கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவதொண்டன் நிலையப் பொன்விழா மலர் 2004

Page 1
டன் நினை
w
இ.
ിഖ007
 
 

யப் பொன்வி

Page 2


Page 3


Page 4
இன்னமுவமாருதரம் பார்க்கவேண் வமன்றிச்சை கொள்ளுவதன் மனம்
அஜியம்
வபான்னொளிர் சோதிபூரணக்காட் என்னகந்தனிலெழும் ஓம்இசை அ
அரவி கண்டவர் மகிழ்ந்திடும் கதிர்சடைக்க கனிவுடன் அருள்வழி கண்ணிை
தொண்டர்கள் சூழ்ந்திடும் கந்தரநா தூயவர் ஏத்திடும் சோதி விசாருபனை
அண்டரும் அறியாத அற்புத நடன ஆனந்தத்தேன்விசாரி அம்புயபாத
கொண்டலே போன்றருள்கொடை கொழும்புத்துறையுறை குருமனி
 
 

னப்போதையும்- இன்னமும்

Page 5


Page 6
N
W W
W N W W N W N W NNNNNNNNNNNNN
W N N W
N N
W
圆 W W NNNNNNNNNNNNNNNN
W N W था । W NNNNNNN
W W
 


Page 7


Page 8
/
அறி
பொருள் திகதி நாள்
55
யாகம் 05-04-2004| ஞாயிறு 18:(
(Up
举
举
29.
ஆயிலியம்
ܢܠ
01-04-2004|வியாழன்கா 9.C 28-04-2004| புதன் மு
எதிர்வரும் பங்குனி ஆயிலியநாளன்று (01-04-2004) கெ குருபூசைக்கு முந்திய மூன்று நாள்களும் சிவதொண்டன் வழமை போன்று நற்சிந்தனை முற்றோதல் நிகழும். குரு 5 மணி முதல் அபிடேகபூசை நிகழும். நினைப்பறநினைந்தேன்
பொன்விழா வாழ்த்து
சிவதொண்டு பரவுக
உனக்கினி என்ன பயமெடி அத்தியாயம் - 01 அடியாருறவும் அரன்பூசை நேயமும் புனிதர்
திருக்களிற்றுப்படியாரில் காணும் திருத்தொண்டர்கள் ஒளிநெறிபெற்றபுண்ணியக்கண்மூன்று
பூசனைமாட்சி
திருவடி
அத்தியாயம் - 2 தோத்திரமும் சாத்திரமும்
கோளறுபதிகம்
அம்மையார் பெருமை சைவசித்தாந்தக் கொள்கையும் பெரியபுராணமும் சிவயோக சுவாமிகளின் திருமுகங்கள் காட்டும் சமயமும் தத்து திருவாசகமும் சிவஞானபோதத்துஎட்டாம் சூத்திரமும் எப்பவோ முடிந்த காரியம்
ஏன் பிறந்தோம் புராணங்கள் கூறும் சிவனின் அட்டவீரச் செயல்களின் சிறப்பு அத்தியாயம் - 3ஐம்பது ஆண்டு ஆண்டகை ஐம்பது ஆண்டு ஆண்டகை
நற்சிந்தனை செல்லப்பாசுவாமிகள் அருளியமகா வாக்கியங்கள் சிவதொண்டன்நிலையப்புரவலர் சிவயோக சுவாமிகள் அருளியமானிட வாழ்க்கையின் இரகசிய சிவயோக சுவாமிகளும் சிவத்தியானமும் செல்லப்பாசுவாமிகள்
The Glory of the Lord's Padukas
செங்கலடி சிவதொண்டன் நிலையத்தில் குருபூசை 28ஆராதனைகள் இடம்பெறும்.

N
sகை
நேரம் | இடம்
ნთ6სა O
0 மணி சிவதொண்டன் நிலையம்
தல் யாழபபாணம
6O6) செங்கலடி
0 மணி சிவதொண்டன் நிலையம்
தல் கொழும்புத்துறை,
ஆச்சிரமம். الصر
ழும்புத்துறை ஆச்சிரமத்தில் குருபூசை கொண்டாடப்படும்.
நிலையத்தில் ஆச்சிரம வாழ்வு நாள்களாகும். இந்நாள்களில் நபூசை நாளன்று காலையில் யாழ் சிவதொண்டன் நிலையத்தில்
ափն
4-04 அன்று காலை 09.00 மணிமுதல் அபிடேக
O
O2
O3
O4
O5
O6
1.
13
15
8
29
30
32
34
37
4.
45
SO
5.
55
56
57
65
76
8.
86
90
93

Page 9
ஓம் !
ஞானகுரு தேசிகனை வாழ்த்தி
நாடனைத்தும் தானாகும் மோனகுரு திருவருளால் ஞானம் முற்றிலும் நாம் தவநிலை தேனொத்த நற்சிந்தனை தியான சித்தத்தில் பேரின்பம் ஊ வானத்தின் வாழ்வளித்த ஈழச் ச
சிவயோக சுவாமிகளின்
எப்போதும் குருபாதம் நினைவா எம்பெருமான் நடராஜன் 1 முப்பொழுதும் கடந்தபர வெளின் முத்தியெனும் வானகத்தி தப்பாத சாந்தநிலை அளித்த ே தவம் நிறைந்த சிவயோக எப்போதும் மரணபயம் வெல்ல
தேசிகனின் திருவடிகள் வ
நேசமுடன் வாழ்த்திடவும் சொற்க நேர்த்தியாகப் பாடிவைக் பாசத்தை அறுத்துவிட்டு பயத்ை பாவனையால் பரவெளிை தேசத்தார் தன்பெயரை மறந்து
மகாமந்தி ரம்மூன்று அரு ஈசானம் யாழ்ப்பாணச் சித்தர் ே சுவாமிகளின் திருவடிகள்
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக் ஞானகுரு சுவாமியை நா ஆயிரம் நூல் எழுதினாலும் இன் வேண்டுமென தமிழின்பம் தாயினும்நல் லசித்தரின் பெருை பாடநானும் ஆசைகொண் காயகற்ப மருந்துதந்த அவர்வா தொண்டர்நாம் எப்போது
 

நின்றேன்
) Guigbo மை நெருங்கப் பெற்றோம்
மருளி
பட்டி நமக்கு
சித்தர்
திருவடி வாழ்க.
ய் நெஞ்சே பாதம் நினைந்து யைக் கண்டு ன் பரிதி யானான்
காமான்
* சுவாமி எம்மை அருள்செய் வாழ்க வாழ்க
5 வில்லை தம் வகையும் அறியேன் த நீக்கி பச் சுட்டிக் காட்டி ஜெபிக்க
ளூம் எங்கள்
Irratör
வாழ்க வாழ்க
க லாமோ
கணிக்க லாமோ னும் 6l(ყpჭნ
வாரி வழங்கும்
சுருங்கப் டேன் தியானம் அருளி
நாளை
மாதாஜி

Page 10
[Ո60f; 68 பொன்வி
எண்ணுவார் நெஞ்சில் கபானு வருடம் 1
2004 Drri,
திருச்சிற் இன்றெனக்கருளி இருள்கடி
எழுகின்ற ஆாயிறே போடு Fife நின்ற நின்தன்மை நினைப்
நீயலாற் பிறிது பற்றின்ை சென்று சென்று அணுவாய்
நிருப் பெருந்துறையுறை
ஒன்றும் நீயல்லை அன்றி
யாருன்னை அறியகிற்பா
E. ச்சிற் திருச்சிற். இஃது மணிவாசகப் பெருமான், திருப்பெருந்: தமது சோதி சொரூபத்தை உள்ளவாறே காட்டிய திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமா இன்று இரவிருள் அகற்றிப் பகல் செய்யும்
தினகரனாய் உதித்து, அறியாமை இருளகற்றி,
உன்னையன்றி மற்றொன்றையும் காணேன். யா
عيساتيجي=
FRA
அணுவணுவாய்த் தேய்ந்து உன்னிலே ஒன்றியிரு நியோ யாதொன்றுமல்லாத தன்னந்தனிப் பொருளாய
உன்னிலே ஒன்றியிருக்கும் அடியேன் மற்றே நினைந்திருக்கும் பேற்றினைப் பெற்றேன். குறிப்பு: மணிவாசகப் பெருமான் சொ
ல்லுகின்ற இந்:
 
 
 
 
 
 

pT இதழ் 04-05
ஓ நண்ணுைவான் நசன் மாசி - பங்குனி மீ
நற்பஐழ்
ந்து உள்ளத்து ன்று பற நினைந்தேன்
த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்
FiవT ஒன்றில்லை ரே
நம்புஜம் - மானிக்கவாசக சுவாமிகள்
துறையில் குருபரனாகத் தோன்றிய சிவபெருமான்
அன்று பாடிய பாட்டு.
னே!
b பகலவன் போல், என் உள்ளத்திலே ஞான அறிவொளி ஊட்டினாய், இவ்வறிவொளியிலே வும் ஒன்றில் ஒன்று சென்று சென்று ஒடுங்கி, இ
க்கின்றன. உன்னையன்றி ஒன்றுமில்லை. ஆயின் 훗
புள்ளாய், சோதிப் பொருளே! உன்னை யாரறிவார்!
மார் நினைப்பும் அற்றவனாய் உன்னையே நீள
迈 ப்பற நினைதலே முழுக்கும்பிடுதலாகும்.

Page 11
சீரார் இலங்கை நகர் சிற பாரோர் புகழ்பெருகப் பணி தேரோடும் நல்லூர் செல் ஆராலும் அளந்திடா அரு ஏழை அடியார்கள் இன்பப தாளமேளம் இல்லாமல் த பவப்பிணி போக்கி பரகதி சிவதொண்டன் என்னும் சி சிந்தையில் நினைந்து ஆ சந்ததம் வாழ வாழ்த்தும்
வாழ்க சிவனடி வாழ்க சிக வாழ்க சிவதொண்டன்
பல்வினை போக்கி நல்லமு பல்குக சிவதொண்டன்
பாழ்செயும் மாயா காரியப பணிசெய் சிவதொண்டன்
பக்தர்க ளெல்லாம் பாட பரவும் சிவதொண்டன்
ஊழ்வினை போக உள்ள்ெ உயர்க சிவதொண்டன்
உண்மை முழுவதும் என்று ஒருவன் கழல் வாழ்க என்றாங்கு பைந்தமிழ் மொழியில் பா எந்தம் குருவின் இனிய வ
என்றும் வாழ்க எனவே ஏ குன்றா மொழியால் குவல நின்று நிலவுக நின்புகழ் 5
 

NUS) வாழ்த்து
க்க வந்த செல்வமே னியாற்றும் பரனே
'Luf (350T ள்பொழியும் ஆசானே மாய் வாழ்வதற்கு வப்பணி ஆற்றினை
ஆக்க வனடி இதனை க்கினை
வழங்கினை.
வனடி
ருள் ஆக்கிப்
Dகலப்
ஆடப்
ாளி ஓங்க
நுரை செய்யும்
டிய வாழ்த்து
ாழ்த்தே
த்திய
யந் தன்னில் சிவதொண்டன் ஓம்
O2

Page 12
ZEN
%ଢିzší
இN %ଜିଞ୍ଜିଞ୍ଜିଳ୍ପୀ
ZaN
%ଚ୍ଛି
சிவதொண்
சிவதொண்டன் நிலையத்தின் பொன் விழாப் புகழ்
(
"STILLTGITT AFTE
வரிசையுடன் எழுத ஞாயிற்றைச் சங்க
ஞானகுரு புகழிை
என்ற பாரதியாரின் குருக்கள் ஸ்து கொள்ளவேண்டியுள்ளது. யாழ்ப்பானத் திருநா சிறக்க வந்தவர் யோகசுவாமிகள், சுவாமிகள் எம நல்லமுதமும், சிவதொண்டன் என்ற பெயரில் உள சஞ்சிகையும், சிவதொண்டன் நிலையம் எனும் நிலையமும் சாலச் சிறந்தனவாகும்.
யோகசுவாமிகள் அவரவர்க்கு அதுவதுவா யோகம், ஞானம் எனப்பட்ட வழிகளில் அவர வேதாந்திகளும், சித்தாந்திகளும், பெளத்த, ! போற்றினர்.
அதிகாலைப் பொழுதில் பணித்துளிகள் மனங்கமழும் பலநிற மலர்களையும் மல செயல்வடிவமாக அமைந்தது சிவதொண்டன் அன்பர்கள் பலரை உருவாக்கும் தொண்டினை எ
மேலும் கடந்த ஐம்பது வருடங்களா அகத்தைக்கொண்டு, செங்கலடி ஆதிய இட சிவப்பணிகளும், அறப்பணிகளும், ஆன்மீக எழு சஞ்சிகை ஊடாகத் தேசமெங்கும் இப்பணிகள் பர
சிவதொண்டன் நிலையப் பொன்விழா இ இறையருளை வேண்டுகிறேன்.
"சிவத்தியானம் ெ
சிவமே நாமெனல்
அவனி அனைத்து அதனை அறிந்து
මමමාමමමාමම

தி
சுவாமி ஜீவனானந்த மகராஜ் தலைவர், பூg இராமகிருஷ்ண மிஷன் ت இராமகிருஷ்ணபுரம். மட்டக்களப்பு.
கூறும்போது,
ஸ்லிடவும் அடங்காதப்பா
நிவைக்க வகையும் இல்லை
லியால் அளக்கலாமோ
ன நாம் வகுக்கலாமோ"
தியில் உள்ள வரிகளையே நினைவிற் ட்டிலே செல்லப்பா சுவாமிகளின் குருபரம்பரை க்களித்த பெரும் பேறுகளில் நற்சிந்தனை எனும் ழ்வினை போக உள்ளொளி ஓங்க உயரும் மாத நிருநாமம் பூண்ட உவமை கடந்த இன்பம் தரும்
ாய் இருந்து வழிகாட்டியவர். சரியை, கிரியை, வர்க்கு அவரவராக நின்று அருள்பாலித்தவர். கிறித்தவ, இஸ்லாமிய அன்பர்களும் அவரைப்
அமைதியாகப் பூச்செடிகள் மீது பொழிந்து ரச் செய்கின்றன. அதுபோல் சுவாமிகளின்
நிலையம். அது ஆன்மீகத்தில் நாட்டமுள்ள மது சமூகத்திற்கு அமைதியாக ஆற்றுகிறது.
க யாழ் வண்ணார்பன்னையில் தலைமை உங்களில் கிளை நிலையங்களை அமைத்து ச்சிப் பணிகளும் செய்துவருகிறது. சிவதொண்டன் வியுள்ளன.
இனிதே நிறைவேறி சிவதொண்டு பரவுக என
சய் செய் செய்
மெய் மெய் மெய்
தும் பொய் பொய் பொய்
உய் உய் உய்"
- நற்சிந்தனை
O3

Page 13
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་།
欧7 蒸 உனக்கினி எ s உனக்கினி யென்ன பயமெடி-ச
உத்தம யோககுரு உன்னோடிரு 猫
தனத்தினில் குறைவுண்டோத
மனத்தினில் மகிழ்வுண்டே மங்
வீடுனக் கினியைப் போதும் செ வீணர்கள் கூட்டமென்றும் பந்:
மாடுமனை மக்களெல்லாம் மய
தேடுசிவ யோகனடி சிந்தித்துக்
ஆராயிருந்தாலும் அவரவர்க்கு
சீராகச் செய்தசிவ யோகன்நி6
வாராத செல்வமெல்லாம் வந்து
ஆராத காதலுடன் அவனழ தின்
AWA
 

வத்தினில் குறைவுண்டோ
களம் யாவுமுண்டே (உனக்கினி
.ം (உனக்கினி) i
ாந்த மென்றே (ස
தமென்றே -
க்க மென்றே
கொண்டே (உனக்கினி)
த் தக்கவருள்
னை விருக்கையில்
குவிந்திடுமே
ختي
Tம் பணி (உனக்கினி)
-சிவசிந்தனை
HU
O)4

Page 14
இ
O
வெனனாவற் பெருமானை அ சிலந்தியும், யா6 LIYAN
- ܪܫܪܸܪ
 
 
 

荃
چكنعتي چا
அன்னை அகிலாண்டேஸ்வரியும், னையும் வழிபடுதல்

Page 15
(நல்லார்கள் சேர்புகலி இரத்தினசபாபதி அவர்கள் நம்ம சிவஞானபோதம், திருஞானசம்பந்தர் ஓர் ஆய்வு ஆதிய வெளியீடாக வந்துள்ளன. சேக்கிழார் அழச்சுவட்டிற் கெ நன்னெறிக்குக்காப்பகமாக அமையவேண்டும் எனும் கெ
இந்த உலகத்தில் விளங்கி வெல்ல வேண்டிய விதி என்பதாக ஒரு விதியைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் அறிமுகப்படுத்துகின்றார். அந்த விதிக்கு உரிமையுடையவர்களாக இருந்து அந்த விதியைச் செயல்படுத்தும் பேரவை" ஒன்று இருந்தது என்றும் கூறுகிறார். அந்தப் பேரவை புனிதர் பேரவை" என்று கூறப்பெற்றது. அது இருந்த இடம் திருவாரூர் தேவாசிரிய மண்டபம். அந்தப் புனிதர் பேரவையைச் சுந்தரருக்கு அறிமுகப்படுத்தி அந்த புனிதர் பேரவையின் பெருமைகளை இறைவனே பேசுவதாக
சேக்கிழார் பின்வரும்பாடல்களை அமைக்கின்றார்.
பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால்
எம்மைப் பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார் ஊனமேல்
ஒன்றுமில்லார் அருமையாம் நிலையில் நின்றார் அன்பினால்
இன்பம் ஆர்வார் இருமையுங்கடந்துநின்றார் இவரை நீ அடைவாய்" பெரியபுராணம் - 196
என்று நடமாடும் கோயில் நம்பர்களை இறைவனே விளக்குகின்றான். இறைவன்
உணர்த்தும் பண்புகள் ஏழு.
1. பெருமையால் தம்மை ஒப்பார்
திருவாரூர்ப் பூங்கோயிலமர்ந்த பிரான் கூறுவது. திருத்தொண்டர்கள் பெருமை என்ன? அவர்கள் பெருமைக்கு ஒத்தவர்கள் அவர்களே. தனக்கு உவமை இல்லாதவன் உலகில் ஒருவனே. அவனே பெரியோன். அவனுக்கு ஒப்பாரே

தர்
சித்தாந்த சரபம் முனைவர் வை. இரத்தினசபாபதி,
மேனாள் தலைவர் பேராசிரியர், சைவசித்தாந்தத்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்.
த்தியில் வாழும் சைவமூதறிஞர். திருமுறைத் தெளிவே இவர் தம் ஆய்வுநூல்கள் சென்னைப் பல்கலைக்கழக Fல்லும் இப் பெரியார் புனிதர் பேரவையைான்று சைவ ாள்கையுடையவர்) - ஆசிரியர்
இல்லையெனில், மிக்கோர் இல்லை. அத்தகைய நிலையுடைய இறைவன் கூறுவது பெருமையால் எம்மை ஒப்பார் என்பதன்று. சிவனை ஒத்த தொண்டு ஆதலின் அவ்வாறு உவமைப்பொருள் என்ற நிலையில் சிவனோடு ஒப்பானார் என உவமை நிலையில் இவர்கள் நின்றார்கள் என்றாவது கொள்ளலாம் தொண்டர்கள் பெருமையை நோக்கின் அவரே அவரை ஒப்பார் என்று இறைவனே சொல்லும் போது தொண்டர்களை ஒத்தவர்கள் இல்லை. ஒத்தவர்களே இல்லை என்னில் மிக்கோரும் இல்லை என்பதாம். இதனாலன்றோ விறன்மிண்டர் “இவனும் புறகு” என்றார்.
இருவரும் தொணர் டர்களே. ஆயினும் தொண்டர் எவ்வாறு உணர்ந்தவரானார்கள். சிவனைத் தவிர வேறுயாரையும் வணங்குவ தில்லை. வேறு யாரையும் நினைப்பதில்லை. சிவனுக்குக் கைத்தொண்டும் செய்கிறார்கள். அதே சமயத்தில் உயிர்களையெல்லாம் திருத் தொண்டு நெறியில் நிறுத்தி இறைவனடிக்கு ஆட்படுத்துகிறார்கள். சிவனைப் பார்த்துத்தான் அழுதார் திருஞான சம்பந்தர். ஆனால் பூதபரம்பரை பொலிய வேண்டும் என அழுதார். செய்யும் அறத்துக்குஉரிய பயன்தான் தரமுடியும்இறைவனுக்கு ஆனால் இவர்களோ செய்த அறத்துக்கு உரிய பயனைவிட அதிகமான பயனைத் தரும் ஆற்றல் உள்ளவர்கள். எவ்வாறு? உலகத்துயிர்கள் செய்யும் அறத்துக்குரிய பயனை இவர்களும் கருதுவார்கள். மேலும் அவர்கள் சிவனுக்குக் கைத்தொண்டு செய்யும் அறத்துக்குரிய பயனை
06

Page 16
இவர்களும் கருதுவார்கள். மேலும் அவர்கள் சிவனுக்கு கைத்தொண்டு செய்யும் பொழுதும் பிறருக்குத் தொண்டாற்றும் பொழுதும் வருகிற அறப்பயனையும் சேர்த்துக் கொடுத்து விடுகி றார்கள். எனவே இவர்கள் இறைவனைவிட ஒரு அறத்துக்கு மிகப்பெரும் பயனை அளிப்பவர் களாகிறார்கள்.
இறைவனாகிய சிவன் உயிர்களை ஈடேற்றுதல் கடமை. ஆனாலி இவர் களுக்கு அது தொண்டாகிறது. எனவே அவரை ஒத்தவர்கள் யாரும் இல்லை.
2. பேணலால் எம்மைப் பெற்றார்
என்னையே நினைந்து, எனக்கே தொண்டு செய்து, என்னைத் தங்களுக்குள் கொண்டுபோய் அடைத்துக் கொண்டு விட்டார்கள். நான் பிச்சைக்கு வருகிறேன். நான் ஒரு பருக்கை உண்டால் உலகத்து உயிர்கள் எல்லாவற்றுக்கும் அது உணவாகப் பொருந்துகிறது. அதுவே நான் பிச்சை ஏற்பதன் தத்துவம். ஆனால் நான் உணவாக ஏற்று, அதை உயிர்களுக்கு அளிக்கும் போது எல்லா உயிர்களும் ஏற்கும். ஆனால் இவர்கள் திருத்தொண்டர்கள். நான் ஊட்டுவதை என்றும் ஏற்றதில்லை.
“நாடொறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்” என்பது திருமூலர் திருமந்திரம். எனவே நான் உண்ணுவது அவர்களைச் சாராது. ஆனால் அவர் களர் எனர் னையே அவர்களுக்குள் அகப்படுத்தி வைத்துக் கொண்டதால் அவர்கள் உண்டது, யான் உண்டதே. இப்பூவுலகத்துயிர்கள் அனைத்தும் உண்டதே. எனவே அவர்கள் உணர் பது என னை அடையும் . எலி லா உலகத்துயிர்களையும் அடையும். ஆனால் நான் உணர் பது எலி லா உலகத் துயிர் களையும் அடையும். அவர்களை அடையாது. என்னிடம் ஏற்று வாழ்வதில்லை என்பதனாலேயே வீரர்களானவர்கள் இதனையே,
நடமாடுங் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாங் கோயில் பகவற்கு அது ஆம் படமாகுங் கோயில் பகவற்கு ஒன்று ஈயின் நடமாடுங் கோயில் நம்பர்க்கு அது ஆகா
என்று திருமூலர் சுட்டினார். இதனையே

திருவள்ளுவர் "ஈண்டு அறம் பூண்டார்" என்றார்.
ஈண்டுதல்-பெருகுதல் ஒன்று மேன்மேற்பெருகுதல்.
3. ஒருமையால் உலகை வெல்வார்
ஒருமை என்பது கற்புநிலை. தன்னைத் தன்னால் அன்பு செய்யப் பெறும் பொருளில் ஒற்றித்து விடுதல். பூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும் இறைவன் மேல்வைத்த காதல் உறைப்பில் வழுவாதவர். கூடும் அன்பினில் கும்பிடுவதைத் தவிர வேறு எதையும் வேண்டாதவர். பாரம் ஈசன் பணி அலது ஒன்றில்லாதவர். எனவே, இறைவன் கூறுகிறான். “எல்லா வற்றாலும் என்னோடு ஒருமையாகி விட்டவர். இவர்கள் என்னோடேயே ஒருமை பெற்று விட்டதால், எல்லா இடங்களிலும் நானே தோற்க வேண்டியதாயிற்று. எண்னோடு ஒருமையின் நின்றதால் உலகியல் நிலையை அவர்கள் வென்று விட்டார்கள். உலகியலுக்கு மாறான வற்றை நான் மேற்கொள்ளும் போது அவர்கள்
என்னையும் வென்று விட்டார்கள்”.
இத்தகையாளரிடம் நாண் தோற்றேன். சிறுத் தொணர் டரிடம் யானி தோற்றேனர். இளையானர் குடிமாற நாயனாரிடம் யான் செல்லும் போது உணர்மையான பசியை உண்டாக்கிக் கொண்டே சென்றேன். மாறான சூழ்நிலையிலும் அவர்கள் என்னை வென்று விட்டார்கள். எல்லாரும் எனக்கு உணவு படைப்பார்கள். உண்ணச் செய்ய மாட்டார்கள். உணர் ண வைக்க மாட்டார்கள் . எனக்கு வெறுப்பான உணவு ஒன்றே வைத்து என்னை உண்ணச் சொன்னார் கண்ணப்பன். அன்பின் வடிவாய நான் எப்படி உண்பேன்? என்னை உண்ண வைத்து விட்டானே! என்ன அப்படிப் பட்ட அன்பு என்று எனக்குத் தோன்றாதபோது அவன் கண்ணையே பிடுங்கி எண் கண்ணில் வைத்து, அன்பு நிலையிது எனக்காணி, என உணர்த்தும் தெய்வமாக இருந்த எனக்கே உணர்த்தும் தெய்வமாக வந்து நினர் று விட்டானே கணிணப் பணி . எண் மனைவி பார்வதியின் கண்ணை ஒத்தது மாவடு. மாவடு வகிரன்ன கணிணி அவள். நான் அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்வேன். மாவடுவை
மடமட எனிறு கடித்து, சத்தம் கேட்க
07

Page 17
உண்ணுமாறு வைத்து விட்டானே. அரிவாள் தாயன். எனவே என்னோடு ஒருமையாக இணைந்தமையால் உலகியலை வென்று நின்ற
வீரர்கள் ஆனார்கள் அவர்கள்.
இன்னும், தன்னியல்பில், தொடக்கத்தில், மென்மை அறிவு பெற்றிருந்தார்கள். அறிவில் அமைந்த மென்மை அறிவு காரணமாகத் தன் உண்மை நிலைக்குக் கீழான உலகியலில், அங்குள்ள இன்பத்தைக் கொல்லை வழியாகச் சென்று தீமையானவைகளை மேய்கின்ற பசுக்கள் போல துய்க்கச் சென்று கொண்டிருந்தார்கள். ஆன்ால் அவர்கள் என்னோடு தங்களை இணைத் தார்கள் . ஒருமை நினைவால என்னையே பெற்றார்கள். (இதைத் தான் “சிவோகம் பாவனை” எண் பர்) $? (Cl560) LD நிலையில் என்னைப் பெற்ற பிறகு உலகியலை நோக்கி ஓடும் நிலை இல்லை. இங்கே உலகியலைப் பொய் எனர் றோ வெல்ல வேண்டியதொன்று என்றோ கொள்ளவில்லை. உலகியல நினைவை என நினைவால
மாற்றிவிட்டார்கள்.
4. ஊனம் மேல் ஒன்றும் இல்லார்
குற்றமற்றவர்கள் என்பது பொருள். இதே கருத்தைத் தூய்மையானவர் என்றே சொல்லி யிருக்கலாம். ஆணவம் செயலற்றிருப்பினும், வாசனாமாத்திரையாய் இருப்பினும், "உண்டு” என்ற சொல்லுக்கு வாக்கியமாக ஆணவம் என்ற ஒன்றை முத்தியிலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையானது அளவை இயலால் சிலருக்குத் தவிர்க்க முடியாததாகி விட்டது. இவர்களுக்கு அத்தகைய குற்றம் ஏதும் இல்லை. உடன்பாட்டு முறையில் தூய்மையானவர் என்று சொல்லாமல், எதிர்மறை முகத்தால் கூறியதன் நோக்கம், வரையறையோடு கூடிய துணிவை உண்டாக்கு வதற்காக. “ஒன்றும்” என்ற எண்ணும் அதன் மேல் உள்ள உம்மையும் ஒரு சிறிதும் இல்லை என்பதைக் கூறி அதை முற்றும்மையால் இல்லை, இல்லை, முக்காலும் இல்லையென வரையறுத்துக் காட்டினார்.
“இணைத்து என்று அறிபொருள் உலகில் நிலாப்பொருள் வினைப்படுத்து உரைப்பின்

உம்மை வேண்டும்”. என்பது இலக்கணம். குற்றம் என்பது, ஊனம் என்பதுஇவர்களிடத்தில் இப்போது இல்லை என்பது மட்டுமன்று, இனி எப்போதும் இல்லை என்பதற்காகக் கொடுக்கப்
பெற்ற முற்றும்மையே.
5. அருமையாம் நிலையில் நின்றார்
1. கர்மாவைச் செய்ய வேண்டும் என்பது ஒரு நிலை. கர்மாவைச் செய்தும் பயனை எதிர்பார்க்கக் கூடாது. பயனை நோக்கிப் பணி செய்வது கூடாது. என்றாலும் பணி செய்த பினர் வரும் பயனையாவது துய்க்கலாமல்லவா என்னின் கூடாது. உள்ளத்தில் எத்தகைய உணர்ச்சியும் இல்லாமற் கடமையாற்ற வேண்டும். இது ஒரு வகை.
2. ஞானத்தாற் பிரமத்தை அறிய வேண்டும். ஞானம் பெறுவதற்கு ஆசைகள் எல்லா வற்றையும் துறந்து, சிரவணம், மனனம், நிதித் தியாசனம் முதலியவைகளை
மேற்கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட வழிகளிற் செல்லாமல் எளிய வழியில் நின்று என்னைப் பெற்றவர்கள் உழைப்பார்கள். உழைத்த பயனைத் துய்ப்பார்கள். துய்த்தும் எனக்கு அர்ப்பணித்து விடுவார்கள். பிறகு அவற்றை என்னிடமிருந்து பிரசாதமாகப் பெறுவார்கள். இன்பத்தோடு துய்ப்பார்கள். எல்லாவற்றையும் இன்பமாகத் துய்க்கும் நிலையில் நின்றே கர்மாக்களினால் வரக் கடவதாகிய பந்தங்களை ஒழிக்கும் ஆற்றல் பெற்று விட்டார்கள். தெய்வத் தன்மைக்கு ஒப்புக் கொடுக்காத எதையும் துய்க்க மாட்டார்கள். எனக்கு அர்பணித்து, என் பிரசாதம் என்று கொள்ளும் போது “பிரசாதம் ” என்ற உணவையும், எத்தகைய அழுக்கையும் நீக்கும் பாதோதகத்தையும் பெற்று, அவற்றினர் அடிப்படையிலேயே துய்ப்பதால் இந்நெறி எளிமையினும் எளிய நெறியாக அமைந்து விடுகிறது. இறுதியில் தாங்கள் பெற்ற மனநிறைவையும் திருப்தியையும் எனக்கே அர்ப்பணித்து விடுகிறார்கள். எனவே அவர்கள்
செயல் செய்யலாம். பயனை எதிர்பார்த்தே
08

Page 18
செய்யலாம். பயனை நன்றாகத் துத்கலாம்" இவ்வளவு செய்தும் அவர்களுக்குக் கிபந்தம் இல்லாமற் போய்விடுகிறது. எனவே இவ்வீர சைவ நெறி மிக்க அருமையான நெறி (அட்ட சயில விளக்கம் காணுக)
ஞான மார்க்கத்திலும்அவர்கள் எங்கேயும் ஓடவில்லை. தங்களுக்குள் இருக்கும் பரம் பொருளே உலகத்தில் உள்ள பரம்பொருள். எல்லாம் என் கைத் தலத்தில் விளங்கும் இட்டலிங்கமே. இதுவே என் உயிரில் அமைந்த பரம் பொருள் என இட் டலிங்கத்தையே அனைத்தும் என எண்ணினார்கள். உலகம் முழுவதும் சுற்றி வர வேணர் டும் எனிறு கூறப்பெற்றதும், தம் தாய், தந்தையரே உலகம் எனக் கருதிச் சுற்றிய விநாயகர் நிலை போன்ற ஒரு எளிமை. அதே சமயத்தில் முழுமையான பயன்தரும் நெறியாகையால் “அருமையாம் நிலை"யில் நின்றார் என்றார்.
6. அன்பினால் இன்பம் ஆர்வார்
ஒருவன் மற்றவனிடம் அன்பு காட்டும் போது இவன் அவனிடமிருந்து ஏதேனும் மறுபயன் பெறுவதை உள்ளத்தே கொண்டு, அன்பு காட்டுவதாகவும் இருக்கலாம். அப்போது அன்பு எண்பது கருவி. அன்பைக் கருவியாக வைத்து வேறுபயன் எதிர்பார்க்கப் பெறுகிறது. என்னிடம் அவர்கள் அன்பு செலுத்தும் போது தேவர்களைப் போலப் பதவியை வேண்டி அன்பு செலுத்த வில்லை. உலகில் பலரும் அது வேண்டும் இது வேண்டும் என்று என்னிடம் அன்பு செலுத்த முற்படுகிறார்களே, அவ்வாறு இவர்கள் அன்பு செலுத்தவில்லை. பொதுவாக ஒருமுகமாக அனைவரும், இது கேட்கக் கூடியது தான் என்று கேட்கிறார்களே. முத்தி, அதைக்கூட இவர்கள் விரும் பரி அதனி காரணமாக அணி பு காட்டுவதில்லை. உன்னை வணங்குதல் உனக்கு நான் செலுத்த வேண்டிய செய்நன்றிக்கடன். என்னை நானறியாக்காலத்தே எனக்காக நீ செய்த நன்மைகளுக்கெல்லாம், நான் என்ன கைம் மாறு செய்யமுடியும் , தங்களிடம் அன்புகாட்டித் தங்களை வழிபடுவதே என்று கூறி, அவ்வாறு செய்து, அப்படிச் செய்துவிட்ட அந்த அளவிலேயே இன்பம் கொள்கின்றனர்.

“கார்ைக்கால் அம்மை" என்ற என் அம்மை கேட்டாளே! “இறவாத இன்ப அன்பு, இறவாத அன்பு, மறவாத அன்பு, உனக்கே கும்பிடும் அன்பு, உன்னிடம் நான் வந்து நின்று வணங்குவதற்குக் காரணமான அன்பு என்று இப்படியெல்லாம் அன்பே, அன்பே என்று அன்பின் வழியிலேயே எல்லாவற்றையும் செய்தும் எனக்குத் தொணி டு செய்தும் , தொழுதும், பாடியும், அரற்றியும், தொழுதும் செய்கின்ற அந்த அளவிலேயே இன்பம் பெற்றுவிடுகிறார்கள். முத்தியை நானே வலியச் சென்று கொடுத்தாலும் வெறுத்து ஒதுக்கும் வீரர்களாக நின்றார்கள். இந்நிலையிலேயே
அன்பினால் இன்பம் ஆர்வார் என்றார்.
7. இருமையும் கடந்துநின்றார்
இருமையும் கடந்த நிலை என்பதற்குப் பல வேறு இருமைகளைக் காட் டலாம் . வேண்டுதல் வேண்டாமை, இம்மை மறுமை, இன்ப துன்பம், ஞானம், கர்மம், இல்லறம் துறவறம் என்பன போல. “ஓடும் பொன்னும் ஒப்பவே நோக்குவார் ” என்பதாகிய ஒரு நிலையைச் சுட்டுகிறார் சேக்கிழார். ஒட்டை ஒடு என்றும் பொன்னைப் பொன் என்றும் முதலில் பார்த்து, இரண்டும் தமக்குத் தேவையில்லை என்று வெறுத்து ஒதுக்கி விடும் மனநிலை என்று விளக்கம் கூறினால் அந்த நோக்கம் தன்னுடைய தேவையை அடிப்படையாகக் கொணர்டது என்பதே. இனி, ஒரு பிச்சைக்காரன் மிக்க பசியால் துன்புறுகிறான் எழுந்து நடக்க முடியாமல் சோர்ந்து விழுந்து விட்டான். அவனைப் பார்த்த ஒருவண் 5 ரூபாய் நோட்டு ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டுப் போகிறான். இன்னொருவன் இவனுக்குப் பசி என்று கருதி ஒரு படி நெல்லை அவன் முன் கொட்டிவிட்டுப் போகிறான். இரணிடும் அவனுக்குத் தேவை. அவன் நிலையைச் செம்மைபடுத்தும் .ஆனால இப்போது அவனைச் செம்மைப்படுத்தாது. அவ்வகையில் அவன் அவைகளைப் புறக் கணிக்கலாம். இங்கே ஓடும் செம்பொன்னும் ஒக் க்வே நோக்குதல் எனர் றால எப்படி நோக்குவது? தனக்குத் தேவையில்லை என்ற அடிப் படையில நோக்குவது? ஒருவகை
பொன்னைப் பொன்னாகவும் ஒட்டை ஓடாகவும்
09

Page 19
மதித்து, அவ்வவற்றின் தகுதிப்படி அவையவை களை மதித்து அவற்றோடு தம்மை இணைக்காது நிறுத்தி விடுதல். அதாவது தராசு நிறுக்கும் போது தன்னிடம் வைக்கப்பெற்ற பொருள் சர்க்கரை என்பதால் மனமிளகியோ, புளி என்பதால் மனம் மறுகியோ காட்டுவதில்லை. எதை வைத்தாலும் எடை அளவுக்கு ஒன்றே. முதல் நிலை தன்னை அடிப்படையாகக் கொண்ட நோக்கு. இரண்டாவது நிலை பொருள்களை நடுவு நிலையில் நின்று கணிப்பது. இந்த இரண்டையும் கடந்த நிலை ஒன்று உண்டு. ஒடு, பொன் என்ற அவ்வப் பொருளை நோக்கியோ
அமைத்துக் கொள்வதில்லை.
அப்பரடிகள் உழவாரம் செலுத்திக் களைகளை நீக்குகிறார் . செலுத்தும் வாயெல்லாம் பொன்னும் நவரத்தினங்களும் வருகின்றன. தன்னை அடிப்படையாகக் கொண்டும் பார்க்க வில்லை. பொருளை மதிப்பீடு செய்தல் என்ற நடுநிலைமை முறையிலும் அவைகளைப் பார்க்க வில்லை. சிவனடியவர்கள் நடக்கும் வழி இது. அவர்களின் செம்மையான திருவடிகளுக்கு ஊறு விளைக்கும் களைகளே இவைகள் எல்லாம் என்ற வகையில் தன்னுடைய தொண்டு யாரை நோக்கியதோ அல்லது எதை நோக்கியதோ அவரை அல்லது அதனை அடிப்படையாகக் கொண்ட நோக்கி
னையே, ஒடும் பொன்னும் ஒக்கவே நோக்குவார்
திருக்கூட்டச் சிறப்பு
மாசிலாத மணிதிகழ் மேனிமேல் பூசு நிறுபோல் உள்ளும் புனிதர்கள் தேசினாலெத் திசையும் விளக்கினார் பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார்
பூதம் ஐந்து நிலையில் கலங்கினும் மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார் ஒது காதல் உறைப்பின் நெறிநின்றார் கோதி லாத குணப்பெருங் குன்றனார்
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிடலே யன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்
- சேக்கிழார்
 

என்று குறிப்பிட்டார். திருக்குளத்தில் தூறு எடுக்கும் போது இரத்தினக்கற்களாயினும் செங்கற்களாயினும் தூறுதானே. எனவே தொண்டினை நோக்கி மற்ற வற்றைத் தூசென மதித்தல். இதையே இருமையும் கடந்த நிலை. சிவபூசையைச் சிதைத்தது தந்தையின் கால், அதிலும் பிராமணத் தந்தையின் கால் எனிற எணர்ணம் , மதிப்பீடு முதலியன தேவைப்படாதன வாயின. அதுவே இருமையும் கடந்த நிலை. தன்னை உள்ளிட்ட நிலையில் ஒன்றைக் கருதுவது, பொருளை உள்ளிட்ட நிலையில் ஒன்றைக் காண்பது என்ற இரு நிலைகளையும் கடந்து, அப்பாற்பட்டதாய்,
குறிக்கோளை உள்ளிட்டநிலையில் நிற்றல்.
தன்னை நோக்கிய மதிப்பீடும், பொருளை நோக்கிய மதிப்பீடும் காலமாற்றம் நேரும் போது மாறுபட்டுவிடும். ஆனால் குறிக்கோளை ஒட்டிய மதிப்பீடு என்றும் மாறாது குளத்துக்குச் செங்கல் தூறாக இருப்பது போலவே செம்பொன்னும் தூறு தான். இந்நிலை என்றும் மாறுபடாது. இதனையே குறிக்கோள்நோக்கி மதிப்பீடு செய்தலையே “கேடும் ஆக்கமும் கெட்டதிரு” என்று குறிப்பிட்டார் சேக்கிழார்.
இத்துணையும் இறைவனால் பாராட்டப்
பெற்ற பண்புகள்.
அடியர்
ஆடுவர் பாடுவர் அந்தியும் சந்தியும் கூடுவர் குணம்பல பேசிக் கும்பிடுவர் தேடுவர் செய்வதொன்றறிகிலர் திடமுடன் நாடுவர் வாடுவர் 5ம்பர்தம் அடியரே
அச்சமும் கோபமும் அறிகிலர் பிரிவிலர் பிச்சையே நச்சுவர் பிணங்குவர் இணங்குவர் நிச்சமும் நோயிலர் தேயமே உருவினர் நச்செழில் மிடறுடை கம்பர்தம் அடியரே
நீறணி நின்மலா நெற்றியங் கண்ணனே ஆறணி சடையனே அம்பிகை பாகனே சீறர வணிதரு செல்வமே எனப்பல கூறியே குரைகழல் கூடுவர் அடியரே
-நற்சிந்தனை.
10

Page 20
திருக்களிற்றுப்ப திருத்தொ
சைவத்திருமுறையும், சைவசித்தாந்த சாத்திரமும் :ெ பேராசிரியர் கு.சுந்தரமுர்த்தி அவர்கள், சித்தாந்த நூ இக்கட்டுரையில் எடுத்துரைக்கின்றார்.
சைவநண்மக்களுக்குக் கிடைத்திருக்கும் அரிய ஞானச்செல்வங்கள் பன்னிரு திருமுறைகளும், பதினான்கு மெய்கண்ட நூல்களும் ஆகும். கி.பி. 3ஆம் நூற்றாணர்டு முதல் கி.பி. 12ஆம் நூற் றாணி டு வரையில் நம் திருமுறைச் செல்வங்கள், தோன்றி வளர்ந்துள்ளன. கி.ப 13, 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஞானச் செல்வங்கள் மெய்கண்ட நூல்கள் பதினான்கும் ஆகும்.
இவ்வகையிலான மெய்கண்ட நூல்களில் திருக்களிற்றுப்படியார் ஒன்றாகும். இந்நூற்கு அமைந்த பெயர் காரணப் பெயராகும். இந் நூலாசிரியர் “திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார் எனும் பெயருடையவர் ஆவர். திருவியலூர் உய்யவந்த தேவநாயனாரிடத்து அருளுரை பெற்றவர் ஆளுடையதேவ நாயனார் என்பவர். அவரிடத்து அருளுரை பெற்றவர் இந்நூலாசிரியராகிய திருக்கடவூர் உய்ய வந்த தேவ நாயனார் என்பவர். என்னறிவு சென்றளவில் யானின்று அறிந்தபடி என்னறிவி லாரறிக என்றொருவன் - சொன்னபடி சொல்லக்கேள் என்றொருவன் சொன்னான் எனக்கதனைச் சொல்லக்கேள்யானுனக்கு அச்சொல்" என வரும் இவ்வாசிரியர் தம் திருவாக்கால் இவ்வுண்மை அறியலாம்.
திருத்தொண்டர்களில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு பெருமக்களின் அரிய செயற்பாடு களையே அவர்களின் அரிய திருப்பெயர்களோடு இணைத்துக் கூறும் நான்கு பாக்கள் உள்ளன. திருஞானசம்பந்தர் 'ஒடம் சிவிகை உலவாக்கிழி யடைக்கப் பாடல் பனைதாளம் பாலை நெய்தல்-ஏடெதிர் வைப்பு என்புக்குயிர் கொடுத்தல் ஈங்கிவை தாம் ஓங்குபுகழ்த் தென்புகலி வேந்தன் செயல்" (பாடல் 70)

2யாரில் காணும் ண்டர்கள்
பேராசிரியர், முனைவர் கு. சுந்தரமூர்த்தி, அனைத்துலக சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம் ஆதீனம், தருமபுரம்.
ன்தமிழ்மொழியின் தவப்பயன் எனும் துணியினரான லான்றிற்காணும் திருமுறைச் செல்வர்களை
- ஆசிரியர்
திருநாவுக்கரசர் 'கொல்கரியின் நீற்றறையின் நஞ்சிற்கொலை தவிர்த்தல் கல்லே மிதப்பாய்க் கடல்நீத்தல் - நல்ல மருவார் மறைக்காட்டில் வாசல் திறப்பித்தல் திருவாமூ ராளி செயல்"
(பாடல் 71) சுந்தரர் "மோகம் அறுத்திடின் நாம்முத்தி கொடுப்பதென ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத்- தோகையர் பால் துதாகப் போகவிடும் வன்றொண்டன் தொண்டுதனை ஏதாகச் சொல்வேன் யான்"
(பாடல் 72) இம் மூவர் தம் கருவி கரணங்கள் நம் தம் கருவி கரணங்கள் போல் அல்லாது சிவகரணங்களாக அமைந்தமையால் தான் இத்தகைய செயற்கரிய செயல்கள் பலவும் செய்ய இயன்றது என்று கூறும் பாடல் ஒன்றும் உள்ளது. 'பாலை நெய்தல் பாடியதும், பாம்பொழியப் பாடியதும் காலனை அன்றேவிக் கராங்கொண்ட- பாலன் மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம் கரணம் போல் அல்லாமை காண்"
(பாடல் 12) என்பது அப்பாடல் ஆகும்.
மணிவாசகள் 'பாய்பரியோன் தந்த பரமானந்தப் பயனைத் தூயதிரு வாய்மலராற் சொற்செய்து - மாயக் கருவாதை யாமறியா வாறு செய்தான் கண்டாய் திருவாத வூராளுந் தேன்"
(urL6f 73) இனித் திருஞானசம்பந்தர், சிவஞானம் பெற்ற செயலை மங்கையர்க்கரசியார் நினைந்த பொழுது அவருக்கு நேர்ந்த அருட்செயலை விளக்கும் திறம் அமைந்த பாடல் ஒன்றும் உள்ளது. அவ்வரிய பாடல் சுரந்த திருமுலைக்கே துய்ய சிவஞானம் சுரந்துண்டார் பிள்ளைனனச் சொல்லச் -சுரந்த நனமுடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த Dனமுடையாள் அன்பிருந்த வாறு" (பாடல் 54) ான்பதாகும்.
11

Page 21
இனி நம் சமய மாண்பினைக் குறிக்கும் முகமாக ஞானசம்பந்தரின் அருட்செயலைப் போற்றும் திருவாக்கும் ஒன்றுள்ளது. "இன்று இச் சமயத்தில் அல்லது மற்று ஏழையுடன் ஒன்று சொலி மன்றத்து நின்றவரார் -இன்றிங்கே அங்கம் உயிர் பெறவே பாடும் அடியவரார் எங்கும் இலைகண்டாய் இது" (UTL6 65) என்பது அப்பாடலாகும்.
母 ருஞானசம்பந்தர் வரலாற்றை மட்டுமன்றி அவரது திருவாக்கினை எடுத்தாளும் பாடல் ஒன்றும் உள்ளது. "ஈறாகி அங்கே முதல் ஒன்றாய் ஈங்கிரண்டாய் மாறாத எண்வகையாய் மற்றிவற்றின் -வேறாய் உடனாய் இருக்கும்உருவுடமை என்றும் கடனாய் இருக்கின்றான் காண்"(பாடல் 86) என்பது அப்பாடலாகும்.
இப்பாடலில் முகந்துநிற்கும் ஞானசம்பந்தரின் திருவாக்கு,
மாறாமறை நான்காய்வரு பூதம் அவை ஐந்தாய் ஆறார்சுவை ஏழோசையோடு எட்டுத் திசைதானாய் வேறாய்உடனானானிடம் விழிம் மிழலையே என்பதாம்.
இது போனர் றே மாணிக்கவாசகரிணி திருவாக்கினுள் இரு தொடர்களை எடுத்தாளும் திருப்பாடல்கள் இரண்டு உள்ளன. 'சிவன் எனவே தேறினன்யான் என்றமையால் இன்றும் சிவன் அவனி வந்தபடி செப்பில் - அவனிதனில் உப்பெனவே கூர்மை உருச் செய்யக் கண்டமையால் அப்படியே கண்டாய் அவன்"
- (பாடல் 91)
என்பது அப்பாடலாகும்.
'சிவன் என யானும் தேறினன் காண்க" என வரும் திருவாசகத்தொடர் இப்பாடலில் அமைந்திருப் பதைக் காணலாம். 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை என்றமையால் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பதனைக் -கண்ணப்பர் தாமறிதல் காளத்தி யாரறிதல் அல்லது மற்று யாமறியும் அன்பன் றது"
(பாடல் 52)
"LGBT isi பயின் گسہ - - ”سبستہ ہے ؟ எனவரும் திருவாசகத் தொடர் இப்பாடலில் அமைந்திருப்பதைக் காணலாம்.
அன்பினால் இன்பம் ஆர்ந்த கண்ணப்பரின் இச்செயலோடு சேந்தனார் தம் செயலையும்

எடுத்துக் கூறி மகிழ்கின்றார் ஆசிரியர். அப்பாடல் 'அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்த்த சடை வேந்தனார்க்கு இன்னமுதம் ஆயிற்றே மெய்யன்பில் சேந்தனார் செய்த செயல்"
(பாடல் 53)
என்பதாம்.
இறைவனை அடைதற்கு எளிதாகச் செய்யும் செயற்பாடுகளை “மெல்வினை” என்றும், வலிதாகச் செய்யும் செயற்பாடுகளை “வல்வினை” என்றும் கூறுவர். இவ் வல்வினைச் செயற்பாடுகளுக்கு “சிறுத்தொண்டர், சண்டேசுரர், அரிவாட்டயர்” ஆகிய முப்பெரு மக்களின் செயற்பாடுகளையும் இந்நூலில் குறித்துக் காட்டுகின்றார் ஆசிரியர்.
சிறுத்தொண்டர் "வரங்கள் தரும் செய்ய வயிரவர்க்குத் தங்கள் கரங்களினால் அன்றுகறியாக்க இரங்காதே கொல்வினையே செய்யும் கொடுவினையே ஆனவற்றை வல்வினையே என்றதுநாம் மற்று"
(பாடல் 18) சண்டேசுரர் "பாதகமென்றும் பழியென்றும் பாராதே தாதையை வேதியனைத் தாளிரண்டும் சேதிப்பக் கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே சண்டீசர் தஞ்செயலால் தான்"
(UITL6, 19) அரிவாட்டாயர் "செய்யில் உகுத்த திருப்படி மாற்றதனை ஐயஇது அமுது செய்கென்று பையவிருந்து ஊட்டி அறுத்தவர்க்கே ஊட்டி அறுத்தவரை நாட்டியுரை செய்வதென்னோ நாம்"
(பாடல் 20)
உள்ளும் , புறமும் ஒரு தனி மைத் தாய
இறையனர் பாய அகநெறியே இறைவனை அடைவதற்குரிய நெறியாகும். இதுவன்றி உலகியல் வயப்பட்ட பிற நெறிகள் எவையும் இறைவனைக் காண்டற்குஅரியவையே ஆம். இக் கருத்தினை விளக்குதற்குத் திருக் குறிப்புத் தொண்டர் (கல்), அரிவாட்டாயர், (வயல் வெடிப்பு), ஏயர் கோன் கலிக்காமர் (வாள்), மூர்த்தியார் (சந்தனக்கல்) மூர்க்கர் (சூதாடும்பலகை) ஆகிய ஐவர்தம் வரலாறுகளைக் காட்டிவிளக்குகிறார் ஆசிரியர். அப்பாடல் 'கல்லில் கமரில் கதிர்வாளில் சாணையினில் வல்லுப் பலகையினில் வாதனையைச் சொல்லும் அகமார்க்கத் தால் அவர்கள் மாற்றினர் காண் ஐயா! சகமார்க்கத் தால் அன்றே தான்" (பாடல் 50) என்பதாம்.
12

Page 22
Th
ஒளிநெறிபெற்ற புன
"சைவநெறிதான் பெற்ற புண்ணியக்கள்ை இரணர்டு" எனும் சேக்கிழார் செந்தமிழ், சிவநெறிச் செல்வர்க்கு நன்கு பழக்கமானது. சேக் கிழார் பெருமானர் குறிப்பிடும் இரு புணர்னணியக் கணர்கள் , திருஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசசுவாமிகளும் ஆவர். சேக்கிழாரது அடிச்சுவட்டில் நிற்கும் நாம், ஒளிநெறி பெற்ற புண்ணியக் கண் மூன்று எனக் குறிப்பிடுவது அண்மைக் காலத்திலே சநாதன தருமம் பெற்ற மூன்று ஞானியரை ஆகும். முரீஇராமகிருஷ்ணபரமகம்சர், பகவான் இரமணர், யோகசுவாமிகள் என்பவர்களே அம் மூன்று ஞானியருமாவர். பரமகம்சர் புனித கங்கைக் கரையிலே தட்சினேசுவரத்தில் அமர்ந்து ஒளிநெறி காட்டினார். ரமண பகவானர் அணர்னா மலைச் சோதியாய்த் திகழ்ந்தார். யோகசுவாமிகள் யாழ்ப்பானத்துச் சோதியாய் இலங்கினார், பரமகம்சர் பிரேமையின் வடிவம், ரமணர் தணினென்ற சாந்தபத இயற்கை, யோகசுவாமிகளோ வீரசாந்தம்திகழ வீற்றிருப்பவர் இராமகிருஷ்ண இயக்கம் கதிரொளி போன்று உலகெல்லாம் பரவியிருப்பதால் இராம கிருஷ்ணரை சிவபெருமானின் கதிரவனெனும் கண்ணென்று ஊகிக்கலாம். சாந்தமாய் ஒளிர்ந்த ரமணபகவானைச் சந்திரக்கண் என்பது தகுவதே. இவ்வாற்றால் சுவாமியை "நெற்றிக் கண்" எனப் போற்றுதல் பொருந்துவதே. இவ்வாறான தனிச்சிறப்புக்கள் மூவரிடமும் தெரிந்தபோதும் மூவரும் சகசளப் திதியினரான ஞானியரே.
 

