கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மறுபாதி 2009.10-12

Page 1
t
(CIG,
கவிதைக்கான காலா
35 d, O2
ஐட் பசி -
(CUD)
* */
 
 

8], l[i]

Page 2
Ólően” (BöTI) Richard Cory
றிச்சட் கோறி நகரத்துக்குச் செல்லுகையிலெல்லாம் நடைபாதை வாசிகளான நாம் அவனைக் காண்போம் அடி முதல் முgவரை அவன் ஒரு கனவான் அப்பழுக்கில்லாத ராஜகம்பீரம் அவனுடையது.
எப்போதுமேகனகச்சிதமாக இருக்கும் அவனது ஆடைகள் பேசுகையில் அவன் ஒரு மனிதனாக இருந்தான் காலை வந்தனம் சொல்லுகையில் ஒரு உயிர்த்துழப்பிருக்கும் நடந்து செல்கையில் ஒரு ஒளிர்வு தெரியும்
மிகப்பெரும் செல்வந்தன் அவன் ஒரு அரசனைக் காட்டிலும் உயர்வாக ஒவ்வொரு அசைவிலும் அவன் கல்வியின் மேன்மைதெரியும் 99
காணுகின்ற யாருமே'இருந்தால் இவன் போலல்லவா இருக்க வேண்டும்
என ஏங்கும்பgயாக இருந்தான் அவன்.
நாமோ எம் விஜயலுக்காக நாளாந்தம் பாடுபட்டபg இறைச்சியில்லா வெறும் பானைச் சபித்தபடி தின்று கொண்டு
அமைதியான கோடைகால இரவொன்றில் விடுசென்றறிச்சட் கோறி ஒருதுப்பாக்கிச் சன்னத்தால் தன்வாழ்வை முழுத்துக் கொண்டான்
ஆங்கில மூலம்:- எட்வின் ஆ(r) லிங்ரன் றொபின்சன் தமிழில்-செளஜன்யஷாகர்

கவிதைகள் 5T6OrEr விஷ்ணு எம்.ரிஷான் ஷெரீப் தமலர்ச்செல்வன் JFLITG3ðBITI IGör கனகரமேஸ் சித்தாந்தன் கருணை ரவி
மொழியாக்கக் கவிதைகள் றிச்சட்கோறி - செளஜன்யவgாகர் 6616irg6II (3LDITir
- நிஷா துர்க்கா பிரசாத் பண்பா - செளஜன்யஷாகர்
கட்டுரைகள் IbuIror fiflu ILIT606ir கருணாகரன்
III 60Rf
பத்தி
திவ்வியா
நூல் அறிமுகம் கடலோடி மருதம் கேதீஸ் தீபச்செல்வன்
அஞ்சலி f.D60f மாவை வரோதயன்
மறுபதி எதிர் வினை
தரஹரன் கவிதைக்கான காலாண்டிதழ் 8půuál - Lomřaté 2OO9 கழதங்கள்
ஐப்பசி - மார்கழி 2009 மறுபதி 1

Page 3
su சித்தாந்தன்
இணை ஆசிரியர்
சி.ரமேஷ் மருதம் கேதீஸ்
அட்டைப்படம்
காகத்துடன் மனிதன்/மரப்பதிப்போவியம் சா.சிவரூபன்
இதழ் வடிவமைப்பு
பா.அகிலன்
அச்சாக்கம்
சுரபி பதிப்பகம், நாவலர் வீதி up'LTങ്ങ്.
தொடர்பு முகவரி மறுபாதி
அரசடி வீதி, கோண்டாவில் வடக்கு,
யாழ்ப்பாணம்,
விலை 30/= இலங்கை)
தொலைபேசி: 0094 0213008806 Lôdra Téb36): marupaathyGlgmail.com GAGDGO: marupaathy.blogspot.com
மறுபதி கவிதைக்கான காலாண்டிதழ் 82ůuál - LorTřebó. 2OO9
வனக்கம்,
இலக்கியங்கள் எப்போதும் காலத் தின் சாடிசியங்களாக அமைபவை. காலத்தின் நகர்வும் சிதைவும் உருமாற் றங்களும் இலக்கியங்களிலும் பிரதி பலிக்கும். பொதுவாகப் படைப்பு இலக்கி யங்கள் மீது கேள்விகளையும் விமர்சனங் களையும் முன்வைப்பவர்கள் அவ்வி லக்கியங்கள் எழுந்தகாலச் சூழல் பற்றிய புரிதல்களைக் கொண்டிருப்பது அவசிய மானது. ஒற்றைப்படையான சிந்தனையு டன் அறிவுபூர்வமற்று முன்வைக்கப்ப டும் விமர்சனங்கள் எவ்வகையிலும் பொருத்தப்பாடாக அமைவனவல்ல.
இலக்கியங்கள் வெறுமனே மொழிச் செயற்பாடிடின் விளைபொருளாக அமைந்துவிடுவதில்லை. வாழ்க்கை யின் பரிமானங்களை, அவை உள்ளார்த் தமாகக் கொண்டி ருப்பவை. ஆதலால் சடீடமிடப்படிட தீர்க்கமான அளவு கோலால் ஒரு காலத்தின் இலக்கியங் களை விமர்சனத்துக்குட்படுத்த முடியாது. இலக்கியப் படைப்புக்களின் சமூக இயங்கு நிலையும் முக்கியத்துவமும் பற் றிய ‘புரிதல் இந்த இடத்தில் முக்கியமா னது.
காலத்தின் முடிந்த முடிபான படைப் புக்கள் இவைதர்ன் என்ற முடிவுகூறல் இலக்கியங்களுக்குப் பொருந்திவராது. வாசிப்புக்கான, விமர்சிப்பதற்கான பரந்த வெளியை இலக்கியப் பிரதிகள் கொண்டேயிருக்கின்றன. ஆயினும், காலத்தின் சாடிசிகளாகவும் அவை இருந்தே வருகின்றன.
ஆசிரியர்
gjué - torts3 2009

சிதறுண்ட காலக் கழகாரம்
தானா விஷ்ணு
முக்காடு போட்ட வயோதிபன் உன்னிடம் வருகையில் உபயோகமற்ற பொருளின் ஞாபகம் உனக்கு வரக் கூடும்.
உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் போல மிக அவதானமாக அவனையும்.அவன் ஞாபகங்களையும் உன்னிடமிருந்து அகற்ற முனைகிறாய்
ஒளி மிகு உலகத்தை இனக்குப் பரிசளித்த அந்த வயோதிபன் தெருவோரத்தில் அல்லது ஆலமரத்தின் கீழ் முடங்கிப்படுக்கையில் பல வரீனங்களிலான இந்த உலகம் மெல்ல மெல்ல உருகிச் சிதைவதனை நீ கானத் தலைப்படுவாய்
வாழ்வின் அர்த்தங்களை அர்த்தங்களின் வரீDைங்களை குழைத்துத் தந்த வயோதிபனின் காலக் கடிகாரம் சிதறுண்டு கிடக்கும் மெளன வெளியில் கொத்தும் அலகுகளைத் தீட்டியபடி ஒரு மரங்கொத்தி சிறகசைக்க எப்படி அனுமதிக்க முழுகிறது உன்னால்,
ஐப்பசி - மார்கழி 2009 மதுபாதி 3

Page 4
பாடநூல்களில் நவின கவிதை - கற்றலும் கற்பித்தலும் சில அவதானிப்புக்கள் சில கருத்துக்கள்
நடராஜா சத்தியபாலன்
இலக்கியம் மனித வாழ்வோடு இயைந்த ஒரு கலை. மனிதனை அவனது வாழ்வைப் பேசுகின்ற விசாரணை செய் கின்ற அனுபவங்களைப் பகிர்கின்ற படரவைக்கின்ற ஒரு அரிய, மொழி சார்ந்த கலை அது. இலக்கியத்தில் “கவிதை” தனக்கேயான தனித்துவங்களோடு காலம் காலமாக மாற் றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் உட்பட்டு உருவாகிவரு வது. கவிஞனாகிய ஒரு கலைஞன் தனது படைப்பை அளிக் கும்போதுதான் உணர்ந்ததைப் பகிர்ந்துகொள்ள முன்வரு கின்றான். மொழியின் அதிகப்படியான சாத்தியங்களை அவன் கவிதையினூடாக பரீட்சிக்கின்றான். தான் சஞ்சரிக் கும் உலகினை நோக்கித் தனது படைப்பினுடாக அவன் அழைப்பு விடுக்கின்றான். அந்த அனுபவ உலகத்துக்குள் வாசகனின் பிரவேசம் எந்த அளவிற்குச் சாத்தியமாகிறதோ அந்த அளவிற்கு அனுபவப் பகிர்வும் சாத்தியமாகிறது.
எமது கல்வித் திட்டத்தில் மொழிக்கல்வி வழங்குதலில் கவிதையின் பங்கு தவிர்க்க இயலாததாக இணைந்துள் ளது. சங்க இலக்கியங்கள் முதல் காப்பியங்கள் அதன் பின் வந்த அறம் மற்றும் சமய நூல் கள் கவிதை வடிவிலேயே அமைந்திருக்கின்றன. ஆரம்ப கால மொழிக் கல்வியில் இராமாய ணம், சாகுந்தலம் போன்ற கவிதை நூல்களில் இருந்து பாடப் பகுதிகள் அமைந்து வந்துள்ள மையும் நாம் அறிவோம். இன்று வரை பாரதியார் கவிதை, திருக்குறள், நாலடியார் என கற்ற லுக்குரிய பாடங்கள் காணப்படுவதையும் அறிவோம்.
மேற்சொன்ன பழந்தமிழ் நூல்களைக் கற்பித்த ஆசிரியர்கள் பாடல்களில் அரும்பதங்க ளின் பொருளை எடுத்துச் சொல்லியும் சந்திபிரித்து விளக்கியும் மாணவர்களுக்கு அவற் றைப் புரிய வைத்தார்கள். மரபுவழியில் அமைந்த படைப்புக்களுக்கு இவ்வகை விளக்கங்கள் வேண்டப்படுவதும் பாடசாலை மாணவர்களைப் பொறுத்தவரை அவசியமாகவே இருந்து வரு கிறது. கால மாற்றத்தின் விளைவாக இன்று நவீன கவிதை பாடநூல் களில் சேர்க்கப்பட்டுள் ளது. அக்கவிதை கற்பிப்பதும் கற்பதும் சில சங்கடங் களைக் கொண்டிருப்பதான நிலைமை ஒன்று தற்போது அவதானிக்கப் படுகின்றது. பொதுவாகவே நவீன கவிதையைப் பொறுத்த வரை “புரியவில்லை’எனக் குறை கூறுபவர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் என்ற ஸ்தா னத்தில் இருப்போர் இவ்வாறு கூற நேரிடுவது நியாயமற்றதும் துர்ப்பாக்கியமானதுமான ஒரு நிலையாகும். கற்பிக்கப்போகும் விடயம் பற்றிய தெளிவு கற்பிப்பவரிடம் இருந்தே ஆக வேண் டும். ஆனால் ஒரு பொதுவான அவதானிப்பில் கவிதையைக் கற்பித்தல் என்னும் கிரியை தொடர்பாக துக்ககரமான சில நிலைமைகள் அறியப்பட்டுள்ளன.
இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னர் மஹாகவியின் “சிறு நண்டு தரை மீது பட
ஐப்பசி - மார்கழி 2009 மறுபவதி 4
 

மொன்று கீறும் சில நேரம் அதை வந்து அலை கொண்டுபோகும்”என்று தொடங்கும் கவிதை யில் பாடசாலை வகுப்பொன்றில் ஒரு ஆசிரியை கற்பிப்புதை அவதானிக்க நேர்ந்தது. கவி தையை முதலிலே ஆசிரியை மூச்சு விடாமல் வாசித்தார். பின்னர் மாணவன் ஒருவனை அதை வாசிக்குமாறு விடுத்தார். பின்னர் ஆசிரியரின் விளக்கம் இவ்வாறு அமைந்தது.
ஆசிரியர் - 'நண்டு என்ன செய்ததாம் மானவர் - தரையில படம் கீறிச்சாம் ஆசிரியர் - அலை என்ன செய்ததாம் மானவர் - அதைக் கொண்டு போச்சுதாம்”
இந்த வகையில் தான் இடையிடை சில விளக்கங்களோடு அந்தப் பாடம் நடந்தேறியது.
மஹாகவியின் கவிதையைப் படித்து அனுபவித்து அது தோய்ந்த ஒருவருக்கு இந்தப் பாடம் எப்படி இருந்திருக்கும் எனச் சொல்லத் தேவையில்லை. இது போன்ற பல கொடுமைகள் தமிழுக்கு நேர்ந்து கொண்டிருப்பதைப் பலரும் அவதானித்திருப்பார்கள். மொழியைக் கற்பிப்ப வர்கள் அதிலும் குறிப்பாக கவிதையைக் கற்பிப்பவர்கள் எத்தகைய ஒரு தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பொதுவாகவே மொழியைக் கற்பிப்பவர்களிடத்தில் மொழிசார் ஆளுமை மிகவும் சிறப் பாக இருக்கவேண்டியது அவசியம். சொல்லாட்சி, மொழியின் நுட்பம், செழுமையைக் கண்டறி யும் பக்குவம், நயக்கும் பண்பு, நயத்தைப் பகிர்ந்து கொள்ளும் ரசனை மற்றும் பக்குவம் என்பன ஒரு மொழி ஆசானிடம் இருந்தாக வேண்டிய பண்புகள். ஆனால் துரதிஷ்டவசமாக இன்றெல்லாம் வாசிக்கும் பண்பை வளர்த்துக் கொண்டு தமது ஆளுமையை உயர்த்திக் கொள்ளும் ஆசிரியர்கள் வெகு அரிதாகவே இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நவீன கவிதை ஒன்றைக் கற்பிக்க முற்படும் ஒரு ஆசிரியர் எத்தகைய பக்குவத்தை உடையவராக இருக்க வேண்டும்? இது பற்றி நாம் மிகுந்த தெளிவான நோக்கு நிலை ஒன்றை உடையவராதல் வேண்டும். இன்று 1oம், 11ம் தரங்களில் எமது மண்ணின் கவிஞர்களான வ. ஐ. ச.ஜெயபாலன், கருணாகரன், சிவசேகரம், முருகையன், ஊர்வசி, சேரன் முதலான நவீன கவிஞர்களின் கவிதைகளும் தென்னிந்தியக் கவிஞர் அப்துல் ரஹ் மான், கவிஞர் சோ.பத்மநாதனின் மொழிபெயர்ப்பும் இன்னும் நீலாவணன், மஹாகவி முத லானோரின் கவிதைகளும் பாடங்களாக இணைக்கப்பட்டுள்ளன.
மேற்படி நவீன கவிதைகளைக் கண்ணுற்ற ஆசிரியர் ஒருவர் தமது நண்பரிடம் “ஒரு மண்ணும் விளங்குதில்லை”என்று குறைப்பட்டுக் கொண்டதாக அறிய நேர்ந்தது. மேற்படி ஆசிரியரையோ அவர் போல சிரமத்துக்குள்ளாகிற ஏனையோரையோ மட்டம் தட்டுவதல்ல எனது நோக்கம். கவிதை என்னும் இலக்கியத்துறை இன்று கண்டுள்ள உச்சங்களை கவிதை யின் பலதரப்பட்ட நுண்ணிய தன்மைகளை அதன் பல் பரிமாணத் தன்மை யை எல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது மொழி ஆசிரியர்களின் அவசிய கடமையாகிறது. நவீன கவிதை பற்றிய தருமுசிவராம், வல்லிக்கண்ணன் போன்றோருடையதும் அவர்களைப் போல் கவிதை பற்றிய பிரக்ஞையும் அறிவும் கொண்டோரான பிரம்மராஜன் விக்கிரமாதித்யன் போன்றோரது ஆக்கங்களையும் படித்திருக்க வேண்டியது அவசியம்.
கவிதையைப் படைப்பதும் படிப்பதும் வெவ்வேறான கிரியைகள். ஆயினும் இரண்டிற்குமே அடிப்படையாகச் சில பண்புகள் வேண்டப்படுகின்றன. சொற்களின் நேர்ப்பொருளோடு மாத்தி ரம் கவிதைகள் அமைவதில்லை. உதாரணத்துக்கு பாரதியின் 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்டமனிதரை நினைந்துவிட்டால்” என்ற கவிதையையும் “அக்கினிக் குஞ்
ஐப்பசி - மார்க்ழி 2009 மேலுUள
5
盘

