கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சொன்னாற்போல 3

Page 1


Page 2

盛 கே.எஸ்.சிவகுமாரனின் பார்வையில்.
சொன்னாற்போல.03
ebdfrfur : கே.எஸ். சிவகுமாரன்
மணிமேகலைப்பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447 7 (ப.எண்.4), தணிகாசலம் சாலை, தியாகாய நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 2434 2926, 2434 6082
LßlaciiT g(ĝ5as ĉio : manirmekalai1@data one.in 960)600Tu psTib : ww.tamilvanan.com 露 S.

Page 3
நூல் தலைப்பு
ஆசிரியர்
GLost
பதிப்பு ஆண்டு
பதிப்பு விவரம்
உரிமை
தாளின் தன்மை
நூலின் அளவு
அச்சு எழுத்து அளவு
மொத்த பக்கங்கள்
حجX
சொன்னாற்போல.03
கே.எஸ்.சிவகுமாரன்
தமிழ்
2008
முதல் பதிப்பு
நூலாசிரியருக்கே
11.6 S.S
கிரெளன் சைஸ்
(12 A x 18 %. Gyi.f.)
11 புள்ளி
XVi +- 284 = 300
நூலின் விலை
இலங்கை விலை
X>
ரூ.90.00 ரூ.300.00
அட்டைப்பட ஓவியம்
லேசர் வடிவமைப்பு
அச்சிட்டோர்
நூல் கட்டுமானம்
-ܠ
ح

Page 4
M
SEN வாசகர்கள் நிச்சயமாகப் பெற்றுக் கொள்வீர்கள், படித்துப் பாருங்கள். பல்கலைக்கழக மாணவர்
களுக்குப் பெரிதும் பயன்தரும் நூலிது.
இந்நூலுக்கு மனமுவந்து அணிந்துரை எழுதிய இலங்கை, கிழக்குப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சிமெளனகுருவுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்.
எனது ஆற்றல்களை இனங்கண்டு நூல்களாக வெளியிட முன்வந்த நிர்வாகி ரவி தமிழ்வாணன் அவர்களுக்கு நன்றிகள் பல. m
அன்புடன் கே.எஸ்.சிவகுமாரன்
21. Murugan Place,
Off Havelock Road,
Colombo - 06.
SRI LANKA.
Te : OO94112587617
OO947796.06283

V
]ܒܔ அணிந்துரை. ཟ
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவரும் பெராசிரியருமான சி.மெளனகுரு
கே.எஸ்.சிவகுமாரன், ஏனையோரிடமிருந்து வேறுபட்டு நிற்பவர் :
கே.எஸ்.சிவகுமாரன் என்ற பெயர் ஈழத்து எழுத்துலகில் பரவலாக அறியப்பட்ட பெயராகும். கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக எழுதிவருவதும், 72ஆவது வயதையடைந்த வேளையிலும் இளைஞர் போல இன்றும் எழுத்திற் செயற்படுவதும் இவரின் தனித்துவங்களாகும்.
சிவகுமாரன் மட்டக்களப்பு நகரின் புளியந்தீவுப் பகுதியிலுள்ள சிங்களவாடியில் பிறந்தவர். ஆங்கிலத்தில் தம் பாடங்களை இளம் வயதிலிருந்தே கற்ற மிகப் பழம் தலைமுற்ையைச் சார்ந்தவர். மட்டக்களப்பு St.Michaelrs' கல்லூரியிலும் அன்றைய அரசாங்கக் கல்லூரியிலும் தொடர்ந்து கொழும்பு இந்துக் கல்லூரியிலும், St.Josephs கல்லூரியிலும் தம் ஆங்கிலக் கல்வியைத் தொடர்ந்தவர். கொழும்பில் 1953 ஆம் ஆண்டு தொடக்கம் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட இவர் எல்லாப் பழையவர்களையும் போலவே ஒரு தொழிலிலே நிரந்தரமாக இருந்தவரன்று.
பல்வேறு தொழில்கள் புரிந்தவராயினும் ஊடகத் h துறையே அவரது பிரதான தொழில்புரிநிலையமாயிற்று.
UEl

Page 5
VM
ERNA வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை எனத் 夏姆 புரிந்தவர் ஒலிபரப்புத்துறையிலே தமிழிலும், ஆங்கிலத்திலும் பகுதி நேர அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளரா கவும், செய்தி ஆசிரியராகவும், வெளி நாட்டுச் செய்தி விவரணத் திறனாய்வாளராகவும் பணிபுரிந்தவர். மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றியவர். இலங்கை Censor Board அங்கத்தினர். பல அனைத்துலகத் திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டவர். தனது பட்டப் படிப்பில் ஆங்கில இலக்கியம், தமிழ், மேலைப் பண்டைய பண்பாடு என்பனவற்றைப் பாடங்களாக எடுத்தவர். தமிழ், சிங்கள, முஸ்லிம் அறிஞர்களுடனும், கலைஞர் களுடனும் தொடர்பு கொண்டவர். மாலைதீவு, ஓமான், அமெரிக்கா, இலங்கை ஆகிய இடங்களில் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில இலக்கியம் போதித்த அனுபவம் மிக்கவர்.
சிறு வயதிலிருந்தே தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ச்சியாக வாசித்தமையும் அவரது வாழ்பனுபவங் களும் அவரை ஒரு தனித்துவம் மிக்க Self-made Arts Critic ஆக வளர்த்தெடுத்தன.
சுதந்திரமான, தனக்கென ஒரு வழிமுறையைக் கொண்டிருப்பதுடன் சகல கோட்பாடுகளையும், சிந்தனைகளையும், புதிய போக்குகளையும் உள்வாங்கும் திறந்த மனம் கொண்டவராகவும் இவர் காணப்படுகிறார். அரசியல், சமூகப் பிரச்சினைகள் என்ற சிக்கல்களுக்குள் தன்னை அகப்படுத்திக் கொள்ளாத இவர் சகலவற்றையும்
ரசிக்கும் ஒரு பரம ரசிகர் அழகியலை விரும்புபவர்

VM
50 வருட காலமாகத் தொடர்ச்சியாக எழுதிய ஆங்கில, தமிழ் எழுத்துக்கள் புத்தக வடிவங்களில் வந்துள்ளன. (ஏறத்தாழ 20 தமிழ் நூல்கள், இரண்டு ஆங்கில நூல்கள்) இலங்கைத் தமிழ் எழுத்து தொடர்பாக இரண்டு உலக இலக்கியக் களஞ்சியங் களில் சிறு குறிப்புக்களை ஆங்கிலத்தில் இவர் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
சிவகுமாரன் பற்றிய பின்னணி, அவர் எழுத்துக் களையும் கருத்துக்களையும் புரிந்து கொள்ள உதவும்.
சிவகுமாரனின் எழுத்துக்களை நாம் 3 பெரும் பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். அவையாவன :
1. ஈழத்துத் தமிழ் புனை கதைகள் பற்றிய அவரது விமர்சனப் பாங்கான பத்தி எழுத்துக்களும், திறனாய்வுகளும். 2. விமர்சனம், திறனாய்வு பற்றிய அவரது எழுத்துக்கள். 3 ஆங்கிலத்தில் அவர் எழுதிய எழுத்துக்களும்,
நூல்களும். 4. சினமா, நாடகம், நாட்டியம், இசை சம்பந்தமான
அவரது எழுத்துக்கள். 5. ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள்
ஆக்க இலக்கியகாரர், விமர்சகர், பத்தி எழுத்தாளர் வானொலி, தொலைக்காட்சி செய்தி / நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர், ஆங்கில ஆசிரியர் எனப் பல்வேறு h தோற்றங்கள் அவருக்குண்டு. வீரகேசரி இணை
Vu

Page 6
VIII
==FN
ஆசிரியர், நவமணி ஸ்தாபக பொறுப்பாசிரியர் The Island t Features (Culture) Editor.
இவ்வெழுத்துக்களுக்கூடாக எழும் சிவகுமாரனின் தன்மை யாது?
பத்திரிகைகளிலும், வானொலியிலும் பணி புரிந்தமையினால் பத்திரிகையின் அளவு கருதியும், வானொலியின் நேர அளவு கருதியும் அவர் தமது புனைகதை, சினமா, நாடகம் சம்பந்தமான கருத்துக்களை முன்வைத்தார்.
அதிக பக்கம் எழுத வேண்டிய அல்லது சொல்ல வேண்டிய விடயங்களை மிகச் சுருக்கமாகவும், தெளி வாகவும்,இங்கிதமாகவும், சாறு பிழிந்தவாறு கொடுப்பதும் என்பது மகா கஷ்டமான காரியம். "4 மணி நேரம் பேச வேண்டுமானால் 3 மணி நேரத் தயாரிப்பு போதும். 3நிமிடம் பேசவேண்டுமானால் 30 மணி நேரத் தயாரிப்பு வேண்டும்” என்பர். சுருங்கச் சொல்ல நிறைந்த அறிவும், தெளிவும், உழைப்பும் தேவை. இதனை இவரின் பங்களிப்புகளில் காணலாம்.
சிவகுமாரனின் புனை கதைகள் பற்றிய எழுத்துக்களில் இச்சுருக்கத்தையும் அதற்கான அவர் உழைப்பையும் புரிந்து கொள்கிறோம்.
பரந்த வாசிப்பு (சிறப்பாக ஆங்கில வாசிப்பு) அவருக்குப் புனைகதைகள், சினமாநாடகம் சம்பந்தமான ஓர் பார்வையைக் கொடுத்திருந்தது. ஈழத்து எழுத்தாளர் களின் புனை கதைகளைப் புகழ் பெற்ற பிறமொழிக்
h கதைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க அவரால் முடிந்தது.இப்
Ül=

= பரந்த பின்னணியில் அவர் ஈழத்து எழுத்தாளர்களின் நிறைகளையும், குறைகளையும் எழுத்தாளர் மனம் நோகா வண்ணம் இங்கிதமாகக் கூறினார். ஒரு சிறுகதைத் தொகுதி பற்றி விமர்சிக்கையில் (சுமைகள்) அவர் கூறும் கருத்து இதற்குச் சான்றாகும்.
இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த வடிவத்தை (கவிதை சிறுகதை நாவல்) அவர்கள் கையாளுகிறார்களே அதன் இயல்புகளைச் சரிவரப் புரிந்து கொள்வதுதான். இதற்கு அந்தந்த வடிவங்கள் பற்றிய கல்வியும் அறிவும் அடிப்பைடயானவை. அத்துடன் காத்திரமான இலக்கியப் படைப்புக்களுடன் ஏற்படுத்தும் பரிச்சயம் முக்கியமானது. தமிழிலும் வேறு மொழிகளிலும் (மொழி பெயர்ப்புக் களுடனாவது வெளியாகும் முக்கியமான இலக்கியங்களை முடிந்தவரை பெற்று வாசித்தல் வேண்டும். இது எழுத்தாளர்களது ஆக்கத்திறமை அபிவிருத்தியடைய உதவும். (தினகரன் 19-09-1993)
இதில் தென்படுவது யாது? ஆக்க இலக்கியம் அல்லது படைப்பு என்பது கருத்து சார்ந்ததாயின் அதன் அடிப்படை அம்சம் ஆக்கத்திறன் என்பதாகும். கலைஞன் வெளிப்படுவது அதில் தான். இந்த அபிப்பிராயமே இன்றும் சிவகுமாரனிடம் உள்ளது. இந்த அத்திவாரத்தில் நின்று கொண்டே அவர் புனைகதை, சினமா, நாடகம் அனைத்தையும் விமர்சித்தார்.
ஏனைய ஈழத்து விமர்சகர்களிடமிருந்து சிவகுமாரன் வேறுபடும் இடம் இரண்டு உண்டு.
பெரும் விமர்சனமாக அவரது எழுத்துக்கள் பூபமாாவிலும் அச்சிறு எழுத்துக்களுக்கடே
-
V5EE

Page 7
X
ஒரு விமர்சகன் இருப்பதனை எவரும் இனம் கண்டு கொள்வர். அப்பிப்பிராயம் போல அவரது கூற்றுக்கள் தென்படினும் அதிலே பிற இலக்கியங்களுடனான ஒப்பீடு குறிப்பிட்ட இலக்கிய வடிவம் பற்றிய உருவச் செம்மை, வெளிப்பாட்டு முறையிற் காணப்படும் பலம், பலவீனம் என்பன தென்படுவதை இலகுவில் இனம் கண்டு கொள்ளலாம். சிவகுமாரனின் ஆளுமையையும் இதில் இனம் கண்டு கொள்ளலாம். சிவகுமாரன் ஒரு வகையில் ஒரு செயல் முறை விமர்சகராவார்.
ஒன்று : பிரபல்யமாகாத, பெயர் தெரியாத எழுத்தாளர்களைப் பற்றியும் இவர் எழுதுவது. சிவகுமாரனை நேரில் தெரியாத எழுத்தாளர்கள் கூட அவர் பெயரை நன்கு தெரிந்து வைத்திருப்பதை நான் அவதானித்துள்ளேன். அதற்கான காரணம் அவர் பிரபல்யமானவர். பெரிய எழுத்தாளர் என்று பேதம் காட்டாது அனைவரைப் பற்றியும் எழுதுவதுதான். அண்மையில் அவரது இரண்டு கட்டுரைத் தொகுதிகளை வாசித்த பொழுதுதான் அவர் எழுத்தாளர் பற்றி எழுதிய எழுத்துக்களின் தாற்பரியத்தை முழுமையாக அறிய முடிந்தது.
ஏறத்தாழ 92 எழுத்தாளர்கள் பற்றி எழுதியமை அத்தொகுதிகள் மூலம் தெரிய வந்தது. இத்தனை எழுத்தாளர்களையும் கணக்கில் எடுத்த திறனாய்வாளர், பத்தி எழுத்தாளர், விமர்சகர் ஈழத்தில் யாரும் இருப்பதாக h எனக்குப் படவில்லை.
=

இன்னொன்று, மனம் நோகாத அவரது இங்கித் மான எழுத்து காரசாரமாக எழுதுவதே விமர்சனம் என்ற சூழலில் காரமான அபிப்பிராயங்களையும் மனம் நோகா வகையில் வெளிப்படுத்தும் பாணி அவரை ஏனையவர் களிடமிருந்து வித்தியாசப்படுத்தி நிற்கிறது. அது அவரது ஆளுமை சார்ந்ததாகும்.
ஆங்கிலத்தில் அவர் எழுதிய எழுத்துக்கள் முக்கியமானவை. ஒரு காலத்தில் ஆங்கிலத்தை முதன் மொழியாகக் கொண்டு கல்வி கற்ற தலைமுறைதான் ஈழத்துத் தமிழ் எழுத்துக்களையும் கலை முயற்சி களையும் பிற மொழி பேசுவோர்க்கு ஆங்கில மொழி மூலம் தெரியச் செய்தன.
ஏ.ஜே.கனகரத்தினா, சோ.பத்மநாதன் போன்றோர் இத்துறையில் ஆற்றிய பணிகளைவிட சிவகுமாரனின் பணிகள் வித்தியாசமானவை. தெரிந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களையும், கலைஞர்களையுமே அவர்கள் ஆங்கில மொழி மூலம் பிறருக்கு அறிமுகப்படுத்தினர். சிவகுமாரனோ புனைகதைகளிற் செய்தது போல சகலரையும் பொதுவான ஓட்டங்களையும் பிறருக்கு அறிமுப்படுத்தினார்.
ஒன்றல்ல; பல உண்டு. அனைத்தும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்ற அகண்ட அவரது சிந்தனையே இதற்கான அடித்தளமாகும்.
ஈழத்து கலை இலக்கியம் பற்றிய அவரது பெரும்பாலான கட்டுரைகள் மிக விரிவாக எழுதப்பட
| வேண்டியதற்குரிய சகல அடித்தளக் கூறுகளையும் Vela

Page 8
X .
கொண்டுள்ளன. ஆற அமர இருந்து சில | அவர் விரித்து எழுதுவாரேயாயின் அவரின் முழு ஆளுமையையும் கண்டு கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
விமர்சகர், திறனாய்வாளர், பத்தி எழுத்தாளர் என அறியப்பட்ட சிவகுமாரன் ஆக்க இலக்கியகாரராகவும் இருந்துள்ளார். அவரது சிறுகதைத் தொகுப்புகள் இருமை" "சிவகுமாரன் கதைகள்" என இரு நூல்களாக வெளிவந்துள்ளன. சிறுகதை எழுத்தாளராக அவர் பெரு வெற்றியீட்டாவிடினும் மோசமான சிறுகதை ஆசிரியர் என்ற நிலைக்கு அவர் இறங்கிவிடவில்லை.
இவ்வகையில் விமர்சனம் (புனைகதை, நாடகம், சினமா), பத்தி எழுத்துக்கள், பத்திரிகையாளர், வானொலி அறிவிப்பாளர், தொலைக்காட்சி செய்தித் தொகுப்பாளர் செய்தி வாசிப்பவர், ஆங்கில ஆசிரியர் என்ற பன்முகத் தோற்றம் கொண்ட கே.எஸ்.சிவகுமாரன் ஈழத்துத் தமிழ் கலை இலக்கிய உலகில் தூக்கி எறியப்பட முடியாத ஒருவராக நிலை கொண்டுள்ளார். அவர் தமது 50 வருட வாழ்பனுபவங்களையும், அதற்கூடாக முகிழ்த்த கலை இலக்கியச் செயற்பாடுகளையும் ஒரு நூலாக அளிப்பின் அது இளம் தலைமுறையினர்க்குப் பெரிதும் ւյա6ծույ6)ւն.
ffZമ്
67ഗ്ഗ77Zഗ്ഗ് ീ മമത്ര് கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலை (கிமா)
VU ஒகஸ்ட் 28, 2008

хІІІ
உள்ளடக்கம் Negnumme
இலக்கியச் செல்நெறிகள்
1 Post - Modernism
2. "பின்நவீனத்துவம்" - ஈழத்துத் தமிழ் நூல் ---------- 3. செ.கணேசலிங்கன் என்ற
ஆய்வறிவாளர்
4. ஒரு மார்க்சியவாதி'அழகியலை நோக்கும் பாங்கு ------
S
மேலை இலக்கியம் / மெய்ப் பொருள் ---------awan 6. 21ஆம் நூற்றாண்டுப் புலமையும் ஆய்வறிவும்
ളുഞ്ഞുങ്ങ്, ഉപ്ലെ, ക്ലിഗ്ഗങ് -------------------- 7. மற்றுமோர் இலக்கிய வரலாற்று நூல் ---------- 8. ஆய்வுகளுக்கிடையே
9. பி.எம். புண்ணியாமினின் தேடல்கள் ----------
ஈழத்துக் கவிதை
1.
ஈழத்துக் கவிஞர்களும் புலவர்களும் ------------- நான்கு இஸ்லாமியர்களின் கவிதை நூல்கள் --------
திருகோணமலையிலிருந்து ஒரு பெண் பாவலர் -------- சடாகோபன் : தாயக நாட்டம் (Nostalgia) --------------
. அடுக்கடுக்காய்-நிகழ்ச்சிகள் -----------------
செவிநுகர் இன்பம்
நீர்வையின் கதைகள் பற்றிய ஆய்வரங்கு -------------
=
* 66
们7
16
24
3
39
48 s7
76
85
96
103
108
化9

Page 9
XV ۰ وز
இந்து சமயம்
1 g|tgഗ്രബrണrgർg ഥഴ്ച ----------------------------- 125 2. எட்டாவது இந்துக் கலைக் களஞ்சியம் --------- 134
புனைகதை 1 வடக்குத் தமிழரின் வாழ்வியல் சீர்கேடு ----------------- 38 2. ஜேர்மனியில் ஈழத்தமிழ் அகதிகள்
எதிர் கொள்ளும் நாடகம் காதல் பூட்டு ----------- 146 3. புலோலி பேசும்மொழி வந்தமரும் படைப்புகள் ----- 153 4. பவானி சிவகுமாரனின் கதைகள் உருவ அமைப்பு ----- 162 5. ஈழத்துப் பெண்களின் தனித்திறமை --- 175 ஊடகம்
1 முன்னோடி ஒலிபரப்பாளர் வீ.ஏ.சிவஞானம் ----------- 182 2. நகைச்சுவை கலந்த சிந்தனைப் பத்தி எழுத்தாளர்
பொ.சண்முகநாதன் :-----== 192 3. அழுத்த நெஞ்சுடைய இளைய ஊடகத்தினர் ----------- 197 4. ஊடகத் துறையில் : புதியவர்கள் தயவுடன் கவனிக்க -- 201 5. ஆங்கில மொழியில் ஈழத்துத் தமிழ்
எழுத்தாளர்கள் கதைகள்----------- 207 6. ക്രിഗ്ലി ബ്രിട്ടിന്ദ്രs Gഖങ്ILuങ്ങഖ ----------------- 212 7. சிந்தனைத் தூண்டல் 219 இந்தியா / சினமா 1 ஓர் இலங்கையனின் இந்தியப் பயணம்------------ 228 2. பிரசாந்தி நிலையமும் பனாஜியும் ------------------ 231 3. ஒரு படைப்பாளியின் 'பத்தி
எழுத்துக்கள்/மீரா+நாயர் --------------- 238 h 4. தரையில் மின்னும் நட்சத்திரங்களிடையே---------- 244

XV.
=
5. மெல்லெனக் காமத்தைத் தீண்டும்
ജGrt' ിu': u_s് ഭൂgഞ്ഞു ------------------ al
6.சிவகாமியின் "ஊடாக" முன்னைவும்
கொழும்பு நாடகங்களும் ----------------- 2S6 7. தமிழ்ப் படம்: ിങGങ്ങrരൂ --------------------------- 263 குறு மதிப்புரைகள்
1. உழைப்பால் உயர்ந்தவர்கள் ------------------ 269
2. மனோலயம் 270 3 நீர்வை பொன்னையன் கதைகள் ------------- 270 4. மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் -271 نسمه 5. நீங்களும் எழுதலாம் - 271 6. தனித்தலையும் பறவையின்
துயர் கவியும் பாடல்கள் 272 7. இரண்டு கார்த்திகைப் பறவைகள் -----ipsamaramewoskopao'avasarowseroas 273 8. கைகளுக்குள் சிக்காத காற்று-----------asserrator 273 9. திருமண ஆற்றுப்படுத்துநர் அனுபவங்கள்------------ 275 10.நலமுடன் -275 1. நிஜத்தின் ஒரு தேடல் 276 12. இன்றைய இலக்கியங்களில் இதிகாசப்
பெண் பாத்திரங்கள் 276 8. ஈழத்து வாய்மொழிப்பாடல் மரபு ------------277 14. சாணையோடு வந்தது 278. 1S. நெருக்கடியின் கதை 279 16. தொழில்நுட்பக் கலைகள்,வெகுஜன ஊடகம் ------ 280
17.மல்லியப்பு சந்தி 28
VU-E

Page 10
XV
இந்நூலாசிரியரின் இதர நூல்கள் கே.எஸ்.சிவகுமாரன் ஆங்கிலத்தில் எழுதியவை :
1. Tamil Writing in Sri Lanka (1974) 2. Le Roy Robinson in Conversation With K.S.Sivakumaran (1992)
3. Entry in ENCYCLOPEDIA OF WORLDLITERATURE
(Ungar Publication)
4. Entry in ENCYCLOPEDIA OF 20th Century World Literature
மிழில் எழுதியவை :
1. ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை 2. சொன்னாற் போல - 03 3. சொன்னாற்போல - 01 4. ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - ஒரு
பன்முகப் பார்வை பாகம் 01 - (1962-1979) - 2008 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - (2008) ஒரு பன்முகப் பார்வை - பாகம் 01 (1980 - 1998) 6. சினமா சினமா - ஓர் உலகவலம் (2006) 7. இந்திய - இலங்கை இலக்கியம் : ஒரு கண்ணோட்டம் (2005) 8. திறனாய்வு என்றால் என்ன? (2005) 9. சொன்னாற்போல - 2 (2004) 10. அசையும் படிமங்கள் (2001) 1. மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் (2000) 12. ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில (1999) 13. மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் (1999) 14. திறனாய்வு - அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத்
தொகுப்புகள் (1999) ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் 15. இருமை - சிறுகதைத் தொகுப்பு (1998) 16. திறனாய்வு - ஈழத்துச்சிறுகதைத் தொகுப்புகள் (1996) 17. திறனாய்வுப் பார்வைகள் (1996) 18. கைலாசபதியும் நானும் (1990) 19. கலை இலக்கியத் திறனாய்வு (1989) 20. சிவகுமாரன் கதைகள் (1982)
EA
(

GraiiiaiTTiBLITTG) " 8
Post. Modernism
Modernism என்றொரு ஆங்கில வார்த்தை உண்டு. அதனைத் தமிழில் நவீனத்துவம்' என்கிறார்கள். g-ffl.
Post Modernism என்றொரு வார்த்தையுமுண்டு. அதனைப் பின்நவீனத்துவம் என்கிறார்கள் தமிழ் நாட்டவர்கள். எந்த ஆங்கில வார்த்தையையும் கண்மூடித் தனமாகத் தமிழ் நாட்டவர்கள்போல இங்குள்ளவர்களும் பின்பற்றுவதுதான் பிழை.
இது பிழை; ஏனெனில், தமிழ் நாட்டவர்களினது ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பு பிழையானதாக இருப்பது மட்டுமல்லாமல் கருத்தியல்களும் பிழையாகப் பொருள் கொண்டு விளக்கப்படுவதனாலாகும்.
இது என்னுடைய கருத்தேயன்றி, எவருடைய அபிப்பிராமும் இல்லை.

Page 11
2
تھ2 ...عےavZZ ZZZے ت62Zva அது சரி. உமக்கேன் தமிழ்நாட்டவர்கள் மீது இவ்வளவு வெறுப்பு என்று கேட்கிறீர்களா..? இல்லையே. அவர்களுடைய ஆங்கில உச்சரிப்பு பிழையென்பதில்தான் வெறுப்பு. அப்படியாயின் நீர் சொல்லும் உச்சரிப்பு சரியானதுதான் என்று எப்படி நிரூபிப்பீர் என்றும் நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி தான். விடை சுலபம். Standard egy 6ü6vg| Received Pronunciation 6T6ör(olpirC5 நடைமுறை உச்சரிப்பு முறை இருக்கின்றது. படித்தவர்கள் எல்லாம் இந்த முறையில்தான் உச்சரிப்பதை நீங்கள் B.B.C. அல்லது கல்விமான்கள் பேசும்பொழுது கேட்டி ருப்பீர்கள். உணர்ந்திருப்பீர்கள். எனவேதான் பொதுவாகச் சரியான ஆங்கில உச்சரிப்பு முறையை RIP என்கிறார்கள். அதேவேளையில், அமெரிக்க, அவுஸ் திரேலிய ஆங்கில உச்சரிப்பு முறைகளில் சிற் சில அழுத்தங்கள் (Stress) சிறிது வேறுபடலாம்.
ஏதோ ஆங்கிலத்தைப் பெரிய அளவில் நீர் சரியாக உச்சரிப்பது போல பேசுகிறீரே நீர் கூட சரியாக உச்சரிக்கிறீரா என்றும் நீங்கள் கேட்கலாம்.
ஆமாம்;இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆங்கிலவர்த்தக சேவையில் நானும் ஒரு பகுதிநேர அறிவிப்பாளராக இருந்து வருகிறேன். அடிக்கடி நான் நிகழ்ச்சிகளை ஆங்கில பிறமொழிப் பாடல்களைத் தொகுத்து வழங்கி வருகின்றேன். நீங்களும் தான் கேட்டுப் பாருங்களேன்! 95 F.M. மீற்றரில் கொழும்பு/ அயல் பிரதேசங்களுக்காக இந்நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.

3.
ஏனைய மாகாணங்களுக்கான ஒலிபரப்புகள் வெவ்வேறு FM மீற்றரில் ஒலிபரப்பாகின்றன. ஆசிய நேயர்களுக்கும் 31, 49, 19 சிற்றலை வரிசைகளில் ஒலிபரப்பாகின்றன, இந்த இ.ஒ.கூதா ஆங்கில நிகழ்ச்சிகள்.
நமது வானொலிநிலையங்களிலும் தொலைக்காட்சி நிலையங்களிலும் பணிபுரியும் தமிழ் பேசும் அறிவிப்பாளர்கள் தமிழ்நாட்டு உச்சரிப்பில் ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுதும், ஆங்கிலப் பாடல்களை தொலை பரப்பும் பொழுதும் எனக்கு ஏதோ மாதிரியாக இருக்கிறது. என்ன செய்வது? வழிகாட்டுவார் இல்லாவிட்டால் அறிவுரை களைக் கேட்டு அனுசரிக்க மறுக்கப்பட்டால் பிழையே சரியாகக் காலக்கிரமத்தில் போய்விடும்.
இது இப்படியிருக்க இலங்கை MTV நிலையத்தில் ஆங்கிலத்திலே செய்தி வாசிப்பவர்கள் இருவர் துரதிர்ஷ்ட வசமாக தமிழ்பேசும் இனத்தவர்களாகிய இஸ்லாமியர் இருவர், இலங்கையின் தமிழ்ப் பெயர்களை (உதாரணமாக மூதூர், சம்பூர், வாகரை) கர்ணகடூரமாக உச்சரிக்கும் பொழுது எனக்கு ஆத்திரமே வந்துவிடுகிறது. அதே வேளையில் இலங்கை MTV யில் ஒரு தமழ்ப் பெண் சரியான ஆங்கில உச்சரிப்பில் செய்தி வாசிப்பார். தமிழ்ப் பெயர்களைத் தமிழ் போலவே உச்சரிப்பார். ஆயினும் இரு இஸ்லாமியர்கள் (இஸ்லாமியர்கள் மீது எனக்கு வெறுப்பேயில்லை என்பதைக் கருத்தில் கொள்க) தமிழைக் கொலை பண்ணுவது மன்னிக்க முடியாதது.
്ട്.മര്).ക്രിക്രമര്

Page 12
4.
-627227azzi 42/zov... (23 இந்த நிலையத்தின் உயர் அதிகாரிகளாக இருக்கும்
செவான் டானியல், ரங்கா போன்றவர்கள் பிழையாக
உச்சரிப்பவர்களைத் திருத்த வேண்டாமா?
0 0 (0
சரி. இனி முக்கிய விடயத்துக்கு வருவோம். Modernism (நவீனத்துவம்) என்றால் என்ன? இது ஒரு போக்கைக் குறிக்கும் பொதுச்சொல்.
ஒரு நவீன பாத்திர வார்ப்பு அல்லது ஒரு சிந்தனை யின் உயர்தரப்பாங்கு அல்லது கருத்து வெளிப்பாடு அல்லது உத்திமுறை நவீனத்துவமாகவும் புதுமையாகவும் இருக்கும் பட்சத்தில், அதனை நவீனத்துவமானது என்கிறோம்.
கலை, இலக்கியம் போன்றவற்றைப் பொறுத்த மட்டில், பண்டை உயர்தர முறைமை (Classica) அல்லது மரபு ரீதியான முறைமையிலிருந்து விடுபடும்போக்கு அல்லது நடை (Style) அல்லது வடிவம் "நவீனத்துவம்" எனப்படுகிறது. நவீன சிந்தனைகளுக்கேற்ப மரபு வழிச் சிந்தனைகளை விரிவுபடுத்திச் செல்லும் இயக்கமாக மேற்குலகில் ஒரு வழமை இருந்து வந்தது. 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டங்களிலும் "நவீனத்துவம்” செல்வாக்குடையதாக இருந்தது.
இந்தச் செல்வாக்கு, பின்னர் வந்த ஒரு போக்கினால் செல்வாக்கு இழந்தது. அதனை Post-Modernism என்றார்கள். அதாவது நவீனத்துவத்தைத் தொடர்ந்து வந்த இயக்கம் என்பதே பொருள். இது இப்படியிருக்கையில், அறியாமை

5 யினாலும் சோம்பலினாலும் Post - Modernism என்ற
്.ബി. ക്രിയത്രZങ്ങ്
இயக்கத்தை "பின்நவீனத்துவம்” என்று பெயரிடுவது எவ்வளவு தப்பு பாருங்கள் - கருத்தியல்களைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டுச் சிற்றேட்டாளர்களும் பேராசிரியர்களும் வழிகாட்டல்களில் பிழை விட்டு விட்டார்களே என்று எனக்குப் பெரும் கவலைதான்;
போகட்டும்.
Post - Modernism என்பதனை "நவீனத்தவத்தைத் தொடர்ந்து வந்த புதிய முறைமை" என நாம் தமிழில் விளக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல் Post என்பதனை "பின்" என்ற அகராதி அர்த்தத்தில் நம்மவர்கள் பியோகிக்கத் தொடங்கியது மாத்திரமல்லாமல் அதுவே சரியென வாதிக்கவும் முன்வருவர்.
Post - Modernism தொடர்பாகச் சில விளக்கங்களைப் பார்ப்போம். கலைகள், கட்டடக்கலை, திறனாய்வு போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு கருத்தியல் தான் இந்த Post - Modernism, சென்ற நூற்றாண்டின் (20) பிற்பகுதியில் இந்தப் போக்கு நிலவியது. நவீனத்துவப் போக்கில் நின்று இது பெருமளவில் விலகிச் சென்றது.
கலைகள் தொடர்பான பார்வைகளை இந்தப் போக்கு நிராகரித்தது. மரபுவழித் திறனாய்வை (நான் இன்னமும் மரபுவழித் திறனாய்வைத்தான் மேற்கொள் கின்றேன் என்பதில் எனக்கு வ்லு சந்தோஷம்) நிராகரித்து அம்முறை மீது நம்பிக்கையின்மையையும் வெளிப் படுத்தியது.

Page 13
6
செசன்னறி போல.23 பின் நவீனத்துவம்' என்று சொல்லப்படும் ஓய்ந்து போன இந்தப் போக்குப்பற்றி நிறையவே தமிழ்ப் பத்திரிகைகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே நான் எழுதி வந்திருக்கிறேன். எனது புத்தகங்கள் சிலவற்றிலும் இது தொடர்பான கட்டுரைகளைச் சேர்த்திருக்கிறேன். என் துரதிஷ்டம் - பாலசுப்பிரமணியம் சிவகுமார், சிவானந்தம் சிவசேகரம் போன்றவர்கள் எனது கட்டுரைகளைப் படிக்கவேயில்லை போலும்! என்ன செய்வது, அவர்களுக்கு அல்லது அவர்கள் Ciqueக்குப் பிடித்தவர் களின் கட்டுரைகளை மாத்திரம் தான் அவர்கள் படிப்பார்கள் போலும்.
இதனை இப்படி நான் ஏன் கூறுகிறேன் என்றால், அண்மையில் ஒரு புத்தகம் கொழும்பில் வெளியிடப் பட்டது. அந்த வெளியீட்டு விழாவிலே பேசிய மேலே குறிப்பிட்ட இருவரும் கா.சிவத்தம்பி, சோ.கிருஷ்ணராஜா, சபா ஜெயராசா ஆகியோரும் பின் நவீனத்துவம் (அவர்களுடைய பாஷையில்) தொடர்பாக எழுதிய வற்றையும் தமிழ் நாட்டுப் பேராசிரியர்கள் (அ.மார்க்ஸ் என்பவர் அவர்களுள் ஒருவர்) எழுதிய வற்றையும் பிரஸ்தாபித்தார்கள்.
மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டு நேர்மையாகத் திறனாய்வு செய்யும் ரவீந்திரனுடைய நூல் பற்றியோ பல்நெறி சார்ந்த (Multidisciplinary) எனது திறனாய்வுக் கட்டுரைகள் பற்றியோ மூச்சுப் பேச்சைக் காணோம். இவர்களின் இந்த உதாசீனம் அறியாமையால்

ി.ണ്. ക്രിത്രZZശ് 7
நிகழ்ந்ததா அல்லது இருட்டடிப்புச் செய்ய வேண்டும் கான்ற தீர்மானத்தினால் வந்ததா என்பதை நான் அறியேன்.
பின் நவீனத்துவம் என்றழைக்கப்படும் (So - caled) போக்கில் பெரிதும் ஈடுபடும் (காலந்தாழ்த்தி இந்தப் போக்கு காலாவாதியாகிவிட்டதை அறியாமல்) "அகல்விழி", "ஓலை’ போன்ற ஏடுகளின் ஆசிரியர் மது சூதனன் பழைய இலக்கியங்களையும் புதிய இலக்கியங் களையும் மறுவாசிப்புக்கு உட்படுத்தி எழுதியும் பேசியும் வருகிறார் என்பதையும் நம்மில் சிலர் அவதானித்து வருவதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
அண்மையிலே இலங்கையில் Post Modernism தொடர்பாக இரண்டு நூல்கள் வெளிவந்தன.
அவையாவன :
சபா ஜெயராசா எழுதிய "பின் நவீனத்துவத்தை விளங்கிக் கொள்ளல்", "பின் நவீனத்துவம் மாயைகளைக் கட்டவிழ்த்தல்" என்ற இந்த இரண்டு நூல்கள் தொடர் பான மதிப்புரையை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
இது தவிர, எனது கட்டுரைகளைப் படிக்க விரும்பாதவர்களுக்கும் "பின் நவீனத்துவம்' என்று சொல்லப்படுவது பற்றி நான் என்ன கூறினேன் என்பதை அறிய விரும்பும் எனது வாசகர்களின் தகவலுக்காகவும் நவீனத்துவத்தைத் தொடர்ந்து வந்த திறனாய்வுப் போக்கு Post Modernism பற்றியும் எனது கட்டுரைகள் அடங்கிய நூல்களின் பெயர்களை இங்கு தருகிறேன்.

Page 14
8
6ിബിരങ്ങØ ബ7ശ.മീ
மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் (2000) பக்கங்கள் 118-120 (பின் அமைப்பியல் வாதமும் திறனாய்வும்).
சொன்னாற்போல. 2 (2005) பக்கங்கள் 84-85 மிஷேல் (F) பூக்கோ.
இந்திய-இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம் (2005) பக்கங்கள் 9-10 (பின் நவீனத்துவத்தின் இயலாத் தன்மை)
0 0 0
இது இவ்வாறிருக்க அறியாத்தனமாக என்னிடம் சிலர் நேரிலேயே கேட்டார்கள்.
1. நீங்கள் ஏன் சினிமாவை சினமா என்கிறீர்கள்? 2. விமர்சகராகிய நீங்கள் சினிமாவைப் பற்றி
எல்லாம் எழுதுகிறீர்கள். இது கேவலமல்லவா? 3. தமிழ்ப் படங்களைப் பற்றி எழுதினாலும் பரவாயில்லை. பிறமொழிப் படங்களைப் பற்றி எழுதி என்ன பிரயோசனம்? 4. ஒவ்வொரு வாரமும் எல்லாப் பத்திரிகைகளிலும்
எழுதுகிறீர்களே! அவ்வளவு Cheap ஆக பிரசித்தி பெறவா?
நண்பர்கள் எனக் கூறிக் கொள்ளும் இவர்களின் கேள்விகளுக்கான பதில்கள் இவைதான்.

9
சே.சன்,சிவகுமாரன்
1. சினிமா என்பது தமிழ்நாட்டு உச்சரிப்பு. சரியான உச்சரிப்பு சினமா. ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் சினமா என்றே உச்சரிக்கிறார்கள். கேட்டுப் பாருங்கள்.
2. நான் விமர்ச்கனில்லை. வேண்டுமானால் திறனாய்வாளன் என்று அழைத்துக் கொள்ளலாம். விமர்சகர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் கண்டித்து, ஆக்கரீதியான அணுகுமுறையைத் தவிர்த்து, கண்டனங் களையே செய்கிறார்கள். நான் அப்படிச் செய்வதில்லை. ஆக்கப்பூர்வமாகவே திறனாய்வு செய்கிறேன் "திறனாய்வு என்றால் என்ன?" என்ற எனது புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.
சினமாவைப்பற்றி (கலைத்துவமான சினமா பற்றிப்) பல்கலைக்கழக மட்டத்தில் பலரும் படித்து வருகிறார்கள். அவர்களுக்காக எழுதுகிறேன்.
3. தமிழ்ப்படங்கள் இந்தியா,இலங்கை, பிற நாடுகள்) பற்றி நிறைய எழுதப் பலர் நம் நாட்டில் இருக்கிறார்கள். பிற மொழிப் படங்கள் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத நம் நாட்டில் ஒரிருவரே இருக்கிறார்கள். எனது "அசையும் படிமங்கள்", "சினமா, சினமா ஒர் உலக வலம்" ஆகிய நூல்களைப் படித்துப் பாருங்கள்.
4. எல்லாப் பத்திரிகைகளிலும் வாராவாரம் நான் எழுதுவதற்குக் காரணம், ஆங்கிலத்திலும் தமிழிலும் மதிப்புரைகளை எழுதும் படி வாரத்திற்கு மூன்று புத்தகங்கள் ஆகுதல் எனக்கு வந்து சேருகின்றன. இவற்றை மதிப்பிட்டு எழுத ஒரு பத்திரிகை மாத்திரம்

Page 15
70
62/eavaj 62/vau.. (23
போதுமானதாக இல்லை. அதனால்தான் எல்லாப் பத்திரிகைகளிலும் வாராவாரம் எழுதி வருகிறேன். எனக்கு Publicity தேடவல்ல.
இன்னுமொன்று என்னைப் பற்றியும் நானே எழுதுவது சுய விளம்பரத்திற்காகவல்ல. எனது எழுத்துக் களை விஷமிகள் இருட்டடிப்புச் செய்தால் அவர் களுக்குத் தகவல் தருவதற்காக அவ்வாறு எழுதுகிறேன். தவிரவும் பத்தி எழுத்து (Columns) என்பது வாசகர் களுடன் Personal ஆக உரையாடுவது போன்ற எழுத்தாகும். தமிழில் இது இன்னமும் சரியாக உணரப்பட வில்லை.
அடுத்த அதிகாரத்திலும் உரையாடுவோம்.
(SN)

77
až ള്ളമ yeye 17727 As 65 த் 爱参 A2ള്ള ഷിമ മ~്
--
6லாநிதி சபா.ஜெயராசா எழுதிய அண்மைக் கால நூல்களிலொன்று "பின் நவீனத்துவத்தை விளங்கிக் கொள்ளல்" (2007)
இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை கைலாசபதி ஆய்வு வட்டம் இதனை வெளியிட்டுள்ளது.
'எல்லை நிலையில் உள்ள இளம் வாசகர்களுக்கு" இந்த நூலை ஆசிரியர் சமர்ப்பித்திருக்கிறார்.
அவர் தமது முன்னுரையில் "பின்நவீனத்துவத்தைப் பல பரிமாணங்களினூடாக நோக்கல் இந்நூலாக்கத்திலே முன்னெடுக்கப்பட்டுள்ளது" என்று கூறுகிறார்.
"இத்தகைய ஒரு தேவையை நண்பர்கள் நீர்வை பொன்னையன், தெ.மதுசூதனன், த.சிவசுப்பிரமணியம் ஆகியோர் வற்புறுத்தியதுடன் பல மூல நூல்களையும்

Page 16
72 — ി(Zമീബഗ്ഗ് (Zങ്ങ. മി
வாசிப்பதற்குத் தந்து உற்சாகமளித்தனர்' என்றும் கூறுகிறார்.
நூலின் பிற்பகுதியில் உசாத்துணை நூல்களின் பெயர்ப்பட்டியல் தரப்பட்டுள்ளமை, என் போன்ற வாசகர்களுக்குப் பிரயோசனமானது.
பல தகவல்களைப் பின்வரும் தலைப்புகளில் நூலாசிரியர் சபா.ஜெயராசா தருகிறார். இவர் யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் சார்ந்த துறைகளில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அங்கு பேராசிரியராகப் பணிபுரிந்தவர். முன்னரும் சில நல்ல பயனுள்ள நூல்களைத் தந்திருக்கிறார். ஆரம்பத்தில் சிறுகதை, கவிதை, மொழி பெயர்ப்புகளைத் தந்தவர். மேற்குலகத் தத்துவத் தரிசனங்களில் பரிச்சயம் பெற்றவர். இவரைப் போலவே அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிருஷ்ணராஜாவும். மேற்குலகச் சிந்தனை களை இவ்விருவரும் தமக்கேயுரிய Academic Style இல் தமிழில் தந்திருக்கிறார்கள்.
சபா.ஜெயராசா பின்வரும் தலைப்புகளில் தமது விளக்கக் கட்டுரைகளைத் தந்திருக்கிறார்.
பின் நவீனத்துவம் - தோற்றம், வளர்ச்சி மற்றும் தேக்கம், பின்நவீனத்துவத்தின் வரலாறு, பின்நவீனத்துவ எண்ணக்கரு விளக்கம், பின்நவீனத்துவம் - மீள் நோக்கல், பின்புலமாக அசையும் விசைகள், இபாப் ஹசனின் பின் நவீனத்துவ முன்னோடி விளக்கம், கட்டடக்கலை நோக்கிற் பின் நவீனத்துவம், லியோகத் வழங்கிய பின் நவீனத்துவ நிலைவரம், றோலன்ட் பார்த்தின் வாசகர்

ச.என்.சிவகுமாரன் 73 பிறப்பு, மிஷேல் பூக்கோவின் அறிகை முறைமை, புக்கோவும் பெண்ணியமும் பின் நவீனத்துவமும், பின் நவீனத்துவ அழகியல், பின்நவீனத்துவ ஆசிரியம், உலகக் கல்விச் செயல்முறைகளில் பின் நவீனத்துவத்தின் செல்வாக்கு, பின் நவீனத்துவமும் இறையியலும், பரத நாட்டியமும் பின்நவீனத்துவமும், இலக்கியவுலகின் புதிய அறிகை வடிவங்கள், நீங்கிய பன்மை நிலை மேலெழத் தொடங்கும் பின் நவீனத்துவம் - மறு மதிப்பீடு, பின் நவீனத்துவமும் மார்க்சியமும்
ஆங்கிலம் தெரியாத தமிழ் மாணவர்களுக்கு, குறிப்பாக சமூகவியல், மெய்யியல், இலக்கியம், வரலாறு போன்ற பாடங்களைப் படிக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இங்குள்ள "சரிநிகர்", "மூன்றாவது மனிதன்', 'மூன்றாவது கண்' போன்ற சிற்றேடுகளில் எழுதுபவர்களுக்கும் கூடிய வகையில் முழுமையாக பின் நவீனத்துவம்' என்று அழைக்கப்படும் விடயம் பற்றிய விளக்கங்களை பாரபட்சமின்றி நூலாசிரியர் விளக்கிக் கூறுகிறார்.
அதேசமயம், அவர் 'மார்க்சியப்பார்வை'யை வலியுறுத்துவதையும் நாம் காண்கிறோம். நூலாசிரியர் ஒரு மார்க்சியவாதி என்பதை நாம் எளிதில் கண்டுபிடித்து விடுகிறோம்.
பரத நாட்டியம் ஒரு தூய கலை என்று கருதுபவர் களுக்குத் தாம் எடுத்துக்கொண்ட பொருளின் அடிப்படை யில் ஒரு சிறு கட்டுரையை சபா.ஜெயராசா எழுதி இருக்கிறார்.

Page 17
74 یعے تعصبر 62 ـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــسسavZثرصہ قبر/Zتھ2 ....وص
அதிலிருந்து சில பகுதிகள் :
"பரத நாட்டியத்தில் தூய்மை" பேணப்பட வேண்டு மென்ற கருத்து மரபு வழி நாட்டிய ஆசிரியர்களால் முன் வைக்கப்படும் அறிவிப்பாக இருந்து வருகிறது. இவ்வாறாக வலியுறுத்தப்படும் தூய்மை" இன்று கட்டிக் காக்கப்படுகின்றதா என்பது ஆய்வாளர்களின் கேள்விக் குறியாகியுள்ளது.
"பரத நடனம் திடீரென்று தோற்றம்பெற்ற ஒரு கலை வடிவம் அன்று. அது தமிழர்களது நீண்ட பண்பாட்டு வரலாற்றோடு இணைந்து கூர்ப்படைந்து செம்மை வடிவம் பெறலாயிற்று. வெறியாட்டம், பரத நடனத்தின் நிருத்தத்துக்குரிய தூய நடன அடிப்படையாயிற்று. தமிழகப் பக்தி நெறிக் காலத்தில் ஆடலில் பக்தி மனவெழுச்சியே மேலுயர்த்தப்பட்டது. அரச அதிகாரத் தோடு இணைந்திருந்த சமஸ்கிருத மொழியாட்சிக் குட்படுத்தப்பட்ட கல்வி முறைமை, பரதத்தின் கட்டுமானத்தை சமஸ்கிருத எண்ணக் கருக்களைப் பயன்படுத்தி விளக்கலாயிற்று"
"இங்கு, 'புனிதம்' என்பது இறைமை மயப்படுத்தலை விட்டு வெளிநீங்காதிருத்தலைக் குறிப்பிடுகின்றது. தூய்மை" என்பது நன்கு கட்டமைப்புச் செய்யப்பட்ட அளவு விதிகளை மீறாது. அங்க சுத்தமாக" பிரதி பண்ணுதலும் பரத நடனத்தோடு இணைந்த விதிகளை மீறாதிருத்தலுமாகும்."

75
செல்லத்தம்பி மாணிக்கவாசகர் போன்ற பரத நாட்டிய இரசனையாளர்களும் நாட்டிய ஆசிரியர்களும், நடன மணிகளும் இந்த நூலையும், மெளனகுரு எழுதிய சில நூல்களையும் படித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
്.ര.ക്രിയക്രമZങ്ങ്
அத்துடன் சிரிங்காரம்' என்ற தமிழ்ப் படத்தையும் பார்த்துவிட்டு தமது ஆங்கில, தமிழ் எழுத்துக்களை இந்த இரசனையாளர்கள் எழுதினால் இன்றைய வாசகர் களுக்குப் பயனளிக்கும் என நினைக்கிறேன்.
இந்த நூல் 96 பக்கங்களைக்கொண்டது. ஆசிரியர் சபா. ஜெயராசா பயன்படுத்தும் சில சொற்பதங்கள் என் போன்ற சாதாரண வாசகர்களுக்குத் தடங்கலை ஏற்படுத்து கின்றன. உயர் கல்வி மாணவர்களுக்குப் பாடநெறிகளை வகுத்து, கடின தமிழில் அவற்றை விளங்கப்படுத்துவது போல இந்த நூலும் அமைந்திருக்கின்றது.

Page 18
76
ബൈബമറ്റ് ‘’
திமிழ்நாட்டில் நெடுங்காலமாக வாழ்ந்து வருவதுடன், தமிழகம் பற்றி ஆதாரபூர்வமாகப் பல செய்திகளைத் தந்து கொண்டுமிருப்பவர் ஈழத்தில் உரும்பிராயில் பிறந்து, இங்குதலைசிறந்த ஆக்க இலக்கியப் படைப்பாளியாகவும் குமரன்' என்ற அறிவு சார்ந்த சிற்றேட்டை நடத்தியவருமான ஆய்வறிவாளர் (Intelectual) செ.கணேசலிங்கன் என்ற மார்க்சியவாதி.
இன்றைய ஈழத்துப் புதிய பரம்பரையினருக்கு அவரைப் பற்றியொன்றுமே தெரியாதது ஒன்றும் வியப்பில்லை. தமிழ்நாட்டுச் சிற்றேடுகளையும் அங்குள்ள "தலித்’ எழுத்தாளர்களையும் பேராசிரியர்களையும் மாத்திரமே தெரிந்து வைத்திருக்கும் அண்மைக்கால

77
சிச.எல்.சிவகுமாரன் - ஈழத் தமிழ் விமர்சகர்கள்'இங்குள்ளவர்களின் புலமையை அறிய விரும்புவதில்லை. மேல்நாட்டு மோகம் எப்படி யொரு காலத்தில் இங்குள்ளவர்களை ஆட்கொண்டதோ அதேபோல, இப்பொழுது தமிழகச் சிற்றேடுகள் தமிழில் தரும் அரைவேக்காட்டு விடயங்கள் அவர்களை ஆட்கொண்டு வருகின்றன. அவர்கள் என்ன செய்வார்கள்! ஆங்கிலம் மூலம் உலகக்கலை, இலக்கியங்களை நேரிலேயே அறிந்து கொள்ள அவர்களுக்குப் பரிச்சயமில்லாது போய்விட்டது நமது இழப்புதான்.
ஏ.ஜே.கனகரத்னாவும் நம்மிடையே இல்லை. பத்மநாப ஐயரும் லண்டனிலிருந்து விதப்புரை களைச் செய்ய வேண்டியிருக்கிறது. அவர் காட்டும் வழியில் நம்மவர் சிலர் தமிழ்நாட்டில் பிரபல்யப்படுத்தப் படுகின்றனர். இங்குள்ள மற்றவர்களை ஏளனமாகப் பார்க்கும் அறியாமையை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
செ.கணேசலிங்கனின் புதல்வன்தான் க.குமரன் என்ற புத்தகப் பதிப்பாளர் என்பதும் இந்த இளவல் களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.
0 0 0
செ.க.னை ஆய்வாளர், அறிஞர், ஆக்க இலக்கியப் படைப்பாளி, தமது ஏடு மூலம் அறிவுப் பரப்பாளராகச் செயற்பட்டவர் என்ற கூறுவதுடன் நின்று விடாது அவரை "ஆய்வறிவாளர்" என்றே உயர்த்திக் கூற வேண்டும்.

Page 19
78
62-7aarzi 62/zav... (23
கைலாசபதி, சிவத்தம்பி, முருகையன், முதளைய சிங்கம் சபா ஜெயராசா போன்ற மூத்த ஆய்வறிவாளர்கள் போன்று செ.கணேஷலிங்கனும் அறிவைப் பகுத்து ஆய்ந்து தெளிவாக விளக்கிக் கூறுபவர்கள். மு.வரதராசன் போன்று சின்னச் சின்ன வசனங்களில் விஷயங்களைத் தருக்க ரீதியாக விளக்கிக் கூறுபவர். அந்தப் பரம்பரை இப்பொழுது நம்மிடையே இல்லை.
முன்னையவர்போல் அல்லாவிட்டாலும் ஓரளவு பரந்த அறிவைக் கொண்டு (ஆனால், சார்பு நிலையில் கருத்தியல்களைப் பகுப்பாய்வு செய்பவர்களாக, சி.சிவசேகரம், கந்தையா சண்முகலிங்கம் ஆகியோரைக் குறிப்பிடலாம் என்பது எனது கணிப்பு. இவர்களை விட பல்கலைக்கழக ஆசிரியர்கள் சிலர் ஆய்வாளர்களாகத் தம்மை நிறுவியுள்ளபோதும், ஆய்வறிவாளர்களாக சோபிக்கும் வாய்ப்பை இன்னமும் பெறவில்லை அண்மைக் காலங்களில் மதுசூதனன், லெனின் மதிவாணம், ரவீந்திரன், சிதம்பரப்பிள்ளை சிவகுமார் போன்றோர் ஆங்காங்கே தமது ஆய்வு மனப்பாங்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.
0 0 1 0
செ.கணேசலிங்கன் எழுதிய மற்றொரு * பற்றி, "சொன்னாற்போல” பத்தியில் முன்னர் நான்
எழுதியிருந்தமையை வாசகர்களில் சிலர் மறந்திருக்கி மாட்டார்கள் என நினைக்கிறேன்.

ச.என்.சிவகுமாரன் - 79
இவர் எழுதிய மற்றொரு புத்தகம் "நவீனத்துவமும் தமிழகமும்". இப்பொழுது நமது இளவட்டங்களில் சிலரைப் பீடித்துள்ள "நவீனத்துவம்", "பின்நவீனத்துவம்" போன்றவையைத் தமிழ்நாட்டுச் சூழலில் மிக நேர்த்தியாக ஆராய்ந்து வெளிப்படுத்தும் 31 சிறிய கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.
இந்த நூல் என்ன கூறுகின்றது? இந்நூலின் பின் அட்டையில் சில விளக்கங்கள் தரப்படுகின்றன. (சொன்னாற்போல, காழ்ப்புணர்வு காரணமாக ஒரு பதிப்பாளர் 1960 களின் முற்பகுதியில் என்னை "புறமட்ட விமர்சகர்" என நையாண்டி செய்தார். போகட்டும், நான் ஓர் ஆங்கில இலக்கியப் பட்டதாரி என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்)
"நவீனத்துவமும் தமிழகமும்" என்ற செ.க.ணின் புத்தகத்தின் பின் அட்டை கூறுகிறது :
"நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்ற வார்த்தை களும் மேல்நாடுகளில் விவாதிக்கப்படுகின்றன. பல்வேறு அணுகுமுறைகள், விளக்கங்கள், பெரும்பாலும் படித்த மேதாவிகளிடையே மோதல்களும் முதலாளித்துவ உலகில் நடைபெறுகின்றன. சாதாரண பரந்துபட்ட மக்களிடையே அல்ல."
"அதே மேல்நாட்டாரது கலை, இலக்கிய, சமூக அறிவியல், சித்தாந்தங்களைக் கடுந்தமிழ் மொழிபெயர்ப்பு நடையில் இங்கேயும் ஒரு சிலர் எழுதி வருகின்றனர். அவற்றைப் புரிந்துகொள்ள ஆங்கில அறிவும் மேல் நாட்டுப் பின்புலமை அறிவும் வேண்டும்."

Page 20
20
67vrafaraó áZ/zav... a3
"தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டு வரும் நவீனத்துவத்தை பல்கலைக்கழகங்கள் - கல்லூரி மட்டங்களில் ஆராய்ந்து எழுதுபவர் குறைவு. இங்கு கலை, இலக்கியம், அரசியல், சித்தாந்தம், சினமா முதலான எலெக்ரோனிக் ஊடகங்கள் வரை ஏற்பட்டுவரும் நவீனத்துவம் பற்றி இந்நூல் சுருக்கமாகக் கூறும்."
செ.க. ஒரு மார்க்சியவாதியாக இருந்து வரும் அதே வேளையில், பாரபட்சமின்றி மாற்றுக் கருத்துகளையும் பதிவு செய்வதனால் நேர்மையான ஆய்வறிவாளராகவும் செயற்படுகிறார்.
செ.க. 35 நாவல்களையும் ஆறு சிறுகதைத் தொகுப்பு களையும் ஒன்பது கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். சென்னை குமரன் பப்ளிஷேர்ஸ்' வெளியீடு. இங்கும் குமரனிடமிருந்து பெற்றுக்
கொள்ளலாம்.
0 0 0
இந்த நூல் 184 பக்கங்களைக் கொண்டது. “முன்னுரையாகச் சில குறிப்புகள்" என்ற தலைப்பில் அருமையான விளக்கக் கட்டுரையை செ.க. எழுதி யிருக்கிறார். ஆரம்பத்திலேயே இந்நூல் இரண்டு நோக்கங் களைக் கொண்டது என்கிறார்.
ஒன்று :தமிழ்நாட்டில் அண்மையில் ஏற்பட்டுள்ளன என்று கூறக்கூடிய நவீனத்துவம் பற்றிய பல்வேறு விடயங்கள் சார்ந்து சுருக்கமாக ஆராய்வது.

ീ.മര്).ക്രിത്രZങ്ങ് 27
இரண்டு : மேல்நாடுகளில் தோன்றிய நவீனத்துவம்,
பின் நவீனத்துவம் என்ற வார்த்தைகள் பற்றி மேலோட்ட
மாகவாயினும் விளக்கிக் கொள்வது.
0 0 (d
இந்தப் புத்தகத்தை எம்.ஏ.நுஃமான், சி.சிவசேகரம், சோ.கிருஷ்ணராஜா இவர்கள் 'விமர்சனம்' என்று கூறி நூல்கள் வெளியிட்டிருப்பதுதான் காரணம்) போன்ற விமர்சகர்கள்' படித்துப் பார்த்திருப்பார்களோ தெரியாது. இதனை ஏன் கூறுகிறேன் என்றால், தமக்குப் பிடித்தவர் களின் நூல்களைத்தான் இவர்கள் வாசிப்பவர்கள் என்று ஊகிக்க முடிகிறது.
தமிழ்நாட்டுச் சூழலை தமிழ்நாட்டில் வசிப்பவர் என்ற முறையில் அம்மாநிலத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, நடையுடை பாவனை, அண்மைக்கால கலாசாரம், உள்ளக அமைப்பு மாதிரிகள் போன்ற பல விடயங்களை நூலாசிரியர் ஆராய்கிறார். அத்துடன் நின்றுவிடாது பெண்ணியம், நாவல், சிறுகதை, புதுக்கவிதை, நாடகம், திரைப்படம், டி.வி. தொடர் நாடகங்கள், பரதநாட்டியம், திரையிசை, ஓவியம், பின் நவீனத்துவம் போன்ற மேலும் சில கட்டுரைகளை செ.கணேசலிங்கன் தருகிறார்.
செ.க.ணின் அவதானிப்புகள் சிலவற்றுடன் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், அவருடைய தெளிவான சிந்தனையும் சிந்தித்ததைத் ளெரிவாக எடுத்துக்கூறும் முறையும் அவர் மீது நான் கொண்டுள்ள அபிமானத்தை அதிகரிக்கவே செய்கிறது.
தமிழ்நாட்டு வாசகர்களுக்காக எழுதியதனாற் போலும் தமிழ்நாட்டுச் சொற் பிரயோகங்களையும் தமிழ்

Page 21
22 நாட்டு உச்சரிப்பில் சில ஆங்கில வார்த்தைகளையும் தந்துள்ளார்.
சொன்னர் போல.23
dl"LLib (Building), dl"lq_Lib (Place where Building is) என்ற சொற்களின் வித்தியாசத்தைத் அறியாது இங்குள்ளவர்களும் "கட்டடம்" என்று வருமிடத்து "கட்டிடம்" என்று எழுதுகிறார்கள். செ.க.ணும் விதிவிலக்கல்ல.
0 0 0
தலித் (Dalit) என்பவர்கள் பற்றிய தகவல்களை செ.க.தருகிறார்.
"தலித்துகளில் பெரும் பகுதியினர் துண்டு நிலம் கூட இல்லாதவர், நில மானியச் சமுதாயத்தில் நிலம் இல்லாவிடின் கிராமப்புறங்களில் பண்ணையாரின் கூலி அடிமையாக வேண்டியது தவிர்க்க முடியாத நிலையாகிறது"
"சமூக கெளரவம் அடைவதற்குத் தலித் மக்களுக்கு நிலத்தின் மீதான அதிகாரம் வேண்டும் என தலித்துகள் குரல் எழுப்புகின்றனர். பெரும்பாலான தலித்துகள் கிராமப்புறப் பாட்டாளிகளாக, கூலி விவசாயிகளாகவே வாழ்கின்றனர். அத்துடன் கிராமப்புறங்களில் மிகவும் மட்டமான இழி தொழில்களையும் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்."
தமிழ்நாட்டு ஆய்வாளர்களுள் ராஜ் கெளதமன், தலித் இலக்கியம் சார்பாக எழுதுவது தருக்க ரீதியாகவும்

23
ச.என்.சிவகுமாரன் - ஏற்றுக் கொள்ளும் விதத்திலும் இருப்பதைத் தீவிர வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். ஏனைய தலித் திறனாய்வாளர்கள் (ஓ! விமர்சகர்கள் அல்லவோ) Post Modernism இல் மயங்குண்டு தமது "வாசிப்பு"களை எழுதி வருகின்றனர்.
"பரத நாட்டியம், "இந்து மதக் கோவில்களிலே நீண்ட காலமாக சதிர்க் கச்சேரிகள்" எனக் குறிப்பிட்ட சாதிப் பெண்களால் நடனம் ஆடப்பட்டு வந்தது. தெய்வீகக் கலை என தெய்வங்களுக்கு அர்ப்பணமாகவே இந்த நடனம் ஆடப்பட்டு வந்தது. இந்நாட்டியப் பெண்களும் கோவில்களுடனே பிணைக்கப்பட்டிருந்தனர். திருவிழாக் காலங்களிலேயே பெரும்பாலும் சதிர்க் கச்சேரிகள் நடைபெற்றன. மேலும், புரோகிதர், மன்னர், நிலப் பிரபுக்கள், பெரு வணிகர் மாளிகைகளிலும் இவர்கள் நடனமாடி உயர் வர்க்கத்தவரை மகிழ்விக்க வேண்டப் பட்டனர். நட்டுவனார் என்ற பெயர் பெற்றவர்களே பரம்பரைப் பரம்பரையாக இக்கலையைப் பயிற்றி வந்தனர். குரு, சிஷ்ய முறையாகவே கோவில்களைச் சார்ந்து இக்கலை வளர்க்கப்பட்டு வந்தது" என்கிறார் நூலாசிரியர்.
சிந்தனைக்கு விருந்தளிக்கும் இந்த நூலின் சில பகுதிகளை மாத்திரமே மாதிரியாக இங்குக் காட்டி யிருக்கிறேன். ஏனைய பகுதிகளை முழுமையாகப் படித்தறிய "நவீனத்தவமும் தமிழகமும்" என்ற இந்த நூலைப் படித்துப் பாருங்கள்.
GN)

Page 22
24
്യമജ്ഞ' മr്ത്രീ ’ IHG
6 மது பெருமதிப்புக்குரிய சிரேஷ்ட ஆக்க இலக்கியப் படைப்பாளியும், மார்க்சிய 'விமர்சகருமான செ.கணேசலிங்கனின் பங்களிப்புகளைச் சரியான முறையில் நமது ஆய்வறிவாளர்களோ, (Intelectuals), ஆய்வாளர்களோ, திறனாய்வாளர்களோ, விமர்சகர் களோ இன்னமும் மதிப்பீடு செய்யவில்லை என நினைக்கிறேன்.
அதற்கான தகைமைகளை க.சண்முகலிங்கம், சி.சிவசேகரம், சோ.தேவராஜ், மதுசூதனன், முகம்மது சமீம், சபா ஜெயராசா, எஸ்.கே.விக்னேஸ்வரன், சிவா சுப்பிரமணியம், சிதம்பரப்பிள்ளை சிவகுமார், எம்.ஏ.நுஃமான் போன்றவர்களும், புதிதாக ஆய்வுத்துறை

25
n.ര.കിത്രഥന്നങ്ങ് களில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக மாணவர்களும், தமது மார்க்சிய நோக்கில் எமக்காக எடுத்துரைக்கலாம்.
மார்க்சியப் பார்வையை முற்றாகவே நிராகரிக்காமலும், அதேவேளையில் வேறு விதமான, பல்நெறிசார்ந்த பார்வைகள் ஊடாக கலை, இலக்கியங்களை அணுகும் என் போன்ற திறனாய்வாளர்களும், பத்தி எழுத்தாளர்களும் செ.க.ணின் இருதுறைகளையும் (ஆக்கப்படைப்புகள்/ விமர்சனம்/குமரன்'ஏடு) போன்றவை பற்றி எழுதலாம்.
ஆயினும், என்னைப் பொறுத்தமட்டில் இது இப்போதைக்குச் சாத்தியமில்லை. இது ஏனெனில், "ஆய்வு" போன்றவற்றை ஏனைய அறிவாளிகளுக்கான பணியாக விட்டுவிட்டு, விழிப்பறிவைப் பெற வேண்டிய இளம் வாசகர்களுக்காக, அவர்களுக்குத் துணைநின்று ஊக்குவிக்கும் பணியில், எனது 'பத்தி எழுத்துக்கள் மூலம் பல ஊடகங்களிலும் (தமிழ்/ஆங்கிலம்) தற்போது ஈடுபட்டு வருவதனாலாகும்.
முதலில் ஒன்று சொல்லவேண்டும். "அழகியல் Aesthetics) தொடர்பான எனது பார்வை மார்க்சியப் பார்வையினின்றும் சிறிது வேறுபட்டது. எனவே, எனது கருத்துக்கள் எனது தத்துவநோக்கிலிருந்தே பெறப்படும்.
0 0 0 இங்கு, செ.கணேசலிங்கன் எழுதியவற்றுள்
ஒரேயொரு கட்டுரை நூலை மாத்திரம், திறனாய்வு சார்ந்த
மதிப்புரைக்கு எடுத்துக் கொள்வோம்.

