கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மன்றம் 1991.02

Page 1
  

Page 2
ஏழைகள் துய நீலகிரி ஆட்சியரின் இன்னொரு ச
நிலமற்ற ஏழை எளியவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்குதல், அரசாங்கத்தின் நல்வாழ்வுத் திட்டங்களில் ஒன்றாகும். தமிழ் நாட்டில் 3, 93,000 பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் (சென்னை தவிர்த்து) எத்தனை , எத்தனை பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அரக தீர்மானித்திருந்தது. ஆனல் வழங்கப்பட்ட பட்டாக்களோ 2,79, 125 மட்டுமே பல மாவட்டங்களிலே அரசு தீர்மானித்த இலக்கை விட குறைவாகவே பட்டா வழங்கப்பட்டுள்ளது.
செங்கை அண்ணா மாவட்டத்தில் 35000 பட்டா க்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழங்கப் பட்டதோ 12439 தான். கோவை மாவட்டத்தில் 18000 பட்டாக்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் 8212 பட்டாக்களே வழங்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்திற்கு 50, 000 பட்டாக்கள் ஒதுக்க ப்பட்டுள்ளது ஆனால் வழங்கப்பட்டதோ 24 274 தான் இதே போல பெரியார் மாவட்டத்தில் 20,000 பட்டா க்களுக்குப் பதிலாக 12133 மட்டுமே வழங்கப்பட்டுள் ளது. தென்னாற் காட்டில் 40.000க்கு 23068 கொடுக் கப் பட்டுள்ளது. திருச்சியிலும் அப்படி யே தான். 30000 பட்டாக்கள் கை யளிக் கப் பட்டிருக்க வேண்டும், ஆனால் கொடுக்கப்பட்டதோ 18016. திருநெல்வேலி கட்ட பொம் ம ன் மாவட்டத்தில 15000க்கு 6221 மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.
சிதம்பரனார், தர்மபுரி. திண்டுக்கல், காயிதே மில்லத் காமராஜ், கன்னியாகுமரி வட ஆற்காடு
குடுமனையில் பட்
உதகை வட்டம் குடுமனையிலுள்ள அரிசனக் காலனியில் பெப்ரவரி 27-2-91 அன்று பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பட்டாக்களை வழங்கி உரையாற்றிய மாவட்ட ஆட்சிக் தலைவர் திரு. ஜி. அம்பேத்கார் ராஜ்குமார் ' ஏழைகளாக உள்ள நீங்கள் மது அரு ந் துவதற்கு அதிக பணத்தை செலவி கிகின்றீர்கள் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க மறுக்கிறீர்கள். இந் நிலை மையை மாற்றாத வரையில் ம.ம.ம. மன்றம் போன்ற தொண்டு நிறுவனங்களாயிலும் சரி, அரசாக இருந் தாலும் சரி, எவ்வளவு திட்டங்களைத் தீட்டினாலும் அவை பயன் தர மாட்டா'' என்று அறிவுருத்தினார். நீலகிரி மாவட்டத்தில் பட்டா வழங்குவது தொடர்ந்து துரிதப்படுத்தப் படும் என்று உறுதியளித்தார்.

