கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அ ஆ இ 1992.08

Page 1
August 1992
10
. . .
... : زبانه
ܐܕܢܖ7* ، : ܕ
 
 


Page 2
சி.சிவசேகரம்
త
*Uცuმ
N షి-పి" N
S 6rs'Dగా * తాత్ర్య
Š இந் 35Ub Պեցց 67
s දී „სნóბმI శ్మీ 9. რმrmგ,
هاجع ால் الاقوق தேவி எழுந்தான்
(கவிதை தொகுப்பு)
சி. சிவசேகரம்
வெளியீடு : தேசியகலை இலக்கியக் பேர ன்
சவுத் ஏசியன் புக்ஸ்
6/1 தாயார் சாகிப் 2வது சந்து
T66GT - 600 002 10.00 .விலை : ரூபா نے ۔ اُ
 
 

剑裂剑
காலாண்டு இதழ்
கவடு 10
ஆவணி 1992
வெளியீடு 9 ፬ இலங்கைக் கலாச்சாரக் குழு நெதர்லாந்து *ኑ m
gr. Pathmanaba Iyer 27-13 shigh Street 1Plaistov Condon E1304D fet: 020.8471 5636
முகவரி:
A AA IE Post bus 85326 3508 A H Utrecht Nederland
også
(Z3 சேரன்இன்னும் கொஞ்ச நேரத்தில் குரியன் மறைந்து விடுவான்
இருள் கவிந்து விடும்
இனிவரப்போகிற இருள்
முன்பு போல அல்ல பிசாக
நிலாவைக் கொலை செய்து வெள்ளிகளைப் போட்டெரித்த சாம்பல் பூசிய இரவு இந்த இரவிக்கு முன் ஒரு சிறு கை விளக்கை அல்லது ஒரு மெழுகு திரியை ஏற்றி விடவேண்டும் என்று விரைந்தாய்
அம்மா, வேகம் அவர்க் கதிகம் இன்று தென்திசை நின்று வந்தனர் யமனின் துாதர்கள்; கைத்துப்பாக்கி; ஐந்து குண்டுகள்
நீ விழுந்த போது குரியனின் கடைசிக் கிரணங்கள் சுவரில் விழுத்திய
உன் நிழல் கைகளை வீசி மேலே ஓங்கிற்று
முடிவிலிவரை. நன்றி. எலும்புக் கூடுகளின் ஊர்வலம்

Page 3
மனிதர்கள் சமூகத்தின் மீது அக்கறை கொள்வதும் அதன் மாற்றங்களுக்கு எவ்வகையிலாவது துணை போவதும் ஒரு நியதியாகிவிட்டது. இம் மனித சமூகம் பல வழிகளிலும் முன்னேறி விட்டது என்பது ஒன்றும் தானாக நடந்த விடையங்கள் இல்லை. ஒவ்வொரு மனிதனின் சேவையும், கடின உழைப்பும், உயர்ந்த சிந்தனைகளும் தான் இதன் அடிப்படையான அம்சங்களாகும்.
ஆனால் காலத்துக்குக் காலம் ஏற்படுகின்ற அரசியல், சமூக சிந்தனைகள் அதன் சார்புத்தன்மைகள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவதும் அவை ஒன்றுடன் ஒன்று மோதுவதும் உலகின் எந்த மூலைகளிலும் கூட நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவ ற் றி ல் ஒன்று சரியா ன தாகவும் மற்ற  ைவ பிழையான வையாகவும் இருக்கலாம் எ ல் லா மே பிழையானவையாகவும் இருக்கலாம். அதிலும்விட ஏதோ ஒன்று மிகச்சரியானதாகவும் இருக்கலாம். முன்னர் ஒரு காலத்தில் சரியெனப்பட்டவை இன்று பிழையென ஒதுக்கப்படலாம். அனாலும் இவை ஒன்றுடன் ஒன்று மோதுவதும் வலிமையானது வெல்லுவதும் எமக்கு மு ன்னுள்ள பாடமாகும். பல உ ண்  ைம க  ைள யும் , சமூக நல ன் பா டு க  ைள யும் , ஏற்றுக்கொள்பவர்கள் மிக சிறுபான்மையானோர்களே. இவர்கள் ஆழமாக விடையங்களை ஆராய்ந்து முடிவுகளை ஏற்றுக்கொள்கிறார்கள். பல பெரும்பான்மையானோர்

பொய்களையும், புரட்டுக்களையும், தவறுகளையும், வெறும் கவர்ச் சிக் காரியங்களினால் உண்மையென நம்பி ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள். ஆயினும் இவை தலைகீழாய் அமைவதும் உண்டு.
இவ்வகை சமூக நீதிக்கான முறமைகளில் ஆட்சிகள் அமைவதும் அதிகாரத்தைப் பெறுவதும் அவனவன் திறமை என்று அதிகமானோர் சொல்லுகிறார்கள். ஆட்சி அதிகாரம் கொலு விருக்கும் போது அந்த மக்கள் அனுபவிக்கும் நிலமைகளில் இருந்துதான் ஆட்சியதிகாரம் எப்படியுள்ளது என்று உணர முடிகிறது. அடுத்தவன் செய்த குறைகளைச் சொல்லி ஆட்சிக்கு வருவார்கள். அதைவிடப் பெரிய குறைகளை இவர்கள் ஆட்சியிலிருக்கும் போது செய்வார்கள். அதிகாரத்தால் மக்களை அடக்கி, மக்கள் மீது சுமைகளை ஏற்றி விட்டு தம் ஆட்சி நல்லாட்சி என்பார்கள்.
இவ்வாட்சிகளுக்குள்ளே அள்ளுண்டு போகின்ற பலரில் பாமரர்கள் அதிகமாயினும் பல அறிஞர்கள், எழுத்தாளர்கள், மதள்தாபனங்கள், பொதுள்தாபனங்கள், பத்திரிகைகள் எல்லாமே அடங்குகின்றன. எது எப்படியாயினும் ஆட்சியிலிருப்பவர்களுக்கு ஆதரவளிப்பது. எந்தத் தவறுகளையும் கண்டு கொள்ளாமல் இருப்பது. தம் பாதுகாப்புக்கு இதுதான் வழி, மக்கள் எப்பாடு பட்டால் எமக்கென்ன என்ற ஒரு சுயநலப் போக்கு . அல்லது மக்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அதிகாரத் திமிர் இவர்களுக்கும் படிப்படியாகத் தொற்றிக் கொள்கிறது.
இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டோர் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் வெறுக்கப்பட்டு கொடிய தண்டனைக்கு உள்ளாகிறார்கள். அதிருப்தியாளர்களாகவும் துரோகிகளாகவும் படம் பிடிக்கப்பட்டு சிதறடிக்கப் படுகிறார்கள். ஆயினும் இவர்கள் எந்த ஆட்சியானாலும் அது கொடுமை நிறைந்ததாய் இருந்தால் பொய்மையில் ஊறிப்போய் சொல்வதொன்றும், செய்வதொன்றுமாய் அமைந்தால் எதிர்ப்புக்களைக் காட்டுகிறார்கள். நீதிக்குப்புறம்பான சகல காரியங்களுக்காகவும் எதிர்க்கிறார்கள். சொந்த நலன்
5

Page 4
கொள்ளாது மக்களின் விடிவிற்காய் - அவர்களின் மீது சுமத்தப்படும் கொடுமைகளுக்காய் எதிர்க்கிறார்கள். இவர்கள் ஆட்சியாளர்களை மட்டுமல்ல விடுதலை அமைப்புக்களானாலும், எதிர்க்கட்சிகளானாலும் எந்த அதிகாரச் சத்தியானாலும் அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி சமூக நீதிக்காகவும், கொடுமைகளை இல்லாதொழிப்பதற்காகவும் போராடுகிறார்கள்.
இவ்வகை எதிர்ப்பாளர்கள் சாதாரண பொதுமக்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக விஞ்ஞானிகள் எனச்சகலரும் அடங்குவர். இவர்களைக் கொலை செய்வதும், சிறையில் அடைப்பதும் அடக்கிவைப்பதும், மிரட்டி ஒடுக்குவதும் நாளாந்தம் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களாகும்.
உண்மையில் சமூகத்தில் அக்கறையுள்ளவர்களாலும், சமூகத்திற்கு நியாயமாகக் காரியம் ஆற்றுபவர்களாலும்தான் இன்றும் சமூகம் இருக்கக் கூடிய நீதி நியாயங்களையாவது காப்பாற்ற முடிந்திருக்கிறது. மனித நீதி நிலைத்திருக்காதவரை அவற்றிக்குரிய சமூகத்தன்மைகள் அற்றுப்போகின்ற காலத்துள் நாம் இழுபடுகின்ற போக்கு அதிகரிக்குமானால். மனிதம் சவப்பெட்டிகளுக்குள் இடப்பட்டு ஆணியடிக்க படுகிறதென்பது முடிவாகும். அப்படியொரு சவ அடக்கத்திற்கு நாமும் தயாரா? என்பதே எம் முன்னுள்ள கேள்வியாகும்.
ஆசிரியகுழு.
சஞ்சிகை அறிமுகம்
t இந்த இதழில். சுமைகள்
மாத இதழ் அட்டைப்படம் : சிவா
வெளியிடுவோர்: J606TU Ln–rigsr:
Tamil Union Bங்களாதேஷ் யன். Post Bus 31057 8
6372 - R V Landgraaf Netherland
Debabrata Mukhopadhyay
 

அஆஇவினருக்கு இம்முறை அஆஇ வடிவமைப்பு அவ்வளவு நல்லதா கவில்லை. முன் அட்டையில் எட்மன் சமரக்கொடியைப் பற்றிய கட்டுரைத் தலைப்புடன் அவரது படத்தையும் போட்டி ருக்கலாம். சிவசேகரத்தின் எழுத்துச்சீர் திருத்த முறையை ஏன் அஆஇ தற்போது பாவிப்பதில்லை. புகலிட பத்திரிகைகள் எல் லாம் அதைப் பின்பற்றுவது தவிர்க் கவியாலாமல் இனி இருக்கும் என நான் எதிர் பார்க்கிறேன்.
சுகன். சீரான்ஸ்
அஆஇ விற்கு கடந்த இதழ் தலையங்கத் தெளிவீனங்கள், படங்கள் போதாமை போன்ற குறைபாடுகளைக் கொண்டிருந்தது. ஆசிரிய கருத்து, நோபல், சினிமா சம்பந்தமான விடையங்கள் மிகச் சிறப்பு அவ்வகையான விடையங்கள் ஐரோப்பியத் தமிழர்களுக்கு மிக அவசியம், தொடர் கட்டுரை காலாண்டு இதழில் வாசகர்களுக்கு கஷ்டமாக இருக்கும்
என்று நீங்கள் எண்ணவில்லையா?.
Bாலா, நெதர்லாந்து.
தேர்சிக்ள்
அஆஇவிற்கு உங்களது அரிய அரசியல் திறனாய் வுகளுக்குப் பாராட் G & & 6 . D T gŋ Lu T u T 6oT அரசியல் வித்தகங்களை கூறு போட்டுப் படைக்கும் தமிழேடுகள் இப்போது ஐரோப்பாவில் மிகுந்து வளர்ந்து வருவது நலமே தமிழீழம் உலக ஏதிலிகளை அதிகரித்து வரும், புள்ளி விளத்தகங்களையும் ஈழத் திலும், அயலகங்களிலும் வளரும் அவலங் களையும் கதைப்பது மிக மிக அவசியம்.
ஒல்லாந்தில் எமது அரிய வரலா ற்றுத் தமிழ் கருவூலங்கள் உண்டு. கொழு ம்பு, யாழ்ப்பாணம், மலாக்காவிலிருந்து 17ம் நுாற்றாண்டில் கடத்திச் செல்லப்பட்ட பல அரிய விபரங்கள், ஏடுகள், நூல்கள் எல்லாம் ஒல்லாந்திலுள்ளது. இவை பற்றிய அரிய உண்மைகளைக் காணும் பணிகளில் யாராவது ஒரு சில நண்பர்கள் ஈடுபடு வார்களா? தங்கள் நாட்டு வாழ்வியல்ச் செய்திகளையும் அஆஇ வெளியிடுமென எண்ணுகிறேன். தங்களது கூட்டு முயற் சிகளுக்கும் பாராட்டுக்கள். அஆஇ வாழ்க வெல்க.
பேராசிரியர் இரா. வீரப்பன்
மலேசியா.

Page 5
பஸ் தரிப்பிடத்தை வந்தடைந்துவிட்டது. மனிதர்கள் மிக அவசரமாக முண்டியடித்துக் கொண்டு இறங்கிக் கொண்டிருந்தனர் நானும் அவர்களுடன் .
வெளி யே பனி து கள் களா கி க் கொட்டிக்கொண்டிருக்கிறது. அந்த மத்சள் விளக்குகள் படர்ந்து கிடக்கும் பணித்துகள்களின் மீது பரவி மினுங்கிக் கொண்டிருக்கிறது. குளிர் மைனஸ் நாலைத் தாண்டி விட்டது. எனது 'மப்பிளரை கழுத்துக்கும் காதுகளுக்கும் இறுகச் சுற்றிக்கொண்டு நடக்கிறேன். குளிர் காலத்து இரவென்பதால் எல்லோரும் மிகவேகமாகவும் சோடிகள் ஒருவரையோருவர் அனைத்துக்கொண்டும் நடக்கிறார்கள்.
இந்தச் சந்தடிக்குள் "அம்புலன்ஸ் வாகனமொன்றும் இரண்டு "பொலிஸ் கார்'களும் ஆாதிக்கொண்டு கடந்து போகின்றன. ஏதோ நடந்துவிட்டது. நாளாந்தம் விபத்தினால் செத்துப்போகின்ற மனிதர்கள் ஏராளம் அதிலும் நெருக்கமான நகரங்களில் வாகன ஓட்டமும், இந்தப் பணிபடிந்த வீதிகளின் சறுக்கல்களும் சாாதிகளை பமனாக்கி விடுகின்றதுதான்.
நான் எ னி வரும் றெயினை ப் பிடித்தாகவேண்டும் இல்லையென்றால் இன்னும் அரைமணி நேரம் குளிருக்குள் அம்போதான். குளிர் எலும் புக்குள்ளும் ஓட்டை துளைத்துவிடும். ஸ்ரேசனுக்குள் ஏறும் "மூவிங்" படிகளினூடே மேலே ஏறி நடந்தேன். படிகளைக் கடந்து போய்த் திரும்பும்
 

