கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கீழக்கரைப் பண்பாட்டுக் கோலங்கள்

Page 1


Page 2


Page 3

(തീയ്ക്കൂ, 站
GSIGOritish
தமிழ்மணி - தாஜூல்உலூம்’ uDMTGØTAT UDáišáfaðir
இலங்கை)
மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. தொலைபேசி 4342926 தொலைநகல் 0091-44-4346082
L6lit ge556) : Manimekalai CD eth.net

Page 4
భా శాg 棒 நரல் விவரம் t
நூல் தலைப்பு > கீழக்கரை பண்பாட்டுக்
கோலங்கள் ஆசிரியர் > மானா மக்கீன் மொழி > தமிழ் பதிப்பு ஆண்டு > 2000 பதிப்பு விவரம் > முதல் பதிப்பு உரிமை > ஆசிரியருக்கு தாளின் தன்மை > மேப்லித்தோ நூலின் அளவு > கிரெளன் சைஸ் (12% x 18% செ.மீ) அச்சு எழுத்து அளவு > 11 புள்ளி மொத்த பக்கங்கள் > 104 நூலின் விலை X<ح ரூ.30.00
முகப்பு கணினி ஓவியம் > திரு. தி. ஞானசேகரன் - இலங்கை லேசர் வடிவமைப்பு > கிறிஸ்ட் டி.டி.பி. சென்டர்,
சென்னை - 24.
அச்சிட்டோர் > ஸ்கிரிப்ட் ஆப்ஸெட்,
சென்னை - 94.
நூல் கட்டுமானம் > தையல்
வளியிட்டோர் > மணிமேகலைப் பிரசுரம், t کامری 17 - சென்னை نهیان
 
 

لا للالا VV్క
ஆங்கிலத்தில் (Culture) என NZ வழங்கப்படுகிறது. ஒரு சமுதாயத்திலுள்ள மக்கள் வாழ்க்கையை நடத்தும் முறையே NZ பண்பாடாகும். எவ்வுயிரும் தம் உயிர்போல் NZ எண்ணி, ஒத்து ஒருமையுடையவராய், உவந்து
வாழும் வாழ்வே உண்மையான பண்பாட்டு NZ வாழ்வு. ஒவ்வொரு சமூகமும் ஏதேனும்
ஒரு வகையான பண்பாடு உடையதாகவே NZ இருக்கும். காடர்கள் உணவு சேகரிக்கும் பண்பாடும், எஸ்கிமோக்கள் வேட்டையாடி மீன்பிடிக்கும் பண்பாடும், மாசையர் (Masai).
கால்நடை மேய்க்கும் பண்பாடும் NZ
உடையவர் - கலைக்களஞ்சியம்
NZ தொகுதி - 6, பக். 690.
الألان الالا

Page 5
2001. 12. 30, 31-b தேதிகளில் கீத்திமிகு கீழக்கரையின் அனைத்து ஜமாத்தாரும், இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தார் அனுசரணையில் நடத்திய வள்ளல் சீதக்காதி 303-வது நினைவுப் பெருவிழாவில் இந்நூல் வெளியானது.
தொடர்ந்து வரவுள்ள நரல் “பசுங்கதிர்? எம்.கே.ஈ. மவ்லானாவின் படைப்புக்கள். இன்ஷா அல்லாஹ்
நான் “விடைபெறும் வேளை’ - 101-ம் பக்கத்தில்! காணத்தவறாதீர்கள், அபிமானிகளே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'உம்மா’ சி.மு.வ. ஸெயினம்பு ஜுலைஹா அவர்களுக்கு என் துஆக்கள்.
Tெழுபதாவது பிராயத்தில் கடந்தாண்டு சென்னையில் ஓய்வுறக்கம் கொண்டுள்ள அருமையிலும் அருமையான 'உம்மா’, சி.மு.விவ. ஸெயினம்பு ஜுலைஹா அவர்களை இந்நூல் ஆய்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நினைவில் கொண்டேன்.
“இலங்கை-கீழக்கரை இனிய தொடர்புகள்’ ஆய்வில் முக்குளித்து மூச்சுவிடக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு சமயத்தில் கீழக்கரையில் அவர்களது பேத்தியார் திருமணத்தில் கண்டு மகிழ்ந்தேன்.
“ஒரு இலங்கைப் பிள்ளைக்கு எங்கள் ஊரைப்பற்றி இருக்கிற அக்கறைக்கு அல்லாஹ்வே நல்ல கூலி கொடு. அவர் வேலைகளை இலேசாக்கு என்ற இறைஞ்சுதல் எனக்காகக் கேட்கப்பட்டது. இலங்கையையும் இலங்கை வாசிகளையும் பற்றி அவர்களுக்கு ஒரு தனிமதிப்பு.
நூல் வெளியான பிறகுதான் நான் விட்ட சில தவறுகள் தெரிந்தன.
'உம்மா’ அவர்களது துணைவராகிய கே.எம். செய்யது இப்ராஹிம் அவர்கள், துணைவரது தந்தையார் (மாமனார், "தோழமை காக்கா’ என்ற முஹம்மது அப்துல் காதர் ஆகிய இருவரது இலங்கைச் செல்வாக்குகளையும் தெரியாத புரியாத ஆய்வாளனாக இருந்ததற்கு வெட்கினேன். சென்னை இல்லத்திற்குத் தொலைபேசித் தொடர்பு கொண்டேன். மன்னிப்புக் கேட்க வரப்போவதாக தெரிவித்தேன்.
“அதற்காக வராதே வாப்பா பகல் சாப்பாட்டுக்கு வா! மீன் பிரியாணி போட்டுத் தருகிறேன்” என்று எதிர்முனையில் குரல் ஒலித்தது.
மெய்ச்சிலிர்ப்பு எனது அருமைப் பள்ளித்தோழர், காயல்பட்டினம் ஹாஜி எம்.எம். முத்துவாப்பா அருகில் இருந்தார். அவரையும் அழைத்துக்கொண்டு 'உம்மா’ அவர்களை மறுபடியும் பார்த்தேன்.
“மறுபதிப்பில் திருத்திக்கொள்கிறேன் உம்மா, மன்னிப்புக் கேட்கிறேன்” என்ற பொழுது, “ரெண்டுபேரும் நல்ல பசியில் இருப்பீர்கள் சாப்பிட் உட்காருங்கள்” என்றுதான் பதில், என்னை ஏசவோ பேசவோ இல்லை!

Page 6
என் இயல்புப்படி உம்மா அவர்களை மதிப்பிட முயன்றேன். முடிந்தது சில துளிகளே!
“அடுத்து வருகிற நூலுக்கு (அதாவது இதற்கு) நீங்கள்தான் தகவல்கள் தரவேண்டும் உம்மா” என்றேன்.
“இன்ஷா அல்லாஹ்” என்று விடை கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் நம்மிடமிருந்து விடைபெற்று ஓய்வுறக்கம் கொள்ளச் சென்றுவிட்டார்கள்.
பேங்காங்கிற்கு, உலக தமிழ்ப் பண்பாட்டு கழகத் தலைவர் கலாநிதி (முனைவர்) அல்ஹாஜ் அ. ரஃபியுத்தீன் அவர்களது. அதிதியாக நான் சென்றிருந்த போது உம்மா அவர்களது நிரந்தர ஓய்வுறக்கம் அறிந்து அதிர்ந்தேன்.
சகோதரர் ரஃபியுத்தீன் அவர்கள், அன்று மாலையே என்னை அஞ்சலி வைபவ மொன்றில் கலந்துகொள்ளச் செய்து இரங்கல் உரையாற்றவும் வைத்தார்.
'உம்மா ஸெயினம்பு ஜூலைஹான்வப் போல தாய்மார்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பார்களேயானால் அந்த இல்லம் ஒளிமயமாக எல்லாப் பறக்கத்துக்களையும் கொண்டதாக அமையும். அப்படிப்பட்ட அன்னையர்களைப்பெற இறைவனை இறைஞ்சுவோம்’ என்று குறிப்பிட்டு உணர்ச்சிவசப்பட்டேன்.
மீண்டும் இங்கே பதிக்கும் பொழுதும் அந்த நிலைதான்.
இதன் முதல் பிரதியை உம்மா அவர்களிடம் ஒப்படைக்கக் கொடுத்துவைக்கவில்லை.
உம்மா, உங்களுக்கு என் துஆக்கள்.
- மானா மக்கீன்
பின் குறிப்பு : - 'உம்மா’ அவர்களது செல்வப் புதல்வர்களே பிரபல வணிகப் பெருமக்கள், ஹாஜிகள், கே.எம்.எஸ். சதக் அப்துல்காதர், கே.எம்.எஸ். செய்கு முஹம்மது சாலிஹ் ஆகியோர்.

oC)
o
DCX
Iる国
இந்நூலுக்கு இவர்கள் தோன்றாத்துணை
சேவாரத்தினா, கலாநிதி, அல்ஹாஜ் செ.மு. ஹமீது அப்துல் காதர் அவர்கள்
“மெஜஸ்டிக்’ அல்ஹாஜ் கே.வி. அப்துல் கரீம் அவர்கள்
அல்ஹாஜ் ஏ.எம்.எஸ். தைக்கா லெப்பை அவர்கள் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். கபீர் அவர்கள் அல்ஹாஜ் என்.டீ.எம். பாறாக் அவர்கள்
அல்ஹாஜ் என்.டி.எஸ். அமீர் அலி அவர்கள் ஜனாப் ஏ.ஜி.ஏ. அஹமது ரிஃபாய், எம்.காம். அவர்கள் ஜனாப் எஸ்.வி.எம். பஷிர் முகையதின் அவர்கள் லயன் ஹெச்.எஸ். அஜீஸ் முகையதின் அவர்கள் (ஈஸ்ட் கோஸ்ட் டிரவல்ஸ்)
ஜனாப் ஹெச். சிராஜூதின் அவர்கள் ("கல்கண்டு")
ஹபீப் அரசர், சூபி செய்யித் ஆசியா உம்மா ஆகியோர்களது வம்சாவளிகளான -
o
OC>
அல்ஹாஜியா இ.சு.மு. ரஹ்மத் பீவி உம்மா
அல்ஹாஜியா கதீஜத்து ஃபாத்திமா ஏ.ஜி.ஏ. காதர் (மர்ஹ9ம் வி.ஏ.எம். முஸ்தஃபா மரக்காயர் புதல்வி)

Page 7
10,
11.
12,
13.
14,
உள்ளே.
பளிச்சிடச் செய்திட முடிவு!-----------------------
ஆன்மிகம்
அன்னதானம்
விருந்தோம்பல்
அருள் இலக்கியம்
தொழிலாளி - முதலாளி --------------------------
தீந்தமிழே வாழ்க்கை
------س-----------س---------- إGLo$فيnrلاIT68orGup, 6006Gلsdou
பெண்கள் தைக்காக்கள்--------------------------
குறுகிய தெருக்கள் - சந்துக்கள்------------------- பெருநாள் மிக வித்தியாசம் -----------------------
தொப்பி தொண்டு தொட்டு --------------------
உணவுப்பொருட்கள்
மரணம் ஒரு பிரச்னையல்ல? --------------------མ་
----------------------------- فق600T سرقة رقيقة yoول5
விடைபெறும் வேளை --------------------
4
21
26
29
35
44
52
75
78
82
89
91
93
96
101

பளிச்சிடச் செய்திட முடிவு
கீர்த்திமிகு கீழக்கரைவாசிகளுக்கு முத்துக்குளித்தல் கைவந்த கலை. இரத்தின வணிகம் பரம்பரைத் தொழில்.
இந்த இரண்டுமே என்னைப் போன்றவர்களுக்கு வராது.
இருந்தாலும் எல்லாம் வல்லவனிடம் கையேந்தி நின்றேன்.
கைகூடி வந்தது.
ஆனால் இரத்தின வணிகமல்ல; ஆய்வு முத்து!
இலங்கை - கீழக்கரை தொடர்புகள்’ என்றொரு முத்துக் குளிப்பு 1996-ல் ஆரம்பித்து ’98-ல் முற்றுப் பெற்றது.

Page 8
10 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
அதற்கு மாபெரும் வைபவம் ஒன்றை மனது மறக்க முடியாத அளவுக்குத் தமிழக சென்னையில் இலங்கை எதிர்க் கரை கீர்த்திமிகு கீழக்கரைவாசிகள் நடத்தித் தந்தார்கள். ஊரின் மூத்தகுடிகளான பெருந்தகைகள் பி.எஸ்.எம். ஷேகு சதக்குதம்பி காரியதரிசி மரக்காயர் அவர்கள், அல்ஹாஜ் கே.டி.எம்.எஸ். அப்துல்காதிர் தைக்கா வாப்பா ஜமாலி அவர்கள், அல்ஹாஜ் முஹம்மது அப்துல் ஹமீது ஆகியோர்தம் ஆசிகள், துஆப் பரக்கத்துடன், வணிகப்பிரமுகர், கல்வித்தந்தை “பி.எஸ்.ஏ.” ஆகிய அல்ஹாஜ் பி.எஸ். செய்யது அப்துல் ரஹ்மான் அவர்களது மானசீக வாழ்த்துக்களுடன், கலாநிதி, அல்ஹாஜ், சேவாரத்னா, செ.மு. ஹமீது அப்துல்காதர் (தலைவர், முஹம்மது சதக் அறக்கட்டளை) தலைமையில் 22.02.1999 திங்களன்று, ஒட்டல் சோழவையொட்டிய கஸ்தூரி ரங்கன்சாலை சோவியத் பண்பாட்டு மையத்தில் அவ்விழா நடந்தது.
மெஜஸ்டிக் பவுண்டேஷன் தலைவர் அல்ஹாஜ் கே.வி.எம். அப்துல் கரீம், ஹாஜிகளான கே.எம்.எஸ். ஸதக் அப்துல்காதர், கே.எம்.எஸ். செய்கு முஹம்மது ஸாலிஹ், ‘இலக்கியச் செல்வர் எம்.ஏ.கே. ஹஸன் அலி, துபாய், அஸ்கன்-ஈடிஏ. நிறுவன எம்.டீ. அல்ஹாஜ் செய்யித் ஸ்லாஹ்தீன் அவர்களது இளவல் சித. செய்யித் அப்துல் காதிர், எச். சிராஜ்தீன் ("கல்கண்டு) ஆகியோர் விழாவின் வெற்றிக்கு உந்து சக்திகளாகத் திகழ்ந்தார்கள்.
விசேட அதிதியாக, கீழக் கரையின் முதிய பெரியவர் (என் மொழியில் என்றும் இளைஞர்”)

ለ) ̆ 11 மானா மக்கீன் S
மர்ஹஜூம் மு. இத்ரீஸ் மரக்காயர் அவர்கள், உடல் நலம் குன்றிய நிலையிலும் சமூகமளித்துப் பெரும் கவுரவம் அளித்தார்கள்.
வைபவத்தின் சிகரமாக, பிரதம விருந்தினராக, இவ்வாண்டு (2000) செப்டெம்பர் திங்களில் (16) அகால மறைவெய்தி ஓய்வுறக்கம் மேற்கொண்டு, என் போன்றவர்களைப் பரிதவிக்கச் செய்துள்ள இலக்கிய நெஞ்சம், இலங்கை கெளரவ அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்றஃப் அவர்களுடன் மாண்புமிகு தமிழக அமைச்சர் ரகுமான்கான் ‘சிராஜ"ல் மில்லத்’ ஆ.கா. அப்துஸ்ஸமது ஆகியோரும் சமூகமளித்துச் சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும் ஒரு சிறப்பாக, கிரெஸண்ட் மேல்நிலைப்பள்ளி முதல்வர், சகோதரி ஷரீஃபா அஜீஸ் அவர்கள் தங்கள் மாணவியர் புடைசூழ வருகைதந்து, விசேட நிகழ்ச்சிகளை வாரி வழங்கி, அற்புத உரையொன்றும் ஆற்றினார்கள்.
இலக்கிய நெஞ்சம், அருமைத்தம்பி ஜனாப் ஏ.ஜி.ஏ. ரிஃபாய் M.Com, அவர்கள் (மர்ஹஜூம் எம்.ஐ. இத்ரீஸ் மரக்காயர் - முஸ்தபா மரக்காயர் பேரன்) தன் கணிரென்ற குரலால் நிகழ்ச்சிளைப் பிசிரில்லாமல் தொகுத்தளித்து இலங்கை பி.எச். அப்துல் ஹமீது அவர்களே பாராட்டும் அளவுக்குப் புகழடைந்தார்
அத்துடன், அனைத்து ஏற்பாடுகளிலும் இரண்டறக்
கலந்து அரும்பாடுபட்டுழைத்தார்கள் அல்ஹாஜ் அ.மு.செ. தைக்காலெப்பை அவர்கள்.

Page 9
12 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
மன்னார்க்குடா கடல் அலையென கீழக்கரை மாதரசிகள் எங்கிருந்துதான் அத்தனை கூட்டமாய்க் குழுமினரோ இறைவனே அறிவான்!
அந்தப் பொன்னான மாலைப்பொழு தை மறக்கமுடியுமா இந்தப் பேனாவுக்கு அல்ஹம்துலில்லாஹ்.
அச்சமயம் ஒலிவாங்கியில் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் வேடிக்கையாக ஒன்று சொன்னேன்:
“கீழக்கரைப் பெண்மணிகளே, உங்களது ஊரின் ஆய்வில் மூழ்கி முத்தெடுத்துக் குளித்தபொழுது எனக்குக் கிடைத்தது முத்து மட்டுமல்ல, எட்டுதட்டு மணி, தோள்வளையம், சுத்துக்காப்பு, வாவாலிகோதணி, விலாக்கு போன்ற பல நகைகளும், வெள்ளை முறுக்கு, கலகலா, அச்சுப்பணியம், கைவீச்சு போன்ற பல்வேறு பலகாரங்களும் தான்! ஆய்வு மும் முரத்தில் அவற்றையெல்லாம் ருசி பார்க்கக் கொடுத்து வக்கவில்லை. நாளைக்கு நான் கொழும்பு திரும்பும் பொழுது எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தந்தீர்களானால் என் 'நிழலுக்கும் துணைவியார்) கொடுத்துச் சுவைப்பேன்!”
அவ்வளவு தான்! அடுத்தநாள் காலையில் அசந்து போனேன்!
நான் தங்க வைக்கப்பட்டிருந்த கே.எம்.எஸ். ஸதக் அப்துல் காதர் ஹாஜியின் எழும்பூர் இல்லத்தில் விதவிதமான, தினுசு தினுசான பலகார வகைகள்! விசேடமாக தைக்காலெப்பை வீட்டார் குவித்து விட்டார்கள் குவித்து

A 8 13 மானா மக்கீன் S.
இலங்கைக்கு ஏர் - லங்காவில் கொண்டு போய்ச் சேர்த்தது ஒரு தனி அனுபவம்!
அப்பொழுது முடிவு பண்ணியது தான் இந்த ஆய்வு நூல்!
கீழக்கரை மண்ணுக்கே சொந்தமான - சுவையான உணவு வகைகளையும், அழகழகான நகை நட்டுகளையும் சொல்ல மட்டும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தாமல், வரலாற்றுப் பெருமை மிக்க பண்பாட்டுக் கோலங்கள் பலவற்றையும் பளிச்சிடச் செய்திட முடிவு பெற்றேன்.
என் முயற்சியில் எந்தளவு வெற்றி அடைந்துள்ளேன் என்பதை எனது தமிழக அபிமானிகள் தான் சொல்ல வேண்டும் - குறிப்பாக, கீர்த்தி மிகு கீழக்கரைவாழ் பெண்மணிகள்

Page 10
14
ஆன்மிகம் 2
இந்தியப் பெருங்கண்டத்தின் தென்பகுதியைத் தமிழ்நாடு என்பர். இதன் கீழ்முனையில் தோற்றமளிப்பது கீழக்கரை.
சிறுபுள்ளியாகத் தோற்றமளித்தாலும் கீர்த்தி பெரியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறுடையது. பாண்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்ட தென்பாண்டிச் சீமையிலே அதுவும் ஒன்று.
செம்பிநாடு - கேலிக்கரை - கிர்க்கிராப்பட்டினம் - அணுத்தொகை மங்கலம் - நினைத்தது முடித்தான் பட்டனம் - பெளத்திர மாணிக்கப்பட்டினம் - வச்சிரநாடு - வகுதை என்றெல்லாம் பல பெயர்கள், பழைய சுவடிகளிலும், கல்வெட்டுகளிலும், வரலாற்றுக் குறிப்புகளிலும் காணப்படுகிறது. கடைசியில் இப்பொழுது நிலைத்து விட்டது கீழக்கரை.
இப்பகுதியில் குறுநிலமன்னனான சேதுபதிக்கு "சேது நாடு’ என்ற ஒன்றே அமையப் பெற்றிருந்தது. அதன் தலைநகர் இராமநாதபுரம். இந்நகரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு 50 கி.மீ. தொலைவு. கீழக்கரை 16

