கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செவ்வேள்

Page 1


Page 2


Page 3

செவ்வேள்
கலாநிதி ஆ. கந்தையா எம். ஏ. (சென்னை), பிஎச். டி. (இலண்டன்)
கல்விச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்
சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்.
1985

Page 4
கேதீச்சரத்துப் பெருமான் திருவடிகளுக்கு
அர்ப்பணம்

முன்னுரை
இறையனூர் அகப்பொருளிலுள்ள அன்பினைந்திணை ’ என்ற சூத் திர உரையிலும் தொல்காப்பியச் செய்யுளியலிலுள்ள ' தரவின்ருகி " என்ற சூத்திர உரையிலும் 150 கலியும் 70 பரிபாடலும், என வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே, பரிபாடல் எழுபது பாடல்களேக் கொண்டது என்பது தெளிவாகின்றது.
பாடியவர் பெயரும் பாடப்பட்ட காலமும் தெரியாத " திருமாற்கிரு நான்கு ' என்னும் வெண்பாவாற் பரிபாடலிலுள்ள எழுபது பாடல்களிலே 8 திருமாலுக்கும் 31 செவ்வேளுக்கும் 1 காடுகிழாளுக்கும் 26 வையை ஆற்றுக்கும் 4 மதுரைக்கும் உரியனவென்று தெரியவருகின்றது.
எனினும், டாக்டர் உ. வே. சாமிநாதையர் பதித்து வெளியிட்டுள்ள பரிபாடல் மூலமும் பரிமேலழகருரையும் என்ற நூலில் (இரண்டாம் பதிப்பில்) முதலிலிருந்து தொடர்ச்சியாக 22 பாடல்களும் அவற்றுடன் பழைய உரைகளிற் காட்டப்பட்ட மேற்கோள்களிலிருந்து கிடைத்த 2 முழுப் பாடல்களும் சில உறுப்புக்களும் புறத்திரட்டு முதலியவற்றி லிருந்து கிடைத்த சில உறுப்புக்களும் மட்டும் இடம் பெறுகின்றன.
சாமிநாதையர் பதிப்பிலே தொடர்சியாகவுள்ள இருபத்திரண்டு பாடல்களிலே திருமாலுக்குரியவை ஆறு (1, 2, 3, 4, 13, 15) : செவ்வேளுக்குரியவை எட்டு (5, 8, 9, 14, 17, 18, 19, 21) : வையைக்குரியவை எட்டு (6, 7, 10, 11, 12, 16, 20, 22). ஏனையவை இன்ன வகையைச் சார்ந்தவை என்று தெரியவில்லை.
சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிற் சிறப்புத் தமிழ் மாணவனுக இருந்தபோதும், இலண்டன் பல்கலைக்கழத்திற் சைவ பத்தி இலக்கியம் பற்றி ஆய்வை மேற்கொண்டபோதும் பரிபாடலைப் படிப்பதற்கு வாய்ப் புக் கிடைத்தது. இலண்டன் பல்கலைக்கழகத்தில் நான் மேற்கொண்ட ஆய்வு சைவ பத்தி இலக்கியம் பற்றியதாகும். எனவே, பரிபாடலிலுள்ள செவ்வேள்மேற் பாடப்பெற்ற எட்டுப் பாடல்களையும் ஆழ்ந்து படிக்க வேண்டியிருந்தது. அந்த எட்டுப் பாடல்களேயும் தனியாக நூல் வடிவில் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் அன்று என் உள்ளத்தில் எழுந்தது. அந்த எண்ணமே ' செவ்வேள் ' என்ற பெயருடன் நூல் ஒன்றை இன்று வெளியிடுதற்குத் தூண்டுதலாக அமைந்தது.
w

Page 5
செவ்வேள் " என்ற இந்நூலில் நான் எழுதிய நான்கு ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. செவ்வேள்மேற் பாடப்பட்டுள்ள எட்டுப் பாடல்கள் வாயிலாக அறிந்து கொள்ளக்கூடிய முக்கிய விடயங்களைச் செவ்வேள் ' என்ற கட்டுரை சுருக்கமாகக் குறிப்பிடுகின்றது. 'வேலன் கடிமரம்' என்ற கட்டுரை சங்க காலத்தில் நிலவி வந்த கடிமரம் பற்றிய கொள்கை, பரிபாடற் காலத்தில் எவ்வாறு சமயச் சார்புடையதாக மாறியது என்பதை எடுத்துரைக்கின்றது. செவ்வேளைப் பாடிய புலவர்க ளின் கண்கொண்டு கட்டுரை வடிவம் பெற்றது பரிபாடற் காலப் பரங்குன்றம் ". அகப்பொருள் அமிசங்கள் சமயப் பாடல்களில் - செவ் வேள்மேற் பாடப்பட்ட பாடல்களிலே-இடம்பெறுவதை 'அகப்பொருள் அறிமுகம்" என்ற கட்டுரை தெளிவுபடுத்துகின்றது. இவற்றுடன் செவ்வேளைப்பற்றிய பாடல்களில் முக்கியமான சில பகுதிகளைப் பொழிப் புரையுடன் 'பாட்டும் பொருளும்' என்ற தலைப்பிலே தந்துள்ளேன்.
கட்டுரைகளைத் தொடர்ந்து, செவ்வேளுக்குரிய எட்டுப் பரிபாடற் செய்யுள்களும் அவைகளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையும் இடம் பெறுகின்றன. பாடல்களுக்கு முன், ஒவ்வொரு பாடலையும் பாடியவர் வரலாறும் அப்பாடலின் பொருட்சுருக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.
தேவாரங்களுக்குப் பண் அமைக்கப்பட்டுள்ளது போலப் பரிபாடற் பாக்களுக்கும் இசை அமைக்கப்பட்டுள்ளது. தேவாரம் அதற்குரிய பண்ணுேடு பாடப்படுதல் வேண்டும் ; அது போலவே பரிபாடற் பாக்களும் அவைக்குரிய பண்ணுேடு பாடப்பட வேண்டியன. தேவாரங் கள் பண்ணுேடு பாடப்பட்டன : இன்றும் பாடப்படுகின்றன. ஆணுல், பரிபாடற் பாக்களை யாரும் பண்ணுேடுபாடுவதுமில்லை, பாராயணஞ் செய் வதுமில்லை. தொடக்கத்திற் பரிபாடற் பாக்கள் பண்ணுேடு பாடப்பட்டன : காலப்போக்கில் அவ்வழக்கு அருகி அற்றுப் போய்விட்டது போலும் !
திருமால்மேலும் வையைபற்றியும் பாடப்பட்ட பாடல்களுடன் செவ் வேளைப் பற்றிய எட்டுப் பாடல்களும் சாமிநாதையர் பதிப்பில் விரவி இடம்பெற்றுள்ளன. இது காரணமாகச் சைவ சமயத்தவர்கள் மத்தியில் இப்பாடல்கள் மதிப்பை இழந்தன என்று கூறுவது தவருகாது. அதேபோலத் திருமால்மேற் பாடப்பெற்ற ஆறு பாடல்களும் வைணவ சமயத்தவர்கள் மத்தியில் மதிப்பைப் பெறவில்லை என்று கூறலாம். இவை தனித்தனியாக அமைந்திருப்பின் செவ்வேள்மேற் பாடப்பட் டுள்ள பாக்களை சைவ சமயத்தவர்கள் போற்றியிருப்பர்; திருமாற்குரிய பாடல்களை வைணவர் பாடிப் பாராயணம் செய்திருப்பர் ; வையைக்குரிய
பாடல்கள் இலக்கிய இரசிகர்களுக்கு நல்லவிருந்தாய் அமைந்திருக்கும்.
vi

எனவே, முருகக் கடவுளுக்குரிய எட்டுப் பாடல்களையும் சைவ சமயத்தவர் கள் நன்கு அறிந்து போற்றிப் பாராயணஞ்செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு அந்த எட்டுப் பாடல்களை மட்டும் தனியே நூல் வடிவில் வெளியிட எண்ணினேன்.
இவ்வகையான வெளியீடுகள் கல்வியாளருக்கும் ஆய்வாளருக்கும் பெருவிருந்தாக அமையும் என்பது எனது எண்ணம். பல்கலைக்கழகத் திற் பரிபாடல் பாடநூலாக அமைய வேண்டும். சைவாலயங்களிற் சிறப்பாக முருகன் கோவில்களிற் செவ்வேளுக்குரிய பாடல்கள் பண் ணுேடு பாடற்குரியவை. திருமுருகாற்றுப்படையை ஒதுவதுபோலச் செவ்வேளுக்குரிய பரிபாடற் பாக்களைப் பாராயணம் பண்ணலாம். ஆகவே, எனது இந்த முயற்சியைச் சைவ உலகம் வரவேற்குமென நம்புகிறேன்.
பரிபாடலுக்கான உரை குறித்து டாக்டர் உ. வே. சாமிநாதையர் கூறியவற்றையும் இங்கு எடுத்துக் காட்டுவது அவசியமாகின்றது :
ஏட்டுப் பிரதிகள் தேடுகையிற் கிடைத்த சில குறிப்புக்களாலும், கண்ணுதற் கடவுள் லும் செந்தமிழ், சு , ஏ, கூ, க0-ஆம் தொகுதிகளிற் பதிப்பிக்கப் பெற்றுள்ள திருக்குறட் பரிமேலழகருரை நுண்பொருள் மாலையாலும் இந்த உரை பரிமேலழகர் இயற்றியதென்று தெரியவந்தது.
’ என்னும் இந்நூல் உரைச் சிறப்புப் பாயிரத்தா
இந்தவுரை பலவிடத்துப் பொழிப்புரையாயும் சிலவிடத்துப் பதவுரை யாயும் சிலவிடத்துக் கருத்துரையாயும் சிறிதும் புலப்படாத சொற்களின் பழைய வடிவங்களைப் புலப்படுத்தியும், உரிய இடங்களில் இலக்கணக் குறிப்புக்களைப் பெற்றும், சிலவிடத்து மிக அழகான பதசாரத்துடன் கூடியும் விளங்காத சிலவற்றைத் தக்க தமிழ் நூல் மேற்கோள்களாலும் வேதம், உபநிதடம் முதலியவற்றின் கருத்துக்களாலும் விளக்கியும் மிக விரிவாக அமைந்துள்ளது; நுணுகி ஆராயின், திருக்குறளுரையிலும் இவ்வுரையிலும் ஒத்த கருத்துக்களும் ஆசிரியர் பரிமேலழகருடைய
yyy
கொள்கைகளும் பல காணலாம்.
பொதுநல நாடுகளுக்கான கல்விசார் புலமைப் பரிசில் பெற்றுப் பிரித்தானிய திறந்த பல்கலைக்கழகத்திலே தொலைக் கல்வி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில், இந்நூலின் கையெழுத்துப் பிரதிகளே வாசித்தும் ஒப்புநோக்கியும் உதவிகள் புரிந்த அன்புக்குரிய திரு. அ. வி. விக்டோரியா அவர்களுக்கும், திரு. டி. ஆர். இராசலிங்கம் அவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றி என்றும் உரியது.
wii

Page 6
அரசாங்க அச்சகத் தலைவர் திரு. நெவில் நாணயக்கார அவர்கள் தமிழ்க் கம்பியூட்டர் அச்சிடும் முறைமைக்குச் சாவித்தட்டு அமைத்துத் தருமாறு என்னைக் கேட்டார். அவரின் வேண்டுகோளை ஏற்றுச் சாவித்தட்டை அமைத்துக் கொடுத்தேன். நான் செய்த அந்தப் பணிக்கு நன்றியாக இந்த நூலைக் கம்பியூட்டரில் அச்சிடுவதற்குத் திரு. நெவில் நாணயக்கார முன்வந்தார். ஆற்றலும் திறமையும் நிறைந்த திரு. நாணயக்கார அவர்கள் நன்றியுணர்ச்சிமிக்க பண்பாளர். அவருக்கு எனது நெஞ்சு நிறைந்த நன்றி என்றும் உரியது.
இந்நூல் தேசிய நூலக சபைக்கு வழங்கப்படுகிறது.
p
கம்பியூட்டரில் முதன் முதலாகச் செவ்வேள் நூல் வடிவைப்
பெறுவதற்கு வழிசெய்த இறைவனின் இன்னருளை இனிது போற்றுதும்
கலாநிதி ஆ. கந்தையா. "நடனலயம்,” 4, 40 ஆவது ஒழுங்கை, கொழும்பு 6, தொலைபேசி இல. 582770 01.11.1985.
viii

1.
0.
பட விளக்கம்
மயிலேறு மைந்தன் தெய்வயானை சமேதர் சரவணப் பொய்கையில் அவதாரம் பரங்குன்றத்துப் பரம் பொருள் கடுஞ் சூர் மாமுத றடிந்தறுத்த வேல் சூர் மருங் கறுத்த சுடர் படையோன் பிணிமுக மூர்த்த வெல்போ ரிறைவன் விரை மயின்மேல் ஞாயிறு வள்ளி, தெய்வயானை மணுளன் ஆறுமுகமும் பன்னிரு கையும்
ix
பக்கம்
13
3.
53
67
83
95
103
113
123
139

Page 7

உள்ளே . . . . . . . .
1.
2
3.
4
5
10.
செவ்வேள்
வேலன் கடிமரம் பரிபாடற் காலப் பரங்குன்றம் அகப்பொருள் அறிமுகம்
பாட்டும் பொருளும் செவ்வேள் (ஐந்தாம் பாடல்) பாடியவர் வரலாறு பாடலின் பொருட்சுருக்கம்
பாடல்
பரிமேலழகருரை செவ்வேள் (எட்டாம் பாடல்) பாடியவர் வரலாறு பாடலின் பொருட்சுருக்கம்
பாடல்
பரிமேலழகருரை
செவ்வேள் (ஒன்பதாம் பாடல்) . . .
பாடியவர் வரலாறு பாடலின் பொருட்சுருக்கம்
பாடல்
பரிமேலழகருரை
செவ்வேள் (பதினன்காம் பாடல்)
பாடியவர் வரலாறு பாடலின் பொருட்சுருக்கம்
பாடல்
பரிமேலழகருரை
செவ்வேள் (பதினேழாம் பாடல்) பாடியவர் வரலாறு பாடலின் பொருட்சுருக்கம்
பாடல்
பரிமேலழகருரை
xi
பக்கம்
O1
15
21
33
43
55
55
57
59
63
69
69
70
72
77
85
85
86
88
9.
97
97
98
99
101
105
105
106
108
110

Page 8
11.
12.
13.
14.
15.
செவ்வேள் (பதினெட்டாம் பாடல்) பாடியவர் வரலாறு பாடலின் பொருட்சுருக்கம்
LI TL L6i)
பரிமேலழகருரை செவ்வேள் (பத்தொன்பதாம் பாடல்) பாடியவர் வரலாறு பாடலின் பொருட்சுருக்கம்
பாடல்
பரிமேலழகருரை செவ்வேள் (இருபத்தொராம் பாடல்) பாடியவர் வரலாறு பாடலின் பொருட்சுருக்கம்
பாடல்
பரிமேலழகருரை
பின்னிணைப்பு
துணை நூல்கள்
xii
பக்கம் 115
115
116
118
120
125
125
127
130
134
141
141
142
144
147
150
153

1. செவ்வேள்
எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாக நின்று திகழும் தொகை நூல் பரிபாடல் ஆகும். தொகை நூல்கள் எட்டினையும் எடுத்துச் * என்று இத்தொகை நூல் பாராட்டப்பட்டுள்ளது. இப்பாடல்கள் தொகுக்கப்பெற்ற காலத்தில் எழுபது பாடல்கள் இருந்ததாகத் தெரியவருகின்றது. இதனை, பாடியவர் பெயரும் பாடப்பட்ட காலமும் அறிந்து கொள்ள முடியாத நிலையிலுள்ள,
சொல்லும் வெண்பாவின்கண் ஓங்கு பரிபாடல்
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்யபரி பாடற் றிறம்
என்ற வெண்பாவினுலும் இறையனர் களவியலின் முதல் நூற்பா உரையினுலும், தொல்காப்பியச் செய்யுளியலின் இளம்பூரணர் உரையி ஞலும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
எழுபது பாடல்களில் அழிந்தொழிந்தன போக எஞ்சியவையாக இப்போது எமக்குக் கிடைப்பவை இருபத்திரண்டாகும். இவ்விருபத் திரண்டு பாடல்களும் உ. வே. சாமிநாதையர் அவர்களின் முதன் முதல் வெளிவந்த பதிப்பில் 1 முதல் 22 வரை இலக்கமிடப்பட்டுப் பதிக்கப் பட்டுள்ளன. ஆணுல், இத்தொடர் இலக்கங்களைக் கொண்டதாய் இவ் வொழுங்கில் இப்பாடல்கள் தொகுக்கப்பட்டிருந்தன என்று நிறுவுவதற் குச் சான்றுகள் எவையும் இல்லையென ஆராய்ச்சியாளர் கருதுகின்ற னர். இவ்விருபத்திரண்டு பாடல்களைவிடத் தொல்காப்பிய உரை யாசிரியர்களின் மேற்கோட் செய்யுள்களிலிருந்து இரண்டு முழுப் பாடல்களும் சில உறுப்புக்களும் கிடைத்துள்ளன. இருபத்திரண்டு பாடல்களுள் ஆறு பாடல்கள் திருமா?லப் பற்றியன : * எட்டுப் பாடல்கள்
நற்றின நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ ருெத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்துங் கலியோ டகம்புறமென் றித்திறத்த வெட்டுத் தொகை.

Page 9
செவ்வேள்மேற் பாடப்பெற்றவை : * ஏனையவை வையையைப் பாராட் டுவன. தொல்காப்பிய உரைகளில் மேற்கோளாகப் பயின்றுவந்த இரண்டு பாடல்களுள் ஒன்று திருமா?லப் பற்றியது ; மற்றையது வையையைப் பற்றியது.
திருமாலைப் பற்றிய ஆறு பாடல்களும் செவ்வேளைப் பற்றிய எட்டுப் பாடல்களும் கடவுள் வாழ்த்து என்னும் துறை பற்றியன. 6) பதிப்புகளிலே ‘கடவுள் வாழ்த்து' என்றே இப்பாடல்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. ஆனல், இப்பதினுன்கு பாடல்களும் ஏனைய நூல்களிலுள்ள கடவுள் வாழ்த்துக்கள் போன்று, நூலின் முதலிலே ‘கடவுள் வாழ்த்துப் பாடல்களாக இடம் பெறவில்லை ; வையையைப் பற்றிய பாடல்களுடன் விரவியே காணப்படுகின்றன.
பரிபாடலிலுள்ள இருபத்திரண்டு பாடல்களில் முதல் நான்கு பாடல்கள் திருமாலைப் பற்றியன ; ஐந்தாவது பாடல் செவ்வேளைப் பற்றியது. அடுத்த எட்டுப் பாடல்களுள் முதல் நான்கு பாடல்களில் இரண்டு வையையைப் பற்றியன ; இரண்டு செவ்வேளைப் பற்றியன. அடுத்தி நான்கு பாடல்களில் மூன்று வையையைப் பற்றியன ஒன்று திருமாலைப் பற்றியது. இவற்றைத் தொடர்ந்து இடம் பெறுவன முறையே, செவ்வேள்மேலும் திருமால்மேலும் வையைமேலும் பாடப்பட் டவை. அடுத்துவரும் மூன்று பாடல்கள் செவ்வேளின் புகழ்பாடுவன. இறுதியான மூன்று பாட்டுக்களும் வையை, செவ்வேள், வையை என்ற முறைப்படி காணப்படுகின்றன. எனவே, இவ்வாறு திருமால், செவ்வேள் ஆகிய கடவுளர்களைப் பற்றிய பாடல்கள் தம்முள் விரவி வருவதோடு, வையைமேற் பாடப்பட்ட பாட்டுக்களுடன் விரவியும் வருவதால் அவற்றைப் பரிபாடலின் ‘கடவுள் வாழ்த்து' என்று கூறுவதிலும் ‘கடவுள் வாழ்த்து என்னும் துறையைச் சார்ந்தன என்று கூறுவதே சாலப் பொருந்தும்.
மேலும், கடவுள் வாழ்த்து என்னும் துறை பற்றிய இப்பாடல்கள் நூலின் முற்பகுதியில் இடம் பெறுவனவாயினும், திருமாலைப் பற்றிய பாடல்களா அல்லது செவ்வேளைப் பற்றிய பாடல்களா முதலிலே இடம் பெறுதல் வேண்டும் என்ற வினுவிற்கும் இடமுண்டு. இப்போதுள்ள பதிப்புக்களில், முன்னர் கூறியது போன்று, திருமால்மேற் பாடப்பெற்ற நான்கு பாடல்கள் முதற்கண் இடம் பெறுகின்றன. அவற்றைத் தொடர்ந்தே ஏனைய பாடல்கள் விரவி இடம் பெறுகின்றன. இந்த முறையிற் பரிபாடற் பாட்டுக்கள் தொகுக்கப்பட்டனவா அல்லது செல் லரித்த ஏடுகளிற் சிதைந்திருந்த பாடல்களே நூல் வடிவிற் கொண்டு வந்தபோது, பதிப்பாசிரியரே இம்முறையைப் பின்பற்றினுரா என்பது
2

ஆய்வுக்குரியதாகும். இன்னும், பரிபாடற் பாட்டுக்களின் தொகையைக் குறிப்பிடும் வெண்பாவிலே திருமால், செவ்வேள், கொற்றவை, வையை குறிப்பிடப்படுவது நோக்கற்பாலது. எனினும், பரிபாடற் காலத்திற் சைவம், வைணவம் என்ற வேறுபாடின்றி மக்கள் சிவனையும் திருமாலையும் வழிபட்டனர் என்பதற்குச் சான்றுகள் பல உளவாதலால் அவை எவ்வாறு அமையி னும் ஏற்புடைத்தே !
செவ்வேளைப் பற்றிய எட்டுப் பாடல்களின் தொடர் இலக்கம், பாடிய
என்ற முறையிலேயே அவைகளின் தொகை
புலவர்கள், அப்பாடல்களுக்குப் பண் அமைத்தோர், அப்பண்களின்
பெயர் ஆகியன பின்வருமாறு :-
பாடல் இல. பாடியவர் பண் அமைத்தவர் பண்ணின் பெயர்
5 கடுவனிள கண்ணனுகஞர் பாலையாழ்
வெயினனர்
8 நல்லந்துவஞர் மருத்துவன் பாலையாழ்
நல்லச்சுதஞர்
9 குன்றம்பூதனர் மருத்துவன் பாலையாழ்
நல்லச்சுதனர்
14 கேசவனுர் கேசவனுர் நோதிறம்
17 நல்லழிசியார் நல்லச்சுதஞர் நோதிறம்
18 குன்றம்பூதனுர் நல்லச்சுதணுர் காந்தாரம்
19 நப்பண்ணணுர் மருத்துவன் காந்தாரம்
நல்லச்சுதஞர்
21 நல்லச்சுதஞர் கண்ணகஞர் காந்தாரம்
மேலேயுள்ள அட்டவணையையும் ஏனைய பாடல்கள் பற்றிய விபரங்களை யும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, திருமாலையும் செவ்வேளையும் பாடிய புலவர்களைப் பற்றிச் சில விபரங்களைத் தெரிந்து கொள்ளமுடிகின்றது. குன்றம்பூதனுர் செவ்வேள்மேல் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார் ; ஏனைய புலவர்கள் ஒவ்வொரு பாடலைப் பாடியுள்ளனர். நல்லந்துவஞர் செவ்வேள்மேற் பாடிய ஒரு பாடலோடு வேறு மூன்று பாடல்களை வையைமேற் பாடியுள்ளார். கடுவனிளவெயினனர் செவ்வேள்மேற் பாடிய ஒரு பாடலோடு வேறு இரண்டு பாடல்களைத் திருமால்மேற் பாடியுள்ளார். கேசவனுர் செவ்வேள்மேல் ஒரு பாடலைப் பாடியதோடு, அப்பாட்டிற்கு இசையும் அமைத்துள்ளார். நல்லச்சுதனர் செவ்வேள் மேல் ஒரு பாடலைப் பாடியதோடு நல்லழிசியாரின் பாட்டு இரண்டுக்கும் குன்றம்பூதனுர், நல்லந்துவஞர் ஆகியோரின் பாட்டு ஒவ்வொன்றிற்கு மாக நான்கு பாடல்களுக்கு இசையும் அமைத்துள்ளார்."
3

Page 10
மேலே எடுத்துக் காட்டப்பட்ட விபரங்கள் மூன்று உண்மைகளைத் தெளிவுபடுத்துகின்றன. செவ்வேளைப் பாடிய புலவர்கள் முருகப் பெருமான்மேல் நிறைந்த பத்தி உடையவர்கள் ஆவர். கடுவனிள வெயினனுர் செவ்வேளையும் திருமாலையும் பாடிப் பரவியுள்ளமையால் முருக பத்தராகவும் திருமால் பத்தராகவும் காணப்படுகின்ருர். இவர் சமயப் பூசல் சிறிதும் மருவாத தூய உள்ளம் படைத்தவர். இறையியல் பினை நுண்ணிதின் இயற்கையினின்றும் எடுத்துப் பற்பல இடங்களிலே விளக்கியுள்ளார். எனவே, பரிபாடற் காலத்திற் செவ்வேளையும் திருமாலை யும் எவ்வகையான வேறுபாடுமின்றி வழிபட்டோர் வாழ்ந்துள்ளனர் என்பது இனிது தெளிவாகின்றது. இன்னும் சைவம், வைணவம் என்ற இரு வேறுபட்ட சமயக் கருத்துக்கள் இலக்கியங்களிலே ஒன்ருக நிலவியுள்ளன என்பதற்குப் பரிபாடலிலுள்ள திருமால், செவ்வேள் ஆகிய கடவுளர்மேற் பாடப்பட்டுள்ள பாடல்களே சான்ருகும். இந்து சமய வரலாற்றிலே தமிழ்நாட்டிற் சைவம், வைணவம் என்ற இரு பெரும் பிரிவுகள் வலுப்பெற்று நிலவத் தொடங்கியதையே இச்சமயப் பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன. பரிபாடலிற் சிவனைப் பற்றிய பாடல்கள் எவையுமில்லை ; அவ்வாறு பாடல்கள் இருந்ததாக மரபுமில்லை. எனினும், செவ்வேளைப் பாடிய புலவர்கள் உள்ளத்திற் சிவனைப் பற்றிய புராணக் கதைகள் நன்கு இடம் பெற்றிருந்தன என்பது வெள்ளிடைமலை.
இரண்டாவதாக, கேசவனுரும் நல்லச்சுதணுரும் பெரும் புலவர்களாக வும் சிறந்த இசையமைப்பாளர்களாகவும் விளங்கினர் என்பது தெரிய வருகின்றது. இலக்கியப் புலமையும் இசைத் திறமையும் ஒருங்கே இணைந்த ஆற்றல் மிக்க புலவர்கள் சிலர், பரிபாடற் காலத்தில் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இவர்கள் இருவரையும் சான்ருகக் காட்ட லாம். செவ்வேள்மேல் ஒரு பாடலை மட்டும் பாடிய நல்லச்சுதனுர் நான்கு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் என்ருல், அவரை ஆற்றல் மிக்க இசையமைப்பாளராகவே குறிப்பிடுதல் சாலும். இன்னும், இவர் செவ்வேள்மேற் பாடிய பாட்டாற் கூத்தியற் கலையிலும் வல்லவர் என்பது இனிது புலனுகின்றது.
ஆசிரியர் நல்லந்துவர்ை சமயப் புலவராகவும் அகத்துறைப் பாடல் களைப் பாடுவதில் ஆற்றலுள்ளவராகவும் இயற்கையை வருணிப்பதில் விழைவுள்ளவராகவும் காணப்படுகின்ருர் என்பது மூன்ருவது உண்மை யாகும். செவ்வேள்மேல் இவர் பாடிய எட்டாவது பாடலிற் பத்தியையும் இயற்கையையும் இவர் வருணிக்கும் திறனைக் காணலாம். வையை
4

மேல் இவர் பாடியவற்றுள் ஆறு, பதினென்று, இருபது ஆகிய மூன்று பாடல்களும் அகத்துறைப் பாடல்களாக அமைந்து விளங்குகின்றன. எனவே, ஆன்மீகச் சார்பானவையும் உலகியற் சார்பானவையுமான பாடல்களைப் பாடக்கூடிய புலவர்கள் பரிபாடற் காலத்தில் வாழ்ந்துள்ள னர் என்பதும் இனிது புலனுகின்றது.
பரிபாடலிலுள்ள கடுவனிளவெயினஞர் பாடியருளிய ஐந்தாவது பாட்டின் பெரும்பகுதி முருகப் பெருமானின் பிறப்பினையே விரித்துக் கூறுகின்றது. இப்பரிபாடற் பகுதி எடுத்துக் கூறும் புராணக் கதையை, 'அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி"19 எனத் திருமுரு காற்றுப்படையில் வரும் அடிக்கு விளக்கவுரையாகப் பின்வருமாறு நச்சினுர்க்கினியர் தருகின்ருர் :-
" இறைவன் உமையை வதுவை செய்துகொண்ட நாளிலே இந்திரன் சென்று * நீ புணர்ச்சி தவிர வேண்டும் ' என்று வேண்டிக்கொள்ள, அவனும் அதற்கு உடம்பட்டு அது தப்பாணுகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற்கொடுப்ப, அதனை இருடிகள் உணர்ந்து அவன் பக்கனின்றும் வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகையினலே இறைவன் கூருகிய முத்தீக்கட் பெய்து, அதனைத் தம் மனைவியர் கையிற் கொடுப்ப, அருந்ததி ஒழிந்த அறுவரும் வாங்கிக்கொண்டு விழுங்கிச் சூன்முதிர்ந்து சரவணப்பொய்கையிற் பதுமப் பாயலிலே பயந்தாராக, ஆறு கூருகி வளர்கின்ற காலத்து இந்திரன் தான் இருடிகளுக்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டு வந்து வச்சிரத்தான் எறிய, அவ்வாறு வடிவும் ஒன்ருய் அவனுடனே பொருது அவனைக் கெடுத்துப் பின் சூரபன்மாவைக் கொல்லுதற்கு அவ்வடிவம் ஆருகிய வேறுபட்ட கூற்ருலே மண்டிச் சென்றதென்று புராணங் கூறிற்று. ” இதனைப் பாயிரும் பனிக்கடல் ' என்னும் பரிபாடற் பாட்டாலும் உணர்க என்றும் , திருமுருகாற்றுப்படையில், அறுவர் பயந்த ஆறமர் செல்வ 11 என்ற அடிக்கு விளக்கவுரையாக, " அங்ங்னம் அக்கினியின் கண் இட்டுச் சக்தி குறைந்த கருப்பத்தை முனிவர் எழுவரும் வாங்கித் தம் மனைவியர்க்குக் கொடுப்ப அருந்ததி ஒழிந்தோர் விழுங்கிச் சூன் முதிர்ந்து, சரவணப் பொய்கையிற் பதுமப்பாயிலே பெற ஆறுவடிவாக வளர்ந்தமை கூறிற்று " என்று குறிப்பிட்டு, இதனைப் பரிபாடலிலுள்ள " பாயிரும் பணிக்கடல்
என்ற பாட்டாலும் உணர்க என்றும் விளக்கியுள்ளார்.
செவ்வேளின் பிறப்பைப் பற்றிய இப்புராண வரலாறு முப்பத்தெட்டு அடிகளில் நீண்ட வருணனையாகப் பரிபாடலில் இடம் பெறுகின்றது. வேறு எந்தப் பாடல்களிலும் இப்புராணக் கதை இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லப்படவில்லை. ஒருசில அடிகளிலேயே திருமுருகாற்றுப்
5

Page 11
படையில் முருகனின் பிறப்பு எடுத்துக் கூறப்படுகின்றது. இவ்வாறன்றி, செவ்வேளின் பிறப்பின் வரலாற்றை வெவ்வேறு புராணங்களிற் சொல்லப்பட்டது போன்று வெவ்வேறு விதமாகவும் கூறுவாருமுளர்.
முருகப்பெருமானுடைய பிறப்பினைப் பற்றிய இப்புராணக் கதையும் திருமுருகாற்றுப்படையில் இடம்பெறும் முருகனின் அவதாரம் பற்றிய வருணனைகளும் ஆரியக் கடவுளைக் குறிப்பிடுவனவாகும். பரிபாடலில் வருகின்ற, "வென்றுயர்த்த கொடி விறல் சான்றவை", "பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ", "செருவேற் ருனைச் செல்வ”14, “காஅய் கடவுள் சேஎய் செய்வேள்”19, "மாறமர் அட்டவை மறவேல் பெயர்பவை", "உடையும் ஒலியலுஞ் செய்யை மற்ருங்கே, படையும் பவழக் கொடி நிறங் கொள்ளும்" ஆகிய தொடர்கள் யாவும் திராவிடப் போர்த் தெய்வத்தைக் குறிப்பிடுவன என்று கூறலாம்.
செவ்வேளின் தோற்றத்தைப் பரிபாடல் எவ்வாறு வருணிக்கின்றது என்பதை இனி நோக்குவோம். “ தீக்கடவுள் தன் உடம்பினின்றும் ஒரு கூற்றைப் பிரித்தெடுத்து அதனைக் கோழிச் சேவலாக்கி நினக்குரிய கொடியாகக் கொடுத்தனன். இந்திரன் தன் உடம்பின் ஒரு கூற்றைப் பிரித்து அழகிய மயிலாக்கி அதனை உனக்கு ஊர்தியாக உதவினன். எமன், தன் உடம்பினின்றும் ஒரு கூற்றைப் பிரித்து வெள்ளாட்டுக் குட்டியாக்கி அதனை உனக்கு அளித்தனன் ” என்று செவ்வேளைக் கடுவனிளவெயினனர் வருணிக்கின்ருர் :
அல்லலி லணலன் றன்மெய்யிற் பிரித்துச் செல்வ வாரணங் கொடுத்தோன் வானத்து வளங்கெழு செல்வன்றன் மெய்யிற் பிரித்துத் திகழ்பொறிப் பீலி யணிமயில் கொடுத்தோன் திருந்துகோன் ஞமன்றன் மெய்யிற் பிரிவித் திருங்கண் வெள்யாட் டெழின்மறி கொடுத்தோன்.? மேலும், செவ்வேள் " என்ற பெயருக்கு ஏற்பப் புலவர்கள் பரிபாடலிற் பலவிடங்களில் சேய் ' என்றும் செய்யோன் ' என்றும் சேயோன் " என்றும் வருணிப்பதைக் காணலாம். நப்பண்ணணுர் என்ற புலவர்,
உடையு மொலியலுஞ் செய்யைமற் றங்கே படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும் உருவு முருவத்தீ யொத்தி முகனும் விரிகதிர் முற்ற விரிசுட ரொத்தி?
6

என்று முருகனை இளஞாயிற்றுக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றர். நல்லச்சுத ஞர் என்னும் புலவர், “ வெள்ளிக்கொடியை உயர்த்திய வேலவனே நீ ஊர்தியாகக் கொண்டு எழுந்தருள்வது தீப்போன்று விளங்கும் முகபடாத் தையும் போர் வென்றியாலுண்டாய புகழினையும் உடைய பிணிமுகம் என்னுங் களிற்று யானை ஆகும். தாமரை மலர் போன்ற திருவடிகளிலே அணிந்துள்ளவை தைத்தல் அமைந்த பீலிப் போழால் ஒப்பனை செய்யப்பட்ட அடையற் செருப்புக்களாகும். சூரனைத் தடிந்து கிரெளஞ்ச மலையைத் துளைத்த வேற்படையை நீ கையில் ஏந்தியுள்ளாய். பெரு மானே ! நீ அணிந்த மாலை வள்ளிப் பூவை விரவித் தொடுத்த கடம்ப மலர் மாலை ஆகும் " என்று சொல்லோவியமாகத் தருகின்ருர். இவ் வருணனைகளுட் சில செவ்வேளைத் திராவிடத் தெய்வமாகக் காட்டுகின் றன ; பல ஆரியக் கடவுளாகக் காண்பிக்கின்றன.
செவ்வேளைப் பற்றிய பரிபாடற் பாக்களிற் காணப்படும் இன்னுெரு வகைச் சொல்லோவியம் முருகப் பெருமான், வள்ளி - தெய்வயானை சமேதராய்த் தோன்றும் காட்சியாகும். இவ்வகையானவற்றுள் இரண்டு சொல்லோவியங்கள் சிறப்பான கருத்துக்களைத் தம்மகத்துக் கொண்டு மிளிர்கின்றன. இவ்வருணனைகள் சமயப் பின்னணியிற் காதற் காட்சி களாகவே காணப்படுகின்றன. முதலிற் குன்றம்பூதனுர் என்ற புலவரின் வருணனையை நோக்குவோம். " பெருமானே ! நீ வள்ளியைக் களவின் கண் மணந்தாய். அவ்வாறு வள்ளியை மணந்த அன்று, முதுவேனிலா னது கார்ப் பருவமாகும்படி முகில் மழையைப் பொழிந்தாற்போன்று திருப்பரங்குன்றிலே தேவசேனையின் கண்கள் கண்ணீர் மழை பொழிந் தன ' ;
மையிருநூற் றிமையுண்கண் மான்மறிதோண் மணந்தஞான் றையிருநூற்று மெய்ந்நயனத் தவன்மகண் மலருண்கண் மணிமழை தலைஇயென மாவேனில் காரேற்றுத் தணிமழை தலையின்று தண்பரங் குன்று.? பாடலின் மிகுதியான பெரும்பகுதியிலே தெய்வயானையும் வள்ளியும் முருகனேடு எவ்வாறு ஊடலுவகையில் ஈடுபடுகின்றனர் என்பதைப் புலவர் வருணிக்கின்ருர் ; இன்னும், தெய்வயானையின் தோழி, வள்ளி யின் தோழியுடன் சண்டையிடுதலையும் நகைச்சுவையுடன் புலப்படுத்து கின்ருர். இவற்றேடு, தெய்வயானையின் மயிலும் கிளியும் வள்ளியின் மயிலுடனும் கிளியுடனும் மாறுபடுதலையும் விளக்குகின்ருர்,
7

Page 12
காதற் காமம் காமத்துட் சிறந்தது ' என்னும் உண்மையினேயே விளக்குகின்றது இப்பாடல். வடபுல மரபையும் தென்புல மரபையும் சீர்தூக்கி ஆராய்ந்து , அவற்றுள்ளே தென்புல மரபே சிறந்தது என்பதைத் தெளிவாகவும் திட்பமாகவும் எடுத்துக் கூறுகின்றது. பொரு ளைத் தெரிந்து பண்ணுேடு பன்முறை பாடிப்பாடி மனங்கொண்டு மகிழக் கூடியதாக இப்பாடல் அமைந்துள்ளது. வானுலக நங்கையும் மண்ணுலக மங்கையும் தன் காதலன் காரணமாக மாறுபடும் ஊடற் காட்சியைக் கண்முன் நிகழ்வது போன்று புலவன் வருணித்துள்ளான்.
குறவர் மகள் வள்ளிக்கும் தேவமகள் தெய்வயானைக்கும் நடுவே முருகனே நிறுத்தி, மண்ணுலகையும் விண்ணுலகையும் இணைத்து மக்களின் கண்கண்ட தெய்வமாக முருகக் கடவுளை நப்பண்ணணுர் வருணிக்கின்றவிடம் பத்திப் பரவசமளிப்பதாகும். முருகன் விண்ணுலகத் தெய்வமன்று மண்ணுலகத் தெய்வமும் ஆவான் என்பதனை நப்பண்ண ஞர் நளினமாக நயம்பட நவின்றுள்ளார். மக்கள் ஆன்ம ஈடேற்றத்திற் குத் தேவ உலகத்தை நாடுவர் ; ஆணுல், முருகப் பெருமான் மக்களைத் தேடி மண்ணுலகத்துக்கே வந்து, வள்ளியை மணந்து, மக்களின் தெய்வமாகவே காட்சி தந்து, பேரின்பம் நல்குகின்ருன் என்று புலவர் வருணித்துள்ள வகை புதுமையானது.
" பெருமானே !! வானுலகத்தின்கண் உறைந்து வானவர்க்குக் காட்சியின்பம் நல்குவது போன்று, மண்ணவர்க்கும் பேரின்பம் நல்குதற் பொருட்டு மண்ணுலகத்திற்கே வந்து திருப்பரங்குன்றத்திலே எழுந்தரு ளியுள்ளாய். மேலும், வானவர் மகள் ஒருத்தியை மணந்து வானவர்க்கு மருகனுஞற் போன்று, மண்ணவர் மகள் ஒருத்தியை மணந்து மண்ணவர்க்கும் மருகளுணுய் வானவர் மகள் ஒருத்தி பக்கலிலே இருந்து விழாக்கொள்ளுமாறு, மண்ணவர் மகள் ஒருத்தியும் பக்கலிலே அமர்ந்து விழாக்கொள்க என்ற கருத்தோடு வள்ளியையும் மணம் புரிந்தருளினுய்.
நிலவரை யழுவத்தான் வானுறை புகறந்து புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந் தருமுனி மரபி ஞன்றவர் நுகர்ச்சிமன் இருநிலத் தோரு மியைகென வீத்தநின் தண்பரங் குன்றத் தியலனி நின்மருங்கு சாறுகொ டுறக்கத் தவளொடு
மாறுகொள் வதுபோலு மயிற்கொடி வதுவை.*
8