ஒரு முடக்கில் துணியொன்றை விரித்துவைத்து பாடகன் ஒருவன் இனிமையாகப் "கிற்றாரில்" பாடிக்கொண்டிருந்தான். இந்த புகையிரத நிலையத்தோடு இனைந்து பரந்து கிடக்கின்ற பல கடைகளின் தொடர் இந்நகரத்தில் விசேடமானது. சமர்காலமோ வின்ார் காலமோ நிரம்பி வழியும் சனக் கூட்டமும், மூலைக்கு முலை பாடிக்கொண்டிருக்கும் கலைப் பிச்சைக்காரர்களையும் பார்த்துக் கொண்டே நேரம் போக்கலாம்.
எதிரே இருந்த இருக்கைகள் எங்கும் சோடிகள் பல தம்மை மறந்து உதடுகளால் பேசிக்கொண்டிருந்தார்கள்.
"வாக்கிடோக்கி பொலிஸ் காரர்களும், ஸ் ரெச்சர் தாங்கிய இரண்டு 'அம்புலன்ஸ் காரர்களும் எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தார்கள், இங்கு எனக்கருகாமையில் இந்த ஸ்ரேசனுக்குள் ஏதோ நடந்துவிட்டது நானும் அவசரப்பட்டேன். என்னதான் நடந்துவிட்டது?
அங்கே சுவர் ஓரமாக இருந்த பச்சை "ரெலிபோன் பூத்துக்குப் அருகில் சனம் கூடிநின்று வேடிக்கைப் பார்த்தது. நானும் கிட்டப்போய் எட்டிப்பார்த்தேன். ஒரு மனிதன் எந்த அசைவுகளுமற்றுக் கிடக்கிறான். என்ன இவன் செத்துப்போனானா அல்லது இன்னும் உயிர் உள்ளதா? என்ற எண்ணம் மின்னுவதற்கிடையே அவன் முகத்தைப் பார்த்தேன். ஆ..இவனா? எனக்குத் தெரிந்தவன் என்னோடு ஒரு தடவை நன்றாகக் கதைத்தவன் அதுவும். எனது மொழியில். அவசரமாக பரிசோதித்து ஸ்ரெச்சரில் போட்டுக் கட்டித் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். வேடிக்கைபார்த்த சனங்களும் தோள்களைத்தூக்கி உதடுகளைப்பிதுக்கி பேசிக்கொண்டது என் காதுகளில் விழுந்தது.
"இவன் தூள் பத்திறவங்கள்ள ஒருவன்"
"தூள் விக்கிறவன்"
"இவடத்திலதான் இவன் படுத்தெழும்பிறவன்"
"இந்த டஸ் பின்னுகளுக்குள்ள இருந்து மிச்சம் மீதிகளையெல்லாம் எடுத்துச்சாப்பிடுகிறதைக் கண்டிருக்கிறன்"
"இவன் ஒரு ஆசியாக்காரனாயிருக்கோனும் அல்லது குரினாம்காரன்"
இவனொரு இலங்கையன் - ஒரு தமிழன் என்பது என்னால் மட்டும்தான் அடையாளம் காண முடிந்தது.
நானும் புகையிரத மேடைக்கான படிகளில் இறங்கி றெயின் பிடித்துவிட்டேன். தொடர்ந்தும் அவன் நினைவுகள்.
அன்று அவனுடன் ஏனோதானோ என்று கதைத்துக் கொண்ட கதைகள்.
9

Page 6
எனக்கென்ன என்று ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்கும் ஒருவகை சுயநலப்புத்தி.ம். நான் என்ன செய்யலாம். தமிழாக்களிட்ட காசு சேர்த்து இலங்கைக்கு அனுப்புவமா? அனுப்புவது.யாருக்கு ?
ஒருவன் இறந்து தொலைந்தபின்னர் சோகமும் இரக்கமும் கொள்ளுகின்ற இந்தப் புத்தி ஏன் எனக்கு? மீண்டும் மீண்டும் எனக்கு அவனோடு பேசியவைகளும், அவனது அடிமனதில் பொதிந்திருக்கும் சோகமும், அவனது இயலாமையை தனது நண்பனுக்குச் சொல்வதுபோல் சொன்னவிதமும் எனக்கு நினைவில் வந்தன.
அது ஒரு புதன்கிழமை எனது இரவுப் பள்ளிக் கூடம் முடிந்து பஸ் ஸைப்பிடித்து அதே ஸ்ரேசனுக்கு வந்தேன். பஸ் பத்துநிமிடங்கள் தாமதித்ததால் எனது றெயினை நான் கோட்டை விட்டுவிட்டேன். அடுத்த றெயின் இன்னும் அரைமணி நேரம் என்ன செய்வது?
அந்தத் தொடர்கடைகளின் "சோக்கேசு’களுக்குள் கண்களை மேயவிட்டு மெல்ல மெல்ல ஒரு சுற்றுச் சுற்றினால் நேரம் தெரியாமல் போய்விடும். நேரம் பத்தைத் தாண்டிவிட்டதால் சனநடமாட்டம் மிகக்குறைந்திருந்தது.
ஆங்காங்கே சிலர் “சோக்கேசுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஆயாசமாக நடந்துகொண்டிருந்தனர். இன்னும் சில பிச்சைக்காரர்கள் மூலைகளில் தமது முடிச்சுக்களுடன் உறங்கிக் கொண்டிருந்தனர். நித்த குடிகாரன் ஒருவன் தூண் ஒன்றைப் பிடித்துக்கொண்டு டச்சில் ஏதோ உளறிக்கொண்டிருந்தான். இடையிடையே ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி கெட்டவார்த்தைகளினால் திட்டினான். அவனைக்கடந்து வடக்குப்பக்க வீதிக்கு இறங்கும் படிகளின் முடக்கில் இருந்த விளம்பரப் பலகையில் பிறந்த குழந்தை ஒன்றிற்கு நச்சு வாயு தாக்காமல் முகக் கவசம் போடப்பட்ட பெரிய படமொன்று காணப்பட்டது. அதன் கீழ் ஒதுக்குப்புறமாக மூன்று பேர் குந்தியிருந்தார்கள். அவர்கள் மூவரும் மிக அவசரத்தில் ஏதோ காரியமாற்றுவதுபோல் எனக்கு ஒரு எண்ணம். ஏதாவது திருட்டோ தற்செயலாகப் பார்ப்பது போல் அடிக்கடி நோட்டம் விட்டேன். உள்ளூர ஒரு சிறு பயம்.
ஒருவன் வெள்ளிக் கடுதாசியில் வைத்து எதையோ சிகரட் லைட்டரால் குடாக்கிக் கொண்டிருந்தான். மற்றவன் ஒரு கத்தி போன்ற ஒன்றினால் மெல்ல சேர்த்துச் சேர்த்துக் கலந்து கொண்டிருந்தான். மற்றவன் சிறு கடுதாசித் துண்டுகளில் ஒன்றைச் சுருளாக்கிக் கொண்டிருந்தான். அவர்களும் சுற்றும் முற்றும் விசேடமான கவனிப்புடன்தான் காரியமாற்றிக் கொண்டிருந்தனர். பொலிஸ் வரக்கூடும் என்ற அவசரம். அவர்களில் ஒருவன் வெள்ளையன் தலை பரட்டை அடித்துப்போய்க் கிடந்தது. மற்றவன் ஆபிரிக்க கருப்பனாயிருக்கலாம் புலுட்டைத் தலையும் பெருத்த

உதடுகளும். மற்றவன் ஆசியன் எம்மைப்போன்று சிலவேளை குரினாம்காரனாக இருக்கலாம். அவர்கள் துாள் பாவிப்பதற்கான ஒரு ஆயத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். உலகெங்கும் இன்று இளைஞர்களைத் தொற்றியுள்ள ஒரு பயங்கரமான பழக்கமிது. ஐரோப்பாவில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எதிர்காலம் குறித்து கவலைப்படுகின்ற மிக முக்கியமான விடையங்களில் இதுவும் ஒன்று.
லைட்டரை வைத்திருந்த அவன் என்னை ஒரு விதமாகப் பார்த்தது எனக்கு என்னவோ போலிருந்தது. நான் சட்டெனத் திரும்பி எனது கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தேன். இன்னமும் இருபது நிமிடங்கள் உள்ளது. அவர்களைக் கவனியாமல் மறுபக்கம் திரும்பி நடந்தேன்.
இவ்வகைப் போதைப் பொருட் பாவனை ஒல்லாந்தின் பெரு நகரங்களின் மூலை முடுக்கெங்கும், பரந்து கிடக்கும் விபச்சாரப் பகுதிகளிலும் நாளாந்தம் நடந்து கொண்டுதான் உள்ளது. இந்தத் தேவைகளுக்காக பல உல்லாசப் பிரயாணிகள் ஒல்லாந்திற்கு வந்து போகிறார்கள். இவற்றுடன் அகதிகளாக வந்த இலங்கையர்களும் இவ்வகை போதைப்பொருட் பாவனைக்கும், விபச்சார விடுதிகளுக்கும், நிரந்தர மதுப்பானைக்கும் அடிமைகளாகி சீரழிந்திருப்பது ஒன்றும் மறைக்கப்பட வேண்டிய விடையங்களே அல்ல.
எனக்குப் பசி குடலைக் கடித்துக் கொண்டிருந்தது. திரும்பி நடந்து ‘சினைக்பார்’ எனும் ஒரு சிறு உணவுக் கடைக்குள் நுழைந்தேன். உருளைக்கிழங்குப் பொரியலும், ‘கறிசோகம்' வேண்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
எனக்கு எதிரே இருந்த ஒரு கதிரையில் ஒருவன் வந்தமர்ந்தான். அவன். அந்த ஆசியன். அந்த மூவரில் ஒருவன். தலைமுடி வளர்ந்து தோள்வரை கிடந்தது. ஒரு சிறு தாடியும் மீசையும். பொது நிறம். கீழே எதையோ தேடினான் சில சிறு சிகரட் துண்டுகளைப் பொறுக்கினான். பின்னர் திரும்பி என்னைப் பார்த்தான். நானும் நேரே அவனைப் பார்த்தேன். அவனுடன் கதைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குச் சற்றும் இல்லை.
அவனே"ஹலோ" என்றான்
நானும் பதிலுக்கு "ஹலோ" சொன்னேன்.
"நீங்கள் எந்த நாட்டவன்" டச்சில் கேட்டான்.
"இலங்கையன்"
"தமிழா?"
"நானும் தமிழன்தான்" அவனிடம் ஒரு சிறு பதட்டத்தையும், இயல்பான சோகத்தையும் அவதானித்தேன்.
எனக்கும் கொஞ்சம் வெக்கமாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன்
11

Page 7
எனக்குத் தெரிந்தவர்கள் ஒருவருமில்லை.
"உருளைக்கிழங்குப் பொரியல் சாப்பிடுகிறீகளா?" "ஓம்" எந்த முகமனுமில்லாமல் சொன்னான். சாப்பிட்டுக் கொண்டே தன்னைப் பற்றிய பல விபரங்களை எனக்குச் சொன்னான்.
யாழ்ப்பாண பிரபல கல்லுாரியொன்றில் ஏ.எல் வரை படித்ததாகவும், இயக்கமொன்றுடன் இணைந்து பயிற்ச்சிக்காக இந்தியா போனதாகவும், இயக்கமோதல்களும் உள்ளுக்குள் முரண்பட்டும், தப்பி பாக்கிஸ்தான் போனதாகவும், அங்கு பண நெருக்கடி பல தொல்லைகள் காரணமாக வறிரோயின் விற்பனையில் ஈடுபட்டதாகவும் சொன்னான். ஜேர்மனிக்குள் துாள் கொண்டுவந்த போது அங்கு பிடிபட்டு ஐந்து வருடங்கள் சிறையிலிருந்து பின்னர் நன்னடத்தையில் விடுதலை செய்யப்பட்டு கொலண்ட் வந்ததாகவும் சொன்னான். அவன் இவற்றைச் சொன்ன போது எனக்கு நம்பச் சங்கடமாகவிருந்தது. ஆயினும் இவ்வகையான பல உண்மைச் சம்பவங்கள் எனக்குத் தெரிந்திருந்தது.
தனது குடும்பத்துடன் பலவருடங்களாத் தொடர்புகள் இல்லை என்றும், தகப்பன் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் என்றும், இரண்டு அக்காக்களும் ஒரு தம்பியும் ஊரில் இருந்ததாவும் சொன்னான்.
"ஏன் நீங்கள் இவற்றை விட்டு விட்டு வேறேதும் செய்யலாமே" "செய்யலாம்தான்" என்றான் தேவையில்லாமல் ‘அட்வைஸ்" பண்ணுவதாக நினைக்கக் கூடாத மாதிரி நானும் கதைத்தேன். தான் இலங்கை போக முடியாதுள்ளதாகவே வருந்திக் கொண்டான்.
"இங்கு அசேலைப் பதிந்து வாழலாமே" என்றும் சொல்லிப் பார்த்தேன். எதற்கும் எதிர்ப்பில்லாமல் - கேட்டுக் கொண்டான். யாரும் கேட்டுக்கொண்டிருந்தால் நீங்கள் ‘அட்வைஸ்" பண்ணுவது போல சொல்லிக் கொண்டேயிருப்பீர்கள் என்று என் மனைவி அடிக்கடி சொல்லுவது ஞாபகத்திற்கு வந்தது.
பின்னர் அவனது நண்பனான கறுப்பன் வந்து அவனை அழைத்தான்.
"பிறகு சந்திப்பம்" என்று சொல்லிப் புறப்பட்டான்.
அதற்குப்பின் அந்த நெருக்கமான நகரத்தில் இரண்டோ மூன்று தடவைகள் அவனைக் கண்டேன். அதே அவனது நண்பர்களுடன்.
அதன் பின்னர் இன்று.

சி.சிவசேகரம்
கூழுக்கும் ஆசை
மீசைக்கும் ஆசை
உலக சுற்றாடல் பற்றிய சர்வதேச மாநாடு றியோ டி ஜனெரோவில் நடந்து முடிந்தது. பல தீர்மானங்கள் நிறைவேறின. சுற்றாடல் பிரச்சனை ஒன்று இருப்பதாக எல்லாரும் ஏற்றுக் கொண்டார்கள். இது ஒரு சாதனை என்று மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் திருப்திப் பட்டுக் கொண்டார்கள். உண்மையில் இது ஒரு சாதனையும் அல்ல இதற்கு முன்னரே பிரச்சனை ஒன்று இருப்பது பற்றி உடன்பாடு காணப்பட்டுள்ளது. பிரச்சனை பற்றி என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் காண்பதில்தான் உருப்படியான நடவடிக்கை இல்லை. ஏகமனதான முடிவு வேண்டிக்
காத்திரமான முடிவு தவிர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உடன்பாட்டை விரும்பிய மூன்றாமுலக நாடுகளின் தலமைகள் பலவேறு விஷயங்களில் அமெரிக்காவுடைய நலன் பேணுமாறான சலுகைகளை வழங்க முன்வந்தன. அறிவுசார்ந்த உடமைக்கான உரிமை (patent, copyright போன்ற உரிமைகள்) பற்றி அமெரிக்காவின் வலியுறுத்தலும் வியாபாரமும் தீர்வைகளும் பற்றிய பொது உடன்பாடு (GATT) பற்றிய அமெரிக்காவின் பிடிவாதமும் தளரவில்லை. எனவே மூன்றாமுலக நாடுகள் இவற்றை ஏற்குமாறு நிர்ப்பந்திக்கபட்டன. மூன்றாமுலக நாடுகளின் கண்டுபிடிப்புக்களும் பங்களிப்புக்களும் உற்ப்பத்திகளும் மலிவு விலையில் முன்னேறிய நாடுகளால் வாங்கப்படுகின்றன. இந்த நிலையில் ஏகாதிபத்திய நாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் மூன்றாமுலகைச் கரண்ட ஏற்பாடுகளை தமக்கு வசதியாக்கிக் கொள்கின்றன.
சுற்றாடலைப் பாதுகாப்பதற்காகத் தொழில் வசதி முன்னேறிய நாடுகளால் ஒதுக்கப்பட்ட தொகையோ மிகவும் சிறியது: இப்போதைக்கு 200 கோடி டொலர் இதனுடன் பின்வருவனற்றினை ஒப்பிடுவது தகும்.
அமெரிக்காவின் வருடாந்த ராணுவச் செலவு 30 000 கோடி டொலர். ரஷ்யாவிற்கும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகட்கும் பொருளாதார
13