ண்ணியக்கண்மூன்று)
மூவரும் மூலகுருவான ஆலமர் செல் வர்ை உணர்த்திய ஒளிநெறியையே விளக்கினர். மூவரும் நால்வேதம் நவின்றவர்களே. வேத மெனக் கொண்டாடத்தக்க "அமுதமொழிகளை" இர மகி ருவர் ன பரமகம் சர் அரு எரினார் . "ரமணநூற்றிரட்டு, ஓர் "அறிவன் நூலே". சுவாமிகளது திருவாய் மொழிகளான நற்சிந் தனையும், அருள்மொழிகளும் மிகக் கனதியான மறைநூால களே . மூவர் ஞானியரையும் குருமூர்த்தங்களாகக் கொண்டாடும் ஆச்சிரமங்களும் உள. மூவர் ஞானியரும் காட்டிய ஒளிநெறியிலே அருள் பெற்றுப் ங் த அடியாரும் அநேகர் , இம்மூவரும் விளக்கின் ஒளிவிடு திரி முனைகள், திருவருள் இம்முச்சுடர் திகழும் கொத்து விளக்கை ஏற்றிவைத்திருப்பது நம்மனோர் செய்த பாக்கியமே.
இம் மூன்று ஞானியருக்கிடையேயும், மூன்று ஞானியரையும் அடியொற்றிச் செல்லும் வழியடியார்களுக்கிடையேயும் ஓர் உள்ளார்ந்த இழை ஓடிக்கொணர்டிருக்கின்றது. அதற்கான குறிப்புகள் சிலவற்றை ஈணர்டு குறிப்பிடு கிறோம். 1. சுவாமி விவேகானந்தரை யாழ்ப்பானத்து மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றபோது, அவர் யோகசுவாமிகள் உறைய இருக்கும் இடத்தின் முன் நின்று “இவ்விடம் ஒரு பாலைவனப் பசுந்தரை போன்று உளது" என்று கூறினார்.
13

Page 23
2. சுவாமி விவேகானந்தரை அழைத்துச் சென்ற ஊர்வலத்திலே இளைஞனாயிருந்த யோக சுவாமிகளும் கலந்து கொண்டனர். சுவாமி விவேகானந்தர் யாழ்/இந்துக்கல்லூரியில் நிகழ்த்திய சொற்பொழிவினையும் கேட்டனர். பொருள் பெரிது, நேரம் சிறிது" என்று அவர் தொடங்கிய முதல் வாசகத்தின் மெய்ப்பொரு ளைச் சிந்தையிற் பதித்து, பின்னர் தம் அன்பர்களுக்கு வியந்தும் நயந்தும் விளக்கிக் கூறினர். சுவாமி விவேகானந்தர் மேடையில் உலாவிய வண்ணம் பேசியமையை “அவர் பேசினார் என்பதிலும் சிங்கம் போலக் கர்ச்சித்தார்’ எனக் கூறுவதே சரி எனவும் புகழ்ந்தனர். 3. யோகசுவாமிகள் தம்மை அணி டி வந்த பண்டிதர் மயில்வாகனம் எனும் முத்தமிழ் வித் தகரை இராமகிருஷ்ண மடத்துத் துறவியாமாறு ஆற்றுப்படுத்தினார். 4. சுவாமி பிரேமாத்மானந்தர் சிறுவனாயிருந்த போது கொழும்புத்துறை ஆச்சிரமத்தில் நந்தவனப்பணி செய்வதில் ஆர்வமாயிருந் தனர். ஆன்மநாட்டம் கொண்ட அவர் யோகசுவாமி களைக் குருபரனாகக் கொள்ளும் ஆர்வமுடைய வராயிருந்தார். சுவாமிகள் “உனது குரு வடக்கிலுள்ளார்” எனக் கூறி இராமகிருஷ்ண மடத் துறவியா மாறு வழிப் படுத்தினார். பின்னாளில் கொழும்பு பூரீஇராமகிருஷ்ண மடத்துத் தலைவராகப் பணியாற்றிய சுவாமி பிரேமாத்மானந்தஜி மகராஜ் அவர்கள் சுவாமிகளை மறவாத சிந்தையராக இருந்தார். யோகசுவாமிகளது அஸ்திநிரம்பிய கலசம் சுவாமி பிரேமாத்மா னந்த ஜி மகாராஜ அவர்களாலேயே சிவதொண்டன் நிலையத்தில் பிரதிட்டை செய்யப்பெற்றது. 5. கொழும்பு இராமகிருஷ்ண மடத்தலைவரா யிருந்த சுவாமி அசங்கானந்தர், தாம் தரிசித்த மூன்று மகாபுருஷர்களுள் யோக சுவாமிகள் ஒருவர் எனத் துணிந்தனர். அவர் சுவாமிகளை அடிக்கடி தரிசிப்பதைப் பெரும் பேறெனக் கொண்டனர். 6. இராமகிருஷ்ண மடத்தினர், மட்டக்களப்பில் நிறுவவிருக்கும் குருகுலத்துக்கு நிதி திரட்டும் கைங்கரியத்தை வண்ணை வைத்தீஸ்வரர்
கோயிலின் முன் நின்று ஆரம்பித்த பொழுது

R R
சுவாமிகளே முதற் “படி’யான “காசு அளித்தனர். சுவாமியினது பெயரை முதலாகக் கொண்ட அவ் “வரவு" இராமகிருஷ்ண மடத்தாரால் பேணப்பட்டு வருகிறது.
7. சுவாமி, காவி உடுத்தவர்களைச் சிவதொண் டன் நிலையத்துள் அனுமதிக்க வேண்டாம் என விதித்தார். ஆனால் இராமகிருஷ்ண மடத்துத்துறவியரை என்றும் கணிணியப் படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இன்றும் இராமகிருஷ்ண மடத்துறவியர் யாழ்ப்பாணம் வரும் வேளையில் சிவதொண் டன் நிலையத்தில் உறைவதையே உகப்பர். செங்கலடி சிவதொணர்டன் நிலையத்து கால்கோள்விழா நாளின் போது மட்டக்களப்பு இராமகிருஷ்ண மடத்துத் தலைவராயிருக்கும் சுவாமி ஜீவனானந்தஜி அவர்கள் கலந்து திருமுறைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்க்குப் பரிசில் வழங்கும் வழக்கமே
இவ் வணி ணமே சிவதொணர் டனுக்கும் இரமணாச்சிரமத்துக்குமிடையே உள்ளார்ந்த ஓர் இழையோடுகின்ற மைக்கான சில குறிப்புக்களும் உள. அவை மேல்வருவன. 1. சுவாமிகள் சிதம்பரம் ஆகிய தலங்களுக்குச் சென்றிருந்த ஒரு தருணம் அண்ணாமலைக் கும் சென்றனர். ரமணமகரிஷிகளின் அருகில் அமர்ந்திருந்தனர். இருவரும் சொல்லெலாம் மோனம் என்றிருப்பவர்களே. ஆதலால் அவர்களுக்கு வாய்ப்பேச்சு “என்ன பயனுமில.” சுவாமி பின்னர் இது பற்றிக் கூறவேண்டி நேரிட்டபோது “ஒரு குன்றின் முன் இருந்தது போன்றிருந்தது” எனக் கூறினார். 2. சுவாமியின் அன்பர் பலர் ரமணாச்சிரமப் பழக்கமுடையவர்கள் அவர்கள் சுவாமியின் 9-uuJTuu பின்னரும் ரமணமகரிஷிகளை ფა(b மகானாக மதித்துப் போற்றினர். 3. சுவாமியின் உத்தம சீடருள் ஒருவர் பகவானை முருகப்பெருமான் போன்றும் சுவாமியைப் பிள்ளையார் போன்றுமே துணிந்தனர். 4. பகவானது தத்துவ மையம் “நான்யார்?" என்பது சுவாமிகளது தத்துவமையம் “நீ யார்?’ என்பது வேறுபாடு சொல்லளவினது விடயம் ஒன்றே.
14

Page 24
s
c G G
பூசனை
கல்வியால் பெறும் பின் கடவுளைத் தொழு தலே என்பது நமது அரிவரிப்பாடம். முடிந்த முடிபாய் உணர வேண்டிய போதமும் அதுவே. சிவஞான போதத்து இறுதிச் சூத்திரத்தின் இறுதி இரு அடிகள் “மாலறநேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரனெனத் தொழுமே” என்றே முடிக்கின்றன. இச்சூத்திரத்தின் முடிந்த மொழி “தொழுமே” என்றிருப்பதும் நன்கு சிந்தித்தற்குரியதாம். இச்சிற்றுரையிலே பூசனை யின் மாணி பு- பூசனையின் நல்லியல்பு,
நற்செய்கை என்பன கூறப்படும்.
1. உமையம்மையார் இயற்றிய பூசனை
சிவபெருமான் உமையம்மையாருக்கு ஆகமம் உரைத்த போது, அவ்வாகமப் பொருள் பூசனை என்றே அம்மையார் துணிந்தார். துணிந்த வண்ணம் பெருமானைப் பூசனை புரிவதற்கும் ஆர்வம் கொண்டார். இது மேல்வரும் பாடலால் இனிது உணரப்படும்.
'எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும் உண்மையாவது பூசனை என உரைத்தருள அண்ணலார் தமை அருச்சனை புரிய ஆதரித்தாள் பெண்ணில் நல்லவளாய பெருந்தவக் கொழுந்து"
ஆர்வம் கொண்ட அம்மையார் காஞ்சிப்பதிக்கு வந்து, கம்பையாற்றில் இலிங்கம் அமைத்துப் பூசித்தார். அது ஆகம விதிமுறை தவறாத சாங்கோபாங்கமான பூசனை. தோழியர் சாத கராய் உதவ இடையீடின்றிச் செய்த பூசை, பூசையின் உயிர் நிலையான அன்பு கெழுமிய பூசை. கம்பை நதி பெருகி வந்தபோது பெருமான் மீது வெள்ளம் பெருகுமோ என்றஞ்சிப் பெருமானைத் தழுவிக் கொண்ட் செயலால் இது வெளிப்பட்டது. அம்மையாரது தழுவுதலுக்குக் குழைந்த இறைவர் அவ்விடத்து வெளிப்பட்டு வேண்டுவதருள்வனென நின்றார். அம்மையார் அப்பொழுது வேணி டியதெனி னவெனினர் என்பூசனை இன்னும் குறை நிரம்பிக்கொள்க"

என்பதே. அம்மையாரின் பூசனை, வெள்ளப் பெருக்கால் தடைப்பட்டிருந்தது. அதனை நிறைவுறச் செய்து முற்றுவிக்கும் வரத்தையே அவர் வேண்டினார். இதனால் இறைவருக்கு இனிய செய்கை பூசனையே என்பது தெளிவு.
2. சம்பந்தப்பிள்ளையார் உணர்த்தும் பூசனைமாட்சி
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளது தேவாரமெங்கும் பூசனையின் மாண்பு செறிந்து கிடக்கின்றது. ஈண்டு, அவர்தம் திருவெழு கூற்றிருக்கை வாசகம் கொண்டும், திருப்பா சுரத்தின் மங்கல வாழ்த்துப்பாடல் கொண்டும் ஒருவாறு உணர்த்தப்படும். 'ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழுதேத்தியநால்வர்க்கு ஒளிநெறி காட்டினை" என்பது திருவெழுக்கூற்றிருக்கை வாசகம். இவ்வாசகத்திலே இறைவன் கல்லால மர நிழலிலே தென்முகக் கடவுளாக இருந்து சன கராதிய நான்கு முனிவர்களுக்கும் உணர்த்திய ஒளிநெறியைக் காண்பதற்கு நால்வர்க்கமைந்த தகைமைப்பாடு உளது. அது யாதெனின் அவர் களர் இறைவனை “மும் பொழுதும் ஏத்தியமையே” யாம். ஆகவே இறைவர் ஆலமர் செல்வனாயிருந்து உணர்த்திய ஆதி ஞானத்தை உணர்தற்கான வழி பூசனையே என்பது தெளிவு. சம்பந்தப்பிள்ளையாரது திருப்பாசுரத்திலுள்ள
மங்கல வாழ்த்துப் பாடல்
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே" என்பது. இப்பாடலிலே அந்தணரை வாழ்த் தியதன் காரணம் அவர்கள் இறைவனைப் பூசனை புரிதற்கான அதிகாரிகள் ஆனமையே. பூசனையைப் பெருமானிடம் சேர்ப்பிக்கும் கருமஞ் செய்வதன் காரணமாகவே வானவர் வாழ்த்தப் பெற்றனர். ஆணினம் வாழ்த்தப் பெற்றமை பூசனைக்குரிய பால் முதல் ஐந்தும் தருதல் பற்றியேயாம். தணிபுணலை வாழ்த்தியதும் பூசனைக்கு இன்றியமையாதமை பற்றியேயாம்.
15

Page 25
பூசை நியமங்களைப் பேணும் அரசாணை புரிதலையிட்டே வேந்தனும் ஓங்குக என வாழ்த்தப் பெற்றது. ஆகவே இம் மங்கல வாழ்த்துப் பாடலால் உணர்த்தப்பெறுவது
பூசனைமாட்சி யே யாம்.
8. தில்லைவாழந்தணர் திருத்தொண்டத் தொகையின்
முதற் பொருளாயிருத்தல்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுவதற்கு தில் லைவாழ் அந் தணரையே முதற்பொருளாகக் கொண்டு, திருவாரூர் ப் பெருமானி அடியெடுத்துக் கொடுத்தனர். உலகின் இருதயத்தானமான சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமானுக்குப் பூசனை புரிதற்குரியவர் என்பது பற்றியே தில் லைவாழந்தணர் முதற்பொருளாயினர். அவர்கள் அம்பலவாணர்க்கு அகம்படித் தொண்டு செய்தற் பொருட்டே வாழ்பவர்கள். அவர்களுக்கு இப்பூசனையன்றிப் பிறதொழிலேதுமில்லை. தில்லைவாழ் அந்தணர் புராணம் பாடிய சேக்கிழார்
நிருத்தனுக்குரிய தொண்டாம் பேற்றினார்.
என்று பூசனையிலே தொடங்கி திருமறையோர் என்றும் பொது நடம் போற்றி - வாழ்க என்று பூசனையிலே வாழ்த்தி முடிப்பது அவர்தம் பூசனைக்குரியராம் பேற்றினைப் போற்றுவ தேயாம். தாராசுரம் கோயிலில் தில்லை வாழந்தணரைச் சிற்பமாய்ச் செதுக்கி வைத்த சிற்பியர் அவர்கள் பூசனைக்குரிய மங்கலப் பொருட்கள் ஏந்திச் செல்வதையே பொருளாகக் கொண்டனர். இது அவர்தம் பூசனை புரியும் சிறப்பிற்குக் கொடுத்த முதன்மையை உணர்த்தி நிற்பதாம். ஆகவே தில்லை வாழ் அந்தணரை முதலாகக் கொணர் டு திருத் தொணர் டர் சீர் பரவுவதானது பூசனை மாட்சிக் கோர் சான்றாம்.
4. பூசனையின் நல்லியல்புகளும், நற்செய்கைகளும்
1.அன்பு: மாட்சிபொருந்திய பூசனைக்கு மெய்யன்பு ஒர்நல்லியல்பாகும். கண்ணப்ப நாயனாரும், திரு நீலநக்கநாயனாரது மாண்புடை மனைவியாரும், இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்கள்.

கண்ணப்பர் வாய்க்கலசம் கொண்டு நீராட்டியும், ஊனமுது படைத்தும் செய்த செயல்கள் ஆகம விதிமுறைக்கு அநுசிதமாயினும் , ஆக மத்தினி உட்பொருளி பொதிந்த பூசனையாகவே அமைந்தன. ஆதலால் இதனைப் “பொருள் பற்றிச் செய்யும் பூசனைபோல்” விளங்கியதாகச் சேக்கிழார் சிறப்பித்தனர். இப்பூசனையை இறைவர் பெரிதும் உகந்தனர் என்பது உயர்கங்கை முதல் தீர்த்தப் பொரு புனலில் எனக்கவன்தன் வாய் உமிழும் புனல் புனிதம் ஆதிய வாக்குகளால் தெளியப்படும். திருநீலநக்க நாயனார் ஆகம விதிமுறை தவறாது பூசனை புரிவதில் சிறந்தவர். அவர் திருஞான சம்பந்தப்பிள்ளையாரது திருமணத்தின் போது புரோகிதராயமைந்தமை அவர்தம் பூசனைத் திறனுக்கோர் விளக்கமேயாம். இத்தகைய பூசனைத்திறத்தினர் அயவந்திப் பெருமானுக்குப் பூசனை செய்திருந்த தருணம், அவருக்குப் பூசனைப் பொருட்கள் உதவிக் கொண்டு நின்ற துணைவியார், பெருமான் திருமேனியில் சிலம்பி ஒன்று வீழ்ந்தது கண்டு எச்சில்படுமாறு ஊதித் துமிந்தனர். தாயர் தம் குழந்தை மீது சிலந்தி விழின் இவ்வாறுதான் செய்வர். தாயன்புடன் வழிபாட்டாற்றி நின்ற அவ்வம்மையார் செய்கை திருநீலநக்கநாயனாரால் அநுசித மென்றே கொள்ளப்பட்டது. ஆயின் பெருமானோ திருநீல நக்கநானாரது ஆகமநெறிமுறை தவறாத பூசையினும், அம்மையாரின் அநுசித மான செய்கையை உகந்ததன் அடையாளமாக ஊதித்துமிந்த பாகத்தில் கொப்புளமின்றிக் காட்டியும் எச்சில்படாத பாகத்தில் கொப்புளம் காட்டியும் உணர்த்தினார்.
I.யூசனைக்கு முட்டுநேரின் உயிர் வாழத்தரியாமை
அரிவாட்டாயநாயனார் பூசனைக்கு முட்டு நேரின் உயர்வாழத்தரியாத செயலுக்கோர் எடுத்துக்காட்டாவார். அவர் செந்நெல்லரிசியும், செங்கீரையும், மாவடுவும் கொண்டு இறை வனுக்குத் திருவமுது படைத்துப் பூசிக்கும் நியமத்தவர். இலம் பாட்டினாலே தாம் தண்ணிரொன்றையே அருந்தித் தளர்ந்திருந்த வேளையிலும் தம் செய்கடன் முட்டாது பூசனை புரிந்தார். அவ்வாறு தளர்வோடு பூசனைப் பொருளேந்திச் சென்ற சமயம் கால் தளர்ந்து வீழ
16

Page 26
செந்நெல்லரிசி ஆதியனவும் சிதறிக் கமரில் வீழ்ந்தன. பெருமான் அமுது செய்யும் பேறு பெற்றிலேனே எனத் துடித்த அத் தொழும்பர், தம் உயிர் வாழ்வால் பயனிலை எனத் துணிந்து அரிவாளால் கழுத்தினை அரியத் துணிந்தார். அப்பொழுது பெருமானது அருட்கை அன்பரின் கழுத்திற்பூட்டிய அரிவாளைப் பற்ற நீண்டது. கமரினுள்ளிருந்து மாவடு கடிக்கும் விடேல் எனும் ஓசையும் எழுந்தது. இவ்வருள் இறைவன் இப்பூசனையை உகந்தனரென்பதை உணர்த்திற்று. இதனால் உயிரினும் சிறந்தது பூசனை என்பது
உளங் கொள்ளத்தக்கதாம்.
III. பசிப்பிணியால் உடல் தளர்ந்த போதும்
பூசனையை விடாமை
புகழ்த்துணைநாயனார், நாட்டிற் பஞ்ச மேற்பட்டு பசிப்பிணியால் தளர் வெய்தி இருந்த காலத்தும் பூவும் நீரும் கொண்டு பெருமானைப் பூசிக்கும் கைங்கரியத்தை விடாத துணிவினரா யிருந்தார். அவர் பெருமானுக்கு முழுக்காட்டும் நீர்க்கலசத்தைத் தாங்குவதற்குச் சக்தியற்ற காலத்தும் அப்பணியினைச் செய்யும் ஊக்கம் மிகுந்தவராக இருந்தார். ஊக்கமிகுதியால் முழுக்காட்ட முனைந்து பெருமானது முடிமீதில் வீழ்ந்தயரும் நிலையும் அவருக்கேற்பட்டது. அந்நிலையில் இறைவன் அவர்க்களித்த காசு அவர் அரிய செய் கைக்கான பரிசி லா யமைந்ததெனக் கொள்ளுதல் தகுவதே.
IV. எப்பரிசாயினும் பூசித்தல்
சாக்கியநாயனார் புத்தசமயத்தைச் சார்ந்து ஒழுகியவர். அவர் சைவநெறியே மெய்ந்நெறி என்ற தெளிவடைந்த பின்
'எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் மன்னியசீர் சங்கரன்தாள் மறவாமை பொருள்" என்றோர் கொள்கையினரானார். ஆதலால் தான் பூண்ட கோலத்தைத் துறவாமலேயே அரண் பூசை நேசம் கொண்டவரானார். உண்பதன் முன் LD6) st பறித்துப் பூசைசெய்யும் நியமம் அறிந்திருந்த அப்புண்ணியர், தம் உள்ளத்தில் உண்ணியவோர் நூதன நினைவால் வெளியிலே கண்டவோர் சிவலிங்கத்தைக் கல்லினாலெறிந்தார். அது அவர் மெய்யன்பினாலே பெருமானாருக்குச் சாத்திய நன்மலராகவே அமைந்தது.

V. பாதகத்தாலாயினும் பூசனைக்கு நேரும்
இடையூறகற்றுதல் சண்டேசுரநாயனாரது பூசனை சைவசமய குரவர் நால்வராலும் போற்றிப் புகழப்பெற்ற பூசனை. அவர் பெறி றது கொணர் டும் பெறாதனவற்றை மனத்தினால் நிரப்பியும் மனம் நிறைந்த பூசனை புரிந்தார். இப்பூசனைப் பொருளறியாத அவர்தம் தந்தையார் கோபங் கொண்டு கைத்தண்டால் மைந்தன் முதுகில் அடித்தார். பூசனையில் ஒனர் றித் திருந்த மைந்தரோ, மற்றொன்றும் அறியாதவராய் மஞ்சன மாட்டும் பணியிலேயே முனைந் திருந்தார். மஞ்சனக்குடப் பாலைக் காலால் இடறியபோதோ, அவ்விடையூறு செய்பவர் தந்தையென்றறிந்தும், அத்தந்தையின் தாளை அறவெட்டி, அதுபற்றிய சலனம் சற்றுமின்றிப் பூசனையைத் தொடர்ந்தார். தந்தையாயும், வேதிய சாதியாயுமிருந்தவரது தாளை அறவெட்டுதல் பாதகமாயினும் பூசனைக் கிடையூறாயமையால் அவ்விடையூறகற்றுவதிலேயே கருத்தாயிருந்தார். பெருமான் இப்பாதகத்துக்குப் பரிசளித்தும் சண்டேசுவரப் பெருமானின் மெய்த்தந்தையாய்த் தம்கொன்றைமாலையைச்சூட்டியும்சிறப்பளித்தனர்.
5. அகப்பூசை
வாயிலார் நாயனார் செய்தது அகப் பூசையாகும். அப்பூசை மிக்க காதலாற் செய்த பூசை. மறவாமையே அவர் அமைத்த மனக் கோயில். அடியானென்னும் அசையாத உறவே அவர் ஏற்றிய திருவிளக்கு. முடிவிலாத ஆனந்தமே அவர் சூட்டிய திருமஞ்சனம். அன்பே அவரமைத்த திருஅமுது. அகமலர்ந்த இவ்வர்ச் சனையைப் பெரியபுராணம் மேல் வருமாறு கூறும்
மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள்ளிருத்தி உறவாதி தனை உணரும் ஒளிவிளக்குச் சுடரேற்றி இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சன மாட்டி அறவாணர்க்கு அன்பெனும் s (Gяiьhпї
முடிவுரை
ஆகம விதிமுறை வழுவாமலோ, மெய்யன் பினால் எப்பரிசாயினுமோ, அகப்பூசனையாகவோ, இறைவனைப் பூசித்தலொன்றே மண்ணினிற் பிறந்தார் பெறும் பயனாகும்.
17

Page 27
திரு
(திருப்பெருந்துறையிலே பரமாசாரியராகத் தே உணர்த்திவைத்தார். கொழும்புத்துறையிலே ஆசா வழிபாட்டையே மலர்ச்சியடையச் செய்தனர். சிவ வழிபாடே. சிவதொண்டன் ஏடு அவ்வப்போது இவ்வ அவற்றைத் திரட்டித் தருவது இக்கட்டுரை)
அ. திருவடி வழிபாட்டின் உட்கிடக்கை
1.திருவடி :- இறைவன் பொற்பாதம்
திருவடியை இறைவனின் திருப்பாதம் என்னும் ஓர் அங்கமாக எண்ணுவது எம்மனோரின் வழக்கமாகும் இவ்வாறு எண்ணுவது ஒருவகையில் சரியே. “செல்வன் கழல், ஈசன் எந்தை இணையடி நீழல், நின்பாதம், நாதன் தாள், என்றவாறாக வரும் அருளாளர் வாசகங்கள், இறைவனது திருப்பாதம் என எண்ணுதற்கு இடந்தந்து நிற்கின்றன. இவ்வாறு எண்ணுதற்குச் சில நியாயங்களும் உள்ளன. மனிதர்களாகிய நாம் முடங்கிக்கிடக்காது நடை பயின்று திரிதற்கு நம் பாதங்கள் ஆதார மாயிருக்கின்றன. அதுபோல் பரமபிதா, பூதாதி ஐந்துமாய் பொலிந்து தோன்றுதற்கு அவர்தம் திருப்பாதம் ஆதாரமாயிருக்கிறது. அதாவது இம்மலர்தலை உலகம் மலர்சிலம்படியினின்றே மலர்ந்தது. மலர்பதம் என்பதன் பொருளும் யாவும் மலர்தற்கு இடமான திருவடி என்பதேயாம்,
நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை யுலகும் முகிழ்ந்தன முறையே" எனும் சங்கச்சான்றோர் செய்யுட் பகுதியிலி ருந்து மூவுலகும் முகிழ்த்தது ஈசன் இணையடி யிலிருந்தே எனும் உண்மை தெளிவாகிறது. முகிழ்ப்பதற்கு மாத்திரமன்றி நிலைபேறு ஒடுக்கம் எனர் பவற்றிற்கும் திருவடிகளே ஆதாரமாயுள்ளதென்பதை "போற்றியெல்லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றியெல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல்லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்"
எனும் திருவாசக அடிகள் புலப்படுத்து கின்றன. ஆகவே உலகம் யாவினதும் தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம், என்பவற்றிற்கு ஆதாரமா யிருக்கும் இறைவன் பொற்பாதத்தை நாம்

ாற்றிய சிவபெருமான், திருவடி வழிபாட்டை ாய் வீற்றிருந்த யோகசுவாமிகளும் இத்திருவடி தாண்டன் நிலையத்தில் கிலஷ்வது இத்திருவடி நிபாட்டு பற்றி இனிய கட்டுரைகளை ஏந்திவந்தது.
- ஆசிரியர்.
திருவடிகள் எனப் போற்றி வழிபடுகிறோம். திருவடிகளை ஈசன் திருப்பாதம் என எண்ணுதற்கு இன்னொரு நியாயமும் உளது. அதாவது இறைவன் உணர்ந்தார்க்கும் உணர்வரியவன். அவனை முற்றும் உணர்ந்தவரில்லை, நின்னளந் தறிதல் மன்னுயிர்க்கு அருமையின்" எனும் நக்கீரர் திருவாக்கு இதனை நன்கு வலியுறுத்தும். அளந்தறிய ஒண்ணாதவனை ஓரளவு அறிந்து வழிபடுதலையே ஈசன் இணையடி எனும் சொல் உணர்த்துகிறது. அதாவது ஈசனை அடிமுதல் முடியிறாக முழுமையும் உள்ளவாறு உணர யாவராலும் முடியாது. அவன் கிருபை கூர்ந்து
18

Page 28
அருளிய வண்ணம் ஓரளவு அறிந்து திருவடிச் சம்பந்தம்உறுவதொன்றே.நம்மனோர்க்குஅமைவது.
2. திருவடி : வியாபகமான பொருள்
ஆதார ஆதேயம் முழுதுமான அப்பனுக்குப் பாதார விந்தம் எங்கே பார்த்து பணிவதெங்கே, என்னும் எங்கள் சுவாமிகளது அருமைத் திருவாக்கு ஒன்று உளது. அதாவது, பரமபிதா வானவர் தோன்றி நின்று ஒடுங்கும் கோலங்கள் 1லவாகவும், இக்கோலங்களுக்கெல்லாம் ஆதாரமான கோலமெதுவுமற்ற சொரூபியாகவும் உள்ளார். எங்கும் ஒழிவறச் சலிப்பற நிற்கும் அப்பரி பூரணப் பொருளுக்குப் பாதாரவிந்த மென்று ஓர் அங்கமோ, அப்பாதாரவிந்தத்தைப் பணியப் பரம பிதாவுக்குப் புறம்பாக நிற்கும் பக்தனொரு வனோ இல்லை என்பது இதன் பொருளாகும். ஆகவே பாதாரவிந்தமில்லாத பரம் பொருளின் அங்கமாகத் திருவடி உள்ளதென்றல் அமையாது. திருவடி என்பது திருப்பாதம் எனும் அங்கம் அளவில் அமையாமல் வேறு வியாபகமான பொருளுடையதென்பதைப் பட்டறிவினாகளின் பட்டாங்களிலுள்ளபடி ஒருவாறு கூறமுயல்வோம்.
2.1. திருவடி : திருத்தொண்டர்
திருத்தொண்டர் புராணத்துக் கழறிற்றறிவார் புராணத்தில் மேல்வரும் பாடல் காணப்படுகிறது.
'கழறிற்றறியும் திருவடியும்
கலைநா வலர்தம் பெருமானாம் முழவில் பொலியும் திருநெடுந்தோள்
முனைவர் தம்மை உடன்கொண்டு விழவில் பொலியும் மாளிகையில்
விளங்குசிங்கா சனத்தின் மிசை நிழல்திக் கொளிரும் பூணாரை
இருத்தித் தாமும் நேர்நின்று"
இப்பாடலிலே, சேரமான்பெருமாள் நாயனா ரான கழறிற்றறிவார், கழறிற்றறியும் திருவடி எனப்போற்றப் பெற்றிருப்பது தெளிவாகிறது. ஆகவே திருவடி என்பது திருவடி மறவாச் சீருடையாளரான திருத்தொண்டரைக் குறிப்ப தாகும். வைணவ பக்தர்கள் ஆஞ்சநேயரைச் சிறிய திருவடி எனவும், கருடாழ்வாரைப் பெரிய திருவடி எனவும் போற்றுவதும் இதற்குப் போதிய
விளக்கமாகும்.

2.2.556) : அநுபூதி
சிவஞானபோதத்துப் பதினோராவது நூற்பா விலுள்ள 'அரன்கழல் செலுமே" எனும் பகுதிக்கு உரைகண்ட பெரியோர் 'முதல்வன் திருவடியாகிய சிவானந்த அநுபூதியைத் தலைப்படும்' எனக் கூறினர். இதனால் திருவடியைப் பெரியோர் அநுபூதியாகக் கண் டமை தெளிவாகிறது. அன்றியும் கழலடி, என்பதற்குப் பற்றனைத்தும் கழன்றவர் பற்றும் திருவடி எனவும் கற்றோர் விளக்கமளிப்பர். கந்தர்கலிவெண்பாவிலே
'யான் எனது என்றற்ற இடமே திருவடி" எனவும், உண்மைநெறி விளக்கம் என்னும் நூலிலே பரையுயிரில் யானெனதென்றற நின்ற தடியாம்" எனவும் பாடப் பெற்றிருக்கின்றன. யான் எனது எனும் செருக்கறுந்த நிலை வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் உம்பர் வாழ்வென வள்ளுவர் பிரானும், யானெனதற்ற நிலை தன்னையறிந்த சுவாநுபூதிநிலை என மற்றும் அநுபூதிச் செல்வர்களும் கூறியிருக்கின்றனர். எங்கள் சுவாமிகள்
தன்னைத் தன்னால் அறிந்து தானே தானாயிரு, இதுவே திருவடி" ~. என அருளினர். ஆகவே தன்னைத் தன்னால் அறிந்த சுவாதுபூதியின் விளக்கமாகத் திருவடி கொள்ளப்படுவது தெளிவாகிறது.
2.3.திருவடி : திருவருள்
திருநாவுக்கரசுசுவாமிகள் அருளிய திரு நேரிசைப் பாடலொன்றிலே திருவடியானது திருவருள் எனக் குறிக்கப்பெற்றிருக்கிறது. அப்பாடல் மேல்வருமாறு:- "மருளவா மனத்தனாகி மயங்கினேன் மதியிலாதேன் இருளவா அறுக்கும் எந்தை இணையடி நிழலென்னும் அருளவாப் பெறுதலின்றி அஞ்சிநான் அலமந்தேற்குப் பொருளவாத் தந்தவாறே போது போய்ப் புலர்ந்த
தன்றே" இராமலிங்க சுவாமிகளும்
'திருவருட் சக்தி உருவாம் பொற்பதம்" எனப் பாடியுள்ளார். உருவிரண்டும் ஒன்றோ டொன்றொஷ்வா இணையடிகளிலொன்றை இச்சாசக்தியாகவும், இன்னொன்றை செயல்கள் யாவுக்கும் ஆதாரமான கிரியாசக்தியாகவும் கொள்வதும் வழக்கமாகும். இவற்றால திருவடியை இறைவனின் வேறாகாத திருவருட் சக்தியாகக் கொள்ளும் உண்மை தெளிவாகிறது.
19

Page 29
2.4. திருவடி : இறைவன்
சம்பந்தப் பெருமானது திருச்செங்காட்டங் குடித் திருப்பதிகத்திலே திருச்செங்காட்டங்குடி எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானை திருவடி எனக் குறித்திருப்பது தெரிகிறது.
செங்காட்டங்குடி மேய திருவடி" என்பது சம்பந்தப்பிள்ளையாரின் தேவார மொழி. திருமூலநாய்னாரும்.
'திருவடியே சிவமாவது தேரில்" எனப் பாடியுள்ளனர். இவற்றால் திருவடி என்பது இறைவனைக் குறிக்கும் ஓர் சொல் என்பது தெளிவாகிறது.
2.5.இறை, சக்தி இரண்டினும் சிறந்தது
திருவடி சங்கச் சான்றோர் செய்யுளொன்று திருவடி மறவாச்சிந்தையை சேவடிபடரும் செம்மல் உள்ளம்" எனச் சிறப்பிக்கின்றது. பரிபாடலிலே வரும் ஒரு வாசகம் மிகச் சிறப்புடையதாகும். நின்னிற் சிறந்த நின்தாளினையவை என்பதே அவ்வாசகமாகும், இவ் வாசகத்துக்கு உரை யெழுதிய உரையாசிரியர் 'அன்பர்கட்கு வீடுபேறு அருளுவதில் நின்னிலும் சிறந்த இரு திருவடிகளை நின்பால் உடையை" என எழுதினர். ஆயிரம் பாடல்களைக் கொண்ட பாதுகா சகஸ்ரம் எனும் நூலைப்பாடிய வேதாந்த தேசிகர் ராமரைக் காட்டிலும் பாதுகையே பெரிது' என்றனர். இன்னும் திருவாய்மொழி உரை விளக்கக்காரர் கூறுவனவும்
ஈண்டு குறிப்பிடத்தக்கதாம்.
“உயிர்கள் எம்பெருமானை அடைவதற்கு புருஷகாரமாக (தகவுரை கூறுபவர்) இருப்பவள் பெரிய பிராட்டியார் என்பது வைணவ தத்துவம். கடின சித்தமுடைய கணவனையும், குறும்பு நிறைந்த மக்களையும் பெற்ற ஓர் இல்லத்தலைவி எங் நுனம் அவர்களை விட்டுத் தாய் வீடு செல்லாளோ அங்ங்னமே குற்றத்திற்கேற்ற தணர் டனையளிப் பதில ஊனர் றி நிற்கும் , கணவனையும் (ஈஸ்வரனையும்) குற்றங்களையே செய்து கொணர் டு போகும் மக்களையும் (ஜீவர்களையும்) பெற்ற பிராட்டியாரும் எம் பெருமானை விட்டுப் பிரிய மாட்டாள். ஆகவே பெரிய பிராட்டி , யாருடன் கூடியிருக்கும் எம்பெருமானே தஞ்சம் என்ற கொள்கையில்

ஊற்றமுடையவர்கள் வைணவர்கள். நம்மாழ் வாரின் சரணாகதித் தத்துவம் இதனையே எடுத்தியம்புகிறது.
'அகலகில்லேன் இறையுமென்று
அலர்மேல் மங்கை உறைமார்பா நிகரில் புகழாய் உலகம்
மூன்றுடையாய் என்னை ஆள்வானே நிகரில் அமரர் முனிக் கணங்கள்
விரும்பும் திருவேங் கடத்தானே புகழொன் நில்லா அடியான்உன்
அடிக்கிழ் அமர்ந்து புகுந்தேனே"
திருவாய்மொழி 6-10:10 அடியவனர் உபாயமாகப் பற்று தறி கு இன்றியமை யாதவை எம்பெரு மானுடைய இணைத்தாமரை அடிகள்”. இத்திருவடிகள் எம்பெருமானை விடவும், பிராட்டியாரை விடவும் சிறந்தனவாகும் என்பது வைணவர்களின் நம்பிக்கை இதனைச் சிறிது விளக்குவோம். பிராட்டியார் அடியவனுடைய துன்பநிலையைக் கண்டு மனமிரங்கி அவனை அங்கீகரிக்குமாறு எம்பெருமானுக்கு தகவுரை செய்கின்றார். இந்நிலையில் அவர் இவனுடைய குற்றங்களைப் பகவானிடம் எடுத்துரைக்க மாட்டார் என்பது உண்மை. ஆயினும் ஈஸ்வரன் மனத்தில் இவனை ஏற்றுக்கொள்ளும் எண்ணத்தை ஊன்றுவிப்பதற் காக ஒருகால் சில குற்றங்களை எடுத்தியம்புதல் கூடும். இங்ங்னம் குற்றம் உரைக்கும் முறையில் பிராட்டியார் சேதனனைக் கைவிடுபவரா கின்றார். அந்தச் சேதனனிடம் ஊன்றிய அன்பு கொண்ட பகவான் தனக்குள்ள வாத்சல்யம் முதலிய குணங்களால்
'என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்" என அவனை அங்கீகரிக்க முன்வந்து நிற்பண். அத்தகைய எம்பெருமானும் ஒருகால் சீவனைக் கைவிடுவதுண்டு. இம்முறையில் சேதனனுக்கு நன்மை புரிபவர்களாகிய இருவரும் கைவிடினும் தம் அழகினால் சேதனனை அப்புறம் செல்லாத வாறு அகப்படுத்திக் கொள்ளும் அவனுடைய திருவடிகளோ அடியவனை விடாது பற்றிக் கொள்ளும் திண்மை வாய்ந்தனவாக இருக்கும். இதனையே
'பிராட்டியும் அவனும் விடினும் திருவடிகள் விடாது, திண்கழலாயிருக்கும்"
20

Page 30
என்ற முமுட்சுப்படிவாக்கியம் விளக்குகின்றது. ஆழ்வாரும்
'வண்புகழ் நாரணன்
திண்கழல் சேரே"
எனத் திருவாய் மலர்ந்துள்ளமை ஈண்டு
நோக்கத்தக்கது.
2..ேதிருவடி : ஆதாரத்தாலே நிராதாரஞ்
சென்ற பின் பாதாரவிந்தம் யோகியர் சகஸ்ராரம் எனும் ஆயிர இதழ் தாமரையின் நடுவில் பிரகாசித்துக் கொண்டி ருக்கும் சற்குருபதமாகத் திருவடியைக் காண்பர். ஆறு ஆதாரங்களையும் தாண்டி அப்பாலேயுள்ள வெள்ளிப்படியில் நிலைத்து சற்குருதரிசனத்தில் இலயித்திருக்கும் இது, மோனப்பெருக்கான ஞான அனுபவமேயாகும். இதனை எங்கள் சுவாமிகள்
'ஆதாரத்தாலே நிராதாரஞ் சென்றபின் பாதார விந்தமென் றுந்தீபற பலித்தது பூசையென் றுந்தீபற"
பாதார விந்தத்தைக் காணாமற் கண்டு பணியாமற் பணிந்தேனடி - குதம்பாய் பணியாமற் பணிந்தேனடி" எனும் பாடல்களால் சுருங்கக்கூறித் தெளிவு படுத்தியுள்ளார். சுவாமிகள் சுருக்கமாகக் கூறியிருக்கும் இவ்விடயம் பாதுகா பஞ்சரத்னம் எனும் சற்குரு தோத்திரத்தில் நிரல்படக் கூறப்பெற்றிருக்கிறது. சதாசிவனார் அருளிய மகத்தான தியான மந்திரமாகப் போற்றப்பெறும் இப்பாதுகா பஞ்சரத்னத்திலே பிரமரந்திரத்தில் இருக்கும் இருதாமரை மலர்கள். இத் தாமரை மலர்களின் ஆதாரஸ்தானங்கள் ஒன்று கூடும் முக்கோணநிலையம், இம்முக்கோணத்தின் மத்தியில் இருக்கும் மணிபீடம், இம்மணிபீடத் திலிருக்கும் சகலபுவனங்களையும் தன்னுள் அடக்கிக் கொணர்டிருக்கும் சர்வ சக்தியும் படைத்த சோதிப்பிழம்பான ஹம்சம், அக் ஹம்சத்திலிருக்கும் சந்திரனின் அமிர்தகிரணங் களைப் போன்று குளிர்ச்சியான, சர்வசெளபாக்கியங் களுக்கும் உறைவிடமான சற்குருவின் திவ்விய இரு சரணகமலங்கள் என்ற உண்மை நுட்பமாகக் கூறப்பெற்றிருக்கிறது. இந்தத் தத்துவாதீதமான சற்குருவின் திருவடி மலர்களை, ஆதாரம் ஆறையும் தாண்டி, அருள் அம்பலத்தில் நின்று வாழ்த்திப் பாடும் இரு ஒப்பற்ற திருவடி
வாழ்த்துப் பாடல்களை எங்கள் சுவாமிகள்

அருளியுள்ளார். அப் பாடல்கள் இரண்டினதும் முதற் செய்யுள்களை இங்கு தருகிறோம்.
அத்துவா மார்க்கமாறும் அகற்றியே அடியனேனைத் தத்வா திதனாக்கும் சற்குரு தாள்கள் வாழ்க அகரமாம் எழுத்துப் போல அனைத்திலும் கலந்து
நின்று இகபரம் இரண்டும் ஈந்த எழில்குரு திருத்தாள் வாழ்க இன்னும் திருவாய்மொழி உரை விளக் கக்காரர் கூறுவனவும் ஈண்டு குறிப்பிடத் தக்கதாம்.
“உயிர்கள் எம்பெருமானை அடைவதற்கு புருஷகாரமாக (தகவுரை கூறுபவர்) இருப்பவள் பெரிய பிராட்டியார் என்பது வைணவ தத்துவம். கடின சித்தமுடைய கணவனையும், குறும்பு நிறைந்த மக்களையும் பெற்ற ஓர் இல்லத்தலைவி எங்ங்னம் அவர்களை விட்டுத் தாய் வீடு செல்லாளோ அங்ங்னமே குற்றத்திற்கேற்ற தணடனையளிப் பதில ஊனி றி நிற்கும் , கணவனையும் (ஈஸ்வரனையும்) குற்றங்களையே செய்து கொணர் டு போகும் மக்களையும் (ஜீவர்களையும்) பெற்ற பிராட்டியாரும் எம் பெருமானை விட்டுப் பிரிய மாட்டாள். ஆகவே பெரிய பிராட்டியாருடன் கூடியிருக்கும் எம்பெருமானே தஞ்சம் என்ற கொள்கையில் ஊறி ற மு ைடய வார் களர்  ைவண வர் களர் . நம்மாழ் வாரினர் சரணாகதித் தத்துவம் இதனையே எடுத்தியம்புகிறது.
'அகலகில்லேன் இறையுமென்று
அலர்மேல் மங்கை உறைமார்பா நிகரில் புகழாய் உலகம்
மூன்றுடையாய் என்னை ஆள்வானே நிகரில் அமரர் முனிக் கணங்கள்
விரும்பும் திருவேங் கடத்தானே புகழொன் றில்லா அடியான்உன்
அடிக்கிழ் அமர்ந்து புகுந்தேனே"
திருவாய்மொழி 6-10:10 அடிய வனி உபாயமாகப் பற்றுதற் கு இன்றியமையாதவை எம் பெருமானுடைய இணைத்தாமரை அடிகள்”. இத்திருவடிகள் எம்பெருமானை விடவும், பிராட்டியாரை விடவும் சிறந்தனவாகும் என்பது வைணவர்களின் நம்பிக்கை இதனைச் சிறிது விளக்குவோம். பிராட்டியார் அடியவனுடைய துண்பநிலையைக் கண்டு மனமிரங்கி அவனை அங்கீகரிக்குமாறு
21

Page 31
எம்பெருமானுக்கு தகவுரை செய்கின்றார். இந்நிலையில் அவர் இவனுடைய குற்றங்களைப் பகவானிடம் எடுத்துரைக்க மாட்டார் என்பது உண்மை. ஆயினும் ஈஸ்வரன் மனத்தில் இவனை ஏற்றுக்கொள்ளும் எண்ணத்தை ஊன்றுவி ப்பதற் காக ஒருகால் சில குற்றங்களை எடுத்தியம்புதல் கூடும். இங்ங்ணம் குற்றம் உரைக்கும் முறையில் பிராட்டியார் சேதனனைக் கைவிடுபவரா கின்றார். அந்தச் சேதனனிடம் ஊன்றிய அன்பு கொண்ட பகவான் தனக்குள்ள வாத்சல்யம் முதலிய குணங்களால்
என்னடியார் அது செய்யார்
செய்தாரேல் நன்று செய்தார்"
என அவனை அங்கீகரிக்க முன்வந்து நிற்பன். அத்தகைய எம்பெருமானும் ஒருகால் சீவனைக் கைவிடுவதுண்டு. இம்முறையில் சேதனனுக்கு நன்மை புரிபவர்களாகிய இருவரும் கைவிடினும் தம் அழகினால் சேதனனை அப்புறம் செல்லாத வாறு அகப்படுத்திக் கொள்ளும் அவனுடைய திருவடிகளோ அடியவனை விடாது பற்றிக் கொள்ளும் திண்மை வாய்ந்தனவாக இருக்கும். இதனையே
'பிராட்டியும் அவனும் விடினும்
திருவடிகள் விடாது, திண்கழலாயிருக்கும்"
என ற மு முட் சுப படி வாக கரிய மீ விளக்குகின்றது. ஆழ்வாரும்
'வண்புகழ் நாரணன்
திண்கழல் சேரே"
எனத் திருவாய் மலர்ந்துள்ளமை ஈண்டு
நோக்கத்தக்கது.
2.6. திருவடிநிலந்தன் மேல்வந்த நீள் கழல்கள்
திருவடியானது தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியர்க்குத் திருத்தொண்டராய் அமைகிறது. திருவருளைத் தாரகமாகக் கொள்வோர்க்குத் திருவருட்சக்தி வடிவாகத் திகழ்கிறது. அநுபூதிச் செல்வர்களுக்கு அநுபூதியாக அமைகிறது. பரமபிதாவாக வழிபாடு செய்வோர்க்குப் பரமபிதாவாக அமைகிறது. நிராதாரத்தே நன்மோன நிறைவாயிருந்து தியானிப்போர்க்கு மோனமுதலாக அமைகிறது. இவ்வண்ணம் அவரவர்க்கு அதுவதுவாக நிற்கும் நீள்கழலே திருவடியெனலாம். ஆயினும் இவை யாவற்றினும்

சிறந்த சிந்தனையை வந்துருக்கும் சிறப்பான ஒரம்சம் என்னவெனில் ஆராலுங் காண்டற்கரிய, நவைதீர்ந்த போதமும் காணாத அறிவு சொரூபமான பரம்பொருள், தனது இயல்பான கருணைப்பித்தின் காரணமாகக் குருபரன் என்றோர் பேர் கொணர் டு காசினியில் எழுந்தருளி, மண்மேல் மலரடி பதித்துத் திரிந்து மனிதரை ஆட்கொள்கின்றது என்னும் எளிவந்த கருணையின் வடிவாகத் திகழ்கின்றது என்பதாகும். இவ்வுணர்மை திருவடி வழிபாட்டி னரான மணிவாசக சுவாமிகளது திருவாசக மெங்கணும் இழையோடுகின்றது.
"செங்கண் நெடுமாலும் சென்றிடந்தும் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி' புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
"நிலந்தன் மேல்வந்தருளிநீள் கழல்கள் காட்டி" "படியுறப் பயின்ற பாவக போற்றி
இங்குநம் இல்லங்கள்தோறும் எழுந்தருளி செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை"
ஆகிய மணிவாசகங்களிலே பரம்பொருளானது அடியார்கள் பழங்குடில் தோறும் திருவடி பதித்துச் சென்று ஆட்கொள்ளும் எளிமை வெள்ளிடைமலையாய்த் தெரிகிறது. சிவபிரான் பரமாசாரியராக எழுந்தருளி வந்து மணிவாசக சுவாமிகளுக்குத் தன் கருணைத் தேன்காட்டி ஆட்கொண்டருளிய பின்னர், திருவடி வழிபா டாற்றுமாறு பணித்த பொழுது அத்திருவடியைப் பரமாசாரியராகவே பாவிக்குமாறு மொழிந்த திருவாய் மொழியும் அழுத்தமாக நெஞ்சிற் பதிக்கத்தக்கதாகும். அதாவது அணி பரை ஆட்கொள்வதற்காக எழுந்தருளும் கருணைத் திருவுருவான குருபரனே திருவடியாகும். இத்தகைய கருணைப்பெருக்கை அனுபவித்தவரே எங்கள் குருபரனான யோகசுவாமிகளும். அவர் தீதெலாம் நீக்கச் சிவபெருமானே செல்லப்பராகக் கோலங்கொண்டு வந்தார் எனத் திடமாக நம்பினார். செல்லப்பதேசிகரின் பெருங் கருணைக்கு ஆளாகித் தன்னைத் தன்னால் அறிந்த ஞானியாக மலர்ந்தார். செல்லப்ப தேசிகர் சமாதியடைந்த பின்னர் அச்செல்லப்ப தேசிகராகவே நம்பி திருவடிப்பிரதிட்டை செய்து வழிபாடாற்றி வந்தார். தாம் திருவடி பூசைத் தினமாகக் கொண்டாடிவந்த ஒரு நாளிலேயே
22

Page 32
திருவடிக் கலப்புற்றாரென்பதும் உளமுருக்கும் செய்தியாகும். ஆகவே திருவடி என்பது ஞானச்செல்வத்தை வாரிவழங்கும் அருட்பெருங் கருணையின் ஆற்றல் வாய்ந்த திருவடிவாகும். திருவடி என்பது மனிதர் மேற்கொணர் ட அளவிறந்த கருணை காரணமாக மண்மேல் வைத்த மலரடி என்பதற்கான தெளிவான சான்றொன்றை வைணவ பக்தர்கள் கோகுலாஷ்டமி கொள்ை டாடும் கிரியையொன்றிலும் கண்டு கொள்ளலாம். அதாவது வீட்டு முற்றத்திலிருந்து இல்லம் வரை, கண்ணன் மலரடிவைத்து நடந்து வருகின்றான் என்பதன் குறிப்பாகப் பாதச் சுவடுகள் பதிந்திருக்கும் கோலம் இடுதலாகும். இறைவன் தானாக எழுந்தருளித் தலையளி செய்யாவிடின் ஞானச்செல்வத்துக்கு ஆளாவது எவ்வாறு? ஆதலால் கங்குல் பகல் காணாத கருணைதனை வேணி டிக்கொணர் டு ஞான பண்டாரத்தை நாடும் ஞானதாகம் கொண்டோர் க்குத் திருவடிபூசை சிறப்பான பூசனையாக அமைகிறது.
ஆ. திருக்கோயில்களில் திருவடி வழிபாடு
சைவப்பெருங் கோயில்களுள் முதன்மையும், மேன்மையும் ஒருங்கே பெற்றுத்திகழும் சிதம்பரம், திருச்செந்தூர், பழநி ஆதியாம் இடங்களில் பள்ளியறையிலிருந்து திருவடியே எழுந்தருளு கின்றது. பள்ளியறையிலிருந்து மூலஸ்தானத் துக்குத் திருவடி எழுந்தருளிவந்த பின்னரே இவ்வாலயங்களில் நாட்பூசை முதலியன ஆரம்ப மாகும். நாள் முடிவிலும் அர்த்தசாமப் பூசை திருவடி பள்ளியறைக்கு வந்த பின்னரே நடந்து முடிகிறது. மறைஞானசம்பந்தர் சமாதி விளங்கு மிடத்திலும் திருவடிக்கே எல்லா வகையான பூசைகளும் நடைபெறுகின்றன. சைவ ஆகமங் களின் திருவடி வணக்கத்தின் சிறப்பு திருக் கோயில்களில் நடைபெறும் கிரியைகளால் இனிது விளங்கும்.
வைணவ ஆலயங்களில் கருப்பக்கிருகத்தில் உற்சவ மூர்த்தியின் திருவடியின் கீழ் சடகோபம்' என்றழைக்கப்படும் கிரீடம் வைக்கப்பெற்றி ருக்கும். இச்சடகோபத்தில் இரு அடிச்சுவடுகள் பொருத்தப் பெற்றிருக்கும். இவை மூலமூர்த்தி
யின் அடிச் சுவடுகளாகவே கொள்ளப்பெறும்.

இந்தச் சடகோபத்துக்கே முதற்பூசை நிகழும். சடகோப பூசை முடிந்தபின்னரே ஏனைய திருமேனிகளுக்குப் பூசை நடைபெறும். சரணாகதி தத்துவத்தில் நம்பிக்கை உடையவர்களான வைஷ்ணவர்கள் பகவானின் பாத கமலங்களை அடைவதையே இலட்சியமாகக் கொண்டவர்கள். திருப்பாற்கடலிற் பள்ளிகொள்ளும் பகவானுக் குப் பாத சேவைசெய்வதே திருமகளின் பெரும் பேறாகவும் உள்ளது. இதனாலேயே வைணவ ஆலயங்களில் அங்குள்ள திருமேனிகளையும் விட சடகோபத்துக்கு முதன்மை அளிக்கப்படுகிறது. பூசை முடிந்ததும் சடகோபத்தைப் பக்தர்களின் சிரத்தின் மீதுவைத்து ஆசீர்வாதம் அளிப்பார்கள்.
சைவக் கோயில்களிலும் , வைஷ்ணவக் கோயில்களிலும், திருவடிக்கென்று மூலஸ் தானத்தைவிடத் தனியான சந்நிதிகளுமுள. கயை என்னும் திருத்தலத்திலுள்ள விஷ்ணு பாதம் மிகப்பெரியது. சிவனொளிபாத மலையி லுள்ள பெரிய திருப்பாதம் பலசமயத்தவராலும் பக்தி செய்யப்பெறும் திருப்பாதமாகும். ஆதிசங் கராச்சாரிய சுவாமிகளால் நிறுவப்பெற்ற பரத கணிடம் எங்கும் பரந்துகிடக்கும் மடங்களி லெல்லாம் திருவடிக்கே அபிஷேகம், பூசனை யாவும் செய்து வருகின்றார்கள். திருவடி வழிபாடு வைதீக மதங்கள் யாவற்றுக்கும் பொதுவானதாகவும், சுத்தாத்துவித சைவர்களுக் குச் சிறப்பானதாகவும் உள்ளதெனக்கொள்ளலாம்.
இ. திருநூல்களில் திருவடி 1. வேதத்திலுள்ள திருவடி
'சதுர்மறையின் முதல்நடு முடிவின் மண நாறு சீறடியே என்பது அருணகிரிநாத சுவாமிகளது சிபாத வகுப்பிலுள்ள ஒரு வாசகம். இவ்வாசகத்தில் உள்ளபடி, வேதத்தின் உட்பொருளாயுள்ளது திருவடியே எனத் தெரிகிறது. அப்பர்
சுவாமிகளும்,
'...கூடவொண்ணாச் சுயம்புவென்றே தகுதாணுவென்றே சதுர்
வேதங்கள் நின்று இயம்பும் கழலின
எனப்பாடியுள்ளார். நால்வேதங்களும் எந்த
மெய்ப்பொருளைத் தான்தோன்றி' எனவும், தம்பம்
23

Page 33
போன்று இமையாது, உயிராது இருக்கும் நண் மோன நிறைவெனவும் போற்றுகினி றனவோ அந்த மெய்ப்பொருளே திருவடி என்பது அப்பர் சுவாமிகளது திருப்பாட்டின் பொரு ளாகும். வேதத்திலுள்ளது திருவடி வழிபாடே எனும் அருணகிரியாரதும், அப்பரதும் வாக்கு களின் உட்பொருளையும், வேதநெறிகள் அனைத்திற்கும் திருவடிவழிபாடு பொதுவா யுள்ளதையும் நாம் நன்கு மனதிற் பதித்தல்
வேண்டும்.
2. சான்றோர் செய்யுள்களில் திருவடி
திருக்குறளில் திருவடி
நிறைமொழி மாந்தரான திருவள்ளுவப் பெருந்தகை தாம் இயற்றிய மறைநூலில் முதலதி காரமாகக் கடவுள் வாழ்த்தை அமைத்துள்ளார். அக்கடவுள் வாழ்த்து, திருவடி வாழ்த்தாகவே அமைந்துள்ளது. பத்துக்குறள்களிலும் ஏழுகுறள் களில் திருவடியே போற்றப்பெறுகிறது. தாளினை நற்றாள்' என்றும் அடியை மாணடி' என்றும் வள்ளுவர் அடைமொழி புணர்த்தி வழங்கி யுள்ளார். நற்றாள் என்பதற்கு பிறவிப் பிணிக்கு மருந்தாதலின் நற்றாள் என்றார் எனப் பரிமேலழகர் கூறினர். துன்பமனைத்தினும் பெருந் துன்பமாகிய பிறவிப்பிணியைப் போக்கி வீடுபேறாகிய பேரின் பத்தைத் தரவல்லது திருவடியே. அதனால் அத்திருவடியைவிட மிக நன்மை செய்யவல்லது வேறொன்றுமில்லை எனி பதை உய்த் துணர வைத் தற்காகவே பெரியோர் நற்றாள் என்றனர். மாணடி என்பது மாண்பினையுடைய அடி என விரியும். மாண்பு என்பது குணம், செயல் ஆகிய இரண்டையும் குறிக்கும். 'தன்னைச் சார்ந்தாரைக் காப்பது திருவடியின் குணமாகும். தன்னைச் சாராத உயிர்களையும் ஐந்தொழிலால் பக்குவப்படுத்தித் தன்னைச்சாரவைப்பதே திருவடியின் செயலாகும். இதனாலன்றோ 'முத்திநான்றமலர்ப்பதத்தே நாடு' என ஞானசாத்திரங்களும் நவில்கின்றன. இத் தகைய பெருமை சான்ற திருவடியை மனத்தால் இடையறாது நினைந்து வழிபட வேண்டு மென்று ஐந்து திருக்குறள்களில் ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார். அவை வருமாறு: 'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்'

வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது 'அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது" பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார்"
இக்குறள்களில் வரும் சேர்தல் எனும் சொல் இடைவிடாது நினைத்தல் என்னும் பொருளை
உடையதாகும்.
திருவடியை மனத்தால் தியானித்தலுடன் அமையாது வாயால் வாழ்த்துதல் வேண்டும் என்பது விளக்க,
'இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு
என்றுங் கூறியுள்ளார். இங்கு புரிதல் என்பது எப்பொழுதும் சொல்லுதல் என்னும் பொருளை யுடையது. அன்றியும் அத் திருவடிகளைக் கைதொழுது பரவி காலுற வணங்கவும் வேண்டு மென்பதைக்
'கற்றதனால் ஆயபயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின்' 'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" எனினும் இருகுறள்களாலும் ஆசிரியர் நன்றாக அழுத்தியுள்ளார்.
3. சைவசமயகுரவர் கூறும் திருவடிச் சிறப்பு
'சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் கைவரப்பெற்ற திருஞானசம்பந்தப்பிள்ளையார். 'கடி கமழ் மலரிட்டுக் மிடற்றாண்டி காண்போம்" 'விரைகமழ் மாமலர்தூவி விரிசடையானடி
சேர்வோம்' 'இனமலரேயம் ந் தனதுTவி எம்பெருமானடி
சேர்வோம்' 'தொண்டர்கள் மாமலர்தூவத் தோன்றி நின்றானடி
(33(36rib'
எனப் பலகாலும் பாடியுள்ளார்.
அப்பரடிகள் அருளிய 32 பதிகங்களில் 720 முறை திருவடி சிந்திக்கப் பெற்றிருக்கிறது. அவர் திருவடி வணக்கத்துக்கு ஏற்ற சிறந்ததோர் அருச்சனையாகத் திருவடித் திருத்தாண்டகத்தைப்
24

Page 34
பாடியுள்ளார். அத்திருவடித் திருத்தாண்டகம் அகத்தியர் தேவாரத் திரட்டில் அருச்சனை என்னும் தலைப்பிலான ஒருபதிகமாக இடம் பெற்றிருக்கிறது என்பது ஈண்டு குறிப்பிடத் தக்கதாகும். இன்னும் திருவையாறுத் திருத் தலத்தில் அருளிய திருவிருத்தப் பதிகம், ஐயாறன் அடித்தலத்தையே
'சிந்திப்பரியன சிந்திப்பவர்க்குச் சிறந்து செந் தேன் முந்திப் பொழிவன'
என்றவாறாகப் போற்றுகின்றது. திருநல்லூரில் இறைவன் திருவடி சூட்டப்பெற்ற பேற்றை எண்ணி எண்ணி இறுமாந்து இன்பமுற்ற அப்பர் சுவாமிகள்,
'இறுமாந் திருப்பன் கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டு சிறுமான் ஏந்திதன் சேவடிக் கீழ்ச் சென்று இறுமாந் திருப்பன் கொல்லோ" என்றும்,
நனைந்தனைய திருவடியென் தலைமேல்
வைத்தார். நல்லூரெம் பெருமானார் நல்லவாறே என்றும் பாடியுள்ளார். இன்னும் அவரருளிய இறுதித் திருப்பதிகம்.
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே' என்றவாறாக அமைவதும் ஊன்றிநோக்கத்
தக்கதாகும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடி பிழையா தவர். அவர் 'பிழைப்பனாகிலும் திருவடி பிழையேன்" எனஓரிடத்திற் பாடினர். மற்றுப்பற்றெனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்' என்பது அவரது பாண்டிக் கொடுமுடித் திருப்பதிகத்தில்
வரும் ஓர் வாசகமாகும்.
மணிவாசகப் பெருமான் திருவடி வழிபாட்டா ளர் என்பது தெளிவு. அவரது சிவபுராணத்தில்
"நாதன் தாள் வாழ்க
வேந்தனடி வெல்க
"ஈசனடி போற்றி
என்றவாறு வாழ்த்து, வெற்றி, போற்றி
யாவும் திருவடிக்கே செய்யப் பெற்றிருக்கின்றது. அவரருளிய கீர்த்தித் திருவகவல் 'தில்லை