2 ர் துடைப்பதில் ாதனை 6280 பேருக்கு பட்டாக்கள்
பசும் பொன் தேவர், புதுக்கோட்டை திருவண்ணா. மலை சம்புவராயர் ஆகிய மாவட்டங்கள் ஒரளவு இலக்கை எட்டியுள்ளன.
ஆனால் நீலகிரி மாவட்டம் அரசின் இலக்கை வெகுவாக மிஞ்சியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 1000 பட்டாக்கள் தான் வழங்கப்பட வேண் டு ம் என்று அரசு நிர்ணயித்திருந்த போதும் அங்கு 6280 பட்டாக்கள் ஏழை எளியவர்க்கு வழங்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களிலே, அரசின் இலக்கைப் பற்றி கவலைப்படாது, பட்டாக்கள் கொடுபடாமல் இருப் ப்பதை பார்க்கும் போது, சாமி வரங் கொடுத்தாலும் பூசாரி வரங் கொடார் என்பது போல அரசு ஆணையி ட்டாலும் அந்த மாவட்ட நிர்வாகங்கள் நிலமற்ற ஏழைகள் மீது கரிசனை கொள்ளாதிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. அப்படிப்பட்ட மாவட்ட நிர் வாகங்களைப் பார்த்து ஏழைகள் இ ன் புறுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா என்று தான் கேட்க தோன்றுகிறது.
இத்தகைய மாவட்ட நிர்வாகிகள் இருக்கும் வரை அரசின் நல்ல பல நலவாழ்வுத் திட்டங்கள் ஏழை களுக்கு சென்றடையாது என்று உறுதியாகக் கூற லாம். இத்தகையோர் மத்தியிலே, மாறுபட்ட மனிதராய் ஏழைப் பங்காளனாய்த் திகழும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் திரு. அம்பேத்கார் ராஜ்குமாருக்கு பலகோடி ஏழை மக்கள் சார்பில் 'மக்கள் மன்றம்' மனமுவந்து நன்றி தெரிவிக்கிறது. அவரது கடமை யுணர்ச்சிபால் நீலகிரியில் இன்று 6 280 நில மற்ற ஏழைகள் நிலச் சொந்தக் காரர்களாகி உள்ளார்கள்.
டா வழங்கல் விழா
விழாவில் குடுமனை காலனி, கரடிப்பட்டு, சுவாமி நாதப்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 93 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களும், 75 பேறுக்கு குடும்ப அட்டைகளும் வழங்கப் பட்டன. வட் 1.ா ட்சியர் திரு. ஆதம், ம.ம.ம.மன்ற கூடலூர் பிராந்திய செயலர் திரு மு. சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர். வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் பலர் உரையாற்றினர். பொது மக்கள் சார்பில் திரு. கிட்டப்பா வரவேற்புரை வழங்க திரு. அரங்கசாமி நன்றி யுரை கூறினார். குடுமனைக் காலணி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
இப் பகுதியிலுள்ள மக்களுக்கு பட்டா வழங்கப் பட வேண்டும் என்று ம.ம. ம. மன்றம் தொடர்ந்து போராடி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Page 3
e
தொண்டரண
கலைப் ப
ஆறாண்டு காலம், நமது மன்றம் ஆற்றிய பல பணிகளிலே செயற்படுத்திய திட்டங்களிலே புதியதும் நல்ல பலனைத் தந்துள்ளதுமான திட்டம் தான் தொண்டரணிப் பயிற்சியும், கலைப்பயிற்சியும்.
சிறுவாணி நதியருகே, மன்ற வளர்ச்சித் கிட்டங் களை மீளாய்வு செய்த வேளை, சிந்தையில் உரு வான, செம்மையான திட்டம் தான் இது. கோத்தகிரி கூடலூர், குன்னூர் என, நமது மன்றம் விரிவு பெறப் பெற முழு நேரப் பணியாளர்களின் முழுத் திறமை யால் மட்டும், மக்களைச் சந்தித்து அவர்தம் குறை களைக் கண்டு, கேட்டறிந்து அதற்கு தீர்வு காண நம்மால் முடியவில்லை. பணிகள் விரிவுபெற்றன. அதற்கேற்ப பணியாளர்களை விரிவு படுத்த நம் சக்தி இடம் தர மறுத்தது. அதிக பணியாள களைக் கொண்டு குறைந்த பணிகளைச் செய்வதை விடுத்து திறமையான ஆர்வமுள்ள சமூகத்தின் மீது அக்கறை கொண்ட குறைந்த பணியாளர்களைக் கொண்டு சிறந்த, சீரிய சேவையை செய்வோம் என உறுதி பூணப்பட்டது.
நாம் பூண்ட உறுதியை செயற்படுத்த நமக்கு பல உதவிக்கரங்கள் தேவைப்பட்ட எ. சிலருக்கு மட்டும் தொண்டு செய்ய சந்தர்ப்பம் கிட்டுகிறது. பலருக்கு தொண்டு செய்ய சந்தர்ப்பம் கிட்டுவதில்லை. ஆனால் தொண்டும், தொழிலும் சேர்ந்து ஒரு சிலருக்கு மட்டும் தான் கிட்டுகிறது. அத்தகையோர், தாம் தொழிலைச் செய்கின்றோமோ அல்லது தொண்டு செய்கிறோமோ என்ற வித்தியாசம் தெரியாமல் நமது மன்றத்திலே முழு நேரப் பணியாளர்களாய்ப் பணி புரிகின்றனர்.
இவர்களோடு இணைந்து பணியாற்ற தொண்டு உள்ளமும், சமூகத்தின் மீது பற்றும் கொண்ட ஒர் இளைஞர் படையை உருவாக்க நாம் திட்டமிட்டோம் நெறியாளர் திரு. இர. சிவலிங்கம் இப் பயிற்சிக்கான திட்டத்தைத் தீட்டினார். அதன்படி பயிற்சி ஆரம்ப நிலை, தயார் நிலை என இரு பிரிவாகப் பிரிக் சப் பட்டது. ஆரம்ப நிலை இரு கட்டமாக நடத்தப் பட வேண்டும் எனவும் முதற் கட்டத்திலே சமூக பகுப் பாய்வு, மனிதகுல வரலாறு, தலைமைத்துவம், அதன் தகுதி, திறமை,பண்பு என்பவற்றோடு அணுகுமுறை , கலையின் முக்கியத்துவம் என்பவற்றை இரு நாட்சளில் பயிற்று விக்க வேண்டும் எனவும் இரண்டாம் க்ட்டத்தில் குடும்ப வரவு-செலவு திட்டமிடுதலின் அவசியம், நீலகிரி வரலாறு, இந்திய வரலாற்றுச் சுருக்கம் சமூக நல நிறுவனங்கள், மன்ற வரலாறு என்பன பற்றி மூன்று நாள் பயிற்சி அளிக்கப் பட

ரிப் பயிற்சியும் யிற்சியும்
எல். பூஜீஸ்கந்தராஜா
வேண்டும் எனவும் நெறியாளர் திட்டமிட்டார். அதன் படி 25-8-1990 முதல் 11.12. 1990 வரை ஆரம்ப நிலைப் பயிற்சியின் இரு கட்டமும் நிறைவு செய்யப் பட்டது. ஆரம்ப நிலைப் பயிற்சியின் முதலாம் கட்டத் தின் போது கோத்தகிரியில் இருந்து 32 ஆண்களும் 4 பெண்களும், குன்னுாரிலிருந்து 31 ஆண்களும், 17 பெண்களும், கூடலூரிலிருந்து 26 ஆண்களும் 10 பெண்களும் மொத்தமாக 120 பேர் கலந்து கொண்ட னர். ஆரம்ப நிலைப் பயிற்சியின் இரண்டாம் கட்டத் தின் போது கோத்தகிரியிலிருந்து 24 ஆண்களும் 4 பெண்களும், குன்னூரிலிருந்து 14 ஆண்களும் 12 பெண்களும், கூடலூரிலிருந்து 9 ஆண்களும், 7 பெண் களுமாக மொத்தமாக 70 பேர் ஆரம்ப நிலைப் பயிற் சியினைப் பூர்த்தி செய்தனர்.
தொண்டரணிப் பயிற்சியின் ஓர் அங்கமாக, கலைப்பயிற்சியும் மிக விரிவான முறையில் நடத்தப் பட்டது. இப்பயிற்சிக்கு கூட லூர், குன்னூர், கோத்தகிரிப் பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 35 பேர் கலந்து கொண்டனர்.
இலைமறைகாய் போன்று தம்முள் திறமைகள் மறை ந்திருந்தும், அதனை அவர்களே அறிந்து கொள்ளாத நிலையிலே பயிற்சிக்கு வந்த அனைவரும் பயிற்சியின் பின்னர் அவர்களே ஆச்சரியப் படும் வகையில் நாடக கலைஞர்களாய் மாறினர். அத்தகைய இளைஞர்களை கலைஞர்களாய் மாற்றிய பெருமை திருச்சியைச் சேர்ந்த திரு. சுந்தர், திரு.செல்வராஜ் ஆகியோரையே
சாரும்.
பயிற்சியின் போது இவ்விருவரும் இளங் கலைஞர் களோடு, இளங் கலைஞர்களாய் இணைந்து ஒரு புறம் பயிற்சியளித்தபடியே மறுபுறம் அவர்களும், தம்மை மறந்து நடித்த சந்தர்ப்பங்கள் பல. வாய் திறந்து பேசவே அச்சமுடன் இருந்தவர்கள் ஆடுகளைப் போல், மாடுகளைப் போல் பறவைகள் போல், யானைகள் போல், குரங்குகள் போல் ஒலி யெழுப்பி அவைகளாகவே மாறிவிட்டனர்.
நவரசம் இவர்களின் முக, பாவங்களிலே பரிண மித்தது. கோபத்தோடு இருந்தவர்களின் முகங்களிலே மகிழ்ச்சி, மகிழ்ச்சியோடு இருந்தவர்களின் முகங் களிளே ஆணவச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு மாறி சோகம் சோகம் மாறி, ஆவேசம், ஆவேசம் மாறி பயம், பயம் மாறி, விசும்பல். இப்படியாக, பயிற்று விப்போரில் கட்டளைக்கேற்ப தம் முகபாவங்களை
தொடர்ச்சி 6 ம் பக்கம் .

