கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உன்னையே உறவென்று

Page 1


Page 2

(అణుబ2 జనvడ్ర92 GίΘήήΛαηλ)
《 ܬܬܐ i یSS KVANKAR
r மணிமேகலைப் பிரசுரம்
தபால் பெட்டி எண்: 1447 7 (ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை - 600 017. OO தொலைபேசி: 2434 2926, 2434 6082
boilsicó58Foo: manimekalai1G)dataone.in tfloist Sooooorub: www.tamivanan.com

Page 3
ii
நூல் விவரம்
நூல் தலைப்பு
ஆசிரியர்
மொழி
பதிப்பு ஆண்டு
பதிப்பு விவரம்
உரிமை
தாளின் தன்மை
நூலின் அளவு
அச்சு எழுத்து அளவு
மொத்த பக்கங்கள்
நூலின் விலை
அட்டைப்பட ஓவியம்
லேசர் வடிவமைப்பு
அச்சிட்டோர்
நூல் கட்டுமானம்
உன்னையே உறவென்று.
பாலா. சங்குபிள்ளை
தமிழ்
2OO8
முதற் பதிப்பு
ஆசிரியருக்கு
11.6
கிரெளன் சைஸ் (12%x18% செ.மீ)
10 புள்ளி
xi+136=148 பக்கங்கள்
e5. 45.00
ஒவியர் மகேஷ்
பி.எஸ். முத்து கிராஃபிக்ஸ் சென்னை - 600 015.
பி.வி.ஆர். ஆஃப்செட் GasaitepsoT - 6OO O94.
தையல்

iii
s
FIDÍîůLIGIOrîd
இந்த நாவலை σΙσότσαυσOIύ பெற்று வளர்த்து ஆளாக்கிய
என் தாய், தந்தைக்குச்
சமர்ப்பணம் செய்கிறேன்.

Page 4
iv
அணிந்துரை
10லையக இலக்கியத் தளத்தில் புதிய நோக்கோடு - புதிய பார்வையோடு - புதிய பாணியோடு இன்று நிறையவே எழுதி வருகின்ற ஆசிரியர் பாலா சங்கு பிள்ளை, குறிப்பிட்டுப் பேசப்பட வேண்டிய ஒரு படைப்பாளியாகவிருக்கின்றார்.
இவர் தனது எழுத்துலகில், பல தளங்களில் தடம் பதித்து வருகின்றதை நாம் அவதானித்து வருகின்றோம். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பார்வை, அவர்களின் மேலுள்ள சமூக அக்கறை, அரசியல் பிரக்ஞை இவற்றோடு கல்வி, மருத்துவம், விஞ்ஞானம், நாடகம், சினிமா, வானொலி, தொலைக்காட்சி, சிற்றேடுகள், பக்தி எழுத்துகள் என பல்துறை ஊடகங்களிலும் இவர் ஊடுருவி, தன்னை அடையாளங் காட்டி வருவதையும் பலரும் ஏற்றுக் கொள்வர்.
இன்று பெருவாரியாக பேனா பிடிக்கும் எல்லா எழுத்தாளர்களுக்கும் பகைப்புலனாக. மலையகப் பாட்டாளி வர்க்கமே தீனியாக இருந்து வருகின்றது இப் பெருந்தோட்டத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை

V .
நிலை, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஓர் ஏகாதி பத்தியப் பொருளாதார வர்த்தகத்தின், ஒப்பந்தக் கூலிகளாக (Bonded Labour) இரு நூற்றாண்டுகளாகத் துயருற்று வரும் சோக வரலாற்றினையே அவர்கள் தொட்டுக்காட்ட ஆர்வம் கொள்கின்றனர்.
இந்த ஒரே பார்வைக்குரிய அவர்களது எண்ணம் ஓர் ஆதங்க உணர்வாகவும், அவர்கள் தொட்டுக் காட்டிய பிரச்சினைகளுக்கு சுபீட்சம் கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகின்றன.
இந்த நோக்கங்களையும் தனது படைப்புகளில் காட்டி வரும் பாலா சங்குபிள்ளை, சற்று விலகி, அதே துயரம் தோய்ந்த வாழ்க்கையில் மின்னிடும் மகிழ்ச்சி, மனிதக் கலாசாரம், காதல், உல்லாசம் போன்ற வாழ்வின் பிற அம்சங்களையும் காட்டுவதில் முன்னிலை வகிக்கின்றார்.
பாட்டாளி வர்க்கத்திலிருந்து உயர்ந்து, கல்வியின் துணையோடு மாறுதலைக் கண்ட இன்னொரு சமூகப் பிரிவினரின் வாழ்வியலைக் காட்டுவதற்கு முன் வந்தவர் களுள், மலையக இலக்கியத்தில் முதல் எழுத்தாள 65 பாலா சங்குபிள்ளையே பளிச்சிடுகின்றார். இவரின் திருப்புமுனையே, இன்றைய மலையக சிறுகதை, நெடுங்கதை இலக்கியங்களில் மென் வாசனையை (Light Readings) அறிமுகப்படுத்தியுள்ளது. மென் வாசனை இலக்கியத்தில் ஆழமான, சமூகப் பிரக்ஞை கொண்ட கருக்கள் முளைப்பதில்லை! இன்றைய சமூக வாழ்வில் அவதி அவதியாக இயங்கிக் கொண்டிருக்கும்

Page 5
vi
வாசகர்களை, பாலாவின் புத்தகங்கள் கொஞ்ச நேரமாவது இளைப்பாற வைக்கின்றன!
பார்த்திபன் என்ற ஒரு இளம் இலட்சியவாதியைக் கதாநாயகனாகக் கொண்டு ‘உன்னையே உறவென்று..? என்ற இந்த நெடுங் கதையை (Novel) சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கின்றார். கதையின் அடி நாதமாக மலையகக் கல்வி மேம்பாட்டினை எடுத்துள்ளார். மலையகத் தமிழ் சமூகம், இந்த நாட்டில் மேன்மையுள்ள சமூகமாக மாற வேண்டுமானால், அச் சமூகம் கல்வியில் மேம்பட வேண்டும். அந்தப் பணிக்கு ஆசிரிய சமூகம் தியாக உணர்வுடனும், சமூகச் சிந்தையுடனும் பணி செய்ய வேண்டும். என்ற திடமான இலட்சியம் கொண்ட இளைஞனாக பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தைப் படைத்துள்ளார். தனது கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக விருந்த தனது ஏழைத் தொழிலாள சகோதரியின் மரணத்தைத் தாங்கிக் கொள்ளாத கதாநாயகனின் தவிப்பு எமது நெஞ்சை நெருடுகிறது.
இந்த நெடுங் கதையில், இவர் எடுத்துக் கொண்டுள்ள கரு, நமது சமூகத்துக்கு மிக அவசியமானதும், அவசரமானதுமாகும். இக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு, கதையை ஓட்ட முடியாது. ஆகவே வாசகர்களை ஆகர்ஷிக்கும் வண்ணம் கதையையும், கருத்தையும் அவர்கள் மனதில் பதிக்கவைக்க வேண்டுமென்ற யுக்தியில், நான்கு இளம் ஆசிரியப் பெண்களை உலாவ விட்டுள்ளமை கதை நிகழ்வுக்குச் சுவை கூட்டுகிறது.

vii
கதாநாயகன் பார்த்திபன் தனது பல்கலைக்கழகக் காதலி மட்டக்களப்பைச் சேர்ந்த சாந்தினியை துரதிர்ஷ்ட வசமான மரணத்தின் மூலம் இழந்து மனப் புண்ணோடு வாழ்கிறான். அவனைக் கண்மணி, மாதவி என்ற இரு ஆசிரியைகள் அடைய முயற்சிக்கின்றார்கள். பார்த்திபன் தனது ஆசிரியத் தொழிலைச் சமூகப் பணியாக எடுத்துச் செல்வதன் மூலம் ஊர் மக்களின் அபிமானத்தைப் பெறுகின்றான். ஆசிரியத் தொழிலைத் தங்களது சுய நலத்துக்காகக் கபடத்தனமாகப் பிரயோஜனப்படுத்தும் சமூகத் துரோகிகளான சில ஆசிரியர்களின் போக்கை இடித்துரைப்பது இன்றைய மலையகச் சமூகத்தின் யதார்த்த நிலைமையைக் காட்டுவதாக அமைகின்றது.
கல்வி, பாடசாலை சூழல் பற்றி ஆசிரியர்களின் உரையாடல் மூலம் சமூகத்துக்குச் சில முக்கிய தகவல்களை இந்த எழுத்தாளர் காட்டுவது பாராட்டுக் குரியதாகும். பசுபதி, அருள்மணி ஆகிய இரண்டு ஆசிரியர்களைப் பற்றிப் பேசும்போது “அவர்கள் இருவரும்
பதினொரு மணிக்கு வருவார்கள். பாடசாலை முடிவதற்குள் வெளி யேறி விடுவார்கள்...?? “சில பேர் டியூசன் என்ற பெயரால் பணம் சம்பாதிக்கினம்.* சுனாமி
அனர்த்தத்தினாலும், யுத்த அழிவினாலும் நிர்க்கதியான சில குழந்தைகளைத் தனது பிள்ளைகளாக வளர்த்து வரும் அதிபர் காசிநாதன் ஒரு மனித நேயம் கொண்டவர். தனது பாடசாலையை அபிவிருத்திச் செய்வதற்குச் சமூக உணர்வோடும், கடமை உணர்வோடும் அவஸ்தைப்படும் அவருக்கு அப் பாடசாலை ஆசிரியர்கள் ஒத்துழைப்பு

Page 6
viii
வழங்குவதில்லை என்பதை பாலா சங்குபிள்ளை ஆத்திரத்தோடும், மன வேதனையோடும் எடுத்துக் காட்டிச் செல்வதில் தனது படைப்பிலக்கியத்தை உச்சநிலைக்குக் கொண்டு செல்கின்றார்.
தமிழர்கள் பிரதேசவாத சிந்தனைகளில் வாழ்வது சமூகச் சீரழிவுக்குக் காரணமாகிறது என்பதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகின்றார்.
கதைக்குள் இன்னுமொரு மர்மக் கதையையும் உள் நுழைத்து, வாசகர்களை ஆர்வமுடன் கதாசிரியர் இழுத்துச் செல்கின்றார். தன்னைப் போலவே முகச் சாயல் கொண்ட பார்த்திபனின் சிறிய தந்தையாரின் மகனை வைத்து
எழுத்தாளர் சித்து விளையாடியுள்ளார்.
ஆசிரியரின் உவமானங்கள் பாராட்டுக்குரியதாக விருக்கின்றன. “இந்தச் சமூகம் மீனிலிருந்து கருவாடு உருவாகிறது என்று சொன்னால் நம்பாது. கருவாடி லிருந்து மீன் உருவாகுமென்றால் அதை நம்பும்...?? **காதல் என்பது ஒரு பட்டாம்பூச்சியைப் போன்றது. அதை அழுத்திப் பிடித்தால் நசுங்கிவிடும். மெலிதாகப் பிடித்தால் பறந்துவிடும்...?? என்பதெல்லாம் Jefoo)6OIUIs இருக்கின்றன.
மலையகச் சூழலில் அழகியலோடு ஜனரஞ்சகமான ஒரு நெடுங் கதையை வழங்கியதன் மூலம் பாலா ஒரு புதிய திருப்புமுனையைத் தமது இலக்கியத்தில் உண்டாக்கியுள்ளார் எனலாம்.

ix
பல்துறை ஆளுமை கொண்ட இந்தப் படைப்பாளி யின், தனி வழி இலக்கியப் பயணம் களைப்பின்றித் தொடர வேண்டுமென மிக ஆசையோடு வாழ்த்து கின்றேன்.
கலாபூஷணம் கொட்டகலை மு. சிவலிகாங்கம் 3.12.08 மலையக எழுத்தாளர்,
விமர்சகர், சிந்தனைவாதி

Page 7
ஒடு ரசிகரின் பார்வையில்...!
பாலா. சங்குபிள்ளை ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல. இவர் ஒரு கொடையாளி. கொடுத்துச் சிவந்த இவரின் கரங்களினால், பலரின் வாழ்வு மலர்ந்திருக்கிறது. இவருடைய எழுத்துகள் oIoslootou Jinrooroo 6J. மலையகத்தைச் சேர்ந்த இவருக்கு இன்று நாடு முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘உன்னையே உறவென்று..? தொடர் கதையாக வெளிவந்தபோது என்னைப் போன்ற பல்லாயிரக்கனக் கானவர்கள் அதை ஆவலுடன் வாசித்து மகிழ்ந்தோம். ஆசிரியர்களான என்னைப் போன்ற பலர் இந்தக் கதையை வாசித்ததன் பயனாகப் பெருமை கொண்டோம். ஏனென்றால் பார்த்திபனின் லட்சியமும் எங்களின் லட்சியமும் ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றது. மலையகத்தைக் கல்வியினால் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற எங்களின் இலட்சிய தாகத்துக்கு உத்வேகமும் உற்சாகமும் தரக்கூடிய வகையில் இந்தக் கதை எழுதப்பட்டிருந்தது. கதையின் நாயகன் பார்த்திபனின் குணநலன்களைக் கொண்டுள்ள எழுத்தாளர் பாலா. சங்குபிள்ளை தான் ‘மலையக மக்கள் திலகம்? என்று நிச்சயமாக என்னால் அடித்துக் கூறமுடியும். இந்த நாவல் அவரின் எழுத்துத் துறைக்கு மற்றுமொரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்க! வளமுடன்.
இரா. மேகநாதன்
ம/நல்லத்தண்ணிர் அதிபர், மற்றும் தமிழ் மகா வித்தியாலயம் சமாதான நீதவான் மங்கெலியா
3.12.08

Χi
என்னுரை
"எழில் கொஞ்சும் மலையகத்தின் மத்தியில் அமைந்திருக்கும் అILL60ురOI பிறப்பிடமாகவும் இருப்பிடமாகவும் கொண்டுள்ள நான் எனது பத்தாவது வயதிலிருந்து வாசிக்கவும், எழுதவும் ஆரம்பித்தேன். எழுத்தாளன் ஒருவன் தன்னை நன்றாகப் பண்படுத்திக் கொள்ள வாசிப்பு மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. எனவேதான் நான் இன்றுவரை வாசிப்பினைக் கைவிடுவதில்லை.
நான் அமரர் தமிழ்வாணன் அவர்களின் பரம ரசிகன். படிக்கும் காலத்தில் அவரின் நாவல்களை வாசித்ததன் பயனாக எழுத வேண்டுமென்ற எண்ணமும் ஆர்வமும் அதிகரித்தது. என்னுடைய முதலாவது தொடர்கதையான “ஒளிவதற்கு இடமில்லை? முழுக்க முழுக்க தமிழ்வாணன் அவர்களின் நடையைப் பின்பற்றி எழுதினேன். மேலும் *காதலனுக்குக் கல்யாணம்’, ‘ஓர் உன்னதத் தமிழனின் கதை’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் மணிமேகலைப் பிரசுரம் மூலமாகவே வெளிவந்ததுடன் இரண்டுமே இலங்கை மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் சிறந்த ஆக்கத்திறனுக்கான பரிசினைப் பெற்றமையும் ஒரு சிறப்பம்சமாகும்.
எனது மூன்றாவது பிரசுரமாக ஒரு நாவலினை மணிமேகலைப் பிரசுரம் வாயிலாக வெளிக் கொணர்வதற்கு

Page 8
xii
முயற்சிகளை மேற்கொண்ட வேளையில்தான் இலங்கையின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான மித்திரன் வார மலரின் ஏறக்குறைய 36 வாரங்களாக என்னு டைய “பார்த்திபன் கனவு" தொடர்கதையாக வெளிவந்தது. மத்திய மலை நாட்டில் படித்த இளைஞர்கள் அதிகமாக மேற்கொள்ளும் ஒரு தொழிலாக ஆசிரியத் தொழில் அமைந்துள்ளது. ஒரு பாடசாலை ஆசிரியன் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கக் கூடாதென்பதற்கு *பார்த்திபன் கனவு நல்லதொரு எடுத்துக் காட்டாகும். பல்வேறு படிப்பினைகளையும் நல்ல பாடத்தினையும் எடுத்துச் சொல்லும் இதே கதையை நாவலாகப் பிரசுரம் செய்யத் தீர்மானித்தேன். இந்தக் கதை மலையகத்தில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தியது. பல்லாயிரக்கணக் கானவர்கள் கடிதம் மூலமாகவும் தொலைபேசியினூ டாகவும் எனக்குப் பாராட்டுதல்களை வாரி வழங்கி என்னைத் திக்கு முக்காட வைத்து விட்டார்கள். இக்கதை நாவலாக மணிமேகலைப் பிரசுரமாக மூலமாக வெளி வருவதில் பெருமையும், பெருமிதமும் கொள்வதுடன் எனக்கு அவ்வப்போது ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் மணிமேகலை நிர்வாக இயக்குநர் திரு. ரவி. தமிழ்வாணன் அவர்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
ரோஜாக்கள் நடப்படாதவரை நிலம் வெறும் மண்தான். லட்சியம் ஊட்டப்படாதவரை மனிதன் வெறும் பிண்டம்தான்.
நன்றி!
பாலா. சங்குபிள்ளை
(மலையக ஜனரஞ்சக 12. 12. O8 எழுத்தாளர்)

1
ഗ്രസകbമ-ഷ്ണaഭച
•، منظر آئ>ث2 کلک (ریٹے ک :
s
கொழும்பு அரசு மருத்துவமனையின் விசேடப் பிரிவு. அந்த அறையில் வைத்தியர்கள் இருவர், தாதியமார் நான்கு பேர் இருந்தார்கள். இன்ஸ்பெக்டர் ஒருவரும் நான்கைந்து பொலீஸ்மார்களும் நின்றிருந்தார்கள். கட்டிலில் அவன் கிடத்தப்பட்டிருந்தான். தலை, வயிறு, முழங்கை, கால்கள் யாவற்றிலும் கட்டுகள் போடப்பட்டிருந்தது. முகம் அடையாளம் தெரியாதபடி சிதைந்திருந்தது. மூக்கினுள் ரப்பர் குழாய் பொருத்தப்பட்டிருந்தன. இன்ஸ்பெக்டர் சிவாகரன் சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு தலைமை வைத்தியரைப் பார்த்தார்.
"டொக்டர், இப்போ நிலைமை எப்புடி இருக்கு?"
'இன்னமும் 'கோமா நிலையிலதான் இருக்கு. எந்தவிதமான அசைவுகளும் இல்லை."
'இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த நிலை. இவனைப் பற்றி தகவல்களை எப்படி அறிந்து கொள்வது."

Page 9
.உன்னையே உறவென்று ܢܦܠ 2
"நுவரெலியா பொலீஸ் மூலமாத்தான் இங்கே இவன் அனுமதிக்கப்பட்டிருக்கான். அவங்கள் மேலதிக தகவல்களை ஏதும் கொடுக்கலையா இன்ஸ்பெக்டர்..??
"இன்னும் விசாரிச்சிக்கிட்டிருக்காங்களாம். யாரோ ஒரு பொண்ணுதான் இவனை நாலைஞ்சு பேர் வேன்ல அடிச்சிப் போட்டுக் கொண்டு போறதா தகவல் கொடுத்தது. பொலீஸ் வேனை துரத்திப் பிடிக்கிறதுக்கு முன்னமே இவனை நல்லா அடிச்சி மலையிலயிருந்து தூக்கி வீசியிருக்காங்க. பள்ளத்துல தேயிலைத் தோட்டத்துல கொழுந்து பறிச்சிக் கிட்டிருந்த தொழிலாளிங்க சத்தம் போட்டிருக்காங்க. ம். இவன் யார். யார் இவனை அடிச்சிப் போட்டாங்கன்னு எந்த விஷயமும் தெரிய மாட்டேன்னுதே."
அப்போது தாதிமார்களில் ஒருத்தி தயங்கியவாறு இன்ஸ்பெக்டரைப் பார்த்தாள்.
'சேர் இவர் பெயர் பார்த்திபனா இருக்கும்னு நினைக்கிறேன்."
"எப்படி சொல்லுறீங்க...?? "இவரோட கையில பெயரை பச்சை குத்தியிருக்காரு. ஆனா அடிபட்டதுல சில எழுத்துக்கள் மறைஞ்சிடுச்சி."
"எங்கே காட்டுங்க பார்ப்போம்."
தாதி கட்டுப் போடப்பட்டிருந்த வலது கையின் கட்டுகளை நீக்கினாள். மணிக்கட்டில் பா. திபன் என்றிருந்தது. சிவாகரன் அதைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தார். அவர் முகத்தில் இலேசான புன்னகை ஒன்று வந்து அமர்ந்தது.

பாலா. சங்குபிள்ளை 3ےر
"ஆமாம். இவன் பெயர் பார்த்திபன்தான். சரி இவன் எப்படியிருப்பான். இவன் யார்? எதனால் இவனை அடித்துப் போட்டார்கள். இவனை வேனில் கடத்திக் கொண்டு போவதாகச் சொன்ன பெண் யார்? அவளை எப்படி கண்டுபிடிப்பது."
சிவாகரனுக்குத் தலை சுற்றியது. இவனுடைய கேஸை முடிக்க வேண்டுமானால் இவன் பேச வேண்டும். அல்லது இவன் யாரென்று அடையாளம் தெரிய வேண்டும். கண்ணைக் கட்டி நடுக்காட்டில் விட்டதைப் போல இருந்தது.
"டொக்டர் இப்போது என்ன தான் செய்வது, இவனின் கோமா நிலை மாறவே மாறாதா..?’
"தலையில் அடி பலமாகப் பட்டிருக்குது. இதயம் ரொம்ப பலயினமாக இருக்கு. இவனோட கோமா நிலை சரிவருமா வராதான்னு என்னால சரியா சொல்ல முடியாது. சில வேளையில கோமா நிலையிலேயே இவன் மரணமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை."
சிவாகரன் நெற்றியைச் சுருக்கியவாறு சற்று நேரம் சிந்தனை வயப்பட்டார். பின்பு எதுவுமே சொல்லாமல் அந்த இடத்தை விட்டு வேகமாக நடக்கத் தொடங்கினார்.
கடந்த மூன்று வாரங்களாக எந்தவிதமான அசைவுகளுமேயில்லாமல் ஏறக்குறைய பிணம் போல கிடக்கும் இவன் யார்? இவனை யார் எதற்காகத் தாக்கினார்கள்.
எழில் கொஞ்சும் மலையகத்தில் "லண்டன்’ என அழைக்கப்படும் அழகுமிகு நுவரெலியாவிலிருந்து சுமார்

Page 10
.உன்னையே உறவென்று ܢܠ 21
ஐந்து மைல் தூரத்தில் அந்த அழகிய தேயிலைத் தோட்டம் இருந்தது. தோட்டத்திற்குப் போகும் பாதையையொட்டி அந்தப் பெரிய மாளிகை அமைந்திருந்தது.
மாளிகையின் பின்புறம் முழுவதும் மரக்கரித் தோட்டமாக இருந்தது. சுமார் நூறு பேர் வரை அங்கே வேலை செய்து கொண்டிருந்தார்கள். மாளிகையினுள் ளேயிருந்த பல அறைகளில் ஒன்று மட்டும் அலங்கோல மாயிருந்தது. அந்த அறைக்குள் யாருமே போக முடியாது. தவறிப் போனால் பாத்திரங்கள் உடையும். உள்ளேயிருந்து அழுகைச் சத்தமும் அலறல் ஒலியும் கேட்கும்.
அந்த அறையினுள்ளே இருப்பவள் பெயர் மாதவி. அவளுக்கு இருபது வயதிருக்கும். பெண்களே விரும்பும் பேரழகி. மாதவம் செய்து பிறந்த ஒரே வாரிசான அவளுக்கு அவள் பெற்றோர் ஆசையுடன் வைத்த பெயர்தான் மாதவி. எந்நேரமும் சிரிப்பும் சுறுசுறுப்புமாக இருக்கும் அவள் இன்று தலைவிரிக் கோலத்துடன் பைத்தியம் பிடித்தவளாக இருக்கிறாள். அந்த மாளிகையில் சுதந்திரப் பறவையாகச் சுழற்றி விட்ட பம்பரமாக வளைய வந்தவள் இப்போது கூண்டுக்கிளியாக ஒரே அறையில் அடைப்பட்டிருக்கிறாள். கரப்பான் பூச்சியைக் கண்டாலே பயப்படக் கூடிய அவள் யாரைப் பார்த்தாலும் வெறி பிடித்தவளைப் போல கத்துகிறாள். அடிப்பதற்கு பாய்ந்து செல்லுகிறாள்.
மாளிகையின் முன் மண்டபத்தில் சோர்வுடன் சுந்தரம் அமர்ந்திருக்க அவர் மனைவி பார்வதி சோகத்துடன் அவர் எதிரே உட்கார்ந்திருந்தாள்.
'என்னங்க மாதவியை இப்படியே எத்தனை நாளைக்குத்தான் வச்சிருக்கிறது. ஏதாவது செய்யுங்களேன். என்னால தாங்க முடியலைங்க. பெத்த வயிறு
பத்தியெறியிது."

unom. afrišIG56ldiroo6r 5ے
"என்னை என்னதான் செய்யச் சொல்லுறே. அவதான் யாரையுமே உள்ளே விடமாட்டேன்னுறாளே. பத்ரகாளியா மாறிடுறா. ஏதோ அவளோட கூட்டாளி அன்னக்கிளியைக் கண்டாமட்டும் பேசாம இருக்கா. அந்தப் பொண்ணு சாப்பாடு குடுத்தா மட்டும் ஒண்ணுமே பேசாம வாங்கிசச் சாப்பிடுறா. நாம அவசரப்பட்டுட்டோம். அவன் அண்ணாமலைக்கு அதிகமாக இடம் கொடுத்ததால வந்த வினை தான் இது.
令令令
2
10ாலை வேளை - லேசான பனிப் பொழிவும், குளிரும் இணைந்து ஒருவித மந்தமான சூழ்நிலையைத் தோற்றுவித்திருந்த நுவரெலியா நகரின் ஒதுக்குப்புறமான இடத்தில் அந்த விடுதியமைந்திருந்தது. மதுபான சாலையுடன் ஏராளமான அறைகளுடன் மிக ஆடம்பரமாக உருவாக்கப்பட்டிருந்த அந்த விடுதியில் எப்போதுமே கூட்டமாகத்தான் இருக்கும். போதை மயக்கத்தில் கவலைகளை மறந்து சத்தம் போட்டு சிரித்தும் பேசியும் பொழுதைக் கழிப்பதற்கு அங்கே தினமும் மாலை வேளைகளில் வாடிக்கையாக வரும் ஒரு கூட்டம் இருந்தது. இவர்கள் எல்லோருமே விளக்கை வைத்துக் கொண்டு நெருப்பைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த விடுதியின் ஒரு அறையில் அண்ணாமலை கட்டிலில் அமர்ந்திருந்தான். அவன் முன்னே போடப் பட்டிருந்த மேசையொன்றில் மேல்நாட்டுக் குடிவகைகள் இருந்தன. சற்று தூரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில்

Page 11
.உன்னையே உறவென்று ܢܦܠ 5
கருத்த தடித்த உடலைக் கொண்ட மூன்று பேர் ஒரு கையில் மதுக் கோப்பையையும், மறு கையில் சிகரட்டுடனும் அமர்ந்திருந்தார்கள். அண்ணாமலை கண்ணாடி கிளாஸி லிருந்த மிச்ச மதுவையும் மடக்கென வாயில் ஊற்றிக் கொண்டவனாக அவர்களைப் பார்த்தான்.
'ஏய் முத்துவேலு. காரியம் இவ்வளவு கச்சிதமா முடியும்னு நான் நினைக்கவேயில்லை. எனக்கிருந்த ஒரே எதிரி அவன் பார்த்திபன் அடையாளமே தெரியாம அழிஞ்சிப் போயிட்டான். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு."
'நீ மட்டும் சந்தோஷப்பட்டுக்கிட்டிருந்தா போதுமான அண்ணாமலை. உன்னையே நம்பிக்கிட்டிருக்கிற எங்களுக்கு இதுனாலே என்ன நன்மை விளையப் போவது. கறையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது மாதிரி நாங்க உனக்காக கஷ்டப்பட, நீ ரொம்ப சுலபமா நினைச்சதை எங்க மூலமா அடைஞ்சிட்டே."
"இங்க பாரு பழனி. சும்மா நாக்கு இருக்குன்னு வார்த்தைகளை அநாவசியமா கொட்டிடாதே. நான் தான் சொன்னேனே. சொத்து கைக்கு வந்ததும் உங்களுக்கெல்லாம் பெரிய தொகையொண்ணு தந்துடுறேன்னு. இவன் பார்த்திபன் இதுக்குத் தடையா இருந்தான். இப்போ அவன் கதையும் முடிஞ்சிருச்சி. இனி மாதவி கழுத்துல மூணு முடிச்சைப் போட்டு சொத்தையெல்லாம் கைப்பற்றிக்கு வேன். அப்புறம் என்ன நான் தான் - ராஜா."
"நீ ராஜாவா இரு. இல்ல உன் மாமன் பொண்ணுக்கு வெறும் கூஜாவா இரு. அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கு எப்போ செட்டில் பண்ணப் போறே. அதை முதல்ல சொல்லு. நட்புன்னுறதெல்லாம் அப்புறமா பார்த்துக்குவோம். இப்போ தேவை பணம்."

பாலா. சங்குபிள்ளை 7ےر
"டேய் கோவிந்தா. ஏண்டா இப்புடி பணம் பணம்னு சாவுறே. உனக்கெல்லாம் நான் எவ்வளவு உதவி செஞ்சிருக்கேன்."
"நீ ஒண்ணும் சும்மா செய்யலையே. அப்பப்பா நீ சொல்லுற வேலைகளை செய்யிறதுக்கு கூலியாதான் பணம் குடுத்திருக்கே. அதோட இதெல்லாம் உன் பணமில்லையே! உன்னோட மாமாவோட பணம்தானே."
"கோவிந்தா. இதுதான் கடைசி. மேற்கொண்டு நீ எதுவும் பேச வேணாம். சரியா முப்பது நாளைக்குள்ள" உங்களோட கணக்கையெல்லாம் செட்டில் பண்ணிடுறேன். ஆறு நிறைய தண்ணி ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்.'
+++
கண்மணி கட்டிலை விட்டு எழுந்தாள். நன்றாக விடிந்திருந்தது. அவள் ஒருவித சோர்வுடன் தேநீர் தயாரிப்பதற்காக அந்தத் தோட்ட வயக் காம்பறாவில் சிறியதாக மறைக்கப்பட்டிருந்த குசினியை நோக்கி நடந்தாள். தண்ணிரைச் சுட வைத்தாள். நீர் கொதிப்பதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென அவள் கண்கள் கலங்கின.
'பார்த்திபன். கடைசியில் நான் பயந்ததைப் போலவே படுபாவிகள் உங்களை அழிச்சிட்டாங்களே. என்
மனசுல உள்ளதை உங்கக்கிட்ட சொல்லுறதுக்கு ஓடோடி வந்தேனே."
அவள் சட்டென கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.

Page 12
.உன்னையே உறவென்று ܥܠ 8
அவள் தாய் வள்ளி கிழிந்த பாயில் படுத்துக் கிடந்தாள். நேற்று இரவு முழுவதும் காய்ச்சல். அதனால் வள்ளி இன்று மலைக்கு வேலைக்குப் போகமாட்டாள். கண்மணி பம்பரமாக வேலை செய்யத் தொடங்கினாள்.
கண்மணி சேற்றில் பூத்த செந்தாமரை. அந்தத் தோட்டத்தில் பணிய கணக்கில் இருக்கும் ஒரே ஆசிரியை. வயது இருபத்தி மூன்று இருக்கலாம். அவள் தந்தை குடித்துக் குடித்தே ஒரு நாள் போய்ச் சேர்ந்தான். தாய் வள்ளி தான் ஒரே மகளான அவளை அவள் விருப்பப்படியே படிக்க வைத்தாள். அழகும் அறிவுமிக்க கண்மணி மிகச் சிறப்பாகப் படித்தாள். அவள் விரும்பிய ஆசிரியத் தொழில் கிடைத்தது. பக்கத்துத் தோட்டப் பாடசாலையில் தான் முதல் நியமனம் கிடைத்தது. ஒரு வருடம் அந்தப் பாடசாலையிலேயே கல்வி கற்றுக் கொடுத்தாள். ஐந்தாம் ஆண்டு வரை மட்டுமே யிருந்த அந்தத் தோட்டப் பாடசாலையில் மாணவர் வரவு மிகக் குறைவாக இருந்தது. யாருக்குமே அந்தப் பாடசாலை மேல் அக்கறையில்லை.
பார்த்திபன் வேறு ஒரு தோட்டப் பாடசாலையிலிருந்து மாற்றலாகி அங்கே வந்து சேர்ந்தான். அது அவனுக்குத் தண்டனை இடமாற்றமாம்.
கண்மணி வேலைகளையெல்லாம் முடித்தாள். அம்மாவுக்குத் தேவையான உணவைத் தயாரித்து மூடி வைத்தாள். வள்ளியிடம் சொல்லிவிட்டு காம்பறாவை விட்டு வெளியே வந்தாள். மண் பாதையில் நடந்தாள்.
'என்ன கண்மணி இப்பதான் ஸ்கூலுக்குப் போறியா..."
கண்மணி வெறுப்புடன் எதிரே நின்றிருந்த கண்ணனைப் பார்த்தாள்.

Unoom. 8FršIGöóláro67 9 سے
"இங்க பாருங்க கண்ணன். நீங்க எங்க அம்மாவுக்கு தூரத்து சொந்தம்ன்னுற படியாலத்தான் உங்களோட மரியாதைக்காகப் பேசுறேன். தயவு செஞ்சி அடிக்கடி என்கிட்டே வந்து பேசுற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க.."
"ஆமா அவன் பார்த்திபனோட மட்டும் கொஞ்சுவே, நம்மலைக் கண்டா உனக்கு ஆகாது. அவன்தான் ஆளே இல்லாம போயிட்டானே. இனியாவது உன் கடைக் கண் பார்வையை இந்தப் பக்கம் திருப்ப வேண்டியதுதானே."
+++ 由
st 3 is
*
1ாடசாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த கண்மணிக்கு வீண் வம்புக்கு இழுத்துப் பேசிய கண்ணன் மேல் ஆத்திரம் ஆத்திரமான வந்தது. அவள் கடுமையான சினத்துடன் அவனைப் பார்த்தாள்.
"கண்ணன். இதுக்கு மேல எதுவும் பேச வேணாம். கத்துற பூனை எலியைப் பிடிக்காது. இன்னைக்கி இப்படி சவடால் பேசுற நீங்க. பார்த்திபன் இருந்தப்ப மட்டும் ஏன் வாய் மூடிக் கிடந்தீங்க. அந்த நல்ல மனுஷன் இருந்தவரைக்கும் உங்களை மாதிரி ஆளுங்க வாலை சுருட்டிக்கிட்டு இருந்தீங்க. இப்போ அவரை அநியாயமா கொன்னுட்டு சாத்தான் வேதம் ஒதுற மாதிரி நல்லவங்க மாதிரி நடிச்சிக்கிட்டிருக்கீங்க. உங்களை மாதிரி கீழே தள்ளுற குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது."