Page 23
26
یک2ی مهرههاZra۶avaza zzzrگی672
சென்னை குமரன் வெளியீட்டாளர்களினால் 2004 இல் வெளியான விமர்சகரின் நூலின் பெயர் அழகியலும் அறமும் சிந்தனையைத் தூண்டும் தெளிவான 25 கட்டுரைகள் இந்த 160 பக்க நூலில் இடம்பெற்றுள்ளன. ஓர் இடையீடு: 1983இல் நண்பர் நீர்வை பொன்னை யனின் சிறுகதைத் தொகுப்பொன்றில் இடம் பெற்ற அழகியல் தொடர்பாக நான் எழுதியிருந்தபோது, எனது தனிப்பட்ட அபிமானத்துக்குரிய செ.க.தமது 'குமரன்' ஏட்டில், "பூர்ஷ"வா விமர்சகர் கே.எஸ். சிவகுமாரன் பற்றி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்," என்று எழுதி யிருந்தமையை இங்கு நினைவூட்டலாம். இது கால் நூற்றாண்டுக்கு முன்னர் நமக்கிடையேயிருந்த உறவு, தற்பொழுது பரஸ்பர மரியாதையுடனான சுமுக உறவாயிற்று.
"அழகியலும் அறமும்" நூலில் எழுப்பப்படும் சில கேள்விகள் :
அவலமான, அக்கிரமமான நிகழ்ச்சியை அழகுக் கலையாக, இலாபம் சேர்க்கும் விற்பனைப் பண்டமாக்கி சந்தையில் விற்பது அறமாகுமா..?
(இது பொருத்தமான கேள்வி, தமிழ் சினமாவை எடுத்துக் கொண்டால் வன்செயல்கள் "அழகாக" இருக்கின்றன என்று சிலர் வாதிடுகின்றனர். அண்மைக் காலப் படங்களில், குறிப்பாக "புதுப்பேட்டை" "வெயில்" இன்னுஞ்சில, வன்முறை மூலம் சமூக விரோதிகள் ஒழிக்கப்படுவதைக் காண்கிறோம். என்னைப் பொறுத்த

27
கே.எஸ்.சிவகுமாரன் மட்டில் மேனாட்டுப் படங்களில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகள் தமிழில் காட்டப்படுவது போல குரூரமாக அமையாமல், நியாயப்படுத்தும் பாங்கு அழகியல் சார்ந்ததாக இருப்பதைக் காண்கிறோம்).
இந்தக் கட்டுரைத் தொகுதியில் இடம்பெறும் மற்றொரு கேள்வி - மரணத்தையும் யுத்தத்தையும் உலகில் நிறுத்திவிட முடியுமா? குடும்ப வாழ்வில் பகைமை உறவு ஏற்படுவதன் காரணங்கள் எவை?
பொய் பேசுவதன் எல்லைகள், இசையும் மூளையும், டெலிவிஷனில் பெண்கள், சித்தர்களின் வரலாறு, கலை இலக்கிய ஆய்வுமுறைகள், ஆறுமுக நாவலரும் சாதியமும், தேசிய இனமும், சிறுபான்மைத் தேசிய இனமும், மார்க்சைக் கற்போம், உலகமயமும் ஒருவனே தேவனும் போன்ற பல கட்டுரைகள், அறிவுத் தேடலுக்கு உரமூட்டுகின்றன.
"தேனருவி" என்ற மறைந்த ஈழத்துச் சிற்றேட்டில் அருண்மொழி, பாலுமகேந்திரா, வாரித்தம்பி, ஞானரதன் போன்றவர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர். இது இற்றைக்கு 45 வருடங்களுக்கு முன் வெளிவந்த ஏடு. அக்காலம் தொடக்கம், சிறந்த திரைப்பட நெறியாளர்களுள் ஒருவரான பாலுமகேந்திராவுடன் தொடர்பு ஏற்பட்டது.
செகனும் பாலுமகேந்திராவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டவர். பாலுமகேந்திராவின் அழகியல்' எனக்கு அதிகம் பிடித்தது. அவரும் என்னைப் போல் மார்க்சியத்தை ஒதுக்கித் தள்ளுவதில்லை. ஆயினும்

Page 24
28
கண்டனக் கண்களுடன் அத்தத்துவத்தின் பிரயோகத்தை விமர்சிப்பவர்.
ബ്ബ് ബ്, മഴ
இருந்தபோதிலும், பாலுமகேந்திராவுடன் நடத்திய சம்பாஷணையொன்றை செ.க.எடுத்துக்கூறி, "அசிங்கத்தை அழகென நிரூபிக்க எத்தனிக்கின்றனர்." என்ற க.கைலாச பதியின் கூற்றை நிலை நிறுத்துகிறார். ஏற்கனவே இங்கு நான் குறிப்பிட்டது போல அழகியலில் குரூரம் இடம்பெறலாகாது.
கலை,இலக்கிய ஆய்வுமுறைகள் என்ற கட்டுரையில் விமர்சகர் செ.கணேசலிங்கன் Ideology என்ற ஆங்கில வார்த்தைக்கு கருத்தியல், கருத்து நிலை, கருத்துருவம் என்ற தமிழ் வார்த்தைகளின் பிரயோகம் இருப்பதைக் குறிப்பிடுகிறார். இவற்றுள்ளே அவரே பயன்படுத்துவ போல கருத்தியல்' கூடிய அர்த்தச் செறிவுள்ளதாக நா உணருகிறேன்.
நூலாசிரியரின் வியாக்கியானத்தின்படி, Realis (யதார்த்தவாதம்) என்றால் "கலையுண்மையும், கை வடிவமும் சிறந்து சமூக வேறுபாடுகளையும் வாழ்க்கையி முரண்பாடுகளையும் விளக்கிக் கூற முயலும் முயற்சிகள் இது ஏற்றுக் கொள்ளத்தக்கதே.
சிலர் இயற்பண்பு வாதத்தையும் (Naturalism) (நல் உதாரணம், மறைந்த அ.ந.கந்தசாமி அவர்கள் மொ பெயர்த்த எமிலி ஸோலா (Emile) வின் நானா' (Nana) வை குறிப்பிடலாம்.) யதார்த்தவாதத்தையும் குழப்பி அடிப்ப இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

ச.என்.சிவகுமாரன் 29
செ.க.ணின் கருத்துப்படி, "அனுபவம் என்பது புலனறிவு, ஐம்புலன்களினால் அறியப்படுவது. அளக்கப் படுவது. இது மரபு சார்ந்த எண்ணங்கள், கருத்துக்களுக்கே இட்டுச் செல்லும்" இதனைப் பூரணமாக நான் ஏற்றுக் கொள்ளேன். அதேவேளை, அனுபவத்திலும் உயர்ந்த நிலையே பகுத்தறிவு' என்ற கூற்றை ஏற்றுக் கொள்ளலாம்.
'இசையும் மூளையும்" என்ற சுவையான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களில் சில :
இசை மரபணுவுடன் சார்ந்தது. மூளையின் வலது பகுதியே இசையைக் கிரகிக்கிறது.
இசை இரத்த அழுத்தத்தைச் சமப்படுத்தும். துன்பங்களையும் உடலில் ஏற்படும் நோய்களையும் கூட இசையால் குணமாக்க முடியும்.
இசை மனக்குழப்பம், இணக்கம் கண்டு தீர்மானம் எடுப்பதற்கும் பயன்படலாம். மொழிக்கு முந்தியது இசை எனவும் தொல்லியல் ஆய்வாளர் கூறுவர். பண்ணிசை, ஒத்திசை தாளலய ஒழுங்கு ஆகியவை தனி மனிதர்களில் ஏற்படுத்தும் உணர்வுகள் வியப்பூட்டுபவை.
மூளையின் முன்புறத்திலேயே நினைவாற்றல் இருப்பதால் பண்ணிசை, ஒத்திசையை ஏற்கெனவே நிறுத்திவைத்திருப்பதுடன் இனங்கண்டு ரசிப்பதற்கும் உதவுவதாகும். மறதி உள்ளவர்களும் இசை நினை வாற்றலை வளர்க்கலாம். இசை ஒரு கலை வடிவமல்ல. வடிவமும் உள்ளடக்கமும் கொண்டதையே கலை என்பர்.
0 0 ()

Page 25
30
ബഗ്ഗ ബഞ്ച്.മ9|
டெலிவிஷனில் பெண்ணினம் என்ற பகுப்பாய்வுக்
கட்டுரையை அற்புதமாகத் தெளிவாக செ.கணேசலிங்கன்
எழுதியிருக்கிறார். இதனை நமது ஊடக விமர்சகர்களும்
நிகழ்ச்சி அளிப்பாளர்களும் பெண் டி.வி.ரசிகைகளும்
அவசியம் படிக்க வேண்டும்.
0 0 0
பூர்ஷ"வா (Bourgeois) மனப்பாங்கை இயல்பாய்
கொண்டவர்களை வறட்டுத்தனமாக விமர்சித்த காலம்
போய் நிதானமாகவும் முதிர்ச்சி மனப்பக்குவம் ஆகிய
நிலையிலும் நின்று, இந்த 21ஆம் நூற்றாண்டில் மார்க்சிய திறனாய்வாளர்கள் உலகெங்கிலும் இப்பொழுது எழுதி
வருவதை, 1960 களில் நிலவிய வாய்ப்பாடான மார்க்சிய
பார்வையை உச்சாடனம் செய்பவர்கள் படிப்பதில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
மறைந்த எழுத்தாளர் கேடானியல் எழுதிய கானல்
என்ற நாவலை காரண காரியத் தொடர்புடன் திறனாய்வு செய்யும் செ.கணேசலிங்கன் அந்த நாவலை "தமிழ் நாவல்களிடை ஒரு நீரோடை" என்கிறார் :
தமது நூலின் 73 ஆம் பக்கத்தில் நூலாசிரியர் இவ்வாறு எழுதுகிறார். ܓܗ
'கானல் வெறும் கற்பனைப் படைப்பல்ல இயற்பண்புவாதமாக நுணுக்க விபரங்களை மட்டும் கூறும்
இயற்பண்பு வாத நாவலல்ல. (அதனை) ஆழமான கருத்துப் பொதிந்த யதார்த்த நாவலாகக் கொள்ளலாம். பாதிரியார்

്.ത്സു, ക്രിക്രമZശ് 37
நன்னியன், தம்பாப்பிள்ளை ஆகியோர் மாதிரிப் பாத்திரங்கள் கிறிஸ்தவ மதமாற்றம் வெளிவேஷத்தில் தாழ்த்தப்பட்டவர் சார்ந்ததாகக் காட்டிய போதும் அது மேல்சாதியினரையே இறுதியில் சார்ந்து நிற்கும் என்ற அடிப்படை அர்த்தத்தையும் கொண்டுள்ளது.
"சாதி, சமய, சமூக ஏற்றத்தாழ்வுகளை நாவல் அம்பலப்படுத்துகிறது. கிறிஸ்தவத்துள் நிலவும் வறுமையையும் புட்டுக் காட்டுகிறது. பகுத்தறிவுடன் சாதி சமயங்களின் வெறுமையைக் காண முடிகிறது. கிறிஸ்தவ சமயத்தோடு இணைந்து ஆங்கிலேய ஆட்சியில் சில சலுகைகள் பெற முடிவதையும் நாவல் காட்டுகிறது.
'கானல் யாழ் தீபகற்பத்தின் ஒரு காலகட்ட வரலாற்றைக் கூறிநிற்கும் சிறந்த படைப்பு வாய்ப்பாடான நாவல் வடிவ அமைப்பில் முதன்மையானது என மதிப்பீடு செய்வர். சமூகவியல் ஆய்வாளருக்கும் என்றும் பயன்படக் கூடிய அற்புத நாவல் என்பதில் சந்தேகமில்லை.
0 0 ()
செ.கணேசலிங்கனை வெறுமனே படைப்பாளி, விமர்சகர் என்று அழைப்பதுடன் நின்றுவிடாது அவரை அறிவாளி என்று மாத்திரம் வரையறை செய்யாது அவரை ஆய்வறிவாளர்' (Intelectual) என்று கூறுவதே பெரிதும் பொருந்தும்.
சொன்னாற்போல இன்டெர் லக்ஷ"வல்' என்ற ஆங்கில வார்த்தையை 'புத்திஜீவிகள்' என்று யாரோ

Page 26
32 — ബീങ്ങZ മZങ്ങ. മട് சோம்பல் நிமித்தம் மொழி பெயர்க்க (தமிழ் நாட்டில் தான்) அதுவே சரியென்று இங்குள்ள ஊடகத்தினரும் வாய்ப்பாடு போல எழுதியும், ஒலிபரப்பியும் வருவது தப்பு, தப்பு மறைந்த பேராசிரியர் க.கைலாசபதி பயன்படுத்திய முருகையன் போன்றோர் பின்பற்றிய சொல் (ஆய்வு செய்து காரண காரியத்துடன் அறிவைப் பகிர்பவர்களே) ஆய்வறிவாளர் என்பதாகும். இதுவே அர்த்தமுடைய சொல் என்பது எனது வாதம்.
() () ()
இவ்வாறு நவீன சிந்தனைகளின் அடிப்படையில் ஒரு களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது. அனைவரும் இந்நூலைப் படித்து பயன் பெறலாம் என்பது எனது துணிபு.

33
മഞ്ഞബ് ടൂ عش744444ھ تھے تھے تھے
zoafz762.7/77g77 کے تر
மீண்பர்களும் ஆய்வாளர்களுமான க.சண்முக லிங்கம், ராஜரத்தினம், மதுசூதனன் ஆகியோர் அண்மைக் கால மேலைத் தத்துவப் போக்குகள் தொடர்பாக குறிப்பாக நவீனத்துவம், நவீனத்துவத்தைத் தொடர்ந்து வந்த எதிர்ப்புத் தத்துவம் - தமிழில் கிடைக்கக்கூடிய நூல்கள் பற்றிய விபரங்களை வழங்கினார்கள். பேராசிரியர் சபா ஜெயராசாவின் நூல் விமர்சனம் தொடர்பாக அவர்கள் பங்கெடுத்தனர். இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை, கைலாசபதி ஆய்வு வட்டம் ஆகியன நூலை வெளியிட்டுள்ளன. நூலின் பெயர் பின்நவீனத்துவத்தை விளக்கிக் கொள்ளல். இந்த விமர்சன அரங்கு 15 பேர் மத்தியில் கடந்த 24/02/2007இல் நடைபெற்றது.

Page 27
2ی به روی ۷//۶ی تeyzzعe۶//سو٪۶یی است. 4 3
நண்பர்கள் தெரிவித்த இந்தத் தமிழ் நூல்களை படித்துப் பயன்பெற எனக்கு ஆசையாய் இருக்கிறது இவற்றைத் தேடிப் படித்து அறிவைப் பெருக்க அவகாசம் இல்லாமற் போய்விட்டது. ஆயினும், சுமார் 23 வருடங்களுக்கு முன் வெளிவந்த இரு தமிழ் நூல்கை அண்மையில் மீளப் படித்துப் பார்த்தேன். எம வாசகர்கள் இந்நூல்களினின்றும் பயன்பெறலாம் எனக் கருதி, இவை பற்றிய சிறு மதிப்புரைகள் தொடர்கின்றன.
0 0 - 0
முதலிலே, மேலை இலக்கியச் சொல்லகராதியை எடுத்துக் கொள்வோம். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ஆங்கில - ஒப்பியல் துறையின் தலைவராக விளங்கிய வை.சச்சிதானந்தன் இந்த நூலினை ஆக்கியோன். 1983இல் வெளியாகிய இந்த நூலை இந்திய மக்மிலன் நிறுவனத்தினர் வெளியிட்டிருந்தனர். மூதறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் நினைவாக இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. பல அறிஞர்கள் நூலாசிரியருக்கு உதவியுள்ளனர்.
வை.சச்சிதானந்தன் தமது முன்னுரையில் கூறும் விபரங்கள் நமக்கும் பயனளிக்கும்.
'நம் நாட்டில் (இந்தியாவின்) ஆங்கிலக் கல்வி சட்டபூர்வமாக 1835 இல் கல்விக் கழகங்களில் நுழைக்கப் பட்டாலும் ஆங்கில இலக்கியத்தின் தாக்கம் தமிழ் இலக்கியத்தில் 1879 ஆம் ஆண்டு முதல் ஊடுருவத் தொடங்கியிருக்கலாம் என்று மாயூரம் வேதநாயகம்
 
 
 
 
 

ச.கிரகம்,சிவகுமாரன் 35
பிள்ளை தன்னுடைய முதல் நாவலுக்கு எழுதிய முன்னுரையிலிருந்து நாம் அறிகிறோம். ஆனால், இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு தான் தமிழ் அறிஞர்களும் ஆராய்ச்சி மாணவர்களும் மேலை இலக்கியத் திறனாய்வு கோட்பாடுகளையும் முறை களையும் உத்திகளையும் தமிழ் இலக்கியத்தின் நுட்ப திட்பங்களை ஆராய்வதற்குப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கினர் எனலாம்.
"இதற்கு ஆங்கில மூல நூல்களும் இலக்கியச் சொல்லதிகாரங்களும் பயன்படுத்தப்பட்டாலும் ஆங்கில இலக்கியத்தில் நேர்முகப் பயிற்சியின்மை காரணமாக, திறனாய்வுச் சொற்களைக் கையாளும் போது சிக்கல்களும் கருத்து வேறுபாடுகளும் தோன்றி நுட்பமான இலக்கிய மதிப்பீட்டிற்கு இடையூறுகளை விளைவிக்கத் தலைப் பட்டன. இக்குறையை ஒருவிதத்தில் நீக்குவதற்காகவே, தமிழில் இலக்கியச் சொல்லதிகாரத்தினை, ஆக்கும் பணியை நானும் ஆங்கில இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் ஒருசேர புலமையுடைய ஒரு சிறிய நண்பர் குழாமும் மேற்கொண்டோம்."
இந்தப் பயனுள்ள அகராதியில் ஆங்கில அல்லது மேலைத்தேய கருத்தியல்களுக்கு ஏற்ப ஆங்கிலத் திறனாய்வுச் சொற்களுக்கு நல்ல முறையில் விளக்கங்கள் தரப்படுகின்றன. agitpra00TLords, Aesthetic Attitude 6T6irp தொடருக்கு "முருகியல் சார்வுணர்வு" என்று தமிழாக்கம் செய்யப்படுகிறது. அதேபோல, முருகியல் அயன்மை

Page 28
36 6ി/മഞ്ഞഗു് (Zങ്ങ. മി (Aesthetic Distance,) Gyp(156uupið Gisint "Lunt(6) (Aestheticism) முருகியல் (Aesthetics) ஆகியன பற்றிய விளக்கங்கள், என்னைப் பொறுத்தமட்டில் சரியாகவே இருக்கின்றன.
Avant Grade என்ற பிரெஞ்சுச் சொல்லுக்கு "முன்னணி இலக்கியம்" என்று கூறுவது பொருத்தமாக இல்லை என்று எண்ணுகிறேன். நூலாசிரியர் தரும் விளக்கம்: "அமைப்பிலோ (Form) உத்தியிலோ (Technique) புதிய முறைகளைக் கையாளும் இலக்கியத்தை இச்சொல் குறிக்கும்.
Beles Letters (கவின்கலை) "தற்காலத்தில் எளிய இலக்கியக் கட்டுரைகளை அல்லது நயம் அழகு எடுத்துரைக்கும் பாராட்டுக் கட்டுரைகளை மட்டும் குறிக்கின்ற தொடராகப் பயன்படுத்தப்படுகிறது." எனது பெரும்பாலான பத்திகள் இந்த வகைகளுக்குள் அடங்கும். Cliche (வழக்கடிபட்ட சொற்றொடர்) என்பது இவ்வாறு விளக்கப்படுகிறது.
"திரும்பத் திரும்பவும், அடிக்கடி சொல்லிச் சொல்லி காலத்தால் தேய்ந்து போய், தனது வார்த்தையையும் ஓரளவுக்கு தனது முதல் பொருளையும் இழந்துவிட்ட சொற்றொடர்கள் இவை"
இந்த நூலாசிரியர் (Criticism) என்ற சொல்லைத் தமிழில் "திறனாய்வு" என்றே பெயரிடுவது எனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. "விமர்சகர்கள்" என்று தம்மை அழைத்துக் கொள்பவர்கள் தயவுசெய்து, இலக்கியத் திறனாய்வு தொடர்பாகத் தரும் விளக்கங்களைப் படித்துப் பாருங்கள்.

്. മര്).ക്രിക്രമ7ങ്ങ് 37
ஆங்கில இலக்கியத் திறனாய்வுப் பதங்களில் நுழைந்துவிட்ட மற்றொரு பிரெஞ்சுச் சொல் DENOUEMENT இதனை "கரை முறுக்கவிழ்வு" என நூலாசிரியர் தமிழாக்கம் செய்கிறார்.
அடுத்ததாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில பதங்களுக் கான தமிழாக்கங்களைக் கீழே தருகிறேன்.
Empathy and Sympathy (62ggadottfarth Lutflajadoriajib), Genre (gaidióu 62/63)as), Hubris (gopilotl'il), Humanism (மனிதநலக் கோட்பாடு) Imageism (உருவகக்கவிதை), impressionism (2 giratt Lugtip, Pathos (26tGpápap), Romance (giblig, polib5) Sublime (Gip60560Lo).
0 0 0
அடுத்த நூல் "மேலைநாட்டு மெய்ப் பொருள் (சொக்கிரட்டிஸ் முதல் சாத்தர் வரை)"இதனை எழுதியவர் பேராசிரியர் க.நாராயணன். இவர் புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக விளங்கியவர். இந்த நூலும் 1989இல் வெளிவந்தது.
இந்த நூலில் முன்னுரை உட்பட 14 அதிகாரங்கள் இருக்கின்றன. அவையாவன :
சொக்கிரட்டிஸ்"க்கு முன், சொக்கிரட்டிஸ், பிளேட்டோ, அரிஸ்டோட்டிஸ், நால்வகைக் கோட் பாடுகள், பிளேட்டோனிய மறுமலர்ச்சி, இடைக்காலச்
சிந்தனைகள், கிறித்துவமும் தத்துவமும், புதுயுகம் பிறக்கிறது. பகுத்தறிவுச் சிந்தனைகள், பட்டவியச்

Page 29
38, ബര്ബ മlരി.മ9
சிந்தனைகள், ஜேர்மனிய கருத்தியல், பொருளியல் சிந்தனைகள்.
இவற்றைவிட அணிந்துரை, முன்னுரை என்பனவும் இடம் பெற்றுள்ளன. இந்த நூலிலே 14 ஆங்கில நூல்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றை "கருவி நூற் பட்டியல்" என்கிறார் நூலாசிரியர். தமிழ் நூல்களும் தரப்படுகின்றன. அ.இ.எத்திராசலு மொழி பெயர்த்த "ஐரோப்பிய தத்துவ இயல்" என்ற இராகுல சாங்கிருத்தியாயனின் நூல் அவற்றுள் ஒன்று. மற்றையது ச.இராதாகிருஷ்ணன் தொகுத்த "கீழை மேலைநாடுகளின் மெய்ப்பொருள் வரலாறு தொகுதி 1, 1. அடுத்தது, TMP மகாதேவன், சண்முகசுந்தரம் ஆகியோர் எழுதிய "மேல்நாட்டுத் தத்துவ வரலாறு"
0 0 ()
தமிழில் மெய்யியல் தொடர்பாக ஆரம்பகாலத்தில் வெளிவந்த இரண்டு நூல்களின் ஆசிரியர்கள் இலங்கையராவர். மறைந்த கி.லக்ஷமண ஐயர் எழுதிய "இந்திய தத்துவஞானம்", ந.கதிரவேற்பிள்ளை எழுதிய "மேனாட்டுத்தரிசன வரலாறு"ஆகியன குறிப்பிடத்தக்கன.
(సాO

39
ஆற்றிவும் இணைந்த உலகத்
+ | ஆம் நூற்றாண்டு புறை
*ழத்தில் வடக்கிலுள்ள கரவெட்டியில் பிறந்து உலக ஆய்வறிவாளர்கள் மத்தியில் ஒருவனாக விளங்கும் ஒருவனுக்கு 75 வயது, கடந்த மே மாதம் 10 ஆம் திகதி (2007) ஆரம்பமாகியது. அவன் பெயர் கார்த்திகேசு சிவத்தம்பி. அவன் வெறுமனே தமிழறிஞன் அல்லன். தமிழ்ப் புலமையுடன், பல்நெறித்துறையறிவும் செல்நெறி களை நன்கு பகுப்பாய்வு செய்து நமக்கெல்லாம் வழி காட்டியாகவும் செயற்பட்டு வருகிறான். கலை, இலக்கியம் சம்பந்தமாக மட்டுமன்றி, வரலாறு, சமயம், சமூகம், நாடகம், சினமா போன்ற இன்னோரன்ன துறைகளிலும் பரிச்சயமும் திறனாய்வுப் பிரயோகமும் கொண்டு விளங்குகிறான். அவன் ஆங்கில இலக்கியத்தை ஒரு பாடமாகத் தனது கலைமாணிப் பட்டத்திற்காகப் பயிலவில்லையாயினும் அண்மைக்கால ஆங்கில

Page 30
40 -— 6ി/ബങ്ങ്/മ മZശ. മ9 இலக்கியத் திறனாய்வுப் போக்குகளையும் கிரேக்க பண்டைய நாடகத்துறை, அனுசரணைகளையும் நன்கு அறிந்து வைத்து ஒப்பியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்யும் பக்குவத்தையும் பெற்றுள்ளான்.
அவன் வெறுமனேயொரு விரிவுரையாளன் அல்லன். அல்லது பேராசானுமல்லன். அவற்றிற்கும் மேலாக ஆய்வறிவுத் தளத்தை எட்டியவனுமாவான். அவனது அளப்பரிய ஆற்றல்கள், செயற்பாட்டிலும் பரிமளித்தது. அவன் ஒரு நடிகன், நெறியாளன், தமிழாக்கம் செய்பவன். சைவசமய ரீதியில் பார்க்கும் பொழுது அவன் ஒரு ஞானகுரு.
() () ()
அத்தகைய பெருமைமிக்க ஒருவரை "அவன்" என்று நான் சுட்டியமைக்காக மன்னிக்க. அன்பின் நிமித்தமே ஒரு பகுப்பாயும் பக்தன் போன்று பேராசிரியர் அவர்களை “அவன்' என்று கூறத் துணிந்தேன்.
ஜெயகாந்தன் போன்று மார்க்சியத்தில் தளம் கொண்டு, அல்லது சம்பிரதாயமான பொதுவுடைமைக் கருத்தியலில் இருந்து, அதற்கப்பாலும் சென்ற மு.தளையசிங்கம் போன்று, கார்த்திகேசு சிவத்தம்பியும், ஒரு பழுத்த ஞானியாக நம்மிடையே இருந்து வருகிறார். அவர் நல்ல உடல் நலம் பெற்று, நாம் பயனடைய நமக்குத் தொடர்ந்தும் வழிகாட்ட வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.

0്ര.ക്രിക്രമZങ്ങ് -ത്ത 47
இக்கட்டுரையிலே ஓய்வு பெற்ற தகைசார் பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கும் எனக்குமிடையிலான உறவைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
அவருக்கும் எனக்குமிடையிலான வயது வித்தியாசம் வெறுமனே ஐந்து வருடங்கள் தான். ஆயினும், அவர் எனக்கு குரு போன்ற ஒரு வழிகாட்டி. நான் ஒரு மார்க்சியவாதியல்லவாயினும், மார்க்சியவாதிகளின் கலை, இலக்கிய அணுகுமுறைகளைப் பின்பற்றுபவன். மனுக்குலத்தையும் உயிர்களையும் பாரபட்சமின்றி நேசிப்பவன். முற்போக்கான கருத்தியல்களை வரவேற்றுச் செயற்படுத்துபவன்.
அந்த விதத்தில், ஆங்கிலப்புலமையுடைய மூவர் என்னை வழிப்படுத்தினர் எனலாம். மறைந்த கனகசபாபதி கைலாசபதி, மறைந்த சில்லையூர் செல்வராசன், வாழும் ஆய்வறிவாளர் கார்த்திகேசு சிவத்தம்பி ஆகிய மூவருமே அவர்களாவர். அவர்களுள் சில்லையூர் செல்வராசனுடன் மிகமிக நெருங்கிய தொடர்பு இருந்தது. இதற்கு ஒரு காரணம், வானொலி, சினமா, திறனாய்வு போன்ற துறைகளில் இருவருக்கும் இருந்த ஈடுபாடுதான்.
க.கைலாசபதி என்னைத் திறனாய்வுத் துறைக்கு அழைத்து வந்தவர். அவருடைய ஆங்கில இலக்கியப் புலமையும் தமிழ் இலக்கியத்தை அணுகும் முறையும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. "கைலாசபதியும் நானும்" என்ற எனது சிறு நூலிலே அவருடன் நான் கொண்ட உறவை விபரித்திருக்கிறேன். எமது துர்ப்பாக்கியம் இளவயதிலே அவர் இயற்கை எய்தியதே.

Page 31
42 H 62-7aarzi az/zov... (23 கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் இடம் பெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய மகாநாட்டிலே, எனது "ஓட்டோகிராப்"பை க.கையிடம் நீட்டியபோது, "மாற்றமே இயற்கையின் நியதி" என்று எழுதி வாழ்த்துத் தெரிவித்தார். அதுவே எனக்குத்தாரக மந்திரமாக அமைந்தது. "தமிழ் றைட்டிங் இன் பூரீ லங்கா" என்ற எனது முதலாவது நூலுக்கு (ஆங்கிலத்தில் எழுதப்பட்டது) அவர் ஓர் அறிமுகத்தை எழுதியிருந்தார். ஒரு நாள் இராமக்கிருஷ்ண பெரிய மண்டபத்தில் இடம் பெற்ற ஒரு மகாநாடு முடிவடைந்ததும் கைலாசபதியும், செ.கணேசலிங்கனும் எனது மேனாட்டு வயப்பாட்டைச் சிறிது தளர்த்தி, வர்க்கரீதியான பார்வைகளைப் பார்க்கும்படி திசை காட்டினார்கள். அந்த அளவில் க.கைலாசபதியுடனான உறவு அமைந்தது.
0 0 0
பேராசிரியராகப் பின்னர் முகிழ்ந்த கார்த்திகேசு சிவத்தம்பி, ஸாஹிராக் கல்லூரியின் ஆசிரியராக இருந்த சமயம், அவருடைய உயர்வகுப்பு மாணவர்களுடன், எமது கல்லூரி (கொழும்பு, டார்லி ரோட்டிலுள்ள செயின்ட்.ஜோசப் கல்லூரி) மாணவர்கள் ஒரு விவாதப் போட்டியில் ஈடுபட்டனர். பின்னைய கல்லூரியின் விவாதக் குழுவில் நானும் இடம் பெற்றேன். அப்பொழுது தான் கா.சிவதம்பியை பிரத்தியட்சமாகக் கண்டேன். இளைஞனான அவரா இந்த விதானையார் என்று சம்சயித்தேன்.

43
l്ര.ക്ഷിക്രZശ്
இது ஏனெனில், 1950 களின் முற்பகுதியில் இந்த விதானையார் வீட்டில்" நிகழ்ச்சியைக் கேட்டுப் பரவசம் அடைந்த மாணவர்களுள் நானும் ஒருவன். தத்ரூபமாக வானொலியில் விதானையார் பாத்திரத்திற்குத் தனது குரல் ஆளுமையாலும் பேசும் முறையினாலும் பயிரூட்டி, நேயர்களைக் கொள்ளை கொண்டார்.
கைலாசபதியே பின்னர் எனக்கு சிவத்தம்பியை அறிமுகம் செய்து வைத்தார். அப்பொழுது பின்னையவர், நத்ராமாவத்தையிலுள்ள ஒரு வீட்டின் அறையில் குடிபுகுந்திருந்தார். என்னவோ தெரியாது சிவத்தம்பி என்னுடன் உரையாடுவதில் அவ்வளவு சுவாரஸ்யம் ாட்டியதாகத் தெரியவில்லை. ஒரு வேளை, நான், அதிகமாக ஆங்கிலத்தில் பேசுவதனாலோ, தமிழ் இலக்கியங்கள் பற்றி அதிகம் பேசாததனாலோ, சிவத் நம்பி அவர்கள் என்னைப் பொருட்படுத்தவில்லை.
வானொலியில் 'இளைஞர் மன்றம்" நிகழ்ச்சியை அவர் தயாரித்து அளித்தபொழுது, ஜோர்ஜ் சந்திர சேகரன் மீது காட்டிய அக்கறையை என்னிடம் காட்ட வில்லை. எனக்குப் பொறாமையாகவும் இருந்தது. நான் தமிழில் ஈடுபாடு காட்டாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பேராதனைப் பல்கலைக்கழகத்துள் பட்டதாரிப் படிப்புக்காக நான் இரு தடவை முயன்றும், இலங்கை வரலாற்றில், (மஹாவம்சத்தையொட்டிய கேள்விக்

Page 32
44 — ിബങ്വേ (Zഞ്ച. മ களுக்கு நான், தமிழ் உணர்ச்சி காரணமாக, போதிய விடையை எழுதவில்லை) போதிய புள்ளிகளைப் பெற வில்லை. இரண்டாவது தடவை முயற்சித்தும் முயற்சி பலிதமாகவில்லை.
பின்னர், கலியாணம் முடித்து இரண்டு புதல்வர் களையும் பெற்ற பின்னர், பேராதனைப் பல்கலைக் கழகத்தின் வெளிவாரி மாணவனாகத் தோற்றி, 1970 களின் இறுதியில் ஒரு பட்டதாரியானேன். நல்லவேளை யாக இலங்கை வரலாற்று"க்குப் பதிலாக ஆங்கிலத்தையும் தமிழையும் மேலைப் பண்டையப் பண்பாட்டையும்
பாடங்களாகப் பயின்று பட்டதாரியானேன்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பேராசிரியர் சிவத்தம்பி, கொழும்பு கொட்டாரோடில் வசித்த பொழுது, அவருடைய வீட்டுக்குச் சென்ற ஒரிரு நாட்களில், தமிழ்ப் பாடநூல்கள் பற்றிய தெளிவை நான்
பெற்ற மைதான். சிலப்பதிகாரத்தில் வழக்குறுகாதை பற்றியும் இந்தக் காப்பியத்தின் குணாதிசயங்கள் தொடர்பாகவும் பேராசிரியர் அவர்கள் விளக்கி
காட்டியமை என்னை வியப்பில் ஆழ்த்தியது.
பரீட்சையில், சிலப்பதிகாரத்தின் நாடகப் பண் களை விளக்கிக் காட்டுமாறு கேட்கப்பட்ட கேள்விக்கு ஓர் "அருமை"யான விடையை எழுதியிருந்தேன் பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைந்தேன். சித்தியடைய இலக்கணக் கேள்விகளுக்கு இலகுவாக விடையெழுத
 
 
 
 
 

Azazia?aezozza 45 ானக்கு உதவிய நூல் "சொக்கன்" அவர்களின் நூல்தான் ான்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
பேராசிரியர் சிவத்தம்பி ஓர் ஆய்வறிவாளனாக
Intelectual) இருந்த அதே வேளையில், நெக்குநெக்குருகும் உணர்ச்சி மிகு மனிதனாகவும் விளங்குகிறார். ஒரு சமயம் பருத்தித்துறையில் முற்போக்கு எழுத்தாளர்கள் மகாநாடு ஒன்று நடந்தது. அந்த மகாநாட்டிற்கு நானும்
ஆர்வத்துடன் சென்றிருந்தேன். இத்தனைக்கும் அச்சமயம்
பூர்ஷ"வா" மனப்போக்குடன் தான் இருந்தேன்.
மகாநாடு நடப்பதற்கு முன்னர், கொழும்பிலிருந்து
ளியாகிய "தேனருவி" (அருள்மொழி, பாலு மகேந்திரா, ஞானரதன் ஆகியோர் நடத்திய சிற்றேடு) இதழில் பானியல் கதைகள்" பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருந்தேன். மகாநாட்டிற்கு வருகைதந்த மறைந்த டானியல் அவர்களுக்கு எனது மதிப்புரை பிடிக்க வில்லை போலும், ஆயினும் அவர் என்னுடன் இயல்பாகவே பழகினார். -
பேராசிரியர் சிவத்தம்பி மதிய போசன விருந்தாளி ாளுக்கு உணவு பரிமாறினார். நானும் உட்கார்ந்தேன். அப்பொழுது டானியல் என்னைப் பார்த்து ஏதோ கூறினார். இதனை அவதானித்த சிவத்தம்பி கண்ணால் சைகை செய்து டானியலை ஆசுவாசப்படுத்தினார். இது எனக்குப் புதுமையாகவும் எதிர்பாராத வொன்றாகவும் இருந்தது. பின்னர் டானியல் அவர்கள் என்னுடன் மிக மரியாதையாகவும், அன்பாகவும் பழகினார் என்பது
வேறு கதை.

Page 33
46 SS S SSSSSSSSSSSSS MATALTTLST AMAMLS MAL0
சிவத்தம்பியின் விருந்தோம்பல் பண்பை நான் அவதானித்தேன்.
சிவத்தம்பியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு குறைவாக இருந்தபோதிலும், அவருடன் அவ்வப்போது தொலைபேசியில் உரையாடித் தெளிவு பெறுவேன். அவரே அறிந்திராதபோதும், அவருடைய ஆங்கில, தமிழ் நூல்கள் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறையத் திறனாய்வு செய்துள்ளேன். அவருடைய ஆளுமை என்னை ஆட்கொண்டது.
அவரிடமிருந்து ஒரு முன்னுரையைப் பெற வெகு ஆவலாய் இருந்தேன். ஒரு புத்தகத்துக்கான அச்சுப் படிவங்களைக் கொடுத்து ஒரு முன்னுரை எழுதித் தரும்படி கேட்டிருந்தேன். புத்தகத்தின் தலைப்பு பத்தி எழுத்து சம்பந்தமாக இருந்தது. பேராசிரியர் அந்தத் தலைப்பை மாற்றி, "திறனாய்வுப் பார்வைகள்" எனப் பெயரிட்டார். பேராசிரியர் என்னையும் இச்செயல் மூலம் ஒரு திறனாய்வாளனாக ஏற்றுக் கொள்கிறாரே என்று புளகாங்கிதமடைந்தேன். அது மட்டுமல்லாமல், ஓர் அணிந்துரையையும் எழுதித்தந்தார்.
என்னுடைய எழுத்துக்கள் எப்படிபபட்டவை என்பதை நானே அறிந்து கொள்ள 'திறனாய்வுப் பார்வைகள்' என்ற எனது நூலுக்கான பேராசிரியர் சிவத்தம்பியின் முன்னுரை அமைந்துள்ளது. அவருக்கு
எனது மனமார்ந்த நன்றிகள்.

47
ச.கிரன், சிவகுமாரன்
கலாநிதி செ.யோகராசா மார்ச் மாத "மல்லிகை" இதழில் எனது எழுத்து தொடர்பாகப் பகுப்பாய்வு செய்தமையும் எனது இருப்பை உறுதிப்படுத்த
0 0
மே மாத இதழ் பேராசிரியர்
உதவுகிறது.
"ஞானம்' கா.சிவத்தம்பியை நன்கு அறிந்து கொள்ள வகை செய்யும் ஒரு களஞ்சியமாக அமைந்திருக்கிறது. அச்சஞ்சிகையின் ஆசிரியர் தி.ஞானசேகரனுக்கு நன்றி. முகம்மது சமீமின் கட்டுரை அந்த இதழில் வெகு சுவாரஸ்யமானது.
0.

Page 34
48
faZ7 sup7777 essava’’ ?oragg7ைற்று ந7سه
1959 இல் அசாதாரண ஆற்றல் மிக்க கூத்துக் கலைஞனாக இனம் காணப்பட்ட மெளனகுரு கடந்த 36 வருடங்களாக அரங்கிற் செயற்பட்டு வருகிறார்.
கூத்து மரபிலிருந்து வந்து கூத்து மரபினை நவீன நாடக மரப்பின் இன்றியமையா அங்கம் ஆக்கியமையில் மெளனகுருவின் இடம் முக்கியமானது.
கூத்தின் ஆட்டத்தையும் அரங்கின் நாடகத் தன்மையையும் சிறுவர் அரங்கில் இணைத்துள்ளமை இவரது முக்கிய பங்களிப்பாகும்"
- பேராசிரியர் கா.சிவத்தம்பி
() () ()

49
്.ബി. ക്രിക്രമZങ്ങ്
சி.மெளனகுருவை வாசகர்கள் நன்கு அறிந்தி ருப்பார்கள். அவரை அறிந்தவர்கள் அவர் குணநலன் களையும் பண்பையும் கூட அறிந்திருப்பர். புதிய பரம்பரையினர் அவரை அறிவரோ தெரியாது. அவர் ஒரு பேராசிரியர். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைப்பிரிவில் பணியாற்றுபவர். அவர் துணைவியார் சித்திரலேகாவும் நன்கறியப்பட்ட பெண்ணியம் பேசும் பேராசிரியர். அவர்களின் புதல்வர் சித்தார்த்தனும் பல்கலைக்கழக மட்ட ஆசிரியராவார். அம்மூவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு அறிஞராவர்.
கிழக்கு மாகாணத்திலிருந்து பல்கலைக்கழக மட்டத்திலே ஆசிரியர்களாக இருக்கும் தமிழர் எண்ணிக்கை யில் குறைவானவர்கள். இப்பிரதேசத்தில் இஸ்லாமியர் களாயிருக்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பற்றி இனிமேல்தான் நான் அறிந்து கொள்ள வேண்டும்.
சுவாமி விபுலாநந்தர், பத்தக்குட்டி சந்திரசேகரம். இ.பாலசுந்தரம், சி.மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு, எம்.ஏ.நுஃமான் ஆகியோர் கிழக்கு அல்லது அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர்களாவர். இவர்கள் ஆற்றிய, ஆற்றிவரும் பணிகள் குறிப்பிடத் தக்கவையாக மட்டுமன்றி, சில அம்சங்களில் பிரத்தியேக பெருமை வாய்ந்தவையாகயும் விளங்குகின்றன.
0 0 0
அண்மையிலே, கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் அற்றைத் திங்கள்' என்ற நிகழ்ச்சியின்

Page 35
SO
6ി/മഞ്ഞ/ഗു മZങ്ങ. മി
தொடர்ச்சியாக பேராசிரியர் சி.மெளனகுருவும் உரையாற்றினார். அவருக்கே உரித்தான விஷயத் தெளிவுடனும் சுவாரஸ்யமாகவும் கூறி தனது தனிப்பட்ட வாழ்வுக்கோலங்கள், பல்கலைக்கழக வாழ்வு, ஆசிரியர் தொழில், நாடக அனுபவங்கள் என்பன போன்றவற்றையும் எடுத்துக் கூறினார். கலாநிதி மகேஸ்வரன் தலைமையில் தெ.மதுசூதன் அருகில் இருக்க மெளனகுரு உரையாற்றினார். சபையிலிருந்த ஆய்வாளர் க.சண்முக லிங்கம், தம்புசிவா உட்பட என்னையும் உட்படுத்தி வேறு சிலரும் மெளனகுரு தொடர்பாகத் தமது அபிமானத்தைத் தெரிவித்தனர்.
0 0 0
1970 களில் சி.மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு, எம்.ஏ.நுஃமான் ஆகிய மூவரும் சேர்ந்து இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கியம் என்ற தகவல்தரும் நூலைத் தந்தனர். அந்த நூல் இரசிகமணி கனக. செந்திநாதன் (எஸ்.பொன்னுத்துரையின் தலையீடும் இருந்ததாகப் பின்னர் அறிந்து கொண்டோம்) எழுதிய ஈழத்து இலக்கிய வரலாறு' என்ற நூலிலுமிருந்து சிறிது வேறுபட்டு அமைந்தது.
ஈழத்து இலக்கியம் தொடர்பான வேறு சில நூல்களும் வெவ்வேறு அம்சங்கள் குறித்தும் வெளியாகின. அத்தகைய நூல்களுள் ஆரம்பகால நூல்கள் பற்றியறிந்து கொள்ள எனது ஈழத்து இலக்கியம் ஓர் அறிமுகம்' என்ற சிறு நூலைப் பார்க்கவும். அந்த நூல் வெளியான பின் பேராசிரியர் க.அருணாசலம், கலாநிதி துரை

്.ബി.കീബക്രZZശ് 57
மனோகரன் மற்றும் சிலர் (இவர்களின் நூல்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை) இவ்வாறான நூல்களை எழுதியிருக்கின்றனர். பல்கலைக்கழகத்திற்கு வெளியே சில்லையூர் செல்வராசன், சொக்கன் போன்றவர் களும் ஈழத்து இலக்கியத்தின் வெவ்வேறு அம்சங்கள் தொடர்பாக வரலாறு சார்ந்த நூல்களை எழுதியுள்ளனர்.
பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்களும் வரலாறு சார்ந்த ஆய்வு நூல்களை எழுதியிருக்கின்றனர். பின்னையவர் ஈழத்து இலக்கியம் தொடர்பாக எழுதிய நூலும் எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்தப் புத்தகம் தமிழ் நாட்டில் வெளியிடப் பட்டதனாலோ என்னவோ என் போன்ற தீவிர ஆர்வமுள்ள வாசகர்களுக்கும் பத்தி எழுத்தாளர்களுக்கும் படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.
() () ()
இந்தப் பின்னணியிலே பேராசிரியர் சி.மெளனகுரு தமிழ் நாட்டில் வெளியிட்ட ஒரு நூல் என் கைக்குக் கிட்டியது. நூலின் பெயர் 'பண்டைத் தமிழர் வரலாறும் இலக்கியமும், சென்னை 24, அலைகள் வெளியீட்டகம் இதனைப் பிரசுரித்திருக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்திலே தமிழ் இலக்கியத் துறைப் பேராசிரியராக இருப்பவர் வீஅரசு. இவருடைய பெரும்பாலான கருத்துக்கள் எனக்குப் பிடிக்கும். நவீன சிந்தனைப் போக்கின் அடிப்படையில் பார்க்கும்போது இவருடைய பார்வைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கனவாய்

Page 36
52
علی 2ص ...ری 7//ثرت تربرayZیے ترصے 7/ تعیۓ67 அமைகின்றன. அ.மார்க்ஸ், அப்துல் ரஹ்மான், மேத்தா போன்றவர்களின் ஆக்கிரமிப்பு எழுத்துக்களை விட அரசுவின் எழுத்துக்கள் ஆய்வறிவு ரீதியாக அமைகின்றன.
இந்த வீ.அரசு, மெளனகுருவின் நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். அவர் கூறுகிறார், "தொல் பொருள் ஆய்வு மூலம் கிடைக்கும் நடுகற்கள், காசுகள் மற்றும் பல்வேறு புழங்கு பொருள்களுக்கும் இலக்கியங் களில் காணப்படும் வரலாற்றுக் குறிப்புகளுக்கும் தொடர்பு இருப்பதை அறிகிறோம். இப்பின்புலத்தில் வரலாறு எழுதுதற்கு இலக்கியங்கள் தவிர்க்க முடியாத தரவுகளாக அமைகின்றன என்பதை உணர்கிறோம்."
உண்மையிலேயே மெளனகுருவின் நூல் பற்றிய
திறனாய்வு சார்ந்த முன்னுரையை பேராசிரியர் வீஅரசு தந்திருக்கிறார். அதனைப் படித்துப் பாருங்கள். மெளன குருவின் கூற்றுமூலம் இன்னொரு முக்கிய விஷயத்தையும் அரசு அடிக்கோடு இட்டுள்ளார். அது வருமாறு :
"சிங்கள இன மையம் கொண்ட இலங்கை வரலாற்றில் "யாழ்ப்பாணம் உரிமை கோருவதுபோல, யாழ்ப்பாணம் மையங் கொண்ட தமிழர் வரலாற்றில் மட்டக்களப்பு உரிமை கோருவது போல, மட்டக்களப்பு மையங்கொண்ட வரலாற்றில் முஸ்லிம்கள் உரிமை கோரும் குரல் இந்நூலில் ஒலிக்கிறது."
பேராசிரியர் சி.மெளனகுருவின் 'என்னுரை' யிலிருந்து சிறு பகுதிகள்.

7ர.என்.சிவகுமாரன் - 53
"வரலாறும் இலக்கியமும் நான் ஆழக்கால் கொண்ட துறைகளல்லவாயினும் எனது விருப்பத்துறைகளாகும். இத்துறைகள்சார் செயற்பாடுகளை அவதானித்தமை யினாலும் கற்றமையினாலும் நான் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளிற் சில தொகுக்கப்பட்டு 'பண்டைத்தமிழர் வரலாறும் இலக்கியமும்' எனும் நூலாக வெளிவருகிறது. இந்நூலில் வரும் சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம் தமிழ் அடையாளம் பற்றிய கட்டுரைகள் தமிழகம் சம்பந்தமானவை. ஏனைய கட்டுரைகள் இலங்கை
சம்பந்தமானவை."
0 0 (0
இந்த நூலிலே இடம்பெற்ற எட்டுக் கட்டுரைகளில் நான் முதலில் படித்தது ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கம், கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகள்'
இதற்குக் காரணமும் உண்டு. எனது 72 வயது வாழ்விலே 1942 - 1953 காலப் பகுதியில் 11 வருடங்கள் நான் மட்டக்களப்பு புளியந்தீவில் வசித்திருக்கிறேன். அதற்கு முன்னர் 1936-42 காலப்பகுதியில் முல்லைத்தீவு, வவுனியா ஆகிய இடங்களில் பெற்றோருடன் வாழ்ந்திருக்கிறேன். எனது தந்தையாரின் பிறப்பிடம் திருகோணமலை. அவர் மூதாதையர் கந்தரோடையைச் சேர்ந்தவர்கள். எனது தாயாரின் பிறப்பிடம் மட்டக்களப்பு புளியந்தீவு, சிங்களவாடி, அவருடைய பெற்றோர் நல்லூர் அத்தியடியைச் சேர்ந்தவர்கள் என்றறிகின்றேன்.

Page 37
ッ4
ஆயினும் 1953 முதல் இற்றைவரை நான் கொழும்பு வாசியாகவே இருந்து வருகிறேன். 'யாதும் ஊரே யாவரும்
6ിബഞ്ഞZ മzZയ. മമ്
கேளிர் என்பதற்கிணங்க உலக மனிதனாகவே என்னைக் கருதிக் கொள்கிறேன். இருந்தபோதிலும் எனது வேர்களையறிந்து காலூன்றித் தமிழனாக வாழ்வதிலேயே பெருமை கொள்கின்றேன்.
0 0 0
மெளனகுரு பின்வருமாறு (Classify) வகுப்பொழுங்கு பண்ணுகிறார்.
"முதலாம் பகுதியில் சாதி வரலாறுகள் எழுது வதற்கான காரணங்களும் ஈழத் தமிழன் வரலாறு கட்டமைக்கப்பட்ட விதமும் கூறப்படுகின்றது.
இரண்டாம் பகுதியில் மட்டக்களப்பு மாறி வருதற்கான காரணங்கள் கூறப்படுகின்றன.
மூன்றாம் பகுதியில் மட்டக்களப்பு சாதி, இன வரலாறு கூறும் நான்கு நூல்கள் இம்மாற்றத்திற்கும் ஈழத் தமிழர் வரலாறு எழுதுவதற்கும் எப்படிப் பதிற்குறி (Response) தருகின்றது என்பது ஆராயப்படுகின்றது.
நான்காம் பகுதியில் முன்னெடுக்கவேண்டிய அம்சங்கள் சம்பந்தமான சில ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன."101ஆம் பக்கத்தில் நூலாசிரியர் எழுதுகிறார்.
"தமிழர் என்ற ரீதியில் பொதுவாக பல இன்னல் களுக்குள்ளாகும் பல் பிரதேசத் தமிழர்களும் (வவுனியா,

55
és. Azov.2/es/ozares
மன்னார், சிலாபம், மலை நாடு, மட்டக்களப்பு) தத்தம் வரலாற்றைக் காண முயல்வதும் ஈழத் தமிழர் வரலாற்றில் நம் தனித்துவத்தைக் காட்ட முயற்சி எடுப்பதும் இயல்பு. இதில் மட்டக்களப்பு, வவுனியா மாத்திரமே தமக்கென சில வரலாற்றுப் பதிவுகளைக் கொண்டனவாக உள்ளன."
ஈழத்துத் தமிழர் அல்லது தமிழ் பேசும் இஸ்லாமியரின் வரலாறுகளை முழுமையாக எழுத முனையும் புதிய வரலாற்றாசிரியர்கள், பேராசிரியர் சி.மெளனகுரு எழுதிய இந்த நூலின் 139 முதல் 179 வரையிலுமான பக்கங்களை அவசியம் படித்துப் பார்க்க வேண்டும்.
தெளிவாகவும், காரண காரியத் தோரணையிலும் அவர் பல உண்மை நிலைப் பதிவுகளையும் சில ஆலோசனைகளையும் தந்துள்ளார். மிகவும் பிரயோசன மானது.
ஆறு ஆலோசனைகளை அவர் கொடுத்திருக்கிறார். அவற்றுள்ளே 3 ஆவது ஆலோசனை வருமாறு:
“கிழக்கிலங்கையில் தமிழர் மத்தியில் முக்கிய இனக்குழுக்களாக வேளாளர், முக்குவர், கரையார், சீர்பாதக்காரர் அமைகின்றனர். இவர்களுள் முதல் மூன்று சமூகமுமே ஜனத்தொகை அதிகம் மிகுந்த சமூகமான மையினாலும் பொருளாதார பலம் மிக்க சமூகங்களான மையினாலும் அவர்கள் அரசியல் அதிகாரத்தில் மட்டக் களப்புச் சமூகம் இம்மூன்று சமூகத்தினரை மாத்திரம் உள்ளடக்கியதன்று. ஏனைய இடைநிலை, அடிநிலைச்

Page 38
56 42zafarzi GZ/zav... (2.s. சமூகங்களுமுண்டு. அவற்றிற்கென்று தனித்துவங்களும், வரலாறுகளும் உண்டு."
மெளனகுரு வரலாற்றாசிரியர் அல்லாவிட்டாலும், அவர் எழுப்பும் கேள்விகளும் நியாயப்பாடுகளும் பரிசீலிக்கப்பட்டு செயலூக்கம் பெறத்தக்கன.
அவர் கூறுவது போல "ஈழத் தமிழ் பேசும் மக்களின் வரலாறு எனக் கட்டமைக்கப்படுகின்றபோது அது யாழ்ப்பாணத்துத் தமிழர் வரலாறாக அன்றி இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழ்பேசும் மக்களினதும் வரலாறாகக் கட்டியமைக்கப்பட வேண்டும்.
முக்கியமாக இவ்வரலாற்றினுள் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேச வரலாறுகளும் அப்பிரதேசங் களில் வாழும் தமிழ் பேசும் மக்களான இஸ்லாமியர் வரலாறும் உள்ளடக்கப்பட்ட வேண்டும். தமிழ் பேசும் பறங்கியர் இன வரலாறும் உள்ளடக்கப்பட வேண்டும்."
ஈழத்து தமிழிலக்கிய வரலாறு அல்லது நாடக இலக்கிய வரலாறு அல்லது ஏனைய கலைகள் பற்றிய வரலாறு எழுதப்புகினும் இம்முறையே பின்பற்றப்பட வேண்டும் என்பதும் நினைவூட்டத்தக்கது.
இந்த புத்தகம் சுவைபட எழுதப்பட்டிருப்பதும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. யாவரும் படித்து அறியலாம்.

57
ஆய்வுகளுக்கிடையே
தேசத்தின் கண், தாஜ"ல் உலூம், கலாபூஷணம், தமிழ்மணி என்ற பட்டங்களுடன் துணிகரமாக எழுதி வரும் இதழியலாளர் ஒருவர் நம்மிடையே இருக்கிறார். ஜனரஞ்சகமாகவும் அதேவேளை, ஆய்வு மனப் பாங்குடனும் எழுதும் இதழியலாளர்களுள், தமிழில் எழுதும் நால்வர் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களாக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளனர்.
அமரர் எஸ்.டி.சிவநாயகம் முதன்மையானவர். அவரைத் தொடர்ந்து இப்பொழுதும் எழுதிக் கொண்டி ருப்பவர்களுள் நாம் முன்னர் குறிப்பிட்ட கலாபூஷணம் மானாமக்கீனும் ஒருவர். இவர் ஒரு நாடக நெறியாளருங் கூட. புதிய பரம்பரையினர் இவர் பங்களிப்புகளை அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். அவருடைய புதிய ஆய்வு ஒன்று சிறு நூலாக வெளிவந்திருக்கிறது.

