கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருமை

Page 1


Page 2

இருமை
சிறுகதைத் தொகுப்பு
கே. எஸ். சிவகுமாரன்
தேசிய கலை இலக்கியப் பேரவை
Vy
சவுத் விஷன்

Page 3
RUMAI (DUALISM) Collection of Short Stories K.S. Sivakumaran, B.A. First Published: March 1998 Published in ASSOciation with National ASSOciation for Art and Literature by
Vyf
SOUTH VISION 6, Thayar Sahib II Lane Chennai - 600 002.
RS. 40.00
Published and Distributed in Sri Lanka by Vasantham (Pvt.) Ltd. South Asian Books 44, 3rd Floor, CCSM Complex, Colombo - 11. Tel: 335844 Fax: 00941-333279
தேசிய கலை இலக்கியப் பேரவையின்
25வது ஆண்டு நிறைவு வெளியீட்டு வரிசையில் மூன்றாவது நூல்
இருமை சிறுகதைத் தொகுப்பு கே.எஸ். சிவகுமாரன் முதற் பதிப்பு : மார்ச் 1998 வெளியீடு தேசிய கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து
Vyf
சவுத் விஷன் 6. தாயார் சாகிப் 2வது சந்து, சென்னை - 600 002.
ரூபா 4000
அச்சாக்கம் : மணி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 600 005. அட்டை அச்சு பிரிண்ட் ஸ்பெஷாலிடி, சென்னை - 600 014. அட்டை அமைப்பு ஏஞ்சலோ கிராபிக்ஸ்

III
கே.எஸ். சிவகுமாரன் எழுதிய நூல்கள்
1. Tamil Writing in Sri Lanka (1974)
2. சிவகுமாரன் கதைகள் (1982)
3. கலை, இலக்கியத் திறனாய்வு (1989)
4. கைலாசபதியும் நானும் (1990)
5. Le Roy Robinson in coversation with K.S. Sivakumaran on Aspects of Culture in
Sri Lanka (1992)
6. பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும்
1; திறனாய்வுப் பார்வைகள் (1996)
7. பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும்
2: ஈழத்து இலக்கியம் : நூல் அறிமுகம் (1996)
8.
இருமை (சிறுகதைத் தொகுப்பு) (1997)
வெளிவரவிருப்பவை: பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் 9. ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் - மதிப்புரை 10. ஈழத்து நாவல்கள் - மதிப்புரை 1. ஈழத்துக் கவிதைத் தொகுப்புகள் - மதிப்புரை 12. நாடகத் துறையும் கொழும்பு மேடை நாடகங்களும் - மதிப்புரை 13. மேலைக் கலை இலக்கிய உலகம் - அறிமுகம் 14. உலகத் திரை வெளியில் ஒர் உலா - அறிமுகம்
15. சினிமா ஒர் ஊடகம் - கட்டுரைகள்

Page 4
உள்ளே
1. கொழும்புச் சூழல் கதைகள்
gCO60LD
உறைவிடம் மேலிடம்
பகட்டு
மல்காந்தி
வாழ்க நீ தமிழணங்கே கண்ணெடுத்தும் பார்ப்பேனோ கன்னியரை ஆள் மாறாட்டம்
டயறிக் காதலி
எழுத்தாளன் காதலன்
2. யாழ்ப்பாணச் சூழல் கதை
தாழ்வு மனப்பான்மை
3. மட்டக்களப்புச் சூழல் கதைகள்
இழை
இனம் இனத்துடன்
4. கண்டிச் சூழல் கதை
அவர்கள் உலகம்
5. தமிழகச் சூழல் கதைகள்
கருணையின் விலை என்ன? குறிஞ்சிக் காதல்
கதைகள் பற்றி இவர்கள் என்ன நினைக்கிறார்கள்
15
25
29
33
37
43
SO
62 67
76
93

எழுத்தாளர் பேசுகிறார்
அன்பார்ந்த வாசகர்களுக்கு, வணக்கம்.
இது எனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. "சிவகுமாரன் கதைகள்” என்ற எனது முதலாவது தொகுதியில் இடம் பெற்ற ஏழு கதைகளுடன், மேலும் எட்டுக் கதைகளை இணைத்து இருமை என்ற இத்தொகுப்பை உங்கள் மதிப்பீட்டிற்காகத் தருகிறேன்.
முதலாவது தொகுப்பு பாரதி நூற்றாண்டாகிய 1982 இல் வெளிவர விருந்தும் 1983 ஜூலை மாதமளவிலேயே அச்சுவாகனமேறியது. நாட்டில் நிலவிய குழப்பங்கள், வன்செயல்கள் காரணமாக, அத்தொகுப்பு நல்ல முறையில் வெளிவர முடியாமற் போய்விட்டது. மட்டக்களப்பு, தேற்றாத் தீவில் அப்பொழுது இயங்கிய ஜீவா பதிப்பகத்தினர் அத்தொகுப்பைக் கொணர்ந்திருந்தனர். பரவலான முறையில் அதனை விநியோகிக்க முடியாமற் போய்விட்டது. ஆங்காங்கே ஒரு சில நண்பர்கள் அத்தொகுப்புப் பற்றித் தமது விமர்சனங்களை எழுதினர். அவற்றில் சிலவற்றை இந்நூலின் இறுதியில் சேர்த்துள்ளேன்.
1950, 1960 களில் எழுதப்பட்ட கதைகளும், 1980 களில் எழுதப்பட்ட ஒரு கதையும் இங்கு இடம்பெறுகின்றன. இக்கதைகள் எனது வளரிளம் பருவத்தின் போதும், மணமாகாதவனாக இருந்த போதும் எழுதப்பட்டமையால், ஆழ்ந்த அனுபவங்கள் இங்கு கதைகளாக வடிக் கப்படவில்லை. ஆயினும், கற்பனையாக, கட்டுக்கோப்பாகக் கட்டப்பட்ட (Wel-made magazine stories) கதைகளாக அமைகின்றன. உத்திகளைப் பயன் படுத்துவதற்காக இவை எழுதப்பட்டன.
இக்கதைகளில் பெரும்பாலானவை கொழும்பு வாழ்’ Զ-Այri மட்ட மக்கள் சிலரின் அனுபவங்களைப் படம்பிடிக்க முயல் கின்றன. ஆங்கில சம்பிரதாயங்கள், மரபுகளைப் பின்பற்றும் மேல்தட்டுப் பாத்திரங்கள் இவர்களிற் சிலர். சிங்கள மக்கள் இக்கதைகளில் பவனி வருகின்றனர். அநேகமான கதைகள் உளவியலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை.
இக்கதைகள் மூலம் அக்காலத்தில் நான் வெளிப்படுத்திய விழு மியங்கள் எனது தற்போதைய நோக்குகளினின்றும் வேறு பட்டவை. அக்காலச் சமுதாயச் சூழலில் முதிரா இளைஞன் ஒருவனால் வாழ்க்கையை அறிந்து கொள்ள முடிந்தது.

Page 5
V
இக்கதைகள் எழுதப்பட்ட காலத்தில் எனது வாழ்க்கை நோக்கு, கற்பனைத் திறன், எழுத்து நடை, ஆக்க ஆற்றல் போன்றவை எவ்வாறி ருந்தன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள உதவுவதுடன், சுவாரஸ்யமான வாசிப்புக்கும் இத்தொகுப்பு உதவும் என எதிர்பார்க்கிறேன்.
கதைகளைப் படித்துவிட்டு உங்கள் கணிப்பை எனக்கு அறியத்தாருங்கள்.
இத்தொகுப்பை வெளியிட உதவிய சட்டத்தரணியும், நாடகக் கலைஞரும், சிந்தனையாளருமான திருசோதேவராஜா அவர்களுக்கு எனது நன்றி
கே.எஸ். சிவகுமாரன். பெப்ரவரி 19, 1996 27, முருகன் இடம், கொழும்பு - 6 இலங்கை

கதாசிரியர் கே.எஸ். சிவகுமாரன்
ஈழத்து இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடம் பெற்றுள்ள திரு. கே. எஸ். சிவகுமாரன், வானொலி, தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள், ஆகியன மூலம் நன்கு அறியப்பட்டவர். இலக்கிய உலகில் ஒரு விமர்சக ராகவே அறியப்பட்டுள்ள கே. எஸ். எஸ், இலக்கிய உலகுக்கு ஒரு சிறு கதை ஆசிரியராகவே அறிமுகப்படுத்தப்பட்ட செய்தி பலருக்கு ஆச்சரிய மாக இருக்கலாம்.
ஈழத்து எழுத்தாளர்களுக்குத் தினகரன் மேடையமைத்துக் கொடுத்த 1957 களில், தினகரனின் ஆசிரியராக கைலாசபதி இருந்த அந்த நாட்களில், கே. எஸ். சிவகுமாரனும் தனது முதல் சிறுகதையைத் தினகரனில் வெளியிட்டார். 'இனம் இனத்துடன் என்னும் இவரது முதல் சிறுகதை தினகரனில் பிரசுரமாகியதைத் தொடர்ந்து வீரகேசரி, புதினம், சுதந்திரன், கதம்பம், தமிழின்பம், ஈழச்சுடர் ஆகிய பத்திரிகைகளில் கே. எஸ். சிவகுமாரனின் சிறுகதைகள் வெளிவந்தன.
1960 இலிருந்து 1965 வரை பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது பெரும்பான்மையான கதைகள் மேல் மட்ட வாழ்க்கைச் சித்திரிப்புக்களே என்றாலும், உளவியற் பண்பு கொண்டவை யாகவும் அந்த அறுபதுகளில் ஒரு புதுவிதமான அனுபவத்தை வாசகர் களுக்குக் கொடுக்கும் தன்மையுடையனவாகவும் இருந்தமை குறிப் பிடத்தக்கது.
"சிறுகதைகள் படைக்கும் ஆற்றல் இருந்தும், என்னுடைய கவனத்தை விமர்சனத்தில் திருப்பிவிட்டதுடன், அறிவுரைகளும் உற்சாகமூட்டலும் தந்தவர் கலாநிதி க. கைலாசபதி அவர்களே" என்று அடக்கத்துடன் கூறுகின்றார் கே. எஸ். சிவகுமாரன்.
படைப்பிலக்கியத்துறையில் ஆற்றல் இருந்தும் விமர்சனத் துறையைச் சிறப்புத்துறையாகச் சிலர் கொள்வது இலக்கியத்தில் தனக்குப் பிடிக் காதவர்களை மட்டம் தட்டுவதற்காகத்தான். படைப்பிலக்கியத்தில் ஈடு படாமல் விமர்சனத் துறையில் பெயர் சொல்லும் மற்றவர்களும் இதையே கூடுதலாகச் சொல்வதுண்டு.
கே. எஸ். சிவகுமாரனிடம் இந்தப் பண்பு இல்லாததுதான் அவரைப் பெரிய விமர்சகர்களிலிருந்து பிரித்தும் ஒதுக்கியும் வைத்து விடுகிறதோ என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு.
இவரைப்பற்றிக் கனக செந்திநாதன் கூறும் போது "தமிழ் சினிமா தொடக்கம் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வரை சகலவற்றையும் அறி

Page 6
VIII
முகப் படுத்தும் ஆவல் மிக்கவராகக் காணப்படுகிறார். உபயோகமாகும் வகையில் மேனாட்டுக் கதாசிரியர்களை அறிமுகப்படுத்துகின்றார். இரசனைப் போக்கில் பல நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்து கின்றார். ஆங்கில ஏடுகளில் தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துதல் நற்பணியாகும். ஆழமான விமர்சன நோக்கில்லாது போனாலும் எழுத் தாளரை வாசகருக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் ஒரு கடமையும் விமர்சகனுக்கு இருப்பதாலேயே சிவகுமாரனை விமர்சகர் வரிசையில் சேர்த்துள்ளேன்” என்கின்றார்.
தமிழ் எழுத்துக்கள் பற்றி, தமிழ் எழுத்தாளர்கள் பற்றி தமிழறியா வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் கே. எஸ். சிவகுமாரனின் பணி மகத்தானது. ஆங்கில வாசகர்களும், தமிழ் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் ஈழத்தின் பிரபல ஆங்கிலத் தினசரிகளில் சுமார் 25 வருடங்களாக எழுதி வரும் சிவகுமாரன் ஆங்கில இலக்கியம் பற்றியும், ஆங்கில விமர்சனம் பற்றியும் தமிழில் நிறையக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஈழத்தின் சகல ஏடுகள், சஞ்சிகைகள், வானொலி மட்டு மன்றித் தமிழ் நாட்டின் அன்றைய எழுத்து', 'சரஸ்வதி முதல் இன்றைய "படிகள் வரை சகல சாதனங்களையும் இவர் பயன்படுத்துகின்றார்.
கொழும்பு சென்ட் ஜோசப் கல்லூரி பழைய மாணவரான கே. எஸ். சிவகுமாரன் ஒரு பி. ஏ. பட்டதாரி. 45 வயதான இவர், முன்பு இலங்கை வானொலியின் செய்திப் பகுதியில் கடமை புரிந்தார். தற்போது அமெரிக்கத் தூதுவராலயத்தில் தகவல் பிரிவில் கடமையாற்றுகின்றார்.
தமிழகத்தின் க. நா. சு. மாதிரி, ஜெயகாந்தன் மாதிரி, ஜானகிராமன் மாதிரி, என்று சொல்லிப் பழகிவிட்ட நமக்கு, கே. எஸ். சிவகுமாரன் மாதிரி அங்கே யார் என்று ஒரு வினாடி யோசித்தால், அவருடைய இலக்கிய முக்கியத்துவம் புலப்படும்.
தினகரன் வாசகர்களுக்கு இவ்வார விருந்தாக வரும் இச்சிறுகதை ஈழச்சுடர் சஞ்சிகையில் 1965 இல் வெளிவந்தது.
- தெளிவத்தை ஜோசப்
மேற்கண்ட குறிப்பைப் பிரபலமானவரும், பல பரிசுகளைப் பெற்ற வருமான எழுத்தாளர்/விமர்சகர் தெளிவத்தை ஜோசப், தினகரன் வாரமஞ்சரியிலே 08.11.1981 இல் ரமேஷ் ரவீந்திரன்' என்ற புனை பெயரில் எழுதியதுடன் உறைவிடம் மேலிடம் என்ற கதையை மறுபிரசுரமும் செய்தார். இந்த அறிமுகம் 15 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது.

பதிப்புரை
இலங்கையில் பிரபலமாக அறியப்பட்டவரும் விமர்சகருமான திரு.கே.எஸ்.சிவகுமாரன் அவர்களுடைய இருமை' என்ற சிறுகதைத் தொகுதியினை அவருடன் இணைந்து வெளியிடுகின்றோம்.
எழுத்தாளர்களே நூல் வெளியீட்டாளராகவும் விநியோகஸ்தராகவும் வெளியீட்டுவிழா அமைப்பாளராகவும் ஈழத்தமிழ் இலக்கியச் சூழலில் இருந்துவரும் தனிமனிதச் செயல்' என்பது ஆரோக்கியமான இலக்கியப் படைப்புக்களின் ஆக்கத்துக்கும், அவ்வெழுத்தாளர்களின் அருமந்த நேரத்துக்கும் நெருக்கடிகளை உருவாக்கும் அதே வேளையில் தனிப்பட அவர்கள் மீது 'வாழ்க்கைப் பெருங் கடன் சுமையையும் ஏற்றிவிடும் அவலம் இன்றும் தொடர்கிறது.
எழுத்தாளர்கள் - வெளியீட்டாளர்கள் - விநியோகஸ்தர்கள் - வாசகர்கள் மத்தியிலான அந்நியோன்னியம் என்பது 'கூட்டுச் செயலைத் தோற்றுவிப்பதுடன் அவை எவ்விதத்திலும் தனிமனிதக் கருத்துக்களையும், முரண்பாடுகளையும், தனித்துவத்தையும் பாதிப்பதாக எவரும் பயம் கொள்ளத் தேவையில்லை. கூட்டுச் செயல் என்பது பகைமைக்குப் பதிலாக நட்பைத் தோற்றுவிக்கிறது. நட்பு நாம் உரையாடும் வாய்ப்பை உருவாக்குகிறது. உரையாடல் ஏற்படுத்தும் உறவில் நாம் நம்மைப் புரிந்து கொள்ளவும், நாம் வாழும் உலகில் நம்மாலான இலக்கியப்பணிகளை முன்னெடுத்துச் செல்லும் நம்பிக்கையைப் பெறவும் முடியும்.
தோப்பு தனிமரத்தின் இருப்பை விழுங்கிவிட முடியாதது போல் தனி மரமும் தோப்பாகாது.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த ஞானம் வந்தாற் பிறகெது வேண்டும்" என்ற பாரதி பாடல் இந்த யுகத்தில் நமது வாழ்வின் தாரக மந்திரமன்றோ!
நாம் கே.எஸ். சிவகுமாரனின் கதைகளை அவரது அறுபது வயதுப் பூர்த்தி வாழ்வில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். அவரது சிறுகதைகள் ஆரம்பகாலக் கதைகள் எனினும் வாசிப்புப் பண்பாட்டிற்கு அவை பயன் விளைப்பன.
இந்நூலை வெளியிடுவதில் ஒத்துழைத்த சவுத் ஏசியன் புக்ஸ் எம். பாலாஜி அவர்களுக்கும் ஒளி அச்சுக் கோவை செய்த மாசறு ஜெயராஜ் அவர்களுக்கும் எமது நன்றிகள்.
தேசிய கலை இலக்கியப் பேரவை. 14, 57வது ஒழுங்கை கொழும்பு - 06 22-4-1997

Page 7
கொழும்புச் சூழல் கதைகள்

இருமை
ராமலிங்கமும் மனோராணியும் பல்கலைக்கழகத்தில் பயிலும்போதே ஒருவரை ஒருவர் வெறுத்து வந்தனர். இல்லை. அது வெறுப்பா அல்லது வெறுப்பு போன்ற நடிப்பா என்று உடனேயே அவர்களுக்குத் தெரிந் திருக்கவில்லை. ஏனெனில் ராமலிங்கத்தின் குறிப்புப் புத்தகத்தில், மனோராணி பற்றி இப்படியும் எழுதப்பட்டிருந்து:
"ஒ நீ ஒரு தன்னியல்பான இளம் பிடிதான். ஆனந்தமயிலோ? உனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாது, குறுநகை இழையோட, மலர்வதனம் அமைவு கொள, நிதமும் கடாட்சம் தரும் அதே தோற்றத்தில், பயிர்ப்பு கொண்டு உறைந்திருக்கின்றாய், பாரம்பரியமாகத் தமிழணங்கு என்றால் உன்போலவே இருப்பாளோ? மானசீக வடிப்பின் பிம்பமோ நீ உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. இந்தத் தமிழ்ப்பண்பாடு அடக்கம், மடமை, பயிர்ப்பு போன்ற பத்தாம் பசலி மரபுகளில் எனக்கு நம்பிக்கையில்லை"
ராமலிங்கம் படாடோபத்தையும் ஆடம்பரத்தையும் விரும்பியவன் இதில் ஆச்சரியம் என்னவென்றால், இருவரும் காதலித்துத்தான் திருமணஞ் செய்து கொண்டனர். அது வாலிப மருட்சிக் காதலா? மேனியழகுக் காதலா? பரிசு, பணப்பற்று நிமித்தம் எழுந்த காதலா? உள்ளமும் உள்ளமும் கலந்த காதலா? வடதுருவமும், தென்துருவமும் ஒன்றையொன்று இழுத்த காதலா? எதிர்மறைகளின் நிறைவான காதலா? (Attraction of the opposities) -
கோலாகலமாகப் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரிலேயே மணம் முடித்தனர்.
இருவரும் பட்டதாரிகள். இருவரும் ஒரே சமுதாய அந்தஸ்திலுள்ள வர்கள். இருவரும் பணக்காரர்கள். இருவரும் நற்குடிப்பிறப்பாளர்கள்.
தாம்பத்திய வாழ்வு இனித்தது. எல்லையிலா இன்பத்தில் இருவரும் திளைத்து இருந்தனர்.
o a a
ஒரு வருடம் சிட்டெனவே பறந்தது.

Page 8
2 0 கே.எஸ். சிவகுமாரன்
இல்லறவாழ்வு நிதமும் இன்பமயமாகவே இருந்தால் சுவைக்குமா? இருக்கத் தான் முடியுமா?
பிளவு
சலிப்பு ஏற்படத்தான் செய்தது. ஊடல் வந்து விளையாடியது. மகப் பேற்றினால் மீண்டும் உள்ளம் நெகிழ்ந்தது. சுகதுக்கம் சுழல் சக்கரம். இயற்கை சாமான்யத் தம்பதிகளுக்கும் அவர்களுக்கும் வேற்றுமையே யில்லை. வயது முதிர்ந்தது. உணர்ச்சி பெருகியது. அறிவு விரிந்தது. ஏழெட்டு வருடங்கள் மாய்ந்தன.
ஆனால்,
தாம் எதிர்பார்த்தது கிட்டவில்லையே என்று இருவருக்கும் அடிமனதில் ஒரு குறை. வெளிச்சொல்லாத வெளிக்காட்டாத வெளிப் படுத்த முடியாத ஒரு குறை.
ஏதோ ஒரு தவறுதல் திருமணம் என்ற விபத்தில் ஏற்பட்டுவிட்ட தென்ற உணர்வு இருவருக்கும் தாம் அவசரப்பட்டு மணஞ்செய்து கொண்டதாக நம்பினர். ஆனாலும் பெரிய குறைபாடுகளை ஒருவரிடத்தில் ஒருவர் கற்பித்துக்கொள்ளக் கூட அவர்களால் முடியவில்லை. சம்சார வாழ்வில் உள்ளமும் உடலும் பரிபூரண சுகம்பெற்றாலும் அக்குறை தான் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது.
蟾 蠍 歌
அன்றொரு நாளிரவு ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்த்துவிட்டுத் திரும்பும்பொழுது,
"ஒருவனுக்கொருத்தி அல்லது ஒருத்திக்கொருவன் என்ற சமுதாயக் கட்டுப்பாட்டைத் தகர்த்தெறிய வேண்டும். மனோ” என்று விபரீதமாக ராமலிங்கம் தன் மனைவியிடம் கூறினான்.
காலதேவனின் வேகத்தை தடுத்துப் பிடித்துக்கொள்ள யாரால்தான் முடியும்? அது துரித வேகத்தில் மனிதனின் ஆசாபாசங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் அமுக்கி வைத்தாலும் இடையிடையே மேலெழுந்து குட்டைகுழப்பத்தான் செய்கின்றன. மனோராணியைக் கட்டிக்கொண்ட தினால் ராமலிங்கத்துக்கு ஏற்பட்ட குறைபாட்டுணர்வு நாளுக்குநாள் அவன் உள்ளத்துள்ளே உருக்கொண்டு வடிவம்பெற்று வருவதை மனோ ராணி அவதானிக்கத் தவறவில்லை.
பகட்டான பெண்களைக் கண்டு காரியாலய காரிகைகளைக்கண்டு! இதமாகத் தனது மனதறிந்து பழகும் பெண்களைக் கண்டு எழிலான நங்கையரைக் கண்டு அவன் மனம் பேதலித்தான். பல்வேறு மலர்கள் மீது தாவ விரும்பினான்.

இருமை 0, 3
பல பெண்களுடன் சரளமாகப் பழக வேண்டிய வேலை அவனுக்கு. ஒரு விளம்பர ஸ்தாபனத்தில் அவனுக்குப் பெரிய நிர்வாக வேலை. அதே ஸ்தாபனத்தில் தமிழ் மொழி பெயர்ப்பு வேலை செய்கிறாள் மனோராணி.
அதனாற்றான் டொறினும், லலிதாவும் அந்நியோன்னியமாக அவனுடன் பழகும் போது மனோராணிக்குப் புல்லரிக்கின்றது.
வெளியுலக நடப்பிலும், உள்ளத்துணர்விலும், தனக்கும் அவளுக்கும் இணக்கமுண்டென்றுதான் நம்பினாலும், உள்ளத்தினுள்ளேயுள்ள உணர்வில், மனப்பாங்கில் தாமிருவரும் ஒருமைப்பாடுடையவர்கள் அல்லர் என்பது அவனுக்குப் புலனாகின்றது. இது அவன் நிலை.
拿 孕 事
அன்று நடந்த சப்பர் டான்ஸ் களியாட்டத்தில் டொறின் என்ற சக ஊழியாளுடன், அவன் குடிவெறியில் ஆடிய ஆட்டம் மிகமிக அருவருக்கத் தக்கதாயிருந்தது. அந்தப் பெண்ணும் மது மயக்கத்தில் அவனைத்தழுவி ஒடிந்து ஒடிந்து படர்ந்து படர்ந்து ஆடினாள்.
மனோராணிக்கும் ‘டான்ஸ் ஆட வேண்டும் போலிருந்தது. அவளுக்கும் மனித உணர்வில் எழும் எண்ண அலைகள் எழுந்தன.
ஆனால் அவளது ஒருமையைக் காட்டிக் கொள்ளவில்லை.
அவள் தனது உணர்வை, குறைபாட்டுணர்ச்சியை, பீறிட்டெழும் எண்ணங்களை, கற்பனைகளை அடக்கி ஒடுக்கி நசுக்க முனைந்தாள்.
"என்னுடன் ஆடவருவீர்களா?” என்று விநயமாக ஓர் இளம் வாலிபன் மனோராணியிடம் வந்து கேட்டான். அமைதியாக மென்மையாக அவன் அவளிடம் வந்து கேட்பது அவளுக்குப் பிடித்தது. அழகாகவும் உடுத் திருந்த அவனிடத்தில் ஓர் அடக்கமான கம்பீரமும், உயர் குடிப்பிறப்புக் களையுமிருக்கின்றது என்று அவள் கண்டு கொண்டாள். "மன்னிக்க வேண்டும். எனக்கு ஆடத்தெரியாது" என்று ஆங்கிலத்தில் ஒரு பொய்யைச் சொன்னாள். வாலிபனுக்கு தெரியும், அவள் மேனாட்டு நடனம் கற்று வருவது!
"பரவாயில்லை. எனக்குத் தெரியும். தாங்கள் தமிழ் பெண்ணென்று” என்று கூறி முறுவலித்தான் வந்தவன். அவளும் சிரித்தாள். பின் தலை கவிழ்ந்து கொண்டாள். அவ்வாலிபனும் அவளைவிட்டு வேறிடம் சென்றான்.
டொறினுடன் ஆடி முடிந்ததும், லலிதாவை அவன் தொற்றிக் கொண்டான். டொறினும் அவ்வாலிபனும் ஜோடிகளாக நின்று ஆடினர். வாத்திய இசையில் இலத்தின் அமெரிக்க மெட்டுகள் சுருதிமீட்டின.

Page 9
40 கேஎஸ். சிவகுமாரன்
என்னதான் மனித இயல்பு கொண்டிருந்தாலும், என்னதான் நாகரிகப் பூச்சில் மனதைப் பறிகொடுத்தாலும், மனோராணி தமிழணங்குதானே?
பெண்ணே புதிர் என்பார்!
ஆனால் தமிழ்ப் பெண்தான் புதிராகத் தோன்றுகிறாள். அவள் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை.
பண்டுதொட்டுக் கட்டிப்பிடித்து காத்துவரும் பண்பு கொண்ட இனத்தில் பிறந்தவள் அல்லவா? தமிழ்ப் பெண்ணின் இலக்கணமே நாணங்கலந்த மடமைதானே?
அடக்கமும், பணிவும், மடமைபோல் நடிப்பும், பயிர்ப்பும், வெகுளித் தனமும் மென்மையுந்தானே, தமிழ்ப பெண்ணுக்கு அணிகலன்கள் என்று, ராமலிங்கம் எண்ணிக் கொண்டான்.
மனோராணி அவனிடம் முன்போலவே பழகினாள். அவளிடம் சிறிதேனும் வெறுப்பின் சாயை கூடவில்லையே!
"செயற்கைத் தளைகளால் தனது 'ஒருமையைத் தடைப்படுத்திக் கொண்டாள் போலும், வெளியுலக நடப்பில் ஒருவிதமாகவும் அகத்தில் வேறுவிதமாகவும் அவள் நடந்தும், எண்ணியும் வருகின்றவளோ? அதற்கு நான் என்ன செய்யமுடியும்? எனது இயல்பின்படிதானே நான் நடக்க வேண்டும்" என்று ராமலிங்கம் தேற்றிக் கொண்டான்.
தன் குடும்பத்தையே மறந்து தன் இயல்பையே நிசமென நம்பித் தன் மனம் போனவாக்கில், பிழையான வழிகளில் சென்றான் இராமலிங்கம்.
ஆனால், மனோராணி கண்ணகிபோல் வாழாயிருக்கவில்லை.
தமிழ்ப் பெண்மையின் பணிவினைச் சாதகமாக வைத்துக்கொண்டு, 'ஒருமை வாழ்வுடைய ஆண்மை, தன் மனம் போனவாக்கில் நடந்தாலும், மனோராணி என்ற இரட்டை வாழ்வுடைய தமிழ்ப்பெண், இராமலிங்கம் என்ற தன் கணவனைத் தக்க இடங்களில் இலாடம் போட்டு இழுக்கத் தவறவில்லை.
இராமலிங்கம் தீ என்றால் மனோராணி தண்ணீர். ஆனால் பூகம்ப உத் வேகத்திற்குப் பசுமையான சாந்தி, சமன்செய்ய முடியுமோ? தோல்விதான்.
தோல்வியின் எல்லை சக்தியின் வேகம். பெண்மை குமுறி எழுந்தது. மனோராணியும் தனது குறைபாட்டுணர்ச்சியை நீக்குமுகமாக, நடிக்க முயன்றாள். பெண் அலை மோதினால்? ஏகபோக உரிமையை இயல்பா கவே கொண்டாட விரும்பும் ஆண் அலை பொறாமை கொண்டது.

இருமை 0 5
"அலுவலகத்தில் வேலை பார்க்கும் இன்னொரு தமிழ் இளைஞனும், அவளும் அடிக்கடி பேசுவதற்கு என்ன இருக்கும்? மனோ! நீ என்னை உதாசீனம் செய்கிறாயா? அந்தப் பையனுடன் சரசமாகப் பழகுவது நீதானா? தமிழ்ப் பெண்ணின் இலக்கணம் என்ற பெட்டகம் போல விளங்கிய நீயா என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் அந்தச் சிறுவனுடன் சல்லாபஞ் செய்கின்றாய்?" என்று ராமலிங்கம் தன்னுள் கேட்டுக் கொண்டான்.
"டொறினும் லலிதாவும் என்னுடன் வந்து பேசினாலும் சிரித்தாலும், முகம் கனன்று கோபித்து வெருட்சியடையும் நீயா, இப்பொழுது அவர்கள் விளையாடும் பொழுது ஒரு பொருட்டாக மதிக்காமல் இருக்கிறாய். நீ - கள்ளி'
"நான் ஆண். நீ. பெண் அல்லவோ? நான் கெட்டால் நீயும் கெடலாமோ? நீ என் மனைவியடி மனைவி"
"ஓ! மனோ! மன்னித்துவிடு. உன்னைப் பிழையான வழியிற் போக விடமாட்டேன்" என்று வெகுண்டெழுந்தான் ராமலிங்கம்.
பெண்மை தன் தளைகளைத் தளர்த்தியது போல நடித்ததும், ஆண்மை பண்ரியத் தொடங்கியது. உணர்ச்சியை ஒதுக்கிச் சிந்தனையை மேலெழுப் பிப் பார்த்ததில், தன் அமானுஷ்ய எண்ணங்களின் கீழ்த்தரப்போக்கை, இனங்கண்டு கொண்டது.
தூய்மை உளத்தூய்மை பண்புத் தூய்மை பொறுப்புணர்ச்சி: இராம லிங்கம் மாறியேவிட்டான். அவனிடமிருந்த 'ஒருமை' மாறிவிட்டது. அவனும் இருமை வாழ்வுடையோனானான். நீச எண்ணங்களைப் புதைத்துவிட்ட தோற்றம் ஒன்று! தூய எண்ணங்களை வளர்க்கும் தோற்றம் ஒன்று.
ஆனால்!
ஒரே நிலையில் இருவர் உள்ளமும் ஒரே தன்மைவாய்ந்தால் அல்லவா பூரண இன்பம். இராமலிங்கம் உளத்தூய்மை பெற, மனோராணியிடம் புதைந்திருந்த நீச எண்ணங்கள் மேலெழும்பின.
நடிப்பே யதார்த்தமானால்?
செயற்கையாகக் கட்டி வளர்த்த தமிழ்ப்பண்பு - கற்பு என்ற வேலி கள் அவளது 'ஒருமையில் இருந்து எழுந்த எண்ணங்களை நீறுநீறாகப் பொசுக்கின. ஆனாலும், சிறுசிறு பொறிகளிலிருந்து, மின்மினி வீச்சில் அவை உருப்பெற்றன.
மனோராணிக்குப் போராட்டம் 'ஒருமைக்கும் இருமைக்கும் இடையே போராட்டம்.

Page 10
6 0 கே.எஸ். சிவகுமாரன்
மைந்தனைத் தொடர்ந்து, மகள் ஒன்று பூத்தாள். வித்து பார்த்தது கல்வி வழிகாட்டியது! பண்பு ஒளிவீசியது தாயைப் போலப் பிள்ளை என்ற வடுச்சொல் வேண்டுமா?
போராட்டத்திற்கு ஒரு முடிவு பிரச்சினைக்கு ஒரு விடிவு மனோராணி குடும்பப் பெண்ணானாள். அவள் மீண்டும் இருமை பெற்றாள்.
காலம் என்ற மருந்து எந்தச் சீழ் சிரங்கையும் குணமாக்கமாட்டாதோ?
(தினகரன் வாரமஞ்சரி 24-09-1962)

உறைவிடம் மேலிடம்
நான்கு மணிக்குத்தான் அவனை வரச் சொல்லியிருந்தேன். இன்னும் இரண்டு நிமிடங்கள் இருக்கின்.
கதவில் நகத்தால் சுரண்டுவது போன்ற சின்ன ஒலி "Come in. கதவு திறந்துதான் இருக்கின்றது"
"Good Evening Madam... I mean Doctor'
"Good Evening வாருங்கோ. அந்தக் கதிரையில் இருங்கோ. Makeyourself Comfortable. ஒரு நிமிஷம் வந்து விடுகிறேன்"
அவனை அறையில் தனியே விட்டு விட்டு, இடைக்கதவினூடாகப் பரி சோதனை அறைக்குள் நுழைந்தேன். படுக்கையைச் சரியாக ஒழுங்கு படுத்திவிட்டு, பச்சை நிற மின் விளக்குகளையும் பொருத்திவிட்டேன். நூதனமான அழகுப் பொருட்களை பகட்டெனத் தெரியும்படி ஒழுங்காக வைத்து விட்டு அலுவலக அறைக்குள் நுழைந்தேன். கூடியது ஐந்து நிமிடங்கள் எடுத்திருக்கலாம்.
முழுநிர்வாண மங்கையரின் சிலை நிகர்த்த உடலமைப்பைக் கலைப் பாங்காகக் காட்டும் படங்கள் கொண்ட ஒர் உயர்தர மேற்கத்திய மொழி வெளியீடு நான் வைத்திருந்த இடத்திலேயே இருந்தது. அதை அவன் தொட வில்லை. வெறுமனே வெள்ளைச் சுவரை அர்த்தமில்லாமற் பார்த்துக் கொண்டிருந்தான்.
"க்கக்கும். க்கம்"
நாற்காலியினின்றும் எழுந்து நின்றான்.
"வாருங்கோ, உள்ளே போவோம்."
கதவைத் திறந்து அவனை முன்னே போகவிட்டுப் பின்னால் அடி வைத்து மெல்ல நடந்தேன். கதவு சாத்தப்பட்டது.
"அக்கட்டிலில் சாவகாசமாகப் படுத்துக்கொண்டு பேசுங்கோ"
சற்றுத் தயங்கினான். என் கண்களைப் பார்க்க அவனுக்குக் கூச்சம் என் தோள்களில் அவன் பார்வை பதிந்திருந்தது.
"LugalsTuSabó06). You are a patient after all."