மண்ணுலக மகளே விரும்பி மண்ணுலகத்தை முருகன் உறைவிடமாகக் கொண்டான் என்பதைக் கூறிய நப்பண்ணணுர், மண்ணுலகத்தை விரும்பியதனுல் அவன் மக்கள் தெய்வமானுன் என்பதையும் மறைமுகமா கக் காட்டியுள்ளார். நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து ’ எனக் கம்பநாடாரும், ' நரகர்களுக்கும் அசுரர்களுக்கும் நடு நின்ற நடுவே என இராமலிங்க அடிகளாரும் கூறுவதற்கு நப்பண்ணணுரின் வருணனை
கால்கோளாக அமைந்தது போலும் வள்ளியை மணம் புரிந்தமையால், மண்ணவர் முருகனுடன் உறவு கொண்டாடுதலையும் அவனிடத்தில் உரிமையோடு வரங்கேட்டலையும் இளங்கோவடிகள் குன்றக் குரவையிற்
கூறியுள்ளார்.?
பரிபாடற் காலத்திற்குப் பிற்பட்ட காலத்திலே வாழ்ந்த நாயன்மார்க ளும் ஆழ்வார்களும் இறைவனைக் காதலனுகக் கண்டு அவன்மேல் ஆராக் காதல் கொண்ட இறைமைக் காதலை இனிமையாக, முறையே தேவாரத் திருமுறைகளிலும் திவ்விய பிரபந்தங்களிலும் ஆங்காங்கே பாடியருளு வதற்குப் பரிபாடற் பாட்டுக்களும் அவைகளில் இடம்பெறும் காதற் காட்சிகளும் பெருமளவிற் கால்கோளாக அமைந்தன என்று கூறின் அது மிகையாகாது. இன்னுெரு வகையாகக் கூறின், இறைமைக் காதலைப் புலப்படுத்தும் அகப்பொருள் அமைதியுடைய பாட்டுக்களும் அவற்றில் இடம் பெறும் வருணனைகளும் பரிபாடலிலேயே முதன் முதல் இடம்பெற் றன என்பதும், அப்பாடல்களும் வருணனைகளும் பிற்பட்ட காலத்திலே அவதரித்த நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனைக் காதலனுகவும் தம்மை இறைவனின் காதலியராகவும் கண்டு ஆராக் காதலினுல் அகப்பொருள் அமைதியுள்ள பாடல்களை அருளிச்செய்யத் தூண்டுதலாக அமைந்தன என்பதும் மறுக்க முடியாதன. பரிபாடலிலே மனிதக் காதல் போன்று, முருகனுக்கும் வள்ளி, தெய்வயானை ஆகியோருக்குமிடையே வருணிக்கப்படும் தெய்வீகக் காதல், தேவாரங்களிலும் திவ்விய பிரபந்தங்
களிலும் இறைமைக் காதலாகப் பாடப்பட்டுள்ளன.
பரிபாடலிலுள்ள செவ்வேளைப் பற்றிய பாட்டுக்களும் நாயன்மார் அருளிய தேவாரங்களும் பலவகையில் ஒப்புமை உடையன ; சில வகையில் வேறுபட்டும் காணப்படுகின்றன. செவ்வேளைப் பற்றிய பாடல்கள் முருகன் புகழைப் பாடுகின்றன : தேவாரங்கள் சிவன் பெருமையைப் பேசுகின்றன. சிவபெருமானின் திருக்குமாரன் முருகன் என்று புராணங்கள் புகழ்ந்து கூறுகின்றன. பரிபாடற் பாட்டுக்கள் பண்
அமைக்கப்பட்டவை ; தேவாரங்களும் பண்ணுேடு கூடியவை.
9

Page 13
எனவே, இவற்றைப் பண்ணுேடு பாடவேண்டும். பண்ணுேடு பாடிப் பரவச நிலையைப் பெறும்போது, பாடுவதைக் கேட்டு நிற்போரும் பத்திப் பரவசமான நிலையினை அடைவர் என்பது திண்ணம். தேவாரம் பன்னிரு திருமுறையில் முதலிடம் வகிக்கின்றது. ஆணுல், பரிபாடல்,திருமால் மேலும் வையை மேலும் பாடப் பெற்ற பாடல்களைக் கொண்டமையாற் போலும் பன்னிரு திருமுறையில் இடம்பெருதொழிந்தது. சைவ மக்கள் தேவாரங்களை ஒதிப் பாராயணம் செய்து, அவற்றை அருட்பாக்களாகப் போற்றுகின்றனர். ஆனல், பரிபாடலிலுள்ள செவ்வேளைப் பற்றிய பாடல்களைச் சைவ மக்கள் அருட்பாடல்களாகப் போற்றுவதுமில்லை : பாடிப் பாராயணஞ் செய்வதுமில்லை. ஆனல், பரிபாடலிலுள்ள செவ்வேளைப்பற்றிய பண் அமைத்த பாடல்கள் பாராயணஞ் செய்வதற்கு ஏற்றவை.
" யான் நின்னை இரந்து வேண்டுவன பொருளும் பொன்னும் போகமும் அல்ல, அருளும் அன்பும் அறமும் ஆகிய மூன்றுமே " என்று வேண்டினின்று செவ்வேளைப் பற்றிய பாடல்களைப் பாடுவோர், முருகப் பெருமானின் இன்னருளைப் பெற்று இன்புறுவர்.
.யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால் அருளும் அன்பும் அறனு மூன்றும் உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே?
குறிப்புகள் :
1. இறையனூர் அகப்பொருள், நக்கீரனூர் விளக்கவுரை, சி. வை. தாமோதரம்
பிள்ளை, சென்னை, 1883, சூத்திரம் 1, விளக்கவுரை, பக்.5. 2. தொல்காப்பியம், செய்யுளியல், சூத்திரம், 149. இளம் பூரணர் உரையைப்
LUFTTEGG. 3. Marr, J. R., "The Eight Tamil Anthologies with special reference to
Purananuru (lHD5 Tgrg) and Patitruppattau, (usibgcuigi) thesis approved for the degree of Doctor of Philosophy in the University of London, 1958.
4. பரிபாடல், திருமால் : 1, 2, 3, 4, 13, 15. 5. பரிபாடல், செவ்வேள் : 5, 8, 9, 14, 17, 18, 19, 21.
6. பரிபாடல் மூலமும் உரையும், உரையாசிரியர் பெருமழைப்புலவர் திரு. பொ.
வே. சோமசுந்தரஞர், கழகப் பதிப்பு, 1964, அணிந்துரை, பக்.14.
7. பரிபாடல், வையை : 8, 11, 20,
10

6.
17.
18.
19.
20.
21.
22.
23.
பரிபாடல், திருமால் : 3, 4,
பரிபாடல், நல்லழிசியார் பாட்டு : 16, 17 குன்றம்பூதனர் பாட்டு : 18, ஆசிரியர் நல்லந்துவஞர் பாட்டு : 20.
திருமுருகாற்றுப்படை, அடி 58, நச்சிஞர்க்கினியர் உரையைப் பார்க்க.
திருமுருகாற்றுப்படை, அடி, 255, நச்சிஞர்க்கினியர் உரையைப் பார்க்க.
. I fu Tsio, 17 : 49
பரிபாடல், 18: 54
பரிபாடல், 5; 13
பரிபாடல், 21: 66
பரிபாடல், 19: 97-98
பரிபாடல், 5: 57-62
பரிபாடல், 19; 97-100
பரிபாடல், 9; 8-11
பரிபாடல், 19: 1-7
சிலப்பதிகாரம், குன்றக்குரவை, பாட்டு மடை 15-6-7
பரிபாடல், 5: 78-81
11

Page 14

S.
s
மயிலேறும் மைந்தன்

Page 15

2. வேலன் கடிமரம்
செவ்வேள்மேற் பாடப்பட்டுள்ள பரிபாடற் செய்யுட்களிற் கடம்ப மரம் பற்றிய வருணனைகள் இடம்பெறுகின்றன. அவ்வருணனைகளிற் கடம்ப மரத்துடன் செவ்வேள் தொடர்புபடுத்தப்பட்டு இருப்பதைக் காணலாம். இவ்வகையான கடம்ப மரத்தைப் பற்றிய அல்லது கடம்ப மரத்துடன் முருகனைத் தொடர்புபடுத்திய வருணனைகள் திருமுருகாற்றுப்படையில் இடம்பெருமை குறிப்பிடத்தக்கது. ஆனல், பரிபாடலிலும் திரு முருகாற்றுப்படையிலும் முருகன் மா மரத்தைத் தடிந்து அசுரரை அழித்த புராணக்கதை எடுத்துக் கூறப்பட்டுள்ளது.*
பரிபாடலில் வருகின்ற வருணனைகள் கடம்ப மரத்தின் புனிதத்
தன்மையை இனிது புலப்படுத்துகின்றன. " கடம்பமர் செல்வன் ",
புலவரை அறியாத புகழ் பூத்த கடம்பமர்ந்து ", " கடம்பமர் அணிநிலை பகர்ந்தேம் ", " உருளிணர்க் கடம்பின் நெடுவேட்கு " என்று பரிபாடற் செய்யுட்களில் வருகின்ற வருணனைகள் கடம்ப மாத்தின் கீழ்ச் செவ்வேள் கோயில் கொண்டிருந்தான் என்பதைத் தெளிவுறுத்துகின்றன. எனவே, பரிபாடற் காலத்திற் செவ்வேளுக்குக் கல்லாலான பெரிய ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதும், கடம்ப மரமே செவ்வேளின் வதிவிடமாக அமைந்திருந்தது என்பதும் தெளிவாகின்றன.
" உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே ", " உருளிணர்க் கடம்பின் ஒன்றுபடு கமழ்தார் " ஆகிய வருணனைகள் கடம்ப மலர் மாலையைச் செவ்வேள் அணிந்திருந்தான் என்பதைக் காண்பிக்கின்றன. எனவே, இவ்வருணனைகளைக் கொண்டு, பரிபாடற் காலத்திலே கடம்ப மலர்களாலே தொடுத்துக் கட்டிய மலர்மாலையை அணிந்து, கடம்ப மரத்தின் கீழ் எழுந்தருளி, முருகப் பெருமான் அடியார்களுக்கு அருள் பொழிந்தான் என்பது தெரிய வருகின்றது. இன்னும், பரிபாடற் காலத்திற் கடம்ப மரமும், கடம்ப மலர்களும் இலைகளும் செவ்வேள் வழிபாட்டில் முக்கியமான இடத்தினைப் பெற்றிருந்தன என்பதும் புலனுகின்றது.
பரிபாடற் காலத்திற் கடம்ப மரத்தின் மலர்கள் பெற்றிருந்த இடத்தினைப் பல்லவர் காலத்திற் கொன்றைப் பூக்கள் பெற்றிருந்தன. கொன்றைப் பூவைப் பற்றிய வருணனைகள் தேவாரத்தில் மலிந்து

Page 16
காணப்படுகின்றமை இதற்குச் சான்ருகும். வழிபாட்டின்போது, ஏனைய பூக்களிலும் பார்க்கக் கொன்றைப் பூவினையே அடியார்கள் பெருமளவிற் பயன்படுத்தினர். எனவே, கொன்றைப்பூ இறைவனுக்கு உகந்த பூவாகத் தேவார காலத்திற் கருதப்பட்டது. ஆனல், இன்று முருக வழிபாட்டிற்கும் சிவ வழிபாட்டிற்கும் கடம்ப மலர்களையோ அல்லது கொன்றை மலர்களையோ பெருமளவில் எவரும் பயன்படுத்துவதில்லை. பதினேழாம் பரிபாடற் செய்யுளில் வரும் வருணனை கடம்ப மரத்தைக் கடி மரமாக - காவல் மரமாக - எடுத்துக் காட்டுகின்றது. திருப்பரங் குன்றத்திலேயுள்ள காவல் மரத்தின் அடியிலே ஆட்டுக்கடா ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதனை நோக்கிக் கூட்டம் ஒன்று வருகின்றது. கோல் விளக்குகளைத் தாங்கியவர் சிலர் ; இசைக் கருவிகளை ஏந்தியவர் வேறு சிலர்; சந்தனம் முதலிய நறுமணப் பொருள்களைச் சுமந்தோர் ஒரு சிலர் , தூபங்களைத் தூக்கியோர் மற்றும் சிலர் ; கொடிகளைப் பிடித்தோர் இன்னும் சிலர். இவர்கள் எல்லோரும் பின்தொடர மலர், தளிர், பூந்துகில், 'மணி, வேல் ஆகியவைகளைச் சுமந்து வந்தோர் ஆட்டுக்கடா வினை அடியிலே கட்டிய முருகவேளின் பூசனைக்குரிய கடம்ப மரத்தைப் பாடிப் பரவினர். இக்காட்சியினை,
தேம்படு மலர்குழை பூந்துகில் வடிமணி ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ விடையரை யசைத்த வேலன் கடிமரம் பரவின ருரையொடு பண்ணிய விசையினர் விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக் கோலெரி கொளைநறை புகைகொடி யொருங்கெழ.? என்று நல்லழிசியார் சொல்லோவியமாகத் தந்துள்ளார்.
இதுவரை எடுத்துக் காட்டிய வருணனைகள், பல உண்மைகளைப் புலப்படுத்துகின்றன. கடம்ப மரத்தின்கீழ் முருகக் கடவுள் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் புரிந்தான் ; கடம்ப மரத்தின்கீழ்க் கோயில் கொண்டிருந்த முருகப் பெருமானை அடியார்கள் கூட்டங் கூட்டமாகச் சென்று, பாடிப்பரவி வழிபட்டனர். அதன்பின்னர், அவர்கள் கடம்ப மர
நிழலிலே அமர்ந்து ஓய்வெடுத்தனர் என்றும் கருதலாம்.
கடம்ப மரம் கடவுளுக்கான மரமாகப் பரிபாடற் காலத்திற் போற்றப்பட்டது. கடம்ப மரப் பூக்களைக் கொண்டு மாலை தொடுத்து இறைவனுக்கு அணிந்து மக்கள் வணங்கினர். கடம்ப மரத்தின் பூக்களாலும் தளிர்களாலும் இலைகளாலும் பூசை செய்து வழிபட்டனர்;
16

முருகனைத் தெய்வமாக வணங்கிய அடியார்கள், அப்பெருமான் எழுந் தருளியிருந்த கடம்ப மரத்தையும் புனித மரமாகவே கண்டனர். அந்தப் புனித மரத்தை வணங்கவும் தலைப்பட்டனர் என்று கூறின் அது மிகையாகாது இவற்றிற்கும் மேலாகக் கடம்ப மரத்தின்கீழ்க் கோயில் கொண்டிருந்த முருகக் கடவுளுக்கு ஆட்டுக் கடாவினப் பலி கொடுக்கும் வழக்குப் பரிபாடற் காலத்தில் இருந்தமையும் தெரியவருகின்றது.
"கடிமரம்' என்ற சொற் பிரயோகம் பரிபாடற் காலத்திற் சமயத்துடன் ஒட்டியதொன்ருகப் போற்றப்பட்டதைப் பதினேழாம் பரிபாடற் செய் யுளில் வரும் வருணனையைக் கொண்டு தெளிவுபடுத்தினுேம். "கடிமரம்" என்பது சங்க இலக்கியங்களாகப் போற்றப்படும் புறநானூற்றிலும் பதிற்றுப் பத்திலும் எடுத்தாளப்பட்டுள்ளது". இவ்வாறு எடுத்தாளப் பட்ட இடங்களிலே கடிமரம் என்பது அரசனின் இறைமையின் அல்லது ஆட்சியுரிமையின் சின்னமாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது ; அல்லது அரசிறைமையின் அல்லது ஆட்சியுரிமையின் உள்ளுறையாகக் காட்டப்பட்டுள்ளது என்றும் கூறலாம். ஆகவே "கடிமரம்' என்ற சொற்பிரயோகம் இரு வேறுபட்ட பொருளில் எடுத்தாளப்பட்டுள்ளதைக் காண்கின்ருேம்.
பரிபாடலிற் "கடிமரம்' என்பது அரசிறைமையைப் புலப்படுத்தாது வேறு பொருளைத் தருகின்றது ; அதாவது சமய அடிப்படையிற் பருப்பொருளுக்குப் புறம்பாக உய்த்துணரக்கிடக்கும் பரம்பொருளைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. “வேலன் கடிமரம்' என்று பரிபாடல் சித்திரிக்கிறது. அக்கடிமரத்தைப் பூவும் பூந்துகிலும் கொடியும் வேலும் தாங்கிவந்து மக்கள் பாடிப்பரவி வழிபடுவதைப் புலவர் புலப்படுத்தி யுள்ளார். ஆகவே, சங்க காலத்தில் அரசனின் இறைமையின் சின்னமாக விளங்கிய "கடிமரம், பரிபாடற் காலத்திலே சமய உட்பொருளைக் கொண்டதாகத் திகழத் தொடங்கிற்று என்பதையே இதனுற் கண்டு கொள்ள முடிகின்றது. இதிலிருந்து சங்க காலப் புறப் பாடல்களில் வீரம் மிக்க அமிசமாகத் திகழ்ந்த "கடிமரம், பிற்பட்ட காலத்திலே சமயத்தோடு ஒட்டிய பொருளினைப் புலப்படுத்துவதாக மாறியது.
சங்க இலக்கியங்களில் முருகனைச் சீற்றமுள்ள தெய்வமாகவே புலவர்கள் சித்திரிக்கின்றனர் ; அத்துடன் பல வீரர்களின் சினத்தை முருகக் கடவுளின் சீற்றத்துக்கு ஒப்பிட்டும் வருணித்துள்ளனர். "கடுஞ் சின விற்ல் வேள்”11 என்றும், “சினமிகு முருகன்"12 என்றும் முருகனின் சினம் சித்திரிக்கப்பட்டுள்ளது. "முருகனுடைய சினம் போன்ற சீற்
17

Page 17
றத்தை உடையவன் எம் தந்தை” என்று தலைமகன் கேட்பச் செவிலித் தாய்க்குத் தோழி சொல்லுவதாக அகநானூற்றிலே கபிலர் வருணிக்கின் ருர்,
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல் எந்தையும் இல்லன் ஆக3 என்பது அவ்வருணனை.
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் சினத்தைப் புறநானூற்றுப் புலவர்,
எல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கம் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் ருேன்றப் புலங்கெட விறுக்கும் வரம்பிறனைத் துணைவேண்டாச் செருவென்றிப் புலவுவாட் புலர்சாந்தின் முருகற் சீற்றத் துருகெழு குருசில்' என்று முருகனின் சினத்துக்கு ஒப்பிட்டுப் பேசுகின்ருர்,
பதிற்றுப் பத்திலுள்ள பாடல் ஒன்று சேரலாதனை முருகனுக்கு ஒப்பிட்டு வருணிக்கின்றது. விண்ணுலகத்தில் முருகப்பெருமான் அவு ணரை வென்ருன் ; மா மரத்தைத் தடிந்து சூரனை அழித்தான். அதே போன்று மண்ணுலகத்திற் சேரலாதன் தன் பகைவரை வென்று, பகைவர் பேணிக் காத்த கடம்பினை அடியோடு அழித்தான். இவ்வாறு சேரலாதனின் வீரத்தினையும் சீற்றத்தினையும் முருகப் பெருமானின் வீரத்திற்கும் சீற்றத்திற்கும் ஒப்பிட்டுப் பதிற்றுப் பத்திலே சித்தரிக்கப் பட்டுள்ளது.*
பதிற்றுப் பத்தில் இடம்பெறும் இவ்வருணனை புலப்படுத்துவது யாது ? நெடுஞ்சேரலாதனுடைய காலத்திற் கடம்ப மரம் அரசனின் இறைமைச் சின்னமாகவும் ஆட்சியுரிமையின் அடையாளமாகவும் கருதப்பட்டது ; அதனுற் கடம்ப மரத்தை மக்கள் நாட்டி, வளர்த்துப் பேணிக் காத்தனர். மக்கள் பேணிக் காத்த கடம்ப மரம் அன்று மன்னனின் காவல் மரமாக விளங்கிற்று. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்ருன பதிற்றுப்பத்து, பரிபாடலினும் காலத்தால் முந்தியது. எனவே, பதிற்றுப் பத்துக் காலத்திலும் " கடிமரம் ' என்பது அரசனின் அர சிறைமையினேயே குறித்து நின்றது. காலத்தாற் பிந்திய பரிபாடலி லுள்ளது போன்று சமயத்தோடு ஒட்டிய கருத்தினை அது புலப்படுத்த வில்லை.
18

ஏனைய சங்க நூல்களிலும் காலத்தாற் பிந்தியது பரிபாடல் என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். சங்க காலத்தில் நிலவி வந்த கடிமரம் பற்றிய கொள்கை, பரிபாடற் காலத்தில் எவ்வாறு மாற்றமடைந் தது என்பதை மேலே எடுத்துக் காட்டியவை இனிது தெளிவுறுத்தும். இவ்வாறு படிப்படியாக மாற்றமடைந்த சமயக் கொள்கை, பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் உச்சக் கட்டத்தை அடைந்தது.
சங்க காலத்திலே புலவர்கள், அரசனின் வீரத்தையும் தீரத்தையும் பாராட்டிப் பாடினர். ஆணுல், பரிபாடற் காலத்திலும் அதன் பின்னர் பல்லவர் காலத்திலும் இறைவனின் புகழையும் அருட்டிறனையும் பாடிப் புகழ்ந்தனர். அரசனுக்காக அரண்மனைகளைக் கட்டுவதை விடுத்து, இறைவனுக்காகக் கோவில்களை அமைக்க மக்கள் முன்வந்தனர். அரண்மனையில் இடம்பெற்ற ஆடலும் பாடலும், இறைவனின் ஆலயத் தில் இடம்பெறத் தொடங்கின. அரசனைப் பாடிப் பரிசில் பெற்ற புலவர்கள், இறைவனைப் பாடி அவனின் இன்னருளை வேண்டி நின்றனர். மன்னர்களும் அரண்மனையை விட்டு வெளியே வந்து, மக்களோடு சேர்ந்து இறைவனுக்கு ஆலயம் அமைத்து வழிபடத் தொடங்கினர். சங்க காலத்தில் அரசனின் காவல் மரமாக இருந்த "கடிமரம்", பல்லவர் காலத்திற் சமயத்தோடு ஒட்டிய பொருளைப் புலப்படுத்தும் காவல் மரமாக மாறியது. அரசனை வணங்கிய மக்கள், இறைவனை வணங்கத் தலைப்பட்டனர். புலவர்கள் பெற்றிருந்த இடத்தை நாயன்மார்களும் ஆழ்வார்களும் எடுத்துக்கொண்டனர். அரச னின் வீரத்தையும் கொடைச் சிறப்பையும் சங்கப் புலவர்கள் பாடியது போன்று, இறைவனின் இன்னருளின் இயல்பையும் அடியார்களை அவன் ஆட்கொள்ளும் திறனையும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிப் பரவினர்.
குறிப்புகள்:
1. பரிபாடல் : 8 : 126 ; 19,2; 19 ; 104 : 21 : 50 ; 5 : 81 : 21 : 1.1 :
1 : 1 - 4.
2. திருமுருகாற்றுப்படை, 60 ; பரிபாடல் : 5-4, 21-28, 18-4 என்பன.
3. பரிபாடல் : 18 : 126,
4. பரிபாடல் 19 : 2.
5. பரிபாடல் : 19 ; 104.
19

Page 18
10.
11.
12.
13.
14.
15.
பரிபாடல் : 21 : 50.
பரிபாடல் : 5 : 81.
பரிபாடல் : 21 : 1.1.
பரிபாடல் 17 1 - 6.
புறநாநூறு : 36 : 96, 57 : 10, 162 : 5,336 : 4 :பதிற்றுப்பத்து :33 : 3,
பதிற்றுப் பத்து 11 : 6.
அகநாநூறு : 59 - 11.
அகநாநூறு : 158 : 16-17.
புறநாநூறு 16 7-12.
பதிற்றுப் பத்து : பாடல் 11.
2O

3. பரிபாடற் காலப் பரங்குன்றம்
பரிபாடற் காலத்திற் பரங்குன்றம் பல சிறப்புகளையும் உடையதாய் விளங்கியது. ஆசிரியர் நல்லந்துவஞர், குன்றம்பூதஞர், கேசவளுர், நல்லழிசியார், நப்பண்ணனர், நல்லச்சுதனுர் என்னும் புலவர்கள் பரங்குன்றத்தைப் பரிபாடலிற் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளனர்.
மதுரையிலிருந்து 8 கல் தொலைவிலே திருப்பரங்குன்றம் இருக்கின் றது. ' குன்று ', ' பரங்குன்று ', ' தண்பரங்குன்று ' என்று இக்குன்றத் தைப் பரிபாடற் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இக்குன்றத்தின் புனிதத் தன்மை காரணமாகப் பிற்பட்ட காலத்தில் " திரு ' என்ற அடை சேர்க்கப்பட்டுத் திருப்பரங்குன்றம் ' என்று வழங்குவதாயிற்றுப் போலும் !
செவ்வேள் பரங்குன்றத்திற் கோயில் கொண்டுள்ளதாகவே புலவர் கள் குறிப்பிடுகின்றனர். முருகப்பெருமானின் ஏனைய படை வீடுகளான திருவேரகம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, பழமுதிர்சோலை, குன்றுதோருடல் என்பவற்றைப் பரிபாடல் குறிப்பிடவில்லை. ஆனல், ஆறு படை வீடுகளில் முருகப்பெருமான் கோயில்கொண்டுள்ளதாகத் திருமுருகாற்றுப்படை கூறுகின்றது.
செவ்வேளின் புகழைப்பாடும் பரிபாடலிலுள்ள செய்யுட்கள், செவ் வேளின் உறைவிடமான பரங்குன்றத்தைப் பற்றிக் குறிப்பிடுவனவற் றைக் கொண்டு, அக்காலப் பரங்குன்றத்தை இக்காலத் திருப்பரங் குன்றத்தோடு ஒப்பிட்டு நோக்க முடிகின்றது. பரிபாடற் காலப் பரங்குன்றத்தின் அழகிய தோற்றத்தைப் புலவர்கள் எழிலுற வருணித் துள்ளனர் ; இயற்கை வளனைச் சிறப்புறச் சித்திரித்துள்ளனர் ; அங் குள்ள காதலரின் வாழ்வைக் கவின்பெற எடுத்துக் காட்டியுள்ளனர்; மக்கள் செவ்வேளை வழிபடும் முறையைப் பாடிப் போற்றியுள்ளனர்.
பரங்குன்றத்தை இமயமலைக்கு ஒப்பிட்டுப் புகழ்கின்றர் ஆசிரியர் நல்லந்துவஞர். பரங்குன்றத்திற் செவ்வேள் கோயில்கொண்டுள்ளான் ; அச்செவ்வேளைத் தரிசிப்பதற்குக் கடவுளர்களும், தேவர்களும், முனிவர் களும், ஏனையோர்களும் இம்மண்ணுலகத்தில் வந்து உறைகின்றனர்.

Page 19
p
. அருவிநீர் தங்கும் பரங்குன்றத்திலுள்ள அழகிய சுனை, இமயமலையிலுள்ள வற்றப் பொய்
எனவே, “ பரங்குன்றிமயக் குன்றை நிகர்க்கும்
கையை ஒக்கும். இமயமலையில் ஏற்படும் மேகக் கூட்டங்களின் முழக்கம், செவ்வேளின் யானையின் முழக்கத்தை நிகர்க்கும்.
செவ்வேளைப் பெற்றெடுத்த இமயமலையைப் போலத் திருப்பரங்குன் றம் சிறப்பும் புகழும் உடையது என்று குன்றம்பூதனுர் பாடிப் போற்றுகின்ருர் :
சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்நின் சீர்நிரந் தேந்திய குன்றெடு நேர்நிரந் தேறுமா றேற்குமிக் குன்று.* செவ்வேளின் காரணமாக இரண்டு மலைகளுக்குமுள்ள தொடர்பைக் காட்டி, இமயத்தைப் போலப் பரங்குன்றம் புகழ்பெற்றது என்று குன்றம்பூதனர் கூறுகின்ருர், இன்னும், மழை முழங்கிய சிகரமும் அதன்கட் கொடி மின்னுதலும் " ஒண்சுட ரோடைக் களிறேய்க்கும் 993 என்றும் அவர் பாடுகின்ருர்,
இனி, கார் காலத்திற் பரங்குன்றம் எவ்வாறு காட்சி கொடுத்தது என்பதைக் கேசவனரின் கண்கொண்டு நோக்குவோம். கார் காலத்திற் பரங்குன்றத்தின்கண் மேகம் மழையைப் பொழிந்தது. அப்போது சுனைகள் நிரம்பிப் பூக்கள் மலர்ந்தன. கடம்ப மலர்களிலுள்ள தேனை உண்ட வண்டுகள் ரீங்காரஞ் செய்து வட்டமிட்டுப் பறந்தன. அந்த வண்டுகளின் இன்னிசை, பண்ணிசை போலக் கேட்டது. மலைப் பக்கங்களில் மூங்கில்கள் வளர்ந்தோங்கி நின்றன. அம்மூங்கில் மரங்கள் மங்கையர்களின் தோளை நிகர்த்தன. மலையில் மயில்கள் அகவுங் குரல் கேட்டது ; அக்குரல், தலைவியரோடு அளவளாவிப் பிரிந்துசென்ற தலைவர்களை, “ இனித் தாமதஞ் செய்யன்மின் ; மீண்டும் வருக ' என அழைப்பவர்களின் குரலை ஒத்தது. கொன்றை மலர்கள் பூத்துப் பொலிந்தன. அப்பூங் கொத்துகள் பொன்னுலான மாலைகளைப்போல விளங்கின. பாறைகளில் வேங்கை மலர்கள் விழுந்து பரந்து கிடந்தன. அவை புலியின் தோற்றத்தை நினைவுபடுத்தின. காந்தட் பூக்கள் மலர்ந்தன ; அவற்றிடையே செங்காந்தட் பூக்கள் பரந்து கிடந்தன* என்று கேசவனுர் வருணிக்கின்றர்.
பரங்குன்றத்தில் நல்லச்சுதஞர் கண்டு களித்த காட்சிகள் இன்னுெரு வகைத்தன. கார் காலத்தில் மயில்கள் தோகையை விரித்தாடின :
குழலோசையைப் போலத் தும்பிகள் மலர்களில் ஊதின;.வண்டினங்கள்
22

யாழினது இசையைப் போல ஒலித்தன. அருவியின் நீர், முழவைப் போல ஒலித்தது. இவ்வாறு எழுந்த ஒலிகளெல்லாம் ஒருங்கே திருப்பரங்குன்றத் திற் பரந்தன :
மிசைபடு சாந்தாற்றி போல வெழிலி இசைபடு பக்க மிருபாலுங் கோலி விடுபொறி மஞ்ஞை பெயர்புட ஞட விரல்செறி தூம்பின் விடுதுளைக் கேற்ப முரல்குரற் றும்பி யவிழ்மல ரூத யாணர் வண்டினம் யாழிசை பிறக்கப் பாணி முழவிசை யருவிநீர் ததும்ப ஒருங்கு பரந்தவை யெல்லா மொலிக்கும் இரங்கு முரசினுன் குன்று என்பது நல்லச்சுதனுர் பரங்குன்றத்திற் கண்டுங் கேட்டும் தீட்டிய சொல்லோவியம்.
நல்லழிசியார் பரங்குன்றத்திற் ஒலித்த இசைகளை நிரற்படுத்தி வருணிக்கின்ருர். மக்கள் இசைக்கின்ற இசைகளோடு இயற்கையாக எழுகின்ற ஒலிகளை ஒப்பிட்டு அவர் பாடியுள்ள திறன் பாராட்டுதற் குரியது. பரங்குன்றத்தின் ஒருபக்கலிற் பாணர்களுடைய யாழோசை எழும். அதனெதிர் வண்டின் இன்னிசைகேட்கும் ; ஒருசார் புல்லாங்குழ லின் ஒலியெழ, அதனெதிர் தும்பி முரலும்; ஒருபுறம் மகளிர் ஆட, அவரெதிர் பூங்கொடிகள் அசையும். ஓரிடத்திற் பாடு மகளது பாலைப் பண் நிறைகுறையோடு ஒலிக்க அதனெதிர் ஆடும் மயிலினது அகவுங் குரல் கேட்கும். இவ்வாறு அவ்வத் துறையில் வெற்றியீட்ட எண்ணியோர் மாறுமாருக இசைத்தாற் போன்ற தன்மையை முருகனது பரங்குன்றம்
உடையது
ஒருதிறம், பாணர் யாழின் றீங்குரலெழ ஒருதிறம், யாணர் வண்டி னிமிரிசையெழ ஒருதிறம், கண்ணுர் குழலின் கரைபெழ ஒருதிறம், பண்ணுர் தும்பி பரந்திசை யூத ஒருதிறம், மண்ணுர் முழவி னிசையெழ ஒருதிறம், அண்ணா ணெடுவரை யருவிநீர் ததும்ப ஒருதிறம், பாடனல் விறலிய ரொல்குபு நுடங்க ஒருதிறம், வாடை யுளர்வயிற் பூங்கொடி நுடங்க ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின்
23

Page 20
நீடு கிளர் கிழமை நிறைகுறை தோன்ற ஒருதிறம், ஆடுசீர் மஞ்ஞை யரிகுர றேன்ற மாறுமா றுற்றனபோன் மாறெதிர் கோடல் மாறட்டான் குன்ற முடைத்து
என்பது நல்லழிசியார் பரங்குன்றத்திற் கண்டுங் கேட்டும் இன்புற்றுத் தீட்டிய சொற் சித்திரம்.
பரங்குன்றத்திற் நல்லழிசியார் கண்டு வருணித்த போட்டிகள் அவர் கற்பனையிற் கண்டவை.
பரங்குன்றத்திற் கலைஞர்களிடையே நிசமாக நடைபெற்ற போட்டி களைக் குன்றம்பூதனுர் எடுத்துக் கூறியுள்ளார். பரங்குன்றத்தின்கண் ஆடல் பயின்ருேர் ஆடல் பயின்ருேருடன் போட்டியிட்டு வென்றனர்; பாடல் பயின்றேருடன் பாடல் பயின்ருேர் போட்டியிட்டு வென்றனர்; சூதாட்டத்தில் வல்லார், சூதாட்டத்தில் வல்லாருடன் போட்டியிட்டனர். இவ்வாறு பல துறைகளிற் போட்டிகள் பரங்குன்றத்தில் நடைபெற்றன.
ஆட னவின்ருே ரவர்போர் செறுப்பவும் பாடல் பயின்றேரைப் பாணர் செறுப்பவும் வல்லாரை வல்லார் செறுப்பவும் அல்லாரை யல்லார் செறுப்பவும்"
என்பவை பரிபாடற் காலத்திற் பரங்குன்றத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளாகும்.
நல்லழிசியாரும் குன்றம்பூதஞரும் எடுத்துரைத்தவற்றைக்கொண்டு சில உண்மைகள் தெரியவருகின்றன. பரிபாடற் காலத்திற் பரங்குன்றத் தில் இசை, நடனம் என்பன முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தன. ஆடுவாரும், பாடுவாரும் அங்கு வாழ்ந்தனர். பல்வகை வாத்தியங்களை வாசிப்போர் பலர் இருந்தனர். இசைக் கலையும், நடனக் கலையும் வளர்ந்திருந்த அக்காலத்திற் கலைஞர்களிடையே போட்டிகளும் இடம் பெற்றன.
பரங்குன்றத்தை இன்னும் சிறிது விளக்கமாக வருணிக்கின்ருர் குன்றம்பூதனுர், மழை முழங்கும் சிகரமும் அதன்கண்ணுள்ள கொடியின் மின்னலும் செவ்வேளின் ஓடையையுடைய களிற்றையொக்கும். குன்றத் தின்கண் உள்ள சித்திரசாலை காமவேளின் படைக்கொட்டிலை நிகர்க்கும். சோலைகளும் சுனைகளும் மலர்களின் செறிவால் அக்காமவேளது அம்ப ருத் தூணியை ஒக்கும். கார் காலத்திலே தோன்றும் காந்தட் பூங்
24

கொத்துகள், காமவேளின் போரிலே தோல்வி கண்டாரின் கட்டுண்ட கைகளைப் போன்றன. தும்பிகளினுற் கட்டவிழ்க்கப்பட்ட காந்தளின் முகைகள், யாழ் நரம்பினது கட்டை நெகிழ்ப்பவர் கைகளே ஒத்தன. அழகிய மேகம் முன்பனிக் காலத்தின்கண் முழங்கி இந்திர வில்லை வளைத்தது. அப்போது, அவ்வில்லாற் சொரியப்படும் அம்புகளைப் போன்று, பரங்குன்றத்திலுள்ள மரங்கள் மலர்களைச் சொரிந்தன. அக்குன்றத்தின் கண் தாள ஒலியும் வாத்தியங்களின் இசையும் மேகங்களின் முழக்கமும் ஒன்று சேர்ந்து போர் முழக்கத்தைப்போலக் கேட்டன. அருவிகள் ஒலித்து இழிவதாற் பரங்குன்றின் சிகரங்கள் முத்தாரங்களை அணிந்தாற் போலத் தோன்றின. குருவிகள் ஆரவாரஞ் செய்யுமாறு, தினைக் கதிர்கள் விளைந்தன. பல நிற மலர்கள் நிறைந்த சுனை, இந்திர வில்லை வளைத்த வானத்தை ஒத்தது*
திருப்பரங்குன்றத்திலே காதலரிடையே நிகழ்ந்த சுவையான சம்ப வங்களையும் புலவர்கள் எடுத்துரைத்துள்ளனர். கானவன் ஒருவனுக்கும் அவன் காதலிக்குமிடையே நடந்த சுவையான உரையாடலைக் குன்றம் பூதனர் குறிப்பிட்டுள்ளார். இன்னும், பரத்தையிற் பிரிந்த தலைவனல் அனுப்பப்பட்ட பாணன் ஒருவனுக்குத் தலைவி கூறிய நளினமான பதிலையும் அவர் எழில் மிகப் பாடியுள்ளார்.19 சுனையில் நீராடிய தலைவியைக் கட்டித் தழுவ விழைந்த தலைவனின் சாமர்த்தியமான செயலை நல்லச்சுதஞர் வருணித்துள்ளார்.
பரத்தையரிடம் சென்று திரும்பிய ஒரு தலைமகன் கூறியதை ஆசிரியர் நல்லந்துவஞர் பின்வருமாறு வருணிக்கின்ருர் :
"திருப்பரங்குன்றமானது சோலையிலுள்ள பூப்படுக்கையின்கண் தலைவரோடு தலைவியர் அளவளாவும் களவுப் புணர்ச்சியையும், தன் அடிவரையிலுள்ள மகளிர் தமக்குரிய காதலருடைய மார்பினின்றும் அகலாமல் பூவின்கண் வாழும் மகன்றிலைப் போல இடைவிடாதமைந்த நல்ல புணர்ச்சியையும் தரும் சிறப்புடையது.”*
திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்த இன்னுெரு நிகழ்ச்சியை ஆசிரியர் நல்லச்சுதஞர் அழகாகச் சித்திரித்துக் காட்டுகின்ருர், மதுவருந்திய
மகிழ்ச்சியினுல் ஒருத்தி ஆடினுள். துகில் நெகிழக் கண்கள் சிவப்புறப் பூங்கொடி போல அசைந்தாள். தன் கணவனின் துடியின் தாளத்துக்
கேற்ப முத்துமாலை அசைய ஆடினுள். ஆடையும் அணியும் அரசேய
25

Page 21
அவள் ஆடியமை வாடைக் காற்ருல் அசைந்தாடும் பூங்கொம்பின் அழகைப்போன்று தோன்றியது. துடியினது தாளத்துக்கேற்ப முறையா கத் தோளை அசைத்தாடிய அவளின் கண் பிறழ்தல் அம்பு பிறழ்தலைப் போலத் தெரிந்தது :
கண்ணுெளிர் திகழட ரிடுசுடர் படர்கொடி மின்னுப்போல் ஒண்ணகை தகைவகை நெறிபெற விடையிடை யிழைத்தி யாத்த செண்ணிகைக் கோதை கதுப்போ டியல மணிமரு டேன்மகிழ் தட்ப வொல்கிப் பிணிநெகிழப் பைந்துகி னுேக்கஞ் சிவப்பூரப் பூங்கொடி போல நுடங்குவா ளாங்குத்தன் சீர்தகு கேள்வ னுருட்டுந் துடிச்சீராற் கோடனிந்த முத்தார மொல்க வொசிபவளேர் ஆடை யசைய வணியசையத் தானசையும்
வாடை யுளர்கொம்பர் போன்ம்'
என்று அந்த நங்கையின் நடனத்தை நம் கண்முன்னே நிறுத்துகின்ருர் நல்லச்சுதனுர்,
இவற்றைக் கொண்டு பரிபாடற் காலத்திற் காதலர்கள் சுனையில் நீராடுதலும் தலைவன் பரத்தையரிடம் செல்வதும் வழக்கிலிருந்தன என்பதும், காதல் வாழ்வு வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்ததோடு தலைவன் தலைவியர் இசை, நடனம் என்பவற்றில் ஈடுபாடுடையராய் வாழ்ந்தனர் என்பதும் தெரிய வருகின்றது. இன்னும், மங்கையர் மது அருந்துவதும் மதுவருந்திய மயக்கத்தில் அவர் நடனமாடுவதும் அன்று இடம்பெற்ற வாழ்க்கை முறையாக இருந்தன என்பது தெரியவருகிறது.
பரங்குன்றத்தில் மக்கள் செவ்வேளை வழிபடுகின்ற முறையையும் பரிபாடல் எடுத்துக் கூறுகின்றது. சந்தனம், தூபத்துக்குரிய பொருள்கள், மணங் கமழ்கின்ற மலர்கள், முழவம், மணி, பாசம், மயில், கோடரி, பிணிமுகம் ஆகியவற்றையும் செவ்வேளுக்குவந்த வேறு பல பொருள் களையும் மக்கள் தம் கைகளிலே ஏந்திப் பரங்குன்றத்தை அடைந்து செவ்வேள் எழுந்தருளியிருக்கும் கடம்ப மரத்தைத் தொழுகின்ருர்கள். வேறு பலர் செவ்வேளிடம் வரங்கள் வேண்டி வழிபடுகின்றனர். காதலரோடு அளவளாவியதாகக் கனவிற் கண்டது நனவாக வேண்டு மென நங்கையர் சிலர் வரம் வேண்டுகின்றனர். அதாவது, காதலரோடு
26

வையைப் புது வெள்ளத்தில் நீராடியதாகக் கனவிலே கண்ட நங்கையர், அக்கனவு பலிதமாவதற்காக வையை நதி, புது வெள்ளத்தைப் பெறுகவென்று செவ்வேளை வேண்டுகின்றனர். தமக்குக் கருப்பமுண்டாக வேண்டுமென்று செவ்வேளுக்குப் பல பொருள்களைக் காணிக்கையாகக் கொடுப்போர் வேறு சிலர். எங்கணவருக்குப் பொருள் வாய்ப்பதாக என்று பிரார்த்தனை செய்வோர் இன்னும் சிலர். எங்கணவர் தாம் மேற்கொண்ட போரில் வெற்றி பெறுக என்று பிரார்த்திப்போர் மற்றும் இசிலர்.14
மதுரையிலிருந்து மைந்தரும் மகளிரும் விடியற்காலையிற் பரங் குன்றத்தை நோக்கிச் சென்ற காட்சியை நப்பண்ணனர் அழகுற வருணிக்கின்ருர் : மைந்தரும் மங்கையரும் அறத்தைச் செய்து அதன் பயனை நுகர்வதற்குத் தேவலோகத்துக்குச் செல்வாரைப்போன்று திருப் பரங்குன்றத்தை நோக்கிச் சென்றனர். அவர்கள் அழகிய ஆடைகளையும் பெறுமதியுள்ள அணிகலன்களையும் அணிந்திருந்தனர். சிலர் குதிரை மேல் இவர்ந்து சென்றனர் ; சிலர் தேரிலேறிச் சென்றனர். அவர்களின் மார்பிலே மாலைகள் விளங்கின. அவர்களின் உடலிலே எழுந்த ஒளி, வழியிலே நிறைந்திருந்த இருளைப் போக்கியது.*
மேலும், பரங்குன்றத்தைப் பாண்டிய மன்னன் வலம் வந்து
வணங்கிய முறையையும் நப்பண்ணணுர் வருணித்துள்ளார் :
சுடரொடு சூழ்வரு தாரகை மேருப் புடைவரு சூழல் புலமாண் வழுதி மடமயி லோரு மனையவ ரோடும் கடனறி காரியக் கண்ணவ ரோடுநின் சூருறை குன்றிற் றடவரை யேறிமேற் பாடு வலந்திரி பண்பிற் பழமதிச் சூடி யசையுஞ் சுவன்மிசைத் தானையிற் பாடிய நாவிற் பரந்த வுவகையின் நாடு நகரு மடைய வடைந்தனைத்தே படுமணி யான்ை நெடியாய்நீ மேய கடிநகர் சூழ்நுவலுங் கால்."
“ பாண்டியன் மயிலனைய மகளிரோடும் கண்போன்ற அமைச்சர்களோ டும் நாடும் நகரும் தன்னைச் சூழ்ந்துவரப் பரங்குன்றத்தில் ஏறினுன். அங்கே செவ்வேள் கோயில் கொண்டிருந்த இடத்தை வலம் வந்தான்.
27