- கி.மீ. தூரம். இராமநாதபுரம் - தூத்துக்குடி - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் (கிழக்குக் கடற்கரைச்சாலை) கிழக்குக் கரையில் கீழக்கரை அமைந்துள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் பல தடவைகள் பயணித்த பாக்கியம் எனக்குண்டு.
இராமநாதபுரத்திலிருந்து புறப்பட்டதும், உப்பங்கழிகளிடையே நெடுஞ்சாலை ஊடுருவிப்பாயும். 13 கி.மீ. தூரத்தைக் கடந்ததும் எங்கிருந்தோ வந்து மேனியை வருடும் இளந்தென்றல் சுகமோ சுகம் சாலையில் இரு மருங்குகளிலும் நிழல் தரும் மரங்கள்! இவற்றைத் தனது சொந்தச் செலவில் வளர்த்து உண்டுபண்ணிய கீழக்கரை பேருராட்சித்தலைவர் (சேர்மன்) ஏ.எம்.எஸ். செய்யிது இபுராஹிம் சாஹிபு அவர்களது பண்பாட்டுச் சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு வள்ளல் சீதக்காதி சாலைக்குள் நுழைந்துவிட்டால், தூத்துக்குடிக்கும் போகமாட்டீர்கள்! கன்னியாகுமரிக்கும் காலடி வைக்க மாட்டோம்! கீழக்கரைக்குள் நுழைந்து விடுவோம்!
யார் எம்மைக் கண்டாலும், “வாருங்கள், வாருங்கள் என ஸலாம் உரைத்து உபசரிப்புகளைத் தொடங்கி விடுவார்கள். அவர்களது பண்பாட்டுக் கோலத்தைக் காட்டி விடுவார்கள்
ஆண்களும் பெண்களும் அறபு நாட்டுச்சாயலை ஒத்தவர்களாக காணப்படுவர்.
இப்படித்தான், அந்த 1990 ஆம் ஆண்டில் அனைத்துலக் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டின் ஐந்தாம்

Page 11
16 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
மாநாட்டின்பொழுது என்னை அரங்கிலிருந்து அள்ளிக் கொண்டு போனார் இளவல் ஏ.ஜி.ஏ.ரிஃபாய்!
அது ஒரு தனிக்கதை 1 இன்னொரு சமயத்தில் வர்ணிக்கிறேன்!
கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு தோன்றிய வள்ளல்களுள் அதிகக் கீர்த்தியுடன் இன்னும் வரலாற்றிலும், தமிழ் இலக்கியங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிற வள்ளல் பெருமகனார், தமிழ் வளர்த்த செம்மல் "சீதக்காதி" என்னும் செய்யிதப்துல் காதிர் மரக்காயர் வாழ்ந்த மண்ணே கீழக்கரை. அவரைப் “பெரியதம்பி’ என்றும் சில இலங்கை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவார்கள்.
அதுவும் நல்ல பெயர்தான்!
பலருக்கும் ஏற்கெனவே தெரிந்திருக்கும் இந்த விவரங்களை எதற்காக மீண்டும் பதிக்கிறேன் எனச்
சிலருக்கு நெருடல் ஏற்படலாம்.
அது, இளைய தலைமுறையினருக்காக, குறிப்பாக, இலங்கைவாசிகளின் தகவல் கருதி.
ஒரு சமுதாயத்தின் பண்பாட்டுக் கோலங்களைப் பட்டியலிடப் போகும்பொழுது, அச்சமுதாயத்தின் ஆன்மிக ஈடுபாட்டையே முதலில் முன்னிறுத்த வேண்டும்.
ஏனெனில், நாமெல்லாம் நாத்திகர்கள் அல்லவே!

S
'CSY
மானா மக்கீன் 17
அந்தவகையில், கீர்த்திமிகு கீழக்கரையின் மிகமிகச் சமீபத்திய வரலாற்று நிகழ்வை உங்கள் முன் கொண்டுவந்து காட்டிட வேண்டும்!
அதுவே இந்நூலின் அட்டைப்படம்.
உலகளாவிய தரத்தில் ஒப்பிடத்தக்க ஒரு ஜ"ம்ஆப் பள்ளிவாசலை கீழக்கரைவாசிகள் இந்த மிலேனிய ஆண்டில் உலக முஸ்லிம்களுக்கு அர்ப்பணித்துள்ளார்கள். இப் புதிய, நவீன பள்ளியைப் பற்றி என் பேனா விவரிப்பதைவிட, நான் ஏற்கனவே அறிமுகப்படுத்திவிட்ட இளவல், இலக்கிய நெஞ்சம், ஜனாப் ஏ.ஜி.ஏ. ரிஃபாய் அவர்கள் மூலமே வாய்மொழியாகக் கேட்டிடலாம்'
இதோ. ரிஃபாய் அவர்கள்!
“கீழக்கரை மேலத்தெருவில் உஸ்வத்துன் ஹசனா” என்ற பெயரில் முஸ்லிம் சங்கம் ஒன்று உள்ளது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சங்கம். “உஸ்வத்துன்-ஹசனா” என்ற அறபுச் சொல்லுக்கு ‘அழகிய முன் மாதிரி” என்று பொருள். மேலத்தெருவை சேர்ந்த ஒவ்வொருவரும் இந்த சங்கத்தில் அங்கம் வகிக்கிறார்கள்.
இந்தத் தெருவில் இருந்த முன்னய தொழுகை (அதன் பெயரும் புதுப்பள்ளிதான்) பள்ளிவாசலில் அதிகமானோர் தொழுகை நடத்தும் வகையில் அதனைப் புனருத்தாரணம் செய்து பிரமாண்ட வசதிகளுடன் 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்

Page 12
18 Iா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
கட்டி உள்ளோம். தரைத்தளம் விலை உயர்ந்த சலவைக் கற்களால் அமைக்கப்பட்டு உள்ளது.
கண்ணைக்க வரும் வகையில் மிக அழகாக கட்டப்பட்டுள்ள இது, தமிழ்நாட்டிலேயே மிக பிரம்மாண்டமான தொழுகைப் பள்ளிவாசலாகும். பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள தரை தளம், முதல் மாடி ஆகியவற்றில் ஒரே சமயத்தில் 2500 பேர் தொழுகை நடத்தும் அளவிற்கு வசதியாகக் கட்டப்பட்டுள்ளது.
இந்தத் தொழுகை பள்ளிவாசலில் 120 அடி உயரத்தில் 4 மினராக்கள் கட்டப்பட்டு உள்ளன.
ஊர் ஜமாத் சார்பில் இந்தப் பள்ளிவாசல் மிகச்சிறப்பாக கட்டி முடிக்கப்படுவதற்கு வர்த்தகப் பிரமுகரும், கல்வித் தந்தையுமான அல்ஹாஜ் பி.எஸ். செய்யது அப்துல் ரஹ்மான் - கப்பலோட்டும். தமிழர் - முக்கிய காரணஸ்தராக விளங்குகிறார்கள்.
28.1.2000 அன்று, முதல் குத்பா நிகழ்த்தப்பட்ட இப்பள்ளிவாசல், கீழக்கரையின் முக்கியப் பள்ளிகளுள் 14-ஆவது என்பது நான் பெற்ற தகவல்.
அப்படியென்றால் முதலாவது எது?
கடற்கரைப் பள்ளியே. இது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ட்டப்பட்டதாகச் சரித்திரம். இதுவே முதலாவது.

N
wasy
மானா மக்கீன் r 19
ஏனையவற்றின் விவரங்கள்:
OQ- பழைய குத்பாப்பள்ளி : 700 ஆண்டுகளுக்கு முன்
கட்டப்பட்டது.
O0 பெரிய ஜும்ஆப் பள்ளி : வள்ளல் சீதக்காதியால் கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு அவரது பின் சந்ததியினரால் முடிக்கப்பட்ட இது, அற்புதமான கட்டடக் கலை அம்சங்களைக் கொண்டதாகும்.
ஒடக்கரைப்பள்ளி : இப்பள்ளியும் உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தாரால் நிர்வகிக்கப்படுகிறது. ஏறத்தாழ 180 ஆண்டுகால வரலாறுடையது.
0ே குளக்கரைப் பள்ளி : கடல்வாணிபத்தில் திளைத்திருந்த வணிகப்பெருமக்களால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. கிழக்குத்தெரு ஜமாஅத்தாரால் நிர்வாகம்.
od- அப்பாப் பள்ளி : சேகு அப்பா பெயரால் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டது. ஆயிரம் பேர் தொழக்கூடிய வசதி. இதுவும் கிழக்குத்தெரு ஜமாஅத் பரிபாலனமே.
9ே தெற்குத்தெரு பள்ளி : தெற்குத்தெரு ஜமாஅத் நிர்வாகத்தில் உள்ள இது, 1903ல் விரிவுபடுத்தப்
.(تیس سال
99. வடக்குத்தெரு பள்ளி : வடக்குத்தெரு ஜமாஅத்
நிர்வகிக்கும் இதனை, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அழகுமிளிர விரிவுபடுத்தினார்கள்.

Page 13
2O ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
O) மின் ஹாஜியார் பள்ளி : புராதனமான
பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்றாகும்.
OO) செய்யது அப்பா தர்ஹாப் பள்ளி : தர்ஹா வளாகத்திற்குள்ளேயே உள்ள இதனை, தர்ஹா நிர்வாகிகளே நிர்வகிக்கின்றனர்.
O0 கொந்தக் கருணையப்பாப் பள்ளி : வடக்குத்தெருவில் உள்ளது. அந்தத் தெருவின் ஜமாத்தே பரிபாலிக்கிறது.
* புதுக்குடியிருப்புப் பள்ளி : தெற்குத்தெரு ஜமாத்
பரிபாலனத்தில்.
ம9 மகான் முஹம்மது காசிம் அப்பாப் பள்ளிவாசல் : இது,
பழைய குத்பாப்பள்ளிப் பரிபாலனம்.
ஆக, பள்ளிவாசல்கள் 14 என்றால், தர்ஹாக்களும்
இறைநேசர்களது ஓய்வுறக்க இடங்களும்
(அடக்க ஸ்தலங்கள்) கணக்கிலடங்காதவை!
பண்பாடுகளைப் பேசுபவை.
இந்நூலினது பக்க அதிகரிப்புக்கு அஞ்சி அவற்றின்
விவரங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. பெரிய மனதுகொண்டு மன்னிப்பு வேண்டும்.

21
அன்னதானம்! 3)
கிந்துரி1
கந்திரி!
இந்த இரண்டும் ஒன்றுதான். பேச்சு வழக்கில் கந்தூரி கந்திரியாக வழங்கப்பட்டு வருகிறது. 12 - 15ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்த்வராகக் கருதப்படும் யாகூப் சித்தர் (இராமதேவர்) அவர்களும் *கந்திரி’ என்றே வழங்கியிருக்கிறார்.
இந்தக் கந்தூரி என்ற ச்ொல்லின் கருத்தை முதலில் தந்துவிடுகிறேன். பின்பு, அன்னதானத்திற்கு வருகிறேன்.
மறைந்த இலங்கைப் பேரறிஞர், அல்லாமா ம.மு. உவைஸ் அவர்கள் இப்படி ஆய்வுக்குறிப்பொன்று தந்திருக்கிறார்கள்:
*கந்தூரி”யை துருக்கிமொழி சார்ந்த ஒரு சொல் என்பர். விழா என்பது அதன் பொருள். உருது பேசும் மக்களிடையே இது பெருவழக்கில் உள்ளது எனக்கூறுவர். பாரசீக மொழியில் இச்சொல் வழக்கு இழந்து விட்டது என்றும் சொல்வர். பெரும்பாலும்

Page 14
22 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
சமயச் சார்பானதாகவே கந்தூரி என அழைக்கப்படும் விழா அமையும். இலங்கையிலும், தமிழ்பேசும் மக்கள் வாழும் இந்தியாவிலும் ஒரு பெரியாரின் பிறப்பை அல்லது மறைவை நினைவு கூருமுகமாக நடத்தப்படும் விழாக்கள் இவ்வாறு அழைக்கப்படும். இத்தகைய விழாக்களில் ஏழை எளியவர் முதல் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
- 'இஸ்லாம் வளர்த்த தமிழ் பக். 44 (1984)
உண்மை உண்மை!
கந்தூரியின் கடைசி நிகழ்வு அன்னதானமே!
ஆனால், இன்றைய சில இளைய தலைமுறையினருக்கு அலர்ஜி - ஒவ்வாமை!
கந்தூரி விழாக்களே விரயம் - வேஸ்ட் என்றுகூடச் சொல்கிறார்கள்.
அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.
இதோ, கலாநிதி (முனைவர்) எஸ்.எம். கமால் (முதிய ஆய்வாளர், ராமநாதபுரம்) வழங்கியுள்ள ஓர் ஆய்வுக்குறிப்பைக் கவனியுங்கள்.
*சில தர்காக்களில் இஸ்லாமிய சமயத்தின் அடிப்படையைக்கூட அறியாத தர்கா நிர்வாகிகளது ‘பெரும் போக்கு காரணமாக இந்தக் கந்தூரி வைபவங்களுக்கு அளிக்கவேண்டிய புனிதத்துவ குறைபாட்டினால், இணை வைப் போர்களது ஆலயங்களிலும் சமாதிகளிலும் நடைபெறுகின்ற திருவிழா ஆர்ப்பாட்டங்கள் போன்ற அக்கிரமச்

மானா மக்கீன் 23
செயல்கள் கந்தூரி விழா நிகழ்ச்சிகளுக்குக் கரிபூசி விடுகின்றன. கந்தூரி விழா போன்ற பெருங் கூட்டங்களில் தங்களது பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக தர்கா நிர்வாகிகளது ஒப்புதலுடன் இன்னிசை, நாட்டியம், நடனம் போன்ற கூத்துக்கள் பாமர மக்களை கவர்ந்து இழுக்கும் பிரதான நிகழ்ச்சியாகிவிடுகின்றன. தர்காக்கள் இத்தகைய அனாச்சாரங்களின் நிகழ்விடமாக பல நூற்றாண்டுகளாக விளங்கிவருகின்றன.
- இன்னும் அச்சில் வராத, 'தமிழக முஸ்லிம்களின் கலாசார மரபுகள் ஆய்விலிருந்து.
ஆகவே, மீண்டும் பதிக்கிறேன், ‘அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை’
எவ்வாறாயினும், கந்தூரியின் கடைசி நிகழ்வான அன்னதானத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வோம்.
அது, தியாகத்தின் அடிப்படையில் அமைந்த
ஒன்று.
மறைந்த முன்னோர்களின் - இறைநேசச்
செல்வர்களின் ஆசிகளைப் பெறச் செய்கிறது.
ஒருவருக்குப் பொன்னாகவோ, பணமாகவோ எவ்வளவு தான் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், தானம் பெறுபவருக்கு திருப்தியே ஏற்படாது. இன்னும் அதிகமாகக் கொடுக்க மாட்டார்களா என்றுதான்

Page 15
24 III) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
ஏங்குவார்கள். ஆனால் அதையே உண்ண உணவாகக் கொடுத்தால் வயிறு நிரம்பியவுடன் போதும் போதும் என்று கூறிவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சாப்பிட வேண்டுமானால் வயிறும் ஏற்றுக் கொள்வதில்லை, போதும் என்று வயிறும் மனதும் திருப்தி அடைந்துவிடும். அதனால்தான் ‘தானத்திலேயே சிறந்ததாக அன்னதானம் விளங்கி வருகின்றது.
கந்தூரிகளில் இரண்டில் நாமும் கலந்து கொள்வோமே! காயல்பட்டணம் பெற்றெடுத்த தலையாய LDITidis, மெய்ஞானி மாதிஹ"ர் ரஸ"ல் சதக்கத்துல்லா அப்பா (வலி) அவர்களாவர். அன்னார் வாழ்ந்து சிறந்து ஓய்வுறக்கம் கொண்டுள்ள இடம், கீழக்கரை பெரிய ஜும்ஆப் பள்ளியாகும். இதன் கிழக்கு நுழைவாயிலின் வடபுறத்தில் ஆனந்த உறக்கம் கொண்டவர்களாக உள்ளார்கள்.
இங்கே, ஆண்டாண்டுகாலமாகத் தொடர்ச்சியாக ஸபர் பிறை 1-லிருந்து 10 வரை “வித்ரிய்யா ஒதுவார்கள். அந்தப் பத்து நாட்களும் பரவசமான நாட்கள்.
இந்த ‘வித்ரிய்யா' என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்ந்து அப்பா அவர்களே இயற்றிய பைத்துக்கள் (பாடல்கள்) ஆகும்.
இறுதிநாளில் இடம்பெறும் நிகழ்வில் வெளியூர் மக்களும் உள்ளூர்வாசிகளுடன் சங்கமிப்பார்கள். கேரள மக்களும் இலங்கையரும் கலந்து கொள்வது வழக்கத்தில் உள்ளது.

மானா மக்கீன் 25
இதோ, இன்னொரு கந்தூரியின் விவரம்: தைக்கா சாகிபு என்ற அப்துல் காதர் (ஒலி) அவர்களுக்கு ஒவ்வொரு ஷவ்வால் மாதத்திலும் புகழ்கூறும் அருள்சேர் அரூஸிய்யா தைக்காவில் கந்தூரி. பிறை 3லிருந்து 10 நாட்களுக்கும் “ஷஃப்இய்யா' என்னும் கஸிதா ஒதப்படும்.
இதுவும் நாயகம் (ஸல்) அவர்களது புகழ்மாலைகளே. காயல்பட்டணத்தைச் சார்ந்த அன்னார் அவர்கள், இளவயதிலேயே கீழக் கரையை வதிவிடமாக்கிக் கொண்டவர்கள். இரண்டு நூற்றாண்டுகளைத் தாண்டிவிட்ட கீழக்கரை அருவிய்யா தைக்காவின் நிறுவனர் அவர்களே. அங்கே ஞானாசிரியராகச் செயல்பட்டு அரிய பணி ஆற்றினார்கள்.
‘முஸ்லிம்களின் வணக்கக் கடமைகளின் விளக்கங்களிலிருந்து, திருமணச் சட்டங்கள், தொழில் முறைகள் கொடுக்கல் வாங்கல், கணவன் - மனைவி கூடி வாழ வேண்டிய முறைகள் வரை பண்பாட்டுக் கோலங்களைக் கற்றுக் கொடுத்து வரும் தைக்காவாகும் - என அதன் சிறப்பைச் சுருக்கிச் சொல்லிவிடலாம்.
இங்கு கந்தூரி நிகழ்வொன்று நடப்பது
பொருத்தமானதே!

