கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாரம்பரிய தொழில் முறையில் உய்த்துணரத்தக்க கல்வி முறைகள்

Page 1


Page 2


Page 3

பாரம்பரிய தொழிற்பயிற்சி முறையில் உய்த்துணரத்தக்க கல்வி முறைகள்
நாகமுத்து தணிகாசலம்பிள்ளை

Page 4
நூலின் பெயர் : பாரம்பரிய தொழிற்பயிற்சி
முறையில் உய்த்துணரத்தக்க கல்வி முறைகள் ஆசிரியர் : கலாநிதி ச.நா. தணிகாசலம்பிள்ளை
முதலாம் பதிப்பு: 2009 பதிப்புரிமை : ஆசிரியருக்கு
2

அறிமுகம்
இலங்கையின் கல்வி வரலாற்றில் 1972ஆம் ஆண்டு கல்வியில் பாரிய மாற்றம் கொண்டுவரப்பட்டது. மாணவர்கள் கல்வியைத் தொழிற்பயிற்சி முறையில் கற்று பிற்காலத்தில் தொழிலைத் தொடருதல் வேண்டுமென்பது வற்புறுத்தப்பட்டது. பிரதேச வளம் பயன்படுத்தப்படல் வேண்டுமென்பதும், அச்சூழல் சார்ந்த தொழிற்துறை மாணவர்களது கற்கை நெறியில் ஊக்குவிக்கப்பட வேண்டுமென்பதும் அரசின் பூரண நோக்கமாக அமைந்தது.
இத்தகைய நோக்கு எந்தளவிற்கு நடைமுறையில் அடையக்கூடியது என்று ஆராயவேண்டிய தேவை எழுந்தது. அவ்வாறு ஆராயும்பொழுது பாரம்பரிய தொழிற்பயிற்சி முறையின் இடம் யாது? அவற்றை எவ்வாறு கற்கைநெறியில் பயன்படுத்தலாம்? அது எவ்வாறு தொழில்முன்னிலைக் கல்விக்கு உதவக் கூடும் போன்ற விடயங்களை ஆய்ந்தறிய வேண்டிய தேவை ஏற்பட்டது.
இங்கு தொழில்முன்னிலைக் கல்வியின் அவசியம் பற்றியும், தொழில்முன்னிலைப் பாடங்கள்,
3

Page 5
அப்பாடங்கள் கல்விமுறையில் சேர்க்கப்பட்டதற்கான காரணங்கள், அவற்றின் பகுப்புமுறை, பாரம்பரிய தொழிற்பயிற்சி முறையும், அவற்றின் சமகால நிலையும் விளக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணச் சூழலில் பிரதானமாக விளங்கும் கொற்றொழில், தச்சுத்தொழில், மீன்பிடித்தொழில் என்பவற்றில் மீன்பிடித்தொழில் பற்றிய பாரம்பரிய முறையும் பாடத்திட்டமும் ஆய்வுப்பொருளாக எடுக்கப்பட்டுள்ளது. இத்தொழில் நவீன தொழில் முறையுடன் ஒப்பீடு செய்யப்பட்டு, நவீன தொழில் முறையில் பாரம்பரிய முறையைச் சேர்த்து மாற்ற முடியாமைக்குக் காரணமும் காட்டப்பட்டுள்ளது. அத்துடன் பாரம்பரியத் தொழிற்பயிற்சி முறையில் இருந்து பாடத்திட்டத்திற்குப் பெறத்தக்க பயிற்றல் முறைகளும், பயிற்சிக் கட்டங்களும், இத்தகைய பயிற்றல் முறை மூலம் பயிற்றுவிக்கப் பட்ட தொழிலாளி ஒரு பூரண தொழிலாளி என்பதற்கா திறன்பேறுகளும் காட்டப்பட்டுள்ளன.
இவ்வாய்வு விடயத்தைப் பொறுத்தமட்டில் ஏனைய ஆய்வுகளுக்குக் கூடுதலான துணைநூல்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையைப் போன்று ஏற்பட வில்லை. விடயத்தை யான் இத்தொழில் புரியும் கரையோரச் சூழலில் வாழ்ந்திராத பொழுதிலும் பூரணமாக அச்சூழலில் வாழ்ந்து தொழில்புரியும் தொழிலாளிகள் பெற்றுக்கொண்ட அனுபவத்தினை கள ஆய்வின் துணைகொண்டு வெளிக்காட்டி
4.

யுள்ளேன். கூடுதலாக இப்பாடநெறி ஆசிரிய ஆலோச கரின் துணை என்னால் நாடப்பட்டுள்ளது. மக்களின் பாரம்பரிய பயிற்சி முறைகள் எவ்வகையிலும் புறக்கணிக்க முடியாததொன்று. இவை நவீனமயப் படுத்தப்படும் பொழுது பலாபலன்களை நோக்காகக் கொண்டு பழமையின் தேவைகள் புறக்கணிக்கப் படாது புதுமை முறை புகுத்தப்பட வேண்டும் என்பது காட்டப்பட்டுள்ளது. அத்துடன் முடிவாக இப்பயிற்சி முறை எவ்வாறு ஏனைய பாடநெறிப் போதனைக்கு உதவி, வழிவகுக்கின்றதென்பதும் இங்கு காட்டப் பட்டுள்ளது.
10. 10, 2009 ச. நா. தணிகாசலம்பிள்ளை

Page 6

நன்றியுரை
கல்வித் தகுதிப் பத்திரத் தேர்வு நெறிக்கான ஆய்வொன்றைச் சமர்ப்பிக்கும் நோக்கில் எனக்கேற் பட்ட சிந்தனையை சிரேஷ்ட விரிவுரையாளரும் தமிழ்த்துறை கல்விப் பகுதித் தலைவருமான திரு. ப. சந்திரசேகரம் அவர்களிடம் எடுத்துக் கூறினேன். அவர்கள் எனது சிந்தனையை நல்ல வடிவமைப்பில் உருக்கொடுத்து ஏற்ற தலையங்கமாக அமைக்க உதவியதுடன் வேண்டிய உபதலையங்கங் களையும் அமைக்க வழிசெய்தனர். அத்தலையங்கத் தின் வரம்பில் ஏற்ற விடயங்களை ஆய்ந்து செல்ல என்னால் முடிந்தது.
எனது ஆய்வின் மேற்பார்வையாளரான திரு. ப. சந்திரசேகரம் அவர்கள் பலமுறை திருத்தங் களைச் செய்து உதவியுள்ளார். வித்தியோதயவளாக பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் ஆலோசனைகள் நல்க அடிக்கடி வழிநடத்தியுள்ளார். இவர்களைப் பல்கலைக்கழகத்திலும் அவர்களது இல்லத்திலும் சென்று வேண்டிய திருத்தங்களையும், ஆலோசனை களையும் செய்துதரும்படி கேட்டபொழுதெல்லாம்
7

Page 7
இன்முகம் காட்டி உதவினர். அவர்களிருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
யாழ். மாவட்ட மீன்பிடித்தொழில் முன்னிலைப் பாடநெறி ஆசிரிய ஆலோசகர் திரு.எஸ். சத்தியமூர்த்தி, அதிபர்- தொண்டமானாறு மகாவித்தியாலயம் அவர்கள் யான் வேண்டிய பொழுதெல்லாம் இப்பாடநெறி சம்பந்தமாக அறிவுரை அளித்தனர். அராலி, பொன்னாலை சிறுகடல் மீன்பிடிப்பாளர்களும், மயிலிட்டி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை பெருங்கடல் மீன்பிடிப்பாளர்களும், தே.க. த. பத்திரப் பரீட்சை வகுப்பு நாவாந்துறை மகாவித்தியாலய மாணவர் களும் எனது கள ஆய்வின்போது தமது தொழில் ரீதியான அனுபவத்தைக் கூறியதுடன் நவீனமுறையில் ஏற்படும் நன்மைகளையும், பழைய முறையில் சில தேவைகளையும் வற்புறுத்திக் கூறினர். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் கையில் அழகுறப் பொலியும் இவ்வாய்வின் கையெழுத்துப் பிரதிகளை சிரமம் பாராது அழகுற தட்டச்சில் அச்சுப்பதித்தது போல் பொறித்துதவிய 59/2, சட்டநாதர் வீதி, திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி சந்திரா இரத்தினசிங்கம் அவர்களுக்கும், நன்றிகூறப் பெரிதும் கடமைப்பாடுடையேன். இறுதியாக இவ்வாய்வை மேற்கொண்ட பொழுதெல்லாம் பொறுமையுடன் எனக்குதவிய எனது இல்லத்தரசி திருமதி த.சுபத்திராவிற்கும் நன்றியுடையேன்.

பொருளடக்கம்
அறிமுகம்
நன்றியுரை
இயல் - 1
l.
கல்வி முறையில் தொழில்முன்னிலைக் கல்வியின் அவசியம்
II
தொழில்முன்னிலைக் கல்வியின் பாடங்கள் 14
தொழில்முன்னிலைப் பாடங்கள் கல்வி முறையில் சேர்க்கப்பட்டதற்கான காரணங்கள் தொழில் முன்னிலைப் பாடங்களின் பகுப்பு முறை தொழில்முன்னிலைக் கல்வியான புதிய கல்விமுறை பற்றிய ஒர் ஆய்வு இப்பாடங்களில் முக்கியமானது பாரம்பரிய தொழிற்பயிற்சி முறை
பாரம்பரிய தொழிலின் சமகால நிலை
9
I6
18
20
24
29

Page 8
இயல் - 2 1. பாரம்பரிய தொழில்பற்றிய ஆய்வு
மதிப்பீட்டை நவீன தொழில்முறையுடன் ஒப்பீடு செய்தல் 34 2. நவீனமுறையில் ஊறிய பாரம்பரிய
முறையைச் சேர்த்து மாற் முடியாமைக்குக் காரணம் 43 3. தொழில்முன்னிலைப்பாட மீன்பிடித்
தொழில் பாடத்திட்டம் பற்றிய ஓர் ஆய்வு 44 இயல் - 3 1. பாரம்பரியத் தொழிற்பயிற்சி முறையில் இருந்து பெறத்தக்க பயிற்றல் முறை பயிற்சிக் கட்டங்களும், பயிற்சி முறைகளும் 54 3. பயிற்றல் முறை மூலம் பயிற்றுவிக்க
பட்ட தொழிலாளி ஒரு பூரண தொழிலாளி என்பதற்கான திறன்பேறுகள் 57
உசாத்துணை 59
10

இயல் - 1
1. கல்வி முறையில் தொழில்முன்னிலைக் கல்வியின் அவசியம் (அதன் தேவை பற்றிய கல்வி நிலைப் பட்ட அறிமுக ஆய்வு) இலங்கையின் கல்வி வரலாற்றில் அன்னிய ஆட்சியில் அளிக்கப்பட்ட கல்வி முறைமையானது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவாமல் இருந்தது. அது மட்டும் அல்லாமல் இன்றைய வேலையின்மை போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் அத்தகைய கல்வி முறையே காரணமாய் அமைந்த தென கல்வியியலாளரால் காரணம் கற்பிக்கப்பட்டது. அவர்களால் அளிக்கப்பட்ட கல்விமுறை இந்நாட்டு பொருளாதார வளங்களை உறிஞ்சி தம்நாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கேற்ற நிர்வாக முறைக்கு ஏற்றதாக அமைந்ததேயல்லாமல் இந்நாட்டு பொருளாதார அபிவிருத்திக்கு வழிவகுப்பதாகவோ அல்லது இந்நாட்டு கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பாரம்பரிய முறையில் பாதுகாக்கக்கூடிய முறை யிலுமோ அமையவில்லை எனக் குறைகாணப் பட்டது. இதனாலேயே மக்கள் மனப்பாங்கும் தொழிலை அடிப்படையாகக் கொண்டமையாது வெள்ளை உடை தரிக்கும் உத்தியோகமுடையதாக அமைந்துள்ளது.
இந்நிலையை மக்களின் மனப்பாங்கான வெள்ளை உடை தரித்த உத்தியோக மோகத்தில் இருந்து
11

Page 9
பரவலான தொழில்முறை வாய்ப்பிற்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இத்தகைய நிலையை உய்த்துணர்ந்த கல்வி ஆய்வாளர்கள், மாணவர்கள் கற்கும் காலங்களில் தொழில் அனுபவத்தைப் பெறவும் கற்றல் முடிவில் தாமாகவே தொழிலைத் தொடங்கும் ஆற்றலைத் தம் அனுபவம் மூலமாகப் பெறவேண்டும் என்பதற்காக கற்கை நெறியில் தொழில்முன்னிலைக் கல்வி அத்தியாவசிய மாகப் போதிக்கப்படல் வேண்டுமெனச் சிபார்சு செய்தனர். இது மட்டுமல்லாமல் 1972 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தைச் செயல்படுத்தியதுடன், தேசிய கல்வித் தராதரப் பத்திரப் பரீட்சையில் தொழில் முன்னிலைப் பாடம் கட்டாய பாடமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது.
இத்தகைய தொழில்முன்னிலைக் கல்வி அவ்வப் பிரதேச மூலப்பொருள் வாய்ப்பை, வளத்தை மட்டுமல்லாமல் அவ்வப் பிரதேச மக்கள் ஈடுபாடுடைய தொழிலை ஊக்குவிப்பதாக வளர்ப்ப தாக அமையவேண்டுமெனக் கூறப்பட்டது. அப்பொழுதுதான் மூலப்பொருளை வெளிநாட்டி லிருந்து இறக்குமதி செய்வதால் ஏற்படும் அந்நியச் செலாவணிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மட்டுமல்லாமல் அவ்வப்பிரதேச சூழலுடன் ஒட்டி யுறைந்த பாரம்பரிய தொழில்முறையையும் நவீன தொழில்நுட்பங்களுடன் தொடர்புபடுத்தி புதிய முறையில் தொழிலைப் பழகும் வாய்ப்பிற்கும் இடமுண்டாகுமென அறியப்பட்டது.
12

