கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசியலமைப்பாக்கச் சிந்தனைகள்

Page 1


Page 2

ろ
cease அரசியலமைப்பாக்கச்
O0000 சிந்தனைகள்
o o a
மூன்று அரசியலமைப்புக்களதம்
'முடியாமைக்கான காரணங்களின் கருத்து வடிவம்.
வி. ரி. தமிழ்மாறன்
LL.B.(Hons.), LL.M., & Attorney-at-Low முதுநிலை விரிவுரையாளர்,
சட்ட பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்.
雪 மதுரி மலர்வகம்
༄༽

Page 3
/*
-།༽
Constitution Making
– Some ficÍlccfÍOns
V. T. Thamilmaram
Senior Lecturer, Gr.I, Faculty of Law, University of Colombo,
SRI LANKA.
First Published : November 1999.
Maduri Malarvagam
ISBN 955-8222-01-1
Published by : Maduri Malarvagam,
215, C/1/3/ Park Road, Colombo - 5, SRI LANKA.
Typesetting & : Professional Publishers
Cover Design 215, F/2/6 Park Road,
Colombo - 5, SRI LANKA. @:508180/593331
Printed by : Unie Arts (Pvt.) Ltd.,
Colombo - 13. @330195.
Price : Local RS. 150/-
Other Countries: US $10
للمرے


Page 4

(என்னுரை
அரசியல் பற்றிய அறிவானது சட்ட, அரசறிவியல் மாணவர்களுக்கு மட்டுமின்றி அன்றாடவாழ்வின் ஒவ்வொரு சந்திப்பிலும் நாம் புகுந்து எழுந்து வரும் சந்து பொந்துகளை விளங்கிக் கொள்வதற்கான விளக்கத்தை வரலாற்றுப் பதிவுகளோடு சேர்த்துத் தருவதுமாகும். இது பாடமாக இல்லாமல் படிப்பினையாகவே செயற்பட வல்லது. எனவே உரிய நேரத்தில் இது பற்றிய தெளிவு நூலொன்று தென்படுதல் நல்லது என்று நினைத்து நானெடுத்த முயற்சியின் செயற்பாடிது.
எமது நாட்டில் அரசியலமைப்பு மாற்றம் பற்றிய பேச்சடிபடத் தொடங்கிய 1994இன் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த நான் 1999இன் இறுதிவரை இழுத்தடித்தேன் இதனை என்றால் இது எனது வழக்கமான பாணியல்ல என்பது வாசகர்களுக்கு நன்கு தெரியும். இருந்தும் ஏதோவொன்று அரும்பாகி, பிஞ்சாகிக், காயாகிக் கனியும் என்ற காத்திருப்பின் விளைவே இந்த இழுத்தடிப்பாகும் என்பதை மனதில் கொள்ளவும். இனியும் ஏமாறத் தேவையில்லை என்ற நிலை நிச்சயமான பின்னரே நூலை முற்றாக்க முடிவு செய்தேன். அதிவிரைவில் அச்சாகி உங்களைச் சீண்டிப் பார்க்க வருகின்றன எனது சிந்தனைகள். இன்னொரு முறையும் அலசிப் பார்க்கலாம் என்ற ஆர்வத்தோடு இவை அரங்கேறுகின்றன.
இது எனது ஆறாவது தமிழ் நூல் . மாணவர்கள் நெருக் கடிகளை எதிர்நோக்குகின்ற போது என்னையும் நெருக்குவார்கள். விரக்தியினை வெளிக்காட்டி விடை தேடுவார்கள். அது என்னை உட்கார வைக்கும், சில பக்கங்களைப் பிரசவிக்க வைக்கும். எனவே முதலில் அவர்களே நன்றிக்குரியவர்கள். உருவத்தை மட்டுமின்றி உள்ளடக்கத்தைக்கூட கேள்விக்குட்படுத்தப் பயின்று வரும் என்னருமை மகள் மதுரி, வடிவமைப்பில் உதவிய திருமதி சியாமா லெஸ்லி, செல்வி, மேரி சுரேகா மனோகரசீலன் ஆகியோருக்கும் அன்பு கலந்த எனது நன்றிகள்!
நூலை அழகுற, இம்முறை அதிவிரைவில் அச்சிட்டுதவிய "யுனிஆட்ஸ்" நிறுவன அதிபர் நண்பர் விமலேந்திரனுக்கும் வழக்கம் போலவே வரவேற்கக் காத்திருக்கும் வாசகர்களுக்கும் என்றுமே மேலான என் நன்றிகள் உரித்தாகட்டும். சட்ட பீடம், வி. ரி. தமிழ்மாறன் கொழும்புப் பல்கலைக்கழகம். கார்த்திகை 1999.
num

Page 5
"All Constitutions aetheheirsofthelast as well. as the testators of the future.
-Jennings.
Violence is essentially wordless and it can begin only where thought and rational communication have broken down"
- Thomas Merton
Animals fight, but they don't wage war. Only man-unique : among the primates-practises the large-scale, deliberate
and enthusiastic destruction of his fellow creatures.
- Hans Magnus Enzensberger.
The ultimate resource of anation is the character ... of the people.
. - Nani. A. Palkhiwala.

உள்ளுக்குள்ளே. 49 OO O 9 40 4p 40 5 O 4 U s u E O O g O N O 2 g e ...
சுதந்திர இலங்கையின் அரசியலமைப்புகளும்
- வெற்றிகரமான தோல்விகளும் . 01. - 1947 இன் சோல்பரி அரசியலமைப்பு - யாப்பின் உள்ளடக்கமும் அதன் ஏற்புடைமையும் - அரசியலமைப்பை நீக்குவதற்கான காரணங்கள் - 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு - யாப்பின் உள்ளடக்கமும், ஏற்புடைமையும் - அரசியலமைப்பை அகற்றுவதற்கான நியாயங்கள் - 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு - உள்ளடக்கமும், உறுதிப்பாடும் - அகற்றப்படுவதற்காள அவசியங்கள்
- முடிவுரை
1. அரசியலமைப்பொன்று எப்படி அமைதல் வேண்டும்?
புதியபோக்குகளும்கிந்தனைகளும். 65 - அரசியலமைப்பொன்றின் முக்கியத்துவம் என்ன? - கருத்தொருமை காணும் முறை
- அரசியலமைப்பும் பன்மைத்துவக் கலாச்சாரமும்
1.பெரும்பான்மை ஆட்சியும் மனித உரிமைகளும். 118
- ஜனநாயகமும் பெரும்பான்மையும்
- பெரும்பான்மை வாக்குகள் எப்போது பேராபத்தாகும்?
- பெரும்பான்மை ஆட்சிக்கெதிரான சில பாதுகாப்புக்கள்
(அ) அரசியலமைப்பு முதன்மைத்துவம் (ஆ) நீதிமுறை மீளாய்வுப் பாதுகாப்பு (இ) வலுவேறாக்கம் தரும் பாதுகாப்பு (ஈ) கண்காணிப்புகளும் சமப்பாடுகளும்
V. SELECTED BBLOGRAPHY

Page 6
996 - 1999ல99தி ஒளிபிசிராகி ரஓெபிடு ரயிைஞஓயmஞge &989「13城府adDSeus P國城ugus 劇6홍「1니19 3ussar편(5%uis的
 

1948இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்பு இலங்கை மூன்று அரசியலமைப்புக்களைக் கண்டுள்ளது. தற்போது நான்காவது யாப்புப் பற்றியும் பேசப்படுகின்றது. இது அரங்கேறுமா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் மூன்று அரசியலமைப்புக்களின் மூலமும் நாம் ஏதாவது அனுபவப் பாடங்களைப் பெற்றிருக்கின்றோமா என்பதை இந்த அத்தியாயத்தில் அலசிப் பார்த்தல் பயனுடையது. 50 வருடத் தோல்விக்கான காரணங்களை எளிதில் புரிந்துகொள்வதற்கு இந்த அலசல் நிச்சயம் உதவுமென்றே நம்புகின்றேன்.
முதலாவது அரசியலமைப்பு சுதந்திரத்துக்கு முந்தியது. அத்துடன் அது பிரிட்டிஷாரால் ‘கட்டளைச்சட்ட வடிவில்' (Order-inCouncil) வழங்கப்பட்டது. அதாவது அது இலங்கைக்கென இலங்கையரால் தயாரிக்கப்பட்ட ஒன்றல்ல. அது அதனது ஆரம்ப வடிவத்திலேயே கிட்டத் தட்ட 24 வருடங்களுக்கு நடைமுறையிலிருந்தது. இரணி டாவது அரசியலமைப்பு பொதுத்தேர்தல் ஒன்றின் மூலம் கோரிப்பெறப்பட்ட அதிகார ஆணையின் மூலம் (mandate) 1972இல் ஆக்கப்பட்டது. இதனை அரசியலமைப்பு நிர்ணய சபை என்ற அமைப்பு தயாரித்து நிறைவேற்றியது.
மூன்றாவது அரசியலமைப்பானது தனக்கு முந்திய அரசியலமப்பில் கூறப்பட்டிருந்தபடி மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மை கொண்டு நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
0.

Page 7
(உண்மையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிடம் அந்த நேரம் ஆறிலைந்து பங்குபெரும்பான்மை இருந்தமை குறிப்பிடத்தக்கது). இந்த அரசியலமைப்பு தற்போது 21 வருடங்களைப் பூர்த்தி செய்துகொண்டிருக்கின்றது. இந்த 21 வருடங்களுள் 17 வருடங்கள் ஒரே கட்சியே பதவியிலிருந்தது என்பதையும் கவனத்தில் கொள்வோம். இன்னும் எத்தனை வருடங்கள் தாக்குப் பிடிக்கும் என்பது நிச்சயமற்றுள்ளது. 1994இல் நான்காவது
அரசியலமைப்புக்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன.
கடந்த 50 வருட சுதந்திர இலங்கையின் சுதந்திர அரசாங்கத்தில் கூடிய காலம் ஜீவித்திருந்தது குடியேற்றவாதிகள் எமக்காக ஆக்கித் தந்துவிட்டுப் போன அரசியலமைப்பேயாகும். இந்த யாப்பின் கீழ் ஆறு பொதுத் தேர்தல்கள் நடாத்தப்பட்டுள்ளன. ஐந்து தடவைகளில் அரசாங்கம் மாற்றப்பட்டது. மாறாக, இந்த மண்ணின் மைந்தர்களினால் ஆக்கப்பட்ட இரண்டு யாப்புக்களும் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தினால் ஆக்கப்பட்டவையாகும்.
அரசியலமைப்பு நிர்ணயசபை, ஆறிலைந்து பெரும்பான்மை எல்லாம் சம்பந்தப்பட்டிருந்தன. இருந்தும் என்ன பயன்? அவற்றை ஆக்கியோரது பதவிக்காலத்துக்கு அப்பால் அவற்றால் தாக்குப் பிடிப்பது பெரும்பாடாய்ப் போய்விட்டது. அந்நியர் ஆக்கித் தந்ததைவிட நாம் ஆக்கியது ஏன் விரைவில் நிராகரிக்கப்பட வேண்டியதாயிற்று? இதையிட்டு ஏன் எங்களது அரசியல்வாதிகள் கவனஞ செலுதீத வில்லை? வாகி காளர்கள் ஏணி
வாளாவிருக்கின்றார்கள்?
02

1947 இன் சோல்மறி அரசியலமைப்பு
சிற்று வரலாற்று நோக்கில் பார்ப்போம். அரசாங்க சபையின்
உறுப்பினர்களால் 1943 ஜூன் மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட பணிதான் பொறுப்புவாய்ந்ததும் சுதந்திரமுடையதுமான இலங்கைக்கான அரசியலமைப்பினை வரைதல் என்பது. இதற்கான திட்டம் அமைச்சர்கள் சபையினால் தயாரிக்கப்பட்டது. உள்நாட்டு விடயங்களில் சுயாட்சியை வழங்குவதற்கு உத்தரவாதம் பிரித்தானிய முடியினால் வழங்கப்பட்டிருந்தபடி, 1943 மே மாதத்தில் வெளியிடப்பட்ட முடியின் பிரகடனம் இந்த உத்தரவாதத்தைச் செயற்பாட்டுக்கு விட வழிசெய்தது. இப்பிரகடனத்தில் மேலும் கூறப்பட்டிருந்ததாவது: "அமைச்சர்கள் சபை இடைக் காலத்தில் உருவாக்கும் பூரண அரசியலமைப்புத் திட்டத்துக்கான அத்தகைய யோசனைகள் யாவும் பொருத்தமான ஆணைக்குழு அல்லது
மகாநாடொன்றினால் ஆராயப்படும்.
அத்தகைய அரசியலமைப்புத் திட்டம் எதனையும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுதல் என்பது இரண்டு விடயத்தில் தங்கியிருக்க வேண்டும் எனப்பட்டது. முதலாவதாக, மேற்சொன்ன பிரகடனத்தில் கூறப்பட்டிருக்கும் குறிப்பிட்ட சில நிபந்தனைகளுக்கு ஒத்திணங்குதல் வேண்டும். இரண்டாவதாக, அரசாங்க சபையின் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்களால் பின்னதாக அத்திட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.இவையே அந்த இரண்டு நிபந்தனைகளுமாகும். அப்போதிருந்த அரசாங்க சபையானது 1936இல் தெரிவு செய்யப்பட்டிருந்ததாகும். இதனிடமே அரசியலமைப்புத்திட்டம் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட
வேண்டியிருந்தது.
03

Page 8
இலங்கை பன்மைத்துவத்தன்மை கொண்டதொரு நாடென்பது அப்போது கேள்விக்குட்படுத்தப் பட்டிருக்கவில்லை. அச்சபையில் இருந்த பிரதிநிதிகளின் விபரம் வருமாறு:
அட்டவணை 1
1936
கரையோரச் சிங்களவர் 31
கண்டியச் சிங்களவர் 08
இலங்கைத் தமிழர் 08 இந்தியத் தமிழர் 03
ஐரோப்பியர் 05十
முஸ்லீம்கள் 02--
பறங்கியர் 0.1-
+ என்பது நியமன உறுப்பினர்களைக் குறிப்பதாகக் கொள்க.
இதில் நான்கில் மூன்றில் பங்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெறுதல் என்றால் 44 வாக்குகளைப் பெற வேண்டும். எல்லாச் சிங்கள வாக்குகளும் மட்டுமிருந்தாலும் போதாது. சிறுபான்மைச் சமூகத்தவர்களது வாக்குகள் சிலவும் தேவைப்பட்டன.
எந்தவிதமான பிரிவினை வேறுபாடுகளுமின்றி அரசாங்கசபை மிகவும் சிறந்த தேசாபிமானிகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதன் அமைச்சர்கள் சபையானது இந்த நான்கில் மூன்று பங்கு என்ற தேவைப்பாட்டினை 'மிகச் சிக்கலான நிபந்தனை” என்று வர்ணித் திருப்பதை அவர்களது அறிக்கையிலிருந்து காணக்கிடக்கின்றது.
04

அமைச்சர்கள் சபையின் திட்டமானது சேர். ஐவர் ஜென்னிங்ஸினால் தயாரிக்கப்பட்டது. அவர் அப்போது இலங்கைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் பிரகடனத்தை வெளியிட்ட தினத்திலிருந்த அவர் அமைச்சர்கள் சபையின் கெளரவ அரசியலமைப்பு ஆலோசகராக இருந்து வந்தார். அவரது தயாரிப்பில் பொதுமக்கள் பங்களிப்பு என்று எதுவுமிருந்திருக்கவில்லை. அத்துடன் அது எக்கட்டத்திலும் மக்களிடம் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப் படவுமில்லை. அமைச்சர்கள் சபையைப் பொறுத்தவரையில் அது தானே திட்டத்தைத் தயாரித்து அதன் கீழ் தானே ஒரு பொறுப்பு வாய்ந்த சுய அரசாங்கத்தைப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. அமைச்சர்களுக்கு இருந்திருக்கக் கூடிய ஒரேயொரு மட்டுப்பாடென்றால் அது அவர்களது திட்டம் அரசாங்க சபையில் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையைப் பெறவேண்டும் என்ற தேவைப்பாடு மட்டுமே எனலாம். சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறாமல் அந்த 44 வாக்குகளைப் பெறமுடியாமல் இருந்தது. இதுதான் மட்டுப்பாடெனலாம்.
அமைச்சர்கள் சபையிலோ அல்லது அரசாங்கசபையிலோ உறுப்பினர்களுக்கிடையில் அரசியல் ரீதியில் எவ்வித கருத்து வேறுபாடும் இருந்திருக்கவில்லை. எந்தவொரு உறுப்பினரது கருதிதும் புறக் கணிக் கப் பட்டிருக்கவுமில்லை. சிறுபானமையினரைப் பொறுதி தளவில் , சிங் களப் பெரும்பான்மையினரது ஆட்சியினால் விழுங்கப்பட்டு விடுவோம் என்ற அச்சமிருந்தபோதிலும் சட்டவாக்க அதிகாரத்தின் மீதான போதுமானதும் வலுவுள்ளதுமான மட்டுப்பாடுகளுடன் திருப்திப் பட்டவர்கள் போல் காணப்பட்டனர்.
ஜூலை 1944இல் பிரிட்டிஷ் அரசாங்கம் சோல்பரிப் பிரபு தலைமையில் ஆணைக்குழு ஒன்றை நியமித்தது. இவர் முன்னர் கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர்.
05

Page 9
அமைச்சர்கள் சபையின் அரசியலமைப்புத் திட்டத்தினை ஆராயுமாறும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் அக்கறையுள்ள எல்லாப் பிரிவினருடனும் கலந்தாலோசிக்குமாறும் குறிப்பாகச் சிறுபான்மையினரின் நலன்கள் தொடர்பான ஆலோசனைகளை நடாத்துமாறும் அமைச்சர்கள் சபை தயாரித்துள்ள திட்டத்தினை முன்னிறுத்தி இவ்வாலோசனைகள் நடைபெற வேண்டும் என்றும் சோல்பரிப் பிரபுவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இவர் மூன்றரை மாதங்களை இலங்கையில் செலவிட்டார். இக்காலப்பகுதியில்
பகிரங்க அமர்வுகளில் சான்றுகள் பதியப்பட்டன.
ஆணைக்குழு தனது அறிக்கையில் அடிப்படையில் அமைச்சர்கள் சபையின் திட்டத்துடன் உடன்பட்டிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தீர்மானங்களை உள்ளடக்கிய வெள்ளையறிக்கை ஒன்று 1945 ஒக்டோபர் 31இல் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையிலிருந்த யோசனைகளை அரசாங்க சபையானது 51 வாக்குகள் ஆதரவாகவும் 3 வாக்குகள் எதிராகவும் பெற்ற நிலையில் ஏற்றுக் கொண்டது.
இரண்டு இந்தியத் தமிழர்களும் ஒரு சிங்களவருமே எதிர்த்து வாக்களித்தவர்களாவர். 1946 மே 15ஆந் தேதியன்று இலங்கை(அரசியலமைப்பு) கட்டளைச்சட்டம் சோல்பரி ஆணைக்குழுவின் விதப்புரைகளுக்கு வலுக்கொடுக்கும் விதத்தில் முடியினால் வெளியிடப்பட்டது. இக்கட்டளைச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகள் வெவ்வேறுகாலகட்டத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. இதன்படிக்கு முதலாவது பிரதிநிதிகள்சபைக் கூட்டம் 1947 ஒக்டோபர் 14ஆந் தேதியன்று நடைபெற்றது.
06

அட்டவணை I
கட்சி வென்ற கிடைத்த வாக்கு
ஆசனங்கள் வாக்குகள் வீதம்
ஐ.தே.க. 42 75Ꭵ Ꭺ82 39.8 6l).9F.5F.5。 10 204,020 10.8 இதமிழ் காங்கிரஸ் 07 82.499 || 44 இ. இந்திய
காங்கிரஸ் 06 72,230 3.8 போல்ஷ்விக்லெனி
னிஷ்ட் கட்சி 05 113,793 6.0 கம்யுனிஷ்ட் கட்சி 03 70,331 3.7 தொழிற் கட்சி 0. 38,932 2. சுயேட்சைகள் 2. 549,381 29.
இந்த முடிவுகளின்படி டி. எஸ். சேனநாயக்கா ஆகப்பெரிய கட்சியின் தலைவர் என்ற வகையில் அரசாங்கத்தை அமைக்கும்படி ஆளுநரால் அழைக்கப்பட்டார்.
அவரது அமைச்சரவையில் ஐ. தே. கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்களும் இரண்டு சுயேட்சைகளும் தொழிற் கட்சியின் ஒரேயொரு உறுப்பினரும் அங்கம் வகித்தனர். சுயேட்சைகள் இருவரும் தமிழர்களே என்பதைக் கவனிக்க வேண்டும். பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்காத அல்லது போதிய பிரதிநிதித்துவம் பெற்றிருக்காத முக்கிய நலன்களைப் பிரதிநிதித்துவப் படுதீத வென ஆறு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் வாக்குகளும் சுயேட்சைகளின் வாக்குகளுஞ் சேர்ந்து அரசாங்கத்துக்குச் சபையில் இலகுவான பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுத்தன.
07

Page 10
அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து டொமினியன் அந்தஸ்தைப் பெறுவதற்கான முயற்சிகளும் தீவிரமடையத் தொடங்கின. பிரிட்டனின் சார்பில் ஆளுநரும் இலங்கையின் சார்பில் பிரதமரும் 1947 நொவெம்பர் 11ஆந் தேதியன்று மூன்று உடன்படிக்கைகளில் கொழும்பில் கையொப்பமிட்டனர். அவையாவன: பாதுகாப்பு விடயத்தில் இரண டு நாடுகளுக்குமிடையில் உள் ளதான உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்கான பாதுகாப்பு உடன்படிக்கை, வெளி விவகாரங்களில் உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்கான வெளிவிவகார உடன்படிக்கை, குடியேற்ற நாடுகளுக்கான அமைச்சரின் சம்மதத்துடன் நியமிக்கப்பட்டவர்களான பொதுச்சேவை ஊழியர்கள் தொடர்பான பொறுப்புக்கள் அனைத்தையும் இலங்கைக்கு மாற்றுவதான பொதுச் சேவை ஊழியர்கள் உடன்படிக்கை என்பவையாகும். பிரிட்டன் முன்னர் வலியுறுத்தி வந்த நான்காவது விடயம் ஒன்றுமிருந்தது. அது யாதெனில் சிறுபான்மையினர் பாதுகாப்புக்கென நான்காவது உடன்படிக்கை ஒன்றும் செய்துகொள்ளப்பட வேண்டும்
என்பதாகும்.
ஆனால் இந்த வலியுறுத்தல் சுதந்திரத்துக்கான ஒரு முன்நிபந்தனையாகவும் பேசப்பட்டது. ஆனால் அரசியலமைப்பில் சிறுபான்மையினர் பாதுகாப்பு போதுமானதாக இருக்கும் என்று திருப்திப்பட்டதின் பேரில் இதனை மேற்கொண்டு வலியுறுத்த பரிட்டிஷ் அரசாங்கம் விரும்பவில்லை.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 1947 நொவெம்பர் 13ஆந் தேதி ‘இலங்கை சுதந்திரச் சட்ட மூலம்’ என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. இரு சபைகளிலும் அது நிறைவேற்றப்பட்டதன் பின்னர் முடியின் சம்மதம் டிசம்பர் 10ஆந் தேதி வழங்கப்பட்டது. டிசம்பர் 19ஆந் தேதி 'இலங்கை (சுதந்திர) சட்ட கட்டளைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
08

மேற்கூறிய உடன்படிக்கைகள், சுதந்திரச் சட்டம், சுதந்திரக் கட்டளைச் சட்டம் என்பன குறிப்பிட்ட ஒரு தேதியிலிருந்து நடைமுறைக்கு வருமென அறிவிக்கப்பட்டது. அத்தேதியே 1948 பெப்ரவரி 4 ஆகும். 1946ஆம் ஆண்டின் அரசியலமைப்பு நீக்கப்படவில்லை. ஆனால் குடியேற்றநாட்டு அதிகாரத்தைப் பிரிட்டன் வெறுமனே கைவிடுவதாக இதன் மூலம் அறிவிக்கப்பட்டது.
1946ஆம் ஆண்டின் அரசியலமைப்பே குடியேற்ற நாடுகளுக்குச் சுதந்திரம் வழங்குவதற்கெனப் பிரிட்டன் அறிமுகப்படுத்திய வெஸ்ற்மின்ஸ்ரர் - உவைற் ஹோல் (Westminster - White Hall) DIT 5ff? (model) அரசியலமைப்புக்களில் முதலாவதாகும்.
இதற்கு எவ்வித கருத்தியல் ரீதியிலான அடிப்படை எதுவும் கிடையாது. எவ்வித சமூக, பொருளாதார இலக்குகளைக் கொணடதாக ஆக்கப்படவுமில்லை. அரசாங்கமொன்றுக்கு அவசியமான முதன்மை நிறுவனங்களை ஸ்தாபித்து அவற்றின் அதிகாரங்களை வரையறுத்ததன் மூலம் அரசாங்கமொன்றுக்கான அடிப்படைக் கட்டமைப்பை வழங்கியதாகவே அந்த அரசியலமைப்பு அமைந்திருந்தது.
அதனது ஏற்பாடுகளின்படி, வலதுசாரிக் கட்சிகளும்
இடப்பக்கச் சார்புக் கட்சிகளும் அமைச்சரவையில் இடம் பிடித்தன. தத்தமக்கு விருப்பமான வேலைத் திட்டங்கள் அவற்றால் நிறைவேற்றப்படுவதில் எவ்வித தடையுமிருக்க வில்லை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். சுதந்திர வர்த்தகக் கொள்கையும் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கையும் ஒரே நேரத்தில் நடைமுறையிலிருந்தன.
இது அறிமுகப்படுத் திய பாராளுமனி ற - நிறைவேற்றுத்துறை முறைமையானது வெற்றிகரமாக 1962ஆம் ஆண்டின் இராணுவச்சதி முயற்சிக்கெதிராகத் தாக்குப்பிடித்தது என்பது கவனத்துக்குரியது.
09

Page 11
அங்ங்ணமே 1971இல் இளைஞர் கிளர்ச்சிக்கு எதிராகவும் அது தாக்குப் பிடித்தது. அதேவேளை பாராளுமன்றத்திலான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோற்கும் அரசாங்கமொன்று பதவியகற்றப்படவும் பொதுத்தேர்தலில் தோற்கும் அரசாங்கம் பதவியகலவும் வழிசெய்யும் வகையில் இந்த யாப்பு நெகிழ்வானதாகவும் இருந்தது. (1960 மார்ச்சிலும் 1964 ஜுலையிலும் இரண்டு அரசாங்கங்கள் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுப் பதவி விலகின). 1952, 1956, 1960 மார்ச், 1960 ஜுலை, 1965 அரசாங்கங்கள் யாவும் அடுத்துவந்த தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டமையையும் கவனிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் அதிகாரங்கள் முக்கிய மூன்று துறை களுக்கிடையிலும்(சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை) தெளிவாகப் பிரிக்கப்பட்டிருந்தமை இந்த அரசியலமைப்பின் மிக உள்ளார்ந்ததோர் அம்சமாக இருந்தது. சட்டவாக்கத்தினரின் நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கான தமது மீளாய்வு அதிகாரத்தை நீதிமன்றங்கள் மிகவும் கவனமாகப் பிரயோகித்ததுடன் நிறைவேற்றுத் துறையோ அல்லது சட்டவாக்கத் துறையோ தமது அதிகாரங்களில் அத்துமீறி நுழையாதபடியும் அவை பார்த்துக் கொண்டன.
முறைப்படி நியமிக்கப்படும் நீதித்துறை ஊழியர்கள் அல்லாதோருக்கு நீதித்துறை அதிகாரத்தைப் பிரயோகிக்க வழிசெய்யும் சட்டங்கள் யாவும் செல்லுபடியற்றன என்று விளம்பப்பட்டன.இவ்விதமே குறிப்பிட்ட ஒரு வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதிகளை நீதியமைச்சர் நியமித்தபோது அந்நியமனம் செல்லுபடியற்றதென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதே வழக்கில் நீதிமன்றம்,விசாரணை ஒன்று தொடங்கிய பின்னர் சான்றுச் சட்டத்தின் விதிகளையோ அல்லது விசாரணை நடைமுறை தொடர்பான விதிகளையோ திருத்துதல் என்பது பாராளுமன்றம் தான் விரும்பிய தீர்ப்பினைப் பெறுவதற்கான திட்டமேயென்றும் தீர்ப்பளித்தது.
0

இந்த Liyanage வழக்குத்தான் பிரசித்திபெற்ற 1962 புரட்சிச்சதி வழக்காகும். இதில் ஆஜராகி வெற்றிவாகை சூடியதனால் அமரர் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் பெருமை சிங்கள மக்கள் மத்தியில் கொடிகட்டிப் பறந்தது. அரசியலமைப்புச்சட்ட மாணவர்களுக்கு மிக அடிப்படையான விடயமாக இந்த வழக்கு இன்றும் கற்பிக்கப்படுகின்றது.
"நிரந்தரமானதும் விட்டுக்கொடுக்காததுமான பெரும்பான்மை” ஒன்றின் ஆதிக்கத்துக்கும் அடக்குமுறைக்கும் ஆளாவோம் என அஞ்சிக் கொண்டிருந்த சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்குவதற்கென ஏதேனும் அரசியலமைப்புப் பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் பிரிட்டிஷ் அரசாங்கம் மிக்க கரிசனை கொண்டிருந்தது. இந்த அச்சம் இலங்கையிலிருந்த இன, மொழி, மதச் சிறுபான்மையினரிடையே இருந்தது என்பது இரகசியமான விடயமல்ல. எனவே அரசியலமைப்பு பின்வரும் ஏற்பாடுகளை நிரந்தரமாக உள்ளடக்கியதாக இருந்தது:
1. இன, மொழி அல்லது வேறேதேனும் விதமாகக் குறிப்பிட்ட அளவில் சிறுபான்மையினர் உள்ளதான இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தெரிவாகக்கூடிய விதத்தில் தேர்தல் தொகுதிகளை உருவாக்குதல்;
2. பிரதிநிதித்துவஞ் செய்யப்படாத அல்லது போதியளவு பிரதிநிதித்துவம் பெற்றிருக்காத சில நலன்களைப் பாதுகாப்பதற்கென பிரதிநிதிகள் சபையில் ஆறு நியமன உறுப்பினர்கள் இருத்தல், செய்யப்படுதலாகாது)
இருக்கக் கூடாது.

Page 12
3. இரண்டாவது சபையாக செனட்சபை இருக்கும். இதில் 15 பேர் பாராளுமன்றத்திலிருந்து தெரியப்படுவர். 15 பேர் ஆளுநரால் நியமிக்கப்பட வேணடும். இதிலும் சிறுபான்மையினருக்கு அனுகூலமிருந்தது;
4. பொதுத்துறை ஊழியர்களது நியமனம் தொடர்பில் முற்றிலுஞ்
சுதந்திரமாகச்
செயற்படவல்ல பகிரங்க சேவைகள்
ஆணைக்குழு இருக்கும்,
5. பிரிவு 29 இல் வழங்கப்பட்டிருந்த பிரத்தியேகப் பாதுகாப்பு.
ஐந்தாவது பாதுகாப்பாக யாப்பில் கூறப்பட்ட பாதுகாப்பு யாப்பின் 29ஆம் பிரிவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பிரிவு வருமாறு கூறுகின்றது:
29 (1) இக்கட்டளையின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, நாட்டின் அமைதி, ஒழுங்கு, நல்லரசாங்கம் என்பவற்றுக் காகச் சட்டம் ஆக்குவதற்குப் பாராளுமன்றம் தத்துவம் கொணடிருத்தல்
வேண்டும்.
(2) அத்தகைய சட்டம் எதுவும்:
(9ى)
(ஆ)
ஏதாவது மதத்தின் சுதந்திரமான பிரயோகத்தை தடைசெய்வதாக அல்லது மட்டுப்படுத்துவதாக, அல்லது
ஏதாவது ஒரு சமூகத்தின் அல்லது மதத்தின் ஆட்களைத் தகவீனங்களுக்கு அல்லது மட்டுப்பாடுகளுக்கு
உட்படுத்தும் அதேவேளையில் ஏனைய சமூகங்களின் அல்லது மதங்களின்
12

(@)
(3)
உட்படுத்தாதிருப்பதாக, அல்லது ஆட்களை அதே தகவீனங்கள் அல்லது
மட்டுப்பாடுகளுக்கு
ஏதேனும் சமூகத்தின் அல்லது மதத்தின் ஆட்கள் மீது ஏதேனும் சிறப்புரிமை அல்லது அனுகூலத்தை வழங்கும் அதேவேளையில் ஏனைய சமூகங்களின் அல்லது மதங்களின் ஆட்கள் மீது அதே சிறப்புரிமை அல்லது அனுகூலத்தை வழங்காதிருப்பதாக, அல்லது
ஏதேனும் மத அமைப் பொன்றின் அமைப்புவிதியினை அந்த அமைப்பின் ஆளும் அதிகார சபையினி சம்மதத்துடனன்றி மாற்றுவதாகவோ (இருப்பினும் ஏதேனும் மத அமைப் பொன்று சட்டத்துடன் ஒன்றிணைக்கப் பட்டதாக இருக்குமிடத்து, அத்தகைய மாற்றம் எதுவும் அந்த அமைப்பின் ஆளும் அதிகார சபையின் வேண்டுகோளின் படி அன்றிச் செய்யலாகாது. இருக்கக் கூடாது.
இப்பிரிவின் (2) வது உபபிரிவுக்கு முரணாக ஆக்கப்படும் சட்டம் எதுவும் அத்தகைய முரண்பாட்டின் அளவுக்கு வெற்றானதாதல் வேண்டும்.
13

Page 13
(4) இப்பிரிவின் கீழான தனது தத்துவங்களைப் பிரயோகிக்கையில் பாராளுமன்றமானது இக்கட்டளையின் ஏதேனும் ஏற்பாடுகளை அல்லது முடியின் ஏதேனும் வேறு கட்டளையினை அது இந்த நாட்டுக்கு ஏற்புடையதாகையில் திருத்தலாம் அல்லது நீக்கலாம்.
இருப்பினும், இக்கட்டளையின் ஏதேனும் ஏற்பாடுகளைத் திருத்துவதான அல்லது நீக்குவதான சட்டமூலம்எதுவும்அது, பிரதிநிதிகள் சபையில் அதற்குச் சார்பாகப் பெறப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை சபை உறுப்பினர்களது மொத்த எண்ணிக்கையில் (சமூகமளிக் காதோர் உட்பட) மூன்றிலிரணிடுக்குக் குறையாததாக இருந்ததென சபாநாயகர் தனது கைப்பட அத்தாட்சிப்படுத்திய சான்றிதழ் ஒன்றைக் கொண்டிருந்தாலன்றி அரச ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படுதலாகாது. இந்த உபபிரிவின் கீழான ஒவ்வொரு சான்றிதழும் எல்லா நோக்கங்களுக்கும் முற்று முடிவானதாதல் வேண்டும் என்பதுடன் எந்த சட்ட நீதிமன்றத்திலும் கேள்விக்குட்படுத்தப் படுதலுமாகாது. ஆறாவது பாதுகாப்பு ஒன்றும் இருந்தது. ஆனால் அது அரசியலமைப்பில் பிரதிபலிக்கப் பட்டிருக்கவில்லை. ஆயினும் முன்னர் அரசாங்க சபையில் ஏற்கப்பட்டிருந்தது யாதெனில் சிங்களமும் தமிழும் நியாயமான காலப்பகுதி ஒன்றுக்குள் சுதந்திர இலங்கையின் உத்தியோக மொழிகளாக ஆக்கப்படுதல் வேண்டும் என்பதேயாகும்.
29ஆம் பிரிவு ஒரேயொரு தடவை அதுவும் ஆரம்ப நீதிமன்றம் ஒன்றிலேயே உதவிக்கழைக்கப்பட்டிருந்தது. 1964ஆம் ஆண்டில் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்று 1956ஆம் ஆண்டின் உத்தியோக மொழிகள் சட்டம் அரசியலமைப்பின் 29(2)ஆம் பிரிவுக்கு முரணானதெனத் தீர்ப்பளித்திருந்தது.
14

உத்தியோக மொழிகள் சட்டம் சிங்களத்தை நாட்டின் உத்தியோக மொழியெனப் பிரகடனப்படுத்திற்று. 1972இல் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது இந்த வழக்கின் மேன்முறையீடு இன்னும் கேட்கப்படாது இருந்தது.
சட்டமா அதிபதிக்கு எதிராக கோடீஸ்வரன் என்பவர் தொடுத்த வழக்கே மேலே குறிப்பிடப்படுவதாகும். மாவட்ட நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் உயர்நீதி மன்றுக்கு மேன்முறையீடு செய்தது.
ஆனால் மேன்முறையீட்டில் உயர்நீதிமன்றம் பூர்வாங்க விடயமான, அரச ஊழியர் ஒருவர் தனது சம்பளப் பாக்கிக்காக முடிமீது வழக்கிட முடியுமா என்பதிலேயே தனது கவனத்தைச் செலுத்தியதுடன் அங்ங்ணம் வழக்கிட முடியாது என்ற தீர்ப்பையும் வழங்கியது. மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பை வழங்கியவர் ஒரு தமிழ் நீதிபதி என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகக் கோடீஸ்வரன் பிரிவுக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தார். பிரிவுக் கவுன்சில் பூர்வாங்க விடயத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நேர்மாறாக்கியதுடன் மேற்கொண்டு வழக்கை விசாரிக்குமாறு இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவிட்டது. உயர்நீதிமன்றம் உத்தியோகமொழிச் சட்டம்பற்றி எதுவும் கூறாத நிலையில் தாங்கள் அதுபற்றி எதுவும் கூறுதல் சரியல்ல என்று பிரிவுக் கவுன்சில் பிரபு டிப்லொக் கூறியிருந்தார். இந்த வழக்கு பற்றிய சில ருசிகரமான விடயங்களை முன்னாள் ஊர்காவற்றுறைப் பாராளுமன்ற உறுப்பினர் வி. நவரெத்தினம் 6Tyglu The Fall and Rise of the Tamil Nation 6Tsip S.T6565 விபரமாகக் காணலாம்.
மேலும் இதே 29ஆம் பிரிவானது, பாராளுமன்றம் கண்டிப்பான பிரசாவுரிமைச் சட்டம் ஆக்குவதைத் தடுத்திட முடியவில்லை. இப்பிரசாவுரிமைச் சட்டமானது இலங்கையில் வாழ்ந்து இங்கேயே வேலைசெய்யும் இந்திய வம்சாவழியினரை இயன்றளவுக்குத் தனது அதிகார எல்லையினின்றும் விலக்குவதாக இருந்தது.
15

Page 14
இங்ங்ணமே அதேயளவுக்குக் கண்டிப்பான சட்டமான வாக்குரிமைச் சட்டம் இந்தியத் தமிழர்களில் பெரும்பாலோரை, அவர்கள் மிகநீணி ட காலம் இலங்கையில் வாழ்ந்தபோதிலும், வாக்குரிமையற்றவர்களாக ஆக்கியது. இலங்கைத் தமிழர்களும் (அல்லது நாட்டின் சிங்களம் பேசாத மக்கள்) இந்தியத் தமிழர்களும் பிரிவு 29இன் கீழ் தனித்தனிச் சமூகமே என்பதில் சந்தேகமில்லை.
அப்படியிருந்தும் அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் 29ஆம் பிரிவினால் வழங்கப்பட்டிருக்கவில்லை. எப்படியிருந்த போதிலும், சட்டம் ஆக்கும் முறை மட்டுமே பிரிவு 29இனால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. நிருவாகத்துறைச் செயல்களோ அன்றி தனிநபர்கள் அல்லது அமைப்புக்களது செயல்களோ இதன் மட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கவில்லை என்பது முக்கியமானதொரு குறைபாடாகும்.
1946இன் இந்த அரசியலமைப்பு ஏற்பாட்டில் உரிமைகள் பட்டயம் (அதாவது அடிப்படை உரிமைகளுக்கான உத்தரவாதம்) எதுவுமே இருந்திருக்கவில்லை. உண்மையில், இத்தகைய ஒரு பட்டயம் தேவையென்று எச்சமூகத்தினரும் எவ்வித அக்கறையுடனும் அந்நேரத்தில் கேட்டிருக்கவுமில்லை. சோல்பரி ஆணைக்குழுவோ அல்லது பிரிட்டிஷ் அரசாங்கமோ இதுபற்றி எண்ணிப் பார்த்திருக்கவுமில்லை. ஆயினும் அமைச்சரவையில் அப்படி ஒரு சிந்தனை தலைதூக்கிய போதிலும் சேர் ஐவர் ஜென்னிங்ஸ் அதனை நிராகரித்துவிட்டார். மனித உரிமைகளை அரசியலமைப்பில் நிலையூன்றிய உத்தரவாதங்களாக ஏற்பாடு செய்யும் கோட்பாட்டுக்கு அவர் முற்றிலும் எதிரானவராக இருந்தார். இது அவரது பிரிட்டிஷ் பாரம்பரியத்தின் வழிவந்த கருத்தாகும்.
ஏற்பாடு செய்யும் கோட்பாட்டுக்கு அவர் முற்றிலும் எதிரானவராக இருந்தார். இது அவரது பிரிட்டிஷ் பாரம்பரியத்தின் வழிவந்த கருத்தாகும்.
16

195636 g/6/it jajifilis Approach to Self-Government 6T6ip நூலில் பிரிட்டனில் எங்களிடம் இந்த உரிமைகள் பட்டயம் என்பது கிடையாது. நாம் வெறுமனே சட்டத்துக்கிணங்கிய சுதந்திரம் என்பதையே கொண்டுள்ளோம்.
அப்படியிருந்தும் நான் உண்மையாகவே நம்புவது யாதெனில் உரிமைகள் பட்டயம் அல்லது மனிதனின் உரிமைகள் பிரகடனம் என்பதைக் கொண்டுள்ள எந்த ஒரு நாட்டிலும் பார்க்க நாம் திறமாகவே செயற்படுகின்றோம் என்பதுதான்’ என்று எழுதியுள்ளார்.
ஆயினும் இலங்கையைப் பொறுத்தளவில் 1960களின் முற்பகுதியில் நடந்த இரு சம்பவங்கள் தனிநபர் சுதந்திரங்கள் பூரணமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தைத் துலாம்பரமாக வெளிக்காட்டின.
1962இல், பிரதிநிதிகள் சபையில் சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இதன் நோக்கம் கொலைச் சதிக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க ஏற்பாடு செய்தலேயாகும். மரணதண்டனை 1959ஆம் ஆண்டுச் சட்டம் ஒன்றின் மூலம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. எனவே மரண தண்டனை விதிப்பதாயின் தனியான சட்டம் கொண்டுவரப்பட வேண்டியிருந்தது. குறிப்பிட்ட இக்கொலைச்சதி வழக்கில் கீழ்நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதித்திருந்தது. ஆனால் உயர்நீதிமன்றம் மேற்சொன்ன சட்ட ஏற்பாடுகளைக்காட்டி மரணதண்டனைக்குப் பதிலாக ஆயுட் சிறைத் தண்டனையே விதித்திருந்தது. இதனால் திருப்திப்படாத அரசாங்கம் மரண தண்டனைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் என்பதனைக் கொண்டுவந்து குற்றவாளிகளைத் தூக்கிலிட விரும்பியது. இப்படியொரு சட்டம் நிறைவேற்றப்பட்டால் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வெற்றுக் கடதாசியாகிவிடும். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு மிகக் கடுமையாக இருந்ததனால்
அச்சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டது.
17

Page 15
ஒகஸ்ட் 1964இல், அரசாங்கம் கொண்டுவர விரும்பிய இன்னொரு சட்டமூலம் தனிநபர்களின் நடமாடுஞ் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக இருந்தது. வெளிநாடு செல்பவர்களுக்கு அந்நியச் செலாவணியை அனுமதிக்கும்போது வழங்கப்படும் கடவுச் சீட்டானது ஒரேயொரு பயணத்துக்கு மட்டும் பாவிக்கப்படக் கூடியதாகவும் அதுவும் செலாவணி எந்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்டதோ அந்நாட்டுக்கு மட்டும் போய்வரத்தக்க விதத்திலும் வழங்கப்பட எத்தனிக்கப்பட்டது. சிலருக்கு அவர்களது பிரயாணச் செலவு, பராமரிப்புச் செலவு என்பவற்றை வெளிநாட்டு அரசாங்கம், நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் வழங்குவதாக இருந்தாலும் அவர்கள் முதலில் பாதுகாப்பு, வெளிவிவகார அமைச் சிடமிருநீது அனுமதிபெற வேண்டியிருந்தது.
இங் நுனம் முறி கூட்டியே அனுமதி பெற்றிருந்தாலன்றி விமான, கப்பல் சேவை நிறுவனங்கள் பயணச் சீட்டு வழங்குவதினின்றும் நிருவாகத் துறைக் கட்டளையால் தடுக்கப்பட்டிருந்தன. ஆசீர்வாதம் என்ற தமிழரே முதலில் இதனையும் எதிர்த்து நீதிமன்றம் சென்றார். நீதிமுறை மீளாய்வு மூலம் இக்கட்டளை எதிர்க்கப்பட்டபோது நீதிமன்றம் விடயத்தை முற்றாக ஆராய முன்னரே அரசாங்கத்தை அச்சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு நீதிமன்றம் நிர்ப்பந்தித்தது. இந்த வழக்கு சர்வதேச சட்டவாளர் ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இடம்பிடித்துவிட்டது.
இதில் வேடிக்கை என்னவென்றால் மேற்சொன்ன இரு சட்ட மூலங்களும் சோசலிசப் பாதையில் செல்லவிரும்பிய அப்போதைய இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே என்பதாகும். ஆனால் இம்முயற்சிகளுக்குத் துணைபோக உதவியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால்
முன்வைக்கப்பட்டிருந்த சட்டக் கொள்கைகளேயாகும்.
18

