் கிடைக்கும் என்று கொள்ள முடியாத காலம். (iv) மகிமை மிக்க, திருப்தியளிக்கக் கூடிய, சுயதிருப்தியளிக்கக்கூடிய வேலை
வாய்ப்புக்களை உருவாக்குதல். (v) மேலே குறிப்பிட்ட பணிச் சட்டத்திலே, நாட்டு வளர்ச்சியின் அமைப் பொழுங்கிற் கூட்டுவிளைவு உண்டாவதற்கு வழி செய்யுமுகமாக மனிதவள விருத்தியில் யாவரும் பங்கு கொள்வதற்காக பல்வேறு வாய்ப்புக்களை ஏற்படுத்தல். (wi) நாட்டு மேம்பாட்டிற்கான முயற்சிகளில் விறுவிறுப்பாக பங்கு கொள்ளலானது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கின்ற ஆழ்ந்த, இடையறாத அக்கறை-யுணர்வு தொடர்ந்து பேணப்படுதலை உறுதி செய்தல் வேண்டும். (vi) இன்று நாம் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போன்றதொரு விரைவாக மாறிவரும் உலகில் மாறுகின்ற நிலைமைகளுக்கு இணங்கி வாழக்கற்றல் மாற்றத்துக்கு இணக்கஞ் செய்கின்ற காரணிகளைச் சிறப்பாக்கலும் வளர்த்தலும் இன்றியமையாதவை. ஒருவர் தமக்கும்
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 6 - ஆரம்பக்கல்வி)

பிறருக்கும் நலனளிக்கும் வகையில் மாற்றத்தை நெறிப்படுத்துந் தகைமைகளையும் மேற் கூறிய கற்றலுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். (vii) காப்பு உணர்வையும் உறுதிப்பாட்டு உணர்வையும் எய்தும் வகையில் சிக்கலானதும் எதிர்பாராததுமான நிலைமைகளை சமாளிக்கும் தகைமையை வளர்த்தல். (ix) சருவதேச சமூகத்தில் கெளரவமானதோர் இடத்தைப் பெறக்கூடியதாக
இந்தத் தகைமைகளை விருத்தி செய்தல்.
மேற்கூறப்பட்ட தேசிய குறிக்கோள்களை பெற்றுக் கொள்ளவதற்கான மிகவும் அவசியமான தேர்ச்சிகளைச் சிறுவர்களிடத்தே உருப்பெறச் செய்தவற்கு அடிப்படையான அடித்தளம் இடப்படுவது அவசியமாகின்றது. அத்துடன் மீளமைக்கப்பட்ட பின்வரும் இலக்குத் தொகுதிகளையும் தேசிய ஆணைக்குழு முன்வைத்தள்ளது.
(i) மனித கெளரவத்தைக் கண்ணியப்படுத்தல் எனும் எண்ணக்கருவுக்குள் தேசியப் பிணைப்பு, தேசிய முழுமை, தேசிய ஒற்றுமை, இணக்கம், சமாதானம் என்பவற்றை மேம்படுத்தல் மூலமும் தேசத்தைக் கட்டி எழுப்புதலும் இலங்கையர் எனும் அடையாளத்தை ஏற்படுத்தலும். (i) மாற்றமுறும் உலகத்தின் சவால்களுக்குத் தக்கவாறு முகங்கொடுத்த லோடு தேசிய பாரம்பரியத்தின் அதி சிறந்த அம்சங்களை அங்கீகரித் தலும் பேணுதலும். (i) மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், கடமைகள், கட்டுப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு, ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள ஆழ்ந்த, இடையறாத அக்கறையுணர்வு என்பவற்றை மேம்படுத்தும் சமூக நீதியும் ஜனநாயக வாழ்க்கைமுறை நியமங்களும் உள்ளடங்கிய சுற்றாடலை உருவாக்குதலும் ஆதரித்தலும். (iv) ஒருவரது உள, உடல் நலனையும் மனித விழுமியங்களுக்கு மதிப்பளிப்பதை அடிப்படையாகக் கொண்ட நிலைபேறுடைய வாழ்க்கைக் கோலத்தையும் மேம்படுத்தல். (V) நன்கு ஒன்றிணைக்கப்பட்ட சமநிலை ஆளுமைக்குரிய ஆக்க சிந்தனை, தற்றுணிபு, ஆய்ந்து சிந்தித்தல், பொறுப்பு, வகைகூறல் மற்றும் உடன்பாடான அம்சங்களை விருத்தி செய்தல். (vi) தனிநபரதும் தேசத்தினதும் வாழ்க்கைத் தரத்தைப் போஷிக்கக் கூடியதும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிக்கக்கூடிய
(ச. நா. தணிகாசலம்பிள்ளை -- 7 سه ஆரம்பக்கல்வி)

Page 14
துமான ஆக்கப் பணிகளுக்கான கல்வியூட்டுவதன் மூலம் மனித வள அபிவிருத்தி. М
(vi) தனிநபர்களின் மாற்றத்திற்கு ஏற்ப இணங்கி வாழவும், மாற்றத்தை முகாமை செய்யவும் தயார்ப்படுத்தவும் விரைவாக மாறிவரும் உலகில் சிக்கலானதும், எதிர்பாராததுமான நிலைமைகளைச் சமாளிக்கும் தகைமையை விருத்தி செய்தல்.
(wi) நிதி, சமத்துவம், பரஸ்பர மரியாதை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச சமுதாயத்தில் கெளரவமானதோர் இடத்தைப் பெறுவதற்குப் பங்களிக்கக் கூடிய மனப்பாங்குகளையும் திறன்களையும் வளர்த்தல்.
அத்தகைய அடித்தளத்தை அமைப்பதற்கு அல்லது சிறுவர்களிடத்தில் தோற்றுவிப்பதற்குத் தகைமைத் தொகுதி-களின் மேம்பாடு அவசியமாகின்றது. அவை அடிப்படைத் தேர்ச்சிகள் என இனங்காணப்பட்டுள்ளன. ஆரம்பக் கல்விக் கலைத்திட்டத்தில் செறிந்துள்ள அவ்வடிப்படைத் தேர்ச்சிகள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளன. அடிப்படைத் தேர்ச்சிகள் A. தொடர்பாடல் தேர்ச்சிகள்:-
இத்தேர்ச்சிகள் நான்கு துணைத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டவை. எழுத்தறிவு, எண்ணறிவு, சித்திரவறிவு, தகவல் தொழில் நுட்பத் தகைமை என்பன அதனுள் அடங்குகின்றன.
எழுத்தறிவு என்பது- கவனமாகச் செவிமடுத்தல், தெளிவாகப் பேசுதல், கருத்தறிய வாசித்தல், தெளிவாகவும் செம்மையாவும் எழுதுதல் என்பவற்றை அடக்குகின்றது.
எண்ணறிவு என்பது :- பொருள், இடம், காலம் என்பவற்றுக்கு எண்களைப் பயன்படுத்தல், எண்ணல், கணித்தல், ஒழுங்கு முறையாக அளத்தல் என்பவற்றை அடக்குகின்றது.
சித்திரவறிவு என்பது:- கோடு உருவம் என்பவற்றின் கருத்தை அறிதல், விபரங்கள் அறிவுறுத்தல்கள் எண்ணங்கள் ஆகியவற்றைக் கோடு, உருவம், வருணம் என்பவற்றால் வெளிப்படுத்தலும், பதிவு செய்தலும் ஆகியவற்றை அடக்குகின்றது.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 8- ஆரம்பக்கல்வி)

தகவல் தொழில் நுட்பத் தகைமை என்பது: கணினி அறிவு, கற்றலில், தொழிலில், சுற்றாடலில், சொந்த வாழ்வில் தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்.
8. ஆளுமை விருத்தி தொடர்பான தேர்ச்சிகள்:-
ஆக்கம், விரிந்த சிந்தனை தற்றுணிபு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினையை விடுவித்தல், நுணுக்கமான பகுப்பாய்வுச் சிந்தனை, அணியினராகப் பணி செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள், கண்டுபிடித்தலும், கண்டறிதலும் முதலான திறமைகள்.
நேர்மை, சகிப்புத் தன்மை, மனித கெளரவத்தைக் கண்ணியப்படுத்துதல் ஆகிய விழுமியங்கள் மனளழுச்சிகள், நுண்ணறிவு, என்பன.
C. சூழல் தொடர்பான தேர்ச்சிகள்
இத் தேர்ச்சிகள் சூழலுடன் தொடர்பானவை, அவையாவன: சமூகச்சூழல், உயிரியற் சூழல், பெளதீகச் சூழல் என்பன.
சமூகச் சூழல்:- சமூக அங்கத்தவர்கள் பற்றிய விழிப்புணர்வும், நுண்ணுணர்வும் திறன்களும், நீதி சமூகத் தொடர்புகள், தனிநபர் நடத்தைகள், பொதுவானதும் சட்ட பூர்வமானதுமான சம்பிரதாயங்கள், உரிமைகள் பொறுப்புக்கள், கடமைகள், கடமையுணர்ச்சிகள் என்பன.
உயிரியற் சூழல்:- வாழும் உலகு, மனிதன், உயிரியற் தொகுதி என்பவை பற்றிய விழிப்புணர்வும் நுண்ணுணர்வும் திறன்களும் மரங்கள், காடு, கடல், நீர், வளி, உயிரினம், தாவரம், விலங்கு, மனிதர் என்பன.
பெளதிகச் சூழல்:- இடம், சக்தி, எரிபொருள், சடப்பொருள் என்பவை பற்றிய விழிப்புணர்வும் நுண்ணுணர்வுத் திறன்களும் பொருள்களும். அவை மனித வாழ்க்கை, உணவு, உடை, வதிவிடம், சுகாதார வசதி, சுவாசம், இளைப்பாறுதல், ஓய்வு, என்பவற்றுடன் கொண்டுள்ள தொடர்புகளும் வாழ்வதற்கும் கற்றலுக்கும் பொருள்களை ஒருப்படுத்துவதற்கும் செய்வதற்கும் கருவிகளைப் பயன்படுத்தும் திறன்களும் இப்பிரிவில் அடங்கும்.
D. வேலை உலகிற்குத் தயார் செய்தல் தொடர்பான தேர்ச்சிகள்
சக்தியை உச்ச நிலைக்குக் கொண்டு வருவதற்கும் ஆற்றல்களை போசிப்பதற்கும் வேண்டிய தொழில்சார் திறன்கள் பொருளாதார விருத்திக்குப் பங்களித்தல்.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 9- ஆரம்பக்கல்வி)

Page 15
கற்பிக்கும் ஆசிரியருக்கும் அவசியமென்பது உணரப்படுகின்றது. ஆடல், பாடல், விளையாட்டு, நடிப்பு என்பவற்றோடு ஆக்கத்திறன்களை வெளிப்படுத்தும் செயற்பாடுகளும் அவசியமாகும். இத்தகைய ஆரம்பக்கல்வி கற்பிக்கும் ஆசிரியரையே ஆரம்பக் கல்விச் சிறார்கள் விரும்புகின்றனர். அவர்களிடத் திலேயே கற்பதற்கும் தமது ஆற்றல்களை வெளிக்காட்டுவதற்கும் முன் வருகின்றனர். எனவே ஆரம்பக்கல்வி ஆசிரியர் ஒரு முழுமையான கல்விச் சிறப்பினுள் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். நல்லொழுக்கமும், சுகாதாரப் பழக்க வழக்கங்களும் அவரிடத்தில் காணப்படுதல் அவசியமாகும்.
ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் ஆரம்பக் கல்வி ஆசிரியர் எனப்படுகிறார். அவர் பெற்றிருக்கவேண்டிய பணி புசார் செயற்பாடுகள் பின்வரும் வகையில் அமைதல் வேண்டுமென எதிர்பார்க்கப் படுகின்றது. * ஆரம்ப வகுப்பு மாணவர்களின் அடிப்படைக் கல்வித் தேவைகளை
அறிந்தும், உணர்ந்தும் செயற்படுபவர். * ஒவ்வொரு மாணவர் பற்றிய விபரங்களையும் தெரிந்துகொண்டு அவற்றின்
மூலம் பெறப்படும் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கிக் கற்றலில் மாணவரை ஈடுபடுத்தும் திறமைமிக்கவர்.
xx
மாணவரை நேசிப்பவர் * மாணவரை விருப்புடனும் அன்புடனும் கற்றலில் ஈடுபடவைக்கும் சிறந்த
ஆற்றல்பெற்றவர். * மாணவரைச் செயற்பாடுகளில் ஈடுபடுத்திக் கற்றலில் தெளிவுபெறச்
செய்பவர். * ஆடல், பாடல், நடித்தல் மூலம் மாணவர்களுடன் சேர்ந்தியங்கும் メ சிறப்புடையவர். * கற்பிக்கும் மொழி, கணிதம், சுற்றாடல்சார் செயற்பாடுகள் ஆகிய பாடப்பரப்புகளில் அறிவும் ஆற்றலும் பெற்று அவற்றை மாணவரிடத்தில் விருத்தியுறச் செய்யும் திறன்மிக்கவர். * ஒவ்வொரு நாளும் நவீனமும் புலமையும் கலந்த புதியனவற்றை
மாணவரின் முன்னிலையில் கொண்டு வருபவர். * தவறு செய்யும் மாணவர்களுக்கு உடல் வருத்தும் வகையான தண்டனைகளை வழங்காமல் அவர்கள் மனம் திருந்தும் வகையிலான அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் மேற்கொள்பவர். * மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கருத்துச்செறிவான
வார்த்தைகளால் தெளிவாக உரையாடுபவர்.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை , - 12- ஆரம்பக்கல்வி)

* மாணவரின் முதிர்வு தொடர்பான அறிவுடன் அவர்களின் மொழி ஆற்றலை மேம்படுத்தப் பொருத்தமான வார்த்தைகளால் கலந்துரை யாடுபவர்.
* வாசிக்க உகந்த நல்லனவற்றை உறுப்பமைந்த அழகான எழுத்துகளால்
இலக்கண வழுவின்றி சிறப்பான மொழிநடையில் எழுதுபவர்.
* மாணவர்கள் கற்றலின்போது இடர்ப்படும் சந்தர்ப்பங்களை இனங்கண்டு
உடனுக்குடன் பரிகாரம் காணும் ஆற்றல் மிக்கவர்.
* பாடசாலைக்கு வெளியேயும் மாணவர் கற்றலைத் தொடரப் பொருத்தமான கற்றல் செயற்பாடுகளுக்கு வழிகாட்டுபவர். (உதாரணம்:- வீட்டுப் பாட வேலைகள்)
* மாணவர் தமது கற்றலுக்கு உகந்த தேடல்களைத் தெரிந்து செயலாற்ற
உதவுபவர்.
பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவர்களுக்கு முன் மாதிரியாக நடந்து கொள்பவர்.
இத்தகைய சிறப்புகள் ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களிடம் இருத்தல் அவசியமானவை எனவும் உணரப்படுகின்றது. இத்தகைய ஆரம்பக்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையே விரும்பி நிற்கும் பள்ளிகளில் இன்று ஆரம்பக்கல்விக்குப் போதிய ஆசிரியர்கள் இல்லை. எப்போதுமே ஆரம்பக்கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவி வருகின்றது. அதிலும் பயிற்சி பெற்ற ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர்.
ஆரம்ப வகுப்புக்களில் கற்பித்தலில் ஆரம்பக்கல்விப் பயிற்சியைப் பெற்ற ஆசிரியர்களையே நியமித்தல் அவசியமாகும். சிறுவர்களான ஆரம்பக்கல்வி கற்கும் மாணவர்களின் உடல் உள இயல்புகளை அறிந்து கொண்டு கற்பிக்கும் ஆற்றல் கூடியவர்களாக அவர்களே இருக்கிறார்கள். ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளிலும் கல்வியியற் கல்லூரிகளிலும் பயிற்சி பெற்றவர்களே சிறப்பான உயர்வான கற்றல் கற்பித்தல் நுணுக்கங்களைக் கற்றவர்களாகவும் செயற்படுத்துபவர்களாகவும் உள்ளனர். ஆரம்ப வகுப்புக்களில் கற்பிக்க விருப்புடையோரே அத்தகைய தகுதியையும் பெறுகின்றனர். எனவே ஆரம்பக் கல்விப் பாடசாலைகளிலும் ஆரம்ப வகுப்புக்களிலும் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆரம்பக் கல்விப் பயிற்சியைப் பெற்றவர்களாக இருப்பதே மிகவும் வேண்டப்படுவதாகும். இருப்பினும் ஏனைய பயிற்சிகளைப் பெற்றோர் ஆரம்ப வகுப்புக்களில் விருப்புடன் கற்பிக்கவும், கற்பித்தல் நுட்பங்களை அறிந்து கொண்டு செயலாற்றவும் முன்வரும் போது
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 13 - ஆரம்பக்கல்வி)

Page 16
அவர்களும் ஆரம்பக் கல்விச் சிறார்களால் விரும்பப்படுகின்றனர். சிறந்த ஆரம்பக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களாக மிளிர்கின்றனர்.
பரீட்சைகளை மையமாகக் கொண்ட கல்வி மதிப்பீடுகளை நோக்கிக் கற்பித்தலை மேற்கொள்ளாமல் மாணவனை மையமாகக் கொண்ட அவனது அறிவு, திறன், மனப்பாங்குகளை வளர்க்கின்ற தேர்ச்சிகளை அடைதலை நோக்கிய கற்பித்தலை ஆசிரியர்கள் மேற்கொள்வதே ஒருவனைச் சிறப்பான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் என்பதை ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.
ஆரம்ப வகுப்புகளில் கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் நோக்குடனான ஆசிரியர் செயற்பாருகள். * தாய் மொழியில் சிறப்பாகச் செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய திறன்களை வளர்த்துக் கொள்ளத் திட்டமிட்ட பயிற்சிகளை வழங்குதல். மொழிசார்ந்த திறன்களில் நல்லாற்றல்பெறச் செவிமடுத்தலுக்குப் பொருத்தமான நிகழ்வுகளில் மாணவர்கள் ஈடுபட, விடயங்களைத் தேடிப்பெற வழிகாட்டுதல். (உதாரணம்:- பேச்சுகள், நாடகங்கள், ஆகியவற்றைச் செவிமடுத்தல், பத்திரிகைகளையும், புத்தகங்களையும் உரத்து வாசித்துக் கிரகித்தல்) * வகுப்பு மட்டத்தில் மொழிவிருத்திச் சங்கங்கள் மன்றங்கள் ஆகியவற்றின்
மூலம் அர்த்தமுள்ள செயற்பாடுகளுக்கு வழிசமைத்தல் * மாணவர் தம் சுய ஆக்கங்களை ஊக்குவிக்கும் பாடல், ஆடல், நடித்தல்
போன்ற நிகழ்வுகளில் ஈடுபடத் தூண்டுதல் மகிழ்ச்சிகரமான ஒன்று கூடல்களுக்குச் சந்தர்ப்பங்களை வழங்கிச் சுதந்திரமான கலந்துரையாடல்களை நடாத்துதல். * ஒவ்வொரு மாணவனும் தனது திறமையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளக, மைதான விளையாட்டுகளில் மாணவரை ஈடுபடுத்துதல். கணிதம் சார்ந்த செயற்பாடுகளின் மூலம் கணித எண்ணக்கரு விருத்தியுற பொருத்தமான கற்றல் கற்பித்தல் செயலொழுங்கைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதல். * கல்விச் சுற்றுலாக்களின்மூலம் சூழலைத் தெரிந்து கொள்ளவும் மொழி கணிதம் சார்ந்த அறிவையும் ஆற்றலையும் பெற ஊக்குவித்தல். * ஒவ்வொரு மாணவரும் தத்தமது திறன்களை வளர்த்துக் கொள்ள ஊக்கும் வகையில் மாணவர்களுக்குப் பாராட்டுகளையும், பரிசுகளையும் வழங்குதல்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 14- ஆரம்பக்கல்வி)

* மாணவரின் கற்றல் விருத்தியைப் பதிவு செய்து அதன்மூலம் மாணவரின் நிலையறிந்து அவர்களின் மேம்பாட்டுக்குப் பொருத்தமான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். ஆசிரியர்கள் தேர்வும் பயிற்சியும்
ஆரம்பக் கல்விக்காக ஆசிரியர்களாகத் தெரிவு செய்யப்படுபவர்களுட் பலர் தமது கற்பித்தல் உத்திகளை ஆரம்பக் கல்வி கற்கும் சிறுவர்களுக்குப் பொருத்தமாக மாற்றிக் கொள்ளும் திறனற்றோராகத் தம்மைத் தாமே மதிப்பீடு செய்வதனால் இவர்கள் தாம் பெறவேண்டிய ஆரம்பக் கல்விக்கான பயிற்சியை விடுத்து கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், ஆங்கிலம், தமிழ், மனையியல், விவசாயம் போன்ற பாடங்களுக்கான விசேடபயிற்சி பெற்ற ஆசிரியர்களாகத் தம்மை மாற்றிக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆரம்பக்கல்வி ஆசிரியர்களாக நியமனம் பெறுபவர்கள், அதற்கான பயிற்சியை முடித்துக் கொள்வதற்குப் பதிலாக, பட்டதாரிப் படிப்பை முடித்துப் பட்டதாரி ஆசிரியர்களாக மாறி விடுகின்றமையையும் காணலாம்.
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வரை இவ் வாசிரியர்களது பயிற்சியானது இரண்டு வருடக் கட்டாயப் பயிற்சியாக, கற்றலில் மட்டும் ஆசிரியர் ஈடுபடக் கூடியதாக இருந்தது. ஆனால் இன்று சேவையின் போதே கற்பித்தல் செயற்பாட்டுடன் கற்றலில் ஈடுபடவேண்டியவராக ஆசிரியர் உள்ளனர். இது ஒரு பாரிய சுமையாக அமைவதுடன் பயிற்சி நிறைவானதாக அமையாமலும் காணப்படுகின்றது. தேசியக் கல்வி நிறுவனம் தொலைக் கல்விப்பிரிவு, ஆசிரியர் கல்விப்பிரிவு, ஆரம்பக்கல்விப் பிரிவு என்பன ஆசிரியர் கல்வியைப் பொறுப்பேற்றாலும் மொடியூல்ஸ் ஊடாகப் பயிற்சி அளிக்கப்பட்டாலும் நேருக்கு நேராகப் பயிற்சி அளிக்கப்படாத நிலை காணப்படுகின்றது. மைய நிலையில் செயற்படுபவர்கள் பயிற்சி பெறும் ஆசிரியரை நாடி வருகை தந்து பயிற்சி நெறியை மேற்பார்வை செய்தலிலும் கண்காணிப்பதிலும் சில இடர்ப்பாடுகள் நிலவுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
ஆரம்பக் கல்வியை வழங்கும் ஆரம்பப் பாடசாலைகளில் பெரும்பாலானவை கிராமங்களிலேயே உள்ளன. இப்பாடசாலைகளே கிராம அபிவிருத்திக்கும். அதனுடாக நாட்டின் அவிவிருத்திக்கும் வழிகாட்டியாக அமைகின்றன. இருந்தபோதும் கிராமப் பள்ளிக் கூடங்களுக்கு ஆசிரியர்-களைப் பகிர்நீதளிப் பதிலோ அல்லது அவர்களை நியமிப் பதிலோ அரசு தோல்வியையே கண்டுள்ளது. ஆரம்பக் கல்விக்குரிய ஆசிரியர்களைப்
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 15- ஆரம்பக்கல்வி)

Page 17
பகிர்ந்தளிக்க முடியாத நிலையே தொடர்ந்து காணப்படுகின்றது. பின் தங்கிய கிராமங்களுக்குச் சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்குத் தேவையான பெளதிக, பண்பாட்டு அம்சங்கள் பொருத்தமற்றனவாக இருப்பதாலும் இவ் ஆசிரியர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளமையும் குறிப்பிடத்தக்கனவாகும்.
இன்று ஆரம்பக் கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியப் பணியில் பெரும்பான்மை யானோர் பெண்களாகவே காணப்படுகின்றனர். ஆரம்பக் கல்வியை ஊட்டுவதற்கு பெண்களே பொருத்தமானவர்கள் எனினும, நடை முறையில் இவர்களது சேவைகளைப் பூரணமாகப் பெறமுடியாத அவல நிலையே தொடர்கின்றது. பெண் ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் ஆசிரிய நியமனம் பெற்றதைத் தொடர்ந்து அவர்கள் திருமண வாழ்க்கைக்கு உட்படுகின்றனர். இதனையடுத்து தமது குழந்தைகளை வளர்ப்பதற்காக மகப்பேற்று லீவைப் பெற்று வீட்டில் தங்கிவிடுவது மட்டுமன்றி வீட்டுக்கு அண்மையில் உள்ள பாடசர்லைக்கு இடமாற்றம் கோரிக் குறித்த பாடசாலையிலிருந்து வெளியேறியும் விடுகின்றனர். இத்தகைய நிலையில் இவ்வகையினரான ஆசிரியர்கள் ஆசிரியவாண்மை விருத்தியை அடைவதில் தவறி விடுகின்றனர். இதன் காரணமாக ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்தும் நிலவி வருகின்றன.
ஆரம்பக் கல்வியின் இறுதியாண்டாகிய ஐந்தாம் ஆண்டில் நடைபெறுகின்ற புலமைப்பரிசில் பரீட்சை இன்று பாடசாலைகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று வருவதால் அவ்வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் மொழிக் கல்வியிலும் கணிதத்திலும் கூடிய கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இவ் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைக் கல்வியை கற்பிக்கும் போதுமான ஆசிரியர்கள் நாடு பூராவும் சமனாகக் காணப்படுவதில்லை. பயிற்சி பெற்ற ஆசிரியர்களை ஐந்தாம் தரத்தில் மட்டும் கல்வி கற்பிப்பதற்கு அனுமதிக்கும் போது அந்த வகுப்பில் அதற்குரிய போதிய கல்வி வளர்ச்சி அடையாத மாணவர்கள் பலர் இருக்கின்றமை கண்கூடு.
எனவே பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தரம் (ஆண்டு) ஒன்று தொடக்கம் கல்வியை வழங்காத நிலைமைகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அல்லது அவர்களின் அடி அத்திவாரத்துக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 16- ஆரம்பக்கல்வி)

ஆரம்பக் கல்விப் பாடசாலைகள்
தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பக்கல்விப் பாடசாலைகள் எனலாம். வயது 5 தொடக்கம் 11வயது வரையிலான பருவத்தினர் இப்பாடசாலைகளில் கற்கின்றனர் அதேவேளை ஆரம்ப வகுப்புக்களான தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான வகுப்புக்களைக் கொண்ட Iம் தரப் பாடசாலைகளைத் தவிர தரம் II, தரம் C, தரம் AB பாடசாலைகளிலும் ஆரம்ப வகுப்புக்கள் உள்ளன. அங்கும் ஆரம்பக் கல்வி கற்கும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர். 1991ம் ஆண்டில் கல்வியமைச் சின் புள்ளிவிபரப்படி மொத்தமாகவுள்ள 10520 அரசினர் பாடசாலைகளுள் 9527பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியைக் கற்பிக்கின்றனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இப்பாடசாலைகள் அனைத்தும் பெளதிக வளங்களில் சமமான வசதிகளைக் கொண்டவை எனவோ அன்றேல் ஆளணி வளத்தால் நிறைவுடையவையென்றோ
கூறிவிட முடியாது.
ஒவ்வொரு பாடசாலையும் தனித்துவம மிக்க பெளதிக வளங்களையும் ஆளணியினரையும் கொண்டுள்ளது.
பாடசாலைகள் அனைத்திலும் ஆரம்பக் கல்வி கலைத் திட்டம் பொதுவானதாக உள்ளது. கற்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கற்றல் கற்பித்தல் திறன்கள் பொதுவானதாகவே எதிர்பார்க்கப்படுகின்றன. இந் நிலையில் பாடசாலைகளுக்கிடையேயான வேறுபாடுகள் நிரம்பவே
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 17- ஆரம்பக்கல்வி)

Page 18
காணப்படுகின்றன. பாடசாலையின் பெளதிக வளங்களில் ஏற்றத்தாழ்வுகள்
காணப்படுவதுடன் மாணவர் கற்றல் கற்பித்தலிலும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்து காணப்படுகின்றன.
பாடசாலைகளின் நிர்வாகம் ஒரே தரமுடையனவாக இல்லாமையும் பாடசாலைகளுக்கான பெளதிக வளங்கள் சமமாகப் பங்கீடு செய்யப் படாமையும் கற்பிக்கும் ஆசிரியர்-களின் ஆற்றல்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளும் பாடசாலை-களை வேறு பிரித்துக் காட்டுவதனால் அனைத்து ஆரம்பப் பாடசாலைகளையும் ஒரே தரத்தில் நோக்குதல் கடினமாகவுள்ளது.
ஆரம்பக் கல்விப்பாடசாலைகள், ஆரம்பக் கல்விப் பாடசாலைகளுக்குப் பொருத்தமான வகுப்பறைக் கட்டடங்களையும் தேவையான விளையாட்டு முற்றம், தோட்டம், உபகரணங்கள் என்பவற்றையும் கொண்டிருத்தல் வேண்டும்.
சிறுவர்களின் கற்றலுக்கேற்ற கவின்நிலை கொண்ட வகுப்பறைகள் அமைக்கப்படுவதோடு விருப்புடன் கற்கும் சூழல் பாடசாலைகளில் நிலவுதல் அவசியமாகும். -
பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அனைத்து வசதிகளையும் அரசாங்கமே பாடசாலைகளுக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் போதிய வளங்களைப் பெறாத பாடசாலைகள் இன்றும் உள்ளன. ஆரம்ப வகுப்புகளில் கற்கும் மாணவரின் தொகைக்கேற்ப வகுப்பறைகள் அதிகரிக்கப்படுதலும் அங்கு கற்கும் மாணவர்களுக்குப் போதியதான விளையாட்டு முற்றம், உபகரணங்கள் என்பனவும் வழங்கப்படுதல் வேண்டும்.
மாணவர் தொகைக்கும், வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கும் ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதே ஆரம்பக்கல்விக் கலைத்திட்டத்தைச் சிறப்பாகக் கற்பிக்க ஆசிரியர்களை ஊக்குவிக்கும் நடைமுறையாகும். இத்தகைய வளங்களுடன் ஆரம்பக்கல்விப் பாடசாலைகள் இருப்பின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல் இலகுவானதாகும்.
ஆரம்பக் கல்விப் பாடசாலைகளிற் பெரும்பாலானவை கிராமப் புறங்களிலேயே காணப்படுகின்றன. நகரப்புறங்களில் காணப்படும் ஆரம்ப பாடசாலைகளில் வசதி வளங்கள் அதிகமானதாகவுள்ளமையால் நகரப் பாடசாலைகளை நோக்கி நகரும் கிராமப்புற மாணவர்கள் இன்று அதிகரித் துள்ளனர். ஆனால் அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் ஒரே தரமுடைய கற்றல் கற்பித்தலைப் பெற வேண்டுமானால் கிராமப்புறப் பாடசாலைகளுக்குச் சகல வளங்களும் போதியளவு பங்கீடு செய்யப்படுவது அவசியமாகும்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 18- ஆரம்பக்கல்வி)

ஆரம்ப வகுப்புகளைக் கொண்ட பாடசாலை ஒன்றில் இடம்பெறத் தக்க செயற்பாருகள் * பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையேயான தொடர்புகளை விருத்தி
செய்யும் வகையில் திட்டமிட்டுச் செயற்படுதல் * பாடசாலை வகுப்பறை ஒழுங்குகளைச் சிறப்பாக வடிவமைத்துச்
சுத்தமாகவும் அழகாகவும் பேணுதல். * இணைபாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஊக்கமாக ஈடுபடத்தக்க செயற்றிட்டங்களை முன்வைத்துச் செயற்படுதல். * மாணவரின் போசாக்குத் தரத்தை மேம்படுத்துவதற்குப் பல்வேறு
வழிகளில் உதவிகளைப் பெற்று வழங்குதல். * மாணவரின் கல்வித் தேவையை நிறைவாக்கும் முயற்சிகளை
மேம்படுத்தும் வகையிலான வளமான சூழலை வடிவமைத்தல்.
ஆரம்பக் கல்வி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள்
1960களின் பின்பு, 1980, 1990களில் கல்வியியற் பிரச்சினைகள் பல அடையாளம் காணப்பட்டன.
கல்விமுறையில் ஏற்பட்ட தோல்விகளால் மனித வாழ்வுக்கு வேண்டிய விழுமியங்கள் சாந்தி, சமாதானம் என்பன இல்லாதொழிந்தன. போட்டி பொறாமை, என்பன மேலோங்கின, கல்வி சீர்செய்யப்பட வேண்டும் என்பதும் அதன் வழி நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதும் கல்வியியலாளர் களின் கருத்தாக உயர்ந்தது.
இதனால் கல்வியில் சீர்திருத்தம் வேண்டும் என்று பலரும் விதப்புரை செய்தனர். அக்கல்விச் சீர்திருத்தம் குறிப்பாக ஆரம்பக் கல்வியில் மாற்றம் கொண்டு வருவதாக அமைய வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.
ஆரம்பக் கல்வி எவ்வாறு கல்வியின் அடி அத்திவாரமாக அமைகின்றதோ அதே போல வாழ்க்கையில் ஓர் உறுதியான ஆரம்பமாகக் கூறப்பட்டது. வளர்ந்து வரும் வருங்காலத்திற்கு வழி வகுக்கும் கல்வியாக இருக்க வேண்டும் என உணரப்பட்டது. ஆரம்பக் கல்வியே பிள்ளைகள் எப்படிக் கற்பது. அவர்களைச் சுற்றியுள்ள ஏனைய மக்களுடனும், உலகத்துடனும், சிறந்த பயனுள்ள உறவுகளை எவ்வாறு விருத்தி செய்வது என்பதையும் கற்றுக் கொடுக்கின்றது. சீரான ஆரம்பக் கல்வி இல்லாமல் உயர்தரக் கல்வி அர்த்தமற்றதாகிவிடும் எனக் கண்டறிந்துள்ளனர். தரம் 1 தொடக்கம் தரம் 5வரை ஆரம்ப நிலைக்கல்வியைக் கற்கும் வருடங்கள் முழுப் பாடசாலை வாழ்க்கையிலும் மிக முக்கிய காலப் பகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 19 - ஆரம்பக்கல்வி)

Page 19
புதிய கல்விச் சீர்திருத்தம் பிள்ளைகளிடம் உள்ளடங்கிய விசேட சாமர்த்தியம், உள்ளார்ந்த ஆற்றல் ஆகியவற்றை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்ய முயலும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விரிவடைந்துவரும் பிள்ளையின் மனதை மேலும் விருத்தி செய்யச் சிந்தித்து வினாக்களைப் பிறப்பித்து அவற்றிற்கான பதில்களைக் கண்டு பிடிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். கருத்தைக் கொண்டும் கற்பனையால் உருவாக்கும் ஆற்றலை விருத்தி செய்ய முடியும்
தானாகவே அறிவைப் பெறவும், பிரயோகிக்கவும்செயன்முறைக் கல்வி உதவும் மூத்தோரைக் கனம் பண்ணவும், ஆதரவளிக்கவும் உதவும் கல்வி ஆரம்பக்கல்வியாகும். மற்றவர்களை மதிக்க உதவ வேண்டும் எனவும் மனிதர்கள் தாவரங்கள், விலங்கினங்கள் உட்பட சுற்றாடலைப் பாதுகாக்க உதவேண்டும் எனவும் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்தியில் பெற்றோர்கள் தங்களை ஈடுபடுத்த சந்தர்ப்பம் தரப்படுகின்றமையும் அதேபோல பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் அபிவிருத்தியில் பங்குகொள்ள இடமளிக்கப் படுகின்றமையும் ஆரம்பக்கல்வியின் சிறப்பம்சங்களாகும்
கற்றலுக்கு உகந்த மகிழ்ச்சிகரமான சூழலை ஆரம்ப நிலை வகுப்புக்கள் அளிக்க வேண்டும். ஆரம்பக் கல்வி மாணவன் செயல் மூலமாகவும், விளையாட்டு மூலமாகவும் தமது திறமைகளை விருத்தி செய்யும் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு பாடசாலையில் உண்மையில் என்ன நடக்கின்றதென்று அறிய வேண்டும்.
1998ம் ஆண்டில் கம்பஹா மாவட்டம் முழுவதும் ஆரம்ப நிலைக் கல்வி சீரமைக்கும் திட்டமாக செயற்படுத்தப்பட்டது. இத்திட்டம் 1999 ஆண்டு முதல் நாடு பூராவும் நடைமுறைப் படுத்தப்படுகின்றது.
ஆரம்ப வகுப்பு மாணவர்கள் கற்கவேணி டியவை தொடர்பாக உருவாக்கப்பட்ட பாடவிதானம் புதிய கல்விச் சீராக்கத்திற்கு அமைவாகப் பின்வரும் அட்டவணைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த பாடப்பரப்புக்குள் இவை கற்பிக்கப்படுவதை இவ்வட்டவணை எடுத்துக் காட்டுகின்றது.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 20- ஆரம்பக்கல்வி)

