கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒளவையார் அறிவுச் செல்வங்கள்

Page 1
eSeSeeSeSeAeSSeSeeeSeSeee SeseSYeSeSYS
ફએ
ஒளவை
அறிவுச் செ
வாக்குண்டாம்
ஆத்திசூடி
(உரைகளுடன்)
 
 
 
 
 
 

Juu Tsir ல்வங்கள்

Page 2
பதிப்பு:- மறுபதிப்பு செய்யப்பட்டது
ஆண்டு 1990
அச்சகம்:- இம்பீரியல் பிறஸ், கொழும்பு-10
இந்துசமய இந்து கலாசார தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சு அலுவலகம் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனக் கட்டிடம்
9வது மாடி 2. வாக்ஷல் வீதி, கொழும்பு-2. இலங்கை.

பணிப்பாளர்
※然
காண்டித் தமிழ்ச் சங்கம் கவுரை * : Ոչ (, T சமுதாயத்தின்ஜ்வ் Q2, CCT2A3. நெறிக் கருத்துக் 14. հ.
豚リ பே
F
பெற் றிவே
ஆதிகுடி, போன்ற ஒளவைய வரை அழிபாப் புகழ்சி அசன்ஹேரிங் ெ
துக்களே காரணமாகும். இத்தகையூ நூல்கள் இ
" L-AfT LI a I Liedhariri 656f if i.
இந்து சமய 5ჭ' த பிட TT தமிழ் அலுள்க
இTஜாங்க அனாச்சர் பாண்புமிகு பி. பி. ே S.
* Saif 2°G)gsÜ51ßBiT“
அறிவு நீர் செலவ அவர்கள்
-
ானிப்புர்ைக்கமைய வாக்குண்டாம்
!a | E si a sporii siga 2) F၈ ခ☎r႔ ၂၂၊ ಫ್ಲ | ܠܐ ¬ ܢ நுர் : "ஒளவை பார் அறிவுச் செல்வங்கள்' எனு
பயரில் எமது தினை க்சுனம் மூலத
வாக்குண்டிாம் மதிப்ஆத்திகுடியில்
I i ii ii ஆமிழ் கூறும் நல்' கம் வரவேற்கு $ எண்ணுகின்ஆே ழி வையார் கருத்துக்க $ ார்ந்து பெரும் ச நல்வ *Gā血凸品岛血@ 5 os
வி காட்டியாக அமையும் கன் பளிவான கி *
, , i. Sħ JagdG 55 L- ங்கம் தி குமி 器芯u தமிழ்ச் \sრ
இவ்வண்ணம், \so
。誓 §### قل للج پہاڑیsr' +
இந்து சழய இந்து கலாசரிஅஅ8 Tai T,
இந்துFமப் த லா சார்
இராஜா ங்க் அமைச்சு அ லுவல்கம் ெ வளியீடு
2.1 YYYeBBLBLBLBDBBDBLSYLDDLSDC C CLzBLBLBOLOOe

Page 3

இந்துசமய, இந்து கலாசார அலுவல்கள் பணிப்பாளர்
அவர்களின்
முகவுரை
சமுதாயத்தின் வளர்சிக்கு இன்றைய நிலையில் அற நெறிக் கருத்துக்கள் மிக அவசியம். ஒளவை மூதாட்டி யின் பாடல்களில் இவைகள் சிறப்பாக பொதிந்து கிடப்பதை யாவரும் அறிவர். வாக்குண்டாம், நல்வழி ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேர்க்கை போன்ற ஒளவையார் நு:ல்கள் அன்று தொடங்கி இன்று வரை அழியாப் புகழ் கொண்டு மணம் பரப்புவதற்கு அவைகளில் பொதிந்நுள்ள ஆழமான அறநெறிக்கருத் துக்களே காரணமாகும். இத்தகைய நூல்கள் இன்றைய சமுதாய வளர்சிச்க்கு மிகவும் அவசியம் என உணர்ந்த இந்துசமய இந்து கலாசார, தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் :ாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, அமைச்சின் செய லாளர் திரு. எஸ். சி. மாணிக்கவாசகர் அவர்கள் விடுத்த பணிப்புரைக்கமைய வாக்குண்டாம் ஆத்திசூடி, நல்வழி ஆகிய மூன்று நூல்களையும் ஒருங்கே இணைத்து ஒரு நூலா "ஒளவையார் அறிவுச் செல்வங்கள்’ எனும் பெயரில் எமது திணைக்களம் மூலமாக இராஜாங்க அமைச்சு அலுவலகம் மறுபதிப்பு செய்து வெளியீடு செய்வதை தமிழ் கூறும் நல்லுகம் வரவேற்கும் என எண்ணுகின்றேன். ஒளவையார் கருத்துக்கள் வளர்ந்து வரும் சமுதாய முன்னேற்றத்திற்கு என்றும் வழிகாட்டியாக அமையும் என்பது என் பணிவான கருத் தாகும்.
இவ்வண்ணம், 원, ... பாஸ்கரதாஸ்
பணிப்பாளர்,
இந்துசமய, கலாசார அலுவல்கள் தினைக்களம்

Page 4
இந்துசமய, இந்துகலாசார, தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சு
அலுவலகச் செயலாளர்
திரு. எஸ். சி. மாணிக்கவாசகர்
அவர்களின்
கருத்துரை
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல் வழி, ஞானக்குறள், பந்தனந்தாதி போன்ற பல நூல்களை ஒளவைப் பிராட்டியார் தமிழுலகிற்கு தந்தருளியுள்ளார். இவற்றில் ஆத்திசூடி, கொன் றைவேந்தன் போன்ற நீதிநூல்கள் கற்ருரும், மற்ருரும், சிறு குழந்தைகளும், முதியோரும் எளிதில் பயிலக்கூடியவை. இவை ஆங்கிலத்தில் உள்ள "Aphorisms" போன்று சுருங்கக்கூறி விளங்க வைக்கும் இரத்தினச் சுருக்கமான சூத்திரங்களாக திகழ் கின்றன. இவைகளை தொன்று தொட்டுப் பயின்று வருவதினுலேயே தமிழ் மக்கள் நீதி வழியில் நடப்பது சுலபமாக இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஆத்திசூடியைப் பயில்வார்கள். சிறிது வயது கூடி பதும் கொன்றைவேந்தனேக் கற்க முடியும். இன்னும் வயது முதிர முதிர முதுனா நல்வழி போன்ற நூல்கள் வழிகாட்டியாக திகழும்.
அறிவுக்கு விருந்தாக இருக்கும் இந்த நூல் களை, தமிழ் மக்களின் அழியாத பொக்கிஷங் களை அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் மறு பதிப்புச் செய்ய வேண்டுமென விரும்பினுர், இந்த விருப்பத்தை ஆணேயாக ஏற்று எங்கள் இராஜாங்க அமைச்சு தமிழ் மூதாட்டியின் சில நூல்களை பிர சுரித்து வெளியிடுகிறது. எல்லோரும் வாசித்துப் பயன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

இந்துசமய, இந்து கலாசார, தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்களின்
அணிந்துரை
ஒளவையார் இயற்றிய வாக்குண்டாம், நல்வழி, ஆத்திசூடி போன்றவைகள் காலத்தால் அழியாது கற்றோரை கரை கடந்த ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தக் கூடியவை. இன்றைய தமிழ் நூல்களில் ஒளவையார் செல்வங்கள் அருகி வருவதை எனது கவனத்திற்கு தமிழ் அபிமானிகள் கொண்டு வந்ததின் i fij தற்போதைய சூழ்நிலையில் அவைகள் மிகவும் அத்தியாவசியமானவை GBT உனர்ந்து 'ஒளவையார் அறிவுச் செல்வங்கள்' எனத் தலைப்பு கொடுத்து வாக்குண்டாம், நல்வழி ஆத்திசூடி, என்ற மூன்றையும் இணைத்து ஒரே நூலாக எமது இந்துசமய, கலாசார தமிழ அலுவல்கள் இரா தாங்க அமைச்சு மறுபதிப்பு செய்வது மிகவும்
யனுள்ளது. எனக் கருதுகின்றேன்.
முன்னர் இவைகளைக் கற்றவர்கள் அவை களின் கருத்துக்களை நன்கு அறிந்து செயற்படும் போது இனிவரும் சமுதாழமும், இதனுல் பயன் பெற வேண்டுமென்ற நல்நோக்கில் "சமுதாயப் பணிக்காக" இந்நூலை மறுபதிப்பு செய்து எமது இராஜாங்க அமைச்சு வெளியிடுவதில் பெரும் மகிழ்ச் சியடைகின்றேன்.
தமிழ் கூறும் நல்லுலகம் இதையேற்று நற் பயன் பெற வேண்டும் என்பதே எனது மனம் நிறைந்த ஆவலாகும்.
இவ்வண்ணம், பி. பி. தேவராஜ், இந்துசமய, கலாசார, தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்.

Page 5
பொருளடக்கம்
வாக்குண்டா LC
ஆத்திசூடி
நல்வழி
1 - 16
- 17 - 33
34一59

r
HR
占山r击
ா தம் - பள்ளம்போ லும் வெப்பாகிய) : குமரியை பும் துதிக்கிையையும் டன டய விநாயகக் கடவுளது
திரு வடிகளே, பூக் கொண்டு । (கையிலே "வாக்குண்டிாம் நல்ல சமனமுண்டிாம், மாழலநாள் நோக்குண்டாம் மேனிநுட்பங்காது-பூக்க்ொண்டு
நல்ல T.டித் டங்டபகம் பல்து நபர் ஆவி
துப்பூர்திருமிேனித்தும்பிக்கையர்ன்பர் தந்",
சிந்தா பரேட்
தப்பர மற்சார்வரர் திமிசிகுருட்பார்வை உண் LTTE,
மணி நுடங்காது_ அவருடைய சாரம் பிஜிதர !

Page 6
.E)ãesa xe, in vivaihtne čia vivu vů v IE,
ww
ä&wuvös vus zesooër die è stcoaliëDeyse invulsie
Qwiata,6)*ąy - eważ_i\, Roast) dt. ube)żywa)
tian Qaas na din swaryvdba (fadsa din wikae)iswa'
 

6.
வாக்குண்டாம்
(மூதுரை)
உரையுடன்
காப்பு
வெண்பா
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதந் தப்பாமற் சார்வார் தமக்கு.
பதவுரை : துப்பு ஆர் திருமேனித் தும்பிக்கையான் பாதம் - பவளம்போலும் (சிவப்பாகிய) திருமேனியை யும் துதிக்கையையும் உடைய விநாயகக் கடவுளது திரு வடிகளை, பூக் கொண்டு - பூவைக் (கையிலே) கொண்டு, தப்பா மற் சார்வார் தமக்கு - தவருமல் அடைந்து பூசை செய்வோருக்கு, வாக்கு உண்டாம்(நல்ல) வாக்கு உண்டாகும், நல்ல மனம் உண்டாம்பெருமை பொருந்திய செந்தாமரைப் பூவில் இருக் கின்ற இலக்குமியினுடைய அருட்பார்வை உண்டாகும், மேனி நுடங்காது - அவருடைய சரீரம் பிணிகளால் வாடிப்போகாது. என்றவாறு.

Page 7
வாக்குண்டாம்
நன்றி யொருவற்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா-நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்றருத வால்,
ப-ரை நின்று தளரா வளர்தெங்கு - நிலே பெற்றுச் சோராமல் வளர்கின்ற தென்னமரமானது, தாள் உண்ட நீரை - (தன்) அடியிலே உண்ட (வெறு) நீரை. தலேயாலே தான் தருதலால் - (தன்) முடியிலே (மதுரமாகிய இளநீராக்கித்) தானே தருதவிகுவே, ஒருவற்கு நன்றி செய்து க்சாங் - (நற்குணமுடைய) ஒருவனுக்கு ஓர் உபகாரத்தைச் செய்தால், அந்நன்றி என்று தருங்கொல் என
வேண்டா - அந்த உபகாரத்தை (அவன்) எப் பொழுது செய்வானுே என்று சந்தேகிக்க வேண்டு வதில்ஃல, எ-று.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரங் கல்மேல் எழுத்துப்போற் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர்மேல் எழுத்திற்கு நேர்
ப-ரை நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் - நற்குணமுடையவராகிய ஒருவர்க்குச் செய்த உபகார மானது, கல்மேல் எழுத்துப்போல் காணும் - கல்வின் மேல் எழுதப்பட்ட எழுத்தைப்போல் விளங்கும், அல்லாத ஈரம் இல்லாத நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் - மற்ற அன்பில்லாத மனமுடையவருக்குச் செய்த உபகாரமானது, நீர்மேல் எழுத்திற்கு நேர் - தண்ணீரின்மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு ஒப்பாகும். if g!. 驶

வாக்குண்டாம்
இன்னு விளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னு வளவில் இனியவும் - இன்னுத நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு.
ப-ரை : இளமை வறுமை வந்து எய்தியக்கால் இன்னு - (இன்பத்தைத் தருகின்ற) இளமைப் பருவ மானது வறுமை வந்து அடைந்தால் துன்பத்தைத் தருவதாகும், இன்னு அளவில் இனியவும் இன்னுத - துன்பத்தைத் தருகின்ற முதுமைப் பருவத்தில் இனியனவாகிய பொருள்களும் துன்பத்தைத் தரு வனவாம், (அவைகள்) நாள் அல்லா நாள் பூத்த நல் மலரும் - சுபகாலமல்லாத காலத்திலே பூத்த நல்ல பூவையும், ஆள் இல்லா மங்கைக்கு அழகும் போலும் அநுபவிப்பவன் இல்லாத மங்கைப் பருவத்தை உடையவளுக்கு உண்டாகிய அழகையும் போலும், எ - று.
இன்னு - துன்பம், இன்னுவளவு - முதுமைப்
பருவம்.
அட்டாலும் பால்சுவையிற் குன்ரு தளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கண் மேன்மக்க ளேசங்கு சுட்டாடி வெண்மை தரும்.
ப-ைர பால் அட்டாலும் சுவையில் குன்றது - பாலானது (தன்னக்) காய்ச்சினுலும் (தன்) மதுரத் திற் குறையாது மிகும், சங்கு சுட்டாலும் வெண்மை தரும் - சங்காவது (தன்னே) நீருகச் சுட்டாலும் மிகுந்த வெள்ளே நிறத்தையே கொடுக்கும், (அவை போல) மேல் மக்கள் கெட்டாலும் மேல் மக்களே - மேலோர் (தாம் தம்முடைய சிநேகராலே) கெட்டாலும் (தம்முடைய நற்குணம் வேறு படாமல்) மேலோ ராகவே விளங்குவார், நண்பு அல்லார் அளவளாப்