Page 4
O 0 O O மன்றச் செய்திகள் கோத்தகிரியில் இலவச மருததுவ முகாம
மன்றத்தின் சுகாதார நடவடிக்கைகளில் ஒன்றாக 24-2-91 ஞாயிற்றுக் கிழமை, கோத்தகிரி மன்ற வளா கத்தில் இலவச மருத்து வ முகாம் ஒன்று நடை பெற்றது. இதில் கோத்தகிரி தாலுக்காவைச் சேர்ந்த 30 குடியிருப்புகளில் இருந்து 264 நோயாளிகள் பயன் பெற்றனர்.
வயிற்று வலி, காச நோய், தோல் வியாதி ஊட்ட சத்து குறைவு, காய்ச்சல், தலை வலி, கர்ப்பகால இடையூறுகள், விபத்து காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் போன்ற பல்வேறு நோயாளிகள் பயன் பெற்றனர்.
கோவையில் இருந்து வருகை தந்த டாக்டர் எஸ். சுப்பிரமணியம், டாக்டர் (திருமதி) சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இம் முகாமிற்கு நெடுகுளா சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மேற்பார் வையாளர் திருமதி. பொன்னம்மா மன்ற ஊக்குநர்களோடு இணைந்து மருத்து வர்களுக்குப் பெரிதும் உதவி புரிந்தார்.
கூடலுாரில் சிறுவர் சீரணி முகாம்
நல்ல பண்பாடும், ஒழுக்க நெறிகளும், சுகாதார பழக்கங்களும், சிறுவயது முதலே கற்றுத் தரப்படும் போது அவை இள மனதிலே பசுமரத்தாணி போல பதிவது மட்டுமல்லாமல் வாழ் நாள் முழுக்க அவை கள் ஒருவனுக்கு ப யன் உள்ளனவாக இருக் கும். இதனை கருத்திற் கொண்டு ஆங்காங்கே சிதறுண்டு கிடக்கும் சிறுவர்களை சீரான அணியிலே ஒன்று திரட்ட தோற்றுவிககப்பட்ட அமைப்புதான் சிறுவர் சிரணி. ཆ་
இத்தகைய சிறு வர் சீரணி மு காம் ஒன்று 24-2-91 ல் கூடலூர் கிளையில் நடை பெற்றது. கூடலூர் பிராந்தியச் செயலர் திரு எம். சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இம் முகாமில் அவர் உரை யrற்றும் போது "சிறுவர் மத்தியில் கல்வியும் நற். பண்புகளும் வளர வேண்டும். பொது அறிவை வளர்த்துக் கொள்ள நல்ல கருத்துள்ள புத்தகங்களை படிக்க வேண்டும்” என்று கூறினார். அவரைக் தொட ந்து மன்ற ஆய்வுக் குழு உறுப்பினர் திரு. மலையூரான் பேசினார். குழந்தைகளின் எதிர் காலம் சிறக்க, உலக அனுபவங்களை அறிய நமது மன்றம் இந்த வாய்ப்பை ஏட்டடுத்தியது. இவ ற்றை நாம் பயன் படுத்தி முன்னேற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சிறுவர் சீரணி அமைப்பு பற்றி திரு. எஸ். ஆனந்த ராஜா விளக்கம் அளித்தார். பிரதம ஊக்குநர் திரு. ஆர். ராஜ"வும் பேசினார்.

மகளிர் சக்தி மக்கள் சக்தி 1 ம் பக்க தொடர்ச்சி செல்லாமல் கல்வி உரிமை மறுக்கப்பட்டு வீட்டு வேலைக்கோ வெளி வேலைக்கோ அனுப்பப்படுபவர்கள் பெண் குழந்தைகள். நமது நாட்டிலேயே பெண் கல்வி சொற்பம். பெண்கல்வியில் மிகவும் பின் தங்கிய மாவட்டம் நீலகிரி மாவட்டமாகும். கணவன் மார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட காரணத்தால் சொல்லொணுக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுபவர் கள் பெண்கள். இளம் பெண்கள் அபகரிக்கப்படுவதும் மானபங்கம் செய்யப்படுவதும், கட்டாயக்கலியாணம் செய்து வைக்கப்படுவதும் நீலகிரியில் அன்றாட நிகழ்ச் சிகள். நீலகிரி மாவட்டத்தில் பெண்களின் நிலை மிக, மிகத் தாழ்ந்தது பெண் சமத்துவம் என்று பேசக் கூட இடமில்லாத இடம் என்ற உண்மைகளை உணரு வதற்கு ஆய்வுகள் தேவையில்லை. அத்தனை அப்பட்டம். பெண் அடிமை தீரவும், பெண்கல்வி உயரவும் பெண் சளின் நிலை திருந்தவும் உடனடியாக தீவிர நட வடிக்கைகள் மேற்க்கொள்ளப் பட வேண்டிய மாவட் டங்களில் முதலிடம் வகிப்பது நீலகிரி மாவட்ட ம கும். இங்கு வாழுகின்ற தமிழ்ப் பெண்களாலென்ன படுகப் பெண்கள் ஆனலென்ன , முஸ்லிம் பெண் களானலென்ன அனைவருமே ஒடுக்கப்பட்டவர்களும் சம உரிமை மறுக்கப்பட்டவர்களும் தான். உலக மெங்கும் தென்றலாய்த் தோன்றி புயலாய் உருவெடு துள்ள மாதர் உரிமை இயக்கம் இங்கும் வேகமாய் விரை வாய் வீசவேண்டும். மார்ச் 8 சர்வ தேசப் பெண் கள் தினம் உரிமை முழக்க தினம். மலையகமாதர் முன் னணியினர் 10 ம் திகதி உரிமைப் பேரணி நடத்து கிருர்கள். அவர்களின் கோஷமும், குமுறலும் மாதர் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டுமென அவாவுகிறுேம்
சிறு சிறு குழு விளையாட்டுக்கள் மூலம் பல நல்ல கருத்துக்கள் போதிக்கப்பட்டன. கவனமுடன் திட்ட மிட்டு செயற்படுதல், தலைமை பண்பு பொறுப்புணர்வு சுகாதாரப் பழ க் க வழக் கங்கள் போன்றவை கற்றுக் கொடுக்கப் பட்டக). பாடல் பயிற்சி வாழ்க்கை கல்வி, மற்றும் செய்தி தொடர்பின் முக்கியத்துவம் போன்ற வையும் புகட்டப்பட்டது
இம் முகாமில் பயிற்சியாளர்களாக திரு. எஸ். ஆனந்தராஜா, திரு.ஏ. மணி, மாதர் அணிச் செயலர் செல்வி வியாகுலமேரி, திருமதி.ஏ, லட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம் முகாம் சிறப்பாக அமைய கூடலூர் இளைஞர் அணிச் செயலர் திரு. சக்திவேல், உபதலைவர் திரு. சுப்பிரமணி. ஆகியோரும் தொண்டாசிரியர்களும் டெரிதும் ஒத்துழைப்பு நல்கினர்.
தேசிய கீதத்துடன் நிறைவு பெற்ற இம் முகாமில், சிறுவர் சீரணி அபிவிருத்திக் குழுவிற்கு பத்து பேர்
தெரிவு செய்யப்பட்டனர்.

