கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அன்னம்மா வல்லிபுரம் (நினைவு மலர்)

Page 1

குவேலி

Page 2
எங்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மெழுகுவர்த்தியாக இருந்து தன்னையே உருக்கி ஒளியூட்டிய
எங்களின்
ஆருயிர் தாய்த் தெய்வத்தின் இனிய நினைவுகளை
எங்களின் இதயங்களில் சுமந்த வண்ணம்
இம்மலரை
அவர் தம் தாழ்களுக்கு
அர்ப்பணிக்கின்றோம்.
- குரும்பத்தினர்.
 

變 ་་་་་་་་་་་་་་་་་་ 義 8%78 業출 அமரர் வல்லிபுரம் அண்னம்மா
ᎠᎧᎧ
தோற்றம் O றவு 1913.09.26 திதிவெண்பா 2001. 09.11.
ஏயவிஷ" ஆவணியின் ஈர்பத்தா றுற்றசெவ்வாய் ஆய நவமி அபரபக்கம் - நேயமிகு வல்லிபுரம் நன்மனையாள் மாண்புடைய அன்னம்மா தில்லைநகள் சேர்ந்த தினம். LS LLSLS S SLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLLLLL

Page 3

திதிவெண்பா
ஏயவிஷ" ஆவணியின் ஈர்பத்தா றுற்றசெவ்வாய் ஆய நவமி அபரபக்கம் - நேயமிகு வல்லிபுரம் நன்மனையாள் மாண்புடைய அன்னம்மா தில்லைநகள் சேர்ந்த தினம்.
போற்றுவோம்
திருவளர் கலைகள் திரண்ட சீருடைச் சிறந்த ஆசிரியப் பெரும்புகழ்படைத்தோன் வல்லிபுரமெனும் மதிப்புயர் கலைஞன் சொல்லுயர் தெய்வத் துணைபெறு புண்ணியன் சீரார் மனைவியாய்த் திகழ்ந்த அன்னம்மா,
பாரார் சுற்றம் பயின்றிடும் பிள்ளைகள்
அயலார் மற்றோர் அன்பு பாராட்ட செயலுயர் கணவனின் சித்தங்குளிரும் நல்விளக்காக நயமிக வாழ்ந்தளை
நல்விருந்தோம்பி இல்லறம் காத்தனன்
நாயகன் சொல்லை நான் மறைவாக்கென தானுளங் கொண்டு வாழ்ந்த நற்செல்வி திருவா திரையாம் திருவாளர் நாளில் பெருவாழ் வெண்ணிப் பிறப்பொழித்தனனே அன்னார் ஆன்மா ஐங்கரன் அடிக்கீழ் மன்னிய சாந்தி பெற்றிடப் போற்றுவோம்.
அருட்கவி சி.விநாசித்தம்பிப் புலவர்.
- 0.1 -

Page 4
9திருவாட்டி அன்னம்மா வல்லிபுரம் வாழககைசசுருககம
ஆயிரம் பிறை கண்டவர் என்ற பெருமைக்குரியவராய் எண்பத் தெட்டு ஆண்டுகள் இவ்வுலகிலே நிறைவான வாழ்க்கை வாழ்ந்த திருவாட்டி அன்னம்மா வல்லிபுரம், தமிழ் சைவப் பண்பாட்டின் நிலைக்களனாகத் திகழும் சங்குவேலிக் கிராமத்தில் 1913-09-26 இல் பிறந்தார். சங்குவேலியில், பிரபல கட்டட ஒப்பந்தக்காரராக விளங்கிய திரு.இராமு பொன்னம்பலம், இவருக்குத் தந்தையார். இவருடைய தாயார் பெயர் திருவாட்டி செல்லம்மா பொன்னம்பலம் என்பதாகும்.
வசதி நிறைந்த பெற்றோருக்கு ஒரே மகளாகிய இவர் செல்ல மாகவும், அதேவேளை, தமிழ், சைவப் பண்பாட்டிற்கு அமைவாக வும் வளர்க்கப்பட்டார். ஆரம்பக் கல்வியைச் சங்குவேலி ழரீ சுப் பிரமணிய வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை மானிப் பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையிலும் பெற்றுக்கெண்டார்.
சைவமும் தமிழும் வளர்த்த, யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களின் மாணவர் பரம்பரையில் வந்த கந்தரோடை அம்பலவாணர் கந்தையா அவர்கள், தனது கிராமத்திலே 1893இல் தமிழ்ப் பாடசாலை ஒன்றை நிறுவியிருந்தார். சைவச் சூழலில் மாணவர்களுக்குக் கல்வி ஊட்டப்பட்டது. அவர்கள் நல்லொழுக் கம், கட்டுப்பாடு, குருபக்தி, தெய்வபக்தி முதலியவற்றைப் பேணுப வர்களாவும் உருவாக்கப்பட்டனர். விளையாட்டு, நடனம், நாடகம், இசை, பேச்சு போன்றவற்றிலே ஆர்வமுடையவர்கள் சரியான முறையிலே இனங்காணப்பட்டு, அத்துறைகளில் மேன் மேலும் முன்னேற்றம் அடைவதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. இப்பணி
- 02

களைச் செய்வதற்குப் பொருத்தமான ஆசிரியர்களையே தனது பாடசாலையில் நியமித்தார் நிறுவுநர் திரு.அ.கந்தையா உபாத் தியாயர் அவர்கள்.
இவ்வாறு இப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுள் ஒருவர் திரு. த. வல்லிபுரம் அவர்கள். பூமி சாஸ்திரம், நாட்டுச் சீவன சாஸ்திரம், தமிழ், சமயம் முதலிய பாடங்களை மிகச் சிறப் பாகக் கற்பிக்கும் ஆற்றலுடையவர் இவர் சங்கீதம், நாடகம் முதலிய வற்றில் ஆர்வமும் திறமையும் உடையவராகவும் விளங்கினார்.
கந்தரோடை தம்பையா தம்பதியின் மகனான இவரை, 1938ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் திருமணம் செய்து இல்லறம் என்னும் நல்லறத்தை இனிதே ஆற்றத் தொடங்கினார் திருவாட்டி அன்னம்மா வல்லிபுரம். இனிய இல்லறத்தின் நற்பயனாக செல்வராணி, திருச் செல்வம், உதயகுமார், மகேஸ்வரிதேவி, அரியபுத்திரன், சந்திரபோஸ் ஆகிய மழலைச் செல்வங்களைப் பெற்று மகிழ்ந்தனர்.
கணவர் திரு.வல்லிபுரம், பாடசாலைக் கடமைகளில் அதிக நேரத்தைச் செலவிட, பிள்ளைகளை நல்லவர்களாகவும் வல்லவள் களாகவும் வளர்த்து ஆளாக்கும் பாரிய பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டார் திருவாட்டி அன்னம்மா. கடவுள் பக்தி நிறைந்த இவர், சங்குவேலி சிவஞானப்பிள்ளையார் கோவிலுக்கும் மருதடிப் பிள்ளையார் கோவிலுக்கும் அடிக்கடி சென்று வழிபடுவதை வழக்க மாகக் கொண்டிருந்தார். ஊரிலுள்ள ஏனைய சிறு ஆலயங்களுக் குச் சென்று வணங்குவதற்கும் தவறுவதில்லை. தன்னுடைய பிள்ளைகளையும் தெய்வ பக்தி மிக்கவர்களாக இவர் வளர்த் தெடுத்தார். வல்லிபுரம் - அன்னம்மா தம்பதியின் மூத்தமகள், செல்வ ராணி மயிலிட்டியைச் சேர்ந்த டாக்டர் கந்தையா பத்மநாதன் அவர்களைத் திருமணம் செய்தார். 1983ஆம் ஆண்டில் வைத்திய
- 03 -