Page 8
விருத்திக்கான உதவிக்காக அமெரிக்காவும் மேலை முதலாளித்துவமும் ஒதுக்கிய தொகை 2400 கோடி டொலர். இச்செலவுகள் சுற்றாடலை மேலும் அசுத்தமாக்கும் பணிக்கே உதவுவன, மாறாக ஐ.நா. சபையின் மதிப்பீட்டில் 60 000 கோடி டொலர் கற்றாடல் நெருக்கடிக்கு முகங்கொடுக்க அவசியம். வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல, உலக வங்கிக்கு இவ்விஷயத்தில் மேலும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உலகச்சுற்றாடல் வசதி (GEF) எனப்படும் உலகவங்கியின் ஆணைக்குட்பட்ட நிறுவனத்தின் முடிவுகளுக்குக் கட்டுப்படுமாறு மூன்றாமுலக நாடுகள் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளன. மூன்றாமுலக நாடுகளின் கடும் எதிர்ப்புக் காரணமாக இது ஒரு இடைக்காலு ஏற்பாடாகவே உள்ள போதும், தற்காலிகமாக அங்கீகரிக்கப்பட்டமை ஏகாதிபத்தியவாதிகளது பிடிவாதத்தின் 35 விளைவு என்பதில் ஐயமில்லை.
இதன் விளைவாக, உலகவங்கியாற் சுற்றாடற் பிரச்சனை மூலமும் மூன்றாமுலக நாடுகளின் தொழில், பொருளாதாரப் பிரச்சனைகளிற் குறுக்கிட மேலும் வசதி ஏற்பட்டுள்ளது. GEF மூலம் மூன்றாமுலகைக் கட்டுப்படுத்தும் வாய்ப்புள்ள அதே வேளை முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் நடத்தை பற்றித் தட்டிக் கேட்க ஒரு வசதியும் இல்லை.
உலகின் சுற்றாடல் பிரச்சனைக்கு மூலகாரணம் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் மிகையான நுகர்வுதான். இதை மூடிக்கட்டும் முயற்ச்சியில் மூன்றாமுலகின் அத்தியாவசிய தொழில் விருத்திக்குத் தடைபோடத் தமது பொருளாதார வலிமையை முதலாளித்துவ வல்லரசுகள் பயன்படுத்தி வந்துள்ளன. றியோ மாநாடும் இந்த வழக்கத்திற்கு விலக்காக அமையவில்லை.
மூன்றாமுலக நாடுகளின் விவசாயிகளதும் ஆதிவாசிகளதும் நலன்கள் சுற்றாடலின் நலனுடன் நெருக்கமானவை. இவைபற்றிப் போதிய அக்கறை காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மிக நியாயமானது. மூன்றாமுலக அரசுகள் ஒரு புறம் தமது தேசங்களின் நலன்கட்கும் மறுபுறம் ஆளும் வர்க்க நலன்கட்கும் இடையில் தடுமாறுகின்றன. மூன்றாமுலகின் ஊழல் மிகுந்த சுரண்டும் வர்க்க ஆட்சியாளர்களாற் குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்பதே உண்ணிம.
உலகின் புரட்சிகர விடுதலைப் போராட்டச் சக்திகளின் கை ஓங்கத்தெரிந்த நிலையில் (1970களிற்போல்) மூன்றாமுலக நாடுகள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நிற்பதில் மும்முரமாக இருந்தன. 1980 களில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவுகளை நாம் நியோ மநாட்டின் முடிவிலுங் கண்போம்.
நியோ மாநாடு ஒரு கண்துடைப்பு என்பதால் அது மூன்றாமுலகிற்கு

முழுத்தோல்வி என்று சொல்ல முடியாது. அதன் பாடங்களை மூன்றாமுலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் கற்பார்களாயின் தமது சமுதாயங்களை மாற்றி, அதன் மூலம் சேதமடைந்து வரும் உலகச் சூழலையும் மாற்ற அவர்கட்கு இயலும்.
சுற்றாடல் பற்றிய அக்கறையுடைய நல்ல சக்திகள் முதலாளித்துவ நாடுகளில் உள்ளன. சமுதாய நீதி பற்றியும் மனித சமத்துவம் பற்றியும் அக்கறையுள்ள சக்திகள் உள்ளன. ஒடுக்கப்பட்ட நாடுகளும் மக்களும் இவர்களுடன் ஒத்துழைக்கவும் இணைந்து போராடவும் வாய்ப்புள்ளது. அவசியமும் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் அதற்குப் பங்களிக்க முடியும், மனிதரை மனிதர் சுரண்டுதலும் சுற்றாடலின் நெருக்கடியும் ஒரு நாணையத்தின் மறு பக்கங்களே என்ற உண்மையை நாம் கிரகித்துக் கொண்டாற்.
புதிய உலகம் ஒன்றை அமைப்பதற்காக இணைவது நமக்கு இயலாத காரியமல்ல, சுரண்டற் சமுதாய அமைப்பும் நெருக்கடியற்ற சுற்றாடலும் சம காலத்தில் இருக்க முடியாதன என்ற உண்மையையும் மனித குலத்தின் இருப்பு மனித சமத்துவத்திலும் சுற்றாடலுடன் மனிதாது உடன்பாட்டின் மேலும் தங்கியுள்ளது என்பதையும் நாம் உணர்வதும் பிறருக்கு உணர்த்துவதும் நமது வருங்கால சந்ததிகட்கு நாம் செய்யவேண்டிய கடமை,
பத்ம மனோகரன் =
கருத்தடைக்கு எதிராகப் பெண்கள்
பூமியின் இயற்கை வழங்கள் சேதமடைந்து தம் வாழ்வு பாதுகாப்பற்றதாக மாறிக் கொண்டிருப்பதை மக்கள் உணரவும், அதனைப் பாதுகாக்க வேண்டிய கடமை தம்முன்னுள்ளது என்பதையும் , தம் வாழ்வு மட்டுமல்ல எதிர்காலச் சந்ததியின் துயரங்களையும் தடுப்பதற்கான அம்சங்கள் தலைகாட்டத் தொடங்கியுள்ளன.
பல அரசுகளும் , அறிஞர்களும் சுற்றாடல் பாதுகாப்பையும், அபிவிருத்தியையும் தடைப்படுத்துகின்ற உண்மைக் காரணங்களை மூடிமறைத்து உண்மைக்குப் புறம்பான காரணங்களை பெரிது படுத்திக்காட்டுகின்ற போக்கும் அதற்கெதிரான உணர்வுபூர்வமான எதிர்ப்புக்களைக் காட்ட மக்கள் தலைப்பட்டுள்ளதும் இயற்கைக்கும், குழலுக்கும். மனிதவாழ்வுக்கும் கிடைத்த நல்ல அறிகுறி என்றே
எண்ணத்தோன்றுகின்றது.

Page 9
1992 யூனில் பிரேசிலின் றியோ டி ஜனரோவில் ஐக்கிய நாடுகள் சபையினால் 'சுற்றாடலும் அபிவிருத்தியும்" என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட மாநாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக விஞ்ஞானிகளும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தனர். 20 வருடங்களுக்கு முன்னர் சுவீடன் நகரான ஸ் ரொக்கேளினில் நடைபெற்ற மாநாட்டிற்குப் பின்னர் நடந்த மிக முக்கிய மாநாடு இதுவெனலாம்.
m இம்மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த இதே காலப்பகுதியில், பெண்கள் பலர் கலந்துகொண்ட பிரத்தியேக நிழல் மாநாடொன்று அங்கு நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்துகொண்டோர் வெளிப்படுத்திய கருத்துக்கள் மிக முக்கியமானவை.
உலகில் வினாடிக்கு வினாடி பிறக்கும் குழந்தைகளின் தொகை அதிகம் என்றும் , சனத்தொகை அதிகரிப்பு சுற்றாடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறதென்றும் மிகப் பதட்டத்தனமாக குரல் கொடுப்பதை நிறுத்துமாறும். வறுமையும், பஞ்சமும் ஏன் ஏற்படுகின்றது என்பதையும் எதற்காக மக்களை வறுமை வாட்டுகிறது என்பதை ஆராயுமாறும் ஆக்ரோஷமாகக் குரல் எழுப்பினார்கள்.
ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளான மூறாமுலக நாடுகளில் பெருகி வரும் சனத்தொகையானது உலக அபிவிருத்தியில் பெரும் எதிர் விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்பது ஒரு தவறான கருத்தாகும். அபிவிருத்தியடைந்த அமெரிக்க, ஐரோப்பி நாடுகளில் சுற்றாடல் சேதமடைவதென்பது அது ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளையும் வெகுவாகப் பாதிக்கும் என்பது மட்டுமன்றி சனத்தொகைப் பெருக்கத்திற்கு வறுமையும் மிக முக்கிய காரணமாகும் என்றும் குறிப்பிட்டார்கள்.
உண்மையில் இது என்ன? உலக சனத்தொகையில் 23 வீதமானவர்கள் பூமியின் இயற்க்கைப் பொருட்களின் 80 வீதமானவற்றை அனுபவிக்கிறார்கள். இதுவும் வறிய மக்கள் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகும் என்று இந்தியப் பெண் விஞ்ஞானியான சீலா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
பணம் படைத்தவர்கள் செயற்கை முறையில் வைத்தியர்களின் உதவியுடன் தங்கள் விருப்பத்திற்கு (Genetic Manipulation) ஏற்ப குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் ஆனால் வறிய மக்கள் கருத்தடைக்கு கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். பிரேசிலில் மட்டும் 45 வீதமான பெண்கள் அவர்களது கற்பம் தரிக்கக்கூடிய பருவத்தில் கருத்தடைக்கு ஆளாகியுள்ளார்கள். இதில் பெரும் பாலானவர்கள் வறியவர்கள் மட்டுமல்ல - கருப்பர்களும்கூட.
அனுபவ ரீதியான ஆய்வுகளின்படி வறுமையானது சனத்தொகைப்

பெருக்கத்தினால் ஏற்பட்டதல்ல. மாறாக சனத்தொகைப் பெருக்கமானது வறுமையால்
ஏற்படுகிறது.
வங்களாதேசில் கருத்தடுப்புத் திட்டமானது கடந்த 30 வருடங்களாக நடைமுறையிலுள்ளது. இத்திட்டத்திற்கு அமெரிக்க ஸ்தாபனங்கள் - உலக வங்கியூடாக நிதி உதவி செய்து வருகின்றன. ஆனாலும் வங்களாதேசின் சனத்தொகை மேலும் அதிகரித்துள்ளது. 1965ல் 3 வீதமாக அதிகரித்த சனத்தொகையானது 1991ல் 3.8 வீதமாகியுள்ளது. ஒரு குடும்பத்தில் ஆறு குழந்தைகள் பிறந்தால் மூன்று பேர்மட்டுமே உயிருடன் இருக்க முடியும் என்ற மாதிரியான 'மருத்துவ வசதி தான் இதற்குக் காரணமாகும்.
தென்கொரியாவில் ஒப்பீட்டளவில் அதிக கல்வி வாய்ப்பு பெண்களுக்கும் கிடைத்திருப்பதால் குழந்தைகள் பெறுவதான சராசரி வீதம் வெகுவாகக் குறைந்துள்ளது.
எனவே சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவதென்பது சிறந்த மருத்துவவசதி, கல்வி தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும், தேவைக்கு ஏற்றவாறான இயற்கை வழங்களை மக்களுக்குக் கொடுப்பதுமே ஆகும். இவ்வகைக் காரியங்கள் ஆற்றினால்தான் வருங்கால குழல்ப் பாதுகாப்புக்கும், உலக வளர்ச்சிக்கும்
கொழும்பிலும் அதனைச்சுற்றியுள்ள பிரதேசங்களிலும் வந்து தங்கியிருக்கிற பெரும்பாலான வடக்கத் தமிழர்களின் பொருளாதாரம் ஐரோப் பிய நாடு களி லிருந்து வருகின்ற பணம் தான் , வங்கிக்கணக்கு,ட்றாப்ட், என்பவை மட்டுமல்லாமல் தனியார்கள் பணம் பெற்று மாற்றிக்கொடுக்கிற ஒரு முறைமையும் நடைமுறையில் உள்ளது. இதன்படி, ஐரோப்பிய நாடொன்றில் இருக்கும் ஒருவர் தனது பணம் அனுப்பப்பட வேண்டியவரின் பெயர், விலாசம், டெலிபோன் இல. என்பவற்றை எழுதி அனுப்பவேண்டிய பணத்தை அங்குள்ள ஏஜண்ட்டிடம்
17

Page 10
கொடுக்கவேண்டும். மறுகணமே தகவல் அங்கிருந்து 'பக்ள் மூலம் பறந்து வந்துவிடும்- இங்குள்ள ஏஜண்டுக்கு.
இந்த ஏஜண்ட் உடனடியாக இப்பணத்தை வீடுதேடி கொண்டுவந்து கொடுக்கிறார்.
கொழும்பில் உத்தியோகம் பார்த்து மணியோடரில் பணம் அனுப்ப அதை எடுத்து சிவித்த யாழ்ப்பாணத்திற்கும் இதற்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் உண்டு. அப்போது அனுப்பப்பட்ட பணம் இலங்கையிலிருந்து இலங்கைக்குள்ளேயே அனுப்பப்பட்டது. அதன் பெறுமதி, அதை உழைப்பதற்கான கல்டம் என்பன பணத்தை பெறுபவராலும் உணரப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் பணம் அப்படியல்ல. அது இங்கு வரும்போது 25 முதல் 70 வரையான மடங்குகளாகப் பெருகுகிறது. பெரியளவு தொகையாக இங்கு வந்து சேர்கையில் அது மாறிவிடுகிறது. இந்தப் பெருந்தொகை கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பொறுப்பற்ற ஒரு போக்கினை தமிழர் மத்தியில் வளர்த்துவிட்டிருக்கிறது. -
பொருட்களை வாங்கும்போது விலைக்காகச் சண்டை பிடித்து நாலுகடை ஏறி இறங்கி வாங்கிய நிலை மாறிவிட்டது. வாங்கப்படும் பொருளின் பாவனைக்காலம் பயன்பாடு என்பன கருதி வாங்கப்படுவதற்குப் பதிலாக பெருமை, அந்தள்து போன்ற காரணங்களுக்காக இவை வாங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களிலிருந்து வயதுவந்தவர்கள் பாவிக்கின்ற பொருட்கள் வரை பயனற்ற பொருட்களை வெறும் டாம்பீகக் காரணங்களுக்காக வாங்குகிறார்கள். இப்பொருட்களுக்கு இவர்கள் கொடுக்கும் பணம் திரும்பவும் இந்த நாடுகளுக்கே திரும்பிப்போய்விடுகிறது. விலைகளைப்பற்றி அக்கறைப்படாது பொருட்களை வாங்குவதால் யாழ்ப்பாணத்தார் " என்றதும் பொருட்களை இரண்டுமடங்கு விலை கூட்டி கூறிவிடுகிறார்கள் கடைக்காரர்கள்.
கல்கிசை முதல் ஜாஎலை வரையான முழு இடங்களிலும் இவர்கள் ஹோட்டேல்கள், தனிவீடுகள் என்பனவற்றை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்கள். வாடகைக்காக வீட்டுச்சொந்தக்காரர் கேட்கும் பணத்தையிட்டு இவர்கள் அக்கறைப்படுவதில்லை. ரூ.2000/= முதல் ரூ.8000/= வரை வாடகை கொடுத்து இவர்கள் இருக்கிறார்கள். கொழும்பின் சராசரி வாசி ஒருவருக்கு கற்பனை பண்ண முடியாத வாடகைப்பணம் இது. இந்த வாடகை ஏற்றம் கூட கண்மூடித்தனமாக காசை கொடுப்பதால்/