முதுாராடிய திருவடி எனத் தொடங்குகிறது. போற்றித் திருவகவலும் நான் முகன் முதலா
• • • • • • • • • *= * * * so so »ooooo வழுத்தியுங்காணா மலரடியிணைகள் எனவே தொடங்கிச் செல்கின்றது. அவரது பிரபலமான திருவெம்பாவை இறுதிப் பாடலில் அவர் பலகாலும் வேண்டுவது பாதமலரே என்பது அழுத்தமாக உரைக்கப் பெற்றிருக்கின்றது.
திருமூலநாயனார் அருளிச் செய்த திருமந்திரம் எனும் தமிழ் ஆகமத்தில் திருவடிப் பெருமை பரக்கப் பேசப்பெற்றிருக்கிறது. அவற்றுக்கெல்லாம் எடுத்துக்காட்டான ஒரு திருமந்தி ரம் மேல்வருமாறு:
"மந்திர மாவதும் மாமருந்தாவதும் தந்திர மாவதும் தானங்களாவதும் சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும் எந்தை பிரான்றன் இணையடி தானே'
5. சைவசித்தாந்த சாத்திரத்தில் திருவடி
சைவசித்தாந்த சாத்திரம் கூறும் முடிந்த முடிபான ஞானம் செம்மலர் நோன் றாள் சேர்தலாகும். இருபொருள் வேறற ஒன்றுபோல் நிற்கும் சைவசித்தாந்த சுத்தாத்துவிதசுகம் தாடலை' என்பதனால் விளக்கப்பெறுவது பிரபல மானதாகும். சைவசித்தாந்த நெறியில் திருவடி தலைமேல் வைக்கும் திருவடி தீக்கையே சிவஞானப்பேற்றின் உயர்ந்த பேறாகக் கொள்ளப் பெறுகிறது. சந்தான குரவர்கள் சமாதித்தலங் களிலெல்லாம் திருவடி வைத்துப் போற்றப் பெறுவதன் நுட்பமும் இதுவே.
5. அருணகிரியார் போற்றும் திருவடி
அருணகிரிநாத சுவாமிகள் இருசரணமும் மறவேன்' எனத் திருப்புகழில் பலகாலும் பாடியுள்ளார். அவர் மெய்ப்பொருளை வகுத்துக் கூறும் திருவகுப்பிலே முதலாவதாக இடம்பெறும் திருவகுப்பு சீபாதவகுப்பு என்பது சிந்திக்கத் தக்கது. அச்சிபாத வகுப்பிலே திருவடியின் மகத்துவம் பலவாறாகச் சிந்திக்கப் பெற்றிருக்கிறது. அவற்றுக்கெல்லாம் எடுத்துக்காட்டான ஓரிரு பகுதியை இங்கு தருகிறோம்.
'உரையவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ உளபடியை உணருமவர் அநுபூதியாவதுவும்" என்பது ஒருபகுதி. இப்பகுதியிலே எல்லாம் அறத்தன்னையுமிழந்து நிற்கும் அநுபூதி நலமே திருவடி எனப் போற்றப் பெற்றிருக்கிறது.
25

Page 35
'அருனெறியில் உதவுவதும்' 'வருகவென அறைகூவி அருளுவதும்"
என்பன மற்றும் இருபகுதிகள். இப்பகுதி களிலே பெருமிடறு செய்து வாவா என அறை கூவி அழைத்து வீடுபேறருளும் திருவடியின் தனிப்பெருங்கருணை போற்றப்பெற்றிருக்கிறது.
6. திருவாதவூரடிகள் புராணத்திற் கூறப்பெற்ற
திருவடி வழிபாடு.
கயிலை நாதரான சிவபெருமான் மண்மேல் மலரடி வைத்துத் திருவாதவூரடிகளை ஆட்கொண் டருளிய பின் தன்கருமம் செவ்வனே முடிந்த தென்று கயிலைசெல்லச்சித்தம்வைத்தார். தம்மோடுடன் வந்த கணநாதர்களை சிலநாள். திருப்பெருந்துறை யிலே தங்கியிருக்குமாறு பணித்தார். சிவனைப் பிரிந்திருக்க ஆற்றாத அவரெல்லாம் ஐயனே! தரிப்பரிது என்று அழுதனர். அவர்களைப் பரிவுடன் நோக்கிச் சிவபிரான் மேல் வருமாறு அருளினார்.
'நீங்கள் வருந்தாதிர்கள்:இத்தக் குருந்தமர நிழலில் ஒருதெய்வபீடம் அமைத்து அதிலே, திருவடி பிரதிட்டை செய்து அத்திருவடியை நாமாகவே பாவித்து இடையறா அன்போடு நாடோறும் வழிபட்டு வாருங்கள்'
பரிந்தழு மடியார் தம்மேல் பரமனு மன்பு கூர்ந்து வருந்துவ தொழிமீன் இந்த மணமலி குருந்த நீழல் பொருந்திய தெய்வபீடம் பொலிவொடு குயிற்றிமீதே திருந்திய மறையுந் தேடும் நம்பத மாகச் செய்தே"
தாங்கருமரந்தை நீங்கியாமெனுந் தன்மை கண்டு நீங்கரும் அன்பினாலே நித்தலும் நயந்திறைஞ்சி ஈங்கருள் மனத்த ரெல்லாம் அமர்ந்திரும்
w -மண்சுமந்த சருக்கம். இவ்வாறருளிச் சென்ற பரமாசாரியரைத் திருவாதவூரர் நீங்கரும் அன்பினாலே தொடர்ந்து சென்றார். அவர் வரவையறிந்து ஒரு கொண்றை நிழலில் அமர்ந்திருந்த தேசிகமணி பரிவோடு அன்பரை அருகில் அழைத்து வைத்து நன்மொழி புகன்றார். அதிலே திருவடிபூசை மெளன பூசையாக நிகழ்வதற்கான விளக்கத்தை உபதேசித்தார். 'பொங்கொளிச் சுழுனையூடு புலம்பிசைக்
குறியேயான மங்கல சங்க மல்லால் வாய்ந்த பல்லியங்கள்
usT6D

இங்கெமக் காகா ஓசை அடங்கிட மாதலாலும் நங்குலக் கவுரிகாண நடநவி லுதலினாலும்"
-மண்சுமந்த சருக்கம் 91
(சுழுமுனா நாடியிற் சப்திக்கும் சூக்குமநாதத்துக்குப் பதிலான சங்கோசை ஒன்றைத் தவிர வேறுவாத்தி யங்கள் இங்கு ஒலித்தலாகா. ஏனெனில் இது ஒசை அடங்குமிடம். அன்றியும் கெளரியம்மை காண நாம் நடமிடும் இடமுமாகும்)
இவ் வாசகங்களை ஆதாரமாகக்கொணர்டு
திருவடி வழிபாடு பற்றிய மூன்று அம்சங்களைத்
தெளிந்து கொள்ளலாம்
l. திருவடி வழிபாடு சிவபெருமானால் உணர்த்
தப்பெற்ற வழி umTG6
2. திருவடியைச் சிவபெருமானாகவே கொள்ள
வேண்டும்.
3. திருவடிபூசை மெளனயூசையாகத் திகழ்தல்
வேண்டும்.
சிவபிரான் திருந்பெருந்துறையில் பரமாசாரி யராக எழுந்தருளித் திருவடி வழிபாட்டினை உணர்த்திய முறைபோலவே. கொழும்புத்துறை யிலும் தேசிக வடிவங் கொண்டு திருவடி வழிபாட்டினை மறுமலர்ச்சியுறச் செய்தனர் எனக் கொள்வது பொருத்துவதே.
7. எங்கள் குருநாதனது திருவடி வாழ்த்து
எங்கள் சுவாமிகளது திருவாய்மொழிகளில் திருவடிப் பெருமை பலகாலும் பயின்று வந்துள்ளது. அவற்றுளெல்லாம் 'திருவடி வாழ்த்து" ஆக அமைந்துள்ள இருவாழ்த்துப் பாக்கள் சிரோமணியெனக் கொண்டாடத்தக்கன.
8. வைணவசமயத்திருநூல்களில் திருவடி
சரணாகதி மார்க்கத்தைச் சிறப்பாக வலியுறுத் தும் வைணவ சமயத்திலே திருவடிக்குரிய மகத்துவமும் வலியுறுத்தப் பெற்றிருப்பது இயல்பே. திருவடிச் சிறப்பு சிறப்பாகக் கூறப்பெற்றிருக்கும் ஒரு நூல் வடமொழியில் உள்ள பாதுகாசகஸ்ரம் என்பதாகும் பூரீவேந்தாந்த தேசிகர் எண் பார் இதனைப் பாடினர். இராமாயணத்திலுள்ள பாதுகா பட்டாபிஷேகம் என்பதைப் பொருளாகக் கொண்டு 1000 சுலோகங்களிற் பாடப்பெற்றிருக்கும் பாதுகாசகஸ்ரம்,
26

Page 36
பாதுகை பூரீஇராமபிரானுக்கு இணையான தென்பதையும், சில இடங்களில் பூரீஇராம பிரானிலும் பாதுகை சிறந்ததென்பதையும் யுக்தியோடு கூறுகிறது. பாதுகா பட்டாபிஷேகம் என்னும் நிகழ்ச்சி பாதுகை இராமபிரானுக்கு இணையானது என்பதன் தெளிந்த விளக்கமே யாகும். இராமர் பரதனுக்குப் பாதுகையை அளிக்கும் போது பாதுகைகளின் மீது ஏறி இறங்கிக் கொடுத்த செயலை வைத் து இராமரிலும் பாதுகை சிறந்தது என்பதை பாதுகாசகஸ்ரம் மேல்வருமாறு கூறுகிறது.
*ராமர் பாதுகையின் மீது ஏறி இறங்கியதன் உணர்மையாது? பாதுகையின் சக்தியைத் தன்காலின் மீது ஏற்றுக்கொள்ளவா? அல்லது தன் சக்தியை அப்பாதுகைகளில் வைக்கவா? பதினான்கு உலகங்களையும் தன் வயிற்றில் தாங்கி நிற்கும் பகவானையே எப்போதும் தாங்கி நிற்கும் பாதுகைக்கு இப்பரத கண்டத்தின் ஓர் பகுதியாகிய கோசலத்தைக் காக்கும் சக்தியைப் புதிதாகத் தரவேணி டிய அவசியமில்லை. பாதுகையின் சக்தியைத்தான் இராமர் தன் காலில் ஏற்றுக்கொண்டார். ஏனெனில் அதன்பின் முள்ளும் கல்லும் நிறைந்த தணடகாரண்ணியப் பூமியில் பாதுகையில்லாமலேயே விளையாட் டாகச் சஞ்சரித்தாரல்லவா?
நம்மாழ்வாரது ஆயிரம் திருப்பாசுரங்களைக் கொண்ட திருவாய்மொழியின் முதற் பாசுரம் மேல்வருவது:
'உயர்வற உயர்நலம் உடையவன் அவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் அவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே'
இத்திருப்பாசுரத்துக்கு ஈடு எழுதிய வியாக்கி யானகாரர்கள் துயரறுசுடரடி என்பதில் பெரிதும் ஈடுபட்டு எழுதியுள்ளனர். துயரறு சுடரடி என்பதற்குத் துயரறுக்கும் சுடரடி எனப் பொருள் கூறி எல்லா ஆத்மாக்களினுடைய எல்லாத் துயரங்களையும் போக்குதலையே தமதியல்பாக உடைய திருவடிகள் எனவும், சுடரடி என்பதை எல்லையற்ற ஒளியுருவான திவ்விய மங்கள விக்கிரகம் எனவும் விளக்கினர். அடி என்பதற்கு அடியவனி இறைவனிடத்து விரும்புவது திருவடிகளை. பால். குடிக்கும் குழந்தைகள் தம்

தாயின் மார்பிலே வாய்வைக்குமாறு போன்று இவரும் (நம்மாழ்வாரும்) “உன்தேனே மலரும் திருப்பாதம்' என்கின்ற திருவடிகளிலே வாய்வைக்கிறார்”, எனக்கூறிய வியாக்கியானம் வியாக்கியான கர்த்தாக்கள் திருவடிச் சிறப்பில் எத்துணைச் சுகங்கணர்டனர் என்பதற்கான எடுத்துக்காட்டாகும். உயர்வற உயர்நலமுடைய பரம்பொருள் அடியவர் பொருட்டு துயரறு சுடரடியாய் மண்மேல் தோன்றும் எளிவந்த கருணையே ஆழ்வார்களுக்கும், ஆழ்வார்களது அடிப்பொடிகளுக்கும்பெரும்ஆர்வத்தை அளித்தது.
ஈ) சிவதொண்டன் நிலையங்களில் திருவடி
எங்கள் குருநாதன் கொழும்புத் துறைக் கொட்டிலிற் குடிபுகுந்த சிலநாள்களில் திருவடி பிரதிட்டை செய்து வழிபாடாற்றி வரலாயினர். ஆண்டுதோறும் பங்குனி மாதத்து இரண்டாவது திங்கள் நாளைத் திருவடி பூசைத்தினமாகக் கொணர் டாடி வந்தனர். யாழ்ப்பாணத்து வணி ணார்பணிணையில சிவதொணி டனர் நிலையத்தை நிறுவிய போது அங்கே தியான மண்டபத்திற் திருவடி பிரதிட்டை செய்யப் பட்டது. சுவாமி சமாதியடைந்த ஆண்டில் கால்கோள் விழாக்கண்ட செங்கலடி சிவதொண்டன் நிலையத்திலும் திருவடியே பிரதிட்டை செய்யப் பெற்றிருக்கிறது. ஆருத்திரா அபிடேகம், சிவராத்திரி, திருவடி பூசைத்தினம், கால்கோள் விழா நாள் என்னும் நாள்களில் அனுட்டிக்கப் படும் விழாக்களின் போது தியான மண்டபத்தி னின்றும் புராண மண்டபத்துக்கு எழுந்தருளும் திருவடிக்கே திவ்வியமாக அபிடேக ஆராதனைகள் நிகழ்த்தப் பெறுகிறது.
ஈ. திருவடி வழிபாடு : மெளனமாக அனுட்டிக்கப்படுவது
திருவடி வழிபாடு மெளனமாக ஆற்றப்படு வதற்கான இரு காரணங்களைத் திருவாதவூரடிகள் புராணம் கூறுகின்றது. ஒன்று திருவடி என்பது ஓசை அடங்கிய இடம், இரண்டு சிவகாமியம்மை யார் காண நடமிடும் இடம். ஒசை அடங்கிடம் என்பதை சிற்சபை சிதம்பர இரகசியம் எனவும், சிவகாமி அம்மை காண நடமிடும் இடம் என்பதை சிற் சபை நடராச மூர்த்தமும்,
27

Page 37
சிவகாமியம்மையும் எழுந்தருளியிருக்கும் இடம் எனவும் கூறலாம். ஆகவே திருவடி எழுந்தருளி யிருக்கும் இடம் என்பது சிதம்பர இரகசியம், நடராச வள்ளல், சிவகாமியம்மை ஆகிய மூன்றும் ஒன்றாய் முடிந்த இடம் எனக்கூறலாம். இந்த மூன்றும் ஒன்றாய் முடிந்த இடத்தில் நினைவேது மின்றி மோனமாயிருந்து வணங்குதலே முழுமையான
வணக்கமாகும்.எங்கள் சுவாமிகளும்.
பாதார விந்தத்தைக் காணாமற் கண்டு பணியாமற் பணிந்தேனடி - குதம்பாய் பணியாமற் பணிந்தேனடி
எனப்பாடினார். காணாமற் காணுதலும், பணியாமற் பணிதலும் நன்மோன நிறைவான வணக்கமேயாகும். திருவடி எழுந்தருளியிருக்கும் தியான மண்டபத்து நுழைவாயிலிலே
'சொல் லெல்லாம் மோனம்
தொழிலாதியும் மோனம் எல்லாம் நன்மோன நிறைவே' என்னும் சுலோகமும்.
'சிவதொண்டன் நிலையத்திற் சேரீர்
தியானம் செய்து கடைத்தேறிர் மெளனமாய் இருந்திளைப் பாறிர் மந்திர மிதுவெனக் குறியீர்'
என்னும் நற்சிந்தனையும் சிவதொண்டன்
அத்துவா மார்க்கமாறும் அகற் தத்துவா திதனாக்குஞ் சற்குரு
ஆக்கைநீ யல்லைநியோ ஆன் தீக்கைவைத் தாண்டுகொண்ட
இருந்துபா ரென்றெனக்கோர் { அருந்தவன் என்னும்வல்ல ஆக
ஈன்றிடு தந்தைதாயோ டெய்தி தோன்றிய குருவுமான துணைவ
உணர்ந்தார்க்கு முணரவொண்ை குணங்காட்டி ஆண்டுகொண்ட (
ஊசிமேனுனியினின்றே உக்கிர மாசில்மா தவருங்காணா மலர்ப்
 
 
 
 
 
 
 

நிலையத்தில் நிகழும் மெளனமான திருவடி வழிபாட்டுப் பாங்கை அறிவுறுத்தி நிற்கின்றன. முகமெல்லாம் கணிணிர் வார நிற்றலும், நாக்குழறப் பாடுதலும் ஆன எல்லாம் முன்னிலைப் பரவல் படர்க்கைப்பரவல் ஆகிய ஆரம்பப் படிகளாக நிகழ்வன, முடிந்த முடியான முழுமையான வணக்கத்தில் இவையெல்லாம் சுத்தப் பொய்யாகவே முடியும். நான் எனது என்பவற்றை இழந்து திருவடி ஞானத்தில் மூழ்கித்திளைத்து சுத்த மோனத்தில்சுகித்திருப்பதேதிருவடிவழிபாடு
(plgaeto
ஆகவே திருவடி வழிபாடு என்பது வரன் முறையாக வரும் செவ்விதான வழிபாடு. ஞான நாட்டங்கொண்டோர் என்றும் கொண்டாடும் முழுமையான வணக்கம். முன்னொரு போது சிறப்பாக மலர்ச்சியுற்றிருந்த இவ்வழிபாட்டைச் சிவயோகசுவாமிகள் இந்நாளில் மறுமலர்ச் சியுறச் செய்தனர். திருவடி வணக்கத்தின் உட்கிடையையும், சிறப்பையும், பயனையும் அறிந்து சிந்தையாற் திருவடிப்பூசை செய்து திருவடிக்கீழ் சிவதொண்டு செய்து கிடப்போமாக.
றியே யடியனேனைத்
தாள்கள்வாழ்க
மாவென் றெனக்குச்சொல்லித் தேசிகன் றிருத்தாள் வாழ்க
இனியநல் வாக்குத்தந்த சான்றன் தாள்கள்வாழ்க
ய சுற்றமாகித் நின் திருத்தாள் வாழ்க
ணா ஒருவனே என்போல்வந்து குருவின்சீர்ப் பாதம் வாழ்க
தவத்தையாற்றும் பதம் மனத்தில் வாழ்க
28

Page 38
→ emas.---*sharam-Nooreal
 

|
型* |-
『**를星1=*를

Page 39
கோளறு
ஆணைநமதென்ற சம்பந்தப்பிள்ளையார் அருளிய யாவரும் இதனை ஓர் கவசமந்திரமாக ஒதிப் பயனுற தமிழ் மந்திரத்தைப்பொருளுணர்ந்தோதிகலனுறலாம்
1. சிவகவசம்
திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் அருளிய கோளறு பதிகம் அளவற்ற பெருமையுடையது. கிரகதோசம் நீங்க இப்பதிக பாராயணம் செய்ய வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். இப்பதிகத்தின் கருத்துக்களை அவதானித்தால் ஒன்பது கிரகங்களும் தீமை செய்யாது நன்மை செய்வதற்காக அப்பதிகக்தின் முதலாவது பாடலைப் பாராயணம் செய்தலே போதுமானது. பதிகம் முழுவதன் கருத்தை அவதானிக்கும் போது, மனிதவாழ் வில் துணி பத்துக்குக் காரணமான எ ல லாம் இனி பத்துக் குக் காரணமாகவும், நன்மைக்கு ஏதுவான எல்லாம் நன்மையை அதிகரிக்கவும் செய்யவல்ல சிறப்பு இப்பதிகத்துக்கு உள்ளது புலனாகின்றது. இந்த அடிப்படையில் கோளறுபதிகம் என்பதன் கருத்து துன்பங்கள் எல்லாவற்றையும், தீமைகள் எல்லா வற்றையும் போக்கும் பதிகம் என்பதாகவே கருதவேண்டி உள்ளது. அதாவது கோளறு - தீமைகளை - துன்பங்களை அறுப்பது என்று அமைகின்றது. இப்பதிகம் உள்ள அமைப்பைப் பார்க்கும் போது விநாயக கவசம், கந்தசஷ்டி கவசம் என்பன போல் சிவகவசம் என்று
சொல்லத்தக்கதாகவும் உள்ளது.
2. அடியரை நாளும் கோளும் நலியா
திருஞானசம்பந்தர் பாணி டிநாட்டுக்குப் புறப்பட்டபோது சமணர் கொடுமை பற்றி அஞ்சிய திருநாவுக்கரசர் திருஞானசம்பந்த சுவாமிகளை நோக்கி நீரோ சிறுபிள்ளை சமணரோ மிகக் கொடியவர். பலகாலம் நன்கு பழகிய என் விடயத்திலேயே பொய்யும் சூழ்ச்சியும் செய்தவர். இவை மட்டுமன்றி இப்போ கிரகநிலையும் தீமையைக் காண்பிப்பனவாக உள்ளன. எனவே
பாண்டி நாட்டுக்குச் செல்லவேண்டாம் எனத்

பண்டிதர் சி.பொன்னம்பலவாணர்.
கோளறுபதிகத்தை ஒதியுணர்ந்த பண்டிதவரவர்கள், வேண்டும், காரும் கோரும் பற்றி அஞ்சுவோர், இத் எனும் தற்சித்தையால் எழுதியது இக்கட்டுரை.
தடுத்தார். “அப்படித் தடுக்க வேண்டாம். கிரகங்களின் தீங்கோ சமணர் கொடுமையோ சிவனடியானாகிய எனக்குத் தீங்கு செய்யா நனர் மையே செய்யும் ” என்ற கருத்தை வெளிப்படுத்தவே திருஞானசம்பந்தர் இப்பதிகத்தை அருளிச் செய்தார். இப்பதிகத்தைக் கேட்ட திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் செல்ல
உடன்பட்டார் என்பது வரலாறு.
3.திருநீற்றுக் கவசம்
சமணர் கொடுமை பற்றி அஞ்சத் தேவை யில்லை. சமணரைச் சிவபெருமானின் திருநீறே வெல்லும் என்று சம்பந்தர் திருநாவுக்கரசருக்கு கூறியிருந்தார் என ஒரு பெரியார் கூறக் கேட்டேன். அப்படிக் கூறியதாக எங்குள்ளது என அவரைத் திருப்பிக்கேட்க வாய்ப்பு ஏற்படவில்லை. பின்னர் இப்பதிகத்தின் பத்தாம் பாடலில் “புத்தரோடு அமனை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே” என்ற பகுதியைக் கொணர்டுதான் அப்பெரியார் கூறியிருக்கின்றார் எனத் தெளிவடைந்தேன்.
இப்பதிகத்தின் முதலாம் பாடல் மூலம் சிவனடியார்க்குக் கிரகங்கள் நன்மையையே செய்யும் என்று பதில் கூறிய திருஞானசம்பந்த சுவாமிகள், பத்தாம் பாடல் மூலம் சமணர் கொடுமைபற்றி அஞ்சவேண்டியதில்லை என்றும் திருநீறே சமணரை வெல்லும் வேலையைச் செய்யும் என்றும் கூறியிருக்கின்றார். அவர் கூறியபடியே பாண்டியனின் வெப்புநோயை திருநீற்றின் மூலம் தீர்த்தே சம்பந்தர் சைவ சமயத்தை நிலை நாட்டியிருக்கிறார். பின் நிகழ்ந்த அனல்வாதம் புனல்வாதம் என்பன சமணரின் அடாத்தான செயலால் ஏற்பட்டனவே யாம். எனவே சம்பந்தசுவாமிகள் கூறிய கருத்துச் செவ்வனே நிறைவேறியுள்ளதைக் காண முடிகின்றது.
30

Page 40
4. உளமே புகுந்த அதனால்
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசருக்கு மறு மொழியாகப் பாடிய இப்பதிகத்தையும் பதிக வரலாற்றையும் வைத்துக் கொண்டு கிரகங் களுக்கு அஞ்சவேண்டியதில்லை. கிரகங்களுக்கு அஞ்சும் தன்மை திருநாவுக்கரசரிடம் காணப் பட்டது. அதைச் சம்பந்தர் நீக்கியிருக்கிறார் என்று சிலர் விளக்கம் செய்ய முற்படுகின்றனர். இது தவறு.
இப்பதிகம் மூலம் கிரகங்களின் பாதிப்பு என்பது இல்லை என்ற கருத்தைச் சம்பந்தர் கூறவேயில்லை. சிவபெருமான் அம்பிகையுடன் என் உளத்தில் புகுந்திருக்கும் காரணத்தால் ஞாயிறு முதலிய கிரகங்கள் நன்மையே செய்யும். சிவனடியார் விடயத்தில் அவை எப்பொழுதும் மிக நல்ல கிரகங்களேயாம் என்றேயருளியிருக் கின்றார்.
இப்பதிகத்தில் பாடல் தோறும் வருகின்ற
உளமே புகுந்த அதனால் என்ற தொடரை நன்கு சிந்திக்க வேண்டும். “நான் அவரை நினைத் தேன்; அவர் என் உள்ளத்தில் உள்ளார்” “நான் அவரை நினைத்தேனோ இல்லையோ அவர் தானாகவே என் உள்ளதில் பிரவேசித்துள்ளார்” என்றவரையில் இத்தொடரின் விளக்கம் அமையும். இவ் விளக்கம் இரண்டு வகையில் எவ்வகையி லாயினும் மண், பெண், பொன் ஆசைகளோ, வெறுப்பு, கோபம், பொறாமை முதலிய தீங்குகளோ உள்ள உள்ளத்தில் சிவபெருமானி விளங்கமாட்டார். அவர் விளக்கமாக இருக்காவிட்டால் அவ் விடத்தில் மேற்கூறிய குற்றங்கள் வலிமையுடன் இருக்கும். அப்படியான குற்றங்களுக்கு இடம் கொடுப்பவர் சிவனடியார் ஆக மாட்டார். சிவனடியா ராகாமலும் குற்றங்களுக்கு இடமானவராகவும் உள்ள ஒருவருக்கு கிரகங்களாலும் சரி வேறு வாயில்களாலும்சரி நன்மை ஏற்பட இயலாது. இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டே பாடல் தோறும் உளமே புகுந்த அதனால் என்பதை சம்பந்தர் மறவாமலும் வலியுறுத்தியும் பாடியருளியுள்ளார்.
5. கோளறு பதிகத்தின் சாராம்சம்
இப்பதிகத்தைப் பாராயணம் பண்ணுபவர்
பாடல் தோறும் முற்பகுதியில் உள்ள

சிவபெருமானைப் பற்றிய சொற்களையும் தொடர்களையும் பொருள் விளங்கி சிவ பெருமான் நம் மனத்திலிருப்பதாக பாவனை பண்ணிப் பாராயணம் செய்வது அவசியம். இப்படியான பாராயணம் அதிகரிக்க அதிகரிக்க கிரகங்கள் மட்டுமன்றி நட்சத்திரங்கள் இலக்குமி, சரஸ்வதி, துர்க்கை ஆகியோர் திக்குத் தேவர்கள், அவுணர், இடிமுழக்கம், பூதங்கள், சிங்கம், புலி, யானை, பன்றி, கொடிய நாகம், கரடி வெப்பு, குளிர்வாதம் பிரமதேவர், திருமால் வேதங்கள், காலங்கள் முதலிய காரணங்களால் நன்மையே உண்டாகும் என்பதே கோளறு பதிகத் திணி சாரமாகும். இடபாரூடர் உமாமகேசுரர் தட்சணாமூர்த்தி, கிராதமூர்த்தி ஆகிய மகேசுர வடிவங்களை நன்கு தியானிக்கும் முறைகளை இப்பதிகத்திலுள்ள பாடல்கள் அழகாகவும் நுட்பமாகவும் தெரிவிக்கின்றன.
6. பொருளுணர்ந்து ஓதல்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லல் என்று மாணிக்கவாசகமும் துஞ்சலில்லா வாய் மொழியால் தோத்திர நின்னடியே நெஞ்சில் வைப்பார் எனத் திருஞானசம்பந்த சுவாமிகள் இடர்களையும் பதிகத்திலும் வலியுறுத்திய வாசகம் என்பவற்றின் உணர்மையைக் கடைப்பிடித்துத் தேவாரப் பதிகங்களின் சொற்கருத்தையும் சாரமான உண்மையையும் மனத்திருத்திப் பாராயணம் செய்வது நன்று. இப்படியான அடிப் படைகளை அறியாதும் பிணி பற்றாமலும் தேவாரப் பதிகங்களைப் பாராயணம் செய்பவரே சிவனருளால் நன்மையடைவதைக் காணமுடிகின்றது என்றால் இந்த அடிப்படைகளைக் கடைப்பிடிப்போ மாயின் அதிக சிவனருளை விரைந்து பெற்று
நாம் எண்ணிய நன்மைகளை அடைதல் தப்பாது.
7. திருவருள் முன்னிட்டு ஒதல்
சாதாரணமாக நாம் பாராயணம் செய்வது என்பதிலும் பார்க்க ஆலயத்தில் இறைசந்நி தானத்திலோ, அல்லது நம் பூசை அறையில் சுவாமி படத்திற்கு முன் தீபமேற்றியோ மலர் சூட்டியோ, வழிபடுதலோடு சேர்த்துச் செய்யும் திருமுறைப் பாராயணம் உடனடியான பயனைக் கொடுக்கும் என ஒரு அருளாளர் குறிப்பிட்டார். சிவத்தியான வலிமை குறைந்த சாதாரண மானவர் இப்பெரியார் கூறிய முறையையும் கடைப்பிடிப்பதால் நன்மையடையலாம்.
31

Page 41
சைவ நாயன்மார் எனப்படும் திருத்தொண் டர்கள் அறுபான் மூவரில் பெண்பாலர் மூவரே. அவருள்ளும் இறைவனைப்பாடி மகிழ்ந்து பரவிய பெருமை - திருமுறை தந்த சிறப்பு காரைக்கால் அம்மையார் ஒருவருக்கே உண்டு. சிவனடியார் கள் பலரும் பல்வேறு தொண்டுகளால் சிவனடிஅடைந்து மகிழ்ந்தாலும், இறைவனால் *அம்மையே” என்று அழைக்கப்பட்ட பெருமை
அடியார்கள் கேட்ட வரங்களும் பெறுபேறுகளும் பல்வேறு திறத்தன. ஆனால் அம்மையாரைப் போன்ற வரம் கேட்டாரும், பேறு பெற்றாரும் வேறு யாரும் இலர். எலும்புருவாம் பேயுருவம் வேண்டியதோடன்றி ஆடிய பாதத்தடியில் அமர்ந்து தாம் இன்னிசை பாடவும் வேண்டுமென்று வேண்டிப் பெற்றவர் அவர். அவர் பாசஞானம், பசுஞானம் இரண்டினையும் ஒழித்து பதி ஞானம் ஒன்றிலேயே ஒன்றியிருந்தார்.
அம்மையார் கருவிலே திருவுடையார். சிவ பெருமானுக்காளாகிப் பணி செய்வதும் அடியார்க்கு அடிமை செய்வதுமே பிறப்பின் சிறப்பும், பயனும் என்று கொண்டவர்.
*பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்” இது தான் அம்மையாரின் முதல் வாக்கு. சேக்கிழார் பெருமான் அம்மையார் வளர்கின்ற நிலையைக் கூறும் போது, சிறுமியருடன் விளையாடும் பருவத்தில் சிவனுடைய திருவார்த்தைகளைப் பாடிப் பயின்றார் என்றும், சிவனடியார்களைத் தொழுதார் என்றும் கூறுகின்றார்.
2 அடியார்களைக் கண்டால் அரனெனத் தொழும் பண்பு குழந்தைப்பருவத்தே அமைவது எளிதன்று. இறைவனிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து

ர் பெருமை)
திரு. பொ. இராசரத்தினம் அவர்கள் செயலாளர், சிவதொண்டன் சபை.
ஆளாகும் பண்பினை அம்மையார் பல இடங்களில் எடுத்துக் காட்டுகின்றார். 1) வண்டல் பயில் வன வெல்லாம் வளர்மதியம் புனைந்தசடை
யண்டர் பிரான் திருவார்த்தை யனையவருவன பயின்று
தொண்டர் வளில்தொழுதுதாதியர் போற்றத் துணை முலைகள் கொண்ட துகப் பொதுங்கு பதக் கொள்கையினிற் குறுகினார்.
(பெரிய புராணம் காரை - 5)
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம், என்றும் அவர்க்கே நாமண்பாவதல்லா - பவர்ச்சடைமேற் பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லான் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்
(அற்புதத் திருவன்தாதி) 9 *மீள அடிமை உமக்கே ஆளாய்ப்பிறரை வேண்டாதே? “விற்றுக் கொள்வீர் ஒற்றியல்லேன் விரும்பியாட்பட்டேன்” எனும் இவை சுந்தரர் திருவாக்குகளுக் கொப்பாகும். இன்னும் அம்மையார் உள்ள ஒருமைப்பாட்டை ஒருபாடலில் கூறுகிறார்
ஒன்றே நினைத்திருந்தேன், ஒன்றே துணிந் தொழிந்தேன் ஒன்றே என் உள்ளத்தினுள் அடைத்தேன்- ஒன்றே காண் கங்கையான் திங்கள் கதிர் முடியான் பொங்கொளிசேர் அங்கையாற் (கு) ஆளாம் அது" இறைவனை உள்ளத்தில் அடைத்து வைத்தால் அங்கே தங்கி இறுதியில் சேமநிதியாக நமக்குப் பயன்படும் என்பதை 'மனக்கினிய வைப்பாக வைத்தேன்" என்று கூறுகிறார். இறைவன் உள்ளத்தில் சேமவைப்பாக இருக்கிறான். இதை உணராத சிலர் இறைவன் இங்கிருக்கிறான் அங்கிருக்கிறான் என்று கூறி உழல்வார் உழல்க; ஆனால்அவன் என் நெஞ்சில் உறைகிறான் என்பதையான் அறிவேன் என்கிறார்.
1 . வானத்தான் என்பாரும் என்க: மற்றும்பர் கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தால் முன்நஞ்சத்தால் இருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என் நெஞ்சத்தான் என்பன் யான்”
2. ஆர்வல்லார் காண அரன் அவனை அன்பென்னும்
போர்வை அதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
3)

Page 42
தாயத்தால் நாமும் தனி நெஞ்சினுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து. தான் வேண்டியவரத்தைப் பெற்றதால் 9560LDuTf " எனக்கு இனி எது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் துன்புறவில்லை" என்றும் தாம் எண்ணிய இன்பநிலை கிடைப்பதால் வீடும் வேண்டா விறலினர் (திருக்கூட்டச் சிறப்பு), ஆதலில் சிவபெருமானின் சிவபூதகணங்களில் ஒருவராகத் தான் ஆனது பற்றியும் ஆனந்தம் அடைகிறார்.
அம்மையார் வேண்டிப் பெற்ற பேய்வடிவு மானிட உடம்பின் அழகெலாம் ஒழிந்து எலும்புக் கூடு மட்டுமாக இருப்பது. காற்றிலும் கடிது செல்லும் தன்மையது. செம்பு, களிம்பு நீங்கிப் பொன்னானமை போன்றது. சுத்தமாயா உருவம் பெற்றது. மக்கள் கண்ணுக்குப் புலப்படும் ஓர் ஒளியுடை உருவம். இவ் வடிவில் அமைந்து திருவாலங்காட்டு இறைவரது எடுத்த திருவடியில் கீழ் அமர்ந்து கீதம் பாடுகிறார். எனவே இயலும், இசையும் பாடுவதற்குரிய வாக்கு முதலிய புறக்கரணங் களையும் மனம் முதலிய உட்கரணங்களையும்
தான் தன்னை அறியுே
Վ2,5 մ) ոց)ւյ6ն լծ 5 մ0 & 5 ա 6wուծ գյ ( வழிமுதலியவற்றைப்பற்றிக் கூறலாம். தன்னை இருக்கிறது? தன்னை விட்டுத்தான் இருக்கமுடிய இருக்கிறோம். ஆகவே ஆத்மானுபவம் எப்போ அதைப்பற்றி உலகம் நமக்கு அயலாய் வெளியே ஆத்மானுபவம் மறைபட்டாற்போல இருக்கின்றது கொள்ள வேண்டும். இம்மறைப்பு நீங்கினால் ஆத்மாவை ஒன்றும் அறியவேண்டியதில்லை. அ ஒழிய வேண்டும். ஆத்மாவை தாம் தேடுவது தேடுவது போன்றதே. என்றும் தமது இயல்பேu நீங்கியதும், தடையின்றி உணர்கிறோம். அஞ்ஞ வேண்டும். விழிப்பு, கனவு, தூக்கம் என்னும் முன்பு கொண்டிருக்க அவற்றின் அடிப்படையாகத் ே கொண்டிருக்கிறோம் நாம். இவ்வுண்மையை உணர் குறைவிலா கிறைவாம் ஆனந்தம்.
ܢ

உடைய திருவடிவம் என்பது தெளிவு. இவ்வடிவில் சிறப்பைச் சேக்கிழார் பெருமான் "வானமும் நிலமுமெலாம் வணங்கும் பேய்வடிவமானார்” என்று கூறுகின்றார்.
இறைவனின் தத்துவத்தைப் பின்வரும் பாடல்களால் குறிப்பிடுகின்றார்.
1. அறிவானும் தானே, அறிவிப்பான் தானே,
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப் பொருளும் தானே விரிகடர்பார் ஆகாயம் அப்பொருளும் தானே அவன்
2. அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான்
அவனே புவியுனல் காற்றாவான் - அவனே
இயமானனாய் அட்ட முர்த்தியுமாய் ஞான
மயனாகிநின்றானும் வந்து”
தாயுமிலி தந்தையிலியாகிய இறைவன், அம்மையே என்று போற்றிய அம்மையார், ஆடும் திருவடிக்கீழ் அமர்ந்திருக்கும் பேறு பெற்றவராவர்.
ம சாந்தமும் செறியுமே
தோவொன்றாய் இருந்தாலர் அதற்கான
N
த் தானறிதலைப் பற்றிச் சொல்வதற்கு என்ன புமா? ஆத்மாவாம் தானாகவே நாம் எப்போதும் தும் உளதே. எனினும் தேகாத்மபாவத்தாலும், இருக்கிறது என்னும் விபரீதத் தோற்றத்தாலும்
இவ்அஞ்ஞான விபரீதத்தையே நாம் போக்கிக் ஆத்மா தானே தானாய்த் தடையின்றி ஒளிரும். து ஸ்வப்பிரகாசமாகையால் அஞ்ஞான விபரீதமே கழுத்திலிருக்கும் நகையைக் காணோம் என்று ாம் ஆத்மாவைக் காணவில்லை எனும் பிரமை ானம் நீங்குவதற்கு இடைவிடா ஞான நாட்டமே 2 அவத்தைகளும் மாறிமாறித் தோன்றி மறைந்து தான்றாது மறையாது இடைவிடாது ஒளிர்ந்து பதே ஞானம் எனப்படும். அதுவே சாந்தி, அதுவே
பகவான் முறி ரமணமகரிஷிகள்
لر
33

Page 43
சைவசித்தாந்த பெரியபுற
இலக்கியங்கண்டு அதற்கு இலக்கணமியம்புவர் இயற்றமிழ்ப் புலவர்கள். முற்காலத்து வாழ்ந்த தமிழறிஞர்கள் தம் மாணாக்கர்க்குக் கல்வி கற்பிக்கும் போது நைடதம், பாரதம், கம்பரா மாயணம் முதலிய இலக்கியங்களைப் போதித்து, அதன் பின்னரே நன்னூல் முதலிய இலக்கண நூல்களைப் போதிப்பர். அவ்வாறே சங்க இலக்கியங்களைக் கற்பித்த பினி னரே தொல்காப்பியம் கற்பிக்கப்படும். இயற்றமிழின் திறத்தை அறிதற்கு அமைந்த இந்த முறைபோல சைவசமயத்தின் இலக்கணத்தை அறிதற்கும், அவ்வறிவு துணையாக வாழ்க்கை நடத்துதற்கும் விருப்புடையோர் முதலில் சைவப்பேரிலக்கிய மாகிய பெரியபுராணத்தை நன்கு கற்று, அதன் கணி நுட்பமாயமைந்த சைவசித்தாந்தக்
கோட்பாடுகளை “உந்தி, களிறு, உயர்போதம் சித்தியார்” முதலாம் மெய்கண்ட சாத்திரங்கள் வாயிலாகப் பின்னர் தெளிந்து கொள்ளல் வேணர் டும் . அங் ங் ன மனர் றி, தனியாகச் சாத்திரங்களைக் கற்பதும், பெரியபுராணத்தைக் கற்றுச் சாத்திரங்களைக் கல்லாது விடுவதும் பெரும் பயனைத் தரமாட்டா.
அன்புநெறி அமைதல்.
இராமாயணம் முதலியன “தக்கவிண்ண தகாதவின்ன என்று" அறிவு காட்ட, அந்நெறி நின்ற சான்றோராய பெருமக்களின் வரலாற் றைக் கூறுவனவாம். அந்நூல்கள் மக்களை மக்களாய் வாழ வழிகாட்டுவன. மக்களாய் வாழ்ந்து சிறப்புற்ற தக்கோர்கள் தமது பண்பாட்டினாலும், அறிவின் முதிர்ச்சியினாலும் முன்னைத் தவத்தின் நன்மைப்பாட்டினாலும் சிவனே ஆன்மநாயகரென்றும் அவர்க்கண்பு செய்தலே தமக்கு இன்பமாவதென்றும் கருதும் உளப்பாங்கினைப் பெறுவர் இக்கருத்து. புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும்
புகன்மிருதி வழியுழன்று புகலுமாச் சிரம
O 娜 a 剑
ர் பல தெரிந்தும் ஆரணங்கள் படித்தும்

க் கொள்கையும்
.4 DLDשrdשTrea,
சிறப்புடைய புராணங்க ளுணர்ந்தும் வேத
சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றாற் சைவத்
திறத்தடைவர் இதிற் சரியை கிரியாயோகஞ்
செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வார்.
என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தால் தெளியப்படும். இவ்வாறு இறையன்பில் தலை நின்ற மெய்யடியார்கள் இறைவனை மட்டு மன்றிக் குருவினையும், லிங்கத்தினையும் சிவவேடத்தி னையும் சிவமெனக் கருதி அன்பு செய்து உய்ந்தனர். அவர் வரலாற்றைக் கூறுவதே பெரியபுராணம் ஆகும்.
மெல்வினையும் வல்வினையும்
தன் மகனிடத்துக் கழிபெருங் காதலுடைய தாயானவள் தனது மனை செல்வம் எல்லாவற் றிலும் மேலாக அம்மகனையே கருதுகின்றாள். அது போல, சைவநாயன்மார்களும் உலகியலார் போல மனைவி மக்கள் முதலிய சுற்றமும் மனை, வயல் முதலிய செல்வமும் உடையராயினும் சிவனையும் சிவனடியார்களையுமே மேலாக நேசித்தனர். இளையான்குடிமாறர்க்கு ஒருபோது வறுமையுண்டாக, அவர் தமக்கும் தம்மனை யாட்கும் உணவில்லையே என்று நினையாது அடியார்களை அமுது செய்விக்க முடியவில்லையே என்று வருந்தினாரென்றும், குங்கிலியக்கலையர் நாடோறும் சிவாலயத்தில் குங்குலியத் தூப மிட்டு வருங்கால் ஒருபொருளும் இல்லையாம்படி வறுமை வந்துற்றதாக தமது மனையாள் கொடுத்த தாலியைக் கொண்டு பொருள்பெறச் சென்றவர் வழியிலே குங்கிலிய வியாபாரியைக் கண்டதும், தமது மனைவிமக்கள் முதலானோரின் பசித்துன்பத்தை நீக்குதலையும் மறந்து, குங்கிலி யத்தை விலைக்குவாங்கி கோயிலுட்சென்று நறுந்தூபமிட்டாரென்றும் பெரிய புராணத்தில் அறிகிறோம். இந்நாயன்மார்கள் அன்புப் பணியில் இன்பங் கண்டனர். இறை வனிடத்தும் அடியார்களிடத்தும் வைத்த பேரன்பு காரணமாக இவ்வாறு செய்யும் தொண்டுகள் மெல்வினைகள்
34

Page 44
எனப்படும். இம்மெல்வினைகள் பார்ப்போர்க்கு எளியனவும் இனியனவுமாயிருத்தலால இப்பெயர் பெற்றன. பலபிறவிகளில் மெல். வினைகள் பலவும் இயற்றி அணி பெனும் புணையை நண் கிறுகப் பற்றி நிற்போர் மறுபிறவிகளில் அந்த அன்பின் முதிர்ச்சியால், கணி டார்க்கு அரியனவான செயல்களைச் செய்யவும் வல்லராவர். சிவனடியாரை அமுது செய்வித்தற் பொருட்டுத் தமது மகனை அரிந்து கறி சமைத்த சிறுத்தொணி டர் செயலும் , சிவபூசைக்குவைத்த பாற்குடத்தைக் காலால் எற்றிய தம் தந்தையைத் தண்டித்த சண்டீசர் செயலும் செயற்கரிய செயல்களாம். இது,
'வரங்கள் தரும் செய்ய வைரவர்க்குத் தங்கள் கரங்களினால் அன்றுகறி யாக்க - இரங்காதே கொல்வினையே செய்யும் கொடுவினையே
ஆனவற்றை வல்வினையே என்றது நாம் மற்று"
பாதக மென்றும் பழியென்றும் பாராதே தாதையை வேதியனைத் தாளிரண்டும் -சேதிப்பக் கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே சண்டீசர் தம் செயலாற்றான்.
என்னும் திருக்களிற்றுப் படியாரிலுள்ள திருச் செய்யுள்களால் அறியப்படும்
அருள்வெளிப்பாடு
சிவனேயம் முதிரமுதிர முதலில் மெல்வினை யும் பின்னர் வல்வினையும்ஆற்றவல்ல பெரியோர்கள், உலகியலாரை நோக்க ஆன்ம வளர்ச்சியில் இறப்பப் பெரியராயினும் சிவஞானம் கைவரப் பெற்ற சீவன்முத்தரல்லர். இவர்கள் உள்ளத்தில் தம்நினைவற்றுச் சிவநினைவே தழைத்திருத் தலை உயிர்கள் தோறும் ஒளித்திருக்கும் இறைவன் உள்ளவாறே அறிவன்.
'அகத்துறு நோய்க்கு உள்ளினர் அன்றிச் சகத்தவரும் காண்பரோ தான்"
என்றபடி உலகத்தவரால் அறிந்துணர முடியாத அவ்வடியார்களது பக்குவத்தினை அறிந்து அவர்க்கு அருள்செய்யும் பொருட்டு இறைவனே மானிடச்சட்டை சாத்தி நேர்முக
மாகத் தோன்றுவன்.

செயலறுதல்
ஆன்மாவானது அஞ்ஞானத்தினால் மயங்கி ஆசை வழிச் சென்று தன்னையும் தன்சூழலையும் நினைந்து இடையறாது தொழிற்படுகின்றது. பின்னர் அன்பின் வழிநின்று சிவனையும் சிவனடியார்களையும் கனவிலும் நனவிலும் மறவாது, அன்பர்கட்குச் செய்யும் தொண்டே தொழிலாக அவர்பால் வைத்த அன்பே இன்பாக அமைகிறது. ஆசைநிலை, அன்புநிலை ஆகிய இவ்விரு நிலையிலும் ஆன்மாவின் வினை முனைப்பு அடங்குவதில்லை. வினை செய்தற்கான முனைப்பு அடங்குதற்குச் சிவஞானம் கைவரப்பெறல் வேண்டும். சிவஞானம் கைவருதற்குத் திருவருள் குருவடிவாய் வந்து நயனம், பரிசம் முதலிய தீக்கைகளால் அஞ்ஞானத்தைப் போக்கி ஆன்மாவைச் சிவமாக்க வேண்டும். சிவாநுபூதியை எய்தியவர்க்கன்றி ஏனையவர்க்குச் செயலற்ற நிலை கூடப்பெறாது.
சிவாதுபூதி
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவரும் திருவருளால் ஆட்கொள்ளப் பட்டுத் தம்செயலற்ற வர்களாவர். அவர்கள், முற்கூறப்பட்ட இளையான் குடிமாறர் முதலிய மெய்யடியார்கள் போல் பக்திவசப்பட்டுப் பணிசெய்தவரல்லர் திருவருள் வசப்பட்டுச் சீவன்முத்தரானவர்களே. அவர்க ளுடைய கரணங்களெல்லாம் பசுகரணமாந் தன்மை ஒழிந்து சிவகரணமாந் தன்மை எய்தின மையால் அவர்களிடத்து நிகழ்ந்த செயல்களெல்லாம் அருட்செயல்களென்றும் அவர் வாக்கினின் றெழுந்தவை எல்லாம் அருள்வாக்குகள் என்றும் கருதப்படும். இது, பாலை நெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும் காலனையன்றேவிக் கராம் கொண்ட - பாலன் மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம் கரணம் போலல்லாமை காண்.
எனினும் திருக்களிற்றுப்படியாரிலுள்ள திருவெண் பாவால் அறியலாம்.
பெரியபுராணத்துட் கூறப்பட்ட ஆளுடைய பிள்ளையார் முதலிய மூவரும் சித்தமலமற்றுச் சிவமாந்தனர் மை எய்தி நின்றனராயினும் அந்நிலை பெறாத ஏனையோர் போலத் தாமும்
35

Page 45
சரியை முதலிய நெறிநின்று வழிகாட்டி யருளினர். சீவன முத்தர்க்கும் ஆலய
வழிபாடு உண்டென்பது,
செம்மலர் நோன்றாள் சேரலொட்டா அம்மலங்கழிஇ அன்பரொடுமரீஇ மாலற நேயம மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரனெனத் தொழுமே
என்னுஞ் சிவஞானபோதத்து இறுதிச் சூத்திரத் தால் தெளியப்படும். தேவாரம் பாடிய செலவர்களாகிய மூவரும் சிவஞானம் பெற்ற வளவில், சமாதிநிலை கைகூடப்பெறாது, சைவம் பரக்கவும் நீறுதழைக்கவும், தொண்டு சிறக்கவும், திருத்தொணி டத்தொகை பிறக்கவும் காரணராய், தமிழ்நாட்டிலுள்ள சைவத் தலங்கள் தோறும் சென்று சென்று சைவநன்மக்களிடத்தே சிவபக்திப் பயிரை வளர்த்தனர். இதனால் அவர்கள் சைவசமய
குரவர் என்றும் போற்றப்படலாயினர்.
இதுகாறும் கூறியவற்றால், மக்கள் மாக்களா காமல் மாணி பெய்துவதற்கு வழிகாட்டியாக இலக்கியங்கள் இருத்தல் போல, மக்கள் அணி புவழி நினர் று இனி பநிலை எய்துவதற்கு உறி ற துணையாகப் பெரியபுராணம் உள்ளதென்பதும் அதனர் கணர் கூறப்படும் அடியார்கள் குருலிங்க சங்கம பத்தியிற் சிறந்து நின்று வாழ்வு நடத்தி னார்கள் என்பதும், அவர்களின் அன்புச் செயல்கள் மெல்வினை என்றும் வல்வினை என்றும் இருதிறத்தன என பதும் அவி வித அணி புநிலை மேம்பாடுற்றமை கணி டு இறைவனி அத்தகையோருக்குக் குருவடிவாக வந்து சிவஞானத்தை அருள் வானென்பதும், அவ்வாறு ஆட்கொள்ளப்பட்டு சிவஞான மெய்தியவர்களே ஆளுடையபிள்ளையார் முதலானோர் எனர் பதும் அவர்கள் தம்செயல் நீங்கிச் சிவனி செயலால் நின்றவர் என்பதும் அவ்வருளாளர்களின் அவதாரத்தினால் சைவமும் சிவனேயமும்
தழைத்தன என்பதும் கூறப்பட்டன.