Page 5
கலாநிதி காலஞ்சென்றதனால் மூத்தமகள் தாய் தந்தையருடன் வாழ்ந்துவருகின்றார். மூத்த மகன் திருச்செல்வம், மூளாயைச் சேர்ந்த பயிற்றப்பட்ட ஆசிரியையான மனோகரி என்பவரைத் திரு மணம் செய்தார். சிறிது காலத்தில் மனைவியார் காலஞ்சென்றார். இரண்டாவது மகனான உதயகுமார் கரவெட்டியில் பிரதேசசபையில் தொழிநுட்ப அலுவலராகப் பணி புரிந்துவருகின்றார். கரணவாய், இராஜராஜேஸ்வரி என்பவரைத் திருமணம் செய்த இவருக்கு சியாம், நிசானந்த, சாந்திகா ஆகிய மூன்று பிள்ளைகள் உளர்.
இரண்டாவது மகளான மகேஸ்வரிதேவி, சுன்னாகம் தெற்கு - பொறியியலாளர் குணபாலசிங்கம் அவர்களை மணம் புரிந்து லண்டனில் வாழ்ந்து வருகின்றார். ஹரன், றீட்டா, நிமால் ஆகியோர் இவர்களின் பிள்ளைகள்.
மொழில்நுட்ப உத்தியோகத்தரான மூன்றாவது மகன் அரிய புத்திரன், வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் வேலை அத்தியட் சகராகக் கடமையாற்றி வருகின்றார். யாழ் - நாயன்மார்க்கட்டைச் சேர்ந்த வசந்தாதேவியைத் திருமணம் செய்த இவருக்கு பிரதாபன், பிரியதர்ஷன், பிரியாகாஷன், தனுஜா, அஜிதா ஆகிய மக்கட் செல்வங்களுளர்.
இளைய மகனான சந்திரபோஸ் லண்டனில் பொறியியலளராகப் பணியாற்றி வருகின்றார்; இந்தியாவிலுள்ள கோவா மாநிலத்தைச் சேர்ந்த மர்லியா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். டொறின் சீத்தா என்பவரே இவர்களின் பிள்ளையாவார்.
தன்னுடைய பிள்ளைகள் நன்கு கல்வி கற்று, உயர்ந்த பதவிகளில் இருந்தபோதிலும், அதனாற் சிறிதும் கர்வமடையாமல், எப்போதும் எளிமையான வாழ்க்கையையே இவர் வாழ்ந்தார்.
- 04 -

உற்றார், உறவினர்களை அணைத்து ஆதரித்தார். வசதிகுறைந்த உறவினர்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்து வந்தார்.
அன்பு மிக்க மனைவியாக - பாசமும் பற்றும் நிறைந்த தாயாககருணை நிறைந்த மாமியாராக - பேரன்பு நிறைந்த பேர்த்தியாராகஅயலவர்களையும் உற்றார் உறவினர்களையும் என்றுமே கெளர வித்து நடத்தும் பண்பான வீட்டுத்தலைவியாக உத்தம வாழ்க்கை வாழ்ந்த திருவாட்டி அன்னம்மா வல்லிபுரம் அவர்கள் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து, அன்பு நிறைந்த கணவர், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் முதலிய பலரும் இரங்கி ஏங்க, 2001-09-11ஆந் திகதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.
எல்லாம் வல்ல இறைவனை மனம் மொழி மெய்யால் எந்நாளும் வழிபடுவதையும் தான தருமங்கள் செய்வதையும் தன் பழக்கமாக வும் வழக்கமாகவும் கொண்டிருந்த இவர், தன் குலதெய்வமாகிய சங்குவேலி சிவஞானப்பிள்ளையாரின் திருவடி நீழலில் இருந்து தன் கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், ஊரவர் எவ்வித பிரச்சினையுமின்றி இனிதே வாழவும் வரம் வேண்டி பிரார்த்தித்துக் கொண்டே இருப்பர் என்பது திண்ணம்.
சி. சிவசரவணபவன் (சிற்பி)
முன்னாள் அதிபர் யாழ். வண்ணை வைத்தில்வரக் கல்லூரி
யாழ்ப்பாணம்,
கந்தரோடை, சுன்னாகம்
2001. 10.01
- 05

