கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2005.05

Page 1
10 1ely 2005
25/-
 
 

鹭
+ " * పF

Page 2
அறிவு “ARIVU”- KNOWLEDGE. சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு 41, கல்லூரி வீதி, திருக்கோணமலை, Sandrasegarampillai Gnanambigai Establishment 41, College Street, Trincomalee
பொருளடக்கம் 0 உங்களுடன் ஒரு நிமிடம். 01 0 ஆத்மவிசாரம். 02 0 கற்றது கைமண்ணளவு. 05 பூமி எதிர்நோக்கியுள்ள அபாயங்கள். O7
d எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்கள்
மேலும் ஐந்து மடங்கு அதிகரிக்கும். 09 0 இயற்கை மருத்துவம் என்றால் என்ன. 10 0 தெரிந்த பெயர் தெரியாத விபரம். 16 () fairs6365 (e-Education)................................... 19 () மதமாற்றம் - (பொ.கந்தையா) LSL LLL SL LLLLL LLLL LSL LLLL L0LLLLLSL LLL LLL LLL LLLL LSL LLLLL LLLL LSL LSL 0LLL LLLL LL LLL LLL LL 23 0 வளராத நேரம் வளர்ந்து வரும் அறிவு. . 28 0 பெண்களின் உடல் பருமன் குறைய. 3 0 நடக்க விரும்புகிறீர்களா. 32 () விலங்கு உலகம். 33 0 “அமெரிக்கப்பயணம்”. 34
0 உலகின் முதன்முதலாக
இயந்திரத்தில் பறந்த முதல் மனிதன். 36
எமது ஸ்தாபித காரணகர்த்தாக்கள் திரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை ஞானாம்பிகை அவர்கட்கு இந்த அறிவு - 2005 3" இதழை சமர்ப்பிக்கிறோம்
 
 

உங்களுடன் ஒதி நிமிடம்
ஆறறிவு படைத்த மனிதனின் பகுத்தறிவே அதன் முடிவு என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஐந்து உணர்வுகளையும் கொண்டு அறிந்த உலகை முழுமைப்படுத்துவது பகுத்தறிவு என்று நாம் எண்ணுகிறோம். பகுத்து அறியும் அறிவு ஒரு பகுதி அறிவே உண்மையான முழுமையான அறிவு தொகுத்தறிவதே.
1960களில் மூளையின் இரு பகுதிகளும் வெவ்வேறு வகையான தொழில்களைப் புரிகின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். எமது இடது மூளைப்பகுதி, வலப்பகுதி உடலையும் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்பவை உற்றுநோக்கல், தொடர்ச்சி, ஒழுங்குமுறை, பகுத்தறிதல், பகுதிகளின் ஒழுங்கு வெளிப்படையாக தெரிதல், உண்மைத்தகவல், யதார்த்தம் இவைகளுடன் தொடர்புடையவை எனக் கண்டறிந்தனர்.
வலப்பகுதி மூளை இடப்பகுதி உடலையும் காட்சி, வெளி, உணர்தல், புலனுணர்வு, பரந்த உணர்வு, உள்ளுணர்வு, அனாதி, தன்னிச்சை, முழுமை, அறிகுறி, உருவகம், விரிவு, கனவு, கற்பனை, ஆன்மீகம் போன்றவற்றுடன் தொடர்புள்ளது.
எமது மரபுவழிக் கல்வி இடப்பக்க மூளை வளர்ச்சியை மையமாகக் கொண்டு செயற்படுகிறது. இப் போது தான் கல்வித்துறையில் வலப்பகுதி மூளையின் தாக்கம் பற்றிய அறிவு ஏற்பட்டுள்ளது. கற்றது கைமண்ணளவு என நாம் மலைத்து நிற்கத் தேவையில்லை. புதிய கண்டுபிடிப்புக்களும், பரிணாம வளர்ச்சியும் எமது உண்மையான குறிக்கோளை - நிலையை அடைய உதவி செய்யும்.
இந்த முயற்சியில் அறிவு தனது ‘அணில்” பங்கை ஆற்றும்.
எஸ்.பி. இராமச்சந்திரா ஆசிரியர் குழுவிற்காக
4வது இதழ் இம்முறை தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிவரவில்லை. இம்முறை 5வது இதழாக 25-05-2005 இது மலர்கிறது
- I -

Page 3
资料 ★
Je,5un 6ířsngún
- சுவாமி கொங்காதரானந்தா இந்த ஊன் உடலில் இருந்து முற்றிலும் வேறாய், அழிவற்றதாய், தூய அறிவு மயமாயிருக்கும் பரமானந்தப் பரவஸ்து ஒன்றிருக்கிறது. என்பது, சர்வ சமயத்தின் முற்றான முடிவு. இது ஆத்மாவென்றும், பிரம்மமென்றும், சிவமென்றும், விஷ்ணுவென்றும், இன்னும் பல பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. இந்த ஆத்மா ஜனன மரணமற்றதாயும், புலன்களால் அறிய முடியாததாயும், சுயம் பிரகாசமாய் இருக்கின்றது. இந்த ஆத்மத தரிசனமே வாழ்வின் இறுதி
இலட்சியமென்பது, சர்வ சமயங்களின் ஏகோபித்த முடிவு.
தோற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படைத் தத்துவமான ஆத்ம சொரூபத்தையே விவேகியானவன் அறியத்தக்கனவாகின்றான். இதை அறியும் முயற்சியே பெரு முயற்சி; இதை விசாரிக்கும் முறையே 'ஆத்ம விசாரம்; இதை அனுபவித்து உணரும் உணர்வே மெய்யுணர்வு; இந்தக் காட்சியே மெய்க்காட்சி; இதன் சேர்க்கையே ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியம்; இந்த ஐக்கிய பாவமே ஜனன மரணமற்ற பெருநிலை என்றும், மோட்சமென்றும், ஜீவன் முத்தி நிலை என்றும் கூறப்படுகின்றது. சம்சார துக்கத்தை அழித்து, சர்வ சுத்த சுதந்திர பேரின்ப நிலையை நிலை பெற்றிருக்கச் செய்வது, இந்த ஆத்ம தரிசனம் ஒன்றுதான். அகண்ட பரிபூரண ஆனந்தமாய், அழிவற்றதாயிருக்கும் ஏகப் பரம்பொருளை அறிந்து, அதில் இரண்டறக் கலப்பது, பரம சாந்தி நிலை.
மனம் - புத்தி - சித்தம் - அகங்காரம் இவற்றைத் தாண்டி உபாதிகள் எதுவுமின்றி, பேத புத்தியை அகற்றி, சமரச பாவனையில் நின்று காணும் காட்சியே ஆத்ம தரிசனம் . இந்த ஆத்மன் சங்கற்பவிகற்பாதிகளற்றது; கூறுபடாத குணாதீக சொரூபன்; இந்த ஆத்ம சொரூபமே நீ! இதை நன்கு அறி; இதுவே வேத வேதாந்தங்களால் விளக்கிக் கூறப்படுகின்றது.
நான் . எனது - என்னும் மமதையால், ஆத்ம தரிசனம் தடைப்படுகின்றது. நான் என்னும் தற்போதத்தால், ஜீவபேதம் - மாயை -ஏனைய ஆணவ மலங்களும் உண்டாகின்றன. நான் என்பதில், பஞ்சகோச ரூபங்களான தூல - சூக்கும - கரண - சரீரங்கள் அடங்கிவிட்டன. ஆத்ம விசாரத்தில் இம் மூவித பேதங்களையும் அகற்றிவிடலாம். அந்தக் கரணத்துக்கு இதயமே இருப்பிடம்.

இந்திரியங்கள் மின்ம்'ஆத்த்கரணம், தூய அறிவு மயமாயிருக்கும் சுத்த சத்துவமன்ம், தமோ குணத்தின் சேர்க்கையால், ஜெகத்தாகத் தோற்றமளிக்கின்றது. ரஜோ குணத்தின் தோஷத்தால் நான் - நீ என்ற பேத புத்தியும், அதனால் பாப புண்ணியங்களைச் செய்து ஜனன மரணங்களும் உண்டாகின்றன. இவ்வித பேத புத்தியை அகற்றித் தான்தானாகவே இருக்கும் நிலை மோட்சநிலை. நான் அழிவற்ற ஆத்மா என்ற திடபாவத்துடன் இடைவிடாது விசாரம் செய்தால், மனம் விஷயாதிகளினின்றும் விலகித், தனது சொந்த நிலையை அடையும். விஷயாதிகளில் விருப்பு வெறுப்பற்ற மனதால் ஈஸ்வர தரிசனம் எளிதில் அறியப்படுகின்றது.
பிராணாயாமம், ஜெபம், மூர்த்தி தியானம் முதலியவை, மனதைப் பரிசுத்தஞ் செய்து, மனத்தைத் தன்னிலையில் வைக்க வல்லவை. ஆனால் ஆத்ம விசார மார்க்கம் மனதை முழு நாசம் செய்யவல்லது. ஆத்ம விசாரத்தால் ஆழ்ந்து, தன்னுள் மூழ்கி, திட வைராக்கியத்துடன் ஆத்ம நிஷடனாய் இருப்பதே தன்னை ஈசனுக்கு அர்ப்பணம் செய்தலாகும். “நான் யார்’ என்னும் ஆத்ம விசாரணையால் மனதை நாசம் செய்தலே, உயர்ந்த ஆத்ம சாதனை. இந்த விசார மார்க்கத்துடன் பூஜை ஜெபம் முதலியவற்றைச் செய்து வருவானாயின் சாதகன் எளிதில் முன்னேற்றமடைவான்.
நான் என்பதில் இரண்டு விதமுண்டு. ஒன்று - அகந்தையால் ஏற்படும் நான் என்ற தற்பெருமை; மற்றது சங்கற்ப விகற்பாதிகளகற்றி, உள்ளத்தில் ஆழ்ந்து பார்க்கும் பொழுது நன்கு பிரகாசித்துக் காணும் சச்சிதானந்த சொரூபமாயிருக்கும் சிவம்; இதுவே உண்மையான நான். இந்த சத்திய சொரூபமாயிருக்கின்ற நான் - உடலல்ல; மனமல்ல; பிராணனுமல்ல; ஏனைய கர்ம ஞானேந் திரியங்களுமல்ல; இவற்றையெல்லாம் விலக்கி மிஞ்சியிருப்பதே உண்மையான நான். இதன் இயல்பு சத் - சித் - ஆனந்தம். உள்ள மெய்ப்பொருளும் இதுவே. பாசமகற்றினால் ஜீவன் சிவமாகப் பிரகாசிக்கும்.
ஆத்ம விசாரணையும் ஒருவித மனோ விருத்திதான். எனினும் முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், விசாரணையின் இறுதி முடிவில், விசாரணைக்குரிய மனதின் மற்றப் பகுதியும் அழிந்து விடும். அப்பொழுது உள்ளது உள்ளபடி விளங்குகிறது. நான் என்ற அகம்பாவம் அழிகின்றது; எல்லா விருத்திகளும் அடங்கி விடுகின்றன. எதைச் செய்யும்பொழுதும் நான் செய்கின்றேன் என்ற அகந்தையை அகற்றிச் செய்ய வேண்டும். - 3 -

Page 4
ஆத்ம தரிசனத்தின் பொருட்டு - அகந்தையை அகற்றி விடுவதுதான் உண்மையான தியாகம் - சேவை - துறவு என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. சுயநலமற்ற பெருநிலையும் பக்தியும் அதுவேதான். ஆத்ம விசாரத்தில் ஆழ்ந்து போகும் அளவில், பூர்வ வாசனைகளும் தொடர்ந்த பாவ புண்ணியங்களும் தானே தேய்ந்து விடும்.
ஆத்ம விசாரம் செய்யும்போது, பூர்வ வாசனைகளும் வினைகளும் அகலுமா - இல்லையா என்ற சந்தேகத்திற்கு இடங்கொடாது உறுதியுடன் விசாரத்தில் ஆழ்ந்து மூழ்கிவிட வேண்டும். சந்தேகம் உண்டாகும் போதெல்லாம், யாருக்கு இந்தச் சந்தேகம் வந்ததென்று விசாரித்து அறிய வேண்டும். எண்ணங்கள் கிளம்பும் போதெல்லாம், எண்ணம் எழுந்த இடத்தில் வைத்து, அதை நசுக்கிவிட வேண்டும்.
திட வைராக்கியத்துடன் பெரு முயற்சி செய்து, விசாரணை செய்து கொண்டு போகும்போது, இறுதியில் மனது அடங்கி ஒடுங்கி, அழியும்; சகல பாப புண்ணியங்களும் அகன்று சச்சிதானந்த சொரூபமாய் சுத்தனாய் விளங்கும்; இனிமேல் அழிவில்லை; இன்பதுன்பங்கள் நம்மைத் தீண்டா, வெப்பம் குளிரால் நாம் பாதிக்கப்படுவதில்லை; இனி வரத்தும் போக்கும் நமக்கில்லை; இப்பொழுது உன் மனதால் சங்கற்பித்த உலகின் தோற்றம் முற்றிலும் உன் எதிரில் நின்றும் மறைந்து விட்டது; எல்லாம் ஒரே பிரகாசமாயிருக்கும். பேரொளி ஒன்று மட்டும்தான் எஞ்சி நிற்கும்; அகண்ட சச்சிதானந்த செரருபமாயிருக்கும் இப்பேரொளிப் பிழம்பில் யாவரும் ஒன்று; இனம் - மொழி - தேசம் - நாம ரூபங்கள் அங்கு கிடையாது; இனத்தால் - நிறத்தால் - தேசத்தால் - மொழியால் இருக்கும் பிரிவினைகள், பரமார்த்தீக நிலையில் காண முடியாது. இவைகள் குறுகிய உள்ளத்தின் பிரிவு பாவனைகளன்றி வேறல்ல.
உயர் ஆத்மாக்களே! எதையும் வெளியில் தேடி அலையாதீர்கள். எல்லாச் சம்பத்துக்களும் உமக்குள்ளே இருக்கன்றன. தெய்வீக சம்பத்தை நாடி நின்றால், பெளதீா சம்பத்து தானே வரும். இதைக் கருத்தில் வை. தன்னை அறிந்து தானாக நிற்கும் நிலையறியாமல், கேவலச் சிற்றின்ப நுகர்ச்சியில் கருகி விடாதே! பரவெளியில் பரநடனம் புரியும், பரமானந்தப் பரம்பொருளை நான் யார்' என்ற விசாரணையால் அனுபவித்து அறிந்து நில்!
நானான தன்மை நழுவியே எவ்வுயிர்க்கும் தானான உண்மை தனைச்சாரு நாள் என்நாளோ
- தாயுமானவர்நன்றி . சித்த சோதனை - 4 -

