கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அமுதத் தமிழ்தந்த ஒளவையார்

Page 1
5.
B.A(Hons)
?
@
g
 


Page 2


Page 3

W அமுதத் தமிழ் தந்த
ஒளவையார்
* தமிழ் மூதாட்டி ஒளவையாரின் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களைச் சுவைபடக் கூறும் நூல்.
சிறுவர் முதல், முதியோர்வகிழ்ச்டிதங்கன்புறத் தக்கது.
இலக்கிய வித்தகள், கவிஞர் த. துரைசிங்கம். B.A (Hons) Dip-in-Ed., S.L.E.A.S கல்விப்பணிப்பாளர் (ஓய்வு)
வெளியீடு: உமா பதிப்பகம்,
521/1B காலி வீதி, கொழும்பு - 06.
விலை: 60/=

Page 4
| நூல் விவரக் குறிப்பு)
நூல் : அமுதத் தமிழ் தந்த ஒளவையார்
ஆசிரியர் : கவிஞர் த. துரைசிங்கம்
முதற்பதிப்பு : LDाfië, 2003.
G பதிப்புரிமை : நூலாசிரியருக்கு.
வெளியீடு : உமா பதிப்பகம்,
521/1 B காலி வீதி, கொழும்பு - 06.
அச்சிட்டோர் : பேர்பெக்ற் பிறின்ரேர்ஸ்,
130, டயஸ் பிளேஸ், கொழும்பு - 12.
《༽ விற்பனையாகின்றன!
சிறுவர்கள் விரும்பும் சிறந்த நூல்கள்.
* பாட்டுப் பூக்கள்
பாடு பாப்பா
பாப்பாப் பாட்டு
பாப்பாக் கதைகள்
பாடம் புகட்டும் பாப்பாக் கதைகள்
சிறுவர் கதைகள்
Children's Essays
நல்வழி - (கருத்துரை, விளக்கம்)
ஆக்கம்:
கவிஞர் த. துரைசிங்கம்
i

முனனுரை
ஒளவைப் பாட்டி நம்பாட்டி அவரே நமக்கு வழிகாட்டி செவ்வை நெறிகள் பற்பலவும் தெரியச் சொன்ன தமிழ்ப்பாட்டி - என்று நம் சிறுவர்கள் ஒளவையாரைப் போற்றிப் பாடி மகிழ்வதை நாம் காணலாம். அவரை அறியாதார் இல்லை. அவர் உலகறிந்த பெண்புலவர். அவருக்குத் தெரியாதது எதுவுமில்லை. ஊர் ஊராய்ச் சுற்றி மனித உள்ளங்களை ஊடுருவிப் பார்த்து, மக்கள் வாழ்வாங்கு வாழும் நெறியுரைத்துச் சென்றவர் அவர்.
அவரது அருமையான பாடல்களைச் சிறுவர்கள் மட்டுமல்லப் பெரியோர்களும் நன்கு கற்றுணர வேண்டும். வையத்து வாழ்வாங்கு வாழவேண்டும். இந்த நோக்குடனேயே இந்நூலைப் படைத்துள்ளேன். ஒளவையாரின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களை அவர் வாயிலாகவே படம் பிடித்துக் காட்டியுள்ளேன். வளர்ந்து வரும் இன்றைய இளஞ் சந்ததியினர் ஒளவையாரை நன்கு அறிந்திடவும் அவரது பாடல்களின் சிறப்பினை உணர்ந்திடவும் இந்நூல் பெரிதும் உதவுமெனக் கருதுகின்றேன்.
நூலை வெளியிடும் பதிப்பகத்தாருக்கு என் நன்றி.
ஒளவையின் புகழ் அகிலமெலாம் பரவும் வகை செய்வோம்.
நன்றி
அன்புடன், த. துரைசிங்கம்.
iii

Page 5
பதிப்புரை
ஒளவைப்பாட்டி நம் தமிழ்ப்பாட்டி, அமுதமனைய நம் தமிழில் அருங்கவிகள் பல தந்த ஒப்பற்ற பெரும்புலவர். பாலர் முதல் முதியோர் வரை படித்து உணர்ந்திட, வாழ்வாங்கு வாழும் நெறி பல உரைத்தவர் அவர். அவரது பாடல்கள் ஒவ்வொன்றும் உள்ளத்தைப் பண்படுத்துவன; அறமுரைப்பன. நீதிபுகட்டுவன. அத்தகு பெருமைமிகு ஒளவையாரைப் பற்றிச் சிறுவர்கள் நன்கறிந்திடல் வேண்டும். அவரது பாடல்களைப் பொருள் உணர்ந்து கற்றிட வேண்டும். கற்றபடி ஒழுகிடல் வேண்டும் என்னும் பெருவிருப்பால் எழுந்ததே இந்நூல்.
சீரிய கல்வியியலாளரும் கவிஞருமான இலக்கிய வித்தகள் த. துரைசிங்கம் அழகு தமிழில் இந்நூலைப் படைத்துள்ளார். சிறுவர் இலக்கியத்துறையில் பல்வேறு சாதனைகளை நிலை நாட்டிய பெருமைக்குரியவர் அவர். இலங்கை அரசின் சிறுவர் இலக்கியத் துறைக்கான தேசிய இலக்கிய விருதினை நான்கு முறை பெற்ற சிறப்புக்குரியவர்.
இந்நூல் சிறுவர்களுக்கென்றே எழுதப் பெற்றதாயினும் ஏனையோரும் படித்தின்புறத்தக்க சிறப்புடையது. இதனை வெளியிடுவதில் எங்கள் பதிப்பகம் பெருமையுறுகிறது. வருங்காலத்தலைவர்களான இன்றைய சிறுவர்கள் இந்நூலை நன்கு கற்று அன்பு, அறிவு, ஒழுக்கம், பிறர் நலம் பேணல், தாய்மொழிப்பற்று, அஞ்சாமை, வாய்மை, கட்மையுணர்வு ஆதியாம் நற்பண்புகளைப் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டுமென விரும்புகின்றோம்.
நன்றி
- பதிப்பகத்தார்
iv

(அமுதத் தமிழ் தந்த ஒளவையார்)
ஒளவைப் பாட்டி நம்பாட்டி. என்று நாமெல்லாம் உரிமை பாராட்டும் ஒளவையார் உலகப் பெண்பாற் புலவர்களில் தலை சிறந்தவர். அவர் வயதில் முதிர்ந்தவர். அறிவிற் சிறந்தவர். அன்பும் பண்பும் மிக்கவர். கருணை உள்ளம் கொண்டவர். கடவுள் பக்தி நிறைந்தவர். தமிழர்தம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் இடம் கொண்டவர். முடியுடை மூவேந்தர் முதல் கடையெழுவள்ளல்கள் வரை போற்றிப் புகழ்ந்திட வாழ்ந்தவர். அவர் பாடிய பாடல்கள் எளிமையும் இனிமையும் நிறைந்தவை. வையத்து வ்ாழ்வாங்கு வாழும் நெறியுரைப்பன. பாலர் முதல் முதியோர் வரை படித்துப் போற்றிடும் பண்புமிக்கவை. மக்கள் கவிஞராக, மனித குலத்துக்கே அறமுரைக்கும் தாயாக, அமிழ்தத் தமிழ் தந்தவர் ஒளவையார். அவரது பிறப்பைப் பற்றியும் அவர் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள் குறித்தும் பற்பல கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில் சில கற்பனை நிகழ்ச்சிகளாகவும் அமைகின்றன.
அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் மன்னன் நெல்லிக்கனி கொடுத்த ஒளவையார் சங்க காலத்திற் பெரும் புகழோடு வாழ்ந்த பெண்பாற் புலவர் என்பர். கம்பர், புகழேந்தி, ஒட்டக் கூத்தர் காலத்தில் வாழ்ந்தவர் வேறோர் ஒளவையார் என்பர். அவரே ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகியவற்றைப் பாடியவராவார். இவர் தவிர வேறும் சிலர் ஒளவையார் என்னும் பெயருடன் உலவினரெனவும் கூறுவர்.
இவ்வாறு ஒளவையார் என்னும் பெயர் கொண்டோர் அனைவரும் வேந்தர்களை விட எளிய வள்ளல்களையே போற்றுபவர்கள்; மக்களிடையே மக்களாக வாழும் மனப்பாங்கு உடையவர்கள். நன்றியுணர்வு மிக்கவர்கள்; நல்லவர்களைப் போற்றியும் அல்லாதவர்களைத் தூற்றியும் அஞ்சாமல் வாழ்ந்தவர்கள் எனலாம். இவர்களது விரிவான வரலாறுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இதனால் ஒளவையார் பற்றிய புனைகதைகள் பெருகிடக் காண்கிறோம். அவர் குறித்த கதைகள் எவ்வாறிருப்பினும் அவர் பாடியதாக இனம் காணப்பட்ட பாடல்கள் அருமையானவை; எளிமையானவை. அவற்றைப் பொருளுணர்ந்து கற்பதே நம் கடனாகும்.

Page 6
(1. ஒளவையின் பிறப்பு)
ஒளவையாரின் பிறப்புப் பற்றிப் பல்வேறு கதைகள் உள. அவற்றில்
ஒன்றினை நோக்குவோம். ஒளவையின் தந்தை பெயர் பகவன். தாய் பெயர் ஆதி. இவர்கள் இருவரும் தமக்குள் செய்து கொண்ட ஒர் உறுதி மொழிப்படி தமக்குப் பிறக்கும் குழந்தையை அவ்விடத்தே விட்டுவிட்டுச் செல்வதெனத் தீர்மானித்தனர். இதற்கமைய ஆதி பெற்ற பெண் குழந்தையை உறையூரில் ஒரு சத்திரத்தில் விட்டுவிட்டுச் செல்ல நேரிட்டது. இச்செயல் ஆதிக்குத் தாங்கொணாக் கவலையை அளித்தது. பெரிதும் வருந்திக் கண்ணிர் விட்டு அழுதார். அவ்வேளை அக்குழந்தையே கண்ணிர் விட்டுக் கதறும் தன் தாயைப் பார்த்து,
‘இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி
விட்ட சிவனும் செத்துவிட்டானோ - முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரம் அவ னுக்கன்னாய்
நெஞ்சமே அஞ்சாதே நீ
என்று பாடியது. 'அன்னையே! இப்படித்தான் நடக்கவேண்டும் என்று என் தலையில் எழுதிவைத்த சிவன் இறந்துவிடவில்லை. என்னைக் காப்பாற்ற அவர் இருக்கிறார். எவ்வளவு பஞ்சம் வந்தாலும் தான் படைத்த உயிர்களைக் காப்பாற்றும் பாரம் அவனுக்கே. நீ மனம் கலங்க வேண்டாம்; செல்வாயாக’ என்னும் பொருளில் அக்குழந்தை அவ்வேளையிற்
2
 

கூறியது. இதைக் கேட்டதும் ஆதியின் துயரம் குறைந்தது. மனந்தேறிக் குழந்தையை விட்டுப் பிரிந்து சென்றனர்.
சத்திரத்தில் அனாதையாகக் கிடந்த அக்குழந்தையைப் பாணன் ஒருவன் கண்டெடுத்து வளர்த்து வந்தான். குழந்தைக்கு ஒளவை எனப் பெயரிட்டான். ஒளவை அறிவிலும் ஆற்றலிலும் நன்கு வளர்ந்து கவி பாடும் திறனுடையராய்த் திகழ்ந்தார். திருமண வாழ்வை வெறுத்தொதுக்கித் தமிழ்ப் பணியே தன் பணியெனக் கொண்டு வாழ்ந்தார். அவர்தம் வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்வுகளையும் அவை குறித்து அவர் பாடிய பாடல்கள் சிலவற்றையும் நோக்குவோம்.
C2. நெல்லிக்கனி பெற்றமை )
பண்டைக்காலத்தில் தமிழ்நாடு சேரநாடு, சோழநாடு, பாண்டிநாடு என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. சேரநாட்டைச் சேர்ந்தது தகடுர். இவ்வூர் பல வளங்களும் கொண்டது. இதனை அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவன் அறிவிற் சிறந்தவன். ஆற்றல் மிக்கவன். கடையெழு வள்ளல்களுள் ஒருவன். தமிழ்மொழி மீது மிக்க பற்றுள்ளவன். தமிழ்ப் புலவர்களை ஆதரித்து உதவும் பண்புள்ளவன். அவனது கொடைச் சிறப்பினையும் பெருமையினையும் கேள்விப்பட்டார் ஒளவையார். அம்மன்னனிடம் சென்று கவி பாடிப் பரிசில் பெற விரும்பினார். அவனது அரண்மனைக்குச் சென்றார். அதியமானைப் புகழ்ந்து கவி பாடினார்.
ஒளவையின் அமிழ்தனைய பாடலைக் கேட்ட அதியமான் பெரு மகிழ்வுற்றான். அவரின் புலமையைப் போற்றினான். தன் அரண்மனை யிலேயே அவர் தங்கியிருக்க வேண்டும் என்று தன்னுள்ளத்தே பேரவாக் கொண்டான். அவருக்கு உடனேயே பரிசில் வழங்கின் தம்மைவிட்டு அவர் சென்றுவிடுவாரே எனக் கருதிப் பரிசில் அளிப்பதைத் தாமதப்படுத்தினான்.
அரசனின் இவ்வுள்ளக் கிடக்கையை ஒளவையார் உணரவில்லை. “எனக்குப் பரிசில் அளிக்க அதியமான் விரும்பவில்லைப் போலும். நாம் ஏன் இங்கு இருக்க வேண்டும்? என்று எண்ணினார். அரசனிடம் கூறாமலே புறப்பட்டுச் சென்றார். ஒளவையார் அரசரிடம் சொல்லாமலே வெளிப்பட்டுச் சென்றதை வாயிற் காவலன் கண்டு கொண்டான். ஒடோடிச் சென்று அதியமானிடம் தெரிவித்தான்.
3

Page 7
அரசன் இச்செய்தி கேட்டதும் பேரதிர்ச்சியுற்றான். தமிழே உருவான ஒளவையார், தம்மை அவமதித்துவிட்டதாகக் கருதி விட்டாரோ? என்று மனம் கலங்கினான். விரைந்து சென்று ஒளவை முன் நின்றான். தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அரண்மனைக்கு மீண்டும் வரவேண்டுமெனப் பணிந்து நின்றான்.
ஒளவையின் சினம் தணிந்தது. அதியமானின் உள்ளன்பை நினைந்து அரண்மனை திரும்பினார். அதியமான் ஒளவை உளம் மகிழும் வண்ணம் பல பரிசுகளை வழங்கினான். மன்னனின் வேண்டுகோளுக்கமையச் சில நாள்கள் அவர் அங்கு தங்கியிருந்தார்.
ஒரு நாள் முனிவர் ஒருவர் அதியமானைக் காணும் பொருட்டு அரண்மனைக்கு வந்தார். அவர் அரிய கரு நெல்லிக்கனி ஒன்றைக் கொண்டு வந்திருந்தார். அதனை மன்னனிடம் காணிக்கைப் பொருளாகக் கொடுத்தார். அதன் சிறப்புப்பற்றியும் கூறினார்.
“மன்னனே! இக்கனி கிடைத்தற்கு அரியது. இதனை உண்பவர்கள் நீண்டகாலம் வாழ்வர். அத்தகு சக்தி படைத்தது. தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாய் வாழும் தாங்கள் இதனை உண்ண வேண்டும். நீங்கள் நீடு வாழ வேண்டும் என்ற பேராவலால் இதனைக் கொண்டு வந்தேன்’ என்றார். முனிவர்.
 