1946ஆம் ஆண்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கான முதலாவது முயற்சி 1957 ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்டது. இம்முயற்சியில் இறங்கியது 1956இல் பதவிக்கு வந்திருந்த பண்டாரநாயக்கா அரசாங்கமேயாகும். பாராளுமன்றக் கூட்டுத் தெரிவுக்குழு ஒன்று இதற்காக நியமிக்கப்பட்டது. இக்குழு குடியரசு ஒன்றை ஸ்தாபித்தல், அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்தல், செனட்சபை மற்றும் நியமன உறுப்பினர்கள் விடயங்களை ஆராய்தல் என்பவற்றில் கவனஞ் செலுத்த வேண்டியிருந்தது. இதுதவிர பொதுச்சேவை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக் குழு தொடர்பாகவும் இது கவனஞ் செலுத்துமாறும் கோரப்பட்டிருந்தது. நாட்டின் பொதுவான அபிப்பிராயத்தைப் பிரதிபலித்து இவ்விடயங்களில் சீர்திருத்தம் அவசியம் என்பதைப் பலரும் அப்போது ஏற்றிருந்தனர். சில விடயங்களில் தெரிவுக்குழுவில் உடன்பாடு காணப்பட்டிருந்தது. அவை யாவை?
தெரிவுக்குழுவுக்குள் சில விடயங்களில் கருத்தொருமை காணப்பட்டது. இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு: 1) சர்வசன வாக்குரிமைக்கும் சமமான
வாக்குரிமைக்கும் உத்தரவாதமளிக்கும் விதத்தில் தேர்தல் தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்;
2) பிரிவுக்கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யும் முறை
ஒழிக்கப்பட வேண்டும்;
3) அரசியலமைப்பு விடயங்களில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்கப்படல் வேண்டும் என்பதுடன் இந்நீதிமன்றத்துக்கே உயர் நீதிமன்றத்திடமிருந்து வரும் மேன்முறையீடுகளும் அனுப்பப்பட வேண்டும்;
19

Page 16
4) இந்திய அரசியலமைப்பிலுள்ளதைப் போன்ற ஏற்பாடுகளைக் கொண்டதான அடிப்படையுரிமைகள் அத்தியாயம் ஒன்று அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்.
இங்கு முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள யோசனையில் சமமான வாக்குரிமை என்பதை ஒரு நோக்கத்துடனேயே அடிக்கோடிட்டுள்ளேன். அது என்ன என்பதைப் பின்னொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.
இருப்பினும், மேலே கூறப்பட்ட எந்த யோசனைகளுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்குள்ளாகப் பிரதமர் பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டு விட்டார். பின்னர் 1960, 1965 மார்ச் மாதங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்று வந்த அரசாங்கங்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளுக்குப் புத்துயிர் கொடுக்க முன்வந்த போதிலும் அதில் அவை வெற்றியடையவில்லை. இதற்கான முக்கிய காரணமே எதிர்க்கட்சிகள் இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்து விட்டமையே ஆகும்.
1965 பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த பின்பு பூரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பன ஒன்றுசேர்ந்து பொதுவேலைத் திட்டம் ஒன்றைத் தயாரிப்பதில் இறங்கின. தாம் அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று வந்தால் இந்த வேலைத்திட்டத்தை அமுல் நடாத்தப்போவதாக அவை மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தன. அரசியலமைப்புச் சீர்திருத்தத்தைப் பொறுத்தளவில் 1948ஆம் ஆண்டு அரசியலமைப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டு வேலைகள் செய்யப்படுவதை இந்த மூன்று கட்சிகளும் ஆதரிக்க -வில்லை. பதிலாக,அரசியலமைப்புப்பேரவையினால் தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பையே அவை அவாவி நின்றன. இங்ங்ணம் நின்றமைக்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, லங்கா சமசமாஜக் கட்சியின் நிலைப்பாடாகும்.
20

ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட அமைச்சர்குழுவின் ஆலோசனைத் திட்டம் என்பதில் இக்கட்சி எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. காரணம் அந்த நேரத்தில் இக்கட்சியின் தலைவர்களில் பெரும்பாலானோர் தடுப்புக்காவலில் இருந்தனர். அது இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். பிரிட்டிஷ் முடியுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் சமசமாஜக் கட்சியினர் விடாப்பிடியாக நின்றனர். அதனால் 1946ஆம் ஆண்டின் அரசியலமைப்பை அவர்கள் அறவே புறக்கணித்தனர். பிரிட்டிஷ் ஆட்சியை இங்கு தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு தந்திரோபாயம் என்றே அந்த அரசியலமைப்பை அவர்கள் வர்ணித்தனர்.
ஐம்பதுகளின் மதிதியில் ஆலோசிக் கப்பட்ட பணி டாரநாயக்காவின் யோசனைகளை ஏற்றுக் கொள்ள இக்கட்சியினர் தயாராக இருந்த போதிலும் பின்னர் அவர்கள் அரசியலமைப்பைப் பொறுதீத வரையில் பிரிட்டிஷ முடியாட்சியிலிருந்து பூரண விடுபாட்டையே விரும்பி நின்றனர். அதாவது சட்டத்தில் ஒரு முறிவு ஏற்பட்டு பிரிட்டனுடனான தொடர்பு துண்டிக்கப்படுவதையே இந்த இடதுசாரிகள் விரும்பி நின்றனர். இன்னும் நுணுக்கமாகப் பாாப்பதானால் வெஸ்ற்மின்ஸ்ரர் முறையை அகற்றுவதையே அவர்கள் முதல் விருப்புரிமையாகக் கொண்டிருந்தனர் எனக் கூறலாம்.
இரண்டாவதாக, கல்வியாளர்கள் மத்தியில் அந்நேரம் எழுந்திருந்த வினா யாதென்றால்,
இரண்டாவதாக, கல்வியாளர்கள் மத்தியில் அந்நேரம் எழுந்திருந்த வினா யாதென்றால், பாராளுமன்றம் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான அல்லது நீக்கி விடுவதற்கான தனது அதிகாரங்களைப் பாவிக்கும்போது அது (மகாராணி, பிரதிநிதிகள்
சபை, செனட்சபை என்பன) தனது
2.

Page 17
உள்ளார்ந்த பாகங்களுள் ஒன்றினைத் தனக்கே உரித்தாக்கிக் கொள்ள முடியுமா? குறிப்பாக, தனக்குச் சட்ட அந்தஸ்தை வழங்குகின்ற அத்தகைய அந்தப் பகுதியையும் நீக்கிவிட அல்லது திருத்துவதற்குப் பாராளுமன்றத்துக்கு அதிகாரமுள்ளதா?
ஆம்! என்பதைப் போன்று விரைவாகவே செனட்சபை ஒழிக்கப்பட்டது.
ஆயினும் சட்டப்படி சிலர் வாதிட்டதற்கிணங்க, புதிய அரசியலமைப்பொன்றினால் பதிலீடு செய்யப்படாமல் அப்போதிருந்த அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதன்படி பாராளுமன்றத்தின் வடிவத்தை அமைப்பு ரீதியில் மாற்றியமைக்க முடியுமா? என்ற நியாயமானதொரு வினா எழுப்பப்பட்டது. பாராளுமன்றம் என்பது ஏற்கனவே வரைவிலக்கணப் படுத்தப்பட்டிருந்தபடியால் அதற்குப் புறம்பான ஏற்பாட்டினை வேறுவழிகளில் முன் வைக்க முடியுமா?
ep6ipT615Is, Bribery Commissioner v. Ranasinghe வழக்கில் 1964இல் பிரிவுக்கவுன்சில் அரசியலமைப்பின் 29ஆம் பிரிவின் 2ஆம் உபபிரிவைக் குறிப்பிட்டு அது மதம், இனம் சம்பந்தப்பட்ட விடயங்களை நிலையூன்றச் செய்யும் பிரிவு என்பதால் சட்டவாக்கம் தலையிடக்கூடிய ஒரு விடயமாக அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறியதோடு பின்வரும் கருத்தையும் வெளியிட்டிருந்தது:
“அவை (29 1-4) பிரசைகளுக்கிடையிலான உரிமைகளின் புனிதமான சமநிலையையும் அவர்கள் அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதற்குக் காரணமான அடிப்படை நிலைமைகளையும் பிரதிநிதித்துவஞ் செய்ததோடு அவை அரசியலமைப்பின் கீழ் மாற்றப்படக் கூடியனவுமல்ல."
இது Pearce பிரபு தெரிவித்திருந்த கருத்தாகும். முன்னதாக, பிரிவுக் கவுன்சிலானது இந்த உபபிரிவானது அடிப்படைஒதுக்கங்களைக்(reservations) கொண்டிருக்கின்ற -தென்றும் இதற்கமைவாகவே இலங்கைப் பாராளுமன்றம்
22

அமைதி,ஒழுங்கு, நல்லரசாங்கம் என்பவற்றுக்காகச் சட்டங்களை ஆக்கும் அதிகாரம் கொண்டிருந்ததென்றும் கூறியிருந்தது.
அந்த நேரத்தில் பிரிவுக்கவுன்சிலே இலங்கைக்கு அதியுயர் நீதிமன்றமாக இருந்தது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அத்தகைய நீதிமன்றம் இவ்வாறு கூறியிருந்தமை நாட்டுக்குள்ளே பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருந்தது.
ஒருபக்கத்தில், வாதிடப்பட்டது யாதெனில், அரசியலமைப்பொன்று மாற்றப்படவே கூடாது என்ற கோட்பாட்டை அது முன்வைத்தது எனக்கூறுவதாயின் அது மிகத் தெட்டத் தெளிவானவார்த்தைகளில் குறிப்பிடப்பட்டிருக்கலாந்தானே என்பது. 1970இல் சட்டச் சஞ்சிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில் ஒருபக்கத்தில், வாதிடப்பட்டது யாதெனில், அரசியலமைப்பொன்று மாற்றப்படவே கூடாது என்ற கோட்பாட்டை அது முன்வைத்தது எனக்கூறுவதாயின் அது மிகத் தெட்டத் தெளிவான வார்த்தைகளில் குறிப்பிடப் பட்டிருக்கலாம் தானே என்பது. 1970இல் சட்டச் சஞ்சிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில் எச்.எல்.டி.சில்வா என்ற அரசியலமைப்புச் சட்ட அறிஞரும் இதையே குறிப்பிட்டிருந்தார். இவர்தான் அண்மைக் காலம்வரை ஐ. நா. வில் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியாக இருந்தவர். தற்போது பேராசிரியர் ஏ.ஜே.வில்சனின் கட்டுரைகளை மறுதலித்து அரசியலமைப்புக்கள் புனிதமானவை என்று பத்திரிகைகளில் எழுதிவருகின்றார். ஆனால் சில்வா தனது முன்னைய கருத்துக்களை தற்போதும் அப்படியே கூறிவருவது நேர்மையான விடயமே என்பதை நாம் ஒப்புக்கொள்ளவே வேண்டும்.
மறுபுறத்தில் வாதிடப்பட்டது யாதெனில், 29ஆம் பிரிவில் தெளிவின்மை எதுவும் இருப்பதாகக் கூறமுடியாது. அரசியலமைப்புக்களில் பொதுவாகப் பாவிக்கப்படும் சொற்றொடர்களே அங்கும் பாவிக்கப்பட்டுள்ளன.
23

Page 18
29(1)இல் கூறப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரமானது 29(2)ஆம் பிரிவினால் மிகத்தெளிவாகவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்ங்ணமில்லாமல் இதற்கு மாறாக ஆக்கப்படும் சட்டம் எதுவும் வெற்றானது என்று (இதன் பொருள் அப்படியொரு சட்டம் ஆக்கப்படவே இல்லையெனக் கொள்ளுதலாகும்) 29(3)ஆம் பிரிவு கூறியது.
29(4)ஆம் பிரிவு கூறுவதன்படி, பாராளுமன்றம் இப்பிரிவின்கீழ் தனது அதிகாரத்தைப் பிரயோகிக்கையில் அரசியலமைப்பின் எந்தப் பிரிவினையும் உரிய பெரும் பான்மையுடன் திருத்தலாம் அல்லது மாற்றலாம் எனக் கூறியது.
இப்பிரிவின் கீழ் அதனது அதிகாரம் ஏனைய உபபிரிவுகள் (1), (2), (3) என்பவற்றால் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தன எனவும் வாதிட முடியும்.
Pearce பிரபுவின் கூற்றுக்கள் குறிப்பிட்ட அவ்வழக்கைப் பொறுத்தவரையில் போதிய அலசலுக்குப் பின்னர் கூறப் பட்டிருக்கவில்லை எனக் கொண்டாலுங்கூட, அங்கே ஓர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவே கொள்ளப்படல் வேண்டும். அதாவது அரசியலமைப்பைச் சாதாரண மரபுவழியில் மாற்றியமைக்க நினைப்போருக்கான ஓர் எச்சரிக்கையாகவே அது இருந்தது.
எனவே இந்த விடயத்தை 1970 பொதுத்தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட மேற்சொன்ன மூன்று கட்சிகளதும் தேர்தல் விஞ்ஞாபனமானது போதியளவுக்குக் கவனத்தில் எடுத்து பின்வருமாறு கூறியது:
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரேநேரத்தில் அரசியல் நிர்ணய சபையாகவும் செயற்பட்டு புதிய அரசியலமைப்பொன்றை வரைந்து நிறைவேற்றிச் செயற்படுத்தவும் அனுமதிக்குமாறு உங்களது அதிகார ஆணையைக் கோரி நிற்கின்றோம்.
24

இந்த அரசியலமைப்பானது, இலங்கையை சோசலிச இலக்குகளை ஈட்டவும் எல்லாப் பிரசைகளுக்கும் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும் உத்தரவாதப்படுத்தவும், உறுதியெடுக்கும் சுதந்திரமானதும் இறைமைமிக்கதுமான குடியரசொன்றாகப் பிரகடனப்படுத்தும்.”
1970 மே 27ஆந் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் 852 வீதமான வாக்காளர்கள் வாக்களித்திருந்தமையை முதலில் குறிப்பிட்டாக வேண்டும். இதன் முடிவுகள் வருமாறு அமைந்திருந்தன:
9r assoGOVOJ III
கட்சி கிடைத்த பெற்ற வீதாசாரம் ஆசனங்கள் | வாக்குகள்
பூரில.சு.க. 9. 1,812,849 36.6
6l).5F。SF.5。 19 433,224 8.7 ஐ.தே.க. 17 1,876,956 38.0 தமிழரசு க. 13 245,747 5.0 கம்.க. 6 169,199 3.4 இத.காங். 3 115,567 2.3 சுயேட்சைகள் 2 225,559 4.6
25

Page 19
குறிப்பு: யூரீல.சு.க., ல.ச.ச.க. கம்.க. என்ற மூன்றும் போட்டித் தவிர்ப்பு தேர்தல் உடன்படிக்கை செய்து கொண்டு * ஐக்கிய முன்னணி ' என்ற பெயரில் போட்டியிட்டன.
வாக்குகளினி மொத்த எணணிக்கையிலுள்ள சில ஏற்றத்தாழ்வுகளை இதனால் புரிந்து கொள்ளலாம்.
இநீத மூன்று கட்சிகளுக்குமிடையிலான உடனி படிக்கையினி வாசகங்களினி படி, யூரீமாவோ பணிடாரநாயக்காவின் தலைமையின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதும் இங்ங்ணம் அமைத்ததும் பொதுவேலைத்திட்டத்தை உடனடியாகவே செயலுருப்படுத்த நடவடிக்கை எடுப்பதும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தன.
1970 ஜூன் 14ஆந் தேதி தேசாதிபதி புதிய உறுப்பினர்களுக்கு பின்வரும் அழைப்பை விடுத்தார். இதுகூட வெறுமனே பிரிட்டிஷ் பாராளுமன்ற சம்பிரதாயம் சம்பந்தப்பட்ட நடைமுறை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“மக்கள் ஜனநாயக ரீதியில் அளிக்கப்பட்ட தமது வாக்குகளின் மூலம் உங்களுக்குத் தெளிவான ஒரு அதிகார ஆணையைத் தந்துள்ளனர். அது யாதெனில், நீங்கள் அரசியலமைப்பு நிர்ணயசபை ஒன்றாகச் செயற்பட்டு, எல்லாப் பிரசைகளதும் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும் உறுதிப்படுத்துவது உள்ளடங்கலாக, சோஸலிச ஜனநாயகத்தின் குறிக்கோள்களை எய்துவதற்கு உறுதிபூண்ட சுதந்திரமானதும் இறைமைமிக்கதும் எவ்விதப் பிணிப்புகளும் அற்றதான இலங்கை கி குடியரசைப் பிரகடனப் படுத்தும் அரசியலமைப் பொனி றை வரைந்து நிறைவேற்றி செயற்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதேயாகும். இந்த அதிகார ஆணையின் நியதிகளுக்கு இணங்க, இந்நாட்டின்
26

அடிப்படைச் சட்டமாக அமைகின்றதான புதிய அரசியலமைப்பொன்றை வரைந்து நிறைவேற்றுமாறு எனது அரசாங்கம் உங்களை அழைக்கின்றது.
பூரீலங்கா மக்கள் எவ்வித பங்கும் கொண்டிராததான விதத்தில் ஆக்கப்பட்டதான தற்போதைய அரசியலமைப்பையும் நீங்கள் நிறைவேற்றப்போகும் அரசியலமைப்புக்கு முரண்படக்கூடியதான அத்தகைய எல்லாச் சட்டங்களையும் மேலோங்கி நிற்கக்கூடிய விதத்தில் புதிய யாப்பு அமைந்திடல் வேண்டும்.”
1970 ஜூன் 24ஆந் தேதி சிம்மாசன உரைக்கான நன்றி தெரிவிப்புப் பிரேரணை பிரதிநிதிகள் சபையில் எவ்வித எதிர்ப்பு வாக்குமின்றி நிறைவேறியது.
1970 ஜூலை 11இல் பிரதிநிதிகள் சபையினி 157 உறுப்பினர்களுக்கும் பிரதமமந்திரி தனித்தனிக் கடிதம் அனுப்பினார். இக்கடிதத்தின் மூலம் அவர் உறுப்பினர்கள் யாவரையும் ஜூலை 19ஆந் தேதி நவரங்கஹலா மண்டபத்தில் கூடும்படி அழைப்பு விடுத்திருந்தார். அன்றைய தேதியில் அங்கு முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது.
157 உறுப்பினர்கள் என்பது நியமன உறுப்பினர்கள் அறுவரையும் உள்ளடக்கியதாக இருந்தது. இது ஐக்கிய முன்னணியினி தேர்தல் விஞ ஞாபனத்துக்கு முரணானதெனலாம். ஏனெனில் அதில் கூறப்பட்டதன்படி அதிகார ஆணையானது நீங்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களுக்கே’ என்று கூறப்பட்டிருந்தது, நுணுக்கமாகப் பார்த்தால் நியமன உறுப்பினர்களை உள்ளடக்கியது தவறேயாகும். ஆனால் இதற்குக் கூறப்பட்ட சமாதானம் யாதெனில் அந்த ஆறுபேரும் குறிப்பிட்ட பிரிவு மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கின்றனர் என்பதேயாகும். பாராளுமன்றத்தில் உறுப்பினர் எவரையும் கொண்டிராத அல்லது அங்ங்ணம் போதிய பிரதிநிதித்துவத்தைக்
27

Page 20
கொண்டிராதவர்களுக்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிங்கள மக்களிடையே சிறுபான்மை வகுப்பினரைச் சேர்ந்த மூவரும் தமிழ் மக்களிடையேயிருந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இந்தியத் தமிழர் மத்தியில் இருந்து ஒருவரும் இங்ங்ணம் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆறாவது நபர் செல்லையா குமாரசூரியர். பூgமாவோவின் நணி பரான இவர் பினர் னர் அமைச்சராக்கப்படுவதற்காகவே நியமன உறுப்பினராக்கப்பட்டார்.
சரி, இனி மீண்டும் நவரங்கஹலாவுக்கு வருவோம். அங்கு
நிறைவேற்றப்பட வேண்டியிருந்த தீர்மானம் இதுதான்:
‘பிரதிநிதிகள்சபையின் உறுப்பினர்களாகிய நாங்கள் 1970 மே 27ஆந் தேதிய பொதுத்தேர்தலில் பூணூலங்காவின் மக்கள் அளித்த அதிகாரஆணையின் பிரகாரம் எங்களை நாங்களே யூரீலங்கா மக்களின் அரசியலமைப்பு நிர்ணயசபையாகப் பிரகடனப்படுத்துவதெனத் தீர்மானிக்கின்றோம். பூரீலங்காவுக்கென ஓர் அரசியலமைப்பை ஆக்கவும் நிறைவேற்றவும் நிலைநிறுத்தவுமே இங் நுனம் செயற்படுகின்றோம். இந்த அரசியலமைப்பு பூணூரீலங்காவைச் சோஸலிச ஜனநாயகம் ஒன்றினது குறிக்கோள்களை எய்துவதற்கு உறுதிபூண்ட சுதந்திரமானதும் இறைமை மிக்கதும் பிணிப்புகளற்றதும் எல்லாப் பிரசைகளதும் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும் உத்தரவாதப் படுத்துவதுமான குடியரசைப் பிரகடனப்படுத்துவதாக இருக்கும். இந்த யாப்பு தனது அதிகாரத்தை பூரீலங்கா மக்களிடமிருந்து பெற்றதாகவும் நாட்டின்அடிப்படைச் சட்டமாகவும் இருக்கும். பிரிட்டிஷ் முடியினாலும் அதனி பாராளுமன்றத்தினாலும் கைக்கொள்ளப்பட்டதும் பிரயோகிக்கப்பட்டதுமான தத்துவம், அதிகாரம் என்பதற்கும் பூரீலங்காவின் மக்களது அதிகாரம் என்பதற்கும் இடையில் எவ்வித சம்பந்தமுமிருக்காது.
28

அத்துடன் இப்போதிருக்கும் யாப்புக்கும் இந்த அதிகாரத்துக்கும் இடையிலும் எவ்வித தொடர்பும் இருக்காது. எனவே இங்ங்ணம் செயற்படுகையில் எங்களை நாங்களே பூரீலங்கா மக்களின் அரசியலமைப்பு நிர்ணய சபையாக அமைத்து, பிரகடனப்படுத்தி, விளம்பிநிற்பதோடு அங்ங்ணம் அமைக்கப்பட்டதன் பேரில் அரசியலமைப்பு நிர்ணயசபையானது அடுத்தமுறை 1970 ஜூலை 29ஆந் தேதியன்று காலை 10 மணிக்கு பிரதிநிதிகள் சபையின் அலுவலகத்தில் கூடுவதெனவும் தீர்மானிக்கின்றோம். மக்கள் எமக்கு அளித்த ஆணையை நிறைவேற்றும் பொருட்டு இங்ங்ணம் கூடும்போது வன்னியாராய்ச்சிகே டொன் ஸ்ரான்லி திலகரத்தின எம்.பி. அல்லது அவர் இல்லாதபட்சத்தில் இப்ராஹிம் ஆதம் அப்துல் காதர் எம்.பி. தலைமையில் கூடவேண்டும் என்பதுடன் அரசியலமைப்பு விவகார அமைச்சரினால் அல்லது அவர் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் விடயங்களை ஆராயவும் வேண்டும்.
அமைச்சரினால் அல்லது அவர் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் விடயங்களை ஆராயவும் வேண்டும்.மேலே பெயர் குறிப்பிடப்பட்ட இருவரும் அப்போதைய பாராளுமன்றத்தின் சபாநாயகரும் பிரதிச் சபாநாயகரும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்ங்ணமாக, மேலே சொல்லப்பட்ட தீர்மானமானது 1970 ஜூலை 21ஆந் தேதியன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரசியலமைப்பு நிர்ணயசபையில் அங்கம் வகிக்கும் எல்லாக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் 17 உறுப்பினர்களைக் கொண்ட விரைவுச் செயற்பாட்டு- விடயக் குழு ஒன்று 1970 ஒகஸ்ட் 12ஆந் தேதியன்று நிறுவப்பட்டது.
29

Page 21
இதில் அரசாங்கக் கட்சியினரே மிகப் பெரும்பான்மையினராக இருந்தனர் என்பதைக் கூறத்தேவையில்லை. அரசியலமைப்பை வரைவதற்கு அவசியமான அடிப்படைக் கோட்பாடுகள் சிலவற்றை உள்ளடக்கியதான தீர்மானங்களை தயாரிப்பதும் அந்தத் தீர்மானங்களை அமைச்சரின் பெயரில் ஒழுங்குப் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதுமே இந்தக் குழுவின் பணியாகவிருந்தது. மக்களின் சார்பில் செயற்படுவதாகக் கூறப்பட்டாலும் இக்குழுவில் எல்லா மக்களும் உரியவிதத்தில் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டனர் என்று கூறவும் முடியாது.
இக்குழுவில் சிங்கள-பெளத்த கொவிகம உறுப்பினர்களே மிகப் பெரும்பான்மையினராக இருந்தனர். அதாவது 17பேரில் 10பேர் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள். மொத்தமாகப் பார்ப்பினும் கண்டியர்களல்லாதோரைவிடக் கண்டியர்களே பெரும்பான்மை யினராக இருந்தனர். 17பேரில் சிங்கள சாதிப்பிரிவுகளில் கொயிகமவும் சலகமவுமே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருந்தன. கத்தோலிக்க மதத்தவர் எவருமே இக்குழுவில் இருந்திருக்கவில்லை. இந்தியத் தமிழர் சார்பிலும் எவருமே இருந்திருக்கவில்லை.
ஆயினும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தொண்டமான் பாராளுமன்றத்தில் நியமன உறுப்பினராக இருந்தார் என்பதையும் கருத்தில் கொள்ளல் வேண்டும். குழுவின் 17 பேரில் 12 பேர் அமைச்சரவை உறுப்பினர்கள் என்பது கவனத்துக்குரிய மற்றொரு விடயமாகும். இன்னுமிருவர் அரசாங்க பாராளுமன்றக் குழுவைச் சேர்ந்தவர்கள். எனவே குழு அமைக்கப்பட்டிருந்த விதத்தைப் பார்த்தால் எவ்வித தங்குதடையுமின்றி தீர்மானங்களை இயன்றளவு விரைவில் தயாரித்து ஒழுங்குப் புத்தகத்தில் அரசியலமைப்பு விவகார அமைச்சரினால் இடம்பெறச் செய்வதை இலகுவாக்கும் நோக்கம் தெளிவாகத் தெரிந்தது.
30

அரசியலமைப்பு நிர்ணயசபையின் நடவடிக்கைகள் பாராளுமன்றக் கட்சிக் கொரடாவின் (கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர்) கட்டுப்பாட்டுக்குள் நடைபெறப் போகின்றமை எடுத்த எடுப்பிலேயே விளங்கிக்கொள்ளக் கூடிய விடயமாகவே இருந்தது. எனவே அரசாங்கம் நினைப்பதெல்லாம் அங்கே அரங்கேறும் என்பதில் எவ்வித ஐயத்துக்கும் இடம் வைக்கப்பட்டிருக்கவில்லை. அரசாங்கக் கட்சிக் குழுவினர் அங்கே கட்சி உறுப்பினர்களாகவே செயற்பட்டனர். தேர்தல் விஞ்ஞாபனம் அவர்களைக் கட்டிப் போட்டிருந்தது. இதனை இந்திய அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்றோடு ஒப்பிட்டால் எத்தகைய திட்டமிட்டபோக்கு எம்மவரை ஆட்டிப்படைத்தது என்பது துல்லியமாகும்.
இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபையில் பங்குபற்ற வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதியதைப் பாருங்கள்:
“எனது சார்பிலும் எனது சகாக்களின் சார்பிலும் முதலில் ஒருவிடயத்தைத் தெளிவாக்க விரும்புகின்றேன். அரசியலமைப்பு நிர்ணயசபையானது ஒருவரின் கருத்தை இன்னொருவர் மீது வலுக்கட்டாயமாகத் திணிப்பதற்கான இடமாகவோ அல்லது முரணி பாடுகளுக்கான இடமாகவோ ஒருபோதும் கருதப்படக் கூடாது. கருத்தொருமைமிக்கதும் ஐக்கியப்பட்டதுமான இந்தியாவைக் கட்டியெழுப்பும் வழியது வல்ல. அதிகூடியளவு நல்லெண்ணத்தைப் பின்னணியாகக் கொண்ட உடன்பாட்டோடும் ஒருமித்த கருத்தோடும் கூடியதான தீர்மானங்களையே நாங்கள் நாடிநிற்கின்றோம்.சர்ச்சைக்குரிய எல்லாப் பிரச்சனைகளிலும் உடன்பாட்டைக் காண்பதற்கான பொதுவான அடிப்படை ஒன்றைக் கண்டறியும் திடசங்கற்பத்தோடு நாங்கள்
31

Page 22
அரசியலமைப்பு நிர்ணயசபைக்குப் போவோம். என்னதான் இதுவரை நடந்திருந்தாலும் எத்தகைய கடினமான சொற்கள் பாவிக்கப்பட்டிருப்பினும் ஒத்துழைப்புக்கான பாதையைத் திறந்தே வைத்திருக்கின்றோம். எங்களோடு உடன்பட மறுக்கின்றவர்களைக் கோருகின்றோம்: எங்களது சமபங்காளிகளாக, ஆனால் எவ்வித கட்டுப்பாடும் உங்கள் மீது விதிக்கப்படாது என்ற நம்பிக்கையுடன் அரசியலமைப்பு நிர்ணயசபைக்கு வாருங்கள். நாங்கள் சந்தித்து பொதுவான கடமைகளை எதிர்கொள்ளும் போது எங்களுடைய தற்போதைய கசப்புக்கள் மறைந்து போகக்கூடும்.”
இந்த வாசகங்களை நவரங்கஹலாவின் தீர்மான வாசகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது வாசகர்களது கடமையாகும்.
செயற்பாட்டு, வழிகாட்டுக் குழுவுக்கு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட 38 தீர்மானங்களும் 1971 ஜனவரி 17ஆந் தேதி பிரசுரிக்கப்பட்டன. விடயக்குழு இத்தீர்மானங்களை 1971 பெப்ரவரியில் ஏகமனதாக நிறைவேற்றியது.1971 மார்ச் 14இல் அரசியலமைப்பு நிர்ணயசபை அவற்றை ஆராயத் தொடங்கியது. ஐக்கிய தேசியக் கட்சியினாலும், தமிழரசுக் கட்சியினாலும் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. அடிப்படைத் தீர்மானங்களுக்கு இணங்க அரசியலமைப்பின் வரைவைத் தயாரிக்கவும் அதனை நிர்ணயசபையின் முன்பாக வைப்பதற்கும் வசதியாக அரசியலமைப்பு நிர்ணயசபை 1971 ஜூலை 10ஆந்தேதியன்று ஒத்திவைக்கப்பட்டது.
அரசியலமைப்பின் வரைவொன்று 1971 டிசம்பர் 29ஆந் தேதியன்று விடயக் குழுவிடம் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை அரசாங்க வர்த்தமானியில் அது அரசாங்க அறிவித்தலாக அதே தினத்தன்று பிரசுரிக்கப்பட்டது.
32

அரசியலமைப்பு நிர்ணயசபையினால் நிறைவேற்றப் பட்டிருந்த அடிப்படைக் கோட்பாடுகளுக்கிணங்கவே அரசியலமைப்பின் வரைவு உள்ளதென்று கூறும் தீர்மானத்தை நிர்ணயசபையானது 1972 ஜனவரி 3ஆந் தேதியன்று கூடித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
அரசியலமைப்பு வரைவை மிக விரிவாக ஆராயும் நோக்கத்துக்கென அரசியலமைப்பு நிர்ணய சபையானது 11 குழுக்களாகப் பிரிக்கப்பட்டது. நிர்ணயசபையினால் அடிப்படைத் தீர்மானங்கள் என்ற வடிவத்தில் நிறைவேற்றப்பட்டிருந்த அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரண்படாதபோது எத்தகைய திருத்தமும் அந்தந்தக் குழுவினால் ஆராயப்பட்டு நிறைவேற்றப்படும். எனவே பொதுமக்கள் தயக்கமின்றித் தமது திருத்த யோசனைகளைச் சமர்ப்பிக்கலாம் என்று பொது அறிவித்தல் விடுக்கப்பட்டது. அப்படியாயின் இதன் பொருளென்ன? தாங்கள் ஏற்கனவே தீர்மானித்துவிட்ட அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரண்படாத விதத்தில் திருத்தங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றால் அத்திருத்தங்கள் வெறுமனே அரசியலமைப்பின் வடிவம், வசன லாவகம் பற்றியதாக இருக்க முடியுமே தவிர கோட்பாடுகள் பற்றியதாக இருக்க முடியாது என்பதும் அதற்கான அரசியலமைப்பு வரைவை மிக விரிவாக ஆராயும் நோக்கத்துக்கென அரசியலமைப்பு நிர்ணய சபையானது 11 குழுக்களாகப் பிரிக்கப்பட்டது. நிர்ணயசபையினால் அடிப்படைத் தீர்மானங்கள் என்ற வடிவத்தில் நிறைவேற்றப்பட்டிருந்த அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரண்படாதபோது எத்தகைய திருதீதமும் அந்தந்தக் குழுவினால் ஆராயப்பட்டு நிறைவேற்றப்படும். எனவே பொதுமக்கள் தயக்கமின்றித் தமது திருத்த யோசனைகளைச் சமர்ப்பிக்கலாம் என்று பொது அறிவித்தல் விடுக்கப்பட்டது. அப்படியாயின் இதன் பொருளென்ன? தாங்கள் ஏற்கனவே தீர்மானித்துவிட்ட அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரண்படாத விதத்தில் திருத்தங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றால்
33

Page 23
அத்திருத்தங்கள் வெறுமனே அரசியலமைப்பின் வடிவம், வசன லாவகம் பற்றியதாக இருக்க முடியுமே தவிர கோட்பாடுகள் பற்றியதாக இருக்க முடியாது என்பதும் அதற்கான கட்டம் கடந்து விட்டது என்பதும் தெளிவாக்கப்பட்டு விட்டது.
உதாரணமாக, அடிப்படை உரிமைகள் தொடர்பான அத்தியாயத்தை ஆராய்ந்த குழுவானது (பதினொருகுழுக்களுள் ஒன்று) பொது மக்களிடமிருந்து வந்திருந்த ஏராளமான அறிக்கைகள், கோரிக்கைகள், விளக்கங்கள் என்பவற்றை ஆராய்ந்ததுடன் தனிநபர்களையும் ஸ்தாபனங்களையும் அழைத்து வாய்மூல சாட்சியங்களையும் செவிமடுத்தது. இதற்கென 18 கூட்டங்கள் கூட்டப்பட்டன. இருந்தபோதிலும், இக்குழு அரசியலமைப்பு நிர்ணயசபைக்குச் செய்த சிபார்சு வேடிக்கையானது. 16 கூட்டங்களில் இக்குழு கண்டும் கேட்டும் ஆராய்ந்தும் எடுத்த முடிவு என்ன தெரியுமா? அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தைக் கூறும் பிரிவுகளின் பக்கத் தலைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதும் அத்தியாயத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு விசேட நிபுணர் குழுவினால் ஆராயப்பட்டு மொழிநடை மிகத் தெளிவாகவும் பளிச் சென்றும் அமையும் விதத்தில் ஆக்கப்படவேண்டும் என்பதுதான் இக்குழு செய்த சிபார்சு. இந்தக் குழுவின் விதப்புரையை உலக அரங்கின் முன்வைத்தால் கைகொட்டிச் சிரிப்பார்கள்.
இந்தக் குழுவுக்குத் தலைமை வகித்தவர் கல்வி அமைச்சர் கலாநிதி பதியூதின் மகமூத். அவர் ஒரு சட்டவாதிகூட அல்ல. ஆராயப்பட்டதோ அடிப்படை உரிமைகள் விடயம். இக்குழுவின் 14 உறுப்பினர்களுள் இருவர் மட்டுமே சட்டவாதிகள். எதிர்க் கட்சியைச் சேர்ந்த எவருமே குழுவில் இடம் பெறவில்லை. இந்த இலட்சணத்தில் 11 குழுக்களும் செய்த ஆய்வும் சிபார்சும் எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ள முடியாதா?
34

11 குழுக்களின் சிபார்சுகளும் திருத்திய அரசியலமைப்பு வரைவும் விடயக் குழுவின் முன்னால் 1972 மே 4ஆந் தேதியன்றும் அரசியலமைப்பு நிர்ணயசபை முன்பாக மே 8ஆந் தேதியன்றும் முன்வைக்கப்பட்டன. 1972 மே 22ஆந் தேதி நிர்ணய சபையானது அரசியலமைப்பு வரைவை வாக்கெடுப்புக்கு விட்டு நிறைவேற்றியது. 119 வாக்குகள் ஆதரவாகவும் 6 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன. அரசியலமைப்பு முறைப்படி ஆக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டதாக நிர்ணய சபையின் தலைவர் அத்தாட்சிப் பத்திரம் வழங்கினார்.
இரசியலமைப்பின் உள்ளடக்கமும் ஏற்புடைமையும்)
1. இதுவரை இலங்கை (Ceylon) என்று அழைக்கப்பட்டு வந்த நாடு பூரீலங்கா என்று நாமமிடப்பட்டது. அத்துடன் அது ஒற்றையாட்சி நாடாக இருக்கும் எனவும் பிரகடனப்படுத்தப்பட்டது. பூரீலங்கா குடியரசை ஸ்தாபித்தது மட்டுமே புதிய அரசியலமைப்பின் சாதனை என்று கூறிவிட முடியாது. அரசாங்க முறைமையில் பின்வரும் மாற்றங்களை யாப்பு அறிமுகப்படுத்தியிருந்தது: சிறுபான்மை மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் கூட்டாட்சி முறை ஒன்றை அறிமுகப்படுத்தி - சிறுபான்மையினர் செறிந்து வாழும் பகுதிகளுக்கு உண்மையான சுயாட்சியை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யவல்ல எத்தகைய முயற்சிகளுக்கும் இடம் வைக்காமல் கதவடைப்புச் செய்யப்பட்டு விட்டது இந்தப் பிரகடனத்தின் மூலம்.
2. பாராளுமன்றம் தற்போது தேசிய அரசுப் பேரவை (National State Assembly) எனப் புதுப் பெயர் சூடிக் கொண்டது. அதுவே அரசின் அதிகாரத்தின் ஊற்றிடமாகவும் அதியுயரிய இடமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. எல்லா அதிகாரங்களையும் இதுவே பிரயோகிக்கும்.
35

Page 24
மக்களின் சட்டவாக்க அதிகாரமும், மக்களின் நிருவாகத்துறை அதிகாரமும் ஜனாதிபதியினுடாகவும் அமைச்சரவை ஊடாகவும் நீதித்துறை அதிகாரம் சட்டத்தினால் நிறுவப்படும் நீதிமன்றங்களினூடாகவும் பிரயோகிக்கப்படும். அதாவது எல்லா அதிகாரங்களையும் பிரயோகிப்பது தேசிய அரசுப் பேரவையே. ஆனால் அவை வெவ்வேறு துறைகளினுTடாகப் பிரயோகிக்கப்படும்.
இங்கே சட்டவாக்கத் துறையிடம் அதிகாரக் குவிப்புச் Oguli u Li LL L gol. Separation of Powers 6T Svi m அறியப்பட்டிருந்த சட்ட ஆட்சிக் கொள்கை குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
இதில் இன்னும் வேடிக்கை இருந்தது. அரசியலமைப்பை வரைந்தவர் லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகச் சிறை சென்றதுடன் குடியேற்றவாதத்தின் எச்சசொச்சங்கள் இந்நாட்டிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தவர். ஆனால் அதே கலாநிதி வரைந்த யாப்பானது பிரிட்டிஷ் அரசியலமைப்புக் கோட்பாட்டைத் தூக்கிப் பிடித்தது. அதுதான் பாராளுமன்றமே மிகவுயர்ந்தது' (Supremacy of Parliament) 6T6p 65T LITG). இதிலிருந்து முன்னாள் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகள்கூட வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டன. உதாரணம் கனடா, இந்தியா போன்றவை. ஆனால் சோசலிஸம் காணப் புறப்பட்ட தலைவர் அதனைப் பிரிட்டிஷ் பாராளுமன்ற மரபுக்குள் நின்று காண விழைந்தமை தான் கோமாளித்தனமாக இருந்தது. தேசிய அரசுப் பேரவையே சட்டத்தின் ஊற்று என்பதும்
அதுவே எல்லா அதிகாரங்களதும் குவிமையம் என்பதும்
36

அப்படியே பிரிட்டிஷ் பாராளுமன்ற மரபைப் பிரதிபண்ணிய ஏற்பாடுதான். பின்னாளில் ஏற்பட்ட எல்லாக் குழறுபடிகளுக்கும் இந்தப் பாராளுமன்ற உயர்வுக் கொள்கையே அடிப்படைக் காரணமாயிற்று என்பதையும் விளங்கிக் கொள்ள அவகாசமுள்ளது. 3. மேலே கூறப்பட்டதுடன் பின்னிப் பிணைந்த மற்றொரு விடயம் நீதிமுறை மீளாய்வு பற்றியது. அதாவது பாராளுமன்றம் ஆக்கும் சட்டமெதுவும் அரசியலமைப்புக்கு இசைவாக உள்ளதா என அரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாடுகளை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கும் முறைமையே நீதிமுறை மீளாய்வு என்பது. உண்மையில் சட்டவாக்கத்துறை (இங்கே தேசிய அரசுப் பேரவை) தான் நினைத்தபடி சட்டம் ஆக்க முடியாது. அரசியலமைப்புச் சொல்கிறபடிதான் (பாராளுமன்றம் அல்லது) தேசிய அரசுப் பேரவை சட்டம் ஆக்க முடியும். இப்படிப் பார்த்தால் அரசியலமைப்பே உயர்ந்ததாக இருக்க முடியுமே தவிர பாராளுமன்றம் உயரியதாக முடியாது. மற்றொரு புறத்தில், அரசியலமைப்பு என்ன சொல்கின்றது என்பதை உயரிய நீதிமன்றமே தீர்மானிக்கின்றது. எனவே முறுகலான சந்தர்ப்பங்களில் நீதி மன்றம் முன்னின்று சட்டவாக்கத்துறைக்குக் கடிவாளம் போட முடியும். எனவே இங்கும் பாராளுமன்றத்தின் மீயுயர் தன்மை பாதிக்கப்படமுடியும்.
இதனாற்றான் பிரிட்டனில் இன்னும் நீதிமுறை மீளாய்வு முறை கிடையாது. பிரிட் டிஷ் மக்கள் பாராளுமன்றத்துக்கு இணையாகவோ அல்லது மேலாகவோ வேறொரு அமைப்பை அங்கீகரிக்க மறுத்து வருகிறார்கள். இதற்குக் காரணம் அவர்களது வரலாற்று அனுபவமே. அந்தப் பிரிட்டிஷ் மரபிலிருந்து உடைத்துக் கொண்டு வெளியே வரவேண்டும் என்று முழங்கிய இடதுசாரிகள் வரைந்த யாப்பு பாராளுமன்றமே உயர்ந்தது என்றும் வேறேதும் அதற்கு இணையாகாது என்றும் சட்டமாக்கியதன் மூலம் முற்றுமுழுதான சந்தர்ப்பவாதச் சேற்றுக்குள் இந்த
37

