கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவஞான சித்தியார் சுபட்ச வசனம்

Page 1
வஞான சித்தி
கபட்ச
Revi, K. S. M.
寰、壹E蚤
 
 
 
 
 
 
 

量。

Page 2

சிவஞான சித்தியார்
சுபட்ச வசனம்
விற்பனை உரிமை
காந்தாகம்
மறவன்புலவு 834 அண்ணா சாலை சாவகச்சேரி சென்னை 600 002 தொலைபேசி: 834505

Page 3
முதற்பதிப்பு: 93 இரண்டாம் பதிப்பு: 1993
விலை:- 25 |-
ஒளிஅச்சுக்கோப்பு, அச்சிடல்:-
காந்தள7கம், 4, முதல்மாடி ரகிசா கட்டடம் 834 அண்ணாசலை, சென்னை - 600 002. தொலைபேசி: 834505

சிவஞான சித்தியார் சுபட்ச வசனம்
By
ReV. K.S. MURUGESU
N.M. SAVERIMUTTU & SONS PRINTERS, JAFFNA
93.
விலை சதம் 50

Page 4
சிவஞான சித்தியார்
சுபட்ச வசனம்
க.சா. முருகேசுப் போதகரால்
எழுதப்பட்டு
யாழ்ப் பானம் நீ.மு. சவிரிமுத்து அன்சன்ஸ் அச்சியந்திர சாலையில் அச்சிடப்பட்டது
9 3 இப்புத்தகம் அச்சிடுவதற்குப் பணவுதவிசெய்த
பிரபுக்களுக்குஞ் சிநேகிதருக்குந் நன்றி கூறுவது எனது கடமை.

உள்ளே
இரண்டாம் பதிப்பு அணிந்துரை
முகவுரை முதலாஞ் தத்திரம் இரண்டாஞ் துத்திரம் உலகத் தோற்றமும் ஒடுக்கமும் மூன்றாம் தத்திரம் நான்காம் தத்திரம் ஐந்தாம் தத்திரம் ஆறாம் தத்திரம் ஏழாம் தத்திரம் எட்டாம் தத்திரம் ஒன்பதாம் தத்திரம் பத்தாம் தத்திரம் பதினொன்றாம் தத்திரம் பன்னிரண்டாம் தத்திரம் அரும்பத விளக்கம்
19
29
36
37
44
4 5
47
48
あ 5
6 0.
62
66
68

Page 5
அணிந்துரை
ஞானமணி, ஞானத்தமிழாகரர்
முனைவர் வை. இரத்தினசபாதி, எம்.ஏ., பி.ஓ.எல்.பிஎச்.டி முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர் சைவசித்தாந்தத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
மறைத்திரு க.சா. முருகேசுப் போதகரால் எழுதப் பெற்று, 1931-ல் பதிப்புச் செய்யப்பெற்ற 'சிவஞான சித்தியார் சுபட்ச வசனம்’ என்னும் அரிய நூலைப் பார்க்கவும் படிக்கவும் ஆயநிலை திருவருளால் வாய்க்கப் பெற்றது. இந்நூல் மறுபதிப்பாக 1993-ல் வெளிவர இருப்பதைப் பார்த்துப் பெருமகிழ்வெய்தினேன்.
'பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியச் சித்தியிலே
ஒர்விருத்தப் பாதி போதும்’
என்ற குருவசனத்துக்கு ஏற்ப விளங்கும் 'சிவஞான சித்தியார்’ என்ற நூலின் சுபக்கப் பகுதியை மிகத் தெளிவான முறையில் எளிய தமிழ்நடையில் எழுதியுள்ள ஆசிரியரின் பணி போற்றுதற்குரியது. h−
கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த போதகராயிருந்தும் சைவ சித்தாந்த நுண்பொருளை மிகத் தெளிவாக உணர்ந்ததோடன்றி, அனைவரும் எளிய முறையில் படித்துப் பயன்பெறும் வகையில் 1931-ஆம் ஆண்டி லேயே எழுதி வெளியிட்ட அவர்தம் தொண்டு பாராட்டு வதற்குரியது.
சைவசித்தாந்த மரபு முறைப்படி, இந்நூலின் ஆசிரியர் சிவஞானபோதம், சிவஞானசித்தியார், சிவப் பிரகாசம் என்ற மூன்று நூல்களையும் சைவசித்தாந்த முதன்மை நூல்களாகக் கொண்டதோடன்றி, சிவஞான சித்தியாரின் பொருள் செய்ததில் மிகவும் ஈர்க்கப்பெற்று, அந்நூலின் சுபக்கப் பகுதியைச் சூத்திர முறைப்படித் தெளிவாக எழுதும்முறை போற்றத்தக்கது.
சிவஞானசித்தியாரின் சுபக்கப் பகுதிப் பொருளை முதலாம் தத்திரம் முதலாகப் பன்னிரண்டாம் தத்திரம் வரையில் முறைப்படுத்தி நிறுத்தித் தெளிவாக எழுதியுள்ளார்.

முதலாம் தத்திரத்தில் கடவுள் உண்மைக் கருத்தை யும், கடவுளின் அருவம், உருவம், அருவாரூபம் ஆகிய கருத்தையும் சிவசத்தி இணைப்பையும் மிகத்தெளிவாக, சைவசித்தாந்திகளும் வியந்து போற்றும் வகையில் விளக்கியுள்ளார்.
இரண்டாஞ் தத்திரத்தில் வினைக்கொள்கையையும் அத்துவிதம் என்பதன் பொருளையும், ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களின் விளக்கங்களையும் நூலின் மரபுமுறை வழுவாமல் அமைத்துள்ளார்.
உலகத் தோற்றமும் ஒடுக்கமும் என்று தலைப்பில் சைவசித்தாந்த அடிப்படைக் கொள்கையாகிய முப்பத் தாறு தத்துவங்களை மிகத்தெளிவாக விளக்கியுள்ளார். மூன்றாஞ் தத்திரத்தில் ஆன்மா உண்டென்பதை ஆட்சேபம், சமாதானம் என வரையறை செய்துகொண்டு விளக்குகின்றார்.
நான்காம் சூத்திரத்தில் ஆன்மாவின் இயல்பை விளக்கி, ஆன்மாவின் பல்வேறு அவத்தைகள் பற்றித் தெளிவாக விளக்கியுள்ளார். பஞ்சகோசங்களைப்பற்றி ஆசிரியர் மிக நுட்பமாக விளக்கும்முறை போற்றத் தக்கது. •
இனி ஐந்தாஞ் சூத்திரத்தில் திரோதான சத்தியின் இயல்பை விளக்கி, ஆறாஞ் தத்திரத்தில் பதிப்பொருளி லக்கணத்தைச் சைவசித்தாந்தத்தின் வழிநின்று, அளவை யாற் பிறழாமல் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
ஏழாஞ் சூத்திரத்தில் சாதனங்களைச் சாதித்துப் பெறுவதற்குரிய ஆன்மாவே என்பதை விளக்கி, எட் டாம் தத்திரத்தில் தீட்சையின் பிரிவுகளை மிகத்தெளி வாக விளக்குகின்றார். இப்பகுதியில் ஆறத்துவாக்களின் விளக்கமாக ஆசிரியர் கூறியிருக்கும் செய்திகள் மிக நுட்பமானவை. சாதகனுக்கன்றி மற்றையோரால் விளக்க முடியாத பல செய்திகளை ஆசிரியர் விளக்கியிருப்பது வியத்தகு பேரருட் செயலாம்.
ஒன்பதாம் சூத்திரத்தில் ?ர்சஞ்ான, பசுஞான, பதிஞானங்களின் இயல்பைத் தெளிவாக விளக்கி, திரு வடி ஞானத்தால்மட்டுமே ஆன்மாவானது தன்னறிவில் சிவத்தை அறியக்கூடும் என விளக்கியிருப்பது சைவசிக்

Page 6
தாந்தச் செந்நெறியை ஆசிரியர் தெளிவாக விளங்கிக் கொண்டிருப்பதற்கு உற்ற சான்றாகும்.
பத்தாம் தத்திரத்தில் பெத்தநீக்கமும் முத்திப்பேறும் இவையென விளக்கி, பதினொன்றாம் தத்திரப் பொரு ளாகக் காணும் உபகாரம் காட்டும் உபசாரம் என்பதை விளக்கி, இறைவனின் அத்துவிதக் கலப்பை மிகத் தெளி வாக விளக்குகின்றார். −
பன்னிரண்டாம் தத்திரப் பொருளாக ஆசிரியர் சீவன்முத்தர் இயல்பை விளக்குகின்றார்.
பிற்சேர்க்கையாக அமைந்துள்ள அரும்பத விளக்கம் மிகவும் பயனுடைய ஒன்று. தெளிவான பொருள் எழுதப்பெற்றுள்ளது.
பொதுமை நிலையிலும் இறப்பு நிலையிலும் இந் நூலைப் படிக்கும்போது வேற்று மதத்தைச் சார்ந்த ஒருவரால் எழுதப்பெற்றது என்ற உணர்வே எழாதவாறு, ஒரு துறைபோகிய சைவசித்தாந்தியால் எழுதப்பெற்றது போன்ற உணர்வே மிகுமாறு அமைந்துள்ள முறை போற்றத்தகுவதொன்று.
சைவசித்தாந்த நுட்பம் தழுவிய இந்நூலைச் சைவ சித்தாந்திகளும் படித்துப் பயன்பெறவேண்டும் என்பது என் அவா. செம்மையாகவும் எளிமையாகவும் கருத்துப் பிறழாமலும் எழுதப்பெற்றுள்ள இச்சைவசித்தாந்த உரை நடைநூல் சைவசித்தாந்த உலகிற்கு அணிசெய்யும் அருள் நலம் கனிந்த செம்பொருள் நூலாம் எனல் தேற்றம்.
எளிய இனிய இச் சைவசித்தாந்த நூல்ன் ஆசிரியர் எல்லாவகையாலும் போற்றப்படுவதற்குரியவர். அவரது இனிய தொண்டானது சைவசித்தாந்த நெறிக்கு அணியும் செம்மையும் சேர்ப்பதாகும்.
வாழ்க ஆசிரியர். வளர்க அவர்தம் தொண்டு.

முகவுரை தமிழ்ப் பாஷையிலுள்ள பதினாலு சைவசித்தாந்த சாஸ்திரங்களுள் 'சிவஞான போதம்" "சிவஞான சித்தியார்’ ‘சிவப்பிரகாசம்’ என்னும் மூன்றும் மிக விசேஷமான நூல்கள். இவை மூன்றனுள்ளும் சிவஞான சித்தியார் மிகச் சிறந்தது. 'பாரினுள்ள நூலெல்லாம் பார்த்தறியச் சித்தியிலே ஓர் விருத்தப்பாதிபோதும்’ என்னும் சிவபோகசார நூலுடையார் திருவாக்கு அந் நூலின் சிறப்பிற்குப் போதிய சான்றாகும். அதைக் கற் பவர்கள் சைவசித்தாந்தத்தைப் பற்றி மாத்திரமல்ல, மற் றைச் சமயங்களையும்பற்றி அறியத்தக்கவர்களாவார்கள். அதில் “பரபட்சம்’ ‘சுபட்சம்' என இரு பிரிவுகள் உள்ளன. முன்னையதில் "லோகாயதம்' முதலிய புறச் சமயங்கள் மறுக்கப்பட்டுள்ளன என்றும் பின்னையதில் சைவசித்தாந்தமே சமயங்களெல்லாவற்றுள்ளும் சிறந்த தாக நாட்டப்பட்டுள்ளது என்றுங் கூறுவர்.
'சிவஞான சித்தியார்’ என்னும் இவ்வரிய நூலை யியற்றியவர் “சகலாகம பண்டிதர்' என்று அழைக்கப் படும் அருணந்தி சிவாசாரியார். இவர் ஏறக்குறைய அறநூற்றைம்பது வருடங்களுக்குமுன் தென்னிந்தியாவிலே 'திருத்துறை' என்னும் ஊரில் இருந்தவர்; தமிழ், சமஸ் கிருதம் என்னும் இருபாஷைகளிலும் வல்லவர். சிவஞான போதத்திற்கு ஆசிரியர் ஆகிய மெய்கண்ட தேவரது சீஷருள் ஒருவர். சிவஞானசித்தியார் மிக விரிவும் ஆழமு மானது; செய்யுள்நடையில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு ஆறு உரைகள் இருந்தும், அவற்றின் உதவியைக் கொண்டு இதை விளங்கிக்கொள்வது வெகு பிரயாசம்; ஆதலினால் இதன் சாரத்தை இலகுவான பாஷையில் எழுதுவது பலருக்கு நன்மையாய் இருக்கும் என்பதற்குச் சந்தேக
மில்லை.
கிறிஸ்தவர்களாகிய நாம் சைவருக்குட் சுவிசேஷ ஊழியஞ் செய்கின்றமையால் சைவசித்தாந்த சாஸ்திரத் தைப்பற்றி நாம் நம்மாலியன்றளவு அறிதல் நமக்கு அதிக பிரயோசனமாயிருக்கும். இச்சிறு புஸ்தகத்திற் பல வழுக் கள் இருக்குமென நினைக்க இடமுண்டு. அவற்றைக் காண்பவர்கள் அவற்றைக்குறித்து எனக்கு எழுதுமாறு அவர்களைத் தயவாய் வேண்டிக்கொள்ளுகின்றேன். என் வேண்டுகோளின்படி செய்பவர்களுக்கு நான் மிகவுங் கடமைப்பட்டவனாயிருப்பேன்.
- க.சா. முருகேசு.

Page 7
முதலாஞ் சூத்திரம்
சிவஞானசித்தியாரில் பன்னிரண்டு தத்திரங்கள் உள்ளன. முதற்துத்திரத்தில் மூன்று விஷயங்கள் நாட்டப் படுகின்றன. அவையாவன:- 1. கடவுள் ஒருவருளர். 2. அவர் உலகம் அழிந்தபின் திரும்பவும் அதைச் சிருஷ் டிப்பர். 3. உலகத்தில் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலும் நடைபெறுகின்றன. பிரமா சிருஷ்டிப்பவர்; விஷ்ணு காப்பவர்; சிவன் அழிப்டவர். அழிப்பவராகிய சிவனே முழுமுதற்கடவுள்; அவர் ஒருவரே அநாதிமலமுத்தர் அல்லது பூரண பரிசுத்தர்.
1. கடவுள் ஒருவர் உளர். உலகத்திலே மேற்சொல்லிய முத்தொழிலும் நடைபெறுகின்றமையால், அவற்றை நடத்துவதற்குச் சர்வஞானம், சர்வவல்லமை, சர்வவியா பகம் முதலிய திவ்விய இலட்சணங்கள் பொருந்திய கடவுள் ஒருவர் இருத்தல்வேண்டும். உலோகாயத மதத் தினர் நாஸ்திகர்; கடவுளும் ஆன்மாவும் மறுமையும் இல்லையென்று சாதிப்பவர்கள். அவர்கள் கடவுள் ஒருவர் உளர் என்பதற்கு விரோதமாய்ச் செய்யும் ஆட் சேபங்களாவன:
1 . உலகம் அநாதி, ஆதலினால், அதில் முத் தொழில்களும் நடைபெறுகின்றன என்று சொல்வது சரியல்ல. அது ஏதோ ஒரு காலத்தில் தோன்றினது அல்ல; எப்பொழுதும் உள்ள பொருள். அது ஒருபோதும் அழியாது.
2. உலகத்திற்குத் தோற்ற நாசங்கள் உண்டென்பதை ஒப்புக்கொண்டாலும், அவை அதற்கு இயல்பென்றே சொல்லவேண்டும்.
3. அவை பிருதுவி, அப்பு, தேயு, வாயு என்னும் நான்கு பூதங்களின் செயல்கள். பூதங்கள் நான்கும் அநாதி. வாயு மற்றைப் பூதங்களை நிலைநிறுத்தித் தானும் அவற் றின் மத்தியில் நிலைபெறும். தேயு மற்றைப் பூதங்களை அழித்துத் தானும் அழியும். அப்பு மற்றைப் பூதங்களைத் தோற்றுவித்துத் தானும் அவற்றின் மத்தியில் தோன்றும்.

சிவஞான சித்தியார் - கபட்ச வசனம் S
பிருதுவி மற்றைப் பூதங்கள் தத்தமக்குரிய பயன்களைக் கொடுக்கச்செய்து தானும் பயன்படும். ஆதலினால், கடவுள் ஒருவர் உளர் என்பது மிகை.
மறுப்பு. 1. உலகத்திலே முத்தொழில்களும் நடைபெறு கின்றன என்பதற்குப் பிரத்தியட்சமே போதிய பிரமாணம். சரம், அசரம் என்னும் இருவகைப் பொருட்களும் தோன் றிக் கொஞ்சக் காலம் நின்று பின் அழிகின்றன என்பதை நாம் கண்கூடாய்ப் பார்க்கின்றோம்.
2. தோற்றமும் நாசமும் ஒன்றற்கொன்று மாறான குணங்களாயிருக்கின்றமையினால், அன்வை உலகத்திற்கு இயல்பு என்று சொல்வது பொருந்தாது.
3. முத்தொழிலும் அநாதியாய் உள்ள நான்கு பூதங் களின் செயல் என்று சொல்லுவதற்கு ஆதாரமில்லை. 'அப்பு' மற்றைப் பூதங்களைத் தோற்றுவித்துத் தானும் தோன்றுமென்றும், வாயு மற்றைப் பூதங்களை நிலை நிறுத்தித் தானும் நிலைபெறும் என்றும், சொல்வது யுத்திக்குப் பொருந்தாது. அப்பு, தான் தோன்று முன் மற்றைப் பூதங்களைத் தோற்றுவிப்பதும், வாயு, தான் நிலைபெறு முன் மற்றைப் பூதங்களை நிலைநிறுத்துவதும் அசாத்தியம். ஆதலினால், கடவுள் ஒருவர் உளர் என் பதை மறுக்க நியாயமில்லை.
1. புத்த சமயத்தவரில் ஒருசாரார் பொருட்களெல் லாம் முற்கணத்திற் றோன்றிப் பிற்கணத்தி லழிகின்றமை யால், ஒரு பொருளாயினும் நிலையுள்ளதல்லவென்றும் நிலத்திலிட்ட வித்து கெட்டபின் அதிலிருந்து முளை தோன்றுவதுபோல, முற்கணத்திற் றோன்றிய பொருள் கெட்டபின், அதிலிருந்து அதைப் போன்ற வேறொரு பொருள் தோன்றுகின்றது என்றும் சொல்லுகின்றனர்.
2. புத்த சமயத்தவரில் இன்னொருசாரார் இதை ஒப்புக்கொள்வதில்லை; ஏனெனில், தோன்றும் பொருள் உள்பொருளாய் அல்லது இல்பொருளாய் இருத்தல் வேண்டும். அஃது உள்பொருளாயின் அது எப்பொழுதும் உள்பொருளாம். அப்படிப்பட்ட பொருள் எங்ங்ணம்

Page 8
6 க.சா. முருகேசுப் போதகர்
தோன்றும்? அஃது இல்பொருளாயின் அது முயற்கோடு போல எப்பொழுதும் இல்பொருளாம். ஆதலினால், தோன்றும் பொருள் எதுவோ அது உள்ளதுமன்றி இல்லதுமன்றி அநிர்வசனமாய் நிற்கும் பொருள் என்பர்.
மறுப்பு 1. உள்ளதல்லதும் இல்லதல்லதுமான பொருள் ஒன்றுமில்லை. ஒவ்வொருபொருளும் உள் பொருளாய் அல்லது இல்பொருளாய் இருத்தல்வேண்டும். உள்பொருளும் தோன்றாது; இல்பொருளும் தோன்றாது. தோன்றும் பொருள் காரியம். அது தனக்குரிய காரணத் தினின்று தோன்றும்.மண்ணினின்று கடம்தோன்றுவதன்றிப் படந்தோன்றாது. நூலில் நின்று படந்தோன்றுவதன்றிக் கடம் தோன்றாது. கடம் மண்ணிலும் படம் நூலிலும் துருக்குமரூபமாய் அடங்கியுள்ளன. கடம் மண்ணினின்று தானாய்த் தோன்றாது. குயவனது செயலினாற் றோன்றும். அது போல உலகமானது தனக்குரிய காரணத்தினின்று தானாய்த் தோன்றாது. கடவுளின் செயலாற் றோன்றும். ஆனபடியால், கடவுள் ஒருவர் உளர் என்பது நிச்சயம்.
சமண சமயத்தவரும் புத்த சமயத்தவரைப் போலவே கடவுளில்லையென்று சாதிப்பவர்கள். அவர்கள் தோன்றும் பொருள் உள்பொருளாயும், இல்பொருளாயு மிருக்கு மென்பர். இக் கொள்கை சரியல்ல. ஏனெனில், ஒரு பொருள் உள்பொருளாயும் இல்பொருளாயுமிருக்காது. ஒருபொருள் உள்பொருளாயும் இல்பொருளாயு மிருக்கு மென்பதன் கருத்து அது காரண ரூபமாயுண்டு. காரிய ரூபமாயில்லை என்றும் சொல்வது பொருந்தாது. ஏனெ னில், காரணம் உள்பொருளாயின் காரியமும் உள் பொருளாம். காரியம் காரணத்தில் தக்குமரூபமாயிருந்து, தோன்றும்போது ஒருகருத்தாவின் செயலினாற் றோன்றும்.
1. மீமாம்சகர் நான்கு வேதத்தையும் ஏற்றுக்கொண் டாலும், கடவுள் ஒருவர் உண்டென்பதை மறுக்கின்றனர். தோற்றமும் நாசமும் அவயவம் உள்ள தேகத்துக்கன்றி அவயவம் இல்லாத உலகத்திற்கு இல்லையென்றும், ஆன படியால் உலகம் அநாதியென்றும் கூறுவர். இதுவும் தவறு. தேகத்திற்குப் போலவே உலகத்திற்கும் அவயவம்

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 7
உண்டு. பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் பஞ்சபூதமும் அதன் அவயவமாம்.
2. தேகத்திற்குப் போலவே உலகத்திற்கும் அவயவம் உண்டென்பது மெய். அது அநாதியென்று வேதங்கூறு வதனால் அது எப்போதாயினும் முழுவதும் அழியும் என்று சொல்வது சரியல்ல என்றும், அதிற்சிலபாகம் அழியச் சிலபாகம் நிற்கு மென்றும் கூறுவர்.
இங்ங்னம் சொல்வதற்கும் ஆதாரமில்லை. ஒரே காலத்தில் விதைக்கும் விதைகள் ஒருங்கே தோன்றி ஒருங்கே வளர்ந்து ஒருங்கே அழிகின்றன. அதுபோல அழியுங்காலம் வரும்போது உலகம் ஒருங்கே அழியும்.
3. ஆட்சேபம்: தோற்ற நாசங்கள் காலத்திலேயே நடை பெறுகின்றமையால் அதுவே கர்த்தா? வேறு கர்த்தா உண்டென்பது மிகை.
மறுப்பு: காலத்திலேயே முத்தொழிலும் நடைபெறு கின்றன என்பது மெய்யாயினும், காலம் அறிவில்லாத பொருளாதலால், அது கடவுளுக்கு ஒரு கருவியன்றி வேறொன்றல்ல.
மீமாம்சகரைப் போல் தார்க்கிகரும் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்கள் உலகம் அழிந்தபின் பரமானுக் கள் தாமே உயிர்களின் கன்மத்தினால் ஒருங்கு சேர்ந்து அதைத் தோற்றுவிக்குமென்பர்.
மறுப்பு: பரமானுக்களுக்கும் கன்மத்துக்கும் அறிவின் மையினால், அவை தாமே உலகத்தைத் தோற்றுவிக்கும் என்பது பொருந்தாது. மேலும், சர்வ சங்கார காலத்தில் சகலமும் அழிவதனால், அணுக்கள் மாத்திரம் எஞ்சி நிற்குமென்று சொல்ல முடியாது.
உலகத்திற்குக் காரணமாகிய அணுக்கள் கெட்டால், அவற்றின் காரியமாகிய உலகம் தோன்றாது என்பதற்கும் ஆதாரமில்லை. அவை மிகச் சிறியன வாயினும், அவற் றிற்கும் அவயவம் உண்டு. அவயவம் உள்ளபடியினாலே அவை ஒன்றோ டொன்று சேருகின்றன. அவயவம்

Page 9
8 க.சா. முருகேசுப் போதகர்
இல்லாவிடிற் சேரமாட்டா. உலகத்திற்குக் காரணம்
அணுக்களல்ல, மாயை. காரணத்திற் காரியம் தக்கும
ரூபமாய் அடங்கியிருத்தலினால், காரியம் ஆகிய உலகம்
அதன் தோற்றத்திற்கு முன் காரணமாகிய மாயையில் அடங்கி யிருந்தது. ஆகவே, மாயை அநாதியாயின் உலக
மும் அநாதி என்று சொல்வது தவறல்ல. கடவுள் அதைக்
காலத்திற்குக் காலம் தோற்று விக்கின்றமையால், அதற்கு
ஆதியுண்டென்றும் நாம் சொல்லலாம்.
சாங்கியரும் கடவுள் இல்லை யென்பவர்கள்; அவர் கள் மாயையே உலகத்தைத் தோற்றுவிக்கும் என்றும்; அதிணின்றும் உலகத்தைத் தோற்றுவிப்பதற்குக் கடவுள் ஒருவர் அவசியம் இல்லையென்றும் கூறுகின்றனர்.
சாங்கியர், மாயையும் உயிரும் அநாதியென்றும் மாயை உயிரின் சந்நிதில் தன்காரியத்தைப் பிறப்பிக்கும் என்றும் சொல்வர். இக்கொள்கை ஏற்றற்பால தொன்றல்ல. ஏனெனில், மாயைக்கு அறிவில்லை. உயிரோவெனில் தனுகரண மாதியன இன்றி யாதாயினும் ஒன்றை அறிய அல்லது செய்யத்தக்க ஆற்ற லுடையதல்ல. ஆதலால், உயிரின் பொருட்டு மாயையினின்று தனுகரண மாதிய வற்றைத் தோற்றுவிக்கக் கடவுள் ஒருவர் உளர் என்பது தானேபோதரும்.
ஒவ்வொரு காரியத்திற்கும் மூன்று வகையான காரண முண்டு. அவையாவன:- 1. முதற்காரணம். 2. துணைக் காரணம். 3. நிமித்தகாரணம். குடத்திற்கு முதற்காரணம் மண். துணைக்காரணம் தண்டசக்கரம். நிமித்தகாரணம் குயவன். அதுபோல உலகத்திற்கு முதற்காரணம் மாயை, துணைக்காரணம் சிவசத்தி, நிமித்த காரணம் சிவன்.
சுத்தம் , சுத்தா சுத்த்ம் , அசுத்தம் எனப் பிரபஞ்சம் மூ வகைப்படும். இவை மூன்றற்கும் முறையே சுத்த மாயையும் அசுத்த மாயையும் பிரகிருதி மாயையும் முதற் காரணமாம். சுத்தமாயையானது ஆணவ மலத்துடனும் கன்ம மலத்துடனும் சேராது மற்றை யிரண்டு மாயை களையும் வியாபித்து அவற்றிற்கு மேலாய் நிலைபெறும். அசுத்த மாயை யானது அம்மலங்களுடன் கலந்திருக்கும்.