Page 11
8 0 கே.எஸ். சிவகுமாரன்
"O.K., as it pleases you."
கொழும்பில் எத்தனையோ Psychiatists இருக்கும்பொழுது நீங்கள் என்னிடம் கலந்தாலோசிக்க வந்ததிற்கு விசேஷ காரணங்கள் ஏதும் உண்டா?”
"ஹ்ம். மூன்று காரணங்கள் உண்டென்று நினைக்கின்றேன். ஒன்று, உளநோய் வைத்தியர் என்று நீங்களே உங்களை அறிமுகப்படுத்திக் கொண் டது. எப்படி ஒரு Psychiartist இடம் போய் தொடர்புகொள்வது என்று தயங்கிக் கொணடிருந்தேன். நீங்கள் முதலில் என்னிடம் தொடர்பு கொண்டீர்கள், சந்தோஷம், நன்றி. இரண்டாவது காரணமாகச் சொல்வதென்றால், நீங்கள் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள், மூன்றாவது காரணம் நீங்கள். ஒரு . பெண்”
"Realy: Howinteresting! நான் தமிழச்சியாக இருப்பதினால் அப்படி என்ன விசேஷமோ?”
"ஏனில்லை? எனக்கோ தமிழ் ஒன்றைத் தவிர மற்றைய மொழிகளில் பாண்டித்தியங் கிடையாது. ஏதோ சகவாச உறவினால் ஒரளவுக்கு broken English பேச முடியும். ஆனால் எனது உள்ளக்கிடையை வெளிப்படுத்து மளவிற்கு எனது ஆங்கில அறிவு பற்றாக் குறையாய். மற்றைய மன வைத்தியர்கள் எல்லோருமே பிறமொழி பேசுவார்கள். நீங்கள் ஒருவர்தான் தமிழிலும் பேசக்கூடியவர்"
"அது சரி, நான் பெண்ணாய் இருப்பதில் உங்களுக்கு என்ன செளகரியம்?”
விஷமப் புன்னகை அவன் இதழ்க்கடையில் பூத்தது. என் கண்களை அவன் உற்று நோக்கினான். நோக்கினானா? என் கண்களைத் துளைத்துச் சென்றது அவன் விழிக் கூர்மை? நானும் பதிலுக்கு அவன் நெற்றி மத்தியைக் குறிநோக்கினேன். வின்ாடிகள் ஊர்ந்தன.
"உங்களைப்போன்ற ஒரு பெண்ணின் உறவாடல் அவசியம் எனக்கு வேண்டியிருப்பதால்.”
அவன் ஒவ்வொரு வார்த்தையையும், மெதுவாக முழுமையாக உச்சரித்தான்.
நாங்கள் இருப்பதே உதவி புரியத்தானே? நீங்கள் தயங்காமல் எதனைப்பற்றியும் என்னிடம் பேசலாம். கூச்சப்படாதீர்கள். எவ்வளவு மணி நேரம் என்றாலும் பேசிக் கொண்டிருப்போம். உங்களுக்குக் கொஞ்சம் Chocolate Cream தரட்டுமா?”
"சிரமம் எதற்கு?”
"இதில் சிரமமொன்றுமில்லை. Have some. Do you smoke?"

உறைவிடம் மேலிடம் 9ெ
"சில வேளைகளில் புகை பிடிப்பதுண்டு”
சிகரட் டப்பாவை அவனிடம் நீட்டினேன். விரல்கள் நடுங்க அவன் சிகரட் ஒன்றை எடுத்துக்கொண்டான். ஆனால், அதனை உதட்டில் வைத்துக்கொண்ட விதமோ, நாசூக்காக, நயமாக இருந்தது. சிகரட் லைட்டரைப் பொருத்தி அவன் சிகரட் அருகே கொண்டு சென்றேன். அவன் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு சிகரட்டை பற்றவைத் தான்.
எனது வலதுகர உள்ளங்கையில் மெத்தென்ற ஒத்தடம். அவ்விரல்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். 'கலகல என்று அவன் சிரிப்பொலி. அதே தொனி எனது நாதம். அவன் முகச் சரும இழைகள் பிச்ச மூர்த்தி என்ற தமிழ்ச் சிறுகதையாசிரியர் கூறியது போல் நெட்டிப்பூ தண்ணீரில் விரிவது போன்று பிரிந்தன. விரிந்தன. மங்கலான ஒளி அவன் முகத்தில் வீசியது. குமைந்த வதனத்தில் குமிண் சிரிப்பு மொட்டவிழ்த்தது"
"சரி மிஸ்டர் உங்க பெயர் என்னவென்று கூறினீர்கள்?”
"மார்க்கண்டு எனது பெயர். இருபத்திரெண்டு வயது. தமிழ் மூலம் "பேராதெனியவில் கல்வி பயின்ற கலைமாணி. வேலையில்லை. அலைந்து திரிகிறேன். மனமும் சரியில்லை.”
"Gg,6/606)Gu. I like your precision in speech. p56i/dpt. Bissoir யாழ்ப்பாணத்தில் எவடம்?”
"கரவெட்டி"
"Oh! see. நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள்?"
"ஒரு நண்பனுடன் கொட்டாஞ்சேனையில் தங்கியிருக்கிறேன். ஒண்டிக் கட்டை பெற்றாரில்லை. உற்றார் ஒருவர் என்னை ஆதரித்துப் படிப் பித்துவிட்டார். அவரும் சென்ற மாதம் இறந்துவிட்டார். ஏனைய உற்றார் என்னை அண்டுவதில்லை. நான் ஒரு "விசரன்" என்பது அவர்கள் எண்ணம்”
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான். அவன் இவ்வளவு சீக்கிரத்தில் வேற்றுலகில் சஞ்சரிக்கத் தொடங்கிவிடுவான் என்று நான் எதிர்பார்க்க வில்லை. அவன் துயில் கொண்டுவிட்டான். அரைத் தூக்க நிலை.
அவன் ஏதோ உள்ளக் குமுறல்களை உருவம் பெறாத வாக்கியங்களில் கொட்டிக்கொண்டிருக்கிறான்.
"டேப் ரெக்கோடர்” அவன் கூறுவதெல்லாவற்றையும் பதிவு செய்கிறது.
பக்கத்திலிருந்த பத்திரிகை ஒன்றை எடுத்துப் புரட்டினேன். அவன் பிதற்றுவதை இடையில் நிறுத்தினான்.

Page 12
10 0 கே.எஸ். சிவகுமாரன்
"Come on மார்க்கண்டு, பேந்து என்ன நடந்தது?"
அவன் பதில் கூறிக்கொண்டேயிருக்கிறான். அவன் என்ன கூறுகிறான் என்பதை எல்லாம் தொழில் முறையை உத்தேசித்து வாசகர்களுக்கு இங்கு நான் கூறப்போவதில்லை. அவன் கூறுபவை அவன் செயல்களுக்குக் காரணங் காட்டுபவையாய் இருந்த போதிலும் நான் இங்கு விபரிக்கும் கதா சம்பவங்களுடன் நேரடித் தொடர்பு கொண்டில்லாதிருப்பதால், அவற்றை இங்கு நான் எடுத்துரைக்காது விடுகிறேன்.
豪
அவனை அங்குதான் முதலில் கண்டேன்.
அவன் கலகலப்பாகத்தான் கூடியிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந் தான். அவனைச் சுற்றியிருந்தவர்கள் அவன் பேசுவதை உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவனைத் தங்கள் நாயகமாக வைத்தே அவனுடன் உறவாடுகின்றனர், உரையாடுகின்றனர்.
அவன் பேச்சும், பேசும் முறையும், நாசூக்குத் தன்மையும் புண்படாத வகையில் சொற்களைப் பாவிக்குந் தன்மையும், அவனது கம்பீரத் தோற்றமும் வசீகரப் பார்வையும் அவனை மற்றவர்களிடமிருந்து இனம் பிரித்துக்காட்டி நிற்கின்றன. அவன் வெகு இலகுவாகவே மற்றவர்களை விட மேலெழும்பிய புருடார்த்தங் கொண்டவனாய் தோற்றமளிக்கிறான்.
எனக்கு மட்டுமல்ல.
மற்றையோரும் அவன் பக்கம் அடிக்கடி பார்த்து அவதானிப்பதை நான் கண்டுணர்கிறேன்.
அது ஒரு Socia. ஆண்களும், பெண்களும் கூடிய இடம். தனித்தனி யான சிறிய வட்டமேசைகளைச் சுற்றிலும் சில நாற்காலிகள், அவற்றில் ஆணும் பெண்ணுமாகக் கலந்து இருக்கின்றனர். ஆனால் அவன் கூடிய மேசையைச் சுற்றிலும் அவர்கள் மாத்திரமே அமர்ந்திருந்தனர்.
அவன் கூடியிருந்த நண்பர்களை விட வேறு எவருடனும் பேசவில்லை. பார்க்கவில்லை, தப்பித் தவறி அவன் விழிகள் பாவையர் மீது தாவினும், அது ஒரு சாதாரண நிகழ்ச்சி போன்று, அல்லது வெற்றுப் பொருள்மேல் அர்த்தமில்லாமல் பாய்ச்சிய செயல் போல, அமைதியாகவே இருக் கின்றான்.
குமரியொருத்தி கண்ணிமைக்காது இவனையே பார்த்து நிற்பதைக் கண்டுகொள்கிறேன். யதேச்சையாக இவனும் அவளைப் பார்க்க நேரிடு கிறது. அது ஒரு கணந்தான். பின்னர் சாதாரணமாகவே அவன் தன் உரை யாடலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறான்.

உறைவிடம் மேலிடம் 1ெ1
இவனின் உதாசீனம் அவளை மேலும் கவர்ந்திழுக்கின்றது. அவளுக்கு வெளிக் காட்ட முடியாத அந்தரங்கத் தவிப்பு. அவனது கவனத்தைத் தன் மேல் திருப்புவதற்கு அவள் மிகவும் முயன்று கொண்டிருக்கிறாள். இவன் அதனை ஒருவேளை உணர்ந்தோ என்னவோ அவள் பக்கம் யதேச்சையா கத்தன்னும் தன் பார்வையைச் செலுத்துகிறானில்லை.
அவள் தன்னிடம் இருந்தவர்களுடன் பெரிதாகப் பேசி, கலீர், கலீர் என்று சிரித்து இவனது கவனத்தைத் தன்பக்கம் இழுக்க முயல்கிறாள்.
அவள் ஒரு இளம் பாவை. நான் உளவியல் தெரிந்த ஒருத்தி.
ஒருவரின் உளப் பண்பு அவர் தம் சிறுசிறு செயல்கள் மூலம் தெரிந்துவிடும். அந்த இளைஞன் ஒரு சுத்த "Humbug' என்பது எனக்குத் தெரியும். அவன் வேண்டுமென்றே அப்பெண்ணை உதாசீனம் செய்கிறான். அவளது பார்வைக்குப் பதிலாத் தன் கனிவுப் பார்வையை செலுத்தவே விரும்புகிறான். ஆனால் விருப்பைச் செயலாற்றத் துணி விருந்தும், அவன் செய்யாது விடுகிறான்.
அவள் என்னைவிட அழகி. அப்படியென்றால் நானும் அழகி என்றல்ல. ஏதோ பார்வைக்கு இதமான கவர்ச்சியுண்டு என்னிடம், அவள் பெரிய இடத்துப் பெண். அதாவது 'Upper - middle class". அவளை நான் நன்கறிவேன். கற்றறிந்த நற் குணமுடைய பெண் அவள். அவளது நட்பைச் சம்பாதிக்க எத்தனையோ காளையர் எத்தனித்து வருவதையும் நானறிவேன். அவளது மனதில் காதல் சம்பந்தமான 'நொய்மை இன்னும் உருவாகவில்லை. அவள் ஒரு வளரிளம் பருவத்தினள்.
அவன் தான் ஒரு விசித்திரப் பிறவி என்று பிறர் எண்ணும் படி நடிக்கிறான். அவன் தோற்றமும், பேச்சும், கலகலப்பும், அசாதாரணப் போக்கும் எல்லாமே போலி. அவன் பாவனை செய்கிறான். அவன் சுயரூபம் வேறானது.
அவன் உள்ளூர உணர்ச்சி பிளம்பாகக் கொந்தளிக்கும் ஒரு பர்வதம். நெக்கு நெக்குருகிப் பாகாய் கனியும் ஒரு பாறை அவனது வெளிநடப்பும், செயலும் போலி என்றால், அவன் உள்ளூரவே ஒரு கயவன் என்றல்ல. சாந்தகுணமுள்ள நல்லவன்தான், பகுத்தறிவாளன்தான். வெகுளி, வெள்ளை உள்ளம் படைத்தவன் என்று பிறரை நம்பப்பண்ணுவதில் கைதேர்ந்தவன்,
போலியுடைக்குள் மறைந்திருக்கும் அவன் உண்மைச் சொரூபம் இடையிடையே அவனையறியாமலே வெளிக்காட்டும் பொழுது ஏனை யோர் மலைக்கின்றனர். பிரமிக்கின்றனர். சங்கடப்படுகின்றனர். மற்றவர்களைப்போல் நடக்காது. வேற்றுமையாக நடப்பதால் அவனை ஒரு பித்துக்குளி, சித்தசுவாதீனமற்றவன் என்று கணித்து விடுகின்றனர். தகுந்த

Page 13
12 0 கே.எஸ். சிவகுமாரன்
அவன் நிலையை விபரிக்கப் போதிய தகுதி வாய்ந்த பொருத்தமான சொற் களைத் தேடி உபயோகிக்கும் சிரமத்தில் அவனைப் பைத்தியம், விசரன், அசடு என்கின்றனர். அதே நேரத்தில் அவனை அப்படி அழைக்கவும் முடியாதென்பதையும் உணருகின்றனர். அவன் சில சில வேளைகளில் இயற்கையாகவே இருக்கிறான். இயற்கையில் அசாதாரணத்தன்மையும், அசாதாரணத் தன்மையில் பேதைத் தனத்தையுங் கண்டோர், அவனிடத் தில் பயபக்தி கொண்டிருக்கின்றனர். வெளியில் அவனை நையாண்டி பண்ணினாலும், அவன் எதிரிலேயே அவனைச் சின்னத்தனமாக முன் வைத்துப் பேசினாலும், உள்ளூர அவன் மீது அவர்களுக்கு ஒரு மரியாதை, Tape Recorder இல் அவன் கூறுவதைப் பகுத்தாராய்ந்து அவனை இவ்வாறுதான் நான் மதிப்பிட முடிந்தது.
நேற்று நடந்த அந்த Social இல் நாங்கள் இதற்கு முன் எங்கு சந்தித்திருக்கிறோம்? என்று வலியப்போய் அவனிடம் கேட்டேன்.
"என் பெயர் மார்க்கண்டு. நீங்கள், உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி?”
"நான் சரோஜினி. 1ama Psychiatris. ஒரு வைத்திய பரிசோதனைக் கூடம் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கிறேன்."
"அப்படியா?.நான் தங்களை வந்து கலந்தாலோசிக்கலாமா?” "Certainly, நாளைக்கு மாலை, நான்கு மணிக்கு வரமுடியும் என்றால், வாருங்கோ"
"கார்டை" அவனிடம் கொடுத்தேன்.
இப்பொழுது
என்னருகே மயக்க உலகினின்றும் வெளிப்பட்டு நிதர்ஸன உலகுக்குச் சிறிது சிறிதாகப் பிரவேசித்துக் கொண்டிருந்தான் மார்க்கண்டு.
கண் விழித்ததுதான் தாமதம் கட்டிலை விட்டிறங்கி என்னருகே வந்தான். என் கைகளைப் பற்றினான். இதமாக என் வதனத்தை வருடினான்.
கால ஓட்டத்தில் சில வினாடிகளிற்தான் அத்துரித சலனம். ஆனாலும் அவனுக்குக் களைப்பு. கதிரைச் சட்டத்தில் அமர்ந்து கொண்டான்.
நான் இலேசாக முறுவலித்தேன்: அவன் வெட்கித் தலைகுனிந்தான்: "இப்பொழுது திருப்திதானே?"
நிதானமாக அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டான். அவனிடத்தில்

உறைவிடம் மேலிடம் 1ெ3
புத்துணர்ச்சி நிரம்பி வழிந்தது. புதிய தென்பைக் காண முடிந்தது. அவன் சிறிது சிரித்தான்.
"Come on my boy. Take it easy' 6T6örgl 3, g3 -gaugit (upg/Sai) g5!' Igld கொடுத்தேன். அவனிடம் ஒரு புதிய கவர்ச்சியைக் கண்டேன்.
“சரோ. நீங்கள் மணமானவரா?”
"அதற்கென்ன இப்பொழுது"
"இல்லை. வெளியில் "டாக்டர் (மிஸிஸ்) சரோஜினி சங்கரலிங்கம்" என்று போர்டு தொங்குதே. அதற்காகக் கேட்டேன்.”
"அதுதான் சொன்னேனே, திருமணமாகினால் என்னவாம்?”
"ஒன்றுமில்லை. தகாத முறையில் தங்களிடம் நடந்துவிட்டேன். தய வுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்.”
"Don't. For God's sake, don't apologise."
நீங்கள் ஒன்றும் அப்படித் தகாத முறையில் நடந்து கொள்ளவும் இல்லை. நான் ஒன்றும் தகாத செயலுக்கு என்னை உட்படுத்திக் கொள்ளவுமில்லை."
"இயற்கையாகவே தாங்கள் நடந்துவிட்டிருக்கிறீர்கள். இயற்கையான உணர்ச்சியையே வெளிப்படுத்தியிருகிறீர்கள். மன நோயால் வாடுவதாக நீங்கள் கற்பிதம் பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். இதற்குக் காரணம் தங்களுக்குள்ள தாழ்வுச் சிக்கலாகும்.
"இந்த தாழ்வு மனப்பான்மைக்குக் காரணம் செயற்கையாகத் தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றீர்கள்.
இயல்பாகவுள்ள பாலுணர்வுகளை ஏதோ காரணத்திற்காக நீங்கள் அழித்துக்கொள்ள முயன்றிருக்கிறீர்கள். நீங்கள் இயற்கையாகவே பெண்களுடன் பழகியிருப்பீர்களாயின்/பேசியிருப்பீர்களாயின், விகற்ப மின்றி அவர்கள் அழகை இரசித்திருப்பீர்களாயின் நீங்கள் சாதாரண மாகவே இருந்திருப்பீர்கள். w
"பெண்களிடத்தில் கூச்சம் என்பதிலும் பார்க்கப் பெண்களுடன் பேசினால் பிறர் என்ன நினைப்பார்கள் என்ற மனவிகாரத்தில் காலங் கழித்து வந்திருக்கிறீர்கள்.
தாய்மையின் அன்பையோ, உடன் பிறந்தவரின் பரிவையோ நீங்கள் பெற்றிருக்க வாய்ப்பிருக்கவில்லை உங்களுக்கு.
"இந்த வலிந்த செயற்கைக் கட்டுப்பாடு, உங்கள் மனத்தையும், உடலை யும் வெகுவாய் பாதித்திருக்கிறது. உங்களிடமுள்ள இருமைத்தனங்களை வெகு சாதுரியமாக, வெளிக்காட்டாமல் நடித்துவந்திருக்கிறீர்கள்.

Page 14
14 கே.எஸ். சிவகுமாரன்
"இப்பொழுது சிறிது நேரத்திற்கு முந்தி என்னிடம் சடுதியாக நடந்து கொண்டீர்கள் அல்லவா? அது தங்களிடம் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணப்போகிறது. நீங்கள் இனி வெகு இயல்பாகவே இருக்கப் போகிறீர்கள். நேற்று நீங்கள் மனதைப் பறிகொடுத்த, ஆனால் அவளைப் பொருட்படுத்தவில்லை என்று உங்களது நடிப்பிற்குப் பாத்திரமான அந்தக் குமரியை உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகிறேன். Come on cheer up."
நீண்டதோர் விரிவுரை முடிந்தது. "Thank you Madam. வாழ்க்கை இன்பமயமாகவும் இருக்கலாம் என்று இப்பொழுதுதான் என்னால்
உணரமுடிகிறது.
"That's the spirit, You are not at all abnormal."
தங்களது குழப்ப நிலையைத் தெளிவுபடுத்த வேண்டி தங்களால் தொடப்பட்டு விட்டேன். அதில் பாதகம் இல்லை. இருவரது motives உம் நிதானமாகவே இருந்திருக்கின்றன.
"அகத்தூய்மை நெறிபிறழாதிருக்கையில் பூதவுடல் accidentaly யாக, மேனிலையா உராய்ந்து விட்டதனால், களங்கம் ஒன்றுமில்லை. சில நிகழ்ச்சிகள் நடக்கப் போகின்றன என்று உள்ளுணர்வில் தொனித்தாலும், அந்நிகழ்ச்சிகள் பிரத்தியட்சமாக நடந்தாலும், பிரக்ஞையறிவில் அவை நடப்பவையாகவே தெரிவதில்லை. அது ஒரு பெரிய மறைஞானம். அந்நி லையை விளக்குவதே ஒரு பெரிய சாதனை.
நீங்கள் ஒரு நோயாளி. நான் ஒரு வைத்தியர். நீங்கள் என்னைத் தொட்டு விட்டதனால் நான் கற்பிழந்தவளாகி விடமாட்டேன்.
நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பாடதிர்கள். நவீன சமுதாய அமைப்பில், சிற்சில சந்தர்பங்களில் பாரம்பரியப் பிரமாணங்கள் தளருவது உண்டு. The best thing is to be natural without any inhibition............ ஆனால் கால, இட, சந்தர்ப்பம், சமூக அமைப்பு இவைகளுக்கிணங்கிய விதத்தில் நடந் கொள்ள வேண்டும். அதுதான் பிரதானம்"
மணி ஏழு அடித்தோய்ந்தது. அப்பொழுது என் கணவர் அறைக்குள் நுழைந்தார். ஆடவர் இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத் தினேன்.
"அப்போ பின் நான் போய்விட்டு வருகிறேன். உங்களுடைய Fees.
"Fees தருவதற்கு உங்களிடம் நோய் இல்லையே!” "Oh. Thank you." "Not at all. Good Bye."
"Good Bye."
(RFgpě s Lrt 1965)

U6-0
பிரெஞ்சிய வாசனைத் திரவியங்கள் கலந்த இதமான சுடுநீரில் புனலாடி நாணகாம்பறா என்ற குளியலறையினின்றும் வெளிப்பட்டுத்தனது அத்தரங்கப்பள்ளியறைக்கு சென்ற தில்குஷி நிலைக் கண்ணாடி முன் நின்றாள். ஒப்பனை நடந்தது.
நோனா, லியூமக் தியனவா” சாத்தியிருந்த கதவின் வெளியில் நின்று தட்டுகிறான். "போய்” என்ற வேலைக்காரப் பையன்.
கதவு திறந்த அக்கணமே அப்ஸரஸ் போன்ற இருபது வயதுச் சீமாட்டியின் பருவக் கொழிப்பின் எழிற் கவர்ச்சி வேலைக்காரனைத் திணற அடிக்கிறது.
கடிதம் கை மாறி கதவு சாத்தப்படுகின்றது. கணிகை உறையைக் கிழித்து மடலைப் பிரிக்கின்றாள், இருமடிப்புக் கடிதங்கள் தலை நீட்டு கின்றன.
சிறிய மடிப்பிலிருந்து "அன்புள்ள தில்குவதி, 'மாலா' என்ற சிங்கள சினிமாப் பத்திரிகை ஆசிரியர் எனக்கு அனுப்பிய ஒரு கடிதம் இன்று தபாலில் வந்தது. அதனை உன் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றேன்.
அன்புள்ள
செல்வலிங்கன்.
சின்னஞ் சிறிய முக்கோண வடிவக் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறாள். மணி பன்னிரண்டரை இன்னும் அரை மணி நேரத்தில் அவள் அலுவலகம் செல்ல வேண்டும். அதற்கிடையில் யாரோ மாலா' பத்திரிகை ஆசிரியர் தனது முதலாளி க்கு எழுதியிருந்த கடிதத்தின் நினைப்பு வருகிறது.
"அன்புள்ள 'ஏலைட் ஆசிரியர் அவர்கட்கு, தங்கள் காரியாலயத்தைச் சேர்ந்த உதவி ஆசிரியை செல்வி தில்குஷி சமரதுங்கவின் அதியற்புத எழிலையும் இனக்கவர்ச்சியைத் தூண்டும் லாவண்யத்தையும் எங்கள் சினிமாப் பத்திரிகையான 'மாலா பிரயோ

Page 15
16 0 கே.எஸ். சிவகுமாரன்
சனப்படுத்த விரும்புகின்றது. திரைப்படம் சம்பந்தப்பட்டோர் அவரைத் தெரிந்து வைத்துக்கொள்ள இதனால் ஒரு வாய்ப்பும் ஏற்படும்.
எனவே இன்று மாலை நான்கு மணியளவில் புகைப் படக் கருவியுடன்
வருகிறோம். இதற்கென விசேஷமாக அவர் உடுத்து வரத் தேவையில்லை.
வழமையாக அவர் அணியும் உடைகளே அவர் பகட்டை விளம்பரப்
படுத்துபவை. தயவு செய்து அவரது அனுமதியைப் பெற்றுத் தயாராய் வரச் சொல்லுங்கள்.
நன்றி
இங்ங்னம்
கருணாரத்ன,
'மாலா ஆசிரியர்.
தில்குஷி இக்கடிதத்தைப் படித்துவிட்டு வாய்விட்டுச் சிரிக்கிறாள். இப்போழுது மருட்சி தட்டுகிறது. 'வழமையாக அவர் அணியும் ஆடைகளே அவர் பகட்டை
விளம்பரப்படுத்துபவை போன்ற வரிகள் திரும்பத் திரும்ப அவள் மூளைப் பொறியில் சிதறுண்டுறைகின்றன.
“சீ.சீ. இது என்ன ஆபாச வியாக்கியானம் அப்பா. கீழைத் தேயப் பெண்ணொருத்தி என் போல் கவர்ச்சியாயிருப்பதே கூடாதோ’ என்று சலித்துக்கொள்கிறாள். அப்புறம் எண்ணச் சூழலில் அவள் மூழ்கி விடுகிறாள்.
(
ஒருவேளை செல்வாவும் அந்தக் கருணாரத்ன போன்ற ஒருபோலிக் கலைஞன் தானா? என் புலாலழகுக் கவர்ச்சியைக் கண்டு எவனோ மோகித்து இவருக்குக் கடிதம் எழுதினால் அப்படியே எனக்கு அனுப்பி விட்டு வேடிக்கை பார்ப்பதா?
அல்லது என்னையும் அவரது ஆயிரத்து இரசிகர்களில் ஒருவராகக் கருதுகிறாரோ? இருக்காது. குறுகிய எல்லைக் கோட்டுக்குள் படித்துப் பட்டம் பெற்ற பண்பட்ட மனப்போக்கு நிற்குமா என்ன? இருந்தாலும் நானும் அவரும் தனித்திருக்கும் பொழுது குரூரமாக என்னை வருணிப் பாரோ.?
"நாகுக்காக, நயமாக, கலாரஸனையாக மொழிய, உங்களுக்குத் தெரியாது. நீங்கள் என்ன கலைஞர்?" என்று கேட்கும் போதெல்லாம்.
"அம்மணமான கரடு முரடான எண்ணக் கோவைகளைக் கலை நய மில்லாதெடுத்து இயம்பும்போது தான் யதார்த்தம் தொனிக்கும், ஒளிவு மறைவின்றிப் பழகலாம்." என்பார்.

usi 6 0 17
"ஓஹோ யதார்த்தம் என்றால் அம்மணமான பதிவு என்று மயங்கு கின்றீரோ? பதிவு இல்லை ஐயா பதிவு, யதார்த்தம் என்றால் கற்பனை என்னும் கலை நயங்கொண்டு கலைஞனின் மனச்சாட்சியின் பிரதிபலிப் பாயிருக்க வேண்டும். பிரதிபலிப்பு என்றால் புகைப்படப் பதிவு அல்லவே, கற்பனையின் துணை கொண்டு கட்டுக் கதைகளை யதார்த்த ரீதியாகப் படைக்கும் நீர் ஒரு பெண்ணுடன் பழகும்போது உம்மை மறந்து விடுகிறீரோ? அல்லது உமது உண்மைச் சொரூபம் யதார்த்தவாதம் என்ற கருத்தற்ற வாதத்தில் கதை பண்ணுவதாகப் பிகு பண்ணி, உம்மையே நீர் ஏமாற்றிக் கொள்கிறீர். இது தெரியவில்லை?” என்பேன்.
இம்மாதிரியே தினமும் தத்துவ விசாரம் யாம் செய்வோம்.
உஹ"ம் செல்வா என்ற இந்த இலக்கிய பேழையிடம் எனக்குப் பரிவுப்பற்றுதல் எழுந்தது இயற்கைதான். என்றாலும் நானோ ஈழத்தின் பெரும்பாற் சமூகத்தினள். அவரோ பண்டை மொழி பேசுவார். ஆங்கிலம் என்ற தொடர்பு மூலம் அவரும் நானும் இலக்கியமும் இலக்கிய முமாய்ச் சந்தித்தோம். அவரும் நானும் எங்ங்ணம் சமதையாவது. அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம் ஒனர்ஸ் படித்த எம்.ஏ. பட்டதாரி. நான் பட்டம் பெற்றிராத சாதாரண இலக்கிய ரஸிக விமர்ச்கி,
என்னதான் இருந்தாலும் தாய்மொழியில் வெளிப்படுத்த முடிவதுபோல் உள்ளத்து உணர்ச்சிகளைக் காட்டிவிட முடியுமோ?
"நாமிருவரும் பிறமொழி மூலம்தானே இலக்கிய சர்ச்சைகளைச் செய்கிறோம்? எனக்குத் தமிழும், உங்களுக்குச் சிங்களமும் தெரிந்திருந்தால் நமது பரிபானஷயை, உள்ளத்து உணர்வுகளை இருவருமே எளிதிற் புரிந்து கொள்ளலாம் இல்லையா?” என்று நான் கேட்டால்,
டக் கென்று என்னிடமே கேட்பார்.
"உனக்குத்தான் உன் தாய் மொழியைச் சரிவரப் பேச வராதே. மேனாட்டுச் சூழ்நிலையில் வாழ்ந்த நீ எங்கே உனது காலாசாரத்தையும் மரபையும் அறிந்திருக்கப்போகிறாய்?"
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்? அவர் சீமைக்கும்போய் பிற மொழியில் பாண்டித்தியம் பெற்றாலும் தான் ஒரு தமிழன் ஒரு கிழக் கத்தியவன் என்பதை மறக்கவில்லையே! அண்ணாமலையில் லளிதகலை களைக் கற்க வேறு சில வருடங்கள் கழித்திருக்கிறாரே!
செல்வா - தில்குவி இது பொருந்துமா? செல்வா என்னைக் காமுற்றாரா? அல்லது உளத்தூய்மையுடன் காதலித்தாரா?
號 寮 豪
துகிலுரியும் படலம் கணப்பொழுதில் முடிகின்றது.

Page 16
18 0 கே.எஸ். சிவகுமாரன்
வில்லன் துச்சாதனன் இல்லை. சுயமாகவே தனது கவர்ச்சி ஆடைகளைக் களைந்து கொள்கிறாள் தில்குவி.
காஞ்சிபுரம் பட்டும், சோளியும் உடலை மறைக்கின்றன. செந்திலகம் நெற்றியில் ஒளி கக்குகின்றது. பாரம்பரியமாக நாணத்தையும் பெண்மை யையும் வளர்க்கும் ‘ரிப்பிக்கல் தமிழ்ப்பெண்போல் இருந்தது அவளது புதிய தோற்றம்.
ஜாவத்த வீதியிலுள்ள அந்தப் பெரிய மாடிவீட்டு முன்றலினின்று தனது போக்ஸ்வகனை" ஒட்டிக்கொண்டு வருகிறாள். பம்பலப்பிட்டியிலுள்ள 'ஏலைட் பத்திரிகாலயப் படிகளில் ஏறுகிறாள். தில்குஷி,
'டிலியூக்ஸ் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் செல்வலிங்கன் அவளை ஏறிட்டுப் பார்க்காமல் 'பைல் கடதாசிகளை அர்த்தமில்லாமல் புரட்டு கிறான்.
தட்டெழுத்து எந்திரம் துரித கதியில் இயங்குகின்றது. உட்புகுந்த பட்டாம்பூச்சிதான் வேலை மும்முரத்தில் ஈடு பட்டிருக்கின்றது.
காலம் சிறிது. கடமைகள் பெரிது என்ற எண்ணம் இருவருக்கும் போலும்.
மூச்சு, ஒருவரோடொருவர் பேசினாரில்லை.
தில்குவழி செல்வலிங்கனை ஒரக்கண்ணால் பார்க்கிறாள். சலனமற்ற அவன் முகக்கண்கள் ‘பைலில் படிந்திருக்கின்றன. அகக்கண்கள் தில்குஷியைச் சுற்றி வட்டமிடுகின்றன.
"தில்குவியும் நானும் அறிமுகமானதே யதேச்சையானது தானே. ஆர்வத்தில் கட்டுரை, கதைகளை எழுதிக் கொண்டு நேரேயே வரத் தொடங்கினாள். உயர் பதவி பெற பட்டம்' என்ற 'பாஸ்போர்ட் தன்னிடம் கிடையாது என்றும் தான் ஒரு இலக்கிய ரஸிகை என்றும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள், உண்மைதான். செல்வக் கொழிப்பில் பிறந்த அவளிடம் வெறும் பட்டதாரிகளையும் மிஞ்சிவிடும் ஆழமான இலக்கியப் பார்வை அமைந்து இருப்பதால்தானே அவளை எனக்கு உதவிக்கு வரும்படி அழைத்தேன். அவள் ஞானம் என்னை வியப்பிலாழ்த்தியது. அவள் அழகும், குணாதிசயங்களும் என் மனதில் புதுப்புது கற்பனைகளை உருவாக்க உதவி புரிகின்றன. கள்ளச் சிரிப்பைக் குமிழெழிலில் காட்டி தன் வட்டக்கரிய காந்த விழிகளால் என்னை விழுங்கி விடுவது போல் பார்க்கும் போதெல்லாம் அவள் எழிற் கோலத்தில் நான் மருளுவேன்.