Page 39
5g
ിഭ/മഞ്ഞഗു (Zയ. മ
அதற்கு முன்னர், நான் வாசித்து இரசிக்கும் ஏனைய இரு இதழியலாளர்கள் பெயர்களையும் குறிப்பிட வேண்டும்.
அவர்கள் இவர்கள் தான்; அருள் சத்தியநாதன், மொழிவாணன், இன்னுமொருவர் பெயரும் உண்டு. அவர் இவர்களினின்றும் சிறிது வேறுபட்ட, பல்வேறு எழுத்து நடைகளையும் கையாண்டு எழுதும் ஆக்க இலக்கியப் படைப்பாளியுங் கூட. அது எப்படி என்பதைப் பிறிதொரு தடவை பார்ப்போம். அவர் பெயர் கே.விஜயன். இந்த ஐவரும் முழுநேரப் பத்திரிகையாளர்களாக இருந்தவர்கள். அருள் சத்தியநாதன் இப்பொழுதும் தினகரன் வாரமஞ்சரி யில் நிரந்தரமாகப் பணிபுரிந்துவரும் ஒரு முதுநிலை இதழியலாளர் ஆவார்.
0 0 0
மானா மக்கீனுக்கு வருவோம். அவருடைய புதுப்புனைவான வித்தியாசமான எழுத்துக்கு 20 பக்கங்கள் கொண்ட விரலளவு நூலுக்கு அவர் இட்ட தலைப்பு சான்று.
* "ஆய்வு புதிது! தமிழுக்கு முதல் புதினம் கீழக் கரையிலிருந்து."
இதன் பின் அட்டையில், மக்கீனின் கையெழுத்தில் பின்வரும் வாசகம் இடம்பெறுகிறது.
"அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாம் மாநாட்டில் ஒரு முக்கிய நிகழ்வாக சென்னை

65,66, ക്രിക്രZങ്ങ് 59 புதுக்கல்லூரியில் 26-05-2007இல் நிகழ்வுற்ற ஆய்வரங்கத் திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை. அதில் பின்வருமாறு கூறுகிறார்:
"பகற்பொழுதில் ஏற்றப்பட்ட வெளிச்சமாயினும் ஒளிசிந்தும் என எதிர்பார்ப்பு. விவாதிப்பவர்கள் விவாதிக்கலாம். விளக்கம் கேட்பவர்கள் கேட்கலாம்."
மானா மக்கீன் முன்னரும் சில நூல்களை எழுதி யிருக்கிறார். அவற்றுள் ஒன்று சுப்பிரமணியபாரதியை ஒரு முஸ்லிம் நேசனாகக் காண்பது. அப்புத்தகத்தின் தலைப்புக் கூட சற்று அசாதாரணமானது தான்!
"ஒரு முண்டாசுக் கவிஞனின் முஸ்லிம் நேசம்"
மானாமக்கீன், அறிவுசார்ந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் போல (Academics) எழுதாததனாலோ என்னவோ, மக்கீனின் புதிய கண்டுபிடிப்புகள் எனக் கொள்ளத்தக்க ஆய்வுகளைப் பலர் கண்டுகொள்ளு வதில்லை போலும் இம்மாதிரித்தான் பொது வாசகர் களுக்காக எழுதும் கலாநிதி செ.குணராசா (செங்கை ஆழியான்), தெளிவத்தை ஜோசப், கே.எஸ். சிவகுமாரன் போன்றவர்களின் பிரத்தியேகப் பங்களிப்புகளைக் கண்டும், அறிந்தும் காணாதவர்போல், அறிந்திராதவர் போல பதவி வழியாகச் செல்வாக்குப் பெற்ற சிலர் பாசாங்கு செய்வதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
சரி, நாம் எடுத்துக்கொண்ட இச்சிறு நூலில் அப்படி என்னதான் மானா மக்கீன் சொல்கிறார் என்று

Page 40
(OO)
பார்த்தால் - தனது ஆய்வின் முக்கிய நோக்கம் முதலாவது தமிழ்ப் புதினம் (நாவல்) "பிரதாப முதலியார் சரித்திரமல்ல, வேறொன்றை 'பளிச்சிடச் செய்வதே' என்கிறார்
ിബബ്ബഗ്ഗ് Zജ. മ
கட்டுரையாளர்.
1858இல் இமாமுல் அரூஸ் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி) என்பவர், மதீனத்துன்னுஹாஸ் தாமிரப்பட்டினம்' என்ற தலைப்பிலே, பாரசீக மொழியில் எழுதப்பட்ட வரலாற்றுச் செய்யுள் ஒன்றைத் தமிழில் தந்திருக்கிறார்.
இந்தக் கூற்றுக்கு விளக்கம் அளிக்கும் கட்டுரை யாசிரியர், பின்வருமாறு எழுதுகிறார்.
"அரபுப் பாண்டித்தியம் மட்டும் பெற்றிருந்த தமிழ் பேசுவோருக்கு, அறபுத் தமிழ் லிபியில் இஸ்லாமிய நாவலொன்றை அளித்திடும் கைவண்ணம்."
குறிப்பிட்ட செய்தியை மானா மக்கீன் முதலில் படித்திருக்கிறார். அவர் படித்தது இதுவே :
'ஹசன்பே சரித்திரம்" என்னும் தமிழ் நாவலை எழுதிய சித்திலெப்பை அவர்களே முதல் நாவலாசிரியர் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவே, தாமிரப் பட்டணம்' நாவல் எழுதப்பட்டு விட்டது. ஆகையால், அதுவே முதல் நாவல் எனவும், தமிழ் மொழியின் முதல் நாவலாசிரியர் மாப்பிள்ளை ஆலிம் அவர்களே என்றும் உறுதியாகிறது. அறபி லிபியில் எழுதப்பட்டாலும், அந்நாவலின் மொழி
 

',67ര.ക്ഷമത്രമZഞ്ച് - 67
மிழே ஆகும்." (தமிழகத்தில் முஸ்லிம்கள் -
அஜ்மல்கான் 1985)
இந்த அவதானிப்பை எழுதியிருக்கும் பீ.மு. அஜ்மல்கான், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியத் தமிழியல் துறைத் தலைவராவார்.
அறபு லிபியில் தமிழாகத் தரப்பட்ட இந்தப் பாரசீக மொழிக் கதை என்ன கூறுகின்றது என்பதை மானா மக்கீன் ஒரு மேற்கோள் மூலம் தருகிறார். அந்த மேற்கோள் இதுதான்.
இப்புதினத்தின் மூலகர்த்தா, பாரசீக எழுத்தாளரான பாகீர் யஸிது இபுனு மாலிக்கித் தாய்யி என்பவராவார்.
உரைமய்யாக்கள் ஆட்சிக் காலத்து சரித்திரப் ன்னணியைக் கொண்டது. புகழ்பெற்ற ஜெனரலாகத் திகழ்ந்த மூசாபின் நுஸைர் என்பவரைக் குறிக்கும் அமீர் முஸ்ா என்ற தளபதி, கலீஃபா அப்துல் மலிக் என்பாரின் கட்டளையேற்று காரிய சாதனை புரிய காடுமலை கடந்து செல்கையில் நிகழும் அற்புதங்களையும் அனுபவங் களையும் விவரிப்பது. மனிதன் எந்தளவுக்கு சக்தியும் கீர்த்தியும் உடையவனாக இருந்தாலும் அவன் கடைசியில் ஜடமே, நடைப்பிணமே, மண்ணுக்குள் நசிந்து போகும் ஒரு படைப்பே என்ற தத்துவத்தை உணர்த்தும் புதினம்."
மானா மக்கீன் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரை ஜனரஞ்சகமாகப் பத்திரிகை வாசகர்களுக்காக எழுதப்

Page 41
62 - ിബങ്വേമ മZങ്ങ. മി பட்டதனாற்போலும், இலக்கிய மகாநாட்டில், (ஆய்வு ரீதியான முறையில் - அடிக்குறிப்புகள், மேற்கோள்கள், ஆதாரங்கள், இறுக்கமான உயர்மட்ட நடை) படிக்கப்பட வில்லை என்றறிகிறோம். ஆயினும் பொது வாசகர்கள் நலன் கருதி இக்கட்டுரையை "வள்ளல் ஹபீபு அரசர் வழித் தோன்றல் நாவுக்கரசன் அல்ஹாஜ் ஏ.ஜி.அஹமது றிஃபாய்' என்பவர் அன்பளிப்பாக வெளியிட்டு வைத்துள்ளார்.
மானா மக்கீனின் ஊக்கத்தை நாம் புறக்கணிக்க இயலாது.
0 0 0
எனக்கென்னவோ ஆர்.இராஜமய்யர் எழுதிய "கமலாம்பாள் சரித்திரம்" என்ற நூலைத் தான் திருப்தி தரும் முதல் நாவலாகக் கொள்ளலாம் போல் உணர வைக்கிறது. முன்னையவை நாவல் எழுத்துத்துறையில் சில ஆரம்ப முயற்சிகள் தான். கற்றறிந்தோர் என்ன சொல்வார்களோ தெரியாது.
0 0 ()
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்
இத்தலைப்பிலே தம்பு சிவா எனப்படும் த.சிவசுப்பிரமணியம் (முன்னர் வெளிவந்த 'கற்பகம்' ஏட்டின் ஆசிரியர்) ஒரு நூலை எழுதியிருக்கிறார். இதுவும் ஒருவித ஆய்வுதான். இங்கு முற்போக்கு' என்பது மார்க்சியச் சிந்தனைகளைக் குறிக்கிறது.

്.ബി.ക്രിക്രZZഞ്ച് - 63
வெள்ளவத்தை, இராஜசிங்க வீதி, 11 ஆம் இலக்க முகவரியிலிருந்து செயற்படும் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை இந்நூலை வெளியிட்டுள்ளது. பேராசிரியர் சபா ஜெயராசா, கலாநிதி வல்லிபுரம் மகேஸ்வரன் ஆகிய இருவரும் தமது எழுத்துக்கள் மூலம் இந்நூலைச் சிறப்பித்துள்ளார்கள். இருவருமே வித்தியாச மாகச் சிந்திக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். நூலாசிரியரும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். இவற்றை நீங்களே படித்துப்பாருங்கள்.
இரண்டு பாகங்கள். முதலாவதில் சரத்சந்திரர், தகழி சிவசங்கரம் பிள்ளை, கிஷன்சந்தர், மக்தூம், வல்லிக் கண்ணன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய இந்திய எழுத்தாளர்கள் பற்றி நூலாசிரியர் எழுதுகிறார். பல தகவல்களை நான் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆயினும், வல்லிக்கண்ணன், கல்யாணசுந்தரம் ஆகிய இருவரும், எம்மைப் போல முற்போக்குச் சிந்தனையுடையவர்களாய் இருந்தபோதிலும் கறாரான மார்க்சியவாதிகளா என்று எனக்கு ஐயமுண்டு. அமரர் வல்லிக்கண்ணனோடு 1960 களில் நான் கடிதத் தொடர்பு கொண்டிருந்தேன்.
அவரும் 'தம்பி சிவா போல் பரந்த நோக்கம் உடையவராக விளங்கினார். தம்பு சிவாவும் பாரபட்சம் இன்றி இலக்கியக் குறிப்புகளைப் பத்திரிகைகளில் எழுதி வருவது மெச்சத்தக்கது.

Page 42
64
ബര്മ്മഗു മZശ.മ பாகம் 02 இல், கைலாசபதி, பசுபதி, செ.கணேச லிங்கன், நீர்வை பொன்னையன், முகம்மது சமீம், சுபத்திரன் ஆகியோர் பற்றிய விபரங்கள் தரப்படுகின்றன. பசுபதி பற்றி முன்னர் நான் அறிந்திருக்கவில்லை. சுபத்திரன் 1940 பிற்பகுதியில் வெறுமனே தங்க வடிவேல்' என்று தான் அறிந்திருந்தேன். அவர்தான் சுபத்திரன் என்று சில வருடங்களுக்கு முன்தான் அறிந்து கொண்டேன்.
இதில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் என்ன வென்றால்,
புளியந்தீவு (மட்டக்களப்பு), ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில், எனது தந்தையாரின் வற்புறுத்தலின் பேரில் ஐந்தாம் வகுப்புவரை, தமிழ் மொழி மூலமே நான் எனது கல்வியை மேற்கொண்டேன். சைவப்புலவர் அருணாசல தேசிகர் தலைமை ஆசிரியர், சங்கீதப் பிரியர் நாகையா மாஸ்டர், சிறுகதை ஆசிரியர் சிவசுப்பிரமணியம், சைவப்புலவர் பொன்னுச்சாமி போன்றவர்கள் எல்லாம் ஆசிரியர்கள்.
பள்ளிக்கூடத்துக்குத் தொப்பி போட்டுத்தான் பெற்றோர் அனுப்பி வைப்பார்கள். அது நிலப்பிரபுத்துவ எச்சசொச்சப் பழக்கம். கொஞ்சம் நாகரிகமான, செல்வந்தப் பழக்க வழக்கம்.
அப்பள்ளிக்கூடத்தில் முரட்டுத்தனமான, கையில் தங்கக் காப்பு அணிந்த ஒரு பையனும் மேல் வகுப்பில் படித்து வந்தார். அவருக்கு ஏனோ என்னைப் பிடிப்பது இல்லை. துரத்தித் துரத்தி எனது தொப்பியைப் பறித்துக் காலால் உதைப்பார். எனது தலையில் தனது காப்பினால்

്.മര.ക്ഷിക്രമZങ്ങ് 65 கொட்டு கொட்டு என்று குட்டுவார். அவரை எதிர்த்து உடல் ரீதியாகப் போராட எனக்குச் சக்தியில்லாமல் போய் விட்டது. அந்தப் பையன் பெயர் தங்கவடிவேல். இது உண்மை,
சுபத்திரன் பற்றி தம்பு சிவா தரும் குறிப்புக்களைப் படித்த பின் இப்படியான கவிஞரிடம் நான் குட்டுப் பட்டது எனக்குத் தான் பெருமை என்று இப்பொழுது நினைத்துக் கொள்கிறேன்.
சுபத்திரன் கவிதைகள், இரத்தக் கடன்' ஆகியன இவரது கவிதைத் தொகுப்புகள் என்றறிகிறோம். படிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
சுபத்திரன், பசுபதி ஆகிய இருவரையும் தவிர, ஏனையவர்களுடன் நான் நட்பு கொண்டிருந்தேன். கைலாசபதி, கணேசலிங்கன், நீர்வை பொன்னையன் ஆகிய மூவரும் என்னைப் புரிந்தவர்கள். அன்பும் நட்பும் காட்டுபவர்கள். கைலாசபதி இளம் வயதிலேயே காலமாகியது எனது ஆய்வறிவுத்துறை நுகர்வுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. சமீம் அவர்கள் இன்று, இலங்கையில் 'அன்றைய மார்க்சிய' மூதறிஞராக விளங்குகிறார். அவரிடம் மரியாதையுண்டாயினும், அவ்வளவு நெருங்கிய பழக்கம் இல்லை.
எனவே, இந்த நூல் என்னைப் பொறுத்தமட்டில் பல தகவல்களைத் தரும் நூலாக அமைந்துள்ளது. உங்களுக்கும் இது பயனுடையதாக இருக்கும்.
(S)

Page 43
66
பி.எம்.മrഞ്ചufിഞ്ഞിര (25/6ia,6ir
இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலே தேடுதல் என்பதும் அவற்றைப் பதிவு செய்வதும் இன்றியமையாததாகி விட்டது. கணினி மூலம் உலகளாவிய இணைய தளத்திலும் தனிப்பட்டவர்களின் Blog களிலும் பல பதிவுகள் நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்டு வருவதனால் ஆய்வாளர்களுக்குப் பெரும் வசதியாய் அமைந்து விடுகிறது.இலங்கையிலும் நூலகம்"என்ற அமைப்பாளர்கள், ஈழத்து எழுத்தாளர்கள் நூல்களைப் பதிவு செய்து வைக்கிறார்கள். ஆயினும், சில செல்வாக்கு மிக்கவர்களின் விதப்புரைகள் நிமித்தமே நூலாகத்தினர் தமது பதிவுக்கு ஈழத்து எழுத்தாளர்களினைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள் போல் தெரிகிறது. இலக்கிய, கலை உலகங்களில் இருட்டடிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட இயல்புப்போக்கு போலும் முன்சொன்ன அமைப்பாளர்களை விட வேறும் ஓரிரு இணையதளங்கள் ஈழத்து எழுத்தாளர்கள் பற்றியும்

as. Azai.42eyazza? 67 படைப்புகள் பற்றியும் தகவல் கோரிப் பெற்ற பின்னரும் காரியம் எதுவும் நடைபெற வில்லை.
இந்த விதத்தில் தமிழ் இலக்கிய அறிஞர் ஜெமீல், முஸ்லிம் தமிழறிஞர்கள், படைப்புகள் தொடர்பான அரிய பணியைச் செய்து "ஆற்றுப்படை” என்ற வரிசையில் சில பதிவுகளைச் செய்துள்ளார். பாராட்டப்பட வேண்டிய
விசயமிது.
இந்தப் பணியை வேறு ஒரு பாங்கில் முஸ்லிம்
எழுத்தாளர்கள் தொடர்பாகவும் ஏனையவர்கள் தொடர்பாகவும் சிறுநூல்களாக மத்திய மாகாணத்திலுள்ள உடத்தலவின்ன என்ற இடத்திலிருந்து கலாபூஷணம் பி.எம்.புண்ணியாமீன் சில நூல்களை வெளியிட்டு வருகிறார்.
அவற்றுள்ளே இந்நூல்களில் சிலவும் அவருடைய சிந்தனை ஓட்டத்தின் வேறு சில வெளியீடுகளும் என்னிடம் இருக்கின்றன. இந்த நூல்களைப் பெற 0094812493746 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்க.
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 04 தொகுதி - 05, தொகதி - 06, முதலாம், இரண்டாம் பாகங்கள், நூல் தேட்டம், தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் (தொகுப்பு), நூல்தேட்டம் (ஆய்வு) நூல் தேட்டத்தில் கலாபூஷணம் பி.எம்.புண்ணியாமீன் (என்.செல்வராஜா) ஆகிய நூல்கள் படித்துப் பார்க்க வேண்டியவை.

Page 44
68 — ബബ്ബ് ബഞ്ച്, 0.
இவற்றுள்ளே சில தொடர்பாகச் சில குறிப்புகளை இங்க பார்ப்போம்.
என். செல்வராஜா, பி.எம்.புண்ணியாமீன் பற்றி எழுதிய புத்தகத்தை முதலில் எடுத்துக் கொள்வோம் என்.செல்வராஜா இலங்கையில் பிறந்த இங்கிலாந்து தமிழர் மூத்த நூலகவியலாளர். 1990-2006 காலப்பகுதியில் ஈழத்துத் தமிழ் நூல்களை இவர் ஆவணப்படுத்தி ஒவ்வொன்றிலும் ஆயிரம் நூல்களாக "நூல்தேட்டம் என்ற பெயரில் நான்கு தொகுதிகளை வெளியிட் டிருக்கிறார். இலங்கையில் வெளியான 150 சிறப்பு மலர்களின் விபரங்களைத் தொகுத்து சிறப்பு மலர்களுக் கான வழிகாட்டி (தொகுதி - 01) என்ற நூலை இவர் வெளியிட விருப்பப்படுவதாக அறிகிறோம்.
நூல் தேட்டம் (05 ஆவது தொகுதி) ஈழத் தமிழ் மக்களின் ஆங்கில நூல்களைப் பட்டியலிடுதல் போன்ற பணிகளிலும் இவர் ஈடுபடுவதாகவும் 2002 முதல் இலண்டன் IBC அனைத்துலக ஒலிபரப்புச் சேவையில் வாராந்த "காலைக்கலசம்" என்ற நிகழ்ச்சியை அளித்து வருகிறார் எனவும் தெரிய வருகிறது.
என்.செல்வராஜா நூலகத்துறை தொடர்பாகப் பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.
கனடாவில் 'தமிழர் தகவல்" சிறப்பு விருது இவருக்கு வழங்கப்பட்டது. "எழுத்தியல் வித்தகர்" என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது. தற்சமயம் அரியபணியைத் தமிழ் பேசும் மக்களுக்காகச் செய்து வரும் என்.செல்வராஜாபிரித்தானியாவின் தபால்துறை

,676, ക്രീബക്രZZമ് 69
அந்நிய நாணயப் பிரிவின் உயர் அதிகாரியாகத் தொழில் பார்க்கிறார். அவருக்குப் பாராட்டுக்கள்.
பி.எம்.புண்ணியாமீன் அடக்க ஒடுக்கமாகப் பின்னணியில் சஞ்சரிப்பதனால் அவரைப் பற்றியோ பல்துறைகள் தொடர்பாக 1979 முதல் இற்றை வரை அவர் எழுதியுள்ள நூற்றுக்கணக்கான நூல்களைப் பற்றியோ ாம் அதிகம் அறிந்திலோம். இன்று 200 க்கும் அதிகமான நூல்களை வெளியிட்டு மலையகத்தின் முன்னணிப் பதிப்பாளராகத் திகழ்கிறார். அவருடைய "சிந்தனை வட்ட”த்திலே துணைவியார் மஸிதாவும், மகன் சஜீர் அஹமட்டும் இணைந்திருப்பதாக அறிகிறோம்.
புண்ணியாமீனுக்கு 46 வயது. இவர் தனது நூல்கள் மாத்திரமன்றி பிற முஸ்லிம், தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. இஸ்லாமிய எழுத்தாளர்களின் பெயர்களை அறிந்து கொள்ள இந்த நூலின் 109 ஆம் பக்கத்தைப் பார்க்கவும்.
புண்ணியாமீனின் கணக்கெடுப்பின்படி 4,350 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் எழுத்தாளர்கள், 19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலிருந்து இற்றைவரை கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நூல் தேட்டம்' நூலாசிரியர் என்.செல்வராஜாவின் அரிய மகத்தான பணிகளை புண்ணியாமீன், இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டிய தொரு பெருநதி" என்ற நூலில் விபரிக்கிறார்.
0 0 () 'ffl') !

Page 45
ፖ0 ബങ്ങിങ്ങ്സ്മ മZയേ. മ9
அடுத்த புத்தகம் ஒரு தொகுப்பு நூல். "தமிழ் - முஸ்லிம் இன உறவுகள்"இங்கிலாந்திலிருந்து வெளிவரும் "தேசம்" என்ற இதழின் சிறப்பு மலர் இது.
தமிழ் - முஸ்லிம் நல்லுறவுகளை வெளிப்படுத்த,
பின்வருபவை கருத்திற்கெடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென புண்ணியாமீன் குறிப்பிடுகிறார். மதத் தலைமைகள், அரசியல் தலைமைத்துவங்கள், தேசிய கல்விக் கொள்கை மூலம் இன உறவுகளை வலுவடையச் செய்தல், ஊடகத்துறை ஆசிரியரின் கூற்றுப்படி "நிச்சயமாக ஓர் இனத்தின் துயர் பற்றி இன்னொரு இனம் சிந்திக்கத் தொடங்குமிடத்து அங்கேதான் உண்மையான இன உறவு ஆரம்பமாகின்றது." இந்தப் புத்தகத்துக்கு "தேசம்' ஆசிரியர் த.ஜெயபாலன் முன்னுரை எழுதி இருக்கிறார்.
எஸ்.பாலச்சந்திரன், சேனன், எஸ்.எம்.எம்.பவர், நிஸ்தார் மொஹமட், த.ஜெயபாலன், பேராசிரியர் ஜலால்தீன், எஸ்.ஆர்.நிஸ்தார், எஸ்.எல்.எம்.பாருக், ச.முருகையா, விமல் குழந்தைவேல், ஆசா மொஹமட், கலாநிதி எம்.வை.எம்.சித்தீக் ஆகியோர் எழுதிய கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
"இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடக வியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு"முதல் இரு பாகங்களும் இவற்றைக் கூறுகின்றன. "முஸ்லிம்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வந்த பழைமை வாய்ந்த கல்வி, கலாசார இலக்கிய மரபுகளின் போக்குகள் 19 ஆம்

്.ത്സു, ക്രിക്രമZങ്ങ് 77 நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் படிப்படி யாக மாற்றமுறத் தொடங்கின. குறிப்பாக அக்கால கட்டத்தில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்புகளை நான்கு கட்டங்களாக வகுத்து ஆராயலாம்.
அரபுத்தமிழ் - இலக்கிய வடிவங்கள், இஸ்லாமிய தமிழ்மொழி இலக்கிய வடிவங்கள், இஸ்லாமிய சிங்கள மொழி இலக்கிய வடிவங்கள், அரபு இலக்கிய வடிவங்கள்.
முதலாவது பாகத்திலே இலக்கியவாதிகளை படைப்பிலக்கியம் (சிறுகதை, கவிதை, நாவல், நாடகம், ஏனையவை), கட்டுரை (அரசியல், சமூகம், உலக அரங்கு, விமர்சனம், ஏனையவை) என்னும் தலைப்புகளில் தகவல்கள் தருகிறார்.
ஊடகவியலாளர்கள் என்ற தலைப்பிலே செய்திப் பத்திரிகை (ஆசிரியர்கள், செய்தியாளர்கள், புகைப்படம், ஏனையவை), சஞ்சிகை (ஆசிரியர்கள், செய்தியாளர்கள், செய்திக் கட்டுரையாளர்கள், ஏனையவை) என்ற தலைப்புகளில் தருகிறார்.
அல்ஹாஜ் எம்.பி.எம். அஸ்ஹர் (நவமணி பிரதம ஆசிரியர்) எண்ணக்கருத்துகள் என்ற தலைப்பிலே நிறைய விபரங்களைத் தருகிறார்.
இந்தப் பாகத்தில் ஏ.யூ.எம்.ஏ.கரீம் முதல்
கே.எம்.எம்.இக்பால் வரை 36 பேரின் விபரங்கள் அறிமுகமாகின்றன.

Page 46
72 ിജ്ഞ/ഞ്ച്ബഗ്ഗ് Zങ്ങ. മി
இரண்டாம் பாகத்தில் 40 பேரின் விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புண்ணியாமீன் கூறுகிறார் :
"நான் சார்ந்த துறைகள் என்பதினால் எழுத்துத் துறை, ஊடகத்துறை, கலைத்துறை சார்ந்த துறைகளில் மட்டுமே இத்தகைய ஆய்வினை என்னால் மேற்கொள்ள முடிந்தது. ஆனால், இலங்கை மண்ணில் முஸ்லிம்கள் ஆற்றியுள்ள சேவைகள் விசாலமானவை. அரசியல், விளையாட்டு, பாதுகாப்பு, பொருளாதாரம், வைத்தியம், கட்டடக்கலை என்று ஒவ்வொரு துறைகளிலும் முஸ்லிம்களின் சாதனைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், துரதிஷ்டம் அவை பற்றிய பதிவுகள் பேணப்படவில்லை."
இந்தப் பாகத்தில் எம்.பி.எம். அஸ்ஹர் முதல் எஸ்.எஸ்.பரிட் வரையிலுமான விபரங்கள் தரப்பட்
டுள்ளன.
பி.எம்.புண்ணியாமீன் அஸ்ஹர் பற்றி எழுதிய விபரங்களைப் படித்து பல விடயங்களை அறிந்து கொண்டாலும் அவர் விட்ட வரலாற்றுப் பதிவுத்துறைத் தவறை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அது என்ன?
18ஆம் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"எம்.பி.எம். அஸ்ஹர் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு 1996 - 10 - 19இல் நவமணி எனும் பெயரில் முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பேண ஒரு தேசியப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது."

.ണ്.ീഖക്രമ7ങ്ങ്-ത്ത 73
இதில் வேடிக்கை என்னவென்றால், ஜனாப்அஸ்ஹரின் வண்டுகோளுக்கிணங்கவே, கே.எஸ்.சிவகுமாரன் ான்ற இந்தப் பத்தி எழுத்தாளர் "நவமணி"யின் ஸ்தாபகப் பிரதம ஆசிரியராகப் பணி புரிந்தார் என்பதாகும். இதை முடி மறைக்க முடியாது. ஏனெனில், அண்மையில் கவிஞர் ஜின்னாஹ்வின்நூல் வெளியீட்டில் அஸ்ஹர் அவர்களே அப்பத்திரிகையின் முதலாவது பிரதம ஆசிரியர் அடியேனே என்பதைப் பகிரங்கமாக எடுத்துக் கூறினார். அவருக்கு எனது நன்றி.
ஏன் இந்த இருட்டடிப்புகள்?
வீரகேசரி நாளிதழின் தினசரி, வாரப் பதிப்புகளின் இணை ஆசிரியராக (Associate Editor) நான் தேர்ந்தெடுக்கப் பட்டுச் சில மாதங்கள் பணி புரிந்தமை பற்றியும் இருட்டடிப்புகள் இருக்கின்றன. மதியார் தலைவாசலை மிதிக்க வேண்டாம் என்று தான் அப்பத்திரிகை ஆசிரியரிடமிருந்து அவசர அவசரமாக நான் விடை
ற்றேன் என்பதும் பலருக்குத் தெரியாது.
() () ()
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி - 03 எனக்குக் டைக்கவில்லை. அதிலே கல்முனை முபாரக் முதல் அரபு பம்மா வரையுமான எழுத்தாளர்களின் விபரங்கள் அடங்கியதாக அறிகிறேன்.
தொகுதி 04 இல் இலங்கையில் பிறந்து ஐரோப்பிய ாடுகளின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவுபவர்களின்

Page 47
ፖ4 ി/മീബഗ്ഗ് (Zഞ്ച. 0.
விபரங்கள் காணப்படுகின்றன. "புலம் பெயர்ந்த இலக்கியம்" என்ற சொற்றொடர், "விமர்சனம்" என்று சொல்லுக்குப் போல எனக்கு Alergy யை உண்டு பண்ணுவது.
இந்தத் தொகுதியில் ஜேர்மனியிலுள்ளவர்கள் பற்றிய விபரங்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கின்றன என்.செல்வராஜா முதல் ரமேஷ் வேதநாயகம் வரையிலு மான 25 பேரின் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
தொகுதி - 5இல் அஷ்ரப் ஏ.ஸ்மத் முதுல் ஏ.எம்.எம் அத்தாஸ் வரையிலுமான 18 பேரின் விபரங்கள் இடம் பெறுகின்றன.
தொகுதி 06 இல் மர்ஹ9ம் எம்.எம்.சாலிஹ் (புரட்சிக்கமால்) முதல் மர்ஹ9ம் எம்.வி.பீர்மொஹமட் வரையிலுமான 13 பேரின் விபரங்கள் இருக்கின்றன.
இத்தொடரிலே கடைசியாக எனக்குக் கிடைத்த
நூல் தொகுதி 07ஆகும். இது இந்த ஆண்டு பெப்ரவரியில் வெளியாகியிருக்கிறது.
இந்தத் தொகுதியிலே நயீமா சித்திக் முதல் எம்.எம்.கலீல் வரையிலுமான 30 பேரின் விபரங்கள் அடங்குகின்றன.
புண்ணியாமீன் கூறுகிறார். "இதுவரை பதிவுக்குட் படாத இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களும் தனது விபரங்களை எனக்கு அனுப்பி வைத்தால் தொடர்ந்து வரும் தொகுதிகளில் சேர்த்துக் கொள்ள முடியும்."

ச.என்.சிவகுமாரன் - 75
அவருடைய முகவரி 14 உடத்தலவின்னமடிகே, படத்தலவின்ன. தொலைபேசி 0094 81 - 2493746.
கலாபூஷணம் பி.எம்.புண்ணியாமீன் சீரிய பணியைச் செய்வதன் மூலம் பதிவுகளைப் பிற்காலச் சந்ததியினரும் அறிந்து கொள்ள வகை செய்திருக்கிறார். இவர் வெளிநாடு களிலுள்ள ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் விபரங்களையும் சேர்த்துக் கொள்ள முனைகிறார். இலங்கையில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறாறாயினும் அந்த விபரங்களை எழுத்தாளர்களே தொகுத்து வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போல் தெரிகிறது. இந்த அடிப்படையிலோ என்னவோ எனக்கும் கடிதமெதுவுமின்றி வெறும் படிவம் ஒன்று செவகுமார்” என்ற பெயரில் நண்பர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோனின் முகவரிக்கு வந்தது. அதை நண்பர் என்னிடம் ஒப்படைத்தார்.
கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக கே.எஸ்.சிவ குமாரன் என்ற பெயரில் எழுதிவரும் எனது பெயரைக் கூட நண்பர் புண்ணியாமீனின் சிந்தனை வட்டத்தினர் அறிந்து வைத்திருக்கவில்லை என்பதையறிந்து மனம் சங்கடப்படுகிறது. இது தான் இன்றைய இளைய பரம்பரையினரின் தேடல் முயற்சிகள். பக்கச்சார்வும் இருட்டடிப்பும் தவிர்க்கப்பட்டால்தான் பதிவுகள்
முழுமையானவையாக அமையும்.
D_ܢܓܠC)

Page 48
76
A. 9 A. 2写@l ሥpመፊò“” መ€oneሡ”
626.2//ia7625/2
ழத்திலே, ஈழத்துப் பூதந்தேவனார் முதல் இற்றை வரை சிறந்த புலவர்களும் கவிஞர்களும் இருந்து வந்திருக்கிறார்கள்; வருகிறார்கள். அவ்வாறு சிறப்பு இல்லாதவர்களும் எழுதி வந்திருக்கிறார்கள். வருகிறார்கள் ஈழத்துக் கவிஞர்கள் தொடர்பான தொகுப்புகள் முன்னரும் வெளிவந்தன. கவிதைக்கான சிறப்பிதழ்கள் வரதர் தொடக்கும் அஷ்ரப் சிஹாப்தீன் வரை இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து வெளிவந்துள்ளன. இவற்றுள்ளே அக்னி, யாத்ரா', 'நோக்கு’ ‘தேன்மொழி போன்றவை குறிப்பிடத்தக்கன.
இந்த 等 ண்டில் கவிதை, பாடல் சம்பந்தமான இரண்டு நூல்கள் வெளியாகின. குறைபாடுகளுடன் இவை

ச.எஸ்.சிவகுமாரன் - 77
வெளிவந்தாலும் (உதாரணமாக சில கவிஞர்களும் புலவர்களும் விடுபட்டுப் போனமை) இவற்றைத் தொகுத்தவர்களின் அரிய, பாரிய முயற்சியைப் பாராட்டாமல் விடலாமோ?
நம்மில் பல 'விமர்சகர்கள் தாங்களே ஒன்றும் முன்னின்று செய்யவும் மாட்டார்கள், மற்றவர் செய்ப வற்றை ஊக்குவிக்கவும் மாட்டார்கள். அவர்களுடைய செயற்பாடு வெறும் கண்டனமே"
இக்கட்டுரையில் 'பத்தி எழுத்தின் வரையறைகளுக் கிணங்க சில அவதானிப்புகளை உங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன். நம்மில் சிலர் Observations என்பதனை அவதானங்கள்' (Caution) என்று தவறாகப் பொருள் கொண்டு பிரயோகிக்கின்றனர்.
நமது அவதானிப்புகளுக்கு எடுத்துக்கொண்ட நூல்களாவன தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம் வெளியிட்ட "இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்து தமிழ் புலவர் வரலாறு முதலாம் பாகம்" என்ற நூலும் "20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்" என்ற நூலும் ஆகும். இதனைத் தொகுத்தவர்கள் முறையே கலாபூஷணம் பண்டிதர் சிஅப்புத்துரை (80ஆவது பிறந்த நாள் வெளியீடு)யும் இலங்கை பூபாலசிங்கம் புத்தக சாலை வைரவிழா வெளியீட்டின் தொகுப்பாசிரியர் பூரீபிரசாத்தனுமாவர்.

Page 49
ፖ8
ിZങ്ങീബഗ്ഗ് (Zങ്ങ. മി முதலிலே 'புலவர் வரலாறு' பற்றிப் பார்ப்போம். இலங்கையிலே சென்ற நூற்றாண்டில் 50க்கும் மேற் பட்ட புலவர்கள் வாழ்ந்திருக்கக் கூடும். ஆயினும் தனது பாரிய தேடல் முயற்சிகளின் பயனாக ஐம்பது புலவர்கள் பற்றி மாத்திரமே தொகுப்பாசிரியர் தர முடிந்துள்ளது. எனினும், இது பாராட்டும்படியான செயலாகும்.
ஆய்வாளர்களின் நலன் கருதி, குறிப்பாகப் பல்கலைக்கழக மாணவர்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த 50 பேரின் பெயர்களை நாம் இங்கு பதிவு செய்துகொள்வோம். இ வசதியின்மை கருதி இவர்கள் வாழ்ந்த காலத்தைத் தவிர்த்து, இவர்கள் பெயர்களை மாத்திரம் இங்கு தருகின்றேன்.
உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் சி.வை.தாமோதரம் பிள்ளை, வடகோவை சபாபதி நாவலர், உரையாசிரியர் ம.க.கதிரவேற்பிள்ளை, ஊரெழு.சு.சரவணமுத்துப்பிள்ளை, காசிவாசி செந்திநாத ஐயர், வல்வை வயித்தியலிங்கம் பிள்ளை, புலவர் வே.அகிலேசபிள்ளை, அம்பலவாண நாவலர், சுன்னாகம் அ.குமாரசாமிப் புலவர், வித்துவான் சபூபாலபிள்ளை, கொக்குவில் சபாரத்தின முதலியார் வேலணைப் பேரம்பலம் புலவர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, அச்சுவேலி வேன்மயில்வாகனப் புலவர் அருள் வாக்கி அப்துல் காதிறுப் புலவர், பாவலர் தெ.அ.துரையப்பா பிள்ளை, பன்னாலை வித்துவான் சிவானந்த ஐயர், க.மயில்வாகனப் புலவர், சின்னவப்புலவர்

கரன், சிவகுமாரன் 79 ாணிக்கத் தியாகராசப் பண்டிதர், வண்ணைச் செல்லையா, வித்துவ சிரோமணி சி.கணேசையர், புலோலியூர் வயித்திலிங்க தேசிகர், முகாந்திரம்
தாசிவஐயர்.
முத்துக்குமார ஆசாரிய சுவாமிகள், மாவை நவநீத ருஷ்ண பாரதியார், சி.குமாரசுவாமி ஐயர், வித்துவான் அசரவணமுத்து, செய்கு அலாவுதீன் புலவர், குருகவி மகாலிங்க சிவம், நயினை வரகவி நாகமணிப் புலவர், ம்பிலுவி உவிலியம் பிள்ளை, சுவாமி விபுலானந்த
டிகளார், முதுத் தமிழ்ப் புலவர் மு.நல்ல தம்பி
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, புலவர்மணி, பெரியதம்பிப்பிள்ளை, கவிஞர் எம்.எம்.லெப்பை, கந்த கேசனார், சிவங்கருணாலய பாண்டியனார், தவத்திரு வடிவேற் சுவாமிகள், பண்டிதர் வ.நடராசா, இலக்கண வித்தகர் இ.நமசிவாய தேசிகர், இலக்கிய கலாநிதி மு.கந்தையா, வித்துவான் க.வேந்தனார், பண்டிதர் பி.சி.கந்தையா, செல்லையா கதிரேசர் பிள்ளை, வித்துவான் இதிருநாவுக்கரசு கலாநிதி க.சொக்கலிங்கம், நீலாவணன் ான்னும் சின்னத்துரை.
விடுபட்டுப் போன புலவர்களும், கவிஞர்களும் ஒரு புறமிருக்க, தொகுப்பாசிரியர் இந்த வரலாற்றை எவ்வாறு ருகிறார் என்று பார்த்தால், அவர் வெறுமனே புலவர்களின் ரிதைகளை மாத்திரம் கூறாது, திறனாய்வு சார்ந்த குறிப்புகளையும் தந்து எழுதுவது அவதானிக்கத்தக்கது.

Page 50
ീ0 - 6ിബങ്വേ മzഞ്ച. 0.
முன்பின் நான் அறிந்திராத சில செய்திகளை இந்த நூல் மூலம் கற்றுக் கொண்டேன். உதாரணமாக தம்பிலுவில் உவிலியம் பிள்ளை (1891 - 1961) இந்திரபுரி இரகசியம்', 'மஞ்சட் பூதம்' என்ற நாவல்களையும் எழுதியிருப்பதைக் குறிப்பிடலாம்.
அதேபோல, சென்னை பச்சையப்பன் கல்லூரியினரின் சொல்லாக்கக் குழுவினருடனாகிய பன்னிராயிரஞ் சொற்களுக்கு மேல் (விபுலாநந்த அடிகள்) தமிழில் வடித்தெடுத்தார்" என்ற கூற்றையும் அவதானித்தல் வேண்டும்.
எழுத்துப் பிழையின்றி, நல்ல காகிதத்தில் தெளிவாக அச்சிடப்பட்டு 280 பக்கங்களைக் கொண்டு வெளியாகி இருக்கும் இந்நூலுக்கு நூலாசிரியர் சாந்தி நாவுக்கரசன், கோகிலா மகேந்திரன், உடுவை எஸ்.தில்லை நடராசா ஆகியோர் எழுதியவற்றிலிருந்து நூலாசிரியரின் சிறப்புகளை நாம் அறிந்து கொள்கிறோம் பத்தினியம்மா திலகநாயகம், செ.சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பாடல்களும் பூணூரிரங்கன் அப்புத்துை அவர்களை அறிந்து கொள்ள உதவுகின்றன. நூலாசிரிய 1964 முதல் எழுதிய நுல்களின் பெயர்களும் அவரைப் பற்றிய ஆய்வுகளின் விபரமும் தரப்பட்டை ஆய்வாளர்களுக்கு உதவும்.
முன்னைய புத்தகம் ஈழத்துப் புலவர்கள் சில பற்றிய தகவல்களைத் தந்தது. பின்னைய புத்தகமே நமது கவிஞர்கள் பலரின் தேர்ந்தெடுத்த சில கவிதைகை

கரன்,சிவகுமாரன் -ண 87
உள்ளடக்குகிறது. இப்புத்தகத்திற்குள் (544 பக்கங்கள்) ாம் நுழையுமுன் அதன் வடிவமைப்பு (மதி புஷ்பா) அச்சுப்பதிவு சித்திரங்களும் மனதைக் கவருகின்றன.
மகாகவி உருத்திரமூர்த்தி (அமரர்) அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இந்த நூலிலே பா.அகிலன் முதல் ஹம்சத்வதனி வரையிலுமுள்ள கவிஞர்கள் சிலரின் படைப்புகள் தொகுப்பாளரின் இரசனைக்கேற்ப சேர்க்கப்பட்டுள்ளன. இன்னொரு தொகுப்பாளர் வேறு சில கவிஞர்களையும் கவிதைகளையும் இந்நூலில் சேர்க்கவும் கூடும். அது அது அவரவர் இரசனையைப் பொறுத்தது. இது இயல்பே.
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துக் 'கவிஞர்களின் தொகை ஏராளம், ஏராளம். கவிதை என்ற பெயரில் வசனச் சுலோகங்களையும் கூற்றுகளையும் எந்தவித ஆக்கத் திறமையுமின்றி வரிகளைக் கிறுக்குவர்களும் தம்மை கவிஞர் என்றே நினைத்து எழுதுவது சில வேளைகளில் என்னிடையே நகைப்பை ஏற்படுத்துவதுண்டு.
தொகுப்பாளர் மொழியியல் துறையில் ஒரு விரிவுரையாளர். அது காரணமாக மொழியின் பயன் பாட்டையும் கவிதையில் அது செயற்படும் விதத்தையும் நன்கறிந்தவர். இலக்கியப் புலமையும், இரசனையும் உடையவர்.நல்லதோர் கவிஞர், பேச்சாளர் விரிவுரையாளர். ரீ பிரசாந்தன் மேடையில் தருக்கரீதியாகப் பேசுவதை யிட்டு இந்த இளைஞர்கள் எல்லோரும் எவ்வாறு வியத்தகு முறையில் பயிற்சி பெற்று நெறிப்படுத்தப்பட்ட

Page 51
82 — ി/മീബഗ്ഗ് (Zങ്ങ. മ
முறையில் தமது ஆற்றல்களை ஆற்றுப்படுகின்றனர் என்று நான் வியந்து போவதுண்டு.
முன்னைய நூல்கள் தொடர்பாக எழுதும் பொழுது நமது பழைய புலவர்களின் பெயர்களைக் கூட நாம் அறிந்திராத நிலையில் அந்த 50 பேரின் பெயர்களையும் மேலே தந்தேன். ஆனால், இந்தப் புத்தகத்தில் வரும் பெயர்களைத் தரும் உத்தேசம் எனக்கில்லை. ஏனெனில், இவர்களுள் பலர் நம்மிடையே தொடர்ந்து வாழும் கவிஞர்களாவர். எனவே, இவர்கள் பெயர்கள் வாசகரிடத்தில் பிரபல்யம் பெற்றிருக்கலாம்.
இருந்த பொழுதும் சிலரின் கவிதைகளை முன்னர் படித்த நினைவு எனக்கில்லை. நான் படித்திராத கவிதைகளை எழுதியவர்கள் இவர்கள் தாம்.
பாஅகிலன், அம்புலி, அமுதமொழியன், அழகசுந்தர தேசிகர், க.ஆதவன், இயல்வாணன், கருணானந்தராஜா, கற்சுறா, கறுப்புக் கவிஞன், சங்கரி, க.சச்சிதானந்தன், சஞ்சதன், ந.சத்தியபாலன், சந்திரபோஸ் சுதாகர், செ.பொ.சிவனேசு, சுகன், சுதாமதி, செல்வம் அருளானந்தம், தம்பா, திருமாவளவன், நிலாந்தன், வீபரந்தாமன், பளை கோகுலராகவன், பஹிமா ஜஹான், தா.பலகணேசன், ச.மணிமாறன், மஜித், ச.முகுந்தன், ஆர்.முரளிஸ்வரன், இ.யதார்த்தன், வாழைச்சேனை அமர், வானதி, கோறுஷாங்கன், த.ஜெயசீலன்.
இவர்கள் கவிதைகள் எங்கு வெளியாகின என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை நான் அதிகம்

1,676, ക്രിക്രZZമ് 83
ாசிக்காத தமிழ்நாட்டுச் சிற்றேடுகளில் அல்லது வடபுலப் புதினத் தாள்களில் இவர்கள் எழுதினார்களோ தெரிய வில்லை.
எனவே, மேற்சொன்னவர்களின் கவிதைகளில் சில இந்நூல் மூலம் படித்த பொழுது பரவசமடைந்தேன்.
நான் இரசித்த கவிதைகள் சிலவற்றின் தலைப்புகள்: உன்னுடைய மற்றும் என்னுடைய கிராமங்களின் மீதொரு பாடல், எல்லாமே அந்நியமானதாய், ஓர் அகதி, விண்ணப்பம், முகங்களும் திரைகளும், ஈரம் சொட்டும் காதல், இருள், தத்துவத்தின் தொடக்கம், பதில் ஆசைக்குச் சாதியில்லை, நிறமற்றுப் போன கதைகள், கிறான் மரமும் ளுெவை வேலியும், இடையில் ஒரு நாள், வேலி, அவர்களுடைய இரவு, வில்லூன்றி மயானம், பேய் தின்ற பழங்கள், ஊடல் 2 வகை, நீரை மீட்பு, பாவலரே, செத்த நாள், இன்று நான் பெரிய பெண், உயிர் வெளி, உயிர்கூவும் அங்கே, நீர் வளையங்கள், சந்தியிலே நிற்கிறேன், ஒரு மானுடன் பாடிய பாட்டு, காலம் கலவிக்கிளி, இலையுதிர் கால அரசியல் நினைவுகள், எரிந்த நிலத்தில் படரும் என்வேர், மீளாத பொழுதுகள், நிலவும் நானும், ஜே.யுடனான உறவு முறிந்து மூன்று நிமிடங்களாகின்றன, ஆடு கதறியது, அந்த வெல்வெட்டுப் பறவை, இனிக்கும் இரவும் புளிக்கும் பகலும், பசுந்தரை, விதைப்பு, நவீன விமர்சகர், நடக்காது அந்த நயவஞ்சகம், மண் பட்டினங்கள், குமையும் குயில், உலகப் பரப்பின்
ஒவ்வொரு கணமும்,

Page 52
84. H 62-76.27arzai 62//av... O
ஆண்பாற் கைக்கிளை, மணி வயிற்றினில் புரளுது அக்கினி, பாலாய் நிலவு பொழிகிறது, அழகான ஒரு சோடிக் கண்கள், இந்தளவே தான் நான், நாளை வருவான் ஒரு மனிதன், முன்னிரவின் மோனம், மீண்டும் தொடங்கும் மிடுக்கு, அகலிகை, தேரும் திங்களும், புள்ளி அளவில் ஒரு பூச்சி, முட் கம்பி விடுதூது, இரண்டாயிரம் ஆண்டு பழைய சுமை எங்களுக்கு, சொல், பொருள், அறியப் படாதவர்கள், நினைவாக, தமிழ்த் தாகம், முல்லையும் பூத்தியோ, நாளாந்தம், இலையுதிர்காலத் தேய்பொழுதில், வீழ்ச்சி, கவிஞன், காவு கொள்ளப்பட்ட வாழ்வு, இன்னும் ஒரு வேறு நாள், வளர்ந்தோர்க்கு மட்டும், இலையுதிர்கால நினைவுகள், முதற்காதல், நமக்கென்றோர் புல்வெளி, பாலி ஆறு நகர்கிறது, தொலைத்தல்.
இந்த நூலிலே 42 பக்கங்களில் ஒரு நீண்ட ஈழத்துக் கவிதை வரலாற்றுக் கட்டுரையைத் தொகுப்பாசிரியர் பூனரீபிரசாந்தன் தந்திருக்கிறார். மிகவும் பிரயோசனமான
LITssao6)I.
நிற்க; நானும் சில கவிதைகளைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். சில கவிதைகளை ஆங்கில மொழி மூலம் அறிந்து தமிழில் தந்திருக்கிறேன். ஈழத்துக் கவிதைத் தொகுப்புகள் பற்றிய திறனாய்வு சார்ந்த மதிப்புரைகளையும் எழுதியிருக்கிறேன். இவற்றை யெல்லாம் பூரீபிரசாந்தன் அறிந்திராதது அவர் பிழையாகாது. நான் தான் இவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டு அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆகட்டும் பார்க்கலாம்.

85
mutazárado இஸ்லாமியர்፵”6ríflaðir
தவிதை நூல்க7ெ
Pழத்திலே தமிழ் மொழியில் எழுதும் நான்கு இஸ்லாமியர்களின் கவிதை நூல்கள் தொடர்பான மனப்பதிவுகள் இங்கு தரப்படுகின்றன. ஆயினும், வற்றுள் ஒரு நூலைத் தவிர, ஏனையவை இஸ்லாமியச் ார்புடையவை அல்ல. அப்படியாயின், ஏன் இஸ்லாமிய எழுத்தாளர்கள் என்றழைக்கிறீர் என நீங்கள் கேட்கலாம். இந்த எழுத்தாளர்கள் அனைவரும் மதத்தால் இஸ்லாமியர்களாயினும், உணர்வால், தமிழ் மொழிப் பற்றுள்ளவர்கள் என்பதனாலும், முஸ்லிம்' என்பது பொதுவாக உலகளாவிய விதத்தில் இஸ்லாம் மதத்தைத் தழுவிய ஒரு முழுச் சமூகத்தைக் குறிப்பதனாலும், நமது தமிழ் மொழியில் எழுதும் முஸ்லிம்களை இஸ்லாமியர்' என அழைப்பது என்னளவில் வசதியாயிருக்கிறது.
நான்கு புத்தகங்கள் ஒரே சீரில் இங்கு எடுத்துக் கூறப்படுவதனால், இப்பத்தியின் வரையறைகளுக்குள் ஒவ்வொன்று பற்றியும் விரிவாகவொன்றும் கூற முடியாது

Page 53
86 ബര്ബ് മZങ്ങ. മി
இருக்கிறது. ஆயினும், அடிப்படைச் சிறப்புகள் நூல்நயம் என்ற தோரணையில் சுருக்கமாகத் தெரிவிக்கப்படுகிறது.
எடுத்துக்கொண்ட நூல்களாவன : 1. திரு நபி காவியம் (ஜின்னாஹ் ஷரிபுத்தீன், 16
ஸ்கூல் அவென்யூ, ஸ்டேஷன் வீதி வழியாக தெஹிவளை)
2. குடையும் அடை மழையும் (கிண்ணியா ஏ.எம்.எம்.அலி, ஹாஜரா வெளியீட்டகம், கிண்னியா - 05) 3. இருத்தலுக்கான அழைப்பு (முல்லை முஸ்ரிபா - மஃரிபா மஃஸ"ர், முல்லை இல்லம், பிரதான வீதி, பெருக்குவற்றான், கொத்தாதீவு) 4. திண்ணைக் கவிதைகள் (டீன்கபூர், 362 A3,
ஹாஜியார் வீதி, மருதமுனை) மேற்சொன்ன கவிஞர்களில் மூவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வட மாகாணத்தைச் சேர்ந்தவர்.
0 0 0
ஜின்னாஹ் ஷரிபுத்தீன், மருதமுனை மறைந்த புலவர் மணி ஆ.மு.ஷெரிபுத்தீன் அவர்களுடைய மகன்களுள் புகழ்பூத்த ஒருவர். புனைகதை, கவிதை, மரபுச் செய்யுள் ஆகிய இலக்கிய வடிவங்களுடன், சிறு காப்பியங்களையும் (ஆறு படைப்புக்கள்) தந்திருக்கிறார்.
முகம்மது நபி அவர்களின் வாழ்க்கையையும், அப்பெருமானாரின் செய்தியையும், தமிழ் காப்பிய மரபில், சொல்லின்பம் தரும் விதத்தில் அண்மையில் தந்திருக்கிறார்.

ീ.ബി.കീത്രZZഞ്ച് 87 ggll uppij, gly 603T60. LouflCay (Daily Mirror, May 17, 2007) ஆங்கிலத்தில் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறேன்.
"யாத்ரா" என்ற தாக்கமுடைய கவிதை இதழை வெளிக்கொணரும் அஷ்ரப் சஹாப்தீன் (ஆய்வாளரும் கவிஞருங்கூட) அதிக பரபரப்பின்றி செட்டாகத்திறனாய்வு செய்யும் ஒரு கவிஞர். அவர் கவிஞர் ஜின்னாஹ்வை இனங்கண்ட விதம் கவனத்திற்குரியது.
"ஒவ்வாத ஒதுக்குதல், ஒரு நேர்மையான படைப்பாளிக்கே உரிய சினம், உறுதியான - நேரான பேச்சு, ஒரு தாயின் பரிவு, விசாலித்தமான நட்பு, உச்சக் கட்ட உபசரிப்பு, எளிமையான வாழ்க்கை - இவை ஜின்னாவிடம் நான் கண்ட பண்புகள்"
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய நூல்கள் எவை?
பாலையில் வசந்தம், முத்துநகை, பனிமலையில் பூபாளம், மஹ்ஜலின் காவியம், புனித பூமியிலே காவியம், பிரளயம் கண்ட பிதா, தாய்க்கென வாழ்ந்த தனயன், பண்டார வன்னியன் காவியம், பெற்ற மனம் சிறுகதைத் தொகுதி, கருகாத பசுமை நாவல், திரு நபி காவியம்.
"திரு நபி காவியம்" பழைய தமிழ்க் காப்பியங்கள் போன்று காப்பு, அவையடக்கம், நூல் முகம் என்று ஆரம்பித்து, சூழல் முதல் எடுத்துக் கொண்ட பொருள் தொடர்பாக ஒசைச்சிறப்புடன் புனித நபி அவர்களின் சரிதமும் சிறப்பும் சொல்லப்படுகின்றன.

Page 54
88
6ിZങ്ങ്ബ് (Zങ്ങ. മി பழைய கவிதை வடிவங்கள் தொடர்ந்தும் பயன் படுத்தப்பட வேண்டும் என்ற கவிஞரின் முயற்சி, கவிதை என்ற முறையிலும் பயனளித்திருக்கிறது. மரபுக் கவிஞர் களும் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் இந்நூலைப் பகுப்பாய்வு செய்வது பயனுடைத்து.
() () ()
கிண்ணியாவில் எழுத்துலகைப் பொறுத்தமட்டில் மூன்று அலிகள் இருக்கிறார்கள். ஏ.எம்.எம்.அலி, எம்.வை.எம்.அலி, ஏ.ஏ.அமீர் அலி. அதேபோல அன்று கிண்ணியா என்றதும் ஞாபகத்திற்கு வந்தவர் "அண்ணல்" முக்கியமான இந்தக் கவிஞர் மறைந்துவிட்டார்.
ஏ.எம்.எம்.அலியை அறிமுகப்படுத்தும் கவிஞர் ஜின்னாஹ், "குடையும் அடைமொழியும்" என்ற தொகுப்பின் ஆசிரியரின் மரபுவழிக் கவிதைகள் சிந்தாமணி, தினபதி, சூடாமணி, வீரகேசரி, தினகரன், தினக்குரல், நவமணி போன்ற இதழ்களில் வெளிவந்தன என்றும், "மரபுக் கவிதை அழிவுற்றுப் போகுமோ என்று ஆதங்கத்தில் இருக்கும் தமிழ் இலக்கிய உலகுக்குக் கவிஞர் அலி அவர்களின் கவிதைத் தொகுதி ஓர் அச்சம் போக்கும் ஊட்டச்சக்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை" என்றும் கூறுகிறார்.
இப்பொழுதெல்லாம் மேடையில் எம்மைப் பரவசப் படுத்திவரும், வயதில் இளைஞராக விளங்கும் "கிண்ணியா
அமீர் அலி", மூத்தவர் பற்றி எழுதும் போது, “கவிஞருடைய அங்கதச்சுவை கலந்த கவிதைகளுள்

89
68.ബി.കീത്രZZര്
பொதிந்திருக்கும் தத்துவங்கண்டு நான் வியந்து போவேன்" என்கிறார். அத்துடன், பெரியவர் தனக்கு நடைவண்டி தந்தவர் எனப் பின்வருமாறு கூறுகிறார் :
**கூவிளங் கருவி ளத்தைக் கப்பிட்டுக் கற்றுத் தந்த பூவுளந் தன்னை எண்ணிப் பூரித்துக் கண்ணிர் விட்டேன்!
பாவல இன்று உங்கள் படைப்புக்கண் டகம கிழ்ந்தேன்!
' αεποίίμμύο μουυ 6οι ύάi'
கவிஞருக்கென் நல்வாழ்த்துக்கள்!”
ஒரு பெரிய பிழை நிகழ்ந்துவிட்டது. இப்புத்தகம் வெளிவரக் காரணமாக இருந்தவர் எழுதிய அழகான தமிழ்க் கட்டுரையில், Creative (ஆக்க) என்பதற்குப்பதிலாக Cheative' (ஏமாற்று) என்று அச்சிடப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் அப்துல் லத்திப் மொகமட் லபிர்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சுவைமிகு கவிதைகளில் எனக்குப் பிடித்த வரிகளில் ஒரு பகுதி.
''26rsoudui360 unriggs'...Lingo
உங்களது பேரன்பு பொம்மையை இழந்து போய்விட்ட சிறு குழந்தை

Page 55
90
62-7627azzi 62/7av... O
சற்று அழுது சயனித்துப் பின் மறந்து மற்றும் ஒரு பதுமை வாங்கி மகிழ்தல் போல் தான் தோன்றுது பிள்ளைகால்!...”
இவர் எழுத்தின் மற்றொரு மாதிரி,
**மானிடப் புனிதர் மனுக்குலம் மீது
காட்டிய பேரன்பு! - அதைப் பேனிடும் பக்குவம் பெரிதென வளர்த்தால் அதுவே நற்பண்பு! நற்சிந்தனையும் நற்செயற்பாடும் உதித்து வரவேண்டும் - ஆம் அச்சிந் தனையால் மனிதத்துவத்தை மதித்திடவே வேண்டும்! மதிக்கும் தன்மை மனதில் வந்தால் மனிதம் மறையாது! உள்ளம் கொதிக்கும்போது அறிவுக்கு வேலை கொடுத்தால் வாழ்வுண்டு.”
கவிஞர் ஏ.எம்.எம்.அலி எழுதிய கருத்தாழ
கொண்ட கவிதைகளென இவற்றையும் சுட்டி காட்டலாம்.
கற்பொழுக்கம் (39), கெட்டழியக்கூடாதே கேள்
(45-46), நூற்பூ மலர்ந்துள்ள நூலகம் (47-48) இன்னும் ப6 உள்ளன. வாய்விட்டுப் பாடச் செந்தமிழ் மிழற்றும் வரிகள் கொண்ட பாடல்கள் சிலவுமுண்டு. உதாரணமாக, "வாழ்6 சுவைத்திடுமோ” என்ற கவிதை (126-127).

War, a7azio. ø%2/øs zo zvøÝ H- 97
தமிழிலக்கியப் பாரம்பரியத்திலே வரும் உவமை பருவகங்களைப் புதுமெருகுடன் பாவிக்கும் தன்மை reative ஆக இருக்கிறது. ஓரிரு உதாரணங்கள் : சேவற்பூச் வப்பு நிறம் நகத்தினிலே (156), வாழைக்கு நிகரான குறங்குனதே (156)
நமது நாட்டு மின்னியக்க ஊடகங்களிலே பணிபுரியும் இளைய வயதினர் சிலர் தமிழ் மொழியின் செழிப்பை அறியாது அம்மொழியினை அர்த்தபுஷ்டியாக உச்சரிக்காது எமது சினத்தை அதிகரிக்கச் செய்கிறார்கள். அவர்களுக்கு நல்ல குரல்வளம் இருக்கிறது. சிலர் அவசர அவரமாகப் பேசி வார்த்தைகளின் மகிமையை அறியாது பிழையாகவும் Phrasing செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் இந்தக் கவிதை நூலில் வரும் "உலகில் உயர்ந்த தமிழ் மொழி" (168-169) என்ற பாடலை வாய்விட்டுப் படித்துப் பயன்பெற
வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். குறிப்பிட்ட இப்பாடலில் வருவது,
"லகர பேதங்களுடைய தமிழ்மொழி
ரகர பேதமுங் கொண்ட தமிழ் மொழி 6ápr பேதமுங் கொண்டுயிர்ப்புடனே சிகர மன்னவே உணர்ந்த தமிழ்மொழி இண்ணா மொழி தொடர் மொழி புணர்ச்சா
என்னும்
விதிவழி செழித்து விளைந்த தமிழ் மொழி தனை நிகர்த் திடாத தன்மைகளோடு நிலமிசை உயர்ந்து நிற்கும் தமிழ் மொழி”

Page 56
92 — ിബമീബഗ്ഗ് Zങ്ങ. മമ് கவிஞர் நாளாந்த வாழ்க்கை உறவுகள் தொடக்கம், சமூகத்திலும், அரசியலிலும் இடம்பெற்றுவரும் அநீதிகளின் பதிவுகள் உட்பட மனிதத்துவம் வரை அழகான பாடல் களை இயற்றிக் கவித்துவப் பரிவர்த்தனை செய்கிறார்.
நமது "விமர்சகர்கள்"திறனாய்வு செய்யாவிட்டாலும், அவர்களுக்கு வாலாயமான ஒடுங்கிய பார்வைகளுக் குள்ளும் கண்டனமாகுதல் செய்ய விரும்பாரோ?
நூறு பக்கங்கள் கொண்ட கவிதைகளும் 15 பக்கங்கள் கொண்ட விரிவான விளக்கமும் கொண்ட முல்லை முஸ்ரிபாவின் கவிதைகள் (இரத்தலுக்கான அழைப்பு) "வதைபட்டுச் சிதைக்கின்ற வாழ்வின் மீதானவை" என வர்ணிக்கப்படுகிறது.
'யாத்ரா ஆசிரியர் அஷ்ரப் சிஹாப்டீன் தமது விளக்கவுரையில் 'துரத்தப்பட்ட மக்களின் துயரப் பாடல்கள்" இவை என்கிறார். அதேபோல் மறைந்த சு.வில்வரத்தினம், இக்கவிதைகளை "வடபுலத்து யாழின் கூட்டு நரம்புகளை மீட்டும் குரல்" என்கிறார்.
எனவே, வெளிப்படையாகவே இது அரசியல், சமூகம் சார்ந்த அறிவுப்பூர்வமான வெளிப்பாட்டுப் பதிவுகள்.
சு.வில்வரத்தினம் கூறுகிறார் :
"1980 களிலிருந்து 1990 வரை தமிழ் கவிஞர்களின் புதிய பரம்பரையின் எழுச்சிக் காலம் எனச் சொல்வோம். ஆனால், 1990 களிலிருந்து கிழக்கிலங்கை முஸ்லிம் கவிஞர்களின் எழுச்சிக்காலம் தொடங்குகிறது எனலாம்."