Page 16
26
விருந்தோம்பல்! á,
இரண்டு விருந்தினர் வந்தால் இருவரையும் சமமாக நடத்துங்கள்.
விருந்தினருக்கு உணவைப் பரிமாறிவிட்டு உடனே نہ" \ அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிடாதீர்கள். அவருக்கு ஏதேனும் தேவைப்படுகிறதா என்று அருகிலிருந்து கவனித்துக்கொள்ளுங்கள். நீங்கள் பார்ப்பதை அவர் தெரிந்துகொள்ளும் வகையில் உற்றுப் பார்க்காதீர்கள். அவர் கவனிக்காத வண்ணம் நீங்களே அவர் தேவையைப் புரிந்துகொள்ளுங்கள்.
விருந்தினருக்கு உணவளிப்பதில் உங்களுக்குள்ள இயற்கையான தன்மையோடு நடந்துகொள்ளுங்கள். எளிதாகக் கிடைக்கும் நல்ல பொருட்களைக்கொண்டே உபசரியுங்கள். செயற்கையாக வீண்பக ட்டோடு நடந்துகொள்ளாதீர்கள்."
- இந்த மூன்று மணிக்குறிப்புகளையும் மொழிந்தவர்கள் ஹகீமுல் உம்மத் ஹஸ்ரத் மெளலானா அஷ்ரஃப் அலி தானவீ (ரஹ்)
கீர்த்திமிகு கீழக்கரைவாசிகள் இந்த அறிவுரைகளை அப்படியே அச்சொட்டாகக் கடைப்பிடிப்பவர்கள்.

y lly 27 மானா மக்கீன் - . . . سده. ق
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரஹ்) அவர்களது மார்க்கச் சட்டநூலான மங்ானியும் விருந்தினர்களை வரவேற்பது, விருந்தினை எவ்விதம் உண்பது போன்ற பல அரிய ஆலோசனைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளது.
ஒரு வரை ‘அக்கடா’ என்று இருத்திவிட்டு உண்பதோ பருகுவதோ அவர்கள் பண்பாட்டில் இல்லை, இல்லவேயில்லை.
முன்னத்தியாயத்தில் சொன்னதுபோல தானத்திலேயே சிறந்தது அன்னதானம் - விருந்தோம்பல் என்பது அவர்களுக்குத் தெரியும்.
அவர்களுடைய முன்னோர்கள் கடைப்பிடித்த தலைசிறந்த பண்பாடு.
இதே பழக்கம், காயல்பட்டனவாசிகளிடமும், பெரும்பாலான தஞ்சாவூர்ப்பகுதி மக்களிடமும் - குறிப்பாக நீடூர், நெய்வாசல், அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி இடங்களிலும் நிறையவே உண்டு.
என் சொந்த அனுபவங்களை வைத்து இக்கணிப்பு. இன்னும் சில இடங்கள் இருக்கலாம். இடம்பெறச் செய்யவில்லையே என வருந்தக்கூடாது.
ஆக, ஊர்க்கந்தூரி என்பது அன்னதானத்தை ஒரு சிறப்பு அம்சமாகக் கொண்ட தித்திக்கும் தேனும் தினைமாவும்!

Page 17
28 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
*அன்னதானம் சம்பந்தப்படும் நிகழ்வில் கீழக்கரைவாசிகளின் பங்களிப்பு வாழையடி வாழையாகத் தொடர்ந்து பண்பாட்டுக் கோலங்களில் மிக நன்றாகவே மிளிர்கிறது.
“வேதியர்க்குங் கற்றோர்க்கும் மிக்கோர்க்கும் பக்தர்க்கும் சாதியெவர்க்குமன்ன சத்ரம் வளர்ப்பவன் காண்”
என ஒரு 17- ஆம் நூற்றாண்டுப் பாடல், வள்ளல் சீதக்காதி பெருமகனார், சாதி, சமய பேதமின்றி அனைத்து மக்களும் வந்து உணவுண்டு செல்வதற்காக "அன்ன சத்திரம்” ஒன்று கட்டி வைத்திருந்த செய்தியை அற்புதமாகத் தெரிவித்துள்ளது.
இதற்கு மேற்கொண்டும் விருந்தோம்பலைப் பற்றி விலாவாரியாக விவரித்துப் பேனாவை களைப்படைய வைக்கக்கூடாது என்று பார்க்கிறேன்!
த அடிக்குறிப்பு : முன்பெல்லாம் நம் நாட்டுக் கிராமங்களில் தாங்கள் சாப்பிட உட்காருமுன் யாராவது வெளியில் பசியுடன் தென்படுகிறார்களா என்று பார்த்து அவர்களை அழைத்து அமுது படைத்து அனுப்பி விட்டுத்தான் தாங்கள் உண்ணுவார்கள்.
கீழக்கரைவாசிகள் இந்தப் பண்பாட்டில் முன்னணி -
முதலிடம்
 

29
அருள் இலக்கியம் 5
ரத்திபு ஜலாலிய்யா! இது, வயது வந்த ஆன்மிகவாதிகளுக்குத் தெரியும்,
புரியும்.
இளைய தலைமுறையினருக்கு-?
அவர்களுக்காகச் சில தகவல்கள். அத்துடன்,
கீழக்கரைப் பண்பாட்டுக் கோலங்களில் அதற்கும் ஒரு தனியிடம் உள்ளது.
o
அது ஆன்மாவுக்கு அமைதி தருவது.
இஸ்லாமிய இலக்கிய வரிசையில் நீங்கா நெடும்புகழ் உடையது.
இறைவனுடைய புகழையும் வள்ளல் நபி (ஸல்) அவர்களது மாண்பையும் எழிலுற விளக்குவது.
காதிராகிய நாயனுடைய கருணையை நாடி ஞானிகள் புரிந்த கடுந்தவத்தைக் கூறுவது.
ஆன்மிக வாழ்க்கையின் அடிப்படைகளையும், அதனை அடையும் வழிவகைகளையும் அள்ளி வழங்குவது. இறுதிநாளைப் பற்றிய அச்சுறுத்தலும், ஈடேற்றத்திற்குரிய துஆக்களும் நிறைந்தது.

Page 18
ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
மேலும் முக்கியமாக - பாத்திஹா சூறாவைத் திருக்குர்ஆன் தனக்குரிய திறவுகோலாகப் பெற்றிருப்பது போல், ராத்திப் ஜலாலிலிய்யாவிலும் அமைந்துள்ளது. திரும்பத் திரும்ப ஒதப்படும் ஏழு வசன அத்தியாயம் (ஸப்உம் மினல் மதானி) என்று புனிதக் குர்ஆன் போற்றிடும் பாத்திஹா சூறாவை, பன்முறை ஓதிடும் வாய்ப்பை ராத்திப் ஜலாலிய்யா தருகிறது. பாத்திஹா சூறாவில் தொடங்கிய இந்த ராத்திப், பெருமானார் (ஸல்) அவர்கள் பெரிதும் சிறப்பித்துக் கூறிய அல்பகரா சூறாவின் முதல் ஐந்து திருவசனங்களுடன் தொடர்கிறது.
அதைத் தொடர்ந்து, இலாஹ"கும் இலாஹான் வா, துன், லா இலாஹ இல்லாஹ"வர் ரஹ்மானுர் ரஹீம் என்ற திருவசனம் வருகிறது. இது, அல்லாஹ்வின் திருநாமங்களில் மகோன்னதமான இஸ்முல் அஃழமைத் தாங்கிய இரு வசனங்களில் ஒன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அஸ்மா பிந்த் யஸிது (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
தகவல் : திர்மிதி அபூதாவூத், இப்னுமாஜா)
இதற்குப் பின், ஆயத்துல் குர்ஸி வருகிறது. குர்ஆனின் வசனங்களிலேயே மகத்துவம் மிக்கது எது? என்று கேட்ட ஸஹாபிக்கு அல்லாஹ" லாஇலாஹ இல்லாஹ"வல்ஹையுல் கையூம் எனத் தொடங்கும் ஆயத்துல் குர்ஸி தான் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.
அறிவிப்பு : அய்ஃபஃ இப்னு அப்தில் கலாF தகவல் மிஷ்காத் - பக்கம் 189)

it is 31 0ለፃ6∂፫ለ} ̇ மக்கி6T awan
ஆயத்துல் குர்ஸிக்குப்பின் - அல்பகறா சூறாவின் இறுதி மூன்று திருவசனங்கள் வருகின்றன. இவிை அல்லாஹ்வின் ரஹ்மத்துடைய கருவூலத்திலிருந்த நிதியென்றும், அவனுடைய அர்ஷின் அடியிலிருந்தவிை என்றும், இந்த ரஹ்மத்தை இந்த உம்மத்திற்கென்றே அவன் வழங்கினான் என்றும், இது இம்மை மறு?! நன்மைகளில் எதையுமே உள்ளடக்காமலில்லை என்றும் ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் இயம்பியுள்ளார்கள்.
(அறிவிப்பு : அய்ஃபஃ இப்னு அப்தில் க?* தகவல் மிஷ்காத் - பக்கம் 189
பகறா சூறாவின் இறுதியிலுள்ள இந்த இருவசனங்கள் இரவில் ஒதுபவருக்கு பாதுகாப்புக் கவசமாகிவிட்டன என்றும் நபி (ஸல்) அவர்கள்
அருளியுள்ளார்கள்.
அறிவிப்பு : அபூ மஸ்ஊத் ரவி, தகவல் புகாரி, முல்லிம்
இவ்வாறு செம்மல் நபி (ஸல்) அவர்களால் மிகவும் சிறப்பித்துச் சொல்லப்பட்ட மேற்கண்ட திருவசனங்களுக்குப்பின், மாநபி (ஸல்) அவர்களால் மகத்தானவை என்று அடையாளம் காட்டப்பட்ட மணிவாசகங்கள் பலவும் எடுத்துரைக்கப்பட்டுள்ள"ே
இறைஞ்சல் தியானமும் இன்றைய விஞ்ஞானமும்
நோய்களைக் குணப்படுத்தும் முறைகளில் பிரார்த்தனையும் ஒருவகை என்ற உண்மையை இன்னிP! நவீன மருத்துவ உலகம் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறது.

Page 19
32 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
“அமெரிக்காவிலுள்ள மிட் அமெரிக்கா ஹார்ட் இன்ஸ்டியூட் - எனும் இதயநோய் மருத்துவ நிறுவனத்தில் இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய் (sLDGof) SS5a))3Fli Shifa'idi (Coronary Care Unity) LS5/TS, அனுமதிக்கப்பட்டிருந்த 1000க்கு மேற்பட்ட இதய நோயாளிகளில் 524 பேருக்கு, வழக்கமாகத் தரப்படும் மருந்து மற்றும் சிகிச்சை முறைகளைப் பின்பற்றி, மருத்துவ சிகிச்சையும், எஞ்சிய 484 பேருக்கு பிரார்த்தனை வைத்திய முறையைக்கொண்டு சிகிச்சையளிக்கும் ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து நான்கு வாரங்களாகப் பிரார்த்தனை வைத்தியம் செய்ததின் விளைவாக குணமடைந்திருக்கிறார்கள்” - என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன்” (ஜமா) என்ற மருத்துவ மாத இதழ் அண்மையில் செய்தி வெளியிட்டிருக்கிறது.
“இறைவன் மீது அசைக்கவியலாத அபார நம்பிக்கை இருக்க வேண்டும்” என்ற நிபந்தனையின் அடிப்படையில், ஒவ்வொரு நோயாளிகளுக்காகவும் பிரார்த்தனை செய்ய ஒவ்வொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் பிரார்த்தனை வைத்தியத்தினால் இதய நோயாளிகள் எவ்விதச் சிரம முன்றிக் குணமடைந்திருக்கின்றனர். ஆனால், இது எப்படி நடக்கிறது? என்பது பற்றி, எங்களால் தெரிவிக்க முடியவில்லை” என்று இத்தகையப் பிரார்த்தனை வைத்தியம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மானா மக்கீன் 3. 33
இந்தச் செய்தி அமெரிக்க மருத்துவ இதழான
ஜமா’வில் வெளிவந்ததால் இதற்கு உலகளாவிய
அதிமுக்கியத்துவமும், மிகுந்த மரியாதையும் ஏற்படும் என்று மருத்துவத் துறையினர் கூறியுள்ளனர்.
கடந்த 4.11.99 அன்றுள்ள ட்ைம்ஸ் ஆஃப் இண்டியா என்ற ஆங்கில நாளிதழ். இந்தத் தகவல்களை Saya Little Prayeranditshallhealthesick.“956fp utišigGoGTGouš Japl அது நோய்களைக் குணப்படுத்தும்” என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டுள்ளது.
1400க்கு மேற்பட்ட ஆண்டுகளாக மெய்ஞ்ஞானம், எடுத்துக் கூறிவந்த பிரார்த்தனை வைத்திய முறையை ஏற்க மறுத்து ஏளனம் செய்த விஞ்ஞான உலகம், இப்போது இதை ஒப்புக்கொள்ள முன்வந்திருக்கிறது.
மொத்தத்தில், ராத்திப் ஜலாலிய்யாவின் முக்கிய நோக்கம் - உலகம் முழுதிலும் ராத்திப் நடைபெற்று, மக்கள் வாழ்வில் அமைதியும், நிம்மதியும் ஏற்பட்டு ஒற்றுமை என்னும் கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளவேண்டும் என்பதாகும்.
கீழக்கரைக்கு ஒரு வியாழக்கிழமை மாலை போனீர்களானால், இரவு மக்ரிபுக்குப்பின் மேலத்தெரு, அரூஸியா அறபுக்கல்லூரியிலும், கிழக்குத்தெரு இரு மஸ்ஜிதுகளிலும், பண்டகசாலைத் தெரு, ஹஸனாத் மத்ரஸாவிலும் ராத்திபு ஜலாலிய்யாவின் திக்ரு முழக்கம் உங்களை ஆட்கொண்டுவிடும்.

Page 20
34 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
இதனைத் தொகுத்துத் தந்தவர்கள் கீழக்கரையின் மாமேதை அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ஸையிது முஹம்மது (ரஹ்) அவர்கள்.
மேலும் இதுபோன்ற பல அருள் இலக்கியங்களை அவர்கள் படைத்தளித்துள்ளார்கள். பக்க அதிகரிப்பைக் கருதி மற்றவற்றை ஆய்வதைத் தவிர்த்துள்ளேன்.
பிரார்த்தனை, தியானம் (திக்ர்) ஆகியவற்றின் மகத்துவத்தை அன்றைக்கே உணர்ந்து “ராத்தி பு ஜலாலிய்யா'வை வழங்கியிருப்பதற்கு வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
நல்லது. இனி நாம், இந்தக் கீழக் கரைப் பண்பாட்டுக்கோலத்தில்,அந்தப் பெருமைக்குரிய மக்களின் வரலாற்றையும் வாழ்க்கைப் பின்னணியையும், பழக்க. வழக்கங்களையும், நடை உடை பாவனைகளையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்த்திடலாம்.
 

35
தொழிலாளி - முதலாளி !
“இஸ்லாத்தின் துவக்க நூற்றாண்டுகளிலேயே வச்ரநாட்டில் நிலை கொண்டுவிட்ட இஸ்லாமியர் வாழ்வு நூற்றாண்டுகள் தோறும் வெற்றிப்பாதையை நோக்கி அலையலையாக மோதிக்கொண்டே இருக்கிறது" - என்கிறார் மன்னார் மஹரூஃப் என்பார் ஒரு கட்டுரையில்.
உண்மை! அது ஆயிரங்காலத்து அலை மோதல்!
கவி. கா.மு. ஷெரீஃப் முதற்கொண்டு, மறைந்தும் மறையாத “இளைஞர் (பெரியார்) எம். இத்ரீஸ் மரக்காயர் ஈறாக கீழக்கரை மக்களது வரலாறு வழங்கியிருக்கிறார்கள். நானுங்கூட விதிவிலக்கல்ல. ‘இலங்கை - கீழக்கரை இனிய தொடர்புகள்’ என ஒரு பார்வை பார்த்திருக்கிறேன். பல பரக்கத்துகளைப் பெற்றிருக்கிறேன். நான் இவ்வுலகில் விட்டுச் செல்லும் என் தலையாயச் சொத்து இந்த நூலே!
இவையெல்லாம் தற் புகழ்ச்சிக்காகச் சொல்லப்படுபவையல்ல. தகவலைப் பதித்தால் தானே பதிவும் இருக்கும்?
ஆகவே - இச்சிறுநூலில் கீர்த்திமிகு கீழக்கரையின் பெரும் வரலாறு அவசியமில்லை.

Page 21
36 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
ஆனால், அந்த மக்கள் யார், எவர் என்பதற்கு மட்டும் குறிப்புகள் இப்பக்கங்களில்.
அவர்களில் பலர் கப்பல் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள், இப்போதும் இருப்பவர்கள்
மரக்கலங்களைத் துணிச்சலுடனும், அறிவுடனும் கடலில் நடத்திச் செல்கின்ற மாலுமிகள், தண்டையல்கள், பல்வகை கடல் தொழில்காரர்கள், பெரும் கடல்பொருள் வணிகர்கள். (முக்கியமாக, முத்துச் சலாபம்).
ஒரு பதச்சோறாக ஒருவரை மட்டும் சொல்கிறேன் அவர், வள்ளல் ஹபீபு முஹம்மது மரக்காயர். “இரண்டாவது சீதக்காதி’ என அழைக்கப்படுபவர். இவருக்குச் சொந்தமாக நாற்பது கப்பல்கள் இருந்தன. *முதன் முதலாகக் கப்பலோட்டிய தென்னிந்தியர்” என வரலாற்றில் பதிவு. இவருக்கு, இலங்கை - புத்தளம் ஏத்தாலையில் ஒரு துறைமுகமே சொந்தமாக இருந்தது.
மேற்படி ஹபீபு முஹம்மது மரக்காயர் அவர்களது பிரதானப் பண்டகசாலையாக, சென்னை, கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் பிரதான அஞ்சல் அலுவலகம் (GPO) அக்காலத்தில் அமைந்திருந்ததாக கூறுவார்கள்.
ஹபீப் அரசரின் 40 கப்பல்களில் முக்கியமானவை, "முஹ்யித்தீன் பக்ஷ்’, ‘காதர் பக்ஷ்’ என்ற இரு கப்பல்களாகும். "முஹ்யித்தீன் பக்ஷ்' எனும் கப்பல் ஜாவாவுக்கு சரக்கு ஏற்றி போன சமயம் புயலில் அகப்பட்டு திரும்பவில்லை என்பது வரலாறு. காலஞ்சென்ற பேரறிஞர் இலங்கை தனி நாயகம் அடிகளார் நியூசிலாந்து சென்றிந்த

3 7 மானா மக்கீன்
சமயம் அவ்வூர் அருங்காட்சியகத்தைப் (மியூசியம்) பார்வையிட சென்ற போது, ஒரு பெரிய வெண்கல மணியின் முகப்பில் தமிழில் "முஹ்யித்தீன் பக்ஷ்” என்று பொறிக்கப்பட்டிருந்ததை வியந்து நிழற்படம் எடுத்துச் சென்னைப் பத்திரிகைகளில் படத்துடன் தகவல் வுெளியிட்டார். (படம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.)
இதுசம்பந்தமான மிகச்சமீபத்திய இன்னொரு நிகழ்வு- கடந்தாண்டு இளவல் ஏ.ஜி.ஏ. ரிஃபாய் அவர்கள், தமது நிறுவனமான ஈ.டி.ஏ. ஸ்தாபனத்தின் தலைமையகம் அமைந்துள்ள துபாய் நகர் சென்றிருந்தார். அங்கு, JMD ஹபீ புல்லா ஹாஜி ரமீஸ் ஆகியோருடன் ஆலோசனை கலந்து, தொழில் நிமித்தமாக நியூஸிலாந்து செல்ல இருந்த நிறுவன மேலாளர் (கும்பிடு மதுரை) முஸ்தஃபா அப்துல் கஃபார் (Kaffar) அவர்கள் மூலமாக பல அரியத் தகவல்களைச் சேகரிக்க முனைந்தார். அவர் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியின் காரணமாக, ஜனாப் முஸ்தபா அப்துல் கஃபார் தமது நியூஸிலாந்துப் பயணத்தில் மேற்கொண்டும் பல அரிய தகவல்களைச் சேகரித்தார். நிழற்படங்களையும் பெற்றார்.
மேற்படி, முஹ்யித்தீன் பக்ஷ் என்ற தமிழ்மணி, திரு வில்லியம் காலன்ஸோ, எஃப்.எல்.எஸ். என்பவரால் நியூசிலாந்தின் வடபகுதித் தீவில் 1836 - ல் கண்டெடுக்கப்பட்டது.
வள்ளல் ஹபீபு அரசர் கப்பலோட்டியதும் அந்தக் காலகட்டத்திலேயே!