Page 5
குன்னுரரில் ப
குன்னூர் வட்டம், டைகர் ஹில் பகுதியில் இருக்கும், விஜயநகர மாளிகையில் வசிக்கக் கூடிய சுமார் 200 குடும்பங்களுக்கு, அதே பகுதியில் இருக்க கூடிய சர்வே எண்- 1024/3, 1025/1, 1025/2 ஆகிய இடங்களில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தை ஆதி திராவிடர் நலத்துறையினர் கையகப் படுத்தி வீட்டு மனைகள் வழங்குவதற்கு ஏற்பாடா யிற்று. இதற்கான பத்திரிகை அறிவிக்கை, அரசாணை போன்ற முன்னோடி வேலைகள் நிறைவு பெற்ற நிலையிலும் கூட தற்போது அரசிடம் பணமில்லை போன்ற சில சாதாரண காரணங்கள் காட்டப்பட்டு இப் பிரச்சனை காலம் தாழ்த்தப்பட்டு வந்துள்ளதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்கள் 4-3-1991 திங்கட் கிழமை சாலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை குன்னுர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் ஒரு நாள் அ டை யா ள உண்ணா விர தத் தை மேற்கொண்டனார்.
இப்போராட்டத்தை விஜயநகர மாளிகை மக்கள் சார்பில் ஊர்த் தலைவர் வி. நடராஜ், செயலாளர் கே. சிவலிங்கம் ஆகியோர் ஒழுங்கு செய்ய முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திரு. வி.பழனிச்சாமி, திரு.வி. குருசாமி ஆகியோர் தலைமையேற்று நடத்தினர் முன்னாள் நகர மன்ற தலைவர் திரு. மு. முபாரக்
உணவீட்டல் உரிமை இயக்க
சர்வதேசிய அமைப்பான உணவீட்டல் உரிமை இயக்கத்தின் (FIAN) அறிமுகக் கூட்டம் கடந்த 17-2-91 அன்று காலை கோத்தகிரி ம.ம.ம. மன்ற த்தில் இடம் பெற்றது.
இவ்வமைப்பின் தமிழ் நாடு கிளையின் ஸ்தாபகர் வழக்கறிஞர் குருசுவாமி அவர்கள் அறிமுகம் செய்து
வைத்து உரையாற்றினார். ‘ஒரு மனிதன் தனக்கு
வேண்டிய உணவை தானே உழைத்து ஈட்டிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை அரசு ஏற்படுத்த
சர்வதேச தொழிலாளர் சபையி
பெண்களும், சிறுமிகளும் உலக சனத்தொகையில்
பெண்களும், சிறுமிகளும் உலக உழைப்பாளர்களுள்
உலக உழைப்பு நேரத்தில் பெண்கள் பங்கு உலக வருமானத்தில் பெண்கள் பங்கு உலகத்தின் சொத்தில் பெண்கள் பங்கு
பெண்களே ! பெண் சமத்துவம் வெறும் என

ட்டினிப் போர்
இதனை ஆரம்பித்து வைத்து வாழ்த் துரை வழங்கினார். இதற்கு பதினைந்து தினங்களுக்குள் தீர்வு காணப் படாவிட்டால் விரைவில் அனைத்துப் பிரிவி னரையும் உள்ளடக்கிய மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தலாம்" என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து திரு. ஜீ.எம். வேலன், மலையக மக்கள் மறுவாழ்வு மன்ற துணைத் தலைவர் திரு. அ. கா. தீன், திருவாளர்கள். ரஹீம், மனோவா, ஷேக் முகமது கான், சிராஜ-தீன் போன்ற பல்வேறு அரசி யல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் வாழ்த்துரைகள் வழங்கினர்.
இந்த ஒரு நாள் போராட்டத்தில் விஜயநகர மாளிகை மக்கள் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட 300 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் சார்பில் துணைத் தலைவர், பிராந்திய செயளர், இளைஞர் வளர்ச்சி அலுவலர் உட்பட தொண்டர் அணியினர் முப்பது பேர் பங்கேற்று ஆதரவு நல்கியதோடு மாநில அரசைக் கண்டித்து உணர்ச்சி மிகு கோஷங்கள் எழுப்பினர்.
போராட்ட இறுதியில் வட்டாட்சியரிடம் கோரிக் கை மனு கையளிக்கப்பட்டது.
கம் - அறிமுகக்கூட்டம் -
வேண்டும் என்பது தான் இவ்வமைம்பின் பிரதான நோக்க மா கும்' என்று கூறிய அவர், 1976ல் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகள் பட்டியலிலேயே இது சேர்க் கப்பட்டு விட்டது’ என்று தெளிவுபடுத்தினார்.
மன்ற இயக்குனர், திரு. இர. சிவலிங்கம் நிகழ்ச் சிக்கு தலைமை வகித்தார். வழக்கறிஞர் சேகர், கோத்தகிரி மதுவிலக்கு அமைப்பின் தலைவர் திரு. ராஜா ஆகியோரும் சொற்பொழிவாற்றினர்.
ன் I.L.0. அறிக்கை கூறுகிறது
அரைப்பங்கினர் மூன்றில் ஒரு பங்கினர் மூன்றில் இரண்டு பங்கு பத்தில் ஒரு பங்கு நூற்றில் ஒரு பங்கு
ண்ணிக்கையில் மட்டுந் தான? சிந்தியுங்கள்.