; q faesI q.6% osofissòstoț¢) issử 必 #Ɛ. *ựsopo l`nţstros) ] * * 少 흑社T院議 ~~~~ (orostraes)邝盛 ()$ permuscosis密蹈 sysop@ırıạsmos)ŋooŋooiingstree)sựso@ırı girmes) și susțișorunţiloooooị:șiøs uolț¢sonuriņķosoɛo școlaesonunţilosoɛhoogooooo iomasoniae, o ,る、、聪¿ą wołosyo, *--; 陵)、o → –––––--------------~--~~~~- 魏命劑r魏益|-劑...」。「 、S ġo.S蛋、****:~.- * L*孵ŠL****」鰓。靜 & ! 3# !----倒避。&ỹ& | &rf, rossoso asso རྫོཐོV||ལྗོ་ཅོ་སྤྱི|ཕྲོ་ཅ, 활|| 總 斑#ĝựsť* 후 1, %斑y§ternos*3 환} .: 和子4;|{{{rr}&心如,-######### *****#!*® 诊射。*Grans3 kmB % gsgungasび BLụsoojusių rreo A.鄂密* - 娜「**娜「*****劑 ș, o ợsonutsso**哆-&*p)*少城 :soos atrosso赣” șo-额=*颂脚saetség) ཕྱི་書事gorrigło舞吧丁•• • | # * ——>•••• • I •)#3, a as•
·途-途* 鹤令冷 胸釋妻掌qi&#** . .ë脚渝黔密%。.Č警•••• • •&凝魔炎.脚isotnçoisée, ofi% 脚风și cete, rroop fortsutøgg ·$, oĢs sosto trự&& soro uostrofo ,隧%耀***러헌&.*るおゴぎ%・o £3. 明►►9),丽Ē 1子, ***** :丽藏|-googoo sin 姆腾 1* ****p;*** :翻腾工sponsoț¢ £ .翻鹏下„ quaeris . ,5- ) fontoo osoɛ nwo 必照必欧-$, $,* £ ,ç giáo?-:* ag|ç qifs2. ; zquae|一)*** るdaf*3 ],|-v «skog, gioosoofið». ...z agusos giosoofi), , , , ,| nsɑsɑ ɑnɑsɑsoofi)
LOOz - (8661) - qızıȚIĶ Ķ Ļ9ọ9? qonqiúfft? Hņqiq,9úg|Úīgi - Ļ9?I?I$$@ $sso șŲ9ọ9?
ஆரம்பக்கல்வி)
- 21 -
(ச.நா. தணிகாசலம்பிள்ளை

Page 20
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் . மறுசீரமைப்பின் கீழ் ஆரம்பக்கல்விப் கலைத்திட்டத்தின் விசேட பண்புகள் - ஐந்து ஆண்டுகளைக் கொண்ட ஆரம்பக்கல்விப் புலம் கலைத்திட்ட விருத்தியினதும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளினதும் வசதி கருதி மூன்று முதன்மை நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதன்மை நிலை 1 - தரங்கள் 1 உம் 2 உம் முதன்மை நிலை 2 - தரங்கள் 3 உம் 4 உம் முதன்மை நிலை 3 - தரம் 5
தரம் 1 இல் பிரவேசிக்கும் பிள்ளையை இனங்காண்பதற்கு வசதியான செயற்பாடுகள் இனங்காணப்பட்டுள்ளன.
பொதுக் கல்வி நிலை இறுதியில் மாணவர்களிடம் விருத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் என விதந்துரைக்கப்பட்ட அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்தேர்ச்சிகளைக் கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமான அடித்தளத்தை இட்டுச் செல்லும் கலைத்திட்டமாக, தேர்ச்சி சார்ந்த கலைத்திட்டமாக உள்ளது. பாட விடயங்கள் நான்காக வகுக்கப்பட்டுள்ளன.
- மொழி
- கணிதம்
- 5LDub
- சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்
பிள்ளையின் பூரண விருத்திக்கு மொழி, கணிதத் தேர்ச்சிகளுடன் வேறு சில தேர்ச்சிகளும் விருத்தி செய்யப்படவேண்டியது அவசியமாகும்.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 22- ஆரம்பக்கல்வி)
 

எடுத்துக்காட்டு அழகியல், ஆக்கம், விஞ்ஞானம், விழுமியம், உடல் விருத்தி, சுகாதாரம் சார்ந்த தேர்ச்சிகள்
இத்தேர்ச்சிகளைத் தனித்தனிப் பாட அலகுகள் மூலம் முன்வைப்பதை விடபிள்ளைகளுக்குப் பொருத்தமான கருப்பொருள்கள் மூலம் வெளிக்கொணர்ந்து எய்துவதே சிறந்ததென ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 16 கருப்பொருள்களைக் கொண்ட சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் எனும் பாடப்பரப்பு முன்பைவிட ஒன்றிணைக்கப்பட்ட பண்பைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
தரம் 1 இலிருந்து செயற்பாடுகள் சார்ந்த வாய்மொழி ஆங்கிலமும், இரண்டாவது தேசிய மொழியும் (சிங்களம்/தமிழ்மொழிப் பாடங்கள்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதன்மை நிலை 2 இலிருந்து முறைசார் ஆங்கிலம் சேர்க்கப் பட்டுள்ளது. தரம் 1 இலிருந்து தொடர்ச்சியாக பாட இணைச் செயற்பாடுகளும், தரம் 5 இல் பிள்ளைகளின் விருப்புக்கும், தேவைக்குமேற்பப் பொருத்தமான விருப்புப் பாடங்களைக் கற்பதற்கும் கால அட்டவணையில் வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆரம்பக்கல்விப் பருவத்தினருக்குப் பொருத்தமாக மேற்கொள்ளக்கூடிய கற்றல்-கற்பித்தல் முறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை:
- விளையாட்டுக்களும் விநோதச் செயற்பாடுகளும் - செயற்பாடுகள்
- எழுத்து வேலைகள் முதன்மை நிலை 1 இல் விளையாட்டுக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் அதிக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதன்மை நிலைகள் மூன்றிலும் கற்றல் - கற்பித்தல் முறைகள் ஒழுங்கமைக்கப்பட்டுப் படிப்படியாக மாறிச் செல்லும் விதத்தில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. பிள்ளையின் முன்னேற்றம், கற்றல் இடர்பாடுகள் தொடர்பாக தகவல் சேகரிப்பதற்கு முறைசாராத கணிப்பீடு முறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்ற அதாவது, தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய தொடர் கணிப்பீட்டிற்காக முன்னுரிமை பெறுகின்ற கணிப்பீட்டுச் செயல்முறையை நடைமுறைப்படுத்தல். யாவருக்கும் கல்வியை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு அதற்குத் தரநிர்ணயமுள்ள ஒவ்வொரு முதன்மைநிலை இறுதியிலும்
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 23 - ஆரம்பக்கல்வி)

Page 21
மாணவர்கள் கட்டாயமாக பாண்டித்தியம் அடையவேண்டிய அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முதன்மைநிலை இறுதியிலும் எதிர்பார்க்கின்ற அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளில் சகல மாணவர்களும் பாண்டித்தியம் அடைய வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு முதன் மைநிலையும் ஒரே ஆசிரியரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையின் அடைவை இன்னொரு பிள்ளையின் அடைவோடு ஒப்பிட்டுத் தீர்மானம் எடுக்கும் முறைமையை விடுத்து, குறித்தவொரு நோக்குடன், நியதியுடன் அடைவை ஒப்பிட்டு தீர்மானம் மேற்கொள் வதற்கு, நியதிசார்ந்த அடிப்படைக் கணிப்பீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதன்மைநிலை 1 இன் பிள்ளைகள் தரம் 5/6 இன் பிள்ளைகளுடன்
சேர்ந்து ஒழுங்கமைப்புடன் செயற்பாடுகளிலும் விளையாட்டுக்களிலும்
ஈடுபடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு முதல், முதன்மை நிலை ஒன்று தொடக்கம்
இரண்டாவது தேசிய மொழிய்ம் அறிமுகம் (சிங்களம்/தமிழ்) செய்யப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு முதல் செயற்பாடு அடிப்படையிலான வாய்மொழி ஆங்கிலம் கணித பாடத்துடனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல், உள விருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் விதத்தில் உடலியக்கச் செயற்பாடுகள் எனும் வேலைத்திட்டம் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் முதன்மை நிலை ஒன்றிலிருந்து அறிமுகம் செய்யப்படுகின்றது.
ஆரம்ப வகுப்பு மாணவர்களின் பல்திறன்சார் தேர்ச்சிகளைக் கவனத்திற்
கொண்டே பாடங்களை ஒன்றிணைத்துக் கற்பிக்க அவை திட்டமிடப்பட்டுள்ளன.
I
xx
xx
хx
хх
தாய்மொழி
கணிதம் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் சமயம் சார்ந்த செயற்பாடுகள்
அழகியற் செயற்பாடுகள்
என்பன அவற்றுள் அடங்கியுள்ளன. ஆரம்பக் கல்வி கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒவ்வொரு ஆரம்பக்கல்வி ஆசிரியரும்
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 24- ஆரம்பக்கல்வி)

மேற்குறிப்பிட்ட பாடஞ்சார்ந்த அறிவும் அவற்றைக் கற்பிப்பதற்கான பாடஞ்சார்ந்த அறிவும் அவற்றைக்-கற்பிப்பதற்கான நுட்பங்களைச் செயற்படுத்தும் ஆற்றல்களும் உடையவர்களாக இருத்தல் வேண்டும். பாடவிதானத்தின் குறிக்கோள்களை நிறைவு செய்யும் வகையில் அவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளை இனங்கண்டு அவற்றுக்கேற்பக் கற்பித்தலில் ஈடுபடுதல் வேண்டும்.
தாய்மொழி
ஆரம்பக் கல்வியின் அடிப்படைக்கு மொழி கற்றலே முதன்மையாக விளங்குகின்றது. தமிழர்களைப் பொறுத்தவரையில் தாய்மொழியான தமிழ் மொழியின் சிறப்பையும் இலக்கண இலக்கிய வளங்களின் விரிவையும் அறிந்த ஆசிரியர்களிடத்தில் மொழி கற்பிக்கும் திறன் நிறைந்திருக்கும் தமிழ்மொழிப் பாடத்திற்கான திறன்கள் செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய செயற்கூறுகளாக வகுக்கப்பட்டுள்ளன. கற்றல் கறபித்தல் செயற்பாடுகளின்போது அவற்றைப் பொருத்தமான சந்தர்ப்பங்களில் ஒன்றிணைத்துச் செயற்படுத்த வேண்டும். ஒருவன் தன் வாழ்க்கையில் மொழியை முறையாகக் கற்றுத் தனது கற்றலுக்கான அடிப்படையை உருவாக்கிக கொள்ள ஆரம்பக் கல்வி உதவுதல் வேண்டும். எமது காலத்திலும் பழைய மூதாதையர் பயின்ற காலத்திலும், மொழியையும், எண்ணையும் போதிக்க நல்ல ஆசிரியர்கள் பயிற்றப்பட்டுக் கற்பித்து வந்தனர். ஏனைய பாடங்களைக் கற்பதற்கும் நல்ல அறிவு, திறனை இவை இரண்டினுாடாகவும் அவர்கள் வகுத்துக் கொடுத்தனர்.
சமூக விலங்காகிய மனிதனது கருத்து வெளிப்பாட்டுக்கும் கருத்துக்களைப் பெறுவதற்குமாகப் பிரயோகிக்கும் பிரதானமானதும், பிரபல்யமானதுமான ஊடகம் மொழி இதுவே அவனது சிந்திக்கும் ஊடகம். இதனாலேயே அவன் உலகையே ஆண்டு கொள்கின்றான். அறிவுக் களஞ்சியத்தின் அடிப்படையும் மொழியேயாகும்.
மொழியே கற்றலுக்குரிய சிறப்பான ஊடகமாகும். மொழிதி தேர்ச்சியின்மையாலேயே கணிதப் பாடத்தையும், ஏனைய பாடங்களையும் வாசித்து விளங்கிக் கொள்ளும் நிலை அற்றுப் போய்விடுகின்றது. இது இடைநிலைக் கல்வியையும் பாதித்து விடுகின்றது. தொடர்ந்து இடைநிலைக் கல்வியை மட்டும் அல்லாமல், உயர் கல்வியையும் பாதித்துள்ளது. இன்று வாசிக்கும் திறனற்ற மாணவன் கணித பாட வினாக்களை விளங்கிக் கொள்வதில் உள்ள இடர்ப்பாடுகளால் தேர்ச்சியடைவதில் பின்னடைவதுடன் முழு இலங்கையிலும் க.பொ.த (சாதாரண) தரத்தில் எட்டு வீதமான
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 25 - ஆரம்பக்கல்வி)

Page 22
மாணவர்களே சித்தியெய்தும் நிலையும் காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது. இது எமது கல்வி நிலையில் பெரும் குறைபாடாக அமைகின்றது.
மொழிக் கல்வி பிரதானமாகக் கொள்ளப்படுவதனால் அதனைக் கற்பிப்பதில்
திறமை பெற்ற ஆசிரியர்களை ஆரம்ப வகுப்புகளில் ஈடுபடுத்துவது அவசியமாகும்.
ஆரம்பக் கல்வி கற்பதற்கென முதன்முதலாகப் பள்ளிக்கு வரும் பாலர்கள் ஓரளவேனும் பேச்சுத் திறனுடையவர்களாகவே வருகின்றனர். அவர்களின் மொழி வளம் சிறக்க ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் மொழி சார்ந்த நான்கு திறன்களிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். ஆரம்ப வகுப்புச் சிறுவர்களுடன் மகிழ்வாகப் பேசுதல் பிரதான செயற்பாடாகும். உச்சரிப்புத் தெளிவும், ஒலி நயமும் மொழியை விரும்பிக் கற்கத் தூண்டுகின்றன. பாடல்கள், கலந்துரையாடல்கள் மூலமும் நடித்தல், விளையாட்டுகள் மூலமும் மாணவர் தமக்கிடையே பேசுதல் மூலமும் பேச்சுத் திறன் விருத்தியுறச் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படல் வேண்டும். மொழித் தேர்ச்சி_வளமுடையதாக விருத்தியுற்றால் ஏனைய பாடங்கள் சிறப்புறுவது நிச்சயமானதாகும்.
ஆரம்பக் கல்வியின் மூலம் எதிர்பார்க்கப்பரும் மொழித் தேர்ச்சிகள் * தினசரி தேவைகளுக்கு மொழித்திறன்கள் நான்கினுடாகவும் தனது
எண்ணங்களை வெளிப்படுத்துவார். கதை, கவிதை, பாடல்கள் என்பவற்றைக் கேட்டும், வாசித்தும் இரசிப்பார். * உச்சரிப்புப் பிழையின்றிப் பத்திரிகைகளையும், புத்தகங்களையும் உரத்து
வாசிப்பார். * நான்கு திறன்களினுடாகவும் மொழி ஆக்கங்களை உருவாக்கி
வெளிப்படுத்துவார். * மொழிவழி விருத்தியுறும் கலை, கலாசாரம், நல்லொழுக்கச்
செயற்பாடுகளில் ஈடுபடுவார். * நாடகம், கவிதை, சிறுகதை, என்பவற்றை வாசித்து அவற்றை விளங்கிக்
கொண்டு அவை போன்ற ஆக்கங்களை வெளிப்படுத்துவார். * புதிய ஆக்கங்களுக்கும் புதிய தேடல்களுக்கும் தன்னைப் பழக்கப்படுத்திக்
கொள்வார்.
கணிதம்
கணிதம் எண்ணக்கரு சார்ந்த ஒரு விடயமாகும் கணித எண்ணக்கருக்களை பெரும்பாலும் விருத்தி செய்து கொள்வதற்காக ஆரம்பப் பாடசாலைப் பருவத்தில்
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 26 - ஆரம்பக்கல்வி)

பொருள்கள் தொடர்பாகப் ங்கள் மிக முக்கியமானவையாகும். எண், எண்சார்ந்த பிற க 3ಜ್ಜೈT எண்ணுதலைக் குறிப்பிடலாம். எண்கள் சார்ந்த எண்ணக்கருக்களை நன்கு வலியுறுத்துவதற்காக, ஆரம்பப் பருவத்திலேயே எண்ணுவதற்கான செயற்பாடுகளில் மாணவரை ஈடுபடுத்துதல் வேண்டும்.
வெவ்வேறு பொருள்களை ஒவ்வொன்றாக எண்ணுவதன் மூலமும், கூட்டம் கூட்டமாக எண்ணுவதன் மூலமும் பெறும் அடிப்படை அனுபவங்கள் எண் பற்றிய எண்ணக்கருவைக் கட்டியெழுப்புதவற்கு மிகப் பயனுடைய-தாகவே அமைகின்றன.
“தெரிதல், அயலும் வரிசைப்படுத்தலும், பருமன், ஒன்று ஒன்றுக்கான ஒத்திருக்கை போன்ற முன் எண்ணக்கருக்களும் எண்களை விளங்கிக் கொள்வதில் பெருமளவு துணை புரிகின்றன. அவ்வெண்ணக் கருக்களை விருத்தி செய்து கொள்வதற்காக, வெவ்வேறு பொருள்களின் துணையுடன் (கூட்டாக) மேற்கொள்ளப்படும் பல செயற்பாடுகளில் மாணவரை ஈடுபடுத்துவது அவசியமாகும்.
ஆரம்பக் கல்வியில் கணிதம் சிந்தனைத் திறனை வளர்ப்பதாகும். இளமையில் மூளையின் செயற்பாட்டிற்கு கணிதமே அடிப்படையாக அமைகின்றது.
குழந்தைகள் இளமையில் வீட்டு முற்றத்தில் கடை போட்டு விளையாடுதல், மண்சோறு, கறி ஆக்கி விளையாடுதல் ஆகியன கணிதத் திறனை வளர்த்து வந்தன. இன்று பெற்றோர் குழந்தைகளை மண்ணில் விளையாடினால் பூச்சி பிடித்துவிடும் என அடித்து விரட்டுவர். இதனால் இயற்கையுடன் இணைந்து கணித எண்ணக்கருவை வளர்க்கும் ஆற்றல் குழந்தைக்கு மட்டுப்படுத்தப் படுகின்றது.
கணிதம் எண்கள் சார்ந்த விடயம் மாத்திரமன்றி வாழ்வின் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அனைவரும் சந்திக்கும் ஒரு வாழ்வாதாரச் செயலொழுங் காகும். அச்செயலொழுங்கை எண்களினூடாக கணிப்பிடுதலைக் கணிதமாகக் காணுகின்றோம். எனவே கணிதச் செய்கைகளினூடாகச் சிறுவர்கள் கணிதம் கற்கச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஆரம்பக்கல்வி ஆசிரியரும் கணித பாடத்தில் திறமை மிக்கவராகத் தம்மை ஆக்கிக் கொள்ளுதல் விரும்பத்தக்கதாகும்.
(ச நா. தணிகாசலம்பிள்ளை - 27- ஆரம்பக்கல்வி)

Page 23
சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்
இக்கற்றல் செயற்பாடுகள் மனிதன் மீதும் மனித சமுதாயத்தின் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்ற அனைத்து பெளதிக, சமூக, உயிரியற் தொகுதிகளையும் உள்ளடக்குகின்றது. தான் வாழும் சூழலில் காண்பவை, வாழ்பவை என்பவற்றோடு தன்னை இயைபுபடுத்தலும், அவற்றைத் தனக்கேற்ப இயைபுறுத்தலும் நிகழ்வதற்குப் பொருத்தமான கல்வியை இச் செயற்பாடு களினூடாக வழங்குதல் வேண்டும். புலனுறுப்புகளைப் பயன்படுத்தவும் தொடர்பாடல், வகைப்படுத்தல், தர்க்கித்தல், தீர்வுகாணல் போன்ற நுண்ணறிவுசார் திறன்களைப் பெறவும், வழிகாட்டப்படுதல் வேண்டும். தான்வாழும் சுற்றாடல் தொடர்பான தகவல்களைக் கண்டறிதல், சேகரித்தல், மீள வெளிப்படுத்தல் என்பன ஒவ்வொரு பிள்ளையிடத்திலும் விருத்தியுற வேண்டிய வாழ்க்கை செயன்முறையாகும். வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வலிமையைப் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளும் ஆற்றலை வளர்ப்பதும் இப்பாடத்தைக் கற்பதன் மூலம் வெளிக்கொணரப்பட வேண்டும் ஒன்றிணைந்த பாடப்பரப்பில் கணிதம, மொழி ஆகிய பாடங்களின் சிறப்பான கற்றலுக்குச் சுற்றாடல் சார் செயற்பாடுகள் எனும் இப்பாடம் பெரிதும் உதவுகின்றது. வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும். வாழும் வழிகளைத் தெரிந்து கொள்ளவும் இப்பாடத்தின் மூலம் வழிகாட்டப்படுகிறது. இப்பாடம் செயற்பாடுகளினூடாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே சுற்றாடல்சார் செயற்பாடுகள் என்ற தலைப்பினுாடாகச் செயற்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். இவை பாடப் புத்தகத் தினுடாகக் கற்பிக்கப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் இதன்மூலம விளங்கிக் கொள்ளக் கூடியதாகும். எனவே செயற்பாடுகளினூடாக உலகத்தை அறிய ஒவ்வொரு பிள்ளையும் வழி காட்டப்பட இப்பாடம் பெரிதும் உதவுகிறது.
இத்தகைய பாடப்பரப்புகள் தவிர்ந்த வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் ஏனைய கற்றல் தொகுதிகளும் ஆரம்பக் கல்வி கற்கும் பருவத்திலேயே கற்றொழுகச் சந்தர்ப்பம் வழங்குதல் அவசியமாகும் அவ்வகையில் பின்வரும் விடயங்களிலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்துதல் வேண்டும். சுற்றாடல், வளமுகாமை
ஆரம்பக்கல்வியில், சுற்றாடலும், வளமுகாமையும் முக்கிய இடம் பெறுகின்றது. சுற்றாடல் சார்ந்த, சூழ்ந்த கல்வியே முக்கியம் பெறுகின்றது. சுற்றாடல்ை அபிவிருத்தியுறச் செய்வதே அக்கல்வியின் முக்கிய நோக்கம். சுற்றாடலுடன் இணைந்த வளமுகாமையும் அவை பற்றிய திறனும் நிறுவன
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 28- ஆரம்பக்கல்வி)

முகாமைக்கு அவசியமாகினி றது. சுற்றுப் புறச் சுற் றாடலையும் , வளமுகாமையையும் மையமாக வைத்தே ஆரம்பக் கல்வியுடன் ஒன்றிணைந்த கலைத்-திட்டம் சகல ஆரம்பப் பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்தப் படுகின்றது.
சுற்றாடலில் வாழும் சமூகத்தினர் குறிப்பிடத்தக்க அளவு கல்வியறிவு கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். கிராமத்தில் வாழ்வோரில் பெரும்பாலானோர் கிராமப் பாடசாலைகளிலேயே தமது அடிப்படைக் கல்வியைப் பெற்றோராகவே இருப்பர். இவர்களிடமும் பல்வேறு திறன்களை கொண்டவர்கள் காணப்படுவர்.
இவர்களை இனங்காணுதலும், அவர்களைப் பயன்-படுத்துதலும் சிறந்த வளமுகாமையாகும். பல் தரப் பாடசாலைகள் பலவற்றில் அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் நான் பெற்ற அனுபவங்களை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும். நான் கடமையாற்றிய ஒரு பல்தரப் பாடசாலைச் சுற்றாடலில் திறமைமிக்க மேளம் இசைப்பவர் ஒருவர் வாழ்ந்தார். பாடுவதிலும் திறமை பெற்றிருந்தார். நிரந்தரமான தொழில்களில் ஈடுபட்டிராத அவர் சில வேளைகளில் பாடசாலை நேரங்களில் கூட பாடசாலைக்கு வருகை தருவதுண்டு. அவரது வருகையின் நோக்கம் பாடசாலை மாணவரின் நடவடிக்கைகளின் ஊடாக திருப்தி பெறுவதாகும். பாடசாலையிலிருந்து மேளத்தை இசைப்பதில் அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சில சந்தர்ப்பங்களில் சிறிது நேரத்திற்கு மேளம் இசைப்பதற்காக நான் பாடசாலைக்கு அவரை அழைப்பதுண்டு.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 29- ஆரம்பக்கல்வி)

Page 24
சுற்றாடல் மனிதவள முகாமையிலும் பாடசாலை நேரத்தில் கற்றல், கற்பித்தல் நேரத்தை அதிபர் முகாமை செய்யும் திறன் இங்கு நல்ல எடுத்துக் காட்டாகும். எங்கள் சம காலத்தில் மாவட்டங்கள் எதிர்நோக்கும் ஆசிரிய வளமுகாமைக்கு இவை நல்ல ஒரு வழிகாட்டியாகும்.
நல்ல கல்வி ஊட்டப்படுவதற்கு வள முகாைைமத்துவத்திறன் அவசிய மாகும். வளமுகாமைக்கு வளங்களை இனங்காணல் அவசியமாகும். அதனையே மேலே அதிபர் தன் அனுபவத்தில் காட்டியுள்ளார். அவ்வளங்களை இனங்கண்டு உச்ச அளவுக்குப் பயன்படுத்தக் கூடிய வழிவகைகளைத் திட்டமிடல் வேண்டும். இத்திட்ட அடிப்படையிலான வேலைத்திட்டத்தை முன் வைக்கலாம். அத்திட்டச் செயற்பாடு சம்பந்தமாக நல்ல மதிப்பீடு செய்வதும் கல்விச் செயற்பாட்டிற்கு அவசியமானதாகும்.
*திருப்தியான அபிவிருத்தி அமுலாக்கலுக்கும் நிகழ்ச்சித்திட்ட செயற்பாட்டிற்கும் போதுமான அளவு மனித, நிதி பெளதிக வள முகாமைத்துவம் அவசியமானதாகும்.
இன்றைய கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கிடைக்கும் வளங்களைக் கொண்டு அதி உச்சப்பயன்பாடு அவசியம். கல்வி வளங்களான (1) மனிதவளமும் (2) பெளதிக வளங்களும் (நிதி + மூலப்பொருட்களும்) அவசியமாகும். தரப்பட்ட அளவு ரீதியான வளங்களில் உச்சப்பயன்பாடு பெறக்கூடிய வளமுகாமிப்புச் செயற்பாடு அவசியமானதாகும். "வளமுகாமைச் செயற்பாட்டை பின்வரும் விதத்தில் வரைவிலக்கணம் கூறலாம்.
1) வள ஒதுக்கீடு
2) வளப்பகிர்வும், வளப்பயன்பாடும்
3) வளப் பேணல்
4) வள அபிவிருத்தி
5) வளப்பன்முகப்படுத்தல்
கல்விச் செயற்பாட்டில் கருத்துடையோர் இவ் ஐந்து வகையான படிமுறைச் செயற்பாட்டிலும் கல்விக் கருமத்-தொடரை ஆற்ற வேண்டும். வளங்களை வளத்தேவைகளை இனங்கண்டு ஒதுக்கீடு செய்தும், நல்ல முறையில் பகிர்ந்தும் பயன்படுத்தியும், வரவேண்டும். கொடுக்கப்பட்ட வளங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் நல்ல முறையில் பேணிப் பாதுகாப்பதுடன் அத்தகைய வள அபிவிருத்திகளையும் கருத்திற் கொள்ள வேண்டும். "வளமானது மையப்படுத்தாமல் சகல பகுதிகளுக்கும் பன்முகப்படுத்துவனூடாகவே அடி நிலையில் கல்வி அபிவிருத்தியைக் காணமுடியும்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 30 - ஆரம்பக்கல்வி)

சுகாதாரமும், போஷணையும்
பிள்ளைகளின் கல்வியின் அடிப்படைக்கு சுகாதாரமும், போஷணையும் மிக, மிக இன்றியமையாததாகும். சுகாதாரப்-பழக்க வழக்கங்கள் நல் வாழ்க்கைக்கு அவசியமானவையாகும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பர். உடல் உறுதிக்கு கல்வி அவசியம். உடல் உறுதியை சுகாதாரமும், போஷணையும் அளிக்கின்றது. கிராமப்பகுதிகளில் இவை இரண்டும் இன்று பெரும் பிரச்சனையாகக் காணப்படுகின்றன.
சுகாதாரம் என்பது நோய்களிலிருந்து தப்பியிருத்தல் மாத்திரமன்று. சுகாதார
தாபன வரைவிலக்கணத்திற்கு அமைய சுகாதாரம் என்பது உடல், உள, சமூக, ஆன்மீக நிறைவுடன் வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான திறன்களை நற்சுக நிலையினூடாகப் பெற்றுக் கொள்ளல் ஆகும். சரியான போசனை, பழக்கவழக்கங்கள், போன்ற-வற்றின் ஊடாக இத்திறனைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப் பெறுகின்றது. சுகாதாரத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு துணையாக அமையும் அடிப்படை அம்சங்கள். * நற் சுகாதாரப் பழக்கங்களை அடிப்படையாகக் கொண்ட சரியான
நடவடிக்கைகள் குறித்த நிர்ப்பீடனமாக்கல் முறைகள் * வைத்தியர் அறிவுறுத்தல்களுக்கு அமைய, தேவையான வேளைகளில்
பெற்றுக் கொடுக்கப்படும் மருத்துவ உதவிகளும், சிகிச்சைகளும்
எவரேனுமொருவருக்கு சுகவாழ்வைத் தனியே பேண முடியாது என்பது சுகாதாரம் தொடர்பான விசேடமான அம்சமாகும்.
நல்ல போஷனை நல்ல சுகாதாரத்தை பேணும் வாழ்வு என்பது நோய் நொடி அற்று இருத்தலாகும். பால், பழம், முட்டை இலைவகை, இறைச்சிவகை, தானியவகை ஆகியவற்றை உண்பதனூடாக ஊட்டச்சத்தைப் பெற்று உடலை உறுதியாக்கி, உள்ளத்தைத் திடமாக்கி நோயின்றி வாழலாம். ஆகவே பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய போஷணையுள்ள உணவுவகை அவசியம், இதனை உணர்ந்து கிராமப்புறப் பெற்றோர்கள் அவற்றை தமது பிள்ளைகட்கு ஊட்ட வேண்டும்.
பாடசாலைகளும், சுகாதாரம், போஷாக்கு என்பவை சம்பந்தமாக முக்கிய கவனம் செலுத்தலாம். கிராமம் ஒவ்வொன்றிலும் சுகாதாரப் பரிசோதகர், வைத்தியர்களை அழைத்துப் பெற்றோர்கள், அதிபர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அனைவரையும் கூட்டிக் கருத்தரங்குகள்,
(ச.நா. தணிகாசலம்பிள்ளை -31 - ஆரம்பக்கல்வி)

Page 25
ஆலோசனைச் செயலமர்வுகள் களப்பயிற்சிகள் போன்றவற்றை நடத்தலாம். இதனால் மாணவர்கள் சுகாதாரம் பற்றிய சரியான அறிவைப் பெற்றுக் கொள்ளவதுடன் அன்றாட சுகாதார நடைமுறைப் பழக்க வழக்கங்களை வீட்டிலும், பாடசாலையிலும் மாணவரும், பெற்றோரும் கடைப்பிடிக்க ஏதுவாகின்றன. உதாரணமாக மலம் கழித்ததும் சவர்க்காரம் போட்டுக் கைகழுவுதல், கொதித்தாறிய நீரைக் குடித்தல், நாள்தோறும் குளித்து, சுத்தமான ஆடை உடுத்துதல், சுத்தமான காற்றை சுவாசித்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல் உளஅமைதி பேணுதல் ஆகியன போன்ற நற்பழக்கங்களை பாடசாலையும், சமூகமும் இணைந்து அறிமுகமாக்குதல் வேண்டும்.
சுகாதார வேலைத்திட்டங்களின் கட்டமைப்பாக பின்வரும் அம்சங்கள் அடங்குகின்றன.
> வகுப்பறைச் சுகாதாரக் கல்வி
) ஆரோக்கியமான பள்ளி வாழ்க்கை
> பாடசாலைச் சுகாதார சேவைகள்
>> சமூகத் தொடர்புடன் கூடிய சுகாதாரச் செயற்பாடுகள்
இவற்றை அன்றாட கிராம வாழ்க்கையுடனும், பள்ளி வாழ்க்கையுடனும் இணைத்து செயற்படுத்துவது நல்லது. எமது உணவு என்பது பற்றிய பாடம் ஒன்று அறிமுகமாக்கப்படும் போது விட்டமின்களைப் பற்றிக் கூறும் ஆசிரியர் போசணைப் பொருட்கள் எவற்றில் உண்டு. அதனை எவ்வாறு பெறலாம்? அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன? என்பவை பற்றிய விடயங்களை அறியவைக்க வேண்டும். தானியவகை, கிழங்குவகை எனபவற்றை மலிவாகப் பெற்று உடலுக்குச் சத்தூட்டம் தருபவை பற்றிய அறிவைப் பெறவைக்க வேண்டும். இவை எவ்வாறு நோய்களினின்றும் எம்மைக் காக்கின்றது. என்பது பற்றியும் அறியவைக்க வேண்டும்.
பிள்ளையின் உடற் சுகாதாரம், உளச்சுகாதாரம் விருத்தி அடைய செயற்திட்ட நடைமுறைகள் அவசியம். குழந்தைகள் உணவருந்த முன்பு கைகளைக் கழுவி உணவருந்துதல் போன்றவையும், தொற்று நோய் ஏற்படும் காலங்களில் வீட்டிலும், அயலிலும் மஞ்சள் நீர் தெளித்தல் போன்ற செயற்பாடுகளுடன் அக்காலங்களில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது பற்றிய அறிவைப் புகட்டுதல் மூலம் உடல், உள சுகநிலையைப் பெணும் வழிகளை மாணவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை -32 - ஆரம்பக்கல்வி)