Page 6
கேட்டாரே தெய்வத் திருமணம்
நான் கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையில் 07-08-1938இல் சேவையில் ஆசிரியராக பணிபுரிந்தேன். எனது முதல் சம்பளமாகிய ஆவணிமாத சம்பளத்தை இறைபணிக்கு செலவு செய்தேன். எனது புரட்டாதி மாத சம்பளத்தை வீடு கொண்டு வந்த போது, எனது சகோதரன் “ஒரு துவிச்சக்கர வண்டி வாங்கு” என்றார். நானும் அதற்கு சம்மதித்தேன். துவிச்சக்கர வண்டி எங்கு வாங்குவது? யாரைப் பிடிபபது? எனக்கு எதுவும் தெரியாது. அச்சுக்கூடத்தில் வேலை செய்யும் திரு.மயில்வாகனத்தை கண் டேன். அவரிடம் “துவிச்சக்கர வண்டி எங்கு வாங்கலாம்?” என்று விசாரித்தேன். அவர் சொன்னார் சங்குவேலியில் பொன்னம்பலம் என்பவரிடம் போனால் அவர் நல்ல மதிப்பான பொருளாய் எடுத்துத் தருவார் என்று சொல்லி அவர் சென்றுவிட்டார். எனக்கு பொன்னம் பலம் வீடு தெரியாது. சங்குவேலிப்பிள்ளையார் கோயிலடியில் வந்து விசாரித்தேன். அதன் மூலம் அவர் வீட்டை அடையாளம் கண்டேன். ஆனால் எனக்கு பொன்னம்பலத்தை தெரியாது. நான் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு வந்த போது பலர் கூடியிருந்தார்கள். யன்னல் வழியாக நின்ற ஒரு பெண் என்னிடம் வந்து “தம்பி என்ன தேவை? எங்கிருந்து வருகிறீர்? வாரும், வந்து இந்த இறாக் கையில் உக்காரும்” என்றார். நானும் உக்கார்ந்தேன். என்னை உபசரித்து நலம் விசாரித்தார். நானும் அவர்களுடன் உரையாடி னேன். இவ் வாறு நாம் உரையாடிக் கொண்டிருக்கும் போது திரு.பொன்னம்பலம் வந்து சேர்ந்தார். வெளியில் நின்றவர்கள் விடைபெற்று சென்றனர். அதன் பின்னர் இருவரும் என்னுடன் பலதும் கதைத்தார்கள்.
இதற்கிடையில் பொன்னம்பலத்திற்கு ஒரு மகள் இருந்தார். அவள் பெயர் பத்தினி அன்னம்மா. அவர் தெய்வீகத்தன்மை உள்ளவர். மாமிசம் உண்பதில்லை. 2ஆம் தீட்சை பெற்றவர். திரு.பொன்னம்பலம் அவர்களின் மனைவி செல்லம்மா அவர்கள் ஒவ்வொரு வெள்ளியும் நல்லூர் முருகனை வணங்கி முன் வாசலில் அமர்ந்து தன்பிள்ளை திருமணத்தை முருகனே நிறைவேற்ற
- 06۔۔

வேண்டி வணங்குவர். அவ்விதம் ஒரு வெள்ளி அவர் வேண்டி நிற்கும் போது அவருடன் இருந்த ஒரு பெண்மணி உருவந்தாடி “நாளை பத்துமணிக்கு உனது வீட்டுக்கு ஒருவர் வருவார். அவள் தான் உனது பிள்ளையின் மணவாளன். கேட்டதை எல்லாம் கொடுத்து அவரை செய்துவையுங்கள்” என்றுகூறினார். இதைக் கேட்ட மகிழ்ச்சியில் கணவரிடம் வந்து கூறினார். மறுநாள் இரு வரும் காவல் இருந்தார்களாம். நானும் தெய்வாதீனமாய் வந்து சேர்ந்தேன். தெய்வ வாக்கில் கூறப்பட்ட அம்சம் எல்லாம் என்னில் அடங்கி இருந்த உடனே அவர்கள் இருவரும் பெரும்மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் வீட்டில் இரண்டு துவிச்சக்கர வண்டிகள் வெளியில் எடுத்து விட்டு என்னை விசாரியாது ஒரு “கிறாம்போனை யும் இரண்டையும் கட்டி வீடு கொண்டு செல்லும்படி கூறினார்கள். நான் மறுத்தேன். எனக்கு உள் இரகசியம் ஒன்னும் தெரியாது. அவர்கள் அவற்றை கொண்டு சென்று பாவிக்கச் சொன்னார்கள். அதற்கு நான் பணமில்லை என்று கூறினேன். பின் ஆறுதலாக தரலாம். எடுத்து செல்லும் என்று பிடிவாதமாக என்னை அனுப்பி வைத்தார்கள். நான் வீடு சென்றவுடன் நடந்த அனைத்தையும் ஒன்றும் விடாமல் கூறினேன். அண்ணன் கூறினார் நான் நாளை எல்லாம் விசாரித்து வருகின்றேன் என்றார். மறுநாள் எல்லாம் கதைத்து சீதனம் எல்லாம் பேசிவிட்டு வந்தார். தாலி கூறை எல்லாம் ஒழுங்கும் அவர்களே பார்த்து அடுத்த ஐப்பசிக்கு திருமணம் என்று முடிவானது. 5 வருடங்கள் பிள்ளைப்பாக்கியம் கிடைக்கவில்லை. ஐந்து வருடத்தின் பின்னர் எனக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தொடர்ந்து மற்றப்பிள்ளைகள் பிறந்தனர். நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும். அவர்கள் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்களில் இருவர் இங்கிலாந் திலும் ஏனையோர் இங்கும் உள்ளார்கள். பிள்ளைகளுடன் வாழ்ந்து
தனது 88ஆம் வயதில் சம்சாரம் இறைவனடி சேர்ந்தார்.
EL D.
சாந்தி சாந்தி சாந்தி
இங்ங்ணம் கணவர் த.வல்லிபுரம்
- 07

Page 7
ஆயிரம் பிறைகணிட அன்னம்மா வல்லிபுரம் அம்மையார்
ஈழத்திருநாட்டின் வடபால் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் பலவளங்களும் நிறைந்த கிராமங்களுள் சங்குவேலியும் ஒன்றாகும். இது சைவத்தையும் தமிழையும் வளர்த்த சான்றோர் வாழ்ந்த பதியாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அயற்கிராமமான மானிப்பாய் கிறிஸ்தவ மிஷனரிகளின் சமயப் பரப்புகைக்கு உள்ளானபோதும் இக்கிராம மக்கள் தங்கள் சமயம், பண்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றைப் பேணி வந்துள்ளனர். அக் காலத்தில் இக்கிராமத்தில் வாழ்ந்த பெரியார் வைத்தியலிங்கம்பிள்ளை அவர்கள் இக்கிராம மத்தியில் சிவஞானப்பிள்ளையார் கோவிலை யும், அருகே சைவ ஆலய அர்ச்சகள்களை உருவாக்கும் சமஸ் கிருத பாடசாலையையும் கட்டுவித்தார். அத்துடன் இக்கிராம மக்கள் கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றில் மேம்படவேண்டு மென்னும் பெருநோக்குடன் யாழ். சங்குவேலி பூரீசுப்பிரமணிய வித்தியாசாலையும் கட்டுவித்துத் திறம்பட நிர்வகித்து வந்தார். இப்பாடசாலை அரசுடைமையாகும் போது உரிய படிவங்களை நிரப்பியோரின் தவறினால் இன்று யாழ்.சங்குவேலி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை என வழங்கப்பட்டுவருகிறது. பெரியார் வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் பிள்ளையாருக்கு ஓர் ஆலயமும் சுப்பிரமணியரின் பெயரில் கல்விக்கு ஓர் ஆலயமும் அமைத்துச் சங்குவேலிக்கிராமம் பல்லாற்றானும் வளர வாரிவழங்கிப் பரிபால னஞ் செய்தார். இவ்வாறான சான்றோர் வாழ்ந்தமையால் இக்கிராம மக்கள் கல்விகேள்வி, ஒழுக்கம், தமிழர் பண்பாட்டைப் பேணுதல், சைவ ஆசாரசீலர்களாக வாழ்தல் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பத னால் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர்.
சங்குவேலிக் கிராமத்தில் பிரபல கட்டட ஒப்பந்தகாரராக விளங்கிய திரு.இ.பொன்னம்பலம் அவர்களும் மனைவி செல்லம்மா அவர்களும் செய்தவப்பயனால் ஏகபுத்திரியாக 1913-09-26ஆம் நாள் அன்னம்மா அவர்கள் பிறந்தார். செல்லப்பிள்ளையான
- 08