Page 25
இடதுசாரிகள் அகப்பட்டுக் கொண்டார்கள் என்பதையே சொல்லாமல் சொல்லிற்று.
நீதிமுறை மீளாய்வுக்குப் பதிலாகப் புதிய யாப்பு இன்னொரு விசேட முறையை அறிமுகப்படுத்தியது.
இதன்மூலம் சட்டமொன்று அது ஆக்கப்பட முன்னரே - தேசிய அரசுப் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட முன்னரே -அதனது ஏற்பாடுகள் அரசியலமைப்போடு ஒத்துப் போகின்றதா என்பதை நீதிமன்றத்தில் பரிசோதித்துப் பார்க்க ஏற்பாடுசெய்யப்பட்டது. இதற்கெனப் புறம்பான அரசியலமைப்பு நீதிமனறம் என்று ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. எனவே அரசியலமைப்பு விவகாரங்கள் யாவும் இந்த நீதிமன்றத்தினாலேயே விசாரிக்கப்பட முடியும். வேறு நீதிமன்றங்கள் இதில் தலையிட நியாயாதிக்கம் வழங்கப்படவில்லை. அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு மனுச் செய்யப்பட்டால் தீர்ப்பு 14 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். சட்டமூலத்தைச் சபாநாயகர் தனது சொந்த அபிப்பிராயத்தில் இந்த நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது சட்டமா அதிபதி கேட்டுக் கொண்டதன் பேரில் அனுப்பி வைக்கலாம். அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் தலைவரின் வேண்டுதலின் பேரில், அல்லது தேசிய அரசுப் பேரவையின் அமர்வொன்றுக்குச் சாதாரணமாகத் தேவைப்படும் எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்களது ஒருமித்த வேண்டுதலின் பேரில் அல்லது, பிரசை ஒருவர் செய்த மனுவின் மேல் அரசியலமைப்பு நீதிமன்றம் வழங்கும் ஆலோசனையின் பேரில், சபாநாயகர் சட்ட மூலத்தை இந்த நீதிமன்றத்துக்கு அனுப்பி வைப்பார். ஆனால் அமைச்சரவை விரும்பினால் அச்சட்ட மூலத்தின் ஒரு கோடியில் “இது அவசரமானதும் தேசிய நலன் கருதியதுமான சட்டமூலம்’ எனப் புறக்குறிப்பிடுவதன் மூலம் நீண்ட நீதிமன்ற விவாதத்தைத் தவிர்த்துக் கொள்ள முடியும். இத்தகைய புறக்குறிப்புடன் வரும் சட்ட மூலத்தை அரசியலமைப்பு நீதிமன்றம் சட்ட மா அதிபதியுடன் கலந்தாலோசித்துவிட்டுத் தனது அபிப்பிராயத்தை
38

இயன்றளவு விரைவில் சபாநாயகருக்கு அனுப்ப வேண்டும். இயன்றளவு விரைவு என்பது 24 மணித்தியாலத்துக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். அத்துடன் இச்சட்ட மூலம் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவுந் தேவையில்லை.
இதுதான் கொல் வின் ‘பிராணட் ஜனநாயகம். நீதிமன்றத்தை வெறுமனே 'றப்பர் ஸ்ராம்பாக்கி’ சோசலிஸக் கொள்கைகளை முன்னெடுக்க அவர் விரும்பினார். ஆனால் சட்ட ஆட்சி, ஜனநாயகம் என்பவையெல்லாம் மிக மோசமான முறையில் தரங்குறைக்கப்பட்டன. மக்களோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. 14 நாட்களுக்குள் நீதிமன்றம் முடிவை அறிவிப்பதாயினுஞ்சரி 24 மணித்தியாலங்களுக்குள் அறிவிப்பதாயினுஞ்சரி சட்டமூலம் ஒன்றை அது விவாதத்துக்கு எடுக்கப்பட முன்பே நீதிமன்றம் மீளாய்வு செய்தல் என்று கூறுதலே அடிப்படையில் தவறானதாகும். ஏனென்று கேட்டால் - சட்ட மூலமொன்று வர்த்தமானியில் இடம் பெறுவதால் மட்டும் அது போதிய அளவுக்குப் பொதுமக்களின் கவனத்தைப் பெற்றுக் கொள்வதில்லை. அரசியலமைப்புடன் சட்டமூலமொன்று முரண்படுகின்றதா என்பதைக் கணிடறிவதாயின் முதலில் அச்சட்டமூலம் பொதுமக்களின் அறிவுக்கு எட்ட வேண்டும். யார் யாருக்கு அதில் என்ன அக்கறை உள்ளது என்பதைச் சம்பந்தப்பட்டவர்களே தீர்மானிப்பர். உதாரணமாக பத்திரிகை பற்றிய சட்ட மூலம் என்றால் பத்திரிகைத் துறையில் சம்பந்தப்பட்டோரது கவனத்துக்கு அது எட்ட வேண்டும். அப்போதுதான் என்ன ஆட்சேபகரமான அம்சங்கள் உள்ளன என்பதையிட்டு அவர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்திச் சிந்திக்க முடியும். அத்துடன் பிரசுரிக்கப்படும் அன்றைய தினமே அரசாங்க வர்தீதமானி எல்லோரது கை களுக்கும் எட்டிவிடுவதுமில்லை. மாதக் கணக்கில் பிந்திப் பிரசுரமாகிய சம்பவங்களுமுள்ளன. வர்த்தமானிக்கு ஒருவர் சந்தா கட்டியிருந்தால் அது வெளிவந்த தினத்திலிருந்து மூன்று
39

Page 26
வாரங்களின் பின்னரே அதனை அவர் தபாலில் பெறக்கூடியதாக இருக்கும். சட்ட மூலங்கள் தங்கள் கைகளுக்கு எட்டவில்லை என்று உயர்நீதிமன்ற நீதியரசர்களே முறையிட்ட சந்தர்ப்பங்களுமுண்டு. எனவே, பிரசை ஒருவர் சட்டமூலத்தின் அரசியலமைப்புக்கு முரண்படும் தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதாயின் அவர் அந்த விடயத்தில் பிரத்தியேகக் கவனமெடுத்து பத்திரிகைச் செய்திகளை ஒழுங்காகப் பின்பற்றி வந்து சட்டமூலம் வெளியான உடன் நீதிமன்றத்துக்கு வர்த்தமானியின் பிரதியுடன் ஓடிப்போக வேண்டும். இது உடனடியாகச் சாத்தியமாகுமா? அவர் என்னதான் பொதுநலன் விரும்பியாக இருந்தாலும் முதலில் சட்ட ஆலோசனை பெறவேண்டாமா? முறைப்படி மனு தயாரிக்கப்பட வேண்டும். உரிய பிரதிகள் எடுக்கப்பட வேண்டும். பின்னரே மனுவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவை யாவும் ஒரே வாரத்தில் செய்து முடிக்கப்பட வேண்டியவையாக இருந்தன. அவரோ அல்லது அவரது சட்ட ஆலோசகரோ தீர்மானம் எடுக்கும்போது குறிப்பிட்ட அச்சட்டமூலம் அரசியலமைப்போடு எங்ங்ணம் முரண்படுகின்றது என்பதை - உண்மையாகவே சட்டம் பிரயோகிக்கப்படும்போது ஏற்படக்கூடிய முரண்பாட்டின் அடிப்படையில்லாமல் - வெறுமனே கற்பனா ரீதியான ஊகத்தின் அடிப்படையில்தான் முரண்பாடுகளைத் தேடவேண்டும். அதாவது நடந்த சம்பவத்தை வைத்து ஆராய வாய்ப்பிருக்காது. இப்படி நடக்குமா- அப்படி நடக்குமா என்று கற்பனையில் நிகழ்வுகளைத் தேட வேண்டும்.
சட்டம் ஆக்கப்பட்ட பின் அதனை நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்துவதாயின் அச்சட்டம் ஏதேனும் விதத்தில் அரசியலமைப்புக்கு முரண்படுகின்றதா என்பதை அறிவதற்கு அது முரண்படுவதான நிகழ்வொன்று நடைபெறும்வரை தாராளமாய்க் காத்திருந்து நீதிமன்றத்துக்குச் செல்ல முடியும். இந்த வாய்ப்பு 1972 முதல் பூரீலங்காவுக்கு இன்றுவரை கிட்டவேயில்லை.
40

4. அரசியலமைப்பின் 18ஆம் உறுப்புரையின் ஒரு பந்தியில் மட்டும் அடிப்படை உரிமைகள் அத்தியாயம் அடங்கியிருந்தது. இரணி டாவது பந்தி மிகப் பரந்த விலக்களிப்பு வாசகமொன்றைக் கொண்டிருந்தது. இதன்படி, பரந்தளவிலான நலன்கள், நோக்கங்களைப் பாதுகாக்க அல்லது ஈட்டுவதற்காக இந்த உரிமைகளின் பிரயோகத்தையும் செயற்பாட்டையும் மட்டுப்படுத்துவதற்கு வழி செய்தது. மூன்றாவது பந்தியின் ஏற்பாட்டுக்கமைய, ஏற்கனவே நடைமுறையிலிருந்துவரும் எல்லாச் சட்டங்களும் அவை எந்தளவுக்கு அரசியலமைப்பு ஏற்பாடுகளோடு முரண்படினும் பரவாயில்லை, செல்லுபடியாகும் எனிறே கொள்ளப்பட வேணி டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
முக்கியமாக, இந்த அடிப்படை உரிமைகளை
வெறுமனே பிரகடனமாகக் கொள்ள முடிந்ததே தவிர அவற்றைச் செயற்படுத்துவதற்கான விசேட நடைமுறை எதுவுமே இருக்கவில்லை. இந்த உரிமைகள் அத்தியாயம் அரசியலமைப்பில் ஆறு வருடங்களுக்கு நிலைத்திருந்த போதிலும் இலங்கை மக்களின் வாழ்க்கையில் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தியதாக இல்லை.
5. நீதித்துறை ஊழியர்கள், பகிரங்க சேவை ஊழியர்கள், யாவருமே “அரச ஊழியர்கள்’ என்ற பொதுவான பெயரினால் குறிப்பிடப்பட்டார்கள். அவர்களுடைய நியமனம், இட மாற்றம், பதவி நீக்கம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு யாவுமே அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சரவை இந்த அதிகாரங்களை அதனால் நியமிக்கப்படும் ஆலோசனைச் சபைகளைக் கலந்தாலோசித்துப் பிரயோகித்து வந்தது.
8. 1956ஆம் ஆணிடினி உத்தியோக மொழிச் சட்டம் நிலையூன்றப்பட்டது. (கவனிக்க- யாப்பை வரைந்தவர் இடதுசாரியான கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா). பூரீலங்காவின் உத்தியோக மொழி சிங்களமே என்று
41

Page 27
பிரகடனப்படுத்தப்பட்டது. சட்டவாக்க மொழி, நீதிமன்ற மொழி, யாவுமே சிங்களமே. “மொழிபெயர்ப்பு மொழி’ என பதாகவே தமிழி குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ் மொழி உபயோகத்துக்கு வழி செய்திருந்த தமிழ் மொழி ஒழுங்கு விதிகள் சட்டம் (1966) ஒரு நிலைகுறைவான இரண்டாம் பட்சமான சட்டமாகவே கருதப்பட்டது. சிங்கள மொழியின் உயரிய தன்மையை வலியுறுத்தியது மட்டுமன்றி தமிழ்ச் சமூகமும் (இனமும்) தேவையற்ற விதத்தில் கேவலப்படுத்தப்பட்டது.
1972 அரசியலமைப்பு நடைமுறையிலிருந்த காலத்தில்தான் தமிழ்க் கட்சிகள் யாவும் ஒன்றுபடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் மட்டுமன்றி, இ. தொ. காங்கிரஸும் கூட இந்தக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்கியது. இரு சமூகங்களுக்கிடையிலுமான உறவு மிக மோசமான முறையில் பாதிப்படையத் தொடங்கியது. அரசாங்கத்தில் அங்கம்வகித்த இடதுசாரிகள் நிலைமையைச் சீர்செய்ய முயன்றிருக்கலாம். ஆனால் அவர்கள் இதற்கு மாறாக, முதலாளித்துவ சக்திகளின் கூட்டு என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயத்துக்கு நாமஞ் சூட்டினர். சிங்கள இனத்தினின்றும் வேறுபட்டதும் புறம்பானதுமான இனம் என்ற வகையில் தங்களை ஒரு தேசியமாகக் கொண்டு தங்களைத் தாங்களே ஆளுவதற்கு வழி செய்வதற்காகத் தனி நாடொன்றை அமைப்பதே த. வி. கூட்டணியின் நோக்கமென்று பிரகடனப்படுத்தப்பட்டது.
சட்டவாக்கத்துறைக்கும் நிறைவேற்றுத்துறைக்கும் இருந்த மட்டுப்பாடில்லாத அதிகாரங்களைக் கொண்டு புதிய அரசாங்கம் சாதித்தது என்ன? நாட்டின் மிகப் பெரிய பத்திரிகைக் கம்பனியை (லேக் ஹவுஸ்) அரசு தனதாக்கிக் கொண்டது. தேசிய அளவில் பத்திரிகைகளை வெளியிட்ட மற்றொரு கம்பனியின் (எம். டி. குணசேன அன்ட் கம்பனி) அச்சகங்களை
42

அரசாங்கம் மூடிச் சீல் வைத்தது. அரசுக்கு எதிராக நீதிமன்றம் தடையாணைகளைப் பிறப்பிக்க முடியாதபடி செய்யப்பட்டது. விசேட நியாயசபைகள், ஆணைக்குழுக்கள் என்பன நியமிக்கப்பட்டன. இவை சாதாரண சான்றுச் சட்டவிதிகள், நடபடி விதிகள் என்பவற்றைப் பின்பற்றி விசாரணை நடாத்த வேண்டும் என்பது அவசியமில்லை.
(உ+ம்: ஜனாதிபதி விசேட ஆணைக்குழு).
1977 பொதுத் தேர்தலையொட்டி ஐ.தே.க. வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் குறிப்பிடப்பட்டிருந்தது யாதெனில், ஜனநாயக சோசலிஸ் சமுதாயமொன்றின் இலக்குகளை அடைவதற்காகப் புதிய குடியரசு அரசியலமைப்பு ஒன்றை வரைந்து, நிறைவேற்றிச் செயற்படுத்துவதற்கான அதிகார ஆணையைக் கட்சி மக்களிடம் கேட்டு நின்றது. இவ் விஞ்ஞாபனத்தில் வருமாறு கூறப்பட்டிருந்தது:
“1975இல் கட்சிகளின் அமர்வுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டதான அடிப்படைக் கோட்பாடுகளை இந்த அரசியலமைப்பில் உள்ளடக்குவோம். மதம், மொழி சம்பந்தப்பட்டவையும் மக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகள், சிறப்புரிமைகள் மற்றும் சுதந்திரங்களை உறுதிப்படுத்துவதான ஏற்பாடுகளும் இதில் இருக்கும். பத்திரிகைச் சுதந்திரத்தை மீளவும் நிலைநிறுத்துவோம். நீதித்துறையின் சுதந்திரத்தைப் பேணி அதனை அரசியல் கட்டுப்பாடு, தலையீடு என்பவற்றிலிருந்து விடுவிப்போம். ஒவ்வொரு பிரசையும் அவர் பெரும்பான்மை அல்லது சிறுபான்மை இனமத, சாதிக் குழுவைச் சேர்ந்தவராக இருப்பினும் அவருக்கு சமத்துவமிக்கதும் அடிப்படையானதுமான மனித உரிமைகளும் வாய்ப்புக்களும்
உறுதிப்படுத்தப்படும்.
nou
43

Page 28
சிங்களவரல்லாத மக்களின் பிரச் சனைகளை ஆராய்வதற்கெனக் கூட்டப்படவுள்ள சர்வகட்சி மாநாட்டின் முடிவுகள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும். மக்களினால் காலத்துக்குக் காலம் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியிடம் நிறைவேற்றுத்துறை அதிகாரம் ஒப்படைக்கப்படும். தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட காலத்துக்கான நிறைவேற்றுத்துறை ஸ்திரப்பாட்டை உறுதி செய்வதற்கு இது வழி செய்யும். எங்களுக்குப் பழக்கப்பட்டுவிட்ட பாராளுமன்ற முறைமையையும் அரசியலமைப்பு பேணிக் கொள்ளும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்கும் கட்சியிலிருந்து பிரதம மந்திரியை ஜனாதிபதி தெரிந்தெடுப்பார். அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகவே இருப்பர்’.
1977 ஜூலை 21ஆந் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் 86.88% மான மக்கள் வாக்களித்து பின்வரும் நிலையை ஏற்படுத்தினர்.
கட்சி கிடைத்த கிடைத்த வாக்கு
ஆசனங்கள் வாக்குகள் விகிதாச்சாரம் ஐ.தே. கட்சி 140 3,179,221 50.9 த.வி. கூட்டணி 18 421488 6.7 பூg. ல, சு. கட்சி 8 1855,301. 29.7 இ.தொ.காங்கிரஸ் 1 62,707 1.0 சுயேட்சைகள் 1 353,073 5.6
44
 

சுதந்திரத்துக்குப் பின்னர் முதன்முதலாக, ல. சமசமாஜக் கட்சியோ (22537 அல்லது 3.6%) அல்லது கம்யூனிஸ்ட் கட்சியோ (123856 அல்லது 1.9%) சட்டவாக்க சபைக்குத் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 30 வருட காலத்தில் முதன்முதலாக இந்தியத் தமிழ்ச் சமூகம் தனது பிரதிநிதியென ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடிந்தது.
பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள்ளாகவே, புதிய அரசாங்கம் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்துவதில் முனைப்புடன் இறங்கியது. இந்த முறைமையானது இலங்கையைப் பொறுத்தளவில் முற்றிலும் புதியதோர் எண்ணக்கருவாக இருந்தது. 1977 செப்டெம்பர் 14ஆந் தேதி, சட்டமூலம் ஒன்று இநீ நோக்க தீது கீ காக அமைச்சரவையினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டது. இந்த அத்தாட்சியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “தேசிய நலனுக்கு மிக அவசரமானது”.
இச்சட்டமூலமானது அரசாங்கப் பாராளுமன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டிருக்கவில்லை. அதாவது ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமூலத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பொதுமக்கள் அறியும் விதத்தில் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்கவுமில்லை. ஆனால் பிரதமர் இச்சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியதும் பாராளுமன்றம் (அப்போதும் தேசிய அரசுப் பேரவை என்ற பெயரில்தான் இருந்தது) விவாதத்தை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது. அதன் பின்னர் திடீரென ஒருநாள் விவாதிக்கப்பட்டு அன்றே நிறைவேற்றவும்பட்டது. இரண்டு எதிர்க்கட்சிகளும் (த. வி. கூ, பூரீ. ல. சு. க.) ஆட்சேபனை தெரிவித்து வெளிநடப்புச் செய்துவிட்டன.
(
7 ஒக்டோபர் 20ஆந்தேதி 1972 அரசியலமைப்புக்கான இரண்டாவது திருத்தத்துக்குச் சபாநாயகர் ஒப்புதல் அளித்தார்.
hohmah
45

Page 29
இத்திருத்தத்தின்படி, ஜனாதிபதி அரசியலமைப்புவழியாக அரசுத் தலைவராகவும், அதேவேளை பிரதமராகவும் இருக்க முடிந்தது.ஆயினும் இத்திருத்தம் நான்கு மாதங்களின் பின்பே நடைமுறைக்கு வருமெனவும் அறிவிக்கப்பட்டது. இங்ங்ணமாக, இது 1978 பெப்ரவரி 4ஆந் தேதி நடைமுறைக்கு வரும்போது பிரதம மந்திரியே ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்றிருந்தது.
1972 அரசியலமைப்புக்கான இரண்டாவது திருத்தம் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அதே தினத்தில் தேசிய அரசுப் பேரவை தனது உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழு ஒன்றை நியமிக்கவும் தீர்மானித்தது. இக்குழு செய்யவேண்டிய பணி யாதெனில் “இலங்கைக் குடியரசின் அரசியலமைப்புக்கும் (1972) ஏனைய சட்டங்களுக்கும் கொண்டுவர வேண்டிய திருத்தங்கள் பற்றி ஆராய்வதும் அவற்றை மீளாய்வு செய்வதுமாகும்”. த. வி. கூட்டணி இந்தத் தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு கடமையாற்ற மறுத்துவிட்டது. இதற்கான காரணத்தை த. வி. கூ. தலைவர் பின்வருமாறு கூறினார்:
“தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சனைகளை எப்படித் தீர்க்கப் போவதென்று தேர்தலுக்கு முன்னர் இவர்கள் கூறியிருந்தார்களோ அப்படியே தீர்ப்பதற்கான வழிவகைகள் எதனையும் இந்த அரசாங்கம் எடுத்திருக்கவில்லை எனக் கருதுகின்றோம்.இவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கொள்கைவிளக்க அறிக்கையிலும் கூறப்பட்டிருந்ததென்ன? ஓர் இணகி கப்பாட்டுடனும் எல்லோருடைய சம்மதத்துடனும் தீர்வு காணப்படுமென்றும் சர்வகட்சி மாநாடு கூட்டப்படும் என்றும் அதன் பின்னரே தீர்மானங்கள் அமுல் செய்யப்படுமென்றும் கூறப்பட்டிருந்தது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியலமைப்புப் பற்றி வருகின்ற பந்தியில் தெளிவாகக் கூறியிருந்தார்கள்.
46

‘சிங்களம் பேசாத மக்களுடைய பிரச்சனைகளை ஆராய்வதற்குக் கூட்டப்படவுள்ள சர்வகட்சி மாநாட்டின் தீர்மானங்கள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும்’ என்று. எனவே அரசாங்கமானது சர்வகட்சி மாநாட்டைக் கூட்டியிருந்தாலோ அல்லது இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக அமையக்கூடிய ஒரு வழிமுறையைக் கண்டறியும் நோக்கில் எம்முடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருந்தாலோ நாங்கள் தெரிவுக் குழுவில் கலந்து கொணடிருப்போம். உண்மையில் அரசியலமைப்பானது அதன் முக்கிய அம்சமாக இத்தகைய பிரச்சனைக்கான தீர்வைக் கொண்டதாக அமையும்போது மட்டுமே எங்கள் பங்களிப்புப் பிரயோசனமாகவும் இருக்க முடியும்”.
ஆனால் யூரீ. ல. சு. க. தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளச் சம்மதித்தது. அதற்குக் காரணமும் இல்லாமலில்லை. அரசியலமைப்புக்கான மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்படும். அதில் தமது கருத்துக்கள் உள்ளடக்கப்படும் என்று இக்கட்சி நம்பியது. ஏற்கனவே கொண்டுவரப்பட்டுள்ள இரண்டாவது திருத்தத்துக்கான தமது புதிய திருத்தங்களும் மூன்றாவது திருத்தத்தில் உள்ளடக்கப்படும் என்று நம்பியே இக்கட்சி தெரிவுக்குழுவுக்குப் போனது. கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு கூறியது:
“தெரிவுக்குழுவில் நாம் பங்குபற்றுவதற்கான பிரதான நோக்கங்கள் இரண்டு : (அ) தேசிய அரசுப் பேரவையின் மீயுயர் தன்மையை (Supremacy) மீள நிலைநிறுத்துதல், (ஆ) சாராம்சமான பிரதான அதிகாரங்கள் எதுவும் தனிநபர் ஒருவருடைய கரங்களில் சென்றடைவதைத் தடுத்தல்.இந்தத் தனிநபர் ஏற்கனவே சட்டவாக்கசபைக்கும் நீதிமன்றங்களுக்கும் மேலாகப் போய்விட்டார் என்பது மட்டுமல்ல அவற்றால் கட்டுப்படுத்தப்படவும்
47

Page 30
முடியாதவராகி விட்டார் என்பதையும் கருத்தில் கொள்கிறோம்”.
இதற்கிணங்க, 1977 நவம்பர் 3ஆந் தேதி 10 அங்கத்தவர்கள் கொண்ட தெரிவுக்குழுவை சபாநாயகர் நியமித்தார். இவர்களில் ஏழுபேர் அமைச்சரவை உறுப்பினர்கள். 1977 நவம்பர் 18க்கும் 1978 ஜூன் 7க்குமிடையில் இத்தெரிவுக்குழு 16 கூட்டங்களை நடாத்தியது. பொதுமக்களின் அபிப்பிராயங்களையும் கருதி துக் களையும் கேட்டு இக் குழு கேள்விக்கொத்தொன்றை தேசிய நாளிதழ்களில் பிரசுரிக்கச் செய்தது. கேள்விகள் பல்வேறு வகையினவாக இருந்தன.
த. வி. கூட்டணி, ல. ச. ச. கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பன இக்கேள்விக்கொத்தை அலட்சியப்படுத்தி விட்டன. பொது மக்கள் மத்தியிலிருந்த நம்பிக்கையின்மையே இந்நடவடிக்கையின் தோல்விக்கு முக்கிய காரணம் எனலாம். கேள்விக்கொத்தின் 1400 பிரதிகள் பொதுமக்களால் பெற்றுச் செல்லப்பட்டிருந்தும் 281 பேர் மட்டுமே அவற்றை நிரப்பி அனுப்பியிருந்தனர். இது கண்ணாமூச்சி வேலை என்று அறிந்ததனாலேயே பலரும் அவற்றை நிரப்பி அனுப்பி வைக்கவில்லை.
தெரிவுக்குழு பின்னர் அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்கத் தொடங்கியது. சங்கங்கள், பொது ஸ்தாபனங்கள், தனிநபர்கள் கூட சாட்சியமளித்தனர். வாய்மூலமாகவும் எழுத்திலுமாகத் தமது கருத்தை வெளிப்படுத்தியிருந்தனர். 1978 ஜூன் 7ஆந் தேதியன்று தெரிவுக்குழு தனது முடிவுகளைப் பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றியது. அறிக்கையுடன் அரசியலமைப்பு மாதிரி வரைவொன்றும் இணைக்கப்பட்டிருந்தது. யூரி. ல. சு. க. உறுப்பினர்கள் தமது எதிர்ப்புக் கருத்தையும் சமர்ப்பித்திருந்தனர்.
48

1978 ஜூன் 22ஆந் தேதியன்று தேசிய அரசுப் பேரவையில் பிரதமர் இந்தத் தெரிவுக்குழு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
1978 ஜூலை 17ஆந் தேதிய அரசாங்க வர்த்தமானியில் சட்டமூலத்தின் வடிவில் புதிய அரசியலமைப்புக்கான மாதிரி வரைவு பிரசுரிக்கப்பட்டது. அதே மாதம் 25ஆந் தேதி இது சட்டமூலமாகத் தேசிய அரசுப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் மீதான இரண்டாவது வாசிப்பு ஓகஸ்ட் 2ஆந் தேதி பிரதமரால் தொடக்கி வைக்கப்பட்டபோதே, த. வி. கூட்டணியும் பூரீல.சு. கட்சியும் தாம் இந்த விவாதத்தில் கலந்துகொள்ளப் போவதில்லையென தெரிவித்துவிட்டன. இக்கட்சியின் தலைவர்கள் இந்த அரசியலமைப்பைத் தாம் நிராகரிப்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டுச் சபையில் அறிக்கைகளை விடுத்த பின்னர் வெளியேறி விட்டனர். 137 வாக்குகள் சட்டமூலத்திற்கு ஆதரவாகக் கிடைத்தன. யாருமே எதிர்த்து வாக்களிக்கவில்லை. ஜனநாயக சோசலிஸக் குடியரசு அரசியலமைப்பு இங்ங்னமாக உருப்பெற்றுக் கொண்டது. ஓகஸ்ட் 31இல் சபாநாயகர் இச்சட்டமூலத்துக்கு ஒப்புதல் கையெழுத்திட்டார். செப்டெம்பர் 8ஆந் தேதி புதிய அரசியலமைப்பு செயற்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் இரண்டாவது குடியரசு உதயமானது.
米米米
ጦ"
gg
ges
".
瞻疹谥
"Somewhere - in the breasts of judges, in Magna Carta, or in the liberties of parliament - were laws so sacred and so essential to social stability, that no government could over ride them."
- Christopher lill , The Century of Revolution.

Page 31
தலைப்பே புதிதாக இருந்தது. புதிராகவும் இருந்தது. ஜனநாயக சோசலிஸக் குடியரசு என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அதாவது ஜனநாயக வழியில் சோசலிஸத்தைக் கொண்டுவரும் அரசியலமைப்பு என்று கூறப்பட்டது. ஜே. ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐ. தே. க. அரசு ஜனநாயக வழியில் சோசலிஸத்தைக் கொண்டுவர என்னவெல்லாம் செய்வார்கள் என்று அப்போது எதிர்பார்த்திருக்க முடியாது என்பதல்ல. இனி இத்தலைப்பை மாற்றுவதென்றால் 2/3 பங்கு பெரும்பான்மையும் சர்வசன வாக்கெடுப்பும் தேவையாயிற்று. இதை அப்போதே உணர்ந்தவர்கள் ஒரு சிலரே.
அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு இதுவரை இருந்து வந்த நியாயாதிக்கம் (அதிகாரங்கள்) உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. புதிய அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட இரண்டு புதிய விடயங்கள் குறிப்பிடத்தக்கன. நேரடி வாக்குத் தெரிவுமுறை (first past the post) ஒழிக்கப்பட்டு 65 distry-ITU 5ugigsligj6 (p60p (proportional representation) அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த விடயம் அடிப்படை உரிமைகள் விடயத்தில் மக்கள் நீதிமன்றஞ் செல்ல முடியும் என்ற ஏற்பாடாகும். சர்வதேச தராதரத்துக்கு வெகுவாகக் குறைந்தனவே என்றாலும் ஓரளவு நிவாரணத்துக்கு இடமிருந்தது. ஆனால் சிறுபான்மையினரைப் பொறுத்தளவில் 1972 அரசியலமைப்பிலிருந்த அதே குறைபாடு 1978இலும் காணப்படவே செய்தது. அதாவது, கடந்த 176 வருட கால ஆட்சியில் ஆக்கப்பட்டதான நியதிச்சட்டங்கள் யாவும் அவை எப்படித்தான் அடிப்படை உரிமைகளோடு மோசமாக முரண்பட்டாலும் தொடர்ந்தும் வலுவுடையனவாகவே இருக்கும் என்று உறுப்புரை 16 கூறுகிறது.
50
 

எதேச்சாதிகாரமான அதிகாரங்கள், நியாயமற்ற நடபடி முறைகள், பழிவாங்கும் வகையிலமைந்த ஜனாதிபதி ஆணைக்குழுச் சட்டங்கள், சிங்களம் மட்டும் சட்டம், பிரசாவுரிமைச் சட்டம் போன்ற பல அவை மானிட கெளரவதி தைக் கொச்சைப்படுத்துவனவாக இருந்தபோதிலும் தொடர்ந்தும் ஏற்புடையனவே எனக் கொள்ளப்பட்டமை அடிப்படை உரிமைகள் உத்தரவாதத்தை நடைமுறையில் வெற்றுக் கூடாக்கிவிட்டது.
1978ஆம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்பு உருவாக்கிய எதிர்மறையான தாக்கங்கள் கணக்கிலடங்கா. ஒப்பீட்டு அளவிலும் முன்னைய அரசியலமைப்புக்கள் யாவற்றையும் விஞ்சக்கூடிய அளவுக்கு ஜனநாயக விரோத அம்சங்களின் குடியிருப்பாக இந்த அரசியலமைப்பு அமைந்துவிட்டது. அதனது பெயரே முதலில் பலருக்கும் தலைச்சுற்றை ஏற்படுத்துவதாக இருந்தது. ஜனநாயக, சோசலிஸ், குடியரசு என்று இந்த அரசியலமைப்புக்குப் பெயரிடப்பட்டிருந்தது. ஆயின் ஜனநாயகத்துக்கான அம்சங்கள் இந்த யாப்பில் எங்கே உள்ளன? இது கூறும் சோசலிஸ் சித்தாந்தம்தான் என்ன? குடியரசு என்பதன் தாற்பரியம் என்பது என்ன?
என்றவாறாகப் பலரும் தலையைப் போட்டுக் குடைந்துகொள்ள வேண்டியதாயிற்று. உண்மையில் இந்த மூன்றுக்குமே குழிதோண்டும் விதத்தில் ஒரேயிடத்திலும் ஒரே நபரிடமும் ஏகப்பட்ட அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒரு ஏற்பாட்டுக்குத்தான் ஜனநாயக சோசலிஸம் என்று பெயரிடப்பட்டது.
இந்த ஜனநாயக விரோத அம்சங்களில் ஒருசிலவற்றை இப்போது பாாப்போம். முதலாவதாக, நிறைவேற்றுத் துறையினரால் வழிநடாத்தப்படுவதும் கட்டுப்படுத்தப்படுவதுமான அரசாட்சி ஒன்றை இந்த யாப்பு அறிமுகப்படுத்தியது.
பாராளுமன்றமானது அதனது அதிகாரத் தைப் பொறுத்தளவில் பூஜ்ஜியமாக்கப்பட்டு விட்டது.
5.

Page 32
அது அதல பாதாளம் நோக்கி உருண்டு கொண்டிருந்தது. அதாவது அதனால் எதனையுமே செய்யமுடியாத அளவுக்கு அது மலடாக்கப்பட்டுவிட்டது. பாராளுமன்றத்தின் வழமையான காலப்பகுதி முடிவடைந்ததும் அதனது ஆயுளை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களது வாக்குரிமைக்கு வேட்டு வைக்கும் முயற்சியில் அரசாங்கம் வெற்றிகண்டது. இதற்கென அரசியலமைப்பு திருத்தப்பட்டு மோசடியான முறையில் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றும் நடாத்தப்பட்டது.
இதனி மூலம் பாராளுமனி றத்துக் கான பொதுத்தேர்தல் என்று ஒன்று இல்லாமலே இரண்டாவது தடவையும் ஆளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு மாற்றாக அல்லது பிரதியுபகாரமாகவே, திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களை ஆளுங் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைத்து இருந்தனர். அதாவது ஐந்து வருடங்களுக்குத் தெரியப் பட்டவர்களுக்கு பதிது வருடங்களுக்கான பதவி கிடைத்தது. அங்ங்ணம் நீட்டித்தமைக்கு நன்றிக்கடனாகவே இராஜினாமாக் கடிதங்கள் பாவிக்கப்பட்டன. உண்மையில் இதில் மக்கள் தவறுகாண வேண்டியது அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமே தவிர கடிதங்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதியிடம் அல்ல. ஏனெனில், இவர்களது சம்மதம் இருந்திருக்காது விட்டால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டிருக்க முடியாது. யானையானது தன்னைக் கட்டுவதற்கான சங்கிலியை யானைப் பாகனிடம் தானே எடுத்துக் கொடுப்பது போல தங்களை அறிந்தோ அறியாமலோ இவர்கள் மாபெருந் தவறை இழைத்தார்கள். ஆனால் அந்த வடு காலத்தால் அழியாத வடுவாகி உலகெங்கும் பேசப்படுவதுமாயிற்று. அரசியலமைப்புக்கு இடப்பட்ட பெயரின் முதலாவது சொல்லுக்கே இத்தகைய வர்ண அலங்காரம் கிடைத்துவிட்டது.
52

ஜனாதிபதி பெற்றுக்கொண்ட இக்கடிதங்களை அவர் தான் விரும்பிய எந்த நேரத்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அங்ங்ணம் அவர் பயன்படுத்திய சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை. அப்போது ஜனாதிபதி பெற்றுக்கொண்ட இக்கடிதங்களை அவர் தான் விரும்பிய எந்த நேரத்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அங்ங்ணம் அவர் பயன்படுத்திய சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை. அப்போது செயற்பட்ட பாராளுமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றமாக இல்லாமலிருந்தமையால் அதனை ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு தீர்மானங்களை எடுக்கும் புதிய அமைப்பொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான் சர்வகட்சி மாநாடு என்பது. ஐ. தே. கட்சியின் 1977 தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவதில் அக்கறை காட்டாத இக்கட்சியின் தலைமைப்பீடம் இப்போது அத்தகைய கருவி ஒன்றைப் பாவிக்க முனைந்தமை தற்செயலான நிகழ்வென்று ஒதுக்கிவிடப்படக் கூடியதல்ல.
இரண்டாவதாக, ஏற்கனவே தேய்ந்தும் நலிந்தும் போயிருந்த அரசியற் கருத்தொருமைப்பாடு’ என்ற எண்ணக்கரு முற்றாகவே அற்றுப்போகச் செய்யப்பட்டது. இந்த அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் கீழ் ஆகப்பெரிய எதிர்க்கட்சியான பூரீ. ல. சு. கட்சியின் தலைவியினுடைய குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு அவர் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மூன்றாவதாக, இதே அரசியலமைப்பின் கீழ்த்தான் இனங்களுக்கிடையிலான உறவுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்நாட்டு யுத்தம் முழு அளவில் வெடித்தது. அதேநேரத்தில் மோசமான ஆலோசனையினி படி செய்யப்பட்டதும் அநாவசியமானதுமான ஆறாவது திருத்தம் அரசியலமைப்புக்குக் கொண்டுவரப்பட்டது.
இத்திருத்தத்தின்படி ஏற்கனவே பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் எல்லோரும் பிரிவினைக்கு எதிராகப்
53

Page 33
புதியதாகச் சத்தியப் பிரமாணம் செய்யவேண்டியிருந்தது. நாட்டின் தமிழ்ப் பேசும் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவாகியிருந்த அத்தனை உறுப்பினர்களும் இதன்மூலம் பாராளுமன்றத்துக்கு வராதபடிக்குச் செய்யப்பட்டனர். ஆயிரமிருந்தும் வசதிகளிருந்தும் ஜனாதிபதி தனது சட்டைப்பையிலுள்ள கடிதங்களை வைத்துக்கொண்டும் சர்வகட்சிமாநாடு என வாயினிக்கச் சொல்லிக்கொண்டும் காலத்தைக் கடத்திக் கொள்ள முடிந்தது.
(அகற்றப்பட வேண்டியதற்கான அவசியங்கள்)
பொதுஜன முன்னணி என்பது 1994 பொதுத் தேர்தலை முன்வைத்து ஏற்படுத்தப்பட்ட கூட்டாகும். இக் கூட்டில் யூனி.ல.சு.கட்சியே பிரதான பங்காளியாக இருந்தது. இந்த முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:
'நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிப்பதற்கான அதிகார ஆணையை யூனலங்கா மக்களிடமிருந்து பொதுஜன முன்னணி கோரிநிற்கின்றது. அத்துடன் ஒரு புதிய அரசியலமைப்பொன்றை ஆக்கவும் அதனைச் செயற்படுத்துவதன் மூலம் மக்களுக்கு அவர்களது இறைமை பூரணமாகவே திருப்பிக் கொணடுவந்து தரப்படவும் வழிசெய்யப்படும். இந்த இறைமையானது பாராளுமனறத்த7லுள்ள அவர்களது பிரதிநிதிகளினால் பிரயோகிக்கப்படும். பொதுஜன முன்னணியானது அரசாங்கத்தை அமைப்பதன்மேல் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொணடதான அரசியலமைப்பு நிர்ணயசபை ஒன்றைக்கூட்டி புதிய அரசியலமைப்பொண்றை ஆக்கி நிறைவேற்றும். இது தனது வலிமையையும் வலிதுடைமையையும் மக்களின் அரசியல் விருப்பின் வெளிப்படுத்தல் வாயிலாகப் பெற்றுக்கொள்ளும்.”
54

இத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் வரப்போகும் புதிய அரசியல் அமைப்பின் சிறப்பம்சங்கள் சில குறிப்பிடப்பட்டிருந்தன. ஆயினும் தேர்தலில் பொதுஜன முனி னணி மிகக் குறைந்த பெரும்பான்மையினாலேயே வெற்றிபெற முடிந்தது. ஆனால் தேர்தலில் வெற்றிபெற்றதும் யார்கொடுத்த போதனையோ அரசியலமைப்பு நிர்ணயசபை என்பதைக் கைவிட்டு பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பதைப் பற்றிக்கொண்டது இந்தப் பொதுஜன முன்னணி இங்கேயோர் ஒற்றுமை என்னவென்றால் ஐ.தே.கட்சி அரசாங்கமும் 1977இல் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வகட்சி மாநாடு பற்றிக் கூறிவிட்டுப் பதவிக்கு வந்ததும் அதை அடியோடு மறந்துவிட்டிருந்தது. பின்னர் 1983க்குப் பின்னர்தான் அதுவும் யார் யாரோ முதுகில் பிடித்துத் தள்ளிய பின்னரே இம்மாநாடு பற்றி உச்சரிக்கத் தொடங்கியிருந்தது.
தற்போது பொதுஜன முன்னணியும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருந்த அரசியலமைப்பு நிர்ணயசபை என்பதை வசதியாக மறந்துவிட்டு பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பதோடு திருப்திப்பட்டுக் கொண்டு விட்டது.
இங்கே பொதுஜன முன்னணி இரண்டு முக்கிய விடயங்களை கவனத்தில் எடுக்கவில்லை என்பது மிகத் துரதிஷ்டவசமானதாகும். முதலாவது யாதெனில் அரசாங்கமொன்று 17 வருடங்களின் பின்பு மாற்றப்படுகையில் மக்களிடம் இருந்திருக்கக்கூடிய எதிர்பார்ப்பு எப்படிப்பட்டதாகும்? அவர்களுடைய அபிலாசைகள் என்பது வெறுமனே ஒரு புதிய அரசியலமைப்பை வரைவதுடன் மட்டும் திருப்திப்படுத்தப்படக்கூடியதல்ல. அதற்கும் மேலாகப்போய் சிலவற்றைச் செய்வதற்கான விருப்புமி திறனும் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே அரசாங்கம் தனது பதவிக் காலத்தின் முக்கிய பகுதியை அரசியலமைப்பை வரைவதாகக்கூறிக் காலங்கடத்த முடியாது. மற்றையது யாதெனில்
55

Page 34
அரசியலமைப்பொன்று நிலைபெறுமாறு அமைய வேண்டுமாயின் எந்த அரசாங்கத்தின் தயவில் அது வரையப்படுகின்றதோ அந்த அரசாங்கம் தனது பெருந்தன்மையையும் விட்டுக்கொடுக்கும் விருப்பையும் வெளிப்படுத்தும் வகையில் செயற்பட்டுமிருக்க வேண்டும். தனது சொந்தக் குரலின் எதிரொலியை மட்டும் கேட்டு இரசித்து மகிழாமல் ஏனையவர்களது குரல்களையும் வாஞ்சையுடன் செவிமடுக்க வேண்டும். இதற்காகவே முன்னர் இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபை பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். புதிய அரசியலமைப்பை வரையும் முயற்சியில் இந்த அரசாங் கமீ வெற்றிபெறுமா என பது பல தீத கேள்விக்குறியாகிவிட்டது. பாராளுமன்றத் தெரிவிக்குழுவின் பெயரால் அரசாங்கமே அவ்வப்போது பல்வேறு நகல்களை வெளியிட்டு வந்துள்ளது. இதில் எது இறுதிவடிவம் பெறும் என்பது எவருக்கும் தெரியாது. அப்படி ஒருவடிவம் பெற்றாலும் அது ஆனால் பாராளுமன்றத் தெரிவுக்குழு கட்டுமரத்தில் ஏறிக் நாட்டிலிலுள்ள பிரச்சனைக்குத் தீர்வைக் கொண்டுவருமா என்பதும் தெரியாது. அப்படித் தான் தீர்வு யோசனைகள் அதில் இருந்தாலும் அது எப்படி அமுலாக்கப்படும் என்பது அடுத்த கேள்வியாகும். ஏனெனில் பூரீலங்காவின் அரசியல் வரலாற்றைத் தெரிந்தவர்களுக்கு தீர்வுமுயற்சிகளுக்கு இதற்கு முன்னர் என்ன நடந்தது என்பது அவ்வளவு விரைவாக மறந்து போயிருக்க முடியாது. கரைதெரியாமல் பயணிப்பதைப் போன்று அமைந்துவிட்டது மட்டுமல்லாமல் இநீதப் பயண தீ தைப் பற்றிக் கரையிலுள்ளவர்களுக்குக் கதைகதையாக அளப்பது போலவும் ஆகிவிட்டது. பேராசிரியர் பீரிஸ் வாய்வலிக்காது பேசிவருவதைப் பார்க்கும் எவருக்கும் அவர் ஒரு நவீன சிந்துபாத்தா என்று சிந்திக்காமலிருக்க முடியாது.
ஏனைய நாடுகளில் இத்தகைய ஒரு பிரச்சனைக்குத் தீர்வுகாணி பதாயினி எதி த கைய வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கலாம் என்பதற்கான சில உதாரணங்களை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
56