*சுற்றாடலில் ஈக்கள், நுளம்புகள் போன்றவை பரவும் இடங்களை ஒழிப்பதற்கு மாணவர்களுடன் சேர்ந்து கிராமத்திற்குச் செல்லுதல், ஒரு செயற்பாடாகும். வீட்டுத் தோட்டங்களிற் காணப்படும் தென்னஞ் சிரட்டைகள், வெறும் தகரப் பேணிகள் போன்ற நீர் தேங்கி நிற்கக் கூடியவற்றை கவிழ்த்து வைத்தல் அல்லது அவற்றை அழித்து விடல் அல்லது அவற்றைப் புதைத்துவிடல், களைபூண்டுகளைப் பிடுங்குதல், குப்பைக் குழிகளை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை மாணவரின் உதவியுடன் ஒழுங்கமைக்கலாம்.
இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் களரீதியாக உற்சாகமளிக்கக் கூடிய ஒரு செயற்பாடாகும். பெற்றோர்கள் தங்களை நாடிப் பாடசாலைச் சமூகம் வருகின்றது என்ற உணர்வு அடிப்படையில் ஊக்குவிக்கப்பட்டு, உற்சாகம் கொண்டு ஒத்துழைப்பர்.
அதிபர் முகாமைத்துவம்
ஆரம்பக் கல்வியின் விருத்தியின்மைக்கான பல்வேறு காரணிகளுள் ஆரம்பப் பாடசாலையின் முகாமைத்துவ விருத்தியின்மை முக்கிய காரணியாக இனம் காணப்பட்டுள்ளது. ஆரம்பப் பாடசாலை என்ற நிறுவனம் கனிஷ்ட, இடைநிலை பாடசாலைகளை போல் கட்டமைக்கப்படாதுள்ளது. இப்பாடசாலைகளின் அமைவிடம், மாணவர் தொகைக்குறைவு ஆசிரியர் பற்றாக்குறை, பெற்றோர் ஆதரவு இன்மை, ஆகியவை காரணங்களாக அறியப்பட்டுள்ளன. குறிப்பாக அதிபரின் முகாமைத்துவத் திறன் விருத்தியாக்கப்பட வேண்டும். இதற்கு முக்கிய காரணிகளாக அதிபரின் நியமனம் கவனிக்கப்பட வேண்டும். அவர்களின் வாண்மை, கல்வித்தகைமை, அனுபவம், ஆரம்பக்கல்வி பற்றிய அறிவு என்பன அவற்றுட் சிலவாகும். பாடசாலையின் முதல் நிலை முகாமையாளர் என்ற நிலையில் பலர் தகுதியற்றவர்களாகக் காணப்படுவதால் ஆரம்பக்கல்விப் பாடசாலைகள் பயன்தரு நிறுவனமாக செயற்பட முடியாத நிலையில் தொடர்கின்றன.
ஒரு கிராமப்புறப் பாடசாலையின் கிராமச் சுற்றாடல் வளப்பயன்பாட்டிற்கு அதிபரே பொறுப்பேற்க வேண்டும். பாடசாலை அதிபரே கிராமப் பாடசாலையைப் பொறுப்பேற்ற நிறுவன முகாமையாளர், தற்போதைய முகாமைத்துவ கலாச்சாரத்தின் அடிப்படையில் அதிபரே கிராமப் பாடசாலையின் முதன்நிலை முகாமையாளருமாவர். முகாமையாளர் என்ற அடிப்படையில் சுற்றாடல், வளமுகாமைக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் அவர் நிறுவன முதல்வர், சமூக முகவர், அபிவிருத்தி முகவர், இந்தக் கருத்தடிப்படையில் அதிபர் அந்நிறுவனக் கல்வி விருத்திக்கு விடை கூற வேண்டியவர். கணிப்பீட்டுக்குரியவர் ஆகின்றார்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை -33 - ஆரம்பக்கல்வி)

Page 26
ஆரம்பக்கல்வி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அந்நிறுவனத்தின் பங்களிப்பும் மேற்பார்வையும் அவசியம். ஆரம்பக்கல்வி அறிவு நிறைந்த அதிபராலேயே மேற்காட்டிய செயற்பாட்டை நிறைவாக்க முடியும். அந்த அடிப்படையில் ஆரம்பக்கல்விப் பாடசாலையை பொறுப்பேற்று நடாத்தும் அதிபர் ஆரம்பக்கல்வபி பயிற்சி பெற்றவராக இருக்கவேண்டும். ஆரம்பக்கல்வி முகாமை, ஆதரவு, பங்களிப்பு என்பன மிகவும் நுண்ணிதானவை. குழந்தைகளின் உளத்தோடு சம்பந்தமானவை. அவர்களுக்கு கற்பித்து அனுபவமுடைய ஆசிரியர் ஒரு பாடசாலையின் அதிபர் பொறுப்பை ஏற்கும்போது அக்கல்வியை நல்ல முறையில் மேம்படுத்த முடியும். அந்த அடிப்படையில் ஆரம்பக்கல்வி அறிவு, அனுபவம் இல்லாதவர் எவரும் ஆரம்பக்கல்வியை பொறுப்பேற்கக்கூடாது. அத்தகையோரிடம் பொறுப் பளித்தலும் பொருத்தமற்றதாகும்.
பொருளாதார அடிப்படையில்
அதிபர் கிராமப் பாடசாலையின் பொறுப்பை ஏற்றவுடன் அக்கிராமத்தின் பொருளாதாரப் பின்னணியை நன்கு கண்டறிய வேண்டும். மக்களுடைய வருவாய் மூலங்கள் அவற்றை அவர்கள் பெறச் சரியான வழி முறைகளைப் பயன்படுத்துகின்றார்களா? என்பதை நன்கு கண்டறிய வேண்டும். அதிபரானவர் தனியாகப் பாடசாலை உள்ளக நிர்வாகச் செயற்பாட்டில் மட்டும் நின்று விடாது கிராமத்தினதும் வெளியக நிர்வாகச் செயற்பாட்டிலும் ஈடுபடவேண்டும். கிராம மக்கள் குறைந்த அளவினராகக் காணப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரப் பின்னணியையும் தகவல்கள், தரவுகள் அடிப்படையில் ஆசிரியர்கள் மூலம் அல்லது கிராமத்தில் வளர்ந்தோர்கள் மூலம் கண்டறிய வேண்டும். கிராமம் பற்றிய தகவல், தரவுகள் அடங்கியதான தரவு வங்கி பாடசாலையில் அமைக்கப்பட வேண்டும்.
இத்தகவல், தரவுகள் பாடசாலையினதும் கிராமத்தினதும் பொருளாதாரப் பின்னணியைப் படம் பிடித்துக் காட்டும் . ஒவ்வொரு மாணவர்களது குடும்பத்தினரதும் பொருளாதாரப் பின்னணியை அதிபர் அறிவதனுாடாக அக் குடும்பத்தில் இருந்து படிக்கவரும் மாணவனுக்குப் பொருளாதார ரீதியாகத் தாய், தந்தையர் மூலமோ அல்லது நிறுவனங்கள் ஊடாகவோ கல்வியை விருத்தியாக்க உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்,
சமூக அடிப்படையில்
அதிபர் கிராமத்தில், சமூகத்தில் ஒரு அங்கத்தவராவர். தானும் சமூக உறுப்பினராகக் கருதி சமூகத்துடன் ஒன்றிக்க வேண்டும். சமூகப் பின்னணியை
(ச.நா. தணிகாசலம்பிள்ளை 34 سم - ஆரம்பக்கல்வி)

கண்டறிய வேண்டும். கிராமத்திலிருக்கும் சமய ரீதியான மக்கள் தொகையையும், தொழில், இனரீதியான குடும்பங்களையும் வெவ்வேறாகக் கண்டறிந்து கொள்ளல் அவசியம், சமூகத்திலிருக்கும் உயர்வு, தாழ்வு வருமான அடிப்படையிலானதா? அல்லது வர்க்க அடிப்படையிலானதா? அல்லது கல்வி ரீதியானதா? என்பன கண்டறியப்பட வேண்டும். அத்துடன் சமூகத்தில் எத்தகைய குடும்பங்கள் பிரச்சனைகளுக்கு உட்பட்டனவாகக் காணக்கிடக்கின்ற தென்பதை அதிபர் கண்டறிதல் வேண்டும்.
அதிபர் சமூகத்தினருடன் ஒன்றிப்பதனுாடாகப் பாடசாலை மாணவர்கள் சமூகரீதியாக கல்வியில் சமவாய்ப்பு இல்லாமல் இருப்பதையோ, அல்லது கல்வியில் புறக்கணிக்கப்படுவதையோ அல்லது தாழ்வு நிலையில் கல்வி நிலையிலிருந்து நழுவும் தன்மைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையோ கண்டறிவதன் மூலம் அத்தகைய நிலைக்கு இடமளிக்காமல் அதிபர் ஒவ்வொரு மாணவனையும் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுத்த முயற்சி மேற்கொள்ள முடியும். சமூகப் பிறழ்வு புறக்கணிப்பு ஆகியவற்றைச் சமூக மக்களுக்கு வெளிப்படுத்தி கல்விக்கு வேறுபாடில்லை என்பதை உணர்த்திக் கல்வியில் சம வாய்ப்பைச் சமூக ரீதியாக அனைவருக்கும் வழங்க முடியும்.
கலாசார அடிப்படையில்
சமூக கலாசார அழகியல் உணர்வை சமூகத்திலிருக்கும் ஒவ்வொரு மகனுக்கும் ஏற்படுத்த வேண்டும். சமூகத்தில் உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு உழைத்ததன் பின் அமைதியும், ஆறுதலும் அளிப்பது கலாசார நிகழ்வுகளாகும். கிராமங்கள் பாரம்பரியமாகக் கலாசாரப் பண்புகளையும், விழுமியங்களையும், கலைக் கோலங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. இவற்றை அதிபரும், ஆசிரியரும் கண்டறிந்து அவற்றிற்கு வடிவமைத்து, சீராக்கம் செய்து அச்சமூக கலாசாரதுறையில் அபிவிருத்தியடைய வழிகாட்ட வேண்டும் கிராமத்தில் நல்ல கூத்து, கும்மி, கோலாட்டம், தாளம், நாடகம் போன்ற மரபியற் கலைகள் செறிந்து காணப்படுகின்றன. இவற்றை நல்ல முறையில் கிராமப்பள்ளி மாணவர்களைக் கொண்டு வடிவமைக்கலாம். பெற்றார் கிராமத்தில் கலைக்கென தம் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தயாரானவர்கள். அவர்-களிடம் இயற்கையான கிராமியக் கலைவளம், கிராமிய கலைஞானம் என்பன மலிந்து காணப்படுகின்றன.
பள்ளி மாணவர்கள் அவற்றை இளம் வயதிலிருந்து பார்த்தும் கேட்டும் நன்கு பழகியவர்கள். அவர்களுக்கு இயற்கையாகவே கலைஞானம் உண்டு. அதனைச் சீராக்கம் செய்து கையளிப்பதே ஆசிரியரதும், அதிபர்களதும் பணியாக இருக்க வேண்டும். அவர்களே அங்கு நடக்கும் கலாசாரக்
(ச. நா. தணிகாசலம்பிள்ளை -35- ஆரம்பக்கல்வி)

Page 27
கோலங்களை ஒழுங்கு பண்ணுபவராகவும் தலைமை தாங்குபவராகவும் இருத்தல் வேண்டும்.
கூடுதலான குக்கிராமங்களில் நல்ல கரகாட்டம், காவடியாட்டம், கோலாட்டம். கும்மியாட்டம், குடமுதல், குதிரைநடனம், பொம்மலாட்டம் போன்ற கிராமியக் கலைகள் நிறைந்து காணப்படுகின்றன. தாளம், மேளம், மத்தளம், மிருதங்கம், போன்ற இசைக் கருவிகளை இசைப்போர் காணப்படுவர். இவர்களை எல்லாம் பாடசாலைச் சமூகத்தில் இனங் காண வேணி டும் . அவர் களைக் கலைத்திட்டத்துடன் இணைத்து அவர்களின் ஊடாக மாணவர்களை மரபு ரீதியான முறைமைக் கல்வியை விடுத்து முறைசாரா நிலையில் பயின்று தேர்ச்சி பெறும் நிலையை அடைவதற்கு அதிபரும், ஆசிரியர்களும் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இத்தகைய செயற்பாடுகளே கிராமசமுதாயத்தில் கல்வி விருத்திக்குக் கலாசாரப் பின்னணி ஊடாக வளர்க்கப்பட வேண்டிய செயற்பாடுகளாகக் காணப்படுகின்றன.
ஆர்ம்ப கல்வி பாடசாலை நிர்வாகக் கட்டமைப்பு
ஆரம்பப் பாடசாலையின் அதிபர் ஆரம்பக்கல்விப் பயிற்சிபெற்ற ஆசிரியராகக் குறைந்தது ஐந்து வருடமாவது கற்றல், கற்பித்தல், செயற்பாட்டில் ஈடுபட்டிருந்திருக்க வேண்டும். அத்துடன் ஆரம்பக்கல்வி பாடசாலைகளின் செயற்பாடு பற்றி அறிந்தவராகவும், அப்பாடசாலையின் சூழல், மாணவர்களின் குடும்பப்பின்னணி, ஆசிரியர்களின் பின்னணி, என்பவற்றை அறிந்து மாணவ வளம் ஆசிரிய வளம் என்பவற்றுக்கு ஏற்றதாகப் பாடசாலையை கட்டமைக்கும் திறனுடையவராக வேண்டும். பாடசாலை மாணவர்களின் தொகை 100க்கு மேற்பட்டதாகவும். 500ற்கு குறைந்ததாகவும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் ஆரம்பப் பாடசாலைகளை இரண்டு மீற்றருக்குட்பட்ட தூரத்தினுள் தரம் ஒன்று தொடக்கம் மூன்று வரை குறிப்பாக ஒன்றிணைக்கப்பட வேண்டும். அவ்வாறிணைப்பின் நிலை ஓரளவு உறுதி வாய்ந்த கட்டமைப்பை கொண்டதாக உருவாக ஏதுவாகும்.
பத்து வருடங்களுக்கு மேலாக ஆரம்பக்கல்வியை கற்பித்த ஆசிரியர்களை இனங்கண்டு பிரமாண அடிப்படையை விதித்து ஆரம்பக்கல்வி அதிபரையும் அதிகாரிகளையும் தெரிவுசெய்ய வேண்டும். அவர்கள் ஆரம்பக்கல்வி அறிவுடன் ஆரம்பக் கல்வியில் முதுமாணி, தத்துவமாணி பட்டங்களைப் பெற்றவராகவும் இருக்க வேண்டும். மேலைநாடுகளில் ஆரம்பக்கல்வி வகுப்பறை கற்பித்தலில் இத்தகைய பட்டங்களைப் பெற்றவரே ஆரம்பக்கல்வி ஆசிரியர்களாக
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 36- ஆரம்பக்கல்வி)

நியமிக்கப்பட்டு கடமையாற்றுகின்றனர். அதே போலவே நியமிக்கப்படும் அதிபருக்கு ஆரம்பக்கல்வியில் அனுபவமும் துறைபோக கற்ற தன்மையும் அவசியம். ஆரம்பக்கல்வி முகாமை என்பது இடைநிலைக் கல்வி, உயர் கல்வி முகாமையைவிட மிகவும் பொறுப்பு வாய்ந்த நுண்ணியதான முகாமைத்துவம் ஆகும். அத்தகைய முகாமைத் துவத்தின் மூலமே ஆரம்பக்கல்விக்குரிய பெளதிகவளம், மனிதவளம் ஆகியவற்றை உரிய நேரத்தில், உரிய முறையில் பகிர்ந்தளிக்க முடியும். மாணவர்களின் உள வளத்தை அறிந்து மாணவர்களை இனங்கண்டு கற்பிக்க உதவ முடியும்.
இக்கட்டமைப்பில் அதிபர் முதல்நிலை முகாமையாளராவார். முதல்நிலை என்பது ஆரம்பக்கல்வியைத் தனது அறிவு ரீதியாக, வாண்மை ரீதியாக, கல்வித்தகைமை ரீதியாக, அனுபவ ரீதியாகப் பெற்று முதல்நிலை வகிக்க வேண்டும். இவர் கற்றல், கற்பித்தல் அறிவுறுத்தல் நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்பவராகவும் நாளாந்த நடைமுறை வேலைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் கற்றல் கற்பித்தலுக்கு ஆதரவும், ஆலோசனை, பின்னூட்டல், தொடர் நடவடிக்கைகள் போன்றவற்றில் அதிக அக்கறை எடுப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக 150மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர் குழுக்கற்றல், பல்தரக்கற்பித்தல், பல்மட்டக் கற்பித்தல், இழந்த கல்வியை ஈடுசெய்தல் (இழப்பீட்டுக் கல்வி) பரிகாரக் கற்பித்தல் என்பவற்றை அறிந்தவராக, செயற்படுத்துபவராக இருக்க வேண்டும் அத்துடன் 21ம் நூற்றாண்டுக் கலைத் திட்டத்துக்கு மாணவர்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
ஆரம்பக்கல்வி நிறுவனம் மாணவர் தொகைக்கேற்ப கட்டமைக்கப்படும். மாணவர் தொகை கிராமப்புற பாடசாலைகளிலும் நகரப்புற பாடசாலைகளிலும் வேறுபட்டுக் காணப்படும். நகர்ப்புறங்களில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை கொண்ட தனியான பாடசாலையாக ஆரம்பப் பள்ளி இயங்கும். அங்கு ஒவ்வோர் தரத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட பத்துப் பிரிவுகள் அல்லது குறைவாக உள்ளதாக அமையலாம். ஆனால் கிராமப் பாடசாலைகளில் ஆரம்பப் பள்ளியில் ஒவ்வொரு தரத்திலும் குறைந்த மாணவர் தொகை (1-15 மாணவர்களுடன்) ஒரு பிரிவு மட்டும் இயங்கலாம். சில பாடசாலைகளில் ஒரிரு ஆசிரியருடன் 1-5 தரங்களை இணைத்துக் கற்பிக்கவேண்டியும் ஏற்படலாம்.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 37- ஆரம்பக்கல்வி)

Page 28
(500 - 2500 மாணவர்கள் கொண்ட ஆரம்பப் பாடசாலை)
அதிபர் பா. அ. சங்கம்
கல்விசார் விடயங்கள் அதிபர்
ஆரம்பப் பிரிவு உதவி அதிபர்
மேற்பார்வையாளர்கள் (பாட இணைப்பாளர்களும் தர இணைப்பாளர்களும்)
| | | | | |
O 1. 2 3 4. 5 வகுப்பாசிரியர்களும் பாட ஆசிரியர்களும், மாணவர்களும்
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 38- ஆரம்பக்கல்வி)
 

(1 - 100 அல்லது 200 மாணவாகள்)
அதிபர் H பா. அ. குழு
வகுப்பாசிரியர்கள்
| | | | | |
O 2 3 4 5
மாணவர் தொகைக்கேற்ப இங்கு பிரிவுத்தலைவர்களும், மேற்பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை.
இக்கடட்மைப்பு பெரிய பாடசாலைகளைப் பொறுத்தமட்டில் அதிகாரப் பகிர்வு மேல் இருந்து கீழ்நோக்கி வழிக்கோட்டுடாக பரவலாக்கி, பன்முகப்படுத்தும் தன்மையை வெளிக்காட்டுகின்றது. அதிபரானவர் கல்விசார் நிர்வாகம் சார் அலுவல களைத் தனது சக பாடிகளான உதவி அதிபர்கடோகவும், உதவி அதிபர்கள் தம்முடன் உதவும் பாட இணைப்பாளர், தர இணைப்பாளர் ஊடாகக் கல்வி நிர்வாக விடயங்களை நடாத்துவர். உதாரணமாக 4ம், 5ம் தரங்களில் 10 பிரிவுகள் தனித்தனியாக அமைந்தால் பாட இணைப்பாளர்கள் மூலம் கல்வி விடயங்களையும், தர இணைப்பாளர்கள் மூலம் நிர்வாக விடங்களையும் மேம்படுத்தலாம். இங்கு நிர்வாக இலகுவாக்கம் நடைபெறுகின்றது. ஒரே அதிபரே பொறுப்பேற்று பொறுப்புக்களைச் சுமந்து திண்டாடும் நிலை தவிர்க்கப்படுகின்றது. நிர்வாக கல்வி விடயங்கள் வழிக்கோட்டின் ஊடாக இலகுபடுத்தப்படுகின்றன. ஒரே ஆளின் செயற்பாடு (One man Saw) என்பது இல்லாமற்போகின்றது. வகுப்பாசிரியர்களும் பெற்றோர்களும் தங்கள் விடயங்களை இருவழித் தொடர்பாக மேல் இருந்து கீழ்நோக்கியும், கீழிருந்து மேல்நோக்கியும் செயற்படுத்தல் இங்கு காணப்படுகின்றது.
இத்தகைய செயற்பாடுகள் மேம்பட ஆரம்பப் பாடசாலை அதிபர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுவதுடன் அவர்களுக்கான முகாமைத்துவப் பயிற்சி அதுவும் வதிவிடப் பயிற்சி ஊடாக அளிக்கப்பட வேண்டும். அதிபர்கள் முகாமைத்துவம் சம்பந்தமான நூல்களையும் விடயங்களையும் கற்றறிவதுடன் இன்ரநெற் ஊடாகவும் கற்றறிய வேண்டும்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை -39 - ஆரம்பக்கல்வி)

Page 29
இன்று கல்வி நிர்வாக அலுவலகங்களே முகாமைத்துவப் பயிற்சியை அளிக்கின்றன. இது தவிர்க்கப்படவேண்டும். எல்லாக் கல்வி நிர்வாகிகளும் கல்வியாளர்களோ அனுபவமானவர்களோ அல்ல. இதற்கு மாறாக கல்வியாளர்கள் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளைத் தேர்ந்து வதிவிட முகாமைத்துவப் பயிற்சி நிலையம் அமைத்து, பயிற்சியை அளிக்கலாம்.
ஆசிரியர்களை அதிபர்கள் பயிற்சிக்கு மட்டும் அனுப்பினால் போதாது. பயிற்சி முடிந்து வந்ததும் அவர்களை அழைத்துப் பெற்றுக்கொண்ட பயிற்சி சம்பந்தமான பின்னூட்டல், கலந்துரையாடல் நடத்தப்படவேண்டும். அவர் பெற்றுவந்த அனுபவுத் தை ஏனைய ஆசிரியர்களும் பகிர்ந்து நடைமுறைப்படுத்தக்கூடியதான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மாணவர்களுக்கு அக்கருத்துக்களைச் சென்றடையச் செய்யமுடிவதோடு பயன்பெற வைக்கவும் முடிகின்றது. இவ்வகைச் செயற்பாடுகள் மூலம் ஆரம்பப் பாடசாலையை பயன்தரு பாடசாலையாக மேம்படுத்தலாம்.
ஆரம்பக் கல்விப் பாடசாலை வகுப்பறை ஒழுங்குகள்
அநேகமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வழமையாக வகுப்பறைக்கு உள்ளேயே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே அவ் வகுப்பறைகள் பிள்ளைகளின் செயற்பாடுகளுக்கு போதுமான இடவசதிகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
ஒரு சாதாரண வகுப்பறை 20 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்டதாகவும் ஏறத்தாள 30 மாணவர்களை உள்ளடக்கக்கூடியதாகவும் அமைந்துள்ளன.
ஆசிரியர் தம் வகுப்பிலுள்ள 30 மாணவர்களையும், ஒவ்வொருவராக அவதானிப்பதற்கு வசதியாகத் தளபாட ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும். ஆசிரியரின் ஆசனம் மாணவர்களுக்கு முன்னே போடப்படுவதோடு மாணவர் ஒவ்வொருவரையும் ஆசிரியர் அருகில் சென்று பார்ப்பதற்கு வசதியாக தளபாடம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
மாணவரின் ஆசன ஒழுங்குகள் பல்வேறு வகையில் ஒழுங்கமைக்கப்படுதல் சாத்தியமாகும். மாணவரின் தளபாடங்கள் கதிரை மேசைகளாக இருப்பின் குழுச்செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆசிரியர்கள் திட்டமிட்டு ஒழுங்கமைத்தல் வேண்டும். அவ்வாறே வகுப்பறை யிலுள்ள ஏனைய தளபாடங்களையும் மாணவரின் கற்றலுக்கும் ஆசிரியரின்
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 40- ஆரம்பக்கல்வி)

கற்பித்தலுக்கும் பொருத்தமானதாக ஒழுங்கமைக்க் ஆசிரியர்கள் தம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆரம்ப வகுப்பறை ஒன்றில் பின்வரும் கற்றல் மூலைகள் அல்லது கற்றலைத் தூண்டும் செயற்பாட்டு இடங்கள் அமைக்கப்படவேண்டும்.
புத்தக மூலை
1.
2. மாதிரி வீட்டு மூலை 3. சித்திர ஆக்க மூலை 4. விளையாட்டுப் பொருட்கள் மூலை 5. ஆடல் பாடல் மூலை 6. உள்ளக விளையாட்டு மூலை
புத்தக மூலை:
அழகிய படங்களோடு கூடிய சிறிய புத்தகங்கள், பல்வேறு இனங்கள், மதங்கள், இடங்கள் தொடர்புகள் கொண்ட விடயங்களை விளக்கும் சிறிய வாக்கியங்களோடு கூடிய புத்தகங்கள்.
விளையாட்டுக்கள். பாடல்கள், கதைகள், பெரியார்களின் வரலாறு ஆகிய விடயங்களைக் கொண்ட புத்தகங்கள். புத்தக மூலையில் இடப்பட்டிருத்தல் வேண்டும்.
IDII:ff sífí (b ey606\o:
சிறுவர் சிறுமியர் வடிவமைந்த பொம்மைகள், வெவ்வேறு இனமத ஆடைகளை அணிந்த மாதிரி உருக்கள் கொண்ட விளையாட்டுப் பொருட்கள்.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 41 - ஆரம்பக்கல்வி)

Page 30
சமையலறைப் பாத்திரங்களின் மாதிரிகள். பழங்கள், பறவைகள், மிருகங்கள், வாகனங்கள், தொழிற்பண்புகளை விளக்கும் சீருடைகளை அணிந்தோரைக் காட்டும் பொம்மைகள். முடியுமாயின் சக்கரச்சுழல் சிறிய நாற்காலிகளை வைப்பது நல்லது.
சித்திர ஆக்க மூலை:
வரைதற்தாள், நீர்வண்ணம், கலர்ப்பென்சில்கள், அச்சுக்கள், நிறந்தீட்டப் பொருத்தமான படங்கள், களி (clay), துணித் துண்டங்கள், கண்ணாடித் தாள், கிறயோன்கள் (crayons) போன்ற வரைதற் பொருட்களைக் கொண்டிருத்தல் வேண்டும.
விளையாட்டுப் பொருட்கள் மூலை:
தானே இயங்கும் மாதிரி வாகனங்கள்,மாணவரின் சூழலில் காணப்படும் மிருகங்கள், பறவைகள் போன்றவற்றின் மாதிரிப் பொம்மைகள், பல்வேறு நிறங்களிலான வடிவங்கள், உருக்கள், கட்டி எழுப்பத் தகுந்ததான மாதிரிக் கட்டிட்த் துண்டங்கள் (Building Blocks) இணைத்து ஆக்கத் தகுந்த பொருட்கள் (Manipulative materials) இவை போன்ற விளையாட்டுப் பொருட்கள் இம் மூலையில் வைக்கப்பட வேண்டும்.
ஆடல் பாடல் மூலை :
வானொலி, ஒலிப்பதிவுக் கருவி, தொலைக்காட்சிப் பெட்டி, என்வற்றோடு ஒலி, ஒளிப் பதிவு நாடாக்களும், இறுவட்டுக்கள் என்பனவும், பிள்ளைகள் தாமே இசையெழுப்பத் தகுந்த இசைக்கருவிகளும் இருத்தல் வேண்டும். இத்துடன் ஆடல் பாடல்களை நிகழ்த்தக் கூடிய இடவசதியுள்ளதான வெளி வேண்டும்.
உள்ளக விளையாட்ரு மூலை :
குடும்ப, சமூக, சிந்தனைகளை விருத்தியுறச் செய்யும் உள்ளக விளையாட்டுப் பொருட்கள், ஏணியும் பாம்பும். சதுரங்கம்(Puzzles, Chess) கரம், இவை போன்ற விளையாட்டுப் பொருட்கள் வைக்கப்பட்ட வசதியான இடம்.
இத்தகைய வகுப்பறைச் செயற்பாட்டுக்கென ஒதுக்கப்படும் இடம்
பாடத்திட்டத்திற்கு அமைவான செயற்பாடுகளை மேற்கொள்ளப் போதுமான இடவசதி உடையதாய் இருத்தல் வேண்டும்.
இவை தவிர கற்றலைத் தூண்டும் வகையில் அலங்கரிக்கப்பட்ட சுவர்ச் சித்திரங்கள். மாணவரின் ஆக்கங்கள் என்பவற்றால் வகுப்பறையைக் கற்றலுக்குகந்த இடமாக மாற்றி அமைக்க வேண்டும்.
( ச. நா. தணிகாசலம்பிள்ளை - 42 - ஆரம்பக்கல்வி)

ஆரம்ப வகுப்பறையும் வளப்பிரயோகமும்
நவீன தொழில் நுட்ப முன்னேற்றங்களுடன் மாறி வருகின்ற புதிய உலகில் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. எத்துறையை ஆழ்ந்து நோக்கினாலும் ஏதோ ஒரு வகையில் அவை பல கிளைகளாகப் பிரிந்து தமக்கே உரித்தான முறையில் தேவைகளுக்கேற்ப அவை பரிணமிக்கின்றன. இவ்வாறு உருவாகும் நவீன உலகிற்கு தகுந்தபடி வாழக் கூடியவர்கள் நல் ஆளுமை கொண்ட நற்பிரஜைகள். இவ்வாறானவர்கள் உருவாகுவதன் அவசியமும் இன்று உணரப்பட்டுள்ளது.
ஒரு நற்பிரஜையை உருவாக்கி அவனை நாட்டிற்கு வழங்கும் பொறுப்பு பாடசாலையையும் பெற்றோரையுமே சார்ந்துள்ளது. பாடசாலை என்ன செய்கின்றது என நாம் எடுத்து நோக்கினால் மாணவனை, பின்னர் நாட்டின் பிரஜையாக உருவாகப் போகின்றவனை நல்ல உடல், உளக் கூறுகளுடன் கட்டியெழுப்பி கல்வியில் தெளிவுடைய ஒருவனாகவும், தொழிலில் ஈடுபடக் கூடிய தகுதியுடையவனாகவும் வெளியனுப்புகின்றது. இதற்கெனப் பெற்றோரின் அன்பும், காப்பும், தேவைகள் நிறைவேற்றல் போன்ற உதவிகளும் பெரும் பங்களிப்பினை செய்கின்றன. நற்பிரஜை உருவாக்கத்திற்கு பெற்றோரும், பாடசாலையும் பங்களிப்புச் செய்வதில் சமத்துவமுடையவர்களாகக் காணப்படுகின்றனர்.
பாடசாலையில் ஆரம்பத்தில் வழங்கப்படுகின்ற கல்வியே உறுதி கொண்ட அத்திவாரக் கல்வியாகக் காணப்படுகின்றது. வீட்டுச் சூழலிருந்தும், முன்பள்ளியிலிருந்தும் நேராகப் பாடசாலை வரும் குழந்தை அங்கு தனக்கு அன்பு, காப்பு, அரவணைப்பு போன்ற தேவைகளுடன் தாம் விரும்பிக் கற்பதற்கு நல்லதொரு சூழலையும் எதிர்பார்க்கின்றது. தான் முன்னரே கண்டறிந்த இயற்கையின் வனப்புகளையும், விலங்கினங்களின் இன்னிசை உருவமைப்பு போன்ற-வற்றையும் நல்ல காற்றோட்டமுள்ள, இடவசதி கொண்ட இருக்கை அமைப்புகளையும் நல்ல நண்பர்கள், நல்ல ஆசான் ஆகியோரையும் எதிர்பார்த்தே ஒரு குழந்தை ஆரம்பப் பாடசாலையில் காலடி எடுத்து வைக்கிறது.
ஆரம்ப வகுப்பறையானது சிறைக் கூடமாக அமையாது உள்ளத்தை உவகை நிலையில் வைத்து, கற்றலுக்கேற்ற சூழ்நிலையை பெறும் வகையில் அமைக்கப்படுதல் ஓர் ஆரம்பமாகும். ஆசிரியர் பாடத்தை தொடங்குவதற்கு முன்னர் வகுப்பறையில் காணப்பட வேண்டிய அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூரணமாகக் காணப்படுகின்றதா? என ஆராய்தல் அத்தியா வசியமாகும்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 43- ஆரம்பக்கல்வி)

Page 31
வெறுமனே கரும்பலகை, இருக்கைகள் மேசைகள் மட்டும் கொண்டதாக வகுப்பறை காணப்படல் கூடாது. முன்னர் கூறப்படவை போன்று ஆரம்பப் பிரிவில் ஆண்டு 1, 2, 3 பிரிவுகளின் வகுப்பறையானது கற்பித்தல் சாதனங்கள், உருக்கள், வரைபடங்கள் சுவர்ச் சித்திரங்கள், முப்பரிமாணப் பொருட்கள், சுற்றாடற்பலகை, அலுமாரி, அலங்காரவேலைப்பாடுகள் குழு வேலைகளுக்கேற்றவாறான இடவசதி, காற்றோட்டம், நல்ல வெளிச்சம் கூடிய வகையில் அமைக்கப்படுதல் அவசியம்.
ஒரு பாடத்தை கற்பிக்க முனையும் போது முதலில் ஆசிரியை மாணவனுக்கு தெரிந்த விடயத்திலிருந்து எண்ணக்கருவை கட்டியெழுப்புதல் வேண்டும். உதாரணமாக நிறங்கள் என்னும் பாடத்தை கற்பிக்க எடுக்கும் பொழுது மாணவன் தானறிந்த நிறங்களை கூற வழிப்படுத்தல் வேண்டும். அதன் பின்னரே ஆசிரியை மிகுதியைத் தெளிவுபடுத்தல் வேண்டும். அவ்வாறு நிறங்களை விளங்கவைக்கும் போது இயற்கையுடன் கூடிய தொடர்புகளை ஏற்படுத்திச் செல்ல வேண்டும். இவை சீருடை, போன்ற அண்மிய பொருட்க ளுடன் மாணவனை ஈடுபடுத்திப் பாடக்கரு விருத்திக்கு இட்டுச் செல்லல் வேண்டும்.
வகுப்பறை மேற்பார்வை
கல்வி அலுவலர்கள் வகுப்பறை மேற்பார்வையை மேற்கொள்வதற்கு முன்பாக பின்வரும் விடயங்களை கருத்திற்-கொள்ள வேண்டும். மாணவரது நிலை, ஆசிரியரது நிலை பாடசாலை முகாமைத்துவநிலை, என்பவற்றை சரியாக இனம் கண்டு அறிந்து அவற்றின் அடிப்படையில் வகுப்பறை மேற்பார்வையை திட்டமிட வேண்டும். இந்நிலையை கண்டறிவதற்கு அதிகாரபலத்தை மறந்து ஒரு சக ஆசிரியர் என்ற மனநிலையில் நின்று ஆசிரியர்களுக்கு உதவ வேண்டும். அதாவது ஆலோசனையும் வழிகாட்டலும் வழங்கல் என்ற மனப்பாங்குடன் மேற்பார்வைப் போக்கை அமைத்துக் கொள்ள வேண்டும். கலைத்திட்டம், மையநிலையில் வகுத்து அளிக்கப்பட்டாலும் நாம் மேலே காட்டிய நிலையில் சூழலை, பிரதேசத்தை கருத்திற் கொண்டு மாணவர் அடைய வேண்டிய தேர்ச்சி மட்டம், அவற்றை அடைய முடியாமைக்குரிய காரணங்கள் என்பவற்றை ஆசிரியருடன் சேர்ந்து கண்டறியவும் வேண்டும். இங்கு சூழலுக்கேற்ற கலைத்திட்ட அமுலாக்கம் இரு பகுதியினராலும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
கற்றவை, கற்பிக்கப்பட வேண்டியவை, அடைவுமட்டம், அவற்றை உயர்த்துவதற்கு உதவுவது.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 44- ஆரம்பக்கல்வி)