Page 22
BB Iாழ் கீழக்கார பண்பாட்டுக் கோலங்கள்
لم يلم - - - - یا با به ای با
ܮܬܳ
العالم
முஹ்ய்யதீன் பக்ஷ்" என்ற கப்பலில் இருந்த மணியாகும். இது இப்பொழுது, நியூசிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ளது.
இந்த மணி, வள்ளல் ஹபீபு மரக்காயருடைய
 
 
 

39
此Q3〜にて象をC2匈了尼思e@
cae%3劑&%氫學 鱷@88%
| NẰ, Kai Y Ya Tii N VaKKuçu.
29((こgUC 9tとcg UȚat Ya KaPaL UTaiYa MaNi

Page 23
40 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
இந்த மணியின் முதல் கண்காட்சி 1862-ல் நியூஸிலாந்தில் நடந்துள்ளது.
தற்சமயம், தங்கத் தமிழ்ப்பெயரைத் தாங்கிக்கொண்டு டொமினியன் அருங்காட்சியகத்தில் வரலாறு பேசுகிறது.
இதுவரை, எந்த நூலிலும் இடம்பெற்றிராத, அந்த தமிழ்ப் பெயரினது வடிவமைப்பை, நிழற்படமாக இங்கு வழங்கியிருப்பதில் பெருமிதம் கொள்கின்றது பேனா
"முகையயதின பகருசு உடைய கபல உடைய மணி” எனப்பொறிக்கப்பட்டுள்ளதை, மலேசியத் தீபகற்பம் பினாங்கில் இருந்த தமிழ்த் தெரிந்த ஒருவர் மூலமாக சரியானபடி தமிழ்ப்படுத்தியுள்ளனர்.
மணியில் பொறிக்கப்பட்டுள்ள ஒர் எழுத்தில் நமது அபிமானிகளது கவனம் செல்லவேண்டுமென விரும்புகிறேன்.
அது, ‘தீ’ என்ற எழுத்து.
இது, ஒரு சங்கு வடிவத்தில் அமைந்து மிக அழகாக காட்சி தருகிறது.
சங்கும் முத்தும் கீழக்கரை முஸ்லிம்களுக்கு பிரதான தொழிலாக இன்றும் இருக்கின்றது என்பதை நான் மீண்டும் பதிக்க வேண்டியதில்லை அல்லவா! (உம். சங்குவெட்டிதெரு, சங்குளியாரதெரு.)
எனினும், வேறு பல பொருள் வணிகர்களும் இல்லாமலிருந்ததில்லை.

மானா மக்கீன் S 41
எத்தனை பெரிய வசதி உள்ளவரானாலும் உழைக்காமல் இருந்து உண்பது என்பது கீழக்கரைக்காரருக்கு ஒத்துவராத ஒன்று.
பாரதத்தின் பெரும் பகுதி மாநிலங்களிலும், இலங்கை உள்ளிட்டு தூரகிழக்கு நாடுகளிலும், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், தாய்லாந்து, மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ரஷியா, பிரித்தானியா (லண்டன்) பெல்ஜியம், ஜப்பான், ஐக்கிய அறபு அமீரகம் ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் கீழக்கரைப் பெருவணிகர்கள் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும், எந்த மொழியினருடன் பழகினாலும் அங்கே பணத்தைச் சம்பாதிப்பதற்கு முன் மக்களையே சம்பாதிப்பார்கள் அவர்களது அன்பையும் அபிமானத்தையும் பெற்றுவிடுவது அவர்களுக்குக் கைவந்த கலை!
பின்னர், நியாயமாக நிறைவான பொருளீட்டி, தாங்கள் எப்பகுதியில் பொருள் தேடுகிறார்களோ அப்பகுதி அறப் பணிகளுக்கு செலவு செய்வதும், உலமாப் பெருமக்களைக் கண்ணியப்படுத்துவதும், கல்விப்பசி கொண்டவையும் ஏழை முஸ்லிம் கண்மணிகளைக் கைதூக்கி விடுவதும், இலக்கியவாதிகளின் புரவலர்களாகத் திகழ்வதும் வெகு வெகு சாதாரணமான நிகழ்வுகள்
எனக்குத் தெரிந்த இலங்கை இளம் மாணிக்க வர்த்தகர் ஒருவர் என்னிடம் கேட்டார். “கீழக்கரை வாசிகள் உலக நாடுகளில் வர்த்தகர்களாகப் பெருகிக்கொண்டே இருப்பதற்கு என்னதான் காரணம்?”

Page 24
42 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
இந்தக் கேள்விக்குரிய பதிலில் ஒரு பெரும் அற்பு:தமே ஆழ்ந்திருந்தது!
ஒரு வணிகத்தலத்தில் ஒரு கீழக்கரைக்காரர் பணி புரிகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் கடைசி வரைக்கும் கடைநிலை ஊழியராக இருக்கவேமாட்டார். இருப்பதற்கு முதலாளி விடமாட்டார்!
பெரிய அதிசயம் இது!
வரைச் சிப்பந்தியாக வைத்திருக்கும் முதலாளி
அவரது திறமையை மிக்கக் கவனத்துடன் கண்காணித்து வருவார். தனித்தொழிலுக்கு அவர் பக்குவப்பட்டு விட்டதாக அவரும் , ஊழியரும் ஒரு மித்து உணரும்பொழுது, அந்த முதலாளியின் துணையுடன் அவர் ஒரு தனிக்கடையைத் துவங்கி விடுவார்!
எந்த ஊரில் இந்தப் பண்பாட்டைப் பார்க்க முடியும்?
இந்த வகையில், கீழக்கரையின் ஒரு முன்னுதாரண மனிதரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விருப்பம். இவர், இந்த நூற்றாண்டுக்காரர் அல்லர். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிக்காரர். பெயர், ஹாஜி கே.டி.எம். ஹ"ஸைன் (மர்ஹலிம்) அவர்கள்.
முத்து இரத்தின வணிகத்தில் ஈடுபாடுகொண்ட ஹ"சைன் ஹாஜியார், தமது நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட அனைவரையுமே வர்த்தகத்தில் பங்காளிகளாக ஆக்கிக்கொண்டார்கள்! “அருளியா’ என்பது அவர்கள்தம் நிறுவனத்தின் பெயராக இருந்தது.

மானா மக்கீன் I 43
பங்காளிகளாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களில் புலர், அவ்வப்பொழுது நிறுவனத்திலிருந்து விலகி தனித்தனி வணிக நிலையங்களைத் தோற்றுவித்துக் கொண்டனர்.
நாளடைவில், அவர்களும் அந்தப் பங்காளி முறையையே கைக்கொண்டனர்.
*வணிக வாரிசு”களாக இப்பொழுது நான்கு தலைமுறையினர் வந்துவிட்டதாக எனக்குக் கிடைத்த தகவலொன்று தெரிவிக்கிறது!
ஓர் அடிக்குறிப்பு: செல்வந்தர்களைத் தோற்றுவித்த ஹ0 சைன் ஹாஜியார், கீழக் கரை மண்ணில் கல்விச் செல்வங்களை உருவாக்குவதிலும் Lu 6T u T (06) மிக்கவராகத் திகழ்ந்துள்ளது என் ஆய்வில் தெரிந்தது. கீழக்கரையின் முதல் உயர்நிலைப் பள்ளியாகவும், முதல் மேனிலைப்பள்ளியாகவும் பெயர் பெற்றுள்ள இன்றைய “ஹமீதிய்யா" அன்னாரது அரிய முயற்சியாகும். மேலத்தெரு உஸ்வத்துன் ஹஸனா சங்கத்தினரது ஒத்துழைப்புடன் அவர் சாதனை புரிந்தார் அல்ஹம்துலில்லாஹ். அழகிய முன்மாதிரி, அற்புதங்பண்பாடு.
حنفیٹ

Page 25
44
தீந்தமிழே வாழ்க்கை! ף
இஸ்லாம் ஒரு கண்ணில், இன்பத்தமிழ் இன்னொரு கண்ணில்!
இவை வெறும் வார்த்தைகளல்ல. கீழக்கரை மண்ணின் மக்களது உடலில் ஒட்டிப் பிறந்திருப்பது.
14-15ஆம் நூற்றாண்டுகளைத் தொடர்ந்து தமிழைக் காக்கவும் தமிழைப் பேணவும் நிலையான, வலுவான ஆட்சிகள் தென்பாண்டிச் சீமையில் அமையாதபொழுது தங்களால் இயன்ற வரையில் தமிழைக் காத்தும் வளர்த்தும் வந்தவர்கள் அச்சீமையின் முஸ்லிம்கள் என்பது வரலாறு.
இதே வரலாறு, கடந்த இருபதாம் நூற்றாண்டிலும், இன்றைய இருபத்தொன்றிலும் இலங்கையிலும்
உருவாகியுள்ளது- யாழ்ப்பாணம் மன்னார் மாவட்டங்களிலிருந்தது புலம்பெயர வைக்கப்பட்ட முஸ்லிம்களாலும், இலங்கையின் பிறபகுதி முஸ்லிம்களாலும்!
கசப்பான உண்மை!
எனினும், இனிப்பாக்கிக்கொள்ள விரும்பும் இனிய நெஞ்சங்கள் அவ்வாறு செய்து தங்களை உயர்த்திக்கொள்வார்கள்.

மானா மக்கீன் ನಿ! 45
போகட்டும். அக்கால கட்டத்தில் ஆயிரமசலாவும், ஒரு சீறாவும் தமிழுக்கு அணி சேர்த்தன.
இதே காலத்தைத் தொடர்ந்துதான் ஒரு சீதக்காதி உருவாகி தமிழறிஞர்களை அழைத்து அவர்களுக்கு வாரி வழங்கி தமிழ்ப்பயிருக்கு நீர்வார்த்து, வாடவிடாது காத்தார்.
எனவே, சீதக்காதி வழிவந்த கீழக்கரை மக்கள் தெள்ளுதமிழையே தீந்தமிழாகக்கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.
அவர்களது வட்டாரத்தமிழை ஆசை ஆசையாகச் சுவைக்கலாம். இங்கே வழங்கப்போகிறேன், பருகிடுவதற்கு!
co அங்கிட்டு, இங்கிட்டு என்றால் அந்தப்பக்கம்,
இந்தப்பக்கம் என்றர்த்தம்!
உம்மா என்றால் தாயார். வாப்பா என்றால் தந்தையார். (இலங்கையிலும் அப்படியே!)
toC) கண்ணும்மா அல்லது உம்மம்மா - தாயைப்பெற்றவள். வாப்புச்சா அல்லது வாப்புச்சம்மா -தந்தையைப் பெற்றவள்.
உ0 தாயாரின் தாய் மாமா - அப்ப மாமா.
தந்தையின் தாய் மாமா - முத்து மாமா
o
தந்தையாரின் தம்பி - சின்ன வாப்பா/ சாச்சிப்பா/ சாச்சா.
DCX- தாயாரது தங்கை - சாச்சி/சாச்சிம்மா

Page 26
:
ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
தாயாரது தங்கை கணவர் - சாச்சிப்பா தமையனார் - காக்கா (கேரளாவிலும் இப்படியே) தமக்கை - லாத்தா (கேரளாவிலும் இப்படியே) தமையனது மனைவி - மச்சி (இலங்கையில் மதினி) இவைபோக, வயதான ஒர் ஆணை, "அப்பா’ என
அழைப்பதும், வயதான ஒரு மாதுவை "ஆச்சா" என்று அழைப்பதும், கணவனை (மாப்பிள்ளை)
‘இந்தாங்க" - “வாங்கம்மா’ - ‘போங்கம்மா’ என்று கூப்பிடுவதும், வயது குறைந்த பெண்களை அல்லது மனைவியை “புள்ள (வாபுள்ள - இரிபுள்ள)
என்பதும் வழக்கம், பண்பாடு! உறவுமுறை இப்படியிருக்க, வேறு விடயங்களிலும் தமிழ்க் கொஞ்சி விளையாடுகிறது! ‘ஆணம்” என்பதுதான் கீழக்கரையின் குழம்பு! ரசம் அவர்களுக்குப் பிடிக்காது. புளியாணம் தான்! (அடடா! என்ன ருசி, என்ன ருசி!) *கூரு கெட்டவனே? என்றால் விழிக்காதீர்கள். ‘தெளிவில்லாதவன்” - ‘சரியாகப் புரிந்து கொள்ளாதவன்” என்பதற்கே அப்படிச் சொல்வது! (இது, செட்டி நாட்டார் வழக்கிலும் உள்ளது). அதிகாலையை ஸ"புஹ0 எனச்சொல்வதுடன், ‘வெள்ளென’, ‘காலங்காத்தாலே" எனவும் சொல்வர்.
‘அரப்படித்தவன்" - "மெத்தப்படித்தவன்” என்பது
தலைக்கணத்தோடு எடுத்தெறிந்து பேசுபவனைக் குறிக்கும்.

s 47 மானா மக்கீன் hపS
O0 எந்த ஒன்றையும் புரிந்துகொள்ள சக்தியில்லாதவனை ‘அக்ல் கெட்டவன்", என்றும் ‘புத்தி கெட்டவன்’ எனவும் அழைப்பர்.
Or ‘விரைவு” - “வேகம் இவற்றுக்கு மூன்று சொற்கள் உண்டு. 'பொக்குண்டு? - ‘வெரசா? - "சுருக்கா? என்பர். இலங்கையிலும் 'சுருக்கா’ புழக்கத்தில் உண்டு.
to) *அடிக்கடி - என்பதற்கு “ஒட்டைக்கு ஒட்ட அல்லது
‘வெசைக்கி வெச".
இனி, ஒரு முக்கியமான வசனத்தின் ஆழ்ந்த கருத்தை ஆய்ந்திடப் போகிறேன்.
“அட மூதேவி கெட்டவனே(ளே), அடீ மூதேவி கெட்டவளோ(னே), பாழுறுவா” - எனத் திட்டுவது கீழக்கரையில் சாதாரணம்.
யார் திட்டுவார்கள் என்றால், உம்மா (தாய்), கண்ணும்மா (தாயைப் பெற்றவள்), வாப்புச்சா (தகப்பனைப் பெற்றவள்) ஆகியோர்.
அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டால், வீட்டுப்பிள்ளையானாலும் சரி, வெளிப்பிள்ளையானாலும் சரி மேற்கண்ட முறையில் திட்டுவிழும்.
இதன் உட்பொருளைத்தெரிந்து கொண்டால் கீழக்கரையின் பண்பாட்டுக்கோலத்தின் மகிமையைப் பாராட்டி மகிழ்வீர்கள்.

Page 27
48 பா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
மூதேவி என்பது சீதேவிக்கு எதிர்மறையல்லவா. அது, தீய தன்மைகளுக்கு அடையாளச்சொல். ஆனால், “மூதேவி கெட்டவனே (ளே” என்றுதானே கீழக்கரை மூதாட்டி திட்டுகிறார்? அதன் சரியான அர்த்தம். *மூதேவி குடிகொள்ளாதவன்” - ‘தீய தன்மைகள் கிடையாதவன் என்பதாகும் மேலும், ‘பாழறுவா’ எனத் திட்டில் முத்தாய்ப்பு, ஏன் என்றால், “மூதேவி குடிகொள்ளாதவனே, உன் வாழ்வு பாழ் இன்றி வளத்துடன் வாழ்வதாக” அல்லது, “பாழ் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்வாயாக’ என்பதைக் குறிப்பதற்கேயாகும்.
‘நிந்தா துதி” என இலக்கணத்தமிழில் ஒருவகை உண்டாமே! அவ்வகையான ஒரு வசனம் தானாம் இது!
இந்தத் ‘திட்டு கீழக்கரைப் பெண்மணிகளிடம் மட்டும் கேட்கக்கூடியது என்பதை அழுத்திப் பதித்திட விருப்பம்.
மேலும், தெருவுக்குத் தெரு பேச்சு வழக்கில் வித்தியாசம் உண்டு.
ஒவ்வொரு தெருவிலும் தமிழ் வித்தியாசப்படுகிறது.
முஸ்லிம் சமுதாய மக்களது தமிழுக்கும் இங்கு வாழும் பிற இன சமூகத்தினர் தமிழுக்கும் வித்தியாசம் உண்டு.
கீர்த்திமிகு கீழக்கரையில், பன்னாட்டார் தெருவில்
டச்சுக்காரர்களால் கட்டப்பட்ட புனித அந்தோனியார் தேவலாயமும், ப்ராடஸ் டாண்ட் புனித பீட்டர்

s is a 49 மானா மக்கீன்
தேவாலயமும், நினைத்ததை முடித்த சித்தி விநாயகர் கோயிலும், 1531-க்கு முன்பே கட்டப்பட்ட சொக்கநாதர் கோயிலும் இருப்பதை அபிமானிகள் மறந்துவிடக்கூடாது. அந்த வணக்கத்தலங்களை வைத்துப்பார்க்கும் பொழுது நிச்சயமாக அங்கு வாழும் மக்களது பேச்சு வழக்கு விதவிதமாகத்தான் இருக்கும்.
இருக்கட்டுமே! இருக்கட்டுமே! அதுதானே நாமனைவரும் ஏக்கத்துடன் எதிர்பார்க்கிற மத நல்லிணக்கம்!
ஆனால், ‘ஹா' - போட்டுப் பேசுவது இப்பகுதி முஸ்லிம்களுக்கே தனித்துவமான ஒன்று!
வந்தாஹ - போனாஹ - இரிக்கிறாஹ!
இதைப் பெண்ணரசிகள் சொல்லும்பொழுது கேட்கவேண்டும், சொக்கிவிடுவோம் சுந்தரத்தமிழின் ஓசையால்!
கடைசியாக - 17ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு பிரபலமான இலக்கிய நூலின் 16-ஆவது கண்ணி, (பாடல்) கீழக்கரை மக்கள் அன்னைத் தமிழ்மீது கொண்டிருந்த காதலைத் துள்ளியப்படுத்துவதைத் தெரியப்படுத்தி விடுகிறேன்.
ஒரேயொரு சொல்தான்!
அதிலேயே அவர்களது தமிழபிமானம் உலகுக்குப் பறைசாற்றப்பட்டு விடுகிறது!

Page 28
50 யா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
‘நன்மை விசயரகுநாதப் பெரியதம்பி
தன்மபரி பாலன் தமிழக்காய லாதிபதி”
என்கிற வரிகளில் உள்ள “தமிழ்க்காயல்” என்ற சொல், எண்ணுந்தோறும் இன்பத்தை யூட்டுவது.
“கீழக்கரையில் தமிழ்ச் சான்றோர் பலர் தோன்றித் தாய்மொழிக்குத் தொண்டாற்றியுள்ளனர். காலம்தோறும் தமிழ்ப் புலமையோர் நிறைந்து வாழ்கின்றனர். அவ்வூருக்குத் ‘தமிழ்க்காயல்’ என்ற பெயர் மிகப்பொருத்தமாக உள்ளது” - என்கிறார் இளம் பேராசிரியர் மு.இ. அகமது மரக்காயர் அவர்கள். இவர், “சீதக்காதி திருமண வாழ்த்துக்கு உரையாசிரியர்.
இந்த இலக்கியப் புதையலின் பாடலொன்றில்தான் ‘தமிழ்க்காயல்' உள்ளது - உமறுகத்தாப் புலவர் அவர்களது உபயத்தினால்!
மேலும், கீழக்கரையில் தோன்றிய சூஃபிஞானி கீழக்கரை செய்யிது ஆசியா உம்மா அவர்கள் (மேல்வீட்டு உம்மா) கீழக்கரை குதுபுஸ்ஸமான் வ. கவ்துல் அஸான் ஹ ல் வத்து நாயகத்தின் முதன்மைச் சீடராவர். இளமையிலே தனித்திருந்து, இறை நேசச் செல்வர்கள் மீது துதிப்பாடல்களை முனாஜத்துக்களைப் பாடும் அற்புத வன்மை பெற்றிருந்தார்.
இவரது பாடல் திரட்டு ஒன்று “மெய்ஞ்ஞானத் தீப இரத்தினம்” என அரபுத்தமிழில் அமைந்துள்ளது.

5 1 மானா மக்கீன் S
“K3Y
இதில் ஒரு பாடல் “தாய், மணவி, மணவர் சகல முதலானவள் தான் சேயா யணைக்க அருள் செய்வீர் என் சற்குருவே” என இருக்கிறது.
“மணவர் - மணவி” என்ற சொற்கள் வெகு வெகு புதுமையானவை. கணவரை மணவர் என்றும், மனைவியை மணவி என்றும் பயன்படுத்தியுள்ளார் செய்யது ஆசியா உம்மா அவர்கள்.
இந்நூலை, அறபுத் தமிழில் 1976ல் பதிப்புச் செய்தவர் மர்ஹஜூம், ஹாஜி இ.சு.மு. அப்துல் காதர் மரக்காயரது புதல்வி அல்ஹாஜிய்யா அஹமது மர்யம், செ.மு. ஹமீது அப்துல் காதர் அவர்கள். இதனை அற்புதமான தமிழ்ப் பதிப்பாக இவ்வாண்டு (2000) ஆகஸ்ட் திங்களில் பிரசுரித்திருப்பவர்கள் அவர்களது தாயார் - மூதாட்டி அல்ஹாஜிய்யா இ.சு.மு. ரஹ்மத் பீவி உம்மா
96) IIT35GTITG IIT.
தரணி சிறக்கத் தாயும் மகளும் நல்ல தமிழ் இலக்கியப் பணிச் செய்துள்ளனர்.
நல்லது. அடுத்ததாக நான் எதை ஆராய்வேன் என்பதை யூகிக்க முடிகிறதா எனப்பாருங்கள்.