இத்தகைய நோக்கில் பரவலான தொழில் வாய்ப்பை எதிர்காலச் சமுதாயம் பெறவேண்டு மாயின் புதிய தொழில்துறை சார்ந்த கல்வி அமைப்பு முறையே அதற்குச் சிறந்த வழியென்றும் கூறப் பட்டது. காரணம், மாணவன் ஆரம்பக் கல்வியை முடித்து இடைநிலைக் கல்வியின் தொடக்கநிலை தொட்டு உயர்நிலைக் கல்விவரை பாடசாலையில் மாணவன் கல்வி கற்கும் காலம் நீண்டகாலமாகும். இந்நீண்டகாலத்தில் தொழிலைக் கல்வியோடு இணைந்து கற்கும் நிலையில் கூடியகாலம் பாடசாலை மூலம் தொழில்முன்னிலைக் கல்வியைப் பெறக் கூடிய வாய்ப்பும், சூழ்நிலையும் உண்டாகின்ற தெனலாம். அதுமட்டுமல்லாமல் இந்நீண்ட காலத் தில் மாணவன் குரு சிஷ்ய பாரம்பரிய முறையில் சாஷ்த்திரியப் பின்னணியில் முழுநிலையில் தொழிற் பயிற்சி பெறக்கூடிய வாய்ப்பும் அவனுக்குக் கிட்டுகின்றது.
இத்தகைய நிலையில் பாடசாலையில் அவன் குழுமுறைக் கல்வி மூலம் தொழில் கற்கும் நிலையில் அவனிடம் பல தொழில்களையும் செய்வதற்குரிய மனப்பாங்கையும் கல்வி அமைப்பின் மூலம் வளர்க்க முடிகின்றது. இன்று இத்தகைய மனப்பாங்கு இல்லாத நிலையிலேயே சில தொழில்கள் தனக்குரிய அந்தஸ்துடன் நவீன நிலைக்கேற்ப விருத்தியடை யாது இருப்பது மட்டுமல் லாமல் ஒருவர் தனித்து தனது வாழ்க்கையில் வேண்டிய சிறுதொழில் செய்யவேண்டிய நிலையையும், பிறர் உதவியை
13

Page 10
நாடாமல் நிற்கும் நிலையையும் இன்றும் நாம்
காண்கின்றோம்.
2. தொழில் முன்னிலைக் கல்வியின் பாடங்கள்
IIITGO)6)?
இத்தகைய நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி தொழில்
முன்னிலைக் கல்வியைப் போதிப்பதற்கென புதிய
கல்வி முறையில் எண்பத்தி மூன்று (83) பாடங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடக்
கூடியவைகளாவன :-
01. விவசாய விஞ்ஞானம்
02. கரும்புத்தொழில்
03. கடற்றொழில்
04. உள்நாட்டு நீர் மின்பிடித்தல்
05. தோல் வேலை
06. மரவேலை
07. மரச்செதுக்கு வேலை
08. ஒட்டுப்பலகைத் தொழில்
09. அரக்கு வேலை
10. நெசவுத்தொழில்
11. புடவையும் உடையமைத்தலும்
12. றேந்தை பின்னல்
13. பற்றிக் வேலை

14.
丑5。
I6.
Ι7.
18.
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
சீலை அச்சடித்தல் வர்த்தகக் கல்வி விற்பனைத் தொழில்
மனையியல்
சிற்றுண்டி வகைகள் தும்புத்தொழில் சணல்நார்த் தொழில் பன்பொருள் வேலை ஈச்சோலைத் தொழில் பிரம்புத் தொழில் மூங்கிற் தொழில் பனந்தொழில் உலோகவேலை
தகரவேலை வனைதற்தொழில் அச்சுத்தொழில்
ஒளிப்படக்கலை
31.
32.
33.
கடதாசி உற்பத்தித் தொழில் வானொலிச் சாதனத் தொழில் மோட்டார் பொறித் தொழில்
. மாணிக்கக் கற்றொழில்
35.
பட்டுத்தொழில்

Page 11
36. புத்தகங் கட்டுதல் 37. அலங்காரத் தையல் 38. பித்தளை வேலை
39. கடிகாரம் திருத்தற்றொழில்
போன்ற பிறவும் ஆகும்.
3. இப்பாடங்கள் கல்வி முறையில்
சேர்க்கப்பட்டதற்கான காரணங்கள் இக்காரணத்தை சிறிது ஆராய்ந்து நோக்கின் இலங்கையைப் பொறுத்தமட்டில் இங்கு பாரம்பரிய மாக செய்து வரப்பட்ட தொழில்முறைகள் பிறப் புடனும் சமூக அந்தஸ்துடனும், உழைப்புடனும் தொடர்புபடுத்தப்பட்டு இருந்தன. இதனால் சில மாணவர்கள் கல்வி கற்றுத் தேறிய நிலையில் இத்தொழில் முறைகளை செய்வதற்குத் தயக்கம் காட்டத் தொடங்கினர். இதனால் இப்பாரம்பரிய நியமத் தொழில்முறைகள் நாட்டில் தொடர்ந்து இடம்பெறாமலே போய்விடுமோ என்றளவுக்கு அஞ்சவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. சிலர் தம் தந்தையின் பரம்பரைத் தொழிலைக் கூறுவதற்கு வெட்கமுற்றது மட்டுமல்லாமல் அத்தொழிலுடை யோன் தான் என்று கூறினால் தன்னை மற்றவர்கள் குறைவாக நினைப்பார்கள் என்ற தாழ்வுச்சிக்கல் உளரீதியாக அவனிடம் ஏற்பட்டது. இதனால் சில தொழில்கள் சில குடும்பங்களை விட்டோ, சில ஊரைவிட்டோ மறையும் நிலையேற்பட்டு வந்தது.
16

இத்தகைய நிலையில் தொழில் மகத்துவம் கணிக்கப்படாத தன்மை சில நாடுகளில் சில சமூக இடர்பாடுகளைக்கூடத் தோற்றுவிக்கக் காரணமாய் இருந்தது. ஒரு குடும்பத்தில் ஒருவர் நன்றாகக் கற்று வெள்ளாடை தரித்த தொழிலைச் செய்வதும், ஏனையோர் ஏனைய தொழிலைச் செய்வதும் ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அந்தஸ்தைத் தோற்றுவிக்கும் நிலை காணப்பட்டது. இத்தகைய நிலையைப் போக்கித் தொழில் மகத்துவத்தை உணர்த்தி யாவரையும் எல்லாத் தொழிலையும் செய்யக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கு வதற்காகவே இப்புதிய தொழில்முன்னிலைப் பாடநெறி அடங்கிய கல்விமுறை உருவாக்கப்பட்டது.
அத்துடன் பழைய முறையின் உற்பத்தி முறையில் வேகத்தை ஏற்படுத்தவும் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதியமுறையில் தொழிலை யாவரும் விரும்பி ஏற்றுச்செய்ய முன்வரவும் இப்புதிய கல்விமுறையில் தொழில்முன்னிலைப் பாடநெறி புகுத்தப்பட்டது. இதன்மூலம் சமூகத்திலும், குடும்பத்திலும் அவ்வத் தொழில், அவ்வக்குடும்பத்திற்கு, சமூகத்திற்கு என்ற நிலையை மாற்றி யாவரும் தமது திறமை, ஆற்றலுக் கேற்ப தொழிலைச் செய்யும் மனப்பாங்கை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்துவது மட்டுமல்லாமல் தொழில் முறையால் உள்ள ஏற்றத்தாழ்வை அகற்றலாம் எனவும் எண்ணப்பட்டது.
17

Page 12
4. தொழில்முன்னிலைப் பாடங்களின் பகுப்புமுறை
யாது? இத்தொழில்முறைகளை நாம் எடுத்து ஆராயும் பொழுது இவற்றின் அடிப்படையை நான்கு நிலையில் வகுத்து நோக்க முடிகின்றது. ஒன்று கிராமியத்துறை சார்ந்த தொழில்முறை, இரண்டாவது நகரத்துறை சார்ந்த தொழில்முறை, மூன்றாவது தொழிற்துறை சார்ந்த தொழில், நான்காவது உழைப்புத்துறை சார்ந்த தொழில்.
இப்பகுதியில் மேற்காட்டிய தொழில்களை நாம் உதாரண ரீதியாகக் காட்டின் விவசாயம், மீன்பிடித் தொழில், கிராமியத்துறை சார்ந்தனவாகவும், ஒளிப் படக்கலை, கடதாசி உற்பத்தித் தொழில் ஆகியன நகரத்துறை சார்ந்த தொழிலாகவும், மோட்டார் இயந்திரப் பொறித்தொழில், கடிகாரத் திருத்தற் றொழில் போன்றன தொழிற்றுறை சார்ந்த தொழிலாக வும், பன்புல் வேலை, ஈச்சோலைத் தொழில், பனை ஒலைத் தொழில் ஆகியன உழைப்புத் துறை சார்ந்த தொழிலாகவும் நோக்க முடிகின்றது. இவை மட்டுமல்லாமல் இத்தொழில் முறையைப் பாரம்பரியமற்ற தொழில்முறையென இரண்டாகவும் வகுக்க முடிகின்றது. அதாவது சில தொழில்முறை எமது மரபு ரீதியான பாரம்பரியத் துடன் தொடர்புற்ற தொழிலாகவும், சில மரபுரீதி யற்ற, பாரம்பரியமற்ற புதிய நவீன தொழில்நுட்பத்துடன் சார்ந்த
18

தொழிலாகவும் காணப்படுகின்றது. இவற்றில் முக்கியமாக எல்லாமாக எம்மால் நோக்கப்பட வேண்டியது பாரம்பரியத் தொழிற் பயிற்சி முறை
யாகும்.
இத்தொழில் முறையில் மீன்பிடித்தொழில், கொற்றொழில், உலோக வேலை, மரவேலை ஆகிய தொழில்முறைகள் எமது நாட்டில் மரபுரீதியாக காலங்காலமாக பண்டு தொட்டு இன்றுவரை செய்து வரப்படும் தொழில் முறையாகும். இத்தொழில் முறையின் உண்மைப் பாரம்பரிய வடிவை, தோற்றத்தை இன்றும் சில கிராமப்புறங்களில் அப்படியே தத்ரூபமாக எம்மால் காணமுடிகின்றது. அதாவது எந்தவித கல்வியறிவும் இன்றி புதிய போதனைப் பயிற்சி முறையற்ற குடும்பத் தொழிலாகத் தந்தையின் பின் தனயன் சிறு பராயம் முதல் சென்று வழிவழியாகக் கற்றுவரும் முறையாகும்.
இவ்வாறு கற்ற தொழில்முறையில் துறை போகக் கற்றுத் தேர்ச்சியான முறையில் தம்தொழிலை ஆற்றி பாராட்டுப் பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக சில தொழில்முறைகளைப் பொறுத்தமட்டில் புதிய முறையில் தொழிலைக்கற்று, தொழிலாற்றி வருபவர்கள் விரும்பி வேலைக்கு அழைக்கப் படுபவர்களாகவும், உறுதியான தொழில்நிலைக்கு அவர்கள் விரும்பி வேலைக்கு அழைக்கப் படுபவர்களாகவும் காணப்படுகின்றனர். உதாரணமாக
19

Page 13
கோவில் மண்டப வேலைகளுக்கு மேலே ஏற்றிப் பொருத்திப் பார்க்காமல் கீழிருந்தே பொருத்திப் பார்த்து மேலே ஏற்றியவுடன் சரியாகப் பொருந்தக் கூடிய பொருத்த வேலைகளுக்குப் பழைய பாரம்பரிய தச்சுத் தொழிலாளர்கள் திறமை பெற்று விளங்கு கின்றனர். அதே போலவே உறுதியான பாத்திரங்கள், மண்வெட்டி, கோடரிகள் செய்விப்பதற்கு பாரம்பரிய முறையில் தொழிலாற்றி வருபவர்களான பித்தளை வேலை செய்வோர், கொற்றொழில் செய்வோரிடம் தமக்கு வேண்டிய தொழில்கள் மக்களால் விரும்பி கையளிக்கப்படுவதை இன்றும் காணலாம். உழவுத் தொழில் செய்பவர்கள் புதிய முறையில் செய்யப் பட்ட மண்வெட்டிடைய விட பழைய பாரம்பரிய முறையில் தொழில் செய்துவரும் கொற்றொழில் செய்வோரிடம் சென்று உறுதியான அலவாங்கு, மண்வெட்டி, கத்தி ஆகியன செய்வித்து பாவித்து வருகின்ற தன்மையை இன்றும் நாம் காணலாம்.
5. தொழில் முன்னிலைக் கல்வியான புதிய கல்வி
முறை பற்றி ஒர் ஆய்வு இப் புதிய கல்வி முறையானது புதிய நோக்கில் புகுத்தப்பட்டாலும், கற்பிக்கும் முறையில் மாணவர் களுக்கு உழைப்பின் மகத்துவம் உணர்த்தப்படல் வேண்டும். இவ்வாறு உணர்த்தப்படுமாயின் மட்டுமே இத்தொழில் முறைமை தன் இலக்கை அடையமுடியும். ஆனால் நிதர்சன நடைமுறையில்
2O

