கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிவேதினி 1994.09

Page 1
பெண் நிலை
மலர் 1 இதழ்
ஆதித்தாய்
கற்பும் கன்
வேழம் படு
சிவரமணி
Z W/7 @ý)az/GỦ 6
Qusarasit assis
 

பதினி
வாத சஞ்சிகை
2 புரட்டாதி 1994
57ra007rag57uy zib
த்த வீராங்கனை
பன்முறை
பி, ஆய்வு நிறுவனம்

Page 2
பெணகள கல்வி, ஆய்வு நிறுவனம் ஒரு அரசாங்கச் சார்பற்ற பெண்களுக்கான ஸ்தாபனம். சமூகங்களிடையே ஒற்றுமை, சமூக மாற்றங்கள், ஜனநாயக பண்புகளை நிலைநாட்டுதல் போன்ற குறிக்கோள்களைக் கொண்ட இந்நிறுவனம், சகல இன பெண்களின் முன்னேற்றத் திற்காக உழைக்க முற்பட்டுள்ளது.
இலங்கையில் பெண்கள் நிலை பற்றிய பல்வேறு அம்சங்களையும் நன்கு கற்று ஆய்வு செய்தல் இதன் முக்கிய நோக்கம். இலங்கையில் பெண்கள் சம்பந்தமான ஆவணங்கள், வளங்கள் ஆகியவற்றை சேகரிக்கும் இந்நிறுவனம், மூன்றாம் உலகிலே பெண்களின் நிலைபற்றி ஆய்வு செய்யும் அமைப்புகளின் ஒரு பகுதியாக இருக்கும்.
இமது குறிக்கோள்
பால் வேறுபாடு காரணமாக ஏற்படும் விளைவுகளைப் பற்றி இந் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்.
பெண்எழுத்தாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும், ஊக்குவித்தல், அத்துடன் பெண்களால் எழுதப்படும் சிங்கள, தமிழ், ஆங்கில நூல்களை வெளியிடுதல்.
பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரப்புதலும், பெண்நலம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அக்கறையைத் தூண்டுதலும்.
இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கான (அகதிகள், வேலையற்றோர், சேரிவாசிகள்)
மீளக்குடியமர்வு முயற்சிகளில் ஒத்துழைப்பையும், ஊக்கத்தையும் நல்கல்.
 
 
 

இதழாசிரியரின் சிந்தனைகள்
ஆதித்தாய் - ராஜம் கிருஷ்ணன்
கற்பின் செல்வி கண்ணகியில் ஒரு பார்வை செல்வி திருச்சந்திரன்
பாலியல் உபத்திரவங்கள் யுனிசெய் மறுபிரசுரம்
பெண்குழந்தை - யுனிசெப் மறுபிரசுரம்
பெண்பாவத்தின் ஆயிரம் முகங்கள் என்.எஸ். ஜகந்நாதன்
அடித்தள மக்கள் மீதான பாலியல்வன்முறையும் நாட்டார் வழக்காறும் - ஆ. சிவசுப்பிரமணியம்
அநாகரிக சங்கிலித்தொடர் - சுகிரிவி
சிவரமணியின் கவிதைகள்: சிவரமணியைப்புரிந்து கொள்ளும் ஒரு சிறுமுயற்சி
சூரியகுமாரி பஞ்சநாதன்
பழமையும் புதுமையும் தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் - சாந்தி சச்சிதானந்தடி
திரைப்படங்களில் பெண்கள - பவானி லோகநாதன்
வேழம்படுத்த வீராங்கனை, ஒரு மீள் நோக்கு செல்வி திருச்சந்திரன்
11
25
31
37
47
49
81
98
116
2O

Page 3
இச்சஞ்சிகையில் பிரசுரமாகும் கட்டுரைகளை ஆசிரியரின் அனுமதியுடன் மட்டுமே மறு பிரசுரம் செய்யலாம். கட்டுரைகளிலும் கவிதைகளிலும் பிரதிபலிக்கும் கருத்துக்கள் அவ்வவ் ஆசிரியர்களின் சொந்தக் கருத்துக்களே, இதழாசிரியருடையவை அல்ல.
ISSN. 1391 - O353
 

மாற்றுச் சிந்தனைகள்
நிவேதினியின் இரண்டாம் ஏடும் வெளிவந்துவிட்டது. முதலாம் ஏடு எந்த வரவேற்பைப் பெற்றது என்று எமக்கு இன்னும் சரியாகத்தெரியாதநிலை. பெண்களது சமுதாய முன்னேற்றத்திற்கும் மட்டுமில்லாமல், அறிவுபூர்வமான ஒரு சஞ்சிகையையும் ஒரு சமூகவிஞ்ஞான நோக்கில் வெளியிட வேண்டும் என்பது எமது இரட்டை நோக்குகள். ஆகவே நிகழ்ச்சிகள்ஆய்வுகள், புத்திஜீவிகளின் படைப்புக்கள், இலக்கிய வாதிகளின் படைப்புக்கள், (புனைகதை, கவிதை, புதுக்கவிதை) என பலவேறுபட்ட முயற்சிகளை ஒன்றிணைக்கவேண்டியது ஒரு பாரிய பொறுப்பே. இதுவுமல்லாமல் தற்போது பல பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் கற்கை நெறி (Women's Studies) என்ற பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறும் எமது சஞ்சிகை இருக்க வேண்டுமென்பதும் எமது ஒரு குறிக்கோளாக ஏற்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் இலங்கையில் இது ஒரு புது முயற்சியே. இம் முயற்சியில் எம்முடன் ஒன்றி ணைந்து உழைக்க பலர் முன்வந்து விட்டனர். அதே வேளையில் இப்படி ஒரு சஞ்சிகை தேவைதானா? அறிவுபூர்வமான பிரசுரங்கள் இப்படி தனித்தவில் அடிக்க வேண்டுமா என்ற கேள்விகளும் அக் கேள்விகளின் தாத்பரியமும் கூட எம்மை வந்து தாக்குகின்றன.
இவை என்றும் கேட்கப்படும் கேள்விகளாகவே இருக்கப்போகின்றனவா என்பதே எமது கிலேசம். இடதுசாரி சஞ்சிகைகளும் தலித் இலக்கியங்களும் தோன்றிய பொழுதும் இக் கேள்விகள் கேட்கப்பட்டனவா? அப்படிக் கேட்கப் பட்டிருந்தால் இதுவும் நியாயமான கேள்விதான். அக் கேள்விகள் ஓய்ந்துவிட்டன. இக் கேள்வியும் ஓய்ந்துவிடும் என நாம் நம்புகிறோம்.
இதை விட தற்போது இன்னுமொரு குறுக்குவாதம் தோன்றியுள்ளது. சில வருடங்களுக்கு முன் இனத்துவ கற்கை நெறி (Ethnic studies) ஒரு இலாபம் தேடும் ஒரு உற்பத்தித் தொழில் (EthnicstudyIndustry) என்று பலராலும்

Page 4
5
சாடப்பட்டது. தற்பொழுது மகளிர் கற்கை நெறி (Women's Studies) ஒரு உற்பத்தித் தொழில் அதாவது இலாபத்தை முன்னிட்டு செய்யப்படுகின்றது என்ற ஒரு கருத்தையும் நாம் கேள்வியுற்றோம். இங்கு முக்கியமான கேள்வி ஒன்று உளது. இது கூறப்பட்டது என்பதிலும் பார்க்க யாரால் கூறப்பட்டது என்ற கேள்வியே முக்கியமானது. இனத்துவ கற்கையால் மூடி மறைக்கப்பட்ட பல இனத்துவேஷத்தை அடிப்படையாகக் கொண்ட கருத்தியல்கள், செயல் திட்டங்கள், செயல் முறைகள் ஒரு இனத்தின் மேலாதிக்கம் போன்றன வெளிக்கொணரப்படுவதால் அவற்றை அலசி ஆராய்வதை, அவற்றை வாதப்பிரதிவாதங்களாக கருத்தரங்குகளிலும் பிரசுரங்களிலும் எடுத்தாளப்படுவதை சிலர் விரும்பவில்லை. அந்த உண்மைகள் மக்களிடம் சென்றடையாமல் இருக்க தடுப்பதற்கும், அவற்றை திசை திருப்பவும் சிலர் முயல்வர். இந்த இனத்துவ ஆய்வுக்கு ஒரு சிலரே முட்டுக்கட்டை போட்டார்கள் ஆய்வு செய்வோரைக் கொச்சைப்படுத்த அவர்கள் தங்கள் சுயலாபம் கருதியே இவ் ஆய்வுகளைச் செய்வர் என்று கூறினர். அவர்களது கருத்தை நாம் கருத்தில் கொள்ளத் தேவையில்லை. இப்படிக் கூறுவோரில் பலர் இனத்துவேஷிகளாகவே இருப்பர். உண்மை பல சமயங்களில் கசக்கத்தான் செய்யும்.
இதே போல, ஆய்வுகள் மூலம் ஆணாதிக்க கருத்துக் களும் நடைமுறைகளும் வெளிவருவதை விரும்பாத சிலர் இப்படிக் கூறி எம்மை இகழ்வது எம்மை பின்னடையச் செய்யாது. ஆதாயம் தேடிச் செய்யும் ஒரு பிழைப்பு அல்ல எமது முயற்சி . ஒரு சிலர் இப்படிக் கூறி எம்மை இகழ்வது எம்மை சிந்தித்து தெளிவு பெற வைக்கிறது. சூதுவாது அறியாத ஆறு வயது பெண் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட கோரமும், அவள் பாலியல் நுகர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட வன்மையையும்,பின் தன்னைக்காட்டிக் கொடுத்து விடுவாளோ என்று பயந்து அவள் கொலைசெய்யப்பட்ட செய்தியும் 24ம் திகதி ஆங்கில, தமிழ் தினசரிகளில் வெளிவந்திருந்தது. அக்கொலையைச் செய்து, அவளது உடலை மயானத்தில் ஒளித்தது அவளதுஉறவினர் ஒருவரே என்ற செய்தி (வீரகேசரி)

4ம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. இச் செய்திகள் எங்களில் பலருக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஆழ்ந்த துக்கத்தையும் உண்டு பண்ணிவிட்டது. அச்சின்னஞ்சிறு உடலும் உயிரும் என்ன பாடுபட்டிருக்கும்.? அதில் வேடிக்கையான செய்தியும் ஒன்று புகுத்தப்பட்டிருந்தது. பொலிஸ் அதிகாரி ஒருவர் இது பாலியல் வன்முறைப்பித்தன் (SexManiac) ஒருவனால் செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது என கூறியிருப்பது " பழைய குருடி கதவைத் திறவடி" என்பது போலவே இருக்கிறது. யார் இந்த பாலியல் வன்முறைப் பித்தன் ? ஆறு பாலியல் வன்முறைப் பித்தர்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு இந்தப்பெண்ணைக் கடத்தி பாலியல் ரீதியில் துன்புறுத்தியிருக்கிறார்களா? ஆண்களின் பாலியல் வன்முறைகள் பொதுவாக sexmaniac என்ற ஒரு மனோவியாதிக்குள் அடக்கப்படுவ மிகவும் சர்வசாதாரணம். இது ஒரு சப்புக்கட்டு என்பது அதைக் கூறும் அதிகாரிகளுக்கும் அதை வாசிப்போருக்கும் நன்றாகவே தெரிந்த விடயம். ஆனாலும் இதை சிலர் திரும்பத்திரும்பக் கூறித்தங்களையும் ஏனையோரையும் ஏமாற்றிக் கொண்டே இருப்பர்.
ஜூன் 4ம் திகதி பத்திரிகை இன்னுமொரு வேதனையான செய்தியை வெளியிட்டுள்ளது. ஒரு வயது பச்சைமண் நிலத்தில் அறையப்பட்டு சொந்தத் தகப்பனால் கொலை செய்யப்பட்டு விட்டது. இக் கொலை வெறிக்குக்காரணம்-ஆத்திரம், ஆணா திக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஆத்திரம். தனது மனைவி தனக்கு உணவு சமைக்காத படியால் ஆத்திரங் கொண்ட கணவனின் அந்த ஆத்திரம் இடம் மாறி அந்தப் பச்சைக் குழந்தையை நிலத்தில் அறைய அவனைத் துண்டி விட்டது. அவள் நேரத்துக்கு உணவு சமைக்காததிற்குக் காரணம் இந்தக் குழந்தையை அவள் பராமரிக்க வேண்டியிருந்ததுவா? இது தானா குழந்ததையைத் துரக்கி எறியத் துண்டிய அவனது கொலை வெறிக்கு காரணம் என்று எம்மை மலைக்கவைக்கிறது இச் சம்பவம். இப்படித் தினமும் நடக்கும் விடயங்களைப் கேட்டும் பார்த்தும் தானே நாம் பெண்நிலைவாதிகளாக மாறி பெண் நிலைவாதம் பேசுகிறோம். இதை ஏன் ஆண்கள் கொச்சைப் படுத்துகிறார்கள்? ஏன் பெண் நிலை வாதிகளை

Page 5
7
அவதூறுக்குள்ளாக்குகிறார்கள்.? ஆண்கள் அத்தனை பேருக்கும் எதிரானது அல்ல எமது போராட்டம். ஆண்கள் அத்தனை பேரையுைம் துவேசிக்கும் ஒரு இயக்கமல்ல எமது இயக்கம்.
ஆண்களில் பெண்களுக்கு உரிமைகளையும் சமத்து வத்தையும் மறுக்கும் அத்தனை பேரையும் நீங்கள் மானிடராக நடக்கப் பழகுங்கள் என்றே கூறுகிறோம். அடித்து, உதைத்து, பழிவாங்கி, கற்பழித்து மிருகங்களாகிக் கொண்டிருக்கும் பல ஆண்களையே நாம் சாடுகிறோம். ஆணாதிக்கச் செயல்கள் சரியானவை அல்ல என்று கூற ஏன் ஆண்கள் தயங்க வேண்டும்? பெண்களே, பெண்நிலைவாதிகளே உங்களது யுத்தம் ஒரு தர்ம யுத்தமே, நாமும் அதை ஆதரிப்போம், உங்களுக்கு உதவுவோம், என்று ஏன் அவர்கள் கூற மாட்டார்கள்? முதலாவது தமிழ் நிவேதினி மிக அருமையான கட்டுரைகளைத் தாங்கி வந்திருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் பாராட்டுத் தெரிவித்த பொழுது முதல் முயற்சியே நன்றாக அமைந்து விட்டதே என்று நான் பூரிப்படைந்தேன். அதே சமயத்தில் அதில் கட்டுரை எழுதிய என் தோழி ஒருத்தி தனக்கு நடந்த அனுபவத்தைக் கூறக் கேட்ட நான் அதிர்ச்சியும் துக்கமுமடைந்தேன். நிவேதினி பெண்நிலைவாத இதழ் என்று அறிந்தும் அதைக் கையில் எடுத்த ஒருவர் முகத்தைச் சுழித்ததாயும் பக்கங்களைப் புரட்டி இதில் பலர் இலாபம் தேடுகிறார்கள் என்று கூறியதாகவும் எனக்குக் கூறினார். எமது பணியையும் முயற்சியையும் அறியாத, புரியாத மூடர் எப்பொழுதுமே இச் சமுதாயங்களில் இருந்து கொண்டே இருப்பர் என என்னையே தேற்றிக் கொண்டேன்.
இந் நிவேதினியில் "சிவரமணியின் கவிதைகள்" பற்றிய ஆக்கபூர்வமான ஆய்வொன்றை வெளியிடுகிறோம். பெண் குழந்தையின் உரிமைகள், பாலியல் உபத்திரவங்கள், என்பன பற்றிய யுனிசெப் பிரகடனங்களையும் ஒரு பகுதியாக தருகிறோம். உலகளாவிய ரீதியில் எப்படி பெண் என்பவளின் பிரச்சினைகளும் உரிமைகளும் எல்லோரது கவனத்திற்கும் கொண்டுவரப்படுகின்றன என்பது ஒரு சந்தோச விஷயமே.

ஆய்வை அடிப்படையாகக் கொண்ட வேறுபல கட்டுரைகளையும் பிரசுரிக்கிறோம். இவற்றில் சிவசுப்பிரமணியத்தினதும் ராஜம் கிருஷ்ணனினதும் கட்டுரைகள் கடல் தாண்டி எம்மை வந்தடைந்தன. சாந்தியும் சூரியகுமாரியும் எம் நாட்டின் பிரதிநிதிகளாக ஆய்வுகளைச் செய்துள்ளார்கள். பெண் நிலைவாதிகளின் சாதி, சமய, இன வர்க்க பேதங்களை கடந்த நிலையை இது நமக்கு எடுத்துக்காட்டுவதுடன் ஆய்வின் முக்கியமுவத்துவத்தையும் இவை நமக்குச் சொல்லாமல் சொல்லுகின்றன. இதே அடிப்படையில் தான் நாம் தஸ்லிமா நஸ்ரீனுக்கும் எமது ஆதரவையும் நல்லாசிகளையும் வழங்கு கிறோம். கண்ணகியின் கற்பிற்கும் வேழம்படுத்த வீராங்கனையின் கற்பிற்கும் போடும் முடிச்சு பொருந்தாத ஒரு செய்தி என்றும் இவ்விதழில் வாதாடப்படுகின்றது. வாசகர்களது கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறோம்.
இவ்விதழை வெளியிட பலர் எமக்கு உதவினர். பத்மா சோமகாந்தன், என். ஞானசுந்தரன் ஆகியோர் மனமுவந்து, அச்சுப்பிழைகளைத்திருத்தித்தந்தார்கள். இவர்களுக்கு எமது நன்றி உரித்தாகுக.
சாந்தி சச்சிதானந்தன், ஆகியோரது ஆய்வுக்கு உதவிய
The globalfundfor Women என்ற அமெரிக்க நிறுவனத்தாருக்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
இதழாசிரியர்

Page 6
9
தஸ்லிமா நஸ்ரின், ஏன் குற்றவாளியானாள்?
வங்காளத்தைச் சேர்ந்த மருத்துவரான தஸ்ரிமா நஸ்ரின் எழுத்துக்கள் தற்போது உலகம் முழுவதிலும் பிரபல்யம் அடைந்துள்ளன. வங்கமொழியிலுள்ள இவரது படைப்புக்களில் மொழிவளம் மட்டுமின்றி முற்போக்குக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. பழமைவாதம் , அடிப்படை மதவாதம் , மதத்தின் பெயரால் பெண்கள் ஒதுக்கப்படுதல் முதலியவற்றை இவர் தீவிரமாக் கண்டித்துள்ளார். பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகளையும் பலாத்காரங்களையும் இஸ்லாமியத் திருமணச்சட்டத்தையும் இவற்றை விமர்சித்தும் கண்டித்தும் எழுதப்படும் தஸ்லிமாவின் படைப்புக்கள், பாராட்டையும் எதிர்ப்பையும் ஒரே நேரத்தில் இவருக்குத் தேடித்தந்துள்ளன. நிர்ப்பச்சித்தாகாலம்" எனப்படும் தொகுப்பு சிறந்ததென கல்கத்தாவிலுள்ள புகழ் பெற்ற பத்திரிகை நிறுவனமொன்று இவருக்கு விருது வழங்கிக் கெளரவித்துள்ளது. இதே சமயம், இத் தொகுப்பு இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்குத் தவறான விளக்கம் அளிக்கின்றது எனப் பழமைவாதிகள் கண்டனம் தெரிவிக்கின்றனர். ஆண்வர்க்கத்துக்கு எதிராக இவரது சமீபத்தைய எழுத்துக்கள் உள்ளன என முஸ்லிம் இளைஞர் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன. இவரது சமீபத்தைய நூலான "லஜ்ஜா" (வெட்கம்) வில் சிறுபான்மையோர் பெரும்பான்மையோரால் அனுபவிக்கும் அடக்குமுறை பற்றிய துணிச்சலான பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
வங்க அரசு இவரது எழுத்துக்களுக்கு தடைவிதித்தது மட்டுமின்றி, வெளிநாட்டுப் பயணங்கள் செல்ல விடாது கடவுச்சீட்டினையும் பறிமுதல் செய்துள்ளது. மதவாதக்குழு ஒன்று இவரைக் கொல்பவருக்கு ரூ 50,00 பரிசு எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதனால் தனக்குப் பாதுகாப்பு அவசியம் என நீதிமன்றத்துக்கு மனுச்செய்து பாதுகாப்புப் பெற்று மறைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
அந்நிலையில், அவர் ஒரு சில பத்திரிகையாளர்களுக்கு பேட்டிகள் அளித்ததன் மூலம், மீண்டும் எதிர்ப்புக்கள்

10
எழுந்துள்ளன. ஸ்டேட்ஸ்மன் பத்திரிகையில் இவர் அளித்த பேட்டியொன்றின் பின்னர், அடிப்படைவாதிகள் கூடுதலான ஆர்ப்பாட்டங்களை எழுப்பியுள்ளனர். அதனுாடாக பங்களாதேஷ் வாசியொருவரால் தஸ்லிமாவுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
தஸ்லிமா நஸ்ரின் கூறுவது யாவும் சரி என்றோ அல்லது
அதை எல்லோரும் ஏற்க வேண்டும் என்பதோ எமது வாதம் அல்ல. அவர் கூறும் தீவிரவாத பெண்ணியக் கருத்துக்கள் எமக்கு உடன்பாடாக இருந்தாலும் அவற்றை ஏற்காத ஏனையோரும் கூட அவர் அப்படிக்கூறுவதற்கு உள்ள உரிமையையும் எழுத்துச் சுதந்திரத்தையும் வாக்குச் சுதந்திரத்தையும் அவரிடமிருந்து பறிக்க எத்தனிப்பது சரியல்ல என்பதே எமது வாதம். அவர் கூறுவதை நாம் ஏற்கமாட்டோம், ஆனால் அப்படி அவர் கூறுவதை தடுக்க எமக்கு உரிமை இல்லை என்று கூறுவது ஜனநாயகப் பண்பாடு சார்ந்த நாகரிகச்செயல் ஆகும். இதைவிடுத்து அதற்காக அவர் தலையைக் கொய்ய வேண்டும் என்பது அநாகரிகத்தின் விளிம்பிற்கு எம்மை இட்டுச் செல்லும். காலங்காலமாக நாம் பாடுபட்டுத் தேடி அடைந்த பேச்சு, எழுத்துச் சுதந்திரங்களை இழக்கச் செய்ய இப்படிப்பட்ட செய்கைகள் அனுகூலமாக அமைந்துவிடும். இப்படியான உரிமை மறுப்புக்களை எதிர்த்து நாம் தொடர்ந்து போராட வேண்டும்.
இதழாசிரியர்

Page 7
ஆதித்தாய்
ராஜம் கிருஷ்ணண்
இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. மனித சமுதாயம் எப்போது சமுதாயம் என்ற நாகரிகம் காண மலர்ந்தது! ஆணும் பெண்ணும் எப்படி வாழ்ந்தார்கள்?
இறைவன் முதலில் ஆணையே படைத்தான். பினனர் அவனுக்கு அடங்கிய துணையாக அவனிலிருந்து ஒரு பகுதியை வைத்தே பெண்ணைப் படைத்தான் என்ற வகையில் சமயங்கள் சார்ந்த பல கருத்துக்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும், ஆதிமனிதர் வரலாறு, பெண்ணை அப்படி ஒரு துணைப் பிறவியாக இனம் காட்டவில்லை என்பதே சரியாகும்.
வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மனிதர் விலங்கு களைப் போன்றே வாழ்ந்திருக்கிறார்கள். நிலத்தில் கொடிய விலங்குகளுக்கு அஞ்சி குரங்குகளைப் போல் மரக்கிளைகளில் தங்கியும், கூடி இனம் பெருக்கியும் வாழ்ந்தார்கள். தரைக்கு இறங்கி நிமிர்ந்து, இரண்டுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியதும், பின்னர் நெருப்பின் பயன்களைக் கண்டு கொண்டதும் மனித வாழ்க்கையின் அற்புதமான திருப்பங்களாகும்.
வாழ்வில் அச்சம் நீங்கியது, நடுங்கும் குளில் இருந்து மீள வெம்மையாகி இதம் இசைந்தது. சமைத்த ஊன் சுவையாக இருந்தது, எளிதில் சீரணமாயிற்று. தீயின் ஆற்றலை உண்ர்ந்த ஆதிமனிதரின் அறிவுக்கண்கள் புத்தொளியுடன் வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாயின.
அறிவும் சிந்தையும் கைத்திறனும் சொல்லாற்றலை மலரச்செய்தன. வெறும் இயல்பூக்க உணர்வினால் (instinct) மரக்கிளைகளில் கூடி இனம்பெருக்கிய மாந்தர், அந்த ஆற்றலை

12
மனித வாழ்வின் தலையாய பேறாக இனம் கண்டனர். கூடலுக்கான விழைவும், கூடலும், அதன் பயனான மகப்பேறும் புதிய பாரிமாணங்களைப் பெற்றன.
பெண் தாய், "ஜனி' -உயிரைப்பிறப்பிப்பவள் என்று அறியப்பட்டாள். இவள் உயிர்கொடுத்த 'ஜனம் (மக்கள்) என்ற குழுவின் தலைவியாக (தாய்) விளங்கினாள்.
இவள் பேராற்றல் மிகுந்தவள். இவள் தலைமையில் மக்கள் வேட்டைக்குச்சென்றனர். காட்டுத் தீயைக்குகைக்குள் பாதுகாக் கக்கற்றுக்கொண்டார்கள். இறைச்சியை உணவா க்கிக் கொண்ட பின் தோலைப் பதமாக்கித் தைத்து இவளே ஆடையாக்கத் தெரிந்து கொண்டாள். மண்பாணிடம் உருவாக்கினாள். மக்கள் நோயினால் துன்புற்ற போது, பச்சிலை மூலிகைத்திறன் கண்டாள். இவளே மக்களைப் பெறும் ஆற்றலைப் பெற்றிருந்ததால், ஆண் இத்தலைமைப்பதவிக்கு உரியவனாக வரவில்லை.
குழுக்கள் தாய்த் தலைவிகளாலேயே அறியப்பட்டன. தாய் - மக்கள் என்ற உறவுகளைத் தவிர இக்குழு வாழ்வில் வேறு உறவுகள் முதன்மை பெறவில்லை எனலாம். இக் குழுக்களே தாயாண் சமுதாயமாக வளர்ச்சி கண்டன.
இதேகாலத்தில், தம் உடல் வலிமையினால் நாயகத் தன்மையை நிலைநிறுத்திக் கொண்ட ஆண் தலைமைக் குழுக்களும் தோன்றின. கானகங்களில் குரங்குகள் தம் வலிமையினால் பல பெண்குரங்குகளைச் சேர்த்து இனம் பெருக்கி நாயகப்பதவிக்கு வருவதைக் கண்ட மனிதன் அதே வழியைப் பின்பற்றினான். எவன் தன் வலிமையினால் பல பெண்களளைத் தனக்கு உரிமையாக்கிக் கொள்கிறானனோ அவனே தலைவன் என்று மதிக்கப் பெற்றான். இக் குழுவினரின் முன்னேற்றம் தீவிரமாக இருந்தது. விலங்கு களை இவன் உயிருடன் பிடித்துப்பழக்குவதனால் ஏற்படும் பயன்களைக் கண்டான். உணவுக்கு அன்றாடம் அலைய வேண்டாம். பால் தயிர், வெண்ணெய், நெய் என்ற

Page 8
13
உணவுப் பொருட்கள் கிடைத்தன. குதிரைகள் ஏறிச் சவாரி செய்யப்பயன்பட்டன. காடுகளில் வளர்ந்த "யவம்' போன்ற தானியங்கள், செழித்து வளர்ந்த புற்கள் ஆகியவை கால்நடைகளுக்குத் தீனியாகப் பயன்பட்டன.
காலம் செல்லச்செல்ல, தானியங்கள் விதைத்துப் பயன் பெறலாம் என்று கண்டார்கள். குகைகளில் தங்கியிருந்தவர்கள் நெருப்பை எப்போது வேண்டுமானாலும் தோற்றுவிக்க முடியும் என்றறிந்ததும் பல்வேறு பகுதிகளில் நாடோடிகளாக, குழுக்களாக முன்னேற்றம் காணத் திரிந்தார்கள் நீர்க்கரை ஓரங்களில் வசதியாக வாழக் குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டு நிலையாகத் தங்கினார்கள்.
வாழும் வழி சிறந்தது. உலகின் பல பகுதிகளிலும் ஆறுகளை ஒட்டிய நிலப்பரப்பில் மக்கள் பல்கிப்பெருகினர். அவர்கள், வானிலை, மாறும் பருவங்கள் எல்லாம் அறிந்தார்கள். தம் அறிவுக்கு எட்டாத இயற்கை நிகழ்வுகளை, தெய்வ ஆற்றல் என்று கருதி, இயற்கையையே வழிபட்டார்கள். மனித உடலின் இன்றியமையாத ஆற்றல் குருதி என்று கருதி, அந்த இரத்தத்தைத் தெய்வம் என்று நம்பி பலி கொடுக்கும் சடங்குகளைச் செய்தார்கள். மனித சமுதாயம் நிலைப் படு முனர் இத்தகைய பெண் தலைமை ஆண்நாயகக்குழுக்கள் அந்தந்த இடத்துக்குரிய சூழலுக்கேற்ப உருவாயின. குழுவுக்குள்ளேயே ஆணும் பெண்ணும் இன்னார், இனியர், தக்கார், தகவிலர் என்ற வேற்றுமையின்றிக்கலந்து இனம்பெருக்கிய முறைமாறி, வெவ்வேறு குழுவினருடன் உடற்கலப்பு சம்பந்தம் செய்து கொள்வதென்றாயிற்று.
இந்த நிலையிலும் கூட மக்கள் தாயைக் கொண்டே அறியப் பட்டனர் . நமது இதிகாசங்கள் காட்டும் உண்மைகளிலிருந்து இந்த நிலையை அறியலாம். மகாபாரதத்து ஆதித்தாய் சத்தியவதி, பராசரரைக்கூடிய போது, திருமணம் என்ற நெறி வழக்கில் வந்திருக்கவில்லை. ஆண்-பெண் கூடுவதற்குரிய இடம், நேரம் போன்றன வரம்புகள் கூட ஒழுங்குக்கு வந்திராத காலம் என்றும்

14
கொள்ளலாம். சத்தியவதியும் பராசரரும் படகில் சென்று கொண்டிருக்கும் பொழுது மோக வசமாகிக் கூடுவதாகத் தெரிகிறது. ஒரு நாகரிகம் கருதி அப்போது மேகம் திரையிட்டதாகத் காட்டப்படுகின்றது.
அடுத்து இதே சத்தியவதியயை, தந்தைநாயகக் குழுவில் வந்த சந்தனு மன்னன் விரும்புகிறான். சத்தியவதியின் தந்தை, சந்தனுவிடம் தன் மகளின் வயிற்றில் பிறக்கும் மகனுக்கு முடிசூட்டப்பட வேண்டுமென்று கோருகிறான்.
"நீ விட்டுக் கொடுத்தாலும், உன்மகன் விட்டுக் கொடுப்பான் என்பது என்ன நிச்சயம்? அப்படி அவன் விட்டுக்கொடுத்தாலும் அவன் சந்ததியினர் உரிமை கோர மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?" என்றெல்லாம் கேட்கிறான். வீட்டுமன், வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரியாக இருப்பதாகச் சபதம் செய்கிறான். வீட்டுமன் சந்தனுவுக்கும் கங்கைக்கும் பிறந்த மகன். பின்னர் சத்தியவதியை சந்தனு மணக்கிறான்.
ஆனால் சத்தியவதி சந்தனுவின் தொடர்பால் பெற்ற மைந்தர்கள் வமிச வழிய்ை நிலைநிறுத்த ஆண்மையற்றவர்களாக இருந்தார்கள். எனவே சத்தியவதியின் முதல் மைந்தன் (பராசரர் வாயிலாகப் பிறந்தவன்) வியாசனே சந்தியை நிலைநிறுத்துகிறான்.
வீட்டுமன், சத்தியவதியின் புதல்வனுக்காகக் கன்னியரைத்தேடி வருகிறான். தன் புயவலிமையினால் பெண்களைக் கொண்டுவரும் ஆண் நாயக வாழ்க்கையை இங்கு காண்கிறோம்.
அம்பை, அம்பிகை என்ற கன்னியர், வீட்டுமனால் கொண்டு வரப்பட்டவர். காதலனனுடன் வாழ நினைத்த அம்பையின் வரலாறு சோகமானது. தன்னைப் பலவந்தமாகப் பற்றிவந்து தனக்கு வாழ்வே பறிக்கப்பட்ட நிலையில் துன்பமிழைத்த வீட்டுமனைக் கொன்று பழிதீர்த்துக்

Page 9
  

Page 10
17
ஆச்வலாயன தர்ம சூத்திரம், திருமண விதிகள் பற்றிக் குறிப்பிடுகையில் தனக்கு ஆண்மகவு வேண்டுமென்றால், மணமகன் மணமகளின் கட்டை விரலைப் பற்ற வேண்டும், மகள் வேண்டுமேன்று விரும்பினால் வேறு விரல்களை மட்டும் பற்ற வேண்டும், இருபால் சந்ததியும் வேண்டுமென்று விரும்புபவன், கட்டைவிரலுடன் ஏனைய விரல்களையும் சேர்த்துப் பிடிக்கேவண்டும் என்று அறிவிக்கிறது.
இந்த விதிமுறையை நினைவுபடுத்தும் வண்ணம் திருமணம் நடத்திவைக்கும் மேதகு புரோகிதர் மணமகனிடம் "பெண்ணின் கட்டை விரலைப் பற்றிக் கொண்டுவரவும” என்று கூறுகிறாள். "இல்லாவிட்டால் பெண்ணாகப் பிறந்து தொலைக்கும்" என்றெல்லாம் தெரிந்த கிழவர்கள் முணுமுணுப்பதும் காதில் விழும். வனங்களில் குழுக்களாக மனிதர் வாழ்ந்த காலத்தில், தாய்த்தன்மைக்குரிய பெண்ணின் விருப்பமின்றி எந்த ஆணும் அவளை அணுக முடியாது. தன் விருப்பத்தை, அவள் தன் விரல்களைக் குவித்து ஓர் ஆடவனுக்குத் தெரிவிப்பதன் வாயிலாக அவன் அவ்விரல்களைப் பற்ற உடன்படுவான்.
தந்தையாண் குழுக்களிலோ, ஆண் பெண்ணின் கட்டை விரலைப் பற்றி இச்சைக்கு உட்பட அழைப்பான். எனவே, தாயாண் குழுவில் இருந்து பெண்ணைக்கொண்டு வரும் போது அவள் கட்டைவிரலைப் பற்றித்தான் குழுவுக்கு கொண்டு வந்தான் என்றும், தாயாண் குழுவுக்கு வருபவன் பெண்ணின் ஏனைய விரல்களைப் பற்றிக் கொண்டான் என்றும் ஊகிக்கலாம். நாளடைவில் தந்தைநாயகமே மேல்நிலையாக்கமாக, சமுதாயத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்ற போது பெண்ணின் கட்டை விரலைப்பற்றி ஆதிக்கத்துக்கு உட்படுத்தவதே பரவலாக வழக்கில் வந்திருக்க வேண்டும்.
இந்த அடிப்படையைப்பின்பற்றி தருமசூத்திரங்கள்திருமணவிதிகள் இயற்றப்பட்டு, ஆண்சந்ததி, பெண்சந்ததி என்று முறைப்படுத்தப்பட்டன என்று கொள்ளலாம். இது ஒரு வகையில் இன்று அச்சுறுத்தல்போலவும் அறிவுறுத்தப்படுவதில்லையா?