Page 6
மரக் கடத்திகள்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் ராஜ்குமார் அம்பேத் கரின் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக இம்மா. வட்டத்தின் பல பகுதிகளில் பரங்களை திருடி பண மாக்கி வந்த பண முதலைகள் பலர் பிடிபட்டனர். இதுவரையில் மரமேற்றி வந்த பதினோரு லாரிகள் கைப்பற்றப் பட்டுள்ளன.
கோத்தகிரி வட்டத்திலுள்ள அன்னிக்கொரை, தேனாடு கம்பை, தூனேரி, சின்னக்குன்னூர் ஆகிய பகுதிகளிருந்து பணமுதலைகள் பலர் வனத்துரை யினரின் அனுமதியின்றி காடழித்து, மரம் வெட்டி பணமாக்கிக் கொள்வது நீண்ட நாட்களாகவே நடந்து வருகிறது. இப்பகுதிகளில் தேனாடு கம்பை யில் போலீஸ் நிலையமும் எப்பநாடு கொனூரு என்ற இடத்தில் மூன்று வனத்துறை அதிகாரிகளும் உள்ளனர். அப்படி இருந்தும் இந்த மரக்கடத்தல் தொழில் ஜாம் ஜாம் என்று நடந்து வந்தது தான் வியப்புக் குரியது.
கொதுமுடி, இடுஹட்டி வழியே கடத்தி வரப்படும் மரங்கள் கக்குச்சியிலிருந்து பெத்தலா, வெஸ்ட் புரூக் வழியே கோத்தகிரியில் சந்தைப் படுத்தப்படும். வேறு சில, கக்குச்சியிலிருந்து பில்லிக்கம்பை வழியே அதற்கு
தொண்டரணிப் பயிற்சியும் கலைப் பயிற்சியு
அங்கங்களை மாற்றி, மாற்றி அமைத்தல் பயிற்சியின் போது தரப்பட்ட நல்ல பயிற்சிகளில் சிலவாகும்.
கலை கலைக்காக என்ற காலம் மாறி கலை மக்களின் பிரச்சனைகளை எடுத்துக் காட்டி கலை மக்களுக்காகத் தான் என்ற ஒரு புதிய போக்கு தோன்றியுள்ள இவ்வேளையிலே, தெரு நாடகம், அதன் தேவை, அதை எப்படிச் செய்வது, பிரச்சனை களை எப்படி எடுத்துக் காட்டுவது போன்ற பயிற்சி களையும், செல்வா சுந்தர் இரட்டையர்கள் பயிற்று வித்தனர்.
பயிற்சியின் பின் மேடையேற்றப் பட்ட அனை த்து நாடகங்களும், சிறந்த முறையில் அமைந்திருந்தது பங்கேற்ற கலைஞர்கள் அனைவரும் ஒருவருக்கொரு வர் சளைத்தவர்கள் அல்லர் என்பது போல தமக்களிக் கப்பட்ட பாத்திரத்தை நடித்தார்கள் என்று சொல் வதை விட, அப்பாத்திரமாகவே மாறிவிட்டனர் என்று தான் கூற வேண்டும். V
கலைக் குழு உருவாக கார ண மா க சுந்தர் செல்வா இருந்தது போல, தொண்டரணி உருவாக காரணமாகவிருந்தவர்கள் பலர். இதன பொறுப்பு உபதலைவர் திரு. ஏ.சி.டீனிடம் ஒப்ப  ைட க் கப் உட்டது. அவர் தனது பணியினைச் செவ்வனே செய்து

T
பிடிபட்டனர்
அருகிலுள்ள தனியார் தேயிலைத் தோட்ட தொழிற் சாலைகளுக்கு அனுப்பப்படும்.
ஒரு லாரியில் சுமார் 12 லாடு வரையில் அடுக்க முடியும் 1 லாடு ரூ. 475 முதல் ரூ. 850 வரையில் விலை போகும். தினமும் மாலை 6 மணி முதல் விடிகாலை 4 மணி வரையில் இந்த மரக்கடத்தல் *திருவிழா வெகு ஜோராக நடைபெறும்.
கடந்த ஒரு மாத காலத்திற்குள் மாவட்ட ஆட் சித் தலைவரின் நேரடி நடவடிக்கைளில் இது போன்ற மரக் கடத்திகளின் 12 லாரிகள் பிடிபட்டுள்
நீலகிரியில் சாதாரண விறகு பொறுக்கி வரும்
தொழிலாளர்களினால் தான் நீலகிரியின் வளம்
பாதிக்கப்படுகிறது என்று ஓலமிடும் பண முதலைகள்
தாம் இந்தப் பெரும் மரக் கடத்தலில் ஈடுபட்டுள்ள
னர். ஆடு நனைகிறதென்று ஒநாய் அழுதகதை இப்
போது நீலகிரியில் அம்பலப்பட்டுப் போயுள்ளது.
இப்போது சொல்லுங்கள் * காடழிப்பது நீங்களா? இல்லை நாங்களா?' "
| ιο
4 ம் பக்க தொடர்ச்சி . . .
நல்லதொரு தொண்டரணியை உருவாக்கியுள்ளார். இவருக்கு திரு.வீரா. பாலசந்திரன், திரு. ஆனந்தராஜ் திரு. அ. தமிழ்ச்செல்வன் ஆகியோர் எல்லா பயிற்சி களிலும் கலந்து உறுதுணையாய் இருந்திருக்கிறார்கள் மொத்தத்திலே ஒரு சிறந்த தொ ன் டர ணி யும் கலைக்குழுவும் உருவா கி விட் ட பெருமகிழ்ச்கி எல்லோர் மனத்திலும் பொங்குகிறது :
ஆண்டு விழா கலையரங்கில் மன்றக் கலைஞர்கள்