Page 13
.உன்னையே உறவென்று ܢܠ 1o
"அப்படின்னா நீ பெரிய உத்தமி நாங்களெல்லாம் உருப்படாதவங்க. இல்லையா..."
"இப்பதான் அது தெரிஞ்சிச்சோ."
“இங்க பாரு கண்மணி. எனக்குத் திருமணம்னு ஒண்ணு நடந்தா அது உன்னோடத்தான். நான் நியாயமா சொல்லிப் பார்ப்பேன். நீ கேட்காட்டி அப்புறம் என்னை அநியாயக்காரன்னு சொன்னாலும் பரவாயில்லை. என் வேலையைக் காட்டாமல் விடமாட்டேன்."
அவன் படபடவெனப் பட்டாசு வெடித்துவிட்டு கோபத்துடன் விடுவிடுவென அந்த இடத்தை விட்டு நடந்தான். கண்மணி ஆத்திரத்துடன் மண் பாதையில் வேகமாக நடந்தாள்.
“பார்த்திபன். நீங்க எங்கிருந்தோ இனிய தென்றலா வந்தீங்க. என் இதயத்துல ரொம்ப சுலபமா இடம் பிடிச்சீங்க. ஆனா கடைசியில அக்கிரமங்களை அடியோட அழிக்க நினைச்ச உங்களையே எல்லாரும் சேர்ந்து அழிச்சிட்டாங்களே. தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் விடிவெள்ளியாக வந்து வால் வெள்ளியா மறைஞ் சிட்டீங்களே. கடவுளே நல்லவங்களுக்குக் காலமே யில்லையா. கெட்டவங்களுக்கும் அராஜகம் பண்ணுறவங்களுக்கும் தான் இது காலமா."
கண்மணி கண்களில் ஆறாக வடிந்த கண்ணிரைத் துடைத்து விட்டுப் பாடசாலையை நோக்கி நடந்தாள்.
நுவரெலியாவிலிருந்து சிறிது தூரத்தில் அந்த வீடு இருந்தது. ஓரளவு நவீன வசதிகளுடன் அமைக்கப் பட்டிருந்த அந்த வீடுகளையிழந்திருந்தது. வீட்டினுள்ளே நான்கைந்து இளைஞர்களும் வயது முதிர்ந்த ஒரு ஆணும்

UITGAom. Frầ5óldir GoGIT 11 سے
பெண்ணும் மாலை போடப்பட்டிருந்த ஒரு படத்தின் முன்னால் நின்றிருந்தார்கள். அந்த வண்ணப் புகைப்படத்தில் புன்னகை சிந்தியவாறு ஒரு இளம் வயது அழகிய பெண்ணொருத்தி இருந்தாள். அந்த இளைஞர்களில் சற்று வயது கூடிய ஒருவன் சட்டென தலையில் அடித்துக் கொண்டு அழவே மற்றவர்கள் அவனை அணைத்துக் கொண்டார்கள்.
"சுமங்கலி. எங்களோட வீட்டுக் குலவிளக்கே. இந்த அண்ணன்களை விட்டுப் பிரிய உனக்கு எப்படியம்மா மனசு வந்துச்சி. நாங்க உன்னை ராணி மாதிரி பார்த்துக்கிட்டோமே. உனக்கு ஒரு குறையும் வைக்கலையே. நீ விரும்பியபடி உன்னை படிக்க வச்சோமே. சின்னண்ணா பெரியண்ணான்னு எங்களை சுற்றிச் சுற்றி வருவியே. உன் கையால காலையில ஒரு தம்ளர் டீ குடிக்காட்டி எங்களுக்குப் பொழுதே போகாதே. இப்போ நீ போனதிலயிருந்து நாங்க டீயே குடிக்கிறதில்லையே எங்க செல்லமே.”*
அவர்கள் மாறி மாறி அழுதார்கள். இந்திரன், முருகன், கணேசன் மற்றும் ரவி ஆகிய சகோதரர்களுடன் கடைக் குட்டியாகப் பிறந்தவள்தான் சுமங்கலி. பச்சைக்கிளி போல பார்ப்போரைக் கலங்கடிக்கும் அழகுக்குச் சொந்தக்காரி. படிப்பிலும் கெட்டிக்காரி. க.பொ.த. உயர் தரம் படித்துக் கொண்டிருந்தாள். திடீரென ஒருநாள் பாடசாலைக்குச் சென்றவள் அன்று முழுவதும் வீடு திரும்பவில்லை. பாடசாலை முடியி இவள் வழமையாக பட்டதாரி அதுவும் விஞ்ஞானப் பட்டதிாரியான பார்த்திபனிடம் மாலை டியூஷனுக்குப் போவாள். அன்று அவள் டியூஷனுக்கு வரவில்லையென பார்த்திபன் கூறிவிட்டான். அப்படியானால் எங்கே போனாள்?

Page 14
.உன்னையே உறவென்று ܢܦܠ 12
அவர்கள் பதற்றத்துடனும் பயத்துடனும் தேடினார்கள். பொலீஸில் முறைப்பாடும் செய்தார்கள். ஆனால் எங்கு தேடியும் அவள் அகப்படவில்லை. அன்றிரவு முழுவதும் அவர்களுக்கு சிவராத்திரியாகவே இருந்தது. யாரும் சாப்பிடவில்லை. புலம்பினார்கள். பித்துப் பிடித்தவர் களைப் போல மூலைக்கொருவராகக் கிடந்தார்கள்.
மறுநாள் - மூங்கில் புதரொன்றுக்குள் அவளைப் பிணமாக அலங்கோலமான நிலையில் மீட்டார்கள் காவல் அதிகாரிகள். அவளைப் பிரேதப் பரிசோதனை செய்தார்கள். அவள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருந்தாள். அதிக இரத்தப் போக்கு மற்றும் மூச்சுத் திணறல் அவள் உயிரைக் குடித்து விட்டது.
தங்கச் சிலை போலிருந்த அவர்களின் தங்கையை வாடிய மலராகக் கையளிக்கப்பட்டாள். அவளின் இந்த நிலைக்குக் காரணமானவர்கள் யார்? அவர்களைத் துண்டு துண்டாக வெட்டி வீசக் கூடிய ஆவேசம் அவர்களிடம் இருந்தது. பூப் போன்ற அந்தப் பாவையைக் கசக்கிக் காலில் போட்டு மிதித்து வீசிய மனித மிருகங்கள் யாராக இருக்கும்?
சுமங்கலியை அடக்கம் செய்த அவர்கள் உடனடியாக அவளின் இந்த நிலைக்கு யார் காரணம் என்பதை அறிய ரகசியமாக விசாரணையில் இறங்கினார்கள். ஆனால் அவர்களுக்குப் பெரிதாக எந்தவிதமான துப்பும் கிடைக்கவில்லை.
எங்கெல்லாமோ அலைந்து திரிந்தவர்கள் கடைசியாக அண்ணாமலையைச் சந்தித்தார்கள். அண்ணாமலை சில விடயங்களை அவர்களிடம் சொன்னான். முதலில் அவர்கள் அதை நம்பாவிட்டாலும் அவன் தேவையான ஆதாரங்

பாலா. சங்குபிள்ளை l113
களைக் காட்டியபோது உண்மையிலேயே நம்பித்தான் விட்டார்கள். அண்ணாமலை யாரைப் பற்றிச் சொன்னான். என்ன ஆதாரங்களை முன் வைத்தான். அவர்கள் என்ன செய்தார்கள். சொல்வார் சொன்னாலும் கேட்பார்க்கு மதி வேண்டும் என்பதைப் பாவம் தங்கைப் பாசத்தால் அவர்கள் மறந்துதான் விட்டார்கள்.
令令今
ܚ8ܟ݁ܽܚ $ 4 -
கிண்மணி பாடசாலையை அடைந்தாள். அவள் அவசர அவசரமாக அதிபர் காசிநாதனின் காரியாலய அறையை நோக்கி நடந்தாள். காசிநாதனுக்கு நாற்பத்தைந்து வயது இருக்கும். கறுப்பாக கட்டையாக இருந்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அவர் அந்தப் பாடசாலையில் அதிபராக இருக்கிறார்.
கண்மணி உள்ளே நுழைந்தாள்.
“காலை வந்தனம் சேர்."
"வாம்மா கண்மணி. இன்றைக்கு ஏன் இவ்வளவு நேரத்தோட வந்துட்டே."
"உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். அதுதான்." முதல் உட்காரும்மா. சொல்லு என்ன விஷயம்."
"சேர் என்னை நீங்க தப்பா நெனைச்சிக்கக் கூடாது."

Page 15
.உன்னையே உறவென்று ܢܠ 14
'அட என்னம்மா இப்படி சொல்லுறே. இந்தப் பாடசாலை படிப்புல முதலிடத்துக்கு வரணும்னுற அதிக அக்கறையுள்ளவங்கள்ல நீயும் ஒருத்தியில்லையா. இந்த முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில முதன் முறையா ஐந்து பேர் திறமையா பாஸ் பண்ணியிருக்காங்கன்னா அதுக்கு நீதானே காரணம்."
"அப்படியில்ல சார். உங்களோட முயற்சியும், நீங்க குடுத்த உற்சாகமும்தான் இதுக்குக் காரணம். சேர், நான் சொல்ல வந்த விஷயம் வேற. அது வந்து. நம்ம பார்த்திபன் சேரை யாரோ நாலைஞ்சு பேர் அடிச்சி மலையிலயிருந்து கீழே தள்ளிவிட்டதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டதாகவும் பரபரப்பா பேசிக்கிறாங்க. நாம இன்னமும் பேசாம இருக்கோம். நாளையோட ஒரு மாசம் ஆகப் போகுது. நம்மளோட ஒரு வருஷமா இருந்தாரு. அவரு வந்த பின் தான் நம்ம பாடசாலை எல்லாவகையிலும் உயர ஆரம்பிச்சிச்சி. ஆனா அவரோட வளர்ச்சி. நல்ல மனம் பிடிக்காத யாரோ இப்படி செஞ்சிட்டாங்க."
கண்மணி கண்கள் கலங்கியதை காசிநாதன் கவனிக்கத் தவறவில்லை. அவரின் முகத்திலும் வேதனைக் கோடுகள் படர்ந்தன. சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. காசிநாதன் ஒரு நீண்ட பெருமுச்சுடன் அவளைப் பார்த்தார்.
'கண்மணி உன்னை மாதிரியே நானும் பார்த்திபனைப் பற்றி தினமும் வேதனைப்பட்டுக்கிட்டு தான் இருக்கேன். அவருக்குப் பிடிக்காதவங்க அவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி மேலிடத்துக்கு பெட்டிஷன் போட்டுட்டாங்க. விசாரணைக்காகப் போறதாகவும் அதோட ரெண்டு மாசம் மேலதிகமா லீவு வேணும்ன்னும் சொன்னாரு. நான் சரின்னேன். முறையா கடிதம் எழுதச்

unom. Frigóldir606I 15 سے
சொன்னேன். அன்றைக்கு மாலை இரண்டு மணிக்குத்தான் அவரை கடைசியா பார்த்தேன். அதுக்குப் புறம் காலையிலதான் அந்த பயங்கரச் செய்தி தெரிஞ்சது. உடனே எல்லா இடத்துக்கும் ஆள்களை அனுப்பி விசாரிக்கச் சொன்னேன். பொலீஸ்ல வந்து தான் பார்த்திபனைத் தூக்கிட்டுப் போயிருக்காங்க. ஆனா பொலீஸ்ல விசாரிச்சா அப்படியொரு சம்பவம் நடக்கவேயிலன்னுட்டாங்க. இது யாரோ நல்லா திட்டம் போட்டு பணத்தை செலவழிசசி செஞ்சிருக்காங்க. நான் இன்னமும் பார்த்திபன் விஷயத்துல விசாரிச்சிக்கிட்டுதான் இருக்கேன். பார்த்திபன் உயிாோட இருக்காரா இல்லை யான்னு தெரியாம எப்படியம்மா மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கிறது. பார்த்திபன் மாதிரி மலையகத்துக்கு பத்து ஆசிரியர்கள் இருந்தா நிச்சயமா இங்க கல்வியில புரட்சிகரமான மாற்றமே ஏற்பட்டிருக்கும். ஆனா என்ன செய்யிறது நல்லதுக்குத்தான் காலமே யில்லை."
"சேர் நான் சொல்லுறேன்னு நீங்க கோவிச்சுக்கக் கூடாது. நம்ம பாடசாலையில வேலை செய்யிற சில ஆசிரியர்களுக்கே அவரைப் பிடிக்காது."
"அது எனக்கும் தெரியும் கண்மணி. ஆனா நான் என்ன செய்யிறது. எல்லோரையும் அனுசரிச்சிப் போகாட்டி அப்புறம் எனக்கும் பெட்டிஷன் போட்டுருவாங்க. அவங்க அரசியல் செல்வாக்கு உள்ளவங்க."
'சரி சேர், ஏதும் செய்தி தெரிஞ்சா உடனடியா எனக்கும் சொல்லுங்க. நான் வகுப்புக்குப் போறேன்.'
அவள் சோர்வுடன் காரியாலயத்தை விட்டு வெளியே வந்தாள்.

Page 16
.உன்னையே உறவென்று ܢܦܠ 16
‘என்ன கண்மணி டீச்சர் சொன்ன மாதிரியே ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில ஐந்து பேரை பாஸ் பண்ண வச்சிட்டீங்களே. கடைசியாக பார்த்திபன் அவளைப் பரவசத்துடன் சந்தோஷத்துடன் பாராட்டியது நினைவுக்கு வர அவளுக்கு 'ஓ'வென அழவேண்டும் போல இருந்தது. கடமைகளைச் சரியாகச் செய்பவர்களை பார்த்திபனுக்கு நிரம்பப் பிடிக்கும். அவர்களை எல்லோர் முன்பும் பாராட்டி உற்சாகம் கொடுப்பதில் அவனுக்கு நிகர் அவனே தான்.
மாணவர்கள் வேகமாகப் பாடசாலைக்கு வரத் தொடங்கவே கண்மணி தன் வகுப்பினை நோக்கி நடந்தாள்.
அந்த மோட்டார் சைக்கிள் மண் பாதையிலிருந்த ஒத்தைக் கடைக்கருகில் நின்றது. பின்னாலிருந்த அருள் மணி கீழே இறங்கி ஒத்தக்கடையை நோக்கி விரைந்தான். மோட்டார் சைக்கிளை ஒரத்தில் நிறுத்திவிட்டு தலைக் கவசத்தைக் கழற்றிக் கையிலெடுத்தவாறு அவனும் அந்தக் கடையை நோக்கி நடந்தான். அருள்மணி சிகரெட் பக்கெற் ஒன்றையும் தீப்பெட்டியும் வாங்கி அருகிலிருந்த மரத்தினருகில் போடப்பட்டிருந்த நீண்ட மரநாற்காலியில் அமர்ந்தான். அவனருகில் மற்றவனும் சென்று அமர இருவரும் சிகரெட்டை ஊதத் தொடங்கினார்கள்.
'என்னப்பா பசுபதி இன்னைக்கி கிழங்கு தோட்டத்துக்கு மருந்து அடிக்கல்லையா...'
'அட இன்னைக்கு சம்பள நாள்ன்னு தெரியாதா? சம்பளத்தை வாங்கிட்டு அரைநாள் லீவு போட்டுட்டு போயிட வேண்டியதுதான்.
ம். அவன் பார்த்திபன் எப்போ வந்தானோ அன்னையில இருந்து நம்ம சொந்த வேலை எதையும்

பாலா. சங்குபிள்ளை 17 سے
செய்ய முடியாமப் போயிடுச்சி. அவன் தொலைந்தான். நாம பிழைத்தோம் இல்லையா ஆமா உன்னோட பெட்டிசன் நல்லாதான் வேலை செஞ்சிருக்கு. அதோட நான் யார்ன்னு அவனுக்கு நல்லாவே விளங்கியிருக்கும்.
'உன்னை எனக்குத் தெரியாதா? அரசியல் செல்வாக்குள்ளவன்தானே நீ. அதுசரி அவனுக்குத்தான் இடமாற்றம் வந்திருச்சே. அப்புறம் ஏன் ஆளையே இல்லாம செஞ்சே."
'ஏய். நீ பாட்டுக்கு யார்கிட்டயும் இப்படியெல்லாம் உளறிடாதே. கொஞ்சம் நளைக்கி அடக்கியே வாசி. சரி பத்து மணியாயிடுச்சி இப்ப போனதான் பாடசாலைக்குப் பதினொரு மணிக்காவது போகலாம்."
அந்தத் தோட்டப் பணியக் கணக்கை நோக்கி சந்திரன் வேகமாக நடக்கத் தொடங்கினான். பேராதனை பல்கலைக் கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் அவன் தன்னு டன் ஒன்றாகக் கல்விகற்ற ரவியின் பெற்றோரைக் காண்பதற்காக அந்த அதிகாலை வேளையில் சென்றான்.
இரவில் பெய்த மழையினால் தரை நனைந்திருந்தது. தேயிலைத் தளிர்கள் குளிரினால் விரைத்து நின்றன. சந்திரன் லயத்தை அடைந்தான். இருபதாம் லயக்காம் பறாவை அவன் சென்றடைந்தபோது ரவியின் வயதான தந்தை 'லொக், லொக்' என இருமியவாறு கதவு என்ற பெயரில்

Page 17
.உன்னையே உறவென்று ܢܦ 1e
உடைந்த பலகைகளினால் செய்யப்பட்ட அந்தச் சிறிய கதவைத் திறந்தவாறு வெளியே வந்தார். "அடே சந்திரனா வாங்கத்தம்பி. வாங்க உள்ளே வாங்க. சந்திரன் காம்பறாவினுள்ளே நுழைந்து உடைந்த நாற்காலியொன்றில் அமர்ந்தான். அந்தக் காம்பறா இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது. தரை வெடித்து உடைந்திருந்தது. மேலே ஒட்டைத் தகரத்திலிருந்து ஒழுகிய தண்ணீர் வீடு முழுவதும் பரவாமல் இருக்க ஆங்காங்கே நசுங்கிய பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.
'தம்பி இருங்க; மகள் வள்ளியை டீ போடச் சொல்லுறேன்."
'அட அதெல்லாம் வேணாங்கய்யா. நான் என்னோட தோட்டத்துக்கும் போகாம உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்."
'ரவி எப்புடி இருக்கான்." சந்திரன் தலைகவிழ்ந்தவாறு பேசாமல் இருந்தான்.
'தம்பீ ஏன் மெளனமாயிருக்கீங்க. என் மகன் என்னதான் தப்பு செய்தான். யூனிவர்சிட்டியில படிச்சிக்கிட்டிருந்தவன் தன்னோட சமூகம் நல்லாயிருக்கணும்னுறதுக்காக பேப்பர்ல எழுதினான். எங்களை மாதிரி அறியாமைனால ஒட்டைப் போட்டுட்டு ஒட்டை வீட்டுல இருக்கிற அநியாயத்தைத் தட்டிக் கேட்டான். எங்களோட சம்பள உயர்வுக்காக முன்னால வந்து போராடினான். அவன் அகிம்சைப் போராட்டம்தானே செஞ்சான். அதைப் பொறுத்துக்க முடியாத நாங்க வாக்களிச்ச மகராசனுக அபாண்டமா பழி சொல்லி அவனை கைது பண்ண வச்சிட்டாங்க. வயசுக்கு வந்த ரெண்டு பொண்ணுக. ஆஸ்மா நோயாளி அம்மா. இவங்களோட

பாலா. சங்குபிள்ளை 19 سے
எதிர்காலமே இப்போ கேள்விகுறியாயிடுச்சி. அவன் ஜெயிலுக்குப் போய் ஆறுமாசமாயிடுச்சி. அந்தத் தம்பி பார்த்திபன் இருக்கமட்டும் அங்கங்க ஓடி அவனை வெளியே எடுக்க ரொம்ப சிரத்தை எடுத்துச்சி. ஆனா அந்தப் புண்ணியவானையும் இங்க இருக்கிற கெட்டவங்க சில பேர் சேர்ந்து ஆளையே முடிச்சிட்டாங்க. நல்லவங்களுக்கு காலமேயில்லையா? 'படிக்கிறது கட்டபொம்மன் நூல் பிடிக்கிறது எட்டப்பன் வால்"ன்னு வாழ்றவங்களுக்குத்தான் இதுகாலம். ஆமா. அவனை ஜெயிலுக்குப் போய் பார்த்தீங்களா? எப்படி இருக்கான்."
சந்திரன் கலங்கிய கண்களைத் துடைத்துவிட்டு அவரைப் பார்த்தான்.
‘போன திங்கள் கிழமை கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குப் போய் பார்த்தேன். ரவி ரொம்ப சோர்வா இருந்தான். சிறைச்சாலை வாழ்க்கை அவனை ரொம்ப மோசமா பாதிச்சிருக்கு. அங்கே அவனை மாதிரி சந்தேகத்துல நிறையப் பேரை தடுத்து வச்சிருக்காங்களாம். சின்ன இடத்துல ஆடுமாடுகள் மாதிரி அடைச்சி வச்சிருக்காங்களாம். இயற்கை உபாதைகளை ஷொப்பிங் பேக்லதான் கழிக்கணுமாம். தாகத்துக்குத் தண்ணிர் இல்லையாம். நாயைவிட ரொம்ப கேவலமா அவங்க நடத்தப்படுறாங்களாம். பார்த்திபன் சேர் கடைசியா அவனுக்கு கடிதம் ஒண்ணு போட்டிருந்தாராம். அதுல எப்படியும் சீக்கிரமா அவனை வெளியே எடுக்கிறேன்னு எழுதியிருந்தாராம். அவரைப் பற்றிக் கேட்டான். நான் எப்படியய்யா அதைச் சொல்லுவேன். நமக்கெல்லாம் கலங்கரை விளக்கமா இருந்தவரு கலங்க வச்சிட்டு போயிட்டாருன்னு எப்படியய்யா சொல்வேன்."
சந்திரன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.
- - -

Page 18
.உன்னையே உறவென்று ܢܦܠ 2o .
10ாலை வேளை. மாதவி கீழே தரையில் படுத்தவாறு விட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை யறியாமலேயே அவள் கண்களிலிருந்து கண்ணிர் ஆறாக ஒடிக் கொண்டிருந்தது.
'பார்த்திபன் உங்கக்கிட்ட ஒண்ணு கேட்பேன். சொல்லுவீங்களா? v
"என்னை மாதிரி நீங்களும் ஒரு ஆசிரியை. தவறா ஏதும் கேட்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்."
"என்ன நீங்க. நான் எப்போது உங்கக்கிட்ட தவறா பேசியிருக்கிறேன். பெண்களைக் கண்டாலே காத தூரம் ஒடறவர்தானே நீங்க. நான் என்ன கேட்க வந்தேன்னா என்ன தான் காதலில் கட்டுண்டு உலகை மறந்திருந்த துஷ்யந்தன் சகுந்தலைமேல் கோபம் கொண்டாலும் விஸ்வாமித்திரன் அப்படியொரு தண்டனையைக் கொடுத்தது அபாண்டம் இல்லையா..."
"ஆமா இதையேன் இந்த நேரத்துல என்கிட்ட கேட்கிறீங்க.."
"நீங்கதான் தமிழ் இலக்கியத்துல புலியாச்சே, சந்தேகம் கேட்கும் இந்த கிளி கிட்ட கொஞ்சம் விளக்கினா என்னவாம்.???
"இங்க பாருங்க டீச்சர், நீங்க எதுக்காக இதை என்கிட்ட கேட்டீங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா இந்தக் காதல் கத்தரிக்காய் பத்தியெல்லாம் பேச எனக்கு நேரமில்லை. நீங்க பணக்காரங்க. பொழுதைக் கழிக்கிறதுக்காக இங்கே வாரீங்க. ஆனா ஒவ்வொரு நிமிஷமும் எனக்குப் பொன் போன்றது. இருட்டு ல

பாலா. சங்குபிள்ளை 1ےسےر
இருக்கிற என் சமூகத்தை வெளிச்சத்துக்கே கொண்டு வர்றதுக்கு இருக்கிற பொழுதே பத்த மாட்டேன்னுது."
“என்ன பார்த்திபன். என் மனசைப் புண்படுத்துற மாதிரி பேசுறீங்க. முன்னர் வேணும்னா நான் நீங்க சொல்ற மாதிரி இருந்திருக்கலாம். ஆனா இப்போ நான் அப்படிப்பட்டவள் இல்லை. உங்களை மாதிரியே இந்தச் சமூகத்துக்காக உழைக்கிறதையே முழுமூச்சாகக் கொண்டு செயல்படுறேன்."
மாதவி சட்டென எழுந்தாள். தன்னுடைய கைப்பையை எடுத்தாள். அதில் எதையோ தேடினாள். அந்தப் புகைப்படம் கையில் கிடைத்தது. அதையே உற்றுப் பார்த்தாள். புகைப்படத்தில் அரும்பு மீசை, குறும்புப் பார்வை, புன்சிரிப்பு. ஒருமுறை பார்த்தால் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற ஆவலைத் துண்டக் கூடிய கவர்ச்சியான முகத்துடன் இருந்தது வேறு யாருமல்ல. பார்த்திபனேதான். யார் இந்தப் பார்த்திபன். அவன் அப்படியென்ன பெரிதாகச் செய்து விட்டான். அவனை யார் என்ன செய்தார்கள். சற்று முன்னோக்கிப் போனால் அவனைப் பற்றிய முழுக்கதையையும் தெரிந்து கொள்ளமுடியும். போவோமா..?
>> >

Page 19
.உன்னையே உறவென்று ܢܦܠ 22
排6睹
--
பார்த்திபன் ரயிலில் ஏறினான். கூட்டம் அதிகமாக இருக்கவில்லை. அவன் யன்னல் பக்கமாகப் போய் அமர்ந்து கொண்டான். கடந்த இரண்டு வருடங்களாகப் பதுளைப் பக்கத்திலிருந்த ஒரு தோட்டப் பாடசாலையில் ஆசிரியத் தொழில் செய்து வந்த அவனை தண்டனை இடமாற்றமாக நுவரெலியாவுக்கருகிலிருக்கும் ஒரு பின்தங்கிய தோட்டப் பாடசாலைக்குத் தூக்கியடிக்கப் பட்டான். அவன் அப்படியே கண்களை மூடிக் கொண்டன். ரயில் வேகமெடுத்தது. அவன் நினைவுகளும் இறக்கைக் கட்டிப் பறந்தது.
பதுளையிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தூரத்தில் அந்தத் தேயிலைத் தோட்டம் இருந்தது. நகரத்திலிருந்து செல்லப் போதுமான பஸ் வசதியில்லை. ஆபத்தான சமயங்களில் பதுளைக்கு வரவேண்டுமானால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டும். அந்தத் தோட்டத்தில் தான் சந்தானம் குடும்பம் இருந்தது. சந்தானம், தெய்வானைக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவள் தாமரை. இரண்டாவது பார்த்திபன். மற்ற இருவரும் செவ்வந்தி மற்றும் லட்சுமி. அந்தத் தோட்டத்தில் ஒரேயொரு பாட சாலையே இருந்தது. அதுவும் ஐந்தாம் வகுப்புவரைதான். தாமரை ஐந்துவரை படித்தாள். அப்புறம் பதினைந்து வயதில் கொழுந்துக் கூடையுடன் மலைக்குப் போகத் தொடங்கினாள். பார்த்திபன் நன்றாகப் படிக்கக் கூடியவன். அவன் ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த அவன் தாய் தெய்வானை திடீரென தலை சுற்றிக் கீழே சாய்ந்தாள். தலை கீழே கிடந்த கூரான கல்லில் பட்டது. உடனடியாக மடுவத்துக்குக் கொண்டு வரப்பட்டு ஒரு மணித்தியாலயம்

Uroom. 8figólároom ے سےB
கழித்து லொரி மூலம் வைத்தியசாலைக்குக் கொண்டு போகப்பட்டாள். அங்கே அவள் இறந்துவிட்டாள். சந்தானம் துடித்துப் போனார். அவள் அந்தக் குடும்பத்தைத் தூணாகத் தாங்கி நின்றாள். இதோ பிணமாகக் கிடக்கிறாள்.
ஆயிற்று - தெய்வானையை அடக்கம் செய்தாயிற்று. அவளுடைய சம்பாத்தியமும் மிகவும் உதவியாக இருந்தது. இனி என்ன செய்வது? சந்தானம் அதற்குப்பின் கவலையை மறக்கக் குடிக்கத் தொடங்கினார்.
முதலில் கவலையை மறக்கக் குடிக்கத் தொடங்கியவர் பின்பு அதற்கே அடிமையானார். அவரையை விதைத்தால் துவரையா, விளையும்? குடி குடியையே கெடுத்தது. ஒருநாள் அதிகமாகக் குடித்துவிட்டு நிதானமில்லாமல் பெரிய பள்ளத்தில் விழுந்தார். அங்கேயே அவர் கதை முடிந்தது.
தாமரையின் தலையில் எல்லாச் சுமையும் விழுந்தது. பூத்துக்குலுங்கும் பருவ வயதில் ஆசைகளையெல்லாம் பூட்டிவிட்டு குடும்ப வண்டியை இழப்பதற்குத் தயாரானாள். பார்த்திபன் தன் அக்காவுக்குத் தோள் கொடுக்க முன் வந்தான். ஆனால் நன்றாகப் படிக்கக் கூடிய அவனை மேலும் படிக்க வைக்க விரும்பினாள் தாமரை.
காலம் ஓடியது. ஐந்தாம் ஆண்டுவரை அங்கேயே படித்தவன் - ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்க பதுளைக்குப் போனான். அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து எல்லா வேலைகளையும் செய்துவிட்டு குறுக்குப் பாதையில் நடக்கத் தொடங்கி விடுவான். சனி, ஞாயிறுகளில் ஏற்கனவே பழக்கமான பதுளையிலிருக்கும் ஒரு கடைக்கு வேலைக்குப் போய் விடுவான். அங்கே கிடைக்கும் பணத்தை அப்படியே தன் அக்காவிடம் கொடுத்து விடுவான்.

Page 20
.உன்னையே உறவென்று ܢܦܠ 22 ܂
சந்தானம் மற்றும் தெய்வானையின் சேமலாப நிதிப் பணம் கிடைத்த போது உடனடியாகத் தன் தங்கைகளின் திருமணத்தை முடித்து வைத்தாள் தாமரை. தன் எதிர்காலத்தைப் பற்றி நினைக்காமல் உடன்பிறப்புகளுக்காக மெழுகாகத் தன்னையே உருக்கிக் கொண்டிருக்கும் அக்காவை நினைத்து அவன் வேதனைப்படாத நாளேயில்லை. நன்றாகப் படித்து, தன் அக்காவை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அவனின் ஒரே ஆசை.
அவன் க.பொ.த. உயர் தரத்தில் நல்ல பெறுபேறு களுடன் சித்தியடைந்தான். பல்கலைக் கழகத்துக்குத் தெளிவான போது அக்காவைத் தொடர்ந்தும் கஷ்டப் படுத்த விரும்பாததால் ஏதாவது தொழில் தேடிக் கொள்ள நினைத்தான். ஆனால் தாமரை பிடிவாதமாகச் சொல்லி விட்டாள்; அவன் கட்டாயமாக ஒரு பட்டதாரியாகியே தீரவேண்டும் என்று.
அக்காளின் ஆசையை நிறைவேற்றுவதே தன் முதல் வேலையென்ற குறிக்கோளுடன் அவன் செயல்படத் தொடங்கினான். பேராதெனிய பல்கலைக் கழகம் சென்று பட்டப் படிப்பை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது. எப்படியாவது கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும். தன்னுடைய படிப்பு தன் சமூகத்திற்கு எல்லாவிதத்திலும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என எண்ணினான். அறியாமை மற்றும் ஏழ்மையினால் வீழ்ந்து கிடக்கும் மலையகச் சமுதாயம் வீறு கொண்டு எழுந்து எழுச்சியை நோக்கி வெற்றி பெற வேண்டும் என எண்ணினான்.
அவன் தன் அக்காவிடம் ஆசி பெற்று புகையிரதம் மூலமாகப் பேராதெனியப் பல்கலைக் கழகம் சென்றான்

பாலா. சங்குபிள்ளை __5ے سے
அங்கே நாட்டின் நாலாபுறமுமிருந்து ஏராளமானவர்கள் கல்வி கற்க வந்திருந்தார்கள். மொழிகள் வேறாக இருந்தாலும் நோக்கம் ஒன்றாகவே இருந்தது. படிக்க வேண்டும் - தங்கள் சமூகம் உயர வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருந்தது.
பார்த்திபன் முழுக்க முழுக்கப் படிப்பிலேயே தன் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினான். அநாவசியப் பேச்சு கிடையாது. ஒவ்வொரு நிமிஷத்தையும் அவன் பயனுள்ள தாகவே கழிக்க முற்பட்டான். அவனைப் போலவே முதலாம் ஆண்டு கல்வி கற்பதற்காக அவள் வந்திருந்தாள். அவள் பெயர் சாந்தினி. அவள் அவனுடன் பேச ஆசைப் பட்டாள். மற்றவர்களிலிருந்து அவன் வித்தியாசமாகப் பட்டான். ஒருமுறை தனியாக இருந்த அவனருகில் அவள் வந்தாள்.
"என்ட பேர் சாந்தினி. நானும் முதலாமாண்டுதான். உங்களோட கதைக்க ஏலுமா?"
'தயவு கெஞ்சி என்னை தொந்தரவு செய்யாதீங்க. நாம இங்க படிக்க வந்திருக்கோம். வீணா கதைச்சி காலத்தைக் கடக்க இல்ல."
அவன் சொல்லிவிட்டு விடுவிடுவென நடக்க, அவள் திகைத்துப் போய் நின்றாள்.
令令令

Page 21
| 26 था உன்னையே உறவென்று.
శ}
7
சிந்தினி மட்டகளப்பில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு இரண்டு அண்ணன்மார். அக்கா மூன்றுபேர். இவள் தான் கடைக்குட்டி. அண்ணன்மார் இருவரும் தந்தையுடன் கமத்தொழில் செய்கிறார்கள். ஒரு அக்கா கல்யாணம் முடித்து யாழ்ப்பாணத்தில் இருக்கிறாள். மற்றவளுக்கு இன்னும் மணமாகவில்லை. அவர்கள் குடும்பத்தில் சாந்தினி மிகவும் வடிவானவள். அதோடு நன்கு படிக்கக் கூடியவள். அவளைப் பட்டதாரியாக்க வேண்டுமென்பதுதான் அவர்கள் அனைவரினதும் விருப்பமாகும்.
e
சாந்தினிக்கு முதல் பார்வையிலேயே பார்த்திபனை நிரம்பப் பிடித்துவிட்டது. அவளின் கடைக்கண் பார்வைக்காகப் பலர் காத்திருக்க அவளோ அவனின் பார்வைக்காக ஏங்கினாள். பார்த்திபன் மற்றவர்களில் பார்க்க பல விடயங்களில் வித்தியாசமானவனாக இருந்தான். அவன் முழுக்கவனமும் படிப்பில் இருந்தது. அத்துடன் அவனொரு நல்ல சிறுகதை எழுத்தாளனாகவும் இருந்தான். அவனின் எழுத்துகள் அநேகமான பத்திரிகைகளில் வெளிவந்தன. அவன் எழுத்துகள் யாவுமே மலையகப் பிரச்சனைகள், அவலங்களையே தொட்டுக் காட்டின.
சாந்தினிக்கு அவனின் எழுத்துகள் மிகவும் பிடிக்கும். ஆனால் அபிப்பிராயம் சொல்ல அவனை நாடினால் அவன் ஒடியே விடுவான். இந்த நிலையில்தான் வாசிக சாலையில் வைத்து அவனை மடக்கிவிட்டாள்.
"என்ன பார்த்தீபன். நான் உங்களோட பேசுறது தவறென்றால் என்னை மன்னிச்சிப் போடுங்கோ. நான் வாறன்."

பாலா. சங்குபிள்ளை 27 كص
அவள் விடுவிடுவென அந்த இடத்தைவிட்டு ஒட்டமும் நடையுமாகச் செல்வதை பார்த்திபன் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்று இரவு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். அவன் மனதில் அடிக்கடி சாந்தினியின் உருவம் வந்து போனது. ஆனாலும் அவன் அவளிடம் அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கக்கூடாது. அவள் அப்படியென்ன கேட்டு விட்டாள். நட்பாகப் பேசத்தானே வந்தாள். அவன் நடு இரவுக்குப் பின் தான் தூங்கினான்.
மறுநாள் பகல் சாப்பாட்டு வேளை. பார்த்திபன் அந்த மரத்தடியில் நின்று கொண்டிருந்த சாந்தினியை நெருங்கினான்.
"மிஸ். சாந்தினி. கோபமா. நான் அப்படிக் கடுமையாகப் பேசியிருக்கக் கூடாதுதான். ஆனாலும் என்ன செய்வது என்னோட கவனம் படிப்பிலிருந்து சிறிதும் சிதறிவிடக்கூடாதென்பதற்காகத்தான் நான் யாரிடமும் அதிகமாகப் பேசுவது கிடையாது. நான் தோட்டத்திலிருந்து இங்கே படிக்க வந்தவன். என்னை நம்பி என் குடும்பமும் என் சமூகமும் இருக்கிறது. இழிவு நிலையிலிருக்கும் அவர்களை ஒளிமிகுந்த பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டுமானால் நிச்சயமாக அது கல்வியினால் மட்டும்தான் முடியும். அதனால் நான் தேனியைப் போல தினமும் சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். நீங்கள் சொன்னது மாதிரி கல்வியிலே முழு நாட்டத்தைச் செலுத்தினாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அவரவரின் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதும் முக்கியமான விஷயம் தான் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்."

Page 22
.உன்னையே உறவென்று ܥܠ 28 .
சாந்தினி இதழோரம் ஏற்பட்ட புன்னகையுடன் அவனைப் பார்த்தாள்.
"அப்படியென்டா. இரவு முழுவதும் நீங்கள் நித்திரை கொள்ள இல்லை. அப்படித்தானே.”
'இல்ல. அப்படியில்ல. உங்கக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டது தப்புன்னு ஃபீல் பண்ணினேன், அவ்வளவுதான்."
‘எப்படியோ.. எனக்கு உங்களோட நட்பு கிடைச்சதால நான் ரொம்ப சந்தோஷப்படுறன். என்னைப் பொருத்தவரை பெண்ணைக் கண்டதும் சிரிப்பவன் முட்டாள். பெண்ணோடு பழகிய பின்னரும் சிரிக்காதவன் பைத்தியம்..”*
பார்த்திபன் கலகலவெனச் சிரித்தான். அவள் தமிழை மிக அழகாக நேர்த்தியாகப் பேசினாள். தமிழ் வார்த்தைகள் பிழையில்லாமல் அருவியெனக் கொட்டியதை அவன் வியப்புடன் பார்த்தான். ஆண்களைவிட பெண்கள் புத்திசாலிகள்தான். குறைவாகத் தெரிந்தாலும் அதை நன்றாகப் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் இருவரின் நட்பானது மிக இறுக்கமாகத் தொடங்கியது.
அவர்கள் தமிழ் இலக்கியத்தை விவாதித்தார்கள். கண்ணகியைக் கைவிட்டு மாதவியிடம் சென்ற கோவலனின் கற்பின்மையைப் பற்றி காரசாரமாக விவாதித்தார்கள். ஆனாலும் அவர்களின் நட்பில் களங்கமிருக்கவில்லை. பார்வையில் கள்ளம் இல்லை. நாட்கள் வேகமாகப் பறந்தன.
அன்று ஒரு புதன்கிழமை. அதற்கு முந்தைய புதனன்றுதான் முதலாவது ஆண்டு புதிய மாணவர்களின்
அறிமுகம் நடந்திருந்தது. பார்த்திபனும் சாந்தினியும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள்.