கற்பின் செல்வி கண்ணகியில் ஒரு பார்வை
செல்வி திருச்சந்திரன்
பொதுவாக தமிழ் கூறும் நல்லுலகில் கண்ணகி கற்பின் கனலாகவும், பதிவிரதா தர்மத்தின் பிரதிநிதியாகவும், பத்தினித் தெய்வமாகவும் கணிக்கப்படுவதை நாம் காண்கிறோம்.
ஆனாலும் இது கண்ணகியின் மேல் திணிக்கப்பட்ட ஒரு பார்வையாகவே எனக்குப்படுகிறது. அதாவது வேறு சில பண்புகள் அகற்றப்பட்டு கற்பு என்ற பண்புக்கு முக்கிய இடம் கொடுத்திருப்பதாகவே எனக்குப்படுகிறது. ஒரு ஆண் பார்வையில் உருவாக்கப்பட்ட இந்த பண்பு கண்ணகியின் கதாபாத்திர குணஇயல்புகளிலிருந்து சிறிது விலகி இருப்பதாக தோன்றுகிறது. இது எப்படி என்று விளக்கி, ஒரு வாதத்தை உண்டு பண்ணுவதே இச் சிறு கட்டுரையின் நோக்கம்.
முதலாவதாக அரசிளங்குமாரனாக இருந்து இளங்கோ அடிகளாக மாறிய இதன் ஆசிரியர், இக்காவியத்துக்கு சிலம்பு அதிகாரம் சிலப்பதிகாரம் என்றே நாமஞ்சூட்டியுள்ளார். இங்கு கற்பிற்கு முதலிடம் கொடுக்கப்படவில்லை என்பது ஈண்டும் கவனிக்கத்தக்கது. சிலம்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததிற்குக் காரணம் இந்தச்சிலம்புதான் கவிதையை வளர்த்துச் செல்வதற்கும் கண்ணகியின் மகிமையை உலகிற்கு, எடுத்துக் கூறுவதற்கும் காரணியாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆகையால் சிலம்புக்கு முதலிடம் கொடுத்தது சரியே. ஆனாலும் கற்புத்தான் கண்ணகியின் மகிமை என்று இளங்கோவடிகள் எண்ணியிருந்தால் கற்பின் குணாதிசயத் தையும் அந்தச் சிலம்புடன் சேர்த்திருப்பாரே!
இரண்டாவதாக கண்ணகியின் கற்பினை எடுத்துரைப் போர் கோவலனுக்கு அடங்கிப் போன தன்மையை எடுத்துக் கூறுவர். அதாவது தாசியுடன் நீண்டகாலமாகத் தங்கியிருந்து, செல்வம் முழுக்கத் தொலைத்த கோவலனை பொறுமை

Page 11
19
என்னும் அணி பூண்டு பொறுத்தது எல்லாங் கூட அவளது கற்பின் தன்மைத்தே என வாதாடுவர். பொறுமையும் கூட கற்பின் வரைவிலக்கணத்திற்கு அடக்கப்பட்டுவிட்டது. கண்ணகிக்கு வேறு வழி ஏதும் இருந்ததா என்பதும் ஒரு கேள்வியாக எழுப்பப்படவேண்டும். அந்தக் கால சமுதாயத்தில் ஒருவனுக்கு தாசியும் காமக்கிழத்தியும் சேரிப்பரத்தையும், இல்பரத்தையும், சர்வசாதாரணம். அது ஒரு சமுதாயத் தேவை என அங்கீகாரம் பெற்றதை இலக்கியங்கள் காட்டுகின்றன. தலைவன், தலைவி, பிரிவு, ஊடல், என்ற நிகழ்வுகள் இலக்கியத்தில் சாதாரண நிகழ்வுகளாகவே காட்டப் பட்டுள்ளன. இந்நிலையில் கண்ணகி மாத்திரம் தான் கற்பின் பாற்பட்டு இந்நிலைமையை ஏற்றுக் கொண்டாள் என்று கூற முடியாது. இது ஒரு சமுதாய மரபாயிருக்கும் பொழுது கண்ணகியின் சிறப்புத் தன்மையாக கருத முடியாது. அடுத்ததாகக் தன் கணவன் கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்டு கொலையுண்டான் என்ற செய்தி கேட்டவுடன் அவள் கதா பாத்திரப் படைப்பு எப்படி இருந்தது என்பதை ஆராய்வோம். அவன் கொலையுண்டது மாதவியுடன் இருந்த காலத்தில் அல்ல. மாதவியுடன் ஊடி அவளைப் பிரிந்து இல்லக் கிழத்தியை நாடிய பொழுதே. அதாவது செல்வம் தொலைத்து மனம் நொந்து மீண்டும் பணம்சேர்த்து இல்லறத்தில் ஈடுபடுவதற்கு கணவனும் மனைவியும் ஒன்றாகச் செயல்படத் தொடங்கிய பொழுது. இந்த நேரத்தில் தன்னுடைய சிலம்பே, சந்தேகத்துக்கு இடம் அளித்தது, தன்னுடைய கனவுகள் எல்லாம் சிதைந்த ஆக்ரோசம், மறுபடியும் ஒன்று சேர்ந்த கணவனும் மனைவியும் சிறிது நாட்கள் கூட ஒன்றாக இல்லறம் நடத்தாத அவலம், போன்ற பல இன்னல்கள் சேர்ந்து ஒரு நியாயமான கோப வெறியாக அவளிடம் எழுந்தது. இது அவளது கற்பின் சீற்றம் என்று நாம் கூற முடியாது. எதிர்பார்ப்புக்கள் எல்லாம் அழிந்ததினால் ஏற்பட்ட சீற்றம். மாசாத்து வணிகனுடைய மகளாகிய கண்ணகிக்கு வர்க்க ரீதியில் ஒரு மேலிடம் உண்டு. ஏனையோரிடம் ஆதிக்கம் செலுத்திய வணிகவர்க்கம் செல்வம் நிறைந்த ஒரு கூட்டம், அடிபணிந்து அடிமைத்தொழில் செய்து பழக்கப்படாத ஒரு சமுதாய மட்டத்திலேயே அவள் தோன்றினாள், வளர்ந்தாள். இச் சீற்றம் ஒரு இயற்கைத்

20
தன்மையின் பாற்பட்டதே அன்றி சிறப்பம்சம் பொருந்திய கற்பின் சீற்றமல்ல.
வீறு கொண்டு எழுந்த அவளது சீற்றம் பாண்டிய மன்னனைப் பார்த்து நீயா அரசன் என்று கேட்கிறது. இங்கு நான்காண்பது நீதி கேட்கும் பண்பையே. நியாயமான வழியில் நீ வழக்கை விளங்கவில்லை. அநியாயமான முறையில் எனது கணவனைக் கொன்று விட்டாய். ஆகவே உனக்கு நான் வழக்குரைக்க வந்து விட்டேன். இப்படிக் கூறும் கண்ணகியின் மகிமை நியாயத்திற்கும் நீதிக்கும் தான் நான் உன்னை நாடி வந்தேன் என்று கூறுகிறதே அன்றி எனது கணவனைக் கொன்று விட்டாய், கற்பின் பிறப்பிடமாகிய நான் ஏன் என் கணவனைக் கொன்றாய் என்று கேட்க வந்தேன் என்று கூறவில்லை . கோவலனின் மனைவி என்ற ரீதியில் மட்டும் அவள் அரசனை நாடவில்லை. நாட்டின் பிரஜையாக அவள் அங்கு சென்றாள். நான் பூம்புகாரில் இருந்து வந்தேன் என்று கூறுகிறாள்.
கற்புக்கரசியையும் நீதிதேவதையையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்து அவர்களின் பண்புகளை ஆராய்வதும் ஒரு சுவாரஸ்யமான ஒப்பீடாக இருக்கும். தொல்காப்பியரின் கற்பின் வரைவிலக்கணம் யாது? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. கற்பு, பெண்மைக்கிலக்கணம் (சூத்திரம் 1045) என்று கூறும் தொல்காப்பியர் மூன்று வகையாக கற்புள்ள பெண்களைப் பிரித்துள்ளார். மூதானந்தம், புறங்காடு, தாபதறிலை, ஆகிய முன்று நிலைகளில் அப்பிரிவு விளக்கப்பட்டுள்ளது. மூதானந்தம் என்பது மிக உயரிய கற்புநிலை, தன் கணவன் இறந்தான் என்று கேட்டவுடன் உடனே இறக்கும் மனைவி இவ்வுயரிய கற்பை உடையவள். தன் கணவனுடன் ஈமம் புறங்காட்டில் உடன்கட்டை ஏறுதல் இரண்டாவது நிலையில் வைத்துக்கணிக்கப்படும். விதவைக்கோலம் பூண்டு, மொட்டையடித்து, ஆபரண்ம் களைந்து, வாசனைத்திரவியம் தவிர்த்து, சிறிய உணவு உண்டு, தவம்காத்தல் மூன்றாவது நிலை. இந்த மூன்றையும் கண்ணகி செய்யவில்லை.

Page 12
21
சிலப்பதிகாரப் பாண்டிய மன்னனின் மனைவி ஒருத்தியே மூதானந்த நிலையை எய்திய பெண் தமிழக கதாபாத்திரம். அவளது கற்புநிலை கண்ணகியின் கற்பிலும் மேம்பட்டிருந்தாலும் அவளுக்கு கோயிலுமில்லை, பத்தினிப்பட்டமும் சிலம்பில் அளிக்கப்படாதது மீண்டும் கவனிக்கத்தக்கது. ஆகவே, இளங்கோவடிகளுக்கு கற்பை விட நீதியே சிலம்பின் காவியப் பொருளாக அமைய வேண்டும் என்ற ஒரு வேணவா இருந்திருக்க வேண்டும். கற்பின் பண்புகள் கண்ணகியிடம் ஏற்றப்பட்டிருக்க வில்லை. சாவித்திரியைப்போல் யமனிடம் சென்று கணவன் உயிரை அவள் மீட்டுவரவில்லை. மூதானந்தம் அடையாமல் விதவைக் கோலம் பூணாமல் தன் ஆபரணங்களைந்து மொட்டைத் தலையுடன் செல்லாமல் தலைவிரி கோலத்துடன் செல்லுங் கண்ணகி ஒரு நீதிதேவதையாகவே காட்சியளிக்கின்றாள் என்பது என் வாதம். நாணமும், மடமையும், அச்சமும், நிறைந்த பெண்மையும் கற்பும் இங்கு வெளிப்பாடுகளாக இருக்கவில்லை. நீதியின் சக்தியாகவே தோற்றமளிக்கின்றாள். சதியாக இல்லை. அவளது கற்பின் திண்மைதான் அவளது சக்திக்குக் காரணம் என்பது பொதுவான சாதாரணமாக விளக்கமாக முன் வைக்கப்படுவதுமுண்டு. இச் சக்தி கற்பினுள் அடக்கப்பட்ட காலம் சிலம்பின் காலத்திலேயே தொடங்குகிறது. அச்சம், மடம், நாணம் ஆகிய சக்தியற்ற அபலைக் குணங்களே கற்பிற்குத் தேவையாக இருந்த காலம் மாறி கற்பின் சக்தி என்று சொல்லக்கூடிய ஒரு பதப்பிரயோகம் சிலம்பின் கண்ணகியால் வந்து விட்டதைக் காணுகிறோம். இந்த மாற்றமும் ஒரு தோற்றுவிக்கப்பட்ட விமர்சனப் பார்வையாக இருக்கலாம். நீதி தேவதைகற்பின் திரு உருவமாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பதற்கு இன்னும் சில ஆதாரங்களைக் காட்டக்கூடியதாக இருக்கின்றது. பத்தினி என்ற சொற்பிரேயாகம் எடுத்தாளப்பட்டிருப்பினும் அவள் பத்தினித் தெய்வமா க்கப்பட்டு விட்ட பின் இலங்கையில் சிங்கள மக்களிடம் அவள் நீதித் தேவதையாகவே(Paragon of Justice) ஏற்றுக் கொள்ளப் படுவதாகவே கணநாத் ஒபயசேகர கூறுவதும் ஒரு முக்கிய செய்தியாகக் கொள்ளப்படவேண்டும். சிலப்பதிகாரம் எழுதியவர் ஒரு பெளத்த சமயத்தைச் சேர்ந்தவர். தர்க்கரீதியான ஒரு அணுகுமுறை (Rationality) பெளத்த சமயத்திற்கு நிறையவே

22
உண்டு. அவர் நீதிக்கு முதன்மை கொடுக்க முற்பட்டு பத்தினித் தன்மையையும் ஒன்று சேர்த்துவிட்டாரா? சமஸ்கிருத இந்துக்காவிய மரபுகளிடமிருந்த கற்புப் பண்புக்கும் பத்தினித் தன்மைக்கு ஏற்ப காவியப் பொருள் மாற்றப்பட்டுவிட்டதா? அதனாலேயே கற்பிற்கு முதலிடம் கொடுக்கப்பட்டு நீதித்தெய்வம் பத்தினித் தெய்வமாக மாற்றப்பட்டுவிட்டதா ?
கிழக்கிலங்கை கூட கண்ணகி வழக்குரை என்றே அதற்கு நாம கரணம் சூட்டியுள்ளது. கண்ணகியின் வழக்குக்கரையே சிலம்பின் மூலாதாரம்-கரு-அது அச்சம், மடம், நாணம், துறந்த பெண்மை, நீதி கேட்ட பெண்மை. கணவன் இறந்து விட்டான் என்பதிலும் பார்க்க கண்ணகியைத் துன்புறுத்திய செய்கை யாதெனில் அவன் கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டமையே. கணவன் இறந்ததும் தன் உயிரைப் போக்கிய பாண்டி மாதேவியின் கற்பு நடத்தைக்கும் கண்ணகியின் வீர நியாய நடத்தைக்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் , கற்பிற்கும் நீதிக்கும் உள்ள வித்தியாசம், தனது கணவனின் அநியாய, நீதிக்குப் புறம்பான அட்டூழியங்கள் எல்லாவற்றையும் பொறுத்து மன்னித்து அவனை நீதியின் கைகளிலிருந்து காப்பாற்றித் தன் தாலிப்பாக்கியத்தை பாதுகாப்பதே கற்பு என்று தற்போது சிறுகதைகளும் தமிழ்த் திரைப்படங்களும் போதிக்கும் கற்பும் இத்தகையதே. அறமும் அதன் நெறிமுறையும் வலியுறுத்தப்படுவதைக் கண்ணகியின் கூற்றாகவும் ஆசிரியர் காட்டுகிறார். சிலம்புடன் பாண்டியன் அரண்மனை வரும் கண்ணகி வாயிலோனை நோக்கி "அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன்” என்று அரசனை விழிப்பது ஈண்டு நோக்கற்பாலது. என்னுடைய ஆருயிர் கணவன் இறந்து போனான், உன்னால மரணித்தான் என்று கண்ணகி இங்கு கூறவில்லை."அறிவறை போகிய இறைமுறை பிழைத்தோன்" என அரசனை சாடுகிறாள். அறமும் இறை முறையும் நீதியின் பாற்பட்டவை தர்க்க ரீதியில் அணுகப்படுபவை. இங்கு அவளது துன்பத்திற்கு, அழுது புரண்டு கண்ணிர் வடிக்கும் உணர்ச்சிமயமான பெண்மைக்கு இளங்கோவடிகள் முதலிடம் கொடுக்கவில்லை.

Page 13
23
கொலைக்களப்பட்ட கோவலன்மனைவி கண்ணகியென்பது என் பெயர் என்று பின்பு கூறுகிறாள். கண்ணகியின் வழக்குரை புறாவின் அல்லல் தீர்த்த சிபி, கன்றை இழந்த மனுநீதிச் சோழனின் நீதி போன்றவற்றுடனேயே ஆரம்பிக்கின்றது. இப்படியாக பல முறைகளில் அறம் என்றும் முறை என்றும் நீதி என்றும் தர்க்கம் பேசிய கண்ணகி அடுத்த காதையில் கற்புடை மங்கையரைப் பற்றிப் பேசுகிறாள். இங்கும் ஒரு திணிக்கப்பட்ட தன்மையையே நாம் காண்கிறோம் என்று எண்ணுகிறேன். சீதை, திரெளபதி, அருந்ததி போன்ற வட நாட்டுப் பெண்களின் கற்பிற்கும் இணையாக தென்னாட்டிலும் பெண்களிருக்கிறார்கள் என்று கூறுவதைப் போல தென்னாட்டுத் தமிழ்க் கற்பரசிகளின் ஏழு பேரைக் குறிப்பிடுகிறாள். இதில் ஐவரது கதைகள் தங்கள் கணவன் பால் கொண்ட அதீத அன்பையும் வன்னி மரமும், மடப்பள்ளியும் சான்றாக இருந்தமையயையும் கூறுகின்றன. ஒருத்தியின் கதை தான் அதி தீவிர கற்புப் பண்பை வெளிப்படுத்துகிறது. தான் இன்னொருவரின் நெஞ்சத்தில் புகுந்ததற்காக தன் முகத்தை குரங்கு முகமாக்கிக் கொண்டாள். ஒரு பெண்ணின் கதையில் கற்பும் அறமும் (நீதி) மயங்கி வருவதைக் காண்கிறோம்.
தன் பிள்ளையுடன் விளளையாடிக் கொண்டிருந்த மாற்றாள் பிள்ளை தவறிக் கிணற்றில் வீழ்ந்து விட்டது. தனது கவனக் குறைவால் இது நடந்தபடியால் தன் குழந்தையையும் அவள் கிணற்றில் தள்ளி விட்டாள். கன்றைக் கொன்ற மனுநீதிச் சோழன் தன் மகனைக் கொன்றதுடன் ஒக்கும் இச் செயலுங் கூட இங்கு கற்பின்பாற் போடப்பட்டமை கற்புக்கும் அறத்துக்கும் உள்ள மயக்கு நிலையை வெளிப்படுத்துகிறது. இதே பாணியில் தான் கண்ணகியின் அறநிலையும் கற்பின் மேல் போடப்பட்டு விட்டது.
பெளத்த துறவி இளங்கோ இந்து மத மேலாதிக்கத்திற்கு அடிபணிந்து தனது கண்ணகியை நீதி தேவதை ஸ்தானத்திலிருந்து இறக்கி பத்தினித் தன்மை ஏற்றப்பட்ட பெண்ணாகத், தெய்வமாக ஆக்கி விட்டாரா? சீதையின்

24
கற்பும் சாவித்திரியின் கற்பும் புராண இதிகாச பெண் கதாபாத்திரங்களின் பூரணத்துவத்தன்மைகளாக மாறி வந்த கால கட்டத்தில் கண்ணகிக்கும் கற்புத் தன்மை ஏற்ற வேண்டிய கட்டாயம் ஒன்று ஏற்பட்டுவிட்டதா? ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு கதாபாத்திரப் படைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய கட்டா யத்துக்கு பெளத்ததுறவியான இளங்கோவடிகளும் தள்ளப்பட்டுவிட்டாரா? கண்ணகியின் வீர தீவிர நியாய உணர்ச்சி அவனது கணவனால் அவளுக்களிக்கப்பட்ட ஒரு சக்தி. அதாவது அவள் அவனுக்கு அடங்கி ஒடுங்கி கற்புள்ளவளாக இருந்தபடியால் தான் கிட்டிய சக்தி எனக் கொச்சைப்படுத்தப்பட்டதும் ஒரு ஆணாதிக்க வெளிப்பாடு தானா? அன்றி பெளத்தம் இந்துமத ஆதிக்கத்துக்குட்பட்ட ஒரு நிலையின் வெளிப்பாடா இது? இக்கேள்விகளுக்கு நாம் விடையை இன்றும் ஆழமாகத் தேட வேண்டும்.

Page 14
பாலியல் உபத்திரவங்கள்
விபசாரம், ஆபாச நடவடிக்கைகள் என்பன உலகளாவிய விதத்தில் வளர்ச்சியடைந்து வரும் தொழில் துறைகளாகும். வறுமை, பேராசை, மலிவான பாலியல் சார்ந்த நடவடிக்கை களுக்குள்ள கீழ்த்தரமான கிராக்கி என்பன இத்தொழில் செழித்தோங்குவதற்கு ஏதுவாக உள்ளன. வறிய நாடுகளிலும் செல்வ நாடுகளிலும் கோடிக்கணக்கான சிறுவர், சிறுமியரின் வாழ்க்கையை இது நாசமாக்கி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தேசிய மட்டத்திலோ சர்வதேச மட்டத்திலோ அதிக சிரத்தை காண்பிக்கப்படுவதில்லை.
சில நாடுகளில் ஏழு வயதுச் சிறுவர்களைக் கூட வயது வந்தவர்கள் வாங்கியும் விற்றும் வருகிறார்கள். இதனைச் செய்வோர் சிறுவர்களின் பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர், ஏன் தர்ம நிலையங்கள் எனப் போலி வேடம் பூண்டுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகளாகக்கூட இருக்கலாம். உடலாலும் உணர்ச்சியாலும் அடிமைகளாக்கப்படும் இச்சிறுவர்கள் பின்னர் கூலிக்கு விடப்பட்டு பலதரப்பட்ட ஆண்களாலும் சில சமயங்களிற் பெண்களாலும் இம்சைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் வாசிகளே வாடிக்கையாளர்களாக இருப்பர், எனினும் சில நாடுகளில் சிறுவர் சிறுமியருடன் உடலுறவு கொள்ளும் வாய்ப்பு, உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வியாபாரத் தந்திரமாக வெளிநாடுகளில் பிரசாரம் செய்யப்படுகிறது. இது தென் மற்றும் தென் கிழக்காசிய நாடுகளிற் பல பாலியல்
* ( இப்பகுதி, சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிலையம் என்ற யுனிசெப் பிரசுரத்திலிருந்து எடுக்கப்பட்டது) யுனிசெப் நிறுவனத்திற்கு எமது நன்றி

26
வேட்கையுடைய ஐரோப்பிய உல்லாச பிரயாணிகளை மட்டுமல்லாமல் ஆசியப் பிராந்தியத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த ஆண்களையும் காந்தம் போற் கவர்ந்து வருகின்றது.
பல நாடுகளில் பாலியற் புணர்ச்சித் துணைவர்களுக்கான கிராக்கி பெருகிவருவதாக சமீபத்தைய அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கு காரணம் விபசாரம் செய்யும் சிறு பிள்ளைகளை எச்.ஐ.வி என்னும் ஆட்கொல்லி நோய் அநேகமாகப் பீடிப்பதில்லை என்னும் தவறான நம்பிக்கையாகும். துரதிஷ்டவசமாக இது உண்மை அன்று, ஏனென்றால் அதிகமான சிறுவர்களுக்கு பாலியல் துஷ்ப்பிரயோகம் பூரண தண்டனையாகவே அமைந்து வருகின்றது.
இந்தச் சிறுவர்களுக்குப் பணம் கொடுக்கும் பாதர்கள் மிகவும் கெளரவமானவர்களாகவே காணப்படுகின்றனர், இவர்கள் எமது உலகத்தின் போக்கைப் பிரதிபலிக்கிறார்கள், தொழில் மயமான நாடுகளில் பாதுகாப்புப் பற்றிய கோட்பாடுகளை முன்வைத்து, குற்றச்செயல்கள் புரிவோருக்கு கடுந் தண்டனை விதிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கும் அதே மனிதர்கள் , வறுமையை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் போது தாமே குற்றவாளிகளாக மாறத் தயங்குவதில்லை. இவ்வாறு வளர்முக நாடுகளில் வளர்ந்து வரும் பாலிய விபசாரம் பாலியல் சார்ந்த உல்லாசப் பிரயாணம் என்பன தொடர்பாக ஆராய்ச்சி நடத்திய பிரெஞ்சுப் பாதிரியும் வைத்தியருமாகிய பிராங்கோ லேஃபோ என்பார் குறிப்பிடுகிறார்.
பல நாடுகளில், சட்டத்தை நிறைவேற்றுவோர் பாலியல்துறையில் சிறுவர்கள் துஷ்ப்பிரேயாகம் செய்யப்படும் விடயம் குறித்துப் பாராமுகம் காட்டிவருவதை மனித உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் சமீபத்தைய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பொலிசார் விரும்பினால் சிறுவர்களையும் சிறுமிகளையும் விபசார விடுதிகளிலிருந்து விடுவிக்கும் பொருட்டு நடவடிக்கை

Page 15
27
எடுப்பதற்கான சட்டதிட்டங்கள் இருக்கவே செய்கின்றன. ஆயினும் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரிகள் இது விடயத்தில் பெரும்பாலும் கண்டும் காணாதவர்கள் போல நடந்து கொள்கிறார்கள். ஏனென்றால் பிறருக்கு உதவ முன்வருவதால் தமக்கு ஒரு வித பயனும் கிடைக்கப் போவதில்லை என அவர்கள் நினைக்கிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் தமக்குப் போதிய ஊதியம் வழங்காமல் இருக்கும் போது தாம் ஏன் சட்டத்தை நிலைநாட்டுவதில் அக்கறை கொள்ள வேண்டும் என்று அவர்கள் நியாயம் கற்பித்துக் கொள்கிறார்கள். எவ்வாறாயினும் அப்பட்டமான ஊழல் அல்லது ஒத்துழைப்பின் மூலம் அவர்களும் இந்த நடவடிக்கைகளில் பங்கு கொள்கிறார்கள். பொய்யான அடையாள அட்டை அல்லது திருமணச் சான்றுப்பத்திர ங்களைக் காட்டி சிறுவர்களைக் கடத்திச் சென்று எல்லைப் புறங்களில் வியாபாரம் செய்யும் பழக்கம் சாதாரணமாகி விட்டதென மேற்படி அறிக்கை கூறுகிறது. அமைப்பு வாரியான குற்றச்செயல்களுடன் சிறுவர்களை வைத்து ஆபாச நடவடிக்கைகள், போதைப் பொருள் வியாபாரம் ஆகியனவும் இணைந்துள்ளன என்பதையும் அறிக்கை குறிப்பிடுகின்றது.
இத்தகைய ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு ஆளாகும் சிறுவர்கள் பெரும் பாலும் மிக வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மணமுறிவு ஏற்பட்ட குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் அல்லது மது அல்லது போதைப்பொருள்களுக்கு அடிமைகளான பெற்றோரைக் கொண்டவர்களாவர். சில சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் தாய்மாரே விபசாரிகளாயிருக் கிறார்கள். யாசித்தும் திருடியும் அல்லது போதைப் பொருள்களை விற்றும் பிழைக்கும் வீடுவாசலற்ற அநாதைச் சிறுவர்கள் இருக்கிறார்கள், இவர்களுக்கு விபசாரம் இலாப கரமான, ஆபத்துக்குறைந்த வாழ்க்கை நெறியாக இருக்கலாம். வறிய குடும்பங்களைச் சேர்ந்த பல சிறுவர்கள் சிறு வயதி லேயே வேலைக்காரர்களாக பணக்கார வீடுகளுக்குத் தானம் பண்ணப்படுகிறார்கள். அவ்வீடுகளில் உள்ளவர்கள் இச் சிறுவர்களை உபத்திரவப்படுத்துவதுண்டு, வேறு சிறுவர்கள்

28
கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பெற்றோரிடமிருந்து 50அமெரிக்க டொலர் போன்ற அற்ப தொகைக்கு விலைக்கு வாங்கப்பட்டு பட்டணங்களிலும் பெரு நகரங்களிலும் விபசார விடுதிகள் அல்லது வெளிநாட்டவருக்கு விற்கப்படுகிறார்கள். பல சந்தர்ப்பங்களில், பெற்றோர் தமது பிள்ளைகள் கெளரவமான தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என நம்பும்படி ஏமாற்றப் படுவதும் உண்டு. தென் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் லட்சக்கணக்கான சிறுவர் சிறுமியர்கள் விபசாரிகளாக உள்ளனரென்று அரச சார்பற்ற அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. ஒரு கடற்கரையை அண்டிய விடுதியிலே 16 வயதுக்குக் குறைந்த 10,000 சிறுவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டுவருவதாக மேற்படி அமைப்புக்கள், அறுதியிட்டுக் கூறுகின்றன. இச் சிறுவர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 75 ரூபாய் கூலி அல்லது வெறுமனே சாப்பாடும் துணிமணியும் வழங்கப்படுகிறது.
ஆபிரிக்க லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியப் பிராந்தியங்களிலும் பாலிய விபசாரமும் விபசாரப் பரிவர்த்தனையும் பெருமளவில் நடைபெற்று வருகின்றன மத்திய கிழக்கு நாடுகள் தமது பிராந்தியத்தில் இந்தப் பிரச்சினை இல்லை என்று வாதிட்டாலும் இந்நாடுகளைச் சேர்ந்தவர்களிற் சிலர் பாலியற் சுகங்களைத் தேடி வெளிநாடு களுக்கு குறிப்பாக தென் கிழக்கு ஆசியப் பிராந்தியங்களுக்குச் சென்று வருவதாக அறிய வருகிறது. தொழில்மயமான நாடுகளில் வறுமை, குடும்பத்தில் நிலவும் வன்செயல், இம்சை போன்றனவும் போதைப் பொருள் பிரயோகமும் பாலிய விபசாரம் அதிகரிப்பதற்கு ஏதுவாக விளங்குகின்றன. வீட்டை விட்டு ஓடிப்போகும் சிறுவர், சிறுமியர் இந்தச் சகதியில் விழுந்து விடுகிறார்கள், பாலிய விபசாரத்தால் பணம் திரட்டுவோரைத் தண்டிப்பதற்கான சட்டங்கள் எல்லா நாடுகளிலும் உண்டு. ஆயினும் இவற்றை நடைமுறைப் படுத்துவதில் தீவிரம் காட்டப்படுவதில்லை. மேலும் கிராக்கியைத் தூண்டுகின்ற உளவியல் மற்றும் புறப்பிரச்சினை களை சட்டத்தினால் மட்டும் தீர்க்க முடியாது. ஒரு சமுதாயத்தில் பாலிய விபசாரமும் சுரண்டலும் பீடையைப்

Page 16
29
போலப் பரவினால் அதனைப் பூண்டோடு களைவதற்கு அச்சமுதாயம் முன்வந்து சட்ட அதிகாரிகளுக்கு உதவ வேண்டும். சட்டமும் நீதியும் அடிப்படையில் சிகிச்சைப் பாங்கானவை, சமுதாய உணர்வுடன் கூடிய தடுப்பு நடவடிக்கை சார்ந்த கொள்கைகள் இன்றியமையாதவை. சமூகப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்பான கொள்கைகள், பெற்றோர் தமது குடும்பங்கள் சிதறாமற் பாதுகாப்பதற்கும் தமது பிள்ளைகளைப் படிப்பித்து அர்த்தமுள்ள, சுரண்டலுக்கு அப்பாற்பட்ட தொழில் முயற்சிகளில் ஈடுபடச் செய்வதற்கும் வழிவகுக்க வேண்டும்.
\
உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் பொது மக்களுக்கு அறிவூட்டு வதும் அவசியம். எங்கேனும் எந்தப்பிள்ளையேனும் அதற்குரிய கெளரவத்துடனும் மதிப்புடனும் நடத்தப்படல் வேண்டும். பாலியல் சார்ந்த உல்லாசப் பிரயாணத்துறையை ஒழிப்பதற்கான யோசனைகளில் விகாரமான பாலியல் நடத்தைகளில் ஈடுபட்டமைக்காகப் பிடிபட்ட வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை அந்தந்த நாடுகளின் சட்டங்களுக் கமையத் தண்டிப்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுவர்களின் பரிதாப நிலையை மாற்றுவதற்கான நடவடிக் கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதன் மூலமே மேற்படி சீரழிவுக்கான காரண காரியத்தொடர்புகளை அறுக்கலாமென சிறுவர்களின் ஆய்வு, பாதுகாப்பு, மேம்பாடு ஆகியவற்றுக்குத் தம்மை அர்ப்பணித்துள்ள யுனிசெப் நிறுவனத்தினதும் ஏனைய அமைப்புக்களினதும் அனுபவங்கள் காட்டுகின்றன.
விபசாரம், ஆபாச நடவடிக்கைகள் அடங்கலான பாலியல் சார்ந்த சுரண்டல் மற்றும் இம்சைகளிலிருந்து சிறுவர்களையும் சிறுமிகளையும் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை சிறுவர்கள் உரிமைகள் பற்றிய சமவாயம் வலியுறுத்துகிறது. (உறுப்புரை34) சிறுவர்களைக் கடத்திச் சென்று விற்பனை செய்தல், பரிமாற்றம் செய்தல் ஆகியன பற்றியும் கவனம் செலுத்தியுள்ளது. (உறுப்புரை35), பெற்றோர், சட்டப்படியான பாதுகாவலார் அல்லது பிள்ளையைப் பராமரிக்கும் பணி சுமத்தப் பெற்ற வேறெவரினதும் கண்காணிப்பிலுள்ள

30
சிறுவர்களின் பாலியல் இம்சைகளை 19 ஆவது உறுப்புரை விவரிக்கிறது. மேற்குறித்தவாறான சகல நிலைமைகளிலிருந்தும் சிறுவர்களைக் காப்பாற்றவும் துஷ்ப்பிரயோகத்தைத் தடுத்தல், துர்ப்பிரயோகத்துக்கு ஆளானவர்களுக்குச் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்கான செயல்திட்டங்களை உருவாக்கவும் தகுந்த, சட்டவாரியான வழிவகைகளை உறுதிப்படுத்துவது சமவாயத்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ள நாடுகளின் கடமையாகும்.

Page 17
பெண் குழந்தை
அநேகமாக எல்லாச் சமுதாயங்களிலும் ஏழைகளும் பணக்காரர்களும் பெண் பிள்ளளைகளைப் பார்க்கிலும் ஆண் பிள்ளைகளின் ஆரோக்கியமான மேம்பாட்டையே விரும்புவது சமூகத் கருத்தோட்டமாக விளங்குகிறது. செல்வ நாடுகளில் பெண்களுக்கு எதிரான மனப்போக்கு கல்வி அமைப்புக்களிற் பிரதிபலிப்பதைக் காணலாம். ஆண்களுக்கே பிரத்தியேகமானவை எனக் கருதப்படும் துறைகளில் படிக்கவோ வேலை வாய்ப்புப் பெறவோ இடமளிக்காத வகையில் கல்வித் திட்டங்கள் அமைந்துள்ளதைக் காணலாம். பெண்கள் வெற்றிபெறும்போது, ஆண்கள் செய்யும் அதே பணியைச் செய்தாலும் குறைந்த ஊதியமே பெறக் கூடியதான உத்தியோகங்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதிகார பலமுள்ள பதவிகளும் அரிதாகவே கிடைக்கின்றன.
பல நாடுகளில் பெண் குழந்தை பெறுவதைத் தவிர்க்கும் பொருட்டு பெற்றோர் கருச்சிதைவு செய்துகொள்கிறார்கள். பம்பாயில் ஆண், பெண்வாரியான பரிசோதனையை அடுத்து 8000 கருச்சிதைவுகள் தொடர்பாக நடத்தப்பெற்ற ஆய்வின் போது சிதைக்கப்பட்ட கருக்களில் 7999 பெண் கருக்களாக இருக்கக் காணப்பட்டன. கருச்சிதைவு, பெண்சிசுக்கொலை, பெண் குழந்தைகளைப் புறக்கணித்தல் ஆகியவற்றின் விளைவாக டெல்லியில் 1000 ஆண்களுக்கு 809 பெண்கள் என்ற விகிதாசாரமே காணப்படுகிறது. பூப்பெய்தும் பருவ முதல் பிற்கால வாழ்க்கை வரை பெண்ணானவள் பாகுபாட்டுக்கு இலக்காகிறாள். தமது ஆற்றாமைகளை அவர்கள் பெரும் பாலும் தமது பெண் குழந்தைகள் மீது சுமத்தி விடுகிறார்கள். பூப்பெய்தும் பருவத்தில் ஆண்களைப் பார்க்கிலும் பெண்கள்
毒性 இப்பகுதியும் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிலையம் என்ற யுனிசெப் பிரசுரத்திலிருந்து எடுக்கப்பட்டது) யுனிசெப்பிற்கு எமது நன்றி.