கறறது கைமன அளவு.
முனைவர் பூதலூர் முத்து
அன்புள்ள தம்பிகளே. தங்கைகளே.
'சிறுவர் மணி’ இதழில் ஒரு செய்தி வந்திருந்தது. நம் தமிழ் மூதாட்டி ஒளவையின் பொன்மொழி ஒன்று அமெரிக்காவில் மிக்சிக்கன் பகுதியில் உள்ள வாணியல் துறையில் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பொன்மொழி எதுவென்று தெரியுமா?
"கற்றது கைம்மண்ணளவு: கல்லாதது உலகளவு" இதனை “What we have learnt is like a hand ful of earth; What we have yet to learn is like the whole world\ - AVVAYAR
என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்களாம். இந்தச் செய்தி நம் மண்ணுக்குப் பெருமை; நம் தமிழுக்குப் பெருமை!
ஒளவையின் இந்தப் பொன்மொழி நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது. தாம் கற்றது கைம் மண்ணளவுதான், கல்லாத விஷயங்கள். நுணுக்கங்கள் உலகளவு என்பதைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இந்த மொழியில் தெரிகிறது. அவ்வாறே உலகத்தில் உள்ள மக்களும், கற்றவை, பெற்றவை, அறிந்தவை, உணர்ந்தவை எல்லாம் கைம்மண்ணளவு தான். அவர்தம் அறியாமையோ உலகளவு என்பதையும் இது உணர்த்துகிறது.
கற்கக் கற்க நூற்பொருள்களை அறிய அறிய நம்மிடமுள்ள அறியாமையை நாம் உணர்வதை 'அறிதோறு அறியாமை கண்டற்றால் (குறள் 1110) என்று நயமாகக் கூறுகிறார் வள்ளுவர்.
கன்பூசியஸ் என்ற சிந்தனையாளர் 'அறிவைப் பயன்படுத்தி நம்முடைய அறியாமையை ஒப்புக்கொள்வதுதான் அறிவின் முக்கியமான பகுதி - பணி ' என்கிறார். எனவே 'அறிவு என்பதே நமது அறியாமையை உணருவதுதான்’ என்பது விளங்குகிறது.
'அறிவிலெல்லாம் பெரிய அறிவு ஒரு மனிதன் தன்னைத் தானே முழுமையாக அறிந்துகொள்வதுதான்’ என்று விளக்கிய கிரேக்க ஞானி சாக்கரடீஸ், "எனக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியும். அது - ஒன்றும்
- 5 -

Page 5
எனக்குத் தெரியாது என்பதுதான்’ என்று பணிவின் உச்சியில் நின்று சொன்னார்.
புத்தர் என்ன சொன்னார் தெரியுமா? "என் கையில் இருக்கும் ஓர் இலையின் அளவே என் அறிவு. ஆனால் இம்மரத்தில் உள்ள இலைகள் எத்தனை? இது இலைகளையும் மரங்களையும் காட்டி அவர் எழுப்பிய வினா. அறிவுக்கும் அறியாமைக்கும் அவர் தந்த விளக்கம!. திருமூலர் உடம்பையும் உயிரையும் காக்கும் உபாயத்தை உலகுக்கு அளித்த மகான். அவர் கூறுகிறார் ‘என்னை அறிந்திலேன் இத்தனை காலமும், என்னை அறிந்தபின், ஏதும் அறிந்திலேன்'
அறிவியல் மேதை நியூட்டன் புவி ஈர்ப்புவிசை, இயக்க விதி, நிறப்பிரிகை என எத்தனையோ உயரிய கண்டுபிடிப்புக்களை உலகுக்கு அளித்துப் பெரும்புகழ் பெற்றவர். அவருடைய சாதனைகளை மற்றவர்கள் பாராட்டிய போதெல்லாம் அவர் என்ன கூறினார் தெரியுமா? “கடற்கரையில் மணலில் தென்படும் கிளிஞ்சல்களையும் சிப்பிகளையும் பொறுக்கி வைத்துக்கொண்டு அவற்றைப் பார்த்து மகிழ்ச்சியடையும் குழந்தையின் நிலையில்தான் நான் இருக்கிறேன். என் எதிரே அழங்காண முடியாத கடல்! அந்தக் கடலின் ஆழத்தில் தான் உயர்வான முத்துக்களும் வேறு பல மதிப்புமிக்க பொருட்களும் இருக்கின்றன’
இந்தப் பணிவுதான் அந்த மாமேதையை இன்னும் மேலோங்கிய சிரகத்துக்குக் கொண்டு சென்றது.
பணிவோடு தொடர்புடைய கீழ்ப்படிதல் பற்றிச் சிலவ்றை நாம் சிந்திக்க வேண்டும். இறையன்பு கூறுகிறார்: “கீழ்ப்படிபவர்கள் எதையும் முட்டாள்த்தனமாகப் பின்பற்றுவதில்லை. அவர்களிடம் பணிவு (Humility) இருக்குமளவு கிளர்ச்சி செய்யும் (rebelliousness) மனப்பான்மையும் உண்டு. “கதர் என்ற சொல்லுக்கே கிளர்ச்சி என்பதுதான் பொருள்!
“தம்மீது திணிக்கப்படும் எந்த ஒரு வன்முறைக்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களாகத்தான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் பணிவு ஆன்ம பலத்தினால் விளைவது; அன்பினால் ஏற்படுவது; கருணையினால் கனிவது. அவர்களாகவே உவந்து, தெரிவிக்கின்ற நேயமான மகிழ்ச்சி அவர்களுடைய பணிவு!"
ஒருவனுக்கு அணிகலன் எது? தங்க நகைகளா? படிப்பா, பணமா, ’சொத்தா? பணிவுடையவனாகவும் இன்சொல் மொழிபவனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும்; மற்றைய அணிகலன் அணிகள் அல்ல!
பணிவுடையான் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி அல்ல மற்றுப் பிற
எனக்குறள் அழகாக விளக்கம் தருகிறது.
- 6 -

தொடரும் “சுனாமி” செய்திகள். ...
பூமி எதிர்நோக்கியுள்ள அபாயங்கள்
பூமிப் பந்து வெப்பமடைவதும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும், பவளப்பாறைகள் அழிக்கப்படுவதும், கடல் நீர்மட்டம் அதிகரிப்பதும் கரையோரங்களுக்கு சுனாமி போன்ற பேரழிவுகளை எதிர்காலத்தில் எளிதில் வரவழைக்கும் அபாயம் உள்ளது.
இந்திய தீபகற்பத்தை நாசப்படுத்திய சுனாமி போன்ற பேரழிவுகளைத் தாங்கி நிற்கும் திறன் உலகில் ஒருசில கடலோரச் சூழலுக்குத்தான் உள்ளது. கடலோரப் பாதுகாப்பில் சதுப்பு நிலக் காடுகளும், பவளப் பாறைகளும் முக்கிய பங்காற்றுகின்றன. மனிதர்கள் திட்டமில்லாமல் செயல்பட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றனர். இதனால் பூமிப்பந்து வெப்பமடைகிறது. கடலோரப் பாதுகாப்பில் திட்டமின்றி செயல்படுவதால் அவற்றுக்கு எதிர்காலத்தில் பேராபத்து காத்திருக்கிறது.
பூமியில் அடிக்கடி பற்றிஎரியும் தி காற்று மண்டலத்தை மாசுபடுத்துகிறது. பூமிப்பந்தும் வெப்பமடைகிறது. இதனால் கடலில் அடிக்கடி புயல் அபாயம் ஏற்பட்டு, கடல் நீர்மட்டம் உயருகிறது. இது கடற்கரைப் பகுதியில் மிகுந்த அரிமானத்தை ஏற்படுத்துகிறது. பூமிப்பந்து வெப்பமடைவதால் உருவாகும் அபாயம் குறித்து தீவு நாடுகளின் தலைவர்கள் மொரிஷியஸ் தீவில் ஆலோசனை நடத்துகின்றனர். 20ம் நூற்றாண்டில் சராசரியாக ஆண்டுக்கு முக்கால் அடி எனக் கடல் நீள் மட்டம் உயர்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டு இருக்கின்றது. பருவநிலை மாறுபாடு குறித்து ஐ.நா. சபையின் நிபுணர் குழுவினர் அடுத்த நூற்றாண்டில் கடல் மட்டம் இன்னும் வேகமாக உயரும் என்று மதிப்பிட்டுள்ளனர்.
மாலதீவு போன்றவை சுனாமி தாக்குதலில் கடலில் மூழ்கி காணாமல் போகும் அபாயம் அதிகரித்து உள்ளது. அங்கு கடல்
سے 7 سے

Page 6
மட்டத்திற்கு மேல் 6 அடி உயரத்தில்தான் தீவு இருக்கிறது. வங்காள தேசத்திலே 17 இலட்சம் மக்கள் கடல்மட்டத்திற்கு மூன்று அடி உயரமான நிலப்பரப்பில்தான் வசிக்கின்றனர். அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்திலும் இதே நிலைதான்.
பருவ நிலைத்தாக்கம் குறித்து ஜெர்மன் ஆய்வாளர் ரிச்சர்டு கிளெய்ன் கூறியதாவது
பேரழிவு அபாயங்களும் வறுமையும் கைகோர்த்துச் செல்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் சமூக பரிமாணம் மிகவும் பலவீனமாக உள்ளது. வளரும் நிலையில் உள்ள மூன்றாம் உலக நாடுகளும் புயல் அபாயம் முதல் சுனாமியின் பேரழிவு வரை எச்சரிக்கை செய்யத் தனி அமைப்பு தேவை.
கடல் நீர்மட்டம் உயர்வதால் தீவு நாடுகள் எதிர்காலத்தில் கடலில் மூழ்கும் அபாயம் இருக்கிறது. அங்கு நிலத்தடி நீரில் உப்புத் தன்மை அதிகரித்து குடிநீர் பஞ்சம் தலைதுாக்கும் என்பது அதைவிட அபாயகரமானது. ஏரிநீரில் உப்புநீர் கலந்து விஷத்தன்மை அதிகரிக்கும். உப்புநீரைச் சுத்திகரிக்கும் கருவிகளின் விலை மிகவும் அதிகரிக்குமென ரிச்சர்டு கிளெய்ன் கூறினார்.
சுற்றுச்சூழல் நிபுணர் பிரட்ஸ்மித், "கடலில் பவளப்பாறைகள் அழிக்கப்படுவதும் கடற்கரைக்குப் பேராபத்தை ஏற்படுத்தும். கடல் சீற்றங்களைத் தாங்காமல் கரையோரம் பலவீனமடையும். கரையோர சுற்றுச்சூழல் மாசுபடுதல், கடலில் அளவுக்கு அதிகமாக மீன்பிடித்தல் போன்ற காரணங்களால் உலகின் பவளப் பாறைகளில் 70 சதவீதம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன என்று சர்வதேச ஆய்வு முடிவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பவளப்பாறைகள் புயலைத் தடுக்கும் சுவர்கள். அவற்றை அழிப்பதால் கரையை எளிதில் புயல் தாக்கும் என எச்சரித்தனர்.
நன்றி நல்வழி மார்ச் 2005