முனிவர் கூறியவற்றை நன்கு செவிமடுத்தான் மன்னன். இக்கனியை நான் உண்டு நீண்ட நாள் வாழ்வதைக் காட்டிலும் பெரும் புலவரான ஒளவையார் அதனை உண்டு நீண்ட காலம் வாழ்வாரானால், அவரால் தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும் பெரும் பயன் உண்டாகுமே என்று நினைத்தான். நெல்லிக்கனியை ஒளவை மூதாட்டியிடம் வழங்கினான். அவரும் அதனை உண்டு மகிழ்ந்தார். அதன் சிறப்பினை அறிந்தார். அதியமான் பேரன்பைக் கண்டு உளம் நெகிழ்ந்தார். அவனின் அருங்குணங்களைப் போற்றிக் கவி பாடினார். அப்பாடல் வருமாறு:
'பூங்கமல. வாவிசூழ் புல்வேளுர்ப் பூதனையும்
ஆங்குவருபாற் பெண்ணை யாற்றினையு - மீங்கே
மறப்பித்தாய் வாழதிகா வன்கூற்றி னாவை
யறுப்பித்தா யாமலகந் தந்து
அழகிய பொய்கைகள் சூழ்ந்த புல்வெளியில் உள்ள பூதன்
என்னும் வள்ளலையும் பாலாறு எனத்தகும் பெண்ணையாற்றையும் இவ்விடத்தே நெல்லிக்கனி தந்து மறக்கச் செய்து விட்டாய். நீண்டநாள் நான் வாழ, என்மீது இயமன் தூதரை ஏவாமல் இருக்கும்படி செய்து விட்டாய் என்று இதயம் கனிந்து இயம்பினார் ஒளவையார். அதியமான் அளித்த நெல்லிக்கனியை உண்டமையால் ஒளவையார் நீண்டகாலம் வாழ்ந்திருந்தார்.
(3. தூது சென்றமை
புலமை நலம் வாய்ந்த ஒளவையார் அதியமானின் அரண்மனையில் பலகாலம் தங்கியிருந்தார். அக்காலத்தில் காஞ்சி மாநகரை ஆண்டுவந்த மன்னனான தொண்டைமான், அதியமானின் மீது போர் தொடுக்கத் திட்டமிட்டான். அதியமான் இதனை அறிந்திருந்தான். வீணாகப் போர் தொடுத்து பல உயிர்களையும், பொருள்களையும் நாசப்படுத்துதல் நல்லதல்ல என்று கருதினான் அதியமான் . தன் படைபலத்தையும் ஆணி மை யையும் தொண்டைமானுக்கு நன்குணர்த்திப் போரைத் தடுத்திடல் தக்கதென்று எண்ணினான். இதன் பொருட்டுத் தொண்டைமானிடம் தூது சென்று அஞ்சாது எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்க ஒருவரை அனுப்ப விரும்பினான். அப்பொழுது அவன் மனத்தில் ஒளவையாரே இப்பணிக்குத் தக்கவர் எனத் தோன்றிற்று. ஒளவையாரும் அப்பணியினை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.

Page 8
காஞ்சி நகருக்குச் சென்றார் ஒளவையார். தொண்டைமானின் அரண்மனையில் விருந்தினராகப் பல நாள் தங்கியிருந்தார். அதியமானின் ஆற்றலையும் , ஆணி மைத் திறத்தையும் பக்குவமாகத் தொண்டைமானுக்கு உணர்த்திடத் தக்க தருணம் பார்த்திருந்தார்.
ஒரு நாள் காஞ்சி மன்னன் தன் படை வலிமையை ஒளவையாருக்குக் காட்ட விரும்பினான். அதன் மூலம் தனது படைத்திறனை ஒளவையார் அறியவும், அவர் மூலம் அவரது அன்புக்குரிய அதியமானுக்கு உணர்த்திடவும் நினைத்தான். ஒளவையாரை அழைத்துச் சென்று தன் அரண்மனையில் உள்ள பல்வேறு இடங்களையும் காட்டினான். தன் படைக்கலச் சாலைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த போர் ஆயுதங்களையும் காண்பித்தான். ஒளவையார் அங்கிருந்த போர்க்கருவிகள் அனைத்தையும் பார்த்தார். தொண்டைமான் அவற்றைத் தனக்குக் காண்பிக்கும் உள் நோக்கத்தையும் புரிந்து கொண்டார். காஞ்சி மாநகருக்குத் தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இதுவே தக்க தருணம் என உணர்ந்தார். படைப் பலத்தைப் பெரிதெனக் கருதும் தொண்டைமானுக்குப் பாடம் புகட்ட விரும்பினார்.
‘அரசே! உன் படைக்கலச்சாலையில் குவிக்கப்பட்டுள்ள போர்க்கருவிகள் அனைத்தையும் பார்த்தேன். இவை போரில் பயன்படுத்தப்படாமல் மயிற்பீலி அணியப்பட்டுள்ளன. மாலை சூட்டப்பட்டுள்ளன. ஆயுதங்களின் கைப்பிடிகளுக்கெல்லாம் நெய் பூசப்பெற்றுள்ளன. ஆகா! எவ்வளவு அழகாகவும், பாதுகாப்பாகவும் உன் ஆயுதங்கள் அரண்மனைக்குள்ளேயே வைக்கப் பெற்றுள்ளன. ஆனால் பயனின்றி வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இவை அழகோடும் பொலிவோடும் காட்சி தருகின்றன. தன் செல்வம் அனைத்தையும் பிறருக்குப் பகிர்ந்தளித்து உண்ணும் பண்புடைய அதியமான் இருக்கின்றானே, அவனது நடைமுறை வேறாகத் தோன்றுகிறது. அவ்வள்ளலின் போர்க்கருவிகள் எல்லாம் உன்னுடைய போர்க் கருவிகளைப் போல இவ்வளவு அழகாக இல்லை. அரண்மனை க்குள் அவற்றைக் காண முடியவில்லை. அவை பகைவர்களைத் தாக்கி நுனிமடிந்தும் கூர் மழுங்கியும் செப்பம் செய்வதற்காகக் கொல்லன் பட்டறையில் குவிந்து கிடக்கின்றன.
இவ்வாறு ஒளவையார் தொண்டைமானின் படை பலத்தைப் புகழ்வது போல் இகழ்ந்தும் அதியமானின் ஆயுதங்களை இகழ்வது போல் புகழ்ந்தும் வெகு லாவகமாகப் பாடினார். ஒளவையாரின்
6

பாடலைக் கேட்ட தொண்டைமான் தன் செருக்கை ஒழித்தான். அதியமான் மீது கொண்டிருந்த பொறாமையைத் துறந்தான். மனம் மாறினான். அதியமான் மீது அளவிலா அன்பு கொண்டான். போர் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டான். ஒளவையின் தூது பயனளித்தது கண்டு அதியமான் பெருமகிழ்வு கொண்டான். ஒளவையாரைப் பெரிதும் பாராட்டினான்.
( 4 யானைப் பரிசு பெற்றமை D
நாஞ்சில் மலைக்கு நாஞ்சில் வள்ளுவன் உரியவனாயிருந்தான். வள்ளுவர் குடியில் பிறந்த அவன் சேரன் படைத் துணைத் தலைவனாகவும் சிறந்த வள்ளலாகவும் விளங்கினான். ஒருநாள் ஒளவையார் அவனிடம் சென்று உணவுக்குச் சிறிது அரிசி வேண்டினார். ஒளவையின் கோரிக்கை அவனுக்குப் பெரும் வியப்பை அளித்தது. திறமறிந்து பரிசளிக்கும் பண்புடையவனான அவன் ஒளவையாரின் பெரும் புலமையை மனதில் கொண்டு அவருக்குப் பெரிய யானை ஒன்றினையே பரிசாகக் கொடுத்தான்.
அரிசி கேட்டதற்கு யானையையே பரிசாக அளித்த அவனது பண்பினைப் புகழ்ந்து பாடினார் ஒளவையார்.
‘யாம் சில அரிசி வேண்டினேனாக. குன்றைப் போன்ற ஓர் ஆண்யானையினையே கொடுத்தானே அவனது ஈகைத்திறனுக்கு ஈடு
7

Page 9
ஏதும் உண்டோ? என வினவிடும் வகையில் அமைந்திருந்தது அப் பாடல். برہ۔
யானையைப் பரிசாகப் பெற்ற பெருமிதத்துடன் அங்கிருந்து புறப்பட்ட ஒளவையார் சோழ நாட்டின் தலைநகரான உறையூர் சென்றார். அங்கு சேரமான் மாவண்கோ, பாண்டியன் கானப்போர் தந்த பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவரையும் ஒருசேரக் கண்டு மகிழ்ச்சி கொண்டார். முடியுடை மூவேந்தரும் ஒற்றுமையாக, நீடுழி வாழ வேண்டுமென வாழ்த்தினார். பின்னர் அங்கிருந்து பாரி மன்னனைக் காணும் பொருட்டுப் பறம்பு மலையை அடைந்தார்.
( 5. பாரியின் அன்பு )
கடையெழு வள்ளல்களில் ஒருவன் பாரி. அவன் பறம்பு மலையில் வாழ்ந்திருந்தான். உயிர்களிடத்து மட்டுமன்றிச் செடி கொடிகளிடத்தும் பேரன்பு பூண்டவன் பாரி. கல்வியும் செல்வமும் ஒருங்கே அமையப் பெற்றவன். புலவர்களைப் போற்றும் பண்பு மிக்கவன். படருதற்குக் கொழுகொம்பேதுமின்றித் தவித்த முல்லைக் கொடிக்கு இரங்கித் தன் தேரையே அக்கொடி படர அளித்திட்ட வள்ளல் அவன்.
 

பறம்பு நாட்டு மன்னனான பாரியின் பண்பு நலன்களை நன்கறிந்த ஒளவையார் அவனைக் காணும் பொருட்டுச் சென்றார். அவனும் ஒளவையாரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். பரிசில்கள் பல வழங்கிப் பாராட்டினான், அவரைத் தன் அரண்மனையிலேயே இருக்குமாறு பணிந்து வேண்டினான். அவன் பெருமையினை வாயார வாழ்த்திப் பாடினார் ஒளவையார். பின்னர் சிலநாள் அங்கு தங்கியிருந்துவிட்டுத் தான் பெற்ற பரிசுப் பொருள்களோடு புறப்பட்டுச் சென்றார்.
ஒளவையாரின் பிரிவினைப் பாரியினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எந்நாளும் அவர், தம் அவையில் இருந்து கவி பாட வேண்டும், தன் அரண்மனை தமிழ் மணம் கமழும் இடமாகப் பரிமளிக்க வேண்டுமென விரும்பினான் பாரி. தன் நாட்டை விட்டு ஒளவையார் செல்வதைத் தடுத்திட வேண்டும். இதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்தான். அவர் செல்லும் வழியில் சிலரை அனுப்பி அவரிடம் உள்ள பரிசுப் பொருள்களை எல்லாம் பறித்து வரச் செய்தான். பரிசில்களை இழந்த ஒளவையார் மனம் வருந்தினார். பாரியின் அரண்மனைக்குத் திரும்பி வந்தார். வழியில் நிகழ்ந்தவற்றைக் கூறி வருந்தினார். வள்ளல் பெருமான் பாரி ஆட்சி செய்யும் நாட்டிலும் கொள்ளையர்கள் உள்ளனரா? எனக் கேள்வி எழுப்பினார்.
ஒளவையாரின் மன வேதனையைக் கண்டு மனம் தளர்ந்த பாரி, தானே அவ்வாறு செய்யச் சொன்னதாகவும், அதற்குரிய காரணம் தங்களைப் பிரிய மனம் ஒவ்வாமையே என்றும் எடுத்துரைத்தான். பாரியின் பேரன்பை அறிந்த ஒளவையார் அவனை மனதாரப் பாராட்டினார். பலநாள் அங்கு தங்கியிருந்தார்.