பாலா. சங்குபிள்ளை _____ے سےe
வழமையாகப் பகல் உணவுக்காக வெளியே வந்த பார்த்திபன் மாணவர்கள் சிலர் அங்குமிங்கும் ஒடுவதையும் பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு பரபரப்பான சூழ்நிலை தோன்றியிருப்பதையும் அவதானித்தான். சக மாணவன் ஒருவனைத் தடுத்து நிறுத்தி விசாரித்தான்.
"என்ன பார்த்திபன், உனக்கு விஷயம் தெரியாதா? நம்ம இரண்டாம் ஆண்டு மாணவன் சண்முகம் போன வாரம் வந்த முதலாமாண்டு மாணவன் செல்வத்தை பகிடிவதை செய்திருக்கிறான். அவனோட இன்னும் சில மாணவர்களும் இருந்திருக்காங்க. ஆனா இவன்தான் மிகக் கடுமையா பகிடிவதை செய்திருக்கிறான். அதுல செல்வம் மயங்கி விழுந்துட்டான். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க. இப்பத்தான் செய்தி வந்திச்சி - செல்வம் இறந்துட்டானாம். பொலீஸ் வரை விஷயம் போயிடுச்சி."
பார்த்திபன் சட்டென தலையில் கை வைத்தவாறு அப்படியே அருகிலிருந்த மரத்தில் சாய்ந்து கொண்டான். 'அடப் பாவிகளா! படிக்க வந்த இடத்துல இது என்ன விபரீத விளையாட்டு. சண்முகமும் ஒரு தோட்டத் தொழி லாளியின் மகன்தான். அவன் தந்தையைப் பார்த்திபனுக்கு நன்றாகத் தெரியும். அவனை நம்பிதான் அவனுடைய குடும்பமே இருக்கிறது. இதோ அவர்களின் நம்பிக்கை களையே குழிதோண்டிப் புதைத்து விட்டான். படிப்பில் மட்டும் நாட்டம் செலுத்த வேண்டிய இவர்களின் கவனம் ஏன் இப்படி திசைமாறிச் செல்கிறது. பகிடிவதையென்ற பொல்லாத விளையாட்டால் தன் எதிர்காலத்தையே தொலைத்து விட்ட இவர்களால் மலையகம் எப்படி மறுமலர்ச்சியடையும்.?
+ 4 +

Page 23
.உன்னையே உறவென்று ܢܦܠ 3o
sh < 8
శ్య பகிடிவதை மூலம் செல்வம் இறந்தமையும் அதற்குக் காரணமான சண்முகம் மற்றும் சில மாணவர்கள் கைது செய்யப்பட்டமையும் பல்கலைக்கழகத்தினுள் ஒரு சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. அதிலும் மலையக மாணவர்கள் இதில் சம்பந்தப்பட்டமையானது மற்ற மலையக மாணவர்கள் மத்தியில் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டது. அதிலும் பார்த்திபனை அந்தச் சம்பவம் பெரியளவில் பாதித்துவிட்டது.
கூலி வேலை செய்பவர்கள் - படிப்பறிவில்லாதவர்கள் அடிமைகள் என்றெல்லாம் மற்றவர்களால் மிக மோசமாகப் பார்க்கப்பட்டவர்கள் இப்போதுதான் பல்கலைக் கழகம் வரை வந்து படிக்கத் தொடங்கி யுள்ளார்கள். இந்த நிலையில் இப்படியான சிலரின் பிழையான நடவடிக்கைகளினால் முழு மலையகச் சமுதாயமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையல்லவா ஏற்பட்டுவிட்டது.
சாந்தினியால் ஒரு வாரமாகப் பார்த்திபனைப் பார்க்க முடியவில்லை. அவன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். அந்தச் சம்பவம் அவன் மனதில் மாறாக சோகத்தை ஏற்படுத்திவிட்டது. படித்துப் பட்டம் பெற்று தன் பெற்றோருக்குப் பெருமை சேர்க்க வந்த செல்வம் அநியாயமாக இறந்து விட்டான்.
சாந்தினியால் பொறுக்க முடியவில்லை. அவளுக்கு அவனைக் காணாமல் பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது. அவள் அவனுடன் பழகி வந்த இவ்வளவு காலத்திற்கு இன்னமும் தன் உள்ளத்திலுள்ளதை அவனிடம்

பாலா. சங்குபிள்ளை 31 سے
சொல்லவில்லை.அபீேடி அவின்ரீட்ம் சொல்லிவிட்டால் அவன் அவளைத் தவறாக எண்ணிக் கோபப்பட்டு ஒதுக்கி விடுவானோவெனப் பயந்தாள். ஏனென்றால் அவள் அவனை உளமார நேசித்தாள். அவனை ஒரு நாள் காணாவிட்டால், பேசாவிட்டால் அவள் தவித்து விடுவாள். சோர்ந்து போய் விடுவாள். இந்த நிலையில் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மேல் அவனைக் காணாவிட்டால் அவளுக்கு எப்படியிருக்கும். காதல் என்பது ஒரு பட்டாம்பூச்சியைப் போன்றது. அழுத்திப் பிடித்தால் நசுங்கி விடும். மெலிதாகப் பிடித்தால் பறந்துவிடும். ஒரு வாரம் முடிய அவன் அவளைச் சந்தித்தான்.
"என்ன ஒரு வாரமா காணேல்லை. சுகமில்லையா..?
"இல்ல சாந்தின். பகிடிவதை சம்பவம் என்னோட மனதை ரொம்பப் பாதிச்சிடுச்சி. படிக்க வர்ற இடத்துல இதெல்லாம் என்ன தேவையில்லாத வேலை. அதுவும் எங்களோட பையன்கள்தான் இப்படிச் செஞ்சிருக்காங்க."
"அப்படின்னா எங்களோட பொடியன்கள் இதுமாதிரி செஞ்சிருந்தா நீங்கள் இந்தளவு வருத்தப்பட்டிருக்க மாட்டியள் இல்லையா..."
பார்த்திபன் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான். எவ்வளவு சரியாக அவள் சொல்லிவிட்டாள். உண்மையிலேயே வேறு பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் இப்படியான விஷயத்தில் ஈடுபட்டிருந்தால் அவன் இந்தளவு வேதனைப்பட்டிருப்பானா? எதற்காக இந்தப் பிரதேச வாதம். அனைவரும் மனிதர்கள்தானே. எல்லார் உடம்பிலும் எல்லாமும் ஒரே மாதிரியாகத்தானே இருக்கின்றது. பின் ஏன் இந்த வேற்றுமை.

Page 24
.உன்னையே உறவென்று ܥܠ 32
அவன் பேசாமல் இருக்கவே அவள் பயந்து போனாள்.
'ஐயையோ நான் ஏதும் பிழையாகக் கதைத்துப் போட்டேனோ..??
'இல்ல சாந்தினி. சரியான நேரத்துல சரியான விஷயத்தைச் சொல்லி என்னோட உணர்வுகளைத் தட்டியெழுப்பிட்டீங்க.
"நீங்க சொல்றது ஒரு வகையில உண்மைதான். நாம் ஒவ்வொருவரும் இன்னமும் பிரதேசவாரியாத்தான் சிந்தனை செய்யிறோம். செயல்படுறோம். இந்தச் சிந்தனை இருக்கும் வரை பிரச்சனைகள் என்றுமே ஒயப் போறதில்லை."
'அதற்கு நீங்கள் மட்டும் காரணமில்லை. எங்களோட தவறுகளும் இருக்கிறதை ஒப்புக்கத்தான் வேணும். சரி இந்த லீவுக்கு என்ன செய்கிறதா உத்தேசம்."
'நான் லீவை வீணாக்க விரும்பலை சாந்தினி. என்னோட தோட்டத்துல க.பொ.த. உயர்தரம் படிக்க பல மைல்கள் நடந்து டவுனுக்குப் போறாங்க. அவங்களுக்கு இலவசமா டியூஷன் குடுக்கப் போறேன்."
“சில பேர் டியூஷன் என்கிற பெயரால் பணம் சம்பாதிக்கினம். உங்களோட நோக்கம் ரொம்ப நல்லது. நானும் அப்படித்தான் செய்யப் போறன்.
'அப்போ இந்த லீவுக்கு மட்டகளப்பு போlங்களா..??
'ஓம். மட்டகளப்பு போய் வந்து உங்கள்ட்ட நான் ஒரு முக்கிய விஷயம் பேசப் போறேன்."

UIToon. FräIG-5ólcir6oor سے BB
"முக்கியமான விஷயமா. ஏன் அதைப் போறதுக்கு முன்னால சொல்லக் கூடாதா...???
'உடனே போட்டுடைச்சா சப்பென்று போயிடும். சஸ்பென்ஸ் வச்சு சொன்னாதான் அதோட பெறுமதி விளங்கும்."
"நான் கூட உங்கக்கிட்ட ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டியிருக்கு."
சாந்தினி முகத்தில் சந்தோஷ மின்னல் தோன்ற எதிர்பார்ப்புகளுடன் அவனை ஏறிட்டாள்.
“என்ன விஷயம் சொல்லுங்கோவன்.?"
"அதுவும் சஸ்பென்ஸ்தான். லீவு முடிஞ்சி ஊருக்குப் போய் வந்தப்புறம்தான் சொல்வேன்."
"ஒரு மாசம் காக்க வேணுமே.”* "ஆமா அப்படித்தான்."
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் உற்று நோக்கினார்கள். முகம் சிவக்க சட்டென அவள் தலை குனிந்தாள். அவள் உதடுகள் துடித்தன. ஆனால் வார்த்தைகள் வெளி வரவில்லை. எல்லா இன மக்களுக்கும் பேசிக் கொள்ள மொழி இருக்கின்றது. ஆனால் காதலுக்கு மட்டும் மொழி கிடையாது.
பார்த்திபன் அவளிடம் விடை பெற்றுக்கொண்டு தன் அறையை நோக்கி நடந்தான். அங்கே அவனுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அக்கா தாமரை எழுதியிருந்தாள். இரண்டு நாட்களாகச் சுகமில்லையாம். அரசாங்க வைத்திய சாலைக்குப் போனபோது அவர் கடிதம் கொடுத்து

Page 25
.உன்னையே உறவென்று ܢܠ 34
உடனடியாகக் கண்டிக்குப் போகச் சொன்னாராம். என்ன செய்வதென்று கேட்டு எழுதியிருந்தாள். அவன் பதறிப் போய் விட்டான். அக்காவுக்கு ஒன்றென்றால் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது. எனவே மறுநாள் காலை ரயிலில் புறப்படத் தீர்மானித்தான். சாந்தினியிடமும் சொல்லிக் கொள்ள முடியாது. அடுத்த ஒரு வாரத்தில் லீவும் வருகிறது. எனவே எல்லாம் முடிந்து வரலாம் என முடிவு செய்தான். ஆனால் அவன் வாழ்வில் பெரிய புயல் வீசப் போவதை பாவம் அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.
+ () ()
9 睦》
பார்த்திபன் சாந்தினியிடம் சொல்லிக் கொள்ளவும் நேரமில்லாமையினால் அவசர அவசரமாக இரவு ரயிலில் புறப்பட்டான். அக்காவுக்கு அப்படி என்ன வருத்தமாக இருக்கும். எதற்காகக் கண்டிக்குப் போகச் சொன்னார்கள். தனக்கு ஏதாவது உடம்புக்கு நோய் வந்தாலும் அக்கா வாய் திறந்து சொல்லவே மாட்டாள். அவன் முதலில் காலை ரயிலில்தான் போகத் தீர்மானித்திருந்தான். ஆனால் அதுவரை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அவன் தன் தோட்ட லயக்காம்பறாவை அடைந்தபோது
இருமியவாறு அக்கா படுத்திருந்தாள். உடல் மெலிந்திருந்தது.

Uneom. aprigoldino6T 35ےر
'என்ன அக்கா. என்ன நடந்தது. எனக்கு முன்கூட்டியே தகவல் அனுப்ப வேண்டியதுதானே.”
'அட தம்பியா. வா. ஒரு வாரமா இடதுபக்கம் நெஞ்சுப் பகுதியில சரியான வலி. ஊசி குத்துற மாதிரி இருக்கு. சரி வாய்வுக் கோளாறா இருக்கும்னு வெள்ளைப் பூண்டை சுட்டு சாப்பிட்டேன். ஆனா. வலி நிற்கல்ல. அதுதான் தோட்ட டொக்டர் கிட்டப் போனேன். அவரு, பரிசோதனை செஞ்சிப் பார்த்துட்டு கண்டிக்குப் போகச் சொல்லிட்டாரு. உன் படிப்பு பாழாகிடக் கூடாதுன்னு தான் உடனடியா சொல்லலை."
“சரி. சரி. புறப்படு அக்கா. இப்பவே கண்டிக்குப் போவோம்."
'இல்ல தம்பி. உடனே எப்புடிப் போறது. கையில காசில்ல."
'அதெல்லாம் என்கிட்ட இருக்கு. நண்பன்கிட்ட வாங்கினேன். நீ பேசிக்கிட்டிருக்காம புறப்படு."
பார்த்திபன் அக்காவுடன் கண்டியை அடைந்தான். அரச மருத்துவமனைக்குப் போனான். அவர்கள் உடனடியாகத் தாமரையை பாரம் எடுத்தனர். அவள் பிரத்தியேக பரிசோதனைக்காக சத்திர சிகிச்சை விசேட வைத்தியர் வரும்வரை வைத்தியசாலை அறையில் தங்க வைக்கப் பட்டாள். எப்படியும் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாகுமென தெரிந்து கொண்ட பார்த்திபன் சாப்பிடு வதற்காக உணவுச் சாலையொன்றுக்குப் போனான்.
நேரம் ஓடியது. பார்த்திபன் வைத்தியசாலையின் வரவேற்பு அறையிலேயே காத்திருந்தான். சுமார் நான்கு

Page 26
.உன்னையே உறவென்று -ܢ 36
மணி நேரத்திற்குப் பின் அவன் உள்ளே அழைக்கப்பட்டான். தனியறையொன்றில் வைத்தியர் ஒருவர் இருந்தார். அவர் பார்த்திபனை நோக்கினார்.
“தாமரை என்கின்ற நோயாளிக்கு நீங்கள் என்ன உறவு முறை..?'
"அவர் என் அக்கா..."
'நீங்கள் உங்கள் சகோதரியை ஏன் முறையாகப் பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. மிகக் காலதாமதம் செய்துதான் இங்கே வந்திருக்கிறீர்கள்."
பார்த்திபன் பதற்றத்துடன் அவரைப் பார்த்தான். "டொக்டர், அவளுக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே."
"உங்கள் சகோதரியின் இடது மார்பகத்தில் புற்று நோய் ஏற்பட்டுள்ளது. வலது புறமாக இருந்தால் பரவாயில்லை. நோய் நன்றாகப் பரவிவிட்டது. இதயத்தின் அருகில் வரை நோய் அண்மித்துவிட்டதால் சத்திர சிகிச்சை செய்ய முடியாது. எப்படியும் உங்கள் சகோதரி இன்னும் ஒரு மாதம் வரை உயிரோடு இருப்பதே அபூர்வம். மருந்து, மாத்திரைகள் தருகிறோம். அவர் ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுங்கள். வீட்டுக்குக் கூட்டிப் போகலாம்.'
பார்த்திபனுக்குத் தலையில் இடி இறங்கியது. இதயத்தில் பலமான அடி விழுந்தது. அவன் அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டான். அவனையறியாமலேயே அவன் கண்களிலிருந்து கண்ணிர் தாரை தாரையாகப் பெருகியது.
"ஐயோ அக்கா, உனக்கா இந்த நிலை. எங்களுக்காக மாடாக உழைத்தாயே. இப்போ எங்களை விட்டு மறையப் போகிறாயா. கழுத்தில் தாலி ஏறாமலேயே அநாதையாகப் போகப் போகிறாயா. ஐயோ. நான் எப்படி இந்த

பாலா. சங்குபிள்ளை 37ے
விஷயத்தை அக்காவிடம் சொல்வேன். என் கண்முன்னே அவள் துடிப்பதைக் கொஞ்சம் கொஞ்சமா துடிப்பு அடங்கப் போவதை எப்படி பார்த்துக் கொண்டிருப்பேன். மாதர் குல மாணிக்கமான உன்னை இவ்வளவு சீக்கிரம் மரணம் காவு கொள்ளப் போகிறதா...???
பார்த்திபன் தாமரையை லயத்துக்குக் கூட்டி வந்தான். அவளிடம் எதுவுமே சொல்லவில்லை. நன்றாக ஓய்வு எடுக்கச் சொன்னதாகக் கூறினான். அவளை எந்த வேலையும் செய்ய விடவில்லை. அவனே அவள் சொல்வதையும் கேட்காமல் எல்லா வேலைகளையும் செய்தான். அவளை ஒரு தாய் போலப் பார்த்துக் கொண்டான். இரவில் தாமரை உறக்கத்தில் தம்பி. தம்பி. எனப் பிதற்றினாள். நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு முனங்கினாள். முகமெல்லாம் வியர்த்தது. கை, கால்கள் நடுங்கின. அடிக்கடி இருமினாள். சிலவேளைகளில் எச்சிலுடன் இரத்தமும் வருவதை அவதானித்த பார்த்திபன் துடித்துப் போனான்.
ஒரு வாரம் ஓடியது. அன்று இரவு ஏழு மணியிருக்கும். தாமரை உடைந்த கட்டிலில் படுத்திருந்தாள். அடிக்கடி இருமினாள். தம்பியை அருகே வரச் சொன்னாள்.
"அக்கா மருந்து குடிச்சிட்டு பேசாம தூங்கு."
'தம்பி. என்னைக் கொஞ்சம் பேச விடுடா. என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம் தம்பி.'
"அப்படியெல்லாம் இல்லக்கா."
'தம்பீ. அந்தப் பெட்டியில பாருடா. ஒரு கவர் இருக்கு. அதைக் கொஞ்சம் எடுடா."
'நீ தூங்கு. அதையெல்லாம் காலையில பார்க்கலாம்."

Page 27
38 a உன்னையே உறவென்று.
"இல்ல தம்பி. என்னைப் பேசவிடு. அந்தக் கவர்ல பாரு. மேல் கணக்கு கிளார்க்கர் ஐயாவோட தம்பி இன்சுரன்ஸ்ல வேலை செய்யுது. அது மூலமா நான் ஐம்பதாயிரம் இன்சுரன்ஸ் போட்டேன். நீ நல்லா படிக்கணும். எனக்கொன்னு ஆச்சின்னாலும் நீ படிப்பை விடக் கூடாது. என்னோட இன்சுரன்ஸ் பணத்தை எடுத்து படிப்புச் செலவுக்கு வச்சிக்க. உன் மேல இந்த அக்கா உசிரையே வச்சிருக்கேன்டா தம்பி. நீ என் தம்பியில்லடா. எனக்குக் கொள்ளி போடப் போற மகன். மகன்."
தாமரை ஓவென அழ, பார்த்திபன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டு கண்ணிர் விட்டான். அவள் அழுகை சிறிது சிறிதாக ஒயத் தொடங்கியது. சட்டென - அவள் தம்பியின் கைகளை இறுக்கமாகப் பற்றினாள்; பின் அவள் கை துவண்டு கீழே விழுந்தது.
-> () ()
fî it 1.O.
* இரண்டு வாரம் ஓடியது. பார்த்திபன் பைத்தியம் பிடித்தவனைப் போல இன்னமும் சரியாக உண்ணாமல் உறங்காமல் மூலையில் முடங்கிப் போய் கிடந்தான். அவன் அக்கா தாமரை இறந்து இதோ பதினான்கு நாட்களாகி விட்டன. பத்து மாதம் பெற்ற அன்னையைவிட அவன் மேல் பாசமும், அன்பும் வைத்து அவன் படிப்பதற்காக ஓய்வில்லாமல் உழைத்தவள். அதே கல்லறைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள். அவனின் மற்ற சகோதரிகள் அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள். ஆனால்

பாலா. சங்குபிள்ளை ےB9
அவனால் சோகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தம்பீ. தம்பீ. என வாய் நிறைய அழைப்பாளே. ஐயோ இப்போது அவள் எங்கே போய்விட்டாள்.
மேலும் நாட்கள் ஓடின. பல்கலைக்கழகம் போகக் கூடிய நாள் நெருங்கியது. ஆனால் ஒரு வாரம் சென்ற பின்தான் அவன் பல்கலைக்கழகம் சென்றான். அங்கே அவனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. தன் கவலைகளை, துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதற்காகச் சாந்தினியைத் தேடினான். இரண்டு நாட்களாகத் தேடினான். அவளைக் காணவில்லை. அவளுடன் மட்டக்களப்பில் வசிக்கும் ஆதித்தனைக் கண்டான். ஆதித்தனுக்கு ஏற்கனவே அவர்களின் விஷயம் தெரியும். எனவே ஆதித்தன் பார்த்திபனைக் கண்டவுடன் ஓடோடி வந்தான்.
“பார்த்திபன். எப்போது வந்தியள். நான் நேற்றுதான் ஊர்ல இருந்து வந்தன்."
"ஆதித்தன். எங்கே சாந்தினியைக் காணவில்லை. அவள் இன்னும் ஊர்லயிருந்து வரல்லையா?"
ஆதித்தன் பேசாமல் இருந்தான். அவன் கண்கள் கலங்கின.
'ஆதித்தன், ஏன் கண் கலங்குறே. உன்னோட மெளனம் எனக்கு அச்சத்தை உண்டாக்குது."
"அதை உங்களிட்ட எப்படிச் சொல்வேன். நானும் சாந்தினியும் ஒன்றாகத்தான் பஸ்ஸிலப் போனோம். மட்டக்களப்பில் ஏற்கனவே யுத்த சூழ்நிலையிருப்பது உங்களுக்குத் தெரியும்தானே. பஸ் ஒரு மூன்று மணித்தியாலம் ஒடியிருக்கும். திடீரென பஸ் நின்று

Page 28
.உன்னையே உறவென்று - ܢܥܐܠ 40
போட்டது. அவ்வளவுதான். துப்பாக்கிகளோட முகத்தை மறைச்சிக் கொண்டு பத்துப் பதினைஞ்சி பேர் பஸ்ஸில ஏறினார்கள். எல்லாருக்கும் அடிச்சினம். பொடியன் களையும் பெட்டையளையும் மட்டும் கீழே இறக்கினம். இருட்டா இருந்தபடியால நான் மெதுவா மறைஞ்சி மறைஞ்சி ஒரு புதர் பின்னால ஒளிஞ்சிட்டன். அவனுவள் எல்லாரையும் எங்கேயோ கூட்டி போயிட்டினம். நானும் தப்பிச்ச மற்றவையும் பஸ்ஸில ஏறிட்டோம். அப்புறம் பொலீஸ் வேன் ஒன்று வந்தது. நாங்க நடந்ததைச் சொன்னோம். அவங்க விசாரிப்பதா சொல்லிப் போட்டு எங்களுக்குப் பாதுகாப்பா வந்தினம். இரண்டு நாள் செல்ல தலையில்லாத முண்டங்களா அந்த இடத்தில நிறைய சடலங்கள் கிடைச்சதா பேப்பர்ல செய்தி வந்தது. அடையாளம் காட்ட நானும் போனன். அங்கே. ஐயோ எப்படிச் சொல்வேன், அழகுப் பதுமையாயிருந்த சாந்தினி அலங்கோலமாய் வெறி நாய்கள் குதறிய கன்றுக்குட்டியாய் உயிரற்றுக் கிடந்தாள். ஆதித்தன் அண்ணா என்று அன்பாய் அழைக்கும் அவள் நாதியற்று நடுக்காட்டில் செத்துக் கிடந்தாள். நாங்கள் தமிழனாய் பிறந்ததைத் தவிர வேறு என்ன தவறு செய்தோம். எங்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை."
ஆதித்தன் குலுங்கிக் குலுங்கி அழ பார்த்திபன் பிரமை பிடித்தவனைப் போல நின்றான். ஏற்கனவே தன் சகோதரியை இழந்து சோகத்திலிருக்கும் அவனுக்கு இப்போது இரண்டாவது இழப்பானது அவன் இதயத்தை இன்னும் அதிகமான சோகத்துக்குள்ளாகியது. விடுமுறைக்குப் போய் வந்து அவனிடம் முக்கியமான விடயமொன்றைச் சொல்லப் போவதாகச் சொன்னாளே. அதே போல தன் மனதிலுள்ள காதலைச் சொல்வதற்காகக் காத்திருந்தானே. கடைசியில் என்ன நடந்தது.

பாலா. சங்குபிள்ளை 41 سے
இருவருக்குமே அதற்குச் சந்தர்ப்பமேயில்லாமல் போய் விட்டது. பட்ட காலிலேயே படும் என்பதைப் போல அவனுக்கு மட்டும் ஏன் அடுத்தடுத்து துன்பங்களாகவே வந்து சேருகின்றது. அவனுடைய மனதைப் பக்குவப் படுத்துவதற்காக ஆண்டவன் அவனுக்கு அளிக்கும் பயிற்சியா. அல்லது விதியின் சதியா. அவன் தன் அறைக்கு வந்தான். குமுறிக் குமுறி அழுதான். அவனு டைய நண்பர்கள் அவனைச் சமாதானப்படுத்த முடியாமல் தடுமாறி நின்றார்கள்.
ஒருவாரம் ஓடியது. பார்த்திபன் ஒருவாறு மனதினைத் தேற்றிக் கொண்டான். தனக்கேற்பட்ட இன்னல்கள், துயரங்களையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினான். தன் அக்காவின் ஆசைப்படி பட்டதாரியாக வேண்டும் என்ற வெறியுடன் படிக்கத் தொடங்கினான். தன் கவனத்தை அவன் வேறு எதிலுமே செலுத்தவில்லை. பல்கலைக் கழக வாழ்க்கையென்பது எல்லோருக்குமே கிடைக்கக்கூடிய வாய்ப்பல்ல. அதே சமயம் கிடைக்கும் இத்தகைய வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கையை முறையாகக் குதூகலமாக அனுபவிக்காதவர்கள் முட்டாள்கள். பல கலைகள் பலவிதமான அனுபவங்களைப் பெறக்கூடிய பல்கலைக்கழகத்தில் அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டுப் படிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்கள் முட்டாள்களா, மடையர்களா?
நாட்கள் வேகமாக ஓடின. வருடங்கள் நழுவின. பார்த்திபன் பட்டதாரியாகிவிட்டான். அவன் விருப்பப் படியே அவனுக்கு ஆசிரியர் தொழில் கிடைத்தது. தன் சொந்த ஊரான பதுளையிலேயே முதல் நியமனம் கிடைத்தது.

Page 29
.உன்னையே உறவென்று ܢܦܠ 42
தன் சொந்த ஊரில் அதிலும் தன்னுடைய தோட்டத்திலேயே ஆசிரியர் நியமனம் கிடைத்ததனால் அவன் சந்தோஷப்பட்டான். தன்னுடைய முழுத்திறமை யினையும் பயன்படுத்தி அந்தப் பாடசாலையை முன்னணிக்குக் கொண்டுவர முயற்சி செய்தான். ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியமானதாக இருக்கவில்லை. அந்தப் பாடசாலை அதிபருக்கு அரசியல் செல்வாக்கு இருந்தது. அவருக்குப் பாடசாலையைப் பற்றி அக்கறை யில்லை. அதே சமயம் தான் இருக்கும்போது இன்னொருவரினால் அந்தப் பாடசாலை உயர்வுற்றால் அது அவருக்கு அவமானம். கெளரவக் குறைச்சல், ஆக வைக்கோல் போர் நாயைப் போன்ற நிலையில் அவர் இருந்தார். பார்த்திபன் செய்ய நினைக்கும் எந்த நல்ல காரியங்களுக்கும் அவர் இடைஞ்சலாக - முட்டுக்கட்டை யாகவே இருந்தார். அந்தத் தோட்ட மக்களிடையும் மாணவர்கள் மத்தியிலும் பார்த்திபனுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே.
+ + +

Unsom. EtåCésleitsdom ے سےرB
- 11 -
ஏமாற்றங்களைத் தீயிலிட்டுப் பொசுக்குங்கள். பெட்டியில் வைத்துப் பூட்டாதீர்கள். இன்றைய தோல்வி நாளைய வெற்றியின் அறிகுறி. ஏழுமுறை விழு; ஆனால் எட்டாம் முறை எழுந்து விடு. பார்த்திபன் தன் சொந்த இடத்திலிருக்கும் பாடசாலையை முன்னேற்றுவதற்காக என்னவெல்லாமோ முயன்றான். எல்லாமே தோல்வியில் தான் முடிந்தது. அவனுக்கு ஆதரவாக யாருமே முன் வரவில்லை. அனைவருமே அவனை வெட்டிவிட விரட்டி விடவே பார்த்தார்கள். அரசியல் பலம் செல்வாக்கு அவனு டைய சொல்வாக்கைத் தூக்கி வீசியது. அவன் வேறொரு பின்தங்கிய பாடசாலைக்குத் தூக்கியடிக்கப்பட்டான். அது நுவரெலியாவிலிருந்தது. பார்த்திபன் முதலில் தனக்கு அளிக்கப்பட்ட இடமாற்றம் சம்பந்தமாகப் போராட நினைத்தான். ஆனால் பின்பு யோசித்துப் பார்த்து அந்தத் திட்டத்தைக் கைவிட்டான். தன் அக்காவின் நினைவுகள் மட்டும் இன்னமும் அவன் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாந்தினியின் நினைவுகளிலிருந்து சற்று விலகியிருக்க வேண்டுமானால் இத்தகைய மாற்றம் கட்டாயமாகத் தேவையாயிருந்தது. அவனை நன்கறிந்த ஊரில் செய்ய முடியாததை வேறு ஊரில் நிச்சயமாகச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. எனவே அவன் நுவரெலியாவிற்கே புறப்பட்டு விட்டான்.
ரயில் சட்டென நின்றது. அது நானுஒயா புகையிரத நிலையம். அங்கேயிருந்து நுவரெலியாவிற்கு மறுபடியும் பஸ்ஸில் பயணம் செய்யவேண்டும். பார்த்திபன் சிந்தனை கலைந்தவனாக தோல்பையுடன் ரயிலைவிட்டு இறங்கினான். அவனுக்குப் பசித்தது. அப்போது மாலை

Page 30
.உன்னையே உறவென்று ܢ 224
இரண்டு மணியாக இருந்தது. அவன் பிரதான வீதியிலிருந்த அந்த சைவக் கடைக்குள் சென்றான். சூடாக வடையும் தேநீரும் அருந்திவிட்டு வெளியே வந்தான். நுவரெலியா போகும் பஸ்ஸில் ஏறினான். அந்த பஸ் அதிகப்படியான பிரயாணிகளுடன் நிறை மாத கர்ப்பிணியைப் போல மலைப் பாதையில் அசைந்து அசைந்து சென்றது.
பார்த்திபன் தோல்பையுடன் அந்த மண்பாதையில் நடந்தான். நுவரெலியா பிரதான பாதையிலிருந்து மூன்று சக்கர வாகனத்தில் பயணித்தவனை அந்தப் பாதையில் இறக்கிவிட்டான் சாரதி. அதற்கப்பால் நடந்துதான் போக முடியுமாம். அவன் நடக்கத் தொடங்கினான்.
சுமார் அரைமணி நேர நடையின் பின் அந்த முச்சந்தியை அடைந்தான். தொடர்ந்து எந்தப் பக்கம் போவதெனத் தெரியாமல் தடுமாறியபோதுதான் அந்தப் பெண் எதிர்ப்பட்டாள். பார்ப்பதற்கு நல்ல நிறமாகக் கண்களுக்குக் குளிர்ச்சியாக, அம்சமாக, அழகாக இருந்த அவளை ரசிக்கும் நிலையில் அவன் இல்லை."
'என்னங்க; இந்தத் தோட்டப் பாடசாலை எந்தப் பக்கம் இருக்குன்னு சொல்ல முடியுமா?"
'நீங்க யாரு. நான் அந்தப் பக்கம்தான் போறேன்.'
‘என் பெயர் பார்த்திபன். நான் புதுசா இந்தப் பாடசாலைக்கு மாற்றலாகி வந்திருக்கிற ஆசிரியர்."
அவள் வியப்புடன் அவனைப் பார்த்தாள்.
'அட. நீங்கதானா அது. அதிபர் நேற்றே சொன்னார். என் பெயர் கண்மணி. நானும் அதே பாடசாலையில்தான் ஆசிரியரா வேலை செய்யிறேன். நான் ஏ.எல். படிச்ச

UITGAom. FrňuG5óldirooooT 45 ܐ
பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியை. ஆனா.நீங்க விஞ்ஞானப் பட்டதாரின்னு கேள்விப்பட்டேன். எங்க பாடசாலைக்கு நீங்க ஆசிரியரா வாரதுல உண்மையிலேயே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்."
அவள் படபடவென பேசிக் கொண்டேயிருந்தாள். அவளின் கண்கள் அலைபாய்ந்தன. நடையில் ஒரு நளினம் இருந்தது.
'ஆமா... எனக்குத் தங்குறதுக்கு வீடு ஏதாவது கிடைக்குமா?"
'பாடசாலை விடுதியிருக்குது. ஆனா கொஞ்சம் பழுதாயிருக்கு. நீங்க பயப்படாம வாங்க. எங்க பாடசாலை அதிபர் ரொம்ப நல்ல வரு. அவரு உடனே அந்த விடுதியறையொன்றைச் சுத்தப்படுத்தித் தந்துருவாரு. ஆமா சாப்பாட்டுக்கெல்லாம் என்ன செய்யப் போறிங்க. உங்கக் கூட வேறு யாரும் வரல்லையா..? உங்களுக்கு ஆட்சேபனையில்லைன்னா கொஞ்ச நாட்களுக்கு எங்க வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு வந்து தாரேன்."
'இல்லையில்ல. உங்களுக்கு சிரமம் வேணாம். அதோட என்னால யாரும் எதுலயும் நஷ்டப்படக் கூடாது."
“அட, நீங்க ஒண்ணும் சும்மா சாப்பிட வேணாம். நீங்களா சமைக்கிற வரைக்கும்தான். அப்புறம். உங்க விருப்பப்படி செய்யுங்க.."
அவர்கள் பேசிக்கொண்டே பாடசாலையை அடைந்தார்கள். அங்கே இரண்டே கட்டிடங்கள் மட்டுமே இருந்தன. ஐந்தாம் ஆண்டு வரை மட்டுமே வகுப்புகள்

Page 31
.உன்னையே உறவென்று ܢܦܠ 46
இருந்த அந்தத் தோட்டப் பாடசாலை அடிப்படை வசதிகள் குறைவாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.
கண்மணி அவனைப் பாடசாலை காரியாலயத்துக்கு அழைத்துச் சென்றாள். அங்கே அதிபர் காசிநாதன் இருந்தார். அவர் மகிழ்ச்சியுடன் பார்த்திபனுக்குக் கை கொடுத்துக் குலுக்கினார். W
"உட்காருங்க மிஸ்டர் பார்த்திபன். என் பெயர் காசிநாதன். நான் இரண்டு வருடங்களுக்கு மேலாக இங்கே அதிபராக இருக்கேன். இங்கே உங்களோடு சேர்த்து இப்போது நான்கு ஆசிரியர்களும் இரண்டு பெண் ஆசிரியைகளும் இருக்காங்க. கண்மணி இந்தப் பாடசாலையிலேயே படிச்சி இங்கேயே ஆசிரியையா வந்திடுச்சி. ரொம்ப சுறுசுறுப்பு. போன ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில இந்தப் பாடசாலையில ரெண்டு பேர் பாஸ் பண்ணினதுக்கு முழுக்காரண கர்த்தாவா இருந்ததே இந்தக் கண்மணிதான். அப்புறம் உங்களுக்கு பாடசாலையையொட்டியிருக்கிற விடுதியறையை ஒதுக்கியிருக்கேன். என்னோட வீடு டவுனை யொட்டியிருக்கு. மோட்டார் சைக்கிள்ல தான் போவேன். வாங்க விடுதியறைக்குப் போவோம். முதன் முறையா எங்க பாடசாலைக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வந்தது உண்மையிலேயே எங்களுக்கு ரொம்ப பெருமையாயிருக்கு. இந்தப் பாடசாலையை பத்தாவது வரை தரம் உயர்த்தி தேவையான கட்டிடம், தளபாடம் பெற்றுத் தரச் சொல்லி நான் எவ்வளவோ முயற்சி செய்யிறேன். ஆனா இன்னும் எதுவும் சரியா அமையலை, இதுக்கு இங்க உள்ளவங்களே முட்டுக்கட்டையா இருக்காங்க."
அதிபர் அவனை விடுதியறைக்குக் கூட்டிச் சென்றார். பின்னாலேயே கண்மணியும் வந்தாள். ஒரு சிறிய