Page 22
அவ்வாறு அவன் வலம் வந்தமை பல நட்சத்திரங்கள் சூழ்ந்துவரச் சந்திரன் மேரு மலையை வலம் வருவதை ஒத்தது " என்று அழகான
உவமையால் நப்பண்ணணுர் எடுத்துரைக்கின்ருர்,
பாண்டிய மன்னனுேடு வந்தோருட் சிலர், தலையிலே துகிலை அணிந்திருந்தனர். சிலர் யானைகளை வழியினின்றும் அகற்றி மரங்களிற் கட்டினர். பின்னர், அந்த யானைகளுக்கு உணவாகக் கரும்பைக் கொடுத்தனர் ; சிலர் குதிரைகளை வழியினின்றும் நீக்கினர்; சிலர் தேர்களை வழியினின்றும் இழுத்துச் சென்றனர். இவ்வகைச் செயல் களாற் பரங்குன்றத்தின் கீழுள்ள நிலப்பரப்பு பாண்டியனது பாசறை போலக் காட்சி கொடுத்தது."
பாண்டிய மன்னன் பவனியில் இசையும் பாட்டும் இடம் பெற்றன. பிரம வீணையை வாசித்தனர் சிலர் ; புல்லாங்குழலை ஊதினர் வேறு சிலர் : யாழை மீட்டினர் இன்னும் சிலர் ; பூசைச் சிறப்பைப் பாடிப் பாராட்ட, யாழோசைக்கேற்றவாறு முரசை ஒலித்தனர் மற்றும் சிலர்.19
பாண்டியனேடு வந்தவர்களுட் சிலர் அக்குன்றத்திலுள்ள சித்திர சாலைக்குச் சென்று, அங்குள்ள சித்திரங்களைக் கண்டு களித்தனர். நங்கையர் சிலர் சுனை நீரிலே இளந்தளிர்களை எறிந்து விளையாடினர். அந்தச் சுனையின் அருகிலே பல்வகைப் பூக்கள் மலர்ந்து கிடந்தன.19
இறுதியாக, செவ்வேளை மகளிர் வழிபடுகின்ற முறையையும் நப் பண்ணணுர் எடுத்துரைத்துள்ளார்:
"திருமணமாகாத நங்கையரும் கன்னியரும் பரங்குன்றத்துக்குச் சென்றனர். அங்கே செவ்வேளினது கொடி ஏற்றப்படும் யானையின் கும்பத்தைக் குங்குமத்தால் அலங்கரித்தனர் ; பூவும் நீரும் தெளித்துக் கவரிகளைச் சாத்தினர். பொற்குடையை மேலே கவித்துப் பூசை செய்தனர். அப்பூசையின் போது, அந்த யானை உண்ட கவளத்தின் சேடத்தை அந்நங்கையரும் கன்னியரும் உவந்து உண்டனர் : அவ் வாறு உண்ணுதவர்கள் காதலரின் சிறந்த அன்பினை எய்தார் ; கன்னியர் குறைவற்ற மணுளரைப் பெருர்.”*
இவ்வாறு அன்று நிலவிய வழிபாட்டு முறையையும் மக்களிடையே நிலவிய தம்பிக்கையையும் நப்பண்ணஞர் தமது பாடலில் விரிவாக
எடுத்துக் கூறியுள்ளதைக் காணலாம்.
38

குறிப்புகள்:
1.
10.
11.
2.
13.
14.
15.
16.
17,
18.
19.
20.
பரிபாடல்,
பரிபாடல்,
பரிபாடல்,
பரிபாடல்,
பரிபாடல்,
. பரிபாடல்,
பரிபாடல்,
பரிபாடல்,
8: 1-18,
18: 4-6.
25-27.
14: 1-17.
21: 30-38
17: 92.
9: 72-75.
18: 22-29.
இந்நூலின் 37 ஆம் பக்கம் பார்க்க.
இந்நூலின் 38 ஆம் பக்கம் பார்க்க.
இந்நூலின் 39, 40 ஆம் பக்கங்களைப் பார்க்க.
பரிபாடல்,
பரிபாடல்,
பரிபாடல்,
பரிபாடல்,
பரிபாடல்
பரிபாடல்
பரிபாடல்
பரிபாடல்
பரிபாடல்
8: 36-46.
21:54一63。
17 : 1-17.
9 : 10-18.
19-29.
30-37.
40-45,
67-84。
85-94。
29

Page 23

*Š*〜。减∞毯§|-%ぼ----Ħ\\ & %%%%후세*...- ~%必鋼・% :??●- Wシ©多族 游∞fh*シŒ 雅■llis)迎e桓鸾{& si}以讹引纠例以藏,_劑沁))R 数\!Q澎●シ%は羽父逐 长衫)、闵隴吻*鯊 心碉*Qミ홍니시이사나에후나的可制國高麗國因丝*-* $|- []uJos,门则以犯%衫 父^^،
动
C必化成淀P) *Ĥ -形%吐鹽妙%" ~--~~~澱凡 斑}刮凉引*心為她徹應概 『研%ジシ安心感多么》(/ ae祝*丝£m# 必考 有之 3%湖属爵 〜与 *對證(艰心 }幫》城
தெய்வயானை சமேதர்

Page 24

4. அகப்பொருள் அறிமுகம்
சங்க இலக்கியங்களுட் பரிபாடல் ஒன்று. இத்தொகைநூலிலுள்ள செவ்வேள்மேலும் திருமால்மேலும் பாடப்பட்ட பாடல்கள் சமயச் சார் புடையன. இப்பாடல்கள் சிலவற்றிலே அகப்பொருள் அமிசங்கள் இடம்பெறுகின்றன. இப்பாடல்களைப் பாடிய புலவர்களே முதன்முதலில் அகப்பொருள் அமிசங்களைச் சமயச் சார்புடைய பாடல்களிற் புகுத்தின ரெனக் கூறலாம்.
செவ்வேளின் புகழ்பாடும் எட்டுப் பாடல்கள் பரிபாடலில் இருக்கின் றன. அவற்றுள் ஐந்து பாடல்களில் மட்டும் அகப்பொருட் கருத்துக்கள் இடம்பெறுகின்றன.
வரையா நுகர்ச்சியும் நன்னர்ப் புணர்ச்சியும்
செவ்வேள்மேல் நல்லந்துவஞர் பாடியருளிய எட்டாவது பாடலின் (இப்பதிப்பில் இரண்டாவது பாடலின்) பெரும்பகுதி உலகியல் சார்ந்த காதல் நிகழ்ச்சியை வருணிக்கின்றது. இப்பாடலிலே இடம்பெறும் சமயக் கருத்துடன், இக்காதல் நிகழ்ச்சி ஓரளவு பின்னிப் பிணைந்துள்ளதென லாம். அதாவது செய்யுளின் முற்பகுதியும் பிற்பகுதியும் செவ்வேள் கோயில்கொண்ட பரங்குன்றத்தின் சிறப்பையும் செவ்வேளின் பெருமை யையும் வருணிக்க, இடையிலுள்ள பகுதி திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்த தலைவன், தலைவி ஆகிய இருவருக்கிடையே ஏற்பட்ட காதற் பிணக்கைச் சித்திரிக்கின்றது. தலைவன், தலைவி, தோழி ஆகிய மூவருக்கிடையே நிகழ்ந்த சம்பவத்தை உரையாடல் வடிவில் நல்லந்துவஞர் தந்துள்
ளார்.
"வரையா நுகர்ச்சி", "நன்னர்ப் புணர்ச்சி" ஆகிய இரண்டு அகப் பொருள் அமிசங்கள் இப்பாடலில் முக்கியமானவையாகும்.
நெடுமென் பனைத்தோட் குறுந்தொடி மகளிர் ஆராக் காம மார்பொழிற் பாயல் வரையகத் தியைக்கும் வரையா நுகர்ச்சி முடியா நுகர்ச்சி முற்ருக் காதல் அடியோர் மைந்த ரகலத் தகலா அலர்ஞெமன் மகன்றி னன்னர்ப் புணர்ச்சி புலரா மகிழ்மறப் பறியாது நல்கும் சிறப்பிற்றே தண்பரங் குன்று.

Page 25
"மகளிரது ஆராக்காம இன்பத்தைப் பொழிற் பரயற்கண் தலைவரொடு கூட்டும் களவிற் புணர்ச்சியையும் அடியுறை மகளிர் பூவின்கண் திரியும் மகன்றில்போல மைந்தர் அகலத்தையகலாத நல்ல புணர்ச்சியையும் மறவாது அம்மகளிர் மனமெனத் தருஞ்சிறப்பிற்று, தண்பரங்குன்று” என்று நல்லந்துவஞர் சித்திரிக்கின்ருர்.
செவ்வேளின் பெருமையும் அவன் கோயில்கொண்ட திருப்பரங் குன்றத்தின் சிறப்பும் அவன் அடியார்களுக்கு அருள் சொரியும் திறனும் இப்பாடலின் உட்பொருள்களாகும். எனினும், காதல் நிகழ்ச்சியின் வருணனை பாடலின் பெரும் பகுதியைக் கொண்டுள்ளது. செவ்வேளின் உயர்வும் திருப்பரங்குன்றத்தின் சிறப்பும் பாடலின் முன்னுரை போல வும், அடியார்கள் செவ்வேளை வழிபடுதலும் செவ்வேள் அவ்வடியார் களுக்கு அருள் சொரிதலும் முடிவுரைபோலவும் அமைந்துள்ளன. இடையே இடம்பெறும் வருணனை வாயிலாகத் திருப்பரங்குன்றத்தின் இயல்பையும் எழிலையும், அங்கு வாழ்கின்ற மக்களின் காதல் வாழ்வையும் கருத்தொருமித்த உறவையும் நல்லந்துவனுர் எடுத்துக் காட்டியுள்ளார்.
களவும் கற்பும் ஒன்பதாம் பாடலிற் சமயக் கருத்தோடு அகப்பொருட் கருத்தை அழகான முறையில் அமைத்துக் குன்றம்பூதனர் அழகு செய்துள்ளார். செவ்வேள், தேவசேனை, வள்ளி ஆகியோருக்கிடையே ஏற்பட்ட ஊடலை வருணித்த புலவர், களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகியவற்றை ஒப்பிட்டுரைத் துள்ளார்.
" காமத்துச் சிறந்தது காதலையுடைய காமம் : அஃதாவது, மெய்யுற் றறியாதார் இருவர் அன்பொத்துப் பான்மைவகையால் தாமே மெய்யுற் றுப் புணரும் புணர்ச்சி ". இக்கருத்தைச் சங்க இலக்கிய அகப்பாடல்க ளும் சித்திரிக்கின்றன ; அகப்பொருள் பற்றிய இலக்கணங்களும் வரையறை செய்கின்றன. இதனையே,
வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது காதற் காமங் காமத்துச் சிறந்தது விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி* என்று குன்றம்பூதனுர் எடுத்துரைத்தார்.
கற்பொழுக்கம் புலத்தலாற் சிறந்தது. தலைவன் வாயில் வேண்டலும் தலைவி வாயில் நேர்தலுமாகிய இவற்றையுள்ளிட்டுத் தலைவனுடைய பரத்தைமையான் இவ்வூடல் உண்டாவது. பரத்தையின் இல்லத்தில்
34

இருக்கும் தலைவனுக்குத் தோழி வாயிலாகத் தன் பூப்பைத் தலைவி அறிவிக்கின்ருள். அதனை அறிந்த தலைவன், தலைவிபால் வந்து உவக்கும் புணர்ச்சியை உடையது அக்கற்பொழுக்கம். இப்புணர்ச்சியின்பம் இயல் பானதன்று ; ஊடலால் உண்டாவது. இதனை,
புலத்தலிற் சிறந்தது கற்பே யதுதான் இரத்தலு மீதலு மிவையுள் ளிடாப் பரத்தையுள் ளதுவே பண்புறு கழறல் தோள்புதி துண்ட பரத்தையிற் சிவப்புற நாளணிந் துவக்குஞ் சுணங்கறை யதுவே கேளணங் குறமனைக் கிளந்துள சுணங்கறை சுணங்கறைப் பயனு மூடலுள் ளதுவே, அதனுல், அகற லறியா வணியிழை நல்லார் இகறலைக் கொண்டு துணிக்குந் தவறிலர் என்று குன்றம்பூதனுர் எடுத்துரைத்துள்ளார்.
கற்பொழுக்கத்தையும் களவொழுக்கத்தையும் இவ்வாறு ஒப்பிட் டுரைத்த புலவர், களவொழுக்கத்தைப் புகழ்ந்தும் கூறுகின்ருர், " கற்பில் தலைவர் நீங்குதலைப் போலின்றி, என்றும் பிரிவின்றியமையும் களவுப் புணர்ச்சியையுடைய மகளிர் தம் தலைவரோடு மாறுபட்டு ஊடுகின்ற குற்றத்தை உடையவரல்லர். இத்தகைய சிறப்புப் பொருந்திய களவுப் புணர்ச்சியைப் பாராட்டும் பொருளிலக்கணத்தையுடைய தமிழை ஆரா
யாதவரே களவொழுக்கத்தைக் கொள்ளமாட்டார்.
L0LLL0LLGLLLLLLLLLLLLGLLLLLLL 0LLLLLLLLLLLLLYYYLLLLLLLLLL அதனுல் அகற லறியா வணியிழை நல்லார் இகறலைக் கொண்டு துணிக்குந் தவறிலரித் தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்று பயன்? என்பது அவர் கூற்று.
களவொழுக்கம் உறவுக்கு முன்னர் ஒருவரையொருவர் அறியாத நிலையில் ஊழ் வசத்தாலும் ஆழ்ந்த உள்ளன்பாலும் உந்தப்பட்டுக் காதலால் எற்படும் உறவு, கற்பொழுக்கம் ஊடலால் உண்டாவதென வருணிக்கப்பட்டுள்ளது. இது நன்னெறியிலிருந்து விலகிச் சென்று, பரத்தையர் கூட்டத்தை நாடும் பொறுப்பற்ற செய்கையால் விளைவது. இதஞல், களவொழுக்கம் கற்பொழுக்கத்திலும் சிறந்ததாக வருணிக்கப் படுகின்றது. ஏனெனில், இந்தவகை ஒழுக்கத்தால் தலைவன் தலைவியை
35

Page 26
விட்டுப் பிரிவதுமில்லை:'பரத்தையர் இல்லத்தை நாடி அவன் செல்வது மில்லை. இதனுல், தலைவனுடன் தலைவி ஊடுதற்கு இடமில்லாமற் போகின்றது. எனவே, தமிழிலுள்ள பொருளியலின் உள்ளடக்கத்தை ஆராய்ந்து அறியாதாரே களவொழுக்கத்தைக் கொள்ளாதார் என்று குன்றம்பூதனுர் கூறிப்போந்தார்.
இவ்வருணனை வாயிலாக இரண்டு உண்மைகளை அறிந்து கொள்ள முடிகின்றது. ஒன்று, பரிபாடற் காலத்திற் கற்பொழுக்கம், களவொழுக்கம் ஆகியன பற்றி மக்கள் மத்தியில் நிலவிய கருத்து. இன்னென்று, செவ்வேள் வள்ளியைத் திருமணஞ் செய்துகொண்டதை எடுத்துரைக்க அகப்பொருட்டுறைகளைப் புலவர் எடுத்தாண்டுள்ள சிறப்பு. சமயப் பாடலைப் படிப்போருக்கு அதில் ஆர்வத்தை அதிகமாக்க அகப்பொருட் கருத்துக்களைப் புலவர் புகுத்தி அணிசெய்தார் போலும் ! தள்ளாப் பொருளியற்றண்டமிழ் ' என்பதுகொண்டு, தொல்காப்பியத்துக்குப் பிற் பட்ட காலத்தே பரிபாடல் தோன்றியது என்பது தெரியவருகின்றது.
துறையும் பொருளும்
சங்க இலக்கிய அகப் பாடல்களுக்குள்ள துறைக் குறிப்புக்களைப் போன்று பதினன்காம் பாடல், " என்பது, பருவங்கண்டு அழிந்த தலைமகள்கேட்ப முருகவேளைப் பரவுவாளாய், இப்பருவத்தே தலைமகன் வருமென்பதுபடத் தோழி வற்புறுத்தியது " என்ற குறிப்பைக் கொண் டுள்ளது. ஆனல், தலைமகன் வருவானெனத் தோழி கூறுவதாகப் பாடலின் பொருள் அமையவில்லை. செவ்வேளின் பெருமையையும் அவன் கோவில் கொண்ட குன்றின் எழிலையுமே பாடல் முழுவதிலும் கேசவனுர் எடுத்துரைக்கின்ருர்,
எனினும், இப்பாடலில் வரும் இரண்டு வருணனைகள் அகப் பாடல்களின் வருணனைச் சாயலைப் போன்றன. ஒன்றில், மூங்கிலப் பெண்களின் தோள்களுக்குப் புலவர் ஒப்பிட்டிருக்கின்ருர் :
அடியுறை மகளி ராடுந் தோளே நெடுவரை யடுக்கத்து வேய்போன் றனவே."
என்பது அவ்வருணனை. இன்னென்றில், மயில்களின் குறைவற்ற குரலை,
கூடிப் பிரிந்த காதலரை, " வாருங்கள் 1 வாருங்கள் " என்று அழைக்கும்
நங்கையரின் குரலுக்கு ஒப்பிட்டுக் காட்டுகின்ருர் : தோகை யார்குரன் மணந்து தணந்தோரை நீடன்மின், வாரு மென்பவர் சொற்போன் றனவே?
36

என்பது அவர் வருணனை. இவ்வருணனைகள் இரண்டும் செவ்வேள் கோயில் கொண்டுள்ள குன்றின் எழிலை எடுத்துக் கூறுகின்றன; தலை
மகன் வருமென்பதுபடத் தோழி வற்புறுத்துவனவாக அவை அமைய வில்லை.
இப்பாடலுக்குள்ளது போன்ற குறிப்பு எதுவும் செவ்வேளைப் பற்றிய ஏனைய பாடல்களுக்கு இல்லை. ஆணுல், இதுபோன்ற குறிப்பு வையை மேற் பாடப்பட்ட பாடல்களுக்கு உண்டு. ஆகவே, பதினன்காம் பாடலின்
குறிப்பு இடச்செருகலாக இருக்கலாம் என்ற ஐயம் எழுகின்றது.
துயரும் தூதும்
பதினெட்டாம் பாடலில் இரண்டு அகப்பொருள் வருணனைகள் உள்ளன. ஒன்று, கானவன் ஒருவனுக்கும் அவன் காதலிக்குமிடையே ஏற்பட்ட ஊடலைப் பற்றியது. மற்றையது, தன்னிடம் தூதாக வந்த பாணன் ஒருவனைத் தலைவி பழித்துரைப்பது. முதல் வருணனையை நோக்குவோம்:
திருப்பரங்குன்றத்தில் ஒரு கானவன் மயில் ஒன்றைக் கண்டான். அதன் அழகிலே மயங்கினன். அதனை அவன் காதலி கண்டாள். " நீ என்னைப் பாராது மயிலேயே பார்ப்பதன் காரணம் யாது ? அவ்வாறு செய்து என்னை இகழ்கின்ருய் ” என்று சொல்லி ஊடினுள். கானவன் தன் காதலியைப் பார்த்து: "அன்பே கொள்ளுதற்குரிய நின் சாயலைக்
களவுகொள்ள எண்ணி அதனைத் தான் பெறமாட்டாமல் வருத்தமுறும் இந்த மயிலைக் கண்டு, நின் சாயலின் அருமையை நினைந்து நின்றேன் : நீ உன்னை இகழ்ந்ததாகக் கூறுகின்ருய்
என்று சொன்னுன்.
ஒள்ளொளி மணிப்பொறி யான்மஞ்ஞை நோக்கித்தன் உள்ளத்து நினைப்பானைக் கண்டன டிருநுதலும் உள்ளிய துணர்ந்தேனஃ துரையினி நீயெம்மை எள்ளுதன் மறைத்தலோம் பென்பாளைப் பெயர்த்தவன் காதலாய் நின்னியல் களவெண்ணிக் களிமகிழ் பேதுற்ற விதனைக்கண் டியானுேக்க நீயெம்மை ஏதிலா நோக்குதி யென்ருங் குணர்ப்பித்தல் ஆய்தேரான் குன்ற வியல்பு?
37

Page 27
என்பது குன்றம்பூதனுர் தீட்டிய சொல்லோவியம். மயிலின் அழகிலே தன் மனதைப் பறிகொடுத்த கானவன், தன் உள்ள நிலையைக் காதலி அறிந்துகொண்டாளே என்று வருந்தினன். அவளின் உள்ளம் வேதனைப் படக்கூடாது என்று எண்ணிஞன். உண்மையை மறைத்துப் பொய் சொல்ல முடிவு செய்தான். மயிலின் சாயலை இகழ்ந்து, காதலியின் சாயலைப் புகழ்ந்து அவளை மகிழ வைத்தான்.
இனி, இரண்டாவது வருணனையைப் பார்ப்போம் : பரத்தையிற் பிரிந்து சென்ருன் தலைவன். அதனுல் தலைவி ஊடல் கொண்டாள். அவளைச் சமாதானப்படுத்தத் தலைவன் எண்ணினுன் ; பாணன் ஒருவ னைத் தலைவிபால் அனுப்பினுன். பாணன் தலைவிபாற் சென்று பாடினன். அது கண்ட தலைவி, “ பொன்னணியினையுடைய பாணு தலைவனுடைய உடம்பிலுள்ள வடுக்கள் அவனது பரத்தைமையைப் புலப்படுத்த அறிந்தோம். நீ பாடிய பாட்டுப் பொய்ம்மையின் மிகுதியைப் புலப்படுத்து கின்றது " ஸ்ன்ருள் :
ஐவளம் பூத்த வணிதிகழ் குன்றின்மேல் மைவளம் பூத்த மலரேர் மழைக்கண்ணுர் கைவளம் பூத்த வடுவொடு காணுய்நீ மொய்வளம் பூத்த முயக்கம்யாங் கைப்படுத்தேம் மெய்வளம் பூத்த விழைதகு பொன்னணி நைவளம் பூத்த நரம்பியைசீர்ப் பொய்வளம் பூத்தன பாணுநின் பாட்டு."
என்பது குன்றம்பூதனுர் தீட்டிய சொற்சித்திரம். பரத்தையிடம் சென்ற மையைத் தலைவன் மறைக்க முயன்றதையும், அவனின் பரத்தைமை யைத் தலைவி அறிந்து கொண்டதையும் இவ்வருணனை தெளிவுபடுத்து கின்றது.
மேலே காட்டிய வருணனைகள் இரண்டும் செவ்வேள் கோயில் கொண்டுள்ள திருப்பரங்குன்றத்திற்குரியன. இன்னுெரு வகையாகக் கூறின், திருப்பரங்குன்றத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பன. இவ்வகப்பொருள் சார்ந்த வருணனைகள் சமயக் கருத் தோடு தொடர்பற்றவை ; உலகியல் சார்ந்த உண்மைகளை எடுத்
துரைப்பன.
38

ஊடலும் கூடலும்
இறுதியாக, இருபத்தொராம் பாடலிலுள்ள இரு பகுதிகளை உலகியல் சார்ந்த காதல் பற்றிய வருணனைகளுக்கு உதாரணமாகக் காட்டலாம். முதல் வருணனை பின்வருமாறு :
திருப்பரங்குன்றத்திலே ஒருத்தி, தன் பொற்சிலம்பிலுள்ள முத்துப் பரல்கள் ஒலிக்கத் துடியின் ஒசைக்கு இயைய அடிபெயர்த்துத் தோளே அசைத்து ஆடினுள். அவ்வாடலைத் தன் தலைவன் அருகிலிருப்பப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தலைவி, ஆடுவாளது அழகு கண்டு, இஃது இவன் மனத்தை வேறுபடுத்துமென்று எண்ணி வெகுளி மிக்க பார்வையோடு அவனைச் சினந்தாள் ; வேருெருத்தி, தன் அழகைக் கண்ணுடியிற் பார்த்துத் தன் அணிகலன்களைத் திருத்தினுள். இன் னுெருத்தி பொங்கின முலையிடத்தே சந்தனத்தைப் பூசினுள். அச்சந்த னம் நிலைகொள்வழித் தன்னைத் தலைவன் நாடுவானெனக் கருதி, அதனைப் பின்னும் பின்னும் ஊட்டுவாள். மற்றும் இத்தன்மைத்தான பல முறை நிகழ்கின்ற மகளிர் செயல்களை நினைப்பின், கைவல்லான் எழுதிய ஒவியத்து அழகு போலும் :
சுடுபொன் ஞெகிழத்து முத்தரிசென் ருர்ப்பத் துடியி னடிபெயர்த்துத் தோளசைத்துத் தூக்கி அடுநரு மகிழ்தட்ப வாடுவா டகைமையின் நுனையிலங் கெஃகெனச் சிவந்த நோக்கமொடு துணையணை கேள்வனைத் துணிப்பவ ணிலையும் நிழல்காண் மண்டில நோக்கி அழல்புனை யவிரிழை திருத்துவாள் குறிப்பும் பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம் உதிர்த்துப் பின்னுற வூட்டுவாள் விருப்பும் பல்லூ Nவையிவை நிலைப்பின் வல்லோன் ஒவத் தெழுதெழில் போலும் '
என்று திருப்பரங்குன்றத்தின்கண் நிகழ்ந்தவற்றை நல்லச்சுதனுர் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
மற்றைய வருணனை, ஒரு தலைவனும் அவள் காதலியும் சுனை ஒன்றில் நீராடுதலைப் படம் பிடிக்கின்றது. ஆழ்ந்த சுனேயின் நடுவே ஒருத்தி மூழ்கி நீர்மேல் எழுந்தாள். அவள், கரையில் நின்ற தன் கணவனை நோக்கி
39

Page 28
நீரில் அழுந்துகின்ற தனக்குப் புணையாகிய மூங்கிலைத் தருமாறு வேண்டினுள். அவன் அதனைக் கொடாமல் அரக்கு நீர் நிறைந்த வட்டை எறிந்தான். அவள் நீரிலே தத்தளித்தாள். அவளது துயரைக் கண்ட தலைவன் இன்புற்று அந்நீரின்கண் குதித்து அவளைத் தழுவினுன் :
தாழ்நீ ரிமிழ்சுனை நாப்பட் குளித்தவண் மீநீர் நிவந்த விறலிழை கேள்வனை வேய்நீ ரழுந்துதன் கையின் விடுகெனப் பூநீர்பெய் வட்ட மெறியப் புணைபெரு தருநிலை நீரி னவடுயர் கண்டு கொழுநன் மகிழ்தூங்கிக் கொய்பூம் புனல் வீழ்ந்து
12
25(phyb............................................
என்று திருப்பரங்குன்றத்திலுள்ள சுனை ஒன்றில் நிகழ்ந்ததை நல்லச் சுதஞர் வருணித்துள்ளார்.
செவ்வேள் கோயில் கொண்ட திருப்பரங்குன்றத்தின் இயற்கை எழிலையும், அங்கே வாழ்ந்த மக்களின் காதல் வாழ்வையும் இவ்வருணனை கள் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது. செவ்வேளையும் அவன் கோயில் கொண்ட திருப்பரங்குன்றத்தையும் பாடிய புலவர், உலகியல் சார்ந்த காதல் நிகழ்ச்சிகளையும் ஆங்காங்கே செவ்வேளைப் பற்றிய பாடலிற் புகுத்தி அணிசெய்துள்ளார்.
மேலே எடுத்துக் காட்டப்பட்ட ஐந்து பாடல்களில் இடம்பெற்றுள்ள அகப்பொருள் வருணனைகளைக் கொண்டு, சில முக்கியமான கருத்துக்களை எடுத்துக் காட்டலாம். 18 ஆம் பாடலிலும் 21 ஆம் பாடலிலுமுள்ள அகப்பொருள் வருணனைகள் ஒரு தன்மைத்தன. அவை பரங்குன்றத்தில் வாழ்ந்த மக்களின் காதல் வாழ்வைச் சித்திரிப்பன. அவை உலகியல் சார்ந்த காதல் வாழ்வை எடுத்துரைப்பனவேயன்றி, சமயக் கருத்தோடு தொடர்பற்றனவாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. 8 ஆம் பாடலிலுள்ள ஊடல் பற்றிய வருணனை, உரையாடல் வடிவத்தில் விரிவாக அமைந்துள்ளது. எனினும், செவ்வேளும் அவன் கோயில் கொண்ட திருப்பரங்குன்றமும் பாடலைப் பாடிய புலவரின் உள்ளத்திலே தொடர்ந்து நிலைத்திருந்தன என்பது தெளிவாகின்றது. 9 ஆம் பாடலிற் சமயக் கருத்தும் அகப்பொருள் வருணனையும் சமமாகவே அமைந் துள்ளன. வள்ளியைச் செவ்வேள் திருமணஞ் செய்துகொள்வதை
வருணித்துச் சமயக் கருத்தைப் புலவர் வலியுறுத்தியுள்ளார். இவ்வருண
40

2னயில் அகப்பொருட் கருத்தும் சமயக் கருத்தும் பின்னிப் பிணைந்திருப்ப தைக் காணமுடிகின்றது. 14 ஆம் பாடல் அகப்பொருள் வருணனைகள் எதுவுமில்லாதிருப்பவும், துறைவிளக்கம் அதனை அகப்பொருள் அமைந்த பாடலாகக் குறிப்பிடுகின்றது.
இப்பாடல்களில் அகப்பொருட் கருத்துக்கள் புகுத்தப்பட்டுள்ளன வெனினும், பாடல்களின் தொடக்கமும் முடிவும் செவ்வேளைப் பற்றி அல்லது அவன் கோயில் கொண்ட பரங்குன்றத்தைப்பற்றி வருணிப்பன வாக அமைந்துள்ளன. இன்னுெரு வகையாகக் கூறின், பாடலிற் காதல் வருணனைகள் சமய விடயங்களோடு விரவி வந்துள்ளன ; எனினும், புலவர்களின் மனத்தில் செவ்வேளின் புகழ்பாடும் நினைவு தொடர்ந்து நிலைத்திருந்தது என்பது தெரியவருகின்றது.
இன்னுெரு முக்கிய விடயம், இப்பாடல்களிற் புலவர்கள் ஊடலையே அதிகமாக வருணித்துள்ளனர். சமயப் பாடல்களில் ஊடலை வருணிப்ப திற் புலவர்களுக்கிருந்த உள்ள விழைவை இப்பாடல்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது.
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்' என்பதன் உண்மையை உணர்ந்து ஊடலுக்கு முக்கியமான இடத்தைப் பரிபாடற் புலவர்கள் அளித்தனர் போலும் !
இந்த ஆய்வின் வாயிலாக, அகப்பொருட் பாடல்களுக்கான நெகிழ்ச் சியற்ற மரபுகளிலிருந்து பரிபாடற் புலவர்கள் விலகிச் செல்வதையும், சமயப் பாடல்களிலே, அவர்கள் அகப்பொருட் கருத்துக்களைப் புகுத்திக் கூறும் மற்றுமொரு சிறப்பினையும் கண்டுகொள்ள முடிகின்றது. இதனை வேறு சொற்களிற் கூறுவதானுல், அகப்பொருள் சார்ந்த முற்காலப் பாடல்களுக்குரிய மரபுகளைப் பின்பற்ருமல், பரிபாடற் புலவர்கள் தங்களுடைய சமயப் பாடல்களிலே மரபு முறையான அகப்பொருட் கருத்துக்களை நெகிழ்ச்சியான முறையில் எடுத்தாண்டுள்ளனர் எனலாம். இவ்வாருண பாடல் அமைப்பு, படிப்போரின் கருத்தைப் பெரிதும் கவரக்கூடியதாக இருக்குமென அப்புலவர்கள் கருதினர் போலும் !
அகப்பொருட் கருத்துக்கள் செவ்வேளைப் பற்றிய பாடல்களில் வந்துள்ளனவெனினும், தேவாரங்களிலுள்ளன போன்று சமயத்தோடு அவை இணைத்துப் பாடப்படவில்லை என்பது தெளிவாகின்றது. இதனை
41

Page 29
இன்னுெரு வகையாகக் கூறின், பரிபாடற் புலவர்கள் அகப்பொருட் கருத்துக்களை அப்படியே தமது பாடல்களில் எடுத்தாண்டுள்ளதையும், தேவார ஆசிரியர்கள் இறைவனைக் காதலனுகவும், அவனை வழிபடுகின்ற அடியார்களைக் காதலியர்களாகவும் பாடியுள்ளதையும் காணமுடிகின்றது. தேவாரம் பாடிய நாயன்மார்கள், இறைவனைக் காதலிக்கின்ற நங்கையர் களாகத் தாம் மாறி நின்று, அவனைக் காதலித்து அவன் தாள்களை அடைந்தனர்.
பரிபாடலிலுள்ள செவ்வேளைப் பற்றிய நான்கு பாடல்களில் உலகியல் சார்ந்த அகப்பொருட் கருத்துக்கள் இடம் பெறுவதைக் கண்டோம். இன்னும், பரிபாடலிலுள்ள செவ்வேள்மேற் பாடப்பட்டுள்ள எட்டுப் பாடல்களும் அந்நூலிலுள்ள திருமால்மேலும் வையைமேலும் பாடப்பட்ட பாடல்களுடன் விரவி வந்துள்ளன. இவை காரணமாகவே, பரிபாடலி லுள்ள செவ்வேள்மேற் பாடப்பட்ட எட்டுப் பாடல்களையும் நம்பி யாண்டார்நம்பி தாம் தொகுத்த சைவத் திருமுறையிற் சேர்க்காதொழிந் தார் போலும் !
குறிப்புகள் :
1. பரிபாடல், 8 : 39-46.
2. பரிமேலழகருரை, பரிபாடல் மூலமும் பரிமேலழகருரையும், டாக்டர். உ. வே.
சாமிநாதையர் அவர்களின் இரண்டாம் பதிப்பு, 1935, பக். 57-58.
பரிபாடல், பக்கம். 86.
பரிபாடல், 9 : 13-15,
பரிபாடல், 9 : 18-24. பரிபாடல், 9 : 22-26,
பரிபாடல், 14 : 5-6.
பரிபாடல், 14 : 8.9.
பரிபாடல், 18 : 7-14.
10. பரிபாடல், 18 : 15-21
11. பரிபாடல், 21 : 18-28.
12. பரிபாடல், 21 : 39-45.
13. திருக்குறள், ஊடலுவகை, 10.
42

5. பாட்டும் பொருளும்
நளினத்துப் பிறவியை மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள் ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்.
-கடுவனிளவெயினனர். பரிபாடல், 5 ; 11-13.
ஆறு தலையுடனும் பன்னிரண்டு தோளுடனும் சூரியனுடைய எழுச்சியி னைப் போன்ற நிற அழகுடனும் தாமரைப் பூவின்கண் தோன்றிய தோற்றத்தை உடையை.
சேர்வார் நின்னிழல் நின்குண மெதிர்கொண்டோ ரறங்கொண்டோ ரல்லதை மன்குண முடையோர் மாதவர் வணங்கியோ ரல்லதை செறுதீ நெஞ்சத்துச் சின நீடி ஞேரும் சேரா வறத்துச் சீரி லோரும் அழிதவப் படிவத் தயரி யோரும் மறுபிறப் பில்லெனு மடவோருஞ் சேரார் நின்னிழ லன்னுே ரல்ல தின்னுேர் Giffourt j.....................
- கடுவனிளவெயினஞர்.
பரிபாடல், 5 : 71.78.
உயிர்களைக் கொல்லுகின்ற தீய நெஞ்சத்திற் சினத்தை உடையோரும், அறத்தின்கண் சேராத புகழில்லோரும், கூடா வொழுக்கத்தாற் சிதைந்த தவ விரதத்தையுடையோரும், இப்பிறப்பில் நுகர்ச்சியே உண்மை என்றும் மறுபிறப்பு இல்லை என்றும் கூறுவோரும் நின் தாள் நிழலை அடையார், நினது குணத்தை ஏற்கொண்டோராகிய அறங்கொண்டோ ரும், வீடு பெறுங் குணமுடையோருமாகிய மாதவரால் வணங்கப்பட்டோ ரும் நின்தாள் நிழலே அடைவர்.