Page 10
( 6. காரி காட்டிய பேரன்பு )
பழம் பெருமை வாய்ந்த ஊர் பழையனூர். அவ் ஊரிலே காரி என்னும் பெயருடைய வேளாளர் ஒருவர் இருந்தார். அவர் புலவர்களைப் போற்றும் பண்புள்ளவர். ஒளவையாரிடத்து அளவற்ற அன்புடையவர். அவரை ஒருபோதும் விட்டுப்பிரிய மனமில்லாதவர். ஒருநாள் காரியின் இருப்பிடத்துக்குச் சென்றார் ஒளவையார். ஒளவையாரைக் கண்டதும் காரி மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான். அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். சில நாட்கள் ஒளவையார் அங்கு தங்கியிருந்தார்.
ஒருநாள் காரி வயலில் களை எடுத்துக் கொண்டிருந்தார். அவ்வேளை அங்கு வந்தார் ஒளவையார். தாம் வேறிடம் புறப்படுவதைத் தெரிவித்தார். புலவர் பெருமாட்டி தன்னை விட்டுப் பிரிந்து செல்வதை அவர் விரும்பவில்லை. தம் கையில் வைத்திருந்த களைக்கட்டு என்னும் களை பிடுங்கும் கருவியை ஒளவையாரிடம் கொடுத்தார். ஒளவையாரை நோக்கி அம்மையே! யான் வரும் வரையும் இப்பணியைச் செய்வீராக!” என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டகன்றான். இவ்வாறு சென்றவன் மாலைப் பொழுதின் பின்னரே திரும்பிவந்தான். அதன்பின்னர் ஒளவையார் வேறிடம் செல்வதற்கு வாய்ப்பிருக்காது, தம் இல்லத்திலேயே தங்கியிருப்பார் என்று எண்ணியே காரி இவ்விதம் செய்தான். காரி செய்த உபாயத்தை ஒளவையாரும் உணர்ந்து கொண்டார். பின்னர் சிலநாள் அங்கு தங்கியிருந்து காரிக்கு மனநிறைவை ஏற்படுத்தினார். அவனது அன்பைப் புகழ்ந்து பாடினார்.
C 7. பாரி மகளிர் பண்பு )
பறம்பு நாட்டு மன்னனான பாரியின் புகழ் பாரெங்கும் பரவியிருந்தது. அவன் கொடைச் சிறப்பைப் புலவர் பலர் போற்றினர். மாரிபோல் வாரி வழங்கும் பாரியின் புகழ் கண்டு தமிழ்நாட்டு மூவேந்தரும் அவன் மீது பொறாமை கொண்டனர். பறம்பு மன்னனை ஒழித்திட வேண்டும் என்று ஒன்று கூடினர். பாரியோடு போர் தொடுத்தனர். பலநாள் முற்றுகையிட்டுப் பெரும்போர் செய்தனர்.
இப்போரில் வள்ளல் பாரி இறந்தான். அவன் நாடும் பிறர் கைப்பட்டது. பாரியின் அவையில் பெரும் புலவராக விளங்கியவர் கபிலர். அவன் மறைவு குறித்து அவர் பெரிதும் வருந்தினார். பாரியின்
O

மகளிராகிய அங்கவை, சங்கவை இருவரையும் அழைத்துக் கொண்டு திருக்கோவலூருக்குச் சென்றார். அங்கு அந்தணர் ஒருவரின் பாதுகாப்பில் அவர்களை இருத்தினார்.
பாரி இறந்த செய்தியை ஒளவையார் அறியார். அவர் பல
ஊர்களுக்கும் சென்று விட்டு ஒரு நாள் மாலை வேளை திருக்கோவலூருக்கு வந்தார். அவ்வேளை வானம் இருண்டு பெருமழை பொழிந்தது. இரவு நேரத்தில் எங்கே செல்வது என்று அறியாது மழையில் நனைந்த வண்ணம் ஒரு வீட்டிற்குச் சென்றார். குளிர் தாங்கமுடியாது தவித்தார். அவ்வீட்டில் பாரியின் மகளிர் இருவரும் இருந்தனர். இருளாயிருந்தபடியால் ஒளவையாருக்கு அவர்கள் இருவரையும் அடையாளம் காண முடியவில்லை. அவர்களுக்கும் அங்கு வந்திருப்பவர் ஒளவையார் என்பதும் தெரியவில்லை. மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டிருந்த அப்பெண்மணியின் நிலைகண்டு அம்மகளிர் இருவரும் மனம் இரங்கினர். தம்மிடமிருந்த நீலச் சிற்றாடை ஒன்றை ஒளவையார் அணியக் கொடுத்தனர். ஒளவையார் அதனை அணிந்து கொண்டு தனது நனைந்த ஆடையைக் களைந்தார். அவரது ஈரத்தைத் துடைத்துக் குளிரைப் போக்கினார்கள் அப்பெண்கள். அவர்களின் அன்பு நிறைந்த செயல்களும் இனிய உரைகளும் ஒளவையாரைப் பெரிதும் கவர்ந்தன. அவர்களது பேராதரவைக் கண்டு உளம் மகிழ்ந்தார். அவர் உதடுகள் அசைந்தன. இனிய வெண்பா ஒன்று பிறந்தது.
பாரி பறித்த "பறியும் பழையனூர்க்
காரி கொடுத்த களைக் கொட்டும் - சேரமான்
வாராயென வழைத்த வாய்மையு மிம்மூன்றும்
நீலச் சிற்றாடைக்கு நேர்.
சில நூல்களில் பாரி பறித்த கலனும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரிவள்ளல் எனக்குப் பரிசாகக் கொடுத்த பரிசினையே திருப்பிப் பறிப்பித்ததுவும் (என்னைப் போகவிடாது தன் அவையில் இருக்கச் செய்தற்காக) பழையனூரில் காரி என்னும் உழவன் என்னைப் பிரிய மனமில்லாது கழனியில் களைபிடுங்கும்படி கொடுத்த களைக் கொட்டென்னும் கருவியும் சேரமன்னன் விருந்தில் என்னை வருக என்று தன்னருகே அழைத்த உண்மை அன்பும் ஆகிய இம்மூன்றும் நீங்கள் (அங்கவை, சங்கவை) அளித்த இந்த நீலச் சிறு புடைவைக்குச் சமமாகும் என்று உருக்கமாக எடுத்துரைத்தார் ஒளவையார்.
11

Page 11
நீலச் சிற்றாடை கொடுத்து ஒளவையாரின் ஈரத்தைப் போக்கிய அப்பெண்கள் அவருக்குச் சோறு படைத்துத் தாம் ஆக்கி வைத்திருந்த கீரைக் கறியையும் பரிமாறினர். ஒளவையாரும் அவற்றை அன்புடன் உண்டு மனம் மகிழ்ந்தார். பசி போக்கிய அப்பெண்களின் பாசத்தையும், பண்பினையும் பாராட்டி மற்றொரு வெண்பாப் பாடியருளினார். ‘வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய் நெய்தா னளாவி நிறம்பசந்த - பொய்யா அட கென்று சொல்லி அமுதத்தை யிட்டார் கடகம் செறிந்த கையார். வளையல் அணிந்த கைகளையுடைய பாரி மகளிர் படைத்த உணவு நல்ல வாசனையுடையதாயும், வெப்பமுடையதாயும் விரும்பிய அளவு தின்றாலும் கெடுதி செய்யாததாயும் நெய் விரவப்பட்டதாயும், தேவாமிர்தத்தை ஒத்ததாயும் இருந்ததாகவும் ஒளவையார் பாராட்டினார். இப்பாடலைக் கேட்டதும் பாரி மகளிர் பெருமகிழ்ச்சியுற்றனர்.
12
 

(8. LuTf LD356ńr நிலையறிதல்
பாரி மகளிர் அளித்த உணவைப் பெரிதும் மெச்சிப் புகழ்ந்த ஒளவையார் அவ்விள நங்கையரோடு உரையாடினார். அவ்வேளை மழை ஓய்ந்து வானத்திருந்த இருள் அகன்றது. முழு வெண்ணிலவு வான வீதியில் பால் நிலவைப் பொழிந்தது. இக் காட்சி அம்மங்கையருக்குச் சொல்லொணாத் துயரினை அளித்தது. நினைவுத்திரையில் முன்னைய காட்சிகள் நிழலாடின. ஒரு மாதத்திற்கு முன், சென்ற பூரணையின்போது - முழுநிலாக் காலத்தில் தங்கள் நாட்டில் (பறம்பு நாட்டில்) தந்தையுடன் தாம் இனிது வாழ்ந்திருந்த நிலையினை எண்ணினர். இன்றைய முழுநிலா இரவில் தாம் இருக்கும் அவல நிலையினை ஒரு கணம் எண்ணிப் பார்த்தனர். கல்வியறிவு நிரவப்பெற்ற அவர்களின் சோகம் கவிதை வடிவில் வெளிப்பட்டது.
“அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின் எந்தையும் உடையோம் எங்குன்றும் பிறர் கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின் வென்றெறி முரசின் வேந்தர்எங் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே'
(புறநானூறு)
என்று அவர்கள் பாடிய பாடலை ஒளவையார் நன்கு செவிமடுத்தார். V
‘அன்றைய முழுநிலாக் காலத்தில் நாங்கள் எங்கள் தந்தையைப் பெற்றிருந்தோம். எங்களுக்குரிய (பறம்பு) மலையையும் உடையவர்களாயிருந்தோம். இத்திங்களில் இம்முழுநிலவில் நல்வழியால் வென்று முழக்குதற்குரிய முரசினையுடைய அரசர் (மூவேந்தர்கள் வஞ்சித்து) எம்முடைய மலையையும் கொண்டார்கள். நாங்கள் எம்முடைய தந்தையையும் இழந்தோம் என்னும் பொருள் அமைந்த இப் பாடலைக் கேட்டதும் ஒளவையார் அப்பெண்கள் இருவரும் பாரியின் மக்கள் என்று அப்போதுதான் அறிந்தார். அவர்கள் இருவரையும் அன்போடு கட்டியணைத்து ஆறாத்துயரால் அலறி அழுதார். பின்னர் அவர்கள் கண்ணிரைத் துடைத்து ஆறுதல் கூறினார். கபிலர் இறந்ததையும் அறிந்தார். அம்மங்கையர் இருவருக்கும் மணம் முடித்து வைக்கவேண்டுமென மனதில் உறுதி கொண்டார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
13

Page 12
( 9. பாரிமகளிர் திருமணம்
திருக்கோவலூர் மன்னன் தெய்வீகன். அவன் ஒளவையாரிடம் பெருமதிப்புக் கொண்டவன். அவனிடம் சென்றார் ஒளவையார். பாரி மகளிரை மணந்து கொள்ளுமாறு அவனிடம் வேண்டினார். பாரிமகளிரைத் தான் மணந்துகொண்டால், பாரியின் பகையாளிகளான மூவேந்தரும் தனக்கு எதிரிகளாக மாறிவிடுவர் எனப் பயந்தான் தெய்வீகன். அவனது பயத்தைப் புரிந்துகொண்ட ஒளவையார் ‘முடியுடை மூவேந்தரையும் அங்கு வரும்படி செய்து அவர்களைக் கொண்டே இத்திருமணத்தை நடத்தச் செய்கின்றேன்’ என்று உறுதி கூறினார். தெய்வீகனும் அதற்கு உடன்பட்டான். உடனே சேர,சோழ,பாண்டியர் மூவருக்கும் தனித்தனியே திருமுகம் எழுதினார். அத்திருமுகச் செய்யுள்கள் வருமாறு:
சேரமன்னனுக்கு எழுதியது:
‘சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவில் ஊரளவுந்தான் வருக உட்காதே - பாரிமகள் அங்கவையைக் கொள்ள அரசன் மனமிசைந்தான் சங்கவையை யுங்கூடத் தான். சோழமன்னனுக்கு எழுதியது: *புகார்மன்னன் பொன்னிப் புனனாடன் சோழன் தகாதென்று தானங் கிருந்து - நகாதே கடுக வருக கடிக் கோவலூர்க்கு விடியப் பதினெட்டாம் நாள். பாண்டியமன்னனுக்கு எழுதியது:
வையத் துறைவன் மதுராபுரித் தென்னன் செய்யத் தகாதென்று தேம்பாதே - தையலர்க்கு வேண்டுவன கொண்டு விடிய வீரொன்பானாள் ஈண்டு வருக இனிது.” ஒளவையார் அனுப்பிவைத்த ஒலை கண்ட அரசர்கள் அவரது விருப்பத்தை நிறைவேற்றாவிடில், யாது விளையுமோ என்று அஞ்சினார்கள். திருமணத்திற்குச் செல்லத் தீர்மானித்தனர். சீர்வரிசை களோடு தாமதமின்றிப் புறப்பட்டுத் திருக்கோவலூரை அடைந்தனர். மூவேந்தர்களையும் கண்ட ஒளவையார் பெருமகிழ்ச்சியடைந்தார்.
14