6.67ര.ക്രിക്രമന്നത് − 93
'முல்லை மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட நோக்காட்டையும் வாய்ப்பூட்டையும் உடைத்து வெளிக் கொணரும் குரலாக வெளிவந்திருக்கிறார் முஸ்ரிபா, முல்லை என்ற பெயரையும் அடையாளமாகச் சூட்டிக் கொண்டு."
ச.வில்வரத்தினம் ஒரு நல்ல கவிஞராகவும் நல்ல திறனாய்வாளராகவும் விளங்கினார் என்பது இங்கு நினைவூட்டத்தக்கது.
இந்தத் தொகுப்பிலே மற்றொரு கவிஞரும் திறனாய்வாளருமான மேமன் கவியின் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. அருமையாகத் திறனாய்வாளர் எழுதியிருக்கிறார்.
நூலின் உள்ளே எஸ்.நளிமின் பொருத்தமான ஒவியமும் அட்டையில் அஸிஸ் நிஸாருத்தினின் அழகிய படமும் சிறப்பைக் கொடுக்கின்றன.
0 0 (0
வ.ஐ.ச.ஜெயபாலன் கூறியிருப்பது போல - "முஸ்தாபா மஃஸ்பீர் என்கிற முல்லை முஸ்ரிபா இளம் பராயத்திலேயே வேரோடு பிடுங்கப்பட்ட பல்லாயிரம் பேரில் ஒருத்தராதலால் அதன் வலி அவரது கவிதை களெங்கும் படிந்து கிடக்கிறது"
எனவேதான், இந்த அவலங்களின் நேரடி அனுபவத்தைப் பெறாததனால் போலும் முஸ்ரிபாவின் கவிதை வரிகள் அத்துணை வலியை என்னில் ஏற்படுத்த வில்லை. தவிரவும் புதுப்புனைவாகச் சில படிமங்களையும் சொற் சித்திரங்களையும் அவர் அதிகளவில் தமது கவிதை

Page 57
9.
6-æøýæragó áfrasv... (?3 களில் தீட்டவில்லை என்று நினைக்கிறேன். ஆயினும் ஒரு பதிவாக இந்த நூல் தொடர்ந்து ஆராயப்படும்.
இறுதியாக டீன் கபூரின் "திண்ணைக் கவிதைகளைப்" பார்ப்போம். அம்ரிதா ஏயெம் இத்தொகுப்புத் தொடர்பான கருத்துரையைப் பின்வருமாறு கூறுகிறார்:
"டீன் கபூரின் கவிதைகள், கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இனி டயிலான உணர்வுகள் வெளிப்பட்ட மனநிலையில் புனையப்பட்டவைகளாகும். இவரின் கவிதைகளில் சர்ரியலிஸ், மெஜிக்கல் ரியலிசம் போக்குகளை அவதானிக்க முடிகிறது"
இந்தப் போக்குகள் எவை என்று என்னால் அவதானிக்க முடியவில்லை. ஒருவேளை நான் பின் நவீனத்துவப் பார்வையை இழந்து விட்டேனோ தெரிய வில்லை.
அம்ரிதா ஏயெனம் மேலும் கூறுவார் :
"பிம்பமாற்றம், தளமின்மை, வடிவமின்மை, வெகு ஜனத் தன்மை போன்றன சேரும் போது சில கவிதைகள் பின்நவீனத்துவம் நோக்கியும் பாயப் பார்க்கின்றன."
டீன் கபூரின் முன்னைய கவிதைத் தொகுப்பில் நான் ரசித்த கவிதை வரிகளை வானொலியில் முன்னர் படித்துக் காட்டியிருந்தேன். அதுபோன்ற, இந்தக் கவிதைத் தொகுப்பிலும் நான் சுவைத்த புதுப்புனைவான வரிகளை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கே.என். சிவகுமாரன் g.5
"காற்றின் முதுகில் பயணம் செய்து, உன் தூக்கணம் மின்னிய கடற் புனலில் காயாத கருவாட்டில் புழுக்கும் தலைக்குள் இருந்து வண்டுகள் உமிழும், எலும்பு முறிந்த நாய் மாதிரி, கபடத்தோடு பதுங்கி நிற்கும் கடுவன் போல, குறாவளியால், சிக்குப்பட்ட கோழிக் குஞ்சாக, காற்றினில் மேயவிட்ட கருமேகம்."
டீன் கபூர் கூறுகிறார் தனது "கவிதைகள் பனை யோலைப் பெட்டிக்குள் கரப்பான்பூச்சிபோல கரகரத்துக் கிடந்தன. பல ஆண்டுகள் உடும்பின் பலமாக"
மற்றும் சில வரிகள்,
"தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாகக் கவிதை மொழியாடல் மாட்டுகையில் யாரையும் விடுமா? வரம்பு மீறிப் பாயாத நீராக இருக்கையில் மண்வெட்டியுடன் கவிதை விவசாயிஎங்கிருந்தோ வருவது?அவன் பாழைக்குப் பாய்ச்சுவது எவரையும் நோக்காமல் இருக்காது. கவிதை கண்களுக்குள் பாய்ந்து மனசுக்குள் மாளிகை கட்டுவது"
நீங்கள் இந்தத் "திண்ணைக் கவிதைகள்" தொகுப்பைப் படித்தால் வெவ்வேறு உணர்வுகளைப் பெறுவீர்கள். அந்தத் தொழிற்பாடே கவிஞரின் வெற்றி
ானலாம்.

Page 58
96.
ாந்து ങ്ങrഞ്ഞtpഞ്ചങ്ങഥി Ap മൈ ጨሠጨñnuመub ሠጫሠጭ”
முநீஸ்கந்தராஜா மனோகரி என்ற கவிஞரை நம்மில்
பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்பொழுது அவருடைய 108 பாடல்கள் நூல் வடிவில் வந்துள்ளது.
அவரை அண்மைக்கால அளவுகோல்களின்படி கவிஞர் என்பதிலும் பார்க்க மரபுசார் புலவர், பாடலாசிரியர் எனக் கூறலாம். ஆயினும் அவரிடம் கவித்துவமும் இருக்கிறது என்பதைக் காட்ட பல உதாரணங்கள் நூலில் உண்டு. 168 பக்கங்களைக் கொண்ட இந்த அழகிய பதிப்பை திருகோணமலையில் நன்கு அறியப்பட்ட சித்தி அமரசிங்கத்தின் ஈழத்து இலக்கியச் சோலை வெளியிட்டுள்ளது. இந்த நூலை 21, ஒளவையார் வீதி (திருகோணமலையில் பெற்றுக் கொள்ளலாம்.

.oര, ജിമക്രമZഞ്ച് - 97
இத்தொகுதியில் இடம்பெறும் பாடல்கள் அன்பு, அமைதி, ஆத்மிகம் போன்றவை பற்றி பேசுகின்றன. இந்த ாலுக்கு சுவாமி ஆத்மகணனந்தா, மூத்த எழுத்தாளர் பாபாலேஸ்வரி (கலாபூஷணம் பாலேஸ்வரி நல்லரெட்ண சிங்கம்), காந்தி ஆசிரியர் என அறியப்பட்ட பொ.கந்தையா, த்தி அமரசிங்கம் ஆகியோர் நூலாசிரியர் பற்றியும் பாடல்கள் பற்றியும் நிறைய விபரங்களைத் தந்துள்ளனர். நூலாசிரியையும், அவருடைய மறைந்த கணவர்பூனரீஸ்கந்தரா ஜாவும் எனக்கு உறவினர்களாவர். பல்துறைகளில் ஈடுபாடுடைய ஆற்றல் மிக்கவராய் அவருடைய குடும்பத்தினர் இருப்பதை நாம் அறிந்து கொள்கிறோம். ஞான மனோகரியின் சகோதரர்களுள் ஒருவர், வைத்தியத்துறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆவார். இவர் அறிவு' என்ற பிரயோசனமான, பெரும்பாலும் சிறுவர்க்கான சஞ்சிகையை வெளியிட்டு வருகிறார்.
திருகோணமலையைச் சேர்ந்த பல தமிழ் மக்கள் கடவுள் பக்தி கொண்டவர்கள். ஆன்மிகத்திலும் மிக நாட்ட முடையவர்கள். அங்கு "மோகனாங்கி” எழுதிய சரவண முத்துப் பிள்ளை முதல் பல எழுத்தாளர்களும், கலைஞர்களும், அறிஞர்களும் இலை மறை காய்போல் இருந்து வருகிறார்கள். மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மாவட்டங்களிலுள்ளவர்கள் போல, மூதூர், திருகோண மலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களில் ஆற்றல் பற்றி பிற மாவட்டத்தினர் நன்கு அறியார் என்றே கூற வேண்டி இருக்கிறது. சிறந்த கவிஞரும், மொழி பெயர்ப்பாளரும், அரசியல் பகுப்பாய்வாளருமான பேராசிரியர் சி.சிவசேகரம்

Page 59
98
6ിZമ്മഗു (Zങ്ങ. മി
திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது பலருக்குத் தெரியாது. சிவசேகரம் விமர்சகர் என்றும் சில இடங்களில் அடையாளம் காணப் பட்டுள்ளார்.
திருகோணமலையில் வடிவேல் மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட அறிஞர் (நூலாசிரியர், கதாபிரசங்க விற்பன்னர்) உட்பட, சுவாமி கெங்காதரணாநந்தவும் போற்றுதற்குரியவராக இருந்து வருகிறார். அவரிடம் ஆத்மிக பிணைப்புக் கொண்டவர் நூலாசிரியை.
இப்பாடல்களை வாய்விட்டு நான் படித்த பொழுது அவற்றில் லயம் இருப்பதையும், ஆசிரியையிடம் சொல்லாட்சி இருப்பதையும் உணர்ந்து கொண்டேன்.
இறை பக்தியைச் சமூக சேவையுடன் ஆசிரியை தொடர்புபடுத்திக் காட்டுகின்றார். ஒரு பானைச் சோற்றுக்கு
ஒரு சோறுபதம் என்பது போல, அவருடைய நரயக்ஞம்'என்ற பாடல் அமைகிறது. இதோ பாடல்,
“ஏழைக்கு உதவினும் சரி
பசிக்கின்ற வயிறு பார்த்து அன்னம் அளிப்பினும் சரி நோயினால் வாடியே வருபவருக்கு ஒளடதம் கொடுப்பினும் சரி ஆடை அற்ற ஏழைகட்கு ஆடை வழங்கினும் சரி அதுவே நாயக்ளும் ஆகும்.

്ര.ക്രിക്രZZഞ്ച് 99
மனத்துயர் கொள்ளும் மக்கள் வேதனை குறைப்பினும் சரி பெண்துயர் கண்டு அவர் துயர் துடைப்பினும் சரி தொழில் வளம் அற்ற சம்சாரிக்கு உதவினும் சரி குழந்தை மன வெதும்பல் தீர்த்து வைப்பினும் சரி அதுவே நாயக்ளும் ஆகும்.
சமூக சேவை சங்கத்தால் தர்மங்கள் செய்யினும் சரி நாட்டினது அமைதிக்கு பாடுபடினும் சரி அகதிகள் இடம்நாடிச் சென்று அவர் துயர் நீக்கினும் சரி நாட்டு மண்ணிலே நல்ல ஒர் ஆட்சியை அமைப்பினும் சரி எல்லாம் நரயக்ஞம் அன்றோ
நரயக்ஞம் தன்னை குறைவா செய்துவரின் தீய கர்மாக்கள் குறையுமன்றோ"
யூத யக்ஞம்' என்பதனை விளக்குகையில் ஆசிரியை இவ்வாறு முடிக்கிறார்:

Page 60
700
6ിബ7ങ്ങ്ബഗ്ഗ് Zങ്ങ. മി
** அன்பு என்பது அனைவருக்கும் சொந்தம்
எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளான் வாயது இல்லா ஜீவனை நாமே மான்போது அணைப்பது யூதயக்ளும் ஆகும்
தானே”
இந்து சமயத்தின் (சைவம்) பற்பல கூறுகளையும் அற்புதமாக விளக்கிக் கூறும் பாடலாசிரியர், மனித நேயம், சமூகத்தில் தனிமனிதன், சமூக நோக்கு அளப்பரிய அன்பு, ஞானம் போன்ற பல விடயங்களையும் யாவரும் விளங்கக் கூடிய விதத்தில், ஓசை நயத்துடன் தந்திருப்பது பாராட்டத்தக்கது. பல விடயங்களை ஆசிரியை அறிந் திருக்கிறார். அடக்கமாக இருந்து இதுவரை தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் இருந்தபோதிலும் இத் தொகுப்பு மூலம் தமது திறமையை வெளிக்காட்டி யிருக்கிறார்.
இந்த நூல் இந்து சமயம் போதிக்கப்படும் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், விதந்துரைக்கப்பட்ட பாட நூலாக இருப்பது அவசியம். ஏனெனில் எளிய முறையில் பல தத்துவங்களையும், கருத்துக்களையும் தமது பாடல்கள் மூலம் எடுத்துக் காட்டியிருப்பதேயாகும்.
அநேகமாக ஒவ்வொரு பாடலுக்கும் கடவுளின் சித்திரங்கள் அணி சேர்க்கின்றன.

്.ഐ.ബി.ക്രിക്രZZമ് 707
ஞானமனோகரி எழுதிய பாடல்களுள் ஒன்றின் தலைப்பு "கவித்துவம்'. அதனை எவ்வாறு அவர் பார்க்கிறார்?
* எண்ணத்தில் மேன்மை வேண்டும்
எழுத்தினில் நல்லோசை வேண்டும் சொற்களில் ஆட்சி வேண்டும் சுவையான கவிதை கொண்டு சாற்றியே நின்றால் இங்கு கல்லும் கசிந்தே வரும்.
பாக்களில் இனிமை வேண்டும் பதங்களில் பொருளும் வேண்டும்
ryřmBúd DS5 GS5mrullfira56mrras எழுதியே எடுத்து விட்டால் நாட்ட மிகு கவிதை எல்லாம்
ஞாலத்தில் எட்டும் சுவையாய்
அன்புசேர் சொற்களாலே அமிழ் தான இசையினோடு இறைவன் தனைப் பூஜித்தால் மயங்கிய பொறிகள் எல்லாம் மயக்கமே தீர்ந்து நின்று வந்த வேலையைச் செய்யும் அன்றோ.
தூதுவளை தொடர்பான ஒரு கதையையும் ஆசிரியை சேர்த்திருக்கிறார்.

Page 61
702 6ീബരഞ്ഞZ് മzZശ.മ
கவனக் குறைவால் சில வார்த்தைகள் சரியாக எழுதப்படவில்லை. உதாரணமாக கணனி, கிருஷ்ணபாலா வீண்காலமாய் போன்ற வார்த்தைகள், வேறு உச்சரிப்பில் எழுதப்பட்டுள்ளன. தாய்க்குலம், தாய்குலம் என்று அச்சிடப்பட்டுள்ளது. இவரது அன்னையின் பிறந்த தினம் சரியாகப் பதிவு செய்யப் படவில்லை.
இருந்த போதிலும் குடத்திலிட்ட விளக்குப் போல, தமது பிள்ளைகளின் உந்தலினால் ஒரு நல்ல படைப்பை ஆறfஸ்கந்தராஜா (மறைந்த கணவரின் பெயர்) ஞானாமனோகரி தந்திருக்கிறார்.

703
VAZ- ക്തമ=zത്തീഭാ
7Z/1 1777,ZTA-472
(Nostalgia)
சிடாகோபன் என்றொரு கவிஞர் சொல்லாமற் கொள்ளாமல் நம்மிடையே (அதாவது, என்னைப் பொறுத்தமட்டில்) தமது "மண்ணில் தொலைந்த மனது தேடி.." என்ற தலைப்பிலே, "கிட்டிய தொலைவில்" (15 கவிதைகள்) "பெயர்வும் பின்னரும்" (13 கவிதைகள்) என்ற உபதலைப்புகளுடன் கூடிய 51 கவிதைகள் இடம் பெறும் ஒரு கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார். புத்தக அமைப்புக் கூட வித்தியாசமாய் அமைந்துள்ளது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடான இப்புத்தகத்தின் அட்டை வடிவமைப்பை ஏ.அளிஸ் நிஸார்டீனும் கருத்தோவியங்களைசசிதரனும் தந்துள்ளனர். புதியவர்களின் கண்டுபிடிப்பாக எமக்கு இந்நூல் அறிமுகமாகிறது. திறனாற்றல் மிக்க இளைய

Page 62
704 - ബഞ്ച്ബ് മZങ്ങ. മ பரம்பரையினர் நம்மிடையே முகிழ்ந்து வருவது நம்பிக்கையை ஊட்டுகிறது.
"விடுதலைச் சமையலுக்கு விறகாகிப்போன என் முன்னவனுக்கும் அவன் போன்ற ஆயிரமாயிரம் மானிடருக்கும்" இந்நூலைக் கவிஞர் சமர்ப்பிக்கிறார்.
அற்புதமான கவிஞரும் முன்னணி 'மார்க்சிய விமர்சகர்களில் ஒருவருமான சி.சிவசேகரம் சடாகோபனின் கவிதைகள் பற்றி என்ன பார்வை கொண்டுள்ளார் என்று முதலிற் பார்ப்போம். அதேவேளையில் இன்னொன்றையும் மனதிலிருத்திப் பார்க்க வேண்டும் ஈழத் தமிழ் இலக்கியப் போக்கிலே "போர்க்கால இலக்கிய வகை" என்றொரு "துணை நிலை" (Subaltern இலக்கியப் பிரிவு இருப்பதையும் நாம் அவதானித்தல் வேண்டும்.
சிவசேகரத்தின் இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்வோம்.
"ஒரு படைப்பு வாசகர்களை எட்டுவதற்கான வாய்ப்பும், எவ்வாறான வாசகர்களுக்காக அது ஆக்க படுகிறது என்பதும் அதன் வடிவம் பற்றிய முடிவுக்கு தூண்டுகோலாகின்றன."
சிவசேகரம் மேலும் கூறுவார், "சடாகோபனின் (இந்நூல்) பெருமளவும் யாழ்ப்பாண மண்ணின் போர்க் கால அல்லல்கள் பற்றிய ஒரு பதிவாகவே உளளது அதிலே அரச அடக்குமுறைக்கும் அதிகாரத்தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ச.கி/ன்.சிவகும/ரன் 705 :: எதிராக நிமிர்ந்த ஒரு குரல் ஓங்கி லிக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து கவிஞர் வெளியேறிய பின்பும் அவரது படைப்புகளில் தேசிய இன ஒடுக்கு முறை பற்றிய பதிவுகளே முக்கியம் பெறுகின்றன. எனினும், இந்தப் போர் சிங்கள மக்கள் மீதான ஒரு அடக்குமுறையுந்தான் என்ற தெளிவு."
"பல கவிதைகளின் தாக்குதலின் பிரதான இலக்கு ஒடுக்குமுறையாளர்களும் அவர்களது எடுபிடிகளாகச் செயற்படுகிற பல்வேறு சக்திகளுமாவர்"
"சடாகோபனின் கவிதைகளின் முக்கியமான
ஒரு பண்பு பேரினவாதத்துக்கும் பெரும்பான்மைச் சமூகத்துக்குமிடையே அவர் தெளிவாகவே அடையாளங் காணக்கூடியதாக இருப்பது என்பேன்."
பேராசிரியரின் இனங் காணலுடன் நான் விளங்கிக்
கொண்டவிதமும் ஒத்துப் போவதனால் கவிதைகள் என்ன
கூறுகின்றன என்பதற்கான விடையை நாம் கண்டு கொண்டோம்.
அடுத்து நாம் இக்கவிதைகளை வாய்விட்டுப் படிக்கையில் ஓர் இசைலயம் இருப்பதைக் கேட்கிறோம். அத்தகைய கவிதை நயம் பொருந்திய பகுதிகளை இங்கு சிறிது பார்ப்போம். இங்குதான், கவிஞர் வெறுமனே சொற்களைப் பயன்படுத்துகிறாரா அல்லது அர்த்தமுடைய பொருத்தமுடைய சொற்களை உரிய இடத்தில் பெய்து புதுப்புனைவாக்கங்களைத் தருகிறாரா என்ற அறிய | (ԼՔւգ-պւն.

Page 63
706
யுடன் கூடிய ஒலிப்பதிவுகளாக வெளிவந்திருப்பதையும் இங்கு நாம் நினைவு கொள்ளலாம். நெருக்கமாக இணைக்கப்பட்ட ஒலிநய வட்டத் தட்டாக (Compact Disc) வெளிவந்திருப்பதைக் கேட்டு மகிழ்ந்தேன். மஹிந்த
ബ്ബഗ്ഗ് മZങ്ങ. മി
எனக்குப் பிடித்த சில வரிகள் வருமாறு :
0.
சடாகோபன் கவிதைகள் சில பாடல்களாக இசை
“அலை நனைந்த / மணற்பரப்பில் / ஓடும் சிறு நண்டுகளாய் / விளையாட ஒரு பொழுது / மீண்டும் கிடையாமலே போகலாம்."
“வெளிச்சத்தைத் தேடி / மெழுகு திரிகள் / உருகும்"
"ஜாம் போத்தல் விளக்கில் / டயறியும் எழுதி / படுக்கை தட்டி / மெல்லச் சரிய / நல்லிரவு சொல்லும் / பல்லி ஒன்று" "அலையும் முகிலும் விழிகள் பொழியும் அவனி எங்கும் துயரில் நனையும்" "இனங்களிற்கிடையில் / இடைவெளிகுறை பட அயராது / உழைப்பவன் மினிபஸ் / நடத்துனன்." "வெண்டிக்காய்களோடு விரல்களும் / வீசி எறிபட" "ஒட்டு மொத்தமாய் / மாண்டவர் மக்கள் / ஒடிய இரத்தமும் / ஒரே நிறம்"

ச.எஸ்.சிவகுமாரன் - 707 குமாரின் வாத்தியக் கூட்டிசை பல நயங்களை இசை வடிவில் தந்தன.
சடாகோபனின் கவிதைகள் 21 ஆம் நூற்றாண்டில் எவ்வாறு அமையப் போகின்றன என்பதற்கு ஓர் முன்னோடியாக இந்த "மண்ணில் தொலைந்த மனது தேடி." என்ற கவிதைத் தொகுதி அமைந்துள்ளது.
அடுத்ததாக இன்னுமொரு குறிப்பு. எடுத்துக்காட்டுக்குள் தருவதை விடுத்து, முழுமை பாகவே நான் படித்த சில கவிதைகளின் சுவையனுபவம் துக்கமாகவும், நகைப்பூட்டுபவையாகவும், மெய் மறந்த நிலையை ஏற்படுத்தியவையாகவும் அமையக் கண்டேன்.
இறுதியாக ஆங்கில/தமிழ் அறிஞரும் கவிஞருமான சோ.ப. எனப்படும் சோ.பத்மநாதன் கூற்றும் சரியாகவே எனக்குப் படுகிறது. அவர் கூறினார். "முதிர்ச்சி வர வர ஆவேசம் சற்று தணியும். இன்னும் ஆழமான கவிதைகள் இவரிடமிருந்து தமிழுக்குக் கிடைக்கும்" வாழ்க.

Page 64
708
அடுக்கடுக்காi. நிகழ்ச்fi56
டொமினிக் ஜீவா
2007 ஜூன் மாத இறுதியில் சில நிகழ்ச்சிகள் என்னைத் திக்கு முக்காட வைத்தன. இலக்கியம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள்தான். அவற்றுள் மூன்று தொடர்பாகச் சில குறிப்புகள்.
டொமினிக் ஜீவா என்ற புறக்கணிக்க முடியாத படிக்காதமேதை பற்றி நாமும் நாட்டிற்கு வெளியே உள்ள விஷயமறிந்தோரும் அறிவோம். அவருடைய 80 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது புதல்வனும் உற்சாகமிழக்காத பல்துறை நாட்டங்கொண்ட மேமன் கவியும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் கடந்த மாதம் 27 ஆம் திகதி விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். அச்சந்தர்ப்பத்தில் 'மல்லிகை" ஆசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான டொமினிக் ஜீவாவின் அபிமானிகள் சிலர் மேடையில் புகழ்மாலை சூட்டினர் ஓர் அழகான பதிவேடும் இலவசமாக வழங்கப்பட்டது

,7ര, ജി.ക്രZZശ് - 709
அந்த ஏட்டைப் படிக்காத வெளியூர் வாசகர்கள் பலன்கருதி, யார் யார் மனப்பதிவுகள் இடம்பெற்றன ான்று இங்கு குறிப்பிடவிரும்புகிறேன்.
ஜின்னா ஷரிபுத்தீன், கம்பவாரிதி இ.ஜெயராஜ், வா சுப்பிரமணியம், வீதனபால சிங்கம் கெக்கிராவ ஹானா, திக்குவலை கமால், ப.ஆப்டீன், லிகோரின் றாளபி, மேமன் கவி எம்.எம்.பீர்முகமது, அந்தனி ஜீவா, லிபன், டொமினிக் ஜீவா,பூபூரீதர்சிங், அனோஜா ராஜ ரீகாந்தன், மா.பாலசிங்கம், எஸ்.ஆர்.பாலச்சந்திரன், க.பொன்னுத்துரை, சுதாராஜ், செங்கை ஆழியான், தம்பு வா, புரவலர் ஹாஷிம் ஓமர், கே.எஸ்.மணியம், ாம்.கே.முருகானந்தன், வதிரி சி.ரவீந்திரன், வசந்தி யாபரன், அன்னலசுஷ்மி ராஜதுரை, கே.எஸ்.சிவகுமாரன். ஆங்கிலத்தில் நான் எழுதிய பொழிப்பை வாசகர் லன்கருதி இங்கே தமிழில் தருகிறேன்.
"எவருமே மிஞ்சிவிட முடியாத பாட்டாளிவர்க்க ழத்து தமிழ் எழுத்தாளர் டொமினிக் ஜீவா (ஆக்க இலக்கியப் படைப்பாளி, இலக்கியச் சிற்றேட்டு ஆசிரியர், *னுடையவையும் பிறருடையவையும் நூல்களாகப் திப்பிடுபவர், பேச்சாளர்) அவருடைய பங்களிப்புகளில் ான் அதிகம் நினைவில் வைத்திருப்பது என்ன
வன்றால்.
தமிழ் பேசம் ஈழத்தவர்களின் எழுத்தின் இலக்கிய ண்பாட்டம்சங்களைப் பிரக்ஞை பூர்வமாகப் பாதுகாத்து வருங்கால சந்ததியினர் ஆய்வு செய்யுமுகமாகத் தனது ரட்டில் களங்கமற்ற விதத்தில் பதிவு செய்து வைப்பது
T6t.

Page 65
770 - ബഞ്ചമ്മഗു മZശ.മ
தனிமனிதச் சிந்தனையாளரும் படைப்பாளியுமான ஒருவரின் இந்தப் பங்களிப்பு அதிசயச் சாதனை. தனக்கே யுரித்தான பாணியில் தமது ஏட்டை மாதாமாதம் கொண்டு வருவதில் அயராது அவர் உழைத்து வருகிறார்.
தமது 'மல்லிகை பந்தல்" மூலம் வெளியிட்ட அவரது நூல்களும் நீடித்து நிற்கும் அவரது ஏட்டில் அவர் எழுதிய கட்டுரைகளும் அவரது உற்சாகமான உழைப்புக்குப் போதிய சான்றானவை.
துரதிர்ஷ்டவசமாக நமது பல்கலைக்கழக மட்ட ஆய்வாளர்கள் இந்த அம்சங்களைப் புறக்கணித்து வந்துள்ளனர். உண்மையிலேயே தாமே தமது ஆய்வு களைச் செய்ய வேண்டியிருக்கும் போது டொமினிக் ஜீவா செய்துவரும் பணிகளுக்காக அவர்கள் பின்னையவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.
கணிக்கத்தக்க சிறுகதை ஆசிரியர், இலக்கிய ஏட்டின் ஆசிரியர் என்ற முறையில் அவரது பங்களிப்பு சிந்தனையாளர் (அவரது ஆசிரியத் தலையங்கங்கள் கட்டுரைகள், கேள்விகளுக்கான பதில்கள் போன்றவை சாரம்மிகுந்தவை), பேச்சாளர், வெளியீட்டாளர், மனித நேயர், பட்டப்படிப்பில்லாதநிலையிலிருந்து மேலெழும்பிய புத்திபூர்வமான எழுத்தாளர் ஆகிய அம்சங்கள் தொட பான விரிவான பகுப்பாய்வுகள் பின்னர் மேற்கொள்ளப் படுவது அவசியம்.
எண்ணிலடங்காத அவரது விசிறிகளுடன் சேர்ந் நானும் அவரது 80 ஆவது பிறந்த நாளில் அவருக் நிறைவான ஆரோக்கியமும் சுபீட்சமும் மகிழ்ச்சி தரு சூழலும் நீடித்த ஆயுளும் அவருக்கு அமையப் பெற்று எவருமே போட்டியிட முடியாத பணிகளைத் தொட வாழ்த்துகிறேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

്.ബി.ക്രിക്രZZമ് 777
மேமன் கவி தொகுத்திருக்கும் முறை கணினித் றையிலும் அவர் முன்னேறி வருவதைக் காட்டுகிறது."
விக்ரம்
கடந்த 30 ஆம் திகதி 'விக்ரம்' என்ற புனை பெயரில் எழுதும் மன்னாரைச் சேர்ந்த தீபநாதனின் கவிதை நூல் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் வெளியிடப்பட்டது. 'நிழல் ஒதுங்கிய நிஜங்கள்' என்ற தலைப்பிலே பக்கத்துக்குப் பக்கம் வரைபடங்கள், நிழற்படங்கள் சித்திரங்களுடன் (அவை சம்பந்தப்பட்ட கவிதைகளுடன் சம்பந்தப்பட்டவையா என்பது நியாயமான கேள்வி) இந்த நூலைத் தந்துள்ளார் இளைஞர்.
இவர் அக்குபஞ்சர் வைத்திய முறை, கணினி பிரயோகம், கிட்டார் வாத்திய இசை மீட்டல் போன்ற வற்றிலும் ஒரு மன்னர் எனலாம். பார்ப்பதற்கும் அழகிய தோற்றமுடையவர். உரிய முறையில் நெறிப்படுத்தப் பட வேண்டிய சுயசிந்தனையும் உணர்வும் கவியுள்ளமும் படைத்தவராக இவர் இருப்பதை நாம் கண்டு கொள்கிறோம். சற்றுமே எதிர்பாராத புதுமைகளைச் செய்ய வேண்டும் என்று இந்த இளைஞர் முயல்கிறார். "சிந்திய துளி தேங்கிக் கிடக்கும் உள்ளக் கிடைக்களாக" அவர் கவிதா முயற்சி அமைகிறது. திறமைசால் மேமன் கவியின் வழிகாட்டலில் இந்நூலை வடிவமைப்புச் செய்தவரும் விக்ரம் தான் எனலாம்.
குடத்திலிட்ட விளக்காய் இருந்து வந்த விக்ரமை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் முகமாக மேமன் கவி தனது முன்னுரையை எழுதியிருக்கிறார். முன்னுரை யாசிரியரின் கூற்று :

Page 66
፲72
6ീബ്രഞ്ഞZ് മzZങ്ങ. മ5 "இத்தொகுப்புக்கான தலைப்பைப் பாருங்கள். நிழல் ஒதுங்கிய நிஜங்கள். நிழலும் நிஜமும் நிஜத்திற்கு எதிர்மறையானது நிழல். நிழல் போலிதான். ஆனால், ஒன்றின் நிழல், நிஜம் ஒன்றுக்குப் பாதுகாப்பு அல்லது இதம் தரக்கூடியது. விக்ரம், நிஜங்களுக்கு அதன் எதிர் நிலை இடத்தே பாதுகாப்புத் தேட வைத்திருக்கின்றார். இதம் காணவும் வைத்துள்ளார். அத்தலைப்பில் ஒரு குறுங்கவிதை அனுபவத்தை நமக்குத் தருகிறது."
விக்ரமின் ஆளுமை நிறைந்த பாடசாலைப் பங்களிப்புகளை அருட் சகோதரர் ஜே.ஸ்டனிஸ் லோஸ் விளக்கிக் கூறியிருப்பதும் இளம் கவிஞரை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது.
முதலாம் பக்கத்திலிருந்து இறுதியான 120 ஆம் பக்கம் வரை 58 "கவிதை'களை விக்ரம் எழுதியிருக்கிறார். இவற்றுள்ளே கவிதைகளும் அடங்கியுள்ளன. மயக்க நிலையை உண்டுபண்ணும் கவிதா வசனங்களும் அடங்கியுள்ளன. சில இலக்கணப் பிழைகளும் காணப் படுகின்றன.
விக்ரமின் கவிதை அமையும் விதம் இவ்வாறு வடிவமாகிறது:
* "பனித்துளியின் பாரம் தாங்காது கீழே விழுந்த மல்லிகை மலர்கள் குளிர் நடுக்கத்தில் நாணல் புல்லை கட்டி அணைத்துத் தூங்குகிறது.
* எழில் மழை சொட்டும் அருவி தென்றலின் கற்பாக வேண்டும். பனி சுரக்கும் புல்வெளியாய் மழலை கொஞ்சும் அண்டவெளி பாலம் மண்ணின் கயிறாக வேண்டும், சிரம்தாழ்த்தும் நனவாய் காலைக் கதிரவன் கண்டும் எழும்பமனமில்லாது.

773
്.ബി.കീത്രZZഞ്ച്
• தூக்கத்தைக் கலைக்க விரும்பாத குருவி எட்ட நின்று எட்டிப் பார்க்குது. மெல்லிய தென்றலின் நாணல் அசைவதை மலரின் இதழ்கள் அசைவதை அறியாத அந்த மலர் ஆழ்ந்திருக்கிறது தூக்கத்தில்.
* விடிந்ததும் தொடங்கியது வேலிச்சண்டை அந்தப்பூ என்ன செய்தது பாவம்."
இக்கவிதை குறித்து நிற்கும் விஷயங்களை நான் விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை. நீங்களே வெளிப்படையாக அறிந்து கொள்வீர்கள்.
விக்ரமின் மேலும் சில நயத்தகு வரிகள்
*எழில் மழை சொட்டும் அருவி தென்றலின் கற்பாக வேண்டும் usóf apräsesúo o Glo6furtiu
மழலை கொஞ்சும் அண்டவெளி பாலம் மண்ணின் கயிறாக வேண்டும் சிரம் தாழ்த்தும் நனவாய்”
இவ்வாறு புதுப்புனைவாக்கத்தை நமது இளங் கவிஞர் மேற்கொள்கிறார்.
இன்னுமொரு கவதையின் தலைப்பு "சிவந்து போன கரித்துண்டு" அதனையும் தரட்டுமா?
*துருவங்களின் சந்திப்பில் உடைந்த நீர்த் துளி
ஒருங்கி வடிய வியாபித்த மனம் கொண்டு துடைக்க விலகியது நிழல் பார்த்து மறுகரைக்குச் சென்று

Page 67
WW&፲
சோன்னதர் போல. 23 கண்ணாடியில் உதித்த சூரியன் கண்டு வாங்கிய புத்தகம்
வாசிக்கத்தான் முடியவில்லை. காத்து விசுக்கவுமா சூரியனை மறைத்தேன்
என் தலைக்கு தெரியக்கூடாது என்று கண்கள் கசியது தாள்களின் புரட்டலில் பறக்கும் விமானம் தரையிறங்க முடியவில்லை. வண்டுக்கும் தேனிக்கும் சுருதி மீட்க கற்றுக் கொடுத்து யன்னலின் கடைசி கம்பி தாண்டி விலகிச் செல்லும் மஞ்சள் நிலவே ஒராண்டு
நொடிப் பொழுதான அந்தக் கணத்தில் இரவின் நிமிடங்கள் குறைந்து
விட்டது.
உங்கள் இரசனை மட்டத்திற்கேற்ப இவற்றைப் புரிந்து இரசிக்கக் கூடியதாக இருக்கும். அல்லது இக்கவிதைகள் கவிதையே ஆகா என்றும் துணியலாம்.
புதுமைகள் சில, காலத்திற்கும் அப்பால் புரியும் படியாக இருப்பதும் இயல்பே. நமது இரசனை மட்டம் சற்று விரிவடைய இதுபோன்ற நூல்களும் அமையக் கூடும்.
விக்ரம் பயன்படுத்தும் சில உவமைகளும் உருவகங்களும் புதிய படிமங்களை நம் முன் கொண்டு வருகின்றன. அவற்றுள் சில :

775
"குப்பைக்குள் எலும்பு பார்த்த நாயாக மரத்தின் முலையில் கனிதேடும் கிளி வண்ண இடையோடு மேனி கன்னம் தேடும் முத்தம்
சேசன்,சிவகுமிசாரன்
முற்றத்தின் வரைபடமாமானது." * என் குருதியுடன் நுளம்பு என் உடலில் இருந்து பறந்தபோது.
வெளிச்சங்கள் ஊமையாகும் போதுஇருள்களும் பேசத்துடிக்கும் போது விண்மீன்களும் புதிதாய் இருக்கும்.
கவிஞன் பிறப்பதும் கவிதை பிறப்பதும் வறைக்குத் தெரியாது. நனவுகள் கனவாகும் போதும் இவை நிஜமாய் காணும் போதும் புதிதாய் இருக்கும்.
வெள்ளை கடதாசியில் வெள்ளைப் பேனாவால் எழுதினேன்
எனக்கு மட்டும் விளங்கியது"
என்று விக்ரம் தமது கவிதைத் தொகுதியின் முடிவில் எழுதுகிறார்.
அவருக்கொரு ஆலோசனை மற்றவருக்கும் விளங்கும்படியாகவும் சொற்செட்டாகவும் நீங்கள் தொடர்ந்து எழுதுவீர்கள் கவிஞனாகவே முகிழ்வீர்கள் நல்வாழ்த்துக்கள்.

Page 68
776
62-7eazzi 62/zav... (23 பல்லவர்கால பண்பாட்டுக் கோலங்கள்
அரசாங்கத்தின் மத அலுவல்கள், ஒழுக்க மேம்பாட்டு அமைச்சு என்று ஒரு நிர்வாகம் இருப்பதாக அறிகிறோம். அதன் ஆளுமைக்குள் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் இயங்கி வருகிறது. திருமதி சாந்தி நாவுக்கரசன் இத்திணைக்களத்தின் தலைவர். சிரேஷ்ட உதவி இயக்குநர் தெய்வநாயகம் உட்பட ஆர்வமுள்ள வேறு உத்தியோகத்தர்களும் இங்கு பணிபுரிகிறார்கள்.
நம்மிடையே ஆங்கிலப் புலமையும் வரலாற்றறிவும் தமிழிலக்கியப் பரிச்சயமும் கொண்ட தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியராக விளங்குபவர் சி.பத்மநாதன் அவருடைய நெறிப்படுத்தலின் பேரில் கலாநிதி மகேஸ்வரன், க.இரகுபரன். பூனரி பிரசாந்தன் ஆகிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் மூன்று நாள் ஆய்வரங்கை 'பக்தி நெறியும் பண்பாட்டுக் கோலங்களும்" என்ற துலைப்பில் 2007 ஜூன் 29,30 ஜூலை 01 இல் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் சிறப்பாக நடத்தி முடித்தனர். நான்கு பேர் தமிழ் நாட்டிலிருந்தும் ஆய்வுரை நிகழ்த்தினர். நமது பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களும் ஏனைய அறிஞர்களும் பயன்தரும் கட்டுரைகளைப் படித்தனர்.
gaolallupp 6Taivavittb The Island psT6tlygflair Midweek Review வில் 2007 ஜூலை 04 இல் எழுதியிருக்கிறேன். முடியுமானால் தயவுசெய்து படித்துப் பாருங்கள்.
(SNSD

፲፲ፖ
6ம்பன் விழா (மே 31-ஜூன் 03, 2007) இனிதே நடந்து முடிந்தது. இக்கட்டான நிகழ்காலச் சூழலில், பிரமிக்கத்தக்க அளவில், பிரம்மாண்டமான முறையில், சீரான ஒழுங்கமைப்புடன் விழாவை ஒழுங்குபடுத்திய கம்பன் கழகத்தினரைப் பாராட்ட வேண்டியது அவசியம்.
கொழும்பிலே, கலைசார்ந்த உணர்வை ஊட்டி யமையும் இளைய பரம்பரையினரிற் சிலரையாகுதல், தமிழ் இலக்கியச் சிறப்புகளை, குறிப்பாக 'கம்பராமாயண' நுண்ணிதானநயங்களை நுகரும் வண்ணம் செய்தமையும் பெரிதும் வரவேற்கத்தக்கது.
விவாதங்களும், உரைகளும், வியாக்கியானங்களும், கவிதா வீச்சுகளும், பொதுமக்களின் சிலரின் சாமான்யத் தன்மையையும் சிறிது உயர்த்த உதவின. வயதில் இளவல்களாக இருந்த பொழுதிலும், நமது புதிய பரம்பரை அறிஞர்கள் செட்டாகவும், ஆழமாகவும் வழவழாவின்றியும் ஆய்வுரீதியாகவும் தமது பார்வைகளை எடுத்துக் கூறியமை

Page 69
778 - ബഞ്ച്ബ് ബ്രി.മ தமிழ் நாட்டறிஞர்களை வியப்பிலாழ்த்தியதுடன், அவை அவர்களுக்கு ஒரு Role Model ஆகவும் அமைந்துள்ளன.
இலக்கியத் திறனாய்வை எழுத்து மூலந்தான் செய்யலாம் என்றில்லை. பாத்திர நலங்களை இலக்கியத் திறனாய்வாக வாய்மொழி விவாதங்கள் மூலமும் எடுத்துரைக்கலாம் என்பதை இளையவரும், முதியவரும் தத்தம் கோணங்களில் நின்று எடுத்துரைத்தனர். நான் வியப்புற்றேன்.
இந்த ஆண்டுக் கம்பன் விழாவிலே பங்குபற்றிய பெரும் பங்களிப்பைச் செய்த அனைவரது அர்ப்பணங் களையும் தனித்தனியாக, அவர்தம் பெயர்களைச் சுட்டி, விபரிக்க முடியாது இருக்கிறது. காரணம் பட்டியல் நீளமானது.
ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றியும் தனித்தனியாக இங்கு வருணிக்க முடியவில்லை. எந்தவிதமான பாகுபாடுமின்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும், கெளரவிக்கப் பட்டவர்களும், விருதுகள் பெற்றவர்களும், புகழப்பட்டு பண்பாட்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டனர்.
கம்பன் விழா போன்ற பொதுமக்கள் பெருமளவு கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளினாற்றான்திறனாற்றல்கள்/ தனித்திறமைகள் நன்கு வெளிப்படுகின்றன.
கம்பன் கழகத்தினர் மீது சிலர் குறைகளைக் காண முடியுமாயினும் இக்கழகத்தினர், வாழும் மொழியான தமிழுக்கு, கொழும்பில் உயிரூட்டுவது பெருமை தருகிறது
() () ()

779
ബഥിങ് മഞ്ചു' %ബ് ഭക്ഷ്മബ7്
6 டந்த மாத இறுதியில் (மே 27,2007) எனக்கு மகிழ்ச்சி தந்த ஆய்வரங்கொன்று WERC மண்டபத்தில் இடம் பெற்றது. WERC என்பது "பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்" இந்த அரசு சார்பற்ற நிறுவனம் வெள்ளவத்தை 58,தர்மராம வீதியில் இருக்கிறது. இதன் தலைவர் கலாநிதி திருநிறைச் செல்வி திருச்சந்திரன். இவரே இந்த ஆய்வரங்குக்குத் தலைமை தாங்கினார். விபவி கலாசார மையம், இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை ஆகியன இந்த ஆய்வரங்கை ஏற்பாடு செய்தன. குறிப்பிட்ட இந்தப் பேரவையின் முக்கியஸ்தர்களாக

Page 70
720 — ബമീബഗ്ഗ് Zങ്ങ. മ
முதுபெரும் எழுத்தாளர் நீர்வை பொன்னையன், எழுத்தாளர் தம்பு சிவா எனப்படும் த.சிவசுப்பிரமணியன் ஆகியோர் இருக்கிறார்கள்.
நீர்வை பொன்னையன் எழுதிய ஏராளமான, கலைத்துவமான, மனிதத்துவம் நிரம்பிய முற்போக்குக் கதைகளுள் 25 கதைகளைத் தேர்ந்து "நீர்வை பொன்னையன் கதைகள்” என்ற 258 பக்க நூலொன்று வெளியாகியிருப்பதை முன்னிட்டு இந்த ஆய்வரங்கு இடம்பெற்றது. இந்த நூலைத் தொகுத்தவர்கள் அமரர் வ.இராசையாவும் எம்.கே. முருகானந்தனும் ஆவர். இருவருமே ஏனைய தகைமைகளுடன் நல்ல திறனாய் வாளர்களுமாவர்.
இந்த ஆய்வரங்கு எனக்குச் சந்தோஷம் அளித்ததற்குக் காரணம், ஏனைய புத்தக வெளியீட்டு விழாக்கள் போலன்றி, ஆக்கபூர்வமான முறையில், கதைகளின் பல்வேறு அம்சங்களைத் தனித்தனியாக எடுத்துக் கூறிமைதான்.
கற்றறிந்தோர் நிறைந்திருந்த இந்தக் கூட்டத்திலே நல்லதோர் விருந்தையளித்த ஆய்வாளர்கள் இவர்கள் தான். கலாநிதி வ.மகேஸ்வரன் (உருவமும் உள்ளடக்கமும்) தெ.மதுசூதனன் (பாத்திரப் படைப்பும் உத்தியும்), எம்.தேவ கெளரி (பெண்களும் சிறுவர்களும்), த.இரவீந்திரன்
(நீர்வையின் படைப்புகளும், ஏனைய முற்போக்கு

്.ബി. ക്രിക്രZZഞ്ച് 727
எழுத்தாளர்களின் படைப்புகளும் - ஒப்பீடு), சிவா சுப்பிரமணியம் (சமுதாயமும் அரசியலும்) இவர்கள் அனைவருமே தத்தமளவில் பாராட்டுக்குரிய ஆய்வாளர்கள் ஆவர். இவர்களுள்ளே, மதுசூதனன், ரவீந்திரன்ஆகியோரின் ஒழுங்கு முறையான பகுப்பாய்வுகள் எனக்குப் பிடித்துப் போய்விட்டன. இவர்கள் ஒவ்வொரு வரும் என்ன கூறினார்கள் என்பதை விஸ்தாரமாக
விளக்கிக்கூற என்னால் முடியாது. இது ஏன் என்பீர்கள்.
ஏனென்றால், இந்த ஆய்வாளர்களின் பார்வைகள் விரிவான நூலொன்றாக வெளிவரவிருப்பதாக, நான் அறிகிறேன். தவிரவும் 'பத்தி எழுத்தில் விரிவான
() () ()
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கதைகள் தொடர்பான மதிப்புரையைப் பிரத்தியேகமாகச் செய்ய வேண்டும். தவிரவும், இந்நூலில் இடம்பெற்றுள்ள கதைகள் தொடர்பாக நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இருந்தாலும் 2007 இல் எனது பார்வை எவ்வாறு அமைகிறது என்பதை வெளிப்படுத்த பிறிதாக நான் எழுதவே வேண்டும்.
நிற்க, இந்த ஆய்வரங்கிலே, தொகுப்புரை வழங்கிய வைத்திய கலாநிதி எம்.கே.முருகானந்தன் "எவருமே

Page 71
722 — ീബഞ്ച്ബ് മZങ്ങ. മ நீர்வையின் அழகியல் தொடர்பாக எழுதவில்லை" என்று கூறினார். இது தவறு. ஒரு வேளை, எம்.கே.எம்.நீர்வையின் அழகியல் தொடர்பாக நான் எழுதியதைப் படித்திருக்க வில்லை போலும்.
யாழ்ப்பாணத்திலிருந்து "விவேகி" என்றோர் இலக்கிய சஞ்சிகை வெளிவந்து கொண்டிருந்தது ஆசீர்வாதம் என்பவர் இதன் ஆசிரியர். 1962 ஜூன் மாத இதழில் நீர்வை பொன்னையனின் "மேடும் பள்ளமும் என்ற சிறுகதைத் தொகுப்பில் காணப்பட்ட அழகியல் சார்ந்த பிரயோகங்களை எடுத்துக்காட்டியிருந்தேன்.
இக்கட்டுரை, "பின்னர் திறனாய்வுப் பார்வைகள் (1996) என்ற எனது நூலிலும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தப் புத்தகம் நூல் நிலையங்களில் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.
நிற்க, நீர்வை பொன்னையனின் கதைக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என கருத்துத் தெரிவித்த கலாநிதி செல்வி திருச்சந்திரன் மொ பெயர்க்க ஆட்கள் இல்லை என்று கூறினார். "ஏ.ஜே.யு. நம்மிடிையே இல்லை" என்றார் அவர்.
தமிழ்க் கதைகளை ஏ.ஜே.கனகரத்ன மாத்திர ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை என்பது பல அறியாமலிருக்கலாம். Saturday Review ஸ்தாபக ஆசிரிய எஸ்.சிவநாயகம் சில ஈழத்துச் சிறுகதைகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.ര.ക്ഷിക്രമZങ്ങ് 723 ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். ராஜசிங்கம் அவர்களும் அவ்வாறே செய்துள்ளார். ராஜ பூரீகாந்தன், தாராஜ் ஆகியோர் எழுதிய சிறுகதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு "A Lankan Mosiac" என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. ஆங்கில ஆக்கம் செய்தவர் கே.எஸ் வகுமாரன். இன்னும் இரண்டொரு மாதங்களில் வெளிவரவிருக்கும் ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பிலே, மது எழுத்தாளர்கள் சிலரின் கதைகளும் இடம் பெற விருக்கின்றன. மொழிபெயர்ப்பாளர் அடியேனே!
செல்வி திருச்சந்திரன் தனது புலமை சார்ந்த ஆங்கில நூலைத் தமிழில் தரமுடியுமா என்று கேட்டார். படித்துப் ர்த்தபோது அது எனக்கு அவ்வளவு விபரம் தெரியாத ண்ணிலைவாத நிலையில் நின்று, வெளி நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் சிறுகதை முயற்சிகள் பற்றியதாகவும், கதையாகவும் இருந்தது. ானவே, அதனை என்னால் தமிழில் மொழிபெயர்க்க
டியாது என்று அவரிடம் கூறினேன்.
விபவி கூட்டத்திலே, ஏ.ஜே.க்குப்பின் ஆங்கிலத்தில் ாழிபெயர்க்க ஆளில்லை என்று கலாநிதி அவர்கள் ய பொழுது அவர் பக்கத்திலிருந்த தினகரன் பிரதம சிரியர் சிவா சிவசுப்பிரமணியம், என் பெயரை னைவூட்டினார். அப்பொழுதுதான், தமது ஆங்கில ாலைத் தமிழில் நான் மொழிபெயர்க்க முன்வரவில்லை ான்று குறிப்பிட்டார். எனக்கு மொழிபெயர்க்கத் தெரியாது

Page 72
724 — ിZബ്ബഗ്ഗ് മZഞ്ച്. ()
என்றில்லை. தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் நானு
மொழிபெயர்ப்பேன் என்றும், செல்வி அவர்களுடைய கலாநிதிப்பட்டம் தரக்கூடிய ஆங்கில நூலைத் தாக
தமிழாக்க முடியாது என அவ்விடத்திலே நான் கூறினேன் ஆயினும், சமுகமளித்தவர்கள் எனது விளக்கத்தை பூரணமாகப் புரிந்து கொண்டார்களோ தெரிய வில்லை. சில சமயங்களில் சிலரின் கூற்றுகள் முழு விபரங்களையும் அறியாத நிலையில், சம்பந்தப்பட்டவரின் பங்களிப்புக்களை மழுங்கச் செய்வதாகவும் ஆக்கிவிடும்
அல்லவா?
 
 

725
அர்த்தமுள்ள இந்துமதம்
மின் பிறப்பால் சைவசமயத்தவன்; கவிஞர் கண்ணதாசன் கூறியது போல அர்த்தமுள்ள மதமாக இந்து சமயம் இருந்து வருவதை அறிவாலும் உள்ளத்தாலும் உணர்ந்து வந்திருக்கிறேன்.
ஆயினும், நான் ஈடுபட்டு வரும் எழுத்துத்துறையைச் ரியான முறையில் பயன்படுத்தவும் பயன் பெறவும் பல்நெறி சார்ந்த அணுகுமுறைகள் தேவை என்பதை வரித்துக் கொண்டு எனது எழுத்துக்களை வாசகர்களிடம் பரிவர்த்தனை செய்து வருகிறேன்.
அத்தகைய எனது பல்நெறியறிவுப் படுதாவுக்குள் தத்துவம், சமயம், மானிடவியல், வரலாறு, சமூகம்,
ாழ்வியல் இலக்கியம் போன்றவையும் அடங்கும்.
சமயத்தைப் பொறுத்தமட்டில் கிரியைகள், அனுஷ்டானங்கள், சடங்குகள், ஆலயதரிசனம், உற்சவங்கள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்படுவதை விட

Page 73
726 — ബഴ്സ് മജ.0
தத்துவார்த்த நோக்கிலேயே அனுபவங்களின் பெறுபேறு களிலேயே நான் எனது மதமாகிய இந்துசமயத்தை புரிந்து கொள்கிறேன்.
உண்மையைத் தேடும் எனது முயற்சிகளில் பிற மதங்கள், தத்துவங்கள் போன்றவற்றின் குணப் பண்பு களையும் நான் கற்றுக்கொள்ள விரும்புகின்றேன்.
சைவசமயச் சித்தாந்தங்களை இளவயதில் கற்பதற்கு எனக்கு வழிகாட்டிய முதல் நூல் ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடை அதன் பின்னர் மட்டக்களப்பிலே உதித்த சைவப்பெரியார் மறைந்த அருணாசலதேசிகரும், மறைந்த புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையும் ஆவர்.
அதேசமயம், எனது மறைந்த தந்தையார் வேதாந்தம்
தொடர்பாக எனக்கு அறிவைப் புகட்டினாலும் இளவயதில் அதன் தாற்பரியங்களை நான் புரிந்து கொள்ள முடியவில்லை. எனது தந்தையார் கைலாயர் செல்ல நயினார் ஓர் அறிவாளியாக இருந்தார் என்பதனை அவருடன் பழகியவர்கள் அறிவர். அவருக்கு தாயுமானவரும் சித்தர் பாடல்களும், Bertrand Russel உம், ராதாகிருஷ்ணனும் பிடித்தமானவர்கள். எனவே, சமயம் தொடர்பான எனது அறிவும் அனுபவமும் சம்பிரதாய முறையில் அமைந்திருக்கவில்லை.
இந்து மதத்தின் அடிநாதமாக ஒலிப்பது அன்பே சிவம்' என்ற தாரக மந்திரம்தான். சகல மதங்களும் அன்பே கடவுள் என்கின்றன. நல்லதைச் சிந்தித்தல்,

ச.என்.சிவகும/ரன் 727
ல்லதைச்சொல்லல், நல்லதைச் செய்தல் ஆகியன ைெறவனின் சொல்லாமற் சொல்லும் ஆணை. ைெறவன் இருக்கிறானோ, இல்லையோ மனித உயிர்கள் அனைத்தினரிடமும் இறைவன் குடிகொண்டிருக்கிறான் என்பது உண்மை தான். இறைவன் என்பது நாமாகவும் இருக்கலாம்.
() () ()
ஈழத்துத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் சைவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய மதம் இந்து
மதம் என்ற பெரும் கடலினுள்ளே அடங்கும் சைவசமய மாகும். சைவசித்தாந்தம் தமிழ் நாட்டின் பெரும் பகுதி களிலும் ஈழத்திலும் தலைதுாக்கியிருக்கிறது. சைவ த்தாந்தம் தொடர்பாக பிறமொழியாளர்கள் ஆங்கிலத்தில் ப்பிடத்தக்க சில நூல்களை எழுதியுள்ளனர். மறைந்த ராசிரியர் சி.சூரியகுமாரன் எழுதிய நூலும் அவற்றுள் ஒன்று.
இந்து சமயத்தை நிறுவியவர் ஒருவருமில்லை. இந்துக்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டியவை என்றொரு வகைமுறையில்லை. பின்பற்றப்படும் மதங்களுள் மிக ஆதியானது இந்து மதம் தான். ஆன்மிக நிறைவை எய்துவதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு என்று இந்துமதம் சட்டதிட்டம் செய்யவில்லை.
காஷ்மீர் உட்பட இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகள், நேபாளம், இலங்கை, மொறிஷியஸ், கரிபிய தீவுகள், இந்தோனேசியாவின் சில பகுதிகள் போன்ற

Page 74
728 வற்றில் இந்துசமயம் பின்பற்றப்படுவதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இலங்கையில் பெளத்தத்திற்கு அடுத்ததாக இந்து சமயமே அதிக மக்களால் பின்பற்றப் பட்டு வருகிறது.
இந்து நதிப் பள்ளத்தாக்கு நாகரிகத்தின் போது அதாவது, சுமார் 8,000 வருடங்களுக்கு முன் சிவ வழிபாடு
6ീബങ്ങ്ബ് മZശ.മ
இருந்து வந்ததாகச் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உலகிலேயே மிகவும் பழைமை வாய்ந்த சமயம் சைவம் தான் என்று சிலர் துணிகிறார்கள்.
இந்து மதத்தின் முக்கிய உறுதிப் பொருள்கள், வேதாந்தமும் சித்தாந்தமுமாகும். சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணபத்தியம், கெளமாரம், செளரம் என்பன அதன் கிளைகளாகும்.
தமிழர்களின் பண்பாட்டில் இந்து சமயப் பண்புகள் இரண்டறக் கலந்திருக்கின்றன.
ஓர் ஆய்வாளரின் கருத்துப்படி சைவ சித்தாந்தத்தின் முதற்குரு, காஷ்மீரில் பிறந்த மகரிஷி நந்தித. அதாவது இவர் கி.மு.250 இல் வாழ்ந்தார் என்றும், அவரைத் தொடர்ந்து வந்தவர்களுள் "திருமந்திர"த்தை உபதேசித்தவர் திருமூலர் என்றும் அறியப்படுகிறது. வடமொழியிலிருந்து தமிழ்மொழிக்கு சைவ ஆகமங்களை மொழி பெயர்த்துத் தந்தவர் திருமூலர் என்பர்.
இலங்கையில் கி.பி.3 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சைவம் தழைத்தோங்கியது என்று சில 邻 ய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சே.கி/ம்,சிவகுமாரன் 29
பேராசிரியர் எஸ்.பத்மநாதனின்நூல்கள் விஞ்ஞான பூர்வமாக வரலாற்றை மறுபரிசீலனை செய்கின்றன என்பதை நாம் அறிவோம்.
அன்பு, அறிவு, பண்பு, பணிவு, துணிவு, பரிவு ஆகியன இந்துக்களின் பண்பாக இருக்க வேண்டும் என்று சமயவாதிகள் கூறுவர்.
0 0 (0
நேற்றைய தினம் (மார்ச் 24, 2007 வரை) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றுமொரு அருமையான இந்துக் கலைக் களஞ்சியத்தின் எட்டாவது தொகுதியை வெளியிட்டு வந்துள்ளது. தமிழ் அகர வரிசையின் "தி” என்ற எழுத்து முதல் "தோ” என்ற எழுத்து வரையிலுமுள்ள எழுத்துக்களுடன் தொடங்கும் இந்து சமயம் தொடர்பான கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன.
தகைமைசார் வரலாற்றுப் பேராசிரியர் எஸ்.பத்ம நாதனைப் பிரதம பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்த இந்தத் தொகுதிக்கு, ஆய்வாளர்கள் க.இரகுபரன், எஸ்.தெய்வநாயகம் ஆகியோரின் பங்களிப்புகளும் இன்றியமையாததாக அமைந்து விட்டன.
இந்தத் தொகுதி (Professional) எனப்படும் (வாழ்க்கைத்) தொழில் சார்ந்த புலமைத் தகுதியுடைய அனுசணைகளுக்கேற்ப அழகாகவும் உரிய முறையிலும் Uni Art நிறுவனத்தினால் அச்சிடப்பட்டுள்ளது. நமது

Page 75
730 — ിബമീബഗ്ഗ് Zങ്ങ. മി நாட்டு ஆய்வாளர்களும் ஆய்வறிவாளர்களும் சிறப்புக் கட்டுரைகளை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் பெயர்களை இங்கு குறிப்பிடுவது அவசியம். ஏனெனில், நமது அறிஞர்கள் சிலரின் பங்களிப்புகளை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் என்று சொல்வதற்குமில்லை.
கட்டுரைகளைப் பிரத்தியேகமாக எழுதியவர்களுள்
பேராசிரியர்கள் சி.பத்மநாதன், வி.சிவசாமி, கோ.கிருஷ்ண ராஜா, தி.ஞானகுமாரன் ஆகியோரும் கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன், கலாநிதி ஏ.என்.கிருஷ்ணவேணி
ஆய்வாளர்கள் க.இரகுபரன், வேல் சுவாமிநாதன், இந்திரா தேவி சதானந்தன் சா.விஜயந்தி ஆகியோருமாவர்.
இவர்களை விட, வேறு அறிஞர்கள் முன்னர் எழுதிய கட்டுரைகளும் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன அவற்றை எழுதியவர்கள் தவத்திரு ஊரன் அடிகள் ம.பாலசுப்பிரமணிய முதலியார், பண்டிதர் இ.வடிவேல் தங்கேஸ்வரி கதிராமன், முனைவர் வை.வேதாசலம் பேராசிரியர் இராசெல்வகணபதி, முனைவர் உலகநாய பழனி ஆகியோராவார்.
இத்தொகுதியில் இடம்பெறும் வண்ண நிழ படங்கள் குறிப்பிடத்தக்கவையாய் இருக்கின்றன.
திருப்பாவை, திருப்புகழ், திருமகள், திருமணம் திருமந்திரம், திருமுருகாற்றுப்படை, திருவருட்பயன் திருவருட் பா, திருவிழாக்கள், திருவிளையாடல் புராணம் திருவையாறு, திரெளபதி, தில்லைவாழ் அந்தணர், திவ்வி
 
 
 
 
 
 
 
 
 
 

്.ബി.ക്രിക്രമZശ് - 737 தேசங்கள், தீட்சை தீபாவளி, தீமை, துவைதம், தெலுங்கு, தேவாரம் ஆகிய தலைப்புகளில் வெளிவந்துள்ளன. கட்டுரைகளைப் படித்து நான் புத்தறிவு பெற்றேன். ஏனைய கட்டுரைகளை ஆற அமர இருந்துதான் நான் படித்துப் பயன்பெற வேண்டும்.
இந்த அருமையான தொகுதியைத் தயாரிப்பதில் எத்தனை இடர்பாடுகளைத் தாண்டி இதில் பங்கெடுத்தவர்கள் அனுபவித்திருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. பாராட்டையும் மதிப்பையும் தவிர வேறொன்றும் கூறுவதற்கில்லை.
சைவர்கள், வைஷ்ணவர்கள் மாத்திரமின்றி, சமயத்தையும் தமிழ் இலக்கியத்தையும் அறிய விரும்பு பவர்கள் அனைவரும் இந்நூலை ஒரு பொக்கிஷமாக வீட்டில் வைத்துப் பயன்பெற வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இதன் விலையோ குறைவு. 500 ரூபாய் மாத்திரமே.
இந்தத் தொகுதிக்கு திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் வெளியீட்டுரையை
எழுதியிருக்கிறார். அவர் எழுதிய உரையின்படி இந்துக் கலைக் களஞ்சியத்தின் முதலாம் தொகுதி 1900 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதுவரை ஏழு தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. இந்து சமயத்துடன் தொடர்பு உடைய வரலாறு, பண்பாட்டுப் பெருமைகள், தலங்கள், கலாசாரச் சின்னங்கள், பெரியார்கள், சஞ்சிகைகள்
முதலானவை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன.

Page 76
732 — ബഞ്ച്ബ് മZ7ങ്ങ. മ9
தலைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் கூறுவது போல சைவக்குரவரின் பாடல் பெற்ற தலங்கள், வைணவ ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலங்கள் பற்றியவையாகப் பெரும்பாலான கட்டுரைகள் அமைந்துள்ளன.
பேராசிரியரின் வருத்தம் யாதெனில், "சைவசமயத் திலே திருக்கோயில்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்ற போதும் இலங்கை சைவ அறிஞர்களில் பலர், கோயில் களின் சிறப்புக்களை மாணவர்களுக்குப் போதிக்க வேண்டுமென்பதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். அதனால் இந்து கலாசாரத்தின் மகோன்னத மான அம்சங்களைப் பற்றி இளைய தலை முறையினர் அறிந்து கொள்ள முடியாத நிலையொன்று இருந்து வந்துள்ளது. கோயில் கிரியைகள் மட்டுமே சமயநெறி என்ற ஒரு மனோபாவம் உண்டு. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக இத்தொகுதி வெளியிடப் பட்டிருப்பது பெரும் பாராட்டுக்குரியது என்பேன்."
() () ()
இந்து சமயம் தொடர்பாக நாம் பேசும் பொழுது இந்து நாகரிகம் சம்பந்தமான மற்றுமொரு பயனுள்ளநூல் வெளிவந்திருப்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவரும் அம்மன்றத்தின் கல்விக் குழுச் செயலாளருமான த.மனோகரன் பதிப்பித்துள்ள இந்தப் புத்தகம், க.பொ.த. உ/த பாட வழிகாட்டி நூலாக வெளிவந்திருக்கிறது. அழகாக அச்சிடப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த 17 ஆந் திகதி கொழும்பு சரஸ்வதி

്.ബി.കീബക്രZZഞ്ച് 733 மண்டபத்தில் விமரிசையாக இடம்பெற்ற போதும் பேச்சாளர் ஒருவர், ஒரு பேராசிரியர் (பெயர் குறிப்பிடாமல்) பற்றிய தனி மனித அபிப்பிராயங்கள் நாகரிகமாக அமையவில்லை.
392 பக்கங்களைக் கொண்ட இந்த நூல் இரண்டு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. மிகமிகப் பிரயோசன மான கட்டுரைகள் அடங்கியுள்ள இந்த நூல், உயர் வகுப்பு மாணவர்களுக்காக மட்டுமன்றி, பல்கலைக்கழக மாணவர் களுக்கும் என்போன்ற வயதில் முதியவர்களுக்கும் பெரும் பயன்தரக்கூடியது. இந்த அருமையான புத்தகத்தைத் தந்தவர்களுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் வி.கயிலாயப்பிள்ளை, க.அருணாசலம், கந்தையா நீலகண்டன், மா.கணபதிப்பிள்ளை, த.மனோகரன் ஆகியோரையும் நாம் பாராட்ட வேண்டும்.
0 0 ()
இந்தச் சமயத்திலே "இந்து ஒளி"யின் தீபம் 11, சுடர் 02இதழ் பற்றியும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் காலாண்டிதழான இந்து ஒளி"யின் இந்த இதழ், தெல்லிப்பழை, துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் வெள்ளிவிழாச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது.
நாற்பத்திரண்டு பக்கங்கள், நிறைய நிகழ்ச்சிகள் தொடர்பான நிழற்படங்கள், சின்னச் சின்ன கட்டுரைகள், கவிதைகள் ஆகியன வாசிப்புக்கு உட்படத்தக்கவை. படித்துப் பயன்பெறுவோம்.