Page 8
வாக்குண்டாம்
நட்டாலும் நண்பு அல்லர் - சிநேக குணம் இல்லாத கீழோர் (தம்மோடு ஒருவர் கலந்து) சிநேகித்தாலும் சிநேகராகார், எ - று. 当
அடுத்து முயன்ருலும் ஆகுநா ளன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா.
ப-ரை தொடுத்த உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம் -கிளேத்த வடி வந்தால் நீண்ட உயர் வாகிய மரங்களெ ல்லாம், பருவத்தாலன்றிப் பழா - (அது அது பழுக்குங் காலம் வந்தாலல்லாமல் பழாவாம், (அது போல) அடுத்து முயன்ருலும் - மேலும் மேலும் முயற்சி செய்தாலும், =器恩 நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - முடியுங் காலம் வந்தால் அல்லாமல் எடுத்த முயற்சிகள் முடியாவாம். எ - று. 蔷
உற்ற விடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர் பற்றலரைக் கண்டாற் பணிவரோ - கற்றுரண் பிளந்திறுவ தல்லாற் பெரும்பாரந் தாங்கின் தளர்ந்து வளேயுமோ தான்.
ப-ரைாா : கல் தூன் - கல்லுத் துணுனது பெரும் பாரந் தாங்கின் பிளந்து இறுவது அல்லால் பெரிய பாரத்தைத் தாங்கினுற் பிளந்து ஒடிவதல் லாமல், தான் தளர்ந்து வளேயுமோ - தான் தளர்ந்து வ&ளயுமோ(வளே பாது, (அதுபோல்) உற்ற இடத்தில் உயிர் வழங்குந் தன்மை யோர்-(தமக்கு) ஆபத்து வந்தவிடத்தேகத்தம்முயிரை விடுங் குனமுடையவர், பற்றவரைக் கண்டால் பணிவரோதம் பகைவரைக் கண்டால் வனங்குவரோ (வணங்கார். er - ) 品

曹
வாக்குண்டாம்
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலேத் தவத்தளவே யாகுமாந் தான் பெற்ற செல்வம் குலத்தளவே ஆகும் குணம்.
ப-ரை நீர் ஆம்பல் நீர் அளவே ஆகும் - நீரில் இருக்கின்ற அல்வியானது அந்த நீரினுடைய உயரத்தினளவாகவே உண்டாகும், (அதுபோல) நுண் அறிவு தான் சுற்ற நூலளவே ஆகும் - ஒரு வனுக்கு நுட்பமாகிய அறிவானது தான் கற்ற நூ வி: எ வாகவே உண்டாகும், தான் பெற்ற செல்வம் மேலேத் தவத்து அளவே ஆகும் - தான் பெற்ற செல்வமானது முற்பிறப்பிற் செய்து தவத் தின் அளவாகவே உண்டாகும், குணம் குலத்து அளவே ஆகும் - குணமானது (தான் பிறந்த) குலத்தின்ளவாகவே உண்டாகும். எ - று. 구
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே பவரோ டிணங்கி யிருப்பதுவும் நன்று.
ப-ரை நல்லாரைக் காண்பதுவும் நன்றே - நல்லாரைக் காணுதலும் நல்லதே, தல்லார் நலம் மிக்க சொல் கேட்பதுவும் நன்றே - நல்ல வருடைய பயன் நிறைந்த சொல்லேக் கேட்குதலும் நல்லதே, நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே - நல்ல வருடைய நற்குணங்களேப் பேசுதலும் நல்லதே அவரோடு இனங்கி இருப்பதுவும் நன்று - அந்த நல்லவரோடு கூடியிருத்தலும் நல்லதேயாம். எ - நூ. 8

Page 9
6 வாக்குண்டாம்
தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார் குணங்கள் உரைப்பதுவுந் தீதே அவரோ டிணங்கியிருப்பதுவுந் தீது,
ப-ரை : தீயாரைக் காண்பதுவுந் தீதே - தீய வரைக் காணுதலுந் தீயதே, தீயார் திருஅற்ற சொல் கேட்பதுவுந் தீதே - தீயவருடைய பயன் இல்லாத சொல்லைக் கேட்குதலுந் தீயதே, தீயார்
குணங்கள் உரைப்பதுவுந் தீதே - தீயவருடைய தீக்குணங்களைப் பேசுதலுந் தீயதே, அவரோடு இணங்கி இருப்பதுவுந் தீது - அவரோடு கூடி யிருத்தலும் தீயதே எ - று. 9
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட் டெல்லார்க்கும் பெய்யும் மழை.
ப-ரை : நெல்லுக்கு இறைத்த நீர் - நெற் பயிரின் பொருட்டு இறைத்த தணிணிர், வாய்க் கால் வழி ஓடி - வாய்க்கால் வழியால் ஓடி, ஆங்குப் புல்லுக்கும் பொசியும் - அங்கேயிருக்கின்ற புல்லு களுக்கும் கசிந்தாறும், (அதுபோல்) தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் - பழைமையாகிய உலகத் திலே நல்லவர் ஒருவராயினும் இருப்பரேல், அவர் பொருட்டு எல்லார்க்கும் மழை பெய்யும் - அவர் பொருட்டாகவே எல்லாருக்கும் மழை பெய்யும். 67 - gpy. 0
பண்டு முளைப்ப தரிசியே யானுலும் விண்டுமி போனன் முளையாதாங் - கொண்டபேர் ஆற்றலுடையார்க்கும் ஆகா தளவின்றி ஏற்ற கருமஞ் செயல்.

வாக்குண்டாம் 7
ப-ரை : பண்டு முளைப்பது அரிசியே ஆஞலும் - (உமி நீங்குவதற்கு) முன்னே முளைப்பது அரிசி யேயாயினும், உமி விண்டு போனல் முளையாது - உமி நீங்கிப்போனல் (அவ்வரிசி) முளையாது, (அது போல) கொண்டபேர் ஆற்றல் உடையார்க்கும் தம்மிடத்து நீங்காத பெரிய வல்லமையை உடைய வர்க்கும், அளவு இன்றி ஏற்ற கருமஞ்செயல் ஆகாது - துணைவலி இல்லாமல் எடுத்துக்கொண்ட தொழிலைச் செய்தல் முடியாது. எ - று. I
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல்சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணிரு மாகா ததனருகே சிற்றுாறல் உண்ணிரும் ஆகி விடும்.
ப-ரை : தாழை மடல் பெரிது - தாழம்பூ இதழ்களினலே பெரிதாயிருக்கின்றது. மகிழ் கந்தம் இனிது மகிழம்பூ (இதழ்களினலே சிறிதாயினும்) வாசனையினலே (தாழம் பூவினும்) இனிதாயிருக் கின்றது, கடல் பெரிது - சமுத்திரம் பெரிதாயி ருக்கின்றது. மண் நீரும் ஆகாது - (ஆயினும் அதிலுள்ள நீர் உடம்பின் அழுக்கை) கழுவுதற்குத் தக்க நீரு மாகாது, அதன் அருகே சிற் றுாறல் உண்ணி ரும் ஆகிவிடும் - அதன் பக்கத்தே சிறிய மணற்கு ழியிற் சுரக்கும் ஊற்றுநீர் குடிக்கத்தக்க நீருமாகும், ஆதலினலே உடல் சிறியர் என்று இருக்க வேண்டா(ஒருவரை) உருவத்தினலே சிறியவரென்று (மதியா மல்) இருக்கவேண்டாம். எ - று. மண்ணுதல் - கழுவுதல். 2
கவையாகிக் கொம்பாகிக் ககொழிமுத்தநீஆச அவையல்ல நல்ல மரங்கள் - சவைநடுவே நீட்டோலை வாசியா நின்றன் குறிப்பறிய
ممراgr
மாட்டா தவனன் மரம்.

Page 10
8 வாக்குண்டாம்
ப-ரை கவையாகி - கிளைகளை உடையவைகளா கியும், கொம்பு ஆகி - கொம்புகளையுடையவை களாகியும், காட்டு அகத்து நிற்கும் அவை நல்ல மரங்கள் அல்ல - காட்டினுள்ளே நிற்கின்ற அந்த மரங்கள் எல்லாம் நல்ல மரங்கள் அல்ல, சபை நடுவே நீட்டு ஒலை வாசியா நின்றன் - சபை நடுவே ஒருவர் நீட்டிய ஒலையை வாசிக்க மாட்டா மல் நின்றவனும், குறிப்பு அறிய மாட்டாதவன் - (ஒருவருடைய) குறிப்பை அறியமாட்டாதவனுமே, நல்மரம் - நல்ல மரங்களாவர். எ - று. 3
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானு மதுவாகப் பாவித்துத் - தானுந்தன் பொல்லாச் சிறகைவிரித் தாடினற் போலுமே கல்லாதான் கற்ற கவி.
ப-ரை : கல்லாதான் கற்ற கவி - (இலக்கண இலக் கியங்களைக் கற்றவர் பிழையற்ற கவியைச் சொல்லிப் பொருளுரைக்க அதைப் பார்த்துக் கொண்டிருந்து, அவைகளைக் கற்று அறியாதவன் (தன்னையும் கற்றவணுக நினைத்துத் தான்) கற்ற (பிழையாகிய) கவியைச் சொல்லிப் பொருள் உரைத்தல் கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி -- காட்டில் உள்ள மயிலானது (தனது அழகுள்ள சிறகை விரித்து) ஆட (அதைப்) பார்த்துக்கொண்டி ருந்த வான்கோழியானது, தானும் அது ஆகப்
பாவித்து - தானும் அம்மயிலாகவே நினைத்து, தானும் தனது அழகில்லாத் சிறகை விரித்து ஆடினுற்போலும். எ - று. 14
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி ஆங்கதனுக்காகாரம் ஆணுற்போற் - பாங்கறியாப் புல்லறிவாளர்க்குச் செய்த வுபகாரம் கல்லின்மேல் இட்ட கலம்.

வாக்குண்டாம் 9
ப-ரை : வரிவேங்கைப் புலிநோய் தீர்த்த விட காரி - வரிகளையுடைய வேங்கைப் புலிக்கு நஞ்சு நோயைத் தீர்த்த விஷ வைத்தியன், ஆங்கு அதற்கு ஆகாரம் ஆணுற்போல் பாங்கு அறியா - அப்பொழுது அப்புலிக்கு இரையானற் போலத் தான் அழியுந் தன்மையை (ஆலோசித்து) அறியாமல், புல் அறி வாளர்க்குச் செய்த உபகாரம் - அற்ப புத்தியை உடையவருக்குச் செய்த உபகாரம், கல்வின் மேல் இட்ட கலம் - கல்லின் மேலே போடப்பட்ட மட் பாத்திரம்போல் அழிந்துபோம். எ - று. 15
அடக்க முடையார் அறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில் ஒடுமீன் ஒட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாங் கொக்கு.
ப-ரை கொக்கு - கொக்கானது, மடைத்தலையில் ஒடும் மீன் ஒட - நீர் மடையினிடத்து ஒடும் சிறு மீன்கள் எல்லாம் ஓடவிட்டு, உறு மீன் வரும் அளவும் வாடியிருக்கும் - பெருமீன் வரும் வரையும் அடங்கியிருக்கும், (அதுபோல) அடக்கம் உடையார் -- (த மக்கு எதிரிகளாகத் தகாதவர் எதிர்ப்படினும் ஒடிப்போகவிட்டு தக்கவர் எதிர்ப்படும்வரையும்) அடங்கியிருக்கும் குணமுடையவரை, அறிவு இலர்
என்று எண்ணி - அறிவில்லாதவரென்று கருதி, கடக்கக் கருதவும் வேண்டா - வெல்லுவதற்கு
நினைக்கவும் வேண்டுவதில்லை. எ - று. 6
அற்ற குளத்தில் அறுநீர்ப்பறவைபோல் உற்றுNத் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு.

Page 11
0 வாக்குண்டாம்
ப-ரை : அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல் - (நீர்) வற்றிய குளத்தினின்றும் நீங்கிப் போகின்ற நீர்வாழ் பறவைகள்போல, உற்றுNத் தீர்வார் உறவு அல்லர் - (ஒருவனுக்கு) வறுமை வந்தபொழுது நீங்குவோர் உறவாகார், அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே - அந்தக் குளத்திலே கொட்டியும் அல்லியும் நெய் தலும் போலவே, ஒட்டி உறுவார் உறவு - தாமும் (வருத்தத்தை) அநுபவித்துக்கொண்டு (அவனை) விட்டு நீங்காதவரே உறவாவார். எ - று. 7
சீரியர் கெட்டாலுஞ் சீரியரே சீரியர்மற் றல்லாதார் கெட்டாலங் கென்னகும் - சீரிய பொன்னின் குடமுடைந்தாற் பொன்னகும் மண்ணின் குடமுடைந்தக் கால். (என்னுகும்
ப-ரை சீரியர் கெட்டாலும் சீரியரே - மேலோர் (தம்முடைய செல்வம்) கெட்டாலும் மேலோராகவே மதிக்கப்படுவர், சீரியர் அல்லாதார் கெட்டால் அங்கு என்னுகும் - கீழோர் (தம்முடைய செல்வம்) கெட்டால் அப்பொழுது அவருக்கு என்ன மதிப்பு உண்டாகும், சீரிய பொன்னின் குடம் உடைந்தால்
பொன்னகும் - சிறப்பினையுடைய பொன்னகிய குடம் உடைந்தாலும் பழைய பொன்னேயாகும் மண்ணின் குடம் உடைந்தக்கால் என்னுகும் -
மண்ணுல் ஆகிய குடம் உடைந்தால் (அதற்கு) என்ன மதிப்பு உண்டாகும் எ - று. மற்று - அசை. 18 ,
ஆழ வமுக்கி முகக்கினும் ஆழ்கடனிர் நாழி முகவாது நானுழி-தோழி நிதியுங் கணவனும் நேர்படினுந் தந்தம் விதியின் பயனே பயன்.

வாக்குண்டாம் II.
ப-ரை : ஆழ் கடல்நீர் ஆழ அமுக்கி முகக்கினும் - ஆழமாகிய சமுத்திரத்திலுள்ள நீரை முழுக அமுக்கி மொண்டாலும், நாழி நால் நர்ழி முகவாது - ஒரு நாழியானது நாலு நாழி தண்ணிரை மொள் ளாது, (அதுபோல) தோழி - தோழியே, நிதியும் கணவனும் நேர்படினும் - (பெண்களுக்குத்) திரவிய மும் நாயகனும் நேர்பட்டாலும், தம் தம் விதியின் பயனே பயன் - அவரவருடைய ஊழின் அளவாகிய பயனே (அநுபவிக்கப்படும்) பயனகும். எ - று. 9
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா மாமலையிலுள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரு முண்டு.
ப-ரை வியாதி உடன்பிறந்தே கொல்லும் - வியாதியானது உடன் பிறந்தே கொல்லும், உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா - (ஆதலால்) உடன் பிறந்தவரே துணையாவோரென்று நம்பியிருக்க வேண்டுவதில்லை, உடன் பிறவா மாமலை யிலுள்ள மருந்தே பிணிதீர்க்கும் - உடன் பிற வாமல் பெரிய மலையிலுள்ள மருந்தே அவ்வியாதியை தீர்க்கும். அம் மருந்து போல்வாரும் உண்டு - ஆதலால் அம் மருந்துபோல் (அந்நியராயிருந்தும் ஆபத்திலே உதவி செய்) வாருஞ் சிலருண்டு. 6了ー gM・ 26
இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த தூருய் விடும்.