அவ்வரசர்களைக் கொண்டே திருமணத்தைச் சிறப்புடன் நடப்பித்தார். தெய்வீகன் என்னும் மன்னனுக்கும் பாரிமகளிருக்கும் திருமணம் இனிது நிறைவேறியது. பாவலரும் காவலரும் மணமக்களைப் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தினர்.
( 10. திருமண விருந்து D
திருமணம் இனிது நிறைவெய்தியமை கண்டு ஒள்வையார் உளம் பூரித்தார். மூவேந்தருக்கும் பெருவிருந்து அளிக்க வேண்டுமென விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். மன்னர்களை விருந்துண்ண அழைத்தார். அவ்வேளையில் அரசர்கள் ஒளவையாரை நோக்கி ' எங்களுக்கு அளிக்கப்படும் விருந்தில் பனம்பழமும் தரவேண்டும்’ என்று கேட்டார்கள். அப்பொழுது பனம்பழங்கள் கிடையாது. அக்காலந்தான் பனைகள் காய்க்கத் தொடங்கும் காலம். எனினும் ஒளவையார் கலங்கவில்லை. தன் பாட்டுத் திறத்தால் எதையும் சாதிக்கும் வன்மை படைத்தவரல்லவா? அவர். மன்னர்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதாகக் கூறினார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
அவ்விடத்தில் பனைமரத்துண்டொன்று கிடந்ததைக் கண்டார். அதனை எடுத்து நிலத்தில் நட்டார் ஒளவையார். உடனே மூன்று பழங்கள் தரவேண்டும் என்று நினைத்து,
"திங்கள் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும் மங்கைக் கறுகிட வந்துநின்றார் மணப் பந்தலிலே சங்கொக்க வெண்குருத்து ஈன்று பச்சோலை சலசலத்து நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனிசிவந்து பங்குக்கு மூன்று பழந்தரவேண்டும் பனந்துண்டமே!’ என்ற செய்யுளைப் பாடினார். ஒளவையார் வாக்கு தெய்வ வாக்காயிற்று. உடனே பனந்துண்டு பனைமரமாகிப் பூத்துக் காய்த்துக் காய் முற்றி மூன்று பழங்களைத் தந்தது. ஒளவையார் அவற்றை எடுத்து அரசர்களுக்குக் கொடுத்தார். இச்செயற்கருஞ் செயல் கண்ட அரசர் மூவரும், அங்கு குழுமியிருந்தோரும் பெருவியப்புற்றனர். அனைவரும் மகிழும் வண்ணம் பெருவிருந்தளித்த ஒளவையார் அந்த விருந்திற்குப் பெண்ணை ஆறு பாலாகவும் நெய்யாகவும் பெருகி வரவேண்டுமென்றும் ஒரு பாடல் பாடினார். அப்பாடல் இதோ:
15

Page 13
‘முத்தெறியும் பெண்ணை முதுநீர் அதுதவிர்ந்து தத்திவரு நெய்யால் தலைப்பெய்து - குத்திச் செருமலைத் தெய்வீகன் திருக்கோவ லூர்க்கு வருமளவிற் கொண்டோடி வா.
ஒளவையின் வேண்டுதற்படியே பெண்ணையாறும் பெருக்கெடுத்துப் பாய்ந்து வந்தது.
திருக்கோவலூரில் நிகழ்ந்த பாரிமகளிர் திருமணத்திற்கு வருகை தந்திருந்த ஏழைகள் அனைவர்க்கும் பொருள் கொடுக்க விரும்பினார் ஒளவையார். உடனே வருணனை நினைத்துப் பொன்மாரியாய்ப் பொழி என்று பாடினார்.
'கருணையால் இந்தக் கடலுலகம் காக்கும் வருணனே மாமலையன் கோவல் - பெருமணத்து நன்மாரி தான்கொண்ட நன்னி ரதுதவிர்த்துப் பொன்மாரி யாகப் பொழி.
இப்பாடலைத் தொடர்ந்து வருணன் பொன்மாரி பொழிந்தான். அவற்றை வறியோர் க்கு வாரி வழங்கினார் ஒளவையார். இவையனைத்தையும் கண்ட தெய்வீகன் ஒளவை மீது அளவற்ற அன்புடையனாய் ஆனந்தக் கண்ணிர் சொரிந்தான். திருமணத்திற்கு வந்திருந்த முடியுடை மூவேந்தரும் பிறரும் ஒளவையாரை வணங்கித் தத்தம் இடங்களுக்குத் திரும்பினர். ஒளன்வயார் சிலகாலம் திருக்கோவலூரில் தங்கியிருந்து பாரி மகளிரது இல்வாழ்க்கையைப் பார்த்து மகிழ்ந்தார். பின்னர் தெய்வீகனது நாடு எல்லா வளமும் நிறைந்து சிறந்திட வேண்டுமென விரும்பி,
பொன்மாரி பெய்யுமூர் பூம்பருத்தி ஆடையாம் அந்நாள் வயலரிசி ஆகுமூர் - எந்நாளும் தேங்குபுக ழேபடைத்த சேதிமா நாடதனில் ஓங்குந் திருக்கோவ லூர்
என்று வாழ்த்தினார்.
16

( 11. பூதன் அளித்த உணவு)
திருக்கோவலூரிலிருந்து புறப்பட்ட ஒளவையார் புல்வேளுர்
என்னும் ஊரையடைந்தார். அவருக்குப் பசி அதிகமாகியது. அதனால்
அங்கிருந்த பூதன் என்பவனின் வீட்டிற்குச் சென்றார். அவன்
ஒளவையாரை மகிழ்வுடன் வரவேற்று அவருக்கு வரகரிசிச் சோறும்,
கத்தரிக்காய்த் துவட்டலும், மோரும் கொடுத்து அவரது பசியைப்
போக்கினான். பசியாற உண்ட ஒளவையார் பூதன் அளித்த உணவைக்
குறித்து நன்றியுடன் ஒரு வெண்பாப் பாடினார்.
வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரென வேபுளித்த மோரும் - பரிவுடனே புல்வேளுர்ப் பூதன் புரிந்து விருந் திட்டசோறு எல்லா உலகும் பெறும்.
தம் பசியைப் போக்கிய பூதன் எல்லோர் பசியையும் போக்கும் வண்ணம் அவனுடைய வயல்களில் வளம் கொழிக்க கிணற்றுநீர் மிகுந்து பாயும் படியும் வாழ்த்திப் பாடினார். அதுகண்ட பூதன் அதிக மகிழ்ச்சி கொண்டவனாய் ஒளவையாரைப் பணிந்து வணங்கினான். ஒளவையார் அங்கிருந்து புறப்பட்டுச் சேரநாடு சென்றார்.
( 12. சேரன் அளித்த பொன் ஆடு
ஒரு சமயம் ஒளவையாருக்கு ஒர் ஆடு தேவையாக இருந்தது. அவர் அவ்வூரில் இருந்த வாதவன், வத்தவன், யாதவன் என்னும் செல்வர் மூவரிடமும் சென்று கேட்டார். வாதவன் ‘பிறகு தருவதாகக் கூறினான். வத்தவன் ‘நாளைக்குத் தருகிறேன்’ என்றான். யாதவனோ ‘என்னிடம் ஆடு ஏதும் இல்லை' என்று கூறினான். யாதவன் கூறியதைக் கேட்ட ஒளவையார் ‘பிறகு தருகிறேன்', ‘நாளை தருகிறேன்’ என்று கூறி அலையவிடாமல் இல்லை என்று தன் முடிவை உடனடியாகக்
கூறிய யாதவனைப் பெரிதும் பாராட்டினார்.
‘வாதவர்கோன் பின்னையென்றான் வத்தவர்கோன்
நாளையென்றான் யாதவர்கோன் யாதொன்று மில்லை யென்றான் - ஒதக்கேள் வாதவன்கோன் பின்னையினும் வத்தவர்கோன் நாளையினும் யாதவர்கோன் சொல்லே இனிது.
17

Page 14
பின்னர் ஒளவையார் சேர மன்னனிடம் சென்று தமக்கு ஒர் ஆடு தரும்படி கேட்டார். அம்மன்னன் ஒளவையாரின் பெருமையை, புலமையைப் பெரிதும் போற்றுபவன். பால் சுரக்கும் ஆட்டுக்குப் பதிலாகப் பொன்னால் ஓர் ஆட்டைச் செய்வித்து ஒளவையாரிடம் வழங்கினான். அவன் அன்புள்ளத்தைக் கண்டு அகமகிழ்ந்த ஒளவையார் சேர மன்னனை நோக்கி 'மன்னா! உன்னாடு பொன்னாடு' என்று புகழ்ந்துரைத்தார். 'உன் ஆடு பொன் ஆடு என்றும் ‘உன் நாடு பொன் நாடு' என்றும் இதற்கு இரு பொருள் கொள்ளலாம். இச்சிறப்பினை நன்குணர்ந்த சேரமன்னன் அளவிலா ஆனந்தமடைந்தான். சேரனின் பொன் ஆட்டைப் பெற்ற ஒளவையார் அவன் கொடைச் சிறப்பைப் பாராட்டி,
"சிரப்பான் மணிமவுலிச் சேரமான் தன்னை சுரப்பாடு யான்கேட்கப் பொன்னாடொன் - றீந்தான் இரப்பவர் என்பெறினும் கொள்வர், கொடுப்பவர் தாமறிவார் தம்கொடையின் சீர்.
என்னும் வெண்பாவைப் பாடினார்.
( 13. குடியானவன் துறவு பூணல் )
அரசர் பலரின் அன்பையும் வள்ளல்கள் பலரின் ஆதரவையும் பெற்றிருந்த ஒளவையார் பசியால் வாடிய சம்பவங்களும் உண்டு. தமக்குக் கிடைக்கும் பொருள்களை யெல்லாம் தமக்கென்றே வைத்துக் கொள்ளாது எல்லோருக்கும் கொடுத்து விடுவதே அவர் வழக்கம். இதனால் சிலவேளைகளில் பசியால் வாட வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுவதுண்டு.
ஒரு நாள் மிகுந்த களைப்புடனும் தளர்ந்த நடையுடனும், வாட்டும் பசியுடனும் ஒரு குடியானவனுடைய வீட்டுக்குச் சென்றார். அவ்வீட்டுக்காரனோ பெரும் உலோபி. மகா கஞ்சன். இரக்கமற்றவன். எச்சிக் கையாற் கூடக் காக்கையைக் கலைக்க மாட்டான். கருமித்தனத்தின் மொத்த உரு அவன். அந்த உலோபி ஒளவையாரைக் கண்டதும் “இங்கே ஒன்றுமில்லை. போ போ’ என்று கலைத்தான். அவன் மனைவியோ கணவனுக்கு நேர் விரோதமான குணமுடையவளாயிருந்தாள். மிக்க இரக்கமும் நற்செயல்களும் உடையவளாகக் காணப்பட்டாள். கணவனுக்குத் தெரியாமல் ஒளவையாரை அழைத்து உணவளித்துப் பசியைப் போக்கினாள்.
18

அவளது பண்பைப் பாராட்ட விரும்பினார் ஒளவையார்.
நற்குணமுள்ள இப்பெண்ணுக்குப் பொல்லாத ஒரு கயவனைக், கணவனாகப் படைத்த பிரமன் மீது (நான்முகன்) கோபம் கொண்டார். அவனைப் பழித்து ஒரு பாடல் பாடினார்.
‘அற்றதலை போக அறாத தலை நான்கினையும் பற்றித் திருகிப் பறியேனோ - வற்றல் மரம்அனை யானுக்கிம் மானை வகுத்த பிரமனையான் காணப் பெறின்.
என்னும் பாடல் மூலம் ஒளவை தன் கோபத்தை நன்கு வெளிப்படுத்தினார்.
மற்றொருநாள் பசியால் மிக வருந்தியவண்ணம் வேறொருவன் வீட்டிற்குச் சென்றார். அவன் மிகவும் நல்லவன். இரக்கம் உள்ளவன். பசியால் வருந்திவந்த ஒளவையாரை அன்புடன் வரவேற்றான். வீட்டின் உள்ளே அழைத்துச் செல்லாது வீட்டுத்திண்ணையிலே அமர்த்திவிட்டுத் தான் மாத்திரம் உள்ளே சென்றான். அவ்வீட்டுக்காரன் மனைவியோ மிகவும் கொடியவள். இரக்க குணமற்றவள். அவளது குணமறிந்த கணவன் அவளிடம் இனிய வார்த்தைகளைப் பதமாகப் பேசினான். அவள் முகத்தில் துளிர்த்திருந்த வேர்வையைத் துடைத்தான். தலையில் ஈருருவிப் பேன் பார்த்து மிக்க பயத்தோடும் நயத்தோடும் மனைவியைப் பார்த்து ‘நமது வீட்டிற்கு ஒரு பாட்டி மிக்க பசியோடு வந்துள்ளார். திண்ணையில் அமர்ந்திருக்கிறார். அப்பாட்டிக்குச் சிறிதளவு உணவு கொடுப்பாயாக’ என்றான்.
அச்சொல்லைக் கேட்டதும் அவள் பாம்புபோல் சீறினாள். அவனைக் கண்டபடி பேசினாள். பேயாட்டம் ஆடினாள். கழுநீர்ப் பானையில் இருந்த நீரை அவன் தலையில் ஊற்றினாள். முறத்தால் அடித்தாள். அவனைத் துரத்தித் துரத்தி அடித்தாள்.
இவற்றையெல்லாம் திண்ணையில் அமர்ந்திருந்த ஒளவையார் நன்கு பார்த்துக் கொண்டிருந்தார். அக்குடியானவனின் அவல வாழ்க்கை நிலையைப் பாட்டால் படம் பிடித்தார். பாடல் பிறந்தது. ‘இருந்து முகந்திருத்தி ஈரொடுபேன்வாங்கி விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால் சாடினாள் ஓடோடத் தான்.
19