Page 5
சொன்று கண்டேன்’ என்ற கவிதையையும் எடுத்துக் கொள்ளலாம். இதில் முதலாது கவிதை சொற்களின் நேரடி அர்த்தத்தோடு கவிஞனின் அனுபவத்தை நம்மில் தொற்ற வைக்கும் ஒரு முயற்சி. அதுபோல அன்றி இரண்டாவது கவிதை சொற்கள் தமது நேர்ப் பொருள் தாண் டிக் குறியீடாக உணர்த்தும் ஒரு நிலைமையை ஒரு அனுபவமாகத் தர விழைவது.
சொற்களை அவை அவை ஏற்கும் நேரடி அர்த்தங்களைக் கொண்டே பொருள் தரும்படி யாக ஆக்கப்படும் கவிதைகளும் உண்டு. சொற்கள் உள்ளீடாக பிறிதான விடயங்களைப் பேசும்படியாக ஆக்கப்படும் கவிதைகளும் உண்டு. இன்றைய நவீன கவிதைப் போக்கில் இவ்வாறான குறியீடுகள், படிமங்கள் கொண்ட ஆக்கங்கள் கவிதைகளாகி வருவது இயல் பாகியுள்ளது. அவ்வாறான ஒரு சொல் தன் பொருளைக் களைந்து அர்த்தங்கள் பலவற்றைப் புனைந்து கொள்ளும்படியாகப் பல்பரிமாணத் தன்மையுடன் திகழ்வது ஓர் இயல்பாகியுள்ளது.
என் பிரியமுள்ள உனக்கு
பிஐ, அந்தக் குருவியைப் பிழ என் நெஞ்சுக்குள் நுழை
அவர்களைக் கண்டதும் எனக்குள் இருந்த குருவிகள் செத்தன - அந்த இரண்டு கையிலும் தங்கள் முகங்களைத் தாக்கி வந்தவர் துயரை
அறிந்ததும் எனக்குள் ஆறுகள் வற்றின மலை இழந்து சரிந்தது உடம்பெல்லாம் வெந்து புழுத்தது - நான் நார் நாராய் கிழிந்தும் போனோன்.
மேலுள்ள நவீன கவிதையில் கவிஞர் சோலைக்கிளி சொல்ல உத்தேசிப்பது எது எனப் புரிகிறதா? அவர் எத்தகைய அனுபவத்தை வாச கனிடம் தொற்ற வைக்க முனைகிறார்?
குருவிகள் எனும் சொல்லினூடாக அவர்
எதைக் குறிப்பிடுகிறார்? “குருவிகள் செத்தன” என்றும் சொல்லும்போது அவர் எதைச் சொல் லுகிறார்? என்றெல்லாம் கவிஞரது உலகத்துக்குள் நாம் நுழைய எத்தனிக்கவேண்டும். ஒட்டு மொத்தமாக அவர் எதைச் சொல்கிறார் எனக் கண்டறிய வேண்டும். இதுவே கவிதை ஒன்றை அனுபவிக்கும் வழி. அவ்வாறன்றி மேலோட்டமாக ஒரு கவிதையைப் பார்த்த மாத்திரத்தில் அதன் சொற்களுடைய நேர்ப் பொருளை விபரிக்க ஒருவர் முற்படுவாரானால் அவரது முயற்சி தோல்வியிலேயே முடியும். இன்றைய கவிதையைக் கற்பிக்க முற்படும் ஒரு ஆசிரியர் கவிதை யின் தளம், அதன் பழகு பிரதேசங்கள், அதன் செல்தொலைவு மற்றும் அதன் சூட்சும அர்த் தங்கள் என்பவற்றையெல்லாம் அடையாளங் காணவும் காட்டவும் கூடியவராய் அமைய வேண்டியிருக்கிறது. “சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா’ என்ற கவிதையை கற்பிப்பதற்கும் "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்'என்ற கவிதையைக் கற்பிப்பதற்கும் ஒருவர் பிரவேசிக்க வேண்டியிருக்கும் உலகங்கள் வேறு வேறானவை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
82üuáà - LDITřřasiĝo 2OO9 - மறுபவதி 6
 

ఫీ حه
ஆங்கிலத்தில் - வென்டி வட்மோர்
தமிழில் - நிஷா
தீவின் வசியம்
ஒரு விசித்திரக் கவர்ச்சியால் சுற்றப்பட்டிருக்கிறேன் ஒரு தீவின் வசியத்தில் பிஜபட்டிருக்கிறேன் பழைய ஒரு மந்திரத்தால் பொறியிலிடப்பட்டிருக்கிறேன் சொற்கொண்டு வரீDைரிக்க முgயாத ஒரு பக்தி
வெகு தொலைவான இடங்கள் எனக்குத் தேவையில்லை அலையும் தாகங்களும் என்னிடமில்லை தாயகத் தீவின் அழைப்பு எனது பசியான இதய நார்களை சுண்g இழுக்கிறது.
{¥ಫಿ x
நான் ஆழ்ந்த பச்சை நீரில் மூழ்கிப் போய் இருக்கிறேன் ଏ୬ ରୋଗୀfiefit ଗuitérédfild && filudíର୍ଚ) எரிந்துபோயிருக்கிறேன் அவளின் ஊதா வண்ண அந்திப் பொழுது முழுவுறும் தருணத்தில் ஒளிரும் தாரகைகளில் சொர்க்கத்தில் மயக்கப்பட்gருக்கிறேன்.
ଏ୬6ରାcifiefit [6ରଠଗଣରାff6ff LD56.JITöb LDLëbuo Ug அவளின் மார்பில் பலகாலம் உறங்கிக் கொண்டிருக்கிறேன் அவளின் சந்தோஷத்தையும் சிரிப்பையும் பகிர்ந்திருக்கிறேன். அவளின் கவலையின் கண்ணித் துளிகளுடன் உதிரம் சொரிந்திருக்கிறேன்.
அவளின் மஞ்சள் நிற கடற்கரையில் கிடந்திருக்கிறேன்.
அந்த சிப்பியின்
மெலிந்த ரீங்காரத்தில் எனது தாயகத் தீவின் வார்த்தையிலடங்கா வசியம்
3ÜLJá. – LDITfalf) 2009
மறுபதி 7

Page 6
ஒரு கவிதைதான்.
LJu600f
மொழியாக்கக் கவிதைகள் பல தமிழில் வெளியாகின்றன. நல்லதொரு மொழியாக்கம் மூலப்படைப்பிற்கு நேர்மையானதாய், தமிழ் மொழி மரபிற்கு இயைபுற, செறிவான சொற்களுடன் கவித்துவம் பொருந்தியதாய் விளங்கும்.
மொழியாக்கம் 'மறுபடைப்பே' என்பதனால், அதன் வெற்றி , மொழியாக்கம் செய்பவரின் - உணர்திறனிலும் வெளிப்பாட்டுத்திறனிலும் வடிவச் செம்மை உணர்விலும் தங்கியிருக்கிறது.
குறித்ததொரு படைப்பினை வெவ்வேறு நபர்கள் மொழியாக்கம் செய்யும்போது, அவர்களின் ‘தணியாள் இயல்பு வேறுபாடுகள்’ காரணமாய் மொழியாக்கங்களில் வித்தியாசங்கள் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது; இவற்றை நோக்குவதும் சுவாரசியமானதுதான்.
உதாரணத்திற்கு ஒன்று:
ஆங்கிலக் கவிஞன் 'வில்லியம் பிளேக் எழுதிய 'A Poison Tree என்ற கவிதையின் நான்கு மொழியாக்கங்கள் காணக்கிடைக்கின்றன : முறையே முருகையன், சி.சு.செல்லப்பா, வை.சுந்தரேசன், க.சத்தியதாசன் ஆகியோர் அவற்றைச் செய்துள்ளனர்.
1. கவிதைத்தலைப்பை விஷமரம் என்று செல்லப்பா மொழியாக்கம் செய்ய, ஏனைய
மூவரும் நச்சுமரம் என்று தந்துள்ளனர்.
2. மூலக்கவிதை 16 வரிகளில் அமைந்துள்ளது. முருகையனும் செல்லப்பாவும் 16
வரிகளில் மொழியாக்கம் செய்துள்ளனர்; சுந்தரேசன் 19 வரிகளிலும்,
சத்தியதாசன் 21 வரிகளிலும் செய்துள்ளனர்.
3. மூலக்கவிதையின் முதல் நான்கு வரிகள் வருமாறு:
was angry with my friend: I told my wrath, my wrath did end. I was angry with my foe: I told it not, my wrath did grow.
மொழியாக்கங்கள்:
கோபம் கொண்டேன் தோழன் மீதில் கோபம் சொன்னேன். குளிர்ந்து தீர்ந்தது: கோபம் கொண்டேன் தீய பகைவனில்: கூறினேன் அல்லேன் வளர்ந்தது கோபம். XXXXჯXXX
(முருகையன்) ': 'xxxx... . . *S:3&:::::8&x&s வில்லியம் பிளேக்
ஐப்பசி - மார்கழி 2009 மறுபதி 8
 

நன்பனிடம் கோபம் கொண்டு இருந்தேன் கோபத்தை காட்டினேன் கோபம் தரிைந்தது பகைவனிடம் கோபம் கொண்டு இருந்தேன் அதைக் காட்டவில்லை, என் கோபம் வளர்ந்தது செல்லப்பர்)
என் நண்பனுடன் கோபம் உற்றேன் என் சினத்தை அவனிடம் பகன்றேன் சினம் தரிைந்தது என் பகைவனுடன் கோபம் உற்றேன் என் சினத்தை மறைத்தேன் சினம் வளர்ந்தது.
(சுந்தரேசன்)
நான் எனது நண்பனுடன் கோபம் கொண்டிருந்தேன் அதை வெளிக்காட்டினேன் அது முழுவுக்கு வந்தது. நான் எதிரியுடன் கொண்டிருந்த கோபத்தை மறைத்து வைத்தேன் அது வளர்ந்தது. (சத்தியதாசன்)
மூலத்திலுள்ளதை நேரே மொழியாக்கம் செய்ததால் - என், நான், எனது ஆகிய சொற்கள் மூன்றாம் நான்காம் உதாரணங்களில் கையாளப்பட்டுள்ளன; ஆனால், தமிழ் மொழிமரபிற்கு இவை தேவையில்லை. முதல் இரண்டு உதாரணங்களிலும் இவை இல்லாமலேயே மூலத்தின் அர்த்தம் வெளிப்படுத்தப்படுகின்றது. “கோபம் கொண்டேன் தீய பகைவனில்"என்பதில் முறையே, நான்/ என்/எனது என்பன மறைந்துள்ளன; இந்த விடுபாடு மொழியாக்கத்திற்குச் செறிவையும் தருகிறது.
'கோபம் கொண்டேன்'/ 'கோபம் சொன்னேன்’ என முருகையன் எளிமையாக வெளிப்படுத்துகிறார்; 'கோபம் உற்றேன் / பகன்றேன்’ எனச் சுந்தரேசனின் சொற்பிரயோகம் சிறிது கடினத்தன்மையைக் கொண்டதாயுள்ளது.
கோபம் கொண்டேன் / கோபம் கொண்டு இருந்தேன் / கோபம்கொண்டிருந்தேன்;
கோபத்தைக் காட்டினேன் / அதை வெளிக்காட்டினேன்;
கூறினேன் அல்லேன்/அதைக் காட்டவில்லை/சினத்தை மறைத்தேன்/மறைத்து வைத்தேன்.
என, ஒரே பொருள் வேறுவேறு சொற்களில் வேறுவேறு கவிஞரால் வெளிப்படுத்தப்பட்டுள்
முருகையனின் மொழியாக்கம் செறிவையும் கவிதைக்குரிய 'இயங்குதன்மை யையும் கொண்டுள்ளது; ஏனைய மூன்று மொழியாக்கங்களும் கட்டுரையின் 'உலர்ந்த' - விவரணத்தன்மையுடன், செறிவற்றும் காணப்படுகின்றன.
ஐப்பசி - மார்கழி 2009 மறுப்தீே 9

Page 7
4. மூலக்கவிதையின் கடைசி இரண்டு வரிகள் வருமாறு:
In the morning glad I see My foe outstretch'd beneath the tree.
இவ்வரிகளின் மொழியாக்கங்கள் வருமாறு:
மரத்தின் கீழே காலையிற் கிடந்த மாற்றான் உடலை மகிழ்வுடன் கண்டேன்
(முருகையன்)
காலையில் மகிழ்வுடன் பார்த்தேன் நான் மரத்தgயில் பகைவன் விரைத்துக் கிடப்பதை,
செல்லப்பர்)
காலையில் மரத்தின் கீழ் என் பகைவன் மல்லாந்து கிடத்தல் கண்டு மகிழ்வுற்றேன்.
(சுந்தரேசன்)
காலையில் நான் கண்டு மகிழ்ந்தேன் அம் மரத்தின் கீழ் இறந்து கிடந்த என் எதிரியை
(சத்தியதாசன்) வில்லியம் பிளேக்
அ) foe என்ற சொல்லிற்கு மாற்றான்/பகைவன் இருவரால் /எதிரி ஆகிய சொற்கள்
கையாளப்பட்டுள்ளன.
ஆ) கிடந்த மாற்றான் உடலை / விரைத்துக் கிடப்பதை / மல்லாந்து கிடத்தல் கண்டு / இறந்து கிடந்த ஆகிய பிரயோகங்களிலும் வேறுபாடுகளைக் காணலாம்.
இ முருகையனின் மொழியாக்க வரிகள் தவிர்ந்த ஏனைய மூன்றும் வெறும் வசனக்
கூற்றுகளாக உள்ளன. அவரது மொழியாக்கம் யாப்பில் எதுகை, மோனை பேணி ஓசையுடன் மரபுமுறைக் கவிதையாக உள்ளது; ஏனைய மூன்றும் புதுக்கவிதைப் பாணியிலுள்ளன.
இவ்வாறாக, தனியாள் இயல்பு காரணமாய் வெளிப்படும் வேறுபாடுகளை அவதானிக்க முடிகிறது. கவிதையை முழுமையாய்ப் பார்க்கையில் - முருகையனின் மொழியாக்கம் கவித்துவ வீச்சுடன், செறிவானதாய் என் வாசக மனதில் பதிகின்றதெனவும் சொல்ல இயலும்
O
geÜuáA – LDITT86 2009 மறுபளதி 10
 