சேக்கிழாரின் நுண்மாண் நுழைபுலம்)
சேக்கிழார் பெருந்தகை தம் காப்பியத்தில் எந்த ஓர் இடத்திலும் அமங்கலமான சொற்களைப் பயன்படுத்தியதில்லை. எடுத்துக்காட்டாக, மெய்ப பொருள் தாயனார் புராணத்தில் முத்தநாதன் என்ற பொய்த்தவ வேடம் தரித்த தீயவன் நாயனாரை, அவர் வணங்கும்போது கத்தியால் குத்தினான். இதை அவ்வாறே கூறாமல் ‘கினைத்த அப்பரிசே செய்ய" என்று மிகவும் நாகரிகமாகக் கூறியுள்ளார்.
சேக்கிழார், நாயன்மார் ஒருவரின் தொழில் பற்றி மேலோட்டமாகக் கூறமாட்டார். கண்ணப்ப நாயனார் புராணத்தில், வேடர்களின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை நெறிமுறைகள், அவர்களின் கடவுள் பக்தி, மிருகங்களை வேட்டையாடும் முறை, அரசபக்தி தொழில் தர்மம் போன்றவற்றை மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் கூறுகின்றார். எடுத்துக்காட்டாக ஒன்று,
வேடர்கள் வெலலும் படைக் கலமும் அஞ்சாமையும் உடையவர்கள். 'கொல்‘, ‘எறி, 'குத்து’ என்ற சொற்களைத்தான் எப்போதும் பயன்படுத்துவார்கள்.
“வெல்படைத்தறுகண்வெஞ்சொல் வேட்டுவர்கூட்டத்தோறும் கொல்எறிகுத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை'
என்று சேக்கிழார் பாடுகின்றார். வேடர்கள்
எப்போதும் கோபம் கொண்டவர்கள். இத்தகைய கொடுமையான குணங்கள் கொண்ட வேடர்கள் தங்களது வேட்டைத் தொழிலிலும் ஒரு தர்மத் தைக் கடைப்பிடித்தார்கள். அதாவது அவர்கள் மிருகங்களை வேட்டையாடும் போது கருவுற்ற மிருகங்களைக் கொல்லமாட்டார்கள். இவ்வழக் கத்தைச் சேக்கிழார்
அடிதளர்வுறு கருவுடையன அனைவுறு பிணைஅலையார் கொடியன எதிர்முடுகியும் உறு கொலைபுரி
சிலை மறவோர் என்கிறார். என்னே சேக்கிகிழாரின் சிரத்தை"
இதை அவர்க கூறாமல்கூட விட்டிருக்கலாம். ஆனால் ஒரு நாயனாரைப் பற்றிப் பாடும்போது அவரது தொழில் முறைகளையும் நன்கு கவனித்து, ஆய்ந்து எழுதவேண்டும் என்ற பேரவா, மேலும் அக்கடமை உணர்வு அவருக்கு இருந்தது. பெரியபுராணம் முழுமையும் இவ்வாறு சேக்கிழார் பெருந்தகையின் நுண்மாண் நுழை புலத்தைப் பரக்கக் காணலாம்.
நன்றி இராமகிருஷ்ண விசயம்
ار
ܢܠ
36

Page 46
È
சிவயோககவாழிதலரின்;
FIDULIUpid B
அறிமுகம்
ஈழத்துச் சிவயோக சுவாமிகள் (1872 - 1964) இருபதாம் நூற்றாண்டின் சிறந்த ஞானியாக மதிக்கப்பெற்றவர். ஈழத்துச் சித்தர்களுள் தனிப்பெருஞ் சிறப்புக்குரியவர். அவர் தம் ஞானகுரவர் அருளிய ஒரு பொல்லாப்புமில்லை', ‘எப்பவோ முடிந்த காரியம்', 'நாமறியோம், "முழுதும் உண்மை" என்ற நான்கு மகாவாக்கி யங்களையும் பிரபலப்படுத்தியவர். இவர் ஈழத்தின் வடபகுதியாசிய யாழ்ப்பானத்திலுள்ள மாவிட்டபுரம் என்னுமிடத்தில் சைவவேளாளர் மரபிலி அம்பலவாணர் என்பவருக்கும் , சின்னாச்சியம்மையாருக்கும் அருந்தவப் புதல்வராக அவதரித்தார். சதாசிவம் என்ற இயற்பெயர் கொண்ட இச் செந்தமிழ் ஞானியை, "யோகர்', 'யோகநாதன்', 'யோகசுவாமிகள்' என்ற பெயர்களால் மக்கள் அழைப்பர். இவரை நேரில் கண்டு தரிசித்த பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார். "இவர் ஒரு பெரிய மகாஞானி" எனவும், ஞானத்தை அன்புடன் குழைத்துத் தனக்கு ஊட்டியதாகவும் குறிப்பிடுவர். சிவயோகசுவாமிகளது திருப்பாடலிகள் உரைநடைப்படைப்புகள், திருமுகங்கள் (கடிதங் கள்) என்பன தொகுக்கப்பட்டு "நற்சிந்தனை" என்ற நூல் வடிவில் தமிழில் வெளிவந்துள்ளன. இதற்கு ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பும் உண்டு. இவர்தம் அன்பர்களுக்கு எழுதிய திருமுகங்கள் பலவாகும். அவற்றுள் சிலவே "நற்சிந்தனை' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. "நற்சிந்தனை' யில் பதிவு செய்யப்பட்டுள்ள திருமுகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளப்படும் ஈழத்துச் சிவயோக சுவாமிகளின் சமய தத்துவக் கோட்பாடுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
இறைக் கோட்பாடு
சிவயோக சுவாமிகள் சிவபெருமான், முருகன் மற்றும் ஒளிக்கடவுள் ஆகிய கடவுளர்மீது பல பாடல்களைப் பாடியுள்ளபோதும். இவர் "ஓரிறைக் கோட்பாடுடையவ' ராக விளங்கினார். இதனை அவரது 'ஒன்றுதான் கடவுள்" "ஒன்றுக்கு மஞ்சேல் ஒருவனே தெய்வம்" என்ற திருமுகவரிகள் நன்கு

திருமுகங்கள் காட்டும்
ததுவமும
டாக்டர் மா. வேதநாதன், எம்.ஏ. பி.எச்.டி.
இந்துநாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
புலப்படுத்துகின்றன. எங்கும், எதிலும் ஓர் இறைவனே உறைந்து நிற்கின்றார் என்ற ஓரிறைக் கோட்பாட்டை இவரின் திருமுகம்,
நான், நீ, ஐயா, அம்மா, அன்னர், அக்காமார், அத்தை, அப்பாச்சி, பெரியையா, சீனியையா சின்னையா, கந்தசாமி, கணபதி, வைரவர், வீரபத்திரர், காளி, கூளி, கிருஷ்ணன், கிறிஸ்து, புத்தன், முகம்மது இராசரத்தினமாமா, சோமா மாமா செல்லத்துரை மாமா, கன்று, பசு, ஆடு குதிரை, சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், மேடம், இடபம், மிதுனம், கர்க்கடகம், சிங்கம், கன்னி துாைம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம், ஊர்வன, பறப்பன, கிடப்பன, நடப்பன மலை, கடல், வாவி, குளம், கொடி, செடி என்று அளவிடக் கூடாமல்
விரிந்துநிற்கிற ஒன்றுதான் கடவுள்"
எனக் குறிப்பிடுவதாலறியலாம். இத்திருமுகச் செய்திகள் சிவயோக சுவாமிககள் ஓர் இறைக் கோட்பாட்டாளர் என்பதை மட்டுமல்லாது, சமய நல்லிணக்கத்தினை மதித்த ஞானி என்பதையும் புலப்படுத்துகின்றன. எல்லாவற்றிலும் இறைவ னைக் காணும் சிவயோக சுவாமிகள் விலங்குகள், பறப்பன, ஊர்வன என்பவற்றில் மட்டுமல்லாது விண்ணிலும், உறவுமுறைகளிலும் இறைவன் இருப்பதைக் குறிப்பிடுவது இவரின் தனித்துவ இறைக்கோட்பாடாகும். இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் 14 - 11 - 33 இல் அவர் எழுதிய திருமுகத்தில்
*அகர வுயிர்போ லறிவாகி யெங்கும்
நிகரிலிறைநிற்கும் நிறைந்து"
என்ற திருவருட் பயன் முதற்பாடலைக் குறிப்பிடுகின்றார்.
உடம்புக்குள் இறைவன்
இறை ஞானிகள் இறைவனைத் தம்முள் கண்டின்புறுவர். சிவயோகசுவாமிகள் இந்த இறையனுபவத்தை 30 - 11 - 1940 இல் எழுதிய திருமுகத்தில்
37

Page 47
"தேடித்திரிந்து காசிக்கு வந்து கண்டேன் விசுவநாதனை என்னுள் வாடித் திரிந்து வருந்த வேண்டாம். தேடிய பூடு காலுக்குள்ளே என்ற
தெவிட்டா வாசகமொன்றுண்டு"
என்று குறிப்பிடுவதாலறியலாம்.
இறைவன் ஒன்றாய் வேறாய் உடனாய் உள்ளவர்
இறைவன் உலகுயிர்களுடன் ஒன்றாகவும் வேறாகவும். உடனாகவும் நிற்பர் என்ற சைவ சித்தாந்த இறைக்கோட்பாட்டினைப் பிரதிபலிப்பது போன்று இவரின் திருமுகவரி "கடவுள் உள்ளும்
புறம்பும் உள்ளவர்" என்று காணப்படுகின்றது.
சிவநெறிக் கொள்கை
சிவயோக சுவாமிகள் சிவநெறிக் கொள்கையை வளர்த்தெடுப்பதில் முனைப்புடன் செயற்பட்டவர். அவர் தான் வாழ்ந்த காலத்தில் "சிவதொண்டன் என்னும் மாத இதழைத் தொடக்கி வைத்தனர். வண்ணார்பன்னையில் "சிவதொண்டன்' என்ற நிலையத்தை அன்பர்கள் மூலம் ஸ்தாபித்துச் சிவதொண்டு. சிவத்தியானம், திருமுறை ஓதல், சைவ உணவு உண்ணல் ஆகிய சைவப் பண்பாட்டை மேற்கொண்டு வாழும் சைவத்தை வாழ்ந்து காட்டினார். இவரது உருவமே சிவவேடம் போன்றது. இவரை நேரில் கண்டு வணங்கிய பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் இவரின் திருத்தோற்றத்தை,
"முகத்தில் குழைந்த புன்சிரிப்பு நெற்றியில் திருநீற்று வெண்மை, இடுப்பில் சுற்றுக்கட்டாகக் கட்டிய வெள்ளை வேட்டி, மார்பு வரை வந்து புரளும் நரைத்த தாடி தலையெல்லாம் நரைத்து வெளுத்த முடி முழுவதுமாகிய பேரின்பக் களிப்பு"
என்று குறிப்பிடுவது நோக்கற்பாலதாகும். இத்தகைய சிவநெறிச் சீலராக விளங்கிய சிவயோக சுவாமிகள் "எல்லாம் சிவன் செயல்" ", எல்லாம் சிவமாய் இருக்கின்றன அப்போது நீ யார்? நான் யார்? ஐயா யார்? மற்றும் எல்லாம் என்ன? சிவமல்லவா இன்னும் சந்தேகமா?" என்றும் தமது திருமுகங்களில் குறிப்பிடுவது அவரது சிவநெறிக் கொள்கையினை விளக்கி நிற்கின்றது. திருமுகம் எழுதும்போது உ சிவமயம் போட்டு எழுதும் சைவ மரபினை இவர் திருமுகங்களில் காணமுடியும். அவர் தனது திருமுகமொன்றில்,

*அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன்
ஆறும் பிறையும் சூடிய அழகன்
கிறையவன் மறையவன் ஏழுலுகாளி ஈசன் மழுப்படை தாங்கிய கையன்
உம்பர்தலைவன் உயர்கை லாயனே"
என்ற பாடலை எழுதி அதனைப் பாடம் பண்ணு என எழுதியிருப்பது அவரது சிவநெறிக் கொள்கை உறுதிப்பாட்டை நன்கு புலப்படுத்தி நிற்கின்றது.
கண்ணனுடைய விருந்தினர்
சிவநெறிக் கொள்கையுடையவராக விளங்கிய சிவயோக சுவாமிகள், இயற்கையில் திருமாலைக் கண்டு பாடிய வைணவ ஆழ்வார்கள் போன்ற இறைஞானியாகவும் விளங்கினார். அவர் மலைநாட்டில் இருந்து 17.02.1932இல் எழுதிய திருமுகமொன்றில் இயற்கை எழிலில் திருமாலைக் கண்டு மகிழ்கின்றார்.
"நம்மைச் சூழ வரவிருக்கும் மலைகள் திருமாலைப் போல் பச்சைப் பசேலெனக் காணப்படுகின்றன. இரைந்து விரைந்து செல்லு மருவிகளின் இனிய சத்தம் திருமாலின் கரத்திலிருந்து இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கும் பாஞ்ச சன்னியத்தை ஒத்தன. சந்திரனுஞ் சூரியணு மிரு பாரிகளிருபக்கத்தும் விளங்குவது போல் விளங்குகின்றன. மரக்கொம்பரி லிருந்து நீங்குரலாற்பாடும் பட்சிகள் அக்கண்ணன் புல்லாங்குழல் பாடுவதை ஒத்திருக்கின்றன. தேயிலை கொய்யும் மகளிர் திருமாலின் இனிய பத்தரான கோபிகாஸ்திரிகளை நேர்வர். இவ்விடத்துக் கறங்கும் முரசம் துரியோதனனுடன் போருக்குச் சென்ற பஞ்ச பாண்டவரின் தேரின்மீது அடிக்கப்படும் பேரிகையை இசைந்தது. எப்படித் திருமால் சகல வளங்களுடனுந் துவாரகையில் விளங்கினானோ அப்படியே இம்மலை இவ்விடத்து மிளிர்கின்றது. கண்ணனுடைய விருந்தி
னராக நாம் இவணிருக்கிறோம்"
என்ற திருமுகம் அவரது வைணவ இறைக் கோட்பாட்டின் ஆழத்தைப் பிரதிபலிக்கின்றது. அவரது படைப்புகளில் இத்திருமுகம் ஒன்றே அவரது வைணவ இறையுணர்வைப் புலப்படுத்து கின்றதெனலாம்.
ஆன்மக் கோட்பாடு
ஆன்மா அழிவதில்லை என்பதும் அது
உடம்போ, மனமோ, புத்தியோ, சித்தமோ அல்ல
என்பதும் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக்
38

Page 48
கருத்தாகும். இதனை வெளிப்படுத்துவது போன்று சிவயோக சுவாமிகள்
நீ உடம்பன்று, மணமன்று, புத்தியன்று, சித்தமன்று, நீ ஆத்மா. ஆத்மா ஒருநாளும் அழியாது. இது மகான்களுடைய அநுபவ சித்தாந்தம். இந்த உண்மை உனது உள்ளத்தில் நன்றாகப்
பதியக்கடவது".
எனத் தனது திருமுகத்தில் குறிப்பிடுகின்றார்.
ஆன்மாவும் கடவுளும்
"ஆன்மாவும் கடவுளும் ஒன்று" என்பது வேதாந்தத் தத்துவத்தின் அடிப்படைக் கருத்தாகும். இச்சிந்தனை உபநிடதங்களில் ஊற்றெடுத்துச் சங்கர வேதாந்தத்தில் உச்சநிலை பெறுகின்றது. இச்சிந்தனை மரபில் சிவயோக சுவாமிகளும் விளங்குகின்றார். ஆன்மா தான் கடவுள்என்பதை அவர்
*எதனால் கண் காணுகிறதோ? எதனால் காது கேட்கிறது? எதனால் முக்கு முகருகின்றது? எதனால் வாய் பேசுகின்றது? அது தான் ஆத்துமா அல்லது
s is கடவுள்"
எனத் தனது திருமுகத்தில் (17.06.1938) குறிப்பிடுகின்றார். இந்த உணர்வின் வெளிப்பாடாகவே அவர் தனது திருமுகங்களில் "அவனே தானே" என்றும் "அவனே நானே" என்றும்
கையொப்பமிட்டுள்ளார்.
வினைக் கோட்பாடு
"நான் ஐம்பது வருடங்களுக்கு மேலாகச் செய்ய வேண்டியவற்றை எல்லாம் செய்து விட்டேன். போதிக்க வேண்டியவற்றைப் போதித்து விட்டேன். ஒரு குறையும் விடவில்லை” என்று கூறிய சிவயோக சுவாமிகள் "நவரத்தினம்” என்பவருக்கு 07.02.1934இல் எழுதிய திருமுகத்தில் வினைப்பயனை நாம் அனுபவித்தே தீரவேண்டும் என்ற சைவ சித்தாந்த வினைக்கோட்பாட்டின் உட்பொருள் பொதிந்து விளங்குவதனைக் காணலாம். இதனை அவரின் திருமுகம்.
*வினைப்பயனை வெல்வதற்கு வேதமுதலாய வனைத்தாய நூலகத்துமில்லை” எனக் குறிப்பிடுவதாலறியலாம். நமது இன்றைய நிலைக்கு "நாம்” தான் காரணம் என்ற சைவ சித்தாந்த வினைக்கோட்பாட்டையே இவர் நன்மை தீமை நாம் தரவருவன பிறராலன்று" என்று குறிப்படுகின்றாரெனலாம்.

பக்திக் கோட்பாடு
சிவயோக சுவாமிகள் எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் பத்தி ஞானியாக விளங்கினார். "எல்லாவற்றிலும் ஓர் இறைவனே இருக்கின்றான் என்பதை உணர்ந்து அதைவிட வேறில்லையென்று தியானிக்கின்றவன் தான் உண்மையான பக்தனென்று சொல்லப்படுவான்" என்ற சிவயோக சுவாமிகளின் திருமுகக் குறிப்பு அவரின் பக்திக் கோட்பாட்டைப் புலப்படுத்து கின்றது. "யாவரிடத்தும் அன்பாயிரு. அதாவது உன்னைப் போல எவரையும் பார்” என்ற சிவயோக சுவாமிகளின் திருமுகக் குறிப்பு அவரதுபரந்த பக்தி நோக்கினைச் சுட்டி நிற்கிறது. பத்திக் கோட்பாட்டின் உன்னத வெளிப்பாடு பத்தி வைராக்கியமாக விளங்கும். இதனைச் சீவன்முத்தர்களிடம் காணமுடியும். இப்பத்தி வைராக்கியம் இவரிடம் விளங்கியதை *அஞ்சுவதி யாதொன்று மில்லை. அஞ்சவருவதியா தொன்றுமில்லையென்னு மான்றோர் மெய்ம்மொழி நம்மைப் பிறப்பிறப்பாக்கிய கடலைக் கடப்பிக்கும் தெப்பம். "இதைத் துணையாகக் கொண்ட வெமக்கென்ன குறை"
என்ற திருவரிகள் சுட்டி நிற்கின்றன.
அறக் கோட்பாடு
சிவயோக சுவாமிகள் "தன்னைப் போன்று மற்றவர்களை நேசித்தலையே தவம் என்றும் அதுவே அறம்” என்றும் குறிப்பிடுகின்றார். இதனை அவர் தனது திருமுகமொன்றில்
தன்னைப் போல் மற்றவர்களையும் நேசித்தலே ‘தவம்’ அதுவே அறம்"
என்று குறிப்பிடுவதாலறியலாம். சிவயோக சுவாமிகள் சைவ வாழ்வியலை வாழ்ந்து காட்டியவர். எல்லோரும் அறமாகிய தரும நெறியினைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பது அவருடைய நோக்கமாக விளங்கியது. இதனை அவர் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு அதாவது தருமநெறியிற் பிசகாதே" என்று குறிப்பிடுவதாலறியலாம். மனிதநேயக் கோட்பாடு
ஞானிகளிடம் காணப்படும் முக்கியப் பண்பு மனிதநேயம் ஆகும். சிவயோக சுவாமிகள் மனிதநேய யோகியாக வாழ்ந்து காட்டியவர். சாதிப் பாகுபாடு பாராட்டாதவர். எல்லோரும் தனது சுற்றத்தவர் என்ற உயர்நிலையில் வாழ்ந்தவர். இத்தகைய மனிதநேயக் கோட்பாட்டினை
39

Page 49
இவரெழுதிய திருமுக வரிகள் தெளிவாக்கு கின்றன. நாங்களெல்லாம் ஒரே சமயத்தையும், ஒரே சாதியையும் சார்ந்தவர்கள்" ‘யாவும் நமது ஊர். எாவரும் நமது கேளிர்"
கடமைக் கோட்பாடு
சிவயோக சுவாமிகள் கடமையை ஒரு கோட்பாடாகவே வற்புறுத்தியுள்ளார். இதனை அவர் தனது திருமுகங்களில். "உனது கடமையை நீநல்லாய்ச் செய்" ‘நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றுண்டு. நீங்கள் உங்கள் கடமையை வழுவாது செய்யுங் கள்"
‘செய்வன திருந்தச் செய்?" என்று குறிப்பிடுவதாலறியலாம்.
சிவயோக சுவாமிகளும் யாழ்ப்பாண மக்களும்
காசித் திருத்தல யாத்திரை செய்த சிவயோக சுவாமிகள் 30.11.1940இல் காசியிலிருந்து எழுதிய திருமுகத்தில் *இருந்த, இருக்கின்ற இருக்கும் யாழ்ப்பாணத்தா
நற்சிந்தனை ஐந்தாம் பதிப்பு பக்கம் 393
l.
2. y9 99 99 394 3. 9. y 393 4. திருவருட்பயன் ' -- 5. 99 9. 99 99. 390 6. 99 99 y 388 7. 99 9. g - -
8. 99 y 99 99 394 9. 99 390 10. p 9. 39 ll. 99 y 388 12. 99 9. 99. 389 13. 99. 99. 388 14. y 99 395 5. p 388 6. y 388 7. 99. 99. 394 18. g 99 99 99 389 . . . . . . h 390
2. 395
22. 9. 9 y 9 395
23. gg yp 99 390

ரெல்லார்க்குமாகக் கருமாதிகளெல்லாஞ் செய்து முடிந்து விட்டன” என்று குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாண மக்கள் எப்பொழுதும் நற்கதி பெறும் பொருட்டே இவர் காசியில் கருமாதிகள் செய்துள்ளார் போலும்.
முடிவுரை
இவ்வாறாக ஈழத்துச் சிவயோக சுவாமிகளின் திருமுகங்களை நோக்கும்போது அவர் சிவநெறியை வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவர் என்பதும், முருகன், திருமால் ஆகிய கடவுளர் மீதும் பற்றுடையவர் என்பதும், ஒளியைக் கடவுளாக வணங்கும் கொள்கையுடையவ ரென்பதும், ஓர் இறைக் கோட்பாட்டாளர் என்பதும், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளில் மட்டுமன்றி வேதாந்த தத்துவத்திலும் நம்பிக்கையுடையவ ரென்பதும், பரந்த மனித நேயம் கொண்டவ ரென்பதும், கடமையே கடவுள் என்ற கோட் பாட்டினர் என்பதும் யாழ்ப்பாணத்து மக்களுக்கு உய்வுண்டு என்பதை உணர்ந்து செயற்பட்ட சிவஞானி என்பதும் பெறப்படும். உலகியலில் உள்ளவர்களைப் போன்று சிவஞானிகளும் வார்த்தைகளால் மட்டுமன்றித் திருமுகங்கள் மூலமாகவும் 5DS &լDաֆ தத் துவக் கோட்பாடுகளைப் புலப்படுத்தியுள்ளமைக்கு ஈழத்துச் சிவயோக சுவாமிகள் ஓர் உரைக் கல்லாகும்.
வருடப்பிறப்பாய் விட்டது. நீங்கள் நல்ல பலகார வகைகள் செய்வீர்கள். பட்டுவேட்டி கட்டுவீர்கள். வீடு வெள்ளையடிப்பீர்கள். கோவிலுக்குப் போவீர்கள். சுவாமிக்கு நைவேத்தியமயிடேகம் முதலியவைகள் செய்விப்பீர்கள். நானோ சாந்தமென்னும் புனலாடிப் பொறுமை என்கிற உத்தரீயம் பூண்டு வறுமையென்று சொல்லப்படுங் குருவின் போதனை கேட்டு மாசற்ற மனத்தைத் தரும் வெண்ணிறனிந்து, வேண்டாமையென்னும் விழுச்செல்வத்தையே மேலும் மேலும் தருமாறு பணிந்து அஞ்சாமையென்கின்ற கேடகத்தை
யுடையவனாய்ச் சுப்பிரமணியசுவாமியினுடைய நெஞ்சிலேமிதித்துவிளையாடுவேன்.
- என்றும் மறவாதவன்
40

Page 50
பன்னிரு திருமுறைகளாகத் தொகை செய்யப் பட்டுள்ள சைவத் திருமுறையிலே எட்டாந் திருமுறையாக உள்ளது திருவாசகம். பன்னிரு சூத்திரங்களாலியன்ற சிவஞானபோதத்திலே எட்டாஞ் சூத்திரமாக இருப்பது ஐம்புலவேடரில். எனத் தொடங்கும் நூற்பா. திருவாசகம், குருவருளால் திருவடி சேர்தலுக்குச் சிறந்ததோர் இலக்கியம். சிவஞானபோதத்து எட்டாஞ் சூத்திரம் இதற்குச் செறிந்ததோர் இலக்கணம். இவ்விரண்டையும் இணைத்து நோக்குவதால் திருவாசகத்தின் பிழிவாய், சிவஞானபோதச் சூத்திரம் விளங்குவதையும் சிவஞானபோதச் சூத்திரத் தெளிபொருளாய்த் திருவாசகம் திகழ்வதையும் கண்டறியலாம்.
(திருவாசகம் அறுநூற்றுக்கு மேற்பட்ட பாடல் களாலான பெருநூல். அதிற் சில பாடல்கள் இக்கட்டுரையில் ஆங்காங்கே எடுத்தாளப்படும். சிவஞானபோதத்து எட்டாம் நூற்பா மூன்றடி களாலானது. அதனையும் அதன் அதிகரணப் பகுப்புகளையும் ஈண்டுத் தருகிறோம்).
'ஐம்புலவேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
0 se ய்த் தவத்தினில் உணர்த்த விட்டு
அந்நியமின்மையில் அரன்கழல் செலுமே
அதிகரணப்பகுப்பு 1. தவத்தினில் உணர்த்த
2. தம்முதல் குருவுமாய்
3. ஐம்புல வேடரில் அயர்ந்தனை வளர்ந்தென.
4. விட்டு, அந்நியமின்மையின் அரண் கழல்
செலுமே.
திருவாசகமும், சி எட்டாம் க

வஞானபோதத்து நத்திரமும்
சிவதொண்டன்
1. "யானேயோ தவஞ்செய்தேன்’
(தவத்தினில் உணர்த்த)
தவத்தினிற் சிறந்தோர்க்கே சிவபெருமான் குருவடிவாக வந்து ஞானம் உணர்த்துவர். மணிவாசகப்பெருமான் தவத்தினிற் சிறந்திருந் தமையைத் திருவாசகத்திற் பரக்கக் காணலாம். அவர் பெண்ணாசை, வித்துவம், செல்வச் செருக்கு இவ்வாறான பல சிறுமைகளினாலும் பந்திக்கப்படாதவராயும், தெய்வமென்பதோர் சித்தம் வாய்த்தவராயும், ஆறுகோடி மாயாசக்தி களுள் அகப்படாதவராயும், சமயவாதிகள், தத்துவ வாதிகள் ஆகியோர் பிடிக்குள் சிக்காதவ ராயும், தாம் பிடித்தபிடியில் சலியாதவராயும், நாடவர் பழித்துரையைத் தமது அணிகலமாகக் கொண்டவராயும் திகழ்ந்ததைத் திருவாசகத்துப் போற்றித்திருவகவல் பல அடிகளில் கூறிச் செல்கிறது. அவர் தம் எணர்ணம், சொல், செயலெல்லாம் சிவனுக்கென்றே அமைந்த திறத்தை.
'சிந்தனை நின்தனக்காக்கி வாக்கு உன் மணிவார்த்தைக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி'
எனும் திருச்சதகப் பாடல் செப்புகிறது. அவர் “பரந்து பல்ஆய்மலரிட்டு முட்டாது அடியே இறைஞ்சி' என்றவாறு சரியை கிரியை யாதியாம் படிகளில் ஒழுகிய திறமும் திருவாசகத்தில் தெரிகிறது. அவர் பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூக்குறையத் தங்கண் இடந்தப்பிய செங்கணி மாலின் பூசைத்திறத்தைப் புகழ்ந்துரைப்பதானது, அத்தகைய பூசைத்திறம் அவர்தம் இலட்சியமா யிருந்து என பதை உணர்த் துவதாம் . 'இத்தந்திரத்திற் காண்டும் என்றிருந்தோர்க்கு
41

Page 51
அத்தந்திரத்தின் அவ்வயின் ஒளித்தும்' என்ற திருவாசகம் அவர் தந்திர சாதனைகள் பலவற்றிலும் முயன்றனர் என்பதன் குறிப்பாகும். அவர் "தீர்ந்த அன்பாய அன்பராய்த் திகழ்ந்தனர் என்பதில், ஐயமில்லை. இந்த அன்பாளராய்ப் பரிணமித்து நின்றமையே அவர்தம் அருந்தவப்பேறு. அவர் அன்பினால் ஆவியோடாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகித் திரிந்த திறத்தைத் திருவாசகம் எங்கும் காணலாம். இதனாலேதான் அவரை 'அழுதடி அடைந்த அன்பர்' எனப் போற்றினர். 'அன்பினில் விளைந்த ஆரமுதே' என்பது திருவாசகத்திலுள்ள ஓர் அருமைத் திருவாக்கு. இவ்வாறு மணிவாசகப் பெருமான் இறைவனை அறியமுயலும் நெறி பலவினும் - சிறப்பாகச் சரியை, கிரியை, ஆகிய நெறிகளில் முயன்று அன்பாளராகப் பரிணமித்த திறம் திருவாச கத்தில் விளக்கமாக உளது.
சிவஞானபோதச் சூத்திரத்திலே இது தவத்தினில் உணர்த்த' என வடித்துவைக்கப் பெற்றிருக்கிறது. 'தவம்' எனும் சொல்லுக்குப் பொருள் விரித்த உரைகாரர் சரியையாகிய
பாதங்கள் எனப் பொருள் கொண்டனர். இது
"ஈண்டுத் தவமெனப்பட்டன பிறவல்ல என்பார் சரியை கிரியா யோகங்களை எனக் கிளந்துரைத்தார்"
என்னும் குறிப்புரையாலும்
மேற் சரியை கிரியா யோகங்களைச் செய்துழி.
என்னும் ஏதுவாலும் தெளியப்படும்
வழிநூலான சித்தியாரும் இத்தவத்தை விளக்கு முகமாகச் சரியை கிரியை ஆகிய வற்றையே விரித்துரைக்கின்றது.
2. பொங்குமலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
Ibapó61) LDTll
வேறு வேறு வடிவங்களாக நின்று வளர்த் தெடுக்கும் முதற்பொருளே, தவத்தினிற் சிறந் தோரை ஞானமுணர்த்தி மலரடிக்கீழ் வைத்தற்குக் குருபரனென்றோர் வடிவு கொண்டு எழுந்தருளும். இவ்வுணர்மை திருவாசகத்திற் போதுமளவு

உணர்த்தப்பட்டிருக்கின்றது.
சிவபெருமானே முதற்பொருள். இதனைக் கூறும் சி றந்ததோர் மணிவாசகம் 'வாழ்முதலாகிய பொருள்" என்பது இம் முதற்பொருள். உள்ளத்துள் ஓங்காரமாய் நின்று உய்விக்கின்றது. ஆகமமாய் நின்று அண்ணிக்கின்றது. தில்லைமூதூராடிய திருவடியாய், கோகழி மேய கோவாய், இடைமரு துறையும் எந்தையாய், . இவ்வண்ணமாகவே திருத்தலந்தோறும் கோயில் கொண்டருளி வாழ்விக்கின்றது. பன்றியாய்க் கிடந்தும், பரிமேல் வந்தும், மணி சுமந்தும். அருள் சொரிகிறது. பெய் வளையாய் பேதித்து வளர்த்தெடுக்கிறது. அதுவே தாயாய் முலையைத் தருகின்றது. அப்பனாய் “அஞ்சல்” என்கின்றது. காவலனாய் க் காக்கிறது. வேந்தனாய்
வேகங்கெடுத்து ஆள்கிறது.
நூற்றொரு கோடியின் மேற்பட்ட விரிந்த அணி டம் , அணு எனும் படி ஆக, தானி அணி டமென ஓங்கி நிற்கும் பெரியோன், மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து, மாயாசக்திகளினின்றும் பேதித்து வளர்த்துப் பக்குவனாக்கியதோடு அமையாது, மிக எளியனாய் மானிடமாக மண்மேல் மலரடி வைத்து, குருபரன் என்றோர் பேர்கொண்டு வந்த பெருங் கருணையே திருவாசகத்தில் எடுப்பாகத் தெரிவதாகும். நாம் நாளும் பாராயணஞ் செய்யும் சிவபுராணத்தினி நடுநாயகமான பகுதி நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி என்பது. திருவாசகத்தின் நடுநாயகமான திருவெம்பாவையில் 'வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்து" ஆட்கொண்ட தலையளியின் இனிமை, பெரிதாய்த் தித்திக் கினிறது. தலையளி என்பது குருபரணி தானாகவே வந்து அருள்செய்த முதற்தரமான கருணையே. இப்பெருங் கருணையை வாயாரப் பாடவே, மணிவாசகப்பெருமான் மைப்புறு கண்ணியர் மானிடத்தியல்பு (மகளிர் பாவனை) கொண்டு, ஊசலாடிப் பாடுகின்றார். தென்னாத் தெனா என்று தெள்ளேணங் கொட்டிப் பாடுகின் றார். “செங்கண் நெடுமாலும் சென்றிடந்தும் காண்பரிய பொங்குமலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி” என அம்மானை பாடுகின்றார்.
42

Page 52
திருக்கோத்தும்பி, திருச்சாழல். திருப்பூவல்லி என்று பாடுவதெல்லாம் இத்தலையளியின்றுஞ் சுரப்பனவே. அருட்பத்து என்றோர் பதிகத்திலே பாடல்தோறும் திருத்தமாம் பொய்கைத் திருப் பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமேவிய சீர்மையைப் பாடிப் பரவுகின்றார். புவனியிற் சேவடி தீண்டிய குருபரனைச் சிவன் எனத் தேறிய திறத்தையும் செப்புகிறார். திருவண்டப் பகுதியிலே "பரமானந்தப் பழங்கடல் அதுவே. திருவார் பெருந்துறை வரையில் ஏறி அரும் பெறன் மேகன் ஆகவந்து, தொண்ட உழவர் ஆர அருள்மழை பொழிந்தான்’ எனும் நீண்டதோர் உருவக வாயிலாகப் பரம்சோதியான சிவபெருமான் குருவடிவாய் வந்த திறத்தை வருணிக்கிறார். அவ்வுருவகத்தை வெறுமனே மாணிக்கவாசக மென்று அமையாது முத்து மாமணி மாணிக்க வைரத்த பவளத்த எனும் சிவன் பெருஞ்சீர் கூறும் முழுச்சோதி வாசகத்தால் புகழினும் தக்கதே.
சிவபெருமான் குருபரனாய் எழுந்தருளிய திறத்தைச் சிவஞானபோதம் தம்முதல் குருவுமாய் என வடித்து வைத்திருக்கின்றது. குருவுமாய் என்பதில் உள்ள 'உம்' மையால் முதல்வன் வேறுவேறுவடிவங்களாயும்நின்றுவளர்த்தெடுத்தமை பெறப்பட்டது. குரு வடிவமாகக் கோலங்கொண்டு இருப்பவர் சிவபெருமானே என தெளிவுறுத்தற் பொருட்டு தம்முதல் எனக் கூறப்பட்டது.
இனி, சிவபெருமான் குருவடிவாய் எழுந்தருளி வந்து உணர்த்தும் திறமும் திருவாசகத்தில் நன்கு தெரிகிறது. குருபரன் பிறவிப் பெருந்துன்பத் தால் துவணர் ட அணி பரிணி கணிணிரைத் துடைத்தருளினார். இது மலங்கினேன் கண்ணின் நீரைமாற்றி என உள்ளது. நீறு சாத்தி அருளினர். இது 'தன் நிறளித்து' என வருகிறது. உபதேசமந்திரம் உரைத்தனர். இது "நொடியன சொற் செய்து என வருகிறது. திருவடி தீக்கை செய்த திறம் 'தாட்டாமரை காட்டி" எனவருகிறது. வினைகடிந்ததிறம்.
"வல்லாளன் கென்னன் பெருர் ன்பிச்சேற்றிச் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத்தழுத்தி வினைகடிந்தவேதியன்'

என வருகிறது. இன்னும் பிறப்போடிறப் பென்னும் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்து, யான் எனதெனும் உரைமாய்த்து என்ெ றல்லாம் வருவன குருபரணி மெய்யுணர்வுணர்த்திய திறம் விரிப்பனவே. சிவஞானபோதத்திலே குருபரன் அறிவுணர்த்தும் முறைமை பற்றிய குறிப்பினை சிவஞானசித்தியார் தீக்கை வகைகளாக விரித்துரைக்கிறது.
8. வஞ்சப்புலனைந்தின் வழியடைத்து
(ஐம்புலவேடரில் அயர்த்தனை வளர்ந்தென)
குரு உணர்த்துவதன் முதன்மையான பாகம் அறியாமையை வெளிப்படுத்திக் காட்டுவதாகும். இதனை 'அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே" எனச் சிவபுராணம் கூறும் (அகல் வித்தல் - அகலவிரித்துக்காட்டுதல்) ஐம்புல வழியிற் பழகிய பழக்கத்தால் அதன்வழி உழன்று திரிபவர்க்கு அது அறியாமை என்றுணர்த்துவது குருவருளாகும். இவ்வாறுணர்ந்து கொண்டமையை
'இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநாகில் வீழ்வேற்கு சிந்தைதனைத் தெளிவித்து."
ஆகிய திருவாசகங்கள் உணர்த்துகின்றன. புலன்வழிச் சென்றமைக்காகக் கழிவிரக்கப்படும் இத்தகைய வாசகங்கள் பல திருவாசகத்தில் உள. குருபரன் புலன்வழிச் செல்லுதலின் அறியாமையை உணர்த்தியதும், அப்புலன்வழியிற் செல்லும் துன்பத்துக்கு ஆற்றாது விட்டுவிடாதே என விண்ணப்பிக்கும் ஒரு நெடும் பாடல் திருவாசகத் திலுள்ளது. நீத்தல் விணர்ணப்பம் எனும் அப்பகுதி புலன்கள் நெய்க்குடத்தைப் பற்றும் எறும்பென மொய்த்துக் கொள்வதாகவும், மொய்த்துக்கொள்ளும் அவற்றால் புழுவெனத் துடிப்பதாகவும், அவை தீப்போல் கதுவுவதாகவும் அப்புலன் தீக்கதுவப் பொதும்புறு தீப்போல் வெதும்புவதாகவும், மத்திடைப்பட்ட தயிர்போல் சுழல்வதாகவும், இப்படியே இன்னும்பல உவமைகள் விரவிய மொழிகளாலும் விண்ணப்பித்து, புலன்வழிச் செல்லவிடாது ஏன்றுகொள்ளுமாறு வேண்டுகிறது. வானோரை ஏவல்கொள்ளும் வல்லபம் இருப்பினும், வஞ்சப்புலன்களை
43

Page 53
வெல்லுதல் அரிது. தவத்தினில் மேம்பட்டோரையும் வரம்பு கடந்து இழுத்துச்செல்வன அவை, அவற்றை வெல்லும் இரகசியத்தைத் திருவாசகம் மேல்வருமாறு கூறும்.
உரைமாண்ட ளொளி உத் & 4 புகலும் கரைமாண்ட காமப் பெருங்கடலைக் கடத்தலுமே இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோட
துரை மாண்டவா பாடித் தோனோக்க மாடாமோ
(ஆசையே இந்திரியப் பறவைகளுக்கு இரை. ஆசையற்றவிடத்து அவை தாமாகவே பறந்து போகும். ஆசையறுதல், குருபரன் உளத்திற் குடிபுகுந்ததும் இயல்பாக வாய்க்கும்) இவ்வண்ணம் வஞ்சப்புலன்வழியும். அவ்வழியினைக் குருவருள் அடைக்கும் திறமும் சிவஞானபோதத்திலே
'ஐம்புலவேடரின் அயர்ந்தனை வளர்ந்தென என்று கூறப்பட்டிருக்கின்றது. இதனை "மன்னவன்றன்மகன்" எனத்தொடங்கும் விருத்தப்பாவால் சிவஞான சித்தியார் விரித்துரைக்கின்றது.
4. விடுமின் எல்லா அல்லலையும் (விட்டு)
சிவமானவாபாடி அந்தியூமின்மையின்)
திருத்தாள் சென்று சேர்வோமே
(அரன்கழல் செலுமே)
குருபரன் ஐம்புலவேடரின் வளர்ந்து அயர்ந்த னையே! என்று உணர்த்திய வழி அச்சார் பினின்றும் விடுபட்டு நிற்கும் திறம் திருவாசகத் தின் இறுதிப் பகுதியில் சிறப்பாகத் தெரிகிறது. "உற்றாரையான் வேண்டேன் ஊர்வேண்டேன், பேர் வேண்டேன் என்ற வாறான திருப்புலம்பலும்,
புகவே வேண்டாம் புலன்களில் நீர்
புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டாம் போக விடுமின்கள்'
ᏡᏕᏋᎦ36ᏯᏋᏕᏋ

என்றவாறான யாத்திரைப்பத்துப் பாடல்களும் இதற்குத் தக்க எடுத்துக்காட்டு. இது சிவஞான போதச் சூத்திரத்தில் விட்டு என வருகிறது.
ஐம்புலச் சார்பை விட்டதும் சிவத்தைச் சார்ந்து சிவத்தினும் வேறலாதிருக்கும் சிறப்பும் திருவாசகத்தில் நன்கு தெரிகிறது. சிவமானவாபாடி, தேவானவாபாடி என்றெல்லாம் தெள்ளேணங் கொட்டிப்பாடுவதும் நிச்சம் என்நெஞ்சில் மன்னி யானாகி நின்றானே எனும் உயிருண்ணிப்பத்தும் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்கள். குருபரன், மணிவாசகப் பெருந்தகையைப் பராவமுதுஆக்கிய திறத்தைக் கூறும் திருவண்டப் பகுதியை ஈண்டு குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.
"அற்புதமான அமுததாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றினன். உருகுவது உள்ளங் கொண்டோர் உருச் செய்தாங்கு எனக்கு அள்ளுறாக்கை அமைத்தனன் ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையும் இருப்பதாக்கினன் என்னில் கருணைவான்தேன் கலக்க அருளொடு பராவமுதாக்கினன்'
என்பது அப்பகுதி. அமுதனான இறைவன் அடிகளைத் தானாக்கிய தன்மையை இத் திருவகவற் பகுதி இனிதாயெடுத்துரைக்கிறது. இத்திறம், சிவஞானபோத்திலே அந்நியமின்மை என்ற தத்துவமொழியிற் கூறப்பட்டிருக்கிறது. அந்நியமின்றி இறைவனுடன் அநந்நியமாயி ருக்கும் நிலை வந்துற்ற ஆன்மா அரண்கழல் செலும் எனச் சிவஞானபோதம் கூறும். இத்தத்துவ ஞானத்திற்கு மேற்காணும் திருவாசகப் பகுதிகள் எடுத்துக்காட்டுக்களாம்.
'தென்னவன் சேவடி சேர்மின்களே சேவடி சிக்கெனச் சேர்மின்களே சென்று சேர்ந்தேன் மன்னுதிருப்பெருர் S ள் பூண்டேன்புறம்போகேன் இனிப்புறம் போக லொட்டேனே'
$8G&突众

Page 54
“எப்பவோ (P.
சிவயோக சுவாமிகளின் குருவாக வந்தவர் செல்லப்பாசுவாமிகள். அவரின் திருவார்த்தை கள் சில மகாவாக்கியங்களாகக் கருதப்படு கின்றன. ஒரு பொல்லாப்புமில்லை, எப்பவோ முடிந்த காரியம், முழுவதும் உணர்மை, நாமறியோம் ஆகிய தொடர்களே இந்த
மகாவாக்கியங்கள்.
எளிமையான வார்த்தைகளாக இருந்தாலும், ஆழ்ந்து நோக்கின், இவை ஆழமான பொருள் கொண்டவை என்பது புலப்படும். இவற்றில் ஒன்றான “எப்பவோ முடிந்த காரியம்” என்ற வாக்கியம் இந்திய தத்துவங்களின் வினைக் கொள்கையை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
மகாவாக்கியம்
வேதமகாவாக்கியங்கள் என்று சில வார்த்தைகள் கூறப்படுவதுண்டு. நீண்ட ஒரு காலப்பகுதியில் எழுந்தவை வேத இலக்கியங்கள். அன்றைய காலகட்டத்தில் வளர்ந்த வேறுபட்ட மனித சிந்தனைகளின் தொகுப்பாக இவை உள்ளன. அவற்றுள் ஒன்றுக்கொணி நு முரணி பட்ட கருத்துக்களையும் காணமுடிகிறது.
ஆகமங்களும் வேதங்கள் போலப் பழமை மிக்கவை. ஆயினும் வேதங்களைவிட அவற்றில் முரண்பாடுகள் குறைவாக உள்ளன. சைவம் காட்டும் இறை, உயிர், தளை பற்றிய கருத்துக்கள் வேதங்களில் பொது வகையால் கூறப்பட, ஆகமங்களில் அதிக தெளிவுடன் கூறப்பட்டுள்ளன. இதனாலேயே சைவத்துக்கு வேதம் பொது, ஆகமம் சிறப்பு என்று திருமந்திரம் கூறுகிறது.
பரந்து விரிந்திருக்கும் வேத இலக்கியங் களைப் படித்து அறிவது எளிதல்ல. இதனால்

2ந்த காளியம்”
சித்தாந்தரத்தினம் கலாநிதி.க.கணேசலிங்கம்
அவற்றிலுள்ள சில வார்த்தைகளைத் தேர்ந் தெடுத்து வேதமகாவாக்கியங்கள் என்று கொள் கின்றனர். அவற்றை அறிந்து தெளிந்தாலே வேதங்களை அறிந்ததாகும்என்று கருதப்படுகிறது.
அகம் பிரமாஸ்மி, தத்துவமசி, அயமாத்மா பிரமம் ஆகியவை மூன்று வேதமகா வாக்கியங் கள். இவை முறையே, நான் பிரமமாகிறேன், அது நீயாகிறாய், இந்த ஆன்மா பிரமம் என்று பொருள் தருகினி றன. முரணி பட்ட, வேறுபட்ட கருத்துக்களுக்கு இடமளிக்கும் வேத நூல்கள் போல், இவையும் வேறுபட்ட விளக்கங்களுக்கு இடமளிக்கின்றன. இதனாற்றான் இவற்றின் அடிப்படையில் வேறுபட்ட தத்துவங்களும்
விளக்கங்களும் உருவாகின.
இவ்வாக்கியங்கள் குரு சீடன் உறவு தொடர் பாக வந்தவை என்பது பொதுவான கருத்து. பண்டிதர்.மு.கந்தையா அவர்களின் பின்வரும் கூற்று இதனை விளக்குவதாக அமைந்தது.
“இவற்றில் மூன்றாவது, குரு என்ற நிலை யிலுள்ள ஒருவர் சீஷனை நினைத்து இவன் பிரமம் எனத் தன்னில் தான் பாவிப்பதாகவும், இரண்டாவது “நீ பிரமமாகிறாய்” என அவர் அவனுக்கு முன்னிலையில் உணர்த்துவதாகவும், முதலாவது அங்ங்னம் உணர்த்தப்பெற்ற சீஷன் “நானி பிரமம்” எனத் தன்னில் தான் பாவிப்பதாகவும் கொள்ளப்படும் பாங்கில் அமைவதால் மூன்றும் சிவோஹம் பாவனைக்கு உபகரிப்பதாகக் கொள்ளல் பொருந்தும்.” (பண்டிதர் மு. கந்தையா, “சைவசித்தாந்த நோக்கில் சைலாசபதி ஸ்மிருதி”, யாழ் பல்கலைக்கழக வெளியீடு)
45

Page 55
பண்டிதரின் இந்த விளக்கம் சைவசித்தாந்த தத்துவத்துக்கு அரணர் சேர்ப்பதாகவுள்ளது. இதற்கு மாறான விள்க்கங்களை வேதாந்திகளும் ஏகான்மவாதிகளும் அளிக்கிறார்கள். ஆன்மா இறைவன்தான் என்றும், அவனின் கூறு என்றும் கொண்டு தத்தமது கொள்கைகளை நிலைநாட்டு கிறார்கள்.
இவ்வாறு வேறுபட்ட விளக்கங்களுக்கு இட மளிக்கும் வேத மகாவாக்கியங்கள் போலன்றி, செல்லப்பாசுவாமிகளின் வார்த்தைகள் எளிமை պւb, தெளிவும் கொண்ட வாக்கியங்களாக இருப் பது சிந்தனைக்குரியது. ஆழ்ந்த அறிவோடு ஆராய்ந்து பார்க்கின், அவை சைவசித்தாந்தக் கருத்துக்களைப் பிரதிபலிப்பதையும் காண முடியும்.
முன்வினைப்பலன்
எமது இன்பதுன்ப அனுபவங்களுக்கு நாமே காரணம். முன் செய்த வினையின் பலனை இன்று அனுபவிக்கிறோம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பழமொழி. “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்பது சங்கத்தமிழரின் அனுபவ வாயிலாக வந்த வார்த்தை.
வாழ்வின் பல நிகழ்ச்சிகளுக்குக் காரணம் காண முடிவதில்லை. நல்லவன் துன்பமடைந்து நலிவதும், தீயவன் சுகபோக வாழ்வில் இன்பம் துய்ப்பதும் எதனால் என்று தெரிவதில்லை. இவற்றுக்கு விளக்கம் அளிப்பது சைவத்தின்
வினைக்கொள்கை.
இந்திய மதங்கள் அனைத்தும் வினை அல்லது கண்மத்தை நம்புகின்றன. தத்துவத்துறையில் வினை அதனால் வரும் பலன் ஆகிய இரண்டும் வினை அல்லது கன்மம் என்று கொள்ளப் படுகின்றன. ஒருவன் செய்யும் வினைக்குப் பலன் உண்டு. அந்தப் பலனைச் செய்தவனே அனுப வித்துத் தீர்க்க வேண்டுமென்பது இந்திய மதங் களின் வினைக் கொள்கையாக உள்ளது. ஆனால்
அவை தரும் விளக்கங்கள் வேறுபடுகின்றன.
வினைப்பலன் வினை செய்தவனைத் தானா
கவே சென்றடைந்து அனுபவத்திற்கு வரும்

என்று பெளத்தம், சமணம் போன்ற மதங்கள் நம்புகின்றன. பல பசுக்களின் கூட்டத்தில், ஓர் பசுக்கன்று தானாகச் சென்று தாய்ப்பசுவை இனங்கண்டு பாலருந்துகிறது. இது போன்றே வினைப்பலனும் தானாகச் சென்று அதனைச் செய்தவனை அடைந்து அனுபவத்திற்கு வரும், என்பது அவை தரும் உதாரண விளக்கம்.
சைவம் இந்த விளக்கத்தை ஏற்பதில்லை. பசுக்கன்று அறிவுள்ள ஒரு பிராணி. அதனால் அது தானாகச் சென்று தன் தாய்ப் பசுவைச்சேர முடிகிறது. வினை அல்லது கன்மம் அறிவற்ற ஒன்று. அதனால் அது தானாகச் சென்று செய்தவனைச் சேரமுடியாது. அதைச் சேர்ப் பதற்கு பேராற்றலும், பேரறிவும் கொண்ட ஒன்று தேவை. அதுவே இறைவன் என்று சைவம் கூறுகிறது.
வாழ்வியல் நிகழ்வுகள் பலவும் முன்செய்த வினையின் பலனாக வருகின்றன. எமது பிறப்பு. இறப்பு, பிணி போன்றவை முன்பே நிச்சயிக்கப் பட்டுவிட்டன. சிவஞானசித்தியார் என்னும் சித்தாந்த நூல் இது பற்றிப் பின்வருமாறு கூறுகிறது. "பேறு இழவு இன்பமொடு பிணி மூப்புச் சாக்காடு என்னும் ஆறும் முன்கருவுட் பட்டது; அவ்விதி அனுபவத்தால் ஏறிடும், முன்பு செய்த கண்மம் இங்கு இவற்றிற்கு ஏது; தேறுநீ; இனிச்செய் கன்மம் மேல் உடல் சேரும் என்றே"
வாழ்வியல் அனுபவங்கள் பலவும் பிறவி எடுக்க முன்னரே கருவுட் பட்டுக் கிடந்த வினைப் பலன்களே என்று சித்தியார் கூறுகிறது. இதன் சுருக்கமாக “எப்பவோ முடிந்த காரியம்” என்ற
மகாவாக்கியம் உள்ளது.
விதியும் முயற்சியும்
விதியை வெல்ல முடியாது, அதனை அனுப வித்தே தீர்க்கவேண்டுமென்பது பொதுவான நியதி. அந்த வினையை வகுத்து உயிருக்கு ஊட்டுபவன் இறைவனே. அவன் வகுத்த வகையிலேதானி அனைத்தும் நடக்கும் பின்வரும் திருக்குறள் இதனை விளக்குவது.
"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது"
46

Page 56
முன் செய்த வினையின் பலன் அனுபவத் திற்கு வரும்போது அது ஊழ் அல்லது விதி என்றழைக்கப்படுகிறது. விதியினர் படியே எல்லாம் நடக்கும் என்ற நியதி இருந்தாலும் விதியையும் வெல்லலாம் என்று கூறி வென்று காட்டியவர்கள் அருளாளர்கள். இறையருளால் நோய் தீர்த்தும், இடர்நீக்கியும் அற்புதங்கள்
செய்தவர்கள் சைவநாயன்மார்கள்
இரமணரிஷியின் முன்னிருந்து வணங்கி னாலே பலருக்கு நோய் பிணி நீங்குவதுண்டு. யோகசுவாமிகளின் அருட்பார்வையும் திருவார்த் தையும் பலரின் இன்னல்களை நீக்கியதுண்டு. குருவருளாலும் இறையருளாலும் விதியையும் வெல்லலாம் என்று காட்டியவர்கள் இவ்வருளா ளர்கள் ஆயினும், இவர்களும் வினைப்பலனை அனுபவித்தே தீர்க்க வேணர் டியிருந்தது. இரமண மகரிஷி தன் இறுதிக் காலத்தில் நோயினால் பீடிக்கப்பட்டார். யோகசுவாமி களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது.
எதுவுமே விதிப்படி நடக்கும், அது எப்பவோ முடிந்த காரியமென்றால் மனித முயற்சிக்கு இடமில்லை என்ற கேள்வி எழுகிறது. இட முண்டு என்பதே அருளாளரின் அனுபவத் திலிருந்தும் அறிவுரையிலிருந்தும் அறியக் கூடியது. “முயற்சி திருவினையாக்கும்” என்பது திருக்குறள். இதனைப் பின்வரும் உதாரணம் மூலம் விளக்கலாம்.
சீட்டாட்டத்தில் ஒருவனுக்கு குறிப்பிட்ட வகைச் சீட்டுகள் கிடைக்கின்றன. அவற்றை மாற்றியமைக்க அவனால் முடியாது. இது அவனின் விதி. ஆனால் கிடைத்த சீட்டுகளை வைத்து திறமையாக ஆடி வெற்றிபெற முடியும். இது அவனின் முயற்சியால் ஆவது. இங்கு மனித முயற்சிக்கு இடமுண்டு.
“எப்பவோ முடிந்த காரியம்” என்ற தொடர் யோகசுவாமிக்கு அவரின் குருவினால் சொல்லப் பட்டது. இதனைக் கருத்திற்கொண்டு எதுவும் செய்யாமல் சோம்பலடையும்படி அவர் சொல்ல வில்லை. மாறாக, யோக சுவாமியைப் பற்பல
முயற்சிகளில் ஈடுபடும்படி உணர்த்துகிறார்.

இதனை யோகசுவாமியே நற்சிந்தனையில் வரும் “எங்கள் குருநாதன்” என்ற பகுதியிலும், பிற இடங்களிலும் குறிப்பிடுகிறார். வாசி யோகம் தேர், காசி தேசம் போ, இருவழியை அடை, கருவழியைக் கட என்று பற்பல கூறி யோகசுவாமிகளை பலவித முயற்சிகளில் ஈடுபடத் தூண்டுகிறார். அவரும் தன்னை நாடியவருக்குப் பல அறிவுரைகள் கூறி, ஆண்மீக வளர்ச்சிக்கான முயற்சிகளைக் காட்டுகிறார். “எப்பவோ முடிந்த காரியம்” என்பது உண்மை தான். மனித முயற்சியும் இன்றியமையாதது. எம்மாலான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதில் “ஒரு பொல்லாப்புமில்லை”
நீ உடம்பன்று, ஆத்மா”
ஆன்ம வளர்ச்சியுற்றுப் பக்குவமடைந்த வருக்கு இறையருளால் குருவைக் காணும் பேறு கிடைக்கிறது. அருள் சுரக்கும் திருக்கோயில் களுக்குச் சென்று முறையாக வழிபடுவதால் ஆன்மீக வளர்ச்சியுண்டாகும். தாயுமானவரின் பின்வரும் பாடல் இதனைக் குறிப்பதாகவுள்ளது.
மூர்த்தி தலம்திர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர் வார்த்தை சொலச்சற்குருவும் வாய்க்கும் பராபரமே"
யோகசுவாமிக்கு செல்லப் பாசுவாமிகள் குருவாக வாய்க்கி றார். அவர் மூலம் நயனதிட்சை கிடைக்கிறது. ஆரடா நீ, தேரடா உள், தீரடா பற்று, பாரடா வெளியில், என்ற வார்த்தைகள் கட்டளை யாகச் சொல லப் படுகினர் றன. யோகருக்கு வாசக திட்சை கிடைக்கிறது. தீட்சை என்பது ஞானத்தைக் கொடுத்துப் பாசத்தைக் கெடுப்பது.
தான் யார் என்பதைத் தனது குரு தனக்கு அறிவித்ததாக யோகசுவாமிகள் கூறுகிறார். “என்னை எனக்கறிவித்தான் எங்கள் குரு
நாதன்” என்பது அவரின் திருவாக்கு.
“நான் யார்?’ என்ற கேள்வியை எழுப்பு வதையும், " அறிவுறுத்துவதையும் ஞானிகள் வாழ்வில் காணக்கூடியதாக இருக்கிறது. இரமணமகரிஷி
“நான் யார்” என்ற கேள்வியைத் தனக்குள்
‘உன்னையே நீ அறிவாய்” என்று
தானே எழுப்பி விடைகாண்கிறார். கண்டவிடை
47

Page 57
யும் வழியும் மெஞ்ஞானத்தைக் கூட்டி இறை அருளால் சேர்க்கின்றன. செல்லப்பா சுவாமி களின் தொடர்பால் யோகசுவாமிக்கும் இத்த கைய அருள் அனுபவம் கிடைக்கிறது. அவரின் பின்வரும் கூற்று இதனை உணர்த்துவதாக
உள்ளது.
நீ உடம்பன்று, மணமன்று, புத்தியன்று, சித்த மன்று, நீ ஆத்மா, ஆத்மா ஒருநாளும் அழியாது. இது மகரிகளுடைய அனுபவ சித்தாந்தம்"
இந்த உண்மை மகரிஷிகளின் அனுபவத்தில் காணக் கூடியது என்றே யோகசுவாமிகள் கூறுகிறார். இதனைத் தனது குரு தனக்கு அறிவித்ததாக அவர் கூறவில்லை. அப்படியா னால் “என்னை எனக்கு அறிவித்தான்” என்று
அவர் எதனைக் குறிப்பிடுகிறார்?
சிவோகம் பாவனை
யோகசுவாமிகள் பாரம்பரியம் மிக்க யாழ்ப்பாணத்துச் சைவமரபில் வந்தவர். அவரின் நற்சிந்தனைப் பாடல்களும் பிறவும் சைவத்தின் உயர்தத்துவக் கருத்துக்களைக் கொண்டுள்ளன. படிப்பவரைச் சைவஞானிகள் காட்டிய வழியில்
நெறிப்படுத்துவன அவை,
சாதனைக்கு மேலான இடமளிப்பவர் யோக சுவாமிகள். நாம் எதைப் பற்றிச் சிந்திக் கிறோமோ அதுவாகவே ஆதல்இயல்பு. இடை விடாத சிவசிந்தனை இறுதியில் சிவமாந் தன்மையைக் கூட்டுவிக்கும். ஆன்ம வளர்ச்சிப் படிகளில் சிவோகம் பாவனை முக்கிய இடம்பெறுவது. குருதனினைச் சிவமாகக் கொண்டு சீடனையும் சிவமாக அகத்தில் பாவனை செய்து தியானிக்கும்படி செய்வது குருநெறியில் இடம்பெறுவது. அகத்தில் சிவனாகத் தன்னைப் பாவனை செய்து ஆன்மீக வளர்ச்சிபெறும் சாதனையை யோகசுவாமிகளும் குறிப்பிடுகிறார்.
'சீவன் சிவன் என்றான் எங்கள் குருநாதன்'
'சீவன் சிவனெனல் தேறினார்க்குண்டு
சிவனருளைப் பெறுவதற்கு இத்தகைய பாவனை தேவைப்படுகிறது. இது பாவனையே யன்றி சிவனே சிவன் என்பதல்ல. சிவன் வேறு,

ஆன்மா வேறு, ஆயினும் ஆண்மாவில் அவன் ஒன்றாய் இருக்கிறான், உடனாய் இருக்கிறான். இங்ங்ணம் வேறாய், ஒன்றாய், உடனாய் இருக்கும் உறவு சைவம் கூறும் அத்துவித உறவு, இரண்டற்ற நிலை. இதனை விளக்குவதாக
யோகசுவாமிகளின் பின்வரும் கூற்று உள்ளது.
'சிவபெருமான் அத்துவிதமாக இருக்கிறார். அடியேன் அவரே எனத் தியானிக்கும் மகிமை எனக் குண்டு. ஒருவன் எப்படிப் T66)6. செய்கிறானோ அவன் அப்படி'ஆகிறான். ஆகையால் நான் அவனே என்று தியானம் செய். அப்போது உன் செய்கைகள் அனைத்தும் அவன் செய்கையாகும்."
இங்ங்னம் பாவனை செய்து சிவனருள் பெற்று உயர்ந்தவர் யோகசுவாமிகள். தன்னுடன் பிரியா திருக்கும் இறைவனை எண்ணி, “அத்துவிதப் பொருள் காப்பாம்” எனப் பாடுகிறார். (துவிதம் - இரண்டு, அத்துவிதம் - இரண்டற்றது)
குரு உணர்த்திய நெறி
அத்துவிதப் பொருளாகச் சிவனைப் போற்றும் யோகசுவாமிகளின் “என்னை எனக்கறிவித் தான் எங்கள் குருநாதன்” என்ற அடி பொருள் பொதி நீ த திருவார் தீ  ைத . இதனை விளங்குவதற்கு சிவஞானபோதம் என்னும் சைவசித்தாந்த நூல் துணைபுரிகிறது.
அரசகுமாரன் ஒருவன், தான் அரச குடும்பத் தைச் சேர்ந்தவன் என்பதை அறியாமல், வேடர் குலத்தில் வேடரில் ஒருவனாக வளர்ந்து வாழ்கிறான். அவனுக்கு தக்க வயது வந்ததும், ஒருவர் வந்து அவன் அரசகுடும்பத்தைச் சேர்ந்தவன், வேடர் குலத்தில் வாழ்வது அவன் இயல்பு அல்ல என்று உணர்த்துகிறார். உண்மையை உணர்ந்த அரசகுமரன் வேடர் கூட்டத்தை விட்டு நீக்கி அரச குலத்தில் சென்று சேர்கிறான்.
இது போன்று ஐம்புலன்கள் என்ற வேடரோடு கூடி ஆன்மா இருக்கின்றது. புலன்கள் சென்ற வழியில் சென்று அலைகிறது. பக்குவம் வந்தபொழுது குருவாக ஒருவர் வந்து, ஆன்மாவின் இயல்பு ஐம்புலன்களோடு வளர்வதல்ல, இறைவனைச் சேர்ந்திருத்தலே, எனிறு
48

Page 58
உணர்த்துகிறார். அப்பொழுது அந்த ஆன்மா ஐம்புலன்களை விட்டு நீங்குகிறது. இறைவன் தனக்கு அன்னியமில்லாதவன் என்ற உண்மையை உணர்கிறது. இந்த உணர்வு மேலோங்க, அது இறையருளை நோக்கிச் செல்கிறது. இதனை விளக்கும் சிவஞானபோதச் சூத்திரம் வருமாறு,
'ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு அன்னியம் இன்மையின் அரன் கழல் செலுமே"
இறைவனே குருவின் மூலம் உணர்த்து கிறானர். அவனர் தானே நேரில் வந்து அருளுதலும் உண்டு. மணிவாசகருக்கு அவன் குருவாகி வந்து உபதேசம் செய்ததாக அவர் கூறுகிறார். “அருபரத்தொருவன் அவனியில் வந்து குருவடிவாகி அருளிய பெருமையை” எண்ணி மனமுருகுகிறார். அவனை “வாழ்முதல்” என்று குறிப்பிட்டு, “போற்றி என் வாழ்முதலாகிய பொருளே’ என்று பாடிப் பரவுகிறார்.
மெய்கணர் டார் தனது சிவஞானபோதம் நூலில் “தம்முதல்” என்று குறிப்பிடுகின்றார்.
/
நாங்கள் சிவனடியார், நாங்கள் சி
சிவனடியார். இது சரியை, இது கிரி
மந்திரம், இதுதந்திரம், இது மருந்து.
இந்தத் தரியானத் தரில திட்டையுடையோர்க்குச் சீலமில 6 ஆச்சிரமச்செயலில்லை.
இவர்கள்தாம் விரும்பிய வ வாழுகிறார்கள். வாழ்வார்கள். இவர் இனிமை கற்கண்டை உமிபவர்க்கே தெரிய
ஒரு பொல்லாப்பும் மில்லை
எப்பவோ முடிந்தகாரியம்
(5Ու0յծlGաnլb
முழுதும் உண்மை.