Page 15
ஒளவையாரின் இப்பாடலைக் கேட்டதும் வீட்டுக்காரன் அங்கு வந்திருப்பவர் ஒளவையார் என்பதை உணர்ந்து கொண்டான். தன் மனைவியை மீண்டும் கெஞ்சினான். அவனது கெஞ்சுதல் பயனளித்தது. அவன் மனைவி சிறிது இரக்கம் கொண்டாள். தானே வந்து ஒளவையாரை அழைத்துச் சென்று உணவளித்தாள். அவள் அளித்த உணவு ஒளவையாருக்குத் திருப்தி தரவில்லை. வெறுப்பையே ஏற்படுத்தியது. அவ்வெறுப்பினைப் பிரதிபலித்துக் காட்டும் வகையில் பாடல் ஒன்று பாடினார்.
காணக் கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது.
இப்பாடலைக் கேட்ட அக்குடியானவன் பெரும் வேதனை கொண்டான். ஒளவையாரின் கால்களில் வீழ்ந்து வணங்கினான். ‘அம்மையே! என் முன்வினைப்பயன் இவ்வாறுள்ளதே?நான் என்ன செய்வேன்? என்று கவலையோடு வினவினான். அதற்கு, சூர்ப்பனகை, தாடகை போல வடிவு கொண்ட சண்டாளியை மனைவியென்று கொண்டாயே! தொண்டர் தமக்கு எள்ளளவும் பயன்படாத செல்வம் என்ன செல்வம்? தீயிலே வீழ்ந்து மடிதல் தக்கதாகும்' என்று பாடினார் ஒளவையார்.
‘சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே - தொண்டர் செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம் நெருப்பினிலே வீழ்ந்திடுதல் நேர், என்று பாடியதோடு அக்குடியானவன்மீது இரக்கம் கொண்டு,
'பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடி யிருக்கலாம் - சற்றேனும் ஏறு மாறாக இருப்பாளே யாமாயிற் கூறாமல் சந்நியாசம் கொள்
என்று அறிவுறுத்தினார். அவனுக்குச் சில நல்லுபதேசங்களையும் கூறினார். ஒளவையின் அறிவுரைகளைக் கேட்ட அக்குடியானவன் பொல்லாத மனைவியோடு கூடி வாழ்தலை விடுத்துத் துறவு பூண்டு நல்வழி சென்றான்.
20

( 14. கூழைப் பலாத் தழைக்கப் பாடியது)
குறவன் ஒருவனுக்கு இரு மனைவியர். இருவருக்கம் இடையே கருத்து முரண்பாடு. இளையவள் செருக்கு மிக்கவள். அவளிடமே குறவனுக்கு அன்பதிகம். ஒருநாள் குறவன் தான் அருமையாய் வளர்த்த பலா மரத்தைக் கவனமாகக் காத்து வளர்க்குமாறு கூறிவிட்டு அயலூர் சென்றான். இளையாள் திட்டம் போட்டாள். இப் பலா மரத்தை அரைகுறையாக வெட்டி விடுவோம். அதற்கான பழியை மூத்தவள் மேல் போடுவம். கணவன் வந்ததும் மூத்தாள் மேல் கோபிக்கட்டும் என்று எண்ணினாள். அப்படியே செய்தும் விட்டாள். மூத்தாள் தன்மேல் பழிவருமே என்று பயந்து கொண்டிருந்தாள். அவளுடைய நல்லகாலம் அவ்வழியாக ஒளவையார் வந்தார். நடந்ததைக் கேள்விப்பட்டார். மூத்தாள் மேல் இரக்கம் கொண்டார். கூழைப் பலா தழைக்க வேண்டுமென்று ஒரு வெண்பாப் பாடினார். அவ்வெண்பா வருமாறு:
‘கூரிய வாளால் குறைத்திட்ட கூன்பலா ஓரிதழாய், கன்றாய், உயர்மரமாய்ச் - சீரியதோர் வண்டுபோல் கொட்டையாய் வண்காயாய்த் தின்பழமாய் பண்டுபோல் நிற்கப் பலா.’
பாட்டின் படியே பலா தழைத்து நின்றது. இதைக்கண்ட குறத்தி பெருமகிழ்வு கொண்டாள். ஒளவையாரை அன்புடன் உபசரித்தாள். ஒரு துணியில் தினை அரிசியைத் தன் அன்புக் காணிக்கையாக முடிந்து கொடுத்து அனுப்பி வைத்தாள்.
ஒளவையார் அந்தத் தினையரிசி முடிச்சுடன் நெடுந்துாரம் வழிநடந்து சோழ மன்னன் அரண்மனை வாயிலை வந்தடைந்தார். ஒளவையாரைக் கண்ட மன்னன் அவரை அன்புடன் வரவேற்று இவ்விடம் எங்ங்ண் வந்தீர்? என வினவினான். அதற்குப் பின்வரும் வெண்பா ஒன்றின் மூலமே ஒளவையார் பதில் கூறினார்.
'கால் நொந்தேன் நொந்தேன் கடுகி வழிநடந்தேன் யான் வந்த தூரம் எளிதன்று - கூணன் கருந்தேனுக்கு அண்ணாந்த காவிரிசூழ்நாடா இருந்தேனுக்கு எங்கே இடம் ஒளவையின் பதிலைக்கேட்டு வியப்படைந்த மன்னன் அவர் கையில் வைத்திருந்த தினை முடிச்சைப் பார்த்துவிட்டான். ‘இது என்ன முடிச்சு? என்று வினவினான். ஒளவையும் வெகு சாதாரணமாகத்

Page 16
தன் எளிமை தோன்றுமாறு பதிலளித்தார் வெண்பா மூலம். கூழைப் பலாத் தழைக்கப் பாடக் குறமகளும் மூழக்கு உழக்குத் தினை தந்தாள் - சோழாகேள் உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒருகவிதை ஒப்பிக்கும் என்றன் உளம்'. (மூழக்கு - மூவுழக்கு மூவுழக்கும் உழக்கும் சேர ஒரு சிறுபடி தினை தந்தாள்). உப்புக்கும் புளிக்கும் பாடும் எளிமை மிக்கவர் ஒளவையார் என மக்கள் கூறுதற்கு இவ்வெண்பாவே சான்றாகும். ஒளவையின் எளிமையை இவ்வெண்பா மூலம் அறிந்த சோழமன்னன் அவருக்குப் பட்டாடை ஒன்றை வழங்கிக் கெளரவித்தான்.
(15. நாலு கோடிச் செய்யுள் பாடுதல்)
சோழமன்னன் அவையில் ஒருநாள் புலவர்களுக்கு அதிர்ச்சி தரும் அறிவிப்பொன்று கிடைத்தது. தன் அவையில் இருந்த புலவர்களை நோக்கிய சோழமன்னன் ‘புலவர்களே! நாளை விடியுமுன் நீங்கள். நாலு கோடிப் பாடல்கள் பாடி வருதல் வேண்டும். இது என் கட்டளை என்றான். அரசன் கூறியது புலவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். ‘நாமெல்லோரும் இரவெல்லாம் கண் விழித்துப் பாடினாலும் நாளை சூரியன் உதிப்பதற்கு முன் நாலு கோடிப் பாடல்களைப் பாடி முடிக்க முடியுமா? இதற்கு நாம் யாது செய்வோம்? மன்னர் கட்டளையை எங்ங்னம் நிறைவேற்றுவோம்? என்று வாடிய முகத்தினராய் வருந்தினர். அப்பொழுது ஒளவையார் அவ்வழியால் வந்து கொண்டிருந்தார். புலவர்களைக் கண்டதும் அவர் உள்ளம் பூரித்தது. புலவர்களை அவர் நெருங்கிய போது தான் அவர்களது முகவாட்டத்தை அவதானித்தார். ‘புலவீர்காள்! நீங்கள் மிகவும் மனம் சோர்ந்திருப்பதேன்? என்று மிக்க பரிவுடன் விசாரித்தார்.
அப்புலவர்கள் ஒளவையாரை நோக்கி 'அம்மையே! அரசன் நாளை பொழுது விடியுமுன் நாலு கோடிப் பாடல்கள் படைத்து வரவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். அதனை நினைத்தே நாம் வருந்துகின்றோம்' என்றனர்.
ஒளவையார் ஒருகணம் சிந்தித்தார். சோழமன்னன் புலமையை மதிப்பவன். புலவர்களை மதிப்பவன். அவர்களை வருத்தும் வகையில்
22

ஆணையிடுவானா? இல்லை இல்லை. அரசனின் ஆணையை ஆராய்ந்து
பார்க்காமலே இவர்கள் அஞ்சுகிறார்கள் என்று எண்ணினார். புலவர்களைப்
பார்த்துப் புன்னகை புரிந்தார். இதற்காகவா நீங்கள் வருந்துகிறீர்கள்?
கவலையை விடுங்கள். யான் இப்பொழுதே நான்கு கோடிப் பாடல்களைப்
பாடுகிறேன். எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறிப் பாடத் தொடங்கினார்.
'மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று மிதியாமை கோடி பெறும்.
'உண்ணிர் உண்ணீர் என்று உபசரியார் தம்மன்னயில் உண்ணாமை கோடி பெறும்.
‘கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்.
‘கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
நான்கே நான்கு குறட்பாக்களில் கோடி பெறும் கோடி பெறும் என்று நான்கு கோடி பாடிய ஒளவையாரின் புலமை கண்டு புலவர்கள் அனைவரும் அவரைப் பாராட்டினார்கள். அவரும் நன்றி கூறி விடைபெற்றார். மறுநாள் காலை அரச சபையில் தாம் பாடிவந்ததாகக் கூறி இப்பாடல்களைப் புலவர்கள் மன்னன் முன் பாடினர். இப்பாடல்களைக் கேட்ட மன்னன் சந்தேகம் கொண்டான். இவை இவர்களால் பாடப்பட்டவை அல்ல. இவற்றைப் பாடியவர் பெரும் புலவராகவே இருக்க வேண்டும். ஒளவையார் இங்கு வந்திருக்கிறார் போலும் எனக் கருதினான். உண்மையை விசாரித்து அறிந்து கொண்டான். உண்மை அறிந்ததும் ஒளவையாரை உடனே அழைத்து வரச்செய்து அவருக்குப் பரிசில்கள் பல வழங்கிப் பாராட்டினான்.
( 16. வரப்புயர. எனும் வாழ்த்து )
சோழவேந்தன் குலோத்துங்கனின் திருமணவிழாவிற்குப் புலவர்களும், அறிஞர்களும் திரண்டு வந்திருந்தனர். திருமணம் இனிது நிறைவெய்தியதும் புலவர்களும் அறிஞர்களும் அரசனை வாழ்த்திப் பாடினார்கள். இந்திரனுக்கு நிகரானவனே! சந்திரனுக்கு ஒப்பானவனே! என்றெல்லாம் சோழ மன்னன் மீது வாழ்த்துப்பாக்கள் பாடினர் பலர். ஒளவையாரும் அங்கு வந்திருந்தார். அவர் அம்மன்னனை வாழ்த்தும் போது வரப்புயர.’ என்று கூறிவிட்டுத் தமது இருக்கையில் அமர்ந்து
23

Page 17
கொண்டார். பாமாலை பல சூட்டிப் பாடிய புலவர்கள் எல்லாம் இதுகண்டு ஏதும் புரியாமல் குழம்பினார்கள். அவையில் இருந்தோர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஒளவையின் இவ்வாழ்த்து. அரசனுக்கும் அதன் கருத்துப் புரியவில்லை. இதன்பொருளை அறிந்து கொள்ளும் அவாவால் தம் அவைக்களப் புலவரான ஒட்டக் கூத்தரைப் பார்த்தார். அரசனின் குறிப்பை அறிந்த ஒளவையார்,
வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும் குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோன் உயரும்
என்று தம் பாட்டின் பொருளை விரித்துரைத்தார். வரம்பின் உயரத்திற்குத் தக்கதாகத் தண்ணிர் வேண்டிய அளவு நிற்க நெற்பயிரானது உயர்ந்து வளரும். நெற்பயிர் அதிகமாக வளர்ந்து அதிக பலனைத் தருவதினால் குடிகள் சிறப்புற விளங்கும். குடிகள் சிறப்புற்றிருந்தால் செங்கோல் சிறப்புடன் விளங்கும். செங்கோலின் மாட்சியினால் மன்னன் சிறந்து விளங்குவான் என்னும் சீருடைக் கருத்தில் ஒளவையின் வாழ்த்து அமைந்திருந்தது.
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஒளவையாரின் ஆழ்ந்த புலமையில் எழுந்த இவ்வாழ்த்தின் பொருளறிந்து மன்னனும் புலவர்களும் மகிழ்ந்தனர்.
( 17. பொன் ஊஞ்சல் சங்கிலி அறுத்த பாடல்கள் D
ஒரு நாள் பாண்டிய மன்னன் தன் நாட்டில் உள்ள புலவர்களின் அறிவையும், ஆற்றலையும் ஆராய்ந்து அறிந்து கொள்ள விரும்பினான். அதற்கென ஓர் ஏற்பாடு செய்தான். விலையுயர்ந்த பொன்னாலான மிகவும் பருத்த நான்கு சங்கிலிகளைச் செய்வித்தான். அச்சங்கிலிகளில் பொன்னாலான ஊஞ்சற்பலகை ஒன்றைப் பூட்டினான். அதைத் தன் அரண்மனை முன் மண்டபத்தில் தொங்கவிட்டான். ஊஞ்சல் பலகையில் பொன்னைக் குவியலாகக் கொட்டினான். அதன்பின்னர் அரசன் ஓர் அறிவிப்பை வெளியிட்டான்.
* இப்பொன் ஊஞ்சல் பலகையின் சங்கிலித் தொடர்கள் நான்கும்.அறுந்து ஊஞ்சல் பலகை கீழே விழும்படி அருமையான பாடல்களை யார் பாடுகிறார்களோ அவர்களுக்குத் தக்க பரிசில்கள் வழங்கப்படுவதுடன், இவ்வூஞ்சலில் உள்ள பொற்குவியலும் பரிசாக அளிக்கப்படும் என்று நாடெங்கும் பறையறிவித்தான்.
24