இந்நோக்கை அடைவது கஷ்டமான காரியமாகும். ஏனெனில் உழைப்பின் மகத்துவத்தை உணர சமூகம் விடாது. அதற்கு சாதியமைப்பு, உழைப்பும் சமூக அந்தஸ்த்தைச் சுட்டிக்காட்டியவண்ணமேயுள்ளது. இதனால் புதிய தொழில்முன்னிலைப் பாடநெறி தன்போதனைக்கு முன்பு இத்தகைய இடர்பாடுகள், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவேண்டும்.
இவ்வாறு தீர்வுகாணாவிடின் இப்புதிய தொழில் முன்னிலைப் பாடநெறியானது பாரம்பரியத் தொழில் முறையைத்தான், பாரம்பரியமற்ற தொழில்முறையை விடப் பாதிக்கும். ஏனெனில் மீன்பிடித்தொழிலை பாரம்பரியமாகச் செய்துவந்த தந்தைக்கு பிறந்த மகன் கல்வி கற்காது தந்தையுடன் தொடர்ந்து தொழில் செய்துவந்திருப்பானாயின் நன்றாகத் தேர்ச்சியடைந் திருப்பான். அதனைவிட்டு வேறோர் சமூகத்தில் பிறந்தவன் மீன்பிடித் தொழிலைக் கற்பானாயின் அவ்விடர்பாடு அவனை அத்தொழிலில் தேர்ச்சி அடையவிடாது. அது மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலையுடைய தந்தைக்குப் பிறந்தவன் தன் பாரம்பரியத் தொழிலைச் செய்யாது அச்சுத் தொழிலைச் செய்வானாயின் வேறு பல இடர்பாடு களை நோக்கவேண்டியேற்படும். அதாவது தன் பரம்பரைத் தொழிலில் தேர்ச்சியற்றும் புதிய தொழிலில் ஆற்றலின்றியும் இரண்டும் கெட்டான் நிலையுருவாகும்.
21

Page 14
இதே போன்று வேறு விளைவுகளை நோக்கின் பாரம்பரிய தொழிலுக்குரிய வேலைவாய்ப்பு பாரம்பரியமற்ற தொழிலில் அதிகம் இல்லை எனலாம். பரம்பரைத் தொழிலுக்கு வேலை நிச்சயம். ஆனால் வேலைக் குறைவுக்கு இடமுண்டு. இதனாலேயே பாரம்பரிய தொழில்முன்னிலையில் முக்கியமாக கவனம் செலுத்தவேண்டும்.
இப்புதிய தொழில் முன்னிலைப் பாடநெறிச் செயற்பாட்டில் இன்னோர் சிக்கலுக்கும் இடமுண்டு. இவை கூறும் தொழில் முன்னிலைப் பாடநெறிக் குரிய மூலப்பொருட்கள் எல்லா இடங்களிலும் இல்லை. இலங்கையின் எல்லாப் பகுதியும் அபிவிருத்தி அடையவில்லை. சில இடங்களில் மூலப் பொருட்கள் இல்லை. சில இடங்களில் மூலப்பொருட் கள் உண்டு. மூலவளங்கள் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுவதால் அபிவிருத்தியடைந்த பிரதேசத்து தொழில் முன்னேற்றத்தைப் போன்று மூலவளம் குறைந்த இடத்து மாணவன் அபிவிருத்தியடைவான் என எதிர்பார்க்க முடியாது. அதனால் தொழில் முன்னிலைக் கல்வி பாடநெறியைக் கற்பிக்கும் பொழுது பிரதேசத்திற்குப் பிரதேசம் கவனம் செலுத்துதல் அவசியமாகும். உதாரணமாக மீன்பிடிப் பயிற்சி நெறிக்குரிய மயிலிட்டியிலுள்ள மூலவளம் பொன்னாலையில் இல்லை. ஆதலால் பொன்னாலை யில் (சிறுகடலில்) பயிற்சி நெறியை மேற்கொள்ளும் மாணவன் மயிலிட்டிக்கும் அழைத்துச் சென்று உண்மையான பரந்த பயிற்சி நெறியுடன் அமைந்த
22

தொழில்முறையை அறிந்து கற்க வாய்ப்பில்லாது போய்விடும். அத்துடன் புதிய நெறிப் போதனை பழைய நெறிப் பாரம்பரிய பயிற்று நெறியைப் புறக்கணித்துப் பயிற்றுவிக்க முடியாது. விதிமுறை சார்ந்த பயிற்றல் புதியநெறிப் போதனைக்கு உதவுவது மட்டுமல்லாமல் புதியநெறி தன்னிடம் இல்லாத சில தொழில்நுட்பங்களைப் பழைய நெறிமுறையில் இருந்து தேர்ந்தெடுக்கும் தன்மை பெறவேண்டும். புதிய நெறிப் போதனை ஆசிரியர்கள் பழையநெறிப் பாரம்பரிய தொழில் செய்வோரிடம் இருந்து நிறைந்த அனுபவம் பெற்றவராகவோ அல்லது அவரை சென்றடைந்து முழு அனுபவங்களைக் கண்டறிந்தவ ராகவோ அல்லது தான் ஒரு விதிமுறை நெறியில் தொழிலாற்றும் தேர்ச்சி நெறியில், அனுபவநெறியில் அனுபவம் உடையவராகவோ இருப்பாராயின் புதியநெறி பூரண பயிற்சிநெறிக்கு வழிவகுப்பதாகும். அதேபோலவே பழைய பாரம்பரிய நெறியில் தொழிலாற்றுவோர் தமது விதிமுறை சார்ந்த தொழில் நெறியுடன் புதிய ஆய்வுமுறையில் கண்டறிந்த தொழில்நுட்பங்களையும் சிக்கன நிலையில் கூடி வருவாய் பெறக்கூடிய தன்மையும் தமது விதிமுறை யுடன் சேர்த்துக்கொள்ளும் மனப்பாங்கை உருவாக்க வேண்டும். பழைய நெறியுடன் மட்டும் நிற்கும் மனப்பாங்குடன் அவர்கள் தொழில் செய்யும் தன்மையை நிறையப் பெறுவார்களாயின் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு ஆகியவற்றால் பெறும் நன்மைகளை இழந்தவர்களாகி விடுவார்கள்.
23

Page 15
கால அனுசரணை காட்டும் நல்ல மாற்றங்களை இவர்கள் ஏற்கக்கூடிய மனப்பாங்கு உடையவர்களாக அமையவேண்டும். உதாரணமாக மீன்பிடிப் பயிற்சி நெறியில் பழைய சாதாரண நூல்வலை பயன்படுத்தப் பட்ட நிலைமாறித் தற்பொழுது நைலோன், குருலோன் வலைகள் பயன்படுத்தப்படுவது மட்டுமல்ல புதிய மீன்பிடிக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றது. பழைய நூல்வலையில் அகப்பட்ட மீன்தொகையைக் காட்டிலும் புதிய நைலோன் வலையில் கூடியளவு மீன் பிடிக்கப்படுவது மட்டுமல்லாமல் நீண்டகாலப் பாவனைக்கு உறுதி உடையதாகவும் மீன், நண்டு சேதப்படுத்தும் நிலையோ, அறுக்கும் நிலையோ புதிய நூல் வலையில் குறைவாக உள்ளது. அதுமட்டு மல்லாமல் கடலில் கடல் இனமான மீன், நண்டு, இறால் ஆகியவற்றை தன்னகத்தே அகப்படுத்தும் வேகசக்தி புதிய நூலினவகைகளுக்கு அதிகம் உண்டு என்பர். இதனால் இன்று பழைய பாரம்பரிய தொழில் முறையைச் செய்வோர் இத்தகைய நூல் இனத்தைக் கூடுதலாகப் பாவித்துப் பயனடையும் தன்மையை நாம் இன்றும் காணமுடிகின்றது.
6. இப்பாடங்களில் முக்கியமானது பாரம்பரிய
தொழிற்பயிற்சி முறையாகும்.
பாரம்பரிய பயிற்று முறையானது மக்களுக்கு பூரணத்துவமான தொழில்வாய்ப்பை அளிக்கக்கூடிய
24

ஒன்று. சாதாரண மனிதன் இளமைதொட்டு தந்தை யின் பின்சென்று தொழிலை படிமுறையாகக் கற்று வரும் தன்மை வாய்ந்தது. தந்தையின் வழிநின்று கற்கும் தனையன் தொழிலில் தேரச்சியடையும் நிலையில் தொழில் தேடி அலைந்து ஏங்கிநிற்கும் நிலையேற்படாது. தானாகவே தனது தொழிற்கருவி களைக் கொண்டு தொழிலைத் தொடங்கும் நிலையைக் காணலாம். அதுமட்டுமல்லாமல் தன் தொழிலை வேறு ஆட்களையும் சேர்த்து பெருந் தொழிலாக நடாத்தும் நிலை அவனுக்கு உருவாகும். இதனால்தான் பாரம்பரிய பயிற்று முறையானது பூரணத்துவமான தொழில் வாய்ப்பை அளிக்கும் முறை என்று கூறலாம்.
பாரம்பரிய பயிற்சி முறையைப் பற்றி நாம் சிறிது ஆராயின் இது ஒர் விதிமுறையற்ற பயிற்சி எனலாம். இளமை தொட்டு தந்தையுடன் சென்று தானாகவே பார்வையாளனாய் பார்த்திருந்து அனுபவமூலம் கண்டறிந்து கற்கும் தொழில் பயிற்றல் ஆகும். அதுமட்டுமல்லாமல் இன்ன விதிப்படி தொழிலைப் படிப்படியாகப் பயின்று வரும் நிலை இல்லாமல் தொழிலுக்கு உடனுதவுவோனாய் இருந்து தொழிலைப் பயிலும் முறையென்று கூறலாம். இந்தவிதமாக அவன் இளமைதொட்டு பயின்றுவரும் நிலை தொழிலில் தேர்ச்சி அடைய வாய்ப்பளிக் கின்றது. அதனால் பயின்றுவரும் தன்மையில் சில நெறிப்பாடுகளை அவன் அறிய வேண்டியவனா கின்றான்.
25

Page 16
தொழிலைக் கற்கும்பொழுது தொழில் தெரிந்தோன் தொழில் பழகுவோனுக்கு சில சில நெறிப்பாடுகளைக் காட்டிக் கொடுப்பான். இன்ன இன்ன முறையில் தொழில் செய்யும் வழியென உணர்த்தப்படும். இத்தகைய நெறிப்பாடுகளை அடிப்படையாக வைத்து அந்நெறிப்பாடுகளைக் கொண்டுதான் தொழிலைச் செய்யும் நிலையில் அடையும் அநுபவத்தைக் கொண்டு தொழிற் திறனைப் பெறுகின்றான். இதனால்தான் இத்தஒகய தொழிற்கல்வி முறையானது அனுபவவாயிலாக வளர்ந்துவரும் கல்விமுறையென்று கூறப்படுகின்றது.
தலைமுறை தலைமுறையாக தந்தைவழி நின்று கண்டறிந்த அநுபவங்கள் திரட்டப்பட்டு எடுத்துக் கூறப்படும். அவ்வாறு எடுத்துக் கூறப்படும் நிலையில் காலத்துக்குக் காலம் ஏற்படும் மாற்றங்கள் சேர்த்துக் கூறப்படும் அம்மாற்றங்களையும் தாம் தொழில் நிலைக்கு ஏற்ப அமைத்துக்கொள்ளும் முறையும் விசேடமானது மட்டுமல்லாமல் அத்தொழிலின் வளர்ச்சிக்கு அவசியமும் உறுதுணையும் எனலாம். இவை எல்லாவற்றையும் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்’ என்ற பழைய பழந்தமிழுக்கேற்ப பாரம்பரிய தொழில்முறை இயங்கி வருகின்றது எனலாம்.
உதாரணமாக தொழில்முறையில் பழைய இயற்கைச் சக்திகளான நீரோட்டம், காற்று,
26