கொடுக்கத்தயாராக இருப்பதால் ஏற்பட்ட ஒன்றுதான்.
இது மட்டு மல்ல இலங்கை அரசின் இன சமத்து வ நடவடிக்கைகளின் காரணமாக அடிக்கடி கைதாகும் இளைஞர்கள் சாதாரண சட்டப்படி விடுவிக்கப்படவேண்டும் என்றபோதும், பொலிசுக்கும், பெரியவனுக்கும் காசைக்கட்டி வெளியிலே எடுக்கிறார்கள். காசு ருசிகண்ட பொலிசோ அடிக்கடி ஆட்களைப் பிடிக்கிறது. அரசாங்கச் சட்டம் இதற்கு வசதியாக இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. அரசின் கைதுகளுக்கு எதிராக ஏதாவது செய்ய நினைப்பவர்களைப் பார்த்து ஏளனமாகச்சிரித்துவிட்டு இவர்கள் காசை வீசி வெளியே கொண்டுவந்து விடுகிறார்கள்.
ஒவ்வொரு நாளும், இப்போது மழைக்காலக்காளான்கள் போலப் பெருகியுள்ள கொமுனிக்கேசன் சென்ரர் களின் முன்னால் பலர் தவமிருக்கிறார்கள். இந்தக் கொமுனிக்கேசன் சென்ரர்கள் கொழும்பின் மூலை முடுக்கெங்கும் பெருகிவிட்ட ஒரு லாபம் தரும் வியாபாரமாகி விட்டது. இரண்டு டெலிபோன்களை வைத்துக் கொண்டு வேறெந்த முதலுமின்றியே வியாபாரம் நடக்கிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்தாரை குறிவைத்தே இந்தக் கொமுனிக்கேசன் நிலையங்கள் உருவாகி உள்ளன. அங்கு நடக்கிற விவகாரங்கள் மிகவும் சுவையானவை. கொழும்பின் கொமுனிக்கேசனில் நடந்த சம்பவம் இது.
ரெலிபோன் இலக்கமிடப்பட்ட கூண்டுகள் ஒருபுறம். மறுபுறம் வரிசையாக டெலிபோன் வருகைக்காக காத்திருப்பவர்கள். தடித்த கண்ணாடிச் சுவருக்குப் பின்னால் டெலிபோன்களை இயக்கியபடி பெண்களும் ஆண்களுமாய்.
தம்பி .ஜேர்மனிக்கு கோல் எடுக்க எவ்வளவு?
இப்ப எண்டால் நுாற்றி இருபது ஒரு நிமிசத்துக்கு
இப்ப எத்தினை மணியிருக்கும் அங்கை
காலை ஆறு மணியிருக்கும்.? என்றபடி பின்புறமாக திரும்பி நேரத்தைப் பார்த்துவிட்டு சரியான நேரத்தைச் சொல்கிறார். ஐஞ்சு அம்பது".
இப்ப கதைச்சால் அப்ப பிடிக்கலாம்"
19

Page 11
ஒ. இதுதான் சரியான நேரம். நித்திரைப் பாயிலை வைச்சு அமத்தலாம். சிரிக்கிறார் அவர்.
அப்ப தம்பி ஒருக்கா கதைக்கோணும்"
"நீங்க கதைக்கோனுமோ அவையை எடுக்கச்சொல்லவோ?
அவையை எடுக்கச்சொல்லுங்கோ"
அப்ப ஒரு நிமிச கோல் எடுத்து நம்பரைச் சொல்லுறன். அவை எடுக்கலாம்.'றிசீவிங் கோல் ஒரு நிமிசத்துக்கு மூன்று ரூபா.
'sif'
இங்கே வந்து பேசிய வர் டெலிபோ னை மலிவாக எப்படிப்பாவிக்கமுடியும் என்றோ றிசீவிங் கோல்"க்கு இவ்வளவு அதிகமாகப் பணம் கொடுப்பது அவசியமா என்பது பற்றியோ, ஜேர்மனியில் இருக்கும் உறவினர் இவர் சொன்னவுடன் டெலிபோன் எடுக்க வசதியாக இருக்கிறாரா என்பது பற்றியெல்லாம் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. காரணம் எல்லாம் 25 மடங்காக பெருத்து இங்கு வந்து சேரும் பணம் தான். இவரது மகனோ அல்லது உறவினரோ இலங்கைப் பணத்தில் 40 முதல் 60 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார் என்ற விடயமும், அவர் அங்கு வீடு, கார் கூட வைத்திருக்கின்றார் என்ற விடயமும் இவரைப் பொறுத்த அளவில் அவர் குபேரவாழ்வு வாழ்வதான உணர்வில் இருக்கும்படி செய்திருக்கக்கூடும். தான் ஒரு நிமிடக் கோல் எடுத்தவுடன் அவர் உடனே திருப்பி எடுப்பது ஒன்றும் கல் டமான காரியமல்லவென்று இவர் நினைத்திருக்கக் கூடும்.
இவர் மட்டுமல்ல இப்படித்தான் இங்குள்ள பலர் நினைக்கிறார்கள். இவர்கள் இங்கு இலங்கை ரூபாயில் கணக்குப்பார்த்து அவர்கள் வசதியாக இருப்பதாக கற்பனை பண்ணுவதற்கு மாறாகவே அங்குள்ளவர்களின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. "பெரிய றெஸ்ட் டுரன்டுகளின் சமையலறைகளில் பாத்திரம் கழுவுபவர்களாகவும், சமையலாளர்களாகவும், இன்னுமிவை போன்ற கடின வேலைகளை செய்பவர்களாகவும் இருப்பதன் மூலம் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை 25 ஆல் பெருக்கிப் பார்த்து விட்டு அவர்கள் பெரிய வசதிகளுடன் இருப்பதாகக் கருதுவது சரியான மடைமை, பாத்திரம் கழுவுவது என்பது எப்படிப்பட்டது என்பதை இங்குள்ள நிலைமைகளுடன் ஒப்பிட்டு ஒருவர் புரிந்து கொள்ள முடியாது. அங்கு
 
 

அன்றாட செலவீனங்களும் அப்படியே என்கிறார் அண்மையில் ஜேர்மனி சென்று திரும்பிய நண்பரொருவர்.
சராசரி 1500 - 2000 மார்க் வரை சம்பளம் வாங்குபவர்களாக உள்ளனர் எமது இளைஞர்கள். இவர்கள் ஏஜன்சிக்குக்கட்ட வாங்கிய கடன்கள், வீட்டில் உள்ள பொறுப்புக்கள், வெளிநாட்டில் இருப்பதன் காரணமாக த.வி. புலிகளுக்கு கொடுக்கவேண்டியது போன்ற பல்வேறு காரணங்களுக்காக நிறையவே மிச்சம் பிடிக்க வேண்டியுள்ளது. குடிநீருக்குப் பதில் ஏதாவது "ஜி ள் " அருந்தவேண்டிய நிலையில் உள்ள ஜேர்மனில் ( குழாயில் வரும் நீரை யாரும் குடிப்பதில்லை. அது அகத்தமானது என்று கருதுகிறார்கள். உலக யுத்தத்தால் ஏற்பட்ட இரசாயனக் கலப்பு காரணம் என்றும், இது கழிவு நீருடன் சேர்த்து வடிகட்டப்படுவதாலேயே என்றும் பல காரணங்களை சொல்கிறார்கள். சுத்தமான குடிநீர் தேவையானால் போத்தலில் அடைத்து வரும் நீரையே குடிக்கவேணும். அதுவும் பழச்சாறும் கிட்டத்தட்ட ஒரே விலைதான் என்கிறார்கள்) நாளாந்த செலவும் இலங்கையை விட 25 மடங்கு அதிகம் என இங்குள்ளவர்கள் உணர்வதாக தெரியவில்லை. உதாரணமாக ஒரு சிகரட் பக்கட்டின் விலை 4,5 மார்க் ( ரூ.117 கிட்டத்தட்ட) இங்குள்ள bic போன்றதொரு சவரம் செய்யும் ரேசரின் விலை 3 மார்க் (ரூ 78 கிட்டத்தட்ட) எழுதுகிற சாதாரண ஒரெக்ல், ரெனோல்ட் போன்றதொரு போல்ட் போயின்ட் பேனாவின் விலை 15, 2 மார்க் (கிட்டத்தட்ட 39, 52 ரூபா) இவை அங்குள்ள நிலைமையை விளக்கப்போதுமென்று நினைக்கிறேன்.
'நமது ஆட்கள் அங்கு அரிசிச்சோறும் கறியுமாக இலங்கை உணவையே உண்கிறார்கள். அங்குள்ள காலநிலைக்கு உகந்த உணவு வகைகளை பாவிப்பது குறைவு. இதனால் இவர்கள் மிச்சம் பிடிக்கக் கூடியதாக உள்ளது. அரசிச்சோறும் கறியும் தொப்பை வைக்க உதவுகிறதே ஒழிய ஜேர்மனிய வேலைத்தளங்களில் சக்கை பிழிய வேலைசெய்ய போதுமான சக்தியை கொடுக்கும் என்று எனக்குப் படவில்லை.
இதைவிடவும் முக்கியமானது அவர்களது வேலை நேரம் எமது நாட்டைப்போல் அல்ல. ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாதபடிக்கு வேலை நேரம் வேறு வேறாக அமைந்துள்ளது. கணவனும் மனைவியும் சந்திப்பது கூட வாரத்தில் ஒரு நாள் இரண்டு நாளாக அமைவதும் உண்டு என்று கூறுகிறார்கள். குழந்தைகளை சந்திப்பதும் அப்படியே. வேலைமுடிந்து வந்தால் அசந்து துாங்குகிறார்கள். திரும்ப எழுந்து சாப்பிட்டு விட்டு வேலைக்குத் தயாராகுகிறார்கள். தொடர்ச்சி பக் 28.
21

Page 12
நெ த ர் லா ந் தி ல் அரசியல் தஞ்சம் கோரி யிருந்த பிலிப் பைன் ன் நாட்டைச் சேர்ந்த Nathan பெiாr) என்பவரை அமெ ரிக்க சி.ஐ.ஏ யும் நெத ர்லாந்தின் உளவுத் துறை யும், பிலிப்பைன்ஸ் விடு திமிலை இயக்கங்கள் சம்ப ந்தமான விபரங்களையும், அதன் ரகசியங்களையும் கொடுப்பவராகவோ அல் லது ஏஜெண்டாகவோ மாற்றுவதற்கு எடுத்த முயற்சி ஒன்று திரு qump அவர்களின் வேண்டுகோ ளின் பேரில் சில செய்தி த்தொடர்பு சாதனங்களால் திருட்டுத்தனமாகப் பதி யப்பட்டு அம்பலத்திற்கு வந்தது. அதன்பின் அவரி னால் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்ட வாக்குமூலத்
தின் தமிழாக்கம் இது.
நெதர்லாந்தின் உளவுத்துறையும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ யும் என்னை {፰፻፬ኴ ஏஜண்டாக அல்லது தகவல் கொடுப்பவனாக சேர்த்துக் கொள்வதற்கான அவர்களது பிரயத்தனத்தை, புதிய மக்கள் SITT SI GAP b (in e w peoples ar liny) மேற்கு ஐரோப்பாவிலுள்ள அமெரிக்க இலக்குகளைத் தாக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்ற அடிப்படையில் நியாயப்படுத்த முயல்கின்றனர் என செய்தி வெளியீடுகளிலிருந்து நான் அறிந்து கொண்டேன்.
 
 

புதிய மக்கள் இராணுவத்தைப் பற்றிய இக்கதையானது எந்தவொரு சிறு ஆதாரமுமில்லாமல் உண்மையிலேயே ஒரு புனையப்பட்ட கதையே" என்னைப்போன்ற அரசியல் தஞ்சம் கோரியவர்களின் உரிமை, பாதுகாப்பு, மற்றும் தஞ்சமுறையின் தனித்துவம் என்பன உண்மையான காரணிகளாக இருக்க இதற்கப்பால் கவனத்தை கொண்டு செல்வதற்காக மேற்கொள்ளப் பட்ட ஒரு மோசமான முயற்சி என்றே இதனை நான் கருதுகிறேன்.
நெதர்லாந்து உளவுத்துறை கூறுவது போல் சட்ட பூர்வமானது என்பதற்கு அப்பாற்பட்டு மிகவும் நேர்த்தியற்றதாகவே முழு நடவடிக்கையும் அமைந்திருந்தது.
நெதர்லாந்தினதும் சி.ஐ.ஏ இனதும் உளவு ஏஜண்டுகள் ஒக்ரோபர் 10ம் திகதி என்னை அணுகுவதற்கு முன்பாக அவர்கள் எனது விட்டிற்கு வாவில்லை; தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளவில்லை. நான் அவர்களை வீதியிலேயே சந்திக்க நேர்ந்தது. அவர்கள் தங்களை நெதர்லாந்து அல்லது சி.ஐ.ஏ உளவு ஏஜெண்டுகளாக அறிமுகப்படுத்தவில்லை. திருeெes overween என்பவர் தன்னை உள்நாட்டு அமைச்சை சேர்ந்தவராக மாத்திரமே அறிமுகப்படுத்தி "உள்நாட்டு விவகாரம்' என்று எழுதப்பட்ட தனது அடையாள அட்டையையும் காண்பித்தார்.இருவருமே உள்நாட்டு அமைச்சைச் சேர்ந்தவர்கள் என்றே அப்போது நான் நினைத்துக் கொண்டேன். நாங்கள் Holiday 1ாா என்னும் வேறாட்டலை நோக்கி காரில் போய்க் கொண்டிருக்கும் பொழுதே திரு Charles Taylor என்பவர் ஒரு அமெரிக்கர் என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். அவர்கள் ஏன் என்னுடன் கதைக்க விரும்புகிறார்கள் என்பதை
றோட்டலினுள்ளிருக்கும் கோப்பி அருந்துமிடத்துக்கு வரும்வரை கூறவில்லை.
நான் தனியாக இருக்கும்வேளை என்னைக் கூட்டிச்சென்று உள்நாட்டு அமைச்சைச் சேர்ந்த பிரதிநிதிகள் எனது அரசியல் தஞ்சக் கோரிக்கை தொடர்பாக கதைக்க விரும்புகிறார்கள் என்ற எனது எண்ணமே நான் அவர்களுடன் சென்றதற்கான ஒரேயொரு காரணமாகும். என்னுள் மறைப்பதற்கென்று எதுவுமில்லை என்பதை நான் உணர்ந்ததினாலேயே நான் அவர்களுடன் செல்வதற்கு பூரணமாக உடன்பட்டேன்.
காரில் போகும் போது திரு Taylor தன்னையொரு அமெரிக்கராக அறிமுகப்படுத்தி நான் பலதடவை பிலிப்பைன்ஸ்ற்கு சென்றிருப்பதாகத் தொடங்கி சில பிலிப்பைன்ஸ் (Tagalag) மொழிச் சொற்களை உச்சரித்தபோது எனது இதயம் ஒரு முறை வேகமாக அடித்துக்கொண்டது. இதன் பின்னரே எனது அரசியல் தஞ்சக் கோரிக்கை தொடர்பாக குறிப்பாகவோ அல்லது மேலோட்டமாகவோ அவர்கள் என்னுடன் கதைக்க வரவில்லை என்பதை நான் உணர ஆரம்பித்தேன்.
கோப்பி அருந்துமிடத்தில் வைத்து தான் ஒரு அமெரிக்க உளவுத்துறையை
23