Page 12
I 2 வாக்குண்டாம்
ப-ரை இல்லாள் அகத்து இருக்க - (நற்குண நற் செய்கைகளையுடைய) மனையாள் வீட்டில் இருப் பாளாயின், இல்லாதது ஒன்று இல்லை - (அவ்வீட்டில்) இல்லாத பொருள் ஒன்றுமில்லை, இல்லாளும் இல் லாளே ஆயின் - மனையாள் இல்லாமற் போனளா யினும், இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்கு
மேல் - மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொல்வா ளாயினும், அவ்வில் புலிகிடந்த g(Tgay
ஆய்விடும் - அவ்வீடு புலி தங்கிய புதர்போல் ஆகிவிடும் எ - று. 2.
எழுதியவாறேகாண் இரங்கு மடநெஞ்சே கருதியவா ருமோ கருமம் - கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்கா யீந்த
முற்பவத்திற் செய்த வினை. (தேல்
ப-ரை : இரங்கு மடநெஞ்சே - வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே, கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்கு - (நல்ல பலனைப் பெறலாமென்று) நினைத்துப் போய்க் கற்பக தருவை அடைந்தவருக்கு, காஞ்சிரங்காய் ஈந்ததேல் - அது எட்டிக் காயைக் கொடுத்த தாயின், முற்பவத்தில் செய்தவி ை- (அதற்குக் காரணம் அலர்) முற்
பிறப்பிற் செய்த தீவினையாகும், கருமம் கருதிய வாறு ஆமோ - செய்தொழில்கள் (நீ) நினைத்தபடியே ஆகுமோ, எழுதியவாறே காண் - கடவுள் விதித்த படியே ஆகும் என்று அறிவாயாக. எ - று. 22
கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே - விற் நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே (பிடித்து சீரொழுகு சான்ருேர் சினம்.

வாக்குண்டாம் 13
ப-ரை கயவர் கடுஞ்சினத்துக் கல்பிளவோடு ஒப்பர் - கீழோர் (தம்முள்ளே) கடுங்கோபத்தினுல் வேறு பட்டால் கல்லினுடைய பிளவுகளைப் போல் வார் (திரும்பக் கூடார்), பொன் பிளவோடு ஒப்
பாரும் போல்வார் - (அப்படி வேறுபட்டடோது) பொன்னினுடைய பிளவுகளோடு ஒப்பாவாரும் ஒப்பாவார் (ஒருவர் கூட்டக் கூடுவர்). சீர் ஒழுகு
சான்ருேர் சினம் - சிறப்பு மிக்க அறிவுடையோ ருடைய கோபம், வில் பிடித்து நீர் கிழிய எய்த வடுப் போல மாறும் - (அம்பினுலே) தண்ணிர் பிளக்க எய்த (அதனுடைய) பிளவுகள்போல (அப் போதே) நீங்கும். எ - று. 23
நற்ரு மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் கற்றரைக் கற்ருரே காமுறுவர் - கற்பிலா (போல் மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற் காக்கை யுவக்கும் பிணம்.
ப-ரை கயத்தின் நல் தாமரை நல் அன்னம் சேர்த்தாற் போல் - குளத்திலுள்ள நல்ல தாமரைப் பூவை நல்ல அன்னப்பறவை சேர்ந்தாற்போல, கற்றரைக் கற்ருரே காமுறுவர் - கற்றறிந்தவரைக் கற்றறிந்தவரே விரும்பிச் சேர்வார், முதுகாட்டில் பிணம் காக்கை உவக்கும் -- சுடுகாட்டிலே கிடக் கின்ற பிணத்தைக் காக்கையே விரும்பும், (அது போல) கற்பு இலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் - கல்வியில்லாத மூடரை மூடரே கொண்டாடுவர். எ - று. 24
நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சிற், கரவிடையார் தம்மைக் கரப்பர் கரவார் − கரவிலா நெஞ்சத் தவர்.

Page 13
4 வாக்குண்டாம்
ப-ரை : நாகம் தான் நஞ்சு உடைமை அறிந்து கரந்து உறையும் - நாகபாம்பு தான் விஷம் உடையதா பிருத்தலை அறிந்து ஒளித்துக்கொண்டு இருக்கும், நீர்ப் பாம்பு அஞ்சாப் புறங்கிடக்கும்-(தன்னிடத்தில் விஷம் இல்லாத) நீர்ப்பாம்பு அஞ்சாமல் வெளியிலே கிடக்கும் (அவை போல) நெஞ்சில் கரவு உடையார் தம்மைக்
கரப்பர் - மனத்தினுள்ளே வஞ்சனையை உடையவர் தம்மைத் தாமே மறைப்பர், கரவு இலா நெஞ்சத்தவர் கரவார் - வஞ்சனை இல்லாத மனத்தை உடையவர்
(அப்படித் தம்மை) மறைக்கமாட்டார். எ - று. 25
மன்னனும் மாசறக் கற்றேனுஞ் சீர்தூக்கின் மன்னனிற் கற்ருேன் சிறப்புடையன் - மன்னற்குத் தன்தேசம் அல்லாற் சிறப்பில்லைக் கற்றேற்குச் சென்றவிடம் எல்லாஞ் சிறப்பு.
ப-ரை மன்னனும் மாசு அறக் கற்ருேனும் சீர் தூக்கின் - அரசனையும் குற்றந்தீரக் கற்ற வித்து வானையும் ஆராய்ந்து பார்த்தால், மன்னனில் கற்ருேன் சிறப்புடையன் - அரசனிலும் வித்துவானே சிறப்பை உடையவனுவான், மன்னற்குத் தன்தேசம் அல்லாற் சிறப்பு இல்லை - அரசனுக்கு அவனுடைய தேசத்தில் அம்லாமல் (அந்நிய தேசங்களிலே) சிறப்பு இல்லை, கற்றேற்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்புவித்துவானுக்கு (அவன்) போன தேசங்கள் எல்லா வற்றிலும் சிறப்பு உண்டாகும் எ - று. 26
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற் அல்லாத மாந்தர்க் கறம்கூற்றம் - மெல்லிய (றம் வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றங் கூற்றமே இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்.

வாக்குண்டாம் 5
ப-ரை : மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் - மெல்லிய வாழை மரத்துக்கு அது ஈன்ற காயே யமனுகும், (அதுபோல) கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம் - கற்று அறியாத மனிதருக்கு கற்றறிந்தவருடைய உறுதிச் சொல்லே யமனுகும், அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-(தரும சிந்தையை உடையவர்) அல்லாத மனிதருக்குத் தரு மமே யமனுகும், இசைந்து இல்லிற்கு ஒழுகாப் பெண் கூற்றம் - கணவன் கருத்துக்கு உடன்பட்டு இல்லறத் தில் ஒழுகாத மனையாளே (அக்கணவனுக்கு) யமனுகும். எ - று. 27 . . ”۔۔۔۔
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்துங் கந்தங் குறைபடா தாதலால் - தந்தந் தனஞ்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டான் மனஞ்சிறியர் ஆவரோ மற்று.
ப-ரை ; மெல் சந்தனக் குறடு - மிருதுவாகிய சந்தனக் கட்டையானது, தான் தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடாது - தான் தேய்ந்துபோன காலத் திலும் (தன்னுடைய) நன்மணத்திற் குறையாது, ஆதலால் - ஆதலினலே, தார்வேந்தர் - சேனையை யுடைய அரசர்கள், கேட்டால் தம்தம் தனம் சிறியர் ஆயினுங் - கேட்டினலே தங்கள் தங்கள் செல்வத்திற் குறைந்தவரானலும், மனம் சிறியர் ஆவரோ - மனவலி மையிலே குறைந்தவராவாரோ (ஆகார்). எ - று. 28
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை ஆம்போ தவளோடும் ஆகும் அவள்பிரிந்து போம்போ தவளோடும் ெேகாழும்பு தமிட்

Page 14
6 வாக்குண்டாம்
ப-ரை : மருவு இனிய சுற்றமும் - தழுவிய இனிய உறவும், வான் பொருளும் - மேலாகிய பொருளும், நல்ல உருவும் - நல்ல அழகும், உயர் குலமும் எல்லாம் - உயர் வாகிய குலமும் என்னும் இவைகளெல்லாம், திருமடந்தை ஆம்போது அவளோடும் ஆகும் சீதேவி வந்து கூடும் பொழுது அவளுடனே வந்து கூடும், அவள் பிரிந்து போம் போது அவளோடும் போகும் - அவள் நீங்கிப் போம் பொழுது அவளு டனே நீங்கிப்போகும். எ - று. 29
சாந்தனையுந் தீயனவே செய்திடினுந் தாமவரை ஆந்தனையுங் காப்பர் அறிவுடையோர்-மாந்தர் குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.
ப-ரை மரம் - மரங்களானவை, LDrtig, it குறைக்குந் தனையும் - (தம்மை) மனிதர் வெட்டு மளவும், குளிர் நிழலைத் தந்து மறைக்கும் - அவருக்குக் குளிர்ச்சியாகிய நிழலையேகொடுத்து (வெயிலை அவர் மேலே படவொட்டாமல்) மறைக்கும், (அதுபோல) அறிவு உடையோர் - அறிவுடையவர், சாம் தனையும் தீயனவே செய்திடினும் - (தாம்) இறந்து போமள வும் (தமக்கு இறந்து போகத்தக்க) தீங்குகளையே பிறர் செய்தார் ஆயினும், தாம் அவரை ஆம் தனையும் காப்பர் - தாம் அவரையும் (தம்மாலே) ஆகுமளவும் (நன்மையே செய்து) காப்பர். எ - று. 30

6) சிவமயம்
ஆத்தி சூ டி
உரையுடன்
காப்பு
ஆத்தி சூடி யமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே.
ஆத்தி - திருவாத்திப் பூமாலையை, சூடி - தரிப் பவராகிய சிவபெருமான், அமர்ந்த - விரும் பிய, தேவனை - பிள்ளையாகிய விநாயகக் கடவுளே, ஏத்தி ஏத்தி - துதித்துத் துதித்து, தொழுவோம் -
வணங்குவோம், யாம் - நாங்கள்; என்றவாறு.
அறஞ்செய விரும்பு
அறம் - தருமத்தை, செய - செய்தற்கு விரும்பு - நீ ஆசைகொள்ளு.
ஆறுவது சினம்
ஆறுவது - (உன்னுள்ளே) தணிய வேண்டுவது, சினம் - கோபமே ஆம். 2
இயல்வது கரவேல்.
இயல்வது - (கொடுப்பதற்கு) இசைவதை, கர வேல் - (நீ வறுமையினலே யாசிப்பவர்களுக்கு) ஒளியாதே. 9

Page 15
8 ஆத்திசூடி
ஈவது விலக்கேல்.
ஈவது - (தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒரு வர்) கொடுப்பதை, விலக்கேல் - நீ தடுக்காதே. 4
உடையது விளம்பேல்.
உடையது - (உனக்கு) உள்ள பொருளை, விளம் பேல் - (நீ மற்றவர் அறியும்படி) சொல்லாதே. 5
ஊக்கமது கைவிடேல்.
ஊக்கமது - (செய் தொழிலில்) ம்னஞ் Ο3 σετ στ மையை, கைவிடேல் - நீ கைவிடாதே. ti
எண்ணெழுத் திகழேல்.
எண் - கணித நூலையும், எழுத்து - இலக்கண நூலையும், இகழேல் - நீ இகழ்ந்து தள்ளாதே. 7
ஏற்ப திகழ்ச்சி.
ஏற்பது - (ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்ச்சி - பழிப்பாகும். S
ஐய மிட்டுண்.
ஐயம் - பிச்சையை, இட்டு - (இரப்பவர் களுக்குக்) கொடுத்து, உண் - நீயும் உண். 9
ஒப்புர வொழுகு.
ஒப்புரவு - உலக நடையை அறிந்து, ஒழுகு - (நீ அந்த வழியிலே) நட. Η Ο

ஆத்திசூடி 9
ஒதுவ தொழியேல்.
ஒதுவது - (அறிவு in 652T) வாசிப்பதை, ஒழியேல் - (நீ மரணபரியந்தம்) விடாதே. 1.
ஒளவியம் பேசேல்.
V ஒளவியம் - பொருமை வார்த்தைகளை, பேசேல் - நீ பேசாதே. 12
அஃகஞ் சுருக்கேல்.
அஃகம் - தானியத்தை, சுருக்கேல் - (அதிக இலாபத்துக்காகக்) குறையாதே. 13
கண்டொன்று சொல்லேல்.
கண்டு-(ஒன்றைக்) கண்டு, ஒன்று-வேருென்றை, சொல்லேல் - (நீ சாட்சியாகும் போது) சொல்லாதே (கண்டபடியே சொல் என்பது கருத்து) 4
ங்ப்போல் வளை
ங்ப்போல் - ங்கரம் (தான் பிரயோசனமுள்ள தாய் இருந்து தன் வருக்கத்தைத் தழுவுதல்) போல, வளை - (நீ பிரயோசனமுள்ளவஞயிருந்து உன் இனத் தைத்) தழுவு.
ங்கரமானது அங்ங்ணம் இங்ங்னம் உங்ங்னம் சான்று சொல்லுக்குக் காரணமாய் வரும். அதின் வருக்கங்களாகிய நுா B, B வு ஆ நுெ ங்ே நுை வொ ங்ோ நுெள என்கின்ற பதினென்றும் சொல்லுக்குக் காரணமாதல் இல்லை. ஆயினும் நுகரத்தின் பொருட்டு, இவைகளையும் நெடுங்கணக்கிலே வழங்குவார்கள். அதுபோலவே, நீ கல்வி செல்வங்களினலே பிறருக்கு