கற்பிப்பது யாருக்கு?
கற்பிப்பது எதனை?
கற்பிப்பது எவ்வாறு? இம் மூன்றையும் ஒருமதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களின் அடைவுகள் மூலம் இனம் கண்டு. குறைபாடுகளுக்கேற்ப மாணவர்களை தரம் பிரித்தலும் அதற்கேற்ப கற்றல் குழுவை உருவாக்கி கற்றல், கற்பித்தல் செயல் ஒழுங்கை மேற்கொள்ளவும் வேண்டும். பாடசாலை மேற்பார்வைக்கு செல்பவர் தன்னை ஒரு அனுபவம் வாய்ந்த ஆசிரியர் என்ற நிலைக்குத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். மேற்பார்வைக்கு உட்படும் ஆசிரியர்களைச் சகபாடிகள் என்ற உணர்வுடன் அணுகவேண்டும். அவர்களுடன் கற்பிக்க இருக்கும் விடயங்கள் குறித்துத் தனித்தனியாகவும்
குழுவாகவும் கண்டு உரையாட வேண்டும்.
இம் மேற்பார்வை திறந்த ஓர் உரையாடலாக அமைய வேண்டும். இங்கு சமமானவர்களாக, ஒருவருக்கொருவர் தாம் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து
கொள்ளும் செயற்பாடாகவும் இக்கலந்துரையாடல் அமைய வேண்டும்.
உதவுகின்றோம், ஒருவருக்கொருவர் உதவ முன் வந்துள்ளோம் என்ற அடிப்படையில் ஆரம்பக் கல்வி மேற்பார்வைக்கு முன்னும் , பின்னும் உரையாடல்கள் அமைய வேண்டும். ஆரம்பக் கல்வி மேற்பார்வை ஆரம்பக் கல்வி பற்றிய அனுபவம் இல்லாதவர்களால் செய்யப்படக் கூடாது. இம் மேற்பார்வைக்குச் செல்பவர்களுக்கு ஆரம்பக்கல்வி பற்றிய அறிவு நிறைய வேண்டும். ஆகவே ஆரம்பக்கல்வி மேற்பார்வை என்பது ஒரு நுண்ணிய செயற்பாடாகும். தொடர்ந்தேர்ச்சியான செயற்பாடும் ஆகும்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 45- ஆரம்பக்கல்வி)

Page 32
பின்னடைவும் மெல்லக்கற்போரும்
கிராமக் கல்விச் சூழலில் பின்னடைவும், மெல்லக் கற்கும் நிலையும் இயல்பான ஒரு விடயமாகும். மேலே கண்டவற்றின் அடிப்படையில் கிராமியக் கல்வி எதிர்நோக்கும் கல்விப் பிரச்சினையால் இவ்விரு தன்மையும் பொதுவாக அமைந்து விடுகின்றன. பின்னடைவிற்கு மாணவர்களது குடும்பச் சூழல், குடும்பப் பின்னணி, கிராமப்பின்னணி என்பவற்றுடன் அவர்களுக்கு கல்வி அளிப்பதற்குரிய ஆசிரிய வளம், பெளதிக வளம், ஆகியன மறுக்கப்பட்ட நிலையும் இவ்விரு தன்மைக்கும் பிரதான காரணிகளாக அமைகின்றன.
ஒருவனுடைய கல்வி, கருவறையிலேயே நிர்ணயிக்கப்பட்டு கல்லறையில் முடிவடைகின்றது. குழந்தையைக் கருவுற்ற தாயானவள் தான் கருவுற்ற காலத்திலிருந்து நல்ல கல்விச் சூழலில் வாழ்வது மட்டும் அல்லாமல் நல்ல நூல்களை வாசித்து நல்ல விடயங்களை அக்குழந்தைக்கு விதைக்க வேண்டும். அந்த ஞானம் தான் அவனுக்கு இளமையில் இருந்து முதுமைவரை சுடர்விட்டு ஒளி வீசுகின்றது. N
இந்தச் சூழல் இல்லாமல் புறச் சூழலுக்குட்பட்டுக் கற்கும் குழந்தை புறக் காரணிகளின் தாக்கத்தால் கல்விக்குரிய வாய்ப்புக்கள் வசதிகளை வழங்க இயலாதவிடத்துக் கல்வியில் பின்னடைகின்றது மெல்லக்கற்கின்றது.
இத்தகைய காரணிகளுடன் குழந்தையின் உளத் தன்மையும், உடலியற் தன்மையும் இப்பின்னடைவிற்கும் மெல்லக் கற்பதற்கும் காரணமாகின்றன. குழந்தை கல்வி கற்பதற்கு உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் தகுதித் தன்மை அடைய வேண்டும் இதனை விடயம் அறிந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தை கருவுற்ற காலத்திலிருந்து வளர்த்தெடுக்கும் காலம்வரை நன்கறிந்து தங்கள் குழந்தைக்கு ஏற்ற, வாய்ப்பான சூழலினை ஆக்கிக் கொடுக்கின்றனர். வசதிகள், வாய்ப்புக்கள் அற்ற குடும்பத்தினர் இப் பெறுமானத்தை அறியாதவர்களாய் அவ்வாறு வளர்த்தெடுக்கத் தவறி விடுகின்றனர். இத்தகைய நிலையும் இவ்விரு தன்மைகளுக்குக் காரணமாகின்றன.
பின்னடைவு என்றால் என்ன?
ஒரு மாணவன் அவனது கற்கும் வயது வகுப்பின் அடைதிறன் என்பவற்றை உரிய நிலையில் உரிய காலத்தில் அடையாது, அறிவு மனப்பாங்கு, திறன் ஆகியவற்றின் விருத்தி நிலையில் அதிகுறைந்து காணப்படுவதையே பின்னடைவு எனலாம். அவனது குணம், நடத்தை, கோலம், ஆற்றல்" என்பவை பின்தள்ளப்பட்டுக் காணப்படும். இதுவே பின்னடைவின் வெளிப்பாடாகும்.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 46- ஆரம்பக்கல்வி)

அந்தந்த ஆண்டின் இறுதியில் நான்கு வகையான மொழித்திறன்களின் ஊடாக மாணவன் பெற்றுக் கொள்ள வேண்டிய ஞானக்கலத்தின் (அறிவு, திறன்கள், மனப்பாங்கு, விழுமியம்) தன்மை அதில் குறிப்பாகக் காட்டப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் மாணவன் எய்தியுள்ள உத்தேச மட்டமானது (தேர்ச்சி மட்டமானது) அவனது அடுத்த ஆண்டுக்கான பிரவேசத் தன்மையாகின்றது. அந்தந்த ஆண்டுக்குரிய குறித்த பிரவேசத் திறன்களை தீர்மானிக்கும் ஆகக் குறைந்த தேர்ச்சி மட்டத்தை (எதிர்பார்ப்பு மட்டத்தை) மாணவன் அடைந்திருக்காவிடின் இடைநிலைக் கல்வியின் போது சிக்கலான எண்ணக்கருக்கள் வகையைச் சேர்ந்த குறைபாடுகள் அவனிடத்தில் ஏற்படும்.
வகுப்பு மட்டத்தில் அடையும் அடைவு மட்டத்திலும், அடுத்த ஆண்டுக்கான பிரவேசத் தகைமையிலும் மாணவர்கள் குறைவாகக் காணப்படின், அம் மாணவனை பின்னடைவு மாணவன், என்றும் அவனுக்குக் கற்பிக்க இயலாது எனவும் ஆசிரியர்கள் கூறிவிடுவர். இந்நிலையை அடையாத நிலையிலும் இலங்கையைப் பொறுத்தமட்டில் இயல்பாக வகுப்பு ஏற்றப்படும் தன்மையினால் அடுத்த வகுப்பில் கல்விப் போதனைக்கு ஆசிரியர்களுக்குச் சிக்கலை உருவாக்கி விடுகின்றது.
ஏதேனும் ஆண்டில் மாணவனொருவன் உத்தேச தேர்ச்சி மட்டத்தை எய்தாவிடின் அவன் அடுத்த ஆண்டில் கல்வி நடவடிக்கைகளில் வெற்றிகரமாக ஈடுபடுவது கடினமானதாக அமையும் மற்றுமொரு விதமாகக் கூறினால் அடுத்த ஆண்டில் வெற்றிகரமாகக் கற்பதற்குத் தேவையான பிரவேசத் திறன்களைப் பெறாதவர்களாயிருப்பர். எனவே வகுப்புக்குரிய தேர்ச்சியை அடையாத மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு வகுப்பேற்றஞ் செய்வதை நியாயமான தொரு நடைமுறையாகக் கொள்ள முடியாது
இத்தகைய நிலை இன்றைய கல்வி முறையில் பெரும்பாலும் சகல இடங்களிலும் ஆசிரியர்களுக்குப் பிரச்சினையைத் தோற்றுவித்து உள்ளது.
யாதேனுமொரு தரத்தில் இருக்கும் மாணவன் அத்தரத்தின் தேர்ச்சி மட்டத்துக்குக் கீழ் அல்லது அதற்குக் கீழான தரங்களின் தேர்ச்சி மட்டத்துக்கு கீழே காணப்படலே “பின்னிற்றல்” என்பதாய்க் கருதப்படுகின்றது. “அ” என்னும் மாணவன் ஆண்டு ஐந்தில் கற்கின்றான். அவனது வாசிப்புத்-திறமை ஆண்டு ஐந்து மட்டத்தை விடக் குறைவானதாகும். அவனது தேர்ச்சி மட்டம் மூன்றாம் ஆண்டு மாணவரது மட்டத்தில் காணப்படுகின்றது.
இந்தப் பின்னிற்றல் என்ற பதம் ஆசிரியரினால் நாம் பின்னடைவு என்று பாவித்த பதத்திற்கு ஏற்க பயன்படுத்தப்படுகின்றது.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 47- ஆரம்பக்கல்வி)

Page 33
இத்தகைய பின்னிற்பதற்கான காரணம் மாணவர்கள் பெறவேண்டிய அடிப்படை அனுபவங்களை ஆரம்பத்தில் பெற்றுக் கொள்ளாமையே. அடிப்படை அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்காக முன் பள்ளியிலும், பாடசாலை யிலும் சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். அதன் மூலம் இத்தகைய பின்னடைவைப் போக்க முடியும்.
மாணவர்களில் சிலர் விடய எண்ணக்கருக்களை விரைவாக விளங்கிக் கொள்வர். இவர்கள் மீத்திறன் மாணவர்களாவர். சிலர் தாமதித்து ஆறுதலாக விளங்கிக் கொள்வர். இவர்களையே நாங்கள் மெல்லக் கற்போர் என அழைக்கலாம். விடயங்களை நன்கு விளங்கிக் கொள்ள இவர்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது. பல்வேறு உத்திகள், கல்வி நுட்பங்களைக் கையாணி டு கல்வி உபகரணங்களின் துணையுடன் கற்பித்தல
மேற்கொள்ளப்படின் விரைவாக விளங்கிக் கற்க முடியும். அவ்வாறு கற்பித்தல்
அமையாவிடின் மாணவர் அவற்றை மெதுவாகவே விளங்கிக் கொள்வர்.
ஒரு வகுப்பில் உள்ள பிள்ளைகளில் இத்தகையோர் இருப்பின் அவர்களை ஒரு குழுவாக வகுத்துக் கொள்ளலாம்.
மெல்லக் கற்போரைக் கொண்ட வகுப்புக்களின் ஆசிரியர்கள். தனியான கவனஞ் செலுத்தி மாணவரைக் கற்பிக்க வேண்டும் இவர்கள்மீது பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து கவனஞ் செலுத்த வேண்டும். பாடசாலைச் சூழலும், வீட்டுச் சூழலும் இவர்களுக்கு உதவியாக செயற்பட வேண்டும்.
சில வேளைகளில் பிள்ளையினது உடல், உளக்குறைபாடுகள் அவனது பின்னடைவிற்குக் கூடுதலாக காரணங்களாக அமைகின்றன. இத்தகைய காரணங்களைக் கண்டறிந்து உதவவேண்டும். நன்றாக கற்று வந்த பிள்ளை திடீரெனச் சுகவீனம் உற்று அதனது உடல் வலுக்குறைவு ஏற்படும் பொழுது அதன் கற்றல் வேகமும், விடயத்தை கிரகிக்கும் திறனும் பாதிக்கப்படுகின்றது.
இவற்றை அனுபவ ரீதியாக எனது குடும்ப அளவில் என்னால் கண்டறிய முடிந்தது. எனது இரண்டாவது புதல்வி ஆண்டு நான்கு வரை நல்ல திறனுள்ள மாணவியாக வகுப்பில் கற்று வந்தார் அவருக்கு ஆண்டு நான்கில் செங்கண்மாரி நோய் வந்ததன் பின் உடல் நிலையில் மாற்றமும் ஏற்பட்டு கற்றல் நிலையிலும் வீழ்ச்சி காணப்பட்டது. அவர் பின்பு மெல்லக் கற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட தன்மையை என்னால் அவதானிக்க முடிந்தது. பெற்றாரும் ஆசிரியர்களுமாகிய நாம் கூடிய கவனம் எடுத்தமையால் அவரைத் திறனுள்ள மாணவராக்க முடிந்தது. இத்தகைய நிலையை பெற்றாரும்,
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 48- ஆரம்பக்கல்வி)

வகுப்பாசிரியரும் கண்டறிந்து உதவவேண்டும். தனியான கவனம் ஒன்று இத்தகைய மாணவர்களிடத்து தேவைப்படுகின்றது. தனியான கவனம் செலுத்துவதன் மூலம் ஓரளவு நிவாரணம் காண முடியும்.
குறைபாடுகளை இனம் காணாமை
நல்ல தீர்வுக்கும், நல்ல திட்டத்திற்கும் குறைபாடுகள் உரிய முறையில் இனங்காணப்பட வேண்டும். கல்விரீதியாக, அவதான மேற்பார்வை செய்பவர்கள் குறைகளை இனங்-காணாமையே நல்ல தீர்வை முன்வைத்து செயற்பாடாமைக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது.
கிராமப் பகுதிகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்களைப் பொறுத்த மட்டில் பாடசாலைகளில் நிறைய குறைகளை எதிர்நோக்குவர். அக்குறைகள் கூடுதலாக உள்ளதை மனதில் வைத்து சோர்வடைந்தும், வெறுப்படைந்தும் விடுவர்.
உண்மையில் இத்தகைய நிலையை விடுத்து குறைகளைப் போக்குவதை ஒரு சவாலாக மேற்கொள்ள வேண்டும். குறைகளைக் கண்டு விட்டு நீங்காது குறைகளைப் போக்குவோம் என்ற மனப்பாங்குடன் அவற்றை அணுக வேண்டும்.
குறைகளின் வடிவம் என்ன? அத்தகைய குறைபாடுகளுக்குரிய காரணம் என்ன? பின்னணி என்ன? என்பதை காரண காரியத்துடன் நன்றாக உற்று நோக்கிப் பகுத்தாராய வேண்டும். இன்னொரு விதத்தில் கூறினால் குறைகளின் தன்மையையும். அவை ஏற்பட்ட விதத்தையும் துருவித் துருவி ஆராய்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய செயற்பாட்டின் மூலம் குறைகளை நன்முறையில் இனங்காணலாம்.
குறைகளை இனங்காணாத தன்மையே கல்வி சீரடை-யாமைக்கு முக்கிய காரணியாக அமைகின்றது.
இந்நிலை கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களங்கள் போன்றவற்றிலும் காணப்படுகின்றது. அவர்கள் கிராமக் கல்வியையோ அல்லது கிராமப் பாடசாலைகளைப் பற்றி அறியவோ அவற்றின் குறைகளை அறிந்து அவற்றை நிவர்த்திக்கவோ முயலும் தன்மையினின்றும் விலகிக் கொள்கின்றார்கள். இதனால் பாடசாலைகளின் குறைகளைப் போக்கவோ, நீக்கவோ முன்வருவ தில்லை. இத்தகையோரின் ஆதரவு அதிபர்கள், ஆசிரியர், பெற்றோர்களுக்குக் கிடைக்காத காரணத்தினால் அவர்களும் இக்குறைகளைத் தம்மட்டத்திலாவது தீர்த்துவிட முனைவதில்லை. பாடசாலை மட்டத்தில் குறைகளை இனம் காணாமை அவற்றின் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 49 س ஆரம்பக்கல்வி)

Page 34
இக்குறைபாடுகளை அவர்கள் நல்ல முறையில் இனம் காணுவதன் மூலம் தங்கள் மட்டத்திலும், தமக்கு மேலானவர்களுக்கும் உதவிக் கல்வியில் அபிவிருத்தியைக் காணமுடியும்.
போக்குவரத்துக் கஷ்டம்
கிராமப் பாடசாலைகளை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று போக்குவரத்துக் கஷ்டம் இக் கஷ்டம் எந்த அளவிற்கு கிராம அபிவிருத்தியைப் பாதிக்கின்றதோ அந்த அளவிற்குப் பாடசாலை அபிவிருத்தியையும் பாதிக்கின்றது. பாடசாலை அமைவிடம் போக்குவரத்துக்குச் சுலபமான இடத்தில் இல்லாமை, அல்லது பிரதான வீதிக்கு அருகாமையில் அமையாமை அதிகூடிய தூரமாகப் பத்து அல்லது பதினைந்து மைல் தொலைவில் அமைந்து விட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், இப்பாதைகள் சீரற்ற முறையில் சேறும், சகதியும் கலந்தோ அல்லது மணல் நிறைந்ததாகவோ அமைந்து விட்டால் துவிச்சக்கர வண்டி மூலமாகவோ நடந்தோ செல்வதற்கு ஆசிரியர் மாணவர்கள் யாவருமே கஸ்டப்படுவர்.
இதனால் போக்குவரத்துப் பிரச்சனை பாடசாலைகளின் விருத்திக்குப் பெரும் தடையாக அமைகின்றது. போக்குவரத்து வசதிகள் ஒழுங்கின்றிக் காணப்படுவதனால் இவ்வாறான பின்னணியில் உள்ள பாடசாலைக்கு ஆகக் குறைந்தளவு வசதிகள் கூடக் கிடைக்கப் பெறுவதில்லை. புதிய ஆசிரியர்கள் கடைமையேற்ற ஓரிரு நாட்களுக்குள்ளாகவே அப்பாடசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆச்சரியப்படத் தக்கதொன்றல்ல.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 50 - ஆரம்பக்கல்வி)
 

கல்விச் செயற்பாட்டில் கடமையிலிடுபடும் ஆசிரியர்கள், அங்குள்ள போக்குவரத்துக் கஷடத்தால் கிராமப் பாடசாலையின் சூழல் அதிபர்களை ஊக்குவித்துக் கவருவதாக இல்லை. இதே போலவே இப் போக்குவரத்துக் கஷடத்தை காரணமாகக் காட்டி கல்வித் திணைக் களமும் கல்விப் பணிப்பாளர்களும் அவர்களின் பிரச்சினைக்கு உதவ முன் வராமை மட்டுமன்றி மேற்பார்வை செய்யவும் தவறி விடுகின்றனர். போக்குவரத்துக் கஷடத்தால் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இத்திணைக்களங்கள், கோட்டங்களுக்குச் சென்று தமது குறைகளை நீக்க முடியாதவர்களாக செயலற்று விடுகின்றனர்.
ஆரம்பக்கல்விப் பாடத்திட்ட நடைமுறைகள்
இலங்கையிலுள்ள நடைமுறையின் பிரகாரம் பாடத்திட்டம் மைய நிலையில் தயாரித்தே கையளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை பாடசாலைச் சூழலுக்கேற்பக் கற்பிப்பதே ஆசிரியர் செய்ய வேண்டிய செயற்பாடு ஆனால் கூடுதலான ஆசிரியர்கள் பாடத்திட்டத்தைபாடசாலை வளங்களுக்கேற்ப மாற்றியமைக்காது அப்படியே கற்பித்து விடுகின்றனர். இத்தகைய நிலை மாணவர்களை சூழலில் ஈடுபடுத்தி கற்கவைக்க மறுக்கின்றது. மாணவனது சூழலில் அவனுக்கு ஆர்வமான முறையில் செயற்பாட்டுடன் இணைத்து இப்பாடத்திட்டம் போதிக்கப்பட வேண்டும்.
இப் பாடத்திட்டம் முழுமையாக அந்தந்த ஆண்டு காலப்பகுதியில் பூர்த்தியாக்க வேண்டும் என மேற்பார்வையாளர்கள் எதிர்பார்த்தால் ஆசிரியர் மாணவர்களுக்கு அப்பாடத்திட்டம் சம்பந்தமான விடயம் விளங்கியதோ, கிரகிக்கக் கூடியதாக இருந்ததோ என்பதைப்பற்றி கவலைப்படாமல் நியம முறைக்கு உட்பட்டு, குறித்த காலப்பகுதியில் முடித்தும் விடுகின்றனர். இதனால் மாணவர்கள் விடய அடைவில் கஷ்டப்படுகின்றனர். பாடத்திட்டத்திற்கு அமைய ஒவ்வொரு வகுப்பிற்கான கற்பித்தல் நடவடிக்கைகளை உரிய விதத்தில் ஒழுங்கமைத்துக் கொள்வதில் ஆசிரியர்கள் பெருஞ் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஆசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புகளுக்குக் கற்பிக்க வேண்டியேற்படுகின்றது. உரிய பாடத்தைப் பூரணப்படுத்துவது பெரும்பாலான வேளைகளில் கடினமானதாக அமைகின்றது. நிருவாகத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டுள்ள நேரசூசிக்கு அமைய கருமங்கள் ஆற்றப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படும் அதே வேளை கருமங்கள் எவ்வாறாக ஆற்றப்படவேண்டும் என்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் ஆசிரியர்களுக்குக் கிடைக்கப்பெறுவதில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் வேலைகள் தனித்தனியே நிறைவேற்றப்படல் வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இது ஒருபோதும் நடைபெறுவது கிடையாது.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - S - ஆரம்பக்கல்வி)

Page 35
பாடத்திட்டச் செயற்பாடு ஒரு பொறிமுறைக்குட்பட்ட செயற்பாடாகவே கருதப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சூழல், அகவய, புறவயக் காரணி அதன் செயற்பாட்டின் விளைவு, பொருத்தப்பாடு ஆகியன கருத்திற் கொள்ளப்படுவதில்லை. இது பாடத்திட்டம் சார்ந்த பெரும் பிரச்சினையாகும். ஆரம்பக்கல்வி புலமைப்பரிசிலைக் கருத்தில் கொண்டு கணிதம், தமிழ் பாடத்திட்டத்திலேயே கருத்துக் கொள்ளப்படுகின்றது. ஆசிரியர்கள் ஏனைய பாடப்பரப்புக்களில் கவனஞ்செலுத்தாது, விடுவதுடன் அவர்களுக்கு நேரமும் கிடையாது என்கின்றனர்.
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களது சேவையை இப்பாடத்திட்ட செயற்பாட்டில் பெறமுடியாது. இப்பகுதிக்கு புதிய ஆசிரியர்களே நியமிக்கப்பட்டு வருகின்றார்கள். அவர்கள் பாடத்திட்டப் பிரயோகம் சம்பந்தமாக போதியளவு அனுபவ-மற்றவர்கள். இவர்களுக்கு பல்தரக் கற்பித்தல் அனுபவம் குறைவு. கற்பித்தாலும் கூட பாடத்திட்டத்திற்குரிய விடயப்பகுதிகளைக் கற்பித்து முடிக்க இயலாமல் இடர்ப்படுகின்றனர்.
கிராமப் பாடசாலைகளில் மீத்திறன் மாணவர்களையும், மெல்லக் கற்போரையும் ஒன்றாக வைத்தே பாடத்திட்டம் நடைபெறுகின்றது. இவர்களைக் குழுநிலைப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் எல்லாப் பாடங்களுக்கும் குறிப்பு எழுத வேண்டிய இடர்ப்பாட்டுக்கும் உள்ளாகியுள்ளனர். பாடசாலைகள் பலவற்றில் ஆசிரியர் ஓர் இருவர் கடமையாற்றுவதால் லீவு எடுக்க முடியாமலும், லீவு எடுப்பதனால் முறையான பாடத்திட்டப் பிரயோகம் நடைபெறாது போவது மட்டும் அல்லாமல் கற்பித்தலும் முறை-யாக நடைபெறுகின்றதெனக் கூறவும் முடியாதுள்ளது.
இங்கு ஆசிரியர்களால் அமுல்படுத்தப்படும் கலைத்திட்டத்திற்கு பெற்றோர்களது ஆதரவு கிடைப்பதில்லை. அவர்கள் விவசாயப் பாடத்தில் கூடுதலாக செய்முறையிலேயே நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
எந்த ஒரு கலைத்திட்ட அமுலாக்கத்திற்கும், பெற்றோர்களது ஆதரவு அவசியம். அவர்களுக்குப் பின்னுாட்டல், தொடர் நடவடிக்கை என்பன வேண்டியனவாக உள்ளன.
நகரத்தின் கலைத்திட்டத்தை கிராமத்திலும் பின்பற்றுதல் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். கிராம விஞ்ஞானம், கிராம விவசாயம் செய்முறை கொண்ட கலைத்திட்டமே செயற்படுத்தப்பட வேண்டும். கிராம மூலப்பொருட்கள் அடங்கிய கிராம விஞ்ஞான கலைத்திட்டம் அவசியம், கிராம ஆசிரியர் பயிற்சி கலாசாலை நிறுவப்பட வேண்டும்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 52- ஆரம்பக்கல்வி)

கிராமத்தை மையமாக கொண்ட கலைத்திட்டம் அமுல் நடத்தப்படாமையே கிராமத்தை ஒட்டிய கல்விப் பிரச்சினைகளுக்கு இங்கு மூலகாரணமாக கூறப்படுகின்றது. கிராம அபிவிருத்தியானது, கிராம சமூகத்தை, கிராம பொருளாதாரத்தை, கிராம மூளவளத்தைக் கருப்பொருளாகக் கொள்ளாத நிலையில் கலைத் திட்ட அமுலாக் கலே கிராமம் சார் ஆரம்ப கல்விப்பிரச்சினைளுக்குக் காரணம் என்பது வெளிப்படுத்தப் படுகின்றது.
ஆரம்பக் கல்வியும் மாணவர் சமூகமளிக்காமையும்
கிராமத்தைச் சூழ்ந்த மாணவர்கள் எதிர்நோக்கும் இன்னோர் பிரச்சினை தொடர்ச்சியாகப் பாடசாலைக்குச் சமூகமளிக்க முடியாமையாகும். இதற்குப் பல்வேறு காரணிகள் காரணமாக அமைகின்றன. எல்லாவற்றிற்கும் அடிப்படையாக பொருளாதாரக் காரணியே காரணமாக அமைகின்றது. அவர்களது பெற்றோர் கல்விப்பெறுமானத்தை உணராது தமது வறுமையினால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பத் தவறி விடுகின்றனர். தாங்கள் தொழிலுக்குச் செல்லும் போது தம்முடன் வளர்ந்த குழந்தைகளைக் கூட்டிச் செல்வர். அல்லது இளைய பிள்ளைகளை பராமரிக்க மூத்தவர்களை வீட்டில் விட்டுச் செல்வர்.
இங்கு பிள்ளைகள் தகுந்த போசாக்கின்மையாலும், சுகாதார நலன் பேணப்படாமையாலும் அடிக்கடி நோய்வாய்ப்படுவர். நோய்வாய்ப்பட்டாலும் அதற்கு நிவாரணம் தேடக்கூடிய மருந்து இல்லை. இங்கு அடிக்கடி மக்களை வாட்டும் நோய் மலேரியா நோயாகும். இந்நோய் கிராமப் புறப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படுவதொன்றாகும். அத்துடன் சாதாரணமாக வரும் சின்னமுத்து, கொப்புளிப்பான், அம்மைநோய் கூகைக்கட்டு போன்ற நோய்களுக்கு தடுப்பு மருந்து ஆகியவற்றைப் பெறாதாலும் நோய்வாய்ப்பட்டு பாடசாலைக்கு தொடர்ச்சியாக வராதுள்ளனர்.
பாடசாலையில் மாணவர்களது உளத்தேவையும், உளநிலையும் அறியாது ஊட்டப்படும் கல்வி அவர்களைப் பாடசாலையில் வெறுப்படையச் செய்கின்றது. “பிரச்சினைகளுடன் கூடிய பாடங்களின் பால் மாணவரின் விருப்பும், ஆர்வமும் குறைவாகக் காணப்படும். அவர்களுக்கு அப் பாடத்தில் படிப்படியாக வெறுப்பு ஏற்படும். பாடத்தில் வெறுப்பு ஏற்படின் பாடசாலைக்கு சமூகமளிப் பதிலும் ஆர்வம் குறைவடையும். இறுதியாக அவர்கள் பாடசாலையை விட்டு விலகிச் செல்கின்றனர்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 53- ஆரம்பக்கல்வி)

Page 36
மாணவர்கள் பாடசாலைக்கு விரும்பி வரக்கூடிய உவப்பான சூழலை ஆசிரியர்கள், அதிபர்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு அவனது நிலையை நன்கறிந்து அவனை ஊக்குவிக்கக் கூடிய கல்வி அளிக்கப்பட வேண்டும்.
கூடுதலான மாணவர்கள் தொடர்ச்சியாக சமூகமளிக்காமைக்கு போக்கு வரத்து கஷ்டமும் காரணமாக அமைகின்றது. கிராமப் பகுதிகளில் மாணவர்கள் ஐந்து அல்லது ஆறு மைலுக்கு கூடுதலான தூரத்தைப் போக்குவரத்து வசதியின்மையால் தினமும் நடந்து சென்றே பாடசாலையை அடைய வேண்டியுள்ளது. போஷாக்கின்மையால் உடல் மெலிவுற்று. நலிவுற்ற மாணவர்கள் தினமும் நடந்து செல்ல கஷ்டப்பட்டும் பாடசாலைக்கு செல்லாது விடுகின்றனர். அத்துடன் பருவமழைக் காலங்களிலோ அல்லது கடும் வெயில் காலங்களிலே உவப்பற்ற வானிலை காரணமாகவும் வராது விடுகின்றனர். மாரிகாலங்களில் மழையில் இருந்து தம்மைப் பாதுகாக்கச் சிறுகுடைதானும் வாங்கிக் கொடுக்க முடியாத நிலை. மாரிகாலங்களில் யானை போன்ற காட்டு மிருகங்களின் அச்சுறுத்தலும் அதிகம். எல்லாவற்றுக்கும் கல்வி பற்றியும், பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பாமல் விடின் ஏற்படும் விளைவு பற்றியும் பெற்றோர் அறியாமை காரணமாகின்றது. அதன் பலாபலனை சிறிதும் சிந்திப்பது கிடையாது. தமது பிள்ளைகள் அன்றாடம் கல்வி கற்றுச் சமூகத்தில் மேம்பட வேண்டும் என்பதை அறியாதுள்ளனர். பெற்றோர்கள் கல்வியில் ஆர்வமின்மையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பொற்றோரது இப் போக்கினால் மாணவர்கள் பாடசாலைக்குத் தொடர்ச்சியாக சமூகமளிக்காது விட்டு விடுகின்றனர். அதனைப்பற்றி அக்கறைப்படாத அதிபர், ஆசிரியர்களது போக்கும் அவற்றுக்கு உதவியாக அமைகின்றது.
குழுக்கற்கை
வகுப்பிலே கற்கைக்கு உட்படும் மாணவர்களை ஆசிரியர்கள் அவர்களது அறிவு மட்டத்திற்கேற்ப இனம் காண வேண்டும். மீத்திறன் மாணவர்கள், பின்னடைவு மாணவர்கள், மெல்லக் கற்போர் யார்? யார்? என பல்வேறு அவதானிப்புகள் மூலம் இனம் கண்டு கொள்ளலாம்.
இவ்வாறு இனம் கண்டு குழுக்களாக வகுத்துக் கற்பிக்-காமையால் ஆசிரியர்களுக்குப் பல பிரச்சினைகள் ஏற்படு-வதுடன் மாணவர்களது கற்கை நிலையிலும் பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது. அறிவும், திறனும் கூடிய மாணவர்கள் பாடவிடயத்தைக் கூடுதலாகக் கிரகித்து வேகமாகக் கற்றுக் கொண்டு செல்லும் பொழுது அறிவும், திறனும் குறைந்த மாணவர்கள்
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 54- ஆரம்பக்கல்வி)

அவர்களுடன் ஒத்துப்போகாது கஷ்டமுறுகின்றனர். இதனால் அவர்களுக்குத் "தாழ்வு உளவியற்தன்மை ஏற்பட்டுக் கல்வியில் வெறுப்படைகின்றனர். இதனால்
அவ்வகுப்பின் பொது மட்ட அடைவுத்திறனில் அவன் பின் நிற்கின்றான்.
தற்போது எமது பாடசாலைகளில் மாணவர்கள் ஆண்டு வாரியாக வகுக்கப்பட்டுள்ளனர். ஒரு வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட குழுவினர் எனக் கருதலாம். எனினும் இப்பிள்ளைகளிடையே வெவ்வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்கள் அடங்கியுள்ளனர். பிள்ளைகளின் இவ் வேறுபாடு களைக் கவனத்திற் கொண்டு அவர்களைக் கணித எண்ணக்கரு மட்டங்களுக்கு அமையக் குழுக்களாக வகுக்-கலாம். திறமை மட்டங்களுக்கு அமைய மாணவர்களைக் குழுக்களாக வகுக்கும் போது பல வகுப்புக்களில் கற்கும் மாணவர்கள் ஒரு குழுவில் இடம்பெறுவர். ஒரு குழுவிலிருக்கும் மாணவர்கள் உத்தேச மட்டத்தை அடைந்த பின்னர் அவர்களை அடுத்த குழுவிற்கு மாற்றுதல் வேண்டும். இவ்வாறாகக் குழுக்கற்பித்தல் முறை பின்பற்றப்படுவதாயின் கூடுதலான உதவி தேவைப்படும். மாணவரின் பால் ஆசிரியர் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.
ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டம் செயற்படுத்தப்படாமையானது, மீத்திறன் மாணவர்களுக்கும், பின்னிற்கும் மாணவர்களுக்கும் பிரதி கூலமானதாக அமைகின்றது. இவ்வாறான பாடங்களில் நேரம் வீண்விரய மாவதைப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காணமுடிகின்றது.
இத்தகைய விளக்கம் எமக்குத்தரும் நியாயம் என்னவெனில் அறிவுக்கும், திறனுக்கும் ஏற்ப மாணவர்களைக் குழுக்களாக வகுத்துக் கற்பிக்க வேண்டும் என்பதே. இதைத் தவற விடுகின்ற காரணத்தினால் பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரிய மாணவர்களது நேரம் வீண் விரயமாகி நல்ல வெளியீட்டைப் பெற முடியாது போகின்றது.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் சமூகத்தை ஈருபருத்தல்
கற்றல், கற்பித்தல் நடவடிக்கை என்பது ஓர் இணைந்த நடவடிக்கையாகவே அமைகின்றது. பாடசாலையும் சமூக-மும் இணைந்தே கற்றல், கற்பித்தலை விருத்தியாக்க முடியும். இன்று வகுப்பில் கற்கும் மாணவன் கற்கை முடிந்ததும், சமூகத்தில் வீட்டை நோக்கிச் செல்கின்றான். அங்கு அவனது கற்கை சமூக, வீட்டு அகவயக் காரணிகளின் தாக்கத்திற்குட்பட்டு பின்பு பாடசாலைக்கு மீளளிக்கப்படுகின்றது. பாடசாலை அதனை வளப்படுத்தி, மீள உருவாக்கி அனுப்புகின்றது. ஆதலால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், சமூகத்தில் உள்ளோர் மாணவரது கற்றலுக்கும், ஆசிரியரது கற்பித்தலுக்கும்
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - SS- ஆரம்பக்கல்வி)