Page 13
சேர்ந்தவர் என்பதை திரு Taylor தெரிவித்தபோது நான் மிகவும் பீதியடைந்தேன். அமெரிக்க உளவுத்துறை என்னைப் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருக்கிறது என்பதன் மூலம் என்னை வியப்பூட்டுவதற்காக மேலெழுந்த வாரியாக அவர்கள் கூறிய எனது சரித்திரத்தில் ஆச்சரியப்படத்தக்க சில மிகச்சரியான தகவல்கள் தவிர, பிழையான தகவல்களும் அடங்கியிருந்தன. நிச்சயமாக திரு. Taylor சி.ஐ.ஏ யைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்பதை என்னுள் நான் கூறிக்கொண்டேன்.
தேசிய ஜனநாயக முன்னணியின் (NDF) நடவடிக்கைகள் தொடர்பான மிகவும் இரகசியமான தகவல்களையும், NDF இன் உட்கட்சி வேலைமுறைகள் தொடர்பான மிகச்சரியான தகவல்களையும் அவர்களுக்கு அளிப்பதற்கு அமெரிக்க உளவுத்துறைக்கு ஒரு தகவல் கொடுப்பவனாக ஏன்னைச் சேர்ப்பதற்கு திரு Taylor முயற்சி செய்தார். நெதர்லாந்து உளவுத்துறைக்காகவும் நான் சேர்த்துக் கொள்ளப்படவிருந்தேன் என்பதைப் பற்றி எனக்குத் திடமாக தெரியாவிடினும் அமெரிக்க உளவுத்துறைக்கும் நெதர்லாந்து உளவுத்துறைக்கும் மறைமுகத் திட்டமொன்று இருப்பதை என்னால் ஊகிக்கமுடிந்தது.
அமெரிக்க உளவுத்துறையுடன் சேர்ந்து வேலை செய்வதற்கு பிரதியுபகாரமாக பணஉதவி அதாவது இலஞ்சமாக, இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் ஆடம்பரமாக வாழ்வதற்கு வசதிகள், நான் பிலிப்பைன்ஸ் திரும்புவதற்கு தீர்மானித்தால், பாதுகாப்பாக திரும்புவதற்கான ஏற்பாடு. பிலிப்பைன்ஸ் இல் மீண்டும் கைது செய்யப்படும் பட்சத்தில் விடுதலை செய்யப்படுதல் உலகிலுள்ள எல்லாப்பாகங்களுக்கும் பயணஞ்செய்யக் கூடிய வசதிகள் போன்றவற்றை திரு. Taylor எனக்கு அளிப்பதாகக் கூறினார். எனது புகலிடக் கோரிக்கை தொடர்பாக அவர்களால் ஏதாவது செய்யமுடியும் என்பதை அவர்கள் நாகுக்காக இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள் என்றே நான் எடுத்துக்கொண்டேன். என்னிடம் பாஸ் போட் இல்லாததால் நெதர்லாந்துக்கு வெளியே பயணம் செய்யமுடியாத நிலையில் நான் உள்ளேன் என்பதை சற்றுமுன்பாக அவர்களுக்கு கூறியிருந்தேன். “அகதி’ என்ற அந்தஸ்து அளிக்கப்பட்ட பின்னர் மாத்திரமே புகலிடம் கோரியவர்களுக்கு அகதிகளுக்குரிய பாஸ் போட் கிடைக்கும் என்பது அவர்கள் சொல்லாமலே எனக்குத் தெரிந்திருந்தது. (எனக்காக ஒரு அகதிப் பாஸ் போட் எடுப்பது என்பதில் எதுவித சிரமமும் இருக்கப்போவதில்லை என்பதை ஒக்டோபர் 26ம் திகதி அடுத்து வந்த சந்திப்பில் திரு. Taylor அழுத்தமாகச் சொன்னார்.)
அடுத்த சந்திப்புத் தொடர்பாக அவர்கள் பேச முற்பட்டபோது நான் அதனைப்பற்றி சிந்திக்க வேண்டியுள்ளதாக கூறி அவர்கள் விருப்பத்தை நான் ஏற்றுக் கொள்ளுமிடத்து எப்படி அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம் எனக்கேட்டேன். ஆனால் அவர்கள் விடாப்பிடியாக இருந்தார்கள். அவர்களுடன் மீண்டும் நான் சந்திப்பதற்கு விரும்பாவிடின் நான் சமூகமளிக்காமல் இருக்கலாம் என்ற ஓர் உடன்பாட்டை நாம்

செய்து கொள்வோம் என அவர்கள் இறுதியில் தெரிவித்தார்கள் அப்பொழுது நான் சரியெனக் கூறி ஒக்ரோபர் 26ல் Amsterdam ல் சந்திப்பதற்கும் உடன்பட்டேன். Holiday Inn Crowne Piazza Gig 6 GT Castly 95 figufu-j60) 5 9 suffsóir தேர்ந்தெடுத்தார்கள்.
நான் இருவருடனான இந்த சந்திப்பின் பின் உடனடியாக நான் என்னைப்போன்ற புகலிடம் கோரிய அகதிகளான பிலிப்பைன்ஸ் சகாக்களை சந்தித்து என்ன நடந்ததென அவர்களுக்கு தெரிவித்தேன். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழாதிருக்க நாங்கள் இதனைப் பகிரங்கப் படுத்துவதற்கு தீர்மானித்துக் கொண்டோம்.
ஒக்ரோபர் 11ல் நான் எனது சட்டத்தரணியான Hans Langenberg ஐ சந்திப்பதற்குச் சென்றேன். ஆனால் அவர் விடுமுறையிலிருந்தார் எனவே நான் சகாக்களை வேறொரு சட்டத்தாணியை ஒழுங்கு செய்வதற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்கள் Bernard Tomlow என்பருடன் தொடர்பு கொண்டார்கள். சில டச்சு நண்பர்களினுாடாக எங்களால் டச்சு செய்தித் தொடர்பு சாதனங்களுடனும் தொடர்பு கொள்ள முடிந்தது. அவர்களிடம் 26ம் திகதி சந்திப்பைப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டோம்.
அந்தச் சந்திப்பின் போதான பதிவு நாடாக்கள் முழுமையாக இல்லாவிடினும் அம்பலப்படுத்துவதற்கு போதுமானதே. ஆனாலும் எல்லாவிதமான எனது கவலையையும் அச்சத்தையும் பின்தொடரப்படுதல், உரையாடல்கள் திருட்டுத்தனமாக பதியப்படுதல் எனும் போது நான் அனுபவித்த உணர்வையும் தொடரப்போகின்ற அனுபவங்களையும் பற்றி (பதிவு நாடாக்கள்) எதுவுமே சொல்லவில்லை. இந்தச் சம்பவம் பற்றியதான எனது அம்பலப்படுத்தலாலும், விடை பெற்ற போது திரு. Taylor எனக்கு எதிராகவே விடுத்த பயமுறுத்தலாலும் நான் பயங்கரமான ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளேன் என்றே நான் நினைக்கிறேன். நீங்கள் அவர்களை அம்பலப்படுத்திய பின்னர் சி.ஐ.ஏ உங்களைப் பார்த்து "நேதன் (Nathan) நீ தொலைந்தாய்" என்று கூறினால் நீங்கள் எப்படியாய் உணர்வீர்கள்?.
பிரச்சனைக்குரிய விடையங்கள் என நான் நம்புகின்றவை தொடர்பாக இப்போ நான் கருத்துத்தெரிவிப்பதற்கு விரும்புகிறேன்.
முதலாவதாக சி.ஐ.ஏ யும் நெதர்லாந்து உளவுத்துறையும் ஒரு ஏஜெண்டாக என்னை சேர்த்துக் கொள்வதற்கு எடுத்தமுயற்சியானது ஒரு புகலிடம் கோரியவனும் ஒரு மனிதப்பிரசையும் ஆகிய என்னுடைய உரிமையின் ஒரு மீறலாகவும், எனக்கெதிரான துன்புறுத்தலாகவும் இருந்தது என்பதைக் கூறுவதற்கு விரும்புகிறேன்.
25

Page 14
இந்தமாதிரியான முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது இது முதற்தடவையல்ல என நெதர்லாந்து அகதிகள் ஒன்றியத்தில்(V V N) பணிபுரிபவர்கள் சிலர் வாயிலாக நான் அறிந்தேன்.
இந்த மாதிரியான செய்கை எல்லாவற்றிற்கும் ஒரேயடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்குமாறு நெதர்லாந்து அரசாங்கத்தை வேண்டிக்கொள்கிறேன். மிகவும் நொந்துபோன நிலையில் உள்ள என்னைப்போன்ற புகலிடம் கோரியவர்கள் அகதி என்ற அந்தஸ்த்து கிடைப்பதற்கு தங்களுடைய விருப்பத்திற்கு மாறாகவேனும் அவர்கள் தகவல் கொடுப்பவனாகவும், ஏஜெண்டாகவும் ஒத்துழைக்க வரவேண்டும் என்பதை இலகுவில் நம்பி விடுபவர்களாக உள்ளார்கள். உண்மையில் இந்த வழியில் மிரட்டுவதற்கும் ஏதுவானவர்களாகவே புகலிடம் கோரியவர்கள் இருக்கிறார்கள்.
இரண்டாவதாக தகவல் கொடுப்பவனாக அல்லது ஏஜெண்டாக வருமாறு நெதர்லாந்து, அமெரிக்க உளவுத்துறையினரால் அணுகப்பட்ட, முக்கியமாக அதற்கு மறுப்புத்தெரிவித்த புகலிடம் கோரியவர்களின் பாதுகாப்பு என்பது ஆபத்தான நிலையிலுள்ளது என்றே நான் நம்புகிறேன்.
புகலிடம் கோரியவர்களில் எத்தனை பேர் "ஒத்துழைக்கவில்லை" என்பதால் பழிவாங்கப்பட்டு அல்லது பயமுறுத்தப்பட்டிருக்கிறார்கள்? எத்தனை பேருக்கு நீ தொலைந்தாய்' என்று சொல்லப்பட்டது?
மூன்றாவதாக எனக்கு நடந்த தென்பது தஞ்ச முறை மை யை கேவலப்படுத்துவதாகவும், கோமாளித் தனமாக்குவதாகவும் அமைந்திருந்தது என்றே நான் நினைக்கிறேன். வெறுமனே சி.ஐ.ஏ என்பதைக் காட்டிலும் என்னையும் , நான் சார்ந்திருந்த இயக்கத்தையும் அழிப்பதற்காக காத்திருக்கின்றது என்று நான் கருதும் ஒரு சக்தியின் கரங்களுக்குள் நான் கையளிக்கப்பட்டேன். இதற்கும் அப்பால், நான் விசாரணைக்குட்படுத்தப் பட்டபோது என்னைப் பற்றியும் மற்றும் எனது நண்பர்கள், சகாக்கள் மற்றும் NDF தொடர்பாகவும் நெதர்லாந்து நீதிமந்திரி இலாகாவிற்கு நம்பிக்கையின் பெயரில் நான் அளித்த தகவல்கள் அமெரிக்க உளவுத்துறையுடம் மற்றும் விரோத சக்திகளுடனும் பரிமாறப்பட்டிருக்காது என்பதை நான் நம்பப்போவதில்லை.
எனக்கு நிகழ்ந்து முடிந்தது ஒரு மோசமான பரீட்சையாக இருப்பினும், நான் செய்ததைப் பற்றி (அம்பலப்படுத்தியது பற்றி) எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. வெறும் அரசியல் தஞ்சத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சி.ஐ.ஏ அல்லது நெதர்லாந்து உளவுத்துறையின் ஏஜெண்ட் அல்லது தகவல் கொடுப்பவனாக' இருப்பதற்கு சம்மதிக்கவும், எனது இலட்சியங்களுக்கு எதிராக போகவும் வேண்டுமாயின் நிச்சயமாகக் கைதுசெய்யப் படலாம், மீண்டும் சிறையில் அடைக்கப்படலாம், மீண்டும்

சித்திரவதைக்குள்ளாக்கப் படலாம், ஒரு வேளை எனது சகோதரன் Ronald Jan போல் காணாமல் போகலாம், எனது சகோதரன் 1shmael போல் நான் கொல்லப்படலாம்,
இருப்பினும் நான் பிலிப்பைன்ஸ்ற்கு திருப்பி அனுப்பப்படுவது மேலானது.
இது இப்போது பகிரங்கப்படுத்தப் பட்டுவிட்டது. எனக்கு நிகழ்ந்தது போன்ற அனுபவம் ஒருபோதும் புகலிடம் கோரிய வேறு எவருக்கும் நிகழாது என எதிர்பார்கிறேன். மீண்டும் ஒருபோதும் நிகழாதிருக்கட்டும்
g 5ഖg உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு
கருப்பொருள்: தேமதுரத் தமிழும் தென் துருவத் தமிழரும்
3 - 5 அக்டோபர் 1992 சிட்னி ஆள்திரேலியா,
இம்மாநாட்டினை சிட்னியிலுள்ள ஒருங்கிணைப்புக் குழுவும், மலேசிய 2655 தமிழ்ப்பண்பாட்டுக் கழகமும் அதனது நியூசிலாந்துக் கிளையும் ஏனைய ஆஸ்திரேலிய மாநிலங்களிலும், பசிபிக் நாடுகளிலும் இயங்கும் தமிழ் அமைப்புக்கள் ஆகியனவும் இணைந்து ஒழுங்கு செய்துள்ளன. 5LOlyp
தொடர்புகளுக்கு: ICTC, PO Box S60, Home South, NSW 2140, Australia.
LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
27

Page 15
பொழுது போக்கு என்ற பிரச்சினை அங்கு இல்லை என்றே கூறவேண்டும். பொழுது போதாத பிரச்சினையே அங்கு நிலவுகிறது. கிடைக்கிற அவர்களது சொற்ப நேரம் முழுவதையும் பெரும்பாலும் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் குப்பைத் தமிழ்ப் படங்கள் பிடித்துவிடுகின்றன. டெலிபோனில் தான் றுாமில் இருப்பவர்கள் கூட அதிகநேரம் பேசிக்கொள்கிறார்கள்.
இங்கிருந்து பணம் அனுப்பு பணம் அனுப்பு என்று அவர்களது பணத்திலேயே டெலிபோன் செய்கிறவர்கள் அவர்களது கள்டத்தை விளங்கிக் கொள்வதில்லை. ஒரு கிலோ மீற்றர் துாரம் போவதற்குக் கூட பள்ளிற்கு 1 மார்க் டிக்கட் எடுக்க வேணும். அது இலங்கைப் பணத்தில் 26 ரூபா. இங்குள்ளவர்கள் அதை யோசிக்காமல் பணம் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அண்மையில் ஜேர்மனியில் இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சொன்னார்கள். வீட்டு நெருக்கடிக்கு பணம் அனுப்ப முடியாததால் இங்கு அனுப்பும் பணத்தை சேர்த்து சிக்கனமாக செலவு செய்யாமல் ஊதாரித்தனமாக செலவு செய்கிறார்கள் என்று அங்கிருந்து கவவைப்படுகிறார்கள்.
நண்பர் தான் தங்கியிருந்த போது அறிந்த வேறு சில விபரங்களையும் தெரிவித்தார்.
இங்குள்ளவர்கள் பணம் அனுப்பும்படி கேட்கும் போது அங்குள்ளவர்கள் மரத்தில் பிடுங்கி அனுப்புவதாகத்தான் நினைக்கிறார்கள். அவர்கள் அனுப்புவது கள்டம் என்று சொன்னால் இங்குள்ள அவரது சகோதரியையோ சகோதரனையோ புலிகள் பிடித்து வைத்திருக்கிறார்கள் கொழும்பில் பொலிள் பிடித்து வைத்திருக்கிறது" என்று கூறிக்கூட அதற்கு செலவு செய்ய பணம் அனுப்புமாறு கோரிப் பணம் பெற முயல்கிறார்கள். நான் அங்கு நின்ற போது ஒரு நண்பருக்கு இப்படி நடந்தது.
கார் வைத்திருப்பது நாங்கள் சைக்கிள் வைத்திருப்பது போல சாதாரணவிடயம் அங்கு. கார் அங்கு ஒரு வசதியானவர்க்கான பொருள் அல்ல. அங்கு அது ஒரு சாதாரண மனிதனது வாகனமாக உள்ளது. 4000 மார்க்கிற்கு - அதாவது ஒருவரின் 3 மாத ஊதியத்திற்கு ஒரு கார் வாங்கமுடியும். அது அங்குள்ள காலநிலைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் முடியுமானளவுக்கு கார் வாங்கி வைத்திருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் கார் வைத்திருப்பது காரணமாக அவர்கள் வசதியாக இருக்கிறார்கள் என்று கருதமுடியாது. உதாரணமாக என்னிடம் ஒரு 300 மார்க் பணத்தை இங்குள்ள உறவினர் ஒருவரிடம்