Page 29
52
கல்யாணமே,
வைபோகமே!
அபிமானிகளே! உங்கள் யூகம் சரிதானா?
கீழக்கரை கல்யாண வைபோகம் பற்றிய ஆய்வும், அது சம்பந்தமான பண்பாட்டுக் கோலங்களுமே இந்த 8-ம் அத்தியாயத்தில் இடம் பெறுகின்றன.
புதுக்கோட்டை, அரசு அருங்காட்சியக் காப்பாட்சியரும், "மர்க்காயர்கள் பற்றிப்பல ஆய்வுகளைச் செய்திருப்பவருமான கலாநிதி (முனைவர்) ஜெ. ராஜா முகம்மது அவர்கள் இப் படியொரு குறிப்பைத் தந்துள்ளார்கள். 0 இலக்கியம் காலக்கண்ணாடி என அழைக்கப்படும். ஒரு இலக்கியம் அது இயற்றப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களின் மேம்பட்ட வாழ்வு நெறிகளை தெரிவிக்கும் சான்றாக அமைகிறது. ஒரு இனத்தின் பண்பாடு, பழக்கங்கள், நடை, உடை, பாவனைகள், கலைகள், மொழி ஆகியன இதன் மூலம் விளக்கமடைகின்றன. சிலதணி மனிதர்களின் வாழ்வியல் சிறப்புகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

மானா மக்கீன் పN 53
இந்த வகையில், 17- ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்ட இலக்கியமொன்று நல்ல பலச்செய்திகளை - தகவல்களை வாரி வழங்கியுள்ளது.
“செய்தக் காதிர் மரக்காயர் திருமண வாழ்த்து” (சீதக்காதி திருமணவாழ்த்து) என்ற அந்தச் சிற்றிலக்கியம் கீழக்கரையில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதியின் திருமண வைபவம் குறித்து வர்ணிப்பதாகும்.
எட்டயபுரம் உமறு கத்தாப் புலவரது கைவண்ணம் என்பது பல ஆய்வாளர்கள் ஏகோபித்த முடிவு.
அன்னார், பெரியதம்பி மரக்காயர் என்ற, செய்கு அப்துல் காதிர் மரக்காயர் ஆகிய வள்ளல் சீதக்காதி அவர்களது திருமணத்தை நேரில் கண்டு அனுபவித்து நமக்கு விவரங்கள் தந்துள்ளார்.
‘திருமண வாழ்த்து’ - ன்னப் பெயரிடப் பட்டிருந்தாலும், அக்காலச் சமுதாயப் பண்பாட்டுக் கோலங்களைக் காட்டி நிற்கின்ற காலக்கண்ணாடி எனத்துணிவுடன் கூறலாம்.
இந்த இலக்கியப் படைப்பில் அக்கால முஸ்லிம் மணமக்கள் வாழ்த்து மட்டுமல்ல, திருமண நிகழ்வுகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் அனைத்துமே பட்டொளி வீசிப் பளிச்சிடுகின்றன.
என்றாலும், தமிழக முஸ்லிம் சமுதாயம், இந்து (தமிழ்ச்) சமூகத்தின் ஒர் அங்கமாக பல நூறு ஆண்டுகாலங்களாகத் திகழ்வதால் இந்து சமூகப் பழக்க

Page 30
54 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
வழக்கங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருப்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
வள்ளல் சீதக்காதிப் பெருமகனாரின் திருமணமும் விதி விலக்கல்ல!
நிச்சயதார்த்தம் - அலங்காரப் பந்தல்கள் - ஆரவார ஊர்வலம் - பந்தக்கால் நடுதல் - மணவறை அலங்காரம் - நல்ல நாள் பார்த்து திருமணம் செய்தல் - ஆரத்தி எடுத்தல் - தாலி கட்டுதல் அனைத்தையுமே இந்து சமூகப் பழக்கங்களிலிருந்து பெறப்பட்ட அன்றையப் பண்பாட்டுக் கோலமாகக் கீழக்கரையில் காண்கிறோம்!
கீழக்கரையில் மட்டும் அன்று இந்த ஊடுருவல்!
தமிழக முஸ்லிம் ஊர்கள் அனைத்திலுமே!
- இன்றும், தொடர்கதையாகத் தொடரவும் செய்கின்றன.
அதே சமயத்தில், LJ 6) நிகழ்வுகள் தவிர்க்கப்படாமலும் இல்லை!
மேற்படி உமறுகத்தாப் புலவரது, சீதக்காதி திருமணவாழ்த்து’ என்ற சிற்றிலக்கியத்திற்கு இளைய தலைமுறைப் பேராசிரியர், ஆய்வாளர், புதுக்கல்லூரி தமிழ்த்துறையின் ஓர் அங்கம், மு.இ அகமது மரக்காயர், பெரிய வர் மர்ஹ ஜூம் மு. இத்ரீஸ் மரக்காயர், துணைகொண்டு மேற்படி பாடல்களுக்கு சிறந்த உரைநூல் ஒன்றையும் எழுதிச் சிறப்புப் பெற்றுள்ளார். ஆண்டு 1996,

மானா மக்கீன் 5SNij 55
அந்த உரைகளிலும் பாடல்களிலும் மூழ்கினோமென்றால் நாளெல்லாம் முத்தெடுத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான்
எனக்குப் பொழுதிருந்தாலும் உங்களுக்கு இல்லை!
ஆகவே, அங்கேயும் இங்கேயுமாக சங்கு குளிப்போம்!
நமது நெஞ்சினில் எப்பொழுதும் நிறைந்திருக்கும் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸ்மத் சாகிப் அவர்கள் அந்நூலுக்கு எழுதிய அணிந்துரையில் இப்படியொரு அருமையான குறிப்பு (தகவல்) உள்ளது.
சீதக்காதி திருமணவாழ்த்தில், மணப்பெண்ணுக்கு உச்சந்தலை முதல் உள்ளங் கால் வரை அணிவிக்கப்பட்ட பற்பல அணிகலன்கள் கூறப்பட்டுள்ளன. இக்காலத்துப் பொற்கொல்லர்கள் பலருக்குக் கூடத் தெரியாத பல நகைகளின் பெயர்களை நாம் காண்கிறோம்.
சீதக்காதி திருமண வாழ்த்தில் சொல்லப்பட்டுள்ள நகை வகைகள் கீழக்கரையில் மட்டுமல்லாது, காரைக்கரல், நாகூர், நாகப்பட்டினம், காயல்பட்டினம், பரங்கிப்பேட்டை போன்ற கடற்கரை நகரங்களில் வாழ்கின்ற பல தமிழ் முஸ்லிம்களிடத்தில் வழக்கில் இருந்தன. காரைக்காலில் வணிகப்பிரமுகராக விளங்கித் தாய்லாந்து (சியாம்) நாட்டில் குபேரர்களாக வாழ்ந்த தம்பிசா மரக்காயர் குடும்பத்தில், ஏறத்தாழ திருமண வாழ்த்தில்

Page 31
56
ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
கூறப்பட்டுள்ள எல்லாவகை நகைகளும் இருந்தன. தம் உறவுப் பெண்களுக்கு மாத்திரமின்றி ஊரிலுள்ள எந்த முஸ்லிம் பெண்ணுக்குத் திருமணம் நடந்தாலும் மணப்பெண்ணுக்கு அவற்றையெல்லாம் அணிவித்து மகிழச்செய்வது அக்குடும்பப் பாரம்பரியப் பண்பாடாக நிலவி வந்ததை நான் அறிவேன்.
திருமண வாழ்த்தில் கூறப்பட்டுள்ள பல அணிகலன்கள் இன்று வழக்கொழிந்துவிட்டன. என்றாலும் பாரம்பரிய முஸ்லிம் குடும் பங்களில் ஒட்டுமொத்தமாக இல்லையெனினும் ஒவ்வொரு குடும்பத்திலும் சிற்சில நகைகளாவது இருக்கக்கூடும்.
மிகமிக உண்மையான வார்த்தைகள்.
அவை எந்தத்தெருவில் எந்த இல்லத்தில் மிகமிகப்
பத்திரமாக இருக்கின்றவோ!
நன்றாக இருக்கட்டும்!
அக்கால கீழக்கரை மணமகளுக்கு (அதாவது சீதக்காதி
வள்ளலின் அருந்துணைவியாருக்கு) அணிவிக்கப்பட்ட பல அணிகலன்களின் விவரத்தை உமறுகத்தாப் புலவர் அழகாகத் தந்துள்ளார்கள்.
பட்டியலைப் பார்வையிடுகிறீர்களா?
O Sojdig, Gif 9 பிறை
9 திருவு

5 7 மானா மக்கீன் 罰ーS面
சுட்டிவடம் அறுக்குத்து
கொப்பு
சுலுக்கியா அரசிலைப் பூத்தொங்கல் ஒன்னப்பூ
அசரவி
சரப்பளி தும்பிப்பதக்கம் ஆளிமுகத்தாளி வில்லை புசபந்தனம் அட்டியல் சந்துக்காறை பொற்கடகம் சிலம்பு தங்கப்பாடகம் கட்டுசரம்
காலாழி கிளப்பதக்கம் ஆரடிக்கொத்துவடம்
666
இரத்தினசரி பொன்மணி
தண்டை

Page 32
58
ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
சதங்கை மேல்முடி சங்கிலி Lწ65)
மெட்டி
இவற்றில், தற்சமயம் உபயோகத்தில் உள்ளவற்றின் சிலதுகளின் பெயர்களை இங்கு தொகுத்துத் தருவதும்
d5 60)).
இதோ.
மசிர்மாட்டி நெத்திச்சுட்டி டோலக் கும்மத்து அலுக்கொத்து அரசிலை ஒன்னப்பு மூக்குத்தி விலாக்கு கடுவமணி எட்டுத்தட்டு மணி நெல்லிக்கா மணி பவள முத்துமணி முத்துக்காய் மணி
ЭғomJL சவடிக்கொடி அட்டியல்

மானா மக்கீன் 59
RINT,
வைரக்கோர்வை கருசமணிப்பொன்னு வாவாலி (காதணி)
55 TF DT60) (6) திருக்கட்டா மாலை மாங்கா மாலை
கவர்னர் மாலை
தோள்வளயம்
சுத்துக்காப்பு
நெளி
காப்பு
பொன்மணி
கும்மினி
பட்டணக் காப்பு
கொலுசு காப்பு
ஒட்டியானம் காரை (ஆண் சிறுவர்களின் அணிகலன்) காப்பு
விலாக்கு
தண்டை
கொலுசு
மிஞ்சி பாசுபந்து (தோளுக்குக் கீழே அணிவது)

Page 33
60 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
மேற்படி பட்டியலுக்கு ஆதாரம்: அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாட்டு மலர் - 1990. Lidh : 80.
இவ்வாறாக, அணிகலன்களின் * - @ره IT ' ஒருபுறமிருக்க, ‘மாப்பிள்ளை உலா (மணமகன் ஊர்வலம்) மற்றொரு மலைப்பான சங்கதி!
அதில் இடம்பெற்ற இசைக்கருவிகள், சிலம்பாட்டங்கள், வாணவேடிக்கைகள், விவரங்களை எல்லாம் இடப்பஞ்சம் கருதி தவிர்த்துவிட்டு மணமேடைக்குக் கூட்டிச்சென்று விடுகின்றேன்!
அங்கே மணவுறுதியின் பொழுது மணமகன் சீதக்காதிக்கு யானைகள் - குதிரைகள் - பல்லக்குகள் - பீரங்கிகள் (ஆமாம், பீரங்கிகள் 1) முதலியன வழங்கப்பட்டன!
அவை மட்டுமா! சீனப்பட்டு-கம்பளிப்போர்வை - சுளிகை ஆடை - வைர உடை - பச்சைக்கடகம் - கலிக்கத்துரா - வைரப்பதக்கம் - வைடூரியக் கடுக்கன் ஆகியனவும்!
இதன்பின், முஸ்லிம் திருமண முறைப்படி மணமகன் மணமகளுக்குக் கொடுக்கும் மஹர் தொகை குறிப்பிட்டு திருமணம் பதிவு செய்தனர். தொடர்ந்து திருமறை வசனங்கள் ஓதி இறையருளுக்கு இறைஞ்சினர்.
மேலும், அக்கால முஸ்லிம் திருமணங்களில்,
முக்கிய நிகழ்வுகள் நடந்து முடிந்த ஒவ்வொரு பொழுதிலும் ஒரு மங்கல ஓசை உரத்து ஒலிப்பது வழக்கம்.

மானா மக்கீன் 1 6 للاهتمال
அது இசைக்கருவி துணை கொண்டல்ல. பெண்மணிகள் தங்களது நாவினால் குழறி இடுகின்ற மகிழ்வொலி
*குரவை’ என்பர், ‘குலவை’ என்றும் கொல்வர்.
தமிழக மக்களிடம் இன்றும் உள்ள இப்பழக்கம், சீதக்காதிச் சீமானின் திருமணத்திலும் இடம் பெற்றது!
அவ்வோசையானது, அருகில் கேட்ட அலையோசையையும் அமுக்கிவிட்டது அமுக்கி!
குணமாக வெல்லோருங்கூடிக் குரவையிட மணவாளன் றன் கையால் மாங்கல்யம் கட்டினரே
என இடம் பெற்றுள்ள 363-ம் பாடலைக்கொண்டு குரவையையும், கேட்டின்புறுகிறோம். 'மாங்கல்யம்' (தாலி) கட்டுவதையும் பார்க்கிறோம்.
அப்பாடா! ‘சீதக்காதி திருமண வாழ்த்துவிலிருந்து ஒரு பாடலையாவது இந்நூலில் சேர்த்துவிடவேண்டும் என்ற ஆசை நிறைவேறிவிட்டது!
பாட்டு மிக இலகுவாகப் புரிந்தது அல்லவா!
தாலி தமிழ்க்கலாசாரப் பண்பாட்டின் தாக்கம். சந்தேகமேயில்லை. பின்னர், கருகமணிச்சரமும் தாலியின் இடத்தைப்பற்றியது. இதுவும் வழக்கிலிருந்து வருகிறது. என்றாலும், மாப்பிள்ளை வீட்டு மூதாட்டி ஒருவர் அழகிய பளிங்குப் பாத்திரத்தில் (தாலிச்செப்பு) சில மங்கலப்

Page 34
62 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
பொருட்களுடன் தங்கச்சங்கிலி ஒன்றை எடுத்துவந்து மணமகள் கழுத்தில் கட்டுவார். இது காயல்பட்டனத்தில் இருப்பதாக அவ்வூர்வாசியான அன்பருக்கு அன்பர் அஹ்மது சாகிபு என்னிடம் தெரிவித்தார். ஆனால், கீழக்கரையில் மணமகனே மணமகளின் கழுத்தில் அணிவித்துவிடுவாராம்!
19-ம் நூற்றாண்டின் இறுதியில், தென்னாற்காடு மாவட்ட மரக்காயர்களின் திருமணங்களில் மணமகன் ஒரு திரைக்குப் பின்னாலிருந்து மணமகளுக்குத் தாலி கட்டும் பழக்கமும் இருந்ததான தகவலை ஜனாப் ஜெ. ராஜா முஹம்மது அவர்களே ஓர் ஆய்வுக் கட்டுரையில் வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்தப் பழக்கங்கள் ராவுத்தர், லெப்பைப் பிரிவினரிடையே இல்லை.
சரி, இத்தோடு இருக்கட்டும் தாலி விடயம்!
இனி, நாம் சீதக்காதி அவர்களது துணைவிக்கு அளிக்கப்பட்ட சீதனப் பொருட்களை வரிசைப்படுத்திட வேண்டும்.
அந்த அருந்துணை பெற்ற பொருட்களில் படகுகளும், தோணிகளும், சுளுப்புகளும், சோங்குகளும்
முதன்மை இடம் பெற்றிருந்தன (இவையனைத்தும் நீரில் உபயோகிக்கப்படுபவை)
இந்தக் காலத்து எந்த மாப்பிள்ளையும் இவற்றை நினைத்தும் பாரார்! விரும்பவும் மாட்டார்!

மானா மக்கீன் 63
மேலும், நகை வகைகளையும், உடை வகைகளையும் பெற்றதுடன், வயிரப்பாக்குவெட்டி, சுண்ணாம்பு வைத்துக்கொள்ள பொற்கரண்டம் (கரன்டம் என்னும் சொல் இன்றும் முஸ்லிம்களிடம் வழக்கில் உள்ளது) உமிழும் படிக்கம் (இன்றும் இச்சொல் முஸ்லிம்களிடம் வழக்கில் உள்ளது) வெள்ளிக் குத்துவிளக்கு, தலையணை (தழுவணை என்னும் அழகிய சொல்லால் பாடலில் பதிவு) தங்கக்கொட்டான் (கூடை), தங்கச் சட்டுவம், வெள்ளிக்குடம், பொன்னரிக்கஞ்சட்டி (இன்றும் முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் உள்ளது) வெள்ளிமிடா (மடா என்று முஸ்லிம் பெண்கள் கூறுவர்), பல்லாங்குழி, செப்புத்தாலா (தாம்பாளம்), தந்தச் சீப்பு, ஈர்க்கொல்லி, எருமைகள், பசுமாடுகள், தென்னஞ் சோலைகள், பொன்மணி வீடு எனப்பெரிய தொரு பட்டியல்
இவற்றில், இறுதியிலே குறித்துள்ள ‘ஒன்றை உற்றுக் கவனியுங்கள்
பொன்மணி வீடு
“வீடாத செம்பொன் மணி வீடுங் கொடுத்து.”
என்று 410-ம் கண்ணி (பாடல்) எடுத்துரைக்கிறது!
ஓர் இளந்தம்பதிக்கு இன்றியமையாத ஒன்று
இல்லம்! “இல்லத்தரசி” என்ற சொல், இல்லமொன்று இல்லையேல் பொருந்தாது! இதை உணர்ந்த கீழக்கரை

Page 35
6 4. யா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
மக்கள் மணமக்களுக்கு வீடு ஒன்று வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்!
ஆக, சீதக்காதி தம்பதிக்கும் வீடு!
இன்றைக்கும் இந்த நடைமுறை இருக்கவே செய்கிறது. அதுவொரு கடமையாகவும் கருதப்படுகிறது.
கீழக்கரையைப் பின்பற்றி, நாகூர், நாகப்பட்டினம், காரைக்கால் போன்ற கடற்கரைப் பிரதேசங்களிலும் இவ்வழக்கம் உள்ளதாம்! பேராசிரியர் அகமது மரக்காயர் தகவல்!
நானுங்கூட, ஒன்றைக்குறித்து விடுகின்றேன். எங்கள் கிழக்கில் ங்கையிலும் இவ் வழக்கம் முஸ்லிம்களிடையே மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அங்கே, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் மணமகன் ஒரு புது வீடு இல்லாமல் மணமகளை ஏறிட்டும் பார்க்க மாட்டார்! சரி. புது வீடுதான் கொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அந்த வீட்டில் அவர் வாழ்வாரா? பேசாமல் தனக்குக் கிடைத்த வீட்டைப் பூட்டி வைத்துவிட்டு கொழும்புக்கு இடம்பெயர்ந்து விடுவார்! வாடகை வீட்டில் வாழ்க்கையைக் கழிப்பார்!
இது எப்படி இருக்கு?