Page 16
20 ஆத்திசூடி
உதவி செய்வாயாயின், அவர் உன்னைத் தழுவுவதன்றி உன் பொருட்டு உன் இனத்தாரையும் தழுவுவார் என்பதாம். 5
சனி நீராடு,
சனி - சனிக்கிழமைதோறும், நீர் ஆடு -(எண்
ணெய் இட்டுக்கொண்டு) நீரிலே தலை முழுகு.
(புதன்கிழமையிலும் முழுகலாம்.) 6
ஞயம்பட வுரை.
ஞயம்பட - (பேசுஞ் சொல்லிலே) இன்பம் விளையும்படி, உரை - நீ பேசு. (நயம் என்பது ஞயம் எனப் போலியாயிற்று.) 7
இ,டம்பட விடெடேல்.
இடம் - இடமானது, பட - (அளவுக்கு மேற். பட்டு) வெறுமையாய்க் கிடக்கும்படி, வீடு - வீட்டை, எடேல் - (நீ பெரிதாகக்) கட்டாதே. 18
இ,ணக்கமறிந் திணங்கு
இணக்கம் - (சிநேகிதத்துக்கு ஏதுவாகிய) நற்
குண நற்செய்கைகளை, அறிந்து -தெளிந்து, இணங்கு(பின் ஒருவரோடு) சிநேகஞ் செய். 19
தந்தைதாய்ப் பேண்.
தந்தை - (நீஉன்) பிதாவையும், தாய்-மாதா வையும், பேண் - (எப்பொழுதும் பூசித்துக்) காப்
பாற்று 2O
நன்றி மறவேல்"
நன்றி - (ஒருவர் உனக்குச் செய்த) 2. Aféos
ரத்தை, மறவேல் - நீ ஒருபோதும் மறவாதே. 21

2
ஆத்திசூடி
பருவத்தே பயிர்செய்.
பயிர் - பயிர்களை, பருவத்தே - (அது அது விளையும்) பக்குவகாலத்திலே, செய் - (வேண்டும் முயற்சியிலே வழுவாமல்) செய். 22.
பயிருக்கு வேண்டும் முயற்சிகளாவன: உழு த ல், எரு இடுதல், களை பிடுங்கல், நீர் பாய்ச்சல், காத்தல் என்கிற ஐந்துமாம்.
மன்றுபறித் துண்ணேல்.
மன்று - தருமசபையில் இருந்துகொண்டு, பறித்து - (வழக்குத் தீர்ப்புக்கு வரும் குடிகளுடைய பொருளைக்) கவர்ந்து, உண்ணேல் - நீ சீவனம் பண்ணுதே. 23
இ,யல்பலாதன செயேல்.
இயல்பு அலாதன - (தருமநுாலுக்குப்) பொருத்த மல்லாதவைகளை, செயேல் - நீ செய்யாதே. 24
அ,ரவ மாட்டேல்
அரவம் - (நஞ்சுடைய) பாம்புகளை, ஆட்டேல்-- நீ பிடித்து ஆட்டாதே. 25
இ,லவம்பஞ்சிற் றுயில்.
இலவம் பஞ்சில் - இலவம் பஞ்சு மெத்தை யில், துயில் - நீ நித்திரை கொள். 26
வஞ்சகம் பேசேல்.
வஞ்சகம் - கபட வார்த்தைகளை, பேசேல் -- நீ பேசாதே. 27

Page 17
22 ஆத்திசூடி
ஆ, ழகலா தனசெயேல்,
அழகு அலாதன-(நீ துன்பப்பட வந்த காலத்தும்) இழிவுள்ள செயல்களை , செயேல்-செய்யாதே.
அழகுடையன உயர்வுள்ள செயல்கள். ஆதலால், அழகலாதன இழிவுள்ள செயல்கள் என்பதாம். 28
இ,ளமையிற் கல்.
இளமையில் - இளமைப் பிராயத்திலே, கல் - (நீ வித்தையை விரும்பிக்) கற்றுக்கொள். 29
அ,றனை மறவேல்.
அறனை - தருமத்தை, மறவேல் - (நீ ஒரு போதும்) மறவாதே. 3 Ꭴ
அ,னந்த லாடேல்.
அனந்தல் - நித்திரையை, ளுடேல் - (நீ அதிகமாகச்) செய்யாதே. (அனந்தல் - கள் மயக்கமு unfrth.) 3
கடிவது மற.
கடிவது - (ஒருவரை ச்) சினந்து பேசுவதை, மற - நீ மறந்துவிடு. 32
காப்பது விரதம்
காப்பது - (உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல்) அவைகளைக் காப்பாற்றுவதே, விரதம் - விரதமாம்.
33
கிழமைப் படவாழ்.
கிழமைப்பட - (உன்னிடத்தில் உள்ள பொருள் பிறருக்கு உரிமைப்படும்படி, வாழ் - நீ வாழு.
B4

ஆத்திசூடி 23
கீழ்மை யகற்று.
கீழ்மை - கீழ்மையாகிய குணத்தை, அகற்று -- நீ நீக்கு. 35
குணமது கைவிடேல்.
குணமது - (மேலாகிய) குணத்தை, கைவிடேல் - நீ விட்டுவிடாதே. 36
கூடிப் பிரியேல்.
கூடி - (நல்லவரோடு) சிநேகித்து, } {{Curميمسس له (நீ பின் அவரை விட்டு) நீங்காதே. 37
கெடுப்ப தொழி.
கெடுப்பது - (பிறருக்குக்) கேடு செய்வதை, ஒழி-நீ விட்டுவிடு, 38
கேள்வி முயல்.
கேள்வி - (கற்றவர்சொல்லும் நூற்பொருளைக்)
கேட்பதற்கு, முயல் - நீ முயற்சி செய். 39
கைவினை கரவேல்.
கைவினை - (உனக்குத் தெரிந்த கைத்தொழிலை) கரவேல்-(நீ மற்றவர்களுக்கு) ஒளியாதே. 4伊
கொள்ளை விரும்பேல்.
கொள்ளை - (பிறருடைய பொருளைக்) கொள்ளை யிடுதற்கு, விரும்பேல் - நீ ஆசைப்படாதே. 4
கோதாட்டொழி.
கோது - குற்றம் பொருந்திய, ஆட்டு-விளை பாட்டை, ஒழி-நீ நீக்கு, r2

Page 18
24 ஆத்திசூடி
சக்கர நெறிநில்,
சக்கர நெறி - (அரசனுடைய ஆஞ்ஞையாகிய) சக்கரம் செல்லும் வழியிலே, நில்-நீ அடங்கி நில், (அரசனுடைய கட்டளைக்கு அமைந்து நட என்பது கருத்து.) 43
சான்ருே ரினத்திரு.
சான்ருேர் - அறிவிஞலே நிறைந்தவர்களுடைய,
இனத்து - கூட்டத்திலே, இரு - (நீ எந்நாளும் சேர்ந்து) இரு. 4全
சித்திரம் பேசேல்.
சித்திரம் - மெய்போலத் தொன்றும் பொய் மொழிகளை, பேசேல் - நீ பேசாதே. 全5
சீர்மை மறவேல்,
சீர்மை - புகழுக்கு ஏதுவாகிய குணத்தை, மறவேல்-நீ மறந்துவிடாதே. 4, 6
சுளிக்கச் சொல்லேல்.
சுளிக்க - (கேட்பவர்) கோபிக்கும்படியாக, சொல்லேல் - (நீ ஒன்றையும்) பேசாதே. 7
சூது விரும்பேல்.
குது - சூதாடலை, விரும்பேல் - (நீ ஒரு போதும்) விரும்பாதே. 48
செய்வன திருந்தச்செய்,
செய்வன - செய்யும் காரியங் திருந்த - செவ்வையாக, செய் - நீ செய். 49

ஆத்திசூடி 25
சேரிட மறிந்துசேர்
சேர் இடம் - அடையத்தகும் (நன்மையாகிய) இடத்தை, அறிந்து - தெரிந்து, சேர்-நீ அடை. 50
சையெனத் திரியேல்.
சை என - (பெரியோர் உன்னைச்) சீ என்று அருவருக்கும்படி, திரியேல்-(நீ துட்டனய்த்) திரி யாதே. 5.
சொற்சோவு படேல்,
சொல்-(நீ பிறரோடு பேசும்) சொற்களிலே, சோர்வுபடேல் - மறதிபடப் பேசாதே, (சொல்ல வேண்டுவதை மறவாமற் சொல் என்பது கருத்து) 52
சோம்பித் திரியேல்.
சோம்பி - (நீ செய்யவேண்டும் முயற்சியைச்
செய்யாமல்) சோம்பல் கொண்டு, திரியேல் -
(வீணுகத்) திரியாதே. 53
தக்கோ னெனத்திரி
தக்கோன் என - (உன்னைப் பெரியோர்கள்)
யோக்கியன் என்று புகழும்படி, திரி - நீ திரி. 54
தானமது விரும்பு.
தானமது - (சற்பாத்திரங்களிலே) தானம் செய் தலை, விரும்பு - நீ விரும்பு. 55
திருமாலுக் கடிமைசெய்.
திருமாலுக்கு - விஷ்ணுவுக்கு, அடிமை செய் -
தொண்டு செய். 56
தீவினை யகற்று.
தீவினை - பாவச் செயல்களை, Joyobibipy -
(நீசெய்யாமல்) நீக்கு.

Page 19
26 ஆத்திசூடி
துன்பத்திற் கிடங்கொடேல்.
துன்பத்திற்கு - (தொழிலைச் செய்யும்போது முயற்சியினலே வரும் சரீரப்பிரயாசத்தால் ஆகிய) துன்பத்துக்கு, இடம் கொடேல் - (சிறிதாயினும்,
இடங் கொடாதே. (அத் துன்பத்தை இன்ப மென்று கொண்டு முயற்சியை விடாது செய் என்பது
கருத்து.) 58
தூக்கி வினைசெய்.
தூக்கி - (முடிக்கும் உபாயத்தை) ஆராய்ந்து, வினை - ஒரு தொழிலை, செய் - (நீ அதன் பின்பு)
செய். 59
தெய்வ மிகழேல்,
தெய்வம் - கடவுளை, இகழேல் - (நீ மறந்தாயி
னும்) இகழாதே. 60
தேசத்தோ டொத்துவாழ்,
தேசத்தோடு - (நீ வசிக்கும்) தேசத்திலுள்ள வர்களுடனே, ஒத்து - (பகையில்லாமல்) ஒற்றுமை யாய், வாழ் - வாழு. 6.
தையல்சொற் கேளேல்.
தையல் - (உன்) மனைவியுடைய, சொல் - சொல்லை, கேளேல் - நீ கேட்டு நடவாதே. 62
தொன்மை மறவேல்.
தொன்மை - பழைமையாகிய சிநேகிதத்தை, மறவேல் - நீ மறந்துவிடாதே. 63
தோற்பன தொடரேல்,
தோற்பன - தோல்வியடையக்கூடிய வழக்குக் களிலே, தொடரேல் - நீ சம்பந்தப்படாதே. 64

ஆத்திசூடி 27
நன்மை கடைப்பிடி,
நன்மை - புண்ணியத்தையே, கடைப்பிடி -- (நீ விடாமல்) உறுதியாகப் பிடி. 65
நாடொப் பனசெய்.
நாடு - உன் நாட்டில் உள்ளோர் பலரும், ஒப் பன - ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை, செய் - நீ செய். 66
நிலையிற் பிரியேல்.
நிலையில் - (நீ நிற்கின்ற உயர்ந்த) நிலையிலே நின்று, பிரியேல் - (ஒருபோதும்) நீங்காதே. 67 நீர்விளை யாடேல்,
நீர் - (ஆழம் உள்ள) நீரிலே, விளையாடேல் --நீ (நீந்தி) விளையாடாதே. 68
நுண்மை நுகரேல்.
நுண்மை - (நோயைத் தருகிற) சிற்றுண்டிகளை, நுகரேல் - நீ உண்ணுதே. 69
நூல்பல கல்.
நூல் பல - (அறிவை வளர்க்கின்ற) நூல்கள் பலவற்றையும், கல் - நீ, கற்றுக்கொள். 70
நெற்பயிர் விளை.
நெற் பயிர் - நெல்லுப் பயிரை, விளை - (நீ வேண்டிய முயற்சி செய்து)விளைவி. 7
நேர்பட வொழுகு.
நேர்பட - (உன் ஒழுக்கம் கோளுமல்) செவ் வைப்பட, ஒழுகு - நீ நட. 72

Page 20
28 ஆத்திசூடி
நைவினை நணுகேல்.
நை - (பிறர்) கெடத்தக்க, வினை - தீவினைகளை, நணுகேல் - (நீ ஒருபோதும்) செய்யாதே. 73
நொய்ய வுரையேல்.
நொய்ய - (பயன் இல்லாத) அற்ப வார்த்தை களை, உரையேல் - (நீ ஒருபொழுதும்) சொல்லாதே. 74 நோய்க்கிடங் கொடேல்.
நோய்க்கு - வியாதிகளுக்கு, இடங்கொடேல் - (அவபத்தியம் முதலானவைகளைச் செய்து) இடங் கொடாதே. 75
பழிப்பன பகரேல்.
பழிப்பன - (அறிவுடையவர்களாலே) பழிக்கப் படுவனவாகிய இழிசொற்களை, பகரேல் - நீபேசாதே.
இழி சொற்களாவன: பொய், குறளை, கடுஞ் சொல், பயனில் சொல் என்கிற நான்குமாம். 76
பாம்பொடு பழகோல்,
பாம்பொடு - (பால் கொடுத்தவருக்கும் விஷத் தைக் கொடுக்கிற) பாம்பைப் போல்பவர்களுடனே, பழகேல் - நீ சகவாசஞ் செய்யாதே. ,'7
பிழைபடச் சொல்லேல்,
பிழைபட - பிழைகள் உண்டாகும்படி, சொல் லேல் - (நீ ஒன்றையும்) பேசாதே. 78
பீடு பெறநில்
பீடு - பெருமையை, பெற - பெறும்படியாக,
நில் - நீ (நல்ல வாழ்விலே) நில். 79

ஆத்திசூடி 29
புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.
புகழ்ந்தாரை - உன்னைத் துதிசெய்து அடுத்த வரை, Gurbs - (G5) is all-stpso காப்பாற்றி, வாழ்-நீ வாழு. 8O
பூமி திருத்தியுண்.
பூமி - உன் விளைநிலத்தை, திருத்தி - சீர்திருத் திப் பயிர் செய்து, உண்-நீ உண்ணு. 8.
பெரியாரைத் துணைக்கொள்.
பெரியாரை - (அறிவிலே சிறந்த) பெரியோரை,
துணைக் கொள் - உனக்குத் துணையாகப் பேணிக்
மகாள். 82
பேதைமை யகற்று.
பேதைமை - (பிறவிக்குக் காரணமாகிய) அஞ்
ஞானத்தை, அகற்று - (நீ மெய்ஞ்ஞானத்தினலே)
போக்கு. 83
பையலோ டிணங்கேல்.
பையலோடு - சிறு பிள்ளையோடு, இணங்கேல் - நீ கூடாதே.
84 பொருடனைப் போற்றிவாழ்.
பொருள் தனை - திரவியத்தை, போற்றி-(மென் மேலும் உயரும்படி) காத்து. வாழ் - நீ வாழு. 85
போர்த்தொழில் புரியேல்.
போர் - சண்டையாகிய, தொழில் - தொழிலை, புரியேல் - நீ செய்யாதே. 86
மனந்தடு மாறேல்.
மனம் - மனசு, தடுமாறேல் - (யாதொரு விஷயத்திலும்) கலங்காதே.