எம். ரிஷான் ஷெரீப்
வளைதலும் வளைந்து கொடுத்தலுமான நானல்களின் துயர்களை நதிகள் ஒரு போதும் கண்டுகொள்வதில்லை
ඊත(6 ශ්‍රැ|bl|bl|5 ඌඛl6ඩ් தன் காலூன்றிப் பறந்த மலையளவு மிகைத்திருக்கிறது நாடோgப் பறவைக்கு
அது நதிநீரை நோக்கும் கனம் கான நேரிடலாம் நானல்களின் துயரையும்
சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்து தான் கண்டு வந்த இரயில் பாதையோர நானல்களின் துயர் இதைவிட அதிகமென அது சொல்லும் ஆறுதல்களை
நானல்களோடு நதியும் கேட்கும் ধৰি ।
பின் வழமைபோலவே சலசலத்தோடும்
எல்லாத்துயர்களையும் சேகரித்த பறவை தன் துயரிறக்கிவர தொலைவானம் ஏகும்
அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும் கண்டுவரக் கூடும்
தொலைவானில் சஞ்சரிக்கும்
ஒற்றைப் பறவை
"ല്ല്യ
22 Juá - LDrfrast 2009
றேறுவனதி 11

Page 8
தரை தட்டா பொழுது
பேய் நெல்லுக்காய வைக்கும் மஞ்சள் வெயில் பொழுதில் பாதை தரை தட்டாது ஆற்றைக் கிண்டுகின்றது.
ஆற்றில் தத்தளிக்கின்ற பாதையை விழுங்க முயலும் முதலை வாயை ஆவென்று விரிக்கின்றது. பாதைக்காரன் பாசாங்கு காட்டிக்காட்டி
பாதையைச் சுற்றுகிறான்.
முதலை வேகம் கொண்டு UT6Dgbu96b dpl°g மூர்க்கம் கொள்ள. பாதைக்காரன் மண்டையில் ஒருபோடு போட்டான். முதலை திமிறி மறைய uாழிலிருந்து வெளிவருகின்ற புன நாற்றம்
பாதையைச் சூழ்ந்து பயம் காட்ட பாதை தடாரென்று
தரை தட்g பறிக்கிறது Safdiscp65uj66).
த.மலர்ச்செல்வன்
ஐப்பசி - மார்கழி 2009
மறுபவதி 12
 

கவிதை மற்றொரு பரிமாணத்தை நோக்கி.
கருணாகரன்
0 1
”கட்டவிழ்ந்து கட்டவிழ்ந்து செல்லும் இந்த உலகம் முடிவற்ற புதிர்களையும் எண்ணற்ற நிறங்களையும்/ வண்ணங்களையும் எல்லையில்லாத விநோதங்களையும் உற்பத்தி செய்த படியே இருக்கின்றது. மனதின், எண்ணங்களின், சிந்தனையின் விநோதங்களும் எல்லை யின்மையும் புதிர்மையும் எப்போதும் எல்லாவற்றிலும் ஏராளம் ஏராளம் கட்டவிழ்ப்புகளையும் புதிதாக்கங்களையும் நிராகரிப்புக்களையும் ஏற்புகளையும் அனுசரிப்புக்களையும் உண்டு பண்ணிக்கொண்டேயிருக்கின்றன. எது சரி, எது பிழை என்றறியாச் சூழல்; நிலைமை எல்லாத் தலைகளுக்குள்ளும் புரக்கேறிக் கொண்டிருக்கிறது. சரியாக எத்தனை இருக்கிறதோ அத் தனை தவறாகவும் அல்லது பிழையாகவும் இருக்கிறது இந்த உலகம். மறதியும் நினைவும் அன்பும் குரோதமும் விருப்பமும் வெறுப்பும் இருளும் ஒளியும் மாயையும் தெளிவும் என்று ஒரு விநோதக் கலவையாக அது தன்னை நிலைநிறுத்திக் கொண்டும் நிலை மாற்றிக் கொண்டுமுள்ளது. புதிதாக்கங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது எனில் பழமையும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. மனிதனுக்குப் புதுமையில் இருக்கின்ற அத்தனை நாட்டங்களும் பழையதிலும் புராதனத்திலும் உண்டு. இது புதுமை நாட்டமா? புராதனத்தின் ஈடுபாடா? என்ன புதிர் இது? என்ன விநோதம் இது? இதை யதார்த்தம் என்பதா? இதுதான் உண்மை என்பதா? இதுவே மாயம் என்பதா?”
நேற்றிரவு எதிர்பாராதவிதமாக இந்தக் குறிப்பை ஒரு பழைய காகிதத்தில் படித்தேன். இவ்வாறு நீண்டு செல்லும் இந்தக் குறிப்பு எங்கேயோ படித்தவை போல ஒரு நினைவு. எங்கே, எங்கே? யுத்தத்தின் பேரொலியும் அவலக் காட்சிகளும் அதன் குரூரமும் நிரம்பியிருக்கும் மூளைக்குள்ளிருந்து சட்டென எந்த நினைவுகளையும் மீட்டுக்கொண்டு வர முடியவில்லை. நண்பர்களிடம் இது பற்றிக் கேட்கலாம். ஏனெனில், இதைப் படிக்கும் போது எப்படியோ ரமேஸின், சித்தாந்தனின் நினைவுகள் வருகின்றன. கூடவே கலாவண்ணன் தயாளனின் நினைவுகளும்; அப்போதுதான் - இந்த நண்பர்களுடன் இருந்த போதுதான் - நான் ‘கந்தன் டேவிற்கலாவை' சந்தித்திருந்தேன். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் என்று நினைவு. இந்தக் காலக் கணிப்புச் சற்றுக் கூடலாம் அல்லது குறையலாம். அப்போது இலங்கையில் அமைதிக்கான பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் இந்தப் பேச்சுகள் நடந்து கொண்டிருந்த காலத்தை யுத்த தயாரிப்புக் காலம் என்றார் கந்தன் டேவிற்கலா. எதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்கள் உண்டென்பதால் நான் அதிகம் அது குறித்து வாதிடவில்லை. க.டே.கலா சொன்னதைப் போலவே பின்னர் யுத்தகாலம் வந்தது. ஊழிக் கூத்தும் நடந்தது. இப்போது"யுத்தமற்ற காலம்?” என ஒன்று வந்திருக்கிறது. இந்தக் காலம் பற்றிய கந்தன் டேவிற் கலாவின் மதிப்பீடும் அனுமானிப்பும் என்னவோ தெரியவில்லை. யுத்த நாட்கள் எல்லாவற்றையும் சிதைத்து
eŮJUJá — LoTsfatų 2009 V முனுபவதி 13

Page 9
விட்டதைப் போல கந்தன் டேவிற் கலாவையும் சிதைத்திருக்கக் கூடுமோ! அல்லது எல்லாவற் றையும் யுத்தம் செதுக்குவதைப் போல கலாவையும் அது மேலும் செதுக்கியிருக்குமோ! எல் லாச் சிதைவுகளுக்குப் பின்னும் இனிச் சிதையமுடியாத துகள் என்ற அளவில், நுண்ணள வில் க.டே.கலாவை என்றேனும் சந்திக்கக்கூடும். அப்போது உரையாடல்கள் எப்படியிருக் குமோ! அதை நினைக்கவே நெஞ்சு பதறுகிறது. எனினும் கந்தன் டேவிற் கலாவுடன் நான் முன்னர் நடத்திய உரையாடல்கள் இப்போது நினைவில் எழுந்து வருகின்றன. அதுவும் நமது கவிதைகள் பற்றி, வாழ்வு குறித்து குறிப்பாக நிகழ்கவிதைபற்றி கந்தன் டேவிற் கலா கொண் டிருந்த சிந்தனைகள் முக்கியமானவை. மக்களை சமூக மயப்படுத்துவதற்கும் அரசியல் மயப் படுத்துவதற்கும் வாழ்வை, அதன் எண்ணற்ற சாத்தியங்களாக விரிந்துசெல்லும் பல் பரி மாண நிலைகளில் உணர்ந்து கொள்வதற்கும் அரசியலின் வன்முறையிலிருந்து மீள்வதற் கும் கவிதை நிகழ் கவிதையாக வேண்டிய அவசியம் குறித்து க.டேகலா கதைத்ததெல்லாம் எத்தனை ஆச்சரியமானவை. இப்போது 'மறுபாதிஎன்ற கவிதைக்கான இதழில் சி.ஜெயசங் கர் நிகழ் கவிதை குறித்து எழுதியிருப்பதைப் பார்க்கும்போது கலாவின் கூற்றுக்களே ஞாப கத்தில் வருகின்றன.அன்றைய அமைதிக் காலத்தில் அல்லது கலா சொன்னதைப் போல கொந்தளிப்புக்கான கருக்கொண்ட காலத்தில் நிகழ்கவிதை இயக்கம் குறித்த கலாவின் சிந்த னைகளும் விருப்பங்களும் முக்கியமானவையாக இருந்தன. சூழல் மற்றும் காலப் பிரக்ஞை யுடைய நிகழ்கவிதை இயக்கத்தின் செயல்விரிவும் பண்பு நிலையும் உச்சமடையும்போது அது பெரும் விழிப்பை நமது சமூகத்தில் உருவாக்கும் என்று கலா நம்பினார்.
1980களில் சேரன், ஜெயபாலன், நுஃமான், அ.யேசுராசா போன்றோர் முன்னெ டுத்த கவிதா நிகழ்வின் விருத்தியும் பரிமாணமும் தொடரப்பட வேண்டும் என்று கலா விரும்பி னார்; அதை அவர் வலியுறுத்தினார். நிகழ்கவிதைக்குரிய அடையாளங்களும் அம்சங்களும் நமது நவீனகவிதைகளில் - குறிப்பாக ஈழக் கவிதைகளில் நிறையவுண்டு என்பது கலாவின் கணிப்பும் நம்பிக்கையும். ஜெயபாலன், சு.வி. முருகையன், மஹாகவி, நீலாவணன், புதுவை இரத்தினதுரை, நுஃமான் போன்ற பலரின் கவிதைகள் நிகழ்கவிதைக்குரிய அம்சங்களைத் துலக்கமாகக் கொண்டவை என்று கலா கூறியது ஞாபகம். இளைய கவிகளில் நாக.சிவசிதம் பரம், த.ஜெயசீலன் இன்னும் சிலரையும் அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார். கூடவே நிலாந்த னின் மண்பட்டினங்கள், யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே அஸ்வகோஸின் கவிதை கள் , மு.பொ.வின் பல கவிதைகள் என நிகழ்கவிதை அமைப்புக்கேற்ற கவியாக்கங்கள் நிறையவுண்டு என்றார் கலா, குறிப்பாக ஈழக் கவிதைகளில் பெரும் பாலானவையும் நிகழ் கவிதைக்குரிய அடிப் படையைக் கொண் டவை. பொதுவாக இவற் றின் மொழிதல் முறை யும் விவரிப்பும் உணர்ச் சியையும்நிகழ்கவிதைப் பண்புக்கு ஒடுக்கமான இந்தக் கவிதைகளை நிகழ்கவிதையாக சமூ கத்தளத்தில் பரிமாற் & : ಇ«3{
றம் செய்யும்போது பெற் (x, xx Kaja
கவிதா நிகழ்வு
ஐப்பசி - மார்கழி 2009 மறுUஎதி 14
 

றுக்கொள்ளும் அனுபவங்களும் சந்திக்கும் சவால்களும் இந்தக் கவிதைகளின் இயல்பிலும் குணத்திலும் மேலும் விருத்திகளை உண்டாக்கும் என்றார். என்றபோதும் நிகழ்கவிதை குறித் துச் சரியான விளக்கம் அப்போது நமக்குச் சரியாகப் புலப்படவில்லை. அதற்கான சவால்க ளும் நிறையவிருந்தன. எனவே இதுகுறித்த விவாதங்கள் அப்போது கடுமையாக நிகழ்ந்தன. வினாக்களும் ஏராளம். அந்த விவாதத்தின் சில பகுதிகள் இங்கே சுருக்கித் தரப்படுகின்றன.
Ο 2
நிகழ்கவிதை என்றவுடன் முதல் நிலை விளக்கமாக கவிதைகள் அது சமூகச் செயற்பாட் டுக்கான ஒரு வகையான உத்தி, உபாயம், முயல்கை, செயற்பாடு என்றே கொள்ளப்படும். இப்படிப் பார்க்கும்போது உடனடியாக நம் அனுபவப் பிராந்தியத்தின் விழிப்புக் காட்டும் காட்சி அல்லது காணும் காட்சி இது கவிதையை தட்டையாகவும் பரப்புரைச் சாதனமாகவும் ஆக்கி விடும் என்பதே. ஆனால், இந்த அச்சத்துக்கு அப்பால் கவிதை அதன் கலைச்செறி வுடன் நிகழ்கவிதை ஆகமுடியும்; ஆகவேண்டும். இதற்கு நாம் தனியே கவிதையை காகிதத்தில் மட்டும் எழுதி எடுத்துக்கொண்டோ மனதில் பாடம் பண்ணிக் கொண்டோ போகமுடியாது. அது நிகழ்கவிதை பற்றிய அறிமுகத்திற்கு எதிர்நிலை அம்சங்களையே அதிகமாகவும் உற் பத்தி செய்யும். நாம் கவிதையைத் தனித்த ஒரு விடயமாக, ஒரு பொருளாக குறிப்பாக கலை என்ற மேல் நிலைத் தகுதியை வைத்துக்கொண்டு அதைப் புனிதப்பொருளாகப் பார்க்கமுடி யாது. கவிதை நமது வாழ்வின் எல்லா நிலைச் சாத்தியங்களிலும் இணைந்த ஒன்று. எந்தப் பொருளும் மறுவடிவம், புதுவடிவம் பெறுவதைப் போல அதுவும் தன்னிலை மாற்றங்களுக் குட்படுவது. நாட்டுப்புறப் பாடல்களும் கூத்துப் பாட்டுக்களும் எப்படி புதுமைப் பாட்டுடன் மாற்று வடிவம் கொண்டு, புதுக் கூறுகளுடன் இன்று மெல்லிசையாகவும் நாட்டுப்புறப் பாடல்கள் கானா மற்றும் சினிமா இசைப் பாடல்கள் என்றெல்லாம் விரித்தியடைந்துள்ளனவோ அவ் வாறே நமது கவிதையும் துணைக்கூறுகள், துணை அம்சங்களுடன் இணைந்தும் கலந்தும் அளிக்கை நிலைக்கு - நிகழ்நிலைக்கு மாற்றம் பெற வேண்டும். இசை, அளிக்கை முறை, ஊடகம்+சாதனம் என்பன போன்றவற்றில் இந்த நிகழ்நிலை கலந்து உருவாக வேண்டும்.
தனி உலோகம் உபயோகப் பொருளாகுதல் ஆகுவதற்கு தயாராகினாலே அல்லது அதை அவ்வாறு நாம் மாற்றும் போது தான் உலோகத்தின் பயன்பாடு உச்ச நிலை எய்தும். அது தன் வரையறைகளை நெகிழ்த்திக் கொள்கிறது. எல்லாச் சாத்தியங்களுக்கும் இடமளிக்கிறது அது. இங்கே உலோகம் உலோக மாகவும் அது உலோகமற்றதாகவும் இருக்கிறதல்லவா! அவ்வாறே கவிதையும் மொழியின் அதிக சாத்தியங்களை / அதிகூடிய சாத்தியங்களைக் கொண்டியங்கும் கவிதை, அதனின்றும் இன்னும் தன்னை நெகிழ்த்தி, இசையுடனும் அல்லது இன்னும் பல இணை பொருட்களுடனும் கூறுகளுடனும் நிகழ்கலையாக, ஆற்றுகைக் கலையாக மாறலாம். ஒன்றுடன் ஒன்று இணைந்ததாக அல்லது பலவும் சேர்ந்ததாக ஒன்று செயற்படுவது மனித ஆற்றலின் - படைப்பின் வெளிப்பாடாக உள்ளது. அதுவே உபயோக மாகவும் பல்நிலைப் பரவலாகவும் உச்சப் பயன்பாடாகவும் இருக்கிறது. வாழ்வுடன் எளிதிற் கலந்தும் விடுகிறது. இன்றைய நம் வாழ்வு எத்தகையதாக உள்ளது? நாம் எவற்றையெல் லாம் பயன்படுத்துகின்றோம்? அவை யெல்லாம் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன. உரு வாக்கப்படுகின்றன? அவற்றுக்குரிய கவர்ச்சி - அழகியல் எவ்வாறு இணைக்கப்படுகிறது? நாம் சமைக்கின்ற, சாப்பிடுகின்ற சோறுகூட, அதன்பாக முறைமை கூட இன்று மாறிவிட்டது. அதேபோல புழங்கும் மொழி மாறிவிட்டது. புழங்கும் பொருட்கள் மாறிவிட்டன; மாறுவது இயல்பு. எழுத்து மொழி மட்டுமல்ல பேச்சு மொழியின் தொனியும் (உச்சரிப்புக்கள்) விளக்கமும் வடிவமும் மாறிக்கொண்டிருக்கிறது. எங்களுடைய தாத்தா, பாட்டி காலத்திய சொற்களில் பலவற்றை நாம் விட்டு விட்டோம். அந்தத் தொனியே வேறு நம் தொனி வேறு.
892ŬJuáà — LDTń85iĝo 2009 ረjr துUஎதி 5