Page 37
பின்னூட்டல் தொடர் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் இது ஒரு கிடைரீதியான கூட்டு நடவடிக்கை.
இத்தகைய நடவடிக்கை பற்றிக் கொள்கை ரீதியாக எடுத்துக் கூறப்படுகின்றதே ஒழிய, நடைமுறை ரீதியாக செயற்படுத்துகின்ற செயற்பாடு குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கு ஆசிரியர், அதிபர், பெற்றோரிடையே புரிந்துணர்வு இல்லாத தன்மையே காரணமாக அறியப்படுகிறது.
கிராமத்தவர்களது கல்வி ஆரம்பக்கல்விக்கு மாத்திரம் வரையறைக்கு உட்பட்டதாக இருந்தாலும் அவர்களிடம் பல்வேறு திறன்களையும் கொண்டவர்கள் உள்ளனர். இவர்களது திறன்களையும், ஆற்றலையும், கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களது ஆற்றல் திறன்கள் பாடசாலை முகாமையாளர்களால் இனங்கண்டு கொள்ளப்படுவதில்லை. இனங்கண்டு கொள்வதன் மூலம் கற்பித்தல் செயற்பாட்டிற்கு அவர்களது துணையையும் நாடிக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் கணிக்கப்பட்டு பாடசாலைக்கு அழைக்கப்படுவதில்லை. இவர்களைப் பகுதிநேர ரீதியில் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் ஆசிரிய வளம் குறைந்த இக்காலத்தில் சில பாடங்களின் போதனை இன்மையை நிவர்த்தி செய்யலாம்.
சமூகத்தில் நல்ல இயல், இசை, சித்திரவல்லுனர்கள் திறன்படைத்து இருப்பர். இவர்களைக் கற்பித்தல் கருமங்களில் ஈடுபடுத்தும் பொழுது அவர்கள் தங்களுக்கு ஒரு கணிப்புக் கிடைப்பதாகவும், அதனால் ஊக்குவிக்கப்பட்டு,
ஆர்வப்பட்டுத் தமது அழகியல் ஆற்றல்களை மாணவர்-களுக்கு கற்பித்து கொடுப்பர். இத்தகைய மனித வளங்கள் சமூகத்தில் பயன்படுத்தப்படாது வீணடிக்கப்படுவது சம காலத்தில் கல்வியில் பாரிய விளைவை ஏற்படுத்தும்.
பல் தரப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்-கானதொரு தீர்வாக சமூகத்தினரின் துணையைப் பெற்றுக் கொள்ள உதவும் அவ்வாறான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் பொருத்தமற்றதென யாரும் கருதமாட்டார்களல்லவா? இவ்வாறான வேலைத்திட்டங்களை நடைமுறைப் படுத்தும் முன்னர் பாடசாலைக்கும் சமூகத்துக்கும் இடையிலான அந்நி யோன்னிய ஒத்துழைப்பை விருத்தி செய்து கொள்ளல் மிக முக்கியமானதாகும்.
சமூகத்தில் உள்ளவர்களின் ஆற்றல் படைத்த மனிதவள உச்சப்பயனைப் பெற இத்தகைய நிலை வாய்ப்பளிக்கும் சமூகத்தவர்கள் தங்களின் பிள்ளைகளது அல்லது ஆசிரியர், அதிபர்களது உண்மையான நிலையைக் கண்டறிய வாய்ப்புக் கிட்டும். கண்டறிந்த பின் உதவும் சூழ்நிலை உருவாகும்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை -56 - ஆரம்பக்கல்வி)

சமூகத்தவர்களது உதவி
சமூகத்தவர்களுக்குச் சொந்தமானதே பள்ளிக்கூடம். அது அவர்களின் சொத்து. இந்த அடிப்படையில் சமூகத்தவர்களை அணுகி அவர்களது உதவியை பாடசாலை வளர்ச்சிக்கு பெற்றுக் கொள்வது அதிபர், ஆசிரியர்களது கடமையாகும்.
சமூகத்தவர்களுடன் பாடசாலை நிர்வாகம் கூடிய தொடர்பாடலை வைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய தொடர்பாடல் ஊடாகப் பாடசாலைக்கு வேண்டிய சகல உதவிகளையும் பெற்றுக் கொடுக்க வாய்ப்புக் கிட்டும். பாடசாலை முன்னேற்றம், அபிவிருத்தி என்பவற்றை கருதும் ஒரு நல்ல அதிபர் சமூகத்தவர்களது இன்ப, துன்ப நிகழ்வுகள், எதிலும் கலந்து கொள்ளத் தவறுவதில்லை.
சமூகத்தவர்கள் பொருள் உதவியைப் தங்களால் கொடுத்துதவ முடியாவிட்டாலும் சரீர உதவியைக் கொடுக்க முன் வருவர். இப்பகுதி பாடசாலைகளில் கூடுதலான சிரமதானத்தையும், சரீர உழைப்பையும் மக்களிடம் இருந்து பெற்று கொள்ளலாம். பாடசாலை நிர்வாகம் அவர்களை திட்டமிட்டு ஒழுங்குபடுத்தினால் அவர்கள் குழு ரீதியாகத் தம்மை வகுத்துக் கொண்டு வேலைகளைப் பகிர்ந்து நிறைவேற்றிக் கொள்வர்.
உதாரணமாக விளையாட்டுத்திடல் அமைத்தல், கட்டிடங்-களுக்கு வெள்ளை அடித்தல், கட்டிடங்கள் கட்டுதல், மரம் போடுதல், கூரை வேய்தல் ஆகிய வேலைகளை சிரமதான அடிப்படையில் நிறைவேற்றிக் கொள்ளலாம். இதற்குப் பாடசாலை நிர்வாகம் திணைக்களத்திலோ, அரசாங்க அதிபரிடம் இருந்தோ இச்சிரமதானப் பணியை முன்வைத்து கூடுதலான நிதியைப் பெற்றுக் கொடுத்து சமூகத்தவர்களை ஊக்கவிக்க வேண்டும். இத்தகைய நிலையில் சமூகத்தவர்களது உதவி இல்லையெனில் சமூக அபிவிருத்தியில் சமூகவளம் புறக்கணிக்கப்பட்டு, வேறு எவரும் கை கொடுத்து உதவ முடியாத நிலை ஏற்படும்.
இவர்களது உதவி பயன்படுத்தப்படாது விட்டால் அவர்களது திறன்கள் வீணடிக்கப்படும். அவர்களது ஓய்வு நேரங்கள் பாடசாலைச் செயற்பாட்டிற்குப் பயன்படுத்தப்படாது போகும். நல்ல பாடகர்களைப் பயன்படுத்தாவிட்டால் அக் கிராமத்தில் கிராமியப் பாடல்பாடும் வளமுடையோர் வீணடிக்கப்படுவர். நல்ல பாடல்களை வெளிக்கொணர முடியாது போய்விடும்.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை -57 - ஆரம்பக்கல்வி)

Page 38
சிறு சிறு கைத்திறனுடையவர்களது அனுபவங்களைப் பாடசாலைச் சமூகம் பயன்படுத்த இயலாது போகும். சமூகத்தில் உள்ள சிறுகைத்தொழிலை வீட்டிலும், பாடசாலையிலும் இணைந்து விருத்தியாக்க முடியாத நிலை உருவாகிவிடும்.
சமூகத்தில் பல்வேறு தொழிலாளர்கள் உளர், சிற்பி, மரவேலை செய்வோர், மேசன், மீனவர், தோட்டத் தொழிலாளர் ஆகியோரைப் பாடசாலைக்கு அழைத்து, பாடசாலை மாணவர்களுக்கு இத் தொழில்களை அறிமுக-மாக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சமூகத்தின் செயன்முறைக் கல்வியையும், பாடசாலையின் போதனை முறைக் கலவியையும் இணைத்துத் தொழிற்திறனை மேம்படுத்த சந்தர்ப்பம் உருவாக்கப்படுகின்றது.
சமூகத்தில் உள்ள கற்றறிந்தவர்கள் அதிகாரிகளை ஈடுபடுத்துவதனூடாக அவர்களது அனுபவங்களையும் புத்திக்கூர்மையையும் பாடசாலைக்குப் பயன் படுத்தலாம். இவ் அதிகாரிகளைப் பயன்படுத்தாவிட்டால் அவர்கள் பல்வேறு துறைகளில் பெற்றுக்கொண்ட அனுபவம், ஆற்றல் வீணடிக்கப்படுகின்றது. ஆகவே சமூகத்தவர்களது உதவி பயன்பெறாமை பாடசாலைச் செயற்பாட்டில் பாரிய விளைவை ஏற்படுத்தும்.
வீட்டில் தாய்மாருக்கு உணவுப் பாத்திரங்களைத் திறந்து வைப்பதால் ஏற்படும் தீமைகளை உணர்த்தி அதற்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும்.
நித்திரைக்குப் போகும் முன் எவ்வாறு உடலைச் சுத்தப்படுத்த வேண்டும். அதற்கான நிலையை எவ்வாறு உருவாக்குதல், தலையை நாள்தோறும் சுத்திகரித்துச் சீவுதல், போன்றவற்றை அன்றாட சுகாதாரச் செயற்திட்டமாக முன் வைக்கவேண்டும். இவற்றைச் சாதாரணமாக நடைபெறும் வேலைகள் என்று கூறி வேலைத்திட்டம் உருவாக்கப்படாமல் விடுவதனால் அப்பழக்கம் வலியுறுத்தப்-படாது போய் விடுகின்றது.
போஷணைக் கல்விச் செயற்திட்டம் இலைக்கஞ்சி மூலம் அறிமுகமாக் கப்பட்ட போதும் அது கைவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பால், பழம், தேன்,தானியம், கிழங்கு முட்டை ஆகியவற்றை அருந்துவதன் மூலம் இயற்கையான போஷணைச் சத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் செயற்திட்டம் மூலம் முன் வைக்கப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் எவ்வளவு கூறினாலும் பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறுகின்றனர்.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 58 - ஆரம்பக்கல்வி)

பள்ளிக் கூடங்களில் சுகாதார சேவை வழங்கப்படுவதில் ஒழுங்கின்மை காணப்படுகின்றது. அநேகமான கிராமப் பாடசாலைகளில் மாணவர்களின் தொகைக் கணிப்பீட்டுக்கு நிதிக்கோவை பணமொதுக்க இடமளிக்கிறது. ஆனால் அவை வழங்கப்படுவதில்லை.
ஆரம்பக்கல்வி கற்பிக்கப்படும் பாடசாலைகளில் மேலெழும் பிரச்சினைகள்
ஆசிரியரின்மை
ஆரம்பக்கல்வியை ஊட்ட முடியாமைக்கு கூறப்படும் அடிப்படைக் காரணிகள் பலவாகும். இவற்றில் சகல பாடசாலைகளிலும் காணப்படும் பிரச்சினை பயிற்சி பெற்ற ஆரம்பக் கல்வி ஆசிரியர்களின்மையாகும். ஆண்டு ஒன்றில் ஒரு மாணவனுக்கு ஊட்டப்படும் கல்வி அவனது வாழ்க்கையில் முதற்படியாக, முதற்கவிவாக உள்ளத்தில் பதியும் ஒரு கல்வியாகும். இதற்கு நல்ல பயிற்சியும், தேர்ச்சியும் பெற்ற ஆசிரியர்கள் தேவை. ஆரம்பத்தில் நல்ல முறையில் கல்வி ஊட்டுவதற்கும், அதனைத் தொடர்ந்து வளர்த்துச் செல்வதற்கும் ஆரம்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆண்டு ஒன்றில் கற்பிப்பதற்கு இல்லை. இதனால் அக்கல்வியை ஏனைய வகுப்புக்களில் தொடர்ந்து கற்றுயர்வதற்கு தடைகள் உள்ளன. இதற்குப் பதிலாக ஆண்டு ஐந்தில் புலமைப்பரிசில் பரீட்சையை மையமாக வைத்துப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அவ்வகுப்பில் கற்பிக்க அனுமதிக்கின்றனர். இது எதிர்பார்த்த விளைவை அளிக்கக் கூடியதல்ல. கிராமப்-பகுதிகளில் ஆரம்பக்கல்விப் பாடசாலைகளில் சிறிய பாடசாலைகளில் மாணவர் அனுமதித் தொகை விகிதம் குறைவாக இருப்பதனால் மாணவர் தொகைக்கேற்ற ஆசிரியர் விகிதத்தை அளிக்க முடியாமல் உள்ளது.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 59- ஆரம்பக்கல்வி)

Page 39
இப்பாடசாலைகளில் வருடந்தோறும் முறைசார் கல்வியைப் பெறுவதற்காக ஆண்டு ஒன்றில் சேரும் மாணவர்களின் தொகை ஆசிரியர், மாணவர் விகிதத்தை ஒத்ததாகவோ அல்லது அதைவிடக் கூடுதலானதாகவோ காணப்படவில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது அவ்-விகிதத்தின் பாதியளவை விடவும் குறைவானதாகவே இருப்பினும் கூட வகுப்பு வாரியாக நோக்கும் பொழுது இப்பாடசாலைகளின் கோலத்தில் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது.
உபகரணங்களின்மை
ஆரம்பக் கல்வியின் கலைத் திட்டத்தை போதிப்பதற்குரிய ஆரம்பக்கல்வி உபகரணங்கள் இன்மையும் ஒரு கல்விப் பிரச்சனையாகும் மாணவர்கள் பாலர் கல்வியை குழு முறைமையாக கற்க பாலர் மேசை, பாலர் கதிரை கூடுதலாக அளிக்கப்படுவதில்லை சொல் அட்டைகள், ஆரம்பக்கல்வி உபகரணங்கள் இப் பாடசாலைகளில் இல்லை. அப்பொருட்களை வைத்தெடுப்பதற்குரிய அடைத்த (வெல்மெஸ்ஸினால்) வகுப்பறைகள் இல்லை.
இத்தகைய நிலையினால் ஆரம்பப் பாடசாலைகளில் அதுவும் சிறிய பாடசாலைகளில் போதியளவு உபகரணங்கள் இல்லாத நிலையில் கற்பித்தற் செயற்பாட்டிற்கு ஆசிரியவள அணியினர் மிகவும் சிரமப்பட்டுக் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டிய நிலை அதிபருக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்படுகின்றது.
இந்நிலையில் ஒரே நேரத்தில் பல தரங்களில், இருக்கக்கூடிய
ஆசிரியர்களைக் கொண்டு முகாமை செய்யவேண்டி ஏற்படுகின்றது. இதற்கு உதவுவதுதான் பல்தரக் கற்பித்தல்.
பல்தரக் கற்பித்தல் முறை
பல்தரக் கற்பித்தல் என்பது ஒரே நேரத்தில் பல தரங்களுக்கு ஆசிரியர் கற்பித்தற் செயற்பாட்டில் ஈடுபடுவதாகும். முறைமையான நிலையில் வேண்டிய வகுப்பு மாணவர்களும், அதற்குரிய வகுப்பாசிரியர்களும் ஒரு பாடசாலையில் இல்லாதவிடத்து பொறுப்பாக இருக்கும் அதிபர், ஆசிரியாகள் கடைப்பிடிக்கும் நடைமுறைச் செயற்பாடாகும்.
பாடசாலையில் உள்ள சிறுதொகை ஆசிரியர்கள், மாணவர்களைச் சில வகுப்புக்களாக வகுத்து இயன்ற அளவுக்கு கற்பித்தலே பல் தரக் கற்பித்தலாகும். இதற்கேற்ப ஓர் ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று வகுப்புகளுக்குரிய வேலைகளை ஒரே வேளையில் ஒழுங்கமைப்புச் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஒரு தரத்துக்கோ ஒரு வகுப்புக்கோ
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 60- ஆரம்பக்கல்வி)

கற்பிப்பதற்குப் பதிலாக ஒரே ஆசிரியர் ஒரே நேரத்தில் சில வகுப்புக்களுக்கு கற்பிக்க வேண்டி ஏற்படுகின்றமையால் கற்பித்தல் முறைகள் தொடர்பாக ஏற்பட்ட எண்ணக்கருவே பல்தரக் கற்பித்தல் முறை”
இங்கு புதிய எண்ணக்கருவாக குறிப்பிட்டாலும் இம்முறை இத்தகைய பாடசாலைகளில் பழைய காலத்தில் இருந்தே செயற்படுத்தப்பட்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை முகாமை செய்யும் நவீன முறைக்குட்படுத்தி ஒழுங்கமைத்த ஓர் முறையே பல்தரக் கற்பித்தல் முறையாகும். இந்த முறை கிராமப்பகுதிக்கு மட்டும் அல்லாது நகரப்பகுதிகளில் மாணவர் தொகை குறைவான பாடசாலைகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பெரிய பாடசாலைகளில் ஆசிரிய வருகையின்மை கூடுதலாக காணப்படும் நாட்களில் இத்தகைய பல்தரக் கற்பித்தல் அதாவது வகுப்புக்களை ஒன்று சேர்த்துக் கற்பிக்கும் தன்மை காணப்படுகின்றது.
பல்தரக்கற்பித்தல் எண்ணக்கருவுக்குப் பல்வேறு வரை விலக்கணங்களை வழங்கலாம். ஆசிரிய பற்றாக்குறை காரணமாக ஓர் ஆசிரியர் சில வகுப்புகளுக்கு கற்பித்தல் என்பது ஒரு வரைவிலக்கணம். குறிப்பிட்ட அளவை விடக் கூடுதலான மாணவர்களை கொண்டுள்ள வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் கற்பித்தல் என்பது மற்றொரு வரைவிலக்கணம். ஓர் ஆசிரியர் பல தரங்களுக்கு ஒரே வேளையில் கற்பித்தலில் ஈடுபடுகையில் பாடசாலைகளில் நிலவும் நிலைமையை இனம் காண்பது பல்தரக் கற்பித்தல் கருமத்தை நன்கு ஒருங்கமைத்து கொள்வதற்கு துணையாக அமையும்.
இவ் அடிப்படைச் சூழ்நிலைகளைப் பாடசாலைகளில் கருத்திற் கொண்டு பல்தரக் கற்பித்தல் முறையை நல்ல முறையில் முகாமை செய்வதே கற்றல், கற்பித்தலில் நல்ல விளைவுக்கு வழிகோலும். வளப்பிரதேசத்தில் நாம் முக்கியமாகக் கையாளும் சாதனம் பாடக்கருவுடன் இணைந்ததாகக் காணப்படுகின்றதா? எனத் தெளிவுபெறல் வேண்டும். பயன்படுத்தப்படும் வளமானது அனைத்து மாணவராலும் கையாளப்படுகின்றதா? அல்லது ஒரு குழுவினரிடம் மாத்திரம் தங்கி விடுகிறதா என ஆசிரியர் நோக்குதல் வேண்டும். மாணவ குழுக்களை பிரிக்கும் பொழுது அறிவு மட்டம் கூடிய மாணவன், அறிவில் பின்னடைவான மாணவனை இனம் கண்டு, அவர்களை கலந்து ஒவ்வொரு குழுவிலும் இரு தரத்தினரும் இடம்பெறும் வண்ணம் குழுக்கள் பிரிக்கப்படல் வேண்டும்.
வகுப்பறையிலுள்ள மாணவர் யாவரும் தெளிவாக நோக்கும் வகையில் கரும்பலகை காணப்படல் வேண்டும். மாணவன் கற்பித்தற் சாதனங்களை தான் கையாண்டு தொட்டுணர்ந்து செயலாற்றும் பொழுது அவற்றை
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 61 - ஆரம்பக்கல்வி)

Page 40
நினைவிற்கொள்ள தலைப்படுகின்றான். உதாரணம் நிறை என்னும் கணித எண்ணக்கருவை நாம் எடுத்தால் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவரையும் தராசு (சிரட்டை, தகரமூடி, தேசிக்காய்) கொண்டுவரச் செய்து அவற்றில் கற்களையும் சிறு பொருட்களையும் இட்டு அளக்கச் செய்வதன் மூலம் மாணவன் நிறை அல்லது பாரம் கூடிய, குறைந்த பொருட்களை அறிய முயல்கின்றான். இச் செயற்பாட்டில் ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும் சென்று அதனை செய்து காட்டி மாணவர்கள் செய்துணர வழிப்படுத்தல் வேண்டும்.
வகுப்பறையில் மாணவர் தாம் கற்கும் ஒவ்வொரு பாட அலகையும் ஆழலுடன் ஒப்பிட்டறிய ஆசிரியர் தூண்டுல் அவசியமாகும். இதன் மூலமே பிள்ளைகள் தர்க்கரீதியில் சிந்தித்து விடை கண்டு அடைவுமட்டத்தை பெறுகின்றனர். ஆசிரியர் என்பவர் வெறுமனே தொழில் ரீதியில் செயற்படாமல் மாணவனின் தரத்திற்கு இறங்கிவந்து அவர்களுடன் நட்பு அடிப்படையிலும், பாச அடிப்படையிலும் இசையச் செய்து கல்வி புகட்டுவதில் முனைவராயின் புத்திஜீவிகள் உருவாகுவதில் சந்தேகமில்லை. அன்புடன் கூடிய கட்டுப்பாடுடன் ஒரு ஆசிரியர் பாடம் புகட்டுவராயின் மாணவர்களின் தரமும் உயர்ந்து செல்லும்.
எனவே ஓர் ஆரம்பவகுப்பு ஆசிரியர் தாயாக, தாதியாக, நண்பனாக, ஆலோசனை வழங்குபவராக, வழிகாட்டியாக, சிந்தனையை தூண்டுபவராக, போதியளவு சாதனங்களை கையாள்பவராகக் காணப்பட்டால் மாணவ சமூகம் நல்லதொரு அமைப்பில் கட்டியெழுப்பப்பட்டு நாட்டின் நாளைய அமைப்பில் நற்பிரஜைகள் பலர் உருவாகுவர் என நாம் திடமாக உணரலாம்.
வகுப்பறையும் தொடர்பாடலும்
தொடர்பாடல் அனைத்தும் கற்பித்தலாக இருக்கமாட்டாது. ஆனால் கற்பித்தல் அனைத்துமே தொடர்பாடலாகும். குறியீடு என்பது தகவலை தெரியப்படுத்துவதற்கு தொழில்-சார்ந்த மொழிசாராதவைகளை குறியீடு குறிக்கும். ஆசிரியர் வகுப்பில் கற்பிக்கும் போது குறியீடுகளைப் பயன்படுத்துவதில் தெளிவைப் பேணுதல் வேண்டும். சிறந்த கற்பித்தலானது இருவழித் தொடர்பாடலாக அமைதல் வேண்டும். இவற்றுடன் பின்னூட்டல் கட்டாயமாகப் பேணப்படல் வேண்டும்.
தொடர்பாடலும் கற்பித்தலும்
தொடர்பாடல் செய்தியை மட்டும் அறிவிக்கும். ஆனால் கற்பித்தல் இத்துடன்
மாணவர்க்கு மாற்றத்தையும் ஏற்படுத்தும். அனைத்து கற்பித்தலிலும் தொடர்பாடல் உண்டு. இவை இரண்டிலும் இருவழி காணப்படும். இங்கு
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 62- ஆரம்பக்கல்வி)

அனுப்பினர் தகவலை குறியீடாகப் பயன்படுத்தி ஊடகத்தின் மூலம் அனுப்புகின்றார். இங்கு கற்பித்தலை குறியீடாகப்பய்ன்படுத்தி ஊடகத்தின் மூலம் அனுப்புகின்றார். இங்கு கற்பித்தலின் ஊடகம் என்பது விரிவுரை, கலந்துரையாடல், செயல்முறை, நாடகம், நடிப்பு ஆகிய முறைகளில் அமைகின்றன. குறியீட்டை அல்லது மொழியை பயன்படுத்தும் போது மிகவும் பொருத்தமாகவும் தெளிவாகவும் பெறுனருக்கு அனுப்புதல் வேண்டும். சிறந்த தகவல் ஊடகத்தின் ஊடாக தகவல் சொல்லும் போது பெறுனர் மீள வலியுறுத்தல் பெறவேண்டிய அவசியம் இருக்காது ஆனால் சத்தம் இடையூறாக இருக்கும்.
வகுப்பறையில் தொடர்பாடல் தடைகள் 1. ஆசிரியர் பயன்படுத்தும் மொழி செம்மையாக வெளிப்-படாதிருத்தல். 2. சொற்களை பயன்படுத்துவதில் பொருத்தப்பாடு இன்மை.
ஆசிரியர் தனது கருத்தை வெளிப்படுத்த எந்த ஊடகம் சிறந்தது எனத் தெரிவதில் சிக்கல். 4. ஆசிரியரின் சிந்தனையில் குழப்பம்
ஆசிரியர் மாணவரிடையே ஏற்படுகின்ற கவலை, சலிப்பு, மனச்சோர்வு, வேறொரு கவனக் கலைப்பு 6. கருத்துக்களை பொருத்தமற்ற குறியீடுகளால் விளக்குதல்
ஆசிரியர் - மாணவரிடையேயுள்ள மொழியிலும் அறிவுக்கிடையிலுள்ள தெளிவிலும் இடைவெளி தோன்றல்.
தொடர்பாடல் வழிகள்
1. பேசுதல் கவனித்தல்
ஆசிரியர் வகுப்பறையில் விரிவுரை நடத்துதல் அல்லது விவாதித்தலின்
போது இது நிகழ்கின்றது. ஆசிரியர் தெளிவாக விளங்கத்தக்க வகையில்
சொல்லுதல் வேண்டும். அதே போல் மாணவரும் கவனத்துடன் செவிமடுத்து
கிரகித்தல் வேண்டும். விரிவுரையாளர் வினா, விளக்கல் என்பவற்றின்
போது பேச்சுத் தெளிவை கவனத்தில் கொண்டு கலந்துரையாடல் வேண்டும்.
2. காட்டுதலும் உற்று நோக்குதலும்
ஒரு பொருளை கண்முன்னே காட்டி நிகழ்வது. இந் நிகழ்ச்சியானது ஒரு கருத்தை காட்சிப்பொருளாக விளக்கும் சந்தர்ப்பத்தில் இது நிகழ்கிறது. சொற்களை குறைவுபடுத்தி பட விளக்கங்களை ஏற்படுத்தும் போது கற்பித்தல், கற்றல் இலகுவாகின்றது. செய்து காட்டல் கற்பித்தல், முறை பானது
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 63 - ஆரம்பக்கல்வி)

Page 41
‘சிறந்ததாகும். உற்று நோக்கல் என்பதில் படங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி என்பன அடங்குகின்றன.
3. எழுத்தும் வாசித்தலும்
குறிப்பு, வினா, வழங்கல் செயற்பாடு என்பவற்றில் எழுத்துச் செயல் இடம்பெறுகின்றது. வகுப்பில் வாசிப்புச் செயன் முறையில் வாசிப்பு இடம் பெறுகின்றது.
ஆசிரியருக்கு கல்வி உளவியல் எவ்வகையில் உதவுகின்றது.
ஓர் ஆசிரரியர் கல்வி உளவியல் மூலம் பெற்ற அறிவினைக் கொண்டு
வகுப்பறையில் நிகழும் கற்றல் கற்பித்தல் செயல்முறையை பயனுள்ளதாகவும்,
உயிர்துடிப்பு உள்ளதாகவும் ஆக்கிக் கொள்வதற்கு உதவுகின்றது.
மனித வளர்ச்சியில் அடிப்படைக் கோட்பாடுகளை உணர்ந்து மாணவர்களது கல்வி வளர்ச்சியில் இவற்றை நன்கு பயன்படுத்த ஆசிரியருக்கு கல்வி உளவியல் உதவுகின்றது.
மாணவர்களது குடும்பப் பின்னணியும் வீட்டுச் சூழலும் எவ்வாறு அவர்களது கல்வி வளர்ச்சியை பாதிக்கக் கூடும் என்பதை அறிய ஆசிரியருக்கு கல்வி உளவியல் உதவுகின்றது.
குழந்தை வளர்ச்சியில் பல்வேறு காலகட்டங்களில் எழும் உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மனளழுச்சி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, ஆகியன சார்ந்த பண்புகள் தேவை அவை பற்றிய அறிவை ஆசிரியருக்கு அளித்து இதன் அடிப்படையில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு திட்டமிட உளவியல் உதவுகின்றது.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 64- ஆரம்பக்கல்வி)
 

கற்றல் பற்றிய கோட்பாடுகள், கற்றலுக்கேற்ற சிறந்த வகுப்பறைச் சூழலின் தன்மை ஆகியவற்றை ஆசிரியர் உணரச்செய்ய உளவியல் உதவுகின்றது.
மாணவர்களிடம் காணப்படும் தனியாள் வேற்றுமைகளை உணர்ந்து இவற்றின் பாதிப்புக்களை எவ்வாறு சந்திக்கலாம், ஆலோசனை வழங்கு தலையும், சூழ்நிலைகளுடன் சிறப்பாக பொருந்தி வாழ வழிகாட்டுதலையும் எவ்வாறு மேற்-கொள்ளலாம் என்பன பற்றி அறியவும் உளவியல் உதவுகின்றது.
பாடசாலையை ஒரு சமுதாயக் குழு என உணர்ந்து தனிப்பட்டோரது வளர்ச்சியினையும் குழுக்களின் செல்வாக்கினையும் ஆசிரியர் அறிய உதவுகின்றது.
ஆசிரியரின் தன்மை பற்றியும் தமது தொழில் பற்றியும் நன்குணர்ந்து இவை பற்றிய ஆக்கமுனைப்புள்ள மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள உதவுகின்றது.
பரிகாரக் கல்வி . பரிகாரக் கற்பித்தல்
கற்றல் கற்பித்தல் நிகழ்வின் போது ஆசிரியர் தான் கொண்டு நடாத்தும் பாடத்தின் அடைவுமட்டம் வகுப்பறையிலுள்ள எல்லா மாணவர்களுக்கும் சென்றடையும் என நாம் உறுதியாகக் கூறமுடியாது. மீள்திறன் கூடிய
மாணவர்கள், சராசரியறிவுடைய மாணவர்கள் பின்னடைவான மாணவர்கள்
என்று மூன்று நிலைகளில் மாணவர்கள் வகுப்பறையில் காணப்படுவர் இவர்களை இனம் கண்டு தனியாள் வேறுபாடுகளுக்கேற்ப கற்பித்தலை மேற்கொள்ளல் அவசியமாகும்.
ஒரு வகுப்பறை நிகழ்வை நாம் எடுத்து கொண்டால் 30 நிமிடத்தில் பாட அலகினை முடித்துக் கொள்ளல் வேண்டும். இச்செயற்பாடு தரம் 1, 2, 3க்கு உரியதாகும். தரம் 4, 5இல் 40நிமிடம் ஒரு பாட நேரமாக காணப்படுகின்றது. ஆரம்பக்கல்வி ஒன்றிணைந்த பாடக் கற்றல் கற்பித்தல் செயலொழுங்கில் உள்ளடக்கப்படினும் ஒரு குறுகிய காலத்தில் நாம் குறைந்தது 3 சிறப்பு நோக்கங்களை மாணவர் அடையச் செய்தல் வேண்டும். மாணவரிடத்தில் கற்றல் இடர்ப்பாடுகள் பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. வெவ்வேறு காரணங்களால் ஏற்படும் இடர்ப்பாடு ஒவ்வொன்றையும் நிவர்த்திப்பதற்கு வெவ்வேறு பரிகாரங்களைக் காண்பது அவசியமாகிறது. அவ்வாறான பரிகார நடவடிக்கைகள் மூலம் மாணவரைத் தேர்ச்சி நிலைக்கு உயர்த்திக் கற்றலைத் தொடரச் செய்யும் கல்வியே பரிகாரக் கல்வியாகும்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 65- ஆரம்பக்கல்வி)

Page 42
கற்றலின்போது மாணவரின் கற்றல் இடர்ப்பாடுகளை இனங்கண்டு அவர்களின் இடர்ப்பாட்டுக்கான காரணங்களை அறிந்து இடர்ப்பாட்டை நீக்குவதற்கான வழிமுறைகளையும் பரிகார நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவர்கள் அடைய வேண்டிய தேர்ச்சியை அடையச் செய்தல் பரிகாரக் கல்வி எனப்படுகிறது. 0 மாணவரின் கற்றலின்போது இடர்ப்பாட்டை இனங்கண்டு அதற்கான
பரிகார அணுகுமுறைகளைத் தீர்மானித்தல். 0 மாணவரின் செயற்பாட்டில் கண்டறியப்படும் வழுக்களைப் பகுப்பாய்வு
செய்தல். 9 வழுக்களுக்கான காரணங்களை அறிதல், 9 காரணங்களுக்கு ஏற்ப இடர்ப்பாட்டை நிவர்த்திப்பதற்கான பரிகார
நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் 0 பரிகார நடவடிக்கைகளுள் ஒன்றாகப் பரிகாரக் கற்பித்தலை முன்வைத்தல்
ஆகிய செயற்பாடுகள் பரிகாரக் கற்பித்தல் செயலொழுங்கில் அறியப் பட்டுள்ளன.
கற்றலின்போது இடர்ப்படும் மாணவர்கள் தாம் எதிர்பார்த்த தேர்ச்சியை அடைவதற்கு கற்றல் கற்பித்தல் மூலம் மேற்கொள்ளப்படும் மாற்றீட்டுக் கற்பித்தல் அணுகுமுறையே பரிகாரக் கற்பித்தலாகும்.
வகுப்பு ஆசிரியர் கற்றலில் பின்னடைவான மாணவருக்கு பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் மேலதிகமான வகுப்புக்களை நடாத்துவதன் மூலம் இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதும் உண்டு. பாட ஆசிரியராயின் தனது ஓய்வு நேரங்களை பயன்படுத்தியும், மேலதிக வகுப்புக்களை நடாத்தியும்
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 66 - ஆரம்பக்கல்வி)
 

இதனை நிவர்த்தி செய்கின்றனர். அவ்வாறு நிவர்த்தி செய்யும் பொழுது பாடஅலகின் ஆரம்பத்திலிருந்து கொண்டு செல்லல் அவசியமாகிறது. இடையிடையே மதிப்பீட்டுச் செயற்பாட்டையும் மேற்கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு பரிகாரக் கற்பித்தலை மேற்கொள்ளல் ஆசிரியரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
ஆரம்பப் பிரிவினர்க்குப் பொருத்தமான கற்பித்தல் முறைகள்
மொண்டகுரி கற்பித்தல் முறை குழந்தை பூங்கா கற்பித்தல் முறை
விளையாட்டு முறை
பிரச்சினை விடுவித்தல் முறை
செயல்முறை
கண்டறி முறை
செய்து காட்டல் முறை
(5(g (p68)
கலந்துரையாடல் முறை
மொண்டகுரி கற்பித்தல் முறை இத்தாலிய நாட்டைச் சேர்ந்த வைத்தியக் கலாநிதி மரியா மொண்டகுரி 1907ஆம் ஆண்டு “குழந்தை இல்லம்" என்னும் சிறுவர் பாடசாலையை நிறுவி அங்குள்ள சிறுவர்களுக்கு கல்வி அளிப்பதில் ஒரு புது முறையினை கையாண்டார். அக்கற்பித்தல் முறை “மொண்டகுரி கற்பித்தல் முறை’ எனப் பிரபல்யம் அடையலாயிற்று. பிள்ளைகள் இயல்பான சூழலில் தாமாக முன்வந்து
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 67- ஆரம்பக்கல்வி)

Page 43
சுதந்திரமாக ஓடியாடி, விளையாடித் தமது கற்றல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பாடசாலைச் சூழலையும், கற்றல் கற்பித்தல் கருவிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். இவ்வாறு கற்றலில் ஈடுபடும் பிள்ளையை ஆசிரியர் பரிவுடன் கவனித்து அவர்களை நெறிப்படுத்தி வழிகாட்டுபவராக இருத்தல் வேண்டும். இதன் மூலம் பிள்ளைகள் தாமாகவே முன் வந்து கற்றலில் ஈடுபடும் நிலை ஏற்படுகின்றது. இத்தகைய கற்பித்தல்முறை மொண்டகுரி கற்பித்தல் முறை எனப்படுகிறது.
2. குழந்தைப் பூங்கா கற்பித்தல் முறை
கற்பித்தல் முறைகளில் பெஸ்ரலாசி என்பவர் ரூசோவின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து புதியதொரு கற்பித்தல் முறையினை வெளியிட்டார். பிள்ளைகளிடம் மறைந்திருக்கும் இயல்பான ஆற்றல்களை புலப்பயிற்சி மூலம் வெளிக்கொணர்தல் என்ற கருத்தை உலகிற்கு முதன் முதல் தந்தவர் இவரேயாவர். குழந்தைகளிடம் இயல்பாகவே காணப்படுகின்ற திறன்களை வெளிக்கொணர்ந்து அவர்களை ஆளுமையுடையவர்களாக உருவாக்குதல் வேண்டும். குழந்தை கல்வி பயிலும் இடம் அவர்களுக்கு விருப்புடையதாக இருக்க வேண்டும்.
குழந்தைகளை இவர் வளரும் செடிகளுக்கு ஒப்பானவர்களாகக் கருதினார். செடிகள் வளர்வதற்கு தோட்டக்காரன் அச் செடிகளில் கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும். இதே போலத்தான் குழந்தைகளின் வளர்ச்சியிலும் ஆசிரியர் தோட்டக்காரன் போன்று கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும். என எடுத்துரைத்தார். இவ்வாறமைந்த ஆழலில் கற்கத் தூண்டும் முறை குழந்தைப் பூங்கா முறை எனப்படுகின்றது.
3. விளையாட்டு முறைக் கற்பித்தல்
கால்டு வெல் குக் என்பவரால் எடுத்துரைக்கப்பட்ட விளையாட்டு முறைக் கற்பித்தல் தற்கால கல்வியியலாளரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருசிறந்த முறையாகும். இது ஆரம்ப வகுப்புப் பிள்ளைகளுக்கு மிகவும் பயன் மிக்க முறையாகும். இங்கு விளையாட்டைக் கருவியாகப் பயன்படுத்தி பிள்ளைகளைக் கல்விச் செயற்பாட்டில் நாட்டத்தையும், விருப்பத்தையும் ஏற்படுத்துதல் வேண்டும் என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே விளையாட்டினுடாகக்
கல்விச் செயற்பாடு இடம் பெறுகின்றமையை நாம் காணலாம்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 68- ஆரம்பக்கல்வி)