பகட்டு 0 19
அது வெறும் இந்திரியக் கவர்ச்சி என்று சொல்வேன். உள்ளத்து உள்ளம், உணர்வுப் பின்னல் ஒன்று தரித்து ஜனித்த மாசற்ற காதல். அன்பு உள்ளம், பேதமை, பெண்மை மென்மை அவளிடம் இல்லாமலில்லை. ஒரு வேளை அவள் மெய்யுருவின் பொய்மையில் கட்டுண்டிருந்தேனோ? சீ.சீ. அவள் என்னுடையவள். அவள் தன் வெளியுரு பிறரின் காமரசனைக்குத் தூண்டில் மீனாவதா?
செல்வலிங்கன் சிந்தனைச் சரம் அறுத்தெறியப்படுகிறதி,
சம்பிரதாய வரவேற்புரைகளின் பின் ஆடவர்களிருவரும் உரையாடலில் இறங்கி விடுகின்றனர். தில்குஷி வேலையில் கண்ணும், நடப்பில் கருத்து மாகத் திளைக்கிறாள்.
"தங்கள் பத்திரிகையின் விற்பனை எப்படி? இலக்கியம் கற்ற நீங்கள் சினிமாப் பத்திரிகை எழுத்தில் இறங்கியதன் காரணம் யாதோ?” என்றான் செல்வலிங்கன்.
"அதையேன் கேட்கிறீர்கள்? நவீன இலக்கியம் சினிமா மூலம் வளரத் தொடங்கியிருப்பது தாங்களறிந்ததே. எனக்குச் சிறுவயதிலேயே இலக்கியப் பித்துப் பாருங்கள். சிங்களத்தை விசேட பாடமாகவும். ஆங்கிலத்தைத் துணைப் பாடமாகவும் பேராதனையில் பயின்று பட்டம் பெற்றேன். சினி மாவுக்கும் இலக்கியத்துக்கும் இடையில் நான் அமைதி காணவிரும்புகிறேன். காண முயற்சிசெய்கிறேன். எனது நாவல் ஒன்று சென்னையில் பட மாக்கப்பட்டு வெளிவருகின்றது”
"ஆகா சந்தோஷம் . சினிமாவுக்கும் இலக்கியத்துக்குமிடையில் அமைதி காண முயலும் தாங்கள் புரட்சிகரமானவர்தான். எவ்விதமான அமைதியைத் தாங்கள் இணைக்கிறீர்கள் என்ற தொழில் நுட்ப வியாக் கியானங்களைத் தங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால்."என்று செல்வலிங்கன் இழுக்கிறான்.
"சொல்லுங்கள். ஆ-னா.ல்."
"ஆனால் ஆபாசக் கவர்ச்சிப் படங்களை இலக்கிய நோக்குக் கொண்ட நீங்கள் சினிமாப் பத்திரிகையில் பிரசுரிக்கும்போது கலை நயங்கெட்டுப் புலாலழகை விகாரமாகக்காட்டும் பணியிலல்லவோ இறங்குகிறீர்கள்.
தில்குவியின் உள்ளம் திறந்த அன்பு வெள்ளமாக பீறிட்டடிக்கிறது. செல்வலிங்கனைக் கருணைக் கண்களால் பார்க்கிறாள்.
கருணாரத்ன முகத்தில் வெளியுலகப் பார்வையை ஒடுக்கமாக நோக்கின மூடத்தனத்தின் ஞானோதயம், என்றாலும்,
"ஓஹோ அதுவா? சினிமாப் பத்திரிகை, சினிமாப் பத்திரிகை போலல்லாமல் இலக்கியம் செப்பிக்கொண்டிருக்க முடியுமோ? எனவே

Page 17
200 கே.எஸ். சிவகுமாரன்
அதற்குரிய இலட்சணங்களூடே எனது இலட்சியங்களை நிறைவேற்ற விரும்புகின்றேன். வாசக இரசனையை எடுத்த எடுப்பிலேஉயர்த்த முடியாதல்லவா?
தில்குவழி.கண்ணகி போல் வெகுண்டெழுந்தாள்"மிஸ்டர் பிளிஸ் கெட் அவுட்"
செல்வலிங்கன் அமைதியாகப் புன்னகைபூக்கிறான், கருணாரத்ன 'ஹி..ஹி என்று வெகுளிச் சிரிப்பை பிரயாசையாகக் கொண்டு வருகின்றார்.
"அழகுக் கரணங்கள் வெளியிற் தெரியப் பகிரங்கத்தில் என் போன்ற கிழக்கத்தியவள் நடமாடினால், அவள் கற்பு என்ன கழருந்தன்மையென்று உமது எண்ணமோ? ஏன் தான் விபரீதமாக உம் போன்றவர் எங்களைப் பார்க்கின்றனரோ? இனிமேல் என் கணவர் முன்னிலையிற் கூட நான் பெண்மை பூண்டு மென்மையாக, அடக்கமாகத்தான் இருக்க வேண்டும். அல்லாவிட்டால் உம்போன்ற கழுகுக் கண்ணர்களின் ஒற்றைப் பார்வை யால் எங்கள் சமூகமே குறைபாடுடையதாகிவிடும். ஹ”ம். என்று தான் இம்மாதிரியான செயற்கைத்தடைகள் உடைபடுமோ?. கிழக்கு. கிழக்குத்தான் மேற்கு.மேற்குத்தான்”
கூனிக்குறுகி ஸ்தம்பித்து வெளியே செல்கிறார் கருணாரத்ன. பகட்டு? எதுதான் பகட்டு?
(வீரகேசரி 1962)

மல்காந்தி
'கோல்பேஸ் ஹொட்டேலில் புதுவருடக் களியாட்ட இரவு. மணி எட்டு.
அப்பொழுதுதான் ஒரு waltz முடிந்து Tango தொடங்கிய நேரம். கறு வாக்காட்டு ஆடவரும் அரிவையரும் தம்மை மறந்து இன்ப லாகிரியில் திளைத்து நிற்கும் கட்டம்.
ஹொட்டேல் வாத்திய இசைக்குழுவினர் Latin - American மெட்டை ரஞ்சகமாக ஒலித்தனர். ஆடியவர்கள் அனைவரும் தாம் ஏதோ நாட்டிய வல்லுநர் என்ற நினைப்பில் அபிநயம் பிடித்தனர்.
ஆடுபவர்களுக்கு ஆனந்தம், பார்ப்பவர்களுக்கு விரஸம்! நான் பார்வையாளன். அடுத்த நாள் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் "ஆடல் பாடல்" வருணனைகள் எழுத வேண்டிய விமர்சகன். என்னைத் தவிர அனைவருமே ஆடிக்கொண்டிருந்தனர்.
எனக்கு முன்னால் வட்டமான சிறிய மேசை அதைச் சுற்றிலும் இரு நாற்காலிகள். நடுவில் ஒரு பூச்சட்டி வலது கையில் ஒரு ballpoint பேனா. இடது கையில் பத்திரிகாலயத்தினர் தந்துள்ள சிறிய குறிப்புப் புத்தகம்.
"Drinks? siril ” Gesu' l -gy "வெயிட்டர்"
"Yes. Biring me bread butter and an omlet and coffee too."
"very well, sir."
எனக்குப் பசி. "வெயிட்டர்” கொணர்ந்து வைத்தவற்றை வயிற்றுக்குள் தள்ளினேன். "பில்"நான்கு ரூபாய். ஒரு Black and white ஐப் பற்றவைத்துக் கொண்டேன்.
நடனம் ஒய்ந்தது. நாட்டிய மண்டபம் சலசலத்தது. நாகரிக வாழ்க்கை நடத்தும் அந்த உயர் சமூகத்தினர் மேசைகளருகே வந்து தத்தம் ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர்.
கொழும்பில் சிறந்த நாட்டியக்காரர்களாகப் புகழ்பெற்ற சில பெரிய புள்ளிகள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தன. நாளைய விமர்சனம் தயவுடையதாக இருக்க வேண்டுமே என்றுதான்.

Page 18
22 0 கே.எஸ். சிவகுமாரன்
லத்தீன் அமெரிக்க நடனங்கள் ஆடுவதில் மிகவும் திறமைசாலி என்று பெயர்பெற்ற செல்வி மல்காந்தி எனது மேசையருகே வருவதை அவதானித்தேன். அவள் வருவதற்கு முன்னமே நான் எழுந்துபோக முயன்றேன். அதற்குள்ளேயே அவள் "மிஸ்டர் சிவகுமாரன், ஒரு ஐந்து நிமிடம் என்னுடன் கழிக்க முடியுமா?" என்று ஆங்கிலத்தில் கேட்டாள். "நிச்சயமாக மடம்” என்று நான் உச்சரித்தேன். நாகரிகமான இடத்தில் நாகரிகமாகத்தானே பேச வேண்டும்?
"வாருங்கள் வெளியே போகலாம்"
"நீங்கள் விரும்பியபடியே!” "ஹொட்டேல்" வெளியே எனது "ஸ்கூட்டர்” இருந்த இடத்திற்கு
வந்தோம்.
"give me a fag" - தனக்கு ஒரு "சிகரெட்" தரும்படி வேண்டிக் கொண்டாள்.
இருவர் உதடுகளிலும் " சிகரெட்"
"நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்?"
நான் பதில் பேசவில்லை.
கடல் காற்று அவள் மீது மோதுண்டு அவள் மேனியில் தெளித் திருந்த "ஒடிக்கொலோன்" வாசனையைச் சுற்றுப்பிரதேசமெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது.
சின்ன வயது. குமரிப் பருவ எழில்கொழிக்கும் உடற்கட்டு கண்டிய மாதர் அணிவது போல சாரி யும் 'பிளவுஸ்’ம் உடுத்திருந்தாள். ஜப்பானியக் கண்கள். தமிழ் பெண்கள் இடுவது போல நெற்றியில் தில கம். சிறிய நெற்றி. முன் நெற்றியில் உதிர்ந்த மயிர்கள். சிட்டெறும்பின் நடை மல்காந்தி என்னும் இந்தச் சிங்களக் குட்டி ஒரு "கதம்பப்" பெண். அதாவது, பல நாகரிகங்களின் கலப்பும் ஒன்றுசேர்ந்து பெண் வடிவத்தில் உதித்தது போலத் தோற்றம். அழகியல்ல, ஆனால், வசீகரவல்லி!
ஆங்கில மொழியும் உச்சரிக்கும் பொழுது இனிமையாகத்தான் இருக்கின்றது என்பதையறிய மல்காந்தியின் குரலினிமையில் எழும் நாதக்கலப்பைத்தான் கேட்க வேண்டும். பலாச்சுளையில் தேன் பிழிந்தாற் போன்று இனிமை நவில்கிடும்.
"மிஸ்டர் சிவகுமாரன்" என்று கூறி என் நெஞ்சில் அவள் சாய்ந்ததும்தான் நான் சுயநினைவு பெற்றேன்.
நாற்பது வயதையும் தாண்டி நாலு குழந்தைகளுக்கும் தகப்பனான நான் இந்த நாகரிக நாரிமணியின் உடற்கவர்ச்சியில் மனதைப் பறிகொடுத்தது

மல்காந்தி 0 23
விந்தைதான். என்னைச் சுதாரித்துக் கொண்டேன். ஆனால், அவள் ஸ்பரிஸம் என் உடலில் புத்துணர்ச்சியைப் பாய்ச்சிக் கொண்டேயிருந்தது. "எனது கணவனின் தொல்லைகளில் இருந்து என்னை மீட்டுத் தர வேண்டும். நான் விவாகரத்துக் கோரியிருக்கிறேன். ஆனால், என் வயது தான் என்னைத்தடை செய்கின்றது.
"என்ன மல்காந்தி! நீங்கள் மணமானவரா?” "பால்ய விவாகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” "இது என்ன விந்தை? இலங்கையிலும் பால்ய விவாகமுண்டா?” "எனக்குப் பதினாறு வயது நடக்கும் பொழுதே திருமணமாகிவிட்டது. எனது கணவன் ஒரு எஞ்சினியர். அவருக்கு என்னைப் பிடிப்பதுமில்லை. எனக்கு அவரைப் பிடிப்பதுமில்லை. சட்டத்தின் பேரில் நாங்கள் தம்பதிகள். ஆனால், ஒரு நாளும் கூடி வாழ்ந்ததில்லை"
அவள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ பிதற்றினாள். கோவை யிதழ் நெளிந்தது. இதமான சுடுநீர் விழிகளினின்றும் மல்கி என் கைகளில் விழுந்தது.
"நீங்கள் சொல்வது, எனக்கு ஆச்சரியமாயிருக்கிறதே? உங்கள் விருப்பம் இல்லாமலா திருமணம் நடந்தது?"
"இல்லை. வாலிபக் காதல், உடற்கவர்ச்சியினால் எடுபட்ட என்மனம் அவரை நாடியது. பள்ளியில் படிக்கும் போதே தொடங்கிய உறவு." வயதுக்கு மீறிய அறிவு வளர்ச்சி அவளிடம் இருப்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. "AdolsCent love" என்னும் வாலிபக் காதல் வலையில் சிக் குண்ட இந்தப் பெண், தன்னைத் திருமணம் எனும் தளையில் இருந்து விடுவித்துக்கொள்ள முயல்கிறாளாம்.
"அதுசரி மல்காந்தி. நீங்கள் ஏன், உங்கள் கணவருடன் வாழவில்லை? அவர் எவ்விதத்தில் தங்களைத் துன்புறுத்துகிறார்?"
՞ւb . . . . . ஹ”ம் . . . . . நான் . . . . . அதை எப்படிச் சொல் வேன் . . . . . நீங்கள் எனக்குத் தந்தை போல . . . . ஆனாலும் அதனை நான் சொல்ல . . . . நான் தோற்றத்தில்தான் பெண் . . . ."
எனக்குப் புரிந்தது. புரியாமலும் இருந்தது.
"நீங்கள் கூறுவதைப் பார்த்தால், தாம்பத்திய வாழ்க்கைக்கு ஏற்றவர் அல்ல என்றல்லவா படுகின்றது?”
" ஆனால், சத்திரசிகிச்சை அவசியமானது" "இது உங்கள் கணவருக்குத் தெரியுமா?"

Page 19
24 0 கே.எஸ். சிவகுமாரன்
"தெரியும் அவர் என்மேல் பச்சாதாபப்படுவதற்கு மாறாக என்னைச் சந்திக்கு இழுக்க முனைகிறார்"
"நீங்கள் இப்பொழுது யாருடன் இருக்கின்றீர்கள்?”
"எனது பெற்றோர்களுடன்தான்” "ஒருவேளை 'ஒப்பரேஷன் உங்களுக்கு விமோசனத்தைக் கொண்டு வருமோ?”
"வரலாம். ஆனால், நான் என் கணவனை விரும்பவில்லையே! பச்சை யாகச் சொன்னால், என் கணவர் நிலையும் என் போலத்தான்!”
“மன்னிக்க வேண்டும் மல்காந்தி. இப்பொழுது நேரம் ஒன்பதரையா கிறது. அச்சுக்கோப்பவர் எனக்காகக் காத்திருப்பார்” என்று கூறிவிட்டு "ஸ்கூட்டரில் குதித்துவிட்டேன். அது பாய்ந்தது.
"Good night and sweet dreams Siva". 6reörgy gy6ucit si.6youg5 sírásai) விழுந்தது.
அக்காரிகைக்கு நான் என்ன பதில் கூறுவேன்? நேரம் வேறு போய்க் கொண்டிருந்தது. அவள் உடலின் ஸ்பரிஸம் மென்மையான நினைவுகளை எனக்குக் கொண்டுவந்தன. அவளை மறக்க முடியவில்லை.
அவள் கூறிய கட்டுக்கதையை நான் நம்பவில்லைதான்! எனக்குத் தெரியும்; அவள் திருமணமாகாதவள் என்று.
ஆனால், விமர்சனம் எழுதும் போது தனது நினைவு என்னிடம் இருக்கட்டும் என்னும் எண்ணத்தில் அவள் ஆடிய நாடகம் வெற்றி யடையத்தான் செய்தது!
பத்திரிகாலயத்தில் அன்றைய நடனம் பற்றி எழுதும் பொழுது அவ ளைப் பற்றி நாலு வார்த்தை ஏற்றி எழுதித்தான் கட்டுரையை "கொம் பஸிட்டரிடம் கொடுத்தேன்.
(தமிழின்பம் 1960)

வாழ்க நீ தமிழணங்கே!
ஹொட்டேல் டி லியூக்ஸ் தனது பத்தடுக்குகளைக் கொண்டு கம்பீரமாகக் காட்சியளித்தது. கிழக்கும் மேற்கும் கொழும்பில் சந்திக்கு மாமே!
உண்மைதான்!
அதோ துறைமுகத்தை நோக்கி உயர்ந்திருக்கும் அந்த ஹொட்டேலில் பட்டவர்த்தனமாக கிழக்கத்தைய நாகரிகமும் மேற்கத்தைய நாகரிகமும் கைகோத்து உலவுகின்றனவே!
தமிழ் நாட்டு உளுந்து வடை, பாயாசம் முதல், இத்தாலிய "மக்ரோனி" வரை பல தினுசு உண்டிகள் அங்கு பரிமாறப்படுகின்றன.
நேரம் மாலை ஏழு மணி!
எனது 'பொன்டியாக்காரை பார்க் பண்ணிவிட்டு இறங்கினேன். எனது 'வூலன் ஈவினிங் ஸுட்டில் மார்கழி மாத மழைத் துளிகள் பட்டு புல் நுனி மேல் நீர்க்குமிழிகள் போல் தோற்றமளித்தன!
பாக்கெட்டுக்குள் கையைப் போட்டு தங்க சிகரெட் பெட்டியை வெளியில் எடுத்தேன். நாசூக்காக ஒன்றை எடுத்து உதட்டில் வைத்துக் கொண்டு மின் தூக்கியில் ஏறி நின்றேன். நாலாம் இலக்கப் பொத்தானை அழுத்தினேன். 'லிப்ட் உயர்ந்து எழுந்தது. அது தானாகவே இயங்கிக் கொள்ளும் மின் தூக்கி.
நான்காம் அடுக்கில் வந்து நின்றது. கதவுகள் தாமே திறபட்டன. 'கார் பெட் தரையில் கால் எடுத்து வைத்தேன். மண்டபத்தில் சலசலப்பு.
ஐரோப்பிய உண்டி வகைகளுக்கென ஒதுக்கப்பட்டது நான்காவது மாடி இலங்கையர் மாத்திரமன்றி பலதரப்பட்ட பிறவின மக்களும் அங்கு குழுமியிருந்தனர்.
நான் ஒரு மேசையடியில் போய் அமர்ந்து கொண்டேன். பக்கத்தி லிருந்த கதிரை காலியாய் இருந்தது.
சுற்று முற்றும் என் கண்கள் துழாவின. என் மூக்கைத் துளைத்தது ஒரு நெடி மல்லிகையின் நறுமணம். சுகந்த சுவாசம். மெதுவாக என்னருகே நடந்து வந்து கொண்டிருந்தாள் ஒரு ஆரணங்கு.

Page 20
26 0 கே.எஸ். சிவகுமாரன்
அவள் ஒரு பிரெஞ்சியப் பெண். "குட் டே மெஷியர்" அவள்தான் கூறினாள்.
"குட் டே மடம்' நான் பதிலுக்குக் கூறினேன். நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
செக்கச் சிவந்த வதனம். பட்டுத் தளிர்மேனி "கிறாப் பண்ணப்பட்ட கேசம். விலையுயர்ந்த ஆடை, கழுத்தில் பவள மாலை. அப்ஸரஸ் போன்ற அழகி
"ஹெள எபவுட் ஏ மம்போ"? "மம்போ" என்ற நடனம் ஆடுவோமா?” என்று கேட்டாள்.
"அதுக்கென்ன” என்று நான் அவளுடன் எழுந்து சென்றேன். ஹொட்டேல் வாத்தியக்குழுவினர் இலத்தீன் அமெரிக்க இசையை முழக்கித் தள்ளினர்.
நாங்களும் இசைக்கேற்ப விரைவாக ஆடத்தொடங்கினோம். என்னால் முடியவில்லை. மிகவும் களைப்பாக இருந்தது. அவளோ மிகவும் உற்சாகமாக ஆடினாள். களைப்பின் மேலீட்டினால் கதிகலங்கினேன். கீழே விழுந்து விட்டேன். சிறிது நேரம் மயக்கம். அவ்வளவுதான்!
இசை நின்றது. எல்லோர் கண்களும் என்னைப் பார்த்தன. அந்தப் பெண் என்னைத் தூக்க முயன்றாள். ஹொட்டேல் சிப்பந்திகள் துணைக்கு ஓடி வந்தனர்.
கடைசியில் போய் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்.
"தாங்கள் எங்கு இருப்பது?, சொல்லுங்கள். என் காரிலேயே கொண் டுபோய் விட்டுவிடுகிறேன்."
"ஒ, டோன்ட் பொதர் மடம். என்னிடமும் காரிருக்கிறது. நான் போய்க்கொள்ளுவேன்"
மின் தூக்கி வழியே கீழிறங்கி முன்தளத்திற்கு வந்தோம். எனது காரில் போய் இருவரும் அமர்ந்து கொண்டோம்.
"ஆமாம். உங்கள் பெயர் என்னவென்று கூறினீர்கள்? “ஸாரி என் பெயர் பிரிஜிட் பிரெஞ்சியத் தூதுவராலயத்தில் வேலை பார்க்கிறேன்"
"அப்படியா? நான் ரோஷான். டொக்டராயிருக்கிறேன்"
"எங்கு வசிக்கிறீர்கள், மெஷியர் ரோஷான்?” "கறுவாக்காட்டில்தான்! பார்ன்ஸ் பிளேஸில்"
"அப்படியா? நானும் அதே தெருவில்தானே வசிக்கிறேன்"

வாழ்க நீ தமிழணங்கே! 0 27
"சந்தோஷம். இனி அடிக்கடி நாம் சந்தித்துக் கொள்ளலாம் அல்லவா?”
குளிர்க்காற்று பலமாக வீசியது. மழை பெய்ய அறிகுறிகள் காணப் பட்டன.
"மழை வருகிறாற்போலிருக்கிறது மெஷயர் ரொஷான். நாளை இதே இடத்தில் சந்திப்போமே, குட்நைட்" என்று கூறி அவள் காரிலேறிச் சென்றுவிட்டாள்.
மூன்றாவது மாடியில் மின்தூக்கி மூலம் வந்திறங்கினேன். அங்கு பரிமாறப்படுவது சைவ உணவு. இன்று ஒரு நாள் நெய்த்தோசை சாப்பிட்டுப் பார்ப்போமே என்று எண்ணி உள்ளே நுழைந்தேன்.
"ஐயா, நமக்கு ரெண்டு நெய்த்தோசை கொண்டுவாங்க" என்று எனக்குத் தெரிந்த தமிழில் கூறினேன்.
வெயிட்டர் சுடச்சுட இரண்டு தோசைகளையும், சாம்பாரையும் என் முன்னால் வைத்தான். கூடவே கத்தியும் முள்ளும் இருந்தன.
"இது வாண்டா. நமக்குக் கையால் சாப்பிடேலும்" என்று கூறி மெதுவாக தோசையைச் சாம்பாரில் தோய்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மிகவும் சுவையாக இருந்தது.
டைனிங் ஹோலின் மறுகோடியிலிருந்த எனது மனைவி யாரோ இருவருடன் சர்க்கரைப் பொங்கலும், சிங்களக் 'கவுங் பலகாரமும் உண்டு கொண்டிருப்பதைக் கண்டேன்.
நான் ஒரு சிங்களவன். என் மனைவி ஒரு தமிழ்ப் பெண். அவள் பெயர் கல்யாணி அவளும் ஒரு டொக்டர் காதல் திருமணம். அவளுடன் கூட இருந்தவர்களில் ஒருவன் எனது நண்பன் டொக்டர் சில்வா. மற்றவன் அவன் சிநேகிதன் மேற்கத்தியவன். அவர்கள் என்னைக் கவனிக்கவில்லை.
அவர்கள் சாப்பிட்டுவிட்டு எழுந்தனர். சில்வாவின் நண்பன் கல்யாணி யின் கையைப் பிடித்து அழைத்து வந்தான். கல்யாணி சடாரெனத் தன் கைகளை உதறிக்கொண்டு தள்ளி நடந்தாள். தன் நண்பன் பண்பற்ற செயலறிந்து சில்வாவுக்கு மனவருத்தம்.
எனது மேசையருகே அவர்கள் வந்தனர். ஆறு ஜோடிக் கண்கள் ஒரே நேரத்தில் என்னைப் பார்த்து ஆச்சரியத்தில் மிதந்தன. சமாளித்துக் கொண்டர்கள். "ரோஷான், மை டியர் தங்கள் புதிய காதலி எங்கே? நான்காவது மாடியில் மம்போ ஆடியவளைக் காணவில்லை" என்று என் மனைவி கேட்டாள்.
"என்ன கல்யாணி ஹை ஸொஸையிட்டிப் பெண்ணாகிய நீயே
இப்படிக் கூறி அபத்தம் விளைவிப்பதா? டான்ஸ் ஆடினால் தவறா? தவறாக நாங்கள் ஒன்றும் நடக்கவில்லையே!”

Page 21
28 0 கே.எஸ். சிவகுமாரன்
"நீ மாத்திரம் என்னை விட்டுவிட்டுப், பிற ஆடவர்களுடன் உண வருந்தலாமா! படித்தவர்கள் நாம், நாகரிகமாகப் பழகுவதற்கு உன் தமிழ்ப் பண்பு இடங்கொடுக்கவில்லையோ என்னவோ?"என்று கூறிய நான், மேலும் தொடர்ந்தேன்.
"ஆனால் ஒன்றை மெச்சுகிறேன் கல்யாணி! தமிழ்ப் பெண்கள் பலரும் பொதுவாகப் பண்புள்ளவர்கள்தான் என்பதைச் சற்றுமுன் நிரூபித்து விட்டாய் கல்யாணி உனது செயல் கோடி பெறும் கண்மணி வாழ்க நீ தமிழணங்கே" என்று கூறி பெரியதொரு விரிவுரையை முடித்து வைத்தேன்.
"தங்கள் பண்பைத் தெரியாமலா, நான் பிற இனத்தவராகிய உங்களைக் காதலித்தேன்?" என்று கூறி என்னை வந்து அணைத்துக் கொண்டாள் என் மனைவி.
(கதம்பம் ஒகஸ்ட் 1960)

கண்ணெடுத்தும் பார்ப்பேனோ கன்னியரை
இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் வண்டி இலக்கம். 16 பாமங்கடை வெள்ளவத்தைச் சந்தியை அண்மி துரித கதியில் ஹவ்லொக் வீதி வழியே ஒடிக் கொண்டிருக்கின்றது.
வண்டிச்சாரதிக்குப் பின்னாலிருக்கும் ஆசனத்தில் ஒரு சிறிய பெண் வீற்றிருக்கிறாள்.
வண்டியில் கூட்டம் நிரம்பியிருந்தமையாலும், அப்பொழுதுதான் நான் அவ்வாகனத்தில் ஏறினமையாலும், கடைக்கோடியில் நின்றுகொண்டிருக்கி றேன்.
சாரதிக்கு முன்னால் தலைமேலுயரத்தில் ஒரு பெரிய நீள் கண்ணாடி!. அதில் அவள் மொட்டவிழும் லாவண்யப் பெண்மை, பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது.
அவள் ஒரு பறங்கிப் பெண் வழமையான பறங்கிப் பெண்களை நான் பொருட்படுத்திப் பார்ப்பதில்லை. ஏனெனில் ஆண்மை கலந்த பெண்மை அவர்களிடம் இயல்பாகவே உள்ளது!
ஆனால்! பள்ளிக்கூட மாணவிபோலும், பட்டணத்துப் பணிப்பெண் போலும் காட்சி அளிக்கும் அச்சிறிய சுந்தரியின் எழிலில் அடக்கமான பெண்மை, தேஜசுடன் சுடர்விட்டு ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றது.
சற்றும் இலட்சியம் செய்யாத மேல் தளத்தாரின் பார்வை! பெருமைக்காரி, அகங்காரி போல தோற்றமளித்தாலும், அகத்திலே பால் மணம் மாறாக் குழந்தையின் களங்கமிலா நெஞ்சத்தின் நெகிழ்வை, புறத்தோற்றத்திலும் இனங்கண்டு கொள்ள முடிகின்றது.
பேதமையைத் தெளிவுறுத்தும் முகப் பிரதி பலிப்பு! அது எப்படி உமக்குத் தெரியும்? என்று தானே கேட்கிறீர்கள்? எனக்குத் தெரியும்? ஒருவரைப் பார்த்தவுடனேயே, அவரது குணநலன்களைப் பற்றிக்

Page 22
30 0 கே.எஸ். சிவகுமாரன்
கூறிவிட என்னால் முடியும்.
ஒல்லாந்துப் பெண்களுக்கே உரித்தான சருமம். அது ஒன்றும் என் மனதைக் கவரவில்லை. நிறத்தில் என்ன இருக்கிறது?
ஆனால் மருள மருள விழிக்கும் கயலழகு, என்னைக் கவர்கின்றது.
இதழ் விரிக்கக் காத்திருக்கும் மொட்டுப்போன்ற குமுதவாய்! அதை அவள் சற்றே திறந்து திறந்து மூடுவதே மெருகேற்றிய தனியழகு!
நிலைக்கண்ணாடிக்குள் அவள் பிம்பத்தை உற்றுப் பார்த்து நிற்கின் றேன்.
நான் பார்ப்பதை அவள் கண்டுகொள்கிறாள்.
முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு யன்னலூடே வெளிப்புறக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
அதன் அர்த்தம்!
தான் என்னை அலட்சியப்படுத்துகிறளாம்.
வேறு யாரும் பெண்ணாயிருந்தால் 'பூ' என்று நானும் முகம் சுளித் திருப்பேன். ஆனால், இந்தப் பெண்ணோ?
எவ்வளவு வேண்டாவெறுப்பாயிக்கிறாளோ, அவ்வளவுக்கு என் இதய நரம்புகளைத் தடவிக்கொடுக்கிறாள்!
சிறிது சிரிக்கிறேன்.
அதைக் கண்டு கொண்டு, தலையைக் கொஞ்சலாகச் சொடுக்கிவிட்டு என்னைப் பாராமல் தான் சிரத்தைக் கவிழ்த்துக் கொள்கிறாள்.
ஓ! எப்படிச் சொல்வேன் அவ் ஒயிலை?
இப்பெண்ணின் உடலழகையோ உடையழகையோ முகவழகையோ வருணிக்க நான் விரும்பவில்லை!
பொருத்தமான இடங்களில் இளமையின் பூரிப்பைக் காண முடி கின்றது என்று மாத்திரம் சொல்லி நிறுத்திவிடுகிறேன்!
பஸ் வண்டி, கோட்டை மில்லர்ஸ் ஷோப் முன்னால் வந்து நிற் கின்றது.
அணங்கும் இறங்குகிறாள்! ஆட்களும் இறங்குகின்றனர்! நானும் இறங்குகின்றேன்!
அது அன்று!

கண்ணெடுத்தும் பார்ப்பேனோ கன்னியரை 3ெ1
இன்றோ?
'லோட்டஸ்' வீதியிலிருந்து தெற்கு நோக்கி ஒடக்காத்து நிற்கின்றது, 102 ஆம் இலக்க வண்டி!
இது ஒரு தட்டு நீண்ட 'டீசல் வண்டி கூட்டம் உள்ளே நிரம்பிவழி கின்றது.
பி. ப. நாலரை மணியல்லவா?
வண்டியின் பின்பக்கவாட்டுக் கோடியிலுள்ள நுழைவாயிலுக்கு எதிரே இருக்கிறாள் அந்தக் கன்னி!
இன்றைக்கென்று ஷவரம் செய்யவில்லை. உடுப்பும் கசங்கிக்கிடக் கின்றது. கையில் கடதாசிப் பொட்டலங்கள் வேறு. எனக்கே என்னைப் பார்க்க அசிங்கமாயிருக்கிறது.
அவளுக்குப் பக்கத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன். வண்டி ஒடிக்கொண்டிருக்கின்றது. இன்று அவளை நேர்கொண்டு பார்க்க எனக்குக் கூச்சம்! வண்டி பாதையின் வளைவு திருப்பங்களில் வெகு லாகவமாக ஓடினா லும் வண்டியின் வேகத்திற்கு பிரயாணிகள் சாய்ந்து மோதி குலுங்கிக்கொ ண்டிருக்கிறார்கள்.
கையில் பொருட்கள் இருக்கின்றமையால் நிற்கும் சக்தியை இழந்து பொத் தென்று அவள் மடி மீது பொட்டலங்களைப் போட்டு, அவள் அம்மணமான தோள்களால் என் கைகளை விளையாடவிட்டு ஸ்பரிஸம் கொண்டாடுகிறேன்.
எல்லாம் தற்செயலாகத்தான்! விபத்து!
நங்கை கொல்லெனச் சிரிக்கிறாள். எனக்கு வெட்கமும் கோபமும் என்னை பரிகசிக்கிறாள் அல்லவா? அவளை முறைத்துப் பார்க்க எண்ணி என் விழிகளை அவள் பக்கம் திருப்புகிறேன்.
ஐயோ கண்றாவியே! அதையேன் கேட்கிறீர்கள்? என்னைப் பார்த்துப் பல்லையிளரித்த அந்தப் பெண்ணின் பற் கோரத்தைக் காணச் சகியாது.
மனம்திறந்து அவள் இதழ் விரிக்கையில், விகாரமான அவள் முகத்தைக் காண மனதில் உறுதி வேண்டும். திட்டுத் திட்டாக பவுடர் பரப்பிய அவள் வதனம் பெரிய பருக்களால் நிறைந்திருக்கிறது.

Page 23
32 0 கே.எஸ். சிவகுமாரன்
சீ சீ இதென்ன அழகு? தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகாய்தான்
இருக்கிறது. கிட்ட நெருங்கினாலோ?
"Nice from far and tar from nice' 6Taipavair auntuSci)
என்னத்தைப் போடலாம்?
இன்னும் அவளருகே நின்றுக்கொண்டிருப்பேன் என்று நினைக்கிறீர் களா? காலியான இடத்தில் அமர்ந்து கொள்கின்றேன்.
ஹ் ஹ"ம் கண்ணெடுத்தும் பார்ப்பேனோ அழகிய கன்னியரை?
發 ↔ 會
(வீரகேசரி 1961)

ஆள்மாறாட்டம்
ஒரு 'புக்போஸ்டையும் சில கடிதங்களையும் என்னிடம் கொடுத்து விட்டுப் போனான், போஸ்ட்மன்.
பத்திரிகையை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். 'லங்காஸ் டைஜெஸ்ட் என்னும் சஞ்சிகையின் சமீபத்திய இதழ் அது. அப்பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் கொட்டை எழுத்தில் பிரசுரிக்கப் பட்டிருந்தன. என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. நூறு ரூபாய் பரிசை எனக்கு அளித்திருந்தார்கள்.
மற்றொரு சிறுகதை, பாராட்டுக்குரிய சிறுகதையாகத் தெரிவு செய்யப் பட்டிருந்தது. அக்கதையை எழுதியவரின் பெயர் ஷாமினி டீ சேரம் என்றிருந்தது.
எனக்குப் பரிசு கிடைக்காதென்றெண்ணியே கதையை அனுப்பி யிருந்தேன். ஆனால், பரிசு கிடைத்த பின் என் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.
என்னுடைய மற்றக் கடிதங்களையும் பிரித்துப் பார்த்தேன். ஒரு கவருக்குள் ஒரு நூறு ரூபாய் "செக் இருந்தது.
'லங்காஸ் டைஜெஸ்ட் பத்திரிகை அனுப்பியிருந்தது. உடனேயே 'செக் கையும் எடுத்துக்கொண்டு 'பாங்கிற்குப் போனேன்.
'செக்கை மாற்றிக் கொண்டு வீடு திரும்பும் பொழுது, எனது வீட்டு வாசலில் ஓர் இள மங்கை நிற்பதைக் கண்டேன். அவளை அழகி என்று கூற முடியாவிட்டாலும், அவளில் ஏதோ காந்த சக்தி இருப்பதாக எனக்குத் தோன்றியது.
"யாரைப் பார்க்க வேண்டும்?” என்று ஆங்கிலத்தில் கேட்டேன். "உங்களைத்தான்” என்று தேன் குரலில் பதிலளித்தாள்.
எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. முன்பின் தெரியாத பெண்ணொருத்தி வந்து என்னைப் பார்க்க வேண்டும் என்றால் மேலும் கொழும்பில் எனக்குத் தெரிந்த பெண்கள் ஒருத்தருமில்லையே!

