கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்

Page 1
பண்டைத் *Արshnաé
Ancient T SOCion I)
AHINDUSUTTEE BURNING AWDowy
NUNA K. WIJEVV
DIG00TΠα
sIT.6flag-u
 

தமிழரும் dishuh
ahills and balahCES
3
ार्वाङ्गाSा
VLOOR ΑΡΑΤΙΝΑΜ
விலூர்
ரத்தினம்

Page 2

ப்ண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
Ancient Tamils and Social Imbalances
நுனாவிலூர் கா.விசயரத்தினம்
Nunaviloor K.Wijeyaratnam
PUBLISHERS
CENTURY HOUSE
35, HA12JU, UK

Page 3
ALL RIGHTS RESERVED
பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும் ANCIENT TAMILS & SOCIALIMBALANCES)
Copyrights G 2010 Main Book (c) Nunaviloor Karthigeyan Wijeyaratnam Foreword GProfessor Kopan Mahadeva Commentary G Dr. Siva Thiagarajah Cover Design (C) Century House"
NOTE: All Rights Reserved. No parts of this book may be reproduced, or stored in a retrieval system or transmitted in any form or by any means without priorpermission from the copyright holders, except for short passages used in research, study or review. It is hereby gratefully acknowledged that public domain material from Wikipedia and other sources have been used in the Cover Designs and within the book.
PRINTING D
Book Format: Paperback, perfect bound Paper: 80 GSM Maplitho
Size of book: Demmy (14X21 cm Font size: 11 No. of Pages: xviii + 202 = 220 Typeset : Sri Vigneshwara Graphics No. of Copies: 1000 Binding: Stiching Printed by: K.V.R. Offset
FIRST EDITION: 2010
ISBN: 978-1873265-72-7
Publishers: CENTURY HOUSE,35, HA12JU, MIDDLESEX, U.K.
Assisted by: MANIMEKALAIPIRASURAM, CHENNAI-17, TAMIL NAADU,S.INDIA

繋リ隠リ
※岛佥
அப்பப்பா! நாங்கள் உங்களைக் கடைசிவரை சுற்றி நின்று காப்பாற்றுவோம்! என்று என்னைப் பெருமையடையச் செய்யும் என் இன்றைய நான்கு பேரப்பிள்ளைகளாகிய. என் மூத்த மகன்திரு. வி.காந்தரூபனின் அருமை மகளும், என் ஒரே ஒரு பேர்த்தியும் அழகரசியும், படிப்பில் நிபுணியுமான.
செல்வி.தீப்தி காந்குடுமின்
(அகவை-19) அவர்களுக்கும் (B.Sc student in neuro-science, King's College University, London) பிறர் உதவியின்றித்தானே சொந்தப் பிரயாசையில் கணினியைக் கற்று இயக்குபவரும் ஒரு கணினி நிபுணனாகப் படித்து வருவேனென்ற ஆசையில் பெருமைப்படுபவருமான என் பேரன்.
செல்வன் திஸ்சோர்கந்குடுன்
(அகவை-10) அவர்களுக்கும் (High view Primary School, Wallington, Surrey) எனது இரண்டாவது மகன் திரு. வி.சாந்தரூபனின் மகனும் என் பேரனும் கல்லூரியில் வைத்தியராகப் படித்துவருவேன் என்று மனத்திடத்துடன் காணப்படுபவருமான.
செல்வன் றொசான்சந்தடுபன் (அகவை-12) அவர்களுக்கும் (Wilson's Grammar School, Wallington, Surrey) என் கடைக்குட்டி மகள் திருமதிமலர்விழியின் அருமை மகனும் எனது பேரனும் தான் திறமைபெற்ற வைத்தியராகி வறிய மக்களுக்கு இலவசச் சிகிச்சை அளிப்பேன் என்பவருமான.
செல்வன்.பிரவின்யெயரசர்
(அகவை-1)அவர்களுக்கும் (St. Olave's Grammar School, Orpington, Kent)
இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்.

Page 4
CONTENTS Uெடுளடக்கம்
Foreword: Professor Kopan Mahadeva, PhD, Hon DLitt
ஆய்வுரை: கலாநிதி சிவ தியாகராசா
நூலாசிரியரின் அழைபபொலி: நுனாவிலுார் கா. விசயரத்தினம்
1.
முச்சங்கங்களை அடுத்த நாலாம் சங்கம் எழுந்த வரலாறு
பரிணாம வளர்ச்சியும் மனித வரலாறும்
பிராமணன் புகழ் பாடும் மனுநீதி நூலார் சூத்திரனுக்குக் கொடுத்த கொடுந் தண்டனைகள்
மங்கையர் மாண்பினை மங்க வைக்கும் உடன்கட்டையேறல்
தொல்காப்பியர் காட்டும் பண்டைத் தமிழர் வாழ்க்கை நெறி
திருமணமும் அதன் முன் பின் விளைவுகளும்
பார் போற்றும் உலகச் சாதனையாளர் மகாத்மா காந்தி
மதங்களும் புராணங்களும் எழுப்பிய உயிர்ப்பலிகள்.
vi
ix
10
18
34
67
82
93
102

10.
11.
12.
13,
14.
15.
16.
17.
18.
19.
20.
பூவுலகின் நிலப்பரப்பில் தோன்றும் உயிரினப் பிறப்பும் இறப்பும்
சங்கத் தமிழ் இலக்கியமும் அதன் வளர்ச்சியும்
செய்ந்நன்றி மறப்பது அறம் அன்று
நான்,விரும்பும் இலக்கிய நாயகன் சிலம்பில் இளங்கோ
மண்ணின் மகிமையும் அதன் வாசனையும்
செந்நாப்போதார் திருவள்ளுவரும் தெய்விக நூல் திருக்குறளும்
மக்கள் கவிஞன் கவியரசு கண்ணதாசன்
இற்றைய உலகும் தமிழர் கலாசாரமும்
தொல்காப்பியப் பெரு நூல் யாத்த தொல்காப்பியனார்
உயரத்திலும் பல்லடுக்கு மாடிகளிலும்
உலக சாதனை பெற்று நிற்கும் கட்டிடம்
மேல்நாட்டுக்கேற்ற சைவமுறைகள்
பன்னிரு திருமுறைகளும் அதிலடங்கிய பெரியபுராணமும்
உசாத்துணை நூல்களின் விவரங்கள்
O
109
115
123
130
138
146
153
161
169
178
185
192
196

Page 5
工
OREWORD
-Professor Kopan Mahadeva -
PhD, MSc. (Birm), Hon. DLitt, FIET, FRSPH, FCMI Founder of Century House; Founder & Patron of ELAB
Mr. Karthigeyan Wijeyaratnam, the Author of this book, is a wellknown writer from the northern Tamil-Eelam' region of the old and beautiful
island of Sri Lanka. His birth-village is Nunaviloor.
He now lives in London. He has already written over a hundred articles on Tamil literature and scientific topics, which have been published in Tamil
newspapers and magazines in UK and abroad.
He has authored three books of his own already, and contributed as coauthor and co-editor to two more. The Human Brain That Excels Computers (Tamil, 2005); Essentials of English Grammar (English, 2007); and Honey Drops from Thol-Kaappiyam (Tamil, 2008) are the
books. This is his fourth one.
He was a major contributor to the Bilingual Anthology (2007) called Poonthunar (Perceptions), ofour ELAB's research-based creative articlesandpoems on literature and social topics (ISBN: 1- 873265-52-2). He also coedited my '75th Year Volume' in 2009.
 

vii
Currently he is the official Co-ordinator of our ELABEelavar Literature Academy of Britain) of which my wife Dr. Seethadevi and I are the Patrons. Our second Poonthunarisscheduled to be published in 2010. We are working frantically hard on it presently.
Mr. Wijeyaratnam retired as a senior Superintendent of Audit from Sri Lanka Audit Service before he immigrated to UK. His work there included presentation of Annual Audit Reports of State Ministries, Departments, and Trade Corporations to Parliament.
In this book he delves deeply and introspectively into ancient Tamils' social customs and their consequent noteworthy injustices and imbalances that are evidenced from Tamilliterature andwider research. Three major articles
of his appear on this major theme.
These include aspects like Hindu women killing themselves by jumping into the same cremation-fires that burn the bodies of their dead husbands (in rituals called Suttee) and human sacrifice to gods and deities for personal
gains under fallacious religious beliefs.
Those chapters also deal with private or public self-immolation suicides
triggered by social and political oppression at all ages.
Additionally, the author decries the caste-based four-layered ancient 'social justice system' of Manu, that grants maximum privileges to Brahmin Priests, followed by Kings & Warriors, then the Merchant Classes, and finally, at the eternally suffering end of it all, varied Farming and Labour Classes. He
evokes much sympathy and tears in readers' eyes in these chapters.
He has spiced up his book of 20 chapter-articles by also writing on his heroes: Mahathma Gandhi; Thol-kaappiyar who wrote our "most ancient' Tamil Grammar-classic; 20th-century Tamil poet Kannathaasan; Ilanko, author
of Silappathikaaram (one of five bestknown, centuries-old Tamil epics); and

Page 6
viii
Thiruvalluvar (author of the 2000-years old "Tamil Testament' Thirukkural,
in 1330 couplets).
His wide interests are evidenced by his articles on History of Human Evolution and the Earth, Literature created by the "Three Tamil Academies of Yore', Story of the Fourth Tamil Academy, Life & Death, Gratitude as an Ethic, Marriage, Tamil Culture in the Modern World, Saivism as Suited to Our Times, Saivite's Periya Puraanam, and Dubai's "Tallest' Burj Khalifa Tower (2010).
Both Century House, and the Author, feel proud to have sought and obtained the active assistance and co-operation of Manimekalai Pirasuram of Chennai, South India. They are widely known in all parts of the world for promoting publication of contemporary works of Tamil writers, with special incentives as their dedicated service to Literature. This is our second book
with Manimekalai.
Century House is really pleased to publish this book by Mr. K. Wijeyaratnam, and we wish him the very best in coming years.
PROFESSOR KOPAN MAHADEWA
DDD

1Χ
ஆய்வுரை
கலாநிதி சிவதியாகராஜா BSc, MB, BS, PhD
LDண்ணிலும், மரத்திலும், வயலிலும, வரப்பிலும் செந்தமிழ் செழிக்கும் பூமி யாழ்ப்பாணம் அந்த மண்ணிலே துளிர்த்து வளர்ந்த நுணாவிலூர் எனும் பூங்காவில் மலர்ந்தெழுந்த திரு. கா. விசயரத்தினத் தின் ஆர்வத்திலும், ஆளுமையிலும், எண்ணத்திலும், எழுத்திலும் உதயமான கட்டுரைகளின் தொகுப்பைத் தாங்கி வரும் நூல் உங்கள் கரங்களிலே தவழ்ந்து கொண்டிருக்கிறது.
அவரது இலக்கிய இரசனைக்கும், இந்திய புராண இதிகாசங்களின் பரிச்சயத்திற்கும், தமிழர் கலாசாரப் பண்பியல் பற்றிய அபிமானத்திற்குமி, உயிரியல் பரிணாம அறிவிற்கும், சமகால வரலாற்றின் கற்கைக்கும் சான்றாகத் திகழும் கட்டுரைகள் இந்த நூலை அலங்கரிக்கின்றன.
விஞ்ஞானம், புவியியல், உயிரியல் ஆகிய துறைகளை ஆதாரமாகக் கொண்டு டார்வின் தத்துவத்தை (Darwinism) மையப் படுத்தி

Page 7
எழுதப்பட்டிருக்கும் பரிணாம வளர்ச்சியில் தோன்றிய மனித வரலாறு அறிவியல் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு அரிய விருந்தாக அமைகிறது. அதே சமயம் - அதையொத்த தலைப்பைக் கொண்ட "பூவுலகின் நிலப்பரப்பில் தோன்றும் உயிரினங்களின் பிறப்பும் இறப்பும்" என்ற கட்டுரையில், இந்த அறிவியல் துறைகள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி விட்டு திருமூலரையும், தாயுமானவரையும், மாணிக்கவாசகரையும் முன்னிலைப் படுத்தி உயிரினங்களின் பிறப்பிற்கும், இறப்பிற்கும் தத்து வார்த்தமான விளக்கங்களை முன்வைக்கிறார் ஆசிரியர். இந்த நாணயத்தின் இரு பக்கங்களான ஆன்மஞானம், அறிவியல் இரண்டுமே அவருக்குக் கைவந்திருக்கின்றன.
மனித நாகரிகம் வளர்ச்சியடைய, சமுதாய வாழ்வியலும் முன்னேற்றம் அடைய, சமூக நீதியைப் பேணும் சட்டதிட்டங்கள் 6)(35585 LIL60T. 'மனித நாகரிகத்தின் தொட்டில்" என வர்ணிக்கப்படும் மொசப்பத்தேமியாவில, பாபிலோனிய மன்னன் ஹமுரபியினால் கி.மு. 1700 ஆண்டு காலத்தில் ஆக்கப்பட்ட ‘ஹமுரபியின் சட்டங்கள் (Code of Hammurabi) பிந்திய நாட்களில் கிரேக்க, ரோம, மேனாட்டுச் சட்டங்களுக்கு அடி நாதமாக அமைந்தன. ஆனால், இந்தியாவில் உருவாகிய 'மனுஸ்மிருதியோ’ மக்களைப் பிறப்பால் நான்கு வர்ணங்களாகப் பிரித்து சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கி - இந்திய உபகண்டத்தில் 'திண்டாமை" என்றொரு சாபக் கேட்டை உருவாக்கி - பெண்களை இந்த மண்ணில் மிருகங்களை விடக் கேவலமான அடிமைகளாக்கி - இந்திய oமுகத்தைச் சின்னாபின்னமாகச் சிதறடிப்பதற்குக் காரணமாயிற்று.
மனிதாபிமானத்தைக் குழிதோண்டிப் புதைத்த, மனிதத்துவத்தையே நாறடித்த கோட்பாடுகளின் சின்னமே ‘னுைஸ்மிருதி. இதை வெகு தெளிவாக முன்னிலைப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர் விசயரத்தினம்.
இந்த நூலின் முதுகெலும்பாக அமைந்திருக்கும் சிறப்பு வியாசம் - முத்திரைக் கட்டுரை - இது என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம்.

xi
இந்தியாவில் ஆரிய சமூகம் விதித்த சட்டங்களில. ஒன்றே உடன் கட்டையேறல். கணவன் இறநதால் மனைவி உடன்கட்டையேறல் வேண்டும். ஆனால், மனைவி இறந்து விட்டாலோ கணவன் உயிர் விடவேண்டிய தேவை இல்லை. கணவன் வேண்டுமானால் மறுமணமும் செய்து கொள்ளலாம். இது சம்பந்தமாக ஏகப்பட்ட புராணக் கதைகள் உருவாக்கப் ULL-60.
மங்கையர் மாண்பினை மங்க வைக்கும் உடன்கட்டையேறல்' என்ற கட்டுரையில் "சதி" பற்றிய ஆரிய சமூக கோட்பாடுகளும், பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணப்படும் இதை நிகர்த்த சில வாழ்வியல் பண்புகளும் ஆராயப்படுகின்றன.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய சில உண்மைகள் இவை: தொல்காப்பியர் காலத்திலேயே பிராமணர்கள் தமிழகத்திற்கு வந்து தமிழர் சமுதாயத்தின் ஒரு பகுதியாகி விட்டமைக்கான சில சான்றுகள் தொல்காப்பியத்திலேயே காணக் கிடைக்கின்றன. இவர்கள் தமிழக அரச சபைகளில் முதன் மந்திரிகளாகவும், இராச குருக்களாகவும், ஆசான்களாகவும் பதவி பெற்று தமிழர் சமூகத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்பது வரலாற்றாசிரியர்களால் நிரூபிக்கப்பட்டு விட்ட உண்மை நிகழ்வுகள்.
இவர்களது சமூகச் சிந்தனைகள் தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் ஊடுருவிக் கிடப்பதையும் நாம் காண முடிகிறது. ஆரியரின் சமூகச் சிந்தனைகளாலும், கோட்பாடுகளாலும் பாதிக்கப்படாது, பண்டைய தமிழரின் 'அறம்' கூறும் ஒரே ஓர் இலக்கியம் 'திருக்குறள் ஒன்றுதான்.
'மதங்கள், புராணங்கள் எழுப்பிய உயிர்ப்பலிகள் என்னும் ட்டுரையும் மேற்கூறப்பட்ட கருத்துக்களோடு தொடர்புடைய கட்டுரையாகும். ஆனால் அதில் உலக ரீதியாக மற்றைய நாடுகளில் காணப்படும் வழக்கங்களோடும், மத சம்பிரதாயங்களோடும் இந்து மத புராணங்களில் காணப்படும் வழக்குகள் ஒப்புநோக்கப்படுகின்றன.

Page 8
xii
'திருமணமும் அதன் முன்பின் விளைவுகளும்" என்ற கட்டுரையில் சங்ககாலத் திருமண வழக்கங்கள் முதல் சமகாலத் திருமண சம்பிரதாயங்கள் வரை இலக்கிய வழியில் ஆராய்ப்படுகின்றன. ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன்' என்ற பண்பின் உயர்வும், இல்ல்ற தர்மத்தின் மகிமையும் கூறப்படுகிறது.
"அறவாழ்வு என்பது அன்றைய தமிழ் மக்கள் பேணிய அற்புதமான பல வாழ்க்கை-நெறிகளைக்கொண்டது.விருந்தோம்பல், ஈகை, எண்ணத் தூய்மை, என்கடன் பணி செய்து கிடப்பதே என்கிற நோக்கு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் பான்மை, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற மனப்பாங்கு என்பன இவற்றில் சில:
இவற்றில் ஒன்றான செய் நன்றி தொல்காப்பியம், பகவத் கீதை,
மகாபாரதம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருவாசகம், திருக்குறள்
ஆகிய இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட மேற்கோள்களின் துணையோடு நெறிப்படுத்தப்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுக்கால இடைவெளியில் வாழ்ந்த செந்நாப் புலவர் திருவள்ளுவரின் தெய்வீகக் குறட்களும், செழுஞ்சொல் வேந்தன் கண்ணதாசனின் சமகாலப் பாடல்களும் சிறப்பாக அலசப்படுகின்றன. இன்றைய சாதனையாளராக மகாத்மா காந்தியும் அவரது செயற்பாடுகளும் விவரிக்கப்படுகின்றன. நான் ஓர் இலக்கிய மன்னன் மட்டுமல்ல, கட்டிட நிர்மாண ஞானமும் எனக்குக் கைவந்த 5606) 660 "உலகச் சாதனை பெற்று நிற்கும் கட்டிடக் கலையில் எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர்
இக் கட்டுரைகளில் காணப்படுகிற ஒரே ஒரு குறைபாடு, தமிழர்
தமிழயிமானத்தினால் ஐதீகங்களைக் கொண்டு வகுக்கப்பட்ட 85T605 கணிப்புகளை இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் எவரும் ஏற்றுக்கொள்ள troTLs assif.