“எதிர்காலத்தில் இயற்கைச் சீற்றங்கள் மேலும் ஐந்து மடங்கு அதிகரிக்கும்!”
எதிர்வரும் காலங்களில் இயற்கைச் சீற்றங்கள் மேலும் 5 மடங்கு அதிகரிக்கும் என்று அமெரிக்க அறிவியலாளர் எச்சரித்துள்ளனர்.
சென்ற டிசம்பர் 26இல் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் ஏராளமான மனித உயிர்கள் பலியாகி, கணக்கிலடங்காத பொருட் சேதமும் ஏற்பட்டது. இதே போல எதிர்காலத்தில் நிலநடுக்கம், எரிலை வெடிப்பு, வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி, போன்ற இயற்கைச் சீற்றங்கள் மற்றும் துயரங்களால் பல மடங்கு அதிகமானோர் உயிர் இழக்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவியலாளர் எச்சரித்துள்ளனர்.
1960ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 100 வெவ்வேறு வித இயற்கைச் சீற்றங்கள் நிகழ்ந்தன என்றால், 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் 500 துயர நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.
அதாவது இவை நிகழ்வது 5 மடங்கு அதிகரித்துள்ளது என அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக அறிவியலாளர் டேனியல் சரேவிட்ஸ் தெரிவித்தார்.
இதற்கு முக்கிய காரணம் இந்த மாதிரி பாதிப்பு நிகழும் அபாயம் உள்ள இடங்களில் மக்கள் குடியேறி வாழ்வதுதான். அவர்களின் வாழ்க்கை முறைகளும் முக்கிய காரணம் என்கிறார் அவர். வெள்ளப் பாதிப்புப் பகுதிகளிலும் வறட்சிப் பகுதிகளிலும் உலகின் பணக்கார மக்கள், ஏழை மக்கள் யாவரும் விரிந்து பரந்துள்ளனர்.
கடந்த டிசம்பரில் ஏற்பட்ட நில நடுக்க அழிவு, சுமாத்திராவின் மேற்கு கடலோர எல்லை முழுவதும் நிகழ்ந்தது. அதுபோல அமெரிக்காவின் கலிபோர்னியாப் பகுதியில் உள்ள சேன் ஆண்ட்ராஸ் எல்லைக்கோடு முழுவதும் திடீர் பாதிப்புக்கு உள்ளானால் பூமி உருண்டையின் விலைமதிப்பில்லா முக்கிய நிலப் பகுதிகள் பேரழிவடையும் அபாயம் உள்ளது என்கிறார்கள். இதில் பணக்கார மக்கள் வாழும் பகுதிகளில் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கட்டிடங்களின் அமைப்பும் தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுவதாகக்கூ ፲995l.
- 9 سه

Page 7
இயற்கை மருத்துவம் என்றால் என்ன.
இது ஒரு மருந்தில்லா மருத்துவம், காற்று, மண் நீர், சூரிய ஒளி போன்ற இயற்கை சக்திகளும் , சமைக்காத உயிருள்ள இயற்கை உணவுகளான தேங்காய், பழங்கள், காய்கறிகள், கீரைகள், இலைகள், முளைகள் முதலியவை மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றன.
அதாவது உணவே மருந்து : மருந்தே உணவு' என்பது தான் இயற்கை மருத்துவத்தின் தத்துவம். உங்களுக்கு நீங்களே மருத்துவர். இது ஒரு செலவில்லாத, பாதுகாப்பான, முற்றிலும் குணம் பெறக்கூடிய நம்பிக்கையான மருத்துவம். எந்த நோயாளியும் எளிதாகப் பின்பற்றி மிக விரைவாகக் குணமடையலாம். மருந்து மருத்தவத்தில் பல ஆண்டுகளாகக் குணமடைய இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்த நோயாளிகளில் மிகப்பலர், இயற்கை மருத்துவத்தில் ஒரு சில மாதங்களிலேயே குணமடைந்துள்ளனர். பொதுவாக சாப்பிடமுடியும் நடக்க முடியும் என்ற நிலையில் உள்ள நோயாளிகள் குணமடைவது மிகவும் எளிது என கூறலாம்.
இயற்கை மருத்துவத்தை வளர்த்தவர்கள்.
இயற்கை மருத்துவத்தில் இரத்தப்புற்று நோய் முதலிய அனைத்தப் புற்று நோய்களும் , வயிற்றுப்புண், குடற்புண் முதலிய அனைத்துப் புண்களும் ஆஸ்த்துமா, நீரிழிவு, தொழுநோய், சிறுநீரகக் கோளாறுகள், மாரடைப்பு, இரத்த அழுத்தம், மலட்டுத் தன்மை, யானைக்கால் வியாதி, காமாலை சயரோகம் முதலிய அனைத்து நோய்களும் குணமாகியுள்ளன.
இயற்கை மருத்தவம் இப்பொழுது உலகம் முழுவதும் மிக விரைவாகப் பரவி வருகின்றது. அரசாங்க அனுமதியுடன் இயற்கை மருத்தவக் கல்லூரி (5வருடப் படிப்பு) இந்தியாவில் ஹைதராபாத்திலும், கர்நாடகாவில் உளள தர்மஸ்தலாவிலும் இருக்கின்றது. மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளிலும் இயற்கை மருத் துவக் கல்லூரிகள் செயல்பட்டு இயற்கை மருத்துவத்தைப் பரப்புகின்றன. M.B.B.S , M.D. பட்டம் பெற்று புகழ் மிக்க பல ஆங்கில மருத்துவ மேதைகள் தான் இயற்கை மருத்தவத்தின் தந்தைகளாக இருந்து பயன்மிக்க பல இயற்கை மருத்துவ நூல்களை எழுதியும், இயற்கை மருத்துவமனைகளை
- I0 -

நடாத்தியும், எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்தியும், இயற்கை மருத்துவத்தை வளர்க்க ஆரம்பித்தனர். அவர்களுள் முக்கியமானவர்கள்.
1. Dr. August Rollier M.D. (Sunshine Therapy U.S.A.)
Dr. Benedict Lust M.D. (Father and Founder Naturopathy in America)
3. Dr. John Harvey Kellogg M.D. (Director, Nature cure Sanitorium,
Battie greek, Michigan) 4. Dr. Henry Lindlahr M.D.
(Author of a famous book in Nature cure)
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
நீங்கள் செய்த புண்ணியத்தினால் தான் இந்தப் புத்தகம் தங்கள் கையில் கிடைத்துள்ளது. நோய்கள் வருவதற்கான முக்கிய காரணங்களையும், ஆரோக்கியமாக வாழ பல ஆலோசனைகளையும் இப்புத்தகத்தில் காணலாம. ஒரு வரி கூட விடாமல் படிக்க வேண்டிய புத்தகம் இது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பழமொழிக்கேற்ப இந்த புத்தகம் தங்கள் கையில் கிடைத்தும், சோமி பேறித் தனமாகவோ, படிக்க நேரமிலி லை என ற காரணத்தினாலோ, படிக்கத்தவறினால், விலை மதிப்பில்லாத உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் இழக்க நேரிடலாம். ஆகவே படிக்க நேரமில்லாதவர்கள் கூட தினசரி இரண்டு பக்கமாவது தவறாமல் படித்து முழுவதையும் படித்து முடிக்கவும். இந்தப் புத்தகம் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே கிடைத்திருந்தால் நான் என் அம் மாவைக் காப்பாற்றியிருப் பேணி , எண் அணி ணனைக் காப்பாற்றியிருப்பேன் என்று கண்ணிர் விட்டுக் கதறியவர்கள் பலராவர்.
இயற்கை மருத்தவத்தின் உயிர் நாடி
சமைக்காத இலைகள், காற்கறிகள், பழங்கள், தேங்காய் முதலியனவே இயற்கை மருத்துவத்தின் உயிர்நாடி. இவைகளே அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்துகளாகும். ஆரோக்கியமானவர்களுக்கு இவைகள் நல்ல உணவாகும். சமைத்த உணவுகளை மட்டும் ஒரு வாரத்திற்கு ஒரு குதிரைக்குக் கொடுத்ததில் அக்குதிரையால் எழுந்த நடக்க் கூட முடியவில்லை. மேலும் இயற்கை உணவுகளைச் சாப்பிடும் ஆடு, மாடு, ஒட்டகம், குதிரை, யானை போன்ற உயிரினங்களின் சிறுநீரோ அல்லது மலமோ துர்நாற்றம்
- II -

Page 8
எடுப்பதில்லை. அவைகள் ஊனமுள்ள குட்டிகளைப் போடுவதில்லை. அவைகளுக்கு முடிநரைப்பதில்லை. கண்பார்வை குறைவதில்லை. சாகும் வரை பற்கள் விழுவதில்லை. அவைகளுக்கு மாதவிடாய்த் தொந்தரவுகள் இல்லை. சமைத்த உணவைச் சாப்பிடும் மனிதனின் சிறுநீரும் மலமும் துர்நாற்றம் வீசுகின்றது. மனிதனின் முடி நரைக்கின்றது. மனிதன் தான் மூக்கு கண்ணாடி போடுகின்றான். ஆரோக்கியமில்லாத குழந்தைகளைப் பெறுகின்றான். நோயாளியாகப் படுக்கின்றான். ஏதாவதொரு நோயின் இருப்பிடமாகவே தன் வாழ்நாளைக் கழிக்கின்றான்.
பஞ்ச பூதங்கள்
அப்படியென்றால் சமைக்காத இயற்கை உணவுகளைச் சாப்பிட்டு மனிதனால் சக்தியுடன் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி முடியும் என்பது தானே தங்களின் சந்தேகம்? மனித உடம்பு நீர், மண், காற்று, சூரிய வெளிச்சம், ஆகாயம் (ஈதர்) என்ற பஞ்ச பூதங்களால் ஆனது. இதே பஞ்ச பூதங்களை நாம் உணவாக உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். அந்த பஞ்ச பூதங்கள் நிறைந்தவை தான் உயிருள்ள இயற்கை உணவுகள். கரட், ஆப்பிள், தேங்காய் போன்ற எல்லா இயற்கை உணவுகளும் நாம் சாப்பிடும் வரை உயிரோடு இருந்து சுவாசித்துக் கொண்டிருக்கின்றன. (பழக்கூடைகளில் துவாரங்கள் போட்டு அனுப்புவது பழங்கள் சுவாசிக்கக் காற்று கிடைப்பதற்காகத்தான்) அவற்றில் நீர், மண் காற்று, சூரியவெளிச்சம், ஈதர் நிறைந்துள்ளன. ஒரு வெங்காயத்தை வேகவைத்து பின் வெட்டினால் கண் எரிச்சல் உண்டாகாது. ஏனென்றால் வேக வைத்த அந்த வெங்காயத்தில் பஞ்ச பூதங்களின் சக்தி அழிந்து விடுகின்றது. பச்சை வெங்காயத்தில் கண்எரிய வைக்கும் சக்தி இருபப்பது போல் ஒவ்வொரு இயற்கை உணவிலும் பல சக்திகள் இருக்கின்றன. அவைகள் தாம் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. பச்சைப்பூண்டு இரண்டு தான் சாப்பிடலாம். ஆனால் வேக வைத்த பூண்டு 200க்கும் மேல் சாப்பிடமுடியும். அப்படியென்றால் வேக வைத்து பூண்டுகளை விட இரண்டு பச்சை பூண்டுகளில் பஞ்ச பூதங்களின் சக்தி அதிகமாக உள்ளது என்பதுதானே இதன் பொருள் அந்த சக்திதான் பஞ்சபூதங்கள். நிறைந்த நோய் நீக்கும் சக்தி. காய்கறி பழங்களில் எண்பது சதவிகிதம் தண்ணீர் தான் உள்ளது. இந்த தண்ணிரால் மட்டும் தான் உடலில் உள்ள நோய்ப் பொருள்களைக் கரைத்து உடம்பை விட்ட வெளியேற்ற முடியும்.
- 12 -

இந்த உலகத்தில் உணவுப் பொருள்களை இரத்தமாக மாற்றுவதற்கு இயந்திரங்கள் இல்லை. மனிதனுடைய வயிற்றில் தான் உணவுகளை இரத்தமாக மாற்றும் ஒரு சக்தி அமைந்துள்ளது. தாயின் கருப்பையில் வளரும் குழந்தைகளுக்கு கண், காது, சிறுநீரகம், கல்லீரல், இருதயம் உண்டாவதற்காக எந்த மருந்துகளையோ, இயந்திரங்களையோ உபயோகிப்பதில்லை. பஞ்ச பூதங்களின் உதவியால் மனித உடல்தான் ஒரு குழந்தைக்குத் தேவையான உறுப்புகளையெல்லாம் உண்டாக்குகின்றது. குழந்தைக் குத் தேவையான உறுப்புக்களை உண்டாக்கிய இந்த உடம்புக்கு இந்த உடம்பிலுள்ள நோய்களை குணப்படுத்தத் தெரியாதா? பஞ்ச பூதங்களை (இயற்கை உணவுகளை) நாம் சாப்பிடாத ஒரே காரணத்தினால் தான் மனிதனின் உடலுறுப்புக்கள் பழுதடைகின்றன. மனிதன் நோயாளியாகின்றான். குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு கூட பருவம் அடைந்த பொழுது புதிய உறுப்புக்கள் பல தோன்றி வளர்வதையும் நாம் பார்க்கின்றோம். தேவையான அளவுக்கு பஞ்ச பூதங்கள் பருவத்திற்கு வரும் காலத்தில் கிடைக்காததால் தான் மனிதன் மலட்டுத்தன்மை பெறுகின்றான்.
பெண்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சியடையாமல் நின்று விடுகின்றது. கருவுற்ற தாயிடம் குழந்தை பெறுவதற்கு ஒரு நிமிடம் முந்தி கூட தாய்ப்பால் வெளிவருவதில்லை. குழந்தை பிறந்த மறுநிமிடமே தாய்ப்பால் கிடைக்கின்றது. அதற்காக நாம் மருந்து மாத்திரைகளை நம்பவில்லை. உலகத்திலேயே மிகவும் அதிகமாகப் படித்த ஒரு டாக்டர் இந்த மனித உடல். இந்த மனித உடலுக்குத் தெரியும் எந்தெந்த நேரத்தில் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று, நீங்கள் பஞ்ச பூதங்களை மட்டும் குறைவின்றி உணவாகக் கொடுத்தால் எல்லா விதமான நோய்களையும் குணப்படுத்த இந்த மனித உடலுக்குத் தெரியும்.
புரதச் சத்தக் கிடைக்க
ஒரு நிலக்கடலையை ஒரு தொட்டியில் நட்டு வைத்தால் அது செடியாகி 4 மாதத்திற்குள் முற்றிய நிலக்கடலையைத் தருகின்றது. அந்த நிலக்கடலைப் பருப்பில் கொழுப்பு, புரதம், கார்போஹைடிரேட், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் நிரம்பியுள்ளன. ஒரு இளநீர் 4 மாதத்திற்குள் முற்றிய தேங்காயாக மாறுகின்றது. அந்தத் தேங்காயில் எல்லாவிதமான சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. அந்த நிலக்கடலைச் செடிக்கும், ဓမ္မာခေါ်ဝှား၊ மரத்திற்கும் உணவாக நாம்