Page 7
நீலகிரிச் சார
உதகமண்டலம் உல்லாச நகரமாகப் பெயர் பெறுவ தற்கு முன்னரே கோத்தகிரிதான் இனிய சீதோதஷ்ண நிலைக்கும் மனேகரமான சுற்ரூடலுக்கும் பெயர்
போனது என்று உங்களுக்குத் தெரியுமா?
1799 ம் ஆண்டு நீலகிரி ஆங்கிலேயர் ஆட்சிக்கு
உட்பட்டது. 1818 ம் ஆண்டு வரை ஆங்கிலேய ஆட்சி யாளர் அந்தப் பக்கமே தலைக்காட்டவில்லை. இரபிண்டு கோவை மாவட்ட உதவிக்கலெக்டர்கள் (உஷ், கிண்டர்லி) முதன் முதலாக சிறுமுகை வழியாக கோத்தகிரிக்குச் சென்றார்கள். அவர்கள்தான் கோத்த கிரியின் அழகு, அமைதி, சுவாத்தியம் ஆகியவற்றைப் பற்றி சல்லிவன் கலெக்டரிடம் எடுத்துக் கூறினர். அவரும் கோத்தகிரி அருகில் உள்ள திம்பட்டிக்குச் சென்று அங்கு ஒரு பங்களா கட்டினர். பிறகு சேலம் கோவை ஆகிய இடங்களில் சிறை வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளைக் கொண்டு சிறுமுகையிலிருந்து திம் பட்டிக்குப் பாதை வெட்டினர்.
முதன் முதலாக ஆங்கிலேயர்கள் கோத்தகிரி யிலும திப் ட்டியிலும் பங்களாக்கள் கட்டி குடி யேறினர்கள். பின்னர் தன் சல்லிவன் உதகை சென்று கல்வியகங்க ளாவையும் வேறுபல கட்டிடங்களேயும் கட்டுவித்தார். சல்லிவன் தான் பூந்தோட்டத்தை அமைத்தவர். 1824ம் ஆண்டு, கடல் மட்டத்திலிருந்து 7228 அடி உயரத்தில் அழகு மிக்க ஏரியும் வெட்டப் பட்டது. சல்லிவனின் பெரும் முயற்சியால் உதகை நீலகிரியின் தலைநகரமாகவும், உல்லாச நகரமாகவும் ட ழைய சென்னை ராஜதானியின கோடை காலத் தலை நகராகவும் மாறியது. 1826ல் சென்னையின் ஆளுநர் சர் தாமஸ் பன்றோ உதகைக்கு வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் ஆளுநர் ஸ்டீவன் வாஷிங்டன் என்பவர் மிகுந்த முயற்சி எடுத்து உதகமண்டலததை அழகு நகரமாக மாற்றினர். உதகையில் ஆலயம் அமைப்பதற்கும் அரசாங்கப் பங்களா கட்டுவதற்கும் திப்புசுல்தானது பூரீரங்கபட்டண அரண்மணையிலிருந்து உத்தரங்களும் தூண்களும் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அரசாங்கப் பங்களா நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் செலவில் 1877ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1819ம் ஆண்டு மேட் டு ப் பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு மலே ரயில் பாதை போடப்பட்டது. இதற்கு 49 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டது. 1845ம் ஆண்டில் அரசாங்கப் பூங்கா ஆரம்பிக்கப் LLL-g
இவ்வாறு ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் தான் நீலகிரி நவீன நாகரீக உலகமாக உருவெடுத்த தாக நாம் எண்ணிவிடக் கூடாது. நம்முடைய நாடு பண்டை பழம் பெருமை கொண்ட நாடாக இருந்த

C CF (Cur6ÖT
uas tb 9
படியால் நமது நீண்ட நெடிய வரலாற்றின் அடிச் சுவடுகள் நீலகிரி மண்ணில் பதிந்துள்ளன. சேரன் காலத்தில் கானக் குரவை ஆடி மகிழ்ந்த காட்சியை இளங்கோவடிகள் எடுத்துக் காட்டியுள்ளார். ரோமர் காலத்தில் தங்கச் சுரங்கம் இருந்ததாகத் தகவல் கூறுகிறது. "தவலா" என்ற இடத்தில் செப்புத்தவலே *ளில் பொன் சேகரித்து வைத்திருந்ததாகவும் அதனைக் கொள்ளை அடிக்க வயநாட்டு அரசன் வந்ததாகவும் பழங்கதைகள் கூறுகின்றன. இவ்வாறு பொன்தவலே கள் வைக்கப்பட்டிருந்த இடத்தைத் தான் இன்று 'தவளை மலையாக நாம் வேடிக்கை பார்க்கிருேம். காலத்தின் கே , லத்தால் இடமும், மக்களும் எப்பபி எப்படி எல்லாம் மாற்ற மடைந்து விடுகிறர்கள்.
sy சென்னையிலே ஒரு பாலமிருக்கிறது. அதனைக் *'-டியவர் ஓர் ஆங்கில என்ஜினியர். அவர் டெயர் ஹமில்டன் என்பதாகும். ஆகவே அந்தப்பாலத்திற்கு ஹமில்டன் பாலம் என்று பெயர் வைத்தார்கள். காலப் போக்கில் அந்த ஆங்கிலேயர் பெயரை சரியாக உச்சரிக்க தெரியாத மக்கள், அந்தப்பாலத்தை அம்பட்டன் பாலம் என்று பெயர் சிதைத்து வழங்கினர் கள். அதோடு விட்டார்களா? அம்பட்டன் என்ற தமிழ்ச் சொல் யாருக்கோ பிடிக்கவில்லை சென்னை யில் தான் ஆங்கில மே. கங் கொண்டவர்கள் அதிக மாக இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். ஆகவே அம்பட்டன் பாலம் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு பார்பர்ன் பிரிட்ஜ்’ என்று அழைக்கப்பட்டு வந்தது பார்த்தீர்களா? ஹமில்டன் எப்படி பார்பர் ஆனர் என்று? அப்படித்தான் நீலகிரிப் பொன் தவலை சாதாரண சொரித்த வலையாக மாறிவிட்டது. ജ
இந்த இடத்தை தவளைக் கோட்டை என்றும் அழைக்கிருர்கள். 1879 - 1882ம் ஆண்டுகளில் இங்கு பொன் வெட்டி எடுத்தார்கள் என்று சொல்லப் படுகிறது.
இந்த மலைக்கு முற்கலுத்தில் மூக்கறுத்தி மலை’ என்றும் ஒரு பெயர் இரந்ததாம். இராமன் சூர்ப்பனகையின் மூக்கறுத்து இந்த மலைமேல் வைத்த தாகக் கதை சொல்வாருமுண்டு இன்னுமொரு கதை தோதுவர்களிடையே பெண் குழந்தையைக் கொல்லும் பழக்கமிருந்ததாம். தோதுவர்களின் எண்ணிக்கை குன்றிப்போனதற்கு இதையே காரணமாகக் கூறலாம் ஆனல் பெண் குழந்தையைக் கொள்ளாத தோதுவப் பெண்களை மூக்கறுத்து விடுவார்களாம். அப்படி மூக்க றுத்து வைத்த இடம் தான் 'மூக்கறுத்தி மலே’ என்று கூறப்படுகிறது.
என்ருலும், தொன்று தொட்ட மக்கள் இங்கு வாழ்ந்து வந்ததற்க்கு அடையாளமாகவே இக்கதை கள் வழங்கி வருகின்றன. அண்மையிலே நடைபெற்ற