Page 77
734
zzബ7 ജൂff257ം Lമ്മബലി”
இந்து சமயம் என்ற பெருங்கடலிலே சைவ சமயமும் அடங்கும். ஈழத்துத் தமிழ் மக்களிற் ஆகக் கூடுதலான எண்ணிக்கையுடையவர்கள் சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள். இவர்களுடைய முழுமுதற் கடவுள் சிவன், சைவ சமயக் கடவுளர் குடும்பத்தில் இடம்பெறும், ஆண் தெய்வங்களும் பெண் தெய்வங்களும் பற்பல பெயர்களில் வழிபடப்பட்டு வருகின்றனர். விஷ்ணுவை வழிபடுபவர்களும் இலங்கை யில் இருக்கிறார்கள்.
சைவ சித்தாந்தமே ஈழத்திலும் தமிழ் நாட்டின் பெரும் பகுதிகளிலும் தலைதூக்கியிருக்கிறது. சைவ சித்தாந்தம் தொடர்பாகப் பிற மொழியாளர்கள் ஆங்கிலத்தில் குறிப்பிடத்தக்க சில நூல்களை எழுதி யுள்ளனர். மறைந்த பேராசிரியர் சி.சூரியகுமாரன் எழுதிய நூலும் அவற்றுள் ஒன்று.

ச.என்.சிவகுமாரன் 735 இலங்கையில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு
முன்னமே சைவம் தழைத்தோங்கியது என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இது இவ்வாறிருக்க, கடந்த மாதம் இறுதியில் டம்பெற்ற ஆய்வரங்கிலே (பக்தி நெறியும் பண்பாட்டுக் காலங்களும்) தொடக்கவுரை நிகழ்த்திய, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாழ் நாட் பேராசிரியர் ப.கோபால ருஷ்ண ஐயர் கூற்றுகள் சில நினைவுகூரத்தக்கன. பண்பாடு” பற்றி தத்துவத்துறைக் கலாநிதி அமரர் எஸ்.ராதாகிருஷ்ணன் விளக்கத்தை, ஐயர் நினைவூட்டினார்.
"நாகரிகம் என்பது ஒரு நாட்டின் மனிதத் தன்மையை அந்த நாட்டின் விழுமிய கருத்துகளை வழிவழியாகப் போற்றிக் காக்கப்படும் பண்பாடுகளை
அடிப்படையாகக் கொண்டதாகும்."
கோபாலகிருஷ்ண ஐயர் மேலும் கூறினார் :
"தென்னாட்டில் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்த பண்பாடு, தான் தோன்றிய நாட்டில் மாத்திரமன்றி, இந்திய எல்லைகளுக்கும் அப்பால் பரவிய இடங்களிலும் தனது செல்வாக்கைச் செலுத்தியதோடு காலங்காலமாக மனித வாழ்வை பல்துறைகளில் மேம்படுத்தவும் தலைப் படலாயிற்று. எத்தகைய தாக்குதல்களினாலும் சின்னா பின்னப்படாமலும் கால வெள்ளத்தால் அழியாமலும் நின்று நிலவும் இப்பண்பாடு, பிரதேச தனித்துவத்தோடு விளங்கி வந்துள்ளது. மொழி அடிப்படையில் வேறு

Page 78
736 பாடுகள் காணப்படினும் வேற்றுமையில் ஒற்றுை கொண்டு இப்பண்பாடு சிறப்படைந்துள்ளமை குறிப்பிட பாலது. இப்பண்பாடு மேலைநாட்டவர்களையும் பெரிதும்
6ിബഞ്ച്ബഗ്ഗ് Zശ.)
கவர்ந்ததில் வியப்பில்லை. இத்தகைய பண்பாட்டி மேன்மையை நாம் எளிதில் அளவிட்டு விட முடியாது."
பல்லவர் காலம் தொடர்பாகவும் கோபாலகிருஷ்ண ஐயர் இவ்வாறு கூறினார் :
"தென்னாட்டில் காஞ்சியைத் தலைநகராக கொண்டு தொண்டை நாட்டுடன் தமிழகத்தின் பல பகுதிகளையும் இணைத்து ஆட்சி செலுத்தியவர்கள்
பல்லவர் என்னும் பேரரசுப் பரம்பரையினராவர்"
இந்த ஆய்வரங்கிலே கலாநிதி ஏ.என். கிருஷ்ண வேணி 'பக்தி ரசம்" பற்றிச் செட்டாக உரையாற்றினார் அவருடைய அளிக்கையில் (Presentation) இருந்து சில பகுதிகள் :
"இந்துக்களின் உயர் கொள்கையாகப் பேசப்படுவது முக்தி அல்லது வீடுபேறாகும். இதனை அடைவதற்குரிய பல்வேறு வழிகளில் ஒன்றாக அமைவது பக்தி. இது இறைவனிடம் செலுத்தப்படும் அன்பு என்று விளக்கம் பெறுகிறது. பக்தி என்னும் சொல் Bhaj என்ற வேர் சொல்லில் இருந்து தோன்றியது. அது அன்பில் பங்கு கொள்ளுதல், பகிர்ந்து கொள்ளுதல், மகிழ்ந்தனுபவித்தல் போன்ற செயன்முறைகளை உள்ளடக்கியது. பகவத் பாகவத போன்றவை "பஜ்" என்ற வினையடியில் இருந்தே தோன்றியவை. பக்தி என்பது ஒரு தெய்வத்திடம்
 
 
 
 
 
 
 
 
 

്,ബ്, ക്രിക്രമZശ് 737 செலுத்தப்படும் ஒரு வழி அன்பு அல்ல. அன்பு செலுத்துவதுடன் அந்த அன்பில் திளைத்தல் என்ற நிலையில் வழிபடப்படும் பொருளுக்கும் வழிபடு
வாருக்குமிடையே உள்ள ஒத்த அன்பு என்றே பொருள் கொள்ள வேண்டும்."
0 0 (0
"கோபுரம்" (தகவல் இதழ்) இந்து சமய, கலாசார லவல்கள் திணைக்களத்தின் சித்திரை-2007இதழ் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் பெறுபேறுகளை உள் ாங்கிய முறையில் அச்சிடப்பட்டு வெளியாகியிருப்பது ாராட்டுக்குரியது. நிறைய வண்ணப் படங்கள், செதுக்கிய செய்திக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதழாசிரியர் ம.சண்முகநாதனுக்கும் உதவிப் பணிப்பாளர் எஸ்.தெய்வ நாயகம், பணிப்பாளர் சாந்திநாவுக்கரசன் ஆகியோருக்கும்
மரபும் நவீன கோலங்களும் இணைந்து தாடர்வதே வளர்ச்சியன்றோ?

Page 79
740 முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டியில் முதற் பரி
ിബങ്വേ മZഞ്ച്... 0
பெற்றிருக்கிறார். கவிதைப் போட்டிகளிலும் இ தடவைகள் பரிசு பெற்றிருக்கிறார். பல மருத்துவ கட்டுரைகளையும் திறனாய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். ஆறு குறுநாவல்களையும் எழுதி இருப்பதாக அறிகிறேன். இவருடைய 'புலி' என்ற சிறுகதை இந்திய பிற மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளதாகவும் "முரண்பாடுகள்" சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. இவர் எழுதிய நான்கு நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பப் பட்டுள்ளன.
ச.முருகானந்தன் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்நூலில் அவர் எழுதியிருக்கும் என்னுரையையும் மல்லிகைப் பந்தல் அதிபர் டொமினிக் ஜீவா எழுதிய முன்னுரையையும் நிச்சயம் நீங்கள் படித்துப் பார்க் வேண்டும்.
டொமினிக் ஜீவா எழுதுகிறார், "யுத்தக் கொடு நாச ரணப் பூக்களால் அலங்கரிப்புச் செய்யப்பட்டுள்ள வன்னி மா மண்ணில் ஓய்வு ஒழிச்சலில்லாமல் தனது தினசரி கடமையைத் தவறாமல் செய்து முடிக்க வேண்டி நிர்ப்பந்த கட்டாய கடமைக்கு உட்பட்டுச் சேவையாற்றி வரும் இவர், அந்த நாச அவலங்கள் நிகழ்ந்த கா கட்டங்களில் கூட பாமர மக்களுக்குத் தொண்டூழிய கடமை செய்து வந்ததுடன், இடையறாது அரிக்கள் லாம்பு' வெளிச்சத்தில் எழுதி வந்ததும் இவரது சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்."

.என்.சிவகுமாரன் 747
சரி, இனி இவரது கதைகளுக்கு வருவோம். த்தொகுதியில் 20 கதைகள் இடம் பெற்றுள்ளன. ந்ெதக் கதைகளைப் படித்ததும், சமு.வின் நல்லிதயத்தை ான் முதலிலேயே புரிந்து கொண்டேன். எத்தகைய மனிதாபிமான மிக்க படைப்பாளி இவர் என்பதைப் புரிந்து கொண்டதும், கதை எழுதும் முறையில் சில குறைபாடு களை நான் கண்டபோதிலும், அவற்றை மனதிற் கொள்ளாது கதைகள் சித்திரிக்கும் அவல லமைகளின் உள்ளடக்கத்தை உணர்வினால் கிரகித்துக் ாண்டு கண்ணிர் விட்டேன். இது ஆசிரியரின் வெற்றி மனக் கொள்ளலாம்.
கதை எழுதிய முறையில் பெரிய குறைபாடுகள்
இல்லை. ஆயினும் மிகத் தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்கள், உள்ளடக்கத்துக்குச் சமமாக உருவ அமைப்புகளையும் கவனிப்பர். ஆனால், சம்பிரதாயமாக நாம் பல வருடங் ாளாகவே சிறுகதை வடிவம் செம்மையாக அமையா
விடினும், அக்கதைகள் தீட்டும் யதார்த்தச் சித்திரிப்புக் ாகப் பாராட்டி வந்துள்ளோம். இந்த மாதிரியான போக்கைக் கைவிட்டு, எழுத்தாளர்களுக்கு உதவுமுகமாக, உருவச் சிறப்புகள் எவ்வகையாக அமையலாம் என்பதைத் திறனாய்வாளர்கள் எடுத்துக் காட்டுவது நன்று மாத்திரமல்ல அவசிய தேவையுங் கூட இது ஏனெனில், புதிதாக எழுதத் தொடங்குபவர்களும் மாமூல் வடிவத்தில் கதை சொல்லத் தொடங்கி விடுவார்கள்.
சிறுகதை ஒரு கலை. ஆசிரியரே கூறுவது
போன்று இலக்கியம் ஒரு மருத்துவம்' மருத்துவத்தில் அநாவசியத்துக்கு இடமில்லை.

Page 80
742 - சொன்னர் பே/ல.0
நமது எழுத்தாளர்களில், உள்ளடக்கமும் உருவமும் பிரிக்கப்படாத முறையில் சிறுகதை எழுத்தாளர்கள் ஒ சிலர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் க.சட்டநாதன் எனலாம்.
சமுருகானந்தன் அற்புதமானகலை பரிவர்த்தனையை மனித அவலங்கள் மூலம் காட்டும் அதே வேளையில் வாசகனே தானாகச் சில உணர்வுகளைக் கிரகித்துக் கொள்ள வகை செய்யலாம். சில வேளைகளில் வியாக்கியானமும் செய்வது தவிர்க்கப்படக் கூடியது.
உதாரணமாக, "வேட்டை' என்ற கதையை ஆரம்பிக்கையில், இடப்பெயர்ச்சி எத்தனை குடும்பங் களின் இயல்பு நிலையைக் கலைத்து விட்டது என்று எழுதுவதைத் தவிர்த்திருக்கலாம்.
இதுபோல, ஆதியோடந்தமாக எல்லா விபரங்களையும் விவரணத் தோரணையில் எழுதுவதும் நமது எழுத்தாளர்கள் பலரின் குறைபாடாக இருக்கிறது.
'தரைமீன்கள்' தொகுதியிலுள்ள 20 கதைகள் அனைத்தையும் பற்றிச் சிறு குறிப்புகள் எழுத வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். அப்படி எழுதுவதாயின் இப்பத்திக்கு பதிப்பாசிரியர் (Editor) தரும் இடத்தைவிட மிஞ்சிவிடும். எனவே, சில கதைகள் பற்றிய விளக்கம் சார்ந்த திறனாய்வுக் குறிப்புக்களைக் கீழே தருகிறேன்.
 
 
 
 

്.ബി. ക്രിക്രZZഞ്ച് 743 தெளிவு சொந்த நாட்டில், தன்னலம் பாராது, மக்களின் நோய் நொடிகளை, பலத்த சிரமங்களுக்கு மத்தியில், தீர்த்து வைக்கும் மனிதாபிமான வைத்தியரின் தை இது. சொகுசாக வாழ்ந்து, பிற நாட்டில் வலைவாய்ப்புப் பெறும் சந்தர்ப்பம் இவருக்கு இருந்தது. இவருடைய நப்பாசையைத் தூண்டிவிட்ட நண்பன் கூட இறுதியில் தனது பிறந்தகத்திலேயிருந்து உழைப்பதை வியப்பதாக எழுதுகிறார். கதையில் விறுவிறுப்பு உண்டு. அநாவசியச் சொற்களோ, நிகழ்ச்சிகளோ இல்லாமை வரவேற்கத் தக்கது. கதை நிகழும் சூழல் விபரிப்பும் பொருத்தமாய் அமைகிறது.
விழிப்பு : கதாசரியர் வன்னிப் பிரதேச அவல வாழ்வு சித்திரிப்புடன் நின்றுவிடாது, மலையக "லைன் வாழ் மக்களின் நாளாந்த சீர்கெட்ட வாழ்க்கைத் துயரையும் சம்பவங்கள் மூலம் எம் முன் கொண்டு வருகிறார். அரசியல் வாதிகளின் பொய் முகங்கள் அம்பலமாகின்றன. "மலையடிவாரக் காணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. ஆனால், தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை. அயல் கிராமப் பெரும்பான்மை இனத்தவருக்கே காணிகள் வழங்கப்பட்ட போது இவர்கள் ஏமாற்றமடைந்தனர்." என்பதை இக்கதையில் ஆசிரியர் காட்டுகிறார்.
அப்பாவும் நானும் கதாசிரியர் சமுருகானந்தன் இக்கதையை இன்னமும் இறுக்கமாக (சிறுகதை என்பது தன்னுணர்ச்சிப் பாடல் Lyric போன்றது என்பர்) எழுதி யிருக்கலாம். இக்கதையிலே கதை சொல்பவரின்

Page 81
744 குடும்பத்தினர் பற்றிய செய்திகளும் கிளிநொச்சி மன்னார் - தலைமன்னார் - யாழ்ப்பாணப் பிரயாணம் பற்றியும் அவரது பெற்றோர் பற்றியும் குறிப்பாக அவருடைய அப்பா பற்றியும் தந்தையாரின் உபதேசங்கள் பற்றியும் பின்னர் அவரின் மறைவு பற்றியும் கூறப்படுகிறது சுவாரஸ்யமாக இருந்தாலும், கதையின் குவியப்படுத்தல் முறையில் தொடர்நிலை அமையாதது, கதையை செதுக்கும் முறையினால் நீக்கப்பட்டிருக்கலாம் இருந்தபோதிலும், இக்கதை சொல்லாமல் சில செய்திகளைக் கூறி நிற்கிறது.
தாத்தா சுட்ட மான். இது ஓர் அருமையான கதை
அருமை ஏனெனில், இது உளவியல் வெளிப்பாட்டுப் பாங்கில் எழுதப்பட்ருப்பதனாலாகும். வயதேறிய காலத்தில், உடல் தளர்ச்சி ஏற்படும் பொழுது, முன்னர் செய்த காரியங்களைச் செய்ய முடியாமற் போய்விடுகிறது
627aarzi (2/zav... O
மனைவியின் இளக்காரமான பேச்சு, இடியன் மணியத்துக்கு உந்து சக்தியாக அமைய, அவன் தனது அசுர திறமைகளை இன்னமும் இழக்கவில்லை என்பதை கதாசிரியர் பிட்டுக்காட்டுகிறார். இது ஒரு Positive மனப்பாங்குக் கதை. இக்கதையில் வரும் ஒரு பகுதி.
"முயல்கறி, பறவைக்கறி என்று அவள் ஆசையாய் கேட்கிறபோதெல்லாம், தவறாமல் சுட்டு வந்து கொடுப்பான் உடும்பு உடம்போடுஒட்டும் என்று கேட்டுபிடிப்பித்து வந்து ஆசை தீரச் சாப்பிடுவாளே!
அவளுக்கு இப்போது உடம்போடு ஒட்ட விருப்பம் இலையாம். பாவி"

af, a7aziv. 4%2/ess zo zvøÝ 745
நான் விபரிக்காமலே, இங்கே என்ன சொல்லப் படுகிறது என்பதை நீங்கள் ஊகித்திருப்பீர்கள். அழகாக
மு. எழுதியிருக்கிறார்.
நேரமாச்சு : அல்லல்களுக்கும், அடக்குமுறைக்கும் ட்படுபவர்கள் இறுதியில் எதிர்ப்பு மனப்பான்மையையும் சக்தியையும் பெறுபவர்களாகி விடுவர் என்பது நம் கண்முன்னால் நிகழும் செயல்கள். இக்கதையிலும் டொக்டராக வரவேண்டும். குடும்பச் சுமைகளைத் தாங்க வேண்டும் என்று பெற்றோரினால் வலியுறுத்தப்பட்ட மாணவன், நிதர்சன அவலங்களின் உந்தலினால், குடும்பப் பாசத்தையும் பொறுப்பையும் உதறித் தள்ளிப் போராட்டச் க்திகளுடன் இணைகிறான். இக்கதை சில யதார்த்தச் ழல்களை வாசகர் முன் கொண்டு வந்தாலும், கதை நிகழ்ச்சிகளின் தொடர் நிலைகள் சிறிது செம்மைப்
டுத்தப்பட்டிருக்கலாம்.
மேற்சொன்ன கதைகளைவிட, ஏனைய கதைகளும் வன்னிப் பிரதேசத்தில் குடிபுகுந்துள்ள மக்களின் அவல வாழ்வையும் தன்னலமற்ற மனிதாபிமான வைத்தியரின் சேவைகளையும் எடுத்துக் காட்டுகின்றன.
கதாசிரியரின் முத்திரை பதித்த கதைகள் இத்தொகுதி யில் இடம்பெற்றுள்ளன.
(SN)

Page 82
746
apy zóAzlzé.
ത്തുമില്ക്ക As മഷ്ട zib
4g ്ബ 2്ടു് ഭൂ ബ് - ബട് &bf'
ழத்தில் நன்கு பிரசித்தி பெறாவிட்டாலும், நல்லதோர் புதிய எழுத்தாளர் எஸ்.உதயச்செல்வன் எனலாம். இவர் எழுதிய நாவல்களுள் ஒன்று "காதல் பூட்டு (2005)" நாட்டின் சமாதானத்திற்கு இந்த நாவலை ஆசிரியர் சமர்ப்பித்திருக்கிறார். நூலை வெளியிட்டிருப்பவர்கள் மணிமேகலைப் பிரசுரம், சென்னை - 17
தமிழ் நாட்டிலுள்ள திருப்பூர் தமிழ்ச் சங்கம், இந்த நாவலுக்கு, 2005 ஆம் ஆண்டு இலக்கிய விருதை வழங்கி இருப்பது அவதானிக்கத்தக்கது. நாவலாசிரியருக்கு நமது பாராட்டுதல்கள்.

്. മര.ക്രിക്രമZങ്ങ് 747
"காதல் பூட்டு" வீரகேசரி வாரமலரில் தொடர் கதையாக வெளிவந்தது. இதனை, இப்பொழுது நாவல் என்ற புத்தக வடிவில் படித்துப் பார்த்தேன். திறனாய்வு சார்ந்த விதத்தில் இந்த எனது மதிப்புரை அமையும்.
நாவலாசிரியரின் நோக்கில் இந்தக்கதை என்ன கூறுகிறது என்று முதலில் பார்ப்போம். "ஒரு முக்கோணக் காதல் கதையை ஒரு ஜேர்மனி அகதிமுகாமில் நடப்பதை காதல், சோகம், பிரிவு, விரக்தி என்பவற்றைச் சித்திரிக்கும் நாவலாகப் படைத்திருக்கிறேன்."
கதை ஆரம்பம் முதலே சுவாரஸ்யமாக எழுதப் பட்டுள்ளது. ஜேர்மனியிலுள்ள அகதி முகாமொன்றில் ஈழத்தவர்கள் சிலர் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். இக்கட்டான நிலைமைகளிலும், தமிழர் சிலரின் பழம் பெருமைச் செருக்கு புலப்படுத்தப்படுகிறது! ஆசிரியரின் முதிர்ச்சி, உலக மனித இயல்பு, சுருங்கச் சொல்லி விளக்குவது போன்று உரையாடல்கள் மூலம் வெளிப் படுத்தப்படுகிறது.
வெளிநாடுகளுக்குத் தப்பியோடிச் சென்ற ஈழத்துத் தமிழ் இளைஞர்கள் சிலரின் அவமானந்தரும் செயல் *களால், ஈழத்தமிழர் மீது ஒரு வெறுப்பு வெளிநாடுகளில் இருந்து வருவதை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம். இரண்டாவது அதிகாரத்தில் இது உணர்த்துவிக்கப் படுகிறது.
இந்தக் கதையில் வரும் ரம்யா என்ற பாத்திரம் பண் பாட்டு அதிர்ச்சிக்கு உள்ளாகிறாள். வசதிபடைத்தவள்

Page 83
748 ബര്ബ് മZയ. മമ് என்பதனால் சிறிது திமிரும், செருக்கும் அவளிடம் குடி கொண்டிருந்தன.
அவள் தன் அண்ணன் (ஜேர்மனியில் உறைவிடச் சிற்றுண்டிச்சாலை வைத்திருப்பவன்) மீது சந்தேகம் கொள்கிறாள். மேல் நாட்டுப் பழக்கவழக்கங்களை ரம்யா இன்னமும் உள்வாங்கவில்லை. அடம் பிடிப்பவள், அவசரபுத்தியுள்ளவள்ஆயினும், நியாயத்தை நல்ல முறையில் எடுத்துச் சொன்னால், அதனை ஏற்றுக் கொள்ளும் *மனோபாவமும் அவளிடம் இருந்தது. அறியாமையினாலும், ஆணவத்தினாலும் ரம்யாவுக்குக் கோபம் அடிக்கடி ஏற்படுவதுண்டு.
இந்தக் கதையில் வரும் அபிலாஷ் என்ற பாத்திரச் சித்திரிப்பின் மூலம் கதாசிரியரின் முதிர்ச்சி தென் படுகிறது. அந்தப் பாத்திரம் வாயிலாக ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்:
"அப்படி இங்லிங்க, எனக்கும் நிறையவே உதவி பண்ணியிருக்காங்க. அதுபோல நானும் பிறருக்கு உதவி பண்ணணும்னு நினைக்கிறதில எந்தப் புதுமையும் இல்லையே. உதவி செய்வதில் ஒருவகை ஆத்ம திருப்தி கூட இருக்கு, அவ்வளவுதான்."
இந்தக் கதையின் 13 ஆம் அதிகாரத்தில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. ராஜா என்ற பேசாக் குழந்தையின் தாயான சுகர்ணா சொல்கிறாள் :
"வெட்கத்தை விட்டுச் சொல்றதென்றால், நான் பல பேரால் கெடுக்கப்பட்டு களங்கப்பட்டவள். அந்த அக்கிரமத்தைச் செய்தவர்கள் இராணுவத்தினர்தான்."

Cas. a7aziv. MéZavezzzozwalý 749
அபிலாஷ் அவள் நிலைமையை அறிந்து இவ்வாறு, பச்சாத்தாபப்பட்டான். "என்ன அதிசயம்! தாய்மை என்பது எவ்வளவு பெரிய தத்துவம் முகம் தெரியாத காட்டு மிராண்டிக்குக் கற்பைப் பறிகொடுத்து, அந்தக் கொடுமைக் காரனுக்கே குழந்தை பெற்று. இப்போ அந்தக் குழந்தையைத் தன் வாழ்க்கையாய் நினைத்து மார்போடு அணைத்து ஏ தாய்மையே! உன்னைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்."
கதாசிரியர் உளவியல் பாங்கிலும் கதையைத் துரிதமாக வளர்த்துச் செல்வது, வரவேற்கத்தக்கதாய் அமைகிறது. சின்ன உதாரணம்,
சிரிப்பில் சிவந்த முகத்தை ரசித்தவன் உடன் சுதாகரித்துக் கொண்டான். அவன் ரசித்ததைக் கவனித்துக் கொண்டவள் கவனிக்காதது போல் காட்டிக் கொண்டாள். அவளையறியாமல் அவன் தன்னை ரசித்துக் கொண்டதை எண்ணி மனதுள் ரசித்துக் கொண்டாள்.இரு துருவங்களாக இருந்த அபிலாஷ"க்கும் ரம்யாவுக்கும் இடையில் மெல்ல மெல்லத் துளிர்ந்த மெல்லிய கவர்ச்சியும் மன ஒட்டுதலும் "காதல்" என்ற பெயரில் உருவாகும் வேளையில் திடீரென்று ஒரு திருப்பம் கதையில் நிகழ்கிறது.
ஊமையும், செவிடனுமான ராஜா, தகப்பனைத் தெரியாத ஐந்து வயதுக் குழந்தை அவனுடைய தாயாரான சுகர்ணாவின் தடுமாற்றமே இது. இந்தத் தடுமாற்றம் தற்காலிகமானது தான் என்பதை விளக்க, ஆசிரியர் 208 ஆம் பக்கத்தில் இவ்வாறு நியாயம் காண்பிக்கிறார்.

Page 84
752
62zzaớawzó (Z/zav... øy
கெட்ட செயல்களை நிறுத்த, கோமதியின் கணவனும், கோமதியுடன் விடுதியில் இருக்கும் ரமணியும் கூட்டாகச் சேர்ந்து, கோமதியை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்ப எடுத்த முயற்சிதான் என்று பின்னர் கதை மூலம் தெரியவருகிறது.
இந்தக் கதையின் பிற்பகுதி Melodrama என்று சொல்லத்தக்க அதீத நாடகப் போக்காக அமைந்திருப்பதை தவிர்க்க முடியாது. இது ஏனெனில், இலட்சியச் சிந்தனை களினாலும் தமிழ் சினமா, ஜனரஞ்சகப் புனைகதைப் போக்கு போன்றவற்றினாலும் கட்டுண்டதமிழ் வாசகர்களைக் குறிப்பாகத் தமிழ் நாட்டின் (பாமரத்தன்மை கொண்ட பெருவாரியான வாசகர்களை) பொது வாசகர்களைத் திருப்திப்படுத்த இவ்வாறு தான் கதைகளை அமைக்க (1Քւգ-պւն.
இருந்த போதிலும், ஒரளவு வித்தியாசமான சூழலில் நடப்பியலை மையமாகக் கொண்டு சுவையான நாவலைத் தந்த எஸ்.உதயச்சந்திரனைப் பாராட்ட வேண்டும்.

753
ரவி பேசும் Øി
(6. 领列 Yo A? 'நெம் Lutz/47
புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் ஆற்றல் மிகு திறமைசாலி என்பது வெளிப்படை. இவருடைய ஆற்றல் படைப்பிலக்கியம், பயிலும் தொழில், செய் நேர்த்தி போன்றவற்றில் வெளிப்படுவன. (சிறுகதை, விளம்பர நிர்வாகம், இலக்கியக் கூட்டங்களை ஒழுங்கு படுத்தி நிறைவேற்றல்) படைப்பிலக்கியம் தவிர திறனாய்வு சார்ந்த பத்தி எழுத்து மூலமும் இவருடைய திறமை வெளிப்பட்டு வந்துள்ளது.
படைப்பிலக்கியத்தைப் பொறுத்தமட்டில், இவருடைய தீட்சண்யக் கண்கள் மனிதர்களையும் செயல் களையும் காட்சிகளையும் தத்ரூபமாகப் படம் பிடித்து வைத்துள்ளன. அது மாத்திரமல்லாமல், வட்டாரப் பேச்சு மொழியைச் சரளமாகப் பாத்திரங்கள் வாயிலாகத் தங்குதடையின்றிப் பேசவைக்கவும் இவர் நுண்ணிய திறமை செப்பனிட்டுதவுகிறது.

Page 85
፲ö&፲
சொன்னார் போல.
நகர்ப்புறத்து வாசகர்களுக்குச் சென்ற தசாப்தங் களின் கிராமிய நடைமுறைகளை நினைவுப்படுத்த உதவும் விதத்தில் இவர் எழுதிய சில சிறுகதைகள் நிதர்சனமாய் அமைந்துள்ளன.
இந்த எனது அவதானிப்புகளை உங்களுக்கு எடுத்துக் காட்டும் முகமாக இவருடைய அண்மைக்காலச் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை எடுத்துக் கொள்வோம். தொகுப்பின் பெயர் "நெஞ்சாங்கூட்டு நினைவுகள்"
"நெஞ்சாங்கூட்டு" என்ற பிரயோகமே தனித்துவம் ஆனது. பேச்சு மொழியைப் பொருத்தம் கருதி, வாய்மொழி இலக்கியமாக்கும் துணிவு இவருடைய தற்புதுமையைக் காட்டி நிற்கிறது.
இங்கு குறிப்பிடப்படும் சிறுகதைத் தொகுப்பிலே நவமாய் ஒன்பது கதைகள் இடம் பெற்றுள்ளன.
முதலாவது கதை கதாசிரியரின் நெஞ்சுக்கூட்டுக்குள் இருந்து வெளிப்பட்ட நினைவுக் கோலங்களை உள்ளடக்கியது. கதாசிரியரே பத்து வயதுச் சிறுவனாக நின்று எடுத்துக் கொண்ட கதாப்பாத்திரத்தின் சித்திரிப்பைச் சிறுசிறு படிமங்களாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
ஆயினும், கதை முழுக்க முழுக்க அப்பாத்திரத்தின் மீதான சித்திரிப்பு எனச் சொல்ல முடியாது. அப்பாத்திரத்தை மையமாக வைத்து கதை சொல்பவரின்

ச என்.சிவகுகாரன் - தறிய மனப்பதிவு களும் வரையப்பட்டுள்ளன. தாப்பாத்திரம் மீதான கழிவிரக்கத்தை நாமும்
அதேவேளையில், கதை ஒரு முழுமையான வாழ் நிலைச் சித்திரிப்பு. இதற்கு முக்கிய காரணம் கதை சால்லப்படும் முறைமையும் பயன்படுத்தப்படும் பேச்சு
ாழிப் பிரயோகமும் தான்.
முதலாவது கதை போன்றே இரண்டாவது கதையும் நீளமானது. சரவணை என்பவர் முக்கிய பாத்திரம்,
அ.முத்துலிங்கம் என்ற கனேடியத் தமிழ் எழுத்தாளர் 1960 களில் இலங்கையராக இருந்த பொழுது யாழ்ப்பாணக் கிராமியச் சூழலை அறிமுகப்படுத்தி இருந்த விதம்போலவே, "வேலோ"னும் தமது கதைகளை இக்காலத்தில் எழுதிவருகிறார் எனலாம். இப்படி றுவதனால் இவர் அவரைப் பின்பற்றுகிறார் என்பது ல்லை. இவர்களிடையேயுள்ள ஒற்றுமை குறிப்பாக வர்கள் கையாளும் யாழ்ப்பாணத்துக்கே உரிய சில சொற்பிரயோகங்களும் சொல்லசைவுகளுமாகும்.
இக்கதையில் கதை சொல்பவர் ஆறாம் வகுப்பு
மாணவராக மாறுகிறார். அறிந்தும் அறியாமலுமுள்ள வளரிளம் பருவம். சரவணை என்பவர் தாழ்த்தப்பட்டவர்

Page 86
756
செசண்தைச் போது. 23
என்பது கூறாமற் கூறப்படுகிறது. அவரது புலமை மூலம் சமரசத்தை ஏற்படுத்தியமை எதிர்பாராத முடிவாக அமைகிறது. சிறுகதையின் உத்திகளுள் ஒன்று பயனுடையதாக இங்கு அமைகிறது. இங்கும் மொழியின் லாவகம் இனிதே சுவையளிக்கிறது. இவ்விரு கதைகளின் கதைப்பின்னலை வேண்டுமென்றே இங்கு நான் தவிர்த்துள்ளேன். கதைகளை நீங்களே படித்துப் பாருங்கள்.
அடுத்த கதை சென்ற நூாற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்ட கதை. இருபத்தைந்து வயதுடைய ஒரு காளையைக் கதாசிரியர் அறிமுகப்படுத்துகிறார். வயதுக் கேற்றவாறு எதிர்பாலராகிய பெண்கள் மீது இயற்கை யாகவே மையல் வாலிபனுக்கு ஏற்படுகிறது. புலோலியி லிருந்து கொழும்பிற்குக் கதை நிகழுமிடமாக மாறுகிறது. வெள்ளவத்தையிலிருந்து ஆமர்வீதிக்குச் செல்லும் பஸ் வண்டியில் பயணம் செய்த இந்த வாலிபன் தனது Sex Impulse ஐ சுவாரஸ்யமாக வெளிப்படுத்துவதாகக் கதாசிரியர் எழுதியிருக்கிறார். இம்மாதிரியான கதை களைப் பத்திரிகைக் கதைகள் என்பர்.
இருந்தபோதிலும் சில பத்திரிகை ரகக் கதைகள் எழுதப்பட்ட முறையினால் சிறுகதை நுட்பங்கள் வெளிப்பட வாய்ப்பு ஏற்படுகிறது. 'கல்கி ரா.கிருஷ்ண மூர்த்தி எழுதியதொரு கதையும் நமது எழுத்தாளர் சாந்தன்

கே.என். சிவகுமாரன் - 757
திய கதையொன்றும் வாகனப் பயனங்கள் ஊடாகப் பறப்பட்ட அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளன. ந்தனின் கதை மனிதாபிமானத்தை உணர்த்தி நின்றது. ண்ணெடுத்தும் பார்ப்பேனோ கன்னியரை" என்ற லைப்பிலே நானும் பஸ் பயணக் கதையொன்றை 45 வருடங்களுக்கு முன் எழுதியிருந்தது ஞாபகத்திற்கு
கிறது.
1980 களின் பிற்பகுதியில் கதாசிரியர் எழுதிய கதைகளுள் மற்றொன்று "புத்துணர்ச்சி" இதுவும் கொழும்பையே களமாகக் கொண்டுள்ளது. இந்தக் கதையிலே கதாசிரியர் Blue Film பார்த்த ஒரு வாலிபனின் அனுபவத்தைத் தீட்டுகிறார். இவ்விதமான கதைகளை இலங்கைத் தமிழ் எழுத்தாளர் எவரும் எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கதாசிரியர் துணிவுடன் ஒரு பதார்த்தச் சூழலைத் தனது இந்தக் கதை மூலம் காட்டுவது அவர் எழுத்துத் திறமையையும் ஓரளவு காட்டுகிறது. கதாசிரியரின் தமிழ்ப் பண்பாட்டு காலூன்றல் காரணமாக கதை தார்மீகச் செய்தியை ஈற்றில் சொல்லிநிற்கிறது. கதை எழுதப்பட்ட முறைமை சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.
"தந்தையுமாகி" இரண்டு வருடங்களுக்கு முன் ழுதப்பட்டது. இங்கு கதாசிரியரே தன்மை இடத்தில் ருந்து கதை சொல்கிறார். இவருடைய கதைகள் எல்லா வற்றிலுமே லேசான நகைச்சுவைச் சம்பவங்களும்

Page 87
፲ö፰ செசன்னதர் போது. பி. பேச்சுகளும் இடம்பெறுவதுண்டு. இந்தக் கதை சுனாமியழிவுக்குப் பின்னர் எழுதப்பட்டதை அறிந்து கொள்கிறோம். கதை வடபுலத்தில் தான் இடம்பெறுகிறது இரத்தினவேலோனின் கதையெழுதும் பாணிகளில் ஒன்று. எடுத்துக் கொண்ட கதை நிகழுமிடச் குழவை நிதர்சனமாகக் காட்டும் பண்புதான். மெக்ஸிம் கோர்கி
எமிலி ஸோலா போன்ற பிற நாட்டு எழுத்தாளர்களும் சூழலை இயற்பண்பு ரீதியில் விபரித்திருப்பதும் எனது நினைவுக்கு வந்தது. அப்படிக் கூறுவதனால் வேலோனை அந்த எழுத்தாளர்களுடன் ஒப்பிடுகிறேன் என்று எண்ணி விடாதீர்கள்.
கொழும்புக்குக் குடும்பத்துடன் திரும்பிச் செல்ல ஆயத்தமான போது, முதல் நாளன்று வைத்தியசாலையில் போய்ச் சந்தித்த கதாப்பாத்திரத்துக்கு மிகவும் நெருங்கிய மூத்த எழுத்தாளர் ஒருவர் அநாதையாய் இறந்து விட்டார் என்ற சாவுச் செய்தி கேட்டுத் தனது பயணத்தை இளம் எழுத்தாளரான கதாப்பாத்திரம் நிறுத்துகிறார். கதையில் ஓர் இரக்கபாவம் தொற்றி நிற்கிறது. கதை உணர்த்துவிக்கும் மனிதாபிமானக் கடமையுணர்வுடன் கதாசிரியரின் குழல் விபரிப்பு, பேச்சுமொழி, கதை அமைப்புச் செறிவு ஆகியனவும் குறிப்பிடத்தக்கன.
"அறிமுகவிழா" கதை 1983 இல் எழுதப்பட்டது.
இக்கதையின் சிறப்புகளுள் ஒன்று அங்கதமாக எழுதப் பட்டமை. முரண் நகை மற்றொன்று. மூன்றாவதாக,

சே என்.சிவகுமாரன் 7.59 கதாசிரியரின் விளக்கங்கள் எதுவுமேயின்றி கதை,
சம்பாஷணை (தாய்க்கும் மகனுக்குமிடையில்) மூலமும் திறனாய்வுக் கூற்றுகள் மூலமும் (கதாசிரியரே ஒரு நல்ல திறனாய்வாளர், பத்தி எழுத்தாளர்) சொல்லப் படுகிறது. வேஷதாரித்தனமும் பொய்மையும் நிதர்சன நிலைமை களும் புரிந்து கொள்ளப்படும் விதத்தில் எடுத்தாளப் பட்டுள்ளன.
+ +
1982இல் கதாசிரியரின் ஆரம்பகால எழுத்துக்களுள் ஒன்றாக எழுதப்பட்டது காரணமாகவோ என்னவோ, 'ஒற்றைப்பனை" என்ற கதை எழுதப்பட்ட முறையிற் குறைபாடாக இருக்கிறது. பாத்திரங்கள் பேசும் மொழியும் நடையும் இயல்பாய் இல்லை. இருந்தபோதிலும்
றிப்பிட்ட ஒரு சமூகத்தினரின் வாழ்வியலில் இடம்பெறக் கூடிய சம்பவங்கள் சிலவற்றை அச்சமூகத்தினைச் சேராத
"புதிய தரிசனங்கள்" என்ற கதை நிகழுமிடம் ண்டும் யாழ்ப்பாணம். இருபது வருடங்களுக்குப் பின் கதாநாயகன் அமெரிக்காவில் இருந்து விட்டுச் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறான். கதாசிரியரின் சூழல் விபரிப்பு இவருடைய வருணனைத் திறனை மேலும் வெளிப்படுத்துகிறது. அதுமாத்திரமல்ல, நாடகங்களின்

Page 88
TED
கிசான்னர் போகி. பி. பாத்திரங்கள் பேசும் உரையாடல்கள் போன்று சம்பாஷணையைக் கதாசிரியர் உருவாக்கியிருக்கிறார் நாடக எழுத்துப் பிரதிகளை இவர் எழுதினால் என்ன?
வெளிநாட்டில் நெடுநாட்களாக வசித்த ஒருவன் மீண்டும் தன் தாயகம் திரும்பி ஊர்ச்சனங்களுக்குத் தான தர்மம் செய்து பழைய நினைவுகளை இரைமீட்டு இறுமாப்படைவது தான் கதையின் சுருக்கம். இக்கதை 2004 இல் எழுதப்பட்டது.
சென்ற நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் எழுதப்பட்ட கதை "அம்மா" இதுவும் கதாப்பாத்திரத்தின் மீது பச்சாத்தாபம் காட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது அநாதரவான ஒரு மூதாட்டிக்குக் கருணையுள்ளம் கொண்ட ஒரு டாக்டர் உதவுவது கதையின் சாரம் அபிமான உண்ர்ச்சி (Sentimental) கஒதயில் மேலோங்கி நிற்கிறது. படிப்பதற்குச் சுவையாய் இருக்கிறது.
இத்தொகுதியிலே முன்னரே குறிப்பிட்டது போல கதாசிரியரின் திறனாற்றல் நன்கு வெளிப்படும் கதைகள் அடங்கியுள்ளன. கதாசிரியரின் எழுத்து முதிர்ச்சியை இந்நூற்றாண்டில் எழுதப்பட்ட கதைகள் காட்டி நிற்கின்றன.
தகவலுக்காகவும் பதிவுகளுக்காகவும் புலோலியூர் ஆஇரத்தினவேலோனின் புத்தகங்களை இங்கு குறிப்பிட
வேண்டும்.

லம், விடியலுக்கு முன், புதிய சரித்திரப் புலர்வின் முன் ச் சிறுகதைகள், அண்மைக்கால அறுவடைகள்,
சரண் சிவகுமாரன் -
புதிய பயணம், விடியட்டும் பார்ப்போம், நிலாக்
க்கற்றவர்கள், ஈழத்துச் சிறுகதைகள், நெஞ்சாங்கூட்டு னைவுகள்.
புலோலியைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்விமான்கள்
த்தாளர்கள் மத்தியில் அமரர் புலோலியூர் க.சதாசிவம் ன்ற இவருடைய தாய் மாமனார் போன்று வேலோனும் சிறப்புற ஒளிர்கிறார். ஈழத்து இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் இனியேனும் இவரைப் புறக்கணிக்க
யலாது.
(SN)

Page 89
72
கதைக7ே
இலங்கையின் புதிய பெண் எழுத்தாளர்களுள் ஒருவர் பவானி சிவகுமாரன். இவர் ஓர் ஆங்கில ஆசிரியர். கொழும்புப் பாடசாலையொன்றில் கற்பிக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில வித்தியாசமான சிறுகதைகளைப் பத்திரிகைகளில் எழுதி, வாசகர்களின் தீவிரமான கவனத்தைப் பெற்று உள்ளார். இலங்கையிலும், வெளிநாடுகளிலும் சில பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.
அத்தகைய கதைகளிற் பதினொன்றைத் தேர்ந்து 'மரம் வைத்தவன்"ன்ற தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.

73
சான்.சிவகுமாரன்
இத்தொகுப்புக்கு கலாநிதி வமகேஸ்வரன் முன்னுரை முதியிருக்கிறார். அவருடைய அவதானிப்பின்படி "பவானியின் பெரும்பாலான கதைகள் புலம்பெயர் லாசாரத்தின் எதிர்விசாரணைக்குட்படுத்துவனவாகவே
மீரா பதிப்பகத்தினர் தமது 63 ஆவது நூலாக இதனை வெளியிட்டுள்ளனர். இந்த நூல் தொடர்பாக எழுத்தாளரும், திறனாய்வாளரும், பத்தி எழுத்தாளருமான புலோலியூர், ஆ.இரத்தினவேலோனின் ஆய்வின்படி "தனைச் சூழும் தகவல்களுள் தன் மனதைப் பாதித்த வற்றிற்கு இலக்கிய வடிவம் கொடுத்திருக்கும் பவானி, இயல்பான கதை சொல்லும் முறைமையால் குறுகிய காலத்திலேயே இனங் காணப்பட்டவர்."
"உள்நாட்டுப் போர்ச்சூழலால் புலம்பெயரும் இளைஞர், யுவதிகள், ஏன் முதியவர்கள் கூட படும் இன்னல்களை உணர்வுத் தாக்கத்துடன் வெளிப் படுத்துவதில் வல்லவராக விளங்குகிறார்" எனவும் ஆஇகூறுகிறார்.
பவானி சிவகுமாரனின் கதைகள் உள்ளடக்கும், கதைப் பொருள்கள் பற்றி பிரத்தியோகமாக நான் ஒன்றும் கூறப்போவதில்லை. ஆயினும், சிறுகதைகளின் உருவம் சம்பந்தமாகச் சில அவதானிப்புகளை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

Page 90
764
ബമഞ്ഞഗു മZങ്ങ. മി
01. சிறுகதையின் வடிவத்தைப் பிரதானமாகக் கொண்டு அதனைத் தன்னுணர்ச்சிப் பாடல் என்றும் கூறுவர்.
02. இதன் அர்த்தம் என்னவென்றால், சிறுகதையின் கட்டமைப்பு ஒரு கவிதை போன்று இறுக்கமாகவும், எடுத்துக் கொண்ட கதைப் பொருளுடன் நின்றுவிட வேண்டுமென்பதுதான்.
03. நல்ல சிறுகதைகள் எனக் கொள்ளப்படுபவை இவ்வாறு அமைந்திருப்பதை நாம் அவதானித்து இருக்கிறோம்.
04. எடுத்துக்கொண்ட கதைப் பொருளுக்குத் தேவையற்றவற்றையும் சேர்த்துக் கொள்வதனால், வாசகரின் ஒருநிலைப்பட்ட உணர்ச்சியனுபவத்திற்குத் தடையாக இது சில வேளை அமைந்து விடுகிறது.
05. சிறுகதையிலே உணர்ச்சியனுபவப் பரிவர்த்தனை மாத்திரமன்றி, சிந்தனைத் தூண்டலும் அமைவதுண்டு. அதாவது, கதையைப் படித்து முடிந்ததும், வாசகர் மனதில் எழக்கூடிய எதிர்வினைகள், சிந்தனைத் தெளிவுக்கு உதவுகிறது.
06. எழுத்தாளர் ஒருவர் தாம் எழுதிய கதையை முடித்த பின்னர், தாமே சில கேள்விகளை எழுப்பி, தமது கதையைப் பகுப்பாய்வு செய்தால், சீரான நல்ல கதைகளை அவர் எழுத முடியும்

765
്.ര.ക്രിക്രZങ്ങ്
07. எழுத்தாளர் எத்தகைய கேள்விகளை எழுப்பலாம் என்பதனை ஆணித்தரமாக விளக்கி இருக்கிறார், தமிழ்நாட்டின் மறைந்த எழுத்தாளர் சுந்தர JTLoőFITLól.
08. இக்கேள்விகளை, "திறனாய்வு என்றால் என்ன?” என்ற எனது நூலில் சேர்த்திருக்கிறேன். வாசகர்களும், எழுத்தாளர்களும் இவற்றை அவசியம் படித்துப் பார்க்க வேண்டும் என்று வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.
09. இந்தப் பின்னணியில், ஈழத்துத் தமிழ் சிறுகதைத் துறைக்குப் புதியவராக, அமைந்திருப்பது "மரம் வைத்தவன்" என்ற சிறுகதைத் தொகுதி.
f
10. எதையுமே ஆதியோடந்தமாகப் பதிவு செய்யும் வகையில், தாம் எழுதிய அண்மைக்காலப் பதினொரு சிறுகதைகளை பவானி சிவகுமாரன் இந்நூலில் சேர்த்திருக்கிறார்.
11. இந்தத் தொகுப்பின் விசேஷ அம்சங்களாகக் குறைந்தது இரண்டு விஷயங்களை நாம் இனங்காணலாம்.
12. இவற்றுள் ஒன்று முதன்முறையாக ஓர் எழுத்தாளர், தமது கதை ஒவ்வொன்றின் இறுதியிலும், அக்கதை எழுதப்பட்ட பின்னணியையும், அக்கதை மூலம் தாம் எதனைக் கூற விரும்புகிறார் என்பதையும் குறிப்பிடுவது தான். இந்த முயற்சி வாசகர்கள் தமது

Page 91
765
62rzayevazi 4Fewau. 23 கதையை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதவுகிறது எனலாம்.
13. பவானி சிவகுமாரன் பயிற்றப்பட்ட ஆங்கில மொழி ஆசிரியை என்பதனாலும், இயல்பாகவே உடனிகழ்கால ஈழத்து வாழ்நிலையை அவதானித்து எழுத வேண்டும் என்பதனாலும், அவரது இந்தப் பகுப்பாய்வு முறை வாசகர்களுக்குப் பெரிதும் உதவுகிறது எனலாம்.
14. பவானி சிவகுமாரனின் கதைகளில் காணப்படக் கூடிய இன்னொரு விசேஷமான அம்சம், அக்கதைகளில் காணப்படும் முரண் நிகழ்வுகளும், அங்கதமுமாகும்.
15. Irony Satre என்ற இரு ஆங்கிலச் சொற்களும் ஏறத்தாழ ஒரே அர்த்தத்தைக் கொடுக்கின்றனவாயினும், இவற்றிற்கிடையே சில வேறுபாடுகளும் உள்ளன.
16. விளக்கம் கருதி, இச்சொற்களின் அர்த்தங்களை அகராதியொன்றிலிருந்து இங்கு விபரிப்பது பொருத்தமாய் இருக்கும்.
17 Irony என்பதற்கு விளக்கங்கள் : முரண் நகைச் சுவை, வஞ்சப்புகழ்ச்சி, எதிர்ப் பொருள் கொள்ள வேண்டிய சொற்றொடர் கேலியாக மற்றொருவருடைய கருத்தை ஏற்றுக் கொள்ளும் பாவனை, முரண் நகைத்திறம்.

W6`ሾ‛
கிரண், சிவகுமாரன்
18. Satre அங்கதம், சமுதாயக்கேடு, கோளாறுகளின் ர்த்திருத்த நோக்கங் கொண்ட நையாண்டித் தாக்குதல், விசைத் தாக்கு மனப்பான்மை,
19. மேற்சொன்ன இரு அம்சங்களையும் அல்லது பண்புகளையும் தவிர, இக்கதைகளின் உள்ளடக்கமும் உடன் நிகழ்வான வடபுலமக்களின் போராட்ட அல்லது போராட்டக் காலத்தின் இடைவெளியில் ஏற்பட்ட அனுபவங்களின் சித்திரிப்பாகவும் அமைகின்றன.
20. இந்தத் தொகுப்பின் உள்ளடக்கச் சிறப்புகளை வரவேற்று எழுத்தாளரைப் பாராட்டும் அதேவேளையில், அவர் எழுத்துக்களின் உருவ அமைப்பில் சிறிது சிரத்தை காண்பிக்க வேண்டும் என்று கதாசிரியைத் தயவாய்
வேண்டிக் கொள்கிறேன்.
21. நமது ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் பலர் இந்த உருவம்' என்ற கருத்தியலுக்கு அதிக கவனம் செலுத்துவதில்லை என்பது ஒரு பொதுவான குறைபாடு என்பது எனது கணிப்பு. இதற்காக நாம் நமது எழுத்தாளர்களைக் குறை கூறிப் பயனில்லை.
22. புதிய சூழலுக்கு ஏற்ப, புதிய முறைகளில் எழுத வேண்டிய வழிவகைகளை நமது வழிகாட்டிகள் தெரிவிக்கும் விதத்தில் செயற்படவில்லை என்பதற் காகவே.

Page 92
Wዕ፵፰
6*ważawzi, 4wu. 2 23. 1950களின் பிற்பகுதி முதல், சென்ற நூற்றாண்டின் இறுதிவரை என்று கூறுமளவிற்கு, நமது நாட்டு வர்க்கப் போராட்டம், சாதிப் பிரச்சனை, போர் கால அவதிகள், இனத்துவ வேறுபாடுகள் போன்றவை சித்திரிக்கப்பட வேண்டும் என்ற தேவையிருந்ததனால், நமது எழுத்தாளர்களும், என்னையும் உட்படுத்திய திறனாய்வாளர்களும், கண்டிப்பதைத் தத்தமது கருத்து நிலையாகக் கொண்ட "விமர்சகர்'களும் உள்ளடக்க சிறப்புக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். இது தவறில்லை.
24. ஆயினும், உள்ளடக்கம் எத்துணை முக்கிய மானதோ, அதேயளவுக்கு, ஒரு படைப்பில் உருவமும் முக்கியம் என்பதை நாம் மறந்து போய், படைப்பின் வடிவ அமைப்பை நெடுங்காலமாகப் புறக்கணித்து வந்துள்ளோம்.
25. இலங்கையிலிருந்து பற்பல காரணங்களுக்காக வெளிநாடுகள் சென்று, அங்கிருந்து உலகத்தை வேறு விதமாகப் புரிந்து கொள்ள முற்பட்ட சிலர், தமிழில் சிறுகதைகளையும், நாவல்களையும் எழுத முற்பட்டனர். அந்தந்த நாடுகளின் இலக்கியப் போக்குகளை அவர்கள் அறிய வேண்டிய காரணத்தினால், அவர்கள் படைப்பு களில் உருவம் தொடர்பான பிரக்ஞையும் ஏற்பட்டது. அதனால், அவர்களுடைய படைப்புகள் சில கவனத்தைப்
பெற்று வந்துள்ளன.

769
சீசனன்,சிவகுமாரன்
26. நமது எழுத்தாளர்களுள் பலர் சிறுகதைக்கும்,
குறுநாவலுக்கும், நாவலுக்குமிடையே உள்ள வேறுபாடு
களை அதிகம் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை.
27. நமது படைப்பாளிகள் பெரும்பாலும் தாம் சொல்ல வருவதை நீட்டி முழக்கி, விவரணப் பாங்கில் ல்லது விபரிப்புப் பாங்கில் அநாவசியமாகக் கதையுடன் பொருந்தாத சில சம்பவங்களையும், விளக்கங்களையும், ந்து விடுகின்றனர். இதனால், கலைநயம் குன்றி, சொல்லாமற் சொல்லும் பண்பு அறவே இல்லாமற் போய்விடுகிறது.
28 சிறுகதை ஒரு கலை என்னும் பொழுது, அதனை ஒரு Craft ஆக, ஒர் உத்திச் சிறப்புடையதாகவே நாம் கருதுகிறோம்.
29. அவ்வாறு பார்க்கும் பொழுது பகுப்பாய்வு முறை பயன்படுகிறது எனலாம்,
முதற் கதையான "அற்றகுளத்துப் பறவைகள்" ஒர் அற்புதமான நடைமுறைச் செய்தியொன்றைக் கழிவிரக்க ரீதியில் பரிவர்த்தனை செய்கிறது. அதேவேளையில், கதையின் நீளமும், பின்னணி விபர எடுத்துரைப்பும் சிறிது நீண்டு விட்டதால், கதையின் இறுக்கமும், ஒருமைப்பாடும் தளர்ந்து விட்டது என்றே கூறவேண்டும். இதற்காக நாம் கதாசிரியையைக் குறை கூற வேண்டியதில்லை. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் இவ்வாறு தான் பெரும்பாலும்

Page 93
፲ፖ0
áWF7øýswazi ALVarav... (2.37 அமைந்து வந்துள்ளன. பவானி சிவகுமாரன் ஆங்கிலம் மூலம் அண்மைக்கால உலகச் சிறுகதைகள் பற்றிப் பரிச்சயம் பெற்றிருக்கக் கூடும் என்பதனால், நமது அக்கறை நியாயமானதாகப் படுகிறது.
அடுத்த கதையான "அஸ்தமன உறவுகள்" உருவ அடிப்படையில் நோக்கும் பொழுது, இது முன்னைய கதையை விட சிறிது அக்கறையுடன் எழுதப்பட்டதாக இருக்கிறது எனலாம், கதை சொல்லும் செய்தி எம்மிதயத்தில் உருக்கத்தை ஏற்படுத்துவதனால், கதையின் உருவச் சிக்கனம் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை என்பது உண்மைதான்.
முன்னைய இரு கதைகளில் வரும் பாத்திரங்களிற் சில விரும்பத்தகாத பாத்திரங்களாக அமைய, "கோடையில் ஒரு நாள்" என்ற கதை, வாழ்க்கையை உறுதிப்படுத்தும் (Positive ஆன) கதையாக உருப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாய் இருக்கிறது. கதாசிரியையே கூறுவது போல, "சமூகத்தில் நிகழும் சாதாரண நிகழ்விற்கு எப்பொழுதாவது நிகழும் நிகழ்வைவிட ஜனரஞ்சகம் அதிகம் போல் தெரிகிறது" இக்கதையில் அமையும் வடிவம் செப்பனிடப்பட்ட முறையில் அமைந்தமையும் இக்கதை பலரால் விரும்பப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம்.
தான் எடுத்துக்கொண்ட கதைப் பொருளை
ஆதியோடந்தமாக, நேர்மையாக, நிதர்சனச் சம்பவங்களை

கரன், சிவகுமாரன் 777
உள்ளது உள்ளபடி சொல்லிவிட வேண்டும் என்ற பவானியின் அந்தரிப்பை அவருடைய பெரும்பாலான கதைகளில் நாம் உணரமுடிகிறது. இந்த ஈடுபாடு சில வேளைகளில் அவரை இயற்பண்புவாத ரீதியில் : விடுகிறது. இதனால் "சிறுகதை" என்ற லக்கிய வகையினின்றும், சிறிது விலகி, "குறுநாவல்" என்று கூறத்தக்க வடிவத்துக்கு இட்டுச் சென்று விடுகிறது. அதேசமயம், கதாசிரியரின் கதைகளிலுள்ள உள்ளடக்கத்தைப் பெரிதும் பாராட்டலாம்.
"பார்வைகள் மனிதர்கள்" நல்லதொரு நடப்பு வாழ்வுக்கதை, சிக்கனமாகவும் எழுதியிருந்தால், அவருடைய ஆற்றல் இன்னும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும்.
அடுத்த கதை "வெளிச்சவீடு" இந்தக் கதையில் இடம்பெறும் உரையாடல்கள் கதையோட்டத்திற்குப் பெரிதும் உதவுவதனால், விறுவிறுப்பாக அமைகின்றன. கதையின் மூலம் உணர்த்துவிக்கப்படும் முரண் நிகழ்வு பொருத்தமாக அமைவது போல கதை எழுதப்பட்ட
முறையும் பொருத்தமாக அமைந்து விடுகிறது.
"மரம் வைத்தவன்" கதைகூட இறுக்கமாக, எடுத்துக் கொண்ட முக்கிய கதைப் பொருளினைக் குவியப்படுத்து முகமாக கட்டமைக்கப்பட்டிருந்தால், வாசகர்களிடத்தே கூடிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஆயினும் கதையின் கருப்பொருள் மூலம் ஆசிரியை உணர்த்து விக்கும் செய்தி நிதர்சனமானது.

Page 94
Vo2 – – 67-Aražarzi đАлгеv. d. ஓரளவு உளவியல் போக்கில் அமைந்த கதை "ஒ கணம் தவறிவிட" கூடியவரை கதையின் (Tempo வுை ஓட்டத்தை நெறிப்படுத்தியிருக்கும் விதம் பாராட்டு குரியது. ஆனால், இங்கும் வாசகர் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில், அதாவது இருவேறு சம்பவங்களு கிடையிலுள்ள தொடர்பைத் தெளிவுபடுத்தும் சி சொற்களை அல்லது வாக்கியங்களை ஆசிரியர் பய படுத்தி இருக்கலாம்.
"உறவைத் தேடும் தீவுகள்" வித்தியாசமாக சொற்றொடர். அதேபோல கதையும் சிறிது வித்தியா மானது காலப்போக்கினையும், சூழல் மாற்றத்தினையும் மனித உறவுகளிடையே, குறிப்பாக தாம்பத்திய உற களிடையே ஏற்படக்கூடிய மாற்றங்களை அதி விபரிப்பின்றி, வாசகரே உணர்ந்து கொள்ளும் விதத்தி கதையை எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.
அடுத்த கதை "சுவாசமெல்லாம் நிறைந்ததாய் இக்கதையின் முதற் பகுதியை எழில் தமிழில் ஆசிரிய எழுதியிருக்கிறார். கதை கூறும் செய்தி ஆரோக்கி மானதாக இருந்தாலும், இந்த பாணி என்னைப் பொறுத் மட்டில் ஒரு குத்தலாக இருக்கிறது. கதையாட என்கிறார்கள் சிலர். இதனை நிகழ்ச்சி விரிவுரை அல்ல, தொடர் உரை சார்ந்த எழுத்து என்று நாம் கூறலாம்.

என்.சிவகுமாரன் - 773
அடுத்ததாக "கருணை இன்னும் சாகவில்லை" என்ற ாதயை எடுத்துக் கொள்வோம்.
இது சுவாரஸ்யமாக எழுதப்பட்ட கதை. அதே ளையில் கதையினுள் ஒரு கதையாக இதுவும் அமைந்து
டது.
கதையின் உட்பிரிவுகளை வெவ்வேறாக இனங் ாட்டும் பொருட்டு ஒன்று இரண்டு, மூன்று என பகுத்து ண்ணிவிட்டிருக்கலாம். அல்லது நிகழ்காலத்திலிருந்து சென்ற காலத்துக்குச் செல்வதை நினைவூட்டுதல் என்பதைக் ாட்ட இணைப்பு சொற்களைப் பாவித்திருக்கலாம். ல்லது நனவோடை என்ற உத்தியைப் பயன்படுத்தி முதியிருக்கலாம்.
இவ்வளவு கூறிவிட்டு, கதாசிரியை தனது கதையைத் ன் எழுதியவாறு எழுதியிருக்கக் கூடாது என்று நான் ால்லவரவில்லை. ஆயினும் செய்நேர்த்தி மேலும் ப்பாக அமைய சில ஆலோசனைகளைத் தந்தேன்.
கடைசியாக, கடைசிக் கதையான "இலவுகாத்த
கள்" என்ற கதையை எடுத்துக் கொள்வோம்.
இக்கதை நல்ல முறையில் எழுதப்பட்டிருப்பதைப் ராட்ட வேண்டும். பாராட்டு. இன்னுமொன்றிற்கும் தரிவிக்க வேண்டும். அதாவது பிறநாட்டுச் சூழலில் தையை நகர்த்தல், போராளிகள் தொடர்பான படப்
டிப்பு ஆகியவற்றிற்கும் நமது பாராட்டு இவ்விதமாக

Page 95
7ፖ4
6ിരഞ്ഞഗു് (Zങ്ങ. മ புதுப்புதுச் சூழலில், புதுப்புதுப் பிரச்சனைகளைத் தனது கதைப் பொருள்களாகக் கொண்டு ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் துறைக்கும் புதிய பரிமாணங்களைக் கொண்டு வருபவர்களுள் பவானி சிவகுமாரனும் ஒருவராகிறார்.
கதை எழுதுவதில் மேலும் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அவர் படைப்புகளில் உருவமும், உள்ளடக்கமும் மேலும் செப்பனிடப்படும்.
நான் ஆரம்பத்திலேயே கூறியது போல, கதைகளின் உள்ளடக்கம் தொடர்பாக அதிகம் கூறாது, உருவம் பற்றியே எனது குறிப்புகளைத் தந்திருக்கிறேன்.