4. பிரச்சினை விருவித்தல் முறை
ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை அல்லது பிரச்சினைகளை சிந்தித்தே தீர்க்க முயல்கிறான். ஒருவன் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற பொழுது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேண்டிய திறன்களையும், பயிற்சிகளையும் முன்னதாகவே அளிக்க வேண்டியது ஆசிரியனதும், பாடசாலையினதும் தலையாய கடமையாகும். இதன் அடிப்படையிலிருந்து தோன்றியதே பிரச்சினை தீர்த்தல் என்னும் முறையாகும்.
பிள்ளைகளின் கற்றல் செயல், அனுபவம் மூலம் நடைபெற வேண்டும். என ஜேன் டுயி விரும்பினார். எனவே பிள்ளை தனது உடலை நன்கு பழக்கப்படுத்திக் கொள்வது ஒரு பிரச்சினையாக உள்ளது. இந்தப் பிரச்சினைகளை தீர்க்கும் வழிகள். பாடசாலையிலே பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதன் அடிப்படையில் எழுந்ததே பிரச்சினை விடுவித்தல் முறை ஆகும்.
5. செயல் முறை கற்பித்தல்
கற்றலுக்கு முன் வைக்கப்படும் ஏதாவது ஒரு பிரச்சினையை செயற்றிட்டமாக அமைத்து அதிலிருந்து முடிவைப் பெறும் வழிகளைத் தெரிதல் இம்முறை கற்பித்தலாகும். ரிச்சர்ட்ஸ் என்ற கல்வியியல் அறிஞர் முதன் முதலில் இம் மூன்றயைப் பயன்படுத்தினார். இதனைப் பின்பு நல்ல முறையில் கட்டியெழுப்பியவர் என். எச். கில்ஸ் ஆவார். மாணவர் தாமே ஒரு செயலைத் தேர்ந்தெடுத்து அதனை அவர்களே செய்து முடிப்பதன் மூலம் அறிவு, திறன், மனப்பாங்கு, அனுபவம், என்பவற்றைப் பெறுகின்றனர். இக்கற்பித்தல் முறையானது மாணவருக்கு ஆர்வத்தை வழங்கி அவர்களின் சிந்தனையைத் தூண்டும் ஒரு முறையாகவும் காணப்படுகின்றது. 6. கண்டறிமுறைக் கற்பித்தல்
மாணவர் தமது முயற்சியினால் விடயங்களைக் கண்டறிந்து கொள்வதன்
மூலம் கற்றல் மிகவும் உயர் மட்டத்திலான பலனைத் தருகின்றது. பிள்ளைகளிடம் இயல்பாக உள்ள ஆராய்வூக்கத்தை தூண்டி எதனையும் அவர்களாகவே ஆராய்ந்து அறியும் திறனை வளர்த்தல் இக் கற்பித்தல் முறையின் அடிப்படைத் தன்மை ஆகும். ஆம்ஸ்டேட் எனும் அறிஞர் விஞ்ஞான விடயங்களைக் கற்பிக்க கண்டறி முறையைப் பயன்படுத்திப் பெரு வெற்றி கண்டனர். இதனால் ஏனைய பாடங்களிலும் இதனைப் புகுத்துவதற்கு காரணமாயிற்று. ஆசிரியர் தகவல் திரட்டி மாணவருக்குக் கொடுப்பதை
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 69- ஆரம்பக்கல்வி)

Page 44
விட அனுபவங்களினூடாக உண்மைகளைத் தாமே கண்டறிவதற்கான வழிமுறைகளை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கண்டறிமுறைக் கற்பித்தல் காணப்படுகின்றது. இது மேலும் திறந்த கண்டறிமுறை, வழிகாட்டப்பட்ட கண்டறி முறை என வளர்ந்துச் செல்கிறது.
7. செய்து காட்டல் முறை
ஆரம்ப வகுப்புக்களில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கு செய்து காட்டல் முறை மிகவும் பயனுடையதாகும். செய்து காட்டிக் கற்பிப்பதனால் மாணவர்கள்
கற்பதில் ஆர்வமும், ஈடுபாடும், காட்டுகின்றனர். சிறிய நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து வகுப்பறைகளில் இம் முறை மூலம் கற்பிக்கலாம்.
8. குழு முறைக் கற்பித்தல்
மாணவரைத் தனித்தனியாக கற்பிப்பதிலும் பார்க்க கூடியபயனைக் குழுமுறைக் கற்பித்தல் மூலம் பெறலாம். குழுவாகக் கலந்துரையாடல் மூலமும், பரிசோதனை செயற்திட்டம், ஒப்படை, அவதானிப்பு, என்பவற்றின் மூலமும் பரிசோதனை மூலமும் மேற்கொள்ளலாம். இக்குழுவில் குழுத் தலைவன், அறிக்கைப்படுத்துபவர் ஆகியோர் இருக்க வேண்டும். இடைக்கிடை குழுக்களில் கவனம் செலுத்தி அவதானிக்க வேண்டும், சந்தேகங்கள் எழும் போது அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு இக்கற்பித்தல் முறை காணப்படுகின்றது.
9. கலந்துரையாடல் முறைக் கற்பித்தல்
கலந்துரையாடல் முறையில் பாடத்தை எடுத்துச் செல்ல வேண்டுமாயின் பிரச்சினையின் இயல்பு பற்றி அறிதல் வேண்டும் கலந்துரையாடலை ஆசிரியரே
(ச நா. தணிகாசலம்பிள்ளை - 70 - ஆரம்பக்கல்வி)
 

ஆரம்பிப்பார். குழு முறையான கலந்துரையாடலில் ஒரு தலைவர் இருக்க வேண்டும். வகுப்பை பல பிரிவாக பிரித்து யாவரும் கலந்துரையாடலில் ஈடுபடச் சந்தர்ப்பம் அளித்தல் வேண்டும். கலந்துரையாடலில் முக்கிய விடயம் மட்டும் இடம்பெற வேண்டும்.
இவ்வாறு ஆரம்பப் பிரிவினருக்கு பொருத்தமாக மேல்வரும் கற்பித்தல் முறைகள் காணப்படுகின்றன. இவற்றை தற்கால ஆசிரியர்கள் கடைப்பிடித்து கற்றல் கற்பித்தலில் ஈடுபடும்போது மாணவ சமூகம் நல்ல நிலைக்கு கொண்டு வரப்படும். என்பதில் எதுவித ஐயப்பாடுமில்லை.
கல்விச் சிந்தனையாளர்கள் சிலரின் ஆரம்பக் கல்வி பற்றிய கருத்து
கல்வி மூலம் ஒரு நாட்டில் சிறந்த குடிமகனை உருவாக்கலாம். ஆரம்ப வகுப்புகளில் பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தலின் நோக்கம் மேற் கூறியதை விட வித்தியாசமானது. பிள்ளையைச் சமூகத்துக்கு ஏற்றவனாக ஆக்குகின்ற செயன்முறையே ஆரம்பக் கல்வியின் நோக்கம் எனலாம். 6வயது முதல் 11 வயது வரையுள்ள காலப்பகுதியில் பிள்ளை தரம் 1 தொடக்கம் 5 வரையும் கற்றலில் ஈடுபடுகிறது. இக்காலப்பகுதியில் பிள்ளையின் உடல் வளர்ச்சி உள வளர்ச்சி சிந்தனை வளர்ச்சி ஆகியன முக்கியமானதாகும். பிள்ளைகளுக்கு தெரிந்ததைக் கொண்டு கற்பித்தல் இடம்பெறுகின்றது. அதாவது கற்றவற்றைத் தொடரும் வகையில் இணைந்ததாகக்கல்வி இடம் பெறுதல் வேண்டும்.
கல்வி சிந்தனையாளர்கள் தமது அனுபவங்களின் மூலம் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பறைகளில் போதனா முறை மூலம் கல்வி கற்பிப்பது
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 71 - ஆரம்பக்கல்வி)

Page 45
ஏற்றதல்ல எனக் கண்டறிந்தனர். அவர்களில் ரூசோ, பிளேற்றோ, ஜோன்டுயி, கேபட்ஸ்பென்சர், மொண்டகுரி அம்மையார் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
1. பிளேற்றோ
இற்றைக்கு 16ம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த கல்விச் சிந்தனையாளர் பிளேற்றோ கல்வி பற்றி கூறிய கருத்துக்கள் இன்றைய கல்வியியலாளர் களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றது. கல்வியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மூலாதாரமானது என்ற கருத்தை இவர் வெளியிட்டார். அது மட்டுமன்றி கல்வி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அரசிற்கு கீழ் இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டவர் இவர்.
பிறந்த நாட்டுக்கு சேவை செய்ய வேண்டியது கற்றறிவாளர்களின் கடமை என்ற கருத்தை வெளியிட்டவரும் இவரே. பிளேற்றோவின் குரு சோக்ரட்டீஸ் ஆவார். சோக்ரட்டீஸின் வழிகாட்டலின் கீழ் பிளேற்றோ வளர்ந்ததனால் அவரின் கருத்துக்கள் இவரின் மீதும் பிரதிபலிக்கலாயிற்று. ஆசிரியர்கள் ஞான விளக்குகளாக இருக்க வேண்டும். பணத்திற்கு அறிவை விற்கும் பரத்தையர்களாக இருக்க கூடாது என்பது இவர்களின் கருத்தாகும்.
கிரேக்க கல்வி அறிஞரான பிளேற்றோ "குடியரசு” “சட்டங்கள்” ஆகிய இரு நூல்களை எழுதியுள்ளார். அதில் கல்வி பற்றிய கருத்துக்களை அவர் வெளியிட்டார். முக்கியமாக ஆரம்பக்கல்வி பற்றியும் குறிப்பிட்டு இருக்கின்றார்.
இவரின் கருத்துப்படி எல்லாப் பிள்ளைகளும் 6 வயதுப் பருவத்திலேயே ஆரம்பக் கல்வியை ஆரம்பிக்க வேண்டும். இது ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவன ரீதியான முறைசார் கல்வியாக இருக்க வேண்டும். இவ் ஆறு வயதிற்கு முன்னைய பருவத்தில் பிள்ளையின் கல்வி குடும்பத்தையே சார்ந்ததாக இருத்தல் வேண்டும். 6 வயதின் பின்னர் ஆரம்பிக்கப்படும் கல்வியை அரசு ஏற்று நடத்துதல் வேண்டும் என வலியுறுத்துகிறார்.
கல்வியின் குறிக்கோள் நாட்டின் அரசியல் சட்டதிட்டங்களிற்கு அடிபணிந்து அச்சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் ஒரு நற்பிரஜை உருவாக்குதல் ஆகும். இக் குறிக்கோளை எய்துவதற்காக அரசு பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துதல் வேண்டும்.
சட்டங்கள் என்னும் நூலில் எதிர்கால நற்பிரஜையாகும் ஒவ்வொரு பிள்ளைக்கும் பொதுக்கல்வி அவசியமானதும், கட்டாயமானதும் ஆகும். பெற்றோர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆரம்பக் கல்விக்காகப்
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 72 - ஆரம்பக்கல்வி)

பிள்ளைகளைப் பாடசாலைக்குக் கட்டாயமாக அனுப்புதல் வேண்டும். ஒவ்வொரு பிள்ளையும் பெற்றோரைவிட நாட்டிற்கே சொந்தக்காரர்கள் ஆவர். எனவே ஆண், பெண் இரு பாலாருக்கும் ஒரே விதமான கல்வியைக் கொடுத்தல் அவசியமானது.
பிறப்புத் தொடக்கம் 6 வயது வரை குடும்பச் சூழலில் பிள்ளையை நற் பழக்க வழக்கத்திற்கு உட்படுத்துதல் வேண்டும். 3-6 வயது வரை இடைப்பட்ட காலத்தில் பிள்ளைகளின் உடல்நலம் இசைவானதாக இருப்பதற்கு விளையாட்டுக்களைப் பயிற்ற வேண்டும். இக் குழந்தைப் பருவத்தில் பிள்ளையைச் சரியாக நெறிப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த நற்பிரஜையை உருவாக்க முடியும் என இவர் கருதுகின்றார். ஆரம்பக்கல்வியின் போது சங்கீதம், தசைநார் பயிற்சி ஆகிய பாடங்கள் முக்கியமானவையாக இருத்தல் வேண்டும். உடல் வளர்ச்சிக்கு இத் தசைப்பயிற்சி முக்கியமானது எனப் பிளேற்றோ கருதுகின்றார். சித்திரம், நடனம், நாடகம் ஆகியன உள்ளடங்கும் வண்ணம் சங்கீத பாடம் இருத்தல் அவசியம். ஆன்ம வளர்ச்சிக்கு இசை முக்கியமானது என இவர் கருதுகின்றார்.
கற்பனையினாலான கதைகளைப் பிள்ளைகளிற்கு கூறாது உண்மை வரலாற்று நிகழ்வுகளை பிள்ளைகளுக்குக் கூறுதல் வேண்டும். அவை மெய்ப்பொருளை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். தாய்மார் பிள்ளைகளின் உடலை நன்கு அழகுபடுத்துவது போன்று இக்கதைகள் அவர்களின் உள்ளத்தை நன்கு அழகுபடுத்தக் கூடியதாக இருத்தல் வேண்டும். இசைக்கு அடுத்ததாக உடற்பயிற்சியினை பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். அதனைக் கவனமாக வாழ்க்கை பூராவும் பேணிவரச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி மூலமாக மனிதனின் ஆன்மீக விழுமியங்கள் வலிமை பெறும். இவ்வாறு பயிற்றுவிக்கப்படும் பிள்ளைகள் ஒருபூரணமான பிரஜையாக உருவாகுவதில் எவ்வித சந்தேகமுமில்லை என கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவரான பிளேற்றோ கூறுகின்றார்.
2. ருசோ
ஆரம்பக்கல்வி பற்றி ரூசோ கூறிய கருத்துக்களை எடுத்து நோக்குவோ மாயின் ஒரு பிள்ளை தன் வாழ்வில் எப்பொழுதுமே அடைய முடியாத ஒரு குறிக்கோளை நோக்கி அவனை விருத்தி செய்யும் விருப்புடன் அவனுக்குப் பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி நிலையில்லாத எதிர் காலத்திற்காக பலாத்காரமாக கற்பிப்பது ஏற்ற செயலல்ல என இவர் கருதுகின்றார். ரூசோவின் கருத்துப்படி பிள்ளைகள் தாமாகவே விரும்பிக் கற்றலில் ஈடுபட
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 73 - ஆரம்பக்கல்வி)

Page 46
வேண்டும். ஒரு பிள்ளையைக் கட்டாயப்படுத்தி கற்பிப்பிப்பதன் மூலம் அவன் அக் கல்வியைப் பெற்றுக் கொள்ள மாட்டான். பிள்ளையின் வாழ்விலும் அதன் அனுபவங்களிலும் கல்வி அடங்கியிருத்தல் வேண்டும். பிள்ளையிடத்தே கல்வி வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்துவதற்கல்ல. சமூகத்தை மதிக்கின்ற ஒரு பண்பினை ஏற்படுத்துவதே கல்வியின் நோக்கமாக இருக்கின்றது.
பிள்ளைகளை நான்கு சுவர்களுக்குள் அடக்கி வைத்து வெற்றுரைகள் மூலம் கல்வியை கற்பிக்கக் கூடாது. காட்சிப்பொருட்கள் மூலமும் அவர்கள் பெறும் அனுபவங்கள் மூலமும் பெறும் கல்வியே அனுபவக் கல்வியாகும்.
ரூசோ 5 வயது தொடங்கி வரும் 11வயது வரையிலான காலப்பகுதி பிள்ளைப்பருவம் எனப் பிரித்துள்ளார். இக் காலத்தில் உள்ளத்தாலும், உடலாலும் பிள்ளையின் வளர்ச்சிக்காலம் முக்கியமானதாக இருக்கும். இக் காலப்பகுதியில் பிள்ளைகளிடம் ஏற்படுகின்ற கற்றல் எக்காலத்திலும் அழியாததாகப்பதிந்து விடுகின்றது. இதைத்தான் இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பார்கள். அதனால் உடல் புலன் வளர்ச்சிக்கு உறுதுணை புரியக் கூடியதாகக் கல்வி இடம்பெற வேண்டும். தீயனவற்றிலிருந்து விலகி நல்லவற்றை நாடுதல் வேண்டும்.
புத்தகக் கருவி எதுவும் இப்பருவத்தில் தேவையில்லை புலன்களிற்குப் பயிற்சியளித்து இயற்கைப் பொருட்களையும், இயற்கை நிகழ்வுகளையும் அறிய உதவுதல் வேண்டும். உடலுக்கு நலன்தரும் உடற்பயிற்சிகளைக் கொடுத்தல் வேண்டும். அன்பையும், கருணையையும் அனுபவத்தின் மூலம் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். துன்பத்தைத் தகர்த்தெறியும் தூய உள்ளம் கொண்ட மாணவனாக உருவாக்க வேண்டும்.
தனியாளின் ஆர்வம், அவா ஆகியவற்றினால் கிடைக்கப் பெறும் தூண்டலின் காரணமாக கற்றல் இடம்பெற வேண்டுமே தவிர கட்டாயத்தினால் புகட்டுவதற்குப்பதிலாக கல்வியைப் பெறும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் இப்பருவத்தில் முக்கியமானதாகும். பிள்ளைப்பருவத்தில் நேரம் போதியளவு உள்ளது. அதனால் அவர்கள் நேரத்தை விரயம் செய்யாது தாமாகவே கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.
இத்தகைய கல்வி முறையினை ரூசோ ஆரம்பக்கல்வி என சிபார்சு செய்கின்றார். பிள்ளைகள் சுதந்திரமாகவும், சுற்றாடலுடன் இணைந்ததாகவும்” பார்த்தல், தொடுதல், நுகர்தல் போன்ற செயல் முறைகளின் மூலம் சமூகத்திற்கு ஏற்றவனாக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும். கற்பித்தல் என்பது
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 74- ஆரம்பக்கல்வி)

கருத்தற்ற சொற் கூட்டங்களை மனனஞ் செய்வதல்ல. புது அனுபவத்துடன் இணைந்த நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துதல் வேண்டும். இவ்வாறு ரூசோ ஆரம்பக்கல்வி பற்றிக் கூறியுள்ளார். 3. ஜோன் டியூயி
கல்வி என்பது என்றும் வளர்ந்து கொண்டிருப்பது. அது சூழ்நிலை மாற்றங்களோடு மாறிக் கொண்டிருப்பது. அது என்றும் இயங்கிக் கொண்டிருப்பது அதனால் கல்விக்கு இறுதி இலக்கு என்ற ஒன்று இல்லை. வளர்ச்சிக்கு வழிவகுக்கின்ற கல்வி வளர்ந்து வருகின்ற கல்விக்கும் வழிகாட்டுதல் வேண்டும். கல்வியை வெறும் புத்தகப்படிப்பின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது. செயல்களின் மூலமும் அனுபவங்களின் மூலமும் பெறுகின்ற அறிவே உண்மையான அறிவு.
கல்வி வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்வது அல்ல வாழ்க்கையே கல்வி. கல்வியே வாழ்க்கையாகும். சூழலைப் பயன்படுத்தி தனியாளின் திறன்களை விருத்தி செய்துகொள்ள உதவுவதே கல்வியாகும். எனவே மனிதன் இயற்கையை தனது தேவைக்கேற்ப பயன்படுத்தத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். கல்வி என்பது சமுதாயம் அழியாது பாதுகாத்து கொள்கின்ற ஒரு கருவியாகும். சமுதாயத்தினுடைய அனுபவங்கள் கல்விமூலம் பரிமாற்றம் செய்யப் படுகின்றது. அதனால் ஒருவர் பெறுகின்ற அனுபவங்களை மற்றவரும் பெறக் கல்வி வழிவகுத்தல் வேண்டும். கல்வி தனிமனிதனின் ஆளுமையை வளர்ப்பதோடு சமூக முன்னேற்றத்தையும் ஏற்படுத்துகின்றது. கல்வி இத்தகைய பண்பினைக் கொண்டிருப்பதனால் அவற்றைப் பிள்ளைகளிடம் ஏற்படுத்தக் கூடியதாக கல்வித் திட்டம் அமைந்திருக்க வேண்டும் என இவர் கருதுகின்றார்.
பிள்ளை கல்வி கற்கின்ற பாடசாலைகள் சமுதாயத்தைப் பிரதிபலிப்பனவாக இருக்க வேண்டும். பிள்ளையின் இயற்கை-யான பணிகளை வளர்ச்சி பெறச் செய்யுமிடமாகப் பாடசாலைகள் இருக்க வேண்டும். அவ்வாறாக இருப்பின் சமூகப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற சக்தியினைப் பிள்ளைகள் பெறலாம். எதிர்காலத்தில் பிள்ளைகள் ஆக்கப் பணிகளில் ஈடுபடவும், பிரச்சினைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் ஏற்ற துணிவை வளர்க்கும் இடமாகப் பாடசாலைகள் அமைய வேண்டும். பாடசாலைகள் பிள்ளைகளுக்கும் பயன்தரக் கூடிய பணிகளைக் கொடுக்க வேண்டும்.
பாடசாலைகள் பிள்ளைகளின் சுயசிந்தனையை விருத்தி செய்கின்ற இடமாக இருக்க வேண்டும். அவர்களின் உடல், உள விருத்தியைப் பெற்றுக் கொள்ளப் பொருத்தமான இடமாக இருத்தல் வேண்டும். சுதந்திரமான சூழலில் பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி பெறுதல் வேண்டும். பிள்ளைகள் இயல்பாகவே
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 75- ஆரம்பக்கல்வி)

Page 47
சிந்திக்கும திறன் வாய்ந்தவர்கள். அவர்களின் சிந்தனையைத் தூண்டி வளர்க்கும் இடமாகப் பாடசாலைகள் இருக்க வேண்டும், சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய நுண்ணறிவுத் திறன்களையும் ஆக்கப் பணிகளில் ஈடுபடுகின்ற வாய்ப்புக்களையும் வழங்க வேண்டும். பிள்ளைகள் வெறும் பொருள் அறிவினை மட்டும் பெற்றால் போதாது அனுபவ அறிவினையும் பெறுதல் வேண்டும். பிள்ளைகள் நாம் கற்கிறோம் என்று கூறுவதைக் காட்டிலும் அனுபவங்களைப் பெறுகின்றோம் என்று கூறுவது தான் சிறந்த கல்வியாகவிருக்கும். எனவே பிள்ளைகளுக்கு கல்வியை, அனுபவங்களை அனுபவங்களால் அனுபவங்களினூடாக அளிக்க திரட்டிக் கொடுக்காமல் பிள்ளைகளுக்கு உபயேர்கமான அனுபவங்களைத் தேர்ந்தெடுத்து அளிக்க வேண்டும். பிள்ளைகளுக்கும் பிரச்சனைகளைக் கொடுத்து நடைமுறைப் பிரயோகங்கள் மூலம் தீர்வுகாண வைத்தல் வேண்டும். இச்செயற்திட்ட முறைக் கற்பித்தலே பிள்ளைகளுக்குச் சிறந்தது எனக் கருதுகின்றார்.
பர்ட்சாலைக் கலைத்திட்டம் பிள்ளைகளின் இயல்பு, வாழ்க்கை ஆகியவற்றுடன் இணைந்ததாய் இருத்தல் வேண்டும். சமுதாய உறுதி, சமூக ஒருமைப்பாடு ஆகியவற்றைக் விதந்துரைக்கும் கலைத்திட்டம் பிள்ளையை மையமாகக் கொண்டிருக்கும் அதே வேளையில் சமூகத்தையும் மையமாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
இவர் குறிப்பிடும் அனுபவக்கல்வி என்பது ஒருசெயற்பாட்டின் மூலம் நடத்தைசார் மாற்றத்திற்கு அடிப்படையாக அமைவதாகும். உதாரணமாக ஒரு பிள்ளை மெழுகுதிரிச் சுவாலையைத் தொடும்போது தான் அதன் வேதனையை உணர்கின்றது. தீச்சுவாலையைத் தொட்டால் தீக்காயம் ஏற்படும் அதனால் வேதனை ஏற்படும் என்பதை அனு-பவத்தினுடாகப் பெறுகின்றான். அனுபவங்களின் ஊடாகக் கற்று உண்மையை அறிதல் முறையாகும்.
6வயதில் பிள்ளை பாடசாலையில் சேரும்போது அவனை எதிர்காலத் திற்கான குறிக்கோளை நோக்கிச் செயற்படுத்துவது பொருத்தமற்றதாகும். சமகாலத்தில் ஏற்படுகின்ற சமூகப் பிரச்சனைகளையும் விடுவிக்கக் கூடிய திறனை அவனிடத்தில் அனுபவங்கள் மூலம் ஏற்படுத்த வேண்டும். மாணவனுக்கு கல்வி வாய்ப்புக்களை வழங்குதல் வேண்டும். பாடசாலைகளில் வாழ்க்கைத் திறன் போன்ற பாடங்களும், குழு முறைக் கற்பித்தல் முறையும் ஜோன் டியூயின் சிபார்சினால் சேர்த்துக் கொள்ளப்பட்டவையாகும். இதன் மூலம் பிள்ளைகள் உயிர்ப்புள்ள கல்வியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இவ்வாறு ஜோன் டியூயி ஆரம்பக் கல்வி பற்றிக் கூறியுள்ளார்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 76- ஆரம்பக்கல்வி)

4. கேபட் ஸ்பென்சர்
இவர் கல்வி பற்றி மிக முக்கியமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கல்வி என்பது முழுமையான வாழ்க்கைக்கு பிள்ளையை ஆயத்தம் செய்வதற்கே என்ற கருத்தை வெளியிட்டார் காலத்திற்கு ஏற்ப கலைத்திட்டங்கள் அமைக்கப்பட்டு கல்வி இடம்பெற வேண்டுமென இவர் வலியுறுத்தினார். தலைமுறை தலைமுறையாக ஒரு பாடம் கற்பிக்கப்படும். அந்தப் பாடத்தினால் வாழ்க்கைக்கு எதுவித பயனும் இல்லை என்றால் அதனைக் கற்பதில் அர்த்தமில்லை. எனவே கால மாற்றத்துக்கு ஏற்பவும் சமூக மாற்றங்களுக்கு ஏற்பவும் கல்வியில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
கல்வி தனிமனித வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அது சமூக வளர்ச்சிக்கும் காரணமாக வேண்டும். இத்தகைய அறிவைப் பெறுவதற்கு விஞ்ஞான பாடங்களே அவசியம் என்று இவர் கருதுகின்றார். கலைத்திட்டங்களில் விஞ்ஞான பாடங்களுக்கு முதன்மை அளிக்க வேண்டுமென்பது இவர் கருத்து.
கற்பித்தலில் ஆசிரியர் முக்கியமான இடத்தைப் பெறவேண்டும். தெரிந்ததிலிருந்து தெரியாததற்கு, அறிந்ததிலிருந்து அறியாததற்குச் செல்லுதல் இவருடைய கறபித்தல் முறையின் முக்கிய அம்சமாகும் மேலும் பிள்ளையின் அனுபவங்களினூடாகவே பாடங்களை நடத்திச் செல்லுதல் வேண்டும். அது நேரடியாகப் பார்க்கக் கூடியவற்றைக் காட்டிலும் பார்க்க முடியாதவற்றைக் கற்றல் வேண்டும். இலகுவானதிலிருந்து கடினமானதுக்குச் செல்லுதல் பிள்ளையின் ஆற்றல்களுக்கு ஏற்ப பாடங்களை அமைத்துச் செல்லுதல் வேண்டும்.
இவ்வாறு ஆரம்பக்கல்வி பற்றி கல்விச் சிந்தனையாளர்களான பிளேற்றோ,
ரூசோ, ஜோன், டியூயி, கேபட் ஸ்பென்சர் ஆகியோர் கருத்து தெரிவித் துள்ளதைக் காணலாம்.
கருவறையிலிருந்து கல்வி
கருவறையிலேயே கல்விக்கு வித்திடும் தன்மை அண்மைக்காலமாக உற்று நோக்கப்படுகின்றது. ஆழ ஆய்வு செய்தவர்கள் கல்விக்கு கருவறையிலேயே வித்திடப்படுகின்றதென்று கூறுகின்றார்கள். பிள்ளை கருவறையிலேயே உற்பத்தியாகும் பொழுதே தன் எதிர்காலச் சிந்தனை ஊற்று விதைப்பாக அங்கு உருவெடுக்கின்றது. தூய தந்தையர்கள் வாழும் சூழல், அவர்களது சிந்தனை, அவர்கள் என்ன நினைத்து பெற்றெடுத்தார்களோ அவை யாவும் கருவறையில் விதைக்கப்படுகின்றது. ஆதலால் தான் அக்காலம் பொன்னாகப்
(ச.நா. தணிகாசலம்பிள்ளை -77 - ஆரம்பக்கல்வி)

Page 48
போற்றப்பட வேண்டும். குறிப்பாக பெண்கள் உணர்ந்து நல்ல நூல்களைப் படித்து நல்லவர்களுடன் பழகி நல்லெண்ணத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகின்றேன். இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும். ஆகவே ஆரம்பக் கல்விக்கு கருவறைக்காலம் வித்திடும் காலம் எனலாம்.
குழந்தை முறைமைக்குட்பட்ட ஆரம்பப் பள்ளிக்கு கால் வைக்க முன் அவனது முன் பிள்ளைப் பருவம் (Early child Hood) மிகமிக அவதானமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய காலமாகும். இக்காலம் தான் கற்றலுக்கும் அவனது விருத்திக்கும் வளப்படுத்தும் காலமாகும். வீட்டுச் சூழலும் அதன் அடுத்துள்ள சூழலும் அவனுக்கு உச்சப் பயன்தரக் கூடிய விதத்தில் வளப்படுத்தப்பட வேண்டும். இங்கு பெற்றோர்கள் திறன் மேம்படுத்தப்பட வேண்டும். வீட்டிலும் அயலிலும் உள்ள கற்றல் வாய்ப்புக்களை பெற்றோரை இனங்காணப் பழக்க வேண்டும். பெற்றோர் தமது தினசரி வாழ்க்கையை அவர்களது வளர்ச்சியைக் கருத்திக்கொண்டு ஊக்குவிக்கப்பழக வேண்டும். தாம் அவர்களது ஒவ்வொரு பருவநிலையிலும் எடுக்கும் நடவடிக்கை அவர்களது கல்வியைப் பாதிக்கவிடாது ஊக்குவிப்பதாக அமைய நடந்து கொள்ள வேண்டும்.
குழந்தை பிறப்பதிலிருந்தே தான் கொண்ட ஐம்புலன்களுடாக கற்று அறிவைப் பெறுகின்றது. இந்த இயற்கைத் தன்மைக்கு வழிகாட்டலும் ஊக்குவிப்பும் மிக மிக அவசியமாகின்றது. இந்நிலைக்கு குழந்தைக்கு இரு நிறுவனங்கள் உதவவேண்டி உள்ளது. ஒன்று அவன் வாழும் வீடு, மற்றது அவனை நாம் அனுப்பும் முன்பள்ளி. ஆனால் இன்று எல்லாப் பிள்ளை களுக்கும் முன்பள்ளிக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டுவதில்லை. அதேபோல வீட்டு நிறுவனமும் வாய்ப்பாக அமைவதில்லை. இவ்விரு நிறுவனங்களிலும்
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 78- ஆரம்பக்கல்வி)
 

அறியாமை காரணமாக உள்ள வளங்கள் வீணடிக்கப்படுகின்றன. இரண்டிலும் வளங்கள் உச்சப் பயன்பெறும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.
அரசாங்க சார்புடைய, சார்பற்ற நிறுவனங்கள் அவற்றுக்கு உதவ வேண்டும். இங்கு செயற்படும் பயிற்றுநர்கள் (அதாவது முன்பள்ளி ஆசிரியர்கள்) பெற்றோர்க்கு வேண்டிய அறிவுரைகளை பகர வேண்டும். பிள்ளை தவழ்ந்து எழுந்து நடக்கும் பராமரிப்புக் காலம் மிகமிக முக்கியம். இதற்கேற்ப வீட்டினதும் கிட்டிய சூழலினதும் அமைவு அவசியம். பிள்ளையின் 0-5 வயதுவரை வளர்ச்சி, விருத்தி மிகமிகக் கவனமெடுக்கப்படவேண்டிய காலமாகும்.
தனியார் வேறுபாடுகள் இனங்காணப்பட்டு உச்சவிருத்தி பேணப்பட வேண்டும். அவனது விருத்தியில் பாதிப்புகள் ஏற்பட இடமளிக்கப்படக் கூடாது. ஒவ்வொரு நிலை விருத்தியிலும் மேம்படுத்தும் செயற்பாடுகள் அளிக்கப்பட வேண்டும். வீடுகளில் தனிப்பட்ட முறையில் கையாளக் கூடிய ஊக்குவிப்பு அல்லது குழுவாரியான ஊக்குவிப்பு அவசியம். இச்செயற்பாட்டிற்கு கிராமிய முன்பள்ளிகள், கோவில்கள் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு சிறுவனின் தினசரி வாழ்க்கையில்.
அவன் காலையில் எழும்பும் போது, அவன் குளிக்கும் போது உணவு உண்ணும் போது உறவினர் விருந்தினர் வரும் போது வெளியில் விளையாடும் போது ஒய்வாக இருக்கும் போது நித்திரைக்குச் செல்லும் போது எனப் பல நிலைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இவ்வூக்குவிப்பு முயற்சிகளினூடாக
* இயக்க விருத்தி
மொழி விருத்தி
இவற்றினூடாக நற்பழக்க வழக்-கங்கள் தோன்றிடப் "பூரண விருத்திக்கு” அடிகோல முடியும்.
* சிந்தனை விருத்தி
* அறிவு விருத்தி
* மனவெழுச்சி விருத்தி
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 79- ஆரம்பக்கல்வி)

Page 49
* அழகியல் விருத்தி * சமூக விருத்தி * நெறிமுறையான வாழ்வு
இதற்குப் பெற்றோர்களுக்கு உதவியாக "சிறுவர் நேயக் குழுக்கள் அமைக்கப்பட்ட வேண்டும்.
இக்குழுக்களில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர், முறைசாராக் கல்வி அலுவலர், சமூக அபிவிருத்திக்கான அலுவலர், இளைஞர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் (வயது வந்த ஒருவர்) பயிற்சி பெற்ற ஊக்குவிப்பாளர் இடம்பெற வேண்டும். இது கூடுதலாக கிராமிய மட்டத்திற்கு உதவும். குறிப்பாக சிறுவர்களை வாரத்தில் ஒரு நாளாவது பாடசாலை விளையாட்டு மைதானத்திலோ அல்லது கோவில்களிலோ சேர்ந்து விளையாடச் சந்தர்ப்பம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
வீட்டை அடிப்படையாகக் கொண்ட முன்பிள்ளைப் பருவ விருத்தி (Home Based Early childhood Development)
பிள்ளை முறைமைப்பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக வீட்டை அடிப்படை யாகக் கொண்ட முன்பிள்ளைப் பருவ விருத்தி அவசியமானதொன்றாகும். வீட்டிலும் அண்மித்த உடனடிச் சூழலிலும் பெற்றோரது திறன் உறுதிப்படுத்தப் படுவது பள்ளி செல்வதற்கு முன்னைய கற்றல் அபிவிருத்தியாகும். நாளாந்த பெற்றோரது செயற்பாடுகளில் கற்கைக்கான சந்தர்ப்பங்கள் இனங்காணப் படுகின்றது. கிடைக்கக் கூடிய வளங்கள் மூலம் அவர்களது நாளாந்த வேலைகளை பெற்றோர்கள் கவனிப்பதன் மூலம் அவர்கள் பின்னூட்டப் படுகின்றார்கள் (Stimulate) அவர்கள் எழும்பும் பொழுது படுக்கைக்குச் செல்லும்பொழுது, கழுவும் பொழுது, குளிக்கும் பொழுது சாப்பிடும் பொழுது, வழிநடாத்தலும் பின்னூட்டலும் நடைபெறுகின்றன.
உடலியல் தொடர்பு அவர்களது பார்வைத் தொடர்பு அதுவும் தாயினது உயர்ந்த செயற்பாடுகளில் தங்கி உள்ளது. அம்மா சமைக்கும் பொழுது கதை கூறுவது, வீட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் கதைப்பது, பழகுவது வீட்டுக்கு வெளியே செல்வது போன்றவை பல வேளைகளில் பிள்ளைகளால் உற்று நோக்கப்படுகின்றன.
ஒரு நேரச் சட்ட அமைப்புக்குள் எல்லா நடவடிக்கை-களையும் விருத்தி ஆக்கி விட முடியாது. ஒவ்வொரு நிலையிலும் அம்சத்திலும் குழந்தை கற்றுக் கொண்டிருக்கின்றதென்பதை நாம் மறந்துவிட முடியாது. வளர்ந்தோரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை அவர்கள் அவதானிப்பதும் முதியோர்களால்
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 80 - ஆரம்பக்கல்வி)