Uroom. Frissjóleiroondar 47ے سے
சமையலறை முன்னறை மற்றும் படுக்கையறையென்று கச்சிதமாக அது இருந்தது. பார்த்திபன் அறைக்குள் பழைய அதிபர் அவனிடம் விடைபெற்றுச் செல்ல, கண்மணி அவனைப் பார்த்து கண் சிமிட்டியதை அவன் பெரிதாக நினைக்கவில்லை.
பார்த்திபன் அந்தப் பாடசாலைக்கு வந்து கடமைகளைப் பொறுப்பெடுத்து ஒரு வாரம் ஓடியது. அவன் சமைப்பதற்கான பாத்திர பண்டங்களை வாங்கி தானே சமைக்கத் தொடங்கினான். அவ்வப்போது அவனுக்கு ஏதாவது உதவி செய்ய கண்மணி வந்தாலும் புன்சிரிப்புடன் மறுத்து விடுவான். மேலும் மாற்றலாகி வந்தவுடனேயே எந்தவிதமான மேலதிக வேலைகளிலும் ஈடுபடாமல் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்தான். இரண்டு வாரங்களில் அந்தப் பாடசாலையின் நிலைமை மற்றும் அங்கே பணிபுரிபவர்களைப் பற்றிய சரியான கணிப்பீட்டினை எடுத்தான். பாடசாலை அதிபர் காசிநாதன் மிக நல்லவர். அந்தப் பாடசாலை நலனில் அதிக அக்கறையுள்ளவராக இருந்தார். ஆனால் அவர் பாடசாலையின் உயர்வுக்காக எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிந்தது. அப்பாடசாலையிலிருக்கும் நான்கு ஆசிரியர்களில் பார்த்திபனும் ஒருவன். மற்ற மூவரில் மூர்த்தி சற்று வயதானவர். பசுபதியும், அருள்மணியும் இளைஞர்கள். அவர்கள் இருவரும் பதினொரு மணிக்கு வருவார்கள். பாடசாலை முடிவதற்குள்

Page 32
.உன்னையே உறவென்று ܢܦ 28
வெளியேறி விடுவார்கள். இருவரும் மோட்டார் சைக்கிளில்தான் வருவார்கள். பாடசாலையிலிருக்கும் சமயங்களிலும் வகுப்புகளிலிருந்தாலும் ஒழுங்காகப் பாடம் எடுக்கமாட்டார்கள். தங்களின் சொந்த வேலைகளைத் தான் செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் இருவரில் பசுபதி அரசியல் செல்வாக்குள்ளவன். எனவே அதிபர் அவர்கள் இருவரையும் ஒன்றும் சொல்வதில்லை. பாடசாலைக்குள் அரசியல் நுழைந்தால் அது ஆமை நுழைந்த இடமாகி விடுகின்றது. அன்னக்கிளி சற்று வசதியான குடும்பத்தி லிருந்து ஆசிரியையாக அங்கே கடமை செய்ய வந்த போதும் அவள் தன் கடமையை ஒழுங்காகச் செய்தாள். அவளுக்குப் பசுபதியையும் அருள்மணியையும் பிடிக்காது. அவர்களின் தேவையில்லாத அலட்டல் மற்றும் அவளிடம் அடிக்கடி அசடு வழிவது எதுவுமே பிடிக்காது. அந்தப் பாடசாலைக்கு மேலதிகமாகச் சில கட்டிடங்களும் மலசலக்கூடம், விளையாட்டு மைதானம் போன்றவற்றிற் காகவும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தபோதும் மேற்கொண்டு முயற்சிகளை மேற்கொள்ளும் அதிபருக்கு ஊக்கமும் ஒத்தாசையும் வழங்க யாருமில்லை.
பார்த்திபன் இன்னும் ஓரிரண்டு வாரங்கள் அமைதியாகவேயிருந்து அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தான். அந்தத் தோட்டத்துக்கும் டவுண் ஆரம்பிக்கும் இடத்திற்கும் இடையில் பல ஏக்கர் விஸ்தீரனமான மரக்கறி தோட்டத்துக்கு நடுவில் இருந்தது அந்தப் பெரிய பங்களா. பெரும் செல்வந்தர்களான சுந்தரம், பார்வதியின் ஒரே செல்ல மகள்தான் மாதவி. பேரழகி, எந்தக் கவலையுமில்லாதவள். யாரையும் மதிக்க மாட்டாள். பொழுதுபோக்குக்காக ஆசிரியர் தொழிலைத் தேர்ந்தெடுத்து நேரத்தைச் செலவழிப்பவள். நுவரெலியாவில் டவுனில் அமைந்திருக்கும் ஒரு

பாலா. சங்குபிள்ளை 9ے سے
பாடசாலையில் கல்வி கற்பித்தாள். அதாவது பொழுதைப் போக்கினாள். அவள் வாங்கும் சம்பளம் அவளின் அழகை மேம்படுத்தப் பயன்படுத்தும் அழகு சாதனங்களுக்கே போதாது. அவளின் ஒரே தோழி அவளுடன் ஒன்றாகப் படித்த அன்னக்கிளி.
அன்னக்கிளி அவள் பணிபுரியும் பாடசாலையில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை அவ்வப்போது மாதவியிடம் கூறுவாள். அதே போல பாடசாலையில் வைத்துத் தான் வாசித்த புத்தகங்களைப் பற்றி மாதவி கூறுவாள். ஆண்கள் என்றாலே பிடிக்காத அல்லி ராணி மாதவி. ஆண்களைத் தன் அழகின் மூலம் அடிமையாக்கி அவர்களைத் தன் காலடியில் விழவைத்து வேடிக்கைப் பார்க்கும் குணமிக்கவள் மாதவி. அவளின் அழகில் மயங்கும் அநேகமான ஆண்கள் அவள் கடைக்கண் பார்வைக்காக அவள் பின்னாலேயே சுற்றுவதை அவள் பெருமையாக எண்ணுவாள்.
அண்ணாமலை மாதவியை மணக்க வேண்டிய முறை மாமன். முரடன். கெட்ட நண்பர்களைக் கொண்டிருப் பவன். அடிதடிக்கு அஞ்சாதவன். பல வருடங்களாக அதே வீட்டில் இருந்தாலும் அவனை மாதவி ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள். ஆனால் அந்தச் சொத்துக்கெல்லாம் ஒரே வாரிசான மாதவியை மணம் செய்து தனிக்காட்டு ராஜாவாக ஆகிவிடவேண்டுமென்பதுதான் அவனின் ஒரே குறிக்கோள். அதற்காக எதையும் செய்யத் தயாராக இருந்தான்.
பார்த்திபன் பாடசாலை விடுமுறை நாட்களில் நுவரெலியாவுக்கு வந்து விடுவான்.
அவனுக்கு இயற்கைக் காட்சிகளை ரசித்தவாறு நடப்பது மிகவும் பிடிக்கும். அப்படி நடந்து செல்லும் போது மாதவியைப் பார்த்திருக்கிறான். அவளும் அவனைப்

Page 33
.உன்னையே உறவென்று ܥܠ 5o
பார்ப்பாள். ஆனால் பார்த்திபன் முகத்தில் எந்தச் சலனமும் இருக்காது. மற்றவர்களாக இருந்தால் திரும்பத் திரும்ப அசடு வழிய மாதவியைப் பார்த்துக் கொண்டேயிருப் பார்கள். ஆனால் அவன் அவளைப் பொருட்படுத்த மாட்டான். புதிய முகமான அவனின் அலட்சியம் அவளை அதிர்ச்சியடையச் செய்தது. ஆண் சிங்கம் முன்னால் செல்லும். பெண் சிங்கம் அதைப் பின்பற்றும்.
மாதவி அன்னக்கிளியிடம் அவனைப் பற்றிச் சொல்லுவாள். ஆனால் அன்னக்கிளிக்கு அவள் பார்த்திபனைப் பற்றித் தான் கூறுகிறாளென்று தெரியாது. அன்னக்கிளி தான் பணிபுரியும் பாடசாலைக்குப் புதிதாக வந்த பார்த்திபனைப் பற்றிச் சொல்லும் மாதவியும் அவனைப் பற்றித்தான் சொல்லுகிறாளென்பது அன்னக்கிளிக்குத் தெரியாது.
ஒரு மாதம் ஓடியது. பார்த்திபன் சிறிது சிறிதாகத் தன் செயற்பாடுகளில் இறங்கத் தொடங்கினான். முதலில் இலவசமாக மாலை நேர வகுப்புகளைத் தொடங்கினான். கொப்பிகள் இல்லாத ஏழைச் சிறார்களுக்குத் தன் செலவில் அவற்றை வாங்கிக் கொடுத்தான். அவர்கள் பலருக்கு நிறைய உதவிகள் தேவைப்பட்டது. எனவே பட்டதாரியான அவன் வசதியானவர்களின் பிள்ளைகளுக்குச் சனி, ஞாயிறுகளில் கட்டணங்கள் வாங்கி வகுப்புகள் செய்து அதில் வரும் வருமானத்தில் வறிய மாணவர்களுக்கு உதவினான். அத்துடன் அதிபருடன் கலந்தாலோசித்து அந்தப் பாடசாலைக்குப் புதிய கட்டிடங்களைப் பெற வேண்டி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டான். அவனின் சுறுசுறுப்பு, தன்னலமற்ற சேவை, ஆசிரியத் தொழில் மேலிருந்த பக்தி போன்றவை அந்தப் பகுதித் தோட்ட மக்களிடையே அவனுக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தியது.

பாலா. சங்குபிள்ளை 51ے
அன்று ஒரு சனிக்கிழமை. பார்த்திபன் பகல் உணவை முடித்துக் கொண்டு வகுப்புகள் செய்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான். அப்போது வாட்ட சாட்டமான இரண்டு இளைஞர்கள் அவனைப் பார்க்க வந்தார்கள். அவர்களுடன் ஒரு பெண்ணும் இருந்தாள்.
+ () ()
t
13
11ர்த்திபன் பிரத்தியேக வகுப்புகள் எடுப்பதற்கான ஆயத்தம் செய்து கொண்டிருந்த அந்தச் சனிக்கிழமை நேரத்தில் அவனைப் பார்க்க இரண்டு இளைஞர்கள் வந்தார்கள். அவர்களுடன் பாடசாலை படிக்கக்கூடிய வயதில் ஒரு பெண்ணும் வந்திருந்தாள்.
'நீங்க யார்? யாரைப் பார்க்கணும்..??
"நீங்கள் தானே பார்த்திபன் சேர்."
"ஆமாம் நான்தான்."
"உங்கக்கூட கொஞ்சம் பேசணும்."
“உள்ளே வாங்க. உட்காருங்க. இப்போ சொல்லுங்க என்ன விஷயம்.?"
"என்னோட பேரு இந்திரன். இவன் என் தம்பி ரவி. இன்னும் முருகன் கணேஷன்னு ரெண்டு சகோதரர்கள் இருக்காங்க. நாங்க நாலுபேரு. எங்களுக்கு ஒரே தங்கச்சி

Page 34
52 he உன்னையே உறவென்று.
இவ. இவளோட பேரு சுமங்கலி. எங்களுக்கு வசதிக்குப்
பஞ்சமில்லை. ரெண்டு பேர் கொழும்புல. ஒருத்தன் வெளிநாட்டுல. நான் இங்கே விவசாயம் செய்யிறேன்.
நாங்க அண்ணன் தம்பி யாருமே பெரிய அளவுல
படிக்கல்ல. ஆனா இவ சுமங்கலி க.பொ.த. சாதாரணத்
தரத்துல நல்ல பெறுபேறு பெற்று இப்போ உயர் தரம்
படிக்கிறா. இவளோட இலட்சியம் யுனிவர்சிட்டி போறது
தான். அதுனாலத்தான் கொஞ்சம் கஷ்டமான பாடங்களுக்கு
டியூஷன் படிக்க உங்களைப் பார்க்க வந்தோம். உங்களைப்
பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கோம்."
அவன் மூச்சு விடாமல் படபடவென பேசினான். முதலில் பார்த்திபன் முடியாது என்று சொல்லத்தான் யோசித்தான். ஆனால் இரண்டு விடயங்களை அவன் கவனத்தில் கொண்டான். முதலாவது வசதியானவர்களாக இருந்தாலும் படிப்பில் ஏற்பட்டுள்ள ஆர்வம். இரண்டாவது இதற்குச் சம்மதிப்பதனால் கணிசமான பணம் கிடைக்கும். அந்தப் பணத்தில் இன்னும் பல வறிய மாணவர்களுக்கு உதவி செய்யலாம். எனவே அவன் சம்மதம் சொன்னான். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை மூன்று முதல் ஐந்துமணி வரைக்கும் சனி, ஞாயிறுகளில் காலை நேரங்களிலும் பாடம் நடத்த ஒப்புக் கொண்டான்.
பார்த்திபன் நினைத்ததைவிட சுமங்கலி மிகச் சிறப்பாக்ப் படித்தாள். எந்தச் சந்தேகத்தையும் மிக நுணுக்கமாகக் கேள்விகள் கேட்டு மனதில் பதிய வைத்தாள். அவள் தன் அண்ணன்மார்களிடம் பார்த்திபனைப் பற்றி மிகவும் உயர்வாகச் சொல்லி வைத்தாள். அவர்களுக்கும் அவன் மேல் ஒரு மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது.

பாலா. சங்குபிள்ளை 53ےر
நாட்கள் சென்றன. வறுமை காரணமாகத் தொடர்ந்து பாடசாலைக்கு வராத மாணவர்களை அவர்களின் லயன்களுக்குச் சென்று பெற்றோருடன் பேசி மறுபடியும் பாடசலைக்கு வரவழைத்தான் பார்த்திபன். இதனால் கட்டிடம் மற்றும் தளபாட பற்றாக்குறை ஏற்பட்டது. பார்த்திபன் இதற்காக அதிபருடன் சேர்ந்து தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டான்.
அருள்மணியும், பசுபதியும் தொடர்ந்து பாடசாலைக்கு
மிகவும் நேரம் சென்றே வந்து கொண்டிருந்தனர். பார்த்திபன் மெதுவாக அவர்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான். பசுபதி தன் மனைவி பெயரில் கட்டிட கொந்தராத்து செய்து வந்தான். சில வெளியிட தோட்டப் பாடசாலைகளுக்குக் கட்டிட வேலைகளைக் கூட தன் உறவினர்களை வைத்துச் செய்து வந்தான். அதேபோல அருள்மணி தன்னிடமுள்ள கணிசமான பணத்தை வட்டிக்குக் கொடுத்ததுடன் ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் சம்பள காசோலைகளையும் கணிசமான கமிஷனுக்கு மாற்றிக் கொடுத்தான். இவர்கள் இருவரும் கற்பித்தல் தொழிலை பிரத்தியேகமாகவும் மற்றையதை முழு நேரமாகவும் செய்து வந்தார்கள். அதிபர் முதலில் அவர்களுக்குத் தன் கண்டனத்தைத் தெரிவித்த போதும் அவர்களின் அரசியல் மற்றும் பண பலத்தைப் பார்த்துப் பயந்து பின்வாங்கிவிட்டார். எனவே அவர்கள் யாருக்கும் பயமில்லாமல் தனிக்காட்டு ராஜாக்களாக அங்கே உலாவினார்கள். பார்த்திபனுக்கு அவர்கள் இருவர் மேலும் பயங்கரக் கோபமும் எரிச்சலும் ஏற்பட்டது. புனிதமான இந்தத் தொழிலைச் சரியாகச் செய்யாமல் துஷ்பிரயோகம் செய்வதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுக்குப் புத்திமதி சொல்வதற்கு ஏற்ற தருணத்திற்காகக் காத்திருந்தார்.

Page 35
.உன்னையே உறவென்று ܢܦܠ 54
அதிபரிடம் அவன் இதைப் பற்றிப் பேசியபோது அவர் அவர்களிடம் மிக அவதானமாக இருந்துகொள்ளும்படிக் கூறினார். அன்று ஒரு வெள்ளிக்கிழமை அதிபர் அவசரமாக வெளியே சென்றிருந்தார். சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான ஒரு செயற்திட்டத்திற்காக கொழும்பிலிருந்து ஒரு சமூக சேவை நிறுவனம் வந்து பாடசாலையில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். எனவே அனைத்து மாணவர்களையும் ஒரு மணித்தியாலத்திற்கு அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்க அனுமதி கேட்டனர்.
பார்த்திபன் பாடசாலைக் காரியாலயத்திற்கு வந்தான். அங்கே அருள்மணியும், பசுபதியும் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்த்திபனைக் கண்டால் வணக்கம் சொல்வதுடன் சரி. அதிகம் பேச மாட்டார்கள். ஆனால் இன்று எப்படியும் அவர்களிடம் பேசிவிட வேண்டுமென அவன் தீர்மானித்திருந்தான்.
“உங்கக்கூட கொஞ்சம் பேசலாமா..??
"தாராளமா. பேசலாமே."
'உங்களுக்கு நல்லாவே தெரியும். மலையகம் விழிப்புணர்வு பெறணும்னா கல்வியில மறுமலர்ச்சி அடையனும்."
ஆமா. அதையேன் எங்கக்கிட்ட சொல்லுறீங்க."
'இல்ல. புனிதமான இந்தத் தொழிலை நாம ஒவ்வொருத்தரும் சரியா செய்யணும்."
"நாங்க சரியா செய்யலைன்னுறீங்களா..??
"நான் அப்படி சொல்லலை. நீங்க கொஞ்சம் நேரத்தோட வந்தீங்கன்னா நல்லாயிருக்கும் இல்லையா..."

Umoon. Frig, Sldiiooar _55 سے |
"அதிபரே அதைப் பற்றிக் கவலைப்படலை. நீங்கள் புதுசா வந்திருக்கீங்க. உங்களுக்கு ஏன் இந்த அக்கறை?"
"இதையெல்லாம் யாரும் சொல்லத் தேவையில்லை. இந்தத் தொழில்ல ஈடுபடுற எல்லாருமே பொறுப்போட செயல்படனும். நான் புதுசா வந்திருக்கேன்னுறதுக்காக என்னோட கடமையை மறந்து செயல்படமுடியுமா..?"
"இங்கப் பாருங்க. எங்களுக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டிய அவசியமில்ல. என்ன செய்யிறதுன்னு எங்களுக்குத் தெரியும். முடிஞ்சா யாருக்கு வேணும்ன்னாலும் ரிபோர்ட் பண்ணுங்க."
-(- - -
áta
14 }
सू*
1சுபதியும், அருள்மணியும் எந்தவிதமான பயமோ பதற்றமோ இல்லாமல் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லி முடிந்தால் நடவடிக்கை எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு விடுவிடுவென கோபத்துடன் அந்த இடத்தைவிட்டு போய்விட, பார்த்திபன் மனதுக்குள் ஆத்திரம் மேலிட்டபோதும் பேசாமல் இருந்தான். அப்போது கண்மணி உள்ளே வந்தாள்.
'என்ன சேர். ஏதும் பிரச்சனையா. உங்களை தாறுமாறா ரெண்டு சேரும் திட்டிக்கிட்டே போறாங்க."
“தொழிலைப் பார்க்காம சொந்த உழைப்பை மட்டும் ஏன் செய்யிறீங்கன்னு கேட்டேன்; கோபம் வந்திடுச்சி."

Page 36
.உன்னையே உறவென்று ܢܦܠ 56
"அவங்கக்கிட்ட கொஞ்சம் கவனமா இருங்க சேர். அவங்களுக்கு அரசியல் ரீதியா நிறையப் பேருக்கிட்ட தொடர்பு இருக்குது. நினைச்சா எதுவும் செய்வாங்க."
"அதுக்காகப் பயந்துக்கிட்டு என்னால பேசாம இருக்க முடியாது. இவங்க மாதிரியானவங்கனாலதான் நம்ம சமூகம் இன்னமும் இழிவு நிலையில இருக்கு. எல்லாருமே நமக்கென்னன்னுக்கிட்டு ஒதுங்கிப் போனா இவங்க கைதான் ஓங்கும். அணில் தள்ளி தென்னை சாயாது. இதை நான் இப்படியே விடமாட்டேன். இவங்களைப் பற்றிய எல்லா தகவல்களையும் சேகரிச்சிட்டேன். ஆனா ஆதாரம் மட்டும்தான் கிடைக்கல்லை. பணம் பேசுகிறது. நாய் குரைக்கிறது.
"இருந்தாலும் கொஞ்சம் கவனமாகவே இருங்க சேர். அப்புறம் உங்கக்கிட்ட ரொம்ப நாளா கேட்க நினைத்தேன். உங்க குடும்பத்தை இங்கே கூட்டி வந்தா உங்களுக்கு உதவியா இருக்கும் இல்லையா..?"
பார்த்திபன் புன்சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.
"அதாவது என்னோட அப்பா அம்மா இருக்காங்களா, எனக்குத் திருமணம் ஆயிடுச்சா - இதைத்தானே வேறு விதமா கேட்குறீங்க. எனக்கு. அப்பா அம்மா இல்ல. அக்காதான் எல்லாம். அவங்களும் காலமாயிட்டாங்க. நான் தனிக்கட்டை. என் கதை தனிக்கதை."
கண்மணி முகம் சிவக்க ஒரக் கண்ணால் அவனைப் பார்த்தாள்.
'மற்ற வங்களுக்கு உதவி செய்யிறதுல துடிப்பா
இருக்கீங்க. எப்போது பார்த்தாலும் நேரத்தை வீணாக்காமல் தேனி மாதிரி சுறுசுறுப்பா இயங்குறீங்க. உங்க உடம்பையும்

Uroom. Frig5óldir606I 57 سے
பார்த்துக்கணும்தானே. சுவர் இருந்தா தானே சித்திரம் எழுத முடியும்.'
'இப்போ என்னதான் சொல்ல வாரீங்க...???
"எங்க வீட்ல நானும் அம்மாவும் மட்டும்தான். வீட்ல தோட்டம் போட்டிருக்கேன். நஞ்சில்லாத மரக்கறி. நான் நல்லா சமைப்பேன். நீங்க சமையல் வேலையையும் பார்த்துக்கிட்டு அவங்களுக்கு இலவசமா டியூஷனும் வச்சிக்கிட்டு எங்களுக்குச் சமைக்கிறதோட சேர்த்து உங்களுக்கும் செய்யிறதொன்னும் கஷ்டமில்ல. தவறா நினைக்கிக்காதீங்க."
'நீங்க சொல்றதும் நல்லதாதான் தெரியுது. அப்படின்னா ஒரு கண்டிஷன் - நீங்க மாச மாசம் பணம் வாங்கிக்கணும்."
"நீங்க உங்க சொந்தப் பணத்துல ஏழை எளிய வங் களுக்கு எவ்வளவோ செய்யிறீங்க. அப்படிப்பட்ட உங்களுக்கு நான் செய்யிற இந்தச் சின்ன உதவிக்கு எப்படி பணம் வாங்குறது."
"அப்படியில்ல. நீங்க மணம் ஆக வேண்டியவங்க. எனக்கு உதவி செய்யப் போய் மற்றவங்க உங்க மனம் நோகும்படி பேசுறதை நான் அனுமதிக்க மாட்டேன். எனக்காக நீங்க சிரமப்படவேண்டாம். பணம் வாங்கிக்காட்டி எனக்குச் சாப்பாடு வேணாம்."
கண்மணி அரைமனதுடன் சம்மதித்தாள். அவள் சமைப்பதில் கெட்டிக்காரி. மிக நீண்ட நாட்களுக்குப் பின் பார்த்திபன் சுத்தமான, சுவையான சாப்பாட்டினை அருந்தத் தொடங்கினான்.

Page 37
| 58 था உன்னையே உறவென்று.
நாட்கள் ஓடின. அனைத்துப் பாடசாலைகளுக்குமான பாரதி விழா நடப்பதையிட்டு சிறந்த நாடகப் போட்டி யொன்று ஏற்பாடு செய்யப்பட்டபோது பார்த்திபனின் கடுமையான பயிற்சியினால் மேடையேற்றப்பட்ட 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற நாடகம் முதலாமிடத்தினைப் பெற்று அந்தப் பாடசாலைக்குப் பெரும் புகழை ஈட்டித்தந்தது.
நுவரெலியா நகரத்தில் மிக கோலாகலமாக நடந்த பரிசளிப்பு விழாவில் அந்நாடகம் மேடையேற்றப்பட்டு அனைவராலும் பாராட்டப்பட்டதுடன் அந்நாடகத்தைத் தயாரித்து இயக்கிய பார்த்திபனும் மேடையில் கெளர விக்கப்பட்டான். அதற்கு நன்றி கூறி சுமார் பதினைந்து நிமிடம் பார்த்திபன் உருக்கமாகப் பேசினான். ஆசிரியத் தொழிலின் புனிதத்துவத்தையும், கல்வியின் உயர்ச்சியினால் மட்டுமே மலையகம் மறுமலர்ச்சியடைய முடியும் என்பதைப் பற்றியும் சிலரின் அலட்சியம் மற்றும் அக்கறையின்மையினால் எவ்வளவு தூரம் மலையகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதென்பதையும் மிக வேதனை யுடன் அவன் எடுத்துரைத்தான். அந்த விழாவுக்கு மாதவியும் வந்திருந்தாள். அவன் கூறிய விடயங்கள் யாவுமே அவளுக்காகச் சொன்னதைப் போல இருந்தது. அவள் தன்னருகே அமர்ந்திருந்த அன்னக்கிளியிடம் தான் அடிக்கடி அவளிடம் கூறும் அந்த நபர் அவன்தான் என சுட்டிக்காட்டியதுடன் அவன் அன்னக்கிளியின் பாடசாலையில்தான் வேலை செய்கிறானென்பது அன்றுதான் தனக்குத் தெரியும் என்றும் கூறவே அன்னக்கிளி அவனைப் பற்றி ஆஹா ஓகோவெனப் புகழத் தொடங்கினாள்.

பாலா. சங்குபிள்ளை 59 سے
பெண்களின் மனம் வினோதமானது. என்னதான் படித்தவளாக, பணக்காரியாக, ஆணவம் பிடித்தவளாக, எப்படிப்பட்டவளாக இருந்தாலும் அவளுக்குப் பிடித்த ஆண் அவள் கண்களுக்குத் தென்பட்டுவிட்டால் அவனுக் காக அவள் உருகத் தொடங்கிவிடுவாள். மாதவியும் அப்படிதான். அவள் மனதில் இதுவரை எந்த ஆண்மகனின் உருவமும் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்திய தில்லை. ஆனால், பார்த்திபனை முதன் முதலாக எப்போது பார்த்தாளோ அப்போதே அவள் மனதில் சிறு சலனம் தோன்றியது. அவளையறியாமலேயே அவள் மனதில் அடிக்கடி அவன் உருவம் வந்து வந்து போனது. அவனு டன் பழகவேண்டும், பேச வேண்டுமென அவள் குரங்கு மனம் அடம்பிடித்தது. முதல் முறையாக பார்த்திபன் பேசியதைக் கேட்டது முதல் அவள் தன்வசம் இழந்தாள். பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத, மற்றவர்களுக்கு உதவி செய்யும், மதிப்பளிக்கும் இப்படியொரு வித்தியாச மானவனை அவள் சந்தித்ததில்லை. மேலும் அன்னக்கிளி வேறு அவனைப் பற்றி அடிக்கடி புகழ்ந்து தள்ளினாள்.
அந்த விழாவிற்குப் பின் பார்த்திபன் மேல் அந்தத் தோட்ட மக்களுக்கு மத்தியில் மட்டுமல்ல; சுற்று வட்டாரத்திலிருக்கும் அனைத்துப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியிலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கத் தொடங்கியது.
令令令

Page 38
.உன்னையே உறவென்று ܢܠ Go
fî
15ѣ
‘ey
10னித வாழ்வில் சில சம்பவங்கள் எதிர்பாராத விதமாக நட்க்கும்போது அவற்றில் சில நம்ப முடியாதவையாகவும் அதிசயமாகவும் இருப்பதுண்டு. ஆழ்மனம் என்பது கடவுள் மாதிரி. ஒரே சிந்தனையுடன் செயல்படும்போது அது உடனடியாக நடந்து நமக்கு ஆச்சரியத்தை உண்டாக்கி விடுகின்றது.
{
மாதவி வாழ்விலும் அப்படித்தான் நடந்தது. அவள் பார்த்திபனை அடிக்கடி சந்திக்க வேண்டும். அவனுடன் பேசவேண்டுமென தினமும் மனதுக்குள் நினைத்தாள். ஏற்கனவே குறிப்பிட்ட பாடசாலையில் மூன்று ஆண்டுகள் வேலை செய்திருந்தமையினால் வேறு பாடசாலைக்கு மாற்றல் வேண்டி எப்போதோ விண்ணப்பித்திருந்தாள். அதே போல பார்த்திபன் வேலை செய்த பாடசாலையில் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலை செய்திருந்த மூர்த்திக்கு வேறு தூரப் பாடசாலைக்கு மாற்றல் வர அந்த இடத்திற்குத் தற்செயலாக மாதவிக்கு இடமாற்றல் வந்தது அதிசயமே. வேறு சமயங்களாக இருந்தால் மாதவி அதை ரத்து செய்ய முயற்சிகளை மேற்கொண்டிருப்பாள். ஆனால், இப்போது பழம் நழுவி வாயில் அல்லவா விழுந்திருக்கிறது.
அடுத்த இரண்டு வாரத்தில் மாதவி பார்த்திபன் வேலை செய்யும் பாடசாலைக்கு மாற்றலாகி வந்து விட்டாள். ஆனால் பார்த்திபன் அவளை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. அவன் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தான். அந்தத் தோட்டப் பாடசாலையை க.பொ.த. சாதாரணத் தரம் வரையாவது தரம் உயர்த்த

பாலா. சங்குபிள்ளை 61 سے |
வேண்டும். இன்னும் கட்டிடங்களைக் கட்ட வேண்டும். தோட்ட மக்களிடையே எல்லா விடயங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதெல்லாம் அவன் இலட்சியங்களாக - கனவாக இருந்தது. இனங் களிடையே நல்லுறவும், சகோதரத்துவமும், மனிதாபி மானமும் ஏற்படும்போது நாட்டில் அமைதியும், சமாதானமும் ஏற்படும் என்பதில் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையிருந்தது. பார்த்திபன் அன்று நடந்த சம்பவத்திற்குப் பின் அருள்மணி மற்றும் பசுபதியுடன் அவ்வளவாகப் பேசுவதில்லை. ஆனால், அவர்களைப் பற்றிய சகல விஷயங்களையும் தகுந்த ஆதாரங்களுடன் சேகரித்து வைத்திருந்தான்.
பார்த்திபன் அந்தப் பாடசாலையில் தொடர்ந்து இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்பதைத் தெரிந்து கொண்ட அவர்கள் இருவரும் அவனைப் பழிவாங்கத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மாதவி அந்தப் பாடசாலைக்கு வந்து ஒரு வாரமாகியது. பார்த்திபன் அவளைக் கண்டால் வணக்கம் சொல்லுவான். வேறு எதுவுமே பேச மாட்டான். மாதவியினால் அவனின் அலட்சியத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் அவனுக்காக ஏங்கினாள். அவன் பேசமாட்டானாவென தவித்தாள். அவனுக்காகத் தன்னைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டாள். ஆடம்பரத்தைத் துறந்தாள். கோபத்தை - அகம்பாவத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டாள். மாணவர்களுக்கு நேரத்தை வீணாக்காமல் பாடம் சொல்லிக் கொடுத்தாள். அவளின் மாற்றங்கள் அன்னக்கிளிக்குப் பேராச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கான காரணம் புரிந்த போது அவள் மகிழ்ந்தாள். ஏனென்றால் மாதவியின் பேரழகுக்கு பார்த்திபன் ரொம்பப் பொருத்தமானவன்.

Page 39
62 a உன்னையே உறவென்று.
நாட்கள் ஓடின. பார்த்திபன் மாதவியுடன் ஒரளவு பேசிப் பழகத் தொடங்கினான். ஆனால் அது முழுக்க முழுக்க வேலை சம்பந்தமாகவே இருக்கும். மாதவியைப் பொருத்த வரை இப்போதைக்கு அவன் பேசுவதே பெரிதென நினைத்தாள். அதே சமயம், மாதவி அந்தப் பாடசாலைக்கு வந்ததிலிருந்து அவளின் நடவடிக்கைகள் சுத்தமாகக் கண்மணிக்குப் பிடிக்கவில்லை. அவள் பார்த்திபனிடம் ஒடியாடிப் பேசுவது, அவனைக் கண்டாலே பல்லைக் காட்டுவது எதுவுமே கண்மணிக்குப் பிடிக்க வில்லை. பார்த்திபனை உளமார கண்மணி நேசித்து வருகிறாள். மாதவியைப் போலவே கண்மணியும் அழகிதான். ஆனால் எங்கே பார்த்திபனை மாதவி தட்டிக் கொண்டு போய்விடுவாளோ என்ற பயமும் கோபமும் அவளுக்கு அதிகமாகவே இருந்தது. ஆனால் நாளுக்கு நாள் மாதவி நடந்து கொள்ளும் விதம் கண்மணிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவள் வேண்டுமென்றே பாடசாலை இடைவேளை மற்றும் ஒய்வான நேரங்களில் பார்த்திபனைத் தேடி வந்து சந்தேகம் கேட்பதைப் போல அவனிடம் பேசுவது கண்மணிக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. பெண்கள் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் தான் காதலிப்பவனை எந்தக் காரணம் கொண்டும் விட்டுத் தரவே மாட்டார்கள்.
அன்று பார்த்திபன் பாடசாலைக்குப் புதிய கட்டிடம் ஒன்று கட்டித் தரவேண்டியது சம்பந்தமாக அதிபருடன் கல்வித் திணைக்களத்துக்குச் சென்றிருந்தான். பாடசாலை சிறிய இடைவேளை சமயத்தில் கண்மணியும், மாதவியும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டியேற்பட்டது. கண்மணி கோபத்தைக் கட்டுப்படுத்தியவாறு மாதவியை நேருக்கு நேர் பார்த்தாள்.
'டீச்சர், உங்களோட கொஞ்சம் பேசணும்.'

Umoom. GršIGoldtoGT ےرeB
ஒ. தாராளமா பேசலாமே..'
'நீங்க வசதியானவங்க. இங்கே வேலை செஞ்சிதான் பொழைக்கணும்னுற நிலையில்லை."
"அதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத விஷயம். நான் வசதியானவளா இருந்தாலும் எனக்குச் சேவை மனப்பான்மை இருக்கு. நான் சம்பளத்துக்காக வேலை செய்யலை."
"நீங்க எதுக்காக வேலை செய்யிறீங்கன்னுறது எனக்கு முக்கியமில்ல. பார்த்திபன் சேர் நல்ல மனுஷன். இந்தப் பாடசாலைக்காகவும், தோட்ட மக்களுக்காகவும் உண்மையான மனசோட வேலை செய்யிறாரு. நீங்க அவர் மனசைக் கெடுத்துடாதீங்க."
"என்ன பைத்தியம் மாதிரி பேசுறீங்க. பார்த்திபன் உங்க சொந்தக்காரரர் இல்லை. அவர் கிட்ட பேச வேணாம், பழக வேணாம்ன்னு சொல்ல நீங்க யாரு. நாம ரெண்டு பேரும் இங்கே வேலை செய்ய வந்திருக்கோம். வேலை விஷயமா நான் அவர்கிட்ட பேசுவேன். அதை வேணாம்னு நீங்க எப்புடி சொல்ல முடியும்.'
கண்மணிக்குக் கோபம் கோபமாக வந்தது. புார்த்திபனைப் பற்றி அவள் எதைப் பேசினாலும் அவளுக்கு ஆத்திரமாக வந்தது. ஆனால் அவளிடம் இதையெல்லாம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லையென தெரிந்து கொண்டாள். எனவே மேற்கொண்டு மாதவியிடம் பேச விரும்பாதவளாக விருட்டென அந்த இடத்தைவிட்டு அகன்றாள். அவள் பேசிய விதம் மாதவிக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
+ 4 +

Page 40
.உன்னையே உறவென்று ܥܠ 64
să
16邯
**
1ார்த்திபன் சோர்வுடன் நாற்காலியில் அமர்ந்தவாறு அமைதியாகப் பாடம் படித்துக்கொண்டிருந்த மாணவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். சுமார் முப்பது மாணவர்கள் வரை அமர்ந்திருந்த அவர்களுக்குப் போதுமான நல்ல இருக்கைகள் இல்லை. மேலே ஆங்காங்கே கூரை ஓட்டை விழுந்தும் உடைந்துமிருந்தது. கீழே தரையும் அப்படித்தான். அவன் அதிபருடன் மேலதிகக் கட்டிடம் சம்பந்தமான குறிப்பிட்ட காரியாலயத்துக்குச் சென்றபோது அங்கே அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பின்பு பார்க்கலாம் என்றார்கள். ஆனால், அங்கே வேலை செய்யும் ஒருவர் பார்த்திபனைத் தனியாக அழைத்துச் சென்றார்.
'தம்பி, உங்களைப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு. நீங்களும் அடிக்கடி இங்கே வாரீங்க. தயவு செஞ்சி நான் சொன்னதா யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. நீங்க நல்ல மனசோடதான் இங்கு அடிக்கடி வாரீங்க. உங்க பாடசாலைக்குப் புதுசா கட்டிடம் தேவைன்னு கோரிக்கை விடுறீங்க. ஆனா உங்க பாடசாலையில வேலை செய்யிறவங்களே இதுக்கு முட்டுக்கட்டைப் போடுறாங்க. உங்க பாடசாலைக்குப் புதுசா கட்டிடம் வந்து தரமும் உயர்ந்து ஆசிரியர் எண்ணிக்கையும் கூடிட்டா அவங்களோட வெளி வருமானம் பாதிக்கும் சைட் பிஸினெஸ் எல்லாம் செய்யமுடியாது. அதோட ரொம்ப நாளா அதே பாடசாலையில வேலை செய்யிற அவங்க செய்யாததை சமீபத்துல வந்த நீங்க செஞ்சி பேரைத் தட்டிக்கிட்டுப் போறதை அவங்க விரும்பலை. அரசியல் செல்வாக்கு இருக்கிற அவங்களை எதிர்த்துக்கிட்டு இவங்களால எதுவுமே செய்ய முடியாது. நம்ம சமூத்துல

Uroom. FilóleirooooT 65 سے
இந்த அரசியல் கல்வி நடவடிக்கைகள்ல மூக்கை நுழைக்கிறவரைக்கும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படப் போறதில்லை."
அந்த நல்ல மனிதர் மிக வேதனையுடன் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் மனதில் அடிக்கடி வந்து வேதனைப்படுத்தியது. நமக்குள்ளேயே நாம் முன்னேறி விடாமல் முட்டுக்கட்டைகளைப் போட்டு எவன் எக்கேடுக் கெட்டாலும் நமக்கு நாலுக்காசு கிடைத்தால் போதும் என்ற நிலையிலிருந்தால் அப்புறம் மலையகத்தில் எங்கே மறுமலர்ச்சி தோன்றும்?
முதலில் இப்படியான புல்லுருவிகளைப் பூண்டோடு களையெடுக்க வேண்டும்.
“சேர். என்ன கடுமையான யோசனை...???
பார்த்திபன் சட்டென சிந்தனை கலைந்தான். அவன் அருகில் கண்மணி நின்றிருந்தாள். என்றுமில்லாமல் அன்று தன்னை மிக நேர்த்தியாக அவள் அலங்காரம் செய்திருந்தாள். மாதவியுடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டதற்குப்பின் அவள் பார்த்திபனுடன் மாதவி அதிகமாகப் பேச விடாமல் ஒட்டாமல் இருக்கச் செய்வதில் அதிக அக்கறை செலுத்தினாள்.
"என்ன டீச்சர், என்ன விஷயம்...???
'ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இந்த முறையும் என்னையையே தயார் செய்யச் சொல்லுறாரு அதிபர். ஆனா இந்த முறை வேறு யாருக்காவது பொறுப்புக் கொடுத்தா நல்லது."
'ஏன். நீங்கதானே இவ்வளவு நாள் செஞ்சீங்க. இப்ப என்ன தயக்கம்..?