775
பத்மா சோமகாந்தன் பழுத்த அனுபவங் கொண்ட ஈழத்துப் பெண் எழுத்தாளர். அரை நூற்றாண்டுக்கும் மேலாக உழைத்துவரும் இவர் "புதுமைப்பிரியை" என்ற பெயரில் புதுமைக் கருத்துக்கள் உள்ளடங்கிய முன்னோடிச் சிறுகதைகளை எழுதி வந்துள்ளார். முற்போக்குச் சிந்தனையாளர். பெண்ணியத்திலும் அக்கறை கொண்டவர். புதிய பரம்பரையினருக்கு இத்தகவல்கள் தெரியாமல் இருக்கலாம்.
கல்லூரி அதிபராகவும் சேவை செய்த இவர் "பெண்ணின் குரல்" என்ற ஏட்டின் ஆசிரியையாகவும் விளங்கினார். திறனாய்வாளராகவும், ஒலி/ஒளி பரப்பாளராகவும் தமது ஆற்றலை வெளிப்படுத்தி வந்திருக்கிறார். "கேள்வி மலர்கள்" என்பது இவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இவருடைய துணைவர் "ஈழத்துச் சோமு” என்ற அமரர் சோமகாந்தன் என்பதை யும் நாம் இங்கு நினைவூட்டலாம். அவரும் ஒரு பெரிய எழுத்தாளராவர்.

Page 96
Wፖዕኗ
6%rwafawagi AFLwów. 23 பத்மா சோமகாந்தன் நல்ல கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடிய பேச்சாளராகவும் இருப்பதனாற் போலும், இவரும் இரு வேறு பெண்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் கருத்தரங்கொன்றின் இறுதியில் இடம் பெற்றன.
கொழும்பில் இயங்கிவரும் அரச சார்பற்றதொரு நிறுவனம் "விழுதுகள்" இந்த நிறுவனத்திற்குத் தலைமை தாங்குபவர் பல் திறனாற்றல் கொண்ட சாந்தி சச்சிதானந்தம் (ராஜசிங்கம்). இந்த நிறுவனம் "அகல்விழி" என்ற கல்விசார்ந்த ஓர் ஏட்டையும், வேறு சில வெளியீடு களையும் பிரசுரித்து வருகிறது. மதுசூதனன் (ஆய்வாளர்), கந்தையா சண்முகலிங்கம் (ஆய்வறிவாளர்), மாரிமகேந்திரன் திரைப்பட ஈடுபாடுடையவர்) உட்படச் சில சிந்தனையாளர்கள் இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். அவர்களுள் ஒருவர் பத்மா சோமகாந்தன். இவர் "ஊடறு" என்ற அமைப்பின் தலைவியாக இந்நிறுவனத்தின் சார்பாகத் தொழிற்படுகிறார்.
பத்மா சோமகாந்தன் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் கல்விக்குழுச் செயலாளராகவும் பல பணிகளைச் செய்து வருகிறார்.
சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி "ஊடறு" வின் ஆதரவில் இடம் பெற்றது. கொழும்பு வாழ் இளம் பெண்களின் ஆற்றல்களை அன்று அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. அவர்களுள் சிலர் மேடையில்

சே.என்.சிவகுமாரன் = 产77 வீற்றிருந்த போது, அன்னவரிற் சிலரை முதற் தடவையாக அறிமுகஞ் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
எம்துஷ்யந்தி (ஒளிபரப்பாளர்), பிரியதர்ஷனி (ஒலி/ ஒளி பரப்பாளர்), அனோஜா தினகரன்), க.பிரபாலினி, சஹஸ்தனி, க.கஸ்தூரி, ப.வனித்தா, ந. வனஜா, என்தர்ஷனி, ச.மேகலா, கா.பொன்மலர், ச.வைதேகி, மு.சாந்தி ஆகியோர் இந்த இளம் பெண்களுள் சிலர். இவர்களைவிட தேவகெளரி, பத்மா சோமகாந்தன், ன்னலட்சுமி ராஜதுரை, சாந்தி சச்சிதானந்தம் போன்ற பழுத்த அறிவாளிகளும், அனுபவஸ்தர்களும் பங்களிப்பு களைச் செய்தனர். இந்த விழாவிலே, ஆரண்யா/ மைத்திரேயி ராஜசிங்கம் சகோதரிகள் (சாந்தி, ராஜசிங்கம் ஆகியோரின் புதல்விகள்) அபிநய நாட்டியத்தின் மூலம் புதுமையாய் சொல்லாமல் சொல்லும் செய்திகளை
பழங்கின.
இந்தப் பெண்கள் விழாவிலே, ஆண்களும் பங்கு பற்றினர்.நடராஜசிவம் (ஒலி/ஒளிபரப்பாளர்) பிபிரபாகரன் வீரகேசரி நாளிதழ் ஆசிரியர்), எஸ்.விஸ்வநாதன் (Eye hannel) தமிழ்) அதிபர், தயானந்த (ஒலி/ஒளிபரப்பாளர்
சிவநேசச் செல்வன், (வீரகேசரி / தினக்குரல் ஈவலின் ரத்தினம் நூலகம் இதழியற் கல்லூரி, தினக்குரல் பிரதம வீ. தனபாலசிங்கமும் பேசவிருந்த போதும், வர் சமுகமளிக்கவில்லை. "ஊடகங்களில் இவர்கள்" ான்ற தலைப்பிலே சில செய்திகளை இவர்கள் தந்து
பாயினர்.

Page 97
了7、
சொன்னர் போது.
கவியரங்கில் அன்னலட்சுமிஇராஜதுரை ஒரு சிறந் எழுத்தாளரும் இதழியலாளருமான இவர் ஒரு கவிஞரும் கூட) தலைமையில் சில பெண்கள் தமது வெளிப்பாடு களைத் தெரிவித்தனர்.இன்னும் சில பெண்கள் வெவ்வேறு தலைப்புகளில் ஊடகம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தனர். சாந்தி சச்சிதானந்தம் அரு மையான உரையொன்றின் மூலம் சில தெளிவான சிந்தனைகளைப் பரப்பிவிட்டார். பிரியதர்ஷனிஆகியோர்பார்வையாளர்கள் சிலரின் கருத்துக்களை அறிந்து கொண்டனர்.
பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் வருகையே அதிகமாக இருந்தது. ஆயினும், சில பலி முற்போக்கான கருத்துக்களை இந்த நிகழ்ச்சி மூலம் நான் கற்றுக் கொண்டேன்.
| 4 |
ஞாயிற்றுக் கிழமையும் (11-03-07) அதே மண்டபத்தில் முழு நாள் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. இது கொழும்புத் தமிழ்ச் சங்க கல்விக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
கலாநிதி செல்வி திருச்சந்திரன், சற்சொரூபவதி நாதன், கோகிலா மகேந்திரன், பத்மா சோமகாந்தன், சித்திரலேகா மெளனகுரு, பவானி சுந்தரராஜன், ம.தேவகெளரி, பிரபாலினி கந்தசாமி, திருமதி பரமசாமி ஆகிய பெண்மணிகளுடன் செங்கை ஆழியான், தெளிவத்தை ஜோசப், க.சண்முகலிங்கம், தெ.மதுசூதனன் சிதம்பரப்பிள்ளை சிவகுமார், டொக்டர் எம்.கே.முருகானந்தம் ஆகிய ஆண்களும் தமது பங்களிப்புகளைச் செய்தனர்

சே.கிரஸ்.சிவகுசசரன் -- பார்வையாளர் மத்தியிலிருந்தும் சிலர் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
மதிய உணவு வழங்கப்பட்டது. பொறுமையுடன் கடைசிவரை இருந்தவர்களுள் நானும் ஒருவன். பல செய்திகளையும், கருத்துப் போக்குகளையும், புதிய சிந்தனைகளையும் கிரகிக்க முடிந்தமை நான் பெற்ற வரப்பிரசாதம்.
பெண்கள் சம்பந்தப்படும் சில நூல்கள் என் கைகளுக்குக் கிடைத்துள்ளன. அவற்றை நீங்கள் ஏற்கெனவே, படித்திருக்கலாம். இப்பொழுது கனடாவில் வாழும் குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்) ஈழத்து முன்னோடி எழுத்தாளர்களுள் முக்கியமானவர். பெண்ணிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர்களுள் இவரும் ஒருவர். கனடாவில் வாழும் மற்றொரு ஈழத்துப் பெண் ஆய்வாளர்களுள் ஒருவரான கலாநிதி பார்வதி கந்தசாமியின் கூற்றுப்படி, "குறமகள் மார்க்சியத் தத்துவங்களை உள்வாங்கியவர். பெண் உரிமைகளை மனித உரிமைகளாகக் கண்டு அவற்றுக்குத் தம்
டைப்புகளில் அழுத்தம் கொடுப்பவர்."
இவர் எழுதிய “குறமகள் கதைகள்", "உள்ளக் கமலமடி" அகிய சிறுகதைத் தொகுப்புகள், சென்னை மித்ர வெளியீடாக சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தன. இக்கதைகள் யாவும் தனித்தனியாகப் பகுத்தாய்வு செய்யப் பட வேண்டியவை. இவற்றை, நான் பின்னர் பகுப்பாய்வு செய்வேன்.

Page 98
78)
சொன்னத் போது. 23 பத்மா சோமகாந்தனின் "வெள்ளி மலர்கள்" என்ற சிறுகதைத் தொகுப்பு சென்னை குமரன் வெளியீடாகச் சில வருடங்களக்கு முன் வெளிவந்தது. இதில் 14 சிறுகதைகள் அடங்கியுள்ளன.
இந்த நூலுக்குப் பதிப்புரை எழுதிய செ.கணேச லிங்கன் கூறுவதை இங்கு நினைவூட்டலாம்.
"ஆணுலகும் பெண்ணுலகும் ஒன்றல்ல. வெவ்வேறானவை என்பார் சிமோன் டி போவே, கலை, இலக்கியம் இதற்கு விலக்கல்ல. சமுதாயத்தில் பாரிய பங்கினராக இருந்தும் அரசியல், பொருளாதார, கலாசார அம்சங்களில் பெண்களுடைய கண்ணோட்டம், சிந்தனை எவ்வாறுள்ளது என்பதை மக்கள் முழுமையாக அறிய முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆணுலகமே ஆக்கிரமித்துள்ள இலக்கியத்துறையிலும் ஆங்காங்கே ஒரு சில பெண்களின் எழுத்தும் வெளிவருகிறது. அங்கும் பெண் எழுத்தாளர் வேறு, மேம்பட்ட பெண்ணிய எழுத்தாளர்கள் வேறு எனவும் பிரித்துக் காண வேண்டியுள்ளது.
இந்நூலின் ஆசிரியர் இரண்டாவது வகையைச் சார்ந்தவர். கதைகளினூடான அன்னாரது பெண்ணியக் கொள்கைகளையும் அறிந்து கொள்ளலாம். அத்தோடு இலங்கையின் இரண்டு தசாப்த காலத்து அரசியல், சமூகப் பிரச்சினைகளையும் அவற்றின் கொடூரத்தையும் தெரிந்து கொள்ளலாம். இதுவும் இச்சிறு நூலின் தனிச் சிறப்பாகும்."
மற்றொரு பெண்ணியவாதி கலாநிதி (செம்மணச்) செல்வி திருச்சந்திரன். இவர் ஆங்கிலத்திலும் எழுதுவார்.

Wዳ W தமிழிலும் எழுதுவார். நிவேதினி என்ற ஏட்டின் ஆசிரியர் பல ஆங்கில, தமிழ் நூல்களை எழுதிய திருமதி திருச்சந்திரன் WERC என்ற பெண்கள் கல்வி/ஆய்வு நிலையத்தின் நிறைவேற்று அதிபராவார்.
ச.கிரஸ்.சிவகுமாரன்
கொழும்பு விஜித யாப்பா நிறுவனத்தினரின் Garafuf Tai, "Stories from the Diaspora; Tamil Women Writing" என்பது இவர் எழுதிய 96 பக்க ஆங்கில நாவல். தமிழ் தெரியாதவர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு ஆங்கிலத்தில் தாம் இந்த நூலை எழுதியதாகக் கூறும் கலாநிதி செல்வி திருச்சந்திரன் தமிழிலும் இந்நூல் வெளிவரும் எனக் கூறுகிறார்.
முன்னுரை, மூன்று அதிகாரங்கள், முடிவுரை, குறிப்புகள், நூல், அட்டவணை ஆகியன இந்நூலில் அடங்கியுள்ளன.
புதிய உலகம், எம்மை நோக்கி இரவில் வந்தவர்,
ளர்மதியும் ஒரு வோஷிங் மெஷினும், சுரண்டலின் கொடுக்குகள், ஒரு மனிதனின் குரல், கற்புடைய விபசாரி, மூலைக்குள் ஒரு சமையலறை, சுபைதா ராத்தாவின் ஒரு பொழுது, விலங்குடைப்போம், அவள் அப்படித்தான், சோதித்த பொழுதுகளின்
மித்தம், பாதுமாகினாய், ஆதலினால் நாம், ராஜகுமாரனும்
ானும்,
இவற்றுள் மூன்று கதைகள் லண்டனில் வாழும்
இலங்கையரான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதியவை. ஆங்கிலம் தெரிந்த ஆய்வாளர்களுக்கு இந்நூல் நல்ல பசளை.
(SN)

Page 99
፲82
ாழத் தமிழ் ஒலிபரப்ா"
வீஏ.சிவஞானம்
இலங்கை வானொலியின் முன்னோடித் தமிழ் ஒலிபரப்பாளர்களின் பங்களிப்புகள் பதிவு செய்யப் பட வேண்டியவை. இவர்களுள் பலர் இப்பொழுது நம்மிடையே இல்லை. இவர்களைப் பற்றி ஊடகத் துறை ஆய்வு மாணவர்கள் கவனம் செலுத்தினால் வரலாற்றுப் பதிவாக இருக்கும். எஞ்சியவர்கள் - மூத்த ஒலிபரப்பாளர்கள் - அடக்கம் அமரருள் உய்க்கும் என்றாலும் கூட, தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல் பிற்காலச் சந்ததியினருக்குப் பல தகவல் களைத் தருவதாகவும் அமையும்,

፲፰3
சே.கிான்.சிவதுசசரன்
கவிஞர் நவாலியூர் சோ.நடராசன், மோனி எலியாஸ், சோ.சிவபாதசுந்தரம் (ஒலிப்பரப்புக் கலை என்ற முன் : நூலை எழுதியவர்), கவிஞர் நாவற்குழியூர் டராசா, வி.என்.பாலசுப்பிரமணியம், பாலசுப்பிரமணிய ஐயர், அருள் தியாகராஜா விவியன் நமசிவாயம், "சானா"
ண்முகநாதன், எம்.எம்.உவைஸ், ரி.எஸ்.மணிபாகவதர், ம்.எஸ்.இரத்தினம், டி.இரத்தினம், வி.சுந்தரலிங்கம். ஸ்புண்ணியமூர்த்தி, வி.ஏகபூர், எஸ்.பிமயில்வாகனன், பி.ஏ.சிவஞானம், எம்.ஐ.எம்.எச். குத்தூஸ் மரிக்கார், விபிதியாகராஜா, ஆர்.முத்துசாமி, தகவம்'எஸ்.இராசையா, எஸ்.கே.பரராஜசிங்கம், கே.எஸ்.ராஜா, ஐயா துரைராஜ், கணேஸ்வரன் இன்னும் சிலர் (பெயர்கள் ஞாபகத்திற்கு வரவில்லை) இப்பொழுது நம்மிடையே இல்லை.
இப்பொழுது நம்மிடையே வாழும் சிரேஷ்ட சிலர் ஞானம் இரத்தினம், எஸ்.சத்திய பிங்கம், பொன்மணி குலசிங்கம், ஏ.சுப்பிரமணியன், எஸ்.சரவணமுத்து, சி.குஞ்சிதபாதம், செந்தில் மணி மயில்வாகனன், சரஸ்வதி குமாரசிங்கம், சி.வி.இராஜ சுந்தரம், கே.சண்முகம்பிள்ளை, அரச ஐயாத்துரை, ஜஸ்டின் ராஜ்குமார், எஸ்.நகுலேஸ்வரன், பாலசுப்பிர மணியம், சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம், நாகலிங்கம், விக்னேஸ்வரன், எழில் வேந்தன் இன்னும் பலர் இருக்கிறார்கள்) போன்றோர்.
இவர்களெல்லாம் தமது அனுபவங்களை நூல் வடிவில் தருவதன் மூலம் இலங்கை வானொலி தமிழ்

Page 100
784 - 672 Fawców.zi ALMwav... WW ஒலிபரப்பு வரலாற்றையும் எமக்குத் தருபவர்களா அமைவர்.
நான் அறிந்தமட்டில் ஜோர்ஜ் சந்திரசேகரன் உவைஸ்பிர் ரஹ்மான், எஸ்.புண்ணியமூர்த்தி, ஞானம் இரத்தினம், பி.எச்அப்துல் ஹமீத், சற்சொருபவதி நாதன் இராஜேஸ்வரி சண்முகம், விசாலாட்சி ஹமீட், 2. lot சந்திரன், சிவலோகநாதன் ஆகியோர் சம்பந்தப்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. இவை புதிய ஒலிபரப்பாளர் களுக்குப் பழைய வரலாறுகளைத் தருவதுடன் வழி
காட்டல்களாகவும் அமைகின்றன.
நிரந்தரமாக இலங்கை வானொலியில் பணி
புரிந்தவர்களும் சமயா சமய ஒலிபரப்பாளர்களும் இனியாகுதல் இது பற்றிச் சிந்தித்து சிறு நூல்களை யாகுதல் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ரூபவாஹினி 25 ஆவது ஆண்டை நிறைவேற்றியுள்ளது இதில் சம்பந்தப்பட்டவர்களும் இது தொடர்பாக இப்பொழுதே தமது அனுபவங்களை எழுத்து வடிவிலோ கணினி வடிவிலோ பதிவு செய்தல் வேண்டும்.
தமிழருக்குத் தன்னடக்கம் அதிகம். இது காரணமாக வரலாறுகள் திரிக்கப்படுகின்றன. நாமெல்லாம் வந்தேறு குடிகள் என்று தன்னாதிக்கப் பேரினவாதிகள் துணியும் பொழுது, போதிய வரலாற்றுப் பதிவுகளை அவர்கள் முன்னெறிய நம்மிடையே அதிக நுல்கள் இல்லை. எழுத்தாளர்களைப் பொறுத்தமட்டில் டொமினிக் ஜீவாவும், செங்கை ஆழியானும், எஸ்.பொன்னுத்துரையும் இந்த விதத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

75
2.A7awi. YýWawayaw wewaï
இளைய நண்பர் மயூரன் நூலகம் - கணினிப் திவாளர்) கூறுவது போல, ஒலிபரப்பாளர்களும் ஒளிபரப்பாளர்களும் எழுத்தாளர்களும் தமது பங்களிப்பு களைத் தாமே எழுத்திலும், கணினியிலும் பதிவு செய்து கொள்வது மிக மிக அவசியம், நாளை நடக்கப் போவதை யாரறிவார்.
நான் எழுதும் பத்திகளில் இவை Personalised columns) என்னைப் பற்றியும் எழுதுவதற்கான காரணம், இவை பதிவாக இருக்க வேண்டுமென்பதற்காகவே ஒழிய, தற்புகழ்ச்சிக்காக அல்ல என்பதை விடயமறிந்தோர் அறிவர். உலக எழுத்துத்துறையையும் இதழியல் / ஊடகத் துறைகளையும் கூர்மையாக அவதானிப்பீர்களாயின், இந்த Personal Style of Writing (செய்தித்தாள்களில் தனியொருவருக்கு ஒதுக்கப்பட்ட பத்தி எழுத்து) எங்கும் வியாபித்து பல தகவல்களையும் சுவாரஸ்யச் செய்தி களையும் வாழ்க்கை அனுபவங்களையும் அறிவுப் பரிவர்த் தனையாக வழங்குகிறது.
எனது பள்ளிக்கூட நண்பர் (1953 - 1955 கொழும்பு இந்து கல்லூரி, இரத்மலானை), வி.ஏ.திருஞானசுந்தரம், தனது மூத்த சகோதரர் அமரர் வி.ஏ.சிவஞானம் தொடர்பாக "சிவலயம்" என்ற நூலைப் பதிப்பித்திருக்கிறார். இந்த நூல் 2004 இல் வெளியாகியது. அரிய பல தகவல்களைத் தலைசிறந்த ஒலிபரப்பாளர்களுள் ஒருவரும், அற்புதமான கருணையுள்ளம் கொண்டவரு

Page 101
755
கிசான்னத் போது.27 மான சிவஞானம் அவர்கள் பற்றிய கணிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
மூன்று பகுதிகளாக அமைந்துள்ள, 18 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. தகைமை சார் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி (இவர் தமிழ் ஒலிபரப்புத்துறையில் ஒரு முன்னோடி என்பது பலருக்குத் தெரியாது), ஞானம் இரத்தினம் (வானொலி / தொலைக்காட்சி இரண்டு ஊடகங்களிலும் தலைமை தாங்கிப் பெரும் பங்களித்தவர், தி.திருலிங்கநாதன் இவரைப் பற்றி நான் நன்கு அறிந்திராததற்காக வெட்கப்படுகிறேன்), ஏ.எம். நஹியா ஆெய்வாளர், அம்பி (சிறந்த கவிஞர்களுள் ஒருவரும், அறிவியல் / சிறுவர் இலக்கியம் / கவிதை நாடகம் போன்றவற்றில் பங்களிப்புச் செய்த அம்பிகைபாகன்), எஸ்.எம்.கமால்தீன் (நூலகத்துறையிலும், ஆய்வுத்துறை யிலும் பெரும் பங்களித்தவர்), ஏ.கே.கருணாகரன் (தலை சிறந்த கர்நாடக இசை விற்பன்னர்) அருணா செல்லத்துரை (கலைஞரும், ஒலி/ஒளி தயாரிப்பாளருமான நூலாசிரியர்) ஏ.எச்.எம்.அஸ்வர் அரசியல்வாதியாக இருந்தாலும், தமிழ் இலக்கியம் / ஒலிப்பரப்பு / ஒளிபரப்பு போன்வற்றில் மிகுந்த பரிச்சயமுடையவர், பதிப்பாசிரியர்), அமரர் ஆர்.சிவகுருநாதன் (இதழியல்துறையில் நிபுணத்துவம் பெற்றவரும் பாடகரும் நடிகருமாவார்), எஸ்.டிதம்பிராஜா (இவரைப் பற்றியும் அறிய எனக்கு வாய்ப்பு கிட்ட வில்லை) ஆகியோரின் மனப்பதிவுகள்/நினைவூட்டல்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. இவை தவிர, சிவஞானம்

ச.கிரன்,சிவகுமாரன் = Wጃ ፖ வர்களின் ஆக்கங்கள் சிலவும் இந்நூலில் சேர்க்கப் ட்டுள்ளன.
இனி வாசகர்களின் அவதானிப்புக்காக நூலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சில பகுதிகளைத் தருகிறேன்.
"(சிவஞானம்) எவரையும் அவர் சுடு சொல்லால் பேசியதில்லை. பொடிவைத்துப் பேசுவார். மனம் திறந்து பேசும் பண்புடையவர். எவரும் அவரின் மனம் நோக ஏதாவது சொல்லி விட்டால் அதற்குப் பதிலளிக்க மாட்டார். பதிலாக தன்னைத்தானே வருத்திக் கொள்வார். இது அவரின் சுபாவம்." (அனுபவம் வாய்ந்த ஒலிபரப்பாளரும், ஊடகத்துறையில் அதியுயர் பதவிகளை வகித்தவருமான வி.ஏ.திருஞானசுந்தரம்).
இவரின் குணநலன்களைப் பற்றிக் கூறுவதானால், அன்பின் நெகிழ்வு, அறிவில் தெளிவு, ஆக்கத்தில் ஊக்கம், வாழ்வில் எளிமை, உழைப்பில் ஒய்வின்மை, புலமையில் ஆழம், அறத்தில் நம்பிக்கை, சுய விளம்பரத்தில் விருப்பமின்மை." (வே.விமலராஜா).
"எனது வானொலி கலையுலக வாழ்வுக்கான முதல் அடிவைப்பு நண்பர் சிவஞானத்தோடுதான்" - கா.சிவத்தம்பி
பேராசிரியர் சிவத்தம்பியின் "சொல்லும் நா" என்ற கட்டுரை, அற்புதமாக எழுதப்பட்ட ஒரு Personal Style of Writing.

Page 102
788 - áWFawazýswazi AFLwav... d.
"சிவஞானம் நாட்டுக்கூத்து, நாட்டுப் பாடல்கள் துறையில் அறிவும், பரிச்சயமும் உடையவர், வானொலியில் சேருமுன்னரே கிராமிய நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய அனுபவம் உள்ளவர். கிராம வாழ்வுடன் ஒன்றியவர். கிராமத்து இதயத்தை நன்கு அறிந்தவர். தமிழ்ச்சேவையில் ஒலிபரப்பாகும் பேச்சு, உரைச்சித்திரங்கள், நாடகம், சிறுவர்/மாதர் நிகழ்ச்சிகள், கிராமிய நிகழ்ச்சிகள், சமய நிகழ்ச்சிகள் யாவற்றையும் மேற்பார்வை செய்தலுக்குப் பொறுப்பாக இருந்தார்" - ஞானம் இரத்தினம்
"ஒரு மனிதனை உயர்த்துவது உயர்ந்த கல்வியல்ல பல்கலைக்கழகப் படிப்பல்ல. உள்ளங்கவரவல்ல உன்னத பண்பே என்பதற்கு அவரோர் எடுத்துக்காட்டு" திதிருலிங்கநாதன்.
(கவனத்திற்குரிய கலைஞன் என்ற தலைப்பிலே ஓர் அருமையான கட்டுரையை ஆய்வாளர் ஏ.எம்.நஹரியா தந்திருக்கிறார். அவசியம் படித்துப் பாருங்கள்).
"அவர் ஒழுங்கு செய்து முன்னின்று நடத்திய ஒருவார நாட்டுக் கூத்து விழாக் காலத்தில் சிவாவின் உண்மையான திறமைகளை நாம் அறிய முடிந்தது சிவாவின் பரந்த அறிவையும் செயல் நுட்பத்தையும் முதிர்ந்த அனுபவத்தையும் முழுமையாக அறிந்து கொள்ள அவ்விழா பெரிதும் உதவியது" - கவிஞர் அம்பி
கவிஞர் அம்பியின் இன்னொரு சுற்றும் மனங்கொள்ளத்தக்கது. அது இதோ:

கிரகிங், சிரதராசன் - 7.59
"எந்தவொரு செய்தியோ, தகவலோ, நிகழ்வோ, ரலாறோ எத்துணை முக்கியமாக இருப்பினும் ழுத்திலே பொறிக்கப்பட்டு அச்சில் நிலை நிறுத்தப் விடின் அது, காலப்போக்கிலே அழிந்து மறக்கப்பட்டு டும். எதிர்கால சந்ததியினர் அதை அறியும் வாய்ப்பு ற்றுப்போய் விடும். தனி மனிதர் பற்றிய தகவல்களும், சாதனைகளும் அப்படியேதான். எழுத்தில் நிலை நிறுத்தப்படாவிடின் அவர்களைப் பற்றிய தகவல்கள் காலப்போக்கிலே அழிந்து மறக்கப்பட்டு விடும். வரலாற்று ஒடையிலே அவை அடித்துச் செல்லப்பட்டு சுவடு கூட இன்றி மறைந்து விடும். அதனால் ஒலிபரப்பாளர் விஏ.சிவஞானம் பற்றிய இந்தப் பதிவேடு மிக முக்கியமான ஒரு தொகுப்பாகும்" - அம்பிகைபாகன்
"எனது மதிப்பிற்குரிய நண்பர் சிவஞானத்தின் நினைவு என்றும் என்னுள்ளத்தே பசுமையாக மிளிரும்" - எஸ்.எம்.கமால்தீன்.
"அப்போதைய சிறந்த இளம் தயாரிப்பாளர்களான ஜோர்ஜ் சந்திரசேகரன், கே.எம்.வாசகர், விவிக்னேஸ்வரன் அருணா செல்லத்துரை ஆகியோரது தயாரிப்புகளை ஒலிபரப்புக்கு முன்னதாகக் கேட்டு குறை நிறைகளைக் கூறுவார். அவர்கள் இந்த சிரேஷ்ட ஒலிபரப்பாளரின் கருத்துகளில் நல்ல மதிப்பு வைத்திருந்தனர். இதனைப் பல தடவைகள் நான் அவதானித்துள்ளேன்."
ஏ.கே.கருணாகரன்.
("கிராமியக் கலைகளின் களஞ்சியம்" என்ற தலைப்பிலே கலைஞரும், தயாரிப்பாளருமான அருணா

Page 103
79
செல்லத்துரை பயனுள்ளதொரு கட்டுரையைத்
தந்துள்ளார். இதனையும் முழுமையாகப் படித்துப் பாருங்கள்.)
áWFwaớasawwazi ALVarav... d.y
"இவர் ஒரு சிறந்த தொலைக்காட்சி நெறியாளர் என்பதும் இதற்கான பயிற்சியை அவுஸ்திரேலியாவில் பெற்றிருந்தார் என்பதும் அதனால் அவர் பெற்றிருந்த அனுபவத்தையும் அவருடைய நிகழ்வுப் பிரதியமைப்பின் மூலம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது" - அருணா செல்லத்துரை
"எதிர்கால இலங்கைக்கு சமூக நல்லிணக்கமே தேவை என்பதை அப்போதே உணர்ந்து எமது கல்வி வழியாக எம்முள் பாய்ச்சிய சிவஞானம் சேர் போன்ற ஆசிரியப் பெருந்தகைகளை எண்ணி எண்ணிப் பூரிக்கிறேன்" ஏ.எச்.எம்.அஸ்வர்.
"சிவத்தம்பியை நாடகத்துறைக்கு அழைத்துச் சென்றவர் ஆசிரியர் சிவஞானம், வானொலிக்கு அறிமுகமாக்கியவர் இவரே. நாடகங்களில் நடிக்க வைத்து கைச் செலவுக்குப் பணமும் கிடைக்க வசதி செய்தார். விதானையார் வீட்டில் என்ற தொடர் ரேடியோ நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த அனுபவத்தின் காரணமாகவே பின்னர் பல்கலைக் கழகத்தில் சிவத்தம்பியினால் நடிக்கக் கூடியதாக இருந்தது. பின்னர் வெளிநாட்டில் நாடகம் பற்றிய ஆய்வை நடத்துவதற்கும் இவருக்கு உறுதுணையாக இருந்தது இந்த நாடக அறிவே" - ஆர் சிவகுருநாதன்.

ச.என்.சிவகுமாரன் - 797
"ஒலிபரப்பாளர் வரிசையில் சிவா ஒரு சிறந்த கலைஞன் இறந்தும் இறவாமல் புகழ் படைத்த சிவாவின் னைவு. எமது நெஞ்சைவிட்டகலாது. அவர் காட்டிய ழி வளமார்ந்த நன்னிலைக்கு எம்மை அழைத்துச் சல்லும் என்றால் மிகையாகாது. அவர் என்றும் உள்ளத்தில் உள்ளார் என்பதை, அறிந்தவர்கள்
ணர்வார்கள்" - எஸ்.ரிதம்பிராஜா,
அமரர் வி.ஏ.சிவஞானம் எழுதிய சில ஆக்கங்களும் அவை தொடர்பான புகைப்படங்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. வானொலி நிகழ்ச்சிகளின்
விமர்சனங்களைப் புனைபெயரில் அவர் எழுதி வந்தார்.

Page 104
79.2
嗣 பூத்தி எமத்து „መጭታ፴ጫውጫዛዛD டிந்தனையும
முதுநிலை எழுத்தாளர் பொ.சண்முகநாதன் அனுபவம் வாய்ந்த ஒரு சிறந்த பத்தி எழுத்தாளருமாவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் "உதயன்' பத்திரிகையில் அவர் நெடுங்காலமாகப் 'பத்தி எழுத்தாளராக இருந்து வருகிறார். அவருடைய நகைச் சுவை சிந்தனை ஆகியவற்றின் வெளிப்பாடாக பத்திகளின் தொகுப்பு இரண்டு நூல்களாக சென்னை மணிமேகலைப் பிரசுரத்தினூடாக வெளிவந்துள்ளன. அவற்றுள்ளே, கடைசியாக வெளிவந்த நூலின் பெயர் "சிரிப்போம், சிந்திப்போம்" (2006)
அவருடைய முதலாவது நூலுக்கு மதிப்புரை எழுதியது போன்றே, இந்த 214 பக்க நூலுக்கும் நான் கணிப்புரை வழங்குகிறேன். "சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பண்பும், எழுத்தும் இலகுவாக எவருக்கும்

சரன்.சிவதுசாரண் = 793 த்திக்கிறது எனச் சொல்ல முடியாது. இலகுவாகவும், எளிமையாகவும் எடுத்துக்கொண்ட பொருளைப் பரிவர்த்தனை செய்யும் ஆற்றல் பலருக்கு, எளிதில் வருவதில்லை. இந்தப் பின்னணியிலே, ஆழமான செய்திகளை, இலகுநடையில் வாசகரிடம் பேசுவது போன்று, நகைச்சுவையினையும் கலந்து பொ.சண்முக நாதன் எழுதக்கூடியவர்."
இவருடைய இரண்டாவது புத்தகத்திலே 49 பத்திக் கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதலாவது பத்தி இந்த "ஐயா" என்ற பேச்சு வழக்குச் சொற்பிரயோகம்
பற்றியது.
ஒக்டோபர் முதலாந்திகதி (2007) எனக்கு 71 வயதாகி டும். வயது முதிர்வு காரணமாகவும், நக்கலாகவும், ரியாதைக்காகவும் என்னை நண்பர்கள்,இளைஞர்களும் 'ஐயா" என்றும் "சிவகுமார்" என்றும் அன்புடனோ, ங்கதமாகவோ அழைப்பதுண்டு. இந்த இரண்டு சொற்களுமே எனக்குப் பிடிக்காதவை. என்னை வறுமனே சிவா' என்றோ, கே.எஸ்.சிவகுமாரன் என்றோ றுவதையே நான் விரும்புகிறேன். வெறுமனே சிவகுமாரன்" என்று அழைக்கப்படுவதையும் நான் விரும்புவதில்லை.
இவற்றிற்கெல்லாம் காரணங்கள் உள்ளன. ஈழத்து
எழுத்துலகில் பல "சிவகுமார்"களும் "சிவகுமாரன்" களும் இருக்கின்றார்கள். உதாரணமாக பாலசுப்பிரமணியம் சிவகுமார் (சரிநிகர்) சிதம்பரப்பிள்ளை சிவகுமார்,

Page 105
794 - சொன்னதுத் போகி.பி பத்திரிகையாளர் சிவகுமார், தமிழருவி சிவகுமாரன் சிவலிங்கம் சிவகுமாரன், இன்னுஞ்சிலர். எனவே "கே.எஸ்.சிவகுமாரன்" என்றழைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன்.
இந்த "ஐயா" விவகாரம் பற்றி அங்கிள் சண்' என்ற நமது எழுத்தாளர் பொ.சண்முகநாதன், தமது நூலிலே முதலாவது கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்.
"இப்பொழுதெல்லாம் "ஐயா" என்று அழைத்தால் அழைப்பவர் மரியாதை கொடுக்கிறார் என்றோ அழைக்கப் படுபவர் மரியாதைப்படுத்தப்படுகிறார் என்றோ சொல்ல முடியாது. "வயதானவர்" எனச் சுட்டும் ஒரு கேலிச் சொல்லாகவே அதை எண்ண வேண்டியுள்ளது. இந்தியாவில்) இந்த ஐயா அவமதிப்பு எப்பொழுதோ ஆரம்பமாகிவிட்டது எனச் சொல்லலாம். அங்கு பேருந்து நடத்துநர்கள், தள்ளுவண்டிக்காரர்கள் போன்றோர் 'ஏறப்யா' இறங்கைய்யா' 'போய்யா', 'வாய்யா' என்று சொல்லுவார்கள். நாமோ அதிலே பொதிந்துள்ள ஏளனத்தால் கூனி குறுக வேண்டும்."
இவ்வாறு உண்மையைத் தமக்கேயுரிய பாணியில் எழுதும் பொ.ச.வின் 'சிரிப்போம் சிந்திப்போம்" என்ற நூலுக்கு முன்னாள் "கலைச்செல்வி'யின் ஆசிரியரும், சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவருமான சி.சிவசரவன பவன் (சிற்பி அணிந்துரை எழுதியிருக்கிறார்.
"வாசகர்களை எப்படியாவது சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இல்லாதது பொல்லாதது" களை

செ.என்.சிவகுமாரன் - 79.5
எழுதாமல் அபத்தமான நடக்கவே முடியாத கற்பனை ளுக்கு எழுத்து வடிவம் கொடுக்காமல், தான் கண்ட வற்றையும் கேட்டவற்றையும் வாசகர்களுக்கு ஏதோ ஒரு வகையிற் பயன்படும் விதத்தில் எளிமையும், இனிமையும், ண்மையும் மென்மையும் கலந்த நடையில் 'சண் அங்கிள்" எழுதிய இக் கதைக் கட்டுரைகள் சமகால சமுதாயக் கண்ணாடியாகத் திகழ்கின்றன."
"உதயன்', 'சிஞ்சீவி" பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் ம.வகானமயில்நாதனின் அவதானிப்பும் இங்கு குறிப்பிடத்தக்கது.
"ஒரு நிகழ்வை அல்லது விடயத்தைப் பிரதானமாக எழுதவந்து, அதனோடு சேர்த்துப் பலப்பல தகவல் களையும், சங்கதிகளையும் ஆழ அகலமும் சுவையும் விரவிநிற்கச் சொல்லும் அவரது எழுத்துக்கள் தனிரகமும் தனித்தரமும் மிக்கவை. இளம் சந்ததியினருக்கு அறிமுகம் செய்யும் ஆவணங்களாகவும் திகழ்கின்றன என்பது
மிகையல்ல
இந்த நூலிலே, அநேகமாக சகல கட்டுரைகளுமே
சுவாரஸ்யமாய் எழுதப்பட்டுள்ளன. எனக்கு மிகவும்
பிடித்தவற்றுள், பின்வரும் கட்டுரைகள் நிறையத் தகவல்களைத் தருகின்றன.
மூத்த பத்திரிகையாளர்கள், யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள், கணவர் ஒடிற்றர், குடை நிழலிலிருந்து சைக்கிளும் ஒரு நாள் சிகரம் ஏறியது, உலகம் சுற்றும் வீடியோ கசெட், ஆட்டுப்பட்டித் தெரு மட்டும் ஏன்

Page 106
796 6ീബങ്ങ്ബഗ്ഗ് Z8.0' அப்படியே, மழை விட்டும் தேர்தல் தூவானம், நின்று போன அந்த நீண்ட பயணம், அகராதியில் இல்லாததும் உண்டா? யாழ்ப்பாணத்திலும் ஒரு பஞ்சிகாவத்தை, ஆசைபற்றி அறையலுற்றேன், ஏ-9 கண்டி வீதியிலிருந்து அறம் செய்ய விரும்பு; ஆனால் புத்திஜீவிக்கும் அது பிடிக்குமா? அடப்பாவிகளே. எங்கே போனிர்கள்? இன்னுஞ்சில.
இந்தப் புத்தகம் பழையவர்களும், புதியவர்களும் படித்து மகிழக்கூடிய தகவல் தொகுப்பு.
GN)

797
ഷമമല്ല 4. 葛资 aga'
பழையன கழிதலும், புதியன புகுதலும் கால நியதி. ஏற்றுக் கொள்கிறேன். பழையன யாவும் புதிய வளர்ச்சிக் கேற்ப இயைந்து போகாவிட்டால் தேக்கமுறும்; இல்லாமலே போய் விடும். இது வரலாற்றில் நாம் கண்ட உண்மை. இயங்கியல் பற்றி நாம் அறிவோம்.
அதே சமயம், புதியன யாவும் புதுப்புனைவானவை அல்ல என்பதையும் நாமறிவோம். பழைமையில் காலூன்றிப் புதிய மெருகுபெறும் புத்தாக்கங்களே சிறிது காலத்திற்காகுதல் நிலை கொள்ளும் புது வளர்ச்சிக்கு உதவி நிற்கும். இவை எல்லாம் சாதாரணமாகவே நாம் அறிந்தவை தான்.
இந்தப் பின்னணியிலே, நாம் நமது நாட்டுத் தமிழ் ஊடகங்களைப் பிரயோகிக்கும் புதிய பரம்பரையினர் மீது சிறிது கவனஞ் செலுத்துதல் மிக அவசியமானதொரு தேவை. கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட ஊடகத்துறை 1950, 1960, 1970, 1980 களில் பெரும்

Page 107
W፵፰ கிசான்னதச் சீயாகி. பிபி மாற்றங்களைக் கண்டது. இவை புலனாகாதவை. ஆயினும், இக்காலப் பகுதிகளில் நிலவிய அரசியல், சமூக, தொழில் நுட்ப போக்குகளின் பின்னணியில், இவற்றை நாம் பகுத்தாய்ந்து பார்த்தால், ஈழத்துத் தமிழ் ஊடகங்கள் பிரமாதமான வளர்ச்சியை, கடந்த நூற்றாண்டின் இறுதிக் கட்டங்களில் பெற்று வந்திருப்பதை நாம் அவதானிக்கலாம்.
புதுமைச் சிந்தனையுடைய, தாய் மொழிக் கல்வி வாய்ப்புப் பெற்ற இளம் வயதினர் ஈழத்து பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி நிலையங்களுள் புகுந்தனர். ஆயினும், பற்பல காரணங்களுக்காகத் தகுதிவாய்ந்தவர் a Gert (Survival of the Fittest) singly g6.f455p 6dré G267; தக்கவைத்துக் கொண்டனர். ஏனையோர் மேற்சொல்லப் பட்ட பற்பல காரணங்களுக்காகச் செல்வாக்கை இழந்தனர்.
தாய்மொழிக் கல்வியே சிறந்தது. ஆயினும், நடை முறையில் தனித் தமிழ்க் கல்வி மாத்திரம் போது மானதாயில்லை.
பல்நெறி சார்ந்த அறிவும் ஆற்றலும் போட்டா போட்டி உலகில் மிகவும் அத்தியாவசியம். குறைந்தது பட்டப்படிப்பாகுதல் தேவை. அது இல்லாமற் கூட, தேடும் முயற்சியும் அக்கறையும் கல்லாதது உலகளவு என்ற உணர்வும், பிறமொழிப் பரிச்சயமும் கனிவும் பவ்வியமும் அடக்கமும் ஊடகத்துறையினருக்கு மிக மிக அவசியம்.
இவைதான், அடிப்படைத் தகைமைகளிற் சில என்றால், இவற்றில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற

r.47ಸೆ. சிவகுமாரன் - 799 த்தனை இளம் பராயத்தினர் நமது ஊடகங்களில் னிபுரிகிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள
ண்டும்.
அரசியல் வாதிகள் இன்று செல்வாக்குடையவர்களாய் இருப்பார்கள். நாளை, அவர்கள் புறந்தள்ளப்படலாம். ரசியல் வாதிகளின் தற்போதைய அதிகாரத்தைக் ாண்டு ஊடகத்துறையினுள்நுழையும் அப்பாவிகளான ளநெஞ்சங்கள், எந்தவிதமான அடிப்படை அடிச்சுவடி களும் அறியாமல், தாமே இந்நாட்டு மன்னர் என்ற தாரணையில் அட்டகாசம் செய்து, தம் இயலாமையைக் காட்டும் போது நாம் வெட்கித் தலை குனிகிறோம்.
ஒரு தொழிலுக்கு முதற் தடைவையாகச் செல்பவர், முதலிலே, தன் தொழிலிடப் பின்னணியையும், அதன் வரலாற்றையும் அறிந்து மனதிற் பதித்து வைத்துக் கொள்ள வண்டும். அதன் பின்னர் அந்தந்த ஊடகத்தின் மரபு வழி அனுசரணைகளை நன்கு புரிந்து கொண்டு, தமது வழிகாட்டிகளின் ஆலோசனைகளின் பேரில் சிற்சில மாற்றங்களைக் காலத்தின் தேவைக்கேற்ப செய்து
காள்ளலாம்.
பிழைகள் விடுவது சகஜம் பிழைகள் விட்டால்தான் இன்னும் சிறப்பாகச் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதே வேளையில் பிழையென்பதை யறிந்தும் தொடர்ந்து அதே பிழையைச் செய்து, அப்பிழையையே சரியெனக் கூறி விதண்டாவாதம் செய்வது அதிகப் பிரசங்கித்தனமானது மட்டுமல்ல, அறியாமையின் வெளிப்பாடுமாகும். நமது புதிய பரம்பரை ஊடகத்தினரிடையே புதுத்திறன் வாய்ந்தவர்களை இனங்காணும் அதே வேளையில், மிக மோசமாக

Page 108
200 — ബബ്ബ് മരി.മ இயங்குபவர்களின் சிறுபிள்ளைத்தனமான செயல்களை அறிந்து, வாசித்து, கேட்டு, பார்த்து நான் மனம் வருந்துகிறேன்.
அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்.
மேலை நாடுகளில் மாத்திரமல்ல, அயலில் உள்ள இந்தியாவிற்கூட ஊடகத்துறையினருக்காக, பழையவர் களுக்குப் புதியவர்களுக்குமாக அடிக்கடி பயிற்சிக் களங்களும் கருத்தரங்குகளும் செய்முறைப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இற்றைவரையிலுமாக புதுப்புது உத்திமுறைகளைப் புதியவர்களும், பழையவர் களும் கற்றுக் கொள்கின்றனர்.
ஆயினும், நமது நாட்டில் இவ்விதமான, ஆக்கபூர்வ மான செயற்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதனாற்றானோ என்னவோ, தட்டிக்கேட்க ஆளில்லா விட்டால் தம்பி, சண்டப் பிரசண்டம்' என்பது போல, நமது இளம் ஊடகத்தினர் நடந்து கொள்கின்றனர்.
இவர்களுடைய நெஞ்சழுத்தத்தைக் கண்டு தார்மிக ஆத்திரம் எழுகிறது. ஆத்திரம் அவர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதற்காகவல்ல; நமக்குத் தெரிந்த சிற்றறிவுடனும், பெற்ற சிறு அனுபவத்துடனும் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற வேணவாதான்.
சரி, இவர்கள் என்னதான் பிழைவிடுகிறார்கள்? அதுவா? அவை பற்றி உணர்ச்சிவசப்படாமல் நாம் தனிப்பட்ட முறையில் அவர்களுடன் கருத்துப் பரிமாறிக்
கொள்வோம்.

207
ஆத்துறையில் புதிய*
uഖLമ ബമില്ക്ക്
ஊடகத்துறையில் புதிதாகச் சேர்ந்து உற்சாகத் துடன் பணியாற்றும் வயதில் இளையவர்களைப் பொதுப்படையாக நாம் கண்டனம் செய்து வந்தாலும், அவர்களிடையே திறனாற்றல் உள்ளவர்களும் இருந்து வருகிறார்கள் என்பதை நாம் பெரும்பாலும் மறந்து விடுகிறோம். அதேசமயம் அவர்கள்விடும் கவனக்குறை வான தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பொதுப்படையாக அனுசரிக்க வேண்டியவற்றை நாம் எடுத்துக் கூறுவது மில்லை. ஆக்கபூர்வமான திறனாய்வும் கணிப்பும் இங்கு தேவைப்படுகிறது.
பல ஊடகங்கள் இந்நூற்றாண்டில் செயற் படுகின்றன. அவற்றுள் முக்கியமானவையாகத் தொலைக்

Page 109
2O2
காட்சி, வானொலி, இரண்டையும் குறிப்பிடலாம் இதழியல், தனியாக ஆராயப்பட வேண்டியது.
சோண்தைச் ALWAYAJ... Č?". W
முதலில் வானொலியை எடுத்துக் கொள்வோம், வானொலி தொடர்பாகப் புதிய இளையோர் செய்ய வேண்டிய சில செயல்களைப் பார்ப்போம்.
முதலிலே, நீங்கள் அறிவிப்பாளராகச் சேர்த் திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் முதலில் அவதானிக்க வேண்டிய பண்புகள் : பணிவு, பிறரை மதித்து மரியாதை செய்தல், யார் யார் இன்னாரென்று அறிந்து கொண்டு அவரை பற்றிய தகவல் களைச் சேகரித்து மனத்திரையில் பதிவு செய்து கொள்ளல், கலையகத்தில் முதுநிலை அறிவிப்பாளர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், கலையகச் சாதனங்கள் எவை, எவ்வாறு இயங்குகின்றன என்று அறிந்து கொள்ளல், இசைத்தட்டு, சி.டி. (இறு வட்டு) போன்றவற்றை உங்களுக்காக இயந்திரத்தில் சுழற்றுபவர்களுடன் நட்பு ரீதியில் பவ்வியமாகப் பழகுதல், இத்தொழில்நுட்ப உதவியாளர்களுக்குத் தமிழ் தெரியாது, ஆங்கில அறிவும் போதாது. கூடியவரை பேச்சுச் சிங்களத்தைப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள், தொழில்நுட்ப சங்கேதப் பிரயோகங்களின் தாற்பரியங்களை அறிந்து கொண்டு உரிய இடத்தில் அப்பதங்களைப் பயன்படுத்தி, தொடர்பு முறிவைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். சிரித்தமுகத்துடன் யாவருடனும் இயல்பாக நட்பு ரீதியில் பழகுங்கள். "நான்" என்ற மமதையை ஒதுக்கி வையுங்கள். பாரம்பரியத்
தொடர்நிலையே புதிய வடிவங்கள் பெறுகின்றன

2O3
0, சின், சிவகுசசரன்
ன்பதை மறவாதீர்கள். தொலைபேசியில் எவருடனும் தொடர்பு கொள்ளும் வேளையில் தொலைபேசி
ாகரிகத்தைப் பேணுங்கள்
இவை இவ்வாறு பின்பற்றப்படும் அதேவேளையில் ரண்டு தமிழ் நூல்களை நீங்கள் தேடிப் படிக்க வண்டும். இது மிகமிக அவசியம். அந்நூல்களாவன : ஒலிபரப்புக் கலை (எழுதியவர் சோ.சிவபாதசுந்தரம்), ானோசை (எழுதியவர் ஸ்ருவர்ட் வேவல், தமிழாக்கம் விராஜ சுந்தரம்). இந்நூல்கள் கொழும்பு பொது நூல் லையத்திலும், இ.ஒ.கூட்டுத்தாபன நூலகத்திலும் ருக்கக் கூடும். இந்நூல்களை ஏன் படிக்க வேண்டும் ன்றால், ஓர் அறிவிப்பாளருக்கு இருக்க வேண்டிய கைமைகள், ஆற்ற வேண்டிய பணிகள் போன்றவை தளிவாக விளக்கப்பட்டிருப்பதனாலாகும்.
இது தவிர, நீங்கள் அரசியல் செல்வாக்கினால், ானொலியில் புகுந்து கொண்டிருந்தாலும், அதனை ாத்திரம் அடிப்படையாகக் கொண்டு நெடு நாட்களுக்கு ானொலியில் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விடும்.
குறைந்தபட்ச கல்வித் தகைமை இல்லாமல் எந்த டகத்திலும் தொடர்ந்து பணியாற்ற முடியாது போய் டும். எனவே, குறைந்தது க.பொ.த.பத்திர (உயர்நிலை) மல், தமிழை ஒரு பாடமாகப் பயிலாமல், இத்துறைக்கு ருவது புத்திசாலித்தனமல்ல. ஏனெனில், தமிழ் மாழியையும், அதன் சிறப்புகளையும் அறியாது, தமிழை ஒலிவாங்கி முன்னால் உச்சரிப்பது சாத்தியமில்லை. தமிழ்

Page 110
204 - சொன்னத் போது.
மொழி தலைசிறந்த உலக மொழிகளில் ஒன்று. -91 பழைமையும், புதுமையும் கொண்டது. பல வழக்காறுகள் அதற்கு உள்ளன. அதன் நெளிவு, சுளிவுகளை அறியாம "கன்னாபின்னா" என்று உளறும் பாணியைத் தவிர்க்கவும் பொருத்தமுடமையான சொற்களை உரிய இடத்தி பாவிக்கும் தன்மையைப் பெறவும், தமிழ் மொழி தமிழிலக்கியம் ஆகியனவற்றில் தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கது. தமிழிலக்கியம்'என்றதும் பெரும்பாலானோ சங்ககாலம் முதல் 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டவை எனக் கொள்வதை நாம் கான முடிகிறது. உடன் நிகழ்கால எழுத்துக்களும் இலக்கிய தன்மை பெறுகின்றன என்பதையும் அறிந்து வைத்து அவற்றைத் தேடிப் படிப்பதும் அவசியம்.
அறிவிப்பாளர் என்று வந்து விட்டால் வெறுமனே தமிழ் அறிவோ, தமிழ் இலக்கியமோ போதாது. குறைந்தது ஆங்கில மொழியிலாவது பரிச்சயம் இருத்தல் வேண்டும்
நாம் நிறையக் கற்க வேண்டியுள்ளது. கற்றது ಹಾ। மண்ணளவு அல்லவா? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வரிடமிருந்தும் நாம் கற்க வேண்டியுள்ளது. பல்துரை அறிவு அவசியம் தேவைப்படுகிறது. உள்நாட்டு அரசியல் போக்குகள், வெளிநாட்டு செய்திப் பின்னணிகள், பிற நாட்டுப் பெயர்களின் உச்சரிப்புகள், B,G.J ஷ, ஸ, Pl போன்ற எழுத்துக்களை எவ்வாறு உச்சரித்தல் வேண்டும் என்ற அறிவு, ஸ்பானிய, பிரெஞ்சுப் பெயர்கள் உச்சரிக்கப் படும் முறை போன்ற எல்லாவற்றையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

7. என்.சிவகுமாரன் = 25 அரசியல், பொருளாதாரம், சமூகவியல், வரலாறு, றிவியல், அறவியல், தத்துவம், சமயம், இலக்கியம், வியல், இசை நடனம், நாடகம் போன்ற துறைகளில் அறிவு இருத்தல் வேண்டும்.
தப்பித்தவறி பிழை விட்டாலும், அப்பிழையை மீண்டும் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ர,நனண,ல,ள,ழ போன்ற எழுத்துக்களை எவ்வாறு யன்படுத்துவது என்பதை அறிந்திருத்தல் அவசியம். ன்னொரு விஷயம்; அநாவசியமாகக் கதைக்காமல், உரிய அளவுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். பொருத்த நல்ல அடை மொழிகளைப் பயன்படுத்தலாகாது.
சினமாப் பாட்டுகளை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகள் பெரும்பாலும் அமைவதனால், உலகத் திரைப்பட வரலாறு, தமிழ்த் திரைப்பட வரலாறு, முக்கிய மானஇசையமைப்பாளர்கள், பாடக பாடகியர், வாத்தியக் முவினர், பாடலாசிரியர்கள் போன்றோர் பற்றிய பரங்கள் உங்கள் கைவிரல்களில் இருக்குமாறு அறிந்து வத்திருத்தல் வேண்டும்.
குறிப்பிடும்படியான அறிவிப்பாளர்கள் தமது மறக்க
டியாத பங்களிப்புகளைச் செய்து போயினர். அவர்களைப் பற்றியும், அவர்கள் பாணிகளையும் தெரிந்து
வத்திருத்தல் நலம்.
ஜனரஞ்சக அறிவிப்பாளர்கள் தரம் வேறு சிறந்த றிவிப்பாளர்கள் தரம் வேறு. அண்மைக் காலங்களில் ஒலித்த குரல்கள் பிஎச்அப்துல் ஹமீட், எஸ்.நடராஜசிவம்,

Page 111
206 - 6°raafawa aaa... O ஜோக்கிம் பெர்னாண்டோ, ராஜேஸ்வரி சண்முகம், ஜெயகிருஷ்ணா, புவனலோஜினி கணேஸ்வரன், ஜிப்ரி சந்திரமோகன், ஜெயலஷ்மி, நாகபூஷணி போன்றவர்கள் என்னைப் பொறுத்தமட்டில் தனித்துவ ஆளுமைகளைக் கொண்டு நாளுக்கு நாள் முன்னேறி வந்துள்ளனர். இவர்கள் இலங்கை வானொலி வர்த்தக சேவையைத் சேர்ந்தவர்கள்.
புதிய சிலர் மாற்று வானொலி நிலையங்களில் சோபிக்கின்றனர். லோஷன், ரவூப் போன்றவர்கள் இவர்களுள் சிலர்.
ஏனையவர்கள் தரத்தில் குறைந்தவர்கள் இல்லை யாயினும் அவர்களுடைய ஆளுமை இன்னமும் முழுமையாக வெளிப்படத் தொடங்கவில்லை.
எனவே, இளந்தலைமுறையினர் மேலே குறிப்பிடப் பட்ட, தேர்ச்சி பெற்ற அறிவிப்பாளர்களின் பாணியைப் பின்பற்றாமல், அவர்களிடம் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியதைக் கற்றுக் கொள்ளுங்கள்.
இப்படியெல்லாம் நமக்கு அறிவூட்ட நீர் யார் என்று என்னிடம் கேட்காதீர்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலாக வானொலியுடன் சம்பந்தப்பட்டு படிப்படியாக முன்னேறியவன் என்று நினைப்பதால் இவ்வாறு நட்புரிமையுடன் எழுதத் துணிந்தேன்.

2O7
கிற மொழியில் ஈறத்து. எழுத்தாளர்கள் கதை"
சொன்னாற்போல, உங்களுக்கு ஒரு முக்கிய விஷயமொன்று சொல்ல வேண்டும். அது என்ன வென்றால் Bridging Connection என்ற தலைப்பிலே ஓர் ங்கிலப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலப் புத்தகம் தானே அதை யார் படிக்கப் போகிறார்கள் ஆங்கிலம் தெரிந்த ஈழத்துத் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போய்விட்டது தான் என்றாலும் சம்பந்தப்பட்ட ஈழத்துச் சிறுகதையாசிரியர்கள் கூடத் தமது கதைகள் ஆங்கில மொழியில் வெளிவந்துள்ளன என்பதையறிய வேண்டாமா?
LIg/uj-GügéluígysírGT National Book Trust of India glifjú புத்தகத்தை அண்மையில் வெளியிட்டுள்ளது. இலக்கிய, அரசியல் புலமை கொண்ட ராஜீவ விஜேசிங்க இந்தப் புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். இவர்

Page 112
208 - சொன்னத் போகி. 23 சப்ரகமுவப் பல்கலைக்கழகத்தில் மொழிகளுக்கான முதுநிலைப் பேராசிரியராகப் பணிபுரிந்துவிட்டு, தற்சமயம் இலங்கை அரசாங்கத்தின் scopp என்ற அமைப்பின் செயலாளர் நாயகமாகப் பொறுப்பேற்றிருக்கிறார். Liberal கட்சியில் முக்கிய பதவி வகித்தவர். சமாதான நடைமுறைக் கான ஒன்றிணைப்புச் செயலகத்தில் கடமையாற்றும் இவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு பண்டை உயர்மட்டப் பண்பாட்டுத் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்.
புனைகதை, அரசியல் வரலாறு, மெய்ஞ்ஞானம் ஆகியனவற்றில் ஈடுபாடு காட்டும் ராஜீவ, இலங்கையில் நன்கறியப்பட்ட ஸாம் (Sam) விஜேசிங்கவின் புத்திரர் களில் ஒருவராவார்.
ஈழத்தில் ஆக்க இலக்கிய வளர்ச்சிக்கு ஆதரவு காட்டிவரும் இவர் ஆங்கிலத்தில் சில நூல்களை எழுதியிருக்கிறார். அவையாவன, The Limits of Lowe, Foundations of Modern Society, Political Principles and their Practice in Sri Lanka, Declining Sri Lanka goal. g65T DITGia G0675 தொகுத்தும் வெளியிட்டிருக்கிறார்கள்:ASelection ofModern Sri Lankan Poetry in English, A Selection of Modern SriLankan Short Stories in English, அத்துடன் இணைத் தொகுப்பாசிரியராக, Across Cultures : issues of identity in Contemporary British and Sri Lankan Writing, Conflict, Causes and Consequences..."
சரி, இந்தச் சிறுகதைத் தொகுப்பிலே 25 கதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றினுள்ளே, 7 கதைகள் தமிழ் எழுத்தாளர்களுடையவை. அவர்கள் யாரென்றால்,

2.
சரண் சிவகுரல்சானி நிசவரதராசன் (வரதர்), கசட்டநாதன், என்எஸ்எம்ராமையா, எஸ்.யோகநாதன், தாமரைச் செல்வி ஐயாத்துரை சாந்தன், சோமபால ரஞ்சகுமார்
இவை தவிர, இரு ஈழத்துத் தமிழர்களின் ஆங்கிலக் கதைகளும் இடம்பெற்றுள்ளன. அழகு சுப்பிரமணியம், சி.வி.வேலுப்பிள்ளை ஆகியோரே அவ்விருவருமாவர். இவ்வாறு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 10 கதைகளும் இடம் பெற்றுள்ளன. ஆங்கில மொழியை மூலமாகக் கொண்டு எழுதியவர்கள் என முன்னர் குறிப்பிட்ட இருவருடன் ஜேம்ஸ் குணவர்தன,விஜித்தாபெர்னாண்டோ மொறின் செனிவிரத்ன, கா(G)மினி அக்மீமன், நிர்மலி ஹெட்டியாராச்சி, அமீனா ஹ"சஸெய்ன், ராஜீவ விஜேசிங்க, புண்யகாந்தி விஜேநாயக்க. அப்படியாயின் சிங்களக் கதைகளை எழுதியவர்கள் யாரென்று நீங்கள் அறிய விரும்பக் கூடும். உண்மைதான் மார்ட்டின் விக்கிரமசிங்ஹ, குணதாச அமரசேகர, எதிரிவீர சரச்சந்திர, கேஜயதிலக்க, கருணா பெரேரா, சீதா குலதுங்க, சுனேத்ரா ராஜ கருணாநாயக்க, சரத் விஜேசூரிய ஆகிய எட்டு எழுத்தாளர்களின் கதைகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சிங்களக் கதைகளையும் தமிழ்க் கதை களையும் ஆங்கிலவாக்கம் செய்தவர்களின் பெயர்களை நீங்கள் அறியவேண்டாமா? அவர்கள் இவர்கள்தான். விஜித்தா பெர்னாண்டோ, கே.எஸ்.சிவகுமாரன்.
நல்ல காலம் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் அனைவர் சம்பந்தமான சிறு குறிப்புகளைத் தொகுப்பு

Page 113
27)
சொன்னார் போல. ஆசிரியர் சேர்த்திருக்கிறார். இப்படித்தான் முன்னரும் Lankan Mosaic என்றொரு தொகுதி வெளிவந்தது. அதிலும் ஈழத்துத் தமிழர் எழுத்தாளர்களின் கதைகள் இடம் பெற்றிருந்தன. அதிலே இரண்டு தமிழ்க் கதைகளை ஆங்கிலத்தில் நான் தந்திருக்கிறேன். அவை ராஜ பூணூரீகாந்தன், சுதாராஜ் ஆகியோரின் கதைகளாகும் வேடிக்கை என்னவென்றால் மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரது விபரங்களும் இடம்பெற்றிருந்தன. ஒருவரைத் தவிர, அந்த ஒருவர் கே.எஸ்.சிவகுமாரன்தான். இது வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம் அல்ல. கணினி தவறு என்று பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் விளக்கம் தந்தார். அவரும் அஷ்வி ஹல்பே, ரஞ்சனி ஒபேசேகர ஆகியோரும் இணைந்து இந்தத் தொகுப்பைத் தந்தனர்.
இம்மூவருக்கும் என்னைப் பற்றி ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை என்றும் கூற முடியாது. ஏனெனில் அவர்கள் மூவருமே எனது நண்பர்கள் தான்!
ராஜீவ விஜேசிங்க என்னைப் பற்றிக் கூறுகையில் "இலங்கையிலும், வெளிநாடுகளிலும் நன்கறியப் பட்ட திறனாய்வாளர்" என்றும் "ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுபவர்" என்றும் குறிப்பிட்டிருப்பது எனது கெளரவத்தை ஆங்கில வாசகர்களிடையே தக்கவைத்துள்ளது.
வரதரின் 'கற்பு', க.சட்டநாதனின் "திருப்தி" என்.எஸ்.எம்.ராமையாவின் "மலைகளிடையே' செ.யோக நாதனின் "ஆயிரம் பாதைகள்" தாமரைச் செல்வியின் "எங்கும், எந்நேரமும் நடக்கலாம்", ஐ.சாந்தனின்
 
 
 
 
 

சே.என்.சிவகுமாரன் - 277 'நன்றிகள்" எஸ்.ரஞ்சகமாரின் "மோகவாசல்" ஆகியன ங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட கதைகளாகும். தயவு சய்து கவனிக்க, மூலக் கதைகளின் தலைப்பு இங்கு ச்சொட்டாக இல்லாமல் இருக்கலாம். நினைவிலிருந்து எழுதுகிறேன். இக்கதைகளை ஆங்கிலத்தில் தந்துதவுமாறு ாஜீவ விஜேசிங்க ஒரு வருடத்திற்கு முன்னர் கேட்டிருந்தார். என்னுடைய கதையொன்று உட்பட 10 கதைகளை மொழிபெயர்த்துக் கொடுத்தேன். அவற்றுள்ளே மூன்று கதைகளை அவர் நிராகரித்தார்.
கனடாவில் வாழும், ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆங்கிலப் பேராசிரியர் செகனக நாயகத்தின் உதவியையும் இவர் நாடியிருக்கிறார். ஏனெனில், இவருடைய பெயரும் நூலில் இடம் பெற்றுள்ளது.
"Stories Written Originally in Tamil" 6T6irly g626 'll Gal. பின்வரும் பெயர்கள் காணப்படுகின்றன. கே.சிவகுமாரன், சிகனகநாயகம், எனது பெயரில் "எஸ்" என்பது விடுபட்டுப் போனது. இதுவும் கணினியின் விளையாட்டோ
என்னவோ!
இந்தப் புத்தகம் கொழும்புப் புத்தகசாலைக்கு வந்து சேர்ந்ததோ தெரியாது. இந்தியாவில் நிச்சயமாகக்
கிடைக்கும்.
நீங்களும் தான் படித்துப் பார்க்க முயற்சி எடுத்தால்
என்ன?