Page 21
30 ஆத்திசூடி
மாற்ருனுக் கிடங்கொடேல்
மாற்ருனுக்கு - பகைவனுக்கு, இடங்கொடேல். (உன்னை நெருங்கிப் பின் வருந்தும்படியாக நீ) இடங் கொடாதே. 88
மிகைபடச் சொல்லேல்.
மிகைபட - (சொற்கள் சுருங்காமல்) அதிகப் படும்படி, சொல்லேல் - நீ சொல்லாதே. 89
மீதூண் விரும்பேல்.
மீது ஊண் -"அதிக போசனத்துக்கு, விரும் பேல் - நீ ஆசைப்படாதே. 90
முனைமுகத்து நில்லேல்.
முனைமுகத்து - சண்டைமுகத்திலே, நில்லேல் - (நீ போய்) நில்லாதே. 9.
மூர்க்கரோ டிணங்கேல்.
மூர்க்கரோடு-அறிவில்லாத வர்களுடனே, இணங் கேல் - நீ சினேகம் பண்ணுதே. 92
மெல்லினல்லா டோள்சேர்.
மெல் - மெல்லிய, இல் - (உன்) மனையாட்டி யாகிய, நல்லாள் - பெண்ணினுடைய, தோள் - தோள்களையே, சேர் - நீ சேர்.
இதனலே, பிறர் மனைவியர், பரத்தையர் என்கிற இவர்களை ஒருபோதும் விரும்பாதே என்பது பெறப் r uG39)Lfb. 9@ மேன்மக்கள் சொற்கேள்.
மேன்மக்கள் - மேன்மையாகிய மனிதருடைய, சொல் - சொல்லை, கேள் ட நீ கேட்டு நட. 94

ஆத்திசூடி
மைவிழியார் மனையகல்.
மை விழியார் - மை தீட்டிய கண்களையுடைய
வேசிகளது, மனை - வீட்டை, அகல் - (நீ ஒருபோதும்
கிட்டாமல்) அகன்று போ. 95
மொழிவ தறமொழி
மொழிவது - சொல்லப்படும் பொருளை, அற(சந்தேகம்) நீங்கும்படி, மொழி - நீ சொல்லு, 96
மோகத்தை முனி.
மோகத்தை - (நிலையில்லாத பொருள்களின் மேலதாகிய) ஆசையை, முனி - கோபித்து வலக்கு. 97
வல்லமை பேசேல்.
வல்லமை - (உன்னுடைய) சாமர்த்தியத்தை, பேசேல் - (நீ புகழ்ந்து) பேசாதே. 98
வாதுமுற் கூறேல்.
வாது - வாதுகளை, முன் -(பெரியோர் முன்னே) கூறேல்-நீ பேசாதே. 9.9
வித்தை விரும்பு.
வித்தை - கல்விப் பொருளை, விரும்பு - நீ விரும்பு. 00
வீடு பெறநில்,
வீடு - மோக்ஷத்தை, பெற - அடையும்படி, நில் - (அதற்குரிய ஞான வழியிலே) நில். 0.

Page 22
32 ஆத்திசூடி
உத்தம னயிரு.
உத்தமனய் - (நற்குண நற்செய்கைகளினலே எல்லாரிலும்) மேலானவனுகி, இரு - நீ இரு. 102
ஊருடன் கூடிவாழ்.
ஊருடன் - ஊரவர்களுடனே, கூடி-(சுபாசுப கன்மங்களிலே) அளாவி, வாழ் - நீ வாழு. 03
வெட்டெனப் பேசேல்.
வெட்டு என - கத்தி வெட்டைப் போல, பேசேல் -(ஒருவரோடுங் கடினமாகப்) பேசாதே. 04
வேண்டி வினைசெயேல்.
வேண்டி - (யாதொரு பிரயோசனத்தை) விரும்பி, வினை - தீவினையை, செயேல் - (நீ ஒருவ னுக்கும்) செய்யாதே. 105
வைகறைத் துயிலெழு.
வைகறை - (நீதினந்தோறும்) விடியற்காலத்
திலே, துயில் எழு - நித்திரையை விட்டு எழுந்திரு. O 6
ஒன்னரைத் தேறேல்,
ஒன்னுரை - பகைவர்களை, தேறேல் - (நீ ஒரு போதும்) நம்பாதே. O7
ஒரஞ் சொல்லேல்.
ஒரம் - பக்ஷ பாதத்தை, சொல்லேல் - நீ) யாதொரு வழக்கிலும்) பேசாதே. 108

33
ஒளவையார் அருளிச் செய்த
ந ல் வழி
காப்பு
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்து னக்கு நான்றருவேன்-கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா.
பதவுரை : கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே-அழகு செய்கின்ற உயர்வாகிய யானை முகத்தையுடைய பரிசுத்த LDrT95) uu இரத்தினம் போலும் விநாயகக்கடவுளே, நான் உனக்குப் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து தருவேன் - அடியேன் உமக்குப் பாலும் தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்புமாகிய இந் நான் கையும் கலந்து நிவேதிப் பேன், நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா - நீர் அடியேனுக்குச் சங்கத்தில் வளர்க்கப்பட்ட (இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ் என்னும்) தமிழ் மூன்றையுந் தந்தருளும். என்ற வாறு.
இதனது தாற்பரியம் : விநாயகக் கடவுளுக்குப்
பூஜை செய்யின் முத்தமிழ்ப் புலமையும் உண்டாகும் என்பதாம்.

Page 23
34 நல்வழி
புண்ணியமாம் பாவம்போம் போனநாட் செய்
(தவவை மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங் (கால் ஈதொழிய வேறில்லை யெச்சமயத் தோர்சொல்லுந் தீதொழிய நன்மை செயல். I
ப-ரை புண்ணியம் ஆம் - புண்ணியமே செய்யத் தக்க து, பாவம் போம் - பாவமே ஒழியத்தக்கது போன நாள் செய்த அவை - முற்பிறப்பிற் செய்த அந்தப் புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - பூமியிலே பிறந்த மனிதர்களுக்கு (இப் பிறப்பில் இன்ப துன்பங்களை அநுபவித் தற்குக் காரணமாக) வைத்த பொருளாகும், எண்ணுங் கால் எச்சமயத்தோர் சொல்லும் ஈது ஒழிய வேறு இல்லை - ஆராயு மிடத்து எந்தச் சமயத்தார் சொல்வதும் இந்தப் பொருளே யல்லாமல் மற் ருெ ன்று மில்லை. தீது ஒழிய நன்மை செயல் - (ஆதலினலே) Lunt 6 Lb நீங்கப் புண்ணியத்தைச் செய்க. எ - று.
இ-ம் : இன்பத்துக்குக் காரணம் புண்ணியமும், துன்பத்திற்குக் காரணம் பாவமுமாதலிற் பாவத்தை ஒழித்துப் புண்ணியத்தைச் செய்க. எ-ம்.
சாதி யிரண்டொழிய வேறில்லைச் சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோ ரிடாதா ரிழிகுலத்தோர் பட்டாங்கிலுள்ள படி. 2
ப-ரை : சாற்றுங்கால் மேதினியில் சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை - சொல்லுமிடத்துப் பூமியிலே (உயர்வாகிய சாதி யென்றும் இழிவாகிய சாதி யென்றும்) சாதி இரண்டேயல்லாமல் வேறில்லை (அவ்விரண்டு சாதியாரும் யாவரெனின்):- நீதி

நல்வழி S5
வழுவா நெறிமுறையின் இட்டார் பெரியோர் - நீதி தவருத நல் வழியிலே (நின்றுகொண்டு முறைமை யோடு சற்பாத்திரங்களா யுள்ளவருக்குக்) கொடுத்த வரே உயர்வாகிய சாதியார், இடாதோர் இழி குலத் தோர் - அங்ங்னம் கொடாதவரே இழிவாகிய சாதியார், பட்டாங்கிலுள்ளபடி - உண்மை நூலின் உள்ள கிரமம் (இதுவேயாம்). எ - று.
இ-ம் : சற்பாத்திரத்துக்குக் கொடுத்தவரே உயர்வாகிய சாதியார், கொடாதவரே இழிவாகிய சாதியார். எ - ம். 2
இடும்பைக் கிடும்பையியலுடம்பி தன்றே இடும்பொய்யை மெய்யென் றிராதே - இடுங்கடுக உண்டாயினுண்டாகு மூழிற் பெருவலிநோய் விண் டாரைக் கொண்டாடும் வீடு. S. 3
ப-ரை : இயல் உடம்பு இது - திரிகின்ற இந்த உடம்பானது, இடும்பைக்கு இடும்பை அன்றே - துன்பங்களாகிய சரக்குகளுக்கு நிறைத்து வைக்கும் பையன்றே, இடும் பொய்யை மெய் என்று இராதே - (போசனத்தை) இடுகின்ற நிலை யில்லாததாகிய இந்த உடம்பை நிலையுடையதென்று நம்பி இராமல், கடுக இடும் - சீக்கிரம் (சற்பாத் திரங்களாயுள்ளவர்களுக்குக்) கொடுங்கள், உண்டா யின் (இத் தருமம் உங்களிடத்து) உண்டாயின், பெருவலி நோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு - பெரிய வலிமையையுடைய மல நோய் நீங்கியவரை மெச்சிக்கொள்கின்ற முத்தியானது. ஊழின் உண்டா கும் - முறையினலே (உங்களுக்குக்) கிடைக்கும். எ - று.
இ-ம் நிலையில்லாத உடம்பு உள்ள பொழுதே சற்பாத் திரத்திலே தானஞ், செய்தவர்க்கு அந்தக்

Page 24
36 நல்வழி
தருமத்தினலே சற்குருவினது திருவருளும், அந்தத் திருவருளினலே ஞானமும், அந்த ஞானத்தினலே முத்தியும் சித்திக்கும். எ - ம்.
எண்ணியொருகருமம் யார்க்குஞ்செய்யொண்ணுது புண்ணியம் வந்தெய்து போதல்லாற் - கண்ணில்
(லான் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக் (குமே ஆங்கால மாகு மவர்க்கு. 4
ப-ரை : யார்க்கு-யாவருக்காயினும், புண்ணியம் வந்து எய்து போது அல்லால் - (முன்செய்த) புண் ணியம் வந்து கூடிய போதல்லாமல், எண்ணி ஒரு கருமம் செய்யொண்ணுது - (மற்றைக் காலத் திலே) நினைத்து ஒரு தொழிலைச் செய்ய முடியாது, சண் இல்லான் மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்கும் - புண்ணியம் வந்து கூடாத அக் காலத்திற் செய்யும் (அத்தொழிலானது) கண் இல்லாதவன் மாங்காய் விழுதற்கு எறிந்த மாத்தி ரைக்கோலைப் போலும், ஆம் காலம் அவர்க்கு ஆகும் - (புண்ணியம் வந்து கூடியபோது) அவருக்கு அத்தொழில் தானே முடியும். எ - று.
இ-ம் : புண்ணியம் இல்லாதவன் எண்ணிய தொழிலும் முடியப்பெருது கைப்பொருளும் இழப்பன். எ - ம். 4
வருந்தி யழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமினென் ருற் போகா - இருந்
(நேங்கி நெஞ்சம் புண்ணுக நெடுந்துரந் தானினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில்.

நல்வழி 37.
ப-ரை வாராத வருந்தி அழைத்தாலும் வாரா(த மக்கு) வராதவைகள் வருந்தி அழைத்தாலும் வாரrவாம், பொருந்துவன போ மின் என்ரு ற் போகா - (தமக்கு) வருமவைகள் போமினென்று வெறுத்தாலும் போகாவாம், இருந்து ஏங்கி - (இவ் வுண்மையை அறியாமல்) இருந்து கொண்டு ஏக்கமுற்று, நெஞ்சம் புண் ஆக தாம் நெடுந் தூரம் நினைந்து துஞ் சுவதே - மனம் புண்ணுகும் படி (அவைகளைத்) தாங்கள் நெடுந்தூரம் நினைந்து மாண்டுபோவதே, மாந்தர் தொழில் - மனிதருடைய தொழிலாம். GT - GDI.
இ-ம் : இருவினைகளைச் செய்தவர் அவற்றின் பயன்களாகிய இன்பதுன்பங்களை அனுபவிப்பது தப் பாதாதலின் அவற்றின் பொருட்டுக் கவலையுற்று வாழ்நாளை வீணுகப் போக்குதல் அறியாமை. எ-ம். 5
உள்ள தொழிய வொருவர்க் கொருவர்சுகங் கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக் கடலோடி மீண்டு கரையேறி ஞலென் உடலோடு வாழு முயிர்க்கு. 6 ப-ரை : ஒருவர்க்கு உள்ளது ஒழிய - ஒரு வருக்கு ( ஊழனுல்) உள்ளதல்லாமல், ஒருவர் Зr dѣiaЈ கொள்ளக்கிடையா - மற்ருெரு வருடைய சுகங்களே அநுபவிக்க விரும்பினுல் அவை கிடையா வாம், (ஆதலினுல்) குவலயத்தில் - இப்பூமியிலே, உடலோடு வாழும் உயிர்க்கு - உடம்புகளோடு கூடிவாழும் உயிர்களுக்கு, வெள்ளக்கடல் ஒ1. மீண்டு கரை ஏறினல் என் - வெள்ள நீரையுடைய சமுத்திரத்திலே (கப்பலின்மேற்) சென்று (சம்பாதி த்துக்கொண்டு) திரும்பிவந்து கரை ஏறினலும் அதனுற்பயன் யாது? எ - று.
இ-ம் பெருமுயற்சி செய்து பெரும்பொருள்
சம்பாதித்தாலும், ஊழினளவன்றி அதிகமாக அனு பவித்தல் கூடாது. எ - று. 6