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 9
அசுத்த மாயையின் விகாரமே பிரகிருதி மாயையன்றி வேறொன்றல்ல.
சுத்த மாயையினின்றும் தோன்றும் பொருட்கள் அல்லது தத்துவங்கள் 1 . வைகரி 2. மத்திமை 3. பைசந்தி 4. துக்குமை என்னும் நான்கு வாக்குகள். '
2. மந்திரேசுரர், மந்திர மயேசுரர், அணுசதாசிவர் முதலிய தேவர்களுக்குரிய சுத்த அத்துவாக்கள். அவை யாவன:- 1. வன்னம் அல்லது எழுத்து 2. பதம் அல்லது சொல் 3. மந்திரம் 4. புவனம் அல்லது உலகம். 5. தத் துவம் 6. கலை என்னும் ஆறுமாம்.
3. சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் ஐந்து சிவதத்துவங்கள் அல்லது சுத்த தத்துவங்கள்.
1. வைகாரியாவது பேசுபவன் செவிக்கும், கேட்பவன் செவிக்கும் கேட்கப்பட்டு, அவன் நினைத்த பொருளைச் சொல்லுஞ் சொல்.
2. மத்திமையாவது மெல்லிய ஒசையாய்க் கண்டத் திற் றொனிக்கும் சொல்.
3. பைசந்தியாவது மனத்தில் பிறக்குஞ் சொல்.
4. தக்குமையாவது மற்றைய மூன்று வாக்குகளுக்கும் காரணமாகிய சொல். அவை இதன் விகாரமேயன்றி வேறல்ல. அவற்றிற்கு அழிவுண்டு. இதோ எனில் நித்திய மானது. சத்தப் பிரமவாதிகள் மேற்சொல்லிய நான்கு வாக்குகளையும் பிரமம் என்பர். சைவ சித்தாந்திகளோ வெனில், அவற்றைச் சுத்த மாயா காரியங்கள் என்பர். அவை ஆன்மாக்களுக்கு அறிவுண்டாக்குவதற்கு இன்றி யமையாச் சிறப்புடையன. அங்ங்னமாயினும் அவை முத்திக்குத் தடையாகலால், அவையும் ஆன்மாவை விட்டு நீங்கல் வேண்டும். அவை ஆன்மாவை விட்டு நீங்க சிவஞானம் பிறக்கில் அதற்கு (ஆன்மாவுக்கு) முத்தி யுண்டாம்.

Page 10
lo க. சா. முருகேசுப் போதகர்
அருவமான மாயையில் நின்று உருவமான பிர பஞ்சம் தோன்றிற்று. சுத்தமாயையிற் கிருத்தியம் சிவ னால் நேரே செய்யப்படும். அசுத்தமாயை பிரகிருதி மாயை என்பவற்றிற் கிருத்தியம் முறையே அநந்தர் சீகண்ட உருத்திரர் என்பவர்கள் மூலமாய்ச் செய்யப்படும். சிவன் பிரபஞ்சத்தினுடன் எள்ளுக்குள் எண்ணெய்போல உள்ளும் புறம்பும் வியாபித்திருப்பதனால், அவர் அதனு டன் ஒன்றாயும், அவர் சித்தும் அது அசித்தும் ஆதலால் வேறாயும் அதை நடத்துவதனால் உடனாயும் நிற்பர்.
அருவமாயிருப்ப தெதுவோ அது அவிகாரமாயு
மிருக்குமென்றும், அருவமும் அவிகாரமுமான மாயை
யில் நின்று உருவமும் விகாரமுமான பிரபஞ்சம் தோன் றாது என்றும் மாயாவாதிகள் கூறுவர். அவர் கூறுமிவ்
வாட்சேபம் அவர் கொள்கையுடன் மாறுபடுகின்றது.
எங்ங்னமெனில், அவர் அருவமும் அவிகாரமுமாகிய
ஆகாயத்தினின்று உருவமும் விகாரமுமான வாயு முதலிய
பூதங்களும் முகில்களும் மின்னல்களும் இடிகளும் இன்னும் இவைபோல்வன பிறவும் தோன்றும் என்பர்.
குயவனானவன் குடம் முதலியவற்றை வனையும் போது நிலத்திலே நிற்றல் வேண்டும். சிவன் பிரபஞ் சத்தைச் சிருட்டிக்கும் போது ஏதோ ஒன்றில் நின்று சிருஷ்டித்தல் வேண்டும். அப்போது அவர் நிற்றற்குரிய இடம் எது?
மறுமொழி: - சிவன் வாக்கு மனாதீதராதலால் அவருக்கு நிற்க இடம் அவசியமில்லை. பிரபஞ்சத்தில் காலத்தினால் முத்தொழிலும் நடைபெறுகின்றன என் பதை எல்லாரும் ஒப்புக் கொள்ளினும், அது நிற்கும் நிலையைப்பற்றி ஒருவரும் அறியார். அதுபோல சிவன் சிருஷ்டிக்கும்போது நிற்கும் நிலையை அறிய நம்மால் ஆகாது. காலம் எல்லாக்காரியங்களுக்கும் தான் ஆதார மாயும், தனக்கோர் ஆதாரமின்றியும் நிற்றல்போலச் சிவ சத்தியும் உலகத்துக்கு ஆதாரமாயும் தனக்கோராதார மின்றியும் நின்று முத்தொழிலையும் நடத்தும். சிவன்

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம்
வாக்கு மனாதீதராயிருப்பது போல, அவரது சத்தியும் வாக்குமனாதீதமானது.
காலமானது அதன் தொழில் வேறுபாட்டால், செல் காலம் நிகழ்காலம் வருங்காலம் முதலியவைகளை அடை வதுபோல், சிவனுந் தமது தொழில் வேறுபாட்டால் பலவகையான விகாரங்கள் அடைவர் என்றல்லவா சொல்லல் வேண்டும்? அங்ங்னம் சொல்வது அவரது பெருந்தகைமைக்கு இழுக்காகும்.
விடை:- ஆன்மாவிற்கு சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி என்னும் அவஸ்தைகள் நாள்தோறும் உண்டாவதுபோல, சிவனுக்கும் இலயம், போகம் அதிகாரம் என்னும் அவஸ்தை கள் உண்டாகின்றன. அவஸ்தைகளினால் ஆன்மா துடக் குறுமாறு போல் சிவனுந் தமது அவஸ்தைகளினால் துடக் குறுகின்றனர். வாஸ்தவத்தில் மேற்சொல்லிய அவஸ்தை களினால் அவர் துடக்குறுகின்றிலர். எங்ங்னமெனில் ஒருவன் கற்ற கல்வியானது அவனுடைய ஆன்மாவிலடங் கிப் பின் றோன்றும்போது ஆன்மா துடக்குறாதிருப்பது போல், சிவனும் தமக்குரிய அவஸ்தைகளினால் துடக் குறார். இவ்வவஸ்தைகள் காரணமாய் சிவன், இலயசிவன், போகசிவன் அதிகாரசிவனென அழைக்கப்படுவர். சங் காரஞ் செய்கையில் இலயசிவனென்றும், போகம் அனு பவிக்கையில் போக சிவனென்றும், அதிகாரம் செலுத் துகையில் அதிகாரசிவனென்றும் அழைக்கப்படுவர். போகசிவனெனினும் சதாசிவனெனினும் ஒக்கும். அநந் தரும் சீகண்ட உருத்திரரும் அதிகாரசிவன்களெனப்படுவர்.
ஒடுங்கிய உலகம் திரும்பவும் தோன்றுவதற்குக் காரணம் யாது? உலகம் ஒடுங்கும்போது உயிர்கள் யாவும் முத்தி யடையமாட்டா. முத்தியடையாத உயிர்கள் முத்தியடை வதற்கு மலபாரிபாகம் இன்றியமையாச் சிறப்புடையது. அப்பரிபாகத்தின் பொருட்டு ஒடுங்கிய உலகம் திரும் பவும் தோற்றுதல் அவசியம் என்பது வெளிப்படை. அங்ங்னமாயின், உலகம் ஏன் ஒடுங்க வேண்டும்? ஒடுங் காது எப்பொழுதும் இருக்கலாமே. விடை:- உலகம் ஒடுங்காவிடில் பிறந்திறந் துழல்வதனாலுண்டாகும் இளைப்பு உயிர்களைவிட்டு நீங்காது. பகற்காலத்திலே

Page 11
2 சு.சா. முருகேசுப் போதகர்
பலவகையான வேலை செய்வதனால் உண்டாகும் இளைப்பு இராக்காலத்திலே நித்திரை செய்வதனால் நீங்குவதுபோல, உலகத்திலே பிறந்திறந் துழல்வதனாலுண்டாகும் இளைப்பு உலகம் நெடுங்காலம் ஒடுங்கியிருப்பதனால் நீங்கும். பகலும் இரவும் நமக்கு அவசியமாய் இருத்தல்போல, உலகத்தோற்றமும் ஒடுக்கமும் நமக்கு அவசியம். உலக மானது காலத்துக்குக் காலம் அநாதியே ஒடுங்கியும் தோன்றியும் வருகின்றது. அது எத்தனைமுறை ஒடுங்கியதென் றும், எத்தனைமுறை தோன்றியதென்றும் சொல்ல முடியாது.
முத்தொழிலும் பெரும்பாரம் என்பதை யார் மறுக் கக்கூடும்? சிவன் ஒருவரே அவற்றையெல்லாம் செய்வ ராயின், அவர் பாரமெய்தி விகாரியாவார் என்னும் குற்றம் அவர்மேற் சாருமல்லவா?
விடை:- முத்தொழில் அவருக்குப் Lu fT UT LID GÜ GU. ஏனெனில், அவர் சர்வ வல்லமையுடையவர். எத் தொழிலும் அவர் நினைத்தவுடனே நடைபெறும் . நாம் ஒரு காரியம் செய்ய வேண்டுமெனில் அந்தக் கரணங்கள்; மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள், கை, கால் முதலிய உறுப்புக்கள் என்னும் கருவிகளினால் செய்தல் வேண்டும். சிவன் சுத்தசங்கற்பர். அவர் தமது கிருத்தியங்கள் அனைத்தையும் சங்கற்பத்தி னால் செய்கின்றவரேயன்றி, கரணங்களினால் செய் கின்றவரல்லர். உலகம் தோன்றக்கடவது என்று அவர் நினைத்தவுடன் உலகம் தோன்றும். அது அழியக்கடவது என்று நினைத்தவுடன் அது அழியும். துரியனது சந்நிதி யில் முத்தொழில் நடைப்ெபறுகின்றனவென்று நாம் அறி வோம். எங்ங்னமெனில், தாமரைப்பூக்கள் மலருகின்றன. காந்தம் அக்கினியைக் காலுகின்றது. நீர் பூமியில் வற்று கின்றது. அப்படியிருந்தாலும் துரியனுக்கு அவற்றால் எவ்விதமான ஆயாசமும் உண்டாவதில்லை. அதுபோலச் சிவசந்நிதியில் முத்தொழிலும் நடைபெறினும் அவற்றால் அவருக்கு ஒருபொழுதும் ஆயாசம் உண்டாகாது. இதி காச புராணங்களில் படைத்தல், காத்தல், அழித்தல் என்பன, முறையே பிரமா, விஷ்ணு, உருத்திரன் என் பவர்களுக்குரியன வென்று சொல்லியிருக்க, இவை மூன்றும் சிவன் ஒருவருக்கே உரியனவென்று சொல்வது

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் S
எங்ங்ணம் பொருந்தும்? மும்மூர்த்திகள் தாம் செய்யுந் தொழில்களுக்கு சுதந்திரர் அல்லர். அவர் புண்ணிய மேலீட்டினால் அத்தொழில்களையும் அவற்றைச் செய் தற்குரிய அதிகார சத்தியையும் பெற்றவர்கள். சிவன் ஒருவரே முத்தொழிலுக்கும் சுதந்திரர், சர்வ சங்கார காலத்தில் மும்மூர்த்திகளும் அழிவெய்துவர். அவர் ஒரு வரே எஞ்சி நிற்பர். அவர்கள் அழியாமலிருந்து தத்தம் தொழில்களைச் செய்வார்களாயின், சங்காரகிருத்தியம் நடைபெறாது. ஆதலால், சிவன் ஒருவருக்கே அவை உரியன என்பது சத்தியம்.
சிவன் முத்தொழிலும் செய்வதற்குக் காரணம் என்ன? சிலர் அவருக்கு அவை லீலை அல்லது திருவிளையாட்டு என்பர். வேறுசிலர் அவற்றிற்கு நோக்கம் பெத்தகாலத்தில் ஆன்மாக்களுக்குச் சுவர்க்கம் முதலிய போகங்களும் பத முத்திகளும், முத்திக் காலத்தில் வீடுபேறும் கொடுத்தல் என்பர், இருசாராருஞ் சொல்வது சரிதான். பிள்ளை களுக்கு விளையாட்டு இலகுவாய் இருத்தல் போலச் சிவ னுக்கு முத்தொழிலும் இலகுவாயிருக்கும். அவருடைய தொழில் அனைத்திற்கும் நோக்கம், உயிர்களின் நன்மையே என்பதற்கு எள்ளளவும் ஆட்சேபம் இல்லை. சங்காரம் உயிர்களின் இளைப்பைத் தீர்க்கவும், சிருஷ்டி மலபாரி பாகம் வருவித்துக் கன்மத்தை நீக்கவும், திதி உயிர்களின் கன்மப்பயனை நுகருவிக்கவும்; திரோபவம் இருவினை யொப்பு வருவித்து மலத்தை முதிர்விக்கவும், அனுக் கிரகம் பாசபந்தத்தை நீக்கவும் செய்யப்படுகின்றன. ஆகவே, பஞ்ச கிருத்தியங்களுக்கும் முக்கிய நோக்கம் அருளே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போற் றெள்ளி தில் உணரப்படும். சைவ நூல்களிற் சில விடங்களில் தொழில்கள் மூன்றென்றும், வேறு சிலவிடங்களில் ஐந் தென்றும் சொல்லப்படுவதற்கு நியாய மென்னவெனில் திரோபவமும் அனுக்கிரகமும் முறையே திதியிலும் சங் காரத்திலும் அடங்குவதனால், முத்தொழில் ஐந்தொழி லின் அடக்கம் என்பதாம். ஐந்தொழில் செய்யுஞ் சிவ னுக்கு வடிவம் அல்லது தேகம் வேண்டும். அவரது வடி வம் என்ன? அவரது வடிவம் அருவம், உருவம், உரு வாரூவம் என்னும் மூன்றுமாம். ஆட்சேபம் : சிவனது

Page 12
4 க. சா. முருகேசுப் போதகர்
வடிவம் உருவம் என்னில் உருவம் எல்லாம் ஒரே இயல் புடையன ஆதலினால், அவர் நம்மைப்போல் பரதந்திர ராய் அல்லது நாம் அவரைப்போல் சுதந்திரராய் இருக்க வேண்டும். சமாதானம்: இங்ங்னம் சொல்வது சரியல்ல. நாம் பாசபந்தமுள்ள பசுக்கள். அற்ப ஞானத்தொழில் முதன்மையுடையவர்கள். சிவனோவெனில், மலநீங்கிய ஆன்மாக்களின் அறிவினின்றுணர்த்தும் பசுபதி. சர்வ ஞானம், சர்வவல்லமை, சர்வமுதன்மை ஆதியாம் திவ் வியகுணங்களுடையவர். ஆதலால், நமது உருவடிவத்திற் கும், அவரது உருவடிவத்திற்கும் உள்ள வித்தியாசம் மிகப் பெரிது. இவ்வித்தியாசத்திற்கு ஏற்ப, நமக்கு ஏக தேச அறிவையுண்டாக்கும் மாயை உருவமும், அவருக்கு மலம்நீங்கிய உயிருக்கு வியாபக அறிவையுண்டாக்கும் சத்தியுருவமும் உரியன. ஆகவே, அவருக்கு உருவம் உண் டாயின் நம்மைப்போல் அவர் பரதந்திரராய், அல்லது அவரைப்போல் நாம் சுதந்திரராய் இருத்தல் வேண்டு மென்று சொல்வது சிறிதும் பொருந்தாது.
ஆட்சேபம்: உருவம் உள்ளது எதுவோ அது அளவுக் குட் பட்டது. அளவுக்குட்பட்ட பொருளுக்கழிவுண்டாக லான், சிவனது உருவடிவம் சத்தியே என்றாலும் அது அழிவெய்தும். அழிவெய்தல் சிவசத்திக்குப் பொருந் தாமையினால், அவருக்குரிய வடிவம் அரு என்று சொல் வதே சரி. சமாதானம்: இதுவுஞ் சரியன்று. சிவன் ஆறத்து வாவையும் கடந்து இருக்கின்றமையினால், அவரது வடி வம் அருவென்று வரையறுத்துச்சொல்ல முடியாது. ஆறத்துவாவுக்குட்பட்ட பொருளியாவும் அரு, உரு, அருவுரு என்னும் மூ வகுப்புள் அடங்கும். அருவப்பொருள் உருவத்தினியல்புடையதாயும், உருவப்பொருள் அருவத் தினியல்புடையதாயும் இருக்கமாட்டாமையினால், அவர் அருவென்று நாம் வரையறுத்துக் கூறினால் மற்றிரு வகையியல்பும் அவருக்கு இல்லையென்று சொல்லவேண் டும். அவர் பசுபாசம் என்னும் பொருட்களின் இயல் புடையவரல்லர், ஆதியந்தமில்தாதவர். ஆதலால், அவர் அரு அல்லது உரு அல்லது அருவுரு என்று வரையறுத்துச் சொல்வது அவரது பெருந்தகைமைக்குச் சிறிதும் பொருந் தாது. அவர் சுதந்திரர். முற்றறிவும் வரம்பில் ஆற்றலு

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் ,
முடையவர். ஆதலால், அவர் தமக்கு வேண்டிய ஒரு திருமேனியைத் தமதாக்கிக்கொண்டருள்வர். அவர் விச்சு வாதிகர், விச்சுவகாரணர், விச்சுவத்திற்கந்தரியாமி, விச் சுவரூபி என்று வேதங்கள் கூறுகின்றன. பிரமவிஷ்ணுக் களிருவரும், அடிமுடி தேடி யறியக்கூடாத அற்புத வடி வம் கொண்டனரென்றும் மும்மூர்த்திகளும் அவருடைய உறுப்பிற்றோன்றினரென்றும் அவருடைய உருவத்தில் தோன்றியவாறே பொருட்கள் உலகத்திலும் தோன்றின வென்றும்; அவரது வடிவத்திலொன்று அர்த்தநாரீசுர வடிவம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. மேலும், அவர்கொண்ட திருமேனிகளிற் சில போகவடிவம் என் றும், சில கோரவடிவம் என்றும், சில யோகவடிவம் என்றும் நாம் அறிவோம். அத்திரு மேனிகள் உயிர் களுக்கு முறையே போகமும் வினைநீக்கமும் முத்தியும் அளித்தற்பொருட்டு அவராற் கொள்ளப்பட்டன. அத் திருமேனிகள் ஒன்றற்கொன்று மாறான குணங்களுடையன வாயிருப்பதனால், அவையெல்லாம் உயிர்களின் பொருட் டுக் கொண்டருளப்பட்டன என்பது வெளிப்படை. பார்வதி திருக்கண் புதைத்த திருவிளையாட்டு இதற்கு நல்ல திருஷ்டாந்தம். ஒரு முறை அவர் தமது நாயகனது வலக்கண்ணையும் இடக்கண்ணையும் வேடிக்கைக்காய்த் தமது திருக்கரங்களினால் பொத்தியருளினர். உடனே உலகம் முழுவதும் இருளில் அமிழ்ந்தினமையால், உயிர் களனைத்தும் தத்தளித்தன. பரமசிவன் உயிர்களில் இரக் கங்கொண்டு தமது நெற்றிக்கண்ணைத் திறந்து வெளிச்சங் கொடுத்து அவற்றையெல்லாம் காத்தருளினர். இத்திரு விளையாட்டிலிருந்து நாம் படிக்கவேண்டிய சத்தியங் களுள் ஒன்று என்னவெனில் துரியன், சந்திரன், அக் கினியென்னும் முச்சுடரும் முறையே அவரது வல இட நெற்றிக்கண்கள் என்பதாம். உயிர்களது போகானுபவத் திற்கும் அவரே காரணர் என்பது அவர் யோகஞ் செய்து கொண்டிருந்தபோது உலகத்தில் நிகழ்ந்த சம்பவம் போதிய சான்றாகும்.
அவர் உருவத்திருமேனி கொண்டதனாலாய பய னென்ன? அவர் அத்திருமேனி கொள்ளாதிருந்தால் வேதாகமங்களும் குருபரம்பரையும் உண்டாயிருக்கமாட்டா.

Page 13
6 க.சா. முருகேசுப் போதகர்
வேதாகமங்கள் மூலமாயன்றி பசு, பதி, பாசம் என்னும்
முப்பொருளது உண்மையியல்பையுணர்ந்து நாம் முத்தி யடைதல் கூடாது. முத்திக்கு அவற்றினுண்மையறிவு அத் தியாவசியம். பிரளயாகலர், சகலர் என்னும் பசுவர்க்கம்
இரண்டற்கும் சிவன் முறையே தேவகுருவாய் முன்னின்றும்
மானுடகுருவை அதிஷ்டித்தும் உபதேசித்தாலன்றி அவற் றிற்கு முத்தி கைகூடாது. சிவனது உருவத் திருமேனி களின் வடிவம் அருள். அவற்றின் தொழில்களும் குணங் களும் கரணங்களும் அருள் கை கால் முதலிய உறுப்புக் களும் புவனபோகங்களும் அருள் உயிர்களின் நிமித்தம் அவற்றையவர் கொண்டருளினர். மேலும், அவையில்லா விடில் பஞ்சகிருத்தியங்கள் நடைபெறமாட்டா உலகமும்
அதிலுள்ள சராசரங்களும் அவருடைய உறுப்புகளில் நின்றே தோன்ற வேண்டும். திதிக்கு அர்த்தநாரீசுரவடிவம்
வேண்டும். திரோபவத்திற்கும் அநுக்கிரகத்திற்கும் முறையே ஊன நடனமியற்றலும் யோகஞ்செய்தலும் வேண்டும்.
அவரது மூன்று வகையான திருமேனியினது நோக்கம்
உயிர்களைப் பிறவிப் பெருங்கடலினின்று தூக்கியெடுத்து முத்திக் கரையில் சேர்த்தலாம்.
சிவனுக்கு மேற்சொல்லிய மூவகைத் திருமேனியன்றி வேறும் மூவகைத் திருமேனிகளுண்டு. அவையாவன: அத்துவத் திருமேனி, மந்திரத் திருமேனி, பஞ்சமந்திரத் திருமேனி என்பன. அத்துவாக்களுக்கும் அவரது திரோ தான சத்திக்கும் நெருங்கிய சம்பந்தமிருப்பதனால் அவை யும் அவருக்குத் திருமேனியென்று உபசாரமாய்க் கூறப் படுகின்றன. ஆறத்துவாக்களுள் மந்திர வடிவம் சிறப் பித்துக் கூறப்படுகின்றது. ஏனெனில், சிவசத்தி மந்திரத் தைச் சுத்தமாயையில் நின்றும் தோற்றுவித்து உயிர்களுக் குப் போகமோட் சங்கள் கொடுத்தருளும் பொருட்டு அவற்றை அதிஷ்டிக்கும். மந்திரவடிவத்திலும் பஞ்ச மந்திரவடிவம் மற்றெல்லா மந்திரங்களுக்கும் முன்றோன்றி னமையால் மிகச்சிறப்பானது.
சிவனுக்கு மாத்திரமன்றிப் பஞ்சகர்த்தாக்களுக்கும் அத்துவ வடிவம் மந்திரவடிவம் உண்டென்று சிவாகமங்கள் கூறினும், அவர்கள் சிவனுக்கு ஒப்பானவர்களல்லர்.

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 7
செனனி முதலிய சிவசத்திகளுள் ஒவ்வொன்று பஞ்சகர்த்' தாக்களிலும் பதிந்து நின்று அவர்கள் கிருத்தியத்தை யியற்று விக்கிறபடியினால், அவர்களுக்கும் இவ்வடிவங்கள் உண் டென்று சொல்லப்படுகின்றது. பஞ்சகிருத்தியங்களையும் பஞ்சகர்த்தாக்கள் செய்யினும், மந்திரி முதலாயினோர்,
அரசனையின்றி ஒன்றும் செய்யும் ஆற்றல் இலராயிருத்தல் போல, அவர்களும் சிவனையின்றி ஒன்றுஞ் செய்யும் ஆற்றலிலர்.
சிவசத்தி ஒன்றே, அரசன் சத்தி, ஒன்றே மந்திரிமார், படைத்தலைவர், காவற்காரர் முதலியுோரினின்று செய் யும் காரிய வேறுபாட்டால், பல வேறுவகைப்படுதல் போலச் சிவசத்தி ஒன்றே பிரமா முதலிய கர்த்தாக்களி னின்று செய்யும் காரிய வேறுபாட்டால் பலவேறு வகைப் படும். பூரணஞானமே சிவசத்தியின் சொரூபமாம். அதன் ஒருகூறு, திரோதானசத்தி எனப்படும். திரோதானசத்தி யானது: இச்சாசத்தி, ஞானாசத்தி, கிரியாசத்தியென மூவகைப்படும். இச்சத்தி மூன்றும் முறையே சிவனுக்கு உயிர்களில் அன்பையும் அவற்றை முத்தியிற் சேர்க்கும் உபாயத்தையும் உலகத்தைச் சிருஷ்டிக்குஞ் செயலையும் உண்டாக்கும். ஆகவே, சிவசத்தியொன்றே பராசத்தி, திரோதானசத்தி, இச்சாசத்தி, ஞானாசத்தி, கிரியாசத்தி யென ஐவகைப்படும். பராசத்தி உயிர்களின் அறிவை மறைக்காது, திரோதானசத்தியோவெனில் அதை மறைக் கும். சிவனைப்போலவே சீவனுக்கும் மேற்சொல்லிய சத்திகள் மூன்றும் உண்டாயினும், அது ஆணவமலத் தினால் மறைக்கப்பட்டிருப்பதனால், அது சிவனது சகாய மின்றி எதையும் அறிய அல்லது செய்யத்தக்க ஆற்ற லுடையதல்ல. ஆதலால், அது போகமோட்சங்களை அவரிடமிருந்தே பெற்றுக்கொள்ளல் வேண்டும். முதல் வன் சிவன், சத்தி, சதாசிவம், மகேசுரம், சுத்தவித்தை என்னும் பஞ்சபேதங்கள் அடைவர். இப்பேதங்கள் எல்லா வற்றிற்கும் இச்சாசத்தி பொதுவாகும். மற்றையிருசத்தி களுள் சிவத்தில் ஞானாசத்தியும், சத்தியில் கிரியாசத்தி யும், சதாசிவத்தில் இவையிரண்டும் சமமாயும், மகே சுரத்தில் கிரியாசத்தி ஏறியும், ஞானாசத்தி குறைந்தும், சுத்தவித்தையில் ஞானாசத்தி ஏறியும், கிரியாசத்தி குறைந்