எட்டுத்திக்கும் இச்செய்தி எட்டியது. செய்தி கேட்ட புலவர்கள் அனைவரும் அணி அணியாக அரண்மனை நோக்கி வந்தார்கள். பொற்குவியலைப் பெற்றிடும் அவாவில் புலவர்கள் பலரும் கவிபுனைந்து பாடினார்கள். யாதும் நிகழவில்லை. அனைவரும் வெட்கமடைந்தவர்களாய் வந்த வழியே திரும்பிச் சென்றனர். அவ்வேளை ஒளவையார் ப்ாண்டிய நாட்டில் இருந்தார். அவரும் இச்செய்தியைக் கேள்விப்பட்டார். தங்கத் தமிழ் வளர்க்கும் தவச் செல்வியான ஒளவையார் பாண்டியன் அரண்மனைக்குச் சென்றார். நான்கு பொற்சங்கிலிகளில் தொங்கும் பொன் ஊஞ்சல்களைக் கண்டார். அருமைத் தமிழில் அழகொளிர நான்கு வெண்பாக்கள் பாடினார்.
‘விரிந்த குளிர்ந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளே! நூறு பேரில் ஒருவர்தான் கற்றவர் சபையில் இருப்பதற்கு உரியவராவர். ஆயிரம் பேரில் ஒருவர்தான் கல்வி அறிவுடையவராயிருப்பர். அவருள்ளும் தக்க மொழியைத் தக்கவிடத்தில் சொல்லும் ஆற்றல் உடையோர் பதினாயிரம் பேரில் ஒருவரே ஆவர். கோடி பேருள் ஒருவனே வள்ளலாயிருப்பான். இவை யாவும் உண்மையென்றால் அந்த உண்மையைக் காட்டுதற்குச் சங்கிலி அறுந்து விழுமாறு செய்க"எனும் கருத்தமைந்தது முதல் வெண்பா.
25

Page 18
‘ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர் வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த் தண்டா மரைத்திருவே! தாதாகோ டிக்கொருவர் உண்டாயின் உண்டென் றறு ‘ஒருவன் ஒரு பொருளைக் கேளாதபோது குறிப்பறிந்து கொடுப்பது சிறந்த ஈகை உள்ளமுடைமையாம். ஒருவன் ஒன்றைக் கேட்ட பிற்பாடு கொடுப்பது கொடையாகும். மீண்டும் மீண்டும் தொடர்ந்து போய்ப் பலமுறை கேட்டபின் கொடுப்பது கால்நடைக்குக் கொடுக்கும் கூலியாகும். அவ்வாறு பலமுறை அடிக்கடி போய்க் கேட்ட பின்பும் ஒன்றையும் கொடாதவனுடைய மக்களைப் போல் தொடர்பு நீங்கும்படி இந்தப் பொன் ஊஞ்சல் சங்கிலிகளை அறுந்து விழுமாறு செய்க என்று வேண்டும் வகையில் அமைந்தது இரண்டாவது வெண்பா.
'தண்டாம லிவது தாளாண்மை தண்டி அடுத்தக்கால் ஈவது வண்மை - அடுத்தடுத்துப் பின்சென்றா லீவது காற்கூலி பின்சென்றும் ஈயான் எச்சம்போல் அறு
'உண்மையான வழக்கு ஒருபுறமிருக்க, ஊரில் உள்ளவர்களின் சபை அவ்வுண்மை வழக்கிற்கு அனுசரணையாயிருக்கவும், அவ்வழக்கு நிறைவேறாவண்ணம் அதனை ஒழிக்கும் வகையைக் கூறி இலஞ்சம் (கையூட்டு) சிறிதளவாயினும் அதனை விரும்பி வாங்கிக் கொள்கிறவன் சுற்றமும் பிள்ளையும் இல்லாமல் பரம்பரைத் தொடர்பு அற்றுப் போவாரென்பது உண்மையானால் இவ்வூஞ்சல் அறுந்து விழுமாறு செய்வாயாக’ என்னும் கருத்துடையதாக அமைந்தது மூன்றாவது G6603TLIFT.
‘உள்ள வழக் கிருக்க ஊரார் பொதுவிருக்க
தள்ளி வழக்கதனைத் தான்பேசி - எள்ளளவும்
கைக்கூலி தான்வாங்கும் காலறுவான் தன்கிளையும்
எச்சமறும் என்றால் அறு
கைக்கூலி வாங்கும் கயவர், பரம்பரையில்லாமல் அழிவர் என்று அறுதியிட்டுரைக்கும் ஒளவையின் வாக்கு எக்காலமும் எல்லோர்க்கும் ஏற்ற படிப்பினையாகும்.
'உண்மை வழக்குக்கு உரியவன் இருக்கவும், வேண்டுமென்றே தவறாக அவனை எதிர்ப்பவனைச் சேர்ந்து, அந்த உண்மை வழக்கு தோல்வியுறும்படி செய்தவன், வழக்கில் தோற்றவனும் அவனது
26

உறவினரும் இடைவிடாது வருந்தி அழுத கண்ணிர் காரணமாகப் பரம்பரையற்றுப் போவான் என்பது உண்மையானால் இப் பொன் ஊஞ்சல் அறுந்து விழும்படி செய்வாயாக!' எனும் கருத்தமைந்ததாக நான்காவது வெண்பாவைப் பாடினார் ஒளவையார்.
வழக்குடை யான் நிற்ப வலியானைக் கூடி வழக்கை யழிவழக்குச் செய்தோன் - வழக்கிழந்தோன் சுற்றமும் தானும் தொடர்ந்தழுத கண்ணிரால் எச்சமறும் என்றால் அறு இவ்வாறு ஒளவையார் பாடியபோது ஒவ்வோர் பாட்டுக்கும் ஒவ்வோர் சங்கிலியாக அறுந்து விழுந்தது. ஊஞ்சற் பலகையிலிருந்த பொற்குவியல்கள் முழுவதும் ஒளவையாருக்குக் கிடைத்தது. அவற்றை முழுமையாகத் தாமே அனுபவிக்க எண்ணாமல் வறியவர்களுக்கு வாரி வழங்கினார். ஒளவையாரின் புலமைத் திறனைக் கண்டு வியந்த பாண்டிய மன்னன் அவரைப் பாராட்டி மேலும் பல பரிசுகள் வழங்கினான். ஒளவையாரும் மன்னனை வாழ்த்தியருளினார்.
C 18. என்றும் அழியாது என் பாட்டு )
ஒரு நாள் சோழ மன்னன் அரசவைக்குச் சென்றார் ஒளவையார். அங்கு சில அருந்தமிழ்ப் பாடல்களைப் பாடிப் பொருள் விளக்கமும் கூறிக்கொண்டிருந்தார். அவ்வேளை அரசன் அதனைச் செவிமடுத்துக் கேட்பதை விடுத்து அழகியதோர் ஆடையொன்றைப் பார்த்த வண்ணமிருந்தான். இதனை அவதானித்தார் ஒளவையார்.
தான் கூறும் அருந்தமிழ்ப்பாட்டின் பொருளை அறிய விரும்பாது சேலையின் மீது கவனம் செலுத்தும் மன்னனைக் கண்டிக்க விரும்பினார். அவர் வாயிலிருந்து ஒரு கவிதை பிறந்தது.
“நூற்றுப்பத் தாயிரம் பொன்பெறினும் நூற்சிலை நால்திங்கள் நாளுக்குள் நைந்துவிடும் - மாற்றலரைப் பொன்றப் பொருதடக்கைப் போர்வேல் அகளங்கா என்றும் கிழியாது என்பாட்டு.”
பகைவர்களை இறக்கும்படி போர் செய்யவல்ல விசாலமான கைகளில் யுத்தத்தில் வெற்றிதரும் வேலையுடைய களங்கமில்லாத மன்னனே! பத்து இலட்சம் விலைபெறுவதான நூற்சேலையானாலும்
27

Page 19
அது நான்கு மாதங்களில் நைந்து போகும்; கிழிந்து விடும். ஆனால் என் பாடல் அப்படியானதா? என்பாடல் காலாகாலத்தும் நின்று நிலைக்கும். அழியாத நிலை பெறும்; உணர்ந்து கொள்’ என்று சீற்றம் கொண்டு பாடினார். ஒளவையின் இப்பாட்டுக் கேட்டு மன்னன் அச்சமும் அவமானமும் அடைந்தான். அவரைப்பணிந்துதன்னை மன்னித்தருளுமாறு வேண்டினான்.
தம்மை மதியாதாரைத் தாம் மதியார் புலமையுடையோர் என்ற உண்மையை ஒளவையாரின் இப்பாடல் அனைவருக்கும் உணர்த்தி நிற்கிறது. -
C 19. கம்பரும் ஒளவையாரும் )
ஒரு நாள் சோழப் பெருமன்னன் புலவர்களை அழைத்துத் தன் அரண்மனையில் விருந்தொன்றளித்தான். விருந்துண்டபின் அனைவரும் அரசனது அவையில் களிப்புடன் இருந்தனர். அப்போது மன்னன் கம்பரை நோக்கி, ‘உலக இன்பங்களில் மிகச் சிறந்தது எது? என்று வினவினான்.
மன்னனின் வினாவிற்குக் கவியரசர் கம்பர் கவிதை ஒன்றின் மூலம் பதிலளித்தார்.
*கங்கைநீர் அதனின்மிக்க கடவுள் நீர் எங்கும் இல்லை
வெங்கதிர் ஒளியே யன்றி வேறு ஒளிர் ஒளியுமில்லை
எங்கணும் தாயைப்போல இனியதோர் உறவும் இல்லை
மங்கையர் சுகமே யன்றி மறுசுகம் இல்லை மன்னா’.
கம்பரின் கவிதை கேட்டு மன்னன் பெரிதும் மகிழ்ந்தான். அவரைப் பாராட்டினான். ஆனால் அங்கிருந்த ஒளவையாருக்கு அப்பாட்டுப் பிழையெனத் தெரிந்தது. கம்பனின் பாட்டைக் கேட்டுச் சிரித்தார் ஒளவையர்ர். ‘அம்மையே! நீங்கள் சிரித்ததன் காரணம் யாதோ? எனக் கேட்டார் மன்னன். ‘மன்னா! இவர் பாட்டுத் தங்களுக்குத் தவறான பதிலைத் தந்திருக்கிறது என்றார் ஒளவையார். கம்பரின் பாட்டில் என்ன தவறு கண்டீர்கள்?’ என்று ஒளவையாரை அரசன் வினவ ஒளவையார்
'விண்ணினின் மழையே யல்லால் வேறொரு நதியுமில்லை
கண்ணினின் ஒளியே யல்லால் காணுமோர் ஒளியுமில்லை
எண்ணிடிற் பொருளைப் போல இனியதோர் உறவுமில்லை
உண்ணிடிற் சுவையே அல்லால் ஒருசுகம் இல்லை மன்னா'
28

என்ற பாட்டால் விடையளித்தார். ஒளவையாரின் பாட்டைக் கேட்ட மன்னன் பெருமகிழ்வுற்று அவரைப் பெரிதும் போற்றினான். கம்பர் எதுவும் பேசாது எழுந்து சென்றார். இச்சம்பவத்தின் பின்னர் ஒளவையார் மீது கம்பருக்குப் பொறாமையும் வெறுப்பும் வளர்ந்தது. தருணம் வாய்க்கும் போது அவருக்கு நல்ல பாடம் புகட்டவேண்டும் என உள்ளத்தில் உறுதி கொண்டார். ஒருநாள் எதிர்பாராத விதமாக ஒளவையாரும் கம்பரும் எதிர் எதிராகச் சந்தித்துக் கொண்டார்கள். உடனே அவர் ஒளவையாரை 'அடி’ என்று அழைக்க எண்ணி, ‘ஒரு காலடி நாலிலைப் பந்தலடி என்று விடுகதையாகச் சொல்லி அதன் பொருளைக் கூறுமாறு கேட்டார்.
அரைக் கீரையைக் குறித்துக் கம்பர் கேட்டதில் ‘அடி’ என்னும் இழிவான சொல் காணப்படுவதற்கு விடையாகத் தாம் 'அடா என்று கேட்க வேண்டும். கம்பரின் செருக்கை அடக்க வேண்டும் என்று ஒளவையார் நினைத்தார். உடனே
‘எட்டேகா லட்சணமே எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேல் கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே! ஆரையடா சொன்னாய் அது என்ற பாட்டால் பதிலளித்தார். கம்பர் ஒரு முறைதான் ‘அடி என்றார். ஆனால் ஒளவையாரோ அவலட்சணமே, எருமை மாடே, கழுதையே, குட்டிச்சுவரே, குரங்கே நீ சொன்னது ஆரையடா என்று ஒரு பாட்டிலேயே பலமுறை பழித்துப் பாடி விட்டார். கம்பரின் ஆணவம் அடங்கியது. எதுவும் உரைக்க மாட்டாதவராய் அவ்விடம் விட்டகன்றார்.
(20. ஒட்டக் கூத்தரின் செருக்கை அடக்கியமை.)
சோழ மன்னன் குலோத்துங்கனின் அவைப்புலவர் ஒட்டக் கூத்தர். அவர் மிக்க புலமைச் செருக்குடையவர். ஏனைய புலவர்களை அவர் ஒருபோதும் மதிப்பதில்லை. ஒளவையாரையும் அவர் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. ஒளவையாரும் இதனை அறிந்திருந்தார். ஒட்டக் கூத்தரின் செருக்கினை அடக்கத் தக்க தருணம் பார்த்திருந்தார்.
ஒருநாள் புகழேந்திப்புலவரும், ஒட்டக் கூத்தரும் ஒரு சேர வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒளவையார் ஓரிடத்தில் காலை நீட்டிக் கொண்டு நூல் நூற்றுக் கொண்டிருந்தார். புகழேந்தியைக் கண்டதும் ஒளவையார் காலை மடக்கி அவருக்கு மரியாதை செய்தார். ஆனால்
29