அன்னம்மாவை சைவ சமய ஒழுக்கமும், தமிழர் பண்பாடும் மிளிரச் சங்குவேலியில் பெரியார் வைத்திலிங்கம்பிள்ளை அவர்க ளால் கட்டித்திறம்பட நிர்வகிக்கப்பட்டுவந்த யாழ்.சங்குவேலி பூரீ சுட்பிரமணிய வித்தியாசாலையில் சேர்த்தனர். அங்கு இவர் ஆரம்பக் கல்வியைத் திறம்படக் கற்றுத் தேறினார். தொடர்ந்து இடைநிலைக் கல்வியைக் கற்பதற்காக அயற்கிராமத்தில் இருந்த யாழ்.மானிப் பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கும் அவர் தனது கல்வியைக் கற்றுத் தேறி மணப்பருவமடைந்
தா.
சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடம் கற்று நல்லைநகள் ஆறு முகநாவலரின் வேண்டுகோளை ஏற்றுக் கந்தரோடைக் கிராமத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்க்க 1893ஆம் ஆண்டில் சைவத் தமிழ் வித்தியாசாலை நிறுவியவர் அம்பலவாணர் கந்தையா உபாத்தியாராவார். (இப்பாடசாலையே இன்று அவர் பெயரால் யாழ்.கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலை என மிளிர் கின்றது) தேவாரப் பண்ணுக்குத் தென்னாட்டுத் தமிழ் வாத்தியமான சாரங்கியை அழியவிடாது பாதுகாக்கும்படி பூரீலழறீ ஆறுமுகநாவலர் சைவ மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அம்பலவாணர் கந்தையா உபாத்தியாயர் அவர்களும் சாரங்கி வாத்தியம் வாசிப் பதில் வல்லவராகத் திகழ்ந்தார். அக்காலத்தில் காந்தி அடிகளின் போதனையால் கவரப்பட்ட இவர் நான்குமுழ வேட்டியுடனும் நர முண்டுப் போர்வையுடனும் எளியவராகக் காட்சியளிப்பார். தனது பாடசாலையில் அறிவுக் கல்வியுடன் தொழிற்பயிற்சியும் வழங்கினார். சவர்க்காரம், கயிறு, கால்மிதி, தும்புத்தடி, தூரிகை, பேனாமை, வெண்கட்டி ஆகியன மாணவர்களால் உற்பத்திசெய்யப்பட்டன. தமிழர் நாடகம், நடனம், சங்கீதம் முதலிய கலைகள் வளர்க்கப் பட்டன. இக்கல்விக்கூடத்திலேயே திரு.த.வல்லிபுரம் அவர்கள் கல்வி கற்றார். கந்தையா உபாத்தியாயரின் அன்புக்கும் அர வணைப்புக்கும் பாத்திரமான திரு.வல்லிபுரம் அவர்கள் ஆசிரியர் தராதரப்பத்திரம் பெற்றார். ஸ்தாபகள் அவர்களால் அப்பாடசாலை யிலேயே ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவருடன் திரு.வே. அப்புத்துரை, திரு.சு.சின்னத்துரை, திரு.சி.பொன்னம்பலம் (ஆதவன்)
- 09

Page 8
ஆகியோரும் கற்பித்தனர். இவர்கள் கந்தையா உபாத்தியாயரின் கனவை நனவாக்கும் ஆசான்களாகத் திகழ்ந்தனர் என்றால் மிகையாகாது. பலவருடகாலமாக இவர்களின் தலைமை ஆசிரிய ராக விளங்கியவர் சிவறு சு.சுப்பிரமணியக்குருக்கள் ஆவார். வல்லிபுர உபாத்தியாயர் சித்திரம் வரைவதிலும் வல்லவர். சரித் திரம், புவியியல், நாட்டுச்சீவன சாஸ்திரம், உடற்கல்வி, சைவ சமயம் போன்ற பாடங்களையும் சிறப்பாகக் கற்பித்து வந்தார். குருபக்தி மிக்கவரான இவர் ஸ்தாபகரின் நம்பிக்கைக் குரியவராகி இப்பாடசாலையை வளர்ப்பதில் பங்கு கொண்டு பணியாற்றினார். இக்காலத்திலேயே பெரியோர் சங்குவேலியில் வாழ்ந்த பொன்னம் பலம் அவர்களது ஏகபுத்திரியாகிய அன்னம்மா அவர்களை 1938ஆம ஆண்டு ஐப்பசி மாதத்தில் திருமணஞ் செய்து வைத்தனர். இல்லறமாம் நல்லறத்தின் பயனாக செல்வராணி, திருச்செல்வம், உதயகுமார், மகேஸ்வரிதேவி, அரியபுத்திரன், சந்திரபோஸ் ஆகி யோரை அருந்தவப் புதலல்வர்களாகப் பெற்றெடுத்தனர்.
இவரது கணவரான வல்லிபுர உபாத்தியாயர் அவர்கள்
கந்தரோடை தமிழ்க்கந்தையா வித்தியாசாலையில் கற்பிப்பதிலும், பாடசாலைப் புறவேலைகளில் ஈடுபடுவதிலும் பெரும்பொழுதைக் கழிக்க வேண்டியிருந்தமையால் வீட்டுப்பொறுப்பினை அன்னம்மா அவர்களே ஏற்றுக்கொண்டார் என்றால் மிகையாகாது. தனது பிள்ளைகளைச் சிவஞானப்பிள்ளையார்கோவில், மருதடிப் பிள்ளை யார் கோவில் ஆகியவற்றிற்கு அழைத்துச் சென்று வழிபட்டு வருவார். இதனால் பிள்ளைகள் சமயப்பற்று, ஒழுக்கம் ஆகியவற் றில் மேம்பட்டவர்களாகத் திகழமுடிந்தது.
"தந்தைமகற்கு ஆற்றும் நன்றி அவயத்து
முந்தி யிருப்பச் செயல்’
என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்கத் தந்தையாரும் தாயாரும் இணைந்து சிறந்த கல்வியைப் புகட்டினர். ஒழுக்க சீலர்களாகப் பிள்ளைகளை வளர்த்தெடுத்தனர். இதற்கு இன்று அவர்கள் வகிக் கும் பதவிகளும் அவர்களின் பண்புமே சான்றுபகரும்.
- 10