Page 14
8 க. சா. முருகேசுப் போதகர்
தும் பொருந்தும். இப்பேதங்களுக்குரிய தத்துவங்கள் ஒவ் வொன்றற்கும் அவ்வப்பெயரே உரியது. ஒரு நாடகத்தில் ஒருவனே பலகூத்தும் ஆடுவதுபோலச் சிவன் ஒருவரே இப்பேதங்கள் எல்லாம் அடைகின்றனர். இவை அவ ருடைய சத்தியில் மாத்திரம் காணப்படுகின்றமையால் அவருடைய உண்மையான தன்மை ஒருபோதும் விகார மடையாது. அவர் நிர்விகாரி. பளிங்கு தனக்குப் பக்கத் திலிருக்கும் பொருளின் நிறமுடையதாய்த் தோன்றுமாறு போலச் சிவனுந் தமது சத்தியில் உண்டாகும் பேதம் எல்லாம் தாமாகத் தோன்றுவார். அவர் தோன்றும் போதெல்லாம் சத்தியினிடம் தோன்றுவதன்றித் தனிமை யாய்த் தோன்றுபவரல்லர். அவர் சிவம், சத்தியென்னும் இரு பேதங் கொண்டதனாலேயே உயிர்கள் ஆண் பெண் ணாகப் பிறந்து கூடிக்களித்து மகிழ்ந்து சந்ததியுண்டாக்கு கின்றன. சிவலிங்கமானது இவ்வுண்மைக்கு அறிகுறியாம். சிவன் இவ்விரு வடிவமும் கொள்ளாவிடில் உலகம் ஒரு நிமிஷமாயினும் நிலைநிற்கமாட்டாது.
சிவன் அளவைக் கெட்டாதவ ராதலினால், அவரை நாம் அரு அல்லது உரு அல்லது அருஉரு என்று சொல்ல முடியாது. வாஸ்தவத்தில் அவர் சிருஷ்டி முதலிய பஞ்ச கிருத்தியங்களையும் தவம், யோகம், போகம் முதலிய செயல்களையும் செய்கின்றவரல்லர். சிவசத்தியின் சகாயத் தால் பஞ்சகர்த்தாக்கள் தத்தம் கிருத்தியம் செய்கின்றனர். தவம், யோகம், போகம் முதலிய செயல்கள் செய்தவர் பூரீகண்ட உருத்திரர் அவரும் அவற்றை உயிர்களின் பொருட்டன்றித் தம்பொருட்டுச் செய்தவரல்லர். அவரே சைவ சித்தாந்திகள் வழிபடுங் கடவுள். அவர்கள் அவ ரைப் பரமசிவனுடன் ஐக்கியப்படுத்தி வழிபடுகின்றனர். அவர் பிரம விட்டுணுக்களில் அதிகம் மேம்பாடுடையவர். அவர் ஏவுதற்கருத்தா, இவ்ர்கள் இயற்றுதற் கருத்தாக்கள். வைரவர், வீரபத்திரர், விநாயகர், சுப்பிரமணியர் என் பவர்கள் அவரது குமாரர். அவரது குமாரர் எல்லாருள் ளும், சுப்பிரமணியரையே சைவர் மிகுந்த பக்தியுடன் வழிபடுகின்றனர். கதிர்காமம், பழனி, திருச்செந்தூர் முதலியன பேர்பெற்ற சுப்பிரமணிய ஸ்தலங்கள். அத் தலங்களுக்கு விசேஷ உற்சவகாலங்களில் இலங்கையிலும்

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம்
இந்தியாவிலும் உள்ள நானாபாகங்களிலுமிருந்து இலட் சக்கணக்கானோர் போவது வழக்கம். கலியுகத்தில் சுப்பிரமணியருக்கு மற்றைத் தெய்வங்களிலும் அதிக கலையுண்டென்றும் ஆதலாலவரே கலியுகவரதரென்றும் சைவர் கூறுகின்றனர்.
இரண்டாம் சூத்திரம்
இச்சூத்திரம் மறுபிறப்பையும் உலகத்தோற்ற ஒடுக் கங்களையும் பற்றிக் கூறுகின்றது. சிவன் உயிர்களுடன் உடலுயிர் போற்கலந்து அத்துவிதமாய் நிற்கையில் சத்தி யென்றும், அவற்றைத் தத்தம் இருவினைக்கேற்பத் தமது பஞ்சகிருத்தியங்களுக் குட்படுத்துவதனால் பதியென்றும், அவர் தனித்துப் பூரணஞானமாய் நிற்கையில் சிவமென் றும் அழைக்க்ப்படுவர்.
1. சிவன் உயிர்களுடன் உடல் உயிர்போற் கலந்து அத்துவிதமாய் நிற்கையில் சத்தியெனப்படுவர். வேதங் கள் ஆன்மா ஒன்றென்று கூற இங்கே ஆன்மாக்கள் பல என்று சொல்வதற்குக் காரணம் யாது? வேதங்கள் ஆன்மா ஒன்றென்று கூறுவது மெய். அங்ங்னம் கூறும் போது அவற்றின் கருத்து என்னவெனில், பரமான்மா அல்லது கடவுள் ஒன்று என்பதாம். பரமான்மா ஒன்று சீவான்மா பல. அகரம் ஏனைய எழுத்துக்களுடன் கலந்து நிற்குமாறு பரமான்மா சீவான்மாவுடன் கலந்து நிற்பர். அகரமின்றி அவை யியங்காவாறுபோல, பரமான்மா வின்றிச் சீவான்மாக்கள் இயங்கா. பரமான்மாவிற்கும் சீவான்மாவிற்கும் உள்ள சம்பந்தத்தைக் குறிப்பதற்கு அத்துவிதம் என்னும் மொழித்தொடர், வேதங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. பரமான்மாவும் சீவான் மாவும் அத்துவிதமாய் இருப்பதனால், அவையிரண்டும் ஒன்றென்று வேதாந்திகள் கூறுவர். 'அகம் பிரமாஸ்மி" (நான் பிரமமாயிருக்கிறேன்) 'தத்துவமசி' (அது நீயா

Page 15
2O க.சா. முருகேசுப் போதகர்
யிருக்கிறாய்) முதலியன வேதாந்த மகாவாக்கியங்கள் சித்தாந்திகள் அவையிரண்டும் வேறென்றும், வேறாயினும் அவை பரமான்மாவிது சீவான்மாவிது என்று பிரிக்கப் படத்தக்க நிலைமையில் நிற்பன அல்ல என்றும், இந் நிலையை அத்துவிதம் என்றும் கூறி, உடலையும் உயி ரையும் இதற்குத் திருஷ்டாந்தமாய் எடுத்துக் காட்டுவர். உடலும் உயிரும் வேறாயினும், நாம் அவற்றை உடலிது உயிரிதுவென்று பிரிக்கமுடியாவாறு போல், பரமான் மாவும் சீவான்மாவும் வேறாயினும், நாம் அவற்றைப் பரம்ான்மாவிது சீவான்மாவிது என்று பிரிக்கமுடியாது என்பர்.
2. உயிர்கள் தத்தம் இருவினைக்கேற்ப சிவனது பஞ்சகிருத்தியங்களுக்குட்பட்டுச் செல்லும். வேறொரு விதமாய்ச் சொல்லுகில் உயிர்கள் தம் இருவினைக் கேற் பத் திரும்பத் திரும்பப் பிறந்திறந்துழலும். சுருக்கிச் சொல்லுகில் மறுபிறப்புண்டு. உயிர்கள் முற்பிறப்பிற் செய்த இருவினைப் பயன்களை இப்பிறப்பில் அனுபவிக் கையில், மேலும் இருவினைகள் அவற்றிற்கு ஏறுவதனால், அவை மீளமீளப் பிறக்கவும் இறக்கவும் வேண்டும். சிவன் அரசனும் வைத்தியனும்போல வினைப்பயன்களை அவற் றிற்குத் தமது ஆணையாற்கூட்டுவர். அவர் அங்ங்னம் செய்யாவிடில் அப்பயன்கள் வந்து அவற்றைச் சேரமாட்டா.
உலோகாயதரது ஆட்சேபம்: உலோகாயதர் கடவுளும் ஆன்மாவும் இல்லையென்று சாதிப்பவர். அவர்கள் இன்பதுன்பங்கள் உடலுக்கு இயல்பாதலினால், அவற்றிற் குப் 'பழவினை' காரணமல்லவென்று கூறுவர்.
சமாதானம்: இன்பதுன்பங்கள் தமக்குள் மாறுபட்ட குணங்களாகையால், அவற்றிற்குக் காரணம் வேண்டும். அவற்றிற்குப் பழவினையே காரணமன்றி வேறல்ல.
ஆட்சேபம்: அவற்றிற்குப் பழவினை காரணமென்பது பொருந்தாது. நீர் பூவின் சேர்க்கையால் வாசத்தையும் தீயின் சேர்க்கையால் வெப்பத்தையுமடைத லதற்கியல்பு. அதுபோல உடலுக்கு இன்பதுன்பங்கள் உண்டாதலதற் கியல்பு.

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம்
சமாதானம்: இவ்வுபமானமே பழவினையுண்டென் பதற்கு நல்ல திருஷ்டாந்தம். நீருக்கு வாசமும் வெம் மையும் செயற்கையால் உளவாவனவன்றி, இயற்கை யாலுளவாவணவல்ல. இன்பதுன்பங்கள் சடத்திற்கல்ல; சித்துக்கே உரியன. நீரிலுண்டாகும் வாசத்திற்கும் வெப் பத்திற்கும் முறையே பூவுந் தீயுங் காரணமாம். அவை வெவ்வேறு காரணமாய் இருத்தல்போல ஆன்மாவின் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வெவ்வேறு காரணம் இருக்கவேண்டும். அக்காரணம் முற்பிறப்பிற் செய்த நல்வினையும் தீவினையும் என்பது நிச்சயம்.
ஆட்சேபம்: முயற்சியும் சோம்பலும் முறையே இன் பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம். முயற்சியுள்ளவர்கள் பொருளிட்டி இன்பம் அனுபவிக்கின்றனர். சோம்பேறிகள் வறிஞராய்த் துன்பம் அனுபவிக்கின்றனர். ஆகவே, முயற்சியே செல்வத்திற்குக் காரணம். அதைவிட வேறு காரணம் உண்டெனில் முயற்சியின்றிச் செல்வம் ஒரு வனுக்கு வரவேண்டும்.
சமாதானம்: செல்வத்திற்கும் வறுமைக்கும் முற்பிற வியிற் செய்த நல்வினையும் தீவினையும் முறையே கார ணம் என்பதற்குச் சந்தேகமில்லை. ஒருவன் பொரு ளிட்டும் நோக்கத்துடன் முயற்சி செய்யும்போது, சோம்பல் பொருட்சேதம் மெய்வருத்தம் முதலிய இடையூறுகளினால் அந்நோக்கம் நிறைவேறாது போகின்றது. மேலும், போதிய முயற்சியின்றிச் செல்வராகின்றவர்கள் ஒரு வருமில்லையென்பது அநுபவத்திற்கு முற்றும் விரோதம். புதையல் கண்டெடுத்துச் செல்வராகின்றவர் சிலருளர். செல்வம், வறுமை, உயர்வு, இழிவு, இன்பம், துன்பம் என்னும் ஆறும் முற்கன்மப்பயன்களாய்க் கருவில் அமைக் கப்பட்டுள்ளனவன்றி, இடையிலுண்டாவனவல்ல. கரு வில் அமைக்கப்பட்டவற்றை அனுபவத்திற்குக் கொண்டு வர முயற்சி அவசியம். அம்முயற்சியே அடுத்த பிறவிக் குரிய மேற்சொல்லிய அறுவகை அனுபவத்திற்கும் கார ணம். உடலுக்கும் வினைக்குமுள்ள சம்பந்தம் வித்துக்கும் மரத்துக்கும் உள்ள சம்பந்தம்போலும். வித்தோ மரமோ முந்திய தென்று சொல்ல முடியாததுபோல, உடலோ

Page 16
22 க.சா. முருகேசுப் போதகர்
கன்மமோ முந்தியதென்று சொல்லமுடியாது வித்தின்றி மரமும் மரமின்றி வித்துமில்லை. அதுபோல உடலின்றிக் கன்மமும் கன்மமின்றி உடலுமில்லை. ஆகவே, உடலும் கன்மமும் பிரவாக வனாதியாம்.
கேள்வி: இப்பிறவிக்குரிய பலவகை அனுபவத்திற்கும் முற்கன்மம் காரணமென்பது சரி. அனுபவத்திற்குப் போலவே அதற்கு வேண்டிய முயற்சியும் முற்கன்மப் பயன். அநுபவம் இப்பிறவியோ டொழிய முயற்சி மாத் திரம் மேலுடலுக்குரிய அனுபவத்துக்கு ஏதுவாகிய கன்ம மாமாறு யாங்ங்னம்?
மறுமொழி: முற்கன்மமெனப்படுவது முற்பிறவியிற் செய்த முயற்சியேயன்றி வேறல்ல. முற்பிறவியிற் செய்த முயற்சியே முற்கன்மம் ஆவதுபோல் இப்பிறவியிற் செய் யும் முயற்சியும் இனிவரும் பிறவிக்குரிய கன்மமாகும். இதை ஒரு திருஷ்டாந்தத்தினால் விளக்குவது நன்று. வயலில் விளைந்த தானியவகைகள் நமக்கு உணவும் மறுபடியும் விதைப்பதற்கு வித்தும் ஆவனபோல், நமது முயற்சியே நமது இன்பதுன்பமாகிய அனுபவமும் இனி வரும் உடலுக்குரிய கன்மமுமாகும். இனிவரும் உடலுக் குரிய கன்மமும் இப்பிறவியில் அனுபவத்திற்குரிய முற் கன்மமும் முற்கன்மத்தில் அனுபவத்திற்குக் காரணமாகா மற் கிடக்கும் கன்மமும் முறையே ஆகாமியம் பிராரத் துவம் சஞ்சிதம் எனப்படும்.
வேதாகமங்களில் விதித்தவற்றைச் செய்தலே யறம். விலக்கியவற்றைச்செய்தலே பாவம். அறம் பாவங்களுக் குரிய பயன்களைச் சிவனே கொடுத்தருள்வர். அவர் இப்படிச் செய்வதற்குக் காரணம், அவருக்கு இயல்பா யுள்ள பேரருளாம். அறம் பாவங்களே பிறவிக்கு வித்து. அனுபவத்தினாலன்றி வேறெவ்விதத்தினாலும் அவை தொலையா. அறஞ் செய்வார்க்கு இன்பத்தையும் பாவஞ் செய்வார்க்குத் துன்பத்தையும் அவர் அருள்வர். இன் பத்தை அருள்வதற்கு அருள் காரணமாயிருத்தல்போலத் துன்பத்தையருள்வதற்கும் அருளே காரணம். தந்தை தாயர் தம்பிள்ளைகளுள் நற்குணமுடையோருக்குப் பட் சம் காட்டுகின்றனர்; துர்க்குணமுடையோரைச் சிட்சிக்

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் S.
கின்றனர். இங்ங்னம் சிட்சித்தல் துற்குணமுள்ளோரில் அவர்களுக்குள்ள கோபத்தினாலல்ல, பட்சத்தினாலாம். அதுபோலச் சிவன் பாவிகளைச் சிட்சித்தல் அவருக்கு அவர்களிலுள்ள கோபத்தினாலல்ல நேசத்தினாலாம்.
ஆட்சேபம்: கன்மங்களே தம்பயனைத் தோற்று விக்கும். அங்ங்னஞ் செய்விப்பதற்குக் கடவுள் ஒருவர் வேண்டுமென்பது பொருந்த்ாது.
சமாதானம் செய்த கன்மம் செய்தவுடனே அழி கின்றமையால், அது தானாய்ப் பயன்கொடுக்குமெனல் சரியன்று.
ஆட்சேபம்: வயலுக்கிடும் எரு, தழை முதலியன அழிந்த பின்னரே பயன்படுவதுபோலக் கன்மமும் அழிந்த பின்னரே பயன்படும்.
சமாதானம்: எரு, தழை முதலியன அழிந்த பின் னரே பயன்படும் என்பது மெய்யாயினும் அழிந்தபின் பயன்படாத பொருட்களும் பலவுள. சோறு, கறி முதலி யனவயிற்றிற் சீரணித்தபின் கொடுக்கும் பயன் யாதொன்று மில்லை. மேலும், எரு, தழை முதலியன போடப்பட்ட வயலிலே கிடந்து அவ்வயலுக்கே பயன் கொடுக்கும்; இவ்வுடம்பில் நாம் செய்யும் கன்மமோ வெனில் இவ் வுடம்போடு கெட்டு மற்றொருடம்பிற் பயன்தருவதனால், எரு, தழை முதலியவற்றிற்கும் கன்மத்திற்கும் உள்ள வித்தியாசம் மிகப்பெரிது.
ஆட்சேபம்: வினைகெட்டுப் பயன் தருமெனல் உண்மையன்று. செய்தவினை செய்தவரறிவிலே யடங்கி யிருந்து பயன்தர வேண்டிய காலத்திற் பயன்தரும்.
சமாதானம் வினைப்பயன்களாவன சுவர்க்கம், நர கம், பூமி என்பனவும் அவற்றிலுள்ள புவன போகங் களுமாம். அவையெல்லாம் அறிவிற் தக்கும ரூபமாயடங்கி யிருந்து வெளிவருமெனல் இந்திரசால வித்தைபோலும். மேலும், சற்பாத்திரத்திற் றானஞ் செய்தல் பெரும் புண்ணியமென நூல்கள் கூறும். அங்ங்னம் தானஞ்

Page 17
24 க.சா. முருகேசுப் போதகர்
செய்யப்பட்டபொருளும், தானஞ் செய்வோரும், ஏற் போரும், இம்மையிலே அழிந்துபோகின்றமையால், மறுமையிற் றானப்பயன் தருவதற்கு முற்றறிவு, வரம் பிலாற்றல் ஆகிய திவ்விய இலட்சணங்கள் பொருந்திய கடவுள் ஒருவர் உளரென்பது நிச்சயம். உயிர்வினை களை யீட்டுவதற்கும், அவற்றின் பயன்களை நுகர்வதற் கும், அதற்குத் தனுகரண புவனபோகம் முதலிய துணைக் கருவிகள் வேண்டும். இக்கருவிகள் சடமாகலால் இவை தாமே சென்று உயிருடன் சேரா. இவற்றையின்றி உயிர் யாதேனும் ஒன்றை அறிய அல்லது செய்ய முடியாதாக லால், அதுதானே சென்று இவற்றுடன் சேரும் ஆற்ற லிலது. ஆதலால் கடவுளாணையே இவற்றோடு அதைச் சேர்க்கின்ற தென்பது வெளிப்படை.
புண்ணிய பாவங்கள்: ஒழுக்கம், அன்பு அருள், ஆசாரம், உபசாரம், உறவு, சீலம், தவம், தானம், துறவு, அடக்கம், அறிவு, வாய்மை, வணங்கல், வந்தித்தல் என்னும் இப்பதினாறும் புண்ணியங்களாம். இவற்றிற்கு மாறுபாடான பதினாறும் பாவங்களாம். ஒருவன் பாவங் களனைத்தையும் ஒழித்து புண்ணியங்களனைத்தையும் செய்து தான் விரும்பிய தெய்வத்தைவழி படுவானாயின், சிவன் அத்தெய்வத்தை அதிஷ்டித்து, அவன் வழிபாட்டை ஏற்றுக்கொண்டு, அவனுக்குப் பயனருள்வர். சிவன் ஒருவரே பதி. அவர் ஒருவருக்கே பிறப்பிறப்புக்களும் இருவினைகளும் அவற்றால் வரும் இன்பதுன்பங்களு மில்லை. இவை யாவும் மற்றைத் தேவர்களுக்கு உளவா தலினால், நாம் எத்தேவரை வழிபடினும் அத்தேவரிடம் நின்று நமக்கு அருள் செய்பவர் அவரே. பசு, பார்ப் பார், தந்தை, தாய் முதலாயினோரை விதிப்படி வழி படுகின்றோருக்குச் சுவர்க்கம் கொடுப்பவர்கள் அவர்கள் அல்ல. சுவர்க்கம் கொடுப்பவர் சிவனேயாம். அமைச்சர் படைத்தலைவர் முதலாயினோர் அரசனது ஆணைக்குட் பட்டவர்களா யிருத்தல்போலத் தேவர்களனைவரும் சிவனது ஆணைக்குட்பட்டவர்கள். அவர்கள் அவருடைய ஏவலை அவரது சத்தியினால் நிறைவேற்றுவதன்றித் தாமாய் யாதாயினும் ஒன்றைச் செய்யும் ஆற்றலிலர். நாம் வழிபடும் தேவர்களை அதிஷ்டித்து நமக்குப் பயன்

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம்
அருள்பவர் சிவனே யாதலால், அவரை வழிபடுதலே அறங்கள் எல்லாவற்றுள்ளும் மிக்க அறம். அவரை மறந்து செய்யும் அறம் யாதாயினும் அது வீண். அவர் விருப்பு வெறுப்பற்றவராயினும் நமக்கு அருள் செய்யும் பொருட்டு, அவர் நமது வழிபாட்டை விரும்புகின்றமை யால், நாம் அவரை விதிப்படி நாள்தோறும் திரிகரணங் களினாலும் வழிபடுதலே நமது முக்கிய கடமை. வீடு பேற்றுக்கு இதுவே உபாயங்கள் எல்லாவற்றுள்ளும் மிகச்சிறந்த உபாயமாம்.
கேள்வி? சிவன் மனோவாக்குக் கெட்டாதவர். அவர் திருமேனி கொண்டருளிய பின்னும் சுத்தமாயா புவனத் தில் வைகுவதன்றி இப்பூமியில் வைகுபவரல்ல ராதலால் அவரை நாம் வழிபட்டுய்யு மாறெங்ங்னம்?
மறுமொழி: அவர் புறத்தே திருக்கோயிலில் விக்கிர கத்திலும் தமது அடியாரிலும், அகத்தே உயிரிலும் நின்று நமது பூசையை ஏற்றுக்கொள்வர். ஆதலால், நாம் அவரை இவற்றின் மூலமாய் வழிபடல் வேண்டும். சிவபூசையின் சிறப்பை விவரிப்பது நம்மனோருக்கு வெகு பிரயாசம். சிவனது திருவடிகளுக்கு அன்பர் செய்யும் பாவங்களும் அறங்களாகும். அன்பில்லாதோர் செய்யும் அறங்களும் பாவங்களாகும். இவை யிரண்டற்கும் முறையே தண்டீச நாயனாரும் தக்கனும் நல்ல திருஷ்டாந்தம்.
வேதாகமங்கள் சிவனது திருவாக்கு. நரகம் அவ்வாக் கின்படி நடவாதாரைத் தண்டித்தற் பொருட்டு அவரால் அமைக்கப்பட்ட சிறைச்சாலை. சுவர்க்கம் அவ் வாக் கின்படி நடப்போர் சுகமாய் வாழும்பொருட்டு அவரா லமைக்கப்பட்ட இன்பவுலகம். உயிர்களுக்கு இன்ப துன் பங்கள் அவரது ஆணையினா லுண்டாகும். அரசன் தனது கட்டளைப்படி நடப்போருக்கு உபகாரஞ் செய்து நடவாதோரைத் தண்டிப்பன். அமைச்சர் முதலானாரிடத் துள்ள ஆணையும் அவனுடையதேயாம். அதுபோலச் சிவனும் தமது கட்டளைப்படி நடப்போருக்கு இன்பத்தை யும் நடவாதோருக்குத் துன்பத்தையு மருள்வர். மற்றைத் தேவர்களிடத்துக் காணப்படும் ஆணையும் அவருடையதே யன்றி அவர்களுடையதன்று.

Page 18
26 க.சா. முருகேசுப் போதகர்
நரகதண்டனையை அறுவுறுத்தி அதை நீக்கும் பொருட்டே அரசதண்டனையும் சிவனால் ஏற்படுத்தப் பட்டது.
செய்த தீவினைக்குத்தக்க அரச தண்டனை அடை பவருக்கு நரக தண்டனை வராது. அரசனுக்குரிய ஆணை யும் சிவனுடையதே யன்றி வேறல்ல. வேதாகமங்களின் படி நடவாமை பாவம்; அவற்றின்படி நடத்தல், புண்ணி யம். பாவ புண்ணியங்களிரண்டும் பிறவிக்குக் காரண மாதலினால், அவை உயிர்களுக்கு நோயாம். அந் நோயைச் சிவனாகிய பரம வைத்தியன் இன்ப துன்பம் என்னும் மருந்தினால் மாற்றி யருள்வர். வாகட நூல்வழி ஒழுகுபவர்களுக்கு நோய் வராது; ஒழுகாதவர்களுக்கு வரும். வரும் நோயை வைத்தியன் அதற்குத் தக்க உபாயத் தினால் மாற்றுவன். சில நோயை மதுரமான மருந்தி னாலும் சில நோயைச் சத்திர வைத்தியத்தினாலும் அல்லது கசப்பான மருந்தினாலும் மாற்றுவன். அது போலச் சிவனும் நல்வினை தீவினை என்னும் நோயை இன்பதுன்ப மென்னும் மருந்தினால் மாற்றியருள்வர். இருவினையும் நீங்கினாலன்றி ஆன்மா வீட்டினையடையாது
ஒருவன் மரிக்கும் போது அவனுடைய ஆன்மாவானது தூல உடம்பைவிட்டு, தக்கும உடம்புடன் அவனது இரு வினைக்கேற்பச் சுவர்க்கத்துக்கு அல்லது நரகத்துக்குப் போகும். போகும் வழியில் அதன் தக்கும உடம்பினின் றும் சுவர்க்க வாசத்துக்கு அல்லது நரகவாசத்துக்குரிய உடம்பு தோன்றும். சுவர்க்கத்தில் அல்லது நரகத்தில் பயன் கொடுக்கும் கன்மம் தொலையுமளவும் அவ்விடம் இன்பம் அல்லது துன்பம் அனுபவித்துப் பின்னர் இப் பூமியிற் பயன் கொடுக்கும் கன்மத்துடனும் தக்கும தேகத் துடனுந் திரும்பிவந்து மாதாவின் கருப்பாசயத்துக்குட் பிரவேசித்துப் பிறக்கும். இது ஒருபோதும் மாறாத நியதி யன்று. சில சமயங்களில் தூலதேகத்தை விட்டவுடன் கருப்பாசயத்துக்குட் பிரவேசித்து வேறு மொரு தூல வுடம்பு எடுக்கும். வேறு சிலசமயங்களில் அது நெடுங் காலம் அறிவு சுரணையற்றிருந்து பின்னர் கொடிய நரகங் களுக்குச் செல்லும். இவை யாவும் அதன் கன்மத்துக்குத் தக்கபடி யிருக்கும்.