உயிர்களுக்கு முதலாக இருப்பவன் அவன். “தம்முதல் குருவுமாய்” வந்து அருளும் என்பது சிவஞானபோதம் கூறும் சித்தாந்த உண்மை, குருவின் வார்த்தை இறைவார்த்தை. தனதுரை அவனுரையாக வந்ததென்று ஞானசம்பந்தப் பெருமான் கூறுகிறார். குருவின் ஆளுமையும் திருவார்த்தையும் மெஞ்ஞானத் தெளிவைத் தரும். குருவை நினைப்பதும் அவரின் பெயரை உச்சரிப்பதும் கூடத் தெளிவைத் தருமெனத் திருமந்திரம் கூறுகிறது.
'தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
குருவந்து மெஞ்ஞானத் தெளிவைத் தருவதும் முன்செய்த தவப்பயனால் வருவது என்பதும் சிவஞானபோதக் கருத்தாக உள்ளது. சிவயோக சுவாமிக்கு செல்லப்பாசுவாமி குருநாதனாக வந்து மெஞ்ஞானத் தெளிவை உண்டாக்கியது. அவர் முன்செய்த தவத்தினால் வந்ததே. அது எப்பவோ முடிந்த காரியம்.
வனடியார், நாங்கள் சிவனடியார், காங்கள் யை, இது யோகம், இது ஞானம், இது
Eலைத்தலே நரிட் டை, இந்த லை, தவமில்லை, விரதமில்லை,
ண்ணம் மண்ணில் வாழ்ந்தார்கள். பெருமை யாவருமறியார். கற்கண்டின் յլն.
நற்சிந்தனை
49

Page 59
ஏன் பிற
அறிவியல் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வரும் இந்நாளில், எதனையும் என்ன? ஏன்? எதற்கு? எப்படி? என்றெல்லாம் வினாக்களைத் தொடுப் பதன் மூலம் உண்மைப் பயனை அறிவதில் ஆர்வம் காட்டுவது இன்றைய தலைமுறையின் வழக்கமாகிவிட்டது.
இம்மானிலத்திலுள்ள உயிரினங்களுள் மனிதன் மட்டும் சிந்தனை செய்யும் ஓர் உயிரினமாய் விளங்குகின்றான். இதனை மேற் குலத் தத்துவஞானியாகிய அரிஸ்ரோர்ரல் Man is a thinking animal எனக் கூறியுள்ளமை கவனிக்கத்தக்கது.
இக்கருத்தைப் பண்டைத் தமிழ் நூலான தொல்காப்பியமும்
மாவும் மாக்களும் ஐயறி வினவே
மக்கள் தாமே ஆறறிவுயிரே
எனக் குறிப்பிட்டுள்ளது. உயிரினங்கள் எல்லாம் ஓரறிவு முதல் ஐயறிவுடையனவாய் இருக்க, மனிதன் மட்டும் அவற்றுக்குப் புறம்பாய் ஒழுகு வதால், அவன் பகுத்தறிவு என்ற ஓர் அறிவைப் பெற்று ஆறறிவுபெற்ற உயிராமாய் விளங்கு கிறான் என்பது தொல்லாசிரியரின் கருத்தாகும்.
அந்த வகையிலே கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போய்விட, உணர்வு பூர்வமான
சிந்தனைகளை மனிதன் பழகுவது நன்றாகும்.
நாள் முழுவதும் உட்லக இன்பங்களில் உழல்வதும், பேரும் புகழும் தேடி ஓயாது ஓடித் திரிவதும் உயிர் வாழ்வுக்கு நற்பயன் அளிக்காது.
நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மை கடை
என்பது வள்ளுவர் வாக்கு. மேலான வீட்டு
நெறியை அடைவதற்கு உயிர்களிடம் அருள்

s(5Irib?
østøj. Øøn, Aupertu0
இணுவில். உடையவராய் இருத்தல் அவசியமாகும். அது போல் இவ்வுலக வாழ்க்கைக்குப் பொருள் வேண்டப்படுகின்றதென்பது உண்மையாகும். ஆயினும், பொருளிட்டுவதுதான் வாழ்வின் முக்கிய குறி க்கோளாக இருக்கக் கூடாது.
ஒரு பொழுதும் வாழ்வது அறியாத மனிதன், தான் செய்ய வேண்டிய பிற விடயங்களிலும்
கண்ணோட்டம் செலுத்த வேண்டும்.
துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக் கால் தொட்டு பகடுநடந்த கூழ் பல்லாரொடு உண்க என நாலடியார் நவில்கின்றது.
அற வழியில் தேடிய செல்வத்தை நல்லன செய்து நாடும் நாமும் நலம் பெற நல்வழியிற் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில்
LLLLLSLLLLLLLLLLLLLLCLL0LLLLSLLLLLLLLLLLLLLLLLLLL
LLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLL0LLLLLLLLLLL
என்ற தத்துவச் சிந்தனைகளை மனதில் மீட்டிப் பார்த்தல் மிகவும் பொருத்தமாகும்.
ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றித் தானே சிந்திப்பதால் பல நன்மைகள் உண்டு. பகைவர் சிலர், நணர் பர் வேடத்தில தேடிவந்து வேண்டாதவற்றைச் செய்து ஒருவரின் உள்ளத்தை மாசுபடுத்துவதுடன் அவரைத் தீநெறியிற் புகச் செய்வதும் உண்டு. எனவே தீநெறி சேராமல் "செயற்கரிய செய் வார் பெரியர்” என்ற செம்மொழியை மனதிற் கொண்டு நல்லவை நாடி இனியவை செய்தல் வேண்டும்.
உலகிற் பிறந்த உயிர்கள் அனைத்தும் பெயரும் புகழும் செல்வமும் தேடுவதே வாழ்வின் குறிக்கோள் என மனதிற் பதித்து, அதன்படி
50

Page 60
புராணங்கள் கூறும் செயல்கள
வேதங்களை அடுத்து முக்கியத்துவம் பெறுபவை புராணங்களே எனில் மிகையில்லை. இந்துசமயம் பற்றிய விளக்கத்திற்கு துணை புரியும் சமய இலக்கிய வரிசையில் பதிணெண் புராணங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவை இந்துசமய மரபு, வழிபாட்டு முறைகள், தெய்வ இயல், விரதமகிமை, தீர்த்தமகிமை முதலிய விடயங்களை உள்ளடக்கி பக்தி நெறியினை வழப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. எது தொன்றுதொட்டு இன்று வரைக்கும் பரவி இருக்கின்றதோ அதுவே புராணம் என வாயுபுராணம் கூறுகின்றது. எனவே புராணம் என்ற சொல் தொன்மையான கதை மரபு என்ற பொருளைக் கொண்டு சமயம் தத்துவம் சார்ந்த விளக்கங்களைத் தருகின்ற முக்கியமான இலக்கியமாகும். வேதகாலத்தில் உருவநாமம் இல்லாத இறைவனை பெயரிட்டு
வாழ முறி படுகினி றனர். அவி வாறான மனநிலையுடையோர்.
“நமக்கு இந்தச் சரீரம் கிடைத்தது, இறைவனை வணங்கி, முத்தி இன்பம் பெறுதற் பொருட்டே
uuTub”
என நல்லை நகர் நாவலர் பெருமான் சொல்லிய நல்லுரையை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
"“பெறுதற்கரிய மனிதப்பிறவியை அங்கப் பிழை இன்றிப் பெற்ற நாம், எமது உறுப்புகளை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே

சிவனின் அட்டவீரச் ரின் சிறப்பு
ħJibuD FLAT
அழைக்கப்பட்டு வந்தாலும் உருவ நாமம் இறைவனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு வளர்ச்சிக் கால கட்டத்தினை அடைந்த காலப்பகுதி புராணங்களின் எழுச்சிக் காலமாகும். இறை வனுக்கு பெயரிட்டு அழைத்து நாம் வழிபட வேண்டிய பல பெயர்களை அறிமுகம் செய்தமை யும் பல திருவுருவங்களை கற்பித்தும், விக்கிரகங் களை ஸ்தாபித்தும்,வழிபடுவதற்கு வழிகோலி யும் சமயம், தத்துவம் தொடர்பான அடிப்படை அறி வுகளையும் இவை விரித்து தருகின்றன. ஆகை யால் புராணங்கள் இன்றியமையாது
வேண்டப்படும் இலக்கியமாகும்.
பஞ்ச இலட்சணங்கள் தழுவி எழுந்த பதினெண் புராணங்களில் சிவன், பிரமன், சூரியன், விஷ்ணு, அக்கினி முதலிய தெய்வங் களைப் பற்றிக் கொண்டிருந்தாலும்.சிவனுக்கே
என்று நல்லூரை கூறுகின்றார் நாவுக்கரசர்.
உடல் வலுவும் போதிய நேரமும் இருந்த காலத்தில் பிறவிடயங்களிற் பொழுதைக் கழித்துவிட்டு, இறுதிக் காலத்தில் இறை இன்பம் காணத் துடிப்பது அறிவீனம். எனவே காலம் கனிந்த வேளையில் கடவுளைக் காண முயலுதல் சிறப்பாகும்.
காலமுண்டாகவே காதல் செய் துய்மின் கருதரிய ஞாலமுண் டானோடு நான்முகன் வானவர் நண்ணரிய
மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து முந்துமினே.
என்ற மணிவாசகரின் மணிமொழியை மனதிற் கொண்டு உய்நெறி காண்போமாக.
S1

Page 61
அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. இதில் பத்துப் புராணங்கள் சிவனைப்பற்றியதாகும். இப்பத்துப் புராணங்களில் சிவனின் தெய்வீக" அம்சங்களான இறைவனின் திருமுகம், சடை, நெற்றிக்கணி, கரங்கள் போன்ற அழகிய தோற்றங்களும் பாம்பு, உடை, ஆபரணம், ஆயுதம் மற்றும் பஞ்ச பூதம், ஐம்புலன், எணர் குணம், அட்டமூர்த்தி, அட்டவீரட்டச் செயல்கள், ஐந்தொழில், நூற்றெட்டு கரணம், இருபத்தைந்து மூர்த்தம், அறுபத்துநான்கு திருவிளையாடல்கள், அர்த்தநாரீஸ்வர வடிவம், உக்கிர சாந்த தோற்றங்கள் போன்ற இன் னேரன்ன அம்சங்களும் கதைகளாக கூறப்பட்டுள் ளன. இவ்வாறு புராணங்களில் கூறப்படும் சிவனின் தெய்வீக அம்சங்களில் சிறப்புப்பெறும் அட்டவீரச் செயல்களின் சிறப்பினை நோக்கு வோம்.
வீரம் , ஸ்தானம் என்னும் சொற்கள் சேர்ந்து விரட் டானம் எனப் படுகினி றது. சிவ பெருமானின் வீரச் செயல்கள் எட்டு இடங்களில் நிகழ்ந்தது. இதனால் இவ்வெட்டு இடங்களையும் சேர்த்து அட்டவீரட்டானம் என தொகுத்து வழங்கப்படுகின்றது. இச்சொல் திருஞான சம்பந்தர் காலத்திலேயே வழக்கில் இருந் துள்ளது. இதனை அவர் பாடல் மூலமே அறிய முடிகின்றது. “அட்டானம் என்று ஓதிய நூலிரண்டும்” என்பர் அவர். இறைவனை அடைவதென்றால் “நான்” என்ற ஆணவம் நீங்கி அடக்கமாக அவன் அருளைப் பெறுவதே இக்கதைகளின் நோக்கமாகும். ஆணவத்தை அடக்கி தூய்மை அடைந்த பின்னரே அவ்வான் மாவில் இறைவனின் அருட்சக்தி படிகின்றது. இந்த எட்டு வீரச் செயல்களிலும் அவர்களது ஆணவம் இறைவனால் அடக்கப்பட்டு அவர்கள் தூய்மையாக்கப்பட்ட பின்னரே அருள் வழங்கப் படுகின்றது. இந்த வகையில் இவ்வீரச் செயல் களில் தத்துவம் முக்கியத்துவப்படுகின்றது.
இவ்வாறு சிறப்புப்பெறும் அட்ட வீரச் செயல்கள் புராணங்களில் தலை சிறந்ததாக காணப்படுகின்றது. இவ் அட்ட வீரச் செயல் களையும் அவை நடைபெற்ற இடங்களையும் நோக்கும் போது பிரமனின் தலை கொய்த

இடமாக திருக்கண்டியூரும் , அந்தகாசூரனை அழித்த இடமாக திருக்கோவிலூரும், திரிபுரங் களை எரித்த இடமாக திருவதிகையும், தக்கன் செருக்கை அடக்கிய இடமாக திருப்பறியலூரும், சலந்திரனைத் தண்டித்த இடமாக திருவிற் குடியும், கஜாசுரன் தோல் உரித்த இடமாக திரு வளுவூரும், காமனை எரித்த இடமாக திருக் குறுக்கையும், யமனை உதைத்த இடமாக திருக் கடவூரையும் காணமுடிகின்றது. இவ் அட்ட வீரச் செயல்களும் அவை நடைபெற்ற இடங்களையும் பற்றி ஒவ்வொரு புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன. அந்தவகையில்,
பிரம்மனின் தலை கொய்தமை பற்றி கூர்ம
புராணமும், அந்தகாசூரனை அழித்தமை பற்றி மச்சய
புராணமும், திரிபுரங்களை எரித்தமை பற்றி பாகவத
புராணமும், தக் கண் செருக்கடக்கியமை பற்றி கூர் ம
புராணமும் சலந்திரனைத் தண்டித்தமை பற்றி லிங்க
புராணமும், கஜாசுரனின் தோல் உரித்தமை பற்றி கூர்ம
புராணமும்,
காமனை எரித்தமை பற்றி வாமன புராணமும்,
யமனை உதைத்தமை பற்றி கூர்மபுராணமும்,
எடுத்துக் கூறுவதைக் காணலாம். புராணங்கள் கூறும் அட்ட வீரச் செயல்களில் பிரம்மனின் தலை கொய்தமை பற்றி நோக்கும் போது பிம்மனும் திருமாலும் மேருமலையில் இருக்கும் போது மும்மூர்த்திகளிலும் முதன்மையானவரும் அனாதியானவருமான கடவுள் யார் என்ற வினா விற்கு விடை காணும் பொருட்டு பிரம்மனும் திருமாலும் தாமே பரம்பொருள் என்று கூறினர். சிவபிரான் சோதிவடிவில் தோன்றியதால் திருமால் அகந்தை நீங்கினார். பிரமணி வணங்காது இகழ்ந்துரைத்தார். சிவபெருமான் வைரவக் கடவுளை உண்டாக்கி பிரமனின் உச்சித் தலையைக் கிள்ளி எறிந்தார். இவ்நிகழ்வு தஞ்சாவூர் மாவட்டம் திருக்கணி டியூருடன் தொடர்புபடுகின்றது. இங்கு பிரமாவிற்கு தனிக்கோயிலுண்டு. இவ்விறைவனுக்குப் பெயர்
52

Page 62
வீரட்டேஸ்வரர். இந்நிகழ்வின் சிறப்பு சம்பந்தர் தேவாரத்தில் பிரதிபலிக் கின்றது. பிரமனின் சிரத்தை அறுத்ததை கூறும் போது பிரமனின் தலையே சிவனுக்கு பிச்சை யோடாக பயன்பட்டது என்பதனை “அலர்மிசை அந்தணன் உச்சிக்களை தலையில் பலிகொள்ளும் கருத்தனே' என சம்பந்தரது பாடல் மூலம் அறிய முடிகின்றது.
அடுத்து சிவபெருமானின் வீரச்செய் லாக அந்தகாசுரனை அழித்த செயல் சிறப்புப் பெறுகின்றது. இரணியாட்சகன் மகன் அந்த காசுரன் சிவபிரானை வழிபட்டு வரம்பெற்று திருமால் முதலிய தேவர்களைப் புறம் கண்டு உலகை ஆண்டு வந்தான். தேவர்கள் அவனுக்குப் பயந்து இறைவியின் கணங்களோடு பெண் வடிவில் கைலையில் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் சிவபெருமான் தாரகாவன முனி வர்களைச் சோதிக்கச் சென்றதை அறிந்த அசுரன், கைலைக்குப் போருக்கு புறப்பட்டான். இறை வியினர் திருவருளால அந்தகனர் தோற்றான். சிவபிரான் கைலையை மீண்டு, பெண்களை சிறைபிடிக்க எண்ணிய அசுரனை வைரவக் கடவுள் மூலம் சூலத்தில் கோர்த்து நடனம் புரிந்தார். அந்தகாசுரன் அறிவு பெற்று சிவனை துதிக்க வைரவமூர்த்தி மகிழ்ந்து அவனுக்கு அருள் புரிந்து பாசத்தை நீக்கினார்.
இவ்வீரச் செயல் தென்னாற்காடு மாவட்டம் திருக்கோவலுர் வீரட்டத்துடன் தொடர்புபடுகின்றது. இவ்விறைவனின் திரு நாமம் வீரட்டநாதர். இத்தலத்தினர் சிறப்பினை சம்பந்தரும் நாவுக்கரசரும் தமது பதிகங்களில் பாடியுள்ளனர்.
இதனையடுத்து சிவன் முப்புரங்களை எரித்தமையினை நோக்கும் போது , திருவதிகை வீரட்டம் தொடர்புபெறுகின்றது. இங்கு திரிபுரம் எரித்த காலை இறைவன் வில் ஏந்திய திருக் கோலத்தோடு வீற்றிருந்த தலம் விற்கோலம் என்பர். அது இன்று கூவம் எனப்படுகின்து. இறைவி இறைவன் பெயர் திரிபுராந்தநாயகி, திரிபுராந்தகர். திரிபுரத்தை எரித்த கதை புற நாநூறு (செய்யுள்-55), கலித்தொகை (செய்யுள்12), சிலப்பதிகாரம் (6,40-44) இவற்றில் இடம்

பெறுகின்றது. பொன், வெள்ளி, இரும்பு எனும் மூன்று உலோகங்களாலான பூமி, அந்தரம், சுவர்க்கம் என்ற மூன்று கோட்டைகளையும், சிவன் தேரில் ஏறி வில்லை வளைத்து திரிபுரத்தவர்களை அழிக்க அவர்களை நோக்கி ஒரு புன்சிரிப்பை உதிர்க்கத் திரிபுரங்கள் வெந்து சாம்பல் ஆயின. இச் செய்தியின் சிறப்பினை சம்பந்தர்
“அசுரர் மொய்த்த முப்புரம்” எனவும் “திரி தருபுரம்” எனவும் “கடி அரண் மூன்று” எனவும் “இமையோர் தொழ முப்புரம் தீ எரித்த சிவலோகன்” எனவும் பாடல்களில் காணலாம்.
மேலும் இச் செய்தியின் சிறப்பினை நாவுக்கரசர் தேவாரத்தில் -
“நிரப்பர் புரமூன்றும் நிறுசெய்பவர் எனவும் “இயங்கும் திரிபுரங்களோரம்பினால்
அழித்திடுமே” எனவும்
“குனித்த சிலையால், புரமும் எரித்த” எனவும் காணப்படுகின்றது.
தக்கனின் செருக்கை அடக்கிய இடமாக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருப்பற்றியலூர் வீரட்டம் தொடர்புறுகிறது. தக்கன் சிவனை மதிக்காது செய்த யாகத்தை அழிக்க வீரபத்திரக் கடவுளாகவும் உமாதேவியார் பத்திரகாளியாக வும் தோன்றி யாகத்தை அழித்தனர். இக்கருத் துக்கள் தேவாரங்களில் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் அப்பரின் பாடல்களில்,
“பண்டமரர் கொண்டுகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்துத் தலையறுத்துப் பற் கொண்ட
கண்டகனை” என்பதிலும்
“விறலங்கி வில்லாத்தக்கன் தன் வேள்வி எல்லாம் அச்சமெழு” என்பதிலும் அறியலாம்.
சிவனின் வீரச் செயல்களில் அடுத்து சலந்தராசுரன் தவம் இருந்து பல வரங்கள் பெற்று தேவர்களை துன்புறுத்திய காரணத்தினால் சிவன் பூமியில் வட்டமாக கோடு கிழித்து அதை பெயர்த்தெடுக்கும்படி அசுரனிடம் கூற அவன் அவ்வாறே செய்து தலையில் வைக்க அது சக்கரமாகி அவன் உடலை கிழித்தழித்தது. இச்
53

Page 63
செயல் தஞ்சாவூர் மாவட்ட திருவிற்குடி என்ற இடத்துடன் தொடர்புறுகின்றது. இதனைச் சம்பந்தர்
“சலந்தரன் வீய தழல் உமிழ் சக்கரம் படைத்த எம்பெருமானார்”
என்று கூறுகின்றார்.
கயாசுரன் மேருமலையில் யானை வடிவம் கொண்டு பிரமனை நோக்கி தவஞ் செய்து சாகாவரம் பெற்றான். எல்லா உலகையும் வென்று காசியில் உள்ள முனிவரை துரத்திச் செல்லும் போது அவர்கள் மணிகர்ணிக்கை என்னும் ஆலயத்தில் விசுவேசரை வணங்க, அவர் உக்கிர வடிவம் கொண்டு திருவடிகளால் மிதித்து திருக்கரங்களால் அவனுடைய தோலை உரித்துப் போர்த்தமை வீரச் செயலில் இடம் பெறுகின்றது. சிவனின் இவ் வீரச் செயல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வழுவூருடன் தொடர்புடையது. இதனை
“கரியுரித்த காபாலி” எனவும் “யானை தன்னை கரம் எடுத்து தோல் உரித்த காரணம் ஆவதென்ன” எனும் பாடல்கள் சிறப்பிக் கின்றன.
இதனை அடுத்து காமனை எரித்த இடமாக தஞ்சாவூர் திருக் குறுக் கை வீரட் டம் தொடர்புபடுகின்றது. இத்தலத்திற்கு காமதகன புரம் என்ற பெயரும் உண்டு. சிவ புத்திரனின் தோற்றத்திற்காக சிவன் மீதில் காமன் மலரம் புகளை ஏவும் போது சிவன் கண் திறப்புடன் எரிந்து சாம்பலானான். ரதியின் வேண்டு கோளின்படி, மன்மதன் ஏனையோருக்கு அருவ மாயும் அவளுக்கு உருவமாகவும் இருக்க சிவன் அருள் புரிந்தார். இதனை சம்பந்தர்
“கடியதோர் விடையர் போலும் காமனை
காய்வர் போலும்" எனவும் * கரும்புவில் தனிக்கொடும் பூண்காமற்
காய்ந்த” எனவும்
“மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த” எனவும் பாடியதன் மூலமும் சிறப்பு பெறு கின்றது.

காலனை மாய்த்தது பற்றி புராணங்கள் கூறும்போது, பதினாறு வயதினை அடைந்த தம் பிள்ளை இறந்துவிடுவான் என கவலையுற்ற பெற்றோரைத்தேற்றி சிவனை நோக்கி தவம் புரிந்தார் மார்க்கண்டேயர். அவர் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பாசக்கயிற்றால் கால னை இழுத்து உதைத்து மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு வயதுடைய நிலையளித்தார். இவ்வீரச் செயல் திருக்கடவூர் வீரட்டானத்துடன் இணைகின்றது. இதனை
“கடைந்த நஞ்சுண்பர் போலும் காலனைக்
காய்வர் போலும்” எனவும்
“காலனை நன்மாலை கொண்டு வழிபாடு
செய்யும்” எனவும்
“காலனை வீடு செய்த கழல் போலும்
அண்டர்’ என சம்பந்தர் தேவாரங்களில் காணமுடி கின்றது.
இவ்வாறாக அட்டவீரட்டத்தானம் எனப்படும் இறைவனின் எட்டு வீரச்செயல்களும் முக்கியத் துவம் பெறுகின்றன. இவ் வீரச் செயல்களின் சிறப்பினைத் தேவாரங்களிலும் காண முடிகின்றது. இவ்வீரச்செயல்கள் எட்டும் வெவ் வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறானவர்களுக் காக இறைவனால் நடாத்தப்பட்ட போதும் ஒரு முக்கிய உண்மையின் அடிப்படையில் அவை ஒன்றுபடுகின்றன. சிவபிரான் வரம்பில்லா ஆற்றல் படைத்தவராகையால் தேவர்களோ அசுரர்களோ உள்ள சர்வ ஆற்றலும் முன்நிற்க முடியாது. இதை உணராது, இறைவனை எதிர்த்தவர் அனைவரும் அழிவர் என்றும், பிழை உணர்ந்து பணிபவர் இறைவனின் அருளைப் பெறுவர் என்றுயும் இவ் அட்ட வீரட்ட புராணக் கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே மேற்கூறப்பட்டவாறு நாம் தொகுத்து நோக்கும் போது புராணங்கள் கூறும் சிவனின் அட்ட வீரட் ட செயலிகளையும் அவறி நரி னி சிறப்பினையும் நோக்க முடிகின்றது.
54 کی۔ــــــــــــــ

Page 64
சிவதொண்டன் நிலைய
தங்கப்பொம்மை போ:
ằ எழுந்தருளியிருக்கும்
 
 

용]}ị|重長1夏를實1『**를直1『*클星1**를|
சுவாமிகளின் திருவுருவம்
'ப் புராணமண்டபத்தில்
ல இருப்பேன்’
III

Page 65
சுபானு வருடம் பங்குனி
ஐம்பது ஆண்டு ஆண்டகை
செந்தண்மை 45fñTL— சிவயோகச் செல்வரின், சிந்தையிற் பூத்த சிவதொண்டன் என்பவன், பவப் பிணிபோக்கிப் பரமசுகம் அளிப்பதற்காய், யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணையில் வந்து அவதரித்தனணி சிவயோகத் தந்தையும் சீரடியாரும் கண் மணி போலக் கவனமாகப் பேணி வளர்த்தனர். அவனும் தளர்ச்சி என்பது தான் சிறிதுமறியாது, தாளமேளம் ஏதுமில்லாது ஐம்பது வயது ஆண்டகையாயினன். அவனை
"வாழ்க சிவனடி வாழ்க சிவனடி வாழ்க சிவதொண்டன் பல்வினை போக்கி நல்லருளாக்கிப் பல்குக சிவதொண்டன் பாழ்செய் மாயா காரியமகலப் பணிசெய் சிவதொண்டன் பக்தர்களெல்லாம் பாட ஆடப் பணி செய் சிவதொண்டன் ஊழ்வினைபோக உள்ளொளி ஓங்க உயர்க சிவதொண்டன் உண்மை முழுதும் என்றுரைசெய்யும் ஒருவன் கழல் வாழ்க"
என வாழ்த் தி அவனது சென்றகாலப்
பழுதிலாத் திறத்தையும், இனி எதிர்காலச் சிறப்பையும் சிந்தை செய்தல் சிவதொண்டர்
A: LGATTh,
அ) பத்தாண்டு காலப் பரிபாலனம்
1. சிவதொண்டன் நிலையத் தோற்றம்
 

சிவதொண்டன் நிலையம் நந்தன வருடத்து (1953) நவம்பர் மாதத்தில் திறப்புவிழாக் கனர் டது. யாழ் வணி னார் பணி னையில காங்கேசன் துறை வீதியில் இருந்த 434ஆம் இலக்க இல்லமே சிவதொண்டன் நிலையமாகப் பரிணமித்து நின்றது. அவ்வில்லத்தின் ஓர் அறை சிவபூசை செய்யும் அறையாக இருந்தது. சிறிது காலத்திற்கு முன்னர் அவ்வில்லத்தின் முன் ஒரு தணிணிர்த் தொட்டி இருந்தது. அத்தொட்டியிலே பசுக்கள் நீர் பருகித் தாகம் தணிந்து சென்றன. இந்தச் சிவபூசை நேசம், பசு ஒம்பும் தருமம் ஆகியனவே அச்சாமானிய இல் லத்தைத் திருவருள் சிவதொனர் டனர் நிலையமாகத் தேர்ந்து கொணர் டதற்கான சீர்மைகள் போலும். ஈராண்டு காலம்வரை இவ்வில்லமொன்றே சிவதொண்டன் நிலைய மாய் இலங்கியது. இவ்வில்லம் பெருகிவரும் அடியார்களுக்குப் போதாதிருந்தது. திருவ ளானது 1955ம் ஆண்டு ஐப்பசித் திங்களில் இவ் வில்லத்தின் வடபக்கத்திலிருந்த இல்லத்தையும் இணைத்து வைத்தது. இவ்விரு இல்லங்களையும் வேண்டிய வண்ணம் திருத்தியும் புதுக்கியும் உருவாக்கியதே இனி நு நாம் காணும் சிவதொண்டன் நிலையப் பெருங் கோயிலாகும்.
2. கோயில் அமைப்பு
சிவதொனி டனர் நிலையக் கோயிலின் தலையாய அங்கம் தியான மண்டபம் ஆகும். தியான மனண்டபத்திலே தொடக்கத்தில் ஒரு திருநீற்றுவாளியே பூசனைக்குரிய புனித வஸ்துவாக இருந்தது. பின்னர் திருவடி பிரதிட்டை செய்யப் பட்டது. சிவயோக சுவாமி கொழும்புத்துறை ஆச்சிரமத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்ததும் திருவடி வழிபாடேயாம். நிராதாரமாயிருக்கும் நாதாந்த மோனமே திருவடி, அதுவே மூலஸ்தானம் என்பதைக் குறிக்கத் தலைத்தலம் என்ற ஓர் நவமொழியையும் சுவாமி கையாண்டார். அது திருவருளாகும், அந்த வகையில் திருவடி தையல்நாயகித் தாயுமானது. அது யானென தற்ற இடமெனவும் ஞானியர் கூறினர். "தன்னைத் தன்னாலறிந்து தானே தானாயிருக்கும் சிவானந்த அனுபூதி திருவடி" எனவும் தக்கோர் புகழ்ந்துரைத்துள்ளனர், பரமாசாரியராக வந்து மணிவாசக சுவாமிகளைத் தீக்கைவைத்தாண்ட
56

Page 66
表
AWA
அடியவர்மனத்தை நீங்கா அப்பனே வடிவுடை மழுமானேந்தும் வள்ள6ே
ஆக்கையே கோயிலாக வகஞ்சிவ ! நீக்கமற்றெங்கும்நிற்கும் நிமலனே
இணையடிபணிவார்தம்மையின்ப
துணைவனே சோதிவெற்பேதுயனே
ஈசனே யெம்மைநீங்கா இறைவனே வாசமார் கமலபாதா வள்ளலே நமச்8
உள்குவாருள்ளத்தெல்லாம் உடனி கள்ளுலாங் குழலாள்பாகா கடவுளே
ஊமைபோலிருந்தேயுண்மையுணரு தாயைப்போலருளைச்செய்யுஞ் சங்
எண்ணுவா ரெண்ணந்தோன்றுமிடே திண்ணமாய்ச் சொல்லும்நல்ல தெய்
ஏகம்பமேவியந்த ஏந்திழை கலக்க ஏகனேயெல்லாம்வல்ல எந்தையேந
ஐயந்திர்த்தடியேன்றன்னையன்றுந துய்யனே துரியவெற்பே சுந்தராநமச்
ஒன்பதுவாய்த்தோற்பைதன்னில் உ அன்புசெய்தெய்வமேயென் அமுதே
 
 
 

கருணை வாழ்வே
'நமச்சிவாய
லிங்கமாக நமச்சிவாய Y
TT வீடடையச்செய்யுந் è ாநமச்சிவாய 3. யிமையோர்போற்றும் ( fastu|
ருந்தறியுந்தேவே நமச்சிவாய 5
நவார்தங்கட்கெல்லாம் ॐ கரா நமச்சிவாய
மனப்பெரியோருன்னைத் வமே நமச்சிவாய
ந்தீர்த்த
மச்சிவாய 8
ல்லூரிலாண்ட சிவாய 9 N R யிரடங்கிநிற்கநல்ல We மநமச்சிவாய ణ
5
7

Page 67
சிவபெருமான், தாம் வீற்றிருந்த குருந்தமர நிழலில் திருவடிப் பிரதிட்டை செய்து, அத் திருவடியைத் தாமாகவே கண்டு வழிபடுமாறு உணர்த்தினார். அவ்வண்ணமே சிவயோக தேசிகரும், திருவடி வழிபாட்டாற்றுவதற்குரிய இடமாகத் தியான மண்டபத்தை அமைத்தனர். புராணமண்டபம் மற்றைய அங்கமாகும். புராண மண்டபத்துப் பூசை, பாடல், படிப்பு ஆகியவற்றில் பக்குவமுற்றுப் படியேறிச் சென்று தியான மண்டபத்திலே திருவடி நிழலில் ஆறியிருத்தற் குரிய ஓர் ஒழுங்கில் சிவதொண்டன் நிலையக் கோயில் அமைந்திருக்கிறது.
.ேகுறிக்கோள்
சிவதொண்டன் நிலையம் திறப்புவிழாக் கண்ட ஒன்றரை வருடத்தில் சிவதொண்டன் நிலையத்திற் சேரீர் எனச் சுவாமி அறைகூவி அழைக்கும் ஒரு நற் சிந்தனைப் பாடல் சிவதொண்டன் ஏட்டில் வெளியானது. (1955 ஏப்பிரல்) அப்பாடலிலே சிவதொண்டன் நிலைத் துக் குறிக்கோள் தெளிவாகப் பொறிக்கப் பெற்றி ருக்கின்றது. பாடல் மேல் வருமாறு.
'சிவதொண்டன் நிலையத்தில் சேரீர் தியானஞ் செய்து கடைத்தேறிர் மெளனமாயிருந்திளைப்பாறிர் மந்திரம் இதுவெனக் குறியீர்
அவனிவன் ஆரென அறியீரோ ஆன்மா நித்தியம் தெரியிரோ உவமை கடந்த இன்பம் உள்ளிரோ உண்மை முழுதுமெனக் கொள்ளிரோ
ஐம்பொறிவழியினிற் செல்லாதிர் ஐம்புலன் தன்னை வெல்விரே வெம்பகை தன்னை விடுவிரே வேதாந்த சித்தாந்தம் தொடுவீரே
ஒரு பொல்லாப்புமில்லை உணர்விரே ஓம் சிவாயநமவென்த் தொழுவிரே உருகி உருகி உணர்விரே உறுதி மொழி இதனைக் குறியிரே"
மெளனமாயிருந்து இளைப்பாறுதலே சிவ தொண்டன் நிலையத்துத் தாரகமந்திரமாகும். இத்தாரகப் பொருளை வெளிப்படுத்து முகமாகவே சிவதொண்டன் நிலையச் சுவர்களில் ஆங்காங்கே

“மெளனம்" எனப் பொறிக்கப் பெற்றிருக்கிறது. தியான மண்டபத்து நுழைவாயிலில்
"சொல்லெலாம் மோனம் தொழிலாதியும் மோனம் எல்லாம் நன்மோன நிறைவே" எனப் பொறிக்கப் பெற்றிருப்பது இக்குறிக் கோளை வெளிப்படுத்தும் பொருட்டேயாம்.
4.பூசை விழாக்கள்
இந்த நன்மோன நினைவிற்கு இயைந்த தாகவே நிலையப் பூசை விழாக்கள் அமைந் திருக்கின்றன. திருப்பெருந்துறையில் பரமா சாரியராகத் தோன்றி திருவடி வழிபாடாற்றுமாறு ணர்த்திய இறைவர் வழிபடும் முறையையும் கூறி
வைத்தனர்.
'பொங்கொளிச் சுழுனையூடு புலம்பிசைக் குறியேயான
மங்கல சங்கமல்லால் வாய்ந்த பல்லியங்கள் யாவும்
இங்கெனக் காகா ஓசை ஒடுங்கிடமாதலாலும்." என்பதால் அது தெளியப்படும். கொழும்புத்துறை அடிகளும் சிவதொணி டன் நிலையத்தில் வாத்தியங்களேதுமின்றி மெளனமாய் பூசனை
செய்யும் முறையையே உணர்த்தி வைத்தனர்.
1. நித்திய பூசை : காலை, மாலை வேளைகளில் செய்யப்பெறும் நித்தியபூசை பழம், பாக்கு, வெற்றிலை, பூ, புனல் என்பன கொண்டு செய்யப்பெறும் எளிமையான பூசையாம். புராண மண்டபத்தில் மாலைக்கால பூசையின் போது பாடல், படிப்பு என்பன நிகழும். கொழும்புத் துறைக் கொட்டிலில் சிவயோக சுவாமி திருமுன்னிலையில் தினமும் சிவபுராணம் ஒதப்பட்டது. நிலையத்துப் பாராயணத்திலும் சிவபுராணம் நடுநாயகமாக அமைந்தது. விநாயகர் வணக்கத்துடன் தொடங்குதற் பொருட்டு ஒளவையார் அருளிய விநாயகரகவலும், தேவாரம் ஒதுதற்பொருட்டு சம்பந்த மூர்த்தி சுவாமிகளின் தேவாரங்கள் அனைத்தையும் ஒதுதற்கீடான திருவெழு கூற்றிருக்கையும் பிரார்த்தனையின் பொருட்டு சுவாமிக்கு மிகவும் பிடித்தமான தையல் நாயகித்தாயே" எனும் வேண்டுதற் பாடலும் அமைய, நிறைவானதோர் பாராயணமாக அது வாய்த்திருக்கின்றது. பாராயண முடிவில் புராணபடனம் நிகழும். கந்தபுராணம், பெரியபுராணம் திருவிளையாடற் புராணம் எனும் சிவபுராணங்களில்
58

Page 68
அன்றைக் கென்ற புராணப்பகுதி படித்துப் பயன் சொல்லப் படும். சுவாமிகள் அந்நாள்களில் புராணபடனத்திற் சிறந்து விளங்கிய பலரையும் அப் புராணத்தில் பங்குகொள்ளச் செய்தனர்.
I. யாகம் : சுவாமி கூறிய உறுதி மொழியிலுள்ள உயர்ந்த குறிக்கோள் அத்துணை இலகுவாக அடைவதற்குரிய தன்று. “பாடின்றி பட்டங்கிடையாது" எனவும், பட்டது பட்டேற்றும் என்று பட்டினத்தார் சொன்னாரெடி" எனவும் சுவாமி பலகாலும் சொல்வார். அது ஒர் பெரும் தவவாழ்க்கையால் பெற்றுக்கொள்வதொன்றே. தவச்சுவை நாடு வோருக்கு வாய்ப்பானதே சிவதொணர்டன் நிலையம். அத்தகைய தவச்சுவை நுகரும் சாதுக்களின் பொருட்டு திருவருள் சிவதொண்டன் நிலையத்தில் யாகநாளொன்றை நியமம் செய்தது. ஆங்கில நாட்காட்டியிலுள்ளபடி மாதந்தோறும் வரும் முதல் ஞாயிறு, யாக நாளாயிற்று. யாகம், நாள் முழுதும் விரதம் இருந்து பயபக்தியுடன் செய்யப்படுவது" என்று சுவாமி கூறுவார். ஆகவே காலை 7 மணி முதல் மாலை5 மணி வரை பயபக்தியுடன் அனுட்டிக்கும் தவமாக யாகநாள் அமைந்தது. அது அவிபாகங்களைச் சொரிந்து இயற்றும் இடம்பமான வேள்வியன்று. அது மனதைச் சுடலையாக்கியெழுகின்ற எண்ணங்களை யெல்லாம் எரிக்கும் அகவேள்வி. பஞ்சேந்திரியங்களை வெல்லுவதற்கான பயிற்சி. ஒரு யாகநாளின் போது 'இன்று உங்களை யெல்லாம் கொளுத்தி எரிக்கப்போகிறேன்." எனச் சுவாமி சொன்னார். கொளுத்தி எரித்தல் என்பது அகத்தில் உள்ள அழுக்குகளை, கழிம்புகளை எல்லாம் எரித்து ஆன்ம ஒளியைச் சுடர்விடச் செய்வதே. இத்தகைய யாகம் மிகக்கண்டிப்பான ஒழுங்கு முறைகளுடன் செய்யப்படுவது. அது சிறிது நேரம் புராண மண்டபத்தில் பாடும் பாடல்களையும், தியானமண்டபத்தில் நிகழ்த்தும் தியான சாதனையையும் அங்கங்களாகக் கொண்டது அன்று. ஆதலினால் ஆரம்பத்தில் விளம்பரம் செய்து அனைவரையும் அழைத்துக் கொள்ளாமல் தாமாக வந்த சில அங்கத்தவர்களைக் கொணர் டே செய்யப்பட்டது. நல்லதோர் ஒழுங்கமைப்பைப் பெற்றபின் அன்பர்களுக்கான அழைப்பு விடப்பட்டது. அழைப்பினைத் தொடர்ந்து அன்பர் தொகை பெருகலாயிற்று.

I. விழாக்கள்: சுவாமிகள் தன்னை அடியார் கூட்டம் சூழத்தொடங்கிய தொடக்ககாலத்திலிருந்தே அவர்களைச் சிவராத்திரி விரதத்தை முறையாக அனுட்டிப்பதற்குப் பயிற்றி வந்தார். அடியார் கூட்டம் பெருகியதற்கேற்ப வீடு, பள்ளிக்கூடம் போன்ற பொது இடங்கள், கோயில்கள் என்ற வண்ணம் அனுட்டிக்கப்பட்டது. சிவதொண்டன் நிலையம் கால் கொண்ட ஆண்டில் தை, மாசி என்ற இரு திங்களிலும் வெளிவந்த சிவதொண்டன் இதழ்கள் சிவதொண்டன் நிலையத்தில் நிகழ விருக்கும் சிவராத்திரி விரதத்திற் பங்குகொள்ளு மாறு வேண்டும் அறிவித்தல்களை ஏந்திவந்தன. நாடெங் குமுள ள சிவ தொணி டா களர் அவ்வறிவித்தலை ஏற்றுவந்து சிவராத்திரி வி ரதம் அனுட் டித்தனர் . அனி றிரவு விழித்திருந்து விட்டு காலைப் பொழுதில் சுவாமி தரிசனம் செய்யக் கொழும்புத்துறை சென்றவர் களிடம் நான் இரவு சிவதொண்டன் நிலையத் தில் இருந்தேனே! விழித்திருந்த எல்லோருட னும் கூடஇருந்தேனே”, எனச் சுவாமிகள் கூறினார். இவ்வாறு சுவாமிகளுடனர் கூட இருந்து அனுட்டிக்கும் விரதமே சிவதொண்டன் நிலையச் சிவராத்திரி விரதம். இதுவே சிவதொண்டன் நிலைய விழாக்களுள் நடுநாயகமானது. இம்முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டே சிவதொணி டனர் நிலைய நிதி யாணி டு சிவராத்திரி நாளுடன் தொடங்கும் நடைமுறை பேணப் படலாயிற்று. ஓராண்டு மாதந்தோறும் வரும் மாதசிவராத்திரிகள் அனுட்டிக்கப்பட்டதும் இம் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டே யாம். பங்குனி மாதத்து இரண்டாவது திங்கட் கிழமை மாலைப் பொழுதில் அனுட்டிக்கப்படும் 'திரு வடிப் பூசைத்" தினமும் நவம்பர் நாலாந்திக தியில் கொண்டாடப்படும் 'கால்கோள் விழாவும்" மார்கழி மாதத்து 'ஆருத்திரா அபிடேகமும்" நிலையத்தினர் ஏனைய விழாக்களாகும். இவற்றுக்கு மேலதிகமாக வேறு விழாக்கள் எதனையும் சேர்ப்பது திருவுளமன்று. மேலதிக விழா ஒன்றைக் கொண்டாட முனைந்து நின்ற ஒருவரிடம் “உத்தரவில்லைக் காணும்” எனக்கூறி சுவாமி மறுத்துவிட்டார். எளிமையான இப்பூசை விழாக்கள் யாவும் சிவதொண்டன் நிலையத்து மெளனமான மாசிலோசைக்கு இயைய, மந்த
முரலும் வண்டிசை போன்று அமைவனவே.
59

Page 69
W. சித்தாந்த வகுப்புக்கள்: சுவாமிகளது திரு முன்னிலையில் விவேகசூடாமணி முதலாய ஞான நூல்கள் வாசிக்கப்படும் வழக்கம் இருந்தது. சுவாமி அவ்வாறு வாசிக்கப்படும் பொழுது இடையிடையே அற்புதமான குறிப்புக்கள் கூறுவர். சுவாமி சந்நிதானமான சிவதொண்டன் நிலையத்திற்கும் அத்தகைய ஞான நூல் போதனை இன்றியமையாததாகும். ஞானப் பண்ணை ஒன்றில் ஞான சாதனை பயில் வோர்க்கு ஞானநூற் பயிற்சியும் ஓர் அங்கமே ஆகும். அன்றியும் சிவதொண்டன் நிலையத்து அங்கத்தவர் பலரும் நூற்சுவை தெரிந்தோராய் இருந்தனர் . அவர் களுக்கு இத்தகைய ஞானநூல்களைப் பயில்தல் உவப்பானதாய் இருந்தது. செந்தமிழ் மொழியிலுள்ள நமது சமயக் குரவர்களும், சந்தான குரவர்களும் அருளிய தோத்திரங்களும், சாத்திரங்களும் வேதசி வாகமங்களின் சாரமாய் அமையும் சிறப்பின. அவற்றின் நுண்பொருளை அவற்றை ஒதியறிந்த அறிவால் மாத்திரம் அன்றி, சுவாமிகளின் சகவாசத்தால் பெற்ற அறிவாலும், சுவானுபூதியாய் அறிந்த அனுபவ ஞானத்தாலும், எளிதான இன்னுரையில் கூறவல்ல சிவதொண்டர் களும் இருந்தனர். அன்றியும் திருமிகுந்த அந்நிலையத்தில் பக்தியுடன் ஒதுமிடத்து அது ஓர் எழில்ஞான பூசனையாகவே அமையலாயிற்று. ஆதலினால் இந்த ஞானநூல் வகுப்புக்கள் உற்சாகத்துடன் நடைபெறலாயின. பெரும்பாலும் வாரஇறுதி நாட்கள் இத்தகைய வகுப்புக்களால் பொலிவு பெற்றன. இவ் வகுப்புக்களுக்கு இயையவே நிலைய்த்தில் ஓர் நூல்நிலையமும் அமைக்கப்படலாயிற்று.
V. தன்னையறியும் தவச்சாலை : பூசை, விழாக்கள், சித்தாந்த வகுப்புக்கள் ஞான நூல்கள் இன்னும் இயன்ற சிவதொண்டுகள் யாவும் துணை யாயமையத் தன்னையறியத் தவமியற்றும் தவச்சாலையே சிவதொண்டன் நிலையமாகும். இத்தவம் அகமுகமாகியவோர் இடையறாத் தேடல்; வாடாதவழிபாடு; நிற்கும் போதும், நடக்கும் போதும், உண்ணும்போதும், உறங்கும் போதும் எப்போதும் ஏகநினைவாயிருக்கும் இடையறாத் தியானம். நிலையத்துள் உறைந் தாயினும், அவ்வப்போது இன்றியமையாத விவ

காரங்களுக்காகச் சென்றுவந்தாயினும் குறியைக் குறியாது குறித்தறியப் படும்பெரும்பாடே சிவதொண்டன் நிலையத்திற் செய்யும் பெருத்த
வேலையாகும்.
VI. ஒழுங்கு : இவ்வண்ணம் தன்னையறியத் தவமியற்றுவோரை அன்னையைப் போல் ஆதரிக்கும் முகமாகவே கண்டிப்பான ஒழுங்கு முறை பேணப்படுகின்றது. கைக்குழந்தையைக் குளிப்பாட்டிப், பாலூட்டி, பொட்டுச் சட்டை என்பன இட்டு அழகுபார்த்துத் தொட்டிலில் வளர்த்தும் அன்னை, அக்குழந்தையின் துயில் கலையாது இருத்தற்பொருட்டுத் தன் வளர்ந்த பிள்ளைகளிடத்தில் எச்சரிக்கையாயிருப்பாளல் லவா? அவ்வாறே சிவதொண்டன் நிலையத்தில் தவமியற்றுவோர்க்கு வாய்ப்பான யாவும் குறைவின்றி நிறைவாயிருத்தற் பொருட்டும் இடையூறுகள் நேராதிருத்தற் பொருட்டும் ஒழுங்குமுறை பேணப்படுகின்றது. சுவாமிகளே இவ்வொழுங்கு முறையைப் பேணியவண்ணம் பெரிதும் சிந்திக்கத் தக்கதாம். தாம் நிலைய வாயிலினின்று சிலவற்றைப் பேசிச் செல்வ தல்லாது உள்ளே வராதிருந்தமைக்குக் காரணம்; “பரதேசியாகிய தம்முடன் பலரும் பழகுவார்க ளெனவும், தாம் உள்ளே வந்தால் அவர்களும் வருவார்களெனவும், இது ஒழுங்கு முறைக்குப் பிழையெனவும் கூறினார்கள். “சிவதொண்டனைச் செம்மையாக நடாத்துங்கள் முடியாவிட்டால் உடைத்துக் கொட்டிவிட்டுச் சும்மாயிருங்கள் ஒரு நட்டமுமில்லை” என அவர் கூறிய வாசகமும் இவ்வொழுங்குமுறைக்கோர் அச்சாணியேயாகும்.
VIII. சிவதொண்டன் சபை: சிவதொண்டன் நிலையத் தோற்றத்துடன் சிவதொண்டன் நிர்வாகம் ஒன்றும் தொடங்கிற்று. அதுவே விரைவில சிவதொணி டணி சபையாகப் பரிணமித்தது. சபையில் இடம்பெற்ற பலரும் கண்ணியம் மிக்கவராகவும் சமூக அந்தஸ்து மிக்கவராகவும் இருந்தனர். தருணம் வந்த பொழுது தாமே தோள்கொடுக்க வல்லவராயு மிருந்தனர். இதனை அன்போடும், மகிழ்ச்சி யோடும், தம்மைக் காட்டிக்கொள்ளாமலும் செய்தனர். அவர்களுள் வழக்கறிஞராய் இருந்த சிலர் நுட்பமானதோர் யாப்பும் அமைத்து
60

Page 70
சிவதொண்டன் சபையாகப் பதிவு செய்து கொண்டனர். இவர்கள் சுவாமியிடத்தில் மிக்க பணிவுடன் ஒழுகும் சிறுத்தொண்டர்களாகத் திகழ்ந்தனர். இத்தகைய சிறுத்தொண்டர்களைக் கொண்ட சிவதொண்டன் சபையையும், திருவரு ளானது உலக நடைமுறைக்கியைந்த ஒரு கருவியாக உருவாக்கியிருந்தது.
IX நாடளாவிய பணி : உயர்வற உயர்ந்த நலத்தை இலட்சியமாகவும், இவ்விலட்சியத்திற்கு இயைந்த பூசை விழாக்கள் என்பவற்றைச் செயற் பாடுகளாகவும், இவற்றைச் செம்மையாகச் செயற்படுத்தவல்ல. விதிகளை ஒழுங்கு முறை யாகவும் கொண்டு செழும்தளிரும், பூவும், பிஞ்சுமாய் செழிப்புடன் நிற்கும் ஓர் பயிர் போன்று வளர்ந்த சிவதொண்டன், தன் கிளைகளை நிலையத்திற்கு வெளியேயும் விசிறலாயிற்று. அதன் பணி நாடளாவியதாய் விரியலாயிற்று.
X. உலகளாவிய பணி : உண்மை அனைவருக்கும் சொந்தமானது. அது உலகிலுள்ள அனைவரும் உணர்தற்குரியது. பொதுவாகவே ஞானியர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கொள்கை உடையவர்கள். சுவாமி உண்மை அறியும் தாகத்தோடு வந்தோர் யாவராயினும் அவரது சாதி, சமயம், இனம், நாடு என்பவற்றைப் பாராமல் வழிகாட்டி வந்தார். ஆதலினால் சிவதொணர்டன் நிலையச் சார்பில் ஐவர் அடங்கிய தூதுக்குழு உலக நாடுகளுக்கான பயணத்தை மேற்கொணர்டது. அத்தூதுக் குழுவினரிடம் இங்கிலாந்தில் சொல்ல வேண் டிய செய்தி ஒன்றைச் சுவாமி கூறியிருந்தார். அது மேல்வருமாறு:
முன்பு நாம் ஒன்றாகவே இருந்தோம் இடையில் சிறிது வேறு போன்று இருந்தோம் ஆனால் இனியும் ஒன்றுதான்” ஒரே உலகம் ஒரே ஆள் என்ற செய்தியை உலகுக்கு உணர்த்தும் உயர் நோக்குடைய ஓர் ஆச்சிரமமே சிவதொண்டன் நிலையம்.
X1. சுவாமி சிவதொண்டன் நிலையத்துள் எழுந்தருளியமை : இவ்வணிணம் ஒன்பது ஆண்டுகள் நிலையவாயிலினின்றே பரிபாலனம் செய்த சுவாமிகள் பத் தாம் ஆணி டில

நிலையத்துள் திருப்பாதம் பதித்துத் திருவேறச்
செய்தனர்.
XII. குறைவிலா நிறைவு : சுவாமி திருவடி கலப்புறும் வரை ஏறக்குறைய பத்தாண்டு காலப் பரி பாலனஞ் செய்தார். இக்காலத்தில் சிவ தொணி டணி நிலையத்து உறுதிமொழி, சுவாமியின் திருவாய்மொழிகளிலே பொறித்து வைக்கப்பெற்றது. நிலையத்துப் பூசை விழாக்கள் நியமஞ் செய்யப்பட்டன. ஞானதானம் ஈறான தானங்களில் பாங்கு விளக்கமாயிற்று. நாட ளாவிய பணிகள் கோடிட்டுக் காட்டப்பட்டன. அதன் உலகளாவிய பணி குறிகாட்டப் பெற் றிருந்தது. சுவாமி திருவடிக் கலப்புறுதற்கு முன் 'ஒரு குறையும் வைக்கவில்லை" என அன்பரிடம் கூறினார். இது அவர் தம் சிவ தொண்டன் நிலையப் பரிபாலனத்துக்கும் முற்றும் பொருந்துவதாயிருந்தது.
ஆ. நிலை பெறுத்துதல்
சுவாமிகள் திருவடிக்கலப்புற்ற பின்னர், சிவதொணி டனி நிலையத்துள் கோயில் கொணர்டருளியும், சீரடியாரை அதிட்டித்து நின்றும் பரிபாலனம் செய்கின்றனர். சுவாமிகள் நடமாடிப் புரிந்த நியமத்தை நிலைபெறுத் துதலே இந் நாற்பதாண்டுகாலப் பணியின் முக்கிய அம்சமாகும். சுவாமியின் ஆணைகள் வேண்டும் போது வெளிப்படுகின்றன நிருமல மாயிருக்கும் சீரடியார் அதனைக் கேட்டுச் செயற் படுகின்றனர். இவ்வண்ணம் செயற்பட்டு உறுதி யுறச் செய்த நடைமுறைகள் இன்று சிவதொண்டன் மரபு என்று சொல்லும் வண்ணம் நிலை
பேறடைந்துள்ளன.
1. குருபூசை ஆயிலிய பூசை
சுவாமி நியமஞ் செய்ததற்கு மேலாகப் பூசை விழாக்களைப் பெருக்காதிருப்பதில் சிவதொண்டன் நிலையம் விழிப்பாயுள்ளது. ஆயினும் சுவாமியின் திருவடிக்கலப்பின் பின் திங்கள் தோறும் வரும் ஆயிலிய நாட்களில் நிகழும் ஆயிலிய பூசையும், ஆண்டுக்கொருமுறை பங்குனி ஆயிலிய நாளில் நிகழும் குருபூசையும் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டன. குரு பீடமொன்றில் குருபரனைப்
61

Page 71
பூசிப்பதில் ஒரு புதினமுமில்லையாதலால் இவை சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவற்றுள் ஆயிலிய பூசை, யாகநாளுக்கு இணையான முக்கியத்துவத் தையும், குருபூசை, சிவராத்திரி நாளுக்கு இணையான முக்கியத்துவத்தையும் பெற்றுத் திகழ்கின்றன.
2. நூல்வெளியீடு :
சுவாமி கண்ணும் கருத்துமாய் வளர்த்த சிவதொண்டன் ஏட்டை, அதே கவனத்துடன் பேணுவதில சிவதொணி டணி நிலையம் விழிப் பாயிருக்கிறது. சுவாமி நடமாடிய காலத்தில் வெள்ளி விழா மலரொனர் று வெளிவந்தது. 1972ம் ஆண்டில் சுவாமிகளின் பிறந்த வருடத்தையொட்டி ஓர் நூற்றாண்டு மலர் மலர்ந்தது. இப்பொழுது நிலையத்தினர் பொன்விழா மலராக மலர்கின்றது. இராணுவ நடவடிக்கைகளின் போது யாழ்ப்பாணத்தில் அச்சகங்கள் இயங்க முடியாத நிலை வந்தவிடத்து சிவதொண்டன் நிலையம் செங்கலடியில் இருந்து தளர்வறியாது வெளிவந்தது. சிவதொண்டன் ஏடு இன்று சிவதொண்டன் அங்கத்தவர்களை நிலையத்துடன் இணைத்து வைக்கும் கைங் கரியத்தையும் புரிகின்றது.
நற்சிந்தனை, அருள்மொழிகள்
சுவாமி திருவடிக்கலப்புற்ற பின்னரே அடியவர்களின் பெட்டகத்துள் பேணப்பட்ட நற் சிந்தனைப் பாடல்கள் வெளியாயின. அவர்தம் பாடல்கள் யாவினும் நெடியதான ஓம்தத்சத் ஓம் பாடல் இவ்வாறு வெளியானதே. சுவாமியினது பொல லாங்கு தீர்க்கும் பாட்டொன்றின் ஐந்து செய்யுள்கள் மிகப் பிந்திய பதிப்பின் போதே வெளிப்பட்டன. அன்றியும் செய்யுட் தொகுப்பொன்றைத் தொகை செய்யுமிடத்து பொருளமைதி, யாப்பமைதி என்பவற்றின் அடிப்படையில் தொகுக்கும் தமிழ் மரபொன்றுள்ளது. அம்மரபினையும் அனுசரித்து நற்சிந்தனை ஏழாம்பதிப்பை சிவதொண்டன் நிலையம் வெளியிட்டிருக்கின்றது. யோகசுவாமிகள் தம் அன்பர்களுக்குக் கூறிய அருள்மொழிகள் அன்பர்களது குறிப்புப் புத்தகங்களிலேயே பல்லாண்டு கால்ஸ்ாகப் பேணப்பட்டு வந்தன. அவை இயல்பான உரையாடலின் போது

வெளிப்பட்டனவாதலால் இடையிடையே பேச்சுமொழியும், ஆங்கிலமும் கலந்த வாசகங்க ளாயிருந்தன. ஆங்கிலேயரான அடியவரொருவர் குறித்து வைத்த அருள்மொழிகள் யாவும் ஆங்கிலத்திலேயே இருந்தன. இவை WORDS OF THE MASTER என ஆங்கிலத்தில் வெளிவந்தன. சுவாமியினது 12வது குருபூசைத் தினத்தன்று (1976) எங்கள் ஆசான் அருள் மொழிகள் என தமிழில் மலர்ந்தன. அன்பர்கள் குறித்து வைத்திருந்த பேச்சு மொழியும் ஆங்கிலமும் வி ரவிய மொழிகளை, சுவாமி யி னது உரைநடைக்குரிய முத்திரை அமையும் வண்ண மாகத் திருவருள் வார்த்திருந்த வண்ணத்தை இந்நூலில் நயக்கக் கூடியதாக இருக்கின்றது. இவ்விரு நூல்களும் அன்பர்களின் பாராயணப் பனுவலாகவும், சாதனைக்குரிய ஞானமணிப் பூஷணங்களுமாயின.
சுவாமியினது திருச்சரிதம்
சுவாமி நடமாடிய காலத்திலே அவரிடம் பெற்ற தெய்வீக அனுபவங்களை வெளிப்படுத்து தற்கு அன்பர்களுக்குத் துணிவு வரவில்லை. சுவாமியினது திருவடிக்கலப்பின் பின்னர் அவற்றையெல்லாம் வாயாரக்கூறி மகிழ்ந்தனர். சிவதொண்டன் ஏட்டின் மூலமும் பலரும் அறியும் வண்ணமாய் எடுத்துரைத்தனர். அன்பர்கள் தாம் பக்குவமாகப் பேணிய குறிப்புப் புத்தகங் களையும் தகவுடையோருக்குத் தந்தனர். அன்பர் சிலர் சுவாமியின் திருச்சரிதத்தை நூலாகவும் ஆக்கினர். என் நெஞ்சில் இடங்கொண்ட ஒரு பெரியர் யோகசுவாமிகளின் வாழ்க்கையும் வழி காட்டுதலும் எனும் நூல்களைச் சிவதொண்டன் நிலையமும் வெளியிட்டது. இந்நூல்களிலே சுவாமியினது சோதி சொரூபம் ஒருவாறு தெரியலாயிற்று. சுவாமிகளது திருவாய் மொழிகளான நற் சிந்தனை, அருள்மொழிகள் என்னும் நூல்களை ஓதி உணர்ந்தவர்களும், திருச்சரிதங்களை நுணுகிக் கற்றோரும். சிவதொணி டணி நிலையத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். சிவதொணி டன் நிலையத்து நடைமுறைகளும் அவர்களுக்கு மிகப் பிடித்தமாயிருந்தன. அங்கு வீற்றிருக்கும் பெரியோர் எளிதாய் உரைக்கும் இன்னுரை அவர் தம் தாகத்தைத் தணித்தது. இவ்வாற்றால் புத்தடியார் கூட்டமொன்றும் பழவடியார்
62