Page 10
ஆனால் நாம் பேசுவதும் தமிழ்தான். அவர்கள் பேசியதும் தமிழ்தான். நம் பிள்ளைகள் பேசு வதும் தமிழே. இந்த மூன்று நான்கு தலைமுறை களில்தான் எத்தனை மாற்றங்களும் விடு படல்களும் புதுச்சேர்த்திகளும் அப்படியே உபயோகப் பொருட்களும்; அவற்றின் உருவாக்க முறைகளும் வடிவங்களும் கவர்ச்சியும் - அழகும்.
எனவே, நம் கவிதையும் இந்த மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் உட்படுவது தவிர்க்க முடியாததது. சுருங்கிய அல்லது ஒடுங்கிய ஒற்றைச் சுவட்டு வழியே அது தன் பயணத்தைத் தனித்து நிகழ்த்திக் கொண்டிருக்க முடியாது. தனி வாசிப்பின்போது எட்டப்படும் பொருள் ஆழப் புரிதல், உள்ளுணர்தல் கவிதையை மிக்க வசீகரத்துக்கும் அதன் சிறப்புக்கும் உச்ச மேன் மைக்கும் உரியதாகக் கொள்கிறது. இது நிகழ்கலை அனுபவத்தில் எட்டப்படுமா? என்று யாரும் கேட்கக் கூடும். சினிமா நமக்கு உச்ச அனுப வத்தைத் தரவில்லையா? வாசிப்பில் ஒரு கவிதை தரும் அனுபவத்துக்கு நிகரான, அதனிலும் மேலான அனுபவத்தை நல்ல சினிமா நமக்கு அளிக்கிறது. இது எப்படி? ஒரு ஒளிப்படம்(Photography) தரும் அனுபவம் இன்னொரு வகையில் பரிணமித்து வேறொரு வகையில் வேறொரு அனுபவமாக சித்திக்கி றது. வாசிப்புக் கவிதை நிகழ்கவிதையாகப் பரிமாணம் கொள்ளும்போது அதன் அனுபவம் இன்னொரு வகையில் உச்ச நிலையில் உச்ச சாத்தியங்களுடன் இருக்கும் . நம் வாழ்க்கை இன்று எதிர்கொள்ளுகின்ற சவால்கள் ஏராளம். அதனால் அது சந்திக்கின்ற நெருக்கடிகளும் அதிகம். நெருக்கடிகளின் தீவிரமும் அதிகமானது, வலியது. எனவே தனித்த, தூய, புராதன வெளிப்பாடுகள் மீதான ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றைய மனம் நெருங்குவது குறை வடைகிறது. இதனாலேயே சீரியஸான விசயங்களில் அக்கறைப்படுவோர் அல்லது எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கையும் குறைவடைகிறது. அதற்காக சீரியஸ் என்பதன் அடிப்படை சிதைந்ததாகக் கொள்ளமுடியாது. அதற்கு அர்த்தம் இல்லை என்றும் இல்லை. ஆனால் அந்தத் தனித்த அம்சங்கள் இன்று வேறொரு நிலையை எட்டியுள்ளன. இதுவொரு வளர்ச்சி . இது பரிணாமம்.
நிகழ்கவிதை வெறும் கவியுரைப்பாக இல்லாமல், அது கூட்டிணை வில் இசையோடும் அரங்காடலோடும் கலக்க வேண்டும். கூட்டுக்குரல்கள், தனிக்குரல், ஒளி, இசை, அரங்கமைப்புக் கவிதையை வழங்குவோரின் அசைவு என இது விரிந்து புதிதாக மலரும் நிகழ்கவிதையாகிறது. இதன் அனுபவமே வேறு. இந்த அளிக்கை பார்வையாளரையும் பங்கேற்பாளரையும் உள்ளடக்கிய ஒரு சமூகச் செயல் வடிவமாகலாம். பல ஆளுமைகளின் சங்கமம் இது. அல்லது பல ஆளுமைகளின் கூட்டுவிளைவு. இப்படி அமையும் போது அது பல வண்ணங்களையுடையதும் எல்லாத் திசைகளிலும் எல்லாக் கோணங்களிலும் ஒளிதெறிக்கும் படியாகவும் மாறுகிறது. கவிதை சிறகுடையதாக மாறி எங்கும் பறந்து, தன் சிறகுகளை விரிக்கும் இயல்புடையதாகிறது. நம் சமகாலத்தய அல்லது அண்மைக் காலத்தைய கவிதைகளில் நிகழ் கவிதைக்குரிய கூடுதல் சாத்தியங்களையும் பல நுட்பங்களையும் கொண்ட பிரதிநிலாந்தனுடைய 'மண்பட்டினங்கள் இன்னும் சில என்றால் மஜீத்தின் றியாஸ் குரானா போன்றோரின் பிரதிகள்.
தொண்ணுாறுகளில் வந்திருந்த அஸ்வகோஸின் வனத்தின் அழைப்பு கவிதைகளும் முக்கியமானவை. நிகழ்கவிதைச் சாத்தியங்களை அதிகம் உட்சாரமாகக் கொண்டவை. ஆனால் துரதிஷ்டம் என்னவென்றால் இவை எதையும் யாரும் நிகழ்கவிதையாக்கவில்லை. பிரதிகளிலேயே நிகழ்கவிதைக்கான உந்துதலைத் தரக்கூடிய அம்சங்கள் இருந்தாலும் அதைப் பரீட்சார்த்தமாகக் கூட நிகழ்கவிதையாக நிகழ்த்திப் பார்த்திருப்பதாக இல்லை. இது தான் துயரம். இது தான் நமது இழப்பு. இந்தத் துக்கம் நம்மை மீட்டெடுக்கும். அதுவே சாத்தியம்.
O
ஐப்பசி - மார்கழி 2009
TJK
6

இங்கேதான் எனது நசுக்கப்பட்டுவிட்ட நானை சீராக்கி மடித்து அலுமாரியில்
என் அறையில் வைத்திருக்கிறேன்
இங்கேதான் என்னுள்ளே பேயாய்க் குழு கொண்ட அடக்கவியலா ஆசைகளைப் பூட்டி வைத்திருக்கிறேன்
இங்கேதான் காயம்பட்ட என் அகங்காரத்துக்கு பச்சாத்தாபத் தைலம் தடவிக் கொள்கிறேன்.
இங்கேதான் [6ia)60ẳ đ5aẳbIa DIIIg dpcỗI fff6)IIøDIIDIIế8 அழுகிப் போன என் ஆணவத்தை காயம் நக்கும் அடிபட்ட நாய்போல நக்கிக் கொள்கிறேன்.
இங்கேதான் வயிறுமுட்டக் குழுத்துவிட்டு என்பரம எதிரிகளை மிக மோசமான தூவிஜனைகளால் சபித்துக் கொட்டுகிறேன்.
இங்கேதான் உலகுக்கெதிரான என் போரினைப் பிரகடனம் செய்கிறேன். விஜந்ததும் ஓசையின்றித் தலைகுரிைந்து என் பேgத்தனத்தால்
உதடுகளை
(3CDöb gpgujLig வெளியேறுகிறேன்.
t ஆங்கில மூலம் - துர்க்கா பிரசாத் பண்டா.
தமிழில் - செளஜன்யஷாகர்
ஐப்பசி - மார்கழி 2009 f மறுபவதி 17

Page 11
(016ICIDfb DIT6Db
GF LTG385 Tu6sr
©ഖ് என்றால் జ్ఞళ్లు அப்படியொரு பயமெனக்கு
A அவருக்கும் எனக்குமான முதல் சந்திப்பும் கூட ஒரு பயங்கரமான நிகழ்வுதான்
பந்தழுத்து
மண்ணுக்குள் புதைந்து கிடந்த அவரின் உக்கிய துண்டு ஒன்று அண்னையின் காலைக்கிழித்து
இரத்தம் ஒgய நினைவு
இப்போதும் நெஞ்சுக்குள் இருக்கிறது.
ിDé dbpരD அவரை நான் எங்கள் தோட்டத்து வேலியில் 8ர்க்கங்காய் பிடுங்கும் போது சந்தித்திருக்கிறேன்.
ਰੀਹੌਹ 66S சின்னதாய்க் கீறிவிட்டு சரி.போ.என்று விட்டுவிட்டார்
சோற்றால் ஒட்டி
பழைய சேலையில் கிழித்து 6ITéo dig
விளையாடிக் கொண்டிருந்த பே
எனது முதுகை ܊
நான் விட்ட முதற்பட்டம் காணி எல்லையில்
நித்திரையாய்க் கிடந்த ©ഖിർ ഫേഞ്ഞിട്ടിന്റെ ിg
கோபப்பட்டு வர்ணக்கடதாசியைக் கிழித்த போது
* , , ଗଣorá୪
வானமே கிழிந்தது பந்தஐ பார்த்து
S து பின்னர் ○
நானே பந்தஐக்கின்றே
ষ্টুঞ্চপ্লঞ্চ
ரிக்ககொண்டேன் േ புரிந்து *ఖ్య
அவர் கிழிப்பது 後毅 எவ்வளவு முக்கியமானதென்று
cele6f IT i.
அவளாய்.
அதுவாய்.
எதுவாயோ எல்லாம் ܢܬ
அவரைப் பார்த்துப்
பட்ட அறிவு எப்போதும் எனக்கு
பாதையாய் விரிகின்றது
ලිඛිතීIID) முள்ளுக்கம்பியவரின் நிழல் கோடுகள் ?ंक्षं எங்கள் முகங்களில் விழுகின்றன. தழும்புகள் ஆகாமல்
தடுப்பது யார்.?
ஐப்பசி - மார்கழி 2009
(് 18
 
 
 
 
 
 
 
 
 

கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள்
கனகரமேஸ்
வதை கழ் ஆத்மாவின் கிழிபடும் இதழ்களுக்கிடையில் சிக்கிக் கிடந்தது வார்த்தை துக்கித்த இருளைப் ே பிரவகிக்கும் நோக்குடன் - அதன் விழிகளில் துலங்கும் %%" ,"ofiaxipن
என்னை வேட்டையாடத் தயாராகவே இருந்தது. வன்மம் குஜகொள்ள குதறும் வார்த்தைகளை
கூரிய அம்பாக்கி ܬ - ඇ|DOIbභීෂ්ණී தயாராகும் கனத்தில் கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள் நான் ஏலவே கொல்லப்பட்டவன்
38
என்பதை \, శ్లో: " *ባM .
ஐப்பசி - மார்கழி 2009 றேறுவனதி 19

Page 12
தொலைவில் ஒரு வீடு
- திவ்வியாவின் பக்கங்கள் -
சில கவிஞர்கள் இருக்கிறார்கள் மற்றவர்களுக்குப்புரியக்கூடாது என்பது போலவே எழுது கிறார்கள், சிலவேளை அதனைத் தமது மேதமை என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்ற பொருள்படபல நண்பர்கள், பலதடைவை, கவிதையுட்படப்பல கலைப்படைப்புக்கள் பற்றியும் கூறக் கேட்டிருக்கிறோம்.
ஒரு புறம் அருந்தலான சில வெளிப்பாடுகள் ஒருவேளை மேற்படி குற்றச்சாட்டிற்குப் பொருத்தப்பாடுடையதாக இருக்கலாம். ஆனால் மறுபுறம் எந்தவிதத் தயக்கமுமின்றி பெரும் பாலான படைப்புக்கள் மீதுங் கூட இந்தவிதமான குற்றச்சாட்டுக்கள் மிக வேகமாக வீசி எறியப் படுவதை எமது கலை - பண்பாட்டுச் சூழலில் முடிவின்றிப் பார்க்க முடிகின்றது. இதனைச் “சாதாரணமானவர்கள்’ மட்டுமின்றி ‘பேர்பெற்ற படைப்பாளிகள் - புத்திஜீவிகள் எனப்படு வோர் - இலக்கியம் கற்பிப்போர் எனப் பலரும் செய்கிறார்கள்.
மேற்படி குற்றச்சாட்டுக்களின் நியாயந்தான் என்ன? கவிதையின் புரிபடாத் தன்மை என் பது முழுக்க முழுக்க குறித்த படைப்பும் படைப்பாளியும் சார்ந்த பிரச்சினைதானா? அல்லது இந்தப் பிரச்சினை படைப்புகளை நுகர்வோர் இரசிகரோடு சம்பந்தப்பட்டுள்ளதா?
பொதுவாக எழுதப்படுவன/ படைக்கப்படுகின்ற யாவும் யாவரும் புரிந்து கொள்ளத்தக்க வாறு - பாமரருக்கும் விளங்குமாறு(யார் பாமரர். எதனால் பாமரர்?) அமைய வேண்டும் எனப் பலர் கடுந்தொனியில் ஆலோசனை கூறக்கேட்கிறோம். இந்தப் பிடிவாதமான கலைஇலக்கியங்கள் தொடர்பான முன் நிபந்தனையும் நிலைப்பாடும் ரசிக நிலையில் உண்மையா னதும் யதார்த்தமானதும் தானா? அதாவது எல்லாமும் எல்லோருக்கும் என்ற வாசகம் நடை முறையில் சாத்தியமானதும் உண்மையானதுமா? எல்லோருக்கும் விளங்குமாறு எழுதுவது எப்படி?
பால், இனம்,இனத்துவம்,வயது,புவியில் காலநிலைப்பின்புலங்கள்,மத,மொழி வேறுபாடு கள், நம்பிக்கை மனப்பாங்கு வேறுபாடுகள் என்பன சார்ந்து அவரவருக்கென, அவருக்கான பார்வைகளும்- புரிதல்களும், நாட்டங்களும்,தெரிவுகளும் உள்ளன. நிச்சயமாக எல்லாம் எல்லோருக்கும் அல்ல. கவிதைக்கும் எந்தவொரு கலைவடிவத்திற்கும் கூட இதுதான் நியதி. அவரவருக்குரிய உலகங்கள் - அவரவருக்குரிய பாடுபொருட்கள்-கேட்டல்கள், அவரவருக் குரிய யாத்திரைப் பாதைகள், அவரவர் பாதையில் அவரவர் சந்திக்கும் விடயங்கள் என்று தான் யதார்த்தங்கள் உள்ளன. அறிந்தோ,அறியாமலோ- விரும்பியோ, விரும்பாமலோ எல் லாக் கவிதைகளும், கவிஞர்களும் தமக்குரிய இலக்குகளையும்,இலக்கு வாசகர்களையும் கட்டமைத்திருக்கிறார்கள். நாங்கள் எளிமையாக நம்புவது போல் எல்லாமும் எல்லாருக்கு மாக இல்லை. சிலவேளை இந்த இலக்கு ரசிகர்களின் வட்டம் விரிந்திருக்கலாம். சிலவேளை சுருங்கியிருக்கலாம். ஆனால் இலக்குகள் உள்ளன.
ஆகவே எவரொருவரும் எல்லோருக்குமாக எழுதுவதில்லை. யாராவது ஒருவர்தான் தமிழ்கூறு நல்லுலகு முழுமைக்குமாக - அது கடைந்தேறுவதற்காக எல்லோரும் விளங்கிக்
ஐப்பசி - மார்கழி 2009 மறுப்எதி 20
 