கொடுக்கும்படி தருவதற்காக ஒருவர் தன்னிடம் இருந்த பொருள் ஒன்றை விற்று விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அவரிடம் ஒரு கார் இருந்தது. குடிப்பதில்லை (பியர் கூட) புகைப்பதில்லை. வேறு எந்த அநாவசிய செலவும் இல்லை. ஆனாலும் "சைசே ஒரு பெனிக் கூட மிஞ்சுவதில்லை. கடன் தான் மிஞ்சுகிறது என்று சொன்னார் அவர். (பேசும் போது வரிக்கு வரி "சைசே என்ற டொச் வார்த்தையை உபயோகிக்கிறார்கள். முதலில் அவர்கள் "ஐசே என்று சொல்வதாக நினைத்தேன். பிறகு விசாரித்ததில் இந்த வார்த்தையின் அர்த்தம் மலம் என்று தெரியவந்தது.
ஜேர்மனியில் பிரமாண்டமான தொழிற்சாலைகளதும் நிறுவனங்களதும் இயந்திரங்களிலும் வேலைத்தளங்களிலும் நசிபட்டு பிழிபட்டு வேலை செய்கிறவர்கள் பலர் தமது உடலின் சக்திகளை இழந்து நோயாளிகளாகின்றனர். கோப்பை கழுவுகின்றவர்களின் கை விரல்களில் வெடிப்புகள் தோன்றுகின்றன. இரசாயன தொழிலகங்களில் வேலை செய்பவர்கள் புரியாத நோய்களுக்கு உள்ளாகின்றனர். நண்பர் ஒருவருக்கு இருமும் போது இரத்தம் வருவதாக கூறினார். வைத்திய வசதிகள் இருந்தபோதும் தமிழ் அகதிகளுக்கு கவனிப்பு குறைவே என்று ஒருவர் கூறினார். நாஜிகளின் செல்வாக்கும், அகதிகளுக்கு எதிரான போக்கும் அதிகரித்து வருதால் வைத்தியர்களையும் நம்பமுடியவில்லை என்கிறார் அந்த இரத்தம் வருகிற நண்பர். வைத்தியர்கள் அவருக்கு ஒன்றுமில்லை என்று சொல்கிறார்களாம். ஒன்றுமில்லாமலேயே இரத்ததம் வருகிற விந்தையை நீங்கள் ஜேர்மனியில்தான் பார்க்கமுடியும் என்கிறார் அவர்.
ஜேர்மனி மட்டுமல்ல கனடா, சுவின் பரில் என்று எல்லா இடங்களிலும் உள்ளவர்களின் நிலை இதுதான். 100% கண்பார்வை கூர்மையுள்ளவர்களை டெலிவிஷனில் கலர் மிக்சிங் ஆய்வுகூடத்தில் வேலைக்கு சேர்க்கிறார்கள். அனேகமாக மூன்றாம் உலகநாட்டு அகதிகளே இதில் வேலைக்குப் போகிறார்கள். 2000 மார்க் சம்பளம் அவர்களை அதில் சேரவைக்கிறது. ஆனால் மூன்று நான்கு ஆண்டுகளில் அவர்களது கண்ணின் கூர்மை 50% ஆகிவிடும் அதன் பிறகு வேலையை விட்டு நிறுத்திவிடுவார்கள். இப்படி உயிரைக் கொடுத்து உடலைக் கொடுத்து உழைக்கிற எங்கடை காசிலை அங்கை சனம் லெவல் காட்டுதாம் பள்விலை போகாமல் ஒட்டோவும் டக்சியும் தான் பாவிக்கினமாம். உண்மையே அண்ணை என்று கேட்டார் என்னை ஒருவர்.
நன்றி சரிநிகர்
29

Page 16
இக்கட்டுரையானது லண்டனிலிருந்து வெளியாகும் "Tamil Times"
இல் கலாநிதி P.சரவணமுத்து அவர்களால் 6TpgŮUJÚL Sri Lanka: The
Ethnic Conflict என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமாகும்
இலங்கை
சிங்கள தமிழ் இன மோதல்
கலாநிதி Pசரவணமுத்து
பிரச்சனைகளும் தீர்வுக்கான நடைமுறைச்சாத்தியங்களும்.
இந்தக்குறுகிய கால சமாதான இடைவேளையானது ஒரு யுத்தத்துக்கானயாருமே துரிதமாகவோ எளிதாகவோ வெற்றி கொள்ள முடியாத ஒரு யுத்தத்திற்கான பல்லவியாகவே அமைந்தது. இந்த யுத்தத்தை இலங்கை அரசாங்கம் "இறுதிவரை போராடப்போகிற யுத்தம்" என்று பிரகடனம் செய்தது. தனிநாட்டுக்கான தனது வெளிப்படையான குறிக்கோளைப் பொறுத்தவரையில் LTTE யும் இப்பிரகடனத்தை எதிர் கொண்டது.
ஒப்பந்தத்துக்கு முற்பட்ட 1987ம் ஆண்டின் துரதிஷ்டகாலத்தை இது நினைவுபடுத்தியது. பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்துவதன் மூலமும் பரஸ்பரம் ஏற்படக் கூடிய தடைகளை முதிர்ந்த பக்குவத்தோடு அணுகுவதன் மூலமும் தங்களுக்கிடையில் ஏற்படுகின்ற வேறுபாடுகளின் அரசியல் பரிமாணங்களின் தீர்க்கமான சவால்களை நேரடியாக எதிர்கொள்வதை விட்டு விட்டு, நம் அரசியல் நாயகர்கள் இராணுவ வழிமுறைகளுக்கூடாக தமது சுத்த சுயம்புவான இலட்சியங்களை அடைவதே உகந்தது என்ற பழைய நிலைக்குப் போய்விட்டனர். இத்தகைய ஒரு மனப்போக்கினை ஏற்கனவே இரண்டு பகுதிகளும் கொண்டிருந்தமையே இன்றைய இந்த யுத்தத்தை ஆரம்பித்ததற்குப் பொறுப்பாகுமே தவிர, இந்தச் சண்டை நடந்ததற்கு கற்பிக்கப்படும் உள்ளூர் சம்பவங்கள் பற்றிய நுணுக்கவிபரங்கள் அல்ல. இந்த யுத்தத்தால் விளையப் போகும் அரசியல் பலாபலன்கள் இவர்கள் எத்தகைய தவறுகளை இழைக்கப் போகிறார்கள் என்பதிலேயே நிர்ணயமாகப் போகிறது. போராடுகின்ற இந்த இரண்டு பகுதியினரின் குறிக்கோள்களும் எவ்வளவு துாரம் மக்களின் நியாயபூர்வமான அங்கீகரிப்பினைச் சார்ந்தது என்பதனைவிட இவர்கள் தங்கள் பகமைகளை எப்படிக் கொண்டு நடத்தப்போகிறார்கள் என்பதிலேயே தங்கியிருந்தது.

அரசாங்கமும் இந்த யுத்தத்தை தமிழ் மக்களுடனான இன மோதலின் யுத்தமாக அபலாது புலிகளின் அதிதீவிரவாதத்திற்கு எதிரான யுத்தமாகவே சித்தரித்தது. எனினும் JVPக்கு நேர்ந்த கதிதான் LTTEக்கும் நேரும் என்ற உயர் மட்ட அச்சுறுத்தல்களும், பொது மக்களின் உயிருக்கும் சொத்துக்கும் ஏற்பட்ட அழிவுகளும் புலிகளுக்கே மிகவும் சாதகமாய் அமைந்தன. சந்தர்ப்ப குழ்நிலை நிர்ப்பந்தத்தால் அல்ல தமது சுயமான விருப்பத்தின் அடிப்படையில்தான் வடக்குக் கிழக்கு மக்கள் பிரிவினையினை ஆதரிக்கிறார்களா? அல்லது நிராகரிக்கிறார்களா? என்பதுதான் இலங்கை அரசியலின் முன்நிற்கும் ஜீவாதாரமான கேள்வியாகும். வேறு வார்த்தையில் சொல்வதானால், விதிகளுக்காக Bodyguards, அல்லது மெய்காப்பாளரை மாற்றிக்கொளஞம் சந்தர்ப்பத்தை இவர்கள் பெறுவார்களா? அல்லது Bodyguards ஐயே ஆளுபவர்களாக அங்கீகரிக்கப் போகிறார்களா?
யுத்தத்திற்கான நியாயப்படுத்தல்களைப் பரிசீலிக்கும்போது யுத்தத்திற்கு காரணமாய் அமைந்த அச்சங்களையும் அது தொடர்வதற்கான காரணங்களையும்
இனங்காண முடியும்.
புலிகளின் அதிதீவிரவாதம் என்ற கருத்தோட்டத்திற்கு அரசாங்கம் கூறும் விளக்கம் என்னவெனில், புதிய மாகாண சபைக்கான தேர்தலில் ஏனைய தமிழ்க் குழுக்கள் பங்கு கொள்வதை LTTE ஏற்றுக்கொள்ள மறுத்தமைதான் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான வழிவகைகளைச் சிதைப்பதற்கு காரணமாக இருந்தது என்பதாகும். பல்வேறு குழுக்களையும் அனுசரித்துப்போவது என்பது எதிர்க்கட்சிகளுக்கு தேர்தலில் இன்னுமொரு சுற்று வாய்ப்பை வழங்குவதற்கு ஒரு அவசிய நிபந்தனையாகும். இந்த விஷயத்தில் அரசாங்கம் உண்மையில் விசுவாசமாகவே நடக்க விரும்பியது என்பதற்கு EPRLF செல்வாக்கிலிருந்து இப்போது செயலிழந்து போய்விட்ட மாகாண சபைக் கவுன்சிலை பூலை 7ம் திகதி தாங்கள் கலைத்து விட்டதையும் 6வது சட்டத் திருத்தத்தை நீக்கி விடுவதைப்பற்றி தாங்கள் ஆராய தாங்கள் தயாராக இருந்ததையும் அரசு உதாணம் சாட்டுகிறது:
மறுபுறம் அரசாங்கம் உண்மையான விசுவாசத்தோடு பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை என்றும், IPKF வெளியேற்றத்தையும் JVP ஒடுக்கப்பட்டதையுமடுத்து அரசாங்கம் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்தது என்று LTTE விடாப்பிடியாக வலியுறுத்தியது. கிழக்கில் மட்டும் 30 புதிய இராணுவ முகாம்களை அமைத்தமையை இதற்குச் சாட்சியாகக் குறிப்பிட்டது. இதனை விட, அதிகாரப் பரவலாக்கம் பற்றிய அரசாங்கத்தின் பிரேரணைகள் போதுமானவையல்ல என்று LTTE வற்புறுத்தியது. அதிலும் முக்கியமாக தாங்கள் மேலதிக அதிகாரங்களை வேண்டி நின்ற துறைகளில், குறிப்பாக கிழக்கின் காணிக் குடியேற்றங்களைப் பொறுத்தவரையில், சிங்களக் குடியேற்றங்களைப் புதிதாக ஊக்கிவித்ததன் மூலம் தமிழருக்கு எதிராக கிழக்கின் குடிப்பரம்பலை அரசாங்கம் மாற்றியமைக்க முனைந்தது என்றும் புலிகள் குற்றம் சாட்டினர்,
31

Page 17
அத்துடன், பாதகமான 6வது சட்டத்திருத்தை நீக்குவதற்கு தேசியப் பேரவையில் போதுமான பெரும்பான்மை இல்லை என்ற அரசாங்கவாதத்தை போலித்தனமானது என்று LTTE நிராகரித்தது. இச்சட்டப் பிரச்சனையை தேசியப்பேரவைக்குக் கொண்டு செல்லக்கூட அரசு தவறி விட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டது. மாகாண சபைத் தேர்தலில் மற்ற தமிழ்க் குழுக்களும் பங்குபற்றுவதைப் பொறுத்தவரையில் அரசு பழைய பிரித்தாளும் சுழ்ச்சியைக் கையாள முனைகிறது என்று LTTE குற்றம் சாட்டியது. தமக்கு எதிரான குழுக்களுடன் அரசு உறவுகளை வளர்த்துக் கொண்டதுடன் அவர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கின என்றது. தேர்தலில் மற்ற ஆயுதக்கோஷ்டிகளையும் பங்குபெற அனுமதிப்பதானது, தமிழ்மக்களின் அதிகாரபூர்வமான ஏகப்பிரதிநிதியாகத் தாங்கள் வரித்திருக்கும் தம் அந்தஸ்தினை மறுப்பதாகும் என்று LTTE அறுதியிட்டுக் கூறியது.
அரசாங்கம் இந்த இனப்போராட்டத்தை தமிழ்மக்களுக்கு எதிரானதல்ல, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்று வரையறுத்ததன் மூலம் புலிகளுக்கு எதிரான குழுக்களையும் உள்ளிட்ட சர்வகட்சிகளதும் உண்மையான ஆதரவைப் பெற்றுக்கொண்டது. புலிகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், 1990 மார்ச்சில் ஈழப்பிரகடனத்தை தன்னிச்சையாக அறிவித்த EPRLFஐ - இலங்கை அரசாங்கமும் LTTEம் குலவிக் கொண்டிருந்த காலத்தின்போது புதுடில்லியின் கைப்பொம்மை என்று ஒதுக்கப்பட்டிருந்த அதே EPRLFஐ பிரிவினைவாதத்தை நிராகரிக்கும் குழுவாக வஞ்சகப்புகழ்ச்சி செய்வதுபோல் அரசாங்கம் இப்போது ஏற்றிப்பேச ஆரம்பித்துவிட்டது. சர்வதேச ரீதியிலும் குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தும் அரசாங்கம் புவிகளுக்கு எதிராக தனது சாதுரியமான பிரச்சாரத்தை ஆரம்பித்தது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்த அரசியல் தீர்வை விடுதலைப்புலிகள்தான் தீவிரமாக எதிர்த்தனர் என்றும் இந்த நல்லிணக்கத்தைச் சிதைப்பதற்கு ஒரே அஸ்திவாரமாக யுத்தத்தை முன்னெடுத்த்தும் புலிகளே என்றும் அரசாங்கம் குற்றம் சாட்டியது. இலங்கையில் யுத்தம் நடந்துகொண்டிருக்கையில், சென்னையில் 14 EPRLF தலைவர்களும் கொலை செய்யப்பட்டபோது - அந்தக்கொலையைத் தாம் செய்யவில்லை என்று நிராகரித்தாலும்கூட அந்த சம்பவத்தையும் தங்களிடம் சரணடைந்த இலங்கைப் பொலிஸ் படையினரை புலிகள் கொலை செய்தததையும் LTTE செய்த அரசியல் படுகொலைப் பட்டியலின் பின்னால் வைத்து நோக்கும்போது அரசாங்கம் முன்வைக்கும் கருத்தினை இவை ஊர்ஜிதம் செய்வது போலவே இருக்கிறது. இலங்கையின் நிலமை பற்றி அரசாங்கம் கூறும் விளக்கத்தைப் பிரச்சாரம் செய்ய பல்வேறு இனக்குழுக்களையும் சேர்ந்த எதிர்கட்சிகளின் துாதுக்கோஷ்டியை தென்ஆசிய தலைநகர்களுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் முயற்ச்சியை இது பெரிதும் சுழுவாக்கியது.
இதன் விளைவாக அரசியல் ரீதியில் கணிசமாக தனிமைப் படுத்தப்படும் நிலையை LTTE ஏற்பதைத்தவிர வேறுவழி இல்லாது போய்விட்டது. இந்த நிலமை என்றும் அதற்குப் புதிதல்ல. கடந்த காலங்களில் இத்தகைய நிலமையைப் பயன்படுத்தி தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடும் சுதந்திரத் தேசிய இயக்கமாகத் தன்னைக்காட்டிக்