Page 24
34 0 கே.எஸ். சிவகுமாரன்
நான் வெள்ளவத்தையில் ஒரு தனி அறை எடுத்துக்கொண்டு வசிப்பவன்.
அவளை உள்ளே வரும்படி அழைத்துச் சென்றேன். 'விடுவிடு என்று என் பின்னாலேயே எனது அறைக்கு வந்தாள். அங்கிருந்தது ஒரு நாற்காலிதான். அதில் அவளை அமரும்படி கூறினேன்.
அவளுக்கு முன்னால் நான் இருப்பதா? எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. உடம்பு வியர்த்துக் கொட்டியது. நான் நின்று கொண்டிருந்தேன். கால்கள் படபடவென ஆடின. நான் நின்ற தோரணையைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வந்திருக்க வேண்டும். அடக்கிக் கொண்டாள். என் மேல் இரக்கப்படுவது போல சோக நகை புரிந்தாள். பின்பு தன்னை அறி முகப்படுத்தினாள்.
"நான்தான் ஷாமினி சேரம் வறிய பெண் குடும்பத்தில் நான் மாத் திரமே உழைப்பது. வீட்டில் எனது தாயும் நானும்தான். அம்மா நோய் வாய்ப்பட்டுப் படுத்திருக்கிறாள். நான் எஸ்.எஸ்.சி. பாஸ் பண்ணிவிட்டு ஒரு வக்கீலிடத்தில் டைப்பிஸ்டாயிருக்கிறேன்.
"எனக்குச் சிறுவயதிலிருந்தே வாசிப்பது மிகவும் பிடிக்கும். சிறுகதை களை எழுத எப்படியோ பழகிக் கொண்டேன். நான் எழுதிய எத்தனையோ சிறுகதைகள் "லங்கா டைஜெஸ்ட்டில் பிரசுரமாகியிருக்கிறதே"
"ஆமாம் படித்திருக்கிறேன்"
"சிறுகதைப்போட்டி என்றதும் ஏதோ ஒரு சக்தி என்னை எழுதத் தூண்டியது. என் வாழ்வையே ஒரு எழுத்தோவியமாகச் சித்திரித்திருந்தேன். அதைப்போல ஒரு சிறுகதையை நான் இதுவரையில் எழுதியது கிடையாது. இனிமேலும், அக்கைவண்ணம் வருமோ என்பது சந்தேகந்தான். பாருங்கள்! என் துரதிர்ஷ்டத்தை. பரிசு எனக்குத்தான் நிச்சயம். நூறு ரூபாவை வைத்துக் கொண்டு என் வயோதிபத்தாயைப் பராமரிக்கலாமே என்றெல்லாம் கனவு கண்டேன்.
"ஹ்ம் வெறும் ஆகாயக் கோட்டைதான்!
நீங்கள் போட்டியில் வெற்றி பெற்றீர்கள் என அறிகிறேன். எனது மனமார்ந்த பாராட்டுதல்கள். பாருங்களேன், எனது சொந்தக் கஷ்டங் களைக் கொட்டித் தள்ளுகிறேனேயல்லாமல், தங்களைப் பாராட்டக்கூட வில்லை! அவ்வளவு மனவிரசம்.
"நீங்கள் ஒர் எழுத்தாளரென்பதும், இங்கு வசிப்பவரென்பதும் எனக் குத் தெரியும். ஆனால், தங்களுக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை.
\ "நான்கூட அண்மையில்தான் வசிக்கிறேன் தெஹிவளையில்".
"அப்படியா"

ஆள்மாறாட்டம் 3ெ5
ஆமாம். எனது தாயார் படுத்த படுக்கையாய் இருக்கிறார். போஷாக் குள்ள உணவுகளைக் கொடுக்கும்படி டொக்டர் கட்டளையிட்டிருக்கிறார். அவற்றைக் கொடுக்க என்னிடம் கையில் பணமில்லை. என் சம்பளமோ வாய்க்கும் கைக்கும் போதாமல் இருக்கும் பொழுது.
"தயவு செய்து நீங்கள் எனக்கு ஒரு நூறு ரூபாய் கைமாத்தாகத் தருவீர்களென்றால், கடமைப்பட்டவளாயிருப்பேன். மாதாமாதம் சிறிய தொகையாகத் தந்து கடனைத் தீர்த்துவிடுகிறேன்.
"மன்னியுங்கள். எனது நிலைமை. தங்களை மன்றாடிக் கேட்க வைத்துள்ளது. நீங்கள் ஒரு எழுத்தாளரானபடியால் என் நிலைமையை அறிந்து இரக்கப்படுவீர்களென்றே தங்களிடம் வந்தேன்”
மூச்சு விடுவதற்காக நிறுத்தினாள் போலும்!
எனக்கு என்ன பேசுவதென்றோ, செய்வதென்றோ ஒன்றும் தோன்ற வில்லை. சற்று யோசிப்பது போல் நின்றேன்.
"ஓ! சீ சீ என்ன வெட்கக்கேடான செயல். சிறிதும் சங்கோஜமின்றித் தங்களிடம் வந்து வாயிழந்து கேட்டேனே! என்னைச் சொல்ல வேண்டும்” என்று கூறிக்கொண்டே வாசலை நோக்கி ஓடினாள்.
"மிஸ் டீ சேரம்”. அவளைக் கூப்பிட்டேன்.
"மிஸ் டீ சேரம்” என்று மீண்டும் கூப்பிட்ட பின்பே திரும்பிப் பார்த்தாள். பின்பு புன்னகையை வரவழைத்துக்கொண்டே என்ருகில் வந்தாள்.
"இந்தாருங்கள். நீங்கள் கேட்ட நூறு ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள். திருப்பித் தருவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு நான் தரும் பரிசாக இதை ஏற்றுக்கொள்ளுங்கள், ஒரு வறிய குடும்பத்திற்கு உதவி செய்தவனாவேன். தங்கள் நட்பைச் சம்பாதித்துக் கொண்டதில் பெரு மகிழ்ச்சி"
"ஓ! தாங்யூ மிஸ்டர் மூர்த்தி. தாங்யூ தங்கள் உதவியை நான் ஒரு நாளும் மறக்கமாட்டேன். உங்கள் பணத்தை விரைவில் திருப்பித் தந்துவிடுகிறேன். "ஒ. கே. மிஸ். தங்களுக்கு என்றும் நான் உதவி செய்யச் சித்தமாயிருக்கிறேன். எனது கதவு தங்களுக்கு என்றும் திறந்திருக்கும்"
"மிக்க நன்றி. தங்களை மீண்டும் சந்திக்கிறேன். சேரியோ"
"GFrfCurri"
என்னைப்போல் ஓர் எழுத்தாளரின் நட்பைச் சம்பாதித்துக் கொண்டதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி. அவளுக்கு உதவி செய்வதில் பெருமை கொண்டேன்.

Page 25
36 0 கே.எஸ். சிவகுமாரன்
அடடே அவள் விலாசத்தைக் கேட்கவல்லவோ மறந்து போனேன்.
பத்திரிகையிலிருந்து வந்த நூறு ரூபாவும் எனது சாப்பாட்டுக் கடைக் கணக்கைத் தீர்க்க உதவியாயிருந்திருக்குந்தான். ஆனால், இவ்விஷயத்தில் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தது சரியென்றே எனக்குப் பட்டது.
போட்டியில் வெற்றி பெற்றதில் மாத்திரம் எனக்கு அளவிலா வியப்பு. எனக்குப் பரிசு வரும் என்று நான் சிறிதளவும் காத்திருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அந்தப் பரிசு பெற்ற கதை 'நேரத்தை வீணடிப்பதற்காக படிக்கக்கூடிய மூன்றாந்தரக் கதை.
எனக்கு அன்றிரவு முழுக்க நித்திரை வரவேயில்லை. பல இன்ப எண்ணங்களுக்கிடையே மூழ்கியிருந்தேன்.
காலையில் நேரங்கழித்தே எழுந்திருந்தேன். ஏராளமான கடிதங்கள் எனக்கு வந்திருந்தன. அனேகமாக எல்லாமே எழுத்தாளர்களிடமும் நண்பர்களிடமிருந்து வந்த பாராட்டுக் கடிதங்கள்தான்.
கடைசிக் கடிதத்தை எடுத்துப் படித்தேன். சிறுகதைப் போட்டியில் பாராட்டுக்குரிய கதையை எழுதிய ஷாமினி டீ சேரத்திடமிருந்து வந்த பாராட்டுக் கடிதம். நேற்றைய தபாலில் சேர்க்கப்பட்டிருந்த அக்கடிதத்தின் வலது முனையில் எழுத்தாளரின் அச்சடிக்கப்பட்ட விலாசம் 'டெம்பிள் ட்ரீஸ், கண்டி என்று தெரிந்தது.
ஆள்மாறாட்டத்திற்கு நான் பலியாகிவிட்டதை அறிந்ததும் என் தலை சுற்றியது. அந்த யுவதியின் சாகஸப் பேச்சில் மயங்கிப் பணத்தைப் பறிகொடுத்துவிட்டேனே என்று ஏங்கினேன்.
அதே சமயத்தில், அடுத்த வீட்டு வானொலிப் பெட்டியிலிருந்து காற்றிலே மிதந்து வந்த 'பெண்களை நம்பாதே என்ற சினிமாப்பாட்டு என் செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது.
(வீரகேசரி - 16.08.1959)

டயறிக் காதலி
Q5rralbL//i 17
இன்று ஞாயிற்றுக்கிழமையாகையால் ரீகலில் மட்னி ஷோ பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
காலிமுக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் காணப்படும் கூட்டம் இன்று ஏனோ என்னைக் கவர்ந்தது.
தெற்கே கோள்பேஸ் ஹொட்டேல், கிழக்கே பாராளுமன்றம். இவ்விரண்டிற்கும் இடையில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் அந்த காலிமுக மைதானத்தில்தான் எவ்வளவு கூட்டம். அருகேயிருக்கும் கடலருகே செல்லும் திரள் திரளான மக்கள் எவ்வளவு குதூகலமாகச் செல்கிறார்கள். அடேயப்பா! பலவின மக்களும் கூடிக் கும்மாளமடித்துச் செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது.
தெற்கு முனையில் இருந்து வடக்கு முகமாக மெல்ல நடந்து கொண்டிருந்தேன்.
எனக்குச் சிறிது தூரத்திற்கு முன்னால் ஒரு பச்சை நிற "பிளிமத் வந்து நின்றது. பதினெட்டு வயதுடைய ஒரு அழகு நங்கை காரிலிருந்து இறங்கினாள். அவள் உடல் அங்கங்களைத் திரட்டிக் காட்டியது அவள் உடுத்திருந்த அந்தச் சிவப்பு நிற ஜக்கெட்டும் ஜீன்ஸும். குதிரை வால்போல் தலையைப் பின்னித் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தாள் கண்ணிற்கு கூலிங் க்ளாஸ் வேறு! ஈவினிங் இன் பரிஸ் வாசனை நாசியைத் துளைத்தது. பலமுறை பார்க்கத் தூண்டும் செளந்தர்யம்.
காரிலிருந்து இறங்கியதும் ஒரு விலையுயர்ந்த பூடிள்' யின் தொடர கடற்கரை அருகே அந்தத் துடியிடையாள் சென்றாள்.
ஆடவரின் கண்கள், ஏன் பெண்கள் கண்கள் கூடத்தான் அவள் மர்லின் மொன்றோ நடையைப் பின் தொடர்ந்தன. அவள் நிச்சயமாக ஒரு 'கறுவாக்காட்டு நங்கையாகவே இருக்க வேண்டும்.
நான் என் வழியே போவதுபோல் சிறிது தூரம் போய்விட்டுப் பின்பு அவளுக்குச் சமீபத்தில் வந்து நின்றேன். கடற்கரை அருகே போடப் பட்டிருக்கும் ஆசனத்திலிருந்து அவள் நாயுடன் விளையாடிக் கொண்டி ருந்தாள். நான் வேண்டுமென்றே அவளருகே நடந்து சென்றேன். அவள்

Page 26
38 0 கே.எஸ். சிவகுமாரன்
தனது தலையை நிமிர்த்திக் கயல் விழிகளால் என்னைப் பார்த்தாள். பின்பு ஒரு புன்னகை பூத்து நின்றாள்.
ஐயகோ! அந்த மோகனப் புன்னகை என்னைக் கொல்லுகின்றதே. நான் பதிலுக்குச் சிரிக்க முயன்றேன். முடியவில்லை. நான் பல்லையிளரித்திருக்க வேண்டும். அவள் என்ன நினைத்தாளோ, தெரியவில்லை. நாயைத் தனது நீண்ட கைகளால் வாரியணைத்துக் கொண்டு காரருகே சென்றாள்.
அடுத்த நிமிடம் அந்தப் பெரிய கார் வீதியில் சென்று கொண்டி ருந்தது.
நொவம்பர் 78
இன்று நான் நேரத்துடனேயே மைதானத்திற்கு வந்திருக்க வேண்டு மென்று நினைத்தேன். மணியைப் பார்த்தேன். ஐந்து மணி. அப் பொழுதும்கூட வெய்யில் காய்ந்து கொண்டிருந்தது. சனங்கள் கொஞ்சங் கொஞ்சமாய் வந்துகொண்டிருந்தனர். என்னருகே கடலைக்காரன் வந்து கொண்டிருந்தான். அவனைக் கூப்பிட்டு பத்துச் சதத்துக்கு வேர்க் கடலையை வாங்கிக் கொண்டேன். கையோடு கைகோர்த்து ஜொலியாகக் காதலர்கள் சென்று கொண்டிருந்த காட்சி என் மனதை என்னவோ செய்தது. ஆயாமார் தங்களுக்கிடையே வம்பளக்க, பிள்ளைகள் பக்கத்தில் நின்று பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஒன்றன்பின் ஒன்றாகக் கார்கள் மைதானத்தை நோக்கி வந்து கொண்டிருந்தன.
2 பூரி. இலக்கத்தையுடைய காரை ஆவலுடன் காத்து நின்றேன். சரியாக 530 மணிக்கு அந்தக் கார் வந்து நின்றது. காரைவிட்டு அந்த யெளவன மங்கை இறங்கினாள். இன்று ஒரு நீல நிற 'ப்ரொக் அணிந்திருந்தாள். அவளது தோற்றத்திற்கும் அளவுக்கும் அது வெகு அழகாகப் பொருந்தியிருந்தது. இன்று இரட்டைப் பின்னலாகத் தலையை வாரியிருந்தாள்.
அவளது கண்கள் என்னைத் துருவிப் பார்க்கவில்லை. சாதாரணமாகவே அவள் கண்கள் என் கண்களைப் பார்க்க நேர்ந்தன. என்னைப் பார்த்த தும் தான் புரிந்து கொண்ட மாதிரி தனது முத்துப் பல் வரிசையைக் காண்பித்தாள். நானும் பதிலுக்குச் சிரித்தேன். அவள் மீண்டும் சிரித்தாள். நானும் அழகாகவே சிரித்தேன். அவள் ரோஜாக் கன்னங்கள் குங்குமச் சிவப்பாவதைக் கண்டேன்.
கடலைக்காரன் எங்கள் இருவரைப் பார்த்தோ என்னவோ தன்னுள் சிரித்துக் கொண்டான்.
ஆவலுடன் பேச வேண்டும்போல் இருந்தது. ஆனால், என் நாக்குத்தான் மேல் வாயுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. நெஞ்சு வேறு திக் திக் என்று

டயறிக் காதலி 0 39
அடித்துக் கொண்டிருந்தது. மேலும் எப்பிடிப் பேச்சைத் தொடங்குவது என்று எனக்குத் தோன்றவில்லை. நாயை இன்று கொண்டுவந்திருந் தாலாகுதல் அதைப்பற்றிப் பேசி நட்பைச் சம்பாதித்திருக்கலாம்.
என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு காரிலேறிக் கொண்டாள். டா டா காட்டிவிட்டு காரின் விசையைத் திருகிவிட்டாள். கார் சிட்டாய்ப் பறந்தது. நானும் ஒரு டாக்சியில் ஏறிக்கொண்டு அந்த பிளி மத்தைப் பின் தொடரச் சொன்னேன்.
சில காலிப்பசங்கள் சீட்டியடித்து ஆரவாரஞ் செய்தனர். கடலைக் காரன் யாருக்கோ எதையோ கூறிச் சிரிப்பதையும் ஒடும் டாக்சியிலிருந்து அவதானிக்க நான் தவறவில்லை.
Ggintaiiba uri 19
சே! நேற்று அவளது வீட்டையாவது தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டதே! எவ்வளவு நேரம் அவளுக்காக நான் வை. டபிள்யூ. சீ. ஏ. முன் காத்து நிற்க முடியும்?
நேற்று அவளது காரைப் பின் தொடர்ந்து போனேனா? போனேன். வை. டபிள்யூ. சி. ஏ. முன் தனது காரை நிறுத்திவிட்டுப் போனவள் போன வள்தான். திரும்பி வரவேயில்லை. டாக்ஸியை நிறுத்தி வைப்பதில் பிரயோசனமில்லை எனப் பட்டது. கையில் சில்லறைகூட அன்று போதாமல் இருந்தது. மேலும், நன்றாய் இருட்டிவிட்டதால், நான் வீடு நோக்கித் திரும்பினேன்.
இன்று நான் கோல்பேஸுக்குப் போவதா வேண்டாமா? வேண்டாமே! வீணாக எதற்குத்தான் அறுபது சதம் பஸ்ஸுக்குக் கொடுக்க வேண்டும்? மேலும், இன்று அவள் மைதானத்திற்கு வருவாள் என்பதற்கு என்ன உத் தரவாதமிருக்கிறது?
ஆனால், அவளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையே! சே! அவளிடம் ஒரு வார்த்தையாவது நான் பேசியிருக்க வேண்டாமா என்னை நொந்து கொள்வதின்றி வேறென்ன செய்ய முடியும்? ஆமாம், அவளல் லவோ முதலில் அந்த மோகானாஸ்திரத்தை என்மேல் வீசினாள். அதனால், அவள்தானே என்னிடம் முதலில் பேசியிருக்க வேண்டும்?
நொவம்பர் 22
இன்று மாலை 630 வரைக்கும் காலிமுகத்தில், என் மனதைக் கவர்ந்தவளைக் காணக் காத்திருந்தேன். மக்கள் பலரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

Page 27
40 0 கே.எஸ். சிவகுமாரன்
நானும் மெளன்ட் லவீனியாவுக்குத் திரும்புவோம் என்று புறப்படும் பொழுது, அந்த 2. பூg. என்னைக் கடந்து சென்று போய் நின்றது. கதவிற்கு வெளியே தலையை நீட்டி, காரில் வந்தேறிக்கொள்ளும்படி தனது மலர்க் கரங்களால் அந்த நங்கை சைகை காட்டினாள். நான் காண்பது கனவுதானா என்று சந்தேகித்தேன். விரைவாக நடந்து சென்று காரில் ஏறிக்கொண்டேன்.
அதிக விசையுடன் கார் ஓடியது. இந்தச் சந்தர்ப்பத்தையிழக்க விரும்பாமல் அவளுடன் பேச விரும்பினேன்.
அவள் மாத்திரம் வாய் திறந்து என்னிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் மெளனம் சாதித்தாள். ஆனால், அடிக்கடி என்பக்கம் திரும்பிப் புன்னகை பூத்துக் கொண்டாள்.
அவளுடன் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் திணறினேன். ஆங்கிலத்தில் பேசுவதா, தமிழில் பேசுவதா என்பதும் தெரியவில்லை. அவள் தமிழ்ப் பெண்ணோ, சிங்களப் பெண்ணோ அல்லது என்ன இனப் பெண்ணோ என்றும் தெரியவில்லை. இந்தக் காலத்தில்தான் அடையாளம் கண்டுகொள்வது சுலபமல்லவே. எதற்கும் ஆங்கிலத்திலேயே. ஆரம்பிப்போம் என்றெண்ணிப் பேச்சை ஆரம்பித்தேன்.
"இப்பொழுது வீதியில் அவ்வளவு வாகனங்கள் இல்லை. அப்படித் தானே?” என்று ஏதேதோ ஆங்கிலத்தில் கூறினேன்.
அவள் ஆமாம் என்ற தோரணையில் அழகாகவே தன் தலையை ஆட்டினாள். வாய் திறந்து பேசினால் முத்துதிர்ந்துவிடுமோ?
மெதடிஸ்ட் கல்லூரியைத் தாண்டி, இடது கைப்பக்கம் காரைத் திருப்பினாள். வழவழப்பான டரெட் ரோட்டில் மணிக்கு 60 மைல் வேகத்தில் கார் பறந்து கொண்டிருந்தது.
"உங்களுக்குச் சிரமம் தந்துவிட்டேன். மன்னிக்கவும். என்னைக் கொள்ளுப்பிட்டி பஸ் ஸ்ராண்டில் நிறுத்தியிருக்கலாம். நான் மவுண்ட் லவீனியாவுக்குப் போகவேணும். மிக்க நன்றி.
தன் செய்கையில் அதிருப்தி கொண்டவள் போல முகத்தைச் சுளித்துக் கொண்டாள். டீ சொய்ஸா வட்டத்தை ஒரு முறை வலம் வந்து அலக்ஸ்ராண்டா வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தோம். நகர சபை மண்டபத்தைக் கடந்து நூதனசாலையைக் கடக்கும் பொழுது அவளுக்குச் சிரமந்தருவதையிட்டு நான் வருந்துவதாகக் கூறினேன்.
அவள் "ஒருக்காலும் இது சிரமமாகாது" என்ற தோரணையில் சித்திரப்பாவை போன்ற தலையை இப்பக்கமும் அப்பக்கமும் ஆட்டிக் கொண்ட பின்பு இன்னொரு புன்னகையை என் மீது வீசினாள்.

டயறிக் காதலி 4ெ1
ஆஹா! அந்தச் சிரிப்பில்தான் எத்துணை காந்தக் கவர்ச்சி. அந்தச் சிரிப்பு உண்மையிலேயே என்னைப் போதைகொள்ளச் செய்தது.
பல்கலைக்கழகத்தைக் கடந்து புள்ளர்ஸ் ரோட் வழியாகக் கார் ஒடிக்கொண்டிருந்தது.
இன்னும் அவள் வாய் திறந்து என்னுடன் பேசவேயில்லை. கண்களாலும், சிரிப்பாலும் ஏதோ மர்மமாகப் பேசிக்கொண்டாள்.
"ஆமாம், உங்களுடைய பெயரை நான் அறியலாமா? என் பெயர் சுந்தரன்"
கார் சந்தியில் வந்து நின்றது. நான் கீழேயிறங்கினேன். அவள் சிரித்துவிட்டு எனக்குக் கைகாட்டிக் கொண்டே மீண்டும் கோட்டையை நோக்கிக் காரை ஒட்டினாள்.
ஹறா! இந்தப் பெண்ணின் பெயர் என்னவோ? சே! அவள் பதில் கூறு முன்பே பம்பலப்பிட்டி வந்துவிட்டதே! அவள் அவ்வளவு விரைவாகக் காரை ஒட்டித்தான் வரவேண்டுமா?
நொவம்பர் 23
வழக்கமாய்ச் சந்திக்கும் இடத்திற்கு இன்றும் போயிருந்தேன். அவள் இன்னும் அங்கு வந்திருக்கவில்லை.
கடலைக்காரன் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் அவன் அடையாளம் கண்டுகொண்டான். தன்னையறியாமலே அவன் உதட்டில் ஏளனச் சிரிப்பு நெளிந்தோடுவதை நான் கவனிக்காம லில்லை. தன் சிரிப்பை அடக்கிக் கொண்டே என்னிடம் பேச்சுக் கொடுத்தான்.
“போன காரியம் வெற்றியா, ஐயா" என்று கேட்டான். அவன் எதைப் பற்றிக் கேட்கிறான் என்று அறிந்திருந்தும் ஒன்றும் தெரியாதவன் போல் நடித்தேன்.
"எதைச் சொல்கிறாய்?”
அவனுக்குச் சிரிப்பு வந்தது? ஹோ, ஹோ என்று அவன் சிரிப்பது எனக்குக் கோபத்தையே விளைவித்தது. அவனைச் சற்று முறைத்துப் பார்த்தேன்.
அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு தன்மேல் கோபப்பட வேண்டாம் என்று வேண்டிக்கொண்டான்.
"பரவாயில்லை. நீ என்னவோ சொன்னாயே? அது என்ன?” என்று அறியாப் பிள்ளைபோல் கேட்டேன். அப்பொழுதுதான் அவன் கூறினான்.

Page 28
42 0 கே.எஸ். சிவகுமாரன்
"பாவம் ஐயா. அந்தப் பெண் கறுவாக்காட்டுப் பணக்காரப் பெண். அழகோ வர்ணிக்க முடியாது. என்ன இருந்தாலும் கடவுள்தான் அவளுக்கு அதைக் கொடுக்கவில்லையே!”
"என்ன? கடவுள் எதைக் கொடுக்கவில்லை?”
"அதுதான் ஐயா. அவள் பேசமாட்டாள். பேசாமடந்தை. ஊமை”
எனக்குத் தலை சுழன்றது. ஆயிரம் சம்மட்டிகளால் யார்ோ மண்டையில் அடிப்பது போலிருந்தது.
(வீரகேசரி - 27.12.1959)

எழுத்தாளன் காதலன்
ஞானசுந்தரம் தனது வீட்டில் ஏதோ ஒரு நாவலைப் படித்துக் கொண்டிருந்தான். கொழும்பில் வசிக்கும் அவன், ஈழத்துப் பிரபல்ய எழுத்தாளர்களுள் ஒருவன். ஞானி என்ற புனை பெயரில் அவன் எழுதும் ஒவியங்களைப் படித்துப் பாராட்டுக் கடிதங்களைப் பலர் எழுதி வருகிறார்கள். அன்றும் அப்படித்தான் ஒரு கடிதம் வந்திருந்தது. கவரைக் கிழித்துக் கடிதத்தைப் படித்தான்.
விபுலானந்தர் லேன், மட்டக்களப்பு
1.1O. 1958 அன்புள்ள "ஞானி அவர்களுக்கு,
தங்களது எழுத்தோவியங்களைப் படித்து மகிழும் ஆயிரக்கணக்கான வாசகர்களுள் நானும் ஒருவன். செந்தமிழ் தீஞ்சுவைக் குழம்பன்னத் தாங்கள் தீட்டும் மணிக்கதைகள், குட்டிக்கவிதைகள், உருசிகரமான கட்டுரைகள் அனைத்தையும் படித்துச் சுவைத்து வருகிறேன்.
தாங்கள் ஒரு பெண்மணி என்று சிலர் கூறிக்கொள்கின்றனர். உண்மை எதுவோ நான் அறியேன்! ஆனால், பெண்மையின் சாயலை உங்களுடைய படைப்புகளின் ஒவ்வொரு வரியிலும் காண்கின்றேன். எண் சுவைப் படைப்புக்கள் பலவற்றையும் தாங்கள் அளிக்கும் விருந்துகளில் கண்டு உண்டு வருகிறேன்.
தங்களுடைய ஒவ்வொரு விஷயத்தையும் விரும்பிப் படிக்கும் நான்,
தங்களுடைய விலாசத்தை 'கலைப்பொழில் பத்திரிகாசிரியரிடமிருந்து
பெற்றுக்கொண்டேன். அடுத்த முறை நான் களியாட்ட நகராகிய கொழும்புக்கு வந்தால், தங்களைக் கண்டு பேச விரும்புகிறேன்.
இங்கனம்
தங்களப்பிமானி
விஜேந்திரன்

Page 29
44 0 கே.எஸ். சிவகுமாரன்
மரீன்ட்ரைவ் வீதி, கொழும்பு. 3. O.1958
அன்புள்ள விஜேந்திரனுக்கு,
தாங்கள் எனக்கு எழுதிய கடிதத்தைத் திருப்பித்திருப்பிப் படித்து மகிழ்ந்தேன். நூற்றுக்கணக்கான விமர்சகர்கள் எனக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் போடுவது என்னால் முடியாத காரியம். கடிதம் எழுதுபவர்கள் அனேகம் பேர் ஆண்கள்தான்.
ஆனால், அவர்கள் எழுதிய கடிதங்கள் எல்லாவற்றையும்விட தாங்கள் எழுதிய கடிதம் என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளது. நான் எழுதுபவற்றைத் தாங்கள் படித்தின்புறுவதையிட்டுப் பெருமை கொள்கிறேன்.
தங்கள் அன்பிற்கு என் நன்றி. தங்களைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசையாய் இருக்கிறது. வீட்டில் நானும் எனது அண்ணனும் தான் வசித்து வருகிறோம். அடுத்த முறை இந்தக் களியாட்ட நகருக்கு வரும்பொழுது கட்டாயம் என்னை வந்து பார்க்க மறவாதீர்கள்.
தங்கள் அன்புள்ள - ஞானி
மீன்பாடும் தேனாடு
O6.O. 958
அன்பிற்குரிய ஞானி அவர்களுக்கு,
தங்களது கடிதம் கிடைக்கப்பெற்று இறும்பூதெய்தினேன். தங்களைப் போன்ற "பெரிய எழுத்தாளர்களிடமிருந்து எனக்குக் கடிதம் வருவது சாமான்யமான காரியமா? ஆமாம், தங்களுடன் தங்கள் சகோதரர் மாத்திரம்தான் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
என்னைப் பார்ப்பதற்கு நீங்கள் ஆசைப்படுவது மிக வியப்பாய் இருக்கிறது. நான் ஒர் அனாதை, கச்சேரியில் எழுதுவினைஞனாக வேலை பார்க்கிறேன். எனக்கு இப்பொழுது 27 வயதாகின்றது. இப்போதைக்குக் கொழும்புக்கு என்னால் வர முடியாததையிட்டு வருந்துகிறேன். எனினும் கூடிய சீக்கிரத்தில் அங்கு வர எண்ணியிருக்கிறேன்.
இத்துடன் எனது புகைப்படத்தையும் அனுப்புகிறேன். பெற்றுக்
கொள்ளவும். தங்களது புகைப்படத்தையும் உடனே அனுப்பி வைக்கும்
படியும் வேண்டுகிறேன். நேரம் வாய்க்கும் பொழுதெல்லாம் எனக்குக் கடிதங்கள் எழுதுவீர்களாயின் மனமிகு மகிழ்வேன்.
தங்கள் அன்புமறவா
விஜே

எழுத்தாளன் காதலன் 0 45
களியாட்ட நகர்
O7. O.1958
என் அன்பே விஜே,
தங்களது எழிலுருவைப் புகைப்படம் மூலம் கண்டு களிப்புற்றேன். மோகனப் புன்னகை தவழும் அந்த முகத்தில்தான் எத்துணை தேஜசு! அந்தக் கூரிய கண்களில்தான் எத்துணை ஒளி அகன்ற நெற்றியின்மேல் விளையாடும் அந்தச் சுருட்டைத் தலைமயிரின் அழகை என்னென்று விபரிப்பேன். தங்களது படத்தைக் கண்டதும் என் மனதைத் தங்களிடம் பறிகொடுத்துவிட்டேன்.
அன்பே,
எழுத்தாளர் ஞானி உண்மையிலேயே ஒரு பெண் என்பதைத் தெரிந்தால் என்ன செய்வீர்களோ தெரியாது. தங்கள் மேல் காதல் கொண்டதையிட்டு எனக்கே வியப்பாய் இருக்கிறது.
காதலரே,
இனிமேலும் என் ஆவலைப் புறக்கணிக்க முடியாது! தயவு செய்து கூடிய விரைவில் இங்கு வந்து என்னைப் பார்ப்பீர்களா? தங்களை அடைய நான் பாக்கியம் பெற்றுள்ளேனா? உங்களையே என் கணவராய் நான் வரிந்து கொண்டேன். நேற்றுப் பிரசுரமான என் கதையில் கூட, கதாநாயகனுக்கு 'விஜே' என்ற பெயரைச் சூட்டியிருக்கிறேனே. படித்தீர்களா?
ஆருயிரே,
எனது புகைப்படம் ஒன்றையும் இத்துடன் அனுப்புகிறேன். தாங்கள் விரைவில் வந்து என்னை ஆட்கொள்வீர்களா?
உங்கள்
ஞானி

Page 30
46 0 கே.எஸ். சிவகுமாரன்
மட்டுநகர்
O8. O.1958
என்னுயிர்க் காதலியே,
பிரபல எழுத்தாளர் ஞானி ஒரு பெண் என்பதை அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
"காதலரே என்று கடிதத்தில் என்னை வர்ணித்ததையிட்டு மூர்ச்சித்தேன்!
என்னிடம் நீங்கள். நீ . காதல் கொண்டிருப்பதையிட்டு புளகாங்கிதம் அடைந்தேன்.
உன்னுடைய எழில்வதனப் புகைப்படத்தைக் கண்டு மயங்கினேன். என் அன்பே நீ அங்கே! நான் இங்கே! எங்ங்ணம் நம் காதல் கைகூடும்? உன் அண்ணன் நம் விஷயத்தில் என்ன சொல்கிறாரோ? அவரைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லையே.
LD/T&DI பொன்னே! வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே! அரும்பொற் பாவாய்! ஆருயிர் மருந்தே!
ஆமாம் கண்ணே, உனது கடிதங்கள் கிடைத்ததும் நான் அடைந்த ஆச்சரியத்திற்கே அளவில்லை!
இதுவரை காதல் கடிதம் எழுதியும், கிடைக்கப்பெற்றும் எனக்குப் பழக்கமில்லை கண்மணி.
அதனாலேயே, இளங்கோவிடமிருந்து இரவல் வசனமெடுத்துக் கடிதத்தைத் தீட்டினேன். நங்கையே! மன்னிப்பாயாக! இக்கடிதம் எழுதும் போது கூட என் கரங்கள் நடுங்குகின்றனவே!
பிரபல எழுத்தாளர் ஞானி யின் காதற் கணவனாக நான் இருப் பதற்குக் கூலி வேறு வேணுமா? அடுத்த வாரம், புதன் கிழமை அங்கு வந்து உன்னைச் சந்திக்கிறேன். மற்றவை நேரில்,
உனது விஜே