Page 30
யாம் இரப்பவை
e sa a es e 9 * * * * e o யாஅ மிரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால் அருளு மன்பு மறனு மூன்றும் உருளிணர்க் கடம்பி ஞெலிதா ரோயே.
- கடுவனிளவெயினஞர் பரிபாடல், 5 : 78-81.
யாம் இரப்பவை நுகரப்படும் பொருள்களும் அவற்றை உளவாக்கும் பொன்னும் அவ்விரண்டானும் நுகரும் நுகர்ச்சியுமல்ல ; எமக்கு வீடு பயக்கும் நின்னருளும் அதனை உண்டாக்க நின்னிடத்து யாம் செய்யும் அன்பும் அவ்விரண்டாலும் வரும் அறமுமாகிய இம்மூன்றுமே !
கனவிற் ருெட்டது கைபிழையாகாது
அருவரைச் சேராத் தொழுநர் கனவிற் ருெட்டது கைபிழை யாகாது நனவிற் சேஎப்பநின் னளிபுனல் வையை வருபுன லணிகென வரங்கொள் வோரும் கருவயி றுறுகெனக் கடம்படு வோரும் செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்து வோரும் ஐயம ரடுகென வருச்சிப் போரும்.
- ஆசிரியன் நல்லந்துவஞர் பரிபாடல், 8 : 102-108.
பரங்குன்றத்தைச் சென்றுசேர்ந்து சேயது அடிமலரைத் தொழுது, யாம் எங் காதலரோடு அளவளாவியதாகக் கண்ட கனவு நனவில் எய்தி நீராடும் பொருட்டு, நினக்குரிய வையை நதி, புது வெள்ளத்தைப் பெறுக என்று வரங்கொள்வோரும், தமக்குக் கருப்பம் உண்டாக வேண்டும் என்று பல பொருள்களைக் காணிக்கையாகச் செலுத்துவோரும், தங் கணவருக்குப் பொருள் வாய்ப்பதாக என்று பிரார்த்தனை செய்வோரும், தங்கணவர் அவர் மேற்கொண்ட போரில் வெற்றி பெறுக என்று அருச்சிப்போருமாகத் தலைமகளிர் நின்றனர்.
44

தண்பரங்குன்றம்
உடம்புணர் காதலரு மல்லாருங் கூடிக் கடம்பமர் செல்வன் கடிநகர் பேண மறுமிடற் றண்ணற்கு மாசிலோ டந்த நெறிநீ ரருவி யசும்புறு செல்வ மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா தண்பரங் குன்ற நினக்கு.
- ஆசிரியன் நல்லந்துவஞர் பரிபாடல், ; 125-130.
பரங்குன்றமே 1 இங்ங்ணம் பிரியாத மகளிரும் மைந்தரும் ஏனைய வரம் வேண்டுவோரும் சேர்ந்து, நீலகண்டப் பெருமானுக்கும் உமாதேவி யாருக்கும் அவதரித்த திருக்குமரனுகிய கடம்பமர் செல்வன் கடிநகரை வழிபட்டு நிற்ப, செல்வத்துடனே மண்ணகம் வருந்தும்படி மழை அற்றுப் போயினும், அருவியானது நீர் மிக்கிருக்கும் செல்வம் நினக்கு நிலைபெற் றிருப்பதாக,
காதற் காமங் காமத்துச் சிறந்தது வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது காதற் காமங் காமத்துச் சிறந்தது விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி.
- குன்றம்பூதஞர். பரிபாடல், 9 : 13-15.
காமத்துச் சிறந்தது காதலையுடைய காமம் , அஃதாவது, மெய்யுற்றறி யாதார் இருவர், அன்பொத்துப் பான்மைவகையால் தாமே மெய்யுற்றுப் புணரும் புணர்ச்சி.
வியத்தகு குமர கற்பிணை நெறியூ டற்பிணைக் கிழமை நயத்தகு மரபின் வியத்தகு குமர வாழ்த்தினேம் பரவுதுந் தாழ்த்துத்தலை நினையா நயத்தலிற் சிறந்தவெம் மடியுறை பயத்தலிற் சிறக்க நாடொறும் பொலிந்தே.
- குன்றம்பூதனுர் பரிபாடல், 9 : 81 - 85.
45

Page 31
கற்புப் பொருந்திய நெறியுடைய தேவியரது அன்பு பொருந்திய ஊடலுரிமையை விரும்புகின்ற பண்புடைய குமர ! அன்புடைய யாம் நின் திருவடிக்கண் உறையும் செயல் நாடோறும் வளர்ச்சியுற்றுப் பயன் தந்து சிறக்கவென்று நின்னைத் தலைவணங்கி வாழ்த்தி வேண்டுகின் ருேம் ; அருள்புரிவாயாக !
வள்ளிப் பூ நயந்தோய்
சூர்மருங் கறுத்த சுடர்படை யோயே கறையில் கார் மழை பொங்கி யன்ன நறையி னறும்புகை நனியமர்ந் தோயே அறுமுகத் தாறிரு தோளால் வென்றி நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே பிறந்த ஞான்றே நின்னை யுட்கிச் சிறந்தோ ரஞ்சிய சீருடை யோயே இருபிறப் பிருபெய ரீர நெஞ்சத் தொருபெய ரந்தண ரறனமர்ந் தோயே.
- கேசவனுர்
பரிபாடல் : 14 : 18 - 28.
சூரபன்மாவைக் குலத்தோடு அழித்த வேற்படையை உடையோய் ! * கார் காலத்து வெண்மேகம் கிளர்ந்தாலன்ன நறிய அகில் முதலியவற்
ருற் புகைத்த நறும்புகையை மிகவும் விழைந்தோய் ! ஆறு திருமுகத்தையும் ஆறிரு தோளையும் உடையவனுய் வள்ளி என்னும் மலர் போன்ற மகளை விரும்பினுேய் ! * பிரிந்த கேளிர் (தலைவர்) வந்து புணர்ந்து,பின் நீங்காமைப் பொருட்டு மகளிர் யாழை வாசித்து நின்னைப் பாடுகின்ற பாட்டை விரும்பி னுேய் ! உனது திருவவதிாரத்தைக் கண்டு இந்திரன் முதலியோர் அஞ்சிய சிறப்புடையோய் ! * இரண்டு பிறப்பையும் அப்பிறப்பால் வந்த இரண்டு பெயரையும் அன்பு பொருந்திய நெஞ்சத்தையுமுடைய அந்தணர்களது அறத்தை விரும்பினுேய் !
46

வழிபடுதலின் பயன்
அன்னை யாகலி னமர்ந்தியா நின்னைத் துன்னித் துன்னி வழிபடு வதன்பயம் இன்னு மின்னுமவை யாகுக தொன் முதிர் மரபினின் புகழினும் பலவே.
- கேசவனுர்
பரிபாடல், 14 : 29 - 32.
நின்னை நாங்கள் சேர்ந்து அடுத்தடுத்து வழிபடுகின்ருேம் ; அங்ங்ணம் செய்வதன் பயணுகப் பின்னும் பின்னும் நின் புகழைக் காட்டிலும் பலவாக அவ்வழிபாடுகள் தாமே ஆகும்படி அருள்புரிவாயாக !
வேலன் கடிமரம் பரவினர்
தேம்படு மலர்குழை பூந்துகில் வடிமணி ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ விடையரை யசைத்த வேலன் கடிமரம் பரவின ருரையோடு பண்ணிய விசையினர் விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக் கோலெரி கொளைநறை புகைகொடி யொருங்கெழ மாலை மாலை யடியுறை யியைநர் மேலோ ருறையுளும் வேண்டுநர் யாஅர்.
- நல்லழிசியார் பரிபாடல், 17 : 1 - 8.
எரிபந்தம், இசைக்கருவிகள், சந்தனம் முதலிய வாசனைப் பொருள்கள், அகிற்புகை, கொடிகள் என்பவற்றை உடன்வருவார் கொண்டுவர, தாம் மலர்களையும் குழைகளையும் பூந்துகில்களையும் மணியினையும் வேலினையும் சுமந்துவந்து செவ்வேள் எழுந்தருளியிருக்கும் கடம்ப மரத்தைத் துதித்துப் பாடித் திருப்பரங்குன்றத்தின் அடியில் மாலைதோறும் பலர் உறைகின்றனர் ; அவர்களுள் எவர் தேவருலகத்து உறைதலை வேண்டு
suTif p
47

Page 32
கையூழ் தடுமாற்ற நன்று
தெய்வ விழவுந் திருந்து விருந்தயர்வும் அவ்வெள் ளருவி யணிபரங் குன்றிற்கும் தொய்யா விழுச்சீர் வளங்கெழு வையைக்கும் கொய்யுளை மான்றேர்க் கொடித்தேரான் கூடற்கும் கையூழ் தடுமாற்ற நன்று.
- நல்லழிசியார் பரிபாடல், 17 : 42 - 46
பிரிந்த தலைவர் வினைமுடித்துக் கடிதின்வந்து கூடுதற்கு வெள்ளருவியை அணிந்த பரங்குன்றத்திலே தலைவியர் செய்கின்ற தெய்வ விழாவும், அங்ங்ணம் கூடிய வழிக்கெடாத விழுப் புகழுடைய வளங்கெழு வையையின் கண்ணும், ஏனையோர் கொய்யுளைமான்றேராற் சூழப்பட்ட கொடித் தேரையுடையான் கூடற்கண்ணும் அவர் செய்யும் விருந்தயர் வும் தம்மிற் காரண காரியங்களாய்த் தடுமாறி வருதல் இல்லற நெறியாதலின் அவர்க்கு நல்லலொழுக்கமாயிற்று.
குன்றம் பாடுதுந் தொழுதும்
மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடிப் பிணிமுக மூர்ந்த வெல்போ ரிறை. பணியொரீஇ நின்புக ழேத்தி அணிநெடுங் குன்றம் பாடுதுந் தொழுதும் அவை, யாமுமெஞ் சுற்றமும் பரவுதும் ஏம வைகல் பெறுகயா மெனவே.
- நல்லழிசியார் பரிபாடல், 17 : 48 - 53.
மணிநிற மயிலையும் சேவற் கொடியையும் உடைய முருக ! யானையின் மேல் இவர்ந்து போர்செய்து வெல்லுந் தலைவ ! பிறவித் துன்பம் சேராத இன்பம் நிறைந்த நாட்களை யாம் பெறுவோமாக என்று வேண்டி யாமும் எம் சுற்றத்தாரும், மக்களைப் பணிந்தொழுகாமல், நின் புகழையே ஏத்தி நின் பரங்குன்றத்தைப் பாடித் தொழுகின்ருேம். அருள் புரிவாயாக !
48

மாதபுத்த வேலோய் நீர்நிரந் தேற்ற' நிலந்தாங் கழுவத்துச் சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்நின் சீர்நிரந் தேந்திய குன்ருெடு நேர்நிரந் தேறுமா றேற்குமிக் குன்று. 8
- குன்றமபூதனுT பரிபாடல், 18 : 3 - 6. அசுரர்களுடைய படை வலியான் உண்டான பெருமிதம் கெடுமாறு கடலின்கண்ணே புக்கிருந்த சூரபன்மனுகிய மாமரத்தை அழித்தோய். நீ விரும்புகின்றதன் காரணமாக, இத்திருப்பரங்குன்றம் நின்னைப் பெற்ற இமயத்தைப் போலப் புகழ்பெற்றது.
செருவேற்றனைச் செல்வ புரியுறு நரம்பு மியலும் புணர்ந்து சுருதியும் பூவஞ் சுடருங் கூடி எரியுரு கதிலோ டாரமுங் கமழும் செருவேற் றனைச் செல்வநின் னடியுறை உரிதினி னுறைபதிச் சேர்ந்தாங்குப் பிரியா திருக்கவெஞ் சுற்றமோ டுடனே.
- குன்றம்பூதனுர். பரிபாடல், 18 : 51-56, செருவேற்ருனைச் செல்வ ! யாழோசையும் இயற் பாட்டுக்களும் பொருந்தி வேதவொலியும் உபசாரமாகிய பூவும் தீபமுங் கூடி, எரியின் கண் உருகுகின்ற அகிலும் சந்தனமும் தூபமாய் நின் திருவடிக்கண் கமழா நின்றது. அந்த நின் திருவடிக்கீழ் எமக்குரிய இருப்பிடத்தைச் சேர்ந்தாற் போல எம் சுற்றத்தாரோடு உறைதலை நீங்காதிருக்க அருள்புரிவாயாக !
மயிற்கொடி வதுவை நிலவரை யழுவத்தான் வானுறை புகறந்து புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந் தருமுனி மரபி ஞன்றவர் நுகர்ச்சிமன் இருநிலத் தோரு மியைகென வீத்தநின் தண்பரங் குன்றத் தியலனி நின்மருங்கு சாறுகோ டுறக்கத் தவளோடு மாறுகொள் வதுபோலு மயிற்கொடி வதுவை.
- நப்பண்ணணுர். பரிபாடல், 19 : 1-7.
செவ்வேளே ! தேவலோகத்தில் நீ எழுந்தருளியிருப்பது போலவே இம் மண்ணுலகத்திலும் எழுந்தருளியிருக்கத் திருவுளங் கொண்டனை. அறி
49

Page 33
வெல்லையால் அறியப்படாத கடம்பினை மேவித் தேவர்கள் பெறுகின்ற இன்பத்தை மண்ணுலகத்தில் மக்களும் அடைகவ்ென்று திருப்பரங் குன்றத்தின் கண்ணே வள்ளிநாய்ச்சியாரை மணம்புரிந்தருளினை. அவ் வாறு திருமணஞ் செய்து கொண்டமை வானுலகத்தில் தேவயானையை மணப்பதற்கு மாருக இம்மண்ணுலகத்திலே நீ மேற்கொண்ட செயல் போலும் !
கடம்பம ரணிநிலை பகர்ந்தேம் உடையு மொலியலுஞ் செய்யைமற் றங்கே படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும் உருவு முருவத்தீ யொத்தி முகனும் விரிகதிர் முற்ற விரிசுட ரொத்தி எவ்வத் தொவ்வா மாமுத றடிந்து தெவ்வுக் குன்றத்துத் திருந்துவே லழுத்தி அவ்வரை யுடைத்தோய்நீ யிவ்வரை மருங்கிற் கடம்ப்ம ரணிநிலை பகர்ந்தேம் உடங்கம ராயமொ டேத்தினந் தொழுதே.
- நப்பண்ணணுர். பரிபாடல், 19 : 97-105. நின் ஆடையும் மாலையும் சிவந்த நிறமுடையன. அவ்வாறே நினது வேலாயுதமும் பவழக்கொடியைப் போன்ற நிறத்தை உடையது. நின் திருவுருவமும் எரிகின்ற தீயின் நிறத்தைப் போன்றது. உனது திருமுகம் இளங் கதிரவனின் விரிசுடரை ஒத்தது. உலக மக்களுக்குக் கொடுமை களைச் செய்த சூரபன்மன் ஆகிய மாமரத்தைத் தடிந்தோய் ! கிரெளஞ்ச மலையில் வேலைச் செலுத்தி அம்மலையை உடைத்தோய் ! இக்குன்றத்திற் கடம்ப மரத்தின்கண் விரும்பிப் பொருத்திய நின் நிலையை உடன்மேவிய சுற்றத்தாரோடு துதித்துத் தொழுது வாழ்த்தினுேம் : அருள் செய்வா uTds -سی۔ . . --س-
செல்வ நிற்றெழுது குன்றத் தடியுறை யியைகெனப் பரவுதும் வென்றிக் கொடியணி செவ்வநிற் றெழுது,
- நல்லச்சுதஞர். பரிபாடல், 21 : 16-17. வென்றிக் கொடியணி செல்வனுகிய நின்னைத் தொழுது, இக் குன்றத்து அடியின்கண் உறைதல் மறுபிறப்பினும் இயைகவென்று பரவுகின்ருேம்.
50

இன்றுபோல் இயைகெனப் பரவுதும்
மாறம ரட்டவை மறவேல் பெயர்ப்பவை ஆறிரு தோளவை யறுமுகம் விரித்தவை நன்றம ராயமோ டொருங்குநின் னடியுறை இன்றுபோ லியைகெனப் பரவுதும் ஒன்ருர்த் தேய்த்த செல்வநிற் ருெழுதே.
- நல்லச்சுதஞர் பரிபாடல், 21 : 66-70. பகைவரைப் போரின்கண்ணே அழித்த வேலாயுதத்தை உடையை. ஆறிரு தோள்களுடனும் ஆறு திருமுகத்துடனும் விளங்குவை பகை வரை அழித்த செல்வ எமது சுற்றத்தார்களுடன் நின் திருவடிக்கீழ் உறைதல் இன்றுபோல என்றும் எமக்கு இயைவதாக என்று உன்னை வேண்டித் துதிக்கின்ருேம். அருள்புரிவாயாக !
5.

Page 34

ཡོད། །
4.
s
---
--
--
s
S.
"AH
リ Wraxars
钦。纷*烈
ീട
酶曼
ܒܚܫܝ
墅。
I
Ź
A /ހ ... “ށ ’
W ീ S -g
《 촌수손을을 དེ་ N་
*測豐
多 β
أمير
ޑޮލަކަ%(
(čo ○s月ー seas
நிறைவயின் வழாஅது நிற்கு லினரே நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப்
பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்.
பரிபாடல், 5 : 46-49.

Page 35

6. செவ்வேள் (ஐந்தாம் பாடல்)
பாடியவர் வரலாறு
பரிபாடலிலுள்ள ஐந்தாம் பாடலைப் பாடியவர் கடுவனிளவெயினனர். மூன்ரும் நான்காம் பாடல்களையும் பாடியவர் இவரே. மூன்ரும் பாடலும் நான்காம் பாடலும் திருமாலுக்குரியவை. முருகக் கடவுளையும் திருமாலை யும் பாடியுள்ளமையால் அக்கடவுளரிடத்து இவர் நிறைந்த பத்தியுடை யார் என்பது தெரியவருகின்றது.
கடுவனிளவெயினஞர் செவ்வேள்மேற் பாடியருளிய ஐந்தாம் பாடல் பல அமிசங்களாற் சிறப்புடையது. முருகப் பெருமானுடைய திருவவதா ரம் இப்பாடலில் விளக்கமாக விபரிக்கப்பட்டுள்ளது. இந்திரன் முதலிய தேவர்களை வென்று மயில், கோழி முதலியவற்றைப் பெற்ற வரலாறும் வருணிக்கப்பட்டுள்ளது. வேற்படையாற் கிரெளஞ்சத்தை உடைத்து வழியுண்டாக்கியமையும், பிணிமுகம் என்னும் யானைமேற் சென்று கடலிற் சூர்மாவைத் தடிந்தமையும் இப்பாடலில் இடம்பெறுகின்றன. இன்னும், வெறியாட்டுச் செயல், சிவபெருமான் திரிபுரம் எரித்தமை என்பனவும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன.
இப்புலவர் திருமாலையும் முருகக் கடவுளையும் பாடிப் பரவியுள்ளமை யாற் பரிபாடற் காலத்தில் வைணவர், சைவர் என்ற வேறுபாடின்றி மக்கள் பலர் வாழ்ந்து இரு கடவுளரையும் வழிபட்டு வந்தனர் என்பது இனிது புலனுகின்றது.
இந்த ஐந்தாம் பாடலில் வரும் இறுதி அடிகள் உயர்ந்த கருத்தை உலகத்துக்கு எடுத்துக் கூறுவனவாகும் :
8 யாஅ மிரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால் அருளு மன்பு மறனு மூன்றும் உருளினர்க் கடம்பி ஞெலிதா ரோயே.
முருகப் பெருமான்மேற் கடுவனிளவெயினஞர் கொண்டுள்ள பேரன்பை இவ்வடிகள் இனிது புலப்படுத்துகின்றன.

Page 36
இப்புலவரின் பெயர் ஒரு பிரதியிற் கடுவனிளவெயிஞர் என்று காணப்படுகின்றது.
கண்ணனுகஞர் என்பவர் இப்பாடலுக்கு இசை அமைத்துள்ளார். இவரின் பெயரைக் கண்ணகளுகளுர், கண்ணுகஞர், கண்ணகஞர் எனப்
பலவாறு குறிப்பிடுவர்.
56

பாடலின் பொருட்சுருக்கம் ஆறு திருமுடிகளை உடைய பெருமானே! பிணிமுகமென்னும் யானையின்மேல் எழுந்தருளி வேலாயுதத்தாற் கிரெளஞ்ச மலையை ஊடறுத்தனே!
பெருமானே ! ஆறு தலைகளுடனும் பன்னிரண்டு தோள்களுடனும் வண்ண அழகுடனும் தாமரைப் பூவின்கண் தோன்றிய தோற்றத்தை நீ உடையை, “ சங்காரக் கடவுளின் மகனே 1 செவ்வேளே ! சால்பினை உடையோய் ! தலைவனே. 1" என்று வெறியாட்டில் வேலணுகிய படிமத் தான் ஏத்துகின்ற வெறிப்பாட்டும் உள; இவ்வுலகத்துக்கெல்லாம் நீயே தலைவனுதலின் அவ்விடத்து அவன் கண்டு ஏத்துகின்ற அப்பாட்டுக்கள் மெய்யல்ல ; ஆயினும் அப்பாடல்களுக்கு நீ அங்கு வெளிப்படுதலால் அவை பொய்யுமல்ல ; அவன் ஏத்துவனவற்றுள் ஒன்ருகியவழி, தலை மைச் சிறப்பினையுடைய நீ அச்சிறப்பின்றி நிற்பாய் ; ஆயினும், நல்வினையாற் சிறப்புடைய உயர் பிறப்பினராதலும், தீவினையால் இழி பிறப்பினராதலும் நின் ஆணைக்கண்ணது ; ஆதலின் அச்சிறப்பு நினக்கு என்றும் உரியது.
நான்கு வேதங்கள் என்ற குதிரைகளைப் பூட்டிய பூமியாகிய தேரை, நான்முகளுகிய பாகன் செலுத்தினன். அந்தத் தேரிலே இவர்ந்து நாகத்தை நாணுகவும், மலையை வில்லாகவும் கொண்டு திரிபுரங்களை ஒர் அம்பினுல் அழியும்படி சிவபெருமான் எய்தான். அப்பெருமான் அமரர் களுடைய வேள்விப் பாகத்தை உண்டவன்; பசிய கண்ணை உடையவன். இவ்வகை இயல்புகளை உடைய இறைவன், உமாதேவியாரோடு இன்புறுகையிற் கரு உண்டானது ; அந்தக் கருவை இந்திரனுடைய வேண்டுகோளுக்கு இணங்கிப் பலவாகச் சேதித்தருளினுன். சேதித்த அக்கருவை, முனிவர்கள் எழுவரும் பெற்றுத் தீ மூட்டி, அந்தத் தீயிலே அவியோடு அதனைப் பெய்தனர் ; பின்னர் அருந்ததியொழிந்த ஏனையவ ராகிய கார்த்திகை மாதர் அறுவரும் உண்டு கருப்பங் கொண்டனர் ; சரவணப் பொய்கையிலே தாமரைப் பூவாகிய பாயற்கண்ணே நின்னைப் பெற்றெடுத்தனர்.
பெருமானே ! அவ்வாறு நின்னைப் பெற்றெடுத்தவன்றே இந்திரன் கோபம் கொண்டான் ; தனது வச்சிராயுதத்தால் எறிந்தான். அப்போது நீ ஆறு வேறு உருவமாகி, பின்னும் ஒருவனுயினை.
குழவிப் பருவத்தில், ஒருநாள் படைக்கலம் ஏதுமில்லாமலே இந்திர னுேடு விளையாட்டாகப் போரிட்டன. அப்போரிலே படைக்கலமில்லாத நின் கைக்கு இந்திரன் தோல்வியடைந்தான். அதனைக் கண்ட
57

Page 37
அக்கிணிதேவன், "இவனே நம் சேனைத் தலைவன் " என்று சேவலை நினக்குத் தந்தான். இந்திரன் மயிலைக் கொடுத்தான். யமன் வெள்ளாட்டு மறியைத் தந்தான். அங்ங்ணம் அவரும் பிறரும் தந்த மறி, மயில், சேவல், வில், மான், வாள், ஈட்டி, கோடரி, மழு, கனலி, மாலை, மணி ஆகியவற்றைப் பன்னிரண்டு திருக்கரங்களிலுந் தாங்கி இளமைப் பருவத்திலேயே தேவர் சேனைக்குத் தலைவனுயினை !
இந்திரனது புகழ்வரம்பைக் கடந்தோய் ! பூங்கொத்தையுடைய கடம்ப மலர் மாலையை அணிந்தோய் ! சினமுடையோரும், அறஞ் செய்யாதவரும், கூடாவொழுக்கத்தால் அழிந்த தவ விரதத்தினரும், இப்பிறப்பின் நுகர்ச்சியே உண்மை என்றும் மறுபிறப்பு இல்லை என்றும் கூறுகின்ற மடவோரும் நின் தாள் நிழலைச் சேரார். நினது குணத்தை ஏற்றுக்கொண்டோரும் வீடுபெறும் குணமுடையோராகிய மாதவரால் வணங்கப்பட்டோரும் நின் தாள் நிழலை அடைவர். ஆதலால் நின்னை யாம் இரந்து வேண்டுவன பொருளும், அப்பொருளைப் பெறுவதற்குக் காரணமாகிய பொன்னும், இவ்விரண்டாலும் நுகரும் நுகர்ச்சியுமல்ல. எமக்கு வீடு பயக்கக்கூடிய நின் அருளும், அந்த அருளைப் பெற நின்னிடத்தே செய்யும் அன்பும், அந்த அருளினுலும் அன்பினுலும் பெறக்கூடிய அறமும் ஆகிய மூன்றையுமே நின்னிடம் வேண்டுகின்ருேம். அருள் செய்வாயாக !
58

பாடல்
98: பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச் சேயுயர் பிணிமுக மூர்ந்தம ருழக்கித் தீயழ றுவைப்பத் திரியவிட் டெறிந்து நோயுடை நுடங்குசூர் மாமுத றடிந்து 5 வென்றியின் மக்களு ளொருமையொடு பெயரிய
கொன்றுண லஞ்சாக் கொடுவினைக் கொஃறகை மாய வவுணர் மருங்கறத் தபுத்தவேல் * நாவலந் தண்பொழில் வடபொழி லாயிடைக் குருகொடு பெயர்பெற்ற மால்வரை *யுடைத்து 19 மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை
மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள் ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்
சால்வ தலைவவெனப் பேஎ விழவினுள்
பாடபேதம் :
1. நுணங்குசூர், 3. வல்லவுனர். 2. கொதிவினை. 4. யுடைத்தம்மலை.
5. நிறத்ததை.
*४४
இறைவன் உமையை வதுவை செய்து கொண்ட நாளிலே இந்திரன் சென்று நீபுணர்ச்சி தவிர வேண்டுமென்று வேண்டிக்கொள்ள அவனும் அதற்கு உடம்பட்டு அது தப்பாளுகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுப்ப அதனை இருடிகள் உணர்ந்து அவன் பக்கனின்றும் வாங்கித் தமக்குத்தரித்தல் அரிதாகையிஞலே இறைவன் கூருகிய முத்திக்கட்பெய்து அதனைத் தம் மனேவியர் கையிற் கொடுப்ப அருந்ததி யொழிந்த அறுவரும் வாங்கிக்கொண்டு விழுங்கிச் சூன்முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பதுமப்பாயலில்ே பயந்தாராக, ஆறு கூருகி வளர்கின்ற காலத்து இந்திரன் தான் இருடிகளுக்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டுவந்து வச்சிரத்தான் எறிய அவ்வாறு வடிவுமொன்ருய் அவனுடனே பெர்ருது அவனைக் கெடுத்துப் பின் சூரபன்மாவைக் கொல்லுதற்கு அவ்வடிவம் ஆருகிய வேறுபட்ட கூற்ருலே மண்டிச் சென்றதென்று புராணம் கூறிற்று. இதனே, " பாயிரும் பனிக்கடல் " என்னும் பரிபாடற்
பாட்டானுணர்க " என்பதும், " அங்ங்ணம் அங்கியின்கணிட்டுச் சத்தி குறைந்த கருப்பத்தை முனிவரெழுவரும் வாங்கித் தம் மனைவியர்க்குக் கொடுப்ப அருந்ததியொழிந்தோர் விழுங்கிச் சூன்முதிர்ந்து சரவணப்பொய்கையிற் பதுமப்பாயலிலே பெற ஆறு வடிவாக வளர்ந்தமை கூறிற்று. . . . இது பரிபாடலிற் பாயிரும் பணிக்கடல் ' என்னும் பாட்டானுணர்க " என்பதும்
திருமுருகாற்றுப்படையில்,38, 255 -ம் அடிகளிள் விசேடவுரை ந.
59

Page 38
15
2O
25
30
35
40
வேல னேத்தும் வெறியு முளவே அவை, வாயு மல்ல பொய்யு மல்ல
நீயே வரம்பிற்றிவ் வுலக மாதலிற் சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை சிறப்பினு *ளுயர்பாகலும் பிறப்பினு “ளிழிபாகலும் ஏனுேர்நின் வலத்தினதே ஆதி யந்தண னறிந்து பரி கொளுவ வேத மாபூண் வையத்தே ரூர்ந்து நாக நாணு மலைவில் லாக மூவகை, ஆரெயி லோரழ லம்பின் முளிய மாதிர மழலவெய் தமரர் வேள்விப் பாக முண்ட பைங்கட் பார்ப்பான் உமையொடு புணர்ந்த காம வதுவையுள் அமையர்ப் புணர்ச்சி யமைய நெற்றி
இமையா நாட்டத் தொருவரங் கொண்டு விலங்கென விண்ணுேர் வேள்வி முதல்வன் விரிகதிர் மணிப்பூ ணவதற்குத்தா னித்த தரிதென மாற்ருன் வாய்மைய ஞதலின் எரிகனன் றனக் குடாரி "கொண் டவனுருவு திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக் *கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசே யாக்கை நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து வசித்ததைக் கண்ட மாக மாதவர் மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற் சாலார் தானே தரிக்கென வவரவி உடன்பெய் தோரே யழல்வே ட்டவ்வவித் 19 தடவுநிமிர் முத்தீப் பேணிய 11மன் னெச்சில் வடவயின் 12விளங்கா லுறையெழு மகளிருட்
கடவு ளொருமீன் சாலினி யொழிய
பாடபேதம் :
1. வரம்பிற்றுலக. 7. கொண்டதன், கொண்டதைத் 2. ரூயர்வா. 8. கருவேற்று. 3. Oழிவா. 9. தரிக்கென வலியுடன் பெய்தோர். 4. பரிக்கொளுவ, 10. தடவுநிறை. 5. யமைக்க, 11. மனெச்சில், மானெச்சில், 6. மாற்ருதுவாய்மையதஞல். 12. விளங்கிற்ருல்.
60

45
50
55
60
65
70
அறுவர் மற்றையோரு மந்நிலை யயின்றனர் மறுவறு கற்பின் மாதவர் மனைவியர் நிறைவயின் வழாஅது நிற்கு லினரே நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப் பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயற் பெரும்பெயர் முருகநிற் பயந்த ஞான்றே அரிதமர் சிறப்பி னமரர் செல்வன் எரியுமிழ் வச்சிரங்கொண் டிகந்துவந் தெறிந்தென அறுவேறு துணியு மறுவ ராகி ஒருவனை வாழி யோங்குவிறற் சேஎய் ஆரா வுடம்பினி யமர்ந்துவிளை யாடிய
*போரால் வறுங்கைக்குப் புரந்தர னுடைய அல்லலி லணலன் றன்மெய்யிற் பிரித்துச் செல்வ வாரணங் கொடுத்தோன் வானத்து வளங்கெழு செல்வன்றன் மெய்யிற் *பிரித்துத் திகழ்பொறிப் பீலி யணிமயில் கொடுத்தோன் திருந்துகோன் ஞமன்றன் மெய்யிற் பிரிவித் திருங்கண் “வெள்யாட் டெழின்மறி கொடுத்தோன் ஆஅங், கவரும் பிறரு மமர்ந்துபடை யளித்த மறியு மஞ்ஞையும் வாரணச் சேவலும் பொறிவரிச் சாபமு மானும் வாளும் செறியிலை யீட்டியுங் குடாரியுங் கணிச்சியும் தெறுகதிர்க் கனலியு மாலையு மணியும் வேறுவே றுருவினிவ் வாறிரு கைக்கொண்டு
மறுவி 'றுறக்கத் தமரர்செல் வன்றன் பொறிவரிக் கொட்டையொடு புகழ் வரம் பிகந்தோய் நின்குண மெதிர்கொண்டோ சீரறங்கொண்டோ ரல்லதை மன்குண முடையோர் மாதவர் வணங்கியோ ரல்லதை செறுதி நெஞ்சத்துச் சின "நீடி னேரும் சேரா வறத்துச் சீரி லோரும்
பாடபேதம் :
1. செல்வன்றன். 8. உருவினவ்வாறிரு உருவினவாறிரு. 2. மறுவராகிய, 7. துறக்கத்தவமரர். 3. போரார்வறுங்கைக்கு. 8. வரம்பிறந்தோய். 4. பிரிவித்து. 9. ரறங்கேட்டோர். 5. வெளியாட்டு, 10. நீட்டிளுேருஞ்.
61.

Page 39
75 1 அழிதவப் படிவத் தயரி யோரும்
மறுபிறப் பில்லெனு மடவோருஞ் சேரார் நின்னிழ லன்ஞே ரல்ல தின்ஞேர் 2சேர்வா ராதலின் யாஅ மிரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால் 80 அருளு மன்பு மறனு மூன்றும்
உருளினர்க் கடம்பி ஞெலிதா ரோயே.
பாடியவர் : கடுவனிளவெயினஞர். இசையமைத்தவர் : கண்ணனுகஞர்* பண் : பாலையாழ்.
பாடபேதம் :
1. பழிதவப். 2. சேர்வர்நின்னிழலாதலின்.
3. கண்ணக்ஞகளுர், கண்ணுகஞர், கண்ணகஞர்.
62

பரிமேலழகருரை 1. பரந்த கரிய குளிர்ச்சியையுடைய கடலை இடையிற் பாறைகள் பிதிர்ந்து துகள்படப் புக்கு.
2. சேயுயர்- மிக உயர்ந்த, பிணிமுகம்- முருகற்குரித்தாகிய யானே.
3-4. தீயின்கொழுந்து ஒலிப்பத் திரித்துவிட்டெறியப்பட்டு அச்சத் தையுடையணுதலால் நடுங்குகின்ற சூர்மாவினது முதலையறுத்து.
திரித்தென்பது திரியவெனத் திரிந்துநின்றது. விட்டெறிந்தெனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது.
மாவென்னும் பெயரொப்புமைபற்றி ‘முதறடிந்து' என்ருர், 5-7. வென்றியுடைமையாற் புண்ணியசனம் பாவசனமென்று இருகூருய மக்களுட் புண்ணியசனமென ஒரு கூற்ருற் பெயர்பெற்ற அவுணர்.
அஃது அவர்க்குப் பெயர் மாத்திரமே யென்றற்குக் கொன்றுணலான் வரும் பாவத்திற்கு அஞ்சாதவென்ருர்,
தீவினையினையும் கொல்லப்படும் தகைமையினையுமுடைய மாயத்தை வல்ல அவுணரென்க.
அவரைக் கிளையறக் கொன்ற வேலால். விட்டெறிந்து (3) தடிந்து (4) தபுத்தவேல் (7) என்க. 8-10. நாவலந்தீவினுள் வடகூற்றிற் கெளஞ்சமென்னும் மால்வ ரையைத் துளைத்து அதனை வழிப்படுத்தின ஆறு மென்றலையினையுடை யாய் !
ஈண்டுக் குருகென்றது அன்றிலை, அதற்கு வடமொழிப்பெயர் அதுவாதலின், "குருகொடு பெயர்பெற்ற மால்வரை" என்ருர், வழிப்படுத் துதல்-வழிக்கண் நிகழும் இயக்கத்தை அதன்கண் நிகழ்வித்தல். குழவிப் பருவத்து இவ்வீரமெல்லாம் செய்தாயென்னுங் கருத்தால், கயந்தலை' என்ருர்,
10. கயந்தலையென்பது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித்தொகை, அஃது ஈண்டு ஆகுபெயராய் அண்மைவிளி ஏற்று நின்றது.
11-2. மூவிரு கயந்தலையுடனும் முந்நான்கு முழவுந்தோளுடனும் ஞாயிற்றின் எழுச்சிபோலும் நிறவழகுடனும் தாமரைப் பூவின்கட் பிறந்த பிறப்பையுடையை.
63

Page 40
13. உலகத்தை அழிக்கும் கடவுட்கு மகனே !
14. சால்வ-சால்பினையுடையாய் !
14-5. நீ வெளிப்படுதலிற் கண்டார்க்கு அச்சஞ்செய்யும் வெறி யாட்டு விழவினுள் வேலன்கண்டு இவ்வாறு சொல்லி ஏத்தும் வெறிப் பாட்டும் உள.
15. வெறி: ஈண்டு ஆகுபெயர்.
16-21, இவ்வுலகிற்கெல்லாம் தலைவன் நீயேயாகலான் அவ் விடத்து அவன்கண்டு ஏத்துகின்ற அப்பாட்டுக்கள் மெய்யுமல்ல ; ஆயினும் நீ வெளிப்படுதலான் அவை பொய்யுமல்ல ; அவற்றுள் ஒன்ருயவழி அத்தலைமைச் சிறப்பினையுடைய நீ அச்சிறப் பின்றி ஒழிகுவை ; நின்னையொழிந்தார் நல்வினையாற் சிறப்புடைய உயர்பிறப்பினராதலும் தீவினையால் இழிபிறப்பினராதலுமாகிய இது நின்னுணைக்கண்ணது ; ஆதலின், அச்சிறப்பு நினக்கு ஒருகாலும் ஒழியாது ; அதனுல் அவற்றுள் ஒன்ருகாது.
22-54. நான்முகளுகிய பாகன்கொளுவுமாறறிந்து செலவினைக் கொளுவ வேதங்களாகிய குதிரை பூண்ட பூமியாகிய தேரையேறி வாசுகி நாணுக இமயம் வில்லாக வெள்ளி பொன் இரும்பென்னும் மூவகையையு முடைய அரிய மதில்கள் ஒரு தீயாகிய அம்பாலே வேவ அவற்றைத் திசைகள் வெதும்ப எய்து அமரர்க்குச் செய்யும் வேள்விக்கண் அவிப்பாகத்தையுண்ட கோபத்தாற் பசிய கண்ணையுடைய ஈசன் உமையோடு புணர்ந்து காமத்தை நுகர்கின்ற வதுவைநாளின்கண் அமையாத புணர்ச்சியை ஒருகாலத்து அமைந்தானுக, நெற்றிக்கண் இமையா நாட்டத்தையுடைய அவன் பக்கலிலே இந்திரன் ஒரு வரத்தைக் கொண்டு " இந்தப் புணர்ச்சியாற்ருேன்றிய கருவை அழிப்பா யாக ' என, மழுப்படையைத் தரித்தவன் வாய்மையணுதலின், அவ்விந்தி ரனுக்குத் தான் கொடுத்த வரத்தைச் செய்தற்கு அரிதென மாற்ருதே இவ்வுலகேழும் தன் மெய்ம்மையை வியக்க அதனுருவைப் பல கண்ட மாகச் சேதித்தான் ; அங்ங்ணம் சேதித்தலாற் கழிந்த சேயாக்கையாதற்கு உரிய கருவை இஃது, அமரர் சேனைக்குத் தலைவனும் ' எனச்சமாதியா னுணர்ந்து (?) இந்திரனுக்கிரதம் வாராமை கூறி அவன் பக்கலிலே பெற்றுக்கொண்டுபோன தெய்வ முனிவர்கள் எழுவரும் இறைவன் கண்டமாக வசித்ததாகிய வசிதடியை நம் மனைவியர் தரித்துச் சமைவிப்பாராயின் நிறைவயிற்சாலார்; அதனுல் அங்கியாகிய தானே தரிக்கவென வெண்ணி, அம்மாதவர் அழலைவேட்டு அதன் கண்
64

அவியுடன்ே பெய்தார்; பெய்ய, அவ்வவியோடு குண்டங்களில் நிமிர்ந்த முத்தீக்கொள்ளுதலால், புரோடாசமாகிய அதனை வானத்து வடவயினு றைகின்ற மகளிர் எழுவருட் கடவுட் கற்பினையுடைய ஒரு மீனுகிய அருந்ததியொழிய விளங்குகின்ற கார்த்திகையாகிய அறுவரும் அப் பொழுதே அயின்ருர் : அயின்றும் தம் கணவர் வேண்ட அயின்ற புரோடாசமாதலால் மறுவற்ற கற்பினையுடைய அம்மாதவர் மனைவியர் நிறையுடைமையின் நீங்காதே நின்னைச் சூற்கொண்டார் ; கொண்டு பின் இமயத்துச் சரவணமென்னுஞ் சுனையில் தாமரைப் பூவாகிய பாயற் கண்ணே ஒருங்கு பெற்ருரென்று பெளராணிகர் சொல்லுவர் ; முருகா ! அவ்வாறு நின்னைப்பெற்ற அன்றே இந்திரன் இகன் மிகுதியான் முனிவர்க்குத் தான் கொடுத்த வரத்தைக்கடந்து வந்து வச்சிரத்தைக் கொண்டெறிந்தானுக, முன் அறுவேருகிய துணியும் அறுவராய்ப் பின்னும் ஒருவனுயினை.
30. நாட்டத்தையுடையவனை ஆகுபெயரால் ' நாட்டம் ' என்ருர், 31. வேள்விகளைச் செய்த விண்ணுேர் முதல்வனென்க. 37. மனத்தினை ஒன்ருக்கி நுண்ணியதாகக் காண்டலாதலிற் சமாதி நொசிப்பு ' எனப்பட்டது.
43. ஆரலென்னும் பெயர், ஆலெனக் குறைந்து நின்றது. 48. நீலப் பூக்களையுடைய பசிய சுனை. 55-70. குழவிப் பருவத்தையாகலான் வளரா உடம்பினையுடைய நீ மேவி விளையாடிய போரின்கண் வறுங்கைக்கு இந்திரன் உடைதலால் இவ்வாற்றலுடைய இவனே இனி நம் சேனைக்குத் தலைவனெனக் கருதி அங்கி கோழியைத் தந்தான் ; அவ்விந்திரன் மயிலைத் தந்தான் ; யமன் வெள்ளாட்டு மறியைத் தந்தான் ; அவ்வாற்ருன், அவரும் பிறருமுவந்து தத்தம் மெய்யின் வாங்கிப் படையாகத் தந்த மறி முதல் மணியீருகச் சொல்லப்பட்ட வேறு வேறு உருவினவாகிய இவற்றை ஆறிருகையினுங் கொண்டு அத் தாமரைக் கொட்டையிற் பெயரமாட்டாத அப்பருவத்தே அமரர் சேனைக்குத் தலைவனுயினமையின் அவர்க்கு அரசனுகிய இந்திர னது புகழ் வரம்பைக் கடந்தோய் ! 62. இருங்கண்-கரிய கண். 58, 60, 62. கொடைச்சொல் முன்னிலைக்கண் வழுவமைதியாய்
மா?ல-பாசம்.
68. ஆறிருகையினுமென்னும் முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.
65

Page 41
71-80. நினது குணத்தை ஏற்றுக்கொண்டோராகிய அறங் கொண்டோரல்லது வீடுபெறுங் குணமுடையோராகிய மாதவரால் வணங்கப்பட்டோரல்லது உயிர்களைச் செறுகின்ற தீயநெஞ்சத்துச் சினத்தையுடையோரும் அறத்தின்கட் சேராத புகழில்லோரும் கூடா வொழுக்கத்தால் அழிந்த தவவிரதத்தையுடையோரும் இப்பிறப்பின் நுகர்ச்சியேயுள்ளது மறுபிறப்பு இல்லையென்னும் மடவோருமாகிய இவர் நின் தாள்நிழலை அடையார் ; அத்தன்மையோரல்லது இத்தன்மையோர் நின் தாள்நிழலை அடைவர்; ஆதலான், நின்னை யாம் இரப்பவை நுகரப்படும் பொருள்களும் அவற்றை உளவாக்கும் பொன்னும் அவ் விரண்டானும் நுகரும் நுகர்ச்சியுமல்ல ; எமக்கு வீடுபயக்கும் நின் னருளும் அதனை உண்டாக்க நின்னிடத்து யாம் செய்யும் அன்பும் அவ்விரண்டானும் வரும் அறனுமாகிய இம்மூன்றுமே.
81. ஒலிதார்-தழைத்த தார்.
66

اللت کر گھ%//
谤议。只 کھینچے
NA
S.
-i.
s m 豪芬
Sട്ട് e (NWNస్ట్
Z
S.
S. 纥厥 骏 ܛܓܰ SB 意。 حشلسلے
ܫܬܐܝܝ Z80s
உடம்புணர் காதலரு மல்லாருங் கூடிக் கடம்பமர் செல்வன் கடிநகர் பேண மறுமிடற் றண்ணற்கு மாசிலோ டந்த நெறிநீ ரருவி யசும்புறு செல்வ மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா தண்பரங் குன்ற நினக்கு.
பரிபாடல், 8 : 1.25-130.

Page 42

7. செவ்வேள் (TILTui L T iii)
பாடியவர் வரலாறு
பரிபாடலில் ஆசிரியன் நல்லந்துவஞர் பாடியதாக நான்கு பாடல்கள் உள. அவற்றுள் எட்டாவது பாடல் முருகக் கடவுளுக்குரியது. 6.11.20 ஆகிய பாடல்கள் வையைக்குரியன.
கலித்தொகையில் நெய்தற் கலியை இயற்றியவர் ஆசிரியர் நல்லந்து வஞர் ஆவர். அந்நூலின் ஐந்திணைக்குமுரிய கலிப்பாக்களக் கோத்தவ ரும் இவரே. ஆசிரியர் ' என்பது கல்விச் சிறப்பாற் பெற்ற பெயர் என்று கூறுவர்.
இவர் பாடிய பரிபாடலிலுள்ள எட்டாம் பாடல் பல சிறப்புக்களக் கொண்டு திகழ்கின்றது. திருப்பரங்குன்றத்தை இமயம&லக்கு ஒப்பிட்டு நல்லந்துவஞர் வருணித்துள்ளார். பரங்குன்றத்திற்கும் மதுரைக்கும் இடையிலுள்ள வழியை இவர் சித்திரித்துள்ள முறை பாராட்டுக்குரியது. மதுரையிற் காதலர் வாழ்வைப் புலப்படுத்தியுள்ள முறையும் தலவி, தோழி, தலைவன் ஆகியோருக்கிடையிலே நிகழ்ந்த உரையாடலப் பாட்டில் அமைத்துத் தந்துள்ள திறனும் படித்து இன்புறத்தக்கன.திருப் பரங்குன்றத்தின் பெருமையையும் அக்குன்றத்திற் கடம்ப மரத்தின் அடியிலே கோயில் கொண்டுள்ள முருகக் கடவுளின் திருவருட் சிறப்பையும் பாராட்டியிருக்கும் பகுதியும், அக்குன்றின் வாழ்வையே தம்முடைய வாழ்வாகக் கருதி உளமுருகி இவர் வாழ்த்தியுள்ள பகுதியும் அறிந்து இன்புறற்பாலன.
முருகக் கடவுளே மட்டும் பாடியுள்ளதால் முருக பத்தராக இவர் வாழ்ந்தார் என்று கூறலாம். மதுரைக்கும் திருப்பரங்குன்றத்திற்கும் இடையேயுள்ள இயற்கை வளங்களையும், வையை, திருமருதந்துறை என்பவற்றின் எழிலையும் வருணித்து ஆங்கு நிகழ்ந்த பலவகைச் செய்திகளையும். விளக்கிக் கூறியிருத்தலால் இவருடைய ஊர் மதுரை என்று கூறுவர்.
இப்பாடலுக்கு இசை அமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனர். இவர் பரிபாடலிலுள்ள 6, 9, 10, 15, 19 ஆகிய பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார். மருத்துவன் ' என்ற சிறப்புப் பெயர் இவர் மருத்துவ நூலில் வல்லவர் என்பதைக் காட்டுகின்றது.