At a 65 மானா மக்கீன் 5SNj]
voor
ஆனால். ஆனால்.
இந்த நூலின் ஆய்வு மும் முரத்தில் நான் ஆழ்ந்திருந்தபொழுது, மணிமேகலைப் பிரசுர நிறுவன சிரேஷ்ட அலுவலர் திரு. முருகேசன் எனக்கு வந்த அஞ்சல்களையும், சஞ்சிகைகளையும் ஒரு மூட்டையாகத் தூக்கித் தந்தார். தொடர்ந்து இந்த உதவியைச் செய்து வருகிறார்!
அதிலிருந்து “சிந்தனைச்சரம்” நாலைந்து மாத வெளியீடுகளையும் ஆவலாய் எடுத்தேன். இந்தச் சரம் சாமான்யமானதல்ல! ஆங்கில இதழ்களையும் தோற்கடிக்கும் தரம் மூன்று ஆண்டுகளாக மணம்! நான்மாடக் கூடலிலிருந்து (மதுரை) பவனி.
இதன் ஸஃபர் - மே மாதத்தின் 19ம் பக்கத்தில், *திருமண அலங்கோலம்” என ச. ஆமினா ஃபர்வின், அவர்களது விளாசுதலைப் பார்த்துப் படித்து
விழிபிதுங்கினேன். − -
அப்பொழுதுதான், கீழ்க்கரை மணமகளுக்கு வீடு கொடுக்கும் விவரத்தைத் தொட்டுக்கொண்டிருந்தேன்!
அவர் எழுத்துக்கள் இப்படி நெருப்பாய்ச் சுட்டன: இன்றும் நம் இஸ்லாமியச் சமூகத்தில் வரதட்சணை வாங்காத திருமணங்கள் ஒன்றிரண்டு கூட நடப்பதில்லை.
“மஹர்” தந்து திருமணம் புரிய வேண்டுமென்ற இறைமறை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா..?

Page 36
66
யா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
“மஹர்” என்ற வார்த்தையே தெரியாத அப்பாவி முஸ்லிம்களும் நம்மிடையே உண்டு 100 பவுன் நகையும் 1 லட்சம் ரொக்கமும் வாங்கிக் கொண்டு நிக்காஹ்விற்கு முன்னிற்கின்றனரே மார்க்க அறிஞர்கள். “நிக்காஹ் புத்தகத்தில் 5000 ரூபாய் மஹருக்காக
இந்தப் பெண்ணை இவர் மன ஒப்புதலோடு
மணம்புரிகின்றார்” என்று பதிவு செய்கின்றனரே. இது மட்டும் தான் இவர்கள் கடமையா..? வரதட்சணையைத் தடுப்பது இவர்கள் பொறுப்பு இல்லையா..? வட்டி, இலஞ்சலாவண்யம், கொள்ளையடித்தல், போன்ற வழிகளில் பொருளிட்டுவதுதான் ஹராமானதா? திருமண வியாபாரத்தின் மூலம் ஒரு ஆண் பெண்ணிடமிருந்து பெறுகின்றானே வரதட்சணைப் பணம் , இது ஹலாலானது என்று
அனுமதிக்கப்பட்டுள்ளதா..? இந்த முறையில்
நடைபெற்ற "நிக்காஹ்” பற்றி ஹதீஸ்களில் ஏதேனும் ஆதாரமுண்டா..? மற்ற புதுமைகளை எல்லாம் “பித்அத்’ என்று நிராகரிக்கின்ற நாம் இந்தப் புதுமையை ஏன் கைதட்டி வரவேற்றுக் கொண்டிருக்கின்றோம்.
இது இப்படியிருக்க, கீழ்க்கரை, காயல்பட்டினம் போன்ற ஊர்களின் சீதனப் பெருமை இன்னும் ஒரு படி மேலே சென்றுவிட்டது. ஒரு பெண்ணை மணம் முடித்துக் கொடுக்க வேண்டுமானால், தாய் வீட்டிலிருந்து அவரவர் வசதிக்கேற்றபடி ஒரு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். இதற்கு வசதியில்லாதவர்கள் பெண்ணைத் தம் வீட்டிலேயே வைத்திருக்க வேண்டியதுதான்.

6 7 மானா மக்கீன் 3S
இப்படியே அந்த கட்டுரையில் இன்னும் பல விடயங்கள் உள்ளன. ஆமினா ஃபர்வினுக்கு மானசீகப் பாராட்டுக்களை அள்ளி வழங்கிவிட்டு ஜூலை இதழின்.83-ம் பக்கத்தைப் புரட்டினால் அங்கே ஒரு வாசகரால் வேறொரு நெத்தியடி காத்திருந்தது.
காயல்பட்டினம்-கீழக்கரை பகுதிகளில் ஆண்களுக்கு பெண் வீட்டார்கள் வீடு கட்டிக்கொடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், அதனால் பல பெண்கள் வாழ்க்கை தேங்கிக்கிடப்பதாகவும் கூறியுள்ளார் ஆமினா பர்வீன்.
கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற ஊர்களில் வீடுகள் கட்டிக்கொடுப்பது ஆண்களுக்காக அல்ல, தன் மருமகனை வீட்டு வேலையாள் ஆக்கவே தன் மகள் பிறர் வீட்டில் சென்று சிரமப்படக்கூடாது. அதற்குப் பதிலாக மருமகன் மாமியார் வீட்டுக்கு வந்து வேலை பார்க்கட்டுமே என்பதற்காகத்தான். இதற்குப் பெயர் வரதட்சணைக் கொடுமை அல்ல, பெண் வீட்டார்களின் சுயநலம்.
- மு. பக்றுத்தீன் அலி அஹ்மது.
அன்பு அபிமானிகளே!
ஆங்காங்கு பல கோணங்களிலும் கிடைக்கப்பெற்ற
கருத்துக்களை இங்கு சமர்ப்பித்துவிட்டேன் ஒரு
பட்டிமன்றத்திற்கு தயாராவது உங்கள் பொறுப்பு, என் பொறுப்பல்ல!

Page 37
68 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
மேலும், தொடர்கிறேன் ஆய்வை! திருமணமான ஒரு மரக்காயர் மணமகள் தனது தர்ய் வீட்டிலேயே தங்கி வாழ்வது ஒரு மரபாக உள்ளது. மருமகனும் (மாப்பிள்ளை) மாமனார் வீட்டிற்குச் சென்று வருவதும் வழக்கமாக உள்ளது.
இதற்கு ஒரு சில காரணங்களை எடுத்துக்காட்டுகிறார் ஆய்வாளர், கலாநிதி ஜெ. ராஜா முகம்மது (காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், புதுக்கோட்டை)
‘அறபு நாட்டு ஆண்கள், நமது பெண்களை திருமணம் செய்து கொண்டு மனைவியின் வீட்டிலே வாழ்ந்து வந்ததால் இப்பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். அத்தோடு, மரக்காயர்கள் வணிக நிமித்தம் நீண்ட நாட்கள் வெளியூரிலிருக்கும் காரணத்தினால், மனைவியரை அவர்களது தாய் வீட்டில் விட்டுச் சென்றவர்களாக இருந்தார்கள் - என்கிறார். ராவுத்தர், லெப்பை போன்ற பிற பிரிவினரிடம் இப்பழக்கம் இல்லை.
அத்துடன், ஏற்கெனவே தெரிவித்த 'குரவை (குலவை) ஒலி, கிழக்கிலங்கையின் ஏறாவூர், மருதமுனை, கல்முனை - அக்கரைப்பற்று வரையிலான அனைத்து ஊர்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன!
காதோடு இரகசியம்: கிழக்கிலங்கைக்கும் கீழக்கரைக்கும் இனிய தொடர்புகள் இருக்கவே செய்கின்றன, அபிமானிகளே! அதனை விரிவாக இன்னொரு முறை ஆய்வு செய்கிறேன்! இன்ஷா அல்லாஹ்.

மானா மக்கீன் 69
2ைகு தாயகம்(ர2) மேற்கொண்ட ای 4AZ 247ی Aea7z//z
பிற்காலத்தில் - கடந்த நூற்றாண்டில் - கீழக்கரைத் திருமணமொன்றில் மிக மிக வித்தியாசமான பண்பாட்டுப் புரட்சியொன்று இடம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.
அது வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சரித்திரத்தை இங்கு மீண்டும் பதிக்கிறேன் - இளைய தலைமுறையினருக்குச் சமர்ப்பணமாக!
*தைக்காக் கோத்திரக் குடும்பம் - கீழக்கரையின் பெருமைமிகு வம்சத்தார். அதிலே, ஷைகு நாயகம், (ரஹ்) அல்லாமா தைக்கா அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் (ரஹ்) அவர்கள், அறவழித்துறையின் நெடுவழிப் பயணத்தில் ஐந்தாவது பயணி. இப்பொழுது நம்மிடையே ‘ஆன்மிக உலா வரும் பெருமதிப்பிற்குரிய கலாநிதி தைக்கா சுஜபு ஆலிம் எம்.ஏ. அவர்களை, அவர்கள் தம் வாரிசாக வழங்கிவிட்டு ஒய்வுறக்கம் கொண்டிருப்பவர்கள்!
அவர்களது திருமண நிகழ்வுகள் அனைத்துமே அதிசயமிக்கதாக உள்ளன. ஒரு வித்தியாசமான பண்பாட்டுக் கோலத்தைக் காட்டுகின்றன.
அவர்கள் இளஞ்சிறுவராக இருக்கும் பொழுதே திருமணப்பேச்சு நடக்க ஆரம்பித்துவிட்டது. திருமணத்திற்கு மறுப்பளிக்காது, ஒரு நிபந்தனைமட்டும் விதித்தார்கள்.

Page 38
70 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
“எனக்கு வரும் மனைவி, காதெல்லாம் 30, 40 ஓட்டைகள் போட்டு வாளிகளும் அரசிலைகளும் மாட்டியவளாக இருக்கக்கூடாது. காதிலே தோடு போடுவதற்காக ஒரு ஓட்டை தவிர வேறு ஓட்டைகளே இருக்கக்கூடாது” என்று நிபந்தனை தெரிவித்தார்கள்.
இவர்கள் விதிக்கும் நிபந்தனையை மீறிவிட்டால், நிச்சயமாகப் பெண்ணை மறுத்துவிடுவார்கள் என்பதை துணுக்கமாக உணர்ந்துகொண்ட தந்தை யாரும், தமையனாரும், கடம்படை ஜமீன்தார், தோல்ஷாப்பு, ஷேகு சலாகுதின் மரக்காராகிய (குணங்கு உம்மாவின் மகன்) மாமா வீட்டாரும், ஷெய்கு நாயகத்தின் நாயகியாக வரவிருக்கும் நாச்சியாரும், தோடு அணிவதற்கு மட்டும் காதில் ஒட்டையிட்டு வளர்த்து வந்தார்கள்.
இது ஒரு பெரிய விஷயமல்ல. அந்த நாச்சியாருக்கு மூக்கும் குத்தக்கூடாது என்று தடை விதித்தார்கள்! வருங்காலக் கணவன் விதிக்கும் வரம்பை மீறாத வனிதா ரத்தினமாக, அவர்களும் மூக்குக் குத்தாமலே வளர்ந்தார்கள்.
திருமணம் முடிந்தது!
புது மணமக்கள் கணவனும் மனைவியுமாகச் சந்திக்கும் முதற்காட்சி.
மணமகன் செய்த முதல் காரியம்..?
தாம் மணமுடித்த மாதின் கழுத்திலே அணி செய்துகிடக்கும் தாலியை - மாங்கல்யத்தை - கருச மணியை

7 1 மானா மக்கீன் 罰ミミ』
மணமகளுக்கும் தனக்கும் ஏற்பட்ட முதற் சந்திப்பிலேயே தன் கையால் அறுத்து வீசியெறிந்தததே
மணமுடித்த அன்றே கருசமணி அறுத்தெறியப்பட்ட அந்த மாதர் திலகம் மரியம் ஆயிஷா (ரஹ்) அவர்கள் 67 வயது வரை சுமங்கலியாக வாழ்ந்து, மாறா மங்கலத்துடன், "மண்ணுலகைத் துறந்தார்கள்!
இச்செயலுக்கு விளக்கம் கேட்டால் ஷெய்கு நாயகம் அவர்கள் தரும் பதில், பதிலல்ல! கேள்விதான்.
“இஸ்லாமியத் திருமணத்தில் தாலிக்கு என்ன வேலை?
“தாலிக்குள்ள (கருசமணி) தரஜா என்ன?”
- இந்த அருமையிலும் அருமையான வரலாற்றுத் தகவலை, குத்தாஸ் என்பவர் மூலம், 1967-ல் வெளியான "ஷெய்கு நாயகம் சிறப்பு மலர்” வாயிலாக அறிய முடிகிறது.
மதிப்பிற்குரிய ஷெய்கு நாயகம் அவர்கள், அல்லாமா தைக்கா அஹ்மது அப்துல் காதிர் (மாப்பிள்ளை லெப்பை) ஆலிம் (ரஹ்) அவர்கள்தம் பேரர்களுள் ஒருவர் என்பது என் அபிமானிகள் பலருக்கும் தெரிந்த ஒன்றே எனக்கருதுகிறேன்,

Page 39
72 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
இன்றைய திருமணங்களில்
சில சுவைத் தகவல்கன்,
'சிற்ை கழட்டல்’
இன்றையக் கீழக் கரைத் திருமணங்களில் முக்கியமாக இடம்பெறும் ஓர் அம்சம்: 'சிறை கழட்டல்’
மணநாளுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, மணப்பெண்ணுக்கு வெள்ளைப் புடவையும், சிவப்பு ஜாக்கெட்டும் அணிவிப்பர். நகை எதுவும் போடமாட்டார்கள். மாப்பிள்ளை வீட்டு முதியவர்கள் (மாமியார், அக்கா, தங்கை போன்றவர்கள்) வந்துதான் அதைச் செய்வார்கள்.
முதலில் கிரீடம். அடுத்து மாலை. இப்படி இன்னும் வரிசையாக நகைகள்! s
தொடர்ந்து ‘நெய்-சந்தனம்’ என்ற நிகழ்ச்சி.
அணிந்திருந்த வெள்ளைப் புடவையை அகற்றிவிட்டு மஞ்சள் புடவையை உடுத்த வைப்பார்கள். மருதாணி இடுவார்கள்!
சிறை கழட்டல் பூர்த்தி!
*இதுவரை கன்னியாக வீட்டிலே சிறைப்படுத்தப்பட்டிருந்த ஒரு நங்கை கணவன் ஒருவனால் விடுதலை ஆகப்போகிறாள்” என்பதை உணர்த்தும் சடங்கு இது.
 

7 3 மானா மக்கீன் JQL
ass
“கைப்பிடித்து விடல்
'குத்பா நிக்காஹ்' முடிந்ததும், ஆண்கள் களைந்து சென்றுவிட, ‘கைப்பிடித்துவிடல் பெண்கள் மத்தியில் நடக்கும் ஒரு காட்சி.
மாப்பிள்ளை அல்லது மணமகன் வீட்டுப் பெரியவர் ஒருவர், மணப்பெண்ணின் கரத்தையும், மணமகனின் கரத்தையும் பிடித்து இணைத்து விடுவார்! இதைத் தொடர்ந்து பெண் தலைமுடியைக் (கூந்தல்) கொண்டு புதிய தம்பதிகளது சுண்டு விரல்களில் கட்டி விடுவது கண்கொள்ளாக்காட்சி. அப்புறம் பாலும் பழமும்! ஆனால் நமக்கல்ல அபிமானிகளே!
“கோப் அடித்தல்'
மணவறையில் “கோப் அடித்தல்’ என்பது வேடிக்கையும் வினோதமுமானது.
பெண்ணின் தம்பி கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்து வேடிக்கை புரிவான்.
இளம்பெண்கள் சுற்றுப்புற ஜன்னல் விளிம்புகளில் முகம் காட்டி வினோத வேடிக்கைச் செய்வார்கள். s
இவற்றையே “கோப் அடித்தல்” (“கேலி பண்ணுதல்") எனப்படுகிறது.
கற்களைக்கொண்டு தயாரான கனிவர்க்கங்கள் மட்டுமல்ல, கோழி மாங்காய், ஈரல் முதலியவற்றைக் கொடுப்பதும், நூலால் இடியப்பத்தைப் பின்னி

Page 40
74 Iா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
வைத்திருப்பதும், பிளாஸ்டிக் பழங்களைக் கொடுப்பதும், அமரும் இடத்தில் அப்பளங்களை நொருங்க வைப்பதும், குரலை மாற்றி கேலிப் பேசுவதும் கோப் அடித்தல்தான்!
'செட்டுப்பணம்’
மணவிழாக்கோலங்கள் கண்டபிறகு இளவட்டங்கள் மாப்பிள்ளையைச் சூழ்ந்துகொண்டு 'செட்டுப்பணம்’ கேட்டு நிற்பர்.
ஏன்? பணப்பஞ்சமா, இல்லை. அப்படி ஒருமரபு. மாப்பிள்ளை வழங்கும் நூறு, ஐநூறு, ஆயிரத்தை எடுத்துக்கொண்டு உல்லாசப் பயணம் புறப்பட்டு விடுவார்கள் (பிக்னிக்).
*சஹான் சாப்பாடு”
எங்கெல்லாம் ஷாபிஈ' முஸ்லிம்களின் திருமணம் இருக்குமோ இந்த "சஹான் சாப்பாடு உண்டு. இலங்கையிலும் அப்படியே! ஆனால் அங்கே சஹன்! அறுவர் அமர்ந்து ஏழை-பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் சமமென அமர்ந்து உண்ணும் விருந்து. கீழக்கரைவாசிகள் அனைவரும் ஷாபிஈ மத்ஹபினர்’ என்பது தெரிந்ததுதானே!
(சஹ(ா)ன் என்பது ஒரு நடுத்தர, வட்டவடிவப்
பாத்திரம்.)

75
பெண்கள் ()
தைக்காக்கள்!
குழந்தை வளர்ப்பில், முக்கியமாக பெண் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே ஒழுக்க சீலர்களாக வளர்த்தெடுப்பதில் கீர்த்திமிகு கீழக்கரை முன்னணி என்பதற்கு நோன்பு மாதம் ஒரு நல்ல உதாரணம்.
சிறுமியர் நோன்பு பிடித்துக்கொண்டு தன் வயதுக்கு ஏத்த தோழியரைச் சந்தித்து நோன்பின் மகத்துவம் பற்றிப்பேசுவதும், முஸல்லாக் (தொழுகைப்பாய்)களைச் சுமந்துகொண்டு பெண்கள் தைக்காக்களுக்குச் செல்வதும் ஒரு கண்கொள்ளாக்காட்சி.
அதுமட்டுமல்ல, அல்-குர்ஆன் மத்ரஸாக்களுக்குச் சென்று போட்டி போட்டு அறிவைத் தேடிக்கொள்வதும், “நான் உனக்கு முந்தி ஒன்னாம் ஜ"ஸ" முடித்துவிட்டேன். இரண்டாம் ஜ"ஸ" முடித்துவிட்டேன்’ எனப் பெருமையாகப் பேசிக்கொள்வதும் சர்வ சாதாரணம்.
வயதுவந்த பெண்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கும் “பெண்கள் தைக்காவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்புள்ளது.

Page 41
76 யா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
இந்தப் பெண்கள் தைக்காக்களைக் கொண்டுள்ள இரண்டே இரண்டு ஊர்கள், கீழக்கரையும் காயல் பட்டினமுமே!
*அறபுமொழியில் ‘தைக்கா’ என்றால், ஆதரவு. அல்லது ஒத்துழைப்பு என்ற பொருளைத்தரும்” என்கிறார் கலாநிதி எஸ்.எம். கமால் (ராமநாதபுரம்).
பெரும்பாலான முஸ்லிம் பேரூர்களில் ஆடவர்களுக்கென தைக்காக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தனிமையில் தியானம் (திக்ர்) செய்யவும், ஒய்வு கொண்டு அமைதி பேணவும் பயன்படுகின்றன.
ஆனால் இவ்விரு ஊர்களிலும், பெண்களின் தொழுகைக்காக உபயோகப்படுத்தப் படுவதுடன், காலை - இரவு நேரங்களில் சிறார்களின் மார்க்கக் கல்விக்கூடங்களாகவும் அமைந்துள்ளது.
இதன்மூலம், பெண்களிடையே மார்க்க ஞானமும் வளர்க்கப்படுகிறது. ஒருவருக்கொருவர் மார்க்க விளக்கங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வழி ஏற்படுத்தப்படுகிறது.
மேலும், ரபியுல் அவ் வல், ரபியுல் ஆதிர் மாதங்களில் மவ்லிதுகளும், ராத்திபுகளும், ரமழான் மாதத்தில் தராவீஹ் தொழுகைகளும் நடத்தப்பட்டு தைக்காக்கள், பெண்கள் வாழ்வில் இரண்டறக் கலந்து காட்சியளிக்கின்றன.