மேற்கொள்ளப்படும் நாளாந்த நடவடிக்கை-கள் ஒவ்வொன்றையும் அவர்கள் பின்பற்றுவதன் மூலமும் கற்கின்றார்கள். அவர்கள் தாங்களாகவும் பெற்றோர்களுடன் சேர்ந்தியங்கியும் கற்கின்றார்கள் என்பதை மறக்கக் கூடாது. இந்த நிலையில் கற்றலை மேலும் விரிவுபடுத்த சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். அவர்களது கற்றலில் பெற்றோர்கள் பங்கு கொள்கின்றார்கள். கவிநயப்படு கின்றார்கள். (Apprentieeship) பெற்றோர்கள் அவர்களுடன் மகிழ்ந்து கொள்கின்றார்கள். பெற்றோர்கள் தாங்களே தங்கள் குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் என்றும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர் தங்கள் வேலையில் ஈடுபடும் பொழுது பிள்ளைகள் அவற்றிலிருந்து அறிவை எவ்வாறு திரட்டுகின்றார்கள் எனப் பார்க்க வேண்டும். தங்களது அனுபவத்தைப் பார்த்து எவ்வாறு திறனை, அறிவை, மனப் பாங்கை வளர்த்துக் கொள்கின்றார்கள் எனப் பார்க்க வேண்டும். குழந்தை சூழலை எவ்வாறு இனங் காண்கின்றது. அதன் வழி உரிய குறிக்கோளை நோக்கி கற்றலை மீட்டுக் கொள்வதற்குப் பெற்றோர் தகுந்த முறையில் உதவ வேண்டும். குழந்தையுடன் வாய் மூலமும் செயல்மூலமும் தொடர்பாடுகின்றபோது பெறும் அனுபவங்களை இனங்காண வேண்டும். குழந்தை மிகத் துடிப்பானதாகவும் அவதானிப் பாளராகவும், கற்பனையாளராகவும், சுறுசுறுப்பாராளராகவும் ஆக்க வேண்டும். குழந்தை பொருட்களை அதன் உருவம், அளவு, நிறம், மணம், ருசி மூலம் இனம் காண உதவ வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் செயற்பாட்டிலும் அதன் மாற்றங்களைக் கண்டறிந்து மேற்காட்டியவற்றின் அடிப்-படையில் விருத்தியுறச் செய்தல் வேண்டும். செயற்பாடு நடவடிக்கைளில் அவற்றுக்கு பெயர் கூற வைக்க வேண்டும். அது குழந்தைக்கு விளையாட்டாகவும் அமைய வேண்டும்.
துரதிஷ்ட வசமாக பெற்றோரது முக்கியத்துவத்தை காட்டாது பள்ளிக்கூடம் என்ற நிறுவனத்தின் முக்கியம் மட்டும் முன்பிள்ளைப் பருவ விருத்தியில் கூறப்படுகின்றது. சூழல் அதன் வளம்பற்றி கவலைப்படுவதில்லை. முன்பள்ளிக் கல்வியைப் பெறுதலில் அதிக பணம் செலவாவதால் அது கிராமப்புறங்களுக்கு சென்று சேருவதில்லை. அதற்குப் பிறிதொரு காரணம் கிராமங்களில் வீடுகள் தொட்டம், தொட்டமாக அமைந்திருப்பதாகும்.
ஆதலால் வீட்டுச் சூழலில் வாழும் பிள்ளை அறிவு விருத்தி பற்றி பெற்றோர், பேரன்மார், மாமா, சித்தப்பா, சகோதரி, சகோதரர்கள் யாவரையும் கூட்டாக அணைத்து பிள்ளைப் பருவ விருத்தியை அடையச் செய்ய வேண்டும். ஆரம்ப காலத்தில் பிள்ளைகளின் விருத்திக்கு அவர்களிடம் பொறுப்பைக் கையளிக்க வேண்டும். முன்பள்ளியில் குழந்தை சென்று வந்தாலும் கூ. அங்கு பெற்றவற்றை மீட்பதற்கு பெற்றோரது ஆதரவும், பங்களிப்பும் அவசியம், உண்மை-யிலே இயற்கைச் சூழல் முன்பள்ளியை விட வீட்டில் அதிகம்
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 81 - ஆரம்பக்கல்வி)

Page 50
உண்டு. ஒய்வு நேரங்களில் அவர்கள் வீட்டில் கூடுதலாகக் கற்கின்றார்கள். முன்பள்ளி வசதி இல்லாத இடத்தில் அடைய முடியாதவற்றை வீட்டில் கற்று சேமிப்பதுடன் வசதிகள் அற்ற மாணவர் வீட்டில் கற்க வாய்ப்பளிக்க வேண்டும். கூடுதலான பெற்றோர்களுக்கு கல்வி பற்றி அறியவைக்கும் செயற்பாடுகளின் (AWareness) மூலம் அறிய வைக்க வேண்டும். ஆதலால் முன்பள்ளிப் பருவ கல்வி விருத்திக்கு வீட்டை அடிப்படையாகக் கொண்ட நிலையை நாம் உறுதிப்படுத்த வேண்டும். முன் பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்தி
வயது 1 தொடக்கம் 5 வயது வரை பிள்ளை தனது எதிர்கால வளர்ச்சிக்கு அடி அத்திவாரமாக முழு வளர்ச்சி காணும் காலமாகும். மொழி, உடல், உளவிருத்தி காண்கிறது. சமூகம் அதன் குணநிலைக்கு சூழலை அளித்து சிந்தனைக்கு இடமளிக்கின்றது. இதனுடாக மனவெழுச்சிக்கு இடமளிக்கின்றது. இதனுாடாக அதன் பூரண விருத்திக்கு இடம் கிடைக்கின்றது.
இப் பருவத்தில் பிள்ளை துரித வளர்ச்சி காண்கின்றது. அதன் விவேகம் வளர்த்தெடுக்கப்படுகின்றது. உச்சரிப்பு உறுதிப்-படுத்தப்படுகின்றது. கற்றல் அனுபவங்கள் பெறப்படுகின்றது. இப்பருவத்தில் வளர்ச்சியும், அபிவிருத்தியும் காணப்படுகின்றது.
வளர்ச்சியும் அபிவிருத்தியும்
அளவுரீதியான மாற்றம் காணப்படுகின்றது. பிள்ளையின் முதிர்வின் பெறுபேறே இம்மாற்றத்திற்கு அடிப்படைக் காரணமாகும். இம்மாற்றத்தின் பெறுபேறுகள் அனுபவத்தின் அடிப்படையில் சேர்ந்த பழக்க வழக்கங்கள் எல்லாம் அபிவிருத்திக்கு உதவுகின்றது.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 82 - ஆரம்பக்கல்வி)
 

இங்கு பிள்ளை வாழும் சூழலும், அவரது பரம்பரையும் அபிவிருத்தியை நிர்ணயிப்பது காட்டப்படுகின்றது. அவரது பழக்க வழக்கங்களில் செல்வாக்கு செலுத்துவது அபிவிருத்தியை நிர்ணயிக்கும் காரணியாக மாறுகின்றது. பழக்க வழக்கங்களை சீராக்கம் செய்வதாகவும் அமைகின்றது. பிள்ளையின் உடல், உளநிலை, உயரம், நிறை ஆகியன அதன் அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாகும்.
பிள்ளையின் வளர்ச்சியை பின்வரும் காரணிகள் நிர்ணயிக்கின்றது. 1) போசாக்கான உணவு
2) குடும்பப் பொருளாதார நிலை
3) குடும்ப அளவு
4) ஓய்வும் நித்திரையும்
இவற்றுடன் பிள்ளைக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு, அன்பு, உணவு, முதிர்வு ஆகியன அதன் வளர்ச்சிக்கு வித்திடும். பிள்ளையின் மன எழுச்சிக்கு சமநிலை காணவேண்டும். அது மகிழ்ச்சியாக உலா வரவேண்டும். குழந்தையின் பராமரிப்பு முறைகள் மிகமிக அவசியம். திட்டமிட்டு அதன் தேவைகள் முன்னுரிமைப் படுத்தப்பட்டு, அதனை ஊக்கு-வித்து தன்னை கணிப்பதாக மனோநிலையை உருவாக்கி சந்தோசமாக வழி நடாத்தப்பட வேண்டும்.
வீட்டில் நடைபெறும் செயற்பாடுகள் அனைத்திலும் சமூக நிகழ்வுகளுக்கும் குழந்தையை அழைத்துச் சென்று முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமக்கு வீட்டிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது என்ற உணர்வு அக்குழந்தையின் உள்ளத்தில் பொங்கி எழவேண்டும். அவரை ஒரு பெருமனிதனாகப் போற்றி கெளரவிக்க வேண்டும்.
இயற்கையான விளையாட்டு முயற்சிகள் அனைத்திற்கும் இடமளிக்க வேண்டும். அது தலைகீழாக நின்று விளையாட முயன்றாலும் நாம் தடுக்காது தலையை முறிக்க விடாது பார்த்துக் கொண்டால் போதும். அது பாயும் பொழுது தட்டிக் கொடுத்தும் அவர் துள்ளி ஓடும் போது நாமும் துள்ளி ஓடி அதன் விநோதமாக நடந்து கொள்ள வேண்டும். இதுவே குழந்தையின் இயற்கைச் செயற்பாட்டிற்கும் அதன் சுதந்திரத்திற்கும் நாம் செய்யும் தொண்டாகும். குழந்தையை அழகுபடுத்துவது மட்டும் அல்லாமல் அதன் அழகியலுணர்வு ஆக்கத்திற்கு நாம் இடமளிக்க வேண்டும். இதனை அமுக்காது அதன் உள்ளார்ந்த உணர்வைக் கண்டறிந்து வளர்த்தெடுக்க வேண்டும். குழந்தையின் சிந்தனைக்கு நாம் ஊக்கம் கொடுக்க வேண்டும். சந்தனை
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 83 - ஆரம்பக்கல்வி)

Page 51
சுடர்விட வேண்டும். பிரதானமாக கடவுள் பற்றிய நம்பிக்கை சிந்தனைக்கு இடமளிக்க வேண்டும். இளம் வயதில் ஒளவையாரது ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள், தேவாரம், பைபிள் பொன்மொழிகள் போன்றவற்றை மனனம் செய்ய வழி காணலாம். சொல்லிக் கொடுக்கலாம். மனித விழுமியம் விதைக்கப்படலாம். குழந்தையின் சிந்தனை ஊற்றுப்பெற வேண்டும். தெய்வீகம் ஒளிவிடவேண்டும். தாய் தந்தையரைத் தெய்வமாக வணங்குதல் ஆசிரியன் தெய்வம் அவனது அடி தொழுதல் நற்தொண்டு புரிதல் என்ற சிந்தனைகள் இளம் வயதில் இருந்தே விதைக்கப்பட வேண்டும்.
குழந்தையின் உடற்சுகம் பேணல், நாள் தோறும் தான் செய்யும் கருமங்களில் நல்ல பழக்க வழக்கங்களை வீட்டில் காட்ட வேண்டும். காலையில் மாலையில் முகம் கழுவுதல், நாள்தோறும் குளித்தல், மலம் கழித்த பின் சவர்க்காரம் போட்டு கை கழுவுதல், சாப்பிடமுன் சவர்க்காரம் போட்டு கை கழுவுதல், பாத்திரங்களை எடுத்தல், வைத்தல், குப்பைகளைத் தொட்டியில் போடுதல், நல்ல சுத்தமான ஆடை அணிதல், அழுக்கான உடையைக் களைதல், தலையைச் சீவுதல் எண்ணெய் தேய்த்தல், நகம் வெட்டுதல், விபூதி பூசுதல், பூக்கொய்தல், இறைவனுக்கு சாத்துதல் ஆகியன இளம் வயதிலிருந்தே பழக்க வேண்டும்.
எங்கள் பாரம்பரிய மரபு, விழுமியம் எதுவென காட்டப்பட வேண்டும். இவை பண்பாட்டுக் கோலங்களாகக் காட்டப்பட வேண்டும். எங்கள் மரபு பழக்க வழக்கங்கள் வெளிக்காட்டப்படலாம். ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்தல், சொல்லும் வார்த்தைகள் இனிதாக அமைதல், ஒருவரைக் கண்டால் இனிமையாக, அன்பாக குழைந்துபேசி இன்முகம் காட்டி வரவேற்று, அழைத்துச் செல்லும் தன்மை அவர்களுக்குக் காட்டப்படுவது மட்டுமல்லாமல் அவர்களையும் அச்செயலை ஈடுபடுத்த வேண்டும்.
அன்பான தாய், தந்தை பிள்ளை உறவு பரிணமிக்க வேண்டும். இவ் உறவு இருபக்கத் தொடர்பாக அமைய வேண்டும் குழந்தை மீது கடிந்து விழவோ, முதுகில் படார் என அடித்தோ அதன் பிஞ்சு உள்ளத்தைக் கசக்கி மணக்கக் கூடாது. குழந்தை உள்ளம் தெய்வ உள்ளம்.
கற்றல் அனுபவங்களை அவர்களிடத்தில் கண்டறிய வேண்டும். அதன் அனுபவங்களுக்கு ஏற்ப இணங்க அவர்களை கற்க வைக்க வேண்டும். ஓடிவிளையாடு பாப்பா, கூடிவிளையாடு பாப்பா, நீ ஒய்ந்திருக்கலாகாது என்பவற்றைக் கற்பதில் சுறுசுறுப்பான செயற்பாட்டுக் கற்கைக்கு இடம் காட்ட
( ச. நா. தணிகாசலம்பிள்ளை - 84 - ஆரம்பக்கல்வி)

வேண்டும். பிள்ளையை ஏற்க வைக்க வேண்டும். அதனை மதிக்க வேண்டும். அதனை கணிக்க வேண்டும். பாராட்ட வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக அன்பு காட்ட வேண்டும், கட்டி அணைக்க வேண்டும்.
முன் பிள்ளைப்பருவம் விருத்திப்பருவம் எனலாம். இங்கு அதன் உடலியல் உளவியல் விருத்தி அடைகின்றதென்பதை நாம் மறக்க முடியாது. இப்பருவம் ஆரம்பக் கல்விக்கு அடி அத்திவாரம் இடும் விருத்திக்காலம் என்பதை நாம் மறக்கக் கூடாது. இப்பருவத்தில் அதன் இயக்கம் பிரதானமானது குழந்தை தானாக இயங்குகின்றது. அதன் இயக்கம் பிரதானமானது குழந்தை தானாக இயக்கம் விருத்தி காண இடமளிக்கப்பட வேண்டும். பிள்ளையின் புலன்கள் விருத்தி காண்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்புலன்கள் விருத்தி காண்கின்றது. மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்புலன்களும் அதன் செயற்பாட்டின் மூலம் விருத்தி காண்கின்றது. பிள்ளையின் காதின் இயக்கம் கேட்டல், கண்ணின் இயக்கம் பார்வை இவை இரண்டினதும் விருத்தி மிகமிகப் பிரதானம். இவற்றை வீட்டிலும் முன்பள்ளியிலும் கவனம் செலுத்திக் கண்டறிய வேண்டும். உடலியலைப் பொறுத்தமட்டில் அதன் உணர்வு பிரதானமானது. தன்னில் முட்டும் பொருட்களையும் தான் முட்டும் பொருட்களையும் உடல் ரீதியாக உணரும் தன்மையை அறிய வேண்டும். உதாரணமாக மயிர் கொட்டியின் கொடுமையை கடி எறும்பு கடிக்கும் தன்மையை பிள்ளை உணர்ந்து தனக்குத் தற்காப்புத் தேடவேண்டும்.
இதே போல அவனது நுண்ணறிவு விருத்தி மிகமிகப் பிரதானம், குழந்தையின் மூளை விருத்தி, மனனம் செய்யும் திறன் எனபவை கண்டுபிடிக்கப்பட்டு விருத்தி ஆக்கப்பட வேண்டும். எமது மூதாட்டி மண்ணில் விளையாடவிட்டு பார்த்த அழகு மீள வரவேண்டும். களிமண்ணில் உரல், அம்மி, குழவி, சூரன், பொம்மை வீடு ஆகியன செய்து மகிழ்ந்த காலம் மீள வரவேண்டும். கைவிரலை மண்போட்டுப் பரப்பி எழுதுவித்த காலம் திரும்ப வேண்டும். தசைநார் பயிற்சியை கைவிரல்கள் பெறவேண்டும். களிமண்ணை கையால் பிசைந்து செய்யும் உருவங்கள் பெருக வேண்டும்.
தேசிக்காய் கோதை பிரட்டி அதற்கு நூலை கட்டி சிறுதடியை தராசின் நெம்புகோலாக மாற்றி, இலை, சோகி, பீங்கான் உடைந்த ஒடு காசாகக் கணக்கிட்ட காலம் அறிமுகமாக வேண்டும். இங்கு மொழி ஆக்கம், அழகியல் ஆகியவற்றில் நுண்ணறிவு விருத்தி பெருகுகின்றது.
பிரச்சியை விடுவிக்கும் திறனை பிள்ளை இளம் வயதில் இருந்தே பெற வேண்டும். பிரச்சினை பொல்லாதது கடினமானது அதனைக் கண்டு ஓட வேண்டும்
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 85- ஆரம்பக்கல்வி)

Page 52
என்ற நிலை இறுதி வரையும் காட்டப்படக்கூடாது. தயவுசெய்து தாய், தந்தையர், சகோதரர்கள் பிள்ளைகளுக்கு பிரச்சினை பொல்லாதது, அது விசுவரூபம் கொண்டது என வீட்டில் சட்டி பானைப் பாத்திரங்களை உடைத்து அடித்து நொறுக்கிக் காட்ட வேண்டாம். குழந்தையின் மனதில் பூதமாக்காது அதனை விடுவிக்கவும் இலகுவாக்கவும் வழிகாண வேண்டும்.
இப்பருவத்தில் பிள்ளையின் மூளை விருத்தி பற்றியும் நாம் கவனமெடுக்க வேண்டும் ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும் பொழுதே மூளை விருத்தி ஆகின்றது. மனித உடலில் குறைவானதும் மிக நுண் ணியதும இன்றியமையாததுமான உறுப்பு இம் மூளை ஆகும். மூளையின் ஆரம்ப இயக்கம் நுண்ணறிவுடன் தொடர்புபடுகிறது. இத்தொடர்பு நிலைவிருத்தி அடைய செயற்பாட்டு அனுபவங்கள் பிள்ளைக்கு அவசியம். இதனால் தான் முன்பள்ளியிலோ, வீட்டிலோ ஆரம்பத்தில் எழுத்து வேலை போன்ற வேலைச்சுமையை பிள்ளைக்கு அளிக்காது அதனை இயற்கையுடன் இணைந்த, செயற்கையுடன் இணைந்த பொருட்கள், வளங்களை அறிந்து செயற்பட வைக்க வேண்டும். அங்கு பிள்ளை அவற்றுடன் செயற்பட வேண்டும். தானாக கவரப்பட்டு அதனை எடுத்து, பொறுக்கி, அடுக்கி அழகு பார்த்து பிசைந்து பொருட்களை ஆக்கி ஆக்கி திருப்தி காண வேண்டும். சோலைகளில் விளையாடும் இயற்கை மிருகங்கள் போலவும் பூங்காக்களில் சுதந்திரமாகப் பறக்கும் பறவைகள் போலவும் தொட்டிகளில் நீந்தும் மீன் குஞ்சுகள் போலவும்
இயற்கையாக விளையாட விட வேண்டும்.
இதனை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய புதிய கல்விச் சீர்திருத்த அறிமுகத்தில் செயற்பாடு மூலம் கல்வி என்ற எண்ணக்கரு தரம் ஒன்று வகுப்பில் வற்புறுத்தப்படுகின்றது. ஆதலால் ஆரம்பக்கல்விக்கு முன்னைய கல்வியான முன்பள்ளிக் கல்வியும் சீராக்கம் பெற வேண்டும். அதன் அடிப்படையில் கற்பித்தல் அமைய வேண்டும்.
பிள்ளை பிறந்து முதல் வருடத்தில் மூளையின் நிறை இரண்டு மடங்காக அதிகரிக்கின்றது. அடுத்த நான்கு வயதில் நுண்ணறிவு 20% விருத்தி அடையும். பிள்ளைக்கு நாம் வளமான சூழலையும் செயல் அனுபவத்தையும் அறிந்து வேறு காரணிகளாகிய போஷாக்கு, பெற்றோர், கல்வி, விளையாட்டு அனுபவம் மூலம் கல்வி அளிப்-போமாக இருந்தால் குழந்தையின் வளர்ச்சியும் முதிர்வும் ஆரம்பக் கல்விக்கு இட்டுச் செல்லும்.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 86 - ஆரம்பக்கல்வி)

முன்பள்ளி:
முன்பள்ளி என்பது மூன்று வயதிற்கும் ஐந்து வயதிற்கும் இடைப்பட்ட சிறுவர்கள் கூடும் இடம். சிறுவர் கூடம் இதனை ஒரு நியம முறைமைப் பள்ளியாகக் கொள்ளாது இயற்கைக் கூடமாக அழகியல் மாடமாக, குழவிப் பூங்காவாக சிறுவர் விளையாட்டுத் திடலாகக் கொள்ள வேண்டும். இங்கு தாமாக ஓடி ஓடி வந்து கூட வேண்டும். சிறுவர் கவரப்பட வேண்டும். தன் தொடர்பாடல் திறனை வளர்க்க வழிகாட்ட வேண்டும். சூழல் வளர்த்தெடுக் கப்பட வேண்டும் சூழலுடன் அவனை இணைக்க வேண்டும். ஒழுக்க நெறி செயல் மூலம் ஊட்டம் பெறவேண்டும். ஒய்வுநேரம் வினோதமாக மாற வழிகாட்ட வேண்டும். அக்கூடம் ஆனந்தமயமாக வேண்டும்.
இங்கு இயற்கையுடன் இணைந்து கல்வி அளிக்கப்பட வேண்டும். உண்மையில் இது சிறுவர் பராமரிப்பு இல்லமாகப் பிள்ளையை பாதுகாக்க வேண்டும். அதன் உறையுள் வசதியாக உண்டா எனப் பார்க்க வேண்டும்.
போதிய போஷாக்குடன் ஊட்டம் உண்டா எனப் பார்க்க வேண்டும். வீடடில் தேகாரோக்கியம், மூத்தோர் எவ்வாறு அவரைக் கவனிக்கின்றார்கள், அவனது புலன் இயக்கத்திற்கு ஊக்குவிப்பு உண்டா, அவனிடம் செயல் வளம், சொல் வளம், உச்சரிப்பு உண்டா என்பன அவதானிக்கப்பட வேண்டும். மொழி சார்ந்த ஊக்குவிப்பு சிந்தனைத் திறன், சுதந்திரமான இயக்கம், வீட்டுச் சூழல் மிகமிகப் பிரதானம். அவனது பழக்கவழக்கங்கள் நியமப்படுத்தப் படுகின்றனவா? மொழி சார்ந்த ஊக்குவிப்பு உண்டா? அவனிடம் சிந்தனைத்திறன் உண்டா? சுதந்திரமாக இயங்குகின்றானா? என்பன அறியப்பட வேண்டும். அனுபவங்களைப் பகிர்கிறானா? அவதனிக்-கின்றானா? கேள்வி எழுப்புகின்றானா? நாளாந்தம் மாற்றம் தென்படுகின்றதா? என ஒவ்வொரு பிள்ளைகளிடமும் இனம் காணும் களமே முன்பள்ளி, இக் களத்தைக் கையாளப் பயிற்சி பெற்ற ஆசிரியைகளின் செயற்பாடு அவசியமாகும். அவருக்கு பயிற்சி அனுபவம் பிரதானம். சிறந்த ஆளுமை வேண்டும். வழிநடாத்தும் பண்பு பிரதானம். அவரிடம் சிறந்த நடை, உடை, பாவனை. பொறுமை, இனிய சொல், நல்ல மொழி கையாளல் என்பன அவசியமாகும். வீட்டில் சிறுவர்களுக்கு வழங்கும் அன்பு, ஆதரவு, நெருக்க உறவை முன்பள்ளி ஆசிரியர் கொடுக்க வேண்டும். நாளாந்தம் சூழலுடன் இலை, மரம், செடி, பறவை, விலங்கு போன்றவற்றுடன் இணைய, அறியவைக்க வேண்டும். பயன்பாடு ஒய்ந்த பொருட்களைச் சேகரிப்பது மட்டும் அல்லாமல், அதனை மீள உபயோகிக்க வழிகாட்ட வேண்டும். புது உருக்களை ஆக்கிக்
(ச.நா. தணிகாசலம்பிள்ளை -87 - ஆரம்பக்கல்வி)

Page 53
காட்டவேண்டும். கதை கூற வேண்டும் குழந்தைகள் போல் தானும் மாறிப் பாவனை செய்து நடித்துக் காட்ட வேண்டும். இசையுடன் அசைந்து காட்ட வேண்டும். பிள்ளைகளுக்கு விளங்கும் மொழி கையாளப்பட வேண்டும். வீட்டுச் சூழலில் இருந்து அவற்றை விருத்தியாக்க வேண்டும். பிள்ளைக்கு. போலச் செய்ய வேண்டும். பாவனை செய்ய எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டு பராமரிப்பு, நாளாந்த நிலையம் (DAY CARE CENTER) போல் இங்கு முன்பள்ளி ஆசிரியர் இயங்க வேண்டும்.
முன் பள்ளி அமைப்பு
முன்பள்ளி ஒரு கிராமத்திலே அதன் மையப் பகுதியில் அமைந்திருக்க வேண்டும். மாணவர்களைப் பெற்றோர்கள் இலகுவாகச் கூட்டிச் சென்று விட்டு வரவும், மீண்டும் கூட்டி வரக் கூடியதுமாகப் பள்ளி நிலையம் அமைக்கப்பட வேண்டும். அவ்விடம் பிள்ளைகளுக்கு பாதுகாப்புடையதாயிருக்க வேண்டும். அவ்விடம் அவர்களது தேகாரோக்கியத்திற்கு உகந்ததாயிருக்க வேண்டும்.
முன்பள்ளிக்கான கட்டிடம்
இக் கட்டிடமானது கற்றலுக்கும், விளையாடுவதற்குமான OLLDTEB SD60LDu வேண்டும். குறைந்த பட்சம் ஒவ்வோர் பிள்ளைக்கும் 20சதுர அடிகளுக்கு குறையாத இட வசதியுள்ளதாக அமைய வேண்டும். அவற்றுடன் அவை போதிய காற்றோட்டமும் வெளிச்சமும் கொண்டதாகவும், சீமெந்தாலான தரை, ரெறாசா அல்லது பிளாஸ்ரிக் சீற் விரித்த தரையாக இருத்தல் நல்லது. மேற்கூரை பாதுகாப்பான கூரையாக அமைய வேண்டும். காரியாலய அறை அவசியம். முடியுமானால் களஞ்சியத்திற்கான அறை அடுக்களை என்பன அமைத்தால் நல்லது. பிள்ளைகள் படிக்கும் போது பாவிப்பதற்கென ஒவ்வோர் 25 பிள்ளைகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் சிறுவர்களுக்கு ஏற்ற மலசல கூடங்கள் அமைத்தல் நல்லது. அதுவும் பள்ளி அறையுடன் இணைந்ததாக அமைத்து நல்ல முறையில் சுத்தமாகப் பேணினால் மிக மிக நன்று. சின்னஞ் சிறுவர்கள் தமது ஆக்கங்களை, அழகியல் வெளிப்பாட்டைக் காட்சிக்கு வைப்பதற்கு தகுந்த வசதிகள் அல்லது சுவர் வசதிகள் அமைத்துக் கொடுப்பது நல்லது.
இவற்றுடன் தளபாட வசதிகளும் மிகமிக முக்கியம். அலுமாரிகள், மேசைகள், நாற்காலிகள் இருக்க வேண்டும். மாணவர்கள் விரித்து அதில் இருந்து விளையாடப் பாய்கள் அவசியம், இறாக்கைத் தட்டுக்கள், அதுவும் கற்றல் உபகரணங்களை வைத்துப் பராமரிப்பதற்கேற்றதாக வைத்திருத்தல் நல்லது. (ச. நா. தணிகாசலம்பிள்ளை - 88- ஆரம்பக்கல்வி)

சிறுவர்களுக்கு ஏற்ற நாற்காலிகள், மேசைகள், பாய்கள் இருக்க வேண்டும். கற்றல் உபகரணங்களை தாமே வைத்து வேண்டிய வேளையில் எடுத்து வைத்து கற்க வசதியான இறாக்கைகள் வைத்திருப்பது நல்லது. சிறுவர்கள் நின்று எழுதக்கூடிய அவர்கள் உயரத்திற்கேற்ற சுவர்களும் பலகைகளும் அமைக்கப்பட வேண்டும். சிறுவர்கள் தட்டுப்பட்டு விழுந்து காயப்பட்டால் மருந்து கட்டவும், சுகவீனத்திற்கு உடனடி நிவாரணம் அளிக்க முதல் உதவிப்பெட்டி சகல வசதிகளுடனும் அமைக்க வேண்டும். குடிநீர் சேகரித்து வைக்க வைப்புடன் கூடிய கொள்கலம் வைத்திருப்பது நல்லது.
கை கழுவுதவதற்கேற்ற நீர் வசதிகள் வெளியேயும் உள்ளேயும் அமைத்துக் கொடுக்க வேண்டும். பிள்ளைகள் தாம் கொண்டு வரும் படங்கள், நூல்கள் மற்றும் பொருட்களை வைக்கவும், சுற்றாடற் பொருட்களை சேகரித்து வைக்கவும் வசதிகளான பெட்டிகள் வைக்க வேண்டும். உள்வீட்டு விளையாட்டு உபகரணங்கள் வைத்-தெடுப்பதற்கு உகந்த பெட்டிகள் இரும்பு அலுமாரிகள வைத்திருப்பது நல்லது.
முன்பள்ளியைச் சுற்றி அல்லது அருகில் சுகாதாரத்திற்கேற்ற பாதுகாப்பான சுத்தமான இடவசதி அமைக்கப்பட வேண்டும். இங்கு குழந்தைகள் விளையாட மணல், நீர் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இது ஒரு சிறுவர் விளையாட்டு பூங்காவாக அமைய வேண்டும். இங்கு குழந்தை பாதுகாப்பாக ஏறுவதற்கும் இறங்குவதற்கும், பாய்வதற்கும், கெந்தவதற்கும், குனிந்து செல்வதற்கும், குதிப்பதற்கும் ஏற்ற வசதிகள் உபகரணங்கள் செய்து வைக்க வேண்டும்.
உதாரணமாக ஏறும் சட்டங்கள், ஊஞ்சல்கள், சறுக்கும் பலகை ஆங்காங்கே அமைக்கப்பட வேண்டும். இவை குதுாகலித்து விளையாடும் உபகரணங்களாகும்.
குழவிப் பூங்கா அவசியம். இச்சிறுவர் பூங்காவானது நிழல் தரும் மரங்களைக் கொண்டதாகவும் வண்ண வண்ணப் பூக்கன்றுகளைக் கொண்டதாகவும், பச்சைப் பசேல் என்ற புற்தரைகளைக் கொண்டதாகவும் அமைக்க வேண்டும்.
பிள்ளைகளுக்கு பின்வரும் நாளாந்த வேலைத் திட்டங்கள் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் காலையில் சமய அனுட்டானம் செய்ய வேண்டும். அடிப்படை மொழித்திறனை விருத்தியாக்கக் கூடிய விதத்தில் கேட்டல், பேச்சு, முன்வாசிப்பு, முன்னெழுத்து என்பவற்றில் ஈடுபடச் சந்தர்ப்பங்கள் வழங்கப்படவேண்டும். விளையாட்டுடன் இணைந்த கணித அனுபவம் அவசி.ம.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 89 - ஆரம்பக்கல்வி)

Page 54
அழகியல் அனுபவம் பெற ஏற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும். பிள்ளை தானாக ஆக்க அனுபவம் பெறவும், குறிப்பாகச் சூழலை அறிந்து கற்கவும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். நாள்தோறும் சுகாதாரமும், சுகாதாரப் பழக்க வழக்கங்களும் பேணப்படுவதில் விருப்பை ஏற்படுத்த வேண்டும். சிறுவர்களுக்கு செயல் அனுபவம் பிரதானமானது. சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கான கற்றல் அனுபவங்களைப் பெற வழிகாட்டப்பட வேண்டும்.
பிளைகளைக் கண்காணிப்பதற்குப் பதிவேடுகள் பேணப்பட வேண்டும். ஒவ்வொரு பிள்ளை பற்றி அறிவதற்குப் பொருத்தமாகத் தனித்தனியான பதிவேடுகள் வைக்கப்பட வேண்டும். இடாப்புகள், தினசரி வரவு இடாப்பு அனுமதி இடாப்பு அனும்தி விபரம் என்பவைகளைக் கொண்ட பதிவுகள் பேணப்பட வேண்டும். மதிப்பீடு அட்டவணைகள் தொங்கவிடப்பட வேண்டும். முன்னேற்ற அட்டவணைகள் பெற்றோர்களுக்கு பின்னூட்ட அவசியம். பிள்ளை பற்றிய தனித்தனியான சுகாதாரப் பதிவேடுகள் பேணப்பட வேண்டும் பிள்ளைகளின் செயற்பாடுகள் பற்றிய அறிக்கைகள் அவசியம்
இதே போலவே ஆசிரியர்களும் தமது வரவைப் பதியத் தினசரி வரவு இடாப்பைப் பேணுதல் வேண்டும். தாம் வைத்திருக்கும் பொருட்களின் பட்டியலை வைத்திருத்தல் அவசியமாகும். தனித்தனியாக குறிப்புப் புத்தகம் பேணப்பட வேண்டும். பாடத்திட்டங்களை அடிப்படையாக வைத்து பாட ஆயத்தங்கள் குறிப்புகள் என்பவற்றைப் பாதுகாப்பதுடன் ஆசிரியர் தமது சுயவிபரம் அடங்கிய விபரக் குறிப்பேடுகளைப் பேணவும் வேண்டும்.
ஆற்றல்கள்:
இவை மொழியாற்றல், கலைகள் சார்ந்த ஆற்றல், சூழலை ஆராயும் ஆற்றல், ஐம்புலன் விருத்தி, கணித எண்ணக் கருவிருத்தி, தசை நார்ப் பயிற்சி, சுதந்திரமான விளையாட்டு, ஆக்கத்திறன்களின் வெளிப்பாடு, அழகியற் செயற்பாடுகள், சமூக இசைவாக்கம், நல்லொழுக்கப் பண்பாடு என்பன ஆகும்.
பாலர் கல்வி நிலையங்களில் உடல் இயக்கத்திறன்கள், புலன் இயக்கத் திறன்கள். புலக் காட்சித் திறன்கள் ஆகிய ஆற்றல்களை வளர்த்தெடுக்க வேண்டும்.
ஒரு குழந்தையிடம் உள்ள விசேட ஆற்றல்களை வெளிக் கொணர குழந்தைகளை அழகான சூழலிலும், கலைக் கூடங்களிலும் விடுதல் அவசியமாகும். அத்துடன் பல விளையாட்டு உபகரணங்களை அளிப்பதன் மூலமும், சுய விருப்பங்களை நிறைவேற்றுவதன் மூலமும் சிறப்பான முன்பள்ளிக் கல்விக்கு வழிகாட்டப்படுதல் வேண்டும்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 90- ஆரம்பக்கல்வி)