அரசியலமைப்புப் பற்றிய உண்மையான தத்துவார்த்த விளக்கங்கள் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் பூரீலங்கா இன்றைய தற்கொலைப் பாதையில் அடியெடுத்து வைத்திருக்காமல் தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஆகக்குறைந்தது 1948க்குப் பின்னைய அரசியல் வரலாற்றைக்கூட நன்கு புரிந்து கொள்ளாத விதத்திலேயே சிறுபான்மை இனங்களுக்கு நம்பிக்கையூட்டப்படுகின்றது. ஆனால் இது புளித்துப் போன கதைதான். தற்போதைய நிலையில் வடக்குகிழக்கு மக்கள் இதையெல்லாம் நம்பி வாயைப்பிளக்கும் காலம் மலையேறிவிட்டது எனிறு நேரடி அனுபவங்கள் உணர்த்திவருகின்றன.
இருப்பினும் கொடுத்த வாக்குறுதிக்கேற்ப எதையாவது வரைந்து கொடுத்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திலிருக்கும் அரசாங்கம் தனது பதவிக் காலம் முடிவதற்கு முன்னர் நிச்சயம் ஏதோவொரு காகிதக் கத்தையை வெளியிட்டு அதை அரசியலமைப்பு என்று கூறப் பார்க்கும். அதை யூரிலங்காவின் பேரினவாத சக்திகளே ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமாயிருக்கும் போது இரத்தப்பலி கொடுத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு அது தீர்வாகுமா என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மக்களோடு எவ்விதத் தொடர்புமற்றது, அவர்களது அபிலாஷைகளோடு சம்பந்தப்படாதது, யாராலோ எமக்கென ஆக்கப்பட்டது என்றெல்லாம் குற்றஞ் சாட்டப்பட்டு எம்மை ஆளும் அதிகார நெறிமுறையற்றதென்று வர்ணிக்கப்பட்ட 1946ஆம் ஆண்டின் அரசியலமைப்பு 25 வருட காலத்துக்கு நாட்டில் ஒப்பீட்டளவில் அமைதி, இன செளன்யம், ஸ்திரமான அரசாங்கம், தனிநபர் உரிமைகள், சுதந்திரங்களின் மதிப்பு என்பவற்றை எல்லாம் எமக்கு வழங்கியிருந்தன என்று துணிந்து கூறலாம். அதில் குறைபாடுகள் இல்லாமலில்லை. குறிப்பாக, சிறுபான்மையினருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பாரபட்சமான
57

Page 35
சட்டங்களைத் தடுத்து நிறுத்த அதனால் முடியவில்லை. அதனாலேயே பின்னாளில் பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டன. ஆனால் மறுபுறத்தில், மண்ணின் மைந்தர்களால் ஆக்கப்பட்ட மற்றைய இரு யாப்புக்களினாலும் எதேச்சாதிகாரம், அடக்கு முறைகள், திறனின்மை, ஊழல், உட்குழப்பங்கள் என்பன மட்டுமே எமக்குச் சொந்தமாகின. 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் வந்த இந்த இரு அரசியலமைப்புக்களும்தான் கட்சிகளுக்கு இடையில் என்றுமே இணக்கம் காணமுடியாத அளவுக்குப் பிளவினையும் குரோதத்தையும் ஏற்படுத்தின. இனங்கள் என்றுமில்லாதவாறு துருவமயமாகின. நாடு சின்னாபின்னமானது. மக்கள் கொடூர மனங்கொண்டவர்களாக மாற்றப்பட்டனர். வன்முறையை சமூகம் வாளாவிருந்து ரசிக்கத் தொடங்கியது. இந்த அனுபவங்களிலிருந்து இரண்டு முடிவுகளை நாம் ஊகிக்கலாம். ஒன்று அரசியலமைப்பொன்று வரையும் வழிமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது. மற்றையதுஅந்த அரசியலமைப்பின் உள்ளடக்கம் என்ன என்பது?
கண்டிப்பான சட்டப் பொருளில் பார்த்தால் இந்த இரண்டும் ஒழுங்கான சட்ட முறைப்படியே ஆக்கப்பட்டன. மண்ணின் மைந்தர்களது சொந்தத் தயாரிப்புக்கள். ஆனால் இந்த இரண்டும் நாட்டு மக்களது முழுமையான ஆதரவைப் பெற்றவையாகாது. அதாவது கட்சி பேதமின்றி மக்கள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த இரண்டுமே அப்போது அரசாங்கத்தை அமைத்திருந்த கட்சியினது கொள்கை, அரசியற் கோட்பாடுகள், சொந்த விருப்பு வெறுப்பு என்பவற்றையே பிரதிபலித்து நின்றன. ஆனால் அரசியலமைப்பை உருவாக்குதல் என்பது ஓர் அரசாங்கத்துக்கு மட்டுமே உரிய பிரத்தியேகமான உரிமைவழிச் செயற்பாடாகாது. அரசாங்கமே இதனைப் பிரத்தியேகமாகச் செய்யும் படி விட்டுவிடுவது என்பது பிரபுக்களும் நிலச்சுவாந்தர்களும் சேர்ந்து ஜோன் மன்னரை அழைத்து மக்னகாட்டாவைத் தயாரிக்குமாறு கேட்பது போலத்தான் என்று செனட்டர் நடேசன் கியூ சி. தனது விமர்சனக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளமை எவ்வளவு நிதர்சனமாக நிரூபணமாயிற்று.
58

பாராளுமன்ற தீ தினால் வரையப்பட்டு அதனாலேயே நிறைவேற்றப்படும் அரசியலமைப்பு எப்படிப்பட்டதாக இருக்கும்? பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மையின் விருப்பை மட்டுமே அது பிரதிபலிப்பதாக இருக்காதா? 1930களின் நடுப்பகுதியில் நாஜி ஜேர்மனியில் பெரும்பான்மை விருப்புத்தான் அடொல்ப் ஹிட்லர் என்பவனை அதிகாரத்துக்குக் கொண்டுவந்தது. பாராளுமன்றத்தின் சம்மதத்தோடுதான் ஹிட்லரும் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தான். ஜேர்மனியின் சட்டப்படி அவனில் எந்தப் பிழையும் காணமுடியாது. ஆனால் முழு உலகுமே இன்று அவனைத் தூற்றுகின்றதென்றால் காரணமென்ன? பெரும்பான்மை முடிவு என்பது எல்லா விடயங்களுக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருந்திவராது என்ற பாடத்தையே அவனிடமிருந்து நாம் படித்தோம். ஆனாலும் பதவி என்று வரும்போது இந்த அனுபவங்களை வசதியாக மறந்துவிட்டு ஜனநாயகம் என்ற நாமத்தைப் போட்டுக் கொள்கின்றோம். ஆக, பெரும்பான்மைக் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலுள்ள தவறை மட்டுமன்றி அதிலுள்ள உள்ளார்ந்த அபாயத்தையும் ஹிட்லரின் பாடம் நமக்கு உணர்த்தி நிற்கின்றது.
இதற்கு மாற்றாகச் சர்வசன வாக்கெடுப்பை நடாத்தலாம் என்றாலும் அதிலும் இந்த பெரும்பான்மை என்ற அபாயம் அப்படியே இருக்கவே செய்யும். ஏனெனில் அங்கும் பெரும்பான்மை வாக்குத்தானே தீர்மானம் எடுக்கின்றது. 51 வீத வாக்குகள் 100 வீத மக்களுக்காகத் தீர்மானம் எடுக்கின்றன.
அண்மையில் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் இங்கே நினைவிற் கொள்ளப்பட வேண்டும். அந்நாட்டின் பன்மைத்துவ கலாசாரத் தன்மையை அங்கீகரிக்கவும் அதனை நடைமுறையில் கடைப்பிடிக்கவுமென வடிவமைக்கப்பட்ட சார்லொட்டேரவுண் உடன்படிக்கை (Charlottetown Accord) கொண்டிருந்த விசேட அரசியலமைப்பு அம்சங்கள் வரவேற்புக்குரிய பல விடயங்களைக் கொண்டிருந்தன.
59

Page 36
கனேடிய மாகாணங்களது எல்லா முதல்வர்களாலும் ஆள்புலம் மற்றும் ஆதிவாசிகளது தலைவர்களாலும் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும் நாடுதழுவிய சர்வசன வாக்கெடுப்பில் இந்த யோசனைகள் யாவும் நிராகரிக்கப்பட்டன. பல்வேறு பிரிவு மக்கள் வெவ்வேறு காரணங்களுக்காக வாக்கெடுப்பில் எதிரிடையாக வாக்களித்தனர். இதில் மிக வேடிக்கையான காரணமொன்றும் இருந்தது. அது என்னவென்றால் அப்போதைய பிரதமராக இருந்த பிரையன் மல்ரோணி மீது தங்களுக்கிருந்த அதிருப்தியை வெளிக்காட்ட எச்சந்தர்ப்பமும் வழங்கப்படாது கொதித்துப் போயிருந்த வாக்காளர்களுக்கு சர்வசன வாக்கெடுப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட விதத்தில் அறிவார்த்தமாகப் பார்த்தால் மல்ரோணிக்கும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் வாக்கெடுப்பு என்று வந்தால் அப்படித்தான். புதிய யோசனைகள் வேண்டாம் என்று தீர்ப்பளித்தாயிற்று.
(pg. 660J.
மேற் சொனி ன அனுபவங்களினி படி பார்தி தாலி இலங்கைக்கெனப் புதிய அரசியலமைப்பொன்றை வரைதலில் எப்படிப்பட்ட கவனஞ் செலுத்தப்பட வேண்டும் என்பதை ஊகித்துக் கொள்ள முடியும். தெரிவிக்கப்படும் யோசனைகளை வரவேற்றல், அவற்றை ஆராய்தல், கலந்தாலோசனைகளை நடாத்தல், இறுதியில் புதிய யாப்பொன்றை வரைதல் என்ற பல்வேறுகட்டங்களிலும் சுதந்திரமான ஓர் அமைப்புக்கு - அரசியலமைப்பு ஆணைக்குழு அல்லது வரைவுக்குழு ஒன்றுக்கு இந்தப் புனிதப் பணி விட்டுவிடப்பட வேண்டும். அதுவும் சட்டப்படி ஏற்பாடு செய்துள்ளதன்படியே வழங்கப்படவும் வேண்டும். இக்குழுவானது நாட்டிலுள்ள மக்கள் பிரிவினர் யாவரையும் பிரதிநிதிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அமைப்புக்குள் அரசாங்கம், எதிர்க்கட்சி, பாராளுமன்றத்தில்
60

அங்கத்துவம் பெற்றிருக்காத ஏனைய அரசியல் கட்சிகள், அக்கறையுள்ள வேறு குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மேற்சொன்ன அனுபவங்களின்படி பார்த்தால் இலங்கைக்கெனப் புதிய அரசியலமைப்பொன்றை வரைதலில் எப்படிப்பட்ட கவனஞ் செலுத்தப்பட வேண்டும் என்பதை ஊகித்துக் கொள்ள முடியும். தெரிவிக்கப்படும் யோசனைகளை வரவேற்றல், அவற்றை ஆராய்தல், கலந்தாலோசனைகளை நடாத்தல், இறுதியில் புதிய யாப்பொன்றை வரைதல் என்ற பல்வேறு கட்டங்களிலும் சுதந்திரமான ஓர் அமைப்புக்கு - அரசியலமைப்பு ஆணைக்குழு அல்லது வரைவுக்குழு ஒன்றுக்கு இந்தப் புனிதப் பணி விட்டுவிடப்பட வேண்டும். அதுவும் சட்டப்படி ஏற்பாடு செய்துள்ளதன்படியே வழங்கப்படவும் வேண்டும். இக்குழுவானது நாட்டிலுள்ள மக்கள் Lf]f]6)fì601 ff யாவரையும் பிரதிநிதிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அமைப்புக்குள் அரசாங்கம், எதிர்க்கட்சி, பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றிருக்காத ஏனைய அரசியல் கட்சிகள், அக்கறையுள்ள வேறு குழுக்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் அவை தமது கருத்துக்களை சமமான மதிப்புடன் நின்று எடுத்துரைக்கத் தக்க வாய்ப்பும் வழங்கப்படவேண்டும். இத்தகைய கருத்துக்கள் யாவும் சமபெறுமதியுடன் கவனத்தில் கொள்ளப்படும் என்பதற்கான உத தரவாதமும் ஏதாவதொரு விததி தில் அங்கு வழங்கப்பட்டிருக்கவும் வேண்டும்.
இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டிருந்த ஒருவிடயம் பங்குபற்றல் ஜனநாயகம் பற்றியதாகும். அது உண்மையில் உருப்பெறுகின்ற இடமும் இதுவேதான். குறிப்பாக, இன, மத, மொழி, கலாசார, பிரதேச அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட மக்கள், குழுக்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் ஜனநாயகம் என்பதன் பொருள் மேலுள்ள பந்தியில் குறிப்பிடப்பட்டதைப் போன்ற அமைப்புக்குட்பட்ட வழிமுறை கையாளப்படுவதும் அதன் மூலம் ஆட்சியில் எல்லாக் குழுக்களும் பங்குபற்ற வழியேற்படுவதும்தான்.
6.

Page 37
இல்லாவிடின் அங்கு பங்குபற்றல் ஜனநாயகம் இருக்க முடியாது.
அங்கு ஜனநாயகம் என்பதும் பொருளற்றதாகி விடும்.
அரசியலமைப்பு என்பது பெரும்பான்மை வாக்குகளால்
மட்டும் உருவாக்கப்படுவது என்றால் அது கட்டாயமாக
ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்றும் பொருளாகாது.
இனி இரண்டாவது விடயத்துக்கு வருவோம். அதாவது அரசியலமைப்பின் உள்ளடக்கம் எப்படியிருக்க வேண்டும் என்பதில் ஏதாவது அனுபவப் பாடங்கள் இருக்கின்றதா எனப் பார்ப்போம். நாட்டிலிலுள்ள எல்லா மக்களதும் அபிலாஷைகளையும் பிரதிபலிப்பதாயும் வெறுமனே பெரும்பான்மையினரின் விருப்பை மட்டும் பிரதிபலிக்காமலும் அரசியலமைப்பு அமைய வேண்டுமாயின் அது அத்தியாவசியமாக ஒருசில ‘கடிவாளங்களையாவது கொண்டிருக்க வேண்டும். இவை நாட்டுக்குநாடு வெவ்வேறு வடிவினதாக இருக்க முடியும். ஆனால் அவற்றின் பிணிக்கும் தன்மை அல்லது கட்டுப்படுத்தும் தன்மை என்பது ஒரேயளவினதாக, சர்வதேசத் தராதரத்துக்கு அமைவானதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வகையில் சமகாலச் சர்வதேசச் சட்டத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியினை வைத்துப் பார்க்கையில் இக்கடிவாளங்களானவை ஆகக் குறைந்தது நீதிமன்ற நிவாரணத்துக்கு உட்படக் கூடிய உரிமைகள் பட்டயம், நீதிமுறை மீளாய்வுக்கான ஏற்பாடு, தெட்டத் தெளிவான வலுவேறாக்கம், சுதந்திரமான நீதித்துறை என்பவற்றைக் கொண்டதாக அமைதல் அத்தியாவசியமாகின்றது.
இங்கே உரிமைகள் பட்டயம் என்பது 1986ஆம் ஆண்டில்
ஐநாவினால் நிறைவேற்றப்பட்டதான மனித உரிமைகள்
62

ܚܝܠܐ
தொடர்பான சர்வதேசக் கட்டுறுத்துக்கள் இரண்டிலுமுள்ள ஏற்பாடுகளுக்குக் குறையாததான உரிமைகள் சுதந்திரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று பொருள். அங்ங்னமே நீதிமுறை மீளாய்வு என்பது கடந்தகால, நிகழ்கால, எதிர்கால சட்டங்கள் யாவற்றையும் நீதிமன்றத்தில் பரீட்சித்து அவை அரசியலமைப்புக்கு இசைவாக உள்ளனவா எனப் பார்க்கப்பட வேண்டும் என்று பொருள்.
வலுவேறாக்கம் என்பது சட்டவாக்கத்துறையான பாராளுமன்றம், நிறைவேற்றுத்துறையான அமைச்சரவை, நீதித்துறை ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று எவ்விதத்திலும் தலையிடாமல் தத்தமது பணிகளை ஆற்றல் வேண்டும் என்று பொருள்படும். எல்லாவற்றிலும் முக்கியமாக நீதித்துறையானது நாட்டு மக்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாக முற்றுமுழுதான சுதந்திரத்துடன் இயங்கிவர மேற்சொன்ன அத்தியாவசியத் தேவைகள் என்பவை பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட விடயங்களல்ல என்பதுடன் இவற்றில் எவ்வித விட்டுக் கொடுப்புகளுக்கும் இடமிருக்கவும் கூடாது. அரசியலமைப் பொன்று மேற்சொன்னவாறாக கடிவாளங்களைக் கொண்டிருக்குமானால் மட்டுமே அது ஒரு சமூக ஒப்பந்தமாக அமைந்து மக்களை ஆள்வதற்குரிய உணர்மையான அதிகார ஆணையைப்
பெறமுடியும். அங்ங்னமல்லாமல் மேற்சொன்ன விடயங்களை
உள்ளடக்கத்தவறின் அல்லது அலட்சியப்படுத்தின் அரசியலமைப்பு விரைவில் தனது பொருத்தமுடைமையை இழந்துவிடும். இலங்கையில் 1972, 1978ஆம் ஆணி டுகளினி அரசியலமைப்புக்களுக்கு இதுதான் நடந்தது. இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கமானது தேவையற்ற விதத்தில் வேறு வழிகளில் அதுவும் ஏற்கப்பட முடியாத வடிவங்களில் அத்துடன் சிலவேளைகளில் கட்டாயத்தின் வடிவில் சமூக ஒப்பந்தத்தைக் கொண்டுவர முயற்சிக்கும்.
63

Page 38
ஆனால் இலங்கையின் அரசியல் பின்னணியை வைத்துப் பார்த்தால் மேலே நாம் கூறியதைப்போல ஆகக்குறைந்த கடிவாளங்கள் அல்லது உத்தரவாதங்கள் என்பது ஒரு போதும் போதியதாக மாட்டா. நாடு இன்றிருக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு இட்டுவந்ததான காரணிகளை அடையாளங்கண்டு (அது அத்துணை சிரமமான காரியமல்ல) அவற்றைக் களைவதற்கான பரிகாரங்களையும் கூறுவதாக இருக்க வேண்டும். சிறுபான்மை மொழிக்குழுக்கள் உண்மையான சுயாட்சி என்பதை மட்டுமன்றி மத்தியிலும் அதிகாரங்களைப் பகிர்வதற்கான வழிவகையிருக்க வேண்டும். அதாவது அதிகாரங்களது மீள்பகிர்வு இடம்பெற வேண்டும். சட்டவாக்க, நிறைவேற்றுத்துறையினது பணிகள் மீள் வரைவிலக்கணப்படுத்தப்பட வேண்டும். பொதுவாழ்வில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அறரீதியிலான கடப்பாடுகளிலிருந்து விடுபட முடியாத அளவுக்கு கடிவாளங்களும் உத்தரவாதங்களும் அமைந்திருக்க வேண்டும். இதுவே 21ஆம் நூற்றாண்டை நாம் நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதற்கான ஒரேயொரு வழியுமாகும்.
ஆனால் இலங்கையில் என்ன நடக்கின்றது? அரசியலமைப்பினை வரைவோர் கைக்கொள்ளும் வழிமுறைகள் எத்தகையன? கடந்தகாலத்தில் இடம்பெற்ற அதே தவறுகள் மீண்டும் மீண்டும் இழைக்கப்படவில்லையா? அரசியலமைப்பு யோசனைகள் யாரிடமிருந்து வரவேற்கப்பட்டன? கலந்தாலோசனைகள் யாருடன் நடாத்தப்பட்டன? பங்குபற்றுவோர் உண்மையிலேயே மக்கள் பிரதிநிதிகள்தானா? எல்லாச் சமூகங்களும் பங்குபற்றுகின்றனவா? எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வரைவு முயற்சியில் ஈடுபட்டிருப்போர் யார்? இவற்றுக்கான விடைகளை
வாசகர்களே கண்டறிய முடியும் !
※※※ YYYYR YN YN WYF YN
64

'%/fuၿမိဳ့မ်ား எப்படி அமைதல் ಯಾ೦) புதிய சிந்தனைகளும் போக்குகளும்
கெரகிளிற்றஸ்(Heracitus) என்ற கிரேக்க தத்துவஞானி கி.மு. 513இல் பின்வருமாறு கூறியுள்ளான்: "ஒரு நபர் அதே ஆற்றுக்குள் இரண்டு முறை இறங்க முடியாது". இதே காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடிய கௌதம புத்தரும் இதே கருத்தைக் கூறியுள்ளதாக பெளத்த நூல்கள் குறிப்பிடுகின்றனவாம். உயிருள்ளவை, உயிரற்றவை ஆகிய இரண்டுமே என்றுமே நிரந்தரமற்றவை என்பதைப் புத்தர் குறிப்பிட்டதாகக் கொள்வர். எல்லாப் பொருட்களுமே தொடர்ச்சியான மாற்றத்துக்கு உட்பட்டவையே என்ற விஞ்ஞான விதியையே சமய ஞானிகளும் குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் யோகர் சுவாமியும் இங்ங்ணமே
எதுவுமே நிரந்தரமில்லை' என அடிக்கடி கூறுவாராம்.
இந்தப் பீடிகை ஏனென்றால் மேலே சொன்னது போலவே சமூகமொன்றில் சட்டம் என்றைக்குமே நிரந்தரமாக இருக்க முடியாது என்பதைச் சுட்டிக் காட்டிடவேதான். சட்டங்கள் காலத்துக்குக் காலம் மீளாய்வு செய்யப்பட வேண்டும். திருத்தியமைக்கப்பட வேண்டும். சமூகத்தின் மாறிவருந் தேவைகளுக்கு முகங்கொடுக்க மாத்திரமன்றி புதிய கோணத்தில் பயணத்தைத் தொடங்கவும் இந்த மீளாய்வும் திருத்தங்களும் அவசியம் எனலாம். இவ்விதமே ஒரு நாட்டின் அரசியலமைப்பும் அமைந்திட வேண்டும். இது அரசினுடைய அதியுயரியதும் அடிப்படையானதுமான சட்டமாக அமைகின்றமையின் அந்தளவுக்கு அது மாற்றங்களையும் திருத்தங்களையும் உள்வாங்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
65

Page 39
கோட்பாட்டளவில் பார்ப்பின் அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும். அது என்ன சமூக ஒப்பந்தம்? மக்கள் தாமாகவே முனி வந்து அரசினி தத்துவங்களுக்கு (அதிகாரங்களுக்கு) தங்களை ஒப்படைக்க உடன்படுதலும் அத்தத்துவங்களை எப்படி எவ்வெவற்றுக்கிடையில் பகிர்ந்தளித்தல் என்பதில் உடன்படுதலுமாகும். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் முறை, அதிகாரங்களின் பிரயோகமும் அவற்றுக்கான மட்டுப்பாடுகளும் இவற்றுள் உள்ளடங்கியிருக்கும்.
18ஆம் நூற்றாண்டில் தோமஸ் பெயின் என்ற அறிஞர் எழுதினார்: "ஒர் அரசியலமைப்பு என்பது அரசாங்கத்துக்கு முன்னால் வந்தது. அரசாங்கமென்பது அரசியலமைப்பொன்றின் -- உருவாக்கம் மட்டுமே. அரசியலமைப்பெண்பது அரசாங்கத்தின் செயற்பாடொன்றால் வந்ததுமல்ல. அதனது செயலுமல்ல. ஆனால், அந்த அரசாங்கத்தை அமைக்கின்ற மக்களது செயற்பாடாகும்".
ஆனால் நடைமுறையில் நடப்பதென்ன? அரசியலமைப்பை வரைதலில் பொது மக்கள் எந்தளவு தூரம் ஈடுபடுகின்றார்கள் அல்லது பங்கெடுக்கின்றார்கள்? அரசியலமைப்பின் வடிவமும் அதன் உள்ளடக்கமும் தீர்மானிக்கப்படுவது பதவியிலுள்ள அரசாங்கத்தினாலேயே தவிர பொதுமக்களாலல்ல என்பதை முன்னரும் பார்த் திருக்கின்றோம். மேலும் அதனை வரைபவருடைய, அத்தனிநபரின் அரசியற் சித்தாந்தத்தை, நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகவும் அது இருக்கும். உதாரணமாக 1972இன் அரசியலமைப்பைப் பாருங்கள். கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வாவுக்கு மிகப் பிடித்தமான - பாராளுமன்றத்தின் lfuyut 56.60)LD (Supremacy of the legislature) 6T6ip Sitgs) அரசியற் தத்துவம் முற்றுமுழுதாக முதனிமைப் படுத்தப்பட்டிருந்தது. சட்டவாக்கத்துறையின் (பாராளுமன்றத்தின்) நடவடிக்கை ஒன்றின் சட்டமுறையாந் தன்மையினைக் கேள்விக்குட்படுத்திச் சோதிக்கும் நீதிமன்றத்தின் அதிகாரம் இதன் மூலம் முதன்முதலாக அகற்றப்பட்டது.
66

இதன் பொருள் யாதென்றால் அப்போதைய தேசிய அரசுப் பேரவையானது, தானே ஆக்கிய சட்டங்கள், நிறைவேற்றிய தீர்மானங்கள் அரசியலமைப்புக்கு உகந்ததாக இருக்கின்றதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் ஒரேயொரு நீதிபதியாகத் தன்னையே நியமித்துக் கொண்டது. தேசிய அரசுப் பேரவை அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டது. இதிகாச, புராணங்களில் வரும் சில பூதங்கள் இப்படித்தான். உருவாக்கிவிட்டவரையே துரத்தத் தொடங்கி விடும். அதுபோலவே இந்தத் தேசிய அரசுப் பேரவை அரசியலமைப்பு விடயத்தில் தானே நீதிபதி என்று விளம்பி விட்டது. சட்டத்தை நீதிமுறையால் ஆராய்ந்து அதன் இயல்பு பற்றித் தீர்மானிக்காமல் அல்லது சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு ஏற்பாடுகளைக் குறிப்பிட்டு அதன்கீழ் ஆராயாமல்- பாராளுமன்ற உறுப்பினர்களது பெரும்பான்மை வாக்குகளினால் மட்டும் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதாவது 100 பேர் உள்ள பாராளுமன்றத்தில் 51 பேர் வாக்களித்தால் சட்டம் சரியானது. 49 பேர் எதிர்த்து வாக்களித்தாலும் அது பிழையானதாக மாட்டாது. இதுதான் பாராளுமன்ற மீயுயர்தன்மை என்பதன் பொருள்.
மறுபுறத்தில் 1978இன் அரசியலமைப்பை எடுத்தால் ஜே. ஆர். ஜெயவர்த்தனா தமக்கு மிகப் பிடித்தமான நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தி யாப்பை வரையச் செய்தார். இந்த முறைமையின் கீழ் அவரே எல்லாவற்றினதும் தலைவரானார்(அரசாங்கம், அமைச்சரவை, ஆயுதப்படை முதலியன). தன்னுடைய பதவிக்கு மட்டும் அதிகாரங்களைக் குவித்தது மட்டுமல்லாமல் தனக்குப் போட்டியாகக் கூடிய ஏனைய இரு துறைகளான பாராளுமன்றத்தினதும் நீதித்துறையினதும் அதிகாரங்களை வெகுவாகக் குறைத்தும் விட்டார்.
இதிலிருநீது தெரிய வருவது யாதெனில் பாராளுமன்றத்தினால் வரையப்பட்டு அதனாலேயே நிறைவேற்றப்படும் அரசியலமைப்பானது பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மை வாக்குகளின் கருத்தொருமையை மட்டுமே காட்டி நிற்கும்.
67

Page 40
ஆனால் நாம் மறந்துவிட்டது என்ன? 1930களின் மத்தியில் நாஜி ஜேர்மனியிலும் இப்படித்தான், பெரும்பான்மையை மட்டும் பாவித்து சட்டங்கள் ஆக்கப்பட்டன. அடொல்ஃவ் ஹிட்லரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டன. பெரும்பான்மைக் கருத்துக்கே என்றும் பயன்வலுக் கொடுக்க வேண்டும் எனக் கருதுதலில் உள்ள உள்ளார்ந்த தவறும், உள்ளமைந்த அபாயமும் ஹிட்லரின் "சேவைகளின்"பின்னர்தான் அடையாளங்
காணப்பட்டன.
சர்வசன வாக்கெடுப்பு என்பதை எடுத்தாலும், அங்கும் தீர்மானமானது பெரும் பாணிமை வாக்குகளாலேயே எடுக்கப்படுகின்றது. இதிலும் மேற்குறித்த தவறு இருக்கவே செய்யும். எனவே ஒரு நாட்டின் மக்கள் கூட்டம் யாவற்றினதும் சர்வசன வாக்கெடுப்பு என்பதை எடுத்தாலும், அங்கும் தீர்மானமானது பெரும்பான மை வாக்குகளாலேயே எடுக்கப்படுகின்றது. இதிலும் மேற்குறித்த தவறு இருக்கவே செய்யும். எனவே ஒரு நாட்டின் மக்கள் கூட்டம் யாவற்றினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் அரசியலமைப்பொன்று வரையப்பட வேண்டுமானால் அங்கு பிணிக்குந் தகவான அம்சமொன்று' (normative element) கட்டாயம் இருந்தாக வேண்டும். தனிநபர்களது அடிப்படை உரிமைகளையும், அவர்கள் இன, மொழி, மத, கலாசார, பிரதேச ரீதியில் ஒன்று திரண்டு வாழும்போது அவர்களின், கூட்டு அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் புதியது அமைய வேண்டும். இதுவே இன்று அதாவது சமகாலச் சர்வதேசச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள கோட்பாடாகும்.
இத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் அரசியலமைப்பு ஆக்கப்படும் போதுதான் அது உண்மையில் சமூக ஒப்பந்தம் என்ற தகுதியைப் பெறுகின்றது.
68

அது அங்ங்ணம் பெறத்தவறின் அல்லது இதனை அலட்சியப் படுத்தினி அரசியலமைப்பு நாளடைவில் பொருளற்றதாகிவிடும் அல்லது தேவையற்றதாகி விடும். இச்சந்தர்ப்பத்தில்தான் அரசாங்கம் வேறு வடிவங்களிலான சமூகக் கட்டுப்பாடுகளை உதவிக்கழைக்கத் தொடங்கிவிடும். இதுதான் 1972, 1978ஆம் ஆண்டுகளில் நடந்ததும். கடந்த ஐந்து தசாப்தங்களாக நடைபெற்ற அட்டூழியங்களுக்கான அடிப்படைத் தவறு யாரிடம் மறைந்து கிடக்கிறது? உண்மையைச் சொல்லப் போனால் நம்மிடந்தான். ஏனெனில் அரசியலமைப்பை வரைவதில் ஈடுபட வேண்டியது மக்களே தவிர அரசாங்கமல்ல என்பதை ஏற்கனவே குறிப்பிட்டேன்.
அரசியலமைப்பொன்றில் பிணிக்குந் தகவுடைய -9 i F @DTGói gọ (normative element) 5 LITUJLô (bi 35 வேண்டும் என்பது திறமான பொது அறிவின் பாற்பட்டது மட்டுமல்ல. அல்லது புத்திசாலித்தனமான ஆளுகைக்கானது மட்டுமல்ல. சமகாலச் சர்வதேசச் சட்டத்தின் கீழான பிணிக்கும் கடப்பாடு ஒன்றாகவும் இது இருக்கின்றது. இந்த நூற்றாண்டின் அரைப்பகுதி வரை - அரசொன்று தனது மக்களை எப்படி நடாத்துகின்றது என்ற விடயம் முற்றுமுழுதாகவும் பிரத்தியேகமாகவும் அதனது சொந்த விடயமாகவே - கருதப்பட்டு வந்தது.
உதாரணமாக, ஹிட்லருக்கு - வேறு எந்த இனக்கலப்புமற்ற தூய 'ஆரிய ஜேர்மனி ' பற்றிச் சிந்திக்கக் கூடியதாயிருந்தது. அங்ங்னமே, எவ்வித தடையுமில்லாமல், வெற்றிகரமாக யூதமக்களை உண்மையாகவே கொன்றொழிக்கும் கடமையை நிறைவேற்றிக் காட்டவும் அவனால் முடிந்தது. அதாவது தனது சிந்தனையைச் செயற்படுத்திக் காட்டினான். பின்னர் இதனை ஜேர்மனியில் மட்டுமன்றி ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் செயற்படுத்த முன்வந்தான்.இதற்காகவே அந்த நாடுகளை ஜேர்மனியின் அதிகாரத்தின் கீழ்க் கொண்டு வந்தான்.
69

Page 41
இனப்பிரச்சனைக்கான இறுதித் தீர்வு (final Solution) எது என்பதை அவன் கண்டறிந்து கொண்டான். தனது திருப்திக்கேற்ற வகையில் அத்தீர்வைச் செயற்படுத்தத் தொடங்கினான். ஆனால் உலகம் விழித்துக் கொண்டு எது அநீதி, எது துன்பம் என்பதை அடையாளங் கண்டபோது - அதனது அறிவு மீளவும் வேலை செய்யத் தொடங்கியது. அதனால் பிறந்தவைதான் சர்வதேச தராதரங்களும் விதிகளும். இவை ஏன் பிறந்தன என்றால் 6ối@GOTIT(b Auschwitz, Belsen, Sachsenhausen sfîșii (65ITGöppi. கூடாது என்பதை உறுதிப்படுத்தவேதான். இந்த மூன்று இடங்களிலும்தான் அதிகூடிய எண்ணிக்கையில் மக்கள் சித்திரவதைக் கூடங்களில் மாண்டனர். (இந்த மூன்று இடங்களுக்கும் நேரடியாகச் சென்று பார்த்து வந்ததன் விளைவாகவே இவை பற்றிக் குறிப்பிட எண்ணினேன்).
எனவே ஹிட்லர் தந்த அனுபவப் பாடத்திலிருந்து எழுந்த விதிகளும் தராதரங்களும் இன்று சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்திருக்கின்றன. அதாவது குறிப்பிட்ட ஒரு தொகை உயரிய தராதரங்கள் உள்ளன. இத்தராதரங்களுக்கு எல்லா நாடுகளதும் சட்டங்கள் இசைந்தொழுக வேண்டும். இங்ங்ணம் இசைந்தொழுகப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பைச் சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
எனவே தனது பிரசையை ஓர் அரசு எவ்விதம் நடாத்த வேணடும் என்பது இன்று சர்வதேச Liugió03,56floTT65 (human rights treaties) 52(gig, LIGigi படுகின்றன. எனவே இது இனிமேலும் அசாங்கத்தின் பிரத்தியேக விடயமாகாது. அப்படி இன்னும் யாரும் கருதினால் அவர்கள் கோமாளிகளேயாவார்.
தனது மக்களை நாடொன்று தான் விரும்பியபடி நடாத்த முடியாத நிலை ஏற்பட்டதன் பின்னணியிலமைந்த சில சர்வதேச உடன்படிக்கைகளைப் பார்ப்போம்.
70

இந்த உடன்படிக்கைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது இலங்கை கையெழுத்திட்டுள்ள உடன்படிக்கைகளையே முதன்மைப்படுத்துகின்றேன். நாடுகளுக்குப் புதியதும் பொறுப்பு மிக்கதுமான அறவொழுக்கத்தை (morality) இவ்வுடன் படிக்கைகள் ஏற்படுத்திக் கொடுத்தன என்றாலும் இவற்றுள் சிலவற்றின் சட்டக் கடப்பாடுகளை வலியுறுத்துவதே இக்கட்டுரைப்பகுதியின் நோக்கமாகும். இந்த வரிசையில் முதலில் வருவது ஐ. நா. பட்டயமாகும். இதனோடு சேர்த்து வாசிக்கப்பட வேண்டியது சர்வதேச மனித உரிமைகள் பிரகடனமாகும் (Universal Declaration of Human Rights). 3605u(655. வருவது 1966ஆம் ஆண்டின் சர்வதேசக் கட்டுறுத்துக்கள் இரண்டுமாகும். இவை மனித உரிமைகளுக்கான சர்வதேசத் தராதரத்தை சட்டக் கடப்பாடாக விதிப்பனவாக அமைந்துள்ளன.
குடியியல், அரசியல் உரிமைகள் மீதான சர்வதேசக் 5 Gigi International Covenanton Civil & Political Rights - (ICCPR); பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் மீதான Jitsu65-yd 5 'Golgigs International Covenant on Economic, Social & Cultural Right - (ECOSOC Covenant) 6TGiuso 66. இந்த இரு உடன்படிக்கைகளுமாகும். இந்த இரண்டு கட்டுறுத்துக்களும் 1976இல் நடைமுறைக்கு வந்தன. 1955இல் இலங்கை ஐ. நா. பட்டயத்தை ஏற்று உறுப்புரிமை பெற்றது. இதன் மூலம் இலங்கை ஏற்றுக்கொண்ட கடப்பாடு யாது? மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் மதித்துப் போற்றவும் அவற்றினி அனுஷ டிப்பை உத்தரவாதப்படுத்தவும் இதன்கீழ் இலங்கை உறுதியெடுத்துக் கொண்டது. இந்தப் போற்றுகையும் அனுஷ்டிப்பும் எல்லா மக்களுக்கும் இன, மத, பால், மொழி வேறுபாடின்றி உத்தரவாதப்படுத்தப்பட்டதாக இருக்கும். இது ஐநாவின் உறுப்பு நாடுகள் எல்லாவற்றுக்கும் பொதுவான சத்திய வாக்குறுதியாகும். (பட்டயம் - உறுப்புரை 55 & 56).
7.

Page 42
அரசொன்று ஐ. நா. பட்டயத்தின் கீழ் இத்தகைய சத்திய வாக்குறுதியை வழங்கினால் மனித உரிமைகளைப் போற்றவும் அனுஷ்டிக்கவுமான அரசின் கடப்பாடானது அதனது ஆள்புல நியாயாதிக்கம் முழுமைக்கும் செல்லுபடியாகுமென்று சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசொன்று ஐ. நா. பட்டயத்தின் கீழ் இத்தகைய சத்திய வாக்குறுதியை வழங்கினால் மனித உரிமைகளைப் போற்றவும் அனுஷ்டிக்கவுமான அரசின் கடப்பாடானது அதனது ஆள்புல நியாயாதிக்கம் முழுமைக்கும் செல்லுபடியாகுமென்று சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது. (இது தொடர்பில் வழக்குத் தீர்ப்புகளைப் Liritug, Tifsir Human Rights in Third World Perspective (1992) - என்ற எனது நூலின் இரண்டாம் அத்தியாயத்தைப் பார்க்கவும்). 1980இல் இலங்கை இன்னும் ஒருபடி மேலே போய் அதாவது பட்டயத்தின் கீழான கடப்பாடுகள் ஒருபுறமிருக்க அதற்கு மேலதிகமாக, 1966இன் இரு கட்டுறுத்துக் களையும் கையொப்பமிட்டு, ஏற்று, அங்கீகரித்துக் கொண்டது.
இந்தத் தன்னிச்சையான செயலின் மூலம் அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு ஒரு புனிதமான வாக்குறுதியை வழங்கியிருக்கின்றது. அது எனின? இந்த இரு கட்டுறுத்துக்களதும் வாசகங்களினால் கட்டுப்படுவேன் என்றும் ஐ. நா. அமைப்புக்குள்ளான பல்வேறு துணை அமைப்புக்களின் கண்காணிப்புக்கு உட்படுவதற்குச் சம்மதிக்கின்றேன் என்றும் புதிதாக உருவாகி வரும் மனித உரிமைகள் சட்டவாட்சி என்பதற்குள் ஆட்படுகின்றேன் என்றும் இலங்கை வாக்குறுதியளித்துள்ளது. இத்தகைய துணையமைப்புக்களுள் ஒன்றுதான் மனித உரிமைகள் குழுவாகும் (Human Rights Committee).
உள்நாட்டில் அரசியல் வாதிகள் மேடைபோட்டு முழங்கும்போது இறைமை என்றும் ஆள்புல ஒருமைப்பாடு என்றும் வாய்கிழியப் பேச அதைக் கேட்டுக் கூட்டம் அமோகமாகக் கைதட்டும்.
72

இத்தகைய மேடை வசீகரத்தை இலங்கையில் செய்து வந்தவர்கள் இருவர். ஒருவர் லலித் அத்துலத் முதலி. மற்றையவர் பிரேமதாசா. இதில் பின்னையவர் மன்னிக்கப்படலாம். ஏனெனில் அவர் என்ன பேசுகிறார் என்ற விடயத்தை அவரால் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்குச் சில மட்டுப்பாடுகள் அவருக்கிருந்தன. ஆனால் முதலாமவர் வேண்டுமென்றே இங்ங்ணம் பேசிவந்தவர். 'சிறிய நாடு என்றால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது. இறைமையில் நாம் இந்தியாவுக்குச் சமம். சீனாவுக்குச் சமம். அமெரிக்காவுக்குச் சமம்' என்று சிங்களத்தில் பொழிந்து தள்ளுவார். ஆனால் ஐ. நா. வின் உறுப்பு நாடு எதற்கும் பூரண இறைமை என்று எதுவுமே கிடையாது என்பதும் எத்தனை சர்வதேச உடன்படிக்கைகளை ஒரு நாடு ஏற்று அங்கீகரிக்கின்றதோ அந்தளவுக்கு அதனது இறைமை தேய்வடையும் என்பதும் இவர் அறியாததல்ல.
இத்தகைய இரட்டைவேடப் போக்கு மேற்கு நாடொன்றில் சாத்தியமல்ல. ஆனால் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் அரசியல்வாதிகள் இப்படி இரட்டைவேடம் போட்டுத் தம்மைத் தேசிய வீரர்களாக்கி பதவி வேட்டையாடுவதுண்டு. முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் சகோதரரான எச். டபிள்யூஜெயவர்த்தனாவின் தலைமையில் இலங்கைத் தூதுக்குழு ஐ. நா. வின் கூட்டங்களுக்குப் போய்வந்த காலமது. நீர் தனிப்பட்ட முறையில் மனித உரிமைகள் மீது மிகவும் பற்றுள்ளவராக இருக்கிறீரே. உமது சகோதரரைக் கொண்டு ஏன் இந்தக் கட்டுறுத்துக்களை (1966) அங்கீகரிக்கச் செய்ய முடியாது' என ஐரோப்பியப் பிரதிநிதி ஒருவர் போட்ட தூண்டிலில் சிக்குண்ட இலங்கைத் தூதுக்குழுவின் தலைவர் நாடு திரும்பியதும் ஜனாதிபதியை எப்படியோ சம்மதிக்க வைத்து இந்த இரு உடன்படிக்கைகளையும் ஏற்கும்படி செய்துவிட்டார். அந்நேரத்தில் எச். டபிள்யூ ஜெயவர்த்தனா இதற்குப் பிரதியுபகாரமாக இலங்கை மன்றக் கல்லூரிக்கும் - அதன் கீழான மனித
73

Page 43
உரிமைகள் நிலையத்துக்கும் நியாயமான நிதியுதவியையும் பெற்றுக் கொண்டு வந்துவிட்டார். உடன்படிக்கைகளை ஏற்றுக் கொண்ட செயலை உள்ளூரக் கண்டித்த ஒரேயொரு அமைச்சர் லலித் அத்துலத் முதலிதான். இவரை விட வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் சிலரும் ஜனாதிபதியின் சகோதரரை இதற்காகத் திட்டித் தீர்த்தனர்.
இவற்றிலிருந்தே இக்கட்டுறுத்தின் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ள முடியும். இவற்றை ஏற்றுக் கொண்டதன் மூலம் உள்நாட்டரங்கில் இரு உடனடிக் கடப்பாடுகள் எழுகின்றன. முதலாவது கடப்பாடு யாதெனில் இவ்விரு கட்டுறுத்துக்களிலும் கூறப்பட்டுள்ள உரிமைகளுக்கு அரசியலமைப்புவழி வலுவை வழங்குவதாகும். அங்ங்ணம் செய்கையில், உத்தரவாதமளிக்கப்படும் இவ்வுரிமைகளில் ஏதாவது மீறுகை நடக்குமாயின் அரசியலமைப்பு நிவாரணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தலும் உள்ளடங்கும். இந்த நிவாரணம் பயனுள்ளதாகவும் பெறுமதியுடையதாகவும் இருக்க வேண்டும். மறுவிதமாகக் கூறுவதாயின், நீதிமன்றத்தில் நிவாரணம் பெறக்கூடிய விதத்தில் அமைந்ததான உரிமைகள் பட்டயமொன்றை (Bill of Rights) அரசியலமைப்பில் உள்ளடக்குவது என்ற கடப்பாட்டை இலங்கை ஏற்றுக்கொண்டுவிட்டது என்பதாகும். இந்த உரிமைகள் பட்டயமானது, குறிப்பிட்ட இரு கட்டுறுத்துக்களிலும் கூறப்பட்டுள்ள உரிமைகளை ஒத்ததாக இருக்க வேண்டும் என்பதோடு நாட்டின் சட்டவாக்க, நிறைவேற்றுத்துறை, நீதிமுறைச் செயற்பாடுகளையும் இப்பட்டயம் ஒழுங்கு படுத்துவதாகவும் அமைந்திருக்க வேண்டும்.
இரண்டாவது கடப்பாடு யாதெனில், பன்மைத்துவக் கலாசாரம் கொண்ட இந்நாட்டில் உள்ள பல்வேறு மக்கள் குழுமங்களது குழுவுரிமைகளை அங்கீகரித்தல் என்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், இன, மத, மொழிச் சிறுபான்மைக் குழுக்கள் தமது அரசியல் அந்தஸ்து,
74

பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்தி தொடர்பாகச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் விருப்புக்களுக்குச் செயலுருக் கொடுக்கும் கடப்பாடாகும்.
ஆனால் இந்த இரு இரண்டாவது கடப்பாடு யாதெனில், பன்மைத்துவக் கலாசாரம் கொண்ட இந்நாட்டில் உள்ள பல்வேறு 'மக்கள்' குழுமங்களது குழுவுரிமைகளை அங்கீகரித்தல் என்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், இன, மத, மொழிச் சிறுபான்மைக் குழுக்கள் தமது அரசியல் அந்தஸ்து, பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்தி தொடர்பாகச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் விருப்புக்களுக்குச் செயலுருக் கொடுக்கும் கடப்பாடாகும். ஆனால் இந்த இரு பொறுப்பேற் புக் களுமே இலங்கையில் இண்றுவரை நிறைவேற்றப்பட்டதாக இல்லை.
1946ஆம் ஆண்டு அரசியலமைப்பில் இத்தகைய உரிமைகள் பட்டயம் எதுவும் இருந்திருக்கவில்லை. ஏனெனில் அதை வரைந்தவரான சேர். ஐவர் ஜென்னிங்ஸுக்கு இது விடயத்தில் திட்டவட்டமான கருத்துக்கள் இருந்தன. உண்மையில், இலங்கை தேசிய காங்கிரஸ் தனது இணைச் செயலாளர்களுள் ஒருவரான ஜெ. ஏ. எல். கூரேயினால் வரையப்பட்ட மாதிரி அரசியலமைப்பொன்றை அமைச்சரவைக்குச் சிபார்சு செய்திருந்தது. இந்த வரைவில் விரிவான உரிமைகள் பட்டயமொன்றும் அதனைச் செயற்படுத்துவதற்கான நடபடிமுறை நிவாரணங்களும் கூரேயினால் கூறப்பட்டிருந்தன. ஆனால் ஐவர் ஜென்னிங்ஸ் தனது கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. ஜென்னிங்ஸ் வருமாறு குறிப்பிட்டார்: "பிரிட்டனில் எங்களிடம் உரிமைகள் பட்டயம் கிடையாது. நாங்கள் வெறுமனே சட்டத்தின்படியான சுதந்திரம் என்பதையே கொண்டுள்ளோம்.
ஆனால் உண்மையாகவே நம்புகின்றேன்; உரிமைகள் பட்டயமுள்ள வேறெந்தவொரு நாட்டையும்விட நாங்கள்
இவ்வேலையைத் திறம்படச் செய்கின்றோம்" .
75

Page 44
ஆனால் பிற்காலத்தில் ஐவர் ஜென்னிங்ஸ் இது தொடர்பான கருத்தினை அடியோடு மாற்றிக் கொண்டுவிட்டார் என்பது வேறு விடயம். 1961இல் அவர் பி. பி. ஸி.க்கு அளித்த பேட்டியொன்றில்இலங்கை அரசியலமைப்புக்கு விரிவான உரிமைகள் பட்டயமொன்று மிகப் பொருத்தமாயிருந்திருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வதாகக் கூறியிருந்தார். இலங்கையின் பிரச்சனைகள் பற்றி இப்போது எனக்குத் தெரிந்திருக்கும் அளவுக்கு அன்று எனக்குத் தெரிந்திருந்தால் (அரசியலமைப்பின்) சில ஏற்பாடுகள் வேறுவிதமாக அமைந்திருக்கும்' என்று குற்றவொப்புதல் செய்துள்ளார் சேர் ஐவர் ஜென்னிங்ஸ்.
1958இல் அப்போதைய பிரதமர் S. W. R. D. பண்டாரநாயக்கா அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்வதற்கென்று பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றினை நியமித்தார். இத்திருத்தங்களுள் 'உரிமைகள் பட்டயம்' ஒன்றும் உள்ளடக்கப்பட வேண்டுமென்று பிரதமர் அறிவுறுத்தியிருந்தார். இத்தெரிவுக்குழு அண்மைக்கால குழுக்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஓரளவுக்குப் பிரதிநிதித்துவங் கொண்டதாக இருந்தது என்றே கூறவேண்டும். பாராளுமன்றத்தின் இரு சபைகளிலிருந்தும் பிரதிநிதிகள் இக் குழுவுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். பாராளுமன்றத்திலிருந்த எல்லாக் கட்சிகளிலிருந்தும் நான்கு பிரதான சமூகங்களிலிருந்தும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். சிங்கள சமூகத்திலிருந்துகூட நான்கு பிரதான சாதிகளிலிருந்தும் கண்டிய, கரையோர சிங்களவர் பிரிவுகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். நான்கு பிரதான சமயங்கள் கூடப் பிரதிநிதித்துவப் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டிருந்தன. கிறிஸ்தவ மதத்தின் வெவ்வேறு பிரிவுகளும் அங்கு பங்குபற்ற முடிந்தது.
இக்குழுவில் 18 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இதில் ஏழுபேர் மட்டுமே ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள். சிங்களபெளத்த- கொவிகம பிரிவினர் அறுவர் மட்டுமே. இத்தெரிவுக்குழு அமைப்பானது மிக முன்மாதிரியானது என்பதில் சந்தேகமேயில்லை.
76

அரசியலமைப்புக்குக் கொண்டுவரப்பட வேண்டிய திருத்தங்கள் குறிப்பிட்ட எந்தவொரு கட்சியினதும் அல்லது நலன்பிரிவினதும் கருத்துக்களது பிரதிபலிப்பாக இல்லாமல் எல்லாக் குழுக்களதும் நலன்களைப் பிரதிபலிக்கும் வகையில் பொதுவான கருத்தொருமைப்பாட்டைக் கொண்டவையாக அமைய வேண்டும் என்ற எண்ணம் தெரிவுக்குழுவை நியமித்தவர்களது எண்ணத்தில் பதிந்திருக்க வேண்டும். இதுதான் இன்றும் ஏனைய நாடுகளில் பின்பற்றப்படும் அரசியலமைப்பு வரைவு முறையாகும். முற்கூட்டிய கருத்துக்கள், எண்ணங்களோடு கூட்டத்துக்கு வராமல் கூட்டத்தின் முடிவில் எழும் பொதுவான கருத்தின் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்ளுவதே கருத்தொருமை காணும் முறையாகும். பாராளுமன்றத்தில் 2/ 3 பங்கு பெரும்பான்மையில்லாத அரசாங்கமொன்று இத்தகைய தெரிவுக்குழு முறையைப் பின்பற்றுதல் சாலப் பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தத் தெரிவுக்குழு ஒரு வருடத்துக்குள்ளாகவே
இந்திய அரசியலமைப்பிலுள்ள உரிமைகள் பட்டயத்தை ஒத்த விதத்தில் நகலொன்றை சட்ட நிபுணர்களின் உதவியுடன் தெரிவுக்குழு தயாரித்திருந்தது. நீதியரசர் ரி.எஸ். பெர்ணாண்டோ, ஜெ. ஏ. எல். கூரே போன்றோரே கூடுதல் பங்களிப்புச் செய்திருந்தனர். துரதிஸ்டவசமாக வேறு நிகழ்வுகள் குறுக்கிட்டு விட்டன. தனது அமைச்சரவைக்குள் ஏற்பட்ட இடது - வலது மோதலைத் தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த பிரதமர் பண்டாரநாயக்கா இந்த முயற்சியின் போது நீதியமைச்சரும் தெரிவுக்குழுவின் துணைத் தலைவருமான எம். டபிள்யூ. எச். டி. சில்வாவை இழக்க வேண்டியேற்பட்டு விட்டது.
இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பொறுத்தளவில் ஒரு வித்தியாசமான போக்கும் இங்கு அவதானிக்கப்பட வேண்டும். மதகுருமார் அரசியலில் ஈடுபடுதலை இங்கே நாணி குறிப்பிடவில்லை.
77

Page 45
அதைக்கூட ஓரளவுக்கு விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் இலங்கையில் மட்டுமேதான் இந்த மதகுருமார் தீவிர வலதுசாரிப் போக்குடையவர்களாக இருந்துவருகின்றனர். இதுதான் விளங்குவதற்குச் சற்றுக் கடினமாக உள்ளது. இங்கு தாராள போக குடையவர்களை ஒரேயடியாக நாணி மறந்துவிடுவதாகக் குற்றஞ்சாட்ட முற்படக்கூடாது.
இதனையடுத்து அரசாங்கத்தின் முக்கியத்துவமும் பெருமதிப்பும் இழக்கப்பட்டதுடன் அதனது அறரீதியான அடிப்படையும் கேள்விக்குறியாக மாறிவிட்டது. கவனத்துக்குரிய காட்சியாக அல்லது திருப்பமாக இருந்த விடயமென்றால் அது பணி டாரநாயக் கா அவர்களே தனது அமைச்சரவைக்குள் வலதுசாரிகளின் சிறைக்கைதியாக மாறிவிட்டதைத்தான் குறிப்பிட வேண்டும். கடைசியாக நடந்ததுதான் என்ன? அவரது பழைய கொள்கைகளுக்கும் அவர் கொண டுவர முயன்ற சீர்திருத்தங்களுக்கும் வைக்கப்பட்ட வேட்டுக்களாகவே அவர்மீது பெளத்த மதகுரு ஒருவரால் தீர்க்கப்பட்ட வேட்டுக்கள் அமைந்து விட்டன.
ஆனால் வலதுசாரிகள் மட்டுமே இங்கு ஒரு சக்தியாக உள்ளார்கள் என்பதையே குறிப்பிட்டுக் கூறவிரும்புகிறேன். இது புத்திஜீவிகளின் ஆராய்ச்சிக்குரிய ஒரு விடயமாக அமைதல் வேண்டும் என்பதும் எனது விருப்பங்களுள் ஒன்றாகும்.
1972இல் கலாநிதி கொல் விண் ஆர்.டி. சில்வா தனக்குள்ளாகவே ஒரு தர்மசங்கடமான மோதுதலுக்கு உட்பட்டிருந்தார். மனித உரிமைகளுக்கு நீதிமுறைப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற அவா அவரிடம் இல்லாமலிருந்தது என்று கூறமுடியாது. ஆனால், மறுபுறத்தில் அரச தத்துவத்தின் அதியுயர் சாதனமாகச் சட்டவாக்கசபை (பாராளுமன்றம் / தேசிய அரசுப் பேரவை) இருக்க வேண்டும் என்பதில் தீவிர பற்றுடையவராக இருந்தார்.
தான் கலந்துகொண்ட பல்வேறு கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் தத்துவார்த்த ரீதியில் கொல்வின் இதனை விளக்கி வந்திருக்கின்றார். இலங்கையின் ஐக்கிய நாடுகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கொன்றில் கொல்வின் வருமாறு பேசினார்:
78

“ஒரு சமூகம் அல்லது நாடு தான் வந்தடைந்திருக்கும் வளர்ச்சிப் படியின் கட்டத்தின் நியதிகளுக்கு அமைவாகவே அரசியலமைப்புக்கள் ஆக்கப்படுகின்றன. அந்த வளர்ச்சியின் நியதிகளுக்கு அமைய அச்சமூகம் சிந்திக்கின்றபோது அது ஒரு தவறை இழைக்கின்றது. ஏதேனும் மக்கள் சந்ததியொன்று தன்னை எதிர்காலம் முழுமைக்குமான ஒரு பிரதிநிதியாகக் கற்பனை பண்ணிக் கொள்கின்றது. தனது தற்போதைய சிந்தனைகள் எதிர்காலச் சந்ததியினையும் கட்டுப்படுத்தும் என்றவாறாக இச்சிந்தனைப் போக்குச் செல்கின்றது. தனது சொந்தக் கருத்தமைவுக்குள் எதிர்காலச் சந்ததிகளின் அபிலாசைகளை நிரந்தரமாக முடக்கிவிடுவதான இம்முயற்சி தோற்றுவிக்கும் தப்பான கருத்து யாதெனில்சக்தியாகிவிடும் என்பதுதான். ஆனால் அது அங்ங்னமன்று.” இங்ங்ணம் பேசியதன் மூலம் அவர் வலியுறுத்தியது - மனித உரிமைகள் என்பன அரசியலமைப்புக்குள் அடங்கிக் கிடக்க வேண்டியனவல்ல என்பதைத்தான். இதில் வேடிக்கை ஒன்றும் உள்ளது. கொல்வின் ஆர். டி. சில்வா புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்து இலங்கையைக் குடியரசாக மாற்ற விரும்பியது பிரித்தானிய அரசியல் பாரம்பரியத்திலிருந்து (ஏகாதிபத்திய / முதலாளித்துவ) இலங்கையை விடுவிக்கத்தான். ஆனால் அதே பிரித்தானியப் பாரம்பரியத்தின் படி மனித உரிமைகளை அரசியலமைப்பில் ஓர் அத்தியாயமாகக் குறிப்பிடக் கூடாது என்பதிலும் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். இது இன்னொரு பெரிய முரண்பாடாகத் தொடர்ந்தது.
சட்டமொன்று வழக்கத்தில் உட்கிடையாக அல்லது மறைமுகமான விதத்திலேயே கேள்விக்குட்படுத்தப்படும். இந்த வகையில் முதலில் நிறைவேற்றுத்துறையின் ஒரு செயலைக் கேள்விக்குட்படுத்துவர்.
79

Page 46
அமுலிலுள்ள சட்டமானது பாதுகாக்கப்பட்டுள்ள ஓர் உரிமையுடன் ஒவ்வாததாகவுள்ளது என நீதிமன்றம் பிரகடனப்படுத்தும் போது சட்டம் செயற்பாடற்றதாக விளம்பப்படுவதுடன் வெற்றானதாகவும் கருதப்படும். ஆனால் இந்நிலை தீர்ப்பு வழங்கப்பட்ட சட்டமொன்று வழக்கத்தில் உட்கிடையாக அல்லது மறைமுகமான விதத்திலேயே கேள்விக்குட்படுத்தப்படும். இந்த வகையில் முதலில் நிறைவேற்றுத்துறையின் ஒரு செயலைக் கேள்விக்குட்படுத்துவர். அமுலிலுள்ள சட்டமானது பாதுகாக்கப்பட்டுள்ள ஓர் உரிமையுடன் ஒவ்வாததாகவுள்ளது என நீதிமன்றம் பிரகடனப்படுத்தும்போது சட்டம் செயற்பாடற்றதாக விளம்பப்படுவதுடன் வெற்றானதாகவும் கருதப்படும். ஆனால் இந்நிலை தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்துதான் உருவாகும். இது நடைமுறையில் செயற்படுத்தப்படுவதில் பெரிதான சிக்கல்கள் எதுவுமில்லை. உலகில் இந்தியா உட்பட எத்தனையோ நாடுகளில் இந்த முறைமை இன்று அறிமுகமாகியுள்ளது. அதாவது உரிமைகள் பட்டயத்தை (பட்டியலை) அரசியலமைப்பில் சேர்த்தல், பின்பு அதற்கு ஒவ்வாததான நியதிச் சட்டங்களை செல்லுபடியற்றதென நீதிமன்றம் விளம்பல் (இது நீதிமுறை மீளாய்வு எனச் சட்டத்தில் கூறப்படுகின்றது) என்ற இந்த முறைமை பல நாடுகளில் பரீட்சிக்கப்பட்ட தொன்றே.
ஒர் உதாரணத்தை மட்டும் பார்ப்போம். ஹொங்கொங் தனது யாப்பில் இத்தகைய பட்டியலி ஒன்றைக் கொண்டிருக்கின்றது. இது 1991 ஜுனில் ஆக்கப்பட்டது. இது 1966ஆம் ஆண்டின் ஐ. நா. குடியியல், அரசியல் உரிமைகள் மீதான சர்வதேசக் கட்டுறுத்தின் பிரதியாகவே ஆக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய குடியேற்ற ஆட்சியில் 150 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த இந்த நாட்டின் சட்டப் புத்தக அகராதியில் தூசி படிந்து கிடந்த எத்தனையோ நியதிச் சட்டங்கள் இன்று சுத்திகரிக்கப்பட்டுள்ளன.
80

நீதிமுறை மீளாய்வு மூலமும் உரிமைகள் பட்டயத்தின் படியான சட்ட மீளமைப்புப் படியும் தேவையற்ற பல விடயங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் அங்கு ஏதேனும் வீழ்ச்சி ஏற்பட்டதாக இல்லை. நிருவாகத்துறையோ, நீதித்துறையோ சீர்குலைந்து போய்விடவில்லை.
கொலை என்பதைச் சட்டவிரோதமாக்கி மரண தண்டனை வழங்கப்படுகின்றது. ஆனாலும் கொலைகள் நின்றுவிட்டனவா? எனவே உரிமைகள் பட்டயமொன்றை அரசியலமைப்பில் கொண்டுவருவதால் மட்டும் மனித உரிமைகள் மீறல்கள் ஒரேயடியாக நின்றுவிடும் என்று எதிர்பார்க்க முடியுமா? நல்லறிவும் மனச்சாட்சியும் உள்ள மக்கள் இன்று விரும்பிப் பின்பற்றும் நெறிகள் அல்லது விதிகள் என பன குறிறவியல் சட்டககோவையினூடு அறிமுகப்படுத்தப்பட்டவையாகவே உள்ளன. இவற்றைப் பின்பற்றப் பழகுவதற்கு நாளாகலாம். ஆனால் உரிய காலத்தில் இதைப் போன்றே உரிமைகள் பட்டயமும் மக்கள் மத்தியில் ஒருவித கலாசாரத்தை உருவாக்கியே தீரும். ஆண் அல்லது பெண், செல்வந்தர் வறியோர், உயர்குடி/தாழ்குடி என்ற வேறுபாடுகளுக்கப்பால் எல்லோருக்கும் பொதுவான ஒரு (சட்டக்) கலாசாரம் இத்தகைய உரிமைகள் பட்டயத்தால் உருவாக்கப்பட முடியும். சட்டத்தை ஆக்குதல், வலுப்பெறச் செய்தல், நடைமுறைப்படுத்தல் என்ற பல்வேறு கட்டங்களிலும் உரிமைகள் பட்டயம் வெற்றியடையும்போது இக்கலாசாரம் உருவாகும்.
இந்த நாட்டில் கடந்த சில தசாப்தங்களாக நடந்து வந்திருப்பதென்ன? மனித உடல் என்பது எந்தளவு தூரத்துக்கு கோரப்படுத்தப்பட முடியுமோ அந்தளவுக்குக் கொடூரமாகவும் கோரமாகவும் பயன்படுத்தப்பட்டுவிட்டது.
ரயர் எரிப்பு, உறுப்புகள் பறிப்பு, உணவு, உறக்கம் மறுப்பு, கடைசியில் புதைகுழியில் மறைப்பு என்றவாறாக எமது வரலாறு இரண்டு தசாப்தங்களாகத் தொடர்கின்றது. மேலும், மனித உயிருக்கான பெறுமதியும்- மிகமிக மலிவாகப் போய்விட்டது. எத்தனை ஆயிரம் மடிந்துவிட்டன? குரலெழுப்புவர் யார்?
8.

Page 47
ஒரு சின்ன உதாரணம். மேற்கு ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளைப் பொறுத்த வரையில் ஒருயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டாலும் அது ஒரு பெரிய "கதையாக" மாறிவிடுகின்றது. பேரணி, பிக்கெட்டிங், ஆர்ப்பாட்டம் என்று துளைத்து எடுத்து விடுவார்கள். ஆனால் இந்த மேற்கத்தைய கொள்கையான ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றை நம்பித் தொலைத்ததால் இலங்கை, மியன்மார், பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் தினமும் மடிவது எத்தனை பேர்? ஆயிரக்கணக்கென்று பட்டியலிடலாம். ஆயின், பொஸ்னியாவில் அல்லது கொசோவாவில் இறக்கும் ஒவ்வொரு நபருக்குமாக அழுதுவடிக்கும் தொலைக்காட்சிச் சேவைகள் ஆயிரக்கணக்கில் தினமும் மடிகின்ற நாடுகளைப் பொறுதி தளவில் ஏனோ தானோ வெனிறு இருந்துவிடுகின்றன. எனவே மனித உரிமைகள் பற்றிச் சிந்திக்கும்போது மனித உயிர்களின் பெறுமதி பற்றியும் சிந்தித்தேயாக வேண்டும். இது உண்மையில் தோலின் நிறம் காரணமான இடைவெளியை விட வடக்கு- தெற்கு பொருளாதார இடைவெளியினால் ஏற்படும் அலட்சியம் என்பதை உணர்ந்துதான் தற்போது பொருளாதார உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் குரல் எழுப்பப்படுகின்றது. இத்தகைய உரிமைகளை உள்ளடக்கியதாக, அனைத்தும் கொண்டிருப்பதாக, பயன்வலுக் கொண்டதாக, நீதிமன்றத்தில் நிவாரணம் பெறத்தக்கதாக மற்ற
நாடுகளில் பரீட்சிக்கப்பட்ட சாதனமாக உரிமைகள் பட்டயம் அமைதல் வேண்டும். இது மற்றைய நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாயின் (இந்தியா/ஹொங்கொங்) ஏன்
எங்கள் நாட்டில் தோல்வியடைய வேண்டும்?
82

maqppqq nnnnnnn
(அரசியலமை ப்பும் பண்மைத்துவ கலாசாரமும்)
சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கையின் வரலாற்றில் முதல் தோல்வியாகத் துலாம்பரமாகத் தெரிவது எமது அரசியல் தலைவர்கள் தவறவிட்ட அல்லது அங்கீகரிக்க மறுத்தஉண்மையான, மாற்றமுடியாத, மெளனமாக்கப்படமுடியாத நிகழ்வான இலங்கை ஒரு பன்மைத்துவக் கலாசார நாடு என்ற உண்மையேயாகும். இதுவே முதற்கோணல். இலங்கை ஒரு பன்மைத்துவ கலாசார நாடு என்பதை இவர்கள் ஏற்கனவே அங்கீகரித்திருந்தால் அவர்கள் புரிந்து கொண்டிருக்கக் கூடிய இன்னொரு விடயமும் இருந்திருக்கும். அதுதான் சமகால பன்மைத்துவ கலாசார அரசொன்றில் சிறுபான்மைச் சமூகங்கள் பெருமி பாணி மையினத் தின சகிப்புத தனிமையிலும் நல்லெண்ணத்திலும் இனிமேலும் தங்களது இருப்புக்கும் வாழ்வுக்குமாகத் தங்கியிருக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்திருப்பர். சிறுபான்மையினங்களுக்குச் சலுகை வழங்குதல் என்பது 1945க்கு முந்திய கால அரசியலாக அமைந்திருக்கலாம். ஆனால் அது இன்றைக்குப் பொருந்தாது என்றே கூறவேண்டும்.
இவர்கள் இன்று மக்கள் குழுக்கள் (peoples) என்று அழைக்கப்படுகின்றார்கள். ஏனைய எவரையும் போலவே இவர்களுக்கும் உரிமைகள் ஒருவிதமாகவே இருக்க முடியும். இதை இன்னொரு விதமாகவும் கூறலாம். சிறுபான்மைக் குழுக்களது விசேட அடையாளங்களும் இயல்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படிப் பாதுகாக்கப் பட்டிராவிட்டால் தான் ஏற்கனவே இந்த உலகில் வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட நாமெல்லோரும் பல வர்ணங்களின் மத்தியில் வாழ்ந்து கொணடிருக்க முடியாது. இந்த உலகு பல வர்ணக் கலவைகளினால் ஆனது. ஒரே வர்ணம் பூசிய வீட்டிலே வாழப் பிடிக்காமல்தானே விதம் விதமான வர்ணம் அடிக்கின்றோம். ஆனால் கூடி வாழும்போது மட்டும் வர்ணங்கள் கசக்கும் நிலை ஏன்? எனவே இவ்விதம் பார்ப்பின்,
83

Page 48
சிறுபான்மையினர் என்று எண்ணுவதை விடுத்து, மக்கள் குழுக்கள் என்று அடையாளங் காணப்படுபவர்கள் விசேட உரிமைகளைக் கொள்ள உரித்துடையவராகிறார்கள்.
சர்வதேசச் சட்டத்தில் இரண்டு உடன்படிக்கைகள் சிறுபான்மைக் குழுக்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்றன. இந்த இரண்டிலும் இலங்கையும் கையெழுதி திட்டிருக்கின்றது. இவை இனப்படுகொலையைத் தடுக்கும் உடன்படிக்கை, அகதிகள் அந்தஸ்துச் சமவாயம் என்பவையே அவைகளாகும். சமத்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆக்கப்பட்ட மனித உரிமைகள் கட்டுறுத்து இரண்டிலும் (1980) இலங்கையும் கையொப்பமிட்டுள்ளது, இது சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையில் சமத்துவத்தை ஏற்படுத்த உதவுகின்ற உடன்படிக்கைகள் ஆகும்.
குடியியல், அரசியல் உரிமைகள் மீதான சர்வதேசக் கட்டுறுத்து என்ற முதல் கட்டுறுத்தின் உறுப்புரை 27இல் இத்தகைய சிறுபான்மைக் குழுவைச் சேர்ந்த நபர்கள் தமது சொந்த கலாசாரம், மதம், மொழி என்பவற்றைப் பாவிக்கவும் பேணவும் அனுஷ்டிக்கவும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் துன்பியல் நாடகத்தின் அரங்கேற்றம் ஆரம்பமான கட்டம் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் மனித உரிமைகள்,அடிப்படை உரிமைகள் என்று வாய் கிழியக் கத்தியபோதும், ஏன் சிலவேளைகளில் ஏதாவது செய்யலாம் என்று முயன்றிருந்த போதிலும் சிறுபான்மை மக்களின் கூட்டு அடையாளத்தை மறுத்தபோதே ஆரம்பமாயிற்று. ஐ. தே. க. யூரீல.சு.க. அரசாங்கங்கள் கொண்டுவந்திருந்த சமரசச் சட்ட ஏற்பாடுகள் யாவுமே தமிழ் மக்களின் கூட்டு அடையாளத்தை அங்கீகரிப்பதாக இருந்திருக்கவில்லை. அது மட்டுமன்றி அத்தகைய ஒரு கூட்டு அடையாளத்தை மறுதலிப்பதாகவே அமைந்திருந்தன. (இதுபற்றி இன்னோர் இடத்தில் விபரமாகக் குறிப்பிடுவேன்).
84

சிறுபான்மைக் குழுவொன்று தனது சொந்த அரசியல் அந்தஸ்தைத் தீர்மானிக்கவும் அதனது பொருளாதார, சமூக, கலாசார வளர்ச்சியை சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்லவும் உள்ள உரிமையை சர்வதேசச் சட்டம் இன்று தேவைப்படுத்தி நிற்கின்றது. இதை வேறுவிதமாகக் கூறுவதானால் சுயநிர்ணய உரிமையின் சாராம்சம் என்றும் கூறலாம். சுயநிர்ணய உரிமையின் சாராம்சம் என்பதே தெரிவு (choice) என்பதுதான். சுதந்திரமான, உண்மையான, தகவலறிந்த, சுயவிருப்பத் தெரிவாக இது இருக்க வேண்டும்.
மானிடச் சமூகக் குழுக்களின் வளர்ந்துவரும் அபிலாசைகளுக்கேற்ப மானிட சமூகங்களை ஒழுங்கமைக்கப்படுத்தலைத் தொடர்ந்து உத்தரவாதப்படுத்தும் வகையில் இத் தெரிவு அமைந்திருக்கும். இலங்கை ஏற்றங்கீகரித்துள்ள (1980) இரண்டு கட்டுறுத்துக்களதும் முதலாவது உறுப்புரை இந்த விருப்பத் தெரிவிலான அரசியல் அந்தஸ்து பற்றியதாகும். இது கட்டாயமாகத் தனிநாடொன்றை அமைப்பதாகும் என்று பொருள்படாது.
நான் வெறுமனே குற்றஞ்சாட்டும் நோக்குடன் இலங்கையின் கடப்பாடுகளை இங்கே சுட்டிக்காட்டுவதாக நினைக்க வேண்டாம். இந்தச் சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையில் இறுக்கமான நிலையை எடுத்துள்ள பல நாடுகள் உள்ளன. இலங்கையும் அவ்விதமே சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதான கடப்பாட்டிலிருந்து தவறியுள்ளது. இன்று ஏறக்குறைய 50 நாடுகளில் சுயநிர்ணய உரிமை தொடர்பான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. எமது பிராந்தியத்தில் மட்டும் திபேத்தியர், சீக்கியர், நாகர், சிட்டகொங் மலைவாழ் ஆதிவாசிகள், கரன் இனத்தவர் உடனடியாக ஞாபகத்துக்கு வருகின்றனர் அல்லவா.
இந்த முரண்பாடுகளோடு இரண்டறக் கலந்துவிட்ட வன்முறை, இதிலிருந்து பிறக்கும் இனவாதம், இனவெறுப்பு,
85

Page 49
இதையடுத்து வரும் இனச்சுத்திகரிப்புகள், இனப்படுகொலைகள், படுகொலைகள், இதையடுத்துத் தவிர்க்க முடியாத விளைவுகளாக உள்நாட்டு இடப்பெயர்வுகள், வெளிநாடுகளுக்கு அகதியாகப் படையெடுத்தல் என்பன இடம்பெற்றே தீரும். ROdolfo Stavenhagen கூறியுள்ளதைப் போல இவை யாவும் சுயநிர்ணய உரிமையைக் கேட்பதனால் ஏற்பட்ட விளைவுகளல்ல. அது மறுக்கப்பட்டதனால் ஏற்படுகின்ற விளைவுகளே என்பதை அவதானிக்க வேண்டும். எந்த நாட்டிலும் இனக்குழுக்களுக்குச் சுயநிர்ணய உரிமை வழங்கப்படுவதாலல்ல அது மறுக்கப்படுவதால்தான் நாடுகளில் மோதல்களும் கிளர்ச்சிகளும் ஏற்படுகின்றன என்பதை மனதிருத்தல் வேண்டும்.
இனிறு இனினுஞ சிலர் வாதிடுகின்றனர். 'சிறுபான்மையினருக்கு (minorities) சுயநிர்ணய உரிமை கிடையாது. இது people என்ற வரைவிலக்கணத்துக்குள் வருவோருக்கே உரியது என்பது இவர்களது வாதம். இவர்களது கருத்தில் இலங்கைத் தமிழர்கள் சிறுபான்மையினரே தவிர மக்கள் என்ற வரைவுக்குள் வரமாட்டார்கள். அண்மையில் இலங்கையைச் சேர்ந்த புத்திஜீவிகள் குழுவொன்று வெளியிட்ட அறிக்கையொன்றிலும் இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லீம், மலே மற்றும் பறங்கியர்கள் என்ற எவருமே nations என்பதற்குள் வரமாட்டார்கள். இவர்கள் சேர்ந்து அமைந்ததுதான் இலங்கை என்ற தேசம் என்பது இவர்களது அறிக்கையின் சாராம்சம். ஆனால் இது சுயநிர்ணய உரிமை விடையத்துக்குப் பொருத்தமற்றது என்பதே இங்கு வலியுறுததப்பட வேண்டிய விடயமாகிறது.
சர்வதேச மனித உரிமைகள் கட்டுறுத்துக்கள் இரண்டும் எலி லா மக்களுக்குமான சுயநிர்ணய உரிமையை உத்தரவாதப்படுத்துகின்றன. இங்கே ஒரு முக்கியமான ஆதாரத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.
86

ஐ. நா. பட்டயம் 1945இல் தயாரிக்கப்பட்டதான சன்பிரான்சிஸ்கோ மாநாட்டுச் செயலகத்தால் தயாரிக்கப்பட்ட memorandum ஒன்று J4, 658ub, Loš56i (state, nation, people) 676ip 6iluJŠJ56067 விளக்குவதாக உள்ளது. இதில் கூறப்பட்டுள்ளபடி, அரசு என்பது திட்டவட்டமான ஓர் அரசியல் உருவமாகும். தேசியம் என்பது குடியேற்ற நாடுகள், mandates எனப்படும் ஐ. நா. வின் பொறுப்பில் விடப்படவுள்ள பிரதேசங்கள், பாதுகாப்புறுதி நாடுகள், மருவிய அரசுகள் (quasi-States) என்பவற்றோடு அரசுகள் என்பதையும் உள்ளடக்கும் என்றும் கூறப்பட்டது. “Peoples” என்பது எல்லா மனிதகுலம் அல்லது எல்லா மனித ஜீவன்கள் என்பவற்றைக் குறிப்பதால் எல்லாவகைக் குழுக்களையுங் கொண்ட மனித ஜீவன்களைச் சுட்டி நிற்கலாம். இது அரசுகளை அல்லது தேசியங்களைக் கொண்டிருக்கலாம். கொண்டிருக்காமலும் இருக்கலாம்.
எனவே கூட்டாட்சி, பிராந்திய சுயாட்சி என்பவற்றுக்கு எதிராக வாதிடுபவர்கள் சுயநிர்ணய உரிமை பற்றிய மேற்சொன்ன விபரங்களை அறியாதிருக்கின்றார்கள்.
தனிநபர்கள் குழுவொன்று எப்போது 'people’ என்பதாக மாறுகின்றது என்பதைத் தீர்மானிப்பதில் கவனத்துக்கு எடுக்கப்படும் பொதுவான உரைகற்கள் (criteria) தொடர்பில் யூனெஸ்கோவினால் கூட்டப்பட்ட நிபுணர்கள் கூட்டமொன்று 1990இல் பின்வருவனவற்றை உரைகற்களாக அடையாளப்படுத்தியுள்ளது:
1. பின்வரும் அம்சங்களில் சிலவற்றை அல்லது யாவற்றையுமே அனுபவிப்பதான தனிநபர்களான மனித ஜீவன்கள் குழுவொன்று: (அ) பொதுவான வரலாற்றுப் பாரம்பரியமொன்று; (ஆ) இன அல்லது இனக்குழும அடையாளம்; (இ) கலாசார ஒருமிப்புத்தன்மை;
87

Page 50
(ஈ) மொழிர்தியான ஐக்கியம், (உ) மதரீதியான அல்லது கொள்கைரீதியான ஒன்றிணைப்பு; (ஊ) ஆள்புலத் தொடர்புகள், மற்றும், (எ) பொதுப் பொருளாதார வாழ்வு.
அக் குழுவானது குறிப்பிட்ட தொகையினதான எண்ணிக்கையுடைய மக்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது பெரிய அளவில் இருக்க வேண்டும் 6TGiug565606) (micro-states -96.T Monaco, Vatican போன்றவை). ஆனால் வெறுமனே ஒன்று கூடியவர்களாக இல்லாமல் ஒன்றித்தவர்களாக இருக்க வேண்டும்.
அக் குழுவானது தனி னை PG மக்களாக' அடையாளப்படுத்துவதற்கான விருப்பினைக் கொண்டிருக்க வேண்டும். அல்லது அங்ங்ணம் மக்களாக இருப்பதற்கான சுயஉணர்வு கொண்டதாக இருக்க வேண்டும். ஆயினுஞ் சில குழுக்கள் இத்தகுதியினைக் கொண்டிருப்பினும் அங்ங்ணம் அடையாளங்காணப்பட வேண்டும் என்ற விருப்பைக்
கொண்டிருப்பதில்லை; அத்துடன்
தனது பொதுவான சிறப்பம்சங்களையும் அடையாளத்துக்கான விருப்பினையும் வெளிப்படுத்தி நிற்கும் நிறுவனங்களை அல்லது வழிவகைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
எனவே, மக்கள் குழுக்கள் என்ற பதம் அரசொன்றுக்குள் உள்ள
சுதேசிகளான மக்கள் குழுக்களையும் இனக்குழும, மதரீதியிலான அல்லது மொழிவழி சிறுபான்மையினரையும் உள்ளடக்கத் தாராளமாகப்
போதுமானதாகும். குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில், அத்தகையதொரு குழுவொன்று சுயநிர்ணய உரிமை நோக்கத்துக்காக 'மக்கள்' என்பதாக அமைகின்றதா என்பது அக்குழுவானது எந்தளவு தூரத்துக்கு
88

இனக் குழும, மொழிவழி, மதரீதியான அல்லது கலாசாரப்பிணைப்புகளைக் கொண்டிருக்கின்றது என்பதிலும் ஒன்றாக வாழவிரும்பும் அதனது கூட்டு அபிலாசையிலுமே (collective aspiration) தங்கியுள்ளது எனலாம்.
இலங்கை 1948இல் சுதந்திரம் பெற்றபோது அதற்குக் கிடைத்த அரசியலமைப்புச் சிறந்தது என்றே பலரும் கருதினர். "ஒரு மனிதனின் கற்பனைக்கெட்டக்கூடிய எல்லா விதத்திலுமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அது சிறுபான்மையினர் தொடர்பில் தன்னகத்தே நிலையாகக் கொண்டிருக்கின்றது " என அவ்வேளையில் ஒரு விமர்சகர் சிலாகித்திருந்தார். சுதந்திரம் வழங்கப்படுவதற்குப் பதிலாக இந்நாட்டு மக்களிடமிருந்து பிரிட்டிஷார் பெற்றிருந்த அரசியலமைப்பு உத்தரவாதங்களும் இருந்தன. அதாவது இது ஒரு நம்பிக்கைவழிச் செயற்பாடாக அமைந்திருக்க வேண்டும். அமைந்தது என்றும் கூறலாம். பல்லங்கத்தவர் தொகுதிகள், நியமன உறுப்பினர்கள், இரண்டாவது சபை, சுதந்திரமான பொதுச்சேவை ஆணைக்குழு, பாரபட்சமான சட்டவாக்கத்தின் மீதான தடை, சிங்களத்துக்கும் தமிழுக்கும் சம அந்தஸ்து என்பதற்கான அங்கீகாரம்- இவை யாவுமே சுதந்திரத்துக்குப் பிரதிபயனாகப் பெறப்பட்டவையாகும்.
ஆனாலும் இந்த நம்பிக்கைப் பொதி சிறுபான்மை - -யினருக்கான ஒரு சுயாட்சி ஏற்பாட்டை அல்லது சம பிரதிநிதித்துவத்தின் மீதான அதிகாரப் பகிர்வைக் கருத்திற் கொண்டிருக்கவில்லை. பதிலாக, வழங்கப்பட்டவை யாவும் பாதுகாப்புக் கவசங்கள் போல, அதாவது ஒரு நாட்டின் மேலாதிக்க இனத்துவ, மதரீதியிலான, மொழிவழி அல்லது கலாசாரக் குழுவொன்றுக்கு நிரந்தரமாகவே அடிபணிந்து நடக்க விதிக் கப்பட்டுள்ள சிறுபானி மையினரை அநீதப் பெரும்பான்மையினரிடமிருந்து பாதுகாப்பதற்கான கவசங்கள்
போலவே அமைந்தன எனலாம்.
89

Page 51
இந்தப் பாதுகாப்புக் கவசங்களுக்குக் கீழ் நாட்டினுடைய பன்மைத்துவ தன்மை, அதாவது பன்மைத்துவக் கலாசாரம் என்பது பூசி மெழுகப்பட்டுவிட்டது. வழங்கப்பட்டவை யாவும் பாதுகாப்புக் கவசங்கள் போல, அதாவது ஒரு நாட்டின் மேலாதிக்க இனத்துவ, மதரீதியிலான, மொழிவழி அல்லது கலாசாரக் குழுவொன்றுக்கு நிரந்தரமாகவே அடிபணிந்து நடக்க விதிக் கப்பட்டுள்ள சிறுபானி மையினரை அநீதப் பெரும்பான்மையினரிடமிருந்து பாதுகாப்பதற்கான கவசங்கள் போலவே அமைந்தன எனலாம். இந்தப் பாதுகாப்புக் கவசங்களுக்குக் கீழ் நாட்டினுடைய பன்மைத்துவ தன்மை, அதாவது பணி மைத் துவக் கலாசாரம் என்பது பூசி மெழுகப்பட்டுவிட்டது.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவரும் தலைசிறந்த சட்டவாதியுமான ஜீ. ஜீ. பொன்னம்பலம் சட்டசபை உறுப்பினர் என்ற அளவில் சமபலப் பிரதிநிதித்துவம் (50 : 50) எனிற மாற்று அரசியலமைப் புதி திட்டமொனி றை முன்வைத்திருந்தார். சட்டவாக்க சபையில் எந்தவொரு சமூகமும் ஏனையவற்றை மேலாதிக்கஞ் செய்யக் கூடாது என்ற நோக்கில் இது வகுக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின்படி நாடு முழுவதும் 100 ஆள்புலத் தொகுதிகளாகப் பிரிக்கப்படும். 100 உறுப்பினர்கள் கொண்ட சட்டவாக்கப் பேரவையுமிருக்கும். இந்தத் தொகுதிகளுள் 50 தொகுதிகள் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். (25 இலங்கை, இந்தியத் தமிழர்களுக்கும் ஏனைய 25 மற்ற எல்லாச் சிறுபான்மைச் சமூகத்தினருக்கும்).
இந்த யோசனையானது உண்மையில் அதற்கு முன்பிருந்த இனவாரிப் பிரதிநிதித்துவத்தின் தர்க்க ரீதியான பரிணாம வளர்ச்சியே என்றால் மிகையில்லை. 1833-1931 காலப்பகுதியில் இனவாரிப் பிரதிநிதித்துவம் நிலவிய போது, பரஸ்பர சம்மதத்துடன், சட்டசபையில் தமிழரும் சிங்களவரும் தொடர்ச்சியாக 1 : 2 என்ற விகிதத்திலேயே அங்கத்துவம் பெற்றிருந்தனர் எனலாம்.
90

ஆனால் சோல்பரி ஆணைக்குழுவானது இந்த இனவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு ஆதரவு காட்ட விரும்பவில்லை என்பதுடன் இலங்கை எவ்விதக் கேள்விகளுக்கும் இடமற்ற ஒரு 'ஏக தேசிய அந்தஸ்தை வளர்த்துக் கொள்ளுதல் மிக அவசியம் என்றும் கருதியது. ஆணைக்குழு நீதிமுறை மீளாய்வுக்குச் சட்டங்களை உள்ளாக்க விரும்பாததுக்கும் இதுவே காரணம் எனலாம்:
ஒரு பிரகடனத்தை மிக அடிப்படையானது எனக் கருதிக் கொண்டால், பின்பு, அச்சட்டமானது உண்மையில் சட்டந்தானா எனத் தீர்மானிப்பதில் அச்சட்டத்தை ஆக்கியவர்களது அதிகாரத்துக்கு வெளியிலுள்ள சிலரின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டிவரும். எங்களது உயர்நீதிமன்றில் எங்களுக்கு நம்பிக்கை உண்டா என்பது வேறுவிடயம். எங்களுக்கு இறைமை மிக்க சட்டவாக்க சபை வேண்டுமா? g365 60o 6) uu IT என பதே உணி மையான வினாவாகும்.சட்டமொன்றின் வலிதுடைமை அச்சட்டத்தை ஆக்கிய அமைப்புக்கு வெளியிலுள்ளவர்களால் தீர்மானிக்கப்பட வேணி டுமாயினி அந்தளவுக்கு - அச் சட்டமாக்கும் அமைப்பானது பூரணமான சட்டமாக்கும் அமைப்பல்ல என்பதும் பெறப்படும் என்று சோல்பரி அடித்துக் கூறிவிட்டார். ஆனால் இது கூறப்பட்டது 1946இல் என்பதையும் கவனிக்க வேண்டும். அவரது தர்க்க நியாயம் சரியானதாகலாம். வாதத்திறன் அலாதிதான். ஆனால் சாராம்சம் ஊசிப்போன- பழைய கருத்தாகும். உலகம் மிக வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் மார்க்ஸிஸ்டான கொல்வின் ஆர். டி. சில்வா 1972 இல் அதனோடு சேர்ந்து ஒட மறுத்துவிட்டார். அரசியலமைப்புப் பேரவையில், அவரது சக்திமிக்க ஆளுமை ஏனையோர் யாவரையும் கட்டிப்போட்டு விட்டதால் அவர் புகுந்து விளையாடினார் எனலாம்.
9.