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 27
பாம்பும் பறவையும் பரகாயப் பிரவேசஞ் செய் வோரும் முறையே தோலையும் முட்டையையும் தேகத்தை யும் விட்டுச் செல்வது போல ஆன்மாவும் மரிக்கும்போது தூலதேகத்தை விட்டு ஆகாய வழியாய் மேலேறிச் சென்று மற்றோ ருடம்பினைப் பொருந்தும். இங்ங்ணம் நிகழ் கையில் அதன் உணர்வு சாக்கிர உணர்வு சொற்பன உணர்வாய் மாறுவது போல மாறும்.
கன்ம மலம். கன்ம மானது அறம் பாவமென்றிரு வகையாய் அவ்விருவகைக்குரிய பயனையும் பிறப்பித்து மும்மலங்களுள் ஒன்றாய் ஆன்மாவினை அநாதியே பந் தித்து நிற்கும். இரு வினைக்கும் ஆதியும் அந்தமும் உண்டா தலினாலும் அவை அநாதியாகவே தொடந் தேர்ச்சியாய் வருதலினாலும் அவை காரியப் பிரபஞ்சம் போற் பிர வாக வநாதியாம். இன்னொரு விதமாய்ச் சொல்லுகில் முதற்கண்மம் எக்காலத்தி லுண்டாயிற்றென்று சொல்ல முடியாது. கன்ம மலமானது அருவாய் நின்று சிவனது ஆணைக்கு ளடங்கி நடக்கும்.
நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்பும் 84 இலட்சம் யோனி பேதங்களும் உள்ளனவென்று நூல்கள் கூறுகின்றன. உயிர்கள் யோனி மாறிப்பிறத்தலன்றி அச்சு மாறிப் பிறக்காவென்பர் சிலர். அதாவது தேவர் எப்பொழுதும் தேவராயும் மனுஷர் எப்பொழுதும் மனுஷராயும் பிறப்பர். விலங்கு எப்பொழுதும் விலங் காயும் பறவை எப்பொழுதும் பறவையாயும் ஊர்வன எப்பொழுதும் ஊர்வனவாயும் நீர்வாழ்வன எப்பொழு தும் நீர்வாழ்வனவாயும் தாவரம் எப்பொழுதும் தாவர மாயும் பிறக்கும் என்பர். சுருக்கிச் சொல்லுகில் மேற் பிறப்புக்களைச் சேர்ந்தவுயிர்கள் கீழ்ப்பிறப்புக்களிலும் கீழ்ப்பிறப்புக்களைச் சேர்ந்த உயிர்கள் மேற்பயிறப்புக் களிலும் பிறக்கா என்பர். இக்கொள்கை சுருதி, யுத்தி, அனுபவம் என்னும் மூன்றற்கும் விரோதமாம். புண்ணிய வான்கள் சுவர்க்கம் சென்று இன்பம் அனுபவிக்கையில் தேவராயன்றி மனுஷராயிரார். அங்கு நின்றும் பூமிக்குத் திரும்பிவந்து பிறக்கும்போது, தேவராய்ப் பிறவாது மனிதராய்ப் பிறப்பர். ஆதலினால், மனிதர் தேவராயும்

Page 19
28 க.சா. முருகேசுப் போதகர்
தேவர் மனிதராயும் பிறப்பர் என்பது வெளிப்படை. மேலும் மயிர்க் குட்டி வண்ணாத்திப் பூச்சியாயும் புழு வேட்டை வாளியாயும் மாறுவதை நாம் கண்கூடாய்க் காண்கிறோம். ஆதலால், கன்மம் யோனியை மாத்திர மல்ல அச்சையும் மாற்றும் என்பதற்குச் சந்தேகமில்லை. அகலியை கல்லாய் மாறினாள் என்றும், விஷ்ணு பல பிறவிகள் பிறந்தனரென்றும்; சிலந்திப் பூச்சியொன்று ஒர் டபிரசித்திபெற்ற சோழ அரசனாயும் எலியொன்று மாவலிச் சக்கரவர்த்தியாயும் பிறந்தன வென்றும், இதி காச புராணங்கள் கூறும். அகலியை கல்லாய் மாறின தற்கும், விஷ்ணு பல பிறவிகள் பிறந்ததற்கும் காரணம் சாபமாதல்போல சிலந்தியும் எலியும் அரசராய்ப் பிறந்த தற்கும் காரணம் ஆசீர்வாதமாம். அச்சைமாற்றும் ஆற்றல் சாப ஆசீர்வாதங்களுக்கன்றி கன்மத்திற்கு இல்லையென்று சொல்வது பொருந்தாது. ஏனெனில், அச்சு மாறுவதற்குக் காரணம் சிவனது ஆசீர்வாதமும் சாபமுமன்றிப் பிறி தொன்றல்ல. கெளதமர், பிருகு முதலிய முனிவருக்கு அச்சை மாற்றும் ஆற்றல் உண்டெனில், சிவனுக்கு அது இல்லையென்பது பெருந் தவறு.
கன்மம் சடமாதலால், அது தன்னைச் செய்த உயிரு டன் தானே சேரமாட்டாது. உயிருந்தானே அக்கன்மத் துடன் சேரமாட்டாது. ஆதலால், சிவனே அவ்விரண் டனையும் ஒருங்கு சேர்க்கின்றனரென்பது வெளிப்படை.
துரலவுடம்புகள் தக்கும உடல்பிலிருந்து தோன்றும். ஒரே தன்மையதாகிய பொன்னிலிருந்து பலவகையான ஆபரணங்கள் உண்டாமாறுபோல, ஒரே தன்மையதாகிய துருக்கும உடம்பிலிருந்து பல தூல உடம்புகள் தோன்றும். துருக்கும உடம்பு கெட்டுத் தூல உடம்பு தோன்றுவதல்ல; அல்லது தக்கும உடம்புக்குள் தூல. உடம்பு தோன்றி வெளியே வருகிறது மல்ல. ஒரு மரத்தை வெட்ட அதன் வேரிலிருந்து வேறொரு மரம் தோன்றுவதுபோல, ஒரு தூல உடம்பு மரிக்க அதன் தக்கும உடம்பிலிருந்து வேறொரு தூல உடம்பு தோன்றும். வித்தின்றி மர முண்டாகாது. அதுபோல துருக்கும உடம்பின்றித் துரல உடம்பு உண்டாகாது. தூல உடம்பிற்கு முதற்காரணம்

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 29
துருக்கும் உடம்பு. இதற்கு முதற்காரணம் மூலப்பிரகிருதி. இதற்கு முதற்காரணம் அசுத்தமாயை. சுத்தமாயை மேற் சொல்லிய யாவையும் வியாபித்து நிற்கும். தனுகரண புவனபோக மென்பன, ஆணவம் கன்மம் என்னும் நோய்க்கு ஏற்ற மருந்து. அம்மருந்தினால் சிவன் உயிர் களின் நோயை மாற்றி, அவற்றிற்கு முத்தி யருள்வர். சீலையில் உள்ள அழுக்கு சாணி உவர்மண் முதலிய அழுக்கினால் நீங்குவதுபோல மாயா மலத்தினால் ஏனை யிரு மலமும் நீங்கும்.
உலகத் தோற்றமும் ஒடுக்கமும்
அசுத்தமாயை: உலகத்திற்கு முதற்காரணமாகிய அசுத்த மாயையின் இலட்சணங்களாவன: நித்தம், அருவம் ஏகநிலை, அசித்து, வியாபகம், சிவனது பரிக்கிரகசத்தி; மும்மலங்களில் ஒன்றாய் உயிர்களை மயக்குதல் என்பன. ஏகநிலையென்றால், அணுக்களுடைத்தாயிராமை. அசுத்த மாயையிலிருந்து காலம், நியதி, கலை என்னுந் தத்து வங்கள் தோன்றும். காலம் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முத்திறப்பட்டு சிவனது ஆணையினால் உலகத்தைச் சிருஷ்டித்துக் காத்து அழிக்கும். நியதி தத் துவம் உயிர்கள்தாம். தாம் செய்த கன்மப் பயனை, தாந்தாமே அனுபவித்தற் குரிய முறைமையை ஏற்படுத்தும்.
கலாதத்துவம் ஆணவ மலத்தைச் சிறிது ஒதுக்கி உயிரினது கிரியாசத்தியைத் தோற்றுவிக்கும். வித்தியா தத்துவம் கலாதத்துவத்திலிருந்து தோன்றி அறிவைப் பிறப்பிக்கும். அராக தத்துவம் வித்தியாதத்துவத்திலிருந்து தோன்றி இச்சையைப் பிறப்பிக்கும். கிரியா சத்தி, ஞானா சத்தி, இச்சா சத்தி என்னும் மூன்றும் தோன்றியபின் உயிர் புருட தத்துவம் என்னும் பெயர்பெறும். கலாதத்து வத்திலிருந்து மூலப் பிரகிருதி தோன்றும். மூலப்பிர கிருதியில் சாத்துவிதம், இராசதம், தாமதம் என்னும் முக்குணமும் முன்னர் அவ்வியத்த ரூபமர்ய், பின்னர் வியத்தமாகும். ஒவ்வொரு குணமும் தனித் தனியே மும்மூன்றாய் முக்குணமும் ஒன்பது வகையாகும்.

Page 20
3 O க.சா. முருகேசுப் போதகர்
அவையாவன: சாத்து விதத்தில் சாத்து விதம், சாத்து விதத்தில் இராசதம், சாத்துவிதத்தில் தாமதம். இரா சதத்தில் இராசதம், இராசதத்தில் தாமதம், இராசதத்தில் சாத்துவிதம், தாமதத்தில் தாமதம், தாமதத்தில் சாத்து விதம்; தாமதத்தில் இராசதம் என்பன குண தத்துவத்தி லிருந்து தோன்றும் புத்தி முதலிய தத்துவங்களும் குண வடிவமாய் உயிரைப் பந்திக்கின்றமையால் உயிர்போக நுகரும் போதெல்லாம் குணவடிவாயே நிற்கும். மூலப் பிரகிருதியிலிருந்து குணதத்துவம் மாத்திரமன்றி; விபரீத உணர்வுக்குக் காரணமாகிய அவிச்சையும் தோன்றும். குணதத்துவத்திலிருந்து புத்திதத்துவம் தோன்றும். இது இன்னதென நிச்சயித்தல் புத்திதத்துவத்தின் செயல். புத்திதத்துவத்திலிருந்து அகங்காரதத்துவம் தோன்றும். அகங்கார தத்துவம் உயிரானது, நான் எனது என்று செருக்குறுவதற்குக் காரணமாம். அகங்காரம், பூதாதி அகங்காரம், வைகாரி அகங்காரம் தைசத அகங்காரமென முத்திறப்படும். பூதாதி அகங்கார மெனினும் தாமத அகங்கார மெனினும் வைகரி அகங்கார மெனினும் இராசத அகங்கார மெனினும் தைசத அகங்கார மெனி னும் சாத்வித அகங்கார மெனினும் ஒக்கும். மனமும் ஞானேந்திரியங்களும் தைசத அகங்காரத்தினின்று தோன் றும். மனம் முன்னர் சித்த ரூபமாய் இது யாதோவெனச் சிந்தித்தும் பின்னர் ஐயுற்று நிச்சயிக்கவும் விரும்பும். வைகாரி அகங்காரத்தினின்று கன்மேந் திரியங்கள் தோன் றும். மெய், வாய், கண், மூக்கு, செவி என்பனவும். வாக்குப் பாதம் பாணி பாயுரு உபத்தம் என்பனவும் முறையே ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களுமாம். பரிசம் இரசம் ரூபம் கந்தம் சத்தம் என்பன முறையே ஞானேந்திரியங்களுக்கு விடயங்களாம். வசனம் கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் என்பன கன்மேந்திரியங் களுக்கு விடயங்களாம். ஞனேந்திரியங்களும் கன்மேந் திரியங்களும் புறக்கருவிகள். மனம் புத்தி சித்தம் அகங் காரம் என்பன உட்கருவிகள் அல்லது அந்தக்கரணங்கள் கலை முதலியன உள் அந்தக்கரணங்கள். இம் மூவகைக் கருவிகளும் ஆன்மாவிற்கு இன்றியமையாச் சிறப்பினை யுடையன. மேலும் பூதாதி அகங்காரத்திலிருந்து பரிசம் இரசம் ரூபம் கந்தம் சத்தம் என்னும் ஐந்து தன்மாத்

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 3
திரைகள் அல்லது தக்கும பூதங்கள் தோன்றும். தன் மாத்திரைகள் ஜந்தும் மனம் புத்தி அகங்காரம் என்னும் மூன்றும் புரியட்டக அல்லது தக்கும உடம்பெனப்படும். சத்தம் முதலிய தன்மாத்திரைகளிலிருந்து முறையே ஆகா சம் முதலிய தூல பூதங்கள் ஐந்தும் தோன்றும். அப் பூதங்களுக்கு முறையே ஒன்றற்கொன்று ஏற்றமாகிய சத்தம் முதலிய குணங்களுண்டாகும். ஆகாயம் வெளி யாதல் இடங்கொடுத்தல் என்னும் குணங்களும் வாயு அசைதல், பரத்தல், திரட்டுதல் என்னும் குணங்களும் தீ சுடுதல் ஒன்றுவித்தல் என்னும் குணங்களும் நீர் குளிர்தல் பதஞ்செய்தல் என்னும் குணங்களும் மண் கடினமாதல் தாங்குதல் என்னும் குணங்களு முடையன. மண் முதலிய பூதங்களின் வடிவம் முறையே நாற்கோணம் பிறை முக் கோணம் அறுகோணம் வட்டம் என்பனவாம். அவற்றின் நிறம் முறையே பொன்மை வெண்மை சிவப்பு கறுப்பு புகை என்பனவாம். எழுத்து அல்லது பீசம் முறையே ல,வ,ர,ய,வெள என்பனவாம். அடையாளம் முறையே வச்சிரம் கோகனதம் சுவத்தி அறுபுள்ளி அமுதவிந்து என்பனவாம். அதி தெய்வம் முறையே அயன் அரி உருத்திரன் மகேசுரன் சதாசிவன் என்பவராம். நிவிர்த்தி பிரதிட்டை வித்தை சாந்தி சாந்தியாதீதம் என்னும் கலை களுக்கும் மேற்சொல்லியவாறே வடிவம் பீசம் அடை யாளம் அதிதெய்வம் என்பன சொல்லப்படும். முதற் தத்திரத்திற் சொல்லப்பட்ட சுத்த தத்துவங்களைந்தும் இப்பொழுது கூறப்பட்ட முப்பத்தொரு தத்துவங்களும் சேர்ந்து தத்துவங்கள் முப்பத்தாறாம். அவற்றுள் முதலைத் தும் சடமாயினும் சத்திக்குச் சுதந்திர வடிவாதலினால் சைதன்னியம் என்றும், புருடத்துவம் சார்ந்ததன் வண்ண மாய் நிற்பதனால் சித்தசித்தென்றும், ஏனை முப்பது தத்துவங்களும் அசித்தென்றும் சொல்லப்படும். முப்பத் தாறு தத்துவங்களுள் முதலைந்தும், இடை ஏழும், கடை இருபத்து நான்கும் முறையே சுத்தம் மிச்சிரம் அசுத்த மெனவும், பிரேரகாண்டம் போசயித்திருகாண்டம் போக் கிய காண்டம் எனவும் மூவகைப்படும்.
அருவும் உருவும் அருவுருவுமாகிய காரியப்பிரபஞ்ச மனைத்தும் மேற்சொல்லிய தத்துவங்களுள் அடங்கும் இத்தத்துவங்கள் தூலதத்துவம் தக்குமதத்துவம் அதிதக்கு

Page 21
32 க. சா. முருகேசுப் போதகர்
மகத்துவம் என மூவகைப்படும். தத்துவங்களை அதிஷ் டிக்கும் அதிதெய்வங்களும், தத்தமக்குரிய தத்துவங்களின் பெயரைப்பெறும்.
லோகாயதம் முதல் ஐக்கியவாத சைவமீறாகிய சம யங்கள் யாவும் புறப்புறம், புறம், அகப்புறம் என்னும் மூவகுப்புளடங்கும். புறச்சமயத் தெய்வங்களெல்லாம் பூதம் முதல் அசுத்தமாயை யீறாகிய தத்துவங்களில் நிலை நிற்கும். அகச் சமயமாகிய அறுவகைச் சைவசமயத் தெய் வங்கள் அதிகார, போக, லய, சிவ பேதங்களென்று அழைக்கப்பட்டு. சுத்தவித்தை முதலிய ஐந்து தத்து வங்களில் நிற்கும். சைவ சித்தாந்த தெய்வமாகிய சுத்த சிவன் அல்லது பரமசிவன் தத்துவங்கள் முப்பத்தாறி னையும் கடந்து நிற்பவராகலால், அவர் ஒருவருக்கே கடவுள் என்னும் நாமந் தகும். பிரமா முதலிய ஏனை யோரைக் கடவுளரெனல் உபசாரமன்றி வேறன்று.
நவபேதங்களாவன: சிவன் சத்தி நாதம் விந்து சதா சிவன் மகேசுரன் உருத்திரன் விஷ்ணு பிரமா என்பன. நவபேதங்களுள் முதல் நான்கும் இடை ஒன்றும் கடை நான்கு முறையே யருவம் உருவாருவம் உருவமாம். சுத்த சிவன் இப்பேதங்கள் எல்லாவற்றோடுஞ் சேர்ந்து நின்று இவை ஒவ்வொன்றுக்குமுரிய தொழிலைச் செய்வர். இவையெல்லாம் பாவைகள்; அவரே இவைகளையெல் லாம் ஆட்டுபவர். இவற்றுள் சத்தி விந்து என்னும் இரண்டும் சத்தி பேதங்களாகலால், சிவ பேதங்கள் ஏழாம். சிவபேதங்களுக்குரிய சத்தி பேதங்களும் முறையே சத்தி முதல் வாணியீறாக, எழுவகைப்படும். பரமசிவன் சிவ பேதங்கள் ஏழனுள்ளும்நின்று அவற்றை நடாத்துமாறு போல, அவரது சத்தியாகிய பராசத்தியும் சத்திபேதம் ஏழினும் அவருக்குத் துணையாய் நின்று அவற்றை நடாத் தும். பரமசிவனும் பராசத்தியும் மரமும் வயிரமும்போல் அபேதமாய் இருத்தலினால் திருமேனி யாவும் அவர் இருவருக்கும் பொதுவாயினும் பரமசிவனுக்குப் பரா சத்தி தேவியுமாதலினால், சிவபேதம் சத்திபேதமென இருவகையாயின. சிவம் சத்தியைத் தோற்றுவிக்கும். சத்தி சிவத்தைத் தோற்றுவிக்கும். அவையிரண்டும்

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 33
புணர்ந்து சராசரங்களைத் தோற்றுவிக்கும். அங்ங்னஞ் செய்யினும் பரமசிவன் நித்திய பிரமசாரியும் பராசத்தி நித்திய கன்னியுமாம். இவ்விரகசியம் மெய்ஞ்ஞானிகளுக் கன்றி ஏனையோருக்குப் புலப்படாது. தனு கரண புவன போகங்களும் அவை மூலமாயுண்டாகும் பந்தமுத்திகளும் தத்துவங்களாலாயினவென்று நன்குணர்ந்து அவற்றை நீக்கவேண்டிய முறைப்படி நீக்கி, அவற்றிற்கு மேலா யுள்ள பதிப்பொருளை உண்மையாய் அறியவல்லவன் எவனோ அவனே மெய்ஞ்ஞானியாம். இருவினைகளை நுகர்வித்து நீக்கும் பொருட்டும் சகல தீமைகளுக்கும் காரணமாகிய ஆணவ மலத்தை நீக்கும்பொருட்டும் தத்து வங்ளெல்லாம் உயிர்களோடு சேர்ந்தன. உயிர்கள் பக்குவ மடையும்போது இவையனைத்தும் தீட்சையாற் கழிந்துபோம்.
ஆணவமலம்: ஆணவமலமானது அநந்தசத்தியுடைய தாய் உயிர்களில் செம்பிற் களிம்புபோல் அநாதியே சேர்ந்து நின்று கேவலாவஸ்தையில் அவற்றின் தொழில் அறிவு இச்சைகளை மறைத்து சகலாவஸ்தையில் போத் திருத்துவத்தையுண்டாக்கி அஞ்ஞானத்திற்குக் காரண மாய் நிலைபெறும்.
சிலர் மாயையே மலம் என்றும் ஆணவம் என்னும் மலம் இல்லையென்றும் கூறுவர். ஆணவமலத்தின் தன்மை அறிவு இச்சை செயல்களை . மறைத்தல. மாயையின் தன்மையோவெனில் அவற்றை விலக்குதல்; மேகம் துரி யனை மறைப்பதுபோல, மாயை தன் காரியமாகிய உலகு உடல் கரணங்களினால் உயிரை மறைக்கும் என்றும், மேகம் துரியனைவிட்டு நீங்குமாறுபோல மாயாகாரியம் உயிரைவிட்டு நீங்குமென்றும், அங்ங்னம் நீங்குவதே முத்தியென்றும் சொல்வது பொருந்தாது. ஏனெனில், மாயாகாரியம் உயிருடன் சேர்ந்திருக்கும்போதே, உயிருக்கு அறிவு, இச்சை, செயல்கள் விளங்குவதும் பிரியும்போது அவை விளங்காதிருப்பதும் உண்மையென்பதற்கு நமது அனுபவமே போதிய சான்று. மேலும், ஆணவத்தாலுண் டாகும் அஞ்ஞானம் மோகத்தாலுண்டாகும் மறைவு போன்றதன்று. அவ்வஞ்ஞானம் உயிருடன் சேர்ந்து அதன் குணம் போற்றோன்றும். தொழிற்பாட்டில் மாயைக்கும்

Page 22
34 க.சா. முருகேசுப் போதகர்
ஆணவத்திற்குமுள்ள வேறுபாடு ஒளிக்கும் இருளுக்கு முள்ள வேறுபாடுபோல் மிகப் பெரிதாதலால், ஆணவ மலத்தை மறுத்தல் பெருந்தவறு. வேறு சிலர் அஞ்ஞானம் ஆன்மாவின் குணமென்பர். அது ஆன்மாவின் குணமா யின், ஆன்மா சித்துப்பொருளல்ல சடப்பொருள் எனப் படும். ஒரு பொருளுடன் குணம் மாத்திரமல்ல, குற்றமும் விரவிநிற்கும் என்பதற்குக் குருட்டுக்கண் நல்ல திருஷ்டாந் தம். அஞ்ஞானம் குணமாதலால் அதற்குக் குணிப்பொருள் ஒன்றுண்டு. அப்பொருள் சித்தாயல்ல சடமாயிருத்தல் வேண்டும். ஆதலால், அஞ்ஞானத்திற்குக் குணிப்பொருள் ஆணவம் என்பதை ஒருவரும் மறுக்கமுடியாது. ஞர்னத் திற்குக் குனிப்பொருள் சித்தாகிய ஆன்மாவாம்.
கன்மம் மாயை ஆணவம் என்னும் மலங்கள் நெல் லுக்கு முளை தவிடு உமிபோல ஆன்மாவுடன் சேர்ந்து நின்று அதற்கு முறையே போகத்தையும் பந்தத்தையும் போத்திருத்துவத்தையும் பிறப்பிக்கும். இம்மலம் மூன் றனையும் நீக்கும்பொருட்டு பரமசிவன் மாயேயம் திரோ தான சத்தி என்னும் இரு மலங்களையும் இவற்றுடன் சேர்ப்பர். மாயேயம் ஆவது மாயா காரியமாம். அது ஆன்மாவின் அறிவு, இச்சை செயல்களை ஏகதேசப்படுத் தும். திரோதானசத்தி ஆன்மாவின் வியாபக அறிவை மறைத்து மலபாரிபாகம் வரச்செய்யும். மேற்கூறிய பஞ்ச மலங்களுமே பிறப்பு இறப்புகளுக்கும் அவற்றாலுண்டா கும் சுகதுக்கங்களுக்கும் காரணமாம்.
உலக ஒடுக்கம்: சர்வ சங்காரகாலத்தில் உருத்திரன் நிலம் முதல் மூலப்பிரகிருதியீறாகிய 24-தத்துவங்களை யும் சங்கரிப்பர். மகேசுரன் அல்லது அனந்தர் மூலப் பிரகிருதிக்கு மேலும், அசுத்தமாயைக்குக் கீழுமுள்ள ஆறு தத்துவங்களையும் சங்கரிப்பர். இலயசிவன் அவற்றிற்கு மேலுள்ள மூன்று சுத்தமாயா தத்துவங்களைச் சங்கரிப்பர். பரமசிவன் சத்தி தத்துவத்தையும் சிவ தத்துவத்தையும் சங்கரிப்பர். உலகத் தோற்றமும் இப்பிரகாரமாகும். உருத் திரன் அநந்தர் இலய சிவன் என்போரைச் சிலர் நித்தியர் என்பர். அங்ங்னஞ் சொல்வது உபசாரமேயன்றிப் பிறி தன்று. ஏனெனில், நித்தியத்துவம் பரமசிவன் ஒருவருக்கே உரியது.

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் S 8
அண்டசம் சுவேதசம் உற்பிச்சம் சாரயுசம் என்னும் நால்வகைத் தோற்றமும், தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்னும் ஏழுவகைப் பிறப்பும் 84-இலட்சம் யோனிபேதமும் உள்ளன. ஏனை யோனி பேதங்களைவிட்டு மானுட யோனியிற் பிறத்தல் கடலைக் கையால் நீந்துவதுபேர்ல் அரிது. மானுடப்பிறவி யெடுத்தும் வேதாகமங்கள் வழங் கும் பரதகண்டத்திலே, பிரம சத்திரிய வைசிய தத்திர என்னும் உத்தமசாதி நான்கனுள் ஒன்றிலே சைவசமயத்திற் குரித்தாய்ப் பிறத்தல் மிகவும் அரிது. அங்ங்னம் பிறத்தல் விசேஷ புண்ணியப் பயன். அங்ங்னம் பிறந்து சைவ சித்தாந்த நெறி உணர்ந்து அந்நெறிப்படி, பரமசிவனை வழிபடுதல் பாக்கியங்கள் எல்லாவற்றுள்ளும் மிக்க பாக் கியமாம். அப்பாக்கியமுடையோரே திருவருள் பெற்று முத்தியெய்தப் பக்குவம் வாய்ந்தோர். மானுடப் பிறவியே பரமசிவனை வழிபடுதற்கேற்ற பிறவியாதலால் தேவர் களும் இப்பூமியில் வந்து அவருக்குப் பூசை செய்வர். அங்ங்ணமாயின், மானுட சென்ம மெடுத்தும் நாம் அவரை மனமொழி மெய்களால் வழிபடாதிருத்தல் எத்துணைப் பெரும்பேதைமை. மானுடயாக்கை நிலையுடைத்தன்று. அது கருப்பையில் அழிந்தாலும் அழியும். அல்லது அவ் விடத்தில் படிப்படியாய் வளர்ந்து வந்து பிறக்கும்முன் னழியும். அல்லது பிறந்தவுடன் அல்லது பாலியப் பிரா யத்தில் அல்லது வாலிபப் பிராயத்தில் அல்லது முதிர் பருவத்திலழியும். அழியுந்தன்மையதாகிய யாக்கையி லுண்டாகிய அறிவுமோ வெனில் விடயங்களை ஒவ் வொன்றாய் அறிவதன்றி ஒருங்கே யறியும் ஆற்றலிலது. ஒவ்வொன்றாய் அறியும்போதும் தானறிவதனை விட்டு விட்ட்டறிவதன்றி இடைவிடாமல் அறியமாட்டாது. மேலும், யாக்கைக்குரிய செல்வம் நிலையுள்ளதன்று. உத்தியோகம் செல்வம் முதலிய ஏதுக்களினால் செருக்குற்றுப் பரம சிவனை மறப்பவர்கள் நடைப்பிணங்களாம். பொருள் வாஞ்சையால் அந்நடைப் பிணங்களுக்குப் பின் செல் பவர்களும் நடைப்பிணங்களன்றி வேறல்லர். நாம் அங் கனஞ் செய்யாது அவரை மெய்யன்போடு வழிபடின் அவருடைய திரு அருளுக்கு இலக்காகி முத்தி சீக்கிரம் அடைவோ மென்பது நிச்சயம்.