கொள்ளுமாறு எழுதுவதாகப் பிரகடனப்படுத்தினாலும் அவ்வாறு யதார்த்தத்தில் நடைபெறுவ தில்லை.
இதனைச் சற்றுப் பாரம்பரிய அறிவியல் துணைகொண்டும் விளங்க முனையலாம். மனி தப் புலன்கள் அடிப்படையிற் வெளிவுலகத்தினை, அகவுலகிற்கு எடுத்துச் செல்லும் வேலையை மட்டுமே செய்கின்றன. இதனைப் புலனுணர்வு (Sensation) என்கிறோம். அகவு லகோ, புலன்கள் வெளியுலகிற் கண்டவற்றை அல்லது மேற்படி புலனுணர்வினை அதனைத் தாங்கிவரும் நரம்புமண்டலத்திடம் இருந்து அவ்வாறே பெற்றுக்கொள்வதில்லை. பதிலாக, மூளையில் ஏற்கனவே பதியப்பட்ட தனிமனிதர்களின் விடய அனுபவத்துடன் கலந்திணைந்தே அது புறவுலகை விளங்கிக் கொள்கிறது. இதனைப் புலக்காட்சி (perception) என்பர். இந்தப் புலக்காட்சியினடியாகவே ஒன்றைப் பற்றிய எமது புரிதல்கள் (understant) அமைகின் றன.எனவே காணல் - கேட்டல் - வாசித்தல் என்பன எல்லோருக்கும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் புரிதல் ஒன்றல்ல, ஏனெனில் அவை புலக்காட்சிகளால் வேறுபடுத்தப்படுகின்றன. சாதி, வர்க்கம், பால் உட்பட்ட சமூக இருக்கை நிலை சார்ந்த பல்வேறு காரணிகள் இரசிகர்க ளின் வேறுபட்ட அனுபவங்களிற்கு அடிப்படையாகவுள்ளன. ஆகவே யதார்த்தத்தில் ஒவ் வொருவரினதும் புரிதல்களும் வேறுபட்டவை. அதனாற்றான் எல்லாமும் எல்லோருக்கும் புரியும் என்றோ- புரிய வேண்டும் - ஒரேவிதமாகப் புரிந்து கொள்ளப்படும் என்றோ எதிர் பார்க்க முடியாதென்பர். இது ஒரு அடிப்படையான விடயம். இந்தப் பின்னணி காரணமா கத்தான் ஒரு படைப்பானது வாசகனினால் அவனவன் சார்ந்த புலக்காட்சி அனுபவங்களால் மீள் படைக்கப்படுகிறதெனவும் வாசகரின் எண்ணிக்கையினாற் பெருகிச் செல்கிறதெனவும் கூறப்படுகின்றது. நிலவரங்கள் யதார்த்தத்தில் இவ்வாறு இருப்பினும், எதனால் மேற்படி விட யம் மிகவும் பிரச்சினைக்குரியதாக்கப்படுகிறது. இதன் தார்பரியந்தான் என்ன? ஏனெனில் வேறுஞ் சில காரணிகள் இதனோடு சேர்ந்திணைந்துள்ளன.
கவிதையும் இலக்கியத்தின் ஏனைய வடிவங்களும் பேசுமொழி சார்பானவை என்பது தான் இவ்வகைக் குற்றச்சாட்டுக்கள் அதிகமுருவாக இன்னொரு அடிப்படைக்காரணமெனக் கூறமுடியும். கடந்த இதழில் நாம் விவாதித்தது போல இலக்கிய மொழியானது. பொதுமொழிக் குள் ஒரு தனிமொழி என்பதும் - அதன் மொழித் தர்க்கம், எமது அன்றாட மொழித் தர்க்கத்தி லிருந்து வேறுபட்டதென்பதுந்தான் பொதுவாக எம்மாற் தவறவிடப்படுகின்ற ஒன்றாக இலக் கிய வாசிப்பில் காணப்படுகின்றது. எமது அன்றாட மொழித்தர்க்கத்தின் துணைகொண்டு இலக்கியத்தினைத் திறக்க முற்படும் போதுதான் பிரச்சினை உருவாகிறது. ஆதலால், அது பல சமயம் திறக்கப்பட முடியாததாய் - அதனால் புரிந்து கொள்ளக்கடினமானதாகிவிடுவது டன், வேண்டுமென்று பூடகப்படுத்தப்படுவதாகவும் வாசகனாற் பார்க்கப்படுகின்ற நிலையும் ஏற்படுகிறது. இதற்கென்ன வழி? இதிலிருந்து வெளியேற முயற்சிப்பதெவ்வாறு?
முக்கியமானது என்னவெனில், ஒரு மொழியை அறிய அம்மொழியறிவு எவ்விதம் அவசி யமோ, அதே வாதந்தான் இலக்கியத்திற்கும் என்பர். ஏனெனில் எந்த ஒரு கலை வடிவமும் அதற்கேயான ஒரு மொழியமைப்பைக் கொண்டிருக்கிறது. அதனாற்தான் அதுவொரு தொடர் பாடல் முறையுமாகியுள்ளது. ஆதலால், கலை - இலக்கியத்தின் சுபாவங்களையும் அதன் கட்டமைப்பினையும் இயங்கு முறை - மற்றும் பரிமாணங்களை அறியவும் அதனால் அத னைப் புரியவும் கூடிய ஆற்றல் இலக்கிய வாசிப்பிற்கு முக்கியமானது. அதுவே, இலக்கி யங்களைத் திறக்கவும் - அதனுள் நுழைவதற்குமான அடிப்படையாகிறது. எனவே இலக்கிய மொழியுடனான குறைந்தபட்சப் பரீட்சையமாவது இல்லாது விடும்போது அந்த மொழிப் பிராந் தியத்தினுள் நடமாடுவதற்கான சாவி நமக்குக் கிடைப்பதில்லை. இது புரியாமை பற்றிய குற்றச் சாட்டுப் புறப்படும் மிகமிகப் பிரதானமானவொரு புள்ளி ஆகும். எதனால் இந்தச் சாவி எளிதில் அகப்பட மறுக்கிறது? இதன் வேர்கள் எங்குள்ளன?
ஐப்பசி - மார்கழி 2009 முனுபவதி 21

Page 13
எமது கல்வித்திட்ட மைய இலக்கியவுட்டல் அதற்கான அடிப்படையற்றது. அது பெருமள விற்கு சொற்களுக்கு அகராதிப் பொருள் கூறுதலை மட்டுமே சிரமேற் கொண்டுள்ளது. அது நமது அன்றாடப் பாவனையிலுள்ள சொற்கள் இலக்கியமாக உருமாறி உருவேறும் தருணங் களைத் தரிசிப்பதில்லை. அதாவது சொற்களின் கடப்புநிலையை (trance) அதற்கான சூழ் நிலைகளை அவை இனங்காண்பதில்லை. இவற்றின் தொடர்ச்சியாகப் பரீட்சை வினாத்தாள்க ளும் குறித்த ஒரு இலக்கியப் பாடம் யாரால் யாருக்கு, எச்சந்தர்ப்பத்திற் கூறப்பட்டது போன்ற வினாக்களைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைகின்றன.
படைத்தல் போலவே, இரசித்தலும் ஒரு ஆக்கச் செயற்பாடும், மனித மனத்தின் யாத்திரை யுந்தான். படைத்தல் போலவே இரசித்தலும் அதற்கான உழைப்பினைக் கோருகிறது. நாமோ அதற்கான சிறிய உழைப்பினையும் தரத் தயாராக இருப்பதில்லை. எமது கல்வியும் - சூழலும் எம்மை அவ்வாறுதான் ஆக்கியுள்ளன. அதனால், எந்த எத்தனிப்பும் இல்லாமல் ஒரு இலக்கி யப் பிரதி புரிய வேண்டுமென நினைக்கிறோம். அதுமட்டுமின்றி இந்த நினைப்பினுள் ஒரு அதிகார அடுக்கு வேறுபாடும் தென்படுகிறது எனலாம்.
மேற்படி வாதத்தை முன்மொழிபவர்கள் பெரும்பாலும் இந்தவகைபட்ட வாதத்தைக் கலை இலக்கியங்கள் மீதாகவே முன்வைக்கிறார்கள். விஞ்ஞான அறிவியற்துறைகள் என நம்பப் படுவன மீது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் பொதுவாக முன்வைக்கப்படுவது இல்லை. இதற்கு என்ன காரணம், இலக்கியம் சாதாரணமானது. எல்லோருக்கும் வாய்க்கக்கூடியது. உயர் அறிவு அதிகம் சம்பந்தப்படாதது. ஆனால் விஞ்ஞானமோ உயர் அறிவு சம்பந்தப்பட்டது. அத னைப் புரிந்துகொள்ளவொரு ‘கெட்டிக்கார மேதாவி மூளை வேண்டும் என்ற ஒரு வகை யான அதிகார அடுக்கு காரணமான நம்பிக்கையும் இதற்குக் காரணம் போலத் தென்படுகி றது. இவ்வாறு, கலை இலக்கியம் தொடர்பில் வெளிப்படையாகச் சொல்லப்படாத ஆனால் விஞ்ஞான அறிவியலோடு ஒப்பிட்டு அதனைவிடத்தரங்குறைந்ததாகப் பார்க்கின்ற ஒரு குறை நிலைப் பார்வை தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் நிலைபெற்றிருக்கிறது.
மேற்குலகில் கலை இலக்கியங்கள் தொடர்பாக 'இன்னொரு விஞ்ஞானம்’ என்ற பொரு ளில் Coy Science எனக் கூறப்படுவதுண்டு. அதாவது, கலை இலக்கியங்களும் விஞ்ஞானம் போலவே தர்க்கங்கள் உடையவை. முன்னர் குறிப்பிட்டது போல அதன் தர்க்கங்கள் அகவய மானவை - உணர்ச்சிகளின் கொதிநிலையாற் கட்டப்படுபவை. உணர்ச்சிகளை உணர்ச்சிக ளாற் திறப்பவை என்பதனால் தேர்ந்த ரசிகனும் தேர்ந்த படைப்பாளியும் தமது மனவெளியில் ஒத்தவர்கள் தான். அதாவது படைத்தலும் ரசித்தலும் அடிப்படையில் ஒரு குறித்த மனநிலை எய்தல் சம்பந்தப்பட்டது. அதனால் தான் சமஸ்கிருத அழகியற் பாரம்பரியத்தில் ரசிகனைக் குறித்து சமமான இதயமுடையவன் என்ற பொருளில் சகிர்தயன் எனும் பதத்தை பிரயோகிக்கி றார்கள். இந்த சமமான இதயமுடையமை என்பது படைப்பாளி எதைக் குறித்தானோ அதைக் குறித்தறிதல் அல்ல பதிலாக அவனது குறிப்புரை கிளர்ந்த மன நிலவரத்தை அல்லது அடிப் படையை அடைதலாகும். பதிலாகக் குறிப்பிட்ட மனநிலவரத்தை அனுபவத்தைத் திறந்து வைக்கவே முயற்சிக்கின்றன என்பர்.
தேவைப்படுவதெல்லாம் சலியாத படைப்புக்களை எதிர்கொள்ளும் மனநிலையும் அதற் கான உழைப்புந்தான். தீட்டுந்தோறும் வாள்கள் பளபளப்பாகின்றன. கூர்மையுடைய வாள் எதனையும் கீறி ஊடறுத்துச் செல்லுவது - விண்மீன் போலும் வானகத்திற் சஞ்சரிப்பது. படைப்பினை திறக்கத்தக்க மனமும் அத்தகையதுதான்.
22ŮUá - LDTřebo 2009 atque cuË 22

பசியோஐருப்பவனின் அழைப்பு
மலைகளைப் பகிர்ந்துண்ை
அழைத்தாய் ஆயிரமாயிரம் வெள்ளிகளைச் சூழய வானம் கடல் அலைகளில் தத்தளித்துக்கொண்டிருந்தது மீண்டும் மீண்டும் அழைத்தாய் காற்று மர இலைகளில் ஒளித்துக் கிடந்தது இரவு பலரித்துளியாய் புல் நுனிகளில் தேங்கி வழிந்தது
முதலில் மலைகளை ஒன்னும் நுட்பங்களைப் போதித்தாய்
பிறகு மலைகளின் சுவை பற்றிய பாடல்களை இசைத்துக் காட்டினாய் மழைப் பொழிவுகளுக்குள் மலைகள் வளரும் அதிசயங்களை வசியச் சொற்களில் சொன்னாய் மலைகள் தீர்ந்துபோகும் ஒருநாள் வருமெனில் Č9ů68UT5 மலைகளைத் தின்று மலைகளாகிய நாம் நம்மையே பகிர்ந்துண்டு பசியாறலாம் என்றாய்
சித்தாந்தன்
82üUé – DTao 2009 றேறுபளதி 23