Page 25
3. நல்வழி
எல்லாப் படியாலு மெண்ணின லிவ்வுடம்பு பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார் அறிந்திருப்பா ராதலின லாங்கமல நீர்போற் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. 7
ப-ரை எல்லாப் படியாலும் எண்ணினல் - சகல விதங்களினலும் ஆராயுமிடத்து, இவ்வுடம்பு பொல் லாப் புழுமலி நோய் புன்குரம்பை - இந்தச் சரீரம் பொல்லாத புழுக்களுக்கும் நிறைந்த வியாதிகளுக்கும் புல்லிய ஒரு சிறு வீடாக இருக்கின்றது, நல்லார் அறிந்து இருப்பார் - நல்லறிவினேர்கள் (இவ்வுடம்பி னிழிவை) அறிந்திருப்பார்கள், ஆதலினுல் 5) Gl நீர்போல் பிரிந்து இருப்பார் - ஆகையால் அவர்கள் தாமரை இலையின் நீர் போல (இவ்வுடம்பிலே கூடியிருந்தும்) கூடாதிருப்பார்கள், பிறர்க்குப் பேசார் - (பயன்படாமையால்) பிறருக்கு (இந்த நிலையைச்) சொல்லார்கள். எ - று. −
இ-ம் : உடம்பு வேறு, தாம் வேறு என்று அறிந்த ஞானிகள் உடம்போடு கூடியிருப்பினும் பற்றற்றிருப்பார்கள்; ஆதலால் அவர்களுக்குத் துன் பமேயில்லை. எ-ம். 7
ஈட்டும் பொருண்முயற்சி யெண்ணிறந்த
(வாயினுமூழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம் மரியாதை கானு மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணுந் தனம். 8
ப-ரை : மகிதலத்தீர் கேண்மின் - பூமியிலுள்ள மனிதர்களே கேளுங்கள், ஈட்டும் பொருள் - தேடுதற்குரிய பொருள்களானவை, முயற்சி எண்: இறந்த ஆயினும் - முயற்சிகள் அளவிறந்தனவாயி

நல்வழி 39
னும், ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - ஊழ் கூட்டுமளவில்லாமற் சேராவாம், தனம் தரியாது - ( ஊழிஞலே சேரினும்) அப்பொருள் நிலைபெருது, தேட்டம் மரியாதை - (ஆதலினல்) நீங்கள் தேடத் தகுவது மரியாதை யேயாம். எ - று.
மரியாதை - நன்னெறியி னிற்றல்.
இ-ம் : பொருள் ஊழினளவன்றி 6նո Մn 65) լՐ யானும் வந்த பொருளும் நிலைபெருமையானும் நிலைபெறுவதாகிய நல்லொழுக்கத்தையே தேடல் வேண்டும். எ-ம். 8
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமல்வா றுாற்றுப் பெருக்கா லுலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தா ராணுலும் இல்லையென மாட்டா ரிசைந்து. 9
ப-ரை ஆற்றுப் பெருக்கு அற்று - ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய், அடிசுடும் அந்நாளும் - (மணலானது வெய்யிலினலே காய்ந்து நடப்ப வருடைய) அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும், அவ் ஆறு ஊற்றுப்பெருக்கால் உலகு ஊட்டும் - அந்த ஆரு னது ஊற்றுநீர்ப் பெருக்கினுல் உலகத் தாரை உண்பிக்கும், (அதுபோல) நல்ல குடிப்பிறந் தார் - நல்ல குடியிலே பிறந்தவர், நல்கூர்ந்தார் ஆனுலும் - வறுமையடைந்த காலத்திலும், மற்ற வர்க்கு இசைந்து இல்லை என மாட்டார் இரந் தவருக்கு (கருத்து) இசைந்து இல்லையென்று சொல் லாது கொடுப்பர். எ - று.
இ-ம் : உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவருக்குக் கொடாது 60ח וו. -ו". எ - ம்.

Page 26
星门 நல்வழி
ஆண்டாண்டு தோறு மழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா நமக்கு மதுவழியே நாம்போ மளவும் எமக்கென்னென் றிட்டுண் டிரும். O
ப-ரை மாநிலத்தீர் - பெரிய பூமியிலுள்ள மனிதர்களே, ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் - (இறந்த) அவ் விடத்தில் வருடந் தோறும் அழுது புரண்டாலும், மாண்டார் வருவரோஇறந்தவர் திரும்பி வருவாரோ (வரமாட்டார்). வேண் டா - (ஆதவினுல்) அழவேண்டுவதில்லே, நமக்கும் அது வழியே நாம்போம் அளவும் எமக்கு என் என்று - நமக்கும் அம் மரணமே வழியாகும் நாம் இறந்து போமளவும் எமக்கு யாது சம்பந்தம் என்று, இட்டு உண்டு இரும் - பிச்சை இட்டு நீங்களும் உண்டு (கவலேயற்று) இருங்கள். G - று.
இ-ம் இறந்தவர் பொருட்டு அழுகையினுலே உடம்பிற்குத் தளர்ச்சியும் உயிருக்கு வருத்தமும் உண்டாமேயன்றிச் சிறிதும் பயனில்லாமையால் கவலை பொழித்துச் சற்பாத்திரத்துக்குக் கொடுத்து வாழ்க GT - Lh.
ஒருநாளுணவை யொழியென்ரு லொழியாய் இருநாளுக் கேலென்ரு லேலாய் - ஒருநாளும் எனணுே வறியா யிடும்பைசர் ரென்வயிறே உன்னுேடு வாழ்த லயிது.
ப-ரை இடும்பை கூர் என் வயிறே - துன்பம் மிகுகின்ற என்னுடையவயிறே. ஒருநாள் உணவை ஒழி என்ருல் ஒழியாய்-கிடையாதபோது) ஒரு நாளுக்கு போசனத்தை விட்டிரு என்ரு ல் விட்டிராய் இரு நாளுக்கு ஏல் என்ருல் ஏலாய் - (கிடைத்தபோது) இரண்டு நாளுக்கு (உண்ணும் போசனத்தை ஒருங்கு)
 

நல்வழி 翡直
ஏற்றுக்கொள் என்ருல் ஏற்றுக்கொள்ளாய், ஒருநாளும் என் நோ அறியாய் - ஒருநாளிலாயினும் என்னு டைய வருத்தத்தை அறியாய், உன்னுேடு வாழ்தல் அரிது - (ஆதவினுல்) உன்னுேடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது. எ - று.
இ-ம் வயிற்றுக்குத் திருப்தி செய்த வினும் அரிது பிறிதில்லே. எ - ம்.
ஆற்றங் கரையின் மரமு மரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லேக் கண்டீர் பழுதுண்டு வேருேர் பணிக்கு. I
ப-ரை ஆறு அம் கரையில் மரமும் - ஆற்றினது கரையில் இருக்கின்ற மரமும், அரசு அறிய வீற்று இருந்த வாழ்வும் விழும் அன்றே - அரசன் அறிய அதிகாரஞ் செய்து (சம்பாதித்துப்) பெருமையாக வாழ்கின்ற வாழ்க்கையும் அழிந்து போ மன்ருே, உழுது உண்டு வாழ்வு ஏற்றம் - (ஆதவினுள் உழுது பயிர் செய்து உண்டு வாழ்வதே உயர்வாகும், அதற்கு ஒப்பு இல்லே - அதற்குச் சமானம் இல்லே, வேறு ஒர் பணிக்குப் பழுது உண்டு - மற்றைத் தொழில் வாழ்க்கைகளுக் கெல்லாம் அழிவு உண்டு. எ - ற.
இ-ம் பிறர் வயத்தினராகாது தம்வயத்தினராய் நின்று. செய்யும் (3Gr GmTTGtiıITTT) nILurt Gh}rT G?!r I வாழ்க் கைக்கு அழிவு இல்லாமையால் அதுவே சிறந்தது. எ - ம்,
ஆவாரை யாரே பழிப்பா ரதுவன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பவர் - ஒவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார் மெய்யம் புவியதன் மேல்.

Page 27
4别 நல்வழி
ப-ரை : அம்புவி அதன்மேல் - அழகிய பூமியின் மேலே, ஆவாரை அழிப்பார் யார் - (நல்வினையினல் நெடுங்காலம்) உயிர் வாழ்வதற்கு உரியவரை (இடையிலே) அழிக்க வல்லவர் யாவர்?, அது அன்றிச் சாவாரைத் தவிர்ப்பவர் யார் - அதுவல் லாமலும் (தீவினையினல்) இறத்தற்குரியவரை நிறுத்த வல்லவர் யாவர்?, ஒவாமல் ஐயம் புகுவாரை விலக்குவார் யார் - (செல்வம் இழந்து) ஒழியாமல் பிச்சைக்குச் செல்வோரைத் தடுக்க வல்லவர் யாவர்?, மெய் - (இது) சத்தியமேயாம். எ - று.
இ-ம் ஊழினல் அடைதற்பாலனவாகிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவருமில்லை. எ-ம் 13
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால் இச்சைபல சொல்வி யிடித்துண்கை - சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மான மழியா துயிர்விடுகை சால வுறும் 14
பகரை பேசுங்கால் - (ஆராய்ந்து) சொல்லு மிடத்து, பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை - பிச்சை எடுத்து உண்டலிலும் (இழிவிற்) பெரிய குடிவாழ்க் கையாவது, பல இச்சை சொல்லி இடித்து உண்கை - பலவாகிய இச்சைகளைப் பேசி (ஒருவரை) நெருங்கி வாங்கி உண்ணுதலாம், சீச்சீ - சீசீ (இது என்ன செய்கை), வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது - வயிற்றை வளர்த்தற்பொருட்டு மானங் கெடாமல், உயிர் விடுகை சால உறும் - உயிரை விடுதலே மிக (உயர்ச்சியைப்) பொருந்தும். எ - ம்.
இ-ம் : பிறரிடத்தே இச்சைபேசி வாங்கி உண்டு மானம் இழந்து உயிர் வாழ்தலினும் உயிரை விட்டு மானத்தை நிறுத்துதலே உயர்வுடைத்து எ - நூறு

நல்வழி 43
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க் கபாய மொருநாளு மில்லை - உபாயம் இதுவே மதியாகு மல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும். 15
ப-ரை சிவாய நம என்று சிந்தித்து இருப் போர்க்கு - சிவாயநம என்று தியாணித்துக் கொண்டு இருப்பவருக்கு, ஒரு நாளும் அபாயமில்லை - ஒரு நாளாயினும் இடுக்கண் உண்டாகாது, இதுவே மதி யாகும் உபாயம் - இஃதொன்றுமே விதியை வெல்லு வதற்கேற்ற அறிவான உபாயமாம், அல்லாத எல்லாம் மதி விதியே ஆய் விடும் - (இச் சிவத்தியானம்) அல்லாத மற்றையிடங்களிலெல்லாம் புத்தியானது விதியின் வசத்தே யாகிவிடும். எ - று.
இதுவே என்பது பின்னுங் கூட்டப்பட்டது.
இ-ம் : சிவத்தியான முடையவருக்கு விதி இல்லை; சிவத்தியானமில்லாத வருக்கு விதி உண்டு. எ - ம். 15
தண்ணிர் நிலநலத்தாற் றக்கோர் குணங்கொடை
Լաո մ) கண்ணிர்மை மாருக் கருணையாற் - பெண்ணிர்மை கற்பழியா வாற்ருற் கடல்சூழ்ந்த வையகத்துள் அற்புதமா மென்றே யறி. I 6
ப-ரை தண்ணிர் நிலநலத்தால் - தண்ணிரானது நிலத்தினது நன்மையினலும், தக்கோர் குணம் கொடையால் - நல்லோரது குணமானது கொடை யினலும், கண்ணீர்மை மாருக் கருணையால் - கண்களையுடைய குணமானது நீங்காத அருளினு லும், பெண் நீர்மை சுற்பு அழியா ஆற்ருல் - பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினலும், கடல் சூழ்ந்த வையகத்துள் அற்புதமா

Page 28
44 நல்வழி
மென்றே அறி - சமுத்திரஞ் சூழ்ந்த பூமியிடத்து (எல்லாரும்) ஆச்சரியப்படத்தக்கவைகளாகும் என்று
நீ அறிவாயாக. எ - று.
இ-ம்: நிலநன்மையினலே தண்ணிருக்கும், கொடை யினலே நல்லோருக்கும், அருளினலே கண்களுக்கும், கற்பினுலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும், Ꮆ T - Lb . 6
செய்தீவினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ விருநிதியம் - வையத் தறும்பாவ மென்னவறிந்தன்றிடார்க் கின்று வெறும்பானை பொங்குமோமேல். 7
ப-ரை வையத்துப் பாவம் அறும் என்ன அறிந்துபூமியிலே (சற்பாத்திரத்திற் செய்யப்படுந் தானத் தினுலே) பாவம் நீங்கும் என்று உணர்ந்து, அன்று இடார்க்கும் - அக்காலத்திலே (சற்பாத்திரத்திலே) தானஞ் செய்யாதவருக்கு, செய் தீவினை இருக்க - செய்த அப்பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்க, இன்று தெய்வத்தை நொந்தக்கால் - இப்பொழுது கடவுளை வெறுத்தால், இருநிதியம் எய்த வருமோ - பெரிய திரவியம் பொருந்த வருமோ (வராது), வெறும் பானை மேல் பொங்குமோ - வெறும்பானை (அடுப் பிலே வைத்து எரித்தால்) மேலே பொங்குமோ (பொங்காது). எ - று.
இ-ம் வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது தெய் வத்தை நோதலிற் பயன் இல்லை. எ - ம். 7
பெற்ருர் பிறந்தார் பெருநாட்டார் பேருலகின் உற்ரு ருகந்தா ரெனவேண்டா - மற்றேர் இரணங் கொடுத்தா லிடுவ ரிடாரே சரணங் கொடுத்தாலுந் தாம். 8

நல்வழி 45
ப-ரை : பேர் உலகின் - பெரிய பூமியிலே, பெற்ருர் (என) (இவர் எம்மைப்) பெற்றவர் என்றும், பிறந்தார் (என) - (இவர் எமக்குப்) பிறந்தவர் என் றும், பெருநாட்டார் (என) - (இவர் எம்முடைய) பெரிய தேசத்தார் என்றும், உற்ருர் (என) - (இவர் எம்முடைய) சுற்றத்தார் என்றும், உகந்தார் (என) -- (இவர் எம்மைச்) சிநேகித்தவர் என்றும், வேண்டார்விரும்பாதவ ராகிய உலோபிகள். மற்றேர் இரணம்
கொடுத்தால் இடுவர் - அந்நியரேயாயினும் (தம் முடம்பிலே) காயத்தைச் செய்தாராயின் (அவருக்கு எல்லாங்) கொடுப்பர், சரணம் கொடுத்தாலும் இடார் - முன்சொல்லப்பட்டவர்) அடைக்கலம் புகுந்
தாராயினும் அவருக்கு ஒன்றுங் கொடார். எ-று.
இ-ம் : உலோபிகள் தமக்கு அகிதத்தைச் செய் யும் கள்வர் முதலாயினேருக்கன்றி இதத்தைச் செய்யும் தாய் தந்தை முதலாயினேருக்குக் கொடார். எ-ம் 8
சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்
(கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப் (பம் பாழினுடம்பை வயிற்றின் கொடுமையால் 19 நாழி யரிசிக்கே நாம்
ப-ரை : வயிற்றின் கொடுமையால் - வயிற்றி னுடைய (பசிக்) கொடுமையினலே, சேவித்தும் - பிறரைச் சேவித்தும், சென்றிரந்தும் - (பலரிடத் திலே) போய் யாசித்தும், தெண் நீர்க் கடல் கடந்தும் - தெளிவாகிய நீரையுடைய சமுத்திரத் தைக் (கப்பலேறிக்) கடந்தும், பாவித்தும் - (ஒரு வரைப்) பெரியவராகப் பாவித்தும், பார் ஆண்டும் - பூமியை ஆண்டும், பாட்டு இசைத்தும் - செல் வரைப் (புகழ்ந்து) பாட்டுப்பாடியும், நாம் உடம்பை