இது ஒன்றைத் தவிர நுணாவிலூர் கா. விசயரத்தினத்தின் ஆழ்ந்த இலக்கிய ஞானமும், பரந்த உலக அறிவும், தமிழர்களின் பாரம்பரியமான அறம் கூறும் பண்புகளும் இந்தக் கட்டுரைகள் முழுவதிலும் இழையோடி நிற்கின்றன. தமிழ் ஆர்வலர்களுக்கு இவை பெருவிருந்தாக அமையும் என்பதில் ஐயப்பாடு ஏதுமில்லை.
கலாநிதி சிவதியாகராஜா BSc, MB, BS, PhD, 24, Grand Drive, Raynes Park, London, SW200JT, UK

Page 9
Xiv
நூலாசிரியரின் அழைப்பொலி
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பதற்கிணங்க எனக்கு உயிரையும் உடலையும் அளித்த, என் அடிமனத்தில் ஆழ்ந்திருக்கும் பெற்றோரை நினைவு கூர்ந்து, நான் பிறந்த மண்ணான நுணாவில் ஊரையும் என் பெயர் முன் நிறுத்தி, இவை மூன்றையும் என் முழுமுதல் மூச்சான மும்மணிகளாய் அணிந்து, புகழ் பூத்த இலண்டன் மாநகரிலிருந்து என் அழைப்பொலியைத் தொடங்குகின்றேன். வணக்கம்.
மனு சுமிருதி' என்ற தர்ம சாத்திர நூலைப் பற்றி அறிவதற்கு அண்மையில் நான் ஆவல்கொண்டேன். அதில் அடங்கிய ஆங்கில மொழி பெயர்ப்பான பன்னிரண்டு (12) அத்தியாயங்களையும் வாசித்து முடித்த உடனேயே ஸ்ன் மனம் தீராக் கவலையில் தோய்ந்தது.
6TD ால்காப்பியர் தமிழ் மக்கள் அனைவரையும் அந்தணர், அரசர், வணிக வேளாளர் என்று நாலு கடமை-முறை வகுப்பினராகக் காட்டிச் சென்றார். ஆன்ால் மனுசுமிருதி நூலார் அதே மக்களை பிராமணர், சத்திரியர் (அரசர்), வைசிகர் (வணிகர்), சூத்திரர் (வேளாளர்) என்று நான்கு சாதிகளாக (வர்ணம்) வகுத்துச் சாதிப் பாகுபாட்டை மக்களிடையே விதைத் தீர கொடுமைகள்ை உருவாக்கி, அவர்கள் மத்தியில் ೬ಳ್ತಸಿಕ್ಕಣೆ என்ற பிரிவினைகளையும் வகுத்து வைத்தனர். இந் நால்நிலை, எல்லா மக்களையும் வெவ்வேறு நிலைகளில் வைத்து பிராமணர் தம் புகழும் பாடிக் கணிக்கப் பட்டனர். இதில் சூத்திரர்களின் குறைந்தபட்ச உரிமைகளைத் தானும் கொடுக்காது தடுத்து வைத்து, அவர்கள் மற்றைய மூவின உயர் சாதியினருக்கும் தொண்டு செய்தே வாழவேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். நாற் சாதியினருக்கும்

XV
மன்னனால் கொடுக்கப்படும் ஒரேமாதிரிக் குற்றத்துக்கான தண்டனைகள் கூட வேறுபட்டனவாய் இருக்க வேண்டும் என்று மனுசுமிருதி நூலார் வகுத்துள்ளார். இதில் சூத்திரருக்கு மாத்திரம் என விதிக்கப்படும் கொடுந் தண்டனைகளை எம் மனத்தால்கூட நினைக்க முடியாதிருக்கின்றது. இவைகளை வாசகர்களுக்கு நிரல் படுத்தி இந்நூலில் மிக்க மனத் தாங்கலுடன் தந்துள்ளேன்.
"உடன்கட்டையேறல்' என்ற கட்டுரை மகளிர் தொடர்பானது. கணவன் இறந்தால் மனைவி ஆனவள் அவன் சிதையில் ஏறித் தன் உடலை எரியூட்டி இறக்க வேண்டும். ஆனால் மனைவியானவள் இறந்தவிடத்து கணவன் அவள் சிதையில் ஏறித் தன் உயிரை விடாது, மறுமணமும் செய்து கொள்ளலாம். இவ்வண்ணம் மனுநீதி நூலும், விஷ்ணு சுமிருதியும், கருடபுராணமும், ரிக் வேதமும், நீதி என்று சொல்லி அநீதியையே கூறி வைத்தன. ஓர் ஆண் மகனை முழுதாக நம்பி வந்து, அவனுடன் ஒன்றாகக் கலந்து இன்ப வாழ்வளித்து, ஒருயிரும் ஈருடலுமாய் வாழ்ந்து, அவன் சுற்றத்தாரையும் அரவணைத்து, அவன் வாரிசையும் சுமந்து பெற்றுக் கொடுத்து, இன்ப துன்பங்களிலும் பங்கேற்று, இனிய வாழ்வமைத்து நிற்கும் மனைவி ஆனவளைத் தடிதண்டுபோல எரித்து வேடிக்கை பார்த்தார்களே!
இது என்ன கொடுமை!! இவற்றை எல்லாம் படித்து எழுதிய பொழுது என் மனம் அடைந்த கனதியை இறக்கிட இன்றும் என்னால்
முடியாது தவிக்கின்றேன்.
உயிரினங்கள் எல்லாம் வாழ்வதற்கு இருப்பிடம் கொடுத்து உதவுவது ஒன்பது கோள்களில் ஒன்றான பூமித் தாயாகும். பூமியின்றேல் உயிரினம் யாவும் வாழ முடியாது இறந்தழிந்து விடும். பூமியில் நிறைந்திருக்கும் நீர், காற்று, வெப்பம் ஆகியவை உயிரினங்களை வாழ வைக்கின்றன. 'பரிணாம வளர்ச்சியில் தோன்றிய மனித வரலாறு' என்ற கட்டுரையில் பூமியின் மாற்றங்கள், அதில் தோன்றிய உயிரினங்கள், அவை தோன்றிய காலகட்டங்கள், மனிதன் தோன்றிய முழு வரலாறு,

Page 10
Xvi
அவன் அடைந்த உயர்ச்சிகள் யாவும் விவரித்துக் காலக் கணிப்புடன் கூறப்படுகின்றன.
தெய்வீக முலாம் பூசப்பட்ட 'மதங்கள், புராணங்கள் எழுப்பிய உயிர்ப் பலிகள்' என்ற கட்டுரையில் கணக்கில் அடங்கா உயிர்கள் வதைக்கப்பட்ட துன்பியற் செய்திகளையும் காண்கின்றோம். உயிர்ப்பலிகள் என்பதில் நரபலியிடல், உடன் கட்டை ஏறல், தற்பலியூட்டல் ଘ[ØtU60! அடங்கும். இவை நடந்தேறுவதற்கு வேதம், புராணம், இதிகாசம், நீதி நூல்கள், மதம், பண்டைய இலக்கியங்கள் போன்றவை துணை நின்றன.
இன்னும் தியாகம் என்ற புனிதப் பெயர் சூட்டிக் கணக்கிலடங்கா வாழவேண்டிய மக்கள் மாண்டார்களே! மனித இனம் இப் பூமியில் வாழத்தான் பிறந்தனரேயன்றி வேண்டாச் சாவை அரவணைக்க அவர்கள் இங்கு வந்து பிறக்கவில்லையே? இக் கட்டுரையின் கருப்பொருளும் என் மனத்தை என்றும் வதைத்துக் கொண்டே இருக்கின்றது.
மேலும், தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகிய மூன்று சங்கங்களைப் பற்றிய செய்திகளையும் நாம் ஓரளவுக்கு ஏலவே அறிந்திருக்கின்றோம். இந் நிலையில் 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய பாண்டித்துரைத் தேவர் என்பவர் நான்காம் தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவிய வரலாற்றுச் செய்தி ஒன்றை முச்சங்கங்களை அடுத்த நாலாம் சங்கம் எழுந்த வரலாறு' என்ற கட்டுரையில் விவரித்துக் கூறப்பட்டுள்ளதை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன். இன்னும், இலக்கிய நாயகன் தொல்காப்பியர், செந்நாப்போதார் திருவள்ளுவர், இலக்கிய நாயகன் இளங்கோ, மகாத்மா காந்தி, கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் தமிழ்ப் பணியும், அவர்தம் வரலாறும் மக்களை ஆற்றுப்படுத்தி நிற்கின்றன.
‘மண்ணின் மகிமையும் அதன் வாசனையும்' என்ற கட்டுரையில் எம் மண்ணாகிய பூமி பற்றியும், அதிலடங்கிய நிலக்கரி, பாறை, எண்ணைய், மண்ணின் பொருள் வரையறை, மண்ணின் பகுப்பு, தொல்காப்பியர் காட்டும் ஐவகை நிலங்கள், தமிழ் இலக்கியங்களான

XVii
புறுநானுாறு, அகநானூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, நற்றிணை, மணிமேகலை, குறுந்தொகை, திருக்குறள், கலித்தொகை ஆகிய நூல்களில் உள்ள, மண்ணின் கதைகள் பற்றியும் பேசப்பட்டுள்ளன.
'திருமணமும் அதன் முன் பின் விளைவுகளும்' என்ற கட்டுரையில் தொல்காப்பியர் காலத்தில் எழுந்த கரணத்தோடு கூடிய சடங்குமுறை நிகழ்ந்ததென்றும் அது இற்றை வரை தமிழருடன் உறவாடி நிலைத்து இருப்பதென்றும், அகநானூற்றில் பந்தலிட்டு, வெண் மணல் பரப்பி, விளக்கேற்றி, பூமாலை தொடுத்து, மணப் பறையுடன் முரசம் எழுப்பி, புத்தாடை அணிந்த மகளிர், பூவையும் நெல்லையும் நீருடன் கலந்து தலைவியின் தலையில் துாவி அவளை மங்கல நீராட்டி வதுவை ᎥᏝ600Ꭲub நிகழ்த்தி முடித்ததும், சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமணத்தை மாமுது பார்ப்பான் முன்நின்று நடாத்தியதையும், வேறு தொடர்பான செய்திகளையும் காண்கின்றோம்.
‘பூர்ச்-கலிவா' கட்டிடம் துபாய் என்ற பிரபல மாநகரில் 160 அடுக்குகளைக் கொண்ட மாடிகளுடன் 828 மீட்டர் உயரத்தில் நின்று, தான் உயர்வில் சாதனை பெற்ற பெருமையை உலக மக்களுக்குக் கூவிக் கூறிக் கொண்டு நிற்கின்றது.
மேலும், ‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’ என்ற இந்நூலுக்கு பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்கள் வழங்கிய ஆங்கில ஆசியுரையும், கட்டுரைகள் யாவையும் வாசித்து உதவிய திருத்தங்கள், கருத்துகள், புத்திமதிகள், ஆலோசனைகளும், இவரின் பாரியார் டாக்டர் சீதாதேவி மகாதேவா அவர்கள் தனித்து ஊட்டிய சிறப்பு அம்சங்களும், இது தொடர்பில் பேராசிரியருக்கு அவர் அளித்த உதவிகளும், கலாநிதி ઈ6] தியாகராசா அவர்கள் உவந்தளித்துள்ள சிறந்த ஓர் ஆய்வுரையும் இந்நூலை மேலும் அலங்கரித்து நிற்கின்றன.
இப்பெரியோர் மூவருக்கும் என் மனங்கனிந்த நன்றிகள் பல. இன்னும் இந்நூலை ISBN-உடன் சிறந்த முறையில் பதிப்பிக்க உதவிய

Page 11
xviii
Century House வெளியீட்டு அகத்தினருக்கும், என் அன்புக்குரிய பழைய நண்பர்கள் மணிமேகலைப் பிரசுரத்தாருக்கும் என் நன்றிகள்.
'பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர் கேடும்' என்ற இந்நூல் உங்கள் கரங்களில் தவழ்ந்து நின்று சமுதாயச் சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும் என்பது என் மனத் துணிபாகும்.
நுனாவிலூர் கார்த்திகேயன் விசயரத்தினம் திருவள்ளுவர் ஆண்டு 2041; வைகாசித்திங்கள், 10.05.2010
(K. Wijeyaratnam, MAAT, SLAS; Co-ordinator: Eelavar Literature Academy of Britain (ELAB); Retired Audit Superintendent, Sri Lanka; 86, Sangley Road, Catford, London, SE62.JP; United Kingdom; Telephone (UK): 0208695 1255; E-mail: wljeyOtalktalk.net
DDD

இச்சங்கங்களை அடுத்த நூல்ாம் சங்கம் எடுந்கு வரல்ாறு
LIண்டிய மன்னர்கள் தமிழை நேசித்துத் தீராக் காதல் கொண்டு முச் சங்கங்கள் அமைத்து இன்பத் தமிழை வளர்த்து வந்தனர். அவர் தமிழின்பால் காட்டிய ஊக்கமும் ஆக்கமும் பல்லாயிரம் புலவர்களை உருவாக்கியது. கணக்கிலடங்கா நூல்களும் எழுந்தன. இச் சங்கங்கள் முறையே (1) தலைச் சங்கம், (2) இடைச் சங்கம், (3) கடைச் சங்கம் எனப் பெயர் பெற்றிருந்தன. இச் சங்கங்களின் ஆயுட்காலம் ஒன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுாறு (9,990) ஆண்டுகளாகும் என்பது அறிஞர் கருத்தாகும். இதில் 197 பாண்டிய மன்னர்களும், 8,598 புலவர்களும் இடம் பெற்றிருந்தனர். கடைச் சங்கம் தி.பி. (திருவள்ளுவருக்கு பின்) மூன்றாம் நூற்றாண்டில் முடிவுற்றது என்பர் ஆய்வாளர்கள். ஆகவே தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) சுமார் பத்தாயிரம் (10,000) ஆண்டுகளிலிருந்து தமிழ் மொழி சங்கத் தமிழாக வளர்ந்து வந்த தொன்மை தெளிவாகின்றது. இதன் பிரகாரம் தமிழை வளர்த்து வந்த பாண்டிய மன்னர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்

Page 12
2 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
தலைச் சங்கம்
தலைச் சங்கம் கடலாற் கொள்ளப்பட்ட தென் மதுரையில் அமைந்து தமிழை ஆராய்ந்து வளர்த்து வந்தது. இதில் இறையனார் என்பவர் தலைமை வகித்தார். இவரை ‘திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்” என்றும் கூறுவர். இச் சங்கத்தில் 4,449 புகழ் பெற்ற புலவர்கள் உறுப்பினராக இருந்து பல பாடல்களை இயற்றினர். அகத்தியனார், இறையனார், குன்றெறிந்த முருகவேள், நிதியின் கிழவன், முரஞ்சியூர் முடிநாகராயர் ஆகியோர் அப்புலவர்களில் ஒரு சிலராவர். அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை ஆகியவை அவர்கள் இயற்றிய நூல்களிற் சிலவாகும். இச் சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்து வாழ்ந்தபின் கடலன்னையுடன் சங்கமம் ஆகியுள்ளது. இத்துடன் தலைச் சங்க நூல்கள் அத்தனையும் அழிந்துபோய் விட்டன. இக் காலப் பகுதியில் 89 பாண்டிய மன்னர்கள் மதுரையை ஆண்டு சங்கத் தமிழையும் வளர்த்து வந்தனர்.
இடைச் சங்கம்
இடைச் சங்கம் குமரி ஆறோடு கூடிய கபாடபுரத்தில் அமைந்திருந்தது. இச் சங்கத்துக்கு முருகக் கடவுள் தலைமை வகித்தார். இவரைக் “குன்றம் எறிந்த குமரவேல்” என்றும் கூறுவர். கிருஷ்ணனும் இச் சங்கத்துக்குத் தலைமை வகித்துள்ளதாகவும் ஒரு செய்தியுண்டு. இவரைத் ‘துவாரகக் கோமான்’ என்றும் கூறுவர். இச் சங்கத்தில் 3,700 புலவர்கள் தமிழ்ப்பணி ஆற்றினர். தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழிமோசி, திரையன் மாறன், வெள்ளபூர்க் காப்பியன், சிறுபண்டாரங்கள், துவரைக் கோமான், கீரந்தை ஆகியோர் அப்புலவர்களில் ஒரு சிலராவர். தொல்காப்பியம், குருகு, வெண்டாளி, வியாழமாலை, அகவல், கலி போன்றவை இப்புலவர்கள் இயற்றிய நூல்களில் ஒரு சிலவாகும். இச் சங்கம் 3,700 ஆண்டுகள் வாழ்ந்திருந்தது.
இக்காலப் பகுதியில் சங்கத்துடன் 59 பாண்டிய மன்னர்கள் தொடர்பு கொண்டு தமிழை வளர்த்தனர். கபாடபுரமும் கடலாற் கொள்ளப்பட்ட பொழுது இடைச் சங்கத்துடன் சேர்ந்த அத்தனை நூல்களும் மாண்டு போயின. ஆனால் தொல்காப்பியம் என்ற நூல் ஒன்றுமட்டும் கடற்கோளில் அகப்படாது தப்பியுள்ளது. மேலும்

நுணாவிலூர்கா.விசயரத்தினம் + 3
தொல்காப்பிய நூலுக்கு மூத்த இன்னொரு நூலான திருமூலர் திருமந்திரமும் கடற்கோளில் அகப்படாது தப்பிக்கொண்டது. இவை தெய்வீகச் செயல்களாகும்.
கடைச் சங்கம்
கடைச் சங்கம் உத்தரமதுரையில் நிறுவப்பட்டிருந்தது. இச் சங்கத்தில் 449 புலவர்கள் தமிழ் வளர்ப்பிலும், ஆய்விலும் ஈடுபட்டிருந்தனர். இவர்களுள், சிறுமோதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றுார்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மதுரை மருதனிளநாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்போர் ஒரு சிலராவர். இப் புலவர்கள் இயற்றிய நூல்களுள் நெடுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, அகநானூறு, பதிற்றுப்பற்று. 150 கலி, 70 பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை போன்ற நூல்கள் ஒரு சிலவாகும். இச் சங்கத்தின் வாழ்நாள் 1850 ஆண்டுகளாகும். இக் காலப் பகுதியில் 49 பாண்டிய மன்னர்கள் இச் சங்கத்துடன் தொடர்புடனிருந்து தமிழை வளர்த்தனர். இச்சங்ககாலத்தில் சிவபிரான் ஒரு பாடல் மூலம் தன் திருவிளையாடலை தருமி, நக்கீரர் ஆகியோருடன் நடாத்தினார் என்பர்.
(According to late legends the Third Tamil Sangam operated on the inks of the Sacred Pond of Golden Lotuses in Madurai.)

Page 13
4 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
இச் சங்கத்தில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய பதினெண் மேற்கணக்கு நூல்கள் எழுந்தன. கடைச்சங்கக் காலத்தில் தமிழ் இலக்கியம் பெரும் புகழீட்டியது. இக் காலம் மதுரை வரலாற்றின் ஊழித் திருப்புமுனை பெற்றிருந்தது. ஆனால் சில தெளிவற்ற சூழ்நிலை காரணமாக இச் சங்கம் தி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நிலை குலைந்து விட்டது. இதன்பின் நாலாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டுவரை சமணர் ஆதிக்கம் மதுரையில் மேலோங்கி இருந்தது. இதே காலப் பகுதியில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெரும் காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் ஆகிய நூல்களும் எழுந்தன.
தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் இம் முச்சங்கங்களின் காப்பாளர் பொறுப்பைப் பத்தாயிரம் (10,000) ஆண்டுகளாகப் பேணிக் காத்துத் தமிழையும் வளர்த்த பெருமை பாண்டிய மன்னர்களுக்கு உரித்தானமை மேற் கண்டோம். இவர்கள் சேவை போற்றிப் புகழ்ந்து பாராட்ட வேண்டிய செயலாகும்.
நான்காம் தமிழ்ச் சங்கம்
இனி நான்காம் தமிழ்ச் சங்கம் தோன்றிய வரலாறு பற்றிக் காண்போம். மாண்புடைய கற்றறிவாளரும் மதகுருவுமான “வச்ரா நந்தி’ (Vajra Nandhi) என்பவர் தலைமையில் ஒரு தமிழ்ச் சங்கத்தை மதுரையில் சமணர் உருவாக்கினர். ஆனால் இது நான்காம் தமிழ்ச் சங்கம் என்று கணிக்கப்படவில்லை. எனவே இது “வச்ரா நந்தித் தமிழ்ச் சங்கம்” என்ற பெயரில் சிறு காலம் வரை ஓடிக்கொண்டிருந்தது.
இதன்பின் 19-ஆம் நூற்றாண்டில் தமிழர் மத்தியில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு உ. வே. சாமிநாதையர், தாமோதரம்பிள்ளை போன்றோர் இருள் நிலையில் மறைவுற்றிருந்த பண்டைய தமிழ் இலக்கியங்களைத் தேடி, ஆராய்ந்து, தொகுத்து, அச்சேற்றி, அளப்பரிய தொண்டுகள் பல செய்து உதவினர். இக்காலத்தில் தமிழர் தம் பண்டைய புகழ் நிலைக்கு வர விரும்பினர்.
இந்நிலையில் தமிழ் வள்ளலான பொன்னுச்சாமித் தேவருக்கும் முத்து வீராயி நாச்சியாருக்கும் 21-03-1867 இல் மூன்றாவது மகனாகப் பாண்டித்துரைத் தேவர் தோன்றினார். இவர் இளம் வயதில் தன்

நுணாவிலூர்கா.விசயரத்தினம் + 5
தந்தையாரை இழந்து, சேத்திரி ஐயங்காரின் கண்காணிப்பில் வளர்ந்து வந்தார். இவர் கல்வி கற்றுத் தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றுப் பல்துறைப் புலவராகவும் பாவலராகவும் இராமநாதபுரத்தில் வாழ்ந்து வந்தார். இவர் ஒரு சிறந்த பேச்சாளர். பல இடங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் ஆற்றிப் புகழ் பெற்றிருந்தார். இவர் இராமநாதபுரம் பாலவநத்தத்திற்கும் வேறு சில கிராமங்களுக்கும் குறுநில மன்னராகவும்
கம்ந்கார்,
திகழ்ந்தார் Paandithurai Thevar
கும்பகோணம் அரசாங்க கல்லூரியில் (21.03.1867
தமிழ்ப் பேராசிரியராயிருந்த அறிஞர் உ.வே. 11.12.1911)
சாமிநாத ஐயருக்கு வேண்டிய நிதியுதவிகளும் புரிந்தார்.
அதன் பெறுபேறாக, 'புறப் பொருள் வெண்பாமாலை’ ‘மணிமேகலை’, இன்னும் பல நூல்களை வெளியிட்டும் உதவினார். தமிழ் நாட்டுக் கடலில் கப்பல் விட எண்ணிய கப்பலோட்டித் தமிழன் வ. உ. சிதம்பரநாதருக்கு அன்று இவர் ஓர் இலட்சம் ரூபாய் கொடுத்துதவியமையும் ஈண்டு நோக்கற்பாலது. மேலும், இவர் 'சைவத்திருமுறைகளை’ மதுரை இராமசாமி முதலியார் உதவியுடன் வெளியிட்டுள்ளார்.
செந்தமிழ் வளர்த்த சேதுபதிகளின் மரபில் வந்த குறுநில மன்னர் வள்ளல் பாண்டித்துரைத் தேவரும், வேறு சில கற்றறிவாளரும் சேர்ந்து பிரித்தானிய ஆளுமையிலுள்ள இந்தியாவின் மதுரையில் 14-09-1901ஆம் திகதியன்று மதுரை சேதுபதி உயர் பாடசாலையில் ஒரு தமிழ்ச் சங்கத்தை உருவாக்குவதற்காக ஒரு கூட்டத்தைக் கூட்டினர். இம் முதற் கூட்டத்தில் பேரறிஞர்கள் உ.வே. சாமிநாத ஐயர், மறைமலை அடிகள், இராகவ ஐயங்கார், சொல் வேந்தர் சண்முகம் பிள்ளை, திருமயிலை சண்முகம் பிள்ளை, எம்.எஸ். பூர்ணலிங்க பிள்ளை, சடகோபன் இராமானுச்சாரியார், சூரிய நாராயண சாத்திரி, திருமணம் செல்வகேசவ முதலியார், பின்னத்துார் நாராயணசாமி ஐயர் ஆகிய பலர் பங்குபற்றிப் பாண்டித்துரைத் தேவரைப் பாராட்டிச் சென்றனர்.