Page 9
பால், முட்டை, மாமிசம், அரிசி, பருப்பு, கொடுத்தோமா? நாம் கொடுத்ததெல்லாம் நீர், மண், காற்று, சூரிய வெளிச்சம் மட்டும் தானே? இந்தப் பஞ்ச பூதங்களின் உதவியால் ஒரு தாவரம் கொழுப்பு, எண்ணெய், புரதம் முதலியவற்றை உண்டு பண்ணத்தெரிந்திருப்பதைப் போல, இந்த மனித உடம்புக்கு பஞ்ச பூதங்கள் நிறைந்த இலை, காய்கனிகளின் உதவியால் தனக்குத் தேவையான கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், தாது உப்புக்கள் எல்லாவற்றையும் உண்டு பண்ணத் தெரியும். அப்படி இருக்க நம் குழந்தைக்கு கொழுப்பு சக்தி கிடைக்க பால், முட்டை, ஆடு, மாடு, கொழி மாமிசம் கொடுக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கின்றது? மாமிசத்தில் தான் மனிதனுக்குத் தேவையான எல்லா புரதங்களுக்கும் கிடைக்கின்றது என்று சொன்னால் அந்த மாமிசத்திற்கு அந்த புரதங்கள் எங்கிருந்து வந்தன? இலைகளிலிருந்து தானே வந்திருக்க முடியும். இன்று 50 கிலோ எடையுள்ள ஒரு குதிரை அடுத்த வருடம் 500 கிலோ எடை வரை வளர்ந்து விடுகின்றதே (வெறும் இலைகளை மட்டும் சாப்பிட்டால் கூட) நாம் நமது குழந்தையின் எடையை வருடத்திற்கு 2 கிலோ கூட்டுவதற்கு எவ்வளவு கஷ்டப்படுகின்றொம் என்று நினைத்துப் பாருங்கள். நமக்குத் தேவையான பஞ்ச பூதத்தில் நாம் குறைவைப்பதால் தான் நமக்கு அத்தனை கஷ்டங்கள்.
சமைக்காத உணவுகளைச் சாப்பிடலாமா?
உலகில் உள்ள எல்லா மிருகங்களும் புழு பூச்சிகள் கூட சமைக்காத உணவுகளையே உண்டு வாழ்கின்றன. ஒரு எறுப்பு கூட சமைக்காத அரிசியை இழுத்துச் சென்று உண்டு வாழ்கின்றது. மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களும் சமைக்காத உணவுகளை உண்டு ஆரோக்கியமாக நோயின்றி மிகுந்த சக்தியுடன் வாழ்வதை மனிதன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான். எனவே உணவுகளை சமைத்துத்தான் உண்ண வேண்டும். சமைக்காமல் சாப்பிடவே கூடாது என்பது எவ்வகையில் நியாயமாகும்? முழுவதும் சமைத்த உணவுகளை மட்டுமே உண்டு வாழும் மனிதன் மிக விரைவில் நோயாளியாகின்றான். பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதன் நெருப்பை கண்டு பிடிக்காத பொழுது சமைக்காத முழு இயற்கை உணவுகளையே சாப்பிட்டுதான் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கின்றான்.
மனிதன் வேறு, மிருகங்கள் வேறு, மனிதனை மிருகங்களுடன் ஒப்பிடலாமா? என்று கேட்கின்றனர். மாடு, பன்றி, போன்ற மிருகங்களின்

கல்லீரலிலிருந்து எடுக்கப்படும் இன்சுலினை மட்டும் மனிதனுக்கு உபயோகிக்கலாமா? அவற்றின் ஈரலிலிருந்தும் எடுக்கும் சாற்றை ஹிமோ குளோபின் டானிக்கில் கலக்கலாமா? ஊசி மருந்துகளைத் தயாரிக்கும் பொழுது சோதனை செய்வதற்கு மிருகங்களைத் தானே உபயோகிக்கின்றனர். அப்பொழுது மட்டும் மிருகங்களை ஒப்பிடலாமா? மனிதன் நலமுடன் வாழ மிருகங்களை மனிதனை உபயோகிக்காமல் மிருகங்கள் வாழும் வழி முறைகளைப் பின்பற்ற சிந்திக்க வேண்டும்.
தடுப்பு ஊசி
சமைக்காமல் பச்சையாக உண்ணும் போது பழங்களிலும் காய்கறிகளிலும் உள்ள கிருமிகளினால் மனிதனுக்கு ஆபத்து இல்லையா என்று பலர் கேட்கின்றனர். மனிதனுடைய நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நோய்க் கிருமிகளையே தடுப்பு ஊசியாக போடப்படுகின்றது. (உதாரணம்: அம்மை தடுப்பு ஊசி) அதே போல பச்சைக் காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ள கிருமிகள் மனிதனுக்குத் தடுப்பு ஊசியாக பயன்படுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கின்றது.
சமைப்பதினால் விஷங்கள் அழிந்து விடுவதில்லை. பாலிடால் விஷத்தைக் கொதிக்க விட்டு சாப்பிட்டாலும் இறந்து விடுவோம். பச்சைக் காய்கறிகளிலும் விஷத்தை வெளியேற்றும் சக்தி இருக்கின்றது. சமைத்தால் தான் அந்த சக்தி அழிந்து விடுகின்றது. சமைக்காத உணவுகளில் உள்ள விஷங்கள் வெளியேற்றும் சக்தி அந்த உணவிலேயே இருக்கின்றதால் தைரியமாக இயற்கை உணவுகளைச் சாப்பிடலாம்.
நன்றி. உயிருள்ள இயற்கை உணவுகள் டாக்டர் ஏ.வி.ஜி. ரெட்டி M.Sc., N.D.D.R.T.
- I5ر -

Page 10
G3535 Guu G5Ĩung 6īt yün
Aestheticism (sigfuIgo)
அழகுணர்ச்சியை மற்ற வாழ்வியல் நெறி முறைகளினின்றும் முதன்மைப்படுத்தி கலை, இலக்கியங்கள், ஒவியங்களில் வெளிப்படுத்தும் போக்கு, கெதே, வழில்லர், கால்ட்ரிஜ், கார்லைல் போன்றோரின் படைப்புகளில் இதைக்காணலாம்.
Afro-centrism (ஆய்பிரிக்க உயர்வுக் கொள்கை)
அமெரிக்கக் கறுப்பர்களை வெள்ளையரை விட உயர்ந்த இனத்தவராக முன்னிலைப்படுத்தும் ஓர் இயக்கம். பண்டைய நாகரிகம் எகிப்து நாட்டில் தோன்றிப் பின்னர் கிரேக்கர்களால் பின்பற்றப்பட்டு, அதன் பின்னர் காக்கேசிய வெள்ளையராலும் தழுவிக்கொள்ளப்பட்டது என்பதே இதன் அடிப்படையான நம்பிக்கை.
Allegory (உருவகக்கதை)
ஒரு பொருளைப் பிறதொன்றின் மேல் ஏற்றிச் சொல்லும் இலக்கிய விளக்கம் அல்லது குறிப்பு. கற்பனையான பாத்திரங்கள் மூலம் உருவகமாக நீதி நெறியினைச் சொல்லும் கதை, கவிதை அல்லது உரை நடைநூல்.
Amish (sablfelp guessarir)
நகர்புற, தற்கால வாழ்க்கை முறையைப் புறக்கணிக்கும்
கிருத்தவக் குழுவினர். மென்னெட் திருச்சபையினை அடிப்படையாகக்
கொண்ட இப்பிரிவு அமெரிக்காவிலும் கனடாவிலும் காணப்படுகின்றது.
Amnesia (LDpbsso apbruti)
தன்னுள்ளே இருக்கும் செய்திகளை நினைவுபடுத்தித் திரும்ப
வெளிக்கொணரும் ஆற்றல் இன்மை. மூளையில் ஏற்பட்ட கடுமையான
சேதத்தின் விளைவினால் ஏற்படும் சீர்குலைவு.
Anarchism (JupiuLIGAITyú)
முறையான தலைமையினை மறுப்பதும், அரசு என்பது தேவையற்ற கேடு எனவும் கூறி சுயமான, தன்னார்வக் கூட்டுறவை
- I6ر -

வலியுறுத்தும் ஒரு அரசியல் கோட்பாடு. தற்காலத்தில் குழப்பவாதம் என்பது சட்டம், ஒழுங்கின்மையைக் குறிக்கிறது.
Anomie (சீர்குலைவு)
சமூகத்தில் நிலவுகின்ற நன்னடத்தை, ஒழுங்கு, நாணயம்
ஆகிய இயல்புகளின் சீர் குலைந்த தன்மை, சமூக அமைப்பின்
கட்டுக்கோப்பு சிதைந்து போன தன்மை.
Anthology (தொகுப்பு)
பல்வேறு படைப்பாளர்களின் உரைநடை, பாடல் ஆகியவற்றின் தொகுப்பு நூல்.
Apartheic (&or segrásasso)
தென்னாபிரிக்காவில் 1990 வரைபின்பற்றப்பட்ட இன ஒதுக்கல் கொள்கை, வெள்ளையரைப் பிற இனத்தவரினின்றும் பிரித்து வைக்கும் சட்டரீதியான ஏற்பாடு.
Aphrodisiac (வசியமருந்து)
பாலுணர்வை எழுப்பி வீரியத்தை உண்டு பண்ணும் அல்லது அதிகரிக்கின்ற ஒரு அரிய பொருள்.
Arbitration (gbbsogos Eirip
நடுநிலையான மூன்றாவது நபரிடம் பூசலை தீர்த்து வைக்கக் கோருதல்.
Atavism (மீட்சி அடைதல்)
நெடுங்காலத்துக்கு முந்தைய மூதாதையரின் அங்க அமைப்பும், குண இயல்பும் பல ஆண்டுகால இடைவெளிக்குப்பின்னர் ஒரு நபரிடமோ, தாவரத்திடமோ மீண்டும் தோன்றுவதைக் குறிக்கும் கோட்பாடு.
Atheism (நாத்திக வாதம்)
கடவுளே இல்லை எனும் கருத்து. நாத்திக வாதிகளின்
கொள்கைப்படி நாம் கண்ணால் காணும் பிரபஞ்சமே உண்மை. உலகில்
காணப்படும் தீமைகளே கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம்.
- 17

Page 11
Autarky (தன்னிறைவு)
தன்னிறவு எனும்பொருளைத்தரும் கிரேக்கச்சொல். இன்றைய பொருளாதாரத்தில் பிற நாட்டுத் தொடர்பின்றி விளைபொருள், வருமானம் ஆகியவற்றில் போதுமான நிறைவு பெற்றிருப்பதைக் குறிக்கும் ஒரு கலைச்சொல்.
Autism (ஒதுங்கும் இயல்பு)
தனித்து ஒதுங்கியிருக்கும் இயல்பு. வேறு யாரிடமும் தொடர்பு
கொள்ளாமல் தானாகவே ஒதுங்கித் தனிமைப்படுத்திக் கொள்ளும்
இந்த இயல்பு பொதுவாகக் குழந்தைகளிடம் காணப்படுகின்றது.
Autocracy (FBGfBlufr FfrGITTSBITUTíb)
அனைத்து அதிகாரங்களும் தனி நபரிடம் குவிந்து எவ்வித தடையுமற்ற யாரும் எதிர்க்க இயலாத அரசியலமைப்பு
Avant Garde (appGIITág,5 365r6DID)
முன்னேறும் குழு என்பது இதன் பொருள். இந்த பிரெஞ்ச் சொல் பொதுவாக புரட்சிக்காரர்களைக் குறிப்பது. பின்னர் அவரது இயக்கங்களையும் மற்றும் நடப்பு நிலையிலிருந்து மாறுபட்டு இயங்கும் முற்போக்கான பண்பாட்டுக் குழுவினரையும் இச்சொல் குறிக்கும்.
நன்றி. மனோரமா இயர்புக்- 2002
உங்கள் ஆக்கங்களையும்
அபிப்பிராயங்களையும் எதிர்பார்க்கிறோம்.
அனுப்ப வேண்டிய முகவரி
அறிவு 97, பிரதான விதி, திருக்கோணமலை.
- 18 -