Page 23
36 க.சா. முருகேசுப் போதகர்
மூன்றாம் சூத்திரம்
இச்துத்திரம் ஆன்மா உண்டென்று சாதிக்கின்றது. ஆன்மா என்னும் பதம் வழங்கிவருவதனால் ஆன்மா தனிய மென்றுசொல்வது சரியன்று. அது தேகத்தினுள் நின்று யான் எனதென்று செருக்குக் கொள்வதனால் தேகமே ஆன்மாவெனல் பொருந்தாது. ஞானம் மாத்திர மன்றி ஞானம், கிரியை, இச்சை என்னும் மூன்றும் உளவாகலால், ஐம்பொறியே உயிரென்று சொல்ல முடியாது. கனவில் காணப்பட்டவை நனவில் ஞாபகத் திற்கு வருதலினால் துருக்கும தேகம் ஆன்மாவன்று. இன்ப துன்பங்கள் நனவிலேயே நுகரப்படுதலினால் பிராண வாயு ஆன்மாவன்று. ஐந்தவத்தைப்பட்டு அறிவதனால், பிரம்ம ஆன்மா வன்று. மேற்கூறியவற்றின் கூட்டமனைத்தும் நீங்கிய துரியாதீதத்திலும் அறிவிருத்தலினால் அக்கூட்டம் ஆன்மாவன்று. ஆதலால், ஆன்மாவானது அவையனைத் திற்கும் வேறு.
ஆட்சேபம்: உயிர் தனியம் அல்லவென்பது மெய்யா யினும், உடம்பே யுயிர். ஏனெனில், உடம்பே அறியுந்
தன்மையுடையது.
சமாதானம்: பிணத்தினும் உறக்கத்தினும் அறிவில் லாமையினால் உடம்பே உயிரெனல் தவறு.
ஆட்சேபம்: ஐம்பொறிகளே உயிர். அவை நனவில் அறிவனவன்றி உறக்கத்தில் அறிவனவல்ல.
சமாதானம்: ஐம்பொறிகளும் ஒவ்வொன்றாய் அறி வனவன்றி, எல்லாம் ஒருங்கேயறியாமையினாலும் ஒரு பொறி யறிந்ததனை ஏனைய அறியாமையினாலும் அவையுயிரல்ல.
உ-ம்: கண் அறிந்ததைக் காது அறியாது. ஆதலால், பொறிகள்மூலமாய் அறிவது வேறொன்றுண்டு

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 37
ஆட்சேபம்: பிராணவாயு இயங்கும்போதே அறிவு ண்டாவதனால் பிராணவாயுவே உயிர். உறக்கத்திலது இயங் கினும் கருவிகள் இல்லாமையினால் அறிவுண்டாவகின்று.
சமாதானம்: பிராணவாயுவே யுயிரெனில் அதுவே கர்த்தாவாகும். கர்த்தா நிற்கும்போது கருவிகள் அதை விட்டுப் போகாவாதலினால் பிராணவாயுவே யுயி ரெனல் பெருந்தவறு.
நான்காம் சூத்திரம்
இச்துத்திரம் உயிரிலக்கணங் கூறுகின்றது. இதில் மூன்று பிரிவுகள் உண்டு. 1. அந்தக்கரணங்கள் ஒன்று அறிந்ததனை ஏனைய அறியாமையினால் அறிவு உயி ருக்கே உரியது. 2. உயிரானது யான், எனது என்னும் செருக்குக்கு ஏதுவாகிய ஆணவமலத்துடன் கூடியிருப் பதனால் அது தனக்கென அறிவுடையதன்று. 3. அது அந்தக்கரணங்களுடன் சேர்ந்து அவற்றை உட்கருவி களாக்கியும் புறக்கருவிகளிற் செலுத்தியும் வெவ்வேற வத்தைகளுறும்.
அந்தக்கரணங்கள் விடயங்களை யறிவதற்குக் கருவியாய் உயிருடன் கூடி நிற்கும். கண்ணுக்கு விளக் குப்போல உயிர்வேறு அதன்கருவியாகிய அந்தக்கரணம் வேறென்று ஒருவன் நன்குணர்ந்து உயிரின் சொரூபம் யாதென்று ஆராயும்போது, அது அவனுக்குப் புலப்படும். இங்ங்ணம் ஆராயும் அறிவு பசுஞானமாதலால், அந்த ஞானம் எங்ங்ணம் உண்டாகின்ற தென்று ஆராயின், பதிஞானம் அதற்குமேலாய்த் தோன்றும்.
பிரணவத்துக்குரிய அ. முதலிய எழுத்துக்கள் அந்தக் கரணங்களைச் செலுத்தும்போதே அவை உயிருக்குக் கருவியாகும். 'பிரணவம்' எனினும் 'ஓம்' எனினும்

Page 24
38 க.சா. முருகேசுப் போதகர்
ஒக்கும். அ.உ,ம், விந்து நாதம் என்பன, முறையே அகங் காரம் புத்தி மனம் சித்தம் புருடன் என்பவற்றைச் செலுத் தும். அவ்வக்கரணங்களை முறையே பிரமா முதலிய பஞ்சகர்த்தாக்கள் அதிட்டித்து நிற்பர். ஆகவே, அந்தக் கரணங்களினாலும் பிரணவத்தினாலும் பஞ்ச கர்த்தாக் களினாலும் உயிருக்கு அறிவுண்டாகும். உயிரிலே அறிவு மாறி மாறித் தோன்றுதல், கடலிலே திரைதோன்றியும் ஒடுங்கியும் வருதல் போலாம். சவிகற்ப உணர்வுக்குக் காரணம் நால்வகை வாக்குக்கள் என்பதனை ஒருவன் கவனிக்கில் இது அவனுக்கு நன்கு புலப்படும். அந்தக் கரணங்கள் பிரணவ அக்கரங்கள் அவற்றின் அதிதெய் வங்கள் என்னும் பதினைந்தின் கூட்டமே ஆன்மா வென்று சிலர் நினைப்பது தவறு. அறிபவனும் அறியப்படும் பொருளும் எப்போதும் வேறாதலினால் அக்கூட்டம் ஆன்மாவல்ல.
ஆன்மாவைப்பற்றிய கொள்கைகள்; சீவான்மா பிரமத்தின் அம்சம் என்றும் அவ்வம்சம் அறிவு, இச்சை, செயல்களையும், குண, குணித் தன்மையையும் அடையு மென்றும் பரிணாமவாதிகள் கூறுவர். அவர்கள் கூற்றுச் சரியன்று. ஏனெனில், கருவிகளை இன்றியறிய மாட் டாத சீவான்மா சுயஞ் சோதியாகிய பிரமத்தின் அம்ச மாயிருத்தல் கூடாது.
சாங்கியர் ஆன்மாவானது குண, குணித்தன்மை யின்றி அறிவுமாத்திரமாய் நிற்றல் அதன் இயல்பென்றும் அதன் சந்நிதியில் உடம்பிலுள்ள கரணங்கள் தத்தம் தொழில் செய்வதனால் உடம்பில் அறிவு இச்சை செயல் கள் உண்டாகுமென்றும் சொல்வர். பிணத்தும் உறக்கத்தும் ஆன்ம சந்நிதியிருந்தும் உடம்பில் அறிவு, இச்சை செயல் கள் உண்டாகாமையினால் இக்கொள்கை ஏற்றற்பால தன்று. சந்நிதியெனில் வியாபகம் அன்று என்றும் அது அருகில் உள்ள இரும்பைத் தொழில்படுத்தும் காந்த சக்தியைப்போன்று உடம்பைத் தொழில்படுத்தும் சக்தி யென்றும் சொல்வர். உடம்பிற் றம்முள் மாறுபட்ட பல தொழில்கள் நடைபெறுகின்றமையால், இத்தன்மையான சந்நிதியினால் நினைத்தல் மறத்தல் ஒடல் இருத்தல் கிடத்

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 39
தல் முதலிய ஒன்றற் கொன்று மாறுபட்ட தொழில்கள் a gooTLIT 95/T.
பெளராணிகர் உயிர் உருவப்பொருள் என்பர். உருவப்பொருள் எதுவோ? அது காணப்படத்தக்கதும் தோன்றியழியும் இயல்புடையதுமாம். இக்குணங்கள் ஆன் மாவுக் கில்லாமையினால் அது உருவப்பொருள் அன்று. மேலும் அது தூல உருவல்லவென்றும், துருக்கும உருவாய் உடம்பில் நிற்கும் என்றுஞ் சொல்வதுந் தவறு. ஏனெ னில், துருக்கும உரு அல்லது உடம்பு தூல உடம்பிற்குக் காரணம். அது துருக்கும உருவுக்குளிருக்கும் அதிதுக்கும உருவென்று சொல்லவும் முடியாது. அதிதக்கும உருவா வது கலை முதலியவற்றாலுண்டாய பர உடம்பாம். மேற்கூறிய மூவகை உருவங்களும் அசித்தும் அசத்து மாதலினால் அவை சித்தும் சத்துமாய ஆன்மா அல்ல வென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகும்.
கவுளர் ஆன்மா அருவுருவப் பொருளென்பர். அரு வும் உருவும் ஒன்றற் கொன்று மாறான குணமுடையன வாதலினால் அருவுருவப் பொருளென்று சொல்லப் படத்தக்க பொருள் ஒன்றுமில்லை. மேலும், அருவுருவப் பொருள் என்றால் சந்திரனைப் போற் சிலகாலந் தோன்றி யும் சில காலம் மறைந்தும் நிற்கும் பொருள் என்றுஞ் சொல்லமுடியாது. ஆன்மா அத்தன்மையான பொருளா யின். சந்திரனைக்காண்பதுபோல் அதையும் காணக் கூடும். ஆயின், அது காணப்படக்கூடிய பொருள் அன்று.
பாதஞ்சலர் ஆன்மா ஆகாயம்போல் அருவும் அவி காரியுமாய் நிற்கும் என்பர். அது அவிகாரியாயின், உடம்பில் தம்முள் மாறுபட்ட பல தொழில்கள் எங்ங் னஞ் செய்விக்கும்?
வைசேடிகர் உயிர் அசித்தென்றும் அது மனத்துடன் சேர்ந்து சித்தாகும் என்றும் சொல்வர். சித்து அசித் தாதலும் அசித்துச் சித்தாதலும் எக்காலத்து மில்லாமை யினால் இக்கொள்கையுந் தவறு. சைவருள் ஒரு சாராரும் பட்டாசாரியரும் ஆன்மா சுத்தசித்தென்பர். அது சுத்த சித்தாயின் கருவிகளுடன் சேராது. கருவிகளுடன்சேர்ந்

Page 25
40 க.சா. முருகேசுப் போதகர்
தாலன்றி அதற்கு அறிவுண்டாகாமையினால், அது சுத்த சித்தென்பதுந் தவறு.
பாஞ்சராத்திரிகள், ஆன்மா உடம்பிற்குள் பரமாணு வளவாய் நிற்கும் என்பர். அங்ங்னமாயின் அது நவத் துவாரமுள்ள உடம்பிற்குள் ஒருகணமாயினும் நிற்கவும் பாரந் தாங்கவும் முடியாது. மேலும், ஆன்மா அணு வாயின் அது அநித்தியமாயும் இருத்தல் வேண்டும். ஏனெனில், அணு எத்துணைச் சிறிதாயினும் அதற்கும் அவயவம் உண்டு. அவயவழுள்ளதெதுவோ அதற்கு அழிவும் உண்டு.
மிருதி நூலார் ஆன்மா இருதயத்தில் நிற்க அதன் அறிவு விளக்கொளிபோல் எங்கும் வியாபிக்கு மென்பர். அது ஒரு இடத்தில் நிற்குந் தன்மையதாயின் அது உருவப் பொருளாதல் வேண்டும். மேலும், குணம்குனியளவே யன்றி அதற்குமேற் செல்லமாட்டாமையால், அதனறிவு அது நிற்குமிடத்துக்கு அப்பாற் செல்லமாட்டாது. விளக் கொளியானது அதன் துருக்கும வடிவன்றி அதன் குண மன்று,
சமணர் ஆன்மா உடம்பு முழுவதும் நிறைந்து நிற்கும் என்பர். அங்ங்னமாயின், உறக்கம், ஐம்பொறியும் ஒருங்கே அறியாமை, அறிவினளவு, உடம்பினளவுக்கு ஒத்திராமை உடம்பைக் குறைக்க அறிவு குறையாமையாகிய இவை நிகழ்தல் கூடாது.
ஐக்கியவாதிகள். ஆன்மா கடவுளைப்போல் வியாபி யாய் நின்று அறியும் என்பர். வியாபியாயிருக்கும் ஆன்மா அவத்தைகள் அடைதல் ஐம்பொறியினாலும் ஒருங்கே யறியாமை உடம்பினுக்குள் ஏகதேசமாய் நிற்றலாகிய இவை எவ்வாறு நிகழும்? மாயாகாரியம் அதின் அறிவைத் தடை செய்வதனால் அது உறக்கம் முதலியன அடைந்து ஏகதேசியாய் நிற்குமெனல் பொருந்தாது. மாயாகாரியம் அறிவை விளக்குவதன்றித் தடை செய்யாது. முன் சுத்த மாயிருந்த உயிரை மாயாகாரியம் அசுத்தப்படுத்துவ தெங்ங்னம்? முன் சுத்தமாயிருந்த உயிருடன் அது இடை யில் வந்து சேர்ந்தது எனில் வீடு பெற்ற பின்பும் அது வந்து சேரும்.

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 4
ஆசிரியரது கொள்கை: ஆன்மாவானது சித்தின் சேர்க்கையினால் சித்தாகியும், அசித்தின் சேர்க்கையினால் சித்தாகியும், வசிப்படையும் வியாபகம் உடையதும் ஆணவ மலத்தினால் மறைந்து கிடக்கும் இச்சாஞானத்தொழில் களுடையதாய் பசுவெனப்பட்டு தூல சித்தாலுடையது மாம். ஆணவ மலத்தின்ால் கேவலாவத்தையையடைந்த ஆன்மா காரண சரீரத்தைப் பெற்றதன் பயனாய் அறிவு இச்சை செயல்கள் சிறிது பொருந்தும். பின் கலை முதலியவற்றா னுண்டாகும் கஞ்சுக சரீரத்தைப் பெற்று அறிவு இச்சை செயல்க ளதிகமாய்ப் பொருந்தும். பின் அந்தக்கரணங்க ளடங்கியிருக்கும் குண சரீரத்தைப் பெறும். பின் தக்கும தேகத்தைப் பெற்றதனால் தக்கும வினைகள் புரிந்து அவற்றின் பயனை யனுபவிக்கும். பின் துரல சரீரத்தைப் பெற்று தூல வினைகள் செய்து மவற்றின் பயனை யனுபவித்தும் பிறந்து இறந்து உழன்று திரியும் மேற்சொல்லிய காரண சரீரம் முதலிய ஐந்தும் ஆன் மாவுக்கு வடிவாய் முறையே ஆனந்த மயகோசம், விஞ் ஞானமயகோசம், மனோமயகோசம், பிராணமயகோசம், அன்னமயகோசம் எனப்படும்.
கேவலாவத்தையின் ஆன்மா ஆணவமலத்துடன் மாத்திரஞ் சேர்ந்து நிற்கும். மேற்சொல்லிய கோசங்கள் ஐந்துடனும் அது வேற்றுமையின்றி நின்று அவற்றை ஆண்டு நடத்தும். அது அவற்றை நடத்துதல் முறையே: தேரை நிலத்திற் செலுத்துதலும் மரப்பாவையை இயக்கு தலும் தோற்பாவைக் கூத்தாட்டுதலும் பரகாயப் பிரவே சஞ் செய்தலும் வேடங்காட்டி ஆடுதலும் போலும். எனது மனை, பொருள் முதலியன என்னில் வேறா யிருத்தல்போல, எனது உடல் பொறி பிராணன் உணர்வு முதலியனவும் என்னில் வேறு என்பது தெளிவு. நான் என்பது ஆன்மாவாகலால் ஆன்மா வேறு, உடல், பொறி முதலியன வேறு.
சிலர் எனது உடல் என்று சொல்வது போல் எனது ஆன்மாவென்றும் சொல்லும் வழக்கம் உலகத்தில் இருக் கையினால், நான் வேறு ஆன்மா வேறு என்று சொல்ல லாமோ? என்னும் ஆட்சேபத்திற்குச் சமாதானம் என்ன

Page 26
42 க.சா. முருகேசுப் போதகர்
வெனில், எனது ஆன்மாவென்று சொல்பவர், ஆன்ம சொரூபம் அறியாத மூடரன்றிப் பிறரல்லர் என்பதாம். சில சமயங்களில் என்றனான்மாவென்னும்போது அது என்னோடு சம்பந்தமான கடவுளைக் குறிக்கும். புத்தியை மனம் என்றும் மனத்தைப் புத்தியென்றும் சித்தத்தைச் சீவனென்றும் சீவனைச் சித்தமென்றும் சிவனைச் சீவ னென்றும் சீவனைச் சிவனென்றும் சொல்லும் வழக்கம் உலகத்திலுண்டு. இவ்வழக்கப்படி பிரயோகிக்கப்படும் பெய ராகு பெயரெனப்படும், உபநிடதங்களில் பஞ்ச கோசங்களுமான்மாவென்று அழைக்கப்படுவது மெய். அவற்றை ஆன்மாவெனல் விளக்குத் தகழியை விளக் கெனல் போல்வதன்றிப் பிறிதன்று. விளக்கு முறிந்தது என்றால் அதன் தகழி முறிந்தது என்று அர்த்தமாம். அவ்வாக்கியத்திலுள்ள விளக்கு என்னும் பெயர் தானி யாகுபெயர். ஆதலால், ஆன்மா வேறு பஞ்ச கோசங்கள் வேறு. ஆன்மா அன்னமய கோசங்கள் முதலிய நான்கு கோசங்களை ஒவ்வொன்றாய்விட்டு ஐந்தவத்தைப்பட்டு விழித்தபின் அவ்வவத்தைகள் யாவும் தனக்குண்டாயின என அறிகின்றமையால் ஆன்மா வேறு கோசங்கள் வேறு என்பது வெளிப்படை.
ஆன்மா கடவுளைப்போல் சுத்த சித்தல்லாமையினால், அது மாயாகாரியங்களின் சகாயமின்றி அறியமாட்டாது. அதற்கும் இவற்றிற்கும் உள்ள சம்பந்தம் அரசருக்கும் அமைச்சருக்கும் உள்ள சம்பந்தம் போலும். அது அங் நுனம் அறிவதிலிருந்து அது அநாதியே ஆணவமலத்தில் மறைந்து அருவாய் நிற்றல் பெறப்படும். அரசனொரு வன் தன் சேனையுடன் வெளியேபோய் அரண்மனைக்குத் திரும்பி வந்தபின் சேனையையும் காவற்காரரையும் இன்னும் பிறரையும் அவரவர்நிற்க வேண்டிய வாயில் களில் நிறுத்தி தான் தனியே அந்தப்புரத்திற் செல்லு மாறுபோல, ஆன்மா கருவிகளை விட்டுவிட்டுச் சென்று, ஐவகை அவத்தைகள் அடையும். அவ்வவத்தைகளாவன: சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பனவாம். அவற்றை யடையும்போது ஆன்மா நிற்கும் இடங்களாவன: முறைய்ே புருவம் கழுத்து இருதயம்

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் A 3
நாபிமூலம் என்பன அவற்றுக்குரிய கருவிகள் முறையே முப்பத்தைந்தும் இருபத்தைந்தும் மூன்றும் இரண்டும் ஒன்றுமாம். ஐந்து அவத்தைகளும் கீழ்நோக்கிச் செல் வதனாலும் மேல் நோக்கிச் செல்வதனாலும் இருவகைப் படும் சாக்கிரத்திலிருந்து சொப்பனம்; சொப்பனத்தி லிருந்து சுழுத்தி; சுழுத்தியிலிருந்து துரியம்; துரியத்தி லிருந்து துரியாதீதம் இது கீழ்நோக்கிச் செல்லுமுறை. இம்முறை பிறவிக்கு வித்தாகும். இதற்கு மாறான முறை மேல்நோக்கிச் செல்லும்முறை. அது பிறவி அறுத்தற்குக் காரணம். மேலும் சாக்கிராவததையிலும் சாக்கிரம் முத லிய பஞ்ச அவத்தைகளும் உண்டாகும். அவை நுண் ணுணர்வினால் அறியப்படும். சுத்தாவத்தையிலும் ஐவகை அவத்தைகளுண்டு. அவை உண்மை அதிகாரத்தில் விளக் கப்படும். அவற்றுள் சாக்கிராவத்தையில் சுத்த தத்து வங்கள் ஐந்தும் சொப்பனத்தில் முதல் நான்கும், சுழுத் தியில் முதல் மூன்றும், துரியத்தில் முதல் இரண்டும், துரியாதீதத்தில் முதல் ஒன்றும், கலை முதலியவற்றைச் செலுத்தும். இப்பஞ்ச அவத்தைகளுக்கும் காரணமான அவத்தைகளும் உளவாதலினால் இவை காரியாவத்தைகள் எனப்படும். கேவலாவத்தை சகலாவத்தை சுத்தாவத்தை என்னும் மூன்றும் காரணாவத்தைகள்.
கேவலாவத்தையில் ஆன்மா தனது இச்சா ஞானக் கிரியைகள் ஆணவமலத்தினால் மறையப்பெற்றுத் தனித்து நிற்கும். சகலாவத்தையில் அது தனு கரனாதிகளுடன் கூடி அவை மூன்றும் ஒரளவில் விளங்கப்பெற்று நிற்கும். சுத்தாவத்தையில் அது பஞ்சமலங்களும் நீங்கி, சிவத்துடன் கூடி அறிவு வியாபிக்கப்பெற்று நிற்கும். சகலாவத்தையில் தேகம் பிறப்பிறப்புக்கள் அராகம் முதலிய குணங்கள் அறிவு இச்சை செயல்கள் விளங்குதல் போகமனுபவித்தல் மலத்தினின்று பிரிதல் ஏகதேசியாதல் என்னும் பத்துக் குணங்களுமுண்டு. இக்குணங்களில் ஒன்றாயினும் கேவ லாவத்தையில் காணப்படமாட்டாது. சுத்தாவத்தையில் இருவினையொப்பு சத்தினிபாதம் குருவருள் ஞான சாதனம் மும்மலநீக்கம் வாசனை நீக்கம் திருவருள் கூடு தல் என்னும் எட்டு இலட்சணங்களும் காணப்படும்.

Page 27
44 க.சா. முருகேசுப் போதகர்
ஐந்தாம் சூத்திரம்
இச்தத்திரத்தில் திரோதான சத்தியினியல்பு கூறப் படுகின்றது. ஆன்மாவானது தன்னை யறியமாட்டாத பொறிபுலன் முதலியவற்றைத் தானறிந்து அறிவித்து உடனிற்குமாறு போலச் சிவமும் தன்னையறியமாட்டாத ஆன்மாவைத்தான் அறிந்து அறிவித்து உடன் நிற்கும். திரோதான சத்தியைச் சிவமெனல் உபசாரம். ஆட்சேபம் சிவமே உயிர்களுக்கு அறிவிக்குமெனில், இவை எல்லா வற்றிற்கும், அறிவில் ஏற்றத் தாழ்வுகளுக்கு நியாயமின்று. அங்ங்னம் இருப்பதற்குக் காரணம் உயிர்களது கன்ம மெனில் சிவத்தின் சகாயம் அவசியம் இன்றெனல் வேண்டும். இவ்வாட்சேபம் சரியானதன்று. தாமரை மலர்வதற்குத் தாமரையேயன்றிச் சூரியனும் உழவு முத லிய செயல்களின் பயனுக்கு அச்செயல்களே யன்றி வயல் நிலமும் வேண்டியன போல உயிர்கள் தத்தம் கன்மத்துக்குத் தக்கபடியறிவதற்கும் சிவத்தின் சகாயம் வேண்டும். ஆன்மா ஒன்றை வேறொன்றால் அறித லானும் அஃதாவது ஒரு விடயத்தை ஒரு கருவியினா லறிதலானும் அறிந்தவற்றை மறத்தலானும் அறிவிக்க அறிதலானும் அறியுந்தன்னை இயல்பாய் அறியாமை யினாலும், தானே எதையும் அறியத்தக்கதன்று. ஆன்மா, " கருவி கலை முதலிய தத்துவங்கள் அறி பொருள் காலம் நியதி தேகம் பிரமாணம் வைகாரி முதலிய நான்கு வாக் குக்கள் என்பவற்றுடன் அறிவிப்பவனுங் கூடி நின்று அறிவித்தால் மாத்திரம் அறியும். அல்லாவிடில் அறிய மாட்டாது. சுருக்கிச் சொல்லுகில் சிவம் அறிவிக்காமல் அது அறியமாட்டாது. சிவம் அறிவதற்கு மேற்கூறியன வேண்டுவனவல்லவாதலினால், சிவம் தானே அறிந்து அதற்கு அறிவித்து உடன் நிற்கும்; சிவத்தின் சகாயமின்றி உயிர் எதையும் அறியும் ஆற்றல் இலது என்பதற்குப் பிரமாணம் மேற்கூறிய யுத்திமாத்திரமன்றிச் சுருதியுமாம். சிவத்தின் சந்நிதியில் மாயாகாரியங்களினால் அதற்கு அறிவுண்டாகும். அக்காரியங்கள் சிவத்தின்முன் முனைத்து நிற்கமாட்டாமையினால் சிவம் தானே யறிவதற்கு அவை வேண்டுவனவல்ல. சிவம் உலகத்தைத் தனக்குத் தேக

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 4 is
மாகவும் யோனிபேதங்களை யுறுப்புகளாகவும் இச்சா சத்தி ஞானசத்தி கிரியாசத்தி முதலிய சத்திகளை அந்தக் கரணங்களாகவும் கொண்டு உயிர்களுக்கு அறிவிக்கும். சிவம் உயிர்களைப் பிறப்பிறப்புகளுக்குட்படுத்தி அவற் றிற்கு ஏகதேச அறிவைப் பிறப்பித்துச் சிற்றின்பம் கொடுத் தலுக்கு நோக்கம் அவற்றிற்குப் பக்குவம் வரச் செய்து வியாகப அறிவையுண்டாக்கிப் பேரின்பம்கொடுத்தலாம். சிவத்தினருளே சத்தி யன்றி வேறொன் றன்று, குண குணிகள் ஒன்றைவிட்டொன்று பிரிந்திருத்தல கூடாமை போலச் சிவமும் சத்தியும் ஒன்றை விட்டொன்று பிரிந்திருத்தல் கூடாது. வேறொருவிதமாய்ச் சொல்லு கில் சிவமின்றிச் சத்தியில்லை சத்தியின்றிச் சிவமில்லை. சிவத்திற்குத் திருவருள் இயற்கைக்குணமாதலால் அது ஒரு உயிரையாயினும் கைவிடாது. உயிர்களனைத்திற்கும் தத்தம் கன்மத்துக்குத் தக்கபடி போகம் கொடுத்து ஈற்றில் மோட்சம் அருளும் என்பது நிச்சயம்.
ஆறாம் சூத்திரம்.
இச்சூத்திரத்தில் பதி இலட்சணங்கள் கூறப்படுகின்றன. சிவன் சுட்டி அறியப்படத் தக்கவராயின், நாம் அவரைச் சடமென்றும், ஆதியந்த முடையவ ரென்றும், எவ்வாற் றானும் அறியப்படக்கூடாதவராயின் அவர் இல்பொரு ளென்றும் சொல்லல் வேண்டும். சிவனுக்கு எதிரே பாசஞானம் நிலைநிற்க மாட்டாமையினால் அவர் சிவ ஞானத்தினாலன்றி வேறெவ்வுபாயத்தினாலும் அறியப் படத் தக்கவரல்லர். அவர் சித்துச் சத்தாகி நிற்பார். சுட்டறிவாவது எதுவோ? அது அசத்து. ஏனெனில் அது ஆதியந்தமுடையதும், தனுகரண புவனபோகமென பல வகைப்படுந் தன்மை யுடையதுமாம். இத்தன்மையுள்ள அறிவினால் அறியப்படுவன அனைத்தும் அசத்தாவனவன்றி அவற்றுள் ஒன்றாயினும் சத்தாகமாட்டாது. பூமி சுவர்க்கம்

Page 28
46 க.சா. முருகேசுப் போதகர்
பிரமலோகம் வைகுந்தம் முதலிய இடங்களும் மற்று முள்ள பூத பெளதிகங்களும் வாஸ்தவத்தில் உள்பொருட் கள் அல்ல. இந்திரசாலம், கனா, பேய்த்தேர் முதலியன போல இல்பொருட்களாம். ஆதலால் உலகத்தை அசத் தெனல் தவறன்று.
அறியப்படும் பொருள் அசத்தாகலால் அறியப்படாத பொருளே சத்து என்பதினா லுண்டாகும் குற்ற மென்னை? விடை அப்படிப்பட்ட பொருளுடன் நமக்கு எப்போ தாயினும் சம்பந்தமுண்டாக இடமின்று. அதினால் ஒரு செயலும் நடை பெறமாட்டாது. அது ஆகாயத்தாமரை ஆமை மயிர்க் கயிறு முதலியனபோல் எக்காலத்தும் இல்பொருளாவதன்றி உள் பொருளாகாது.
மேற்கூறிய நியாயங்களினால் பிரமம் உள்பொருளு மன்று இல்பொருளுமன்று, இரண்டுமன்று வேறுமன்று ஆதலால் அது அநிர்வசனப்பொருள் என்று சொல்வது ஏன் தவறு? விடை அநிர்வசனப்பொருள் எனப்படுவது உள்பொருளாய் அல்லது இல்பொருளாய் இருத்தல் வேண்டும். அது இல்பொருளாயின் இல்பொருளுக்கு மேற்கூறிய குற்றங்கள் யாவும் அதற்கும் பொருந்தும். ஆதலாலது உள் பொருள் எனல் வேண்டும். அங்ங்ன மாயின் பிரமம் அநிர்வசனப்பொருளன்று உள்பொரு ளாம். பிரமம் உள்பொருளாயின் நாம் ஏனதை யறிய முடியாது. சுட்டறிவினா லறியப்படுவன வனைத்தும் சடமு மழியுந் தன்மை யுடையனவும் என்று முன்னரே நாட்டப்பட்டது. பிரம மல்லது சிவம் சுட்டறிவினைக் கடந்து நிற்கும் சித்துப்பொருளாகலா லதை நாமத னரு ளினா லறிவதன்றி வேறெவ்வழியினாலுமறியமுடியாது. தன்னருளினா லறியப்படுஞ் சிவமானது தன்னை அறியு மறிவுமாய் வேறுமாய் உடனுமாய் நிற்கு மியல்புடையது.
ஆட்சேபம்: பிரமத்தை அதனருளினால் மாத்திரம் நாமறியலாம் என்று சொல்வது சரியன்று. பாதஞ்சலர் சொல்வது போல நாம் அதை யோக பாவனையினா லறியலா மென்று ஏன் சொல்லக்கூடாது?