32
டுதலான அளவில் தமது சுயகெளரவத்தை இழப்பதான உணர்வைப் பெறுகிறார்கள் என்று அமெரிக்காவில் ஹாவார்ட் பல்கலைக்கழகமும் அமெரிக்கப்பல்கலைக்கழகப் பெண்கள் சங்கமும் அண்மையில் நடத்திய ஆராய்ச்சி மூலம் தெரியவருகிறது.
'பால்சார்ந்த பாகுபாடு, ஆகாரத்தினால் உண்டாகும் உடற் கோளாறுகள், சஞ்சல உணர்வு, தற்கொலை எத்தனங்கள், வறுமை ஆகியவற்றின் தாக்கத்தினைப் பெண்கள் பூப்பெய்தும் பருவத்திலேயே முதன் முதலாக அனுபவிக்கத் தொடங்கு கிறார்கள். பெண்களைத் தமது கருத்துக்கள், கனவுகள், பிரச்சி னைகள், ஆகியவற்றில் கவனம் செலுத்தச் செய்வதன் மூலம் சுயகெளரவத்தை இழப்பது போன்ற உணர்வை அகற்றுதற்கு உதவும் பொருட்டு, அரசசார்பற்ற நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றன. பெண்களை அவர்களின் நன்நடத்தைக்கும் தோற்றத்துக்கும் அல்லாமல் எண்ணங்களுக்கும் கருத்துக் களுக்குமாக மதிப்பதை உறுதிப்படுத்துவதே நாடளாவிய இயக்கங்களின் குறிக்கோளாகும்.
வளர்முக நாடுகளில் பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள சமத்துவமற்ற நிலைமையை பல்வேறு வகைகளில் காணலாம். போசாக்கின்மை, மரண விகிதாசாரம், என்பன பெண்கள் மத்தியில் ஆண்களிலும் அதிகம், ஆக்கத்திறனை உயர்த்தவும், வேலைப்பளுவைக் குறைக்கவும் வழிசெய்யக்கூடிய கல்வி மற்றும் நுட்பங்களை பெறும் வாய்ப்பு பெண்களுக்குக் கிடைப்பதில்லை. சமரீதியில் பெண்களின் முழுமையான அந்தஸ்தை வென்றெடுப்பதற்கான சீர்திருத்தங்களைப் புகுத்தும் கொள்கை மட்டங்களில் இடம் பெறும் வாய்ப்புக்களும் பெண்களுக்குக் கிடைப்பது குறைவு.
பெண்களுக்கு ஒரவஞ்சகம் செய்வதன் விளைவு பாரதூரமானதாகலாம். எந்தச் சமுதாயத்திலும் பெண்களின் அந்தஸ்து எதிர்காலச் சந்ததிகளின் மீது அழியாத முத்திரையைப் பதிக்கிறது. தாய்மார் என்ற வகையிலே தமது பிள்ளைகளின் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் மட்டுமல்லாமல் அவர்களின் கருத்தோட்டங்கள், ஆற்றல்கள் ஆகியவற்றின் விருத்திக்கும்

Page 18
33
பெண்களே பொறுப்பாளிகள். சிறுவர்களின் ஆரோக்கியமும் உய்வும் தாய்மாரின் கல்வி அறிவு மட்டத்துக்கு ஏற்றவாறு உயர்கிறதென்று வளர்முக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆயினும் அநேக ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் 40 சதவீதமான பெண்களே எழுதவோ வாசிக்கவோ கற்றவர்களாயிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டில் ஆரம்பக்கல்வி பெறும் வாய்ப்பை இழந்த 6-11 வயதுக்குட்பட்ட 1000 லட்சம் சிறுவர்களில் 600 லட்சம் பேர் பெண்களாவர். இவர்கள் கல்வி கற்கும் உரிமையை இழந்தமைக்கான காரணங்களில் பின்வருவனவும் அடங்கும்.
பெண் பிள்ளைகளுக்கு எழுத்தறிவைப் புகட்டுவதில் பெற்றோர் அக்கறை கொள்ளாமை, பாடசாலைகளில் ஆசிரியைகள் இல்லாமை. பாடநூல்களும் ஆசிரியர்களும் ஆணாதிக்கத்தை வலியுறுத்தியமை. பெண்பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே அனுப்புவதற்குப்பயம். மலசல கூடம் போன்ற அடிப்படை பாடசாலை வசதிகள் பெண்பிள்ளைகளுக்கு இல்லாமை.
மேற்படி இடர்ப்பாடுகளுடன் வறுமை, பாடசாலை இடவசதி அல்லது போக்குவரத்து பற்றாக்குறை, பாடநூல்களின் விலை, வறிய நாடுகளில் வாழும் சிறுவர் சிறுமியர்கள் உழைத்துப்பணம் சம்பாதிக்க வேண்டிய கடப்பாடு என்பன நிலவுவதைப் பார்க்கும் போது கல்வி தொடர்பான ஏற்றத்தாழ்வு இலகுவாகவோ துரிதமாகவோ அகலமாட்டாது என்றே தோன்றுகிறது.
சிறுவர் உரிமை பற்றிய சமவாயத்தின் ஆணிவேர் போன்ற கோட்பாடு சிறுவர்களின் சமத்துவம், பாரபட்சமற்ற மேம்பாடுமேயாகும். உறுப்புரைகளின் பயன்கள் சிறுவர்சிறுமியர் இருசாராருக்கும் சமமாகக் சேரவேண்டுமெனச் சமவாயம் குறிப்பிடுகின்றது. 2வது உறுப்புரையானது,

34
எல்லா உரிமைகளும் ஆண், பெண் இருபாலாருக்கும் சமம் எனக் குறிப்பிடுகின்றது.
பல நாடுகளில் சமவாயத்தைக் கவனிக்கத் தொடங்கியுள்ளமைக்கான அறிகுறிகள் புலப்படுகின்றன. ஆசியாவில் பல கலாசார பாரம் பரியங்கள் பெண்களுக்குக் கீழான அந்தஸ்தையே கொடுத்து வந்துள்ளன. ஆனால் அண்மைக்காலத்தில் பெண் பிள்ளைகளின் பரிதாப நிலைமை குறித்து தேசிய, பிராந்திய வாரியான கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. பிராந்தியக் கூட்டுறவுக்கான தென்னாசியச் சங்கம் (சார்க்) 1990 ஆண்டை பெண்களின் ஆண்டாக அனுட்டித்ததுடன் ஆண், பெண் ஏற்றத் தாழ்வுகள் தொடர்பான விடயங்களிலுள்ள அக்கறையை விரிவாக்கும் பொருட்டு பெண்கள் தசாப்தம் அனுட்டிக்கவும் தீர்மானித்தது. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளும் 1990களில் பெண் பிள்ளைகளின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க முன்வந்துள்ளன. இவையும் ஏனைய முயற்சிகளுள் பெண் வெறுமனே ஒரு மகள், சகோதரி எதிர்கால மனைவி, தாய் அல்லது எவரோ ஒருவரின் சொத்து என்னும் நிலையிலிருந்து தனிநபர் என்னும் அந்தஸ்தைப் பெற உதவிவருகின்றன.
அநேக வளர்முக நாடுகளில் ஆண், பெண், பாலாருக்கிடையிலான தாரதம்மியம் சார்ந்த விடயங்கள் பற்றிய ஆய்வுகளில் கீழ்க் காண்பன கவனத்திற் கொள்ளப்படுகின்றன.
வளர்ப்பு, போசாக்கு, சுகாதார பராமரிப்பு, கல்வி என்பன ஆண், பெண் இருபாலாருக்கும் சமமாகக் கிடைக்கச் செய்தல். ஆண் குழந்தைகளைப் பார்க்கிலும் குறைந்த காலத்துக்கே பெண் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டப்படுகின்றது, ஆகாரத்தில் போசாக்கு அளவும் பெண் பிள்ளைகளுக்குக் குறைவாகக் கிடைக்கின்றது. ஆண்பிள்ளைகளைப் போலன்றி பெண் பிள்ளைகள் நோய் முற்றிய பின்னரே சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றெல்லாம் பல்வேறு ஆய்வுகள் எடுத்துக் காட்டியுள்ளன.

Page 19
35
* பெண்கள், திருமணம் செய்யக் கூடிய ஆகக்குறைந்த வயதெல்லையை நிர்ணயித்தல்,
இளம்வயதில் மணம் செய்யும் பெண்களுக்கு வீட்டுக்கு வெளியே ஏதாவது பயனுள்ள பணிகளில் ஈடுபடும் வாய்ப்புக்கிடைப்பது அரிது. இதன் விளைவாக அவர்கள் இளமையிலிருந்து நெடுங்காலத்துக்குக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டே இருப்பர். இதனால் தாய் நோயாளி யாவதுடன் பிள்ளைகள் சனப்பெருக்கம் அதிகரிப்பதற்கு ஏதுவாகின்றன. வங்காளாதேசத்தில் 15-19 வயதுக்குட்பட்ட பெண்களில் 71.8 சதவீதமானவர்கள் மணமானவர்கள். ஒப்பீட்டளவில் 7.4 சதவீதமான ஆண்கள் இவ்வயதில் மணம் புரிகிறார்கள்.
* சிறுமியர் மற்றும் பெண்களின் நிலைமை பற்றியும் தேசங்களின் பொருளாதார, சமுக மேம்பாட்டில் அவர்கள் ஆற்றியுள்ள பணி பற்றியும் புள்ளி விவரத் தரவுகளைச் சேகரித்தல்
米 பெண்களின் வேலைப்பளுவைக் குறைத்தல்.
அவர்கள் சமவயதுள்ள ஆண்களைவிடக் கூடிய நேரம் வேலை செய்வது வழக்கமாகிவிட்டது. ஜாவா தேசத்தில் பெண்கள் வீட்டு வேலைகளிலும் சந்தைகளிலும் நாள்தோறும் 33 சதவீதம் கூடுதலான நேரத்தைச் செலவிடுகிறார்கள். சில பருவத்தினர் அதே வயதையொத்த ஆண்களிலும் 85 சதவீதம் கூடுதலாக வேலை செய்கிறார்கள்.
* பாலியல் வாரியாகவும் வேறு வகையிலும் பெண்களைச் சுரண்டி வாழ்வதை முறியடித்தல்.
இவர்கள் பூப்படைந்த பருவத்தில் எயிட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய்க்கும் அதைச் சார்ந்த துன்பங்களுக்கும் இலக்காகும் பரிதாப நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது.

36
சிறுமியர், பெண்கள் ஆகியோரின் நிலைமை பற்றி அதிக அக்கறை கொள்ளுதல் அவசியம். அரசாங்கங்கள் இதில் கரிசனை காட்டுவதானால் பணம் செலவிடத் தயாராக இருக்கவேண்டும் பெண்களுக்குச் சார்பாக சட்டங்கள் இயற்றவேண்டும், வீட்டிலும் வேலைத்தளங்களிலும் சமத்துவம் நிலைபெறுவதைக் கண்காணிக்க வேண்டிய தேவையும் இருந்து வருகிறது. பெண்களின் சேவை எந்தத்துறையிலும் தாழ்வானது, அவர்களின் அந்தஸ்து குறைந்தே இருக்கவேண்டுமென்னும் எண்ணத்தை மாற்றும் பொருட்டு பொதுமக்களுக்கு அறிவூட்ட வேண்டிய தேவையும்இருந்து வருகிறது. கண்கண்டதே காட்சி என்பார்கள். பொருளாதார, சமூக முன்னேற்றத்துக்கு உந்துசக்தியாகப் பெண்கள் விளங்குகிறார்கள் என்னும் உண்மையை உணர்த்துவதற்கு அவர்களின் பணியைப் பேணிப் பாராட்டுதல் அவசியம்.

Page 20
பெண்பாவத்தின் ஆயிர முகங்கள்.
என்.எஸ்.ஜகந்நாதன்
"சமுதாயத்தின் உற்பத்திக்கான சக்தியாக திகழும் அவளுடைய நிலையை இன்றைய சமுதாய அமைப்பின் ஆதிக்கக் கோட்பாடுகள் நாலியும் பீலியுமாகக் குதறி எறிய முற்பட்டிருந்தும் ஒரு வார்த்தை கேட்கத்தெரியாதவளாக இருக்கிறாள். உயிரற்ற அணிகளால் கவர்ச்சி என்ற பொய்மையைத் தன்னில் ஏற்றிக் கொள்வதைத் தன் வாழ்வுக்கான சாயுச்சியம் எனக் கருதி, அதற்காகத் தனது ஏனைய மேன்மை நயங்களைப் பணயமாக்க அவள் தயங்குவதில்லை. கற்பொழுக்கம் என்ற கோலினால் அவளை குற்றுயிராக அடித்துக் குப்பையில் தள்ளினாலும் அந்த அடியை உவந்து ஏற்றுக்கொள்வது போல் தலை வணங்குவதுடன், குப்பையில் தானே விழுந்ததாக, அந்தப் பழியையும் குற்ற உணர்வையும் தானே சுமக்கிறாள். இவளுக்கு அறிவு இருக்கிறது. ஆனால் அது இயங்குவது நின்று எத்தனையோ காலமாகிவிட்டது.
"ஏன் இந்த சூழ்நிலை? இந்த முடக்கம் எப்படி நேர்ந்தது?
நான் அண்மையில் படித்த ராஜம் கிருஷ்ணனின் "காலந்தோறும் பெண்” * என்ற நூலின் குவிமையம் இதுதான்.
பொறி பறக்கும் சீற்றம் வாத நெறிகளை மதிக்கும் நேர்மையில் கட்டுப்படும்போது இதன் நியாயம் மேலும்
* காலந்தோறும் பெண் : ராஜம் கிருஷ்ணனன் தாகம்சென்னை இரண்டாம் பதிப்பு

38
உறுதிப்படுகிறது. ரிக்வேத காலத்திலிருந்து இன்று வரை படிப்படியாக இறுக்கப்பட்டு வந்துள்ள கலாசார, சமய மரபுத்தளைகள், இத்தளைகளையே ஆபரணங்களாக அணிந்து உவக்கும் பேதமை , இவ்விரண்டைப்பற்றி வரலாறு அளிக்கும் சான்றுகளையும் நிகழ்காலத்தில் கண்கூடாகத் தெரியும் பிரத்தியட்சங்களையும் அவரது நாவலாசிரியர் திறனைப் பயன்படுத்தி ஒன்றோடு ஒன்றாகப்பின்னி பெண்ணினத்திற்கு காலங்காலமாக இழைக்கப்பட்டு வந்துள்ள, வந்து கொண்டிருக்கும் கொடுமையின் பல்லாயிர முகங்களை, இந்திய ஆணினம் மட்டுமின்றி பெண்ணினமும் கண் கூசுமளவிற்குப் பளிச்சிட்டுக் காட்டியிருக்கிறார்.
ராஜம் கிருஷ்ணனின் வாத இழை இவ்வாறு அமைகிறது. ரிக்வேத காலத்தில் ஆணினத்திற்குச் சரிநிகர் சமானமாக வாழ்ந்து வந்த பெண்ணினம் காலப்போக்கில் பல சமூக அமுக்கங்களின் விளைவாக எழுந்த பாலினக் கொடுமைகளால் ஒரு நிர்பலையாக பாதுகாக்கப்படவேண்டிய, சகிக்க வேண்டிய அலங்காரப் பொருளாக மாறிவிட்டது. அண்மைக் காலத்தில் பெயரளவில் சுதந்திரையாக்கப்பட்ட இந்தியப் பெண் பழைய தளைகளிலிருந்து முழுமையாக விடுதலை பெறாமல், புதிய தளைகளை சில சமயங்களில் உவந்தே ஏற்றுக் கொள்ளும் அவல நிலையில் இருக்கிறாள். இப்புதுச் சங்கிலிகள் பழைய சம்பிரதாய விலங்குகளை விட வசீகரமானவை, கொடுமையானவை. பெண்களை அலங்காரப் பொருள்களாகவும் சுவைக்கும் சாதனங் களாகவும் கருதும் உலகளவில் வியாபித்து உள்ள நோக்குகள் பாரத சம் பிரதாயத் தில் தழைத்து வந்துள்ள கொடுமைகளுடன், இவை ஓரளவு தளர்ந்து விட்டிருந்தாலும் இணைந்து பாரதப் பெண்ணினத்தின் சமூக பொருளாதார, உளவியல் சுமைகளை அதிகரித்திருக்கின்றன.
என்னைக் கேட்டால் ராஜம் கிருஷ்ணன் இதை ஒத்துக் கொள்வாரோ என்று எனக்குத் தெரியாது. இந்தியப் பெண்ணின், துல்லியமாகச் சொன்னால், நடுத்தர வர்க்கத்துப் பெண்ணின் மீது இன்று இழைக்கப்படும் அநீதிகளின்

Page 21
39
கொடுமை, வரலாற்றுக் கொடுமைகளைவிட மோசமானவை. போலிச்சுதந்திரமும் சந்தைப் பொருளாதாரமும் , முன்பு அடிமைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பையும் மேலினத்தினரிடமிருந்த பொறுப்புணர்வுகளையும் சிதைத்து பெண்களை பொருளாதார , சமூக உளவியல் அபலை களாக்கி விட்டுள்ளன. இன்று டெலிவிஷன் விளம்பரங்களிலும், சினிமாக்களிலும் பெண்ணினம் சித்திரிக்கப்படும் விதத்திலிருந்தது இது நன்கு புலனாகும். அண்மையில் * சித்ரஹார் நிகழ்ச்சியை யதேச்சையாகப் பார்த்தபோது, இத்தகைய படங்களை எடுப்பவர்கள், அதில் நடிக்கும் ஆண்கள், பெண்கள், அதைத் திரையிடும் தொலைக்காட்சி அதிகாரிகள் எல்லோரும் சுட்டுக் கொல்லப்படவேண்டும் என்று எனக்குப்பட்டது.
ராஜம் கிருஷ்ணன் நோக்கில், இந்திய பெண்ணினத்தின் பொற்காலம் ரிக்வேத காலம். “பெண்மை என்ற முழுமையில் விகசிக்கும் முதல் இயல்பாய் தாய்மைக்கு கற்பு வளையமிட்டுப் பிணிக்கும் சிந்தையின் ரேகையும் கூட ரிக்வேத பாடல்களில் இல்லை. ரிக்வேத பெண் தெய்வங்கள், ரிஷி பத்தினிகள் எல்லோரும் சுவந்திரைகள். "மூப்பும் வாட்டமறியாத" எல்லையற்ற அதிதி, அள்ளியளிக்கும் ப்ருத்வி, நல்ல பயிர் விளைச்சலுக்கு அருள் பாலிக்கும் விதா (கலப்பை), ஒளியை அள்ளி வீசும் உஷஸ், "மண்ணகத்துக் கன்னியர் கட்டுப்படாத சுதந்திர நிலையில் நடமாடுகையில் தொடர்ந்து செல்லும் இளைஞர்களைப்போல் இவளைப் பல தேவர்கள் தொடர்ந்து வருகின்றனராம்", ஒரேபாட்டில் துதிக்கப் பட்டுள்ள ராத்ரி எனும் இரவுத் தேவதை இவர்கள் எல்லோருக்கும் நாயகர்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் பிற்காலக் கற்புநெறியின் ஒரு இழையோட்டத்தைக் கூட ரிக்வேத்தில் காண்பதற்கில்லை.
மானிடப் பிறவிகளான பெண்களும் ஆண்களுக்குச் சமமாக உபநயனம் செய்விக்கப்பட்டு "வேதவித்து" களாகவே திகழ்ந்தனர். “எப்படிப் பார்த்தாலும், ரிக்வேத காலத்தில், கல்வியறிவு பெண்களுக்கு மிக உயர்ந்த நிலையில் கட்டாயமாகக் கொடுக்கப்பட்டிருந்தது எனத் தெளிவாகிறது".

40
மேலும் கல்வியறிவில் மட்டுமின்றி போரிடும் கலையிலும் பெண்கள் சிறந்து விளங்கினர். கேல அரசனின் மனைவி விஸ்பலாவும் முத்கலரின் மனைவி முத்கலானியும் இதற்கு உதாரணங்கள். “காற்றில் மேலாடை வீசிப் பறக்க அம்புகளைச் சரமாரியாகப் பொழிந்து, தோற்றோடும் பகைவர் கதி கலங்கத் துரத்திச் சென்றதும், கொன்று குவித்ததும்" (ரிக் வேதத்தில் ) வருணிக்கப்படுகிறது.
மற்றும் பல சமூகங்களில் நிகழ்ந்தது போலவே இந்திய சமூதாயத்திலும் பெண்ணினம் வரலாறு துவங்கிய நாட்களிலிருந்து ஒடுக்கப்பட்டு வந்திருக்கிறது என்பது பற்றி சந்தேகம் ஏதுமில்லை ஒரு சில பழங்குடி மக்களிடை தவிர உழைப்புப் பிரிவினையென்ற சமூக செளகரியமும் உடைமை என்ற பொருளாதார அமைப்பும் தலையெடுக்கத் தொடங்கிய பிறகு பெண்ணினத்தின் உயிரியல் அமைப்புக்களிலிருந்து எழுந்த பலவீனங்கள் அதை ஆணினத்தின் ஆதிக்கத்திற்கு உள்ளாக்கத் தொடங் கிவிட்டது. இதற்குப் பிறகு வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறு கதிவேகத்தில் ஏற்பட்ட சமூக அமைப்பு மாற்றங்கள், இவை மாறி வரும் பொருளாதார உறவுகள், உற்பத்தி சாதனங்களின் மேல் ஒருவருக்கு உள்ள ஆளுமை என்ற அஸ்திவாரத்தில் எழுதப்பட்ட கட்டுமானம் என்று மார்க்ஸியவாதிகள் சொல்லுவார்கள்- பெண்ணினத்தை பல்வேறு அளவிற்கு "அடிமை” களாக்கி விட்டன.
இதுவரை ராஜம் கிருஷ்ணனின் வரலாற்றுப் படிமத்துடன் எனக்கு வேறுபாடில்லை. ஆனால் பெண்களின் நிலை எப்பொழுது முடிவுற்றது, முக்கியமாக ரிக்வேத காலத்தில் பெண்ணினத்தின் படி நிலை எப்படி யிருந்தது என்பது பற்றி, குறியீடு என்கிற வகையில் அல்லாது, வரலாற்று உண்மை என்கிற வகையில் எனக்கு சில ஐயப்பாடுகள் எழுகின்றன. ரிக்வேதத்தின் காலம் அதிலுள்ள ஸம்ஹிதைகள் பாடும் தேவதைகள், முக்கியமாக பெண் தெய்வங்களின் குறியீட்டுப் படிமங்கள் பற்றி, நான் படித்தவரை தெளிவாக துல்லியமான ஒருமித்த விளக்கங்கள் இல்லை.

Page 22
41
பிற்காலப் புராணங்களையும் ஆதிகால வேதங்களையும் கால பாகுபாடில்லாமல் ஒரே தொடர்பாக (Continm)நிறுவி மனு காலத்து நியதிகளுக்கு வேதங்களில் நியாயம் கற்பிக்கும் சம்பிரதாய சமய வியாக்யானங்களை மறந்து விடுவோம். ரிக்வேத தேவதைகளுக்கு வெவ்வேறு புராணங்கள் கொடுத்துள்ள ஒன்றுக்கொன்று முரணான பின்னணிகளையும் பரஸ்பர உறவுகளையும் ஒதுக்கிவிடுவோம். ஆனால், ஸம்ஸ்கிருதத்திலும் மொழியியலிலும் நுண்ணறிவு உள்ள சார்பற்ற வல்லுநர்கள், ரிக்வேத தேவதைகள் பற்றிச் சொல்லியுள்ள கருத்துக்களை உதறித்தள்ளுவதற்கில்லை. இவர்கள் சொல்வதையெல்லாம் "வேதவாக்காகக் கொள்ளத்தேவையில்லை எனினும், தங்கள் ஆய்வுகளில் கிட்டும் சான்றுகளை பெண்மையை சிறுமைப்படுத்தும் வகையில் வேண்டுமென்றே திரித்து இவர்கள் அளிக்கமாட்டார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். பீடிகைக்குப் பிறகு விஷயத்திற்கு வருகிறேன். ரிக்வேதத்தைப் பற்றி நான் படித்த மிகசில புத்தகங்களில் அதிதியைத் தவிர வேறு எந்த பெண் தெய்வமும் ஆணினத்துக்கு சமமாகப் கருதப்பட்டதாகப் படித்ததில்லை. ராஜம் கிருஷ்ணன் கவிதை நெகிழ்ச்சியுடன் வர்ணித்துள்ள பொலிவுடன் ரிக் வேதத்தில் உலா வருகிறாள் அதிதி. "தேவானாம் வயம் ஜானப்ரவோசாம" -"தேவர்களின் பிறப்பின் அற்புதத்தைப் பற்றி பேசுவோம்" என்று தொடங்கும் புகழ் பெற்ற துதியில் சிருஷ்டியின் பெண் தத்துவ ரூபிணியான அத்தி, ஆண் தத்துவ உருவகமான (தக்ஷனுடன் கூடி உலகத்தையும் மற்றும் பல தேவர்களையும் ஈன்றெடுக்கிறாள். (தக்ஷனை அவள் மகனாகவும், அவளை தக்ஷன் மகளாகவும் இந்த துதி குறிப்பிட்டு, படைப்பின் மறைபொருளை ஒரு முரண்படு மெய்ம்மையாக்கி (paradox) நம் போன்றவர்களை மேலும் குழப்புகிறது. மற்றும் பல துதிகளில், ராஜம் கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளபடி, ஆதித்தியர்களுடன் மற்றும் பல மக்களைப் பெற்ற இவள் அம்மக்களை "பேணி நல்வழி நடத்திச் செல்லும் திறமையும் கருணையும் அன்புமுள்ள அன்னையாக" திகழ்கிறாள்.
ஆனால் வேறெந்த பெண் தெய்வமும் இத்தகைய

42
அருள் மாட்சியுள்ளவளாக ரிக் வேதத்தில் நிலவவில்லை. அண்மையில் மனு ஸ்ம்ரிதியை மொழிபெயர்த்துள்ள வெண்டி GLstøoflgift SPåliens)mpff Lq (Wendy Doniger O 'Flaherty) -Penguin classics -1991-) ரிக்வேதத்தையும் 1981ல் மொழிப் பெயர்த்திருந்தார் (Penguin Classics 1981) . ரிக்வேதத்தில் பெண்கள் பற்றிய இவர் குறிப்பு இவ்வாறு அமைகிறது.
"The Rig Veda is a book by men about male concerns in a world dominated by men :One of these concerns is women. who appear throughout the hymns as objects though seldom as subjects.... Adite is the only Vedic Goddess of the true Stature.
ராஜம் கிருஷ்ணன் "சுமங்கலி" என்ற பிணை பிற்காலத்தில் எழுந்தது என்று வாதிக்கிறார். வெண்டி டோனிகரின் கருத்து இதற்கு மாறாக இருக்கிறது.
"The marriage hymns (in Rig Veda) return again and again to the problem of sexual rejection...... Apaalaa fears that she will be rejected by her husband becaause she is not beautiful and this is a theme that haunts the marriage hymns; the women wishes to be subhaga: beautiful, hence loved by her husband, hence fortunate....'
ரிக்வேத காலப் பெண்கள் சுதந்திரிகைகளாக திகழ்ந்தனர் என்ற வாதத்தை நான் ஏற்கத் தயங்கும் காரணத்திற்காக வரலாறு இழைத்துள்ள கொடுமைகளைப் பற்றி ராஜம் கிருஷ்ணனின் கனமான கருத்துக்கோவையை ஏற்க மறுக்கிறேன் என்று யாரும் நினைக்கக்கூடாது. மாறாக ஆணின் ஆதிக்கம் ரத்தத்தில் ஊறிப் போன ஒரு சமுதாயத்தில் பெண்ணினத்திற்கு ஆதிகாலத்திலிருந்து இழைக்கப்பட்டு வந்து, இன்றும் மறையாதிருக்கும் ஒரவஞ்சகத்தின் பல ரூபங்களை அசாதாரணத் துணிவுடன் வெளிச்சமிட்டிருப்பதற்காக அவரை நான் தலை வணங்குகிறேன்.

Page 23
43
இது ஒரு புத்தக விமரிசனமாகமட்டுமிருந்தால் "முக்கியமான புத்தகம் . ஆண்கள் அவசியம் படிக்க வேண்டும். ஆண்களை விட பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டும்" என்ற அறிவுரையுடன் இந்த இடத்தில் முடிந்திருக்கும். எனினும் மதிப்பீடு என்ற முறையில் இல்லாத பல சிந்தனைகளை இந்தப் புத்தகம் என் மனதில் எழுப்பியிருக்கிறது. அவைகளை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலாவதாக “மனித இனத்தின் மடைமைகளின, கொடுமைகளின் தொகுப்புத்தான் வரலாறு என்ற கணிப்பில் இம்மடைமைகளையும் கொடுமைகளையும் பலவகைகளில் வரிசைப்படுத்தி பலவிதமான புனைவுக் கோலங்களை நிறுவ முடியும். பெண்களின் துயர் கதையைப் போலவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வந்துள்ள கொடுமைகளை சித்திரிக்க முடியும். இதைச் சுட்டிக்காட்டும் போது பெண்ணினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமை களிலிருந்து திசை திருப்புவதாகக் கொள்ளத் தேவையில்லை. சொல்லப் போனால் ஏழ்மையில் உழலும் பெண்ணினம் இருவித அட்டூழியங்களினால் இரட்டிப்பாக சிதைக்கப் பட்டிருக்கின்றது.
இரண்டாவதாக ரிக்வேதத்தில் பெண்ணின் மாட்சிமைக்கு ராஜம் கிருஷ்ணன் சொல்லும் அளவிற்கு சான்றுகளில்லை என்று சொன்னேன். ரிக்வேத மூலபாடங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் எழும் ஒரு வரலாற்று உண்மை பற்றிய தீர்வு, ஆனால் மனித வர்க்கத்தின் ஆதி காலத்தில் ஆண்-பெண் சமத்துவம் ஒரு சமூகக் கோட்பாடாகவோ, நடைமுறை வழியாகவோ இருந்திருக்காது என்று நான் சொல்லவில்லை. இன வளர்ச்சிக்குப் பெண்ணினத்தின் இன்றியமையாமையிலிருந்தே ஆதிகாலத்தில் பெண்மை வணங்கப்பட்டு வந்திருக்க வேண்டும். முன்னரே நான் சொன்னபடி, உழைப்புப் பிரிவினையும் தனி உடைமைகளும் சமூக அங்கீகாரம் பெறத் தொடங்கி பிறகு பெண்மையின் வீழ்ச்சி நிகழ்ந்திருக்க வேண்டும் வணங்கும் மரபு மானுடத்தின்

44
துவக்கத்தில் யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக இருந்திருக்க வேண்டும்."விமென்ஸ் லிப்” இயக்கத்தின் மாதா ஹியான க்ளோரியாஸ்டெயினம் அண்மையில் சொல்லியுள்ள Luig "Women's self-esteem has been valued in the past, not in the last eight or nine thousand years but in pre-history, in the cosmicearthmotherinindigenous religions'. -gdCol iflóGog, காலத்தில் இல்லாவிட்டாலும் அதிதியின் மூதாதைய அன்னை ஆணினத்திற்குத் தலை வணங்காது நிமிர்ந்து நடமாடும் தேவதையாக திகழ்ந்திருக்க வேண்டும்.
மூன்றாவதாக, பிற்கால சமய, கலாச்சார ஆண் மேலாண்மையிலிருந்து விடுதலை பெற இந்தியப் பெண்ணினத்திற்கு வரலாறு அளித்த ஒரே வழி பக்தி மார்க்கம். மேலே போகு முன் ஒரு சிறிய திசை திருப்பம் ஆண்மை என்று சொன்னாலே ஆண் ஆணவத்தாக்குக்கு ஒரு சான்று ஆணவம் என்ற சொல்லும் அப்படியே தானோ?
காரைக் கால் அம்மையார், ஆண்டாள், மீரா, மஹாதேவியக்கா போன்றவர்கள் கடவுளைக் கணவனாக வரித்த காரணத்தினால் சமய சாதி நெறிகளிலிருந்து ஏன் சம்பிரதாய நடத்தையிலிருந்து கூட விடுபட்டவர்களாகி விட்டனர். வீர சைவ இறை மரபை தனதாக்கிக் கொண்ட மஹாதேவி, வீடு வாசல் சுற்றம் என்ற எல்லா சம்பிரதாய பிணைப்புகளை மட்டுமின்றி உடையலங்காரங்களையெல்லாம் கூடத் துறந்து தனது கூந்தலையே தனது நாணத்தைக் காக்கும் ஆடையாக உடுத்துக் காமுகர்கள் நடுவில் தான் வரித்த கடவுள் கணவனின் அருளுக்காகத் தேடி அலைந்து கொண்டிருந்தார். அவருடைய வசனங்கள் தனிப் பொலிவு பெற்றவை. (கன்னடம் தெரியாது, ஆங்கில ஞானமுடையவர்கள் ஏ. கே. ராமனுஜனின்(ரூஆக்ஷபுவூ'பூ "த ரூவூழிக்ஷ ) என்ற கன்னட வீர சைவக் கவிதைகளின் மொழி பெயர்ப்பைப் படித்து இன்புறலாம்.)
அடக்கியாளப்பட்ட பாலினமான பெண்ணினம் பக்தி

Page 24
45
மார்க்கத்தின் மூலம் விடுதலையடையாத போது தனது அடிமைத் தளைகளைத் தாங்கிக் கொள்ள எந்த விதமான உத்திகளைக் கையாண்டது? உயிரியல் அதற்களித்த தனித்தன்மைகளை பயன்படுத்திக் கொண்டு ஆண்களைத் தனது தற்காலிக அடிமைகளாக மாற்றிக் கொள்வது ஒரு உபாயம். வசந்தசேனை, மாதவி, சிந்தாமணி, சித்ராங்கதை போன்ற இலக்கியக் காமக்கிழத்திகளின் பல்லாயிரக்கணக்கான எதார்த்த வாழ்க்கை வாரிசுகள் ஓரளவு வெற்றியுடன், குறுகிய காலத்திற்கு பயன்படுத்திய கொச்சைப்படுத்தப்பட்ட பெண் சக்தி!
குடும்ப சூழ்நிலையிலும் இதனுள் அடங்கி யிருக்கும். ரண நீதி பயனளிக்கும்.
அம்பை எழுதிய வீட்டு முலையில் ஒரு சமையலறை என்ற கதையில் ஒரு மூதாட்டி கணவன் வீடு செல்லவிருக்கும் தனது மகளுக்கு ஒரு அழகான அறிவுரை வழங்குகிறாள். ஆபரண பூஷிதையான உனது உடலின் வசீகரம், அடுக்களை, கமரா உள், இவ்விரு அறைகளின் சாவிக்கொத்து இவையிரண்டும் தான் உனது கவசம் என்று. விதவை யானவுடன் கைமாறும் சாவிக்கொத்தும் அழகழிந்த பிறகு சிதையும் பாலாஞமையும் ஆண்கள் உலகில் எளிதில் முறிகிற, “பாராசக்தியின வலிமையைப் பளிச்சிடுகின்றன.
ஆனால் இந்த இருமுனை சக்தி நீடிக்கும் வரை, ஆண்களை மட்டு மல்லாமல் தங்கள் இனத்தவரையும் அடக்கியாளமுடியும். மாமியார் மருமகளையும் மருமகள் மாமியாரையும் வாட்டி வதைப்பதும் ஒரு மரபாக இயங்கி வரும் ஒரு சமூகத்தில் பெண்ணினம் பெண்களைக் கொடுமைப்படுத்துவது தாழ்த்தப்பட்டவர்கள் தம்மின் மெலியாரை ஒடுக்கும் கொடுங்கோல் (Subaltern tyranny ) என்று தான் கொள்ள வேண்டும்.
திரும்பவும் புத்தகத்திற்கு வருகிறேன். பெண்ணினத்திற்கு இழைக்கப்பட்ட வரலாற்றுக் கொடுமைகள் பற்றிய

46
சான்றுகளை விட இப்புத்தகமளிக்கும் இன்றைய கொடுமைகளின் பிரத்தியட்சங்கள் என்னை மிகவும் வாட்டி வெட்கப்படுத்தின. வரலாற்று அதீதங்கள் என் கண்ணெதிரில் நடக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் விதவைகளுக்கு அருள் பாலிக்க மறுக்கும் சமயக்குரவர்கள், பெண்ணினத்தின் வேட்கைகளை கொச்சைப்படுத்தும் நுகர் பொருள் வியாபாரிகள், இவர்கள் எழுப்பும் கிளர்ச்சிகள் காரணமாகவே வளர்க்கப்பட்டு வரும் வரதக்கூடிணை கொடுமைகள், இன்றும் பின் தூங்கி முன்னெழுந்து கணவனர், மக்கள், மாமி, மாமனார், எல்லோருக்கும் சிச்ரூஷை செய்வது மட்டுமின்றி, பணியிடத்தில் பல சிறுமைகளையும் வேண்டாத நெருக்கங்களையும் சகித்துக் கொள்ளும் நிர்ப்பந்தங்களை சுதந்திரம் என்று எண்ணும் பேதைப் பெண்கள்!
புதிய சட்ட நெறிகள், படிப்பு வசதிகளின் பெருக்கம், வளர்ந்து வரும் பொருளாதார ஆளுமை போன்ற காரணங்களால், தனது வரலாற்றுத் தளைகளை உதறிவிட்டு, ஆதி பராசக்தியின் உருவகமாக பெண்ணினம் இன்று நடமாடுகிறது என்ற மயக்கத்தை இவையெல்லாம் தகர்க்கின்றன
நன்றி கணையாழி

Page 25
அடித்தள மக்கள் மீதான பாலியல் வன்முறையும் நாட்டார் வழக்காறும்
ஆ . சிவசுப்பிரமணியன் ச்
"பெயர் அறியப்படாத மக்கள் கூட்டத்தைத் காலந்தோறும் நாகரிகச் சமுதாயங்கள் தம்மகத்தே கொண்டுள்ளன" என்று கூறும் கவிஞர் தாகூர், "இக்கூட்டமானது விளக்குத் தண்டைப் போன்று நாகரிக விளக்கைத் தன் தலையில் சுமந்து கொண்டிருக்கிறது. விளக்கிலிருந்து கசிகின்ற எண்ணெயானது விளக்கைச் சுமப்பவர் மீது கசிந்து கொண்டிருக்க மேல்நிலை மக்கள் விளக்கின் ஒளியைப் பெறுகின்றனர்" என்று குறிப்பிடுவர்.
நாகரிக விளக்கின் ஒளியைப் பெறும் மேல்நிலை மக்களை மேற்கத்திய சமூக வியலாளர்கள் "மேலோர்"(Elite) என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் கருத்துப் படி இம்மேலோர்களே சமுதாய மேலடுக்கில் இருந்து கொண்டு சமுதாயத்தினை ஆள்வோர்களாக அமைகின்றனர். இவர்கள் பரம்பரையாக மேலோர்களாக இருக்கலாம் அல்லது அடிமட்டத்திலுள்ள ஒரு மனிதனோ குடும்பமோ மேலோர் களாக மாறலாம். மேலோர் மற்றும் மேலோர் குழு (Elite Group) குறித்துச் சமூகவியல் அகராதி ஒன்று பின்வருமாறு விளக்கம் அளிக்கும்.
மேலோர் :
ஒரு சமுதாயத்தின் தனி மனிதர்களைக் கொண்ட ஒரு சிறுபான்மைக் குழு(அல்லது) ஒரு வகைப் பிரிவு. இக்குழு சில வகையில் மேலதிகாரம் உடையதாக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளின் மீது தன் செல் வாக் கையோ கட்டுப் பாட் டையோ செலுத்தும்.
* இவர், தூத்துக்குடியில் உள்ள வ. உ. சிதம்பரம் கல்லூரி
தமிழ்த்துறையைச் சேர்ந்தவர்.