Page 14
Tamil Poetry Today தமிழ்க் கவிதை இன்று
கடலோடி
தமிழ் மொழியிலுள்ள நவீன இலக்கியப் படைப்புகளின் மொழியாக்கங்கள் வேற்று மொழிகளில் - குறிப்பாக ஆங்கி லத்தில் வர வேண்டியதன் அவசியம், பலராலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது; அத்தகைய முயற்சிகள் ஒர ளவு ஆங்காங்கு நடைபெற்றும் வருகின்றன.
முனைவர் கே.எஸ். சுப்பிரமணியம் தொகுத்து மொழி
umaisub Ghafugsit6T “Tamil Poetry Today' 676Tp நூலைச் சென்னையிலுள்ள 'உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பாரதியார், பாரதிதாசன் முதலிய 98 தமிழகக் கவிஞர்களினதும் எட்டு ஈழத்துக் கவிஞர் களினதும் கவிதைகள் இந்நூலில் உள்ளன. ஆங்கில மொழியாக்கத்திற்குப் பக்கத்தில் மூலத் தமிழ்க் கவிதையும் தரப்பட்டுள்ளது.
மஹாகவியின் தேரும் திங்களும், முருகையனின் இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு., வ.ஐ.ச. ஜெயபாலனின் கடற்புறம், எம்.ஏ. நுஃமானின் கவிதை உள் ளம் , சு.வில்வரத்தினத்தின் காயம் , இளவாலை விஜயேந்திரனின் காணாதுபோன சிறுவர் கள், சிவரமணியின் முனைப்பு, எஸ். உமாஜிப்ரானின் 'இம்சை ஆகியன இடம்பெற்றுள்ள ஈழக் கவிதைகளாகும்.
முனைவர் கே.எஸ். சுப்பிரமணியம் ஏற்கெனவே தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு 11 நாவல் களையும், 5 குறுநாவல்களையும் , 2 கவிதைத் தொகுதிகளையும் மொழியாக்கம் செய்துள் ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
• LjIUJ 66D6056T6)
ஆதல்
புதிய 酶酯 ឆ្នា
தொடர்புகளுக்கு:- புஷ்பலதா லோகநாதன் மறெn கவிதைகள்
குருக்கள் வீதி, பாண்டிருப்பு - 2,
கல்முனை. rivyw. shoot-200/-
ஐப்பசி - மார்கழி 2009 மறு: தி 24
 
 
 
 

வெள்ளை மாரனாரின்
புனிதத்துக்குள் கடீருறும் அபத்தத்தின் முகம் - குறிப்புக்களும் மேலும் சில குறிப்புக்களும்
தரஹரன்
மறுபாதி இதழில் வெளிவந்த புனிதத்துக்குள் கட்டுறும் அபத்தத்தின் முகம் என்ற கட்டுரை யைக் கண்டபோது மனதில் இனம்புரியாத பல உணர்வுகள் ஏற்பட்டன. “மதங்களின் தோலை உரித்து, அவற்றுள் புதைந்து கிடக்கும் புண்களையும் சீழ்களையும் அபத்தங்களையும் வெளிச் சமிடும் முயற்சி இது ’என்ற எதிர்பார்ப்பே இதற்குக் காரணமாகும். ஆயினும் கட்டுரையை வாசிக்கும்போதும் வாசித்து முடித்த பின்னரும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது; என்னை அசடு வழிய வைத்தது. இதற்குப் பின்வருவன காரணங்களாக அமைந்தன.
繼攤
1. செத்த பாம்பிற்கு உயிர் கொடுக்கும் முயற்சி என்றோ ஆறிய கஞ்சி என்றோ இக்கட்டுரையைக் கூறலாம். சமணர்க்கு சம்பந்தர் ஏற்படுத்திய இடர் பாடுகள், தொல்லைகள் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே பல நூல்கள் வெளிவந்துவிட்டன. பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (சம்பந்தரும் சமண ரும் சம்பந்தருக்குச் சார்பாகவும் சி.என்.அண்ணாத் துரை (இரத்த தாகம்) சமணருக்குச் சார்பாகவும் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் (பெரியபுராணம் ஓர் ஆய்வு), திரு.வி.கல்யாணசுந்தரனார் (பெரிய புராண முன்னுரை - இராமகிருஷ்ணமிஷன் வெளி யீடு ஓரளவு நடுநிலையில் நின்றும் தத்தம் கருத்துக் களை வெளியிட்டுள்ளனர். இன்னும் சில கட்டுரைக ளும் நூல்களும் வெளிவந்துள்ளன. ஆகையால் இக்கட்டுரை எவ்வகையிலும் புதியது ஆகா. இது அரைத்த மாவை அரைக்கும் முயற்சியே.
2. இக்கட்டுரையை வாசிக்கும்போது ஏற்பட்ட இன் னொரு முக்கிய நெருடல் மொழிக் கையாளுகை ஆகும். தான் வாசித்த நூல்களின் வழி பண்டித மொழியையும் நவீன மொழியையும் கலைச்சொற் களையும் கலந்து எழுதியுள்ளமை வாசகனுக்கு இடை யூறை விளைவிக்கின்றது. ‘புனிதங்களின் கட்ட விழ்ப்பு தீவிர கல்வியாளனுக்காக எழுதப்பட வேண் டியதில்லை. சாதாரண கல்வியறிவுடையோர்க்கும் மாணவர்க்கும் வேண்டியது. அதனைச் சாதாரண மொழிநடையில் கூறுவதன் மூலமே அவர்களுக்குப்
ஐப்பசி - மார்கழி 2009 மூனுபவிதி 25

Page 15
புரிய வைக்க முடியும். கட்டிறுக்கமான மொழி'என யாரோ இருவர் பாராட்டுவதைவிட நிறைந்த வாசகர்கள் புரிந்து கொள்ளும் மொழியாக இருப்பதே இவ்வாறான கட்டவிழ்ப்புகளுக்குத் தேவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
3. இக்கட்டுரையில் (ஆசிரியரி யாழ் முரிப்பதிகம் பற்றிக் கூறும்போது, “திருநீலகண்டப் பெரும்பாணருடைய சுற்றத்தார் திருஞானசம்பந்தரின் பதிகத்தைச் சிறந்த முறையில் பாணர் யாழிலிட்டு வாசிப்பதைப் புகழ்ந்து கூற அதனைச் சகியாத சம்பந்தர் இசை உலகார் கண்டத்தி லும் கருவியினும் அடங்காவண்ணம் மாதர் மடப்பிடி’ எனும் திருப்பதிகத்தைப் பாடினார்” என்று கூறியுள்ளார். சகியாத சம்பந்தர்' என்பதற்குப் பெரியபுராணத்தில் சான்றில்லை. சுற் றத்தார் மொழிகேட்டுப்பாணரே யாழில் இசைக்க முடியாதபடி பாடலைப்பாடுமாறு சம்பந்தரைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆக இது கட்டுரையாசிரியரின் ஊகமே. அதேவேளை இப்பதிகம் இசை உலகத்தார் கண்டத்திலும் கருவியிலும் அடங்காது என்பதை ஆசிரியர் நம்புவதாகவே மேற்சொன்ன வரிகள் எண்ணச் செய்கின்றன. ஆனால் இப்பாடற்பகுதிகள் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு கர்நாடக சங்கீத பாடத்திட்டத்துள் அடக்கப்பட்டுள்ளன என்பதைக் கட்டுரை ஆசிரியர் தெரிந்து கொள்ள வேண்டும். இப்பதிகம் இசை உலகத்தார் கண்டத்தில் அடங்கும் என்பது தெளிவு. ஆகவே இசை உலகத்தார் கண்டத்தில் அடங்காத பதிகமாக இதனை நம்பும் ஆசிரியர் ஏன் பாணரின் வேண்டுகோளிற்கு இணங்கவே சம்பந்தர் பாடினார் என்பதை திரிவுபடுத்த வேண்டும் என்பது விளங்கவில்லை.
4. ...... எனவே முத்தியாகிய வீடு பேறு திருநல்லூர்ப் பெருமணத்தில் சம்பந்தருக்குக் கைகூடியது என்பது கட்டுக்கதையே அன்றில் வேறில்லை. சம்பந்தர் நாதன் நாமம் நமச்சி வாயவே எனக் கூறிச் சோதியில் புகுந்தது என்பது நடைமுறையில் இயல்புடைய கூற் றல்ல'பக் -12 என்றுள்ளது. இதன் மூலம் மலமாசை நீக்காத சம்பந்தர் சோதியில் புகுந்த தையே அவர் நடைமுறையில் இயல்புடைய கூற்றல்ல என்கிறார் என்பது தெளிவு. ஆக, சோதியிற் புகுதல்', 'இறை கூற்று ’ என்பவற்றை அவர் நடைமுறையில் இயல்புடைய கூற் றாகவே கருதுகிறார் போலும். இதே போல (பக்-17) "சமணரைக் கொல்லும்படி சொல்லியும் துணை நின்றும் தூண்டியவருமான சம்பந்தர் ஏழ் நரகிடை வீழ்ந்து துன்புற வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை என அங்கலாய்க்கின்றார். இவ்வாறான கூற்றுக்கள், இவ ரின் மதநம்பிக்கையையும் மதச்சார்பையும் பட்டவர்த்தனமாக்குகிறது. இந்து சமயம் இந்து தத்துவம் எனும் சொற்களுடாகத் தன்னை ஒரு நடுநிலையாளனாகக் காட்ட ஆசிரியர் எடுத்த முயற்சியை தோல்வியுறச் செய்வதோடு இந்துத்துவ நம்பிக்கையாளனாக இவரை இனங் காட்டுகின்றது.
5. இவ்வாறு அமையும் மேற்சொன்ன (O4) கூற்றுக்களும் கட்டுரையிலமைந்துள்ள சித் தாந்த விளக்கங்களும் ஆசிரியரின் அங்கலாய்ப்புக்களாக அமைந்துள்ளனவே அன்றி கட்டு ரையின் நோக்கத்தினை சீர்மைப்படுத்த உதவுவதாக இல்லை. பிறிதொரு வகையில் ஆசிரியர் தன் பன்முகத்தன்மையை இனங்காட்ட எடுத்த முயற்சியாகவே உள்ளது. இதன் விளைவாக இக்கட்டுரை தன் நோக்கத்தின் நின்று விலகி சைவ விளக்கக்கட்டுரையாக அமைந்துள்ளது. அந்த வகையில் ‘கவிதை பற்றிய மறுபாதி இதழில் இக்கட்டுரை தேவையா என்ற கேள்வி மேற்கிளம்புகின்றது.
6. தருக்கவாதத்தினாலும் மந்திர தந்திரத்தினாலும் ஏலவே சமண பெளத்தரை விரட்டிய சம்பந்தர் (பக் - 16) எனும் ஒரு தொடர் கட்டுரையில் உள்ளது. விரட்டிய சம்பந்தர்’ என்பது இறந்த காலம் காட்டும் பெயரெச்சம் ஏலவே' என்பதும் இறந்தகாலக் குறிப்புச் சொல். இவ்
ஐப்பசி - மார்கழி 2009 மறுயஎதி 26

வாறு நடந்திருப்பின் ஏன் பின்பும் அனல் புனல் வாதங்க ளைச் சம்பந்தர் நிகழ்த்தியிருக்க வேண்டும்? ஆகவே இது ஏலவே சமண பெளத்தரை விரட்ட முற்பட்ட என்று வருதலே சாலப் பொருத்தமானது.
இவ்வாறு விரட்ட முடிந்திருப்பின் பின்பு ஏன் சமணபெளத் தர்களைச் சம்பந்தர் முதலானோர் வதம் புரிந்திருக்க வேண்டும்? சமணர்களோடு பல்வேறு சந்தர்ப்பங்களில் வாதங்கள் பல நிகழ்த்தி அவர்களை நாயன்மார்கள் தோற் கடித்த வரலாற்றை நாம் பெரிய புராணம் எங்கும் காணமுடி கிறது. ஆனால் பெளத்தர்களுடன் நடத்திய வாதங்கள் குறைவு. அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பெளத்தர்களோடு நடந்த வாதங்களில் வெல்லமுடியாத கார ணத்தினால் அவர்களோடு வாதம் நடத்துவதை தவிர்த்தார் கள்; கொன்றார்கள், ஊனப்படுத்தினார்கள். உதாரணமாகச் சம்பந்தர் பெளத்த துறவி மீது இடிவிழச் செய்து கொலை செய் தமையையும் மாணிக்கவாசகர் தன்னோடு வாதம் புரிந்த பெளத்த துறவிகளை ஊமையாக்கியமையையும் குறிப்பிட லாம். பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் 'எல்லையில்லாமல் அறிவின் அடிப்படையில் வாதம் செய்வதையே தொழிலாகக் கொண்டனர் பெளத்தர்கள். அவர்களுடைய தருக்கமும் அறிவு வாதமும் மிக நுண்மையானவை. இதனாலேயே ஆதி சங்கர பகவத்பாதர் மிக நுணுக் கமான அறிவுவாத முறைகளைக் கையாண்டு பெளத்தர்களை எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது என நினைப்பதில் தவறில்லை பெரியபுராணம் ஓர் ஆய்வு -பக்-120-127) என் கிறார். ஆக இந்துக்களின் தத்துவ வளர்ச்சிக்கு ஒரு வகையில் அடிப்படையாக, உந்து சக்தி யாக இருந்தது பெளத்தம் என்பது தெளிவு. ஆக இக்கட்டுரை ஆசிரியர் கூறுவதுபோல தருக்க வாதத்தால் சம்பந்தர் மட்டுமல்ல வேறு நாயன்மார்களாலும் பெளத்தர்களை விரட்ட முடியவில்லை.
7. கட்டுரையின் இறுதிப்பந்தியில் ஆசிரியர், பின்நவீனத்துவம் சார்ந்த கருத்துக்களான மறுவாசிப்பு, எதிர்மறைக்கூறுகளைத் தேடல், ஒழுங்கமைப்புக்களைச் சிதைத்தல் போன்ற வற்றைக் கூறி, அதன்வழி நவீன ஆய்வுகளைச் செய்தல் மூலம் தமிழ் இலக்கியம் உரம் பெற்று வள்ரும் என்கிறார். இக்கூற்றின் வழி அறம், மதச்சார்புநிலை, புனிதத்துவம் போன்றன முதன்மை பெறமுடியாது. ஆனால் இவ்விரு கருத்து நிலைகளும் சமாந்தரக் கோடுகளாகக் கட்டுரையெங்கும் விரவிக்கிடக்கின்றன. இது ஆசிரியரின் அக முரண்பாட்டையே எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறான அரைத்த மாவை அரைக்கும் முயற்சியை விடுத்து சம்பந்தர் சார்ந்த தனித்து வமான ஆய்வுகளை மேற்கொள்வதே மேலானது. சம்பந்தரையும் பெளத்தத்தையும் பற்றிப் ‘போடுபோக்கான கட்டுரைகளே வெளிவந்துள்ளன. தனித்துவமான ஆய்வுகள் வெளிவர வில்லை. அதனை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கலாம். இதற்கான இரு குறிப்புக்களை மட்டும் இக்கட்டுரை ஆசிரியருக்குச் சமர்ப்பிக்றேன்.
ஐப்பசி - மார்கழி 2009 முனுபவிதி 27