எழுத்தாளன் காதலன் 0 47
மீன்பாடுந் தேன்நாட்டிலிருந்து களியாட்ட நகர் வந்து சேர்ந்த விஜேந்திரன், எழுத்தாளர் ஞானியின் வீட்டைக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்தான். புகைப்படத்தில் கண்ட அந்த எழில் நங்கை வாயிலில் கண்டு அவனை வரவேற்றாள்.
"வணக்கம்" நான்தான் விஜேந்திரன். இன்று காலையில்தான் மட்டக்களப்பில் இருந்து இங்கு வந்தேன். தாங்கள்தானே எழுத்தாளர் ஞானி’
"ஓ! அண்ணாவைப் பார்க்க வந்தீர்களா? உள்ளே வாருங்கள்" "அண்ணாவா? அப்படியானால் ஞானி என்பது தாங்களில்லையா?”
"அதில் என்ன சந்தேகம்? நான் அவர் தங்கை "மஹா என்று புன்னகை பூத்து நின்றாள்"
"நிற்கிறீர்களே! அமருங்கள்” என்று கூறி, உள்ளே போனாள். விஜேந்திரனுக்கு எல்லாம் குழப்பமாய் இருந்தது. அப்படியானால் எனக்குக் கிடைத்த அந்தக் காதல் கடிதம்? அந்தப் புகைப்படம் எல்லாம் வெறும் கனவா? இருக்க முடியாது. அந்தப் புகைப்படத்தில் காணப்படும் சுந்தரிதானே என்னுடன் தேன் குரலில் பேசினாள்?
ஆமாம்! ஒருவேளை ஞானி தான் என்னிடம் விளையாடி இருக்கிறாரோ? ஞானி வேண்டுமென்றுதான் எழுதியிருக்க வேண்டும்! அப்படியானால், மஹாவை நான் அடைய முடியாதா? அவள் என்னைத் தெரிந்து வைக்கவில்லையே!
இவ்வாறு தனது எண்ணத் திரைகளை நினைவுக்கடலில் இருந்து அலைமோத விட்டுக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழிந்து, பிஸ்கட்டும் கொக்கோவும் தட்டிலேந்தி, அன்ன நடை போட்டு, ஒயிலாக அவனருகே மஹா வந்தாள். அவளுடன் கூட ஒர் அவலட்சணப் புருஷனும் வந்தான்.
“வணக்கம் சேர். உங்களுடைய முதற் கடிதத்தைப் படித்தேன். நான்தான் ஞானசுந்தரன், ஞானி என்ற பெயரில் எழுதுபவன். இவள் என் தங்கை மஹாலசுஷ்மி.
"உங்களுடைய கடிதத்தைக் கண்டதும் அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது போலாயிற்று, வழக்கமாக நான் வாசகர் கடிதங்களுக்குப் பதிலளிப்பதில்லை. நேரமும் இருப்பதில்லை.
"உங்கள் கடிதத்தை வழக்கம் போல் என் மேசை மீது விட்டெறிந்தேன். இவள் அக்கடிதத்தைப் படித்துவிட்டு உங்களுக்குப் பதில் எழுதியிருக்

Page 31
48 ேெக.எஸ். சிவகுமாரன்
கின்றாள். ஞானியாகப் பாவித்துக் கடிதம் எழுதியிருக்கிறாள். உங்கள்
காதலும் இவ்வளவு தூரத்திற்கு வந்துவிட்டது”
"மன்னிக்கவும்" இனி உங்கள் இருவருக்கும் பேசுவதற்குப் பத்தும்
பலதும் இருக்கும். நான் ஏன் இடையில் வந்து குறுக்கிடுவான்?
"தவிரவும், அவசரமாய் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். பிறகு சாவகாசமாய்ப் பேசிக்கொள்ளலாமே!" என்று ஒரே மூச்சாய்க் கூறிவிட்டு ஓர் அறைக்குள் புகுந்து கொண்டான் ஞானசுந்தரம்.
சிருங்காரக் கதைகளை எழுதி இளம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் எழுத்தாளன் "ஞானி தோற்றத்தில் அவலட்சணமும், பேச்சில் குறும்புமுடையவன் என்று விஜேந்திரன் எதிர்பார்க்கவில்லைதான்.
உண்மையில் நடைபெற்ற சம்பவங்களைக் கேட்டு அதிர்ச்சியுற்று நின்றான்.
அழகுத் தெய்வமாக தங்கை விளங்க, அண்ணன் மாத்திரம் எப்படிக் குரூபியானானோ தெரியாது என்று வியந்து நின்றான். தன்னைப் பேச விடாமல் ஒரே மூச்சாய்க் கொட்டித் தீர்த்துவிட்டு உள்ளே போய் விட்டானே என்று ஆத்திரம் வேறு. ஒரு பக்கம் ஆச்சரியமும், ஒரு பக்கம் மகிழ்ச்சியும் கொண்டு சிலையாய் நின்றான்.
"ஏன் சேர்? உங்களுக்குச் சிலப்பதிகாரம்தான் மிகவும் பிடிக்குமா?” என்று மஹா கேட்டபொழுதுதான் அவன் தன்னுணர்வைப் பெற்றான்!
ஹ். ஹ். என்ன சொன்னீர்கள்?"
"இல்லை, எழுதுவது போல் உங்களுக்குப் பேச வராதோ? என்று கேட்டேன்” என்றாள் மஹா.
அவள் கூறியதன் பொருளை உணர்ந்து கொண்டு கடைக்கண்ணால் அவளைப் பார்த்து, தோளைக் குலுக்கிக் கலகலவென விஜேந்திரன் சிரித்தான்.
அவள் மதிவதனம் குங்குமச் சிவப்பாயிற்று.
(வீரகேசரி 24.04.1960)

யாழ்ப்பாணச் சூழல் கதை

Page 32
தாழ்வு மனப்பான்மை
g(upstrT
என்னைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காது. அத்தானாம் அத்தான்!
காரணமில்லாமல் என்மேல் அவருக்கு வெறுப்பு. கண்டாலும் காணாதமாதிரிப் போய்விடுவார். பேசினாலும் வேண்டாவெறுப்பாக உதிரி வசனங்களை உதிர்த்துவிட்டு முகத்தைக் கடுமையாக வைத்துக்கொள்வார். எனக்குச் சினம் சினமாக வரும்.
என்ன செய்வது கடுமையாக நானும் அவரைப் பேசிவிட்டேனானால்,
அவர் முரட்டுத்தனமாய் நடந்துகொண்டு. பின் அசம்பாவிதமான சம்பவங்கள். சே! சே! அப்படி ஒன்றும் கெட்டவர் அல்ல அவர்.
இவருக்கொரு பாடம் படிப்பிக்க வேண்டும்.
நான் தான் வலிய வலியப்போய் இவரிடம் சிறுமைப்படுத்திக் கொள்கிறேனாக்கும் ஒ. ஆமாம்! நாமும் இவரைப்போல் அலட்சிய மாயிருந்தால். மிஞ்சினால். கொஞ்சாமலா போய்விடுவார்?
இத்தனைக்கும்.
சின்ன வயது முதல் நாங்கள் கூடி விளையாடினவர்கள் தான். சின்னச்சோறு முதல் புருஷன் பெண்டாட்டி விளையாட்டு வரை 'மியூஸிக்கல் செயர் முதல் "கெளபோய் விளையாட்டு வரை எல்லாம் நாங்கள் எத்தனையோ விளையாட்டுக்களை விளையாடியிருக்கிறோம்! ஊடலும் கூடலும் எத்தனையோ தரம், எத்தனையோ தரம் 'டு விட்டாலும் பேசாமல் இருக்க முடிவதில்லை.
ஹ"ம் அதெல்லாம் எம் இளம்பராயத்தில் இடையில் எத்தனையோ வருடங்கள் நானும் அவரும் சந்திக்க வாய்ப்பிருக்கவில்லை என்பது உண்மையே; ஆனாலும் உறவு மறந்து விடுமா? அந்தப் பழைய நாட்களின் இன்ப அனுபவங்கள் நினைவிற்கு வராமலா போகும்? என்னதான் இருந்தாலும் பழமையை முற்றாக மறக்க முடியுமா?
ஒருவேளை.
சூழ்நிலையினாலும் தொடர்பின்மையாலும் பழமையை முற்றாகவே மறக்க முடியுமா?

தாழ்வு மனப்பான்மை 5ெ1
இந்த ஐப்பசிக்கு எனக்குப் பதினெட்டு வயது தொடங்குகிறது.
அத்தான் சிறு வயதிலேயே கொழும்புக்குப் படிக்கச் சென்றார். நான் பிறந்த மண்ணிலேயே படித்து வந்தேன். இப்போது எஸ்.எஸ்.ஸி. பாஸ் பண்ணிவிட்டு நான் படித்த கல்லூரியிலேயே உபாத்தினியாய் இருக்கிறேன்.
அத்தான் இப்போது டாக்டருக்குப் படிக்கிறார். கொழும்புச் சீவியமாய்ப் போய்விட்டது அவர் வாழ்வு. வருடத்தில் ஒரு முறையாவது யாழ்ப்பாணம் வந்துதான் போவார். ஆனால் வைத்தியக் கல்லூரியில் சேர்ந்தபின் அவர் யாழ்ப்பாணம் வருவதேயில்லை. மாமாவும் மாமியும் தான் அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வருவார்கள்.
நேற்று
பல நாட்களின் பின்
யாழ்ப்பாணம் வந்திருக்கிறார்.
அதுவும் மூன்றுமாத விடுதலையானபடியால்தானாம் ம் இங்கு வந்திருக்கிறார். இல்லாவிட்டால் கொழும்புத்துரை இங்கு ஏன் வரப் Guntspitti
இவரை எண்ணியெண்ணி நான் வாடாவிட்டாலும் அவரைப் பார்க்கவேண்டும், பேச வேண்டும், சரளமாகப் பழக வேண்டும் என்று எனக்கோர் ஆவல், சாம்பல் படர்ந்த தணல் போன்று கனன்று கொண்டிருந்தது உண்மைதான். அதுவும் நேற்று அவர்கள் வீட்டிற்கு அத்தான் அவை வீட்டிற்கு நானும் அம்மாவும் போய்ப் பார்த்த பின் என் மனம் ஒரு நிலையிலில்லை.
அவர் தனதறையில் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். வெளியில் வர வேயில்லை. பின் மாமி தான் அவரைக் கூப்பிட்டு எங்கள் வருகையை அவருக்குத் தெரிவித்தார். அதன் பின். அந்தத்துரை வந்து. எங்களருகே நின்று கொண்டிருந்தார்.
“எப்படித் தம்பி சுகமாயிருக்கிறியளோ?" என்று என் அம்மா அவரிடம் கேட்டாள்.
"ஓம். இருக்கிறோம்"
பேச்சுத் தொடரவில்லை. அதற்கிடையில் அவரைத் தேடி ஒருவன் வந்திருந்தான். அவர் என்னிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார் ஒன்றும் கூறாமலே,
அவருக்கு
கொழும்பில் எத்தனை எத்தனை சிநேகிதிகளோ? வண்ண வண்ண

Page 33
52 0 கே.எஸ். சிவகுமாரன்
உடைதரித்து, சிங்காரமாக அலங்கரித்து 'நாகரிகமாகப் பழகும் பெண்மணிகள் எத்தனை பேரோ?
கேவலம்
பட்டிக்காட்டுப் பெண் நான் எங்கே? அத்தானின் மேல்நாட்டு மோகத்துக்கேற்ற விதத்தில் அவரை வளையவரும் அந்த நாரி மணிகள் எங்கே?
சீ சீ இப்படியெல்லாம் நான் எண்ணக்கூடாது பாவம் அப்பா!. அவர் ஒருவேதை. தானும் தன்பாடும் என்று படிப்பில் கவனம் செலுத்துபவரோ. படிப்பில் சூரப்புலிதான்! அல்லாவிட்டால் டாக்டராவது சுலபமா என்ன?
ஆனால். இவர் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லையே. ஆணவம். பணத்திமிர். வித்துவக் காய்ச்சல். ஆனால். பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்களே. என் அழகைக் கூடவா அவரால் இரசிக்க முடியவில்லை!
மாமாவும் மாமியும் நல்லூரிலும், எங்கள் குடும்பம் கந்தரோடையிலும் இருந்தபோதிலும் இரு குடும்பங்களுக்குமிடையில் பரஸ்பர போக்கு வரத்தும் நல்லுறவும் இருக்கத்தான் செய்தன.
அம்மாவின் வேண்டுகோள்படி அவர்கள் எல்லோருக்கும் எங்கள் வீட்டில் இன்று விருந்து. அதாவது மாமா, மாமி, அத்தான் மூவருக்கும். எங்கள் வீட்டிலும் மூன்று பேர்தாம்!
காலையில் அவர்கள் வந்ததும் நான்தான் போய் வரவேற்றேன். அம்மா குசினியில் வேலையாயிருந்தாள். அப்பா தோட்டத்தில் கத்தரிச் செடிகளை நட்டுக்கொண்டிருந்தார்.
"வாருங்கோ. மாமா! வாங்கோ மாமி" என்று அவர்களை வரவேற்று விட்டு,
"அம்மா, அம்மா! அத்தான் அவை வந்திருக்கினம்" என்று கூவிக் கொண்டே நான் உள்ளே ஒடினேன்.
அம்மாவும், அப்பாவும் போய் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் கள். நான் கோப்பியைக் கலந்துகொண்டு போய் முதலில் அத்தானிடம் நீட்டினேன். அவர் எழுந்து நின்று 'டிறேயிலிருந்து கோப்பையை வாங்கிக்கொண்டு தாங்ஸ்' என்றார்.
இது என்ன மோடியோ! இப்படியும் மரியாதையா?
நான் அவரைப் பார்த்து முறுவலித்தேன். அதைக் கவனிக்காதது போல். இல்லை கண்டும் பொருட்படுத்தாது கதிரையிலிருந்து கொண்டார். அவர்

தாழ்வு மனப்பான்மை 0 53
என்னை உதாசீனப்படுத்துவதை நான் அறிந்து கொண்டேன் என்பதைப் புரிந்தது போலக் காட்டியது அவர் முகம்.
ஹ"ம்! இவர் ஏன் என்னை வெறுக்க வேண்டும்? என்மேல் கோபங் கொள்வதற்கு நான் என்ன குற்றம் செய்தேன்? சரி சரி! இவர்மேல் எனக்கொரு சபலம் ஏன் வரவேண்டும், பார்ப்பதற்கு அவர் ஒன்றும் அப்படி சுந்தரபுருஷரல்லவே?
ஆனால்.
ஆஜானுபாகுவான தோற்றம், கம்பீரமான பார்வை, பரந்த நெற்றி, நீண்ட நாடி, சதுர முகம், மிடுக்கான நடை அலட்சிய மனப்பான்மை. சுருக்கமான பேச்சு, அடேயப்பா, இப்படிப் பேசாமடந்தையாக இருக்க அத்தான் எங்கு கற்றுக் கொண்டார்? இந்தக் குறுகிய இடைக்காலத்தில் இவ்வளவு மாற்றமா?
ஆனால். அத்தான் என்னை அலட்சியம் செய்ய நியாயமேயில்லை. இவருக்கு என்னிடம் கூச்சமா? அல்லது என்னை வெறுக்கிறாரா? பெரியவர்கள் மனம்விட்டுப் பத்தும் பலதும் பேசிக்கொண்டிருந்தார்கள் இவரும் கூடவே இருந்தார். அவர்களுடன் மெழுகுப் பொம்மைபோலே உறவுக்காரர் வீட்டில் பிறத்தியார் போல் பழகும் இவரை என்னென்பது? வெறும் ஆணவக்காரர் உள்ளே வந்து என்னிடம் பேசினால் என்னவாம்?
கேவலம்.
வருங்கால டொக்டர் வெறும் எஸ். எஸ். சி. பெண்ணை விரும்புவாரா என்ன? ஆனால், அதற்கு ஈடுகொடுக்கத்தான் அழகும் பணமும் இருக்கின்றனவே?
ஒரு வேளை நான் ஆங்கிலம் பேசமாட்டேன், நாலுபேருடன் பழக மாட்டேன் என்று நினைக்கிறாரோ?
என் உள்ளக்கிடக்கையைக் கண்களினால் எத்தனை முறை தெரிவிக்க முயன்றிருக்கிறேன். கண்ணோடு கண் நோக்கினால் தானே!
தமிழ்ப்பண்பாட்டுடன் நாலு பேரோடு பழக எனக்குத் தெரியாதா என்ன? தொல்காப்பியருடைய பெண்ணின் இலக்கணத்தில் அத்தானுக்கு நம்பிக்கையில்லையோ? அவர் தமிழன் என்பதை மறந்து விட்டாரோ?
புதிர்தான்..
இவர் ஏன் என்னை வெறுக்க வேண்டும்?
போயும் போயும் இவர் மேல் ஏன் தான் நாட்டம் கொள்ள வேண்டும்?

Page 34
54 0 கே.எஸ். சிவகுமாரன்
வெறுப்பின் எல்லைதான் அன்பின் உதயமோ? நான் அவரை வெறுக்க வெறுக்க, அவர் என்னை வெறுக்க வெறுக்க, வற்றாத ஜீவநதி போல் அன்பு பரிணமித்தூற்றெடுக்கிறது.
ஏன் இது? அவரிடம் எனக்கொரு கவர்ச்சி! பழைய அனுபவங்களின் பசுமை நினைவோ?
ஹ"ம் நான் என்றொரு பொருளிருப்பதாக அவர் காட்டிக் கொள்ள வில்லையே. இது எத்தகைய கொடுஞ்செயல்?
எனக்கு அவர்கள் முன்னிலையில் போயிருந்து பேச வெட்கமாய் இருந்தது. என் அறைக்குள்ளேயே இருந்துவிட்டேன்.
கணேஷ்:
நேரங்கழிந்தது!
எவ்வளவு நேரந்தான் அறைக்குள் அடைந்து கிடப்பாள் ஜமுனா! வெளியே வந்தாள்.
தென்றலில் அசைந்தாடும் பைங்கொடிபோல் மெல்ல மெல்ல நடந்து வந்தாள்.
ஆஹா! அவள் அங்க அசைவுகளில் எத்துணை மென்மை. எத்துணை நளினம், தோற்றத்திற்கேற்ற உயரம். பிறை நுதலில் செந்தூரப் பொட்டு வாரியிழுத்த கேசம், காதோரங்களில் சுருண்டு சுருண்டிருந்தது.
இரட்டைப்பின்னல், றிபன் முடிச்சு, சிறிய கண்கள், செந்தாழை உதடுகள். செக்கச்சிவந்த முகம். புன்னகை மலரும் அந்த வதனத்தில் ஒரு சாந்தி, தெய்வீக ஒளி மெல்லிய பூங்கரம். காந்தள் விரல்கள் கைத்தறி உடை
அவள் என் மைத்துனி!
எனக்கு மணப்பெண்ணாகவும் மாறலாம் தடைகள் எதுவும் இல்லை.
ஜமுனாவுடன் தனிமையில் பேச எனக்குப் பல சந்தர்ப்பங்கள் வாய்த்தன. ஆனால் அவற்றை நான் தவிர்த்துவிட்டேன்.
"ஜமுனா இஞ்சவாம்மா, இப்படியிரு” என்று தன் பக்கத்தில் உள்ள நாற்காலியை காட்டி அழைத்தார் என் தாயார். அவள் கூனிக்குறுகி, நெளித்து வளைந்து, கொண்டு நாற்காலியில் அமர்ந்தாள்.
என்னையறியாமலே அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பப்பா கண்ணைக் கூசவைக்கும் அழகு. ஒருமுறை பார்த்தாலே போதும்.
மனதில் பதிந்துவிடும் வடிவம். பல முறை பார்க்கத்தூண்டும் செளந்தரியம். எழுத்தில் வருணிக்க முடியாத ஒர் உணர்ச்சிப் பிழம்பு அவள்.

தாழ்வு மனப்பான்மை 0 55
அவளும் என்னைப் பார்க்கிறாள். நான்கு கண்களின் சந்திப்பினால் சிறிது கலக்கம். பின்னர் தெளிவு. குமுதவாயில் குமிண் சிரிப்பு மொட்டவிழ்ந்தது.
நான் சடுதியாகத் தலையைத் திருப்பிக் கொள்கிறேன். அவள் வெட் கிக்கூனி ஏமாற்றத்தோடு தலை குனிகிறாள்.
"இப்ப என்ன விடுதலையா ஜமுனா?” என்று என் அம்மர் அவளிடம் கேட்டாள். ܟܕ
"ஓம் மாமி" என்று கூறிவிட்டு என்னை பார்த்தாள், அவ்விளங்காரிகை. நான் அவளுக்கு அப்பால் இருந்த அவள் அம்மாவைப் பார்த்தேன்.
விருட்டென்று எழுந்து ஓடினாள் ஜமுனா. அவளுக்கு கோபம் வருவது நியாயந்தானே!
"எங்கே மோனே போகிறாய்?”
"வாறன் மாமி, ஒரு வேலையிருக்குது” அம்மாவும் மாமியும் குசினிக்குள் சென்றனர். அப்பாவும் மாமாவும் உரையாடுவதற்கென வெளித்திண்ணைக்குப் போனார்கள். நான் பக்கத்திலிருந்த பத்திரிகையை எடுத்து ஊன்றிப் படிக்கத் தொடங்கினேன்.
"d 6iu”
நான் தலை நிமிரவில்லை.
“ფა 6hს! . დ2 -6hს!
உஸ். அத்தான்!”
தலையை உயர்த்திச் சத்தம் வந்த திசையை நோக்கினேன். என் கண்கள் மலர்ந்தன. அங்கு அவள் விண்ணகத்துத் தேவதை போல் நின்று கண்ஜாடை காட்டினாள்.
நான் புன்னகை பூத்தேன். மனம் கனிய முறுவல் விரிந்தது. சிரித்தேன். ஆம். என்னையறியாமலே அவளைப் பார்த்துத் துணிந்து சிரித்துவிட்டேன்.
வலிய வந்த சீதேவியை உதறித் தள்ளலாமா? ஆனால். ஆனால்.
வேண்டாம். சபல புத்திக்கு இடம் கொடுத்தால். பெண் பாவம் பொல்லாதது. சே! பாதகமில்லை.
அவள் முறுவலித்தாள். மோகனப்புன்னகை அவள் முகமெங்கும் வியாபித்தது. குறும்புப் பார்வையா அது.

Page 35
56 0 கே.எஸ். சிவகுமாரன்
கேலிப்பொருளைப் பார்த்து அவள் உள்ளம் புளகாங்கிதமடைகிறதா..? ஆவலலைகளைத் தேக்கி நின்று உணர்ச்சி வெள்ளமாகப் பீறிட்டடிக்கக் காத்திருக்கும் நோக்கா அது. ஐயையோ இது என்ன பார்வை? "சந்திர லேகா” என்று படத்தில் நடித்த நடிகை பார்த்த விழிச்சுடர் போலல்லவா இந்தப் பார்வையிருக்கிறது. அப்பப்பா என்னால் இந்தப் பார்வையை எதிர் கொண்டு பார்க்க முடியவில்லையே. என் சிரம் தாழ்ந்தது.
மின்னலிடைப்பெண் அவள். பின்னல் சடைமருங்கசைய. அன்ன நடைபயின்று என்னருகே வந்தனள்,
ஐயையோ. எனக்கு வெகு அண்மையில் அல்லவா வந்துவிட்டாள். ஓர் இனிய வாசனை; அவள் சேலைத்தலைப்பு என் முகத்தில் பட்டும் படாமலும் அல்லவா காற்றுக்குப் படபடத்துக் கொண்டிருக்கிறது?. கூடவே என் நெஞ்சம் படபடக்கத் தொடங்குகிறது. உமிழ் நீரை விழுங்கினாலும் அது முடியவில்லையே. இது என்ன சோதனை
"அத்தான்" - "கு அந்தச் சொல்லின் உச்சரிப்புக்கு இவ்வளவு இனிமையுண்டா?”
"ஊம்"
"கதைப்புத்தகம் இருந்தால் தாருங்கோவேன். நாவல் அல்லாட்டிக்குச் சிறுகதைகள். இங்கிலிஷ் புக்ஸ் என்றாலும் பரவாயில்லை.”
"என்னிட்ட இப்ப ஒன்றும் இல்லை. உங்களுக்கு எந்த ஆசிரிய ருடையது பிடிக்கும் என்றால் எங்கேனும் தேடிக்கொண்டு வந்து தருகிறேன்"
"குறிப்பிட்ட ஆசிரியர் என்றில்லை. ஆனால் எஸ். ஏ. பி, சாண்டியல்யன், சிரஞ்சீவி"
“cyrffi!”
"என்ன சரியாம்?” என்று கிண்கிணி நாதத்தை உதிர்த்து விட்டாள். அந்த நாதத்தின் எதிரொலியே என்னைச் சொக்குப்பொடி போட்டாற் போன்றுகிறங்க.
நான் விழித்தேன். ஸெட்டியில் அமர்ந்துகொண்டாள். அவள் என்கூடத் தனிமையாக. ஓர் அங்குலம் இடைவெளியில். இருப்பது எனக்கு முள்ளின்மேல் இருப்பது போலிருந்தது.
என்னை ஊடுருவிப்பார்த்து. "ஐயோ. இது என்ன.
மனோவசியப் பார்வை." அர்த்தமில்லாமற் சிரித்தாள்.
நானும் வெகுளித்தனமாகச் சிரித்தேன். பத்திரிகையைச் சலசலத்தேன். அங்கு மிங்கும் பார்த்தேன். மிரள மிரள விழித்தேன். அவள்

தாழ்வு மனப்பான்மை 5ெ7
இன்னும் பார்த்துக் கொண்டு முறுவலித்தாள்.
அதில் ஒரு சோக. அல்ல அல்ல. ஒரு வேளை இது காதலர் பரிபாஷையோ? எல்லாம் புது அனுபவந்தான். ஏதாவது கதைக்க வேண்டும்போல் தோன்றியது.
இது ஏன்? கூச்சத்தினாலா, வெட்கத்தினாலா? இல்லை இல்லை. பயத்தினால். பயத்தினால் கொழும்பில் என் சகமாணவிகளுடன் விஞ்ஞானக் கூட்டங்களில் பக்கத்தில் இருக்கும் பொழுது வராத பயம் இப்பொழுதும் ஏன் வர வேண்டும்?
ஜமுனா
பாவம் அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது எதையோ பறிகொடுத்தவர் மாதிரி என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
நிலைமையைச் சமாளிக்க என்னாலும் முடியவில்லை. அவராலும் முடியவில்லை.
நான் போய் "செஸ்” போர்ட்டை எடுத்து வந்தேன்.
"வருகிறீர்களா? ஓர் ஆட்டம் ஆடலாம்" "செஸ்” என்றால் அவருக்கு உயிர் என்பது தெரியாதா என்ன?
காய்களை அகற்றி அகற்றி விளையாடினோம்.
ஒரு கண வேளை!
ஸ்பரிசம் இருவர் விரல்களும் சிக்கித்தவித்தன. நான் சிரித்தேன். அவர் சிரித்தார். என் விரல்களை விடவேயில்லை. அவர் உணர்ச்சி வசப்பட்டார். அம்மா "ஹோலுக்குள்” வந்தாள். திகில், ஆச்சரியம், மகிழ்ச்சி ஒரே நேரத்தில் அவள் முகத்தில்! அத்தான் முகம் நவரசங்களையும் பிரதி பலித்துக் காட்டியது.
"அத்தான்”
"ஊம்"
“உங்களுக்கு என்மேல் கோபம்?”
"அப்படி யொன்றுமில்லையே!”
"நீங்கள் முன் போல் என்னிடம் சரளமாய்ப் பேசுவதில்லையே? பழகுவதில்லையே? M
"பேசுவதற்கு என்ன இருக்கிறது?”
"பேசுவதற்கா இல்லை? நிறைய நிறையப் பேசலாமே?” என்று கூறி

Page 36
58 0 கே.எஸ். சிவகுமாரன்
ஓரக்கண்ணால் அவரைப் பார்த்தேன். அப்பார்வைக்கோர் அர்த்தமுண்டு என்பது என் நோக்கம்.
"சுந்தரேசன் இப்பொழுது என்ன செய்கிறான்?”
எதிர்பாராத விதமாகச் சுந்தரேசனின் பெயரை அவர் கூறியதும் எனக்குக் கலக்கம்.
"யார் சுந்தரேசன்?”
"தங்களுடைய வருங்காலக் கணவன் சுந்தரேசன்தான்"
"அத்தான் நீங்கள் மிகவும் பொல்லாதவர்"
"உள்ளதைத்தானே சொல்கிறேன்”
"அடடே, உங்களுக்கு குதர்க்கமாய்ப் பேசக்கூட வருகிறதே"
மெளனம்
"அது சரி. நீங்கள் ஏன் என்னைப் பன்மையில் அழைக்கிறீர்கள்”
"மதிப்புக்குரியவர்களை மரியாதையாக அழைக்க வேண்டாமா?”
"ஓஹோ நான் உங்களுக்கு மதிப்புக்குரிய பொருள் மாத்திரமோ! வேறொன்றுமில்லையா?”
நான் கூறியதன் அர்த்தம் அவருக்குப் புரிந்ததோ என்னவோ? ஒரு வேளை சுந்தரேசனைத்தான் நான் விரும்புகிறேன் என்று எண்ணுகிறாரோ.
"மதிப்புக்குரியவள் என்கிறீர்களே! நான் உங்களிலும் ஐந்து வயது சிறியவள் என்பதை மறந்து விட்டீர்களா?”
"இப்பொழுதுதான் தெரியும்"
"வாருங்கோ சாப்பிடுவோம். பிள்ளை அத்தானுக்கு செம்பை எடுத்துக் கொடு” என்று கூவிக்கொண்டே அம்மா நாங்கள் இருந்த இடத்திற்கு வந்து விட்டாள்.
அத்தானும் அப்பாவும் மாமாவும் திண்ணையில் உட்கார்ந்து அரசியல் தொடக்கம் அத்தானின் படிப்புவரை அலசிக்கொண்டிருந்தார்கள்.
அம்மாவும் மாமியும் நானும் உள்ள்ருந்து ஊர் வம்பு பேசிக்கொண்டி ருந்தோம். பின், ஆடவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம்.
"ஜமுனாவுக்கு ஒரு கலியாணத்தை முடிச்சுவைக்க வேணும் அண்ணை? அம்மாதான் மாமாவிடம் கூறினாள்.
"அதற்கென பிள்ளை இப்ப அவசரம்? பொடிச்சிக்கு என்ன வயசா ஆகிவிட்டது?" என்று மாமா கூறினார்.

தாழ்வு மனப்பான்மை O 59
"இல்லை, ஒரு கதைக்குச் சொல்றன். தம்பி கணேசும் படிச்சு முடிக்கத்தானே வேண்டும்?” என்றி கூறி முடித்தாள்.
"எல்லோர் கண்களும் அத்தானை நிலைகுத்திப் பார்த்தன. ஆவலுடன் இதழில் நீரூற விழிகள் மலர அவரை நோக்கினேன்.”
"நான் ஜமுனாவை ஒருநாளும் கட்ட மாட்டேன். காரணத்தைக் கேட் காதீங்கோ" என்று கூறிவிட்டு அத்தான் எழுந்துவிட்டார். எல்லோருக்கும் ஆச்சரியம்!
எனக்கு ஆச்சரியம், ஏமாற்றம், பொறாமை, எரிச்சல், விரக்தி.
அத்தான் எழுந்து போகிறார். மாமாவும் மாமியும் அவரைக் கூப்பிடு கிறார்கள்.
அவர் போய்க் கொண்டேயிருக்கிறார். எல்லோரும் என்னைப் பார்க் கிறார்கள். என் தலை சுற்றுகிறது. நான் கீழே. வி.ழு.
கணேஷ்
ஜமுனாவின் சாகசங்கள் எனக்குப் புரிந்தன. அவள் என்னை விரும்புகிறாள். உள்ளத்தாலும் நேசிக்கிறாள்.
ஆனால். ஆனால். அந்தச் சுந்தரேசன்?
ஜமுனாவின் தாயினுடைய தம்பி மகன். அவன் அவளுக்குச் சாலவும் பொருத்தமானவன். அவன் அழகென்ன? அவன் பெருமை என்ன? அவன் வகிக்கும் பதவி என்ன?
கேவலம் கொம்புத்தேனுக்கு நான் ஆசைப்படுவதா? நான் ஆசைப் பட்டேனா? இல்லையே!
ஆனால். தேன் மலர் வண்டையே நாடி வந்தால். என்னைப் பரிகசிக்கிறாளோ?
ஆம்! கள்ளி!
"சுந்தரேசன் தங்களுடைய வருங்காலக் கணவன்" என்று நான் கூறியதும், "பொல்லாதவர்" என்று அவள் எனக்குப் பட்டம் சூட்டியதற்கு என்ன அர்ததம்?
"போங்கள்" "பொல்லாதவர்” என்றெல்லாம் பெண்கள் சிணுங்குவது இணக்கத்தைக் காட்டுவதற்கண்றோ?
சரிதான்.
அவள் அவனை விரும்புகிறாள்.