வெப்பநிலையைப் பயன்படுத்தி பாய்மரம் மூலமாகச் சென்றவர்கள் இன்று அதற்குப்பதிலாக நவீன இயந்திர வள்ளங்களைப் பயன்படுத்தும் நிலையை நாம் காணமுடிகின்றது. இத்தகைய நிலை இருந்த பொழுதும் தமது தொழில்முறையில் முற்றாக புதிய முறைகள் யாவற்றையும் பயன்படுத்தாமல் பழைய பாரம்பரிய தொழில் முறையையே பயன்படுத்தி வருகின்றனர். அதே போலவே தமது தொழில் செய்யும் நிலையில் இருந்துவந்த பழைய நிலையை காலத்திற்கேற்பக் கைவிட்டுள்ளனர். அராலிக்கு ஆதியில் சயிக்கிள் இல்லாத காலத்தில் நடந்து சென்றவர்கள் திரும்ப நடந்துவரும்பொழுது வலையை மரக்கலங்களில் போட்டு காய்வதற்காகக் கோதிக்கோதி வந்தனர். அக்காலத்தில் நூல் வலை யானபடியால் காய வைப்பதற்காக அவ்வாறு நடந்துவரும் நிலையில் செய்துவர முடிந்தது. ஆனால் இன்று சயிக்கிள் வசதியிருப்பதால் சயிக்கிளில் வரும் நிலையிலும் நைலோன் வலையைக் காயவைக்க வேண்டிய அவசியமில்லாதபடியாலும் அந்த நிலையை மாற்றி இன்று சயிக்கிளில் வரும்நிலைக்கு ' மாற்றிக் கொண்டனர்.
பாரம்பரிய தொழில்முறை முழுக்க முழுக்க ஓர் வாழ்க்கைமுறை எனலாம். வாழ்க்கையோடு இணைந்த ஓர் தொழில்முறையாகும். கடற்கரையில்
தாம் வாழும் வாழ்க்கையில் படகோட்டுதல்,
27

Page 17
கடலுக்குச் செல்லுதல், கடலால் வந்து வலையைக் காயவிடுதல், வலைபின்னுதல், வலை பொத்துதல் ஆகிய தொழில்களை நாள் முழுவதிலும் செய்வதி லேயே அவர்களது நாட்பொழுது கழிந்தது. அத்தொழிலின் பல்வேறு செயல் அம்சங்களிலும் ஆண், பெண், குழந்தை, குட்டிகள் அனைவருமே ஈடுபட்டனர். அத்தொழிலின் செயற்பாடு யாவரது ஒத்துழைப்பிலும் உதவியிலுமே தங்கியிருந்தது. தொழிற்பிரிவு அடிப்படை என்ற நிலையில்லா விட்டாலும் எல்லாரும் தனித் தனியாகவும் ஒருமித்தும் தொழிலைப்பகுத்து முடிக்கும்நிலை
காணப்பட்டது.
இவர்களது பாரம்பரிய தொழில்முறை அதிகம் தொழில்நுட்பத்துடன் இணைந்தவையல்ல, ஒரு சில மாற்றங்களே புகுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக மீன்பிடிபடும் இடங்களை கண்டறியும்முறை பழைய முறையிலேயே இன்றும் கண்டறியப்பட்டு வருகின்றது. புதிய தொழில்நுட்ப முறையில் கண்டறி யும் முறையில்லை. முழுக்க முழுக்க உழைப்பாளி களுடன் உள்ளடங்கிய ஒன்றாகவே காணப்படு கின்றன. எதற்கும் உடல் மூலம் உழைத்து தொழில் செய்யும் தன்மையே அதிகமாகக் காணப்படுகின்றது.
இத்தகைய பாரம்பரிய தொழில்முறை இத்தகைய
நிலையில் காணப்படுவதற்கு பல காலங்களாக குடியேற்றவாதக் கொள்கையினால் பொருளாதார
28

வாய்ப்புக் குறைந்தவர்களாலேயே பின்பற்றப்பட்டு வருகின்றது. அவர்களிடம் பொருளாதார வளம் குன்றியிருப்பதால் அதனை வளர்க்கும் தன்மைக் கேற்ப பொருளாதாரம் குன்றிக் காணப்படுகின்றது. இதனாலும் அத்தொழில்முறை வளர்ச்சி குன்றிய ஒன்றாகக் காணப்படுகின்றது. பொருளாதார வாய்ப்புடையவர்கள் சிறந்த கல்வி வசதி பெற்று வேறு தொழில்களைக் கையாண்டுள்ளனர். அவர்களின் கல்வி வசதி இத்தொழிலுக்கு உதவக்கூடிய தாக அமையவில்லை. இதனால் இத்தொழில் புதிய மாற்றங்களையோ பெறமுடியாமல் முன்னேற்ற மின்றிக் காணப்படுகின்றது. இதனை மேற்கொள்ளும் மக்கள் இத்தொழிலைத் g5 Dgil அன்றாட சீவனோபாயத் தொழிலாகக் கொள்ளுகின்றனரே யொழிய தமது பொருளாதார வளத்துக்கு உதவக் கூடிய தொழிலாகக் கொள்ளவில்லை.
7. பாரம்பரிய தொழிலின் சமகால நிலை யாது?
சமகாலத்தில் இத்தொழிலின் பழைமையான முறையில் இன்றும் பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நவீன தொழில்மயப்படுத்தலில் பழைய முறைகளின் இன்றியமையாமையும் நவீன தொழில்முறைக்கு பழைய முறைகள் சேர்த்து உதவுவதாயும் காணப் படுகின்றது. உதாரணமாக வலை பின்னல், வலை பொத்துதல், பழைய முடிச்சுக்களுடன் நவீன நார்
29

Page 18
முடிச்சு சாரணிய முடிச்சு (ஸ்கவுட் முடிச்சு) ஆகியன போடப்படுகின்றது. துணி முடிச்சு என்ற பாரம்பரிய முடிச்சு தற்போது மொத்தக் கயிற்றுடன் மெல்லிய கயிற்றை முடிப்பதற்குப் போடப்படுகின்றது. இம்முடிச்சுகளில் நாம் அவதானிக்கக்கூடியது இரட்டைக் குளச்சு முடிச்சும் ஒற்றைக் குளச்சு முடிச்சும் ஆகும். பாரம்பரிய தொழில்முறையில் முக்கிய அம்சமாக ஒற்றைக் குளச்சு முடிச்சு உராய்வுத்தன்மை கூடிய நிலையில் முடியக்கூடியதாகும். இதனால் முடியக்கூடிய தன்மைக்கு உராய்வுநிலை அவசிய மாகும். ஆனால் இன்று பாவிக்கப்படும் நைலோன் நூல் வகையில் உராய்வுத் தன்மை குறைவானதாகும். உராய்வுத் தன்மைக்குப் பதிலாக வளுவளுப்புத் தன்மையே கூடுதலாக உடையதாக நைலோன் நூல் உள்ளது. இதனால் ஒற்றைக் குளச்சு முடிச்சு போடுவது மிகவும் சிரமமாய் உள்ளது. இத்தகைய நிலையில் முடிச்சுப்போட முடியாத தன்மையை நாம் அறியும் பொழுது விஞ்ஞான அறிவு மாணவர்களுக்கு உணர்த்தப்படுகிறது. மாணவன் விஞ்ஞான ரீதியாக உராய்வுத் தன்மை ஒன்றின் பிணைப்புக்கு அவசியம் என்பது அறிந்ததொன்றாகும்.
தற்போதைய தொழில்முறையில் முடிச்சுகள் போடப்பட்டாலும் பாரம்பரிய தொழில்முறையில் இருந்து விரைவாக ஒரு நூலோடு நூல் முடிச்சுப் போடும் முறை பின்பற்றப்படுகின்றது. அதுமட்டு
30

மல்லாமல் நவீன தொழில்பயிற்சி முறையும் முடிச்சுப் போடும் பழக்கத்திற்கு பாரம்பரிய முறையில் முடிச்சுப் போடும் முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. தற்போது எவரும் விரைவாக முடிச்சுப் போடமாட்டார்கள். அவ்வாறு போடுதலுக்கு எந்தவித நவீனமுறையும் பின்பற்றப்படவில்லை. பழைய வயதுபோனவர்கள் பெருவிரலில் நூலைச் சுற்றி ஒரு நூல்த்தலைப்புடன் இன்னொரு தலைப்பை வைத்து வெகு வேகமாக முடிக்கும் நிலை பழைய பாரம்பரிய முறையில் இருந்து வந்த ஒன்றே இத்தகைய விரைவுத்தன்மை இன்னும் அவர்கள் வாயிலாக இளம் சந்ததியினரால் பின்பற்றப்படுகிறது. இதே போலவே பீத்தல் வலைகளுக்கு பொத்தல் போடும் தன்மை வலைப்பின்னல் ஆகியவற்றில் பழைய பாரம்பரிய முறையில் உள்ள வேகம், விரைவு ஆகியன பழைய பாரம்பரியத் தொழிற்பயிற்சி முறையை அடியொற்றி வந்தவையே.
இன்று பாரம்பரிய தொழில்முறையின் சமகால நிலையை மேலும் ஆராய்ந்து நோக்குகையில் கட்டுமரம் பிணைந்து ஆழ்கடலில் செலுத்தல், தெப்பம் ஒடப்பழகுதல், வலித்தல் ஆகியவற்றில் பாரம்பரிய தொழில்முறையே உதவுகின்றது. இதனைப் பாரம்பரியமாகத் தெரியாதவர் எவரும் தீடீரெனத் தம் கற்றல் மூலமோ அல்லது பயிற்றல் மூலமோ எந்தநிலையிலும் செய்ய முடியாத
31

Page 19
நிலையுள்ளது. அவர்கள் கட்டுமரங்களைச் சேர்த்துப் பிணைக்கும் தன்மை ஒரு கலை. அதனை நம்பி வலித்த ஆழ்கடலில் செலுத்துதல் ஒரு தனியாற்றல். தண்டு வலித்து நினைத்த இடத்திற்கு திசைதிருப்பும் தன்மை பெரும் வியப்பை அளிக்கும். இச்செயல்கள் யாவும் பாரம்பரிய தொழில் முறையினால் விளையும் பிரதிபலிப்பாகும்.
பாரம்பரிய தொழில்முறையில் சமகால நிலையில் இடம்பெறும் இன்னோர் முக்கிய அம்சம் தூண்டில் தொழில்முறையாகும். இத்தூண்டிலில் இரை குத்தலும் குத்தும் பாரம்பரியமாக இருந்து வந்தவையே ஆகும். தூண்டில் குத்தும் உணவாக ஆதியில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்த உணவான இறால் கடல் ஒரத்தில் வசிக்கும் மண்புழு, கபாட்டி சிப்பியின் நடுவிலுள்ள மச்சை, சிறு கணவாய்த் துண்டுகள், சின்ன மீன்துண்டுகள் ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் இன்னும் மாற்ற மில்லை. இவ்விரைகளைத் தேடுதல் அன்றாடம் நடைபெறுகின்றது. இதனைத் தூண்டில் தங்கூசியில் குத்துவது ஒரு கலை. குத்தும் முறையிலேயே மீனைத் தின்பதும், தின்னாது விடுவதும் தங்கியுள்ளது.
இத்தகைய தூண்டிலில் குத்தும் இரைகளை பாரம்பரியமாகப் பதனிடாமல் அன்றாடு அன்றாடு எவ்வாறு பயன்படுத்தி வந்தார்களோ அதே மாதிரியே இன்றும் பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால்
32

தூண்டில் உணவுக்குரிய உணவுகளை இன்று வேறு நாடுகளாகிய ஜப்பான், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால் எங்கள் நாட்டில் குறிப்பாக யாழ்ப்பாணத்தைப் பொறுத்தமட்டில் பாரம்பரியமாக இருந்துவந்து அன்றாடு அன்றாடு உணவைத் தேடும் நிலையே நீடித்து வருகின்றது.
இதற்குக் காரணம் மக்களிடமுள்ள சில நம்பிக்கை களாகும். புதிய முறைப்படி இத்தகைய உணவுகளை ஐஸ்கட்டி போன்றவற்றில் பதனிட்டு வைத்தால் மீன் தின்னாது அல்லது தின்ன மறுக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வருகின்றது. இதனால் மீன் பிடிபடாதென்ற சந்தேகமும் நிலவி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் இன்ன இன்ன இடத்தில் இன்ன இன்ன உணவை இட்டு தூண்டில் இட்டால் இன்ன இன்ன மீன்வகை பிடிபடும் என்ற நம்பிக்கை நிலவி வருகின்து. அதாவது சில தூண்டில் இரைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் குறிப்பிட்ட இடத்தில் பயன்படுத்தி அவர்களுக்கு பிடித்துக் காட்டும் தன்மையைக் காணமுடிகின்றது. விளைமீனுக்கு இன்ன இன்ன இரை, அதே போன்று வேறு மீன்வகைகளுக்கு இன்ன இன்ன இரை எனக் கூறி இட்டு பாரம்பரிய ஆற்றல் கொண்டு பிடித்துக்காட்டும் ஆற்றலை நாம் காணமுடி கின்றது. உண்மையில் இத்தகைய வியத்தகு முறை சமகால நிலையில் பாரம்பரிய தொழில்முறை வகிக்கும் வியத்தகு முறை வகிக்கும் முன்னைய நிலையை எமக்கு உய்த்துணரவைக்கின்றது.
33