Page 14
6 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
இக் கூட்டம் மூன்று நாட்கள் நடைபெற்றன. நாலாவது நாளன்று நாலாம் தமிழ்ச் சங்கம் அங்குரார்ப்பணம் செய்து தொடக்கி வைக்கப்பட்டது. இதற்குச் சேது நாட்டுப் பெரு வள்ளல் பாஸ்கர சேதுபதி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். இதற்குமுன் முச்சங்கங்கள் இருந்தமை காரணமாக இச் சங்கம் ‘நான்காம் மதுரைத் தமிழ்ச் சங்கம்’ என ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாண்டித்துரைத்தேவர் இச் சங்கத்தின் காப்பாளராகவும், தலைவராகவும் பணியாற்றி வந்தார்
நாலாம் தமிழ்ச் சங்கம் உருவான அதே தினத்தன்று (1) சேதுபதி செந்தமிழ் கலாசாலை, (2) பாண்டியன் புத்தக சாலை, (3) நூல் ஆராய்ச்சி சாலை ஆகியனவும் நிறுவப்பட்டன.
(1) சேதுபதி செந்தமிழ் கலாசாலையில் (அ) பிரவேச பண்டிதர், (ஆ) பால பண்டிதர், (இ) பண்டிதர் ஆகிய மூன்றுதர வகுப்புகள் நடாத்தப்பட்டுப் பரீட்சைகளில் சித்தி எய்தியவர்களுக்குப் பட்டமளிப்பு விழாக்களும் நடைபெற்றன. இங்கே படித்த மாணவர்களுக்கு இலவச உணவும், தங்குமிட வசதியும் அளிக்கப்பட்டன. பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்றுச் சித் தி எய்தியவர்கள் பரிசளித்துக் கெளரவிக்கப்பட்டனர். இவருள் வெங்கிடசாமி நாட்டார், தாராமங்களம் கந்தசாமிப்பிள்ளை ஆகியோரைக் குறிப்பிடலாம்.
(2) பாண்டியன் புத்தகசாலை ஒரு நூல் நிலையமாக இயங்கியது. இந் நூல் நிலையத்துக்கு ஆயிரக் கணக் கான புத்தகங்களையும் ஏட்டுச் சுவடிகளையும் சேதுபதியும், பாண்டித்துரைத் தேவரும் கொடுத்துதவினர்.
(3) நூல் ஆராய்ச்சி சாலை என்பது ஒரு நூல் ஆய்வு நிலையம். இந் நிலையத்தில் பல புலவர்களும், ஆய்வாளர்களும் தமிழ் இலக்கிய ஆய்வுகள் நடாத்தி அவற்றைத் தமிழ்ச் சங்கம் மூலம் வெளியிட்டனர்.
தேவருக்குச் சொந்தமான, மதுரையின் வடவெளி தெருவில் அமைந்திருந்த ஒரு மாளிகையை அவர் தமிழ்ச் சங்கத்துக்கு நன்கொடையாகக் கொடுத்துதவினார். இந்த மாளிகையில்தான் தமிழ்ச் சங்கம் பல ஆண்டுகளாகச் செயற்பட்டது. இவர் ‘தமிழ் பழம் சரிதம்” என்னும் தலைப்பில், தமிழரின் புராதன வரலாற்றைத் தொடர்க்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 7
கட்டுரைகளாகச் ‘செந்தமிழ்’ என்ற மாதச் சஞ்சிகையில் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும், “சிவஞானபுரம் முருகன் காவடிச்சிந்து, 'j rജj T8 ജൂൺ ഖjി பதகம் , *சிவஞான 8i 6)I(T Ldil 85 6ti இரட்டைமணிமாலை”, “தனிப்பாடல்கள்”, “ஆராய்ச்சிப் பதிப்புரைகள், முகப்புரைகள் முதலியன’, ‘பன்னூல் திரட்டு”, “சைவமஞ்சரி’, *அகப்பொருள்” போன்ற பல நூல்களையும் யாத்து வெளியிட்டுள்ளார். இவைகள் இவரின் இலக்கியப் பணியின் சிறப்பினை எடுத்துாைக்கின்றன.
வள்ளல் பாண்டித்துரைத்தேவர், தான் சேர்ந்து நிறுவிய நாலாம் தமிழ்ச் சங்கத்தில் பத்து ஆண்டுகள் பணியாற்றித் தனது நாற்பத்தைந்தாவது (45) வயதில் 11-12-1911 ஆம் திகதியன்று இறைவனடி சேர்ந்தார். இவர் இறப்பால் தமிழ் நாட்டினர் தாங்கொணாக் கவலையில் ஆழ்ந்தனர். இவரின் பின் இச் சங்க நிலைப்பாடுகள் அனைத்தும் முன்போலன்றித் தேக்கநிலை அடைந்து விட்டன. இவர் மறைந்தாலும் இவர் புகழ் இன்றும் மக்களிடையே பேசப்பட்டு வருகின்றது.
பாரதிதாசன் பா
இனி, நான்காம் தமிழ்ச் சங்கம் தொடர்பில் பாவேந்தர் பாரதிதாச்ன் யாத்த பின்வரும் முப் பாக்களின் பாங்கினையும் காண்போம். முதல், இடை, கடைச் சங்கங்களைப் போல் இனியும் ஒரு தமிழ்ச் சங்கத்தை அமைப்பேன் என்று கூறிய வள்ளல் பாண்டித்துரைத் தேவரின் கூற்றை இவ்வையகத்தார் அவர் கூறிய அந்நாளில் கொஞ்சமேனும் நம்பவில்லை.
“இனியுமோர் தமிழ்ச் சங்கம் காண்பேன்
இருந்த முதலிடை கடைச் சங்கம் போலவே எனச் சொன்ன பாண்டித்துரைத் தேவன் சொல்லை இவ்வையகம் அந்நாளில் நம்பவே இல்லை.”
கொஞ்ச நாள் செல்ல மதுரையில் நாலாம் தமிழ்ச் சங்கம், நிலவைப் போல் விரிந்து, நிமிர்ந்து எழுந்தது. அயர்ந்திருந்த தமிழரின் ஆடலும், பாடலும், அறிவுத் திறனும் மீண்டும் ஒளி பெற்றன. இதைக் கண்ணுற்ற வையகம் வியந்து நின்றது.

Page 15
8 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
*வியந்தது வையம் சென்றநாள் சிலவே
விரிந்தது மதுரைத் தமிழ்ச் சங்க நிலவே அயர்ந்த தமிழரின் ஆடலும் பாடலும் அறிவின் செயலும் மிளிர்ந்தன பலவே.”
பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் ஆகிய மூன்று முதிர் நிலை வகுப்புகளை நடாத்தி, அறிவின்மையையும் மடமைத் தனத்தையும் உடைத்தெறிந்து, மாசு படிந்த பல தமிழ் இலக்கியங்களைச் செம்மைப் படுத்திப் புகழ்க்கொடி ஏந்தி நின்றான் வள்ளல் பாண்டித்துரைத்தேவர்.
*புலவர் வகுப்பு மூன்று படைத்தான்
புன்மையின் மடமையின் என்பை உடைத்தான் பலதமிழ் இலக்கிய மாசு துடைத்தான் பாண்டித் துரைத்தேவன் புகழ்க்கொடி எடுத்தான்.”
கடைச் சங்கத்தை உருவாக்கிய பாண்டிய மன்னன் உக்கிர பெருவழுதியே, பின்னர் பாண்டித்துரைத் தேவராகப் பிறந்து நாலாம் தமிழ்ச் சங்கத்தை அதே மதுரையில் நிறுவியவர் என்றும் சிலர் கூறி உள்ளனர்.
முச்சங்கங்களின் பெயர் எழுந்த கதை
மேலும், முச்சங்கங்களான (1) தலைச் சங்கம், (2) இடைச் சங்கம், (3) கடைச் சங்கம் என்ற பெயர்கள் அந்தந்தக் காலப் பகுதிகளில் எழுந்தனவா? என்றொரு கேள்வியும் எழுகின்றது. தலைச் சங்க காலத்துக்கு முன் ஒரு சங்கமும் இல்லாதது கருதி அச்சங்கத்தைத் ‘தலைச் சங்கம்", அல்லது “முதற் சங்கம்’ என்ற பெயர்கள் அமைவதற்கு இடமுண்டு. ஆனால் “இடைச் சங்கம்’, ‘கடைச் சங்கம்’ என்ற பெயர்கள் அந்தந்தக் காலப்பகுதியில் எழுந்திருக்கவே முடியாது. ஏனெனில் இடை, கடைச் சங்கங்களுக்குப் பின் மீண்டும் ஒரு சங்கம் உருவாகுமா? என்பது அன்று தெரியாத விடயம். எனவே "இடைச் சங்கம்", *கடைச் சங்கம்’ என்ற பெயர்கள் கடைச் சங்கம் முடிவுற்றுப் பல நூறு ஆண்டுகள் சென்ற பின்னரே, இனிமேல் அண்மைக் காலத்தில் வேறொரு சங்கம் தோன்றாது என ஓர் அவநம்பிக்கை

நுனாவிலூர் கா.விசயரத்தினம் + 9
தெளிவாகித் திடமுற்ற பின்புதான் ‘இடைச் சங்கம்’, ‘கடைச் சங்கம் ? என்ற பெயர்களை வைத் தரிருப்பர் என்பதும் தெளிவாகின்றது. மேலும், இச்சங்கங்களை ‘இரண்டாம் சங்கம்", ‘மூன்றாம் சங்கம்' என்ற பெயர்களால் அக்காலப் பகுதிகளில் அழைத்திருந்தால் உசிதமாக இருந்திருக்கும் என்பதும் எம் கருத்தில் தர்க்கரீதியாகத் தோன்றுகிறது.
முடிவில், இனியும், மீண்டும் ஒரு உலகத் தமிழ் சங்கம் ஒற்றுமையாக உதயமாக வேண்டும் என்பதே எம் அவா. இச் சங்கத்தின் தேவை மக்களின் தேவையாகவே அமையவும் வேண்டும். எங்கென்றால், புராதன முச் சங்கங்களை ஒத்த எம் புதிய சங்கம் இந்தியாவில் புகழ் பூத்து நிற்கும் மதுரை மாநகரிலேயே அமையவேண்டும். அது, சிறந்த புலவர் குழாம் ஒன்றுடன், தமிழ் நாட்டு அரசின் ஆதரவில், தமிழ் இலக்கிய மணம் பரப்பி, பலநூற்றாண்டுகள் நிலைத்து வாழ்ந்து, உலகத்தின் தமிழ்மக்கள் எல்லாரையும் நாடிச் சென்று அவர்தம் வாழ்வியலை அலங்கரித்து நிற்கவேண்டும். இதை உலகத் தமிழ் அறிஞர்களின் தமிழுலகம் இறைஞ்சி வேண்டி நிற்கின்றது.
(65/Tզpubւլ - வீரகேசரி வார வெளியிட்டில் 11-01-2009 & 01-02-2009)
(இலணிடனி சுடரொளியிலி செப்தம்பர்-ஒக்தோபர் 2008) (இலண்டனி தமிழர் தகவலில் - செப்தம்பர் 2008)
D

Page 16
10 +
<°
p
பரிணாம வளர்ச்சியும் மனித வரல்ாறும்
LDனிதன், விலங்கு, பறவை, ஊர்வன, மரம், தாவரம், செடி, கொடி போன்ற உயிரினங்கள் வாழவேண்டுமெனில் ஓர் இருப்பிடம் தேவைப்படுகின்றது. இவை யாவுக்கும் இருப்பிடம் கொடுத்து நிற்பது அந்தரத்தில் நின்று சுழன்றுகொண்டிருக்கும் நமது ஒன்பது சூரியக் கோள்களில் ஒன்றான பூமியாகும். பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழமுடியும். மற்றைய எட்டுக் கோள்களிலும் உயிரினம் வாழ முடியாது. பூமியில் உள்ள நீர், காற்று, வெப்பம் ஆகியவை உயிரினங்களை வாழ வைக்கின்றன. இதனால்தான் பூமியும் உயிர் பெற்றுச் சிறப்புடன் நிலைத்துள்ளது.
 

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 11
எனினும் சூரியன் இன்றேல் பூமியும் இல்லை. ஏன் மற்றைய எட்டுக் கிரகங்களும் இயங்காது அழிந்துவிடும். எனவே சூரியன் பிறந்த கதையையும் காண்போம். ஒரு கருநிலைக் கோட்பாட்டின்படி (Theory) 460 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒரு கிட்டிய நட்சத்திரம் விசையால் அழிக்கப்பட்டு அந்த வெடிப்பொலி அதிர்வு அலைகளைக் கதிரவன் முகிற் படலம் மூலம் வெளியேற்றி அதற்குக் கோணமுடக்கான இயங்கு விசையைக் கொடுத்தது. இது முகிற்சுழற்சி, ஈர்ப்பு, செறிவு ஆகியவற்றை விரைவுபடுத்தியது. இதனால் செறி தொகுதிகள் கெட்டியடைந்து மத்தியில் வெப்பம் பெருகியது. இவ்வெப்பம் வெளியேற முடியாது மேலும் மையவெப்பம் கூடிக்கொண்டது. ஈற்றில் நீர்வாயு (Hydrogen) ஹீலியமாக (Helium) அணுமாற்றம் பெற்று ஒரு நட்சத்திரம் (TTauri) தீப்பிடித்து எரிந்து ஒரு சூரியன் உருவாயிற்று. இச் சூரியன் 460 கோடி ஆண்டுகளாக இற்றைவரை பிரகாசித்து எரிந்துகொண்டிருக்கின்றது.
கதிரவன் மண்டலம் தொடக்கத்தில் சுழற்சியான தூசு, பாறை, நீரகம், ஹிலியம் போன்றவை நிறைந்திருந்தன. கதிரவன் மண்டலத்தின் பிறப்புத்தான் பூமி. இப்பூமியானது 457 கோடி ஆண்டுகளுக்குமுன் தோன் றியதென்பர். அன்று பூமியும் நெருப்புக் கோளமாகச் சூரியனைப்போல் எரிந்துகொண்டிருந்தது. நீண்ட காலத்தின்பின் பூமியின் மேற்பரப்பு குளிர்ச்சியடைந்தது. ஆனால் பூமியின் மையப் பகுதி இன்றும் அனலாகவே இருக்கின்றது. பூமி குளிர, மேகங்களும் குளிர்ந்து, பெருமழை பெய்து, நீர் குழிகளில் பாய்ந்து தேங்கிக் கடல்கள் தோன்றின. பூமியில் 453 கோடி ஆண்டளவில் ஒரு நிலா தோன்றியது.
இனி பூமியில் ஏற்பட்ட மாற்றங்களையும், அதில் தோன்றிய உயிரினங்களையும், மனிதன் தோன்றிய முறைகளையும், அவன் எய்திய உயர்ச்சிகளையும் காண்போம்.
• பூமியில் 400 கோடி ஆண்டளவில் உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது
9 350 கோடி ஆண்டுகளுக்குமுன் தாவர இலைகள் பச்சிலை பெற்று உண்வைத் தயாரிக்கும் தாவர ஒளி இயைபாக்கம் பெற்றன.

Page 17
12
+ பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
260 கோடி ஆண்டளவில் நீரிலுள்ள உயிரணுச் சவ்வுகள் தரையிலும் தோன்றின.
230 கோடி ஆண்டளவில் உயிரகம் செறிந்த வளிமண்டலம் தோன்றியது.
100 கோடி ஆண்டுகளுக்குமுன காளான்கள் தோன்றின.
தாவரம் 70 கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன.
53 கோடி ஆணி டுகளுக்குமுன் கடலி மீன்கள் முள்ளெலும்புடன் தோன்றின.
45 கோடி ஆணி டுகளுக்கு முன் ஒட்டுத் தோடுடைய இணைப்புடலி உயிரினங்களின் ஒரு வகைப் பிராணி (Arthropods) நீரிலிருந்து நிலத்தில் வாழத் தொடங்கியது.
38 கோடி ஆண்டுகளுக்குமுன் நாற்காலி (Tetrap0ds)
பிராணிகள் மீனிலிருந்து தோன்றின. இவை நீரிலிருந்து
தலையை வெளியில் நீட்டிச் சுவாசிக்கத் தொடங்கின. இதே காலப் பகுதியில் முதலாவது முதுகெலும் பு
பொருந்திய தரை விலங்குகளும் தோன்றின.
36 கோடி ஆண்டுகளின்முன் தாவரங்கள் விதைகளைத் தம் விருத்திக்காகத் தந்துதவின.
31 கோடி ஆண்டுகளில் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன
தோன்றின.
23 கோடி ஆண்டுகளின்முன் ஊர்ந்து செல்லும் மாபெரும் விலங்குகள் (Dinosaurs) தோன்றின.
15 கோடி ஆண்டுகளில் பழமையானதும் பறப்பனவற்றிற்கும் ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்ட ஓர் அதிசயப் பறவை (Archaeopteryx) இனம் தோன்றியது.
7 கோடி ஆண்டுக் காலப்பகுதியில் பாலூட்டிகள் பெரிதாக வளர்ந்தன.

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 13
o 3 கோடி ஆண்டளவில் சில பாலூட்டிகள் டொல்பின்
மீன்களாகக் கடலுக்குத் திரும்பின.
9 20 இலட்சம் ஆண்டளவில் முதல் மனிதன் ஆப்பிரிக்கா
வில் தோன்றினான்.
0 எட்டு (08) இலட்சம் ஆண்டுகளுக்குமுன் நெருப்பின் பிரயோகமும் அதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் மனிதன் பெற்றுக்கொண்டான்.
60 இலட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு சிறிய ஆபிரிக்கப் குரங்கின் இரு மரபினர்வழித் தோன்றலின் ஒன்றான வாலில்லாக் குரங்கு இனம் எழுந்து நிமிர்ந்து நின்று நடக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றது. இதன் மூளை வளர்ச்சியும் மிகுதியாகப் பெருகியது. 20 இலட்சம் ஆண்டளவில் இந்த வாலில்லாக் குரங்கினத்தை மனித இனமாக வகைப்படுத்தப்பட்டது. மனித இனம் இரு காலுள்ள பாலூட்டும் இனத்தின் குரங்குக் குடும்பத்தைச் சேர்ந்தது. மனித இனத்தின் மிக நெருங்கிய உறவினர் சிம்பன்சியாகும். (Chimpanzee).
இஃது இவ்வாறிருக்க மனிதன் எப்படித் தோன்றினானென்பதை மனு நீதிச் சட்ட நூலான சுமிருதி கூறுவதையும் காண்போம்.
0 பிரமன் தன் மேனியை இரு கூறாக்கி ஒரு பகுதியை ஆணாகவும் மறு பகுதியைப் பெண்ணாகவும் தோன்றினான். - (I: 32)
0 உலகின் நற்பேற்றுக்காகப் பிரமன் தன் வாயிலிருந்து பிராமணனையும், தோள்களிலிருந்து சத்திரியனையும், தொடைகளிலிருந்து வைசியனையும், பாதங்களிலிருந்து சூத்திரியனையும் அவதரிக்கச் செய்தான். - (1 : 31)
பல்லினால் அரைக்கும் முறையைச் சீராக்கி, கோரைப் பல்லைக் குறைத்து, குரல்வளையையும் வளைந்த நாவடி எலும் பையும் சரிவுபடுத்தப்பட்டமை மனிதன் கதைப்பதற்கு ஏதுவாயமைந்தது. சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் உள்ள பரிணாம வளர்ச்சி எலிக்கும் சுண் டெலிக்கும் உள்ளதைவிடப் பத்து மடங்கு கூடியதாக

Page 18
14 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
அவதானிக்கப்பட்டது. அணுமரபுவழிப் பரிசோதனையில் 98.4 சதவீதம் சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் இடையில் ஒப்பானதாக இருந்தமையும் காணப்பட்டது.
உறுப்பியல் சார்ந்த அமைப்பியலான புது நாகரிகப் பண்பாடுடைய மனிதன் சுமார் இரண்டு இலட்சம் (2,00,000) ஆண்டளவில் ஆப்பிரிக்கா வில் தோன்றினான். இதை ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் (1,60,000) ஆண்டுகளுக்கு மேலான புதை படிவமூலம் கணக்கிட்டுள்ளனர்.
நியான்டர்தால் (Neanderthals) என்றொரு தனி இனம் ஆன்மிகத் துறையில் ஊறிய முதல் மனிதனாக இருந்துள்ளமைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவர்கள் இறந்த பொழுது சடலங்களை அவர்கள் உண்ட உணவுடனும், பாவித்த கருவிகளுடனும் அடக்கம் செய்து தம் ஆன்மிக உணர்வை வெளிக்கொணர்ந்தனர். இவர்களின் வழித்தோன்றல் அன்றிலிருந்தே அருகிவிட்டது.
தற்கால மனித மூளையின் நிறை 1,400 கிறாம் (1.4 கிலோ அல்லது 03 இறாத்தல்) ஆகும். இதன் கன பரிமாணம் 1,400 கன. சென்டி மீட்டராகும். மனித மூளையானது சிம்பன்சி, கொரில்லா குரங்குகளின் மூளையிலும் பார்க்க இரு மடங்காகும். மனித மூளையின் விரிவுமி, வளர்ச்சியும் அவன் உயர்வுக்கு முழுமுதற் காரணமாம்.
மூளையின் பருமன் கூடியபடியால் தலைகள் பெரிதாக வளருமுன் குழந்தைகள் விரைவில் பிறக்கின்றனர். இதன் காரணமாக எளிதில் கூடிய உருமாறும் தன்மையையும் புதிதாகக் கற்பதற்குரிய கூடிய பரும அளவையும் கொண்டுள்ளனர். இத்துடன் அவர்களுக்குக் கூடிய காலச் சார்புநிலையும் (dependence) தேவைப்படுகின்றது.
ஆதி மனிதனின் மனச் செயற்றிறன் தன் உடலை நிமிர்த்தி நிற்கச் செய்தது. இதனால் அவன் மேல் உறுப்பான கைகளால் பொருள்களைக் கையாளுவதற்கும் கருவிகளைப் பெரிய அளவில் பாவிப்பதற்கும் மற்றைய இனங்களைவிட மனிதன் முன்னிலை அடைந்துள்ளான். இன்று மனிதன் தென் துருவமடுத்த பெரும் பனிப்பரப்பைத் (Antarctica) தவிர மற்றைய எல்லாக் கண்டங்களிலும் செறிந்து வாழ்கின்றான். தை மாதம் 2010 ஆம் ஆண்டின் உலகச் சனத்தொகை 680 கோடியாகும்.