48
இவ்வாறு மேலோர் என்பதற்கு விளக்கம் அளிக்கும் சமூகவியலாளர்கள், தனிச் சொத்துரிமை உலகத்தாரால் உருவாக்கப்பட்டதே "மேலோர்” என்ற பிரிவு என்பதை மறந்து விடுகின்றனர். உற்பத்தியையும் மூலதனத்தையும் ஒரு சிலரது கையில் குவிக்கும் பொருளாதார விதிகளினால் "மேலோர்' உருவாகிறார்கள். இவ்வாறு உருவாகும் மேலோர், கடினமான உடலுழைப்பிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு இப்பணியைத் தமக்குக் கீழுள்ள சொத்துரிமையற்ற பிரிவிடம் ஒப்படைத்துவிடுகின்றனர்.
இம்மேலோர்களுக்கு நேர்மாறான வாழ்க்கை நிலையை உடையவர்கள் "அடித்தள மக்கள்” ( Subalterns ) ஆவர். இவர்களைத்தான் "விளக்குத் தண்டைப் போன்ற மக்கள்” என்று தாகூர் குறிப்பிட்டுள்ளார். எண்ணிக்கையில் அதிகமான அம் மக்கள் ஒரு சமுதாயத்தின் வளங்களில் பங்குபெற முடியாமல் "குறைந்த அளவு உணவு-குறைந்த உடை-குறைந்த கல்வி பெற்று வாழ்கின்றனர். இந்தியச் சமூகத்தைப் பொறுத்த அளவில், சுரங்கம் மற்றும் ஆலைத் தொழிலாளர்கள், மலைத் தோட்டத் தொழிலாளர்கள், கூலி மற்றும் குத்தகை விவசாயிகள், மீனவர்கள், சிறுநிலவுடமையாளர்கள், சிறு வணிகர்கள், கைவினைஞர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கீழ்நிலைப் பணியாளர்கள், உதிரித் தொழிலாளிகள் (Lumpens) ஆகியோர் அடித்தள மக்களாய் அமைகின்றனர். பொருள்வளம் மற்றும் பதவியின் காரணமாக மேல்நிலையில் உள்ளவர்களைக் கூட ஜாதீயக் கொடுமையின் காரணமாக அடித்தள மக்களாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
மொத்தத்தில் இந்தியச் சூழ்நிலையில் அடித்தள மக்கள் என்பதற்கு இப்படி ஓர் எளிய வரையறை செய்யலாம்.
சாதி, செய்யும் தொழில், அரசியலாதிக்கம், பாலியல் நிலைபொருளாதார நிலைஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் அல்லதுஅனைத்து நிலையிலும் தாழ்ந்திருக்கும் மக்களே அடித்தள மக்கள்.

Page 26
49
இக்குறைபாட்டினைப் போக்கும் வகையில் உருவான ஒரு வரலாற்றுக் கருத்துப் பள்ளியே "அடித்தள மக்கள் குறித்த் ஆய்வு (Subaltern Studies)" ஆகும். இப்புதிய வரலாற்றுப் பள்ளியானது நீண்ட காலம் காலனிய நுகத்தடியின் கீழிருந்த நாடுகளின் வரலாற்றை எழுதுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வரலாற்றில் தலையான இடம் பெறும் மேலோர் நிகழ்த்திய சாதனையைப் பற்றியல்லாமல், அச்சமுதாயத்தில் வாழ்ந்த அடித்தள மக்களின் பங்களிப்பு இச்சாதனைகளில் மறைத்துள்ளதையும் வெளிக் கொணர்வது அவசியமான ஒன்றாகும். அத்துடன் அடித் தள மக்களின் நியாயமான விருப் பங்கள், எதிர்பார்ப்புக்கள், அவற்றை அடையும் முயற்சியில் அவர்கள் எதிர்கொண்ட இடையூறுகள், நிகழ்த்திய போராட்டங்கள், அவர்களது வழிபாட்டு நெறி மற்றும் ஒழுக்க நெறிகளில் மேலோர் ஏற்படுத்திய தன்னிச்சையான சுயநலநோக்குடைய குறுக்கீடுகள் ஆகியன குறித்த உண்மைகளைக் கண்டறிவதே அடித்தள மக்கள் குறித்த ஆய்வின் நோக்கமாகும்
இவ்வாய்வு முயற்சியில் வழக்கமான வரலாற்று ஆவணங்கள் மட்டுமின்றி மக்களிடையே வழங்கும் வாய்மொழி மரபுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இடத்தில் வாய்மொழி மரபுகளை அடிப்படையாகக் கொள்ளும் வாய்மொழி வரலாறு (Oral History) என்பது குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது. (1)
வாய்மொழி வரலாறு
வாய்மொழிவரலாறு என்பது அரசியல் வரலாறு, சமுதாய வரலாறு பொருளாதார வரலாறு போன்ற வரலாற்றின் ஒரு பிரிவன்று. இது ஒரு வரலாற்று முறையியல் (Methodology) ஆகும். வாய்மொழி வரலாற்றில் சான்றுகள் (OralTestimony) முக்கிய இடத்தை வகிக்கின்றன. சுகோவ என்பவரது கருத்துப்படி "ஆவணங்களாகப்

50
பதியப்படாத வரலாற்று நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்களின் வாய்மொழிச் சான்றுகளைப் பயன்படுத்துவது வாய்மொழி வரலாறு ஆகும்." ஜான் வான்சினா (1965 : 19-20) வாய்மொழிச் சான்றுகளை
1. Sg5 GöOTGOOTIT Giv SSGöOTL6uir singiogoj (Eye witness account )
2. outtiolorfupply (Oral Tradition )
3. 6...g55g (Rumour) என் மூன்று வகையாகப் பகுப்பார்.
இவ் வாய் மொழிச் சான்றுகளில் நாட்டார் -பாடல்கள்-கதைப்பாடல்கள்-கதைகள் மற்றும் பழமரபுக் கதைகள் போன்ற வாய்மொழி வழக்காறுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவை எழுத்துவடிவில் பதிவு செய்யப்பட்ட பின்னரே "ஆவணம்" என்ற நிலையைப் பெற்று ஆய்வுக்குரிய தரவுகளாக அமைகின்றன. வாய்மொழிச் சான்று எவ்வாறு எழுத்து வடிவம் பெற்று ஆவணமாக மாறுகிறது என்பதைப் பின்வரும் வரைபடத்தின் வாயிலாக ஜான் வான்சினா (1965; 2:1) விளக்குவார்.
உண்மை அல்லது நிகழ்ச்சி
நோக்கர் ->தொடக்க அல்லது
தொன்மைச் சான்று
செய்திப்பரவலின் சங்கிலி->செவிவழிச் செய்தி
அல்லதுசெய்திச் சங்கிலித் தொடரில் ஒரு கண்ணி
இறுதித் தகவலாளர் ->கடைசி அல்லது இறுதிச் சான்று
பதிவு செய்பவர் முதல்-Pஎழுத்து ஆவணம்.

Page 27
51
இவ்வாறு வாய்மொழியாகப் பரப்பப்பட்டு ஒரு கட்டத்தில் எழுத்து வடிவம் பெற்று பின்னர் ஆவணமாக மாறும் வரலாற்று நிகழ்ச்சிகள் மேல் நிலை மக்களின் வரலாற்றைக் கூறுவதையே நோக்கமாகக் கொண்ட வரலாற்றாசிரியர்களால் எளிதாகப் புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் அடித்தள மக்களைக் குறித்த ஆய்வில் இவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு வாய்மொழிச் சான்றுகளைப் பயன்படுத்தும் பொழுது மரபுவழிப்பட்ட வரலாற்றுச் செய்திகளுக்கு நேர்மாறான முறையில் பல புதிய உண்மைகள் வெளிப்படுகின்றன.
தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால் தமிழ் நாட்டில் நிகழ்ந்த கொடிய பஞ்சங்கள்-நிலவுடைமைக்கொடுமைகள், ஜாதியக்கலவரங்கள், குடியானவர்களின் எழுச்சிகள்-சமூகம் சார் கொள்கையரின் தோற்றம்-பிழைப்பு நாடி மக்கள் அயல் நாடுகளுக்கு இடம் பெயர்ந்து சென்றமை-காலரா, பிளேக், போன்ற கொடிய நோய்களினால் ஏற்பட்ட பேரழிவு மக்களிடையே நிகழ்ந்த மத மாற்றம் என அடித்தள மக்களுடன் தொடர்புடைய ஆய்வுக்குரிய பல அம்சங்கள் உள்ளன.
இவை குறித்து அரசு ஆவணங்களை மட்டும் பயன் படுத்தாமல் வாய்மொழிச் சான்றுகளையும் இணைத்துப் பயன்படுத்தும்போதே உண்மையான வரலாற்றை எழுத (Մ)ւգ-պմ).
இக்கட்டுரையானது அடித்தள மக்கள் தம் வாழ்க்கையில் எதிர் கொண்ட " பாலியல் வன்முறை " என்ற சமூகக் கொடுமையைக் குறிக்கும், இக்கொடுமையை உணர்த்தி நிற்கும் நாட்டார் வழக்காறுகளைக் குறித்தும் ஆராய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வின் முதற்கட்டமாகப் பாலியல் வன்முறை என்பது குறித்து வரையறை செய்து கொள்வது அவசியமாகும்.

52
шта)шоу елетрGogo( Sexual Violence )
பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை(Sexual Offence)
1. ஆபாச சொற்களைக் கூறல், ஆபாசச்சைகை காட்டல், 2. நச்சரித்தல் மற்றும்கில்லறைச் சேட்டைகள்
Lyrfng56nj | (Molestation) , 3. வன்புணர்ச்சி அல்லது பாலியல் பலவந்தம் (ருகூCது)என
மூன்று வகையாகப் பகுக்கலாம்.
இவற்றுள் இறுதியாகக் கூறப்பட்ட பாலியல் பல வந்த த்தின் தொடக்க நிலையாக அல்லது முன்னோட்டமாக முதலிரண்டு குற்றங்களும் பெரும்பாலும் அமைகின்றன. இவ்விரு குற்ற நிகழ்வுகள் தொடர்பாக பள்ளு இலக்கியத்தில் இடம் பெறும் சில செய்திகளைக் கூறுவது இங்கு பொருத்தமாக இருக்கும்.
“முத்த பள்ளி முகம்பார்த்து
வார்த்தை சொல்லா ராம்-பெரு மூச்சுக் கொண்டிளைய பள்ளி பேச்சுக் கேட்பா ராம் சாத்திமகள் காத்தி தன்னைப் பேத்தி என்பாராம்-மெள்ளச் சன்னையாய்க் களத்திலே வா பின்னை என்பா ராம்"
என்று முதற்கூடற் பள்ளு கூறுகிறது. செண்பகராமன் பள்ளு வெற்றிலைக் காம்பை முறித்து மூத்தப்பள்ளியின் மீது எறிந்து அவள் தன்னைப் பார்த்ததும் "குச்சை” (குடில்) எட்டிப் பார்க்கும் பண்ணைக்காரனது செயலை,
“பூஞ்சருகு வெற்றிலைக்காம்பு ஆய்ஞ்செறி வாராம்-அந்தப் பொட்டைக்கண்ணைக் கொண்டு குச்சை எட்டிப்பார்ப் பாராம்."
என்று குறிப்பிடுகின்றது.

Page 28
53
இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 354 மற்றும் 509-வது பிரிவுகள் முதலிரண்டு குற்றங்களையும் வரையறுத்து அவற்றுக்குரிய தண்டனைகளைக் குறிப்பிடுகிறது. 357-வது பிரிவு பாலியல் பலாத்காரம் என்பதனை வரையறை செய்கிறது. அதன்படி பின்வரும் ஆறு சூழ்நிலைகளுள் ஒன்றில் உடலுறவு நிகழ்த்தப்படும் போது அது பாலியல் பலவந்தமாகக் கருதப்படும்.
1. ஒரு பெண்ணின் விருப்பத்திற்கெதிராக,
2. அவளுடைய உடன்பாடின்றி,
3. அப்பெண் தன் உயிருக்கு அஞ்சிய நிலையில் அல்லது துன்பத்திற்கு அஞ்சிய நிலையில் அவளிடம் சம்மதம் பெற்று,
4. அவளது கணவனென்று தவறாக நம்பச் செய்து பெற்ற
சம்மதத்தின் அடிப்படையில்,
5. அறிவு மயங்கிய நிலையில், மதுமயக்கத்தில் போதைப்
பொருள் மயக்கத்திலிருக்கும்போது பெற்ற சம்மதத்தின் அடிப்படையில்,
6. பதினாறு வயதிற்குட்பட்ட நிலையில் அவளது சம்மதம்
பெற்றோ பெறாமலோ,
இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 376-வது பிரிவு பாலியல் பல வந்தத்திற்கு வழங்கப்படும் தண்டனையைக் குறிப்பிடுகின்றது. இப் பிரிவின்படி தண்டனனை வழங்கப் பின்வரும் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நிரூபிக்கப்பட வேண்டும்.
1. ஒரு பெண்ணுடன் ஒர் ஆடவன் உடலுறவு கொண்டமை, 2. 375-வது பிரிவில் குறிப்பிட்ட ஆறு சூழ்நிலைகளில்
ஒன்றில் அவ்வுடலுறவு நிகழ்ந்தமை.
1860-ல் உருவான இச்சட்டப்பிரிவுகள் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதைவிட ஆடவர்களுக்கே பாதுகாப்பு அளித்து வந்தது. (வருகிறது). ஏனெனில் மேற்கூறிய ஆறு சூழ்நிலைகளுள் ஒன்றில் உடலுறவு நிகழ்ந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண்தான் நீரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறு நிரூபிக்கத் தவறினால் குற்றவாளியான ஆடவன் விடுவிக்கப்படுவான்.

54
சட்ட நுணுக்கங்களுக்கிடையில் பாலியல் பலவந்த நிகழ்ச்சிகளை ஆராய்வதை விட இந் நிகழ்வின் பின்புலமாக எவையெவை உள்ளன என்பதைக் காணமுயல்வது சமூகவியலாளரின் கடமையாகும். அதிகாரம்-செல்வம்-சாதிய மேலாண்மை இவற்றுள் ஒன்றின் துணையுடன் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவரின் துணையுடன்தான் அடித்தள மக்கள் மீது பாலியல் குற்றங்கள் இழைக்கப்படுகின்றன. இத்தகைய பாலியல் குற்றங்களும் குற்ற முயற்சிகளும் அடித்தள மக்களுக்கெதிரான வன்முறையின் ஒரு பகுதியாகும். எனவே நுட்பமான சட்ட விளக்கங்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு அடித்தள மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட நிகழ்த்தப்படும் அனைத்து வகையான பாலியல் குற்றங்களை மட்டுமின்றிக் குற்ற முயற்சிகளையும் கூட பாலியல் வன்முறை என்ற சொல்லால் குறிப்பிடுவதுதான் பொருத்தமானது.
அடித்தள மக்களின் ஏழ்மை-பாதுகாப்பற்ற நிலை-சாதிய இழிவு இவற்றை சாதகமாகக் கொண்டு உடலுறவுக்குக் கட்டாயப்படுத்துவதும் அல்லது அதற்கு இணங்கிப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு அவர்களை ஆளாக்குவதும் கூட ஒருவகையான வன்முறை தான். இதன் அடிப்படையில் பாலியல் வன்முறை என்ற சொல் பாலியல் பலவந்தத்தை மட்டும் குறிப்பிடவில்லை. அதிகாரம் என்ற கருவியின் துணையுடன் மேலோர் நிகழ்த்திய அனைத்துவகை பாலியல் குற்றங்களையும் குற்ற முயற்சிகளையும் இச்சொல் இக்கட்டுரையில் குறித்து நிற்கிறது.
பாலியல் வன்முறையும் நாட்டார் பாடல்களும்
அடித்தள மக்கள் மீதான வன்முறை நாட்டார் வழக்காறுகளின் பல்வேறு பிரிவுகள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் 1) நாட்டார் பாடல்கள் 2) கதைப்பாடல்கள் 3) பழமரபுக் கதைகள் ஆகியவைகளில் இடம் பெற்றுள்ள பாலியல் வன்முறை குறித்த செய்திகள் மட்டும் இக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்படுகின்றன. முதலில் நாட்டார் பாடல்கள் குறிப்பிடும் செய்திகளைக் காண்போம்.

Page 29
55
உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினரைக் தீண்டாமை என்ற நிலைமைக்கு இந்திய நிலபிரபுத்துவம் ஆளாக்கி வைத்துள்ளது. குறிப்பிட்ட பிரிவு மக்களைத் தொட்டால் தீட்டு ஏற்படுமென்று விலகிச் சென்றும் எதிர்பாராத வகையில் தொட்டுவிட்டால் நீராடியும் தீட்டிலிருந்து உயர் சாதியினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். அதே நேரத்தில் தீண்டாதவர்கள் என்று அவர்கள் ஒதுக்கி வைத்த சாதியினரின் பெண்களைப் பலவந்தம் செய்யும் தீட்டு என்ற விலக்கு மறைந்து விடுகிறது. காஞ்ச்சா ஐலய்யா (1993:49) கூறுவது போல் "அப்பெண்களின் உடல்தான் தீண்டத்தகாததாக இருக்கிறதேயன்றி அவர்களின் பாலியல் தன்மையன்று”. இவ்வுண்மையை மலையாள நாட்டார் பாடலொன்று இவ்வாறு எடுத்துரைக்கிறது.
ஆணாளெ தொட்டா(ல்) குளிக்கனெ(ம்) தம்புரான்
பெண்ணானெ தொட்டா(ல்) குளிக்காத்த தம்புரா(ன்)
ஆணானெக் கண்டா(ல்) ஒடி ஒளிக்கும்
பெண்ணாளெனக் கண்டா(ல்) மாறி விளிக்கும். *
பெரிய தம்புரான் இப்படி என்றால் சின்னத் தம்புரான் ஒரு புலைப் பெண்ணைத் தீய எண்ணத்துடன் வேண்டு மென்றே வீட்டிற்குப் போக விடாமல் நிறுத்தி வைக்கிறான். அவனைப் பார்த்து
"நேரம் போயிட்டே நேரம் போயிட்டே
எங்க சின்ன தம்புரான் என்னைப் பார்க்காது நேரம் பார்க்கணும் எங்க சின்ன தம்புரான்"
என்று அப்பெண் புலம்புகிறாள்.
கிராமத்தின் தலைவராக விளங்கும் ஊர்க்கவுண்டரின்
குமாரி வேட்டை குறித்துக் கொங்கு நாட்டில் வழங்கும் பாடெலான்று பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

56
* “நல்லாரும் பொல்லாரும்
மானு வேட்டைக்கும் போறாங்கோ மயிலு வேட்டைக்கும் போறாங்கோ குயிலு வேட்டைக்கும் பொறாங்கோ கூனு வேட்டைக்கும் போறாங்கோ நம்மூரு ஊருக் கவுண்டரு கொமுரி வேட்டைக்கும் போறாங்கோ
இதே பாடலின் மற்றொரு வடிவம் வருமாறு
“மானு வேட்டையை ஆடிக்கொண்டு மயிலு வேட்டையை ஆடிக்கொண்டு கொக்கு வேட்டையை ஆடிக்கொண்டு குயிலு வேட்டையை ஆடிக்கொண்டு குயிலு வேட்டையை ஆடிக்கொண்டு குமரி வேட்டையையும் ஆடுவாராம்"
ஆங்கிலேயர்கள் நம்மை ஆளத்தொடங்கிய போதும் இத்தகைய கொடுமை தொடர்ந்தது.
“ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருதன் போட்டானாம் வெள்ளரிக்கா காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளக்காரேனர்.
வ்ெஸ்ளக் காரம்பணம் வெள்ளிப் பணம் வேடிக்கை செய்யுர சின்னப்பணம் வெள்ளிப் பணத்துக்கு ஆசப்பட்டு வேசங் கொலாஞ்சாளே வீராயி”
என்ற பாடல் சிற்சில மாறுதல்களுடன் தமிழ்நாடெங்கும் பரவலாக வழங்குகின்றது.
இதே ஆங்கிலேயர்கள் இலங்கை, பர்மா, மலேயா போன்ற பகுதிகளில் காஃப்பி, ரப்பர் தேயிலை போன்றவற்றைப்

Page 30
  

Page 31
59
இடங்களையறிந்து அவர்களைக் தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமெனப் பெற்றோர்களிடம் தைரியமாகக் கேட்கலாயினர். மேலும் "மஜர் மொராச்சா'என்னுமொரு கலியான வரிவிதித்து இந்துக்களை இம்சித்தனர். இவ்வரிக்கோ வரம்பே கிடையாது. திவான்களின் இஷ்டப் படி இதை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்தலாம். இவ்வரியைக் கொடுக்கிறாயா? அல்லது ஒன் பெண்ணைத் தருகிறாயா? எனக் கேட்பான் திவான் அல்லது அவன் கீழுள்ள காஜி. இக்கொடியவரியிலிருந்து மீள, இந்துக் குடும்பத்தினர் தம் பெண்ணைக் காஜிடம் ஒப்படைக்க நேரும்".
இவ்வாறு இச்சிற்றரசர்களிடம் அழகிய பெண்கள் பலியான சோக நிகழ்ச்சிகளை வங்க மொழியில் “கீத-காதா" என்றழைக்கப்படும் கதைப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. (மேலது 4)
"கன்னிகா அம்மவாரி கதா" என்ற தெலுங்குமொழிக் கதைப்பாடல் பாலியல் வன்முறைக்குப் பலியான கன்னியாகா என்ற பெண்ணின் கதையைக் குறிப்பிடுகின்றது. மேற்குக் கோதாவாரி மாவட்டத்திலுள்ள பேணுகொண்டா என்ற நகரில் கோமுட்டிச் செட்டியார்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களின் தலைவனான குசும சிரேஷ்டி' என்பவனின் மகளான கன்னியாகா மிகவும் அழகானவள். ஒரு நாள் இந்நகரத்திற்கு மன்னன் வருகை தர கன்னியாகா அவனை வரவேற்றாள். அவள் அழகில் மயங்கிய மன்னன் அவளை மணம்புரிய விரும்பினான். தன் விருப்பத்தை நிறைவேற்றா விட்டால் இந்நகரத்தைக் கைப்பற்றி கன்னிகாவைப் பல வந்தமாகத் துரக்கிச் சென்றுவிடுவதாக அச்சுறுத்தினான். இச்சிக்கலிலிருந்து விடுபடும் வழியறியாது கோமுட்டிச் செட்டியார்கள் திகைத்தனர். இறுதியில் கன்னிகா முடிவெடுத்தாள். அம்முடிவின் படி ஆழமான குழியை வெட்டி இதில் நெருப்பை வளர்த்து உறவுப் பெண்கள் சிலருடன் தீக்குழித்தாள். இதன் பின்னர் அவள் கோமுட்டிச் செட்டியார்களின் தெய்வமாக வணங்கப்படலானாள்.

60
"மங்காத்தியம்மன் கதை' என்ற தமிழ்க் கதைப்பாடலில் அகம்படியார் சாதி மன்னன் ஒருவன் அனஞ்ச பெருமாள் கோனார் என்பவரது பத்ரகாளியைத் தன் மகனுக்குப் பெண் கேட்கிறார். முதலில் பெண் தர மறுத்த அவர் பின்னர் இதன் காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சி திருமணத்திற்கு இசைவு தெரிவிக்கிறார். பின் திருமணப் பந்தல் அமைத்து முகூர்த்தக் காலில் பெண்நாயைக் கட்டிவிட்டு அவரது குடும்பத்துடன் ஊரை விட்டுப் புறப்பட்டுப் போய்விடுகிறார். உறவினருடன் திருமண வீட்டிற்கு வந்த மன்னன் இதைக் கண்டு அவமானமடைந்து அவரைத் துரத்திச் சென்றான். ஆனால் பத்திரகாளியம்மன் அருளினால் அனஞ்ச பெருமாள் குடும்பம் தப்பிவிடுகிறது.
பாலியல் வன்முறையும் பழமரபுக் கதைகளும்
பழமரபுக் கதைகளிலும் (Legends ) பாலியல் வன்முறை குறித்தச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகளை (1) சாதிகள் இடப்பெயர்சி தொடர்பானவை (2) நாட்டார் தெய்வங்களுடன் தொடர்புடையவை என இரண்டாகப் பகுக்ககலாம். முதலில் சாதிகளின் இடப்பெயர்ச்சி தொடர்பான கதைகள் சிலவற்றை எடுத்துக் காட்டாகக் காண்போம்.
இரணியல் செட்டியார்களின் இடப் பெயர்ச்சி
காவிரிப்பூம் பட்டினத்தில் செட்டியார் ஒருவருக்கு அழகிலும் அறிவிலும் சிறந்த பெண்களிருவர் இருந்தனர். அவ்விருவரையும் தனக்கு மணம் முடித்துக் கொடுக்கும்படி சோழ மன்னன் கட்ளையிட்டான். இது தொடர்பாக முடிவெடுக்க ஒரு நாள் அவகாசம் கேட்டுவிட்டு நேராக வீட்டிற்கு வந்த செட்டியார் நிலவறைக்குள்ளிருந்து சில பாத்திரங்களை எடுத்துவிடும்படி இரு மக்களிடமும் கூறினார். அவ்வாறே அவர்களிருவரும் உள்ளே போனதும் மண்ணைப் போட்டு அதை முடிவிடும்படித் தன் ஆட்களிடம் கூறிவிட்டு தானும் நிலவறைக்கள் நுழைந்து விட்டார். செட்டியாரும்

Page 32
61
அவரது இருமகள்களும் நிலவறையில் சமாதியாகிவிட ஏனைய செட்டியார்கள் காவிரிப்பூம் பட்டினத்தை விட்டுப் புறப்பட்டு அன்றைய கன்னியாகுமரி மாவட்டப் பகுதிக்குள் நுழைந்து இரணியல் உட்பட ஏழு ஊர்களில் குடியேறிய இரணியல் செட்டியார்கள் அல்லது ஏழுர்ச் செட்டியார்கள் என்று அழைக்ப்படலாயினர். -
நகரத்தாரின்இடப்பெபயர்ச்சி
காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் குலப் பெண்களுக்கு சோழ மன்னனொருவன் கொடுமையிழைக்க அதற்கு அஞ்சி அவர்கள் சோழ நாட்டிலிருந்து குடிபெயர்ந்து சோழ நாட்டின் தெற்கெல்லையான வெள்ளாற்றுகுத் தெற்கே குடியமர்ந்ததாக பழைய கதை ஒன்று கூறுகிறது. (ரகுநாதன் 1984, 354) கி.பி. 1608-இல் பழனியில் நகரத்தார் எழுதிக் கொடுத்த தருமசாசனம் ஒன்றிலும் "காவரிப் பூம்பட்டினத்தைப் விட்டுப் புறப்படும் போது . இராஜாவினுடைய உபத்திரவம் பெண்ணு விஷயமாய்ப் பொறுக்காதபடியால் இளையேத்துக் குடி வந்து சேர்ந்தோம்” என்று எழுதப்பட்டுள்ளது.(ரகுநாதன் 11984 360)
வைசிய புராணச் செய்தி
சூடாமணிப்புலவர் என்பவரியற்றிய வைசிய புராணத்தில் வைசியர்களின் இடப் பெயர்ச்சி குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. இதன் படி மருதவாணன் என்ற வணிகனின் மகளைப் பலவந்தமாக மணக்கச் சோழ மன்னன் ஒருவன் முடிவு செய்து திருமணப்பந்தல் போட உத்தரவிட்டான். திருமண நாளுக்கு முந்திய நாளிரவில் “எம் வீட்டுப் பெண் நாய்க்கும் நீ தகுந்தவனல்லன்” என்பது விளங்க ஒரு ஆண் நாயைக் கட்டிவிட்டு மருதவாணன் ஓடி விட்டான். (ரகுநாதன் 1984 : 357 358).

62
பாலியல் வன்முறையில் உதித்த தெய்வங்கள்.
தமிழ்நாட்டில் பெரும் பகுதி மக்களால் வணங்கப்படும் நாட்டார் தெய்வங்களுள் பெரும்பாலானவை கொலையுண்டு பின்னர் தெய்வமாக்கப்பட்ட மானுடர்களே. இத் தெய்வங்களைக்
"கொலையில் உதித்த தெய்வங்கள் ' என்று குறிப்பிடலாம். அக் கொலை நிகழ்வுக்குப் பின்னரும் பிரச்சனைகளும்,
முரண்பாடுகளும் காரணமாக அமைகின்றன.
1. நிலப்பிரப்புத்துவ மற்றும் அதிகாரவர்க்கசக்திகளின்"
பகை, நிலப்பிரபுத்துவக்கொடுமை. 2. பிறரின் பொறாமையுணர்வு.
மூடநம்பிக்கை (நரபலி போன்றவை) 4. குடும்பப் பிரச்சினைகள் ( மனஉறவு-சொத்துரிமை
முறையற்ற பாலுறவு) தோற்றுவிக்கும் பகைமையுணர்வு. 5. நேரடியான போரில் ஈடுபட்டமை.
3.
6. வாழ்க்கைப் பிரச்சினையினால் சிலதவறுகள்அல்லது
குற்றங்களைப் புரிதல். 7. கொள்ளையர், காமுகர் ஆகியோரிடமிருந்து பிறரைக்
காக்கும் முயற்சியினை மேற்கொண்டமை. 8. சாதி மீறிய காதல்.
இவற்றுள் முதலாவதாகக் குறிப்பிட்ட நிலவுடமைக் கொடுமை என்பதனுள் பாலியல் வன்முறை அடங்கும். இப்பாலியல் வன்முறைக்குப் பின்னர் தெய்வமான நிகழ்ச்சி களுக்கு எடுத்துக்காட்டாக சில மரபுகளை இனிக் காண்போம்.
குருவிக்குளம் கிராமத்தின் கிழ்ப்பகுதியில் வாழ்ந்து வந்த இந்து மலை வேடர் (குறவன்) சாதியில் பொன்னுமாடி என்ற பெண் மிகவும் அழகாயிருந்ததால் அரண்மனை அழைப்பு அப்பெண்ணிற்கு வந்தது. சாதிய நிலையிலும் பொருளாதார நிலையிலும் தாழ்ந்திருந்த அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு அரண்மனை உத்தரவுக்கு கீழ்ப்படிவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இவ் வழிச்செயலை விரும்பாத அப்பெண் அரண்மனைக்குப் புறப்பட்டுவிட்டு

Page 33
63
செல்வதற்குப் பதில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாள். தொடக்கத்தில் இப்பெண்ணின் சாதியினர் இப்பெண்ணின் வீட்டுப் பகுதியில பீடம் எழுப்பி வழிபட்டு வந்தனர். தற்போது "பெரிய சும்மா” என்றழைக்கப்படும் ஊருக்குத் தென்புறமுள்ள குளத்தில் கரைப்பகுதியில் இலுப்பை மரங்களுக்கடியில் மேற்கரை எதுவுமில்லாத கோவிலொன்றை அமைத்துள்ளனர். தற்போது சிறு மேடையில் வடக்கு முகமாக 2.75 அடி உயரத்தில் பீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தின் முகப்பில் ஓவியமாக அம்மன் உருவம் வரையப்பட்டுள்ளது. பொன்னுமாரி அம்மன் என்று இவ்வம்மன் அழைக்கப்படுகிறாள்.
போத்தி அம்மன்
ஏறத்தாள 150 ஆண்டுகளுக்கு முன் சிதம்பரனார் மாவட்டம், பூரீவைகுண்டம் வட்டத்திலுள்ள செய்துங்கநல்லூர் என்ற கிராமத்திலிருந்து பொற்கொல்லர் குடும்பங்கள் சில இடம்பெயர்ந்து எட்டையபுரம் ஊரில் கீழ்ப்பகுதியில் தங்களின் குடியிருப்பை அமைந்தன. இவ்வாறு குடியேறிய குடும்பம் ஒன்றில் போத்தியம்மாள் என்ற அழகான பன்னிரன்டு வயது சிறுமி ஒருத்தி இருந்தாள். ஒரு நாள் எட்டாயபுரம் ஜமீன்தார் வேட்டைக்குச் செல்லும் போது அவர் கண்ணில் இச்சிறுமி தென்பட்டாள். தன்னுடன் வந்தவர்களிடம் அப்பெண் யார் என்று விசாரித்து அரண்மனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டார். கட்டளையைப் பெற்றவர்கள் அப்பெண் அரண்மனை பொற்கொல்லரினர் மகள் என்பதைக் கண்டறிந்து அவரிடம் ஜமீன்தாரின் கட்டளையைத் தெரிவித்தனர். கட்டளையை மீறவும் முடியாது, அதிலிருந்து தப்பிக்கவும் வழியும் தெரியாத சிறுமியின் தந்தை இறுதியில் அப்பெண்ணைக் கொன்று குலமானத்தை காப்பாற்றிவிடுவது என்று முடிவுக்கு வந்தார். தம் குலதெய்வத்தின் கோவில் வளாகத்தில் ஆழமான குழி ஒன்றைத் தோண்டி அதற்குள் இறங்கும்படி அச்சிறுமியிடம் கூறினார். அதன்படி அக்குழியினுள் அச்சிறுமி இறங்கியவுடன் குழியினுள் மண்ணை விரைவாகத் தள்ளி அப்பெண்ணை உயிரோடு சமாதி வைத்தார். பின்

64
தம் குடும்பத்துடன் கீழைக்கரைப் பகுதிக்கு இரவோடு இரவாகக் குடிபெயர்ந்தார். பல ஆண்டுகள் கழித்து அப் பெண் னின் குடும்பத்தினரும், உறவினர்களும் அப்பெண்ணைப் புதைத்த இடத்தில் பீடம் எழுப்பி வழிபடத் தொடங்கினர். போத்தியம்மன் கோவில் என்ற பெயரில் இன்றும் எட்டயாபுரம் கீழ வீதியில் இக்கோவில் உள்ளது. பொற் கொல்லர்களுக்கு உரிய கோவிலாக இக்கோவில் விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் கொடைவிழாவில் கலந்து கொள்ளுவதற்கு, கீழைக்கரை பகுதியிலிருந்தும் பொற்கொல்லர்கள் வருகிறார்கள்.(2)
ஆய்வுரை
பாலியல் வன்முறை தொடர்பாக இதுவரை நாம் பார்த்த நாட்டார் வழக்காறுகள் இக்குற்ற நிகழ்ச்சிகளைக் குறித்த வாய்மொழிச் சான்றுகளாக அமைகின்றன. குறிப்பிட்ட ஒரு பாலியல் குற்றத்தைக் குறித்து திட்டவட்டமாகக் கூறாமல் பொதுவான செய்திகளைக் கூறும் துறையிலேயே நாட்டார் பாடல்கள் அமைந்துள்ளன. (அஞ்சம்மாள் பாடல் மட்டும் இதற்கு விதிவிலக்கு) . கதைப்பாடல்களும் பழமரபுக்கதைகளும் ஒரு குறிப்பிட்ட பாலியல் குற்ற நிகழ்வு அல்லது குற்ற முயற்சியை எடுத்துரைப்பனவாக அமைகின்றன.
இவை அனைத்தும் எழுத்துவடிவம் பெற்ற நிலையில் வாய்மொழிச் சான்று என்ற நிலையிலிருந்து வரலாற்று ஆவணம் என்ற நிலையை அடைந்துள்ளன. அடித்தள மக்கள் ஆய்வுக்கான முக்கிய ஆவணங்கள் என்ற நிலையில் இவை கூறும் செய்திகளை இனி ஆராய்வோம். இதன் முதற்படியாக எடுத்துக்காட்டாகப் பார்த்த கதைப் பாடல்கள், பழமரபுக் கதைகள் ஆகியவற்றில் இடம் பெறும் கதைக் கூறை (Tale motif) வரையறை செய்து கொள்வது அவசியம். இம்முயற்சியில் இக்கதைகளின் அமைப்பையும் பாத்திரங்களின் வினைகளையும் இவ்வாறு சுருக்கிக் கூறலாம்.