Page 20
இயல் - 2
1. பாரம்பரிய தொழில் பற்றிய ஆய்வு மதிப்பீட்டை
நவீன தொழில்முறையுடன் ஒப்பீடு செய்தல்
சமகால தொழில்முறையில் இயந்திரப் படகுகள் வெளியிணைப்பு இயந்திரங்களின் ஒரு பகுதி மாற்றப் பட்டுள்ளது. மரத்தால் செய்த பழைய பாரம்பரிய வள்ளங்கள் பாவிக்கும் அதே நேரத்தில் கண்ணாடி இழையங்களால் செய்யப்பட்ட வள்ளங்களும் பாவிக்கப்படுகின்றது. மரவள்ளங்களைத் தற்போது செய்வதிலுள்ள சிரமம் அதில் இயந்திரங்கள் பொருத்தும் தன்மை குறித்த நேரத்தில் உடனடியாக வாங்கி உபயோகிக்கக்கூடிய வசதிகளும் அகலம் கொண்டதாக விளங்கும் தன்மையும் தற்போது மீனவர்களால் கண்ணாடி இழைய வள்ளங்கள் விரும்பிப் பாவிக்கப்பட்டு வரும் நிலையை உருவாக்குகின்றது. பாரம்பரியமாக மரத்தினால் செய்யப்பட்ட வள்ளங்களின் நடுவே கம்பம் நாட்டி கம்பத்தில் சேலையால் ஆக்கப்பட்ட பாய்களைத் தொங்கக்கட்டியும் தண்டால் வலித்தும் இயற்கைச் சக்தியான நீரோட்டம், காற்று சவள், மனிதபலம் ஆகியவற்றைப் பாவித்து வள்ளங்களைச் செலுத்தியது மட்டுமல்லாமல் தனது தொழில்களைச் செய்வதில் இவற்றிலும் தங்கி இருந்தான். ஆனால் சமகால நிலையில் இவை எல்லாவற்றிலும் தங்கி

இருப்பதிலும் பார்க்க நீலீன் இயந்திரம் பொருத்திய படகுகளில் தொழில்செய்யும் முறையில் தங்கியிருக் கின்றன. ஆனால் இவ்வாறு தங்கியிருந்தாலும் கடற்றொழிலைப் பொறுத்தமட்டில் முற்றாக
பாரம்பரிய முறையில் தங்கியிருந்தவைகளையும் புறக்கணித்துவிட முடியாது.
ஏனெனில் இயந்திரப் படகில் ஆழ்கடலில் செல்லும் ஒருவனுக்கு எதிர்பாராத விதமாக இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்தால் அவன் பாரம்பரிய தொழில்முறையில் உள்ள இயற்கைச் சக்திகளைப் பயன்படுத்தத் தெரிந்திருப்பதும் அல்லாமல் தண்டு வலித்தல், சுக்கான் திருப்புதல் போன்றவற்றில் பயிற்சி உடையவனாய் இருந்தால் மட்டுமே ஆபத்தி லிருந்து தப்பிக் கரையைச் சென்றடையவும் முடியும். இதனால் நவீன தொழில்முறை முற்றாக பழைய பாரம்பரிய தொழில்முறையை முற்றாகப் புறக்கணிக்க முடியாத நிலையை நாம் அறியவேண்டியுள்ளது.
இத்தகைய நவீன இயந்திரப் படகைப் பயன் படுத்தும் முறையினால் ஒரு தொழிலாளியைப் பொறுத்தமட்டில் நினைத்த நேரத்தில் நினைத்த லையத்திற்குச் சென்று மீன்பிடிப்பது மட்டு ல்லாமல் நினைத்த இடத்துக்கு நினைத்த நேரத்தில் ரும்பி பாவனையாளர்களின் தேவையை மீன் ழுதடையாமல் உடனுக்குடன் பூர்த்திசெய்யக் டியதாக உள்ளது. இதனால் பாரம்பரிய முறையில்
35

Page 21
இருந்துவந்த மீனைப் பாதுகாத்தல், நஸ்டம் அடைதல் ஆகியவற்றிற்குப் பெரும் தீர்வு காணப்பட்ட தெனலாம்.
முன்னைய பழைய முறையில் மீனவன் ஆழ்கடலில் மீனைப் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தீடீரெனக் காற்று, புயல் வீசுமாக இருந்தால் அவன் அவற்றை பழுதடையும் முன்பாக கரையைச் சென்றடைந்து விற்பனை செய்ய முடியாத நிலையேற்பட்டதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தற்போதைய நிலையில் அத்தகைய இடர்பாட்டிற்கு இடமில்லை. இயற்கைக் காரணிகள் பிரச்சினையை ஏற்படுத்தினாலும், ஏற்படுவதற்கு முன்பாகவே அறிகுறிகளை உணர்ந்து குறித்த நேரத்தில் விரைந்து சென்று விற்கக்கூடிய வசதிகளுள் அதுமட்டு மல்லாமல் பருத்தித்துறைச் சந்தையில் மீன் மலிவாக விற்கப்படுகின்றது என அறிந்தவர்கள் யந்திரப்படகின் உதவியுடன் வல்வெட்டித்துறைக்குச் சென்று அங்கு விற்கக்கூடிய நிலையும் வசதிகளுமுள
முன்னைய பாரம்பரிய தொழில்முறையில் மீன்பிடிப்பதற்குரிய வலையை பின்ன, பொத்த இழைக்க முழுக்குடும்பமுமே பலநாட்களை செலவழித்துத் தயாரிக்க வேண்டிய நிலை இருந்தது இதனால் அவர்கள் தமது நேரத்தை இத்தொழிலின் பொருட்டு சீவநோபாயத்திற்காகச் செலவிட்டனே ஒழிய வேறு புறவேலைகளில் ஈடுபடமுடியாமல்
36

இருந்தது. ஆனால் இன்று ஒவ்வொருவருக்கும் வலை பின்னல், தயாரித்தல் என்பனவற்றிற்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு இயந்திரத்தால் நெய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது. சொற்ப வேளையில் பல்லாயிரக்கணக்கான Ᏻl I Ꭷfll Ꮿl! பின்னப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது. இதனால் அவர்களது உடல், உழைப்பு, சிரமம் ஆகியன குறைக்கப்பட்டு உள்ளதுடன் அவர்களது குடும்ப நலனையும் பாதுகாக்கக்கூடிய வாய்ப்பையும் அளித்துள்ளது.
பாரம்பரிய தொழில்முறையில் உபயோகிக்கப் பட்ட நூல்வலைகள் அன்றாடம் காயப்போட்டு, உலரப்போட்டு பின்பு அவற்றில் உள்ள பீத்தல்களைப் பாத்தவேண்டிய நிலையிருந்தது. இது அத்தொழில் றையில் பெரும் அலுப்பும் இளைப்புமாக அவர் ளுக்கு இருந்தது. ஆனால் நவீனமுறையில் நலோன், குர்லோன் வலைகள் இத்தகைய ரமத்தைக் குறைத்துக் கொண்டது. நைலோன் லையை மாதக்கணக்காக உலரப் போடாது வத்திருந்தாலும் பழுதடையாது. உலரப்போட வேண்டிய அவசியமுமில்லை. நைலோன் நூல் டுதலாக அறாதபடியால் பீத்தல்களைப் பொத்த வேண்டிய அவசியமும் இல்லை. தமக்கு எப்பொழுது ரண்டு மூன்று நாட்கள் ஓய்வுகிட்டுகின்றதோ : உலரப்போடுவார்கள்.
தற்போது மக்களிடமுள்ள இன்னோர் முறைப்பாடு நலோன் வலையில் பிடிக்கப்டும் மீன்கள் உருசி
ጏ W"

Page 22
குறைந்தவை என்றும் முன்னைய நூல் வலையில் அகப்படும் மீன்கள் உருசி கூடியவையென்றும் கூறப்படுகின்றது. அதற்குக் காரணமுண்டு. எல்லாம் நவீன நைலோன் வலைகளுக்கு ஈய்கின்ற தன்மைகூட உள்ளது. இவை இவ்வாறு மீன் அசைய ஈய்ந்து ஈய்ந்து நன்றாக இளகுவதால் மீனினம் அகப்பட்டதிலிருந்து எடுக்கும் வரை கூடுதலான இரத்தத்தைக் கக்கி விடுகின்றது. இவ்வாறு கூடுதலான இரத்தம் கக்கப்படு வதினாலேயே மீன்கள் உருசியற்றுக் காணப்படு கின்றது. ஆனால் பாரம்பரிய தொழில்முறையில் உள்ள நூல் வலையானது ஈய்ந்து ஈய்ந்து இறுகாதபடி யால் அதிக இரத்தப் போக்கில்லை. இதனால் உருசி கூடவுள்ளதாக இருக்கின்றது. இத்தகைய நைலோன் ஈய்கின்ற தன்மையை அறிவதில் மாணவன் விஞ்ஞான அறிவின் பயன்பாட்டை எளிதில் அறிந்து கொள்ள முடிகின்றதெனலாம்.
நவீன தொழில்முறையைப் பொறுத்தமட்டில் மீன்பிடிப்போருக்கு மீன் காட்டிகள் உண்டு. ஆனால் பாரம்பரிய முறையில் வலையையும் தூண்டிலையும் தேடி மீன் வரவேண்டி இருந்தது. மீனைத்தேடி அது கூடுதலாக இருக்கும் இடத்திற்கு மனிதன் செல்ல வில்லை. இதனால் மனிதர்கள் மீன் பிடிபாடு இல்லாமல் திரும்பி வரவேண்டி அடிக்கடி ஏற்படும். இது பாரம்பரிய முறையில் இருந்த பெருங்குறைபாடு எனலாம். ஆனால் புதிய முறையில் உள்ள
@曲

மீன்காட்டிகள் இத்தகைய இடர்ப்பாட்டிற்கும் பிரச்சினைக்கும் பெருமளவில் தீர்வு கண்டுள்ளதெனலாம்.
பாரம்பரிய தொழில்முறையில் மீனவர்கள் மீனுள்ள இடங்களைக் கண்டறிய கடல் கலங்கும் தன்மை, மீன் எழும்பிப் பாய்தல் ஆகியவற்றைக் கொண்டு மீனுள்ள இடங்களை ஊகித்து உணர்ந்தனர். ஆனால் நவீன தொழில் முறையிலோ மீனுள்ள இடங்களைக் கண்டறிய நுண்ணுயிர்களின் செறிவு, வெப்பநிலை, நீரோட்டம், காற்று, ஆழம், காலநிலை ஆகியன கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது. Il II Group L u பாரம்பரிய முறையில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வோர் இடம்பெயர்ந்தனர். உதாரணமாக வல்வெட்டித்துறை மீனவர்கள் ஆடி மாதத்தில் தாளையடிக்கு மீனுள்ள இடமாகக் கணித்துக்கொண்டு செல்வர். அவர்கள் ஆடி மாதம் 15ஆம் திகதியில் வருடா, வருடம் வழமைபோல் செல்லுகின்றனர் எனக் கொண்டால் அப்பகுதியில் ஒவ்வோர் ஆண்டிற்கும் ஆடி மாத முன் பின் பகுதிகளில் மீன்கள் காணப்படலாம். இதனால் நிதானமாக மீன்களம் கண்டறியும் முறையின்றி அவர்கள் ஏமாற்றமடையும் நிலை பரம் காணப்பட்டு வந்தது. ஆனால் நவீனமுறையில் இயற்கைக் காரணிகளைக் கொண்டு உடனுக்குடன் தீர்மானித்தறிந்து அவற்றுக்கேற்ற உபகரணங்களைப் பாவித்து மீன்பிடிக்கக்கூடிய நிலையும் உள்ளது. உதாரணமாக வல்வெட்டித்துறை
39

Page 23
இனக்கடலில் இன்னமாதப் பகுதியில் 'கிழவறையன்’ என்னும் பெரிய மீன்வகை அகப்படுமென அறிந்து அதற்கேற்ற பெரிய வலையைப் பாவிப்பர். கோர்த்தல், கோரை என்னும் மீன்படும் நிலையில் சின்னக் கண்ணுள்ள வலையை பாவிக்கின்றனர். ஆனால் பாரம்பரிய முறையில் இரண்டு வகை மீன்களுக்கும் பூவலை என்ற வலையையே பாவித்து வந்தனர். இதனால் பெரிய கண்ணுள்ள வலையில் கோர்த்தல், கோரை போன்ற சிறு மீன்கள் தப்பித்துக் கொள்ளும் நிலையும் உள்ளது. இதுமட்டுமல்லாமல் வலையைப் போடும்போது அல்லது படுக்கும் போதோ வெப்பநிலை, காலநிலை என்பவற்றை யோசித்து வலைகளைப் போடுவதும் கிடையாது. ஒரு திட்டமுமின்றி எல்லாவகை மீன்களுக்கும் ஒரே வலையையே பாவித்து வந்தனர்.
பாரம்பரிய தொழில்முறையில் மீனவர்கள் தாம் தொழில் செய்யும் நிலை ஒவ்வொன்றிலும் பழைய புராண, இதிகாச அடிப்படையில் அமைந்த பாரத இராமாயண பாட்டாலாகிய ‘அம்பா’ பாட்டுப் பாடுதல் வழக்கமாய் இருந்தது. இத்தகைய பாடல் வலைபடுத்தல், இழுத்தல், தோணி வலித்தல், மீன்களைத் தூக்குதல் ஆகியவற்றிற்குத் தயார் பண்ணும் நிலைக்கும் இளைப்பாறுவதற்கும் உதவுவ தாய் அமைந்தது. இதனால் முன்னைய மக்கள் பழைய இலக்கண, இலக்கிய அறிவை கேள்விச் செவியூடாகப்
40