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 15
பொதுநலத் தொண்டுச் செயற்றிறன், உறவினர்க்கிடையில் நிலவும் உறவு போன்றவற்றில் பெரும் சிக்கலை உண்டாக்கியது. மொழி பெரும் முன்னேற்றமடைந்தது. கருவிகள் மிக நுட்பமாகச் செய்யப்பட்டன. இவைகள் மேலும் ஒத்துழைப்பையும் மூளை வளர்ச்சியையும் கொடுத்தன. குடியேற்றமற்ற தென் அமெரிக்காக் கண்டத்தின் தென் முனைப் பகுதிக்கு பதினோராயிரம் (11,000) ஆண்டளவில் கடைசியாக மக்கள் குடியேறினர்.
ஆதி மனிதர் நாடோடி வேட்டையாடும் சிறு குழுவாக வாழ்ந்தனர். மொழி சிக்கலைக் கொடுத்தபடியால் ஞாபகத் தன்மையிலும் செய்திப் பரிமாற்றத்திலும் சிரமங்கள் ஏற்படப் புது விதமான முறைகளைக் கைக் கொண்டு கருத்துப் பரிமாற்றம் விரைவாகச் செய்தனர். திருவள்ளுவருக்கு முன் (தி.மு) 8,500 - 7,000 ஆண்டுக் காலப்பகுதியில் மத்திய கிழக்கில் பயிர் வேளாண்மையும், விலங்குடனான உழவு விவசாயமும் செய்யத்தொடங்கினர். இது அயல் நாடுகளுக்கும் பரவித் தனித்துவமாகச் சீவித்து ஒரேயிடத்தில் நிரந்தரமாகக் கமத்தொழிலில் ஈடுபட்டு வாழ்ந்தனர். விவசாயம் பெரு விளைச்சலைத் தந்தது. அதேநேரம் அரச வகுப்பினரும் தோன்றினர். அத்தோடு உழைப்புப் பங்கீட்டு (Division of labour) முறையும் நடைமுறைக்கு வந்தது. இது பூமியின் முதல் நாகரிகமாக மத்திய கிழக்கு நாடுகளில் தி.மு. 4,000 - 3,000 ஆண்டுகளில் ஏற்பட்டது. இதனோடு பண்டைய எகிப்தும் இந்து ஆற்றுப் பள்ளத்தாக்கு நாகரிகமும் தோன்றியது.
இன்னும் தி.மு. (தரிருவள்ளுவருக்கு முன்) 3,000 ஆண்டுகளுக்குமுன் பழமை வாய்ந்ததும் இன்றும் பழக்கத்திலுள்ளதுமான இந்து மதம் தோன்றியது என்பர். மேலும் எழுத்து முறை, பதிவுகள், நூல் நிலையம், விஞ்ஞானம் (முதல் நிலை), வியாபாரம், சண்டை சச்சரவு, நிலம் பற்றல், வல்லரசு போன்றன உருவாகின. தி.மு. 500 ஆம் ஆண்டளவில் மத்திய கிழக்கு, இந்தியா, சீனா, ஈரான், கிரீஸ் ஆகிய நாடுகள் ஆதிக்கம் பெற்றன. இத்தாலியில் கலை, சமயம், விஞ்ஞானம் ஆகியவற்றில் 14ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி தோன்றியது. மேலும் 15ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானம், தொழில் முறை ஆகியவற்றில் ஐரோப்பிய நாடுகள் பெருமாற்றம் பெற்றன. 1914-1918 ஆம் ஆண்டுகளிலும் 1939-1945 ஆம் ஆண்டுகளிலும் இரண்டு உலக யுத்தங்கள் நிகழ்ந்தன.

Page 19
16 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
அன்றிருந்த சர்வதேச சங்கம் இந்த யுத்தங்களைச் சமரசம் செய்து வைக்க முடியவில்லை. இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாகியது. 1992ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாட்டினம் ஒன்று சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கினர். போக்குவரத்தும் தொடர்சாதனமும் முன்னேற்றமடைந்தன. உலகப் பொருளாதாரமும் நாட்டின் அரசியல் நடைவடிக்கைகளும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்தன. தொழில் நுட்ப விஞ்ஞான வளர்ச்சியில் உள்ளடங்கிய அணு படைக்கலம், கணினி, மரபுவழிப் பண்பியல் சார்ந்த பொறியியல், உலக மயப் பொருளியல், தொடர் சாதனம், போக்கு வரத்து, தொழில் நுட்பம் ஆகியன 1940ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை உலகின் அநேக பகுதிகளில் வாழும் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் அதிக செல்வாக்கைக் கொடுக்கின்றன. இன்னும் குடியாட்சி, முதலாளித்துவம், சூழ்நிலைச் சுற்றாடல் ஆகியனவும் செல்வாக்கை உயர்த்தி உள்ளன.
உலக சனத்தொகை பெருக நோய், யுத்தம், வறுமை, வன்முறை, தீவிரவாதம், உலகளாவிய வெப்பநிலை ஆகியன தோன்றின. 1957ஆம் ஆண்டில் ருசிய கூட்டரசு தன் முதலாவது செயற்கைத் துணைக்கோளைக் கோள்வீதியில் செலுத்தியது. திரு. யூரி ககாரின் (Yuri Gagarin) என்பவர் முதலாவது விண்வெளி வீரனானார். அமெரிக்க வீரனான திரு. நீல் ஆம்ஸ்ட்ரோங் (Neil Armstrong) சந்திரனில் கால் பதித்தார். 20ஆம் நூற்றாண்டில் ருசியாவும் அமெரிக்காவும் விண்வெளி ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டனர்.
உயிரினங்கள் அனைத்தும் பரிணாம வளர்ச்சிக்குட்பட்டு வளர்ச்சியடைகின்றன. அவ்வாறே உயிரினங்கள் ஓரறிவிலிருந்து ஆறறிவுவரை வளர்ச்சியடைந்துள்ளன. புல், செடி, கொடி, மரம், பிராணி, நாற்கால் விலங்கு, பறவை ஆகியவற்றினதும், மக்கள், தேவர், அசுரர், இயக்கர் போன்றோரினதும் உயிர் வளர்ச்சியின் ஏறுநிலைப்பட்டியலை இற்றைக்கு ஏழாயிரம் (7,000) ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த தொல்காப்பியர் கூற்றுத் தெளிவுபடுத்தி நிற்கின்றது.
“ ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு முக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனமே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.?
- (தொல். பொருள். 571)

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 17
மேலும் மாணிக்கவாசகர் தாம் இயற்றிய சிவபுராணத்தில் புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், மிருகமாய், பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், அசுரராய், முனிவராய், தேவராய் இவ்வுலகில் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்று கூறியுள்ளமை ஈண்டு நோக்கற்பாலது.
“புல்ஆகி பூடுஆய் புழுஆய் மரம்ஆகி
பல்மிருகம் ஆகி பறவைஆய் பாம்புஆகி கல்ஆய் மனிதர்ஆய் பேய்ஆய் கணங்கள்ஆய் வல்அசுரர்ஆகி முனிவர்ஆய் தேவர்ஆய் செல்லாஅ நின்ற இத்தாவர - சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன்பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்."
மனிதன் ஒரு தனிக் குரங்கினத்திலிருந்து தோன்றியவன். மற்றைய உயிரினங்களைவிட மனிதனுக்கு மட்டும்தான் ஆறறிவு உள்ளது. அதுவே அவன் சிறப்புமாகும். இனி, ஆறறிவு மனிதனுடன் உயிர் வளர்ச்சி தடைப்பட்டு நின்று விடுமா? என்றொரு கேள்விக்கு விடை காணவேண்டிய நிலையொன்று எழுகின்றது. என்றோ ஒரு நாள் ஏழறிவுடன் மனிதன் தோன்றுவான். அவன் அசாதாரண மனிதனாய், தேவநிலையாளனாய், ஆய்வறிவாளனாய், சிந்தனையாளனாய், மேம்பட்ட /ஆற்றல் கொண்ட வனாய்த் தோன்றி ‘மாமனிதன்” (Superman) என்றழைக்கப்படுவான்.
ஆறறிவு படைத்த மனிதருள் ஒரு சிலர் மிக்க ஆற்றல், அறிவு, தெளிவு உள்ளவர்களாய்த் திகழ்வதை நாம் இன்றும் காண்கின்றோம். இவ்வகையில் விவேகானந்தர், காந்தி, யேசு, திருமூலர், நபிநாயகம், திருவள்ளுவர், அகத்தியர், தொல் காப்பியர், ஆறுமுகநாவலர் போன்றோரைக் குறிப்பிடலாம். இவ்வாறான ஒரு வகுப்பினர் ஏழறிவுடன் தோன்றுவர். அல்லது விஞ்ஞான ரீதியில் உருவாக்கப்படுவர். இவர்களே ஏழாம் அறிவுடைய மாமனிதரும் ஆவர்.
(கொழும்பு- வீரகேசரி வார வெளியிட்டில் 16.11.2008 & 23.11.2008)

Page 20
18 +
பிரமணன் புகழ்படும் மனுநீதிநூல்ார் டுத்திரனுக்டுக் கொடுத்த கொடுந்தண்டனைகள்
தொல்காப்பியம், அகநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய பணி டைத் தமிழ் நூாலி கள் எழுந்த காலங்களிலி சாதிப்பிரச்சினையும், சீதனக் கொடுக்கல் வாங்கல் முறைகளும் தோன்றாப் பொற்காலமாகும்.
மனுநீதிச் சட்ட நூலில் சாதி, சீதனம் ஆகியன விதைக் கப்பட்டு மக்கள் மத்தியில் மீளாத் துன்பம் ஏற்படுத்தியது.
மனுநீதி நூலார் திருமணங்களில் அந்தணரைப் புரோகிதம் புரியக் கொண்டு வந்து புகுத்தி, அன்றிலிருந்து அவரின்றித் திருமணம் நடப்பது இல்லை.
சூத்திரருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள்:- நாக்குத் துண்டித்தல், கை வெட்டுதல், கால் துண்டித்தல், பழுக்கக் காய்ச்சிய இரும்பு ஆணியை வாயில் செலுத்தல், காய்ச்சிய எண்ணையை வாயிலும் காதிலும் ஊற்றல், இடுப்பில் குறி சுட்டு நாடு கடத்தல், கசையடி கொடுத்தல் போன்றனவாம்.
 

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 19
நாகரிகத்தில் வளர்ச்சியடைந்த மக்கள் தம் வாழ்வியலைக் கட்டுப்பாட்டுடன் சமுதாய நலன்கள் பேணப்பட வேண்டுமென்ற பெருநோக்கில் நாட்டிலுள்ள சட்டமேதைகள், ஆன்றோர், சான்றோர், புத்தி சீவிகள் ஆகியோர் பல்வேறுபட்ட சட்ட திட்டங்கள், விதிமுறைகள், கட்டளைகள் ஆகியவற்றை வகுத்துக் கொடுத்தனர். அச்சட்டங்களுக்குத் தெய்விகச் சாயம் பூசி மக்கள் மத்தியில் வைக்கப்பட்டன. மக்களும் மனப் பயம் கொண்டு இவை தெய்விகக் கட்டளைகளென்று மதித்துப் போற்றி வந்தனர்
தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) 1,600 ஆம் ஆண்டளவில் பபிலோனியாவில் “ஹம்முராபி’ (Hamurabi) என்ற மன்னன் காலத்தில் எழுதப்பட்ட சட்ட நூல்தான் முதல் முதலில் தோன்றியதென்ற ஒரு கருத்து மக்கள் மத்தியில் நிலவியுள்ளது. இதேபோன்று வெவ்வேறு சட்ட மூலங்கள் கிரேக்கர், உரோமர், ஆங்கிலேயர், டச்சுக்காரர் போன்றோரால் ஆக்கப்பட்டுள்ளன.
மனுநீதி நூல்
இதேபோல் இந்தியாவிலும் இந்துமதச் சார்புடைய பதினெட்டு (18) நீதிச் சட்ட நூல்கள் எழுதப்பட்டன. அவையாவன: (1) மனு சுமிருதி, (2) யஜ்னவால்க்கிய சுமிருதி, (3) பராசர சுமிருதி, (4) தக்ஷர் சுமிருதி, (5) விஷ்ணு சுமிருதி, (6) சம்வர்த்தர் சுமிருதி, (7) வியாசர் சுமிருதி, (8) ஹரிதர் சுமிருதி, (9) சட்டப்பா சுமிருதி, (10) வஷிஸ்டர் சுமிருதி, (11) Ul IID). சுமிருதி, (12) அபஸ்தம்பர் சுமிருதி, (13) கெளதமர் (புத்தரைக் குறிப்பதல்ல) சுமிருதி, (14) தேவலர் சுமிருதி, (15) சங்ஹர்-லிஹிதர் சுமிருதி, (16) உசனர் சுமிருதி, (17) அத்திரி சுமிருதி (18) சவுனாக்கர் சுமிருதி என்பனவாம். இவற்றில் முதற் கூறிய மூன்று சட்ட நூல்களும் மிகப் பிரபல்யம் வாய்ந்த புராதன நூல்களாகும். இவற்றுள் “மனு சுமிருதி’ என்ற சட்ட நூலை மிகச் சிறந்த நூலாக ஏற்றுக்கொண்டனர். இன்னும் மனு நெறி நூலின் சில சட்டப் பகுதிகள் இந்திய சட்ட நூல்களில் ஆங்காங்கு செறிந்து காணப்படுகின்றன. மற்றைய பதினைந்து (15) நூல்களில் அதிகமானவை தற்பொழுது பாவிப்பின்றி மறைந்து விட்டன.

Page 21
20 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
மனு என்பவரால் ‘மனு சுமிருதி சட்ட நூல் எழுதப்பட்டது. இந்நூல் எழுதப்பட்ட காலம் சரியாகத் தெரியவில்லை. திருவள்ளுவருக்கு முற்பட்ட நூலென்று ஒரு சிலரும், அதற்குப் பிற்பட்ட நூலென்று வேறு சிலரும் கூறுவர். தி.மு. 300 - 200 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட நூலென்று பலர் கூறுவர். இச் சட்ட நூல் பன்னிரண்டு (12) அதிகாரங்களைக் கொண்டது. இதில் ஒருமித்து 2,685 சுலோகங்கள் உள்ளன.
இதிலடங்கிய 2,685 சுலோகங்களில் 1,214 சுலோகங்களே உண்மையானவை என்றும், மிகுதியான 1,471 சுலோகங்கள் இடைச்செருகல் ஆனவை என்றும் இந்திய ஆய்வாளர் திரு. சுரேந்திரகுமார் கூறுகின்றார். பிராமணக் கோட்பாட்டு மரபுகளுக்கு, வேதம் சாராதோர் இயக்கத்தினரால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காலப் பகுதியில் இந்த மனுச் சட்டம் எழுதப்பட்டது. சமக்கிருதத்தில் எழுதப்பட்ட இந்த மனு நீதி நூலை முதன் முதலாக ஆங்கிலேயர் படித்தனர். இதன் பிரகாரம் இந்நூலை வில்லியம் யோன் என்ற பிரபு 1794 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
புத்த மதம் மேலோங்கி நின்ற காரணத்தால் ஒரு சமூக அழுத்தம் தொடர்பில் சங்க புஸ்யமித்ரா காலத்தில் ப்ரிக்கு (Brigu) என்ற சாதுவால் மனு சுமிருதி எழுதப்பட்டதென்று தலித் தலைவர் அம்பேத்கார் தான் எழுதிய ‘இந்தியப் புரட்சியும் மாற்றுப் புரட்சியும்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் 6.L, தென் பகுதிகளில் சைவமும், வைஷ்ணவமும் பொதுச் சமயங்களாக இருந்தபடியால் மனு நீதி அங்கு அதிகமாகப் பரவவில்லை.
மனு நீதி நூலில் மக்களுக்கு ஏற்புடையதும், தற்காலத்துக்கு ஏற்றதுமான சிறந்த வழிகாட்டல்களும், தர்ம போதனைகளுமி, சமுதாயச் சீர்திருத்தங்களும் அடங்கியுள்ளன. ஆனாலும் நாற் சாதிகளிடையே காட்டப்பட்ட உயர்வு, தாழ்வு நிலைகளும், சமுதாயத்துக்கு ஒவ்வாத கருத்துக்களும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் இன்னல்களும், பெண்கள் உரிமை மறுப்பும், ஒரு பிறப்பாளருக்கு விதிக்கப்படும் கொடுந் தண்டனைகளும், இன்னும் பலவும் அதில் அடங்கியுள்ளன. எனவே இச் சட்டங்கள் அன்றிலிருந்தே பல பெரியோரின் கண்டனத்திற்கும், எதிர்ப்புக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகி வந்துள்ளன.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 21
மனு நீதிச் சட்டங்களை எதிர்த்தவர்கள் வரிசையில் மகாத்மா காந்தி, சுவாமி சிவானந்தர், கலாநிதி அம்பேத்கார், ஈ.வே.ரா. பெரியார் ஆகியோர் அடங்குவர். இந்நிலையில் மனு நீதிச் சட்டங்களைப் போற்றும் வரிசையில் அன்னிபெசண்ட், சுவாமி விவேகானந்தர், ரபிந்திரநாத் தாகூர், பாண்டுரங்க சாஸ்திரி ஆதவான், சர்வபள்ளி ராதாக்கிருஷ்ணன் ஆகியோரைக் குறிப்பிடலாம். இன்னும் எல்லா இந்து மதத்தினரும் இக் கண்டனங்களில் இணையவில்லை. ஒருசில முதன்மை வாய்ந்த இந்துக்களான சுவாமி தயானந்த சரசுவதி, சிறீல பிரபுபாத போன்றோர் இச் சட்டம் நம்பத்தக்கதாகவும், தகுதியுடையதாகவும் ஆக்கப்படல் வேண்டுமென்று கூறியுள்ளனர். மேலும் பிறென்றிச் நெய்ட்செய் (Friendrich Nietzsche) என்பவர் “பைபிளை முடிவிட்டு, மனு ஸ்மிருதியைத் gógB6ršats6īr” (Close the Bible and open the Manu Smriti) 676örg கூறியுள்ளார்.
மனு நீதியில் கூறப்பட்டுள்ள பிராயமடையாச் சிறுவர் திருமணம், விதவைகள் உடன்கட்டை ஏறல், திருமணங்களில் சாதிகள் சொல்லி ஏற்படுத்திய கட்டுப்பாடுகள், நாலு வகுப்பாரிடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், தாழ்ந்தோருக்கு விதிக்கப்படும் கடுந்தண்டனைகள், கட்டுப்பாடுகள், பெண் உரிமை மறுத்தல் போன்ற விடயங்களில் பாதிப்புக்குள்ளாகும் ஒரு சிலர் கீழ்த்தரமான மனு நீதி முறைகளை எதிர்த்து அதில் எதிர்பார்த்த நிவாரணம் கிடைக்காதவிடத்துத் தம் இந்து மதத்தைத் துறந்து பிறமதங்களைத் தழுவிக்கொண்ட ஆயிரமாயிரக் கணக்கான எம் உறவுகளை மறக்க முடியாது. நியாயம் ஒருபக்கம் நீதி ஒருபக்கம் சாயுமிடத்து இவ்வாறு நடப்பது நியதி.
மனுநீதிச் சுலோகங்கள்
இனி முக்கியமான மனுநீதிச் சுலோகங்கள் என்ன பேசுகின்றன என்பதையும், அவற்றின் உண்மைத் தன்மையினையுமி, சுலோகங்களின் தற்போதைய நிலையினையும், ஈண்டுக் காண்போம்.
அறிவுத் தெளிவுள்ள சிந்தையுடன் மனு நீதியாளர் அமர்வில் உள்ளார். மரபுவழி அறிவுள்ள சிறந்த சாதுக்கள் அவரை நாடிவந்து வணங்கிவிட்டுக் கேட்கும் கேள்விகளுக்கு அளித்த விடைகள்தான் பன்னிரண்டு (12) அதிகாரங்களில் மனுச் சட்ட நூலாக வெளிவந்துள்ளது.