Page 72
திரளுடன் சேர்ந்து கொண்டது. பலபடவிரித் துரைப்பானேன்? சுவாமியின் சோதி நடமாடிய காலத்தையும் விட் திருவடிக்கலப்புற்றபின் மிக்கப் பிரகாசமாய் ஒளிரலாயிற்று. இப் பிரகாசத்தின் பிரதிபலிப்பே சுவாமியின் படிமத் திருக்கோலமாகப் பிரதிட்டை செய்யப் பட்டிருக்கின்றது போலும்.
3.1. நாடளாவிய பணி
சுவாமி திருவடிக்கலப்புற்ற அதே திங்களில் செங்கலடி சிவதொண்டன் நிலையக் கால்கோள் முயற்சிகள் தொடங்கின. அடுத்த ஆண்டு பங்குனித்திங்கள் முதல் நாளில் சிவதொண்டன் நிலையத்தில் இருந்து நீண்டதொரு பாத யாத்திரையாகச் சென்ற சிவதொண்டர் குழாம், அங்கு திருவடி பிரதிட்டை செய்து வைத்தது. சுவாமியினது உத்தம சீடர்களில் ஒருவரும் மேற்கு நாட்டுத் தொணர் டுணர்ச்சியால வளம்பெற்றவருமான சாந்த சுவாமிகள் அதன் பணிகளைப் புரியும் பொறுப்பாளரானார். அதற்கென்ற வளவயலும் அமைந்தது. இதனால் மெளனமாய் இருந்து இளைப்பாறும் இலக்குடன் தொண்டு செய்து உபசாந்தமுறும் இன்னொரு இலக்கையும் சிவதொணி டணி நிலையம் பெற்றுவிட்டது. இவ் விலக்கை எய்துவதற்குத் தக்க சான்றாக சாந்த சுவாமி விளங்கினார். அவர் பத்தாண்டுக்கு மேற்பட்ட பணியால் பண்பட்டு உப சாந்தமுற்றவராய் கைதடிவந்து அங்கிருந்த மெளனமுனி மார்க்கணிடு சுவாமிகளுடன் உறைந்தார். அதன் பின் யாழ் சிவதொண்டன் நிலையப் பொறுப்பாளரே அமைதியானதும் இடமகன்றதுமான அவ்வாச்சிரமத்தில் உறைந்து ஆச்சிரம நாள்களையும் ஆயிலிய பூசைகளையும் நியமஞ் செய்து ஞானதானம் அளித்துவருகின்றார். ஆலயங்களில் குருபூசை ஆகியன சிறப்புற நடைபெற ஊக்கம் கொடுத்தும், குருகுலங்கள் பலவற்றுக்குக் காப்பளித்தும் இச்சிவ நிலையம் பணிசெய்து வருகிறது.
II. Dasafir eğrafyuDib
கைவினை செய்து கழலடி போற்றுதற்கு வாய்ப்பாக கொழும்புத்துறை மகளிர் ஆச்சிரமத் தைச் சிவதொண்டன் நிலையம் நிறுவியது. இராணுவ நடவடிக்கைகளால அதனைத்

தொடர்ந்து பேணுவதில் சிறிது தடங்கல் ஏற்பட்டுள்ளது.
Iநாடெங்குமுள்ள சுவாமி பக்தரை ஊக்குதல்
சுவாமி நாடெங்கும் சென்று சிவதொண்டு புரிந்தனரல்லவா? சுவாமியினது பக்தர்கள் பலர் உத்தியோக நிமித்தம் தலைநகரில் வாழ்கின் றனர். அவரெல்லாம் ஒன்று கூடிச் சுவாமியை நினைவு கூரவிழைதல் இயல்பே. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் அவர்களுக்கு அவ்வாறான தோர் ஒன்று கூடுமிடமாக இருந்து வருகின்றது. அவர்கள் நிறுவன ரீதியாக இயங்குதற்கு நாட்ட முடையோராயுள்ளனர். இந்நிறுவனம் யாழ் சிவதொண்டனால் ஊட்டம் பெற நாடுதலும் இயல்பே. இவ்வியல் பறிந்து இயலுமான பணிகளெல்லாம் செய்வதும் சிவதொண்டன் நிலையத் தொண்டுகளில் ஒன்றாகியுளது.
V. PeoGTTeu L60
இன்று சிவதொண்டன் அங்கத்தவர் பலர் உலக நாடுகள் பலவற்றிலும் உறைகின்றனர். அவர்கள் தொலைவிடங்களில் வாழ்ந்தாலும் சித்தம் எனும் திண்கயிற்றால் சுவாமிகளது திருப்பாதத்துடன் பிணைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தாம் உறையும் இடங்களில் சுவாமிகளின் பெயரை முன்னிட்டு ஒன்று கூடுபவராயும், குருபூசை ஆகியவற்றை அனுட்டிப்போராயு முள்ளனர். அவர்கள் சிவதொண்டன் நிலை யத்தைத் தம் தாயகமாகக் கொள்ள நாடுவது இயல்பே. அவர்களுக்கான ஊக்கத்தையும் சிவதொண்டன் நிலையம் அளித்துவருகின்றது.
சுவாமிகள் ஒன்பது ஆண்டுகள் நிலைய வாயிலில் நின்றும், பத்தாமாண்டின் சிலநாள்கள் நிலையத்துள் உறைந்தும் நியமஞ் செய்துவைத்த ஞானபண்ணையைச் சோதி சொரூபமாயிருக்கும் தம் சொந்த நிலையில் நின்று நாற்பது ஆண்டு காலமாக நிலை பேறடையச் செய்துள்ளார். அவர் தம் ஆணை வழிப் பணி செய்வதொன்றே அடியார் கடனாயிற்று.
முடிவுரை
சங்கற்பமில்லை என்றானி எங்கள் குருநாதன் என்பது எங்கள் சுவாமிகள் திருவாய் மொழி. சங்கற்பமின்றியே சிவதொண்டன்
63

Page 73
உதித்தது. அது ஆணைவழியேதான் ஐம்ப தாண்டு கண்டது இனியும் ஆணை வழியிலேயே
அது இயங்கும். ஆயினும்,
*சிவதொண்டன் தொண்டு செய்ய முந்திவிடவேண்டும்" "சிவதொண்டனைக் காக்கச் சிந்தை வேண்டவோ
இன்னும்
சிவதொண்டன் தொண்டில் உளம்
செல்லாதிருந்தக் கால்”
அவனை ஓம்புவார் ஆர்அறை”
என்னும் சுவாமி வாக்குகள் தரும் உன்னுதலால்,
அச்சத்துடனேயே சிலவற்றைக் கூறுதும்.
சிவயோக சுவாமிகள் மூலையிலிருந்த எம்மை முற்றத்தில் விட்டார். அதுபோல் நாம் அவரை நாடறியச் செய்தல் வேணர் டும். தத்துவாதீதமான உணர்மை, அந்த உண்மையை உணர்தற்கான சாதனைகள், அவற்றை எடுத்
துரைக்கும் கலைவணிணம் என்பவற்றை யெல்லாம் உலகறியச் செய்தல் வேண்டும். அவருணர்த்திய கொழும்புத்துறை சமாதிக் கோயில் சிவ தொண்டன் நிலையத்தின் தாயகம். ஆண்டகையாய் வளர்ந்துவிட்ட சிவதொண்டன் தன் தாயகத்தைக் கண்ணியமாகப் பேணவேண்டு மன்றோ! அது சுவாமி மலர்பாதம் பதித்த மணி. சுவாமியினர் உபசாந்தம் படிந்திருக்கும்
ஞானச்சுரங்கம்,
சுவாமியின் திவ்வியபார்வை
யாலே அங்குள்ள மரம், செடி, கொடி, புல், பூண்டு திருவேறியுள் ளன. அங்குள் ள
யாவும்
r
சிவதொண்டு செய்வார்க்குச் சிவதொண்டு செய்வார்க்குச் சிவதொண்டு செய்வார்க்குச் சிவதொண்டு செய்வார்கள் (
சிவதொண்டு செய்து திரும சிவதொண்டு செய்துதிரு வ சிவதொண்டு செய்தரசன் ே சிவதொண்டு செய்வார்க்கு
சிவதொண்டு செய்வார்க்குச்
சிவதொண்டு செய்வார்க்குத் சிவதொண்டு செய்வார்க்குத சிவதொண்டு செய்வார்கள்
-ܥ

சிவயோகக்குயில்கள் நற்சிந்தையென்னும் நல்ல முதவிசையே பாடும். அங்கு வாழும் பல்லி களும் பெருமானின் நல்வரவே சொல்லும். ஆதலால் அப்பசுஞ்சோலையில் ஒரு தியான மண்டபம் எழுதுதல் வேண்டும். சமாதிக் கோயிலின் அயலே சகல கட்டட வசதிகளுடன் கூடிய மகளிர் ஆச்சிரமம் உளது. பஞ்சம் படைகளால் பாதிப் புற்றிருக்கும் பஞ்சை மகளிருக்குத் தஞ்சம் அளிப்பது தயாமூலதன்மமல்லவா! இத்தண்மம் அவ்வாச்சிரமத்தில் தழைத்தல் வேண்டும். தலைநகரிலும், உலகெங்கும் உறையும் சுவாமி பக்தரெல்லாம் ஒருவனைப் பற்றி ஓரகத்திருக்க நாடுவரே ல அவர் களையெலலாம் தனி இறக் கைக் குளிர் அணைத்துக் கொள்ள வேண்டியது சிவதொண்டன் பணியல்லவா! செங்கலடியிற் சிவதொண்டனர் நிலையக் கோயில் கட்டடம் போன்ற ஒன்று துறவிகள் தங்குவதற்கும் அமையவேணர் டும் என்ற சுவாமியின் திருவுளம் செயற்படுதற்குரிய நாம் கருவியாய் அமைதல் பெரும் பாக்கியமன்றோ! அத்தகைய துறவோர் கூட்டத்தில் சிவதொண்டன் சோதி உலகெலாம் பிரகாசிக்கும் அல்லவா?
*செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்கலென நல்லெளவை முன்னாள் நவின்றனளால் செல்வச் சிவனடியிர் தொண்டதனைச் செய்யத்தவறீர் கவனம் செலுத்துவீர் காப்பு”
செல்வமுண்டு கல்வியுண்டு சீருமுண்டு பேருமுண்டு சிந்தைத் தெளிவுமுண்டு சேருவரோ தீநெறியில்
T லுலகாண்டான் ாரூரன் சிவமானான் சாந்தான் கழல்முன்னாள் முண்டோ குறைசொல்வாய்
சாந்தம் பொறுமையுண்டு திரிகால வுணர்ச்சியுண்டு தீயபிணி நோயில்லை தெய்வமே போல்வார்

Page 74
エ
செல்லப்ப#கவா மகாவாக்க
தன்மோனநிறைவைத் தொட்டுநிற்கும் ஞானவ மகாவாக்கியங்கள், இவற்றை அவ்வப்போது சிவ அவ்வாறான விளக்கங்களைத் திரட்டி அமைத்தது இக்
மகாவாக்கியங்கள் என்றுமுள்ளவை. அவை அவ்வப்போது திறவோர் காட்சியில் தரிசனமா கின்றன. "அகம்பிர்மாஸ்மி" ஆகிய உபநிடத மகாவாக்கியங்களை இருடிகள் கண்டறிந்தனர். அனர் மைக் காலத்திலே யாழ்ப் பானத்து நல்லூர்த் தேரடியில் வாழ்ந்த செல்லப்பா சுவாமி களுக்கு முழுவதும் உண்மை, ஒரு பொல்லாப்பும் இல்லை, எப்பவோ முடிந்த காரியம், நாமறியோம் என்னும் மகாவாக்கியங்கள் தரிசனமாயின. இவற்றை அவர் ஓயாமல் ஒர்க்கொண்டிருந்தார். ஓராண்டு முழுவதும் ஒரு மகாவாக்கியத்தை ஒதுவது என்ற ஒழுங்கில் ஒவ்வோராண்டும் ஒவ்வொரு மகாவாக்கியத்தை ஒதும் நியமத்தவராக அவர் இருந்தார். அவர் சமாதி யடைந்த ஆண்டில் நாமறியோம்" எனும் மகாவாக்கியத்தை ஓதிக் கொண்டிருந்தார்.
மகாவாக்கியங்கள் ஆழ்ந்தகன்று நுண்ணிய மறைஞான வாக்கியங்களாகும். அநுபூதிச் செலவரான அருணகிரிநாத சுவாமிகள் தாமருளிச் செய்த 'பெருத்த வசன வகுப்பிலே" தமக்குப் பெருமானருளிய உபதேச மந்திரப் பொருளை விரித்துரைத்திருக்கின்றார். சங்கராச் சாரியார், இராமானுஜர் ஆகிய மெய்ஞ்ஞானியர் அகம்பிராமாஸ்மி ஆகிய மகாவாக்கியங்களின் பொருளைத் தத்தம் நோக்கில் விரிந்துரைத்திருக் கின்றனர். இவ்வாறெல்லாம் விரித்துரை செய்யத்தகுந்த பெரும்பெயர் மந்திரங்களே செல்லப்பா சுவாமிகள் அருளிச்செய்த மகா வாக்கியங்கள் ஆகும்.
செல்லப்பதேசிகரை அணி டி வாழ்ந்து, அத்தேசிகனருளால் தன்னைத் தன்னாலறிந்த ஞானியாக மலர்ந்தவர் யோகசுவாமிகள், யோக சுவாமிகளின் அருளிச் செயல்கள், நற்சிந்தனை (NATCHINTHANAL) GBU Tabii kurt L6) aseti g|(b6fi

மிகள் அருளிய யெங்கள்
ரம்பாய மொழிகள் செல்லப்பா சுவாமிகள் அருளிய தொண்டன் ஏடு ஒருவாறு விளக்கமுயன்றுள்ளது. கட்டுரை
GlupTiflsai (WORDS OF THE MASTER) STSZT glob நூல்களாக செந்தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழிகளிலும் உள்ளன. இந் நூல்களிலே செல்லப்பா சுவாமிகள் அருளிய மகாவாக்கியங் கள் பலகாலும் பயின்று வந்துள்ளன. அத்துடன் மகாவாக்கியங்களின் சார்பு வாக்கியங்கள் எனக் கொள்ளக்கூடிய சிலவும் அடிக்கடி கூறப்பெற்றி ருக்கின்றன. இவை பல சந்தர்ப்பங்களில் அடையேதும் புணர்த்தப் பெறாத தனிமந்திரங் களாகவேயுள்ளன. எனினும் சில இடங்களில் அவற்றை அடுத்துள்ள வாசகங்கள் அவற்றின் மறை பொருளை உள்நுழைந்து காணற்கேற்ற திறவு கோல் வாசகங்களாக உள. இன்னும், இவ்விரு நூல்களுமே மகாவாக்கியங்களின் பாடியம் என்று சொல்லும் வண்ணமாயமைந் திருக்கின்றன. மேலும் யோகசுவாமிகளினது வாழ்க்கை இம் மகாவாக்கியங்களின் விளக்க மாகவே அமைந்திருந்தமையைச் சுவாமிகளை அணி டி வாழ்ந்த அணுக்கத் தொன்ைடர்கள் கணர்டறிந்தனர். இவற்றைச் சான்றுகளாகக் கொண்டு மோனந்திகழும் சிவயோகியர் தாமும் முற்றும் உணராத இம்மகாவாக்கியங்களின் மறைஞானத்தை ஒருவாறு கற்றார் காமுறும் வண்ணம் உரைத்தல் இயலும்,
1. முழுவதும் உண்மை
சொற்பொருள்
முழுவதும் உணன்மை எனும் பெரும் பெயரி லுள்ள முழுவதும் எனும் பதம் பார் முதற் பூதமாகிய LJELIGIJSштLI பொருள்கள் அனைத்தை யும் குறிப்பதாகும். உணர்மை எனும் மொழி, இப் பலபல வாம் பொருளினர் உள்ளார்ந்த இயற்கையாகிய மெய்ப்பொருள் நிலையைக் குறிக்கிறது. ஆகவே முழுவதும் உண்மை எனும் பயிலும் தமிழிலமைந்த மெய்ம்மொழி, படித்த
55

Page 75
இந்துக்கள் நாவிற் பயிலும் "சர்வம் பிரமமயம்" எனும் வாசகப் பொருளைப் பயப்பதாகும்.
"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" எனும் வள்ளுவர் மெய்யுணர்வின் "பிழிவு' எனவும் கூறலாம். 'பிரக்ஞானம் பிரமம்' எனும் உபநிடத மகாவாக்கியம் இப்பெரும் பெயருக்கு இணையானதாகும். இதனை நற்சிந்தனை, யோகசுவாமிகள் அருள்மொழிகள் என்னும் இரு நூல்களிலுமுள்ள மேல் வரும் வாசகங்கள் அரணிசெய்து நிற்கின்றன.
'ஆராய்ந்து பார்த்தால் அறிவேயன்றி வேறா யொன்றும் விளங்க வில்லை பேரா யிரமுடைப் பெம்மாள் தானே பாரதியெலலாம்என்று பாடுவோம் ஓதுக அதுநாம் ஓம் தத் சத் ஓம்"
'ஒன்றுதான் இவ்வாறு பலவாக வந்த உபதேசிப்பவராகவும் உபதேசம் கேட்பவராகவும் ar Rwyf iawn) L, Geru i Luang fras 6ngl 6, 7 ID AT 23 Tawel செய்பவராகவும், காமாதி குணங்களாகவும் இவற்றை வெல்பவராகவும், இயம நியமாதி சாதனைகளாகவும் வியாபித்துள்ளது. நானும் அதுதான், நீயும் அதுதான், வேண்டாம் என்பதும் அதுவே வேண்டும் என்பதும் அதுவே. எல்லாமாகவும் அல்லவுமாகவும் விளங்கும் அப் பொருளொன்றே உலகில் என்றும் உள்ளது. ஏனையவெல்லாம் அதனிற்தோன்றி அதனில் நிலைத்து அதனில் ஒடுங்கி மறைபவையேயாம்."
வரன்முறையான இந்து மெய்ஞ்ஞானம்
முழுவதும் உண்மை எனும் இம் மெய்ஞானம் வரன்முறையான இந்து மெய்ஞ்ஞானமேயாம். ஈஸாவாஸ்யம் இதழ் சர்வம்" எனும் ஆரிய "ஈசோபநிடதமும்”, முற்றும் நீ எனும் தமிழ் வேதமும் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே எனும் திராவிட வேதோநிடத சாரமும் இதற்கான சில சான்றுகள். சுகமுனிவர் பிரமானந்தப் பெருக்கில், பிரமமே! பிரமமே" என்று அழைக்க யாவும் “ஏன்? ஏன்?" என எதிரொலி செய்தமையும்,
பண்ணேன் உனக்கான பூசையொரு வடிவிலே
பாவித்திறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலருடு நீயே இருத்தியப் விமலரெடுக்கவும் நண்ணேன்"
எனும் ஆன்றோர் வாக்கும் இதற்கான உளம் நெகிழச் செய்யும் உதாரணங்களாம். வரன்முறை

யான முழுவதும் உண்மை எனும் மெய்ஞ்ஞானம் யோகசுவாமிகளுக்கு அனுபூதியாயமைந்தது.
இதனை அவரது மேல்வரும் வாக்குஉறுதி செய்கிறது.
ஆரா ரென்ன அறைந்த போதினும் நீராயுள்ளுருகி நினையுமடியேம் பாராதி யெல்லாம் பரனே யென்ன நேரா யுணர்ந்து நிற்குதும் நாமே ஒதுக அதுநாம் ஓம்தத் சத் ஓம்'
முகமுகமாய்க் காணும் அநுபூதிஞானமாக அமைந்ததால் முழுவதுமுணிமை எனும் ஞானம் வியத்தகு எளிமையுடனும் அற்புத சோபையுடனும் யோகசுவாமிகள் வாழ்விலும், வாக்கிலும் வெளிப்படலாயிற்று. ஒருசமயம் யோகசுவாமிகள் தம் முன்னிலையில் இருந்த அன்பரொருவரை நோக்கி 'இவ்வறையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் சொல்' எனக் கேட்டார். அன்பர் ஒன்று, இரண்டு என்று எண்ணிக் கணக்கிட்டுக் கூறினார். அப்போது சுவாமி அஃது எப்படி யாகும் எல்லாருள்ளும் இறைவன் ஒருவரே இருக்கின்றார். ஆகவே இங்கே ஒருவர் தான் உளர். எங்கள் அறியாமையாலேயே யாம் பலவடிவங்களையும் காணிகிறோம் என்று அருளினார். இன்னொரு சமயம் பகவற்கீதை யைப் பாராயணஞ் செய்து வந்தவரும், கீதாசாரியரிடத்தும், மகாத்மாகாந்தியிடத்தும் பெரும் பக்தி பூண்டவருமான ஒரன்பரிடம் ஒருதெரு நாயைச் சுட்டிக்காட்டி 'இந்த நாயும் கிருஷ்ணனும், காந்தியும் ஒன்றே" எனக் கூறினார். இவ்வுணர்மை நற்சிந்தனையில் போதுமளவு சொல்லப் பெற்றிருக்கிறது. "அண்ட பிண்டமனைத்தும் அது, நாமது, தானதாம், எல்லாம் சிவருபம், பார்ப்பதெல்லாம் சிவம்' என்பன அவற்றுக்கான சில எடுத்துக்காட்டுகள், இவ்வுணர்மையைச் சிறுவரும் உகக்குமாறு கூறிய எளிமைக்கு மேல்வருஞ்செய்யுள் எடுத்துக்காட்டு.
"அப்பனும் அம்மையும் சிவமே அரிய சகோதரருஞ் சிவமே
ஒதரும் மைந்தரும் சிவமே'
தேவாதி தேவரும் சிவமே
என்னை யாண்டதும் சிவமே'
66

Page 76
மறைஞான விளக்கம்
முழுவதும் உண்மை எனும் பெரும் பெயருள் நுழைந்து மறைபொருள் காண்பதற்கு வாய்ப் பான திறவுகோல் வாசகங்கள் மேல்வரும் கண்ணியில் உள.
'உண்மை முழுதுமென்ற
கண்ணைத் திறந்துவிடு - தங்கமே
காட்சியைவிடு, சூட்சியைத்தொடு
சாட்சியையடு மாட்சிமைப்படு'
ஞான வீறு படைத்த இப் பாடலிலுள்ள காட்சியைவிடு, சூட்சியைத்தொடு எனும் வாச கங்கள் முழுவதுமுண்மை என்பதன் மறைஞான
பாகத்துக்குச் சுடர்பாய்ச்சுவனவாயுள்ளன.
காட்சியைவிடு
முழுவதும் உண்மை எனும் பெரும் பெயர், முழுவதுமாய்ப் பொலிந்து தோன்றும் காட்சியை ஒப்புக்கொள்கிறது. அக்காட்சி கயிற்றரவு போன்றதாகவும், இடியப் பத்தின் துணர்டுக் காட்சிகள் போல்வதாகவும், திரைப்படத்தைப் போன்றதாகவும் உள்ளதென உவமிக்கப் பெற்றுள்ளது. இந்த உவமைகள் தத்துவவாதியர் தத்தம் நோக்கில் விரித்துப் பொருளுரைத்தற்கு இடம் தந்து நிற்பன என்பது தெளிவு. உபநிடத மகாவாக்கியங்களுக்குக் கேவலாத்துவைதிகளும், விசிட்டாத்துவைதிகளும், சுத்தாத்துவைதிகளும் தத்தம் நோக்குகளில் பொருள்கொள்தற்கு வேத வாக்குகள் இடம்தந்து நிற்பது போல்வதே இதுவும். (இவ்வேறுபாடுகள் தத்துவவாதியரைப் பொறுத்ததேயாகும். ஒன்றோ இரண்டோ எனும் சந்தேகந் தொலைந்த அனுபூதிச் செல்வர்களிடம் இவ்வேறுபாடுகள் இல்லை. வேதாந்த சித்தாந்தம் வேறெனக் காணாத அவர்கள் தமக் குத் தரிசனமானவற்றையே கூறினர்.) முழுவதுமான காட்சி எவ்வாறாயினுமாக, அக் காட்சியை விட்டு நிற்கும் நிலை ஒன்றேயாகும். இக் காட்சி மயக்கினின்றும் விடுபட்டு நிற்கும் நிலையை முழுவதுமுணர்மை எனும் பெரும் பெயரை அடுத்துவரும் வாசகங் களர் சில நணர் கு தெளிவுபடுத்துகின்றன.
முழுவதுமான காட்சி வெறும் காட்சி யளவினது எனின் பிறவி என்பது பிராந்தியே, பிறப்போடிறப்பென்னுஞ் சித்த விகாரக் கலக்கம்

என்றே மணிவாசகரும் கூறுவர். யோகசுவாமிகள்.
மண்ணிற் பிறந்ததும் வாழ்ந்ததும் மாமாயை இதை மாதவரறிவார் மற்றவரறியார்'
எனவும் மனத்திற்பதியும் வண்ணம் பாடி யிருக்கிறார். இவ்வறிவுத் தெளிவினின்றும் உதித்த ஓர் நற்சிந்தனைப்பா, பிறவிப் பிராந்தியில் உழலும் நெஞ்சை மேல்வருமாறு இழித்துக் கூறுகிறது.
'உண்மை முழுதுமென்றால் ஓகெடுவாய் நெஞ்சமே
பின்னைப் பிறப்புண்டோ பேசு'
ஆகவே முழுவதுமுண்மை எனும் ஞானமொழி பிறவியொழிக்கு மந்திரமாகும். இதனை:
முழுவதும் முண்மை யென்று மோனமுனி சொன்னா னன்று
ஒழிந்துபோகும் பிறவி.
எனும் கீதமும் உறுதி செய்து நிற்கிறது. பிறவி மயக்கத்தை இடமாகக் கொணர்டு முனைத்து நிற்பது நான் என்று அகங்கரிக்கும் உணர்வு. நான் எனும் பான்மை மெல்லவந்து நலிந்தவுடன் 'அவனென்றும், அவளென்றும் பலபலவாம் காட்சிகள் தோன்றுகின்றன. பிறவி மயக் கறுந் த இடத் தி லி நாணி எனும் பான்மையில்லை. பலபலவாம் காட்சி விசித்திரங் களும் இல்லை. கண்முன் தோன்றும் முன்னிலைக்
காட்சிகள் எதுவும் இல்லை என்பதை.
'முன்னிலை யில்லை என்றும் முழுவதும் முதன்மையென்றும் எனும் நற்சிந்தனை வாசகம் தெளிவிக்கின்றது. 'அவன் அவள் அது என்னும் அவையொரு மூன்றும் சிவனார் விளையாட்டு எனும் 'ஓதுக அதுநாம் ஓம் தத் சத் ஓம்" பாடல், பொருட்காட்சிகள் அனைத்தையும் வெறும் விளையாட்டெனத் தேறச் செய்கிறது. பிண்டப் பொருள்களைப் போலவே அண்டம் அனைத்தை யும் விட்டு நிற்கும் நிலையை மேல்வரும் நற்சிந்தனை தெளிவுபடுத்துகிறது.
'உண்மை முழுதுமென ஒது மொரு மொழியால் என்னை மறந்தே னிடரகன்றேன் - பிள்னையிங் காச்சரிய முண்டோ அண்டபிண்டமெல்லாமே போச்சுதொன் றாகப் புகல்" ஆகவே முழுவதுமுண்மை என்னும் ஞான
மொழி பொய்யை மெய்யென நம்பும் மோகத்
67

Page 77
தைத் தீர்ப்பது. அது உண்மை எனும் சூரியனை மூடிமறைத்து முழுவதுமான விசித்திரக் காட்சி களைக் காட்டும் மாயை எனும் இருள் மேகத்தைச் சிதறடிக்கும் சூறைக்காற்று என வருணிக்கத் தக்கது.
'முழுவது முண்மை யென்றும் மூடிய மாயவிருள் ஒட அருள்புரிந்தான்' என்பது நற்சிந்தனை
சூட்சியைத் தொடு
சூட்சியைத் தொடுதல் என்பது அவன், அவள், அது எனும் அவைவாய்த் தோன்றி, நிலைத்து ஒடுங்கும் காட்சிகள் யாவும் 'ஒடுங்கி'யின் அருளாடலே எனும் உளவறிந்து, அந்த ஒடுங்கியிடத்திலே ஒழிவிலொடுக்கத்திற் பூண்டு கிடத்தலாம். முழுவதுமான காட்சியை விட்டு உண்மையான சூட்சியைத் தொட்டு நிற்பதற்கு, அறிவினாலே நித்தியம் எது அநித்தியம் எது என ஆராய்ந்து பார்த்து உறுதியுறும் முறை யொன்றையும் யோகசுவாமிகள் ஆங்காங்கே
அறிவுறுத்தியிருக்கின்றார்.
நற்சிந்தனைத் திருநூலின் உரைப்பகுதி ஒன்றிலே உலகம் உடல் என்பன வீண்பாவனை களெனவும், கடவுளே உணர் மையெனவும் பலகாரணங்கள் காட்டி மேல்வருமாறு முடிவு கூறுகிறார்.
வேதம் ஆகமம் யாவும் இந்த உலகம் முழுவதும் தெய்வமே நிறைந்திருக்கிறதென்றும் அதைவிட வேறு யாதுமில்லையென்றும் முறையிட நாங்கள் எப்படி உலகமிருக்கின்றது சரீரமிருக்கிறதென்று சினைக்கலாகும். அப்படி உலகஞ் சரீரம் வேறாயிருக்கிறதென்றால் இதைவிடப் பழி பிறிதுண்டோ? ஆன்றோரும்’ நின்னாவார் பிறிரீன்றி நீயேயானாய், என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னோரன்ன பல காரணங்களாலுங் கடவுளைத் தவிர வேறொன்றுமில்லை. யாவும் அவன் செயல்.
'சொல்லெலாம் மோனம்
தொழிலாதியும் மோனம்
எல்லாம் நன்மோனநிறைவே'
இவ்வண்ணம் ஆய்ந்து பார்த்து உறுதியுறும் முறையை மேல்வரும் தியானமாலைப் பாடல்
ஒன்றும் கூறுகிறது.

நீயும் நானும் அவனும் அவளும் 'காயுந் தீயும் காலும் வானும் பேயும் பூதமும் பிரானும் பிறவும் ஆயும் பொழுது அவனாய் விளங்குமே
ஆயினும் எவ்வாறு தான் நூதனவிவேகத்தால் நுழைந்து நோக்கினாலும் அது அளந்தறிய ஒண்ணாதது. அது ஒரு நுணுக்கமான மருமமே
LTLD.
'பரத்தை மறைத்தது பார் முதற் பூதம் பரத்தில் மறைந்தது பார் முதற் பூதம்' எனத் திருமூலர் கூறுவது போலவே உண்மை யொன்றே உலகாகவும் தோன்றுகிறது. உண்மை யைக் கண்டால் உலகத்தோற்றம் கழியும். உலகத் தோற்றத்தில் மயங்கினால் உண்மை மறைந்து நிற்கும். இந்த மருமத்தை நுணுக்கமாகக் கண்டு நிற்கும் தெளிந்த அறிவு நிலையை மேல்வரும் நற்சிந்தனைப் பாடல் கூறுகிறது.
போக்கொடு வரவுமில்லை பூமி வானமிங்கில்லை நீக்கற வோங்கி நிற்கும் நின்மலன் தன்னையன்றிக் காக்குமோர் தேவுமில்லை காலதேசமுமில்லை நோக்குவார் தங்கெட்கெல்லாம் நுணுக்கமாய்த்
தெரியுமன்றே இந்நோக்கு அவனருளே கண்ணாகக் காணும் நோக்கு என்பது தெளிவு. அருட்கண்ணால் நோக்குவோர்க்கு முழுவதுமாய்த் தோன்றும் மாயாவிகாரக் காட்சிகளைவிடப் பன்மடங்கு தெளிவாக உண்மை சொரூபம் ஒளிரும். அந்தத் திணிந்ததோரிருளுள் தெளிந்த தூவெளியாய் ஒளிரும் சோதி சொரூபக் காட்சியிலேயே மாயாவிகாரக் காட்சிகள் பொருளற்றுப்போம். இவ் வணர் ணம் உணர் மை முழுதுமெனி ற கண்ணைத் திறந்து காட்சியை விட்டு சூட்சியைத் தொட்டு நிற்கும் சுவானுபூதி வாக்குகள் பல நற்சிந்தனையிலே ஆங்காங்கு வெளியாய்த் தெரிகின்றன. அவற்றுக்கான சில எடுத்துக் காட்டுகள் மேல்வருமாறு:
"ஓங்கார மேடையின் மேலேறி நின்றேன் ஒன்றையுங் காணேனடி -குதம்பாய் ஒன்றையுங் காணேனடி.
தூங்காமல் தூங்கும் சுகம் வந்து வாய்த்தது சும்மா விருந்தேனடி - குதம்பாய் சும்மா விருந்தேனடி"
பாதார விந்தத்தைக் காணாமற்கண்டு பணியாமற் பணிந்தேனடி - குதம்பாய் பணியாமற் பணிந்தேனடி.
68

Page 78
முண்டக மலப்பதங் கண்டேன் மூவரும் தேவரும் முளைத்ததும் கண்டேன் உருகி யுருகி உணர்ந்தேன் - சிவசிவ ஒன்றையுங் காணாம லேங்கி நான் நின்றேன் மருமமிது பெரும் மருமம் மகத்துக்களாலும் சொல்லொனா மருமம்'
முழுவதுமான காட்சியை விட்டு உண்மை யெனும் சூட்சியைப் பொருந்தி நிற்கும் நிலை நன்மோன நிலையாகும். இதனை,
'முழுது முண்மையாச்சுதடி மூச்சுப் பேச்சுப் போச்சுதடி" எனும் வாசகம் உணர்த்துகிறது.
ஆகவே முழுவதுமுணர்மை எனும் ஞான மொழியின் முடிந்த முடிவான விளக்கம் ஞான
வரம்பான மோனமே.
இந்த நன்மோன நிறைவின் நீங்காமலேயே காட்சி மாத்திரமான உலகிலே சாட்சியாய் வாழுதற்கான ஒழுக்கத்தையும் முழுவதும் உண்மை எனும் திருமொழி உள்ளடக்கியிருக் கிறது. உலகக் காட்சியை வெறும் தோற்றமெனக் கணி ட ஞானி அதனைப் பற்றுதற்கோ, விடுதற்கோ ஓர் அவசியமுமில்லையே! அவன் பொருந்திய வண்ணம் பூமியில் வாழ்வான். அவனது உலக வாழ்வும் உல்லாச வாழ்வாக அமையும்.
'உண்மை முழுதுமென்று சொல்லு உல்லாசமாயெங்கும் செல்லு' எனும் வாசகம் இதற்கான சான்றாகும்.
ஆகவே முழுவதுமுண்மை எனும் திருமந்திரம் நண் மோன நிறைவினை நீங்காமலேயே உலகோடு ஒட்டியும் ஒட்டாமலும் ஒழுகும் சகசஸ்திதியைக் குறிகாட்டுவதாகும்.
2. ஒரு பொல்லாப்புமில்லை ஒரு குறைவுமில்லை என்பது ஒரு பொல்லாப்பு மில்லை என்னும் மகாவாக்கியத்தின் சார்பு வாக்கியமாகும்.
ஒரு பொல்லாப்புமில்லை என்பது செல்லப்பா சுவாமிகள் யோகசுவாமிகளுக்கு அருளிய தீக்கைமந்திரம் எனத் தோன்றுகின்றது.
ஒரு பொல்லாப்புமில்லையெனும் ஒசை

-யோடு வந்து நோக்கித் திருவடித் திக்கை செய்த செல்வன் தாள்
- என்றும் காப்பு எனும் பாடல் இதற்குச் சான்றாகும். தீக்கை மந்திரமாதல் பற்றியே இஃது மகாவாக்கியங் களுள் முதலாவதாக வைத்து வழங்கப்படுகிறது போலும்.
பொருள் விளக்கம்
இத்திருமந்திரம் உபதேசிக்கப்பட்ட சந்தர்ப் பம் பற்றிய தெளிவான குறிப்பு நற்சிந்தனை யிலுள்ளது. இக்குறிப்பினை அறிந்து கொள்வது இம் மகாவாக்கியப் பொருள் விளக்கத்திற்குப் பொருத்தமான நுழைவாயிலாக அமையும். ஆதலால் அச்சந்தர்ப்பம் இங்கு கூறப்பெறு கின்றது. நல்லூர்த் தேரடியிலிருந்த செல்லப்பா சுவாமிகள் யோகசுவாமிகளை நோக்கி யாரடா நீ" என்று அதட்டினார். அவ் வதட்டுதலாலே யோகசுவாமிகள் தான் உடம்பன்று, மணமன்று, புத்தியன்று, சித்தமன்று என்றவாறு கோசங்கள் யாவையும் கழித்து அகமுகமாகி உள்ளே சென்று அருளொளியில் சுகித்தனர். ஆனால் அவ்வருளொளி யைச் சூழ்ந்து இருள்தோற்றமும் தோன்றியது. அருளொளியை இருள் சூழ்ந்திருப்பதன் பொருளறியாது நின்ற யோகசுவாமிகளை நோக்கிச் செல்லப்பா சுவாமிகள் கூறிய திருவாக்கே ஒரு பொல்லாப்புமில்லை என்பது,
யாரடா நீ யென்றே அதட்டினான் அன்றே யான் பெற்றே னருள் அருளொளிக்குள்ளே புகுந்து சென்றேன் ஆங்கே இருள் சூழ்ந்திருப்பதைக் கண்டேன் பொருளறியேன் ஒரு பொல்லாப்புமில்லை யென்றான்'
-நற்சிந்தனை அருளொளி என்பது அகமுகமாகிச் சுகிக்கும்
நன்மோனசுகமேயாகும்.
நினைவொன்றும் நினையாமல் நிற்கின் அகமென்பார்
நிற்கு மிடமே அருளாம்"
எனும் தாயுமானார் அருமைத் திருவாக்கு இதற்குப் போதியசான்று. இந்த நன்மோன சுகத்தின் நிழல்போல அதனைச் சூழ்ந்து இன்ப துன்பமாயையாகிய அருளாடல் நிகழ்கிறது. உண்மை ஒன்றே உளது. அதனை அகமுகமாகி
69

Page 79
நோக்கச் சுகமாயமையும். அதனிடத்தே பலவாகிய கோலங்கள் பகிர்முகப் பட்டுத் தோன்றுகின்றன. அக்கோலங்களை நோக்கத் துன்பத் தோற்றம் தோன்றுகின்றது. இவ்வண்ணம் சுத்த சுகத்தைச் சூழ்ந்து அதன் நிழல்போல் துன்பத்தோற்றம் தெரிவதால் ஒரு பொல்லாப்பும் இல்லை. கானல் நீரால் நிலம் கரையுமோ? சித்திரப் புலியின் சீற்றத்துக்கு அஞ்சுவாரும் உளரோ?
இம்மைக்கு மருந்து
ஒரு பொல்லாப்புமில்லை எனும் திருமந்திரம் துன்பத் தோற்றத்தை ஒப்புக்கொண்டு அதனால் ஒரு பொல்லாப்புமில்லை என உறுதியுரைக் கின்றது. “துன்பமும் வாழ்க்கை ஒழுங்கில் அடங்குகிறது” எனவும் “துன்பமும் ஓர் உணவு” எனவும் யோகசுவாமிகள் அடிக்கடி கூறியுள்ளார். திருவருட்சக்தி இன்ப துன்பமாகிய தொட்டிலி லாட்டியே உயிர்த்திரளைப் பேதித்து வளர்த் தெடுக்கின்றது. ஆராய்ந்து பார்த்தால் இன்பத் தினும் துன்பமே ஆன்ம லாபத்தைப் பொருளெனக் கொண்டவர்க்கு உதவியாயுள்ளமை தெரியவரும். இன்பம் போக நுகர்ச்சியையே தூண்டும். துன்பமே போக உவர்ப்புக்கு ஏதுவாகும். போக உவர்ப்பே. (விராகம், பிரபஞ்சவைராக்கியம்) மெய்ஞ்ஞான பேற்றுக்குத் தக்க வேலியாக அமைகிறது. ஆதலால் ஆண் மலாபத்தைப் பொருளாகக் கொணர்ட பலர் துன்பத்தை வேண்டிப் பிரார்த்தித்தனர். துன்பம் தவத்தின் உருவம் எனவும், சுடச்சுடரும் பொன் போல் துன்பம் சுடச்சுட நோற்கிற்பவருக்கு ஞானஒளி பெருகும் என்பதும் வள்ளுவர் குறிப்பாகும். யோகசுவாமிகள் தாம் கால்முறிவுற்று வைத்திய மனையிற்கிடந்த தருணத்தில் அவரைப் பார்க்கச் சென்ற மெய்யன்பர் ஒருவரிடம் வருத்தம் வரப்பிரசாதம் எனக் கூறியதும் இதனோடு தொடர்பானதே.
அவர் 'வில்லங்கத்துள் தான் விளங்கும். நல்லருள்" என அடிக்கடி கூறினார். துன்பம் கன்மம் தொலையும் ஒரு வாயிலாகவும் உள்ளது. 'ஏனிந்தத் துன்பம் வந்தது என்பதை அறிபவர் தொலைகிறது கன்மம் என்று பரபரப்படையாது சும்மா இருப்பர்" என்பது யோகசுவாமிகள் அருள்மொழி. "பூரணமான நன்மையுளதாயின் இப்பிறப்பு இல்லை".

மலநோயை அகற்றுவதற் காகவே உலகமாகிய வைத்தியமனைக்கு வந்துள்ளோம். வைத்திய மனையில் துன்ப அனுபவங்கள் ஏற்படுவது இயல்பே. ஆனால வைத்தியநாதனான இறைவன் யாவரையும் சுகப்படுத்துவது உறுதி. 'குப்பைகள் எரிக்கப்படுகின்றன. அதனால் ஆன்மாவுக்கு ஒரு கேடு மில்லை, கரும்பை இறுக நசித்தாற்றான் சாறு வரும்" என்பன அருள்மொழிகள், அகிம்சைக் கோட்பாட்டில் ஊறிப்போனவர்க்கு உலகில் நிகழும் கொலைகள் பெருந்துயரை ஏற்படுத்தும். ஆனால் கொலையும் வேண்டும். அது இனி றி உலகு இயங் காது. அது பஞ்சகிருத்தியங்களுள் ஒன்று என யோகசுவாமி கூறுவார். இவ்வாறு துன்பம் அழிவு ஆதிய யாவும் திருவருளின் மறக்கருணையே என்பதற்கான விளக்கம் போதுமளவு யோகசுவாமிகளால் உணர்த்தப் பெற்றிருக்கிறது. ஆதலால் யாவும் அருட்செயலே. "அருளல் ஐந்தொழில்களில் ஒன்று என்ற அளவில் அமையாது. ஐந்தொழிலும் அருளலே" என்பதை மேல்வரும் சிவப்பிரகாச செய்யுள் கூறுகிறது. 'ஏற்றவினாவ அரனருளின் திருவிளையாட்டாக இயம்புவர்கள் அணுக்களிடர்கடனின்று மெடுத்தே ஊற்றமிக அருள்புரித லேதுவாக உரைசெய்வர்; ஒடுக்கம் இளைப்பொழித்தல், மற்றைத் தோற்றம் மலபாகம்வர, காத்தல் போகம் துய்ப்பித்தல், திரோதாயி நிறுத்தலாகும், போற்றலரும்அருள் அருளே அன்றி மற்றுப்புகன்றனவும் அருளொழியப் புகலொணாதே."
எல்லாம் அருட்செயலே எனும் அடிப்படையில் அமைந்த ஒரு பொல்லாப்புமில்லை என்ற மருந்து இம்மை மறுமைக்கும் ஏற்ற மருந்து. இஃது இம்மையில் இவ்வுலகை அழகிய நந்தவனமாகக் காணச்செய்கிறது. இவ்வழகிய நந்தவனத்திலே நெருஞ்சிற்காடும் உள்ளது. ஆனால் அதனால் ஒரு பொல்லாப்புமில்லை. நெருஞ்சிற்காடே பிருந்தாவனமன்றோ. ஆகவே இத்திருமருந் தானது புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் ஒன்றாகக் காணச்செய்கிறது. இன்பத்தைப் போலவே துன்பத்தையும் கொள்ளும் சம புத்தியைத் தருகிறது. நிகழ்வன நிகழட்டும் எல்லாம் நன்மைக்கே என்று சாட்சியாய் வாழும் திடபுத்தியைத் தருகிறது. இவற்றால் மனத் துயரை நீக்க நல்ல மருந்தாக அமைகிறது. இவை
70

Page 80
மேல்வரும் நற்சிந்தனைப் பகுதிகளால் தெளி வாகின்றன. "பொல்லாப்பிங்கில்லையென்று போதனை செய்வான் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒன்றாகக் காண்பான்
ஒரு பொல்லாப்புமில்லையென்றோதுந் திருவாக்கால் உருகி உருகி உணர்வற் - றிருநிலத்தில் இன்பதுன்ப மென்னுமவை யென்று மொப்பாந் தன்மைகண்டேன்.
ஒரு பொல்லாப்புமில்லையடா தம்பி உண்மை முழுது மறிந்திடெடா வருவது வந்து போகட்டும் சாட்சியாய் வையகத்தில் நீவாழ்வாய் மாட்சியாய்
மனத்துயரை நீக்க நல்ல மருந்து - குரு வாக்கியமொரு பொல்லாப்புமில்லை.
இத்தகைய விளக்கத்துடன் சஞ்சலமின்றி திடபுத்தியுடன் வாழும் ஒருவர் தருமநெறியி னின்றும் பிசகார். ஆதலால் இவ்வுலகிலே இன்பமாக வாழ்தற்கு உதவியாயமைவதுடன் தருமநெறி பிசகாமல் வாழவும் வழிகாட்டுகின்றது. 'ஒரு பொல்லாப்புமில்லை என்னும் உத்தமனார்
திருவாக்குத் தருமநெறிகாட்டும் சடுதியில் வா என் மனமே" எனும் கண்ணி இதனைத் தெளிவுபடுத்து கின்றது.
மறைஞ்ஞான விளக்கம்
ஒரு பொல்லாப்புமில்லை எனும் திருமந்திரம் உண்மை முழுதும் எனும் ஞான மொழியுடன் காரியகாரணத் தொடர்புடையது. அதாவது உண்மை முழுதுமாதலால் ஒரு பொல்லாப்பு மில்லை என்பது முடிபாகிறது. இவ்விரு வாக்கி யங்களும் பலசந்தர்ப்பங்களில் இணையாகக் கூறப்பெற்றிருப்பதன் நுட்பம் இதுவே.
'ஒரு பொல்லாப்பு மில்லை யென்றுரைத் தோய் உண்மை முழுவதும் என்றெனக் குரைத் தோய்
ஒரு பொல்லாப்பு மில்லை தம்பி உண்மை முழுதுமறிந்திடடா" என்பன இதற்கான சில எடுத்துக்காட்டுகள். இவ்வியைபினை அழுத்தமாகத் தெளிவுபடுத்தும் ஓர் பாடல் அன்னைப்பத்திலுளது. அது மேல் வருமாறு,
'எல்லாஞ் சிவன் செயல் எல்லாஞ் சிவன் வடிவு எல்லா மவனன்றோ அன்னே யென்னும்

எல்லாமவன்வடி வெங்கு மவனென்றால் பொல்லாப் பிங்கேதடி அன்னே என்னும்"
ஒரு பொல்லாப்புமில்லை என்னும் மறை மொழியின் மறைஞானப் பொருளை உள்நுழைந்து
காணுதற்கேற்ற தக்கதிறவுகோல் இதுவே. எங்கும் சிவமெனில் மங்களம் பொங்குமன்றோ!
'சார்ந்த இடமெங்குச் சிவ சிவ தங்கும் பரிமளம் பொங்கும் சிவ" என்பது நற்சிந்தனை. எல்லாமவனெனில் நாமும் அவனே. அதாவது அவனே நாமாக உள்ளான். இந்நிலையை விளக்க யோகசுவாமிகள் நூதனமானதோர் அடுக்குத் தொடரை அமைத்தனர் அது “நாம் நாம்” “நாமேநாம்” என்றவாறு நற்சிந்தனையில் பல விடங்களில் பயின்று வந்துள்ளது. மெய்ப் பொருளாகிய நாம் எவ்வித மாற்றமுமின்றி நாமாகவே இருக்கின்றோம். இதனை என்றும் இருந்தபடியே இருக்கிறோம் எனவும் யோக சுவாமிகள் இடையிடை கூறுவார். நாமாகிய நம்மை அங்கி சுடா, நீர்நனையா, மாதிரம் தானும் வருத்த முடியாது. நாம் ஈறிலாப் பொருள். மாறிலா மகிழ்ச்சியே நமது இயல்பு. நாம் நித்தியர், நிராமயர், பூரணர், பரமாத்மா. ஆதலால் நமக்கொரு குறையுமில்லை. இதனை “நாமே நாம் என்றுரைத் தான். எங்கள் குருநாதன்”, “நமக்கொரு குறைவில்லை” எனும் இரு வாசகங்களும்,
பொல்லாப்பு மிங்கில்லை புதுமையுமிங்கில்லை பூரண சுதந்திரம் எம்மிடமே" என்னும் வாசகமும் உணர்த்தி நிற்கின்றன.
ஆகவே ஒரு பொல்லாப்புமில்லை எனும் மகாவாக்கியம் பூரண ஞானத்தில் பூண்டு கிடக்கச் செய்வதுடன் இம்மையில் மகிழ்ச்சியாகவும், தருமநெறி பிசகாமலும் வாழ்தற்கும் உதவியான திருமந்திரமாகும்.
3. எப்பவோ முடிந்த காரியம்
எப்பவோ முடிந்த காரியம் என்பதன் சார்பு வாக்கியங்கள் “ஒரு நூதனமுமில்லை, முடிந்த முடிபு, அப்படியே உள்ளது" என்பன.
இப்பெரும் பெயரிலுள்ள காரியம் என்னும்
71

Page 81
சொல் ஏகமாயும், சுத்தமான அருளொளியாயு முள்ள உண்மைப்பொருள் எவ்வித மாற்றமு மின்றி இருந்தபடியே இருந்துகொண்டு, எல்லா மான கோலங்களாயும் இன்பதுன்பமாயையான இருட்கவிவாயும் தோன்றும் உலககாரியத்தைக் குறிக்கிறது. முடிந்த எனும் பதம் உண்மைப் பொருள் உலக காரியமாகத் தோன்றுவது கதிரவனும் கதிரும் போன்றதொரு மாற்றொணா நியதி என்பதை அழுத்திக் கூறுகிறது. எப்பவோ எனும் சொல் உணர்மைப் பொருள் உலக காரியமாகத் தோற்றும் அநாதித் தன்மையைக் குறிக்கிறது. ஆகவே எப்பவோ முடிந்த காரியம் எனும் பெரும் பெயரானது உண்மைப் பொருளான இறைவன் இருந்தபடியே இருக்க, அவரின் திரு முன்னிலையில் உலக மாயை விரிந்து தோன்றுவது அப்படியேயுள்ள காரியம் என்பதை உணர்த்துகிறது. இஃது அப்படியே உள்ளது எனும் சார்பு வாக்கியம் செல்லப்பரால் உரைக்கப்பட்ட சந்தர்ப்பத்தைக் கொண்டு தெளியப்பட்டதாகும். செல்லப் தேசிகர், “அருளொளியை இருள் குழ்ந்திருப்பதால் ஒரு பொல்லாப்புமில்லை" என்று அருளிய போது அதன் மருமந்தேராது மலைந்து நின்ற யோக சுவாமிகளை நோக்கி 'அப்படியே உள்ளது காண் ஆரறிவார்" என்று அருளினார். ஆகவே எப்பவோ முடிந்த காரியம் எனும் பயிலும் தமிழில் அமைந்த பெரும்பெயர், இறைவன் அவரின் சந்நிதானத்தில் நிகழும் அருளாடல் எனும் இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையுமாகிய அத்துவித ஞானத்தை மறைபொருளாகக் கொணர்ட திருமந்திரம் என்பது தெளிவு. இதனை நற்சிந்தனையில் ஓரிடத்திலே யோகசுவாமிகள்
அப்படியே உள்ளதென அத்துவித உண்மையினைச் செப்பினான் செல்லப்பன் தேர்" என உணர்த்தியுள்ளார்.
எப்பவோ முடிந்த காரியம் எனும் இப்பேருண் மைக்குள் அடங்குவதே ஒரு சிற்றுயிர் வாழ்க்கை யும். ஒரு சிற்றுயிரின் பிறப்பு, வாழ்வு, இறப்பு இறப்பிற்குப் பிந்திய கருமாதிகள் யாவும் எப்பவோ முடிந்த ஓர் ஒழுங்கின்படியே நிகழ்கின் றன. இந்த ஒழுங்கு அல்லது தெய்வசித்தம் மறைவானது. ஆயினும் மகான்களுக்கு அது அவ்வப்பேது தெளிவாகும். யோகசுவாமிகள்

காசியிலிருந்து எழுதிய திருமுகமொன்றிலே 'இருந்த இருக்கிற இருக்கும் யாழ்ப்பாணத்தா ரெல்லாருக்குமாகக் கருமாதிகளெல்லாம் செய்து முடிந்துவிட்டன" என அருளினார். மறைவாயிருக்கும் தெய்வசித்தத்தைத் தெளிந்தே அவர் அவ்வாறு கூறினார். கருமாதிகள் மட்டும் இன்றிக்கண்ணி மைத்தல் கூட எப்பவோ முடிந்திருக்கின்றன.
'இன்னவினை இன்னதலத்தின்னபொழுதின்னபடி இன்னதனால் எய்தும் என அறிந்தே -அன்னவினை அன்னதலத் தன்னபொழு தன்னபடி அன்னதனால் பின்னமறக் கூட்டும் பிரான்'
என்பது சிவபோகசாரம். ஆகவே நூதனமான காரியமெதுவும் பூதலமீதினில் இல்லை. இதனை ஒரு புதினமுமில்லை எனும் வழக்கு மொழியால் யோகசுவாமிகள் உணர்த்தி வந்தனர். யாழ்ப்பா ணத்திலே ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது என்ன புதினம்?' என விசாரிப்பது வழக்கம். சுவாமிகள் இவ்வழக்கப்படி தம் அடியவர்களிடம் என்ன புதினம் என விசாரிப் பார். அவர்கள் ஒரு புதினமுமில்லை சுவாமி என்றவாறாகப் பதில் கூறும்பொழுது 'ஓம் ஒரு புதினமுமில்லை. எல்லாம் எப்பவோ முடிந்திருக் கின்றன" எனும் ஞானப்பொருளை அவர்களுக்கு உணர்த்துவார்.
செல்லப்பதேசிகர் எப்பவோ முடிந்த காரியம் எனச் செப்பிய வாசகம் சித்தகத்தியைத் தருவ தாகும். எனினால் காரியங்களை ஆக்கவும் அழிக்கவும் முடியும் எனும் முனைப்பே மனத்திற்கு விசையூட்டுகிறது. இதனால் பம்பரம் போன்ற சுழற்சி நிகழ்கிறது. ஓயாத சுழற்சியே சித்தவிகாரக் கலக்கமாகவும் அமைகிறது. எனக்கெனச் செயலில்லை எனத் தெளிந்த விடத்து மனம் ஆடி ஓய்ந்த பம்பரம் போல் அடங்குகிறது. ஒடுங்கிய மனத்தில் உண்மை புலப்படும். இதனை,
"எப்பவோ முடிவானதென் றெங்கட்குச்
செப்புவா ரவர் சிந்தை தெளிந்திட
என நற்சிந்தனை கூறும். எப்பவோ முடிந்த காரியம் என்பதன் முடிந்த எனும் அம்சத்தி னின்றும் முளைகொண்டது. 'முடிந்த முடிவு எனும் மெய்ம்மொழி. இம் மொழியினை இடி போன்ற குரலிலே செல்லப்பர் கூறுவார். இந்தச்
72

Page 82
சிம்ம கர்ச்சனையின் முன் சித்தம் எனும் மத்தகசம் மண்டியிட்டுக் கிடக்கும். இவ்வாற்றால் ஐம்முகச் சிவனிடத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியை நிகர்ப்பது எப்பவோ முடிந்த காரியம் எனும் பெரும் பெயரிலிருந்து முளை கொண்ட முடிந்த முடிவு எனும் திருமந்திரம். சிந்தை என்னும் சூர் அடக்க இத்துணை வேகமந்திரம் வேண்டும் போலும்,
'முடிந்த முடிவென்று முன்னின்று சொல்லப்
படிந்த தென்னுள்ளம் பதியில்"
எனும் வாக்கு இத்தகைய விளக்கத்துக்கு இடந்தந்து நிற்பதாகும்.
எனவே எப்பவோ முடிந்த காரியம் எனும் பெரும் பெயர் வேகங்கெடுத்தாளுந் திருமொழி எனக் கூறுவது பொருந்துவதாகும். அது பிணம் எழுந்து நடந்தாலும் ஒரு புதினமுமில்லை எனத் தெளிந்து சும்மாயிருக்கச் செய்யவல்ல அருள் மொழியாகும். அண்மைக் காலத்திலே அண்ணாமலையில் சலனமற்ற அருட்சோதியின் விளக்கமாய்த் திகழ்ந்த இரமணமகரிஷிகள் அவரை அழைத்துச் செல்லும் நோக்கோடு வந்து அழுது கரைந்திருந்த தமது அன்னையாரின் பொருட்டு எழுதிக் காட்டிய வாசகத்தில் இந்த எட்பவோ முடிந்த காரியத்தின் ஒரம்சம் அழுத்தமாய்த் தெரிகிறது. இது மேல்வருமாறு:-
"அவரவர் பிராத்தப் பிரகாரம் அதற்கானவனாங் காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது: நடப்பதென்றடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம் ஆதலில் மெளனமாயிருக்கை நன்று
எப்பவோ முடிந்த காரியம் எனும் பெரும் பெயரின் இருந்தபடியே இருக்கும் மறைஞானத் தினின்றும் மலர்ந்த மலர்ச்சுடர் அப்படியே யுள்ளது எனும் மணிமொழி. இம்மணிமொழி அருளொளியை இருள் சூழ்ந்திருப்பது அப்படியே யுள்ள காரியம்எனும் ஒருபொருளுடன்,அருளொளி யானது இருள் சூழ்ந்திருப்பதனால் எவ்வித திரிபும் அடையாமல் இருந்தபடியே இருக்கிறது என்னும் ஓர் உயர் ஞானப் பொருளும் தருவது.
에
கூடுதலடுடன் பிரிதலற்று நிர்த் தொந்தமற்று குவிதலுடன் விரிதலற்றுக் குணமற்று வரவினொடு போக்கற்று'