Page 52
டாக்டர் கொல்வினுடைய முத்திரை பதித்த அந்த யாப்பில் (1972) அவர் பொருத்தமென எவற்றைக் கருதினாரோ அந்த உரிமைகளை ஒரேயொரு உறுப்புரைக்குள் திணித்து விட்டார். அதுவும் ஒரேயொரு பந்திக்குள்ளாக. இந்த உறுப்புரையின் இரண்டாவது பந்தி மேற்படி உரிமைகளும் சுதந்திரங்களும் கட்டுப்படுத்தப்படக்கூடிய சந்தர்ப்பங்களைக் கூறுகின்றது. சட்டவாக்க சபையானது பரந்தளவிலான டாக்டர் கொல்வினுடைய முத்திரை பதித்த அந்த யாப்பில் (1972) அவர் பொருத்தமென எவற்றைக் கருதினாரோ அந்த உரிமைகளை ஒரேயொரு உறுப்புரைக்குள் திணித்து விட்டார். அதுவும் ஒரேயொரு பந்திக்குள்ளாக. இந்த உறுப்புரையின் இரண்டாவது பந்தி மேற்படி உரிமைகளும் சுதந்திரங்களும் கட்டுப்படுத்தப்படக்கூடிய சந்தர்ப்பங்களைக் கூறுகின்றது. சட்டவாக்க சபையானது பரந்தளவிலான இலக்குகளை அல்லது நலன்களை ஈட்டுவதற்காக மக்களது உரிமைகளும் சுதந்திரங்களும் கட்டுப்படுத்தப்படும். இந்த இலக்குகளும் நலன்களும் சோசலிஸ் சமுதாயத்தைக் கட்டி வளர்ப்பதற்கானவையாக இருக்கும்.
மூன்றாவது பந்தியில் கூறப்பட்டிருந்ததன்படி, குறிப்பிட்ட இந்த உறுப்புரைக்கு ஒவ்வாததான விதத்தில் உள்ள சட்டங்கள், ஆனால் அவை ஏற்கனவே ஆக்கப்பட்டதாயிருப்பின் தொடர்ந்தும் வலுவிலிருக்கும் எனப்பட்டது.
மேற் சொனின உரிமைகளை வலுப் படுதி திச் செயற்படுத்துவதற்கான எவ்வித விசேட நடபடி முறையும் இருந்திருக்கவில்லை. அரசியலமைப்புத் தொடர்ந்திருந்த ஆறு வருட காலத்தில் இந்த உரிமைகள் விவரணப் பட்டியல் இலங்கை மக்களது வாழிக் கையில் எவி வித தாக்கத்தையும் ஏற்படுத்தவேயில்லை.
1978இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்குத் தீனி போடுவதான விதத்தில் புதிய வரைவொன்றைக் கொண்டு வந்தார்.
92

முன்னைய அரசியலமைப்பில் ஓர் உறுப்புரையாக மட்டும் இருந்ததை ஓர் அத்தியாயமாகவே விரிவுபடுத்தினார். ஆனாலும் அவருடைய தீர்க்கதரிசனத்துக்குள் - மிக முக்கியத்துவமான - உயிர்வாழும் உரிமை என்பது உள்ளடக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் தனக்கிருந்த ஐந்தில் நான்கு பெரும்பான்மைப் பலத்தில் அதீத நம்பிக்கை கொணடிருந்த அவர் அரசியலமைப்பினால் விதிக்கப்படும் மட்டுப்பாடுகளின் பரப்பெல்லை குறைக்கப்படுவதையிட்டு அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அதாவது மிகக் குறுகியதான மட்டுப்பாடுகளே அடிப்படை உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் விதிக்கப்பட்டன. இதன் முழு வீச்சுப் பயன்பாட்டை இன்னும் இந்நாட்டு மக்கள் அனுபவிக்கத் தொடங்கியதாக இல்லை. ஆனால் அதேவேளை, ஏற்கனவே இருந்துவருஞ் சட்டங்கள் அவை அடிப்படை உரிமைகளுக்கு முரண்படினும் தொடர்ந்து வலுவிலிருந்து வரவேண்டும் என்று கூறிவிட்டார்.
அரசாங்கசபை காலத்திலிருந்து (State Council) இன்றுவரையான காலப்பகுதிக்குள் (1978) பலவகையான மோசமான நியதிச் சட்டங்கள் உருவாகுவதில் முக்கிய கர்த்தாவாகத் திகழ்ந்தவர்களில் ஜே. ஆரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய மோசமான சட்டங்களை அப்படியே வலுவில் வைத்துக்கொண்டு ஒருவரின் அடிப்படை உரிமைகள், சுதந்திரங்களைப் போற்றிப் பேணுதல் என்பது அவ்வளவு சாத்தியமானதாக இருக்கவில்லை.
செனட்டர் நடேசன் கியூ சி. இவ்விதமாகப் பாராளுமன்றமும் அதன் தெரிவுக் குழுக்களும் அரசியலமைப்பு வரைவில் ஈடுபடுதலைக் கண்டித்து ஏராளமான கட்டுரைகளை அந்நேரத்தில் எழுதினார். ஆயினும் அக்கட்டுரைகள் ஓரளவு படித்தவர்களுக்கு மட்டுமே விளங்கக் கூடியனவாக இருந்தன
93

Page 53
குறிப்பாக, பிரிட்டனின் அரசியல் வரலாற்றிலிருந்து அவர் ஏராளமான உதாரணங்களை எடுத்து வைத்தார். இது சாதாரண மக்களைப் போய்ச் சேரவில்லை. பிரிட்டனில் மக்களது உரிமைகள் எவ்வாறு உருவாகின? அவை எப்படி அரசியல் வலுப்பெற்றன? என்பவற்றை உதாரணம் காட்டும்போது சட்டவாக்க சபையினரது அதிகாரங்கள் குறைக்கப்பட்டு வந்ததே வரலாற்று உண்மை என்பதை அவர் சுட்டிக் காட்டினார். சட்டவாக்க சபையின் அதிகாரங்கள் குறையும் போதுதான் மக்களது உரிமைகள் கூடும். சுதந்திரம் அதிகரிக்கும்.
அரசியலமைப்பை வரையும் பணியை சட்டவாக்க சபையே தனதாக்கிக் கொண்டால் அது எப்படித் தனது அதிகாரங்களை மட்டுப்படுத்தி தத்துவங்களைக் குறைத்து அரசியலமைப்பை வரைய முயற்சிக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். நடேசன் தரும் உதாரணத்தில் பிரிட்டனில் 1215இல் Magna Carta என்ற உடன்படிக்கை ஆக்கப்பட்டதல்லவா. இந்த உடன்படிக்கை ஜோன் மன்னர் தனது அதிகாரங்களை இங்கிலாந்தின் Barons என்ற குறுநில அதிகாரிகளுக்கு விட்டுக் கொடுத்து அவர்களுடைய விருப்புகளுக்கு முரண்பட்டு நடப்பதில்லை என்று அவர் உடன் பட்டமையாகும். இதுதான் பின்னர் Magna Carta எனப் பெயர் பெற்றது. ஆனால் அன்று அங்கு நடந்திருக்க முடியாதவற்றுக்கு இன்று ஏறக்குறைய 750 ஆண்டுகளுக்குப் பின்பு இங்கு இடமளிக்க முயற்சிக்கப் படுகின்றது.
உரிமைகள் பட்டயம் ஒன்று அரசியலமைப்பு ஒன்றில் இடம்பெறுவதன் முக்கியத்துவம் என்ன? சமகாலத் தராதரங்களையும் விதிகளையும் உள்ளடக்கியதாக அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். வளர்ந்து வருகின்ற சட்ட முறைமைகளை எடுத்துப் பார்த்தால் ஒன்றை அவதானிக்கலாம்.அரசாங்கம் ஒன்றின் செயற்பாடுகளை எடை போடுவதற்குப் பாவிக்கப்படும் சில விழுமியங்களை, அவற்றின் தராதரங்களை உருவாக்குவதற்கான பல வழிமுறைகளைக் கண்டறிவதே இன்றைய அரசியலமைப்பு முயற்சிகளாகும்.
94

அதி த கைய உயரிய விழுமியங்களையும் தராதரங்களையும் அரசாங்கம் எந்தளவுக்கு ஏற்றியங்குகின்றது என்பதைக் கணி காணிப்பதே உலக அமைப்புக் களது
பணியுமாகின்றது.
இந்த உயரிய தராதரங்களும் விழுமியங்களும் ஆரம்பத்தில் தெய்வீகச் சட்டங்கள் என்று பெயர் பெற்றிருந்தன. பின்பு படிப்படியாக மாற்றங்களுக்குட்பட்டு இன்று மனித உரிமைகள் (அடிப்படை உரிமைகள்/ சுதந்திரங்கள்) என்று பெயர் பெற்றுள்ளன. இஸ்லாமிய நாடுகளில் - திருக்குர்ஆனில் கூறப்படும் உண்மைகளுக்கு ஏற்ப நாட்டின் சட்டங்கள் அமைந்துள்ளனவா என்று உரைத்துப் பார்க்கப்படுகின்றன.
இந்த மாற்றங்கள் மிகக் குறுகிய காலகட்டத்துக்குள் ஏற்பட்டவையல்ல. இவை பரிணாம வளர்ச்சிக்குட்பட்டவையாகும். இயற்கைச் சட்டம் என்ற கோட்பாட்டின் கீழ் விளங்கப்பட்ட தராதரங்களின் அடிப்படையில் இவை விளங்கப்பட்டன. 1776இல் Virginia என்ற அமெரிக்க மாநிலம் ஒன்றில் கூட்டப்பட்ட மாநாட்டிலிருந்து வெளியிடப்பட்ட பிரகடனங்கள், உரிமைகள் பிரகடனங்கள் என அறியப்பட்டன. இதன் பின்னர் 1789இல் பிரான்சின் புரட்சிக்கு அடிப்படையான உரிமைகள் பிரகடனம் 0.616fun Gorg). (French Declaration of the Rights of Man and the Citizen). 1791இல் அமெரிக்க அரசியலமைப்புக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின் மூலமும் உள்நாடு ஒன்றில் உள்நாட்டு உரிமைகளை எங்ங்ணம் உருவாக்குவது என்பது அறிமுகமானது. இவை யாவும் அரசியற் பேரவை ஒன்றின் தயாரிப்பாகவே பெறப்பட்டிருந்தன. அதற்கு முன்பிருந்த - நிகழ்ந்த - பிரச்சனைகளுக்கு விடை காண்பதாக, அந்த நிகழ்வுகளின் அடிப்படையிலே0யே இந்த ஆவணங்கள் தயாராகின.
மக்களுடைய அபிலாசைகள், குறைகள் என்பவற்றுக்கு விடை காணவே இவை ஆக்கப்பட்டன.
95

Page 54
ஆனால் அக்காலகட்டம் புரட்சிகர காலகட்டமாக இருந்தமையினால் விருப்புகள் விரைந்து ஏற்கப்பட வேண்டியனவாயிற்று. ஆனால் இன்று நிலைமையில் மாற்றமேற்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் பொதுக் கோட்பாடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு சட்டச் சொற்களால் வரையப்பட்டு எல்லா நாடுகளதும் ஒப்புதல் பெறப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் மூன்று முக்கிய ஆவணங்கள் பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.
1948இல் ஐ. நா. பொதுச்சபையினால் ஆக்கப்பட்டதான சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், 1968இல் இதே அமைப்பினால் ஆக்கப்பட்டதான - குடியியல், அரசியல் உரிமைகள் மீதான சர்வதேசக் கட்டுறுத்து, மற்றும் பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் மீதான சர்வதேசக் கட்டுறுத்து என்ற மூன்று ஆவணங்களுமே இனிறு உலகளாவிய ரீதியில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட தராதரங்களாக உள்ளன.
உரிமைகளைப் பட்டியலிட்டுக் கூறும்போது அப்பட்டியல் இன்ன வடிவத்தில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதனுடைய ஏற்பாடுகள் ஒருவருடைய கற்பனைகள் எந்தளவுக்குப்போக முடியுமோ அந்தளவுக்கு வேறுபட்டவை யாகவும் எண்ணிறந்தவையாகவும் இருக்கலாம். அங்ங்னமே அதிகாரமும் கட்டுப்பாடும் அவசியமாகும்போது அந்தளவுக்குக் குறுகியதாகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருக்கவும் முடியும். எனவே உரிமைகள் பட்டயத்தின் பலமானது அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்தளவுக்கு மனித உரிமைகள் மீது பற்றுள்ளவர்களாக இருக்கின்றார்களோ அந்தளவுக்கு உறுதியானதாக இருக்கும்.
96

இலங்கையானது மேற்சொன்ன கட்டுறுத்துக்களையும் ஏனைய ஆவணங்களையும் ஏற்றங்கீகரித்திருப்பதுடன் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் மனித உரிமைகள் மேற்பார்வை அமைப்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே அத்தகைய நாடொன்றின் அரசியலமைப்பானது சர்வதேசச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டதான விதிகளின் ஆகக் குறைந்த தராதரங்களையாவது திருப்தி செய்வதாக இருக்க வேண்டும். இவற்றில் இன்னும் மேம்பாட்டைக் கொண்டுவர வேண்டுமே தவிர இருக்கும் தராதரத்திலிருந்து விலகி நிற்பதற்கு நியாயப்படுத்தல்களைத் தேடுவதாக இருக்கக் கூடாது.
மேற்சொன்ன கட்டுறுத்துக்கள் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளின் உரிமைகள் பட்டயத்துக்கு மாதிரி வரைவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் ஆகப்பிந்திய உதாரணங்களாக அமைவன தென்னாபிரிக்காவினதும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளினதும் அரசியலமைப்புக்களாகும். வெறுமனே கோட்பாட்டு வடிவங்களாக இருந்த இந்த உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் இன்று பொருள் கொடுக்கத்தக்க விதத்தில் ஏராளமான தீர்ப்புக்கள் வெளிவந்துவிட்டன. இதன் மூலம் இந்தக் கட்டுறுத்துக்களின் ஏற்பாடுகளைப் பொருள் கோடல் செய்வதென்பது இன்று அத்துணை சிரமமான காரியமன்று.
இந்தக்கட்டுறுத்துக்களை உதாசீனப்படுத்திவிட்டு கலாநிதி கொல்வின் ஆர்டிசில்வாவும் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் புதிய தொகுதி அடிப்படைக் கோட்பாடுகளை அமைப்பதற்கு முயன்றமையானது புதிய சக்கரமொன்றைக் கண்டுபிடித்தல் அல்லது மீற்றர் அளவு முறைக்குப் பதிலாக இன்னொன்றை அறிமுகப்படுத்தல் போன்றதாகும் என்றே கூறவேண்டும். சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளுக்கு ஆசிய வர்ணந்தீட்ட முயலுதல் அல்லது இலங்கைப் பரிமாணமொன்றைச் சேர்க்கமுயலுதலானது அந்த உரிமைகளின் பரப்பினையும் ஏற்புடைமையினையும் மாற்றியமைப்பதாக ஆகிவிடும் எனலாம்.
97

Page 55
அத்துடன் விளக்கப்பட முடியாத காரணங்களுக்காக இங்ங்ணம் கூறுதலானது ஆசிய மக்கள் அல்லது இலங்கை மக்கள் மானிடத் தன்மை குறைந்தவர்கள் அல்லது ஏனையவர்களைவிட மானிட அம்சங்களில் தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள் என்று ஒப்புக் கொள்வதாக இல்லையா? உரிமைகள் பட்டயமொன்றின் பிரதான நோக்கம் யாதெனில் அரசதத்துவத்தை (அதிகாரத்தை) ஒழுங்குபடுத்துவதாகும். எனவே அதனது ஏற்பாடுகள் யாவும் அரசாங்கத்தின் மூன்று அங்கங்களுக்கும் பொருந்துவதாகவும் இருக்க வேண்டும். மறுவார்த்தையில் கூறுவதானால், சட்டமாக்கும் நடபடி, நிர்வாக நடபடி, நீதிமுறை நடபடி என்ற மூன்றுமே உரிமைகள் பட்டயத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படக் கூடியனவாக இருக்க
வேண்டும்.
இந்தத் தேவைப்பாடானது 1990 இன் நமீபிய அரசியலமைப்பில் நன்கு தெளிவாக விளம்பப்பட்டுள்ளது. இதன் 5வது உறுப்புரை வருமாறு கூறுகின்றது:
"இந்த அத்தியாயத்தில் நிலைபெறச் செய்யப்பட்டுள்ள அடிப் படை உரிமைகளும் சுதநீதிரங்களும் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை உட்பட அரசாங்கத்தின் எல்லா அங்கங்களாலும் மற்றும் அதன் முகவர்களாலும் போற்றிப் பேணப்பட வேண்டும் என்பதுடன் தேவையேற்படுமிடத்து நமீபியாவிலுள்ள எல்லா இயற்கை, மற்றும் சட்ட நபர்களாலும் அங்ங்ணமே போற்றிப் பேணப்பட வேண்டும் என்றாவதுடன் இதனகத்துப் பின்னர் ஏற்பாடுசெய்யப்படும் விதத்தில் நீதிமன்றங்களால்
செயற்படுத்தப்படக் கூடியதாதலும் வேண்டும் ".
98

அரசியலமைப்பு என்பது நாட்டினி அதியுயரிய சட்டமென்பதால் அந்த அரசியலமைப்பில் நிலையூன்றியுள்ள உரிமைகள் பட்டயமானது ஏற்கனவே இருந்துவரும் எல்லா நியதிச் சட்டங்களையும் மேலோங்கிநிற்கும் வலுப்பெற்றதாதல் வேண்டும்.
இனி 1996 ஆம் ஆண்டின் (புதிய) தென்னாபிரிக்க அரசியலமைப்பு என்ன கூறுகின்றது எனப்பாருங்கள்:
உதாரணத்துக்கு இனி இந்திய அரசியலமைப்பினைப் பார்ப்போம். இதன் உறுப்புரை 13(அ) கூறுவதாவது:
"இந்த அரசியலமைப்பு வருவதற்கு உடனடி முன்னதாக இந்திய ஆள்புலத்தினுள் வலுவிலிருந்த சட்டங்கள் யாவும், அவை இந்தப் பிரிவின் ஏற்பாடுகளுக்கு முரண்படுகின்ற போது அத்தகைய முரண்பாட்டினளவுக்கு வெறிதானதாதல்
வேண்டும்".
இலகுபடுத்திக் கூறுவதானால் - புதிய அரசியலமைப்பு வருவதற்கு முன்பிருந்த சட்டங்கள் யாவும் அவை அரசியலமைப்போடு முரண்படாவிட்டால் மட்டுமே தப்பிப் பிழைக்கலாம். அதாவது அரசியலமைப்பே இலகுபடுத்திக் கூறுவதானால் - புதிய அரசியலமைப்பு வருவதற்கு முன்பிருந்த சட்டங்கள் யாவும் அவை அரசியலமைப்போடு முரண்படாவிட்டால் மட்டுமே தப்பிப் பிழைக்கலாம். அதாவது அரசியலமைப்பே உயர்ந்தது. அதற்கு முரணான எந்தச் சட்டமும் அது எப்போது ஆக்கப்பட்டதாயினுஞ்சரி செல்லுபடியற்றதாக்கப்பட வேண்டும் என்பது இதன் பொருள். மிக அண்மைக்கால அரசியலமைப்புகளுள் ஒன்றான சிசெல்லெஸ் தீவின் அரசியலமைப்பை வரைந்தவர் இலங்கையின் முன்னாள் சட்டவரைஞர் ஒருவரே.இதன்உறுப்புரை 5 வருமாறு கூறுகிறது:
99

Page 56
"அரசியலமைப்பானது சிசெல்லெஸின் அதியுயரிய சட்டமாகும் என்பதுடன் இந்த அரசியலமைப்புடன் முரண்படுவதாகக் காணப்படும் வேறு எந்தச் சட்டமும் அந்த முரண்பாட்டினளவுக்கு வெறிதானதாகும்."
இதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் யாவை என்பதற்கு இலங்கை அரசியலமைப்பே தகுந்த சான்றாகின்றது. எமது அரசியலமைப்பின் உறுப்புரை 16(1) வருமாறு கூறுகிறது:
இந்த அத்தியாயத்தின் முற்போந்த ஏற்பாடுகளுடன் ஏதாவது முரண்பாட்டினை தற்போது இருந்துவரும் எழுத்திலான மற்றும் எழுத்திலில்லா சட்டங்கள் யாவும் கொண்டிருப்பது எது எப்படியிருப்பினும் அவை யாவும் செல்லுபடியானவையும் செயற்பாடுடையவையுமாதல் வேண்டும் (உ+ம்: உத்தரவாதம் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் , சுதந்திரங்களுடன் முரண்படினும்) இதன் பொருள் என்ன? அடிப்படை உரிமைகள் என்று உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களுங்கூட தற்போது வலுவிலிருக்கும் சட்டங்கள் யாவற்றுக்கும் உட்பட்டவையேயாகும் என்பது அடித்துக் கூறப்படுகின்றது. அப்படியாயின் அரசியலமைப்பை விடச் சாதாரண சட்டங்கள் உயர்ந்தவை. அத்துடன் சட்டத்தின் வலிதுடைமை பற்றி நீதிமன்றம் வாய் திறக்க முடியாது. எனவே எல்லாச் சட்டங்களுமே அரசியலமைப்பைவிட உயர்ந்து நிற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படியாயின் அரசியலமைப்பு என்றொன்று எதற்கு?
அரசியலமைப்பைத் திருத்துவதற்கு 2/3 பெரும்பான்மை பாராளுமன்றத்தில் தேவைப்படும். அத்துடன் அத்தியாயம் II அடிப்படை உரிமைகள் பற்றிக் கூறுவதனால் அதனைத் திருத்துவதானால் 2/3 பங்கு பெரும்பான்மையுடன் சர்வசன
100

வாக்கெடுப்புந் தேவையாகும் என்று இதே அரசியலமைப்புக் கூறுகின்றது. அதேவேளை சாதாரண சட்டங்கள் அரசியலமைப்பை விஞ்சி நிற்கவும் முடிகின்றது. இது உலக அதிசயமே என்றால்கூட மிகையில்லை. அற்தளவிற்குக் குளறுபடி நிலைமை.
எமது அரசியலமைப்பின் இன்னொரு சாதனை ஏற்பாடு யாதென்றால் எழுத்திலில்லாத சட்டங்கள் கூட அடிப்படை உரிமைகளை விட உயர்ந்து நிற்க முடியும் என்பதாகும். எழுத்திலில்லாத சட்டங்கள் யாவை? அவற்றின் எண்ணிக்கை எத்தனை? ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் இப்படியொரு ஏற்பாட்டை இலங்கை அரசியலமைப்பில் மட்டுமே காண முடியும்.
கடந்த 200 வருடங்களாக ஆக்கப்பட்டு வந்துள்ள சட்டங்கள் யாவும் அப்படியே வலிதானவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவற்றிலிருந்து வரும் அதிகாரத்தை வைத்துக் கொண்டே அரசாங்கம் தான் நினைத்ததைச் சாதித்து விடலாம். அடிப்படையுரிமைகள் உத்தரவாதம் பற்றிய அரசியலமைப்பின் ஏற்பாடுகள் பற்றி எவ்வித கவலையுமில்லாமல் செயற்படவல்ல அதிகாரம் அரசாங்கத்துக்கு ஏற்கனவே உண்டு. இன்னொரு விதத்தில் பார்ப்பின் தற்போதுள்ள சட்டங்களை பாராளுமன்றம் தான் விரும்பிய நேரத்தில் விரும்பியபடி சாதாரண பெரும்பான்மை கொண்டு மாற்ற முடியும். ஆனால் இலகுவில் மாற்ற முடியாத அடிப்படை உரிமைகளை இச்சாதாரண சட்டங்கள் மேலோங்கி (Supersede) நிற்க முடிகின்றமை வேடிக்கையே. இதன்படி, 1978க்கு முன்னைய நியதிச்சட்டங்கள் யாவும்அரசியலமைப்பை விட உயர்ந்தவை. புதிதாகச் சட்ட மூலம் கொண்டு வந்தால் தான் அத்தியாயம் 3 இன் கீழ் ஆட்சேபிக்கலாம். இது இன்னும் விந்தையானது.
கடந்த 20 வருடங்களில் எமது பாராளுமன்றம் மிக மோசமான சட்டங்களை ஆக்கியுள்ளது.
10.

Page 57
எந்தளவுக்கு உரிமைகளுக்குள் ஊடுருவ முடியுமோ அந்தளவுக்கு ஊடுருவியுள்ளன. எனவே சுதீதமான போலித்தனமே அடிப்படை உரிமைகள் விடயம் என்பது சற்று ஆழமாகப் பார்ப்பின் தெரியவரும். இது தொடர்பில் அப்போதைய பிரதமர் திருமதி பூணூரீமாவோ பணி டாரநாயக் கா தனது அரசியலமைப்பு விவகார அமைச்சர் கொல்வின் ஆர். டி. சில்வாவுக்கு 1970 டிசம்பர் 9இல் எழுதிய கடிதத்தில் தனதும் கட்சியினதும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி எழுதியிருந்தார். இக்கடிதம் நீண்ட காலமாக வெளியிடப்படாமலிருந்தது. இதன் சாரம் வருமாறு:
அரசியல் நிர்ணய சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையின் அடிப்படைச் சட்டமாக அமையப் போகின்ற அரசியலமைப்பை நிறுவக் கருதியுள்ளது. இத்தீர்மானத்துக்கு வலுவும் பொருளும் கொடுப்பதற்காகப் புதிய அரசியலமைப்பில் செய்யப்படும் ஏற்பாட்டின்படி சட்டவாக்க சபையானது கூட இந்த அடிப்படைச் சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படும். இந்த இலக்கை அடைவதற்கு வேறு சிறந்த வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே சுதந்திரமான அமைப்பொன்றை முன்னிறுத்தி அதற்கு வழங்கப்படும் தத்துவத்தின் மூலம் இந்நிலை எற்படுத்தப்படுத்தப்படும். இத்தகைய அடிப்படை விதிக்கு முரண்படும் ஏதேனும் சட்டவாக்கம் உள்ளதா என்பதைக் கண்டறியும் பணி சுதந்திரமான நீதிமன்றம் போன்ற அமைப்பிடமே விடப்படும். இந்த நோக்கத்துக்கென கருதப்பட்டதான அடிப்படைத்தீர்மானத்தை நீங்கள் நிறைவேற்றியுள்ள விதத்தைப் பார்ப்பின் அது திருப்திகரமானதாகத் தெரியவில்லை. நீதிமுறை மீளாய்வுத் தத்துவத்தை நீதிமன்றத்துக்கு வழங்குதல் என்பது சட்டவாக்கத் துறைக்கு மேலான உயரியதாக நீதித்துறையை
102

ஆக்குவது என்பதல்ல மக்களுடைய தத்துவமானது நீதித்துறை, சட்டவாக்கத்துறை இரண்டையும் விடவே உயரியது என்ற கருதுகோளினடிப்படையிலும் சட்டமானது அரசியலமைப்பில் நிலையூன்றியுள்ள மக்களின் விருப்பான உரிமையொன்றுடன் முரண்படும்போது நீதிமன்றங்களானவை அரசியலமைப்புக்கு வலுக் கொடுத்து அதற்கு மீறலாயமையும் சட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும். இது பிரதமரின் விருப்பம். ஆனால் சோசலிஸ் விருப்புடைய அமைச்சர் இறுதியில் என்ன செய்தார்? அரசியலமைப்பில் Guilfigs, si6T LDig,6fsii. 65.5 L (Will of the people) 6T6iugi பின்னதாக மாற்றத்துக்கு உள்ளாகுமாயின் அந்த நிலைமைக்கு ஏற்றபடி அரசியலமைப்பைத் திருத்துவதற்கான ஏற்பாடிருக்க வேண்டும். ஆனால் மேற்சொன்னபடி பிரதமர் நல்ல வழியில் செல்ல விரும்பியும் அவரது ஆசை நிறைவேறவில்லை. இருந்துவருஞ் சட்டமானது உரிமைகள் பட்டயத்துக்கு முரண்படும்போது சட்டத்தை நீதிமன்றம் அடித்து அகற்றத் தொடங்கினால் நீதிமன்றில் வழக்குகள் வந்து குவிந்துவிடும். சட்டங்களைச் செல்லாதது என்று நீதிமன்றம் கூறத் தொடங்கினால் அரசாங்கமே ஸ்தம்பித நிலையை அடையும் சாத்தியமுமுண்டு என்று சிலரும் அச்சந் தெரிவிக்கின்றனர். எனவேதான் ஏற்கனவே இருந்து வரும் சட்டத்தில் கை வைப்பதை இவர்கள் விரும்புவதில்லை. -
ஆனால் இவர்கள் கவனிக்கத் தவறுவது யாதெனில் சட்டம் ஒன்றின் வலிதுடைமையை அந்தளவில் மட்டும் கேள்விக்குட்படுத்துவதற்காக நீதிமன்றத்துக்கு எவரும் செல்வதில்லை. ஒருவருடைய உரிமையை நீதித்துறை மூலம் செயற்படுத்துவதற்குரிய கட்டம் எழாதவரை சட்டத்தைக் கேள்விக்குட்படுத்தும் பிரச்சனை எழுவதேயில்லை. எனவே ஒருவரது உரிமை மீறப்படாத வரை சட்ட தீ தைக் கேள்விக்குள்ளாகும் தேவையெழாது.
103

Page 58
அதேபோல, அதற்கு முன்னர் அச்சட்டத்தின்கீழ் செய்யப்பட்டவை யாவும் ஆனால் இவர்கள் கவனிக்கத் தவறுவது யாதெனில் சட்டம் ஒன்றின் வலிதுடைமையை அந்தளவில் மட்டும் கேள்விக்குட்படுத்துவதற்காக நீதிமன்றத்துக்கு எவரும் செல்வதில்லை. ஒருவருடைய உரிமையை நீதித்துறை மூலம் செயற்படுத்துவதற்குரிய கட்டம் எழாதவரை சட்டத்தைக் கேள்விக்குட்படுத்தும் பிரச்சனை எழுவதேயில்லை. எனவே ஒருவரது உரிமை மீறப்படாத வரை சட்டத்தைக் கேள்விக்குள்ளாகும் தேவையெழாது. அதேபோல, அதற்கு முன்னர் அச் சட்டத்தினி கீழி செய்யப்பட்டவை யாவும் பாதிக்கப்படுவதுமில்லை.
ஆனால் ஒருதேசத்தைக் கட்டியெழுப்புவது என்பது அரசியலமைப்பில் ஒருபாதுகாப்புப் பொறிமுறையைக் கொண்டுவருவதால் மட்டும் பூர்த்தியடையமாட்டாது. தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்பதுக்கு பரஸ்பர நம்பிக்கையும் கெளரவமும் அவசியம். ஒவ்வொருவரும் மற்றவரது பெறுமதியை ஏற்றுக்கொள்ள விருப்புடையவராக இருக்க வேண்டும். உதாரணங்களைப் பார்ப்போம். முன்னாள் பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா தனது 14 உறுப்பினர் அமைச்சரவையில் வடக்கு மக்களைப் பிரதிநிதித்துவஞ் செய்யும் வகையில் 2 அமைச்சர்களுக்கு இடம் கொடுத்தார். இவர்கள் இருவரும் தெரிந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவே இருந்தனர். முஸ்லீம் பிரதிநிதி கொழும்பிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டபோது அவரையும் அமைச்சராக்கினார். இதன் மூலம் தேசியம் ஒன்று உருவாக்கப்படும் என்று அவர் நம்பியிருக்கலாம். ஆனால் மறுபுறத்தில் அவர் என்ன செய்தார்? இந்தியத் தமிழர்களின் வாக்குரிமையினைப் பறிப்பதற்காகக் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அரச நிதியுதவியுடன் சிங்கள மக்களைக் கொண்டுபோய் தமிழ்ப் பிரதேசங்களிலும் தரிசு நிலங்களிலும் குடியேற்றினார்.
104

இது கிழக்கில் பெருமளவிலும் வடக்கில் சிறிதளவிலும் இடம் பெற்றது. இலங்கைச் சிறுபான்மையினரது தாயகம் இதனால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.
1944இல் அரசாங்கசபை எடுத்த தீர்மானமான இலங்கையின் உத்தியோக மொழிகள் சிங்களமும் தமிழும் என்பதை முறியடித்து சிங்களம் மட்டுமே நாட்டின் உத்தியோக மொழி என்று இரு பிரதான கட்சிகளும் சேர்ந்து முடிவெடுத்தபோது கெளரவமும் நம்பிக்கையும் குழி தோண்டப்பட்டு விட்டன.
1957 ஜனவரி 1ஆந் தேதியிலிருந்தாவது தமிழ்மொழி உத்தியோகமொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே 1944ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிங்கள அரசியல் தலைவர்கள் தங்களுடைய அரசியல் வெற்றியின் அத்திவாரம் சிங்களத் தொகுதிகளை வெல்வதிலேயே தங்கியுள்ளது என்று அறிந்து கொண்டதும் அவற்றை இலக்காக வைத்து அரசியல் நடாத்தத் தலைப்பட்டனர். அன்றைய தேர்தல் முறைமையின் கீழ் சிங்களத் தேர்தல் தொகுதிகளிலிருந்து மட்டும் தேவையான பெரும்பான்மையை அதாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கூடப் பெறக்கூடியதாக இருந்தது. எனவே வெற்றிகரமான அரசியல் என்பது சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவது தான் என்ற அரிச்சுவடியைப் படித்துக் கொண்டனர்.
பிரதான கட்சிகள் இரண்டும் காலத்துக்குக் காலம் ஏனைய ஏழு மாகாணங்களில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்துவதோடு சிறுபான்மையினர் வாழும் மற்றைய பிரதான கட்சிகள் இரண்டும் காலத்துக்குக் காலம் ஏனைய ஏழு மாகாணங்களில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்துவதோடு சிறுபான்மையினர் வாழும் மற்றைய இரண்டு மாகாணங்களிலும் எவரையுமே நிறுத்தாமல் விட்டும்கூட தாம் நினைத்தபடி வெற்றியடைந்துள்ளன என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகின்றது. சில சந்தர்ப்பங்களில் இப்படி சிறுபான்மையினரைப் புறக்கணித்துவிட்டுத்
105

Page 59
தேர்தலில் நின்று அறுதிப் பெரும்பான்மை கிட்டாதபோது தமிழ்க் கட்சிகளுடன் தேர்தலுக்குப் பிந்திய கூட்டை ஏற்படுத்திக் கொண்டு அரசாங்கத்தை வெற்றிகரமாக அமைக்கவும் தவறியதில்லை.
பெரும்பாலும் அரசியல் நிலைமை ஸ்திரமடைந்ததும் இந்தக் கூட்டுக்களின் நோக்கமே அடிபட்டுப்போய் வாக்குறுதிகள் காற்றில் பறந்த வரலாறுமுண்டு. சுதந்திரத்தின் பின்னரான அரசாங்கங்களில் முதலாவதைத் தவிர வேறெந்த அரசாங்கத்திலும் வடக்கு-கிழக்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி எவருமே பதவியெதுவும் வகிக்கவில்லை என்பதைத் தற்செயலான நிகழ்வாகக் கருதிவிடவும் முடியாது.
சிறுபான்மையினர் பக்கத்திலிருந்து பிரதிபலிப்புகள் முன் கூட்டியே வெளிவரத் தொடங்கியிருந்தன. நாடு சுதந்திரமடைந்து ஒரு வருடத்துக்குள்ளாகவே தமிழரசுக்கட்சி ஆரம்பிக் கப்பட்டுவிட்டது. இலங்கை எனிற கூட்டமைவுக்குள்ளான மொழிவாரி சுயாட்சித் தமிழரசொன்றை அமைப்பதன் மூலம் தமிழ்ப்பேசும் மக்களின் சுதந்திரத்தை அடைதல்' என்பதை இலக்காகக் கொண்டு இக்கட்சி அமைக்கப்பட்டது. கூட்டாட்சி என்பதன் அரசியல், சட்டக் கோட்பாட்டுப் பரிமாணங்களை விளங்கிக் கொண்டவர்களால் அது ஏன் தமிழரசுக் கட்சி என அழைக்கப்பட்டது என்பது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டதில்லை.
ஆனால் இனிறுங் கூட இப் பெயர் சிலரால் சர்ச்சைக்குள்ளாக்கப்படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் இதற்காக, தமிழரசுக்கட்சியினர் தமது கொள்கை விடயத்தில் தெளிவாக இருந்தனர் என்றும் கூறிவிடவும் முடியாது. உண்மையான கூட்டாட்சியின் அலகொன்றை அரசு என அழைப்பதில் தவறில்லை என்பதால் தமிழரசுக்கட்சி என்ற பதம் சரியானது என்பதே என்னுடைய வாதமாகும். ஆனால் இக்கட்சியினர் தமது கொள்கை விடயத்தில் சரியான விளக்கம் உடையவர்களாக இருந்தனர் என்று கூறமுடியாத அளவுக்கு அவர்களது பின்னைய செயல்களும் அவற்றுக்கான விளக்கங்களும் அமைந்திருந்தன.
106

கட்சி எதிர்கொண்ட முதலாவது தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு இந்த விளக்கமின்மையின் பிரதிபலிப்பு என்றே கூற வேண்டும். அவ்வேளையில் வடக்கு-கிழக்கு மக்களின் அரசியல் மிகக் கூர்மையடைந்திருந்தது என்றும் கூறுவதற்கில்லை.
வடக்கில் கூடுதலாக இந்து-விவசாயிகளையும் கிழக்கில் இந்து, கிறீஸ்தவ, முஸ்லீம் வாக்காளர்களையும் நம்பியே கட்சி செயற்படத் தொடங்கியது. 1956இன் பின்னரான ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வந்திருப்பதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
1970இல் புதிய குடியரசு யாப்பு ஒன்றை வரைந்து, நிறைவேற்றி, செயற்பாட்டுக்கு விடும் பணியில் பங்குபற்றுமாறு அப்போதைய அரசாங்கம் விடுத்த அழைப்பினையேற்று தமிழரசுக்கட்சி அரசியலமைப்பு நிர்ணயசபையில் கலந்து கொள்வதற்குச் சம்மதித்தது. நாட்டின்மீது வரலாற்றினால் சுமத்தப்பட்டிருக்கும் பன்மைத்துவத்துக்கு மத்தியிலும் ஒற்றுமையினைப் பேணி மிகப்பலமான தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்குப் பணியாற்றும் விதத்தில் புதிய அரசியலமைப்பு அமைந்திருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. அரசாங்கத்துக்கு உணர்மையிலேயே அக்கறை இருந்திருக்குமானால் சிறுபான்மையினரின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதற்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பமாக அரசியலமைப்பு நிர்ணயசபையில் போராடவே செய்வர். எனவே சிறுபான்மைச் சமூகமொன்று நாடி நிற்கும் கொள்ளிடம் (space) என்பது பேச்சுவார்த்தைக்குரியதல்ல என்பதுடன் எவ்வித நிபந்தனைக்கும் உட்பட்டதாகவும் இருக்க முடியாது. சர்வசன வாக்கெடுப்பு அல்லது தேசிய ரீதியிலான சம்மதம் (national consensus) அல்லது யுத்த நிறுத்தம் என்றுகூட நிபந்தனை விதிக்கப்பட முடியாது.இது அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேசச் சட்டத்தின் கடப்பாடு. இதற்காக அரசாங்கம் சர்வகட்சி மகாநாடுகள் அல்லது சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்று அலைவது வீணானது. இது சட்டமும் பொது அறிவும் தேவைப்படுத்தி நிற்கும் ஒன்று.
107

Page 60
இதற்கு புறக்காரணிகளைச் சாட்டாக வைத்துப் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.
பிராந்திய சுயாட்சி அல்லது கூட்டாட்சி அமைப்பு என்ற அரசியல் ஏற்பாடுகள் தம்மளவிலேயே இறுதி வடிவ முடிவுகள் என்று கூறப்பட முடியாதன. பிராந்தியமொன்று எந்தளவுக்கு சுயாட்சியை அனுபவிக்கின்றதோ அந்தளவுக்கு அந்தப் பிராந்தியத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான பிணிப்பானது, உறவானது இன்னும் பலப்பட்டு விடும் என்பதே எனது அபிப்பிராயம். பிராந்தியத்தின் எவ்வித வடிவத்திலான அமைப்பும் மத்திய அரசாங்கத்தில் உண்மையாகவே பங்குபற்றும் நிலை இருக்க வேண்டும். மறுவார்த்தையில் கூறுவதானால், வடக்கு கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லீம் சமூகங்கள் அரசியலமைப்பு ரீதியாகப் பெயரளவிலன்றி உண்மையாகவே உத்தரவாதமளிக்கப்பட வேண்டும். எதிலென்கிறீர்களா? தேசிய சட்டவாக்க சபையிலும் மத்திய அரசாங்கத்திலும் உண்மையான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும்.
பன்மைத்துவக் கலாசாரம் என்பது யதார்த்தமானதொன்று என்பது அங்கீகரிக்கப்பட்டு ஏற்கப்பட வேண்டும். டொனமூர், சோல்பரி ஆணைக்குழுக்கள் செய்ததைப் போல இரகசியமான முறையில் அடக்கி வாசிக்கப்பட, மூடி மறைத்துவிட முடியாததொன்று என்பதும் உணரப்பட வேண்டும். அரசியலில் அதனை வெறுமனே ஒரு வியாதியாகக் கருதுதல் தவிர்க்கப்பட வேண்டும். தற்போது அமைச்சரவையில் ஒரு தமிழரும் இரு முஸ்லீம்களும் இருப்பதை மட்டும் வைத்து இச்சமூகங்கள் அரசாங்கத்தில் பங்குபற்றுகின்றன என்று கூறிவிட முடியாது. ஏனெனில் இந்தப் பதவிகளுக்கு அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதம் எதுவும் கிடையாது. அடுத்த தேர்தலின் பின்பும் இதே நிலையிருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதமுள்ளது? கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஏதும் உத்தரவாதமுள்ளதாகக் கூற முடியுமா?
108

இது விடயத்தில் ஏற்கனவே பலமுறை நான் குறிப்பிட்டதைப் போல வேறு நாடுகளின் அரசியலமைப்பு முன்னுதாரணங்களிலிருந்து நிறையவே பெற்றுக் கொள்ள முடியும். இன்று சிங்கப்பூர் கூட ஓர் உதாரணமாக மாறிவிட்டது. பன்மைத்துவ கலாசாரத்தை அங்கீகரித்து அதனைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும் சிங்கப்பூர் அங்கு வசிக்கும் வெவ்வேறு குழுக்களுக்கிடையில் வளர்ந்து வருவதும் பரஸ்பர ஆக்கபூர்வமானதுமான உறவுமுறையை நிலைப்படுத்தி நிறுவனப்படுத்துவதற்காக அரசியலமைப்புவழி யுக்திகள் பலவற்றைக் கையாண்டுள்ளது. Kiribati, Fi என்ற இரு நாடுகள் பசுபிக் சமுத்திரத்திலுள்ள சிறிய தீவுகள். அங்கும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் அரசியலமைப்புக்கள் நல்ல முறையில் பாவிக்கப்பட்டுள்ளன.
சைபிரஸ் நாடு 1960ஆம் ஆண்டு அரசியலமைப்பு விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை மக்கள் பிரதிநிதிகள் சபையில் மட்டுமன்றி அமைச்சரவையிலும் கடைப்பிடிக்கின்றது. இங்கு கிரேக்கர் பெரும் பாணிமையினராகவும் துருகி கியர் சிறுபான்மையினராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்ங்ணமே ஆஸ்திரிய நாட்டு அரசியலமைப்பையும் பார்க்கலாம். டச்சு, பிளெமிஸ், பிரெஞ்சு, ஜேர்மன் மொழி பேசுபவர்கள் அங்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தைச் செனட்டில் கொண்டுள்ளனர். பிரதமர் பதவியைத் தவிர ஏனைய அமைச்சுப் பொறுப்புக்கள் பிரெஞ்சு - டச்சு மொழி பேசும் பிரதிநிதிகளிடையே பகிரப்படுகின்றன. சைபிரஸ் நாடு 1960ஆம் ஆண்டு அரசியலமைப்பு விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை மக்கள் பிரதிநிதிகள் சபையில் மட்டுமன்றி அமைச்சரவையிலும் கடைப்பிடிக்கின்றது. இங்கு கிரேக்கர் பெரும்பான்மையினராகவும் துருக்கியர் சிறுபான்மையினராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்ங்ணமே ஆஸ்திரிய நாட்டு அரசியலமைப்பையும் பார்க்கலாம். டச்சு, பிளெமிஸ், பிரெஞ்சு, ஜேர்மன் மொழி பேசுபவர்கள் அங்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தைச் செனட்டில் கொண்டுள்ளனர்.
109

Page 61
பிரதமர் பதவியைத் தவிர ஏனைய அமைச்சுப் பொறுப்புக்கள் பிரெஞ்சு - டச்சு மொழி பேசும் பிரதிநிதிகளிடையே பகிரப்படுகின்றன. கனேடிய அரசியலமைப்பு கியூபெக் மாகாணத்தின் விசேட அந்தஸ்தை அங்கீகரிப்பதுடன் ஆதிவாசிகளது பொருத்தனை உரிமைகளையும் அங்கீகரிக்கின்றது.
இலங்கையைப் பொறுத்தளவில் இது விடயத்தில் பொதுவான விவாதமொன்று நடப்பது முளையிலேயே கிள்ளப்பட்டு விடும். சுயாட்சி என்பது இறுதியில் சுதந்திர நாட்டுக்கு வித்திட்டுவிடும் என்ற கற்பனையான அல்லது நிசமான அச்சமே இதற்குக் காரணமாகின்றது. வேறுசிலர் கூட்டாட்சி என்பது பிரிவினைக்கு முதற்படி என்று நினைக்கின்றார்கள்.
இங் நுனம் அச் சப் படுவோர் யதார்த்த தீ தைக் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை. ஏனென்றால் உண்மையான அச்சுறுத்தல் என்பது கூட்டாட்சி அல்லது சுயாட்சி மறுக்கப்படும்போது மட்டுமே உருவாகின்றது. அடுத்தடுத்து வரும் அரசாங்கங்கள் இங்ங்ணம் பிடிவாதம் பிடிக்கும்போது படிப்படியாக ஆள்புலப் பகுதிகள் மீதான கட்டுப்பாட்டை அது இழக்க ஆரம்பிக்கும். இலங்கையில் இது 1972இலேயே ஆரம்பித்து விட்டது எனலாம்.
இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாடானது இலகுவில் அடையாளங் காணப்படக் கூடியதான ஆள்புல எல்லைக்கு அப்பால் செல்லுபடியாகின்றதா என்பதை நாமே கேட்டுப் பார்த்துக் கொள்ளலாம். நிகழ்வுவழி (defacto) அரசாங்கம் ஒன்று அங்கே செயற்படுகின்றது. எனவேதான் யதார்த்தம் உணரப்பட வேண்டும் என்கின்றோம். அரச தத்துவங்களைப் பகிர்ந்து மீளளித்தல் இங்ங்ணம் யதார்த்தத்தை உணரல் என்பதற்கு அத்தாட்சியாகின்றது
எனலாம்.
மறுபுறத்தில், சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் முறையாக மதித்திருந்தால்
110

இன்று சிறுபான்மைச் சமூகம் உரிமைகள் பற்றிப் பேசிக் கொண்டிராமல் சகவாழ்வுக்கான நியதிகள் பற்றியல்லவா பேசிக் கொண்டிருக்கும். உரிமைகள் என்ற கருத்தே அச்சமூகத்தின் எண்ணத்தில் உதித்ததாயின் அதற்கான காரணம் என்ன என்பதை யோசிக்க வேண்டும்.
சமூகமொன்று தான் பிரிந்து போவதற்கு உரிமையுள்ளது என்று சிறுபான்மைச் சமூகமொன்று நினைக்குமாயின் அப்பிரிவினை தொடர்பான அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் பிரிவினையின் சாத்தியம் பற்றி ஆராயும் கட்டாயத்துக்கு உள்ளாகியுமிருக்கும். இங்கு பொருளாதார சாத்தியப்பாடு என்பது மிக முக்கியமானதாகும்.
இவற்றை எடைபோட்டுப் பார்த்த பின்னர் அச்சிறுபான்மைச் சமூகமானது குறிப்பிட்ட அரசுடன் ஒட்டியிருக்கவே விரும்பியிருக்கும். ஆனால் பரஸ்பரமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய - பேசித் தீர்மானிக்கக்கூடிய நியதிகளின் அடிப்படையில் சம்மதம் ஏற்படுவதன் மேலேயே தொடர்ந்தும் ஒற்றுமை நீடிக்க முடியும். ஐரோப்பாவில் இன்று என்ன நடக்கின்றது என்பதையும் அவதானிக்க வேண்டும்.
இனத்துவ எழுச்சியைத் தடுப்பது பிரயோசனமற்றது என்பது ஐரோப்பாவில் அண்மைக் காலங்களில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகளிலிருந்து தெரிய வருகின்றது. ஆனால் அதேவேளை மறுபுறத்தில் இந்தப் பிரிவினைகளுக்கு மாற்றாக, இறைமைமிக்க ஐரோப்பிய அரசுகள், புதியனவுஞ்சரி, பழையனவாயினுஞ்சரி, இறைமை பற்றிய மரபுவழிக் கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் புதிய ஐக்கியத்தையும் உறவுமுறைகளையும் தமக்குள்ளாக ஏற்படுத்திக் கொள்கின்றன. இதற்கு முதன்மைக் காரணியாக பொருளாதாரமே அமைந்துள்ளதும் அவதானிக்கப்பட
வேண்டும்.