Page 37
60 0 கே.எஸ். சிவகுமாரன்
வைத்தியக் கல்லூரியில் படிக்கும்போது மாணவர் நடத்திய ஒரு கேலிக் கூத்தில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் சிக்கிய நான் பலத்த எரி காயங்களால் திருமணம் புரிந்து இல்வாழ்க்கையை நடத்த முடியாத நிலையை அடைந்து விட்டேன்.
இதனால் ஜமுனா என்னுடன் சரளமாகப் பழகும் பொழுது நான் தூர விலகி நின்றேன். ஏன்? சபல புத்திக்கிடங்கொடுத்தால் திருமணத்தில் முடியும். அவள் வாழ்வே பாழாகிவிடுமல்லவா?
ஆனால், அவள் சுந்தரேசனை விரும்புகிறாள். நல்லதுதான். என்னைப்
பரிகசிக்கச் சரசமாடினாள்.
(தினகரன் 1962)

மட்டக்களப்புச் சூழல் கதைகள்

Page 38
இழை
தங்கப்பாளக் கைகளினால் வெள்ளிப் பாத்திரத்தினின்றும் பதார்த் தத்தை எடுத்துக் கொட்டுகின்றாள். விரல்களிடையே வளைந்தோடுகிறது பாயாசம். கையை எட்டிப்பிடித்து நக்குகிறான் கைலாசம், நளின விரல் கள் அவன் நாக்கில் சுருதி மீட்டுகின்றன. சிணுங்கிக் கொண்டே அவள் விடுவித்துக் கொள்கிறாள்.
பாயாசம் தீர்ந்தது. பசியாறவில்லை. ஒட்டமாகச் சமையலறையுள் உட்புகுகிறாள் தாமரைக்குமாரி கைலாசம் பின்தொடர்ந்து குழாயில் கையலம்புகிறான்.
வெள்ளி நிலா வானவெளியில் மோடி காட்டுகிறான்.
கைலாசத்தின் உள் விதானத்திலும், உடலுறுப்புகளிலும். குமுறல். வேட்கையைத் தணிக்கப் பூகம்ப உத்வேகம் முறுகல். விறைப்பு. சதிராடும் லாவகம். வளைவு. நெளிவு. சுழிவு. குமிழ்ச்சி.
படுக்கை விரித்தாயிற்று துயில்புக நேரம் வந்தாயிற்று. இருவருடத் தாம் பத்திய உறவின் விளைவு ஒரு பாலகன், தனிமையில் கட்டிலில் உறங்கு கிறான்.
குமாரியின் உடற் கட்டுப் பூரிப்பைக் கண்டு உன்மத்தங் கொள்கிறான் கைலாசம். இயற்கை பெண்மை துவஞகிறது. ஆண்மை கம்பீரங் கொள்கிறது. சுமை தாங்கி மேலும் கனம் கொள்ள மறுக்கிறது. நெருக்கம். நெருக்கம். துவட்சி. துவட்சி. சலிப்பு. சலிப்பு. வெறுப்பு. வெறுப்பு.
கனல் கொண்ட தசைக் கோளங்கள் தளர்ந்து குமைகின்றன. பிணக்கம். இந்த வார்ப்பில் எத்தனையோ பிணக்குகள்.
ஒரு மகவை ஈன்ற பின் உறவு கொளல் தவிர்க்க வேண்டுமோ? ஆண்மையின் தவிப்புக்குப் பெண்ணையின் தயக்கம், எல்லைக்கோடு தளரலாகாதா? விளைவு விரக்தியாகத்தானே இருக்க வேண்டும்.
கட்டழகு மங்கை தன் கவினுறு உடலின் இந்திரியக் கவர்ச்சி குலைந்திடும் என்று மருண்டனள். பெற்றது ஒன்று போதும் என்ற திருப்தி. ஆனால் கைப்பிடித்தவனுக்கு இது புரியவில்லை. ஏன், அவளே உணர்த்தக் கூடவில்லையே. மனோதத்துவத்தைப் பற்றி கைலாசத்திற்கு

Qanpo l 63
என்ன தெரியும்? தந்தைதாயற்ற அவன் பட்டணத்துக் கம்பனி ஒன்றில் சாதாரண கிளார்க், காளை வயசு.
தாமரைக்குமாரி செல்வக் கொழிப்பில் பிறந்து வளர்ந்தவளல்லள். சாதாரண மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள் தான். எஸ். எஸ். சி. சான்றிதழ் அவளிடம் உண்டு. பொலி டெக்னிக்கில் தட்டெழுத்துக் கற்றிருந்தாள். வயோதிபப் பெற்றோர் ஒரே மகளின் மண நாளை ஆவலுடன் காத்து நின்று நிறைவேற்றினர். அது இரண்டு வருடங்களுக்கு முன். கைலாசம் மனதில் சிதறிடும் எண்ணக்கோவை. குமாரியின் அகத்தில் நெகிழ்வு கனிவு. உள்ளன்புடன் உயிரினிய கணவனை அவள் நேசிக்கிறாள். தன் பொன்னுடல் பழுதாகாமலிருக்கப் பாவை கல்யாணம் பண்ணியும் கட்டுக்களைக் கட்டிக் கொண்டாலும், பொருளாதார நிலை அவளது செய்கைக்கு ஆதரவு தந்தது.
இருளைக் கல்வி ஒளியைக் கக்கும் கோளம் வெளியே இருளில் இருளாய் சபிக்கும் உறவு உள்ளே.
பொழுது விடிந்தது. உறவிலோர் மாற்றம், அசைவிலே கணவன் மீது ஒரு வெறுப்பு. திருப்தியிலா வஞ்சத்தை பலாத்காரமாகத் தீரத்துக் கொண்டதொரு போலிப் பெருமிதம் அவனுக்கு.
"நானும், ரமணியும் அம்மாவோட போயிருக்கிறம். எனக்கு இனிமேலும் பொறுக்க ஏலாது. ஒரு அளவு வேணாமா? உங்களுக்குப் பித்து, இதோட நம்மிட வாழ்க்கை முடியட்டும்."
"போடி. போ எங்கையாவது போய்த் தொலை. புருஷனின் தேவைகளைப் பூர்த்தி செய்யாத பிறவி. நீ என்னத்துக்கடி. போறாளாம். போவன் மூதேவி”
கைப்பிடித்தவனின் கதறலினால் வெகுண்டெழுந்தாளா குமரி? இல்லை. பச்சாதாப நெகிழ்வு. என்றாலும் தற்காலிகமாக அவன் போகத்தை தடுத்து நிறுத்தலாம் என்ற பிரேமை.
கட்டிய தளபாடங்களுடன், பாலன் ரமணியைத் தூக்கிக் கொண்டு பெற்றோர் இல்லம் போயேபோய் விட்டாள். இவள் எங்கு போய் விடுவாள்? நாளை அல்லது மறுநாள் தன்னிடம் திரும்பி வந்தே தீர வேண்டும் என்ற முடிவு கைலாசத்திற்கு.
மாதங்கள் சில பறந்தோடின. வைராக்கியம் இருவருக்கும். கண்ணால் கூடக் கண்டு மூன்று மாதம், பெண்மை பணியத் தொடங்கியது, ஆண்மையும் ஏக்கத்தினால் தவித்தது.

Page 39
64 0 கே.எஸ். சிவகுமாரன்
கலியாணத்தை நடத்தி வைத்த சுந்தரலிங்கத்திடம் கைலாசம் முறை யிட்டான். சுந்தரலிங்கம் அடுத்த நாள் கைலாசத்தை வரும்படி கூறியிருந்தார். குமாரியின் மாமன் தான் முன்னையவர். அவளையும் வரும்படி கூறியிருந்தார்.
3
தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் எதிர்பாராத விதமாக சுந்தரலிங்கம் வீட்டில் சந்தித்தனர். அண்ணலும் நோக்கினாள். அவனும் நோக்கினான். ஏக்கத்தின் சாயல் இருவர் விழிகளிலும். அவனைக்கண்டு அவள் தயங்கினாள். அவள் விழிகள் இப்பொழுது அவனைக் கவ்விக் குவிக்கின்றன.
சுந்தரலிங்கம் எடுத்த எடுப்பிலேயே விஷயத்தில் நேரடியாய் இறங்க வில்லை. உரையாடல் வளர்ந்து விரிந்து சென்றது.
“என்ன தம்பி கைலாஸ், பெஞ்சாதியோட நீ என்ன கோவமா? இதென்ன ராசா ஊடல்? குழந்தைப் பிள்ளையாட்டம் கணகாட்டுத் தாநீங்க. மறுகா புறத்தியாரெல்லாம் பார்த்துச் சிரிக்கப் போறாங்க. நாம ஒண்டுக்குள்ள ஒண்டு இஞ்ச வாபுள்ள, குமாரி இதென்ன எண்டு கேக்கிறன். இப்ப நீ வீட்ட விட்டு வந்து மூண்டு மாசம் போயிற்று. இஞ்ச பாரன் உன்ர புருஷன்ர நிலையை, இஞ்ச பார் கண்டியோ. இப்பவே இரண்டு பேரும் உங்கட வீட்ட போய்ச் சேருங்கோ"
"இவருக்கு என்னைக் கூட்டிப் போக மனமில்லாட்டி நான் எப்படி அம்மான் அங்க போற?”
"இதென்ன புள்ள நீ கேக்கிற கேள்வி. சும்மா விசர்ப்பெட்டையாட்டம்
உளறTத.
"அவக்கு என்னோட வாழப்புறியமில்ல. அம்மான் அது தான் மறுகிக் கொண்டு நிக்கிறாஷ"
பிணக்கு நீங்கித் தம்பதிகள் ஒன்று சேர்ந்தனர். ரமணி இந்த மூன்று மாதங்களும் துருதுருவென வளர்ந்திருந்தான். மைந்தனின் மழலையிலும், மகிழ்ச்சியிலும் திளைத்து இருந்தனர் இருவரும்.
அவளுக்குத் தேக அவஸ்தை, மன அரிப்பு, அவனுக்கு உடற் தாபம். சிலிர்ப்பு. இயற்கையின் தேவை, பூரணத்துவம் பெற்றது. வருடம் ஒன்றோடி மறைந்தது. புதல்வரிருவர் அவர்களின் உடமை.
வாழ்க்கைச் செலவு அதிகரித்தது. வருவாய் படுத்தது. அதே நிலையில்

இழை 0 65
வீட்டுத் தலைவன் தனது பொறுப்புணர்ச்சியை மறந்திட்டான். அவனுக்கு அதே உணர்வு அதே வேகம் அதே மயக்கம்.
மீண்டும் தம்பதிகளிடையே அதே ஊடல். அதே பிணக்கு இதே எதிர்ப்பு.
இம்முறை நிச்சயமாகத் தாம் ஒரேயடியாகப் பிரிந்து விடுவதென்று கச்சைகட்டிப் பிரிந்தனர். மக்களிருவருடனும் தன் தாயில்லம் சென்றாள் தாமரைக்குமாரி
காலச்சக்கரத்தின் துரித சுழற்சி. அன்றாடத் தேவைக்குப் பணமில்லா வறட்சி. தாமரைக்குமாரிக்கு தட்டெழுத்துக் கற்ற கர்வம்? அவளும் ஒரு கொம்பனியில் வேலை தேடிக் கொள்கிறாள். மாதாமாதம் ரூபாய்கள் சில வீட்டுத் தேவைக்குப் போதுமானதாக வருகின்றன. தாமரைக்குமாரி உழைக்கிறாள், அவள் தேகத்தில் காந்தி லாவண்ய அழகு சுறுசுறுப்பான போக்கு. மனேஜர் தன் முழுக் கவனத்தையும் அவள் மீது செலுத்துகிறார். மங்கை இதை உணர்ந்தாள். தனது அலங்காரத்தில் அதிக கவனம் செலுத்தினாள். தினம் தினம் புதுப்புது உடைகளை அணிந்து அலுவலகம் வருவாள். மயக்கும் விழிகளால் கோணப்பார்வை பார்ப்பாள். அசந்து விடுவார் மனேஜர் பார்வைப் பரிமாறுதல்கள் குமாரியின் சம்பள உயர்வுக்குக் காலாயிருந்தன. குட்டி பெரிய சுட்டிதான் போங்கள். கற்பு கற்பு என்று தமிழ்ப்பண்பு, பண்பு என்றும் வாய்கிழியக் கத்துகிறோமே! மாசிலா மனமிருந்தால் கேவலம் வெறும் உடற்சேட்டைகளா 'கற்பை குலைத்துவிடும்?
அதோ,
மனேஜர் அவள் கையைப் பிடித்துக் கசக்கிறார். ஆ! சும்மா கண்ணை மூடாதீர்கள்! இதற்கெல்லாம் போய் வெகுண்டெழுந்தீர்களாயின்? இதெல்லாம் சர்வசாதாரணம். குமாரி குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறாள். மனேஜருக்கு முறையற்ற காமம் என்று தீர்த்துக்கட்டி விடாதீர்கள். அவருக்கு மணமாகிப் பிள்ளைகள் பலவும் இருக்கின்றன. அடடே சொல்ல மறந்து விட்டேனே. மனேஜர் ஒரு ஐரோப்பியர்! அலுவலகங்களில் இப்படி எத்தனையோ சம்பவங்கள்!
கற்பு பறிபோனதா? இல்லை பின் வெறும் அங்க சேஷ்டைகளுக்கு இயைந்தாள் குமாரி சம்பளம் அதிகம் உயர்ந்தது.
குமாரிக்கு இனிக்க வலை என்ன? தன் வருவாய் மூலம் சம்பாதிக்கிறாள். ஆனால். அந்த தாம்பத்திய உறவு.
கைலாசத்தை மனம்விரும்பியே மணஞ் செய்தாள் குமாரி. அவன் குழந்தைப் போக்கில் மனம் பறிகொடுத்தாள். அவன் முதிர்ச்சியின்மையில்

Page 40
66 0 கே.எஸ். சிவகுமாரன்
மருண்டாள். அவன் அழகிலும் ஆண்மையிலும் மயங்கினாள்.அவள் தீவிர உணர்ச்சித்தழலை அறவே வெறுத்தாள். இருந்தாலும் அவனது உடமைகள் தனது புதல்வரிருவரும். அவன் ஞாபகத்தையே நினைவூட்டின. கணவன் என்றதும் முதலில் எழும் எண்ணம் அவளுக்கு பக்தியாகும். பதி பக்தி. ஆனால் பதிவிரதத்தன்மை யோகியாய் வாழ இடங்கொடுக்கவில்லை. இழை போல அன்பு வற்றாத காதல் அவளுக்கும் அவனுக்குமிடையில் வெகு துல்லியமாய் தளிர்திருந்தது உண்மை. அவனுக்கு அவளிடம் வெறுங்காமம் என்று சொல்லி விட முடியாது. ஆனால், அதீதப் பிரவாகத்தைத் தாங்க அவளால் முடியவில்லை. s
இரு வருடங்கள் உருண்டோடின. வெறுப்பின் தாகம் என்று சொல்ல முடியமோ?
வெளியுலக நடப்பில் வெளிப்பாட்டில் வெறுப்பு. உள்ளே அகத்தே உணர்வில் தாகம். தாகம். தாகம். நாட்கள் கரைந்தோடின.
6
இன்று.
திரைப்படமாளிகையுள் திரண்டிடும் கூட்டத்திலே குமரியும் ரமணியும் பாலனும், கியூ வரிசையில் கைலாசமும். பிரவேசச்சீட்டு பெற்றுக்கொண்டு உள்ளே போன கைலாசத்தைத் தொடர்ந்து குமாரியும் மைந்தரும் சென்றனர். அவனுக்குப் பக்கத்திலேயே போயிருந்தனர். கைலாசம் காண வில்லை. அல்ல. கைலாசம் தனக்குப் பக்கத்தில் ஒரு பெண்ணும் இரு பிள்ளைகளும் என்பது மாத்திரமே தெரியும். அவன்தான் பெண் பிறவிகளைக் கண்ணெடுத்துப் பார்த்து பல ஆண்டுகள் கழிந்தாயிற்றே.
ரமணியை ஆசனத்தினின்றும் இறங்கி கைலாசம் முன்னிற்க நிறுத்து கிறாள். தன் புயத்தை லேசாக அவன் தோள்களில் படரவிடுகிறாள்.
மின் அதிர்ச்சி தாக்குண்ட அவஸ்த்தை கைலாசத்திற்கு சமாளிக்க முடியாத வெகுளித்தனம். மைந்தனைத் தூக்கி வைத்துக்கொள்கிறான். பாலனிடம் அவள் கேட்கும் அர்த்தமில்லாக் கேள்விக்குப் பாவை விடை தருகின்றாள். ரமணி திரு திரு வென்று விழிக்கிறான். நடப்பின் பிரக்ஞையற்ற நிலையில் திக்கு முக்காடுகின்றனர்.
படம் ஆரம்பமாகின்றது:
கைலாசத்தின் அரவணைப்பில் குமாரி கட்டுண்டாள். அன்பென்னும் இழையா? அல்லது தேக அமுக்கம் எனும் இழையா அவர்களைப்
பிணைத்தது?
(வீரகேசரி 1960)

இனம் இனத்துடன்.
மேல் மாகாணம், வடமேல் மாகாணம், வட மத்திய மாகாணங்களூடாக ஒடிவந்து கல்லோயாச் சந்தியில் நின்றது, டீசல் எஞ்சின் பூட்டப்பட்ட மட்டக்களப்பு மெயில்.
நள்ளிரவையும் கடந்து நின்றது நேரம் இன்னுஞ் சற்று வேளையில் கரி எஞ்சின் பூட்டப்பட்டு கிழக்கிலங்கைத் தலைநகருக்குச் செல்லப் போகின்றது வண்டி
நான் இருந்த பெட்டி மூன்றாம் வகுப்புத்தான்! நிறைய ஆட்கள் இருந்தார்கள். பெரும்பாலும் கல்லோயாவிலும் அம்பாறையிலும் வேலை பார்க்கும் மக்கள்தான்!
விஸில் ஊதியது பச்சை வெளிச்சம் தெரிந்தது! வண்டி நகர ஆரம் பித்தது!
அப்பொழுது. அவசரம் அவசரமாக ஒரு வாலிபன் வந்து வண்டியில் ஏறிக் கொண்டான். நீளக்காற்சட்டை, கைமுட்ட சேட், உதட்டில் சிகரெட், கையில் பெட்டி இவற்றுடன் காட்சியளித்த அவன் கேசம் நெளிநெளியாய் இருந்தது. அழகாகத் தலையை வாரியிருந்தான். பார்ப்பதற்கு இலட்சண மாகவும் மிடுக்காகவும் காணப்பட்டான்.
நான் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டேன். என் எதிரே காலியாயிருந்த இடத்திலே அவன் அமர்ந்து கொண்டான்.
அல்பேட்டோ மொறேவியா எழுதிய நவீனம் ஒன்றை விட்ட இடத்தில் இருந்து வாசிக்கத் தொடங்கினேன்.
"க்கக்கம்”- இலேசான இருமல்!
வந்த திசையை நோக்கினேன். வைத்த விழிவாங்காது என்னையே பார்த்து பிரமித்து அமர்ந்திருந்தான் அந்தப்புதிய பிரயாணி
சற்று நேரம் எனக்குச் சிறிது கலக்கம், சமாளிக்க முடியாத வெகுளித்தனம்
எங்கேயோ பார்த்த முகம்!

Page 41
68 C கே.எஸ். சிவகுமாரன்
மந்தகாசமான குறுநகை அவன் இதழ்க்கடையில் நெளிந்தோடிற்று. நானும் பதிலுக்கு நாகுக்காகச் சிரிக்க முயன்றேன்.
அது இயற்கையான புன்னகையல்ல என்பது எனக்குத் தெரியும். வேண்டுமென்றே முயன்ற நாகரிகப் புன்னகை.
கொழும்பில் வசிக்கும் நான் அறிமுகமில்லாத ஒருவன் பார்த்துப் புன்னகைத்ததும் பல்லையிளரிப்பதா? என் சுய கெளரவத்தை அவ்வளவு மலிவாக்கிக் கொள்ள விரும்பவில்லை குளிர் காற்று ஜன்னலினுடாக வெளியே இருந்து வந்து கொண்டிருந்தது.
ரெயிலின் வேகம் வெறுப்பைத்தந்தது. ஈழத்தில் ஒடும் ஆமைவேகப் புகையிரதச் சேவைக்குப் பெயர் பெற்றது இந்தக் கல்லோயா மட்டக் களப்பு வண்டியல்லவோ? டீசலின் வேகம் எங்கே? கரி எஞ்சின் வேகம் எங்கே?
சிருங்கார ரசக் கதையைப் படித்து முடிக்க வேண்டுமென்றிருந்த உணர்ச்சி உந்தல் எங்கே? அதனை மூடிவைத்து விட்டு வேறோரு கவர்ச்சிப் பொருளின் மீது மனம் இலயிப்பது எங்கே?
அந்த இளைஞன் தான் என் புதிய கவர்ச்சிப் பொருளோ?அவனுடன் பேச வேண்டும் போல் இருந்தது. ஆனால், கெளரவம் விட்டுக் கொடுத்தால்தானே?
புத்தகத்தை மூடினேன்! யன்னலை மூடினேன்! சிகரெட் துண்டைக் காலுக்குக்கீழ் போட்டு சம்பாத்தால் நசுக்கினேன்.
ஏதோ ஒரு ஆங்கில மெட்டுத் தமிழ்ப் படப் பாடலை சீட்டி யடித்தேன். அவனையும் அலட்சியமாய்ப் பார்ப்பது போல் பார்த்தேன்.
அவன் வாய் உன்னியது.
"என்னம்பி பெரிசா வளர்ந்திட்டீங்க! நீங்க இப்ப கொழும்பிலயா? என்னை மதிக்கலியா?. நான்தான் செல்லத்துரை." என்று இழுத்தான்.
திடுமென ஒலித்த குரல் எப்பொழுதோ கேட்ட குரல் தான் முகமும் பார்த்த முகம் தான்! ஆனால், எங்கே எப்போது என்பது தான் தெரியவில்லை!
ஆனைப்பந்திப்பள்ளில நாம ஒரு கிளாசில படிச்சநாம எலுவா? மறந்திட்டீங்க போலிருக்கு நீங்க சிவகுமார் தானே.?
"அடடே இப்பொழுதுதான் நினைவிற்கு வருகிறது. நீங்கள் இப்பொழுது என்ன செய்கிறீர்கள்?”
"நான் மலையில அம்பி அங்க ஒரு ஷிப்பிங் கொம்பனில வேலை செய்கிறன். இப்ப ஊருக்குப் போறன். மலைக் கோச்சில வந்து

இனம் இனத்துடன். 6ெ9
கல்லோயாவில மாறினனான்.
"நீங்க என்ன படிக்கிறிங்களா? இல்லாட்டி வேலையா?” "நான் இன்னும் படித்துக்கொண்டே இருக்கிறேன்.” "நல்லது தானே! நம்மளப்போல படிப்பைக் குழப்பாம படித்துப் பெரிய மனிசனா வந்தா பெருமைதானே?”
"அது சரி, மட்டக்களப்பு பட்டினத்தில் என்ன விசேஷம் உண்டு? ஏதும் முன்னேற்றங்கள் இருக்கிறதா? ஆறு வருஷங்களுக்குப் பின் மீண்டும் அங்கே நான் போகிறேன்!” என்று அவனிடம் கூறினேன்.
இலக்கண சுத்தமாக நான் தமிழ்ப் பேசுவது அவனுக்கு ஆச்சரியத்தை விளைவித்திருக்க வேண்டும். வெறுப்புக்கூட வந்திருக்க வேண்டும்.
ஆனால், எனக்கோ தமிழ் பேசுவது ஏதோ போலிருக்குது! ஆங்கிலத் தில் என்றால் சரளமாகப் பேச வரும். இலக்கண சுத்தமாக பேசினாலன்றி வார்த்தைகளுக்குத் திக்குமுக்காட நேரிடுகிறது. எனது கொழும்புச் சூழ்நிலையும் சகவாசமும் இதற்குக் காரணமாயிருக்கலாம்.
அந்த இளைஞன் தரித்திருந்தது மேல் நாட்டு உடையேயாயினும். அவன் தமிழிலேயே பேசினான். அதுவும் மட்டக்களப்புத் தமிழிலேயே பேசினான்.
கிழக்கிலங்கை வட்டாரப்பேச்சு வழக்குகளைக் கேட்டுப் பல வருடங் களாகி விட்டன. ஆகையால் அவன் பேசும் பொழுது மேலும் கேட்டுக் கொண்டிருக்கலாம் போலிருந்தது.
சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு. "வாங்களன் ஒரு 'பியர் அடிப்பம், குளிருக்கு நல்லா இருக்கும். கன்ரின்ல இருந்து பேசுவோம்"
"வேண்டாம் நான் குடிவகை பாவிப்பதில்லை. நன்றி.” "ஆச்சரியமாயிருக்கே கொழும்பில் இருக்கிற நீங்க பியர் குடிக்காட்டி! அது உடம்புக்கு நல்லது தானே?"
"இருக்கலாம். ஆனால், சில கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறவன் நான்” என்றேன்.
"அப்ப சரி"
அவன் முகத்தில் திடீரென ஒரு மாற்றம். என்னிடம் சற்று மரியாதை யாகப் பழக வேண்டும் என்று நினைத்திருக்க வேண்டும்.
அதிகம் படிக்கவில்லை! எஸ். எஸ். சியும் சித்தியடைந்தானோ, என்னவோ, காற்சட்டையும் சேட்டும் போட்டு ஏதோ கொம்பனியில் குறைந்த வேலையில் இருக்கிறான். ஆனால், இடாம்பீகத்துக்கோ

Page 42
70 0 கே.எஸ். சிவகுமாரன்
படாடோபத்துக்கோ குறைவில்லை. இப்படித்தான் என் மனம் அவனை எடைபோட்டது.
ஒரு வேளை!
மட்டக்களப்பு வாலிபர்கள் பலரும் இப்படியான போக்குடையவர்கள் தானோ? ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை ஏற்றுக் கொண்டால் செல்லத்துரையே எடுத்துக்காட்டாக விளங்கலாமோ? என்னவோ, அங்கு போய்த்தான் தெரியவேண்டும் உண்மையை
"மறுகா நீங்க எப்ப திரும்புறீங்க?". அவன் தான் கேட்டான்.
"சரியாகத் தெரியாது. ஒரு கிழமை மட்டிலும் நான் பட்டணத்தில் நிற்கலாம். அது சரி மட்டக்களப்பில் என்னமும் மாறுதல்கள் இருக்கிறதா?” மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.
"என்ன மாறுதல்கள்? அந்த மாதிரியாகத்தான் இருக்கு நீங்கதான் போய்ப்பார்க்கப் போறிங்களே!” என்று கூறி நிறுத்திக் கொண்டான்.
ஏனோ அதைப்பற்றிப் பேச அவன் விரும்பவில்லை. நானும் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை.
"கோப்பி கோப்பி" என்று கூவிக்கொண்டே வந்தான் ரெயில் சிற்றுண்டிச்சாலை சிப்பந்தி.
அவனைக்கூப்பிட்டு ஒரு 'கப் கோப்பி வாங்கி செல்லத்துரையிடம் கொடுத்தேன். அவன் வேண்டாம் என்று மறுத்தான். அவனும் கெளரவத்தைக் காப்பவன் போலும் நான் தான் பரவாயில்லை என்று வற்புறுத்திக்கொடுத்தேன். நானும் ஒரு கோப்பை கோப்பியை வாங்கிப் பருகினேன். பச்சைத் தண்ணீர்போல இருந்தது கோப்பி.
ரெயில் மன்னம்பிட்டியைத் தாண்டி வெலிக்கந்தையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
பெட்டியில் இருந்த ஒரு சிங்களப் பெண் என்னைப் பார்த்துச் சிரித்தாள். நானும் நாகரிகமாகச் சிரித்தேன்.
ஆனால்!
அந்தப் பெண் ஒரு நடுத்தர வயதுப் பெண் என்றால், நான் அப்படிச் செய்திருக்கலாம். பரவாயில்லை.
ஆனால்
அவள் கட்டுக் கோப்பான உடலமைப்பைக் கொண்ட
வாலைக்குமரியல்லவோ?
செல்லத்துரை வந்து பெட்டியில் ஏறுமட்டும் அல் பெட்டோ மொஹே

இனம் இனத்துடன். 0 71
வியாவின் நாவலில் இலயித்திருந்தேன். அவன் வந்ததும் அவனுடன் சம்பாஷிப்பதில் நேரங்கழிந்தது.
அதனாற்றான், அவளை முன்கூட்டியே நான் பார்க்கவில்லை போலும்!
இடுப்புச் தெரியச் சட்டையும் உடலையொட்டி சாரமும் உடுத்தி யிருந்த அவள் ஒர் அழகிதான்! h நானும் அந்த வாலிபனும் பேசுவதை அவள் கேட்டுக் கொண்டிருந் திருக்க வேண்டும். நாங்கள் அவளைக் கவனிக்கவேயில்லை!
மற்றப் பிரயாணிகள் தூங்கி வழிந்துகொண்டிருந்தார்கள். அதி காலை நாலரை மணிக்கு அவர்கள் விழித்தெழ நியாயமில்லைதான்!
அவள் கன்னக் கதுப்பு இரத்தக் குமிழிகளானது. அவள் நயனங்கள் படபடத்தன. அவள் விழிகள் ஊடுருவிப் பார்த்தன. இதழோரத்திலே முறுவல் படர்ந்து விரிந்தது. மார்பு மேலும் கீழும் விம்மி விம்மித் தணிந்தது. அவளைப்பார்க்க எனக்கு வெட்கமாய் இருந்தது.
சே! கேவலம் ஒரு சாதாரணப் பெண்ணின் அதுவும் ஒரு சிங்களப் பெண்ணின் அழகை ரசித்து மயங்குவதா என்று என் உள் மனம் ஏதோ பிதற்றிற்று.
ஆண்டவன் கண்களைப் படைத்திருப்பது கவினுறு காட்சிகளைக் கண்டுகழிக்கவே என்று தேற்றிக்கொண்டு அவளைப் பார்த்து சிரித்தேன். அவள் செம்பவள வாய் விரித்துத் தன் முத்துப் பல் வரிசையைக் காட்டி முறுவலித்தாள்.
செல்லத்துரைக்கு விஷயம் விளங்கியது. "குட்டி என்னவாம்?” என்று கேட்டான். "ஒன்றுமில்லை. சும்மா சிரிக்கிறாள்" என்றேன். "அவ சிரிப்பா சிரிப்பா" என்று ஞானி போல் விரக்தியாய் ஏதோ அவன் கூறியது எனக்கு ஆவலைக் கிளப்பி விட்டது.
"என்னது"? "ஹிஹ"க்கும் இந்த அம்பாரைச் சனங்கள் அங்க வந்த பிறகு பாருங்க! அங்க மட்டக்களப்பில "காதலர் புரி சாகசங்கள்” எல்லா நடக்குது? தமிழ்ப் பண்பாடெல்லாம் காற்றோடு போயிற்று. இந்த மாதிரிப் பொம்பளையைப் பார்த்து அங்க இருக்கிற பொட்டையள்
எல்லாம் அங்க கண்டவனைப் பார்த்துக் காதலிக்கிறாங்க.
"என்ன சொல்கிறீர்கள்? ஏதோ தி. மு. க. வசனங்கள் மாதிரியல்லவோ இருக்கிறது?"

Page 43
72 0 கே.எஸ். சிவகுமாரன்
அவன் சிரித்தான். அவள் சிரித்தாள். நானுந் தோள் குலுங்காமல் சிரித்தேன் பெரிய நகைச்சுவை மன்னன் போல!
என்ன இது!
அந்தச் சிங்களப் பெண்ணுக்குத் தமிழ் தெரியுமா? அவளுஞ் சிரிக்கிறாளே!
"அவளுக்குத் தமிழ் நன்றாகத் தெரியும் போல இருக்கிறது" என்று ஆங்கிலத்தில் அவனிடம் கூறினேன்.
ஒரு கிளுகிளுப்பான சிரிப்பு அருவியின் ஒசை போன்ற சிலிர்ப்பு அவளிடம் இருந்துதான்!
"ஐ ஹாவ் பீன் லிஸ்னிங் டு யுவர் கொன்வசேஷன்" அவன் மிழற்றினாள்.
"நானும் ஒரு தமிழ்ப் பெண்தான்" என்று தமிழில் மழலை பயின்றதும், என் ஆச்சரியத்திற்கோ அளவில்லை. பேச முடியாமல் திக்கித்திணறினேன். சொற்களைச் சித்தரிப்பதில் என் மனம் இலயித்தது.
"அப்படியெண்டா இந்த உடுப்பு என்னத்திற்கு உடுத்தியிருக்கிறீங்க?" என்று துணிந்து கேட்டுவிட்டான் செல்லத்துரை.
"ஓ! அதுவா? அது ஒரு பெரிய கதை"
"சுருக்கித்தான் சொல்லுங்களன்” அர்த்தமற்ற முறையில் ஜன்னலூடே பார்த்தேன். 'பொல பொல" என்று விடிந்து கொண்டிருந்தது.
தூரத்தில் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை மின்விளக்கு களினால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது. ஒட்டை மாவடிப் பாலத்தை ரெயில் கடந்து கொண்டிருந்தது.
இன்னுமொரு மணித்தியாலத்தில் 'மீன்பாடுந்தேன் நாட்டில் மிதிக் கலாம் அல்லவா?
பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் தருக்களின் அழகும், கண்ணுக் குக் குளிர்ச்சி தரும் கவினுறு காட்சிகளும் பண்டைத்தமிழ் நிலங்களின் வளத்தை நினைவூட்டும் இயற்கைச் சூழலும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. ۔
"கேளுங்கள் அம்பி! தங்கச்சி ஒரு கதை சொல்லப் போறாவாம்" என்று என் கவிதை மனத்தைக் கலைத்தான் செல்லத்துரை.
நான் ஒன்றும் பேசாமலே தலையைத் திருப்பிச் செல்லத் துரையின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இனம் இனத்துடன். 7ெ3
அவளைப்பார்க்க எனக்கு வெட்கம்!
"என் பெயர் விஜயமலர். கொழும்பில் படிக்கிறேன். நேற்று எங்கள் கல்லூரியில் வினோத உடைப் பவனியிருந்தது. நான் சிங்களக் கிராமிய அழகியின் தோற்றத்தில் பங்கு பற்றினேன்.
"மட்டக்களப்பில் என் தாயாருக்குச் சுகமில்லை என்றும் உடனே வரும்படியும் தந்தி வந்தது. பெட்டி படுக்கை கட்டவே அவகாசமில்லை. ரெயிலுக்குச் சில நிமிஷங்களே இருந்தன. உடுத்தியிருந்த உடையுடனே கிள ம்பிவிட்டேன்.
இந்தக் குடும்பம் மட்டக்களப்புக்குப் போகுதென அறிந்து இவர் களுடன் சேர்ந்து நானும் பிரயாணஞ் செய்கிறேன்" என்று கூறி முடித்தாள்.
அவள் காட்டிய குடும்பம் ஒரு சிங்களக் குடும்பம். மட்டக் களப்பு ரெயில் பிரயாணிகள் எல்லாருமே சிங்களவர் போலல்லவா தோன்றுகிறது.
"நீங்க எங்கே இருக்கிறீங்க?"
"லேக் ரோட்டில” அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அமைதியாக நான் அவர்கள் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டி ருந்தேன். எனக்கென்னவோ பேச முடியவில்லை.
உதிரி வசனங்கள் தன்னும் உச்சரிக்க முடியவில்லை. சொக்கிப்போனேனோ என்னவோ?
முதலில் அவளை வெறுத்துப் பேசிய செல்லத்துரை அவளுடன் குதூகலமாகப் பேசிக் கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை.
என்னைப் பார்த்து முதலில் சிரித்த அவள், நான் உதவாக்கரை என்று அறிந்தோ என்னவோ செல்லத்துரையுடன் சிரித்துச் சிரித்துப் பேசினாள்.
இருவரும் என்னை அலட்சியம் செய்தனர். இனம் இனத்துடன் தானே சேரும்! மட்டக்களப்பு நிலையத்தில் வண்டி வந்து நின்றது. அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். நான் ரெயிலை விட்டு இறங்கி நடந்தேன்.
(தினகரன் 1960)

Page 44

கண்டிச் சூழல் கதை

Page 45
அவர்கள் உலகம்
மணி ஏழு
கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து வண்டி புறப்படுகின்றது. கூட்டம் அதிகமில்லை.
இரண்டாம் வகுப்புப் பெட்டியொன்றில் சுந்தரமூர்த்தியும் இன்னுமொரு இளைஞனும் இருக்கின்றனர்.
வேகமாக ஒடுகின்றது ரெயில்!
சுந்தரமூர்த்தி யன்னலூடே வெளிப்புறக்காட்சிகளைப் பருகிக் கொண்டிருக்கிறான். அந்த இளைஞனோ ஒரு நாவலின் கடைசிப் பக்கங் களைப் படித்துக் கொண்டிருக்கிறான்.
பிரபலமான ஒரு தமிழ் நாட்டுப் பிரசுராலயத்தினரால் வெளியிடப் பட்டிருந்த அந்த நாவலின் ஆசிரியர் வேறு யாருமிலர்!
ஈழத்துப் பிரபல எழுத்தாளனான சுந்தரமூர்த்திதான்!
தன்னெதிரே சதையும் குருதியுமாக அமர்ந்திருக்கும் சக பிரயாணிதான் சுந்தரமூர்த்தி என்பதை அவ்விளம் வாசகன் அறியான்.
ராகமைக்கு வந்து சேர்கின்றது வண்டி
"அப்பப்பா! என்ன வெப்பம்" என்று அலுத்துக் கொள்கிறான் அந்த யுவன்.
பேச்சுத்துணைக்கு யாருமில்லை என்ற சுந்தரமூர்த்திக்கு மகிழ்ச்சிதான்! "ஆமாம்! சரியான வெப்பநிலைதான்" "சிகரெட் பிடிப்பீர்களா?" கேட்பது யுவன்.
"மிக்க நன்றி, நான் புகைப்பிடிப்பதில்லை”
ஆடத் சிகரெட் அவ்வாலிபன் வாயை அலங்கரிக்கிறது. கையிலிருந்த புத்தகத்தின் சில பக்கங்களை குறிப்பாற் படித்துவிட்டு மூடி வைக்கிறான்.
"மிகவும் பிரமாதம்” விமர்சிப்பது அவ்விளைஞன்தான்!
"அப்படியா?”