Page 29
நல்வழி
நாழி அரிசிக்கே பாழின் போவிப்பம் - நாம் இந்தச் சரீரத்தை நாழி அரிசிக்காகவே பாழிலே செலுத்து கின்ருேம். எ - து.
இ-ம் முத்திக்குரிய சாதனத்தைத் தேடும் பொருட்டு அரிதாகக் கிடைத்த சரீரத்தை அதற் குக் கொடுக்கப்படுங் சுவியாகிய போசனத்தைத் தேடும் பொருட்டே முழுமையும் செலுத்துதலின் மிக்க பேதைமை பிறிதில்ஃ. எ - ம்.
அம்மி துணையாக வாறிழிந்த வாருெக்கும் கொம்மை முலேபகர்வார்க் கொண்டாட்டாம்
(இம்மை மறுமைக்கு நன்றன்று மாநிதியம் போக்கி வெறுமைக்கு வித்தாய் விடும். 2)
ப-ரை கொம்மை முல் பகர்வார்க் கொண்டர்ட் 1-ம் - குவிவாகிய தனங்களே விற்கின்ற பரத்தை பரைக் கொண்டாடுதல், அம்மி துனே பாக :البا يلي இழிந்த ஆறு ஒக்கும் - அம்மிக்கல்லே துணையாக ஆற்றுவெள்ளத்தில் இரங்கிய தன்மையைப் போலும், அன்றியும் மாநிதியம் போக்கி வெறுமைக்கு வித்து ஆய் விடும் - (அது) பெரிய செல்வத்தை அழித்து வறுமைக்குக் காரணமாய்விடும், இம்மை மறுமைக்கு நன்று அன்று - (ஆதவிஞல்) அது இப்பிறப்பிற்கும் ருெ பிறப்பிற்கும் நல்லதாகாது. எ. நு.
ஒடத்தினுலே கடக்கத்தக்க ஆற்றை அம்மியி ஒலே கடக்கப்புகுந்தவன் அமிழ்ந்து உயிரை இழத்தில் போல, மனேவியினூலே அநுபவிக்கத்தக்க இன்பத்தை வேசியினூலே அநுபவிக்கப் புகுந்தவன் மேர்நோயால் வருந்தி உயிரை இழப்பன். ஆதலின் அம்மி துணையாக வாரிழிந்த வாருெக்கு மென்ருர்,

நல்வழி 星章
இ-ம் : வேசையைப் புணர்ந்தவன் கைப்பொருளே இழந்து மேக நோயால் வருத்தமுற்றுப் பழி பாவங் 1. அடைவன். GT - Li.
நீரு நிழலு நிலம்பொதியு நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க் கென்றுத் தருஞ்சிவந்த தாமரையாள் தான். 2 II
ப-ரை சிவந்த தாமரையாள் - செந்தாமரை மலரில் இருக்கின்ற சீதேவியானவள், வஞ்சம் இலார்க்கு - வஞ்சனே இல்லாதவருக்கு, நீரும் - நிர்வளத் தையும், நிழலும் - நிழல் வளத்தையும், நிலம் பொதியும் நெற்கட்டும் - நிலத்திலே நிறைய
நெற்போரையும், பேரும் - பேரையும், புகழும் கீர்த்தியையும், பெருவாழ்வு - பெரிய வாழ்வையும், நளரும் - கிராமத்தையும், வரும் நிருவும் -
வளர்கின்ற செல்வத்தையும், வாழ்நாளும் - நிறைந்த ஆயுளே பும் என்றுத் தரும் எந்நாளும் கொடுத் தருளுள்ை. எ - று.
இ-ம் வஞ்சனே யில்லாதவருக்குச் சீதேவியினது திரு வருளினூலே எல்லா நலமும் உண்டாகும். எ-ம். 81
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத் (துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங் காவிதான் போயினபின் பாரே யநுபவிப்பார் பாவிகா ளந்தப் பணம். 22
ப- பணத்தைப் பாடுபட்டுத் தேடிப் புனிதத்து வைத்து - பணத்தைப் பிரபாசப்பட்டுச் சம்பாதித்து (நீங்களும் உண்ணுமல் பிறர்க்குங் கொடாமல் பூமி யிலே) பாதத்து வைத்து, கேடுகெட்ட மானுடரே கேளுங்கள் - அப் பொருட் கேட்டினுல் (சரீரசுகத்

Page 30
4& நல்வழி
தையும் ஆன்ம சுகத்தையும் ஒருங்கு) இழந்த மனிதர் காள்? (நான் சொல்வதைக்) கேளுங்கள், ஆவி கூடு விட்டுப் போயினபின்பு - ஆன்மா சரீரத்தைவிட்டு நீங்கிய பின்பு, பாவிகாள் அந்தப் பணம் இங்கு ஆர் அநுபவிப்பார் - பாவிகளே! அப் பணத்தை இவ்வி டத்து யாவர் அநுபவிப்பார். எ - று.
இ-ம் : பூமியில் புதைத்து வைக்கப்பட்ட பணம் வைத்தவர் இறந்த பின் அவருக்கு உதவாமற் போவது மன்றிப் புதைத்தவிடந் தெரிந்து எடுக்கக்கூடா மையினலே பிறருக்கும் உதவாமற் போம். எ-ம். 22
வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்ருேரஞ் சொன்னர் மனை. 23
ப-ரை : மன்று ஒரஞ் சொன்னர் மனை - தரும சபையிலே பட்சபாதஞ் சொன்னவருடைய வீட்டிலே வேதாளஞ் சேரும் - பேய்கள் (வந்து) சேரும். வெள்ளெருக்குப் பூக்கும் - வெள்ளெருக்கு (முளைத்து) மலரும், பாதாளமூலி படரும் - பாதாள மூல என்னும் கொடி படரும், மூதேவி சென்று இருந்து வாழ்வள் - மூதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வள், சேடன் குடிபுகும் - பாம்பு குடியிருக்கும். எ - று. (பாதாளமூலி - சிறு நெருஞ்சில்)
இ-ம் வழக்கோரஞ் சொன்னவர் குடும்பத்தோடு அழிவதுமன்றி அவர் குடியிருந்த வீடும் பாழாம்.
- 23
நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா வுண்டிபாழ் ஆறில்லா வூருக் கழகுபாழ் - மாறில் உடற்பிறப் பில்லா வுடம்புபாழ் பாழே மடக்கொடி யில்லா மனை. . 24

நல்வழி 49
ப-:ை நீறு இல்லா நெற்றி !ாழ்-விபூதி யில்லாத நெற்றி பாழாகும், நெய் இல்லா உண்டி பாழ்-நெய்யில் லாத போசனம் பாழாகும், ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ்-நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும் மாறு இல் உடற் பிறப்பு இல்லா உடம்பு பாழ்-மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும், மடக்கொடி இல்லா மனை பாழே-(இல்லத்துக்குத்தக்க) மனைவியில்லாத வீடு பாழே யாகும். எ-ம்.
இ-ம் : விபூதியினலே நெற்றியும், நெய்யினலே போசனமும், நதியினலே ஊரும், சகோதரராலே உடம்பும், மனைவியினலே வீடும் சிறப்படையும். எ - று. 24 -
ஆன முதலி லதிகஞ் செலவானுன் மான மழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்குங் கள்ளணு யேழ்பிறப்புந் தீயணுய் நல்லார்க்கும் பொல்லன நாடு. 25
ப-ரை ஆன முதலில் செலவு அதிகம் ஆனன் - (தனக்குக்) கிடைத்த முதற்பொருளுக்குச் செலவு
அதிகமான வன், மானம் அழிந்து - மானங் கெட்டு, மதிகெட்டு - அறிவு இழந்து, போன திசை எல்லார்க் குங்கள்ளணுய் - (தான் ஒடிப்) போன திசையிலும்
எல்லார்க்குங் கள்ளணுகி, ஏழ் பிறப்புந் தீயனுய் -- எழுவகைப் பிறப்புகளினும் பாவம் உடையவனுகி, நல்லார்க்கும் பொல் லணும் - (தன்னிடம் அன்பு வைத்த) பெண்டிருக்கும் பொல்லாதவளுவான், நாடு -- (இதனை) ஆராய்ந்து அறிவாயாக. எ - று.
இ-ம் : வரவுக்கு அதிகமாகச் செலவு செய்பவன்
பழி பாவங்களை அடைவன். ஆதலின் வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும். -எ - ம். 25

Page 31
50 நல்வழி
மானங் குலங்கல்வி வண்மை யறிவுடைமை தானந் தவமுயற்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம். 26
ப-ரை : பசி வந்திட - பசிநோய் ஒன்று மாத்திரம் வந்தால், மானம் - மானமும், குலம் - குலமும், கல்வி - கல்வியும், வண்மை - வாய்மையும், அறி வுடைமை - அறிவுடைமையும், தானம் - கொடை պւծ, தவம் - தவமும், உயர்ச்சி - உயர்வும், தாளாண்மை - தொழின் முயற்சியும், தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் - தேன்
பெருக்குப் போலத் தோன்றுகின்ற சொல்லையுடைய மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய, பத்தும் பறந்து போம் - இப் பத்தும் விட்டோடிப்போம்" எ. - று.
இ-ம் : மான முதலிய எல்லா நலன்களையுங் கெடுத் தலினலே பசிநோயினுங் கொடியது பிறிதில்லை 26
ஒன்றை நினைக்கி னதுவொழிந்திட் டொன்ருகும் அன்றியதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினு நிற்கும் எனையாளு மீசன் செயல். 27
ப-ரை : ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்று ஆகும் - ஒரு பொருளைப் பெற நினைத்தால் அப் பொருள் கிடையாமல் வேருெரு பொருள் கிடைத் தாலும் கிடைக்கும், அன்றி அதுவரினும் வந்து எய்தும் - அப்படி அல்லாமல் அப்பொருளே வந்து கிடைத்தாலும் கிடைக்கும், ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் - (இன்னும்) ஒரு பொருளை நினையாதிருக்கு முன்னே அது தானே வந்து நின்ருலும் நிற்கும், என ஆளும் ஈசன் செயல் - (இவைகளெல்லாம்) என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கைகளாகும். எ - று.

நல்வழி 5 Ι
இ-ம் : இருவினைகளுக்கீடாக இன்பதுன்பங்களை ஊட்டும் கடவுளுடைய கருத்தின் படியேயன்றி ஆன்மாக்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது. 67 - th. 27
உண்பது நாழி யுடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந் தெண்ணுவன - கண்
(புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையுஞ் சஞ்சலமே தான். 28
ப-ரை கண் புதைந்த மாந்தர் - அகக்கண்
குருடாக இருக்கின்ற மனிதர், உண்பது நாழி - உண்பது ஒருநாழி அரிசி அன்னமேயாகும், உடுப்பது நான்கு முழம் - (அவர்) உடுப்பது நான்குமுழ வஸ்திரமேயாகும், (இப்படியாகவும்) நினைந்து எண் ணுவன எண்பது கோடி - (அவர்) நினைத்து எண்ணுங் காரியங்களோ எண்பது கோடியாகும். (ஆதலினல்) மண்ணின் கலம் போலச் சாம் துணையும் குடிவாழ்க்கை சஞ்சலமே - மட்பாத்திரம் அழிந்தாற்போல (அவர் சரீரம்) அழியும் வரையும் (அவருடைய) குடிவாழ்க் கையிலே துன்பமே விளையும். எ - று.
இ-ம் : உள்ளதே போதும் என்று திருப்தி யடையாதவர் சாங்காறும் அடைவது துன்பமே அன்றிப் பிறிதில்லை. எ-ம். 28
மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - கரந்தமுதம் கற்ரு தரல்போற் கரவா தளிப்பரேல் உற்ரு ருலகத் தவர். 29
ப-ரை : மரம் பழுத்தால் - மரம் பழுத்திருந் தால், வா என்று வெளவாலை கூவி இரந்து அழைப்

Page 32
5x நல்வழி
பார் அங்கு யாவ்ரும் இல்லை - இப் பழத்தைத்தின்னுதற்கு வா என்று வெளவாலைக் கூவி வேண்டி அழைப்பவர் அம்மரத்தருகில் ஒருவரும் இல்லை. கன்று ஆ அமுதம் சுரந்து தரல்போல கரவாது அளிப்பரேல் - கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல் போல ஒளிக்காமற் கொடுப் பாராயின், உலகத்தவர் உற்ருர் - (அவ் வெளவால் போலத் தாமே வந்து) எல்லாரும் உறவினராவர்.
m- Ol.
இ-ம் : கொடையாளருக்கு எல்லாரும் தாமே உறவின ராவார். எ - ம். 29
தாந்தாமுன் செய்தவினை தாமே யனுபவிப்பார் பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே ஒறுத்தாரை யென் செயலா மூரெல்லா மொன்ரு வெறுத்தாலும் போமோவிதி. 30
ப-ரை வேந்தே - அரசனே, முன் தாம் தாம் செய்த வினை - முற்பிறப்பிலே தாம் தாம் செய்து கொண்ட நல்வினை தீவினைகளை, பூந்தாமரையோன் பொறி வழியே தாமே அதுபவிப்பர் - தாமரை மலரில் இருக்கின்ற பிரமா விதித்தபடியே தாமே அநுபவிப்பார்கள். ஒறுத்தாரை என் செயலாம் - (தீவினையினலே தூண்டப்பட்டுத்) தீங்கு செய்தவரை நாம் யாது செய்யலாம், உவர் எல்லாம் ஒன்ருக வெறுத்தாலும் விதி போமோ - ஊரிலுள்ளார் எல்லா ருந் (துணையாகத்) திரண்டு வெறுத்தாலும் விதி போமோ (போகாது). எ - று.
இ-ம் : த மக்கு ஒருவன் துன்பஞ் செய்யின், அது தாம் முன் செய்த தீவினைக்கீடாகக் கடவுளாலே தமக்குக் கிடைத்த தென்று அமைவதே அறிவு. எ - ம். 30