Page 41
ee ञ~ உன்னையே உறவென்று.
“என்னால தனியா செய்ய முடியாது. யாரும் உதவி செய்யவும் மாட்டேன்னுறாங்க. மணியடிச்சதும் ஒடத்தான் பார்க்கிறாங்க. நான் ரொம்ப கஷ்டப்பட்டு ஐந்துமணி வரை பாடம் நடத்துறேன்.'
"நீங்க இப்படி சொல்லக் கூடாது டீச்சர். போன முறை உங்களாலதான் ரெண்டு மூணு பேர் சரி பாஸ் பண்ணினாங்க. இந்த முறை இன்னும் கூடுதலா முயற்சி செஞ்சா ரொம்ப பேரை பாஸ் பண்ண வைக்கலாம். உங்களுக்கு நான் முழு உதவியும் ஒத்துழைப்பும் தாரேன். என்னோட விடுதியிலேயே தேநீர் எல்லாம் தயார் செஞ்சிக்கங்க. தயவு செஞ்சி ஏலாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க டீச்சர்."
கண்மணிக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவள் இதைத்தன் எதிர்பார்த்தாள். பார்த்திபனுடன் எந்த விதத்திலாவது அருகிலேயே இருக்க வேண்டும். அவன் கவனம் மாதவி பக்கம் திரும்பி விடக்கூடாது. பார்த்திபன் அவளுக்கு மட்டும்தான் சொந்தம்.
"சேர் சொல்றதுனால நான் சம்மதிக்கிறேன். நீங்க எனக்குப் பக்க பலமா இருந்தா நிச்சயமா நான் சாதிப்பேன்."
அவள் குதூகலத்துடன் மானைப் போலத் துள்ளியோடிய அதே சமயம் அதிபர் அழைப்பதாகத் தகவல் வரவே பார்த்திபன் காரியாலயம் நோக்கி நடந்தான். அங்கே அதிபர் அமர்ந்திருக்க எதிரே வயதான ஒரு ஆணும் பெண்ணும் சோர்வுடன் உட்கார்ந்திருந்தார்கள்.
"வாங்க பார்த்திபன். இவங்க ரெண்டு பேரும் ஒரு முக்கிய விஷயமா வந்திருக்காங்க. இவங்களோட மகன் பேரு ரவி. இந்தப் பாடசாலையில ஐந்தாவது வரை படிச்சி

UiToon. Fring,SldiroodT 67ے
ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் திறமையா பாஸ் பண்ணி நுவரெலியாவுல படிச்சான். ரொம்ப கெட்டிக்காரன். இந்தத் தோட்டத்துல முதன் முறையா பல்கலைக்கழகம் போன ஒரே ஒருத்தன் ரவிதான். துடிதுடிப்பானவன். தன் சமூகம் மேல அதீத அக்கறையுள்ளவன். சம்பள உயர்வு கேட்டு தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செஞ்ச போது அதுக்கு ஆதரவா நோட்டீஸ் அடிச்சி வீதியில இறங்கிப் போராடிய அவனை பயங்கரவாத சட்டத்தால போன மாசம் கைது செஞ்சி உள்ளுக்குப் போட்டுட்டாங்க. விசாரணையில்லை. வழக்கு இல்லை. யாரும் பார்க்க அனுமதியில்லை. மகன் ஜெயிலுக்குப் போனதிலயிருந்து ஏற்கனவே நோயாளியான அவங்க அம்மா படுத்த படுக்கையாயிட்டாங்களாம். இப்போ கூட கடுமையான சுகயினமான சூழ்நிலையில மகனுக்காக நம்மளைப் பார்க்க வந்திருக்காங்க."
பார்த்திபன் அனுதாபத்துடன் அவர்களைப் பார்த்தான். அந்தத் தாய் கண்களில் கண்ணிர் பெருக கையெடுத்துக் கும்பிட்டவாறு பார்த்திபனைப் பார்த்தாள்.
'எங்களுக்கிருக்கிறது ஒரே மகன். அவன் எந்த குத்தமும் செய்யலை, என்னை ஜெயில்ல போடச் சொல்லுங்க. என் மகனை விட்டுடச் சொல்லுங்க. என்னால என் மகனைப் பார்க்காம இருக்க முடியலை தம்பி.'
அந்தப் பெண் 'ஓ'வென அழத் தொடங்கவே பார்த்திபன் கண்கலங்க அவள் கைகளைப் பற்றினான். "அம்மா, அழாதீங்க. உங்க மகனை வெளியே கொண்டு வர எல்லா முயற்சிகளையும் நாங்க செய்யிறோம். அழாதீங்க."
-> --> -->

Page 42
.உன்னையே உறவென்று ܢܦ 68
fî
姆17睐
శజ్ఞత
பார்த்திபனால் அன்றிரவு முழுவதும் தூங்க முடியவில்லை. ரவியின் தாய், தந்தை இருவரும் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுத காட்சி அடிக்கடி அவன் மனதில் வந்து அவன்ை வேதனைப்படுத்தியது. செய்யாத குற்றங்களுக்காக இப்படி எத்தனை அப்பாவிகள் யாருமற்ற அநாதைகளாகக் கேட்பாரற்று சிறையில் வாடுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் உரிமைகளைக் கேட்கும் சுதந்திரமில்லையா? வாக்கைப் பெற்றவர்கள் இப்படியானவர்களின் வாழ்க்கையைப் பார்க்க மாட்டார்களா? மலையகத்தில் கல்வியில் உயர்ச்சி வந்தால் மட்டுமே அரசியலிலும் விழிப்புணர்ச்சி ஏற்படும். அவன் பல்வேறு வகையான சிந்தனைகளுடன் புரண்டு புரண்டு படுத்தான்.
மறுநாள் பாடசாலைக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு அவனுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாகப் பிரபல சட்டத்தரணியொருவரைச் சந்தித்து ரவியின் விஷயம் பற்றிப் பேசினான். அவரின் அறிவுரைப்படி மனித உரிமை இல்லத்தில் ஒரு மனுவைப் போட்டான். அன்று முழுவதும் அவன் வேறு எந்த வேலையையும் செய்யாமல் ரவியின் வழக்குச் சம்பந்தமாகவே அலைந்து திரிந்தான்.
தொடர்ந்து வந்த ஒரு சனிக்கிழமையன்று கொழும்புக்குப் போய் சிறையில் ரவியைச் சந்தித்தான். ரவி மிகவும் விரக்தி நிலையில் இருந்தான். "பட்டப் படிப்பு பாதியில் போய் விட்டது. தன் சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டிய சந்தர்ப்பமும் கானல் நீராகி விட்டது. இனி கண்ணிருடன் காலத்தைக் கழிப்பதைத் தவிர வேறு என்ன செய்வது' என அழுதான். பார்த்திபன் அவனுக்கு ஆறுதல்

Uroo. Figoldiooa 69 سے
சொன்னான். வெகுவிரைவில் அவனை வெளியே எடுப்பதாக நம்பிக்கையூட்டினான். இன்றைய மலையகத் திற்கு அவனைப் போன்ற இளைஞர்களின் சேவைதான் தேவையென அவனுக்கு அறிவுறுத்தினான். மொத்தத்தில் அவனுக்கு தைரியத்தை ஊட்டி உற்சாகப்படுத்தினான். இடையிடையே அவனைச் சிறையில் சென்று பார்த்து வருவதுடன் அவனை வெளியே எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அவன் எடுக்கத் தவறவில்லை.
காலம் ஓடியது. பார்த்திபன் அந்தப் பாடசாலையின் உயர்வுக்காக அயராது பாடுபட்டான். பாடசாலைக்கான புதிய கட்டிடங்கள் சம்பந்தமாக அதிகளவிலான முயற்சிகளை மேற்கொண்டான்.
அவன் எண்ணம், செயல், மூச்சு யாவுமே அந்தப் பாடசாலையின் முன்னேற்றத்தின் மீதே இருந்தது. ஒய்வு ஒழிச்சலில்லாமல் ஒடியாடி வேலை செய்தமையினால் அவன் உடல் சோர்வுற்றது. ஒருநாள் காய்ச்சலில் வீழ்ந்து விட்டான். காலையில் எழ முடியவில்லை. உடம்பு நெருப்பாகச் சுட்டது. சரியான நேரத்திற்குப் பாடசாலையி லிருப்பவன் அன்று வராமல் போகவே இடைவேளை நேரத்தில் கண்மணி அவனைத் தேடி அவனுடைய விடுதிக்குச் சென்றாள். அவன் முனகியவாறு இழுத்திப் போர்த்தியிருந்த விதம் அவளுக்கு வேதனையை உண்டாக்கியது. −
“என்ன சேர். ரொம்ப சுகமில்லை போல. எனக்கு ஒரு வார்த்தை சொல்லியனுப்பியிருக்கலாம்தானே."
அவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவன் மறுப்பையும் பொருட்படுத்தாமல் அடுப்பை மூட்டி கோப்பி தயாரித்துக் கொடுத்தாள். அறையை ஒழுங்கு

Page 43
.உன்னையே உறவென்று ܢ 7O
படுத்திவிட்டு வைத்தியரை அழைத்து வர வெளியே சென்ற அதே சமயம் பதற்றத்துடன் மாதவி வந்தாள்.
‘என்ன சேர், சுகமில்லைன்னு இப்போதுதான் கேள்விப்பட்டேன். கண்மணி டொக்டரை அழைத்து வரவா போயிருக்கா."
"ஆமாம். எனக்காக ஏன் நீங்க வீணா சிரமப் படுறிங்க. போங்க. படிப்பு வீணாயிடப் போகுது."
'உங்களை இந்த நிலையில விட்டுட்டு எங்களை அங்கே போய் பாடம் நடத்தச் சொல்லுறீங்களா.. இன்னைக்கி ஒரு நாள் பாடம் நடத்தாது போனா ஒண்ணும் குறைஞ்சிடாது."
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அதிபரும் வந்து விட்டார். அவர்கள் காட்டும் பரிவும் பாசமும் அவனுக்குக் கண்களில் கண்ணிரை வரவழைத்தது. கண்மணி வைத்தியருடன் வந்தாள். அவர் பரிசோதித்துவிட்டுமருந்து கொடுத்தார். மாதவியை அந்த இடத்தில் பார்த்தபோதும் கண்மணி எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவளை எதுவுமே செய்யவிடாமல் தானே அனைத்தையும் செய்தாள். அன்று மாலை வேலை முடிய அந்தப் பகுதி தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக அவனைப் பார்க்க வந்தனர். அவர்களின் அன்பில் அவன் திக்குமுக்காடிப் போனான். உயர்ந்த இலட்சியம் கவலைகளைத் தகர்க்கும். மக்களின் அன்பைப் பெருக்கும்.
மாதவி இப்போது அடியோடு மாறிவிட்டாள். ஒரு
பெண் எப்படியெல்லாம் இருக்கக்கூடாதென்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவள் இப்போது எப்படியிருக்க

பாலா. சங்குபிள்ளை 71 سے |
வேண்டுமென்பதற்கு இலக்கணமாகத் திகழத் தொடங்கி னாள். ஆசிரியத் தொழிலைப் பொழுதுபோக்காக நினைத்த அவளே இன்று அதை உயிர் மூச்சாக நினைக்கத் தொடங்கி விட்டாள். அவளின் பெற்றோருக்கே அவளின் மாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒருபுறம் அந்த மாற்றத்திற்காக அவர்கள் மனம் மகிழ்ந்தாலும்கூட அவர்களின் கெளரவத்துக்கு ஏதாவது இழுக்கு வரும் வகையில் நடந்து கொள்வாளோவென்ற பயமும் இருந்தது.
அண்ணாமலையைப் பொருத்தவரை அவள் எப்படியிருந்தாலும் அதைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. ஆனால் அவன் கட்டும் தாலி மட்டும்தான் அவள் கழுத்தில் ஏறவேண்டும். அந்தச் சொத்து முழுவதும் அவன் கைக்கு வரவேண்டும். இந்த நிலையில் மாதவி அடிக்கடி குறிப்பிட்ட ஒரு ஆசிரியருடன் பழகுவதாகவும் எந்நேரமும் அவனைப் பற்றியே பேசுவதாகவும் அவன் காதுக்கு செய்தி எட்டியபோது அவன் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினான். அவள் கல்வி கற்பிக்கும் பாடசாலை அமைந்துள்ள தோட்டத்தில் அவனுக்கு வேண்டிய ஒருவன் இருக்கிறான். அவனை வைத்து விசாரித்தபோது குறிப்பிட்ட விடயம் உண்மையெனவும் அந்த ஆசிரியர் பெயர் பார்த்திபன் என்றும் தெரிந்து கொண்டான். அவனுக்குக் கடுங்கோபம் உண்டானது. சந்தர்ப்பம் ஒன்றுக்காகக் காத்திருந்தான்.
மாதவி இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வில்லை. அவள் மனதில் பார்த்திபன் நிரந்தரமாகக் குடியேறிவிட்டான். அவனில்லாமல் அவளால் வாழ முடியாது. அவன் மனதில் இடம் பிடிப்பதற்காகத்தான் தன்னையே முழுவதுமாக மாற்றிக் கொண்டாள். மாணவர் களுக்குப் படித்துக் கொடுப்பதிலாகட்டும் ஏழை மாணவர்

Page 44
| 72 -> உன்னையே உறவென்று.
களுக்கு உதவுவதாகட்டும் அவள் தயங்காமல் உளப்பூர்வ மாகச் செய்தாள். அவள் செய்த நல்ல விஷயங்கள் அவளுக்கு நன்றிகளாக வந்து சேர்ந்தபோது அந்தச் சுகத்தில் அவள் மெய்ம் மறந்தாள். அதை மனதார அனுபவித்தாள்.
- - ->
e
18 it
g
10ர்த்திபனுக்கு அன்று சிறையிலிருக்கும் ரவியின் வழக்கு விஷயமாக அவசரமாக வக்கீலைப் பார்க்க வேண்டியிருந்தது. அத்துடன் நுவரெலியா பூங்காவிற்கு மாணவர்களின் ஒரு பகுதியினரை அழைத்துச் செல்லும் பொறுப்பு மாதவியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனவே அவள் காலையிலேயே மாணவர்களை அழைத்துச் சென்று விட்டாள். காலை மற்றும் பகல் உணவுக்கான செலவு களைக் கூட அவளே ஏற்றுக் கொண்டாள். கண்மணி இன்று எப்படியாவது பார்த்திபனிடம் தன் உள்ளத்திலுள்ளதில் ஒரு பகுதியையாவது கொட்டிவிடலாம் என எண்ணி யிருந்தாள். ஆனால் அவனும் நுவரெலியா நகருக்குப் போவானென்று எதிர்பார்க்கவில்லை. மாதவி வேறு போயிருக்கிறாள். அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. கொலு மண்டபங்களைப் போலவே குடிசைகளிலும் குடியிருப்பது காதல், நிதானமோ அளவு கோலோ இல்லாததுதான் காதல்.
பார்த்திபன் வக்கீலைப் பார்த்துப் பேசி முடிக்கும் போது பகல் பொழுதாகி விட்டது. உணவகமொன்றில் உணவருந்தி விட்டு மாணவர்கள் என்னானார்களென்பதைப்

பாலா. சங்குபிள்ளை _7ےB
பார்ப்பதற்காகப் பூங்காவை நோக்கி நடந்தான். அங்கே மாணவர்கள் கும்பல் கும்பலாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க மாதவி மட்டும் ஒரு பெரிய மரத்தினருகில் போடப் பட்டிருந்த சிமெண்ட் நாற்காலியில் தனியாக அமர்ந்திருந்தாள். அவன் அவளை நோக்கி நடந்தான். அவளை அண்மித்த போது அவள் அவனைக் கண்டவுடன் சட்டென எழுந்து நின்றாள். வாடியிருந்த அவள் முகம் அவனைக் கண்டதும் ரோஜாவாகிச் சிரித்தது.
‘என்ன டீச்சர், தனிமையிலயிருந்து இனிமை காணுறீங்க போல. சாப்பிடலையா..?"
"நீங்க வருவீங்கன்னு நினைச்சேன். உங்களுக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வந்தேன். தனியா சாப்பிட ஒரு மாதிரியா இருந்திச்சி. அதுதான். நீங்க வந்ததும்.'
அவன் இதை எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு வெட்கமாகப் போய்விட்டது. அவளைப் பற்றி நினைக்காமல் அவன் பாட்டிற்குத் தனியாகப் போய் சாப்பிட்டு விட்டான். ஆனால் அவளோ அவனுக்காகக் காத்திருக்கிறாள். அவனுக்குச் சட்டென சாந்தினியின் நினைவு வந்தது.
அவளும் அப்படித்தான். ஒரு டொபி துண்டு கிடைத்தாலும் அவனுக்கு ஒரு துண்டைக் கொடுத்து அவனுடன் சேர்ந்தேதான் சாப்பிடுவாள். அது காதல். அப்படியானால் இது என்ன? அவனுக்குக் கொடுக்கப்படும் ஒரு மரியாதையா. காதல் என்பது உலகைச் சுற்றி மூன்று பக்கமும் தண்ணிர். ஆனால் நான்கு பக்கமும் காதல். அவன் இதயத்தில் ஏற்கனவே ஒருத்தி அழியாத காதலுடன் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அங்கே இனி யாருக்கும் இடமில்லை.

Page 45
.உன்னையே உறவென்று ܥܠ 721
“என்ன சேர் திடீர்ன்னு மெளனமாயிட்டீங்க."
"ஒண்ணுமில்ல. எனக்காக நீங்க ஏன் டீச்சர் வீணா காத்திருக்கீங்க. நான் வராமலே போயிட்டா. பட்டினியாகவா இருப்பீங்க."
"நிச்சயமா...??
அவனுக்கு மேற்கொண்டு என்ன பேசுவதென்று ஒன்றும் விளங்கவில்லை. அவளை அவன் வெகு நாட்களாக அவதானித்துக் கொண்டுதானிருக்கிறான். ஆனால் அவள் கிட்டே வரும்போதெல்லாம் அவன் எட்டப் போய் விடுகிறான்.
'டீச்சர். சரி வாங்க சாப்பிடுவோம். நான் முன்னாடிப் போறேன். நீங்க பிள்ளைகளை இன்னும் கொஞ்சம் சுற்றிக் காட்டிட்டு பகாடசாலைக்குக் கூட்டிட்டு வந்திடுங்க."
பார்த்திபன் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டிருந்தபோதும் அவள் சாப்பிட வேண்டுமேயென்ற நல்ல நோக்கத்தில் அவளுடன் சேர்ந்து சாப்பிட்டான். அவனுடன் சேர்ந்து சாப்பிட அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது. அவள் மனம் முழுவதும் பரவசமாகியது. இதயத்தில் ரோஜா மலர்ந்தது. மூச்சுக் காற்றில் வாசனை பிறந்தது.
பார்த்திபன் அவளிடம் விடைபெற்றுக்கொண்டு நடந்தான். மறுபடியும் அவள் முகம் வாடியது. கண்கள் கலங்கின. உள்ளத்து ரோஜா நெருப்பில் வாடியது. மூச்சுக் காற்றில் உஷ்ணம் வெளிப்பட்டது.
பார்த்திபன் நகர்ப்புறத்துக்கு வந்தான். அப்போது யாரோ ஒருவன் பார்த்திபனை அண்ணாமலைக்கு அடையாளம் காட்டவே எங்கோ போவதற்காக மோட்டார் சைக்கிளில்

பாலா. சங்குபிள்ளை 75 سے
ஏறப்போனவன் இரண்டு பேர்களுடன் அவனை நோக்கி வேகமாக வந்தான்.
அண்ணாமலையை யாரென்று பார்த்திபனுக்குத் தெரியாது. இதற்கு முன் அவனைப் பார்த்ததும் இல்லை. எனவே சட்டென அவன் எதிரே நின்றவனைப் புரியாமல் பார்த்தான் பார்த்திபன்.
"நீ தான் பார்த்திபன் மாஸ்டரா."
"ஆமா! நீங்க யாரு..?*
"உன்னோட ஒண்ணா வேலைப் பார்க்குதே மாதவி அது யார் தெரியுமா..?’
"நான் எதுக்கு அதெல்லாம் தெரிஞ்சிக்கணும்.?
"என்ன பெரிய வாத்தியார்ன்னு நினைப்போ. மாதவி எனக்கு முறைப் பொண்ணு. நான் தான் கல்யாணம் கட்டப் போறேன்."
"சரி. தாராளமா கட்டிக்கங்க. அதையேன் என்கிட்ட சொல்லுறீங்க."
“என்ன நக்கல் பண்ணுறீயா. இங்கப் பாரு. நான் ரொம்பவும் பொல்லாதவன். என்னோட விஷயத்துல யார் தலையிட்டாலும் முண்டமாக்கிடுவேன்."
"இங்கப் பாருங்க மிஸ்டர். பாதையில பார்த்து நடந்துக்கங்க. அநாகரிகமா பேசாதீங்க. நான் வாத்தியார் தான். அதே சமயம் என் கிட்டே தேவையில்லாம வம்பு வச்சிக்கிட்டா நான் ரொம்ப பொல்லாதவனாயிடுவேன்."

Page 46
.உன்னையே உறவென்று ܥܠ 7G
அண்ணாமலை மீசை துடிக்கக் கடுங்கோபத்துடன் அவனைப் பார்த்தான்.
'ஏய். என்ன என்னையே அதட்டுறீயா. இந்த அண்ணாமலை நினைச்சா உன்னை அடியோடு ஒழிச்சிடுவான். மாதவி எனக்குச் சொந்தமானவ. ஒழுங்கா நான் சொல்றதைக் கேட்டு நடந்துக்க. நான் ஜெயிலுக்குப் போகவும் தயங்க மாட்டேன்."
அவன் பாதையென்றும் பார்க்காமல் 'வாள் வாளென' சத்தம் போட்டு விட்டு மோட்டார் சைக்களில் ஏறிப் பறந்தான். பார்த்திபன் வியர்த்திருந்த முகத்தை கைக்குட்டையினால் அழுந்தத் துடைத்துக் கொண்டான். அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. செய்யாத தவறுக்காகப் பொய்யான குற்றச்சாட்டுகளை வீசிவிட்டுச் செல்லும் அவன் மேல் ஆத்திரம் மேலிட்டது. ஆனாலும் அடக்கிக் கொண்டான். இதையெல்லாம் பெரிது படுத்தினால் அவனுடைய லட்சியங்கள் எல்லாமே வீணாகிவிடும். பொறுத்தார் பூமியாள்வாரென்பது அவனுக்கும் தெரியும்.
令令令

பாலா. சங்குபிள்ளை 77ےر
曲19邯
நீட்கள் வேகமாக ஓடியது. அவன் அந்தப் பாடசாலைக்கு வந்து ஓராண்டு பூர்த்தியாகியது. அந்தப் பாடசாலைக்கான மேலதிகக் கட்டிடம் சம்பந்தமாக அவன் முயற்சியைக் கைவிடாது, மேலிடத்திற்குக் கடிதங்கள் எழுதியதுடன் நேரடியாகவும் முயற்சிகளை மேற் கொண்டான். இதனால், அந்த விடயம் சம்பந்தமாக உடனடியாகக் குறிப்பிட்ட பாடசாலைக்குச் சென்று ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி மேலிடத்தில் உத்தரவு வரவே முட்டுக்கட்டைகளைப் போட்டவர்கள் உடனடியாக இயங்கத் தொடங்கினார்கள். அந்தப் பாடசாலையிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் எதிர்பாராதவிதமாக அதிகம் பேர் சித்தியடைந்தமையினால் அந்தப் பாடசாலையின் மேல் உயர் அதிகாரிகளின் பார்வை திரும்பத் தொடங்கியது.
பார்த்திபனுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மிகவும் பின் தங்கிய அந்தத் தோட்டப் பாடசாலையிலிருந்து அதிகமானோர் சித்தியடைய முழுக்காரணமாக அமைந்தது கண்மணி யாகும். அவன் மிக மகிழ்ச்சியுடன் அவளைப் பாட சாலையில் சந்தித்தான்.
'டீச்சர், நம்ம பாடசாலையோட பெருமையை உணர்த்திட்டீங்க. உண்மையிலேயே எனக்குப் பெருமையா இருக்கு."
'இல்லை சேர், இதுக்கெல்லாம் காரணமானவரே நீங்கதான். நீங்க கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் தான் என்னை இந்தளவு வெற்றியடையச் செஞ்சது.

Page 47
.உன்னையே உறவென்று ܢܦ 78
சித்தியடைஞ்ச மாணவர்களோட பெற்றோர் என் கைகளைப் பிடிச்சிக்கிட்டு கண் கலங்கிறப்போ என் மனசுல பட்டாம்பூச்சி பறக்குது. நாம மனமார ஒருத்தருக்கு நன்மை செஞ்சா அது நம்ம மனசையே மலரச் செய்யும்னு நீங்க சொல்லு வீங்க. அதை இப்பதான் நேரடியா அணு பவிக்கிறேன். எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்."
'அட என்ன டீச்சர், என்னைப் போய் புகழுறீங்க. கஷ்டப்பட்டது நீங்க. கடமையைச் செஞ்சீங்க. பலனை அனுபவிக்கிறீங்க."
"அப்புறம் சேர். உங்கக்கிட்ட மனம் விட்டு சில விஷயங்கள் பேசணும். எப்போ ஒய்வா இருப்பீங்க...??
"எனக்கேது டீச்சர் ஒய்வு ஒழிச்சல், ரொம்ப முக்கிய விஷயமா இருந்தா இன்னைக்கி மாலையிலேயே பேசலாம்தான். ஆமா அவ்வளவு முக்கிய விஷயமா டீச்சர்!??
அவள் முகம் குங்குமமாகியது. "இல்லன்னா சொல்லுவேனா..."
'சரி மணியடிச்சிடுச்சி. பாடசாலை விட்டதும் பார்க்கலாம்."
அவள் சந்தோஷத்துடன் புள்ளி மானைப் போல துள்ளியவாறு ஓடினாள். ஆனால் அவள் மனதிலுள்ளதை கடைசிவரை அவனிடம் சொல்லவே போவதில்லை யென்பது அவளுக்கெங்கே தெரியப் போகின்றது.
அந்த வீட்டின் உள் அறையில் அருள்மணியும், பசுபதியும் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தார்கள். இருவர்

Uroom. Figólát606I 79 سے |
கைகளிலும் புகையும் சிகரட்டும் மது ஊற்றப்பட்ட கண்ணாடி கிளாசும் இழுந்தது. அது பசுபதியின் வீடு. வீட்டில் யாருமில்லை.
“என்ன அருள், அவன் பார்த்திபனால் நாம நல்லா மாட்டிக்கப் போறோம்னு நினைக்கிறேன். பாடசாலைக்குப் புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி கிடைச்சி பணமும் ஒதுக்கிட்டாங்க. அதுவுமில்லாம உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா..?"
‘எல்லாம் தெரியும். நம்மளோட வண்டவாளங் களையெல்லாம் ஆதாரத்தோட திரட்டி வச்சிருக்கான். அதை இன்னமும் கொடுக்கல்லை. கொடுத்துட்டால நமக்கு சங்குதான்."
“அவன் அதைக் கொடுத்து நடவடிக்கை எடுக்கிறதுக்கு முன்னால ஏதாவது செஞ்சாகனுமே."
"நாம நேரடியாகச் செய்ய ஏலாது. மாதவி டீச்சரோட மாமா அண்ணாமலைக்கு அவனைப் புடிக்காது. மாதவியைக் கட்ட வேண்டிய முறை மாமன்தான் அவன். பார்த்திபனைப் பற்றி என்னிடம் அடிக்கடி விசாரிப்பான். விடுவேனா நான். நல்லாவே போட்டுக் கொடுத்துடுவேன்."
‘அப்படின்னா. நாம எதுவும் செய்யத் தேவையில்லை. அண்ணாமலையே பாத்துக்குவான்."
"அப்படி அவன் பாத்துக்குவான்னு நாம சும்மா இருக்க முடியாது. நம்மளைப் பற்றி அவன் செய்து வச்சிருக்கிற ஃபைல் மேலிடத்துக்குப் போறதுக்கு முன்னாடி அவனை மேலே அனுப்பிடனும். இல்லன்னா இதுனால கீழே விழுந்துட்டு அப்புறம் எழும்பவே முடியாது.

Page 48
80 a உன்னையே உறவென்று.
பசுபதியும் அருள்மணியும் பார்த்திபனைப் பற்றி இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் அதே சமயம் அன்று பார்த்திபனிடம் டியூஷன் படிக்க வந்த சுமங்கலி வீட்டுக்குத் திரும்பவில்லை. பார்த்திபனிடம் கேட்டபோது அவன் அன்று சுமங்கலி வரவேயில்லையென்றான். அத்துடன் அவன் மேல் யாரோ இல்லாததும் பொல்லாததும் சொல்லி பெட்டிஷன் போடவே விசாரணைக்காக கொழும்பு வரச் சொல்லியிருந்தார்கள். அவன் தொடர்ந்து ஒரு மாதம் பாடசாலை விடுமுறை வரவே மேலதிகமாக இன்னொரு மாதம் லீவும் பெற்றான்.
மாதவி அன்று மிகவும் பரபரப்புடன் காணப்பட்டாள். மாலை ஆறுமணியிருக்கும். அண்ணாமலை மாதவியின் தந்தை சுந்தரத்துடன் தனியறையில் அந்தரங்கமாகப் பேசவே அவள் ஒட்டுக் கேட்கத் தொடங்கினாள்.
'அண்ணாமலை இதனால் ஏதும் பிரச்சனை வராதா...???
"மாமா, நான் விசாரிச்ச வகையில அவன் பார்த்திபன் சாதியில குறைஞ்சவன். அவனோட மாதவி ரொம்ப நெருக்கமா பழகுறா. நாளைக்கி ஏதும் கசமுசா நடந்துட்டா நம்ம மானம் தான் போகும். இன்னைக்கி ராத்திரி ஏழு மணிக்கு ஏற்பாடு செஞ்சிட்டேன். அவனை அடிச்சி மலையில இருந்து உருட்டி விடுவாங்க. அதோட ஆள் காலி. அவனோட உருவம் தெரியாதளவுக்கு முகத்தை சிதைச்சி சித்திரவதை செஞ்சிதான் உருட்டிவிடுவாங்க. ஆள் யார்ன்னு தெரியாது. கொஞ்சம் பணம் செலவழிச்சா கேசே இல்லாமல் போயிடும்.
அண்ணாமலை சொல்லி முடிக்கவும். "அடப்பாவி..." என மாதவி தன்னிலை மறந்து கத்தி விட்டாள். அண்ணாமலை ஓடோடி வந்து அவளைப் பலவந்தமாக

பாலா. சங்குபிள்ளை 81ے۔
இழுத்துவந்து ஒரு அறையில் போட்டு பூட்டினான். தன் திட்டத்தில் ஒரு மாற்றம் செய்தான். பார்த்திபன் விடியற்காலை கொழும்பு போவதாக ஏற்கனவே பசுபதி மூலம் தெரிந்து கொண்டிருந்தான். எனவே அந்த நேரத்தில் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தான். மாதவி அறைக்குள்ளிருந்து கத்தினாள். கதறினாள். பார்த்திபனை எப்படியாவது காப்பாற்றிவிடத் துடித்தாள். கடைசியாக இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்தான் கைபேசி மூலமாக அன்னக்கிளியுடன் தொடர்புகொள்ள முடிந்தது.
K () ()
一排20肆一
கோழியாயிருந்தால் முட்டையிட வேண்டும் சேவலா யிருந்தால் கூவ வேண்டும். கடமையை எந்த நிலையிலும் செய்யத் தயங்கவோ தவறவோ கூடாது. ஆனால் பார்த்திபன் தன் கடமையைத்தானே செய்தான். நல்லதையே நினைத்து நன்மையே செய்யத் துணிந்த வனுக்குக் கடைசியில் என்ன நடந்தது. நல்லதுக்குக் காலமில்லையா. நல்லவர்கள் வாழ இது காலமில்லையா. இது முன்னால் நடந்த கதை. இனி பின்னால் என்ன நடக்கப் போகின்றது?
கொழும்பு அரசு மருத்துவமனையின் விசேடப் பிரிவு. இன்ஸ்பெக்டர் சிவாகரன் வைத்தியர்கள் சிலருடன் உரையாடியவாறு இன்னமும் சலனமின்றியிருந்த அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

Page 49
82 a. உன்னையே உறவென்று.
'என்ன டொக்டர். நேற்றோடு இரண்டு மாதம் முடிந்து விட்டது. இன்னமும் இவனுக்கு நினைவு திரும்ப வில்லையா...'
'இல்லை இன்ஸ்பெக்டர், நினைவும் திரும்பல்லை! எந்தவிதமான மேலதிகத் தகவலும் இவனிடமிருந்து பெற முடியவில்லை...'
'ம். இந்தக் கேஸை முடிக்கிறதாயிருந்தா இவன் பேசணும். இல்லன்னா சாகணும். எனக்கும் நேரமில்லை. அதனால் நேரடியா நுவரெலியா போகமுடியாம இருக்கு. அங்கேயிருந்து சரியான - தேவையான தகவல்களும் கிடைக்க மாட்டேன்னுது. ஏதாவது மாற்றம் ஏற்பட்டா உடனே எனக்கு தகவல் சொல்லுங்க. நான் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நுவரெலியா போகப் பார்க்கிறேன்.
+ + 4
கண்மணி மணியைப் பார்த்தாள். காலை ஏழுமணியாகிவிட்டிருந்தது. அவள் சற்று மெலிந்திருந்தாள். முகத்திலிருந்த பொலிவு காணாமல் போயிருந்தது. பார்த்திபன் எப்போது காணாமல் போனானோ அன்றிலிருந்து அவள் முகத்திலிருந்த மலர்ச்சியும் உள்ளத்திலிருந்த மகிழ்ச்சியும் காணாமல் போய் விட்டது. அவன் இரண்டு மாத விடுமுறை எடுத்திருந்தமையினால் அதிபரால் உடனடியாக எதுவும் செய்ய முடியவில்லை. நேற்றுடன் இரண்டு மாதம் முடிந்து விட்டது. இன்று சட்டப்படி அதிபர் அவன் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடும். அவன் போனதிலிருந்து அருள்மணி, பசுபதியின் கொட்டம் அதிகரித்து விட்டது.