என்றவாறாக உள்ள தாயுமானாரின் திருவாக்குக் கொப்ப பரிபூரணசுகப் பொருளாய் நிலையாய் இருப்பது. இந்த நிலையில் நிலை கொண்ட இயல்பினரான செல்லப்பர் அப்படியே உள்ள தென அந்தரங்கமாகச் செப்பிக் கொண்டிருந்தனர். யோகசுவாமிகளும் இருந்தபடியே இருக்கும் பொருள் எனப் பலவிடத்தும் பாடினர். இத்திரு மந்திரம் இருந்தபடியே இருப்பாய் இருக்கச் செய்யும் மெளன மந்திரமெனவே தெளியத்தக்கது. இத்திருமொழியைச் செல்லப்ப தேசிகர் அன்பாக மொழிவார்.
"அப்படியே உள்ளதென அன்பாகச் சொல்லியே
அப்பன் செல்லப்பன் அருள் தந்தான்"
என்பது நற்சிந்தனை. முடிந்த முடிபென்னும் மொழி தீப்பொறியை நிகர்க்குமென முன் கூறப்பட்டது. அப்படியேயுள்ளது எனும் மொழியோ சரவணப் பொய்கையில் குளிர்ந்து தவழ்ந்த குழந்தையை ஒப்பதெனக் கூறத்தக்கது. அது தண்ணென்ற சாந்தபத இயற்கையில் பூண்டு கிடக்கச் செய்யும் மோனமணிப் பூடணமாகும்.
ஆகவே எப்பவோ முடிந்த காரியம் எனும் மகாவாக்கியம் உலக காரியங்களால் தாக்குறாது பரபரப்பற்றுவாழவும் நன்மோனநிலையிற்பொருந்தி உபசாந்தமுறவும் அருளும் திருமந்திரமாகும்.
4. நாமறியோம்
நாமறியோம் எனும் நலத்திகழ் மந்திரத்தின் சார்பு - வாக்கியம் ஆரறிவார் என்பது
அண்ட சராசரத் ததிசயந் தன்னை ஒருவருமறியார்
உண்மை ஒன்றே உள்ளது. இந்த ஒரே உண்மை எண்ணிறந்த கோலங்களாகத் தோன்று வதேன்? சுத்த சுகம் ஒன்றே உளது. இதில் பொல் லாப்பான தோற்றங்கள் தோற்றுவ தெப்படி? எல்லாம் நன்மோன நிறைவே, ஆனால் அலகிலா ஆடலும் நிகழ்வதேன்? இவை போன்ற வினாக்கள் மெய்ப்பொருளறிவினி மூலமுடிச்சி னைத் தொட்டு நிற்கும் வினாக்கள். இவ்வினாக் களுக்கு விடைகாண முயன்ற மெய்யியலறிஞர் ஒன்றோடொன்றொவிவாத விடைகளையே கூறிச் சென்றனர். அவ்வொவ்வாமை ஒன்றே
அவர்கள் முழு உண்மையறியாத, யானை பார்த்த
73

Page 83
குருடராயினர் என்பதற்குச் சான்றாகும். செல்லப்ப தேசிகரோவெனின் யாமறியோம் என்று சொல்லக் கூசார். அவர் அது அப்படியே உள்ளது காண் ஆரறிவார்' என்று சொல்வார். மாயை வல்லாளான இறைவன் தன் மாசாலத்தின் பொருட்டு மறைத்து வைத்திருக் கும் அந்த இரகசியத்தை யாரே அறியவல்லார்
'ஒருவருமறியா ரென்றான் எங்கள் குருநாதன்
ஓங்கார வழியென்றான் எங்கள் குருநாதன்
என்பது சுவாமிகளினது திருவாய் மொழி
11. ஓங்காரத்துட் பொருளை அறியும் நெறியை
ஒருவரும் அறியார் உலகிலுள்ள சமயங்களெல்லாம் உண்மை யுணரும் நெறிகள் பற்றிப் பலபடக் கூறுகின்றன. இந்துசமயத் தந்திர சாத்திரங்களில் உண்மையை உணரும் நெறிமுறைகள் விரிவாகவும், நுட்பமாகவும் கூறப்பெற்றிருக்கின்றன. இந்நெறிமுறைகளின் இயலாமை பற்றிய சுவையான குறிப்பொன்று திருவாசகத்திருவண்டப் பகுதியில் உளது.
'இத்தந்திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்(கு) அத்தந்திரத்தின் அவ்வயின் ஒளித்தும்'
என்பது அக்குறிப்பாகும். இதனை யோக சுவாமிகள் வசனவடிவில் அவ்வாறே வழி மொழிந்திருக்கிறார்.
'எத் தந்திரத்தில் தேடிப் போனாலும்
அது அத்தந்திரத்தில் மறைந்து நிற்கும்'
அது தேடித் தேடொணாத தேட்டமெனவே தோன்றுகிறது. செய்கண்ணானும், பிரமனுமாகிய இருவரும் நிலங்கிண்டும், உயரப் பறந்தும் காணமுடியாது போயினர் என்னும் கதை மெய்யடியார்களாலும், மெய்ஞ்ஞானியராலும் ஒரு சேரப் போற்றம் பெற்றிருக்கிறது. இரமண மகரிஷிகள், அன்னமாய் விசும்புபறந்து அயன் அறியாமற்போன கதையின் நுட்பம், புத்தியால் இறைவனை அறியொனாது என்பது என எடுத்துக் காட்டியிருக்கின்றார். நெறியிலாத 960 p66 (Pathless God) 6TgJub Gastafś625" பெரிதாய் முழங்கிய J. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், அறிவாயு தத்தால் இறைவனைக் கைப்பற்றிக் கொள்ளத் துடித்துத் திரிந்த ஆய்வறிஞர் f6 ofb

'அறிய வேண்டுமென்ற ஆசையைத் துறந்து விட்டீர்களோ' எனக் கேட்டமையும் ஈண்டு நினைவு கூரத்தக்கது. தாயுமானாரும்,
'கூர்த்த அறிவத்தனையும் கொள்ளை கொடுத்துன்னருளைப் பார்த்த வன்நான் என்னை முகம் பாராய் பராபரமே என்றே பாடியுள்ளார். யோகசுவாமிகள் மேற்கு நாட்டுப் பல்கலைக்கழகத்திலே தத்துவத் துறையிற் பட்டம்பெற்று உண்மையறியும் தாகத் தினராய் இந்தியா, திபேத் என்றவாறாக அலைந்து திரிந்து தம்மிடம் வந்து அடியவரொருவரிடம் நேரடியாகப் போர் செய்தால் அது வராது அறிய வேண்டும் என்ற எண்ணமும்
ஒப்படைக்கப்பட வேண்டும்"
என அருளினார். தாயுமான சுவாமிகளின் மற்றொரு பாடலைக் கூறுவது இவ்விடத்திற்கு மிகப் பொருத்தமாகும்.
நாமே கருதின் வரநாடார் சும்மாயிருப்பின் தாமே வருவார் அவர் தன்மை என்னே
பைங் கிளியே
I.ஓங்காரத்துட் பொருளை ஒருவரும் அறியார் ஓங்கார வழியையும், ஓங்காரத்துட்பொரு ளைச் சென்றடையும் நெறியையும் ஒருவரும் அறியார் என்பது போலவே ஓங்காரத்துட் பொருளையும் ஒருவரும் அறியார். உலகிலுள்ள சமய கோடிகளெல்லாம் உண்மைப் பொருளை அன்னை என்றும், ஐயன் என்றும், இவ்வண் ணமே இன்னும் பலவாறாயும் கூறமுயல்கின்றன. ஈற்றிலே அவையெல்லாம் இன்ன தன்மைய னென்று எடுத்துச் சொல்லவொண்ணாத இறை என ஒலமிட்டு நிற்கின்றன. சமயாதீதப்பழம் பொருள் சமயத்துக்கு அகப்படுமோ? உணர்மை பெரிய பரம்பொருளே, இறைவன் அண்டமானது அணுவெனச் சிறிதாம் வண்ணம் தான் அண்ட மாய் ஓங்கி நிற்பவன் என ஒரு பெரியார் பாடி னார். நாம் யுகம்" எனக் கூறும் அளவில்லாத காலப்பொழுது அன்னைக்கு ஓர் இமைப்பொழுது என மற்றொரு பக்தர் பாடியுள்ளார்.
தேச காலம் என்பவற்றால் அந்தமும் ஆதியு மகன்ற மெய்ப்பொருளை அண்டப் பகுதியின் ஓர் மூலையில் வாழும் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவுயிர் அறியமுயலுதல் விண்ணின்று
74

Page 84
இழியும் சிறுநீர்த்திவலை பரந்த சமுத்திரத்தை அளந்தறிய முயலுதலைப் போன்றதேயாம். அணி றியும் இறைவனது பெருமைகளுள் ஒன்றாகத் தோன்றாப் பெருமை சொல்லப்படுகிறது. வேதம் அவனது எண்ணிறந்த நாமங்களுள் ஒன்றாகக் கள்வர் தலைவன் எனும் நாமத்தைக் கூறுகிறது. ஆகவே அந்த மறையோனை நாமறியோம். யோகசுவாமிகள் ஒரு சந்தர்ப்பத்தில்.
'மாபெரும் சங்கராச்சாரியர் கூட உண்மையைச் சரியாகக் கூறவில்லை'
எனக் கூறியிருக்கிறார். இன்னோரிடத்தில் 'காலத்துக்குக் காலம் தோன்றிய ஞானியரும் ஏனைய பெரியோரும் ஏதோ சிலவெல்லாம் கூறிச் சென்றனர். ஆனால் அது அதாகாது என்றும் அறிய முடியாததாகப் புதிதாகப் புதிராக இருக்கிறது.
எனவும் கூறினர். இவையெல்லாம் நாமறி யோம் எனும் நல்லொளி ஊட்டும் சில ஒளிக்கதிர் களாம். அகில மாயைக்கப்பால் உயர்ஞான பூதரத்துச்சியில் ஒளிரும் ஓர் ஞான தினகரனே நாமறியோம் எனும் நலம் திகழ்மந்திரமாகும்.
நாமறியோம் எனும் நல்லறிவு
நாம் அறியோம் எனும் நலம் திகழ் மந்திரத் தின் உயர்ஞானப் பொருள் அதுவாக உள்ள நாம் நமக்கு அயலாக எதனையும் அறியோம் எண்பதாகும். அதுவே நாமான நாம் பந்தமறும் பளிங்கனைய சித்தாக உள்ளோம். இந்தப் பளிங்கனைய சித்தான நமக்கு
'சிந்தையில்லை நானெனும் பான்மையில்லை தேசமில்லை காலமில்லை திக்குமில்லை தொந்தமில்லை நீக்கமில்லை பிரிவுமில்லை சொல்லுமில்லை இராப்பகலாம் தோற்றமில்லை அந்தமில்லை ஆதியில்லை நடுவுமில்லை அகமுமில்லை புறமுமில்லை அனைத்துமில்லை'
இந்த அனைத்துமில்லை என்னும் நிலையையே யோகசுவாமிகள் அறிவதற்கு ஒன்றுமில்லை என
செப்பமுடியாதடி தங்க செல்லப்பன் திருவாக்

மிக எளிமையாகக் கூறினார். இந்த ஒன்றுமில்லாத இடத்தில் ஏதுமொன்றற நிற்கும் நிலை இயல்பாக வாய்க்கும். யாதொன்று மற்ற இடத்திலே, அறிவதற்கு ஏதுமில்லை என்று இருத்தல், அறிவேதுமற்ற நிலையன்று. நாம் 'அறிவு' என எண்ணியிருந்த அறியாமையாகிய ஞாதுரு ஞானத்தை இழந்து நிற்கும் நிலையே அது. காண்பாண் (ஞாதுரு) ஆகிய நானும், காட்சிப்பொருள் (ஞேயம்) ஆகிய பொருள்கள் அனைத்தும், காட்சி (ஞானம்) ஆகிய சித்த விகாரக்கலக்கம் என்கின்ற அறியாமைத்திரையும் அகன்ற நிலையே அது. அறியாமைத் திரை அகன்ற அந்நிலையே அறிவு சொரூபமான மெய்ஞ்ஞானம் விளங்கும் நிலையுமாகும். இதுவே நாமறியோம் எனும் நல்லறிவு. யோக சுவாமிகள் மெய்ஞ்ஞானமான மோன பண்பில் நிலைத்து அயலறியாதிருந்த நிலையை ஆங்காங்கே உணர்த்தியிருக்கிறார். உலக வியப்பெல்லாம் சொப்பனமாகக் கழிந்த மருமந் தெரிந்த நிலையில், ஒன்றையுங் காணாமல் ஏங்கி நான் நின்றேன் என் ம், ஓங்கார மேடையின் மேலேறி நின்றேன் ஒன்றையுங் காணேனடி என்றவாறும் அவர் பாடியிருக்கின்றார். ஞானப் பெருவெளியின் ஏக சக்கராதிபதியான தனது இராச்சியத்தில் இராப்பகலில்ல்ை நன்மை தீமையில்ல்ை பெரிது சிறிது இல்ல்ை நீ நானில்ல்ை இன்றைக்கு நாளைக்கு இல்ல்ை என்றவாறாகக் குறிப்புணர்த்தியிருக்கிறார். மோனப் பெருக்கில் திளைக்கும் நிலையை வண்டுகள் பூவைக் கிண்டித் தேனையுண்டு ஒன்றுமறியாது கிடப்பது போல் பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத் தினால் கிண்டி அங்கு வரும் ஆனந்தத் தேனையுண்டு ஒன்று இரண்டு நன்று திதென்றறியாமற் தேங்கிக் கிடக்கிறான் என்ற வாறாகத் தெளிவுபடுத்தியிருக்கின்றார். இவ்வாறாக அயலறியாத சுவானுபூதியே நாமறியோம் எனும் நல்லறிவு என்பதை யோகசுவாமிகள் தெளிவு படுத்தினர். ஆகவே நாமறியோம் என்பது நன்மோன நிறைவில் மூழ்கிக் கிடக்கச் செய்யும் முடிந்த முடிபான ஞானமணிப்பூடணம் ஆகும்.
மே தங்கம் தத் தங்கமே தங்கம்
75

Page 85
சிவதொண்டன் நி
சிவயோக சுவாமிகளது சிந்தையிற் பூத்த சிவதொணி டணி என்பவன் ஐம்பது வயது ஆண்டகையாய் உயர்ந்து நிற்கின்றனன். அவன் பொன்விழாப் பொலிவு காணும் இவ்வேளை யிலே சுவாமிகள் பற்றியும், சிவதொண்டன் பற்றியும், யாம் ஏதேனும் எழுதுதல் வேண்டு மென அன்பர்கள் விரும்புகின்றனர். அவர்கள் விருப்பம் நியாயமானதே. ஆனால் சுவாமிகளோ “எங்களைப் பற்றி எழுதக் கூடியவர்கள் இன்றும் இல்லை, இனி என்றும் வரப்போவதுமில்லை” என்று எம்மிடம் கூறியிருக்கின்றனர். சிவ தொண்டனும் சுவாமிகளின் வேறல்லன். ஆத லால் சுவாமிகளின் வாக்குப் பற்றிய அச்சத்துட னேயே அன்பர்களின் விருப்பத்தை ஒருவாறு நிறைவு செய்ய முயல்கிறோம்.
ஞானியரை விளக்கின் சுடர்விடு திமுனை, கதிரவன், யாழ் என்பவற்றுடன் ஒப்பிட்டுக் கூறுவது ஆன்றோர் வழக்கு திரிமுனைச் சுடரே விளக்கு எனும் பெயருக்குரியது. அச்சுடரினாலே அகல், தண்டு ஆகிய அங்கங்களைக் கொண்ட ஒரு பொருள் விளக்கு எனப் பெயர்பெறுகிறது. அவ்வாறே ஞானியராலேயே உலகம் விளக்கம் பெறுகிறது. ஞானியர் உணர்மையாலேதான் உலகம் உணர்டு எனும் இவ்வுணர்மையைப் பண்டைச் சான்றோர் “உண்டாலம்ம இவ் Qqeossib..... தனக்கெனவாழாப் பிறர்க்கெனவாழுநர் உண்மையானே? எனக் கூறிப்போயினர். கதிரவன் உதயமாகும் போது உலகுயிர் யாவும் களிகொள் கின்றன. பக்குவமான மொட்டுக்கள் மலர்கின் றன. மற்றைய மொட்டுக்களும் முதிர்கின்றன. அவ்வாறே ஞானியின் தோற்றம் உலகோரை யெல்லாம் மகிழ்விக்கிறது. பக்குவமானோர் ஞானியராய் மலர்கின்றனர். மற்றையோரும் தத்தம் படிநிலையினின்றும் உயர்வடைகின்ற னர். யாழ், மீட்போன் தகவுக்கேற்ப இசை

ைெலயப்புரவலர் Σ
*சிவதொண்டன்” சிவதொண்டன் நிலையம் աnլքւնւIn600Iւb.
எழுப்புகின்றது. இசைவல்ல பாணன் வாசிக்கும் போது அது உன்னதமான ஓர் “உருப்படியை” உருவாக்குகின்றது. அல்லாதோர் தெறிக்கு மிடத்து அது சில சுரங்களை இசைக்கிறது. பக்குவமான அன்பர்களிடத்து ஞானி “ஓம் இசை அமுதினைப்" பொழி கின்றார். மற்றையோர்க்கு அவரவர் தகவுக்கு ஏன்றவற்றை வழங்குகின்றார்.
இவ்வுவமைகள் யாவும், சுவாமிகளை விளங்குதற்கு ஓரளவு உதவியாயுள்ளன. சுவாமி களை விண்ணைப் போன்றவர் என விளம்பு வதும் பொருந்துவதே. ஆகாயம் அனைத்துக்கும் இடம் தந்து நிற்கிறது. ஆயின் அது ஒன்றிலும் தங்காது தான் தானாகவும் நிற்கின்றது. சுவாமிகளும், எல்லாருடனும் கூடிவாழ்ந்தார் ஆயின் ஒன்றுடனும் ஒட்டாமல் “ஏதுமொன்ற” ஷ்ம் நின்றார். சுவாமிகள் தம் முன்னிலையில் இருக்கும் அன்பர்கள் தூக்கிவந்த குழந்தையைச் சுட்டிக் காட்டிய வண்ணம் “இந்தக் குழந்தைக்கும் எனக்கும் ஒருவயது” என்பதும் இந்த அறையில் எத்தனை பேர் உள்ளனர் எனக் கேட்டு அதற்கு எண்ணிப் பதில் சொல்லும் அன்பரிடம் “அது எப்படிச் சரியாகும்? இந்த அறையில் ஒருவரே உளர்” எனக் கூறுவதும் பிரபலமானவை. சுவாமிகள் நாம் உளேன்" (We is) என்றோர் ஞானவாசகம் பேசுவார். இவ்வாசகம் மொழி இலக்கணத்துக்கு வேடிக்கையானதாகத் தோன் றும். ஆனால் இருமையின் ஒருமை எனும் மெய்யி யல் இலக்கண விதிக்கியைந்ததே இந்த மெய்ம் மொழி. சுவாமிகளது ஒன்றாகக் காணும் காட்சியும் அதனைக் கூறும் சோதி மிக்க சொற் களும் அவர் ஒன்றில் ஒன்றியிருந்தனர் என் பதைக் கையில் நெல்லிக் கனியெனக் காட்டுவன. அவர் சாதி சமயமென்னும் சங்கடத்துக்குள்ளா
காதவர் “தமிழா விவசாயத்தைச் செய்; அற்றேல்
76

Page 86
சிங்களவன் . ” எனச் சுவாமிகள் கூறியதுண்டு. இது மேழிச்செல்வத்தின் மேம்பாட்டை மறந்து அடிமைத்தொழிலான உத்தியோகத்தைப் புருட இலட்சணமாகக் கொண்ட நம்மவர் மோகத்தை முனிந்ததேயாம். சிங்களவர் எங்கள் செல்வம் என்பதே சுவாமிகளின் கொள்கை. அன்றியும் “சிங்களவர் தமிழரைக் காணமாட்டேன்” என்றும் அவர் கூறினர். இவ்வேறுபாடுகள் அவருக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. இங்கு உள்ளது ஒரே ஆள் என்பதே சுவாமிகளின் தெளிந்த காட்சி. அவர் பார்த்தால் சைவாசார சீலர் போன்றே தோன்றினார். ஆனால் அவரோர் சமயாதீதர். சென்ற ஆண்டு தமது தொண்ணுாற் ரோராம் வயதில் இறையடி சேர்ந்த அமரர் இயேசுதாசன் சுவாமிகளது ஓர் உத்தம பக்தராய் திகழ்ந்தார். அவர் சுவாமிகளை “ஆண்டவன்" என்றே கொணர் டார். சுவாமிகளும் அவர் வருவதைக் கண்டால் “ஆண்டவன் வருகிறார்” எனக் கூறிச் சிரிப்பார். புத்ததத்துவத்தை நன்கு கற்ற சுசநாக வீரப் பெரும போன்ற பெளத்த அறிஞர்கள் சுவாமிகளைப் பூரணஞானி என மதித்துத் தலை வணங்கி நின்றனர். சுவாமி களும் ஒரு சந்தர்ப்பத்தில் “நான் புத்தன்” எனக் கூறினர். (புத்தன் என்பதன் பொருள் அறிந்தவன் என்பது) “அல்லாஹ" என்று அரற்ற வேன் டும்.” எனவும் சுவாமிகள் பாடினர். உயர் நீதி மன்ற நீதியரசராயிருந்த அக்பர் அவர்கள் சுவாமியிடத்துப் பேரன்பு பூண்டிருந்தார். அவர் யாழ்ப்பாணத்திலே பொது வைபவங்களிற் பேச வேண்டி நேரிட்ட போதெல்லாம் யோக சுவாமி களைப் பற்றிச் சில வசனங்களாதல் பேசாமல் விடுவதில்லை. அவர் பெரியவர் சிறியவர் என்று பேதம் பாராட்டியதில்லை. சேர்.பொன் இராமநாதன் அவர்களையும், வண்டிற்கார அப்புக்குட்டியையும் அவர் “ஒரேஆளா”கவே கணி டார். “பெரியவர் சிறியவர் என்பது பேதைமை” என்பதே அவர் திருவாய் மொழி. அவர் ஆசார சீலர்கள், குடிகாரர்கள் என்று பிரித்துப் பார்த்ததுமில்லை. குடிகாரருக்கு ஒரொரு சமயம் குடிப்பதற்குக் காசு கொடுத்தது முண்டு. "சேறும் சகதியும்” என நாம் எண்ணும் *அரசியற் குப்பை”யினின்றும் கூட அவர் பிரிந்திருக்கவில்லை. மாந்தர் விடயத்திற் போலவே மற்றைய உயிர்களிடத்தும் அவர்

ஒன்றியிருந்தார். திக்கம் கந்தவனக்கடவைக் கோயில் மயில் ஒன்றைப் பார்த்து ஆடுமயிலே என அவர் பாடிய போது அம்மயில் ஆடியது. பாட்டின் தாளமும் மயிலின் ஆட்டமும் ஒன்றோ டொன்றியைந்து நின்றன. அம்மயில் வாழ்ப வரும் அவரே. நீயும் நானும் ஒன்றாக நிற்க வருமாகில்” என்று பல்லிப் பாட்டில் பாடிய போது “பல்லியும் தானும் ஒன்று நிலையை உணர்த்தினார். புல், பூண்டு, செடி,
’ என்ற உண்மை
கொடி யாவிலும் அவர் தன்னையே கண்டார். “எங்கும் என்றன் தங்கும் வீடு” என அவர் கூறியது வெறும் புகழ்ச்சியன்று. “அங்கும் இங்கும் எங்கும் பிரகாசன்” எனத் தம் குருவுக்குச் சொன்ன மொழி, அவருக்கும் பொருந்துவதே. அவர் கேதாரம், இங்கிலாந்து என்று எவ்விடத் தும் நிறைந்திருந்தார் என்பதற்கான அனுபவ சாட்சியங்கள் பல உள. “அங்கும் இங்கும் எங்கும் நான் அதை அறியும் விசரன் நான்” என்ற அவர்தம் சொந்த வாக்கொன்றுமுளது. அவர் தன்னிலே எல்லாரையும் கண்டார். எல்லாரிடத் தும் தன்னையே கண்டார். அண்டமும் பிண்டமும் ஆகி நின்றார், அண்ட சராசரமெல்லாம் அகத் திலே கண்டு தரிசித்தும் நின்றார். அவருக்கு அயலாக ஏதுமிருந்ததில்லை. அவர் அந்நியமாக எதனையும் கண்டதில்லை. இவ்வாறெல்லாம் கூறிச் செல்வதில் வியப்பதற்கு எதுவுமில்லை. தன்னைத் தன்னாலறிந்த ஞானி தானாய் எங்கும் செறிந்திருக்கும் தன் உண்மையைக் கையில் நெல்லிக் கணியெனக் கண்டுகொண்டிருக்கின் றான். பூரணத்தில் ஒன்றி நிற்கும் பூரணனான அவனது காட்சி பூரணக் காட்சி. பூரணப் பொரு ளில் ஒன்றி நிற்கும் பேற்றினாலே ‘தான் வேறில்லை” எனக் காண்பவராதலாலே தனக்கு வேறாக எதனையும் காண்பதில்லை. அவர் தன்மை, முன்னிலை, படர்க்கையற்ற சற்குரு வாதலாலே, சகலதுமில்லாத பரஞானப் பெருவெளியிலே அறி துயில்கொள்ளுமொருவ ராகவும் உள்ளனன். எங்கள் சுவாமிகள் "அகண்ட வெளியிலே யானிருந்தேனே' எனக் கூறுவதன் பொருளை அவர் போனிறு வெளியிலே வெளியராயிருக்கும் ஒருவராலன்றி மற்றை யாவர் அறியவல்லார்! இஃது சுவாமிகளோடு கூடிவாழ்ந்த பல்வேறு திறத்தினரதும் பன்முகக் காட்சிகளினின்றும் கிரகித்துக் கொணர்ட
77

Page 87
சுவாமிகளின் உணர்மை நிலைக்கான சிறு குறிப்பேயாம். கடலைக் காணாத ஒருவருக்கு அதன் பரப்பைக் காட்டு வதற்குக் கைகளை அகல நீட்டிக் காண்பிப்பது போன்றதே இச்சிறு குறிப்பு. சுவாமிகளது இந்த மகத்தான தன்மை யை இவ்வாறு அறிமுகம் செய்தது, சுவாமிகள் எம்மோடு கூடியிருந்தும், எல்லாவற்றுள்ளும் கலந்து நின்றும் எம்மை வளர்த்தெடுக்கின்றார். என்பதைச்
சுட்டிக் காட்டுதற்கேயாம்.
'அகரமாம் எழுத்துப்போல அனைத்திலும் கலந்து
நின்றே இகபரம் இரண்டும் ஈந்த எழிற்குரு திருத்தாள் வாழ்க.
ஊனுமாய் உயிருமாகி உள்ளுமாய்ப் புறம்புமாகி நானுமாய் நீயுமாகி நடஞ்செய்யும் திருத்தாள் வாழ்க"
ஆகிய குருவணக்கப் பாடல்கள் உள்ளன அல்லவா? சுவாமிகள் தமது அன்பரொருவரிடம் தம்மைச் சுட்டிக்காட்டி “கூடிப்பிரியார்” எனக் கூறினர். “கூடிப்பிரியேல்” என்ற ஒளவை மொழியைக் கற்றிருந்த அந்த அடியவரைத் தான், ஒருபோதும் விட்டுப்பிரியமாட்டார் எனச் சுவாமிகள் கூறிய உறுதிமொழியே அது. சுவாமிகள் ஒவ்வொருவருடனும் கூடிப் பாடு படுகிறார். நாம் கடவுளைக் கும்பிடும் போது அவரும் முன்னின்று நமக்காக நம்மொடு கூடிக் கும்பிடுகிறார். அவர்தம் “ஓதுக அது நாம் ஓம்தத் சத்ஓம்’ எனும் தியான மந்திரப்பாடலிலே உள்ள நீயும் நானும் நின்றிறைஞ்சுதும்” என்றோர் வாசகம் நம் சிந்தனைக்குரியதாம். அவர் யாருக்கும் பாரபட்சம் காட்டாமலும், எவருக்கும் தீங்கு செய்யாமலும் எல்லோரையும் வளர்க்கவே பாடுபடுகின்றார். அவர் ஏசினும் அருளே. அவரிடம் ஏச்சுவாங்குவதைப் பேறாகக் கொண்டு அவரைத் தரிசிக்கச் சென்ற அணி பரும் இருந்தனர். அவர்தம் திவ்விய பார்வை சன்ம மலங்களையெல்லாம் தீர்க்கும் ஞானச் சுடர் வீச்சாகவே இருந்தது. அவர் தம்மிடமிருந்த அருள் மருந்தை இல்லை என்னாது எல்லாருக்கும் ஈந்தார். இருக்கும் இடம் தேடிச் சென்று அருள முதமிந்த வள்ளல் அவர். உடல் நோய் முதல், பிறவிநோய் வரை எல்லாப் பிணிகளையும் நீக்கவல்ல வைத்திய நாதனே எங்கள் குருநாதன். . அவரை நாடிச் சென்ற அன்பர்களுக்கு அறுசுவை

உணவு முதல் “சிட்டாய சிட்டனின் திருவி ருந்து" வரை அனைத்தும் கிடைத்தன. அவர் செல்லப்பரைச் செல்லப்பன் என்னும் “சீமான்” எனவும், பண்டார வேடம் எனவும் பாடினார். அவரும் இச் சொற்களுக்குரியவரே. அவரிடம் மூல பணி டாரம் இருந்தது. அனி பர்கள் வேண்டுவன அவர்கள் ஏந்திய பாத்திரங்களுக் கேற்ப வழங்கப்பெற்றன. சிறு குழந்தைகள் அவரைத் தாடி அப்பனாகக் கண்டனர். பாக்கிய வான்கள் சிலர் தாதவிழுஞ்சடை அப்பனாகவே கண்டனர். தமது நிசசொரூபத்தைக் காணக் கண்படைத்த திறவோருக்கு அவர் ஓர் ஒளிவு மறைவுமின்றித் தம் சோதி சொரூபத்தைக்
காட்டினார்.
நமது சிவபூமி தென்னாட்டையும் விட சைவாசாரத்தில் சிறந்து நிற்பது. சுவாமிகளை அண்டிவந்த சிலர் சைவாசார சீலர்களாக இருந்தனர். சிலர் சிவபூசையிலும் சிறந்து விளங் கினர். ஆயின் ஆசாரம், பூசனை என்பவற்றின் பொருளறியாத வெற்று ஆசாரி, பூசாரிகளாக இருந்தனர். இவர்களை ஏழுவயதிற் தூக்கிய செம்புடனேயே எழுபது வயதிலும் நிற்கிறார்கள் எனச் சுவாமிகள் வேடிக்கை செய்தனர். விர திகளாயிருந்தால் மட்டும் போதுமா? விரத மெல்லாம் மாண்ட மனத்தினராகப் பரிண மித்தலும் வேண்டும். இவர்களைப் பார்த்து உணவுண்பதிலோ, உணவை ஒறுப்பதிலோ, உறக்கத்தை நீத்தலிலோ, உறக்கத்திலோ அது தங்கியிருக்கவில்லை எனக் கூறினர். துறவை நாடியோரிடம் விடுவானேன்? பிடிப்பானேன்? என விளம்பினர். நூலறிவாளர் சிலர் சுவாமி களைச் சூழ்ந்து திரிந்தனர். எழுதுவதில் வல்ல வரும் பேச்சாளர்களும் சுவாமிகளை அண்டி வந்தனர். ஆனால் எழுதிக் குவிப்பதில் என்ன பயன். சாத்திர நூல்களைப் படித்து விட்டுச் சபையோர் மெச்சும்படி பேசித் தன்னை வியந்து தருக்கித் திரிதலொன்றே அவர் கற்ற தனாற் பயனில்லை எனப் பறைசாற்று மல்லவா! உபகாரம் பற்றிய இனிய கட்டுரைகளை எழுதவல்ல பண்டிதரொருவர், ஒரு மழை நாளில் சுவாமிகளை அவரது கொட்டில் வரைக் குடைபிடித்துக் கூட்டிச் செல்வதற்குச் சிரமப்
பட்டார். இத்தகைய “கருமக் கண்ணர்கள்”
78

Page 88
சுவாமிகளைக் கண்கண்ட தெய்வமாகக் காணுதல் எங்ங்னம்? "நூலறிவாளர் றுணுகியுமறியார், சாதனை செய்யும் சத்துக்கள் கான்பர்" என்பதே சுவாமிகளின் திருவாய்மொழி. சுவாமிகள் "தானதருமங்கள் தவமும் புரியுங்கள், ஞான வீடு நமக் கெளிதாமே" எனப் பாடியதுமுண்டு. ஆயின் கோயில் குளங்களைக் கட்டி உய்தி பெற்றோர் எத்தனை பேர்? அகந்தையுற்று அழிந்ததேயல்லாமல் என எச்சரித்தது முண்டு. அதனால் தம்மிடமுள்ள செல்வத்துக்கோர் விளம் பரமாகத் தான தருமஞ் செய்தோரும் சுவாமி களின் உண்மைச் சொரூபத்தைத் தரிசிக்க முடியாது போயினர். சுவாமிகளோடு மிக நெருக் கமாக உறவு பூண்டிருந்த அடியவர் சிலர் இருந்தனர். சுவாமிகளும் அவர்களையும்விட அணுக்கனாய் அவர்களை உறவு செய்து கொண்டனர். அவர்களது இல்லங்களுக்குத் தாமாகவே பலதரமும் சென்றனர். அவர்களுக்கு நேர்ந்த நெருக்கடிகளைப் போக்கியருளினர். சுகமீந்தனர். இவற்றை அனுபவமாயுணர்ந்து கொண்ட அவ்வடியவர்கள் சுவாமிகளது பாதங் களைப் பணிவது, சிவனொளி பாதமலைக்கு யாத்திரை செய்து வழிபடும் தம் நேர்த்தியை நிறைவாகச் செய்யும் கருமமென உறுதியாய் நம்பி வாழ்ந்தவர்கள். ஆயினும் வலிந்து கவரும் மாய வாழ்வின் கவர்ச்சிக்குள் அகப்படாது தப்புதல் அரிது போலும் காமக் குரோத மோகக் கடலைக் கடத்தல் அத்துணை எளிதன்று போலும்! ஆனவ இருள் "முத்தி நிலை பேசாதகவும் பிணி" என்றோர் சாத்திர மொழி யுண்டல்லவா? ஆனவ இருள் வீட்டுக் கதவத்தை நெருங்கிய வேளையிலும் விழுத்தி விடத் தருணம் பார்த்து நிற்கும். இவ்வாறு வீழ்ந்தோ ரும் பலர், வார இறுதி நாட்கள் இரண்டையும் சுவாமிகளுடன் சேர்ந்திருத்தலையே பெரும் பேறெனக் கொண்ட பாடசாலை அதிபரொரு வரை எமக்குத் தெரியும். அவர் சுவாமிகளோடு கூடி வாழ்ந்ததன் சுகத்தை உண்மையாக அனுப வித்தவரெனத் தெரிந்தது. அவருக்குச் சோதிடப் பற்று இருந்தது. அவரது அந்தச் சோதிட ஞானம் வியக்கத்தக்க வகையில் வளர்ந்தது. ஈற்றில் அந்தச் "சாத்திரமருளிலே' மயங்கிவிட்டார். இன்னோரன்பர் தமது குடும்பத்துக்கு மாறான
ஒருவர் சுவாமிகளின் அருளுக்குப் பாத்திரமான

வராயிருப்பது கண்டு உளம் கோணினார். கடவுளைத் தனதாக்கலாமா? சுவாமிகள் எல்லாருக் குமுரியவரல்லவா? செம்மை மனமுடையவரே சுவாமியின் உண்மைச் சொரூபத்தைத் தரிசிக்க வல்லவர். நாம் மேற்சொன்ன "நிழல்போல் திரிந்த" சுவாமிகளின் அடியவர்களை விட அவ்வப்போது மாத்திரம் தரிசித்துச் சென்ற செம்மை மனத்தவரான அனர் பர் சிலரும் இருந்தனர். அவர்களுட் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல மனம் விழைகின்றது. சைவப்பெரியார் மு.திருவிளங்கம் என்னும் திருவாளர் அவர்களுள் ஒருவர். அவர் ஆகமநெறி அகத்தினிற் பொருந்திய ஓர் சைவாசார சீலர். சாத்திர தோத்திர ஞானமுடையவர். ஆசாரம், தோத்திர பாராயணம், சாத்திரஞானம் என்ப வற்றால் அடையும் பலனில் குறியாய் நின்றவர். அவர் சிவஞானசித்தியாருக்கு உரையெழுதிக் கொண்டிருந்த வேளையில், ஐயம் தெளிதற்குரிய இடங்கள் எதிர்ப்பட்ட இடத்துச் சுவாமிகளை நாடி வருவார். சுவாமிகளும் "திருவிளங்கம் வருகிறார்" எனக் கூறியவராய் அவரெதிரே செல்வார். திருவிளங்கம் அவர்கள் சுவாமி தரிசனம் சித்தித்த அக்கணத்திலேயே ஐயமும் தெளிந்தவராய் "இப்பொழுது விளங்கிவிட்டது. சுவாமி" எனக் கூறுவார். "வெல்ல வரும் மாந்தர் தனர் வாயடக்கும் சிவஞானம்" எனர் று செல்லப்பதேசிக வடிவைப் போற்றிய சுவாமி களின் பாடலொன்றுள தல்லவா?. அவர் சிவஞானத் திருவுருவமே. அந்த ஞானத்திருவுரு தாகத்துடன் நாடி வந்த பக்குவருக்கு எவ்வித மறைவுமின்றி வெளியாகவே தெரிந்தது. திரு விளங்கமவர்கள் கொழும்பிலே இறையடி சேர்ந்த அக்கணத்தில் கொழும்புத்துறைக் கொட்டிலி லிருந்த சுவாமிகள் அவர் சோதியுடன் கலக்கின்றார்" எனக் கூறினார். நெருக்கமாய்த் திரிந்த அடியர் சிலர் "பிரைசேர் பாலினர் நெப்போல்" பிரிந்தேயிருக்கப் பக்குவமான அன்பர் சிலர் பாலொடு மேவிய நீர் போல் சுவாமிகளோடு கலந்தினி திருக்கும் பாக்கியம் பெற்றனர். இராமகிருஷ்ண மடத்துத் துறவி என்ற வகையில் கொழும்பு இராமகிருஷ்ண மடத்துத் தலைவ ராயிருந்த சுவாமி அசங்கானந்தரின் தகைமைப் பாடு பற்றி யாம் ஏதும் கூறவேண்டிய தில்லை. அவர் சுவாமிகளைத் தருணம் வந்த வேளை
7g

Page 89
களில் தரித்துச் சென்றனர். ஓரிரு தரிசனமே சுவாமிகளின் சோதி சொரூபத்தைக் காணர் பதற்கு அவருக்குப் போதியதாயிற்று.அவர் தமது வாழ்நாளில் தரிசித்த மகான்களாக மூவரைக் குறிப்பிட்டனர். அம் மூவருள் ஒருவர் “யாழ்ப்பாண சோதி யோகசுவாமிகள்”, “பாம்பின் கால் பாம்பறியும்” என்றோர் பழமொழி பலரும் அறிந்ததே. சுவாமிகளும், ரமண பகவானும் ஒருவர் முன் ஒருவர் அமர்ந்திருக்கும் ஓர் தருணத்தைத் திருவருள் கூட்டி வைத்தது. இந்த நேர்முகத்தில வாய் ச் சொற்கள் எனின பயனுமிலவாயின. இருவரும் நண் மோன நிறைவினரே. (மெளனமே சிறந்த பேச்சு)
மங்கையர்க்கரசியாரும், மந்திரி யாரும் ஞானசம்பந்தப் பெருமானைக் கண்ட காட்சியைச் சேக்கிழார் ஒரு செய்யுளில் கூறியிருக்கிறார். அது மேல்வருவது :- ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக் கொழுந்தை
கானத்தின் எழு பிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்.
பானல்வாய் ஒரு பாலனாய்த் தோன்றியது சம்பந்தப் பிள்ளையாரது தேகக் கோலம். அவர் தம் உண்மைக் கோலம் ஞானத்தின் திருவுருவே. அவ்வண்ணமே சங்கொத்த சடை ஆகியன சுவாமிகளின் தேகக் கோலம். அவரது உண்மைச் சொரூபம் அறிவு சொரூபமே. அவருக்கோர் சொந்தநாடு சொல்வதெனின் “சோதிமயமான உயர்நாடே” அவர் நாடு எனலே தகுவது. அவர் தம்மை இலங்கையான், இலங்கை நமதுரர் என்றெல்லாம் கூறியிருக்கிறார். அவர் கூறும் இலங்கை பெளதீக இலங்கையன்று. அது பகலிரவு தோன்றாது, பட்டப்பகல்போலிலங்கும் ஞானப்பெருவளியே. (இந்த இன்பவளநாட்டை எங்கள் வளநாடு எனும் பாடலில் சுவாமிகள் விரிவாகப் பாடிவைத்திருக்கிறார்.) அவர் எழுதிய திருமுகங்களில் இட்டிருக்கும் கையெழுத்துக்கள் அவர்பெயரைக் காட்டி நிற்கின்றன. "அவனே நானே” “இறவாதவன் பிறவாதவன்”, “மறவா
தவன்” ஆகிய இக்கையெழுத்துக்கள் அவர்

மானிடமன்று என்பதற்கான குறிப்புகள். அவ ருக்கு மண்ணாதி பூதமில்லை, மனமானபேயில் லை. பொறி புலனில்லை. அறிவு அறியாமை யில்லை. சீலமில்லை, தவமில்லை விரதமில்லை ஆச்சிரமச் செயலில்லை. புண்ணிய பாவமில்லை. சொர்க்க நரகமில்லை, அவர் “தன்னை அறிந் தோமே தவத்திலுயர்ந்தோமே” எனப்பாடுவார். தன்னையறிந்த தாபதராதலாலே அன்னை, தந்தை, நன்மை, தீமை, மூலம், முடிப்பு யாவும் அவருக்கில்லை. “ஆன்மாவே நா மென்னும் சேதி தெரிந்ததெடி" என்றுபாடுமவர் அன்றும் இன்றும் என்றும் ஆண்மா இருந்தபடியே இருக்கும் சீரை அறிந்த அருந்தவயோகரே யாவர். குதம்பாய், உந்தியார், ஆனந்தக்களிப்பு ஆகிய பாடல் பகுதிகளிலே அவர்தம் உணர்மைச் சொரூபத்தை ஒளிவு மறைவின்றி உள்ளவாறே பாடிவைத்திருக்கிறார். அவர் சிங்கக்குட்டி போல உல்லாசமாக நடந்து கொணர் டே தங்கப் பொம்மை போல இருப்பவர். பதிபசு பாசம் எனும் மொட்டாக்கைப் போட்டிருக்கும் பூரணன்.
இனி, சிவதொண்டன் எனும் ஆண்டகை, மனித சங்கற்பமேதுமின்றித் தெய்வ சித்த மாகவே தோன்றியவன். ஆணைவழியே தான் வளர்ந்தவன். ஆணையிற் கிழந்தவற்றைக் கேட்டே சிவதொண்டன் கருமங்கள் அனைத்தையும் சுவாமிகள் நியமஞ் செய்தனர். சுவாமிகள் நியமஞ் செய்தவற்றை நிலைபேறடையச் செய்ததும் அருளாணையே, ஆதலால் ஐம்பது ஆண்டு ஆண்டகையாய்ப் பொலிந்து நிற்கும் இச்சிவதொண்டன் வளர்ச்சியில் ஆரும் உரிமை பராட்டுதற்கில்லை. ஈதோர் தாளமேளமில்லாத வளர்ச்சி. இனியும் அளவில் காலம் ஆணை வழியே தான் இச் செல்வச் சிவதொண்டன் தளர்ச்சி என்பது தானறியாது வளர்ந்து செல்வான். திருவருள் அவ்வப்போது அவரவரைக் கொணர் டு ஆவன செய்யும் . நிருமலமான உள்ளத்தினராயிருந்து அப்போதைக்கப்போது பிறக்கும் ஆணைகளைச் “செவிமடுத்து" அருள் வழி நிற்பதொன்றே அன்பர்பணி.
80

Page 90
afan:GBuLmraB &Brent ITI மானிட வாழ்க்கை
சிவயோக சுவாமிகள் தமது வாழ்க்கையில், வண்ணார்பண்ணை, கைதடி முதலிய இடங்களிலே அதிகம் சஞ்சாரம் செய்து வந்தார்கள். வண்ணார் பண்ணையில் சிவதொண்டன் நிலையத்திற்கு ஏறக்குறையத் எப்போதும் அங்கு செல்வார்கள். சில நாட்களில் இருமுறை, மும்முறையும் சென்று அதற்குப் பொறுப்பாயிருப்பவர்களுக்கு அதை நடத்துவது பற்றியும், சிவதொண்டன் பத்திரிகை நடத்துவது பற்றியும் ஆலோசனை கூறிவருவார்கள். 1961ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ம் திகதி சுவாமிகள் விழுந்த அன்று வண்ணார்பண்ணை க்குச் சென்றிருந்தார்கள். அன்று பிற்பகல் கால் நடையில் கொழும்புத்துறைக்குச் சென்றிருந் தார்கள். அங்கு சென்றதும் இவர் வழக்கம்போல் பசுக்கள் கட்டியிருக்கும் இடத்தைச் சுத்தி செய்யும் பொழுது ஒரு பசு துள்ளியது. சுவாமிகள் அதைக் கண்டு சடுதியாகத் திரும்பியதும், நிலத்தில் விழுந்துவிட்டார்கள். தொடை எலும்பு உடைந்து விட்டது. சுவாமிகள் தமது நோய் பற்றிக் கூறியவை சில வருமாறு: 'இந்த நோய் ஒரு வரப்பிரசாதம். கன்மத்தை அனுபவித்தே தீரவேண்டும், உடம்பு தோன்றிய பொழுது அதோடு சம்பந்தப்பட்ட எல்லா வற்றையும் கொண்டு வந்தது. அதில் நோயும் ஒன்றாகும்."
'இந்த நோயைப்பற்றி ஆராய வேண்டிய தில்லை. இது எப்பவோ முடிந்த காரியம். ஒன்றுக்கும் அஞ்ச வேண்டிய தில்லை. இந்த நோயின் காரணத்தை அறிந்தவர் இது எல்லாத் துக்கங்களுக்கும் நிவர்த்தி என்பதை அறிவர், அறிந்து அமைதியாயிருப்பர்". இராமகி ருஷ்ண பரகம் சருக்கும், இரமண மகரிஷிக்கும் புற்றுநோய் வந்ததை அன்பர்கள் அறிவார்கள். சுவாமி விவேகானந்தர் 'உடலுக்குப் பிணி, மூப்பு, சாக்காடு வருவது இயற்கையென்றும், ஞானிகளின் உடம்பும் இதற்கு விலக்கானவையல்ல வென்றும் கூறினார். இந்நிலையில்தான், சுவாமிகள் சில காலம் யாழ்ப்பாணம் சிவதொண்டன்நிலையத்தில் தங்கி அந்தவிடத்துக்கு ஒரு புதுச்சக்தியை கொடுத்தனர். சிவதொண்டன் சபை ஆதரவில் பாதயாத்திரைகள் இக்காலத்தில் தான் ஆரம்பிக்கப் பட்டன. சுவாமிகள் நல்லுர்முருகன் மீதும், வண்ணைச்

Slassir egeful யின் இரகசியம்
தில்லையம்பலம் சிவயோகபதி
9-Ll &ունԼյոնITh சிவதொண்டன் நிலையம், கனடா.
சிவன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் தையல் நாயகி மீதும் விஷேச பக்தியுள்ளவராய் இருந்தார்கள். கடைசிக் காலத்தில் இவ்விரு கோயில்களிலும் அபிஷேகம், ஆராதனைகள் முதலியன செய்விக்கும்படி அன்பர்களை ஊக்கு வித்து வந்தார்கள். தையல்நாயகி அம்மன் மீது சுவாமிகள் பாடல் பின்வருமாறு:
தையல்நாயகித் தாயே இது நல்ல தருணம் அம்மா வையம் புகழும் வண்ணைமா நகரில் வந்த வாமியே சிவகாமியே
மியை தந்த நாயகிக்காே இது நல்ல தருணமம்மா"
சுவாமிகளோடு பல காலமாக நெருங்கிப் பழகிய எங்களுக்கு “சுவாமிகள்வெண்முடிதாங்கி,வெண்தாடி யோடு, வெண்நீறு அணிந்து, வெள்ளை வேட்டி உடுத்து, புன்சிரிப்போடு, அருள்ஒளி வீசும் அத்திருவுரு வத்தை அந்தச் சிறு குடிசையில்" கண்குளிரக் கண்ட காட்சியை நினைக்கும்
போது இன்றும் எமது மனதை உருக்குகிறது.
அன்பர்கள் மத்தியில் நடமாடும் தெய்வமாக விளங்கிய சிவயோக சுவாமிகள், 23-03-1964 இல் திருவடிபூசைத் தினத்தன்று சமாதியாகி, சோதியுடன் கலந்து கொண்டார்.
சுவாமிகள் கடைசியாக உருக்கமாகக் கூறியவை பின்வருமாறு:
நான் ஐம்பது வருடத்திற்கு மேலாகச் செய்ய வேண்டியவற்றை எல்லாம் செய்து விட்டேன். போதிக்க வேண்டியவற்றை போதித்து விட் டேன். ஒருவருக்கும் ஒரு குறையும் விடவில்லை". ஆகவே சுவாமிகள் அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலமாக நமக்குக் காட்டிய நல்வழியைப் பின்பற்றி உய்தியடை வோமாக!
ஒரு பொல்லாப்புமில்லை
எப்பவோ முடிந்த காரியம்
நாமறியோம்
முழுவதும் உண்மை"
ஓம் நமசிவாய !
81

Page 91
சிவயோக சுவாமிகள்
இலங்கையிலே சைவசமயம் நீண்ட காலமாக நிலவிவந்துள்ளது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே பெளத்தம் இங்கு பரவுதற்கு முன்பே சைவம் இங்கு நிலவியதற்குத்தொல்லியல், இலக்கியச் சான்றுகள் உள்ளன. பெளத்தம் பரவிய பின்னரும் சைவம் இங்கு நிலவி வந்துள்ளது. இலங்கையிலே புகழ்பூத்த தொன்மையான சிவத்தலங்களாகத் திருக்கேதீஸ்வரம் , திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம் முதலிய திருத்தலங்கள் பற்றி யாழ்ப்பாண வைபவமாலை எனும் பிற்காலத்திய நூல் கூறுகின்றது. சைவநாயன்மார்களிலே திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருக்கேதீஸ்வரம் பற்றி ஒவ்வொரு பதிகங்கள் பாடியுள்ளனர். திருஞான சம்பந்தர் திருக்கோ ணேஸ்வரம் பற்றியும் பாடியுள்ளார். இவர்களுக்கு முற்பட்ட (சிலர் பிற்பட்ட எனவும் கருதுவர்) திருமூலர் இலங்கையைச் சிவபூமியெனக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் காலத்திற்குப் பிற்பட்ட சோழப் பெருமன்னர், பாண்டியப் பெருமன்னர், விஜயநகர - நாயக்க மன்னர் காலங்களிலே தமிழகத்திலிருந்து இங்கு சைவஞானிகள் வந்து சென்றனர்; அல்லது தங்கியிருந்தனர் எனலாம் . ஸ் காந்த புராணத்தின் ஒரு பகுதியெனக் கொள்ளப்படும் தரிணகைலாச மாஹாத்ம்யம் எனும் நூல் இலங்கையிலுள்ள சிவத்தலங்கள், விஷ்ணு தலங்கள் - சிறப்பாகச் சிவத்தலங்கள் பற்றியும், அவற்றின் சிறப்புகள், தீர்த்த மகிமைகள் முதலியன பற்றியும் கூறி இவற்றால் இலங்கைத் தீவு உலகிலுள்ள எல்லா இடங்களிலும் பார்க்க மிகச்சிறந்ததெனக் குறிப்பிடுகின்றது. இந்நூல் ஒரு தல புராணமாக இலங்கையிலுள்ள சிவத்தலங்கள் பல பற்றியும், வைணவதலங்கள் சில பற்றியும் கூறும் பாங்கினை இன்று கிடைத்துள்ள இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நூல்களிலே காணமுடியாது. தரிண கைலாசம் (தென்கைலாசம்) எனப்போற்றப்படும் திருக்கோணேஸ்வரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாயினும், பிறதலங்கள் பல பற்றி ஓரளவு விரிவாகவும், பொதுவாகவும் இந்நூல்

ir - சில சிந்தனைகள்
பேராசிரியர் வி.சிவசாமி குறிப்பிடுகின்றது. மேலும் சமயஞானிகள், அந்தணர் பற்றியும் பொதுவாக இதிலே கூறப்படுகின்றது.
மேற்குறிப்பிட்டோரில் ஞானிகளும் சித்தர்களும் அடங்குவர் எனலாம். கி.பி. 16ஆம் நூற்றாண்டு, 17ஆம் நூற்றாண்டு முதற்கால் பகுதியிலே யாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொண்டு அதனை வென்று அங்கு தமது ஆட்சியைச் சிறிது காலம் போர்த்துக்கீசர் ஏற்படுத்தினர். போர்த் துக்கீச அறிஞர் சிலர் எழுதியுள்ள நூல்களிலே வரும் சில குறிப்புகள் கவனித்தற்பாலன. எடுத்துக் காட்டாக குவேறோஸ் என்னும் கத்தோலிக்க மதகுரு யாழ்ப்பாண அரசனான சங்கிலி போர்த்துக்கீசருக்கு எதிராக நடத்திய போரிலே யோகி ஒருவர் அரசனுக்கும், படைகளுக்கும் ஊக்கமளித்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு யோகி என்ற பதமே வந்துள்ளது. இஃது அக்காலத்திய ஞானி அல்லது சித்தர் ஒருவரைக் குறிப்பிட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
தமிழகத்திற் போன்று இங்கும் சிவஞானிகள் அல்லது சித்தர்மரபு ஒன்று நீண்டகாலமாக நிலவி வந்திருக்கலாம். சித்த (Siddha) என்னும் வடமொழிச்சொல் “வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டது, பூரணப்படுத்தப்பட்டது. பெறப்பட்டது, வெற்றிகரமாக நிறுவப்பட்டது, நிரூபிக்கப் பட்டது, தெய்வீகத் திருவருளால் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றல் உள்ளவர், விடுதலை யடைந்தவர், முழுமையானவர், தவத்தின்மூலம் தூய்மையானவர், ஒருவகைத் தெய்வகணங்கள்” எனப்பல பொருள்படும். இவற்றுள் பின்னர் கூறப்பட்டுள்ள அதீத ஆற்றலுள்ளவர், முழுமை யானவர், (மலங்களிலிருந்து) விடுதலைய டைந்தவர் (ஜீவன் முக்தர்) தூய்மையானவர் என்ற கருத்துக்கள் சிலவோ, பலவோசித்தர் என்ற பதத்திற்குப் பொருத்தமானவை. இக்கருத்துக்கள் ஞானிகளுக்கும் (இறைவனை அறிந்தவர்கள் / உணர்ந்தவர்களுக்கும் பொருத்தமானவையே. மேலும் சித்தர்கள்
82

Page 92
ஞானிகள் ஒரு தெய்வம், சமத்துவம், எளிமை, சமயசமரசம், உயிர்களிடத்து அன்பு, மனிதநேயம், மற்றவர்களின் ஆன்ம ஈடேற்றம், சமயக்கிரியைகள் மூலமான வழிபாட்டிலும் பார்க்க அகவழி பாட்டிற்கு மிக முக்கியத்துவம் அளித்தல் முதலியனவற்றினைப் பெருமளவு வலியுறுத்தி வந்துள்ளனர். இத்தகைய குறிப்புகளுடன் சென்ற நூற்றாண்டிலே சிறப்பாக விளங்கிய சிவயோக சுவாமிகளின் சிந்தனைகள் சிலவற்றைச் சுட்டிக்
காட்டலாம்.
சிவயோக சுவாமிகள் (1872 - 1964) தமக்கு ஞானோபதேசம் செய்த செல்லப்பா சுவாமிகள் புகட்டிய,
“ஒரு பொல்லாப்புமில்லை
எப்பவோ முடிந்த காரியம் நாமறியோம்
99 gy
முழுதும் உணர்மை என்னும் மகா வாக்கியங்களைத், தாரகமந்திரமாகக் கொண்டு மக்களுக்குச் சமய, ஆன்மீக, வாழ்வியல் நெறியினை எடுத்துக்கூறி, வழிகாட்டியாக விளங்கினார். இவருடைய அரிய போதனைகளை, கருத்துக்களின் தொகுப்பினைக் குறிப்பாக நற்சிந்தனையிலே காணலாம். இத்தொகுப்பின் தலைப்பே இது மக்களுக்கு நல்ல சிந்தனைகளைக் கூறுகின்றதென்பதைத் தெற்றென விளக்குகின்றது.
இவர் தமக்கு முற்பட்டகாலப் பல நூல்கள் குறிப்பாகத் தமிழிலுள்ள சைவத்திருமுறைகள், தாயுமானவர் பாடல்கள், பாரதியார் பாடல்கள் போன்றவற்றையும், வட மொழியிலுள்ள உபநிVதங்கள், பகவத்கீதை போன்றவற்றையும் நன்கு கற்றவர். இந்நூல்களின் சாயலை நற்சிந்தனையிலே ‘காணலாம். இவற்றிலுள்ள சில முக்கியமான கருத்துக்களை இவர் கூறுவதிலே பழைமையும், புதுமையும் புதுமெருகுடன் நன்கு விரவிக் காணப்படுகின்றன. இவை பலருக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்கி வந்துள்ளன. இயற்கையிலே காணப்படாத அதிசயமான செயல்களைப் புரியும் சித்தர்களிலொருவராக இவரைப் பலர் நோக்குவது பற்றி ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. சிலவேளைகளில் அணி பர்களினி கஷ்டங்கள், துணி பங்கள் ,
குறைபாடுகள் சிலவற்றை நிவிர்த்தி செய்யுமுக