மானா மக்கீன் — FN 77
நமது பெண் சகோதரிகளுக்கென தனித்துவம் மிக்க தைக்காக்கள்-பந்தல்கள் ஊருக்கு ஊர் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஏக்கப்படுகிறது என் பேனா. இதற்குக் கீழக்கரையையும் காயல்பட்டினத்தையும் முன் மாதிரியாகக்கொள்வோம்.
இன்ஷா அல்லாஹ்.
علاسفیٹ

Page 42
78
குறுகிய தெருக்கள் O)
சந்துக்கள்
கீழக்கரை முஸ்லிம்கள் துவக்ககால முதலே “திரை கடலோடியும் திரவியந்தேடு” என்ற தமிழகத்தின் சிறப்புச் சொற்கூற்றை முழுமையாக ஏற்றுப் பின்பற்றுகிறவர்கள். வாணிபப் பணியாக உலகமெல்லாம் சுற்றி விட்டு குறிப்பிட்ட காலங்களில் ஊர் திரும்புவார்கள்.
கீழக்கரை முஸ்லிம்களின் வணிக வாழ்வு சங்க கால ஊர்த்தலைவர்களின் வாழ்வை ஒத்தது எனில் மிகையல்ல.
ஊர்த்தலைவன் பொருளிட்டப் புறப்படுகிறான். ஊர் மக்கள் அவன் செல்வதை தடுக்கின்றனர்.
“தலைவா! நீ பொருளிட்டச் செல்லவேண்டாம். வேண்டுமான சொத்தும் உன்விரல் அசைவுக்குப் பணியாற்ற ஆட்களும் இருக்கின்றோம்; எனவே நீ ஊரிலேயே இருந்து கிராமத்தை நல்ல நிர்வாகம் செய்” என வேண்டினர்.
அவன் மீறிச் செல்லவே தீர்மானித்தான்.
அவனைத் தடுத்து நிறுத்தும்படி தலைவியை மக்கள் வேண்டினர். தலைவியும் ஊரவரோடு கூடி தலைவனைத் தடுத்து நின்றாள். அப்பொழுது தலைவன் தலைவியின் காதுக்குள் எதையோ முணுமுணுத்தான். உடனே தலைவி தலைவனுக்கு வழி விட்டு, தடுக்க வேண்டாம் என்று மக்களுக்கும் கூறினாள். மக்கள் வழிவிட்டனர்.

மானா மக்கீன் RKNÜ 79
*XY
பல மாதங்கள், வருடங்கள் பறந்தன.
பொருள் தேடிப் புறப்பட்ட தலைவன் குறிப்பிட்ட
காலத்தில் வரவேண்டியவன் இன்னும் வரவில்லை.
மக்கள் துயர்கொண்டு தலைவியை அணுகி, தங்கள் கவலையைக் கூறி
“ஏனம்மா தலைவன் இன்னும் வரவில்லை? இறுதியாக உன்னிடம் ஏதோ கூறிச் சென்றானே; அது என்ன” என வினவி நின்றனர்.
“ஆமாம், அவரைப் போக வேண்டாமென்று நானும் தடுத்தபோது அவர் கூறிய சில செய்திகள் எனக்குக் கிளுகிளுப்பை உண்டாக்கின. அவர் சொன்னார்:
‘நமக்கு எவ்வளவு சொத்து சுகம் இருந்தாலும் இன்னும் பொருள் வேண்டும். ஏன் தெரியுமா?
‘நமது நாடு மும்மாரியும் பெய்து செழிப்புடன் வாழ்வதற்குக் காரணம்.
“தேட்டைகளிலேயே மிகவும் அரிதாய தேட்டை அறவாழ்வின் மூலம் இறை நேசர்களாக வாழ்ந்து வருகின்றவர்களின் அறவழித்தேட்டையாகும்.
அவர்கள் இந்த உலகம் வாழ்வதற்கு இறைவனிடம் மன்றாடியவர்களாக இறைவேட்டலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் தங்கள் உலகாயதத் தேவைகளுக்கு நிறைவு செய்து கொள்ளாதவர்களாக இருப்பார்கள்.

Page 43
3) யா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
‘எனவே, நாம் வாழ அவர்கள் வாழ வேண்டும். அவர்களின் தேவையறிந்து அவர்களை வாழச் செய்வது நாட்டு மக்களின் கடமையல்லவா?
‘நமது மண்ணின் மீது மாற்றார் ஆக்கிரமிப்பு எண்ணம் கொள்வரானால் அவரை அடக்கி நமது மண்ணைக் காப்பதும் நம் கடனல்லவா?
"அத்துடன் இவ் வாழ்வு இன்புற்றுத் திகழவும் பொருள் தேவை” என்று கூறிச் சென்றார்” என்றார்.
ஏறத்தாழ கீழக்கரை மக்களின் பொருளிட்டும் வாழ்வு சங்ககால தலைவனின் வாழ்வை ஒத்தது எனில் மிகையாகாது. இப்படிப்பட்ட இந்த வாழ்வுக்கு மெருகேற்றி, இஸ்லாம் சரியான ஒரு பாட்டையை வகுத்துக் கொடுத்திருக்கிறது.
எனவே, கீழக்கரைக்காரர் எவ்வளவுதான் வசதி படைத்தவராக இருந்தாலும் தொடர்ந்தும் அவர் வணிகத்தின்மேல் செல்லவில்லையென்றால் அவர் வாழ்வு கீழக்கரையின் இலக்கணத்திற்கே புறம்பாகிவிடும். கோடி கோடியாக அவர்கள் பொருள் தேடிவந்து பிறரை வாழச் செய்து தாங்களும் வாழுவதே கீழக்கரையின் மரபு.
இந்த மரபுடையக் கீழக்கரை மக்களில் மிகப் பெரும் பான்மையினர் வாணிபத்தின் மேலேய்ே இருந்து கொண்டிருப்பர். பாஸ்போர்ட், விஸா, செலாவணிக் கட்டுப்பாடு எதுவும் இல்லாதிருந்த காலங்களில் நினைக்கும் போதெல்லாம் வெளியிடங்களுக்குத் தொழிலின் மேல் போகவும் வரவுமாக இருந்து கொண்டிருப்பார்கள்.

-- - 81
மானா மக்கீன் KN)
xx or
அப்பொழுது ஊரில் குடும்பத்திற்குப் பாதுகாப்பும் உதவிகளும் தேவை.
இத்தியாதிக் காரணங்களால் சொந்தக்காரர்கள் குழுக்களாக அமைந்து வாழ்வதும், மாற்றார் எவரும் தேவையிருந்தாலன்றி அந்த வளாகங்களுக்குள் நடமாட இயலாதவாறும் தெருக்கள் மிகக் குறுகிய சந்துகளாக இயற்கையாகவே அமைந்திருக்கின்றன.
அக்காலங்களில் வெளியிடங்களிலிருந்து ஊருக்கு ஒருவர் வருவாரானால் அங்கே வசிக்கும் ஊரவர்களிடம் பயணம் சொல்லி விட்டே புறப்படுவர். அதுபோலவே *ரிலிருந்து போகும் போது தான் செல்லும் இடங்களில் உள்ளவர்களின் வீடுகளில் பயணம் சொல்லிவிட்டுப் புறப்படுவர். இந்த வழக்கமானது குடும்பத்தவருக்குத் தங்கள் தலைவனைப் பற்றியும், தலைவனுக்குத் தனது குடும்பத்தைப் பற்றியும் சுகசேமங்கள் தெரிந்து கொள்வதற்கும், பணம் உள்பட தேவையான பொருள்கள் கொடுத்தனுப்புவதற்கும் இந்த நெருக்கமான இடவாழ்வு மிகச் செளகரியமாக அமைந்தது.
இதுதான் கீழக்கரையின் பல தெருக்கள் குறுகியும், நெருக்கமாகவும் அமைந்திருப்பதற்கு அடிப்படைக் காரணம்.
- ஹாஜி ஏ.எம்.எஸ். அஹ்மது இபுராஹிம் அவர்கள்
ஒரு கட்டுரையில் வழங்கியுள்ள தகவல். நன்றி.

Page 44
82
Ո 娜 - மஃம்ே ே
வ்வாண்டின் (2000) ஈகைப்பெருநாளாம் நோன்புத் திருநாள் கழிந்த இரண்டொரு நாட்களின் பின் கீழக்கரை ஊரிலேயே, அம்மக்களது கரங்களிலேயே, இந்நூல் முதன் முதலாக கமகமக்கும். பின்னர் தமிழகம். தொடர்ந்து இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, பாங்காங், ஹாங்காங், அமீரகம் என வானவீதியில் சஞ்சரிக்கும் - ஈத்முபாரக் சொல்லிக்கொண்டு!
அவ்வாறு எப்பொழுதும் ஈத் வாழ்த்து வழங்கலாமா? அறியேன்!
ஆனால், ஒன்றை மட்டும், கீழக்கரைப் பண்பாட்டுக் கோலங்களில் அறிந்தேன்.
கீர்த்தி மிகு கீழக் கரையில் நான்கு நாட்கள் தொடர்ந்து பெருநாளாம் திருநாள் தொடராக ஈத்முபாரக்! தோளுடன் தோள் சேர்த்து முலாகத்
வெறும் கற்பனையல்ல!
ஒரே ஒரு நாளுடன் பெருநாள் கொண்டாடி
முடிப்பது என்பது கீழக்கரைவாசிகளிடம் வழக்கத்தில் இல்லை.

axér/r vm à AP4i 83 மானா மக்கீன் S)
முதல் நாள் - இரண்டாம் நாள் - மூன்றாம் நாள் - நான்காம் நாள் எனக்கொண்டாடப்படும். இதிலே, கடைசி நான்காவது பெருநாளுக்கு “ஊசிப்பெருநாள்’ என்று பெயராம்!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உடைகள், உணவு வகைகள், உற்றார் உறவினர் சந்திப்பு என ஒரு தனி உலகத்தில் மகிழ்ச்சியாக இருப்பர் மக்கள்
முதல் நாளின் பெருநாள் முத்தானது!
ஒவ்வொரு ஊராரும் பின்பற்றப்படவேண்டியது.
விவரிக்கட்டுமா?
மேலத்தெருவில் இப்பொழுது புதுப் பள்ளி புதுமணம் கமழ உள்ளது. அதே தெரு வில், ஒடக்கரைப்பள்ளி என்றும் இன்னொன்று. (180 ஆண்டுகளுக்கு மேலான பழமை.)
முதலில், புதுப்பள்ளியில் பெருநாள் தொழுகையை முடித்துக்கொண்ட அனைத்து மக்களும் ‘தக் பீர்” முழக்கத்துடன் ஊர்வலமாகப் பழைய ஓடக்கரைப் பள்ளிக்கு வருவார்கள். அப்பொழுது அந்தப் பள்ளியிலும் தொழுகை முடிந்திருக்கும். அல்லது முடியும்வரை தரித்து நிற்பர். அப்புறம் இரு மக்களும் சங்கமிப்பார்கள். எங்கும் ‘ஈத் முபாரக்' வாழ்த்தொலியும், ஒருவருக்கொருவர் “முலாகத்" செய்தலும் உணர்வுபூர்வமாக நடக்கும்.

Page 45
84 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
அதன்பின் அவரவர், அவரவர் இல்லங்கள் மீள்வார்களென அபிமானிகள் எதிர்பார்க்காதீர்கள், ஏமாறுவீர்கள்!
இரு பள்ளிகளிலும் தொழுகை முடித்துக்கொண்ட மக்கள் இலேசில் பிரியமாட்டார்கள்!
உரத்து தக்பீர் முழக்கமிடுவார்கள், ஊர்வலமாகப் புறப்பட்டு விடுவார்கள்!
எங்கே? எங்கே?
நடுத்தெருவுக்கு நகைக்கக்கூடாது!
இது பிரபலமான ராஜபாட்டை பிரதான வீதி! வரலாற்று முக்கியத்துவம் கொண்டது.
இங்கே, இருக்கின்ற பழமைமிகு பெரிய ஜும்ஆப் பள்ளிக் கட்டடவேலையை ஆரம்பித்தவர்கள் வள்ளல் சீதக்காதி. முடித்தவர்கள் அவர்களது வாரிசுகள். தென்னகத்திலேயே சிறந்த கட்டடக்கலை அம்சம் கொண்டதாக வர்ணிக்கப்படும் இதன் சிற்சில அமைப்புகள் இராமேஷ்வரம் கோயிலிலும் காணப்படுவது வரலாறு.
இப்பள்ளி முகப்பில், மாதி ஹூர் ரசூல் சதக்கத்துல்லா அப்பா அவர்களினதும் வள்ளல் சீதக்காதி மரக்காயரினதும் ஒய்வுறக்க இடங்கள் காட்சி தருகின்றன. அப்பா அவர்கள், கூரை வேய்ந்த அறைக்குள்ளும், வள்ளல் அவர்கள் வெயிலுக்கும் மழைக்கும் ஈடு கொடுத்தவாறு வெளிப்புறத்திலும் வாழ்கிறார்கள்

மானா மக்கின் – PSV 5
இங்கேதான், மேலத்தெருவில் இருபள்ளியிலும் தொழுத மக்கள் குழுமுவார்கள்! நிகழ்த்தப்படும் பயானை பயபக்தியுடன் செவியுறுவார்கள், துஆ ஒதப்படும்பொழுது கையேந்துவார்கள்.
அதன் பின்னரும் அவர்கள் கலையமாட்டார்கள்!
அப்பா அவர்களுக்கும், வள்ளல் அவர்களுக்கும் மற்றும் அங்கே ஓய்வுறக்கம் கொண்டுள்ள அனைத்து மகான்களுக்கும் ஓதப்படும் பாத்தி ஹாவிலும் பங்கேற்பார்கள்!
இதற்கிடையில் ஓர் அதிசயம் நடக்கும்!
கீழக்கரையின் அனைத்துத் தெருவின் மக்களும் (வடக்குத்தெரு, தெற்குத்தெரு, கிழக்குத்தெரு, பழைய குத்பாப்பள்ளித் தெரு, பிரபுக்கள் தெரு) அங்கே வந்து சேர்ந்திருப்பார்கள் - தத்தம் முஹல் லாக்களில் தொழுதுவிட்டு!
இத்தருணத்தில் வரலாற்றுப் புகழ் மிகு நடுத்தெருவில் மக்கள் சங்கமம்தான்!
அந்தச் ‘சங்கமம் மனத்திற்கினியது, மகத்தானது, மகிமையானது!
இப்படியொரு ஒற்றுமை நிகழ்வுக்கு இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டுமே என்ற ஏக்கத்தையும் தரக்கூடியது.

Page 46
86 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
இவ்வாறு ஒருமிக்க ஒரு பள்ளித்தலத்தில் திரண்டு விட்டிருக்கும் ஊர் மக்கள், நல்ல ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்து, கூட்ட நெரிசலைத் தவிர்த்து முலாகத் செய்வதும் ஈத் முபாரக் சொல்வதுமாக இருப்பர்.
அதற்குப் பள்ளி வாசலின் மூன்று நுழைவாயில்களும் வழி சமைத்துக்கொடுக்கும்!
ஒவ்வொரு ஜமாத்தினரும் தங்களுக்குள் குழுவினர்களாகக் கூடி ஒவ்வொரு வாசலை தேர்ந்தெடுத்து நுழைந்து வெளியேறி மிக ஒற்றுமையுடன் நற்காரியங்களில் ஈடுபடுவார்கள்.
பின்னரும் இவர்களனைவரும் கலைந்து போய் விடுவதில்லை மறுபடியும் முழக்கத்துடன் ஊர்வலமாக மேலத்தெரு அரூஸிய்யாத் தைக்காவைச் சென்றடைவர். சிலர், களிதாக்களையும், பலர் பாத்திஹாக்களையும் ஒதுவர்.
அங்கே அவர்களது தாகசாந்திக்காக பானமொன்றும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
அது என்ன என்பதை உங்களால் யூகிக்க முடியாது! உடன் தெரிவித்து விடுகிறேன் நானே! , י
மோர் சுத்தமான தைக்கா மோர்!
களைப்பெல்லாம் நீங்கிவிட இப்பொழுதும் இல்லங்களைச் சென்றடைய மனம் வராது யாருக்கும்!
அங்கிருந்து பல்லாக்கு (வலி) தர்ஹாவை நோக்கி அனைவரும் செல்வர். பாடல்கள், பைத்துக்கள் சகலரையும் ஈர்க்கும்.

Wo 87 மானா மக்கீன்
voorY
இங்கேயும் ஓர் இனிய உபசரிப்பு கிடைக்கும்.
அது, இளநீர் ஷர்பத்! இப்பொழுது நேரத்தைப் பார்த்தால் லுஹர் வக்த்!
காலையில் பெருநாள் தொழுகைக்காக வீட்டை விட்டுப் புறப்பட்டவர்கள், நண்பகலில் லுஹர் தொழத் தங்களை ஆயத்தப்படுத்தும் ஆனந்தத்தில் மீண்டும் பள்ளி வாசல்களை நோக்கி! அதன் பின்தான் இல்லங்களுக்கு மீண்டு பெருநாள் பிரியாணிக்கு முன் அமர்வது!
() () (a)
அஸருக்குப் பிறகு வடக்குத் தெரு கொந்தக் கருணையப்பா திறந்தவெளி மைதானத்தில் ஆரம்பிக்கும் பெருநாள் திருநாள் சிறுவர்களுக்கும், இளவயதுக்காரர்களுக்குமானது. அன்ன ஊஞ்சல், குடைராட்டினம், தின்பண்டங்களின் விற்பனையென அமளி துமளிப்படும்.
மக்ரிப் ஆனதும், இதே மைதானத்தை முழுக்கவும் பெண்களே ஆக்கிரமித்து விடுவார்கள்.
இதுபோக, மேலத்தெருவில் ‘பெருநாள்வெட்டை (மைதானம்) என ஓரிடம். அங்கே பெண்கள் மட்டும் ஐந்து மணிக்குப் பிறகு கூடுவார்கள்.
இந்த இடம் முதலில் "தோழமை காக்கா’ (முஹம்மது அப்துல் காதர்), பேரெழுத்தாளர் மர்ஹஜூம்

Page 47
вр, III) agakas6opor Uecăruaru 09& கோலங்கள்
r
எம்.கே.ஈ. மவ்லானாவின் சகோதரர் எம்.கே.ஈ. புஹாரி மற்றும் கோ.சி.மு. புஹாரி இல்லங்களுக்கு எதிரில் இருந்ததாகவும் ஒரு தகவல். இப்பொழுது ஹமீதிய்யாப் பள்ளிக்கூட மைதானத்தில் நடைபெறுகிறது. இரவு இஷாவரை விதவிதமான உணவுப் பண்டங்களுடனும், உற்சாகமான உரையாடல்களுடனும், மார்க்க வினா-விடை புதிர்ப் போட்டிகளுடனும் கழியும்.
இதேபோல் கிழக்குத் தெருவிலும் பெருநாள் வெட்டை இருக்கிறது.
ஒரு முக்கிய அடிக்குறிப்பு முதல்நாள் பெருநாளில் அக்கம்பக்கம் உள்ள இந்து நண்பர்களும், தோட்டம் துறவுகளில் கடமைபுரியும் பிற இன ஊழியர்களும் கலந்துகொண்டு பெருநாள் சாப்பாடு உண்டு மகிழப் பிரமாதமான ஏற்பாடுகள் செய்யப்படும். V

89
தொப்பி தொண்டு தொட்டு 2
இன்றைய முஸ்லிம் இளைய தலைமுறையினர் - ஏன், வயது வந்தவர்கள்கூட - பழங்காலத் தொப்பிகளைத் தவிர்ப்பது பார்க்க முடிகிறது. குண்டுத்தொப்பி (வெள்ளைக் குல்லாய்கள்) அந்த இடத்தை அபகரித்துக்கொண்டுள்ளன!
அதனால் பிழையொன்றும் இல்லை! காலம் மாறிப்போச்சே!
ஆனால், ஒரு துருக்கித் தொப்பி - ஒரு ஃபெஸ் தொப்பி - ஒரு சூரத் - ஒரு ராம் பூரி - ஒரு காஷ்மீரி - ஒரு மலேசியத் தொப்பி, ‘என்னையும் அணிந்துபார்க்கக் கூடாதா என்று ஏக்கப்பார்வைப் பார்க்கின்றன. கவனிக்க வேண்டாமா?
இலங்கையில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அங்கே மாப்பிள்ளைமார்கள் தத்தம் திருமணநாளன்று, அந்தக் குறிப்பிட்ட சிலமணித் தியாலங்களுக்கு மட்டும் அந்த அழகிய வட்டவடிவமான இளஞ்சிவப்பு துருக்கித் தொப்பியை அணிவர். அப்புறம் தூக்கிவைத்துவிடுவர்!
கீழக்கரை சமாசாரம் எப்படி?
மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

Page 48
90 யா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
அதனைக் காலம் காலமாகக் காப்பாற்றி வருகிறார்கள்.
பெரியவர்களைப் பார்க்கும்பொழுது, கையிலோ தலையிலோ ஒரு தொப்பி காணப்படும்.
குண்டுத் தொப்பி (வெள்ளை) தவிர்த்து வேறு விதவிதமானத் தொப்பிகளை விசேட வைபவங்களில் அணிந்து மகிழ்வர்.
என் கருத்தில், கறுப்புநிறத் தொப்பி அணிந்து, வெள்ளை நீள்க்கைச்சட்டை, கைலி உடுத்தி அவர்கள் ஒரு வைபவத்தில் கலந்துகொள்ளும்பொழுது அலாதி கவர்ச்சியைக் காணலாம்.
மேலும், அவர்கள் அணியும் தொப்பிகளில் ஓர் அதிசய அந்தரங்கமும் உள்ளது.
தொப்பியைக் கழட்டும்பொழுது பார்த்தால் மிகமிக முக்கியமானக் குறிப்புகள், ரெயில் பதிவுகள், அத்தியாவசியமான சான்றிதழ் பிரதிகள், ரூபாய் நோட்டுகள் எல்லாம் அழகாக மடிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டிருக்கும்!
இன்றைய இளைஞர்கள் எப்படியோ, அன்றைய முதியவர்கள் அப்படியே!
 