Page 22
22
* பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
இந்தப் பிரபஞ்சம், எவராலும் உணரமுடியாத, துணையற்ற, தனிமாதிரிச் சின்னமாய, முற்றும் மூழ்கி ஆழ்ந்த தூக்கத்தில், தெரிந்து கொள்ள முடியாத, கிடைக்காத, இருள் மண்டலமாய்த் தோற்றமளிக்கின்றது. ( 1 : 5)
தடுக்க முடியாத சக்தி இருள் மண்டலத்தை நீக்கித் தனக்கென ஒரு மேனியைப் படைத்துத் தண்ணிரை உண்டாக்கி அதில் தன் கருமுளை ஒன்றை இட்டு, அக் கருமுனை சூரியனை ஒத்த ஒரு பொன் முட்டையாய் வெளிவந்தது. இந்த முட்டையிலிருந்து முழு உலகத் தந்தையாகப் பிரமன் தோன்றினான். இத் தண்ணிர் நாராயணன் எனப் பெயர் பெற்றது. ஓர் ஆண்டின்பின் அந்த முட்டையிலிருந்த தெய்விகம் பிரமன் எண்ணப்படி இரண்டாகப் பிளந்து ஒன்று ஆகாயமாகவும, மற்றது பூமியாகவும், இடைப்பட்ட பகுதி அடிவானம் - எட்டு முனைகளாகவும், நிலையுள்ள நீர் இருப்பிடமாகவும் தோன்றின. அளக்க முடியாத சிறு துகள்களைச் சேர்த்து உயிரினங்களைப் படைத்தான் பிரமன். ( 1 : 6, 8, 9, 10, 11, 12, 13 & 16)
நெருப்பு, காற்று, சூரியன் ஆகியனவற்றிலிருந்து மூவடுக்கு நிலையிலுள்ள வேதங்களான இருக்கு, யசூர், சாமம் ஆகியவை திருப்படைச் செயல் நிறைவேற்றத்துக்காக அமைக்கப்பட்டன. . (1 : 23 )
பிரமன் தன் மேனியை இரு கூறாக்கி ஒரு பகுதியை ஆணாகவும் மறு பகுதியைப் பெண்ணாகவும் தோன்றினான். - (I: 32)
உலகின் நற்பேற்றுக்காகப் பிரமன் தன் வாயிலிருந்து பிராமணனையும், தோள்களிலிருந்து சத்திரியனையும், தொடைகளிலிருந்து வைசியனையும், பாதங்களிலிருந்து சூத்திரியனையும் அவதரிக்கச் செய்தான். - (1 : 31)

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 23
நால்வகை வகுப்பினரைச் சேர்ந்தோரான அந்தணர், அரசர், வைசிகர், வேளாளர் ஆகியோரின் கடமைகளை இவ்வாறு தொகுத்துக் காட்டுவர் தொல்காப்பியனார்.
1. அந்தணர் : நூல், கரகம், முக்கோல், மணை ஆகியன கற்றல்.
2. அரசர் ; படை, கொடி, குடி, முரசு. குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகியவற்றுடன் மக்களைக் காத்தல்.
3. வைசிகர் : வாணிகம் செய்தல். எண்வகை உணவான
நெல்லு, காணம், வரகு, சிறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதுமை ஆகியவற்றை விளைவித்தல்.
4. வேளாளர் : உழுதுாண் வாழ்க்கையைத் தவிர பிறவகையான வாழ்க்கை இவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.
இன்னும் நம் பண்டைத் தமிழ் ஆன்றோர் தம் இனமக்கள் அனைவரையும் அந்தணர், அரசர், வைசிகர், வேளாளர் ஆகிய நான்கு வகுப்பினரில் அடக்கிச் சாதிப்பிரிவினை காட்டாதுள்ளமை போற்றற்குரியது. இது நிகழ்ந்தது தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) 5,000 ஆம் ஆண்டுகளுக்குமுன்.
ஆனால் மனு மறை நூலார் தொல்காப்பியர் காட்டிய நாலு வகுப்பினரைப் போல் சற்று மாறுதலாக மக்களை நான்கு சாதிகளாக (வர்ணம்) வகுத்து, அவர்களுக்குரிய கடமைகளையும் இவ்வாறு சட்டமாக்கியுள்ளார்.
0 பிராமணர் :- வேதங்கள் கற்றல், கற்பித்தல், தானங்கள் வழங்கல், பரிசில்கள் பெறுதல் போன்றவை. இவர் முதல் தரத்தினர். (1 : 88)
6 சத்திரியர் :- நீதியான ஆட்சி, குடிமக்களைக் காத்தல், கொடை, வேதங்கள் கற்றலி, புலனடக்கம் போன்றவை.இவர் இரண்டாந் தரத்தினர். - (I: 89)

Page 23
24 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
• வைசிகர் - வாணிபம் விவசாயம் செய்தல், கால்நடைகளைப் பராமரித்தல், தானம் வழங்கலி, வேதங்கள் கற்றலி , வட் டிக் குப் பணம் கொடுத் தலி போன்றவை. இவர் மூன்றாந் தரத் தரினர் . - (I: 90)
9 சூத்திரர்:- இரு பிறப்பாளராகரிய மேலி மூவர் க்கும் விசுவாசமாக சேவை புரியும் ஒரே ஒரு கடமை மாத்திரம் இவர்களுக்குரியது. இவர் நாலாந் தரத்தினர். (1 : 91)
O பிராமணர், சத்திரியர், வைசிகர் ஆகிய மூவரும் இரு பரிறப் பாளர்கள் . ஆனாலி நான்காவதான சூத்திரர்களுக்கு ஒரே ஒரு பிறப்பு மாத்திரம். ஐந்தாவது சாதி என்று ஒன்றும் இல்லை. - (X: 04)
முதல் மூன்று சாதியினரும் கருவிலிருந்து வெளிவருவது முதற் பிறப்பென்றும், மதத் தட்சை பெறுவது இரண்டாம் பிறப் பென்றும் கூறுவர். மதத் திட்சை பெறும் உரிமை சூத்திரர்க்கில்லை. எனவே இவர் ஒரு பிறப்பாளர்.
திருமணம் தொடர்பில் மணமகன் ஒருவன் தான் விரும்பும் ஒரு மணமாகா மங்கைக்குரிய ஒத்துக்கொண்ட பணத்தைக் கொடுத்து, அவளைத் திருமணம் செய்யும் முறை ஒன்றை மனு நீதிச் சாத்திரம் கூறுகின்றது. அதாவது ஒரு பெண்ணுக்குரிய விலையை அவள் பெற்றோருக்குக் கொடுத்துவிட்டு அவளை விலைக்கு வாங்கிவந்து திருமணம் செய்து கொள்வது. சீதனம் என்பது இதற்கு மாறுபட்டது. முன்னதில் பெண்ணை பணம் கொடுத்து விலைக்கு வாங்கித் திருமணம் செய்வது. பின்னதில் சீதனம் என்றும், வரதட்சனை என்றும், சீர்வரிசை என்றும், நன்கொடை என்றும், அன்பளிப்பு என்றும் பல சொற்பதங்களை முன்வைத்துப் பெண் வீட்டாரிடம் பெறுபவை எல்லாம் பெற்றபின் அவளைத் திருமணம் செய்வது.
9 ஒரு மணமாகா மங்கையைக் காட்டி வேறொரு பெண்ணைக் கொடுத் தாலி , அந்த LD 600 LD 86 g9D] öß6 (ö5 இவ் விரு

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 25
பெண்களையும் முன் பேசிய அதே விலைக்குத் திருமணம் செய்து கொள்ளலாம். - (VIII : 204)
ஒரு கன்னிப் பெண்ணின் திருமணம் தொடர்பான கொடைப் பணத்தைக் கொடுத்தவர் இறந்தால், அப் பெண்ணின் சம்மதத்துடன் பணம் கொடுத்தவரின் சகோதரனுக்கு அவளைத் திருமணம் செய்து வைக்கலாம். - (IX : 97)
சிறார்களின் கல்வி தொடர்பில் கட்டாயக் கல்வி சிறுபிராயத்தில்
கொடுக்கப்படல் வேண்டுமென்ற சட்டம் வரவேற்கத் தக்கது
சமயக் கல்வியைப் பிராமணர் ஐந்து (5) வயதிலும், சத்திரியர் ஆறு (6) வயதிலும், வைசிகர் எட்டு (8) வயதிலும் தொடங்க வேண்டும். - (1 :37)
மத தீட்சை பெறுவதை பிராமணர் எட்டு (8) வயதிலும்,
சத்திரியர் பதினொரு (11) வயதிலும், வைசிகர் பன்னிரண்டு (12) வயதிலும் பெற்றுக்கொள்ள வேண்டும். - (11:36)
கல்வி கற்பதும், மத திட்சை பெறுவதும் இரு பிறப்பாளரான
பிராமணர், சத்திரியர், வைசிகர் ஆகியோருக்கேயன்றி நான்காம் வர்ணத்தினரான சூத்திரர்களுக்கோ அல்லது மேல் மூன்று உயர் வர்ணத்துப் பெண்களுக்கோ அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
மனு நீதிச் சட்டம் மூன்றாம் அத்தியாயத்தில் 55 ஆவது சுலோகம்
முதல் 62 ஆவது சுலோகம் வரை பெண்களைப் பற்றி மிகப் போற்றிப் புகழ்ந்து பேசப்பட்டுள்ளது. அதேநேரம் அவர்களின் சுதந்திரத்தை மறுக்கும் சுலோகங்களும் காணப்படுகின்றன.
பெண் திருமணமாகுமுன் தந்தையின் பாதுகாப்பிலும்,
திருமணமானபின் கணவனின் ஆதரவிலும், முதுமையில்
ஆண்பிள்ளையின் அனுசரணையிலும் தங்கியிருத்தல்
வேண்டும். அவள் சுதந்திரமாக வாழத் தகுதியற்றவள்.
(IX : 03)

Page 24
26 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
0 சுரபானம் அருந்தல், ஒழுக்கக் குறைவானவர்களுடன் சேரல், கணவனைப் பிரிந்திருத்தல், பிரதேசங்களில் சஞ்சரித்தல், நேரங் கெட்டவேளை உறங்குதல், வேற்று ஆண்கள் இருக்குமிடங்களில் வாசஞ்செய்தல் ஆகிய ஆறு செயற் பாடுகளும் பெண்ணைக் கெடுத்து விடும். - (IX 13)
9 பெண்கள் ஆணிகளின் வயதையோ அழகையோ எதிர்பார்க்கக் கூடாது. ஆணி என்ற ஒரு தன்மையே போதுமானது. பெண்கள் ஆண்களை முழுமையாக ஏற்றுத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். — (IX : 14)
0 படைப்புக் கடவுள் பெண் குணநலமறிந்து ஆண்களின் கடுங் கணி காணிப் பரிலி இருக்குமாறு அவர் களைப் படைத்துள்ளான். — (IX : 16)
0 முப்பது (30) வயது ஓர் ஆணி தன் னைத் திருப்திப்படுத்துவாள் எனக் கருதினால் பன்னிரண்டு (12) வயதுப் பெண் ஒருத்தரியை மணம் முடிக் கலாம் . இருபத்தரினான்கு (24) வயது வாலிபன் தன் கடமைகளுக்குப் பங்கம் ஏற்படாதவாறு எட்டு (08) வயதுச் சிறுமியை மணம் முடிக்கலாம். - (IX: 94)
9 சிறுமியொருத்தி மூன்று (03) வயது நிரம்பியபின் தான் விரும்பிய பொழுது திருமணம் செய்து கொள்ளலாம். — (IX : 90 )
இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் சிறுபிராய மணநிகழ்வுகள் ஏற்பட்டமைக்கு மனுநீதி நூலார் விதித்த மேற்காட்டிய சட்டங்கள் உறுதுணையாய் நின்று வழி சமைத்துள்ளமை புலனாகின்றது. இன்றும் இந்தியாவிலுள்ள பல கிராமங்களில் இவ்வாறான நிகழ்வுகள் நடைமுறையில் உள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
சாதி அமைப்புக்களை உண்டாக்கி அவற்றை நடைமுறையில் வைத்திருப்பதற்கு வேண்டிய சட்டதிட்டங்கள், விதிகள், கடும்

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 27
தண்டனைகள் மனு சுமிருதியில் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. தாழ்ந்த குலத்துடன் சம பந்தி போசனம் செய்தல், கலப்புத் திருமணம் செய்தல், சூத்திரர்முன் உணவருந்தல், அவர் உணவை உண்ணல், அவருக்குச் சம ஆசனம் கொடுத்தல், அவர் இரு பிறப்பாளரைப் பெயர் சொல்லி அழைத்தல் போன்றவை மனு நீதிச் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளன. இதை மீறுவோருக்குக் கடுந் தண்டனை விதிக்கும் முறைகளையும் இச் சட்டம் விவரித்துக் கூறுகின்றது.
சூத்திரருக்கு விதித்த தண்டனைகள்
பிராமணனுக்காகவும் அவன் நலங்களுக்காகவும்தான் மனு நீதிச் சட்ட நூல் அமைந்துள்ளதென்று கூறலாம். மற்றைய சத்திரியன், வைசியன் ஆகியோருக்கு இந்நூல் ஓரளவுக்கு அனுசரணையாக உள்ளது. ஆனால் சூத்திரன் விடயத்தில் பெரும் பாதகம் தரும் விதிமுறைகளும், தண்டனைகளும் மனு நீதிச் சட்டத்தில் பொதிந்துள்ளன.
0 பிராமணன் ஒருவன் சூத்திரப் பெண்ணொருத்தியுடன் உறவு கொண்டால் அவன் மரணத்தின்பின் நரகத்தில் அழுந்துவான். அவன் மூலம் ஒரு பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளை பிராமண வம்சத் தகுதியை இழந்து 6GBb – (III : 17)
0 பிராமணன் நற்பெயரைக் கெடுத்த சத்திரியனுக்கு நூறு (100) பணமும், வைசியனுக்கு நூற்றைம்பது (150) பணம் முதல் இருநூறு (200) பணம் வரை அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் சூத்திரனாயின் அவனுக்குக் கசை யடித் தண்டனை கொடுக்கவேண்டும். - (VIII : 267)
9 ஒரு பிறப்பான சூத்திரன் இரு பிறப்பானவர்களை வன்சொல்லால் அவமதித்தால் அவன் நாக்கை வெட்டிவிட வேண்டும். — (VIII : 270)

Page 25
28
+ பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
இரு பிறப்பாளர்களின் பெயர்களையோ அல்லது சாதிகளையோ சொல்லி அவமதிக்கும் சூத்திரன் வாயில் பழுக்கக் காய்ச்சிய பத்து விரற்கிடை அளவுள்ள இரும்பு ஆணியைச் செலுத்த வேண்டும். — (VIII : 271)
கர்வம் மேலிட எவனொரு சூத்திரனாவது பிராமணனுக்குப் பாடம் கற்பிக்க முயன்றால் அவனுடைய வாயிலும் காதுகளிலும் காய்ச்சிய எண்ணெயை ஊற்றும்படி பணிக்க வேண்டும். — (VIII : 272)
சூத்திரன் இரு பிறப்பாளருக்கு எதிராகத் தன் கையையோ அலி லது தடியையோ உயர் தி தரினாலி அலி லது கோபங்கொண்டு காலால் உதைத்தால் அவன் கையும், காலும் துண்டிக்கப்படல் வேண்டும். - (VIII : 280)
ஒரு சூத்திரன் மேற்சாதி மக்களுக்குச் சமானமாக அவர்களது இருக்கையில் அமர்ந்தால் அவன் இடுப்பில் குறி சுட்டு நாடு கடத்தப்படல் வேண்டும் அல்லது அவனது ஆசன இருக்கையை (உறுப்பு) அரிந்து விட வேண்டும்.
— (VIII : 281)
கீழ்ச் சாதியினரான சத்திரியர், வைசிகர், சூத்திரர் ஆகிய மூவரின் உறுப்பு, வயிறு, நாக்கு, கை, கால், முதுகு, கண், முக்கு, காது, உடம்பு ஆகிய பத்து (10) அவயவங்களில் தண்டனை வழங்கலாம். ஆனாலி பிராமணனுக்கு இத் தண்டனைகள் கொடுக்க முடியாது. அவர்களை 5TB a5L-gög56oTib. - (VIII : 124, 125)
பிராமணன் பிறப்பின் மேன்மை கருதி உலகத்தின் பொருட்கள் அத்தனையும் அவன் உரிமைச் சொத்தாகும். - (I : 100)
பிரமன் வாயிலிருந்து பிராமணன் பிறந்தபடியாலும், இவனே முதற் பிறப்பென்றபடியாலும், வேதங்கள் கற்றபடியாலும்

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 29
இவனே படைப்பு முழுவதற்கும் முதல்வன் ஆவான். - (I: 93)
0 பிராமணன் புனித சட்டத் தொகுதியை நிறைவுபடுத்தப் பிறந்ததனாலும், பிரமனுடன் தகுதியாய் இருப்பதனாலும், அவன் பிறப்பு புனித சட்டத் தொகுதியின் நிலைபேறான திருவவதாரமாகின்றான். - (I: 98)
0 பிராமணனைக் கொலி வதும் , மது அருந்துவதும் , களவெடுப்பதுவும், குருவின் மனைவியை நாடுவதும் ஆகியவை மகா பாதகச் செயலாகும், - (X1 : 55)
சூத்திரனுக்குக் கொடுத்த கொடுந் தண்டனைகளைப் பார்த்து மனம் சகிக்கமுடியாத பார் போற்றும் பாரதியார் நீதி சரிந்து விட்ட செய்தியைப் பாவில் இவ்வண்ணம் வடித்துள்ளார்.
“சூத்திர னுக்கொரு நீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
(பாரதியார் கவிதைகள் -பக்கம் 474) -
99 O
ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக மாறுபாடுகளைக் காட்டிய மனு நீதி நூலில் மேலும் ஒரு விசித்திரமான செய்தியையும் கூறுகின்றார்.
0 மனிதனின் அரைக்கு மேற்பட்ட பகுதி தூய்மையானது. அதரிலும் அவன் வாய் மிகப் புனிதமானது.
(I: 92)
மன்னன் விசாரணை மன்றம்
மக்களுக்கிடையில் எழும் பிரச்சினைகளையும் தொடுக்கப்பட்ட வழக்குகளையும் தீர ஆராய்ந்து தீர்ப்புச் சொல்லும் பொறுப்பும் மன்னனின் கடமையாகும். இதன்படி மன்னன் விசாரணை மண்டபம் அமைத்து வழக்கை விசாரித்து நீதி கூறுவது வழக்கம். இது தொடர்பில் மனு நீதிச் சட்டம் கூறுவதையும் காண்போம்.

Page 26
30
+ பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
மன்னன் விசாரணை மண்டபத்துக்குப் பிராமணனுடனும், அனுபவமுடைய மன்ற உறுப்பினர்களுடனும் சென்று வழக்குகளை விசாரிக்கவேண்டும். மன்னன் அமர்ந்திருந்தோ அல்லது எழுந்து நின்றபடியோ தன் வலக் கரத்தை உயர்த்தி, உடுப்பு அணிமணிகளின் ஆரவாரப் பகட்டின்றித் தன்முன் வைக்கப்பட்ட சட்ட வழக்குகளை ஆராய்ந்து தீர்ப்புக் கூறவேண்டும். விசாரணைக்கு வரும் வழக்குகளைப் பதினெட்டுதி (18) தலைப்புகளில் பரின் வருமாறு கூறப்பட்டுள்ளன:-
(1) பெற்றகடனைத் திருப்பிக்கொடாமை. (2) சேமிப்பும் பணையமும். (3) சொந்தமற்ற பொருள் விற்பனை. (4) பங்காளிகளின் தொடர்பு.
(5) நன்கொடை தொடர்பானவை. (6) சம்பளம் கொடுக்காமை. (7) ஒப்பந்தம் மீறல். (8)கொள்வனவு-விற்பனை-அழித்தல். (9) கால்நடைப் பிணக்கல். (10) எல்லைப் பிரச்சினை. (11) தாக்குதல். (12) Je96QIğ5JTgpI.
(13) களவு. (14) வழிப்பறிப்பு வன்முறை.
15) பிறன்மனை நயத்தல். (16) கணவன் மனைவி கடமைகள். (17) பரம்பரை உடைமை பிரித்தல். (18) சூதாடல் பந்தயம்.
மன் னன் விசாரிக்க (tpւգ աT 5 வழக்குகளைக் கல்வியறிவுள்ள பிராமணனை விசாரிக்குமாறு மன்னன் நியமிக்கலாம். - (VIII : 1 — 9)
திருப்படையல்
வழிபடுதற்குரிய மூதாதையர்களின் ஆவிகளுக்குக் கொடுக்கப்பட
வேண்டிய திருப்படையல் தொடர்பில் மனு நீதிச் சட்டம் கூறுவதாவது:-
ஒரு மாதத்துக்குக் கொடுக்க வேண்டிய பொருட்கள்:- தானியம், அரிசி, கோதுமை, தண்ணிர், பழம், அவரை போன்றன. இரண்டு மாதங்களுக்கு மீனுடனும், மூன்று மாதங்களுக்கு இறைச்சியுடனும், நான்கு மாதங்களுக்கு ஆட்டிறைச்சியுடனும், ஐந்து மாதங்களுக்குப் பறவைகளின் இறைச்சியுடனும், ஆறு மாதங்களுக்கு வெள்ளாட்டிறைச்சி யுடனும், ஏழு மாதங்களுக்குப் புள்ளிமான் இறைச்சியுடனும்,

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 31
எட்டு மாதங்களுக்கு பெண்மான் இறைச்சியுடனும், ஒன்பது மாதங்களுக்கு மான் இறைச்சியுடனும் , பத் து மாதங்களுக்கு எருமை, பன்றி இறைச்சியுடனும், பதினொரு மாதங்களுக்கு முயல், ஆமை இறைச்சியுடனும், 305 வருடத்துக்குப் பாலும் பாற்சோறுடனும், பன்னிரண்டு வருடங்களுக்குப் பெரிய வெள்ளைக் கடா ஆட்டிறைச்சி யுடனும் திருப்படையல் கொடுக்கப்படல் வேண்டும்.
— (III : 267- 271).
6 காய்கறிகள், மீன், காண்டாமிருக இறைச்சி, சிவப்பு ஆட்டிறைச்சி, காட்டில் வாழும் துறவிகள் உணவாக உண்பவை போன்றவற்றைக் கொடுத்தால் அது முடிவற்ற காலவரைக்குரிய திருப்படையலாகும். - (I : 272)
(ԼՔլգ6յ60Մ
மேலே மனு நீதி நூலாரின் ஒரு சில முக்கிய சுலோகங்கள் நால்வகை மக்களைப் பற்றிக் கூறும் செய்திகளைப் பார்த்தோம். அதில் மனு நீதி நூல் பிராமணன் புகழ் பாடும் நூலெனக் கண்டோம். அன்று பிராமணன் வேதம் கற்க உந்தப்பட்டு மக்களாலும் போற்றப்பட்டான். போற்றப்பட்டமைக்கு அந்நூலில் அடங்கிய கடுந் தண்டனைகளே காரணமாம். அன்றிருந்த நாலு வர்ணத்தினரின் நிலை, காலக்கிரமத்தில் இன்றுவரை நிலைத்து நிற்க முடியாது மாறி விட்டது. பிராமணர் வேதத்துடன் மட்டும் இன்று நிற்காது, தம் வாழ்வியலைக் கொண்டிழுக்க அரச பதவிகளிலும், வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
சத்திரியர், மன்னராக அன்று இரண்டாம் இடத்தில் இருந்தனர். இன்று மன்னராட்சி மறைந்து மக்கள் ஆட்சி மலர்ந்துள்ளது. அத்துடன் அவர்கள் நிலையிலும் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. மனு காலத்தில் மூன்றாம் இடத்தில் இருந்தவன் வைசிகன். அவன் நிலையிலும் இன்று மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவன் தனக்குரிய தொழிலாற்றி முன்னேறியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
மனு காலத்தில் கீழ்ச் சாதியாக நான்காம் இடத்தில் வைக்கப்பட்டு இரு பிறப்பாளரான மேல் மூவர்க்கும் தொண்டு புரிந்து வந்தவன் சூத்திரன.