அவர்கள் உலகம் 0 77
"இந்த நாவலாசிரியர் இலங்கையைச் சேர்ந்தவர். சுந்தரமூர்த்தி என்று பெயர்"
"ஒகோ" வேடிக்கை பார்க்க விரும்புகிறான் மூர்த்தி. "மிஸ்டர் மூர்த்தியின் நாவல்களை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?” "உம். ஒன்றுமே வாசிக்கவில்லை நான். அப்படியென்ன பிரமாதமான எழுத்தாளரா அவர்?" என்று கேட்டுத் தன்னுள் சிரித்துக்கொள்றான் மூர்த்தி,
"அப்படிச் சொல்லக் கூடாது. இன்றைய தமிழ் நாவலாசிரியர்கள் வரிசையில் சுந்தரமூர்த்தி ஒரு முக்கிய இடம் வகிக்கிறார். தமிழ் கற்ற மேலை நாட்டறிஞர்கள் கூட மூர்த்தியின் நாவல்களுக்கு தக்கமதிப்புக் கொடுத்திருக்கிறார்கள். அவரைப்பற்றி நீங்கள் கேள்விப்பட வில்லையா? "கேள்விப் பட்டிருக்கிறேன்" மூர்த்திக்குத்தான் இன்னார் என்று சொல்ல வேண்டும் போலிருக்கின்றது. ஆனால், அவசரப் படவில்லை. வேடிக்கை பார்க்க விரும்புகிறான்.
"மஹநுவர எக்ஸ்பிரஸ்" துரித கதியில் ஓடிக்கொண்டிக்கிறது. "எங்கு வரைக்கும் போகிறீர்கள்?" வாலிபன் கேட்டான். "பேராதனைக்குப் போகிறேன்” "அப்படியா நானும் அங்குதான் போகிறேன்" "அப்படியானால் யூனிவர்ஸிட்டியிலா படிக்கிறீர்கள்?" "இல்லையில்லை! இனி மேல்தான் நான் அங்கு சேர வேண்டும். இப்பொழுதுதான் புகுமுகப் பரீட்சைக்குத் தோற்றியிருக்கிறேன். முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை"
"அப்படியா?"
"நீங்கள். உங்கள் பெயரென்ன?”
"சுப்பிரமணியம்." வேண்டுமென்றே ஒரு பொய்யைச் சொல்கிறான் மூர்த்தி.
"ஆமாம். உமது பெயரென்ன?"என்று தொடர்ந்து அந்த இளைஞனைக் கேட்கின்றான்.
"தில்லையம்பலம் என் பெயர். யாழ்ப்பாணத்தில் படிக்கிறேன். ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளைக் கொண்ட ஒரு புத்தகக் கண்காட்சியை இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பகுதியினர் ஒழுங்குபடுத்தியிருக் கின்றனர். அந்த 'எக்ஸிபிஷனுக்குத்தான் போகிறேன்" என்று முழு விபரங்களையும் கொடுக்கிறான் தில்லையம்பலம். V

Page 46
78 0 கே.எஸ். சிவகுமாரன்
பொல்காவலையில் ரெயில் வந்து நிற்கின்றது. இவர்கள் இருக்கும் பெட்டியில் மூவர் வந்தேறுகின்றனர். அவர்களுக்கு இருபதிற்கும் இருபத்தைந்துக்கும் இடையில் வயது இருக்கும்.
அவர்கள் நடையுடை பாவனை முதலியன அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றன.
இருவர் "வெள்ளைச் சுருட்டை ஊதித்தள்ளுகின்றனர். மூன்றாமவன் பிளாட்போமில் உலவுவோரைப் பற்றியும் புகையிரத நிலையத்திற்கு வருவோர் போவோரைப் பற்றியும் விவரணத் தொகுப்பைத் தொடுத்துக் கொண்டிருக்கிறான்.
ரெயில் புறப்படுகின்றது.
"டிங்கிரி டிங்காலே” முதல் "மாமா மாமா" வரை டப்பாப் பாடல்கள் எல்லாம் அவர்கள் தொனியில் புது மெருகு பெற்றுப்பெட்டியை ஆர்ப்பரிக்கின்றன!
சக பிரயாணிகள் இருவரையும் அலட்சியம் பண்ணுகின்றனர் மாணவர். கடுகண்ணாவையை வண்டி வந்தடைகின்றது. மாணவர்கள் தங்கள் சப்தஸ்வரங்களை நிறுத்துகிறார்கள். மூர்த்தியும் தில்லையம்பலமும் ஆர்வத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.
தில்லையம்பலத்தின் கையிலிருக்கும் நாவலைக் காணும் ஒருவன், "லெற் மீ ஹாவ் தற் படி" என்று வாங்கித்தன் நண்பர்களிடம் காட்டுகின்றான்.
"பூ! இவன்களுக்கெல்லாம் என்ன நாவல் என்று கேட்கிறேன்" என்று ஆரம்பிக்கிறான் அம்மாணவர்களில் சூடிகையாய் தோற்றமளிக்கும் ஒருவன். தில்லையம்பலத்தின் முகத்தில் ஈயாடவில்லை, தன்னைப் பற்றித்தான் கூறுகின்றான் என்று.
சுந்தரமூர்த்திக்கு வியப்பு! "இல்லை மச்சான் நாவல் என்றால் என்ன என்று தெரியாத புல்லுருவி பேனாக்கிறுக்கிகள் எல்லாம் 'எழுத்தாளர்கள் என்று வெளிக் கிட்டிருக்கேக்குள்ள பின்ன, என்ன சொல்லறதாம்?” என்று அந்த மாணவனே கூறி முடிக்கின்றான்.
சுந்தரமூர்த்திக்கோ விவரிக்க முடியாத அனுபவம். நாக்கு குழறுகின்றது. 'உமிரி விழுங்குகின்றான்.

அவர்கள் உலகம் 0 79
"என்ன மச்சான் 'கொன் அடிக்கிறாள்? சுந்தரமூர்த்தி இதை எழுதிய தாக்கும்" என்கிறான் சற்று உயரமான மாணவன்.
"அட, ஒஹோ என்றானாம்! சுந்தரமூர்த்தி பெரிய எழுத்தாளனே! சும்மா போடா! சுன்னாகத்திலே என்னுடைய பக்கத்துவீட்டுக்காரன் அல்லே இவன்" என்று பதிலளிக்கிறான் முதலாமவன்.
"பொய் மூர்த்தி கொழும்பிலேல்ல இருக்கிறான். உனக்கு எப்படி யடப்பா அவன் பக்கத்து வீட்டுக்காரனாவான்?" என்கிறான் மூன்றாமவன்.
"மச்சான் இந்த ராமாவின்ரை வாயில ஒரு நாளும் பொய் வராது, கண்டியோ? உனக்குச் சங்கதி தெரியுமா? இங்கிலிஷ் நாவல்களை வாசிச்சுப்போட்டு 'புளட்டுகளைத் திருடித்தானாம் அவற்றைச் சாம்பாராய் அவித்து நாவல் சமைப்பதாக என்னிடம் கூறியிருக்கிறான், பேந்தென்ன?”
மற்ற மாணவர் இருவரும் ராமா என்றழைக்கப்படும் மாணவனின் புளுகுகளை நம்புவது போல் நடிக்கின்றனர். சுந்தரமூர்த்தி அதிர்ச்சியினால் கட்டுண்டவன் போல வாயடைத்து மாணவர்களின் அரட்டையைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்.
தில்லையம்பலமோ திறந்த வாய் மூடாது சுவாரஸ்யமாக உரையாடல் களைக் காது குளிரக் கேட்டுக்கொண்டிருக்கிறான். அவனும் விரைவில் பல்கலைக்கழக மாணவனாகலாம் அல்லவா?
புகைவண்டி பேராதனையை வந்தடைகின்றது. எல்லோரும் இறங்குகி ன்றனர். மாணவர்கள் தூரத்தில் தெரியும் தங்கள் விடுதிகளுக்குச் செல்கிறார்கள்.
தில்லையம்பலம் சுப்பிரமணியத்திடம் (சுந்தரமூர்த்தி) விடைபெற்றுக் கொண்டு நிலையவாயிலைத் தாண்டிச் செல்கிறான்.
நிலையத்தில் காத்திருக்கும் சிலர் வந்திறங்கிய பிரயாணிகள் சிலருக்கு மாலையிட்டு வரவேற்கின்றனர்.
வந்திறங்கிய எழுத்தாளர்களுக்குப் பல்கலைக்கழக புத்தகக் கண்காட்சி வரவேற்புச் சபையின் உபசரிப்புத்தான் வேறென்ன..?
சுந்தரமூர்த்தியிடம் இரு விரிவுரையாளர்கள் வந்து கைகுலுக்கி மாலை போட்டு அழைத்துச் செல்கின்றனர்.
மாலை ஐந்து மணி! பேராதனைப்பல்கலைக்கழக முதியோர் சபையின் முன்னே பெரு வாரியான மக்கள் கூடியிருக்கின்றனர்.
ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களைப் பார்ப்பதுடன் அவர்களுள் ஒரு சிலரை நேருக்கு நேர் காணும் வாய்ப்பினையுந்தாங்கள் பெற முடியும்

Page 47
80 0 கே.எஸ். சிவகுமாரன்
என்பதனால் மலைநாட்டுத் தமிழர் மட்டுமன்றி, தமிழ்பேசும் இடங்களிலிருந்தும் மக்கள் வந்திருக்கின்றனர்.
பொதுமக்கள் புத்தகங்களைப் பார்வையிடு முன், பல்கலைக்கழகத் துணைவேந்தர், கண்காட்சிக்கு வந்திருக்கும் எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தி வைக்கிறார்.
தனது குரலைக்கனைத்துக் கொண்டு அவர் ஆங்கிலத்தில் ஆரம்பிக் கிறார்.
"சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த பிரபல ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் திரு. சுந்தரமூர்த்தியை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். அவர் ஈழத்தின் பெயரை தமிழ் எழுத்துத் துறையில் பிரதிபலிக்கச் செய்துள்ளார் என்று தமிழ்ப்பேராசிரியர்கள் என்னிடம் கூறினார்கள். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதையிட்டு நான் பெருமை கொள்கிறேன். இதோ திரு. சுந்தரமூர்த்தி"
"மிக்க நன்றி ஐயா" என்று சுந்தரமூர்த்தி அவருக்கு ஆங்கிலத்தில் பதிலளித்துவிட்டு கூடியிருந்த மக்களுக்குத் தலைகுனிவதன் மூலம் தன் வணக்கத்தைச் செலுத்துகின்றான்.
நான்கு சுவர்களும் அதிர்கின்றன. கைதட்டல் ஒலி காதைப்பிளக் *கின்றது.
தில்லையம்பலத்திற்கோ அளவிலா ஆச்சரியம். சுப்பிரமணியம் என்ற பெயரில் காலையில் தன்னுடன் பிரயாணஞ் செய்த அந்தப் பிரகிருதிதான் பிரபல எழுத்தாளர் சுந்தரமூர்த்தி என்று அறிய வெகு நேரம் பிடிக்கவில்லை.
"ராமா" என்றழைக்கப்பட்ட அந்தப் பல்கலைக்கழக மாணவனுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் தாங்க முடியாத அவமானம்.
ரெயிலில் சுந்தரமூர்த்தியைப் பற்றி அவன் முன்னிலையிலேயே தாங்கள் புழுகியதைக் கேட்டு அவன் என்ன நினைத்திருப்பானோ என்று வருந்துகின்றனர். அவன் தங்களுடன் பிரயாணஞ் செய்வான் என்றோ ஒரு புத்தகக் கண்காட்சி பேராதனையில் நடைபெறுமென்றோ அவர்கள் காத்திருக்கவில்லை. அதனாலேயே அவர்கள் தங்களுக்கே உரித்தான கேலிப் பேச்சுக்களிலும் சேட்டைகளிலும் புளுகுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
"ஏன் ஸேர்? கண்டிக்குப் போவோமா? இன்றைக்கு இராச்சாப்பாடு உங்கள் கணக்கில்தான்" ராமா தன் நண்பர்கள் புடைசூழ மூர்த்தியை நெருங்கிக்கேட்கிறான்.
"பொறுங்கள் தம்பிமாரே! உங்களை எனக்குத் தெரியாதே எப்படி நான் உங்களை அழைத்துச் செல்வேன்?"

அவர்கள் உலகம் 8ெ1
"ஐயா எழுத்தாளர் மூர்த்தி அவர்களே! சும்மா போஸ் காட்டாதீங்க! வாங்க ஸேர், போகலாம்" ஒருவன் துணிந்து மூர்த்தியை இழுக்கிறான். "மன்னியுங்கள். உங்கள் விருப்பத்தைப்பூர்த்தி செய்ய முடியாததையிட்டு வருந்துகிறேன்” என்று மிடுக்குடன் பதிலளிக்கிறான் மூர்த்தி.
அதற்குமேல் அவனைத் தொந்தரவு செய்ய அவர்கள் விரும்பவில்லை. "சரி சரி பாதகமில்லை! ஆனால் மனதில் எதையும் வைத்திருக் காதீர்கள். எங்கே கைகுலுக்குங்கள் பார்க்கலாம்”
"சே! அப்படியொன்றும் தவறாக நான் நினைத்துக் கொள்ளவில்லை" சுந்தரமூர்த்தி மாணவர்களுடன் கைகுலுக்குகின்றான்.
மன நிம்மதியுடன் அவர்கள் அவனை விட்டுச் சென்றனர், உண்மையில் சுந்தமூர்த்திக்கு மாணவர்கள் மீது சிறிதேனும் கோபம் வந்ததில்லை! மாணவர்களின் கோலாகலமான கேளிக்கைகளைப் பற்றி
அறிந்திராத எழுத்தாளனும் ஒரு எழுத்தாளனா? சுந்தர மூர்ததிக்குத் தெரியும் அவர்கள் உலகம், ஒரு தனியுலகம் என்று!
(சுதந்திரன் 1960)

Page 48

தமிழகச் சூழல் கதைகள்

Page 49
கருணையின் விலை என்ன?
ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிறு காலை.
நெடுஞ்சாலை மத்தியில் ஆங்காங்கே நடப்பட்ட கம்பங்கள். அவற்றிலே கட்டப்பட்ட ஒலி பெருக்கிகள் பலவிதமான இசையொலிகளை கர்ண கடூரமாய்ப் பரப்பிக்கொண்டிருந்தன. இதனையெல்லாம் பொருட்படுத்தாது மனிதர்கள் குழாம் வீதி முழுவதுமே நடமாடியது. வாகனப் போக்கு வரத்து விதிகளை அனுசரிக்காது "ட்ரைஷோக்களும், ஏனைய வாகனங்க ளும் கண்மூடித்தனமாக அவ்வீதியில் எதிரும் புதிருமாகப் பறந்தன. அவ்வாகனங்களில் மோதித் தொலைக்காமல் மிகவும் பாரமான சூட்கேஸைக் கையில் தூக்கிக் கொண்டு நெடுஞ்சாலையைக் கடந்து திரு வனந்தபுரம் "ரெயில்வே ஸ்ரேஷனுக்குள் பிரவேசித்தேன்.
முதல் நாள் மாலைதான் கேரளத் தலைநகரை வந்தடைந்தேன். விமான நிலையத்தில் யாரோ எனது பெரிய சூட்கேஸின் அடிப்பாகத்தைச் சிறிது கிழித்திருந்தார்கள். விமானத்திலிருந்து சுங்கப்பகுதிக்குப் பொதிகளைக் கொண்டு வரும்பொழுதே யாரோ கத்தியால் எனது பொதியின் அடித் தளத்தைக் கிழித்திருக்கவேண்டும். கள்ளக் கடத்தல் பொருளையோ வேறு ஏதோ பொருளையோ கண்டுபிடிக்க அல்லது தாமே எடுத்துக்கொள் வதற்காக யாரோ இதனைச் செய்திருக்க வேண்டும். ஆயினும் அவர் நம்பிக்கை வீண்போய் விட்டது. நான் அவ்விதமான பொருள் எதனையும் கொண்டு செல்லவில்லை. எனது உடுப்புப் பெட்டியை நான் கையோடு வைத்திருக்கவில்லை. பாரத நாட்டின் பல பாகங்களில் என் மூன்று வாரச் சுற்றுப் பயணத்தின் போது தேவைப்படலாம் என்று கருதி "ஸ"ட்கேஸ் நிறைய உடுப்புகளை அடுக்கி வைத்திருந்தாள் என் மனைவி.
எனவே, கிழிக்கப்பட்ட பலமிழந்த கைபிடி கொண்ட பெட்டியுடன் கஷ்டப்பட்டு 'பிளட்போர்முக்குள் பிரவேசித்தேன். என்ன தலைவிதி! ஸ்டேஷனையொட்டி அல்லாமல் அடுத்த ரயில் பாதையில் நான் செல்ல வேண்டியிருந்த வண்டி நிறுத்தப் பட்டிருந்தது. அடுத்த மாநிலமான தமிழ் நாட்டிலுள்ள நாகர் கோவிலுக்கு நான் போக வேண்டியிருந்தது. எப்படி நான் அடுத்த "லைனுக்குச் செல்வேன்? படிக்கட்டுகளோ மேம்பாலமோ கிடையாது.
ரயில் நிறுத்தப்பட்டிராத வெற்று ‘லைனில் பெட்டியுடன் இறங்கி,

கருணையின் விலை என்ன? 0 85
பாதையைக் கடந்து, சமரேகையாய் இருந்த "லைனில் நிறுத்தப்பட்டிருந்த வண்டியிலே மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்கச் சுமையுடன் ஏறினேன். வண்டி திருநெல்வேலி புறப்படவிருந்தது. நான் போகவிருந்த இடம் கேரள எல்லையில் செல்லும் வழியில் இருந்தது.
வண்டியோ மூன்று நான்கு ரயில் பெட்டிகளைக் கொண்டது. முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று, அப்படியொன்றும் கிடையாது. வண்டி முழுவதும் பாடசாலைப் பிள்ளைகள். கஷ்டப்பட்டுப் பெட்டிகள் இடையேயிருந்த வெற்றிடமொன்றிலே 'சூட்கேஸை வைத்துவிட்டு விரக்தியுடன் நின்றுகொண்டிருந்தேன். அதிகாலை 6.00 மணியளவில் அப்பிள்ளைகளின் கவின் மலையாளக் குளவி மொழியொலிகள் இனிமை யாகத்தான் இருந்தன. ஆயினும் கொழும்பிலிருந்து போய்ச்சேர்ந்த நேரந்தொடக்கம் பிரயாணக் களைப்பு மிகுதியினால் நான் அசதியாகவும் சுவாரஸ்யமற்றும் இருந்தேன்.
"ட்ரெயின் மெல்ல நகரத் தொடங்கியது. பயணிகளை நோட்டமிட ஆரம்பித்தேன். திராவிடச் சிறார் மத்தியிலே வசதியாக வட இந்தியர் ஒருவர் அமர்ந்திருப்பதை அவதானித்தேன். எனது கண்கள் சந்தித்தன. எனது தர்ம சங்கட நிலையைக் கண்டு தெம்பு அளிக்கும் வகையில் அவர் புன்னகை புரிந்தார். நான் அரை மனதுடன் அதனை ஏற்றுக் கொண்டேன். அடுத்த ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றது. அடேயப்பா என்ன நிவாரணம்! எல்லாப் பிள்ளைகளுமே குன்றிலிருந்து கீழிறங்கும் ஆட்டுக் குட்டிகளைப் போலவே சட்சட்டெனக் கீழே குதித்தனர். ஒரு நிமிடத்திலே நான் நின்றிருந்த கொம்பார்ட்மென்டின் முழுப் பகுதியுமே காலியாகியது.
நட்புறவை நாடும் அந்த அந்நியனையும் என்னையும் தவிர வேறு எவருமிலர். நான் அவருக்கருகே அமர்ந்து கொண்டேன். எனக்கருகே சூட்கேஸை இழுத்தேன். என்ன இழவு கைப்பிடி கழன்றே விட்டது.
கடவுளே! 'சூட்கேஸைத் தலையில் வைத்துத்தான் இனி எடுத்துச் செல்லவேண்டும் என்று பயந்தே விட்டேன். ஆம் அப்படித்தான் செய்ய வேண்டும். இந்த அந்நிய நாட்டிலே எங்கிருந்தோ உடனடியாக மாற்றுக் கைபிடியைத் தேடிப் போடாவிட்டால் தலையில் சுமந்துதான் செல்ல வேண்டும்.
எனது சக பிரயாணி உற்சாகப்படுத்தினார்: "கவலைப் படாதீர்கள், நீங்கள் இறங்கும்பொழுது சரிக்கட்டி விடலாம். சொன்னாற் போல, நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?" துப்பரவான ஆங்கிலத்திலே சிறிது இந்திய உச்சரிப்புடன் அவர் என்னைக் கேட்டார். நான் ஓர் இந்தியன் அல்லன் என்பதை அவர் ஊகித்திருக்க வேண்டும். நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்றும், இப்பொழுது முதற் தடவையாக, நாகர்கோவிலில் ஒரு நண்பரின் இல்லத்தில் தங்கிச் செல்ல இருக்கிறேன் என்றும் அவரிடம் கூறினேன்.

Page 50
86 0 கே.எஸ். சிவகுமாரன்
"நான்கூட இந்தப் பகுதிக்குப் புதிசு. கன்னியாகுமரிக்குப் போகிறேன். உங்களுக்குத் தெரிந்திருக்கும் உல்லாசப் பயணிகளைக் கவருமிடம்" என்றாரவர்.
"நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று வினவினேன்.
"நான் டெல்லியில் இருக்கிறேன்" என்று கூறித் தனது இன்னாரென்ற அட்டையைத் தந்தார் அவர். இந்தியத் தலைநகரிலே நாகரிகமிக்க ஒரு பகுதியிலே வர்த்தக நிறுவனமொன்றின் நிறைவேற்று அதிகாரி
பரஸ்பரம் இருவரும் ஒத்த ஈடுபாடுள்ள பல விஷயங்கள் பற்றி உரையாடினோம். எங்கள் உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாக இருந்த தனால், ரயில் ஒரு தரிப்பு நிலையத்தில் வந்து நின்றதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். யன்னலுரடே பார்த்தபோது, நாகர்கோவில்' என்ற பெயர்ப் பலகையைக் கண்டேன். இதுதான் இடம் என்று நினைத்துக் கொண்டேன்.
ட்ரெயினில் இருந்து துரிதமாக இறங்கினேன். நண்பர் சூட்கேஸை யன்னலூடாகக் கீழேயிறக்க உதவினார் ரயில் மெல்லப் புறப்பட நாங்கள் பிரியாவிடை பெற்றுக்கொண்டோம்.
ஐயோ, தெய்வமே! அது நாகர்கோவில் ஸ்டேஷனே அல்ல. வெறுமனே ஒரு தரிப்பு இடம். உண்மையிலே ரயில் நிலையம் மூன்று மைல் தூரத்தில் இருப்பதாக அத்தரிப்பு நிலையத்தில் காணப்பட்ட இருவரில் ஒருவர் கூறினார். அவர் பிரயாணச் சீட்டு வழங்குபவர்.
"இப்ப நான் என்ன செய்வது? இந்த ரயில் பாதை நெடுகிலும், கைப்பிடியற்ற கிழிந்த 'சூட்கேசுடன் நான் எப்படிச் செல்லப்போகிறேன்" என்று திகைத்துப்போய் நின்றேன். என் மீது நானே பரிதாபப்பட்டுக் கொண்டேன். இப்படியானதொரு நிலைமையிலே என்னத்தைச்செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றேன்.
டிக்கட் விற்பனை சாவடியிலிருந்தவர் எதிலும் அக்கறை செலுத்தாது, தான் கையில் வைத்திருந்த சஞ்சிகையிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்தார். என்னைக் காணவே அவருக்கு வெறுப்பாக இருந்தது போல இருந்தது அவர் செயல். என்னுடன் அவர் பேச விரும்பவில்லை.
ஏதாவது செய்ய வேண்டும் என்றெண்ணி மீண்டும் சுற்று முற்றும் பார்த்தேன். அப்பொழுதுதான் அவதானித்தேன். எங்களிருவருடன் மற்று மொரு உயிரும் அங்கு நின்றதை தலையைச் சற்றே தாழ்த்தியவாறு, ஊத்தை உடுப்புடன், பணிவான முறையிலே ஒரு கிராமவாசி அங்கு நின்றான். 'ஒரு வேளை பிரயாணியாக இருக்கலாம் என நினைத்துக்கொண்டேன். எனவே அவனிடம் உதவியை நாடத் தயங்கினேன்.
பணிவாகக் காணப்பட்டாலும் ஒரு கூலியாள்போல அவன் காணப்

கருணையின் விலை என்ன? 0 87
படவில்லை. அவனிடத்தே உள்ளார்ந்த திடகாத்திரம் இருப்பதை அவதானித்தேன். கண்கள் சந்திப்பதை அவன் தவிர்த்துக்கொண்டாலும் எங்கள் கண்கள் சந்தித்தபோது, பிரகாசிக்கும் அவன் கண்களில் கருணைச் சமிக்ஞை காட்டுவதை நான் அவதானித்தேன்.
நான் முறுவலித்தேன். அதையே அவன் எதிர்பார்த்தது போல முகம் விரிய அவன் புன்னகை செய்தான். இது அவனுடைய ஆரம்பத் தோற்றத்தை விடத் துரித மாற்றமடைந்த தோற்றமாகும். மெல்ல என்னருகே அவன் வந்தான். "என்னா சார், எங்கே போகணும்" எனக் கேட்டான். m
இலங்கைத் தமிழுக்கேயுரிய பேச்சு மொழியிலே நான் விஷயத்தை அவனுக்கு விளக்கினேன். எனது பேச்சோசை அவனுக்கு வித்தியாச மாகப் பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். உடனே அவன், "சார், யாழ்ப்பாணமா?” என்று கேட்டான். அப்படித்தான்” என்றேன்
ஒன்றுமே பேசாது, அந்தப் பெரிய பாரத்தைத் தூக்கித் தன் தலைமேலே வைத்துக்கொண்டான். "வாங்க சார், நாம பஸ்ஸிலேயே போயிடலாம்” என்று கூறிக்கொண்டே அவன் நகரத் தொடங்கினான்.
நான் மெளனமாக அவனைப் பின் தொடர்ந்தேன். பிரதான வீதிக்குச் செல்லும் ஒடுங்கிய பாதையூடாக அவன் நடக்கத் தொடங்கினான். நடந்துகொண்டு போகும்போதே பிரதான வீதி வந்ததும், பட்டணத்துக்குப் போக பஸ் ஒன்றைப் பிடித்து விடலாம் என்று அவன் தெரிவித்தான்.
கஷ்டப்படும் ஒருவனுக்கு உதவும் உள்ளார்ந்த பண்பாகவே அவன் செயலை உண்மையிலே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். எளிமையான கரடு முரடான கிராம வாசிகளிடையே தான் இந்த உதவும் பண்பு காணப்படும். அவனிடத்தே இருந்த அன்பு எனது அந்தர நிலையை நீக்க உதவிற்று. எனக்காக இந்த உதவியைச் செய்வதனால் அவனது நேரத்தை விரயமாக்கி, அவன் மேற்கொளவிருந்த பயணத்தை நான் தடை செய்கிறேனா என்று அவனிடம் கேட்டேன்.
"இல்ல சார் நாம அடுத்த வண்டியில, அடுத்த ஊருக்குப் போகணும். பரவாயில்ல, இது என்னா சார்? இந்தா ரோடு வந்திருச்சு”
பதினைந்து நிமிஷ துரித நடையின் பின்னர் பிரதான வீதியை நாம் அடைந்துவிட்டோம். நாமும் அங்கு செல்ல பஸ்ஸும் ஒன்று அங்கு வந்தது. நாகர் கோயில் பட்டணத்துக்குச் செல்ல வேண்டிய பஸ்தான் அது.
பஸ் வண்டியில் ஏறு முன், நான் கேட்காமல் அவன் செய்த உதவிக்காக இரண்டு ரூபாய் நோட்டை அவனிடம் கொடுத்தேன். அவன் முகம் சிவப்பாயிற்று. "வாணாமுங்க, என்னா இது, மனுஷனுக்கு மனுஷன் உதவ வேண்டாமா?” என அவன் சற்று உரத்த குரலில் கூறிக்கொண்டான்.

Page 51
88 0 கே.எஸ். சிவகுமாரன்
பஸ்ஸும் நகரத் தொடங்கியது. எனது இரு கரங்களையும் கூப்பி வணக்கம்' என்று மரியாதை செலுத்துவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதறியாது விழித்தேன். அவனும் பதிலாகக் கரங்கூப்பி வணக்கம் செய்தான்.
மனிதப் பிறவி ஒன்று இன்னொரு மனிதப் பிறவிக்காகச் செய்த உதவிக்காகச் சன்மானம் கொடுக்கப்படுவதை அவன் அவமானஞ் செய்யப்படுவதாகக் கருதினான் என்பதைச் சடுதியாக நான் உணர்ந்தேன். இந்த நிகழ்ச்சியை நினைத்து நினைத்து என் இதயம் நீண்ட காலம் எனக்குள் அழுது இருக்கிறது. அந்நிகழ்ச்சியின் தாக்கம் என்னைத் தொட்டுச் சென்றது.
(மல்லிகை)

குறிஞ்சிக் காதல்
அது ஒரு மலைப் பிரதேசம், குறிஞ்சி நிலச் சாரல்.
வானளாவிய குன்றுகள்! நீர் வீழ்ச்சிகள்! மலையடிவாரத்திலுள்ள பூந்தோப்புகள்! தினைப்புனங்கள்! மலைக்குன்றுகள் சிற்றாறுகள்! பலவகைப்பட்ட விலங்கினங்களும், புள்ளினங்களும்!
அப்பகுதியின் கவர்ச்சியை மேலும் அழகுப்படுத்துகின்றன. கண்ணைப் பறிக்கும் வண்ணக் காட்சிகளைத் தினமும் கண்டுகளிக் கின்றனர் அங்குள்ள மக்கள்!
மலைகளிடையே ஞாயிறு மறைந்திருக்கும் பொழுது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
முழு நிலவு நாட்களில், தண்மதியின் தங்க நிலாவொளி மண்ணினை வெண்முலாம் பூசிவிட்டிடும்.
களவொழுக்கத்திற்கு உகந்த பிரதேசம் குறிஞ்சி நிலம்.
அங்கே காளையரும் கன்னியரும் கனவில் தங்கள் அகத்தினை ஒருவருக் கொருவர் வெளிப்படுத்துவர்.
இன்று. வான மண்டலத்தில் விண் மீன்கள் கண்களைச் சிமிட்டிக்கொள் கின்றன.
திங்களின் பால் நிலவு அப்பிரதேசமெங்கும் ஆடை போர்க்கிறது.
தலைவியொருத்தி தன் பாங்கியருடன் சோலையிடையே விளையாடிக் கொண்டிருக்கிறாள்.
அவள் பெயர் அங்கையற்கண்ணி!
வட்டவடிவமான அவள் வதனத்தில் அழகு, முழு நிலாவின் ஒளியினால் மிக வெழிலுடன் விளங்குகின்றது.
எனினும்

Page 52
90 0 கே.எஸ். சிவகுமாரன்
அவள் முகத்தில் வேதனையின் சாயல் படர்ந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
அவள் விரக நோயினால் வாடிக் கொண்டிருக்கின்றனளோ? காதல் வியாதி அவளையும் வாட்டுகின்றது போலும்!
தன்னை மறந்து அவள் சோக கீதம் பாடுகின்றாள்.
சோலையில் கேட்கும் இன்னிசையை இரசித்துக்கொண்டு ஆணழகன் குன்றுத்தேவன் கையில் வேலுடன் வந்து கொண்டிருக்கின்றான்.
இதோ
தன் குரலெழுப்பிய யெளவன மங்கையைக் காண்கின்றான்.
நான்கு கண்கள் ஒரே நேரத்தில் சந்திக்கின்றன. ஒரு கண நேரம் சிறிது கலக்கம். பின்னர் தெளிவு.
தோழியர் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.
தலைவியிடம் தலைவன் பேச விரும்புகிறான்.
அவள் செவ்விதழ்களையும், கருங்கூந்தலையும், தாமரை வதனத்தையும், கயல் விழிகளையும், குரும்பையன்ன கொங்கைகளையும், பூவுடலையும், துடியிடையையும், கமுகு நிறத் தொடைகளையும் வருணித்துச் செல்கிறான்.
அங்கையற்கண்ணிக்கோ
வெட்கம் பிடுங்கித் தின்கின்றது.
அவள் தலையைக் கவிழ்ந்து சிலையாக நிற்கிறாள். பின் அசைவு பெறு கிறாள். காற் பெருவிரலினால் நிலத்தில் ஏதோ கீறிக் கொண்டிருக்கிறாள்.
குன்றுத் தேவனின் குறும்புப் பேச்சைக் கேட்டுத் தோழியர் கலகல வெனச் சிரிக்கின்றனர்.
"என்ன, என்னுடன் பேசினால் உன் வாய் முத்துதிர்ந்துவிடுமோ?” என்கிறான்.
அவள் விடை பகருவதா வேண்டாமா என்ற இடைநிலையில் தத்தளிக்கும் போது
மதவெறி கொண்ட வேழமொன்று அவர்களிருக்குமிடம் விரைந்து வருகின்றது. அங்கையற்கண்ணியும், தோழிகளும் திகிலடைந்து தலைவனைச் சுண்டுகின்றனர்.
செம்பொன் மேனியாளின் அழகிய அவயவங்கள் பயத்தினால் நடுங்குகின்றன.

குறிஞ்சிக் காதல் 0 91
நாணத்தையும் மறந்து குன்றுத்தேவனைக் கட்டிப்பிடித்துக்கொள்கிறாள் அவள்.
ஒராயிரம் மின்வெட்டுக்கள் அவர்களிருவரின் உடல்களிலும் ஜனித்துப் பாய்கின்றன.
யானையும் அவர்களை நெருங்கிப் பாய்கிறது. தலைவனின் கைகள் தாமே வேலை எய்துகின்றன. யானையும் அதனை ஏந்தி வலியினால் தன் வழியே மீண்டும் செல்கின்றது.
அவள் நன்றியுடன் அவனைப் பார்க்கிறாள். குன்றுத்தேவன், அவ்வழகியைப் பார்த்து "நீ பயத்தினைத் தெளி உன் அழகினில் நான் மையல் கொண்டேன். உன்னை என் இல்லக் கிழத்தியாக ஏற்றுக் கொள்வேன். உன்னைப் பிரியவே மாட்டேன்" என்று கூறி, அருகில் ஒடிய அருவியின் நீரை அள்ளி ஆணையிடுகின்றான்.
அதன் பின்பு அங்கையற்கண்ணி தோழிகள் பின்தொடர, ஒட்டமாக வீடு நோக்கிச் செல்கின்றாள்.
குன்றுத்தேவன் புன்னகை பூத்து நிற்கின்றான். காதலுணர்ச்சி அவனைப் பாடத் தூண்டுகிறது.
வீட்டையடையும் அங்கையற்கண்ணியும் பஞ்சணையில் படுத்து விடுகின்றாள். அவளுடம்பு இன்ப வேதனையில் புல்லரிக்கின்றது.
நிகழ்ந்தவையெல்லாம் உண்மையிலேயே நடந்தனவா என்று சம்சயமுறுகிறாள்.
ஆழ்ந்த நித்திரையில் பல இன்பக் கனவுகள் காண்கின்றாள். விழித்தெழுந்ததும் தோழியிடம் செல்கின்றாள். தோழிக்குத் தலைவியின் இன்ப அனுபவம் நன்கு தெரிந்திருந்தும் "என்னம்மா, ஏதோ சொல்ல விரும்புகிறீர்கள் போலத் தெரிகிறது, சொல்லுங்கள்” என்கிறாள்.
"ஆமாம், மங்கை நித்திரையில் ஒரு இன்பக் கனாக் கண்டேனடி" என்று கூறி நிறுத்துகிறாள் தலைவி.
பின்பு கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு வெகுளிச் சிரிப்புச் சிரிக்கிறாள். அவ்வளவு வெட்கம்! ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொள்கின்றனர்.