Dai - 3566) (e-Education)
எம்.சிவலிங்கம் - விரிவுரையாளர், மண்டலத் தொலைதொடர்பு மையம், சென்னை.
மரபு வழிக் கல்வி முறைக்கு மாற்றாக வேறெந்தக் கல்வி முறையும் இருக்க முடியாது என்பதில் ஐயமில்லை. எனினும் மாணவர்கள் கல்வி பெறுவதற்கான மாற்று வழிமுறைகளின் தேவையைக் குறித்து சிந்தனை எழுந்துள்ளது.
பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகம் சென்று பயில்வதற்கும் அப்பால் புதிய முறைகளில் கல்வி கற்கும் தேவைகள் இருக்கவே செய்கின்றன. நம்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பல, இரண்டு வழிகளில் இத் தேவையை நிறைவு செய்கின்றன. 1. அஞ்சல் வழிக் கல்வி (Correspondence) 2. Gig5T60)6Oddb6)6) (Distance Education) (gpg56)T61g) முறையில் பாடங்கள் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படுகின்றன. மாணவர்கள் தாங்களாகவே படித்துக்கொள்ள வேண்டும். சில குறிப்பிட்ட மையங்களிலி சிலநாட்கள் ஆலோசனை வகுப்புகள் நடைபெறுவதும் உண்டு. தொலைக்கல்வி முறையில், குறிப்பிட்ட மையங்களில், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாடகளில் வகுப்புக்கள் நடைபெறும். வழக்கமாகக் கல்லூரிகளில் கற்பிக்கப்படுவது போன்றே பாடங்கள் நடத்தப்படும். வகுப்புத் தேர்வுகள் (Class Test), வீட்டுப் பாடங்களும் (ASSingments) உண்டு மேற் கண்ட இரண்டு முறைகளுக்கும் பெரிதும் வேறுபாடு இல்லாத வகையிலேயே இன்றைக்குப் பெரும்பாலான கல்கலைக்கழகங்கள் அஞ்சல்வழி தொலைக் கல்வியை கற்பித்து வருகின்றன.
கணிப்பொறிப் புரட்சியும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் கற்றலிலும் , கற்பித் தலிலும் பல புதிய பரிமாணங்களை அறிமுகப்படுதியுள்ளன. இவற்றை முறையே மின் - கற்பித்தல் (e - Learning) என்றும் மின் - கற்றல் (e-Teaching) என்றும் வகைப்படுத்தலாம். இரண்டையும் சேர்த்து மின் - கல்வி (e - Education) எனலாம் மின் கல்வியின் சிறப்புக் கூறுகளை இரண்டு கோணத்தில் நோக்க வேண்டும். 1. மரபுவழிக் கல்விமுறைக்குக் கூடுதல் வலுசேர்க்கின்ற கணிப்பொறி வழியிலான கல்வி கற்றலும், கற்பித்தலும். 2. முற்றிலும் கணிப்பொறி இணையம் வழியாகவே தருகின்ற / பெறுகின்ற கல்வி.
கணிப்பொறியின் வருகையால் ஆசிரியர்களுக்குப் பல புதிய
- 19 -

Page 12
கருவிகள் கிடைத்துள்ளன. ஆசிரியர் தன் பாடக் குறிப்புக்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கணிப்பொறியில் உருவாக்க முடியும். கணிப்பொறியில் இணைக்கப்பட்ட படப்பெருக்கி மூலம் விரிந்த திரையில் காட்டி விளக்க முடியும். உரை, படம், அசைவூட்டம், ஒலி, நிகழ் படம் ஆகிய ஐந்து வகை ஊடகங்களும் , இணைந்த பல்லுTடகக் கருத்துவிளக்கங்கள் (Multimedia Presentations) இத்தகைய பல்லூடகக் கருத்து விளக்கங்களை உருவாக்குவதற்கென்றே தனிச்சிறப்பான மென்பொருள் தொகுப்புகள் (Software packges) இருக்கின்றன. ஆசிரியர் பலகையில் படம்வரைந்து எழுதி விளக்க முடியாத பல நுட்பமான தகவல்களை (சுவாச அமைப்பு, இதயத்தின் இயக்கம், நரம்பு மண்டலம், சூரிய மண்டலம் மற்றும் பிற) அசைவூட்டப்படங்கள் (Animation pictures) மூலமாக எளிதில் விளக்க முடியும். மாணவர்களுக்கு எளிதில் புரிவதோடு, ஆசிரியர் பாடம் நடத்துகின்ற நேரமும் பெருமளவு குறையும்.
கணிப்பொறி வாயிலாகக் கற்றலுக்கும் வழியுள்ளது. ஆசிரியரின் உதவியின்றி மாணவர்கள் கணிப்பொறி மூலமாகக் கற்பதற்கென 6JT6TLDT601 UTLSE6i (Computer Based Tutorials - CBT) (gp16) (6556ssi) (CDS) கிடைக்கின்றன. பல்லூடக வழிமுறைகளில் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஓர் ஆசிரியர் நேரில் பாடம் நடத்துவதுபோன்ற குரல்வழி விளக்கங்களும் உள்ளன. நள்சரி வகுப்புமுதல் பல்கலைக்கழகப் பட்ட மேற்படிப்பு வரையிலான பாடங்கள் குறுவட்டுக்களில் கிடைக்கின்றன. வீட்டில் சொந்தமாக கணிப்பொறி வாங்கி வைத்துக்கொள்ளும் அளவுக்கு வசதியுள்ள மாணவர்கள் மட்டும் இத்தகைய வசதியைப் பெறுவார்கள் என்பதில்லை. பள்ளி நூலகங்களில் நிறுவப்படும் கணிப்பொறிகளிலும் இத்தகைய பயன்களைப் பெற முடியும்.
அடுத்தாக, முற்றிலும் கணிப்பொறி / இணையம் வழியான கல்வியைப் பார்ப்போம். மூன்று கோணங்களில் இதனை அணுக முடியும். 1. ஏற்கனவே தொலைக் கல்வி முறையில் கல்வியளிக்கின்ற பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற பட்ட/ பட்டய வகுப்புக்கள். 2. முற்றிலும் இணையம் வழியாகவே கல்வி தருகின்ற மெய்நிகர் பல்கலைக் கழகங்கள் (Virtual Universities) நடத்தும் வகுப்பகள், 3. கணிப்பொறிப் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பிற இணையத் தளங்களின் மூலமாக வழங்கப்படும் கல்வி / பயிற்சி.
அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இணையம் வழியாகப் - 20

பல்வேறு பட வகுப்புக்களை நடத்திரீேண்குறிர்க்ப்பட்ட மேற்படிப்பு சான்றிதழ், பட்டயப் படிப்புக்களை இணையம் வழியாக வழங்குகின்றன. படிப்புக்கு விண்ணப்பித்தல், நுழைவுத் தேர்வு, தேர்வு முடிவு வெளியிடல், மாணவராகப் பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல், பாடக்குறிப்புக்கள் வழங்கல், பாடப்பயிற்சிகள் (ASSignments) சமர்ப்பித்தல், இறுதித் தேர்வு, சான்றிதல் வழங்கல் அனைத்து நடவடிக்கைகளும் இணையம் வழியாகவே நடைபெறுகின்றன. மெய்நிகர் வகுப்பறைகளில் (Virtual Class Rooms) மாணவர்கள் பயிலலாம். அதாவது, ஒரு கணிப்பொறி முன்னால் அமர்ந்துகொண்டே வகுப்பில் கலந்து கொள்ளலாம். எங்கோ ஓரிடத்தில் கேமரா முன்பு ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருப்பார். ஆனால், எந்த மூலையிலிருந்தும் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் கூறுவார்.
இந்தியாவில் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சில குறிப்பிட்ட கணிப்பொறிப் பட்டய வகுப்புக்களை இணையம் வழி நடத்துகின்றன. எம்பிஏ போன்ற பட்ட மேற்படிப்புக்கு, தொலை நிலைக் கலந்துரையாடல் (Teleconferencing) முறையில் மெய்நிகள் வகுப்புக்களை நடத்துகின்றது. சில ஐஐடிகள், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களும் இணையம் வழிக் கல்வியை வழங்க முன்வந்துள்ளன.
மெய்நிகர் பல்கலைக் கழகங்களும் (Virtual Universities) உருவாகி வருகின்றன. தமிழ் நாட்டில் தமிழ்நாடு அரசு 'தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை அமைத்துள்ளது. குறிப்பாக, வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் கற்றுக் கொள்வதற்கான பாட வகுப்புக்களை வழங்குகிறது. சான்றிதழ், பட்டய, பட்ட வகுப்புக்களும் உண்டு. பல்லூடக முறையில் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, வெளிநாட்டவர் சரியான உச்சரிப்புடன் தமிழைக் கற்றுக்கொள்ள முடியும்.
மூன்றாவது வகை பல்வேறு கணிப்பொறிப் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பல வலையங்கள் (Websites) நடத்துகின்ற நிகழ் நிலை (on line) பாட வாகுப்புக்களையும், பயிற்சிகளையும் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக, இந்தியாவின் செல்வாக்கு மிக்க கணிப்பொறிப் பயிற்சி நிறுவனம் என்ஐஐடீ (NIT), நெட்வர்சிட்டி (Netvarsity) என்ற பெயரில் பல்வேறு நிலைப் பாடவகுப்புக்களை (Online Courses) நடத்தி வருகிறது. அதுபோலவே, ஆப்டெக் (Aptech) நிறுவனம் ஆன்லைன்வர்சிட்டி (On
- 2 -

Page 13
line varsity) என்ற பெயரில் இணையவழிப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றது. இவற்றில் மாணவராகப் பதிவுசெய்வோர் இணையம் வழியே பாடங்களைப் படித்துக்கொள்ள வகைசெய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்படும். அதுவும் இணையம் வழியாகத்தான். இவைதவிர பல்வேறு இணையத்தளங்கள் நிகழ்நிலைப் பாடப்பயிற்சியை (On line Tutorials) இலவசமாக வளங்குகின்றன. யாரும் அவற்றைப் படிக்கலாம். நிகழ் நிலைத் தேர்வினை எழுதி உங்கள் தகுதியை மதிப்பிட்டுக் கொள்ளலாம். குறிப்பாக சி, சி + +, ஜவா சி# ஹெச்டிஎம் எல், எக்ஸ்எம்எல் போன்ற கணிப்பொறி மொழிகளைக் கற்றுக் கொள்வதற்குரிய இணையத்தளங்கள் உள்ளன.
மரபுவழிக் கல்விக்கும், இணையம் வழிக் கல்விக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மரபுவழிக் கல்வி ஆசிரியரை மையமாகக் கொண்டது. ஒற்றை ஆசிரியர் தன் அறிவை வெளிப்படுத்துகிறார். அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான கல்வியே பெறுகின்றனர். அறிவுத்திறன் மிக்க மாணவர்கள் எளிதில் புரிந்துகொண்டு பயன்பெறுகின்றனர். பின்தங்கிய மாணவர்கள் மேலும் பின்தங்கி விடுகின்றனர். ஆசிரியர் குறிப்பிடும் நேரத்தில் மாணவர்கள் கற்பதற்கு வரவேண்டும். ஒரு மாணவருக்காக ஆசிரியர் முந்தைய பாடங்களை நடத்தமாட்டார். ஒருவகையில் செலவு கூடுதலானது.
இணையம் வழிக் கல்வி மாணவரை மையமாகக் கொண்டது. பல்வேறு வல்லுநர்களின் மேதமையைத் திரட்டிப் பாடமாகப் பெறமுடியும். ஒவ்வொரு மாணவரும் தத்தமது திறனுக்கு ஏற்ப பாடங்களைத் தேர்வு செய்து மெதுவாக அல்லது விரைவாகப் படித்துச் செல்லலாம். திறமை குறைந்த மாணவர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் படித்துக் கொள்ளலாம். ஒரு மாணவரின் பலம் அல்லது பலமின்மை மற்றவர்களுக்குத் தெரியப் போவதில்லை. தேவையெனில் முந்தைய பாடங்களைத் திரும்பவும் படித்துக்கொள்ளலாம். செலவு குறைவானது. நல்லாசிரியன் அன்பும் அரவணைப்பும் கவனிப்பும் இணையம் வழிக் கல்வியில் கிடைக்காது என்பது ஒரு குறிப்பிடத்தக்க குறைபாடு ஆகும்.
கற்றல் - கற்பித்தலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பிற்காலத்தில் மணவர்களின் எண்ணங்கள், சிந்தனைப் போக்குகளிலும் மிகப் பெரும் மாற்றங்களை ஏற்படுக்க வழியுள்ளன. ـــــ
நன்றி - மனோரமா இயர்புக் - 22

寅 食 tung unggun
பொ. கந்தையா மனிதனை மனிதனாக்குவது மதம், மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்துவது மதம், நிலையற்ற உலக விஷயங்களிலிருந்து மனிதனை மீட்டு நிலையான விண்ணுலகப் பெருவாழ்வுக்கு அழைத்துச் செல்வது மதம். மதத்தை ஸ்தாபித்தவர்கள் பெரிய ஞானிகள், கடவுளின் அடியார்கள், கடவுளின் தூதுவர்கள், கடவுளின் அவதாரங்கள். இத்தகைய மதத்தைவிட்டு ஒருவரும் ஓடத் தேவையில்லை. கையில் கற்கண்டை வைத்துக்கொண்டு சீனியைத் தேடி ஏன் ஓட வேண்டும். கற்கண்டும் சீனியும் ஒன்றுதானே!
"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவனானினும் நனிசிறந்தனவே' என்பது பாரதி வாக்கு. இதுபோல் நாம் உதித்த மதமும் பெருமதிப்புக்குரியதேயாகும். பணத்துக்கும், படிப்புக்கும், பட்டத்திற்கும், உத்தியோகத்திற்கும், திருமணத்திற்கும், உண்ணும் உணவுக்கும், உடுக்கு உடைக்கும், உறங்கும் குடிசைக்கும் மதம் மாறும் மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேலும் கொடுத்தால் இன்னுமொரு மதத்திற்கு மாறுவார்கள். இந்த மதமாற்றம் அறியாமையையும் அவர்கள் அஞ்ஞான இருளில் இருப்பதையும் குறிக்கின்றது. இவர்களை அறியாமையிலிருந்து அறிவுடமைக்கும், இருளில் இருந்து ஒளிக்கும் கொண்டுவர வேண்டும். இருக்கும் மதத்தில் மனப்பக்குவத்தையும் மனமாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
மதம் மாறுவதால் ஒரு மனிதன் வாழ்க்கையில் மேம்பாடடைய முடியாது. தன் மதத்தை ஆழ்ந்து ஆராய்ந்து நன்கு படித்து தனது மதகுருவின்ட வழிகாட்டலில் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், மேல்நிலை அடையலாம். எல்லா மதங்களும் ஒரே கடவுளைப் பற்றியும் அவரை அடையும் வழிமுறைகளைப் பற்றியும் நிறையப் போதிக்கின்றன. அப்படியிருக்க ஒரு மதத்தை விட்டு இன்னொரு மதத்திற்கு ஏன் மாற வேண்டும்.
பசுக்கள் பல நிறங்களில் இருக்கலாம். ஆனால் அவற்றின் பால்