Page 20
ஒட்டக் கூத்தருக்கு அப்படி ஒன்றுமே செய்யவில்லை. இதனை அவதானித்த ஒட்டக் கூத்தர் பெரும் சினம் கொண்டார். அரசனிடம் சென்று ஒளவையார் தம்மை அவமதித்து விட்டதாக முறையிட்டார்.
மன்னனும் ஒளவையாரை அவைக்கு அழைத்தார். ‘இருவரும் பெரும் புலவர்களாக இருக்க ஒருவரை மதித்து மற்றவரை அவமதிக்கலாமா?” என்று வினவினார். அதற்கு ஒளவையார் ‘அரசே! இருவரும் பெரும் புலவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இவர்களுக்கிடையேயுள்ள ஏற்றத்தாழ்வை (தாரதம்மியத்தை) நோக்கியே அவ்வாறு செய்தேன். வேண்டுமாயின் அதனை இச்சபையிலேயே வெளிப்படுத்துகின்றேன்’ என்றார்.
‘எம்மை விடப் புகழேந்தி அறிவில் உயர்ந்தவர் என்பதை நீர் எவ்வாறு அறிந்தீர்?" என்று ஆத்திரத்தோடு கேட்டார் ஒட்டக்கூத்தர். உடனே ஒளவையார் கூத்தரைப் பார்த்து ‘ஒரடியில் மூன்று மதி வரும்படி ஒரு பாட்டுப் பாடுக என்றார். ஒளவையாரின் செருக்கை அடக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் இருந்த ஒட்டக்கூத்தரும் உடனே பாட ஆரம்பித்தார்.
“வெள்ளத் தடங்காச் சின வாளை வேலிக் கமுகின் மீதேறி துள்ளி முகிலைக் கிழித்து மழைத் துளியோடிறங்கும் சோணாடா கள்ளக் குறும்பர் குலமறுத்த கண்டா அண்டர் கோபாலா பிள்ளை மதிகண் டப்பேதை பெரிய மதியும் இழந்தாளே - எனப் பாடி முடித்தார். “ஆற்று வெள்ளத்தில் அடங்காது கோபித்து எழுகின்ற வாளை மீன்கள் வேலியோரத்தில் நிற்கின்ற பாக்கு மரங்களில் மோதி, அங்கிருந்து துள்ளி மேகத்தைக் கிழித்து உட்புகுந்து மழைநீருடன் கீழே இறங்குகின்ற சோழ நாட்டு மன்னனே! வஞ்சகம் நிறைந்த சிற்றரசர்களது கூட்டத்தைத் தொலைத்த கைவாளினை உடையவனே! இடையர் தம் பசுக் கூட்டங்களைக் காப்பாற்றிய திருமாலைப் போன்றவனே! பேதைப் பருவத்தினளான எனது மகள் பிறைச் சந்திரனைப் பார்த்துத் தன் உயர்ந்த அறிவு நீங்கப் பெற்றாள்' என்பது இப்பாடலின் பொழிப்பாகும். ܐ
பிள்ளைமதி என்பதில் ஒரு மதியும், பெரியமதி என்பதில் ஒரு மதியுமாக இருமுறை மட்டுமே மதி என்னும் சொல் கூத்தரின் பாடலில் 30

வந்துள்ளது. ஒளவையாரை இகழ வேண்டும் என்னும் நோக்குடன் அதே கருத்தாக இருந்தமையால் ‘ஒருமதி தவறியதை அவர் உணரவில்லை.
மதி என்றால் திங்கள். பிள்ளையாகிய தம் மதியைக் கண்டு பேதையாகிய ஒளவையார் தம் பெரிய மதியை இழந்து விட்டாள் என இகழும் வண்ணம் கூத்தரின் பாடல் அமைந்திருந்தது. கூத்தரின் சிறுமதி கண்ட ஒளவையார் ‘இதில் இரண்டு மதியே வந்துள்ளது. ஒருமதி கெட்டாயே என்று இரு பொருள்படக் கூறினார்.
பின்னர் புகழேந்தியை நோக்கி மூன்றுமதி வரும்படி பாடுக என்றார். உடனே புகழேந்தி,
பங்கப் பழனத் துழும் உழவர்
பலவின் கனியைப் பறித்ததென்று சங்கிட் டெறியக் குரங்கிளநீர்
தனைக் கொண்டெறியும் தமிழ்நாடா கொங்கர்க் கமரர் பதியளித்த
கோவே ராச குலதிலகா வெங்கட் பிறைக்கும் கரும் பிறைக்கும்
மெலிந்த பிறைக்கும் விழிவேலே!’
என விருத்தம் பாடி முடித்தார். குரங்கு பலாப்பழத்தைப் பறித்ததற்காகச் சேறு நிறைந்த வயலில் உழவு செய்கின்றவர்கள் அவ்வயலில் உள்ள சங்குகளை எடுத்து அதன் மீது வீச, அதற்குப் பதிலாகக் குரங்கானது இளநீர்க் காய்களை எடுத்து வீசும் வளமுடைய தமிழ் நாட்டிற்குத் தல்ைவனே! கொங்கு தேசத்து அரசனை வென்று அவனுக்கு விண்ணுலகம் அளித்த மன்னனே, அரசர் கூட்டத்திற்குத் தலைவனே! வெப்பமுள்ள பிறைத் திங்களின் நிலவொளியாலும் கரும்பு வில்லினையுடைய மன்மதன் காரணமாகவும் உடல் தளர்ந்து வேல் போன்ற கண்ணையுடைய பெண் கண்ணிர் சிந்துகின்றாள்' என்பதே இப்பாடலின் பொருளாகும்.
இப்பாடலைக் கேட்டதும் ஒளவையார் மிக மகிழ்ந்து மன்னனை நோக்கி இதில் மூன்று பிறை (மதி) வந்துள்ளது காண்க என்றார். ஒட்டக் கூத்தர் வாயடங்கி வாளாவிருந்தார். அவர் செருக்கு அடங்கியது. இதன் மூலம் ஒளவையார் ஒட்டக் கூத்தருக்கும் புகழேந்திக்கும் இடையேயுள்ள ஏற்றத் தாழ்வினைப் (தாரதம்மியத்தை) புலப்படுத்தினார். ஏனைய புலவர்களும் கல்விச் செருக்கை விடுத்து நன்னெறிப்பட வேண்டும் என்னும் பெருவிருப்பே ஒளவையாருக்கிருந்தது. இக்கருத்தினை
31

Page 21
அவரது மற்றொரு பாடல் தெள்ளத் தெளிவாக எடுத்துக்கூறுகிறது. 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவென்று உற்ற கலைமடந்தை ஒதுகிறாள் - மெத்த வெறும் பந்தயம்கூற வேண்டாம் புலவீர் எறும்பும் தன்கையால் எண்சாண்’ ‘யாம் கற்றது ஒரு பிடி மண்ணளவேயாகும். கல்லாதது உலகளவாகும் என்று கலைமகள் கூறுகின்றாள். எனவே புலவர்களே! அதிகம் கற்றுவிட்டோம் என்று பெருமை கொண்டு வீணாகப் போட்டியிடாதீர்கள். மிகச் சிறிய எறும்புகூட அதன் கையால் எட்டுச்சாண் நீளமுள்ளதாகும் என்னும் உயர்ந்த கருத்துள்ளது இப்பாடல்.
கல்விக்கு ஓர் எல்லை இல்லை என்றும், நீவிர் செருக்கடைய வேண்டாம் என்றும் புலவர்களை நோக்கி ஒளவையார் கூறியுள்ளமை என்றும் பொருந்தும் நல்ல கருத்தாகும்.
( 21. முருகனும் ஒளவையாரும். D)
முருகன் தமிழர்தம் தெய்வம். அவன் முத்தமிழால் வைதாரையும்
வாழவைப்பவன். ஒளவையாரின் அருந்தமிழ்ப் பாடல் கேட்க ஆசை
கொண்டான். ஒருநாள்.
ஒளவையார் ஒரு காட்டுவழியே நடந்து கொண்டிருந்தார். வெயில்
மிகவும் கடுமையாக இருந்தது. நன்கு களைத்துப் போனார். அவர் 32
 

சென்ற வழியில் நாவல் மரமொன்று நன்கு பழுத்து நின்றது. ஒளவையார் இளைப்பாறும் பொருட்டு அந்நாவல் மரத்தின் நிழலின்கீழ் போய் நின்றார். அண்ணாந்து பார்த்தார். மரத்தின்மீது ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான். அவன் நாவல் பழங்களைப் பறித்துச் சுவைத்துத் தின்றுகொண்டிருந்தான்.
ஒளவையார் அச்சிறுவனைப் பார்த்துத் தம்பீஎனக்கும் சில நாவல் பழங்களைப் பறித்துப் போடு' என்று கேட்டார். உடனே அச்சிறுவன் ‘பாட்டி உனக்குச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டான். −
அதைக் கேட்டதும் ஒளவையாருக்குச் சிரிப்புண்டாயிற்று. இவன் விளையாட்டுக்காகக் கேட்கிறான் போலும் என்று எண்ணிக் கொண்டார். "வேடிக்கையாகவா கேட்கிறாய்? எங்கே சுடுகின்ற பழங்களாகவே போடு என்று கேட்டார். உடனே அச்சிறுவன் மரக்கிளையைப் பிடித்துப் பலமாக ஆட்டினான். நாவற்பழங்கள் மணலின்மீது உதிர்ந்தன. ஒளவையார் சில பழங்களைக் கையில் எடுத்தார். அவற்றில் மணல் ஒட்டிக்கொண்டிருந்தது. மணலைப் போக்குவதற்காக வாயால் ஊதினார். அச்செயலை மரத்தின் மேலிருந்த சிறுவன் பார்த்தான். கைகொட்டிச் சிரித்தான்.
‘பாட்டி! எங்கேனும் நாவற்பழங்கள் சுடுமா? என்று கேட்டாயே. இப்போது ஏன் வாயால் ஊதுகின்றாய்?அதிகமாகச் சுடுகின்றதா? என்று கேட்டுச் சிரித்தான். சுடுகின்ற பழம், சுடாத பழம் என்று சிறுவன் கூறியதன் கருத்து அப்போதுதான் ஒளவையாருக்குப் புலனாயிற்று.
‘ஓ! இதுதான் சுடுகிற பழமா? இது எனக்கு முன்பே தெரியாமல் போய்விட்டதே. மாடு மேய்க்கும் சிறுவன் என்னை மடக்கிவிட்டானே!" என்று வெட்கமும் துக்கமும் அடைந்தார். மிகவும் வருந்தினார். இரண்டு இரவுகள் எனக்கு நித்திரை வருமோ? என்னே இழிவு என்று ஏங்கினார்; புலம்பினார். அவர்தம் வேதனையின் பிரதிபலிப்பாகப் பாடல் ஒன்று பிறந்தது.
‘கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடரி இருங்கதலித் தண்டுக்கு நானும் - பெருங்கானில் கார் எருமை மேய்க்கின்ற காளைக்கே நான் தோற்றேன் ஈரிரவுந் துஞ்சாதென் கண். ‘கருங்காலி மரத்துண்டினை வெட்டுதற்குப் பின்னடையாத கோடரியானது பெரிய வாழைத்தண்டினை வெட்டுதற்கு அஞ்சும். பெரிய காட்டினில் கறுப்புநிறம் பொருந்திய எருமை மேய்ப்பவனாகிய
33

Page 22
சிறுவனுக்கு நான் தோற்றுப்போனதை என் மனம் நினைத்துக் கொண்டிருப்பதால் என் கண்கள் இரண்டு இரவு நித்திரை கொள்ளாது" என்பதே ஒளவையாரின் பாட்டின் பொருளாய் அமைந்தது. எவ்வளவு புலமை படைத்தும் என்ன பயன்? இடைச்சிறுவனிடம் தோற்றுவிட்டேனே என்று அவர் மனம் வேதனையுற்றதையே இப்பாடல் மூலம் வெளிப்படுத்தினார்.
பாடலைக் கேட்டதும் சிறுவன் மரத்தினின்றும் கீழே குதித்தான். முருகனாகக் காட்சி கொடுத்தான். “செந்தமிழ்ச் செல்வியே! உனது அமிழ்தினும் இனிய பாடல்களைக் கேட்க விரும்பியே இவ்வாறு செய்தேன். கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்று நீயே பாடியிருக்கிறாய். ஆகவே வருந்தற்க! அம்மையே! இவ்வுலகில் கொடியது யாது? அரியது யாது? இனியது யாது? பெரியது யாது? என்பதனை எமக்கு விளக்கிக் கூறுவாயாக!” என்றார்.
முருகன் தொடுத்த நான்கு வினாக்களுக்கும் ஒளவை மூதாட்டி அகவற்பாக்கள் மூலம் விடை பகர்ந்தார்.
மிகவும் கொடியது:
‘கொடியது கேட்கின் நெடிய வெவ்வேலாய் கொடிது, கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய் அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர் அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பது தானே!
பொழிப்புரை:
நீண்ட வெப்பம் பொருந்திய வேலாயுதத்தை உடையவனே! (உலகில்) மிகக் கொடுமையானது எதுவென்று கேட்டால் வறுமையே கொடியவற்றுள் கொடியது. அதைப் பார்க்கினும் கொடுமையானது இளமைப் பருவத்தில் வருகின்ற கொடுமையே. அதைவிடவும் கொடுமையானது தாங்க முடியாத வியாதியாகும். அதைப் பார்க்கினும் மிகவும் கொடுமையானது நேசமில்லா மனையாளாகும். அதைப் பார்க்கினும் தீயது அவர்கள் கையாலிடப்பட்ட உணவை விரும்பி உண்பதேயாகும்)
அன்பிலாப் பெண்டிர் இடும் உணவு மிக மிகக் கொடிது என்கிறார் ஒளவையார்.