மூத்த புதல்வி செல்வராணி மயிலிட்டியைச் சேர்ந்த வைத்திய கலாநிதி கந்தையா பத்மநாதன் அவர்களைத் திருமணஞ் செய்து வாழ்ந்துவந்தார். குறுகிய காலத்தில் டாக்டர் திடீரென மறைந்தார். இதனால் செல்வராணி தாய் தந்தையருடன் வாழ்ந்து வருகிறார். இரண்டாவது புத்திரன், திருச்செல்வம் அவர்கள் மூளயைச் சேர்ந்த பயிற்றப்பட்ட ஆசிரியை மனோகரி அவர்களை மணஞ் செய்தார். மனோகரியும் சிலவருடங்களில் அகால மரணமடைந்தமையால் திருச்செல்வம் அவர்களும் தாய் தந்தையருடன் வாழ்ந்து வரு கிறார். மூன்றாவது புத்திரன் உதயகுமார் வடமராட்சி தென்மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையில் தொழில்நுட்ப அலுவலராகப் பணி புரிகின்றார். இவர் கரணவாயைச் சேர்ந்த இராஜராஜேஸ்வரி என்ப வரைத் திருமணஞ் செய்து வாழ்ந்து வருகிறார். நான்காவது புத்திரி மகேஸ்வரிதேவி இலண்டனில் உள்ள வைத்தியசாலையொன்றில் பணி புரிகின்றாா. இவர் சுன்னாகம் மேற்கைச் சேர்ந்த பொறி யியலாளர் குணபாலசிங்கம் அவர்களை மணஞ் செய்தார். இவரும் மனைவியுடன் இலண்டனிலேயே தொழில் புரிந்து வருகின்றார். ஐந்தாவது புத்திரனான அரியபுத்திரன் அவர்கள் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தொழில்நுட்ப அலுவலராகக் கடமையாற்றி வருகிறார். இவர் நாயன்மார்க்கட்டினைச் சேர்ந்த வசந்தாதேவி என்பவரைத் திருமணஞ் செய்தார். இளைய மகனான சந்திரபோஸ் பொறியியலாளராக இலண்டனில் கடமை ஆற்றுகிறார். இவர் இந்தியாவிலுள்ள கோவா மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மர்லியா என்பவரை வரித்துக் கொண்டார். திருமதி ச. மர்லியா அவர்கள் இலண்டனில் உள்ள வைத்தியசாலையொன்றில் தலை மைத்தாதியாகப் பணிபுரிகின்றார். இவ்வாறு பிள்ளைகளைப்பார் போற்றும் உத்தமர்களாக, கற்றோர் அவையில் முன்னிருக்கும்படி வளர்த்தவர் அன்னை அன்னம்மா அவர்களேயாவார். தந்தையின் கண்டிப்பும் பாசமும் பிள்ளைகளை மேல்நிலைப்படுத்த உதவின என்றால் மிகையாகாது.
அம்மையார் சிவஞானப்பிள்ளையார், மருதடி விநாயகர் வழி பாட்டின் மூலம் தனது ஆன்மீக ஈடேற்றத்திற்கு வழி கோலினார். ஆயிரம் பிறைகண்ட அன்னம்மா அமையார் அறுபத்துமூன்று
- II -

Page 9
ஆண்டுகள் கணவருடன் இணைந்து அவனி போற்ற வாழ்ந்து காட்டினார். “தென்புலத்தார் தெய்வம், விருந்து, ஒக்கல், தான்” என்ற ஐந்து புலத்தவர்களுக்கும் ஒம்பவேண்டியவற்றை ஓம்பி வந்தவர். அ.தாவது இல்வாழ்வானுடைய கடமைகளை இருவரு மாக நிறைவேற்றி வந்தனர் என்றால் மிகையாகாது. இறுதிக் காலத்தில் தனது 88ஆம் அகவையில் சிறிது நோய்வாய்ப்பட்டிருந்த அம்மையார் 2001-09-11ஆம் நாள் இங்கு வாழும் நான்கு பிள்ளை கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், கணவன் ஆகியோர் அரு கிருந்து கண்ணி மல்க இறைவனடி சேர்ந்தார். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.
“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு”
- வள்ளுவர் ஓம் சாந்தி சாந்தி சாந்தி1
அ. தற்பரானந்தன் 2z562ů LiezofůLmrami, உடுவிற்கல்விக் கோட்டம்.
கந்தரோடை,
சுன்ன7கம்.
2001-10-01.
「一ーーーーーーーーーーーーーー -
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்” - - - - - - - - - - - - - - - -
- 12

மணி ஓசை கரைகிறத மணி ஓசை கேட்கிறத அத சங்குவேலிப் பிள்ளையார் காண்டாமணி ஓசை தான் அன்னம்மா அம்மையார் வீட்டில் இருந்தபடியே கோயில் இருக்கும் திசை நோக்கிக் கும்பிடுகிறார் வாயோ “பிள்ளையாரப்பா பிள்ளைகளைக் காப்பாற்று” என்று சொல்லுகையில் சொற்கள் சுழுலுகின்றன தள்ளாத வயதிலும் தன் கணவர் நிலையை நினைக்கிறார் அன்னம்மா அம்மையார் கொடுத்த வைத்தவர் கந்தரோடையில் கலை வளர்த்த முன்னோடிகள் மூவரான சின்னத்தரை, பொன்னம்பலம் வல்லிபுரம் ஆசான்கள் வாழ்க்கைத் தணைவராய் வாய்த்தவர் வல்லிபுரம் ஆசானே இருவரும் இணைந்ததில் ஈடிலாச் செல்வங்கள் பெற்றீர் பிள்ளைச் செல்வங்கள் பொருட் செல்வங்கள் நற்பேறாய் பெற்றீர்கள் அந்த நாளிலே வல்லிபுரம் ஆசானும் மனைவியும்
- 13