Page 62
இன்னும் அண்மித்தாகக் கூறுவதாயின் ஹொங்கொங்கைக் கூடப் பார்க்கலாம். முடிக்குரிய குடியேற்ற நாடாக இருந்த ஹொங்கொங் 1997 யூலை 1ஆந் தேதியிலிருந்து சீனாவின் கீழான விசேட நிர்வாகப் பிராந்தியமாக மாறியுள்ளது. பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் இடையிலான உடனி படிக் கைகளின் படி (இநீத உடன்படிக்கைகள் தற்போது சீனாவின் அரசியலமைப்பின் பகுதிகளாக்கப்பட்டுள்ளன) இன்று ஹொங்கொங் அனுபவிக்கும் சுயாட்சி அந்தஸ்தானது உலகத்தின் எப்பகுதியிலும் எந்தவொரு கூட்டாட்சி அலகும் அனுபவிக்காத அளவுக்கு உயர்ந்ததாகும்
என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.
ஹொங்கொங் தனது சொந்தச் சட்டவாக்கச்சபை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை என்பவற்றைக் கொண்டிருப்பது மட்டுமன்றி தனது இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றையும் தானே கொண்டுள்ளது. அதனது சட்டங்கள் பிரத்தியேகமாக அதற்கு மட்டும் உரியவை. அதற்கெனத் தனியான கொடியுண்டு, இலட்சனையுண்டு. நீதிபதிகள் ஹொங்கொங் நீதிபதிகள்தான். சிவில் சேவையாளர்கள் ஹொங்கொங் ஊழியர்கள். நிரந்தர வசிப்பிடமென்று சீனாவுக்கு வேறு. ஹொங்கொங்குக்கு வேறு. கடவுச் சீட்டு, குடிவரவு, குடியகல்வு விதிகள் எல்லாம் ஹொங்கொங்கில் பிரத்தியேகமானவை. இவை மட்டுமல்ல. இன்னும் ஏராளம். ஏராளம்.
ஹொங்கொங் தனக்கெனப் புறம்பான நாணயத்தைக் கொண்டிருக்கின்றது. தனது நிதி மூலவளங்கள் யாவற்றையும் தனது சொந்த நோக்கங்களுக்கு மட்டுமெனப் பாவிக்கும் உரிமையுள்ளது. சுங்கப் பகுதி தனியாகச் செயற்படுகின்றது. ஆள்புலம் தனியாக உள்ளது. அங்கு தயாரிக்கப்படும் பொருட்களுக்குத் தனியாக ஹொங்கொங் முதீதிரை இடப்படுகின்றது. கல்வி முறையும் தனியானது. ஆங்கிலத்தை உத்தியோக மொழிகளுள் ஒன்றாகப் பாவிக்க முடிகின்றது.
112

பாதுகாப்பும் வெளிவிவகாரமும் மட்டுமே சீன அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ளது. அரசுகள் மட்டுமென மட்டுப்படுத்தப்பட்டிருக்காத சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ளவும் சர்வதேச நிறுவனங்களில் உறுப்புரிமை பெறவும் ஹொங்கொங் குக்கு உரிமையுள்ளது. சர்வதேச உடன்படிக்கைகளைக் கூட "ஹொங்கொங் - சீனா என்று ஒப்பமிட முடிகின்றது. ஆனாலும் ஹொங்கொங் ஒரு தனிநாடு அல்ல. அது பிரிவினைவாதத்தால் பிறந்த ஒரு நாடுமல்ல. அதேவேளை, அது கூட்டாட்சிக்குட்பட்ட ஒரு மாகாணமுமாகாது. ஏனெனில் சீனா ஒரு கூட்டாட்சி நாடுமல்ல. சீனா என்ற முகத்தின் மீது தோன்றிய ஒரு முதலாளித்துவப் பரு ஹொங்கொங் என்பதை நாம் மறக்கக் கூடாது.
அரசியலமைப்புச் சட்ட அறிஞர் ஒருவரின் அகராதியில் தற்போது வழக்கொழிந்த சொற்களாக மாறிவிட்ட ஒற்றையாட்சி, கூட்டாட்சி அல்லது இதுபோன்ற நடைமுறைப் பொருளற்ற சொற்கள் அகற்றப்படுகின்றன. எனவேதான் சீனாவுக்கும் ஹொங்கொங்குக்கும் இடையிலான உறவுமுறையில் இந்தப் பழைய சொற்கள் எதுவுமே பாவிக்கப்பட்டிருக்கவில்லை. அறிவுபூர்வமாகவும் எந்த வித உணர்ச்சிகளுக்கும் இடங்கொடுக்காமல் உருவாக்கப்பட்டதுதான் இந்தப் புதிய
உறவுமுறை.
அரசியலமைப்புச் சட்ட அறிஞர் ஒருவரின் அகராதியில் தற்போது வழக்கொழிந்த சொற்களாக மாறிவிட்ட ஒற்றையாட்சி, கூட்டாட்சி அல்லது இதுபோன்ற நடைமுறைப் பொருளற்ற சொற்கள் அகற்றப்படுகின்றன. எனவேதான் சீனாவுக்கும் ஹொங்கொங்குக்கும் இடையிலான உறவுமுறையில் இந்தப் பழைய சொற்கள் எதுவுமே பாவிக்கப்பட்டிருக்கவில்லை. அறிவு பூர்வமாகவும் எந்தவித உணர்ச்சிகளுக்கும் இடங்கொடுக்காமல் உருவாக்கப்பட்டதுதான் இந்தப் புதிய உறவுமுறை. அது இரு நாடுகளைச் சட்டபூர்வமாக ஒன்றிணைத்த போதிலும் உறவுக்குப் பெயர் சூட்டிப் பிரலாபிக்கவில்லை. c
13

Page 63
சீனாவின் இறைமையுடன் ஹொங்கொங் மக்களின்
அபிலாசைகள் எப்படி ஒத்திணக்கப்பட்டன என்பதே முக்கியமானது தவிர அதற்குக் கொடுத்த பெயரென்ன? அதனை எந்தச் சட்ட வரம்புக்குள் கொண்டுவருவது என்று அகராதிகளைப் புரட்டுவதில் பயனேதுமில்லை. ஹொங்கொங் மக்கள் தங்களது பழக்கப்பட்ட மரபு ரீதியிலான வாழ்க்கை முறையைத் தொடருதல், அவர்களது சொந்த அரசியல், பொருளாதார, சமூக முறைமைகளை நடைமுறைச் சாத்தியமான விதத்தில் ஒத்திணக்குவதில் காணப்பட்ட வெற்றிதான் ஒரே நாட்டுக்குள் இன்று இரண்டு முறைமைகள் வெற்றிகரமாக இயங்குவதற்கு வழி செய்துள்ளது.
மறுபுறத்தில் இலங்கையின் வரலாற்றைப் பார்த்தால் அரசியலமைப்பு ஆக்கம் அடிக்கடி நிகழும் ஒன்றாகப் போய்விட்டது. ஏதாவது முக்கிய மாற்றம் செய்யப்படுவதாக இருந்தாலும் அதுவும் எதிர்மறையானதாகவே போய்முடிகின்றது. சர்வாதிகார ஆட்சியைக் கொண டுவருவதற்குதி துணைபோகின்றது. உதாரணமாக, நாம் பாராளுமன்ற ஜனநாயகத்திலிருந்து பாராளுமன்ற ஆயுளை நீடிக்கும் ஆட்சி முறையை 1972 அரசியலமைப்பு மாற்றத்தின் கீழ் பெற்றோம். அதே போல 1978இல் பாராளுமன்ற முறையிலிருந்து நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமைக்கு மாற்றம் பெற்றோம். இது மேலும் நாட்டைக் கீழ் நோக்கிய அரசியல் பாதையில் தள்ளிவிட்டது. ஆயினும் கடந்த 50 வருடகாலமாக நாம் பெற்ற அனுபவங்களிலிருந்து ஏதாவது படித்திருக்கின்றோமா என்றால் பதில் ஏமாற்றமே. நீதிமுறை மீளாய்வு ஒழிக்கப்பட்டு விட்டது. நீதிபதிகளின் சுதந்திரம் கேள்விக்குறியாகியது.
இன்னும் சொல்லுவதானால் அறிமுகமான எல்லா மாற்றங்களுமே எதிர்மறையாக அமைந்திருந்தமைக்கு உதாரணங்கள் ஏராளம். தேசியக் கொடி பற்றிய குறிப்பு, தேசிய கீதம், தேசிய தினம் என்பன யாவுமே புதிய பிரச்சனைகளை உருவாக்கிவிட்டல.
114

உண்மையில், இங்கே ஒரு வினாவை நாம் எழுப்பியும் கொள்ளலாம். கடந்த 50 வருடங்களாக அரசியலமைப்புகளின் மீது நாம் மேற்கொண்ட ஒட்டு / வெட்டு வேலைகளினால் இந்நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் பயன் என்று எதனைச் சுட்டிக் காட்டுவது?
1948ஐ ஒட்டிய ஆண்டுகளை நினைத்துப் பாருங்கள். ஆசியாவிலேயே அதியுயரிய தலை வருமானத்தைக் கொண்டிருந்தது இலங்கை என்பதும் அதிகுறைந்த இராணுவ பட்ஜெட்டை அது கொண்டிருந்ததும் ஞாபகத்துக்கு வரும். மிகப்பரந்த சமூக நலத் திட்டங்களைக் கூட நாடு அறிமுகப்படுத்த ஆரம்பித்த கட்டமது. ஆனால் இன்று நடப்பதென்ன?
இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தராதரத்தை இன்று யார் தீர்மானிக்கின்றார்கள்? வருடந்தோறும் பாரிஸில் நடைபெறும் உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம்தான் இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தராதரத்தைத் தீர்மானிக்கின்றது என்பதை அவதானிக்கவும்.
இந்தப் பிராந்தியத்தில் எடுத்தால் பின்தங்கியுள்ள நாடுகளுள் 21வதாக இலங்கை மாறிவிட்டது. 6.182 பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலையிலிருக்கின்றோம். முன்னாலுள்ள 20 நாடுகளிலும் 1000 பேருக்கு ஒரு டாக்டர் என்ற விகிதம் காணப்படுகின்றதாம். போஷாக்கு விடயத்திலும் நாடு பின்னாலேயே போய்க் கொண்டிருக்கின்றது. பங்களாதேஷ், வியட்நாம், கம்போடியா, நேபாளம், பூட்டான் என்பவை மட்டுமே எம்மைவிடச் சற்றுப் பின்னாலுள்ளன.
முன்னர் எப்படி இருந்தோம் என்பதை எவராவது சிந்தித்துப் பார்க்கின்றார்களா? மனிதகுலவளத்தில் மிகவும் முன்னேறியிருந்தோம். படிப்பறிவில் அதி உயரிய இடத்தை எட்டியிருந்தோம்.
5

Page 64
மிகவும் உயிர்த்துடிப்புள்ள, சாதிக்கும் ஆற்றல் மிக்க மத்தியதர வர்க்கம் அரசியல் உயிர்த்துடிப்புடையதாக இருந்தது. மிக உறுதியான கிராமிய அடித்தளம் ஒன்றும் இருந்தது. ஆனால் இன்று நாட்டின் படிப்பறிவு வீதம் பிராந்தியத்தின் 11 நாடுகளுக்குப் பிந்தியதாக மாறிவிட்டது. மொங்கோலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்,
மாலைதீவுகள் போன்றவை எம்மை முந்திக்கொண்டு விட்டன.
இந்த இலட்சணத்தில் எங்களுடைய தலைவர்களோ நாட்டை அடுத்த மூன்று / நான்கு வருடங்களுக்குள் NIC 9556ù5J(g5 (Newly Industrialized Countries) (od, T6006 வரப்போவதாக வானளாவப் பேசுகின்றார்கள். இது வெறுமனே மாயமான் வேட்டைதான். ஏனென்றால் அத்தகைய அந்தஸ்துப்
பெற்றுள்ள நாடுகளைப் பார்த்தால் தெரியவரும்.
ஹொங்கொங்கில் ஒவ்வொரு 1.5 நபர்களுக்கும் ஒரு தொலைபேசியுள்ளது. சிங்கப்பூரில் இருவருக்கு ஒன்று, தென்கொரியாவில் 23 பேருக்கு ஒன்று, தைவானில் 24 பேருக்கு ஒன்று, மாகாவு நாட்டில் 25 பேருக்கு ஒன்று, புரூணையில் 3.8 பேருக்கு ஒன்று, மலேசியாவில் 68 பேருக்கு ஒன்று, தாய்லாந்தில் 244 பேருக்கு ஒன்று, பிலிப்பைன்ஸில் 44 பேருக்கு ஒன்று எனத் தொலைபேசிகள் இருக்கின்றன. எனவே புதிய கைத்தொழில்மய நாடுகள் அந்தஸ்து என்பது எமக்குத் தொடர்ந்து கனாவாகவே இருக்கும் எனலாம்.
இன்று இலங்கையின் கடவுச்சீட்டு மிகவும் பெறுமதியற்ற ஓர் ஆவணமாகக் கருதப்படுகின்றது. அடிக் கடி வெளிநாடுகளுக்குப் பிரயாணஞ் செய்யும் உயர் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கேட்டால் தெரியும். எல்லா விமான நிலையங்களிலும் தூதுவராலயங்களிலும் ஆகக் கூடிய சந்தேகத்துடன் பார்க்கப்படும் ஒரே ஆவணம் இலங்கைக்
கடவுச்சீட்டாகத்தான் இருக்க முடியும்.
16

அண்மையில் ஐ. நா. சபையில் இலங்கைக்குக் கிடைத்த முக்கிய பதவியான பாதுகாப்புச்சபை அங்கத்துவத்தை (இது இரண்டு வருடத்துக்குரியது) தென்னாசிய நாடொன்றிலான ஒரு சில ஆயிரங்களுக்கான கூலித் தொழில்களுக்காக இலங்கை விலைபேசிவிட்டது. இதனால் இலங்கைக்கு இன்று சர்வதேச அரங்கில் ஏற்பட்டிருக்கும் பெயர் அகதிகளை மட்டும் ஏற்றுமதி செய்யும் நாடல்ல, வீட்டு வேலைக்குக் கூலிகளையும் ஏற்றுமதி செய்யும் நாடென்பதுதான். இத்தகைய ஒரு பழுதான பெயரிலிருந்து விடுபடுவதற்கு பிலிப்பைன்ஸ் அண்மையில் தீவிரமாகப் போராடி வெற்றிகண்டு வருகின்றது.
எமது உள்ளார்ந்த கெளரவம், அபிலாசைகள், புதிய உறவுகளின் உருவாக்கத்திலான விருப்பு, வளமிக்க எமது நிலப்பகுதியை மேலும் விருத்தி செய்தல் என்பதை இலக்காகவைத்து இலங்கை அரசியலமைப்பை உருவாக்கினால் அதனால் பல்வேறு மக்கள் குழுக்களுக்கும் திருப்தி ஏற்பட முடியும். ஆனால் நாம் நிச்சயம் இன்று அத்திசையில் செல்வதாயில்லை. இது எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லோரும் இந்நாட்டுப் பிரசைகள் என்ற உணர்வு வேண்டும். அதற்கு முன்னர் எல்லோரும் இந்நாட்டு மன்னராக வேண்டும். மக்களாகவே இருக்கவிடாது விரட்டிக் கொண்டிருக்கும் நாடொன்றில் நாமெல்லோரும் மன்னராவது எப்படி? அக்கம் பக்கம் நடப்பதைப் பார்த்தாவது இவர்கள் திருந்தமாட்டார்களா என்ற நப்பாசை
உங்களைப் போலவே எனக்கும் இன்னும் இருக்கவே செய்கின்றது.
όό ό
117

Page 65
பெரும்பான்மை ஆட்சியும் மனித உரிமைகளும்!
III
Gஜனநாயகமும் பெரும்பான்மையும்)
இங்கிலாந்தில் 1648இலும் அமெரிக்காவில் 1776இலும் பிரான்ஸில் 1789இலும் சர்வாதிகார ஆட்சிகளுக்கு முடிவு கட்டப்பட்டன. இதன் பின்னரே ஜனநாயகம்' என்பது அங்கு பரவலாக கடைப்பிடிக்கப்படலாயிற்று. ஜனநாயகத்தில் பெரும்பான்மை வாக்குகளே எத்தீர்மானத்தையும் தீர்மானிக்க வேண்டும். ஜனநாயகத்தில் இது ஏன் தவிர்க்க முடியாதது என்பதைப் பார்ப்போம். தேர்தலில் மக்கள் வாக்களித்து ஒரு கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவருவதுதான் ஜனநாயகம் என்றும் ஜனநாயக ஆட்சி என்றும் விளங்கிக் கொள்ளப்படுமானால் ஆட்சியிலமர்த்தல் என்ற செயல் பெரும்பான்மை வாக்குகளினால் தீர்மானிக்கப்படுகின்றது. இந்தப் பெரும்பான்மை வாக்குகள் எந்த அடிப்படையில் பெறப்படுகின்றன என்பதையிட்டு ஜனநாயகம் கவலைப்படுவதில்லை. தடுக் கப்பட்ட வழிகள் என்று எதுவுமில்லை. ஆயின், நாடுகள் தமது அரசியல் வரலாற்றுக்கேற்ப சில மட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால் இவை ஜனநாயகம் விதித்துள்ள மட்டுப்பாடுகளல்ல. அதாவது ஜனநாயகத்தின் இன்றியமையாத அம்சங்கள் என்று கருதி விதிக்கப்பட்டவையல்ல. மறுபுறத்தில், மனித உரிமைகள் சட்டத்தின் வியாபிப்புக் காரணமாக விதிக்கப்படும் மட்டுப்பாடுகள் ஆகும். உதாரணமாக: இனவெறுப்புப் பேச்சு (hate speech), வன்முறையைத் தூண்டும் பேச்சு, இன ஒதுக்கல் பேச்சு என்பவை சில நாடுகளின் அரசியலமைப்பினால் அல்லது தேர்தல் சட்டங்களினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
8

மக்களில் பெரும்பாலானோர் ஒரு சினினத்துக்கு வாக்களிக்கின்றார்கள் என்று வைப்போம். அச்சின்னத்துக்குரிய கட்சி அல்லது கூட்டணி பதவிக்கு வருகின்றது. இங்கே எல்லோரது விருப்பும் என்பது பெரும்பான்மையோரின் விருப்பினால் பதிலிடப்படுகின்றது. ஆயின், உண்மையில் நடப்பது என்ன? எல்லோரது விருப்பும் பெரும்பான்மையினரது விருப்பால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டாலும் அவர்களுக்குள்ளேயே செல்வாக்கு அல்லது சலுகை பெற்ற குழுக்கள் மக்களில் பெரும்பாலானோர் ஒரு சின்னத்துக்கு வாக்களிக்கின்றார்கள் என்று வைப்போம். அச்சின்னத்துக்குரிய கட்சி அல்லது கூட்டணி பதவிக்கு வருகின்றது. இங்கே எல்லோரது விருப்பும் என்பது பெரும்பான்மையோரின் விருப்பினால் பதிலிடப்படுகின்றது. ஆயின், உண்மையில் நடப்பது என்ன? எல்லோரது விருப்பும் பெரும்பான்மையினரது விருப்பால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டாலும் அவர்களுக்குள்ளேயே செல்வாக்கு அல்லது சலுகை பெற்ற குழுக்கள் இருக்கமாட்டாதா? உதாரணமாக, செல்வந்தர்கள், நிலச்சுவாந்தர்கள், வயதான பிரசைகள், கல்வியறிவுடையோர், புத்திக்கூர்மையுடையோர், அடக்கமுடையோர், குறிப்பிட்ட இனப்பிரிவு, சாதிப்பிரிவு, மத நம்பிக்கைப்பிரிவு இவை அந்தப் பெரும்பான்மை வாக்குகளில் செல்வாக்குச் செலுத்துபவையாக இருக்கும்போது உண்மையில் வெற்றியைத் தீர்மானிப்பது எது என்ற வினா எழுகின்றது. வெறுமனே கோட்பாடுகள் வெற்றியைத் தேடித்தரமாட்டா. தாங்களே உயர்ந்தவர்கள் என்று வெவ்வேறு குழுக்கள் வாதிடும்போது வெற்றியைத் தீர்மானிப்பது வெறும் எண்ணிக்கைப் பலம் மட்டுமே. இதுவே தீர்வுமாகின்றது. இதனையே கார்ள்ஸ் மார்க்ஸ் ஒரு முறை கிண்டலாகக் குறிப்பிட்டார்: அரியணைக்கு இரணிடு இளவரசர்கள் போட்டியிட்டால் அமைதிவழியான தீர்வு அங்கு வாக்கெடுப்பு நடாத்திவிட்டால் கிட்டிவிடும்.
19

Page 66
இதிலுள்ள போலித்தனம் யாதெனில் மக்கள் எவ்விதத்திலும் சமானர்களாக இல்லாதபோது அவர்களைச் சமானர்களாகக் கொண்டு வாக்குகளை எண்ணுவதேயாகும்.
பெரும்பான்மை வாக்குகளும் மனித உரிமைகளும் என்று வரும்போது ஜனநாயகம் தரும் மற்றொரு பரிசானது பயன்பாட்டுக் 637. LITG" (utilitarianism) 6Torug57355.
பெரும் பாணிமை என்பதற்கும் பயன்பாட்டுக் கொள்கைக்குமிடையில் நெருங்கிய தொடர்புண்டு. அதாவது இரண்டுக்குமே பொது எதிரிகளாக உள்ளவை தனிமனித உரிமைகளேயாகும். அதிகூடிய எண்ணிக்கையாளர்களுக்கு அதிக கூடிய நன்மை' என்பதே பயன்பாட்டுக் கோட்பாடாகும். சிலரின் மீதான பலரின் ஆட்சி என்பது பெரும்பான்மை ஆட்சி என்று பொருளாகும். இடையே ஒற்றுமையுள்ளது போலதி தோன்றவில்லையா?
ஆனால் பெரும்பான்மை ஆட்சி என்பது மனித உரிமையால் மட்டுப்படுத்தப்பட வேணி டியதாகின்றது. உணர்வுகளினால் உந்தப்படும் போது பெரும்பான்மை ஆட்சியானது எது தனது உண்மையான நலன் /அக்கறை என்பதை மறந்து விடுகின்றது. இங்கேதான் உரிமைகள் தேவைப்படுகின்றன. இவை மொத்தச் சமூக நலனையுமே மேம்படுத்த, முன்னெடுக்க என்றவாறாக அவசியமாகின்றன. அதேவேளை, இச்செயற்பாட்டில் பெரும்பான்மை ஆட்சியானது பயன்பாட்டுக் கொள்கைக்கு இயற்கையான உறவாக இல்லாமல் அதன் எதிரியாக மாறிவிடுகின்றது. ஒரு சிறு உதாரணத்தை
முன்வைப்போம்.
20

இலங்கையின் அரச மதம் பெளத்தமாக இருக்க வேண்டுமா? அதிகாரப் பகிர்வு நாட்டுக்குத் தேவையா? இந்த வினாக்களுக்கு
பெரும்பான மையின மக்களினி வாகி குகள் உணர்ச்சிமயப்படுத்தப்பட்ட நிலையில் - இல்லையென்றே
வாக்களிப்பார்கள் எனக் கொள்வோம். இதன் விளைவு
எப்படியிருக்கு மி? கூடிய அளவு நண் மை கூடிய எண்ணிக்கையுடைய மக்களுக்கு விளையுமா? அல்லது ஒரு சிலரே பயன் பெறுவதாக முடியுமா? என்பதை வாசகர்களே
தீர்மானிக்க விட்டுவிடுகின்றேன்.
இங்கே முகங்கொடுக்க வேண்டிவருகின்ற இன்னொரு சிக்கல் யாதெனில், பெரும்பான்மை முடிவுகளை உரிமைகள் கொண்டு கட்டுப்படுத்துவது என்பது சரி. ஆனால் அங்ங்ணம் கட்டுப்படுத்தல் என்ற முடிவு எதனால் எடுக்கப்படுகின்றது. இத்தீர்மானங்கூட சாதாரண பெரும்பான்மையினால்தானே எடுக்கப்படுகின்றது. ஆயின், இதுகூடப் பெரும்பான்மை ஆட்சியில்லையா? இந்நேரம் உணர்ச்சிகளுக்கு இடமிருக்குந்தானே என்ற வினாக்கள் நியாயமானவையேதான். உதாரணமாக: அரசியலமைப்பை
வரைவதிலீடுபட்டுள்ளோர் அந்த அரசியலமைப்பு எப்படித் திருத்தப்படலாம் என்பதற்கான ஏற்பாட்டையும் அங்கே குறிப்பிடுவர். இது 2/3 பெரும்பான்மை, இரு சபைகளிலுமான நிறைவேற்றம், மக்கள் தீர்ப்பு என்றவாறாக இருக்கலாம். ஆனால் இந்த விசேட ஏற்பாட்டைப் புகுத்தும் தீர்மானம் அதை வரைபவர்களால் எப்படி எடுக்கப்படுகின்றது? சாதாரண பெரும்பான்மையினால்
எடுக்கப்படும் சந்தர்ப்பங்கள் இல்லையா?
12

Page 67
பெரும்பான்மை வாக்குகள் எப்போது பேராபத்தாகும்?
முதலில் தனிநபர்களது உரிமைகள் பற்றிப் பார்ப்போம். இந்த உரிமைகள் எவை என்பதிலும் கருத்து வேறுபாடுள்ளது. சிலர் பெளதீக வாழ்வுக்கு அவசியமான விடயங்களையும் உரிமைகள் என்கிறார்கள். உ+ம். வேலைசெய்யும் உரிமை, சமூகநலக் கொடுப்பனவுக்கான உரிமை, சுத்தமான சுற்றாடலுக்கான உரிமை. ஆயின், குடியியற் சுதந்திரங்கள், அரசியல் சுதந்திரங்கள், ஆதன உரிமைகள், ஒப்பந்தஞ் செய்யும் சுதந்திரம் என்பனவே ஜனநாயகத்தின் அத்தியாவசிய அம்சங்கள் என்றளவில்
இவை பாதிக்கப்படுமாற்றை காண்போம்.
இந்நோக்கத்துக்காக உரிமைகளை மூன்றாகப் பிரித்துப் பார்க்கலாம். உண்மையானதும் சமத்துவமானதுமான அரசியல் பங்குபற்றலை இயலச்செய்யும் உரிமைகள் ஒருவகை. பேச்சு உரிமை, கூட்டங்கூடும் உரிமை, வாக்களிக்கும் உரிமை என்பன முதலாவது வகை. சட்ட ஆட்சியை முன்னெடுக்கும் உரிமைகள் இரண்டாவது வகை. சட்டமூலங்களை நீதிமன்றங்கள் மீளாய்வு செய்தல், அரசியலமைப்புக்கு ஒவ்வாத தன்மையை கண்டுபிடிக்க பொதுமக்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புக்கள், பின்னோக்கிச் செயற்படும் சட்டம் அல்லது வரி விதிக்காமை, அரசாங்கம் பறிமுதல் செய்யும் சொத்துக்களுக்கான முழுமையான அல்லது பகுதியளவிலான இழப்பீடு வழங்கல், எதேச்சாதிகாரமான கைது, தடுத்துவைப்பு என்பவற்றுக்கான தடை, நீதியானவிசாரணைக்கான உரிமை என்பவை இந்த இரண்டாம் வகைக்குள் அடங்கும். இத்துடன் வேறு சிலர் சட்டங்கள் நியாயமான ஸ்திரப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமெனக் கோரும் உரிமையையும் உள்ளடக்குவர்? மூன்றாவதாக உள்ளதுதான் இன, மத, மொழிக் குழுக்களைப் பாதுகாக்கும் உரிமைகள்.
122

(1) பெரும்பான்மை வாக்குப் பலத்தைக் கொண்டுள்ள அரசாங்கமானது தனது மீள்தெரிவுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் நோக்குடன் அரசியல் உரிமைகளைத் தவறாகப் பாவிக்கும் வேட்கை கொண்டிருக்கும். தேர்தலுக்கான காலத்தை அதனால் தீர்மானிக்க முடியுமாயின் - பொருளாதார நிலைமை மிகச் சாதகமாயுள்ளபோது அது தேர்தலை நடாத்துகிறது. அங்ங்னமே, குடித்தொகைப் பெருக்கம் காரணமாக தேர்தல் மாவட்டங்களின் எல்லைகள் மீளவும் வரையப்பட வேண்டியிருப்பின் அரசாங்கம் தனக்குச் சாதகமான வழியில் அதனைச் செய்து கொள்ளும். இதே பெரும்பான்மை வாக்குப் பலத்தைக் கொண்டு தேர்தல் முறைமையையே மாற்றியமைக்கவும் முடியும். உ+ம். நேரடித் தெரிவு முறையிலிருந்து விகிதாசாரத் தெரிவு முறை: வாக்காளர்கள் புதிதாகப் பதியப்பட வேண்டியிருப்பின் - அங்ங்ணம் பதியப்படும் வழிமுறையை இயன்றளவுக்கு இலகுவானதாகவோ கடினமானதாகவோ ஆக்குவதற்குப் பதவியிலுள்ள அரசாங்கத்தால் முடியும். வானொலி, தொலைக்காட்சி வசதியுள்ள நாடுகளில் அரசாங்கம் தனக்குத் தேவையான நேரத்தை ஏதேனும் சாக்குச் சொல்லிப் பெற்றுக்கொள்ள முடியும்.
இங்கே கவனத்துக்குரியது யாதெனில் உரிமைகள் மீதான தாக்குதல் பெரும்பான்மை மக்களிடமிருந்து வரவில்லை. பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மையிலிருந்து வருகின்றது என்பதைத்தான். இதில் அபாயம் யாதெனில் இந்த பாராளுமன்றப் பெரும்பான்மை உண்மையாகவே குடித்தொகையின் பெரும்பான்மையினரின் விருப்பப்படியான பாராளுமன்றம் ஒன்று அமைவதை தீ தடுத்து நிறுத்திவிடவும் வல்லது என்பதே
23

Page 68
(2) பெரும்பான்மை ஆட்சியானது சட்ட ஆட்சியை தனது சொந்த நலன் கருதி அல்லது ஒரு கண உணர்வு உந்துதல்களினால் புறந்தள்ளி விடலாம். அமெரிக்க அரசியலமைப்பை வரைந்தவர்களுள் ஒருவரான MadiSOn பின்வருமாறு கூறியுள்ளார்: 'பெரும்பான்மையானது ଦ୍ରୁ (୭ பொது அக் கறையினால் அல்லது உணர்வூக்கத்தினால் ஒன்றுபடும் போதிலெல்லாம் சிறுபான்மையினரின் உரிமைகள் ஆபத்துக்குள்ளாகியே
4
தீரும்".
அக் கறை அல்லது நலனி என பதற்கும் உணர்வூக்கத்துக்கும் இடையிலான வேறுபாடு மிக முகி கியமானது. உதாரணமாக, ஆதனமற்றோர் பெரும்பான்மையினராக இருப்பின் அவர்கள் ஆதன உரிமைகளுக்கு எதிராகச் சட்டமியற்றுவர். கடன்களை ரத்துச் செய்வர். இவையெல்லாம் அவர்களது நலன்கள். ஆனால் இங்கே உணர்வூக்கமில்லை. ஆனால் பெரும்பான்மையானது திடீரென இங்ங்ணம் உந்தப்படின் நிலைமை பாரதூரமானதாகும். இவ்வேளையில் சட்ட ஆட்சியின் தேவைப்பாடுகள் யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகப் போய்விட முடியும். இந்த உந்துதலானது பாராளுமன்றப் பெரும்பான்மையிலிருந்து ஏற்படலாம். அல்லது குடித்தொகைப் பெரும்பான்மை தனது விருப்பை பாராளுமன்றத்தின் மீது -தேர்தலல்லாத முறைகளில் விதிக்கலாம் (அடிக்கடி நடைபெறும் கலவரங்கள்).சட்ட ஆட்சிக்கு அப்பாற்பட்ட வகையில் இத்தகைய உநீ தல களினால் ஆகி கப்படும் சட்டங்கள் யுத்தகாலத்தின் போது, அவசரகாலநிலையின் போது ஆக்கப்படின் நிலைமை இன்னும் மோசமாகும்.
124

(3)
(1)
உ+ம். இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பானிய - அமெரிக்கர் யாவரையும் ஒருவித தடுப்புக் காவலில் வைத்தமை.
பெரும்பான்மையானது ஓர் இன அல்லது மதச் சிறுபான்மையினரது உரிமைகளை ஒதுக்கித் தள்ளி விடும். இதுநிலையான உணர்வூக்கத்தினால் ஏற்படுவது. முன்னைய நூற்றாண்டுகளில் மதவெறியால் இத்தகைய ஆதிக்க நிலைப்பாடு ஏற்பட்டிருந்தது.
ஆனால் இன்று, இனவெறுப்பு மத வேறுபாடுகளுடன் சேர்ந்து பயங்கரமான அடக்குமுறைக்கு வித்திடும் அபாயம் நிலவுகின்றது. இனி முழுவதையும் திருப்பிப் பார்ப்போம்: இரணிடு வேறுபாடுகள் உட்கிடையாக உள்ளன. தொடர்புடைய பெரும்பான்மை என்பது என்னவென்பதை கணிடறிதல் வேண்டும்- அதாவது பாராளுமன்றப் பெரும் பாணிமையா அல்லது குடித் தொகையின் பெரும்பான்மையா என்பதை அறிந்து கொள்ள முயல வேண்டும். மறுபுறத்தில், சிறுபான்மையினரது உரிமையைப் பறிக்கும் விதத்தில் பெரும்பான்மையினரை நடந்து கொள்ளச் செய்யும் நோக்கங்கள் யாவை என்பதும்
கண்டறியப்படவும் வேண்டும்.
நிலையான நலன்கள், திடீர் உணர்வுகள், நிலையான உணர்வுகள் என்பன இதிலடங்கும். இந்த நோக்கங்களை இனி வகைப்படுத்தலாம்.
பாராளுமனி றப் பெருமி பாணிமை தனது பெரும்பான்மைப் பலத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு நடபடி முறைகளிலான
வித்தைகளைக் காட்டலாம்.
25

Page 69
(2)
(3)
(4)
(5)
பாராளுமன்றப் பெரும்பான்மை நிலையான உணர்வுகளால் அடித்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களுமுண்டு. புகழ், சுயகெளரவம் போன்றவற்றுக்காக முறையற்றவற்றைச் செய்யலாம்.
குடித்தொகையிலான பெரும்பான்மை தனது பிரதிநிதிகளின் மூலம் செயற்படுஞ் சந்தர்ப்பத்தில் தனது பொருளாதார நலன்களை மேலும் வலுப்படுத்த இங்ங்ணம் முறையற்று நடக்கலாம்.
உ+ம். சுவீகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடல், வட்டி
வீதங்களில் ஏற்ற இறக்கஞ் செய்தல்.
குடித்தொகைப் பெரும்பான்மை தனது பிரதிநிதிகள் மூலம் திடீர் உணர்வலைகளால் உந்தப்பட்டுச் செயற்படுஞ் சந்தர்ப்பம். அமெரிக்க அரசியலமைப்பை வரைவதற்குக் கூட்டப்பட்ட பிலெடெல்பியா மகாநாடும் புரட்சியின் பின்னர் பிரெஞ்சு குடியரசு அரசியலமைப்பை வரையக் கூட்டப்பட்ட பேரவையும் இந்த அபாயம் பற்றி முறையான கவனஞ் செலுத்தியிருந்தன.
குடித்தொகைப் பெரும்பான்மை தனது பிரதிநிதிகள் மூலம் நிலையான உணர்வலைகளின் உந்தலினால் செயற்படுஞ் சந்தர்ப்பங்கள். பிலெடெல்பியா மாநாட்டில் எவருமே இனவாதம், மதவாதம் ஆகியவை தனிநபர் உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமையுமென்று குறிப்பிட்டிருக்கவில்லை. ஆனால் இன்று இந்த இரண்டுமே பெரும்பான்மை ஆட்சியின் பெரும் அச்சுறுத்தல்களாக இருந்து வருகின்றன.
26

பெரும்பான்மை ஆட்சிக்கெதிரான சில பாதுகாப்புக்கள்:
(அ) அரசியலமைப்பு முதன்மைத்துவம்
இவ்விதத்தில் முதலில் வருவது அரசியலமைப்பு உத்தரவாதமே. இது நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்படலாம். அரசியலமைப்பைத் திருத்துதல், மாற்றுதல் போன்றவற்றில் ஏற்படுத்தப்படும் வெளிப்படையான சில சட்ட ஏற்பாடுகளும் நடபடிமுறைகளும் இந்த உத்தரவாதத்தைத் தருகின்றன.
பெரும்பான்மையின் விருப்புக்கேற்ப நடப்பதன் மூலம் சட்டங்களை அடிக்கடி மாற்ற முடியாதபடி அரசியலமைப்பு தடைகளைப் போடமுடியும். இதற்கான வழிமுறையாக, அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் நடபடிமுறை வேண்டுமென்றே சிக்கலானதாகவும் மெதுவானதாகவும் ஆக்கப்பட்டிருக்கும். ஏனெனில் வெறுமனே உந்துதலால் செயற்படும் கூட்டம் நியாயங்களைப் புரிந்து கொள்ளவும் ஆழ்ந்து யோசிக்கவும் போதுமான கால அவகாசம் இங்கே வழங்கப்படுகின்றது. இன்னொரு விதமாக, சில உறுப்புரைகளை மாற்றுவதற்கு விசேட பெரும்பான்மையைத் தேவைப்படுத்துதல் (சோல்பரி யாப்பு பிரிவு 29) அல்லது சில பிரிவுகள் ஒருபோதுமே திருத்தப்பட முடியாதவாறு ஆக்கப்படல் (நிலையூன்றிய வாசகங்கள்). நோர்வேயின் அரசியலமைப்பு இந்த இரண்டு ஏற்பாடுகளையும் கொண்டுள்ளதோடு போதிய கால அவகாசத்தைத் தேவைப்படுத்தும் தாமதிப்பு யுக்தியையும் பயன்படுத்துகின்றது. சுவீடனின் அரசியலமைப்பு வெறுமனே தாமதிப்பு யுக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றது:
127

Page 70
ஹங்கேரியின் அரசியலமைப்பு நோர்வேயின் அரசியலமைப்பு இந்த இரண்டு ஏற்பாடுகளையும் கொண்டுள்ளதோடு போதிய கால அவகாசத்தைத் தேவைப்படுத்தும் தாமதிப்பு யுக்தியையும் பயன்படுத்துகின்றது. சுவீடனின் அரசியலமைப்பு வெறுமனே தாமதிப்பு யுக்தியை மட்டுமே பயன்படுத்துகின்றது. ஹங்கேரியின் அரசியலமைப்பு விசேட பெரும்பான்மையை மட்டும்
தேவைப்படுத்தி நிற்க,
நியூசிலாந்து அரசியலமைப்பு தனித்துவமானதாக அமைந்து சாதாரண பெரும்பான்மை மூலமே புதிதாக எதனையுஞ் சேர்க்க, திருத்த, மாற்ற, அகற்ற முடியுமென்கின்றது: தாமதிப்பு யுக்திகள் பெரும் பாணிமையினரினி திடீர் உணர்வெழுச்சிகளையும் உணர்வூக்கத்தையும் சமாளிப்பதற்காகக் கையாளப்படுபவை. விசேட பெரும்பான்மை யுக்தி என்பது தனிநபர்களது உரிமைகளைப் பெரும்பான்மையின் நிலையான நலன்கள், உணர்வெழுச்சி என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் பயன்படுவது. இந்த இரண்டு வழிமுறைகளும் தம்மளவில் வெவ்வேறு வகையினதாகவே நிறைவேற்றப்படுகின்றன. தாமதிப்பு ஏன் தேவை என்பதை இப்படி விளக்குகிறார் J. E. Finn என்ற அறிஞர்; மனிதர்கள் தமக்கு வெறி ஏற்படும்போது தற்கொலை செய்து கொள்ளாமல் இருப்பதற்காக, தாங்கள் சுயபுத்தியுடன் இருக்கும் போது தங்களைத் தாங்களே கட்டிப் போடப் பயன்படுத்தும் சங்கிலிகளே அரசியலமைப்புக்கள்' உணர்ச்சிகளுக்கு அடிமையாகி அசட்டுதி தனமான காரியங்களிலிறங்காமலிருப்பதற்காக மேற்கொள்ளப்படும் தடை என்பது உண்மையில் அந்தப் பெரும்பான்மையின் நேரடி நலனோடு சம்பந்தப்பட்டதாகத்தானே இருக்க முடியும்.
இருப்பினும், மட்டுப்படுத்தப்பட்ட அல்லது விசேட பெரும்பான்மையைத் தேவைப்படுத்தல் என்பதை மேலுள்ள வாதம் நியாயப்படுத்த முடியாது.
128