ஆரம்பக்கல்வியும் தரஉறுதிப்பாரும் கல்வியின் படிநிலை வளர்ச்சியின் முதன்நிலை வகிக்கும் ஆரம்பக்கல்வி தரமாக அமையும் பொழுதே இடைநிலைக்கல்வியும் உயர்நிலைக்கல்வியும் உயர்வடையும், ஆரம்பக்கல்வியின் வெளிப்பாடு கணிப்பீட்டிற்குரியதாகவும், வகை கூறக்கூடியதுமாகும். ஆகவே ஆரம்பக்கல்விக்கு தர உறுதிப்பாடு வற்புறுத்தப்படவேண்டியதாகும். கல்வி பண்புசார் தன்மையுடையதாக அமையவேண்டும். இதுவே ஆசிரிய மாணவர்களிடத்தில் எதிர்பார்க்கப் படுகின்றது.
பண்பாடு 1. செயற்பாடு வினைத்திறன்
வகைகூறல
கடமைப்பாடு
நோக்கம்
தாபனம் 2. நம்பகத்தன்மை செயற்பாடு
கண்காணித்தலும், நிருவாகமும் மதிப்பீடு
குறிப்பிட்ட அளவிடக்கூடிய 3. அம்சம் அடையக்கூடிய
ஏற்ற நேரம்
உள்ளிடு வருமானம்
4. G
பாருத்தப்பாடு வெளியீடு விலை / செலவு
5. உறுதி பாவனை : குறுகியகால அல்லது நீண்டகாலம் பாவனை
6. புதுப்பித்தல் ; தரவட்டம்
5 S முறைகள்
7. விரும்பும் கலை : சுய உற்சாகம்
அர்ப்பணிப்பு கொள்வனவு அபிவிருத்தி சிறந்த பெறுபேறு மதிப்பீட்டு முறைகள் (ச.நா. தணிகாசலம்பிள்ளை – 91 سے ஆரம்பக்கல்வி)

Page 55
|-
\|-
w
qrtos@sqicolloxfī) ‘Gloo@kofī) . őTIL? 109IKJ moạgi • qi???IIgig) goq9o 1991 JTTß • φι (Φ.
ц9ӕ JK999,99$ IỮU99) / IKTIIIII.93)ņóı . qırı9ĪĢĒĢ1999ífi . Œœ9$-11991g9gj .
(Q9ćTILITIQŪmeo) Q9QŪqjæ) @īņIIIIII||199J1 §qjųTm-os . §§@g9.gs@ ĢĒĻ9ơių99$ . &99úsı głąjājs? •
ĢĒĢ@g9 1990ĪĢĒĢłU93, IĜITIÐ
1999ísısı)o quŪqkn Rogáđù19 . ĢģĶĪDU,9 hoŲJIG,
Gბgnკ19IGც9
qlol Ing) úgı sığıKTIG) CŨqŬso • QŪ09TITIŴRo (ĪQŪÉ9 • qīG-I-IIIGÈış9ţi qig) çısı soğan 109 urnơiqoổī)đī) . 1,9oCỦơ9đī) ọ9$ $Ųı QŪo 9) Tı urı QŪTnog) . qıßqig) 1991 JIĠLTIg) .
q9$$çıąjąo / Q90Īqjæ
† |
qigo199$$$IIq|qi . IŪTIg)ļūrio) ĝqÌQŪ)? . q9đĶĒ) gïgîrnogo . @ņIIIIII||199ƠI Tnúgsstā, 1991 TL1919 . qrtos@țGK990.909$ 1.9LJITnQ9TIúŲ . qu009190919 oĒĶĪĻTITās •
Q9 CQ9 Ilo T1 IJTI
Qırısınaeuo
1,98,1% Tng đī)ņ9 rmTlo@引 qKoooooogi útočilu9@LTIÐ qu09IKTI@TU9 199ứLCŮg)qİng) 1,9% hiç09Tı 1191,9ĪĢĒĢæđīào / @ņ9 f(9úrto •
9) LITIQŪ1993)199đĩ) • qKfī)'úIKĒJoosę oqsmıç09C09 ELTIg) . HIų999TIŲG “GIGSTĀrmē3 .
119orgılado o Ios@ 1ņ9Ų9?!!191099.IKJ.
g9, 199£(fi)? / JLTig)qİng) - 1193?GĖGIŲ9 109IKTIĞI Tig) HIų999III||rē ‘sqìgnrı ‘q’,093x09, 199ụ9Ðyrnúlfsso 1,9%EIĘIloco sorT-3 Q9QĒĢgiqja? qīITQ|qi qiúGĖ Įrn-æ / Q9cc9gHƠ9€/TIQıíffē) qılo9ısērnīgo
○9C9」はQコ」「
இழ99 டு
t.
+
ஆரம்பக்கல்வி)
- 92 -
(ச.நா. தணிகாசலம்பிள்ளை

பண்புசார் தன்மையென்பது யாது?
хх
“பண்புசார் தன்மையென்பது” “Quality” எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். "Quality” என்னும் சொல் இலத்தின் மொழியில் “Qualits’ என்ற சொல்லிலிருந்து பிரிந்து வந்துள்ள ஒரு சேர்வாகும். இது எந்த வகையைச் சேர்ந்தது (What Kind of) எனும் கருத்தையும் எழுப்புவதாகும் என்று சொல்லப்படுகின்றது.
எனினும் சாதாரண மொழியில் கூறினால் குணம், பண்பு என்றும் நல்லொழுக்கமென்றும் கூறப்படும். மற்றும் உணவு வகைகளினதும், பொருட்களினதும் சிறந்த அம்சம் என்பனவற்றையும் குறிப்பிடுவதாகும். எனினும் “Quality’ என்பது அவற்றைவிட விரிவான கருத்தைக் கொண்டதாகும்.
இது பற்றிய நிபுணர்களின் விளக்கங்கள்
I
உரிய முறையில் வரைவிலக்கணம் காண்பது கஷ்டமாக இருப்பதால் b(p6b "ép 35(550gs T65rp' (Slippery concept) Naomi Pfefter LDfbpub Anna Cote இனால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
“தெளிவு” என்பது தெளிவானதாக அமைதல் எல்லாவற்றையும் விட
மிகவும் நல்லவை. எனினும் இந்த “நல்லதன்மை” என்பது யாது? (R.M. PIRSIG) ዲ፥
தரம் மற்றும் விசேடத்துவம் ஆகிய விளக்கங்களை அளிப்பதால் “பண்புசார் தன்மை” என்பது பல அர்த்தங்களையும் அளிக்கும் ஒரு Lugs(3LD (R. Ellis) u
“உத்தேச அல்லது வெளியிடப்பட்டுள்ள தேவைகளைத் திருப்திப்படுத்தும் ஆற்றலுள்ள உற்பத்தியின் அல்லது சேவையின் பல அம்சங்களையும் 2 6f 6TLddlugs.T(gib. (British Standard Institute) “பண்புசார் தன்மை என்பது தேவைகளுக்குரிய அனுகூலத்தின் 60bLDuuLDIT(g5 Lib... (J. M. Juran) எந்த இடத்திலும் அடிப்படைப்பிரச்சினை பண்புசார்தான். பண்புசார் தன்மை என்பது யாது? நாளாந்தம் உபயோகத்திலிருக்கும் நிலையான விற்பனைச் சந்தை இருப்பின் பொருள் அல்லது சேவையில் பண்புசார் தள்மை நிலவும். வியாபாரம் நிலைத்திருப்பது பண்புசார் தன்மையிலேயேயாகும்”. (E. W. Deming)
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 93- ஆரம்பக்கல்வி)

Page 56
“எந்த பொருளுக்கோ அல்லது சேவைக்கோ பண்புசார் லேபலை ஒட்டவேண்டியது அதற்கான தரத்தைப் பூர்த்தி செய்த பின்பேயாகும். (Edwards Sallis)
பண்புசார் தன்மையை நிலைப்படுத்திக் கொள்ளவும் அதனை விருத்தி செய்யவும் அவசியமானவை:-
நுகர்வோரின் (Customer) அல்லது சேவை பெறுவோரின் (Client) தேவைகள் (Needs) உரிய முறையில் பூர்த்தி செய்யப்படக்கூடிய திறன் இருப்பதோடு அதையிட்டு அவர்கள் திருப்தி (Satisty) அடைய வேண்டும். உற்பத்தி அல்லது சேவை உரிய வேலைக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
முதலில் தீர்மானிக்கப்பட்ட மாதிரிக்கு ஏற்ப (Specification) அல்லது ஒப்பளவுகளுக்கு (Criterion - measurements) ஏற்ப இருக்க வேண்டும். இதற்கான பண்புசார் தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு முறையை (Quality ASSurance System) so u(Sujitsuu(655 (36.60(6lb.
பண்புசார் தன்மையின் விசேட இலட்சணங்கள்
Σα
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மாதிரி அல்லது ஒப்புரவுகளின் அடிப்படையில் உற்பத்தியின் பண்புசார் தன்மையை அளவிட முடியும். அது தரத்தை p5606) LIG5g56 g5T(5ub. (It is proving of Quality Standard) எனினும் பண்புசார் தன்மை நிலையான ஒன்றல்ல. அது தொடர்ந்து 6cbibiu JTE (36.1669 uu 96ipt (35lb. (KAIZEN) (It is improving) விசேட தரம் என்பது (Standard Excellence) நிலையான தரமன்று.
அது ஒரு தொடர் பணயம். ஒரு பயணம் இலக்கல்ல. (It is a Juurney; not a destination)
நோக்கங்களுக்கேற்ற சரியானதை மாத்திரம் சரியாகச் செய்வதன் மூலம் (Doing right things right) 35,5606)6Ouu (3LD6103LDgjub 6.j6Tids35 (ypiqujib.
பண்புசார் தன்மையின் உள்ளடக்கம்
xx
х
செயற் சாதனை - (Performance) உரிய தேவைகளுக்கு மாத்திரம்
உபயோகிக்க கூடியதாக இருத்தல்.
நம்பிக்கைத்துவம் - (Reliability) நம்பிக்கையுடன் கொள்வ:ைவு
செய்யக்கூடியது.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 94- ஆரம்பக்கல்வி)

хх
உரிய இலச்சணம் :- (Features) அவசிய பாகங்களைக் கொண்டதாய்
இருத்தல். ஆக்கக் கூற்றுக்களுக்கேற்றதாய் இருத்தல் :- (Conformance) ஏற்றுக் கொணி ட ஒப்பளவு களுக்கு சமனானதாக இருத்தல் வேண்டும்.
கால பாவனை :- (Durability) செலவிடப்படும் பணத்திற்குப் பெறுமதியானதாக குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பாவிப்பதற்குக் கூடியதாக இருத்தல்.
மீள் பயன்படுத்தக் கூடியது :- (Serviceability) திருத்தி மீளப்
பாவிக்கக்கூடியதாக இருத்தல்.
கவர்ச்சிகரமானதாக இருத்தல் :- (Aesthetic) மனதிற்கு கவர்ச்சித்
தன்மையை அளித்தல்.
பொருளாதார தன்மை : (Economics) குறைந்த செலவில் நிறைய
பயனைத் தரக்கூடியதாக இருத்தல்.
கல்வியும் பண்புசார் தன்மையும்
хх
பொருளுற்பத்தித் துறையில் விருத்தியான “பண்புசார் தன்மை” பாங்கில் எண்ணக்கரு சேவைத்துறையிலான கல்விக்கு மாற்றி அமைத்தமையால் அது ஓரளவு வேறுபாடான தோற்றத்தைக் கொடுக்கிறது. கல்வியையும் ஒரு உற்பத்திச் செயற்பாடாகக் கருதுவதாயின் அதன் உற்பத்தித்திறன் (Product-Output) மாணவரிடத்தில் பொதுவாகக் காணக்கூடியதாக இருப்பினும், கல்விச் செயற்பாட்டை ஒரே வகையான பொருள்கள் உற்பத்திக்குப் பயன்படுத்துவதைவிட, கல்வி பெறுபவர் (Client-customer)களாகிய மாணவரிடையே நிபுணத்துவ வளர்ச்சி காணப்படல் வேண்டும். மாணவரின் பணி புசார் தன்மையை தரமாகக் கருதக் கூடியது, அந்நிபுணத்துவ வளர்ச்சியால் ஏற்படும் ஆக்கச் செயற்பாடாகும். இது பற்றி பல்வேறுபட்ட மாணவர்களிடையே வேறுபாடுகள் காணக்கூடியதாக இருப்பினும் அத்தியாவசிய நிபுணத்துவங்கள் சகல மாணவர்களிடமும் விருத்தியடைவது அத்தியாவசியமானதாகுமென்.தும்
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 95- ஆரம்பக்கல்வி)

Page 57
ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுமாகும். (விசேட தேவைகள் உள்ள / ஊனமுற்ற மாணவர்களைப் பொறுத்தவரையில் மாத்திரம் பிரச்சினைகள் இருக்கலாம்)
மாணவர்களின் நிபுணத்துவ வளர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்படுகின்ற G3FuusiðUITG6 Process LDðgpjub 60d6OOTöB PFGUITG6a56înguib agn (Inputs) பண்புசார் தன்மை / தரம் இருக்க வேண்டும்.
மனித உள்ளிடுகளான ஆசிரியர் ஆசிரிய ஆலோசகர், அதிபர், உத்தியோகத்தர்கள் ஆகிய கல்வி ஆலோசனையினர்களும் தமது செயற்பாட்டுக்கேற்ற-சகல விடயங்களையும் உரிய முறையில் நிறைவேற்ற நிபுணத்துவம் பெறவேண்டும்.
உள்ளிடுகளாக உபயோகிக்கப்படுகின்ற பாடநூல்கள் மற்றும் பல்
வகையான நூல்கள், கட்டிடங்கள், தளபாடங்கள், கணனி மற்றும் உபகரணங்கள் (இரசாயனகூடம், கைத்தொழிற் பிரிவு, தகவல் தொழில்நுட்பம்) உரிய தரத்தினை உடையதாக இருக்க வேண்டும்.
பயன்படுத்தப்படும் முகாமைத்துவச் செயற்பாடும் சிறந்த பண்புசார் தன்மை கொண்டதாக இருத்தல் வேண்டும். உள்ளிடுகள் எவ்வளவு பண்புசார்புடை யனவாக இருப்பினும் முகாமைத்துவச் செயற்பாட்டில் பண்புசார் தன்மை இல்லையெனில் ஆக்கங்கள் பண்பானவையாக அமையாது.
“உற்பத்திச் செயற்பாடு சரியான முறையில் கண்காணிக்கப்படல், உற்பத்தி "(Look after the process; the product will look after itself - Edwards W. Deming) பொருட்கள் தம்மைத் தாமே கண்காணித்துக்கொள்ளும். The process is the product (Anon-Quicked by John Be..... ford)
இம்முறையில் உள்ளிடுகளின் பண்புசார் தன்மையும், முகாமைத்துவச் செயற்பாட்டின் பண்புசாரா தன்மையினாலும், தானாகவே தோன்றும் பண்புசார் உற்பத்தி உட்பட மொத்த செயற்பாடுகளும் பண்புசார் தன்மையை (Total Quality) உடையனவென்று கருதக்கூடியதாக உள்ளது.
சம்பிரதாய முகாமைத்துவக் கோட்பாடுகளின் நின்றும் வேறுபடும் இந்நிலையை ஒத்த பண்புசார் முகாமைத்துவ கலாசாரமாகவே நாம்
g60TssissT600T6)Tib. (Culture of Total Quality management)
(ச.நா. தணிகாசலம்பிள்ளை -96 - ஆரம்பக்கல்வி)

அபிவிருத்தி என்றால் என்ன?
* கருத்தாழமுள்ள செல்வத்தின் மாற்றமாகும். * தொடர்ச்சியான செயற்பாடாகும் * ஒரு நபரின் பூரண அபிவிருத்தியாகும் (உடல்சார், மனம்சார், மன
வேகம், நல்லொழுக்கம் ஆகியன ஒன்றுதிரட்டிய அபிவிருத்தியாகும்.) * போட்டி மற்றும் பிரச்சினைகளைக் குறைத்து அனைவரையும் ஒன்றுபோல்
அணுகும் ஒரு சந்தர்ப்பமாகும். * பண்புசார் வாழ்க்கை மூலம் பண்புள்ள சமூகமொன்றை விருத்தியடையச்
செய்யலாம்.
வளர்ச்சியும் அபிவிருத்தியும் * வளர்ச்சி என்பது இயல்பான தானாக (Spontaneous) நிகழும் செயற்பாடாகும். குறித்த நோக்கமோ குறிக்கோளோ இருக்க அவசியமில்லை. * அபிவிருத்தி என்பது உறுதியான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு
திட்டமிட்டு செயற்படுவதாகும். வளர்ச்சியில் எல்லை உண்டு. அபிவிருத்தியில் எல்லை இல்லை.
அபிவிருத்தியும் நவீனமயமும் * அபிவிருத்தி என்பது காலத்திற்கேற்றவாறு நவீனமயப்படுத்தலாகும்
(Modernisation) * எல்லா நவீனமயமாக்கல்களும், வேறான அபிவிருத்தி அல்ல. * வன்பொருளில் வழக்கத்தை மாற்றி புதுமையைப் புகுத்தல் (Hardware
innovation) இலகுவாக சுவீகரிக்கக் கூடியது. * மென்பொருள் புதுப்பித்தல் (Software innovation) பலவீனமாகும்.
ஒருவருடைய ஆக்கத்திறமையை விசேடமாகப் பாதிக்கும்.
அபிவிருத்தியின் பொருட்டு கல்வியின் அனுசரணையை அறிந்து கொள்ளல்
Xx
х
புராதன மற்றும் மத்திய யுகத்தில் கல்வி வியாப்பிக்காததால் அபிவிருத்தியும் வேகமாக விருத்தியடையவில்லை. சிந்தனை மற்றும் தொழிநுட்பப் புரட்சியின் பின்னர் கல்வி வியாப்பித்தலினால் அபிவிருத்தியைப் பாதித்தது. கலை மற்றும் சமய பாடவிதானங்களுக்குப் பதிலாக விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பம் முக்கியம் பெற்றது.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 97- ஆரம்பக்கல்வி)

Page 58
பொருளியல் கல்வியியலாளர்கள், அபிவிருத்திக்கான முக்கிய சாதனம் கல்வியென பிரகடனப்படுத்தியுள்ளமை.
கூடிய அபிவிருத்தி, கல்வியாலேயே விரைவில் பெற்றுக் கொள்ளக் கூடியதாய் இருந்ததை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அபிவிருத்திக்கு உறுதுணையாக அமைந்துள்ள பண்புசார் கல்விச் செயற்பாடுகளில் இருக்க வேண்டிய இலட்சணங்கள்
хх
хх
எழுத்தறிவு மற்றும் அறிவு மாத்திரமன்றி ஒருவரின் பூரண அபிவிருத்தியை அடிப்படையாகக் கொள்ளல்.
ஒவ்வொருவரும் அபிவிருத்திக்கு சம்பந்தப்படல்
தேவையான சகல வளங்களையும் பாவித்து வாழ்க்கைக்குத் தேவையான சகல பொதுத் திறமைகளையும் விருத்தி செய்தல்.
IDsofgbolóTcpid boo356 oDiginsolid (Human Abilities & Competence)
X
хх
கல்வியின் குறிக்கோள் தொடர்பாக வகைப்படுத்தலின் கீழ் (Classification of Educational Objecties) uT6ïlg5gb LD6omg5 6.611560),5 9gölg56ö (Congitive) b6)06)66T600TLb (Affective) ip60LDE6ft 6 LibL (Domains) 6T60T மூன்றாகப் பிரிக்கலாம்.
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில், பிரதான கவனம் அறிதல்பால் செலுத்தப்பட்டாலும் முக்கிய அபிவிருத்தி அடைந்த அறிதல் பகுதியின், ஆகக்குறைந்த மட்டத்தில் உள்ள ஞாபக சக்தியைக் கொண்ட அறிவுப் பகுதியே கணிப்பிடப்படுகின்றது.
தகைமைத்திறன் என்பது விருப்புடன் அல்லது விதிக்கப்படும் கடமைகளைக் குறித்த இலக்கை நோக்காகக் கொண்டு நிறைவேற்றுவதாகும். தகைமைத்திறன்கள் அடிப்படை (Basic) மற்றும் விசேடமானதென (Specific) இரு வகைப்படும்.
தேசிய கல்வி ஆணைக்குழுவினால் அடிப்படைத் தகைமைத்திறன்கள்
7 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய கல்வி நிறுவகம் மூலம் பாடசாலை பாடவிதானத்துடன் இணைக்கப் படக்கூடிய விசேடமான கல்வித் தகைமைத்திறன்கள் காலத்தின்
தேவைக்கேற்ற வகையில் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில் சம்பந்தமாக பாடவிதானத்தின் மூலம் வளர்ச்சியடைய வேண்டிய விசேட தகைமைத்திறன்கள் முக்கிய இடத்தைப்
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 98- ஆரம்பக்கல்வி)

பெறுகின்றன. இருந்தும் இந்நாடு சரியானதையும், பிழையானவற்றையும் இன்னும் இனங்காணவில்லை.
* எந்தவொரு கல்வித் துறையிலும் பண்பு என்பது தகைமைத்திறன்
விருத்தியிலேயே தங்கியுள்ளது.
* தகைமைத்திறன்களையுடைய நகர்கள், கல்விச் செயற்பாடுகள் மூலம் முன்னேற்றமடையும் போது, நாட்டின் அபிவிருத்தி ஏற்படுவது தானாகவே நடைபெறும். வேகமாக முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் இதற்குச் சான்றாகும்.
புதிய கல்வி மறுசீரமைப்பின் அடிப்படையில் நவீன கற்றல் கற்பித்தல் முறைமைகள்
2007 ஆண்டிலிருந்து தரம்-1, தரம்6, தரம்-10 ஆகிய வகுப்பு மாணவரிடையே புதுக்கற்றல் கற்பித்தல் அனுபவம் கொடுக்கப்படுகின்றது. »ب"
தேர்ச்சியை அடிப்படையான கலைத்திட்டம் தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்டு, பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்திற்கும், ஆசிரியர் அறிவுறுத்தல் வழிகாட்டி தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது ஆசிரியர் “பாடத்திட்டம்” எழுத வேண்டிய அவசியமில்லை. ஆனால், “செயற்பாடு’களுக்குரிய அறிவுறுத்தல் படிவம் தயாரிக்க வேண்டும். தொழிற்பாட்டுக்காகத் திட்டமிடப்படல் வேண்டும். முன்பு போல் நேற்று என்ன பாடம் படித்தோம்? என மாணவரிடையே கேட்டு, ஆசிரியர் தெரிந்து கொள்ள முடியவே முடியாது. ஆசிரியர் ஒரு வளவாளராகச் செயற்பட்டு மாணவருக்குரிய செயற்பாட்டைத் திட்டமிடல் வேண்டும். 5E படிமுறைக்கேற்ப செயற்பாட்டுப் படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
SE
(1) Engagement - FGU(6556) (2) Exploration - தேடல் / கண்டறிதல் (3) Explanation - 66T65LD6sgigs6) (4) Elaboration - 6 florTiss6) (5) Evaluation - மதிப்பிடுதல்
இந்த 5E எவ்வாறு விஞ்ஞானப் பாட தேர்ச்சி மட்டமொன்றில் உள்ளடக்கப்படுகின்ற தென்பதை அறிவோம்.
6ம் வகுப்பு விஞ்ஞானப் பாடத்தின் தேர்ச்சி 3.0 விலங்குப் பல்வகைமையை நுணுக்கமாக ஆராய்வார் எனக்கொள்ளப்படுகின்றது. தேர்ச்சி என்பது அறிவ.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை -99 س - ஆரம்பக்கல்வி D

Page 59
மனப்பாங்கு, திறன் என்பவற்றுடன் ஆளிடைத் தொடர்புடன் கூடிய வாழ்நாள் முழுவதும் தொடராகப் பின்பற்றுகின்ற பயிற்சியாகும். இது KASP மாதிரி எனப்படும்.
தேர்ச்சி மட்டம் - வாழும் சுற்றாடலுக்கேற்ப விலங்குகளின் பல்வகைமையை நுணுக்கமாக ஆய்வார்
* ஒரு தேர்ச்சியில் பல தேர்ச்சி மட்டங்கள் காணப்படலாம். ஒரு தேர்ச்சியை வாழ்வில் அடைய பல சிறிய தேர்ச்சி மட்டங்களைக்கடக்க வேண்டி நேரிடும். d செயற்பாடு:- அங்கிகளின் ஒற்றுமை, வேற்றுமைகளைத் தேடியறிவோம். இதில் செயற்பாடு மகிழ்வாக எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டி யிருப்பதால் “வோம்” என முடிவுற வேண்டும். நேரம் :- 120 நிமிடம்
தர உள்ளிடு: வகிபாகமேற்று நடித்தலுக்கான நாடகப் பிரதி ;-
* குரங்கு, பூனை, விரால், மண்புழு ஆகிய விலங்குகளின் வகிபாகங்
களைக் காட்டுவதற்காக நான்கு முகமூடிகள்
பொது மேடையைத் தயார்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்.
கற்றல் - கற்பித்தல் செயன்முறை: LJ9 3.2.1 * இது Engagement Step - இந்த ஈடுபடுத்தும் படியிலேயே மாணவரைப் பாடத்தின்பால் கவர்ந்திழுத்து முன்னறிவை மீட்டு கண்டாய்வுக்கு ஆயத்தப்படுத்தலாகும். * நான்கு மாணவரைக் கொண்டு வகிபாகமேற்று நடித்தலை வகுப்பில்
முன்வையுங்கள். பின்வரும் விடயங்களை வெளிக்கொணரத்தக்க வகையில் கலந்துரை யாடுங்கள்.
- வெவ்வேறு சுற்றாடல்களில் வெவ்வேறு விலங்குகள் வாழ்கின்றன. - பூனை தரைச்சூழலிலும், விரால்மீன் நீர்ச்சூழலிலும், குரங்கு
மரங்களிலும் வாழுகின்ற விலங்கு இனமாகும். - அவை வாழும் சூழலைத் தவிர ஏனைய சூழலில் வாழமுடியாத
விலங்குகள் உள்ளன. * இவ்வாறு ஆசிரியர் கூற வேண்டியவைகள் சுருக்கமாக் வழங்கப்
பட்டுள்ளன.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 100- ஆரம்பக்கல்வி)

Ll9 3.2.2 * வகுப்பு மாணவரை நான்கு குழுக்களாகப் பிரியுங்கள்
தேடியாய்வு அறிவுறுத்தல்களை மாணவர்களுக்குப் பகிர்ந்தளியுங்கள் வேலையை ஒப்படைத்து குழுக்களைத் தேடியாய்வில் ஈடுபடுத்துங்கள். தேடியறிந்தவற்றை வகுப்பில் முன்வைப்பதற்கான ஆயத்தங்களைச் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துங்கள். LDIT600T6hi (35.9uggs(36) Exploration step ஆகும்.
xx
* மாணவர் தமக்கிடையே தர்க்கித்து ஆராய்ந்து, அறிக்கைப்படுத்தி முன்வைத்தலுக்குத் தயாராக வேண்டும். இதற்குக் கூடிய முக்கியத்துவமும், அதிக நேரமும் வழங்கப்படல் வேண்டும்.
L9 3.2.3 * குழு தேடியறிந்தவற்றை வகுப்பில் முன்வைக்க வாய்ப்பளியுங்கள்.
விரிவாக்குவதற்கு அதே குழுவிற்கு வாய்ப்பளியுங்கள். ஏனைய குழுக்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பெறுங்கள். இது Explanation step ஆகும். ஒரு மாணவர் மற்றவர்கள் எல்லோருக்கும் கூட்டாக விளக்க வேண்டும். மாணவர் முன்வைத்தலில் ஈடுபடும் பொதும் விரிவாக்கும் போதும் மாணவரை ஆசிரியர் மதிப்பிட்டுக் கொள்ளலாம். இறுதியில் ஆசிரியர் பொழிப்புரை வழங்க வேண்டும். பின்வரும் விடயங்களை உள்ளடக்கியவாறு மீட்டாய்வு செய்யுங்கள்.
அங்கிகள் வாழும் சூழலை பின்வருமாறு வகைப்படுத்தலாம். நீர், மணல், தரை, மரங்கள் * வாழுமிடம் நீராயின் அவை நீர்வாழ் விலங்குகள் * வாழுமிடம் தரையாயின் அவை தரைவாழ் விலங்குகள் * வாழுமிடம் மண் எனின் அவை மண்வாழ் விலங்குகள்
மேற்கூறியவாறு வகைப்படுத்த முடியாது வெவ்வேறு சூழலில் வாழுகின்ற விலங்குகளுமுண்டு. வாழும் சூழலுக்கேற்ப விலங்குகளுக்கிடையில் பல்வகைமை காணப்படுகின்றன. * மாணவர்கள் முன்வைக்கும் போதும், ஆசிரியர் நன்கு அவதானித்து
பின்வரும பிரமாணங்களின் படி புள்ளியிடக்கூடியதாகவிருக்கும்.
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 101 - ஆரம்பக்கல்வி)

Page 60
கணிப்பீட்டு மதிப்பீட்டுப் பிரமாணங்கள்
வெவ்வேறு சூழலில் வாழும் விலங்குகளின் அடிப்படையான இயல்புகளைப் பெயரிடுங்கள்.
விலங்குகள் சூழல் தொடர்பாகக் காட்டும் இசைவாக்கங்கள் விலங்குப் பல்வகைமைக்குக் காரணமாகின்றமையை ஏற்றுக்கொள்வார்.
விலங்குகளின் இயல்பை ஆராய்ந்து அவ்விலங்குகள் வாழும் சூழலைத் தீர்மானிப்பர்.
காரணங்களை ஆராய்ந்து முடிவெடுப்பார்.
பாடங்களைத் தொடர்பாடல் ஊடகமாகப் பயன்படுத்துவார்.
* அறிவுறுத்தல்கள், விளக்கங்கள் யாவும் கொடுக்கப்பட வேண்டும்.
தேர்ச்சி அடிப்படை, மாணவர் மைய, தொழிற்பாடுகள் மூலமான
கலைத்திட்டம் இவ்வாறே வழங்கப்படுகின்றது.
ஆரம்பக் கல்வியின் தரத்தை உயர்த்துதல்
நாட்டின் பெரும்பாலான பகுதிகள் விருத்தியடையாத சுற்றாடல்களைக் கொண்டவை. இவற்றில் கூடுதலான பாடசாலைகள் கிராமியப் பாடசாலைகளாகவும், சிறிய பாடசாலைகளாகவும் விளங்குகின்றன. இவற்றில் பெரும்பாலான பாடசாலைகள் ஆரம்பப் பாடசாலைகளாகவே உள்ளன. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஆரம்பப் பாடசாலைகள் அமைந்திருக்கின்றன. இவற்றின் தர உயர்விலேயே நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது.
ஆரம்ப, சிறிய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் அவற்றை அண்மித்து இருந்தாலும் அவர்களது தொழில்சார் விருத்திக்கான வளங்கள் அண்மித்து அமைவதில்லை. இந்நிலைமையில் ஆரம்பக்கல்வியின் தர உயர்வு
பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றது.
அவை மாணவர்கள் பாடசாலையை விட்டு நழுவிச் செல்லல், குறைவான அடைவு மட்டம், அடைவு மட்ட ஏற்றத் தாழ்வு, சுகாதாரம், போசணைக்குறைவு. சுற்றாடல் வளமுகாமை, ஆசிரியர் பற்றாக்குறை, பெற்றோர் அறிதலின்மை ஆகியவையாகும்.
இத்தகைய சவால்களையும் வேறும் பல்வேறு காரணிகளையும், கருத்திற் கொண்டே ஆரம்பக் கல்வியின் தரத்தை உயர்த்தலாம். இவற்றை நிறைவு செய்தலோடு கல்வித்துறையில் உள்ள ஆரம்பக் கல்வியியல்ாளர்களின் வாண்மையை விருத்தி செய்தலும் அவசியமாகின்றது. அந்த வகையில்,
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 102 - ஆரம்பக்கல்வி)

சமூகத் தொடர்புகள், உபகரணங்களை ஆக்குதல், அவற்றைப் பயன்படுத்துதல், பாடவிதானச் சுற்றாடல், வளமுகாமை, மாணவர்களின் சுற்றாடலையும் பின்னணியையும் ஆராய்தல், போன்றவற்றில் மேம்படத்தக்க வகையில் ஆரம்பப் பள்ளி அதிபர்களுக்குப் பயிற்சி வழங்குதல்.
பயன்படுத்தப்பட்டு பயன்விடுத்து ஒதுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு உபகரணங்கள் ஆக்கும் திறனை வளர்ப்பதோடு அவற்றைக் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்துவதிலும் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்குதல்.
மேற்குறிப்பிட்டவற்றுடன் ஆரம்பக்கல்வி கற்றல் கற்பித்தல் தொடர்பான மேற்பார்வைத் திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் செயற்றிட்டங்களுக்குப் பொறுப்பான கல்வி அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்குதல்.
இவை தவிர,
பின்வரும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடத்தக்கதான ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ள ஆரம்பக்கல்விப்
பாடசாலை மாணவர்களின் மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு அனைத்துப் பிரிவினரும் செயலாற்ற முன்வரவேண்டும்.
* பரிகாரக் கற்பித்தல்
* பல்தரக் கற்பித்தல்
* பல்மட்டக் கற்பித்தல்
போன்ற வாண்மை விருத்திப் பயிற்சிகளையும் அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கஷ்டப் பிரதேச மாணவர்களின் போசணைக் குறைபாடுகளையும், சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் கருத்திற்கொண்டு செயலாற்றும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், வாழ்க்கைமுறை தொடர்பில் சரியானதும் பொருத்தமானதுமான வழிகாட்டல்களைப் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் வழங்கும் திறமையுடையவர்களாகத் தம்மை வெளிப்படுத்த வேண்டும்.
(ச. நா. தணிகாசலம்பிள்ளை - 103 - ஆரம்பக்கல்வி)

Page 61
பாடசாலையையும் அதன் சூழலையும் அறிந்து அங்குள்ள வளங்களை உணர்ந்து கல்வி கற்பதற்குப் பொருத்தமாக மாற்றியமைத்தலுடன் சமூகம் அவற்றை ஏற்றுக்கொள்ளும் வகை தெரிந்து செயற்படவும் வேண்டும்.
அனைத்துப் பிரச்சினைகளையும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யும் வழிவகைகளைத் தெரிந்து பெற்றோர் சமூகத்துடன் கலந்து நடவடிக்கைகளை மேற்கொண்டால் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் வெற்றிபெறுவதுடன் மாணவர்களும் தமது கற்றல் தேர்ச்சிகளை பெற்றுக்கொள்வர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
“கல்வியின் அடி அத்திவாரம் ஆரம்பக்கல்வியாகும்.”
(ச.நா. தணிகாசலம்பிள்ளை - 104- ஆரம்பக்கல்வி)


Page 62
நு
邸。 நாகமு அயரா முன்னேற் தமிழரிை ist) សាណា
OT35 g/ 'மத்திய கல்வி ஆகும். யேயுள்ள
A.
|
(Primus ii
யாழ்ப்பா Lilo LoGL)
பல்கலை துறையில்
பல்கலை
35. β) Οι Η
கலாநிதி
IŠKEGísli'j
ឲ្យសាម៉ា னவாகும்