Page 10
விழாக்களுக்கு வந்திட்டால் நாங்கள் வணங்கி நிற்போம் வல்லிபுர ஆசிரியரோ எங்களுக்கு கல்வியொடு கலைகளும் அள்ளித் தருவார் உபசரிப்புக்கும்
உரியவர்க்கு உதவிகள் செய்வதற்கும் பரிவு காட்டவும் பத்தியில் கோயில் திருப்பணி 6eចំub ஆசானுக்கு வாய்த்த அன்னம்மா அம்மையார் தனிக் கொடையே நாலுபேருக்கு நல்லத செய்வார் பாட்டி வைத்தியம் பார்க்காது விட்டாலும் பக்குவம் சொல்லி வைப்பார் பெற்றெடுத்த பிள்ளைகள் அத்தனை பேரையும் பேரெடுக்க கணவருடன் ஊரார் போற்றிட உயர்த்தி வைத்தார் கொண்டவரின் பெருமைக்கும் குல விளக்குகளான பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் தாண்டாமணியாக இருந்தார் அன்னம்மா ളമ്ന ഗുങ്ങി ഞെ கேட்கிறது கை கூப்பவில்லை ஓசை மெல்லனவெ கரைகிறது.
இங்ங்ணம் ~ அ.துரைசிங்கம் (வலம்புரி)
- 14

ஒளியிழந்த குல விளக்கு
பாசத்தின் எல்லை வரை பறந்த திரிந்த ஒரு பறவை சிறகுகளை இழந்ததம்மா. பலகாலம் நிழல்தந்த ஆலமரம் போல் ஒன்று வேர் கொண்டு சாய்ந்ததம்மா. நதிபோல நலம் தந்த ~ இன்று விதியால் பலமிழந்த போனீரே எங்கு எதவோ, அங்கு அதவாய் அமர்ந்திருப்பீர் அன்புள்ள அன்னையாய் அறிவுள்ள வழி சொல்லி எமை பண்போடு உயர வைத்தீர் நதிக்கு கரையாக கலங்கரை விளக்காக வழிகாட்டினீர் சோகையில் சுகம் செய்தீர் இன்று சோகத்தில் மூழ்க வைத்தீர் தடுப்பிழந்த ஓடம் போல, கூடு இழந்த குருவி போல, ஆகி விட்டோம் இறைவா, மரணத்திற்கு மரணம் இருந்தால் நாமின்ற மனம் நோகத் தேவையில்லை ஆனால். சிந்தம் மழைத்துளிகளே நீங்களும் கண்கள் வாங்குங்கள் ஏனென்றால், கண்ணி சிந்தவதற்கு இனி எம் கல்லறை வரை கசிகின்ற கண்ணீரை இனியார் தடைப்பார் இனியார் தடைப்பார்.
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
سے 15 سے

Page 11
இறையடிப் பேறுகண்ட திருமதி அன்னம்மா வல்லிபுரம் அவரது பிரிவு குறித்த இரங்கல் பாக்கள்
மகன் அரியபுத்திரன் புலம்பல் பெயரிட்டுப் படிக்க வைத்துப் பெருமை வாழ்வு
பெறவைத்து வளர்த்திட்ட அம்மா நோயாற் துயருற்ற வேளையிலே அருகே நின்று
செய்கடமை செய்துமென்ன விட்டேன் போனி செயலற்று நினைவிழந்து கொள்ளியிட்டேன்
செய்கடமைக் கிதுதானோ கைம்மா றம்மா துயர்மிக்கு நிற்கின்றேன் தாங்கும் தெய்வம்
திருவடியிற் பேரமைதி பெறு சாந்தி.
மகன் சந்திரபோவுத் புலம்பல் அடித்தறி யேனணைத்த அன்பைக் கண்டேன்
அன்பையெல்லாம் என் மேலே சொரிந்து கண்ணே படித்திடடா என்று சொன்ன அம்மா நானும் படித்திட நல் நிலை யடைந்தேன் நேருக்கு நேரே காண நமக்கது வாய்க்க வில்லை
மனங்கலங்க விட்டகன்று போனிரம்மா யாருக்கே இந்தவாறு துயரது கிடைக்கும் அம்மா
விண்ணமர் இறைவன் பாதம் விரும்பினி சார்க சாந்தி.
மருமகன் புலம்பல் குணபாலசிங்கம் மருமகன் ஆகி நானும் பல காலம் பழகவில்லை அருகில் இல்லாது அன்னிய ஊர் சேர்ந்துவிட்டேன் அருவி போற் பாசத்தை அருகாமற் கொட்டியே உருக வைத்திரே உள்ளத்தின் ஊற்றை அறிந்ததும் அறிவிழந்தேன் ஆசை மாமி பறந்து ஓடி வந்து பாராப் பாவியானேன்.
- 16 ۔

பேரப்பிள்ளைகள்
பொட்சி, றிட்டா, நிமால், டொரிஸ், சீத்தா பிறந்தவுர் வரமுடியாத் தடைகளாலே
பிரியமுள உங்களது பக்கம் வந்து அன்புடனே உங்களுடன் கலந்து பேசும்
ஆனந்த வாழ்வு எமக்கில்லை. அம்மம்மா என்று நாம் - அன்புடன் அழைத்திடவே எங்கு சென்றீர் அம்மம்மா வந்திடுவா எல்லாமே
கேட்டறிவோம் இவ்வுலகில் மறப்போமோ.
சியாம், றிசானந், சாந்திகா, பிரதாபன், பிரியதர்சுடின், பிரியகாசுரன், தனுஜா, அஜித்தா. கண்டு விட்டால் முகமலர்வு காட்டிக் கையில்
காவியெம்மை வீடுமுற்றம் சுற்றுவீர்கள் உண்டிருக்க இன்சுவை சேர் பண்டம் கோடி உதவிடுவீர் வேண்டிய வாங்கித் தந்து கொண்டவரே கோப முகம் கண்டதில்லை
கூடி புது வோரமுது தந்திடுவீர் தேம்புகின்றோம் கொண்டு சென்று விடுவாம் ஊரார் நாங்கள் காண இனி முடியாதோ கலக்கந்தானோ
மகன் புலம்பல் - திருச்செல்வம் ஆற்றலிலே அம்மாவைப் போல என்றே
அயலவர்கள் சொல்ல வளர்த் தெடுத்த நீங்கள் ஆற்றரிய சோகத்தைத் தந்து போன
அவலமுறும் சேதி பெற்றே அலறுகின்றேன். நேற்றுவரை இருந்தமிடுக் கெல்லாம் போக
நினைவிழந்து தவிக்கின்றேன் கடமை தன்னை ஆற்றுதற்கும் கிடைக்காத பாவி போல்
அவலத்தால் அழுதழுது மாய்கின்றேனே.
- 17