Page 34
65
1. அழகான பெண்ணொருத்தி ஓர்
ஊரில் வாழ்தல் தொடக்கநிலை 2. மன்னன்/இமீன்தார்/அவனதுஏவலாள்
அப்பெண்ணைக் காணல் காட்சி 3. திருமணம் பேசல் அரண்மனைக்கு
அப் பெண்ணை அனுப்பும் படி கூறல் கட்டளை 4. ஊரைவிட்டு ஓடிப்போதல்/பெற்றோர் அல்லது சகோதரர் அப்பெண்ணைக் கொலைசெய்தல்/தற்கொலைசெய்தல் கட்டளையிலிருந்து
தப்பித்தல் 5. வேறு ஊரில் குடியேறல்/ அப் பெண்
தெய்வமாக்கப்படல் (Լpւգ-6ւ!
ஆதிக்கசக்தி, அதாவது மேலோர் அதிகாரத்தின் துணை யோடு அடித்தள மக்களின் பெண்களை அடைய முயல்வதே இக்கதைகளில் காணப்படும் முக்கிய கதைக் கூறாக அமைந்துள்ளது. இப்பழமரபுக் கதைகளில் இடம் பெறும்
(1) கட்டளை (2) கட்ட்ளை மீறல் (3) கட்டளையிலிருந்து தப்பித்தல்
என்ற மூன்று வினைகளைக் குறித்தும் விரிவாக ஆராய்ந் தால் இக்கதைக் கூறின் சமூக வரலாற்றுப் பின்புலத்தை அறிய முடியும்.
கட்டளை
ஓர் ஊரில் வாழும் அழகிய பெண் ஒருத்தியை தன் இருப்பிடத்திற்கு அனுப்பிவைக்கும்படியோ தனக்கு மணம் முடித்துக் கொடுக்கும் படியோ இடும் கட்டளைக்கு அடிப்படையாக அமைவது அதிகாரம் (Power) என்ற ஒன்றாகும். செல்வ வளம்- சாதிய மேலாண்மை- ஆட்சிப் பொறுப்பு என்ற ஒன்று அதிகாரம் என்ற ஆற்றலை ஒரு தனிமனிதனுக்கோ, ஒரு குழுவுக்கோ வழங்குகிறது. அதிகாரமுடையவன் கட்டளையிடும் உரிமையைப் பெற்று

66
குறிப்பிட்ட சமூகத்தில் மேலோனாக விளங்குகிறான். அடித்தள மக்கள் கட்டளைக்கு கீழ்ப்படிதல் என்ற பெயரில் கட்டளையை நிறைவேற்றுபவர்களாக காட்சியளிக்கின்றனர். “அதிகாரம் என்பது தனது விருப்பப்படி பிறரைச் செயலாற்ற வைப்பதில் பரிமளிக்கிறது” என்ற வால்டரின் கூற்று இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. அதிகாரம் பெற்றவன் அனைத்து உடைமைகள் மீதும் தன் அதிகாரத்தைச் செலுத்த விரும்புகிறான். சமூக அமைப்பில் பெண்ணானவள் ஒரு மனிதப் பிறவியாகக் கருதப்படாமல் உடைமைப் பொருளாக கருதப்பட்டால் அதிகாரமுடையவன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவளைத் தன்னுடைய உடமையாக மாற்றிக் கொள்ள விரும்புகிறான். ஆளும் உரிமை என்ற அரசியல திகாரத்தைப் பயன்படுத்தி பெண்ளை தம் உடைமையாக மாற்றும் செயலினை சமூக விஞ்ஞான கலைக்களஞ்சியம் இவ்வாறு குறிப்பிடுகிறது:
"அரசியலதிகாரத்தை ஆடவன் கைப்பற்றிக் கொள்ளும்போது அவ்வதிகாரம் பெண்ணினத்தை ஒரு கட்டுக்குள் வகைப்படுத்தும் வண்ணம் அமைகின்றது. சான்றாக பிடோயின் சமூகத்தில் குழுத்தலைவன் அவனைவிடப் பலம் குன்றிய அச்சமூக உறுப் பினனைக் காட் டிலும் ஒன்றுக்கு மேற்பட்டமனைவிமார்களையும், வைப்பாட்டி களளையும் வைத்துக் கொள்கிறான். ஐரோப்பாவில் அரச குடும்பத்தினரும், பொருளாதார நிலையில் பலம் பொருந்தியவர்களும் வைப்பாட்டிகளை வைத்திருந்திருக்கின்றனர். போரில் வெற்றிவாகை சூடல் என்பது இறுதியில் தோற்கடிக்கப்பட்ட சமூகத்தின் பெண்டிரை பாலியல் பலவந்தம் செய்வதன் மூலமாகவோ, சிறைப்படுத்துவதின் மூலமாகவோ ஆதிக்கம் பெற்றவர்களோடு உறவு ஏற்படுத்திக் கொள்வதில் பெண்டிர் இணக்கம் காட்டுவதன் மூலமாகவோ வெளிப்படுகிறது.

Page 35
67
இது போன்ற எடுத்துக்காட்டுகளை தமிழக வரலாற்றில் காணலாம் . தமிழ் நாட்டு மன்னர்கள் தம் படையெடுப்புகளின் போது பகை மன்னர்களின் பெண்களைக் கவர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பட்டினப்பாலை "கொண்டி மகளிர்" என்று இவர்களைக் குறிப்பிடும். வெற்றி பெற்ற மன்னன் கவர்ந்து வந்த பொருட்களைக் குறிப்படும்போது "பெனி டிர் பண்டாரமும்' என்று கல்வெட்டுக்கள் குறிப்படுவதைக் காணலாம்.
நில உடமைச் சமூகத்தில் பெண்கள் நிலை
பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தமிழ்நாட்டில் சுற்றுப்பணம் செய்த மார்க்கோபோலோ சுந்தர பாண்டிய மன்னனைக் குறித்துப் பின்வருமாறு எழுதியுள்ளார்.
"அரசனுக்கு ஏறக்குறை ஐந்நூறு மனைவியர் இருக்கின்றனர். எங்காவது ஓர் அழகிய பெண் இருக்கின்றாள் என்று கேள்விப்பட்டால் உடனே அவளை அரசன் தன் மனைவியாக்கிக் கொள்கிறான். இவனுடைய தம்பியின் மனைவி ஒருத்தி மிகவும் அழகாக இருந்தாள். அவளை அவன் வன்முறையில் கைப்பற்றிக் கொண்டான். தம்பியோ தன்னுடைய மானக்கேட்டை பறைசாற்ற விரும்பாதவன். எனவே அவன் அதைப் பற்றி கவலைப்படாதவன் போல இருந்துவிட்டான்
عمري
விஜயநகரை ஆண்ட முதலாம் தேவராயர் என்ற மன்னன் அழகிலும், கல்வியிலும் சிறந்த குடியானவப் பெண் ணொருத்தியை அரண்மனைக்கு கொண்டுவர ஒரு பெரும் படையை அனுப்பிய நிகழ்ச்சியை இராபர்ட்ஸ்வல் விரிவாக எழுதுவார் (1970 55-57) . திருவாங்கூர் மன்னர்களின் 'அம்மவீடு' இத்தகைய பாலியல் வன்முறை வெளிப்பாடே ஆகும்.
பதினாறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் முத்துக்குளித்

68
துறைப் பகுதியில் போர்ச்சுகீசிரியரின் ஆதிக்கம் நிலவிய போது ஏழை அடிமைப் பெண்களை அவர்களது விருப்பத்திற்கெதிராகக் கைப் பற்றி அவர் களை அனுபவித்துவிட்டுப் பின்னர் வளமிக்க இந்து மற்றும் முஸ்லிம் வணிகர்களுக்கு விற்றுவிடுவது போர்ச்சுகீசியர்களின் வழக்கமாக இருந்தது.
இந்த வழிமுறையில் வந்துதான் மேற்கூறிய கதைப் பாடல்களிலும் பழமரபுக் கதைகளிலும் இடம் பெற்றுள்ள "கட்டளை" என்ற வினையாகும். ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டாலும் நிலவுடமை காரணமாகப் பெறும் அதிகாரத்தின் துணையுடனும் பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
திருமணமாகும் குடியானப் பெண்களின் முதலிரவு மீதான உரிமை ஜெர்மனிய நிலப்பிரபுக்களுக்கு இருந்தது பி.பி. 1486-ல் பெர்டினான்ட் என்ற ஸ்பானிய மன்னன் அந்நாட்டுக் குடியானவர்களின் எழுச்சி காரணமாகக் குடியானவப் பெண்களின் முதலிரவு மீதான பிரபுக்களின் உரிமையைத் தடை செய்தான் அதுவரை அவ்வுரிமையைப் ஸ்பானியப் பிரபுக்கள் அனுபவித்து வந்தனர்.
தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் நிலவுடமையினால் பெற்ற அதிகதரத்தின் துணையுடன் பெருநிலக்கிழார்கள் நிகழ்த்திய பாலியல் வன்முறைக்கு முன்னர் எடுத்துக்காட்டிய நாட்டார் பாடல்கள் சான்றுகளாய் அமைகின்றன. புதிதாக உருவான மலைத்தோட்டங்களின் உரிமையாளர்கள் என்ற நிலையிலும் நாட்டை ஆளும் வெள்ளையினத்தைச் சார்ந்தவன் என்ற நிலையிலும் கிடைத்த அதிகாரத்தின் அடிப்படையில் வெள்ளையர் நிகழ்த்திய பாலியல் வன்முறைகளை, தோட்டத் தொழிலாளர்களின் நாட்டார் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆளுவோரின் அடக்குமுறை இயந்திரத்தின் ஓர் உறுப்பு என்ற முறையில் பெற்ற அதிகாரமானது காவல்துறையினரின் பாலியல் வன்முறைக்குத் துணை நிற்கிறது. இதனால் தான் பெண்களைச் சிறையலடைப்பதற்காக உருவான ஒன்றாக காவல்நிலையத்தைப் பெண் தொழிலாளிகள் கருதினர்.

Page 36
69
அதிகாரத்தின் துணையுடன் பெண்கள் மீது நிலவுடமைச் சமுதாயத்தில் நிகழ்ந்த பாலியல் வன்முறைக்கு அடிப்படைக் காரணம் பாலியல் வேட்கைமட்டுமல்ல. அதிகாரத்தையும், மேலாதிக்கத்தையும் நிலைநாட்டும் ஒரு கருவியாகவும் பாலியல் வன்முறையாகக் கருதியுள்ளார். பொதுவாக நிலவுடமைச் சமூக அமைப்பில் பின்வரும் மூன்று வகையான ஆதிக்கம் இடம் பெறுவது இயல்பு.
1.பொருளாதார ஆதிக்கம் பண்ணை அடிமை-கொத்தடிமை,
குறைந்த கூலி-கூலி கொடுக்க கள்ள அளவுகருவி களைப் Luulu Gör படுத்துதல்- கட்டாய வேலை, குத்தகை முறை-வரி விதிப்பு.
2 அரசியல் ஆதிக்கம் - பஞ்சாயத்து செய்யும் உரிமை,
ஊர்க்கட்டுப்பாடு விதித்தல்தண்டனை வழங்கல்.
3 பண்பாட்டு ஆதிக்கம் கல்வி பயிலுதல், ஆடை அணிகலன்
அணிதல், மணப்பொருள் பயன் படுத்துதல், உணவு உண்ணுதல்தெய்வவழிபாடு, பெயரிடுதல் குடியிருப்பு தொடர்பான தடைகளும் கட்டுப்பாடுகளும் விதித்தல்-பாலியல்
வன்முறை.
இவற்றுள் இறுதியாகக் கூறப்பட்ட பண்பாட்டு ஆதிக்கத்திற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக சிலவற்றைக் காண்போம். 1930 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இராமநாதபுரம் மாவட்டத்தில் தலித்களுக்கு எதிராக ஆதிக்க சக்தியினர் பின்வரும் எட்டு தடைகளை விதித்துள்ளனர்.
1. பொன் மற்றும் வெள்ளியிலான அணிகலன்களை
ஆதித்திராவிடர் அணியக்கூடாது. 2. ஆடவர்கள் இடுப்புக்கு மேலும் முழங்காலுக்கு கீழும்

70
ஆடை அணியக்கூடாது. 3. கோட், சட்டை, பனியன் ஆகியவைகளைஅணியக்கூடாது. 4. தங்கள் தலைமயிரை கத்தரிக்கக் கூடாது. 5. வீடுகளில் மட்பாண்டங்களைத் தவிர ஏனைய
பாத்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது. 6. துணி, ரவிக்கை, தாவணி ஆகியவற்றைப் பயன்படுத்தி
பெண்கள் தங்கள் மார்பை மறைக்கக்கூடாது. 7. மலர்கள் சந்தனம் ஆகியவற்றைப் பெண்கள் பயன்
படுத்தக்கூடாது. 8. வெய்யில், மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆடவர்கள் குடை பிடிக்கக் கூடாது. காலில் செருப்பணியக்கூடாது.
இத்தடைகளை ஏற்றுக் கொள்ளாததால் தலித்துகளின் குடிசைகள் நெருப்புக்கிரையாயின. தானியக் களஞ்சியங்களும், பொருட்களும் அழிக் கப்பபட்டன. கால்நடைகள் கொள்ளையடிக்கப்பட்டன.ஆளுவோரின் பண்பாட்டு ஆதிக்கத்துக்கு எடுத்துக்காட்டுகளாக அமையும்.
துணி - ரவிக்கை-தாவணி ஆகியவற்றைப் பயன்படுத்தி பெண்கள் தங்கள் மார்பை மறைக்கக்கூடாது. என்ற தடை பாலியல் வன்முறையின் ஒரு வெளிப்பாடே. இது த்ொடர்பாக வேறு சில எடுத்துக்காட்டுகளும் உள்ளன. இராஜஸ்தானில் "பலாய்' என்ற தலித் பரிவுப் பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு 1928 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டதாக அம்பேத்கார் (1993 : 55) குறிப்பிடுகிறார். கேரளத்தில் ஈழவப் பெண்கள் மீது இத்தகைய இழிவான கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. மேலாடை அணியும் உரிமை இல்லாத ஈழவப் பெண்கள் தண்ணிர்க்குடம் அல்லது பானையைக் தலையில் சுமந்தே எடுத்துவரவேண்டும். இடுப்பில் வைக்கக்கூடாது. தென் திருவிதாங்கூர்ப் பகுதியில் வாழ்ந்த நாடார் குலப் பெண்களுக்குத் துணியால் தங்கள் மார்பை மறைக்கும் உரிமை மறுக்கபட்டிருந்தது. இதனை மீறி மீார்பைத் துணியால் மறைத்த ப்ெண்களின் ஆடைகள் கிழித்தெறியப்பட்டன. "தோள்ச்சீலைப் போராட்டம் ' என்ற பெயரில் நடத்திய ஒரு போராட்டத்தின் வாயிலாகவே

Page 37
71
1859ஆம் ஆண்டில் மார்பைத் துணியால் மறைக்கும் உரிமை நாடார் குலப் பெண்களுக்குக் கிடைத்தது. 1865-ஆம் ஆண்டில் தான் ஏனைய ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களும் இவ்வுரிமையைப் பெற்றனர்.
ஆளுவோரும், அவர்களைச் சார்ந்தோரும் கூட்டாக இணைந்து அடித்தளப் பெண்களின் உடல் மீது இத்தகைய பண்பாட்டு ஆதிக்கத்தை நிலைநாட்டிய உளவியல் நிலையில் அப்பெண்களை மட்டுமின்றி அப்பெண்களின் சாதியினரையும் பலவீனமாக்கியுள்ளனர். ஆளுவோரின் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் பண்பாட்டு ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பண்பாட்டு நிலையில் மற்றவர்களை அடிமையாக்கவும் உதவும் ஒரு வழிமுறையாக பாலியல் வன்முறை உதவியுள்ளது. இதன் உச்சக் கட்டமாக பாலியல் பலவந்தம் அமைந்தது. அன்றிலிருந்து இன்று வரை நிகழ்ந்துள்ள பாலியல் வன்முறைகளை ஆராய்ந்தால் இவ்வன்முறைக்கு ஆளாக்கப்படுபவர்கள் அடித்தள மக்களாக, குறிப்பாக ஏழைகள், தலித்துக்கள், ஆதிவாசிகளாக இருப்பதைக் காணலாம். அடக்குமுறைக்கான கருவிகளில் ஒன்றாகவும், தன் எதிரிகளைப் பழிவாங்கும் கருவிகளில் ஒன்றாகவும், பாலியல் வன்முறையானது காலம்தோறும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சூசான் பிரெளன் மில்லர் என்பவர், மொத்த மக்கள் தொகையை அச்சுறுத்தப் பாலியல் பலவந்தம் பயன்படுகிறது என்று குறிப்பிட்டு இரண்டு உலக யுத்தங்களின் போதும் பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் போரிலும் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போதும் நிகழ்ந்த பெருமளவிலான பாலியல் பலாத்கார நிகழ்ச்சிகளை தம் கூற்றுக்கு சான்றாக காட்டுகிறார். போஸ்னியா இனக்கலவரத்தில் இஸ்லாமியப் பெண்கள் மீது கூட்டாக நிகழ்த் தப்படும் பாலியல் பலவந்தம் நிகழ்காலச்சான்றாகும்.(3)
எதிரிகளைப் பழிவாங்கும் வழிமுறைகளுள் ஒன்றாகப் பாலியல் பலாத்காரம் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டமைக்கு மணிமேகலை காவியத்தில் இடம்பெறும் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். தன் மகன் உதயகுமாரன் இறந்ததால் துயரம் அடைந்து இராசமாதேவி, தன் மகனது இறப்புக்கு

72
மணிமேகலைதான் காரணம் எனக்கருதி அவளைப் பழிவாங்க விரும்பினாள். இவ்விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு வழிமுறையாக கல்வியறிவில்லாத இளைஞன் ஒருவனிடம் பொற்காசுகளை நிறையக்கொடுத்து மணிமேகலை இருக்குமிடம் சென்று அவனை வலிந்து புணரும்படி ஏவினாள் (மணிமேகலை 23 : 43 -48).
பெளத்தரோடும் , சமணேராடும் மாறுபாடு கொண்ட திருஞான சம்பந்தர்
“பெண்ணகத்து எழில் சாக்கியப் பேய் அமனை
தென்னற் கற்பழிக்கத் திருவுள்ளமே”
என்று பாடுகின்றார்.(4)
எதிரிகளைப் பழிவாங்கும் வழிமுறைகளுள் ஒன்றாகப் பாலியல் வன்முறை இன்றும் கூடத் தொடர்கிறது. இதற்கான காரணம் குறித்து அநுராதா (1993 : 79) என்பவரது பின்வரும் கருத்து கவனத்துக்குரியது.
ஆடவர்களது சண்டைகள் நிகழும் தளமாக பெண்களது உடல்கள் ஆகிவிட்டன. ஒரு சமூகத்தின் மரியாதையானது இதன் பெண்களின் மரியாதையோடு நெருக்கமாக இணைக்கப் பட்டுள்ளது. மேலும் அச் சமுதாயத்தின் பாரம்பரியத்தைத் தாங்கி நிற்பவர்களாகப் பெண்கள் கருதப்படுகிறார்கள். அப் பெண்களின் மீதான பாலியல் பலவந்தம் பாலியல் முறை கேடுகளும் அச் சமுதாயத்தின் சுயமரியாதையையும் தன்மானத்தையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. அத்துடன் அச்சமுதாயத்தின் தனித்துவத்தையும், சுய தகுதியையும் சமூக மதிப்பையும் சூறையாடி விடுகின்றது. இதன் விளைவாக அம்மக்கள் செயலற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள். அமைதியாக எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இக்கூற்று முற்றிலும் உண்மை என்பதற்கு இன்று

Page 38
73
தொடர்ச்சியாக நிகழும் பல பாலியல் வன்முறை சம்பவங்களே சான்றாகும். ஆந்திர மாநிலத்திலுள்ள நலகொண்டா மாவட்டத்தின் சில்குறிச்சி என்ற கிராமத்தில் ரெட்டி வகுப்பு இளம் பெண் ஒருத்தி பிற்படுத்தப்பட்ட கோலா வகுப்பைச் சார்ந்த பையனுடன் ஓடிவிட்டாள். இதற்கு உடந்தையாக இருந்ததாக கோவா வகுப்பைச் சார்ந்த முத்தம்மா என்ற 35 வயதுப் பெண்ணின் மீது ரெட்டி வகுப்பினர் குற்றம் சாட்டினர். இச் செயலுக்குத் தண்டனையாக 1991 ஆகஸ்டு 14 அப் பெண்ணை முழு நிர்வாணமாக்கி கிராம வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இச் செயலைக் காணச் சகிக்காத கோலா சாதிப் பெண்கள் வீட்டிற்கு சென்று கதவை அடைத்துக் கொண்டனர். அப்பெண்ணின் மானத்தைக் காக்க ஆடையொன்றைத் தர முன் வந்த முதியவர் ஒருவரும் தாக்கப்பட்டார். அச் சாதியைச் சேர்ந்த ஆடவர்கள் அதனைத் தடுக்க முடியாத நிலையில் தம் கண்களை மூடிக் கொண்டனர். ஆனால் அவர்களளை அச்சுறுத்திக் கண்களைத் திறந்து அக்காட்சியை காணும்படி ஆதிக்கங்கள் செய்தன.
1993 மே 26இல் உஷா என்ற 35 வயது தலித் பெண், வலிமை மிக்க குஜார்ஸ் 'என்ற பிரிவின் குண்டர்களால் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சரணாப்பூர் நீதிமன்ற வளாகத்தினுள் பட்டப்பகலில் நிர்வாணமாக்கப்பட்டு அடிக்கப்பட்டாள். வழக்கறிஞர் உட்பட பலர் இக்கொடுமையை நேரில் கண்டனர். காவல் நிலையத்தில் இது தொடர்பாக அப்பெண் கொடுத்த புகார் மனு ஏற்றுக் கொள்ளபடாததுடன் காவல் நிலையத்தில் தாக்குதலுக்கும் ஆளானாள். அப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை நேரில் கண்ட பதின்மூன்று வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிபதியிடம் முறையிட்டதன் விளைவாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. (Indian Express 26-6-93)
அண்மைக் காலத்தில் நடந்த இந் நிகழ்ச்சிகள் சமூக மேலாதிக்கத்திற்கும் பாலியல் வன்முறைக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்துகின்றன. இந்நிகழ்ச்சிகளின்

74
அடிப்படையில் மேற்கூறிய நாட்டார் கதைப்பாடல்களிலும், பழமரபுக் கதைகளிலும் இடம் பெற்றுள்ள பாலியல் வன்முறை குறித்து செய்திகளை நோக்கினால் தம் மேலாண்மையை வலியுறுத்தும் ஒரு வழிமுறையாகப் பாலியல் வன்முறை நிகழ்ந்துள்ளதை உணரலாம்.
கட்டளையிலிருந்து தப்பித்தல்
அதிகாரத்தின் துணையுடன் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்க அடித்தள மக்கள் தேர்ந்தெடுத்த வழிமுறையாக
1. இடப்பெயர்ச்சி 2. கொலை 3. தற்கொலை
ஆகிய மூன்றும் அமைகின்றன. இவற்றுள் இடப்பெயர்ச்சி என்பது ஆதிக்கசக்திகளின் கொடுமையிலிருந்து தப்புவதற்கு அடித்தள மக்கள் மேற்கொண்ட ஓர் எளிமையான வழி முறையாகும். எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து தப்பிக்க யூதர்கள் இடம்பெயர்ந்து சென்றதை விலியத்தின் பழைய ஏற்பாடு (யாத்திராகம்) குறிப்பிடுகின்றது. அடிமை உரிமையாளர்களிடமிருந்து தப்பி ஓடிய அடிமைகளைக் குறித்த செய்திகளை, பழைய நாகரிக நாடுகளின் வரலாறுகளில் படிக்கிறோம். இந்த வழிமுறையில் வந்ததுதான் மன்னன் பெண் கேட்க, பெண் கொடுக்க மறுத்து நாட்டைவிட்டு வெளியேறுவது. இவ்வாறு வெளியேறுவதற்கு சாதிப்பற்று மற்றும் சாதியத்துய்மை உணர்வு மட்டும் காரணமல்ல. “பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று" என மன்னன் அல்லது ஜமீன்தாரின்அந்தப்புரத்தில் தம் குலப் பெண் அடைக்கப்படுவதையும், அவனது மறைவிற்குப் பின் அப்பெண்ணும் அவளது பிள்ளைகளும் எவ்வித உரிமையுமின்றி அவலத்திற்கு ஆளாவதையும் விரும்பாத காரணத்தால் பெண் கொடுக்க விருப்பமின்றி இடம் பெயர்ந்துள்ளனர்.

Page 39
75
பாலியல் வன்முறை தொடர்பான ஆதிக்கச் சக்தியின் கட்டளை யிலிருந்து தப்பிக்க அடித்தள மக்கள் மேற்கொண்ட ஒரு வழி அழைப்பைப் பெற்ற பெண்ணைக் கொன்று விடுவதாகும். குலமானம் என்பது பெண்களுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் (7.17) இப்படி ஒரு முடிவைப் பெண்ணின் பெற்றோர்களோ சகோதரர்களோ எடுப்பதில் வியப்பில்லை. உடமைப் பொருளாகப் பெண் கருதப் படுவதின் தீயவிளைவை இங்கு காண்கிறோம். அழகிய பெண் என்ற உடைமையை அதிகாரத்துடன் ஒருவன் கேட்க, அதை மறுக்க இயலாத நிலையில் அவ்வுடைமைப் பொருளை அழித்து தம் குல அல்லது சாதியப் பெருமையை நிலைநாட்டும் செயலாக இது அமைகிறது. ஆதிச்சக்திகளின் பாலியல் வன்முறைக்கு ஆளாக விரும்பாத பெண் அதிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளும் முயற்சியாக தற்கொலை அமைகிறது. பாலியல் வன்முறை நிகழ்வுக்குப் பின்னர் ஏற்படும் அவமானத்திலிருந்து தப்பிக்கும் வழிமுறையாகத் தற்கொலை அமைந்துவிடுகிறது. இம்முடிவானது அப்பெண் எடுக்கும் சுயேட்சையான முடிவு என்று முழுமையாக கூறிவிட முடியாது. இத்தகைய தற்கொலை உணர்வு பெண்களின் உள்ளத்தில் பாரம்பரியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. போரில் தோற்றுப் போன மன்னனின் உறவுப்பெண்களும் பிற பெண்டிரும் தீக்குளித்து மாண்டு போவதை 'ஜஉறீர்’ என்றபுெயரில் ஒரு சடங்காக இராஜபுத்திரர்கள் கொண்டிருந்தனர். இவ்வாறு தற்கொலை மேற்கொண்ட பெண்களைப் போற்றி வழிபடும் மரபு தமிழ்நாட்டில் வழக்கிலுள்ளது. பாலியல் வன்முறைக்கு ஆளாகப் போவது குறித்து அச்ச உணர்வும் அவமான உணர்வும் மேலோங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டு அக்கொடுமையிலிருந்து விடுபட்ட பெண்களைப் போற்றும் கதைகளும், வழிபாட்டு மரபுகளும் இப்பெண்களின் தற்கொலைக்கு மறைமுகமாகத் தூண்டுவதாக அமைந்து விடுகின்றன.

76
(Լքւգ-6ւ!
தம்குலப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதை விரும்பாது இடம் பெயர்ந்து சென்றவர்கள் வேறு ஊரில் குடியேறிவிடுவது பல பழமரபுக் கதைகளின் முடிவாக உள்ளது. இதைவிட முக்கியமான முடிவாக அமைவது, கொலைக்கு ஆளாகியும் தற்கொலை செய்து கொண்டும் பாலியல் வன்முறையிலிருந்து தப்பிய பெண்கள் தெய்வமாக வழிபடுவதாகும். முன்னர் குறிப்பிட்ட கொலையில் உதித்த தெய்வங்களின் தோற்றத்திற்குக் காரணமாக முன்னோர் வழிபடும் (Ancestor Worship) வீரர் வழிபாடும் குறிப்பிடப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் கொடூரமான முறையில் இறந்தவர்களின் ஆவியைக் குறித்த அச்சமும் இத்தகைய தெய்வங்களின் தோற்றத்திற்குக் காரணமாக அமைகிறது. பாலியல் வன்முறைக்குப் பலியாகி அல்லது பலியாக விரும்பாது தற்கொலை செய்து கொண்ட பெண்களும், உறவினர்களால் கொலைசெய்யப்பட்ட பெண்களும் தெய்வமாக வணங்கப்படுவதை மேற்கூறிய மூன்று வகைகளுள் எதில் அடக்கலாம் என்பது கேள்விக்குரிய ஒன்று. மூதாதையர் வழிபாட்டின் தொடர்ச்சியாகவோ, அச்சத்தின் காரணமாக வழிபடப்படும் தெய்வங்களுள் ஒன்றாகவோ இப்பெண் தெய்வங்களைக் கருத முடியாது. வீரர் வழிபாட்டில் ஒரு பகுதியாகவே இவ்வழிபாட்டைப் கருத வேண்டும். தம் குல அல்லது சாதிய மானத்தின் குறியிடாக இவ்வாறு இறந்துபோன பெண்களைக் கருதுவதன் காரணமாக இவ்வழிபாடு இன்றும் தொடர்கிறது. அதிகாரம் என்ற வலிமை மிக்க சக்திக்குத் தம் உடலை இரையாக்காமல் கொலை அல்லது தற்கொலையின் வாயிலாக உயிர்நீத்த தம்குலப் பென்டிரைத் தெய்வமாக வழிபடும் இச்செயல் மேலோர் ஆதிக்கத்துக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்தும் முறையாகவும் அமைகிறது.
(Մ)ւգ-6յ6ՓՄ
இதுவரை பாலியல் வன்முறை தொடர்பாக நாட்டார் வழக்காறுகளில் இடம் பெற்ற செய்திகளையும் செவ்விலக்கியங்

Page 40
77
களோடு ஒப்பிட்டு நோக்கும் போது ஓர் உண்மை பளிச்செனப் புலப்படுகிறது. பாலியல் ஒழுக்க நெறியில் பிறழாது நின்ற பெண்டிரைக் குறித்து மட்டுமே செவ்வியல் இலக்கியங்கள் புகழ்ந்து பேசுகின்றன. ஆனால் அடித்தள மக்கட் பிரிவைச் சேர்ந்த பெண்டிர் எதிர்கொண்ட பாலியல் வன்முறை அவ்விலக்கியங்களில் இடம் பெறவில்லை. இதுபோன்ற மரபுவழியான வரலாற்று நூல்களிலும் உயர் வகுப்புப் பெண்டிரின் அழகும் ஆற்றலும் செயல்பாடுகளும் இடம் பெறும் அளவிற்கு அடித்தள மக்கட் பிரிவைச் சார்ந்த பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்த செய்திகள் இடம் பெறவில்லை.ஆனால் நாட்டார் வழக்காறு களில்தான் இத்தகைய பாலியல் வன்முறை குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக அடித்தள மக்கள் ஆய்வில் பாலியல் வன்முறை குறித்த நாட்டார் வழக்காறுகள் முக்கிய இடம் பெறுகின்றன.
என்றாலும் நாட்டார் வழக்காறுகளைச்சான்றுகளாக ஏற்றுக்கொள்ள நம்நாட்டு வரலாற்றறிஞர்கள் பலர் தயங்குகிறார்கள். ஆனால் இத்தகைய தயக்கம் பொருளற்றது. ஏனைய வரலாற்றுச் சான்றுகளைப் போன்றே நாட்டார் வழக்காறுகளையும் ஆய்வுககுட்படுத்தி வரலாற்றுண்மை களைக் கண்டறிய முடியும்.
அதே நேரத்தில் பாலியல் குறித்த சான்றுகளைக் திரட்டி ஆராய்வது மட்டும் அடித்தள மக்கள் ஆய்வின் நோக்கமாகிவிடக்கூடாது. பாலியல் வன்முறைக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து பழிவாங்கியது தொடர்பான வழக்காறுகளைச் சேகரிக்க வேண்டும். நம் காலத்திய பாலியல் வன்முறைக் கெதிராக இத்தகைய வழக்காறுகளைப் பயன்படுத்தும் சாத்தியத்தைக் கண்டறிய வேண்டும். கடந்த காலத்திய நாட்டார் வழக்காறுகளை நிகழ்கால சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளப்பயன்படுத்தும் போதுதான் ரசனைக்கும் ஆய்வுக்கும் மட்டுமே நாட்டார் வழக்காறுகள் உரியன என்ற கருத்து நிலையிலிருந்து விடுபட முடியும்.

78
சான்றாதாரம்
l. இப்புதிய வரலாற்றுப் பள்ளியினரின் ஆய்வுக் கட்டுரைகள் "அடித்தள மக்கள் ஆய்வு தெற்காசிய நாடுகளின் வரலாறு சமுதாயம் பற்றிய கட்டுரைகள்' என்ற தலைப்பில் 1982 முதல் 1989 முடிய ஆறு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இதன் பதிப்பாசிரியர் பேராசிரியர் இரணஜித்குகா ஆவார். ஏழாவது தொகுதி அண்மையில் வெளிவந்துள்ளது.
2. இக்கதையிலும் அடுத்து இடம்பெறும் போத்தியம்மன் கதையிலும் பெண்ணின் வயது 12 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பூப்படையாச் சிறுமிகளுடன் உடலுறவு கொள்ள விழையும் பாலியல் வக்கிரஉணர்வினை இக்கதைகள் வெளிப்படுத்து கின்றன. இத்தகைய வக்கிர உணர்வினை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்ச்சி வருமாறு : ஒரிசா மாநிலத்தில் கடக் மாவட்டத்தில் அவுல் என்ற மன்னராட்சிப்பகுதி இருந்தது. ராஜா விரஜசுந்தரத்தோன் என்ற காமுகன் இப்பகுதியின் மன்னனாக இருந்தான். இவனது ஆளுகைக்குட்பட்ட சத்ரசகடா என்ற கிராமத்தில் கனகா என்ற பருவமடையாத 12 வயதுச் சிறுமி வாழ்ந்து வந்தாள். கரன் வகுப்பைச் சேர்ந்த இக்குடியானவப் பெண்ணின் அழகை சுந்தரத்தோன் கேள்விப்பட்டான். 1926 செப்படம்பர் 19 இல் அவனது ஆட்கள் கனகாவின் தந்தையைப் பலவந்தமாகப் பிடித்து பல்லக்கில் போட்டு மூடி அரண்மனைக்குக் கொண்டு சென்றனர். 42 வயதான மன்னனின் மிருகத்தனத்தைத் தாளாது 12 வயதுச் சிறுமியான கனகா ஒரு மாதத்திற்கள் இறந்து போனாள். (ஆர். பி. ஐயர் 1962 17 12).
3. செர்பியர்களால் திட்டமிட்டு நடத்தப்படும் இப்பாலியல் பலவந்த த்திற்கு இருபதினாயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியப் பெண்கள் இரையாகியுள்ளனர். இது தொடர்பான கட்டுரையொன்று தினமணி (1.8.93 மதுரைப் பதிப்பு, பக்கம், 6) நாளிதழில் வெளியாகியுள்ளது.
4. சம்பந்தரின் இப்பாடலில் பெரும் 'கற்பு' என்ற சொல் 'அறிவு' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிலர் விளக்கம் தருகின்றனர். ஆனால் சீர்காழியில் ஆண்டுதோறும் நடைபெறும் திருமுலைப்பால் திருவிழாவில் இடம் பெறும் ஆறுபேர் பங்கேற்கும் நிகழ்ச்சியொன்று பாலியல் பலவந்தம் என்ற பொருளிலே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதனை உறுதிப்படுத்துகின்றது. 'திருஞானசம்பந்தர் என்ன செய்யச் சொன்னார்?' என்று ஒருவர் கோட்க மற்றவர்கள் சமணப் பெண்களை. சொன்னார் என்று கூட்டாகக் கூறி ஆபாசமான உடலசைவுகளைச் செய்வார்களாம். அது குறித்து சிலர் கடிதம் உழுதியதின் பேரில் தமிழறிஞரும் சமணருமான ஜீவபந்து பூரீபால் நேரில் சென்று இந்நிகழ்ச்சியைக் கண்டுள்ளார்.