Page 8
அகழ்வாராய்ச்சிகள் கூட இதனை உறுதிப்படுத்து கின்றன.
கோத்தகிரியில் தான் மனிதமூலம் உற்பத்தி யானது என்று கோத்தர்கள் கூறுவார்கள். இறைவன் கோத்தகிரியில் தோன்றி, அந்த இடத்தின் எழிலைக் கண்டு மனமகிழ்ந்து தனது நெற்றியின் வியர்வை யால் ஒரு ஆணையும் பெண்ணையும் படைத்தார் என்றும் அவர்களின் சந்ததியினரே கோத்தர்கள் என்றும் அவர்களிடையே வரலாறு வழங்கி வருகிறது.
ஆஞல் 1990ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோவை அகழ்வாராய்ச்சி அதிகாரி ஆர் செல்வராஜ" ஒரு அற்புதமான தகவலைத் தந்தார். கோத்தகிரி தாலு காவைச் சேர்ந்த தெங்கு மரஹாடா பகுதியில் வண்ணுன் பாறை என்ற ஒரு இடமிருக்கிறது. அங்குள்ள மிகப்பெரிய குகை ஒன்றில் புராதன ஒவியங்கள் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த ஓவியங் கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவி யங்களில் மனித உருவங்கள் வரையப்பட்டுள்ளன. யானை மேல் ஒருவன் நின்று கொணடு, இடையில் ஒரு கையை வைத்துக் கொண்டு மற்றக் கையால் கோடரி ஒன்று சுழட்டுவது போல் வரையப்பட்டிருக் கிறது. பல்வேறு மிருகங்கள் மீது மனிதர்கள் அமர்ந்து
as i leis
3 Ùi Ù tîj):
ம.ம.ம.மன்றத்தின் பணியாளர்கள் மற்றும் பகுதி இளைஞர்களுக்கு பயன் தரும் வகையில் 1991, பெப்ரவரி 16 முதல் 18 வரையிலான மூன்று நாள், நிலம் தொடர்பான சட்டப் பயிற்சி முகாம் 16ம் தேதி பன்றத் தலைவர் திரு. திருச் செந்தூரன் தலைமையில் தொடங்கியது. வழக்கறிஞர் குருசுவாமி அவர்கள் திருவொளி ஏற்றிவைத்தார் மன்ற இயக்குனரும் வழக்குரைஞருமான திரு. இர. சிவலிங்கம் அவர்கள் பயிற்சியின் நோக்”ம் மற்றும் முக்கியத்துவம் பற்றி தெளிவுபடுத்தினர்? மதுரை வழக்குரைஞர் சள் திரு. குருசுவாமி, திரு, சேகர் மற்றும் திண்டுக்கல் வழக்கு - ரைஞர் திருமதி ரமணி மாத்யூ ஆகியோர் விரிவுரைகள்
மகளிர் கல்வி
பெப்ரவரி 8 மற்றும் 9 ம் தேதிகளில் கோத்தகிரி மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தில் மகளிர் கல்வி கருத்தரங்கு இடம் பெற்றது. இதில் மன்ற ஊக்குனர் கள் உட்பட பல பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இயக்குனர் திரு. இர. சிவலிங்கம் நிகழ்ச்
சியை தொடக்சி வைத்தார். சென்னை, டெக்ராஸ்

திருப்பது போன்ற சித்திரங்களும் காணப்படுகின்றன. இன்னொரு ஒவியத்தில் ஒரு மிருகத்தின் மீது நிற்கும் மனிதன் ‘கொம்பு வாத்தியத்தை முழக்குவது போல் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. நான்கு பேர் தோளோடு தோள் இணைத்து வட்டமாக நிற்பது போல் சித்தரிக்கப் படடுள்ளது. இந்த ஒவியங்கள் கிராமியக் கூத்தை சித்தரிக்கின்றனவா அல்லது போர் முறையைச் சித்த ரிக்கின்றனவா என்று தெளிவில்லை ஆளுல் இந்த ஒவி யங்கள் மசினகுடியில் கண்டு பிடிக்கப்பட்ட ஒவியங் களோடும், கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளடுக்கன் பாளையம் என்ற இடத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ள ஒவியங்களோடும் ஒப்பிடத் தக்கனவாய் உள்ளன.
தெங்கு மரஹாடாப் பகுதியில் எட்டாம் நூற் றாண்டுக்குறிய மஹாவிஷ்ணு சிலையும், 12ம் நூற்ருண் டுக்குரிய கல் வெட்டுக்களும், இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட புதை குழிகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. ஆதி காலந்தொட்டே, மனித நாகரீகம் நீலகிரி தழுவிய பரந்த நிலப் பீட பூமியில் செழித்து வளர்ந்து வந்திருக்கிறது. என்று எண்னும் பொழுது நமது தொன்மையும், உயர்வும், தொடர்ச்சியும் நம்மை இறும் பூதெய்தச் செய்கின்றன,
-தொடரும்
ரிக் கருத்தரங்கு
ஆற்றினர். மூன்றாம் நாள் காலையில் 'நீலகிரியில் சுற்றுபுறச் சூழல் பற்றிறிய விபரங்களை திரு. இர. சிவலிங்கம் விளக்கினார். நிகழ்ச்சி முடிவில் செயல் திட்டம் வகுக்கப்பட்டது. செயல் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக பின் வருவோர் உள்ளடக்கிய ஒரு நிலப்படை அமைக்கப்பட்டது.
க. பார்த்தசாரதி
மை, பிரான்ஸிஸ்
சக்திவேல்
த. குமார்
எஸ். நாராயணன்,
கருத்தரங்கு
நிறுவன இயக்குனர் அருட்திரு. பெள்ளி அவர்களின் சிறப்புரை இடம் பெற்றது. கல்விச் சுற்றுலாவுக்காக தமிழகம் வந்த சுவீடன் நாட்டைச் சேர்ந்த பத்து மாணவிகளும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கருத்தரங்கு முடிவில் மலையக மாதர் முண்ணணி செயலர் செல்வி. வியாகுலமேரி நன்றி கூறினார்.