Page 43
பாடலின் பொருட்சு ருக்கம்
முருக! மண்ணுலகத்திலுள்ள திருப்பரங்குன்றத்திற் கோயில் கொண் டுள்ளன. நின்னத் தரிசிக்கும் பொருட்டுத் திருமால், சிவபிரான், பிரமன், துவாதசாதித்தியர், மருத்துவர் இருவர், வசுக்கள் எண்மர், ஏகாதசருத்திரர்கள், எட்டுத்திக்குப் பாலகர்கள், தேவர்கள், அசுரர்கள், முனிவர்கள் ஆகியோர் திருப்பாங்குன்றத்திற்கு வந்துள்ளனர். அத ஞல், திருப்பரங்குன்றம் இமயமtலயை ஒக்கும். திருப்பரங்குன்றத்தி லுள்ள சுனையானது இமய மலேயிலுள்ள பொய்கையைப் போன்றது. இமய மலையிலுள்ள மேகங்களின் முழக்கம் நின்னுடைய யானையின் முழக்கத்தை நிகர்க்கும். கோழிகள் கூவின யானைகள் பிளிறின. இவற்ருல் முழைக்கண் எதிரொலி எழுந்தது.
திருப்பாங்குன்றத்திற்கும் மதுரைக்கும் இடையிலுள்ள வழி இயற்கை ஏழிலுடையது. ஏழு துளைகளையுடைய புல்லாங்குழலின் இசையைப் போலத் தும்பிகள் ஒலித்தன ; ஐந்து துளைகளையுடைய புல்லாங்குழலின் இசையைப்போல வண்டுகள் இன்னிசை பாடின. யாழிசையைப் போல மிஞறுகள் இசைத்தன. சுனைகளிலே பூக்கள் இதழ் விரித்தன. கொன்றை மரத்திற் பூங்கொத்துக்கள் மலர்ந்தன. கொடிப்பூக் கள் மலர்ந்து நறுமணம் வீசின. மலர்கள் மெல்ல மெல்ல இதழ் விரித்து நின்றன. இத்தகைய மணங்களோடு தென்றல் மெல்லென உலாவும் சிறப்புடையது அவ்வழி.
கிரெளவுஞ்ச மலையைத் துளைத்த வேலையுடைய இறைவனே ! மதுரையில் மணமுரசு முழக்கம் எழுந்தது. காற்ருல் ஏறுண்ட கடலைப் போல அந்த முரசு அதிர்ந்தது. அப்போது நின் பரங்குன்றத்தில் எழுந்த முழக்கம் அதற்கு மாறுமாருக அதிர்ந்தது.
வண்டுகளைத் தலைவியர் தூது அனுப்பினர். அவ்வண்டுகள் ரீங்காரஞ் செய்து அத்தலைவியரின் காதலை மதுரை மாநகரின்கண் புலப்படுத்தின. அதனுலே தலைவர்கள் தலைவியரை நாடினர். அவருள்ளே பரத்தையர் பாற் சென்று மீண்ட தலைமகன் ஒருவன், தன் தலைவியை நோக்கி, " திருப்பரங்குன்றமானது சோலையிலுள்ள பூப்படுக்கையின்கண் தலைவ ரோடு தலைவியர் அளவளாவும் களவுப் புணர்ச்சியையும், தன் அடிவரையி லுள்ள மகளிர் தமக்குரிய காதலர்களுடைய மார்பினின்றும் அகலாமல் பூவின்கண் வாழும் மகன்றிலைப்போல இடைவிடாதமைந்த நல்ல
புணர்ச்சியையும் தரும் சிறப்புடையது ” என்ருன். அதனைக் கேட்டுப்
70

பொருது தலைமகள் ஊடினுள் ; பரத்தையரோடு அளவளாவுதற்குக் காலேயிற் சென்று மாலேயிலே திரும்பியதாகத் தலவன்மேற் பழி சுமத்தினுள். தன்னைத் தவருகத் தலவி புரிந்துகொண்டதாகத் தலவன் ஆணையிட்டுரைத்தான். இடையிலே தோழி தோன்றித் தலவனின் தவறைச் சுட்டிக் காட்டினுள். பின்னர், தோழி கூறியவாறே தலமகள் தன் கணவனுக்கு எதம் எதுவும் ஏற்படாத வண்ணம் முருகவேளத்
தொழுது ஆற்றுவாளாயினள்.
இவ்வாறு மதுரையிலிருந்து பாங்குன்றத்துக்குச் செல்கின்ற வழி யிலே பலரைக் காணக்கூடியதாயிற்று. சந்தனம், தூபத்துக்கான பொருள்கள், மலர்கள், முழவம், மணி, பாசம், மயில், கோடரி, பிணிமுகம் ஆகியவற்றையும் முருகவேளுக்கு உகந்த வேறுபல பொருள்களயும் ஏந்திப் பரங்குன்றத்தையடைந்து தொழுவார் பலர். தாம் காதலாோடு அளவளாவியதாகக் கண்ட கனவு பொய்யாகாமல், நனவிலே நீராடி இன்பம் பெறவேண்டுமென்று, வையை நதிப் புதுவெள்ளத்தைப் பெறுவதற்கு வரம் வேண்டுவோர் வேறுபலர். கருப்பம் உண்டாக வேண்டுமென்று பல பொருள்களைக் காணிக்கையாகச் செலுத்தி நிற் போர் இன்னும் சிலர். தம் கணவருக்குப் பொருள் வாய்ப்பதாகவென்று பிரார்த்தனை செய்வோரும், போரில் வெற்றி பெறச் செய்வாயாகவென்று அருச்சிப்போருமாய் நின்றனர் இன்னும் பலர்.
இன்னும், பாடுபவர்களின் பாட்டுக்குரிய தாளமும், ஆடுபவர்களின் கூத்துக்குரிய தாளமும், அதனுல் மலையின்கண் உண்டாகும் எதிரொலி யும் பெருமுழக்கத்தை ஏற்படுத்தின. சுனையின்கண் பாய்ந்து நீராடிய அழகிய மங்கையரின் பூண்களோடு அவருடைய கணவர் பூண்களும்
மயங்கின.
பரங்குன்றமே 1 மகளிரும் மைந்தரும் ஏனைய வரம் வேண்டுவோரும் கூடி, நீலகண்டப் பெருமானுக்கும் உமாதேவியாருக்கும் அவதரித்த திருக்குமரனுகிய கடம்பமர் செல்வன் திருக்கோயிலை வழிபடாநின்றனர். மண்ணகம் வருந்தும்படி மழையற்றுப் போயினும், அருவியானது நீர்மிக்கிருக்கும் செல்வம் நினக்கு என்றும் நிலைபெற்றிருப்பதாக !
71.

Page 44
O5
10
15
20
25
பாடல்
மண்மிசை யவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப் புண்மிசைக் கொடியோனும் புங்கவ மூர்வோனும் மலர்மிசை முதல்வனு மற்றவ ணிடைத்தோன்றி உலகிரு ளகற்றிய பதின்மரு மிருவரும் மருந்துரை யிருவருந் திருந்துநூ லெண்மரும் ஆதிரை முதல்வனிற் கிளந்த நாதர்பன் ஞெருவரு நன்றிசை காப்போரும் யாவரும் பிறரு மமரரு மவுணரும் மேவரு முதுமொழி விழுத்தவ முதல்வரும்
பற்ரு கின்றுநின் காரண மாகப் பரங்குன் றிமயக் குன்ற நிகர்க்கும் இமயக் குன்றினிற் சிறந்து நின்னின்றி நிரையிதழ்த்தாமரை மின்னின்ற விளங்கிணரூழா ஒருநிலைப் பொய்கையோ டொக்குநின் குன்றின் அருவிதாழ் மாலைச் சுனை. முதல்வநின் யானை முழக்கங் கேட்ட கதியிற்றே காரின் குரல். குரல்கேட்ட கோழி குன்றதிரக் கூவ மதநனி வாரண மாறுமா றதிர்ப்ப எதிர்குதி ராகின் றதிர்ப்பு மலைமுழை ஏழ்புழை யைம்புழை யாழிசைகேழ்த் தன்ன வினம் வீழ்தும்பி வண்டொடு மிஞருர்ப்பச் சுனைமலரக் கொன்றை கொடியின ரூழ்ப்பக் கொடிமலர் “மன்றல மலர மலர்காந்தள் வாய்நாற நன்றவிழ் பன்மலர் நாற நறைபனிப்பத்
தென்ற லசைவரூஉஞ் செம்மற்றே யம்மநின் குன்றத்தாற் கூடல் வரவு. குன்றமுடைத்த 'வொளிர்வேலோய் கூடல்.
பாடபேதம் :
1 காரணம் பரங்குன்று. 5 மன்றன்மலர. 2 சிறந்த, 8 தென்றலசைவுந் தகைமைத் தேவரூஉஞ். 3 குன்றதிர்கூவ, குன்றெதிர்கூவ. 7 வொளிறுவேலோய்,
4 நனைவீழ்தும்பிவண்டொடினமிDறு.
72

30
35
40.
45.
50
55.
மன்றல் கலந்த மணிமுரசி ஞர்ப்பெழக் காலொடு மயங்கிய கலிழ்கடலென மால்கடல் குடிக்கு மழைக்குரலென ஏறதிர்க்கு மிந்திர னிருமுருமென மன்ற லதிரதிர மாறுமா றதிர்க்குநின் குன்றங் குமுறிய வுரை. தூதேய வண்டின் ருெழுதி முரல்வவர் காதன்மூ தூர்மதில் கம்பலைத் தன்று வடுவகிர் வென்றகண் மாந்தளிர் மேனி நெடுமென் பணைத்தோட் குறுந்தொடி மகளிர்
ஆராக் காம மார்பொழிற் பாயல் வரையகத் தியைக்கும் வரையா நுகர்ச்சி முடியா நுகர்ச்சி முற்ருக் காதல் அடியோர் மைந்த ரகலத் தகலா அலர்ஞெமன் மகன்றி னன்னர்ப் புணர்ச்சி புலரா மகிழ்மறப் பறியாது நல்கும் சிறப்பிற்றே தண்பரங் குன்று. இனிமன்னு மேதிலர் நாறுதி யாண்டுப் பனிமலர்க் கண்ணுரோ டாட நகைமலர் மாலைக்கு மாலை வரூஉம் வரைசூனில் காலைப்போய் மாலை வரவு. இனிமணல் வையை யிரும்பொழிலுங் குன்றப் பனிமொழி சாரலும் பார்ப்பாரும். துணியன் மலருண்கண் சொல்வேறு நாற்றம் கனியின் மலரின் மலிர்கால்சீப் பின்னது துணிய னணிநீநின் சூள். என்பாணி நின்னி லெலாஅபாணி நீநின்குள் சான்ருள ரீன்ற தகாஅத் தகாஅமகாஅன் ஈன்ருட் கொருபெண் ணிவள். இருண்மையீ ருண்க ணCலங்கிழை யீன்ருட்
பாடபேதம் :
1. சூள் சூளேல் பாணி.
73

Page 45
60.
65.
70.
75.
80.
85.
கரியளோ வாவ தறிந்திலே னிதா வருபுனல் வையைமண ருெட்டேன் றருமணவேள் 'தண்பரங் குன்றத் தடிதொட்டே னென்பாய் கேளிர் மணலின் கெழுவு மிதுவோ ஏழுலகு மாளி திருவரைமே லன்பளிதோ என்னை யருளி யருண்முருகு சூள்சூளின் நின்னை யருளி லேணங்கான்மெய் வேறின்னும் விறல்வெய்யோ னுார்மயில் வேனிழ னுேக்கி *அறவ ரடிதொடினு மாங்கவை சூளேல் குறவன் மகளான கூறேலா கூறேல் ஐய சூளி னடிதொடு குன்ருெடு வையைக்குத் தக்க மணற்சீர்சூள் கூறல் யார்பிரிய யார்வர யார்வினவ யார்செப்பு நீருரைசெய் நீர்மையில் சூளென்றி நேரிழாய் *கயவாய நெய்தலலர் கமழ்முகை மணநகை நயவரு நறவிதழ் மதருண்கண் வாணுதல் முகைமுல்லை வென்றெழின் முத்தேய்க்கும் வெண்பல் நகைசான்ற கணவன்று நனவன்று நவின்றதை இடுதுணி கையாரு வெற்றுயர் கூரச் சுடுமிறை யாற்றிசி னடிசேர்ந்து சாற்றுமின் மிக, ஏற்றுதுமல ரூட்டுது மவி கேட்டுதும் பாணி யெழுதுங் கிணைமுருகன் தாட்டொழு தண்பரங் குன்று. தெரியிழாய் "செல்கென்ரு யெல்லாயாம் பெற்றேம் *ஒருவர்க்கும் பொய்யாநின் வாயில்சூள் வெளவல் பருவத்துப் பன்மாணி சேறலிற் காண்டை எருமை யிருந்தோட்டி யெள்ளியுங் காளை செருவஞ் 19செயற்கென்னை முன்னைத்தன் சென்னி அருள்வயினுற் றுங்கு மணிகையாற் ருக்கி நிரைவளை யாற்றிருஞ் சூள்.
பாடபேதம் :
1. தண்பரங்குன்று. 6. தோற்றுதும்.
. லணங்குடகாணமெய். 7. சொல்லென்ருயேலா.
யாவரடி. 8. ஒருவற்கும். கயவருநெய்தல். 9. வாயிற்சூள். வாணுதலார். 10. செயற்கென்ன.
i
74

90.
95.
100.
105.
110.
115
வளிபொரு சேட் சிமை வரையகத்தால் *தளிபெருகுங் தண்சினைய பொழில்கொளக் குறையாமலரக் குளிர்பொய்கை யளறுநிறைய மருதநளி மணன் ெேஞமர்ந்த நனிமலர்ப் பெருவழிச் சீறடியவர் சாறுகொள வெழுந்து வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும் ஆறுசெல் வளியி னவியா விளக்கமும் நாறுகமழ் வீயுங் கூறுமிசை முழவமும் மணியுங் கயிறு மயிலுங் குடாரியும் பிணிமுக முளப்படப் பிறவு மேந்தி அருவரைச் சேராத் தொழுநர் கனவிற் ருெட்டது கைபிழை யாகாது நனவிற் சேஎப்பநின் னளிபுனல் வையை வருபுன லணிகென வரங்கொள் வோரும்
கருவயிறுறுகெனக் 7
கடம்படு வோரும் செய்பொருள் வாய்க்கெனச் 8செவிசார்த்து வோரும் ஐயம ரடுகென வருச்சிப் போரும் பாடுவார் பாணிச்சீரு மாடுவா ரரங்கத் தாளமும் மஞ்சாடு மலைமுழக்கும் துஞ்சாக் கம்பலைப் பைஞ்சுனைப் பாஅ யெழுபாவையர் ஆயித ழுண்க ணலர்முகத் தாமரை தாட்டா மரைத்தோட் டமனியக் கயமலர் எங்கைப் பதுமங் கொங்கைக் கயமுகைச் செவ்வா யாம்பல் சென்னிர்த் தாமரை புனற்ற மரையொடு புலம்வேறு பாடுருக் கூரெயிற்ருர் குவிமுலைப் பூனெடு மார ஞெப்பார் மார்பணி கலவி
UTLGuż5ub :
தொடுநர். கைபிழையாது.
1. சிமைய.
2. தளிர்பெருகும், தளிர் பெருஞ்சின. 3. ஞெமிரநரிை. 4. சேஎத்தெடுநர்க்கு.
கடன்படு.
செவிசாத்துவோரும்.
75

Page 46
120 அரிவைய ரமிர்தபானம்
உரிமை மாக்க 1ளுவகையமிர் துய்ப்ப
மைந்தர் மார்வம் வழிவந்த செந்தளிர் மேனியார் செல்ல ?றீர்ப்ப
எனவாங்கு
125 8
உடம்புணர் காதலரு மல்லாருங் கூடிக்
கடம்பமர் செல்வன் கடிநகர் பேண
மறுமிடற் றண்ணற்கு மாசிலோ டந்த நெறிநீ ரருவி யசும்புறு செல்வ மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா
130 தண்பரங் குன்ற நினக்கு.
பாடியவர் :
ஆசிரியர் நல்லவந்துவஞர்
இசையமைத்தவர் : மருத்துவன் நல்லச்சுதனர்? பண் : பாலையாழ்.
பாடபேதம் :
1.
ளுவகையமிர்துவாக்க,
2. தீர்ப்பவாங்க.
3.
4.
5
உடன்புணரக்காதலரும்.
. ஆசிரியர் நல்லந்துவனர், ஆசிரிய நல்லந்துவஞர், ஆரியநல்லந்துவஞர்.
மருத்துவ நல்லச்சுதளுர்,
76

பரிமேலழகருரை
1 - 2. மலர்ந்த துழாய்மாலையையும் அளவற்ற செல்வத்தினையு முடைய புள்ளை மேலே எழுதப்பட்ட கொடியோனும்.
2. புங்கவம் - ஏறு.
4. உலகின் கண் இருள்.
6 - 7. ஆதிரைமுதல்வன் பெயராற் சொல்லப்பட்ட நாதர் - உருத்திரர்.
4 - 7. ஆதித்தர்முதலாக உருத்திரரீருக முப்பத்து மூவரையுங் கூறிஞர்.
7. நல்ல திசையைக் காப்போர் - இந்திரன் முதலிய எண்மர்.
8. இவரெல்லாரும் இவரொழிந்த பிறருமாகிய அமரரும் அவுணரும்.
9. அதிகரித்ததற்கரிய வேதத்தினை அதிகரித்த விழுத்தவ முதல் வர் - தெய்வமுனிகள்.
10 - 11. நின்னைக் காண்டல் காரணமாக மண்மிசைவந்து உறை யும் இடமாகாநின்றது ; ஆதலாற் பரங்குன்று அவர் பழைய இடமாகிய இமயக்குன்றத்தை யொக்கும்.
12 - 6. அவ்விமயக் குன்றின்கட் சிறப்பெய்தி நின்னையீன்ற தாமரையினது மின்போலும் இணருதிராத வற்ருப்பொய்கையொக்கும், நினது குன்றின் அருவி தங்கும் ஒழுங்குபட்ட சுனே.
18. கதியிற்று - இயல்பினையுடைத்து.
19 - 21. அக்குரலைக்கேட்ட கோழி வெருவிக் குன்றெதிர் கூவக் கூவுதலானும் மதமிக்க வாரணம் அக்குரற்கு மாறுமாருகப் பிளிறுதலா னும் மலேமுழைக்கண் எழுகின்ற எதிரொலி அவற்றிற்கு மறுதலையாகா நின்றது.
19. ‘கேட்ட' என்பதனை வாரணத்தொடுங் கூட்டுக.
21. எதிர்குதிரென்பது ஒருலக வழக்கு.
77

Page 47
22 - 8. எழுதுளையான வங்கியத்தும் ஐந்து துளையான வங்கியத் தும் யாழினும் பிறந்த இசைச்சுருதியொத்து நிறத்தாலொத்த இனம் விரும்பும் தும்பியும் வண்டும் மிஞறும் ஆர்ப்பச் சுனை பூக்களை மலரக் கொன்றை தாராகிய இணர்களை மலரக் கொடிமலர்கள் மன்றலையுடைய வாய் மலர மலர்ந்த காந்தட்பூ இடமெல்லாம் நாற மற்றும் நன்ருக மலர்ந்த பன்மலர்கள் நறைபனிப்ப நாற அந்நாற்றங்களோடு தென்றல் அசையுந் தலைமைத்து, நின் குன்றத்தொடு கூடலிடைவழி.
29 - 35. கூடலின் மணத்தைப் பொருந்திய மணிநிற முரசின் ஆர்ப்பு எழுந்ததாக, காற்ருல் ஏறுண்ட புடைபெயர் கடலெனவும் மயங்கு கடலைக் குடிக்கும் மேகக்குரலெனவும் இந்திரனது அதிர்க்கும் பெரிய உருமேறெனவும் அம்மன்றல் முரசு அதிரவதிர அதற்கு மாறு மாருக அதிர்க்கும், நின் குன்றம் முழங்கிய முழக்கம்.
35. முழக்கம் மலைக்கு வார்த்தைபோறலின் ‘உரை" எனப்பட்டது. இவ்வளவும் முருகவேளை எதிர்முகமாக்கி வாழ்த்தி மேல் அவன் பரங்குன்றை வாழ்த்துவார், பிரிந்த தலைமக்களது வரவும் அவருட் பரத்தையிற் பிரிந்து வந்தானுெரு தலைமகன் கூற்றும் தலைவி கூற்றும் தோழி கூற்றுமாகிய த . . . . . . . . . . .
36 - 7. தலைவியரால் தூதாக ஏவப்பட்டுத் தலைவரோடு மீண்ட வண்டின் தொழுதியது முரற்சி அத்தலைவியர் காதலை மதில் மூதூர்க்கண் அரவமாக்கின்று.
37. 'கம்பலைத்தன்று" என்பது உரிச்சொல்லடியாகப் பிறந்த வினைத் திரிசொல்.
தலைமக்களது வரவு கூறியவாறு.
39 - 46. மகளிரது ஆராக்காம இன்பத்தைப் பொழிற்பாயற்கண் தலைவரொடு கூட்டும் களவிற் புணர்ச்சியையும் அடியுறைமகளிர் பூவின்கண் திரியும் மகன்றில்போல மைந்தர் அகலத்தையகலாத நல்ல புணர்ச்சியையும் மறவாது அம்மகளிர் மனமெனத் தருஞ்சிறப்பிற்று தண்பரங்குன்று.
என்று தலைமகன் மகளிர்மேல் வைத்துக்கூறி.ய இன்பமிகுதி கூறியதுபொருது மேல் தலைமகள் புலந்து உரைக்கின்ருள்:-
78

47 - 50. இப்பொழுது மிகவும் அயல்மகளிர் நாற்றத்தை நாரு நின்ருய் ; ஆண்டு அவரொடு கூடுதற்கு நீகாலைபோய் மா?லவருதல் ஒளி மலரையுடைய மாலைப்பொழுதுதோறும் உண்டாகா நின்றது : இனிப் பண்டைச் சூளைத் தவிர்.
49. "மாலைக்கு மாலை" என்றது, "அடிக்கடி" என்ருற்போல நின்றது.
மேல் தலைமகன் :-
மேல் தோழி :-
51 - 5. இனிய மணலையுடைய வையைக்கண் இரும்பொழி லாணை ; குன்றத்துச் சாரலாணை ; பார்ப்பாராணை ; துனியல் ; மலருண் கண்ணுய் ! அது சொல் எனக்கு இயைவதன்று ; இந்நாற்றம் பரங் குன்றத்துக் கனியினும் மலரினும் பயின்ற காற்றுச் சீத்து அடித்து வந்தது ; ஆதலான், மிகவும் துனியல் என, -
மேல் தலைமகள் வையை மணலையும் பரங்குன்றத்தையும் சூளுற்ருன் குறிப்புநோக்கி,
55. நீ நின் சூளைவிடு; என
56 - 8. ஏடா ! யானென்று சொல்லுங் காலத்தளவும் நில்லு நில்லு ; நீ நின்சூளைப் பின்னை உறு ; அமைதியுடையோர் பெற்ற மிகத் தகுதியில்லாத மகனே இவள் தாய்க்கு ஒரு பெண்.
என, நினக்கு இச்சூளான் ஏதம் வரின் இவள் இறந்துபடுமென்பது கூறிப் பின்னும் அவன் கூற்றைக் கொண்டு கூறுகின்ருள் n=
59 - 60. இலங்கிழை ஈன்ருட்கு அரியளோ ? அரியளாவது நீ சொல்லுதற்குமுன் யான் அறிந்திலேன் ; இதனைப் பார்.
அறிந்திலேனென்பது குறிப்புமொழி. ஈதாவென்பது ஒரு மரூஉமுடிபு ; அஃது இக்காலத்து இந்தாவென்று வழங்கப்படும் சுட்டு நீண்டது.
81. மணத்தைத் தரும் வேள். 63. கேளிரையொத்த மணலொடு நட்பும் இத்தன்மைத்தோ ? அது கிடக்க.
64 - 6. திருவரைமேல் அன்பு அளிக்கத்தக்கது ; ஆதலால், எனக்கு அருள் செய்தாயாக அருள் முருகன் சூளைச் சூளுறின், நின்னை அருளில்லாத அணங்குடனே அவன் வேல் மெய்யாக வருத்தும்.
7g

Page 48
67 - 68. அதுவேயன்றிப் பார்ப்பாரடியைத் தொடினும் விறல் வெய்யோனூர் மயிலையும் அவன் வேல் நிழலையும் நோக்கி அவற்றைச் சூளுறல்.
68. ஆங்கு : அசைநிலை.
69. குறவன் மகளாணையைக் கூறலுறுகின்ற ஏடா ! அதனையும் கூறல்.
70 - 71. ஐயனே 1 சூளுறல் வேண்டின், வணங்கப்படும் குன்ருெடு வையைக்கேற்ற சீர்மணலைச் சூளுருதொழி.
என்று சூள்விலக்க, மேல் தலைமகன் :-
72 - 3. நேரிழாய் ! யார் பிரிய, யார் வர, யர்ர் வினவ, யாரது செப்பு உண்ட்ாகின்ற்து ?
என்றது இருதலைப் புள்ளின் ஒருயிரேன் ஆதலாற் பிரிவும் வரவும் விஞரவும் செப்பும் நம்மிடை உளவாகாவென்றவாறு.
73 - 7. நீ அது கருதாது, 'நீருரைக்குஞ் சூள் நீர்மையில் கடுஞ்சூள்' என்றி ; கயத்தின்கணுள்ள நெய்தற் பூவையும் கமழ்முகைகளது மணத்தைத் தருகின்ற அலர்ச்சியான் நயக்கப்படும் நறவம்பூவினது இதழையுமொத்த கண்ணினையும் நுதலையும் வெண்பல்லையுமுடையாள் நவின்ற குற்றம் நனவுமன்று, கனவுமன்று.
76. முகைமுல்லை - முல்லையது முகை
77. பொய்யாதலால், நகைமிக்க நனவு.
78 - 82. என்மாட்டு இன்றியிருக்க இவள் இட்ட இத் துணிக்கார ணத்தை என் ஒழுக்கம் நெறியாக ஒர்த்தலால் இதனைப் பொய்ச் சூளென்று கருதி என்னை இறை துயர்கூரச் சுடும் ; இது செய்யாமல் நீ சென்று அவனடியைச் சேர்ந்து ஆற்றுவாயாக ; இவ்வுரையை எல்லார்க்கும் அறிவிம்மின் ; முருகன் தாளை யாவருந் தொழும் பரங்குன்றத்தின்கட் சென்று மலரை ஏற்றுதும் ; அவியையூட்டுதும் ; பாணித்தாளத்தையுடைய பாட்டைத் தோற்றுவிப்பேம்; S260T யொலியை எழுவிப்பேம்.
80

79 - 81. ஆற்றிசின்" என்றது, தோழியை நோக்கி ; ‘சாற்றுமின்’ என்றது, தன் ஏவலிளையரை நோக்கி, உளப்பாடுகள் அவளையும் அவரையும் நோக்கி.
மேல் தோழி :-
83 - 9. ஏடா ! என்னைச் சாந்தி செய்யச் செல்கவென்ருய் ; அதனுலே நின் பொய்ச்சூளாணுகிய ஏதம் நின்னை வெளவுதலை யாம் அறிந்தேம் : கூற்றினது மிக்க ஆ2ணயையும் இகழும் ஆற்றலையுடைய முருகன் மாறுபடுதற்கு முன்னே என் நிரைவளை தூங்கும் மணிநாவைக் கையால் தாக்கித் தன் சென்னியான் வணங்கி இருஞ்சூளான் வரும் ஏதத்தை அருட்கூற்ருன் ஆற்றுதலை ஏதிலரைப் புணரும்பருவத்து ஆண்டு நீ பலகாலும் சேறலாற் காண்டி.
என்றது, யான் ஆற்றவேண்டா; அவள் தானே ஆற்றுமெனத் தலைமகள் கற்புடைமை கூறியவாறு.
84. 'ஒருவர்க்கும் பொய்யாநின்' என்றது குறிப்புமொழி.
கணவற்கு வரும் ஏதமஞ்சிச் செய்தலால் தம் கற்பிற்கும் . . . . . . .
தலைமகளிர் யாவரும் இத்தன்மைய செய்வரென அவரது செய்தி கூறுகின்ருள் :-
90 - 99. மழையான் வளர்ந்த தண்சினைப் பொழில்கள் பூக்கள் பறிக்கத் தொலையாவாக மலரக் குளிர்பொய்கைகள் நீரால் நிறையச் செறிந்த மணல்பரந்த வரையோடு கூடலிடைவழி . . . . பூசை செய்ய எழுந்து சாந்தமும் புகைப்பனவும் மாருயியங்கும் காற்ருல் நந்தாத விளக்கிற்கு வேண்டுவனவும் நாறுகின்ற கமழ்வியும் இசையைக் கூறு கின்ற முழவமும்.
100. கயிறு - பாசம்.
102 - 5. அருவரைக்கட் சென்று சேயது அடிமலரைத் தொழுது, கனவின் யாம் எம் காதலரைத் தொட்டது பொய்யாகாமல் நனவின் கண் எய்த வையைப் புதுப்புனலை அணிக.
106. யாம் வயிறு கருவுறுகவெனப் பொருள்களை நேர்வோரும்.
107. எம் கணவர் செய்பொருள் வாய்க்க.
108. எம் கணவர் வியக்கத்தக்க அமரையடுகவென அருச்சிப்போருமாய்.
109. பாடுவாரது பாணியாகிய தாளமும்.
81

Page 49
110 - 11. மலைக்கண் எதிரொலியுமாகிய இக்கெடாத கம்பலைக் கண்ணே.
111. ஏழாவது வினைசெய் இடத்தின்கண் வந்தது.
112. சுனைக்கட் பாய்த்தெழு பாவையராகிய கூரெயிற்ருர் (118) என மேலே கூட்டுக.
113 - 24. கண்ணுகிய தாமரைப் பூவும் முகமாகிய தாமரைப் பூவும் தாளாகிய தாமரைப் பூவும் தோளாகிய பொற்கயத்து மலர்ந்த எம்கையா கிய தாமரைப் பூவும் கொங்கையாகிய பெரிய தாமரைமுகையுமாய்ச் செவ்வாயாம்பலொடுங் கூடி இயங்கும் நீர்மையையுடைய இத்தாமரை கள் அந்நீரின்கட்டாமரையொடு வேறுபாடுருத கூரெயிற்ருர் முலைப்பூ ணுெடு கணவர் மார்பணிகள் மயங்க, அவர்க்கு அரிவையராக்கும் அமிர்தம்போலும் காமபானத்துடனே அமுதாக்குதற்குரியர் மடையர் உவகையைச் செய்யும் அமிர்தத்தைக் கொடுக்கத் தம் கணவர் மார்பின்கண் வழிவந்த செல்லலைச் செந்தளிர் மேனியார் தீரா நிற்பர்.
119. கலவ " என்பது கலவியென நின்றது.
சீறடியவர் சாறுகொளப் (96) பெருவழியிடத்து (95) எழுந்து (96) பிறவுமேந்தி (101) வரையகத்துச் சென்று தொழுது (102) கம்பலைக் கண்ணே (111) மார்பணி கலக்க (119) உவகையமிர்துய்ப்ப (121) வரங்கொள்வோரும் (105) கடம்படுவோரும் (106) செவி சார்த்து வோரும் (107) அருச்சிப்போருமாய் (108) செல்லல் தீர்ப்ப (123) எனக் கூட்டுக.
124. எனவாங்கு - என்றிவ்வாற்றல்.
125 - 30. பரங்குன்றமே ! தம்முட் பிரியாத மகளிரும் மைந்தரும் அல்லாத வரம்வேண்டுவாருங் கூடி மறுமிடற்றண்ணற்கு மாசிலோள் தந்த கடம்பமர்செல்வன் கடிநகரை வழிபடச் செல்வத்துடனே மண் வருந்த மழை வறந்ததாயினும் நெறிநீர் அருவி அசும்புமிகுஞ்செல்வம் நினக்கு மன்னுவதாக,
129. மா : வியங்கோளசைச்சொல்.
முருகற்கு இடமாகிய பரங்குன்றை வருணித்த முகத்தால் எதிர்முக மாக்கியும் படர்க்கையாக்கியும் அவனையே வாழ்த்தி முடித்தமையிற் கடவுள் வாழ்த்தாயிற்று.
82

A/1 f li Šy
SN
கடுஞ்சூர் மாமுத றடிந்தறுத்தவேல் அடும்போ ராள.
Luflurrusio, 9 : 70-71

Page 50

8. செவ்வேள் (ஒன்பதாம் பாடல்)
பாடியவர் வரலாறு
பரிபாடலிலுள்ள ஒன்பதாம் பாடலைப் பாடியவர் குன்றம்பூதனர். இவரே செவ்வேளுக்குரிய பதினெட்டாவது பாடலையும் பாடியவர்.
முருகப் பெருமானுடைய அவதாரம், சூரபன்மஞகிய மா மரத்தைச் செவ்வேள் தடிந்தமை, பரங்குன்றத்தின் இயற்கை எழில், வள்ளி, தேவசேனை ஆகியோருக்கிடையிலான மனவேறுபாடு என்பன இப்பாட லிற் குன்றம்பூதனுரால் எழிலுற வருணிக்கப்பட்டுள்ள முறை கவிநயத் தோடு கூடியதாகும். இப்பாடலில் " நான்மறை விரித்து " என்பது முதலியவற்ருற் பாராட்டியிருக்கும் தமிழ் வழக்குத் தமிழ்மொழியின்கண் இவருக்குள்ள பேரன்பைப் புலப்படுத்துகின்றது.
செவ்வேளுக்குரிய இரண்டு பாடல்களைப் பாடிய இவர், திருமாலுக் குரிய பாடல் எதனையும் பாடாமையால், இவர் முருக பத்தராகவே வாழ்ந்தார் என்று கூறலாம். பாடலின் இறுதியில், " பெருமானே ! அன்புடைய யாம் நின் திருவடிக்கண் உறையும் செயல் நாடோறும் வளர்ச்சியுற்றுப் பயன் தந்து சிறக்கவென்று நின்னைத் தலைவணங்கி வாழ்த்தி வேண்டுகிருேம் " என்று பத்திப்பெருக்கோடு உள்ளம் நெகிழ்ந்து இவர் பாடியுள்ளார். தெய்வயானைக்கும் வள்ளிக்குமிடையே ஏற்பட்ட பிணக்கைச் சித்திரிப்பதற்குப் புலவர் கையாண்டுள்ள புதுமை
யானமுறை கவிநயமுடையதாகும்.
இப்பாடலுக்கு இசை அமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனர். இவர் பரிபாடலிலுள்ள 8ஆம், 8ஆம், 10ஆம், 15ஆம், 19ஆம்,பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
85

Page 51
பாடலின் பொருட்சுருக்கம்
முருகப் பெருமானே! வடதிசைக் கண்ணேயுள்ள இமய மலையின் சிகரத்திலே மதிப்புடைய கார்த்திகை மகளிர் அறுவரிடத்தே அவதரித் தாய் ! கங்காதரராகிய நீலகண்டப் பெருமானுடைய குமாரனுகப் பிறந் தாய் !
மான் மகளாகிய வள்ளிநாய்ச்சியாரைக் களவின்கண் திருமணஞ் செய்தபோது, தேவசேனையின் கண்கள் நீரைப் பொழிந்தன. கண்கள் நீரைப் பொழிந்ததுபோலப் பரங்குன்றத்தில் முதுவேனிற் காலத்திற் கார் காலத்தைப்போல மழை பொழிந்தது.
நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் ! சிறந்தது எது என்பதைக் கேள்மின் : காமத்துச் சிறந்தது காதலே யுடைய காமம். அஃதாவது, மெய்யுற்றறியாதார் இருவர் அன்பொத்துப் பான்மைவகையால் தாமே மெய்யுற்றுப் புணரும் புணர்ச்சி. இனி, அன்பு ஒவ்வாத கற்பு என்னும் ஒழுக்கமானது புலத்தலாற் சிறந்தது. அப்புலவி, தலைவன் வாயில் வேண்டலும் தலைவி வாயில் நேர்தலுமாகிய இவற்றை யுள்ளிட்டுத் தலைவனுடைய பரத்தைமையான் வருவது. இன்னும், தலை வன் இன்பம் நுகர்ந்திருக்கும் பரத்தையினுடைய இல்லத்துக்குத் தோழி ஒருத்தியைக் காலைப்பொழுதிற் செவ்வணியணிந்து அனுப்பித் தலைவி தன் பூப்பைத் தெரிவிக்க, அதனை அறிந்து தலைவன் தலைவியிடம் வந்து உவக்கும் புணர்ச்சியை உடையது அக்கற்பொழுக்கம். அப்புணர்ச்சிகள் தலைவியின் பாங்காயிஞர் கேட்டு வருத்தமுறக்கூடியதாகப் பரத்தையாற் பழிகூறப்படுவனவாம். அப்புணர்ச்சியும் இயல்பாகவன்றி ஊடலால் உண்டாவது. அதனுல், இக்கற்பிற்போலத் தலைவர் நீங்குதலறியாத களவிற் புணர்ச்சியையுடைய மகளிர், அவரோடு மாறுகொண்டு துனிக் கும் குற்றமுடையவரல்லர். இப்புணர்ச்சியை வேண்டுகின்ற பொருளிலக் கணத்தையுடைய தமிழை ஆராயாத தலைவர் களவொழுக்கத்தைக்
கொள்ளமாட்டார்.
மலர்மாலை விளங்கும் மார்பிலே முத்தாரம் அழகுபெறத் தேவசேன யோடு கலந்துறவாட முருகன் வந்தான். அப்போது தேவசேன அவனைத் தொழுது, அகப்பட்ட மகளிர் நிலை, மழையை வேண்டி வருகின்ற சோலையினது
வஞ்சகனே !! வாழ்வாயாக, நின்னை அறியாமல்
இயல்பை ஒக்கும். ஆதலால் அவரே தவறுடையராவர் ; நீ தவறுடையை யல்லை. நின்னை அடையும் பேறுடையார்களது தோள்மேலே தங்கி அருள்
86

செய்தலும் நின்பாலில்லை. ஆகையால் நின்னுடன் இன்புறக் கட வேனே ? " என்று சொல்லி வள்ளி காரணமாக உண்டான புலவியைச் சினத்தோடு வெளிப்படுத்தினுள். அப்போது முருகவேள் அவளே அணுகித் தலையில் அணிந்த மாலை அவள் அடியிற்படுமாறு வணங்கினுன். அப்போது தேவயானை புலவி நீங்கி வருந்தற்கவென்று சொல்லித் தன் மார்பை அளித்தாள். அதனை வள்ளி கண்டாள். சினங்கொண்டு, " தேவசேனையை அணுகாதே ” என்று சினந்து தன் மாலேயால் அடித்தாள். அப்போது தேவயானையின் மயில் வள்ளியின் மயிலே எதிர்த்தது ; ஒருவர் கிளி மற்றவர் கிளியைப் பேசியது ; வள்ளியின் குன்றத்து வண்டு தேவசேனையின் கொண்டையிலிருந்த வண்டின்மீது பாய்ந்தது.
தேவசேனையின் பாங்கியர் வள்ளியின் பாங்கியரோடு பகைத்து மாலையும் மாலையும் பிணக்குற்ருர், கோதையையும் வரிபந்தையும் கொண்டு ஒருவர்க்கொருவர் எறிந்தனர். கண்கள் சிவக்கக் கோபங் கொண்டு போரை மேற்கொண்டனர். அப்போது வள்ளியின் பாங்கியர் மதம்பட்ட களிற்றின் தன்மையை மேற்கொண்டனர். குதிரைபோல நடந்துவந்தனர் : அம்பை எய்வதற்கு வில்லை வளத்தனர் : வாளை ஏந்தினர் ; சக்கரத்தைச் சுழற்றினர்.
பாங்கியரின் இந்த நிலையைக் கண்ட இந்திரனின் பாங்கியர் அஞ்சி முருகனைக்கூடிச் சூழ்ந்துகொண்டு நீரினுள் மறைந்தனர் வண்டாய் நின்று முரன்றனர் ; மயிலாய் நின்று ஆடினர் ; குயிலாய் நின்று கூவினர் ; இவ்வாறு குறிஞ்சி நிலத்து மக்களாகிய குறவர் பெற்ற மறக்கெழு கொடிச்சியர் திருந்திய போரை விளைத்தலால் திருப்பரங் குன்றம் செவ்வேளுக்கு இயைந்தது.
நினக்குப் பொருந்திய வேலின உடையை. வென்றுயர்ந்த கொடி யால் விறலமைந்தனை . குமர ! யாம் நின் திருவடிக்கீழ் உறையும் செயல் நாடோறும் வளர்ச்சியுற்றுப் பயன் தந்து சிறக்கவென்று நின்னைத் தலைவணங்கி வாழ்த்தி வேண்டுகின்ருேம்.
87

Page 52
05
10
15
20
25
பாடல் இருநிலந் துளங்காமை வடவயி னிவந்தோங்கி 'அருநிலை யுயர்தெய்வத் தணங்குசா றலைகாக்கும் உருமுச்சூழ் சேட்சிமை யுயர்ந்தவ ருடம்பட எரிமலர்த் தாமரை யிறை வீழ்த்த பெருவாரி விரிசடைப் பொறையூழ்த்து விழுநிகர் மலரேய்ப்பத் தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய்நீ மையிருநூற் றிமையுண்கண் மான்மறிதோண் மணந்தஞான் றையிருநூற்று மெய்ந்நயனத் தவன்மகண் மலருண்கண் மணிமழை தலைஇயென மாவேனில் காரேற்றுத் தணிமழை தலையின்று தண்பரங் குன்று. நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது காதற் காமங் காமத்துச் சிறந்தது. விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி புலத்தலிற் சிறந்தது கற்பே யதுதான் இரத்தலு மீதலு மிவையுள் ளீடாப் பரத்தையுள் ளதுவே பண்புறு கழறல் தோள்புதி துண்ட பரத்தையிற் சிவப்புற நாளணிந் துவக்குஞ் சுணங்கறை யதுவே *கேளணங் குறமனைக் கிளந்துள சுணங்கறை சுணங்கறைப் பயனு மூடலுள் ளதுவே, அதனுல், அகற லறியா வணியிழை நல்லார் இகறலைக் கொண்டு துணிக்குந் தவறிலரித் தள்ளாப் பொருளியல்பிற் 'றண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்று பயன். ஊழாரத் தோய் கரை நூக்கிப் புனறந்த காழாரத் தம்புகை சுற்றிய தார்மார்பிற் கேழாரம் பொற்ப வருவானைத் தொழாஅ
பாடபேதம் : 1 அகனிலையுயர். 6 துணிக் குந்தவறிலரைத்.
2 தணங்குகாறலை. 7 தண்டமிழாவந்துழார், 3 வீழத்த முருகுபெருவாரி. தண்டமிழாயவந்திப்பார். 4 சேண்மினறந்தது. 8 கரைநீங்கிப். 5 கேளணங்குறமனைமனைக். 9 சுற்றிய மார்பிற்.
88