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 47
சமாதானம்: ‘யோகபாவனை கருவிகளுடன் கூடி நின்று செய்வதனால் அது சகலாவத்தைக் குரிய தாகும். கருவிகளன்றிச் செய்வதனால் அது கேவலாவத்தைக் குரிய தாகும், சுத்தாவத்தையி லன்றி யேனையிரு அவத் தைகளிலும் சிவத்தையறிய முடியாது. மேற்சொல்லிய விதம் இரண்டு மின்றிப்பாவிப்ப தெனில் அப்பாவனை வெறும்பாழ் அல்லது தனியமாம். பாவனைக்கு எட்டாத பொருளை எட்டிய பொருளாக நினைத்துப் பாவிப் பவன் அதைத்தானாகப் பாவிப்ப தென்னில் அப்பா வனை போலியாம். ஆதலால் சிவத்தை அத னருளினால் அறிவதே தக்க முறையாம்.
சிவமும் உயிரும் ஒன்றென்று ஏகான்மவாதிகள் கூறு வது சரியன்று ஒருவன் சொல்லுவானாயி னப்படிச் சொல் பவன் வேறு சொல்லப்படும் பொருள் வேறாதலும் வேறென்று சொல்வானாயின், அது வேறென்னும் அறி வுக்கு எட்டாமையினால் உடனாதலும்; அவ்விருவகையு மாய்மாத்திரம் நிற்கும் என்று சொல்வானாயின்; அது அங்ங்னம்மாத்திரமல்ல; அது உயிருட் னொன்றி நின்று உயிரே சிவம் என்னும்படி ஒன்றாதலும் பெறப்படும். சுருக்கிச்சொல்லுகில் சிவம் உயிருமாய் உடனுமாய் வேறு மாய் நிற்கும்.
ஏழாம் சூத்திரம்
இச்துத்திரத்தில் சாதனங்களைச் சாதித்துப் பெறுதற் குரிய அதிகாரமுடையது எதுவென்பது கூறப்படுகின்றது. சத்த சத்துக்களைப் பகுத்தறிவது யாது? சிவாத்துவித சைவர் சத்தாகிய சிவமே அசத்தாகிய பொருட்களனைத் தையும் அறியும் என்பர். அவர்கள் சொல்வது சரியன்று. சிவம் வியாபக அறிவாகையால் எல்லாவற்றையும் ஒருங்கே அறிவதன்றி ஒவ்வொன்றாய் அறிவதன்று. சிவம் உயிரின் பொருட்டுக் கருவி கரணங்களில் நின்று ஒவ்வொன்றாய்

Page 29
48 க.சா. முருகேசுப் போதகர்
அறியும் என்றும் சொல்வது பொருந்தாது. ஏனெனில், இரவிமு னிருள்போலச் சத்தெதிர் அசத்து முனைத்து நிற்க மாட்டாது. சிவ சங்கிராந்தவாதிகள் அசத்தாகிய கருவியே ஆன்ம சந்நிதியில் சிவகரணமாய் நின்று அறியுமென்பர். இது வும் ஏற்றற்பால தன்று. கருவி தானேறியுந் தன்மையுடைய தன்று அதனுதவியால் அறியுந் தன்மையுடைய வேறொரு பொருள் அறியும். சத்தையும் அசத்தையும் அறிவது ஆன்மா வேயாம். அது சத்துமன்று அசத்துமன்று. அவை இரண்டுட னும் அதுவது வாய் நிற்கும் இயல்புடையதாதலால் சத சத் தெனப்படும். சிவம் துக்கும சித் தாகலால் அதனெதிர் அசத்து நிற்கமாட்டாது. துரலசித்தாகிய உயிரின் முன் அது நிற்கும். இவ்வித்தியாசத்திற்குக் கடலும் நீரும் உப்பும் நல்ல உவமை உப்பு கடலுடன் சேராது நீருடன் சேர்ந்து நிற்கும். அது போலப் பாசம் சிவத்துடன் சேராது ஆன்மாவுடன் சேர்ந் திருக்கும். சிவமும் ஆன்மாவும் பாசமும் அநாதி. உயிர் தானே யறியாது அறிவிக்க அறிவதனால் அது துரல சித் தென்றும் சிவம் ஒரு உதவியுமின்றித்தானே யறி வதனால் துருக்கும சித்தென்றுஞ் சொல்லப்படும். ஆதலால், சிவம் தனது அருளினால் ஆன்மாவைப் பாசபந்தத்தி லிருந்து விடுவித்து அதை முத்தியிற் சேர்க்கும் ஆற்ற 39160 ll 1951.
எட்டாம் சூத்திரம்
இச்சூத்திரம் முத்தி சாதனத்தையும் அதற்குரிய வழி வகைகளையும் கூறுகின்றது.
ஒர் அரசிளங் குமரன் தன் மடமையால் வேடர் கையில் அகப்பட்டுத் தன் தந்தையாகிய அரசனை மறந்து மயங்கித் துயருறும்போது, அவ்வரச னவன்மேலுள்ள அன்பினால் அவனைத் தேடிப்போய்க் கண்டு பிடித்து, அவன் தன் மகனென்பதை அவனுக் குணர்த்தி, அவனை வேடரினின்றும் பிரித்துத் தன் அரண்மனைக்குக்கூட்டிக்

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 49
கொண்டுபோய்த் தனக்குரிய சிறப்புக்களை அவனுக்குச் செய்வதுபோல; சிவன் குருமூர்த்தியாய் எழுந்தருளிவந்து ஐம்பொறிச்சுழியில் அகப்பட்டு வருந்தும் உயிருக்கு அதன் பக்குவங்கண்டு அதற்கு உண்மையை உணர்த்தித் தமது திருவடிகளிற் சேர்த்தருள்வர்.
உயிர்கள் பந்தவேறுபாட்டால் விஞ்ஞானகலர் பிரளயா கலர் சகலர் என மூவகைப்படும். அவை முறையே ஆணவம், ஆணவம் கன்மம், ஆணவம் கன்மம் மாயை என்னும் மலமுடையன. சகலவர்க்கத்திற்கு மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்னும் நால்வகைச் சத்தினி பாத முறைமையினால் உணர்த்த வேண்டுவதனால் அவ்வர்க்கத்திற்குச் சிவன் குருமூர்த்தியை அதிஷ்டித்துச் செய்யும் தீட்சை சாதார தீட்சை எனவும் முதலிருவர்க்கத் திற்கும் தீவிரம் தீவிரதரம் என்னும் சத்தினிபாத முறை மையினால் முறையே உள் நின்றும் முன்னின்றும் உணர்த்தவேண்டுவதனால், அவ்விருவகை வர்க்கத்திற்கும் அவர் செய்யும் தீட்சை நிராதார தீட்சை எனவும் கூறப் படும். தீட்சையானது நயன தீட்சை, பரிச தீட்சை, வாசக தீட்சை, மானத தீட்சை, சாத்திர தீட்சை, ஒளத்திரி தீட்ச்ை முதலிய பலவகைப்படும். ஒளத்திரி தீட்சை யானது; ஞானவதி கிரியாவதி என்றிருவகைப்படும். ஞானவதி குண்டம் மண்டலம் முதலியவற்றை மனத்தாற் கற்பித்துச் செய்ய வேண்டிய கிரியைகளை அகத்தே செய்வதாம். கிரியாவதி அவற்றையெல்லாம் புறத்தே யமைத்து, அக்கிரியைகளைச் செய்வதாம். மேலும் ஒளத் திரி தீட்சை, நிர்ப்பீசம், சபீசம் என வேறிரு வகைப்படும் அனுஷ்டிக்கவேண்டிய சமயாசாரங்களை அனுஷ்டிக்குந் திறமையில்லாதவர்களாகிய பாலர் வாலிபர் விருத்தர் ஸ்திரிகள் வியாதிஸ்தர் முதலியோருக்குச் செய்யுந் தீட்சை நிர்ப்பீச தீட்சையாம். இத்தீட்சை பெறுவோருக்கு நித்திய நைமித்திக கருமங்கள் செய்வதற்கு அதிகாரங் கொடுக்கப்படாமையினால் இது நிரதிகாரதீட்சையென் றும் கூறப்படும். நிரதிகார தீட்சை, சமய தீட்சை, விசேஷ தீட்சை, நிர்வாண தீட்சை என மூவகைப்படும். நிர்வாண தீட்சை உடனே முத்தியைப் பயக்கும் சத்தியோ நிர்வாண தீட்சை எனவும் மரணத்தின் பின் முத்தியைப் பயக்கும் அசத்தியோ நிர்வாண தீட்சை எனவும் இருவகைப்படும்.

Page 30
5 O க.சா. முருகேசுப் போதகர்
சபீச தீட்சையாவது மலபாரிபாகமும் கல்வியறிவும் சமயசார நெறி நிற்கும் ஆற்றலும் உடையோருக்குச் செய் வது. இத்தீட்சை செய்யும் ஆசாரியன் அவர்களுக்கு நித்திய நைமித்திக காமிய என்னும் மூவகைக் கன்மமும் செய்ய அதிகாரம் கொடுப்பன். இதைப் பெற்றவர் சாதகர் ஆசாரியர் என்னும் இருவகுப்பினராவர். மேலும் இது இல்லறமுடையார்க்குச் செய்யப்படும் லோகதருமிணி என்றும் துறவறமுடையார்க்குச் செய்யப்படும் சிவதருமிணி என்றும் இருவகைப்படும். சமயம் விசேடம் நிர்வாணம் அபிஷேகம் என்னும் தீட்சா பேதங்கள் அனைத்தும் நிர்ப் பீசம் சபீதம் என்னும் இரண்டிலும் அடங்கும்.
சிவன் ஞானாசாரியனை அதிஷ்டித்து நின்று மந்திரம் முதலிய ஆறத்துவாக்களும் ஒன்றிலொன்றடங்க இறுதியிலுள்ள கலை திரோதான சத்தியிலும் அது சிவத் திலும் அடங்குமாறுணர்ந்து, அவ்வாறடக்கி நிர்ப்பீசம் சபீசம் எனத் தனித்தனி இருவகைப்படும். மேற்கூறிய ஞானவதி கிரியாவதி என்னும் இரு தீட்சையில் ஒன்றி னால் ஆறத்துவாக்களையுஞ் சோதித்துப் பிறவிக்குக் காரண மாகிய மல சத்தியைக்கெடுத்து சிவம் பிரகாசித்தற்கு வேண்டிய ஞானத்தைக் கொடுத்தருள்வர். மந்திரங்கள் பதங்களிலும் பதங்கள் வன்னங்களிலும் வன்னங்கள் புவ னங்களிலும் புவனங்கள் தத்துவங்களிலும் தத்துவங்கள் கலையிலுமடங்கும் கலை ஐந்து வகைப்படும். அவையாவன: நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதம் என்பன. நிவிர்த்தி கலைக்கு இரண்டு மந்திரங்களும், இருபத்தெட்டுப் பதங்களும், ஒரு எழுத்தும், நூற்றெட்டுப் புவனமும், பூமி தத்துவமும் உரியன. இக்கலைக்குத் தெய் வம் பிரமா, பிரதிட்டா கலைக்கு இரண்டு மந்திரங்களும், இருபத்தொரு பதங்களும், இருபத்துநாலு வன்னங்களும், ஐம்பத்தாறு புவனமும், இருபத்துமூன்று தத்துவங்களும் உரியன. இதற்குத் தெய்வம் விஷ்ணு. வித்தியா கலைக்கு இரண்டு மந்திரங்களும் இருபது பதங்களும் ஏழு வன்னங் களும் இருபத்தேழு புவனமும் ஏழு தத்துவங்களும் உரியன. இதற்குத் தெய்வம் உருத்திரன். சாந்தி கலைக்கு இரண்டு மந்திரங்களும் பதினொரு பதங்களும் மூன்று வன்னங் களும் மூன்று தத்துவங்களும் உரியன. இதற்குத் தெய்வம்

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 5
மகேசுரன். சாந்தியாதீத கலைக்கு மூன்று மந்திரங்களும் ஒரு பதமும் பதினாறு வன்னங்களும் பதினைந்து புவனங் களும் இரண்டு தத்துவங்களும் உரியன. இதற்குத் தெய் வம் சதாசிவன்.
ஆகவே, மந்திரங்கள் பதினொன்று. பதங்கள் எண்பத் தொன்று. வன்னங்கள் ஐம்பத்தொன்று. புவனங்கள் இருநூற்றிருபத்துநாலு. தத்துவங்கள் முப்பத்தாறு.
ஆணவ மலமும் ஆகாமிய வினையும் சஞ்சித கன்ம மும் அதற்குப் பற்றுக்கோடாகிய மாயையும் முறையே சிவனது ஞான சத்தியினாலும் கிரியா சத்தியினாலும் அழியும். பிராரத்துவ கன்மம் அனுபவத்தினாற்றிரும். ஆதலால், தீட்சை முத்திக்கு இன்றியமையாச் சிறப்புடை யது; தீட்சையின்றி யத்துவ சுத்தி கைகூடாது. அத்துவ சுத்தி யாவது அத்துவாக்களாறிலுங் கட்டுப்பட்டிருக்குஞ் சஞ்சித கன்மங்களை யழித்தல்.
ஒருவன் மலபாரி பாகம் எய்த அதிககாலஞ் செல்லும். அதற்கு முன் அவன் பல படிகள் ஏறவேண்டும். அப்படி களாவன:- பாஞ்சராத்திரம் முதலிய புறச் சமயங்களை அனுஷ்டித்தல், சைவம் முதலிய அகச்சமயங்கள் ஒன்றிற் சேர்தல், மிருதி நூல்களைக் கைக்கொள்ளுதல், பிரம சரியம் முதலிய ஆச்சிரமங்களின் வழி நிற்றல், தவம் புரிதல், கலைக் கியானங்கற்றல், வேதம் படித்தல், சிவ புராணம் படித்தல், சைவ சித்தாந்த நெறியைச் சேர்ந்து சரியை கிரியை யோகம் என்பவற்றை முறையே அனுஷ் டித்தல் என்பன. இப்படி எல்லாம் கடந்தோரே மலபாரி பாகமுடையோர். அவர்களுக்கே பரமுத்திக் கேது வாகிய சிவஞானம் உதிப்ப தன்றி ஏனையோருக்கு அது உதியாது.
முத்திவகைகள் - ஸ்திரிபோகம் சுவர்க்கம் பஞ்ச கந்தங்களும் அழிதல் அட்டகுணமடைதல் அறிவுகெடுதல் பிரகிருதி புருஷ விவேகம்: சிவசமவாதம் என்பன. இம் முத்தி வகைகள் எல்லாம் நிலம்முதல் நாதம் ஈறாயுள்ள முப்பத்தாறு தத்துவங்களுக்குட்பட்டனவாம். சைவசித் தாந்த முத்தியாவது முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்த சிவனது திருவடியைச் சேர்தல்.

Page 31
52 க.சா. முருகேசுப் போதகர்
நூல்கள் முதல்நூல் வழிநூல் சார்புநூல் பூர்வபட்ச நூலெனப் பலவகைப்படும். வேதாகமங்கள் முதல்நூல் கள், ஸ்மிருதி புராணம் முதலியன வழி நூல்கள். வேதாங் கங்கள் சார்புநூல்கள் புறச்சமயநூல்கள் பூர்வபட்சநூல் கள், வேதாகமங்களை ஒழிந்த ஏனைய நூல்கள் முதல் நூல்கள் எனப்படத் தக்கனவல்ல. நான்கு வேதங்களும் உலகத்தவர்கள் எல்லாருக்கும் பொது நூல்கள், சிவா கமங்களோவெனில் சத்தினிபாத முடையோருக்குமாத் திரமுரிய சிறப்புநூல்கள். வேதங்களின் உண்மையான கருத்தையறிவது சிற்றறிவுடைய மனுஷருக்கு அசாத்தியம் என்பதையறிந்து சிவபிரான் தாமே அதை ஆகமங்களில் வெளியிட்டிருக்கின்றனர். உபநிடதங்கள் வேதாந்தம் என்றும் ஆகமங்கள் சித்தாந்தம் என்றும் அழைக்கப்படும். ஆகவே, உபநிடதங்களின் உண்மைப்பொருளே ஆகமங் களின் அடக்கமன்றிப் பிறிதன்று. ஆதலால்,
சைவ சித்தாந்த நெறியே முத்திக்கு நேர்நெறி என்று துணியப்படும். இதை மறுப்பவர்கள் விவேகிகள் அல்லர். அவர்கள் முத்திநெறி யைக் கண்டுபிடிக்க அநேக ஜென் மங்கள் கழிதலவசியம். சர்வ ஞானம், சர்வ முதன்மை, சர்வ காருண்ணியம் என்னும் மூன்று இலட்சணங்களும் சிவபிரானுக்கே உரியனவென்பது முறையே வேதாகமங் களை யருளியதனாலும் உயிர்களுக்கு இன்ப துன்பங்களைக் கன்மத்துக்கு ஈடாய்க் கொடுப்பதனாலும் அவற்றின் பக்குவங் கண்டு அவற்றிற்கு முத்தியளிப்பதனாலும் பெறப்படும்.
சைவ சித்தாந்த நெறிக்கு சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கு பாதங்களுள. சரியையாவது சிவன்கோயிலைக் கூட்டுதல் மெழுகுதல் கோயிற் பூசைக்கு வேண்டிய பூக்கள் கொய்தல் மாலை கட்டுதல் நந்தவனம் அமைத்தல் திருவிளக்கிடுதல் சிவனடியாரை உபசரித்தல் முதலியனவாம். சரியை விதிப்படி அனுஷ்டிப்பவர்கள் சாலோக பதவியையடைவர். கிரியையாவது சிவபூசை செய்தல். கிரியை அனுஷ்டிப்பவர்கள் சாமீபப்பதவியை யடைவர். யோகமாவது புலன்களை யடக்கி மூச்சை வசப்படுத்தி சிவனது அருவத் திருமேனியை வழிபடுதல். யோகத்தை அனுஷ்டிப்பவர்கள் சாரூபபதவியடைவர்.

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 53
யோகம் அட்டாங்கமுடையது; அவையாவன: இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி என்பன. இயமமாவது பாவங்களை விடுதல். நியமமாவது தவஞ்செய்தல் தெய்வம் வழிபடல் முதலியன. ஆசனமாவது யோகஞ்செய்கையிலிருக்கும் விதம் ஆசனம் கோமுகம் பங்கயம் முதலியன. பிராணா யாமம்-பிராணவாயுவைத் தடுத்தல், பிரத்தியாகாரம் மனத்தைப் பொறி வழி செல்லாமற் றடுத்தல். தாரணை உந்தி இருதயம் உச்சி என்னுமிடங்களிற் சித்தத்தை நிலை நிறுத்தல்; தியானம் சிவ மூர்த்தியைத் தியானித்தல்; சமாதி சிவத்தோடு தன்னைப் பொருத்துதல்; ஞானமாவது சகல கலைக் கியானங்கள் புராணங்கள் சாஸ்திரங்கள் அனைத் தையும் நன்கு கற்று ஏனைச் சமயப்பொருட்கள்யாவும் உண்மைப்பொருட்கள் அல்லவென்று உணர்ந்து வேதா கமங்களிற் சொல்லப்பட்டுள்ள பதி பசு பாசம் என்னும் முப்பொருளது இயல்பை ஐயந் திரிபறக் கற்றுச் சிவனைத் தரிசித்தற் கேதுவாகிய சிவஞானம் அடைந்து அறிபவன் அறிவு அறியப்படும்பொருள் என்னும் திரிபுடி கழலப் பெற்று சிவனுடன் இரண்டறக் கலத்தல். ஞானத்தை யனுஷ்டிப்பவரே-பரமுத்தி அல்லது சாயுச்சியம் அடைவர்.
ஐந்து வகையான வேள்விகள் உண்டு. அவையாவன:- கன்மவேள்வி, தவவேள்வி, செபவேள்வி, தியானவேள்வி, ஞானவேள்வி என்பன. முதல் நான்கும் போகத்துக்கு வித்தாம். ஒதல் ஒதுவித்தல் ஒதியதன் பொருளைக் கேட் பித்தல் கேட்டல் சிந்தித்தல் என ஐவகைப்படும். ஞான வேள்வி ஒன்றுமே வீட்டைத் தரத்தக்க ஆற்றலுடையது. ஆதலால், வீட்டை விரும்புபவன் அவ்வேள்வியையே முக் கியமாய்க் கையாடல் வேண்டும். உண்மைஞானமாவது கேட்டல், கேட்டதனைச் சிந்தித்தல், சிந்தித்த பின் தெளி தல், தெளிந்தவண்ணம் நிட்டை கூடுதல் என நான்கு திறப்படும். இம்முறையே படிப்படியாய் மேற்சென்று நிட்டை கூடியவர்களே முத்தியடைந்தோராவர். இவை நான்கு வகைகளையுங் கையாட்ாது ஒதல் ஒதுவித்தல் கேட்பித்தல் என்னும் மூன்றையுஞ் செய்தவர்கள் பத முத்திகள் அடைந்து பின் நற்குலத்திற் பிறந்து ஆசிரிய னிடம் கேட்டல் முதலியவற்றால் நிட்டை கூடி இறுதியில்

Page 32
54 . க.சா. முருகேசுப் போதகர்
t
முத்தியடைவர். தானம், யாகம், தீர்த்தம், ஆச்சிரமம், தவம், சாந்தி, விரதம், கன்ம யோகம் முதலியன விதிப் படி செய்தோர் சுவர்க்கம்போய் அங்கே சிறிது காலம் இன்பம் அனுபவித்த பின் பூமிக்குத் திரும்பி வந்து பிறப்பர். சரியை, கிரியை யோகம் என்பவற்றை யனுஷ்டிப்பவரோ வெனில் மேற்சொல்லிய மூவகைப் பத முத்திகளில் நெடுங்காலம் வைகி சர்வ சங்கார காலத்தில் சிவானுக்கிரகத்தினால் முக்தியடைவர். சிவானுக்கிரகம் கிடைக்காவிடில் உலகம் திரும்பவுஞ் சிருஷ்டிக்கப்பட்ட பின் பூமியிற் பிறந்து ஞான மெய்தி முத்தியடைவர்.
சிவஞானிகட்குத் தானஞ் செய்தல் முதலிய செயல்கள் அடங்கிய பத்தி நெறியில் நின்றோர் பத முத்தியடைந்து பின் பூமியில் நற்குடியிற்பிறந்து சரியை கிரியை யோகம் என்பன எளிதிற் கைகூடப்பெற்று ஈற்றில் ஞானமடைந்து முத்தி சேர்வர். நான்கு வேதங்கள் புரா ணங்கள் ஆகமங்கள் ஆதிய நூல்கள் எல்லாம் வீட்டிற்கு வழி ஞானமே யன்றி வேறொன்றன்று என்று கூற அதற்கு மாறாய்த் தீட்சையே போதும், ஐவகை வேள்வியே போதும், பத்தியே போதும் என்று பிதற்றும் அறிவிலிகட்கு மெய் யறிவு புகட்டுதல் எவ்வாற்றாலும் கூடாது. ஞானம் அல் லாதது எதுவோ? அது அஞ்ஞானம். அஞ்ஞானத்தாற் பந்த முண்டாவதன்றி முத்தி ஒருபோதும் உண்டாகாது. அஞ்ஞான வகைகள் யாவும் ஒளிமுன் இருள்போல ஞானத்தின்முன் கெட்டொழியும். ஞானமென்று சிறப்பித்துச் சொல்லப்படத்தக்கது திருவடி ஞானமொன் றேயாம். அதற்கும் தார்க்கிகர் சாங்கியர் மாயாவாதிகள் என்போர் கூறும் ஞானங்களுக்குமுள்ள வித்தியாசம் மிகப் பெரிது.
துரியனது சந்நிதியில் சூரியகாந்தக் கல்லினிடத்தில் அக்கினி தோன்றுமாறுபோல் சற்குரு மூர்த்தி மிக்க கருணையுடன் வந்து தோன்றும்போது மேற்சொல்லிய நான்கு ஞானவகைகளுள் முதலாவதாகிய கேட்டலறிவு சீடன் மாட்டுத் தோன்றும். அது தோன்றவே பதி பசு பாசம் என்னும் முப்பொருளும், அவை ஒன்றினொன்று

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 55
வியாபக வியாப்பியங்களாயிருத்தலும் தோன்றும். பக்குவ முதிர்ச்சியுடையோருக்கு அக்கேட்டலறிவு விரை வில் விருத்தியடையும். அப்போது குருவினது அல்லது உடன் மாணாக்கருள் மூத்தவனது சகாயத்தினால் அவ்வறிவிலுள்ள ஐயம் நீங்குமாறு அதனைச் சிந்தித்தல் உண்டாகும். அது உண்டாகவே நிட்டை கூடவேண்டும் என்னும் விருப்பம் அதிகரிக்கும். இடைவிடாமற் சிந்திப் பதனால் வேறொன்றினும் பற்றின்றிச் சீவன் முத்திநிலை பெற்று விருப்பு வெறுப் பற்றுச் சிவத் தோற்றம் ஒன் றையே கண்டு நிர் விகற்பம் சவி கற்பம் என்னும் இரண் டுக்கு மிடையே சீடன் நிற்பன். குருவருளால் அறிவு அறியாமை என்னும் இருவகைப் பாசங்களும் நீங்கப் பெற்றுக் கேட்கு முறையிற் கேட்டுச் சிந்திக்கு முறையிற் சிந்திக்கும்போது கேட்டலறிவு தெளிதலடையும். அப் போது சிவன் ஒன்றிலும் பற்றிலராய் வேறு தோன்றுவர். கேட்கும்போது அவர் பொருட்டன்மையால் பேதமாயும் சிந்திக்கும்போது கலப்பினால் அபேதமாயும் தெளியும்போது அணுவுக்கு அணுவாயும் மகத்துக்கு மகத் தாயுமிருப்பதனால் எல்லாவற்றோடும் ஒன்றித்து நின் றும் ஒன்றிலும் பற்றில்லாதவரர்ய் வேறு தோன்றுவர். இருவினைகளையும் ஞானநூல் ஒதல் முதல் தெளிதல் “ஈறாகிய ஞான பூசையினால் கெடுத்திடில் பிறப்பிறப்புக் கள் நீங்கும். எங்கனமெனில், ஏகதேசப்பட்டுப் பூமியிற் பிறப்பதற்கும் சுவர்க்க நரகங்களுக்குப் போவதற்கும் இரு வினைகளே காரணம். ஏகதேசப்படுதல் நீக்கப் பெற்று சிவனது வியாபகத்திற் கலந்து சீவன் முத்தனாகித் தேகம் நீங்கியபின் பர முத்தியடைந்து சிவனைப்போல வியாபக அறிவாவன் சீடன்.
ஞான நிட்டையுடையோர் செய்வன வெல்லாம் தவமாகலான், அவர்களுக்கு விதிவிலக்குகள் இல்லை. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தேசம் இடம் காலம் திக்கு ஆசனம் என்பன வில்லை. அவர்கள் நடந்தாலும் நின்றாலும் உறங்கினாலும் விழித்தாலும் உண்டாலும் பட்டினி இருந்தாலும் படுத்தாலும், சுத்தமா யிருந்தாலும் அசுத்தமா யிருந்தாலும் வறுமையால் வருந்தினாலும் செல் வம் அனுபவித்தாலும் அவர்களுக்குத் துன்பம் வந்தாலும்