உணவுப் பொருட்கள்
கலியாச்சோறு
ஆணம்
புளியாணம்
தாளிச்சா
பயத்தாணம் தேங்காய்க்கஞ்சி
ஒட்டுமா
தக்கடி நெல்லுமா ரொட்டி நெல்லுமா கொழுக்கட்டை புல்லுக் கொழுக்கட்டை வட்டிலாப்பம் கோழியப்பம்
தேங்காய் அப்பம்
மஞ்சப்பம்
S
3)

Page 49
92
ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
சீப்பணியம்
வெள்ளாரியரம்
அச்சுப்பணியம் ஒட்டுப்பணியம்
கைவீச்சு
55(6)56b)
கவுன்ரொட்டி பொறிக்கஞ்சட்டி கொழுக்கட்டை ஊமைக் கொழுக்கட்டை வெள்ளடைப் பணியாரம்
தொதல்
எள்ளுருண்டை வெள்ளை முறுக்கு மரத்தி முறுக்கு மகழ முறுக்கு
SFÍTGDIT 6.16ð)L-
G6) If TL -- IT
நண்டுக்கால் போன்டா தட்டப்பயறு ஒடியல் மொச்சப்பயறு ஒடியல்
ஒடியுல் கிழங்கு

மானா மக்கீன் 93.
ವೋ]
‘டாலர் பரோட்டா
“நைஸ்’ புஷ்பம்
கண்ணுருண்டை
ராவியத் அல்வா
காதிரியா சர்பத்
உளுவாக் கஞ்சி
ஹரீராக் கஞ்சி
நோன்புக் கஞ்சி பொன்னுக்குருவிக் கறி (மண்ணு சல்வா) கம்பத்தான் கறி
மாம்பழச் சிட்டு (இப்பொழுது பிடிக்கத் தடை)
ஆவுலியா - கடல் பசு (இதுவும் இப்பொழுது பிடிக்கத் தடை)

Page 50
94
*மரணம்’ ஒரு 4. பிரச்னையல்ல?
இந்த உலகில் ஓர் உயிர் பிறக்கும்போதே இறப்பும் அதன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்படியாகவே பிறக்கிறது.
என்றாலும் கூட, சில பகுதி மக்கள் வீட்டில் குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால் அதைத் தொடர்ந்து அவர்கள் நடந்து கொள்ளும் விதம் விசித்திரமானது.
நெருக்கமான உறவுக்காரர் யாராவது இறந்து விடுவாரானால் அந்தக் குடும்பத்தவர் ஒராண்டுவரை தங்கள் இல்லங்களில் மங்களச் சடங்குகள் செய்வதில்லை. புதுத் துணிகளை அணிவதில்லை. நல்ல உணவுகளை உண்பதில்லை.
கீழக்கரை மக்களின் வாழ்வு இதற்கு முற்றிலும் வேறானது. “இறந்தவர் இறந்துவிட்டார்; இருப்பவர் அவரின் காலம் முடியும் வரை இருந்துதானே ஆக வேண்டும்?” என்றவாறான சிந்தனைப் போக்குடையவர்கள் கீழ்க்கரை மக்கள்.
இறப்புச் செய்தி கிடைத்ததும் பொதுவாக முஸ்லிம்கள் வாயிலிருந்து வரும் முதற் சொல்

ZA A 寸5 மானா மக்கீன்
*Veyr
“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்பதாகும். “இறைவன் புரத்திலிருந்து வந்தோம், நிச்சயமாக அவன் பக்கமே மீளுகிறோம்” என்ற கருத்துள்ள இச்சொல்லைச் சொல்லிவிட்டு அடுத்து மையித்தை அடக்குவதற்கான பணிகள்.
அடக்கி முடிந்ததும், அடுத்தபடியாக உறவுமுறையினர் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு கூடி, இறந்தவரின் குடும்ப நிலை, திருமணம் செய்து வைக்க வேண்டிய பருவத்தில் உள்ளவர்கள் பற்றி குறிப்பாகப் பெண்மக்கள் பற்றிப் பேசுவார்கள். அவர்களுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசிப்பார்கள்.
இப்படியான நிலைகளோடு அங்கே இறந்த வீட்டுச்சூழல் மாறும்.
இது தவிர, இறந்தவர் வீடு குடும்பம் என்பதற்காக துக்கம் காப்பதோ, மங்கலங்கள் தவிர்ப்பதோ கீழக்கரை
மக்களுக்குத் தெரியாத ஒன்று.
- அனைத்துலக இசுலாமியத் தமிழ் இலக்கிய 5-ம் மாநாட்டு 'கீழக்கரை மலரி'லிருந்து (1990 பெறப்பட்ட தகவல் நன்றி

Page 51
96
மூத்தவர்களையோ, மரியாதை செய்யத்தக்கவர்களையோ கண்டால், தோளில் துண்டு போட்டிருந்தால் உடனே அதை கையில் எடுத்துக் கொள்வது கீழக்கரையின் மரபு. பெரியவர்களுக்குமுன்தோளில்துண்டு போட்டுக் கொண்டிருப்பது மரியாதை குறைந்த செயல் என்பது அவர்கள் கொள்கை.
நம்பிக்கை கீழக்கரை மக்கள் ஒரு விசயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள். ஒருவனுக்கு ஒன்றைப் பெறுவதற்குத்
தகுதியிருக்குமானால், உலகமே எதிர்த்து நின்றாலும் திண்ணமாக அவன் அதை அடைந்தேதீருவான் என்பதாகும் அந்த நம்பிக்கை.
முன்னோர் உடை
கீழக்கரைமுன்னோர்களது உடை ஒரு பனியன், சால்வை, அகலமான பெல்ட் (வார்ப்பட்டி), தொப்பி, குடை, மிதியடி அவ்வளவே (இந்த மிதியடியும் ஒரு விசேஷம்: மணற்பாங்கான கிழக்கரைத் தெருவில் கஷ்டமில்லாமல் நடக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.) Y
鷲
 

மானா மக்கீன் INI 97
Y
இடியப்பம்
இட்லி தமிழருக்கு எப்படியோ அப்படியே இடியப்பம் (இடியாப்பம்) கீழக்கரை மக்களுக்குத் தினமும் கலையிலும் இரவிலும் மாசிச்சம்பல் (துவையல்) துணைக்கு இருக்கும். மோரிலும் பிசைந்து உண்பர். "கேப்பை இடியப்பம்’ என்றும் ஒன்று உள்ளது.
சிலர் வேடிக்கைக்காக, “இந்தக் கீழக்கரை இடியப்பச் சிக்கலை எப்படிதீர்ப்பது?” என்று கேட்பார்கள்.
鷲
பாட்டப்பணம்
தமிழ் நாட்டாருக்கு - குறிப்பாகத் தென்புலத்தாருக்கு - இயற்கை தருகின்ற ஓர்அற்புத அமுதபானம் பதநீர்
பதநீரின் அருமையான குணநலன்களை கிழக்கரை மக்கள் தெளிவாகத் தெரிந்திருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் பனைமரத்தோட்டங்களை குத்தகைக்கு விடும்போது பாட்டப்பணம் சற்று குறைந்து விட்டாலும் | பரவாயில்லை, தங்களுக்கு தினசரி மாலையில் இவ்வளவு பதநீர் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் மரம் ஏறுகிறவர்களுக்குக் கொடுப்பது முன்னாட்களில் பழக்கமாக இருந்தது. இப்பொழுது இந்த நிபந்தனைஇல்லையென்றாலும், வழக்கில் அந்தப்பழக்கம் தொடர்ந்து வருவது மரம் ஏறுகின்ற நாடார்மக்களுக்கும் முஸ்லிம் பெருமக்களுக்கும் இடையிலான பாச உணர்வையும் நேசப் பழக்கத்தையும் காட்டுகிறது.
ଖୁଁ

Page 52
98 ம) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
தாலாட்டு
யார் யாரோ எப்படியெப்படியோதாலாட்டு இசைத்தாலும், கீழக்கரை மாந்தரின் தாலாட்டு ஒரு வரிக்குள் அடங்கிவிடுகிறது. வரிகூட இல்லை. “லாயிலாஹா இல்லல்லாஹ” என்ற ஒரே வாக்கியம், ஒவ்வொரு தாயிடமிருந்தும் எத்தனையெத்தனையோ வடிவங்களில் புறப்படுகிறது.
பிள்ளைத்துயிலின் அக்கரையும், தன் ஈமானின் |சிரத்தைமிகு பக்தியும், பெருமிதம் பொங்கும் அன்பும் கலந்து நயமாய் ஒலிக்கும் குரலே அழும் குழந்தையை ஆற்றவும்,துள்ளும் Apej60p660A/ துயில வைக்கவும் போதுமானதாக அமைந்துவிடுகிறது.
இந்தத் தாலாட்டு திக்ரோடு சில சமயங்களில்
பைத்துகளும் கைகோர்க்க குழந்தை ஆனந்தமாய் சயனிக்கும், இதோ அந்தத் தாலாட்டு.
தாதார யாஅல்லாஹ்! பொன்னத்தா பூவத்தா! பொருளத்தா அருளத்தா! ஆளைத்தார் அன்பைத்தா! அல்லாஹ் எனக்கு நன்மையைத்தா!
-என்று இறையைவேண்டும் அற்புதத் தாலாட்டுப்பாடல்.
தகவல் : எஸ்.எம். மஹபூப் எம். மதார், கிழக்கரை
鷲

9 9 மானா மக்கீன் i୍]]
வாழ்க்கை
கீழக்கரை மக்கள் எப்பொழுதுமே அமைதி வழியை | நாடுகிறவர்கள். தேவைப்படுமானால் எவ்வளவு விலை கொடுத்தாவது வம்பிலிருந்து ஒதுங்கிச்சென்று விடவே விரும்புவார்கள்.
மேதை ஹென்றி கூறினார்:- ‘அமைதிஎன்பதுமதிப்புயர்ந்த நகை. சத்தியத்தைத்தவிர எதைக் கொடுத்தாவது நான் அதை வாங்க விரும்புகிறேன்"
இதுவே, கீழக்கரை மக்களின் சராசரி வாழ்வுப் பாதை.
பல்லாக்கு
கீழக்கரையின்பழமொழிகளும்உயர்ந்தது.அபிலாசைகளை உள்ளத்தில் தேக்கியதாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக -
ஏராளமான செல்வம் தேடி உயர்ந்த வாழ்வுக்கு மனக்கோட்டை கட்டிக்கொண்டிருப்பார். எனினும் அதற்கு உரிய ஆற்றலும் முயற்சியும் இல்லாதவரைப் பார்த்துச் சொல்லும் பழமொழி:
“பல்லாக்கு ஏற பவிசு உண்டு
உன்னி ஏறத்தான் சீவனில்லை.”
உருப்படியான தொழில் எதுவும் செய்யாமல்
வெறுமனே திண்ணைப் பேச்சிலே பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பவருக்குச் சொல்லும் வசைச்சொல்:
“பேச்சு பல்லக்கு - தம்பி கால்நடை”
鹽

Page 53
100 பா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
பிறந்தவீடு
பெண் மக்களைப் பெற்றோர் மணம் செய்து அனுப்பி விடுவதில்லை. காலமெல்லாம் பெண்ணுக்குப் பிறந்த வீடுதான். சீதனம் பெற்ற வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தினாலும், உடன் பிறப்புக்களோடு ஒன்றாய் வாழ்ந்தாலும் சரி, பெண்ணுக்குப் பிறந்தகத்தில் பூரண செல்வாக்குண்டு. தன்னுடன் பிறந்தவர்கள் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் திருமணம்'கொடுக்கல் | வாங்கல் மற்றும் குடும்பம் அமைப்பது வரை அனைத்திலும்
பெண்பெற்றோருக்குச் சமமான பொறுப்பு வகிக்கிறாள்.
鷲
தோட்டக் குளிப்பு
எந்த இலட்சாதிபதியானலும் சரி, எந்த நாட்டில் ஷவரில் |குளிப்பவராய் இருந்தாலும் சரி, ஊரிலே ‘தோட்டக் குளிப்புதான் அவருக்கு முக்கியம்! நல்ல நந்நீர்க் கிணறுகள் எல்லாத் தோட்டங்களிலும் உள்ளன.
இளநீர் இனியநீர்!
தினமும் இளநீர் பருகுவது கீழக்கரைவாசிகள் பழக்கம்,
விருந்தாளிகளையும் அப்படியே உபசரிப்பர். அங்கே செல்வோர் உடலுக்கு நலந்தரும் இளநீரைதவற விடாதீர்கள்.
鷲

U
விடைபெறும் வேளை
கீர்த்திமிகு கீழக்கரை இன்றைய அமைப்பில் முஸ்லிம் சமுதாய மக்களை மட்டும் கொண்ட ஒரு பேரூர் அன்று.
வட்டாரங்கள் (வார்டுகள்) 3-லும் 5-லும் சொக்கநாத கோவில் தெரு
7-இல் பனக்காட்டு ஆதி திராவிடர் தெரு, நாடார் கடைத்தெரு -
8-இல் பன்னாட்டார் தெரு
9-இல் கிழக்கு நாடார் தெரு (முத்துசாமிபுரம் -
12-இல் பரதவர் தெரு -
14-இல் வாணியர் தெரு
15-இல் மீனாட்சிபுரம்.
வடக்கே, பொற்கொல்லர்கள் பகுதியும். அதற்கு மேலே முக்குளத்தூர் குடியிருப்புகளும் உள்ளன.
நாடார்க் குடியிருப்புகளும் சமீப காலத்தில்
வளர்ந்துள்ளன.
- இந்தப் பேருண்மைகளின் பின்னணியில், அற்புதமானதொரு மத நல்லிணக்க வாழ்வு கீழக்கரையைச் சுற்றி பரிணமித்துள்ளது.
எனது நூலுக்கு “கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்” எனத் தலைப்பிட்டுவிட்டு மேற்கண்ட சமூகத்தவர்களது

Page 54
102 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
பண்பாட்டுப் பழக்கவழக்கங்களையும் நான் பார்த்திடாது போனால் பண்பாகுமா? அது தவறல்லவா!
எனினும், இவ்வாய்வானது, இந்த அவசர யுகத்தில்அதுவும் ஒருவிழாவின் போது வெளியாக வேண்டிய இக்கட்டில்- மிகவும் சுருக்கமாக அமைய வேண்டியிருந்ததால் முஸ்லிம் சமுதாயத்தவரது பண்பாட்டுக் கோலங்களை மட்டும் வரைவதுடன் நிறுத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இதனால் யாருக்காவது மனக்குறையோ ஆதங்கமோ ஏற்பட்டால் என்னைப் பெருமனது கொண்டு மன்னித்திட வேண்டும்.
வழக்கம் போல எனது ‘குருவிக்கூட்டுக் குடும்ப நிழல்’ துணைவியார்), அருமைச் செல்வங்கள் அஞ்சானா (தற்சமயம், பங்களாதேஷ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில், அஜீம் மற்றும் பெயரைத் தெரிவிக்க விரும்பாத தமிழகத்தின் பல பெண்மணிகளின் ஒத்துழைப்பு எனக்குக் கிடைக்கப்பெற்றது.
அனைத்துப் புகழும் அவன் ஒருவனுக்கே.
நீங்கக் கட்டாயம் என்னோட தொடர்பு வைக்கணும். வைப்பீங்களா?
விடைபெற அனுமதியை விரும்பி.
நன்றியுடன்,
B-54- என்.ஹெச்.எஸ். பிளாட்ஸ், எப்பொழுதும் (தேசிய வீடமைப்பு வளாகம்) எழுத்துப்பணியில் மாளிகாவத்தை, - மானாமக்கீன்
கொழும்பு 10, இலங்கை தொ.பே. 332225. 2000-12-30

மானா மக்கீன் 103
நூல்கள். நூல்கள். நூல்கள்.
* இவ்வுலகில் மனிதனுக்குக் கிடைக்கும் சிறந்த நண்பன் ஒரு
நல்ல புத்தகமேயாகும்.
- அறபுக் கவிஞர் முதருப்பி. * எந்த இல்லத்தில் நூல்கள் இல்லையோ அது உயிரில்லாத
சவம் போன்றது.
- சாக்ரடீஸ்,
* இருபது ஆண்டு காலத்தில் கிடைக்கும் அனுபவத்தை விட . ஓராண்டுகால நூலாராய்ச்சி அதிகமாகக் கற்றுத்தந்து
விடுகிறது.
- ஸ்காட்டிஸ்.
* நல்ல நூல்கள் இளமையில் வழிகாட்டி, முதுமையில்
பொழுதுபோக்கு, தனிமையில் உற்ற நண்பன், கவலை போக்கும் தோழன்.
- ஸர் ஜான்லீக்,
* நான் தேடிய அமைதி எனக்கு எங்கும் கிடைக்கவில்லை.
இறுதியில் அது ஒரு மூலையில் கிடந்த நூலில் கிடைத்தது.
. பீ.ஏ. கேம்ப்ஸ்.
* பழைய ஆடைகளை அணிந்து கொண்டாலும் புதுப்புது
நூல்களை வாங்கத் தவறாதீர்கள்!
- ஆஸ்டன் பிலிப்ஸ்.
அவ்வப்பொழுது என் கண்களில் பட்டதை தொகுத்திருக்கிறேன். தாங்களும் பார்வையிட்டு பதித்திடுக மனத்தில்! நன்றி!
- D6 ಊಹಿáಡೆ

Page 55
104 ா) கீழக்கரை பண்பாட்டுக் கோலங்கள்
ானா மக்கின் பூல்கள்
லைட் ரீடிங் (முதல் பாகம்)
- விற்பனையாகி நூலகங்களில் மட்டும் லைட் ரீடிங் (இரண்டாம் பாகம்)
- விற்பன்ையாகி நூலகங்களில் மட்டும் பேனா முனையில் அரை நாற்றாண்டு
(திருச்சி குலாம் ரசூலின் வாழ்க்கை வரலாறு - விற்பனையில்) முஸ்லிம் டைஜஸ்ட் (உலகளாவிய தகவல் மஞ்சரி)
- இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது. என்னைக் கேளுங்கோ!
விற்பனையாகி நூலகங்களில் மட்டும் இளைய தலைமுறையினருக்கு இனிக்கும்
இஸ்லாமியக் கதைகள் - இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது. இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார்
- விற்பனையாகி நூலகங்களில் மட்டும். இரு சமூகங்கள் - இரு கண்கள்
- இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது. மானா மக்கீன் கதை மலர்கள் - விற்பனையில் தியாகத்திருநாள் கதைகள் - விற்பனையில் ஈகைப்பெருநாள் கதைகள் - விற்பனையில்
இலங்கை-கீழக்கரை இனிய தொடர்புகள்
- விற்பனையாகி நூலகங்களில் மட்டும்.
நீடூர் நெய்வாசல் நெஞ்சங்கள்
- விற்பனையாகி நூலகங்களில் மட்டும்.
 
 
 


Page 56


Page 57