Page 114
272
ei ബEക്രിക്ര്മ
es
Tഖങ്ങി/മzബ്ബ
பரமசிவனுக்கு மூன்றாவது கண் உண்டென்பர். கிரேக்கக் கடவுள் ஸ்பீயஸ்ஸை (Zeus) நெற்றிக் கண்ணன் என்பர். மூன்றாவது மனிதன் என்றொரு கலை இலக்கியச் சஞ்சிகையும் கொழும்பில் வெளியாகி வருகிறது.
மூன்றாவது மனிதன் என்ற பெயரில் ஓர் அருமையான ஆங்கிலப் படமும் பல தசாப்தங்களுக்கு முன்னர் வெளிவந்திருந்தது. அப்படத்தை இயக்கியதுடன் நடித்துமிருப்பவர் தலை சிறந்த நாடக, திரைப்பட நடிகரான ஓர்ஸன் வெல்ஸ்.இவர் உயிருடன் இப்பொழுது இல்லை. இந்தப் படம் ஒரு மர்மப் படம். விறுவிறுப்பான திகிலூட்டும் படம். நிலத்தின் கீழுள்ள வடிகால் குழாயினுள் முக்கிய கதை மாந்தர் உயிருக்குத் தப்பி மறைந்திருக்கும் சூழலில் திகிலூட்டும் சம்பவங்கள்

്.മര.ക്രിക്രമZങ്ങ് 273
இடம்பெறுகின்றன. இந்தப் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று எபிதர் (Zither) என்ற வாத்தியக் கருவி மூலம் எழுப்பப்படும் விறுவிறுப்பான இசை
மூன்றாவது மனிதன் கதை மாந்தர் போலவே மற்றுமொரு மறக்க முடியாத கதை மாந்தரை அதே அடித்தளச் சூழலில் பிரபல அமெரிக்க எழுத்தாளர் ரால்ப் எலிஸன் எழுதியிருக்கிறார். இந்த நாவலைப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்புக்காக நான் படித்துச் சுவைத்தேன்.
சொன்னாற் போல இந்த விபரங்கள் என் மனத்திரையில் எழுந்தமைக்கான காரணம் 3 ஆவது கண் என்ற தலைப்பிலான ஒரு தமிழ்ப் புத்தகத்தை நான் படித்துப் பார்க்கையில் எழுந்த நினைவலைகள் தாம்.
0 0 (0.
3வது கண்' என்ற தலைப்பை 3 ஆவது கண்' என்று கொடுத்திருந்தால் உச்சரிக்க வசதியாய் இருந்திருக்கும். இது ஒரு தமிழாக்க நூல். பத்மா சிவகுருநாதன் இவர் முன்னரும் அருமையாகத் தமிழாக்கம் செய்து சில கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவருடன் மோகனா பிரபாகரன், பின்னையவரே பதிப்பாசிரியருமாவார். புத்தகத்தின் அட்டையில் சில பூனைகளின் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. கட்ஸ் ஐ" பிரசுரத்தினர் இதனை வெளியிட்டுள்ளனர். இவர்களுடைய முகவரி : 425/15, திம்பிரிகஸ்யாய வீதி, கொழும்பு -05. இதனை 2 கின்ஸி டெறஸ், கொழும்பு 08 என்ற முகவரியிலிருந்தும் பெற்றுக்

Page 115
ኃWዻ
&Wwayawagj GZww... (?,? கொள்ளலாம். விலை குறிப்பிடப்படவில்லை. இந்த நிறுவனத்தினர் வேறு சில தமிழாக்கங்களையும் தந்துள்ளனர். இவை ஆய்வறிவு சார்ந்த நூல்கள். இவையாவன: இலங்கையில் பெண்கள் உரிமைக்காக உழைத்த கனேடியப் பெண்ணான "டொக்டர் மேரி ரத்னம்' பற்றி கலாநிதி குமாரி ஜயவர்த்தன எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம்:
பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரித்தல் தொடர்பாக சார்லட் பஞ்ச் எழுதிய மனித உரிமைகள் பற்றிய ஒர் மீள்பார்வை நோக்கி" என்ற நூலின் தமிழாக்கம்;
றொக்ஸானா காரியோ எழுதிய "பெண்களுக்கு எதிரான வன்முறை அபிவிருத்திக்கு ஓர் தடை" என்ற நூலின் தமிழாக்கம்;
டெலரின் ப்ரோஹியர் எழுதிய "வைத்திய கலாநிதி அலிஸ் டி புவரும் முன்னோடிகளான சில பேகர் பெண் மருத்துவர்களும்" என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம்:
கம்லா பாளியின் எழுதிய "ஆண் தலைமை ஆட்சி
என்றால் என்ன?" என்ற நூலின் தமிழாக்கம்.
கலாநிதி குமாரி ஜயவர்தன எழுதிய "பெண்ணிலை
வாதமும் பேரினவாதமும்"
கம்லா பாளியின் எழுதிய "ஆண் என்றால் என்ன?
பெண் என்றால் என்ன?" என்ற நூலின் தமிழாக்கம்,

275
"3 ஆவது கண்" என்ற நூல் "சமகால விவகாரங் ாளில் பெண்ணியலாளர்களின் கண்ணோட்டம்" என்று வெளியீட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். "cats Eye" ஆங்கில கட்டுரைகளில் தெரிவு செய்யப்பட்ட கட்டுரை ாளின் தமிழாக்கம் இந்நூலில் அடங்கியவை.
z. என்.சிவகுமாரன்
வரவேற்கத்தக்க, தமிழ் வாசகர்கள் நிச்சயம் படித்தறிய வேண்டிய பல கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பைப் பதிப்பித்தமைக்காக மோகனா பிரபாகரன் பாராட்டுக்குரியவராகிறார்.
"துணிகர எழுத்தாளர்களும், மெய் சிலிர்க்க வைக்கும் கவிஞர்களுமான" பின்வருபவர்களின் நினைவாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
செரீனா தென்னக்கோன், ரஜினி திரணகம இவர் சிங்களவரை மணந்த தமிழ்ப் பேராசிரியை, கொல்லப் ட்டவர்), லீனா ஹபுதந்ரி, பத்மினி பள்ளியகுரு, சிவரமணி (கவிஞர், உயிர்நீத்தவர்), செல்வநிதி தியாகராஜா பிபரம் தெரியவில்லை) இலங்கையில் "தி ஐலண்ட்" ான்றொரு ஆங்கில நாளிதழ் வெளிவந்து கொண் பருப்பதை உங்களிற் சிலர் அறிந்திருக்க மாட்டீர்கள். இதை ஏன் கூறுகிறேன் என்றால் பெரும்பாலான இன்றைய இளைய சமுதாயத்தினர் படிப்பது, வாசிப்பது குறைவு. அதுவும் ஆங்கிலப் பத்திரிகைகள் என்றால் தொட்டுமே பார்க்க மாட்டார்கள். அவ்வளவு துடக்கு மனப்பான்மை, சரி இந்த ஆங்கிலப் பத்திரிகை திவயின என்ற சிங்களப் பத்திரிகையின் நிறுவனத்தினரான உபாலி நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட்டினால் பிரசுரிக்கப்

Page 116
276 படுகிறது. தினக்குரல்" சில வேளைகளில் சிங்களப் பத்திரிகைகளில் ஆசிரியத் தலையங்கப் பொழிப்புகளை தருகிறது. அவற்றைப் படித்திருப்பீர்களாயின் சிங்கள இனவெறியையும், தமிழ் துவேஷத்தையும் திவயின வெளிப்படுத்துவதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள் இதே நிறுவனத்தினர் வெளியிடும் தி ஐலண்ட் நாளிதழி (1985 - 1991 காலப் பகுதியில்) சிறப்புச் சித்திராம்சப் பகுதியின் ஆசிரியராக நான் பணிபுரிந்த அனுபவமு உண்டு.
சொன்னாத் போல.
தி ஐலண்ட்" பத்திரிகையில் "Cats Eye" என்றொரு பத்தி கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல ஆய்வறிவு சார்ந்த வாசகர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஓர் எழுத்து கோவையாகும். பல பெண்ணியவாதிகள் கூட்டாக சிந்தித்தும், சில வேளை தனியொருவரின் சிந்தனையாகவு வெளிப்படும் எழுத்து இது கலாநிதிகள் குமாரிஜயவர்தன ராதிகா குமாரசாமி, நெலூபர் டி.மெல், செல் திருச்சந்திரன் போன்றோர் இதில் சம்பந்தப்பட் பெண்ணியவாதிகளாவர். அநேகமாக நெலூபர் டிமெ இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆங்கி பேராசிரியராவார்) இப்பத்திகளை எழுதுவார். என்னிட இதனை அவர் ஒரு முறை கூறியிருந்தார்.
கடந்த ஈராண்டு காலமாக வெளிவந்த பத்திகளி சிலவற்றை மாத்திரம் தேர்ந்து, 'தினக் குரல்" இவள் - சக் பக்கத்தில் மூன்றாவது கண்" என்று தலைப்பில் சி கட்டுரைகள் வெளிவந்தன என்றும் "கூர்விழி" என் தலைப்பில் "வீரகேசரி"யில் சில கட்டுரைகள் வெளிவந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

277
சே, கீரன்.சிவகுமாரன் என்றும் மோகனா பிரபாகரன் தெரிவிக்கிறார்.
இந்தப் புத்தகத்தில் ஆறு அதிகாரங்கள் உள்ளன. மதமும் பெண்களும், உழைக்கும் பெண்களும், பெண்களும் உரிமைகளும், பெண் என்ற பால் நிலையும் யிர் துடிக்கும் இம்சைகளும், பெண்களும் அரசியலும், பெண் சாதனையாளர்கள் ஆகியன இவை.
இவற்றுள்ளே நான் முதலில் படித்துப் பார்த்தவற்றுள் சில அவசியம் தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என நினைக்கிறேன் அவையாவன :
பூரீமாவோ நாட்டுப் பெண்களுக்கு விட்டுச் சென்றவை, அருந்ததிரோய், ஒளிதரும் வால் நட்சத்திரம், சரித்திரம் படைக்கிறார் சாவித்திரி, மனோராணிக்கு அஞ்சல், ஓர் பெளர்ணமியில் மரணம், நாடாளுமன்றத்தில் பெண்கள், அரசியலில் இஸ்லாமியப் பெண்களின் பிரவேசம், கோணேஸ்வரி முருகேசபிள்ளை கொலைச் சம்பவம், கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கில் சரியான நீதி வழங்கப்பட்டது. ரீட்டா ஜோனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை. தெற்காசியாவில் குழப்ப நிலை, பெளத்த பிக்குணிகள், இன்னுஞ்சில. வேறு பல கட்டுரைகள் அவரவர் தேவைக்கு ஏற்பப் பயன்படும்.
சில பெயர்கள் உச்சரிப்புப் பிழையாகத் தரப் பட்டதை அவதானிக்கலாம், லெஸ்பியனிஸம் (பெண் தன்னினச்சேர்க்கை) லிஸ்பியனிஸம்" என்று தரப்பட்டு உள்ளது. அனந்த் பட்டவர்த்தன்' என்பவரின் பெயர்
'பத்தவர்த்தன்' என்று தரப்பட்டுள்ளது. இலங்கையின்

Page 117
፰Wዳ
சொன்னத் பேசல. முதலாவது பெண் பாராளுமன்ற உறுப்பினரான ப்ளோரன்ஸ் சேனநாயக்க பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம் மனோராணியின் தாயார் ஆங்கிலேயர் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது, அவரின் கணவர் லூஷியன் டி சொய்ஸா பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம். லூஷியன் - மனோ ராணிக்குப் பிறந்தவர்தான் கொலையுண்ட ரிச்சர்ட் டி
சொய்ஸா என்ற ஊடகத்துறையினரும், நடிகருமாவார். இப்படிச் சில விடப்பட்ட தகவல்கள் இருந்தாலும், இப்புத்தகம் ஓர் அருமையான பங்களிப்பு தகவல்களைத் தேடும் ஊடகத்தினருக்குப் பல விபரங்களையும், திறனாய்வு சார்ந்த குறிப்புகளையும், "விமர்சனங்களையும்" (கண்டனங்களையும்) இந்நூல் தருகிறது.
(SNSD

279
சிந்தனைத் தூண்டல்
"குடும்பம்' என்ற தலைப்பிலே ஒரு புத்தகம். ழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ளடக்க விஷயங்கள், இத்தனைக்கும் இது இலவசமாக வழங்கப் படுகிறது. இதனைப் பெற்றுக் கொள்ள, என்.சிறிரஞ்சன், 251/7, ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தை, வெள்ளவத்தை என்ற முகவரி (தொலைபேசி = 255334) தரப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தில், அறிவுறுத்தும் சில கட்டுரை தளும் அடங்கியுள்ளன. "குடும்பம்" தொடர்பாக வெளியீட்டாளர் கூறுவது இதுதான்.
குடும்பம்' என்கின்ற இந்த நூல் காலஞ்சென்ற திருமதி குணநிதி சிறிரஞ்சனின் (1973-2006) நினைவாக, குடும்பம், உறவு, மனைவி தொடர்பாக எழுதப்பட்ட பல்வேறு ஆக்கங்களை, மூன்று பாகங்களில் சில பதிவுகளாகத் தாங்கி நிற்கிறது.

Page 118
220 – 62-73374; 44/ww.0 முதற்பகுதி குணநிதி என்ற மறைந்த ஒரு பெண்னை தனித்துவ ஆளுமை கொண்ட மனுஷியாக அறிமுக படுத்துகிறது. இரண்டாம் பகுதியில், குடும்பம், மனைவி தொடர்பாகப் பிறர் எழுதிய ஆக்கங்களிலிருந்து தொகுக்கப்பட்ட ஆக்கங்கள் இடம் பெறுகின்றன.
மூன்றாம் பகுதி, புதிதாக எழுதப்பட்ட கட்டுரை களைக் கொண்டுள்ளது. குடும்பம்' என்பது இலங்கையி பின்பற்றப்படும் ஐந்து மதங்களின் அடிப்படையி நோக்கப்படுகிறது.
இந்த மும்மொழி நூல் சிறிது வித்தியாசமானது திருமதி குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடாக அவருடைய கணவர் வெளியிட்ட நூல்; 180 பக்கங்களை கொண்டது. சிறிரஞ்சன் சுங்கத் திணைக்களத்தில் ஒர் உய அதிகாரி பொருளாதாரத் துறைப் பட்டதாரி பல்கலை கழகங்களில் வருகைதரு விரிவுரையாளர்.இவர் ஏற்கனவே "பொருளாதார மேம்பாட்டுச்சிந்தனைகள்"என்ற பயனுள்ள நூலை குமரன் பதிப்பகம்) எழுதியிருக்கிறார்.
புதிய நூல் பற்றி, மறைந்தவரின் குடும்பத்தினரு நண்பர்களும் இவ்வாறு எழுதுகின்றனர்.
"தீவிர வாசிப்பு ஆர்வம் உள்ளவர்களும் சரி, அதி வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களும் சரி, படித்து பயன் பெறுவதற்கு ஏதோ சில விடயங்களையேனு கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது."
என்னைப் பொறுத்தமட்டில் நான் பயன்பெற்றேன் நீங்களும் பயனடையக்கூடும்.

எஸ்.சிவகுமாரன் - 227
காயத்திரி மந்திரம், பிரார்த்தனை, காளிதாசனின் விதை (ஆங்கிலத்தில்), முன்னுரை (ஆங்கிலத்தில்) reword என்பதற்குப் பதிலாக Forward என்று தப்பாக
டப்பட்டுள்ளது. தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, ருப்பல்லாண்டு, பெரியபுராணம், சிவபுராணம் கியவற்றுடன் சிவயோக சுவாமிகள், பேராசிரியர் சிவலிங்கராஜா, கனடா சிவா - இராஜரெத்தினம் பதிகள், கவிஞர் சடாகோபன் எழுதிய பாடல்களும் ம்பத்தினர் இயற்றிய பாடலொன்றும் இந்நூலில் டம்பெற்றுள்ளன.
குடும்பத்தினர் சிலரின் விபரிப்புகளுடன் சடா ழுதிய பாடல்களும், குடும்பத்தினர் இயற்றிய ாடலொன்றும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
குடும்பத்தினர் சிலரின் விபரிப்புகளுடன் சடா தரிவிக்கும் ஒரு தகவலும் கவனிக்கத்தக்கது.
"இருவருமாக இரண்டு ஆண்டுகளாக வணிகச் ால்விளக்க அகராதி ஒன்றை உருவாக்கும் மிகப் பெரிய ணியில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். வெளிவர விருக்கும் அகராதியில் நிதியினுடைய வியர்வைத்துளிகள் தீதுக்களாய் பரிமளிக்கப் போகின்றதனை எம்மால் ார்க்க முடியும்.
ராஜினி செல்வகுமாரன், டாக்டர் அனுஷா கியோரும் தமது பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர்.
திருமதி குணநிதி சிறிரஞ்சன் திடீரென எவ்வாறு றந்தார்?

Page 119
222 - 6aafawai aaa... O
"வைரஸ் மூளைக் காய்ச்சல்" (Wirus Encephals) என்னும் நோயினால் பீடிக்கப்பட்டு உரிய காலத்திற்கு முன்னதாகவே இறந்து விட்டார். இந்த நோய் பற்றிய விபரங்களைக் கவிஞரும், திறனாய்வாளரும் பொது சுகாதாரத் துறையில் ஈடுபட்டவருமான மாவை வரோதயன் அழகாகத் தந்திருக்கிறார். எனவே, இந்த நூல் வாசகர்களுக்குப் பயனுள்ளதாக அமைகிறது.
குடும்பம் தொடர்பான கட்டுரைகள் ஸ்வாமி சின்மயானந்தா, தலாய் லாமா, ஹொவர்ட் சிகட்டர், சிவ மகாலிங்கம், அன்ஜெலோ ஜோசப், ஸ்வாமி தேஜோ மயானந்த, சுகி சிவம், லேனா தமிழ்வாணன் ஆகியோர் எழுதியவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை.
இவை தவிர, பல்வேறு பண்பாட்டு மரபுகளில் குடும்பம் என்ற பொதுத் தலைப்பிலே சில கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கதொன்று தகைமைசார் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதியுள்ள, "தமிழ்ச் சைவ மரபிற் குடும்பம், மனைவி என்ற ஆய்வு. பிற ஆய்வாளர்கள் இக்கட்டுரையைப் படித்துப் பார்க்க வேண்டும். அதேபோல், "சிங்கள பெளத்த குடும்பம்" தொடர்பாக பேராசிரியர் சுச்சரித்த (G) கம்லத் எழுதிய கட்டுரையும் பல தகவல்களைத் தருகின்றது.
கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ், "இஸ்லாமிய குடும்ப அமைப்பில் மனைவி" என்ற தலைப்பில் ஒரு தகவற் கட்டுரையைத் தந்துள்ளார் அதேபோன்று, கலாநிதி தயாளினி தியாகராஜா, "கிறிஸ்தவ மரபில் குடும்பம்" என்ற தகவற் கட்டுரையை எழுதியிருக்கிறார். "கத்தோலிக்க

சே.கிான்.சிவகுவாரன் 223
குடும்ப அடித்தளம்" பற்றி ஹில்டன் ஐ.ரொட்ரிகோ விபரங்களைத் தருகிறார்.
இவ்வாறு பல புதிய பார்வைகளைத் தரும் கட்டுரைகளையும் சேர்த்துக் கொண்டதன் பேரில், த்தியாசமானதொரு நினைவு மலரை, சிறிரஞ்சன், தனது ன்புக்குரிய மறைந்து போன துணைவியாரை னைவூட்டுகிறார்.
சிந்தனைத் தூண்டலுக்குப் பெரிதும் உதவக்கூடிய மற்றொரு நூல், "சமூக சிந்தனை விரிபடு எல்லைகள்." விழுது ஆற்றல் மேம்பாட்டு நிலையம், 3 டொரிங்டன் ©ಣ್ತ; கொழும்பு - 7 என்ற முகவரியில் இதனைப் பெற்றுக் கொள்ளலாம். நமது புதிய ஆய்வாளரான தெ. மதுசூதனனும் ஆய்வறிவாளரான கந்தையா சண்முகலிங்கமும் இந்நூலைத் தொகுத்துள்ளனர்.
"விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்" என்ற நிறுவனத்தினர்க்கு வரவேற்கத்தக்க இலட்சியங்கள் இருப்பதை நாம் அவதானித்துக் கொள்கிறோம். அவர்கள் கூறுகிறார்கள்.
"நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், விடயங்கள் மீதான கவனயீர்ப்பு முக்கியம். நமக்குத் தொடர்ந்து அறிவியல் பார்வை, விமர்சன நோக்கு விரிவும் ஆழமுமாய் வளர வேண்டும். அப்பொழுது தான் நமக்கான சமூகப் பொறுப்பு எத்தகையது என்பது புரிந்து கொள்ள முடியும். செயற்பட முடியும். இதற்கு நாம் எமது இதுகாறுமான சிந்தனைகளுடன் தருக்கம் புரிய வேண்டும். புதிய புதிய சிந்தனைகளுடன் ஊடாட வேண்டும். எமது சிந்தனை

Page 120
224 47 Fazażawzzi (z/zav... Ø” புத்தாக்கம் பெறவேண்டும். இந்தத் தெளிவுதான் நம்மைச் சூழ்ந்துள்ள பிரச்சனைபாடுகள் மீதான தெளிவைத் தரும்." நல்லது.
கடந்த நூற்றாண்டு சமூக சிந்தனை வெளிப்பாட்டாளர்கள் பலர் மேற்கிலும் கிழக்கிலும் இருந்து வந்துள்ளார்கள். அவர்களுள் ஆறுபேர் பற்றிய அறிமுக, விரிவுரை சார்ந்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தொகுப்பாளர்கள் தேர்ந்தெடுத்த மேலை அறிஞர்கள் இவர்கள்தான் தோமஸ் கூன் (Thomas Coone), கார்ள் பொப்பர் (Karl Popper), நோ-ஆம் சொம்ஸ்கி (Noam Chomsky), 6JITLb67 (Gramsci), geüg|6murf (Althusar), 6Trfilá d3GTrub (Eric From).
முன்னுரை ஆசிரியர்கள் கூறுகிறார்கள் "விஞ்ஞானத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய சிந்தனை, அறிவின் சமூகவியல் என்றும் அழைக்கப் படக்கூடியது. நவீன காலத்தில் விஞ்ஞான அறிவைப் பெறும் முறை பற்றிய மூன்று முக்கிய கோட்பாடுகள் எழுந்தன. அவை :
"பிரான்ஸிஸ் பேகனின் (Francis Bacon) தொகுத்தறி
முறை.
தோமஸ் கூனின் "கட்டளைப்படிம மாற்றம் (Paradigm Shift) Gist LIG).
கார்ள் பொப்பரின் பொய்ப்பித்தல் (Faisification) கோட்பாடு"

്.മി.ക്രീയത്രZങ്ങ് 225
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா, இலக்கிய விமர்சனம்' உட்பட பல நூல்களை எழுதியிருப்பவர். இந்தத் தொகுப்பிலே, அவர் எழுதிய இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. விஞ்ஞான அறிவின் வளர்ச்சி - தோமஸ் கூனின் சிந்தனைகள், யார் இந்த கார்ள் பொப்பர்? ஆகிய இரு கட்டுரைகளை, அவர், கல்வியறிஞர் (Academics) பொதுவாக எழுதும் எழுத்து நடையில் எழுதியிருக்கிறார். இதனால், என் போன்ற சாதாரண வாசகர்களுக்கு இக்கட்டுரைகளைப் படித்துப் பயன்பெறுவது அதிகம் தள்ளிப் போய்விடுகிறது.
இதற்கு மாறாக, தமிழ் நாட்டுக் கல்வியறிஞர், முனைவர் கி.அரங்கன் நோ-ஆம் சொம்ஸ்கி பற்றி எழுதிய விரிவாக்கக் கட்டுரை எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கிறது.
அவருடைய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி :
“மொழியியலில் சொம்ஸ்கி உருவாக்கிய கோட்பாட்டை மாற்றிலக்கண ஆக்கமுறைக் கோட்பாடு (Transformational Generative Theory) 6T6ip, Japlaintifasoit. இக் கோட்பாடு மொழியியலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது."
26Teofilu 6576i 6Cyb (Theory of Behaviourism) 676örp தொடரைத் தமிழில் "புறநடத்தைக் கோட்பாடு" என்று கட்டுரையாளர் கூறுகிறார். அதேபோல (Empiricism) என்பதை, "அனுபவாதம்" என்றும் மொழியாக்கம் செய்கின்றார்.

Page 121
226 ബീബ് മZങ്ങ. മ9 நமது இன்றைய ஆய்வறிவாளர்களுள் ஒருவரான கந்தையா சண்முகலிங்கம் இரு கட்டுரைகளைத் தெளிவாகத் தந்திருக்கிறார். "மேலாண்மை, சிவில், சமூகம், கருத்து நிலை அன்டோனியோ க்ராம்ஷியின் சிந்தனைகள்" என்பது ஒரு கட்டுரை.
இவர் எழுதிய மற்றொரு கட்டுரை “கருத்து நிலை பற்றி அல்துரசர்" இந்தக் கட்டுரையில் அவர் விளக்கும் சில பகுதிகள் :
1.gy6igiTamurflair 6ig56060Tasoir Structuralist Marxism எனப்படும். பிரான்ஸ் நாட்டில் Structuralism (அமைப்பியல் வாதம்) என்னும் சிந்தனை மரபு வளர்ந்தது. Sasure என்னும் மொழியியலாளர், லெவிஸ்ரொஸ் (Levi-Strauss) என்னும் மானிடவியலாளர், லக்கான் (Lacan) என்னும் உளவியலாளர் ஆகியோர் அமைப்பியல்வாத சிந்தனைக்கு வழிகோலிய சமூக விஞ்ஞானிகளாவர். பலிபார் (Balibar) நிக்கோஸ் பெலனிஸாஸ் (Nicos Poulanizas) ஆகியோரும் அல்துாஸரின் கருத்துக்களை வளர்த்துள்ளனர்.
கட்டுரையாளரிடம் தெளிவான சிந்தனை இருப்பதனால் எழுத்து நடையும் இலகு வாசிப்பாக அமைகிறது. ஒரு சின்ன அவதானிப்பு : கட்டடம் (Building) வேறு, கடிட்டம் (Place ofthe Building) வேறு. கட்டுரையாளர் 'கட்டிடம்" என்று கூறுவது பொருத்தமானதா என்று யோசிக்கிறேன். −
அமைப்பியல் வாதம் (Structuralism) அமைப்பியல் வாதத்தைத் தொடர்ந்து வரும் அமைப்பியல் வாதம் (PostStructuralism) என்ற கருத்து நிலைகள் தொடர்பாக எனக்கு அக்கறையின்மை இருந்து வந்தது. ஆயினும், கந்தைய

്ര.ക്രീയക്രമZങ്ങ് 227 சண்முகலிங்கத்தின் கட்டுரையைப் படித்தபின், இவைபற்றி நான் கற்க இன்னும் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.
இறுதியாக, "எரிக் ப்ரொம் (Eric Fromm) மின் மானுட ஆளுமை மாதிரிகள்" என்ற கட்டுரையை விளங்கக்கூடிய விதத்தில் எழுதியிருக்கிறார்.
6Fašo 6ăr”. L’u Gourmruiu” (Sigmund Freud) 6 raðirp உளவியலாளரின் கோட்பாடுகளை (சில அம்சங்களை மாத்திரம்) விளக்கி ஒரு தொடர் கட்டுரையை இரா. நாகலிங்கம் நடத்திய “செய்தி” வார இதழில், மறைந்த அன்டன் பாலசிங்கம் "பிரம்மஞானி” என்ற புனைபெயரில் எழுதியமையை இங்கு குறிப்பிடலாம்.
"ப்ரொய்டின் தப்பெண்ணங்கள்" oT6ip உபதலைப்பில் கட்டுரையாளர் வருமாறு எழுதுகிறார் :
'ப்ரொய்ட் இருவித மரபான தப்பெண்ணங்களின் அடிப்படை மீதும் தம் கொள்கைகளை வகுத்தார் என்று குறை கூறுகிறார் ப்ரொம். அவையாவன :
01. தனி மனிதனும் சமூகமும் ஒன்றுபட முடியாதவர்கள். இருவர்க்குமிடையே நிரப்ப முடியாத பிளவு உள்ளது.
02. மனித இயற்கை அடிப்படையிலேயே தீயது" மரபுவாதிகளும் நவீனத்துவவாதிகளும் எழுத்தாளர் களும் "விமர்சகர்'களும் ஏனையோரும் இந்நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும்.
DܓܠܘG

Page 122
228
ട്ടുമിz zമf
%ቋñ ஈழத்தவன் என்ற முறையில் கடந்த ஆண்டின் இறுதியில் நான் மேற்கொண்ட இந்தியப் பயணத்தின் போது ஏற்பட்ட சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இலங்கைத் தலைநகரான கொழும்பிலிருந்து விமானம் மூலம் நொவம்பர் மாதம் 12ஆந் திகதி சென்னை மாநகரைச் சென்றடைந்தேன். தமிழ் நாட்டுத் தலை நகருக்குப் பல தடவை சென்றிருந்தாலும் இப்பொழுது சில மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. உதாரணமாக, மீனம்பாக்கம் அனைத்துலக விமான நிலையம், பிறநாடுகளின் அனைத்துலக விமான நிலையங்களுக்குச் சமமாக இருக்கிறது என்று கூறத்தக்க நவநாகரிக வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

66.7ര.ക്ഷമമ്രZങ്ങ് - 229
சென்னையில் உறவினர்களின் வீட்டுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்ட வாகனத்தில் சென்றேன். அவர்கள் இல்லம் மோகன்ராம் நகர், முகப்பேரில் இருக்கிறது. அவர்கள் வசிப்பது வசதியான அடுக்குமாளிகை வீட்டுத் தொகுதியாக இருப்பினும், செல்லும் தெரு சேறும் சகதியுமாக அருவருப்பைத் தந்தது. சென்னை மாநகர நிர்வாகத்தினர் இந்தத் தெருக்களைச் செப்பனிட மாட்டார்களா? சென்னையில் சில எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடிய பின்னர் பெங்களூருக்குத் தனியார் சொகுசு பஸ் வண்டியில் சென்று, பின்னர் அங்கிருந்து (கர்நாடக மாநிலத்திலிருந்து) ஆந்திர மாநிலத்திலுள்ள புட்டபர்த்திக்கு சாதாரண அரசு பஸ்ஸில் பயணஞ் செய்தேன். அங்கு ஒரு நாள் தங்கியிருந்து பூனரி சத்ய சாய்பாபா அவர்களின் தரிசனத்தைப் பெற்று மீண்டும் பெங்களுருக்கு சொகுசு வண்டியில் பயணம் செய்து அந்நகரை அடைந்ததுடன் உடனடியாகவே மற்றொரு சொகுசு வண்டியில் பனாஜிக்குப் புறப்பட்டேன். இது ஒரு கஷ்டமான பயணம். தெருக்கள் கரடுமுரடானவை. நீண்ட தூரம் பஸ்ஸில் இடைவிடாது பயணம் செய்ததனால் பசிக்களை, சூடு, காய்ச்சல், பலவீனமுற்றேன். நொவம்பர் 16 ஆம் திகதி பனாஜியை அடைந்ததும் கொங்கனி, மராட்டி, ஹிந்தி போன்ற மொழிகள் பேசுபவர்களிடையே திக்குமுக்காடிவிட்டேன்.
எனது ஆடை தாங்கி (Suitcase) யையும் என்னையும் ஏற்றிக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஒட்டி ஒருவர் ஒரு லொட்ஜில் கொண்டு விட்டார். ரூ.250 வாடகை கொண்ட

Page 123
230
672zzařazzZzó (Z/zav,... Øy
துப்புரவு அற்ற அறைதான் எனக்குக் கிடைத்தது. "அறை" என்றால் Room என்று பொருள்படும்.
அதிர்ஷ்டவசமாக நொவம்பர் 19 முதல் 26 வரை ரூ.60 வாடகையில் படுக்கை வசதி மாத்திரம் Youth Hostel இல் கிடைத்தது. 18ஆந் திகதி ரூ.550 வாடகையில் படுப்பதற்கு மாத்திரம் EL Passo ஹோட்டலில் இடம் கிடைத்தது. நொவம்பர் 26, 27 ஆகிய இரு தினங்களில் வேறு ஒரு லொட்ஜில்படுக்கை மாத்திரம் பெறக்கூடியதாக இருந்தது. நொவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை Youth Hostel இல் தங்கிய பின்னர் நேத்ராதேவி கடுகதி ரயிலில் திருவனந்தபுரம் பயணமானேன்.

237
Azíz) gy97്മീ ടുത്തങ്ങഥP
LaDIZ727
இ ந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள புட்டபர்த்தி யில் பல சமூகத் தொண்டுகளைச் செய்து வரும் பூரீ சத்ய சாய்பாபா என்ற அன்புடையாளரின் கருணையினால் அனுக்கிரகம் பெற்று வரும் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் நானும் ஒருவன். அவர் மீது மரியாதையும் மதிப்பும் என்னுள் உண்டு. ஓரளவு மனதினால் அவரை அணுகும் பாங்கை என்னுள் வளர்த்துக் கொண்டேன். அவருடைய தத்துவ நோக்கான உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல், அன்பே சிவம் என்பன என்னுள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதனால், கூடியவரை யாவருடனும் அன்பாகப் பழகும் பக்குவத்தை எனக்குத் தந்து கொண்டிருக்கிறது. அவர் தொடர்பான பஜனை களிலோ, கிரியைகளிலோ நான் ஈடுபாடு காட்டா விட்டாலும், மனதால், அவரை வேண்டிக் கொள்கிறேன்.

Page 124
232 - 6ീബര്ബഗ്ഗ് Zങ്ങ. മി கடவுளை நான் கண்டதில்லை. ஆயினும், நல்ல மனிதர்களிடம் கடவுளின் இயல்புகள் என்று கூறக் கூடிய பண்புகளைக் காண்கிறேன். மனிதப் பிறவிகளின் குணாம்சங்களைக் கொண்டு அவர்களை தேவர் என்றும் மானிடர் என்றும் ராக்ஷதர்கள் என்றும் புராணங்கள் வகுத்துத் தருகின்றன.
நல்லதை நினைத்து நல்லதைச் சொல்லி (கனிவு மொழி), நல்லதைச் செய்து வர நான் முயல்கிறேன். இவற்றை நடைமுறையில் நான் பிரயோகிக்க உதவியவை பகவான் சத்யசாய் பாபாவின் கூற்றுகள். அவரை நேரில் கண்டு தரிசனம் பெற மூன்று தடவை சென்றிருந்த போதிலும் நேருக்கு நேர் அவருடன் உரையாடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கடந்த நொவம்பர் மாதம் 16 ஆம் திகதி பகல் 10.30க்கு பெங்களுரிவில் இருந்து பஸ் மூலம் புறப்பட்டு பிப330 அளவில் புட்டபர்த்தியை அடைந்தேன். பிரசாந்தி நிலையத்துக்கு நான் விஜயம் செய்யும் சந்தர்ப்பம் இது நான்காவது தடவை. பகவானின் தரிசனம் கிடைத்தாலும் அவரைக் கிட்ட நெருங்கி கண்ணோடு கண் நோக்கி உறவாடும் சந்தர்ப்பம் நழுவியது.
சென்னையிலிருந்து 15ஆந் திகதி இரவு பஸ் மூலம் நெடுந்துாரம் பயணம் செய்து, பெங்களூர் வந்து அங்கிருந்து உடனடியாகவே மற்றொரு பஸ் மூலம் புட்டபர்த்தியையடைந்த களைப்பினால் பிரசாந்தி நிலையத்துக்கு வெளியேயிருந்த ஹோட்டலில் ரூபா 200 க்கு படுக்கையறை தேடிப்படுத்து விட்டேன். மனதால் இளவலாக இருந்த போதிலும் உடம்பால் 70

്.ത്സു, ക്രിത്രZZങ്ങ് 233 வயதுடையவனாக இருந்ததனால் அசதி மிகுந்து நிம்மதியாய் நித்திரை செய்தேன்.
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து உதய தரிசனம் கிடைத்தது. பகவானைச் சிறிது அண்மித்து, அவர்கள் கவனத்தை ஈர்க்க முற்பட்டேன். பல்லாயிரக் கணக்கான உலக ஜீவன்கள் அவரை நெருங்க முற்பட்ட போது முக்தி பெற இன்னமும் நான் காத்திருக்க, வேண்டியிருப்பதனாற் போலும், சத்யசாய் பாபா அவர்கள் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவ்வளவு தான் நாம் செய்த புண்ணியம் என்று நினைத்துக் கொண்டு பிற்பகல் 130 க்கு சொகுசு பஸ்ஸில் ஏறி 6 மணியளவில் மீண்டும் பெங்களுர் போய்ச் சேர்ந்தேன்.
சேர்ந்ததும் சேராததுமாக உடனடியாகவே மற்றொரு சொகுசு பஸ் ஏறி கோ-ஆ தலைநகரான பனாஜிக்குப் புறப்பட்டேன். பயணம் உல்லாசமாய் அமையவில்லை. கரடுமுரடான பாதை. நீண்ட தூரம். மாலை 6.30 க்குப் புறப்பட்ட பஸ் அடுத்த நாள் (17ஆம் திகதி காலை 8.30. மணிக்கு) பனாஜியை வந்தடைந்தது.
இதற்கிடையில் காய்ச்சல் வந்து விட்டது. முறையாகச் சாப்பிடவும் முடியவில்லை. உடம்பு பலவீன மாக இருந்தது. பற்றாக்குறைக்கு எனது ஆஸ்துமாவும் கரகரத்த இருமலும் தொந்தரவு செய்தன. அந்நாட்களில் நான் சங்கிலித் தொடராக சிகரெட் புகைத்ததனால் எனது சுவாசப்பை குழாய்கள் (காற்று வெளியே வரும் குழாய்) சுருங்கி விட்டதனால் நெஞ்சிலிருக்கும்

Page 125
234 672.Faralýø7zző (z/zav... Øy இறுக்கமான சளியை வெளியே துப்ப, பகீரதப் பிரயத்தனம் எடுக்க வேண்டியிருந்தது. அதனால், மூச்சு விடுதலும் கஷ்டமாயிருந்தது. இருமல் கர்ணகடுரமாய் வர சுற்றியிருந்த பயணிகள் அசூசையாக என்னைப் பார்த்தனர். தர்ம சங்கமாய்ப் போய்விட்டது.
шаят8.
சளி, போகட்டும் (G) கோ-ஆ, இந்திய மாநிலங்களுள் ஒன்றாக வருமுன்னர் போர்த்துக்கேய ஆட்சிக் காவலுக்கு (Protectorate) உட்பட்டிருந்தது. அதனால், கோ-ஆ பண்பாட்டுச் சூழலில் போர்த்துக்கேய செல்வாக்கை அங்கு காணலாம். கொங்கண மொழி பேசும் (G) கோ-ஆ மக்களில் கணிசமான தொகையினர் கத்தோலிக்கர் களாகவும் ஏனைய கிறிஸ்தவ மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர் களாகவும் இருக்கின்றனர். போர்த்துக்கேய மொழியை முதியவர்கள் சிலவேளை பேசுவதுண்டு. பெரும்பான்மை யான கோ-ஆ மக்கள் இந்துக்களாவர். இவர்களுடைய முக்கிய தெய்வம் துர்கா. ஜைன மதச் செல்வாக்கும் இங்கு உண்டு. எஞ்சியவர்கள் இஸ்லாமியர்.
இங்கு வசிக்கும் மக்களில் பலர் கொங்கணி, மராட்டி, ஹிந்தி போன்ற மொழிகளைப் பேசுபவர்கள். மேலை நாகரிகத்தைப் பின்பற்றுபவர்கள். சரியான உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவார்கள். பெரும்பாலான மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது. தொழிலாளர்களாக மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களி லிருந்து வந்தவர்களும் வேலை செய்கிறார்கள்.

6, ര, ക്രിക്രമZങ്ങ് 235
கொங்கணி மொழி மராட்டி மொழியின் சாயலைக் கொண்டுள்ளது. ஆயினும், தோற்றத்திலும் நடையுடை பாவனையிலும் கோ-ஆ மக்கள் திராவிடர்கள் போலவே தோற்றமளிக்கின்றனர்.
திராவிடர்
இந்துவெளி நாகரிகம் நிலவிய காலப் பகுதியில் அங்கு திராவிட நாகரிகம் இருந்து வந்ததாக ஒரு நம்பிக்கை சிலரிடத்தில் இருக்கிறது. ஆரியர் வருகையினால், திராவிடர்கள் (B) பலுச்சிஸ்தான், பாக்கிஸ்தான், அஸாம், (B) பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒரிஸ்ஸா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, இலங்கை போன்ற இடங்களுக்கு விரட்டியடிக்கப்பப்பட்டனர் என்றும் சிலர் கூறுகிறார்கள். இந்த இடங்களில் எல்லாம் திராவிட நாகரிகச் சிறப்புகளைக் காணமுடியும் என்பர் சிலர். எது எப்படி யிருப்பினும், ஆரியமும் திராவிடமும் இரண்டறக் கலந்த நாகரிகமே இந்தியாவில் வியாபித்திருக்கிறது.
நான் ஒமான் தலைநகரான மஸ்கட்டில் 1990 களின் பிற்பகுதியில் வசித்தபொழுது வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் ஆய்வறிவாளருடன் சிநேகிதமாய் இருந்தேன். அவர் சொன்னார், மொங்கோலியர்களினதும் திராவிடர் களினதும் கலப்பில் உருவாகியவர்கள்தான் வங்காளிகள். இது இவ்வாறிருக்க தாம் வங்கத்திலிருந்து இலங்கை வந்த ஆரியர் என்று நமது சிங்களச் சகோதரர்களில் தீவிரவாதிகளாக இருக்கும் பேரினவாதிகள் கூறிவருவது சிரிப்புக்கிடமானது.

Page 126
236
சொன்னதுத் போது. போர்த்துக்கேய - ஸ்பானிய இலத்தீன் அமெரிக்க இசைவகைகளுள் ஒன்று (B) பைலா இலங்கையில் இது ஒரு ஜனரஞ்சக இசை / நடனமாக இருப்பது போலவே (G) கோ-ஆவிலும் Bala பிரசித்தமானது.
கோ - ஆ மக்கள் விரும்பி உண்ணும் உணவு மீன் வகைகள், கடலுணவு சுவையாகச் சமைக்கப்படுகிறது. மீன் குழம்பு, மீன் பொரியல், தயிர், ரசம், பச்சடி, இரண்டு மரக்கறிகள் உட்பட ஒரு மதியச் சாப்பாடு இந்திய ரூபாயில் 40 மட்டுமே.
பனாஜியின் சில தெருக்கள் துப்புரவாய் இல்லை ஆயினும் நகரில் சில பகுதிகள் மிகவும் அழகான வீடுகளையும் கட்டடங்களையும் கொண்டுள்ளன. (G) கோ-ஆ மக்கள் விருந்துபசாரப் பண்புடையவர்கள். சிரித்த முகமுடையவர்கள்.
பனாஜியை மாத்திரம் வைத்துக்கொண்டு (G) கோ-ஆ முழுவதையுமே நான் பார்த்ததாகக் கூறமுடியாது (G) கோ-ஆ ஓர் அழகிய மாநிலம். உல்லாசப் பயணிகள் வந்து கூடுமிடம். கடல், ஏரி, படகுகள், தென்னந் தோட்டங்கள், விற்பனை நிலையங்கள் என்று பற்பல நிறைவுதரும் இடங்கள் உள்ளன.
பனாஜியில் நொவம்பர் 17 முதல் டிசம்பர் 3 வரை தங்கியிருந்தேன். அங்குசென்ற நோக்கமே படம் பார்க்கத் தான். அப்படி என்ன விசேஷம் என்று கேட்பீர்கள். இந்தியாவின் 37 ஆவது அனைத்துலகத் திரைப்பட விழா அங்கு இடம்பெற்றது. உலகத் திரைப்படங்களைப்

சரன்,சிவகுமாரன் - 237 பார்க்க எனக்கு கொள்ளை ஆசை. அதுதான் அங்கு
சன்றிருந்தேன்.
அதை விட கேரளாவின் 11 ஆவது அனைத்துலகத் ரப்பட விழாவுக்கும் சென்றிருந்தேன். -
(G) கோ-ஆவிலிருந்து "நேத்திராவதி"கடுகதி ரயிலில் டிசம்பர் 4 இரவு புறப்பட்டு அடுத்த நாள் மாலை 6 மணிக்கு கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தேன். அந்த அனுபவமும் ஒரு பெரிய கதை.

Page 127
፰38
ஒரு படைப்பாளியின் മ്മ', எ த்துக்கள் / மீரா + I7IT
“என் பயணம்" என்றொரு அருமையான புத்தகம் (என்னளவில் 1988இல் வெளியாகியது. நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்கும் உங்களிற் சிலர் இதனை ஏற்கெனவே படித்திருப்பீர்கள். ஏனையவர்கள் - எழுத்தாளர்கள் திறனாய்வாளர்கள், விமர்சகர்கள் (கண்டனக்காரர்), ஆராய்ச்சியாளர்கள், ஆய்வறிவாளர்கள் (Intelectuals) ஊடகத்துறையினர் - குறிப்பாகப் புதிதாக எழுத்து உலகத்துள் நுழைய விரும்பும் இளசுகள் கட்டாயம் இந்த நூலை ஒரு முறையாகுதல் படித்துப் பார்த்து விட்டுத் தள்ளுவதைத் தள்ளிக் கொள்ளுவதைக் கொள்ள வேண்டும்.

23.9
என்.சிவகுமாரன்
சொன்னாற் போல அவர் பெயரை நான் இன்னமும் கூறவில்லையா? அவர்தான் அசோகமித்திரன் (ஐதியாக ராஜன்). முன்னரும் ஒரு முறை அவர் பற்றி எழுதி இருந்தேன் அல்லவா? சரி, அப்படி என்ன விஷேசம் இப்புத்தகத்தில்?
நேர்மை, எளிமை, பாசாங்கின்மை, பல்துறையறிவுத் திரட்டு, பரவலான அனுபவ வீச்சுப் பதிவுகள், பயண அனுபவங்கள், திரைப்படப் பார்வைகள், ஆழமான இலக்கிய நுண்மான் நுழைபுலம், இப்படிப் பல. நீங்களே உங்கள் தெரிவுகளைச் செய்து கொள்ளுங்கள்.
1971-1987 காலப்பகுதியில் அசோகமித்திரன் எழுதிய பத்திகளுள் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் "18 ஆவது அட்சரக் கோட்டில்" என்ற அவருடைய பிரசித்தி பெற்ற 58 பக்கக் கட்டுரை, மரணச் சக்கரம்" என்ற கதை, "பிரயாணம்" என்ற அவரது தை பற்றிய அவருடைய விளக்கம் அவரது "இனி வேண்டியதில்லை" என்ற கதையில் தனக்குப் பிடித்த தைமாந்தர் பற்றிய விளக்கம் ஆகியனவும் என் பயணம்' என்ற நூலில் இடம் பெறுகின்றன.
இவை தவிர, எனக்குப் பிடித்த முக்கியமான அம்சம் இவர் அளித்துள்ள நேர்காணல்கள். சுவையான கேள்விகள் - சுவையான பதில்கள். அப்பப்பா பத்தி எழுத்துக்களை "ஆழமில்லை" என்று ஒதுக்கிவிடுபவர்கள் சற்று சிந்திக்க

Page 128
240 6ിബിരങ്ങZ Zങ്ങ. മ
"ஒரு கலந்துரையாடல்" என்பது 1980 இல் "புதிய நம்பிக்கை" என்ற சிறு சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டி, "தினகரன் வாரமஞ்சரி"க்கு (1977) என அவர் நமது எழுத்தாளர் சாந்தனுக்கு வழங்கிய பேட்டி, 1985 இல் இலங்கைத் தமிழ் மாணவன் ஒருவனுடன் உரையாடிய பதிவு, கவிஞர் நா.காமராசனுடன் பேட்டி ஆகியன இந்நூலில் சேர்க்கப் பட்டுள்ளன.
"ஈழத்துத் தமிழிலக்கியத்தின் போக்கையும், வளர்ச்சியையும் பற்றித் தங்கள் அபிப்பிராயம் என்ன?” என்ற சாந்தனின் கேள்விக்கு (பக்கம் 176) அசோகமித்திரனின் பதில் இதோ:
"நான் பங்கு பெறும் 'கணையாழி" பத்திரிகையில் ஈழத்து எழுத்தாளர்கள் நுஃமான், ரத்னசபாபதி ஐயர், சாந்தன், யேசுராசா, ராசரத்னம், திக்குவல்லை கமால், பா.மனோகரன் போன்றோருடைய படைப்புகள் பிரசுரிக்கப்பெற்று, அவை நல்ல கவனம் தென்னிந்தியர் களிடையே பெற்றன. நுஃமானின் சதுப்பு நிலம்" என்னும் சிறுகதையும், யேசுராசாவின் கவிதைகளும் சமீபத்தில் சாந்தனின் நீக்கல்கள்' என்னும் சிறுகதை - இவை யெல்லாம் என்னிடம் விசேஷமாக நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்தின."
"கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் நூல் என்னிடமும் இந்தியத் தமிழ்ப் படைப்பாளி களிடமும் மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தியது. சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட "அக்கரை இலக்கிய

്.ബി.കീത്രZങ്ങ് 247 தொகுப்பு மூலம் இலங்கைப் பகுதி மிகவும் ஆழமான கவனம் பெற்றது." "கணேசலிங்கனின் படைப்புகள் மற்றும் முருகையன், கே.எஸ்.சிவகுமாரன், தர்மு சிவராமு, மஹாகவி, தளையசிங்கம் இவர்களெல்லாம் எனக்கு
றிமுகம் ஆனவர்கள். என்னுடைய இலங்கைத் தமிழ் இலக்கியப் பரிச்சயம் இன்னமும் பரவலாகவும் இருந்தால் நலமாயிருக்கும்."
சொன்னாற் போல, அசோகமித்திரன் மூன்று நான்கு தடவை இலங்கை வந்து போயிருக்கிறார். நம்முள் பலர், அவரைப் போதிய அளவு அறிந்து வைத்திருக்கவில்லை. பத்திரிகைத் துறையில் ஈடுபட்டுப் பத்திரிகாலயங்களில் பணிபுரிபவர்கள் அசோகமித்திரனின் "ஒருக்கால் சுதேசமித்திரன்" மற்றும் சில கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். அனுபவம் பேசுகிறது.
மீரா நாயர்
சொன்னாற் போல, மற்றொரு இந்தியர் அனைத்து உலகத் திரைப்பட விழாவில் உச்ச விருதைப் பெற்றுள்ளார். இவர் இந்தியாவில் பிறந்து (கேரளம்), நியூயோர்க்கில் வாழும் மீரா நாயர் தான். நீங்கள் ஏற்கனவே இவரைப் பற்றியறிந்திருப்பதுடன், இவருடைய படங்களைப் பார்த்துமிருப்பீர்கள்:
சலாம் பொம்பே (1988) தொடக்கம் மிஸிஸிப்பி மசாலா (1992), த.பெரேஸ் பெமிலி (1995), காமசூத்ரா (1997), மை ஒன் கன்றி (1998) ஊடாக இப்பொழுது மொன்ஸ்"ன்

Page 129
22 வெடிங் வரை இவர் உலகத் திரைப்பட விழாக்களில் கொடி கட்டிப் பறக்கிறார்.
சொன்னார் போது. 23
"பெரஸ் குடும்பம்" "எனது சொந்தநாடு" "பருவக்காற்றுக் கல்யாணம்" என்று தமிழில் அழைக்கக் கூடிய மேற் சொன்னவற்றுள் காணப்படும் மூன்று படங்களையும் இதுவரை நான் பார்க்கவில்லை. கடைசியாகக் குறிப்பிடப் பட்ட படத்தை ஒரு வேளை அனைத்துலகத் திரைப்பட விழாவில் பார்த்தாலும் பார்க்கலாம். சொன்னாற்போல, இந்த விழா, 2007, ஒக்டோபர் 10 முதல் 20 வரை தென்னிந்திய அழகு நகரமாகிய பெங்களூரில் நடைபெற விருக்கிறது.
இம்மாதம் முதல் வாரத்தில் இத்தாலிய நகரமாகிய வெனிஸில் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவில் மீரா நாயரின் "பருவக்காற்று கல்யாணம்" தங்கச் சிங்க' விருதைப் பெற்றிருப்பது பாராட்டுக்குரியதே. மீரா நாயர் தனது சலாம் பொம்பே' மூலம் 1980 களின் இறுதிக் சுற்றில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தினார். ஒரளவு சமூகப் பார்வை இப்படத்திலிருந்த போதிலும், படம் எடுக்கப் பட்ட முறையில் முதிர்ச்சியின்மை காணப்பட்டது.இந்தப் படத்தைவிடச் சிறப்பாக மும்பாய் வாழ்க்கையை (சேரி மக்களது) சாய் பரான்ஜி என்ற மற்றொரு பெண் நெறியாளர் தந்திருக்கிறார்.
"மிஸிஸிப்பி மசாலா"இந்தியர்களின் அமெரிக்காவில் வாழ்பவர்களின்) குடிபெயர் வாழ்வை யதார்த்தம் குன்றிய கலவையாகக் காட்டியது.

சரஸ்.சிவதலாரன் ፰ቆ3
"காமசூத்ரா" ஆபாசமின்றி அழகியல் ரீதியாகத் தொன்மைப் படிமங்களுடன் காட்டி நின்றது.
"பருவக்காற்றுக் கல்யாணம்" குடும்பத்தினரிடையே நடக்கக்கூடிய தகாத உடலுறவு பற்றியும் சித்திரிக்கிறது என்று சிஎன் என் செய்தியாளர் குறிப்பிட்டார்.
சொன்னாற்போல, "படிமம்" (Images) என்ற சொல்லை உபயோகித்த பொழுது, "அசையும் படிமங்கள்" The Moving Images) என்ற தலைப்பில் திரைப்படத் திறனாய்வு பற்றியும், திரைப்பட நுணுக்கங்கள் பற்றியும் அறிமுகஞ் செய்யும் ஒரு புத்தகம், விற்பனையாகியது. விடியோ படங்களைத் தயாரிப்பவர்கள் திரைப்படத் தொழிலில் புதிதாக ஈடுபட விரும்புபவர்கள், திரைப்படத் திறனாய்வில் ஈடுபட விரும்புபவர்கள், ஊடகவியலாளர்கள் என்போருக்கும் கூட இந்தப் புத்தகம் பெரிதும் பயனளிக்கும். ந்த நூல் கொழும்பு மீரா பதிப்பகத்தினரின் 25 ஆவது லாக வெளிவந்துள்ளது. இதனை எழுதியவர் ங்களுக்குத் தெரிந்த ஓர் ஊடகவியலாளர் - கே.எஸ்.சிவகுமாரன்
(SN)

Page 130
24
(865 - ஆ(Goa)வுக்குக் கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவின் 37 ஆவது அனைத்துலகத் திரைப்பட விழாவிற்குச் சென்றபோது அனுபவித்த பொதுவான சந்தோஷங்களையும், இடர்ப்பாடுகளையும் விபரித்து இருந்தேன்.
இப்பொழுது கோ-ஆ தலைநகரான பனாஜியில் இடம் பெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கலைஞர்கள் தொடர்பாகச் சில விபரங்களைத் தரலாம் என்று நினைக்கிறேன்.
இந்தத் திரைப்பட விழாவிலே உலகத் திரைப் படங்களுள் கலைநயங்கொண்ட படங்கள் காட்டப் பட்டதுடன், இந்திய பரந்த காட்சிப் படங்கள் (Panorama) என்ற வகையினுள் 20 கதை சார்ந்த சித்திரங்களும், கதைசாராச் சித்திரங்களும் இடம் பெற்றன.

சேரன்.சிவகுமாரன் - ፰ሩጆ5
இந்தப் படங்களுள் சிலவற்றை மாத்திரமே நான் பார்க்கக்கூடியதாய் இருந்தது. ஏனெனில், ஒரே சமயத்தில் பல மொழிப் படங்கள் வெவ்வேறு திரையரங்குகளில் (05) காட்டப்பட்டன. எனது சார்பு பிற உலக மொழி பேசும் படங்களைப் பார்ப்பதில் தங்கியிருந்தது. ஆயினும், குறிப்பிடத்தக்க இந்திய மொழிப் படங்களையும் பார்த்து மகிழ்ந்தேன். அப்படங்கள் பற்றிய திறனாய்வுக் குறிப்புகளை இங்கு எழுதுவது எனது நோக்கமல்ல. மாறாக, நான் சந்தித்த திரையுலகப் பிரமுகர்கள் பற்றிய குறிப்புகளே இங்கு தரப்படுகின்றன.
அதற்கு முன்னர் இடம்பெற்ற படங்களின் பெயர்களும் அவற்றின் நெறியாளர்களின் பெயர்களையும் இங்கு தருகின்றேன். இந்தப் பட்டியலிலிருந்து சிலவற்றை (DVD Format இல்) நமது தொலைக்காட்சி நிலையங்கள் st'Lautogiovast? Eye Channel இல் சனிக்கிழமைதோறும் காலையில் ஒளிபரப்பப்படும் "நான்காவது பரிமாணம்" தயாரிப்பாளர் (ஆத்மா என்ற கவிஞர் எம்.ஜாபீர்) உட்பட 'நிகரி" திரைப்பட வட்டத்தினர் மற்றும் திரைப்பட இரசனை வட்டங்களைச் சேர்ந்தவர்கள் இதுபற்றி யோசிக்கலாம்.
"நல்ல" படங்களைக் கலைநயமாக அணுகிப் பார்க்கும் பக்குவத்தை நம்மில் பலரும் படிப்படியாகப் பெற்று விட்டால், மட்டரகமான வணிகப் படங்களைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டோம் என்றொரு நம்பிக்கை எனக்கு.

Page 131
35
சேசன்னதத் பேசப.பி சரி, திரையிடப்பட்ட படங்களின் நாமாவளியைப் பார்ப்போம்.
ஆங்கில அகர வரிசையில் பார்ப்போமென்றால், இதோ பட்டியல்:
01. Missed Cal ஆங்கிலம் / ஹிந்தி தவறவிடப்பட்ட அழைப்பு என்ற படத்தை ம்றித்துல் தூள்சிதாஸ், வினே சுப்பிரமணியம் ஆகியோர் நெறிப்படுத்தியுள்ளனர்.
02 (B) பாயோ-மராட்டி - நெறியாளர் (G) கஜேந்திர அஹிரே.
03. த்ரிஷாந்தம் - மலையாளம் - நெறியாளர் எம்.பி.சுகுமாரன் நாயர்.
04. மாட்டிமாய் - மராட்டி - நெறியாளர் சித்ரா பலேகார்,
05. ஸாயிரா - மலையாளம் - நெறியாளர் டாக்டர் (B) பிஜ".
06. சிரிங்காரம் - தமிழ் - நெறியாளர் ஷாரதா ராமநாதன்.
07ஆடும் கூத்து -தமிழ் - நெறியாளர் டிவிசந்திரன்
08. Corporate - ஹிந்தி - நெறியாளர் - மதுரர் (A) பண்டர்கார்,
09. ஏகாந்தம் - மலையாளம் - நெறியாளர் - மது கைதாபுரம்.
10. தன்மத்ரா - மலையாளம் - நெறியாளர் (B) ப்ைொளபி.