கொண்டது. ஆயுதத் தாக்குதலை எதிர்கொள்ளும்போது அரசாங்கம் தனது நவீன இராணுவ வலிமையை தயவுதாட்சண்யமின்றிப் பிரயோகிப்பதில் காட்டும் முனைப்பு தமிழர்களின் காவலர்களாக போராளிகள் தங்களைச் சித்தரித்துக் காட்டுவதைச் சாத்தியமாக்கியது. அப்போதைய போராட்டங்களின் போதும், தேர்தலில் ஏனைய தமிழ்குழுக்கள் பங்கேற்பது பற்றிய பிரச்சினையிலும் புலிகளின் அணுகுமுறையில் இத்தகைய கணிப்பே நிலவியது. தமிழ்மக்களின் அதிகார பூர்வமான ஏகப்பிரதிநிதி தானே என்ற தனது நிலைப்பாட்டை தேர்தலில் ஊர்ஜிதம் செய்யமுடியும் என்பதில் பூரண நம்பிக்கையில்லாத நிலையில் அதனையே பேச்சுவார்த்தை மேடையில் அடைந்துவிட LTTE முனைகிறது என்ற அரசாங்கத்தின் வாதமும் வெறும் அனுமானத்திலிருந்து எழுகிறது என்று சொல்லி விடமுடியாது. இதனை நிபந்தனை இன்றி ஏறறுக்கொள்ள அரசாங்கம் மறுத்தமையும் மீண்டும் இராணுவ விஸ் தரிப்பில் இறங்கியமையும் தெற்கில் சிங்களக் குடியேற்றத்தினை ஊக்குவித்தமையும் விடுதலைப் புலிகளுக்கு ஆத்திரமூட்டியது. தாங்கள் முன்னர் சலுகைவாரியாக முதன்மைப் படுத்தியிருந்த விவகாரங்களை புலிகள் மீள்பரிசீலனை செய்வதை இது நியாயப் படுத்தியிருந்தது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனிநாடு பெறுவது என்பதை தமது அடிப்படை இலட்சியமாக மீண்டும் பிரிவினைவாதத்தைப் புதுப்பிக்கத் தொடங்கினர். அராங்கத்துடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நிலவிய குழலில் தனிநாட்டுக்கோரிக்கை ஒரு இனஸ் யூரன்ஸ் கொள்கை (insurance policy) மாதிரித்தானிருந்தது.
இந்த நியாயர்த்தத்தின் அடிப்படையில் ஏற்பட்ட அரசுக்கு எதிரான பரந்த அபிப்பிராய மாறுதலுக்கு யுத்தத்தில் ஏற்பட்ட களைப்பு என்பதனைவிட புலிகளுக்கும் தமிழ்குழுக்களுக்கும் இடையிலான உறவில் காணப்படும் இரண்டகநிலையும் முக்கிய காரணமாகும். புலிகளை மக்கள் ஐயப்பாட்டுடனும் மரியாதையுடனும் அதேபோல ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும், தங்களை ஒருவேளை ஆளக்கூடியவர்களாக இல்லாது போய்விட்டாலும் மெய்ப்பாதுகாவலர்களாக “bodyguards but perhaps not ruler' புலிகளை மக்கள் கருதினார்கள். அல்லாமலும் தங்களின் தொடர்ந்த போராட்டங்களால் தமிழ் மக்களின் மத்தியில் நிலவிய சாதி, வர்க்க முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன என்றும் புலிகள் வாதாடிவருகின்றனர். தமிழ்மக்களின் பழமைவாதப் போக்கும், யுத்தத்தில் ஏற்பட்டுள்ள சலிப்பும் புலிகளுக்கு எதிரான நிலையை உருவாக்கக்கூடும். எனினும், இலங்கையரசு கொடூரமான முறையில் இந்த யுத்தத்தைக் கொண்டுநடத்துமானால், மீண்டும் புலிகள் இயக்கம் புத்துயிர்ப்புற்று பிரிவினையை நோக்கிப் போகக்கூடும்.
இப்போது மாறியமைந்துள்ள தந்திரோபாயச் குழலில் இன்னுமொரு
இந்தியத்தலையீடு இருக்கமாட்டாது என்பதுவும் இன்னுமொரு காரணியாகும். இந்தியா
இலங்கை மீதான தன் கரிசனையைத் தெரிவித்ததையடுத்து மாகாண சுயாட்ச்சிப்
பிரேரணையில் தாங்கள் இன்னும் நம்பிக்கை கொண்டிருப்பதை ஊர்ஜிதம் செய்யவும்,
பொதுமக்களுக்கு கூடிய அழிவுகள் ஏற்படாது பார்த்துக்கொள்வோம் என்று உறுதியளிக்கவும்
இலங்கை தனது வெளிநாட்டுச் செயலாளரை புதுடில்லிக்கு அனுப்பியது. IPKFன் பழைய
33

Page 18
அநுபவங்களைக் கருத்தில் கொண்டும், அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேணவிரும்பும்
வி.பி.சிங்கின் நல்லெண்ணத்தோடும் இந்தப்போராட்டத்தில் தாங்கள் நேரடியாக இறங்கிச்சிக்கிக் கொள்வதை விரும்பவில்லை என்று புதுடில்லி வலியுறுத்தியது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் உள்நாட்டு அரசியல் குழ்நிலைகளும் அத்தகைய தலையீட்டுக்கு ஆதரவாக இருக்கவில்லை. தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி புலிகளுக்கு ஆதரவாக இருந்தபோதும் சென்னையில் புலிகளுக்கான ஆதரவு மட்டுப்படுத்தப் பட்டதாகவே இருந்தது. அதே சமயம் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியோ VP.சிங்கின் அரசாங்கம் உயர்மட்டரீதியில்- காத்திரமான முறையில் இலங்கைப்பிரச்சனையில் தலையிடவில்லை என்று குத்திக்காட்டியதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இந்தியாவின் மிகப் பெரிய உள்ளூர்ப் பிரச்சனையாக எந்த அளவு இலங்கைப்பிரச்சனை அமைந்தது என்பது இந்தியாவின் மத்திய - மாநில அரசுகளின் உறவிலும் மாநில அரசியலிலும் நெருக்குவாரத்தைக் கொண்டுவரக்கூடிய சாதனமாக இதன் பலாபலன்கள் எப்படி அமையும் என்பதைப் பொறுத்ததாகும்.
இலங்கை அரசாங்கத்திற்கு இன்றைய இனமோதலில் இன்று வரையிலும் தொடர்ந்து சாதகமாக இருந்துவரும் விஷயம் பிரிவினைக்கு எதிராக இந்தியா, இலங்கை அரசுகள் கொண்டிருந்த கருத்தொற்றுமையாகும். பஞ்சாப், காசுஷ்மீர் உட்பட்ட மத்திய அரசிலிருந்து பிரிந்து போகும் பல சக்திகளின் போராட்டங்களைத் தீர்த்துக்கொள்ள முடியாதநிலையில் - தமிழ் நாட்டில் முன்னர் இந்தப்போக்கு நிலவியது - இந்தியா இதில் ஏனோதானோவென்றிருக்கமுடியாது; இலங்கையில் பிரிவினைவாதத்தை ஆதரித்து நிற்கவும் முடியாது. காஷ்மீர் யூனியனில் இந்தியா கைக்கொண்ட இராணுவ முஸ்தீபுகள் இலங்கை அரசும் அதே வழிவகைகளைக் கையாண்டபோது அதனைத் திட்டவட்டமாகக் கண்டிக்க முடியாமல் செய்துவிட்டது.
இவ்வாறு தங்களை இதிலிருந்து பிரித்து நோக்கும் தன்மை இராணுவரீதியிலான செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்வதைக்காட்டுவதே தவிர அரசியல் ரீதியாகவோ ராஜரீகரீதியிலோ தங்களை இதிலிருந்து விடுவித்துக்கொண்டது என்பதை அர்த்தப்படுத்தாது. முடிவில்லாத ஒரு யுத்தத்தை ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் கொண்டு நடத்தக்கூடிய ஆற்றலை மட்டுமே கொண்ட இக்கட்டான நிலையில் இலங்கை இருந்தது. இந்த ஸ்தம்பித நிலையிலிருந்து சாமர்த்தியமாக வெளியேறிக் கொள்வதற்கு அந்நிய உதவியின் அவசர-அவசியத்தேவையை இது உணர்த்துகிறது. இந்த நடமுறையில், அது உதவி என்ற ரீதியில் அமையாவிட்டாலும் கூட இந்திய ஒப்பந்தம் ஒன்று தேவைப்பட்டதாகிறது. இந்தப்போராட்டம் தீரும் வரை-ஒரு இறுதித்தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஒன்றில் இந்தியா உடனடியாகக் கையெழுத்திட மிகுந்த அக்கறை கொண்டிருந்தாலும் இலங்கை கையெழுத்திட காலதாமதமாகியே தீரும்.

பொருந்தாத போக்குகள்: அரசியல், ராணுவம்.
பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கம் இந்த இனமோதலை விரைந்தும் தீர்க்கமாகவும் முடிவுக்குக் கொண்டுவந்தாக வேண்டிய நிலையில் இருந்தது. ஒப்பிட்டுப்பார்க்கையில் நீண்டகால யுத்தம் என்பது LTTE ற்குப் புதியதுமல்ல: அதுசாவதானமாப் பின்வாங்கி காடுகளுக்குள் சென்றுவிடும். JVP யின் கிளர்ச்சி காரணமாக பெருமளவில் ஏற்பட்ட சீரழிவினால் இலங்கையின் பொருளாதாரம் 1987ல் இருந்ததைவிட மோசமான நிலையை அடைந்திருந்தது. எனவே பொருளாதாரத்தைப் புனரமைப்பதற்கு சமாதானம் நிலவுவது அவசியமாகியது. இனமோதலை முடிவுக்குக் கொண்டுவரும் பட்சத்திலேயே தேவையான நிதி பட்டுவாட செய்யப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. எனவே இனப்போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிைைலயில் நிதி வழங்கும் நாடுகளும் நிதி வழங்குவதைத் தாமதப்படுத்த நேர்ந்தால் பொருளாதாரம் மீளவும் கட்டி எழுப்பப்படுவதை அது மிகவும் மோசமாகப் பாதித்தது. அரசியல் ரீதியில் இதன் விளைவுகள் VP கு புது உத்வேகத்தைக் கொடுத்தது. வறுமையை ஒழிக்கப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருந்த திட்டத்தை அமுல்படுத்துவதில் பெரும் கால தாமதம் ஏற்பட்டது அல்லது அந்தத்திட்டம் ஆரம்பத்தில் இருந்ததைவிட இப்போது முற்றிலும் வேறுமாதிரி மாற்றியமைக்கப்பட்டிருந்தது. நிறைவேற்றப்படாத இன்னுமொரு தேர்தல் வாக்குறுதி இது என்று JVP இதை பகிரங்கமாகக் கண்டனம் செய்தது. இதன் அடிப்படையான குறைபாடுகளைத் தீர்ப்பதில் அரசு மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தமை துரதிர்ஷ்டம் வாய்ந்த கடந்த காலங்களில் JVP தனது செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்ள சாதகமாய் அமைந்தது. இதில் இன்னுமொரு தொந்தரவான அம்சம் என்னவெனில் இன்னும் பாதுகாப்புப்படையின் சாதனையைப் பொறுத்தே இலங்கையின் தலைவிதி அமைந்ததாகும். முழுச்சமூகமுமே குறுரமயமாக்கப் பட்டிருந்தது என்பதைவிட 1980 களில் இலங்கை ஒப்புவமை சொல்லமுடியாத அளவிற்கு இராணுவமயமாக்கப் பட்டிருந்தது.கேள்விக்கிடமில்லாத ஒரு இராணுவத்தலைவர் இல்லை என்றால் இராணுவச்சதி நடைபெறுவதென்பது சாத்தியமில்லை. ஆனால் பாதுகாப்புப்படையினர் அரசியல்மயப்படுத்தப் படுவதும், முதன்மை ஸ்தானம் வகிப்பதும் ஆரோக்கியமான ஒரு முன்மாதிரியில்லை. JVP யின் கடைசிக் கிளர்ச்சியின் விளைவாக, பாதுகாப்புச் சேவைகளின் கையில் சிவில் கட்டுப்பாடுகளை வழங்கவேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் அந்தச்சக்திகள் ஜனநாயகதிற்கு குந்தகம் விளைவிப்பதைவிட தீவிர வன்முறைக்கு எதிராக நாட்டைப்பாதுகாத்து வருகின்றன என்ற எதிர்வாதத்தை மறுத்து நிராகரிக்கவேண்டும்.
இப்போது நிலவுகின்ற ஸ்தம்பித நிலைக்கு விரைந்த தீர்வைக்காணுவது
இலங்கைக்கு மிக அவசரமானதும்- இனப்பிரச்சினைக்கான எந்தத்தீர்வை إ9ی"J&
முன்வைத்தாலும் அதற்கு இது அவசியமான முன் நிபந்தனையாகும். 1987ல் இந்தியா
தலையிட்டபோது சிவிலியன் ரத்தவெள்ளத்தைத் தடுப்பதற்காகவே தாங்கள் யாழ்ப்பாணத்தை
மீட்பதற்கான யுத்தத்தைத் தவிர்ப்பதாக அரசாங்கம் கூறியது. ஆனால் புலிகள் நன்கு
35