Page 53
92 ேெக.எஸ். சிவகுமாரன்
தலைவியின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட தோழி, தலைவனிடம் தன் தலைவியின் விருப்பத்தை எடுத்துக்கூற எண்ணுகிறாள்.
தலைவியை அலங்கரித்த பின்
அவ்விருவரும் அவ்விளங்காலையில் மலையடிவாரத்திற்குச் செல் கின்றனர்.
அப்பொழுது
வேணுகானம் ஒன்று கேட்கிறது.
தலைவனின் வேய்ங் குழலிலிருந்துதான் அவ்வின்னிசை வருகின்றது என்பதை தோழி மூலமறிந்த தலைவி, தானும் பாடுகின்றாள்.
தலைவனுக்கு மகிழ்ச்சி தாங்குவதில்லை!
தான் வாசித்த புல்லாங்குழலின் ஒசையை இரசித்து தன் காதலி புகழ்ந்து பாடுவதைக் கேட்டதும், அவர்களிருக்குமிடம் செல்கின்றாள்.
இப்பொழுது
அங்கையற்கண்ணி கூச்சப்படவில்லை.
தலைவனை நோக்கி முறுவலிக்கிறாள்.
தலைவனும் அவளை விழுங்கிவிடுவதுபோல் பார்க்கிறான்.
இருவரும் சிலைகள் போல ஒருவரையொருவர் பார்த்து நிற்கின்றனர்.
எவ்வளவு நேரம்?
தோழிக்கு இந்த மெளன நிலை பிடிக்கவில்லை. கலைக்க விரும்புகிறாள்.
- "அம்மா, அதோ அம்மலைச்சாரலில் இருக்கும் பூக்களைப் பறித்து வருகிறேன்” என்று கூறிச் சாதுரியமாக அவர்களை விட்டுச் செல்கிறாள் அந்தப் புத்திசாலிப் பெண்.
(புதினம், 1962)

கதைகள் பற்றி இவர்கள் என்ன நினைக்கிறார்கள்:
'சிவகுமாரன் கதைகள் தொகுதியில் உளவியல் ரீதியான கதைகள் ஆண்/ பெண் உறவில் தலைகாட்டும் உண்மையான உணர்வுகள், பிணக்குகள் சம்பந்தமான கதைகள் இருக்கின்றன. பாத்திரங்களின் இயல்புகளையும், உணர்வோட்டங்களையும் நன்கு சித்திரித்திருக்கின்றீர்கள். நாகரிக/சமூக வளர்ச்சிப் போக்கில் பெண்களின் நோக்கும் போக்கும் மாறுபட்டிருப்பதை நன்கு காட்டியிருக்கின்றீர்கள். நடை நன்றாக அமைந்துள்ளது. எனது பாராட்டுக்கள். (கதாசிரியருக்கு வல்லிக்கண்ணன் எழுதிய கடிதம்
14.09. 1984)
t
உங்கள் கதைகளைப் படித்த போது, பொதுவாக தமிழரின் உயர்ந்த நாகரிகம், தமிழ் பெண்களின் தனிப் பண்பாடு, தமிழ் ஆண்/பெண்களின் மேன்மைகள் போன்ற (இன்று நடைமுறையில் இல்லாத அல்லது சீரழிந்துபோன) பண்டித மனோபாவம் உடையோரும், பழந் தமிழ் இலக்கியப் பயிற்சியும், பக்தியும் உள்ளவர்களும் போற்றித்துதி பாடி வருகிற இலட்சியங்களை வைத்துக் கதை எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று எனக்குப் படுகிறது. ஆகவே, உங்கள் கதைகளில், பல படிப்பதற்குச் சுவையானவை; இன்றைய எழுத்துக்கள், சமுதாய வாழ்க்கையைப் பிரதிபலிப்பன அல்ல. மனித உணர்வுகளையும், உள்ளத் துடிப்புக்களையும் பிரதிபலிக்கும் சித்திரங்களாக அவை அமைவதில்லை. அமையவும் முடியாது. இல்லாத கற்பனைக் கொள்கைகளையும், போக்கு களையும் சித்திரிக்க முயலும் எழுத்தில் உயிர்த் துடிப்பும், மனித குண படப்பிடிப்பும் எப்படி இருக்க முடியும்?.
பகட்டு க் கதையில் முதல் பாதியும், உரையாடலும் அருமை. தாழ்வு மனப்பான்மை வாசிப்பதற்கு இரசமான கதை. இருமை' எழுதும் முறை யில் புதுமையைக் கையாண்டிருக்கிறீர்கள். நல்ல முயற்சிதான். இனிய வெற்றியும் கூட உங்கள் கதைகளில் இது எனக்கு மிகுதியும் பிடித் திருக்கிறது. குறிஞ்சிக் காதல் பழைய விஷயம். இரசமான வர்ணிப்பு. இனம் இனத்துடன் நன்றாக இருக்கிறது. இழை பாராட்டத்தக்க படைப்பு. மொத்தத்தில் திருப்திகரமாக இருக்கின்றன. (கதாசிரியருக்கு 1963 இல் வல்லிக்கண்ணன் எழுதிய கடிதத்திலிருந்து).

Page 54
94 0 கே.எஸ். சிவகுமாரன்
மேலைப் பண்பாட்டு இலக்கியம், கீழைத்தேய நாகரிக இலக்கியம், சங்கத் தமிழ் இலக்கியம், தற்காலத் தமிழ் இலக்கியம் ஆகியவை சங்கமமாகும் எழுத்தாற்றல் மிக்க இவரின் கதைகள், மனோதத்துவத்தால் மிளிர்பவை. சமுதாயக் குறைகளை சாடுபவை.
(செ.எட்வர்ட் இதயச் சந்திரா, நிர்வாகி, ஜீவா பதிப்பகம், 8.10.1982)
se 鲁
உங்களுடைய கதைகள் பற்றி : “உறைவிடம் மேலிடம்” இரண்டு நிமிடங்கள் இருக்கின்." நான் இதை இரசித்தேன். உரையாடல் ஆங்கிலம் கலந்த நல்ல தமிழில் அல்லது இயல்பாய் ஆங்கிலம் கலந்த பேச்சுத் தமிழில் வைத்திருக்கலாமே?
"துளைத்துச் சென்றது அவள் விழிக்கூர்மை", "குமைந்த வதனத்தில் குமிண் சிரிப்பு மொட்டவிழ்த்தது” போன்ற இடங்கள் உங்கள் மொழி ஆற்றலுக்குச் சான்று. Psychiatrist உடன் கதைத்துக் கொண்டிருந்த patent தானாக அரைத்தூக்க நிலைக்குச் சென்றான் என்பதைவிட, psyclairst அவனை hypnotise பண்ணியிருந்தால், கூட realistc ஆக இருந்திருக்கும். அல்லது patentக்கு metedne என்ற மருந்து கொடுத்து அவனைக் கதைக்க வைத்ததாகக் கூறியிருக்கலாம். "நொய்மை", "புருடார்த்தம்", "வளரிளம் பருவம்' ஆகியன நல்ல பிரயோகங்கள். உளவியல் ரீதியாகக் கதையை அணுகுவது பலரால் முடியாத ஒன்று. The best things to be natural" என்பதை நல்ல முறையில், கதையில் கொண்டு வந்திருக்கிறீர்கள். நல்ல கதை.
தாழ்வு மனப்பான்மை ; ஆணும் பெண்ணும் மாறி மாறிக் கதை சொல்வது நல்ல உத்திமுறைதான். "உதிரி வசனங்களை உதிர்த்துவிட்டு", "மெழுகுப் பொம்மை போல" போன்ற சில இடங்கல் இரசிக்கும்படி இருக்கின்றன. ஆனாலும் வெறும் காதற் கதை. இனம் இனத்துடன் : "அல்பேட்டோ மொஹாவியா எழுதிய நவீனம் ஒன்றை அவன் வாசிக்கிறான்.” நீங்கள் படைக்கும் பாத்திரங்கள் உங்கள் உயர்ந்த இரசனையைப் பிரதிபலிக்கின்றன. "நாம ஒரு கிளாசில படிச்ச னாம. எலுவா” - மட்டக்களப்புத் தமிழ் சுத்தமாக விழும் இதைப்போன்ற பல இடங்கள், ஏ வன். "கொழும்பில் வசிக்கும் நான் பல்லை இளிப்பதா?” கொழும்பு வாழ் மக்களின் இயல்பை இவ்வசனம் மட்டுமே நல்ல முறையில் படம்பிடிக்கிறது. வினோத உடைப் போட்டிக்குப் போனவள், அதே உடையுடன் பயணம் செய்வது பொருத்தமாயில்லை. ஆயினும், இரண்டாவது கதையைவிட நல்ல கதை.
அவர்கள் உலகம் : பிரயோகங்கள் புதிதாய் இருக்கின்றன. கதையோட்டம் நன்று. ஆனால், கதாசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியவில்லை.

கதைகள் பற்றி இவர்கள் என்ன நினைக்கிறார்கள் 0 95
பகட்டு செல்வாவின் தத்துவங்களை மறுபடியும் வாசிக்கும் ஆவல் ஏற்படுகிறது. "கிழக்கு கிழக்குத்தான். மேற்கு மேற்குத்தான்" நல்ல முடிவு. தில்குஷியின் ஆத்திரம் இயல்பாக இருக்கிறது. இத்தொகுதியின் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று. இடையில் வரும் சிங்கள வசனங்களும் இரசிக்கும்படி உள்ளன. m
இழை அந்த இழை வெகு துல்லியமாகப் படம் பிடிக்கப்பட்டிருக் கின்றது. கருவில் வலிமை இல்லாவிட்டாலும் நிகழ்வைப் பிடிப்பதில் ஒரு 'பாலு மஹேந்திரா வாகிப் பாராட்டப்படுகிறீர்கள்.
குறிஞ்சிக் காதல்: எந்த நூற்றாண்டில் இருந்து வாசிக்கின்றோம். பழைய இலக்கிய மணம் நன்றாகவே வீசினாலும், என்னால் இரசிக்க முடியவில்லை.
மொத்தத்தில் "உறைவிடம் மேலிடம்", "இனம் இனத்துடன்", "பகட்டு” ஆகியன "ஏ" இழை "பி" தாழ்வு மனப்பான்மை, அவர்கள் உலகம் "சி", குறிஞ்சிக் காதல், Fai,
(கோகிலா மகேந்திரன் கதாசிரியருக்கு எழுதிய கடிதம் - 25.12.1985)

Page 55
96 0 கே.எஸ். சிவகுமாரன்
தமிழ் இலக்கிய உலகில் நன்கு பரிச்சயமான ஒருவர் திரு.கே.எஸ். சிவகுமாரன். தமிழ் வாசகர் மட்டத்தில் சிறந்த கலை இலக்கிய விமர்சகர் என்று மதிக்கப்படுபவர் இவர்.
அரசாங்க மொழிபெயர்ப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்திப் பிரிவில் பொறுப் பாசிரியராகப் பணியாற்றி, தற்போது கொழம்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தகவல் பிரிவில், செவிப்புல கட்புல நிகழ்ச்சி அமைப் பாளராகப் பணியாற்றி வருகின்றார்.
நல்லதொரு வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்; சிறந்த ஆங்கில, தமிழ் அறிவிப்பாளர்; கலா ரசிகர். திரைப்படத்துறையின் ஆக்கபூர்வமான விமர்சகர்களில் ஒருவர்; புனை கதை; கட்டுரை, பத்தி எழுத்தாளர் ரூபவாஹினியின் செய்திப் பிரிவிலும் பணியாற்றியவர். சித்திரகுப்தன், ரேவதி, விலோஜனி என்று பல புனைப்பெயர்கள் இவருக்குண்டு.
தமிழ் எழுத்தாளர்களையும் அவர்களது ஆக்க முயற்சிகளையும் வேற்று மொழியினர் அறிந்து கொள்வதற்காக ஆங்கிலப் பத்திரிகைகளை ஒரு களமாக நீண்டகாலமாக சிவகுமாரன் பயன்படுத்தி வருகின்றார். இந்த ஆக்கபூர்வமான பணியின் அறுவடையாக “டமில் றைட்டிங் இன் பூரீலங்கா" என்ற இவரது நூல் 1974 இல் வெளிவந்து அனைவராலும் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.
நிகழ்காலத்தில் "விமர்சகர்” என்ற மதிப்பீட்டில் கணிக்கப்பட்டு வரும் கே.எஸ்.எஸ், ஒரு காலத்தில் சிறுகதைகள் மூலமே இலக்கிய உலகில் பிரவேசம் செய்தார் என்பது, இன்றைய பலருக்குத் தெரிந்திருக்கநியாய மில்லை. இவ்வாறான ஒரு மயக்க நிலையிலேயே "சிவகுமாரன் கதைகள்” சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.
நூற்றுக்குமதிகமான சிறுகதைத் தொகுதிகளைப் பார்த்து, படித்து, விமர்ச்சித்து அனுபவம் பெற்ற சிவகுமாரனின் முதலாவது தமிழ் நூல் இதுவே. இவ்வகையில் இதனை கன்னிப் பிரசவம் என்று சொல்ல நியாயங்களுமுண்டு.
முதலாவது கதையாக "உறைவிடம் மேலிடம்” இடம் பெறுகின்றது, அந்தக் காலத்தில் மேல் தட்டு வர்க்க வாழ்க்கை நடத்தியவர்கள் பேச்சுத் தமிழில் தாராளமாக ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தி வந்ததையும், கறுவாக்காட்டு நாகரிகத்தின் வளர்ச்சியையும் இக்கதை நன்கு வெளிக் காட்டுகின்றது. பட்டதாரி இளைஞன் ஒருவனின் தாழ்வுச் சிக்கலையும், அவனுக்கு வைத்தியம் செய்யும் தமிழ்ப் பெண் மனநோய் வைத்திய நிபுணர் ஒருவரையும் இழையோடவிட்டுக் கதை நகர்த்தப்படுகிறது. இந்தத் தொகுதியின் மிகச் சிறந்த கதையாகவும் இதுவே முதலிடத்தைப் பெறுகிறது.

கதைகள் பற்றி இவர்கள் என்ன நினைக்கிறார்கள் 9ெ7
கணேஷ், ஜமுனா என்ற இரண்டு இளம் சிட்டுக்களைச் சுற்றிவரவிட்டு வரையப்பட்டது. "தாழ்வு மனப்பான்மை"முதலாவது கதையின் பாத்திரங் களைப் போலவே இங்கும் கதாநாயகனின் குடும்பம் கொழும்பு வாழ்க்கை யைப் பெற்றதாகக் காட்டப்படுவதுடன், முதற் கதையில் வரும் டாக்டரைப் போலவே, இங்கும் கதாநாயகனை மருத்துவப் படிப்பு மாணவனாக ஆசிரியர் அறிமுகம் செய்கின்றார். ஆனாலும், கிராமத்துப் பெண் ஜமுனாவுக்குத் தாழ்வு மனப்பான்மை இருப்பதாகக் காட்ட முனைந்து, கடைசியில் கணேஷ் தான் அங்கு தோல்வி அடைகிறான் என முடிக் கப்பட்டுள்ளது, அவளது தாழ்வு மனப்பான்மையா அவனது இயலாத் தன்மையா முதன்மையானது என்று சிந்திக்க வைக்கின்றது.
மூன்றாவது கதை கல்லோயாச் சந்தியில் இருந்து புறப்பட்டு மட்டக் களப்பு சேரும் முன்னர் முடிவடைகின்றது. ஒடும் இரயில் இதன் களம், "இனம் இனத்துடன்” என்பது இந்தக் காதல் சபலக் கதைக்குக் கொஞ்சம் பொருத்தமில்லாத தலைப்புப் போலவும் தெரிகின்றது.
"கதைகளில் சிலவற்றில் எழுத்தாளர்களே முக்கிய பங்கெடுத்தனர்" என்று திரு. சிவகுமாரன் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல, "அவர்கள் உலகம்” என்னும் கதை அமைந்துள்ளது. எழுத்தாளர் சுந்தர மூர்த்தி, அவரது இரசிகன், மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் "கொட்டம்" ஆகியவைகளுடன் கண்டி ரயிலில் ஆரம்பமாகும் கதை, பேராதனைப் பல்கலைக்கழக எழுத்தாளர் கண்காட்சியில் முடிவடை கின்றது. ஆழமான கருவின்மையால் கதை மேலோட்டமாகவே இழுத்துச் செல்லப்பட்டுள்ளதெனினும், புறச் சம்பவங்களால் வாசிப்புத் தூண்டு தலுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தக் காலம் (1959 - 65) இந்தக் காலம் போலில்லை என்பதற்கு "பகட்டு" ஒர் உதாரணம். சினிமாவும் இலக்கியமும் கதாசிரியருக்கு நன்கு பரிச்சயமானவை என்பதை "தில்குவீ” மூலம் அறிமுகம் செய்யும் அதே வேளை, கற்பு எல்லாப் பெண்களுக்குமே அவசியமானதென்பதையும் நாகரிகமாக இக்கதை மூலம் நிலைநிறுத்தியுள்ளார். படிக்கும் போது "கறுவாக்காடு” தான் மீண்டும் நினைவுக்கு வருகிறது.
சிவகுமாரனுக்கு "செக்ஸ்" எழுதத் தெரியாது என்ற சந்தேகம் எவருக்கும் வரக்கூடாது. முனகல்களும் சிணுங்கல்களும் மீட்டும், தாபம்' அவரால் எழுத முடியாதது என்று எவரும் நினைக்கக்கூடாது! இழையை நுழைத்துள்ளாரே! இரண்டு பிள்ளைகளைப் பெற்றாலும் உடல் கலையக்கூடாது. ஆனால், புறச் சேஷ்டைகளால் நஷ்டமொன்றுமில்லை. இழையின் தத்துவம் இதுதான்.
"குறிஞ்சிக் காதல்" தொகுதியின் கடைசிக்கதை வெறும் கற்பனைச் சகதியில் புரளும் இது, கடைசிக் கதையேதான். ஏன் என்று கேட்பதனால் தொகுதியைப் படித்துப் பாருங்கள் என்றுதான் சொல்ல வேண்டி வரும்.

Page 56
98 0 கே.எஸ். சிவகுமாரன்
கதைகளைப் படிக்கும் போது அந்த நாட்களில் இவர் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் தோன்றவில்லை. ஆனால், இவர் எதற்காகச் சிறுகதை எழுதுவதைக் கைவிட்டார் என்பது தான் புரியவில்லை.
(எஸ். திருச்செல்வம், தினகரன் வாரமஞ்சரி, 09.03.1984)
萱 竇 蜜
சிறுகதைகளை எழுதிய ஆசிரியர் திருகேஎஸ். சிவகுமாரனை இன்றைய தலைமுறை தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறந்த விமர்சகராகவே அறிவார்கள். ஆனால், அவர் 1959 லிருந்து 1965 வரை பல சிறுகதை களையும் எழுதியிருப்பது பலருக்குத் தெரியாத விஷயம். ஈழத்துப் பத்திரிகைகள் பலவற்றில் அவ்வப்போது எழுதிய கதைகள் உறைவிடம், தாழ்வு மனப்பான்மை, இனம் இனத்துடன், அவர்கள் உலகம், பகட்டு, இழை, குறிஞ்சிக் காதல் என்பன இந்நூலில் காணப்படுகின்றன.
உறைவிடம்
உறைவிடம் என்ற கதை முழுவதும் மனோதத்துவத்தை நமக்கு உணர்த்தி நிற்கிறது. மன நோயாளிக்கும், மன நோய் டாக்டரான பெண்ணுக்குமிடையில் நடக்கும் சம்பாஷணையாக இக்கதை இருந்தாலும் ஒரு டாக்டர் தன் கடமையைச் செய்யும் போது நோயாளி என்ன செய்தாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு அவனுக்கு ஆக வேண்டியதைக் கவனிக்க வேண்டுமென்பதை இக்கதை தெட்டத் தெளிவாகக் காட்டி நிற்கின்றது. அந்த வாலிபன் மன நோயாளி எனத் தன்னை எண்ணிப் பெண் டாக்டரிடம் சென்றவன். அவர் கைகளைப் பற்றுகிறான். இதமாக அந்த டாக்டரின் வதனத்தை வருடி மகிழ்கிறான். இத்தனைக்கும் இந்தப் பெண் டாக்டர் லேசாக முறுவலித்து நிற்கிறாள். இது தான் கதை. அவன் அவளைத் தொட்டுவிட்டதனால், அந்தக் குடும்பப் பெண்ணான டாக்டர் கற்பிழந்தவளாகக் கருதப் படமாட்டாள் என்பது கதை சொல்லும் உண்மை.
இக்கதை நெஞ்சை நெகிழ வைக்கிறது. கடமையில் கண்ணும் கருத்துமாக உழைப்பவர் எதையும் தாங்கும் இதயத்துடன் இருக்க வேண்டும் என்பது கதையின் படிப்பினையாக இருக்கிறது.
தாழ்வு மனப்பான்மை
தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு நல்ல நளினமான சிறுகதை, சிறு வயதில் பழகிய இருவர் வளர்ந்து பெரியவர்களானதும், எப்படித் தூர நிற்கிறாள். பெண்மை எப்படிப் பரிணமிக்கின்றது. பின்னர் திருமணம் செய்யுமாறு கேட்ட போது அத்தான் திருமணம் செய்ய மறுக்கிறான். டாக்டரான அத்தான் தற்பெருமையில் மணக்காது கர்வமாக இருக்கிறான்

கதைகள் பற்றி இவர்கள் என்ன நினைக்கிறார்கள் 0 99
என அவள் கற்பனை செய்கிறாள். ஆனால், அவன் திருமணம் செய்யாமல் இருக்க முடிவு செய்த காரணத்தைக் கதை முடிவில் படித்துணரும் போது அவனின் முடிவு சரிதான் என்று நாமும் தலையசைக்கிறோம். பாலுறவுக் கதையாக ஆரம்பித்து பரிவுக்கதையாக இக்கதை முடிகிறது.
இனம் இனத்துடன்
கதை வெறும் சம்பாஷணைக் கதைதான். பிற இனத்தை வெறுக்கும் ஒருவன் தன் இனத்தவளைக் கண்டதும் அவளுடன் ஆர்வமாகப் பேசி மகிழ்கிறான். அவ்வளவுதான் கதை.
அவர்கள் உலகம்
அவர்கள் உலகம் பல்கலைக்கழக மாணவர் எழுத்தாளர் ஒருவர் முன்னிலையிலேயே அவர் காது கேட்க அந்த எழுத்தாளர் எனது அயலவர், எனக்குத் தெரிந்தவர் என்று அரட்டை அடித்துப் பொழுது போக்குவது தான் சில மாணவரின் மனோநிலை என்பதை இக்கதை எடுத்துக்காட்டுகின்றது.
பகட்டு
பகட்டு தமிழ் இளைஞனுக்கும் சிங்கள யுவதிக்குமிடையில் நடக்கும் ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டி சினிமா இதழ் ஒன்றிற்கு அவள் போஸ் கொடுக்க வேண்டுமென இதழாசிரியர் கருணாரத்தின கேட்ட போது எரி மலையாகிறாள். அவளின் பகட்டு எப்படி இருந்த போதிலும் இதற்கு அவள் இசையாது பெண்மையின் தன்மையை எடுத்துக்காட்டுகிறாள் இக்கதையின் மூலம்.
இழை இது ஒரு புதுமையான கதை. கதையும் கதை சொல்லப்படும் உத்தியும் மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றன. தாம்பத்திய வாழ்வில் குழந்தைகள் பிறக்கிறார்கள். அவள் வேலை செய்யும் காரியாலயத்தில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அதனால், சம்பள உயர்வு கிடைக்கின்றது. ஆனாலும், அவள் தன் கற்பை இழக்கவில்லை. தன் கணவனிடம் காட்டும் இழையான அன்பில் அவள் கட்டுண்டு மகிழ்கிறாள்.
குறிஞ்சிக் காதல்
மலையகத்தில் இக்கதை ஆரம்பிக்கிறது. தமிழ் இலக்கியத்தில் தலைவன் தலைவி தோழி என்பவர்களின் நிகழ்வு ஒன்றைக் கதையாகக் காட்டுகிறார் கதாசிரியர் தலைவனும் தலைவியும் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் கொடுத்துத் தோழி விலகிவிடுகிறாள்.
தலை சிறந்த ஈழத்து விமர்சகராக இருக்கும் கே. எஸ். சிவகுமாரன் எழுதிய கதைகள் சிவகுமாரனின் இளமைப் பருவத்தை எண்ணிப் பார்க்க வைக்கின்றது. கதைகளில் சிக்கலோ, சிதறலோ இல்லாமல்

Page 57
100 0 கே.எஸ். சிவகுமாரன்
தெளிவான நீரோடையாகக் கதை சொல்லப்படுகின்றது. வாசகர்களுக்கு இச்சிறுகதைகள் நல்ல பொழுது போக்குக் கதைகளாக அமைகின்றன.
(புத்தொளி என். சிவபாதம், ஈழநாடு வாரமஞ்சரி, 3.3.1984)
பாரதி நூற்றாண்டை நினைவு கூரும். நோக்கத்துடன் பதின்நான்கு சிறுகதைகளை உள்ளடக்கிய ஒரு தொகுதியாக வெளியிடுவதற்குத் திட்டமிடப் பெற்றிருந்த 'சிவகுமாரன் கதைகள் இரண்டாண்டு காலத் தாமதத்தின் பின்னர் ஏழு கதைகளை மாத்திரம் கொண்ட ஒரு நூலாக வெளிவந்துள்ளது. மொறாயஸின் அழகிய முன்னோவியத்துடன் களுவாஞ்சிக்குடி, டி.ஜீவா பதிப்பகம் லெ வெளியிட்டிருக்கும் இச் சிறுகதைத் தொகுதியினுள்ளே பாரதியின் ஒரு புகைப்படமும், சிறு கதைகள் ஒவ்வொன்றின் ஆரம்பத்திலும் - கதைகளுக்கு மேற் பாரதியின் கவிதை வரிகள் சிலவும் இடம் பெற்றுள்ளன. ஈழத்தின் பிரபல விமர்சகர் ஒருவரின் சிறுகதைத் தொகுதியொன்றினைப் படிக்கப் போகின்றோமென்னும் ஆவலுடன் பதிப்பகத்தார் உரையை நோக்கும் போது எமது உறுதிப்படுத்தப் படுகிறது.
ஒரு விமர்சகன் இலக்கியம் படைப்பானேயானால் அவ்விலக்கியம் ஒரு பூரணத்துவம் மிக்க ஆக்கமாகவே அமையும். ஏனெனில் சமுதாயத்திற்கு எது தேவை, அதை எப்படி அளிக்க முடியும் என்பதை அவன் அனுபவித்து அறிந்திருக்கிறான், அந்த அனுபவத்தின் வடிகால்களாக பெருக்கெடுக்கும் படைப்புக்கள் சமுதாயத்தின் குறைகளை நிவர்த்தி செய்யும் சஞ்சீவிகளாகும்
பதிப்பகத்தார் உரையைத் தொடர்ந்து நூலாசிரியர் முன்னுரையில் இன்றைய பிரபல விமர்சகர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள், 1959 முதல் 1965 வரையுள்ள ஓர் ஆறு வருடகாலத்துள் வெளிவந்திருக்கும் அன்றைய தமது சிறுகதைகள் பற்றித் தெரிவித்திருக்கும் அவை அடக்கமான கருத்துக்கள் எமது கவனத்தை ஈர்க்கின்றன.
பத்திரிகை ரகக்கதைகள்’ ‘சில கதைகள் உளவியல் சார்ந்தவை, 'பெரும்பாலான கதைகள் கொழும்பு வாழ் மேல்தட்டு பாத்திரங்களைத் தீட்டுபவை. "சுவாரஸ்யமாக அமைய வேண்டும் என்பதற்காக எழுதப் பட்டவை இக்கதைகள்'
இக்கதையை எழுதும் பொழுது வாழ்க்கையை ஆழமாக நோக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருக்கவில்லை. அறுபதுகளில் முதிரா இளைஞனாகவே இருந்தேன். அக்கால கட்டத்தில் எமது நோக்கு எவ்வாறிருந்தது என்பதையறிய இக்கதைகள் உதவும்.
சிவகுமாரனின் கருத்துக்களால் எம்மை நிதானப்படுத்தி சுதாகரித்துக்

கதைகள் பற்றி இவர்கள் என்ன நினைக்கிறார்கள் 1ெ01
கொண்டு கதைகளை நோக்கினால் அவரது கூற்றுக்களை அங்கீகரிக்கச் செய்பவைகளாகவே இத் தொகுதியில் இடம் பெறும் சிறுகதைகள் அமைகின்றன.
பொதுவாக எல்லாக் கதைகளும் உளவியல் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கியவையாகப் படைக்கப்பட்ட போதும் உறைவிடம் மேலிடம், தாழ்வு மனப்பான்மை, இழை ஆகிய மூன்று கதைகளிலும் உளவியலே அடிநாதமாக விளங்குகின்றது. 'இனம் இனத்துடன்.என்ற கதை ஒருவகையான மனப்பாங்குடையவர்கள் ஒன்று சேருவர் என்னும் பொருள்பட இனம் என்னும் சொல் இரட்டுற மொழிகின்றது. மாணவ உலகத்தின் தெளிவற்ற, அதே சமயம் வீம்பு கொண்ட உல்லாசப் போக்கினை அவர்கள் உலகம் சித்திரிக்கென்றது. பகட்டு பழைமையான கற்பு நெறி பேசும் நவீன கண்ணகி க் கதைதான் குறிஞ்சிக் காதல்' அகத்துறை சார்ந்த சங்க இலக்கியக் காட்சி ஒன்றினை அல்லது தினைப்புனத்திற் காவல் காக்கும் வள்ளியைச் சந்திக்கும் முருகனின் நாடகக் காட்சி ஒன்றினை மனத்திலே விரிக்கின்றது.
இத்தொகுதியில் இடம் பெறும் கதைகள் முதிரா இளைஞன் ஒருவரால் எழுதப்பட்ட பத்திரிகை ரகக் கதைகள்’ ஆக இருந்த போதிலும், ஜனரஞ்சகப் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வெளிவரும் தரக்குறைவான வெறும் பொழுதுபோக்குக் கதைகளல்ல இவை. ஒரு சிறுகதை எழுத்தாளன் பல்வேறு வகையாகக் கதைக் கருவை உள்வாங்கிக் கொண்டு, பின்னர் அதனைச் சிருஷ்டியாக உருவாக்குகின்றான். அவனது நெஞ்சிலேதைத்த ஒரு கருத்தைக் கருவாக்கி, அக்கருத்தை வெளிக் கொணருவதற்கேற்ற பாத்திரங்களை உருவாக்கி சிருஷ்டி இலக்கியமாகப் படைப்பதும் அதில் ஒரு வழி. சிவகுமாரனின் பெரும்பாலான கதைகள் இவ்வழியில் உருவானவையாகவே தோன்றுகின்றன. இத்தகைய கதைகளுக்கேற்ற சுவையான வாசனைக் கவரத்தகுந்த மொழி நடை சிவ குமாரனுக்கு கைவரப்பெற்றது என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகிறது.
ஓர் எழுத்தாளனின் ஆரம்பகாலப் படைப்புக்களில் அவன் தனது முன்னோடிகளாகக் கொண்டிருக்கும் அல்லது அவனை மிகவும் கவர்ந்திருக்கும் படைப்பாளிகளின் பாதிப்பு பெரும்பாலும் இடம் பெறுதலுண்டு. இப் பொது விதிக்குச் சிவகுமாரனும் விலக்கல்ல.
அவன் முகச் சரும இழைகள் - பிச்சமூர்த்தி என்ற தமிழ் சிறுகதை யாசிரியர் கூறுவது போல - நெட்டிப் பூ தண்ணிரில் விரிவது போன்று பிரிந்தன, விரிந்தன, மங்கலான ஒளி அவன் முகத்தில் வீசியது. குமைந்த வதனத்தில் குமிண் சிரிப்பு மொட்டவிழ்ந்தது (உறைவிடம் மேலிடம்) என எழுதுவதன் மூலம் தாமே பெருந்தன்மையாகத் தம்மை வெளிக்

Page 58
102 0 கே.எஸ். சிவகுமாரன்
காட்டியுள்ளார். கதைகளைக் கூறும் உத்திமுறையில் மு.வவின் பாதிப்பும் பளிச்சென வெளிப்படுகின்றது.
அறுபதுகளில் சிவகுமாரன் போன்றோரது சிருஷ்டி இலக்கியம் எப்படி இருந்தது. என்பதனை அறிந்து கொள்வதற்கும், சுவாரஸ்யமான உளவியற் பாங்கான படைப்புக்களைச் சுவைப்பதற்கும், நிச்சயம் இத்தொகுதியினைப் படித்துப் பார்க்கலாம். ஆயினும் ஆரம்ப காலச் சிருஷ்டிகளை உள்ளடக்கிய இத்தொகுதியினால் இன்றைய பிரபல விமர்சகரான சிவகுமாரனின் பெறுமானம் குறைவுபட்டு விடாதென்பதே எனது எண்ணம்.
(கந்த நடேசன், மல்லிகை மே, 1985)


Page 59
Tழத்து இலக்கிய உலகில் த திரு கே.எஸ். சிவகுமாரன், வானொ ஆகியன மூலம் நன்கு அறியப்பட்
1950, 1960களில் எழுதப்பட்ட க ஒரு கதையும் இந்தத் தொகுப்பில்
இக்கதைகளில் பெரும்பாலான மக்கள் சிலரின் அனுபவங்களைப ப சம்பிரதாயங்கள், மரபுகளைப் பின் இவர்களிற் சிலர். சிங்கள மக்கள் இ பெரும்பாலான கதைகள் உளவி எழுதப்பட்டவை.

னக்கென ஓர் இடம் பெற்றுள்ள லி, தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் டவர்.
தைகளும், 1980களில் எழுதப்பட்ட இடம்பெறுகின்றன.
வை கொழும்பு வாழ் உயர்மட்ட டம்பிடிக்க முயல்கின்றன. ஆங்கில பற்றும் மேல்தட்டுப் பாத்திரங்கள் க்கதைகளில் பவனி வருகின்றனர். பலை அடிப்படையாக வைத்து