Page 14
எல்லாம் ஒரே நிறமாக, ஒரே குணமாகவே உள்ளது. அதுபோல் மதங்கள் பல பெயரில் இருந்தாலும் அவை தெரிவிக்கும் உண்மை ஒன்றே. பாலுக்காகக் கறுத்தப் பசுவை விற்றுவிட்டு வெள்ளைப் பசுவை வாங்குவது அவசியமில்லை. எல்லா மதங்களிலும் உயர்ந்த கருத்துக்கள் இருக்கும்போது மத மாற்றம் அவசியமில்லை.
பிறரை மதம் மாற்றுவதில் ஈடுபடுவோர் குளிக்கப்போய் சேறு பூசுகிறார்கள். தன் மதத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் மதத்தைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ எவ்வித அறிவும், ஞானமும் இல்லாதவர்களாக இருக்கையில் அவர்களைத் திருத்தி, அவர்களுக்குப் போதித்து , அவர்களைத் தெய்வத் தன்மைக்கு உயர்த்தாது, அவர்களை அஞ்ஞான இருளில் மூழ்கவிட்டு, புது ஆட்களை மதத்திற்கு சேர்க்கப் புறப்படுகிறார்கள். இப்படி மதத்திற்கு எண்ணிக்கையைக் கூட்டுவதால் எவருக்கும் பயன் இல்லை.
t மதகுருமார்கள் தம் மகத் தரில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தையும் அணுகி மதத்தின் உயர்வையும், கடவுளின் மேன்மைகளையும், மத அறிவினால் மத ஒழுக்கத்தினால் மனிதன் தெய்வம் ஆகலாம், என்ற உண்மையையும் எடுத்து விளக்கி அவனை அஞ்ஞான இருளில் இருந்து ஞான ஒளிக்குக் கொண்டு வந்தால் அதுவே பெரிய சேவையாகும்.
எல்லா மதங்களும் அடிப்படைக் கொள்கைகளைப் புறக்கணித்து விட்டன. சடங்குகளும், சம்பிரதாயங்களுமே மிஞ்சிக்கிடக்கின்றன. மதக் கொள்கைகள் நல்லவைகள்தான். ஆனால் அவற்றைக் கைக்கொள்ள முடிவதில்லை என்கிறார்கள். அத்தோடு நாகரிகத்தின் பேரால் வேண்டாத பழக்கங்களையும் கட்டித் தழுவும் சமுதாயம், எப்படிக் கடவுளைத் தேட - கடவுளை அடைய முடியும்.
புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகினால், புகையிரதமும், பழுதாகி பிரயாணிகளும் உயிரிழக்க - காயப்பட நேரிடும். அதுபோல் மத ஒழுக்கத்தை - மத வாழ்க்கையை விட்டு விலகிய சமுதாயம்
- 24 -

தானும் அழிந்து மதத்தையும் அழித்து விடுகின்றது. ஒவவொருவரும் தான்பிறந்த மதத்திலேயே உறுதியாக நிலைபெற்று நின்று அம்மதத்தில் ஈடேற்றப் பாதையினைத் தெரிந்து கடவுளைச் சென்றடைய வேண்டும். கடவுளை அடைவதற்கு மதமாற்றம் துணை செய்யாது. சமயகுருமார்கள் ஒவ்வொரு மனிதரையும் வேறு சமயத்துக்குச் செல்லவிடாது, தன் மதத்தின் சிறப்புக்களை எடுத்துக்கூறி, அம்மதத்தில் நம்பிக்கையை உண்டாக்கி, பேரின்பமாகிய தெய்வீக நிலைக்கு உயர்த்த வேண்டும்.
நல்லதைச் செய்தால் நல்லதை அடையாளம் என்பதைக் கூறி, நம்பிக்கை அற்றவனுக்கும் நம்பிக்கையை ஊட்டி, அவனது வாழ்ககையைப் பேரின்பமாக்குவதே உண்மை மதத்தின் உயரிய கொள்கை. "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்” என்பது பழமொழி. மந்திரத்திலும் மனப்பக்குவமே மேலானது. கடவுளுடைய நாமத்தை மந்திரத்தைச் சொல்லுவதால் மனப்பக்குவம் ஏற்படும். “கடவுளை நம்பினோர் கைவிடப்படார். எல்லா மதத்திற்கும் இவை பொருந்தும். எனவே மதம் மாறி அலையவேண்டியதில்லை. தன் அயலில் உள்ள கடலில் முத்திருக்கும்போது தூர உள்ள கடலுக்குச் சென்று முத்தைத் வேண்டியதில்லை. "இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை” கடவுள் எங்கும் இருக்கிறார். எமக்குள்ளேயும் இருக்கிறார். அவரைக் கண்டு கொள்வதே O95l D.
மத மாற்றம் என்பது ஒரு போலிப் புறச் சடங்காகும். அதனால் புறத் தூய்மையோ அகத்தூய்மையோ ஏற்படாது. மதம் மாறிய சிலர் மனதில் ஒரு மதம், வெளியில் ஒரு மதமாக அலைவதைப் பார்க்கிறோம். இரண்டு தோணியில் கால் வைத்தவன் பிரயாணம் என்னவாகும்? நாம் பிறந்திருக்கும் மனத்தில் பொதிந்திருக்கும் உண்மைகளைத் தெரிந்து உயர்நிலையை அடைய முயற்சிப்பதே நமது கடமை. எமது மதத்தில் குற்றமுண்டு. எனவே பிறமதத்தையும் தழுவுவோம், என்று அதில் சேர்ந்து அதிலும் குற்றம் கண்டு வாழ்க்கையை வீணாக்கக் கூடாது. இரண்டு முயல்களைத் துரத்தி ஓடும் வேடன் ஒருவனால், ஒன்றையூம் பிடிக்க முடியாது. அதுபோன்று மதம் மிாழியின்கவிழ்க் ம் இழக்க நேரிடும்.
-125 -

Page 15
மதகுருமார்கள் தமது மத ஒழுக்கங்களை தம் மக்களிடையே நடைமுறைப்படுத்தியிருந்தால், மக்கள் இன்றுள்ள அவல நிலைக்குள் அகப்பட்டிருக்க மாட்டார்கள். மத வாழ்க்கைக்கும் இன்று நடப்பவற்றுக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. மத வாழ்வு வாழ்பவன், பாவச் செயல்களில் ஈடுபடமாட்டான். இன்று பாவச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மதத்திலும் இருக்கிறார்கள். மத குருவிடமும் செல்கிறார்கள். ஆலயத்திற்கும் போகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். மதத்திலும் அன்றாட வாழ்விலும் அரசியலிலும் நீதி, ஒழுக்கம், உண்மை என்பன கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
மதச் சண்டைகள் நடைபெறுகின்றன. மதம் சண்டை பிடிக்கச் சொல்கிறதா? சண்டையைத் தூண்டுகிறதா? மதவெறி வேண்டாம். மத அபிமானம் இருக்கலாம். தெய்வம் இகழேல், ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு. எல்லா நதிகளும் ஒரு சமுத்திரத்தைச் சென்றடைவது போல எல்லா மதங்களும் ஒரே கடவுளைச் சென்றடைகின்றன. அப்படியானால் மதச் சண்டைகள் எதற்கு? சமய சமரசத்தையும், சமய ஒற்றுமையையும், சமய ககோதரத்தையும் அண்மையில் வாழ்ந்து வழிகாட்டிய மகாத்மா காந்தியடிகளும், வடலூர் இராமலிங்க சுவாமிகளும், ழரீ இராமகிருஷ்ண பரமஹம்சரும், இமயஜோதி சுவாமி சிவானந்த மகரிஷியும், குருமகராஜ் அவர்களும், பகவான் பூரீ சத்திய சாயிபாபா அவர்களும் இன்னும் பல மகான்களும் வற்புறுத்திக் கூறியுள்ளார்கள். "எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்றார் தாயுமானவர். இப்படி வாழ்ந்தால் மண்ணுலகம் விண்ணுலகம் ஆகும்.
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க,
நன்றி:- மகாத்மா காந்தியின் மகத்தான சீடர் வே. வரதசுந்தரம்
- 26 -

நீங்கள்
நீங்கள்
நீங்கள்
நீங்கள்
வார்த்தைகள்
திறமையாய் வார்த்தைகளை உபயோகித்தால்,
அது பொய்; வார்த்தைகளோடு விளையாடினால்,
அது நகைச்சுவை; வார்த்தைகளை நம்பி இருந்தால்,
அது அறியாமை; வார்த்தைகளைக் கடந்து சென்றால்,
அது விவேகம்;
முதன்முதலில், நீங்கள் நீங்களாக இருக்க முயற்சி செய்யுங்கள். அடுத்து, உண்மையில் நீங்கள் யாரென்று அறிய முயலுங்கள்.
உங்களிடம் இப்படி இயல்பாக ஓடும் உயிர்த் தன்மையைப்
பிறருக்கு தண்பம் விளைவிக்கத்தான்,
உங்களுக்கு அதிகார பலம் தேவை, இல்லாவிட்டால், வெறும் அன்பும், கருணையும்
உங்கள் வாழ்க்கைக்குப் போதும்.
முடிவில், நீங்களாக, இயல்பாயிருங்கள். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்.
பற்றிய பிரக்ஞையை விழிப்புத் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ளுங்கள்.
இது இல்லை, அத இல்லை, என்று எதிர்மறையிலேயே ஆராய்ந்து கொண்டே செல்லுங்கள். ஆமாம், இததான் அத என்ற கண்டுபிடிப்புக்கு, நீங்கள் ஆயிரம் இல்லைகளை ஒதக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.
969 IT வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்
- 27

Page 16
வளராத நேரம்.
வளர்ந்துவரும் அறிவு
திரு.S. மீனாட்சி சுந்தரனார்
ஈரோட்டின் மகத்தான மாமேதை, சொல்வண்மை மிகுந்த மாமனிதர், தந்தை ஈ.வெ.ரா.பெரியாருடன் கதர் இயக்கம், கள்ளுக்கடை மறியல், அந்நியநாட்டு துணிஎரிப்புப் போராட்டங்களில் பங்குகொண்டவர். மகாத்துமா காந்தியடிகளின் சீடர். ஈரோடு கலைமகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர். 1964 -இல் நல்வழி வெளிவந்த கட்டுரை இது. காலத்துக்கும் பொருந்துவது.
கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்திலும் ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம்தான், இன்றும் ஒரு நாளைக்கு இருபத்து நான்குமணி நேரம்தான். காலம் நீள்வதில்லை.
பழைய கற்கால மனிதன் புதிய கற்கால நிலைக்கு வரப் பல ஆயிரமாண்டுகள் ஆயின. மனிதன் பறக்கத் தொடங்கியது. 1919ம் ஆண்டில்தான். இந்த ஒருசில ஆண்டுகளுக்குள் அவன் ஒரு மணிக்கு 20,000 மைல் வேகத்தில் பறக்கத் தெரிந்து கொண்டான். சில ஆண்டுகளுக்குள் அவன் பிற மண்டலங்களுக்குப் பறந்து செல்ல இயலுமென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நமது தோட்டத்துத் தென்னை மரத்தில் வாழும் தூக்கணாங் குருவியின் கூட்டைப் பாருங்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தூக்கணாங் குருவிகளின் கூடுகள் போலவேதான் இன்றும் அவை கட்டுகின்றன. ஆனால் குகைகளிலும், வனங்களிலும் வாழ்ந்து வந்த மனிதன், இன்றைக்கு நுறு அடுக்குக் கட்டடங்கள், கட்டி வtழ முடிகின்றது.
நமது முன்னோர்கள் பனையோலையில் எழுத்தாணி கொண்டு நூல்கள் எழுதினார்கள். இன்று புதிய அச்சு இயந்திரங்களில் ஒரு நாளில் - 28