Page 27
32 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
இவன்தான் ம்ற்றைய மூவரையும்விட மிகவும் பாதிப்புக்குள்ளானவன். இவன் கல்வி கற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளில் ஒரு சில விபரம் இவை
உ நாக்கு வெட்டுதல், கை வெட்டுதல், கால் துண்டிப்பு, பழுக்கக் காய்ச்சிய இரும்பு ஆணியை வாயில் செலுத்தல், காய்ச்சிய எண்ணெயை வாயிலும் காதிலும் ஊற்றல், இடுப் பரிலி குறி சுடுதலி , கசையடி கொடுத் தலி போன்றவையாகும்.
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்தால் அதை அடக்குவதற்கு இப்படியான கொடுந்தண்டனைகளை விதித்தனர் போலும், மனு நீதியாளர். ஆனால் இரு பிறப்பாளரான அந்தணர், சத்திரியர், வைசிகர் ஆகியோருக்கு மேற்கூறிய தண்டனைகளை வழங்க மறுத்து நிற்கும் மனு நீதிச் சட்ட நூலை எவ்வாறு நீதி நூலென்று நாம் கூறுவது?
அன்று இவ்வளவு இன்னல்களுக்குள் வாழ்ந்த சூத்திரன் நாளடைவில் வீரங்கொண்டு, கல்வி கற்று, உயர்நிலை அடைந்து, அரச உத்தியோகம் புரிந்து, மற்றவர் வியக்கும் வண்ணம் கல்விமான்களாகி, எத்துறையிலும் உயர்நிலையில் உள்ளனர். மனு நீதியால் தடை செய்யப்பட்ட கலப்பு மணம், பெண் உரிமை, பெண் கல்வி, பெண் சுதந்திரம் ஆகியவை இன்று அருகி நிலைமாற்றம் பெற்றுள்ளன.
தொல் காப்பியம், அகநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய பண்டைத் தமிழ் நூல்கள் எழுந்த காலங்களில் öFrg5)ü பிரிவினையும் சீதனக் கொடுக்கல் வாங்கல் முறைகளும் தோன்றாப் பொற்காலமாகும்.
ஆனால் முன்கூறிய நூல்களுக்குப் பின்னெழுந்த மனு நீதிச் சட்ட நூலில் சாதி, சீதனம் ஆகியன விதைக்கப்பட்டு மக்கள் மத்தியில் சொல்லொணாத் துன்பம் ஏற்பட்டதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இன்று இவற்றின் நிலையும் அருகி, மங்கி, மறைந்து போய்க்கொண்டிருப்பது நற்செய்தியாம். நாம் அந்தப் பொற்காலத்தை நாடி நடை போடுகிறோம் என்பதை நினைக்க மனம் பூரிப்படைகின்றது.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 33
மேலும் பண்டைத் தமிழர் சடங்கோடு கூடிய கொண்டு-கொடுக்கும் முறையில் திருமணங்களை அந்தணர் பங்கேற்பின்றி நடாத்திவந்தனர் என்பதைத் தொல்காப்பியம், அகநானூறு போன்ற நூல்கள் பேசுகின்றன. ஆனால் மனு நீதி நூலார் திருமணங்களில் அந்தணரைப் புரோகிதம் புரியக் கொண்டுவந்து புகுத்திவிட்டார். அன்றிலிருந்து அந்தணரின்றித் திருமணம் இல்லை என்றாகிவிட்டது.
மனு நீதிச் சட்டத்திலுள்ள அரைவாசிக்கு மேற்பட்ட சுலோகங்கள் தற்போதுள்ள நடைமுறைகளுக்கு ஒவ்வாததாக வந்துவிட்டன. இனிவரப்போகும் நவீன காலத்தோடு மிகுதிச் சுலோகங்கள் எவ்வண்ணம் ஒத்தோடப் போகின்றன என்பது ஒரு கேள்விக் குறியாகும். காலம் பதில் சொல்லும். பொறுத்திருந்துதான் பார்ப்போமே.
“மனு சுமிருதி சட்டம் இந்து மதத்திற்குப் பெரும் சேவைகள் ஆற்றியுள்ளதென்று ஒரு சிலர் புகழ்ந்து கூறினாலும் அது இந்து மதத்திற்கும், மக்களுக்கும் கொடுத்துள்ள தீராத் தீங்குகள் பன்மடங்காகும். இந்து மதம் சிதைந்து சிதறிச் சுருங்கிச் சிறுத்துப் போகும் நிலைக்கு இந்த மனு நீதி நூல் மேற்காட்டியவாறான பற்பல தீங்குகளை ஏற்படுத்தி மக்கள் மனங்களை வதைத்து உள்ளன என்பது, மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை யாகும்.
(கொழும்பு வீரகேசரி வார வெளியீட்டில் 07.12.2008, 14.12.2008
& 21.12.2008)
DD

Page 28
ܛ 34
மங்கையர் மாண்பினை மங்க வைக்டும் உடன்கடிடையேறல்
கணவன் இறந்தால் மனைவி அவனுடன் உடன்கட்டையேற வேண்டும். மனைவி இறந்தால் கணவன் அவள் சிதையில் ஏறி உயிர் விடாது மறுமணம் செய்யலாம்.
ஒரு சமுதாயம் ஒரு வழக்கத்தைப் பல்லாண்டுகளாகப் பழக்கத் தில் வைத்திருந்தால் அதை இல்லாதொழிக்கப் பல்லாயிரம் ஆண்டுகள் தேவைப்படும். இவ்வழியில் வந்தவைதான் உடன்கட்டையேறலும், தற்பலியூட்டலும்!
இரண்டாயிரம் (2,000) ஆண்டுகளுக்கு மேலாக உடன்கட்டை ஏறும் வழக்கம் தொடர்ந்து வந்துள்ளமை பெண்கள் மேல் திணிக்கப்பட்ட ஒரு சாபக்கேடாகும்.
 

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 35
உடன்கட்டையேறல், தற்பலியூட்டல் ஆகிய இரண்டும், அவச் சாவும் வேண்டாச்சாவும் ஆகும். வாழ வேண்டியவர்கள் விணே மடிகின்றார்களே!
இப்பூவுலகில் பல்வேறுபட்ட உயிரினங்களைப் படைத்த இயற்கை அன்னை ஒவ்வொரு உயிரினங்களுக்கும் வெவ்வேறுபட்ட வாழ்நாட்களை வகுத்துள்ளமையை நாம் அறிவோம். இவ்வுயிரினங்களில் மனித உயிர், மாண்பும், மேன்மையும், சிறப்பும், ஆற்றலும் பொருந்தியது. மனித உயிரொன்றைச் சிதைத்தால் நாட்டுச் சட்டம் முன்வந்து நிற்கும். கடுந்தண்டனையும் கிடைக்கும். அழிந்த ஓர் உயிரை நம்மால் ஆக்க முடியாதவிடத்து எந்த உயிரையும் பறிக்கும் உரிமையும் நமக்கில்லை. மனித உயிருக்கும் வாழ்நாள் எல்லையுண்டு. பிறக்கும் உயிரனைத்தும் என்றோ ஒரு நாள் இறப்பதுதான் நியதி. இது இயற்கை வழியது. ‘ஓர் உயிரின் காலவரம்பு முடியுமுன் அது இறக்கக்கூடாது’ என்பது வேதப்பொருள்.
சதி
*சதி” என்பதற்கு “உண்மையான நல்லொழுக்கமுள்ள மனைவி' என்றும் “உடன்கட்டை ஏறல்’ என்றும் பொருள் உள்ளது. சதி என்பவள் பெண் கடவுளான பார்வதியின் ஒரு திருவவதாரம் என்றொரு புராணக்கதை உண்டு. சதி, பார்வதி ஆகிய இருவரும் சிவபிரானின் சிறந்த மனைவியர் ஆவர். உடன்கட்டையேறல் தொடர்பில் ஒரு மரபுக்கதையும் உள்ளது. பெண்கடவுளான சதி சிவபிரானின் மனைவி. சதியின் தகப்பன் தக்சன், தன் மகள் சதியையும், தன் மருமகன் சிவனையும், அவமரியாதைப் படுத்தித் தான் நடாத்தும் யாகத்துக்கு அவர்களை அழைக்காது ஒதுக்கி விட்டபடியால் சினங் கொண்ட சதி தன்னைத்தானே நெருப்பில் பாய்ந்து எரியுண்டு தன் எதிர்ப்பைத் தெரிவித்தாள். சிவன் துயர் தாங்கமுடியாது அவள் உடலை இப்பிரபஞ்சம் அடங்கலும் கொண்டு திரிந்தார்.
ஈற்றில் விஷ்ணு, சிவன் துயர் துடைக்க வந்து, அவள் உடலைத் துண்டுகளாகச் சீவிச் சீவி அவள் உடல் இல்லாது போக்கிவிட்டார். இது தொடர்பில் பரிசுத்த இடங்களில் சின்னங்களும் எழுந்தன. சிவன், இறந்த சதியின் உடலைச் சுமந்து செல்வதைக் குறிக்கும்

Page 29
36 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
17ஆம் 18ஆம் நூற்றாண்டு வெண்கலச் சிலையொன்றை இந்தியாவின் குவாலியர் (Gwalior) என்ற அரும்பொருட்காட்சி மனையில் காணல்ாம்.
உடன்கட்டையேறல்
SLLLLLLS LL00LLLLLL Y LLLYLLLLYYLLL LLLL LL L YLLLLLLYSLLLLLL S 0
“Ceremony of burning a Hindu widow with the body of her late husband” - from Pictorial History of China and India, 1851. Also see the Front Cover Picture of this book
ஒவ்வொரு தினமும் மக்கள் தம்மைத்தாமே வலிந்து மாய்த்துக் கொள்வதை நாம் அறிந்தவண்ணமுள்ளோம். இதற்குப் பல வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர். அவற்றுள் (1) கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்குதல். (2) நஞ்சருந்தல், (3) மலையுச்சியிலிருந்து பாய்தல். (4) கிணறு, கடல், ஆற்றில் விழுதல், (5) கூரிய ஆயுதத்தால் குத்துதல், (6) துப்பாக்கியால் சுடல், (7) மண்ணெண்ணை ஊற்றித் தன்னைத்தானே தீயிடல் போன்றவை ஒரு சிலவாகும். இனி, உடன்கட்டையேறல் பற்றி (AHindயSயttee) ஆய்வோம். அதுதான் இக் கட்டுரையின் முக்கிய நோக் காகும்.
இறந்த கணவனின் சிதையில் மனைவியும் ஏறித் தன்னுயிரினையும் ே உடன்கட்டையேறல் எனக் கூறுவர். இது பல லைமுறையான 605 Լ160|ՔԱl வழக்கமாகும். இதில் கைம்பெண்ணானவள்
 

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 37
வயது முதிர்ந்தவளென்றோ அல்லது இளம் வயதினளென்றோ பார்ப்பது கிடையாது. எந்த வயதினரும் உடன்கட்டை ஏறித்தான் ஆகவேண்டும். உடன்கட்டையேறுவதை ‘சதி” (Sati) என்று வடமொழியில் கூறுவர். ஆங்கிலேயர் இந்த இந்து வழக்கத்தை ‘சுற்ரீ (Suttee) என்றழைப்பர்.
கணவன் இறந்ததும் மனைவியானவள் உடன்கட்டையேறுகின்றாள். இஃது அவளுக்கு ஏனென்று தெரியாது அவளுள் நுழைந்துள்ள ஒரு வழக்கம். இது அவளை ஆட்டிவைக்கின்றது. அவள் ஆடுகின்றாள். அவள் ஆட்டியும் வைக்கப்படுகின்றாள். ஆனால் மனைவி இறந்தவிடத்து கணவனானவன் உடன்கட்டை ஏறுவதில்லை. அவளை எரித்துவிட்டு வந்து சில நாட்களின்பின் அவன் மீண்டும் மறுமணம் செய்யலாம். இங்கே அவளுக்கொரு நீதியும், அவனுக்கு இன்னொரு நீதியும் கூறி வைத்தனர் ஆன்றோரும் சான்றோரும். இனி உடன்கட்டை ஏறுவதில் உள்ள வித்தியாசமான முறைகளையும் காண்போம்.
e கணவன் சிதையில் மனைவி ஏறித் தன் உயிரைப்
போக்குதல்.
0 மனைவியர் தம் கணவன் இறந்ததும் அவன் சிதையில்
பாய்ந்து விழுந்து எரியூட்டி இறத்தல்.
0 மாறுபட்டு நிற்பவர்களை மற்றோர் தள்ளி எரித்து விடுதல்.
0 கணவனின் சிதைக்கருகில் மனைவி அமர்ந்துகொண்டு
சிதைக்குத் தியிட்டுத் தானும் இறத்தல்.
e கணவன் இறந்ததும் மனைவியானவள் தன்னை அலங்கரித்துக்கொண்டு சிரித்த முகத்துடன், கண்ணிர் சிந்தாது, வேதனை ஒன்றையும் காட்டாது, சிதையில் ஏறிக் கணவனுக்கருகில் படுத்துக்கொண்டு தீயை முட்டும்படி பணித்துத் தன்னையும் எரியூட்டி இறத்தல்.
e இந்துமத இனத்தில் சிலர் கணவன் இறந்தால் மனைவியை கணவனுக்கருகில் படுத்தித் திருமண நிகழ்வுகளும், ஈமக் கிரியைகளும் நடத்துவர். இதிலி மனைவி உடன்கட்டையேறி உயிர் விடுவதில்லை.

Page 30
38 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
இனி உடன்கட்டையேறல் தொடர்பில் பழந்தமிழ் இலக்கியங்கள், மனுநீதி நூல்கள், புராணங்கள், வேதநூல்கள் போன்றவை பேசும் பாங்கினையும் காண்போம்.
தொல்காப்பியம்
தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) ஐயாயிரம் (5,000) ஆண்டுகளுக்குமுன் எழுந்த நூல் தொால்காப்பியம். இந்நூல் காலத்தால் தொன்மையாய், கருத்தால் செழுமையாய், நாகரிகத்தால் செம்மையாய் நம் மத்தியில் உயிருடன் உலாவுகின்றது. தொல்காப்பியனார் யாத்த தொல்காப்பியப் பெருநூல் தம் கருப்பொருள் பற்றி பின்வருமாறு பேசுகின்றது:
ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுத்து அவளை வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டோன் இறந்துபட்ட விடத்து அவன் தலையோடு தன் முலைகளையும் முகத்தையும் சேர்த்து இறந்த ஒரு பெண்ணின் நிலையைக் காண்கின்றோம்.
* முலையும் முகனும் சேர்த்திக் கொண்டான்”
தலையொடு முடிந்த நிலையொடு ...”
- (பொருள். 77-16-17)
பெரும் புகழ் ஈட்டியவன் இறந்தபொழுது அவனைச் சுற்றிக் கூடிய உறவினர்கள் அழுத மயக்கமும், மனைவியர் தத்தம் கணவரைக் கட்டிக்கொண்டு அழுததை, கண்டோர் பொறுக்க முடியாத வருத்தமும் ஆகியவை தென்படும் காட்சிகளாம்.
"... . . . . . . . . . . . 8 × 8 + · · ......... (Suflo)&
மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் மாய்ந்த பூசல் மயக்கத் தானும் தாமே எய்திய தாங்கரும் பையுளும்.”
- (பொருள். 77-18-21)
கணவனோடு இறந்த மனைவியின் இறப்பைக் கண்டோர் பிறர்க்கு எடுத்துக் கூறிய ‘மூதானந்தம்” என்ற நிலையைத் தொல்காப்பியனார் எடுத்துக் காட்டுகின்றார். ‘மூதானந்தம்” என்பது ஒன்றுபட்ட அன்பினால் வந்த சாக்காடு.

நுனாவிலூர் கா. விசயரத்தினம் + 39
*கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதானந் தமும்.”
- (பொருள். 77-22-23)
கொடிய பாலைவனத்தின் வழியில் தன் ஆருயிர்க் கணவனை இழந்து தனியளாய்த் தவித்து நின்று தலைவி வருந்திப் புலம்பிய 'முதுபாலை நிலையையும் சித்தரிக்கின்றார் தொல்காப்பியனார்.
*நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து
தனிமகள் புலம்பிய முதுபா லையும்.”
- (பொருள். 77-24-25)
தன் ஆருயிர் மனைவியை இழந்த கணவன் தனித்துநின்று படுந்துயரான தபுதார நிலையையும் காண்கின்றோம்.
“காதலி இழந்த தபுதார நிலையும்.”
(பொருள். 77-28)
காதலன் இறந்துபட்ட விடத்து, அவன் மனைவி. உடன்கட்டையேறாது கைம்மைபூண்டு தவம் புரிதலைத் தாபத” நிலையில் காட்டப்பட்டதையும் காண்கின்றோம். மேலும் காதலனை இழந்த மனைவி தன் கணவனோடு இறந்துபடத் தீ மூட்டியவிடத்து விலக்கினாரோடு மாறுபட்டுக் கூறிய புறங்காட்டு (பாலை) நிலையும் பேசப்படுகின்றது. மாண்ட கணவனுடன் மனைவி உடன்கட்டையேறும் வழக்கம் /பழந்தமிழர்களிடம் இருந்தது. இது ‘பாலை நிலை" என்று வழங்கப்பெறும்.
பாலை = புறங்காடு.
“காதலன் இழந்த தாபத நிலையும்
நல்லோள் கணவனொடு நளியழல் புகீஇச் சொல்லிடை இட்ட பாலை நிலையும்.”
- (பொருள். 77-29-31)
0 பாலை நிலை - உடன்கட்டையேறும் வழக்கம்.
0 தாபத நிலை - உடன்கட்டையேறாது கைம்மை பூண்டு
தவம்புரி நிலை.

Page 31
40 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
0 முதானந்தம் - கணவன் இறந்த பொழுதே மனைவி
உடனுயிர் நீத்த நிலை.
மூதானந்தம் = முதுமை + ஆனந்தம்.
முதுமை - உழுவலன்பு பற்றிய ஒன்றுபட்ட அன்பு.
ஆனந்தம் - சாக் காடு, மகரிழ்ச்சி, பேரின்பம்.
9 தபுதார நிலை - மனைவியை இழந்த கணவன் படும் துயர்
நிலை.
பாலை நிலையிலுள்ள பெண்கள் தம் கணவர் இறந்தபொழுது உடன்கட்டை ஏறுவதும், தாபத நிலையிலுள்ள பெண்கள் உடன்கட்டை ஏறாது தம்மைத்தாமே வருத்திக் கைம்மை பூண்டு தவம் புரிவதும், மூதானந்த நிலையிலுள்ள பெண்கள் கணவர் இறந்தபொழுதே தாமும் உடனுயிர் நீத்தலும், தபுதார நிலையிலுள்ள கணவர் தம்மனைவியர் இறந்தபொழுது தாமும் இறந்துபடாது உயிர் தரித்து நிற்பதையும் மேற்காட்டிய தொல்காப்பிய நூலில் கண்டோம்.
35 TgO T3
இற்றைக்கு மூவாயிரம் (3,000) ஆண்டுகளுக்குமுன் எழுந்த நூலான புறநானூற்றில் உடன்கட்டையேறல் பற்றி எவ்வாறு பேசப்படுகின்றது என்பதையும் காணி போம் . பெருங் கோப் பெண் டு என்பவர் பூதப் பாணி டியனின் தேவியார் ஆவார். பூதப் பாணி டியன் போர்க்களத்தில் மாண்டான். அவன் மனைவி பெருங்கோப்பெண்டு தானும் அவன் சிதையில் புகுந்து உயிர்விடத் துணிந்தாள். இதைச் சான்றோர் தடுக்க முயன்றபொழுது நின் கணவனுடன் நீயும் செல்வாயாக! என்று சொல்லாது என்னைத் தடுக்கும் பொல்லாச் செயல்புரியும் சான்றோரே!” என்று சாடுகின்றாள். 'வெள்ளரி விதைபோன்ற ய்யற்ற நீரச்சோறு, எள்ளுத்துவை, புளிசேர்த்துச் சமைத்த வேளைஇலை ஆகியவற்றை உண்டும், பாயின்றிப் பருக்கைக் கற்கள்மேல் படுத்தும், கைம்ம்ை நோற்கும் பெண்டிர் அல்லேம் யாம்! பெருங்காட்டில் வளர்த்த

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 41
ஈமப் படுக்கை உங்களுக்கு அரிதாகத் தோன்றலாம். எம்கணவன் இறந்துவிட்டான். எமக்கு அத்தியே தாமரைக் குளத்து நீர்போல் இன்பம் தருவதாகும்' என்று கூறித் தீப்பாய்ந்து இறந்துகொண்டாள்.
“பல்சான் றிரே! பல்சான் றிரே!
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றிரே அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம், வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை, வல்சி ஆகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ, பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் நுமக்கு அரிது ஆகுக தில்ல; எமக்குஎம் பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற வள்இதழ் அவிழ்ந்த தாமரை நள்இரும் பொய்கையும், தீயும் ஒரற்றே!” - (246)
(பாடியவர்: பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு).
இன்னும் பிறிதொரு பாவில் மன்னன் சேரமான் மனைவி மாண்டுவிட்டாள். கள்ளி வளர்ந்த காட்டிலே விறகு அடுக்கிய ஈமத்தின்கண் அவளைக் கிடத்தினான் மன்னன். அவன் துயர் பெருகியது. அவளோடு தானும் உயிர் விடவில்லையே என மனம் உருகி வாடுகின்றான். இதன் பண்புதான் என்னே? என்றும் ஊசலாடுகின்றான். பெண்கள் தம்கணவர் இறந்தவிடத்து அவர்கள் சிதையில் பாய்ந்து உயிர்விடும் தீர்மானத்தை உடன் எடுத்துவிடுவர். ஆனால் ஆண்கள் தம் மனைவியர் மாண்டவிடத்துத் தாமும் உயிர்விடாது தம் உயிரினைக் காத்து நிற்பர் என்பதும் புலனாகின்றது.