Page 41
அந/7கரிக சங்கிலித் தொடர் ஒன்று
சுகிரிவி
சென்னையில் ஏப்பிரல் 21ம் திகதி போலிஸ் தடையை மீறி வடநாட்டுக்காரர்கள் கடைகள் முன்பு மறியல் செய்ய முயன்றதாக நெடுமாறன் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி படித்தேன். தமிழர் தேசிய இயக்கத்தலைவன் நெடுமாறன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 150 பேர் ஒரு ஊர்வலம் நடத்தினர். அவர்களது கோரிக்கை விசித்திர்மானது.
தமிழ் நாட்டில் தொழில், பங்குசந்தை வணிக வியாபாரம் போன்ற துறைகளில் வடநாட்டுக்காரர் ஆதிக்கம் செலுத்து வதாகவும் இந்த ஆதிக்கத்தை தாங்கள் எதிர்ப்பதாகவும் கூறி மறியல் செய்தார்களாம். இதை வாசிக்கும் பொழுது வேடிக்கையாகவும் இருந்தது வேதனையாகவும் இருந்தது. இந்த நடவடிக்கைகளுக்கும் மேல் நாடுகளில் வதியும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் நித்தியம் அனுபவிக்கும் இனத்துவேச துன்பங்களுக்கும் கருத்தியல் அளவில் ஏதும் வித்தியாசமுண்டா?
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இப்படிப்பட்ட தேசியம் பேசுவோர் தமிழர்கள் வெளிநாட்டில் அல்லல்படுவதைத் தாம் சகிக்கமாட்டோம் என்றும் தமிழர் போகும் இடமெல்லாம் பள்ளமும் திட்டியும் என்று மேடைகளில் ஆதங்கப்பட்டு ஆவேசத்துடனும் ஆக்ரோசத்துடனும் கூறுவர். இது என்ன முரண்பட்ட விதண்டாவாதம்? உனக்கு ஒரு நீதி ஏனையோருக்கு ஒரு நீதியா?
பூமியின் பரப்பை இனத்துவ அடிப்படையில் கண்டதுண்டமாக்கித் தேசியம் பேசி அது முன்னேற்றமான ஒரு கொள்கை என்று கூறி அப்படி தேசிய எல்லைகளை பரப்பளவில் மீறுவோரை கண்டதுண்டமாக்குவதும் மானிடரின் அநாகரிகம் வளர்ந்து கொண்டு போவதும் ஒரு முரண்பட்ட தற்காலிகப் பண்பு ஒன்று. தொடர்பு சாதனங் களினால் சுருங்கிக் கொண்டு வரும் உலகப் பரப்பை ஒரு

80
பக்கம் தற்காலிக வரலாற்றுப் பண்பு என்று கூறும் நாம் அதே சமயம் இனத்துவ ரீதியில் பரந்த நிலப்பரப்பை துண்டு போட்டுத் தீவுகளாக்க முற்படுகிறோம். இவை யாவும் தற்கால முரண்பாடுகள்.
இந்த அநாகரிகத் தேசிய வெளிப்பாட்டில் மகளிர் அணியைச் சேர்ந்த ஒன்பது பெண்களும் இருந்தார்கள் என்பதை அறிந்த பொழுது நாம் வெட்கித் தலை குனிகிறோம். அடக்குமுறைகளையும் பாரபட்சமற்ற அணுகுமுறைகளையும் அனுபவித்து வரும் பெண்களும் அவற்றை இயக்க ரீதியாக கண்டிக்கும் பெண் நிலைவாதிகளும் இப்படிப்பட்ட பிற்போக்குத்தனத்தில் எப்படி தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்?
ஜெர்மனியில் ரொக் இசையில் கூட இனத்துவேசத்தைக் அள்ளிக் கொட்டும் பாடல் ஒன்று இதோ!
அன்றைய ஜெர்மனி இன்றில்லை எல்லாத் திசைகளிலிருந்தும் புகுந்துள்ளார்கள் நம் தேசத்தில் வேறினத்தவர் விழித்தெழு ஜெர்மனியனே! நாம் கத்துவோம் ! - எப்போதும் குரல் கொடுப்போம் ! வெளியேறு அந்நியனே!
G)35st LDITaioTGLT Guff G60T (commando - Pernod) 676orp இசைக்குழுவினரின் இந்தப் பாடலுக்கும் நெடுமாறனின் வடநாட்டுக்காரனே வெளியேறு என்ற கூற்றுக்கும் உள்ள கருத்தியல்வாத தொடர்ச்சியை இனங்காண்பது அப்படி ஒரு கஷ்டமான காரியமல்ல.

Page 42
"சிவரமணியின் கவிதைகள்”
சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி
சூரியகுமாரி பஞ்சநாதன்
சமகாலத்து ஈழத்து இலக்கியப் பரப்பில் முற்போக்கு சிந்தனையை அடித்தளமாக வைத்துத் தம்மை இனங்காட்டிய இளம் பெண் கவிஞர்களுள் தனித்து முத்திரை குத்துமளவிற்குத் தன்னை வித்தியாசமாகவும் தனித்துவத்துடனும் வெளிப் படுத்திய சிவரமணி தற்கொலை செய்ததன் மூலம் தனது ஒரு சில கவிதை ஆக்கங்களை மட்டுமே எமக்கு எச்சமாக விட்டுச் சென்றுள்ளார்.
தனித்துவமிக்க அவருடைய 22 கவிதைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பானது "சிவரமணி கவிதைகள்” என்ற தலைப்புடன் பெண்கள் ஆய்வு வட்டத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டது.
மேற்படி நூலில் சித்திரலேகா மெளனகுரு அவர்களின் "சிவரமணியின் வாழ்வும் கவிதையும் ஒரு அறிமுகம்” என்ற குறிப் பேட்டின் மூலம் சிவரமணியின் வாழ்க்கை நோக்கினையயும் இவருடைய கவிதை ஆளுமையையும் அறியக்கூடியதாகவுள்ளது. சிவரமணி ஏன் தற்கொலை புரிந்தார்? அச்சம்பவத்தின் மூலம் அவர் சமூகத்திற்கு எதனை உணர்த்த விழைந்தார்? என்பன போன்ற வினாக்களுக்கு எம்மால் இன்றும் தெட்டத் தெளிவான ஒரு முடிவுக்கு வரமுடியாமலே உள்ளது.
சிவரமணியுடன் ஒன்றாகக் கல்வி கற்ற போது அவருடைய வித்தியாசமான தன்மைகள் பல சந்தர்ப்பங்களில் என்னை வெகுவாக ஈர்த்திருந்தன. ஒரு சிலரிடையே நட்பினைக் கொண்டிருந்த சிவரமணி, யதார்த்த சமூகத்தின் முரண்பாடுகள், சமூக வரையறைகள், பெண்கள் அடக்குமுறை, மூன்றாம் உலக நாடுகளின் பொதுவான பிரச்சினையாகிய வறுமை, அதிலும் பெண் சமூகம் மட்டுமே எதிர்கொண்ட

82
இரட்டைச் சுமை பற்றி எல்லாம் அதீத ஈடுபாட்டுடன் அவற்றினைக்களையும் விதத்தில் நண்பர்களுடன் மட்டும் நின்றுவிடாது சுயாதீனமாக இயங்கும் பல பெண்கள் அமைப்புக்களுடனும் சேர்ந்து நடைமுறைக்கு ஏற்ப செயற்படவும் தொடங்கினார்.
பெண்விடுதலை பற்றித் தீவிரமாகத் சிந்தித்த சிவரமணி அதனோடு மட்டும் நின்றுவிடாது ஒட்டு மொத்தமான சமூக விடுதலை பற்றியும், ஆரோக்கியமாகச் சிந்தித்து அதற்கான வழிவகைகளையும் தீர்க்கமாக முன்வைத்தார்.
1985 ஆம் ஆண்டு தொடக்கம் அவரால் எழுதப்பட்ட கவிதைகளை நோக்கும் போது அவருடைய உண்மையான மனஉணர்வுகளையும் அரசியல், சமூக, பொருளாதாரம் பற்றிய அவரது கருத்து ஆழ்ந்த நோக்கும் புலனாகின்றமையை நாம் அவதானிக்கலாம்.
"எனது ஊர்க் கோவில் திருவிழா நடந்தது" என்ற கவிதையில்,
ராகம் இல்லாத நாதஸ்வர ஒலமும் அண்டம் அதிரும் மேளத்துடனும்,
என்ற வரிகள் மூலம் காலங்காலமாக எமது பண்பாட்டில் மங்கலக் குறியீடாக வரும் நாதஸ்வர, மேள ஒலிகளை ஒலமாகவும் , அண்டம் அதிரும் ஓசையாகவும் , வெளிப்படுத்தியிருப்பதனைச் சற்று வித்தியாசமாக நாம் உணரக் கூடியதாயுள்ளது. கோவில்களில் வாசிக்கப்படும் நாதஸ்வரத்தை எவரும் தமது கவிதை ஆக்கங்களில் இவ்வாறு இழிவுபடுத்தியதாகத் தெரியவில்லை. எள்ளல் சுவையுடன் சமூகத்தின் அபத்த நிலையினை நேர்மையாகவும் துணிவுடனும் இங்கு சிவரமணி தமது கவிதையில் சித்திரிக்க முயல்வதினை நாம் அவதானிக்கலாம்.

Page 43
83
எனது ஊர்க் கோவிலில் திருவிழா நடந்தது. வழக்கமான ஆண்டுகள் போன்று கடுக்கன் போட்டு காதுகள் கிழிந்த கச்சான் ஆச்சி ஐஸ்பழக்காரன் சரிகைச் சேலையைச் சரிபார்க்கும் பெண்கள் பேசிப்புறுபுறுக்கும் கிழவர் கூட்டம்.
இத்தனைக்கும் நடுவே, மக்கள் பார்வையில் நழுவிய ஒரு சிறு கறுப்புக் கொடி ஆனாலும் வழக்கம்போல் திருவிழா நடந்தது மீண்டும் ஒரு நாள் இரத்தத் துளிகள் மண்ணிலே தெளிக்கப்படலாம் மீண்டும் ஒருவன் வருவான் இந்தக் கொடி கிழிந்திருக்கும் இதற்குப் பதில் இன்னுமோர் கறுப்புக்கொடி ஏற்றி வைப்பான் எனினும் என் ஊர்க் கோவிலில் வழக்கம் போல் திருவிழா நடைபெறும்.
சமூகத்தின் யதார்த்த நிகழ்வுகளூடு அரசியல் இரண்டறக் கலந்துள்ள தன்மையினை மேற்படி கவிதையானது இனங்காட்ட முனைகிறது. கடுக்கன் போட்டுக் காதுகள் கிழிந்த கச்சான் ஆச்சியும், ஜஸ்பழக்காரனும் சரிகைச் சேலையைச்சரிபார்க்கும் இளம் பெண்களும், பேசிப்புறுபுறுக்கும் கிழவர் கூட்டமும் மிக இயல்பாக யதார்த்தத்தினின்றும் வேறுபடாது மிக அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்னர். இத்தகைய இயல்பான சம்பவங்களுடனே மக்கள் பார்வையில் நழுவிய

84
ஒரு சிறு கறுப்புக் கொடி, மீண்டும் ஒரு நாள் இரத்தத் துளிகள் மண்ணிலே தெளிக்கப்படலாம், மீண்டும் ஒருவன் வருவான் இந்தக் கொடி கிழிந்திருக்கும். இதற்குப் பதில் இன்னுமோர் கறுப்புக் கொடி ஏற்றி வைப்பான் என்ற அடிகள், அரசியல் புரட்சி என்பன மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த ஒன்று என்பதனை சிவரமணி ஆணித்தரமாக எமக்குப் புரிய வைக்கிறார்.
கறுப்புக் கொடிக்கான காரணத்தைச் சமூகம் பெரிதுபடுத்தாது தன்பாட்டில் வழக்கம் போலவே இயங்குகின்றமையை சாதாரண குறியீடுகள் மூலம் புலப்படுத்திய சிவரமணி காலங்காலமாக ஒருவரேனும் விடாப்பிடியாகக் கறுப்புக் கொடியை ஏற்றிவைப்பதன் மூலம் இளம் சமுதாயத்தினரின் மூலம் சமூகத்தினின்றும் வேறுபட்ட அல்லது இளம் சமுதாயத்தினரின் எதிர்ப்புணர்வை ஏதோ ஒரு வகையில் புலப்படுத்த எத்தனிப்பதாகவே அமைகிறது.
தீர்மானமாக, உண்மை விடுதலையினை மட்டுமே அவாவி நின்ற சிவரமணி
எங்களிற் சிலரது விடுதலை
மட்டும்
விலங்கோடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம். என்று கூறியதுடன் நின்று விடாது
விலங்குகளுக் கெல்லாம் விலங்கொன்றைச் செய்த பின் நாங்கள் பெறுவோம் விடுதலை ஒன்றை
என்கிறார். இதன் மூலம் இவர் அரைகுறை விடுதலையின் தாக்கத்தை எமது சமூகத்தின் அனுபவ வாயிலாகப்

Page 44
85
பெற்றமையால் இனியும் எமது இளந் தலைமுறை ஏமாற்றமடையக்கூடாது என்ற மனப்பாங்குடன் இக்கவிதை உருக்கொண்டிருக்கலாம்.
"காதல்" உணர்வினை வெளிப்படுத்தும் கவிதையாக,
மஞ்சள் சந்தனத்தில் மூழ்கி வரும் வானமகளின் வண்ண நெற்றியிலே ஆதவன் பொட்டு இடும் அந்தி வேளைகளிலே உன்னை நினைக்கிறேன்.
எனது இதய ரோஜாவின் ஒவ்வொரு செவ்விதழும் காதல் காணிக்கையால் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு எஞ்சியிருப்பது பூவைத்தாங்கிய வெற்றுக் காம்புதான்.
என் இதயத்தில் நான் தாங்கியுள்ள வெற்றுக் காம்பு இன்னும் எறியப்படவில்லை அன்பே புது பிரசவத்துக்காய் இங்கே காத்துள்ளது.
ஆனால் அந்தப் பிரசவம் அந்தக் காதல் மலர் நானும் நீயும் காத்துள்ள நாளைய உலகென்னும் இளம் தேசத்தில் நிச்சயம் மணம் வீசும்

86
என்ற கவிதை வரிகளில் கூட சிவரமணி "காதலை புதிய பிரசவத்தின் எதிர்கால நம்பிக்கைக்குரிய கருப்பொருளாகவே இனம்காண்கின்றமையை நாம் அவதானிக்கலாம். அதாவது புதிய பிரசவத்தின் எதிர்கால நம்பிக்கையில், காதலின் காத்திருப்பு சிவரமணியினால் தூய உருவினைப் பெறுகின்றமையையே நாம் காணக்கூடியதாக உள்ளது.
அடுத்து “வையகத்தை வெற்றி கொள்ள" என்ற தலைப்புடன் 1986இல் எழுதப்பட்ட கவிதையானது கடமை நம்பிக்கையினையும், வாழ்வு பற்றிய நம்பிக்கையினையும் சுட்டுவதாக அமைகிறது. மேலும் அக்கவிதையில் பெண்களின் அர்த்தமற்ற நேர இழப்புக்கள் சுட்டிக் காட்டப்படுவதுடன் புதிய வாழ்வு பற்றிய சிந்தனையை நோக்கிக் கவிதை நகர்வதனை நாம் அவதானிக்கலாம்.
என் இனிய தோழிகளே இன்னுமா தலைவார கண்ணாடி தேடுகிறீர் சேலைகளைச் சரிப்படுத்தியே வேளைகள் வீணாகின்றன.
ஆடையின் மடிப்புக்கள் அழகாக இல்லை என்பதற்காகக் கண்ணிர் விட்ட நாட்களை மறப்போம்.
மண்ணால் கோலமிட்டு அழித்தது போதும் எங்கள் செந்நீரில் கோலமிட்டு வாழ்க்கைக் கோலத்தை மாற்றி வரைவோம்
சாரிகைச் சேலைக்கும் கண்நிறைந்த காதலர்க்கும் காத்திருந்த காலங்கள்

Page 45
87
அந்த வெட்கம் கெட்ட காலத்தின் சுவடுகளை அழித்து விடுவோம். புதிய வாழ்வின் சுதந்திர கீதத்தை இசைத்துக் களிப்போம் வாருங்கள் தோழியரே
என அறைகூவல் விடுக்கிறார், இன்றைய பெண்களிடம்.
1986 காலப்பகுதியில் எழுதப்பட்ட "முனைப்பு" என்ற கவிதை, நம்மைச் சூழ உள்ள சமூகத்தினதும் ஆணாதிக்க உணர்வுளுடனும் எமது பெண்கள் சிக்கித்தவிக்கும் அவலத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது.
பேய்களால் சிதைக்கப்படும் பிரேதத்தைப் போன்று சிதைக்கப்பட்டேன் ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம் இரத்தம் தீண்டிய கரங்களால் அசுத்தப்படுத்தப்பட்டன.
என்னை
மேகத்திற்குள்ளும் மண்ணிற்குள்ளும் மறைக்க எண்ணிய வேளையில் வெளிச்சம் போட்டுப் பார்த்த அவர்களின், குரோதம் நிறைந்த பார்வையும் வஞ்சகம் நிறைந்த சிரிப்பும் என்னைச் சுட்டெரித்தன
எனது ஆசைகள் இலட்சியங்கள் சிதைக்கப்பட்டன என் வேதனை கண்டு

88
ரசித்தனர் அவர்கள் என்றைக்குமாய் என் தலை குனிந்து போனதாய்க் கனவு கண்டனர்
ஆனால் நான் வாழ்ந்தேன் வாழ்நாளெல்லாம் நானாக இருள் நிறைந்த பயங்கரங்களின் ஊடாக நான் வாழ்ந்தேன் இன்னும் வாழ்கிறேன்
ஒரு பெண்ணின் ஆத்மார்த்த உணர்வு சமூகத்தின் கயமைத்தனத்தால் தீண்டபப்டும் அவலத்தினை இக் கவிதையில் சிவரமணியினால் பயன்படுத்தப்பட்ட சொற் பிரேயாகங்கள் முடிந்தளவு எல்லைக்கோட்டில் நின்று அதன் அர்த்தத்தினைப் புலப்படுத்தியுள்ளமையை நாம் அவதானிக்கலாம். கொடூரமான உணர்வுகள் ஒரு மனித ஜீவியினை எவ்வெவ்வகையில் பாதித்தன அல்லது பாதிக்கும் என்பது பற்றி மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. இக் கவிதையில் அவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லினையேனும் நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக இன்னொன்றினை நாம் சேர்த்துப் பார்த்தால் அக்கவிதையின் நிறைவின்மையை நாம் கண்டு கொள்ளலாம். எனவே சிவரமணி நல்ல ஒரு கவிஞருக்குரிய சொல்லாக்கப் பண்பினையும் ஆளுமையையும் கொண்டிருந்தமை அக்கவிதையின் மூலம் நன்கு புலனாகிறது. தடித்த எழுத்துக்களிலுள்ள வரிகள் அவரின் கவித்துவத் திறனையே சுட்டி நிற்கின்றன.
அடுத்து 1985இல் சிவரமணியினால் எழுதப்பட்ட அன்றைய, இன்றைய முரண்பாடுகள் பற்றிய கவிதையை நோக்குமிடத்து அவர் அழகியலின் பால் மட்டும் தனித்து ஈர்க்கப்பட்ட கவிஞராக அல்லாது ஓராயிரம் சம்பவங்களால் வெறியூட்டப்பட்ட கவிஞராகவே தன்னை இனங்காட்டுகிறார்.

Page 46
89
ஆதவனின் ஒளி கண்டு மலரும் ஆம்பலின் அழகு கண்டு அதிலே மொய்க்கும் வண்டின் மோகநிலை கண்டு கவிதை வரைவதற்கு நான்
நீ நினைக்கும் கவிஞன் அல்ல . என்னை வெறிமுட்ட இங்கு ஓராயிரம் சம்பவங்கள் அன்றைய பொழுதும் இன்றைய பொழுதும் ஒரே சூரியன் ஒரே சந்திரன்-ஆனால் அன்றோ ஒரு உறக்கம் நிகழ்வுகள் புரியாத W நிம்மதிப் பெருமூச்சு-இன்றோ உறக்கங்கள் தோல்வி கண்ட விழிப்பின் பரிதவிப்பு
நானோ இருபதாம் நூற்றாண்டின் வசந்தத் தென்றல் அல்ல
அனேகமான கவிஞர் வசந்தத் தென்றல் பற்றியும் மலரிலே மொய்க்கும் வண்டின் மோக நிலையினையுமே கவிதைக்குப் பொருளாக்கி அதன் இரசனையில் தம்மை மூழ்கடிப்பர். ஆனால் சிவரமணி தத்துவ அறிஞரான "பிளேற்றோ" வின் கருத்தியலினால் ஈர்க்கப்பட்ட காரணமோ தெரியவில்லை, தான் இருபதாம் நூற்றாண்டின் வசந்தத் தென்றல் அல்ல என்பதையும் சாதாரண இயற்கை அழகில் ஈடுபட்டு எழுதும் கவிஞர்களின் ரகத்தைச் சேர்ந்தவள்

90
அல்ல என்பதையும் மேற்குறித்த கவிதை மூலமாகவே பிரகடனம் செய்கிறார்.
இனி 1989களில் எழுதப்பட்ட சிவரமணியின் கவிதைகளை
நோக்குவோமேயானால் அவை சிவரமணியின் கவிதைகளின்
முதிர்ச்சி நிலையினை இனங்காட்டி நிற்பதுடன் வாழ்வு
பற்றிய நம்பிக்கைகள் துண்டுதுண்டாகச் சிதறப்பட்ட நிலையில்
வாழ்வு பற்றிய வெறுப்பு, ஆத்திரம், மனக் கசப்பு என்பவற்றுடன் மனிதாபிமான உணர்வினைக் காப்பாற்ற முடியாது பரிதவிக்கும் நிலையினையே தெள்ளிதின் உணர்த்தி
நிற்கிறது.
மனிதாபிமான உணர்வு அரசியலுள் முரண்பட்டுப் போகின்ற செய்தியினை,
என்னிடம் ஒரு துண்டுப் பிரசுரத்தைப் போல நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை
இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு துப்பாக்கி நீட்டப்படும் போது ஒரு மெல்லிய பூ நுனியில் உட்காரக் கூடிய வண்ணத்துப் பூச்சியின் கனவு எனக்கு சம்பந்தமற்ற ஒரு சம்பவிப்பு மட்டுமே
நான் மனிதனாய் வாழும் முயற்சியில் பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன் எனக்கு பகலால் உருவமைக்கப்பட்ட அழகிய இரவு கனவாயுள்ளது.
என்ற கவிதையில் "மனிதனாய் வாழும் முயற்சியில் பூக்களை மரத்துடனே விட்டுவிட விரும்பும் மனிதத்துவம் சிவரமணியின்

Page 47
91.
ஆத்மார்த்த ஒசையாகவே எமக்குக் கேட்கிறது. மரங்களையும் பூக்களையும் மானிட நேயத்துடன் சேர்த்தே நேசித்த அவரது சுபாவம் தனிக்கற்பனையாக அல்லாது அவருடைய நடைமுறைவாழ்விலும் அவர் அதனைச் செயற்படுத்த முயன்றமை, அவருடன் பழகியோரால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று.
யுத்தகால நெருக்குதலில் சிறுவரின் மனப்பாதிப்புகள் நடைமுறைச் சம்பவங்கள் அவர்கள் மாற்றப்படும் விதத்தினை யுத்தகால இரவொன்றின் நெருக்குதல் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையில் அழகுறச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
பாதைகளின் குறுக்காய் வீசப்படும் ஒவ்வொரு குருதி தோய்ந்த முகமற்ற மனித உடலும் உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பின் மீதாய் உடைந்து விழும் மதிற்கவர்களும் காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள் சிறுவர்களல்லாது போயினர் கேள்விகள் கேட்காதிருக்கவும் கேட்ட கேள்விக்கு விடை இல்லாத போது மெளனமாயிருக்கவும் மந்தைகள் போல எல்லாவற்றையும் பழகிக் கொண்டனர்.
தும்பியின் இறக்கைகளைப் பிய்த்து எறிவதும் தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும் எமது சிறுவரின் விளையாட்டானது யுத்தகால இரவுகளின் நெருக்குதலில் எங்கள் குழந்தைகள் 'வளர்ந்தவர்' ஆயினர்.

92
தற்போதைய அரசியல் நிலையினைக் கேள்வி கேட்கவோ அல்லது அதற்கான பதிலினைப் பெற முடியாத நிலையில் மந்தைகள் போன்றிருத்தல் என்ற செய்தியின் மூலம் எங்களுடைய சிறுவர்கள் சிறுவர்களல்லாது போனமைக்கான அடிப்படைக் காரணமாக
பாதைகளின் குறுக்காய் வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த முகமற்ற மனித உடலும் உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பின் மீதாய் உடைந்து விழும் மதிற்கவர்களும்
சிறுவரினை “வளர்ந்தவர்கள்” ஆக்கியமைக்கான காரணமாகக் கூறப்படுகின்றது.
அனைத்திற்கும் மத்தியில் 'அரசியல் சர்வாதிகாரம்", இதனைத் தொடர்ந்து எதிர்காலம் பற்றிய கேள்வி ? இவை சிவரமணியைத் தூண்ட கவிதை இவ்வாறாக உருக்கொள்கிறது.
புத்திசாலித்தனமான
கடைசி மனிதனும் இறந்து கொண்டிருக்கிறான் கேள்வி கேட்பதற்கான எல்லா வாசலும் அறையப்பட்டபின்னர் இருட்டின் உறுதியாக்கலில் உங்கள் குழந்தைகளைவிட்டுச் செல்லுங்கள் அவர்களுக்குப் பின்னால் எதுவுமே இல்லை சேலை கட்டிக் காப்பாற்றிய சில நாகரிகங்களைத் தவிர.
சேலை பற்றிய செய்திகளை சிவரமணியின் கவிதைகளில் ஒரு குறியீடு போல் நாம் பரக்கக் காணக்கூடியதாயுள்ளது.
* சரிகைச் சேலையைச் சரிபார்க்கும் பெண்கள்.

Page 48
93
* சரிகைச் சேலைக்கும்
கண்ணிறைந்த காதலர்க்கும் காத்திருந்த காலங்கள் அந்த வெட்கம் கெட்ட காலத்தின் சுவடுகளை அழித்துவிடுவோம்.
* ஆடையின் மடிப்புக்கள்
அழகாக இல்லை என்பதற்காக கண்ணிர் விட்ட நாட்களையும் மறப்போம்.
சேலை கட்டிக் காப்பாற்றிய
சில நாகரிகங்களைத் தவிர.
என்பன போன்ற வரிகள் சிவரமணியினால் எடுத்தாளப்பட்டமைக்கான காரணத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். "சேலை கட்டுதல்' என்ற செய்தி சிவரமணியினால் பயன்படுத்தப்பட்ட இடங்கள் யாவுமே வீண் நேர இழப்பினையும் முந்தானை விலகாத எமது கட்டுப்பெட்டித்தனமான கலாச்சாரத்தின் பால் ஏற்பட்ட வெறுப்பினையுமே தரவாகக் கொண்டு கவிதையை வடிவமைத்துள்ளமையை நாம் காணலாம். எனவே சேலை கலாசாரம் தனிய பெண்களின் குறியீடாய் மட்டுமல்லாது வழிவழிவந்த மரபுப்பேணலின்மொத்த வடிவாகவும் அடக்க ஒடுக்கத்தினைக் குறிக்கும் உடைமையாகவும் இதுவரை காலமும் அல்லது இனியும் கூட அது கருதப்படும் நிலையினை எள்ளி நகையாடியே இவ்வரிகள் அவரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் நாம் ஊகிக்க
இடமுண்டு.
சகஜமான எமது வாழ்வில் எதிரெதிரான நியாயப் படுத்தல்களால் உண்மை பொய்மைகளையும் கண்டுபிடிக்க முடியாது நாம் சிக்கித்தவிக்கும் சந்தர்ப்பங்களை நிதர்சன மாக நாம் பல தடவை எதிர் கொண்டதுண்டு. அந்த நிலை சிவரமணியையும் மிக ஆழமாகக் பாதித்தனால் அவருக்கே உரிய பாணியில் கவிதையானது அரசியலும் நடைமுறையும் சார்ந்த வாழ்வின் தாக்கத்தினூடு வெளிப்படுகின்றது.

94
மாலை நேரங்களில் எல்லாச் சுமைகளும் அதிகரித்துப் போய்விடும். எனக்கு உண்மைகள் தெரியவில்லை பொய்களைக் கண்டுபிடிப்பதும் இந்த இருட்டில் இலகுவானகாரியமில்லை மொத்தத்தில்
எல்லோரும் அவசரமாயுள்ளனர்
என்னிடம் ஞாபகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இரவு எனக்கு முக்கியமானது நேற்றுப் போல் மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய
இந்த இருட்டு எனக்கு மிகவும் பெறுமதியானது.
இரவு நேர அரசியல் அராஜகத்திலிருந்து விடுபடமுடியாத தவிப்பும் வெறுப்பும் கடைசி வரிகளில் வெளிப்படுவதை நாம் சற்று நோக்கலாம்.
“எனது பரம்பரையும் நானும்” என்ற கவிதையிலும் கூட வெறுப்பினதும் விரக்தியினதும் உச்சநிலையினை அவர் எட்டிவிட்டதனையே நாம் காணக்கூடியதாயுள்ளது.
எல்லாவற்றையும் தேடிக் கொண்டிருக்கும் இந்த இருட்டில் எதுவுமே இல்லை என்பது நிச்சயமாகின்றது
நான் எனது நம்பிக்கைகளுடன் தோற்றுக் கொண்டிருக்கிறேன்.
இக்கவிதை வரிகள் அவரின் தற்கொலை முயற்சிக்குத் துண்டு கோலாக அமைகின்றமையாலேயே நாம் நோக்கக்கூடியதாயுள்ளது.

Page 49
95
"அவமானப்படுத்தப்பட்டவள்" என்ற 1990 இல் எழுதப்பட்ட கவிதையில் புதிய உவமைகளை எடுத்தாண்டு தனது இருத்தலின் உறுதியை நிர்ணயம் செய்கிறார் சிவரமணி.
உங்களுடைய வரையறைகளின் சாளரத்துக்குப் பின்னால் நீங்கள் என்னைத்தள்ள முடியாது நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து வெளியே எடுத்துவரப்பட்ட ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன் ஒரு குட்டி நட்சத்திரம் போன்று எனது இருத்தல்
உறுதி பெற்றது தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய் நான்
பிரசன்னமாயுள்ளேன்
யாழ் பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலையில் எழுதப்பட்ட இன்னுமொரு கவிதை நடைமுறை உலக யதார்த்தத்தை உணர்ந்து கொண்ட அல்லது தெளிந்து கொண்ட பாதிப்பில் வடிவம் பெறுகிறது.
தனித்து பிரயாணிகள் அற்று மறக்கப்பட்ட எந்த விசேஷமுமற்ற ஏராளமான காயங்களுக்கிடையில் மகிழ்ச்சியாயிருக்க விரும்பும் பொழுதுகள் பேசுவதற்கு சொற்களற்று நாங்கள் எழுந்தோம் உலகை மாற்ற அல்ல மீண்டுமொரு இரவு நோக்கி

96
என்ற இந்த இறுதி வரிகள் ஏமாற்றத்தினால் விரக்தியின் விளிம்பினையே தொட்டுவிடுகிறார் சிவரமணி
இறுதியாக, சிவரமணி தனது கைப்படவே எழுதிய வரிகள்,
எவ்விதப் பதட்டமுமின்றி சிந்தித்து நிதானமாக எடுத்த முடிவு இது எனினும் எனக்கு இன்னும் வாழ்க்கை அற்புதமாகவே உள்ளது எரியும் நெருப்பும்-காற்றில் இந்த முடிவுக்காக என்னை மன்னித்து விடுங்கள்
இறுதி வரை வாழ்வை அற்புதமான ஒன்றாகவே உணர்ந்த சிவரமணி தன்னைச்சுற்றியுள்ள சிறுமனிதரின் குரூரம் நிறைந்த செயற்பாட்டின் பாதிப்பினால் முரண்பாடுகளின் மத்தியில் வாழமுடியாத ஒரு நிலை ஏற்பட்டதனாலேயே தற்கொலை முடிவினை எடுத்திருக்க வேண்டும்.
உலகக் கவிஞர்களின் வாழ்க்கை நோக்கு, முரண்பாடுகள் அதன் பயனாகத் தற்கொலை செய்து கொண்டவர்களின் வரிசையை நோக்கும் போது, காதல் தோல்வியினால் தற்கொலை செய்து தமது உலக இருப்பினை அழித்துக் கொண்ட ரஷ்யக் கவிஞர் மாயாகோவ்ஸ்கி, மலையாளக் கவிஞர் சங்கம்புழை என்போரின் கவித்துவ ஆளுமையும், அமெரிக்காவைக் சேர்ந்த சிறந்த பெண் கவிஞரான சில்வியா பிளாத்தினுடைய தற்கொலையும் அதன் வழியே இலங்கையில் அதிலும் குறிப்பாக ஈழத்து இளம் பெண்கவிஞரான சிவரமணியின் தற்கொலையும் ஏதோ ஒரு வகையில் சமூகத்தினின்றும் தம்மை மீட்டுக் கொள்ள எத்தனித்த ஒரு முயற்சியாகவே எம்முன் காட்சியளிக்கிறது.

Page 50
97
முடிவாக சிவரமணி என்கிற பெண் கவிஞர் தான் சார்ந்த சமூகத்திற்குக் கூறவிழைந்த செய்தியாக,
“சமூக முரண்பாடுகளின்றும் எம்மை நாம் காத்துக் கொள்வோம்" (அதிலும் குறிப்பாகப் பெண்கள்)
என்பதே அவரது கவிதைகளில் அடிநாதமாக ஒலிப்பதை நாம் காணலாம்
தனது சிந்தனைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுவதனைத் தவிர்க்குமுகமாகவே சிவரமணி தற்கொலை முயற்சியில் இறங்கினார் என்பதே இறுதியும் உறுதியமான முடிவு என நாம் கொள்ளலாம்.