Page 9
இன்றைய மலையகம்
- இரா. தனகோபால் -
பழைய கனவுகளை நனவாக்க புதியதாய் நித்திரைகள்
முல்லைப் படருதற்கு தேர் செய்து நிறுத்த எண்ணி நிறுத்தக் குறிகளாய் தொடரும் வாழ்க்கை
சாண் ஏற முழம் சறுக்கும் வழுக்கு
மரம்
சமுதாய நாற்றம் தாங்காமல் தாவிச் சென்ற இளஞ்
சிட்டுகள்
சிறகடித்து பறந்து விட்டு மீண்டும் வந்து சிறைக்குள் சிக்குண்ட G3gfrej,
கீதங்கள்.
பூபாளம் பாடி எழும்பிய சிங்கங்கள் தாலாட்டு பாடி தலை காயும் தரித்திர கனவுகள்
வாழ்வின் உயர்ச்சிக்கு வைத்த ஏணி பிடிமானம் இன்றி முறிந்த
சட்டங்கள்
அதுவா அவர்களின் எதிர்காலத் திட்டங்கள்?

வாதும் சூதும் வேதனை செய்யும் எனத் தெரிந்தே அதனை தத்துவமாய் ஏற்றுக் கொண்ட பாவ உருவங்கள்
செல்வச் செழிப்பில் மிதக்க வழியிருந்தும் செல்லரித்துப் போன எலும்புத் துகல்கள் இது தான் இன்றைய மலையகம்
தொழிற் பயிற்சி அறிவிக்கை
எட்டாம் வகுப்பு படித்த ஆதி திராவிட மற்றும் பழங்குடியின (ஆண்/பெண் ) இளைஞர்களுக்கு கோவை கனரா வங்கி இருபது நாள் இலவச தொழிற் பயிற்சி அளிக்க உள்ளது. பின்வரும் பயிற்சிகள் தரப் படும்:
1. கோழி வளர்ப்பு 6. பூச் செடி வளர்ப்பு 2. மாடு வளர்ப்யு 7. தையல் 3. தேனீ வளர்ப்பு 8. பின்னல் 4. பட்டு பூச்சி வளர்ப்பு 9. தட்டெழுத்து 5. பழ மரங்கள் வளர்ப்பு 10. ஊது பத்தி செய்தல்
இப் பயிற்சியை முடித்தவர்களுக்கு வங்கியின் கடனுதவி தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப் படும். மேலதிக விபரங்களுக்காகவும்விண்ணப்பிக்கவும் விரும்பும் மன்ற உறுப்பினர்கள் வேலையற்ற இளை ஞர்கள், உடனடியாக ம.ம.ம. மன்றத்தின் பிராந்திய செயலாளர்களை அணுகவும்.
சுவீடன் நாட்டு மாணவர்கள் சிவகிரி நகர் மக்களுடன்

Page 10
அடிமை விலங்கொடிக்க
இந்த
பசுந்தேயிலைத் தளிரோடு
உன் விரலும் உன் அன்னையின் விரலும் உறவாட உறவாட ୬-୯୭ ଜurP ଶୋe பொன்னிறத் தேநீரின் இதமான வாசத்தில் சுகங் கெரண்டு
இதுவே எங்கள் ஜீவனமென இனியும்
is இரு(ற)க்கப் போகிறாயா?
எங்கள் வாழ்வு இந்தத் தேயிலைக்கே அர்ப்பணமென சிந்தை குளிரப் போராயோ? அல்லது தாமும்
இத்தத் தேயிலையும் இரட்டையர்கள் இணைபிரியோம்
எந்தாளுமென எக்காளமிடப் போராயோ!
இலையோடு நீ உறவாடு வேண்டாமென உரைப்பார் எவருண்டு:
பிஞ்சுத் தளிர்களைக்
கொய்யும்
உன் கரங்கள்
உரிமைக்குக்
ரல் கொடுக்கும்
ங்கவோ ீடு
இணையட்டும்
தளிர் பறிக்க மட்டும் உன் விரல்கள் குத்தகையொன்றும் எடுக்க வில்லை! பெண்னே!
வெளியீடு : மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம்
s
தபால் பெட்டி விண். 2758, கோவை- 641011

ன் கரங்கள் உதவட்டும்
உழைப்பவர்
குரலோங்கவும்
அடிமை
விலங்கறுக்கவும்
பயன் டடட்டும்
உன் விரல்கள்
உன் கரங்கள்!
se நிகர PP
தமிழகத்தின் முதல் பெண் டிரைவர்
வசந்தகுமாரி
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தா மொழி என்ற இட த்தைச் சேர்ந்தவர் வசந்தகுமாரி. இவர் டிரைவிங்கிற் கான ஹெவி லைசென்ஸ் பெற்றுள்ளார். அத்துடன் பஸ் ஒட்டுவதற்குரிய அனைத்து சோதனைகளும் முடி க்கப் பெற்றவர். இவர் கன்னியாகுமரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் தனது பெயரை பதிந்துள்ளார். இவர் தனக்கு வேலை கேட்டு என்.டி. சி.க்கும் விண்ணப்பித்துள்ளார். இப்போது இந்த பெண்ணுக்கு வேலைதர என், டி.சி. முடிவு செய்து ள்ளது. இவருக்கு இப்பதவியை வழங்க வேண்டுமென முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர், சம்பந் தப் பட்டவர்களுக்கு கட்டளை பிறப்பித்திருந்தார்.
இதன் மூலம் தமிழகத்தில் முதல் பஸ் ஒட்டும் பெண் டிரைவர் என்ற பெருமையை வசந்தகுமாரி பெறுகிறார்
நன்றி தினமலர்
egro Gr * rwm
இல, 187, இராஜ அண்ணாமலைத் தெரு, (தனிச் சுற்றுக்கு மட்டும் )