Page 19
ஸ்திரமாக இருந்த நிலையில் 1990ல் அந்த யுத்தத்தில் ஏற்பட்ட ரத்த வெள்ளம் ஒன்றும் முன்பைவிட அவ்வளவு குறைவானதில்லை. இரண்டு சாராருமே அந்நிய ராணுவத் தலையீட்டை எதிர்த்தமை இதனை ஊர்ஜிதம் செய்யும் இராணுவச் சமநிலை குறிக்கப்பட்ட ஒரு திசை சார்ந்து திட்டவட்டமாக நகர ஆரம்பித்ததும் - இறுதித் தாக்குதலைத் தொடுத்து முடிக்கமுடியாத நிலையில் அல்லது அதற்கு மாற்றாக, ஒரு யுத்தநிறுத்தத்தைக் கண்காணிக்கவும் தீர்வுக்கான ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு மத்தியஸ்தம் வகிக்கும் வகையிலும் ஒரு அந்நிய உதவி பெறப்படும். இதிலிருந்து என்ன அனுமானிக்க முடிகிறது என்றால், இலங்கையின் மோதலில் தயக்கங்களைத் தள்ளிவைத்துவிட்டு நேரடியாகப் பங்குகொண்டு அது வீண் தொந்தரவை ஏற்படுத்துவதாக இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்டவர்களின் ஒத்துழைப்பை தேடித் தராவிட்டாலும் சரி அந்நிய வல்லரசுகள் இதில் ஈடுபாடு காட்ட விரும்புகிறன என்பதாகும்.
இரண்டு பக்கங்களிலுமே ஏற்படக்கூடிய வித்தியாச வேறுபாடுகள் கொண்ட அரசியல் முட்டுக்கட்டைகளைப் பொறுத்தவரையில் ஒரு தீர்வுக்கு வருவதில் அரசாங்கத்தைவிட கெரில்லாக்குழுக்கள் கூடிய அளவு விட்டுக்கொடுக்கக் கூடியனவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பரஸ்பரம் மோசமான நம்பிக்கையீனமும் அதேநேரம் நம்பிக்கைக்குப் பாத்திரமாய் இருக்கக் கூடிய மாதிரி நடந்துகொள்ள வேண்டிய தேவையும் சேர்ந்து தமது குறிக்கோள்களைப் பற்றிய வரைவிலக்கணங்களையே இரு பகுதியுமே விட்டுக் கொடுத்து ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை இறுகப்பிடித்துக் கொண்டிருக்கும் போக்கிற்கே வலுச்சேர்க்கின்றன. 1987ல் தங்களது கெளரவத்தை பெருமளவு விட்டுக் கொடுத்து விடாமல் சில வரையரையின் எல்லைக்குள் தந்திரோபாய ரீதியில் தீர்வுக்கு இணங்கியதைப் புலிகள் நியாயப்படுத்த இடமுண்டு. இதைப்போன்ற சாத்தியப்பாடு இன்னும் உள்ளதா என்பதைப் போரின் போக்கே முடிவு செய்யும் தற்போது மனஉறுதி பற்றிய போட்டாபோட்டிதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றும் தனது பலத்தை நிறுவவும் மற்றதை வீழ்த்தவுமே முனைந்துகொண்டிருக்கின்றன.
மறுபுறம் அரசாங்கம் பிரிவினையைப் பொறுத்தவரையில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் நிலையைக் கையாள்வதாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளமுடியாது. ஏனெனில் தெற்கில் அதனுடைய செல்வாக்கை இது மோசமாகப் பாதிக்கும். "இறுதிவரை போராடும் சங்கல்பத்தை ராணுவ முஸ் தீபுகளால் மட்டுமே அடைந்து விட முடியாது. நியாபூர்வமான தரத்தைக் கொண்டதும் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்தை வழங்கக்கூடியதுமான ஒரு அரசியல் தீர்வின் சாத்தியத்தாலேயே இதனை அடைதல் முடியும். அரசாங்கம் எவ்வளவு விரைவில் ஒரு புதிய தேர்தலை நடத்துகிறதோ அவ்வளவிற்கு அது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். அத்துடன் தமிழ்மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கத்தை வழங்குவது பற்றிய திரள்நடவடிக்கைகள் என்ற திட்டவட்டமான பரந்த வரையறைக்குள் குடியேற்றங்கள், பொலிஸ் படை போன்ற அம்சங்கள் மீண்டும் நன்கு விவாதிக்கப்பட வேண்டும்.

மாகாணசபைத் தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் சர்வசன வாக்கெடுப்பு நடைபெறுதற்கானா அறிகுறிகள் தென்படுகின்றன. கிழக்கின் தேர்தல் தொகுதிகளின் தீர்ப்புக்களைப் பிரதிபலிக்கும் வகையில் பிராந்திய எல்லைகள் ஒழுங்குபடுத்தப்படும் சாத்தியமும் தென்படுகிறது. சிங்கள - முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட அம்பாறை மாவட்டம் இந்த இணைக்கப்பட்ட மாகாண அமைப்பிலிருந்து தனியே பிரித்தெடுக்கப்படலாம். திருகோணமலையின் கேந்திர நடுநிலைத் தன்மையை இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாத்துக் கொள்ளும் சாத்தியமும் உண்டு. பிராந்திய எல்லைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வது (territorial adjuistment) என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இது சாதாரணமாகக் கூறுபோட்டுக் கொள்கிற வேலையாக இராது.
இந்தப் பிரேரணைகளோடு சேர்ந்து தேசிய நெருக்கடியற்றி தீவிரமாக ஆராய்வதற்கு JVP கிளர்ச்சி அதன் உச்சக் கட்டத்தை அடைந்த நிலையில் 1989 செப்டம்பர் மாதத்தில் கூட்டப்பட்ட சர்வகட்சி மாகாநாட்டில் பெறப்பட்ட ஆலோசனைகளையும் சட்டபூர்வமாக அமுல்படுத்துவதற்கு மக்கள் ஆணையைப் பெறுவதற்கு பொதுத்தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் முன்னுள்ள இன்னுமொரு தீர்வுக்கான தெரிவாகும். இது ஜனாதிபதியின் நிலையை ஸ்திரப்படுத்தக் கூடியதாகும்.
அதிகாரப் பரவலாக்கத்தை வழங்கவும் அபிவிருத்தியை முன்னெடுக்கவும் அரசு தயாராக இருக்கிறது என்பதை வெளிவெளியாகக் காட்டவேண்டியது இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான மிகக்குறைந்த பட்ச நிபந்தனையாகும். அமையவிருக்கும் மாகாண சபைக்களுக்கும் முன்பிருந்த மாகாண சபைகளின் கதிதான் நேருமா என்பதையும் பேசி சமரஸம் செய்து கொள்ளலாம். அபிவிருத்தியை ஸ் திரப்படுத்தக்கூடிய காத்திரமான அஸ் திவாரங்களை வட கிழக்கிலும் அமைக்க அரசு முன்வரவேண்டும். இதற்காக வழங்க்படுவதாகக் கூறப்பட்ட நிதிகள் பட்டுவாடா செய்யப்படுவதும் இந்த நிர்ணயமான திட்டங்கள் துரிதமாக அமுல்படுத்தப்படுவதும் அவசியமானதாகும். மாகாண சபைகளுக்கு எந்தத்தமிழ்க்குழுக்கள் தெரிவு செய்யப்பட்டாலும் அவை சக பங்காளர்களாகக் கருதப்படவேண்டுமே தவிர கைப்பொம்மைகளாக அல்ல. அரசியல் ரீதியில் தாங்கள் அழிந்துபோகாமலிருக்க தீவிரவாதத்தைக் கையாளும் நிலைக்கு இக்குழுக்களை அரசு தள்ளிவிடலாகாது. புலிகள் இல்லாத நிலையில் மாகாண சபைகள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டாலும் கூட தமிழ் மக்களின் நலன்களை முன்னெடுப்பதில் LTTE எய்திய வெற்றிகளை கவுன்சில் பிரதிபலிப்பதாக அமையவேண்டும். அவ்வாறு செய்யத்தவறுவது அழிவைத்தேடும் யுத்த மோதலுக்கும், பொருளாதாரச் சீரழிவுக்கும் மோசமான ஸ்திரமின்மைக்கும் அழைப்பு விடுவதற்கு சமமானதாகும்.
தாங்கள் நேரடியாகப் பங்கு கொள்ளாமலோ அல்லது தமது சம்மதமின்றியோ மேற்கொள்ளப்படும் எந்தத்தீர்வையும் பழைய ஒப்பந்தங்களில் உள்ள குறைபாடுகளை அப்படியே பிரதிபலிக்கும் ஏமாற்று நகல் என்று புலிகள் நிராகரித்து விடுவார்கள். எனினும் எப்படியும் ஒரு தீர்வு காணப்படவேண்டும் என்பது பற்றிய தெளிவு இப்போது பிறந்துள்ளது.

Page 20
புலிகள் இலங்கையின் தேசிய சமாதான அரசியலில் தம்மை பூரணமாக ஈடுபடுத்திக் கொள்ளும்வரை இதற்கு காத்திருக்க வேண்டியதில்லை. சர்வதேச அபிப்பிராயம் இறுதியில் தங்களுக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையில்தான் புலிகள் போராடுவதென்று சங்கற்பம் கொண்டுள்ளனர். பிறழ்ந்து போன இந்நிய - புலிகள் உறவையும், சர்வதேச அமைப்பில் ஏற்பட்டுள்ள பல்துருவப் (multipolarity) போக்கினையும் நோக்கும் போது மற்றக் குழுக்களுடன் இதனை ஒப்பிட்டுப் பார்ப்பது அவ்வளவு பொருத்தமாயில்லை. யுத்தமுனையில் பிரிவினைவாதத்தை முறியடிப்பதில் தோல்வி கண்டிருக்கும் இலங்கை அரசு ‘சுயாதீனமான பிரதேசத்தை ஒரு தேசிய சிறுபான்மை இனம் திரும்பத்தனது தாய்நாட்டுடன் இணைப்பதற்கான கோட்பாட்டின் " (IRREDETSM) தாக்கத்திலிருந்து தன்னை தவிர்த்துக் கொள்ள முடியாது. மேலும் புலிகள் தமக்கு மரபு சார்ந்த ராணுவ வல்லமையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றோ அல்லது தமிழீழத்தை அடையவும் அதனைப் பாதுகாக்கவும் தேவையான கூட்டுச் சக்திகளையோ ஒருங்கிணைக்கக் கூடிய சக்தி வாய்ந்தது என்று காட்ட வேண்டும்.
கெரில்லா இயக்கங்கள் எந்த குழ்நிலையிலும் நின்று சமாளிக்கக்கூடியன. ஈழத்தை அடைவதில் உள்ள முட்டுக்கட்டைகளைப் பற்றி LTTE அறிந்து வைத்திருக்கிறது என்பதில் ஐயம் இல்லை. தங்கள் கைவசமுள்ள பலத்தைப்பற்றி அது நன்கு தெரிந்து வைத்துள்ளது. மாறுபட்டமையப் போகிற தந்திரோபாயச் சூழ்நிலையிலும் கூட தங்களைத் தள்ளி வைத்துவிட்டு உருவாகப் போகிற எந்த ஒப்பந்தத்தையும் அது அழித்துவிட முடியும். ஆகவே LTTE யின் ஒருங்கிணைக்கும் பலம் என்ற வகையில் ஈழத்தின் உண்மையான முக்கியத்துவம் அது அடையக்கூடிய கூடியபட்ச சலுகைகளிலே தங்கியுள்ளது. ஆனால் அதுவே அதன் முற்றுமுழுதான முடிவாக அமையவேண்டியதில்லை. இன்றைய அதிகாரக் கோலங்களின் மத்தியில் வெகு லா வத்துடனும் நுட்பமாகவும் கையாளப்படக்கூடுமானால் இதுவே திறமையான நடைமுறைச் செயற்பாடாக இருக்கும்.
இச்செய்முறையை அடிக்கடி பிரயோகித்தால் அதனுடைய தந்திரோபாய அடிப்படைகள் மிகவும் துலக்கமாகத் கொடங்கியதும், இச்செய்முறையை முன்னெடுக்கும் குழு நீண்டகால - லாபகரமற்ற யுத்தத்திற்குள் சிக்குப்படுவதுடன், அரசியல் பிராந்தியத்திலிருந்து தம்மைத்தாமே தேசபிரஷ்டம் கொண்டுவாழ நிர்ப்பந்திக்கப்படும். இதனால் ராணுவநிலைமைகள் ஒரு முறை சீரானதும் புலிகள் இனி ஒரு தீர்மானம் எடுத்தாக வேண்டும். தமிழீழ லட்சியத்திற்காக தாங்கள் ஆற்றிய மறக்கமுடியாத பங்களிப்புகளை பன்முகப்போக்கும் சமரஸ் விட்டுக்கொடுப்புகளும் கூடிய அரசியலுக்குள் இட்டுச்செல்லத் தயாராக உள்ளனரா என்பதே அது. இதற்கு எதிர்மறையான நிலையை புலிகள் எடுப்பார்களானால் தீவிரவாதம் என்பதும் மதிப்பிழந்து போய்க்கொண்டிருக்கும் ஒரு சொத்து என்கிற மாதிரி ஆபத்தான நிலையை உருவாக்கும். தமிழர் பிரச்சனைக்கான தீர்வு ஒரு வேளை திருப்திகரமாக அமையாது போய்விட்டாலும் கூட, Intifada மாதிரி மக்கள் இயக்கம் உருப்பெற்று அது LTTE தலமையை வெளித்தோற்றத்தில் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகலாம். ஆனால் உண்மையில் அது தானே ஸ்திரம் பெறுவதற்குரிய உந்து

விசையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்
முடிவுரை
LTTE வழங்கக் கூடிய அதிகபட்ச தந்திரோபாய நெகிழ்ச்சித் தன்மைக்கும் - அரசாங்கம் வழங்கக்கூடிய அதிகாரப் பரவலாக்கத்திற்கும் இடையே தான் கடைசித் தீர்வுக்கான ஒப்பந்தத்தின் சாராம்சத்தினை ஒத்த கூறுகள் பொதிந்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரு சாராருக்கிடையே மேற்கொள்ளப்படும் ஒப்பந்தம் இதுவாதலால் பழைய குறைபாடுகளை இது திருப்பியும் கொண்டிருக்க வேண்டியதில்லை. காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கையீனமும் கசப்பும் உடனடியாக மறைந்து போகாது. சிருஷ்டிபூர்வமாகவும் தாராள மனதோடும் ஒரு பொதுவான தளத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால் இரு சாராருக்கும் இடையிலான நம்பிக்கையினத்தையும் கசப்பையும் பெருமளவில் குறைத்து விடமுடியும்.
ஒப்பந்தத்தீர்வில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவநம்பிக்கையைக் குறைக்கவும் வெளிநாட்டு ஆதரவு எந்தவிதத்தில் அமையலாம் என்றால் வடகிழக்கில் புனரமைப்பு, அபிவிருத்தி பற்றிய பேச்சுவார்த்தைகளில் சர்வதேச நிதி வழங்கும் அமைப்புக்கள் இதில் நேரடியாகப் பங்குபற்றுவதன் மூலமாகும். அரசாங்கத்தால் அல்லாது நிதிவழங்கும் ஸ்தாபனங்களின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும் விசேஷ திட்டங்கள் சார்ந்த நிதியுதவி சமாதானத்திற்கும் ஸ் திரப்பாட்டிற்குமான ஈடுபாட்டின் நல்ல வெளிப்பாடாகும். நிதியுதவியை அரசாங்கம் நிர்வகித்தால் நிதியுதவியைப் பெறுவோர் மத்தியில் நம்பிக்கையினங்கள் ஏற்படக்கூடும். இத்தகைய பொருளாதார உதவி இலங்கையின் உள் நாட்டு அரசியலில் அநாவசியமான தலையீடு என்று சிலர் வாதாடக்கூடும். ஒருவரில் ஒருவர் தங்கி நிற்கும் தன்மை அதிகரித்துச் செல்லும் இன்றைய உலகில் இது குறித்து மிகச்சிலரே அதிருப்தி தெரிவிக்கக் கூடும்.
உண்மையில் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் தன்மையே இந்த இன மோதலுக்கான தீர்வின் மையக் கருத்தோட்டமாகும். அரசியல் கூட்டு அமைப்புக்களின் வடிவங்கள் எதுவாய் அமைந்தாலும் இலங்கை மக்கள் ஒருவருக்கொருவர் இணைந்தே வாழ்ந்தாக வேண்டும். இரண்டு ஆயுத முகாம்களுக்குள் வாழ்ந்து கொண்டு அவர்கள் வழமான எதிர்காலத்தைக் கண்டு கொள்ள முடியாது.
வாசகர்களே
இவ்வருடத்திற்கான புதிய சந்தாக்களை அஆஇ உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. முடிந்துபோன தங்களின் சந்தாக்களைப் புதிப்பிக்குமாறும், புதிய சந்தாதாரர்களை அறிமுகம் செய்யுமாறும் நன்றியுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Page 21