Uroom. Figoldiooo __8ےB
காலையில் நேரம் கழித்துப் பாடசாலைக்கு வருவது மட்டுமல்ல கையெழுத்தை மட்டும் போட்டுவிட்டு சில வேளைகளில் சொந்த வேலை பார்க்கப் போய் விடுவார்கள். மேலும் பார்த்திபன் மிகவும் கஷ்டப்பட்டு அந்தப் பாடசாலைக்கு மேலதிகமாகக் கிடைக்க வேண்டிய கட்டிடத்தையும் கிடைக்கவிடாமல் செய்வதற்காகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்கள். குலத்தைக் கெடுக்க வந்த இத்தகைய கோடரிக் காம்புகள் இருப்பதனால்தான் மலையகம் இன்னமும் கல்வியில் கரைசேர முடியாமல் இருட்டிலேயே இருக்கின்றது.
கண்மணி மெதுவாக மண் பாதையில் நடந்தாள். "டீச்சர். நாம இருக்கிறவரைக்கும் நம்ம சமூகத்துக்கு ஏதாவது செய்தாகணும். படிச்ச படிப்பை வச்சி அவங்களை முன்னேற்றணும். நம்ம லயத்துல இருந்து நிறையப் பேர் பல்கலைக் கழகம் போகணும். பட்டம் பெறணும். அதுக்கு நாம உயிரைக் கொடுத்தாவது அவங்களுக்குக் கல்விச் செல்வத்தைத் தரணும்."
கண்மணிக்குச் சட்டென கண் கலங்கியது. சொன்ன மாதிரியே பார்த்திபன் இந்தச் சமூகத்திற்காக உயிரையே கொடுத்து விட்டானா? அவளுக்கு மனதில் இன்னுமொரு தீராத சந்தேகம் இருந்தது. சுமங்கலி மூங்கில் புதரொன்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்டிருக்கின்றாள். பார்த்திபனைக் கேட்டபோது அன்று அவள் பாடம் படிக்க வரவேயில்லை என்றிருக்கிறான். ஆனால் அவள் பார்த்திபனின் பாடசாலை விடுதியறைக்குள் நுழைந்ததை கண்மணி பார்த்திருக்கிறாள். அப்படியானால் என்னதான் நடந்திருக்கும். பார்த்திபன் பெண்களை மதிப்பவன். யாரையும் ஏறெடுத்துப் பார்க்காதவன்.

Page 50
.உன்னையே உறவென்று ܢܦܠ 821
அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. மண்டை வெடித்துவிடும் போல இருந்தது. அவனைக் காணாத கண்கள் ஆதவனை எதிர்பார்க்கும் தாமரையைப் போல சோர்வுடன் வாடிக்கிடந்தது.
அவள் பாடசாலையை அடைந்தபோது எட்டு மணியாகி விட்டிருந்தது. மாதவியும் பார்த்திபன் காணாமல் போன நாளிலிருந்து பாடசாலைக்கு வரவில்லை.
அவள் அதிபருக்கு விடுப்புக் கேட்டுக் கடிதம் போட்டிருப்பதாக அதிபர் கூறக் கேட்டிருக்கிறாள். பார்த்திபன் இல்லாத அந்தப் TL96) G) களையிழந்திருந்தது. கண்மணி பாடசாலையை அடைந்தாள். தன்னுடைய வகுப்புக்குள் நுழைந்தாள். அப்போது பாடசாலையருகில் ஒரு மூன்று சக்கர வண்டி வந்து நின்றது. அதிலிருந்து தோல் பையுடன் இறங்கியவன் பார்த்திபன்! ஆம் பார்த்திபனே தான் ஒட்டோ சத்தம் கேட்டு வெளியே வந்த அதிபர் காசிநாதன் அதிர்ச்சியுடன் அப்படியே நின்றுவிட்டார். அவரால் அவர் கண்களையே நம்பமுடியவில்லை.
பார்த்திபன் ஒட்டோவை அனுப்பிவிட்டு புன்சிரிப்புடன் அதிபரைப் பார்த்தான்.
‘என்ன சேர். என்ன அப்படிப் பார்க்கிறீங்க. என்னோட இரண்டு மாச லீவு நேற்றோட முடிஞ்சிடுச்சி. அதுதான் இன்றைக்கே ஓடி வந்துட்டேன்."
'வாங்க... பார்த்திபன். உங்களுக்கு ஒண்ணுமில்லையே..??
"ஏன் அப்படி கேட்கிறீங்க...???
'இல்ல. உங்களை யாரோ அடிச்சி. நீங்க காணாமப் போயிட்டதா."

பாலா. சங்குபிள்ளை 85ےر
'அட. எந்தத் தகவலும் இல்லாம நான் இருந்தது என்னோட தவறுதான் ரயில்ல வந்தது. ரொம்ப களைப்பா இருக்கு. அறைக்குப் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்.
பார்த்திபன் சொல்லிவிட்டு அறையை நோக்கி நடக்க காசிநாதன் இன்னமும் எதையுமே நம்ப முடியாமல் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார்.
பார்த்திபன் பாடசாலை விடுதி அறையை அடைந்தான். அதே சமயம் விஷயம் கேள்விப்பட்ட கண்மணி பரபரப்புடன் அவனைக் காண ஓடினாள். அங்கே அவனைக் கண்டவுடன் அவள் கண்களில் கண்ணிர் அவளையறியாமலேயே பெருகத் தொடங்கியது.
'பார்த்திபன். நீங்களா. உங்களுக்கு ஒன்று மில்லையே..!" பார்த்திபன் எரிச்சலுடன் அவளைப் பார்த்தான்.
'அட என்னடா இது வம்பா போயிடுச்சி. உங்களுக்கெல்லாம் என்னாச்சி."
令令令
ليبية
கிண்மணி வகுப்பறையில் இருந்தாள். அவளால் இன்னமும் பிரமையிலிருந்து விடுபட முடியவில்லை. ஒரு பக்கம் அதிசயமாகவும் இன்னொரு பக்கம் மகிழ்ச்சி யாகவும் இருந்தது. பார்த்திபனை அடித்துக் குற்றுயிராகக் கொண்டு போனதை பல பேர் பார்த்திருக்கிறார்கள். அன்னக்கிளிதான் தகவல் கிடைத்து உடனடியாக

Page 51
.உன்னையே உறவென்று ܢܦܠ 35
பொலீசுக்கும் அறிவித்திருக்கிறாள். அப்படியானால் பார்த்திபன் இறக்கவில்லையா? அவனைப் பார்த்தால் அடிபட்டவனைப் போல தெரியவில்லை. எந்தவித காயத்தையும் காண முடியவில்லை. மேலும் வழமை யாகவே அவன் இருக்கிறான். இது என்ன கண்கட்டி வித்தை.
அதிபர் காசிநாதனிலிருந்து அந்தத் தோட்ட மக்கள் அனைவருமே ஆச்சரியப்பட்டுப் போனார்கள். பார்த்திபனைக் கடுமையாகத் தாக்கி வேனில் ஏற்றியதைச் சில தோட்டத் தொழிலாளர்கள் கேள்விப்பட்டு அந்த இடத்துக்கு விரைந்து வந்ததுமல்லாமல் வேனையும் துரத்தியிருக்கிறார்கள். ஆனால் வேன் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்துவிட்டது. பார்த்திபனைப் பார்க்க அந்தத் தோட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தபோது பார்த்திபன் அவர்களைச் சமாளித்து அனுப்ப மிகவும் சிரமப்பட்டான். அவர்களின் அன்பில் திக்குமுக்காடிப் போனான். சிலர் ஏராளமான கொழுந்து மாலைகளைச் செய்து அவன் கழுத்தில் போட்டனர். மொத்தத்தில் அவன் அவர்களின் அன்பிலும் ஆதரவிலும் மெய்சிலிர்த்துப் போனான்.
அருள்மணியும், பசுபதியும் அவன் உயிருடன் வந்ததை எதிர்பார்க்கவில்லை. இது எப்படி சாத்தியம்? வந்திருப்பது உண்மையிலேயே பார்த்திபன்தானா? அவர்கள் கதிகலங்கித்தான் போனார்கள். இரண்டு மாதமாக அவர்கள் இருவரும் கேட்க யாருமில்லாமல் இஷ்டப்படி காரியங்களைச் செய்தார்கள். ஆனால் இப்போது மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டதா?
பாடசாலை முடிந்தது. கண்மணியினால் கடமையில் கவனம் செலுத்த முடியவில்லை. அவள் நினைவுகள் யாவும் பார்த்திபனைச் சுற்றியே வட்டமிட்டது. பாடசாலை

பாலா. சங்குபிள்ளை 87ے
முடிந்ததுமே பார்த்திபனைப் பார்ப்பதற்காக அவனின் விடுதியறைக்குச் சென்றாள்.
பார்த்திபன் வழமை போல டியூஷன் கொடுப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.
"வாங்க டீச்சர். உட்காருங்க." "உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்."
'இங்க பாருங்க டீச்சர். நான் சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க. என்னை நீங்க என்னமோ மாதிரி பார்க்கிறீங்க. என்னவெல்லாமோ கேள்வி கேட்குறீங்க. நான் கொழும்பில் புதுசா ஒரு பாடநெறி செய்ய வேண்டியிருந்திச்சி. அதுதான் மேலதிகமா ஒரு மாசம் லீவு எடுத்தேன். வேறு ஒண்ணுமே பெரிசா நடக்கல்ல."
“வந்து. சுமங்கலி.'
"ஆமாம். பாவம். நல்லா படிக்கிற பொண்ணு. யாரோ அயோக்கியன் மிருகமா மாறி அந்த பூவைக் கசக்கி எறிஞ்சிட்டான். அவன் நல்லா இருக்க மாட்டான்."
"நீங்க எந்தப் பிரச்சனையுமில்லாம கொழும்பு போய் சேர்ந்துட்டீங்களா..???
'அட ஆமாம் டீச்சர். எல்லாருமே என்னைத் திரும்பத் ம்ப ஏன் இதையே கேட்குறிங்கன்னு புரியலை." (05 குற 99)
கண்மணி அதற்குமேல் அவனிடம் எதுவும் பேசவில்லை. அவள் அடிமனதில் இன்னமும் சில சந்தேகங்கள் இருந்தபோதும் தொடர்ந்து ஒன்றும் கேட்கவில்லை. ஆனாலும் அவனைப் பார்த்ததில் சந்தோஷம் ஏற்பட்டதை அவளால் மறுக்க முடியவில்லை.

Page 52
உன்னையே உறவென்று.
"சேர். சாப்பாடு."
"இல்ல டீச்சர். வரும்போதே சாப்பாடு பார்சல் கொண்டு வந்துட்டேன். நாளைக்குப் பார்ப்போம்."
"அப்போ. நான் வாறேன்."
"சரி, நாளைக்குப் பார்க்கலாம்."
அவள் தலைகுனிந்தவாறு வெளியே வந்தாள். நீண்ட நாட்களுக்குப் பின் அவளுக்குப் பசித்தது. ஒழுங்கான சாப்பாடில்லாமல் உடல் மெலிந்து சற்று அசிங்கமாக இருந்தாள். வாடியிருந்த அவள் முகம் ஆதவனைக் கண்ட சூரியகாந்தியைப் போல மலர்ந்தது. உள்ளத்தில் உவகை தோன்றியது. உடலில் உற்சாகம் தோன்றியது.
அன்னக்கிளி பாடசாலை விட்டதுதான் தாமதம் புயல் போல புறப்பட்டாள். மாதவியின் மாளிகையை அடைந்தாள். பரபரப்புடன் வேகமாக வரும் அவளை ஆச்சரியத்துடன் மாதவியின் தந்தை சுந்தரம் பார்த்தார். ஆனால் அவரிடம் அவள் எதுவும் சொல்லாமல் மாதவியின் அறையை நோக்கிச் சென்றாள். மாதவி விட்டத்தை முறைத்துப் பார்த்தவாறு படுத்துக் கிடந்தாள். மாதவி கதவைத் திறந்து கொண்டு பரபரப்புடன் உள்ளே நுழைந்த அன்னக்கிளியைச் சலனமின்றிப் பார்த்தாள்.
“மாதவி. மாதவி. எழுந்திரு."
மாதவி சோர்வுடன் அவளைப் பார்த்தாள். “மாதவி. பார்த்திபன் உயிரோடுதான் இருக்கிறார்."
அவள் சொல்லி முடிக்கவில்லை. படாரென மாதவி கட்டிலை விட்டு எழுந்தாள். அவள் கண்கள் படபடத்தன. உதடுகள் துடித்தன.

பாலா. சங்குபிள்ளை 89ے
"நீ. நீ. என்ன சொல்லுறே. பார்த்திபன் உயிரோட இருக்காரா. நீ பொய் சொல்லல்லையே."
'உண்மைதான் மாதவி. அவரு இன்றைக்குப் பாடசாலைக்கு வந்திருந்தாரு. தோட்டமே கலகலத்துப் போயிடுச்சி. நான் இப்படியொரு கூட்டத்தைக் கண்டதேயில்லை. ஆனா பார்த்திபன் பழைய பார்த்திபனாவே இருந்தாரு..."
"ஐயோ கடவுளே, அவருக்கு ஒண்ணுமே ஆகலையா. நல்லா இருக்காரர். இப்பவே நான் அவரைப் பார்க்கணுமே.”*
'இது என்ன பைத்தியக்காரத்தனம். நாளைக்குப் பார்க்கலாம். லீவை உடனடியா ரத்து செஞ்சிட்டு நாளைக்கே வேலைக்கு வந்திடு. ரெண்டு மாசத்துல உன் முகமே மாறிப் போயிடுச்சி."
மாதவியிடம் எப்படி அந்தச் சுறுசுறுப்பு மறுபடியும் வந்து சேர்ந்ததென்பதை அன்னக்கிளியால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. வெறும் சவமாக சலன மற்றிருந்தவள் முகத்தில் தான் எவ்வளவு சந்தோஷம். காதல் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் பாடாய்ப் படுத்துகிறது. அன்னக்கிளி அவளிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினாள். மாதவி பரபரவென அறையைச் சுத்தமாக்கி ஒழுங்குபடுத்தினாள். நன்றாகக் குளித்தாள். பொட்டு வைத்துக் கொண்டாள்.
4) () ()

Page 53
.உன்னையே உறவென்று ܥܐܠ 9o
e
22睐
** இரண்டு மாதத்திற்குப் பின் பார்த்திபன் மறுபடியும் அந்தத் தோட்டப் பாடசாலைக்கு வந்தபின் பல வியக்கத் தக்க சம்பவங்கள் நடக்கத் தொடங்கின. அருள்மணியும், பசுபதியும் சரியான நேரத்துக்குப் பாடசாலைக்கு வந்ததுமில்லாமல் தங்களின் கடமைகளையும் சரியாகச் செய்யத் தொடங்கினார்கள். பார்த்திபனைக் கண்டாலே போதும் பாம்பைக் கண்டவர்களைப் போல ஓடி மறைந்தார்கள். மொத்தத்தில் அவர்கள் பெட்டிப் பாம்பைப் போல அடங்கி ஒடுங்கிப் போனார்கள்.
மாதவி மறுநாளே பார்த்திபனைக் காணும் மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் பாடசாலைக்குப் புறப்பட்டாள். அவளைக் கண்டவுடனேயே கண்மணிக்குக் கோபம் வந்தது. இவ்வளவு நாள் லீவில் இருந்தவள் பார்த்திபன் மறுபடியும் வந்த தையறிந்து உடனடியாகப் புறப்பட்டு வந்தது அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இம்முறை தாமதம் செய்யாமல் தன் மனதிலுள்ளதை உடனடியாக அவனிடம் சொல்லிவிட நினைத்தாள். ஆனால் இன்னமும் அவளுக்குப் பார்த்திபன் மேல் தயக்கமாக - சந்தேகமாக இருந்தது. உண்மையில் அன்று என்னதான் நடந்தது என்பதையறிய அவள் உள்ளம் விரும்பியது. ஆனால் அதே சமயம் அதைப் பற்றித் துருவித் துருவிக் கேட்கப் போய் பார்த்திபன் கோபித்துக் கொண்டால் என்ன செய்வது?
மாதவி அதிபரிடம் சென்று தன் லீவை ரத்து செய்து கொண்டாள். முதலில் பார்த்திபனைப் பார்க்க வேண்டும். பாடசாலை பாடம் தொடங்க இன்னும் நேரமிருந்தது. அவள் பார்த்திபனின் விடுதியறையை நோக்கி விரைந்தாள்.

பாலா. சங்குபிள்ளை l191
அவளின் வேகத்தைக் கண்டு தடுத்து நிறுத்தவும் சக்தியற்று நின்றாள் கண்மணி. மாதவியைக் கண்ட பார்த்திபனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அவள் அந்தளவு மெலிந்திருந்தாள். முகத்தில் ஒரு சோர்வு இருந்தது.
'வாங்க. டீச்சர். என்ன ஆளே மாறிப் போயிட்டீங்க. என்ன நடந்தது..?
'ஒண்ணுமில்ல. வைரஸ் காய்ச்சல்ல விழுந் துட்டேன். இப்போ பரவாயில்ல."
'உங்களைப் பார்த்தா காய்ச்சல்ல விழுந்த மாதிரி தெரியலையே."
மாதவி தலைகுனிந்தாள். கண்ணிரைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
"என்ன டீச்சர் மெளனமாயிட்டீங்க."
"ஒண்ணுமில்ல. ஆமா. உங்களுக்கு ஆபத்தொன்றும் இல்லையே. நான் சில கெட்ட விஷயங்கள் கேள்விப் பட்டேன். உங்களுக்கு ஏதோ ஆபத்து நடந்திருக்குமோன்னு கலங்கிப் போயிட்டேன். '
'அட. நீங்க ஒருத்தர்தான் சொல்லலையேன்னு பார்த்தேன். நீங்களும் சொல்லிட்டீங்க. சரி. அதெல்லாம் கிடக்கட்டும் டீச்சர், உங்கக்கிட்ட சில முக்கிய விஷயங்கள் கதைக்க வேண்டியிருக்கு. நாளைக்கு பெளர்ணமி. லீவு தானே. பரவாயில்லையா...??
"என்ன நீங்க. எங்கே வரணும்னு சொல்லுங்க. நான் வாரேன்."

Page 54
92 a உன்னையே உறவென்று.
'இங்கே பேசினா தவறா நினைச்சிக்கு வாங்க. நுவரெலியா பூங்காவுக்கு மாலை நான்கு மணிக்கு வந்தா நிறைய பேசலாம்.'
அவள் முகத்தில் செம்மை படர்ந்தது.
"கட்டாயமா வாரேன். அப்புறம் இன்றைக்கு விநாயகர் சதுர்த்தியில்லையா. மோதகமும், பாயசமும் கொண்டு வந்திருக்கேன்."
'அட பாயசம்ன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். வச்சிட்டுப் போங்க. ரொம்ப நன்றி டீச்சர்."
மாதவி மனதில் என்றுமில்லாத சந்தோஷமும் நிம்மதியுமிருந்தது. பார்த்திபன் நிச்சயமாக அவளுக்கு நல்ல விஷயம் தான் சொல்லப் போகிறான். அவளும் தன் மனதிலுள்ளதைக் கொட்டப் போகிறாள். இனி பார்த்திபனைப் பிரிந்து அவளால் ஒரு நிமிஷமும் இருக்க முடியாது. காதல் கண்களில் தொடங்குகிறது. கண்ணிரில் முடிகிறது. ஆனால் அவளுக்கு நிச்சயம் கல்யாணத்தில்தான் முடியவேண்டும். இல்லையேல் அவள் மடிந்து விடுவாள்.
பார்த்திபனைச் சந்தித்து விட்டு குதூகலமாகச் செல்லும் மாதவியைக் கோபத்துடன் பார்த்தாள் கண்மணி. அவள் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. அளவிட முடியாத கோபம் மின்னியது. அன்று அவளால் ஒழுங்காகப் பாடம் நடத்த முடியவில்லை. இன்னமும் தாமதம் செய்வதில் பயனில்லை. வெட்டு ஒன்று துண்டொன்று என்று பேசித் தீர்த்துவிட வேண்டியதுதான்.
() () ()

Unoon. šfilgóldioar 93ے
"அண்ணாமலை அந்த மதுபான விடுதியில் தன் கூட்டாளிகளுடன் இருந்தான். அவன் முகத்தில் கடுமை யான சினம் குடிகொண்டிருந்தது. கிளாஸில் மிகுதியாக இருந்த மதுவை ஒரே மடக்கில் குடித்துவிட்டு கோபத்துடன் கிளாசினைத் தூக்கி வீசினான். அது சுவரில் சிலீரெனப்பட்டு உடைந்தது.
"அன்னைக்கி அப்புடியிப்புடி சவடால் பேசினீங்க. கடைசியில என்ன ஆச்சு? நீங்க அடிச்சு தூக்கி வீசினவன் ஒரு கீறல்கூட இல்லாம வந்திருக்கான். நினைச்சா எனக்கு அடிவயிறு கலங்குது. எந்த நேரத்திலயும் அவன் வாய் திறந்து உண்மையைச் சொல்லலாம். மக்களோட செல்வாக்குள்ள அவன் என்ன சொன்னாலும் எடுபடும். அப்புறம் நான் சிறையில கம்பியெண்ண வேண்டியது தான்."
'அண்ணாமலை. தயவு செஞ்சி கோபப்பட்டு வார்த்தைகளைக் கொட்டாதே. என்னோட ஆளுங்க அவனை அடிச்சி குற்றுயிரும் குலையுயிருமா மலையில யிருந்து தூக்கி வீசினது உண்மைதான். நான் தூரத்திலயிருந்து பார்த்துக்கிட்டுதான் இருந்தேன். அப்புடின்னா அவன் எப்புடி உயிரோட வந்திருக்க முடியும். இது ஆள் மாறாட்டமா இருக்குமா..?"
‘என்ன, அம்புலிமாமா கதை சொல்லுறியா..? வந்திருக்கிறவன் பார்த்திபனேதான். மாதவியும் போய் பார்த்துப் பேசிட்டு வந்திருக்கா. அவளோட சந்தோஷத்தைப் பார்த்துட்டு மாமாவே ஆச்சரியப்பட்டதுமில்லாம அவ மகிழ்ச்சியாயிருந்தாலே போதுமுன்னு அவன் பார்த்தி பனுக்கே மணம் முடிச்சி குடுத்தாலும் பரவாயில்லைன் னுற மாதிரி யோசிக்க ஆரம்பிச்சிட்டாரு. இதை நம்பி எக்கச்சக்கமா வெளியில கடன் வேற வாங்கிட்டேன்.

Page 55
94) உன்னையே உறவென்று.
வேலையை ஒழுங்கா செய்யாததால இப்போ நான் நல்லா மாட்டிக்கிட்டேன். சொத்தும் போய் வீணா ஜெயில்லயும் மாட்டிக்கணும் போல...'
"அண்ணாமலை நான் சொல்றதை நம்பு.’
"ஐயோ உன்னையெல்லாம் நம்பினது போதும். இனி என் காரியங்களை நானே நேரடியா பார்த்துக்குறேன். மாமாவோட சொத்து எனக்கு வரணும். அதுக்காக நான் எதுவும் செய்வேன்.'
அண்ணாமலை கோபத்துடன் கத்தத் தொடங்கினான்.
10 -> -->
23
பார்த்திபன் அன்று சற்று நேரத்துடனேயே எழுந்து விட்டான். பெளர்ணமி தினமாதலினால் பாடசாலை விடுமுறை. மேலும் அன்று டியூஷனும் அவன் நடத்தவில்லை. அவனுடைய சொந்த வேலைகள் சில இருந்தன. அவன் காலைக் கடன்களை முடித்துவிட்டு தேநீர் தயாரிக்க ஆயத்தமானான். அப்போது யாரோ கதவைத் தட்டினார்கள். இந்த அதிகாலை வேளையில் யார் வந்திருப்பார்கள். அவன் யோசனையுடன் கதவைத் திறக்க அங்கே யாரோ ஒரு இளைஞனுடன் சிறையிலிருக்கும் ரவியின் தாயும், தந்தையும் நின்றிருந்தார்கள். அந்த இளைஞன் கண்களில் கடகடவென கண்ணிர் பெருக சட்டெனப் பார்த்திபன் காலில் விழுந்தான். பார்த்திபன் இதை எதிர்பார்க்கவில்லை. சட்டெனப் பின்வாங்கினான்.

பாலா. சங்குபிள்ளை 95ےر
- - - - - - "శా "హౌ**' ...}. s an 8 6T66 இது என் கால்ல போய் விழுந்துக்கிட்டு. நீ யார்? ஏன் என் கால்ல விழுறே..??
அவன் கண்ணிருடன் பார்த்திபனைப் பார்த்தான்.
'நான் யார், எப்படியிருப்பேன். கறுப்பா, சிவப்பான்னு கூட தெரியாது. ஆனா என் உயிரையே காப்பாத்திட்டீங்க. முதலை வாயில அகப்பட்டு உயிருக்குப் போராடிக்கிட்டிருந்த என்னை யார் எவர்ன்னு பார்க்காம உயிரைக் குடுத்து காப்பாற்றின உங்களை கால்ல விழுறதுல என்ன தவறு.???
பார்த்திபனுக்கு அடியும் தெரியவில்லை. நுனியும் தெரியவில்லை. குழப்பத்துடன் அவனுடன் வந்தவர்களைப் பார்த்தான். ரவியின் தாய் கையெடுத்துக் கும்பிட்டவாறு அவனைப் பார்த்தாள்.
“என்னை பெத்த சாமி. இவன்தானுங்க என் மகன் ரவி. நேத்து இவனை விடுதலை செஞ்சிட்டாங்க. இவன் வெளியில வரணும்னுறதுக்காக உங்க கைக்காசெல்லாம் செலவழிச்சி பெரிய வக்கீலை ஏற்பாடு செஞ்சி உதவுனிங்க. உங்களோட முயற்சி வீண் போகலை சாமி. இவன் மேல் குத்தமில்லன்னு விடுதலை செஞ்சிட்டாங்க."
பார்த்திபன் முகம் முழுவதும் சந்தோஷம் பரவ அவர்களை உடனே உள்ளே அழைத்து அமரவைத்தான். அவனால் எதுவுமே பேச முடியவில்லை. வார்த்தைகள் வெளிவர மறுத்தன. சற்று நேரம் அங்கே அமைதி குடி கொண்டது. ரவியினால் கண்ணிரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
"என்னோட எதிர்காலமே நாசமாக இருந்திச்சி. நான் தேசத்துரோக குத்தம் எதுவுமே செய்யலை. என்னோட

Page 56
.உன்னையே உறவென்று ܢܦܠ 9G .
சமூகம் இன்னமும் அடிமை விலங்கோட இருக்கக் கூடாது. சுயநல அரசியல்வாதிகளால ஏமாறக்கூடாதுன்னு போராடினேன். இது குத்தமா."
பார்த்திபன் புனுமுறுவலுடன் அவனைப் பார்த்தான்.
"உன்னை மாதிரி மலையக இளைஞர்கள் கிட்ட வேகம் மட்டும் இருந்தா போதாது - விவேகமும் இருக் கணும். உன்னோட நிலையை முதல்ல பலப்படுத்திக் கணும். அதாவது - உன்னோட உயர்கல்வியை முடிச்சிட்டு அப்புறமா இந்த மாதிரி வேலையில இறங்குறது தான் நல்லது. இப்போ மலையக அரசியல்ல ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கு. நம்ம சமூகம் சிந்திக்கத் தொடங்கியிருக்கு. இந்தச் சிந்தனையோட வேகம் தடைப்படாதளவுக்கு நாம செயல்படனும். நீ சொன்ன மாதிரி நீ யார். என்ன நிறம்னு தெரியாம உன்னை வெளியில எடுக்கப் பாடுப்பட்டேன். நான் மலையகச் சமூகத்தைச் சேர்ந்தவன். நமக்குள்ளே ஒற்றுமை அவசியம். நம்மில் யாருக்காவது ஏதாவது ஆபத்துன்னா மற்றவங்க சும்மா வேடிக்கை பார்க்காம வர்க்க சிந்தனையோட செயல்பட்டு அவங்களைக் காப்பாற்றப் பார்க்கணும். அது மட்டுமில்லை. உன்னை மாதிரி உயர் கல்வி கற்கப் போற இளைஞர்கள் படிச்சிப் பட்டம் பெற்றதும், தான், தன் குடும்பம்ன்னு பணம் சம்பாதிக்கப் போயிடக்கூடாது. படிச்ச படிப்பை வச்சி நம்ம சமூகத்துக்கு என்ன செய்ய முடியும்னு பார்க்கணும்.’’ •
ரவி சட்டென எழுந்து பார்த்திபனின் கைகளைப் பற்றிக் கொண்டான்.
'உங்களை மாதிரி சமூக அக்கறையும் நல்ல சிந்தனையுமுள்ளவங்க எங்களை மாதிரி இளைஞர்களுக்கு

பாலா. சங்குபிள்ளை ____ 97ے
வழிகாட்டியா இருந்தா நிச்சயமா நாங்க சாதனை படைப்போம். புதிய சிந்தனையோட புதிய மலையகத்தை உருவாக்குவோம்."
' 'gsfl... இருங்க தேநீர் குடிச்சிட்டுப் போகலாம்."
"ஐயோ வேணாம். காலையிலேயே உங்களுக்கு ரொம்ப சிரமம் குடுத்துட்டோம். எங்களை மாதிரி ஏழைத் தோட்டத் தொழிலாளிங்களோட பிள்ளைகள் எல்லாரும் உங்களை மாதிரி நல்லவங்களை நம்பி இருக்காங்க.. இன்னைக்கி ரொம்ப சந்தோஷமா இருக்கிறதுக்குக் காரணமே நீங்கதான். நாங்க வாரோம்.'
பார்த்திபன் அவர்களை வாசல் வரை வந்து வழி யனுப்பி வைத்தான். அவன் மனம் சந்தோஷத்தில் மலர்ந்தது. வேளையும் நாழியும் கூடி வந்தால் வேண்டாம் என்றாலும் வருவது நிற்காது என்பதைப் போல இவ்வளவு நாளும் அறியாமை மேகங்களால் மூடிக் கிடந்த மலையகம் இதோ வேகமாக ஆதவன் என்ற மக்கள் சிந்தனையால் மறுமலர்ச்சி ஏற்பட்டு வருகின்றது.
அவன் குதூகலத்துடன் தேநீர் தயாரித்து அருந்தினான். மணி பத்தாகிய நேரத்தில் அதிபர் காசிநாதன் அவனைக் காண்பதற்காக வேகமாக வந்தார். அவன் அவரை உபசரித்து இருக்கையில் அமர வைத்தான்.
'பார்த்திபன், உங்களுக்கு விஷயம் தெரியுமா? இவ்வளவு நாளும் நாம பட்ட பாட்டுக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு. டவுண்ல வச்சி இப்பத்தான் விஷயம் கேள்விப்பட்டேன். அதுதான் முதல்ல உங்கக்கிட்ட சொல்றதுக்காக லீவுன்னும் பார்க்காம ஓடோடி வந்தேன்."

Page 57
.உன்னையே உறவென்று ܢ 93
பார்த்திபன் எதுவும் புரியாமல் அதிபரைப் பார்த்தான்.
'என்ன சேர் சொல்லுறீங்க. எனக்கு எதுவும் புரியலை."
'அட விஷயத்தைச் சொல்லாம சந்தோஷத்துல ஏதேதோ சொல்லிக்கிட்டிருக்கேன். நம்ம பாடசாலைக்குப் புதுசா இரண்டு மாடிக் கட்டிடங்கள் கட்டுறதுக்கு அனுமதி கிடைச்சிடுச்சி. அதோட பத்தாம் வகுப்பு வரையில விரிவுபடுத்தவும் அனுமதி வழங்கிட்டாங்க. மேலதிகமா தேவையான ஆசிரியர்களும் தரப் போறாங்களாம். என்னை விட நீங்கதான் இந்த விஷயத்துல ரொம்ப கஷ்டப் பட்டீங்க. உங்களோட முயற்சி இப்ப வெற்றி யடைஞ்சிடுச்சி."
பார்த்திபனுக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை.
"சேர். இதுகெல்லாம் நான் மட்டும் காரணமில்லை. நான் முயற்சி பண்ணினாலும் முழு ஒத்துழைப்புக் கொடுத்து தோளோட தோள் நின்னு உதவி செஞ்சது நீங்கதான். உங்களை மாதிரி நல்ல அதிபர்கள் எல்லா தோட்டப் பாடசாலைகளுக்கும் கிடைச்சா அப்புறம் சொல்லவா சேர் வேணும்."
'நீங்க வேற, என்னை அதிகமா புகழுறீங்க. என்னைப் பொருத்தவரை நீங்க வந்ததுக்கப்புறம்தான் இத்தனை முன்னேற்றம். இன்னைக்கி பகல் சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வாங்களேன் பார்த்திபன்."
+ () ()

பாலா. சங்குபிள்ளை 99ے :
fî 一排24腓
அதிபர் காசிநாதன் அதிகமாக வற்புறுத்தியழைத் தமையினால் பார்த்திபன் தட்டமுடியாமல் அவரின் அன்பிற்குக் கட்டுப்பட்டு பகல் சாப்பாட்டிற்கு அவர் வீட்டுக்குப் புறப்பட்டான். அவன் இதற்குமுன் அவரின் வீட்டுக்குச் சென்றதில்லை. அவனிடம் வீட்டுக்கு வர வேண்டிய விவரத்தினைச் சரியாகக் கூறியிருந்தமையினால் எந்தவித கஷ்டமுமில்லாமல் அவன் அந்த சிறிய வீட்டையடைந்தான். மிகவும் சிறிய வீடாக இருந்தாலும் மிகக் கச்சிதமாக அழகாக இருந்தது. காசிநாதன் அவனை அன்புடன் வரவேற்றார்.
"முதன் முதலா வீட்டுக்கு வந்திருக்கீங்க. முதல்ல எல்லாரையும் அறிமுகப்படுத்திடுறேன். இது என்னோட மனைவி மஞ்சுளா, சின்ன வயசிலேயே போலியோ வியாதி தாக்கினதால ஒரு கால் சின்னதா போயிடுச்சி. நேரா நடக்க முடியாது. உடல் ஊனமுள்ள ஒரு பெண்ணைத்தான் கட்டிக்கணும்னு நான் ஒரு தீர்மானத்தோட இருந்தேன். இது புண்ணியமூர்த்தி. ஆறாவது படிக்கிறான். இவன் கணேசன். நாலாவது படிக்கிறான். இவங்க ரெண்டு பேரும் ரெண்டாவது படிக்கிறாங்க. பேரு முத்தழகி, கல்யாணி."
பார்த்திபன் அவரைப் பெருமைப் பொங்கப் பார்த்தான். "உண்மையிலேயே நீங்க உயர்ந்த எண்ணம் உள்ளவர்தான். உங்க எண்ணம் போலத்தான் மணிமணியா நான்கு பிள்ளைகள் பிறந்திருக்காங்க."
மஞ்சுளா கண்கள் இலேசாகக் கலங்க பிள்ளைகளை விளையாட அனுப்பிவிட்டுப் பார்த்திபனைப் பார்த்தாள்.