Page 12
மகன் புலம்பல் ~ உதயகுமார் ஊரிலிருந் தொரு சேதி அம்மாவுக்கு
உற்ற சிறு நோயென்று வந்த போது நேரிலிருந் துதவுவதற்கு ஓடோடி நான்
ஊர் சென்று வந்தினனே சிலநாளின் பின் கூரிய வாள் தாக்கியதே போலச் சேதி
கேட்டழுது கலங்குகின்றோம் கதறுகின்றோம் நேரில் வந்து கடமை செய்து
நினைந்து நினைந் தழவிதியே யானதம்மா
மகள் புலம்பல் - மகேஸ்வரி காட்டாற்று வெள்ளம் போல் அன்பு காட்டி
கண்ணை இமை காப்பது போல் காத்து யாரும் ஈட்டரிய இன்ப மண வாழ்வு காட்டி
இங்கனுப்பி விட்ட அம்மா இறந்த சேதி கேட்டுணர்வு கெட்டழுதேன் அருகிருந்து
கடமை செய்யக் கிடைக்காத தான அம்மா வாட்டுதுய ரோடிங்கே வதங்குகின்றேன்
வளர்கங்கைச் சடையரனின் அடியே சார்க.
「-ーーーーーーーーーーーーーーーーーー ר உலகப் பெருந்தவறுகள்
1) உழைக்காமல் ஈட்டிய செல்வம் 2) மனச்சாட்சி இல்லாத இன்பம். | 3) பண்பு இல்லாத அறிவு. | 4) நல்லொழுக்கம் இல்லாத வணிகம் | 3) மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞானம்
6) தியாகம் இல்லாத வணக்கம் 7) அடிப்படைக் கொள்கை இல்லாத அரசியல், !
ل
- மகாந்மா காந்தி - - - - - - - - - - - - - - - - - - -

தாய்மரம் சரிந்தத
"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை”
என்ற வள்ளுவரின் பொய்யா மொழிக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் அமரர் திருமதி அன்னம்மா வல்லிபுரம் அவர்கள். அமைதி, அடக்கம், நற்பண்பு, பக்தி, ஆசாரம் நிறைந்து நான்கு புதல்வர் களையும் மூன்று புதல்விகளையும் பெற்று ஒரு ஆலமரம் போல நிழல் தரும் விருட்சமாகத் திகழ்ந்து அந்த மரத்திற்கே தெரியாதது போல நோய் ஏற்பட்டு அழிந்துவிட்டது என்றால் படைத்தவன் திரும்ப அழைத்து விட்டான். ஏனெனில் திரும்பவும் ஒரு விருட்ச மாகத் திகழ வேண்டும் என்ற நோக்கில் என்றே கூடக் கூறலாம். ஆன்மாவானது ஒருபோதும் அழியாது. இறைவனால் தனக்கு இட்ட கட்டளையினை பூர்த்தி செய்ததும் திரும்பவும் இறைவனே ஆட்கொள்வான். இந்த வகையினில் மண்ணில் பிறந்தவர் இறப்பது திண்ணம். ஆனால் ஊன் என்ற உடம்புதான் அழியுமே அன்றி உயிராகிய ஆன்மா அழியாது. வேறு சரீரம் எடுப்பது திண்ணம். அமரர் அன்னம்மா கடவுள் பக்திக்கு கட்டுப்பட்டவர். எந்தநேரமும் முருகன், அம்பாளை நினைத்த வண்ணமே உள்ளவர். அவருக்கு முருகன் அருள் உண்டே என்று கூறலாம். அமரரின் திடீர் மறைவு எல்லோரையும் மீளாத் துயரில் ஆளாக்கிவிட்டது. திடீர் துயரினால் ஆளாகியுள்ள அவர் தம் கணவருக்கும் மழலைச் செல்வங்களுக் கும் ஆறுதலும் ஆசியும் கூறுவதோடு அவர் ஆத்மா சாந்தியடைந்து சாயுட்சிய வாழ்வு பெற எல்லாம் வல்ல மானியம்பதி மருதடி விநாயகரைப் பிரார்த்திக்கின்றோம்.
இங்ஙனம்
உற்றார், உறவினர்கள்.
- 19 -

Page 13
அன்பர்களே
பாவத்திற்குப் பயப்படாதே மக்கள் தம் மாய வாழ்வில் உழலுகின்றார்கள். கடவுள் நீதி, மனுநீதி, சமூக நீதி எல்லாம் இன்று முற்றாக ஒழிந்துவிட்டன. மனச்சாட்சியமில்லாத மனங்களும் தெய்வபக்தி இல்லாத மனிதர்களும் மலிந்துவிட்டார்கள். இதன் பேறாக உலகத்தில் பாவம் மூன்று பங்கும் புண்ணியம் ஒரு பங்குமாகிவிட்டது. இவ்வேளையில் தெய்வ கோபம், தேவ சாபம் நம்மைத் தண்டிக்கும் என்பது உண்மை. இதனை நாம் இன்றும் கண்கூடாகக் காண்கின்றோம். துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் வெகு விரை வில் உண்டு. இதனைக் கூறுவதே காலக்கியானம் என்னும் தேவாட்டனை என்னும் நூல். இதனை சகலரும் வாசித்து அறிந்து பாவத்தை விட்டு விலகி மும்மூர்த்திகளின் அருள் பெறுவீராக.
பட்டினத்தார் பாடல் ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல - உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளும் சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே போருஞ் சதமல்ல நின்தாள் சதங்கச்சி ஏகம்பனே.
- -- ---- س-------------- س- س- س- -- --س--س--س- سT
முத்தித் தலங்கள் ஐந்து
பிறக்க முத்தி - திருவாரூர் தரிசிக்க முத்தி - சிதம்பரம் நினைக்க முத்தி - திருவெண்ணாமலை வாழமுத்தி - திருவாலவாய் (மதுரை)
இறக்க முத்தி - காசி

எத நடந்ததோ, அத நன்றாகவே நடந்தத.
எத நடக்கிறதோ, அத நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு
எதை நீ படைத்திருந்தாய் அத வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எத இன்று உன்னுடையதோ, அத நாளை மற்றொருவருடையதாகின்றது,
மற்றொரு நாள் வேறொருவருடைய தாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
பகவான் பூனி கிருஷ்ணர்.
- 21 -

Page 14
2
éfi62mLDu utö
பஞ்சபுராணம்
திருச்சிற்றம்பலம் விநாயகர் வணக்கம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
தேவாரம் காத லாகிக் கசிந்து கண்ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொருளாவது நாத னாம நமச்சி வாயவே.
திருவாசகம் பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே
- 22
 
 
 
 
 
 

ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகவென் றருள்புரி வாயே.
திருவிசைப்பா கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவ ரறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெம் சிவனைத்
திருவீழி மிழலைவிற் றிருந்த கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளங்
குளிரவென் கண்குளிர்ந் தனவே
திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற தில்லைச்
சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
கற்பனைக் கடந்த சோதி கருணையே யுருவமாகி அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம் பலத்து னின்று பொற்புட னடனஞ் செய்கின்ற பூங்குழல் போற்றி போற்றி.
- 23 -