Page 16
1. பெளத்த தர்க்கவாதிகள் பலர் தமிழர்களாக இருந் தும் அவர்களின் அறிவு நிலைப்பட்ட வாதத்தன்மை யால் மக்கட் செல்வாக்கை அவர்களால் பெரிதும் பெற முடியவில்லை. ‘அறிவுடைய பெருமக்களையே அவர் களால் கவரமுடிந்தது. முன்னர் குறிப்பிட்ட அ.ச.ஞான சம்பந்தனின் கூற்று இதற்குத் தக்க சான்றாகும். இத னாற்றான் போலும் சமயகுரவர்கள் சமணர்களோடு இணைத்தே பெளத்தர்களைத் தாக்கினார்களே அன்றி பெரிதும் தனித்துச் சுட்டவில்லை; வாதங்களை அதிகம் நிகழ்த்தவும் இல்லை. தமது மேலாண்மைத்தனத்தால் பெளத்தர்களை அடக்கினார்களே அன்றி வாதில் பெரு வெற்றியீட்டவில்லை என்றே கூறலாம்.
2. சம்பந்தரின் திருமுறைப்பாடல் வைப்பில் மூன் றாம் திருமுறையில் உள்ள காட்டுமாவதுரித்துரி எனத் தொடங்கும் திருவாலவாய்ப் பதிகத்தில் இடம் பெறும் பாடலே,
G6
மன்னகத்திலும் வானிலும் எங்குமாம் திண்னகத்திரு ஆலவா யயருள் பெண்ணைகத்தெழிற் சாக்கியப் பேயமன் தென்னர் கற்பழிக் கத்திரு வுள்ளமே ’ என்பதாகும்.
இதற்கு உரையாசிரியர்கள் “எங்குமுள்ளவனாக உள்ள ஆலவாயானே பெளத்தப் பெண் துறவியரிடமும் கொடிய சமணர்களிடமும் உள்ள கல்வியைப் பழிக்க, இல்லாதொழிக்க எனக்கு அருள்புரிவாய்' என உரை செய்துள்ளனர். இவ்வுரை தவறானதாகவே எமக்குப்படுகி றது. இறுதி இருவரிகளுமே முக்கியமானவை. பெண்ணகம்- பெண்துறவியர் : எழில் - அழகு; சாக்கியர் - பெளத்தர், பேயமண் - சமணர்; “பெண்ணகத்து எழிற் சாக்கியப் பேயமண் எனும் தொடர் அழகிய பெளத்த சமணப் பெண் துறவியர்” என்றாகிறது. தெண்ணர் - அறிவிலிகள் (கழகத்தமிழகராதி (உரையாசிரியர் சிலர் ‘கொடியோர் எனப் பொருள் கொள்கின்றனர்) என் றாகிறது. அதாவது அழகிய பெளத்தப் பெண் துறவியர், சமணர்கள் எனும் அறிவிலிகளின் கல்வியைப் பழித்தல் என வரும். அறிவிலிகளின் அறிவை ஏன் பழிக்க வேண்டும்? அறிவிலி களுக்கு அறிவை அளிக்க வேண்டுமே தவிர பழித்தல், இல்லாதொழித்தல் என்பன செய்தல் நாயனார்க்கு அடுக்கும் செயலாகுமோ? அதிலும் திடீர் என்று பெண் துறவிகளைச் சம்பந்தர் தன் பாடலில் இட்டது ஏன்? ஆண் துறவிகளின் கல்வியை பழிக்காது விட்டது ஏன்? எனும் வினாக்களெல்லாம் மேற்கிளம்பி நிற்கின்றன. ஆகவே கற்பழித்தல் என்பதை உரையாசிரியர் கள் கூறுவது போல் கல்-பழித்தலாகக் கொள்ள முடியாது. 'கற்பழித்தலாகவே கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ளப்படின் இந்துத்துவத்தின் புனிதப் படிமமான சம்பந்தர், அழகிய, பெளத்த சமணப் பெண்துறவிகளைக் “கற்பழிக்க இறைவனிடம் வரம் கேட்டார்’ என்றாகின் றது. இக்குறிப்பு இந்துத்துவப் புனிதர்களுக்கும் வழிபடுநர்களுக்கும் சமர்ப்பணம்,
இங்கு இடம்பெற்ற எல்லாக் குறிப்புக்களின் நோக்கமும் யாருடைய மனதையும் நோகடிப்ப தற்கு அல்ல. ஆரோக்கியமான ஆய்வுகள் வெளிவர வேண்டும் என்ற வேணவாவே.
ஐப்பசி - மார்கழி 2009 பறுUஎதி 28
 

தொண்ணுறுகளின் நடுப்பகுதியிலி ருந்து எழுதிவரும் பெண்ணியா, இதுவரை ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை மற்றும் இது நதியின் நாள் ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புக்களை வெளி யிட்டிருக்கிறார்.
இது நதியின் நாள்'கவிதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டு, மார்கழி மாதம் வெளி வந்திருக்கிறது. இத்தொகுப்பில் காணப்படும் அதிகமான கவிதைகள் 2007-2008 ஆம் ஆண்டு காலப் பகுதியில் எழுதப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரை இந்தக் காலப் பகுதியுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக் குண்டிருந்தமையால் இங்கு வாழ்ந்த எல்லா இன மக்களும் ஏதோ ஒரு வகையில் அதன் பாதிப்புக்குட்பட்டேயிருந்தனர். ஆதலால் இக் காலப் பகுதியில் எழுந்த அதிகமான படைப் புக்களில் அதைப் பற்றிய பதிவுகள் உள் ளதை அவதானிக்க முடிகிறது. இதற்கு மாறாகப் பெண்ணியாவின் கவிதைகள் இதி னின்றும் விடுபட்டுத் தனி மனித நெகிழ்வு கள், உடைவுகள், வலிகள், இயலாமை பற் றியே தன்னை அதிகமும் வெளிப்படுத்துகின் றன. தவிரவும் பெரும்பாலான கவிதைகள் பெண் மொழி பேசுபவையாகத் தம்மை இனங்காட்டுகின்றன.
கயல்விழி விரிந்த தோள்’ எனும் கவி தையில் படுக்கை விரிப்பைச் சரிசெய்வதை யும்/புதிய சமையலைக் கண்டுபிடிப்பதையும் விட / இந்த உலகம் விரிவதே இல்லை’ என்று மிகவும் எளிமையான புழங்கும் வார்த்தைகளால் தன்னைச் சுற்றியுள்ள சமூ கத்தின் மீது உள்ள வெறுப்பையும் சினத்தை யும் வெளிப்படுத்தி நிற்கின்றார். நிகழ்தல், அரசியாகும் ஓர் கழுகு’, ‘பூக்கள்’ எனத் தொடரும் இவருடைய ஒரு சில கவிதை களை வாசித்துணர்கையில் பெண்களின் நெருக்கடியான பொழுதுகளைப் பேசுவ
தோடு ஆண் உறவுகள் மீதான கேள்விக ளோடும் அவையுள்ளன.
பெண்ணியாவின் பெரும்பாலான கவி தைகள் ஒற்றைப் பரிமாணத் தன்மையுடன் தமது அகலிப்பை நிறுத்திக் கொள்கின்றன.
வெளிப்படுத்தல்' எனும் கவிதையில்
இரவினில் நீ இரைந்து கத்துகிறாய் Uආෆ්රාද්භිගGIIu|b କ୍ଷୌ'(86ର୍ଯl୩Idéo
96 அவதூறு கொண்டு
அலங்கரிக்கத் தொடங்குகிறாய்.”
என்று கவிதையின் ஆரம்பத்திலேயே பேச்சு மொழிச் சாயல் பூசப்பட்டு அது தன்னை நெகிழ்த்திக் கொள்வதால் கவிதை பலமின்றிப்போய்விடுகிறது. இறுதியில்
இதற்கெல்லாம் பதிலாய் அவள் தன்னை
ஆழ்ந்த மெளனத்தில் w வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறாள்'
எனக் கவிதையின் முடிவில் பெண் னியா தனக்கான அவதானிப்பை வெற்றி கரமாகத் தக்கவைத்துக் கொள்கிறார். இது போன்றே ‘காதல், நீலமான இரவு' எனும் கவிதையிலும் பெண்ணியாவின் ஆளுமை சுயம் பேசுதல் எனும் வகை பாகத்தினூடாக வெளிப்படுகிறது.
“ஆண்மை வழியும் இரவில் இராப்பிச்சைக்காரனின் கெஞ்சலும் தோற்றமும் மிகைப்பட கையேந்துகிறாய் ஒரு இரவுக்காக.
பெண்ணியாவின் ‘இது நதியின் நாள்
கவிதைத் தொகுப்பை முன்வைத்து.
மருதம் கேதீஸ்
ஐப்பசி - மார்கழி 2009

Page 17
என்று தன்னுடைய பிறிதொரு கவிதை யில் அந்தரங்கங்களையும் கூட விட்டுவைக் காமல் பேசியிருக்கிறார். அனார், பகிமாஜ ஹான், சலனி போன்ற ஏனைய கவிஞர்க ளோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் பெண்ணியா வின் கவிதைகள் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான, தீவிரமான குரலாக வெளிப்படுகி றது எனலாம்.
இரவுநேரத் தொழிலாளி தன் பங்கிற்கு / இரவினில் எழுகிறான் / மரங்களை வெட்டுகி றான்/ அவர்களுக்கான உணவினையும் / கூலியின்றிச் சமைக்கிறான். இவ்வாறு தொடர்ந்து செல்லும் வரிவார்த்தைகள் இறுதி யில் தனக்காக ஒருநிமிடம் தானும் /ஒதுக்க முடியாத தொழிலாளி / எதற்காய் தொழில் புரிகிறான்.?’ எனத் தன்னை எதிர்ப்பால் நிலையில் உருவகித்து எதுவுமற்றுப் போகின்ற வாழ்க்கையினை உணரவைக்கி றார். பெண்ணியாவிற்கு இந்தக் கவிதை தனக்கான ஓர் ஆறுதல் நிலையைத்தர லாம். உலகில் எத்தனையோ தாய்மார்கள் இரவு நேரத் தொழிலாளிகளாகவே வாழ்ந்து வாழ்வை நிறைவும் செய்திருக்கிறார்கள் என் பது உண்மையே.
'என் குழந்தை ஓவியம்' என்னும் பெண் னியாவின் கவிதை அவருக்குக் கைவரப் பட்ட ஓர் கவிதையாக வெளிப்படுகிறது. உண் மையில் கவிதை, எழுதுவதற்கான ஓர் படைப் புக்கலையல்ல; அது அனுபவங்களால் தன் னைக் கட்டிக்கொள்கிறது அல்லது செய்யப் படுகிறது என்றேதான் கூறவேண்டும். ஏனெ னில் கவிதையுணர்வு எல்லோருக்கும் வாய்த்துவிடும் ஒன்றல்ல. அது பல தடவை கள் கவிஞர்களையே ஏமாற்றியும்விடுகிறது. (மேற்படி கவிதையில் குழந்தை பற்றிய செய லுணர்வுகளை நம்மில் தொற்றவைத்தா லும்)
தனித்த இடைவெளியில் அவன் வரைந்த சுவர் ஓவியங்களின்
உருவங்கள் இறங்கிவந்து அவனை ஒத்த பாவனைகள் செய்து தங்கள் தங்களின் இடங்களில் உறைகின்றன. என் விடு முழுக்க ஒரு குழந்தையால் நிரப்பப்பட்டிருக்கிறது.
எனும் இந்த வரிகளில் கவிதையில் மெளனம் என்று சொல்லப்படுகின்ற உச்ச நிலை வெளிப்படுகிறது.
இதுபோன்ற பெண்ணியாவின் அனேக மான கவிதைகளில் குறிப்பிட்ட வரிகள் கவி தையின் நுண்ணுணர்வை வெளிப்படுத்து கின்றன எனலாம்.
பெண்ணியாவைப் பற்றிச் சலனி குறிப் பிடும்போது இந்தச் சமூகம் பெண்ணுக் கென வழங்கியிருக்கும் வாழ்வை நன்கறி வேன். இதற்குப் பெண்ணியாவும் நானும் எனது நண்பிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல. எனவே இந்த வாழ்வு, சமூகப்போக்கு மீது பெண்ணியா ஆற்றும் எதிர்வினை என் னுடையதும்தான் எனக் குறிப்பிடுகிறார்.
ஒரு சமூகத்தின் மீது எதிர்வினையாற்று தல் என்பது அதனுடைய பல பாகங்களையும் பல பரிமாணத்தன்மையில் நோக்குத லையே கொண்டிருத்தல் வேண்டும். தவிர எதிர்வினையாற்றலால் நாம் சாதித்துக் கொள்பவை யதார்த்தத்தில் பெரும் வெற்றி டமாகவே இருந்தும் விடுகிறது. இது கூர்ந்து நோக்கப்படவும் வேண்டிது. ஆண் ஒடுக்குற வுக்கு எதிராக அல்லது ஆண்வெறுப்புணர் வைப் பேசும் பெண்மொழிகள் பெரும் துக் கத்துக்குரியதாகவே இருந்து விடுகின்றது. ஏனெனில் குறித்த கவிஞர்கள்/படைப்புணர் கள் இதற்குப் பின் வாழ்வை எதிர்கொள்தல் என்பது பெரும் போராட்டங்களூடே அமைந் தும் விடுகின்றது. பெண்ணியா தனது எல் லாக் கவிதைகளுக்கும் அப்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதற்கு அப்பாலும் அவர் செல்லவேண்டிய பாதை இருந்து கொண்டே யிருக்கிறது.
O
ஐப்பசி - மார்கழி 2009
மறுபவதி 30

விழுங்கும் தருணங்கள் -
簽
x. 8:
该
褒
چه
평
முடிவற்ற உரையாடலையும் தன்னை விழுங்கும் தருணங்களையும் முரண்பாடுக ளையும் ஏமாற்றங்களையும் கலைமகளின் கவிதைகள் பிரதிபலிக்கின்றன. தனக்கான உலகத்தை, தனக்கான சொற்களை, பொழு துகளை இன்னும் பிறவற்றைக் கோரிநிற்கின் றன கலைமகளின் கவிதைகள்.
தனது நினைவுகள் அனுபவங்களைக் கவிதைகளாக வெளிப்படுத்தும் கலைமகள் தனது காத்திருப்பையும் காதலின் நெருக்கத் தையும் மிக உன்னதமாகக் கருதுகிறார். எந்த முரண்பாடுகளிலும் பிரிவுகளிலும் காதல் அல்லது நெருக்கம் குடியிருப்பதை வெளிப்படுத்துகிறார். அது எப்படி சுருங்குகி றது எனவும் பெருகுகிறது எனவும் பேசுகி றார். அன்புக்காக அழைக்கிற மனமும் சொற் களும் அவரை முழுமையாக இங்கு பிரக டனம் செய்து விடுகிறது.
'உனக்கும் எனக்கும் ஒத்துவராத சில பக்கங்கள் நடுவே இன்னும் அமர்ந்திருக்கிறது நம் காதல்
என்ற இந்தக் கவிதையின் கூறுதல் முறை
கலைமகள் கவிதைகள்
தீபச்செல்வன்
மையையும் அதன் அர்த்தத்தையும் நோக்கு கின்றபோது, அது பல கவிஞர்களின் கவிதை களை நினைவுபடுத்துவதாகத் தன்னை வெளிப்படுத்துகிறது எனலாம். ஆனால் தன்னை உன்னதமாக்குகிற
‘பாரதியின் கவிதையை விட
கன்னி ஆழமானது
என்பதன் வாயிலாக பெண்ணினது இயக்க சக்தியையும் ஆளுமையையும் அன்பையும் எடுத்துக் காட்டி உன்னதப்படுத்துகிறார். வாழ்வை மிக உன்னதப்படுத்துகிற மனதை கலைமகளின் காதல் சார்ந்த கவிதைகளில் காணமுடிகிறது. தன்னை விழுங்குகிற தரு ணங்களாகக் கருதினாலும் தொடருவதற்கு தேடி அடைவதற்கு பிரயாசப்படுகிறது.
தொடரும். என்னும் வார்த்தையை உன் ஒவ்வொரு வரிகளிலும் தேஜத்தோற்றேன்’
இந்தத் தோல்வியும் ஏமாற்றமுமே பின்னர் வரும் கவிதைகளையெல்லாம் தூண்டி விடு கின்றன. அதுவே வாழ்வாகவும் தொடருகின்
DS).
'26ঠা@6তা চ্যাক্টো நேசித்த பொழுதுகளை அறியமாட்டாய் வெறுத்த பொழுதுகளையே É cegle)JTi"
என்று இப்படிச் சொல்லுகிற கவிதையைத் தொடர்ந்து வருகிற மற்றைய கவிதையில்
ஐப்பசி - மார்கழி 2009
றேறுபவிதி 31