படைத்திருந்தது மட்டுமல்லாமல் சமய அறிவு, புராண, இதிகாச சம்பவங்களைப் பாடுவோராயும், வேடிக்கைக் கதைகளை கூறுவோராயும் சுத்த செந்தமிழில் பாடினார்களோ அந்தளவிற்கு வெறும் தூஷண வார்த்தைகளைப் பெய்தும் பாடினார்கள். இதில் அவர்களது புலமையும் மனமகிழ்ச்சியும் இழையோடி இருந்தமையும் நாம் காணமுடிகிறது. தமது உடல், உள ஆற்றலில் மட்டும் தங்கியிருந்த வர்களுக்கு ஆபத்தான வேளைகளில் இத்தகைய அம்பா பாட்டு நம்பிக்கையை அளித்து உற்சாகத்தை ஊட்டியதெனலாம்.
ஆனால் நவீன இயந்திரத்தொழில் மயத்தில் இத்தகைய நிலைக்கு இடமில்லை. ஏனெனில் இயந்திரங்கள் அவர்கள் படும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல் அவர்கள் பெற்றிருந்த கூடுதலான நேரத்தைத் தொழில் செய்யும் நிலையில் இருந்தவற்றிற்கு சந்தர்ப்பம் அளியாது இயந்திரப் படகு சுருக்கிவிட்டது. தற்போது பாரம்பரிய முறை யில் இடம்பெற்ற உளமகிழ்பாட்டிற்குப் பதிலாக இரைச்சலிடும் இயந்திரத்தைச் சகிக்கவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டான் மனிதன். இத்தொழிலில் மட்டுமல்லாமல் உழவுத் தொழிலிலும் நாம் கேட்டு இரசித்த கலப்பை உழவு, சூடு மிதித்தல் போன்ற வற்றின் போது இசைத்த பாடல்களை உழவு இயந்திரம் வந்தபின் காதால் கேட்பதைத் தவிர்க்கும்
4.

Page 24
நிலையுள்ளது. இதனால் கேள்விமுறைக் கல்வி அற்றுப் போகும்நிலை ஏற்பட்டதெனலாம்.
பழைய பாரம்பரிய முறையில் மீனவர்கள் தொழில் செய்யும் சுற்றாடல் பத்து மைல் உடையதாகவே அமைந்தது. கரையோரத்தை அண்டியே மீன் பிடித்து வந்தனர். ஆழ்கடலில் அதிக தூரம் செல்ல முடியாத நிலையிருந்தது. அதுமட்டுமல்லாமல் மீன்பிடிக்கும் இடம் குறிப்பிட்ட இடமாக வரையறுக்கப்பட்டு இருந்தபடியால் மீன்பிடிக்கும் அளவும் குறைவாகவே காணப்பட்டது. அக்காலத்தில் அதிகம் மீன் பிடித்தால் மீன்வளமும் குன்றிவிடும் என நம்பினர். ஆனால் தற்போது பயமின்றி ஆழ்கடலில் சென்று வரும் நிலையுள்ளதால் மீன்பிடிக்கும் அளவு கூடியிருப்பது மட்டுமல்லாமல் ஆழ்கடலில் பெருவின மீன்களை யும் பிடிக்க முடிகிறது. அத்துடன் ஆழ்கடலில் செல்வதால் வளம் குறையும் என்ற நிலையுமில்லை.
பாரம்பரிய தொழில்முறையில் மீனைப் பதனிடும் முறை கருவாடு போடுதலும் உப்பிடுதலும் சாடிமீன் போடுவதுமாகவே காணப்பட்டது. மீன் என்ற நிலையில் பச்சைமீனாக உலராது பயன்படுத்தப்படும் நிலை அறியப்படவில்லை. ஆனால் நவீன தொழில் ல் மரத்தொட்டிகளில் போட்டு ஐஸ் இட்டு பலமணி நேரம் பல நாட்களுக்கு பழுதடையாமல் உடன் பச்சையாக பாவிக்க முடிவது மட்டுமல்லாமல் குளிரூட்டி தூளிலிட்டு நீண்டநாட்களுக்குப் பாவிக்க
42

முடிவதுடன் பேணிகளில் அடைத்து பல மாதங்களின் பின்னரும் பாவிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
அத்துடன் முன்பு கடல்நீர் குறைகின்ற நேரத்தில் குன்றுகளில் அகப்பட்டு இறக்கக்கூடிய மீன்களை தற்போதைய நவீனமுறையில் பிடித்துவந்து தொண்டைமானாறு போன்ற கடல்நீர்த் தேக்கங்களில் விட்டு மீன்வளர்ப்புத் திட்டம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதனால் அவற்றில வளரும் மீன்களை இடைமறித்து வளர்க்கும் முறையினால் குறைந்த காலத்தில் அவற்றிற்கு பின்ணாக்கு, தவிடு ஆகியன கொடுத்து வளரச் செய்வதன் மூலம் கூடிய பயனினை நவீனமுறையில் பெற்றுக்கொள்ள முடிகிறது.
பாரம்பரிய முறையில் தூண்டிலில் மீன் கொத்தும் பொழுது நூலில் இழுக்கும் இழுவையைக் கொண்டு என்ன மீன் என்று சொல்லும் தன்மை அநுபவ ரீதியானது. இத்தகைய அநுபவத்தன்மை நவீன தொழில்முறைக்கு மாணவர்கள் பயிற்சி முறைமூலம் உய்த்துணரும் தன்மை தொழில் முறையின் தேர்ச்சிக்கு உதவக்கூடியது.
2. நவீன முறையில் ஊறிய பாரம்பரிய முறையைச்
சேர்த்து மாற்றமுடியாமைக்குக் காரணம்
நவீனமுறையில் சேர்க்கவேண்டிய பல சிறப்புப்
பண்புகள் விளங்கிய போதிலும் பாரம்பரிய முறையை
மாற்றமுடியாமைக்குப் பல காரணங்களுள. ஒன்று
43

Page 25
பொருளாதாரம். இது தொழிலைச் செய்பவர்களிடம் நவீன இயந்திர சாதனங்களையெல்லாம் பூரணமாகப் பயன்படுத்துவதற்கேற்ற பொருளாதாரம் குன்றிக் காணப்படுவதால் பழைய முறையிலேயே தமது தொழில்முறையைத் தொடர்ந்து நடாத்தவேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உபயோகிக்கக்கூடிய மீன்பிடி உபகரணங்களோ அல்லது அணியங்களோ குறைந்த விலையில் அல்லாமல் உயர்ந்த விலையிலேயே விற்கப்பட்டு வருகின்றது. இதற்குக் காரணம் இவை வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுத் தருவிக்கப்படுவதாலும் பழைய முறையில் வலையில் பாவிக்கப்பட்ட சணல் நூலுக்குப் பதிலாக நைலோன் நூல்களை மட்டும்தான் இவர்களால் மாற்றிப் பாவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பழைய பாரம்பரியமுறை நவீனகாலத் தொழில்நுட்ப வசதிகளை ஏற்கமுடியாத ஒரு நிர்ப்பந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை நாம் அறிய முடிகின்றது.
3. தொழில்முன்னிலைப்பாட “மீன்பிடித் தொழில்’
பாடத்திட்டம் பற்றிய ஓர் ஆய்வு இப்பாடத்திட்டம் ஏனைய தொழில்முன்னிலைப் பாடத்திட்டங்களைப் போன்று செயற்றிட்ட ரீதியில் பிரதேசத் தொழிலை அபிவிருத்தியடையச் செய்வதுடன் மாணவன் தானே தொழிலைத் தொடங்கும் நிலைக்கு பாடத்திட்ட ரீதியில் தயார்
44

பண்ணுவதாக அமைந்தாலும் இப்பாடத்திட்டத்தைப் போதிப்பதில் பல இடர்பாடுகள் உள்ளன என்பதனை நாம் மறந்துவிட முடியாது.
இவற்றில் முக்கியமானது கல்வி நிலையங்களில் பெற்றோரிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் குறிப்பாக இந்துமத, பெளத்தமத மக்கள் ஆத்மீக நெறிக்கு முரணான உயிர்க்கொலைக்கு உயிரூட்டுவதாக இத் தொழில் அமைவதால் இதனைப் போதிப்பதிலேயோ அல்லது தம் பிள்ளைகள் கற்க வேண்டும் என்பதிலேயோ பெரும் எதிர்ப்புக்காட்டி வருகின் றனர். இத்தகைய எதிர்ப்புக்கு நியாயம் காட்டுவதும் இப்பாடத்திட்டப் போதனை எதிர்நோக்கும் முக்கிய இடர்ப்பாடாகும்.
மீனவக் குடும்பத்தினரே இப்பாடத்திட்டம் போதிப்பதை எதிர்க்கின்ற நிலைமை உள்ளது. அதாவது பொருளாதார நிலையில் மேம்பட்ட உத்தியோகம் பார்க்கும் தாம் தமது பிள்ளைகள் உத்தியோகம் பெறக்கூடிய ஆபத்தற்ற வாய்ப்பும் வசதிகளும் உள்ள வேறு தொழில்முன்னிலைப் பாடங்கள் இருக்க அதனை ஏன் கற்கவேண்டுமென்று கேட்கின்றனர். அத்துடன் மீன்பிடித் தொழிலைச் செய்யும் குடும்பத்தினரே தங்கள் பிள்ளைகளுக்கு மீன்பிடித்தல் பற்றி என்ன சொல்லிக்கொடுக்க உள்ளது எனக் கேட்கின்றனர். தம்முடன் தொழிலுக்கு வரும் பொழுதே கற்கக்கூடிய வாய்ப்புண்டு என்கின்றனர்.
45

Page 26
இதனை பாடசாலை அதிபரிடம் கற்கவேண்டுமா? கற்பிக்கும் ஆசிரியர் மீன்பிடித் தொழிலில் எதுவித அநுபவமும் அற்றவராய் விளங்கலாம். அவரின் போதனை மட்டும் இத்தொழிலுக்கு எந்தளவிற்கு உதவும் என்பதில் நம்பிக்கையற்றுள்ளனர்.
இத்தகைய மனப்பாங்குடன் உள்ள அவர்கள் மீன்பிடித்தொழிலை நன்றாகக் கற்பதன் மூலம் அத்தொழிலிலும் மேற்படிப்புக்குச் செல்லலா மென்பதை அவர்கள் உணரவில்லை. மேலைநாடு களில் இத்தொழில்முறை உரைக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்து கலாநிதிப் பட்டம் பெற்று இத்தொழிலின் விருத்திக்கு உதவுவதை உணர்ந்துள்ளனர்.
இன்று இலங்கையைப் பொறுத்த மட்டில் கூடுத லாக இப்பாடத்திட்டம் கரையோரப் பகுதிகளிலுமே அமுலில் இல்லாதுள்ளது. தமிழ்ப் பகுதிகளில் ஆக பதின்னான்கு பாடசாலைகளில் மட்டுமே இத் தொழில் முன்னிலைப் பாடத்தை முன்வந்து கற்பிக் கின்றனர். அதுவும் அந்தந்தப் பகுதியில் சமூக ரீதியான நவீன மீனவ சமூக மாணவர்களே இதைக்கற்க முன்வருகின்றனர். அரசு தொழில் முன்னிலைப் பாடத்திட்டத்தைக் கொண்டுவந்த நோக்கிற்கிணங்க மக்களால் தொழிலின் மகத்துவம் உணரப்படாத நிலையையே இது உணர்த்தி நிற்கின்றது எனலாம்.
46

இப்பாடத்திட்டத்தின்படி தொழில்முன்னிலை
பற்றி 50% வீதந்தான் அறியமுடிகிறது. ஏனைய பாடங் களை மாணவர்கள் கற்பதுபோல இப்பாடத் திட்டத்தில் செயல்முறையை முற்றாக உபயோகிக்க முடியாதுள்ளது. காரணம், இத்தொழில்முறையில் மாணவர்களை செயல்முறைக்கு கடலிற்கு அழைத்துச் செல்லும்பொழுது பெரும் ஆபத்துக்களையும் எதிர்ப்புக்களையும் எதிர்நோக்க வேண்டியவரா கின்றார். அவருக்குப் போதிய அநுபவமும் பயிற்சியும் வேண்டியுள்ளது. ஆழ்கடலில் செல்லும்பொழுதும் மாணவன் ஒருவனுக்கு ஆபத்து தற்சமயம் ஏற்பட்டு உயிர்ச்சேதம் நடைபெற்றுவிட்டால் ஏனைய பெற்றோர் தமது பிள்ளைகளை இப்பாட போதனையே வேண்டாமென்று நிறுத்தும் நிலை உருவாகலாம். இந்நிலை ஏற்படும் பொழுது இப் பாடத்திட்டம் பரவலாகவே கைவிடப்படலாம். இதனால் ஆசிரியர்கள் இத்தகைய நிலைக்குப் பயந்து செயல்முறைக்கு அழைத்துச்செல்லாது நீங்களாகவே உங்கள் பெற்றோர் உறவினருடன் பழகுங்களென விட்டுவிடுகின்றனர். இதனால் ஏனைய பாடங்களைப் போன்று பூரணமான செயல்முறையையும் இப்பாடத் திட்டம் பெறமுடியாமல் உள்ளது.
இப்பாடத்திட்டம் 6ஆம் வகுப்புத் தொடக்கம் 9ஆம் வகுப்புவரை அமைந்துள்ள நிலையில் இத்தொழில் பற்றி ஒர் அடிப்படை அறிவை உணர்த்துவதாகவே
47