Page 15
திருப்புகழ்
எதிரி லாத பக்தி தனைமேவி இனிய தாள் நினைப்பை இருபோதும்
இதய வாரி திக்குள் உறவாகி
எனது ளேசி றக்க அருள்வாயே
கதிர் காம வெற்பில் உறைவோனே
கனக மேரு ஒத்த புயவீரா
மதுர வாணி உற்ற கழலோனே வழுதிகூன் நிமிர்ந்த பெருமாளே
வாழ்த்து
வான்முகில் வழாதுபெய்க மலிவளம் சுரக்கமன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்.
- - - - - - - - - - - - - - 一 மனித தர்மம் ஏழ்மையிலும் நேர்மை கோபத்திலும் பொறுமை தோல்வியிலும் விடாமுயற்சி தரித்திரத்திலும் பரோபகாரம் துன்பத்திலும் தைரியம் செல்வத்திலும் எளிமை பதவியிலும் L1600ily

சகலகலாவல்லி மாலை வெண்டா மரைக்கன்றி நின்பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொலோ
சக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான் பித்தாக
வுண் டாக்கும் வண்ணங் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்வாய்
பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்று மைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு
தார்த்துன் னருட் கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கோ
லோவுளங் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.
தூக்கும் பனுவற் றுறை தோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய் வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்
- 25

Page 16
υi i :اُئلاً }}rhi ، زيائي தேக்கும் .بود i. i. :ேபவமுந்
தொண்டர் செந்தவினின்று காக்குங் கருணைக் கடலே
சகல கலாவல்லியே.
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென்னே
நெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன் செந்
நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலாவல்லியே.
பண்ணும் பரதமும் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே.
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல்கா
யுளங் கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத் தமிழ்த் தீம்பா
லமுதந் தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள் ளோதிமப் பேடே
சகல கலாவல்லியே.
- 26
 
 

சொல்விற்பனமு மவதானமுங்
கல்வி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமைகொள்வாய்
நளி னாசனஞ் சேர் செல்விக் கரிதன் றொருகால
முஞ்சிதை யாமை நல்குங் கல்விப் பெருஞ் செல்வப் பேறே
சகல கலாவல்லியே.
சொற்கும் பொருட்கு முயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்
நிலந்தோய் புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ
டரசன்ன நாண நடை கற்கும் பதாம் புயத்தாளே
சகல கலாவல்லியே.
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரு மென் பண்கண்ட ளவிற் பணியச் செய்வாய்
படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும்
விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வமுளதோ
சகல கலாவல்லியே.
- - - - - - - - - - - - - - - - - - - -
| "குடம்பை தனித்து ஒழியப் புட்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு ”
- திருக்குறள்.

Page 17
|
loĝ$$IG 1609IGĒĢĒ 1ĝoőtoloĐInsı 1ņogļgĒrnsı 1ĝonIs í sı |-|
||
Q91 GIẾ LÚĝis 199ÉGŰ LoĘqİLo qİlçelsőlegj qumg IĶĒĢpış9ŞİL-19)(1ņ9-T1ņ0909 |‘||19109TmŲnŞÜırılg) Lo Q91|ơnĻ9@g)IĜqjestoqlossig?(\ollTII) 09@ყ[[9Qu9ზმვ)|][ზGu(G}ÚÐIII093)JI1ņ9@1sgĪGIĘrı'œ'ICI +十十十+十 Q91||Tig) (1$ĝo1ņ91$ĝĦıms@Įstoņ19??)(Tiபுயாmெ-ே 6qıfloņ9€(9) ș@@Ļ091][TtoQ9€(9) qishọ9ọ919 士 Ilgiqılọ91ņ9f@IHEIJÚÚ(09ĶĒ 1JQIQIQ9Q980)qıstıQ9Q919LITQ11091ņ9f@quņ9$$1& 十十十十 q1,9riqi1991ņ9Lru9)Ф999шпо)qıÍTIqßigqÍFIQ9Q919|(1091$țQ9Q999@ığ093?s?||LIJI || đfi)ll|(G|1909ų9Țiņ1091ņ9f@ +
1Imri@9q1@
- 28
 
 


Page 18
எங்கள் அன்புத் தெய்வம் யில் அவருக்குவேண்டிய வை
புடன் செய்த Drராசையா அவ
அன்னாரது இறுதிக் கிரிை தாபங்களைக் கூறியும், மலர் யம் வைத்து அஞ்சலி செய மூலம் அனுதாபச் செய்தி ெ செய்தி அறிந்து ஆறுதல் கூற புரிந்தவர்கள், விசேடமாக வ
மானிப்பாய் தலைவர், செயல தெற்கு பிரதேச சபை சுன்னா தியோகத்தர்கள்; வடமராட்சி
வெட்டி தலைவர், செயலாளர், கும் வருகை தந்து ஆறுதல் கலந்து கொண்டவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளுகின்றோ
இறுதிக் கிரியைகள், ஊர் 31ம் நாள் இடம்பெற்ற சகல பங்குகொண்ட அனைவருக்கு பெறும் ஆக்கங்களை ஈய்ந் அமைத்த பாரதி அச்சகத்தின களைத் தெரிவித்துக்கொள்ளு
பாரதி பதிப்பகம், கே.கே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܕ_-
நோய்வாய்ப்பட்டிருந்த வேளை த்திய உதவிகளை அர்ப்பணிப் ர்களுக்கும், !
யகளில் கலந்து தங்கள் அனு மாலைகள் இட்டும், மலர்வளை ப்தோர், தொடர்பு சாதனங்கள் தரிவித்த உள்ளங்கள், மரணச் நியவர்கள், முன்னின்று உதவி லிதென்மேற்குப் பிரதேசசபை, ாளர், உத்தியோகத்தர் வலி. கம் தலைவர், செயலாளர், உத் தென்மேற்கு பிரதேச சபை கர உத்தியோகத்தர்கள் யாபேரிற் கூறி 31ம் நாள் நிகழ்விலும் எமது குடும்ப சார்பில் நன்றி TLD.
வலம் ஆகியவற்றில் கலந்தும் ஆத்ம சாந்திக் கிரியைகளில் ம், இம்மலர் தன்னில் இடம் 3த அனைவருக்கும் மலரை ருக்கும் எம் மனமார்ந்த நன்றி கிறோம்.
இவ்வண்ணம் கணவன், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
எஸ். வீதி, யாழ்ப்பானம்.