இங்கே தீர்மானம் எடுப்பதில் கூடுதலான எண்ணிக்கை யுள்ளவர்களைத் தேவைப்படுத்துவதன் மூலம், எல்லோரும் ஒரேவிதமான உணர்வலைகளால் இழுத்துச் செல்லப்பட மாட்டார்கள் என்பதால் நிதானமாகச் செயற்பட வழிபிறக்கும். அரசியலமைப்பை வரைந்தோரில் சிலருக்கு சில விடயங்களில் நிலையான நலன்கள் இருக்குமாயின் அது கட்டாயம் நிலையூன்றச் செய்யப்பட வேண்டும் என்பதிலேயே அவர்கள் குறியாக இருந்திருப்பர். உதாரணமாக, மதவாதம் இடம்பெறக் கூடாது என்பதில் அக்கறையுள்ள ஒரு சில குழுவால் ஆக்கப்பட்ட யாப்பானது விசேட ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதால் பிற்காலத்தில் அது திருத்தப்படுவது கடினமாகி விடுகிறது. எனவே மதவெறி பிடித்தவர்கள் எப்படித்தான் கோஷமிட்டாலும் அதற்கேற்ப அரசியலமைப்பு மாற்றப்பட முடியாத நிலையிருக்கும். ஏனெனில் எல்லோரும் மதவெறியால் உந்தப்பட்டு வாக்களிக்க மாட்டார்கள். பெரும்பான்மை அப்படி வாக்களிக்கலாம். ஆனால் அது மட்டும் திருத்தத்தைக் கொண்டுவரப் போதாது என்றாகிவிடும். இதற்கு நல்ல உதாரணமாக அமைவது அமெரிக்க அரசியலமைப்பேயாகும்.
ஆனால், இங்கே ஓர் எச்சரிக்கையும் அவசியமாகின்றது. மிக இறுக்கமாக அமையும் அரசியலமைப்புக்கள் தற்கொலை உடன்படிக்கைகளாக ஆனால், இங்கே ஓர் எச்சரிக்கையும் அவசியமாகினிறது. மிக இறுக்கமாக அமையும் அரசியலமைப்புக்கள் தற்கொலை உடன்படிக்கைகளாக மாறிவிடும் அபாயமும் உண்டு என்று வாதிடப்படுகின்றது. எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு விடைகாணும் ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இருக்கத்தான் வேண்டும். ஆனால் மறுபுறத்தில், அதே எதிர்பாராத சூழ்நிலைகளில்தான் அரசியலமைப்பு மக்களைப் பாதுகாக்க
வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
129

Page 71
அபாயம் என்னவென்றால், குடிகாரன் ஒவ்வொரு தினத்தையும் அது ஏதோவொரு விதத்தில் விசேடமானது என்று நியாயப்படுத்துவதைப் போல அரசியலமைப்பின் கீழும் விசேட சூழ்நிலைகள் (அவசரகால நிலை) நியாயப்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி எழலாம் என்பதே.
(ஆ) நீதிமுறை மீளாய்வு தரும் பாதுகாப்பு
மேலே நான் குறிப்பிட்ட அபாயத்தைத் தவிர்க்க அல்லது தணிக்க உபயோகிக்கப்படும் ஒரு வழிமுறையே நீதிமுறை மீளாய்வாகும். அரசியலமைப்பொன்றைக் கொண்டிருப்பதால் அல்லது போற்றுவதால் மட்டும் பிரச்சனைகளுக்கு விடைகாண முடியாது. அதனைப் பொருள் கோடல் செய்வதற்கும் செயற்படுத்துவதற்குமான சாதனங்களும் பொறிமுறைகளும் செயற்பாட்டிலிருக்க வேணடும். அரசியலமைப்பு மீறப்படுகின்றபோது அதனை ஆக்கியவர்களிடம் அல்லது அதற்கெனக் கூட்டப்பட்ட மாநாட்டாளர்களிடம் சென்று முறையிட முடியாது. அதை விட இலகுவான வழியொன்று தேவைப்படுகின்றது.
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அமெரிக்க மாநாடும் பிரெஞ்சு பேரவையும் நீதிமுறை மீளாய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருசபைகள் முறை, ஜனாதிபதியின் Veto அதிகாரம் என்பவற்றில் கவனஞ் செலுத்தின. சட்டங்கள் நியாயமற்றவையாக, முட்டாள்த் தனமானவையாக, அபாயமானவையாக, அழிவு தருபவையாக இருக்கலாம். ஆனால் கட்டாயமாக அரசியலமைப்புக்கு முரணானவையாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆயின் நீதிமுறை மீளாய்வினால் என்ன பயன் ஏற்படும்? என்று அமெரிக்க
அரசியலமைப்பு மாநாட்டில் வாதிடப்பட்டதுண்டு
130

அரசியலமைப்புக்கு இசைவாக இருந்துவிட்டால் மட்டும் போதுமா? என்ற வினாவும் எழுப்பப்பட்டதுண்டு. ஆயினும் Madison இவற்றுக்கு விடையளிக்கும் போது அத்தகைய நியாயமற்ற, முட்டாள்தனமான செயல்களுக்கெதிராகவே மேலதிகத் தடையொன்று அவசியமாகின்றது' என்றார்? நீண்ட விவாதங்களின் பின்னர், அரசியலமைப்பில் வெளிப்படையாக எதுவுமே இது விடயத்தில் குறிப்பிடுவதில்லை என மாநாடு தீர்மானித்தது.
சமகால அரசியலமைப்பு ஏற்பாடுகளைப் பார்ப்பின் மேற்சொன்ன விவாதங்களோடு ஒத்துப்போகத் தக்கதான இரண்டு யாப்புக்களை அடையாளங்காண முடியும். அவையாவன அமெரிக்காவினதும் நோர்வேயினதும் அரசியலமைப்புக்களாகும். இவ்விரு நாடுகளின் உயர்நீதிமன்றங்கள் நியதிச் சட்டங்களை அவை ஆக்கப்பட்டதற்குப் பின்னரான நிலையில் (ex post) அரசியலமைப்புக்கு அவற்றின் இசைவாந்தன்மை குறித்து உரைத்துப் பார்க்கின்றன. பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் அரசியலமைப்பு நீதிமன்றங்கள் சட்டங்களை அவை ஆக்கப்பட முன்னரான நிலையிலேயே (ex ante) இங்ங்ணம் உரைத்துப் பார்ப்பதுண்டு. இந்த ஐரோப்பிய முறைமையிலும் நாட்டுக்கு நாடு முக்கிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, சட்டத்தை நீதிமன்றின் முன்னால் கேள்விக்குட்படுத்தும் உரிமை தொடர்பில் பாரிய வேறுபாடுகள் உள்ளன.
எப்படிப் பார்ப்பினும் ex post மீளாய்வுதான் தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமானது என்பது பொதுவான கருத்து. இதற்கு முக்கியமான இரு காரணங்களைக் கூறலாம்: ex ante மீளாய்வை அனுமதித்தால் அதன்மூலம் சட்டவாக்கத் துறைக்கும் நீதித்துறைக்கும் இடையில் அபாயகரமான சிக்கல்களும் மோதல்களும் எழலாம். அத்துடன், குறிப்பிட்ட அச்சட்டம் உரிமைகளை மீறக்கூடிய இயல்திறனைக்
(potentiality) கொண்டிருப்பினும் உண்மையான வழக்கொன்று
3.

Page 72
கொண்டுவரப்படும்வரை அத்தகைய மீறலை எதிர்பார்த்தல் என்பது சாத்தியமில்லை. இலங்கையில் தற்போதுள்ளது ex ante மீளாய்வு என்பதையும் கவனிக்கலாம்.
அரசியலமைப்புப் பாதுகாப்பு உத்தரவாதங்களைச் செயற்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையாகவே நீதிமுறை மீளாய்வு கருதப்பட வேண்டும். சட்டமானது உண்மையிலேயே அரசியலமைப்புக்கு முரணானதெனினும் அதனை அங்ங்ணம் அளவிட்டு அதற்கெதிரான நடவடிக்கைகளைத் தொடக்கி வைப்பதற்கான பொறிமுறையொன்று இருக்க வேண்டும் என்பதுமிக அவசியம். அங்ங்ணமில்லாதபோது அரசியலமைப்பின் ஏற்பாடுகள் நடைமுறைப் பெறுமதியை இழந்தவையாக மாறத் தொடங்கிவிடும். இத்தகைய பொறுப்பையேற்கும் அமைப்பானது (நீதித்துறை) அரசியலமைப்பினை சொற்பொருள்சார் விதிப்படி பொருள்கோடல் செய்வதால் எழக்கூடிய அனர்த்தங்களையும் தவிர்க்கக் கூடியதாக இருக்கும். நீதிமன்றமானது பழைய அரசியலமைப்பைப் புதிய சூழ்நிலைகளுக்குப் பிரயோகிக்கும்போது அதனது எழுத்துக்களுக்குக் குறை நிரப்பல் செய்து அல்லது அவ்வெழுத்துக்களை மீறிக்கூடச் செயற்படலாம். ஆனால் நீதிமன்றம் அந்த அரசியலமைப்பின் ஆத்மாவை அழியவிடாதபடி பார்க்கும் விசுவாசத்துடன் இங்கு செயற்பட வேண்டும்.
இங்கேயும் ஆட்சேபனைக் குரிய அபாயங்கள் இல்லாமலில்லை. எது விழலானது? எது பிரயோசனமானது? எது அரசியலமைப்பின் ஆத்மாவைக் குறிவைக்கிறது? எது அங்ங்னமாகத் தோன்றவில்லை? என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிட்டால் அங்கே நீதிமுறை மீளாய்வுக்குப் பதிலாக நீதித்துறையின் ஆட்சியே எஞ்சி நிற்கும் என்ற அபாயம் உள்ளார்ந்த ஒன்றாகும். பெரும்பான்மை ஆட்சிக்கு எதிரான ஒரு தடையாகச் செயற்படுவதற்குப் பதிலாக பொதுமக்களது பிரதிநிதித்துவத்தோடு எவ்விதத்திலும்
32

சம்பந்தப்படாத நீதித்துறையானது சட்டவாக்கத்துக்குப் பதிலாக இடம்பிடித்துக் கொண்டுவிடும். கோட்பாட்டளவில் பார்த்தால் இங்கேயும் ஓர் இக்கட்டான நிலை ஏற்படுகின்றதெனலாம். அதாவது சொல்லுக்குச் சொல் எழுத்துக்கு எழுத்து என்று ஒட்டிக் கொண்டு பொருள் கோடல் செய்யும் அபாயம் ஒருபுறம். மறுபுறத்தில், மட்டுப்பாடு எதுவுமற்ற நீதிமுறைச் செயற்பாடு (judicial activism), இந்த இரண்டில் எதனை எப்படித் தெரிவது? கோட்பாட்டளவிலான இந்தச் சிக்கலுக்கு நடைமுறையில் அனுபவ ரீதியிலான படிப்பினையின் மூலம் விடைகாணப்பட முடியும்.
நீதிமன்றங்கள் முற்றிலும் எதேச்சாதிகாரமான முறையிலும் முற் கூட்டியே எதிர்பார்த்திருக்க முடியாத விதத்திலும் செயற்படுவதைத் தடுக்கவல்லதான பொருள்கோடல் விதிகளை வளர்த்தெடுக்கவல்ல சட்டக் கலாசாரம் ஒன்று உருவாகுமாயின் மேற்சொன்ன சிக்கலுக்கான விடை கிடைத்து விடுகின்றது.
ஆயினும், இதனோடு ஒட்டியதாக எழுப்பப்படும் இன்னொரு வினா- இந்தச் சட்டக் கலாசாரம் ஆயினும் , இந்தச் சட்டக் கலாசாரம் நீதிமன்றங்களை வெறுமனே பெரும்பான்மையின் முகவர்களாக மாற்றிவிடாதா? என்பதாகும். ஆதன உரிமைகள் தொடர்பாக மக்கள் கொண்டிருக்கும் கருத்து இந்தச் சட்டக் கலாசாரத்தில் புகுந்துவிட்டமையால்தான் இன்று இந்த உரிமைகள் பெரும்பாலும் கூடுதலான மட்டுப்பாடுகளை எதிர்கொள்பவையாக உள்ளன. ஆனால் ஆதன உரிமையினைக் காப்பாற்ற வேண்டியது அரசியலமைப்பாகவே இருந்தும் அதுவே அந்த உரிமைக்கு மட்டுப்பாடுகளை விதிப்பதாகச் செயற்படுகின்றதென்றால் காரணமென்ன? சட்டக் கலாசாரம் கூறுவதன்படி பொருள்கோடல் வளர்த்தெடுக்கப்பட்டதுதான்
காரணம்.
133

Page 73
நீதிமன்றங்கள் முற்றிலும் எதேச்சாதிகாரமான முறையிலும் முற் கூட்டியே எதிர்பார்த்திருக்க முடியாத விதத்திலும் செயற்படுவதைத் தடுக்கவல்லதான பொருள்கோடல் விதிகளை வளர்த்தெடுக்கவல்ல சட்டக் கலாசாரம் ஒன்று உருவாகுமாயின் மேற்சொன்ன சிக்கலுக்கான விடை கிடைத்து விடுகின்றது.
தனிநபர் உரிமைகளை அரசியலமைப்பு பாதுகாப்பது என்பது திருப்தியானது என்று கருதும் மனித உரிமைவாதிகள் தவறிவிடும் சந்தர்ப்பமும் இதுதான். பெரும்பான்மையின் கருத்து நேரடியாக வெளிப்படுத்தப்படும்போது அது சட்டத்தின் வடிவில் வந்து உரிமைகளை மீறும். அதே விருப்பு மறைமுக வடிவில் வந்து உரிமைகளை மீறும் போது நீதிமன்றமே அதை உட்கிடையாக நிறைவேற்றி வைக்கின்றது. இங்கே சட்டமானது பெரும்பான்மை மக்களது தெளிந்த முடிபாகுமேதவிர வெறும் உணர்ச்சிகள், உந்தல்களுடன் சம்பந்தப்பட்டதாக இல்லை. ஆனால் இங்கு அபாயம் குறைவானதாக இருப்பதற்குக் காரணம் இது.
தனிநபர் உரிமைகளை அரசியலமைப்பு பாதுகாப்பது என்பது திருப்தியானது என்று கருதும் மனித உரிமைவாதிகள் தவறிவிடும் சந்தர்ப்பமும் இதுதான். பெரும்பான்மையின் கருத்து நேரடியாக வெளிப்படுத்தப்படும்போது அது சட்டத்தின் வடிவில் வந்து உரிமைகளை மீறும். அதே விருப்பு மறைமுக வடிவில் வந்து உரிமைகளை மீறும்போது நீதிமன்றமே அதை உட்கிடையாக நிறைவேற்றி வைக்கின்றது. இங்கே சட்டமானது பெரும்பான்மை மக்களது தெளிந்த முடிபாகுமேதவிர வெறும் உணர்ச்சிகள், உந்தல்களுடன் சம்பந்தப்பட்டதாக இல்லை. ஆனால் இங்கு அபாயம் குறைவானதாக இருப்பதற்குக் காரணம் இது மிக மெதுவாக எழும் சட்டக் கலாசாரத்தினால் ஏற்படுவது. பதிலாக, அரசியலமைப்பு நிர்ணய சபையானது விசேட நலன்களுக்கும் உணர்வலைகளுக்கும் இடங்கொடாததாக இருப்பது என்பது அரிதே.
134

இந்தச் சட்டக் கலாசாரம் என்பது நீதிமன்றத் தீர்ப்புகள் மீதான மென்தடையாகவே செயற்படவல்லது. யாப்பை வரைந்தோரின் கருத்துக்களையோ அல்லது தற்போதைய பெரும்பான்மையினது தீர்க்கமான முடிவையோ பிரதிபலிக்காது நடுநிலையான தீர்மானங்களை எடுப்பதற்கான கால அவகாசமும் இந்தச் சட்டக்கலாசாரம் வளரும் அதே வேளையில் கிடைத்து விடுகின்றது. இத்தகைய கலாசாரம் வளராததால்தான் அமெரிக்க நீதிமன்றம், ஜப்பானிய-அமெரிக்கர்களை தடுப்புக்காவலில் வைத்ததைச் சட்டமுறையானதென்று தீர்ப்பளித்தது. இது தொடர்பான வழக்கை இன்று அமெரிக்க சட்டக்கலாசாரம்
அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்து உதறுகிறது."
(இ) வலுவேறாக்கந்தரும் பாதுகாப்பு
பெரும்பான்மை ஆட்சியின் அபாயங்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கத்தின் மூன்று துறைகளும் எங்ங்ணம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதை இனிப் பார்ப்போம். இந்த ஒழுங்கமைப்பு இரண்டு விதங்களில் செய்யப்படலாம். அதிலொன்றே Separation of powers 6T6ip 6 gy66 prid, (p60p. Lofb60pugil Checks and balances என்ற கண்காணிப்புகளும் சமப்படுத்தல்களும் கொண்ட முறையாகும். இதில் முதலாவதையே இங்கு பார்ப்போம்.
சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை ஆகிய இரண்டுக்கும் இடையிலான உறவுகளைப் பொறுத்தளவில் ஜனாதிபதி ஆட்சிமுறை, பாராளுமன்ற ஆட்சிமுறை என்ற இரண்டிலும் வெவ்வேறு வழிமுறைகள் கடைப்பிடிக்கப் படுவதுண்டு. முதலாவதில் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் விசேட இரத்து (Veto) அதிகாரம் சட்டவாக்கசபைக்குக் கடிவாளமிடுவதாக இருக்கும்.
35

Page 74
ஆனால் பாராளுமன்ற ஆட்சி முறையில் நிறைவேற்றுத்துறை என்பது (Cabinet) சட்டவாக்கத 'துறையிலிருந்து தோன்றுவதேயாகும். இங்கு சட்டவாக்கத்துறை மீது விதிக்கப்படும் மட்டுப்பாடுகள் யாவுமே நிறைவேற்றுத்துறை மீதான மட்டுப்பாடாகவும் அமைந்திருக்கும்.
இவற்றைவிட, நாம் வழக்கத்தில் பரிச்சயமாயிருப்பது நீதித்துறையின் சுதந்திரமேயாகும். ஏனைய இரு துறைகளிலிருந்தும் இது விடுபட்டிருப்பது இரட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது. ஏனெனில் இதுவே சட்ட ஆட்சிக்கும் நீதிமுறை மீளாய்வுக்கும் உத்தரவாதந் தருவதாகும். இச்சுதந்திரத்தின் ஒரம்சம் நீதிபதிகளது நியமனம், பதவிக்காலம், ஊதியம் சம்பந்தமானது. மற்றோரம்சம் நீதிமன்ற அமைப்புமுறை சம்பந்தமானது. உதாரணமாக, யூரர்களைத் தெரிவு செய்தல், முக்கிய வழக்குகளை எந்த நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தல் என்பன சம்பந்தப்பட்டதாகும். அரசாங்கம் தனக்கு நம்பகரமான' நீதிபதிகளிடம் வழக்கை ஒப்படைக்காமலிருப்பதைத் தடுப்பதற்குச் சில நாடுகளில் “லொத்தர்' முறை பாவிக்கப்படுவதுண்டு.
இவற்றைவிட, நாம் வழக்கத்தில் பரிச்சயமாயிருப்பது நீதித்துறையின் சுதந்திரமேயாகும். ஏனைய இரு துறைகளிலிருந்தும் இது விடுபட்டிருப்பது இரட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது. ஏனெனில் இதுவே சட்ட ஆட்சிக்கும் நீதிமுறை மீளாய்வுக்கும் உத்தரவாதந் தருவதாகும். இச்சுதந்திரத்தின் ஒரம்சம் நீதிபதிகளது நியமனம், பதவிக்காலம், ஊதியம் சம்பந்தமானது. மற்றோரம்சம் நீதிமன்ற அமைப்புமுறை சம்பந்தமானது. உதாரணமாக, யூரர்களைத் தெரிவு செய்தல், முக்கிய வழக்குகளை எந்த நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தல் என்பன
சம்பந்தப்பட்டதாகும்.
136

அரசாங்கம் தனக்கு நம்பகரமான நீதிபதிகளிடம் வழக்கை ஒப்படைக்காமலிருப்பதைத் தடுப்பதற்குச் சில நாடுகளில் “லொத்தர்’ முறை பாவிக்கப்படுவதுண்டு.
இதற்கு மேலதிகமாக, வழமையான மூன்று துறைகளைவிட, பத்திரிகைத்துறை - இன்னும் பொதுவாகச் சொன்னால் ஊடகத்துறை நான்காவது "வலுவாக அமைந்து விடுகின்றது. ஏனெனில் இவையும் பெரும்பான்மையின் துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்திக் கட்டுப்படுத்துவதில் கணிசமான பங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இதனைக் கண்டிப்பான பொருளில் பொருள்கோடல் செய்தால், அரச தொலைக்காட்சி, வானொலி போன்ற பொதுசன ஊடகங்கள் வலுவேறாக்கத்துக்கு உட்பட்டுப் பூரண சுதந்திரத்துடன் இயங்க அனுமதிக்கப்படல் வேண்டும் என்று கொள்ளலாம். நியமனம், பதவிக்காலம், ஊதியம் என்பன பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவாதப்படுத்தப்பட்டவையாக இருக்க வேண்டும். இலங்கையில் இது தொடர்பான நடப்புகளை வாசகர்களே அசை போட்டு கி கொள்ளலாமீ. இதீத கைய பதவிகளிலுள்ளவர்களுக்குவரவு-செலவுத் திட்ட சுயாட்சி மிக அவசியம். அதில் கைவைக்கக் கூடாது எனலாம்.
சற்று விரிவான பொருளைக் கொடுப்பதாயின், தனியார்துறை பொதுசன ஊடகங்களும் இங்ங்னமே கட்டுப்பாட்டையும் அச்சுறுத் தலையும் பிரயோகித்து பெரும்பான்மை ஆட்சிக்குக் கடிவாளமிட முடியும். இதன் அடித்தளமே பேச்சுச் சுதந்திரத்துக்கான அரசாங்கத் தலையீட்டுக் கெதிரான சட்டப் பாதுகாப்பில் தங்கியிருக்கும். அதுமட்டுமன்றி பத்திரிகை அச்சிடுந்தாள், இயந்திரங்கள், மை போன்றவற்றில் அரசாங்கத்துக்கு ஏகபோகம் அனுமதிக்கப்படவும் கூடாது. இன்னுஞ் சிலர் மத்திய வங்கியின் சுதந்திரத்தையும் இதனோடு சேர்ந்து ஐந்தாவது வலுவாகத் தற்போது கணிக்கின்றனர்.
37

Page 75
மத்திய வங்கியின் பணிப்பாளர் நாயகத்தின் பதவியின் சுதந்திரம் நீதித்துறைச் சுதந்திரமளவுக்கு முக்கியத்துவமானது எனச் சில அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்." ஏனெனில் நாட்டின் நாணயப் பெறுமதியின் ஏற்ற இறக்கத்தை வைத்தும் ஆட்சியை மாற்றமுடியும் என்பதைத் தேர்தல்கள் நிரூபித்து உள்ளன. எனவே ஆதன உரிமைகளோடு நெருங்கிய தொடர்புடைய மத்திய வங்கியின் செயற்பாடானது ஏனைய துறைகளின் தலையீடின்றிச் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதில் தவறில்லை.
(ஈ) கண்காணிப்புகளும் சமப்பாடுகளும்
(Checks and Balances)
இதில் அரசியல் நிறுவனங்கள் ஒன்றினால் ஒன்று மட்டுப்படுத்தப்படுகின்றன. இதன் பொருள், ஒவ்வொன்றுக்கும் அதனது மட்டுப்படுத்தப்பட்ட அதிகார எல்லை உண்டென்பது மட்டுமல்ல அந்த எல்லைக்குள்ளும் அந்த நிறுவனம் தான் நினைத்தபடி ஆட்டம் போட முடியாது என்றாகும். இது இக்கோட்பாட்டின் பலமிக்க பொருள்கோடலாக அமையும். சட்ட வாக்க அதிகாரமானது நிறைவேற்றுத்துறையின் 'இரத்து ஆயுதத்தினாலும் நீதிமுறை மீளாய்வினாலும் மட்டுப்படுத்தப்படும். அதேவேளை துடிப்பான நீதிமன்றமொன்று அதற்கான புதிய நியமனங்களாலும் மீளாய்வு அதிகாரத்திலான மட்டுப்பாடுகளாலும் அச்சுறுத்தப்படலாம்.
கணி காணிப்பு வழிமுறைகள் என்றால் இங்கு இரு சபைகள் கொணட சட்டவாக்க சபை மற்றும் நிறைவேற்றுத்துறையின் இரத்ததிகாரம் என்றே எடுத்துக் கொள்வோம். இந்த இரு கண்காணிப்பு முறைகளும் முறையே பெரும்பான்மை ஆட்சியின் இரு அபாயங்களுக்கு பரிகாரமாகின்றன.
138

இரணி டாவது சபையினி உள்ளமையானது பல்வேறு பொறிமுறைகளின் மூலம் பெரும்பான்மையின் உணர்வலைகளுக்கு ஓர் செயற்படவல்லது. சட்டவாக்கக் கொடுங்கோன்மைக்கு எதிரான தடையாக இரத்ததிகாரம் பாவிக்கப்பட முடியும். ஆனால் இக்கூற்றுக்கள் விதிவிலக்குகளுக்கு
உட்படாதவை என்று கூறுவதற்கில்லை.
அணைக் கட்டாகச்
உணர்வலைமிக்க சுயநலன் காக்கும் பெரும்பான்மைப் சட்டவாக்குனர் பிரச்சனை களின் பிரச்சனை
இருசபைகள் |மேற்சபை தாமத பேரவை முறை மூலம் யுக்தியைக் கையாளும். இரண்டாகப் கிடைக்கும் பணம் அல்லது ஞானத் பிளவுபட்டிருப் தீர்வு தின் மூலம், உணர் பது செல்வந்தர்
வலைமிக்க பெரும் பக்கஞ் சாயும் பான்மையினின்றும் சாத்தியம் வேறுபட்டு அதற்குத் குறைவு. தடையாக அமையும்.
இரத்ததிகாரம் இரத்ததிகாரம் மேலதிகக் சட்டவாக்கத்தின் மூலம் கிடைக் கண்காணிப்பாக அமை சொந்த அத்து கும் தீர்வு ந்து அபாயகரமான உந்| மீறல்களை
துதல்களைத் தடுக்கும். நிறைவேற்றுத்
துறை தடுக்கும்.
இருசபைகள் மூலமான அணைபோடல் என்பது "சூட்டைக் குறைக்க" உதவும் என்று நம்பப்பட்டு வருகின்றது.
Thomas Jefferson Lofbopri(5 F576) TGOT George Washington ஐப் பார்த்து 'ஏன் செனட்சபை தேவையென்கிறீர்கள்?' எனக்
கேட்டார்.
39

Page 76
அதற்கு Washington அளித்த பதில் இன்னொரு கேள்வியாக இருந்தது.
'ஏன் நீர் கோப்பியை Cup இலிருந்து saucer க்கு ஊற்றுகிறீர்?"
ஆறவிடுவதற்கு' என்றார் Jefferson.
'915sbeyi.576ir'676ipii Washington.
பிரான்சிலும் இத்தகைய ஆறவைக்கும் அவகாசம்' என்றளவிலேயே செனட் உருவாக்கப்பட்டது. இங்கே செனட்டர்களது விசேட தகுதி கவனிக்கப்படுவதில்லை. ஆனாலும் கீழ்ச்சபை உறுப்பினர்களிலும் பார்க்க உணர்வலைகளைத் தடுக்கவல்ல தகுதிகள் கொண்டவர்களாக மேல்சபை உறுப்பினர்கள் இருப்பதற்குரிய விதத்தில் தேவைப்பாடுகள் விதிக்கப்படுவதுண்டு.
சுயநலத்தோடு கூடிய சட்டங்களை சட்டவாக்குனர் ஆக்காதிருப்பது தடுக்கப்பட வேண்டுமானால் அங்கு பிரித்துஆளும் வழிமுறை கையாளப்பட வேண்டும். பேரவை ஒரேவிதமானவர்களைக் கொண்டிருந்தால் அவர்கள் வரிந்துகட்டிக் கொண்டு நிறைவேற்றுத் துறையை எதிர்க்க முற்படுவர். அவர்களை இரண்டாகப் பிரித்துவிட்டால் நலன்களும்/ அக்கறைகளும் இரணிடாகும். எதிர்ப்பும் அந்தளவுக்கு இரண்டுபட்டு மழுங்கிவிடும். பிரெஞ்சுப் பேரவையில் இவ்வாறு கூறப்பட்டதாம்: ஒரேயொரு அதிகார அமைப்பு இருப்பின் அது எல்லாவற்றையும் விழுங்கிவிடும். இரண்டிருப்பின் அவை இடைவிடாது மோதிக் கொண்டேயிருக்கும். மூன்றுதான் முறையான சமநிலையைப் பேணும்' நிறைவேற்றுத்துறையின் இரத்ததிகாரம் உணர்வலைப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வாய்ப்பு ஜனாதிபதி ஆட்சி முறைக்கே அதிகம் பொருத்தமானது.
இங்கு இரத்துச் செய்யப்பட்ட சட்டத்தை விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் ஏற்பாடு சிலவேளைகளில் (அமெரிக்காவிலுள்ளது போல) விரும்பப்படுகின்றது.
வேறுசில சந்தர்ப்பங்களில் இரத்துச் செய்யப்பட்ட
சட்டத்தை சாதாரண பெரும்பான்மையுடன் மீளவும் கொண்டுவர சட்டவாக்க சபைக்கு முடியும் என்றாலும் அது பின்னைய
140

சட்டவாக்க சபையினாலேயே செய்யப்பட முடியுமெனக் கூறப்படுவதுண்டு. இதுவே பிரான்சில் ஏற்கப்பட்டிருந்த முறையாகும்.
சுயநலத்தோடு செயற்படும் சட்டவாக்குனர்களைத் தடுப்பதில் நிறைவேற்றுத்துறையின் இரத்ததிகாரத்தின் பங்கானது அமெரிக்க அரசியலமைப்பு மாநாட்டிலும் பிரான்சின் பேரவையிலும் நிரந்தரக் கோட்பாடாகவே விவாதிக்கப்பட்டது. 1888இல் இங்கிலாந்தில் இருசபைகளும் சேர்ந்தே தமது அதிகாரத்தின் ஒரு பகுதியை நிறைவேற்றுத்துறையிடம் கையளித்து அதன்மூலம் சட்டவாக்கக் கொடுங்கோன்மையைத் தடுத்துக் கொண்டன. இந்த உதாரணம் பாரிஸ் சட்டப் பேரவையினரைக் கவரத் தவறவில்லை.
Checks என்பதும் check பண்ணப்படாவிடின் அங்கு Balances இருக்காது. கண்காணிப்பு அங்கங்கள் (organs) தாம் கணி காணிப்புச் செய்யும் நிறுவனங்களிலிருந்து புறம்பானவையாகவும் சுதந்திரமானவையாகவும் இருக்க வேண்டும். ஜனாதிபதி பாராளுமன்றத்தினால் தெரியப்பட்டால் அவர் பாராளுமன்றத்தைக் கண்காணிக்க முடியாது. அவரைத்தான் பாராளுமன்றம் கண்காணிக்கும். இங்கே சமப்பாடு இல்லாமல் போய்விடும். ஜனாதிபதி மீதான (impeachment) பழிமாட்டறைதல் கண்காணிப்பாக அமைவதாயின் அவர் பாராளுமன்றத்தோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாதவராக இருக்க வேண்டும்.
Checks and Balances என்பதிலுள்ள குறைபாடு யாதெனில் இறுதியில் அது அரசாங்கத்தைச் செயற்பாடற்ற ஒரு நிலைக்குக் கொண்டுவருமே தவிர பொறுப்புடைய அரசாங்கத்தை அமைக்க உதவாது என்பதே. தாமதிப்பு யுக்தி ஏற்பாடுகள் இந்த அபாயத்தைக் கொண்டுவரா.
எனினும் நிரந்தர 'இரத்து' என்பது சட்டவாக்கக் கொடுங்கோன்மையைத் தணிக்கும் என்றாலும் அதற்கும் பக்க விளைவுகள் இல்லாமலில் லை. சட்டத்திலுள்ள குறைபாட்டைவிட சட்டத் துஷ்பிரயோகமே பயங்கரமானது என்பதால் நிரந்தர இரத்து அதிகாரம் இன்றும் விரும்பப்படுகின்றது எனலாம்.
141

Page 77
பெரும்பான்மை ஆட்சியின் அபாயத்தின் தோற்றுவாய்கள் மூன்றெனப் பார்த்தோம். அவையாவன: நிலையான நலன்கள், நிலையான உணர்வலைகள், திடீரெனக் கிளம்பும் உணர்ச்சிப் பிரவாகம் என்பனவாகும். இவை பாராளுமன்றப் பெரும்பான்மையில் அல்லது குடித்தொகைப் பெரும்பான்மையில் எழலாம் எனவும் பார்த்தோம். கிழக்கு ஐரோப்பாவில் தற்போது நிகழ்வன இவற்றுக்கு நல்ல உதாரணங்களாகும். பாராளுமன்றப் பெரும்பான்மையினது நிலையான நலன்கள் அங்கு குழப்பத்துக்கு வித்திட்டுள்ளன. அதேபோன்று குடித்தொகையின் நிலையான உணர்வலைகள் இன, மத, மொழி வேறுபாடுகளின் வடிவத்தில் உருக்கொண்டு ஆட்டம் போடுகின்றன. குறைந்த எண்ணிக்கையினராக உள்ள ஆதனச் சொந்தக்காரர்கள், பணமுதலீட்டாளர்களது குறுகிய வட்டத்துக்குள்ளான உரிமைகளை எதிர்த்து நிற்கக்கூடிய அளவுக்கு அங்கு குடியியற் சமூகமொன்று (Civil Society) இன்னும் உருவாகவில்லை. அத்துடன் பெரும்பான்மை ஆட்சியின் அபாயத்தின் தோற்றுவாய்கள் மூன்றெனப் பார்த்தோம். அவையாவன: நிலையான நலன்கள், நிலையான உணர்வலைகள், திடீரெனக் கிளம்பும் உணர்ச்சிப் பிரவாகம் என்பனவாகும்.
இவை பாராளுமன்றப் பெரும்பான்மையில் அல்லது குடித்தொகைப் பெரும்பான்மையில் எழலாம் எனவும் பார்த்தோம். கிழக்கு ஐரோப்பாவில் தற்போது நிகழ்வன இவற்றுக்கு நல்ல உதாரணங்களாகும். பாராளுமன்றப் பெரும்பான்மையினது நிலையான நலன்கள் அங்கு குழப்பத்துக்கு வித்திட்டுள்ளன.
அதேபோன்று குடித்தொகையின் நிலையான உணர்வலைகள் இன, மத, மொழி வேறுபாடுகளின் வடிவத்தில்
உருக்கொண்டு ஆட்டம் போடுகின்றன.
142

குறைந்த எண்ணிக்கையினராக உள்ள ஆதனச் சொந்தக்காரர்கள், பணமுதலீட்டாளர்களது குறுகிய வட்டத்துக்குள்ளான உரிமைகளை எதிர்த்து நிற்கக்கூடிய அளவுக்கு அங்கு குடியியற் சமூகமொன்று (Civil Society) இன்னும் உருவாகவில்லை. அத்துடன் திடீரெனக் கிளம்பும் உணர்வலைகள் என்பன தன்னளவிலேயே முன்னறியப்பட முடியாதன என்பது பெறப்படும். எனவே இது Civil Society யின் தேவையை இரட்டிப்பாக்கும்.
நம்பிக்கை தருவது யாதெனில் தற்போது உருவாகிவரும் அரசியலமைப்பு நீதிமன்றங்களும் மனித உரிமைகள் பிரகடனங்களின் அபரிதமான செல்வாக்குமேயாகும். 'ஏகதத்துவம் என்று 1989க்குப் பின்னைய சர்வதேச அரங்கு உருமாறிவிட்ட பின்பு கண்காணிப்பும் சமப்பாடுகளும் எல்லைகளுக்கு அப்பாலும் இருந்து செல்வாக்குச் செலுத்துகின்றன. சாதாரண சட்டம் மாத்திரமன்றி அரசியலமைப்பை ஆக்குவதிலும் இந்த அவதானிப்புகள் ஏற்புடையதாகின்றன. அரசியலமைப்பு நீதிமன்றங்கள் மேற்சொன்ன மூன்று அபாயங்களிலும் நிலையானதும் தற்காலிகமானதுமான உணர்வலை அபாயங்களை நீக்க உதவ முடிகின்றன. ஆனால் மாறாக, சொந்த நலன் பேணும் அக்கறை கொண்ட சட்டவாக்குனர் குழுவுக்கெதிராக - கண்காணிப்பும் சமப்பாடும் போதியளவு கட்டுப்பாட்டைச் செலுத்துவதாக இல்லை.
இதனால்தான் இன, மத, மொழி, கலாசார, பிரதேசச் சிறுபான்மைக் குழுக்களது எதிர்பார்ப்புக்கள் ஆள்புல எல்லைகளுக்கு அப்பாலான கண்காணிப்பையும் சமப்பாட்டையும் வேண்டி நிற்பதான துர்ப்பாக்கிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதற்கு பொஸ்னியா, ரூவண்டா, புரூண்டி தொடக்கம் இலங்கை
வரை விதிவிலக்குக் கிடையாது எனலாம்.
143

Page 78
SELECTED BIBILIOGRAPHY
BOOKS
Catherine Brolman, Rene Lefeberand Marjoleine Zieek (eds), Peoples and Minorities in International Law, Martinus Nijhoff Publishers, London, 1994
Christian Tomuschat (eds), Modern Law of Self-Determination, Martinus Nijhoff Publishers, London, 1993.
J.E.Finn, Constitutions in Crisis, New York, Oxford University Press, 1991.
L.Fuller, The Morality of Law, New Haven, Conn., Yale University Press, 1969.
Ivor Jennings, Approach to Self-Government, Combridge University Press, 1951.
Ivor Jennings, The Constitution of Ceylon, 2nded; Bombay,
Oxford University Press, 1956.
J.Jaconelli, "Majority Rule and Special Majorities", Public Law, 1989.
John Elster, Solomonic Judgments, Cambridge, England, Cambridge University Press, 1989.
Karl Marx, The Eighteenth Brumarie, in Marx and Engels, Collected Words, New York, vol III.
144

Ketheshwaran Loganathan, Sri Lanka: Lost Opportunities - Past Attempts at Resolving Ethnic Conflict, CEPRA,University of Colombo, Colombo, 1996.
D.J.Morgan, The Official History of Colonial Development, vol.5, MacMillan, London, 1980.
V. Navaratnam, The Fall and Rise of the Tamil Nation, Kanthalakam, Madras, 1991.
S.Nadesan Q.C., Some Comments on the Constituent Assembly and the Draft Basic Resolutions, Nadarajah Press, Colombo, 1971.
J.N.Pandey, Constitutional Law of India, 27th Edition, CLA, Allahabad, India, 1994.
Rajiva Wijesinghe (eds.), Values for South Asia, CLD, Colombo, 1997.
E.Simith(ed.), Constitutional Justice Under Old Constitutions, New York, 1966.
G.R. Stone et. al., Constitutional Law, 2nd ed., Boston, Little Brown, 1991.
A.Theva Rajan, Tamil as Official Language - Retrospect and Prospect, ICES, Colombo, 1995.
145

Page 79
CaSeS
Aseerwatham v Permanent Secretary of the Ministry of Defence and External Affairs, Journal of the International Commission of Jurists, volume VII, p.319.
Bribery Commission v Ranasinghe (1964) 66 NLR 73
Ibrahim v Government Agent, Vavunia (1966) 69 NLR 217.
Ibrelebbe v The Queen(1963) 65NLR 433.
Kodakkan Pillai v Sivagnanasundrarem(1953) 54NLR 433 Kodeswaran v Attorney - General (1969) 72 NLR 337.
Liyanage v The Queen(1965) 68 NLR 265
Piyadasa v Bribery Commissioner (1962) 64 NLR 385.
Senadira v Bribery Commissioner(1961) 63 NLR 313.
Published Documents/Reports A Programme of Action to Create a Just and Free Society, Colombo, 1977.
Ceylon Today, Vol, XVIII Constituent Assembly Debates, 1971 - 85
Joint Election Manifesto by the United Front, M.D.Gunasena & Co Ltd., 1970.
Madison Records, 1:135
National State Asssembly, August 1978.
Sessional Papers -XVII, 1943.
Soulbury Commission Report, 1947.
146

ஆசிரியரின் பிற நால்கள்
Human Rights in Third World Perspective
(Har - Anand International , New Delhi, 1992)
இனப்பிர்ச்சனைத் தீர்வுகள்
(காந்தளகம், சென்னை,1993 )
தமிழ்மாறன் கட்டுரைகள்
(தர்ஷணா பிரசுரம், கொழும்பு, 1995)
சர்வதேசியம் : சமகாலச் சிந்தனைகள்
(கவிதா பதிப்பகம், மதுரை, 1995)
தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள்
(கார்த்திகேயன் வெளியீட்டகம், கொழும்பு, 1996)
ஒப்பீட்டுச் சட்டம் : ஒரு சில சிந்தனைகள்
(மதுரி மலர்வகம், கொழும்பு, 1998)
இனப்பிரச்சனைத் தீர்வுகள்
( திருத்திய இரண்டாம் பதிப்பு) அச்சில்

Page 80
இந்நூலாசி கொழும்பு கடந்த 2 வருகின்ற விரிவுரைய
சர்வதேசச்
சட்டம் 6 முதுமானி, கலைமுதுமானி மாண அதே வேளையில் பண்டாரநாயக்க பட்டப்பின்படிப்பு மாணவர்களுக்கு அரசியலமைப்புச்சட்டம், சர்வதேசச் பல்கலைகழகத்தில் அரசியலமைப்பு
என்பவற்றையும் கற்பித்து வருகின்
மிகச் சிக்கலானதும் சர்ச்சை உள்ளடக்கியதான பாடநெறிகளைப் சிந்தனைத் தெளிவு, விமர்சனப் போ. மிகச்சிறந்த ஆசானாகத் தன்னை நீ நன்கறிவேன். தனக்கெனத் தனியா அவர் கொண்டிருக்கின்றார். சட்டம், போன்றவற்றை உள்ளடக்கி ஏற்கெ இவர் வெளியிட்டுள்ளார்.
அதே வரிசையில் தற்போது மூன்று ஆராய்ந்து இதில் எழுதியுள்ளார்.
அரசியலமைப்புக்களும் இந்நாட்டில் ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஏமாற்ற ஏற்படுத்தியுள்ளன. இவற்றினின்று அரசியலமைப்பு எங்ங்னம் அமைதல் கூறத் தவறவில்லை. இது எங்கள் வாசிக்கப்பட வேண்டிய நூலாகும்.
- பேராசிரியர் பேட்ரம் ட
Ρ
 

ரியரான திரு. வி. ரி. தமிழ்மாறன் பல்கலைக்கழக சட்டபீடத்தில் ) வருடங்களாகப் பணிபுரிந்து T. தற்போது முதுநிலை ாளராகப் பணியாற்றி பகிரங்க
சட்டம், மனித உரிமைகள் ான்பவற்றைச் சட்டமானி, சட்ட வர்களுக்குப் போதித்து வரும் ஈர்வதேச கற்கைகள் நிலையத்தில் அரசியற் சிந்தனைகள், ஒப்பீட்டு சட்டம் என்பவற்றையும் திறந்த |ச் சட்டம், சர்வதேசச் சட்டம் றார்.
க்குரியதுமான விடயங்களை
போதிக்கும் தமிழ்மாறன் தனது க்கு, மொழியாற்றல் என்பவற்றால் லைநிறுத்திக் கொண்டிருப்பதை ன வாசகர் கூட்டமொன்றையும்
அரசறிவியல், மனித உரிமைகள் னவே ஐந்து தமிழ் நூல்களை
9ਘ555
இலங்கை கண்ட மூன்று அரசியல் ஸ்திரத்தன்மையை ம், விரக்தி, அச்சம் என்பவற்றையே ம் விடுபட, பொருத்தமான ஓர் வேண்டும் என்பதையும் அவர்
ஒவ் வொருவராலும் கட்டாயமாக
-
|ஸ்தியாம்பிள்ளை.
*inted by: Unie Arts (Pvt) Ltd., Colombo - 13.