Page 18
6
- - - - 9L6b féfurû
உணர்வு ரீதியாய்
நான் வித்தியாசமானவள் உன்னில் இருந்தும் அவர்களில் இருந்தும்' என்று இருக்கிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியமான கவிதைகளாக “நான்’ என்றமைந்த தன் னைக் குறித்து எழுதும் பிரகடனங்களை அல்லது மனவெளிச் சொற்களைக் குறிப்பிட லாம். கலைமகளும் அவற்றை இங்கு முக்கி யப்படுத்துகிறார். உன் முன் மண்டியிட விரும் பவில்லை என்னும் பொருள் சார்ந்தமைகிற வரிகள் ஏற்கனவே பல கவிஞர்களின் கவி தைகளில் பார்த்திருக்கிறோம். நான்’ என்ற தலைப்பிலமைந்த கவிதை தன்னைக் குறித்த பாடலாக இருக்கின்றது. அவை கன வுகள் ஏமாற்றங்கள் முயற்சிகள் குறித்துப் பேசுகின்றன.
இந்த முயற்சிகள், ஒரு கட்டத்தில் குருதி சிந்துகிற தருணங்களுக்குக் கொண்டு செல் லுகிறது. ‘குருதி சொட்டும் கண்ணிர்’, ‘முடி வில்லாத பேச்சுக்கள் முதலிய கவிதைகள் இவ்விதம் அமைகின்றன. முடிவில்லாத பேச்சுக்கள்’ என்ற கவிதை முழுத் துயர்க ளின் வலியாக வருகிறது.
மேடையேறும் எங்கள் கால்கள் வெந்துபோகிறது ஆனால் எல்லாவற்றையும் பேசித்தீர்த்துக் கொள்வதற்காய் tổ6ĐI(Blồ Iổ6ẳbf{Biỗ மேடை யேறுகின்றது
இந்த முரண்பாடுகளுக்குள் பிறந்துவிடு கிற குழந்தை குறித்ததாய்மையின் ஏக்கங்க ளாக சில கவிதைகள் வருகின்றன. இந்தக் குழந்தை துயர்கொள்ளுகிறது, அழுகிறது. திசையற்றுக் கிடக்கிறது. யாருக்கு உரியது என்ற கேள்விகளால் தனித்திருக்கிறது. இவ் வாறு தனித்திருக்கும் குழந்தைக்கான தாய்
மையின் ஏக்கத்தை கலைமகளின் இந்த வரி கள் உணர்த்துகின்றன.
‘.அவன் விந்துவில் தான்- நீ பிறந்ததாய் கூற விட்டு வந்தேன் பால் சுரக்கையில்
புரிகிறது
வாழ்தல்' என்ற கவிதைதான் இந்தத் தொகு தியில் என்னை அதிகம் பாதித்த கவிதை. பயங்கரமான உலகத்தில் பிறந்து விடுகிற பெண் குழந்தையின் ஏக்கத்தை வாழ்தல் - 01 கவிதை பேசுகிறது.
'இரு மூலைகளுடன் பிறந்து விட்டாய். நான்
இந்த உலகம் பயங்கரமானது என்பதை' முன்னம் ஒரு பொழுது என் தாய் காத்தது போல் பின்னைய பொழுதுகளில்
இந்தப் பயங்கர உலகத்தில் தனது குழந் தையை எப்படிக் காத்துக்கொள்ளுவது என்ற ஏக்கமே இந்தக் கவிதை.
ஐப்பசி - மார்கழி 2009
மறுபவதி 32
 

பருந்துகள் வட்டமிடும்
காலங்கள் இவை
அடைகாத்து
சோர்ந்து போய் அமர்ந்திருக்கும் நான் எப்படிச் செல்வேன் இந்த உலகம் பயங்கரமானது என்பதை
குழந்தையின் முழு இருப்பையும் கவிதை மனம் கேள்விக்குள்ளாக்கிறது. ‘வாழ்தல் - O2 கவிதை உயிரழிவைப் பற்றியும் அச்ச மும் அவலமும் நிறைந்த காலம் பற்றியும் பேசுகிறது. அதிகாரத்தால் பலி கொள்ளப்படு கிற வாழ்வு குறித்தும் பேசுகிறது. ஆயுத வழிப் போரின் அவலத்தைக் கவிதை இப்படி சொல் லுகிறது.
வன்முறை வளர ஆயுதம் வளரும் ஆயுதம் வளர போர் வளரும் போர் வளர கோன் வளர்வான் கோன் வளர குழு விழும்
சந்தா விபரம்
தனி இதழ் - 3 O/= ஆண்டுச் சந்தா - 120/= (göllu mrgib 6NaFoo6 · 9 · Lu L)
சந்தா செலுத்த விரும்புவோர்:-
ச.உதயணன்
கொமர்ஷல் வங்கி, கனக்கு இல. - 8060070929 யாழ்ப்பாணம்.
உலகப் பொதுவான இன்றைய வாழ்வியல் அரசியன்லக் குறிப்பிட்ட வரிகள் உள்ளடக்கி யிருக்கின்றன. வாழ்தல் - O3, O4 கவிதை கள் நான் வாழ்வேன் என்ற நம்பிக்கையைத் தருகின்றன.
நான் வாழ்வேன் கனவுகளிலும் கசக்கி எறிந்த காகிதங்களிலும் உதிர்ந்து கிடக்கும் மலர்களிலும் இலையுதிர்கால வேரிைல் பொழுதுகளிலும்
முடிவில்லாப் பேச்சுக்கள் என்ற இத்தொகுப் பின் வாயிலாக தனது கனவுகளையும் எண் ணங்களையும் ஏக்கங்களையும் பகிரத் தொடங்கியிருக்கும் கலைமகளிடமிருந்து இன்னும் பல சிறந்த கவிதைகள் கிடைக்கு மென நம்பிக்கை கொள்ளலாம்.
த.அஐந்தகுமாரின்
ஒரு சோம்பேறியின் கடன்
த.*ஐந்தகுமார்
က္ကံမမ်းမဲဒါး (%. →
diğunu ö
41, இராஜ வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
ஐப்பசி - மார்கழி 2009
ரூனுபவதி 33

Page 19
எனது இரவுகளில் செட்டை கழற்றிய சாரையொன்று சிநேகம் கொள்கிறது
ඌඛණගී6IIIහී கன்னங்களைத் தேய்ப்பது நாக்கினால் வியர்வையை ஒற்றுவது வாலைச் சுருட்g வளையமாய் கழுத்தில் எறிந்து
LDig6Dudpö(56)Idi
இரவுகள்
அச்சத்தைத் தருகின்றன நாகங்களுடன் ஸ்பரிசம் கொள்வதாயும் பற்களில் விசங்கள் இருப்பதாயும்
சாரைகள் தீண்g மனிதர்கள் செத்ததாய் எவரும்
சொல்வதில்லை சாரைகள் புனரும் வேளை போர்த்தெடுக்கும் வெள்ளைச் சேலையில் அதிர்ஸ்ட தேவதைகளின் சிரிப்பொலிகள் நிறையும்
மலழக்கும் கருத்தரிக்கும் என uTog 65Tõp66
ஒற்றைப் பாம்பு என்னுடனேன் சிநேகம் கொள்கிறது.
என்னைப் புணர்வதற்கோ?
- கருணை ரவி
gú.jLéil - Loitiag9 2009 பற்றுபவதி 34
 

தமிழின் புதுக் கவிதைகளுள் குறிப்பிடத்தக்கவரான சி.மணி எழுத்து' இதழ் வெளிவந்த காலத்தில் புதுக்கவிதை எழுதியவர்களில் ஒருவர். கவிர்ை, விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கியத்தில் தீவிரமாக இயங்கியுள்ளார். இவர் ஆங்கிலப் பேராசிரியருமாவார். 'வரும் போகும்', 'ஒளிச்சேர்க்கை', 'இதுவரை ஆகிய கவிதை நூல்களும் யாப்பும் கவிதையும் என்னும் விமர்சன நூலும் வெளிவந்துள்ளன. எலியட்டின் பாழ்நிலத்தையும் மொழியாக்கம் செய்துள்ளார்.
விளக்கு, இலக்கியப் பரிசு(2002), தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது (1985,1985) என்பவற்றை யும் பெற்றிருக்கிறார். வே.மாலி என்ற பெயரிலும் எழுதியிருக்கும் சிமணியின் இயற்பெயர் எஸ். பழனிசாமி.
சத்தியகுமாரன் என்னும் இயற்பெயரைக் கொண்ட மாவை வரோத யன் யாழ்ப்பாணத்தின் வடக்கேயுள்ள மாவிடிடபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்பில் பரீடிசைத் திணைக்களத்திலும் பின்னர் இலங்கை சுகாதார சேவையில் சுகாதாரப் பரிசோதகராகவும் பணியாற்றி யுள்ளார்.
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், விமர்சனம் என பன்முகத் தளத்தில் செயற்படிடவர். தேசிய கலை இலக்கியப் பேரவையின் இலக் கியக் குழுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். வானொலி நிகழ்ச்சி களிலும் பங்குபற்றியுள்ளார்.
‘இன்னமும் வாழ்வேன்’ (கவிதை), ‘வேப்பமரம்' (சிறுகதை) ஆகிய
நூல்கள் வெளிவந்துள்ளன. 'தாயகம்' சஞ்சிகையில் வலிகாமம் மைந் தர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடரும் எழுதியிருக்கிறார்.
சி.மணி
(1936 - 2009)
D66 வரோதயன் (1965 - 2009)
கவிதை நூல்களுக்கான விமர்சனங்களுக்கு தங்கள் நூல்களை
அனுப்புகின்ற படைப்பாளிகள் நூலின் இரண்டு பிரதிகளை அனுப்பி
வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றிர்கள்.
- ஆசிரியர் -
ஐப்பசி - மார்கழி 2009
மறுபனிதி 35

Page 20
கவிதைக்கான காலாண்டு இதழாக மொட்டவிழ்ந்த மறுபாதியே நீகவி
தைக்கானவன் என்றாலும் உன்னுள் ஓடும் கட்டுரை நாடிகளும் என் 8 னைக் கவர்ந்தவை. அதிலும் “புனிதத்துக்குள் கட்டுறும் அபத்தத்தின் முகம்'என்ற வெள்ளைமாரனார் கட்டுரை மேலும் சிறப்பானது. புனித
மான எமது நெறியில் களையோடி உள்ள இவை போன்றகளைப் பயிர் களை அறிஞர்கள் தெளிவித்து புலப்படுத்துவது எமது நெறிக்கு மிகவும்
Է6Ն இன்றியமையாதது. மேலும் 'மறுபாதி 'உன் நிறை உன் விலையை விட அதிகம். இது உன்னை முத்தமிட்டவருக்கு புரியும். மறுபாதியே உன் ஒவ்
Co வொரு பாதியையும் தவறாது தவழவிடுவாயாக. அடுத்தவனை எதிர்
LJIIfišg!......
ஜீவா
- fe லோலி தென்மேற்கு (e ri)(CThke motrër L மேலுபளது O
Aவிதைக்கான காலாண்டிதழ் LLLLLL SS LLL S S AAAALLLLLLL SS SqL G L00L0 கலை உலகில் ஏற்பட்டு வரும் மாறுதல்களின் ஆரோக்கிய மான பகைப் புலத்தில் கவி தைக்கான தனித்துவமான சஞ் சிகைகளின் வருகை முதன்மை பெறுகின்றது. இவ்வகையில் “நடுகை”யினைத் தொடர்ந்து கலை உலகில் வெளிக்கிளம்பிய 'மறுபாதி”எனும் கவிதைக்கான இதழின் வருகை மகிழ்ச்சிக் குரியதாக உள்ளது.
வாசிப்புப் பழக்கம் அருகிவிட்டது. அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்று பேச்சளவில் மட்டும் மார்தட்டிக் கொண்டிருப்ப
வர்கள் மத்தியில் செயல்நிலை செயற்பாட்டுடன் இயங்குகின்ற கலைஞர்களின் உற்பத்தியாக இவ்விதழின் வெளிப்பாடு அமை கின்றது.
இவ்விதழில் உள்ளடக்கப்பட்டிருந்த கவிதைகள், கட்டுரைகள், ஆரோக்கியமானவையாக
அமைகின்றன. எனவே இவ்விதழின் தொடர்ச்சியான வருகை வாசிப்பியல் சார்ந்தும் எழுத்தி யல் சார்ந்தும் மாறுதல்களை ஏற்படுத்தும்.
மல்லாகம்.
O
அடுத்த மறுபாதிக்காகக் காத்திருக்கிறேன். சமய உணர்வுகளைப் புண்படுத்தாததாயும் காத்திரமானதாயும் அடுத்த இதழ் மலரட்டும். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
தி. மயூரகிரி
ff86S.
O
ஐப்பசி - மார்கழி 2009 றேறுபாதி 36
 

ARRUL GLOBAL, EXPRESS INTERNATIONAL COURIER 8 CARGO SERVICES
k 22O இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உலகின் முதல்தர கூரியர் நிறுவனத்துடன் இணைந்த ᏩeᎭ60Ꭷ6ll.
次 அதி அவசர கடிதங்கள், பொதிகள் மற்றும் ஆவணங்கள் முன்கூட்டியே நேரம் குறித்து ஒப்படைக்கப்படும். (TDDServices)
* 24 மணி நேரத்தில் இலங்கையின் சகல பாகங்களுக்கும் பொதிகள் மற்றும் ஆவணங்கள் ஒப்படைக்கப்படும்.
இல.01, பிறவுனர் வீதி, நாவலர் வீதி, யாழ்ப்பானம்
75 O9 999 613

Page 21
(
NEW ASA
No: 285, Galle Road, TOI 1236 |-laille Was
- 二ーニ
 

s! 五湖 = r== |- 5 ) ğ 又创腾乱 闵正 上避姚弼 工油羽 Qo照邻感 地部 的 홍 !, foi s-a 心随心雕