மாகச் சுவாமிகள் அதிசயங்கள் சிலவற்றைச் செய்துள்ளார். ஆனால் அவர் உண்மையிலே இறையனுபவமுள்ள மறைஞானி (Mystic) யாக மக்களைச் சமய, ஆன்மீக, சமூகரீதியிலே நெறிப்படுத்திய சமயப்பெரியாராகவே மிளிர்ந்தார். அதேவேளையில் உலகியல் ரீதியிலும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தவும் தவறிலர். தாயுமான சுவாமிகள் போன்று வேதாந்த, சித்தாந்த நெறிகளுக்கிடையிலே சமரசத் தன்மையையே அழுத்திக் கூறியுள்ளனர் சமயங்களுக்கிடை யிலும் சமரச நோக்கினையே இவர் பொதுவாக வலியுறுத்தியுள்ளார்.
"ஒரு தெய்வம் ஓர் ம் உண் மென்னும்
திருவருளில் நிற்கவருள் செய்வாய்"
என இவர் கூறியிருப்பது கவனித்தற்பாலது. இங்கு ஒரு தெய்வம், ஒரு சமூகம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே மத, சமூக ரீதியிலான வேறுபாடுகளை இவர் விரும்பிலர் என்பது தெளிவாகும். “எச்சமயத்தோரையும் ஏளனஞ்செய்யோம்” என்பது இவரின் திருவாக்கு.
மேலும் இந்த ஒரேயொரு தெய்வம் சிவம் - சிவபெருமான் என்பதிலும் இவருக்கு அசையாத நம்பிக்கையிருந்தது. இதனை,
"அனைத்தும் சிவன் செயல், அவனின்றி அணுவும் அசையாது" எனவும்,
'ஓம் சிவாய வென்ன உள்ளங்குளிருது" எனவும்,
"சிவபக்தி மாத்திரந்தான் மனிதனைப்
பாக்கியவானாக்கும். மற்றவையனைத்தும் பிரயோசன மற்றவை" எனவும்,
"சைவமோங்கவும் சத்தியந்தழைக்கவும்
தெய்வ முண்டென்னுஞ் சித்தந்திகழவும் 60pse e soe e நமச்சிவாயவென நாம் வாழ்குவமே" எனவும்,
"சிவபக்தியாலே சீவன் முத்தியே
சிவனையல்லாமல் தேவருமில்லை சிவனையல்லாமல் சீவருமில்லை சிவனையல்லாது தேகமுமில்லை" எனவும்
'சிவனை என் சித்தத்துட் கண்டு கொண்டேன்" எனவும் வரும் சுவாமிகளின் திருவாக்குகளிலே
83

Page 93
காணலாம். சிவம் எனில் அனைத்தையும் தன்னுள் அடக்கியவர், மங்களம், நன்மை, திருவருள், அன்பு, நட்புறவு, பிரியம், இன்பம், விடுதலை முதலிய பலபொருள்படும். எனவே எல்லாம் வல்ல இறைவனைச் சிவம் என அழைத்தலில் நல்ல பொருத்தப்பாடு உண்டு. திருமூலர் போல இவரும் இறைவன் அன்பு என்றே கண்டவர், “அன்பே சிவம்” எனும் திருமூலரினி திருவாக்கினை இவரும் பயன்படுத்தியுள்ளார். "அன்பே கடவுள், அன்பே உலகம், அன்பே உயிர்கள், அன்பே அனைத்தும், அன்பே சிவமறிந்திடா" என இவர் கூறியுள்ளார்.
சைவசமயம் முக்கியமாகக் கூறும் ஐந்தெழுத்து பஞ்சாரம் - அஞ்செழுத்து - நமசிவாய (சிவனுக்கு வணக்கம்), ஒங்காரம் - பிரணவம் ஆகியனவற்றின் மகிமையை இவர் நன்கு வலியுறுத்தியுள்ளார். வேதங்களின் சாரமாகவும், அனைத்திற்கும் ஆதாரமாகவும் உள்ள நாதமே ஓங்காரம். இறைவன் - சிவன் ஓங்கார வடிவினன். இதனை,
"ஓங்காரத்தின் உட்பொருளானவன்" எனவும், "ஓங்காரத்துட் பொருளான உத்தமனை" எனவும்
"ஓங்காரத்துள்ளே ஒளிரும் சிவன்" எனவும்
"ஓங்கார நாதமே யோதவொண்ணாப் பிரமாதமே" எனவும் அவர் கூறியிருப்பனவற்றிலே
காணலாம்.
சைவசமயத் திணி தாரகமந்திரம்
'நமசிவாய" எனும் அஞ்செழுத்தாகும். இது தூல பஞ்சாரமாகும். இது 'சிவாயநம எனச் சூம பஞ்சாரமாகவும் ஒதப்படும். இத்துடன் "ஓம்" என்பதும் சேர்த்தே ஒதப்படும்.
"ஓம் சிவாயநமவெனத்துதிப்போம்
நாம் சிவமென்று நெஞ்சில் பதிப்போம்"
எனவும்
'நமச்சிவாயவே நாம் சொல்லும் மந்திரம்
எமக்கினிக்குறையொன்றுமில்லை
தமர் பிறரென்னும் தளையுந் தீர்ந்தோம்
சமமாயுயிரெல்லாந்தாம் நினைவோமே
ஒதுவதுநாம் ஓம் தத் சத் ஓம்" எனவும்
'ஐந்தெழுத்துள்ளே அனைத்தையும் கண்டேன்"

எனவும்
"அஞ்செழுத்தாலே அனைத்தும் ஆயின
அஞ்செழுத்தாலே அனைத்தும் உதித்தன அஞ்செழுத்தாலே அனைத்தும் நிலைத்தன அஞ்செழுத்ததிசயம் ஆரறிவாரே" எனவும்
'அஞ்செழுத்துப் பொருளானும்" எனவும்
"ஓம் சிவாயநமவென்ன உள்ளங்குளிருது" எனவும்
"ஓம் நமசிவாய என உருவேற்றுவோம்"
எனவும் அவர் கூறியுள்ளனவற்றிலே
ஓங்காரம், குறிப்பாக அஞ்செழுத்தின் முக்கி யத்துவம் நன்கு புலப்படும்.
சிவபிரானை மட்டுமன்றிச் சக்தி, விநாயகர், முருகன், திருமால், முதலியோர் பற்றிச் சுவா மரி கள பாடியுளி ளார். எனினும் சிவபிரானையும், முருகனையும் பற்றியே கூடுதலாகப் பாடியுள்ளார். சிவமயமாகவே
சுவாமிகள் எல்லாவற்றையும் கண்டார்.
ஒரே பரம்பொருளின் - சிவனின் பல்வேறு திருவடிவங்களாகவே தெய்வங்கள் அனை வரையும் அவர் கருதினார்.
இறைவன் மிக இனியவன். எடுத்துக் காட்டுகளாக வடிஷதேனும் பாலினுமினிய தெய்வத்தை நானும் நீயுமாய் நாளும் போற்றுவோம்", "சித்தத்துட் தித்திக்கும் தேனே பாலென்று சிந்தனை செய்து" போன்றவற்றின் மூலம் மேற்குறிப்பிட்ட கருத்துத் தெளிவாகும். அப்பர் சுவாமிகள் போல இறைவனைக் கணி"யெனவும் இவர் குறிப் பிட்டுள்ளார்.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு இறைவனை உள்ளத்திலே நன்கு வழிபடலாம் என்பது இவர் கருத்து. இதனை,
"ஆக்கையே கோயிலாக வகஞ் சிவலிங்கமாக நீக்கமற்றெங்கும் நிற்கும் நிமலனே நமச்சிவாய",
"காயமே கோயில் கடிமன மடிமை நேயமே பூசை நீயிதை அறிந்தே உபாயமாய் நடந்தாலுணக் கொரு குறையிலை"
84

Page 94
போனி றவற்றால அறியலாம். இதே வேளையில் கோயில் வழிபாட்டினையும் இவர் நன்கு ஆதரித்துள்ளார் என்பது நல்லூர் முருகனைப் பற்றிய பாடல்கள் போன்றவற்றால் புலப்படும். எடுத்துக்காட்டாக,
'நல்லூரைக்கும்பிட்டு நீபாடு - அதனாலே நாட்டிலுள்ள பிணிகள் ஒடும்" என்பதைக் குறிப்பிடலாம்.
சிவதொண்டு, சிவதொண்டர்களின் சிறப்பு களையும் சுவாமிகள் குறிப்பிட்டு சிவதொண்டு செய்வதற்கு அனைவரையும் அழைக்கிறார். இங்கு சிவத்தொண்டு சமயத் தொண்டன்றி மக்கள் சேவையே மகேசனுக்கான சேவையெனும்
விருப்பு வெறுப்பு அற்ற சமூகப்பணியாகும்.
யாழ்ப்பாண வரலாற்றிலே பல ஞானிகள் உலாவித்திரிந்த இடங்களில் நல்லூரும் ஒன்றாகும். சிவயோக சுவாமிகளும் அவரின் குருவும் நல்லூரிலும், அதன் சுற்றாடலிலும் தான் வாழ்ந்து ஆன்மீக ஒளி பரப்பினர். செல்லப்பா சுவாமிகள் தம்மை நல்லூரில் ஆட்கொண்ட விதத்தினைச் சுவாமிகள் கூறியுள்ள
'நல்லூரில் தேரடியில் நான் கண்ட சிவயோகம் சொல்ல முடியாத சுகத்தினைக் காட்டிவிடும்",
"என்னை அறிவித்தான் எங்கள் குருநாதன்
m S G d ன் i குருநாதன்"
"நல்ல மருந்தொரு குருமருந்தை நான் நலலூரில் கண்டேனே"
போன்றவற்றிலே காணலாம். மேலும் நல்லூர் முருகன் இவரின் ஞான நோக்கிலே இவரின் குரு போலவே மிளிர்ந்தார்; சிவபிரானையும் சிலவேளைகளிலே தம்முடைய குருபோலவே நோக்கினார்.
சுவாமிகளின் தேசப்பற்றும் (பரவெளி) நன்கு குறிப்பிடற்பாலது. நல்லூர் பற்றியும், இலங்கை பற்றியும் இவர் பாடியுள்ள அருட்பாடல்கள் சிலவற்றைக் குறிப்பிடலாம்.

"ஈசனே நல்லூர் வாசனே இனிய வேல் முருகா உனை நம்பினேன் வா, வா"
'மதியும் நதியும் வைத்த சென்னியன்
விதியுமரியு மறியா விமலன் துதி செய் அடியார் துன்பந் தீர்ப்பவன் மதில் சேரிலங்கை மாநகரானே"
போன்றவை குறிப்பிடற்பாலன. பின்னைய பாடலிலே சிவபிரான் இலங்கையிலே குடி கொண்டுள்ளான் என்பது குறிப்பிடற்பாலது.
சுவாமிகள் சைவசித்தாந்தக் கருத்துக் களுடன் வேதாந்தக் கருத்துக்களுக்கும் முக்கியத் துவம் அளித்துள்ளார். “அகம் பிரமாஸ்மி”, “ஓம் தத் சத் ஓம்", "சர்வம் பிரமமயம்", என்பன இதற்குச் சான்று. “இறைவனும் ஆன்மாவும் ஒன்று” போன்றவை வேதாந்தக் கருத்துக் களாயினும், சைவ சமயக் கருத்துக்களே
கூடுதலாக இடம்பெற்றுள்ளன.
மேலும் மக்கள் பற்றின்றித் தங்களின் செயற்பாடுகளைப் பலனை எதிர்பாராது செய்ய வேண்டும் என்பது பகவத்கீதையிற் போல இவரின் பாடல்களிலும் காணப்படுகின்றது. மக்கள் எது நடந்தாலும் அஞ்சத் தேவையில்லை. இறைவன் - சிவன் அவர்களைக் காப்பான் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகவாழ்வுக் கான சில முக்கியமான விதிகளையும் இவர் கூறத் தவறிலர். வாழ்க்கையில் ஒழுக்கமே முதலிடம் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு சமய, ஆன்மீகக் கருத்துக்களுடன் உலகியல் வாழ்வுக்குத் தேவையான அரிய கருத்துக்களையுமிவர் கூறியுள்ளார். எல்லாம் சிவமயம், எல்லாம் சிவன்செயல் என்பதே
இவரின் ஆணித்தரமான நம்பிக்கை.
"உறுதி தருவது சிவமே உள்ளத்துணர்வது சிவமே பொறுதி தருவது சிவமே பூரணமானது சிவமே இறுதியிலாதது சிவமே என்னையுடையது சிவமே கருதவினியது சிவமே காசினி எல்லாஞ் சிவமே"
- நற்சிந்தனை -

Page 95
சிவயோக சுவாமிகளு
தியானம்
இந்து தத்துவ சாத்திர மேதைகளான எங்கள் மகரிஷிகள், ஆன்மீகமானதும் சடமானதுமான மனித அமைப்பினைத் தியான அறிவியலூடாக ஆராய்ந்தார்கள். அவர்கள் இந்த அமைப்பானது ஸ்தூலம், சூக்குமம், காரணம் எனப்படும் மூன்று உடல்களால் மூடப்பட்டதாயும் தெய்வீகச் சுடர்விச் சுக்கு மையமான ஆத்மதத்துவத்தைக் கொண்ட தாகவும் அறிந்தார்கள். தாலசரீரம்" அன்னமய கோசம் (உணவினாலானது), பிராணமய கோசம் (வாயுக்களாலானது) என்னும் இரண்டினாலானது. சூக்குமசரீரமானது சூக்குமமான மனோமயகோசம். (மனத்தினாலான உறை) அதனிலும் சூக்குமமான விஞ்ஞானமயகோசம் (புத்தியாலான உறை) என்பவற்றைக் கொண்டது. இந்தச் சூக்கும சரீரத்துக்கு அப்பால் உள்ளது காரண சரீரம். இதனை ஆனந்தமயகோசம் என்பர். இவ்வைந்து கோச அமைப்பில் உள்ளீடானதும் அதிசூக்கும மானதுமான ஆத்மாவே "ஜீவ" ஸ்தானமாகும். இவை யாவும் சேர்ந்ததே மனிதன் எனப்படும் ஆத்ம ஜட உருவமாகும். ஒரு மனிதனிடம் காணப்படும் மனஉணர்வு (Conciousness) மேலே கூறப்பட்ட ஐந்து கோசங்களினதும் விசேஷமாக மனோமய விஞ்ஞானமய கோசங்களைப் பொறுத்ததாகும். ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது அவன் முன்பு செய்த வினையின் தன்மையான வாசனாமலத்துடனேயே பிறக்கின் றான். அதாவது இராகம், துவேஷம், பாக்கியம் (விதி) ஆகியவற்றால் நாம் நம்முடைய முற்பிறவிகளிற் செய்து எஞ்சி நின்ற சஞ்சித வினைகள் மனிதனின் மனவுணர்களின் அதி ஆழத்தில் வித்துக்களாக, சக்தி உள்ள வாசனைகளாக அடங்கிக் கிடக்கும்.
இந்த வாசனைகள் உருவெடுக்கும் போது முதலில் மனித மனத்தில் எண்ணங்களாக உதிக்கின்றன. இந்த எண்ணங்கள் உடம்பில் கர்மங்களாகச் செயல்படுகின்றன. வாசனைகள் இருக்கும் வரை எண்ணங்கள் உதிக்கும். அந்த

நம் சிவத்தியானமும்)
-பேராசிரியர் நாச்சியார் செல்வநாயகம்
எண்ணங்களால் அவற்றின் விளைவான கர்மங்கள் தொடரும். வாசனைகள் எண்ணங்களைப் பிறப்பிக் கும். எண்ணங்கள் கர்மங்களை வருவிக்கும். கர்மங்களின் மூலமான வாசனைகளை நிர்மூல மாக்கிவிட்டால் ஒருவரிடத்தில் கர்மங்களோ எண்ணங்களோ நிகழாது போய்விடும். மனிதன் தனது எண்ணங்களின் ஊற்றையும் வாசனைகளின் விளைவையும் குறைக்கும் நோக்கத்துடன் தன்னுடைய செயல்களை - கர்மங்களை அடக்கியும் நெறிப்படுத்தியும் இயற்றுவதில்தான் ஈடேறும் வழியுண்டு. இந்த வெற்றி நமது உடல், மனம், புத்தியாகிய மூன்று உபகரணங்களினதும் துணை கொண்டன்றி எய்த முடியாது. எங்களிடம் நிலைகொண்டிருக்கும் வாசனைகளிலிருந்து எண்ணங்கள் எழுகின்ற சமயத்தில் எம்மிடத்தி லுள்ளதான விவேகம் என்னும் கருவியின் துணைக்கொண்டு எமது கர்மங்களை அடக்கி வழிப்படுத்தும் முறையே தியானம். தியானம் என்னும் சாதனையினால் மட்டுமே இந்த விவேகத்தில் வெற்றி பெற முடியும். சத்யதரிசனம் பெற்ற மகரிஷிகள் கண்ட உண்மை வழியே இதுவாகும்.
நமது முன்னோர்கள் அகத்தாய்வு செய்ய எடுத்துக் கொண்ட கருவிதான் தியானமாகும். தியான நிலையில் தன்னையே அவர்கள் ஆழ்த்திக் கொண்டு ஏகாந்தத்தில் மூழ்கி அகத்தாய்வு செய்து அகசூட்சுமங்களை உணர்ந்து கொண்டனர். தன்னை ஒருவன் அறிய தியானமே கைகொடுக்கும்.
சிவயோகசுவாமிகள் தன்னையறிவதற்காகத் தம்மை நாடிவந்த அன்பர்களுக்கு அவ்வன்பர் களின் ஆற்றலுக்கும் நாட்டத்திற்கு மேற்ப, பல்வேறுசாதனைமுறைகளை அறுவுறுத்தினர். அவற்றுள் தியான சாதனை முதன்மை யானது. எனவே தான் அதுபற்றி இங்கு சிறப்பாக ஆராயப்படுகின்றது. "நாம் ஆத்மா என்பதே உண்மை, அவ்வுண்மையை மறந்துவிட்டதே அறியாமை. அவ்வறியாமையை நீக்குதற்குரிய நேர்வழி
86

Page 96
அவ்வுண்மையை மீண்டும் நினைவுபடுத்தலேயாகும்"
சத்தியத்தைக் காணும் வழியாக அவர் சிவத்தியானத்தை வலியுறுத்தியதாக அறிய முடிகின்றது. 1953ம் ஆண்டு யாழ் சிவதொண்டன் நிலையம் சிவத்தியானத்திற்கான இடமாக யோக சுவாமிகளால் உருவாக்கப்பட்டது.
சிவதொண்டன் நிலையத்திற் சேரீர்
தியானம் செய்து கடைத்தேறிர்
மெளனமாய் இருந்து இளைப்பாறிர்
மந்திரம் இதுவெனக் குறியீர் என்பது சிவதொண்டன் நிலையத்தின் குறிக்கோளாகும். மெளனமாக இருந்து சாந்தி பெறுவதற்காகவே திருவடி பிரதிட்டை செய்யப்பட்டுள்ள தியான மண்டபம் உள்ளது. திருவடி என்பது "தன்னைத் தன்னால் அறிந்து தானே தானாய் இருக்குமிடம்" சூட்சுமத்தில் பொருந்தி இருக்கும் உயர்வற உயர்ந்த இடம். சிதம்பரத்தில் இடம்பெறும் முதலும் முடிவுமான வழிபாடும் இதுவே. எண்ணமெல்லாம் விட்டு ஏகாந்த மோனத்தி லிருக்கும் முழுமையான வழிபாடு திருவடி வழிபாடு. தியான மண்டபத்தின் கீழுள்ள புராண மண்டபத்திலே இன்று சிவயோக சுவாமிகளின் திருமேனி பிரதிட்டை செய்யப் பட்டுள்ளது. சிவயோகசுவாமிகளது சந்நிதியாக சிவதொண்டன் நிலையம் தற்போது துலங்கிக் கொண்டிருக்கின்றது. புராண மண்டபத்தில் இடம் பெறும் வழிபாடுகள் அனைத்தும் தியான மண்டபத்து மெளனமான மாசிலோசைக்கு இசைவான மந்தம் முரலும் வண்டிசை போன்றனவே. இந்த மோன நிலையைப் பேணும் வகையில் சிவதொண்டன் நிலைய ஒழுங்குகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். நாற்பொருளையும் பேசாமற் பேசும் தட்சணாமூர்த்தியின் சந்நிதியாக இதைக் காணலாம்.
தியான மண்டபத்திற் புகுவதற்காகப் படியேறிச் செல்லும் நுழைவாயிலிலே
"சொல்லெல்லாம் மோனம்
தொழிலாதியும் மோனம்
எல்லாம் நன்மோனநிறைவே"
எனும் யோக சுவாமி பயன்படுத்திய தாயுமான
சுவாமிகளின் பாடல் தியான சுலோகமாக ஒளிர்வதைக் காணலாம். மோன நிறைவிற் பொருந்தியிருத்தலே தியானமண்டபத்திற் பெறும் பேறாகும். சிவதொண்டன் நிலையமே சிவத் தியான பூமி என்றால் மிகையல்ல. மனமானது அலை பாயும் தன்மையுடையது. எண்ணங்களே

மனத்தை அலைக்கழிக்கின்றன. அதனைச் சிவ நினைவில் திருப்பி விட்டால் அது சிவத்தியான மாகின்றது. மன ஓட்டத்தை எப்படி அடக்குவதென குரு மாணவ சம்பாஷனை போன்று சுவாமிகளது ஓர் நற்சிநதனையில் செய்தி கூறப்படுகின்றது குரங்கு போல் மனங் கூத்தாடுகின்றது. இதன் கூத்தை எப்படி அடக்குவதென்று தெரிய வில்லையே" என்று மாணவன் குருவிடம் முறையிடுகிறான். அப்போது குரு நன்று சொன்னாய்; இதற்கு நல்ல மருந்து உன்னிடம் உண்டு. அதை மறந்து போனாய். சொல்கிறேன் கேள். சிவத்தியானம் என்னும் மருந்தைத் தினந்தேறும் சாப்பிட்டுவா. மனக்குரங்கின் பிணி மாறும்” எனக் கூறுகின்றார்.
இயற்கையோடு இணைந்து வாழ்பவனே அன்பின் பயணமான தியானம் செய்தல் கூடும். இதனை “இயற்கையோடு அளவளாவி வாழுதல் தான் பேரின்பம். அது ஒரு மாதிரியல்ல. உண்மை உணர்ச்சி. தனக்குத் தான் உண்மையாக இருந்தால் யாவும் விளங்கும் தன்னைப்போல் மற்றவர்களையும் நேசித்தலே தவம்’ அதுவே அறம்” என்பது யோகர் வாக்கு. பிரபஞ்ச ஒருமையுணர்வில் தோன்றுவது தியானம் என்பதை மேற்போந்த கூற்று நிரூபிக்கின்றது. அன்புதான் உயிரை உருக்கி அழுக்கை அகற்றிச் சுடர்விட்டு ஒளிகாணும்படி செய்வது. திருவள்ளுவரும்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு
என்று கூறுவதும் உயர்நிலையான ஆன்மீக வாழ்க்கை அன்பின் வழியிலே எட்டப்படுவது என்பதாகும்.
அன்பும் அமைதியும் நிறைந்த உலகத்தை உருவாக்குவது தியானம். அன்பின் அடிப்படையில் உருவாகும் செய்கைகள் அமைதியை உரு வாக்கும். அமைதி இருக்கும் இடத்தில் மெளனம் இருக்கும். மெளனமான நிலையில் பார்ப்பதே (Seeing is doing) gustó0TLb.
'ஆளியைத் (Switch) தட்டினால் தான் வெளிச்சம் வரும். எங்கள் ஒவ்வொருடைய இதயத்திலும் கடவுள் இருக்கிறார். மின்சக்தி தருகின்ற மின் உற்பத்தி நிலையம் போல் கடவுள் இருக்கின்றார். பெண்டு. பிள்ளைகள் உலகவாழ்வு யாவும் அவருடைய பாதத்தை அடைகிற நோக்கத்திற்குப் பாவிக்க வேண்டும்"
என்று சுவாமிகள் கூறுவது இதயத்தில் இறைவனைப் பற்றிக் கொண்டு உலக காரியங்களில் ஈடுபடுபவன் சிவத்தியானம்
87

Page 97
பண்ணுகிறான் என்பதாகும்.
தியானம் அறிவினால் எட்டப்படுவதன்று. அது சாதனையினாற் பெறப்படுவது. இதனை
நூதன விவேகியர் நுழைந்துங் காண்கிலர் சீதள கமலச் செல்வனுங் காண்கிலர் வேதவாகமம் தாமும் விளம்பில சாதனையுள்ள சத்துக்கள் காண்பரே"
(நற்சிந்தனை தியானமாலை - 20) என்றார் சுவாமிகள். அறிவு என்ற சுமையால் நலிவு பெற்ற மனம் ஒருபோதும் உண்மையை அறிந்து கொள்ளாது. பாசஞான, பசுஞானங் களினால் அறியப்படாதவர் சிவபரம்பொருள் என்று சித்தாந்தம் சுட்டுவது இங்கே கவனிக்கத்தக்கது.
தியானம் கைவர வேண்டுமாயின் "இதயம் சுத்தமாயிருக்க வேண்டும். இதற்கு மேலே என்னத்தைச் சொல்லலாம்” என்பர் சுவாமிகள். மேலும் 'உங்களுடைய வேலைகளைச் செவ்வனே செய்யுங்கள். அதே யோகம். தன்னுடைய கடமையை செவ்வனே செய்வதனால் ஞானம் உண்டாகும். நான் உமக்குத் தரக்கூடிய முது சொம் எந்நேரமும் கடவுள் உம்முடனிருக்கிறார்" என்னும் உறுதி மொழியே" இதனைச் சாதனை செய்வதே தியானமாகும்.
இருதயசுத்தி மிக முக்கியமானது. கறள் நீங்கிய இரும்பைக் காந்தம் கவர்ந்திழுப்பதைப் போன்று பரிசுத்தமான மனதைத் தெய்வ சக்தி ஆகர்ஷிக்கும். உண்மை ஒளியாகிய தியானம் பரிசுத்தமான இடத்திலேயே நிகழ்வது.
'எக்கருமத்தைச் செய்யும் பொழுதும் ஊக்கத் தோடும் சிரத்தையோடும் மனமகிழ்ச்சி யோடும் செய்து பழகுதல் வேண்டும். அப்படிப் பழகி வந்தால் மன உறுதி உண்டாகும். ஃதாவது மனம் ஏகாக்கிரக நிலையைப் பொருந்தும். பொருந்தவே ஆன்ம சக்தி விழிப்புறும். நினைத்த காரியம் நினைத்த மாத்திரத்திலே உண்டாகும்" என்பது நற்சிந்தனை.
"ஒழுக்கம் உயிரினுந் சிறந்தது. ஒழுக்க முடையான் எல்லாமுடையான்"
இவை நற்சிந்தனை மந்திரங்கள்.
தியானம் செய்வதற்கு ஒழுங்கு (Order) தேவை. வெளிப்புறம் மட்டும் தெரியும் ஒழுங்கு போதாது. அந்த ஒழுங்கு மனத்திற்குள்ளும் இருக்கும் போதே தியானம் இடம் பெறுகின்றது.
நற்சிந்தனையில் வரும் தியான சாதனை

பயில்வதற்கேற்ற மந்திரங்களில் மிகவும் மேலானது "ஒதுக அது நாம் ஓம் தத்சத் ஓம்" எனும் 88 பாடல்களைக் கொண்ட மந்திரமாலை யாகும். பாடலொவ்வொன்றினதும் முதல் நாலடிகளும் மனதைச் சிவசிந்தனையில் பயிலச் செய்கின்றன. இதனால் ஏகாக்கிரகம் அடைந்த மனம் "அது நாம் ஓம் தத்சத் ஓம்" எனும் மந்திரத்தில் நிலைத்து ஆத்மசுகத்தில் லயிக்கின்றது.
நற்சிந்தனை சிவத்தியான்ஞ் செய்1 பக் 287
சிவபெருமான் அத்துவிதமாக இருக்கிறார். அடியேன் அவரே எனத்தியானிக்கும் மகிமை எனக் குண்டு. ஒருவன் எப்படிப் பாவனை செய்கிறானோ அவன் அப்படி ஆகிறான். ஆகையால் நான் அவனே” என்று தியானஞ் செய். அப்போது உன் செய்கைகள் அனைத்தும் அவன்
செய்கையாகவேயாகும்.
நற்சிந்தனை சிவோகம் பாவனை பக் 382
"சிவபக்தி மாத்திரந்தான் மனிதனைப் பாக் கயவானாக்கும் . மற்றையவனைத் தும் பிரயோசனமற்றவை ஆகையால் இடைவிடாமற் சிவத்தியானம் பண்ணு. ஒன்றுக்கும் பயப்படாதே. வெற்றியுன் சொந்தம். எத்தனைமுறை தவறினாலும் தைரியத் தைக் கைவிடாதே. தவறுதல் சடசம்பந்தமானது நியோ சித்துப் பொருள். நீயொரு நாளும் அழியமாட்டாய், எழுந்திரு. விழித்துக் கொள். காரியங்கை கூடுமட்டும் வழியிலே தங்கிவிடாதே. உற்சாகத் தோடு முன்னேறிச் செல் உனக்குச் சகல சக்தியுங் கட்டுப்படுவதைக் காண். வீண் வாத தர்க்கத்திலே நாளைப் போக்காதே. நீ எங்கே போகிறாயோ அங்கே உன்னுடன் பகவான் வருவார்".
சிவபக்தி நற்கிந்தனை பக் 380 - 7
"தவத்திலே மேம்பட்டவர்களைக் கூட இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத்துச் செல்கின்றன. ஆதலால் அவற்றை வெல்வதற்குச் சிவத்தியானஞ் செய்க. அதனால் மாத்திரந்தான் புலன்களைத் தன்வசப்படுத்தத்தக்கது. ஆகவே இடைவிடாமற் சிவத்தியானஞ் செய்”.
ஓங்கார மேடையின் மேலேறி நின்றேன். ஒன்றையும் காணேனடி குதம்பாய் ஒன்றையும் காணேனடி தூங்காமல் துங்கும் சுகம் வந்து வாய்த்தது சும்மா விருந்தேனடி குதம்பாய் சும்மா விருந்தேனடி
88

Page 98
நற்சிந்தனை- குதம்பாய்132 ஒழுங்கான பிராணாயாமப் பயிற்சியினால் மனதை ஒழங்குபடுத்த முடியும். ஒழுங்குபட்ட மனம் விழிப்புணர்வைப் பெறுகின்றது. இந்த விழிப்புணர்வு நிலையே தியானம் என்பது. சும்மா இருத்தல் என்பது மனம் குவிந்து ஆன்ம விழிப்புணர்வு பெறும் நிலை.
கம்மாவிருக்குஞ்சுகமறியவேண்டும்வேல் -வேல்- பக்.43
சொல்லும்பொருளுமற்றுச்சும்மா இருக்கவேண்டும் -பக்91
சொல்லாலேபானில்லைத்தம்பி
கம்மா இருந்துபார்தம்பி
நற்சிந்தனை-சும்மா விருந்துபார்தம்பி. பக்.279
ஓமனிதனேவானம் வந்தாலும்பூமிவந்தாலும்
ஆட்சிசெய்யக்கருதாதே.
சாட்சியாயிரு.மாட்சிஉன் பிறப்புரிமை
நற்சிந்தனை - பக். 377
மனத்திலெழும் உபாதிகளை - மனமாசுகளை
நீக்குவதற்கு மனதில் தெய்வப்பற்றை வளர்க்க வேண்டும். அத்துடன் சுயநலமான காரியங்களே மனதை மாசுபடுத்துகின்றன. சுயநலமற்றுச் செய்யப்படுகின்ற கர்மயோகத்தில் - செயலில் துறவில் சித்தம் சுத்தியடைகின்றது. உலக ஆசை பிடித்த மனிதன் வெறிபிடித்தவன் போன்று அலைகின்றான். அவனுடைய இச்சையை நிறைவேற்றிக் கொள்வதற்கு எதை வேண்டு மானாலும் செய்ய ஆயத்தமாக இருக்கின்றான். உலகப் பற்றை எல்லாம் தெய்வப்பற்றாக மாற்றும் பொழுது ஒருவனிடத்தில் உள்ள காமமும், காசாசையும் பக்தியாக வடிவெடுக்கின்றன. பக்தன் ஐம்பொறிகளையும் மனத்தையும் இறைவன் பால் செலுத்தி உலக ஆசையை பக்தியாக மாற்ற வேண்டும். பக்தி நெறி உயிர்கள் அனைத்தையும் நேசிக்கின்ற அன்பை ஏற்படுகின்றது. இந்நிலை வளர்ச்சியடைய பக்தி யோகம் ஏற்படுகின்றது. பக்தி யோகமே பேரன்பை வளர்க்கின்றது. சுயநலத்தைவிட்டுப் பேரன்பில் திளைக்கும் ஒருவனுக்கு அறநெறி இன்னதென்பதும் இதைப் பற்றிய அறிவும் அதாவது பரஞானமும் அவனுக்கு வாய்க்கின்றது. இந்நிலையில் தியானம் கைகூடுகின்றது. நோக்கரிய நோக்கும் நுணுக் கரிய நுண்ணுணர்வும் அவனுக்கே சாத்தியம். எனவே அகந்தை மமதை அற்ற தொண்டால் உடலும் உள்ளமும் தூய்மைபெறுகின்றன.

அந்நிலையில் பேரன்பு பிறக்கின்றது. அந்நிலை யில் ஞானம் துலங்குகின்றது. உள்ளத்தில் சத்தியமாகிய அன்பு இல்லாத போது தியானம் என்பது கைகூடாது. அன்பின் பயணமே தியானம். பறவையொன்று பறப்பதற்கு இரண்டு சிறகுகளும் ஒருவாலும் ஆகிய மூன்று உறுப்புக்கள் தேவை. அதே போன்று சுயநலமற்ற தொண்டும் அதன் பெறுபேறான அன்பும் இந்நிலையாற் கிட்டும் ஞானமுமே உண்மையைக் காண வைக்கின்றன. சிவயோக சுவாமிகளின் நற்சிந்தனை இவற்றை எடுத்துக்கூறும் அருள் நூல். பிரபஞ்சத்துடன் ஒருவன் இணைவதற்கு கர்மத்தால் அதாவது தொண்டாற் பழுத்த உள்ளம் அடிப்படை யாகின்றது. அந்த உள்ளத்தில் அன்பு பொங்கி சுத்த சைதன்னியத்தில் நிலைக்க வைக்கின்றது. இந்நிலையே தியானம். உண்மையான விழிப் புணர்வே தியானம். உண்மையில் நிலைக்கும் போது நாமே சிவமாகின்றோம். இது சிவயோக சுவாமிகளின் சிவவாக்கு. *அவனே நானென்று சொல்லித் தியானஞ்செய்வாய் தினமும் ஆசையெல்லா மொழியும் ஈசனருள் பொழியும்
(B. சி. பா 72 அவனே நான் பல்லவி) சிவத்தியானஞ் செய் செய் செய்
சிவமே யாமெனல் மெய் மெய் மெய்”
plq660s
*ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா” என்பது திருஞானசம்பந்தர் அருள்வாக்கு. உண்மையை மிக்குச் சோதிப்பதற்கு உண்மை யான சாதனை அவசியம். சிவயோகரின் சிவத்தியானம் பற்றிய கருத்துக்களும் எம்போன்ற வர்கள் முழுமையாக விளங்கும் தரமன்று. ஏனெனில் அவையெல்லாம் அநுபூதிச் செல்வம். அவற்றை நாம் உள்ளத் தூய்மையுடன், நம்பிக்கையுடன் போற்றும் போது நாமும் அந்நிலை எய்தலாம். “சாதனை உள்ள சத்துக்கள் காண்பரே" என்பது சுவாமிகள் வாக்கு. ஒரு நாட்டுக்குக் கிடைக்கும் இயற்கை வளங்கள் அந்நாட்டுக்கு எவ்வாறு சிறப்பாகின்றனவோ அதே போன்று ஆன்மீக வளத்தைப் பேணும் அநுபூதிமான்களும் பெரும் பொக்கிஷங்கள். அவர்களைப் போற்றுவது நம் தலையாய கடமை.
89

Page 99
6.
reo6)
ப்
g
செல்லப்பா சுவாமிகளை ஏட்டில் எழுதிக் க ஆனால் அவர்தம் குருதோத்திரப் பாக்களிலே சித்திரங்கள் உளஅவற்றை ஒருவாறு நிரற்படுத்திஅ
1. செல்லப்பா சுவாமிகள் வாழ்ந்த இடம்
செந்நெல்லும், கன்னலும் செறியும் நல்லூர். காரார் குயில பாடுவதும் கார் வணர் டு பண்பாடுவதுமான வாச மலர்ச் சோலைகள் செறிந்தது அவ்வெளில் நல்லை. அச்சீராரும் நல்லூரில் அயலறியா அந்தணர்களும், ஆன்ற விந்தடங்கிய கொள்கைச் சான்றோரும் வாழ்வர். வானவரும் தானவரும் ஒழிவின்றி வந்து வணங்குவதும், மங்கையர், ஆடவர், மைந்தர்கள் கூடி, கோடி கோடியாக வந்து வந்தனை புரிவதுமான ஆறுமுகன் சந்நிதி அவ்வூரிலுள்ள ஆனந்தத் தேனிருக்கும் பொந்து. தன்னையறியத் தவமியற்றும் மாதவரை அன்னையைப் போல் ஆதரிக்கும் அவ்வறுமுருகப்பெருமான் கோயில் முன்றிலில் தேர். அத்தேரடியிலே செல்லப்ப தேசிகர் எந்நாளும் இருப்பார்.
2. செல்லப்ப தேசிகளின் மானிடச்சட்டை
கறுத்தமேனி, கந்தைத்துணி, வெறித்த பார்வை, முட்டாளைப் போன்ற முகத்தோற்றம், ஓவியம் போன்றிருக்கும் அவர் சிலபோது முகமலர்ந்து சிரிப்பார். வேடமொன்றும் விரும்பார். நீறும் அணியார். நெற்றியிலே பொட்டுமிடார். தேர் முட்டிப்படியிலே சிங்காரமாய்க் கிடப்பார். கை தலையணையாய் க் கணி னுறக்கம் கொள்வார். பாதிச் சாமத்தின் பின்பு பள்ளி கொள்வார். கந்தன் திருமுன்றில் நிற்பார். வருவார் போவாரை வாயில் வந்தபடி பேசுவார். அவர்கள் தம்மோடு பேதித்துப் பேசவேண்டு மென்றே சின்னத்தனமான வார்த்தைகளால் ஏசுவார். அவர்களும் “இவன் விசரன்” என்று ஏசுவர். சில வேளை ஊரூராய்த் திரிவார், பிச்சைக்கு இச்சித்துப் பித்தனைப் போலத் திரிவார். உல்லாசமாய் நடப்பார், நாய்போல் திரிவார், நரி போல் உழல்வார், ஆரேனும் ஏதெனினும் கொடுப்பதற்கு வந்தால் அவரைச்

சுவாமிகள்)
Tட்ட ஒண்ணாதவன் என எங்கள் குருநாதன் கூறுவார். செல்லப்பரைச் சித்திரிக்கும் அற்புதமான சொற் Dமத்தது இக்கட்டுரை.
சீர்கேடாகப் பேசுவார். இவை செல்லப்பரின் பாரறிந்த பைத்தியப் போர்வை.
8.செல்லப்பதேசிகளின் அக அழகு
செல்லப்பதேசிகர் போர்த்திருந்த விசர்க் கோலத்துள்ளே, தூண்டு சோதி சுடர்விடு தூய்மையான அகம் துலங்கியது. அவர் காமக் குரோதமோகம் கழிந்தவர். அச் சமொடு கோபமில்லாதவர்; இகழ்ச்சியும் புகழ்ச்சியும் ஒன்றாய்க் காண்பவர், விருப்பு வெறுப்பை வேரறப் பறித்தவர். நன்மை தீமையைக் கடந்த நாதன். நீதி அநீதி எனும் நிலைமையைக் கடந்தவர். சாதி சமயமென்னும் சங்கடத்துக் குள்ளாகாதவர், குலநலம் பராக் கொள்கை யுடையவர். பேதம் யாவும் நீங்கும் பெரியவர் ஆண்டவர்க்கு அன்பு பூண்ட அகத்தினர். திருவடி மறவாச் சீருடையாளர். இயமநியமங்களில் எள்ளவும் பிசகாதவர். ஒதாதே வேதம் உணர்ந்தவர். கற்றவர் விழுங்கும் கருணை யாளன். மற்றவர் அறியா மாணிக்கமாமலை. சிற்றறிவுடையார் தேறாச்செல்வன். உணர்ந் தார்க்கும் உணர்வரியன். ஒளவிய நெஞ்சத்தால் அறியவொண்ணாதவன். மந்திரமும் தந்திரமும் மானாபிமானமில்லாச் சுந்தரன். குருசீட முறை யொன்றுமில்லாதவர். குணாதிதர் எவரையும் கும்பிட்டு நில்லாதவர். ஆண்மைசேர் குருபுங்கவ சிங்கம், தவராசசிங்கம், புனிதன், முனி முனிவர் முழுதல் கண்ணியமுடைய செல்வன் கருணைக் கடல், இன்பசாகரமோனம்.
4. செல்லப்பா கவாமிகளின் வியாபகம்
செல்லப்பதேசிகரின் தேகக் கோலமே எழில் நல்லையில் வாசம் செய்தது. அவரது உண்மைச் சொரூபமோ அங்கும் இங்கும் எங்கும் பிரகாசித்தது. அவர் எத்திக்குமாகி நின்றனர். அகரமாம் எழுத்துப் போல அனைத்திலும் கலந்து
90

Page 100
நினர் றனர். ஆணுமாய் ப் பெண னுமாகி அண்னையும் பிதாவுமாகி நின்றனர்; ஊனுமாய் உணர்வுமாகி உள்ளுமாய்ப்புறம்புமாகி நானுமாகி நீயுமாகி நின்றனர். விண்ணும் மண்ணுமாகி நின்றனர். எல்லாரையும் தனி னிடத்தில் காண்பவராயும், தன்னிடத்திலே எல்லாரையும் காண்பவராகியும் இருந்தனர். அவருக்கு அயலாக ஏதும் இருந்ததில்லை. அவர் ஒம் எனும் எழுத்தினுள்ளே உலகெலாம் விளங்கக் காட்டி அவ்வுலகெங்கும் செறிவொழியாது நிற்பவர் நாம் என்று சொல்லவல்லவர். எல்லா உலகமுமாய் நின்றவர் அவர், ஆருயிர்கள் தோறும் அதுவதுவாய் நிற்கும் பேருரு.
5. கருத்தினிற் கருத்தாயிருக்கும் கண்மணி
செல்லப்பரின் பேருரு பெரிதினும் பெரிது ; நோக்கரிய நோக்கினது. அவர்தம் நுண்ணுருவோ அணுவுக்கும் அணுவானது. நுணுக்கரியது. நுணர்ணுணர் வாயது. அவர் சித் தத்துள் திகழ்பவர்; பஞ்சாமிர்தம் போல் நெஞ்சில் பண்புடன் இனிப்பவர். அன்பினர் நெஞ்சம் குடிகொண்டவர். அகச்சோதி, உயிர்க் குயிராம் நாதன். எண்ணும் எண்ணம் எல்லாம் அறிபவர்,
எண்ணுவார்எண்ணம் தோன்றும்இடமாயுள்ளவர்.
6. நால்வேதம் நவில் வாயான்
பாரோர், செல்லப்பர் சின்னத்தனமாகப் பேசுபவரென்றே அறிந்திருந்தனர். அவர் சின்னஞ்சிறிய சொற்களால் பென்னம் பெரிய உண்மையைக் கூறவல்ல செந்தமிழ் நாவலன் எனச் சீரடியார் சிலர் அறிந்திருந்தனர். அவர் ஒரு பொல்லாப்புமில்லை என ஒயாது உரைப்பார். முழுவதுமுண்மை என முக மலர்ந்தோதுவார். எப்பவோ முடிந்ததென எடுத்தெடுத்துரைப்பார். அப்படியேயுள்ளதென அந்தரங்கமாகச் செப்பிப் கொண்டிருப்பார். ஆரறிவார் என அடிக்கடி சொல்வார். நாமறியோம் என நகை செய்வார். இப்பெரும்பெயர்களோ ஒப்பற்ற வாக்குகள். ஆழநீளம் காண அரிய மகாவாக்கியங்கள். உணர்ந்துணர்ந்து இன்பத்தில் தேறுதற்குரிய உறுதிமொழிகள். இவற்றுடன் வாசியோகம் தேர், வகாரநிலை அறி, காசிதேசம்போ, முச்சந்திக்குப்பையிலே முடங்கிக்கிட என்றெல்லாம்
யோகமொழி பேசுவார். பாவலர் நாவலர் தாமும்

இப்பரிபாசை அறியாது பதறிப் போவார். பாடாமற்பாடு, நாடாமல் நாடு,தேடாமல்தேடு,என்று சின்மொழி பேசுவார். இச் சின்மொழி களின் பொருளை சின்மயமாக வல்லவரே நயப்பர். இவை ஞான நாட்டமுடையோர் கொண்டாடும் மொழிகள். இருந்தபடியே இருக்கும் பொருளை இருந்தபடியே இருந்து- (மெளனநிலையில்) சிவயோகத்திற்கு பொருந்தி உணரச் செய்ய வல்ல மறைமொழிகள். அக்குமணி அணி, அஞ்செழுத்தை ஒது, நெக்கு நெக்குருகு எனும் அவர் தம்மொழிகள் பக்திநெறியின் பயின் றோருக்குமுத்திநெறி காட்டும் மொழிகள்
7. ஈனப்பிறவிநீக்கும் எழில்
செல்லப்பதேசிக வேடம் மூலபண்டாரம் வழங்குதற்காகத் தாங்கிய அருள் வேடம். கைலைநாதர், குருந்த மரத்தடியில் குருவாக வந்து, தம்மைக் கும்பிட்டு நின்ற மாணிக்கர்க்குத் தீக்கைவைத்தாண்ட மருந்தினையே தேரடியில் செல்லப்பதேசிகராய் எழுந்தருளியிருந்து தம்மை அண்டிவாழ்ந்த சிவயோகச்செல்வருக்கும் ஈந்தனர். செல்லப்ப தேசிகர் எந்தவேளையும் “ஓம்" எனச் சிந்தைதனிலே செப்பிக் கொண்டு வந்த பேருக்கு வாழ்வை அளிப்பவர். அவர் வஞ்சம் பெறாமை, கோபம் வைத்திடும் பேருக்கும் அஞ்சாதே என்று அருள்சொரியும் சுதந்திரர். எட்டும் இரண்டும் அறியாதோருக்கும் பட்டமளிக்கவல்ல நல்லூர் ஆட்டக்காரர். வித்தின்றி நாறு செய்யவல்ல வித்தகர். அவர் ஒரு மொழியாலே ஒவியம் போல ஆக்கி வருபயம் நீக்கவல்லவர். தித்திக்கும் ஒரு மொழியால் சிண்மயத்தைக் காணச் செய்ய வல்லவர். ஒரு மொழியால் கன்றுமனவெப் பெல்லாம் தணித்து உளங் குளிரச் செய்ய வல்லவர். அவர் “ஒழிக உண்பவம்” என உரைப்பரேல் அவ்வாணைமொழியின் முன் பிறவிப்பிணி வெந்து நீறாய்ப்போம். அவரது ஒரு திவ்வியபார்வை கன்மமெல்லாம் தீர்க்கும். அவரது ஒரு தொடுகை வெட்ட வெளியிலே நிறுத்தி இடர் தீர்க்கும். அவர் தினையளவு போதிலே சிவமாக்க வல்லவர். ஆயினும் அவர் நல்லையில் அளித்த நாடகத்தில் ஞான வித்தையின் அரிவரிப்பாடம் முதல் அனைத்தையும் உணர்த்தியிருக்கிறார். "ஆரடாநீ?" என்ற அடிப்படை வினாமுதல் “ஊமை எழுத்தறி”
91

Page 101
என்ற உபதேசம் வரை யாவும் உணர்த்தினார். தன்னைச் சரணடைந்தோரைத் தானாகச் செய்வதற்குச் சாம பேத தான தண்டம் எனும் சதுர் வித உபாயங்களையும் உணர்த்தி யிருக்கிறார். சோதித்துச் சோதித்து, பந்த பாசங்களிலெல்லாம் பேதித்துப் பேதித்து சும்மா இருக்கும் சூட்சத்தில் மாட்டி வைக்கும் வித்தையைப் போதித்தார். அவரிடம் வெல்ல வரும் மாந்தரின் வாயடக்கும் சிவஞானம் இருந்தது. அல்லும் பகலும் ஆனந்தம் தரும் மோனமே அவர். இரவுபகலற்ற ஏகாந்த வீட்டில் பரவிப் பணிய வைக்கும் பரமன் அவர். அவர் ஒதாமல் ஒதுவிப்பவர்; அவர் அருள் சொரியும் இரகசியத்தை ஆரே அறிய வல்லார்; அவருக்குக் கிரியாவதியான நிருவாண தீக்கைக் காரியங்கள் எதுவும் வேணர் டியதில்லை. அவர் ஆரும் அறியாமல் அந்தரங்கமாக அருளைச் சொரிபவர். அவர் தாயாரைப் போல வந்து ஆள்பவர். பஞ்சின் மெல்லடிப் பரம குருபரனான அவர் மெத்தென்ற இன்மொழி பேசி, நோ ஏதும் தோன் றாத வணிணம் ஞான வைத்தியம் செய்பவர். வெல்லும் மோகம் அறுத்தாள்பவர்; கண்மணசை முற்றாய்க் கரைப்பவர். ஐம்புலன் ஐந்தையும் ஆட்கொள்ள வல்லவர். இரு வினையினர் கட்டறுத்து எல்லாம் சிவன் செயலாய்க் கருதும்படி வைப்பவர். மூடிய மாயவிருளை ஓடச் செய்ய வல்லவர். மலப் பகையின் வில்லை முறியடித்து வெற்றி முரசு கொட்டுபவர். அவரிடம் இல்லை என்ற சொல்லுக்கு இடமில்லை. இல்லை என்னும் சொல்லை இல்லாமற் செய்பவர் அவர். அவர் தாரகப் பொருள் தருபவர். தன்னைத் தந்து ஆண்டு கொண்ட சற்குரு. பலபடச் சொல்வானேன்? அவர் தந்தைக்கு உபதேசஞ் செய்த சிவகுரு நாதனை ஒத்த சிவகுரு. திருவேரகத்தமர்ந் திருக்கும் சுவாமிநாதன். (ஏரகத்தமர் ஏந்தலை ஒப்பவர்)
8. இருவரும் தேடிக்காணாத இறைவன்
தேர்முட்டிப் படியிலே செல்லப்பண் எனும் பெயர் பூண்டு விசர்க் கோலத்திலிருந்தவர் சிவபெருமானேயாவர். இவர் வேதாந்திகள் கூறும் இருபத்து நான்கு தத்துவத்துக்கும் அப்பாலானவர். சித்தாந்திகள் கூறும் ஆறாறு தத்து தீவத்திற்கும் அப்பாலனவர். அவர் தத்துவாதீதர்.

மண்ணையும் விண்ணையும் எண்ணுமுன்னே ஆக்கவல்லவர். அவர் அயன் அரி இருவரும் அன்னமாய்ப் பறந்தும், பன்றியாகக் கிண்டியும் அறியொணாது நின்ற அந்தமும் ஆதியும் அகன்ற சோதி சொரூபம். அயன் அரி அரண் ஆகிய மூவரும் ஒன்றாகச் சேர்ந்திருந்த மூர்த்தம் செல்லப்ப மூர்த்தம் என்பதும் முடிந்த முடிபல்ல. அவர் இம் மூவருக்கும் அறியொணாத முதலாய மூர்த்தி. நீராய் நிலனாய் நெடுவிசும்பாய் இப்படி அட்ட மூர்த்தமாகவும் நிற்கும் ஆராலும் காண முடியாத அமலனே, இவ்வாறு செல்லப்ப மூர்த்தம் தாங்கி நேராகக் காணும்படி தேரடியிலே இருந்தார். முட்டாளைப் போலிருந்த செல்லப்ப மூர்த்தம் மொய்குழலாள் பாகம் மறைத்து வந்த பாக்கியம். காட்டிலே காளியுடன் கூத்தாடுபவனே நாட்டிலே ஞானகுருவாகவும் வீற்றிருந்தான். அகளமாய் யாரும் அறிதற்கரிதாயிருந்த அப் பொருளே யாவரும் அறிதற் கெளிதாய் சகளமாய் தேரடியில் திரிந்தது. பித்தனென்று ஊரவ ரெல்லாம் பேசும்படி நல்லூரிலே திரிந்த செல்லப்பமூர்த்தி, பித்தன் என்று நம்பியாரூரன் பாடும்படி திருவெண்ணெய் நல்லூரில் ஆடல் காட்டிய அப்பனே. நல்லூர் என்ற ஒரூரும், செல்லப்பன் என்ற ஓர் பேரும் ஊரும் பேருமில்லா இறைவன் கொண்ட ஒர் ஒப்பற்ற இரக்கமே. விற்றுாணொன்றறியாத பிச்சாடன மூர்த்தமே செல்லப்பமூர்த்தமாய் ஊருராய்ப் பிச்சையேற்றுத் திரிந்தது. போக்கும் வரவும் புணர்வுமில்லாப் புணர்ணியரே, இணங்கி எவரும் வணங்கும் நல்லையில் இன்னான் இவனென்ன ஒருவரும் அறியாதபடி ஒடி உலாவித்திரிந்தார். நாதம் கடந்த ஞானவெளியில் நிலைத்திருக்கும் அவரே நல்லூர் வெளியில் நடம் புரிந்தார். இருந்த படியே இருக்கும் சச்சிதானந்தப் பொருளே, எப்படி இவன் தன்மை என்று எவரும் எண்ண முடியாதபடி தேர்முட்டிப் படியிலே ஒவியம் போன்றிருந்தது. கல்லால் நிழலிலே மெளனோப தேசம் செய்த ஆலமர் செல்வனே மாறாத மெளனத் தியானப் பிரவேசனாய் தேரடியில் அமர்ந்திருந்தார். அவர் ஊசிமேல் நுனியில் நின்று டக்கிரதவத்தையாற்றும் மாசில் மாதவரும் காணா மலர்ப்பாதம் காணவே வந்த கழலடி ாம்போல் வந்த இணையடி தீதெல்லாம் நீக்கச் சிவபெருமான் எண் போல் பூதலத்தில் வந்தான்.
92

Page 102
THE GLORY OF THI
"Paduka' means "foot guard'. The padukas are the Sandals of the Lord and are called as such as they guard the Lord's Feet.
1. The literature on the Avatars or the Incarnations of the Lord indicates that the padukas had their orgin with the Inception of the Lord. The padukas are considered to have played their part consistent with the Avatars of the Lord and taken shape according to the Feet of the Incarnations. But it was only in the Avatar of Rama, that they attained very great prominence.
2. Bharata went to the Dandaka forest to bring back Rama to Ayodhya. As no amount of persuasion on his part was of any avail, Vasishta, the preceptor suggested that he might rule under Rama's authority as his deputy. Protesting against this suggestion, Bharata requested to be given Rama's Sandals in the belief that they would be able to look after the interests of the kingdom in the absence of the Lord. Accordingly Rama gave His Sandals to Bharata. According to Bhoja of Champu Ramayana Bharata obtained two valuable Crowns in the shape of the Sandals of Rama.
3. On return to Ayodhya the whole situation was distressing to Bharata on account of the absence of Rama. Bharata moved to Nandigrama. a village on the outskirts of Ayodhya with the approval of Vasishta and with the army and the people who followed him voluntarily. He

E LORD'S PADUKAS
performed immediately Pattabhisheka to the padukas. At the same time, he proclaimed that he would bring all matters of the state into their sacred presence, seek their advice, and govern the kingdom in the patient expectation of the day when they would be placed once more under Rama's Feet. The rule of the Padukas lasted for 14
years.
4. Tulasidas in his Rama Charita Manasa' has compared the padukas to the watchguards looking after theKosala kingdom. One paduka represented "RA" and the other "MA". They were like two eyes-one eye watching that matters did not go wrong anywhere and the other that the progress and prosperity of the kingdom grew more and more.
Yudhistra in Bhagavata had praised the glory and greatness of the padukas of Krishna as follows "The pair of the wooden Sandals You wear under Your Feet destroy all evil. The holy persons, who constantly worship them extol them and obtain release from the bondage of samsaric existence. They even get wordly boons, if they seek for them. Others do noteither" (X-12)
6. Thepadukas control the mind of the devotee removing all impurities and fosters devotion to the Lord. Worshipping the padukas implies therefore more reverence than worshipping the Feet, as they are deemed to be worthy and valuable substitute for the latter.
93

Page 103
7. One who is imbued with intense devotion and does 'dasya' or Kainkaraya to the Lord or His devotees is generally termed 'Paduka'. The mystic, Namalwar was called the Paduka of the Lord. Similary Madurakavi Alwar to whom Nammalwar constituted everything was the Paduka ofthelatter.
8. Vedanta Desika, the poet philosopher was once crowned with Lord Ranganatha'spadukas at Srirangam. Immediately he received inspiration and he composed the poem "Paduka Sahasra' consisting of 1008 slokas overnight in glorification of the padukas. He has himself expressed that the padukas themselves made him compose the poem as Ramayana was got composed by Valmiki. He has looked at the importance of the padukas in thousand different ways and each idea is peculiar and has the aspect ofverisimilitude.
9. The padukas constitute a glorious and charming personality to desika. The glory of the padukas is considered to be greater than that of the Lord's Feet. The padukas function in two capacities. In their individual capacity they act as the servant of the Lord. In their social capacity they are the servant of the Lord's devotees. They
act as the link betweenthe Lord and his devotees.
10. The padukas are both a concept and truth. They are a pointer to the Baktas as to the manner in which service should be rendered at the Feet to the Lord. In the worship of the padukas the devotees could see a reflection of the attributes of the Lord such as goodness, 'daya' 'vatsalya' 'soulabya' etc. Kulasekara Alwar, the author of "Mukundamala' has sung Lugustus fl-bgsir u66T6histu siT60ir(Su(360T. He desired to be an inseparable achetana nearest to God an to do worship service and aradana etc.

11. Man serves to please God. God is pleased with man's services. He is so pleased with his service that in His pleasure, He regards the servingman as his equal, comradenay as His very self. That pleasure is his Grace and Mercy. They padukas stand as much for that service as for the law of that service. It has been aptly described The Will of God is the way of Paduka. Paduka serves as He wills and Hedesires as it serves.
12. The Padukas are guardians of both the Lord and His devotees. They bring God and the souls together. They are in the words of Desika, "Foot guards' of God and the "head - guards' of souls. Lord Krishna has declared in Bhagavad Gita: "Those who meditate on Me and worship Me and no other, and who are ever devoted to Me, I undertake to secure their yogakshema. The Padukas are considered to play the same role Valmiki in his Ramayana has also referred to this aspect.
13. The Feet of the Lord always symbolise His mercy. The Padukas also represent His mercy in extention. According to Desika, the extension stands for the descent of the Lord and the ascent of thejiva. The descent of the Lord is for the purpose of conferring salvation. The ascent of the man is to crown himself with the Padukas and to attain
salvation.
14. The glory of the "Paduka Rajya' excels even the glory of 'Rama Rajya'. Bharata's mention to Rama about the state of the Kingdom on the latter's return to Ayodya confirms this. There was complete unity, amity, contentment and happiness. There was santi everywhere in the upanishadic sense of the term. The Padukas exercised magic spell and inspired intense devotion to Rama. Thus inservice of the Padukas
is embodied divine essence.
94

Page 104


Page 105


Page 106

Bilingual Monthly, Registered at the GPO, as NewsPaper. No. R. B.N. 782/1961. a) Printer-Harikanan Printers
General & Commercial Offset Printers, Screen Printers & Computer Designers 424 K.K.S. Road Jaffna. Sri Lanka.
■P&Fax-021-2222了重了。 Publisher, A Cheathurai b) Published for Sivathondan Society Ltd.
| 434, K.K.S Road, Jaffna, Sri Lanka.
TP-02-2222799 Date of Publication: 1st March-April 2004 Editor: S.Vinasithamby B.A (Hons)
Sivathondan Nilayam, Chen kallady, TP-065-2240272
toad, Jaffna. TP-021-2222717