Page 58
.உன்னையே உறவென்று ܢܦ1CO
"நல்லா படிச்சி நானும் ஆசிரியையாதான் தொழில் செஞ்சேன். ஆனா ஊனமுள்ள என்னை பெண் பார்க்க வந்தவங்க எல்லாரும் எனக்கு விலை தான் வச்சாங்க. எங்க வீட்ல மூணு பெண்கள். நான் மூத்தவ. அப்பா தோட்டத்துல லொரி சாரதி. அவரால எப்புடி என் ஒருத்திக்கு மட்டும் லட்சக்கணக்குல பணம் குடுத்து மணம் முடிச்சி வைக்க முடியும். கல்யாணக் காட்சியில்லாம மற்றவங்களோட கேலிப் பேச்சிக்கிடையில கண்ணீர் கடல்ல மிதந்துக்கிட்டிருந்த என்னைக் கரையேத்த வந்தாரு இவரு. கட்டின புடவையோட என்னை மகாராணி மாதிரி கூட்டிட்டு வந்தார். இத்தனை வருஷமா நான் எந்தக் குறையுமில்லா இருக்கேன். எனக்குப் பிள்ளைகள் இல்லயேன்னுற குறைகூட இந்த நாலு பேர்னால சுத்தமா மறைஞ்சிடுச்சி."
காசிநாதன் சட்டென இடையில் குறுக்கிட்டார்.
'அட என்ன மஞ்சுளா அவர்கிட்ட போய் இதை சொல்லிக்கிட்டு அவங்களும் நம்ம பிள்ளைகள் தானே. அப்படித்தானே எந்தக் குறையுமில்லாம அவங்க வளர்றாங்க.."
பார்த்திபன் மிதமான ஆச்சரியத்துடன் அதிபரைப் பார்த்தான். 'என்னது இவங்க உங்க சொந்த பிள்ளைகள் இல்லையா..?"
மஞ்சுளா பெருமிதத்துடன் அவனைப் பார்த்தாள்.
‘ஆனா சொந்தப் பிள்ளைகளைவிட உயிரா பார்த்துக்குறோம். நாங்க கல்யாணம் முடிச்சி ரெண்டு வருஷமா குழந்தைகள் பிறக்கல்ல. ஆனா அதுக்காகக் கவலைப்படலை. புண்ணியமூர்த்திக்கு ஒரு வயசு இருக்கும்

பாலா. சங்குபிள்ளை 101
போது லயத்துல ஏற்பட்ட தீ விபத்துல அப்பா, அம்மா ரெண்டு பேருமே கருகி செத்துட்டாங்க. இரண்டாவது பையன் கணேசன் அப்பா ஏற்கனவே விபத்துல செத்துட்டாரு. அம்மா மண்சரிவுல சிக்கி உடலையே கண்டுபிடிக்க முடியலை. முத்தழகியும், கல்யாணியும் திருகோணமலையில் சுனாமியில பெற்றோர், உறவினர்களைப் பறி கொடுத்தவங்க.
இவங்க யாருக்குமே அவங்களோட அப்பா அம்மா வோட முகம் தெரியாது. எங்களைத் தான் பெற்றோரா நினைச்சிக்கிட்டிருக்காங்க. இவரு வேலையை விட்டுட்டு வீட்ல இருக்கத்தான் சொன்னாரு. ஆனா நாலு பிள்ளை களை வளர்க்கணும் இல்லையா."
பார்த்திபன் பிரமிப்புடன் அவர்களைப் பார்த்தான். அவனால் பேசக் கூட முடியவில்லை. பார்த்திபனை விடவும் அவர்கள் வானளவுக்கு உயர்ந்து விட்டார்கள். ஒரு நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதை மிக அமைதியாகச் செய்துவிட்டு எதுவும் தெரியாதவர்களைப் போல சாதாரணமாக இருக்கும் இவர்கள் எத்தனை பெருமை மிக்கவர்கள். இன்றிருக்கும் மனிதன் மண்ணுக்காகவும் தனத்துக்காகவும் மற்றவர்களை ஏமாற்றித் தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறான். செல்வச் செருக்கால் மனிதர்களை மதிப்பதில்லை. யாருக்கும் உதவி செய்வதில்லை. ஏற்றத்தாழ்வு, இனப்பாகுபாடுகளினால் மனிதன் மனிதனையே வேட்டையாடுகிறான். இதனால் உலகில் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கி விட்டது. இந்நிலையில் இன்னமும் மழை பெய்கிறதென்றால் அது சில நல்லவர்களினால்தான் போலும். பார்த்திபன் கலங்கிய கண்களை அவர்களுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டான். அவர்கள் அவனுக்கு அறுசுவை உணவைப்

Page 59
toa உண்ணையே உற்வென்று.
பரிமாறினார்கள். அவர்களின் அன்பில் அவன் நெகிழ்ந்து போனான்.
அவன் அவர்களிடம் விடைபெற்றபோது இரண்டு மணியாகி விட்டிருந்தது. மாதவியை வேறு நான்கு மணிக்கு வரச் சொல்லியிருந்தான். அத்துடன் பாடசாலையின் புதிய கட்டிடம் சம்பந்தமாக நுவரெலியாவில் ஒருவருக்குக் கடிதம் ஒன்றைத் தரவேண்டியிருந்தது. அவர் பிரபல அரசியல் தலைவர் ஒருவரின் அந்தரங்கக் காரியதரிசி. அதிபருக்கு அவர் வேண்டியவர். வேலையை விரைவுபடுத்த இப்படியான சில இடைச்செருகல் வேலைகளையும் செய்ய வேண்டியதாக இருக்கின்றது. மலையகத்தின் கல்வியின் வீழ்ச்சிக்குச் சில மலையக அரசியல் தலைவர்களும் காரண கர்த்தாக்களாகத் திகழ்கிறார்களென்பது பார்த்திபனின் கருத்து. அதைப் பல சந்தர்ப்பங்களில் கண்கூடாகவும் பார்த்திருக்கிறான்.
மலையக மக்களுக்காகச் சேவை செய்யப் போவதாகக் கூறிக்கொண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவர்கள் அவர்களுக்காக ஒரு இரும்பைக்கூட எடுத்துப் போடுவதில்லை. இரும்பைக் கவரும் காந்தம் போல பதவிகளுக்காகச் சோரம் போகும் இப்படியானவர்கள் மக்களால் ஒதுக்கப்படும்வரை மலையகத்துக்கு விடிவில்லை.
பார்த்திபன் குறிப்பிட்ட நபரைச் சந்தித்து கடிதத்தை ஒப்படைக்கும்போது நான்கு மணியாகிவிட்டிருந்தது. அவசர அவசரமாகப் பூங்காவை நோக்கி விரைந்தான். பூங்காவைச் சுற்றித் தேடினான். ஒரு பூமரத்தினருகில் போடப்பட்டிருந்த சிமெந்து நாற்காலியில் மாதவி உட்கார்ந்திருந்தாள். சாதாரண அலங்காரமே

பாலா. சங்குபிள்ளை ےo3
செய்திருந்தாலும் அசத்தலாக - அழகாகவே இருந்தாள். பார்த்திபனுக்கு அதையெல்லாம் ரசிப்பதற்கு நேரமில்லை. அவன் அவளிடம் சில முக்கியமான விஷயங்களைப் பேசி முடித்துவிடும் அவசரத்தில் இருந்தான்.
பார்த்திபன் அவளை நோக்கி நடந்தான். அவனைக் கண்டதும் ஆதவனைக் கண்ட அல்லிப் போல முகம் மலர்ந்த வண்ணம் அவள் நின்றாள். அவன் அவள் அருகில் சென்றான்.
“வந்து ரொம்ப நேரமா டீச்சர்.?”
"இல்ல இப்பத்தான் வந்தேன்."
令令令
ܚܧܵܚܐ
25掛
+
{
பிரச்சனைகள் என்பது சிலந்தி வலையைப் போன்றது. கவனமாக இல்லாது போனால் மேலும் மேலும் அந்த வலையில் சிக்குப்பட்டு பின்பு வெளியேற முடியாத நிலையேற்பட்டு விடும். சிலர் தங்களுக்குள்ளேயே பிரச்சனைகளைப் போட்டுப் பூட்டி வைத்துக் கொண்டு வெளியே சொல்லாமல் புழுங்கிக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் யாரால் பிரச்சனைகள் வந்ததோ அதை அவர்களிடம் சொல்லித் தீர்வு காண தைரியமில்லாமல் அவர்களுடன் நெருக்கமானவர்கள் மூலமாகத் தீர்வுகாண முற்படுவார்கள். இதில் இரண்டாவது ரகத்தினை சேர்ந்தவன் தான் பார்த்திபன். அவன் மனதிலிருந்த ஒரு விடயத்தை

Page 60
1 OAN உன்னையே உறவென்று.
வெளியே கொட்டிவிடும் அவசரத்தில் இருந்தான். வெள்ளம் தலைக்கு மேலே போய் அவனை மூழ்கடித்து விடுவதற்கு முன் அவன் பத்திரமாகக் கரையேற முயன்றான். மாதவியைப் பொருத்தவரை அவள் மேல் அவன் நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தான். எனவே, தன்னுடைய பிரச்சனையை அவள் மூலமாகத் தீர்த்துக் கொள்ள விரும்பினான்.
'டீச்சர். எனக்காக நீங்க இங்கே வந்து காத்திருக்கிறீங்க... உங்களுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லையே..?"
'உங்கள் அருகில் அனுதினமும் இருப்பதுதானே என் ஆசை...!" என அவள் மனம் சொன்னது. உதடுகள் சொல்லவில்லை.
V 'அட. எனக்கும் இந்தப் பூங்காவுக்கு வரணும்னு தோணிச்சி. நல்ல வேளையா நீங்களே அழைச்சீங்க. இயற்கையான சூழ்நிலையில மனம் விட்டுப் பேசினா அது மனசுக்கு இதமா சுகமா இருக்கும் இல்லையா..."
"நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க. இப்படி உட்கார்ந்து GL156ofTLDT...?''
"இதையெல்லாம் என்கிட்ட அனுமதி கேட்கணுமா. உட்காருங்களேன்.'
"டீச்சர். உங்களுக்கு என்னோட ஒரு பக்கம்தான் தெரியும். இன்னொரு பக்கம் தெரியாது. நான் வெளியே சிரிச்சிக்கிட்டிருக்கேன். ஆனா தனிமையிலயிருக்கும்போது உள்ளுக்குள் அழுதுக்கிட்டிருப்பேன். என்னோட வாழ்க்கை வாசிக்கிறதுக்குச் சுவையான - சுகமான நாவல் இல்ல.

பாலா. சங்குபிள்ளை 1ےO5
சோகம், வேதனை, சோதனை மிக்க ஒரு மெகா டீ.வி. நாடகம். என்னோட மனசுல இருக்கிற சில விஷயங்களை உங்கக்கிட்ட சொல்லுறதுக்காகத்தான் உங்களை இங்கே வரச் சொன்னேன். நான் பல்கலைக்கழகத்துல படிக்கிறபோது ஒரு பெண்ணை மனசாரக் காதலிச்சேன். அது மட்டக்களப்பு பொண்ணு. அழகுன்னா அப்படியொரு அழகு. பொதுவா பெண்களைத் தலை நிமிர்ந்தும் பார்க்காதவன் நான். எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தப் பெண்ணிடமும் அனாவசியமாகவோ தீய எண்ணத்தோடயோ நான் பேசியதுமில்லை. பழகியதுமில்லை. ஆனா சாந்தினி துடிதுடிப்பானவ. அவளோட துடுக்குத்தனமான பேச்சு, சுறுசுறுப்பான நடவடிக்கை எல்லாம் என்னை ரொம்பவும் கவர்ந்தது. அவளும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவளா இருந்தாள். ஆரம்பத்துல சாதாரண நட்புடன் இருந்த எங்களோட பழக்கம் நாளடைவில் காதலா மாறிடுச்சி. ஆனா, இதுல ஆச்சரியம் என்னன்னா ரெண்டு பேர் மனசிலேயும் காதல் இருந்தபோதும் யாருமே அதை வெளியில சொல்லலை. நீரின் ஒட்டமும் காதலின் போக்கும் என்றும் மாறாதது. ஆனால் மாறாத எங்களோட மனசுல இருந்த காதல் எந்தக் காரணம் கொண்டும் வெளியில் வரல்ல. மரத்தோட வேரை மரம் பார்த்ததில்ல. ஆனா அந்த வேர் தர்ற போஷாக்குல மரம் செழிப்பா வளருது. அதுமாதிரிதான் எங்களோட காதலும். காதலினா மனசு மகிழ்ச்சியாயிருந்திச்சி. ஆனா அந்தக் காதலை வெளிப்படுத்தலை, லீவுல ஊருக்குப் போறதா சொல்லிட்டுப் போனா, போய் வந்து முக்கியமான விஷயம் சொல்றதா சொன்னா. நானும்தான். ஆனா அவ வரல்ல. யுத்தம்ன்னுற அரக்கனால அவ அழிக்கப்பட்டா. நான் அழுதேன். வாய் விட்டு அழுதேன். என்னோட முதல் காதல் முற்றுப் பெறாமல் முடிந்த காதலா போயிடுச்சி. சாந்தினி

Page 61
106. உன்னையே உறவென்று.
உன்னை மனசார விரும்புறேன்னு சொல்லக் காத்திருந்தேன். ஆனா அவ என்னை நிரந்தரமா காத்திருக்க வச்சிட்டு போய் சேர்ந்துட்டா. அவளோட உருவம் என் மனுசுல ஓவியமா காவியமாக பதிஞ்சிடுச்சி. அவள் இன்னமும் என் மனசுல வாழ்ந்துக்கிட்டிருக்கா...'
பார்த்திபன் சட்டென பேசுவதை நிறுத்திவிட்டு கண்களை மூடியவாறு அப்படியேயிருந்தான். மாதவிக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுடைய காதல் கதை மிக சோகமாகத்தான் இருந்தது. ஆனால் அதை ஏன் இவளிடம் சொல்லுகிறான். மாதவி அவனை விரும்புவது அவனுக்குத் தெரிந்திருக்குமோ? இப்படியொரு கதையைச் சொல்லி விட்டு அவனை மறந்துவிடும்படி கூறப் போகிறானோ.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படி அவன் சொல்லிவிட்டால் அவளால் அதைத் தாங்க முடியாது. அவளால் அவன் இல்லாமல் வாழவே முடியாது. அவள் சுவாசிப்பதை விடவும் அவனை நேசிப்பதைத்தான் முக்கியமாக நினைக்கிறாள்.
பார்த்திபன் கண்களைத் திறந்தான். அவளையே உற்றுப் பார்க்கச் சட்டென கண்கள் தரையைப் பார்த்தன.
"டீச்சர், கண்மணி டீச்சரைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க.."
அவள் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள். கண்மணியைப் பற்றி ஏன் அவளிடம் கேட்கிறான்.
"என்ன டீச்சர். நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லாம தரையைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க."

பாலா. சங்குபிள்ளை ےO7
'இல்ல. திடீர்ன்னு கண்மணியைப் பற்றி கேட்டீங்களா.. எனக்குச் சட்டென என்ன சொல்றதுன்னு விளங்கல்லை. கண்மணி ரொம்ப நல்லப் பொண்ணு. மாணவர்களுக்குப் பாடம் நடத்துறதுல நல்ல கெட்டிக்காரி. ஏழையாயிருந்தாலும் எல்லா நல்ல குணங்களும் இருக்கிறவ."
"ஆமாம். டீச்சர். நீங்க சொல்றது ரொம்ப சரி. கண்மணிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. நம்ம சமூகத்திற்கு இன்னமும் அவளால செய்யக் கூடிய கடமைகள் ஏராளமா இருக்கு. அந்தப் பொண்ணோட எதிர்காலம் மேல எனக்கும் அக்கறையிருக்கு. ஆனா என்னோட அதிகமான அக்கறை அதிகமான அன்பு இதையெல்லாம் அந்தப் பொண்ணு தவறா நினைச்சிக்கிச்சி. என்னை நேசிக்க ஆரம்பிச்சிடுச்சி. பலமுறை என்கிட்ட இதைப் பத்தி பேச முயற்சி செஞ்சப்ப நான் அதைத் தவிர்த்துட்டேன். ஏற்கனவே காதல்ல காயம் பட்ட எனக்கு மறுபடியும் இப்படியொரு விஷப்பரீட்சை வேணாம். என்னால கண்மணிக்கிட்ட நேரடியா பேச முடியலை. அப்படிப் பேசி அது அந்தப் பொண்ணு மனசை பாதிச்சிடுமோ. அப்புறம் அந்தப் பொண்ணு விபரீதமா ஏதாவது முடிவை எடுத்திடுமோன்னு நான் ரொம்ப யோசிக்க வேண்டியதாயிடுச்சி. நான் ரெண்டு மாசம் இல்லாமப் போனதுக்கே கண்மணி ஆளே மாறிடுச்சி. இந்த நிலையில நான் எப்படி இதைப் பக்குவமா சொல்வேன். என்னால முடியாது. அதுதான் இந்த விஷயத்தை பக்குவமா கையாள உங்களைத் தேர்ந்தெடுத்தேன்."
-> --> -->

Page 62
10a உன்னையே உறவென்று.
ii:
26
பார்த்திபன் சொன்னதைக் கேட்ட மாதவி வெலவெலத்துப் போனாள். அவள் பார்த்திபனை உயிராக நினைப்பது அவனுக்கு ஏன் விளங்கவில்லை. கண்மணியின் மனதைப் பற்றி தெரிந்துகொண்ட அவனால் ஏன் அவள் உள்ளத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவனை இரண்டு மாதமாகக் காணாமையினால் அவள் பைத்தியம் பிடித்திருந்தது போல உணர்வற்றிருந்த விடயம் அவனுக்குத் தெரியாதா? கண்மணியைப் பற்றி மட்டும் இவ்வளவு துல்லியமாக அறிந்துகொண்ட அவன் அவளை மட்டும் உதாசீனம் செய்தது, அறிந்தும் அறியாமலுமா அல்லது உண்மை யிலேயே தெரியவில்லையா..? மேலும் கண்மணிக்கு அவளால் எப்படி புத்தி சொல்ல முடியும்? ஏற்கனவே மாதவியைக் கண்டால் அவளுக்குப் பிடிக்காது. இந்த நிலையில் அவளால் எப்படி இதைச் சொல்ல முடியும். ஆனால் வேறு வழியில்லை. அவளை நம்பி பார்த்திபன் இத்தகைய பொறுப்பை ஒப்படைத்திருக்கிறான். அவன் அவளைச் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும் அவள் மேல் பூரண நம்பிக்கையும் மரியாதையும் வைத்து இந்த அரிய பொறுப்பை ஒப்படைத்திருக்கிறான். ஒரு வகையில் பார்த்தால் இதுவும் நல்லதுக்குத்தான். பார்த்திபன் கண்மணியை விரும்பவில்லையென்பது நல்ல விடயம்தான். பார்த்திபன் ஏற்கனவே ஒருத்தியை நேசித்தும் அந்தக் காதல் நிறைவேறவில்லை. அந்த மனக்காயம் நிச்சயமாக ஆறிவிடும். அதன்பின் மாதவி அவனை அடைய முயற்சி செய்யலாம். இடையிலிருப்பவள் கண்மணி. அவளைப் பார்த்திபன் நேசிக்கவில்லையென்பது முடிவான பின் அவளை வெட்டி விடுவது I.-I fT6) I. LD fT657

பாலா. சங்குபிள்ளை _ ےO9
காரியமில்லையே. அவள் சட்டென தெளிவான மனதுடன் பார்த்திபனைப் பார்த்தாள்.
'இது கொஞ்சம் சிரமமான காரியம்தான். ஆனால் உங்களுக்காக இதைச் செய்ய வேண்டியதா இருக்கு."
“ரொம்ப நன்றி டீச்சர். இந்த உதவியை நான் மறக்க மாட்டேன்."
'அட நன்றி அதுயிதுன்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க. எனக்கு நீங்களும் உதவி
செய்யணும்."
‘என்ன டீச்சர். சொல்லுங்க; கட்டாயம் செய்யிறேன்."
"நான் தமிழ் இலக்கியத்துல கொஞ்சம் வீக். நீங்க அதுல ரொம்ப திறமையானவர்ன்னு எனக்குத் தெரியும். க.பொ.த. உயர் தரத்துல நான் வர்த்தகப் பிரிவுலத்தான் அமோகமா பாஸ் பண்ணினேன். பயிற்றப்பட்ட ஆசிரியையான எனக்குத் தமிழ் இலக்கியம் மேல தீராத மோகம். அதை நல்லா படிச்சிக்கிட்டு மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க விரும்புறேன். எனக்கு டியூஷன்
ՖՄ(ԼՔւգսկւDIT... ?''
‘என்ன டீச்சர், ரொம்ப நல்ல விஷயம் தானே. இதையேன் தயங்கித் தயங்கிக் கேட்குறீங்க. ஆனா ஞாயிறு மட்டும் தான் நான் ஒய்வுல இருப்பேன். அந்த நாள் பரவாயில்லையா..?"
“ரொம்ப நல்லது. ஆனா ஒரு நிபந்தனை. இதுக்கு நீங்க பணம் வாங்கிக்கணும். அதோட என்னோட வீட்ல வந்து சொல்லிக் குடுக்கணும். கணிசமா கிடைக்கும்

Page 63
1 on உன்னையே உறவென்று.
பணத்துல நீங்க இன்னும் பலருக்கு உதவி செய்யலாம் இல்லையா...'
பார்த்திபன் சற்று நேரம் சிந்திக்கத் தொடங்கினான்.
"என்ன சேர். வீட்டுக்கு வந்து டியூஷன் தாரதால ஏதும் பிரச்சனையா...???
"நீங்க வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் டீச்சர். நான் அங்கே வாரதை உங்க வீட்ல விரும்புவாங்கலா தெரியலை. ஏற்கனவே உங்களோட மாமான்னு யாரோ என்னை மிரட்டினது இப்பவும் என் மனசுல இருக்குது."
"அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நீங்க சரின்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்க.மற்றதை நான் பாத்துக்குறேன்."
'ஒகே டீச்சர். நீங்க தார பணம் ஒரு நல்ல காரியத்துக்குப் பயன்படுறதால நான் இதுக்குச் சம்மதிக்கிறேன். அனால ஒரு வாரம் மட்டும் எனக்குக் கால அவகாசம் தாங்க."
அவள் மகிழ்ச்சியுடன் தலையாட்டினாள். இருவருமே மனத்திருப்தியுடன் பிரிந்தார்கள். கண்மணியின் விடயம் நல்ல விதமாக முடிந்துவிடும் என பார்த்திபன் மகிழ்வு கொண்டான். கண்மணியின் குறுக்கீடுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பார்த்திபனின் மனதை மாற்றித் தன் பக்கம் இழுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் சந்தோஷத்துடன் மாதவி நடந்தாள். ஆனால் அவர்கள் இப்படி நினைக்க ஆண்டவன் என்ன நினைத்து வைத்திருக்கிறானென்பது பாவம் அவர்கள் இருவருக்குமே தெரிந்திருக்க நியாயமில்லை.

பாலா. சங்குபிள்ளை 11 سے
ஒரு வாரம் ஓடியது. அந்தத் தோட்டப் பாடசாலைக்குப் புதிதாக இரண்டு மாடி கட்டுவதற்கு அனுமதி கிடைத்ததுடன் கட்டிடம் கட்டுவதற்கான வரைபடம் தயாரிப்பது மற்றும் அது சம்பந்தமான வேலைகளுக்காக உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அடிக்கடி அங்கே வந்து போனது. அந்தத் தோட்டமக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். இந்த நல்ல விஷயத்திற்குக் காரணமான பார்த்திபன்மேல் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடியது. அவர்கள் அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். அவன் புகழ் மற்ற தோட்டங்களுக்கும் வேகமாகப் பரவியது. ஆனால் பார்த்திபன் சாதாரணமாகவே இருந்தான். அவனுக்கு இந்த மதிப்பு, மரியாதை, புகழ் மேல் எல்லாம் நாட்டமில்லை. மலையகம் உயர்வடைய வேண்டும். அடிமைகளாக, கூலிகளாக மற்றவர்களால் ஏளனமாகப் பார்க்கப்படும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் இந்த நிலை மாற வேண்டும். அதற்குக் கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். மலையக மக்கள் சிந்திக்க வேண்டும். இளைஞர்கள் உணர்வுப் பூர்வமாகச் செயல்படவேண்டும். அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. பாடசாலைக்கென தோட்ட நிர்வாகத்தினால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான தளம் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. பார்த்திபன் அறையில் ஏதோ முக்கிய வேலையிலிருந்தான். அப்போது யாரோ கதவைத்தட்டினார்கள். பார்த்திபன் கதவைத் திறந்தான். வெளியே வாட்டசாட்டமான சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க நடுத்தரமான ஒருவர் வெள்ளை Tப்பா வேட்டியுடன் நின்றிருந்தார்.
"நீங்க யாரு, யாரைப் பார்க்கணும்.?’

Page 64
2n உன்னையே உறவென்று.
'நீங்க தானே இந்தப் பாடசாலை ஆசிரியர் பார்த்திபன்.?"
"ஆமாம்."
"உங்களைத்தான் பார்க்க வந்தேன்."
'உள்ளே வாங்க உட்காருங்க. இப்போ சொல்லுங்க. யார் நீங்க? எதுக்காக என்னைப் பார்க்க வந்திருக்கீங்க..?"
'தம்பி ரொம்ப அவசரப்படுறிங்க போல."
"ஆமாம், எனக்கு நேரம் ரொம்ப முக்கியம்.'
"சரி. நேரடியா விஷயத்துக்கு வாரேன். என் பெயர் ஜம்புலிங்கம்.”
7 <�> <�> <�
fî 排27睦
(+940 00
கோவணத்தை இழந்தவன் கல்லடி வாங்குவான். கொள்கையை இழந்தவன் அரசியல்வாதியாவான் என்று பார்த்திபன் படித்திருக்கிறான். தான் சார்ந்த சமூகம் எல்லா வகையிலும் இன்னமும் விழிப்புணர்ச்சி பெறாமைக்குக் காரணம் மலையக அரசியல் என்பது அவனின் தனிப்பட்ட கருத்தாகும். எனவேதான் தன்னுடைய முழுத் திறமை மற்றும் கடுமையான முயற்சியின் மூலமாகத் தன் காரியங்களைச் சாதித்துக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்தி வந்தானேயொழிய அதற்காக எந்த நிலையிலும்

UIGDom. FrňuGúldiroOoGT العصر
அரசியல்வாதி எவரையும் அவன் நாடியது கிடையாது. இந்த நிலையில் திடீரென தன்னைச் சந்திக்க வந்தவர் தன் பெயர் "ஜம்புலிங்கம்’ எனக் கூறியதைக் கேட்டு அவன் ஆச்சரியப்பட்டான். ஏனென்றால் ஜம்புலிங்கம் மலையகத் தின் பிரபல அரசியல்வாதியொருவரின் பிரத்தியேக காரியதரிசி மட்டுமல்ல; அந்தப் பகுதியில் அதிகச் செல்வாக்கு மிக்கவர். அவர் எதற்காகத் தன்னைப் பார்க்க வந்திருக்கிறாரென்று அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தான்.
"ஐயா. நீங்க ரொம்பப் பெரிய இடம். இந்தச் சிறியவனை எதுக்காகப் பார்க்க வந்திருக்கீங்க...??
'தம்பி, ரொம்ப தன்னடக்கமா பேசுறீங்க. ரொம்ப சந்தோஷம். எங்கத் தலைவர் உங்களைப் பார்க்க விருப்பப்படுறார்.'
“என்னையா. எதுக்காக...??
"நீங்க இந்தப் பகுதியில நல்லவிதமா சேவை செஞ்சி பிரபலமாயிட்டீங்க. உங்களை மாதிரி துடிப்புள்ள இளைஞர்கள் மேல எங்க தலைவருக்கு எப்பவுமே அன்பும் மரியாதையும் இருக்கு. உங்களைப் போல சுறுசுறுப்பான வங்களை எங்களோட கட்சியில இணைச்சி இன்னமும் பரந்தளவுல மக்களுக்குச் சேவை செய்யிற வாய்ப்பை அளிக்கத்தான் உங்களைத் தேடி வந்தேன்."
பார்த்திபனுக்கு இப்போது எல்லாமே தெளிவாக விளங்கியது. குறிப்பிட்ட அந்தக் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு வேகமாகக் குறைந்து வருகின்றது. பட்டம், பதவியுடன் சொகுசு வாழ்க்கை அனுபவித்து வரும் அவர்கள். வாக்களித்தவர்களை மறந்துவிட்டார்கள். அடுத்து

Page 65
14N உன்னையே உறவென்று.
ஏதாவது தேர்தல் வந்தால் அவர்கள் தோற்பது உறுதி. எனவே மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்களுக்கு வலை வீசுகிறார்கள். அவர்களுக்கு விலை வைக்கிறார்கள். மலையக மக்கள் ரொம்ப நல்லவர்கள். மீன்தான் கருவாடு ஆயிற்று என்றால் நம்ப மாட்டார்கள். கருவாடு தான் மீன் ஆயிற்று என்றால் உடனே ஒட்டுப் போடுவார்கள். இதை நன்கு தெரிந்துகொண்டவர்கள் இவர்களை ஏமாற்றி வருகிறார்கள்.
'என்ன தம்பி, மெளனமாயிட்டீங்க. இதை நான் சம்மதமா எடுத்துக்கவா. எப்போது தலைவரைப் பார்க்கப் போகலாம். நீங்க சரின்னு மட்டும் சொல்லிடுங்க. வாகனத்தை இங்கேயே கொண்டு வந்திடுறேன்."
'இல்லங்க ஐயா. எனக்கு அரசியல்ல நாட்டமில்லை. அதுக்கு நேரமும் இல்லை. என் மேல் இங்குள்ள மக்கள் பூரண நம்பிக்கையும் அன்பும் வச்சிருக்கிறாங்கன்னா அதுக்குக் காரணம் நான் நல்லவன்னுறது மட்டுமில்ல. சாதாரணமானவன்னுறதும் தான் காரணம். நான் பெரிய பெரிய பதவிகள்ல இருந்தா சாதாரண மக்கள் என்னை நெருங்கப் பயப்படுவாங்க. என்னாலேயும் அவங்களுக்குத் தேவையானதைச் சரியான முறையில செய்யவும் முடியாது. அதுனால தயவு செஞ்சி என்னை மன்னிச்சிடுங்க."
"நீங்க பிழைக்கத் தெரியாதவர் தம்பி.”
"நான் பிழைக்கிறதுக்காகத் தொழில் செய்யலை. என் மக்களுக்குத் தேவையானதைச் செய்யிறதுக்காகத் தொழில் செய்யிறேன். எங்களோட சோகங்கள், சுமைகள், துன்பங்கள், துயரங்கள் மனசுல மட்டுமில்ல. மடிகளிலும் தான். நீங்க தடியினால காய்களைக் கணிய வைக்கப் பாக்கிறீங்க. ஆனா நான் உண்மையான அன்பினால

Umroom. Frisólóir Goar .15 كصب س
உறுதியான சேவையினால அதைச் செய்யப் போகிறேன். எனக்கு அரசியல் வேணாம். இவங்களோட அன்பு மட்டும் தான் வேணும்.'
ஜம்புலிங்கம் சட்டென எழுந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டார்.
'தம்பி, என்னோட இருபது வருஷ அரசியல் வாழ்க்கையில வெறும் பணம், பதவிக்காக இடுப்புல சுத்தியிருக்கிற வேட்டி கழன்று தரையில விழுறது கூட தெரியாம கூப்பிட்டதும் விழுந்து அடிச்சிக்கிட்டு ஓடி வர்ற வங்களைத்தான் நான் பார்த்திருக்கேன். ஆனா உண்மையான கொள்கையோட தன்னோட சமூகத்துக்கு எதையாவது செய்தேயாகணும்னு உறுதியா இருக்கிற உங்க மாதிரி ஒருத்தரை இன்னைக்கித்தான் நான் சந்திக்கிறேன்.
இந்தப் பாழாய்ப் போன பட்டம், பதவிகளுக்காக நானே கூட என்னோட சமூகத்தைப் பற்றியெல்லாம் நினைக்காம எவ்வளவோ பாவங்களைச் செஞ்சிருக்கேன். உங்களை மாதிரி நல்ல சிந்தனையுள்ள இளைஞர்கள் உருவாகி வரும் போது எங்களைப் போல போலி அரசியல்வாதிங்க கொஞ்சம் கொஞ்சமா பின் வாங்கிடுவாங்க. நான் நினைச்சி வந்த காரியம் வேணும்னா கனியாகாம இருக்கலாம். ஆனா இந்த மக்களோட இதயக்கனியா இருக்கிற உங்களை நம்பி நான் ரொம்பப் பெருமைப்படுறேன். தம்பி. உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை வந்து சந்திங்க. நான் வாறேன்."
ஜம்புலிங்கம் விடைபெற்றுச் செல்வதையே அவன் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான். நம்மைத் தாழ்த்திப் பேசும் போது அடக்கமாய் இருப்பது பெரிய காரியமல்ல.

Page 66
116a உன்னையே உறவென்று.
நம்மைப் புகழ்ந்துரைக்கும் போது அடக்கமாய் இருப்பதே மிகப் பெரிய விஷயம்.
மேலும் இரண்டு நாட்கள் சென்றன. கண்மணி பார்த்திபனைப் பலமுறை சந்தித்தபோதும் அவன் தனிமையிலிருந்த சமயங்களில் தன் மனதிலுள்ளதை அவனிடம் சொல்ல முயற்சி செய்தாள். ஆனால் அவள் சொல்வதற்கு முன்பே அவன் சட்டென அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவான். அவர்கள் இருவருக்குமிடையில் அடிக்கடி கண்ணாமூச்சி விளையாட்டு நடந்து வந்தது. அதே சமயம் மாதவி கண்மணியை எப்படியாவது தனிமையில் சந்தித்து பார்த்திபன் அன்று கூறியதைச் சொல்லிவிட சமயம் பார்த்திருந்தாள். ஆனால் சரியான நேர காலம் உடனடியாகக் கிடைக்கவில்லை.
அன்று ஒரு சனிக்கிழமை. புதிதாக அமைக்கப் படவுள்ள பாடசாலைக் கட்டிடம் சம்பந்தமான ஒரு கலந்துரையாடலுக்கு அதிபர் ஏற்பாடு செய்திருந்தார். அன்று அனைவருக்கும் ஒரு தேநீர் விருந்தொன்றினையும் அதிபர் ஏற்பாடு செய்திருந்தார். மாதவியும் கண்மணியும் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். இருவருமே அதிக சிரத்தையுடன் அலங்காரம் செய்திருந்தார்கள். மாதவி நட்புடன் கண்மணியைப் பார்த்தாள்.
+ () ()

பாலா. சங்குபிள்ளை 17 سےر
0
28
X->
ஒரு செயலில் உறுதியாக இருந்தால் வெற்றி நிச்சயம். மரத்திலிருக்கும் காய்க்காக உறுதியுடன் காத்திருந்தால் கனி கையில் கிடைக்கும். மாதவியும் அப்படிதான். தன்னுடைய காதலில் உறுதியுடன் இருந்தாள். அதில் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருந்தாள். எனவே இன்று எப்படியாவது கண்மணியுடன் பேசி விடுவது என முடிவு செய்திருந்தாள். அவளை நட்புடன் பார்த்ததுடன் பேசவும் செய்தாள். 'மீட்டிங் முடிஞ்சதும் எனக்காகக் காத்திருக்க முடியுமா, உங்களோட கொஞ்சம் பேசனும்."
கண்மணி புன்னகையுடன் தலையாட்டினாள். தன்னு டைய காதலின் உறுதியை எப்படியாவது மாதவியிடம் சொல்லிவிட இந்தச் சரியான தருணத்தை உபயோகப் படுத்திக் கொள்வது எனக் கண்மணி மனதில் முடிவு செய்து கொண்டாள். சில வேளை மாதவியின் மூலமாகக் கூட தன் காதலைப் பார்த்திபனிடம் சொல்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையுமென அவள் மனம் கணக்குப் போட்டது. எந்தக் கணக்குகளையும் யாரும் போடலாம். ஆனால் முடிவு யார் கையில்?
ஒரு மாதிரியாகக் கூட்டம் முடிவடைந்தது. பார்த்தி பனுக்கு டவுணில் ஒரு முக்கிய வேலையிருந்தது. எனவே கூட்டம் முடிந்தவுடனேயே புறப்பட்டு விட்டான். மேலும், மாதவியும் கண்மணியும் தோழமையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை அவன் பார்த்துவிட்டான். இன்று மாதவி கண்மணியிடம் அவன் சொன்ன விடயத்தை அநேகமாகக் கூறிவிடுவாளென அவன் நம்பினான். இந்தச் சமயத்தில் அவன் அந்த இடத்தில் இருக்க விரும்பவில்லை.

Page 67
1 1 BN உன்னையே உறவென்று.
அதிபர் கூட்டத்தை முடித்துவிட்டு அனைவருக்கும் நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டு விட்டார். எஞ்சியிருந்தவர்கள் மாதவியும் கண்மணியும் மட்டுமே. இலேசாக மழை தூறத் தொடங்கியது. இருவரும் அந்தப் பெரிய ஆலமரத் திண்டியில் ஒதுங்கினார்கள். மாதவி மெதுவாக வாய் திறந்தாள்.
'கண்மணி, நீங்க என் மேலே கோபமா இருப்பீங்க. நாம ரெண்டு பேருமே இங்கே தொழில் செய்ய வந்திருக்கோம். நமக்குள்ளே எதுக்காக இந்தத் தேவையில்லாத கோபமெல்லாம்."
கண்மணி புன்னகையுடன் அவளைப் பார்த்தாள்.
"ஆமாம் உண்மைதான். வீணா கோபப்படுறதுல எந்தப் பிரயோசனமும் இல்ல. அர்த்தமில்லாத கோபத்தினால நாம ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்கமுடியாம அவஸ்தைப் படுறதைவிட எதுவாயிருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம் இல்லையா...'
"சரியா சொன்னீங்க. நான் சுற்றி வளைக்காம நேரடியாகவே விஷயத்துக்கு வாரேன். சமீபத்துல பார்த்திபன் சேர் என்கிட்ட சில விஷயங்கள் பேசினார். அது உங்களைப் பற்றிய விஷயம். நேரடியா உங்கக்கிட்ட சொல்ல முடியாததால என் கிட்டே சொன்னாரு..."
கண்மணி படபடக்கும் இதயத்துடன் அவளைப் பார்த்தாள். 'என்னது, என்னைப் பற்றி உங்கக்கிட்ட பேசினாரா. என்னவாக இருந்தாலும் நேரடியா என்னோட பேசியிருக்கலாம் தானே."
"இது ரொம்ப முக்கியமான விஷயம். இதை எப்படி உங்கக்கிட்ட சொல்றதுன்னு ரொம்பத் தயங்கினாரு.

பாலா. சங்குபிள்ளை _19 سے
அதுனாலதான் என் மூலமா உங்கக்கிட்ட பேசச் சொன்னாரு..."
கண்மணிக்குச் சட்டென கோபம் வந்தது. இவள் நேற்று வந்தவள். பார்த்திபன் என்னிடம் நேரடியாகப் பேசாமல் அது என்ன மூன்றாம் மனுஷியிடம் சொல்லச் சொல்வது.
“என்ன கண்மணி. ரெண்டு பேருக்கும் நடுவில இவள் எதுக்குன்னு கோபப்படுறிங்களா. சில விஷயங்களை நேரடியா சொல்ல முடியாது. நான் உங்களோட ஒரு நெருங்கிய தோழியர்தான். இதை சொல்லுறேன். இதுனால அவரைத் தப்பாகவோ என் மேல ஆத்திரமோ பட்டுடாதீங்க."
"இல்ல. சொல்ல வந்ததைச் சொல்லுங்க."
“பார்த்திபன் சேர் அவர் பல்கலைக்கழகத்துல படிக்கிற வருசத்துல சாந்தினின்னுற ஒரு பொண்ணை நேசிச்சிருக் காரு. அதையே மணம் முடிக்கவும் விரும்பியிருக்காரு. ஆனா அந்தப் பொண்ணு விபத்தொன்னுல இறந்து போயிடுச்சாம். அதுனால பார்த்திபன் சேர் ரொம்பவும் மனம் உடைஞ்சிட்டாராம். அவர் வாழ்க்கையில் இனி எந்தப் பொண்ணுக்குமே இடமில்லையாம். சில வேளைகளில் உங்களுக்கு அப்படியொரு எண்ணம் இருந்தா அதை மாத்திக்கச் சொல்லி என் மூலமா சொல்லச் சொன்னாரு..."
கண்மணிக்குக் கோபத்தால் உடல் நடுங்கியது. அவள் மதுரையை எரித்த கண்ணகியைப் போல மாதவியைப் பார்த்தாள். 'நான் நினைச்சேன். என்னடா புலி பதுங்குதுன்னு. நல்லாவே பாய்ஞ்சிட்டீங்க."