30
35
40
45
50
55
பாடே
1.
2.
3.
4.
வாழிய மாயாநின் றவறிலை யெம்போலும் கேழிலார் மாணல முண்கோ திருவுடையார் மென்ருேண்மே லல்கி நல்கலு மின்று வையெயிற் றெய்யா மகளிர் திறமினிப் பெய்ய வுழக்கு மழைக்காமற் றைய
கரையாவெந் நோக்கத்தாற் கைசுட்டிப் பெண்டின் இகலி ?னிகந்தாளை யவ்வே டலைக்கண்ணி திருந்தடி தே பத் திறைகொடுப் பானை
*வருந்த லெனவவற்கு மார்பளிப் பாளைக் குறுகலென் ருெள்ளிழை கோதைகோ லாக *இறுகிறுக யாத்துப் புடைப்ப ஒருவர் மயிலொருவ ரொண் மயிலோ டேல
இருவர் வான்கிளி யேற்பின் மழலை செறிகொண்டை மேல்வண்டு சென்றுபாய்ந் தன்றே வெறிகொண்டான் குன்றத்து வண்டு.
தார்தார் "பிணக்குவார் கண்ணியோச்சித் தடுமாறுவார் மோர்பணி கொங்கைவார் மத்திகையாப் புடைப்பார் கோதை வரிப்பந்து கொண்டெறிவார் பேதை மடநோக்கம் பிறிதாக வூத நுடங்கு நொசிநுசுப்பார் நூழி றலைக்கொள்ளக் கயம்படு கமழ்சென்னிக் களிற்றியல்கைம் மாறுவார் வயம்படு பரிப்புரவி மார்க்கம் வருவார் தேரணி யணிகயிறு தெரிபு வருவார் வரிசிலை வளைய மார்புற வாங்குவார் 19வாளி வாளிக ணிலைபெற மறலுவார் தோள்வளை யாழி சுழற்றுவார் மென்சீர் மயிலிய லவர். 11.வாண்மிகு வயமொய்ம்பின் வரையகலத்தவனை வானவன்மகள் மாணெழின் மலருண்கண்.
பதம
கரையாவ நோக்கத்தாற். 5. Lou GastLisu. 9. படுபுரவிமாறகம். னிகந்தானே வேள்கண்ணித், 8. இருவான கிளி. 10. வாவாளிகள். வருந்தாலெனவவடாரக்கு. 7. பினங்குவார். 11. வாணவயமொய்ம்பின். . இறுதிறுக 8. மாரணிை.
89

Page 53
60
65
70
75
80
மடமொழியவ ருடன்சுற்றிக் கடிசுனையுட் குளித்தாடுநரும் அறையணிந்த வருஞ்சுனையான் நறவுண் வேண்டாய் நரம்புளர்நரும் சிகைமயிலாய்த் தொகைவிரித்தாடுநரும் கோகுலமாய்க் கூவுநரும்
ஆகுல மாகுநரும் குறிஞ்சிக் குன்றவர் மறங்கெழு வள்ளிதமர் வித்தகத் தும்பை விளைத்தலான் வென்வேலாற் கொத்தன்று தண்பரங் குன்று. கடுஞ்சூர் மாமுத றடிந்தறுத்தவேல் அடும்போ ராளநின் குன்றின்மிசை ஆட னவின்ருே சீரவர்போர் செறுப்பவும் பாடல் பயின்ருேரைப் பாணர் செறுப்பவும் *வல்லாரை வல்லார் செறுப்பவும் அல்லாரை யல்லார் செறுப்பவு மோர்சொல்லாய்ச் செம்மைப் புதுப்புனற் றடாக மேற்ற தண்சுனைப் பாங்கர்ப்
படாகை நின்றன்று
மேஎ வெஃகினவை வென்றுயர்த்தகொடி விறல்சான்றவை "கற்பிணை நெறியூ டற்பிணைக் கிழமை நயத்தகு மரபின் வியத்தகு குமர! வாழ்த்தினேம் பரவுதுந் தாழ்த்துத்தலை நினையா நயத்தலிற் சிறந்தவெம் மடியுறை
85 பயத்தலிற் சிறக்க நாடொறும் பொலிந்தே,
பாடியவர் : குன்றம்பூதனுர் பாட்டு. இசையமைத்தவர் : மருத்துவன் நல்லச்சுதனர். பண் : பாலையாழ்.
பாடபேதம் :
1. மடிமொழி. 5. வல்லாரை வல்லாணர் செறுப்பவும். 2. வண்டாறு. 8. படாக்கைநினகுன்று. 3. மறகெழு. 7. கற்பின. 4. ரவைபோர்.
90

பரிமேலழகருரை
1-11. பெரியநிலம் அசையாமல் வடதிசைக்கண்ணே மிக ஓங்கி அணங்குதல்சான்ற தெய்வசாதிக்கு இறையாகிய இந்திரனுற் காக்கப் படும் இமயச்சிமையத்தின்கண் தெய்வமுனிவர் அறுவரும் உடம்படக் கற்பால் நன்கு மதிக்கப்படும் ஆரலிடத்தே மணிமிடற்றண்ணற்குப் பிறந்தோய் ! மையாகிய கரிய நூற்ருன் அணியப்பட்ட இமைக்குங் கண்ணையுடைய வள்ளிதோளை நீ களவின்கண் மணந்த அன்று மெய்யின்கண் ஆயிரங்கண்ணையுடைய இந்திரன்மகள் தேவசேனையது கண் முதுவேனில் காராந்தன்மைபெற மணிநிற மழைபெய்தாலொக்கப் பரங்குன்றின்கண் நீராகிய தணிந்த மழையைப் பெய்தது.
4-8, அயனுல் வீழ்த்தப்பட்ட ஆகாயகங்கையை மலர்ந்துவிழும் பூவையொப்ப வேகந்தணியச் சடைப்பாரத்தின்கட்டாங்கிய ஒப்பில்லாத நிலைமையினையுடைய சலதாரியாகிய மணிமிடற்றண்ணலெனக் கூட்டுக.
6. சலதாரி - சலத்தைத் தரிக்கும் இயல்பையுடையவன்.
8. வள்ளியை இமையுண்கண் மான்மறி" என்ருர், மானுடை மக ளாகலின்
இவ்வளவும் முருகவேளை எதிர்முகமாக்கிக் கைகோளிரண்டிற்கு முரிய தேவியராற் காதலிக்கப் பாடுகூறி வாழ்த்தி மேல் வள்ளியது சிறப்பும் அவன் பரங்குன்று அவட்கொத்தவாறும் கூறலுறுவார், நான் மறைப்புலவரை நோக்கித் தமிழது சிறப்புக் கூறுவாராய்ப் பொதுவகை யான் அவற்றிற்குக் காரணம் கூறுகின்ருர் :-
12-13. நான்மறைப்பொருளை விரித்து அம்மறையது நல்லிசையை விளக்கும் புலவீர் 1 சிறந்ததொரு பொருளைக் கேண்மின் :
14-15. காமத்துச் சிறந்தது காதலையுடைய காமம் : அஃதாவது, மெய்யுற்றறியாதார் இருவர் அன்பொத்துப் பான்மைவகையால் தாமே மெய்யுற்றுப் புணரும் புணர்ச்சி.
16-26. இனி அன்பு ஒவ்வாத கற்புப் புலத்தலாற் சிறந்தது; அப்புலவியாவது, தான் வாயில்வேண்டலும் வாயினேர்தலுமாகிய இவை யுள்ளீடாகத் தலைவனது பரத்தைமையான் வருவது. இனிப் புதிதாகத் தோள் நுகரப்பட்ட பரத்தையில்லின்கண்ணே ஒருத்தியை நாட்காலேயே செவ்வணியணிந்து விட்டும் பூப்பு அறிவிப்ப அப்பண்புறு கழறலால்
91.

Page 54
தலைவன் வந்து உவக்கும் புணர்ச்சியையுடைத்து ; அப்புணர்ச்சிகடாம் தலைவிக்குப் பாங்காயினர்கேட்டு வருத்தமுறப் பரத்தையால் தன் மனேக்கண் அலர் தூற்றப்பட்டுள. அப்புணர்ச்சியின்பந்தான் உண்டா வது இயல்பானன்றி ஊடலாஞயது ; அதனல், இக்கற்பிற் போலத் தலைவர் நீங்குதலறியாத களவிற் புணர்ச்சியையுடைய மகளிர் அவரொடு மாறுகொண்டு துணிக்கும் குற்றமுடையரல்லார் : இப்புணர்ச்சிய்ை வேண்டுகின்ற பொருளிலக்கணத்தையுடைய தமிழை ஆராயாத தலைவர்
களவொழுக்கத்தைக் கொள்ளமாட்டார்.
18. பண்புறுகழறலாவது :- "பூப்பின் புறப்பா டீராறு நாளுந் நீத்தகன் றுறைத லறத்தா றன்றே" எனும் அறத்தொடு பொருந்திய உறுதிச்சொல்.
இனி அக்களவிற் புணர்ச்சியையுடைமையான் வள்ளி சிறந்தவாறும் அத்தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறுங் கூறுகின்ருர் :-
27 - 44. சந்தனமரங்களையுடைய ஊழான் மெலிந்த கரையை முறித்து வையைப்புனல்கொண்டுவந்த வயிர்த்த சந்தனத்தினது புகை சூழ்ந்த தாரையுடைய மார்பின்கண் நிறத்தையுடைய முத்தாரம் அழகுபெறத் தன்னெடு கலத்தற்குவரும் முருகவேளைத் தொழுது எம்போலி , வஞ்சனே வாழ்வாயாக ; நின்னை அறியாது அகப்பட்ட அவ்வையெயிற்று மகளிர்திறம் இனி மழைபெய்ய வேண்டி வருந்தும் காவையொக்கும் ; ஆதலால் அவரே தவறுடையராவதல்லது நீ தவறுடையையல்லை ; நின்னையெய்துந் திருவுடையார் மென்ருேண் மேலல்கி நல்கலும் நினக்கின்று ; ஆகையால் நின் மாணலம் உண்ணக் கடவேனே " என்று தன்னைக் கையாற் சுட்டிச்சொல்லி வெகுளி மிக்க நோக்கத்துடனே அவன் பெண்டுகாரணமாக உண்டான புலவியானிங் கிய தேவசேனையைச் சென்றெப்தி அவ்வேள் தன் தலைமாலை அவள் திருந்தடியைத்தோய வணக்கமாகிய திறையைக் கொடுப்ப, அவள் புலவிநீங்கி அவனை வருந்தலென்று சொல்லித் தன் மார்பையளிப்ப வள்ளி அதனைக்கண்டு " இனி அவளைக் குறுகல் " என்று அவன் கையை மிக இறுகயாத்துத் தன் கோதை கோலாகப் புடைப்ப அதனைக்கண்டு ஒருவர் மயில் ஒருவர் மயிலோடேல, இருவர் வான்கிளியும் தம்முள் மழலையேற்கின்ற அளவிலே, வெறியாட்டை விரும்பினுன் குன்றத்து வண்டு தேவசேனையது கொண்டைமேற் செறிந்த வண்டை மேற் சென்று பாய்ந்தது.
92

34. காவையொத்தலாவது :-கா, தனக்கு இன்றியமையாத மழையை வருவித்துக்கொள்ள மாட்டாது அது தானே வந்துழிப் பொலிந்து வாராதவழியும் ஆமளவுமாற்றி ஆகாத எல்லேக்கண் இறந்து படுதல்.
44. குன்றத்து வண்டென்றமையான் அது வள்ளியுடையதாயிற்று.
45. அங்ங்ணம் பாய்ந்த அதனைக் கண்டு தேவசேனை பாங்கியர் வள்ளி பாங்கியரோடு இகலித் தாரையும் தாரையும் பிணக்குவார்.
46. மார்பை அழகுசெய்த கொங்கைக்கண்.
47-9. கோதையையும் வரிப்பந்தையும் கொண்டெறிவாராய்த் தம் பேதைமையையுடைய மெல்லிய நோக்கம் வெகுளியான் வேறுபட ஊத நுடங்கும் நுசுப்பினராயிருந்தே மிடைந்த போரை மேற்கொள்ள.
50 - 56. அதனைக்கண்டு, வள்ளிபாங்கியராகிய மென்சீர்மயிலியல வர், தோட்டிப்புண்ணுல் மென்மைபட்ட சென்னியை யுடைத்தாய . மதத்தாற் கமழ்கின்ற களிற்றியல்பைத் தம்பாற்கொள்வார் ; வெற்றிபட்ட செலவினையுடைய புரவிகளது கதியால் வருவார் ; தேரணிபோல வடிக்கயிற்றைத் தெரிந்துகொண்டு வருவார் ; வாளிமார்புற ഖfിണ്ഡങ്ങu வளைய வாங்குவார் ; வாளையுடையவர் நிலைமைபெற மறலுவார் ;
தோள்வளையாகிய ஆழியைச் சுழற்றுவாராக.
57 - 60. வானவன் மகளுடைய பாங்கியர் அதற்கு அஞ்சி வாட் டழும்பு நெருங்கிய வெற்றிமொய்ம்பினையுடைய முருகனைத் தொக்குச் சூழ்ந்துகொண்டு.
62 - 3. அப்பாறையணிந்த சுனைக்கண் வண்டாய் நின்று. 66. ஆகுலமாகுநருமாக. 67-9. குறிஞ்சிநிலத்து மக்களாகிய குறவர்பெற்ற மறங்கெழு கொடிச்சியர் திருந்திய போரை விளைத்தலால் வென்வேலானுக்கு இயைந்தது. இவ்வாறு அவனைப் படர்க்கையாக்கி இவை கூறிப் பின்னும் எதிர்முகமாக்கி வாழ்த்துகின்ருர்,
70. வேலால். 72. ஆடல் பயின்ருரை அவ்வாடல் பயின்ருர் வெல்லவும். 74. வல்லாரை-வல்லுப்போர் வல்லாரை. 75. அல்லார்-ஒழிந்த கல்விகளையுடையார். இக்கல்வி வென்றிகளான் ஒப்பில்லாத புகழ் பரப்ப,
93

Page 55
77 - 8. தடாகம்போலும் சுனைப்பக்கத்துக் கொடியெடுத்து நின்றது. 79. நினக்குப் பொருந்தின வேலினை. 80. வென்றுயர்ந்த கொடியால் விறலமைந்தனை. 81-5. கற்புப்பொருந்திய நெறியையுடைய தேவியரது அன்பு பொருந்திய அவ்வூடலுரிமையை நயத்தற்கேற்ற பண்பினையுடைய குமர ! யாம் நின்னை வணங்கி வாழ்த்தி வேண்டிக்கொள்ளா நின்றேம் ;
அன்பாற் சிறந்த எம்மடிக்கணுறைவு நாடோறும் பொலிந்து பயன்தருத லொடு சிறக்கவென்று.
என்றென்பது அவாய்நிலையான் வந்தது.
94

S LSS SL S S S S S L S L S L LLSSS L S L S S SL S L S L SS0L S LS SL0L SLL SSLLSS S SLL SLL S SY போர்மலிந்து
சூர்மருங் கறுத்த சுடர்படை யோயே.
பரிபாடல், 14 : 17

Page 56

9. செவ்வேள் (பதினுன்காம் பாடல்)
பாடியவர் வரலாறு செவ்வேளுக்குரிய பதினுன்காம் பாடலை இயற்றியவர் கேசவஞர். திருப்பரங்குன்றத்தின் கார் கர்லத்தை இவர் வருணித்துள்ள முறை தனித் தன்மையானது. முருகக் கடவுளை முன்னிலையாக்கித் துதித்துள்ள அருமை ஆய்வோருக்கு இன்பம் பயப்பதாகும்.
முருகப் பெருமானை அடுத்தடுத்து வழிபடுவதன் பயன் மேன்மேலும் அப்பெருமானை வழிபடுவதாக அமைதல் வேண்டுமென்று பாடலின் இறுதியிற் கேசவனுர் வேண்டி நிற்றல், முருகப் பெருமான்மேல் அவருக்குள்ள ஒப்புயர்வற்ற அன்பை அப்படியே புலப்படுத்தி நிற் கின்றது :
அன்னை யாகலி னமர்ந்தியா நின்னைத் துன்னித் துன்னி வழிபடு வதன்பயம் இன்னு மின்னுமவை யாகுக. பதினுன்காம் பாடலுக்கு இசையமைத்தவரும் இவரே. புலவராகவும் இசை வகுக்கும் ஆற்றல் மிக்க இசை வல்லுநராகவும் கேசவனுர் விளங்கினர்.
97

Page 57
பாடலின் பொருட்சுருக்கம்
முருகப் பெருமானே! மேகம் மழையைப் பொழிதலாற் சுனைகள் நிறைந்து பூக்கள் மலர்ந்தன. கடம்ப மலர்த் தாதை ஊதுகின்ற வண்டுகளின் குரல்கள் பண்களைப்போல இசைத்தன. மலைப் பக்கங் களிலுள்ள மூங்கில்கள் மங்கையர்களின் தோள்களையொத்தன. வாகைப் பூவைப் போன்ற கொண்டையை உடைய மயில்கள் அகவுகின்றன. அந்தக் குரல் தலைவியரோடு அளவளாவிப் பிரிந்து சென்ருேர்களே நோக்கி, ' இனித் தாமதஞ் செய்யன்மின் : மீண்டும் விரைந்து வருக என அழைப்பவர்களுடைய குரல்களைப் போன்றன. கொன்றை மரங்களி லுள்ள மலர்க்கொத்துக்கள் பொன்னுலாகிய மலர்களைப் போன்றன. பாறைகளில் வேங்கை மலர்கள் பரந்து கிடந்தன. அவை புலியின் தோற்றத்தைப்போலக் காணப்பட்டன. பரந்து கிடக்கும் வேங்கை மலர்களைத் தாய்மார்கள் பேதை மகளிர்க்குக் காட்டிப் “ புலி ! புலி ! " என்று அச்சுறுத்தினர். அவற்றினிடையே செங்காந்தளின் பூக்கள் மலர்ந்தன. இவ்வாறு நின் பரங்குன்றம் கார்காலத்திலே விளங்கியது.
சூரபன்மாவைக் குலத்தோடு அழித்த வேற்படையை உடையோய் ! வெண்மேகம் எழுந்தாற் போன்ற அகிற் புகைத் தூபத்தை விரும் பினுேய் ! ஆறு திருமுகத்தையும் பன்னிரு தோள்களையும் கொண்டு
வள்ளி என்னும் மலர்போன்ற மங்கையை விரும்பியோய் !
பிரிந்த தலைவன் திரும்பி வந்தான். அவன் திரும்பவும் பிரியக்கூடா தெனத் தலைவி எண்ணினுள். யாழை எடுத்து மீட்டிப் பாடினுள். அந்தப் பாட்டை நீ விரும்பினுய். நீ திருவவதாரம் செய்தபோது இந்திரன் முதலிய தேவர்கள் அஞ்சினர். இரு பிறப்பையும், அப்பிறப்பால் வந்த இரண்டு பெயரையும், அன்பு பொருந்திய நெஞ்சத்தையுமுடைய அந்தணர்களது அறத்தை விரும்பிய பெருமானே !
இவ்வகைத் தன்மைகளை நீ உடையை. அதனுல் உன்னை யாம் விரும்பி நின்பாற் பொருந்தி வழிபாடு செய்கின்ருேம். அவ்வாறு நாம் மேற்கொள்ளும் வழிபாடு மேலும் மேலும் நிகழ அருள்புரிவாயாக !
98

O5
10
15
20
25
பாடல்
கார்மலி கதழ்பெய றலைஇ யேற்ற நீர்மலி நிறைகனை பூமலர்ந் தனவே தண்ணறுங் கடம்பின் கமழ்தா தூதும் வண்ண வண் டிமிர்குரல் பண்ணைபோன் றனவே அடியுறை மகளி ராடுந் தோளே நெடுவரை யடுக்கத்து வேய்போன் றனவே வாகை யொண்பூப் புரையு முச்சிய தோகை யார்குரன் மணந்து தணந்தோரை நீடன்மின், வாரு மென்பவர் சொற்போன் றனவே நாண்மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன மெல்லிணர் வேங்கை வியலறைத் தாயின அழுகை மகளிர்க் குழுவை செப்ப நீரயற் கலித்த நெரிமுகைக் காந்தள் வார்குலை யவிழ்ந்த வள்ளிதழ் நிரைதொறும் விடு கொடிப் பிறந்த மென்றகைத் தோன்றிப் பவழத் தன்ன செம்பூத் தாஅய்க் கார்மலிந் தன்றுநின் குன்று போர்மலிந்து சூர்மருங் கறுத்த சுடர்ப்படை யோயே கறையில் கார் மழை பொங்கி யன்ன *நறையி னறும்புகை நனியமர்ந் தோயே அறுமுகத் தாஹிரு தோளால் வென்றி நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை எழீஇப் பாடும் பாட்டமர்ந் தோயே பிறந்த ஞான்றே நின்னை யுட்கிச் சிறந்தோ ரஞ்சிய சீருடை யோயே இருபிறப் பிருபெய ரீர நெஞ்சத் தொருபெய ரந்தன ரறனமர்ந் தோயே அன்னை யாகலி னமர்ந்தியா நின்னைத்
பாடபேதம் : 1 வண்டின் குரல்.
2. நொமுசை.
3. கரையில, 4. நறையுணறும்.
99

Page 58
30 துன்னித் துன்னி வழிபடு வதன்பயம்
இன்னு மின்னுமவை யாகுக தொன் 1முதிர் மரபினின் புகழினும் பலவே.
என்பது, பருவங்கண்டு அழிந்த தலைமகள்கேட்ப முருகவேளைப் பரவுவாளாய், இப்பருவத்தே தலைமகன் வருமென்பதுபடத் தோழி வற்புறுத்தியது.
பாடியவர் : கேசவனர் இசையமைத்தவர் : கேசவஞர் பண் ; நோதிறம்.
1. மிகுமரபுநின்.
100

பரிமேலழகருரை
1 - 2. மிக்க கதழ்பெயலை மேகம்பெய்தலால் அதனை ஏற்ற மிக்க நீரான் நிறைதலையுடைய சுனைகள் பூ மலர்ந்தன.
2. இடத்துநிகழ் பொருளின்தொழில் இடத்தின்மேல் நின்றது.
4. பண்ணையென்புழி ஐகாரம் பகுதிப்பொருள் விகுதி. 5 - 6. வேய், ஆடும் அடியுறைமகளிர் தோள்களை ஒத்தன. 7 - 8. சூட்டினவாகிய மயில்களின் குறைவற்ற குரல்.
9. கூடிப் பிரிந்தோரை. 10. கொன்றை மலர்களும். 11 - 2. அழுகையையுடைய மகளிர்க்கு அது தீர்தற்பொருட்டுத் தாயர் புலிபுலியென்று சொல்லுமாறு வேங்கைப்பூ வியலறைக்கட் பரந்தன.
13 - 7. இவற்ருேடு, நெருங்கிய முகையையுடைய காந்தள் அவிழ்ந்த இதழ் நிரைதொறும் தோன்றியது விட்டகொடிக்கட் பூத்த செம்பூப் பரக்க நின் குன்று கார் காலத்தன்மை மிக்கது.
இவற்ருேடென்பது வருவிக்கப்பட்டது.
16. தாவவென்பது தாயெனத் திரிந்தது.
18. சூரைக் கிளையொடறுத்த,
19 - 20. கார்காலத்து வெண்மேகம் கிளர்ந்தாலன்ன நறிய அகில் முதலியவற்ருற் புகைத்த நறும்புகையை மிகவிரும்பினுேய் !
21 - 2. அறுமுகத்தையும் ஆறிருதோளையும் உடையையாய் அழ காற் பிறமகளிரை வென்ற வெற்றியையுடைய வள்ளியது நலத்தை நயந்தோய் !
ஆலெனும் உருபு வேறுவினை ஒடுவின்கண் வந்தது.
22. நறுமலர்வள்ளியென்பது, தன்பொருட்கேற்ற அடையடுத்து நின்ற ஆகுபெயர்.
23 - 4. பிரிந்தகேளிர் வந்து புணர்ந்து பின் நீங்காமைப் பொருட்டு மகளிர் யாழையெழுவி நின்னைப் பாடுகின்ற பாட்டை விரும்பினுேய் !
101

Page 59
26. சிறந்தோர் - இந்திரன் முதலாய தேவர்கள். அஞ்சிய - அஞ்சுதற்குக் காரணமாகிய,
27 - 8. இரண்டு பிறப்பினையும் அப்பிறப்பான்வந்த இரண்டு நாமத்தினையும் ஈர நெஞ்சத்தினையும் ஒப்பில்லாத புகழினையுமுடைய அந்தணரது வைதிக அறத்தைப் பொருந்தினுேய் !
29 - 32. நின்னை யாங்கள் மேவி அடுத்தடுத்து வழிபடுவதன் பயம், இன்னும் இன்னும் நின்புகழினும் பலவாக அவ்வழிபாடுகள் தாமே
யாகுக.
32. மிகவும் பழையதாகிய மரபு.
வாருமென்பவர் சொற்போன்றன (9) என்றதனுலும், எழீஇப் பாடும் பாட்டமர்ந்தோய் ' (24) என்றதனுலும் இப்பருவத்தே தலைமகன்
வருமென்பது பட்டவாறு கண்டுகொள்க.
1.02

હેિ ്ട
s ブ
Sea CCSՇ: SR
ՉՈ
பிணிமுக மூர்ந்த வெல்போ ரிறைவ பணியொரீஇ நின்புக ழேத்தி அணிநெடுங் குன்றம் பாடுதுந் தொழுதும் அவை, யாமுமெஞ் சுற்றமும் பரவுதும்

Page 60

10. செவ்வேள் (பதினேழாம் பாடல்)
பாடியவர் வரலாறு
பரிபாடலின் பதினேழாம் பாடலை இயற்றியவர் நல்லழிசியார். இவர் வையைக்குரிய பதிஞரும் பாடலையும் இயற்றியவராவர்.
முருகக் கடவுளுக்குரிய இப்பாடல் பல சிறப்புக்களை உடையது. முருகக் கடவுள் கோயில் கொண்டுள்ள கடம்ப மரத்தை வழிபடுகின்ற அடியார்களின் நிலையை நல்லழிசியார் வருணித்துள்ள திறன் பாராட்டு தற்குரியது. திருப்பரங்குன்றத்திற் கடம்ப மரத்தை வழிபட்டு, மாலை நேரத்தில் அம்மலையின் அடிவாராத்தில் உறைவோர் தேவருலகத்தை யும் விரும்பமாட்டார் என்று நல்லழிசியார் கூறுவது கொண்டு, தமது உள்ளக்கிடக்கையினையே அவ்வாறு அவர் புலப்படுத்தினர் என்று
கூறலாம்.
திருப்பரங்குன்றத்தில் எழுகின்ற இன்னிசைகளை வருணித்துள்ள முறையிலே ஒரு தனிச் சிறப்பினைக் காண முடிகின்றது. திருப்பரங் குன்றத்திலெழுகின்ற வாத்திய இன்னிசைகளுக்கு இயற்கை இன்னிசை கள் ஒத்துச் செல்கின்றமையைப் புலவர் எழிலுற எடுத்துக்காட்டி யுள்ளார். இயற்கையிற் புலவருக்குள்ள ஈடுபாட்டை இவ்வருணனைகள் இனிது தெளிவுறுத்துகின்றன.
இப்பாடலுக்கு நல்லச்சுதஞர் இசை அமைத்துள்ளார். இப்பாட லுடன் 16 ஆம், 18 ஆம், 20 ஆம் பாடல்களுக்கும் இசை அமைத்தவர் இவரே.

Page 61
பாடலின் பொருட்சுருக்கம்
திருப்பரங்குன்றத்தின் சாரலில் மாலைக் காலத்தில், முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் கடம்ப மரத்தைத் துதிக்க அடியார்கள் பலர் கூடினர். அவர்கள் மலர்களையும், குழைகளையும், பூந்துகில்களையும், மணியினையும், வேலினையும் சுமந்து வந்தனர். இவ்வடியார்களுடன் வந்த வேறு பலர் நெருப்பு, இசைக் கருவிகள், வாசனைப் பொருள்கள், அகிற்புகை, கொடிகள் முதலியவற்றைத் தாங்கி வந்தனர். திருப்பரங் குன்றத்தை வந்தடைநீத அடியார்கள் முருகக் கடவுள் எழுந்தருளியிருக் கும் கடம்ப மரத்தை வணங்கிப் பாடிப்பரவினர் ; மலையின் அடிவாரத்தில் மாலை நேரத்திற் குழுமி நின்றனர். அவர்களுள்ளே தேவர் உலகத்துள் உறைதலை வேண்டுவோர் யார் ? எவருமிலர்.
அக்குன்றத்தின் ஒரு பக்கலிற் பாணர்களுடைய யாழோசை எழுந்தது ; அதனெதிர் வண்டுகளின் இன்னிசை இசைத்தது. ஒருசார் புல்லாங்குழலின் ஒலி எழுந்தது; மறுசார் தும்பிகள் முரன்றன. ஒருபால் முழவம் அதிர்ந்தது ; அதனெதிர் அருவி நீர் ஒலித்தது. ஒருபுறம் ஆடு மகளிர் ஆட, அதனெதிர் பூங்கொடிகள் அசைந்தன. ஓரிடத்திற் பாடுமகளது பாலைப் பண் ஒலிக்க, அதனெதிர் ஆடும் மயிலின் அகவுங் குரல் கேட்டது. இவ்வாறு எதிரெதிர் எழுகின்ற ஓசைகளைக் கொண்டது முருகனது திருப்பரங்குன்றம்.
பரங்குன்றத்துக்கு அண்மையிலுள்ளது மதுரை. எனினும், மகளிரும் மைந்தரும் அங்கே நெருங்கி விளையாடுதலால் இரண்டு இடங்களுக்கும் இடையிலான தூரம் நீண்டதாக இருந்தது. அங்கே குழுமி நின்ற மகளிரது கூந்தலிலிருந்தும், மைந்தரது குஞ்சியிலிருந்தும் வீழ்ந்த மலர்களாலும் மாலைகளாலும் பாதை மூடுண்டு கிடந்தது. அத்தகைய திருப்பரங்குன்றத்தில் முருகன் எழுந்தருளியுள்ளான். அங்கிருந்தவாறு அப்பெருமான் ஆங்காங்கே செய்யப்படும் பூசைகளை ஏற்றுக்கொள் கின்ருன். அப்பூசைகளிலே அகிற்புகை மேலே எழுந்துபோகத் தேவர்கள் கண்ணிமைத்து நின்றனர்; சூரிய மண்டிலமும் தோன்ருது மறைந்தது.
திருப்பரங்குன்றத்தின் சுனையிலே மகளிரும் மைந்தரும் பாய்ந்து விளையாடினர். அதனுல் வண்டுகள் பயந்து பறந்தன; அச்சுனையிலுள்ள மலர்த் தாதினை உண்ணவும் அவை மறந்தன. இவ்வாறு திருப்பரங்குன் றம் அழகுமிக்கதாய் விளங்கியது.
106

திருப்பரங்குன்றத்திலிருந்து அருவி பாய்ந்தோடியது. அந்த நீர் மலைச் சாரலிலேயுள்ள வயல்களிலே பாய்ந்து பரந்தது. அந்த அருவியிலே மகளிர் விளையாடினர். அப்போது மங்கையர்களின் ஆபரணங்களினின் றும் விழுந்த நீலமணிகள் அந்த வயல் நிலத்தைச் சிதைத்தன.
தெய்வ விழாவும் விருந்தயர்தலும், பரங்குன்றத்துக்கும் வையைக் கும் மதுரைக்கும் இயல்பானவை.
மயிலையும் கோழிக் கொடியையும் உடைய முருக! பிணிமுகத்தின் மேல் ஊர்ந்து போர் செய்து வெல்லும் தலைவ! பிறவித் துன்பம் நீங்கி, இன்பம் மலிந்த நாட்களை யாம் பெறுகவென்று வேண்டி, யாமும் எம் சுற்றத்தாரும் நின் புகழையேத்தி நின் பரங்குன்றத்தைப் பாடித் தொழுகின்ருேம் ! அருள் புரிவாயாக !
107

Page 62
05
O
15
20
25
象。 TL6)
தேம்படு மலர்குழை பூந்துகில் வடிமணி ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ விடையரை யசைத்த வேலன் கடிமரம் பரவின ருரையொடு பண்ணிய விசையினர் விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக் கோலெரி கொளைநறை புகைகொடி யொருங்கெழ மாலை மாலை யடியுறை யியைநர் மேலோ ருறையுளும் வேண்டுநர் யாஅர் ஒருதிறம், பாணர் யாழின் றிங்குரலெழ ஒருதிறம், யாணர் வண்டி னிமிரிசையெழ ஒருதிறம், கண்ணுர் குழலின் கரைபெழ ஒருதிறம், பண்ணுர் தும்பி பரந்திசை யூத ஒருதிறம், ம்ண்ணுர் முழவி னிசையெழ ஒருதிறம், அண்ண னெடுவரை யருவிநீர் ததும்ப ஒருதிறம், பாடனல் விறலிய ரொல்குபு நுடங்க ஒருதிறம், வாடை யுளர்வயிற் பூங்கொடி நுடங்க ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின் நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற ஒருதிறம், ஆடுசீர் மஞ்ஞை யரிகுர ருேன்ற மாறுமா றுற்றனபோன் மாறெதிர் “கோடல் மாறட்டான் குன்ற முடைத்து. பாடல் சான்று பல்புகழ் முற்றிய கூடலொடு பரங்குன்றினிடைக் கமழ்நறுஞ் சாந்தி னவரவர் திளைப்ப *நணிநணித் தாயினுஞ் சேஎய்ச் சேய்த்து மகிழ்மிகுதேஎங் கோதையர் கூந்தல் குஞ்சியிற் *சோர்ந்தவி Nதழி னியங்குமா றின்று வசைநீங்கிய வாய்மையால் வேள்வியாற் றிசைநாறிய குன்றமர்ந் தாண்டாண்
பாடபேதம் : 1விரைஇய,
2 பாடல்விறலியர், யாடனல்விறலியர்,
3 கொள்ளன 4 நணரிந்தணித்தாயினுஞ் 5 சோர்ந்தவிதழின்.
108

30
35
40
45
50
டாவி யுண்ணு மகில்கெழு கமழ்புகை வாய்வாய் மீபோ யும்பரிமை பிறப்ப தேயா மண்டிலங் காணுமா றின்று வளைமுன்கை வணங்கிறையார் அணைமென்றே ளசைபொத்தார் தார்மார்பிற் றகையியலார்
ஈரமாலை யியலனியார் மனமகிழ் தூங்குநர் பாய்புட னுடச் சுனைமலர்த் தாதுதும் வண்டூத லெய்தா அனையபரங் குன்றி னணி.
கீழோர், வயல்பரக்கும் வார்வெள்ளருவி பரந்தா னுதரோ மேலோர், இயங்குதலால் வீழ்மணி நீலஞ் செறுவுழக்குமரே தெய்வ விழவுந் திருந்து விருந்தயர்வும் அவ்வெள் ளருவி யணிபரங் குன்றிற்கும் தொய்யா விழுச்சீர் வளங்கெழு வையைக்கும் கொய்யுளை மான்றேர்க் கொடித்தேரான் கூடற்கும் கையூழ் தடுமாற்ற நன்று.
எனவாங்கு மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடிப் பிணிமுக மூர்ந்த வெல்போ ரிறைவ *பணியொரீஇ நின்புக ழேத்தி அணிநெடுங் குன்றம் பாடுதுந் தொழுதும் அவை, யாமுமெஞ் சுற்றமும் பரவுதும் ஏம வைகல் பெறுகயா மெனவே.
பாடியவர் : நல்லழிசியார்? இசையமைத்தவர் நல்லச்சுதஞர். பண் ; நோதிறம்.
பாடபேதம் : 1 நீலஞ்சேறுழக்கும், நீலஞ்சிதைக்கும்,
2 பணியொரீஇய 3 நல்லழுசியார்.
109

Page 63
பரிமேலழகருரை
1 - 8. கோலப்படும் எரியும் இசையியங்களும் சந்தனமுதலிய விரைகளும் அகிற்புகையும் கொடிகளும் ஒருங்கே வரத் தாம் தேன் விளைந்த மலர்களையும் குழைகளையும் பூத்தொழில்களையுடைய துகில் களையும் வடித்த மணியினையும் ஏந்தப்படும் இலையினையுடைய வேலினை யும் சுமந்துவந்து கடிமரமாகிய கடம்பை உரையாலே ஏத்தினராய், ஆளத்தியாலாக்கிய இசையினராய் விரிமலர்மதுவான் மரங்கள் நனையுங் குன்றத்து அடியின்கண் உறைதலை மாலைகடோறும் பொருந்துவாருள் தேவருலகத்து உறைதலை வேண்டுவாருளரோ ?
2 - 3. சந்தனத்தைத் தெளித்து அரைக்கண்ணே வேலன் விடையைக் கட்டின பூசையையுடைய மரமெனக் கூட்டுக.
கோலெரி (6) - தீபம். எழவெனவுழ் சுமந்தெனவும் நின்ற வினையெச்சங்களும், பரவினர் இசையினரென்னும் முற்றுவினையெச்சங்களும் இயைநரென்னும் தொழிற் பெயருள் இயைதலொடு முடிந்தன.
10. பூக்களாகிய புதுவருவாயினையுடைய வண்டு. 11. கரைபு. 12. ........ போலும் இசையினை. 15. பாடுதல் நல்ல விறலியர். வினையது நன்மை வினைமுதன்மேல் நின்றது. 16. உளர்வயின் - அசைந்த விடத்து. 17 - 8. பாலையையுடைய அழகிய மிடற்றுப்பாடற்கண் நாலு தாக்குடைய கிழமையும் இரண்டு தாக்குடைய .குறையும் தோன்ற.
19. சீருக்கு இசைய ஆடுகின்ற மயிலது அரிந்த குரல். 20. கல்விகள்ால் மாறுமாருந் தன்மையுற்றனபோல இகலை ஏற்றுக் கோடல்.
9 - 19. யாழின்குரலொடு வண்டிசைக்கும், குழலின்கரைபொடு தும்பியிசைக்கும், முழவிசையொடு அருவிநீரொலிக்கும், விறலியர் நுடக் கத்தொடு கொடி நுடக்கத்திற்கும், கிழமைநிறைகுறைகளின் தோற்றத் தொடு அரிகுரற்றேற்றத்திற்கும் கொள்க.
22 - 5. பாடுதலமைந்து பல புகழும் முற்றுப்பெற்ற கூடற்கும் பரங்குன்றத்திற்கும் இடைநின்ற நிலம் மிக அணித்தாயினும் மகளிரும் மைந்தரும் நெருங்கி விளையாடுதலால் மிகச் சேய்த்தாகா நின்றது.
110

26 - 7. மகிழ்ச்சி மிக்க அவர்கள் கூந்தலினின்றும் குஞ்சியினின் றும் வீழ்ந்து அவிழ்ந்த மாலையால் தடுக்கப்பட்டு இயங்குநெறி இன்ருகா நின்றது.
29 - 32. புகழால் திசையெங்கும் பரந்த குன்றின்கண் மேவி உலகத்தார் பலவிடத்தும் செய்கின்ற பூசைக்கண் முருகன் ஆவியாகக் கொள்ளும் அகிற்புகை அவ்விடந்தோறும் மேலே போதலான் உம்பர் இமையாநின்று நீங்குவார் ; ஆதித்தமண்டிலமும் ஆண்டுக் காணும் இயல்புடைத்தன்று.
32. தேயாமண்டிலமென்ருர், ஏனைமண்டிலம் தேய்தலின். 33 - 9. ஈரமாலை இயலணியாராகிய வளைமுன்கை வணங்கிறையா ரும் அவர் அணைமென்ருேளின்கட் டங்கி அன்பொத்தாராகிய தார்மார் பிற் றகையியலாரும் மனமகிழ்தூங்கி உடனே பாய்ந்தாடுதலால், வண்டுகள் வெருவிச் சுனைமலர்த்தாதினை ஊதப்பெரு ; பரங்குன்றினது அலங்காரம் அத்தன்மைய.
என்றது, முன்னர்ச் சொல்லுகின்றவற்றை. 40 - 41. மலைக்கண் வார்வெள்ளருவி ஆணுது பரந்து உழவரது வயலின்கட் பரக்கும். மேல் விளையாடுமகளிர் இயங்குதலால் அவர் பூணினின்றும் விழுந்த மணிநீலம் உழுநிலத்தைச் சிதைக்கும்.
இரண்டு அரோவும் அசை, 42 - 6. பிரிந்த தலைவர் வினைமுடித்துக் கடிதின்வந்து கூடுதற்கு அவ்வெள்ளருவியணிந்த பரங்குன்றின்கண் தலைவியர் செய்யும் தெய்வ விழாவும் அங்ங்ணம் கூடியவழிக் கெடாத விழுப்புகழையுடைய வளங் கெழு வையையின்கண்ணும் ஏனையார் கொய்யுளை மான்றேராற் சூழப் பட்ட கொடித்தேரையுடையான் கூடற்கண்ணும் அவர்செய்யும் திருந்து விருந்தயர்வும் தம்மிற் காரணகாரியங்களாய்த் தடுமாறிவருதல் இல்லற நெறியாதலின் அவர்க்கு நல்லொழுக்கமாயிற்று.
வையையின்கண் விருந்தயர்தலாவது, அவரோடு புதுப்புனலாடுதல். கற்புடை மகளிரும் தலைவரது அறம் நிமித்தமாகப் பூசை செய்து அதன் பயன் நுகர்வரென்றலின், இதுவும் கடவுண்மேலதாயிற்று.
இவ்வளவும் முருகனது பரங்குன்றத்தைப் புகழ்ந்து, மேல் அவனை எதிர்முகமாக்கி வாழ்த்துகின்ருர் :-
48 - 53. மணிநிற மஞ்ஞையினையும் உயர்ந்த கோழிக் கொடி யினையும் 1 பிணிமுகத்தை ஊர்ந்து செய்யப்பட்ட வெல்போரையுமுடைய தலைவ 1 மக்கண்மாட்டுப் பணிமொழியையொழிந்து நின்புகழையேத்தி es»e a se யாமும் எம் சுற்றமும் வேண்டிக்கொள்ளாநின்றேம், பிறவித் துன்பம் சாராத வைகலப் பெறுகவென்று.
111

Page 64

வெண்சுடர் வேல்வேள் விரைமயின்மேன் ஞாயிறுநின்
ஒண்சுட ரோடைக் களிறேய்க்கு நின்குன்றத்
தெழுதெழி லம்பலங் காமவே ளம்பின் தொழில்வீற் றிருந்த நகர்.
பரிபாடல், 18 : 26-29.