Page 32
42 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
“யாங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே,
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்? கள்ளி பேர்கிய களரியம் பறந்தலை* வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து, ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை, இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே" - (245)
(பாடியவர் :- சேரமான் கோட்டம் பலத் துத் துஞ்சிய மாக்கோதை.)
மணிமேகலை
மேற்கூறப்பட்ட தாபத நிலை, பாலை நிலை, மூதானந்தம் ஆகிய மூன்றும் கடையன்பு, இடையன்பு, தலையன்பு பற்றி நிகழும். இம் மூன்று நிலைகளையும் மணிமேகலையிலும் காண்கின்றோம். கணவன் இறந்தவிடத்து கற்புடைமகளிர் துயரமாகிய தீ மூண்டு, அனல் பெருகி, உள்ளத்தே துன்பம் அடங்கப்பெறாது உடன் இன்னுயிர் ஈவர். அவ்வாறு ஈயாராகின் குளிர்ந்த பொய்கையில் நீராடுபவர்போல கணவன் ஈமத்தியில் புகுந்து உயிர் துறப்பர். அவ்வாறு உயிர் விடாராயின் தம் காதலருடன் மறுமையில் வாழும்பொருட்டு கைம்மை நோன்பு பூண்டு உடலை வருத்துவர். கடல்சூழ் உலகில் கற்புடைப் பெண்டிர் இம்மூவகை நிலையில் அடங்குவர்.
*காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது இன் உயிர் ஈவர் ஈயார் ஆயின் நல் நீர்ப் பொய்கையின் நளி எரி புகுவர் நளி எரி புகா அர் ஆயின் அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று, உடம்பு அடுவர் பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து.”
- ( ஊரலர் உரைத்த காதை 42-48)
* கள்ளி போகிய களரி மருங்கின்” - வேறு பாடம்.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 43
பத்தினிப் பெண்களை நம் முன்னோர் மூன்று வகையாகப் பிரித்துக் கூறுவர்.
முதல் ரகம் - கணவன் இறந்தவுடன் மனைவியும் அவனுடன்
உயிர் துறத்தல். இதை மூதானந்தம் என்பர்.
இரண்டாம் ரகம்:- கணவன் இறந்தான் என்றதும் அவனுடன் மனைவியும் ஈமளரியில் புகுந்து உயிர் விடல். இது பிற்காலத்தில் உடன்கட்டையேறல் என்றாயிற்று. இதைப் பாலை நிலை என்பர்.
மூன்றாம் ரகம்:- கணவன் இறந்தபின் மனைவியானவள் பூவிழந்து, பொட்டிழந்து, மங்கல அணியிழந்து, அறுசுவை உணவு நீக்கி, வெறுந்தரையில் படுத்துறங்கிக் கைம்மை நோன்பு நோற்று உடலை வருத்தி வாழ்வர். இதைத் தாபத நிலை என்பர்.
மனுநீதி நூல்
இனி இது தொடர்பில் மனுநீதி நூலார் கூறுவதையும் காண்போம். சிறந்த இந்து சட்டத்தின் உயர் நிலையில் உள்ளதாக மனுநீதி நூல் கருதப்படுகின்றது. மனுநீதி நூல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிக் கருத்துக் கூறாவிடினும், கைம்பெண்கள் வாழ்நாள் முழுவதும் துறவிகளாக இருக்கவேண்டும் என்று உத்தரவிடுகின்றது.
9 நல்லொழுக்கமுடைய மனைவி தன் கணவன் இறந்தபின்பும் என்றும் கற்புடையவளாக இருந்தால் அவள் சுவர்க்கத்தை e60L6Isrof. - ( V-160)
0 இறந்த கணவனுக்கு மனைவி என்ற முறையில் தன் வழிமரபான கடமைகளைச் செய்யாது சீர்குலைத்தால் இவ்வுலகில் அவள் இகழப்பட்டுச் சுவர்க்கத்தில் தன் கணவனுடன் சேர்ந்து வாழவும் மாட்டாள். - ( V-161)
0 மனைவி இறந்தவிடத்து கணவனானவன் அவளின் ஈமக்கிரியைகளை முடித்தபின் அவன் மீண்டும் மீண்டும் g5qLD600lb QafufuouTib. - (V-168)

Page 33
44 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
கணவனை இழந்த மனைவி என்றும் கற்புடையவளாய் இருக்கவேண்டுமென்றும், மனைவியை இழந்த கணவன் மீண்டும் மீண்டும் திருமணம் செய்யலாம் என்றும் மனுநீதி நூலார் நீதி கூறியுள்ளார். கணவனுக்குக் கொடுத்த நீதி மனைவிக்குக் கொடுக்கப்படவில்லை. இது நீதி நூலா? அன்றேல் அநீதி நூலா? என்பதில் சர்ச்சை எழுகின்றது.
விஷ்ணு சுமிருதி
விஷ்ணு சுமிருதி நீதிநூல் பெண்களின் கடமைகள் பற்றி இவ்வாறு கூறுகின்றது.
0 தன்கணவன் இறந்தபின் மனைவியானவள் தன்கற்பைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அல்லது, கிணவனின் சிதையில் ஏறி அவனுடன் தன்னையும் எரியூட்டி இறக்க வேண்டும்.
கருட புராணம்
கருட புராணம் கூறும் நீதி வார்த்தைகளால் பெண்கள் மனவெழுச்சி கொண்டு தம்கணவர் இறந்தக்கால் அவர்களின் ஈமச் சிதையில் ஏறித் தம்முயிரையும் பலியாக்கி இறக்கின்றனர்.
0 மனைவி தன் கணவனுடன் சேர்ந்து இறந்தாலி சுவர்க்கத்தில் கணவனுடன் பல்லாண்டுகள் வாழ்வாள். -- (1-107-29)
0 சுவர்க்கத்தில அவள் தன் கணவனுடன் 14 இந்திரா அதாவது ஒரு கற்ப காலம் மட்டும் வாழ்வாள். - (2493) (கற்பம் - நான் முகன் நாள். இது 4.32 கோடி ஆண்டுகளாகும்.)
ரிக் வேதம்
ரிக் வேதம் பெண்கள் உடன்கட்டையேறுவதை வரவேற்கின்றது.
9 உடன்கட்டையேறவுள்ள பெண்கள் தங்கள் கண்களில் நெயப் போட்டுக்கொண்டு, அழகூட்டும் அணிவகைகளை

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 45
அணிந்துகொண்டு, பெருந் துன்பமின்றி, கண்ணிர் சிந்தாது,
கணவன் ஈமத்திச் சிதையில் புகுவார்களாக. - (10-18
07)
ஒதுக்கப்படும் பெண்கள்
இனி உடன்கட்டையேறும் முறை, எவ்விடத்தில், எவ்வண்ணம்
தோன்றியன, அது நிலைத்து நிற்பதன் காரணம் ஆகியவற்றை விரிவுபடுத்திக் காண்போம். கணவன் சிதையில் மனைவியைப் போட்டு எரிக்கும் முறை இந்தியாவில் கி.பி. 400ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்து வருகின்றபோதிலும், இதற்கு முன்பே யேர்மனி, கிரீஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் இம்முறைகள் தோன்றியதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடன்கட்டையேறும் வழக்கில் கி.மு. 316 ஆம் ஆண்டில் நடந்த ஒரு நிகழ்வைப் பின்னால் கூறப்பட்டுள்ளதையும் காண்க.
இந்தியாவில் கணவன் இறந்தபின் கைம்பெண்ணாயிருக்கும் மனைவியானவள் தன்கணவன் குடும்பத்தினருடன் தொடர்ந்து சீவிப்பது வழக்கம். இவர்கள் தம்கணவன் இறப்புக்குப் பொறுப்பானவர்களென்று கணிக்கப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டு, தவறாக நடத்தப்பட்டு, பழி கூறப்பட்டு, இன்னலுக்கு உட்படுத்தி, சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்படுவர். மேலும் இவள் பொட்டிழந்து, பூவிழந்து, மங்கல அணியிழந்து, பட்டாடையரிழந்து, நலி லுணவிழந்து, மெத்தையரிழந்து, பொலிவிழந்து, வெறுந்தரையில் படுத்து உறங்கிக் கைம்மை நோன்பு நோற்று வாழ்தற்குரியவளாகின்றாள். இவள் கோயில், குளம், திருவிழா, திருமணவிழா, நன்மையான கருமம் எதிலும் பங்குபற்ற முடியாது. இவளை ஒரு தனி மரமாய்த் தனித்து வைத்திருப்பர். இவளுடன் ஒருவரும் பேச மாட்டார்கள். இவள் ஒதுக்கப்பட்டு ஒதுங்கி வாழ்பவள். ஒரு கைம்பெண்ணைத் தேவையற்ற சுமையாகவும், வீட்டுவேலைச் செயற்பாட்டிற்கூட அவளை ஒதுக்கியும், அவள் குரல், தோற்றம், தொடுவை ஆகியவை புனிதமற்றதாகவும், அவள் பரிசுத்தம் அற்றவளாகவும், வெறுப்புக்குரியவளாகவும் கருதப்படுகின்றாள். இதுதான் அக்காலக் கைம்பெண்களின் நிலை.

Page 34
46 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
இவ்வாறான சுமைகளைச் சுமப்பதிலும் பார்க்க இறந்து விடுவது மேல் என்று அவளுக்குத் தோன்றிவிடும் . ஆனால் அவள் உடன்கட்டையேறினால் பரிசுத்தப் பெண்ணாகி விடுவாளாம். உடன்கட்டையேறுவது சிறந்ததென்று கருத்துப் பரிமாறப் பலர் உளர். இன்னும் அவள் சொத்தை அபகரிக்கும் நோக்கில் இறந்த கணவரின் உறவினர்கள் அவளைப் பலியிடத் தூண்டி விடுவதும் உண்டு. அவள் உடன் கட்டை ஏறினால் கணவனுடன் சுவர்க்கத்தில் வாழலாமென்றும், அவள் பெயரில் கோவில் எழுந்து அவளைத் தெய்வமாக வணங்குவரென்றும் கூறி ஆசைகாட்டி நிற்பர். இவற்றையெல்லாம் கேட்டும், பார்த்தும், சிந்தித்தும் மன அமைதியற்ற நிலையோடும் கணவனை இழந்த கடுந்துயரோடும் தவிக்கும் பெண்கள் உடன்கட்டையேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றே கருத இடமுண்டு.
இரணி டாயிரம் (2,000) ஆணி டுகளுக்கு மேலாக உடன் கட்டையேறும் வழக்கம் தொடர்ந்து வந்துள்ளமை பெண்கள்மேல் திணிக்கப்பட்ட ஒரு சாபக் கேடாகும்.
சில நிகழ்வுகள்
உடன்கட்டையேறும் பெண்களின் பரிதாப நிலைகளையும், அதனால் ஏற்பட்ட சில மாற்றங்களையும், அவை கூறிநிற்கும் செய்திகள்
பலவற்றையும் இங்கு நிரைப்படுத்திக் காண்போம்.
9 இந்தியாவில் ராசஸ்தான் யோட்பூர் என்ற இடத்தில் உடன்கட்டையேறும் பெண்களுக்காக ஒரு ஞாபகார்த்தக் கல் நாட்டப்பட்டுள்ளது. உடன்கட்டை ஏறவுள்ள பெண்கள் தம் கரத்தைச் சிவப்புச்சாய மையில் தோய்த்து அக் கல்லில் பதித்துவிட்டு உடன்கட்டையேறும் வழக்கம் உண்டு. மேலும் வங்கநாடு, ஒரிசா, ராசஸ்தான், குசராட்டி, மத்தியப்பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய கிராம எல்லைகளில் உடன் கட்டையேறும் கற்கள் நிறுவப் பட்டுள்ளன.
N 9 உடன் கட் டையேறிய யோட் பூர் மகாராசாக் களின் மனைவியரான மகாராணியர் நினைவில் ஒரு புனித நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.

நுணாவிலூர்காவிசயரத்தினம் + 47
ܐܚܢܠ
[Palmprints-Ashrine to wives of the Maharajahs of Jodhpur that have committed “Sati” or “Suttee”.
மகாபாரதத்தில் பாண்டு மன்னன் இறந்தபொழுது அவன் இரண்டாவது மனைவி மாத்திரி உடன்கட்டையேறினாள். பாண்டு மன்னன் பெண்ணுடன் உறவு கொண்டால் அவன் இறந்துவிடுவான் என்ற சாபத்தை அறிந்திருந்தும் மாத்திரி அவனுடன் உறவுகொண் டபொழுது பாண் டு மன்னன் இறந்துவிட் டான் . இதன் பொறுப்பை அவள் ஏற்று உடன்கட்டையேறினாள். ஆனால் பாண்டு மன்னனின் முதல் மனைவி குந்திதேவி உடன் கட்டையேறாது தாபத நிலை ஏற்றுக் கைம் மை நோன் பிருந்து தன் ஐந்து பிள்ளைகளையும் வளர்த்து வந்தாள்.
இராமாயணத்தில் வாலி இறந்தான் என்று கேள்விப்பட்டதும் அவன் மனைவி தாரா உடன்கட்டையேற இருக்கையில் அநுமன், இராமன் , இறந்து கொண்டிருக்கும் வாலி, ஆகியோர் தாராவை உடன்கட்டையேற வேண்டாம் என்று

Page 35
48
+ பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
புத்திமதிகள் கூறியபொழுது அவள் அதை ஏற்றுக்கொண்டு தன் உயிரைப் போக்காது காத்துக்கொண்டாள்.
இலங்கை வேந்தன் இராவணன் இறந்தபோது அவன் மனைவி மண்டோதரியும் அவனுடன் உயிர் நீத்தாள் என்ற செய்தியையும் இராமாயணத்தில் காண்கின்றோம். இச் செயலை மூதானந்தம் என்று கூறுவர்.
அக்பர் அரசு உடன்கட்டையேறும் பெண்ணின் தீர்மானத்தை எவ்வளவு காலத்துக்கும் நீடிக்கலாம் என்று உத்தரவிட்டது. இதன் காரணம் என்னவெனில், கணவன் இறந்துள்ள அன்றைய உணர்ச்சி வேகம் கடந்தபின் அவள், தான் இறக்கவிருக்கும் தீர்மானத்தை மாற்றக்கூடும் என்பதாகும்.
சா-யகான் (Shah Jahan) ஆட்சிக்காலத்தில் பிள்ளைகள் உள்ள கைம் பெண் கள் எக் காரணம் கொண்டும் உடன்கட்டையேறுவதற்கு அனுமதிக்கப் படவில்லை
முகலாயர் (Mughal) ஆட்சியில் பெண்கள் உடன்கட்டை ஏறாதிருப்பதற்காக அவர்களுக்கு ஓய்வூதியம், நன் கொடை, மறுசீரமைப்பு உதவி ஆகியன வழங்கப் பட்டன. இருந்தும் இவ் வழக்கத்தை நகரங்களில் ஓரளவு தடுத்தாலும் கிராமங்களில் இதைத் தடுக்க முடியவில்லை.
சிலப்பதிகாரத்தில் கோவலன் பாண்டிய மன்னனால் கொலையுண்டான். ஆனால் கண்ணகி உடன்கட்டை ஏறவில்லை. கோவலன் காதல் மனைவி மாதவிதானும் உடன் கட்டையேற வரவில்லை. கண்ணகி பாண்டிய மன்னன் அரண்மனை ஏகி, நீதி கேட்டு, நீதி தவறியதால் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனும், அவன் அரசி கோப்பெருந்தேவியும் உயிர் துறக்க, கண்ணகி பாண்டிய நாட்டை அழித்துத் தானும் தெய்வமாகினாள். மாதவி கைம்மை நோற்றுத் தவம் புரிந்தாள். கோவலனுக்கும் மாதவரிக் கும் பிறந்த மகள் மணிமேகலை

நுனாவிலூர் கா.விசயரத்தினம் + 49
பரிக் குணியானாள். கோப் பெருந் தேவி பாணி டிய மன்னனோடு உடன் உயிர் நீத்தமையை மூதானந்தம் என்றும் மாதவி கைம்மை நோன்பிருந்ததைத் தாபத நிலை என்றும் கூறுவர்.
சத்தியவான் சாவித்திரி காதையில் சத்தியவான் உயிரை இயமன் எடுத்துச் சென்ற பொழுது சத்தியவான் மனைவியாகரிய சாவித்தரி உடன் கட்டை ஏறாது இயமனை எதிர்கொண்டு சத்தியவானுக்குப் பதிலாகத் தன் உயிரை எடுக்குமாறு கேட்க, இயமன் அதற்கு உடன்படாது மறுத்து நிற்க, சாவித்திரி இயமன் பின்னால் தொடர்ந்து செல்ல, இடையில் அவள் சோர்வடைவதைக் கண்டு, இயமன் அவளுக்கு சத்தியவானைத் தவிர ஏதாவதொரு வரம் கேட்குமாறு கூறினான். அதற்குச் சாவித்திரி இயமனிடம் சத்தியவான் மூலம் தனக்கொரு பிள்ளை வரம் தரும்படி வேண்டினாள். இயமன் இதை மறுக்க முடியாதபடியால் சத்தியவான் உயிரை விட்டுச் சென்றான். சாவித்தரிரி சத்தியவானை அடைந்து இன்புற்றிருந்தாள்.
டக்சிலா (Taxila) பண்டைய இந்தியாவின் பிரசித்திபெற்ற தொல் பொருள் ஆய்வு நிலையம். இது தற்பொழுது பாகிஸ்தான் நாட்டுடன் உள்ளது. அரிஸ்டோபுலஸ் (AristobயயS) என்னும் கிரேக்க வரலாற்று ஆசிரியர் அலெக்சாண்டர் படையெழுச்சியுடன் இந்தியாவுக்கு வந்தபொழுது டக்சிலா நகரத்தில் உடன்கட்டையேறும் நிகழ்வொன்றை இவ்வாறு பதிவு செய்துள்ளார்: “கிரேக்க கொமாண்டோ தரைப்படையில் ஓர் இந்தியன் இராணுவ வீரனாகக் கடமையாற்றினான். இவனுக்கு இரு மனைவியர் இருந்துள்ளனர். இவன் இறந்தபொழுது இவனின் இரு மனைவியரும் போட்டி போட்டுக் கொண்டு கணவன் தீச்சிதையில் இறங்கி மாண்டனர். இது கி.மு. 316 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.

Page 36
50
+ பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
ராசஸ்தானில் நெப்பால் மகாராணி இராசேஸ்வரிதேவியின் கணவர் அரசைத் துறந்து சந்நியாசியானபடியால் மகாராணியின் மகன் சார்பில் மகாராணி 1799ஆம் ஆண்டில் நாட்டின் ஆளுநர் பதவியை ஏற்றுக்கொண்டார். பின் அவள் கணவன் 1804 ஆம் ஆண்டில் மீண்டும் அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவர் 1806sib ஆண்டில் தன் சகோதரனால் கொலை செய்யப்பட்டார். பத்து நாட்களின்பின் 05-05-1806 அன்று கைம்பெண்ணான இராசேஸ் வரிதேவி பலாத் காரமாக உடன் கட்டை ஏற்றப்பட்டாள்.
அன்று உடன்கட்டை ஏறியவர்களின் உண்மையான எண்ணிக்கையை நாடுகள் ரீதியாகக் கணிக்கப்படவில்லை. பிரித்தானிய கிழக்கு இந்தியக் கம்பனியின் வங்கநாடு மாகாணத்தில் 1813 ஆம் ஆண்டிலிருந்து 1828 ஆம் ஆணி டுவரையான காலப் பகுதயரிலி 8, 135 உடன்கட்டையேறும் சம்பவங்கள் பதிவில் உள்ளன. இது சராசரி வருடமொன்றுக்கு 542 கைம்பெண்கள் உடன் கட்டை ஏறியுள்ளதைக் காட்டுகின்றது. வங்க நாட்டில் மற்றைய இடங்களை விடப் பத்து மடங்கு அதிகமான உடன்கட்டை ஏறல் நடந்துள்ளதாகப் பதிவுகள் கூறுகின்றன. மேலும் வங்கநாட்டின் கீழ் மாகாணத்தில் ஓர் ஆண்டில் 420 உடன்கட்டையேறல் நிகழ்ந்ததாக ly 66)65ub பென்ட்ரிக் எனும் ஆளுநரால் (Governor Lord William Bentrick) 1829 sib satirigéir ஆளுநரின் அறிக்கையில் காட்டப் பட்டுள்ளது.
ராசஸ்தானில் 1987-ஆம் ஆண்டில் 18-வயதினளான நூப் கன்வர் (R00p KanWar) என்னும் கைம் பெண் உடன்கட்டை ஏற்றப்பட்டாள். இது நிர்ப்பந்திக்கப்பட்ட தற்கொலை என்று நீதி மன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டும் இதில் எவரும் குற்றவாளியாகக் கருதப்படவில்லை.