Page 27
உள்ளது எனலாம். நீச்சல் பழகுதல், மீன்பிடி வலை களுக்குரிய முடிச்சுக்கள், இலங்கையின் கடலமைப்பு, மீன்பிடி அணிகலங்கள், மீன் பதனிடும் முறை, கலங்களின் அமைப்பு, கலங்களின் இயந்திரங்கள், வலைகள் அவற்றின் வகைகள், மீன் வளர்ப்பு, கடற்பாசியின் உப உற்பத்திகள், மீன்களை அறுவை செய்தல் போன்ற மீன்பிடித் தொழிலுக்குரிய முன்னறித் தன்மைகள் அளிப்பதாக அமைந்துள்ளது. அத்துடன் ஏனைய பாடங்களுடன் தொடர்புபடுத்திக் கற்கும் தன்மையையும் மாணவர்களுக்கு அளிக்கின்ற தெனலாம். தொழில்முன்னிலைப் பாடத்துக்குரிய இறுதி நோக்கமான மாணவன் தானாகவே தொழில் தொடங்கும் ஆற்றலை இது வளர்க்காது என்றே கூறலாம். இத்தகைய நிலையைப் பெறுவதற்கு இப் பாடத்திட்டமானது பாரம்பரிய தொழில்முறையுடன் ஒன்றிணைக்கப்பட்டு போதிக்கப்படும் நிலையி லேயே முடியுமெனலாம். பாரம்பரிய தொழில்முறை அளிக்கும் பயிற்சித் திறனை வெறுமனே இப்பாடத் திட்டத்தின் மூலம் பெற்றுவிட முடியாதென்பதும் எமது கருத்தாகும்.
இப்பாடத்திட்டம் ஒரு மையப்பாடத்திட்டமாகும். இப்பாடத்திட்டங்களைக் கற்கும் மாணவனிடத்து உடனடியாக தாக்கத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. நீண்டகாலத்தின் பின் அதுவும் விதிமுறையற்ற பாரம்பரிய தொழில்முறையுடன் அவன் தனது பாடத்திட்ட பாட அடைவைத் தொடர்புபடுத்தி,
48

பயன்படுத்தி தொழில் செய்யும் நிலையிலேயே அறியமுடியுமெனலாம். மீனவர்கள் தாம் திறமை யானவர்கள், ஆசிரியர்களைக் காட்டிலும் தாம் திறமையாக உடனடித்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் தம்மால் தொழிலை தேர்ச்சியடையச் செய்யலாமென்ற அபிப்பிரயம் கொண்டுள்ளனர்.
இருந்தாலும் இத்தகைய பாடத்திட்டம் அவர்களது பாரம்பரிய தொழில்முறைக்கு உதவக்கூடிய சிறப்புக் களைக் கொண்டு விளங்குகின்றதெனலாம். நவீன தொழில்நுட்பம், மாணவர்கள் மீன்பிடி கண்டறி முறை, மீன்வளர்ப்புத் திட்டம், பதனிடும் முறை, புதிய மீன்பிடிக் கருவிகள் ஆகியன பற்றிய புதிய நெறிமுறைக் கருத்துக்கள், பாரம்பரிய தொழில்முறை கள் பெற்றோருக்கு உதவ அமைவது மட்டுமல்லாமல் தொழிலை முன்னேற்றுவதற்கு உறுதுணையாக அமையும் என்பதையும் நாம் மறுக்கமுடியாது.
இப்பாடத்திட்டம் மாணவர்களைப் பொறுத்த மட்டில் வேறு பாடங்களை கற்பதற்கும், அப்பாடங் களில் பெற்ற பாடஅறிவை இங்கு செயல்முறையில் பிரயோகித்து அறிவதற்கும் அவனுக்கு உறுதுணை எனலாம். சாதாரணமாக மீன்களை அறுவை செய்யும் பொழுது ஆசிரியரால் இருதயம், நுரையீரல், அவற்றின் தொழிற்பாடு, மீன் ஏன் இறக்கின்றது, தொற்றுநோய்த் தடுப்புகள், முதலியன பற்றி மாணவன் அறியும்பொழுது விஞ்ஞான பாடஅறிவை அறிய முடிகின்றது.
49

Page 28
இதேபோல மீன்பிடி இடங்கள் பற்றிய வரைபடங் கள், மீன்பிடி அளவு பற்றிய கணித அளவுபடங்கள் தயாரித்தல், கரையோரங்களைக் கணிக்கும்முறை, ஆழம்கணித்தல், வெப்பநிலை கணித்தல், வெப்ப மானி பாவித்து கணிக்கும் முறை ஆகியன மாணவனுக்கு கணித அறிவை ஊட்டுகின்றது. இதைப் போலவே மீன்பிடி விற்பனை நிலையங்கள், இலாப நட்டம் ஆகியன பற்றி அறியும்பொழுது வர்த்தகம் பற்றிய அறிவும், புவியியல் தன்மை, காலநிலை பற்றி அறியும்போது புவியியல் அறிவும், முன்னைய மீன்பிடிமுறையை அறியும்பொழுது வரலாற்று அறிவு ‘அம்மா’ பாடல் ஆகியனவற்றை அறியும் பொழுது எதுகை மோனை பற்றியும் செய்யுள் அறிவும், மொழிக்கருத்துக்களை அறியும் தன்மையும் இப்பாடத்திட்டத்தின் மூலம் வாய்ப்பளிக்கப்படு கின்றது. இதனால் பெற்றோர் சிலர் இப்பாடத் திட்டத்தை விரும்புகின்றனர். புதிய முறைகளைத்தம் பிள்ளைகள் வந்து கூற ஆவலுடன் கேட்டு அதனைப் பின்பற்ற விரும்புகின்றனர். இப்பாடத்திட்டம் புதிய கல்விமுறையில் நிபந்தனைப்படுத்தப்பட்டதால் மாணவர்களுக்கும் மாணவர்கள் ஊடாகப் பெற்றோர் களுக்கும் இக்கருத்தை அறிய வாய்ப்புள்ளது. அதுவும் அச்சமூக மாணவர்களுக்கு மிகவும் சுவையாகவுள்ளது. அச்சமூகத்தவர்களும் பிள்ளைகளும் புதிய தொழில் முறை அறிவுபெற்று மலர்கின்றனர். அதன் நன்மை தீமைகளைப் பகிர்ந்து ஆராய்கின்றனர். ஆயினும்
SO

இப்பாடத்திட்டத்தைப் போதித்து அமுல் நடத்தக் sடிய ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளனர். இருக்கும் சில ஆசிரியர்களும் முறையற்ற இடமாற்றத் கிட்டத்தால் போதிக்கும் வாய்ப்பற்றுச் செல்ல, இப்பாடநெறி ஸ்தம்பிதமடைகின்றது. ஆழ்கடலிற்கு மாணவர்களை எடுத்துச் செல்லாதுள்ளனர். ஆசிரியர் கள் கரையோரங்களிலேயே அளிக்கும் பயிற்சியுடன் நின்றுவிடுகின்றனர். மீன்பிடித் தொழிலினோடு சம்பந்தமுடைய வேறு பயிற்சி முறைகளையே கூடுதலாகப் பயிற்றுகின்றனர். இதன் விளைவு தொழில் முன்னிலைப் பாடத்திட்டத்தின் பூரண நோக்கத்தினை அடைய வழிவகுக்காதெனலாம்.
s

Page 29
இயல் - 3
1. பாரம்பரிய தொழிற்பயிற்சி முறையில் இருந்து
பெறத்தக்க பயிற்றல் முறைகள் யாவை? ஒரு தொழிலைப் பழகும் ஒருவன் பூரண தொழிலாளிக்கு வலையைத் காவி உதவிசெய்தும், அவ்வலையை எடுத்து உலர்த்தியும் வலையைப் பின்பு மடித்தும் கொடுக்கும் தன்மை ஆரம்பப் பயிற்றல் முறையாக உள்ளது. வலையைக் காயவிடு தல் அவற்றை வலித்தல் போன்றவற்றை ஆதியில் தொழில் பழுகுவோன் தானே செய்யும் நிலைக்கு விடப்படமாட்டான். வலையைக் காயவிடுவதற்குத் தொழில் பழகுவோன் வலையைக் காவி நின்று கொண்டு காயவிடும் தன்மையைப் பார்த்து நின்று படிப்படியாகத்தான் காயவிட ஆரம்பிப்பான். அதேபோலவே வலையை, தொழிலாளி வலித்து, வலித்து இவனிடம் கொடுக்க இவன் வாங்கி சேர்த்து வைத்து வலிக்கும் முறையைப் பின்னால் திரிந்து நின்று விதிமுறையற்ற நிலையில் பயிலும் தன்மையைக் கண்டறி நிலையில் பெறும் தன்மையைக் காண்கின்றோம்.
இதன் பின் வலை பழுதுபார்க்கும்பொழுது தொழிலாளி பழுதுபார்க்கும் நிலையை அவதானித்து நிற்பவர் பின்பு ஊசியை எடுப்பதும் ஊசியின் கண்ணுள் நூல்போட்டுக் கொடுத்துப் படிப்படியாக
52

ஒரு கண்ணைப் பழுது பார்த்தும், பின்பு இரண்டு மூன்று கண்களைப் பழுது பார்த்தும், வலையை அறுத்துக் கொடுத்தபின் பொருத்தப் பழகியும் பின்பு வலையைத் தயார்பண்ணியும் உள்ள நிலையை பெறத்தக்க படிமுறை பயிற்றல் நிலையெனக் கூறலாம்.
இதேபோலவே வேறு பெறத்தக்க பயிற்றல் முறை களாகக் கயிறு பொருத்தல், துண்டிலிடும் முறைகளும் வலையில் இருந்து மீனைக் கழற்றி எடுத்தலும், பிடித்த மீனைப் பதனிடலும் உலர்த்தலும், கலங்களைக் கட்டுதல், அவிழ்த்தல் ஆகியனவும், கலங்களைச் செலுத்தலும் செலுத்தும்பொழுது நட்சத்திர வருகை, கலங்கரை விளக்கங்கள் ஆகியன கொண்டு குறிப்பிட்ட இடங்களை அறிந்து திசையறிந்து நாளாந்தம் கலங்களை செலுத்தும் திசையை படிப்படியாக அறிந்துகொள்ளுதலும், ஆழம் கண்பிடித்தலும், தத்தமது பரம்பரரை மீன்பிடி நிலையங்களில் சென்று மீன்பிடிக்கப் பழகுதலும் அடங்கும். இத்தகைய நிலையங்களை தகப்பன் மகனுக்கு மட்டும் தன்னோடு கூட்டிச் செல்லும்பொழுது தெரிவித்து வைப்பது, பார் எங்கே அமைந்துள்ளது அதனை எவ்வாறு கண்டு பிடிக்கலாம் என்பதும் குறிப்பிட்ட மீன் இனங்களை எங்கே எங்கே பிடிக்கலாம் என்றும் அறிந்து கொள்வர். உதாரணமாக வலையில் மீன் எங்கே அகப்படும் என சில இடங்களைக் குறிப்பாக வைத்துப் பிடித்து வரும் நிலையை இன்றும் நாம் காணமுடிகின்றது.
53

Page 30
இத்துடன் பாரம்பரியமாகக் குறித்த காலத்தில் குறித்த இடத்தில் இன்ன இன்ன மீன்கள் எங்கே பிடிக்கலாம் என்பது பயிற்றல் முறை மூலம் காட்டிக் கொடுக்கப்படும்.
மீன்பிடி வள்ளங்கள் கட்டுவதும் அமைப்பதும் பாரம்பரியமாக இருந்துவரும் முறையாகும். பாரம்பரியமாக வள்ளம் அமைப்பதில் கைதேர்ந்த தச்சர் இதற்கென உள்ளனர். அவர்களால் மட்டுமே அதனை அமைக்கும் முறை உபயோகிக்கப்பட்டு வருகின்றது. மற்றவர்கள் இத்திறனற்று உள்ளனர். பாய்மரக்கோல் நாட்டுதல், பாய்கட்டுதல், பாய்மரம் செலுத்தும் முறை ஆகியன பாரம்பரியமாக வழிவழி முறையாகப் பயிற்றல் நெறிப்படி உணர்த்தப்பட்டு வருகின்றது. இதுவே பெறத்தக்க பயிற்றல் முறைகள் என்று கூறலாம்.
2. பயிற்சிக் கட்டடங்களும் பயிற்சி முறைகளும்
அடுத்து இப்பாரம்பரிய தொழில்முறையானது எந்தெந்தக் கட்டடங்களில் பயிற்றப்படுகிறது என்பதை ஆராயும்பொழுது இத்தொழில் சீவனோபாயத் தொழிலாக விளங்கினாலும் பின்வரும் குறிப்பிடக்கூடிய கட்டடங்களில் பயிற்றப் பட்டு வருவதை நாம் காணமுடிகின்றது.
இது பயிற்றப்படும் இடம் பிரதானமாக வீடு எனலாம். இங்கு பயிற்றும்பொழுது புதிய பிள்ளை களுக்கு கல்விக்கு ஏடு தொடக்குவதுபோல் ஒரு
54