ஆயிரக்கணக்கான நூல்கள் வெளியிடப்படுகின்றன. உலகில் பத்திரிகைகளுக்கும் புத்தகங்களுக்கும் ஒரு ஆண்டுக்குச் செலவாகும் மை, அரபிக் கடலின் நீரைவிட அதிகம் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். இவ்வளவும் அறிவு வளர்ச்சிக்காகத்தானே.
கற்காலத்திற்கும், அணுக்காலத்திற்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று அறிவின் ஆழமும் அகலமும் வெகு வேகமாக வளர்ந்துகொண்டே போகிறது. ஒவ்வொரு துறையிலும் இதை நாம் நாள்தோறும் பார்க்கிறோம்.
இந்த நிலையில் அறிவு பெறப் பள்ளிக்கும் கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவ - மாணவிகளின் கடமை என்ன? வளராத நேரம் - வெகு வேகமாக வளர்ந்து வரும் அறிவு - இச்சூழ்நிலைக்குத் தகுந்தபடி அறிவு பெற்று உயர்வடையவேண்டுமானால் மாணவர்கள் காலத்தை ஒரு சிறிதும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். வேகமாகக் கற்கவேண்டும் கவனமாகக் கற்கவேண்டும். நிறையக் கற்க வேண்டும்.
இந்த உண்மை தெரிந்து, காலத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் நாடுகள் தாம் உலக அரங்கில் முன்னேறி வருகின்றன. மற்ற நாடுகளில் மக்கள் தொகை எவ்வளவு அதிகம் இருந்தாலும், இயற்கை வளம் நிறைய இருந்தாலும் அவை பின்தங்கிய நாடுகளாகவே இருக்கும்.
நம் நாட்டில் இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. விஞ்ஞான அறிவு வளர வேண்டும். இதற்கு அடிப்படையான கணித அறிவு வளரவேண்டும் என்று சொல்லுகிறோம். ஆனால் 30% இவ்விரு பாடங்களிலும் பெறுவதைப் பெரிய சாதனையாகக் கருதுகிறோம். உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் நமது சென்னை மாநிலத்தில் 50,000 மாணவர்கள் வெற்றி பெறவில்லையென்றால், இதனால் ஏற்பட்ட கால இழப்பு முதலியவைகளை எண்ணிப்பார்க்க வேண்டாமா? இவர்களில் நூற்றுக்குத் தொண்ணுாறு பேர் காலத்தை வீணாக்கியவர்கள் என்று துணிந்து கூறலாம்.
29

Page 17
உலக வரலாற்றில் நமக்கென்று ஒரு தனி இடம் தேடிக்கொண்ட பெரியார்கள் பலர் தம் காலத்தை வீணாகக் கழித்திருந்தால், எல்லோரையும் போலத்தான் அவர்களும் வாழ்ந்து மடிந்திருப்பார்கள். மறைந்த நம் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, இரவில் நான்குமணி நேரம் மட்டும் தூங்குவார். மீதி 20 மணி நேரமும் உழைப்பார். அமெரிக்க கோடீசுவரர் நம்மைப்போலத் துங்கிக்கொண்டு இருந்தால் இத்தனை பொருளிட்டி வாரி வழங்கி வள்ளலாக மாறியிருக்க முடியுமா? இப்படிப்பட்ட பெரியோர்களின் வாழ்க்கையைப்பற்றிப் படித்து நாமும் காலத்தைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.
"நெடுநீர், மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்”
என்றார் வள்ளுவர். "மறதி, காலம் நீடித்தல், சோம்பல், அளவு மீறிய தூக்கம் இந்நான்கும் கெடுகின்ற இயல்பை உடையவர் விரும்பி ஏறும் மரக்கலம்' என்பது இதன் பொருள். இந்நாட்டின் வருங்காலத் தலைவர்களாகிய மாணவமணிகளின் இந்நான்கு பண்புகளையும் விலக்கி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை நரம்புகளில் பாய்ச்சி, குறைந்த அறிவு பெற முயற்சி செய்ய வேண்டும்.
காந்திஜி கீதை முழுவதையும் பாராமல் படிக்க விரும்பினார். நேரம் கிடைக்கவில்லை. எனவே அன்றாடம் பல்துலக்கும் இடத்தில் இரண்டு சுலோகங்களை எழுதித் தொங்க விட்டுக்கொண்டு பல்துலக்கிக் கொண்டே அவற்றைப் பாராமல் படித்து விடுவாராம்! இளைஞர்கள் காலையில் ஆறு மணிக்கு எழுவதற்கு மாறாக ஐந்து மணிக்கு எழுந்திருப்பது என்று பழக்கப்படுத்திக் கொண்டால், ஓர் ஆண்டிற்கு 365 மணி நேரம் நமக்கு அதிகம் கிடைக்குமல்லவா? இழந்த பணத்தை மீண்டும் பெறலாம், இழந்த பலத்தை மீண்டும் பெறலாம். ஆனால். இழந்த காலத்தை எவரும் எக்காலத்திலும் பெற முடியாது! ஆதலால் இளைஞனே, உனது காலத்தைச் சிறிதும் வீணாக்காதே! நீ உலகில் தோன்றுவது ஒரு முறையே! உனது தோற்றமும், வாய்ப்பும் சிந்தனையும் கொண்ட இன்னொருவன் இனிப் பிறப்பதில்லை. நீ உனது உயிரை இழப்பதற்குள் உனது முத்திரையை இவ்வுலகில் பதித்துவிடு!
- 30 -

பெண்களின் உடல் பருமன் குறைய.
முகத்திலும், முடியிலும் காட்டும் அக்கறையை நிறைய பெண்கள் மற்ற உறுப்புக்களிடம் காட்டுவதில்லை. us) பேருக்கு முகம் அழகாக இருக்கும். ஆனால் உடல் அமைப்பை பார்க்கவே சகிக்காது. சாப்பிடுவதில் சிக்கனம் காட்டாமல் இருப்பதுதான் இதற்குக் காரணம்.
அளவுக்குமீறி உடல் பருமனாவதற்கான காரணங்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். எண்ணெயில் பொரித்த பண்டங்கள், நெய், பருப்பு போன்றவற்றை சமையலில் அதிகமாகச் சேர்த்தல் முதலில் இடுப்பில் கிலோ கிலோ கணக்கில் சதைபோடக் காரணமாகிறது. இடுப்பில் விழுகிற சதைதான் நாம் குண்டாவதற்கான அறிகுறி.
எண்ணெய்ப் பண்டங்களைக் கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள். சாப்பிடும்போது அடிக்கடி தண்ணி குடிக்கக்கூடாது. சாப்பிடுவதற்கு முன் கொஞ்சம் நீர் பருகிவிட்டு சாப்பிட ஆரம்பியுங்கள். சாப்பிட்ட பின் பத்து - பதினைந்து நிமிடம் கழித்தே தண்ணி குடிக்க வேண்டும்.
சாப்பிட்டு முடித்தவுடனேயே சாய்ந்து படுத்துக்கொள்ளுதலோ, துTங்குவதோ வேண் டாம் . இந்தச் செயல் தான் சதைகளை தொளதொளவென ஆக்கிவிடுகிறது. ஆனால், உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் ஒரேயடியாக எல்லா உணவு வகைகளையும் தவிர்த்து விடாதீர்கள்.
ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடுங்கள். காபி அல்லது
தேநீரைக் கூடுமானவரை தவிர்த்தல் நலம். இரவு உணவுக்குப் பின்னர் கொஞ்ச தூரம் நடந்து விட்டு வாருங்கள். உடல் அழகு பெறும்.
- 31 -

Page 18
நடகக விரும்புகிறீன்களா?
மிகச் சிறந்த உடற்பயிற்சி நடத்தல். நடைப்பயிற்சி செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான சில அம்சங்கள் உண்டு.
ஒருவரின் உயரம், உடல் எடை போன்றவற்றுக்கு ஏற்பத்தான் நடக்க வேண்டும். உடலை வருத்திக் கொண்டு வேகமாக நடக்கக்கூடாது. காலடிகளை நீளமாக வைத்து நடந்தால் எலும்புகளில் வலி, தசைப்பகுதியில் பாதிப்புக்கள் ஏற்படும்.
சரியான காலணிகளைத் தேர்ந்தெடுத்து அணிவதும் மிக அவசியம். அதிக எடை கொண்டவடிக்களை அணிந்தால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
கால்களைத் தரையில் தேய்த்துக்கொண்டும் தரையை உதைத்தும் நடப்பது தவறு.
கால்களின் நடை வேகத்துக்கு இணையாக கைகளையும் முன் பின் நன்றாக வீசி நடக்க வேண்டும்.
கைகளை நேராக உயர்த்தி நடக்க வேண்டும். கைகளைப் பக்கவாட்டில் வீசிக்கொண்டு நடந்தால் கழுத்து, முதுகு வலி ஏற்படும்.
அங்கும் இங்கும் உடலை வளைத்தபடி நடப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும்,
குழுக்களாக சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டும் சத்தமாகப் பேசிக்கொண்டும் நடப்பது மிகவும் தவறு.
நடைப்பயிற்சியின்போது தேவை இல்லாமல் தண்ணி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். நடந்து முடித்து, சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகே தண்ணிர் குடிப்பது நல்லது.
ஆர்வக்கோளாறு காரணமாக நீண்ட தூரம் நடப்பது தவறு.
- தகவல். ஆர். சுவாமிநாதன், ந6க்றி நம்ம ஊரு செய்தி, மயிலாடுங்றை
- 32

விலங்கு
விலங்குகளின் வாழ்நாட்கள், பிரசவ காலம், ஒட்டவேகம் மற்றும் அவற்றின் ஒலிகள் குறித்துச் சில
தகவல்கள் விலங்கு சராசரி பிரசவ வாழ்நாள் காலம் (வருடம்) (நாட்கள்)
கழுதை 12 365 குரங்கு 20 87 கரடி-கறுப்பு 18 29 ஒட்டகம் 12 406 Ա60)601 2 63 சிம்பன்சிக் குரங்கு 20 231 15 284 LDIT6 8 201 நாய் 12 61 ஆசிய யானை 40 645 குள்ளநரி 7 52 ஒட்டகச்சிவிங்கி 10 425 ஆடு 8 151 கொரில்லா 20 257 நீர்யானை 25 238 குதிரை 20 330 கங்காரு 7 42 சிறுத்தைப்புலி 12 98 சிங்கம் 15 100 கண்டெலி 3 21 அணில் O 44 புலி 5 63
காண்டாமிருகம் 15 450
༄༽ D-6D SD
விலங்குகளின் ஒட்ட வேகம்
வேகம் (கி.மீ மணிக்கூர்கள்) சிறுத்தைப்புலி 13 சிங்கம் 80 ஒட்டகச்சிவிங்கி 64 முயல் , 56 நரி 56 கலைமான் 52 ஒட்டகம் 52 DIT6i 48 ്യങ്ങങ്ങ 48 அணில் 19 பெரிய ஆமை 028
பல்வகை ஒலிகள்
கழுதைகள்-கத்தும் - Asses bray கரடிகள் உறுமும் எருதுகள் எக்காளமிடும் . Buls below
Bears browl
u66T56i 655jLö - Cats new நாய்கள் குரைக்கும் - Dogs bark ust 60601856ft Slssolub-Elephants trumpet pfascit d-6061TuSGub - Jackals howl issuansitassi sigjub - Frogs croak S5660Dg856 85600601&Suid-Horses neigh Ararash afrahib lion roar Jorubat dyb . Snake hig u46Sassh R-COcyplyb • Tigord growl கழுதைப் புலிகள் சிரிக்கும் பசுக்கள் கதறுதம்
Hyenas laugh - Cows low கழுகுகள் அலறும் - Vultures scirteam ஆந்தைகள் அலறும் - Owls screech
الصـ
- 33

Page 19
அமெரிக்கப் பயணம்
நியுயோர்க் நகரத்திற்கு, ஏன் அமெரிக் காவிற்கே 69 (5 அடையாளமாக குறியீடாக நியுயோர்க் துறைமுகத்தில் அமைந்திருக்கும் சுதந்திரச் சிலை இனி னும் விளங்கிவருகிறது. இது 1886ம் ஆண்டு அமெரிக்க பிரஞ் நட்பின் சின்னமாக பிரஞ்சு மக்களினால் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. தேசிய பூங்கா அமைப்பினால் பராமரிக்கப்படும் இச்சிலையின் உயரம் (அடியில் இருந்து தீப்பந்தத்தின் நுனிவரை) 151 அடி அதி திவாரத்திலிருந்து சிலையின் நுனி (தீப்பந்தம்) வரை 305அடி தலையிலிருந்த அடிவரை 111 அடி அதன் எடை 450,000 றாத்தல் அதாவது 225 அமெரிக்க தொன் தீவின் நிலமட்டத்திலிருந்த சிலையின் கால் பகுதி வரை 167 படிகளும் சிலையின் உள்ளே அடியில் இருந்து தலைவரை 168 படிகளும் உள்ளன. 54 ஏணிப்படிகளைக் கொண்ட ஒரு ஏணி, பந்தம் பிடித்திருக்கும் கையூடாக பந்த நுனிவரை செல்கிறது.
இன்றும் பெரிய பரிசுக்கள் பட்டியலில் முதலிடத்தை வகித்துக் கொண்டிருக்கிறது. 1981ல் இருந்தே பார்வையாளர்கள் ஏறிப் பார்ப்பது நிறுத்தப்பட்டு 100வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்திற்குரிய திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன.
1886ம் ஆண்டு பிரட்ரிக் அகொன்டே பார்தொல்டி என்பவரால் வடிவமைக்கப்பட்டு குளடாவ் ஏபிலினால் தொழில் நுட்ப ஆலோசனை வழங்கப்பட்ட இச்சிலையை அமைக்க ஆலோசனை தந்தவர் பிரஞ்சு சரித்திராசிரியர் எடுயார்ட்டிலவும் என்பவர். அமெரிக்க முதலாவது ஜனபாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனின் 1877ன் பிறந்ததினத்தன்று பெப்ரவரி 22ந் திகதி அமெரிக்கக் காங்கிரஸ் இத்திட்டத்தை அனுமதித்தது. (பெட்லோத்தீவில் அச்சிலைக்குரிய பீடமைப்பதை)
-34 -
 