நல்வழி S3 ,
இழுக்குடைய பாட்டிற் கிசைநன்று சாலும் ஒழுக்க முயர்குலத்தி னன்று - வழுக்குடைய வீரத்தி னன்று விடாநோய் பழிக்கஞ்சாத் தாரத்தி னன்று தனி. - 3 I
ப-ரை : இழுக்கு உடைய பாட்டிற்கு இசை தன்று இலக்கண வழுக்களை யுடைய செய்யுளினும் இசை நல்லது, உயர் குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று - உயர்வாகிய குலத்திலும் மாட்சிமைப்பட்ட ஒழுக்கம் நல்லது. வழுக்கு உடைய வீரத்தின் விடா நோய் நன்று - தவறுதலையுடைய வீரத்திலும் திராவியாதி நல்லது, பழிக்கஞ்சாத் தாரத்தில் தனி நன்று - பழிச்சொல்லுக்கு அஞ்சாத மனைவி போடு கூடி வாழ்தலினும் தனியே இருத்தல் தல்லது. எ - று.
இ-ம் : இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலை யுடைய வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைக்கும். எ-ம். 31
ஆறிடு மேடு மடுவும்போ லாஞ்செல்வம் மாறிடு மேறிடு மாநிலத்தீர் - சோறிடுந் தண்ணிரும் வாரும் தருமமே சார்பாக உண்ணிர்மை வீறு முயர்ந்து. 32
ப-ரை மா நிலத்தீர் - பெரிய பூமியிலுள்ளவர் களே, ஆறு இடும் மேடும் மடுவும் போல் - ஆற்று
வெள்ளத்தினுல் உண்டாக்கப்படும் மேடும் பள்ள மும்போல, செல்வம் ஏறிடும் மாறிடும் - செல் வம் வளர்வதும் தேய்வதுமாயிருக்கும், (ஆதலி ஞல்) தண்ணீரும் வாரும் - குடிக்கத் தண்ணி
ரையும் வாருங்கள், தருமமே சார்பு ஆக உள் நீர்மை உயர்ந்து வீறும் - (இப்படிச் செய்துவரு

Page 33
*/占LC 并 சங்கு
重重 நூலகம்மி
வீர்களானுல்) இந்தத் தருமமே துணையாக உள்ளத் திலே (சத்தியமாகிய) தன்மை ஓங்கி விளங்கு ங் - மு.
இ-ம் நிவேயில்லாத செல்வம் உள்ள பொழுதே இரப்பவர்களுக்கு அன்ன பானியங்களைக் கொடுத்து வருபவர்களுக்குச் சித்த சுத்தி உண்டாகும். எ - ம், 32
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் .
(வேழத்திற் பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும். ፮ ?
ப-ரை வேழத்தில் பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது - (வலிய) யானேயின்மேலே பட்டு உருவும் அம்பானது (மெல்விய) பஞ்சின் மேலே பாயாது. (அதுபோல) வெட்டெனவை மெத் தெனவை
வெல்வா - வன் சொற்கள் இனிய சொற்களே வெல்ல மாட்டா, நெடு இருப்புப் பாரைக்கு நெக்கு விடாப் பாறை - நெடுமையாகிய இருப்புப் பாரைக்
குப் பிளவாத கருங்கற்பாறை யானது, பசு மரத்தின் வேருக்கு நெக்கு விடும் - பச்சை மரத்தின் வேருக்குப் பிளந்துபோம். எ - ற,
இ-ம் வன்சொல்லே இன்சொல்லுக்குத் தோற் றுப் போம். எ - ம்
கல்லானே யானுலுங் கைப்பொருளொன் றுண்டா
(யின்
எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர்- இல்லானே இல்லாளும் வேண்டாண்மற் றீன்றெடுத்த தாய்
(வேண்டாள்
செல்வா தவன்வாயிற் சொல். ፲፰ Ã
32216

நல்வழி
ப-ரை கல்லானே ஆணுலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் - (ஒருவன்) படியாதவனேயா பினும் அவன் கையிலே பொருள் மாத்திரம் இருந் தால், எல்லாரும் சென்று எதிர் கொள்வர் - (அவனே) யாரும் போய் எதிர் கொண்டு உபசரிப்பர்,
இல்லானே இல்லாரும் வேண்டாள் - (படித்த ନା) {#୍t பாயினும் பொருள்) இல்லா தவனே (அவன்) மண்வியும் விரும்பாள். ஈன்று எடுத்த தாய் வேண் டாள் - (அவனோப்) பெற்று வளர்த்த மாதாவும்
விரும்பாள், அவன் வாயில் சொல் செல்லாது - அவன் வாயிற் பிறக்குஞ் சொல்லானது பயன்படாது. - ועי. ה "זיו
இ-ம் கல்லாதவனேயாயினும் பொருளுடைய வனே எல்லோரும் பதிப்பர் கற்றவனேயாயினும் பொருளில்லாதவனே ஒருவரும் மதியார் எ - ம், 34
பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும் ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா விரைத்தாலு நன்ருகா வித்தெனவே பேதைக் குரைத்தாலுந் தோன்ரு துனர்வு. ዳ {j
ப-ரை பூவாதே காய்க்கும் மரமும் உள-பூவாமலே காய்க்கின்ற மரங்களும் உண்டு (அதுபோல), மக்களும் ஏவாதே நின்று தாம் உணர்வார் உளர் -மனிதர்களுள் ரூம் ஏவாமலே இருந்து தாமே அறிந்து செய்ய வல்ல வரும் உண்டு. தாவா விதைத்தாலும் கன்று ஆகா வித்து என் - துரவி விதைத்தாலும் முளத்துப் பங்ன் படாத விதைபோல, பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்ருது முடனுக்கு (எடுத்து விளங்க)ச் சொன் ணு,லும் (அதனே அறியும்) அறிவு அவனிடத்து உண்டா
-
இ-ம் குறிப்பறிந்து செய்வோரே அறிவுடையோர்: அறிவிக்கவும் அறிந்து செய்யாதவர் மூடர். -

Page 34
56 நல்வழி
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்திற் கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல் - ஒண்
- டொடி போதந் தனங்கல்வி பொன்றவருங் காலமயன் மாதர்மேல் வைப்பார் மனம். 36
ப-ரை; ஒள் தொடி - ஒள்ளிய வளையலை யணிந்த வளே, நண்டு சிப்பி வேய் கதலி - நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும், நாசம் உறும் காலத்தில்-தாம் அழிவை அடையும் காலத்திலே , கொண்ட கரு அளிக் கும் கொள்கை போல் - (முறையே தாம்) கொண்ட (குஞ்சும் முத்தும் அரிசியும் காய்க்கு லேபும் ஆகிய) கரு க் களை ஈனும் தன்மை போல. (மனிதர்கள்) போதம் தனம்; கல்வி பொன்ற வருங் காலம் - ஞானமும் செல் வமும் வித்தையும் அழிய வருங் காலத்திலே, அயல் மாதர்மேல் மனம் வைப்பார் .பிறர் மனைவியர்மேல் மனம் வைப்பார்கள். எ-று
இ-ம்; ஒருவன் பிறன் மனையாளை இச்சிக்கின் அது அவனிடத்துள்ள ஞானம் செல்வம் கல்வி என்னும் மூன்றும் கெடுதற்கு அறிகுறியாகும், 36
வினைப்பயனை வெல்வதற்கு வேத முதலாம் அனைத்தாய நூலகத்து மில்லை - நினைப்பதெனக் கண்ணுறுவ தல்லாற் கவலைபடே னெஞ்சேமெய் விண்ணுறுவார்க் கில்லை விதி. 37
ப-ரை வேதம் முதலாம் அனைத்து ஆய நூலகத் தும்- வேத முதலாகிய எல்லா நூல்களினுள்ளும் (ஆராய்ந்தால்), வினைப்பயனை வெல்லதற்கு - இருவினைப் பயனை வெல்வதற்கு (உபாயம்), அவ்வினைப்பயனை வெல் வதற்கு (உபாயம்), அது நினைப்பு எனக் கண்ணுறுவது அல்லால் இல்லை - அவ்வினைப்பயன் (நம்முடைய) நினை வாலாவது என்று அறிவதல்லாமல் வேறு இல்லை, நெஞ்

நல்வழி 57
சமே கவலை படேல்-மனமே கவலையை அடையாதே, மெய்விண் உறுவார்க்கு விதி இல்லை - நித்தியமாயுள்ள ஞானகாசமாகிய பதியோடு கலந்து நிற்பவருக்கு ஊழ் இல்லை. எ - று.
இ-ம் பரஞானத்திலே பதியைத் தெளிந்து நோக்கி அன்பு செய்யப் பெற்றவர், அப்பதியையே யன்றிப் பிரார்த்த வாசனை தாக்குதற்குரிய மற்றப் பதார்த்தங் களைச் சிறிதும் காணுராதலின், அவருக்கு விதியில்லை. 6T-01. 37
நன்றென்றுந் தீதென்று நானென்றுந் தானென்
[றும் அன்றென்று மாமென்று மாகாதே - நின்றநிலை தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக் (குப் போனவா தேடும் பொருள். 38
ப-ரை நன்று என்றும்-(இது) நல்லது என்றும், தீது என்றும் - (இது) தீயது என்றும், நான் என்றும் - (இது செய்தவன்) நான் என்றும் , தான் என்றும் - (இது செய் தவன்) அவன் என்றும், அன்று என்றும் - (இது) அன்று என்றும், ஆம் என்றும் (இது) ஆகும் என் றும், ஆகாதே நின்ற நிலை பேதஞ் செய்யாமலே (பதியி னுள் அட்ங்கி இரண்டறக் கலந்து) நின்ற நிலையே, தான் அது ஆம் தத்துவம் (ஆன்மாவாகிய) தான் (பதியாகிய) அதுவாகின்ற உண்மை நிலையாகும் சம்பு அறுத்தார் யாக்கைக்குத் தேடும் பொருள் போனவா சம்பை அறுத்தார் அதனைக் கட்டுவதற்கு தேடும் பொருள் அதுவன்றி வேறில்லாமற் போனவாறு போலப் பாசத்தின் வேருகக் காணப்பட்ட தன்னைப் பதியினுள்ளே அடைத்தற்குத் தேடும் பொருள் தானன்றி வேறில்லை. எ-று,
இ- ம் ஆன்மா பதியின் வேரு யினும் கண்ணுெளி யும் சூரியன் ஒளியும் போல வேற்றுமை சிறிதும் தோன்ரு

Page 35
58 நல்வழி
வண்ணம் ஒன்றித்து நிற்கும் நிலையே தான் அதுவது வாய உண்மை நிலை. எ து 38
முப்பதா மாண்டளவில் மூன்றற் ருெருபொருளைத் தப்பாமற் றன்னுட் பெருஞயிற் - செப்புங் கலையளவே யாகுமாங் காரிகையார் தங்கள் முலையளவே யாகுமா மூப்பு. 39
ப-ரை முப்பது ஆம் ஆண்டு அளவில் முப்பது வயதி னளவிலே, மூன்று அற்று (மலம் மாயை கன்மம் என் னும் பந்தம்) மூன்றும் நீங்கி, ஒரு பொருளேத் தப் பாமல் தன்னுள் பெற்ருன் ஆயின்-ஒப்பில்லாத முதற் பொருளாகிய பதியைத் தவரு மல் தன்னுள்ளே (அனு பூதி ஞானத்தினல் ஒருவன்) அடையான யின் செப்புங் கலே அளவே ஆகும்-(அம்முதற் பொருள் அவனுக்கு அவன்) கற்ற சாத்திர ஞானத்தினளவேயாகும். மூப் புக் காரிகையார் தங்கள் முலை அளவே ஆகும்- (அவன் பின் வரும்) முதுமைப் பருவத்திலே (தான் கண்ட) பெண்களுடைய தனத்தினளவாகவே (தளர்ச்சியுடை யவன்) ஆவன் (ஆதலால்). எ-று.
இ-ம் அநுபூதிஞானம் நிட்டையினலல்லது பெறப் படாமையாலும், நிட்டை உடம்பும் அறிவும் வளர்ச்சி யடைந்த முதுமைப் பருவத்திற் சித்திக்கமாட்டாமை யாலும் ஞான சாரியரை அடைந்து ஞான சாத்திரங் களைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கையும் இளமைப் பருவத்திற்ருனே செய்தல் வேண்டும். எ-ம். 39
தேவர் குறளுந் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழு முனிமொழியுங் - கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர். 40

நல்வழி 59
U-sho G561 fi குறளும் - திருவள்ளுவநாயன ருடை திருக்குறளும். திருநான்மறை முடிவும் - சிறப்புப் பொருந்திய நான்கு வேதங்களின் முடிவாகிய உப நி!-தங்களும், மூவர் தமிழும்- (திருஞானசம்பந்த மூர்த்தி நாயனர், திருநாவுக்கரசு நாயனர் சுந்தரமூர்த்தி நாயனர் என்னும்) சமயகுரவர் மூவருடைய (தேவார மாகிய) தமிழ்வேதமும் முனிமொழியும் -வியாச முனிவ ருடைய வேதாந்த சூத்திரமும், கோவை திருவாசக மும்- (திருவாதவூரடிகளுடைய) திருக்கோவையார் திருவாசகங்களும், திருமூலர் சொல்லும் - திருமூல நாயனருடைய திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறித்த வாக்கியங்களென்று அறிவாயாக. a t-Oil:
இ-ம்: திருக்குறள் முதலிய நூல்களெல்லாம் வேறு வேறு வாக்கியங்களாகத் தோன்றினும் பதியிலக்கண மும் பசுவிலக்கணமும் பந்தவிலக்கணமும் முத்தியிலக் கணமும் ஆகிய இவைகளை ஒரு தன்மையாகவே அறிவிக்கும் நூல்களாம். எ-ம்
உபநிடத மெனினும் வேதாந்த்மெனினும் வேதாந்த சிரசெனினும் பொருந்தும் வேதாந்த சூத்திரமெனி னும் பிரம மீமாஞ்சையெனினும் உத்தர மீமாஞ்சை யெனினும் பொருந்தும்.
(முனிமொழியும் கோவை திருவாசகமும் என்ப தற்கு துறவியாகிய மாணிக்கவாசக சுவாமிகள் பாடிய யருளிய திருக்கோவையாரும் திருவாசகமும் எனப் பொருள் கொள்ளலுமாம்). 4G
wassagawiwambassaf

Page 36


Page 37