விசேட தொடக்குமுறை எதுவும் கிடையாது. பிள்ளை வளர்ந்துவரும் நிலையில் நாளடைவில் தகப்பன் உதவியாக இவனை அழைத்து சில வேலைகளைப் பணிக்கும் கட்டத்திலிருந்து பயிற்சிக் கட்டம் ஆரம்பிக்கின்றது எனலாம். இப்பயிற்றல் பிரதானமாக வீட்டிலேயே எவராலும் இதற்கென ஆரம்பிக்கப்படு கின்றது என்று குறிப்பிட்டுணரக்கூடிய அளவிற்கு இல்லாமல் தாமாகவே எவருக்கும் தெரியாமல் மகன் தகப்பனுக்கு உதவும் நிலையில் இருந்து வீட்டில் ஆரம்பித்துவிடுகின்றது.
வீட்டிலிருந்து அடுத்த பயிற்சிக் கட்டம் கடற்கரை யோரம் என்று கூறலாம். வலையைக் கரைக்குக் கொண்டுவரும்படியும், மரக்கலத்தில் ஏற்றிவிட்டுச் செல்லும்படியும் அழைக்கப்படும் மகன் அவற்றை ஏற்றிவிட்டுச் செல்லும் நிலையைப் பார்த்துப் பார்த்து பயிற்றல் நிலையாக மனதில் பதித்துக்கொள்வான். பின்பு அதேபோலவே தந்தை கடலால் வந்தவுடன் வலையை வாங்கியும், வலையில் அகப்பட்ட மீனை வேறாக்கவும் முதலில் பார்த்திருந்த பின் தான் வேறாக்கவும் பழகிக்கொண்டு இவ்வாறு நாளாந்தம் கடலோரம் நின்று பழகுவதன் மூலம் கடற்பயம் தெளிவடைந்து விடும்.
பின்பு கடல் தண்ணிரில் இறங்கிக் கட்டுமரத்தைப் பிணைக்கும் நிலையைப் பார்த்திருந்து தானாகவே கட்டுமரத்தைப் பிணைப்பதும் தள்ளி விடுவதுமாக
SS

Page 31
இருப்பான். பின்பு தீடீரென தொழிலாளி இருக்கும் பொழுது கட்டுமரத்தில் ஏறி கரையோர இடங் களுக்குச் சென்று எட்டுந் தண்ணிரில் நடந்து கட்டு மரத்தை இழுத்தும் தனியாக விழுந்து விழுந்து நீந்திப் பழகியும் கொள்வான்.
இதேபோலவே கரையில் நாளாந்தம் நின்று வலை உலர்த்துவதும் தகப்பனுடன் வலைக்கு வேண்டிய கயிற்றைத் திரித்தும் முறுக்கியும் பழகிக் கொடுத்து உதவுவான். முறுக்கப்பட்ட கயிறுகளை அவர்களுடன் சேர்ந்து வலைக்குக் கட்டியும் கொள்வார்கள்.
முதல் முதலாக கலத்தில் ஏற்றி கடலுக்குக் கொண்டு செல்லும் நிலையில் பயிற்சிமுறை ஆரம்பமாகும். ஆழ்கடலுக்குப் பயம் தெளியாத பலபேர் கலத்தில் ஏறி இருந்துகொண்டு செல்வார்கள். பின்பு திரும்பி வரும்பொழுது எட்டும் கடலில் நடக்கவைத்து கடற்பயத்தைத் தெளிய வைப்பார்கள்.
இதே போலவே கட்டுமரத்தில் ஏற்றி தூண்டில் போடலில் தூண்டிலுக்குத்தங்கூசியில் இரைகொத்திக் கொடுத்தல், தூண்டிலில் அகப்படும் மீனைக் கழற்றிக் காட்டியும், முதல்நாளில் பார்க்கவைத்த பின்பு இரண்டு மூன்று நாட்களில் தானாகவே தூண்டில் போடும் நிலைக்குப் பழக்கப்படுவர்.
இதே போலவே வலையைப் போடுதல், இழுத்தல் ஆகியனவற்றை தாம் செய்யும் முறையைப் பார்த்திருக்க வைப்பர். பின்பு இடைக்கிடை வலையை
S6

இழுக்கவைப்பர். பார்த்து அவதானித்த பின் மூன்று நாட்களில் தொடர்ந்து தாமாகவே இழுக்கப் பழகுவர். பின்பு இழுக்கும் நிலையில் குறைகாணப்பட்டால் திருத்திக் காட்டிக்கொடுப்பர். இரண்டு, மூன்று மாதங்கள் செல்ல வலையடுக்க, இழுக்கப் பழகுவ துடன் ஆறுமாதத்தின் பின் ஊக்கமிருந்தால் பூரண மீன்பிடிகாரராய் பழகிவிடலாம். பின்பு வலையில் அகப்பட்ட மீனை கழற்றப் பழகுவர். கழற்றிய மீன் களைப் பறிக்குள் அடுக்கப் பழுகுவர். இவ்வாறு பயிற்றல்முறை, பழக்கும்முறை, தற்காலக் கல்வி முறை பயிற்றல் நெறிக்கு ஒவ்வாத முறையில் முரட்டுத்தனமாகத் திணிக்கும் தன்மையை பாரம்பரிய பயிற்றல்முறையில் காணப்படுகின்றது எனலாம். மேசன் வேலை பழகுபவன் சாந்தகப்பையால் கையில் அடி வாங்குவது போல் இவனும் மரக்காலால் அடிவாங்கும் தன்மையுமுள. உண்மையில் பயந்து பழகும் தன்மையும், முரட்டுச் சுபாவமும் பயிற்றல் முறையுமே இப்பாரம்பரிய தொழில்முறையிலுள்ள பயிற்றல் நெறிமுறை எனலாம்.
3. இத்தகைய பயிற்றல் முறை மூலம் பயிற்றுவிக்கப் பட்ட தொழிலாளி ஒரு பூரண தொழிலாளி என்பதற்கான திறன்பேறுகள் யாவை? அவர் தான் எவ்வாறு விதிமுறையற்ற நிலையில் பாரம்பரியமாக நின்று தொழிலைப் பழகினாரோ அதேபோல மற்றவர்களுக்குத் தொழில் பழக்கும் திறமை அவரது திறன்பேறுகள் ஆகும். இத்தகைய
57

Page 32
திறன் பேறுகளை காலமாற்றத்திற்கேற்ப நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.
இத்துடன் தொழில் செய்யும் ஒவ்வொரு நிலை யிலும் தொழில்த் திறமையுடையோர் தொழிலின் நன்மை தீமைகளை அறிந்தவராக இருத்தல் வேண்டும். இத்தகைய நிலை அவரை ஒரு பூரண தொழிலாளி யாக்கி மற்றவர்களுக்கும் தொழில் செய்யும் நிலையைப் பயிற்றுபவர்களாகுதல் வேண்டும்.
இதுமட்டுமல்லாமல் ஒரு பூரண தொழிலாளி என்பவர் பல்வேறு இயற்கைக் காரணிகளையும் அறிந்தவர்களாய் இருப்பது மட்டுமல்லாமல் மற்றவர் களுக்கு இயற்கைக் காரணிகள் பற்றி அறிவுறுத்துபவ ராகவும் இருத்தல் வேண்டும். உதாரணமாக மீன்பிடி படுநிலையும், மழை, கடும் புயல் ஆகியன பற்றி அவர் அறிந்து அபாயத்திலிருந்து பாதுகாப்பளிப்பவராயும் இருத்தல் வேண்டும்.
மீன்பிடி நிலையங்கள் எவை எவையென அறிந்திருப்பது மட்டுமல்லாமல் மீனவர்களுக்குப் பரவலாக மீன்பிடி நிலையங்கள் எவ்விடம் என ஆலோசனை கூறக்கூடிய ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் மீன்பிடிப்பதற்குரிய பாரம்பரிய உபகரணங்களையோ தனது உபகரணங்களையோ, தொழில்நுட்ப உபகரணங்களையோ பற்றி அறிந்திருப்பது மட்டுமல்லாமல் புதுப்புதுக் கருவி களை உபயோகிக்கும் திறமையை அறிந்திருப்பது
58

மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறக்கூடியவராகவும் அமைய வேண்டும். இத்தகைய பூரண திறன்பேறுகள் பழைய பாரம்பரிய முறையி லிருந்து பெற்ற கற்கை நெறிகளாய் புதிய தொழில் முன்னிலைக் கற்கைக்கு உதவும் கல்விமுறையாய் அமையுமெனலாம்.
உசாத்துணை
l.
பேராசிரியர் கா. சிவத்தம்பி (வித்தியோதய வளாகம், கொழும்பு) அவர்களின் அறிவுரை. திரு.எஸ்.சத்தியமூர்த்தி - அதிபர் தொண்டைமானாறு மகா வித்தியாலயம் - மீன்பிடித் தொழில் முன்னிலைப் பாடநெறி ஆலோசக ஆசிரியர் அவர்களின் அறிவுரை.
தொழிற் கற்கைகளின் உள்ளடக்கமும் முக்கியத்துவமும் - செயன்முறை ஆசிரியர் எஸ்.குகதாசன், யாழ் இந்துக் கல்லூரி. Non Traditional forms of Education - Dr. S. Weeraratna, Peradeniya Campus. கல்வி அமைச்சின் 06.09.76ஆம் திகதிய 104/76 ஆம் இலக்க சுற்றறிக்கை.
. கள ஆய்வு
1. அராலி, பொன்னாலை சிறுகடல் மீன்பிடி
யாளர்கள்
59

Page 33
மயிலிட்டி, வல்வெட்டித்துறை, பருத்தித் துறை - பெருங்கடல் மீன்பிடியாளர்கள்.
தே.க.த.பத்திரப் பரீட்சை வகுப்பு, நாவாந்துறை மகாவித்தியாலய மாணவர்கள்
60


Page 34


Page 35
Uსრr0üზUსტმuს 6)$( உய்த்துணர்த்தக்க
BIT
தற்பொழுது மாணவர்கள் கல்வி கற்று பிற்காலத்தில் தொழிலைத் வற்புறுத்தப்படுகின்றது. பாரம்பரி கல்வியைக் கற்றவர்களது தொ நவீன தொழில்நுட்பத்துடன் கலந் நிலையில் பாரம்பரிய தொழிற்ப தக்க கல்வி முறைகளின் முக்கிய
இவர் பேரா;
கலைமாணிப்பட் கழத்தில் பட்டட் தேசிய கல்வி துவ டிப்ளோமான் கழகத்தில் கல்வியியல் முதுமா6 பட்டங்களையும் பெற்றவர். அமெரிக் கழகத்தில் ஆய்வுப் புலமையாள
ஆசிரியராகவும் அதிபராகவும் க கல்விப் பணிப்பாளராகவும்(SLAE சிந்தனைகள்', 'ஆரம்பக்கல்வி', முறைசாராக்கல்வியும்', 'வட பி (3LobLITG6", "The Role of Princip DifficultAreas of Sri Lanka”, “556NoT கட்டுரைகள்', 'கல்வி உலா' இவர் தற்போது கல்வி அமைச்சி கப் பணியாற்றி வருகின்றார்.
| SI :NE KETE - 355 - 50250 - 4 - 1
Cfast Cfziratez 6 : 289-1/2, Galle
 

ாழில் முறையில்
கல்வி முறைகள்
முத்து தணிகாசலம்பிள்ளை
யைத் தொழிற்பயிற்சி முறையில் தொடருதல் வேண்டுமென்பது ய முறையுடன் கலந்து தொழிற் ழிற்திறன், வெளிப்பாட்டுத்திறன், து மிகச் சிறப்பாக உள்ளது. இந் யிற்சி முறையில் உய்த்துணரத் ந்துவத்தை இந்நூல் ஆராய்கின்றது.
玩fāü
தனைப் பல்கலைக்கழகத்தில் டத்தையும் திறந்த பல்கலைக் பின் கல்வி டிப்ளோமாவையும் நிறுவகத்தில் கல்வி முகாமைத் வையும் யாழ்ப்பாண பல்கலைக் 0ணி மற்றும் கல்வியியல் கலாநிதி 5காவில் வோலிங்கிறின் பல்கலைக் ராகச் சென்று வந்தவர்.
ல்வி அதிகாரியாகவும், மாகாணக் S-I) விளங்கிய இவர் 'கல்வியியல் “கல்வி நிர்வாகம்', ‘நாட்டுக்கூத்தும் ரதேச கிராமப் பாடசாலைகளின் als in Managing Small Schools in நிதி சநா.தணிகாசலம்பிள்ளையின் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ன் முதுநிலை கல்வி ஆலோசகரா
S
MAXIMU
175
Road, Colombo - 06 7. P-Off 2382312.