Page 65

11. செவ்வேள் (பதினெட்டாம் பாடல்)
பாடியவர் வரலாறு
பரிபாடலிலுள்ள ஒன்பதாம் பாடலையும் பதினெட்டாம் பாடலையும் இயற்றியவர் குன்றம்பூதனர். இவர் முருகப் பெருமான்மேல் இரண்டு பாட்டுக்களைப் பாடியுள்ளமையால் முருக பத்தராக வாழ்ந்தார் என்று கூறலாம்.
இவர் பாடிய பதினெட்டாம் பாடல், பல சிறப்புக்களைக் கொண்டு விளங்குகின்றது. திருப்பரங்குன்றத்தில் வாழ்கின்ற காதலர்களின் வாழ்க் கையைக் குன்றம்பூதனுர் எழிலுற வருணித்துள்ளார். இச்செய்ய்ளாற் சூரனுடைய மா மரச் செய்தியையும் திருப்பரங்குன்றத்திலுள்ள கோயி லின் பக்கத்தே இருக்கின்ற சித்திரவம்பலத்தையும் தெரிந்துகொள்ள முடிகின்றது.
குறிஞ்சித் திணைக்குரிய முதல், கரு உரி என்ற முப்பொருளையும் செவ்வனே அமைத்து நயமுறப் புலவர் வருணித்துள்ளர்ர். இதனல், இவர் அகத்திணையைப் பாடுதலில் வல்லார் என்பது இனிது புலனு கின்றது.
பரங்குன்றத்தின் இயற்கை அழகை வருணித்து, அதனை இமய மலைக்கு ஒப்பிட்டுப் பாடியுள்ளமை பாராட்டுதற்குரியது. குன்றத்தை அழகுறப் பாடியமையால், இவர் குன்றம்பூதஞர் என்ற பெயரைப் பெற்ருர் போலும்
இப்பாடலுக்கு நல்லச்சுதளுர் இசை அமைத்துள்ளார். நல்லச்சுதனுர் செவ்வேளுக்குரிய இருபத்தொராம் பாடலைப் பாடியவராவர்.
15

Page 66
பாடலின் பொருட்சுருக்கம்
கடலிற் புக்கிருந்த சூரபன்மாவாகிய மா மரத்தைத் தடிந்தோய் ! திருப்பரங்குன்றத்தை விரும்பி அங்கு கோயில் கொண்டுள்ளன ! அதனுல் திருப்பரங்குன்றம் இமயத்தைப் போலப் புகழ்பெற்று விளங்கு கின்றது.
திருப்பரங்குன்றத்திலே கானவன் ஒருவன் மயில் ஒன்றைக் கண்டான் ; அதன் அழகிலும் களிப்பிலும் தன் மனத்தைப் பறிகொடுத்து நின்ருன். தலைவனுடைய அந்த நிலையைத் தலைவி கண்டாள். "நீ என்னை நோக்காமல் மயிலையே பார்ப்பதன் அர்த்தம் என்ன ? உன்னுடைய இந்தச் செயலால் என்னை நீ இகழ்ந்தாய்" என்று சொல்லிச் சினந்தாள். தலைவியினுடைய நிலையைத் தலைவன் உணர்ந்தான். தலைவியைப் பார்த்து, "அன்பே கொள்ளுதற்கரிய நின் சாயலைக் களவுகொள்ள எண்ணி அதனைத் தன்பாற் பெறமுடியாமல் துன்பப்படும் இந்த மயிலைக் கண்டேன். நின் சாயலின் அருமையை நினைந்து என்னையே மறந்து நின்றேன். ஆனல், நான் உன்னை இகழ்ந்ததாக நீ எண்ணுகின்ருய்" என்று கூறித் தலைவியைச் சமாதானஞ் செய்தான். இதுவே, திருப்பரங் குன்றத்தின் இயல்பாகும்.
தலைவன் பரத்தையிற் பிரிந்து சென்ருன். அவ்வாறு சென்ற அவன் பாணன் ஒருவனைத் தலைவியிடம் தூதாக அனுப்பினுன். பாணன் தலைவிபாற் சென்று பாடினன். அது கண்ட தலைவி, "பொன்னணியினை யுடைய பாணு ' தலைவனுடைய உடம்பிலுள்ள வடுக்கள் அவனது பரத்தமையைப் புலப்படுத்தின. நீ பாடிய பாட்டும் பொய்ம்மை மிகுதியையே உணர்த்திற்று" என்ருள்.
வேலவனே 1 மயிலேறிவரும் ஞாயிறே ! மழை முகில் முழங்கும் சிகரத்தையுடைய திருப்பரங்குன்றம், முகபடாத்தையுடைய யானையை ஒக்கும். அக்குன்றத்தின்கண் உள்ள சித்திரசாலை காமவேளது படைக் கொட்டிலை ஒக்கும். மலர்களின் செறிவாற் சோலைகளும் சுனைகளும் அக்காமவேளது அம்பருத் தூணியை ஒக்கும். கார் காலத்திலே தோன்றும் காந்தட் பூவின் குலைகள், அவனிடம் போரிலே தோல்வி யடைந்த கட்டுண்டார் கைகளை ஒக்கும். வண்டுகளினுற் கட்டவிழ்க்கப் படும் காந்தளின் முகைகள், யாழ் நரம்பினது கட்டை நெகிழ்ப்பவர் கைகளை ஒக்கும்.
116

முன்பனிக் காலத்தில் அழகிய மேகம் முழங்கி இந்திர வில்லே வளைத்தது. பரங்குன்றத்திலுள்ள மரங்கள், அந்த வில்லாற் சொரியப்படும் கணைகளைப்போல மெல்லிய மலர்களைப் பரப்பின. அக்குன்றத்திலே தாள ஒலி எழுந்தது. வாத்தியங்கள் இயம்பின. மேகங்கள் முழங்கின. இவை யாவும் போர் முழக்கத்தைப் போலத் திருப்பரங்குன்றத்திலே ஒலித்தன. அருவிகள் ஒலித்து ஓடின. அவை சிகரங்கள் முத்தாரங்களை அணிந் துள்ளன போலத் தோன்றின. தினைக் கதிர்கள் விளைந்தன; அங்கே பறவைகள் பறந்து திரிந்தன.
வேற்படைச் செல்வ ! யாழோசையும் இயற்பாட்டுக்களும் பொருந்தி வேதவொலியுடன் பூக்களையும் தீபங்களையும் ஏற்றருளிய நின் திருவடிக் கீழ் என்றும் நீங்காது உறைதலை விழைந்தோம். அங்ங்ணம் இருப்ப இன்னருள் புரிவாயாக !
117

Page 67
O5
10
15
20
25
பாடல்
போரெதிர்ந் தேற்ருர் மதுகை மதந்தபக் காரெதிர்ந் தேற்ற "கமஞ்சூ லெழிலிபோல் நீர்நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்துச் சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்நின் சீர்நிரந் தேந்திய குன்ருெடு நேர்நிரந் தேறுமா *றேற்குமிக் குன்று. ஒள்ளொளி மணிப்பொறி யான்மஞ்ஞை நோக்கித்தன் உள்ளத்து நினைப்பானைக் கண்டன டிருநுதலும் உள்ளிய துணர்ந்தேனஃ துரையினி நீயெம்மை எள்ளுதன் மறைத்தலோம் பென்பாளைப் பெயர்த்தவன் காதலாய் நின்னியல் களவெண்ணிக் களிமகிழ் பேதுற்ற விதனைக்கண் டியானுேக்க நீயெம்மை * ஏதிலா நோக்குதி யென்றங் குணர்ப்பித்தல் ஆய்தேரான் குன்ற வியல்பு. ஐவளம் பூத்த வணிதிகழ் குன்றின்மேல் மைவளம் பூத்த மலரேர் மழைக்கண்ணுர் கைவளம்பூத்த வடுவொடு காணுய்நீ மொய் வளம் பூத்த முயக்கம்யாங் கைப்படுத்தேம் மெய்வளம் பூத்த விழைதகு பொன்னணி நைவளம் பூத்த நரம்பியைசீர்ப் பொய்வளம் பூத்தன பாணுநின் பாட்டு. தண்டளிர் தருப்படுத் தெடுத்துரைஇ மங்குன் மழைமுழங்கிய விறல்வரையாற் கண்பொருபு சுடர்ந்தடர்ந்திடந் திருள்போழுங் கொடிமின்னுல் வெண்சுடர் வேல்வேள் விரைமயின்மேன் ஞாயிறுநின் ஒண்சுட ரோடைக் களிறேய்க்கு நின்குன்றத் தெழுதெழி லம்பலங் காமவே ளம்பின் தொழில்வீற் றிருந்த நகர்.
பாடபேதம் : 1 கயஞ்சூழெழிலி. 4 றேற்றருங்குன்று.
2 மாதபுத்தோய். as a 5 ஏதிலானுேக்குதி. 3 நீர் நிரந் --- 6 விழைதரு மெய்யணி.
18

30
35
40
45
50
55
ஆர்ததும்பு மயிலம்பு நிறைநாழி சூர்ததும்பு வரைய காவாற் கார்ததும்பு நீர்ததும்புவன சுனை 2 ஏர்ததும்புவன பூவணி செறிவு போர்தோற்றுக் கட்டுண்டார் கைபோல்வ *கார்தோற்றும் காந்தள் செறிந்த கவின். கவின்முகை கட்டவிழ்ப்பதும்பிகட் டியாழின் புரிநெகிழ்ப்பார் போன்றன கை. அச்சிரக் காலார்த் தணிமழை கோலின்றே வச்சிரத் தான்வான வில்லு, வில்லுச்சொரி பகழியின் மென்மலர் தாயின வல்லுப்போர் வல்லாய் மலைமேன் மரம் வட்டுருட்டு *வல்லாய் மலைய நெட்டுருட்டுச் சீர்ததும்பு மரவ முடன்சிறந்து போர்ததும்பு மரவம் போலக் கருவி யார்ப்பக் கருவிநின்றன குன்றம் அருவி யார்ப்பமுத் தணிந்தன வரை குருவி யார்ப்பக் குரல்குவிந்தன தினை எருவை கோப்ப வெழிலணி திருவில் வானி லணித்த வரியூதும் பன்மலராற் கூனி வளைத்த சுனே. புரியுறு நரம்பு மியலும் புணர்ந்து சுருதியும் பூவுஞ் சுடருங் கூடி எரியுரு ககிலோ டாரமுங் கமழும் செருவேற் ருனைச் ெேசல்வநின் னடியுறை உரிதினி னுறைபதிச் சேர்ந்தாங்குப் பிரியா திருக்கவெஞ் சுற்றமோ டுடனே.
பாடியவர் : குன்றம்பூதஞர் இசையமைத்தவர் ! நல்லச்சுதனுர்
பண் : காந்தாரம்
LNTLĜUiĝ5tb :
1 நீர்தயங்குவன. 4 தணிமணி மழை. 2 ஏர்தயங்குவன பேர்தயங்குவன. 5 வல்லாயமலே நெருட்டுருட்டுக. 3 கார்தோற்றற் காந்தளஞ் செறிந்த 8 செல்வனின்
119

Page 68
பரிமேலழகருரை
1-6. தம்முட்கூடிப் போரையேற்ற அவுணரது வலியானுண்டாகிய பெருமிதம் கெட, விசும்பின்கட்பரந்து கார்காலத்தையெதிர்ந்த நிறைந்த சூலையுடைய மேகம்போலிருண்டு நீரைப்பரந்தேற்ற நிலத்தால் தாங்கப்ப டும் கடற்பரப்பினுட் பரந்துசுற்றிய சூர்மாவைத் தபுத்தோய் ! நின்னப்ப யந்த புகழைத் தான் அகன்று ஏந்திய இமயத்தொடு நேர் நின்று ஏறுமாருதலை யேற்கும், இப்பரங்குன்று.
மதந்தப மாதபுத்தோயென இயையும். 6. ஏறுமாறென்பது, பகைத்தற்கு ஒருலக வழக்கு, நீ விரும்புதலால் இப்பரங்குன்று நின்னைப்பயந்த இமயம்போலப் புகழ்பெற்றது என்றவாறு.
இனி முருகவேளப் படர்க்கையாக்கி இம்மலேச்சிறப்புக் கூறுகின் (grif :-
7-13. ஒள்ளொளிமணிபோலும் பொறியினேயுடைய ஆலுமயிலே நோக்கி, அதழைகையும் களிப்பினையும் தன் உள்ளத்தாற் குறிக்கொள் ளும் கானவனேத் திருநுதல் கண்டு நீ நினத்ததரிந்தேன் ; இனி, அதனே எமக்கு உரை ; எம்மை நோக்காது இகழலே மறைத்த லொழி" என்று ஊடுவாளே அவன் அதனேமாற்றி, "யாம்செய்யுங் காதலை யுடையாய் ! தன்னுற் களவுகொள்ள அரிதாய நின்சாயலேக் களிமகிழாற் களவுகொள்ள எண்ணி அதுதான் பெருது வருத்தமுற்ற இதனேக் கண்டு யான் அவ்வருமையை நினைக்க, நீ எம்மை இகழ்ந்தேமாகக் கருதா நின்ருய் ' என்று அவ்வூடலே அப்பொழுதே உணர்ப்பித்தல்.
15-21. மெய் அழகுபூத்தற்கு ஏதுவாகிய விழைதகு பொன்னணி யினையுடைய பாணு, ஐந்துவளமும் பொலிந்த பரங்குன்றின்மேல் வாழும் மழைக்கண்ணுரது இறுகன்மிகுதியையுடைய முயக்கத்தை அவருகிர் செய்தவடுவால் யாம் தெளியவறிந் . . . . . . . . . . . . . . . . நட்டபாடை யென்னும் பண்ணைத் தருகின்ற யாழ் நரம்பிற்கு இயைந்த நின் பண்டைப்பாட்டு (?) நின்னேயல்லது பரத்தைமையானென்னும் இய லொடு கூடுதலால் நின் பொய்ம்மிகுதியையுணர்த்திற்று.
மலைவளம் ஐந்தாவன :" அரக்கிறலிசெந்தே னணிமயிலின் பீலி, திருத்தகு நாவியோ டைந்து ” என்பதனுலறிக.
இது பாணனுக்குத் தலைவன் பரத்தைமை கூறுகின்ருளொருதலேவி
கூறறு.
120

இதனுல் அத்தன்மைத்தாகிய இன்பத்தென்பது பெறப்பட்டது.
இனி அவனை எதிர்முகமாக்கி23-9. வேலையுடைய வேளே விரைந்த மயின்மேல் வரும் ஞாயிறே ! மழை முழங்கிய சிகரமும் அதன்கட் கொடிமின்னும், நின் ஒடையையுடைய களிற்றையொக்கும் ; நின் குன்றத்தின்கண் எழுதிய அழகையுடைய அம்பலம் அம்பினது ஏத்தொழில் நிலைபெற்ற காமவேள் சிரமச்சாலையையொக்கும்.
LYYY00LzLLLLLL0LLLLLYLLLLLL0LLLL0LLLLLL00YLLLLLL0 த்துமின்னும் 6 ypics Grbirdis .........................." அம்பின்தொழிலெண்ருர்,
மழைக்கு முழக்கம் கூறியனமையான், யானைக்கும் முழக்கம் கொள்ளப்படும்.
30-33. சூர்நிறைந்த வரையவாகிய சோலைகளும் மேகத்தால் நிறைந்த நீர் துளும்புவனவாகிய சுனைகளும் பூவணிந்த செறிவால் அழகு துளும்புகின்றவை ஆர்மிக்க கூரிய அம்பு நிறைந்த அவன் தூணியையொக்கும்.
34-5. கார் தோன்றுவிக்கும் காந்தட்குலைகள் நெருங்கிய அழகாற் போர்தோற்றுக் கட்டுண்டார் கையையொக்கும்.
36-7. தும்பி கட்டவிழ்ப்பனவாகிய கவினையுடைய காந்தண்முகைகள் கட்டுதலையுடைய யாழ்நரம்பினது புரியை நெகிழ்ப்பார் கையை ஒத்தன.
உவமை, மலராது குவியாது இடையதாகிய நிலைமைபற்றி நின்றது.
38-9. அழகியமேகம் முன்பணிக்காலத்தின்கண் ஆர்த்து இந்திரனது வானவில்லை வளைத்தது.
ஆர்ததும்பும் (30) என்பது முதலாய இந்நான்குறுப்பிற்கும் குன்றத்தென்பது அதிகாரத்தான் வருவிக்க.
40-41. சூதுப்போர்வல்ல நினது மலைமேன்மரங்கள் அவ்வில்லுச் சொரியுங் கணைகளுளவாயின் அவற்றையொக்க மெல்லிய மலரைப் பரப்பின.
42-3. வட்டுருட்டுதல்வல்ல நின் மலைக்கட்குன்றத்துப் போரின் கண்மிகும் அரவம்போலத் திரளாகிய தாளமொலிக்கும் ஒலியொடு சிறந்து இயங்களார்ப்ப மேகத்தொகுதியும் அவ்வார்ப்பொடு நின்றன.
121

Page 69
ஈண்டுக் குன்றமென்றது, முருகவேள் கோட்டத்தையும் அதனைச் சூழ்ந்த இடத்தையும்.
48. மலைக்கட் சிகரங்கள் அருவி ஆர்த்தலால் முத்தணிந்தாலொத்
தன.
47. தினைகள், குருவியார்க்குமாறு கதிர்கள் விளைந்தன.
48-50. சுனைகள், கரையினின்றும் சாய்ந்த வேழத்தை முட்டுவன பல நிறத்து மலராற் கூனற்பட்டு எழிலனிந்த திருவில்லை வளைத்த வானையொப்பவாகி வண்டுதும் அழகுடையவாயின.
இவ்வளவும் மலைச்சிறப்புக் கூறி மேல் வாழ்த்தி முடிக்கின்ருர் :-
51-6. செருவேற்ருனைச் செல்வ ! நின்பூசைக்கட் புரிதலுற்ற நரம்பினது ஒலியும் புலவர்பாடிய இயற்பாட்டுக்களும் பொருந்தி வேதவொலியும் உபசாரமாகிய பூவும் தீபமுங்கூடி எரியின்கண் உருகுமகிலும் சந்தனமும் தூபமாய் கமழா நிற்கும் நின் அடியின் கண் உறைதலை எமக்கு உரித்தாக உறையும் பதியைச் சேர்ந்தாற்போல எம் சுற்றத்தோடு கூடியாம் பிரியாதிருப்பேமாக,
122

A 2ஆற் S. 鳢 懿季意
2
S
N
M
Cs
酶
ܐܵ
நிலவரை யழுவத்தான் வானுறை புகறந்து புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந் தருமுனி மரபி ஞன்றவர் நுகர்ச்சிமன் இருநிலத் தோரு மியைகென வித்தநின் தண்பரங் குன்றத் தியலனி நின்மருங்கு சாறுகொ டுறக்கத் தவளொடு
மாறுகொள் வதுபோலு மயிற்கொடி வதுவை.
பரிபாடல், 19 : 1-7.

Page 70

12. செவ்வேள் (பத்தொன்பதாம் பாடல்)
பாடியவர் வரலாறு
இப்பாடலை இயற்றியவர் நப்பண்ணனர். இவரது இயற்பெயர் பண்ணஞர் என்பது. 'ந' என்பது சிறப்புப் பொருளைத் தருகின்றவோர் இடைச் சொல்லாகும்.
இவர் இயற்றிய இப்பாடல், பல சிறப்புக்களைக் கொண்டு விளங்குகின் றது. "தேவயானையைத் திருமணஞ் செய்து, வானுலகத்திலே தேவர்கள் இன்பத்தை பெறுவதற்கு வழிசெய்தனை. அதேபோல மண்ணுலகத்தில் மக்கள் இன்பமடைய வள்ளிநாய்ச்சியாரை மணந்தனை” என்று பொரு ளமையப் பாடி, முருகப் பெருமான் விண்ணவருக்கும் மண்ணவருக்குங் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கின்ருன் என்று கூறி நப்பண்ணணுர்
புளகாங்கிதம் கொள்கின்ருர்,
திருப்பரங்குன்றத்திற் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானை வழிபடுவதற்கு மதுரையிலுள்ள மைந்தரும் மகளிரும் விடியற் காலையிற் புறப்பட்டுச் செல்வதையும், பரங்குன்றத்துக்கும் மதுரைக்குமிடையிலான வழியின் இயல்பையும் வருணித்து நப்பண்ணணுர் தமது பத்திப்பெருக் கைக் காட்டியுள்ளமையை இப்பாடலிற் காணக்கூடியதாக இருக்கின்றது.
முருகப் பெருமானின் திருக்கோயிலைப் பாண்டிய மன்னன் வலம் வந்த வகையையும், அவனது பரிவாரம் அவனைத் தொடர்ந்து அவ்வாறு வந்தபோது, திருப்பரங்குன்றத்தின் நிலப்பரப்புப் பாண்டியனது பாசறை போலத் தோன்றியதையும் நப்பண்ணணுர் எழிலுற வருணித்துள்ளமை அவரின் கவித்திறத்தையும் கற்பனை வளத்தையும் இனிது புலப்படுத்து கின்றன.
இன்னும், பலவகை மலர்கள் கவினுறத் தோற்றமளித்தல், கொடி யேற்றிய யானையை அலங்கரித்துப் பூசித்தல், கன்னியரும் கற்புடைய மகளிரும் பயன்கருதி அந்த யானையின் கவள மிச்சிலை உண்ணுதல், முருகப் பெருமான் கடம்ப மரத்தடியில் எழுந்தருளி வழிபாடேற்றல் என்பன இப்பாடலிற் சித்திரிக்கப்பட்டுள்ளன. இப்பாடலில் வந்துள்ள உவமைகள் மிக்க இன்பத்தைத் தருவன.

Page 71
இப்பாடலுக்கு இசை அமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனர். செவ்வேள்மேற் பாடப்பட்ட எட்டாம் பாடலுக்கும் ஒன்பதாம் பாடலுக் கும் இசை அமைத்தவரும் இவரே. இன்னும், வையை பற்றிப் பாடப்பட்டுள்ள ஆருவது பாடலுக்கும் பத்தாவது பாடலுக்கும் திருமால் மேற் பாடப்பட்டுள்ள பதினைந்தாம் பாடலுக்கும் இவர் இசை அமைத் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
126

பாடலின் பொருட்சுருக்கம்
முருகவேளே ! வானின்கண் எழுந்தருளி இருப்பதுபோலவே, மண் ணுலகத்திலும் எழுந்தருளி இருப்பதற்குத் திருவுளங்கொண்டனை. தேவர் கள் அடையும் இன்பத்தை மண்ணுலக மக்களும் பெற்றுய்ய வேண்டு மெனக் கருதினை. திருப்பரங்குன்றத்தின்கண்ணே வள்ளிநாய்ச்சியாரை மணம் புரிந்தருளினை. இது வானுலகத்திலே தேவயானையை மணப்ப தற்கு மாருக மண்ணுலகத்திற் புரிந்த செயல் போலும் !
மதுரையிலுள்ள மைந்தரும் மகளிரும் விடியற்காலையிற் பரங்குன் றத்தை நோக்கிப் புறப்பட்டனர். இவ்வுலகத்தில் அறத்தைப் பெரிதாகச் செய்து, அதன் பயனை நுகர வேண்டித் தேவருலகத்துக்குச் செல்கின் ருரைப் போன்று சென்றனர். அவர் தத்தமக்கேற்ற அணிகலன்களையும் நல்ல துகில்களையும் அணிந்துகொண்டு புறப்பட்டனர். சிலர் குதிரைமேற் சென்றனர் ; வேறு சிலர் தேர்மேற் சென்றனர். அவர்களின் மார்பில் மாலைகள் விளங்கின. அவர்கள் அணிந்திருந்த ஒளிபொருந்திய ஆபர ணங்கள் வழியிலுள்ள இருளைப் போக்கின. இவ்வாறு பரங்குன்றத்துக்கும் மதுரைக்குமிடையிலுள்ள வழிமுழுவதிலும் அவர்கள் நெருங்கிக் காணப் பட்டனர். மாலையையுடைய தலைகள் இடைவெளியற நிறைதலால், ஒரே தன்மைத்தான பூக்களை நிறைய வைத்துக்கட்டி நிலத்துக்கிட்ட மாலை
போல அவை விளங்கின.
சந்திரன் மேருமலையை வலம் வந்ததுபோலப் பாண்டிய மன்னன் மடமயிலனைய மகளிரோடும் அமைச்சர்களோடும் நாடும் நகரும் தன்னை வந்து சூழ்ந்து நிற்க, பரங்குன்றத்திலேறி நின் கோயிலை வலம் வந்தான். பாண்டிய மன்னனுேடு வந்தோருட் சிலர், தலையிலே துகிலை அணிந்து, உன் புகழைப் பாடிப் பெரிய உவகையோடு வந்தனர். வேறுசிலர், வழியில் நின்ற யானைகளை அகற்றி மரங்களிற் கட்டி அவற்றுக்கு உணவாகக் கரும்பை முறித்துக் கொடுத்தனர். இன்னும் சிலர், வழியிலே நின்ற தேரைப் போக்கிப் பாண்டிய மன்னன் பரிவாரங்களோடு செல்வதற்கு உதவினர். இவ்வாறு பாண்டியன் நின் கோயிலை வலம் வந்தமையால், பரங்குன்றத்தின் கீழுள்ள நிலப்பரப்புப் பாண்டியனது
பாசறையைப்போலத் தோன்றியது.
127

Page 72
பாண்டியனைச் சூழ்ந்து சென்றவர்களுட் சிலர், அங்குள்ள குரங்கு களுக்கு உணவுப் பண்டங்களை வழங்கினர்; சிலர் கருமுக முசுக் கலைகளுக் குக் கரும்பை அளித்தனர்; இன்னும் சிலர் வீணைகளை மீட்டினர் ; சிலர் புல்லாங்குழலை வாசித்தனர் : அந்த இசைக்கு இயைந்து செல்ல வேறுசிலர் யாழை வாசித்தனர். சிலர் முருகவேளின் பூசைச் சிறப்பினைப் புகழ்ந்து பாடினர் ; சிலர் யாழோசைக்கு அமைய முரசை ஒலித்தனர்.
பரங்குன்றத்திற் சித்திர சாலைகள் பல அமைக்கப்பட்டிருந்தன. பாண்டிய மன்னனேடு சென்ருேருட் பலர், அந்தச் சித்திர சாலைகளுக்குச் சென்றனர் ; அங்குள்ள சித்திரங்களைப் பார்த்து மகிழ்ந்தனர். அவர்களுட் சிலர், சூரியன் முதலிய கிரகங்களின் நிலையை விளக்கும் சித்திரங் களைப் பார்த்து நின்றனர். அங்கே அமைந்திருந்த சித்திரங்களைச் சுட்டிக்காட்டி மங்கையர் மைந்தரிடம் விஞவினர். அவ்வினுக்களுக்கு, இவள் இரதி, இவன் காமன் ' என்று மைந்தர் விடையிறுத்தனர். சித்திர கூடத்தின் ஒரு பகுதியில் அகலிகையின் வரலாறு சித்திரிக்கப்பட் டிருந்தது. அதனைப் பார்த்து, 'இவள் அகலிகை; இவள் கெளதமர்; கெளதமர் கோபங் கொண்டதால் அகலிகை கல்லுருவான காட்சி இது " என்று சிலர் எடுத்துரைத்தனர். இவ்வாறு சித்திர சாலைகளிற் கூடிநின்று சித்திரங்களைக் கண்டு களித்தோர் நிலை கண்கொள்ளாக் காட்சியாகும்.
பரங்குன்றத்தின் ஒரு புறத்தில் இன்னுெரு சம்பவம் நடந்தது. குன்றத்திலுள்ள குகைகளைக் காண்பதற்கு ஒரு பேதைப் பருவத்தாள் விரும்பினுள். தன்னுடன் வந்த உறவினரை விட்டு நீங்கினுள். கற்குகைகளின் இடையிடையே புகுந்தாள். ‘சிறந்தவரே எனவும் ‘சிறந்தவரோ" எனவும் விளித்தாள். அதனுல் அங்குள்ள குகைகளில் ‘சிறந்தவரே', 'சிறந்தவரோ’ என்ற எதிரொலிகள் எழுந்தன. அதனை அறியாத அந்தப் பேதைப் பருவத்தாள் தன்னுடன் வந்தாரே அழைக் கின்ருர் என்று எண்ணிக் குகைகள் தோறும் சென்று சென்று மீண்டாள். இவ்வாறு பரங்குன்றத்திலுள்ள இடவேறுபாடு சிறு பராயத்தினருக்கு மயக்கத்தைக் கொடுத்தது.
நெடியோய் ! பரங்குன்றத்திலுள்ள சுனையின் பக்கலிலிருந்த மரங்க ளிலுள்ள இளந் தளிர்களை இளைய மகளிர் விளையாட்டாகச் சுனே நீரிலே உதிர்த்தனர். அவை சுனையிலுள்ள மலர்களையும் அரும்புகளையும்
128

பொருந்தித் தலைதூக்கிக் கிடந்தன. மலர்ந்த மலரோடும், முதிர்ந்த பேரரும்போடும், முதிராத இளைய அரும்போடும் அவை கிடந்தன. மலர்ந்த மலரோடு கிடந்ததை ஐந்தலையையுடைய அரவு என்றும், பேரரும்போடு கிடந்ததை மூத்தபிள்ளை என்றும், இளைய அரும்போடு கிடந்ததை அதன் இளைய பிள்ளை என்றும் எண்ணி அந்தப் பேதை
மகளிர் மயங்கினர்.
அந்தச் சுனையருகே இன்னுெரு காட்சி. பல இனப் பூக்கள் பரந்து கிடந்தன. ஆம்பல் பூ, காந்தள் பூ வேங்கைப் பூ தோன்றிற் பூ, நறவம் பூ கோங்க மலர், இலவம் பூ முதலியன அவையாகும். அவை பலவின மாலைகளைப் போல விளங்கின. தெற்றின மாலைகளைப் போல மலர் நிறைந்தும், கோத்த மாலைகளைப் போல நிறம் மாறுபட்டும், தொடுத்த மாலைகளைப்போல இடையிட்டும், தூக்கிக் கட்டின மாலைகளைப் போல நெருங்கியும் அந்தப் பூக்கள் காட்சி கொடுத்தன. அந்த மலர்ப் பரப்பானது விடியற்காலத்திற் காணப்படும் பல நிறத்தையுடைய மேகம் நிறைந்த வானம் போலக் காட்சி கொடுத்தது.
திருப்பரங்குன்றத்தை அடைந்து திருமணமான மகளிரும மற்றைய கன்னியரும் முருகப்பெருமானை வழிபடும் காட்சி பத்திப் பரவசமான தாகும். செவ்வேளின் கொடியேற்றப்படும் கும்பத்தைக் குங்குமத்தால் அம்மகளிர் அலங்கரித்தனர். பூவும் நீரும் தெளித்துக் கவரிகளைச் சாத்தினர். பின்னர், பவழக் காம்புடைய பொற்குடையினை மேலே கவித்துப் பூசை செய்தனர். மகளிர் காதலருடைய அன்பைப் பெறுவதற் கும் கன்னியர் குறைவற்ற மணுளரை மணப்பதற்கும் அந்தப் பூசையின் போது யானையுண்ட கவளத்தின் சேடத்தை உவந்து உண்டனர்.
சூரபன்மாவாகிய மாமரத்தைத் தடிந்தோய் ! கிரௌஞ்ச மலையில் வேலைச் செலுத்தி அம்மலையை உடைத்தோய் ! நின் ஆடையும் மாலையும் சிவந்த நிறமுடையன. நின் வேலாயுதம் பவழக்கொடி போன்றது. நின் திருவுருவம் எரிகின்ற தீயை ஒக்கும். நின் திருமுகம் இளங் கதிரவனை நிகர்க்கும். பெருமானே ! கடம்ப மரத்தின்கண் நீ விரும்பிப் பொருந்திய நிலையைச் சுற்றத்தாரோடு வழிபட்டு வாழ்த்தினுேம். அருள்புரிவாயாக !
கடம்பம ரணிநிலை புகர்ந்தேம் உடங்கம ராயமொ டேத்தினந் தொழுதே.
129

Page 73
பாடல்
நிலவரை யழுவத்தான் வானுறை புகறந்து புலவரையறியாத புகழ்பூத்த கடம்பமர்ந் தருமுனி மரபி ஞன்றவர் நுகர்ச்சிமன் இருநிலத் தோரு மியைகென வீத்தநின் 05 தண்பரங் குன்றத் தியலணி நின்மருங்கு
சாறுகொ டுறக்கத் தவளொடு மாறுகொள் வதுபோலு மயிற்கொடி வதுவை புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடற் கலப்போ டியைந்த விரவுத்தீ ரெல்லை 10 அறம்பெரி தாற்றி யதன்பயன் கொண்மார்
சிறந்தோ ருலகம் படருநர் போல உரிமாண் புனைகல மொண்டுகி ருங்கிப் புரிமாண் புரவியர் போக்கமை தேரர் தெரிமலர்த் தாரர் தெருவிருள் சீப்பநின் 15 குன்ருெடு கூட லிடையெல்லா மொன்றுபு நேர்பூ நிறைபெய் திருநிலம் பூட்டிய தார்போலு மாலைத் தலைநிறையாற் றண்மணல் ஆர்வேலை யாத்திரைசெல் யாறு. சுடரொடு சூழ்வரு தாரகை மேருப் 20 புடைவரு சூழல் புலமாண் வழுதி
மடமயி லோரு மனையவ ரோடும் கடனறி காரியக் கண்ணவ ரோடுநின் சூருறை குன்றிற் றடவரை யேறிமேற் பாடு வலந்திரி பண்பிற் பழமதிச் 25 சூடி யசையுஞ் சுவன்மிசைத் தானையிற் பாடிய நாவிற் பரந்த வுவகையின் நாடு நகரு மடைய வடைந்தனைத்தே படுமணி யானை நெடியாயநீ மேய கடிநகர் சூழ்நுவலுங் கால்.
பாடபேதம் : 1. யறியாது.
2. சூழிற்.
30

30
35
40
45
50
55
தும்பி தொடர்கதுப்ப தும்பி தொடராட்டி வம்பணி பூங்கயிற்று வாங்கி மரணசைப்பார் வண்டார்ப் புரவி வழிநீங்க வாங்குவார் திண்டேர் வழியிற் செலநிறுப்பார் கண்டக் கரும்பு கவழ மடுப்பார் நிரந்து பரிநிமிர் தானையான் பாசறை நீர்த்தே குருகெறி வேலோய்நின் குன்றக்கீழ் நின்ற இடைநிலம் யாமேத்து மாறு.
குரங்கருந்து பண்ணியங் கொடுப்போரும் கரும்பு கருமுகக் கணக்களிப் போரும் தெய்வப் பிரமஞ் செய்கு வோரும் கைவைத்திமிர்புகுழல் காண்கு வோரு மியாழி னிளிகுரல் சமங்கொள் வோரும் வேள்வியி னழகியல் விளம்பு வோரும் கூர நாண்குரல் கொம்மென வொலிப்ப *ஊழுற முரசி ஞெலிசெய் வோரும் என்று முறவரு மிருசுடர் நேமி ஒன்றிய சுடர்நிலை யுள்படு வோரும் இரதி காம ணிவளிவ னெஞஅ விரகியர் வினவ விளுவிறுப் போரும் இந்திரன் பூசை யிவளக லிகையிவன் சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு ஒன்றிய படியிதென் றுரைசெய் வோரும் இன்ன பலபல வெழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவுஞ் சுட்டறி வுறுத்தவும் நேர்வரை விரியறை வியலிடத் திழைக்கச் சோபன நிலையது துணிபரங் குன்றத்து மாஅன் மருகன் மாட மருங்கு. பிறந்த தமரிற் பெயர்ந்தொரு பேதை * பிறங்க லிடையிடைப் புக்குப் பிறழ்ந்தியான்
பாடபேதம் : 1. திமிரிக்குழல்.
2. sigg.
3. கெளமதன்.
4. பிறக்கல்,
131

Page 74
60
65
70
75
80
85
வந்த நெறியு மறந்தேன் சிறந்தவர் ஏள யோஒ வெனவிளி யேற்பிக்க ஏஎ யோஒவென் றேலா வவ்விளி அவ்விசை முழையேற் றழைப்ப வழைத்துழிச் செல்குவ ளாங்குத் தமர்க்கா னுமை மீட்சியுங் கூஉக்கூஉ மேவு மடமைத்தே வாழ்த்துவப்பான் குன்றின் வகை. 'நனிநுனி நயவரு சாய்ப்பி னறிணர்ச் சினைபோழ் பல்லவந் தீஞ்சுனை யுதிர்ப்ப உதிர்த்த சுனையி னெடுத்த தலைய அலர்முகிழுற வவைகிடப்பத் தெரிமலர் நனையுறுவ
ஐந்தலை யவிர்பொறி *யரவ மூத்த மைந்த சீனருகொன்று மற்றிளம் பார்ப்பென
வாங்கிள மகளிர் மருளப் பாங்கர் பசும்பிடி யிளமுகிழ் நெகிழ்ந்தவா யாம்பல் கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள் எருவை நறுந்தோ டெரியிணர் வேங்கை
உருவமிகு தோன்றி யூழினர் நறவம் பருவமில் கோங்கம் பகைமல ரிலவம்
நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க மணந்தவை போல வரைமலை யெல்லாம் 'நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துந் தொடர்ந்தும் விடியல் வியல்வானம் போலப் பொலியும் நெடியாய்நின் குன்றின் மிசை
நினயா?னச் சென்னி நிறங்குங்கு மத்தாற் புனேயாப்பூ நீரூட்டிப் புனைகவரி சார்த்தாப் பொற்பவழப் பூங்காம்பிற் பொற்குடை யேற்றி மலிவுடை யுள்ளத்தான் வந்துசெய் வேள்வியுட் பன்மண மன்னு பின்னிருங் கூந்தலர்
பாடபேதம் :
1. நளிதுனி. 6. வரைவரை. 2. களையுறழ. 7. நிரைந்து. 3. யரவினது மூத்த, 8. நினையா?ன. 4. னருகிலொன்று. 9. நீரினிதூட்டி, 5. மைந்துறுமகளிர்.
132

90
95
100
105
கன்னிமை கனிந்த காலத் தார்நின் கொடியேற்று வாரணங் கொள்கவழ மிச்சில் மறுவற்ற மைந்தர்தோ ளெய்தார் மணந்தார் முறுவற் றலையளி யெய்தார்நின் குன்றம் குறுகிச் சிறப்புணுக் கால். குறப்பினுக் கொடியைக் கூடியோய் வாழ்த்துச் சிறப்புணுக் கேட்டி செவி. உடையு மொலியலுஞ் செய்யைமற் ருங்கே படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும் உருவு முருவத்தீ யொத்தி முகனும் விரிகதிர் முற்ரு விரிசுட ரொத்தி எவ்வத் தொவ்வா மாமுத றடிந்து தெவ்வுக் குன்றத்துத் திருந்துவே லழுத்தி அவ்வரை யுடைத்தோய்நீ யிவ்வரை மருங்கிற் கடம்பம ரணிநிலை பகர்ந்தேம் உடங்கம ராயமொ டேத்தினந் தொழுதே.
பாடியவர் : நப்பண்ணளுர், இசையமைத்தவர் : மருத்துவன் நல்லச்சுதளுர், பண் : காந்தாரம்.
பாடபேதம் : 1 கொட்டிசெவி.
133

Page 75
பரிமேலழகருரை
1-7. வானின்கண் உறைதற்கு ஏதுவாகிய விருப்பத்தை நீ நில வெல்லையிடையுங்கொண்டு அறிவெல்லையால் அறியப்படாத புகழை யுடைய கடம்பினை மேவி, பெறுதற்கரிய இறைமையானமர்ந்த தேவ ரெய்தும் நுகர்ச்சியை . . . . . . மக்களும் எய்துகவெனத் தந்த நின் னுடைய பரங்குன்றத்து இயல்கின்ற அலங்காரத்தையுடைய மயில் போலும் வள்ளியது வதுவை துறக்கத்துத் தெய்வயானையது சாறு
கொள்வது போலும்.
அலங்காரத்தையுடைய (5) வதுவை (7) என இயையும்.
8-18 அறிவினும் வீரத்தினும் பிறரைப் போர்வெல்லுங் கூடற் கண் மகளிரும் மைந்தரும் புணர்ச்சியொடுவந்த இரவு நீங்கிய வைகறைக்கண் இவ்வுலகத்து அறத்தைப் பெரிதாகச் செய்து அதன் பயன் நுகர வேண்டித் தேவருலகத்துச் செல்வாரைப்போலத் தமக் கேற்ற மாட்சிமையுடைய புனைகலங்களையும் நல்ல துகில்களையும் அணிந்து விருப்பமாண்ட புரவியராய் ஓட்டமமைந்த தேரராய்த் தெரி மலர்த்தாரராய் விளக்கம் தெருவின்கண் இருளை அகற்றப் போந்து நின்குன்றிற்கும் கூடற்கும் இடையெல்லாம் நெருங்கி, யாத்திரை செல்கின்ற தண்மணலார்ந்த கானல்போலும் வழி, அவர் மாலையை யுடைய தலைகள் இடைவெளியற நிறைதலால் ஒத்த பூக்களை நிறைய வைத்துக் கட்டி இருநிலத்திற்கு இட்ட மாலை போலும்.
முதற்கண் போர் என்பதுTஉம் கூடலென்பதுTஉம் (8) ஆகுபெயர். சீப்ப ' (14) என்னும் எச்சத்திற்கு முடிபாகிய போந்து ' என்னுஞ் சொல் வருவிக்கப்பட்டது.
தாங்கிப் (12) புரவியராய்த் தேரராய்த் (13) தாரராய் (14) வைகறைக்கட் (9) போந்து நெருங்கிப் (15) படருநர்போலச் (11) செல்கின்ற வழி (18) தார்போலும் (17) என்க.
19-29. படுமணியான நெடியாய் ! அறிவுதிருந்திய வழுதி, மட மயிலனைய மகளிரோடும் காரியக் கடனறிந்த தன் கண்ணுகிய அமைச்ச ரோடுங் கூடி நாடும் நகரும் தன்னையடைய வந்து நின்குன்றில் தடவரை மேலேறி நீமேவிய கடிநகரைப் பாடுண்டாக வலந்திரியும் பண்பினுற் சூழ்தலை உவமை சொல்லுங்கால் மதியுடனே . . . . . . . மேருவின் பக்கத்துச் சூழ்வருதலையனைத்து. 21. ஒருமென்பது அசை,
134

22. " ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டும், தெற்றென்க மன்னவன்கண் " என்பதனுற் கண்ணவரென்ருர்,
24 - 7. பழைய வரிசையாற் சூடிச் சுவன்மிசையசையும் பரிவட் டத்தினும் ஏத்தியநாவினும் பரந்த உவகையினும் நாடும் நகரும் அடையவெனக் கூட்டுக.
30 - 37. மதத்தால் தும்பிகள் தொடரும் கபோலத்தையுடைய யானைகளை வழிநின்று வாங்கிக் காலிற்ருெடரையாட்டிக் கச்சணிந்த புரசைக் கயிற்ருல் மரங்களிற் கட்டுவார், அவற்றிற்குக் கண்டமாக முறித்த கரும்பை மடுப்பார், தார்ப்புரவிகளை வழியினிங்க வாங்குவார், திண்டேர்களை வழியினின்றுஞ்செல்ல நிறுத்துவாராக, அவை பரந்து, நின்குன்றத்தின் கீழ்நின்ற இடைநிலம் வழுதியின்பாசறை நீர்மையினை யுடைத்து.
அவை கூடலினின்றும் போந்து குன்றின்மேல் ஏருவாய் இடையே நிற்றலின் இடைநிலம் . . . . . . ..
36. குருகு ; ஆகுபெயர். 37. யாம் அவ்விடைநிலத்தை உயர்த்துக் கூறுமாறு இது. என்றது உவமையால் உயர்க்குங்கால் அதுவும் அவன் பாசறையல் லது பிறிதில்லையென்னும் நினைவிற்று.
'இது" என்னுஞ்சொல் வருவிக்கப்பட்டது. இனி முருகவேளைப் படர்க்கையாக்கி மேல் வழுதியுடன் ஏறியோரது விளுேதங் கூறுவாராய் மலைச்சிறப்பு கூறுகின்றர் :-
38. குரங்கருந்தும் பண்டங்களை அவற்றிற்குக் கொடுப்பாரும்.
39. கருமுகக்கணம் - முசுத்திரள். 40. தெய்வத் தன்மையையுடைய பிரமவிணையை எழுப்புவோரும். 41. கைவைத்து ஊதிக் குழலின் இசையை அளப்போரும். 42. யாழின்கண் இளிவாய்ப்பாலையையும் குரல்வாய்ப்பாலையையும் வலியவும் மெலியவுமாகத் தாக்காது சமனுகத்தாக்கி அதனின்பத்தைக் கொள்வோரும்.
48. வேள்வி - பூசை 44 - 5. யாழினது நாண்குரல் கொம்மென ஒலித்த அளவிலே அத்தாளத்திற்கு ஏற்ப முரசினுெலியை எழுப்புவோரும்.
135