Page 33
56 க.சா. முருகேசுப் போதகர்
சுகம் வந்தாலும் அவர்கள் போகம் அனுபவித்தாலும் அனுபவியா திருந்தாலும் அவர்களுக்கு ஆசை கோபம் விருப்பு வெறுப்பு முதலியன வந்தாலும் வராவிட்டாலும் அவர்களுடைய மனமானது ஊசல்போல் அங்குமிங்கு மலையாது சிவனது திருவடிகளில் அடங்கி ஒரே நிலையில் நிற்கும். இத்தகைய ஞானநிட்டை எய்துதல் வெகு பிர யாசம். எய்திலும் அதைக் குலையாமல் நெடுநேரங் காப் பாற்றுதல் அரிது. ஏனெனில்:- பண்டைப் பயிற்சி வயத் தால் பிரபஞ்சந் தோன்றும். அது தோன்றும்போது சிவன் அண்டத்துக்குள்ளும் புறம்புமாய் நிற்பதைக் காணும்படி முயலவேண்டும். அங்ங்ணம் நிற்பதைக் காண்பது அரி தாயின், பிண்டத்தில் நிற்கும் நிலைகளில் ஒன்றின் மூல மாய் அதையறிந்து அப்போது காணப்படும் பசுகரணங் கள் சிவகரணங்களாக நினைந்து சகல சாக்கிராவத்தை யிலேயே சுத்த துரியாதீத நிலையடைய முயல்வோர் சிவானந்தப் பெரும்பேறு எய்துவர் என்பது நிச்சயம்.
இவ்வாறு பசுகரணங்களைச் சிவகரணமாகப் பேணி சாக்கிராவத்தையிலிருந்து கொண்டே சுத்த துரியாதீத நிலையடைய விரும்பி முயல்வோர் அதை அடைந் தோருக்கு ஒப்பாவர். அவர்கள் அரசராய் அரசாண்டு போக போக்கியங்களை அனுபவித்தாலும், நான் என்னும் அகப்பற்று அற்றவராவர். அந்நிலையடைய முயலாதோர் எனது என்னும் புறப்பற்று அற்றோராயினும் அவர் களுடைய இருவினைகள் நீங்காமையினால் மீண்டும் மீண்டும் பிறந்திறந் துழல்வர். புணர்ச்சி யின்பம் வாயி னாற் பேச அரிதாயினும் புணர்ந்தவர் இருவரும் அதை நன்கறிவர். கன்னிகை காமரசம் அறியாள். அதுபோலப் பக்குவர் சிவனது திருவருளினால் தமது அறிவில் தமது ஆன்மாவையும் சிவத்தையும் அறிவிறந்தறிந்து சிவா னந்தம் அனுபவிப்பர். இவ்வுண்மையை அறியமாட்டாத அபக்குவருக்கு இதை உணர்த்துவதற்கு ஒரு உபாயமும் இல்லை. அவர்கள் தேகத்தினால் மயங்கி ஆன்ம சொரூ பம் அறியமாட்டாதவர்கள். ஆதலினால், அவர்கள் தேகத்தின் மூலம் அறியும் அறிவினால் ஆன்மாவிற்குள் இருக்கும் சிவத்தை அறிவோமெனல் வாய்ச் சொல் மாத்திரமன்றி வாஸ்தவமன்று. கருவியறிவிறந்து நின்று

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 57
அறியாதோர்க்குக் கருவியறிவிற் குரியதாகிய ஏகதேசக் காட்சி நீங்காது. ஆதலால், பிறவியும் அதற்குக் காரண மாகிய ஆணவமலமும் அவர்களை விட்டு நீங்கமாட்டா. தன்னை யடுத்த பல நிறங்களைக்காட்டும் பளிங்குபோல, ஆன்மாவும் தனது கருவிகளின் இயல்பையே தன்னிடங் காட்டும். இவ்வாறு காட்டுதல் அதன் பொது இயல்பு. அதற்குப் பொது இயல்பு மாத்திரமன்றிச் சிறப்புயல்பும் உண்டு. அவ்வியல்பு கருவிகளோடு சம்பந்தமுடையதன்று. இதை அறிபவன் ஆன்மாவில் விளங்கித் தோன்றும் சிவத்துடன் கலத்தலன்றித் திரும்பவும் கருவிகளோடு சேரான். சிறைப்பட்ட நீர் சிறை முறிந்துழி கடலுக்குட் பாய்ந்து கடலோடு கலத்தலன்றித் தான் முன்னின்ற இடத்துக்கு வரமாட்டாதது போல, அவனும் சிவத்தை விட்டு நீங்கிக் கருவிகளோடுஞ் சேரமாட்டான். கருவி கள்யாவுஞ் சிவமெனில் சகல நிலையை விட்டுத் திரு வடியைக் கூட அவசியமின்று. ஆதலால், சிவம் கலப் பினால் உடலில் உயிர்போல அவற்றில் நிற்கும். கண்ணுக் கும் மற்ற இந்திரியங்களுக்கும் உள்ள வித்தியாசம் மிகப் பெரிது. கண்ணானது தூரத்திலுள்ள விடயங்களையும் வியாபித்தறியும் ஆற்றலுடையது. இவ்வாற்றல் அவற்றிற் கின்று. ஆன்மா கண்போலவும் தத்துவங்கள் மற்ற இந் திரியங்கள் போலவும் இருக்கின்றன. அது கருவி ஞானத் தைக் கைவிட்டுச் சிவஞான்ம் பெறுதல் தன்னொளி யிழந்த கண்ணானது அவ்வொளியையும் அதற்குள் ஒளி யாகிய ஆன்மபோதத்தையும் பெறுதல்போலும். ஆத லால், சிவம் ஆன்மாவின் அறிவிற்கறிவாய்த் தோன்று வதன்றிக் கருவியறிவுக்குள்ளறிவாய்த் தோன்றாது. சில சமயங்களிற் சிவத்துடன் கலந்தவன் கருவிகளோடு திரும்பவும் கூட நேரிடும். அங்ங்ணம் கூடுவதற்குக் கார னம் பண்டைப் பற்று அல்லது வாசனை. வாசனை நீக்கத்திற்கு உபாயம் வருஞ் சூத்திரத்திற் கூறப்படும்.

Page 34
58 க.சா. முருகேசுப் போதகர்
ஒன்பதாம் சூத்திரம்
இச்தத்திரம் முக்திப் பேற்றுக்கு வேண்டிய சாதனங் கள் செய்யுமாறு கூறுகின்றது. சிவத்தைப் பாசஞானம் பசுஞானம் என்பவற்றால் அறியமுடியாது. திருவடி ஞானத்தினால் மாத்திரம் ஆன்மா தன்னறிவில் அதை அறியக்கூடும். அவ்வாறு அறிந்து சிவத்தின் திருவடியை விட்டு விடா திருப்பதே சிவ ஞானியின் நோக்கம். இந்நோக்கத்தின் நிறைவேற்றத்திற்குப் பிரபஞ்சம் பெருந் தடை. அத்தடை நீக்கத்திற்கு உபாயம் பிரபஞ்சம் பேய்த் தேர்போல அநித்தியம் என்னும் நிச்சயம்; இதைவிட வேறுமோர் உபாயம் உண்டு. பஞ்சாட்சர மந்திரத்தை விதிப்படி உச்சரித்தலே அவ்வுபாயம்.
பாசஞானமாவது:- வேதம் முதலிய சாஸ்திரங்களி னாலும் நிலம் முதல் நாத மிறுதியாயுள்ள தத்துவங் களைப் பற்றியும் உண்டாகும் ஏகதேச ஞானமாம். பசு ஞானமாவது: - ஆன்மா தான் தத்துவங்களனைத்தையும் கடந்தது என்னும் அறிவின் மூலமாயுண்டாகும் செருக் கால் தானும் அநாதிமுத்தனாகிய சிவனைப்போல பிர மம் என நினைப்பதற்கு ஏதுவாகிய சிவ சமவாத ஞான மாம். பாடாணவாதஞானமும் பேதவாதஞானமும் சிவ சமவாத ஞானத்தைப்போற் பசுஞானமாம். பாடான வாதம் ஆவது:- முத்தியில் ஆன்மாவினறிவு முற்றாய்க் கெடுதல் என்னும் கொள்கை. பேதவாதமாவது:- கரணங் களினால் விரிவடைந்த அறிவானது ஒடுங்கி ஆன்மாவுட னொன்றி நிராதாரமாய் நிற்கும் என்னுங் கொள்கை. மேற்கூறிய மூவகை ஞானங்களுள் பதிஞானம் அல்லது திருவடிஞானம் ஒன்றுமே தற்பிரகாசமும் பரப்பிரகாசமு மாய்ப் பொருள்கள் எல்லாவற்றையும் விளக்கும் ஆற்றல் உடையதாதலினால் அதனால் மாத்திரம் நாம் சிவனை யறியலாம். பசு பாச ஞானங்கள் பிற பொருட்களைக் காட்டும் இயல்புடையனவன்றித் தம்மைக்காட்டும் இயல் புடையனவல்ல. கண் உருவங்களையும் நிறங்களையும் காண்பதன்றித் தன்னையும் கரணங்களையும் காணமாட் டாது. கரணங்களும் தம்மையும் உயிரையும் காணமாட்டா.

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 59
அது போல உயிரும் தன்னையும் சிவனையும் காணமாட் டாது. ஆதலால், சிவமே உயிருக்குத் தன்னையும் உயிரை யுங் காட்டல் வேண்டும். குருவினருளால் அறியவேண்டிய குறியைப் பற்றி நின்று உலகத்தில் வெறுப்புற்றுச் சுத்தம் மிச்சிரம் அசுத்தம் என்னும் மூவகைப் பிரபஞ்சமும் வெறும்பொய் என்றுணரும்போது சிவந்தோன்றும். அது தோன்றவே அதில் காதலதிகரிக்கும். அக்காதல் வழியாய் அது உட்பிரவேசித்துப்பேரின்பமருளி ஆன்மாவுடன் கலக்கும்.
நான் உடம்புமல்ல பிரமமுமல்லவென்று கருதி சிவம் சிறிதும் வேற்றுமை தோன்றாதபடி என்னுடன் கலந்து நிற்கையினால் நான்சிவோகம் பாவனைசெய்ய வேண்டு மென்ற ஒருவன் எண்ணிச் செய்யும்போது, சிவமவனில் அத்துவிதமாய்த் தோன்றி மலங்களை நீக்கியவனைச் சுத்தனாக்கும். மாந்திரீகன் கருடோகம் பாவனை செய் கையில் கருடன் அவனில் அத்துவிதமாய்த் தோன்றிச் சர்ப்பந்தீண்டப் பெற்றவனிலிருந்து விஷத்தை நீக்கி அவனைச் சுகப்படுத்துவது வழக்கம். சிவம் வேற்றுமை தோன்றாது உயிரில் அத்துவிதமாய் நிற்றலே வேதாந்த மகாவாக்கியத்தின் பொருள். உயிரும் சிவமும் உடைமையு முடையானுமாய் நிற்பதைப் பஞ்சாட்சரமோதும் முறை யினாலறிந்து சிவத்தின் திருமேனி பஞ்சாட்சரத்தினா லமைந்திருப்பதையு முணர்ந்து இருதயம், நாபி, புருவநடு என்னும் மூன்றையும் முறையே பூசை ஸ்தானம் ஒமஸ் தானம் தியான ஸ்தானமாகப் பாவித்து அம்மந்திரத்தை ஒருவன் விதிப்படி உச்சரித்தல் வேண்டும். சிவோகம் பாவனை பஞ்சாட்சரமந்திரம் உட்பூசை என்னும் இம் மூன்றினாலும் சிவம் உயிரில் விளங்கித் தோன்றும். உட் பூசை செய்யும்போது பிருதுவிமுதல் சத்தி ஈறாகிய முப் பத்தைந்து தத்துவங்களும் இருதய கமலத்துக்குக் கிழங்கு முதல் பீசம் ஈறாகிய அவையவங்கள் என்று பாவித்தல் வேண்டும். இருதயகமலம் ஆசனம் அதன்மேற் சத்தி மூர்த்தியும் சிவன் மூர்த்தி மானுமாய் நிற்பர். இவ்விதம் ஒமமும் தியானமும் செய்யப்படல்வேண்டும். கண்ணாடியை விளக்க விளக்க அதிலுள்ள மாசு நீங்கி ஒளி மிகுமாறு போல உயிரில் மேற்கூறியபடி பூசையும் ஒமமும் தியான

Page 35
6 O க. சா. முருகேசுப் போதகர்
முஞ் செய்யச் செய்ய சிவமதிகமதிகமாய் விளங்கித் தோன்றும். அங்ங்னந் தோன்ற உயிரிலுள்ள ஆணவ மலம் படிப்படியாய்த் தேய்ந்து ஈற்றில் பற்றறக்கழியும். ஆகவே, அந்தரியாகம் அல்லது உட்பூசை ஆன்மசுத் திக்குக் காரணமாகலாலது விதிப்படி செய்யப்படல் வேண்டும்.
சிவஞானிக்குப் புறப்பூசையுஞ் செய்ய விருப்பமுண் டாகும்போது, அவர் பூமரத்தின் கீழுதிர்ந்த பூக்கள், ஆறு குளம் முதலியவற்றிலுள்ள நீர் என்பனவற்றை உபகரணங்களாகப் பிரயோகித்து அதை நிறைவேற்றலாம்.
சிவன் விறகில் அக்கினியும் பாலில் நெய்யும் பழத் திற் சுவையும் போல் அகம் புறம் என்னும் வேற்றுமை யின்றி, எங்கும் ஒப்ப நிற்ப ராதலால் அகப்பூசை செய் தாலும் புறப்பூசை செய்தாலும் அருள்செய்வர் என்பது நிச்சயம். அங்ங்ணமாயினும், புறப்பூசையினும் அகப்பூசை முக்கியம். ஏனெனில், வாதனாமல நீக்கத்திற்கு அதன்றி வேறு உபாயமில்லை. அகப்பூசை செய்யச் செய்ய சிவன் அம்மலத்தைப் பற்றறத் தொலைத்து உயிரைத் தம்மய மாக்கித் தமது பேரானந்தப் பெருஞ்செல்வத்தை அதற்கு அருள்வர்.
பத்தாம் சூத்திரம்
இச்சூத்திரத்தில் பெத்த நீக்கமும் முத்திப்பேறும் கூறப்படுகின்றன. உயிரானது சிவனுட னொற்றுமைப் பட்டு அவர் பணியில் நிற்கில் யான் எனது என்னும் செருக்கறும். அப்போது அவர் அது செய்யும் புண்ணிய பாவங்களைத் தாம் செய்தனவாக ஏற்றுக்கொள்வர். பிறரதற்குச் செய்யும் நன்மை தீமைகளை அவர் தமக்குச் செய்தனவாக எண்ணுவர். ஆதலால், அது செய்யும் புண் ணிய பாவங்கள் யாவும் அவர் பணியாய் மாறும்.

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 6
அதற்கு நன்மை தீமை செய்தவர்களுக்கு அந்நன்மை தீமை கள்செய்த அளவினன்றி மிகுதியாகும். இக்காரணத்தி னால் கர்ம ஆர்ச்சிப்பும் நுகர்ச்சியும் அதைப் பாதிக்க மாட்டா. வேறு விதமாய்ச் சொல்லுகில் ஆகாமிய வினை அதற்கு ஏறாது. அதுமாத்திரமல்ல. சஞ்சித வினையும் ஆணவ மாயாமலங்களும் அதைவிட்டு நீங்கும். உயிருக்கு யான் எனது என்னும் செருக்கு அற்றாலன்றிச் சிவன் அதனோடு ஒற்றுமைப்பட்டு நிற்றலும், வினை நுகர்ச்சியும் ஆர்ச்சியும் ஒழிதலும் சஞ்சித வினையும் ஆணவ மென் னும் மலமும் நீங்குதலும் உண்டாகா. அச்செருக்கறுத்தலுக் கவருடன் சேர்ந்து ஏகனாகி நிற்கும் ஞானமன்றி வேறு உபாயமின்றாகலால் அவ்வகை ஞானம் அத்தியாவசியம்.
இந்திரியங்கள் என்வசப்படாமல் என்னைத் தம் வசப்படுத்தியதற்குக் காரணம், சிவனது ஆணையே யன்றி வேறன்று. இந்திரியமும் நானுமவருடைய உடைமைக ளாதலால் நான் அவருடைய திருவடியில் நிலைத்து நிற்கில் அவற்றின் வலி அடங்குமென்று நினைத்து ஒருவனவ் வாறு செய்யி னவற்றின் வசத்தி னின்று நீங்குவான். சிவனது திருவடியில் நிலைத்து நிற்கையிலும் பயிற்சி வயத்தா லவை குறும்பு செய்யக்கூடும். அவை அங்ங்னம் செய்யும்போது அது இற்ைவன் செயலென நினைத்துப் பொறுமையாய் இருக்கி லவற்றின் வேகமடங்கும். நீயே எனக்குள் நின்று செய்கின்றாயா கலால் என் புண்ணிய பாவங்களனைத்தும் உன் செயல்களென்றும் நீயே எனக்குட் போலவே பிறருக் குள்ளும் நின்று செய்கின்றா யாகலால் அவர்கள் எனக்குச் செய்யும் நன்மை தீமைக ளெல்லாம் உன் செயல்களே என்றும் சொல்லி ஒருவன் அருள் வழி நிற்கில் அஞ்ஞான கன்மமவனை விட்டு நீங்கும்.
இறைவன்பணியில் நிற்றலால் உண்டாகும் ஞானத் துக்கு ஒப்பான பெரும்பேறு வேறொன்றுமின்று. இவ் வகையான ஞான மில்லாதோர் பல நாடுகளில் உழன்று திரிந்தும் காடுகளிலும், குகைகளிலும் வாசஞ்செய்தும் பசி தாகம் முதலியவற்றை யடக்கியும் காய சித்தி செய்து நெடுங்காலம் உயிரோடிருந்தும் பின்னும் பல அரிய

Page 36
62 க.சா. முருகேசுப் போதகர்
செயல்கள் செய்தும் பயனின்று. ஏனெனில், அச்செயல் கள் பிறவியை நீக்கமாட்டா. இவ்வகையான ஞானமுடை யோர் பெருந்தீமைகள் செய்தாலும் அவர்களுக்குப் பிறவி யுண்டாகாது. அக்கினித் தம்பனம் செய்ய வல்லோருக்கு அக்கினி ஒரு தீங்குஞ் செய்யாது. விஷத்தைத் தடுக்க வல்ல மந்திர மருந்துகளுடையோருக்கு விஷம் ஏறாது. அதுபோல மெய்ஞ்ஞானி எவ்வகையான செயல் செய் தாலும் அவனுக்கு இரு வினைகள் ஏறமாட்டா. சுழற்றி விடப்பட்ட குயவனது சக்கரமானது அதன் வேகம் 9քgծlպ மளவும் மெல்லமெல்லச் சுழல்வது போலவும், பெருங் காயமிருந்த பாத்திரம் அழியுமளவும் அவ்வாசனை யுடைய தாய் இருப்பதுபோலவும் காயத்தோடு இருக்குமளவும் இரு வினைகளின் வாசனை, அவனுக்கு இருக்கும். அங்ங்ன மாயினும் அவ்வாசனை பிறவிக்கு வித்தாகாது. காயம் நீங்கும்போது அதுவும் அதற்குத் துணையாய் நிற்கும் மும்மலங்களும் முற்றாய் ஒழிந்துபோம்.
பதினொன்றாம் சூத்திரம்
இச்சூத்திரம் முத்திப்பயன் பெறுமாறு கூறுகின்றது. ஆன்மாவுக்கும் சிவனுக்குமுள்ள சம்பந்தம் கண்ணுக்கும் ஆன்மாவுக்கு முள்ள சம்பந்தம்போலும், உயிரின் சகாய மின்றிக் கண் காண மாட்டாததுபோல சிவனது சகாய மின்றி ஆன்மா அறியமாட்டாது. சிவன் அத்துவிதமாய் நின்று தனக்கு உபகாரஞ் செய்வதை அது நன்கறிந்து நிற்கும்போது சிவனது திருவடியில் ஆசை இடையறாது அதற்கு உண்டாகும். அங்ங்ணம் உண்டாக அதற்குச் சிவானுபூதிவரும். இதுவே சீவன்முத்தி நிலை. சீவன் முத்தராவார் சிவத்தைப் பார்ப்பதன்றிப் பிரபஞ்சத்தைப் பாரார். பிரபஞ்சத்தைப் பார்ப்பதற்கு வேண்டிய ஞானங் கள் பிரத்தியட்சம் அனுமானம் உரை என்பனவாம். அவை எல்லாம் சுட்டறிவின் பேதங்கள். கேட்டலினால்

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 63
வருஞ் சாத்திர ஞானம் நால்வகை வாக்குகளினால் வரும் விந்து ஞானம் சிந்தித்துத் தெளிவதனால் வரும் ஞானம் ஆகிய இவை பாவனை ஞானமன்றி அனுபூதி ஞானமன்று. ஆதலால், சிவஞானமென்று சிறப்பித்துச் சொல்லப்படத்தக்கது அனுபூதி ஞானமேயாம். அனுபூதி ஞான முடையோரே சீவன் முத்தர்.
உருவ சிவசமவாதிகள் முத்தியிலும் உடம்பு உண்டு என்றும் அவ்வுடம்பு சுத்த மங்கள திவ்விய உடம்பென் றுங் கூறுவர். அவர்கள் இங்கனம் கூறுவதற்கு நியாய மென்னவெனில், உடம்பானது அநாதியாய் உயிரைப் பற்றி நீரோட்டம்போலத் தொடர்ச்சியாய் வருதலினால் அது இடையில் ஒழிந்துபோம் என்று சொல்வது பொருத்த மன்று என்பதாம். அவர்கள் கொள்கை சரியன்று. முத்தி யிலும் உடம்பு இருக்கில் அதற்குக் காரணமாகிய மாயை யும் அதற்கு வேண்டிய உணவு செயல்களுக்கு ஏதுவாகிய கன்மமும் அதனை இயைவிக்கும் ஆணவமும் இருக்க வேண்டும். முத்தியிலும் இவை எல்லாம் இருக்குமாகில் முத்தியென்று சொல்லப்படுவது போலியாய் முடியும். துருக்கும உடம்பிலிருந்து தோன்றும் தூல உடம்பானது காரியமாயும் அநாதியாகிய மல நோய்க்கு மருந்தாயும் இருப்பதனால் மலம் நீங்கும்போது அதுவும் நீங்குமென் பது நிச்சயம். சுத்தமங்களதிவ்விய உடம்பானது பத முத்திக் குரியதன்றிப் பரமுத்திக் குரிய தன்று.
சிவஞானியாவான் மெய்ஞ்ஞானமடைந்தபின் அவ னுக்குச் சிவம் பிரகாசிக்கும். அப்பொழுது அவன் சீவன் முத்தனாவன். அவினிலுள்ள ஆணவமலமானது தேற்றாம் பொடி கலந்த நீரையும், துரியன்முன் இருளையும் மருந் தினாற் றடுக்கப்பட்ட விஷத்தையும்போலத் தன் சத்தி கெட்டு நின்று, தேகம் மரிக்கையில் வேறு பிறவிக்கு வித்தாதலின்றி ஆன்மாவை விட்டு நீங்கி முற்றாயழிந்து
போம்.
ஆட்சேபம் ஆணவமலமானது ஆன்மாவுடன் அநா தியே சகசமா யிருப்பதனால், அது ஒரு போதும் அழி யாது. அது அழியுமெனில் ஆன்மாவு மதனோடு அழிய வேண்டும்.

Page 37
6 4. க. சா. முருகேசுப் போதகர்
சமாதானம்: செம்புடன் சகசமாயிருக்குங் களிம் பானது இரச குளிகையினால் நீங்கி ஒழிந்துபோகச் செம்பு அழியாதிருப்பதுபோல, ஆன்மாவுடன் சகசமாய் நிற்கும் ஆணவமலம் மெய்ஞ்ஞானத்தினாற் கெட்டொழிய, ஆன்மா அழிவின்றி யிருக்கும். மெய்ஞ்ஞானம் பிறந்த வுடன் ஆணவமலம் முற்றாயழியும். அங்ங்ன மழிவதே முத்தி யெனல் பொருந்தாது. துரிய ஒளியோடு கண் ணொளி சேர்ந்தாலன்றி இருள் நீங்காதவாறுபோல, மெய்ஞ்ஞானம் பிறந்தும், சிவம் பிரகாசித்துத் திரு வடியை ஆன்மா சேர்ந்தாலன்றி ஆணவமலமதனைவிட்டு முற்றாய் நீங்காது. அரிசியுடன் சகசமாயுள்ள முளை தவிடு உமிகள் அதனை விட்டு நீங்க அது தனித்திருக் கையில், அதிலிருந்து வேறு நெல் தோன்றாததுபோல; ஆன்மாவிலுள்ள மும்மலமும் அதனை விட்டுப் பற்றறக் கழிந்துபோக ஆன்மா பிறவிக்கு வித்தின்றி இருக்கும். மேலும் அவை முத்தான்மாக்களை விட்டு நீங்கிப் பெத் தான்மாக்ளோடு இருப்பதனால், அவை நித்தப் பொருட் கள் என்பது மிழுக்கன்று. பெத்தநிலையிற் சிவன் ஆன்மா வோடு சேர்ந்து அத்துவிதமாய் நிற்றல்போல முத்தியிலுந் நிற்பர். அவரங்ங்னந் நிற்பதைப் பக்குவமுடையோரன்றி ஏனையோர் பார்க்கமர்ட்டார். பக்குவமுடையோர் சிவ னருளுமருட்கண்ணினா லதனைப் பார்ப்பர்.
முத்தியைப் பற்றிய போலிக் கொள்கைகள் பலவுள.
அவையாவன:
1. சிவன் பக்குவான்மாக்களுக்கு அருட்கண்கொடுத் துத் தோன்றுவரெனல் சரியல்ல. அவர் நிர்விகாரியாய் நிற்க, அவை யருட்கண்பெற்று வழிப்போக்கர் மர நிழ லைச் சேர்வதுபோலத் தாமே யவரைச் சேரும்.
2. ஆன்மா அழிந்து சிவனோடு கூடி அவரடியி லொன்றாகும்.
3. ஆன்மா தானழியாது சிவனோடு கூடி ஒன்றாகும். 4. சிவனோடு கூடியபின்னழியும். 5. அழிவதே முத்தி.