Lք6ԾնԶեւյնb ւյժ:/607/OԱյն :
தொலைக்காட்சி ந/7டகங்களில்
பெண்கள்
சாந்தி சச்சிதானந்தம்
பெண்களைப் பற்றிய எந்நிலைப்பாட்டினையும் ஆராயுமிடத்து, ஒரு சமூகத்தின் அந்தந்தக் காலகட்டத்திற்குரிய மேலாதிக்கக் கருத்தியலினை ஆழ நோக்குவது அவசிய மாகின்றது. மிசேல் பரட் (MicheleBarrett என்னும் பெண் ஆய்வாளர் "அர்த்தங்கள் உருவாவதும் , அவை ஆட்சேபனைக்குள்ளாக்கப்படுவதும், அவற்றை உருமாற்றுவதும், மீள உருவாக்குவதுமான நடைமுறைகள்” அறிவு சார்ந்த கருத்தியலின் தோற்றப்பாடும் அதன் இயங்குதலும் எனக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அர்த்தங்களாவன தொடர் பாடலின் மூலம் உருப் பெறுவதால் , கலைப்படைப்புக்கள் கருத்தியலின் உருவாக்க நடை முறையின் முக்கியகளமாக அமைகின்றது என உய்த் தறியலாம். இதன் காரணமாகவே பெண்நிலைவாதக் கோட்பாட்டிற்கு இயைபவர் பலரும் கலைப்படைப்புக்களில் பெண்கள் சித்திரிக்கப்படும் முறைமையினைப் பற்றி பல தரப்பட்ட விவாதங்களை இன்று கிளப்பியுள்ளனர்.
இன்றைய கலைப்படைப்புக்கள் பல தற்கால சமூகத்தில் விரவியுள்ள ஆணாதிக்கக் கோட்பாடுகளின் ஆளுமைக்குட்பட்ட வெளிப்பாடுகளே என்பது இவர்களின் ஏகோபித்த முடிவாகும். கலை மரபுகளில் பெண்கள் ஒரே தன்மைத்தானவுருக்களில் வெளிக்கொணரப்படுகின்றனர். தங்கள் நிலைமைகளுக்குத் தாங்களே உடந்தையாவது போன்று காட்டப்படுகின்றனர், ஒரு புறம் அற்பமென ஒதுக்கித் தூற்றப்படும் அதே வேளையில் தாய் என்றும் தெய்வம் என்றும் போற்றப்பட்டு ஈடு செய்யப்படுகின்றனர். கலை வெளிப்பாடுகளின் சமூக நடைமுறைகளினை (social Practice) ஆய்வுக்குட்படுத்துவதன் மூலம் இத்தன்மைகளை மேலும் உணரலாம். எந்த

Page 51
99
ஊடகத்தினூடு தரப்படுகின்றது, யாரால், யாருக்காக என்னும் வினாக்களினை எழுப்புவதன் மூலம் அவ்வக் கலைகளின் விசேடத் தன்மைகளைப் புரிந்து கொள்ளலாம். இவ்வகையில் தொலைக்காட்சி என்னும் ஊடகம் ஒலி, ஒளி என்னும் அம்சங்களை உள்ளடக்கியதால் வானொலி, பத்திரிகை போன்ற ஊடகங்களில் இருந்து வேறுபடுகின்றது. அதே சமயத்தில் தான் தொடும் இரசிகர்களின் தன்மையினைப் பொறுத்து ஒத்த இயல்புள்ள திரைப்படங்களிலிருந்தும் வேறுபட்டு இருப்பதைக் காணலாம்.
தொலைக்காட்சியினைப் பார்ப்பதற்கு ஓய்வுநேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஏதேனும் கைவேலையைச் செய்து கொண்டே இதனைப்பார்க்கலாம். நிகழ்ச்சிகளைப் பற்றிய கருத்துக்களைப் பார்வையாளர்கள் அவ்வப்போது தங்களுக்குள் பரிமாறி அதன் நுணுக்கங்களை, புரியாதன வற்றை புரிந்துகொள்ளலாம். இதன் காரணமாக இது ஒரு Jfup 55 56ór 60 LDś 55 (Social Phenomenon ) 67 607 j. குறிப்பிடப்படுகின்றது. எமது நாட்டில் உயர், கீழ் மத்தியதர வர்க்கப் பிரிவினரே இதை நுகர்வோராய் கூடியளவு இருப்பினும், இன்று படிப்படியாக நகர்ப்புறச் சேரிவாசிக ளையும் பிரதேச சிற்றுார் வாசிகளையும் ஈர்த்ததாகக் கொண்டுவிட்டது. கையெட்டும் தூரத்தில் தத்திமது இருப்பிடங்களிலேயே கிட்டுவதனால், வீடு என்னும் வரையறைக்குள்ளேயே பெரும்பாலும் இயங்கிக் கொண்டி ருக்கும் பெண்களே இதன் முக்கிய பார்வையாளர்களாக இருக்கின்றனர்.
தொலைக்காட்சியின் அண்மித்த நிலை அதில் வரும் பேச்சாளர்களையும் நடிகநடிகையரையும் மக்களுக்கு மிக நெருங்கியவர்களாகவும் பரிச்சயம் கொண்டவர்களாகவும் தோற்றமளிக்கச் செய்கிறது. இதற்கு ஒரு சிறந்த உதாரண மாக செய்தி வாசிப்பவர்களைக் காட்டலாம். இவர்கள் நமது நாட்டின் லட்சோப லட்சம் மக்களது வரேவற்பறையில் தினமும் நடமாடி மறைபவர்கள் என்றும் நாம் கூறினால் மிகையாகாது. இதே போன்றே வாரத்தொடர் நாடகங்களில்

100
மீண்டும் தோன்றும் நடிகர்கள் நடிகைகள் தாங்கள் ஏற்று நடிக்கும் பாத்திர உருக்களில் பார்வையாளர்களின் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவராகவே மாறிவிடுகின்றனர். இதனால் இயல்பான கதைப்போக்கும் சிறந்த கதாபாத்திரங்களுமுடைய நாடகங்கள் அதிகளவு பிரபல்யம் அடைகின்றன. (திரைப்படங்களைப் பொறுத்தவரை இதற்கு ஏறுமாறான போக்கு காணப்படுவது இங்கு குறிப்பிடப்படவேண்டும்) வீட்டில் ஆறுதலாக அசந்திருக்கும் நிலையில் இவ்வாறு பரிச்சயமானவர்களினூடாக வரும் செய்திகள் மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தினை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது மட்டுமின்றி, மனிதர்கள் இயல்பாகவே கைக்கொள்ளும் தேர்வு என்ற நடைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை அற்றுப்போய்விடுகின்றது. ஓய்வுநேரம் ஒதுக்கி, முயற்சி எடுத்து மேலதிக செலவு செய்து ஒரு திரைப் படத்தைப்பார்க்க வேண்டியிருப்பதால் ஓரளவாயினும் தரம் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் மக்கள், தொலைக்காட்சியினுாடாக வரும் சகல நிகழ்சிகளையும் பாரபட்சமின்றிப் பார்க்கத் தலைப்படுகின்றனர். பார்வையாளர்களை இவ்வாறு செயலிழக்க வைத்து அவர்கள் கற்பனா சக்திக்கு ஏதும் இடம் கொடாமல் சகல விடயங்களையும் அப்படியே ஏற்கவைக்கும். இதனை ஆங்கிலத்தில் (Idiot box ) (முட்டாள் பெட்டி) என்று அழைப்பதில் ஆச்சரிய மேதுமில்லை. ஆகவே பல்வேறு வெகுசனத்தொடர்பு சாதனங்களிலும் மிகுந்த தாக்கம் விளைவிப்பது தொலைக்காட்சியே. வயது வரம்புகளின்றி சகலரும் நேசிக்கும் தொலைக்காட்சியில் மக்களால் அதிகளவு விரும்பிப் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளாக நாடகங்களும் முழுநீளப்படங்களும் அமைந்துள்ளன.
கடந்த 1991-1993ம் ஆண்டுகளில் இலங்கைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குறுநாடகங்கள், தொடர் நாடகங்கள், முழுநீழப்படங்கள் ஆகியற்றில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தன. இலங்கைத் தயாரிப்புக்களாக சில குறுநாடகங்களும் நகைச்சுவைக் கதம் பங்களும் ஒளிபரப்பாயின. இந்நாடகங்களின்

Page 52
101
ஊற்றுப்புலங்கள் சமூக அமைப்பிலும், சாதி வர்க்கங்களிலும் தயாரிப்பு நடைமுறைகளிலும் பெருமளவு வேறு பட்டிருப்பினும் ஆணுதிக்கக் கோட்பாட்டினை நிலை நிறுத்துவதில் ஒத்து இயங்குவதாகக் காணப்பட்டன. கரு, கதைப் பின்னல், நிகழ்ச்சிகள், காட்சியமைப்புக்கள், நேராகவேனும் மறைமுகமாகவேனும் தரப்படும் செய்திகள் என்பன மீண்டும் மீண்டும் பெண்களுக்கான வகைமாதிரிகளை உருவாக்கிய வண்ணம் இருந்தன. ஒரு தொடர்நாடகம், குறுநாடகத்தொடர், முழுநீளப்படம் இவற்றைத்தவிர மிகுதித் தயாரிப்புகளுக்கு இவ் விமர்சனம் பொருந்தும்.
பெண்களுக்கு இந்நிகழ்ச்சிகளினூடாக உருவகப்படுத்தப் படும் ஒரே தன்மைத்தான எவை என்பதை நோக்குவோம். பெண் கதாபாத்திரங்கள் அனேகமாக நல்ல பெண், தீயபெண் என மிகத் தெளிவாக வரையறுக்கப்படுகின்றனர். பூர்ணம் விஸ்வநாதன் தயாரித்தளித்த முரண்பாடுகள் என்னும் தொடர் மற்றும் சில புதிய அலை நாடகங்கள் போன்றவையே இதற்கு விதிவிலக்கு. ஆண் கதாபாத்திரங்கள் ஸ்தீரி லோலர்களாகவும் போதை மருந்துக்கு அடிமைப் பட்டவர்களாகவும் இருக்கலாம். ஆனால் இவர்கள் திருந்த இடமுண்டு. இவ்வகையாகப் பிழையான வழிகளில் தவறிவிடும் பெண்கதாபாத்திரங்களோ எவ்வகையிலும் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆண்கள். தீயவர்களாயிருந்து நல்லவர்களாக மாறலாம். பெண்களின் ஆணவம் மற்றும் இரக்கமற்ற சிந்தை போன்றவைதான் திருத்தப்பட வேண்டப்படுகின்றதே தவிர அவர்கள் வேறெந்த வகையிலும் தவறிவிடின் குடும்பத்துக்கு ஒவ்வாதவர்களாக கதைப்போக்கில் துTக் கியெறியப்பட்டு விடுவர். நல்லவை என்பன பாரம்பரியத்துடன் உருவகப் படுத்தப்படுகின்றது, தீது என்னும் கருத்து நவீனத்துடன் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நவீன சிந்தனையுள்ள பெண்-மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறிய பெண்- தீய பெண் என்னும் சமன்பாடு, உலகளாவிய ரீதியில் சட்டலைட் தொடர்புகள் ஏற்பட்டு நாம் உபயோகிக்கும் குண்டூசி கூட வெளிநாட்டு சமாச்சாரம் என ஆன பின்னரும் நம்மவர்களைத் தொடர்கின்றது. பாரம்பரியத்திற்கு

102
மாறுபாடான வகைமாதிரிகளை அங்கீகரிப்பது போன்று காட்டும் நாடகங்களும் சில நுணுக்கங்களைக் கையாண்டு இந்த நன்று-தீது, நவீனம்-பாரம்பரியம் என்னும் சமன் பாட்டினைத் தங்கவைத்துக் கொள்கின்றன. உதாரணத்துக்கு காதலனுடன் பழகி கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பந்தரித்த பெண் கழுத்தளவு கூந்தலுடன் சல்வார் கமீஸிலும் நீள் சட்டையிலும் காட்சியளிப்பதையும், பின்பு மனந்திருந்தி குடும்பம் ஒன்றில் ஈடுபடத் தொடங்கியதும் அதே பெண் திடீரென முழங்கால்வரை பின்னலுடன் சேலையில் வளைய வருவதையும் காட்டலாம்.
திரைப்டங்களைப் போலன்று தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் இரசிகர்கள் ஏற்கனவே பழக்கப்பட்டவர்கள் என்பதனால் வண்ண வண்ணக் காட்சியமைப்புக்களும் கிளுகிளுப் பபூட்டும் கவர்ச்சிக் காட்சிகளும் புகுத் தி இரசிகர்களை ஈர்க்க வேண்டிய அவசியம் தொலைக்காட்சிக்கு இல்லை. அதுவும் எமது நாடுகளில் ஏராளமான அலைவரிசைகளில் நிகழ்ச்சிகள் தனியார் நிறுவனங்களினாற் தரப்படாமையினால் தரப்படுத்தல் மூலம் நிகழ்ச்சி களுக் கிடையே உள்ளுர் இரசிகர் களைப் பங்கு போடவேண்டியிருக்கும் போட்டியும் கிடையாது. இதனால் தொலைக்காட்சி நாடகங்களில் நடைமுறை ரீதியாகப் பிரச்சினைகள் அணுகப்படுவதைக் காணலாம். பெண்கள் இக்கதைகளுடன் ஐக்கியப்பட்டு அவ்வக் கதாபாத்திரங் களுடன் தம்மை இனங்காணும் போக்கில் மேற்குறிப்பிடப்பட்ட விழுமியங்கள் அவர்களுக்கும் புகுத்தப்படுகின்றது. தீயது என இனங்காணப்பட்ட பாத்திரங்களிடமிருந்து தம்மை விலக்கிக் கொள்ளவும் நல்லது என இனங்காணப்படும் பாத்திரங்களுடன் தம்மை இணைத்துக் கொள்ளவும் முயல்வர்.
இந்த வகைமாதிரிப் பாத்திரங்களுக்கு பொறுமை முக்கிய அணிகலன். சமூகத்தின் கொடுமை, ஆண்கள் இழைக்கும் துன்பம், கணவனது முட்டாள்தனமான வீம்பான நடவடிக்கைகள் இப்படிப்பட்ட பலவற்றை பொறுத்துக் கொள்ள வேண்டும். "நான் இத்தனை வருஷங்களாகக்

Page 53
103
குடும்பம் நடத்துகிறேன் ஒரு கேள்வி கேட்டிருப்பேனா" இப் பதான் பொறுக் கமுடியாமல் (கணவனுடைய மூடநடவடிக்கைகளை) முதல் கேள்வி கேட்கிறேன் என்ற ரீதியில் பேசும் மனைவி கதாபாத்திரங்கள் பல. ஒரு நாடகத் தொடரில், தன் முதல் மனைவி இறந்த பின்னும் அவள் நினைவில் மூழ்கியிருக்கும் கணவனை இரண்டாந்தாரமாக மணந்த இளம் பெண்ணொருத்தி, புகுந்த வீட்டாரின் அவமதிப்புக்களையும்பொறுத்துக்கொண்டு அவர்களெல் லோருக்கும் சேவை செய்து அக்குடும்பத்தை உயர்த்தி விடுவதாகக் காட்டப்பட்டுள்ளது. கணவனின் ஆதரவுகூட இல்லாதவொரு இடத்தில் தியாக மனப்பான்மையுடன் கணவனின் நன்மைகளை தனதுவிருப்பு, வெறுப்புகளுக்கு மேலாகத் கருதி அந்த வீட்டில் வாழ்ந்ததற்காக அவள் போற்றப்படுகிறாள். ஈற்றில் சகலராலும் அவள் ஏற்றுக் கொள்ளப் படும் மகிழ்ச் சரியான முடிவும் தரப்படுகின்றது.
இன்னொரு தொடரில் திருமணத்துக்கு முன் வேருெரு ஆணைக் காதலித்த பெண் தன் குடும்ப வாழ்வில் உணரும் அவஸ்தைகள் காட்டப்படுகின்றன. காதலன் இருக்கும் ஊருக்கு கணவன் மாற்றலாகிப் போவது தொடங்கி அவனையும் அங்கு அகஸ்மாத்தாக சந்தித்த பின்னர் இந்த விடயம் கணவனுக்கு தெரிய வருமோ வருமோ என தொடர் நீள இவள் சித்திரவதைக்குள்ளாகின்றாள். னைவியானவள் தன் கணவனைத் தவிர பிற ஆண்களை மனதிலும் நினையாத பத்தினியாக இருக்க வேண்டும் என்னும் கருத்து தரப்படுவதுடன் பெண்களின் நடத்தைகளின் விளைவுகள் பெரும் விபரீதமாகக் காட்டப்படுவதனால் பார்க்கும் பெண்களின் பய உணர்வுகளை மிகச் சாதுர்யமாகக் கையாளுகின்றனர். வேறு சில தொடர்களில் பெண்கள் மறைக்கப்பட்டவர்களாக குறிப்பிடத்தகுந்த கதாபாத்திரங்களாக இல்லாதவர்களாக ஆக்கப்படுவர். இதனைச் சந்திரமதி விளைவு எனப் பெயரிடுவேன். அரிச்சந்திரன் தான் வாய்மை தவறாதவன் என்று நிரூபிக்கப் போய் சந்திரமதியை பலிகொடுக்கின்றான். அவளைச் சிரச்சேதம் செய்யும்போது

104
தேவர்களும் முனிவர்களும் ஓடோடி வந்து அவனை வணங்கி வாழ்த்துகின்றனர். அவனுக்காக வாழ்வு இழந்து, மகனை இழந்து ஈற்றில் தலையையும் இழக்கவிருந்த சந்திரமதியைப் பற்றி நாம் பேசுவதில்லை. இவ்வாறு நமது நாடகங்களில் கதாநாயகர்களும் தாம் நேர்மை தவறாதவர்கள் என்று நிறுவ வறுமையைத் தருவிப்பர், வேறு கஷ்டங்களையும் வருவிப்பர். இவற்றுக்கு அந்த நாடகங்களில் கூட முகம் கொடுப்பது பெண்களே. ஆயினும் அவர்கள் கெளரவிக்கப் படுவதில்லை.
சில கதைகள் பெண்களின் நடைமுறைப் பிரச்சினைகள் பலவற்றைப் பிரதிபலிப்பதாக ஆரம்பித்தாலும் அவற்றின் முடிவுகள் எவ்வாறேனும் திரிக்கப்படும் விளைவுகளும் உள்ளன. உதாரணமாக தான் தொழிலில் பெயரெடுக்க வேண்டும் என ஏக்கத்துடன் செயல்படும் பெண் கடைசியில் வீட்டில் கவனக்குறைவால் உணவின்றி வாடும் கணவரையும் இறக்குந்தறுவாயில் இருக்கும் குழந்தையினையும் கண்டு மனந்திருந்தி வீட்டோடு வரும் சம்பவக் கோவையினைக் காட்டலாம். இன்னொரு உதாரணம், காதலில் தோல்வியுற்று குழந்தையுடன் நிராதரவாக இருக்கும் பெண்ணை விரும்பி ஒரு நல்ல இளைஞன் மணமுடிக்கும் கதை. இதில் இழி வெனக் கருத ஒரு இடமில்லையென இயக்குனர் நமக்கு உணர்த்துகின்றாராக்கும் என நாம் அசந்திருக்கும் வேளையில் அந்தப் பெண் இறக்கும் காட்சி வருகின்றது. நான் விட்ட தவறை என் மகள் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள் எனக் கணவனிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டு கண்ணை மூடி விடுகிறாள். கதையின் கருவானது அந்த மகள் தன் தாயின் வரலாற்றிலிருந்து வேண்டிய படிப்பினைகளைப் பெறவேண்டும் என்ற ரீதியிலிருந்தது.
ஒரு நாடகத்தில் தோன்றும் நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடகங்கள் பெரும்பாலும் கணவனை ஆட்டிப் படைக்கும் மனைவியைப் பற்றியதாக இருக்குமென்று உண்மையிலேயே கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். இவர்கள் சேலை, நகைகள் பற்றி அக்கறை

Page 54
105
கொண்டவர்களாயும் அயலவர்களைப் பற்றி வம்பு பேசி காலத்தைக் கழிப்பவர்களாயும் காட்டப்படுவர். உறவினர் மற்றும் நண்பர்களின் அந்தஸ்திற்கு சமமாகத் தாமிருக்கப் போடும் போட்டியில் கணவரைச் சித் திரவதை செய்பவர்களாகக் காட்டப்படுவர். சுருங்கக்கூறில் இக்கதாபாத்திரங்களின் அறிவிலித்தனங்களை இரசிப்பதே நகைச்சுவையாக கருதப்படுகின்றது.
இவ்வாறாக தொலைக்காட்சி நாடகங்களினது பொதுத் தன்மைகள் இருப்பினும், வளர்ந்து வரும் பெண்கள் இயக்கத்தின் தாக்கமும் இவற்றில் இல்லாமலில்லை. உண்மையில் மற்றைய வெகுசனத் தொடர்பு சாதனங்களுடன் ஒப்பு நோக்கில் தொலைக்காட்சியில் இவ்வகைக் கருத்துக்களின் தாக்கம் அதிகம் எனலாம். முதலாவது, மற்றெவற்றையும் விட மத்தியதர வர்க்கத்தினரை இலக்காகத் கொள்ளுவதில் அவர்கள் மத்தியில் வளர்ந்து வரும் தாராளவாதத்தினை தொலைக்காட்சி நாடகங்கள் பிரதிபலிக்கின்றன. அடுத்ததாக திரைப்படங்களைப் போன்று சந்தையின் பூரண கட்டுப்பாட்டில் இயங்காமையால் பெண்கள் தொடர்பான சமூகப் பிரச்சினைகள் பலவற்றை படமாக்க முடிகின்றது. அத்துடன் ஏராளமான முதல் வசூல் போன்ற அம்சங்கள் இல்லாயிைனால் நாட்டின் பொருளாதார அரசியல் லகான்களைக் கட்டி இழுக்கும் கனவான் வர்க்கத்தின் பிடியில் சிக்காமல் இதுவரை தொலைக்காட்சி நாடகங்கள்
இருந்திருக்கின்றன.
1980களில் தமிழ்நாட்டில் வீடியோ கலைஞர்களின் மத்தியில் இந்தப் போக்கு ஊடுருவிப் பரவியது. இவர்கள் படைப்பில் ஓரிரண்டு பெண்கள் பிரச்சினைகள் பற்றிய பிரச்சார நாடகங்களாக இருப்பினும் ஏனையவை கலையம்சங்களுடன் மிளிர்ந்திருக்கின்றன, மக்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றிருக்கின்றன. இந்த ஆய்வுக் கட்டுரையின் பிரதான அம்சமாக இவ்வகையான கலைத்தரம் மிக்க படைப்புக்கள் எடுக் கப் பட்டுள்ளன "சித் திரப் பாவை" என்னும் முழுநீளப்படமும் "பெண்” என்கின்ற குறுநாடகத் தொடருமே அவை.

106
சித்திரப்பாவை அகிலனுடைய ஞானபீடப் பரிசு பெற்ற நூலின் குறுந் திரையாக்கமாகும். இவர் ஐம்பதுக்கும் அறுபதுகளுக்குமுரிய எழுத்தாளராகையால் அவருடைய கதையும் அந்த தசாப்தங்களுக்குரிய சமூகப் பின்னணியில் பின்னப்பட்டிருக்கிறது. சுஹாஸினி மணிரத்தினத் தினால் எழுதி இயக்கப்பட்ட "பெண்” தொடரில் உள்ள நாடகங்களை தொண்ணுரறுகளின் பிரதிபலிப்புகளாகக் கொள்ளலாம். பழமை யில் புதுமை யைக் ტ5 [T (მსე) მწT வரிழையும் சித்திரப்பாவைக்கும், நவீனத்திலும் நவீனமாகத் தோற்ற முயலும் "பெண்ணிற்கும்,” காலத்திலும் கட்டமைப்பிலும் வேறுபாடுகள் இரு ப் பரினும் அவையிரண் டும் தொண்ணுரறுகளில் கருத்துரட்டி உயிர் கொடுக்கப்பட்ட நாடகங்கள் என்ற முறையில் ஒத்திருக்கக் காணப்படுகின்றன. முக்கியமாக நடுத்தர வர்க்கப் பார்வையாளர்களைக் கொண்ட தொலைக் காட் சரியில் , அதே வர் க் கத்தினாரின் அபிலாஷைகளையும் பிரச்சினைகளையும், பிரதிபலிப்பனவாக இவ்விரண்டு படைப்புக்களும் அமைந்ததினால் இவை பிரபலமடைந்ததில் ஆச்சரியமில்லை.
பெண்களின் பிரச்சினைகளைக் கருவாக வைத்துச் சிருட்டிக்கப்படும் கலைப் படைப்புக்களில் பொதுவாகவே சில குறைபாடுகளை நாம் காணலாம். இவை பெண்கள் பிரச்சினை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான போராட்டம் எனவும் இம்முரண்பாடு தனிமனிதரீதியில் அணுகப்பட்டுத் தீர்க்கப்படவேண்டும் என்ற வாதங்களுக்கு அடிமையாகிவிடுகின்றன. பெண்கள் மீதான ஒடுக்குமுறையினைச் சுட்டுவதில் மிதவாத பெண்ணிலைவாதிகள் காத்திரமான பங்கு அளித்திருப்பினும் இவ்வொடுக்குமுறை சாதி, வர்க்கப்பாகுபாடுகளினால் ஆளுமை செலுத்தப்படும் பலத்த சமூகப் பின்னணியில் இதனை இவர்கள் நோக்குவதில்லை. இக்காரணிகளில் முக்கியத்துவம் பெற்றது வர்க்கப் பாகுபாடாகும். மாலினி பட்டாச்சார்யாவின் கூற்றில், “பால்நிலையினை வரலாற்று ரீதியாக காலநிலைகளின் வளர்ச்சிப் படிகளாகக் காட்ட

Page 55
107
வர்க்கம் நமக்கு உதவுகின்றது. நமது சமூகத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்குமிடையே நிலவிய உறவுமுறையின் பரிணும வளர்ச்சியானது தனக்கேயுரிய நியாயங்களுடன் தனித்துவமாக இயங்குவது போல் தோன்றினாலும் அவ்வச் சமூக அமைப்பில் இதற்கு உற்பத்தி உறவுமுறைகளின் அடிப்படையிலேயே இதன் விளக்கத்தினை நாம் பெறலாம்.சகல விதமான உறவுகளின் சிக்கலான இடையீடுகளினூடே பால் உறவுகள் ஸ்தாபிக்கப்படுகின்றன. இந்த விளக்கம் குறையுறுவதனால் அகமும் புறமுமாக இரு உலகங்களைச் சிருஷ்டிக்கின்றனர், இங்கு தொழில் சார்ந்த இடங்களையும் சந்தைக் கென உற்பத் தி செய்யும் நிலையங்களையும், போர் அரசியல் ஆகியனவற்றை உள்ளடக்கிய உலகத்தினைப் புறம் எனவும், குடும்பம் தனிநபர் சார்ந்த உலகத்தினை அகம் எனவும் கருதும் போக்குகள் மேலோங்குகின்றன. ஆகவே பெண்கள் விடுதலைக்கான போராட்டமானது தனிப்பெண்கள் தம் சொந்த வாழ்வில் மேற்கொள்ளுவதாகக் காட்டுவதல்லாது ஒரு குழுவினரின் போராட்டமாகப் பார்க்கப்படுவதில்லை. இந்த விமர்சனங்களின் அடிப்படையிலேயே மேற்குப்பிட்ட இரண்டு படைப்புக்களும் உள்ளடக்கம் கருத்து முதலியவற்றினூடு பார்க்கப்படுகின்றது.
சித்திரப்பாவை, கலையார் வம் மிக்க ஓவியன் அண்ணுமலை, பாரம்பரியமே உருவான பெண் ஆனந்தி, இவர்களின் தைரியம் மிக்க நண்பி சாரதா, அண்ணாமலையின் உடன் பிறவா அண்ணனான, மோசடிக் காரனும் காமுகனுமான மாணிக்கம் ஆகிய நான்கு பாத்திரங்களைப் பற்றியது . அண்ணாமலையும் ஆனந்தியும் ஒருவரையொருவர் நேசித்தாலும் அதைத் தமக்குள் வெளியிட வகை தெரியாது தவிக்கின்றனர். இவர்களின் காதலை ஈடேற்ற சாரதா கூறும் ஆலோசனைகளும் பயனில் லை. ஆனந் தி அண்ணுமலையின் காதலை உணர்ந்தும் கூட மாணிக்கம் ஆனந்தியைக் தான் மணம் செய்யத் தந்திரங்கள் பல கையாண்டு அதில் வெற்றியும் பெறுகிறான். பெற்றோரின் நிர்ப்பந்தத்தினால் அண்ணுமலையும் தன் அத்தைமகள் சுந்தரியை மணம் செய்கிறானர். மனம் விருப்புறாத

108
மணவாழ்க்கையில் ஈடுபட்ட அண்ணாமலையும் ஆனந்தியும் சந்தோசமற்ற வாழ்க்கை நடத்துகின்றனர். ஈற்றில் சுந்தரி
தற்கொலை புரிந்து கொள்கிறாள். ஆனந்தி தன் கணவனை விட்டு வெளியேற குடும்பத்துப் பெரியவர்களால் மணவாழ்க்கையில் அண்ணாமலையுடன் ஒன்று சேர்க்கப்படுகின்றாள்.
இற்றைக்கு சுமார் 30 வருடங்களுக்கு முன்னரே அகிலன் பிடித்த மில்லாத கல்யாணத்திலிருந்து பெண்கள் மீளவேண்டும் என்னும் கருத்தினை ஆணித்தரமாகக் கூறியிருப்பது மெச்சத்தகுந்த விடயமே. மாணிக்கம் தொட்டணைத்ததனால் தான் அவனை மணமுடித்ததாக ஆனந்தி சாரதாவிடம் கூறும்போது எங்களுக்கு மட்டுமல்ல சாரதாவுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. ஒருவன் பஸ்ஸில் போகும்போது தொட்டுட்டான் என்கிறத்துக்காக வாள்நாழ் பூரா அவனுக்கு வாழ்க்கைப்பட முடியுமா? என்று சாட்டையடிபோல் கேட்கிறாள், ஆயினும் கதைப் போக்கினையும் சம்பவக் கோர்வையினையும் நோக்கும் போது முன்குறிப்பிட்ட கோட்பாடுகள் குழம்பிக் கிடப்பதை அவதானிக்கலாம்.
மாணிக்கம் என்ற பாத்திரம் உலகிலுள்ள நயவஞ்சகத் தன்மை எல்லாம் ஒருங்கே உருப்பெற்றாற் போன்றதொரு பாத்திரமாகக் காட்டப்பட்டிருக்கிறது. அவன் தன் மேற் பார்வையின் கீழ் வேலை புரியும் சித்தாள் தொடங்கி ஊரிலுள்ள பெண்கள் அத்தனை பேருடனும் தகாத தொடர்புகள் வைப்பவன், அவர்கள் கர்ப்பந்தரித்தால் ஒதுக்கி விடுபவன். தன்னை வளர்த்து ஆளாக்கிய அண்ணமலை குடும்பத்தினரை மோசடி செய்து அவர்கள் குடியிருந்த வீட்டை அபகரித்தவன். தன் மனைவியின் உணர்வுகளை மதியாமல் அவளை வெறும் சமையற்காரியாக, தாசியாக நோக்குபவன். கிட்டத்தட்ட பார்வையாளருக்கு இவனைக்கொன்று விடலாமா என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும். உற்ற சமயத்தில் ஆனந்தி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். கதாசிரியருக்கு இவ்வளவு நியாயப்படுத்தலும் அவசியமாக இருந்திருக்கின்றது.

Page 56
109
அவள் வெளியேறும் உச்சக் கட்டமும் சுவாரசியமானது. அவள் வாழ்வில் முதன் முதலாகக் கணவனை எதிர்த்துப் பேசுவதாகக் காண்பிக்கப்படுகின்றது. "நீங்க ஆம்பளை இல்லை" என நிமிர்ந்து பார்த்து மாணிக்கத்திடம் கூறுகிறாள். ஆத்திரத்தில் தன்னிலை மறந்து அவன் அவளை இழுத்து அடிக்கவும் திரும்பத்திரும்ப வீம்புடன் "நீங்க ஆம்பளை இல்ல" என்கிறாள் மாணிக்கத்துக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய அவமதிப்பாகவும் தண்டனையாகவும் இது பார்வையாளருக்குக் காட்டப்படுகிறது. கணவனுக்கும் மனைவிக்குமிடையே நேர்ந்த ஒரு பட்சக் கைகலப்பில் தற்செயலாக இவளுடைய தாலி கழுத்தைவிட்டுக் கழருகின்றது. அப்படியே ஆனந்தி வெளியெறுகின்றாள். மனைவி தாலியைத் தூக்கியெறியவில்லை, கணவனின் செயல்களினால்தான் தூக்கியெறியப்பட்டு விட்டது என உணர்த்துகின்றனர்.
அவர்கள் வீட்டு வேலைக்காரி தனக்கு வைப்பாட்டியாக இருக்கவும் வசதியாக மாணிக்கத்தினால் சேர்த்துக் கொள்ளப்பட்டவள். இந்த வேலைக்காரியும் ஆனந்தியும் இரு வேவ்வேறு துருவங்களில் இருக்கும் அடிமைகள். உண்மையில் அவர்கள் பரஸ்பர அனுதாபிகளாக இருக்க வேண்டும். ஆனால் வேலைக்காரி வில்லிச் சிரிப்புக்களை உதிர்த்தவண்ணம் அங்குமிங்கும் திரிவதும், மாணிக்கத்துடன் கழிக்கும் இரவுகளில் பலமாக முனகிச் சிரிப்பதிலும் இவள் தீய பெண் என்ற தார் பூசப்பட்டுவிடுகிறது. வேலைக்காரி யாகட்டும் மாணிக்கத்தினால் கர்ப்பமாக்கப்பட்ட கட்டிட வேலைச்சித்தாளாகட்டும்- இவர்கள் சார்ந்த தொழிலாள வர்க்கத்திற்கேயுரிய பலவீனங்களினாலேயே பெண்கள் என்ற ரீதியில் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுகின்றனர். கற்பு பற்றிய மத்தியதர வர்க்கத்தினரின் விழுமியங்களும் இவர்கள் மேல் புகுத்தப்படுகின்றன. அதற்கு மேலாக தன் காமத்தன்மையை வெளிப்படுத்தும் பெண் என்று இழித்துரைக்கப்படுகின்றாள்.
சுந்தரி விட்ட ஒரே தவறு திருமணத்துக்கு முன்பு அண்ணுமலையிடம் ஐ லவ் யூ என்று முன்னும் பின்னும்

110
கூறித் திரிந்ததும் திருமணத்திற்குப் பின்பு ஓவியம் வரையாதே என்றும் தடுத்ததுமாகும். மாணிக்கம் சில்லறைத் தண்டனையுடன் தப்பிக் கொள்ள இவளோ தன்னையே அழித்துக் கொள்ளுகிறாள். அடக்கமில்லாப் பெண்களுக்கு ஏற்படும் கதி இது என்று சொல்லாமற் சொல்லப்படுகிறது.
சாரதாவின் நிலைமை என்ன? அண்ணுமலையும் ஆனந்தியும் விட்ட தவறுகளை அலசி தைரியமாக எடுத்துச் சொல்லுகிறாள் அவள் உண்மைகளை எடுத்துச் சொன்னாலும் கூட அவள் வேலை செய்யும் பத்திரிகையின் ஆசிரியரோ “டோன்ட் பி சில்லி, யூ ஆர் பியிங் இமோஷனல்" என அவளை அடக்குகின்றார். அவ்வாசிரியரை அறிஞரா கவும் பண்பாளராகவும் உருவகப்படுத்துவதனால் அவர் அபிப்பிராயங்களுக்கு மிகுந்த வலு கொடுக்கப்படுகின்றது. பெண்கள் அற்பப்படுத்தப்படல் இங்கு தென்படுகின்றது. துணையிழந்த அண்ணாமலையிடம் தன் நீறு பூத்த காதலை வெளிப்படுத்த சாரதா சென்றபோது அண்ணாமலையும் ஆனந்தியும் தம்பதியராய் செல்வதைப் பார்த்து ஆனந்தக் கண்ணிர் உகுக்கிறாள். கடைசிக் காட்சியில் கமெராகோணம் மேலிருந்து நோக்க அண்ணாமலை செல்லும் வாகனம் ஒரு திசையிற் செல்வதாகவும் சாரதா எதிர்த்திசையில் நடப்பதைப் போன்றும் காட்டப்படுகின்றது. சற்று வித்தியாசமான பெண்களுக்கு தனிமை வாழ்வுதான் முடிவு எனக்காட்டப்பட்டுள்ளது.
ஆண் பெண் உறவுகளை ஆற அமர இருந்து அலசும் அவகாசம் “பெண” னரிற்கு இல்லை, ஒவ்வொரு குறுநாடகமும் இருபதே நிமிடங்களில் கூற வந்ததை முற்றுப் பெற வைக்கவேண்டும். இதைச் செவ்வனே உணர்ந்து பெண்கள் முகம் கொடுக்கும் சில பிரச்சினைகளை எளிமையான வடிவில் எம்முன் கொணர்கிறார் சுஹாசினி. நல்ல கலையு ணர்வும் தொழில்நுட்பத்திறனும் இவர் படைப்புகளுக்கு மெருகூட்டுகின்றன. முழுக்க முழுக்க மத்திய தர வர் க் கத்தினரைச் சார்ந்தவர்களாகவே எல்லாக் கதாபாத்திரங்களும் இருப்பதனால் சிக்கலின்றி கதையை

Page 57
111
நகர்த்தக்கூடியதாக இருக்கின்றது. இவர் எண்பதுகளையும் தொண்ணுரறுகளையும் சார்ந்தவர் என்பதினாலும் தானும் ஒரு பெண் என்ற காரணத்தினாலும் அகிலனை விடக் கூடிய அனுதாபத்துடனும் புரிந்துணர்வுடனும் தன்னுடைய கதாபாத்திரங்களை இவர் அணுக ஏதுவாக இருக்கின்றது.
"பெண்” தொடரில் உள்ள எட்டு நாடகங்களிலும் ராஜி மாதிரி பொண்ணு மனைவியை அடிக்கும் கணவனைப் பற்றியது பெண்ணின்மேல் கட்டவிழ்க்கப்படும் வன்முறையானது அவன் ஆத்மாவையே நிர்மூலமாக்கும் செயல் எனக்கருதி ஆணித்தரமாக மனைவி ராஜி கணவனை எதிர்க்கிறாள். அவளுக்குப் பக்கபலமாக மாமியாரும் துணை நிற்கிறாள். இந்த நோக்கத்தில் இரு பெண்களும் வெற்றி பெற்றாலும் அந்தக் கணவன் மனைவிக்கிடையில் நிலவிய அசமத்துவ உறவினைப் பற்றிய சில கேள்விகள்தானும் எழுப்பப்படவில்லையே என்ற ஆதங்கம்தான் மேலிடுகின்றது. மாமியார் தன் மகனிடம் தான் தன் கணவன் கையில் பட்ட அவஸ்தைகளை கூறும் சந்தர்ப்பமே அவன் மனந்திருந்து வதற்கு முக்கிய காரணியாகக் காட்டப்பட்டுள்ளது. "அம்மா நீங்க என்ன தப்பு செஞ்சீங்க அம்மா, உங்களை ஏனம்மா அப்பா அடிச்சாரு" என மகன் உருகி தான் இனி மனைவியை அடிக்கமாட்டான் என உறுதி கூறுவதோடு பிரச்சினைதீர்க்கப்படுகின்றது. பெண்களை மானபங்கப் படுத்தும் ஆண்களிடம் அவர்கள் உங்கள் தாயாய், சகோதரியாய் இருந்தால் செய்வீர்களா என்று கேட்பதிலும் இது வேறுபட்டதல்ல. மனிதத்துவம் பேணும் தேவையினை உணர்த்துவதைவிடுத்து பெண்களை கையாளும் பொருட்களாக வலியுறுத்தி நீதியாசிப்பதே இதுவாகும் . சமைத்து, வீட்டை நிர்வகித்து, உடை சலவை செய்து சகல சேவைகளும் புரிகிறாள் ராஜி. ஆனால் ஒரு வாக்குவாதம் முண்டால் போதும் தலையணை, போர்வை சகிதம் இவள் வெளியில் துரத்தப்படுகின்றாள். மாமியார் வேறு "அடிக்கிற துங்கிற சின்னப் பிழையைத் தவிர அவன் நல்லவன் தானம்மா” என்கிறாள்.