Page 76
46 - 7. நாண்மீன்களையும் தாரகைகளையுமுடைய சுடர்ச்சக்கரத் தைப் பொருந்திய ஆதித்தன் முதலாகவரும் கோட்களது நிலைமையை எழுதியவாற்ருன் அறிவோரும்.
48. இவள் இரதி, இவன் காமனென்று. 49. விரகியரென்றதஞல், வினவுகின்ற மகளிர் பிரியாமைக் குறிப் பினராதலும் அவ்வினவிற்கு இறைசொல்லுவார் கணவராதலும் பெற் ரும்.
50 - 52. இப்பூசை இந்திரன் ; அவ்விடத்திற் சென்ற கௌதம முனிவன் ; இவன் சினன் மிகுதலால் இவள் கல்லுருவெய்தியவாறு இதுவென்று கொண்டோற் பிழைத்த தண்டங் கூறுவாருமாய்.
53 - 7. தேரப்படும் பரங்குன்றத்து மான்மருகனது மாடத்தின் பக்கம், சென்றவர் கையாற் சுட்டிக் கேட்கவும் கேட்டவற்றை அறிவிக்கவும் இத்தன்மைய பலபல சித்திரம் நிற்றலையுடைய மண்டபங் களைச் செவ்விய மூங்கில்களையும் விரிந்த பாறைகளையுமுடைய அகன்ற இடத்துச் செய்தலாற் சோபனமான நிலைமையினையுடைத்து.
58 - 66. ஒரு பேதைப் பருவத்தாள் பிறத்தலானுகிய தன் தமரினிங்கிக் காண்டல் விருப்பினுற் பிறங்கின கற்களின் இடையிடைப் புக்குத் திகைத்து, சிறந்தவரேயெனவும் சிறந்தவரோவெனவும் அவரை விளியேற்பிக்க, ஆண்டை முழைகள் அவ்விளியை ஏலாவாய் அவ்விசை தன்னையே ஏற்றுத் தாமும் அழைப்ப அதனை அறியாது அவரும் தன்னை அழைக்கின்றராகக் கருதி அவ்வழைத்தவிடத்துச் செல்கின்ற அவள் ஆண்டுத் தமரைக் காணுது மீளுமிடத்தும் கூவுதலைக் கூவுதலை மேவா நின்ருள் ; அதனுல் அன்பரது வாழ்த்தினையுவப்பானது குன்றின் இடவேறுபாடு சிருர்க்கு மடமை செய்தலை யுடைத்து.
இனி அவனை எதிர்முகமாக்கிக் கூறுகின்ருர் :- 67 - 74. மிக நயக்கப்படும் நுனிசாய்ப்பினையுடைய சினையைப் போழ்ந்து புறப்பட்ட பல்லவங்களைத் தாம் விளையாட்டு வகையால் இனிய சுனைக்கண்ணே உதிர்ப்ப, அவை அவ்வுதிர்த்த சுனையின்கண் எடுத்த தலையவாய் அலரையும் முகையையும் உறக்கிடப்ப, அவற்றுள் அலரை யுறக் கிடந்ததனை இது விரிதரும் ஐந்தலையினையும் அவிர்பொறியினையு முடைய அரவென்றும் அதனருகு முதிர்ந்த முகிழையுறக்கிடந்ததனை அருகிலொன்று அதன் மூத்தமைந்தனென்றும் இளமுகிழையுறக் கிடந்த தனை மற்றையதன் இளம்பார்ப்பென்றும் இளைய மகளிர் மருளா நிற்க.
சாய்ப்பிற் (67) பல்லவம் (68) என்க.
136

74. பாங்கர் - அதனருகே. 75. பசும்பிடி இளமுகிழ் - பச்சிலையது இளைய கொழுந்து, மகளிர்
வாய்போல் மலர்ந்த ஆம்பல்.
77. எருவையது நறுந்தோட்டையுடைய பூ. எருவை யென்பது, “எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை” எனக்
கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியினும் வந்தது.
78. உருவம் - நிறம். ஊழிணர் - அலர்ந்த இணர்.
79. காலங்குறியாது பூக்கும் கோங்கு ; அக்கோங்கம்போதொடு நிறத்தாற் பகைத்த மலரையுடைய இலவம்.
80 - 84. இவையெல்லாம் தெற்றின மாலைகள்போல மலர் நிறைந்தும் கோத்த மாலைகள் போல நிறம் மாறுபட்டும் தொடுத்த மாலைகள் போல இடையிட்டும் தூக்கிக்கட்டின மாலைகள் போல நெருங்கியும் பூத்தலால், மயங்கு அலர், நின்குன்றின் மிசை வரைமலை யெங்கும் விடியற் காலத்துப் பலநிறத்து மேகமார்ந்த வானம்போலப் பொலியும்.
பூத்தலாலென்பது வருவிக்கப்பட்டது.
மலர் பொலியுமென்க.
85 - 94. நின்குன்றத்தைக் குறுகி நின்கொடியை ஏற்றப்படும் நின்யானையின் கும்பத்தின்நிறத்தைக் குங்குமத்தால் அலங்கரித்துப் பூவொடு கூடிய நீரை இனிதாக ஊட்டிச் செவிக்கவரிகளை சார்த்திப் பொலிந்த பவழத்தாற் செய்த நல்ல காம்பினையுடைய பொற்குடையை மேலெடுத்து உவகையுள்ளத்தான் வந்து செய்யும் பூசைக்கண் அவ் வியானை கவழங்கொள் மிச்சிலைச் சிறப்போடு உண்ணுதொழியிற் பல மணமும் நிலைபெற்ற பின்னிருங் கூந்தலையுடைய மகளிர் தம் காதலர் முறுவலொடு கூடிய தலையளியை எய்தார். கன்னிமை. கனிந்த காலத்தார் குறைவற்றமைந்த மைந்தர் தோளைக் கூடார்.
இவ்வாறு மலைசிறப்புக் கூறி, மேல் வாழ்த்துவான் முகம்புகுகின் ருர் :-
95 - 6. குறப்பெண்ணுகிய வள்ளியை மணந்தோய் ! எம் வாழ்த் தினை நின்செவிக்குச் சிறப்புணுவாகக் கேட்டல்வேண்டும்.
அன்புடைமையின் . . . . . . . . னம் எய்தினை யன்றே ? அதுபோல அருளுடைமையான் ஒவ்வாவாழ்த்தும் கேட்டல் வேண்டும் என்றவாறு.
137

Page 77
97. ஒலியல் - கடம்பமாலை.
செய்யையென உடையதுதொழில் உடையான்மேல் நின்றது.
98. அவையொழிய நின்வேலும் அவ்வாறே பவழக்கொடி நிறத் தைக் கொள்ளும்.
குருதி தோய்ந்துழியல்லது அந்நிறம் இயல்பன்மையிற் கொள்ளு மென்ருர்.
99. நிறனும் எரிகின்ற தீயை ஒப்பை. பண்பின்ருெழில் பொருண்மேல் நின்றது.
99 - 100. முகனும் இளைய ஆதித்த மண்டலத்தை ஒப்பை. சினைவினை முதன்மேல் நின்றது.
101. உலகிற்கு எவ்வஞ்செய்தலான் நீதியிற்றப்பிய சூர்மா.
102. பகைமை பொருந்திய குருகுபெயர்க் குன்றத்து.
103 - 5. உடன் மேவிய சுற்றத்தோடு ஏத்திப் பரங்குன்றத்துக்
கடம்பின்கண் அமர்ந்த நல்ல நிலையை வாழ்த்தினேம் ; எம் வாழ்த்து
இது.
“எம் வாழ்த்து இது' என்பது சொல்லெச்சமாயிற்று.
138

/妙や漁
纥
@
(ž.
罗
4.
t
粤
ـــــــــــ ܐܸܠ
یقینی
షా
YakaY
ஆறிரு தோனவை யறுமுகம் விரித்தவை நன்றம ராயமோ டொருங்குநின் நடியுறை இன்றுபோ வியைகெனப் பரவுதும் ஒன்ருர்த் தேய்த்த செல்வநிற் றெழுதே.
பரிபாடல், 21 : 67-70.

Page 78

13. செவ்வேள் (இருபத்தொராம் பாடல்) பாடியவர் வரலாறு
பரிபாடலிலுள்ள இருபத்தொராம் பாடலைப் பாடியவர் நல்லச்சுதனர். முருகப் பெருமானின் பெருமையையும் முருகப் பெருமான் கோயில் கொண்டிருக்கும் பரங்குன்றத்தின் சிறப்பையும் பாடியுள்ளமையால், நல் லச்சுதஞர் முருக பத்தராக வாழ்ந்தாரென்று தெரியவருகின்றது.
முருகப் பெருமானின் தோற்றத்தை வருணித்து, “ வென்றிக் கொடி யணி செல்வணுகிய நின்னைத் தொழுது, இக்குன்றத்து அடியின்கண் உறைதல் மறுபிறப்பிலும் இயைகவென்று பரவுகின்ருேம் ” என்று நல்லச்சுதஞர் வேண்டிநிற்கின்ற இடம் உள்ளத்தைத் தொடக்கூடிய தாகும். திருப்பரங்குன்றம் யானையாக உருவகஞ் செய்யப்பட்டுள்ளது.
பரங்குன்றத்திலே துடியின் ஒசைக்கு இயைய ஆடிய ஒருத்தியை அருகிலிருந்து மங்கையர் பார்த்தனர். அம்மங்கையர் நிலையை வரு ணித்து, " அவர்களின்நிலையை நினைப்பின் அது கைவல்லான் எழுதிய ஒவியத்தின் அழகைப் போன்றது " என்று நல்லச்சுதனுர் கூறுகின்ற போது, அவ்வழகிலே ஈடுபட்டு நிற்பதுபோன்ற உணர்வு எமக்கும் உண்டாகின்றது.
திருப்பரங்குன்றத்தின் இயற்கை அழகைப் புலவர் எழிலுற வருணித் துள்ளார். இயற்கையில் நல்லச்சுதனருக்குள்ள ஈடுபாட்டையே இவ் வருணனை இனிது தெளிவாக்குகின்றது.
முருகப் பெருமானின் திருவடிகளின் கீழும் திருப்பரங்குன்றத்தின் கீழும் உறைதல், தமக்கு இயைய வேண்டுமென்று நல்லச்சுதஞர் வேண்டுதல், முருகப் பெருமான்மேல் அவருக்குள்ள அன்பின் மிகுதி
யைக் காட்டுகின்றது.
இப்பாடலுக்கு இசையமைத்தவர் கண்ணகஞர். ஆணுல், பரிபாடலி லுள்ள 16 ஆம், 17 ஆம், 18 ஆம், 20 ஆம் பாடல்களுக்கு நல்லச்சுதனர் இசையமைத்துள்ளார். எனினும், நல்லச்சுதனுர் பாடிய இப்பாடலுக்குக் கண்ணகளுர் இசையமைத்துள்ளார். நல்லழிசியார், குன்றம்பூதனர், ஆசிரியர் நல்லந்துவஞர் ஆகியோர் பாடிய பாடல்களுக்கு நல்லச்சுதஞர் இசையமைத்துள்ளமை நோக்கற்பாலது.
சிறந்த புலவராகவும் திறமைமிக்க இசை அமைப்பாளராகவும் நல்லச்சுதஞர் விளங்கிஞர் என்பது தெளிவாகின்றது.
குன்றத் தடியுறை யியைகெனப் பரவுதும் வென்றிக் கொடியணி செல்வநிற் றெழுது.

Page 79
பாடலின் பொருட்சுருக்கம்
முருகா நெருப்புப் போன்ற முகபடாம் விளங்கும் சென்னியை யுடைய வேளத்தை நீ வாகனமாகக்கொண்டு எழுந்தருள்கின்ருய். திருவடிக்கு இயைந்ததும் தோலாலே தைத்த முதுகினையுடையதும் பீலிப் போழால் அலங்கரிக்கப்பட்டதுமாகிய காலணியினை அணிந்துள்ளன. சூர்மாவைத் தடிந்து கிரௌஞ்ச மலையைத் துளைத்த வேல், உனது திருக்கரத்திலே விளங்குகின்றது. வள்ளிப்பூவை விரவித் தொடுத்ததும் உருளுகின்ற பூக்களை உடையதுமாகிய கடம்ப மாலையினை அணிந்து கொண்டனை. யானையைப் போன்று விசும்புற நிவந்த தண்பரங்குன்றத் தில் நீ விரும்பி வீற்றிருக்கின்றன. வென்றிக் கொடியணி செல்வணுகிய நின்னைத்தொழுது, திருப்பரங்குன்றத்து அடியின்கண் உறைதல் மறு பிறப்பினும் இயைகவென்று பரவுகின்ருேம்.
சூரனைத் தடிந்தோய் ! பொற் சிலம்பிலுள்ள முத்துப் பரல்கள் ஒலிக்கத் துடியின் ஒசைக்கு இயைய அடிபெயர்த்துத் தோளை அசைத்து, கள்ளுண்ட மகிழ்ச்சியாலே திருப்பரங்குன்றத்தில் ஒருத்தி ஆடினுள். அவ்வாடலை அருகிலிருந்து தலைவன் பார்த்துக் கொண்டிருந்ததைத் தலைவி கண்டாள். ஆடுவாளது அழகு தன் கணவனின் மனத்தை வேறுபடுத்தும் என்று எண்ணினுள் ; வெகுளியோடு அவனைப் பார்த்துச் சினந்தாள். வேருெருத்தி, கண்ணுடியிலே தன் அழகைப் பார்த்துத் தன் அணிகலன்களைத் திருத்தினுள் ; இன்னுெருத்தி தனது நகில்களிற் சந்தனத்தைப் பூசிஞள். இம்மகளிருடைய நிலை கைவல்லான் எழுதிய ஒவியத்தின் அழகைப் போன்றது.
மயில்கள் தம் சிறகை விரித்து ஆடின; குழலோசையைப் போலத் தும்பிகள் மலர்களில் ரீங்காரஞ் செய்தன; வண்டினங்கள் யாழினது இசையைப் போல ஒலித்தன; தாளத்தையுடைய முழவைப்போல அருவியின் நீர் ஒலித்தது. இவ்வாறு எழுந்த ஒலிகள் எல்லாம் திருப்பரங்குன்றத்தில் ஒருங்கே பரந்தன.
சுனை ஒன்றின் நடுவே ஒருத்தி நீரில் மூழ்கி எழுந்தாள். கரையில் நின்ற தன் கணவனை அவள் நோக்கினுள்; நீரில் அழுந்துகின்ற தனக்குப் புணையாகிய மூங்கிலைத் தருமாறு அவனிடம் வேண்டினுள். அவன் அதனை அவளுக்குக் கொடுக்காமல், அரக்கு நீர் நிறைந்த வட்டை எறிந்தான். அப்போது அவள் நீரிலே தத்தளித்தாள். அவளின் துயரத்தைத் துடைக்கத் தலைவன் துணிந்தான். தண்ணிரிற் குதித்து அவளைத் தழுவினுன். தண்பரங்குன்றம் இத்தகைய இயல்பை உடையது.
142

திருப்பரங்குன்றம் இடையருது பாயும் அருவிகளை உடையது. அது மைந்தர் பூசிய சந்தனத்தைத் தடவி வந்த காற்றையும், மகளிர் பூந்தாதை உதிர்த்த கூந்தலினூடே உலாவிவந்த காற்றையும், நினக் குரிய பூசைக்கண் காட்டிய தூபப் புகையோடு சேர்ந்த காற்றையும் உடையது.
கள்ளைக் குடித்த மகிழ்ச்சியாலே தளர்ந்து துகில் நெகிழ, கண்கள் சிவக்க, ஒருத்தி பூங்கொடிபோல அசைந்தாள்; தன் கேள்வன் ஒலிக்குந் துடியின் தாளத்திற்கேற்பத் தனது முத்துமாலை அசைய ஆடினுள். அவளுடைய அழகு ஆடும் பூங்கொம்பைப் போன்றது. துடியினது தாளத்துக்கு ஏற்ப முறையாகத் தோளை அசைப்பவளின் கண்பிறழ்தல், அம்பு பிறழ்தலையொத்தது. இவ்வாறு பரங்குன்றம் ஆடலும் பாடலும்
உடையது.
போரிலே பகைவரை அழித்த வேற்படையையுடைய இறைவனே ! பன்னிரண்டு தோள்களை உடையாய் ! ஆறு திருமுகங்களுடன் விளங்கு கின்ருய் பகைவரை அழித்த செல்வ 1 சுற்றத்தோடு ஒருங்கே நின் அடிக்கண் உறைதல் இன்றுபோல என்றும் எமக்கு இயைய வேண்டு மென நின்னைப் பரவுகின்ருேம் ! அருள் புரிவாயாக !
143

Page 80
10
15
20
25
30
பாடல் ஊர்ந்ததை, எரிபுரை யோடை யிடையிமைக்குஞ் சென்னிப் பொருசமங் கடந்த புகழ்சால் வேழம் தொட்டதை, தைப்பமை சருமத்திற் ருளியை தாமரை துப்பமை துவர்நீர்த் துறைமறை யழுத்திய வெரிநத் தோலொடு முழுமயிர் மிடைந்த வரிமலி யரவுரி வள்புகண் டன்ன புரிமென் பீலிப் போழ்புனை யடையல் கையதை, கொள்ளாத் தெவ்வர்கொண் மாமுத றடிந்து புள்ளொடு பெயரிய பொருப்புப்புடை திறந்தவேல் பூண்டதை, சுருளுடை வள்ளி யிடையிடு பிழைத்த உருளிணர்க் கடம்பி ஞென்றுபடு கமழ்தார் அமர்ந்ததை, புரையோர் நாவிற் புகழ்நல முற்றி நிரையே ழடுக்கிய நீளிலைப் பாலை அரைவரை மேகலை யணிநீர்ச் சூழித் தரைவிசும் புகந்த தண்பரங் குன்றம் குன்றத் தடியுறை யியைகெனப் பரவுதும் வென்றிக் கொடியணி செல்வநிற் ருெழுது. சுடுபொன் ஞெகிழத்து முத்தரிசென் ருர்ப்பத் துடியி னடிபெயர்த்துத் தோளசைத்துத் தூக்கி அடுநரு மகிழ்தட்ப வாடுவா டகைமையின்
நுனையிலங் கெஃகெனச் சிவந்த நோக்கமொடு துணையனை கேள்வனைத் துணிப்பவ ணிலையும் நிழல்காண் மண்டில நோக்கி அழல்புனை யவிரிழை திருத்துவாள் குறிப்பும் பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம் உதிர்த்துப் பின்னுற வூட்டுவாள் விருப்பும் பல்லூ Nவையிவை நினைப்பின் வல்லோன் ஒவத் தெழுதெழில் போலு மாதடிந் திட்டோய்நின் குன்றின் மிசை மிசைபடு சாந்தாற்றி போல வெழிலி *இசைபடு பக்க மிருபாலுங் கோலி விடுபொறி மஞ்ஞை பெயர்புட னுட விரல்செறி தூம்பின் விடுதுளைக் கேற்ப முரல்குரற் றும்பி யவிழ்மல ரூத
பாடபேதம் : 1. நனையிலங்கெஃகின். 2 இசைபக்கலிருபாலும்,
144

35
40
45
50
55
60
யானர் வண்டினம் யாழிசை பிறக்கப் பாணி முழவிசை யருவிநீர் ததும்ப ஒருங்கு பரந்தவை யெல்லா மொலிக்கும் இரங்கு முரசினுன் குன்று. தாழ்நீ ரிமிழ்சுனை நாப்பட் குளித்தவண் மீநீர் நிவந்த விறலிழை கேள்வனை
வேய்நீ ரழுந்துதன் கையின் விடுகெனப் *பூநீர்பெய் வட்ட மெறியப் புணைபெரு தருநிலை நீரி னவடுயர் கண்டு கொழுநன் மகிழ்தூங்கிக் ஃகொய்பூம் புனல்வீழ்ந்து தழுவுந் தகைவகைத்துத் தண்பரங் குன்று. வண்டார் பிறங்கன் மைந்தர் நீவிய தண்கமழ் சாந்தந் *தைஇய வளியும் கயல்புரை கண்ணியர் கமழ்துக ளுதிர்த்த புயல்புரை கதுப்பக முளரிய வளியும் உருளினர்க் கடம்பி னெடுவேட் கெடுத்த முருகு கமழ்புகை நுழைந்த வளியும் அசும்பு மருவி யருவிடர்ப் பரந்த பசும்பூட் சேஎய்நின் குன்றநன் குடைத்து. கண்ணுெளிர் திகழட ரிடுசுடர் படர்கொடி மின்னுப்போல் ஒண்ணகை தகைவகை நெறிபெற விடையிடை யிழைத்தி யாத்த செண்ணிகைக் கோதை கதுப்போ டியல மணிமரு டேன்மகிழ் தட்ப வொல்கிப் பிணிநெகிழப் பைந்துகி ஞேக்கஞ் சிவப்பூரப் பூங்கொடி போல நுடங்குவா ளாங்குத்தன் சீர்தகு கேள்வ னுருட்டுந் துடிச்சீராற் கோடணிந்த முத்தார மொல்க வொசிபவளேர் ஆடை யசைய வணியசையத் தானசையும் வாடை யுளர்கொம்பர் போன்ம்.
வாளி புரள்பவை போலுந் துடிச்சீர்க்குத்
ത്ത-ണയബ பாடபேதம் : 1. வேய்நீர்த் தன்கையிற் புனையவை விடுகென.
2 பூநீர்செய். 3 கொய்பூ நீரமபுனல் வீழ்ந்து. 4 தைஇயவளிவளியும்.
145

Page 81
65 தோளூழ் பெயர்ப்வள் கண்.
மாறம ரட்டவை மறவேல் பெயர்ப்பவை ஆறிரு தோளவை யறுமுகம் விரித்தவை நன்றம ராயமோ டொருங்குநின் னடியுறை
இன்றுபோ லியைகெனப் பரவுதும் 70 ஒன்ருர்த் தேய்த்த செல்வநிற் ருெழுதே.
பாடியவர் நல்லச்சுதஞர்.
இசையமைத்தவர் : கண்ணகளுர், பண் : பண்காந்தாரம்.
பாடபேதம் :
1 இன்றுபொலிகென.
146

பரிமேலழகருரை
1-2. விளக்கத்தால் எரியையொத்த ஓடைநடுவே கிடந்து விளங் குஞ் சென்னியை யுடைத்தாய வேழம்.
3-7 தொட்டது, தாமரைத்தாளிற்கு இயைந்த பவழம்போலும் துவர்நீர்த்துறையிலே மறைய அழுத்திய சருமத்தால் தைத்தலமைந்த முதுகிற்றேலுடனே அதன் முழுமயிர் மிடைந்த பாப்புத்தோலைக் கீறின வாரையொத்த பீலிப்போழாற் புனைந்த அடையற்செருப்பு.
தாளியை தைப்பமை யென்பனவும் அடையலென்பதனுேடு இயை պմ,
8. நின்னை மதியாத அவுணர் தமக்குத் துணையாக மதித்த மா.
9. புள்-அன்றில், புடை-பக்கம்.
10-11. சுருளுதலையுடைய. இடையிட்டுத் தொடுத்த கடம்பம் பூவினையுடைய ஒன்றுபட்டு அலர்ந்த தார்.
13. ஏழு நிரையாக அடுக்கிய நீண்ட இலையையுடைய பாலை : என்றது, ஏழிலைப் பாலையை.
14-5. அதனையுடைய அரைமலையாகிய இலகடத்தினையும் அருவி யாகிய படாத்தினையுமுடைத்தாய்த் தரையின்கணின்று விசும்பையுற ஓங்கிய பரங்குன்றம்.
16. இக்குன்றத்து அடியின்கணுறைதல் மறுபிறப்பினும் இயைக வென.
17. வென்றியாற் கொடியை அலங்கரித்த செல்வ !
18. ஓடவைத்த பொன்னுற் செய்த சிலம்பில் முத்தாகிய அரி ள்ங்குங் கேட்ப ஆர்ப்ப
19. அடியினைத் துடியொலிக்கு இயைய.
20. அடுநருவுண்ட மகிழ்ச்சி தடுப்ப ஆடுவாள் அழகு காரணமாக,
22. துணித்தலாவது, இவளழகு எமக்குங் கூட வியப்பாயிற்று. இனி இவற்குச் சொல்லவேண்டுமோவென உட்கொண்டு கேள்வன் துணை யாய் அமராநிற்கவும் அவனை வெகுளிமிக்க நோக்கமொடு துணித்தல்.
23. இவளினும் எனக்கு அழகுண்டாயவழி இவளை நோக்கானென்று கருதிக் கண்ணுடியை நோக்கி.
147

Page 82
24. அழல்போல் அவிராநின்ற இழை. 25-6. பொங்கின முலையிடத்தே சந்தனத்தைப் பூசியுயர்த்து நாற் றம் நிலைபெற்றவழி என்னைத் தழுவுமென்று கருதி அதனைப் பின்னும் பின்னும் ஊட்டுவாள்.
27. மற்றும் இத்தன்மைய பலமுறை நிகழ்கின்ற மகளிர் தொழில் களை நினைப்பின், கைவல்லானெழுதிய ஓவியத்து அழகுபோலும்.
என்ருர், அவ்வொரு தொழிற்கண்ணே நிற்றலான்.
30-32. மேல் எடுத்துக் காட்டப்பட்ட சாந்தாற்றிபோல எழிலி யிசையொலிகின்ற இடத்து இரண்டு இறகையும் விரித்து விளங்கும் பொறியையுடைய மயில்கள் எழுந்து ஆட.
33. விரல் செறிந்துவிடுகின்ற வங்கியத்தின் துளைக்கு இசைய.
35. யாழினது இசையை மேன்மேலு. . . . . . . . . . . . . . . .
36. பாணியென்னுந் தாளத்தையுடைய முழவிசைபோல.
37. இவ்வாற்ருல் தம்முள் வேறுபட்டனபலவும் ஒருங்கொலிக்கும்.
39-45. நீரொலிக்கின்ற ஆழ்ந்த சுனைநடுவே மூழ்கி அவ்விடத்து நீர்மேலெழுந்த விறலிழை கரையில் நிற்கின்ற கேள்வனைப் புணையாகிய வேயை நீரில் அழுந்துகின்ற தன்கையின்கட் டருகவென அவன் அதனைக் கொடாது அரக்குநீர் கரந்த வட்டை எறிதலாற் புணைபெருது அவள் அருநிலையான நீரிற் படுகின்ற துயரத்தைக் கண்டு கொழுநன் இன் புற்றுப்பின் அந்நீரின்கண் வீழ்ந்து தழுவும் தன்மையினையுடைத்து.
46. பிறங்கற்கண்.
46. சந்தனத்தைத் தடவிப் புலர்த்துங் காற்றும்.
48-9. கமழ்தாதுதிர்த்த கதுப்பகத்தை ஊடுபுக்கு அசைத்த காற்றும்.
50-51. கடம்பின்கண் மேவிய நினக்குப் பூசைக்கட் காட்டும் பாத்திரத்தெடுத்த கமழ்புகையூடு நுழைந்த காற்றும்.
50. நெடுவேள் : முன்னிலைப்பெயர்.
52-3. இடையருது ஒழுகும் அருவி அரிய விடரின்கண்ணே பரந்த நின்குன்றம் உடைத்து.
148

47-53. பலவகை நறுநாற்றமுடைமை கூறினவாறு.
54-6. இடுசுடர் பரந்த கொடிமின்னுப்போற் கண்ணிற்கு ஒளிர்ந்த திகழாநின்ற அடராலே ஒண். . . . . . .அழகும் நெறிப்பும் இடையிடை பெறச்செய்து யாத்த தொழிலையுடைய.
மின்னுப்போற் கோதையென இயையும். . . . . . . . .
54. ஒளிர்திகழ் : வினைத்தொகையடுக்கு.
56. அக்கோதை கதுப்போடசைய.
57-8. மாணிக்கத்தை யொக்கச்சிவந்த. . . . . கள்ளை நுகர்ந்த மகிழ்ச்சி தடுப்பப் பசுமையையுடைய துகிலுடை நெகிழ.
57-63. கள்ளுணர். . . . . . ராக்க நுடங்குவாளாய்த் துடிச்சீரின் கண்ணே முலைக்கணணிந்த முத்தாரமசைய ஆடுவாளது அழகு, வாடை யாலுளரப்பட்டு ஆடையசையவும் அணியசையவும் அசையுங் கொம்ப
ருண்டாயின் அதனழகையொக்கும்.
59. ஆங்கு : அசை.
64-5. சீர்க்கு இசையத் தோளைப் பெயர்ப்பவள் கண் அம்பு புடைபெயர்வன போலும்.
என்று இவ்வாற்ருன் மலைச்சிறப்புக் கூறி மேல் வாழ்த்தி முடிக்கின் დmჯf :—
66. மாற்ருரை அமரின்கட்கொன்ற படையை.
68-70. எமக்கு விரும்பின சுற்றத்தோடு கூடி நின் அடிக்கண் உறைதல் இன்றுபோல என்றும் இயைகவென்று பரவுதும்.
149

Page 83
அசுரர் அகம்
அகநானூறு அகப்பாட்டு
அகப்பொருள்
ஆனந்தக் கூத்து:
பரிசில் பெற்ருஞெருவன், அது பெறக் கருதியவனை
ஆற்றுப்படை
அடங்கன்முறை :
அவுணர் சமயகுரவர்
சூத்திரம்
எட்டுத்தொகை
களவு
கலித்தொகை
கற்பு
கடவுள் வாழ்த்து :
கடிமரம்
கொற்றவை
குரவை
: சில்வகையெழுத்திற்
: எட்டுத்தொகையுள்
14. பின்னிணைப்பு
: பதினெண் கணத்துள் ஒரு கணம். : அகப்பொருள். : எட்டுத்தொகையுள் ஒன்று. : அகப்பொருளமைந்த செய்யுள். : அகத்திணையாகிய பொருள்.
பத்திப் பரவசங்கொண்டு ஆடும் ஆட்டம்.
ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடும் பிர பந்தம். மூவர் அருளிச் செய்த தேவாரங்களை அடக்கிய நூல்.
: அசுரர்.
சைவ சமயத்தை நிலைநாட்டிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சிவனடியார்.
பல்வகைப்
பொருளும் செறிந்து விளங்க அமைத்து முடிக்கப்படும் யாப்பு
: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்
பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புற நானூறு ஆகிய சங்ககாலத்திலே தொகுக்கப்பட்ட எட்டு நூல்கள்.
களவுப் புணர்ச்சி; தலைவனுந் தலைவியும் பிறரறி யாது தனியிடத்தில் எதிர்ப்பட்டுக் கூடுதல்.
நல்லந்துவஞர் தொகுத்த 150 கலிப்பாக்களைக் கொண்ட நூல்.
களவுக் கூட்டத்துக்குப்பின் தலைவன், தலைவியை
விதிப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம். நூல் அல்லது நூற்பகுதியின் முதலிற் கூறும் தெய்வ வாழ்த்து.
: பகைவர் அணுகாதவண்ணம் வளர்த்துக் காக்கப்
படும் காவன் மரம்.
: (வெற்றிக்குரியவள்) துர்க்கை : முல்லை அல்லது குறிஞ்சி நிலமகளிர்
தம்முட் கைகோத்தாடும் கூத்துவகை.

குறுந்தொகை
மதுரைக்காஞ்சி
நற்றிணை
நெடுநல்வாடை
நிகண்டு
பண்
பரிபாடல்
பத்துப்பாட்டு
பவழக்கொடி புறப்பொருள்
ListeoTsit
பாயிரம்
பதிற்றுப்பத்து
: பத்துப்பாட்டினுள்
: தலையாலங்கானத்துச்
: அகப்பொருளைப் பற்றியதும், அகவற் பாக்கள் 402
கொண்டு பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பெற்ற தும் எட்டுத்தொகையிற் சேர்ந்ததுமாகிய ஒரு நூல். தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி
மருதனுர் பாடிய பாட்டு
: பன்னடுதந்த பாண்டியன் மாறன்வழுதி தொகுப்
பித்ததும் எட்டுத்தொகையுள் ஒன்ருனதும் அகப் பொருளைப் பற்றியதுமான தொகைநூல்.
நெடுஞ் செழியன்மேல் நக்கீரராற் பாடப்பட்டதும் பத்துப்
செருவென்ற
பாட்டினுள் ஏழாவதுமான பாட்டு.
: ஒருபொருட் பலசொற்ருெகுதியையும் பலபொரு
ளொரு சொற்ருெகுதியையும் பாவிலமைத்துக் கூறும் நூல்.
: இசை,
1. ஒரு வகைப் பா. 2. எட்டுத்தொகையுள் எழுபது
தொகுக்கப்பட்ட ஒரு நூல்.
பரிபாட்டால்
: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறு
பாணுற்றுப்படை, பெரும்பாணுற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பத்துப் பாடல்கள் அடங்கிய பழைய நூற்ருெகுதி.
: கடலில் வளரும் கொடி வகை.
: outlib.
: பாடல் வல்ல ஒரு சாதி
முகவுரை. பொருளடக்கம்.
எட்டுத்தொகையில் ஒன்ருனதும், சேரர் பதின்
மரைப் பற்றிப் புலவர்ப் பதின்மராற் பாடப் பெற்ற தும் ஒரொருவருக்குப் பத்துப் பாட்டாக நூறு பாடல்களால் அமைந்ததுமான நூல்.
151

Page 84
தேவாரம்
திருக்கோவையார் :
திருமுறை
திருமுருகாற்றுப் :
6)
திருக்குறள்
திருமந்திரம்
திருவாசகம்
தொல்காப்பியம்
துணங்கை
வெண்பா
வெறியாடல்
யாழ்
அப்பர், சுந்தரர் ஆகிய நாயன்மார் மூவரால் அருளிச் செய்யப்பட்ட பதிகங்கள் கொண்டதும், தமிழ் வேதம் என்று
போற்றப்படுவதுமான சைவத்திருமுறை.
சிவபெருமான்மேல் சம்பந்தர்,
மாணிக்கவாசகர் அருளிச்செய்ததும் திருச்சிற்றம் பலத்தைப் பற்றியதுமான அகப்பொருட் கோவை.
பன்னிரண்டு சைவத் திருமுறைகள்.
பத்துப்பாட்டினுள் ஒன்றும், நக்கீரர் இயற்றியதும், முருகக்கடவுளைப் பற்றியதுமான ஒரு நூல்.
பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றும் அதிகாரத்துக் குப் பத்துக் குறள் கொண்ட 133 அதிகாரங்களில் அறம், பொருள், இன்பங்களைப் பற்றிக் கூறுவதும் திருவள்ளுவர் இயற்றியதுமான நூல்.
திருமூலநாயனர் அருளிச்செய்த ஒரு சைவத் திரு
முறை.
வாதவூரடிகள் அருளிச்செய்த துதிநூல்.
; மிகப் பழையதும் தொல்காப்பியனுர் இயற்றியது
மான தமிழிலக்கண நூல்.
: முடக்கிய இரு கைகளையும் விலாப்புடைகளில் ஒற்றி
யடித்துக் கொண்டு அசைந்தாடும் ஒருவகைக்
கூத்து.
: நால்வகைப் பாக்களுள் ஒன்று.
வேலனுடல்.
பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ்
என்ற நால்வகை வீணைக்கருவி.
152

15. துணை நூல்கள்
பரிபாடல், பிராங்கோ குருேசின் விளக்கவுரையுடன், பாண்டிச்சேரி, 1968. பன்னிரு திருமுறைப் பெருந்திரட்டு, சைவ சித்தாந்தக் கழகம், திருநெல்வேலி, சென்னை, 1961 பரிபாடல், பரிமேலழகர் விளக்கவுரையுடன், பதிப்பாசிரியர் உ. வே. சாமிநாதையர், 3 ஆம் பதிப்பு, சென்னை 1948. திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டுத் தொகுப்பில், நச்சிஞர்க்கினியர் விளக்கவுரையுடன், ப - ர் : உ. வே. சாமிநாதையர், சென்னை, 1918,
திருமுருகாற்றுப்படை, பி. வி. சோமசுந்தரனர் விளக்கவுரையுடன், சை. சி. க. சென்னை, மதுரை, திருநெல்வேலி, 1969.
அகநானூறு (களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை), என். எம். வேங்கடசாமிநாட்டார் விளக்கவுரையுடன்,
சை. சி. க. திருநல்வேலி, சென்னை, 1944 - 47
சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் விளக்கவுரையுடன், சென்னை, 1927,
கலித்தொகை, நச்சிஞர்க்கினியர் விளக்கவுரையுடன், ப - ர் : காசி விஸ்வநாதன் சை. சி. க. திருநெல்வேலி, சென்னை, 1958.
குறுந்தொகை, உ. வே. சாமிநாதையர் விளக்கவுரையுடன், சென்னை, 1947.
மணிமேகலை, எம். எம். வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப் பிள்ளை ஆகியோர் விளக்கவுரையுடன், சை, சி. க. திருநெல்வேலி, சென்னை, 1946.
மதுரைக் காஞ்சி, சை. சி. க. திருநெல்வேலி. சென்னை, 1956.
நற்றிணை, ப - ர் : ஏ. நாராயணசாமிஐயர் விளக்கவுரையுடன், சை. சி. க. திருநெல்வேலி, சென்னை, 1956.
பதிற்றுப் பத்து, ப - ர் : உ. வே. சாமிநாதையர், சென்னை, 1904,

Page 85
பொருநராற்றுப்படை, பத்துப்பாட்டில், நச்சிஞர்க்கினியர் விளக்கவுரை யுடன் ப - ர் : உ. வே. சாமிநாதையர், சென்னை, 1918.
தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சிஞர்க்கினியர் விளக்கவுரையுடன், ப - ர் : எம். வி. வேணுகோபால்பிள்ளை, சென்னை, 1941.
எழுத்ததிகாரம், இளம்பூரணர் விளக்கவுரையுடன், சை, சி. க. திருநெல் வேலி, சென்னை, 1955.
பொருளதிகாரம், (களவியல், கற்பியல், பொருளியல்), நச்சிஞர்க்கினியர் விளக்கவுரையுடன், ப - ர் : எஸ். பாலசுந்தரம்பிள்ளை, சென்னை, 1916.
பொருளதிகாரம், (அகத்திணை, புறத்திணை), அதே விளக்கவுரையாளர், சென்னை, 1916,
பொருள்திகாரம், இளம்பூரணர் விளக்கவுரையுடன், சை. சி. க. திருநெல்வேலி, சென்னை, 1961.
ஏனைய நூல்கள்
Dorai Rangaswamy, M.A., The Religion and Philosophy of Tevaram, 2 vols University of Madras, 1958-59.
Gopalan, R., History of the Pallavas of Kanchi, Universty of Madras, 1928.
է` Jesudasan, C., A History of Tamil Literature, Calcutta, 1961.
Kailasapathy, K., Tamil heroic poetry, Oxford University Press, 1968.
Kamil Zvelebil, The Smile of Murugan on Tamil Literature of South India, Leiden, E.J. Bril, 1973.
Mariasusai Dhavamony, Love of God according to Saiva Siddhanta, Oxford University Press, 1971.
Some manuscripts in Grantha Scripts in Bangkok, in BSOAS, Vol. XXXI, part 2, University of London, 1969.
Meenakshisundaram Pillai, T. P. Prof. T. P. Meenakshisundaram Pillai Sixty-first Birthday Commemoration Volume Collected Papers, Annamalai University. 1961
Nallaswamy Pillai, J. M., Tirumurukarruppatai in the work Five Tamil Idylls of Paththuppattu being studies and translations, Madras, 1947.
Narayana Ayyar, C. V., Origin and Early History of Saivism in South India, Madras, 1936.
154

Nilakanta Sastri, K. A., Studies in Cola History and Administration, University of Mardras, 1936.
The Colas, University of Madras, 1955. The Pandyan Kingdom, London, 1927
Pillay, K. K. Landmarks in the History of Tamilnad Proceedings of the Second International Seminar of Tamil Studies, Madras, 1968, pp. 12-26.
Somasundaram Pillai, J. M., Palani. The Sacred Hill of Muruga, Madras, 1941.
Purnalingam Pillai, M. S., Tamil Literature, Tinnevelly, South India, 1929.
Sadasiva Pandarattar, T. V., A. History of Tamil Literature (250-600 A.D.) Annamalai University, 1957,
A History of Tamil Literature (13, 14 & 15th centuries), Annamalai University, 1957.
Tiruchendur, The Sea-Shore Temple of Subrahmanyam, Madras, 1948
Two Thousand Years of Tamil Literature, Madras, 1959.
Thani Nayagam, Xavier S., Nature in Ancient Tamil Poetry, Tuticorin, South India, 1953.
Nature Poetry in Tamil, the classical period, Singapore, 1963.
Vaiyapuri Pillai, S., History of Tamil Language and Literature. Madras, 1956
Varadaraja Iyer, E. S., Porulatikaram, Vol. I, Part 1 and Vol II, part II, Annamalai University, 1948.
Venkata Ramanaiyya, N., An Essay on the Origin of the South Indian Temple, Madras, 193O.
Withiananthan, S. The Patupatu, a Historical, Social and linguistic study thesis approved for the degree of Doctor of Philosophy in the University of London, 1950
Reference Books
Burrow, T. and Emeneau, M. B., A Dravidian Etymological Dictionary, Oxford University Press, 1961,
A Dravidian Etymological Dictionary, Supplement, Oxford University Press, 1968.
index des mots de la, Literature tamoule ancienne, Vols. -Fll, Institut Francais D'indologie, Pondichery, 1968
Subrahmaniam, N., Pre-Pallavan Tamil index, University of Madras, 1966.
Tamil Lexicon, 6 Vols and supplement, University of Madras, 1926-39. Visvanatha Pillai, V., Tamil-English Dictionary, 7th ed. Madras, 1963.
155

Page 86
இலங்கை அரசாங்க அச்சுத் தினக்கணத்திற் பதிப்பிக்கப்பெற்றது


Page 87