Page 68
120 உன்னையே உறவென்று.
'கண்மணி, நீங்க என்னைப் பற்றித் தவறா புரிஞ்சிக்கிட்டீங்க."
'இல்ல டீச்சர். ஆரம்பத்திலேயே உங்களைப் பத்தி நான் சரியா தான் தெரிஞ்சி வச்சிருந்தேன். போனாப் போவுதுன்னு உங்களோட சிரிச்சிப் பேசினா நீங்க ரொம்ப அதிகமாகவேதான் என்னோட அந்தரங்க விஷயங்கள்ல தலையை நுழைக்கிறீங்க."
"கண்மணி. நான் சொன்னது சத்தியம்."
'நீங்க எதுவும் பேச வேணாம். பார்த்திபன் சேர் படிச்சவர்; நாகரிகம் தெரிஞ்சவர். இதையெல்லாம் இப்படி அநாகரிகமா கண்டவங்ககிட்ட பேச மாட்டாரு. நீங்க அவரை விரும்புறதாயிருந்தா உங்க வழியில முயற்சி செய்யுங்க. இப்புடி குறுக்குப் புத்தியில செயல்படாதீங்க. அது உங்களுக்கு நல்லதில்லை."
மாதவி, கண்மணி இந்தளவுக்குக் கோபப்படு வாளென்று எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் விஷயத்தை அவளிடம் கூறிவிட்ட திருப்தி மாதவிக்கு இருந்தது.
'கண்மணி. நீங்க என்னைத் தவறா நினைச்சாலும் பரவாயில்லை. உண்மை இதுதான். பார்த்திபன் சேர் மேல நான் மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கேன். ஆனா நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமில்லை. இது சம்பந்தமா உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தா நீங்க சேர் கிட்டேயே பேசித் தீர்த்துக்கங்க. நான் வாரேன்."
மாதவி படபடவெனப் பேசிவிட்டு விடுவிடுவென அந்த இடத்தைவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினாள். கண்மணி அப்படியே சற்று நேரம் அசையாமல் நின்றாள். அவள் மாதவி கூறிய எதையும் நம்பத் தயாரில்லை.

பாலா. சங்குபிள்ளை 1ے 1ے
மாதவியிடம் நிச்சயமாகப் பார்த்திபன் கண்மணியைப் பற்றிப் பேசியிருக்கவே மாட்டார். கண்மணியை பார்த்திபனிடமிருந்து பிரிப்பதற்காக மாதவி இப்படியாக நாடகமாடு கிறாளென்றே அவள் நினைத்தாள். இனிமேலும் தாமதம் செய்தால் மாதவியே பார்த்திபனிடம் இல்லாததையும் பொல்லாததையும் கூறி அவனைத் தன் கைக்குள் போட்டாலும் போட்டு விடுவாள். கண்மணி உறுதியான இறுதியான முடிவுடன் அந்த இடத்தைவிட்டு நடக்கத் தொடங்கினாள். மெதுவாக ஆரம்பித்த மழை இப்போது கொட்டோ கொட்டென கொட்டத் தொடங்கியது.
令令令
29 -
10ர்த்திபன் டவுணில் வேலைகளை முடித்துவிட்டுப் புறப்படும் வேளையில் மழை பொழியத் தொடங்கிவிட்டது. அவன் பாதையோரத்திலிருந்த அந்தச் சிறிய பஸ் நிலையத்தில் ஒதுங்கினான். குடையையும் கொண்டு வரவில்லை. பஸ்ஸையும் காணவில்லை. மழை விடுவதாகத் தெரியவில்லை. அவன் என்ன செய்வதெனத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது சட்டென அந்த இடத்தில் ஒரு ஒட்டோ வந்து நின்றது. உள்ளே அன்னக்கிளி அமர்ந்திருந்தாள்.
"சேர், மழை நிற்காது போலிருக்கு. ஒட்டோவில் ஏறுங்க. என் வீடு பக்கத்துலத்தான் இருக்கு. குடை தாரேன்."

Page 69
.உன்னையே உறவென்று ܓܠ122
பார்த்திபனுக்கு வேறு வழி தோன்றவில்லை. எனவே ஒட்டோவில் ஏறினான். ஒட்டோ வேகமாக ஓடியது.
“என்ன சேர். மழை ரொம்ப பெரிசாயிடுச்சி. அந்தி மழை விடாதுன்னு சொல்லுவாங்க. இந்த மழையில பஸ்சும் வராது. நல்ல வேளை நான் பார்த்துட்டேன். அப்புறம் சேர், உங்கக்கிட்ட ரெண்டு முக்கியமான விஷயங்கள் பேச வேண்டியிருக்கு. என்னோட பக்கத்து வீட்ல இருக்கிற மாமா ஒட்டோ வச்சிருக்கார்; அதுலயே நீங்க போயிடலாம்."
“ரொம்ப முக்கியமான விஷயமா டீச்சர்."
"ஆமாம் சேர். கட்டாயம் இதைப் பற்றி உங்கக்கிட்ட பேசியே தீரணும்.'
"சரி. பரவாயில்ல. பேசுவோம்."
"வீட்டுக்குப் போயிடலாம் சேர்."
அந்த ஒட்டோ சுமார் இருபது நிமிடங்களின் பின் அந்தச் சிறிய வீட்டினருகில் நின்றது. இதற்கு முன் அவன் அங்கே வந்ததில்லை. அங்கே சிறியதும் பெரியதுமான பல வீடுகள் இருந்தன. அவள் அவனை உள்ளே அழைத்துச் சென்று இருக்கையில் அமரச் செய்துவிட்டு உள்ளே ஓடினாள். ஒரு தட்டில் பிஸ்கெட்டும் வாழைப்பழமும் வைத்து வயதான பெண்ணொருத்தி சிரித்த முகத்துடன் அவனிடம் வந்தாள். பார்த்திபன் வணக்கம் சொன்னான்.
“உங்களைப் பத்தி மகள் அடிக்கடி சொல்லுவா. என்னோட மகன் ஒருத்தன் கொழும்புல சீ.ஐ.டி. திணைக் களத்துல வேலை செய்யிறான். நாங்க மரக்கறி தோட்டம் வச்சிருக்கிறோம். எங்களோட பரம்பரைத் தொழிலே

பாலா. சங்குபிள்ளை 2ے سےB
இதுதான். நாங்க கைநாட்டுப் பேர் வழிங்க, தேயிலைத் தோட்டத்துல கொழுந்து பறிச்சிக்கிட்டிருந்த எங்களோட சந்ததிங்க படிக்கல்ல. நாமத்தான் இப்படிப் போயிட்டோம், நம்ம பிள்ளைகளாவது படிக்கட்டுமேன்னுதான் நல்லா படிக்க வச்சோம். அப்புறம் தம்பி இருந்து சாப்பிட்டுட்டு தான் போகணும்."
"இல்லம்மா. உங்க அன்புக்கு ரொம்ப நன்றி. நான் அவசரமாப் போகணும். மழைக்காக ஒதுங்கினேன். இன்னொரு நாள் கட்டாயமா வருவேன்.'
அப்போது கையில் தேநீர் கோப்பையுடன் அன்னக்கிளி வந்தாள்.
‘எங்கம்மா அப்படித்தான்; யாரும் கிடைச்சிட்டா வளவளன்னு பேசுவாங்க. இந்தாங்க நீங்க பசும்பால் தேநீர்தானே குடிப்பீங்க..?"
அன்னக்கிளியின் தாய் உள்ளே சென்றாள். பார்த்திபன் தேநீரை மெதுவாகக் குடிக்கத் தொடங்கினான்.
“சேர். நீங்க கொஞ்சம் கவனமா இருக்கணும். அருள் மணியும், பசுபதியும் அமைதியா இருக்காங்கன்னு நீங்க நினைக்கிறீங்க. ஆனா அப்படியல்ல. இரண்டு நாளைக்கு முன் ரெண்டு பேரும் நுவரெலியா பொலீசுக்குப் போயிருக்காங்க. நேற்று கொழும்பிலிருந்து அண்ணன் ஃபோன் பண்ணினாரு. அவருக்கு உங்களைப் பற்றி தெரியும். கேள்விப்பட்டிருக்காரு. ஆனா பார்த்ததில்லை. கொழும்புலயிருந்து நுவரெலியா பொலீசுல உங்களைப் பற்றி விசாரிச்சிருக்காங்களாம். இன்னைக்கி யாரோ சிவாகரனாம். துப்பறியும் பொலீஸ் இன்ஸ்பெக்டராம் அவர் வந்திருக்கிறாராம். எனக்கு ஒண்ணுமே விளங்கலை. அண்ணாதான் இதையெல்லாம் சொன்னாரு...”*

Page 70
.உன்னையே உறவென்று ܢܥܠ122 フ
பார்த்திபன் முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லாமல் அன்னக்கிளியைப் பார்த்தான்.
"வீணா மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க டீச்சர். இதுல அச்சப்படுறதுக்கு எதுவுமேயில்லை. எதுயெது எப்போது எப்படி நடக்குமோ அதுவது அந்தந்த நேரத்துல சரியா நடந்துடும். இதை யாராலும் தடுக்க முடியாது."
அன்னக்கிளிக்கு அவன் பேசுவது எதுவுமே விளங்கவில்லை.
"சேர், சொல்றது எதுவுமே எனக்குப் புரிய மாட்டேன்
"சில விடுகதைகளுக்கு விடையே கிடைக்காது."
"சரி அது போகட்டும். ரெண்டாவது விஷயம் ரொம்பவும் முக்கியமானது. அதைப் பற்றி மாதவி எதுவும் சொல்லியிருக்க மாட்டாள்ன்னு நினைக்கிறேன்."
'இல்லையே என்ன விஷயம்...??
'நீங்க ரெண்டு மாசம் திடீர்ன்னு காணாம போயிட்டீங்க. நீங்க கொழும்புக்குப் போன அன்னைக்கி யாரோ நாலைஞ்சி பேரு உங்களை நல்லா அடிச்சி வேன்ல ஏத்திட்டுப் போய் மலையிலிருந்து கீழே தள்ளிடப் போறதா மாதவி ஃபோன்ல அழுதுக்கிட்டே சொன்னா. நான் தான் பொலீசுக்குச் சொன்னேன். நீங்க இறந்துட்டதா நினைச்சி மாதவி பைத்தியம் பிடிச்ச மாதிரியாயிட்டா. யாருக்கும் அடங்காமயிருந்த அவ உங்களை எப்போ பார்த்தாளோ அப்பவே அவளை மாத்திக்கிட்டா."

umoon. Fileóliooo 125ےر
பார்த்திபன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான்.
'நீங்க என்ன டீச்சர் சொல்லுறீங்க. என்னை யாருமே அடிக்கவும் இல்ல மலையிலிருந்து கீழே தள்ளிவிடவும் இல்லை. அதுவும் போக மாதவி டீச்சர் விஷயம்தான் எனக்கு விளங்கல்லை. அவங்க எதுக்காக எனக்காகச் சாப்பிடாம இருக்கணும்.?"
"என்ன சேர். இப்புடி பேசுறீங்க. மாதவி உங்களை நேசிக்கிறது உங்களுக்குத் தெரியாதா...??
"நிச்சயமா தெரியாது டீச்சர். நீங்க சொன்னதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைஞ்சிப் போயிருக்கேன்."
'நீங்க சொல்றதைக் கேட்டா எனக்குத்தான் அதிர்ச்சி யாவும், ஆச்சரியமாகவும் இருக்குது. அவ மாதவி எல்லாத்தையும் மனசுல போட்டு பூட்டி வச்சிருக்கிறா. பாருங்க நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டியதா இருக்கு."
"இதுக்கு நான் பொறுப்பில்லையே டீச்சர். தவிரவும் நாம இங்க சேவை செய்ய வந்திருக்கோம். இந்த நிலையில் இப்படி காதல் கீதல்ன்னு போனா கடமையை எப்புடி செய்யிறது. நம்மளோட சொந்த விஷயங்களுக்காக வந்த வேலையைக் கவனிக்காம கண்ட வேலையிலயும் கவனம் செலுத்துவது எந்தவிதத்துல நியாயம் டீச்சர்?"
K) () ()

Page 71
.உன்னையே உறவென்று ܥ126
jତ! if
1ார்த்திபன் கட்டிலில் படுத்தவாறு விட்டத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஓர் ஆணுக்குச் சிறந்த நன்மையும் பெரிய பிணியும் பெண்ணாலேயே உண்டாகின்றன என்பது எவ்வளவு பெரிய உண்மை. கண்மணிதான் அவனை நேசிக்கிறாள் என்பது அவனுக்குத் தெரிந்தபோது அவன் துடித்துப் போனான். வீணாகத் தன் மேல் ஆசையை வைத்து அது நிராசையாகப் போவதற்கு முன் எச்சரிக்கை செய்வதற்காக மாதவியைப் பயன் படுத்தினான். ஆனால் கடைசியில் மாதவியே அவனை நேசிப்பதாகச் சொன்னபோது அவன் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து விட்டான். அவன் மனதில் ஏற்கனவே நிரந்தரமாக ஒருத்தி காவியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது வேறு யாருக்குமே அங்கே இடமில்லை. ரோஜாச் செடியில் மலரும் ரோஜா ஒருமுறை உதிர்ந்துவிட்டால் அதே ரோஜா மறுபடியும் மலர்வதில்லை. அவனுடைய காதல் ஜன்னல் வழியாக உள்ளே வந்து கதவு வழியாக வெளியே போய் விட்டது. இனி அது திரும்பாது.
பார்த்திபன் மணியைப் பார்த்தான். இரவு பன்னிரண்டு மணி. அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அன்னக்கிளி பொலீஸ் பற்றி சொன்னதை யோசித்துப் பார்த்தான். அவன் மனதில் சில விஷயங்கள் மறைந்துக் கிடந்தன. அவற்றை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டான். அவனைப் பொருத்தவரையில் அவன் வந்த வேலை ஓரளவு முற்றுப்பெற்று விட்டது. இனி அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். மலையகம் எல்லா வகையிலும் மறுமலர்ச்சியடைய வேண்டும் என்ற அவனுடைய கனவு இன்னமும் முழுமை

பாலா. சங்குபிள்ளை 27ے 1ےر
யடையவில்லை. ஆனால் இப்போது இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். அவனின் அணுகுமுறை யினை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
பார்த்திபனுக்கு வெகு நேரம் கழித்துத்தான் உறக்கம் வந்தது. பொழுது விடிந்தது. இரவில் அவன் சில தீர்க்கமான முடிவுகளை எடுத்திருந்தான். அதன் முதல் கட்டமாக முதலில் அதிபரைச் சந்தித்தான். அவருடன் அரைமணி நேரத்துக்கு மேல் விவாதம் செய்தான். முடிவில் தன் தீர்மானத்தை அதிபர் ஏற்றுக் கொள்ளும்படி செய்தான்.
அவன் உடனடியாக நுவரெலியா டவுனுக்குப் புறப்பட்டான். நுவரெலியா பொலீஸ் நிலையத்தை அடைந்தான். கொழும்பிலிருந்து வந்திருந்த துப்பறியும் பொலீஸ் இன்ஸ்பெக்டர் சிவாகரனை அவரின் பிரத்தியேக அலுவலக அறையில் தனிமையில் சந்தித்தான்.
“என் பெயர் பார்த்திபன். ஆசிரியரா இருக்கேன்." சிவாகரன் ஆச்சரியமாகப் பார்த்தார்.
'பார்த்திபனா. உங்களைப் பற்றி ஏற்கனவே உங்களோட வேலை செய்யிற சக ஆசிரியர்கள் எல்லா தகவல்களையும் குடுத்துட்டாங்க. இருண்ட வீட்ல குருட்டுப் பூனை மாதிரி எந்த வழியும் தெரியாம விழி பிதுங்கியிருந்த எங்களுக்கு ஒளியைக் காட்டினது அவங்கதான். ஒஃபிசியலா உங்களை அழைச்சி விசாரிக்க நினைச்சேன். நல்ல வேளை நீங்களே வந்துட்டீங்க. உங்களைப் பத்தி இங்கே விசாரிச்ச வகையில உங்களை ரொம்ப உயர்வா சொன்னாங்க. நானும் மலை நாட்டைச் சேர்ந்தவன்தான். என்னோட அப்பா அம்மாவும் மலையில புல்லு வெட்டிவங்கதான். உங்களை மாதிரி உண்மையான மனசோட நம்ம சமூகத்துக்குச் சேவை செய்யிறவங்க

Page 72
.உன்னையே உறவென்று ܢܥ12e
இருக்கிறதாலத்தான் நாம கொஞ்சமாவது முன்னேறி வாரோம். ஆனா நான் சட்டத்தை மதிக்கிறவன். என்னால எந்தளவுக்கு உங்களுக்கு உதவ முடியும்னு தெரியலை. முதலாவது கொழும்புல 'கோமா நிலையில இருக்கிற பார்த்திபன் யாரு. நீங்க யாரு. ரெண்டு மாசத்துக்கு முன்னால என்னதான் நடந்திச்சி. இதுக்கெல்லாம் சரியான விடை உங்கக்கிட்டதான் இருக்கணும். சொல்லுங்க மிஸ்டர் பார்த்திபன்."
பார்த்திபன் சற்று நேரம் பேசாமல் இருந்தான். பின்பு நீண்டதொரு பெருமூச்சினை வெளியிட்டான்.
"மிஸ்டர் சிவாகரன், உங்களைச் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம். நான் இங்க வந்த வேலைகள் ஒரளவு முடிஞ்சிருச்சி. ஆனா என்னோட லட்சியம், கனவு எல்லாம் முழுமையடைஞ்சிடுச்சின்னு சொல்ல முடியாது. நான் என்னோட கடமையைச் சரியா செய்ய நினைச்சப்போ எனக்குப் பல குறுக்கீடுகள், இடையூறுகள் எல்லாமே வந்துச்சி.
ஆனா அதையெல்லாம் எதிர்த்துத் தடை தாண்டிதான் என்னால நினைச்சதை முடிக்க முடிஞ்சது. நான் பெண்களை மதிக்கிறவன். என் மனசுல ஒரே ஒருத்திதான் தெய்வமா வீற்றிருக்கா. அவளைத் தவிர வேற யாரையும் நான் என் மனசாலக் கூட தவறா நினைச்சதில்ல. ஆனா என் பெயரைக் கெடுக்குறதுக்குன்னே ஒருத்தன் இருந்தான். ஆரம்பத்திலேயே அவனை அடிச்சி வளர்க்காத படியினால் அவன் வீட்டுக்கு அடங்காதவனா யார் பேச்சையும் கேட்காதவனா இருந்தான். அவன் வேறு யாருமில்ல. என்னோட பெரியப்பாவோட மகன். பெரியப்பா தபால் நிலையத்துல சாதாரண வேலையில சேர்ந்து உழைப்பால

Uoo. Figoldiood 9ے 1ےر
உயர்ந்தவர். அவருக்கு ஒரே மகன். அவன் பெயரும் பார்த்திபன்தான். பார்க்கிறதுக்குக் கிட்டத்தட்ட என்னை மாதிரியே இருப்பான். அவன் வீட்டுக்கு அடங்காதவனா ரெளடித்தனம் பண்ணுறவனாயிருந்ததைக் கூட நான் பெரிசா கவனத்தில் எடுக்கலை. ஆனா அவன் பெண்களோட மானத்தோட விளையாடினான். நம்ப வச்சி ஏமாற்றினான். படியாதவங்களை பலாத்காரமும் செய்தான். அவனால் பெரியப்பா குடும்பத்துக்கு மட்டுமில்ல, எனக்கும் தான் இழுக்கு. பெரியப்பாவைப் பார்க்க நான் போகும்போது சில பேர் என்னைத் தவறாக அவனென்று நினைத்து மிக மோசமாக ஏசுவார்கள். காரி மூஞ்சியில துப்புவாங்க. நான் துடிச்சிப் போயிடுவேன். இதுனால நான் அந்தப் பக்கமே போறதில்லை."
பார்த்திபன் பேசுவதைச் சட்டென நிறுத்தினான். சிவாகரனிடம் அனுமதி கேட்டு விட்டு கண்ணாடி போத்தலிலிருந்து தண்ணிரைப் பருகினான். சிவாகரன் அவனை அனுதாபத்துடன் பார்த்தார்.
"மிஸ்டர் பார்த்திபன், நீங்கள் சொல்றதை வச்சிப் பார்த்தா எனக்கு இலேசா விஷயம் விளங்குற மாதிரி இருக்கு. ஆனா உங்களோட வாக்குமூலமில்லாம எதையும் சரியா ஊகம் செய்யமுடியாது. அது சரி. அருள்மணிக்கும், பசுபதிக்கும் உங்க மேல அப்படியென்ன கோபம்.?"
"பயன் தரக்கூடிய நல்ல மரங்களுக்கு மத்தியில சில விஷச் செடிகளும் வளர்றது இல்லையா அதுமாதிரிதான்."
+ () ()

Page 73
18ohx உன்னையே உறவென்று.
10ர்த்திபன் சிவாகரனிடம் தொடர்ந்து பேசத் தொடங்கினான். 'கடவுள் மனிதனை என்ன காரணத்துக்காகப் படைச்சானோ அது பெரியளவுல நிறைவேறலை. எங்கே பார்த்தாலும் பொய், பொறாமை, களவு, கொள்ளை, மிருகக் குணம்னு மனுஷத் தன்மை இல்லாம போயிடுச்சி. நிலத்துக்காகவும், பணம், பொருளுக்காகவும் அடிச்சிக்குறோம். கொலை பாதகச் செயல்ல ஈடுபடுறோம். நம்மைப் பெற்றெடுத்தவளும் ஒரு பெண் தானென்பதை மறந்து பெண்களை இழிவு படுத்துறோம். இம்சைப்படுத்துறோம். என்னோட பெயரை வச்சிக்கிட்டு அப்பாவிப் பெண்களோட வாழ்க்கையோட விளையாடிக்கிட்டிருந்த அவன் கடைசியா ஒரு பெண்ணால பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டான். இவனால ஏமாற்றப்பட்ட அந்தப் பெண் தற்கொலை செஞ்சிக்கிட்டா. அந்தப் பெண்ணோட அண்ணன்மார் இவனைத் தேட ஆரம்பிச்சிட்டாங்க. அந்தப் படுபாவி அவங்கக்கிட்டே யிருந்து தப்பிச்சி என்னோட பாடசாலை விடுதிக்கு வந்துட்டான். அடுத்த நாள் விடுமுறை. நான் தொடர்ந்து இரண்டுமாதம் லீவுப் போட்டிருந்தேன். இந்த விஷயம் அதிபருக்கு மட்டும் தான் தெரியும். நான் விடுதியோட சாவியை பக்கத்து லயக்காம்பறாவுல இருந்த முத்துசாமிக் கிட்ட குடுத்துட்டு டவுணுக்குப் போயிட்டேன். சரியா அரைமணி நேரத்தில இவன் பார்த்திபன் பெட்டியோட அங்கே வந்திருக்கான். அப்போ ஒரு ஐந்து மணியிருக்கும். முத்துசாமிக்குக் கொஞ்சம் இருட்டானா கண் தெரியாது. எனவே கிட்டத்தட்ட ஒரே மாதிரியிருந்தவனை பார்த்திபன் என எண்ணி சாவியைக் கொடுத்துவிட்டான். வழமையா

Umroom. FråIGóldirooooT 131ے
ஐந்து மணியிலயிருந்து ஆறுமணிவரை நான் யாருக்கும் டியூஷன் எடுக்கிறதில்லை. சுமங்கலி நல்லா படிக்கக் கூடியவ. பாடசாலை விட்ட மூன்று நான்கு மணியிலிருந்து ஐந்து மணிவரை அவள் என்கிட்ட டியூஷனுக்கு வருவா. ஆனா விதி அன்றைக்கு விளையாடிவிட்டது. அவள் யாரோ தோழி வீட்டுக்குப் போய் கொஞ்சம் லேட்டானதால ஐந்து மணிக்கு அவசர அவசரமா என்னைத் தேடி வந்திருக்கா. அப்போது என்னைப் போலவேயிருந்த பார்த்திபனிடம் பேசியிருக்கா. அந்தக் காமப் போய் எப்படியோ அவளை சத்தம் போடாம வாயைக் கட்டி முரண்டு பிடிக்காம கைகால்களைக் கட்டி மிருகமா நடந்துக்கிட்டான். அந்தப் பச்சை மண்ணு துடிதுடிச்சி மூச்சுத் திணறிச் செத்துப் போயிடுச்சி.
அவன் இப்படி நடக்கும்னு நினைக்கல்லை. பயந்துட்டான். கட்டில் பெட்சிட், பழைய சாக்கு எல்லாம் பயன்படுத்தி மூட்டையா கட்டி ரொம்ப சாமர்த்தியமா மூங்கில் புதர்ல போட்டுட்டான். எட்டு மணியாகியும் சுமங்கலியைக் காணாம டவுண்ல இருந்த என்னைத் தேடி வந்து அந்தப் பொண்ணோட அண்ணன்மார் சொன்னப்ப எனக்கு ஒண்ணும் புரியலை. நான் அவசர அவசரமா விடுதியறைக்குப் போனபோது அங்கே என் சகோதரன் இருந்தான். ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி இருந்தான். நான் அவனிடம் சந்தேகம்படும்படி நடந்துக்கல்லை. முத்துசாமி இன்னும் பலரை மெதுவா விசாரிப்ப சுமங்கலி என்னைத் தேடி வந்த விஷயம் எனக்குத் தெரிஞ்சிடுச்சி. ஆனா நான் ஒண்ணுமே சொல்லலை. என் மனசுல ஒரு புயல் வீசிக்கிட்டிருந்திச்சி. மற்ற வங்களுக்குத் தீங்கு விளைவிக்கிற நச்சுச் செடிகளை வேறோட பிடுங்கி எறிஞ்சிடணும். மறுநாள் காலையில சுமங்கலியோட பிணத்தை மூங்கில் தோப்பு புதர்லயிருந்து

Page 74
132n உன்னையே உறவென்று.
கண்டுபிடிச்சிட்டாங்க. நான் அவனை வெளியே விடாம வச்சிருந்தேன். அன்னைக்கி ராத்திரி நான் கொழும்புக்குப் போக ஏற்பாடு செஞ்சிருந்தேன். என்னோட அவனும் வாரேன்னான். நான் சுமங்கலியோட அண்ணன்மார்களை ரகசியமா சந்திச்சேன். அன்றைக்கு ராத்திரி நான் முன்னாடியே போய் ரயில் நிலையத்துல டிக்கெட் ரெடி பண்ணுறதாகவும் அவனை பின்னாடி வரச் சொல்லிட்டுப் போனேன். சுமங்கலியோட அண்ணன்மார் இன்னும் சில பேரையும் ஏற்பாடு செஞ்சி ஒரு வேனோட வழியில காத்திருந்தாங்க. அவன் வந்தபோது அவனை அடிச்சி நொறுக்கிட்டாங்க. முகத்தை சிதைச்சிட்டாங்க, அவன் கையில் தன் பெயரை பச்சைக் குத்தியிருந்தது ரொம்ப வசதியா போயிடுச்சி. வேன்ல கொண்டு போய் மலையிலிருந்து கீழே அவனைத் தூக்கி வீசிட்டாங்க. அண்ணாமலைகூட என்னைத் தீர்த்துக் கட்ட ஆட்களை அனுப்பினான். ஆனா அதுக்கு முன்னமே இப்புடி நடந்ததைப் பார்த்த அவனுங்க. என்னைத்தான் யாரோ அடிச்சித் தூக்கி வீசிட்டாங்கன்னு நினைச்சி அதை அவங்க செய்ததாச் சொல்லி அண்ணாமலைகிட்ட கணிசமா காசு வாங்கிட்டாங்க. என்னோட திட்டம் நல்லாவே நடந்தது. ஆனா இடையில யாரோ பொலிசுக்குத் தொலைபேசியில தகவல் சொன்னதால ஒரு சின்ன தவறு நடந்து போயிடுச்சி.
இரண்டு மாசம் கழித்து நான் மறுபடியும் வந்தபோது நான் ஒழிஞ்சிட்டதா நினைச்சி சந்தோஷப்பட்டவங்க அதிர்ச்சியாயிட்டாங்க. என்னை ஓட ஓட துரத்தினவங்க என்னைக் கண்டா பாம்பைக் கண்ட மாதிரி ஓட ஆரம்பிச் சிட்டாங்க. இதுனால நான் என்னோட கடமைகளை நிம்மதியா செஞ்சேன். என்னோட சகோதரன் கொடியவனா யிருந்தாலும் அவன் மூலமா நான் என்னோட லட்சியத்தை அடைய அவன் எனக்கு உதவி செஞ்சிருக்கான். நான்

பாலா. சங்குபிள்ளை 133ے
செஞ்சது குற்றம்ன்னு எனக்குத் தெரியும். ஒருத்தனை கொலை செய்ய நான் காரணமாயிருந்திருக்கேன். அதுனால தான் என்னோட வேலையையும் நான் ராஜினாமா செஞ்சிட்டு என் குற்றத்தை ஒத்துக்கிட்டு உங்கக்கிட்ட சரணடைய வந்திருக்கேன். சுமங்கலியோட அண்ணன் மாரை கொலைக்குத் தூண்டியவன் நான்தான். அதுனால அவங்களுக்கு அதிகப்படியான தண்டனை கிடைக்கக் கூடாது...'
பார்த்திபன் சொல்லி முடிக்க இவ்வளவு நேரமும் பிரமிப்புடன் அவன் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த சிவாகரன் கலங்கிய கண்களை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டார்.
"மிஸ்டர் பார்த்திபன், ரியலி யூ ஆர் கிரேட். நியாயத்தின் பக்கமிருந்து பார்த்தா நீங்க செஞ்சது சரிதான். ஆனா சட்டப்படி பார்த்தா குற்றம். கோமா நிலையிலிருக்கிற உங்க சகோதரன் பார்த்திபன் உயரோட இருக்கிறவரைக்கும் நீங்க சிறையில இருக்கலாம். வழக்குப் போய்க் கிட்டிருக்கும். ஆனா அவன் செத்துட்டா உங்களுக்கு உச்சப்பட்சத் தண்டனை கிடைக்கும். எது எப்படி நடக்குமுன்னு யாராலயும் சொல்ல முடியாது. எப்படியோ உங்களோட கனவுகள் ஒரளவு நிறைவேறிடுச்சி."
மறுநாள் நுவரெலியா பொலீஸ் நிலையத்தில் ஆயிரக் கணக்கில் தோட்டத் தொழிலாளர்கள் கூடியிருந்தார்கள். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவலர்கள் தடுமாறினார்கள். அனைவர் முகங்களும் சோகத்தில் மிதந்தன. மாதவி, கண்மணி, அன்னக்கிளி மூவரும் கண்ணிருடன் நின்றிருந்தார்கள். சற்று நேரத்தில் பொலீஸ் நிலையத்தினுள்ளேயிருந்து பார்த்திபனும் சுமங்கலியின்

Page 75
134N உண்ணையே உறவென்று.
அண்ணன்மார்களும் பலத்த பொலீஸ் காவலுடன் வெளியே வந்தார்கள்.
அவர்களை விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டு போவதற்காக சிவாகரன் அவர்களுடன் சேர்ந்து வெளியே யிருந்த பொலீஸ் வேனை நோக்கி நடந்து வந்தார். பார்த்திபனைக் கண்ட தொழிலாளர்கள் "ஐயா, ஐயா..? என கத்தினார்கள். பெண்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறினார்கள். மாதவியும், கண்மணியும் தாங்களொரு ஆசிரியையென்பதையும் மறந்து கண்களில் கண்ணிர் பெருக வாய்விட்டு அழுதார்கள். இவ்வளவு நேரமும் சூட்டையள்ளி வீசிக் கொண்டிருந்த ஆதவன் அவசர அவசரமாகக் கடும் மேகக் குவியலுக்குள் சென்று மறைய இலேசாகத் தூறலுடன் ஆரம்பித்த மழை படபடவென கொட்டத் தொடங்கியது. பார்த்திபன் எல்லோரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான். வயதான தாய்மார்கள், என்னைப் பெத்த ராசா என கூவியழத் தொடங்கினார்கள். பார்த்திபன் மாதவியையும், கண்மணியையும் பார்த்தான். கடமையைச் செய்ய மறக்கக் கூடாதென சைகையினால் தெரிவித்தான். என்றாவது மீண்டும் வருவேன் எனக் கண்களால் சொன்னான்.
ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் மழையினையும் பொருட்படுத்தாமல் பொலீஸ் வேன் பின்னாலேயே ஓடிவர வேன் வேகமெடுத்து புள்ளியாக மறைந்தது. மழைவிடாமல் கொட்டியது.
ஒரு மாதம் ஓடியது. பார்த்திபன் நிச்சயமாக மறுபடியும் வருவான் என்ற நம்பிக்கையில் இதோ மாதவி வழமை போல அமைதியாகத் தன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறாள். கண்மணியும் அப்படித்தான். அவர்கள்

பாலா. சங்குபிள்ளை 135ے
எதிர்பார்ப்புகள் ஈடேறுமா? அவன் மறுபடியும் வருவானா. பார்த்திபன் தன்னுடைய இலட்சியத்தின் ஒரு பகுதி நிறைவேறிய நிம்மதியில் போய் விட்டான். ஆனால் மலையகம் எழுச்சிப் பெற அங்கே மறுமலர்ச்சி தோன்ற பார்த்திபனைப் போன்ற சமூகப் பற்றும் இலட்சியத் தாகமும் கொண்ட ஆயிரமாயிரம் இளைஞர்கள் தோன்ற வேண்டும். உலகத்தில் சோகம் தோய்ந்த வரலாற்றினைக் கொண்டு இன்னமும் இருட்டில் இருக்கும் மலையகம் வெளிச்சத்துக்கு வர இன்றைய இளைஞர்கள் பாடுபட வேண்டும். அந்தப் பொற்காலம் வெகுவிரைவில் மலையகத்தில் நிச்சயம் மலரும். வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை
- - --

Page 76
136
குறிப்புகள்


Page 77
இந்நூலாசிரியர்
முழுப்பெயர்: சங்குப்பிள்ளை பாலகி புனைப் பெயர்: பாலா சங்குப்பிள்ை கே.எஸ்.பாலா, இன பிறப்பிடம்: அட்டன் மாநகரம் ஆரம்பக் கல்வி: அட்டான் நு/ஹை6
கல்லுாரி தொழில்: கணக்காய்வாளர் (Audit முதலாவது ஆக்கம்: தினகரன் பத் ஆக்கங்கள் தொடர்ந்து வெளிவ தினக்குரல், சுடர் ஒளி, தினகரன் மித்திரன் வாரமலர். இலக்கியப் பத் மற்றும் தென்னிந்தியப் பத்திரிகைய எழுதிய தொடர்கதைகள்:05, சிறுக விஞ்ஞான, ஆரோக்கிய, சினிம துறவியின் வாயிலாக வெளியான " மணிமேகலைப் பிரசுரத்தால் ெ தொகுப்புகளில் இவரின் கதைகள் படமாக்கப்பட்ட நீருபூத்த நெருப்பு', 2008இல் படமாக்கப்பட்ட ‘புலன் பிரதான வேடமேற்று நடித்துள்ளார். இவர் பெற்ற விருதுகள்: மணியே ‘காதலுக்குக் கல்யாணம்’, ‘ஓர் உன் இரண்டு நூல்களும் சிறந்த சிறுக செய்யப்பட்டு மத்திய மாகாண சாக கண்டி கலை, கலாசார சங்கத்தி கெளரவிக்கப்பட்டார். நுவரெலி தமிழாராய்ச்சி மாநாடு, மற்றும் சாகி கெளரவிக்கப்பட்டார். தொ.இல: 051-2222399/051-222

பற்றி
ருெஷ்ணன்
57T,
D6T UT6)T
வன்ஸ் மத்தியக்
or) திரிகை ரும் பத்திரிகைகள் வீரகேசரி, ன், தினமுரசு, மெட்ரோ நியூஸ், திரிகைகளான மல்லிகை, ஞானம் ான ராணி. தைகள்-100, அரசியல், இலக்கிய, ா கட்டுரைகள் 200க்கு மேல். உழைக்கப் பிறந்தவர்கள் மற்றும் வளியான மூன்று சிறுகதைத் T இடம் பெற்றுள்ளன. 2006இல் 2007இல் தயாரிக்கப்பட்ட ரேகா, ஆகிய குறுந்திரைப்படங்களில்
0கலைப் பிரசுரமாக வெளிவந்த ானதத் தமிழனின் கதை’ ஆகிய தைத் தொகுப்புகளாகத் தெரிவு கித்திய விழாவில் பரிசு பெற்றன. ல் "ரத்ன தீப" விருது வழங்கி பா பிரதேசசபை, நுவரெலியா த்ய விழாக்களில் விருது வழங்கி
2057/ 051-2224977