நியூயோர்க் நகரை அங்குள்ள மக்கள் செல்லமாக பெரிய அப்பிள் (பிக் அப்பிள்) என்று |- அழைப்பார்கள். 301 சதுரமைல் க" விஸ் திர ண முளர் ள *: அமெரிரிக் காவின் பெரிய . நகரமான நியுயோர்க் கில் ஏறக்குறைய 8 மில்லியன் Air மக்கள் 80களில் வாழ்ந்து வந்தனர். இது 49576 சதுர மைல் விஸ்தீரணம் கொண்ட நியுயோர்க் மாகாணத்தின் தலைநகரமாக விளங்குகிறது. கனடாவில் பெரிய ஏரிகளை * வடபக் க எலி லை யாக கொணி டுள்ள நியுயோர் க் மாகாணத்தின் வடபகுதியில் உலகப்புகழ் பெற்ற நயகராநிர் வீழ்ச்சியின் ஒரு பகுதி அமைநதுள்ளது.
நியுயோர்க் நகரில்தான் நவீன உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் 1472 அடி உயர ஏம்பயர் ஸ்டேட் கட்டிடம் இருக்கிறது. 1931ம் ஆண்டில் மே1ம் திகதி திறக்கப்பட்ட இக்கட்டிடம் தான் உலகின் உயரமான கட்டிடமாகக் கணிக்கப்பட்டு வந்தது. சிகாகோவில் சியர்ஸ் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை, 102 மாடிகளைக் கொண்ட இக்கட்டிடத்தின் 102வது மாடி அவதான நிலையமாகப் பயன்படுகிறது. காலநிலை நன்றாக இருந்தால் 80 மைல் தொலைவு வரை இக் கட்டிடத்தில் இருந்து பார்க்கலாம். 37வது ஒழுங்கையும் 5வது தெருவும் சந்திக்கும் இடத்தில் 2 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்ட 16000 பேர் வேலை செய்யும் இக்கட்டிடத்தில் 6500 ஜன்னல்கள் உண்டு. 3500 மைல் தொலைபேசிகளும் 60 மைல் நீளமான தண்ணிர் குழாய்களுமுண்டு. வருடாவருடம் 1 மில்லியன் பேர் இக்கட்டிடத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.
நியுயோர்க்கில் நானிருந்த சமயம் இரண்டு தெருக்கள் தள்ளி
7வது தெருவில் தான் வேலை பார்த்து வந்தேன். ஒவ்வொரு நாளும்
வேலைக்குப் போகும் போதும் வரும் போதும் இக்கட்டிடத்தைத்
தாண்டிச் செல்வேன். - எஸ்.பி.இராமச்சந்திரா - -35 -

Page 20
உலகில் முதன் முதலாக. இயந்திரத்தில் பறந்த முதல் மனிதனி
ரைட் சகோதரர்கள் 1903
டிசெம்பர் 17 திகதி
உலகிலி முதன் முதலாக காற்றைவிடப் பாரமான பறக்கும் இயந்திரத்தில் பறந்த மனிதன் ஆகாயவிமானத்தைக் கண்டு பிடித்த * ரைட் சகோதரர்களில் இளையவரான ஓர்வில் ரைட் என்பவரே. அமெரிக் காவில் வடகரோலினா மாநிலத்தில் டிசம்பர் 17ம் திகதி 1903ம் ஆண்டு இது நிகழ்ந்தத. முதலில் 120அடி தூரம், 12 செகண்டில் இவர் பறந்து கடந்தார். அதேநாளில் 4வது சுற்றாக மூத்த சகோதரர் வில்பர் ரைட் 859 அடி தூரத்தை 59 செகண்ட்களில் பறந்து கடந்தார்.
இதைப்பற்றி உரியச்சான்றிதழ்கள் பெற்றும் புகைப்படம் எடுத்தும் அக்காலத்து விஞ்ஞானிகளோ, பொறியியலாளர்களோ இதை நம்பாது பொய் பிரட்டு என்று கூறிக்கொண்டிருந்தனர். அதேஊரில் வெளியாகும். பத்திரிகைகள் கூட இதை ஒரு பொருட்டாக எடுத்தக் கொள்ளவில்லை. அப்போது வெளியாகிய அமெரிக்க விஞ்ஞான சஞ்சிகையும், நியூயோர்க் ஹெரல்ட் சஞ்சிகையும் இது அப்பட்டமான புரட்டு என்று எழுதின.
காற்றைவிடப் பாரமான ஒரு பொருள் பறக்க முடியாது என்ற
கருத்தை அக்காலத்து மக்கள், (ஏன் விஞ்ஞானிகள்) இடையேயும்
அக்காலத்தில் இருந்ததே காரணம் 1908ம் ஆண்டு செப்டம்பர் மாதம்
அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி தியோடரூஸ் வெல்டின்
ஆணைப்படி அமைத்த குழு முன்னே உத்தியோகப்பூர்வமாக ரைட்
سے 36 ۔
 
 
 
 
 

சகோதரர்கள் பறந்து காட்டிய பின்னரே மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை அறியும் போது எமக்கு வியப்பாக இருக்கிறது.
முதலில் நம்பாமல் இருந்தும், பின்னர் ரைட் சகோதரர்களுக்கு பெரும் பணமும் புகழும் இதனால் கிடைத்தது. இப்போதும் அமெரிக்கமக்கள் நினைவு கூறும் நாட்களில் டிசம்பர் 17 ரைட் சகோதரர்களின் நினைவு நாளாக கணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஏனைய வான் வெளியுடன் சம்பந்தப்பட்ட பிரபலஸ்தர்களின் உருவங்களுடன் வைத்து போற்றப்படுகின்றார்கள், டேய்டன் எனும் ஊரிலுள்ள தேசிய வானூர்தி புகழ் மண்டபத்தில். அவர்கள் பறப்பதற்கு பாவித்த மைதானம் தேசிய ஞாபகார்த்தப் பூங்காவாகப் பாதுகாக்கப்படுகிறது.
ரைட் சகோதரர்களின் முதலாவது நடவடிக்கையாக பறக்கும் முயற்சி இருக்கவில்லை. பாடசாலையை விட்டு வெளியேறியதும் இருவரும் இணைந்து ஒரு புதினப் பத்திரிகையை ஆரம்பித்து வெளியிட்டனர்.
அக்காலத்தில் பறப்பதற்கு முயற்சித்த மனிதர்கள் பலூனையும், கிளைடேர்ஸ் என்று கூறும் ஒருவகை இயந்திரமற்ற விமானத்தையும் பாவித்து வந்தனர். 1896ல் கிளைடர் மூலம் பறக்க முயற்சித்த ஜெர்மனியர், ஒட்டோலில் என்தால் என்பவர் இறந்த பின்பே ரைட் சகோதரர்களின் கவனம் பறப்ப்தில் திரும்பியது. லிலிஎன்தால்
ரைட் சகோதரர்கள் முதன்முதலாகப் பறந்த விமானம் - 37

Page 21
அறிந்திருந்த பறப்பதற்குரிய விடயங்களை அறிவதிலும ஏனைய விடையங்களை சேகரிக்கவும் ஆரம்பித்தனர். சைக்கிள் கடை வைத்திருந்த அவர்கள் தமக்கு கிடைத்த பொருட்களை வைத்து தங்கள் முதலாவது விமானத்தை அமைத்தனர். முதலில் அவர்கள் இயந்திரமற்ற கிளைடர் வகை விமானத்தையே வடிவமைத்தனர். அப்போதிருந்த கிளைடர்களில் இவர்கள் அமைத்த கிளைடர்தான் சிறந்ததாக அமைந்தது.
பறவைகள் எப்படிப்பறக்கின்றன என்பதை நன்றாக அவதானித்து பறப்பதற்கு வேண்டிய யுக்திகளை அறிந்தனர். முதன்முதலில் 12 குதிரை சக்தி உடைய இயந்திரத்தை அமைத்தனர். பறப்பதற்குரிய அறிவைத்திரட்டிய இவர்கள் மின் இயந்திரத்தில் இயக்கும் இரு காற்றாடிகளை விமானத்தின் முன் பொருந்தினர். 1903ல் முதல் பறக்கும் இயந்திரம் 120 அடிகளையே பறந்து கடந்தது. ஆனால் அன்று நடந்த பிந்திய முயற்சிகளில் அதிக தூரத்தைக் கடநதனர். 1908ல் தான் பரிபூரணப்படுத்தப்பட்ட இயந்திரத்தை வடிமைத்து பொதுமக்கள் பார்வையில் பறந்து காட்டினர்.
ரைட் சகோதரர்களில் மூத்தவரான வில்பர்ரைட் 1921ல் நெருப்புக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இருவருமாக வடிவமைத்து காற்றைவிடப் பாரமான பறக்கும் இயந்திரத்தின் உரிமைகளை 1915ம் ஆண்டு இளைய சகோதரரான ஓர்வில் ரைட் விற்று பெருஞ் செல்வத்தைப் பெற்றார்.
- 38 -

THE WRIGHT BROTHERS
WLBUR 1867-1912 ORvi L.E. 1871-1948
• 4 June 1783 First public demonstration of the Montgolfiers' hitair balloon • 1896 German Otto Lilienthal dies în a glider accident, this marks the beginning of the Wrights' serious interest in flight a 17 December 1903 Orville nakes the first successful powered, sustained and controlled flight in heavier-than-air machine 'The Flyer's 908 The Wrights reveal their irrproved machines to the public e 8 August 1908 First public flight in Europe at Le Mans in France
CHRonotoGY
he Wright brothers' interest had not drew their attention to the subject, Lillenthal had always heen in flying, Thele first Juin i minde M number of Advances in understuhling project, after leaving scicl. was (erotlyihnle, y the brothers Legin ly stutlying starting and publishing their own his ad other inverners' prog1": Ms to tatt, newspaper. They later moved inten
bicycles, opening their own shop httiiding and i » SYSE MS ()F CONTROL selling then. So it was only from 896 their The Wrights quickly realised whilst much of the curiosities turned to aircraft. Others had already focus in the pioneering of gliders had been on built glittlers and it was the death in a crash of • making the craft statilc, this had been af te one of he early pioneers of thesc machincs, the cxpense (fany rca kind of control. So titey
(ierman (to Lilienthal (1848-96) which initially systematically began experimentalia) on control
- 39 -

Page 22
The Wrights quickly realised that gliders, though Stable, lacked control
mechanisms which would eventually include ground-breaking mechanisms for the twisting of their aeroplane's wings, inspired after observing the flight of birds when searching for aerodynamic clues from nature.
MASTERING THE AERODYNAMICS OF THE GLIDER
The Americans' research also involved the building and testing of unmanned gliders which they refined after each experiment. By 1900 they had built their own manned glider, They further improved their testing with the construction of a wind tunnel to aid their research in 1901 and by the following year they had made enough findings to build the most successful glider anywhere in the world up to that time. It was almost
the aerodynamics of aircraft construction, it would only be a matter of time before they took the next logical step of adding motors to their invention. Before they could do this, however,
they ni ceded a method of Corvertinag-tae elektrikal...:..«
power of the motor into forward thrust. They found this method in the propellor.
The Wrights tested numerous prototypes of propellor, which they conceived as moveable wings rotating around fixed axes, until they were
finally satisfied. They then built their own 12 horsepower engine which powered two propellors and fitted it to their biplane, The Flyer,
The first ever successful manned flight in a powered aircraft took place, like all of their other tests, at Kitty Hawk, North Carolina on 17 December 1903, Wilbur had made an unsuccessful launch a few days earlier, but it was Orville who became the first to go airborne in a controlled manner on this date, initially covering just 120ft.
By the end of the day, they had both made successful, longer flights.
AIRCRAFT ON DISPLAY
Over the next few years the brothers worked on improved versions of their early aircraft, waiting
i' until they had much more reliable models in inevitable, therefore, that once they had mastered
place before demonstrating their advances to the
public. Indeed, it was not until 1908 that they
revealed their machines: Wilbur gave a display in .
France and Orville in Virginia, USA, within a few
days of each other. They went down well, for within a year, the brothers had received the backing to build their planes commercially and with
great success in both the USA and Europe, Sadly,
Wilbur caught typhoid fever in 1912 and died, leaving Orville to inherit the business and a size
able fortune when he sold it in 1915.
FURTHER ACH EVEM ENTS
Although the human race had been airborne for o'er a hundred years hefire (Orurille Wright and his elder brother Wilburt 1867-1912) came along, it had struggled to make the next logical step in the progress of flight. For thousands of years mankind had dreamed of flying until the Montgolfiers had fulfilled that fantasy with their lo sa ir ballopout in i 783. Tl is ladi taken adva - fugi' (filte fact that sons' gases (were 'lighter-that-air and as such would propol a
suitable device, such as a balloon, upwards. For the century afterwards, however, inventors had fantasised about achieving another seemingly impossible dream; powered flightiith 'heavierthan-air' machines. Many tried to create such devices during the nineteenth century, and many failed. Then the Wright brothers arrived with a conpletely different approach and hy 1903 had in L'ented and tested the world's first motorpouvercad acroplane.
- 40 -
 

Vith Best Campliments from
oféivelAgé
22Ct. Jewellery
105, N.C.Road, Trincomalee Tel 026 - 2222298 (026 - 222 II 79 E-mail : jewellanka 108a.yahoo.com

Page 23
With Best Campliments from
EVER
"تیان
()A/C & Non A
() Van Hii
( )
() Air PortTrar
() Air TI W
No. 76A, Sr Co
Tel: 0112-3

§.
EST INN DDGE
2.17 r r ܢ ܚܘ ܝ ܢܝ .
'C Rooms Available
ring,
Tour arrangement,
Sport
icketing orld wide & Jaffna
kathireshan Street ombo - 13 2924, 0112-461059