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 65
6. நீருடன் நீர் சேர்வதுபோல ஆன்மா சிவனுடன் சேர்ந்தொழுகும்.
7. களிம்பு நீக்கியபின் செம்பு பொன்னாய்ப் பொன் னுடனொன்றாவது போல மலம் நீங்கிய பின் ஆன்மா சிவனாய்ச் சிவனுடன்சேரும்.
8. சிவனுமான்மாவுஞ் சித்தப் பொருளாவதனால் முத்தியிலிருபொருளுஞ் சமமாயொன்றாகும்.
மறுப்பு 1. மரநிழலைச் சிவனுக்கு ஒப்பிடுதல் சரியன்று. ஏனெனில், அங்ங்ணம் செய்தல் சுதந்திரம் சிவனுக்கல்ல உயிருக்குரியதென்று காட்டும்.
2. ஆன்மா தானழிந்தபின் சிவனுடன் சேரமாட்டாது. 3. அழியாமற் கூடினாலொன்றாகாது. 4. அழிந்தால் முத்திபெற்றதெனப்படுவ தொன்றில்லை. 5. இது ஆன்மா நித்தப்பொரு ளென்பதற்கு விரோதம். 6. நீரும் நீரும்போல ஆன்மாவுஞ் சிவனுஞ் சமமல்ல. 7. சிவனைப் பொன்னுக்கு ஒப்பிடுதல் சரியன்று செம்பைப் பொன்னாக்கு மாற்றல் பொன்னிற்கில்லை. அவ்வாற்ற லிரசகுளிகைக்கே உரியதாகலால், சிவனை யதற்கே ஒப்பிடுதல் நியாயம். முத்தான்மாவிற்குச் சிவா னுபவ மொன்றே யுரியது; பஞ்ச கிருத்தியமோவெனில் சிவனொருவருக்கேயுரியன.
8. ஆன்மாவும் சிவனும் சித்துப்பொருளாயினும், ஆன்மா சிவனுக்குச் சமமானதல்ல. ஆன்மா அருளைச் சேருஞ்சித்து, சிவனருளளிக்குஞ்சித்து, ஆன்மா போக மோட்சங்களை யடையுஞ்சித்து; சிவனவற்றை யதற் கடைவிக்கும் சித்து; ஆன்மா சிவனாலறிவிக்கப்படும்சித்து; சிவனியல்பாகவே யறியும் சித்து. ஆதலால், ஆன்மா சிவனுடன் சேர்ந்தாலு மவருக்குச் சமமாகாது. பெத்த நிலையிற் புத்தியு மான்மாவு மொன்றோ டொன்று சேர்ந்திருக்கினும், புத்தி வேறு ஆன்மாவேறு. அதுபோல

Page 38
66 க. சா. முருகேசுப் போதகர்
முத்தியிலான்மாவும் சிவனுமொன்றுசேர்ந் திருக்கினும் ஆன்மா வேறு சிவன்வேறு. ஆன்மா தூல சித்து, சிவன் துருக்குமசித்து.
காந்தம் விகார மின்றி நின்று இரும்பைத் தன்னிட மிழுப்பதுபோலச் சிவனு மான்மாவைத் தன்னிட மிழுப் பினும் நிர் விகாரியா யிருப்பர். அக்கினி இரும்பை யழியாமல் அதனுடன் சேர்ந்திருக்குங் கறையை யழித்து இரும்பைத் தன் வண்ண மாக்குவதுபோலச் சிவனும் ஆன்மாவை யழியாமல் அதனோடு சேர்ந்திருக்கும் மலத்தை யழித்தான்மாவைத் தம்வண்ணமாக்கியருள்வர். நீருடன் சேர்ந்த உப்புத் தன் சுவையை நீரிற் பதித்துத் தனக் கொப்பாகுவதுபோலச் சிவனும் தமது எண்குணங் களையு மான்மாவிற் பதித்து அதைத் தமக்கு ஒப்பாக்கி யருள்வர். இரச குளிகை செம்பைப் பொன்னாக்கித் தானதனில் வேறாய் நிற்பது போலச் சிவனு மான் மாவைத் தம் வண்ணமாக்கித் தாமதனில் வேறாய் நிற்பர். கருப்பஞ்சாறு தேன்பால் முக்கனிச்சாறு அமுது கற்கண்டு வெல்லக்கட்டி என்னும் சுவைப்பொருட்களெல்லாங் கலந்த பின்னுண்டாகும் சுவை இத்தன்மைத்தென்று பிரித்தறிய முடியாததுபோலச் சிவனுமான்மாவுடன் சேர்ந்து இத்தன்மையினரென்று பிரித்தறிய முடியாதபடி ஆநந்தசொரூபமாய்நிற்பர்.
பன்னிரண்டாம் சூத்திரம்
இச்சூத்திரம் சீவன் முத்தி நிலையிற் காணப்படு மியல்பு கூறுகின்றது சீவன்முத்தரும் மும்மலங்களுந் தம்மைவிட்டு நீங்கியபின், அவை மீளவுந் தம்மைப் பந்திக்காதபடி தாங்கையாட வேண்டிய உபாயங்க ளெல் லாவற்றையுங் கையாடுவர். அவ்வுபாயங்களாவன:-
1. மெய்யன்பர் சகவாசம்.
2. அவர் திருவேடத்தயுைம் சிவலிங்கத்தையும் சிவ னெனப்பாவித்து வழிபடுதல்.

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 67
3. அவர் பெருமையையும் மற்றையவர் சிறுமையை யும் அறியு மறிவும் அவ்வறிவிற்கேற்ப நடத்தலும்.
கடவுளுக்கும் அவரடியவர்களுக்கும் மற்றை உயிர் களுக்கும் அன்பில்லாதவர்களுடன் செய்யும் சகவாசம் பிறப்பிற்கு வித்தாகலால், அவர்களைவிட்டு, மெய்யடி யாருடன் சேர்ந்து, அவர்களுக்குச் செய்யவேண்டிய சேவை செய்தல் சீவன்முத்தரது செயலாம்.
பாசபந்த முடையவரது சகவாசத்தை விடும்பொருட்டு மெய்யன்பரைச் சிவனெனப் பாவித்து வழிபடல் வேண் டும். அவர்கள் வேடத்தினாலும் செயலினாலும் பாவனை யினாலுந் தன்மையினாலும் சிவனே யாவர். சரியை யாளருக்குச் சிவன் சிவலிங்க முதலிய திருமேனிகளில் மறைந்து நின்று அருள் செய்வர். கிரியையாளருக்கும் யோகிகளுக்கும் விறகுக் கட்டையைக் கடைகையிற் தோன்று மக்கினி போன்றும் கறக்கையிற் றோன்றும் பசுப்பால் போன்றுந் தோன்றியருள் செய்வர். ஞானிகளுக்குக் கன்றை நினைந்த பசுவின் முலைப்பால் போலப் பேரன் பினால் அன்பே தாமாய் வெளிப்பட் டருள் செய்வர். ஆதலால், ஞானிகள் மேற்சொல்லிய திருமேனிகளை யேக தேசமாய்ப் பாவியாது, அவற்றை யன்டபினால் வழிபடுவர். ஞானிகள் யோகிகள் கிரியையாளர் சரியை யாளர் என்போருக்கு முறையே சரியை முதலிய நான்கும் மூன்றும் இரண்டும் ஒன்றுமுரியன. ஞான குருவே மற் றைக் குருக்க ளனைவரிலும் மேலானவ ராகலால், மேற் கூறிய தாபர சங்கமங்களாகிய திருமேனிகளனைத்து மக்குரு வடிவே யென்றறிந்து அவரை வழிபடவேண்டும். வேதாகமங்கள் கலைக்கியானங்கள் முதலியவற்றின் ஞானமும் முக்கால ஞானமும்அணிமா முதலிய அட்டமா சித்திகளுக் குரிய ஞானமும் மணி மந்திர மருந்துகளினா லுளவாகும். திருவடி ஞானமோ வெனில் குருவருளால் மாத்திரம் வரும். மேற்கூறிய ஏனை ஞானங்களு மவ ரருளால் வரு மாகலா லவரைச் சிவனெனப் பாவித்து வழிபடவேண்டும். அவரே பரப்பிரமமும் பரமசிவனும் மெஞ்ஞானிகளும் சிவ மூர்த்தங்களுமென்றறிந்து அவரை யன்பினால் ஒருவன் வழிபடின், சிவனவரை யதிஷ்டித் துப் பரிசித்தல் நினைத்தல் பார்த்தலென்னும் மூன்றி னாலு மவனைத் தம் வண்ண மாக்கியருள்வர்.

Page 39
68
க.சா. முருகேசுப் போதகர்
அரும்பத விளக்கம்
முதலாஞ்
பரபட்சம் - அந்நியபக்கம் அதா வது மற்றைச் சமயங்களைப் பற்றிக் கூறும் பிரிவு சுபட்சம் - சொந்தப்பக்கம் அதா வது சொந்தச் சமயத்தைப் பற்றிக் கூறும் பிரிவு லோகாயதம் - கடவுளும் ஆன் மாவும் மறுமையுமில்லையென்று கூறுஞ் சமயம் நாசம் - அழிதல் பிருதுவி - மண்
அப்பு - நீர் தேயு - நெருப்பு வாயு - காற்று
பிரத்தியட்சம் - கண்ணாற் பார்த் தல் விடயங்களை நேரேயறிதல் சரம் - இயங்கும் பொருள் அசரம்- இயங்காப் பொருள் கணம் - நுட்பகாலம் கோடு - கொம்பு அநிர்வசனம் - இத்தன்மைய தென்று சொல்லப்படக்கூடாதது கடம் - குடம் படம் - வஸ்திரம் தக்குமம் - நுண்மை மிகை - குற்றம் மிகுதி எஞ்சி நிற்றல் - மிஞ்சி நிற்றல்,
அழியாது நிற்றல் சாவசங்கார காலம -
மெல்லா மழியுங்காலம்
ᎯᎠ ᎧᏓᏪᏯᎦ5
சூத்திரம்
சந்நிதி - சமுகம் தனு - சரீரம் கரணம் - கருவி அத்துவா - ஆன்மாக்கள் முத்தி யடைதற்குக் காரணமாகிய வழி வித்தியா தத்துவத்தி லொன்று வாக்குமனாதீதர் - வாக்கிற்கும்
மனத்திற்கு மெட்டாதவர் இழுக்கு - குற்றம் சாக்கிரம் - விழிப்பு சுழுத்தி - சொப்பன மின்றி
யுறங்கு முறக்கம் அவஸ்தை - உயிரினதுநிலை
95@ö)@l) ー
மலபாரிபாகம் - மலமுதிர்ச்சி துடக்குறுதல் - சிக்குப்படுதல் சங்கற்பம் - எண்ணம், நியமம் விகாரி - மாறுதலடைபவன் அந்தக்கரணம் - உட்கருவி காலுதல் - புறப்படுத்தல்
பெத்தகாலம் - பாசத்தோடு
கட்டப்பட்டிருக்குங் காலம் திதி - காத்தல்
திரோபவம் - மறைத்தல் பாசபந்தம் - பாசத்தோடு
கட்டுப்பட்டிருத்தல் பசு - உயிர் பரதந்திரம் - சுதந்திர மின்மை சுதந்திரம் - உரிமை, சுய இஷ்டம் அரு - உருவமில்லாதது

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 69
மேனி - சரீரம் ஆற்றல் - வல்லமை அர்த்தநாரீசுரவடிவம் - சிவனது வடிவத்திற் பாதி பார்வதி தேவி வடிவம் பாதி சிவன் வடிவம் விச்சுவாதிகர் - உலகத்திலும்
பெரியவர்
விச்சுவகாரணர் - உலகத்திற்குக்
காரனா விச்சுவத்திற்கந்தர்யாமி - உலகத் திற்குள்ளிருந்து நியமிப்பவர் விச்சுவரூபி - உலகத்தைத் தமக்
குத் தேகமாயுடையவர் கண்புதைத்தல் - கண்ணைமூடுதல் பிரளயாகலர் - பிரளய காலத்
தில் முத்தியடைபவர் சகலர் - மும்மலமுடையவர் பசு வர்க்கம் - உயிர்க்கூட்டம் பஞ்சகிருத்தியம் - ஐந்து தொழில் அவையாவன: படைத்தல், காத் தல், அழித்தல், மறைத்தல், அநுக்கிரகித்தல் ஊன நடனம் - குறைபாடுள்ள
கூத்து உபசாரம்- முகமன் திரோதானசத்தி - மறைக்கும்
G6)6)6)
அதிஷ்டித்தல் -
கொள்ளுதல் பஞ்சமந்திரம் - ஈசானம் தற்புரு
டம் முதலிய ஐந்து மந்திரம்
வாயிலாகக்
பஞ்சகர்த்தாக்கள் - பிரமா, விஷ்ணு, உருத்திரன், மகே சுரன், சதாசிவன் என்னு
மைந்து கடவுளர் பேதங்கள் - வித்தியாசங்கள்
இரண்டாஞ் சூத்திரம்
ஒடுக்கம் - அழிவு பதி - கடவுள் அத்துவிதம் - இரண்டன்மை பரமான்மா - கடவுள் இருவினை- புண்ணிய பாவங்கள் மீள மீள " - திரும்பத் திரும்ப ஆணை - கட்டளை பழவினை - முற்பிறப்பிற் செய்த
GLOO
சடம் - தேகம் சித்து - ஆன்மா கரு - கருப்பம் பிரவாகவநாதி - வெள்ளம் போலவநாதி. அநாதியே உட லுங் கன்மமு மொன்றன் பின் னொன்றாய் வருதல் அருள் - கிருபை சற்பாத்திரம் - தானம் வாங்கு
வதற்குப் பாத்திரமுள்ளவர் முற்றறிவு - எல்லாமறியு மறிவு வரம்பிலாற்றல் - எல்லையற்ற
6666)
ஈட்டுதல் - சேர்த்தல், சம்
பாதித்தல் நுகர்தல் - புசித்தல் சீலம் - நற்குணம் தானம் - கொடை துறவு - பிறர்மனைநயத்தல்
முதலியவற்றை விடுதல்

Page 40
7 O
க.சா. முருகேசுப் போதகர்
வந்தித்தல் - வந்தனஞ் செய்தல். இங்கே சொல்லப்படும் வணங் கலும் வந்தித்தலும் மூத்தோருக் குச் செய்யப்படுவன பார்ப்பார் - பிராமணர் சுவர்க்கம் - தேவர்கள் வாசஞ்
செய்யுமுலகம் அமைச்சர் - மந்திரிமார் திரிகரணங்கள் - மனம் வாக்குக் காயமென்னும் மூன்று கருவிகள் வீடுபேறு - முத்தியடைதல் வைகுவது - இருப்பது அகத்தே - உள்ளே தூல உடம்பு - சரீரம், தேகம் சூக்கும உடம்பு - சரீரத்திற் குள்ளிருக்கும் நுண்ணிய தேகம் பரகாயப்பிரவேசம் - வேறு தேகத்திற்குட் பிரவேசித்தல் நிகழ்கை - சம்பவிக்கை.
நால்வகைத் தோற்றம்: அண்ட சம் (முட்டையிற் பிறப்பன),
சுவேதசம் (வேர்வையிற் பிறப்
பன), உற்பிச்சம் (கிழங்கு) கொடி முதலியவற்றிற்பிறப்பன) சராயுசம்-கருப்பையிற் பிறப்பன எழுவகைப்பிறப்பு
மனிதர்,
தேவர், பறவை, விலங்கு, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பன. ஊர்வன 11 இலட்சம், நீர்வாழ்வன 10 இலட்சம், தேவர் 14 இலட்சம், மனிதர் 9 இலட்சம், பறவை 10
இலட்சம், தாவரம் 20 இலட் சம், விலங்கு 10 இலட்சம் 84 இலட்சம் யோனி பேதம். யோனி - ஆண் அல்லது
பெண் குறி விலங்கு - மிருகம்
தாவரம் - மரம்
சுருதி - வேதம்
யுத்தி - புத்தி
வியத்தமாகுதல் - வெளிப்படுதல்
அவ்வியத்தம் - வெளிப்படா
திருத்தல்
கோகனதம் - தாமரை சுத்ததத்துவங்கள் ஐந்து - அவை யாவன: சிவம், சத்தி, சாதாக் கியம், ஈசுரம், சுத்தவித்தை. மிச்சிரதத்துவங்கள் ஏழு அவை
யாவன: காவும், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், குணம். அவை வித்தியா தத்து வங்களென்றுஞ் சொல்லப்படும் அசுத்த தத்துவங்கள் 24 அவை
யாவன: மனம், புத்தி, சித்தம், அகங்கார மென்னும் அந்தக் கரணங்கள். மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஞானேந்திரியங்கள் வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தம் என்னும் கன்மேந் திரியங்கள் பரிசம் இரசம் ரூபம் கந்தம் சத்தமென்னுந் தன் மாத்திரை
தண்டீசநாயனார் சரித்திரத்தயுைம் தக்கன் சரித்திரத்தையும் முறையே பெரிய புராணத்திலுங் கந்தபுராணத்திலுங் காண்க.

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 7
கள் அல்லது தக்கும பூதங்கள் பிருதுவி அப்பு தேயு வாயு என்னும் தூல பூதங்கள் வித்தியாதத்துவங்கள் - வத் தைக்கு அல்லது அறிவிற் குரிய தத்துவங்கள் ஞானேந்திரியங்கள் - அறிவிற்
குரிய கருவிகள் கன்மேந்திரியங்கள் - கிரியைக்
குரிய கருவிகள். மிச்சிரம் - கலப்பு பிரேரகாண்டம் - மற்றைத் தத்து வங்களைத் தொழிற் படுத் தலுக்கு வேண்டிய தத்துவக்
thl D போசயித்திருகாண்டம் போகத் திற்கு ஏதுவாகியதத்துவக்கூட்டம் போக்கியகாண்டம் - அனுபவிக்
கப்படுந் தத்துவக்கூட்டம் போத்திருத்துவம் - போகம்
நுகருங்கர்த்தாவாதல் ஏகதேசம் - ஓரிடம்
அவிச்சை - அஞ்ஞானம் கேவ
லாவஸ்தை சகலாவஸ்தை சுத் தாவஸ்தை என்பன நான்காஞ் தத்திரத்தில் விளக்கப் பட்டுள்ளன விரவிநிற்கும் - கலந்துநிற்கும் பேதமை - மடமை
யாக்கை - தேகம்
மூன்றாஞ் சூத்திரம் தனியம் - இல்பொருள் துரியா தீதத்திலும் அறிவுண்டென்
பதற்குப் பிரமாணமென்னை யெனில், உறங்கி விழித்த பின் சுகமாயுறங்கினே னென்னு மனுபவம். யுறங் கினே னென்னு மனுபவம். சாக்கிரம்முதற் றுரியாதீதம் ஈறாய் பஞ்சாவத்தையும் நான்காம் தத்திரத்தில் விளக் கப்பட்டிருக்கின்றன.
நினவு - சாக்கிரம் விழிப்பா
யிருக் குந்நிலை
நான்காம் சூத்திரம் சவிகற்ப உணர்வு - பெயர் முத லிய ஐந்தையு மொரு பொரு ளில் நன்கு அறியுமறிவு சவி
கற்ப உணர்வெணப்படும்
நிருவிகற்ப அறிவு - பெர்ருளுண்
மைமாத்திர மறியு மறிவு நிரு விகற்ப உணர்வெனப்படும். பெயர் முதலிய ஐந்தாவன: பெயர், சாதி, குணம், கன்மம், பொருள். இது ஒரு பொருள் என்னுமறிவு. நிருவிகற்ப அறி வும் இது பசு என்பது சவி கற்ப அறிவுமென்க. பசு பெய்ர் பசுச் சாதி பசுவின் குணம் பசு வின் தொழில் பசு என்னும் பொருள். இது பசு என அறி கையில் இவையைந்துந் நமக்குப் புலப்படுகின்றன.
அம்சம் - பங்கு பொராணிகர் - புராணங்
களைக் கைக்கொள்பவர்
பாதஞ்சலர் - பதஞ்சலி முனிவராலியற்றப்பட்ட யோக

Page 41
7 2
சாஸ்திரத்தைக் கைக்கொள்பவர் அவிகாரி - மாறுதலில்லாதது வைசேடிகர் - கணாத முனி வராலியற்றப்பட்ட வைசேடிக சாஸ் திரத்தைக் கைக்கொள் பவர்
பாஞ்சராத்திரிகள் - பாஞ்ச ராத்திராகமத்தைக் கைக்கொள் பவர்கள். இவர்கள் வைஷ்ண வர் பாஞ்ச ராத்திரம் வைஷ ணவ ஆகமங்களில் ஒன்று அவர்கள் விஷ்ணுவினால் ஐந்து இராத்திரியிற் கூறப்பட்டபடி யால் அப்பெயர் வந்த தென் பர் நவத்துவாரம் - ஒன்பது துவாரம மிருதி நூலார் - மனு மிருதி முதலியவற்றைக் கைக்கொள் பவர் குணி - குணத்தையுடைய
பொருள் ஐக்கியவாதிகள் - முத்தியில் ஆன்மாவுஞ் சிவனுமொன்றாகு மென்பவர்கள் பஞ்சகோசமாவன - பஞ்ச சரீ ரங்களாம். அவையாவன: காரண சரீரங் கஞ்சுக சரீரங் குணசரீரஞ் தக்கும சரீரம் தூலசரீரம் அந்தப்புரம் - ஸ்திரிகளுக்குரிய
இடம் சாக்கிராவத்தைக்குரிய முப்பத் தைந்து தத்துவங்களாவன: ஐந்து ஞானேந்திரியங்கள்; ஐந்து கன்மேந்திரியங்கள் பத்து வாயுக்கள், பத்து விடயங்கள்.
க.சா. முருகேசுப் போதகர்
நான்கு அந்தக்கரணங்கள், ஒன்று புருடன் சொப்பனாவத் தைக்குரிய இருபத்தைந்து தத்துவங்கள் பத்து வாயுக்கள், பத்து விடயங்கள், நான்கு அந்தக்கரணங்கள், ஒன்று புரு டன்; சுழுத்தியவத்தைக்குரிய மூன்று தத்துவங்கள் பிராண வாயு, சித்தம், புருடன்; துரி யாவத்தைக்குரிய இரண்டு தத்துவங்கள் சித்தம், புருடன்; துரியாதீத அவத்தைக்குரிய ஒரு தத்துவம் புருடன். வாசனை - பற்று, சார்பு ஆறாம் சூத்திரம் சித்து - அறிவது சத்து - முக்காலத்துமுள்ளது பெளதிகங்கள் - பூதங்களா
லுண்டானவை பாவனை - தியானம்
ஏகான்மவாதிகள் - ஆன்மா ஒன்றென்னுங் கொள்கை யுடையவர்கள்.
ஏழாம் சூத்திரம் சிவாத்துவிதசைவர் - சிவமும்
உயிருமொன் றென்னும் சைவர். எட்டாம் சூத்திரம் சத்தினிபாதம் - சத்தி பதிதல் வர்க்கம் - கூட்டம் சாதாரதீட்சை - மானுட குருவை யாதாரமாய்க்கொண்டு செய் யுந் தீட்சை நிராதாரதீட்சை - ஆதாரமின்
றிச் செய்யுந் தீட்சை

சிவஞான சித்தியார் - சுபட்ச வசனம் 7 3
சாதகர் - அப்பியாசம் செய்
பவர் சீஷர் ஆசாரியர் - குருமார்
மலபாரிபாகம் - மலமுதிர்ச்சி
பஞ்சகந்தங்கள் s உருவம்,
வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானமென்பன பஞ்ச கந்தங்களுமழிதல் புத்தரது முத்தி அட்டகுணம் - அநந்தஞானம் முதலிய எண்குணங்கள். குற ளுரை பார்க்க. அட்டகுண மடைதல் சமணரது முத்தி. அறிவுகெடுதல் வாதிகளது முத்தி பிரகிருதி புருஷவிவேகம் - பிர கிருதிக்கும் புருஷனுக்குமுள்ள வேறுபாடறிதல். இது சாங்கி யரது முத்தி சிவசமவாதம் - முத்தியிற் சிவ மும் உயிரும் சமம் என்னுங் கொள்கை. இது சிவசமவாதி களது முத்தி ர்வ பட்சம் - தள்ளப்பட வேண்டிய கொள்கை சித்தாந்தம் - ஏற்றற்பாலதெனத்
துணிந்த துணிவு வேதாங்கம் - வேதப்பகுதி: வேதாங்கமாறு. அவை: சிட்சை கற்பம், வியாகரணம், நிருத் தம், சந்தோபிசிதம், சோதிட மென்பன சாலோக பதவி - சிவலோகத்
தில் இருத்தல் சாமீப பதவி - சிவனுக்குச் சமீ
பத்திலிருத்தல்
untu LfT6807
சாரூப பதவி - சிவசொரூப
மடைதல் சாயுச்சியம் - சிவத்துட னிரண்
டறக் கலத்தல் வியாகப வியாப்பியங்கள் - வியாபித்து நிற்பதும் வியா பிக்கப்பட்டு நிற்பனவும். பதி வியாபகம் பசுவும் பாசமும் வியாப்பியங்கள்
பசுகரணங்கள் - உயிருக்குரிய
கருவிகள் சிவகரணங்கள் - சிவனுக்குரிய
கருவிகள் நிட்டை - சமாதி ஆன்மபோதம் - ஆன்மாவினறிவு
ஒன்பதாம் சூத்திரம் நிராதாரம் - ஆதாரமில்லாதது தற்பிரகாசம்-தன்னை விளக்குதல் பரப்பிரகாசம் - பிற பொருட்
களை விளக்குதல் குறி - அடையாளம் மிச்சிரம் - கலப்பு சிவோகம்பாவனை - நான் சிவ
னென்று தியானித்தல் கருடோகம்பாவனை - நான்
கருடனென்று தியானித்தல் மாந்திரீகன் - மந்திரத்தினால
விஷம் நீக்குபவன் மூர்த்தி - தேகம் மூர்த்திமான - தேகத்திலிருப் பவர். சிவன் அண்டத்தி லிருக்குமாறுபோலப் பிண்டத் திலுமிருக்கின்றனர்

Page 42
74
க.சா. முருகேசுப் போதகர்
‘சாக்கிர மாது தலினிந் திரியம் பத்தும்
சத்தா திவச னாதி வாயு பத்தும் நீக்கமி லந்தக் கரணம் புருட னோடு
நின்றது முப்பா னைந்து நிலவுங் கண்டத் தாக்கிய சொப்பன மதனில் வாயு பத்து
மடுத்தன சத்தா திவச னாதி யாக நோக்கு கரணம் புருட னோடு கூட
நுவல்வ ரிருபத் தைந்தா நுண்ணி யோரே.
சுழுத்தி யிதயந் தன்னிற் பிராணஞ் சித்தஞ்
சொல்லாரி யபுரு டனுடன் மூன்ற தாகும் வழுத்திய நாபியிற் றுரியம் பிராண னோடு
மன்னு புருடனுங் கூட வயங்கா நிற்கும் அழுத்திடு மூலந் தன்னிற் றுரியா தீத
மதனிடை யேயுரு டனொன்றி யமரு ஞானம் பழுத்திடும் பக்குவ ரறிவ ரவத்தை யைந்திற்
பாங்கு பெறக்கரு விநிற்கும் பரிசு தானே.”
பத்தாம் சூத்திரம்
ஆர்ச்சிப்பு - சம்பாதித்தல் பதினோராம் சூத்திரம் சிவானுபூதி - சிவனை யறியுமறிவு
உரை - ஆன்றோர்வாக்கு
பாவனைஞானம்
தியானத்
தாயுமானவர் பாடல் தினால் வரும் ஞானம் உருவ சிவ சமவாதிகள் - முத் தியிலும் உடம்பு உண்டென் னுங் கொள்கையுடையோர் சகசம் - இயற்கை பெத்தான்மாக்கள் - பாச பந்த
முள்ள ஆன்மாக்கள்


Page 43

| - ------------------ : ------------------------------------------------- * sae.sae|-| _) :- !...-