112
ராஜி கணவனின் இம்சை தாங்காது தனிமையில் அழும்போது அவளுக்கும் அவன் தந்தைக்குமிடையே இருந்த உறவு கோடுகாட்டப்படுகின்றது. சல்மான் ருஷ்டியைப் பத்திப் பேசி ஒங்ககூட சண்டை போடணும் போலருக்கே அப்பா என்று கேவுகிறாள். அறிவுபூர்வமான சிநேகிதர்களாய் அவர்கள் இருந்திருக்கின்றனர். இவ்வகையான நட்பு அவளுடைய கணவனிடமிருந்து கிடைப்பதாக கடைசி வரை காட்டப்படவில்லை. அடிப்பதை நிறுத்தினால் போதும், இறுதிவரை சந்தோசமாக இருக்கலாம் என்று உணர்த்தப்படுகின்றது.
"குட்டி ஆனந்த்' நாடகத்தில் மருத்துவப் பரீட்சையில் சித்தியெய்தி ஹவுஸ் சேர்ஜனாக பணிபுரியும் ஒரு பெண் வைத்தியரைப் பற்றிய கதை. தன் நோயாளர்களின் பிரச்சினை களைத் தாங்கமுடியாத மென்மையான உணர்வுகளைக் கொண்டவள் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிச் சிறுவன் ஆனந்தில் பாசம் கொண்டு அவனைப் பராமரிக்கின்றாள். இக்காரணத்தினால் தன் காதலனையும் சந்திக்க முடியாமல் நேர்ந்திருக்கின்றது: பையனின் அவசர சிகிச்சை நிகழ்ந்த அன்று தான் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ளத் தவறுகிறாள். சம்பந்தியும் உறவினர்களும் கலைந்து போனபின்னர் ஒரு பிரளயமே நிகழவிருப்பது போல வீட்டினுள் நுழைந்த அவள் காதலனின் மார்பில் தலை புதைத்து ஆனந்தைக் தங்களால் காப்பாற்ற இயலாமல் போனதைக் கூறி “எனக்கும் ஆனந்தைப் போல ஒரு மகன் வேணும்" என்று விம்முகிறாள். இங்கு கடமையுணர்வு கொண்ட ஒரு வைத்தியர் என்பதை விட தாய்மையுணர்வால் உந்தப்பட்ட பெண்ணாய்த் தான் பார்வையாளர்களுடனும் தன் வருங்கால கணவனுடனும் ஒன்றித்து விடுகின்றாள். கடமைக்கு முன்னுரிமை கொடுத்ததினால்தான் நிச்சயதார்த்தத்திற்கு வரமுடியவில்லை என்று அவன் கூறியிருந்தால் அங்கீகாரம் பெற்றிருப்பாள் என்பது சந்தேகமே.
"மிஸிஸ் ரங்கநாத்" நாடகம் கணவன் விபத்தில் பலியாக தன் வாழ்க்கையினை கட்டுப்பாட்டுக்குள் / கொண்டு வர

Page 58
113
முயற்சிக்கும் பெண்ணைப்பற்றியது. இரு இளம் பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டிய பொறுப்புடன் தன் கணவனின் சொந்தத் தொழிலாக இருந்த அச்சகத்தினையும் நிர்வகித்து வெற்றி பெறுகிறாள். ஆண் துணையில்லாதவர்கள் என்று உலகத்தினால் நோக்கப்படுவதால் விதவைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஸ்பஷ்டமாக வெளிக் கொணரப்பட்டிருக்கின்றன. இனியும் எப்படி இந்த பெரிய வீட்டுக்கு வாடகை கட்டப்போறிங்க என்று அவநம்பிக்கை தெரிவிக்கும் வீட்டுக்காரர், இவள் பொட்டு வைத்திருப்பதைப் பார்த்து விட்டு கலிகாலம் எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொள்ளும் இன்சியூரன்ஸ் கிளார்க், வீட்டில் இருந்து சமைப்பியா அத விட்டுட்டு எங்க பிராணை வாங்கிறியே என்று எரிந்து விழும் கம்பெனி செகரட்டரி இவ்வாறாகப் பலரைக் கொண்டு நிறுத்தி ஒரு பெண்ணின் சுயகெளரவத்தையும் தன்னம்பிக்கையையும் வேரோடு சாய்க்க என்னென்ன ஆயுதங்கள் பிரயோகிக்கப்படுகின்றன என்று எடுத்துரைக்கப்படுகின்றது. பாரம்பரிய விழுமியங்களின் ஊற்றாக இருக்கும் மதத்தினை உருவமேற்றும் கோயில் சந்நிதானத்திலேயே, இறுதியில், பூசாரி கையால் குங்குமம் வாங்க இவள் துணிவது சிகரம் வைத்தாற் போன்ற காட்சி இங்கு மதப் பாரம்பரியங்கள் இடித்துரைக்கப்படுகின்றன.
"அப்பா அப்படித்தான்” “வார்த்தை தவறிவிட்டாய்” போன்ற நாடகங்கள் தந்தைவழிச் சமூகங்களின் பிம்பங்களான அப்பாக்களைக் காட்டுகின்றன. தான் பார்த்துத் தேர்ந்தெடுக்காத மாப்பிள்ளையென்ற ஒரே காரணத்தினால் மகளின் காதலனை நிராகரிக்கும் அப்பா பொறுமை உபதேசித்து துரோகமிழைக்கும் கணவனுடன் மீண்டும் இணையும்படி மகளுக்குக் கூறும் அப்பா, மூத்த மகள் திருமணத்தன்று வேறு பையனுடன் ஓடிவிட, தனது கெளரவம் காப்பாற்றப்படவேண்டுமே என்பதற்காக இளைய மகளை அதே மணவறையில் திருமணம் செய்து வைக்கும் அப்பா, இந்த அப்பாக்கள் பெரும்பாலும் காலை நேரங்களைப் பூஜையறையில் செலவழிப்பர், இவர்களின் மனைவிகளோ அடுப்படியும் அதுவுமாக வேலையில் ஓடியாடித் திரிவர். சாஸ்திரங்களும் சமயமும் ஆண்களினால் அபகரிக்கப்பட்டதை அங்கீகரிப்பது போன்று காட்சியமைப்புக்கள்

114
சொல்கின்றன. ஒரு அப்பா தன் மகளிடம் 25 வருஷமா நான் பூஜை பண்ணிட்டு இருக்கேன் யாருமே கொழப்பினதில்லை இன்னிக்கு உன்னால் நடந்திருச்சு என்று கடிந்து சொல்லுகிறார் இவ்வாறு " அப்பா பூஜை பண்றார் ஷ்" என்றும் " அப்பாகிட்ட எதிர்த்தா பேசறே" என்றும் எல்லோரும் வளையவரும் வீடுகளின் அப்பாக்கள் நிதானமுள்ளவர்களாகவும் சரியான முடிவு எடுப்பவர்களாகவும் காட்டப்பட்டுள்ளது. அம்மாக்களோ ஒன்றில் வாயில்லாப்பழச்சிகளாகவும் அன்றி அவசரப்பட்டு படபடவென்று உணர்ச்சி மேலிட்டால் பொரிந்து தள்ளுபவர்களாக இருப்பர். இந்த அப்பாக்களினால் வீட்டிலுள்ளோர் பாதுகாப்பு உணர்வுடன் இருப்பதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தந்தை நடிகர்கள் மூலமும் கம்பீரமாகத் தென்படும் கமெரா கோணம் மூலமும் சூசகமாக உணர்த்தப்படுகின்றது.
“ஹேமாவுக்கு கல்யாணம்" நாடகம் திடமான சுய உணர்வுகொண்ட மகளுக்கும் அவளுடைய தாய்க்கு மிடையேயுள்ள உறவினைச் சித்திரிப்பது. தாய்க்கு மகனில்லாத குறையைத் தீர்த்த மகள் ஹேமா "நீதான் என்னைப்போல, அக்கா அவ அப்பாவைப்போல” என்கிறாள் தாய். இந்நாடகமும் “லவ்ஸ்டோரி” என்கிற நாடகமும் பெண்களை புத்துணர்ச்சியளிக்கும் புதிய கோணங்களில் காட்டுகின்றன. "லவ்ஸ்டோரி” திருமணத்தை விரும்பாது சிட்டுப்போல் சுதந்திரமாகத் திரிந்த பெண்ணைப் பற்றியது. தன்னுடைய சம்பளத்தை உயர்த்த வேண்டுமென்று தான் வேலை செய்பவரிடம் கோரிக்கை விடும்போது தான் தன்னம்பிக்கையும் திறமையும் மிளிருகின்றன. மொத்ததில் சுஹாசினி பெண் கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்திக் கதையை நகர்த்துவதில் வெற்றி கண்டிருக்கிறார் என்றே கூற வேண்டும். ஆணாதிக்கக் கோட்பாடுகளின் சகல அம்சங்களையும் அவர் வேரோடு களையாவிடினும் அங்கங்கு அவற்றைக் கண்டித்திருக்கிறார். இவருடைய பெண் கதாபாத்திரங்கள் பாரம்பரியம் நவீனம் அல்லது நன்று-தீது என மாறாப்படிவுருக்களில் சமைக்கப்படவில்லை. பெண்களின் பிரச்சினைகளுக்கு பொதுமையான பண்புகள் உண்டென்பதை

Page 59
115
"ராஜி மாதிரி பொண்ணு, மற்றும் "மிஸிஸ் ரங்கநாத்"
மூலம் சுட்டிக்காட்டுகின்றார். பெண்கள் வாழ்வின் முரண்பாடுகளை பெரும்பாலும் அகம் என்ற களத்திலேயே தனிமனித உறவுகளில் இவர் தீர்க்க எத்தனிப்பினும், இத் தொடரின் பாத்திரங்கள் அத்தனையும் ஒரே வர்க்கத்தைச் சார்ந்தவையாக இருப்பதனால் கதைகள் பாதகமின்றி நகர்கின்றன. "சித்திரப்பாவை" ஆண் மேலாதிக்க சமூக அமைப்பில் சில அம்சங்களில் மறுசீரமைப்பு கோரியது. “பெண்" தொடரோ சமூகத்தில் ஆழப்புதைந்துள்ள விழுமியங்களை அங்கீகரித்தாலும் இவற்றின் வரையறைக்குள் வீட்டில், வேலைத்தளத்தில் ஆண்-பெண் உறவுகள் மாற்றமடைய வேண்டுமென யாசிக்கின்றது. எப்படிப் பார்க்கினும் இது சமூகத்தின் வளர்ச்சிப் படியில் ஒரு முன்னேற்றமே. சுருங்கக்கூறில், தொலைக்காட்சி நாடகங்களில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் தென்பட ஆரம்பிக்கின்றன எனலாம்.
சான்றாதாரம்
1 Barrett. M. 1980. Women's Oppression Today, Problems in
Marxist Feminist Analysis Verso, London
2 Magunda Rangani. 1991. "Dialectic of Public and Private
'Representation of Women in Bhoomika and 9Mirch 9Masale TEconomic er Political Weekly No 43, Oct 26, 1991

திரைப்படங்களில் பெண்கள்
“கிழக்கு சீமையிலே. ஒரு நோக்கு
பவானி லோகநாதன்
"தமிழ்கலாசாரம்' என்ற பாத்திரத்துள் இட்டுத் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் பெரும்பாலானவை யதார்த்தத்தை இனங்காண மறுப்பது தமிழ்ப்பட உலகில் விரவியுள்ள ஆரோக்கியமற்ற நிலையாகும். அதிலும், தமிழ்த் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களில் ஒரு குறிக்கப்பட்ட பாலியல் வரையறையைத் தாண்டி மனிதர்களாகத் தமது தனித்துவத்தை நிலைநாட்டுவது மிகமிக அரிது. கதாநாயகனுக்குத் துணை போகும், அவனது பெருமை பற்றியே பேச்சிலும் பாட்டிலும் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் கதாநாயகிகளையே பெருமளவில் 'உற்பத்தி செய்யும் தமிழ்த்திரை உலகம் சமீபத்தைய காலங்களில் ஓரளவிற்கு ஒரு திருப்புமுனையைச் சந்தித்திருக்கிறது என்ற ஒரு நிலை உருவாகிவருவதை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் திரு. பாரதிராஜாவின் நெறியாள்கையில் வெளிவந்துள்ள “கிழக்கு சீமையிலே." இதற்கு ஒரு சான்றாகும்.
பெண்சுதந்திரம் எனப் பெயரளவில் கூறி விரச, ஆபாச, வன்முறைகளைச் சித்திரிக்காது ஒரு சராசரி மனிதப்பிறவியின் நியாயமான ஆசாபாசங்களோடு "மனுஷி' யாகப் படைக்கப் பட்டுள்ள விருமாயி இதன் கதாநாயகி.
மதுரையை அடுத்துள்ள கிராமமொன்றைச் சேர்ந்த விவசாயியான மாயாண்டித்தேவர் தனது ஒரே தங்கையான விருமாயியை அயலூரானான செவனாண்டிக்கு மணம் செய்து வைக்கிறார். கணவன் வீட்டிற்குச் சென்று , பின்பு ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகும் விருமாயி, அவனது முன்கோபம், வறட்டுக்கெளரவம், ஆணாதிக்க வெளிப்பாடுள் இவற்றிற்கு கட்டுப்படுவது மட்டுமின்றி , பெண் குழந்தையைப் பெற்றவள் என்னும் இழிச் சொல்லுக்கும் ஆளாகி வாழ்கிறாள்.

Page 60
117
மாயாண்டித் தேவனும் அவளது கணவனும் தத்தம் வறட்டுக் கெளரவங்கள் மூலம் பகை உணர்வை வளர்த்துக் கொள்கின்றனர். தான் எதிரியாகக் கருதும் மாயாண்டியைப் பணியவைக்க, விருமாயியின் கணவன் அவளை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி பலவித இம்சைகளுக்கு உள்ளாக்குகின்றான். கணவனது கொடுமை தாளாத விருமாயி பஞ்சாயத்தார் முன்னிலையில் தனது தமையனது உறவை முழுமையாக அறுத்து விட வேண்டி நேரிடுகிறது. பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு எனும் சட்டத்தை தனக்குச் சாதகமாக்கி விருமாயியை ஏவி, பரம்பரைச் சொத்தில் அவளுக்குண்டான பங்கைக் கேட்குமாறு வற்புறுத்துகிறான். தங்கையின் திருமணத்துக்காக வேண்டி ஏற்கனவே நில்த்தை அடமானம் வைத்திருந்த மாயாண்டித் தேவர் அவளது பங்கையும் பிரித்துக் கொடுத்துவிட்டு கடனாளியாகிறார். அவர்களது ஒரே மகளான பேச்சி தனது தாய் மாமன் மகன் சின்னானை விரும்புவதை அறிந்த செவனாண்டி அவளைத் தனது தங்கையின் மகனுக்கு மணமுடித்து வைக்க விழைகிறான் என்பதை விருமாயி அறிகிறாள். பெண்பித்தனான அவனைப் பேச்சிமட்டுமின்றி, விருமாயியும் அடியோடு வெறுக்கிறாள் ஆயினும் இதைத் தடுத்து நிறுத்தும் துணிவு அவளுக்கு வரவில்லை. மச்சினர்களுக்கிடையிலான விரோதம் மேலும் அதிகரிக்கையில், விருமாயி மறுபடியும் கணவனால் பஞ்சாயத்தார் எதிரில் கொண்டுவரப்படுகிறாள். சாதி, சமூகக் கட்டுப்பாடுகள் நிறைந்த அச்சமூகத்தில் பெண் வழிக்கு உரித்தான தாய்மாமன் என்னும் உறவையும் அவள் அறுத்தெறிய வேண்டி நேரிடுகிறது.
பலாத்காரத்திருமணத்திற்கு ஒப்புதல் தராத பேச்சி தனது காதலனுடன் ஓடிப்போக எத்தனிக்கையில் விருமாயி அவர்களுக்குக் கோயிலில் வைத்துத் திருமணம் செய்ய விழைகிறாள். கணவன் இதைத்தடுக்கையில், அவள் இதுகாறும் கட்டிக்காத்த பொறுமை, சகிப்புத்தன்மை இவற்றைத் துறந்து சீறி வெடிக்கிறாள்.
“என் பெண்ணை அந்தப் பொறுக்கிக்குத் தர ஒரு நாளும் ஒப்புக்கமாட்டேன். பெண்ணுக்கு நீ தகப்பன் என்றால் நான் தாயில்லையா-?

118
எனத் தனது ஸ்தானத்தை நிலைநாட்டும் அவளது எதிர்ப்பைக் கண்டு அடிக்கவரும் கணவனை வார்த்தைகளால் சாடுகிறாள்.
"உனது வரட்டுக் கெளரவம், இறுமாப்பு, குலப்பெருமை இவற்றை வெளிக்காட்ட என்னை ஒரு கருவியாக உபயோகித்தாய் உன்னைப் போலலே நானும் ஒரு மானம் ரோசம் உள்ள ஒரு மனுஷி என உனக்குத் தெரியவில்லையா?”
என ஊர் முன்னிலையில் அவனை எதிர்க்கிறாள்.அவளது கணவனும், தமையனும் நேரடிக் கை கலப்பில் ஈடுபடு கிறார்கள். தனது கணவன் தமையனின் வெட்டரி வாளுக்குப் பலியாக இருக்கையில், அவனைக் கொல்ல வேண்டாமெனக் கெஞ்சுகிறாள். கடைசியில் தன் தமையனைக் காப்பாற்ற கணவன் வீசும் அரிவாளுக்குப் பலியாகிறாள். மரணப் படுக்கையில் அவள் தனது கணவனைப் புறக்கணித்து தாலியை அறுத்து, அவனுடன் தாம் பத் திய பந்தத் தை இல்லாதொழிக்கின்றாள்.
"உனக்கு முந்தானை விரிச்சு ஒரு குழந்தையைப் பெத்ததுக்காக வெட்கப்படுகிறேன்."
தனது திருமணவாழ்வில் ஏற்பட்ட அவமானங்கள், அவலங்கள், பெண்என்ற ஒரே காரணத்தால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் இவற்றை மரணப்படுக்கையில் விருமாயி நினைவு கூர்கிறாள்.
“என்னை எங்க சொந்த ஊரிலேயே புதைத்துவிடு அண்ணே, இப்பேர்ப்பட்ட புருசனுக்கு மனைவியாக இருக்கிறதை விட, அண்ணனுக்குத் தங்கையாகச் சாகிறேன்."
பெண் அடிமைத்தனம், ஆண் ஆதிக்கம் போன்ற சமுதாய நெறிகளும், காத்திரமான சாதிக்கட்டுப்பாடுகளும் மேலோங்கிய ஒரு சமூகத்தில் பிறந்து, தனது சுய உரிமைகளை இழந்து

Page 61
119
இவற்றின் பளுவினால் அழுத்தப்பட்டு, இறுதியில் விழிப்புணர்வு பெற்று தனது தனிமனிதத்துவத்தை நிலைநாட்டும் விருமாயி வெறும் கற்பனையாக அல்லாமல் உரிமைகளுக்காகப் போராடும் பெண்வர்க்கத்தின் ஒரு பிரதிநிதியாகிறாள்.

வேழம் படுத்த வீராங்கனை- ஒரு மீள் நோக்கு
செல்வி திருச்சந்திரன்
"வேழம்படுத்த வீராங்கனை" என்ற முல்லைமோடி வட்டக்களரி நாட்டுக்கூத்தை ஒளிப்பேளையினூடாகப்பார்க்கும் ஒரு சந்தர்ப்பம் அணிமையில் எனக்குக் கிட்டியது. நாட்டுக்கூத்தின் வன்ககளையோ அவற்றின் கூறுகளையோ நான் நன்கு அறிந்து அவை பற்றி ஆய்வு செய்ய முன்வரவில்லை. அந்த நோக்கில் வேழம்படுத்த வீராங்கனையின் தகுதியையும் பெறுபேறுகளையும் விளக்க எடுத்த முயற்சியல்ல இது. அதே போல இக்கூத்தின் இசை, நடிப்பு, ஆகிய அரங்க முறைகளைப் பற்றியும் நான் விமர்சிக்க விரும்பவில்லை. என்றாலும் பள்ளி மாணவர்களின் ஒரு புது முயற்சி என்ற அளவில் அந்தமட்டத்திலேயே, இதன் கலைத்தன்மையும் அமைந்திருந்தது என்று சொல்ல விரும்புகிறேன். ஆனாலும் எனது கவனத்தை ஈர்த்த ஒரு முக்கிய அம்சம் பற்றியே நான் இங்கு கூறவிரும்புகிறேன். இந்தக் கதையின் கருவும் இந்தக் கதையின் வெளிப்பாடுமே எனது கவனத்தை ஈர்த்தன. இக் கூத்தைப் பார்த்த பொழுது ஒரு உருமாறிய கருவும், அதன் தாத்பரியமும் என்னை ஆழ்ந்து யோசிக்க வைத்தது. போராசிரியர் சிவத்தம்பி கூறியது போல “வேலப்பணிக்கன் பெண்சாதி அரியாத்தை பேரில் ஒப்பாரி" என்பதே இதன் முதல் உரு. அது ஒப்பாரிக்கே முதன்மை கொடுக்கிறது. இந்த ஒப்பாரியின் பின்னணியில் அவளது அரிய சாதனை, நஞ்சூட்டப்பட்ட நயவஞ்சகம், ஒரு ஆண் பெண்ணுக்கிழைத்த அநீதி அதாவது தனக்குக் கிட்டாத பொருளை அழிக்க நினைத்த அவலம் ஆகிய கதையின் பரிமாணங்கள் வெளிப்படுவதைக் காணலாம்.
நீண்டகாலமாக அரியாத்தையை அடைய எண்ணிய நீலப்பணிக்கன் (அவள் மாமன் மகன்) அவள் தனக்குக் கிட்டவில்லை என்ற பொறாமையினால், கிடைத்த ஒரு சம்பவத்தை தனக்கு அனுகூலமாக்கி, யானையை அடக்கக்

Page 62
121
கூடியவன் கணவன் அல்ல அவனது மனைவியே என்று இகழ்ச்சி தொனிக்கக் கூறுகின்றான். கிராமத்து மக்களது பயிர்களை அழித்த மதங் கொண்ட யானையை அடக்குவதற்கு யாது செய்யலாம் என சின்ன வன்னியன் சபையோரைக் கேட்ட போழுது, வேலப்பணிக்கனே தகுந்த வீரன் என்று கணிக்கப்பட்டான். அந்த நேரத்திலேயே நீலப்பணிக்கன் மேற்கண்டவாறு கூறினான். அவள் மனைவியே இப் பணியைச் செவ்வனே செய்வாள் என்று கூறி வேலப்பணிக்கனை பேடி என கூறுவதன் மூலம் தனது நயவஞ்சகத்திட்டத்தை ஒரே சமயத்தில் நிறைவேற்றலாம் என அவன் நினைத்தான்.
அரியாத்தை வீறு கொண்டு வீரச்சொற்கள் பேசி வெளிப்படுகின்றாள் யானையை அடக்குவதற்கு. இது வரையில் கதையில் பிரச்சினை ஒன்றுமில்லை. யானையை அடக்க வெளியேறிய அரியாத்தை நெடிய ஈட்டி ஒன்றும், தடித்த கயிறும், வீராவேசம் பொருந்திய உடற்பாங்குடனும் செல்வதாகக் காட்டப்பட்டிருக்கும் படம் ஒன்று அழைப்பிதழில் உள்ளது. ஏறக்குறைய இதுவே சரியான பாடமாக இருந்திருக்க வேண்டும். வேழம்படுக்க அவள் சென்ற கோலம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். வீரங்கொண்ட பெண், தன்னை எள்ளி நகையாடிய தன் மாமன் மகனை நினைத்தெழுந்த வீராவேசம் இப்படித்தான் வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நமக்குக் காட்டப்பட்ட காட்சி வேறு விதமாக அமைந்துள்ளது. அரியாத்தை மென்மையான, பதுமையாக கீழே விழுந்து யானைமுகனைத் தொழுது பணிந்து, அவனது ஆசீர்வாதத்தை வேண்டி ஒரு அற்புதம் மூலமாக அந்த யானையை அடிபணிய வைக்கிறாள். இது ஒரு கருத்துநிலைத் திணிப்பாக- மாற்றியமைக்கப்பட்ட ஒரு பண்பாட்டு வெளிப்பாடாக அமைவதைக் காண்கிறோம். இதை இந்து மயமாதல் (Hinduization) எனக் கூறலாம்.
பழங்குடி மக்களும் ஏனைய உயர்குடியைச் சேராத மக்களும் பெரும்பாலும் இந்து சமயக் கடவுளர்களை வணங்கும் வழக்கமில்லை. இந்துமயவாக்கம் இருவகைப்படும். ஒன்று அவர்களாகவே மேல் சாதியில் உள்ள இந்துக்களின்

122
சமயக்கோட்பாடுகளையும் சடங்குகளையும் வழிபாட்டு முறைகளளையும் ஏற்றுக்கொள்வது இரண்டாவது அவர்களது கதை, புனைகதை, கூத்து, நாட்டியம் போன்றவற்றில் நெறியாளர்களும் , தயாரிப்பாளர்களும் தத் தமது கண்ணோட்டத்தில் அவர்களை இந்து மயமாக்கிவிடுவது. இது தமிழ் திரைப்படங்களில் பல சமயங்களில் வெளிப்பட்டுள்ளது. அரியாத்தை கூத்து, பின்னயதைத் சேர்ந்தது போல இருக்கிறது. கேரளத்திலிருந்து வன்னிப் பிரதேசத்துக்கு யானைகளை அடக்குவதற்கு கொண்டு வரப்பட்ட பணிக்கர் குலம், பிள்ளையார் வணக்கத்திற்குப் பழக்கப்பட்டுவிட்ட காலத்தின் பிரதிபலிப்பா, அல்லது பிள்ளையார் வணக்கம் புகுத்தப்பட்ட இந்து மயவாக்கமா என்பது ஆராய்ச்சிக்குரிய விடயம். வேலப்பணிக்கன் பெண்சாதி அரியாத்தை பேரில் ஒப்பாரியின் மூல வடிவம் எப்படி இருந்திருக்கும்? அதாவது, வாய்மொழி வடிவம் எப்படி இருந்தது என்பது தெளிவாக்கப்படல் வேண்டும்.
இரண்டாவது, வீறு கொண்டு எழுந்த பெண்மை ஏன் அடங்கி ஒடுங்கியது?. வேலும், ஈட்டியும், உபயோகிக்கப் படாதது ஏன்? பெண்ணைப் பதுமை வடிவத்தில் பார்ப்பது மேல் குடி மக்கள் மரபு. இந்த மரபு அரியாத்தையின் மேல் திணிக்கப்பட்டுவிட்டது இதை சமஸ் கிரு தவாக்கம் (Sanskritisation) என்று சமூகவியலாளர் கூறுவர்.
மூன்றாவதாகத் திணிக்கப்பட்ட இன்னுமொரு பண்பு கற்பு என்ற திண்மை. கற்பும் அதன் வரைவிலக்கணமும் பெரும்பாலும் மேல் குடி மக்களது ஒரு பண்பாடாகவே பலகாலமிருந்து வந்துள்ளது. அறுத்துக்கட்டும் வழக்கம் அதாவது ஆணொருவனைச் சேர்ந்து வாழ்ந்து அந்தச் சேர்க்கை சரிவர அமையாவிட்டால்பந்தத்தை முறித்து விலக்கி இன்னொருவனை நாடி வாழும் பழக்கம் பெரும் பாலும் சமூக அங்கிகாரம் பெற்ற வழக்குமுறையாக பழங்குடி மக்களிடமும் சிறப்பாக கேரள நாட்டு உயர்குடி மக்களது சமுதாயப் பண்பாகவும் இருந்து வந்துள்ளது. வேலப்பணிக்கனின் மனைவி அரியாத்தை தன் கற்பின் திண்மையால் கண்ணகிக்கு ஒப்ப யானையை

Page 63
123
அடக்குகிறாள் என்று கூறுவதும் மேலிருந்து திணிக்கப்பட்ட ஒரு பண்பாட்டு மாற்றமாகவே தெரிகிறது. இங்கு அவளது தனிமனித வீரம் மழுங் கடிக் கப்பட்டு அவள் பதிவிரதையாக விருந்தபடியால் தான் யானையை அடக்குகிறாள் என்று கூறப்படுவது அவதானிக்கத்தக்கது.
இதில் நாம் மீண்டும் ஆராய்சிக்குட்படுத்தவேண்டியது யாதெனில் இந்து மயவாக்கம், சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பண்பாட்டு மாற்றத்தின் கால கட்டத்தை இது பிரபலிக்கிறதா? அன்றி கூத்து நெறியாள்கையின் நெறியாளர்களால் இம் மாற்றங்கள் செய்யப்பட்டனவா?. எவ்வழி நடந்திருந்தாலும் அரியாத்தை என்ற வீரப்பெண்ணுக்குரிய அவளது சிறப்புத்தன்மை மழுங்கடிக்கப்பட்டு பத்தினியாக்கப்பட்டு பாவையாக்கப்பட்டுவிட்டாள். (பத்தினித்தன்மை நல்லதா இல்லையா என்பதல்ல இங்கு கேள்வி, இல்லாததொன்று புகுத்தப்பட்டுவிட்டது என்பதுதான் இங்கு முக்கியம்) பெண்ணுக்கு- தனது காதலிக்கு அல்லது மனைவிக்கு வஞ்சகம் செய்யாமல் எனக்கு அவள் ஒருத்தியே என்றிருக்கும் ஏகபத்தினிவிரதம் கணவனுக்கு அந்தப் கற்பின் திணிமை *எப்போதாவது ஏதேனும் ஒரு பயனைப் பெற்றுக் கொடுக்காத நிலையில் பெண்ணினது கற்புக்கும் அந்த வலிமை இல்லை என்பதே நியாயமானதாகப் பெறப்படும்.
இக் கூத்து பெண்களை மேம்படுத்தியுள்ளது பெண்ணின் அரிய சாதனையைக் காட்டுகின்றது என்ற ஒரு குரலும் ஒலிக்கக்கேட்டேன். பெண்நிலைவாதக் கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது என்ற கூற்றுச் சரியானதாக எனக்குப் படவில்லை. பெண்ணொருத்தி இங்கு சில சிறப்புக்குணங்கள் -அதாவது அஞ்சா நெஞ்சமும் நிமிர்ந்த நேர்நடை போன்றகுணங்கள் அகற்றப்பட்டு ஒரு பாவை யாக்கப்பட்டுவிட்டதும் ஆண்மகன் ஒருவனது உடைமைப் பொருளாக இருக்க மறுத்த பொழுது அந்த உடைமைப் பொருள் நஞ்சூட்டி அழிக்கப்பட்டமையும் இறுதியில் கதைப் பொருளாக வருவதை நாம் கவனத்துக்கு எடுக்க வேண்டும். இத்தகைய ஒரு கருத்து பெண்நிலைவாதத்திற்குட்பட்டது என்று கூறுவது எள்ளளவும் சரியல்ல.

124
நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்தே முதலில் வாய்மொழி யாகவும் பின்பு கூத்தாகவும் மாறியதென்றால் அங்கு அற்புத அதிசயங்களுக்கு இடமில்லை. அரியாத்தை உண்மையிலேயே ஒரு வீரப் பெண்ணாகவே ஈட்டி கொண்டோ அன்றி வேறுவிதமாகவோ யானையை அடக்கி இருக்க வேண்டும். அச்சம்பவம் இக் கூத்தில் மழுங்கடிக்கப் பட்டுவிட்டது. இந் நாட்டுக்கூத்து ஒரு இரவு முழுதும் தொடர்ந்து, விடியும் வரையும் நடக்கும் ஒரு கிராமிய விழாவாகவே இருந்து வந்துள்ளது. இது குறுக்கப்பட்ட பொழுது, நவீன மயப்படுத்தப்பட்ட பொழுது இதன் கரு உருமாறியது என்று நாம் கூற முடியாது. ஆனாலும் எப்பொழுது இந்த கருத்துநிலை மாற்றம் ஏற்பட்டது என்பதை கூறுவதில் பொழுதைக் கழியாமல் மூலவடிவத்தில் இப்படி ஒரு மாற்றம் நடந்திருக்கிறது. இதனை சமூகவியல் நோக்கில் நாம் பார்க்க வேண்டும். இத்தகைய சமூகத் தன்மையை இந்த இலக்கிய வடிவத்தில் நாம் கண்டு தெளிய வேண்டும் என்பது தான் இச்சிறு குறிப்பின் நோக்கம்.
நமது பாரம்பரியக் கதைகள் பலவற்றில் பெண்களுக் குரிய குணங்கள் இவ்வாறு மாற்றியமைக்கப்படுவது ஒரு மரபாயுள்ளது. சமூகத்தில் பெண்மையின் முதன்மை குறைக்கப்பட்டு ஆண் மேலாண்மை கருத்துரீதியாக நிறுவப்படுகிறது என்பது ஈண்டு நோக்கற்பாலது.

Page 64

வருடாந்த சந்தா - நிவேதினி
North America : USS 30
UK & Europe : US$ 20 India, S. Asia USS 10 Sri Lanka : SLR 200
சாந்தா விண்ணப்பம் 19.
நிவேதினி சஞ்சிகைக்கு சந்தா அனுப்பியுள்ளேன்.
இத்துடன் காசோலை/ மணிஓடரை மகளிர் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் பேரில் அனுப்பி வைக்கிறேன்.
Women's Education and Research Center 17, Park Avenue Colombo 5
Sri Lanka.

Page 65


Page 66
எமது வெள
නන්දිමිත්‍ර - රොස්ලින්ඩ් මැන්ඩිස් ඩොරින් වික්‍රමසිංහල ශ්‍රී ලංකාවේ ජනත අරගලයෙහි පුරෝගාමී වූ බටහිර කාන්
- කුමාරි ජයවර්ධන ලුහසුකාංගේ පතිවත ඉබ්සන්ගේ බෝනික්කී - පරිවර්තනය ධර්මසිරි ජය ඇගේ ලෝකය - මොනිකා රුවන්පතිර ස්ත්‍රීවාදය අද සමාජයට උචිතයි ඉතිහාස
- ස්ත්‍රීවාද අධ්‍යයන කවය
பெண்விடுதலை வாதத்தின் பிரச்ச அது ஒரு மேலைத்தேய கோட்பா
- செல்வி :
வார்ப்புகள் - பாரதி இந்தியர்களது இலங்கை வாழ்க்சை - மீனாட்சி பெண்களின் சுவடிகளில் இருந்து - சாந்தி ச மக்கள் தொடர்பு சாதனமும் மகள் - சந்திரிகா
பெண் நிலைச் சிந்தனைகள்
- சித்திரா பெண்ணடிமையின் பரிமாணங்களு விளக்கமும். - செல்வி
கடவுளரும் மனிதரும் -பவானிஆ (சிறுகதைத் ெ
Doreen Wickramasinghe, A Wes Radical in Sri Lanka - Kumari Ja Feminism in Sri Lanka in the De Kumari Jayawardane
Fragments of a Journey – Jean AJ Some Literary Woman of Sri Lar The Dilemma of Theories. a Fem
Thiruchandran
The Janasaviya Poverty Allevia A Case Study from Palenda Vil
இவற்றை எம் வனக் ச (D 01 西兰 புத்தகசாலைகளிலும் ே
ISSN : 1391-0353
 

மீடுகள்
fත9වක්
කොඩි
වණ සය හා ආර්ථික
னைமையம்
! Π Ρ
திருச்சந்திரன்
நிலைமை அம்மாள் சில அடிகள் ச்சிதானந்தன் ரிரும்
சோமசுந்தரம்
மெளனகுரு நம் பெண்ணுரிமையின் திருச்சந்திரன் ழ்வாப் பிள்ளை தாகுதி) tern yawardena Cade
rasanayagam
ka - Eva Ranaweera inist. Perspective - Selvy
tion Programme and Woman, lage - Sepali Kottegoda
நிலும் ஏனைய பிரபல பெற்றுக் கொள்ளலாம்.
Printed by Karunaratne & Sons LtC