&ሪ፲፩‛
சே.ான்.சிவதரசரன்
1 (B) பாதா - மராட்டி - நெறியாளர்கள் சுமித்ரா (B) பாவே'சுனில் சுக்தன்கார்
12. தவமாய் தவமிருந்து -தமிழ் - நெறியாளர் சேரன்.
13. Hope தெலுங்கு - நெறியாளர் கே.சத்யநாராயணா,
14. நயிநேரலு - கன்னடம் - நெறியாளர் (G) க்ரிஷ் களபரவல்லி
15. சோனம் - மொன்பா - நெறியாளர் அஹ்ஸன் முளயிட்
16 (B) பனாரஸ் - வங்காளம் - நெறியாளர் பங்குழ் பரளார்.
17. டொஸார் - வங்காளம் - நெறியாளர் ரிட்டுபர்னோ (G) கோஷ்.
18. ஜோய்மொட்டி - அஸாமிய நெறியாளர் மஞ்சு (B) போராஹ்.
19. நோட்டம் - மலையாளம் - நெறியாளர் சஷி
பராவூர், | سمي
20. ஸொங்சோ ஹ்ஸ்ஸோய் - வங்காளம் - நெறியாளர் - ஸ்ை (B) பால் மித்ர
மேற்சொன்ன திரைப்பட நெறியாளர்கள் சிலருடன் கதைத்துப் பயன் பெற்றேன். சித்ரா பலேகார் என்ற பெண் நெறியாளரின் முன்னாள் கணவர் அமோல் பலேகாரும் மராட்டிய சினமாவில் மிகப்பெரிய நெறியாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சித்ரா பலேகார், ராகவேந்திரா

Page 132
248 - 42rzažavzi (ZVrav. 29. போன்றோருடன், நானும் "திரைப்படத் திறனாய்வு" என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டேன்.
ஷாரதா ராமநாதன் ஒரு தென்னிந்தியர்; தமிழச்சி யாகவும் இருக்கலாம். ஆங்கிலத்தில் அச்சொட்டான உச்சரிப்புடன் அழகாகப் பேசுகிறார். இவருடன் கதைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆயினும், 'சிரிங்காரம்' என்ற தமது படத்தை இவர் அறிமுகப்படுத்தியபோது திரையரங்கில் எனக்கு முன்னர் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த சுஹாசினி (நடிகை, நெறியாளர், நெறியாளரின் துணைவி), ஷாரதா பற்றிய விபரங்களை எனக்குத் தந்தார். சுஹாசினி, முன்னரே எனக்கு அறிமுகமானவர்.
மலையாள நெறியாளர் டி.வி.சந்திரனைப் பல வருடங்களாக எனக்குத் தெரியும். இவரும் நானும் 1991 - 1997 களில், ஒவ்வொரு வருடமும் திரைப்பட விழாக்களில் சந்தித்து உரையாடியுள்ளோம். இவரை எனக்கு அறிமுகப் படுத்தியவர் விவாதத்துக்குரிய தமிழ் நாட்டு எழுத்தாளர் சாரு நிவேதிதா.
நடிகைகள் அர்ச்சனா, ரோஹிணி ஆகியோர் எனக்கு முன்னர் ஒரு தடவை சுமித்ரா (B) பாவேயை அறிமுகஞ் செய்து வைத்தனர். இவரை இம்முறையும் சந்தித்து உரையாடினேன்.
சேரன் பனாஜிக்கு வந்திருந்த போதிலும், அவரைக் கண்டு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனது நெடு நாளைய நண்பர், கன்னடத் திரைப் படத்துறையின் சிறப்பு மிகு நெறியாளர் (G) க்ரிஷ்

Øs, owali, Magyaeavwav 249 கஸ்ஸரவல்லி அவரையும் சந்தித்து பயனுள்ள முறையில் அளவளாவ முடிந்தது.
இவர்களைவிட, நேபாளத்தில் பிறந்து அந்நாட்டுப் பிரதமரின் பெறா மகளும், தமிழ்ப் படங்களில் நடித்தவரு மான) மனிஷா கொய்ராலாவுடன் கருத்தரங் கொன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் மனிஷா, இலங்கைக்கு வந்து போக ஆசைப்பட்டார். நாள் சற்று பலவீனமாகத் தோற்றமளித்த போது (காய்ச்சல்) எனது உடல் நலத்தைப் பேணும்படி மனிஷா கொய்ராலா கேட்டுக் கொண்டார். கருத்தரங்கில் நான் தெரிவித்த கருத்துக்களையிட்டுப் பாராட்டுத் தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்கு பிரபல ஜேன் கம்பியன் என்ற அவுஸ்திரேலியப் பெண் நெறியாளரின் Holy Smoke என்ற படம் பற்றியதாக இருந்தது. "பியானோ" என்ற அற்புதமான படத்தை நெறிப்படுத்திய ஜேன் கம்பியனும் எமக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
மற்றுமொரு பெண் நெறியாளர், அஸாமைச் சேர்ந்த சந்திவானா (8) பார்த்தலோய். இவருடைய படம் எதுவும் கோ-ஆ திரைப்பட விழாவில் காட்டப்படாத போதும், ஒவ்வொரு வருடமும் IFF பட விழாவுக்கு வருவது போல, இத்தடவையும் வந்திருந்தார். அஸாமியத் தலைநகரில் இவரும், இவருடைய கணவரும் (இருவருமே வைத்தியர்கள்) பெரியதொரு சங்கிலித் தொடர்பான வைத்தியசாலையை நடத்தி வருகிறார்கள். இவரைப்

Page 133
250
67rrararaá áZ/raw. Os
பற்றியும், இவருடைய படம் பற்றியும் மேலும், அறிந்து கொள்ள எனது "சினமா! சினமா! ஓர் உலகவலம்," என்ற நூலைப் படிக்கும்படி இனிய வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சந்தித்து உரையாடியவர்கள் போக சஷிகப்பூர், தேவ் ஆனந்த், ஷில்பா ஷெட்டி மற்றும் இனங்கண்டு கொள்ள முடியாமற் போன வட இந்திய, தென்னிந்திய உலகத் திரைப்படத் துறையினர் பலருடனும், ஆய்வறிவாளர்கள் (Intelectuals) எழுத்தாளர்களுடனும், அவ்வப்போது காத்திராப் பிரகாரமாக பேசி மகிழ்ந்ததும் உண்டு.
இவர்களைவிட சென்னை, பெங்களுர், கோயம்பத்தூர், புதுடில்லிமும்பாய், கேரள மாநிலங்களைச் சேர்ந்த திரைப்படக் கல்லூரி மாணவர்கள், சீனிவாசன், குட்டி ரேவதி, விஷ்வாமித்திரன், சுப்பிரபாரதி மணியன், திலகவதி போன்றவர்களுடனும் உரையாடி மகிழ நேரிட்டது.
இவை எல்லாம், சினமாவை நான் புரிந்து கொள்வதற்குப் பெரிதும் உதவி வருகின்றன. படங்கள் பார்ப்பது, பயனடைவது ஒருபுறமிருக்க மனிதர்களை மனிதர்களாகச் சந்தித்து உரையாடி மகிழ்வதும் இன்பந்தான்.
QN)

257
— • 4tadioib° னத் காமத்தைத் தி ಇಂr பபுள் இரண்ம்
Sex, Lust, Obscenity, Ereticism Guitairp giréal பதங்களுக்குச் சரியான தமிழ்ப் பதங்கள் எவை என்று பார்த்தால் தெளிவான விளக்கங்களைப் பெற முடியாமல் இருக்கிறது. தமிழிலும் வெறுமனே "செக்ஸ்" என்கிறார்கள். இது ஒருவரின் பால் (ஐயும்) குறிக்கும். அதேவேளையில் காம உறவுகளையும் குறிக்கும் விதத்தில் பயன்படுத்துகிறார்கள். அதேபோல "ஆபாசம்” என்ற வார்த்தையும் பிரயோகிக்கப்படுகிறது. இந்த மயக்கமான நிலையில் நான் சொல்லவருவதை எந்தப் பதங்களைக் கொண்டு விளக்கலாம் என்று திண்டாடுகிறேன்.

Page 134
252 - சொன்னதத் போது,23 இந்த இலட்சணத்தில் "காமம்" என்ற சொல் தரும் அர்த்தத்தில் நான் சொல்லவருவதை எப்படியோ சொல்ல முனைகிறேன். "காமம்" என்ற சொல்லே அருவருப்பானது என்று நம்பும்படி சூழல் சார்பான மனக்கட்டுப்பாட்டுக்கு (Conditioning) நாம் அடிபணிந்து வந்துள்ளோம். ஆயினும் 21 ஆம் நூற்றாண்டில் இந்த sex (காமம் என்று தற்போதைக்குக் கூறிக்கொள்வோமே) என்பது பலவித மான ஊடகங்கள் ஊடாகப் பகிரங்கமாகப் பேசப்படுகிறது. பார்க்கப்படுகிறது. ஆயினும் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் அறநெறிகள் வலியுறுத்தப்பட்டு வந்த காலத்தில் (giréaugigai Victorian Morality, Puratinism 6TGirGuit by gigi. காமம்’ நயமற்றதொரு கீழ்த்தரமான பூட்டிய அறைக்குள் நடக்கும் பவித்திரமான இரகசிய உடலுறவு என வேஷதாரித்தனத்துடன் (Hypocritically) அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இப்பொழுது செய்மதித் தொலைக்காட்சி, இணையதளங்கள், திரைப்படங்கள் போன்ற காட்சி ஊடகங்களும், ஆண்-தன்னினச் சேர்க்கை, பெண்தன்னினச் சேர்க்கை, ஜனனேந்திரிய கவச உறைகள், பாடசாலைகளிலும், பல்கலைக்கழங்களிலும் பாலியற் கல்விப் போதனை என்றெல்லாம் வந்துவிட்ட பின்னர் இன்னமும் நாம் இந்த விவகாரங்களை மூடி வைக்க
முபுடயாது.
சீர்கெட்ட சமுதாயப் போக்கைத் தடுக்க இவை பற்றிப் பகிரங்கமாகவே நாம் பேசி விவாதிக்க வேண்டும்

சே.கிரன்,சிவகுமாரன் - 23 எனநான் நினைக்கிறேன்.நீங்கள் என்னநினைக்கிறீர்களோ தெரியாது.
தமிழிலக்கியத்தில் அன்று தொடக்கம் இன்று வரை சிற்றின்பம் இயல்பான பாடு பொருளாக - கதைப் பொருளாக-இருந்து வருவதை நாம்தட்டிக் கழிக்க முடியாது. சங்கப் பாடல்கள், சங்கம் மருவிய காலப் பாடல்கள், பல்லவர், சோழ, நாயக்கர் கால இலக்கியங்கள், 19ஆம், 20ஆம் நூற்றாண்டு இலக்கியங்கள், அண்மைக்கால இலக்கியங்கள் என்பவற்றில் எல்லாம், ஆயிரத்திற்கும் அதிகமான எடுத்துக்காட்டுகளை நான் சுட்டிக் காட்டாமலே நீங்கள் அறிவீர்கள்.
-Slg| *sfl gLITFlb' (Obscenity) - sffu) மெல்லுணர்வு (Eroticism) என்பதற்குமிடையே வேறுபாடு வேண்டாமா என்று நீங்கள் கேட்பீர்கள். நியாயம் தான். குரூரமான கலைநயமற்ற, கரடுமுரடான, நாகுக்கற்ற காம வெளிப் பாடுகளை 'ஆபாசம்' என்றால், கவித்துவமான காம உணர்வின் வெளிப்பாட்டை "காமஞ் சார்ந்தது" என்போம்.
முன்னையது நாகரிகமற்றது. காட்டுமிராண்டித் தனமானது பின்னயதை ரசிப்பதில் நான் பின்னிற்பதில்லை. என்னடா இது பேரப்பிள்ளைகளையும் கண்ட இவன் இந்தக் காமம்' பற்றி எல்லாம் எழுதுகிறானே என்று நீங்கள் என்மேல் வைத்திருக்கும் மரியாதையைக் கு றைத்துதக் கொண்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆயினும், யதார்த்த நிலையில் நின்று பார்த்தால், இயல்பான பாலுணர்வு அப்படியொன்றும் பரிகாசத்திற்கு உரியதல்ல என்பதை ஏற்றுக் கொள்வீர்கள்.

Page 135
254 - சோன்னதுச் சிபால.23 இந்தப் பூடகத்துடன் பல வருடங்களுக்குப் பின் தியேட்டரில் இருந்து பார்த்து ஓரளவு திருப்தியுற்ற இரு ஐரோப்பியப் படங்கள் பற்றி மிகச் சுருக்கமாக உங்களுக்குத் தரலாம் என நினைக்கிறேன்.
இவை 30, 40 வருடங்களுக்கு முன் வெளிவந்தவை. இவை நிச்சயமாகக் கலைப்படங்கள் அல்ல. ஆனால் காமத்தைத் "தீண்டும்" (Touching) மெல்லிய உணர்வுகளைப் பிரத்தியட்சமான நிர்வாணக் காட்சி களாகத் தந்தன. அதாவது இக்காட்சிகள் (Blue fim) எனப்படும் ஆபாசப் படக்காட்சிகள் போல் படம் பிடிக்கப்படவில்லை.
இந்த இரண்டு படங்களும் ஆங்கிலம் பேசுபவையாக இருந்த போதிலும், அவற்றின் பின்புலம் இங்கிலாந்தும் பிரான்ஸ"மாகும்.
இத்தாலியின் புகழ்பெற்ற எழுத்தாளர்களுள் ஒருவர் அல்பேர்டோ மொறாவியா (Alberto Moravia) என்பதை ஆங்கில நாவல்களைப் படித்த வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.
ஆய்வறிவாளர் க.கைலாசபதி, தினகரன்' ஆசிரியராகப் பணிபுரிந்த பொழுது, நமது முன்னணி மூத்த எழுத்தாளரும், கண்டனக்காரருமான திறமைசால் எஸ்.பொன்னுத்துரை தான் விரும்பிய நாவலாசிரியராக அல்பேர்டோ மொறாவியாவைத் தேர்ந்தெடுத்ததை நான் இங்கு நினைவூட்டலாம்.
அல்பேர்டோ மொறாவியா எழுதிய "The Red Cherry" என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இதே

255 தலைப்புடைய படம், அறிவு ரீதியாகச் சிந்திக்க முடியாத இயந்திரப் பாங்கான வளரிளப் பெண்ணொருத்தியின்
சே.கிரஸ்.சிவதசசரன்
உளப்பாங்கு உடற்தேவை ஆகிய அம்சங்களை உளவியல் பாங்காகச் சித்திரிக்கிறது. இதற்கு மேலே நான் கூறினால், அது இப்படத்தின் திறனாய்வாக அமைந்து விடக்கூடும். அதுவல்லவே இப்பத்தியின் நோக்கம்?
அடுத்த படம் Patricia. இது திருட்டுக்காம நிகழ்வு களையும் மனித உடல்களின் அழகியற் தன்மையையும் ஓர் ஓவியனின் மனப்பாங்கு எவ்வாறு ஒரு சித்திரத்தை
வரையத்துரண்டுமோ, அதே போன்று இப்படத்திலும்
பெண்ணுடல் அழகு படம் பிடிக்கப்படுகிறது.
இந்த Lesbianism என்ற பண்பு பல தசாப்தங்களுக்கு
முன்னரே படங்களில் காட்டப்பட்டு விட்டதை இப்படம்
மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.
பெண்ணுடலின் கவர்ச்சியை அல்லது கவித்துவ மான அழகுடல் வளர்ப்பைக் கலை நயமாக ரசிப்பது அழகியற்றன்மையாக அமையும். அதேவேளை, பெண்ணை வெறுமனே ஒரு போகப் பொருளாகப் பார்ப்பது ஆணாதிக்கச் செயற்பாடு என்றுதான் நாம் பார்க்க வேண்டும்.
Sexis Beautiful, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான்

Page 136
256.
(t്മി (Ete?' രൈf AESnr, assif6למשלשנ
‘தலித்’ என்ற மராத்தி மொழிச்சொல் தமிழிலும் இடம்பெறத் தொடங்கிவிட்டது. நமது மொழியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சாதியில் குறைந்தவர் களாகக் கருதப்படுபவர்களை இந்த வார்த்தை குறிக்கும். குறைந்த சாதியில் பிறந்தவர்களை ஏளனமாகச் சாதி வெறியர் பார்த்த காலம் ஒன்றிருந்தது. இது படிப்படி யாகக் குறைந்து வந்தபொழுதிலும் சாதி வெறியாட்டம் இன்னும் சில இடங்களில் இருந்து வருவதை மறைக்க முடியாது. கடந்த அரை நூற்றாண்டாக நமது தமிழ் எழுத்தாளர்களில் சிலர் இந்தச் சாதிப் பாகுபாட்டை எதிர்த்து நிறையவே ஆக்க இலக்கியங்களைப் படைத்து வந்துள்ளனர். இவர்கள் தமது எழுத்துக்கள் மூலம் தமிழ் நாட்டுப் பின்தங்கிய வகுப்பினருக்கு முன்மாதிரியாக

മs.ബി.ക്രിക്രമZത് - 257
இருந்து வந்துள்ளனர். கே.டானியல், டொமினிக் ஜீவா, என்.கே.ரகுநாதன், எஸ்.பொன்னுத்துரை போன்றோர் இவர்களில் சிலர். சாதியின் பெயரால் இடம் பெறும் அட்டூழியங்களை, இச்சாதிகள் எனக் கூறப்படும் சாதிகளில் பிறக்காத ஏனைய எழுத்தாளர்களும் சுட்டிக் காட்டி எழுதியுள்ளனர். பொதுவாக இலங்கையில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் அனைவருமே "சாதி" என்ற மூடப்பகுப்பை நிராகரித்து வந்துள்ளனர். இங்கு விழிப்புணர்ச்சி அதிகம். எழுதப் படிக்கத் தெரிந்தவர் களின் எண்ணிக்கை அதிகம். முற்போக்குச் சிந்தனைகள் அதிகம்.
அம்பேத்கார் என்ற மராத்தியர் தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களிற் பெரும்பாலானோரைக் கவர்ந்த ஒரு சமூகச் சிந்தனையாளர். அவருடைய பாதிப்பினால் பல எழுத்தாளர்கள் அங்கு சாதியத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்தி எழுதி வருகின்றனர். அடிமட்டத்திலிருந்து பல ஆய்வறிவாளர்கள் தோன்றியுள்ளனர். அவர்களுள் சில பெண்களும் அடங்குவர். அத்தகையோரில் ஒருவரான சிவகாமி படித்துப் பட்டம் பெற்று உயர்மட்டநிர்வாகியாக இருந்து வருகிறார். இவரை 1996 ஆம் ஆண்டில் புதுடில்லியில் சந்தித்தேன். அங்கு நடைபெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவிற்கு அவர் வந்திருந்தார். கதை சாரா படமொன்றை (டொக்கியூமென்டரி) அவர் நெறிப்படுத்தியிருந்தார். அக்குறும்படத்தின் பெயர்
'goon LT&S'.

Page 137
258
é7ezeverzé áZ/zev... a3
இரண்டு நாவல்களையும், இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும் அவர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார். இந்திய மத்திய அரசில் இவர் ஓர் உயர் அதிகாரி. இவருடைய கணவர் போஸும் சென்னை துறைமுக நிர்வாகத்தில் ஓர் உயர் அதிகாரி
சிவகாமியின் முதற்படம் "ஊடாக" கதைசாரா, விவரணம் சார்ந்த அரைமணி நேர வண்ணப்படம். சந்துரு என்பவர் எழுதிய கதையைத் தழுவி, நெறிப்படுத்தி வெளியிட்டிருக்கிறார். இந்தப்படத்தில் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்றவரும், சிறப்பான நடிகரும், கலை இலக்கியங்களில் பரிச்சயமுடையவருமான நாசர் நடிக்கிறார். ஆனால், படத்தில் ஒரு வார்த்தைகூட அவர் பேசமாட்டார். படத்தில் அவர் ஒரு பயணி படத்தின் படிம இணைப்புக்கு அவர் உதவுகிறார், இந்தப் படத்தின் ஒளிப்பதிவு தங்கர் பச்சானுடையது. இவர் ஒர் எழுத்தாளரும் ஆவார். படநெறியாள்கையையும் மேற்கொள்வார். படத்தின் தொகுப்பு முன்னாள் நெறியாளர் பீம்சிங்கின் புதல்வர் லெனின். வி.டி.விஜயனும் துணை.
மனிதன் இயற்கையைக் கட்டி ஆளலாம் என்ற மமதை கொண்டவன். அதனால், இயற்கையான மனிதத் தன்மையை இழந்துவிடுகிறான். உண்மையில் இயற்கையின் மாண்பு மகத்தானது. இதனைத்தான் படிமச் சித்திரத் தொடர் மூலம் சிவகாமி காட்ட முயல்கிறார்.
இயற்கையோடியைந்த பண்டைய மரபு வாழ்க்கை முறைமை சொல்லாமல் சொல்லப்படுகிறது.இயற்கையின்

259
வளங்கள் அபரிமிதமாகக் கிடைக்கின்றபொழுதிலும் மனிதன் அவற்றை மாசுறுத்துகிறான். அலட்சியம் செய்கிறான். முரண்பாடாக மனித வாழ்வு முழுவதுமே இயற்கையிலும், இயற்கைதரும் பலாபலன்களிலுமே தங்கியுள்ளது. இதனை உணர்த்துவதில் சிவகாமி பெருமளவு வெற்றி காண்கிறார்.
മി.മീ. കിത്രZZങ്ങ്
பொறுப்பற்ற முறையில், கூலிப்படையினர் போன்று இயற்கை விரோதிகள் இயற்கையைச் சூறையாடுகின்றனர். இயற்கை, இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடி மக்கள்; இவையே துரித அசையும் படிமங்களாகப் படத்தில் சித்திரிக்கப்படுகின்றன. சமிக்ஞைகளும் பொருத்தமான இடங்களில் இடம்பெறுகின்றன.
மனிதன் தன்னையும் கடந்த நிலையில் மேற் கொள்ளும் - இயற்கையளாவிய தேடலில் - போக்கையும், நெறியாளர் காட்டிநிற்கிறார். பயணம் தொடருகிறது.இந்த விதமான தத்துவ, இயற்கை வள விசாரத்தை நெறியாளர் கோடிகாட்டி நிற்கிறார்.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சில நோர்வே படங்களை (சுற்றாடல் தொடர்பானவை) பார்த்த பொழுது சிவகாமியின் "ஊடாக'வும் என் மனத்திரையில் ஓடியது.
இத்தகைய படங்கள் பரீட்சார்த்தமானவை. இவற்றை எளிதிற் புரிந்து கொள்ளத்தக்கவர்கள் உளவியலாளர், ஆய்வறிவாளர், சமூகவியலாளர், இயற்கை நேசிகள் ஆகியோராவர். ஆயினும் மட்டரகமான, பாமரத்தன்மை கொண்ட பார்வையாளர் இத்தகைய

Page 138
260 படங்களைப் புரிந்துகொள்வார்கள் என்பது ஐமிச்சம்.
6a7aaraj 62/7av... (23
"படம் எப்படி?” என்று சிவகாமி என்னிடம் கேட்டார். "என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் படத்தை வரவேற்கிறேன்" என்றேன்.
"ஆனால், ப்ரெண்ட்ஸ் எல்லாம் வாய்க்கல்லே என்று சொன்னாங்க" என்றார் சிவகாமி.
"அது அப்படித்தானுங்க. ரசனை என்பது, தனிப் பட்டதொரு அனுபவம் தானே, ஆளுக்கு ஆள் வேறுபடும்" என்றேன்.
"வாஸ்தவந்தான்" என்றார் சிவகாமி.
() () ()
1970 sømfesiy கொழும்பு மேடை நாடகம்.
1970 களில் பல குறிப்பிடத்தக்க தமிழ் நாடகங்கள் கொழும்பில் மேடையேறின. இவை பற்றி நிறையத் தமிழிலும், ஆங்கிலத்திலும் திறனாய்வுப் பத்திகளை எழுதி வந்தேன். அவற்றுள்ளே பின்வரும் நாடகங்கள் பற்றி ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதியமை இங்கு குறிப்பிடப் பட வேண்டியது ஏனெனில், சம்பந்தப்பட்ட நாடகங் களின் நெறியாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோர் இவற்றை ஆங்கிலத்தில் படித்திருக்க மாட்டார்கள். அவர்களுக்காகவும், இன்றைய இளம் வாசகர்களுக்காகவும், இந்நாடகங்களை அன்று பார்த்து. மகிழ்ந்தவர்களின் இரை மீட்டலுக்காகவும் இந்த விபரங்களைத் தருகிறேன்.

267 நகரத்துக் கோமாளிகள் (கோர்க்கியின் நாடகம், ஸ்ஹேர் ஹமீட் நெறிப்படுத்தியது), தகுதி (பேராசிரியர் தில்லைநாதன் எழுதி நெறிப்படுத்திய நாடகம்), காலங்கள் அழுவதில்லை (மாத்தளை கார்த்திகேசு எழுதி நெறிப்படுத்தியது), ஐயா எலக்ஷன் கேட்கிறார் (மாவை நித்தியானந்தன்), ஏணிப்படிகள் (பெளஸ"ல் அமீர் எழுதியது ஸ"ஹேர் ஹமீட் நெறிப்படுத்தியது), நளன், அக்கினிப் பூக்கள் (அன்டனி ஜீவா) முறுவல் (எஸ்.பொன்னுத்துரை), பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் (பெளஸ்" ல் அமீர்), களங்கம்,
്.ബി. ക്രിക്രZZങ്ങ്
கோவலன் கூத்து, நல்லை தந்த வல்லவன், கந்தன் கருணை (என்.கே.ரகுநாதன்), காலம் சிவக்கிறது (இ.சிவானந்தன்), உதயம், கிருஷ்ண லீலா (கார்த்திகா கணேசர்), பிச்சை வேண்டாம் (அதாளபீஸியஸ்), விழிப்பு (நா.சுந்தரலிங்கம்), இனி என்ன..? சிறுக்கியும் பொறுக்கியும் (கலைச்செல்வன்), தோட்டத்து ராணி, போராட்டம், தீர்க்க சுமங்கலி, கர்ணன் கருணை, மழை (க.பாலேந்திரா), இரு துயரங்கள் (முருகையன்), மனிதனும் மிருகமும், ஒரு சக்கரம் சுழல்கிறது, காமன்கூத்து, இலங்கேஸ்வரன், பூதத்தம்பி சாதிகள் இல்லையடி பாப்பா, நம்பிக்கை, நட்சத்திரவாளபி, பலி, கண்ணாடி வார்ப்புகள் (பாலேந்திரா), பசி, கூடி விளையாடு பாப்பா, பயணம், அலைகள், சக்கராம் பைண்டர், யுகதர்மம், நாற்காலிக்காரர் (ந.முத்துசாமி), கோடுகள், சலனங்கள், நடைமுறைகள், ஊசியும் நூலும், பொறுத்தது போதும், ஜானகி கல்யாணம், வேட்டை, காமன் கூத்து, உன் கண்ணில் நீர் வழிந்தால், துரோணர்,

Page 139
262
6ീബ്രങ്ങZ് മZര, മ9
ஒரு மலர் கருகியது, துயரத்தின் சுவடுகள். இவ்வாறு பல நாடகங்கள் கொழும்பு மேடைகளில் அரங்கேற்றப் பட்டுள்ளன.
இவற்றைத் தந்ததன் நோக்கம், இத்தகைய நாடகங்கள் புதுப்பரிமாணங்களுடன் இன்றும் மேடையேறக் கூடியவை என்பதையும் மறக்கப்பட்டுவிட்ட நாடகாசிரியர்கள், நெறியாளர் ஆகியோரை, விமர்சகர்களுக்கு நினைவூட்டு வதுமே.
தாளிளவியல், பாலேந்திரா, (சுந்தரலிங்கம், ஸ"ஹேர் ஹமீட் காலமாகிவிட்டனர்) போன்றோர் பிறநாடுகளில் செயலாற்றுகின்றனர்.

தமிழ்ப்பம்:பின்னோக்கு
oS) சையும் படிமங்கள்” என்ற தலைப்பிலான நூல் ஒன்று கொழும்பில் வெளியிடப்பட்டது. இது "சினமா" என்ற கலை வடிவத்தை எவ்வாறு நுகர்ந்து மதிப்பிடலாம் என்ற விபரங்களையும், திரைப்படம் கூறும் விளக்கங்களையும் தமிழில் அளிக்கும் ஒரு நூல். அதனை எழுதியவர் கே.எஸ்.சிவகுமாரன்.
இந்தப் பின்னணியில், தமிழ்த் திரைப்படத் தொழில் வளர்ச்சியின் தொடக்ககால விபரங்களை அடுத்டுப் பார்ப்போம்.
திரைப்படம் என்பது கலை மாத்திரமல்ல. அது ஒரு கைத்தொழில் என்பதனையும் அறிவீர்கள்.
முதலில், தமிழ்பேசும் படங்கள் மும்பாய், கொல்கத்தா, பூனே ஆகிய இடங்களில் உள்ள கலையகங்களிற் தான் படம் பிடிக்கப்பட்டுத் தயாரானவை. சென்னையில்

Page 140
264 முதலாவது திரைப்படக் கலையகம் 1934 ஆம் ஆண்டு
62-7eazzi away... (23
நிறுவப்பட்டது. சிவகங்கை நாராயணன் என்பவர் நிறுவிய இந்தக் கலையகத்தின் பெயர் ஆங்கிலத்தில் "Sound City Seenivasa Cinetone"
ஆரம்பகாலத் தமிழ்ப் படங்களின் கதைகள் இந்துக் கற்பிதக் கதைகளைத் தழுவியதாக அமைந்தன. ஓரளவு வரலாற்றுப் பொருள்களைக் கொண்ட மனோரீதியக் கதைகளாகவும் அமைந்தன. இதனை Historical Romances என்பர். இந்தியா சுதந்திரம் பெறும் வரை இந்தப் போக்கே நிலவியது.
ஆங்கிலத் துப்பறியும் நாவல்களைத் தழுவி வடுவூர் துரைசாமி ஐயங்கார் சில நாவல்களை அந்தக் காலத்தில் எழுதி வந்தார். அந்நாவல்களைத் தழுவி "மேனகா", "ராஜாம்பாள்" போன்ற படங்கள் வெளிவந்தன. 1935இல் இன்னொரு படமான "டம்பாச்சாரி"யும் தயாரிக்கப் பட்டது. 1937 முதல் பத்திரிகைகளில் வெளிவந்த தொடர் கதைகளைத் தழுவி சில படங்கள் தயாரிக்கப்பட்டன.
தமிழ் சினமா தொடர்பாக அறந்தை நாராயணன் ஓர் அருமையான நூலை எழுதியிருக்கிறார்.
உடனிகழ்காலத் தமிழ்ப் புனைகதைகளைத் தழுவி எடுக்கப்பட்ட தமிழ்ப் படங்களுள் சிலவற்றின் பெயர்களை அவர் தந்துள்ளார். உங்கள் பரிச்சயத்திற்காக அவற்றின் பெயர்கள் வருமாறு:
கே.சுப்ரமணியத்தின் இவர் பத்மா சுப்ரமணியம், எஸ்.கிருஷ்ணசாமி ஆகியோரின் தந்தையாவர்), பால

6.476i. Moyamvat 265
யோஹினி, வி.எம்.கோதைநாயகி அம்மாளின் அநாதைப் பெண், முன்ஷி பிரேம்சந்தின் சேவாசதனம், கல்கி கிருஷ்ணமூர்த்தியின் தியாகபூமி, எஸ்.டி.எஸ்.யோகியின் அதிர்ஷ்டம், ராம்குமாரின் பால்ய விவாகம், டி.கே.ஷண்முகத்தின் குமாஸ்தாவின் பெண், பி.நீல கண்டனின் நாம் இருவர் (தமிழ் சினிமாவில் இது ஒரு திருப்புமுனைப் படம், சுப்பிரமணிய பாரதி மக்கள் கவியாகப் பிரபல்யம் பெற வழி வகுத்தவை இப்படத்தின் பாடல்கள்), பைத்தியக்காரன், சி.என்.அண்ணாத்துரையின் வேலைக்காரி (மற்றொரு மைல்கல் படம்), நல்லதம்பி (என்.எஸ்.கிருஷ்ணனின் பங்களிப்பு மகத்தானது), ஓர் இரவு (மேலைத்தேச இசையின் செல்வாக்கு), ரங்கூன் ராதா, முன்ஷா பரமுப்பிள்ளையின் மணமகள்,
இவற்றைவிட வேறு சில படங்களும் உள்ளன. மு.கருணாநிதியின் தேவகி, பராசக்தி (சிவாஜி கணேஷனின் அறிமுகம் மற்றொரு திசை திருப்பம்) திரும்பிப்பார், சரச்சந்தரின் தேவதாஸ், திருவாரூர் தங்கராசாவின் ரத்தக் கண்ணிர் (எம்.ஆர்.ராதாவின் தத்ரூப நடிப்பு), மங்கையர் திலகம், பூனரிதரின் ரத்தபாசம், எதிர்பாராதது (உடனிகழ்கால காதற்சிக்கல்கள்), கல்யாணப் பரிசு (மற்றொரு திருப்பு முனை), நெஞ்சில் ஒர் ஆலயம் (சினிமா என்ற ஊடகத்தைச் செம்மையாகப் பயன்படுத்த எடுக்கப்பட்ட ஒர் எத்தனிப்பு), விந்தனின் கூண்டுக்கிளி (சிவாஜியும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம்), ஏ.பி.நாகராஜனின் நால்வர், மாங்கல்யம், நான் பெற்ற செல்வம், கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை (விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் ஆற்றல் வெளிப்படல்), கறுப்புப்பணம்.

Page 141
288 - சொன்னத் போது, 23
இவை தவிர, தி.ஜானகிராமனின் நாலுவேலி நிலம், எம்.எஸ்.சோலைமலையின் பாகப்பிரிவினை (சிவாஜியின் உணர்ச்சி மிகு நடிப்பு), கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் தெய்வப்பிறவி (பத்மினியின் நடிப்பு), என்னதான் முடிவு? படிக்காத மேதை (மீண்டும் சிவாஜி, ஆர்.கே.கண்ணனின் பாதை தெரியுது பார் இடதுசாரிக் கருத்துக்கள் கொண்ட மகத்தான படம்), பி.எஸ்.ராமையாவின் போலிஸ்காரன் மகள் (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் இயல்பு நடிப்பு) ஆகியனவும்.
ஜெயகாந்தனின் உன்னைப் போல ஒருவன் (யதார்த்த சினிமாவின் ஆரம்பம்), யாருக்காக அழுதான் நாகேஷின் நடிப்பு, சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (லக்ஷமியின் இயல்பு நடிப்பு முக்கியமானதிருப்புமுனை), கே.பாலசந்தரின் அரங்கேற்றம் (தவிர்க்கப்பட்ட கதைப் பொருள்கள் தமிழ் சினிமாவில் இடம் பெறத் தொடங்குகின்றன), தப்புத்தாளங்கள், மூன்று முடிச்சு அவள் ஒரு தொடர் கதை (சுஜாதாவின் அதியற்புத இயல்பு நடிப்பு), வறுமையின் நிறம் சிவப்பு (கமலஹாசன், பூரீதேவி இடதுசாரிப் பாவனை), அச்சமில்லை அச்சமில்லை, தண்ணிர் தண்ணிர் (கோமல் சுவாமிநாதனின் கதையைத் தழுவிய மிகச் சிறப்பான "சினமா), சிந்து பைரவி (சுஹாசினி, சிவகுமார் நடிப்பு, நாட்டுப்பாடல் மெட்டுத் தழுவிய இசை), அகிலனின் பாவை விளக்கு போன்ற படங்களும் குறிப்பிடத்தக்கவை.
பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் (ராதிகாவின் நடிப்பு), அலைகள்

*.7wi.4%wyzoważ - 267
ஓய்வதில்லை (கார்த்திக்/ ராதா அறிமுகம்), வேதம் புதிது
(சத்யராஜின் நடிப்பு), மகேந்திரனின் முள்ளும் மலரும் (சரத்பாபு, ரஜினிகாந்தின் நடிப்பு), உத்திரிப்பூக்கள் (மற்றொரு சிறப்பான படம்) துரையின் பசி நான் பார்க்க வில்லை), கோமல் சுவாமிநாதனின் அனல்காற்று (பார்க்க வில்லை), ஒரு இந்தியக் கனவு (வித்தியாசமான படம்) ரொபர்ட் ராஜசேகரனின் பாலைவனச் சோலை (சுஹாசினியும், ஆண் நடிகர்களும் காட்டும் புதிய நடிப்பு முறை), பூணூதர் ராஜாவின் கண் சிவந்தால் மண் சிவக்கும், மணிவண்ணனின் இனி ஒரு சுதந்திரம் (நான் பார்க்க வில்லை) போன்றவை உடனிகழ்கால வாழ்க்கைப் போக்கின் சில அம்சங்களைக் காட்டி நிற்கின்றன.
வரலாற்றுச் சாயல் கொண்ட மனோரதியக் கதைகளாகப் பின்வரும் படங்களின் கதைகளைச் சொல்லலாம், மாத்ருபூமி, அஷோக்குமார், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் மற்றும் அரச படங்களாக உத்தம புத்திரன், மனோன்மணி, சந்திரலேகா, பொன்முடி, மந்திரிகுமாரி, பாதாள பைரவி (என்.டி.ராமராவின் நடிப்பு), மர்மயோகி, மனோகரா, சொர்க்க வாசல், சக்கரவர்த்தித் திருமகள், நாடோடி ன்னன், ஆயிரத்தில் ஒருவன் (எம்ஜிஆர்/ஜெயலலிதா - அரபி இசை), அடிமைப் பெண் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சமயம் மற்றும் இலக்கியங்களைத் தழுவிய சில
படங்களும் குறிப்பிடத்தக்கன :

Page 142
268
6ിബല്യു മzങ്ങ. മ9
அம்பிகாபதி, சிந்தாமணி, சுந்தரமூர்த்தி நாயனார், பூரீ ராமானுஜர், திருநீலகண்டர், சகுந்தலை, காரைக்கால் அம்மையார், காள மேகம், பக்த சேதா, ஆர்யமாலா, சாவித்திரி, கண்ணகி, நந்தனார், சிவகவி, ஹரிதாஸ், மீரா, கிருஷ்ணபக்தி, மங்கையர்க்கரசி, ஒளவையார், சம்பூர்ண ராமாயணம், பூம்புகார், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர்.
மேலைச் சினமாவின் வார்ப்பில் சில படங்கள் தயாராகின. நிமால் கோஷ், ஜெயகாந்தன், ஜெயபாரதி (குடிசை), ஹரிஹரன் (ஏழாவது மனிதன்), கோமல் சுவாமிநாதன், பிரதாப் போத்தன், ஜோன் ஏப்ரஹாம் (அக்கிரகாரத்தில் கழுதை), பாலுமகேந்திராவின் அனைத்துப் படங்களும் இவ்வாறு குறிப்பிடப்படலாம் என நினைக்கிறேன்.
புதிய படங்கள் (1990 களுக்குப் பின் வந்தவை) பற்றிப் பின்னர் பார்ப்போம்.
GN)

269
குறு DőlÚya)J.
உழைப்பால் உயர்ந்தவர்கள் - பந்துபால குருகே, இரா.சடகோபன்
இது சிங்கள நாவலொன்றின் தமிழாக்கம். தமிழ் பணியையும் தேசியப் பணியினையும்" தமது தமிழாக்கம் மூலம் மொழிபெயர்ப்பாளர் செய்திருப்பது வரவேற்கத் தக்கதே. இலங்கையின் பெருந்தோட்ட உபபண்பாட்டுக் கோலங்கள் இந்த நாவலில் இடம்பெறுகின்றன. நல்லதோர் சமூகவியல் நாவல்; நல்லதோர் தமிழாக்கம். சித்திரங்களுடன் கூடிய சமூகவியல் பண்பு நிறைந்த இந்த நாவல் மலையகத் தமிழ் இலக்கியத்திற்குக் கனதியைத் தருகிறது. தமிழாக்கம் செய்தவர் ஆக்க இலக்கியப் படைப்பாளரான நாடகாசிரியர், சட்டத்தரணி, சமூக நோக்குடையவர். சிறுவர் இதழின் பிரதம ஆசிரியர். அதனால் நூலும் செய் நேர்த்தியாய் உருப் பெற்றுள்ளது. பாராட்டுக்கள்.

Page 143
ኃፖዕፓ
சொன்னதச் சிாது. 23
மனோலயம் - வி.ஏ.திருஞானசுந்தரம்
தமிழ் ஊடகத்துறைக்குத் தகவற் பரம்பலை குறுங் குறிப்புகள், சம்பந்தப்பட்டவர்களின் இளமைக்கால நிழற் படங்கள் சகிதம் கச்சிதமாகச் செய்திருக்கிறார்நூலாசிரியர் அவரே ஒலிபரப்புத் துறையில் நன்கு பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற உயரதிகாரியாகவிருந்து தன்னலம் பாராது இலங்கை வானொலியின் பல ஒலிபரப்பாளர் களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அந்தப் பணி இந்நூலின் ஒரு பகுதியென்றால், மறு பணி மறைந்து போன தம்பியாரின் திறனாற்றலை வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்யும் வண்ணம் கார்ட்டூன்" (அரசியல் அங்கச் சுவைதரும் சித்திரங்கள்) மற்றும் சித்திரங்களை உள்ளடக்கி யிருக்கிறார் நூலாசிரியர். இதில் பிரஸ்தாபிக்கப் பட்ட ஒலிபரப்பாளர்கள் உட்பட ஊடகத்துறையில் ஈடுபடுவோர் அவசியம் இதனைப் படித்துப் பார்க்க வேண்டும்.
நீர்வை பொன்னையன் கதைகள் - இ.மு.க.இ. பேரவை
தமிழ் இலக்கிய உலகில் தலைசிறந்த எழுத்தாளர் களுள் ஒருவராகக் கருதப்படும் இந்த ஆசிரியர் ஈழத்திலும் முன்னணி சமூகப்பார்வை கொண்ட கலைநயம் வாய்ந்த கதைகளை எழுதியிருக்கிறார். இலை மறை காயாக இருக்கும் இவருடைய திறனாற்றலைப் பரவலான வாசகர்கள் நன்கு அறிந்து கொள்ளத் தேர்ந்தெடுத்த

277
as availayaara
25 கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
சிறுகதை வடிவத்தின் இன்னொரு சாயலை அறிந்து
கொள்ள இத்தொகுப்பு உதவுகின்றது.
மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் - வித்துவான் சா.இ.கமலநாதன் கமலா கமலநாதன்
மட்டக்களப்பு புளியந்தீவு சிங்கள வாடியில் 1936 ஆம் ஆண்டு பிறந்து, அங்கே 1947 - 1953 காலப்பகுதியில் லேக்ரோட்டிலுள்ள எமது திருப்பதி" என்ற பெரிய வீட்டில் வளர்ந்தவன் என்ற முறையில் மட்டக்களப்பு பற்றியறிந்து கொள்ள ஆசைப்பட்ட எனக்கு இது ஒரு வரப்பிரசாதமான நூல். ஆசிரியர்களும்
மறைந்த த.சிவராமும் இந்த நூலுக்குப் பங்களிப்புச்
செய்துள்ளனர். பூர்வசரித்ரம் என்பதனால் சுவாரஸ்யம் சிறிது குன்றினாலும் பல வரலாற்றுச் செய்திகளைக் கல்வெட்டுப் பிரசுரங்கள் மூலமும் நாம் அதிகாரபூர்வமாக அறிந்து கொள்ள வகை செய்யப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பார் மாத்திரமல்ல சகல தமிழ் பேசும் மக்களும் இந்த நூலைப் படித்துப் பார்க்க வேண்டும்.
குமரன் புத்தக இல்லத்தின் நேர்த்தியான தயாரிப்பும் வெளியீடும் இது.
நீங்களும் எழுதலாம் 123 எஸ்.ஆர்.தனபால சிங்கம்
திருகோணமலையிலிருந்து வெளிவரும் இருமாதக்
கவிதை இதழில் இளையவர்களின் தரமான கவிதைகள்

Page 144
272 சில இடம் பெற்றுள்ளன. ஞாயிறு இதழ்களில் வெளிவரும்
சொன்னர் பேWவ.23
வசனங்களை (கவிதைகள் அல்ல அவை விடச் சிறப்பான முறையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இத்தொகுப்புகளில் இடம்பெறுவது பாராட்டத்தக்கது.
தனித்தலையும் பறவையின் துயர் கவியும் பாடல்கள் - றதமான் - எ - ஜமீல்
இது ஒரு புதுமையான கவிதைத் தொகுப்பு விசேடம் என்னவென்றால் சிறுவர்களைப் பற்றியும் பெண் களைப் பற்றியும் பாடும் கவிதைகள் சில உள்ளடங்கி யிருக்கின்றன. அம்ரிதா ஏயெம் எழுதுகிறார். "ஜமீல் கையாண்ட சிறுவர் பிரச்சனைகள், சிறுவர் உரிமைகள் பற்றிய ஐ.நா. சமவாயத்தன சரத்துக்களான அகதிப் பிள்ளைகள், சமூகப் பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம், கல்வி சிறுபான்மையினரின் பிள்ளைகள், சிறுவர்களின் ஓய்வு பொழுதுபோக்கு மற்றும் கலாசார நடவடிக்கைகள், சிறுவர்களை வேலைக்கமர்த்தல், பாலியல் வாரியான சுரண்டல், வேறு வகையான சுரண்டல் போன்றவைகளே எழுதப்பட்டவை போல்தான் தெரிகின்றன."
உள்ளடக்கம் தெளிவாகிவிட்டது. ஏ.எம். குர்கூரித் எழுதுகிறார் :
"ஜமீல் பெருங் குரலெடுத்தார், "கவிதை என்பது மொழிகடந்த உணர்வுகளின் வெளிப்பாடு, உணர்வுகள் தான் கவிதை மொழி என்பது எழுதுபவரின் விருப்பம்

சே.எஸ்.சிவகுமாரன் ፰ ፖ3 சார்ந்தது" என்ற அவரது கருத்து சன்னம் சன்னமாய் உடைந்து காற்றில் கலந்தது."
இத் தொகுதியில் 56 பக்கங்களில் றகுமான் - ஏஜமீல் கவிதை" வரைந்துள்ளார். எனக்குப் பிடித்த கவிதை களிலொன்று "கூடாரமாகி வாழ்வும் அலைச்சலாகி" நீங்களும் படித்துப் பாருங்கள். வித்தியாசமான அனுபவம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
இரண்டு கார்த்திகைப் பறவைகள் எஸ்.புஸ்பானந்தன்
கிழக்கிலிருந்து மற்றொரு கவிதைத் தொகுப்பு இது. கலாநிதி செ.யோகராசாவின் அருமையான திறனாய்வுடன் வெளிவந்திருக்கும் இந்த 68 பக்கத் தொகுப்பிலே சிக்கனமான முறையில் சொற்செட்டுடன் எழுதப்பட்ட புத்தனுபவம் தரும் கவிதைகள் அடங்கியுள்ளன. கிழக்கின் புதிய கவிஞர்களின் ஆற்றல் பாராட்டும்படியாக இருக்கின்றன. படித்தனுபவித்து புத்தறிவு பெற இந்த நூல்
பெரிதும் வகை செய்கிறது.
கைகளுக்குள் சிக்காத காற்று - த.ஜெயசீலன்
இன்னுமொரு கவிதைத் தொகுப்பு இது. 110 பக்கங்களில் 80 கவிதைகள், "ஒரு சிறு கவிதை. மாசிப் பனி நாளில் / நடுநிசியில் திடீர்த் தும்மல்; காதில் குளிர் ழைந்த காரணம் தான் மெய் எனினும் / ஆதங்கம் தான்றிற்று. நீதான் நினைத்தாயோ?"

Page 145
2 A.
42Fwaớaswazzi (AFZWAYATv... 07.37
ஈழத்துப் புதுக் கவிஞர்கள் சுலோகங்கள் எழுதுவதை விட்டு விட்டு கவிதையின்பத்தைத் தருவது சுகமாக இருக்கிறது.
"இலங்கை தேயிலைத் தோட்டத்திலே"ஆங்கிலத்தில் சி.வி. வேலுப்பிள்ளை எழுதியது. தமிழில் சக்தி அ.பால ஐயா.
ஈழத்தின் ஆங்கில கவிஞர்களில் ஒருவரான அமரர் சி.வி. வேலுப்பிள்ளையின் கவிதைகளைத் தமிழில் தந்திருப்பவர் பிரபல கவிஞரும் ஓவியருமான சக்தி அ.பால - ஐயா. இவர் ஈழத்தின் பிரபல ஆங்கிலக் கவிஞர்களில் ஒருவரான அமரர் சி.வி.வேலுப்பிள்ளையின் கவிதைகளைத் தமிழில் தந்திருக்கிறார் சக்தி அ.பால-ஐயா. அருமையான தமிழாக்கம்.
மாத்தளை ரோகிணி பயன்தரும் அணிந்துரையைத் தந்துள்ளார். இந்த நூலைப் பதிப்பித்தவர் மயில்வாகனம் திலகராஜா. அவர் கூறுகிறார் :
"சக்தி பால - ஐயா அவர்களோ தான் தமிழ் மொழி பெயர்ப்பு செய்யவில்லை என்றும் சி.வி.யின் கவிதைகளை உணர்ந்து தமிழாக்கம் செய்திருப்பதாகவுமே கூறுகிறார்"
மலையக இலக்கியத்திற்கு மாத்திரம் அணிசேர்ப்பது அல்ல இந்நூல்.
படித்துப் பார்த்தீர்களாயின் உண்மை தெரியவரும்.

சே.சிங்.சிவகுமாரன் - 27.5
புதிய நூல்கள் சில தறு மதிப்புரைகள்
ஏராளமான நூல்கள் மதிப்புரைக்காக வந்து குவிந்துள்ளன. விரிவாக எழுதுதல் சாத்தியமில்லை. எனவே குறுமதிப்புரைகள் கைகொடுத்து உதவுகின்றன. ப்பதிப்பின் நோக்கமே சுருங்கச் சொல்லித்
வல்களைப் பரிவர்த்தனை செய்வதுதான். ஆயினும் வை திறனாய்வு சார்ந்த அடிப்படையில் அமையும்.
எடுத்துக் கொள்ளப்படும் நூல்கள் வெளிவந்துள்ளன என்பதையறிந்திராத வாசகர்கள் நலன் கருதி அந்நூல்கள் எவை என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.
திருமன ஆற்றுப்படுத்துங்ப் அனுபவங்கள்
வேல் அமுதன், எழுதியவற்றுள் எனக்குப் பிடித்தவை சுவாரஸ்யமான முறையில் எழுதப் பட்ட குறுங்கதைகளாகும். இந்த நூலின் முக்கியத்துவம், அது புதிய முறையில் எழுதப்பட்டிருப்பதும், சமூகவியல், கணினியூடாக அறிவியல் சார்ந்த கணிப்பு முறையுமாகும்.
ாகலமுடன் - வைத்தியகலாநிதி எஸ்.சிவதாஸ்
இந்த நூலும் தமிழுக்குப் புதிது. "உள் சமூகத் துறையின் ஒரு பாட நூலாக நலமுடன் என்ற நூல் နှီးမြှား பொருத்தமானது" என பேராசிரியர் தயாசோம சுந்தரம் அவர்கள் குறிப்பிடுவது சாலவும் சரியான கணிப்பு.
நூலாசிரியர் ஒரு சிறந்த நிழற்படக் கலைஞருமாவர். அண்மையில் அவருடைய புகைப்படக் காட்சி

Page 146
276 - 6aaaayaaf Gavrov... (23
கொழும்பில் இடம்பெற்றது. இவ்விதமான அறிவு நூல்கள் தமிழில் வெளிவருவது அவசியமாகிறது.
நிஜத்தின் ஒரு தேடல்
வைத்திய கலாநிதி ஜெயவீரன் ஜெயராஜா. இவர் கவிதை, ஓவியம், விளையாட்டு ஆகியவற்றிலும் ஈடுபாடுடையவர். இந்த நூலில் இவர் எழுதிய 109 'கவிதைகள்’ இடம் பெற்றுள்ளன. இந்த நூலிலே, கவிஞர் மேமன் கவி எழுதிய சில வரிகள் எனது எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்கின்றன. 'இந்தக் கவித்துவம் என்பது மொழியைப் புரிந்து கொள்வதிலும், மொழியைக் கையாள்வதிலுள்ள ஆற்றலிலும், அப்படைப்பாளியின் ஆளுமையிலும் தான் தங்கி இருக்கிறது. ஓர் இலக்கியப் படைப்புக்கு எந்த அளவு கலைத்துவம் தேவையோ (கவிதையில் அது கவித்துவம்) எந்த அளவுக்கு மொழிவளம் தேவையோ அதே அளவுக்கு அப்படைப்பைப் படைத்தளிக்கின்ற ஒரு படைப்பாளிக்கு அனுபவங்களும் தேவை." மெத்தச் சரி. வண்ணத்திலும் சில நிழற்படங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நீரோட்டமான முறையில் சொற்களின் ஆளுமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் பாத்திரங்கள் / ஈழத்துச் சிறுவர் அறிவியல் பாடல்கள் absonfidt 6af.03unabneft
இவ்விரண்டு நூல்களும் அருமையான ஆய்வு நூல்கள். நூலாசிரியர் பாரபட்சமற்ற முறையில் திறனாய்வு

മ്ര.ക്ഷിക്രZZങ്ങ് 277
செய்பவர்களில் குறிப்பிடத்தக்கவர். முதலாவது நூலிலே 23 படைப்புகள் தொடர்பாக ஆய்வாளர் விபரம் தருகிறார். இந்த நூலின் முடிவுரையும், சான்றாதாரங்களும் மாணவர்களுக்குப் பெரும் பயனளிக்கும்.
இரண்டாவது நூல் ஒரு தொகுப்பு நூல். மஹாகவி வளவை வளவன், ச.அருளானந்தம், மனோபற்குணம், மாவை வரோதயன், ஜின்னாஹ், தில்லைச்சிவன், பா.அமிர்தநாயகம், கவி.மு.பொன்னம்பலம், வ.இராசையா, ஆடலிறை, வாகரை வாணன், த.துரை சிங்கம், திமிலை மகாலிங்கம், வெற்றிவேல் விநாயகமூர்த்தி, மருதமைந்தன் ஆகியோரின் பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இன்னுஞ்சிலரின் சிறுவர் அறிவியல் பாடல்களைச் சேர்த்து மற்றுமொரு தொகுதியும் வரவேண்டும்.
ஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு
கலாநிதி செ.யோகராசா, 'செந்நெறி அல்லாத நிலையில் வாய்மொழி இலக்கியமாகவும், முற்றிலும் நாட்டார் இலக்கிய நெறி சாராதவையாகவும் எழுதி, பாடி ஆற்றப்பெற்ற பாடல்களின் தொகுப்பு இது" என கூறுகிறார். இந்த நூலும் தமிழுக்கு ஒரு வரப்பிரசாதம். சமூக முக்கியத்துவம் கொண்டவையாகப் பாடல்களும் அவை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் அமைகின்றன என்ற கருத்துப்பட அறிஞர் க.சண்முக லிங்கம் கூறுவது மெய்யே. இந்த நூலில் இன்னொரு விசேஷம் ஆய்வாளர் செ.யோகராசாவும் ஆய்வறிவாளர் கா.சிவத்தம்பியும்

Page 147
2ፖ8
எழுதியுள்ள அருமையான விளக்கக் கட்டுரைகள்
6ീബര്ബഗ്ഗ് ബഞ്ച്.മഴ
எனலாம். வாய்மொழிப் புலவர்களாக மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை, மலையக மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் பாடல்கள் சேர்க்கப் பட்டமை பாராட்டுக்குரியது. இது ஓர் அருமையான புத்தகம். பணிப்பாளர் என்பூரீதேவி நன்றிக்குரியவர்.
சானையோரு வந்தது (சிறுகதைத் தொகுதி) யூ.எல்.ஆதம்பாவா
கிழக்கில் அற்புதமாக எழுதும் எழுத்தாளர்களுள் முக்கியமானவர் இந்நூலாசிரியர் ஏற்கனவே காணிக்கை, நாங்கள் மனித இனம்' ஆகிய நூல்களை வெளியிட்டவர். மறைந்த அரசியல்வாதியும் எழுத்தாளருமான எம்.எச்.எம். அஷ்ரப் பற்றிய இரங்கற் கவிதைத் தொகுப்பில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவர்.
நவமான ஒன்பது கதைகள், மதிப்புரை செய்யப்படும் இந்நூலில் இடம் பெறுகின்றன. ஆயினும் காலத்தின் வேகத்தில் இடம்பெறும் மாற்றங்களிடையே சிறுகதை உருவமும், யதார்த்த / மாந்திரிக உள்ளடக்கமும் புதிய பரிமாணங்களை ஏற்படுத்தி வருகின்றன. உலக மொழி களில் இதனைக் காணலாம். தமிழிலும் கடந்த 10, 20, ஆண்டுகளுக்குள் சிறுகதை இலக்கியம் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் மாற்றம் பெற்றுள்ளன.

சே.என்.சிவகுமாரன் 279
அம்மாற்றங்களை ஐரோப்பிய, கனேடிய அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளில் நாம் காணலாம்.
இந்தப் பின்னணியில் என்னைப் பொறுத்தமட்டில் புதுப்புனைவைக் காணமுடியாவிட்டாலும், சம்பிரதாயமான சிறுகதை எழுதும் முறையில் வைத்துப் பார்க்கும் பொழுது கதைகளில் ஊடறு நாராய் இருப்பது மனிதமும் மனிதத்துவமுமே.
ஒவ்வொரு கதையையும் பகுத்துப் பார்த்து விளங்க வைத்தல் இப்பத்தியில் சாத்தியமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இக்கதைகளில் எனக்குப் பிடித்த கதை "தாடி" விளக்கமின்றியே உணர்வு நேர்த்தியாய் பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
நெருக்கடியின் கதை - விக்டர் ஐவன் தமிழாக்கம் ப.பன்னிர்செல்வம். ராவய பிரசுரம்)
புகைப்படங்களுடன் கூடிய 90 பக்க வெளியீடு. நிழற் படங்களே வரலாற்றைச் சொல்லாமற் சொல்லும் உத்தி. இடையிடையே வசனத்தில் விவரணம். இந்நூலில் இடம்பெறும் தலைப்புகள் நாட்டைத் தலைகீழாக்கிய ஆங்கிலேயர் யுகம், மேல் மக்கள் குழுமமொன்றின் மேலெழும்புகை, தொழிலாளர் வர்க்கத்தினது உருவாக்கம், இனக்குழும பன்முகப்பாடு, கல்வியின் பரம்பல், தேசிய இணக்கவுணர்வின்றி சுதந்திரம் கிட்டியமை, நாட்டை

Page 148
280 67ezararaó áZ/rev... a3
அவலட்சணப்படுத்திய படுகொலைக் கலாசாரம். இத்தலைப்புகளிலிருந்தே, சம்பிரதாயமற்ற முறையில் இலங்கையின் வரலாற்றுச் சம்பவங்கள் ஆழமான பார்வையுடன் சித்திரிக்கப்படுவதை உணரலாம். வரலாற்று, அரசியல் மாணவர்கள் மாத்திரமன்றி பொது வாசகனும் புத்தறிவு பெற இந்நூல் வகை செய்கிறது. தமிழாக்கம் நன்று. ஆய்வறிவாளர் சிவத்தம்பியின் சொற்பிரயோகங்கள் தனித்துவம் பெற்று நிற்பதையும் அவதானிக்க முடிகிறது.
தொழில் நுட்பக் கலைகள் வெகுஜன ஊடகம் GT6io.(BDT3afsio
ஊடகத்துறை, அதனுடன் தொடர்புடைய வாகனங்கள் தொடர்பாகத் தமிழில் நிபுணத்துவமாகப் பேசக்கூடிய உயர்கல்வி அறிஞர் ஒருவர் கிழக்கில் தோன்றியிருக்கிறார். அவர் பெயர் ஸ்டனிஸிலாஸ் மோசேஸ். தமிழர் தான். அவர் எழுதிய மேற்கண்ட நூல்கள் உயர்கல்வி, பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும். ஆராய்ச்சிக் கட்டுரைகளாகவும் விளக்க உரைகளாகவும் அமைந்த இத்தொகுப்பில் தமிழ் மாத்திரம் தெரிந்த புதிய பரம்பரையினருக்குப் பயனுள்ளதாகும்.
பல்கலைக்கழகத்தார் எழுதும் இறுக்கமான நடையில் நூல் எழுதப்பட்டிருந்தாலும் புதிய தகவல்களை அறிய விரும்புபவர்கள் சிரமப்பட்டேனும் இந்நூலைப் படித்துப் பயன் பெறலாம்.

287
6.67രി.മിത്രZZങ്ങ്
மல்லியப்பு சந்தி - திலகர்
தோட்டத் தொழிலாள வர்க்கத்தில் பிறந்து உயர்ந்த கல்விமானாகத் திகழும் ஆசிரியரின் கவிதைத் தொகுப்பு இது கவிஞரின் குரு மெய்யன் மேகராஜி எழுதியிருக்கும் தமிழ் நடை சுவை,
இந்த நூலுக்கு ஆய்வறிவாளர் கா.சிவத்தம்பி பின்னுரை எழுதியிருக்கிறார். அதிலே நான் உள்வாங்கி அனுசரித்து வரும் அவதானிப்புகள் இவை:
"இரசனை என்பது அவ்விடயம் நமது மனதின் ஆழங்களை எவ்வாறு தொடுகின்றது என்பதிலேயே உள்ளது. மனித நிலைப்பட்ட விடய ஆழமெல்லாம் சமூக உறவுகளின் ஆழமில்லாமல் வந்துவிடாது. வந்து விடுபவை யுமல்ல, இரசிக்கப்படும் பொருளின் சமூக உணர்வாழங் களைப் புரிந்து கொள்ளாமல் இரசனையைப் புரிந்து கொள்ள முடியாது."
கவிஞரின் துணைவியார் கவிதைகளுக்கான ஒவியங்களை வரைந்துள்ளமையும், தனுஷனின் அட்டைப் படமும் குறிப்பிடத்தக்கன.
இத்தொகுப்பில் இடம்பெற்று வந்துள்ள எனக்குப் பிடித்தவை:
வெள்ளித் தீயொன்று வேண்டும், மல்லியப்பு, சந்தி,
கூடைப் புராணம், மேற்கில் உதிக்கும் சூரியன்கள்,

Page 149
282
வரையப்படாத லைன்கள், உருமாறு ஏனையவை அவரவர்
இரசனையைப் பொறுத்தது.
ബര്ബ് (Zക. മ
தமது வாழ்நாள் அனுபவங்களை, அவதானிப்பு களுடனும், நியாய பூர்வமான கேள்விகளுடனும் திலகர் பதிவு செய்கிறார். கவித்துவமாகவும் இச்செய்திகள் வரையப்பட்டிருப்பின் முழுமையான அனுபவம் வாசகருக்குக் கிட்டியிருக்கும். முயற்சி திருவினையாக்கும் என்பதற்குத் தக்க சான்று திலகராஜா. படித்துப் பாருங்கள்.

குறிப்புகள்

Page 150
குறிப்புகள்


Page 151


Page 152


Page 153
நூலாசிரியரை
கே.எஸ்.சிவகுமாரன் (1936) கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி வருபவர். தற்பொழுது Freelance Media Critic ஆக இயங்கி வருகிறார்
(p6öT60Ti The Island, 65ty (Segrf நவமணி ஆகிய புதினத்தாள்களின் ஆசிரியப் பீடங்களிலும், இலங்கை வானொலி செய்திப் பிரிவிலும் முதன்மை ஆசிரியராகப் பணி புரிந்தவர். இலங்கை, மாலைதீவு ஒமான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் உயர்நிலைப் பள்ளி விரிவுரையாளராகவும் பணியாற்றியல்
இவர் ஒர் ஆங்கில தமிழ் இல அறிவிப்பாளராகவும், செய்தி வா தற்சமயம் இலங்கை வானொலியின் நேர அறிவிப்பாளராகப் பணியாற்றுகி
ஆங்கிலப் பத்திரிகைகளில் கை எழுதி வருகிறார். இலங்கை சென்ச இருந்துவரும் கே.எஸ்.சிவகுமாரன், இ திரைப்பட விழாக்களில் கலந்து கெ எழுதிவருகிறார்.

கே.எஸ்.சிவகுமாரன்
ரி ஆங்கில இலக்கிய பர்.
க்கியப் பட்டதாரி. தமிழில் சிப்பவராகவும் பணியாற்றி ஆங்கிலச் சேவையில் பகுதி றார்.
லை, இலக்கியப் பத்திகளை ர்போர்ட் அங்கத்தவராகவும் இந்தியாவின் அனைத்துலகத் ாண்டு திறனாய்வுகளையும்
- பதிப்பகத்தார்