மிக அரியது:
‘அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிதரிது மானிட ராத லரிது மானிட ராயினுங் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்த லரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமுங் கல்வியும் நயத்த லரிது ஞானமுங் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தாம்செயல் அரிது தானமும் தவமும் தாம்செய்வ ராயின் வானவர் நாடு வழி திறந்திடுமே. பொழிப்புரை: அழகிய வேலாயுதத்தை உடையவனே! இந்த உலகில் அரியது எது எனக் கேட்டால் மானிடராகப் பிறப்பதே அரிதாகும். அதிலும் கூனாகவோ, குருடாகவோ, செவிடாகவோ, பேடியாகவோ இல்லாமல் பிறப்பது அரிதாகும். பேடி இல்லாமல் ஆண்மையுள்ளவனாகப் பிறந்தாலும் அவன் அறிவையும் நூற்படிப்பையும் விரும்புவனாய் இருத்தல் அரிதாகும். அறிவையும் படிப்பையும் விரும்புவனாயிருந்தாலும் அவன் தானமும் தவமும் செய்வது அரிதாகும். அவ்வாறு அவன் செய்வானாயின் வானவர் நாடு அவனுக்கு வழி திறந்திருக்குமே!.
மிக இனியது: இனியது கேட்கின் தனிநெடு வேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது: அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல் அதனினும் இனிது அறிவுள் ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே! பொழிப்புரை:
ஒப்பற்ற நீண்ட வேலாய்தத்தை உடையவனே! இன்பந் தருவது யாதென்று கேட்டால் இனியவற்றுள் இனியது பிறர் தொந்தரவின்றித் தனியே இருப்பது, அதைப் பார்க்கினும் இனியது முதல்வனாகிய கடவுளைத் தொழுதலாகும். அறிவுடையவர்களைப் போய்ச் சேர்தல் அதனினும் பார்க்க இனியதாகும். அறிவுள்ளவர்களைக் கனவிலும் அது அல்லாத நேரங்களிலும் பழகிக் காண்பது அதைப் பார்க்கிலும் இன்பந் தருவதாகும்.
w 35

Page 23
மிகவும் பெரியது:
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது; புவனமோ, நான்முகன் படைப்பு; நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன் கரியமாலோ அலைகடல் துயின்றோன்; அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம், குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்; கலசமோ புவியில் சிறுமண் புவியோ அரவினுக்கு ஒரு தலைப் பாரம் அரவோ, உமையவள் சிறுவிரல் மோதிரம்; உமையோ இறையவர் பாகத்தொடுக்கம் இறைவரோ தொண்டருள்ளத் தொடுக்கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.
பொழிப்புரை:
வெப்பம் பொருந்திய வேலை உடையவரே! பெரிய பொருள் யாதென்று கேட்டால் உலகிலுள்ள பெரிய பெரிய பொருள்களைப் பார்க்கிலும் உலகமே மிகப் பெரியது. உலகமோ பிரமனால் படைக்கப்பட்ட பொருளாகும். பிரமனோ கரிய நிறமுடைய திருமாலின் உந்திக் கமலத்தில் வந்தோன். அத்திருமாலோ அலைகளையுடைய திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவன். அலைகடலோ அகத்தியரின் உள்ளங்கையில் அடங்கி விடுவது. அகத்தியரோ கும்பத்தில் நின்று தோன்றியவர். கும்பமோ பூமியிலுள்ள சிறிய அளவுள்ள மண்ணாலாகியது. பூமியோ ஆதிசேடனாகிய பாம்புக்குத் தலையில் உள்ள ஒரு சுமையாகும். பாம்போ உமையம்மை சிறுவிரலில் தரிக்கப்பட்ட கணையாழியாகும். உமாதேவியோ கடவுளாகிய சிவபிரானின் இடது பாகத்தில் அடங்கியிருப்பவர். கடவுளோ 9Itջ Ա In (5 600ւ-եւ இதயத்தில் அடங்கி நிற்பவர். ஆதலால் அடியார்களுடைய உயர்வு பேசுதற்கு அடங்காத பெருமை வாய்ந்தது.
ஒளவையாரின் இவ்வரிய கருத்துக்களைத் கேட்டு மகிழ்ந்த முருகன் அவரை வாழ்த்தி மறைந்தருளினார். முருகனின் திருவிளையாடலை நினைந்து மகிழ்ந்த வண்ணம் ஒளவையாரும் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
36

( 22. ஒளவையின் நகைச்சுவை
தமது கருத்துக்களை நகைச்சுவை ததும்ப எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்கவர் ஒளவையார். அவர் பாண்டிய மன்னனது திருமண வைபவம் ஒன்றிற்குப் போயிருந்தார். அங்கு திருமண விருந்துண்ணப் பலரும் முண்டியடித்துக் கொண்டிருந்தனர். இந்த நெருக்கடிக்குள் ஒளவையும் சிக்கிக் கொண்டார். அவர் பட்ட பாட்டை அழகிய வெண்பா ஒன்றின் மூலம் நகைச்சுவை ததும்பத் தெரிவித்தார். அப்பாடல் இதுதான்:
வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி
நெருக்குண்டேன்; தள்ளுண்டேன்: நீள்பசியாலே
சுருக்குண்டேன் சோறுண்டிலேன்.
நெருக்குண்டும் தள்ளுண்டும் சுருக்குண்டும் சோறுண்டிலா அவலத்தை இப்பாடல் மூலம் நகைச்சுவை ததும்ப எடுத்துரைத்தார் ஒளவையார்.
மற்றோரிடத்தில் முல்லான் என்னும் வள்ளலைப் பாடும்போது மனிதர் தம் பண்பையே சித்திரித்துக் காட்டினார் ஒளவையார். மனிதரது உள்ளங்களைக் கூர்ந்து அவதானித்து அனுபவ வாயிலாக உரைக்குந் திறன் பாடலில் பளிச்சிடுவதைப் பார்ப்போம்.
37

Page 24
“காலையில் ஒன்றாவர் கடும்பகலில் ஒன்றாவர் மாலையில் ஒன்றாவர் மனிதரெல்லாம் - சாலவே முல்லானைப் போல முகமும் அக முமலர்ந்து நல்லானைக் கண்டறியோம் நாம்'.
வள்ளலைப் பாடிய வாயால் கஞ்சன் (உலோபி) ஒருவனையும் பாடினார் ஒளவையார். அங்கும் நகைச்சுவை ததும்புவதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கோரைக்கால் என்னும் ஊரில் ஆழ்வான் என்பவன் இருந்தான். அவன் ஒரு கஞ்சன். எதுவும் ஈயான். வாயால் மட்டும் பெரிதாகப் பேசுவான். கரி (யானை) என்பான். அது பின்னர் பரி (குதிரை) ஆகும். பிறகு அது எருமையாகும். பின்னர் காளை மாடாகி, ஒரு முழத் துணியாகி, திரிதிரியாய்ச் சுருங்கித் தேரையின் கால் போலானது. என்காலும் தேய்ந்து போனது என்கிறார் ஒளவையார்.
‘கரியாய்ப் பரியாகிக் கார்எருமை தானாய் எருதாய் முழப்புடை வையாகித் - திரி திரியாய்த் தேரைக்கால் பெற்று மிகத் தேய்ந்து கால் ஓய்ந்ததே கோரைக்கால் ஆழ்வான் கொடை.
வெறும் வாய்ப் பேச்சுக்காரரின் வண்டவாளம் இதுதான் என்று கூறுகிறார் ஒளவையார்.
( 23. கைலாயம் சேர்ந்தமை )
ஒளவையார் விநாயகப் பெருமான் மீது பேரன்பு பூண்டவர். தினந்தோறும் அவர் விநாயகருக்குப் பூசை செய்யத் தவறுவதில்லை. ஒரு நாள் சுந்தரமூர்த்திநாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் திருக்கைலாயமலைக்குச் செல்லும் செய்தியை ஒளவையார் அறிந்தார். தானும் அவர்களுடன் கைலைக்குச் செல்ல விரும்பினார். இதனால் விநாயகருக்குச் செய்யும் பூசையை மிக அவசரமாகச் செய்து கொண்டிருந்தார். அவர் தன்மையை அறிந்த ஐங்கரன் ‘அம்மையே! அவசரப்படாமல் ஆறுதலாகப் பூசை செய்க. குதிரை மீது செல்லும் சேரர்க்கும் யானை மீது செல்லும் சுந்தரர்க்கும் முன்னதாக உன்னை அம்மலையிற் சேர்ப்போம்' என்று திருவாய் மலர்ந்தருளினார்.
அதுகேட்ட ஒளவையார் மிக மகிழ்ந்து தமது பூசையை மிக்க
பக்தியுடன் செய்து பல பாக்களைப் பாடித் துதித்தார். அடியார்க்கருளும் ஐங்கரன் தமது துதிக் கையினால் ஒளவையைத் தூக்கித்
38

திருக்கைலாயத்தில் சேர்ப்பித்தார்.
தமக்கு முன்பே ஒளவையார் அங்கு வந்திருந்தமை கண்டு சேரமான் பெருமாள் நாயனாரும் சுந்தரரும் பெரும் வியப்புக்குள்ளாயினர். எங்களுக்கு முன்னே இங்கு வந்தது எப்படி? என வினவினர். அதற்கு ஒளவையார் 'ஜங்கரன் அடியவர்க்கு அரிய தொன்றில்லை. அவர்கள் விரும்பியதை அளிக்கும் கருணையுடையவர் ஜங்கரன்’ என்று பதிலளித்தார். இதோ அவரது பாடல்.
'மதுரமொழி நல்லுமையாள் சிறுவன் மலரடியை முதிர நினையவல் லார்க்கு அரிதோ முகில்போல் முழங்கி அதிர வருகின்ற யானையுந் தேருமதன் பின்வருங் குதிரையுங் காதங்கிழ வியுங்காதங் குலமன்னனே!
பொழிப்புரை:
உயர்குடிப் பிறந்த மன்னனே! இனிய சொற்களைக் கூறுகின்ற நன்மை தரும் உமாதேவியாரது திருக்குமாரராகிய விநாயகப் பெருமானுடைய திருவடித் தாமரைகளைப் பயன் தரும்படி தியானிக்கக் கூடியவர்களுக்கு எக்காரியமும் அரிதாயிருக்குமோ? மேகம் போல இடி இடித்து அதிர்ச்சியடையும்படி செல்கின்ற யானை பூட்டிய தேரும் அதற்குப் பின் புறப்பட்டு வந்த குதிரையும் (ஒருநாழிகைக்கு) காத வழிநடக்கும். நடக்க இயலாத கிழவியும் வந்தது காத வழியே.
இப்பாடலைக் கேட்டுச் சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் பெரு வியப்படைந்தனர்.
( 24. ஒளவையின் அருந்தமிழ் )
ஒளவையின் அருந்தமிழ் அமுதம் போன்றது. படிப்போர் உள்ளங்களைச் செம்மைப்படுத்த வல்லது. அறமுரைப்பது, நீதி புகட்டுவது, வாழும் நெறி உரைப்பது. அவர் தம் வாழ்வில் எத்தனையோ உள்ளங்களைப் பார்த்தவர். மன்னர்கள் பலரையும் அவர்கள் ஆண்ட மண்ணையும், மலைகளையும், காடுகளையும் கண்டவர். அத்தகைய பரந்த அனுபவத்தில் உதித்த உண்மைகளையே பாடல்களாக, தம் வாழ்வின் காணிக்கையாகத் தமிழ் உலகுக்கு வழங்கியுள்ளார்.
நல்லிசைப் புலமை வாய்ந்த பெண்மணிகளுக்கெல்லாம் தலைமணியாக, தாய்க்குலத்தின் பெருமையாய்த் தோன்றிய தமிழ்
39

Page 25
மூதாட்டி அவர். அத்தகு பெருமைவாய்ந்த ஒளவையாரின் சான்றாண்மை மிக்க நெஞ்சின் உள்ளொளியாக விளங்கும் அருந்தமிழ்ப் பாடல்கள் என்றென்றும் நம்வாழ்விற்கு இருள் நீக்கி, ஒளி காட்டி, வளம் புரியவல்லன. அவற்றை நன்கு கற்று அன்பு, அறிவு, ஒழுக்கம், வாய்மை, அஞ்சாமை ஆதியாம் நற்பண்புகளை நாம் பெற வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லவர்களாக, வல்லவர்களாக, நலன் செய்பவர்களாக நாம் வாழவேண்டும்.
அழுதத் தமிழ் தந்த ஒளவையின் பாடல்களை நன்கு கற்போர் இத்தகு பண்பு நலம் வாய்ந்தவர்களாகத் திகழ்வர் என்பதில் ஐயமில்லை. இதுவரை அமுதத் தமிழ் தந்த ஒளவையின் தனிப்பாடல்கள் சிலவற்றின் சிறப்பை, அவர் தம் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களோடு தொடர்புடையனவற்றைப் பார்த்தோம். இவற்றை விட ஒளவையார் அருளிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆதியாம் நீதிநூல்களில் கூறப்படும் கருத்துக்கள் மிகவும் சிந்தித்தற்குரியன. அவை மக்கள் தம் வாழ்வைச் செம்மைப்படுத்த உதவுகின்றன. அவற்றைப் பொருளுணர்ந்து கற்பது நமது கடமையாகும்.
ஒளவையாரைப்பற்றிப் பாட்டுக்கொருபுலவனான பாரதி கூறியுள்ளவற்றை இங்கு குறிப்படுவது சாலப் பொருத்தமாகும். பாரதி கூறுகிறார் ‘தமிழ் நாட்டின் மற்றைச் செல்வங்களையெல்லாம் இழந்து விடப் பிரியமா? ஒளவையாரின் நூல்களை இழந்துவிடப் பிரியமா? என்று நம்மிடம் யாரேனும் கேட்டார்களாயின் "மற்றைச் செல்வங்களை எல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றை தமிழ்நாடு மட்டும் சமைத்துக் கொள்ள வல்லது. ஒளவைப்பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம். அதுமட்டும் சமைத்துக் கொள்ள முடியாது. தனிப் பெருஞ் செல்வம் என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
பாரதியின் வாக்கு தெய்வ வாக்கு. ஒளவையர்ரின் பாடல்கள் அருந்தமிழ்ச் செல்வங்கள். அவற்றைப் போற்றிப் பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும். பாரதி கூறியவாறு நாமும் செயற்படுவோமாக. ஒளவையின் புகழ் அகிலமெலாம் பரவும் வகை செய்வோம். அமுதத் தமிழ் தந்த ஒளவையின் நாமம் வாழ்க!
40


Page 26


Page 27
雛 ஒளவையர் இருளிய