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 51
• இந்தியாவில் 2006 ஆம் ஆண்டு 7-வயதுப் பெண் தன் கணவன் சிதையில் விழுந்து தன்னைத்தானே எரித்து இறந்துவிட்டாள்.
• உத்தரப் பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாயாரான 35-வயதுப் பெண் 2006 ஆம் ஆண்டில் தன்கணவன் சிதையில் பாய்ந்து உடன்கட்டையேறினாள்.
o இந்தியாவில் ராசஸ்தான் கிராமத்தில் உடன்கட்டையேறும் இந்துக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் வைகாசி மாதம் 2006 ஆம் ஆண்டில் கலவரங்கள் எழுந்தன. மக்கள் தடிகளாலும் கல்லுகளாலும் பொலிசாரைத் தாக்கி, அருகிலுள்ள வீட் டு யன்னலி களையும் உடைத்து, வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இதில் 20 பேர் காயப்பட்டு 30 பேரைப் பொலிசார் கைது செய்தனர்.
• உத்தரப் பிரதேசத்தில் 18-05-2006 இல் வித்தியாவதி என்னும் 35-வயதுப் பெண் தன்கணவன் தீச்சிதையில் பாய்ந்து உயிரை மாய்த்தாள்.
9 நாற்பது (40) அகவையான யனக்ராணி என்னும் பெண் தன்கணவனான பிரேம் நாராயண் சிதையில் உயிருடன் 21-08-2006 அன்று எரிக்கப்பட்டாள்.
இதுகாறும் கணவன் இறந்ததும் அவனுடன் உயிர் நீத்த மனைவியரை மூதானந்தம்” என்ற நிலையிலும், உடன்கட்டையேறிய மனைவியரை “பாலை’ நிலையிலும், உடன்கட்டையேறாது கைம்மை நோன்பு நோற்கும் மனைவியரை ‘தாபத’ நிலையிலும் நிறுத்திக் 560ir(3LTib.

Page 37
52 + பண்டைத்தமிழரும் சமுதாயச்சீர்கேடும்
தற்பலியூட்டல்
... 3x8
జి
Self-immolation
தற்பலியூட்டல் என்பது தன்னைத்தானே பலியாக ஒப்படைத்தல் என்பதாகும். உடன்கட்டையேறலில் கணவனை இழந்த பெண்கள் மாத்திரம் பங்கேற்பர். இதுவும் ஒருவகைத் தற்பலியூட்டல்தான். இதைவிட வேறு ஒழுங்கு முறைகள் குறிக்கப்படாத, ஆணி, பெண் ஆகிய இரு பாலாரும் பங்கேற்கும் தற்பலியூட்டலும் நடைமுறையில் உள்ளது. இதற்குப் புத்த மதமும், இந்து மதமும் சகிப்புத்தன்மையைக் காட்டுகின்றன. அரசியல், பக்தி, அன்பு, எதிர்ப்பு, இணங்காமை, சுயநலம் ஆகியவை தொடர்பாக உலகில் பல பாகங்களில் இன்றும் பல தற்பலியூட்டல்கள் நிகழ்வது நம் கண்கூடு. இவற்றில் ஒரு சில நிகழ்வுகளை வரிசைப்படுத்திக் காண்போம்.
0 புத் தமத மாடதி துறவிகளும் , மாடக் கண் ணிகளும் வியட்நாம் ஆட்சிமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1963 ஆம், 1966ஆம் ஆண்டுகளில் தம்மைத்தாமே தற்கொலை , செய்துள்ளனர்.
9 தீக்குளித்து உயிர் நீத்தல் என்ற செயற்கமைய ருவிய மாதா கோயிலின் பெரிய திருச்சபைக் காலத்தில் புராதன
 

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 53
தெய்வ நம்பிக்கையுள்ள கிராமத்தவர் தம்மைத்தாமே தீயிட்டுப் பலியாகினர்.
பரந்த தற் பலியுட்டல் நிகழ்வுகள் பிரஞ்சு நாட்டு இயேசுநாதர் சங்கக் குருவால் 1600 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பதிவாக்கப்பட்டுள்ளன. இவை சாவுக்குரிய நிகழ்வுகளாக அமையவில்லை. ஏனெனில் யேசுநாதர் சிலுவையில் அனுபவித்த துன்பத்தை எடுத்துக்காட்டும் நோக்கில் அவர்கள் தங்கள் முன் கை, தொடை ஆகிய உறுப்புகளை எரித்துத் தாமும் வருந்தினர்.
தன்னினச் சேர்க்கை பாவச்செயலென்று பழித்துரைத்த ரோமன் கத்தோலிக்கச் சபையின் கொள்கையை எதிர்த்து Sə6ðLsBGBLAT ?j LDT60ố (8LT (Alfredo Ormando) 6T6ögpJLð எழுத்தாளன் வத்திக்கான் நகரிலுள்ள புனித பீற்றர் சதுக் கத்தில் 13-01-1998 அன்று தன்னைத் தானே உயிருடன் தீமூட்டி இறந்தான்.
வியட்நாம் யுத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் (ЗБПуш6ii Glorija:6ii (Norman Morison) 616 иш6).j 02-111965 அன்று ஐங்கோண மண்டபத்துக்கு வெளியே மண்ணெண்ணை ஊற்றித் தன்னைத் தானே தியிட்டு இறந்தார்.
இதன் பின்னர், 09-11-1965 அன்று இதே காரணத்திற்காக ரோகர் அலன் லாபோர்டே (Roger Alan Laporte) என்பவர் ஐக்கிய நாடுகளின் தலைமை அகத்தில் தன்னைத்தானே தீயிட்டு இறந்தார்.
செக்கோசுலோவியா மாணவர் யான் பலாச் (Jan Palach), uT6ër 69 Tefë (Jan Zajic), 6luTUTIf 616jGefsir (Evzen) ஆகியோர் செக்கோச்சுலோவியாமேல் 1968-ஆம் ஆண்டின் ஆகத்து மாதம் ருஷிய நாடு படையெடுத்ததை எதிர்த்து 1969-ஆம் ஆண்டு தம்மைத்தாமே தற்பலியிட்டு இறந்தனர்.

Page 38
54
+ பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
போலந்துத் தத்துவ ஞானி ரிசாட் சிவிக் (RySzerd Siwlec) போலந்துப் படையினரின் படையெடுப்பை எதிர்க்கும் நோக்கில் 1968-ஆம் ஆண்டின் செப்தம்பர் மாதம் தன்னைத் தானே பலியிட்டுக் கொண்டார்.
கங்கேரியர்-ரோமர் பொதுவுடைமைக் கொள்கை (19691970) நடப்பாட்சிக்கு அரசியல் எதிர்ப்பைத் தெரிவித்து, ab Hii 86 fuu TT GOT FT 6i 8Tj Lu Tsoj (Sandor Bauer) 616å Lu6uC5ub, udstff L-6å GudruflG&6mö (Marton Moyses) என்பவரும் தம்மைத்தாமே உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.
யோர்ஜ் வின்னி (George Winne) என்னும் கலிபோர்னியா பல கலைக்கழக மாணவன் வியட்நாம் யுத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 10-05-1970 அன்று றிவல்லி பிளாசா பல்கலைக்கழகம் அருகில் தன்னைத்தானே எரியூட்டி உயிர் நீத்தான்.
மாட்டின் லூதரைப் பின்பற்றும் ஒஸ்கார் புறுசிவிட்ஸ் (Oskar BrயSewitz) என்ற குருவானவர் கிழக்கு யேர்மன் பொதுவுடைமை நடப்பாட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தன்னைத்தானே 22-08-1976 அன்று உயிர்த் தியாகம் செய்தார்.
எசன் போகா (Esenboga) விமான நிலையத்தில் ஓர் அறையில் தங்கியிருந்த பயணிகள் மீது 1982 ஆம் ஆண்டில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதை எதிர்த்துத் துருக்கி - அமெரிக்கரான ஆர்டின் பெனிக் (Artin Penik) என்பவர் தீக்கொழுத்தி உயிர்துறந்தார்.
பொஸ்னியாவில் நடந்த யுத்த அட்டூழியங்களை மக்களின் தெரிநிலைக்குக் கொண்டுவருவதற்காக கிரகாம் பாம்போட் (Graham Bamford) என்பவர் பிரித்தானிய பொதுமக்கள் அவையின் முன் நின்று தன்னைத்தானே கல்லெண்ணையில் தோய்ந்துகொண்டு 29-04-1993 அன்று எரியூட்டி இறந்தார்.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 55
அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த பாகிஸ்தான் அகதியான ஷாராஷ் கயானி (ShahraZKayani) என்பவர் தன் மனைவி, புதல் விகளை அவுஸ்திரேலியாவுக்குள் அழைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏப்ரல் மாதம் 2001 ஆம் ஆண்டு கன்பெரா நாடாளுமன்றச் சபையின் படிகளில் நின்று தன்னைத்தானே எரியூட்டி இறந்துள்ளார்.
G6irst)(3LT56i (3LDfloorGoirigg)6igiT (Waldorf Maryland) to6. G6) TGA6i (369 IT (SL60ci 6i (Dean Lorenzo Turnbull) என்பவர் 09-08-2008 அன்று தன்வீட்டை நெருப்பு வைத்து, வெளியிலி வர மறுப்புத் தெரிவித்துத் தற்கொலை செய்துள்ளார்.
தூத்துக்குடியை வதிவிடமாகக்கொண்ட எழுத்தாளரும், ஊடகவியலாளருமான 28-அகவையான முத்துக்குமார் என்பவர் ஈழத்தில் தமிழருக்கு எதிராக நடந்து கொண்டி ருக்கும் சிங்கள அரசின் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தன்னைத் தானே கல்லெண்ணையில் தோய்ந்து கொண்டு 29-01-2009 அன்று சென்னையிலுள்ள இந்திய மத்திய அரசு செயலகத்தின் முன்பாகத் தீக்குளித்து உயிர் நீத்தார். மேலும் இதே காரணத்தை முன்வைத்துப் பின்வருப வர்களும் தம்மைத்தாமே தற்பலியட்டிக் கொண்டனர்.
* மதுரையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரவி என்பவரும் 31-01-2009 அன்று தீக்குளித்து எரிகாயங்களுடன் மதுரை அரசு மருத் துவக் கலி லுTரி மருத்துவமனையரிலி சேர்க்கப்பட்டு 02-02-2009 அன்று உயிர் நீத்தார்.
* சுமை ஊர்திச் சாரதியான 29 அகவையுடைய மலேசியத் தமிழ் இளைஞரான ஸ்டீபன் ஜெகதீசன் என்பவர் 02-02-2009 அன்று ஒரு சுமை ஊர்தியின் எதிரில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
* தமிழ் நாட்டின் நாகபட்டினத்தில் சீர்காழி காங்கிரசின் வட்டாரச் செயலாளரும், இரு பிள்ளைகளின் தந்தையும்,

Page 39
56 - + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
45 அகவைகொண்ட சீர்காழி ரவிச்சந்திரன் என்பவர் 0702-2009 அன்று மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளித்து உயிர் நீத்தார்.
* மலேசியாவில் வசிக்கும் ஈழத் தமிழா, 27 அகவையன் இராசா என்பவர் 06-02-2009 அன்று முனிசுவரர் கோயிலுக்கு முன்பாகத் தன்னைத்தானே தீக்குளித்து உயிர் நீத்தார்.
* நான்கு பிள்ளைகளின் தகப்பனும், 65 அகவையுடைய அமேசன் என்ற தமிழர் 08-02-2009 அன்று சென்னையில் சுங்கச்சாவடி பேருந்து நிலையம் எதிரில் தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளித்துச் சாவை அனைத்துக் கொண்டார்.
* பிரித்தானியாவை வாழ்விடமாகக்கொண்ட பட்டதாரியும், 26 அகவை கொணி ட முருகதாசன் என்ற தமிழர் சுவிற்சலாந்து சென்று 12-02-2009 அன்று சுவிற்சலாந்தின் ஜெனிவா நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் முன்பாகத் தன்னைத்தானே தீக்குளித்து உயிர் நீத்தார்.
* தமிழ்நாட்டின் கடலூரில் வாழ்ந்து வந்த ஒருவயதுக் குழந்தையின் தகப்பனான சோதி என்றழைக்கப்படும் 33 அகவைகொண்ட தமிழ் வேந்தன் 18-02-2009 அன்று தன்னைத்தானே மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளித்து உயிர் நீத்தார்.
* சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற சைதாப்பேட்டையைச் சேர்ந்த அறுபது (60) அகவையான திரு. சிவப்பிரகாசம் என்பவர் 20-02-2009 அன்று எரிபொருளைத் தன்உடலில் ஊற்றித் தீக்குளித்துச் சாவை அனைத்துக்கொண்டார்.
* இலங்கைத் தமிழராக, 1989-ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு அகதியாகச் சென்று இந்தியக் குடியுரிமை பெற்று, சிவகாமி-ஆணையூர் பஞ்சாயத்து ஐயம்பட்டியில் வசித்து வந்தவரும் , மூன்று பிள்ளைகளின் தந்தையுமான

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 57
பாலசுப்பிரமணியம் கோகுலரத்தினம் (அகவை 50) என்பவர் 25-02-2009 அன்று விருதுநகர் ஆட்சித் தலைவர் அலுவலகத் துக் கு முன் பாகத் தன் னைத் தானே மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளித்துச் சாவை அணைத்துக் கொண்டார்.
* வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளியம் பட்டி கரிராமத்தைச் சேர்ந்தவரும் (5 பிள்ளையரின் தந்தையுமான கூலித் தொழிலாளி திரு.சீனிவாசன் (அகவை 36) 26-02-2009 அன்று தனக்குத்தானே மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளித்து மருத்துவமனையிலி அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பயனளிக்காது 02-03-2009 அன்று சாவை அனைத்துக் கொண்டார்.
* மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலை கலாசார பீட முதலாம் ஆணி டிலி கலி வி பயிலும் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்ப் பகுதியைச் சேர்ந்த 23 அகவையுடைய தனபாலசிங்கம் நிருஷா என்ற மாணவி 03-03-2009 அன்று தன்னைத்தானே சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
* சென்னை ஓட்டேரி தோட்டம் 9-வது தெருவைச் சேர்ந்த இருபிள்ளைகளின் தந்தையும் 33 அகவையுமான திரு. சிறீதரன் என்பவர் 04-03-2009 அன்று தனக்குத் தானே மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளித்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பயனளிக்காது 05-03-2009 அன்று உயிர் நீத்தார்.
* கடலூர் முதுநகர் அருகேயுள்ள அன்னவல்லி மாரியம்மன் கோவிலி தெருவைச் சேர்ந்த 23 அகவையுடைய நாகலிங்கம் ஆனந்த் என்பவர் 1503-2009 அன்று உடலில் மண்ணெண்ணை ஊற்றித் தக் குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலுTர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட

Page 40
58 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
போதிலும் அது பலனளிக்காது 17-03-2009 அன்று சாவை அணைத்துக்கொண்டார்.
*அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனுர் கீழ் விதியைச் சேர்ந்த 24 அகவையுடைய இராசசேகர் என்பவர் தனக்குத்தானே மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளித்து ஆபத்தான நிலையில் தஞ்சை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பலனளிக்காது 17-03-2009 அன்று உயிர் நீத்தார்.
* புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களம் சிற்றுார், பவான் தெருவைச் சேர்ந்த 35 அகவையுடைய பால சுந்தரம் என்பவர் மண்ணெண்ணையில் தீக்குளித்து 2203-2009 அன்று உயிர் நீத்தார்.
* மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கலைப்பீட மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் 23 அகவையுடைய ரவீந்திரன் சுதர்சனா என்ற LDIT6006 தனக்குத்தானே மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளித்து 22-03-2009 அன்று உயிர் நீத்தார்.
* கரூர் அண்ணாநகர் வெங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த 46 அகவையுடைய சிவானந்தன் என்பவர் வடபழனி ரோட்டிலுள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்கருகில் தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளித்து 17-04-2009 அன்று உயிர் நீத்தார்.
* பண்டிருட்டியைச் சேர்ந்த 43 அகவையுடைய சுப்பிரமணி என்பவர் கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் 23-042009 அன்று தக் குளித்துச் சாவை அனைத்துக் கொண்டார்.
மேற்காட்டிய நிகழ்வுகள் மதப்பற்று, யுத்தம், படையெடுப்பு, அரசியல், பொதுவிடயம், சொந்தவிடயம் ஆகிய காரணங்களை வைத்து முன்பின் யோசிக்காது வேண்டாத் தற்கொலைகள் நடந்துள்ளதைச் சிந்தைக்கெடுக்க வேதனைகள் விஞ்சி வடிகின்றன. இவர்களுக்கு உயிரின்

நுனாவிலூர் கா. விசயரத்தினம் + 59
மதிப்பு அன்று தெரியவில்லை. அவர்களுக்கு அந்தநேர உணர்வு உயிரினும் மேலாகத் தொழிற்பட்டதால் தம்மைத்தாமே மாய்த்துக் கொண்டனர்.
ஒரு சமுதாயம் ஒரு வழக்கத்தைப் பல்லாண்டுகளாகப் பழக்கத்தில் வைத் தரிருந்தாலி அதை இலி லாதொழிக் கப் பல்லாயிரம் ஆண்டுகள் தேவைப்படும். இவ்வழியில் வந்தவைதான் உடன்கட்டையேறலும் தற்பலியுட்டலும் ஆகும்.
சட்டதிட்டங்களும் தண்டனைகளும்
உடன்கட்டையேறல் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நடந்ததற்கு ஏடுகள் உள்ளன. அந்தந்தக் காலப் பகுதிகளில் ஆட்சி புரிந்த அரசுகள் உடன்கட்டையேறுவதைத் தடைசெய்து சட்டங்கள் உருவாக்கித் தண்டனைகளும் விதித்தனர். இருந்தும் இச்செயலை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.
0 சீக்கிய மதத்தினர் பெண்கள் உடன்கட்டையேறுவதை 1500-ஆம் ஆண்டில் தடை செய்து சட்டம் கொண்டு வந்தனர்.
0 போர்ச்சுக்கல் அரசு 1515-ஆம் ஆண்டில் கோவா நாட்டில் பெண்கள் உடன் கட்டையேறக் கூடாது என்று ஒரு தடையுத்தரவுச் சட்டத்தைக் கொண்டுவந்தது.
0 முகலாயர் (Mயghal) அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள நாடுகளில் உளர் ள எப்பெணி னாவது தன் னைத் தானே எரியூட்டிக் கொள்ள அனுமதிக்கக் கூடாதென்று தன் அதிகாரிகளுக்கு 1663 ஆம் ஆண்டில் அவுரங்க் செப் (Aயrangzeb) என்ற ஆளுநர் உத்தரவைப் பிறப்பித்தார்.
9 டச்சும், பிரான்சு அரசுகளும் பாண்டிச்சேரி, சின்சுறா நாடுகளில் உடன்கட்டை ஏறுவதற்குத் தடை விதித்தனர்.
0 பிரித்தானிய அரசு கல்கத்தாவில் 1798-ஆம் ஆண்டில் பெண்கள் உடன்கட்டை ஏறுவதற்குத் தடை விதித்தனர்.

Page 41
60
+ பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
ஆளுநர் பிரபு வில்லியம் பென்டின்ங்க் (Governor Lord William Bentinck) 6T6iru6) 04-12-1829 96ing 6lriss6II மாகாணத்தில் பெண்கள் தம் உயிரைப் பலியாக்கக் கூடாதென்று ஒரு தடையுத் தரவை விதத் தார். இத்தடையுத்தரவை எதிர்த்து நீதி மன்றில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு, அதன்பின் அது பிரித்தானிய அரசப் பேரவைக்கும் சென்று அங்கு அது 1832-ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பிரித்தானிய ஆட்சியினர் 1846-ஆம் ஆண்டில் யெய்பூர் மாநிலத்தில் உடன்கட்டை ஏறலுக்குத் தடை விதித்தனர்.
1829 ஆம் ஆண்டில் பிரித்தானிய குடியேற்றம் சார்ந்த அதிகாரக் குழு உடன்கட்டை ஏறுவதற்குத் தடைச் சட்டம் கொண்டுவந்தனர்.
இந்திய அரசு 1987-ஆம் ஆண்டின் திசெம்பர் மாதம் உடன்கட்டை ஏறும் வழக்கச் செயலை ஒரு சட்டமூலம் தடை செய்தனர். தன்னைத்தானே பலியிடத் துணியும் பெண்மேல் சட்ட மீறல் குற்ற வழக்குத் தொடர்ந்து 12 மாதம் சிறையிடவும் அல்லது அபராதம் சுமத்தவும் இச் சட்டம் இடம் வகிக்கிறது. பலியிடுதலில் பெண் ஒருத்தி இறந்துவிட்டால் அவளின் மிக அண்மையான உறவினர் பின்நின்று தூண்டிவிட்ட தற்கொலைக் குற்றத்திற்காகச் சட்டமீறல் குற்றவழக்கும் தொடரலாம்.
உடன் கட்டையேறும் (தடுப்பு) ஆணைச் சட்டம் (1987) இவ்வாறு பொருள் வரையறை கூறுகின்றது: "இறந்த கணவனுடன் கைம்பெண்ணையோ, வேறு இனத்தவரையோ, வேறு பெண்களையோ அவர்களின் விருப்புடன்தானும் அவர்களை உயிருடன் எரிக்கவோ புதைக்கவோ முடியாது.
இதில் ஒன்றை நாம் அவதானிக்க முடிகின்றது. கைம்பெண்ணுக்குப் பதிலாக வேறு பெண்களைப் பணம் கொடுத் தோ, ஆசை வார் தி தைகள் காட் டியோ

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 61
உடன் கட்டையேறலி நிகழ்ந்தபடியால் இவ்வாறான கட்டுப்பாட்டுடன் சட்டம் எழுந்தது போலும் . இராச வம்சத்தில் மன்னருக்குப் பல அரசிமார், ஆசைநாயகியர், காதலியர், காமக்கிழத்தியர், வைப்பாட்டிமார் எனப் பல மனைவியர் உளர். மன்னன் இறந்தவிடத்து அவன் மனைவியர் எல்லாரும் உடன்கட்டையேறினரா? என்பது சந்தேகமே. இவர்கள் பணம் படைத்தவர்கள். அதிகாரம் தம்கையில் உள்ளவர்கள். எனவே தமக்குப் பதிலாக வேறு பெணிகளுக்குப் பணமூட்டை கொடுத் து உடன்கட்டையேறச் செய்திருப்பர்.
9 உடன் கட்டையேறுவது தொடர்பிலி இந்தியாவின் ஆட்சிப்பொறுப்பில் இருந்த பிரித்தானியரின் கருத்தைத் தளபதி நபியர் (Napier) மூலம் கூறிய உரையிற் காணலாம்:
* கைம்பெண்ணை உயிருடன் எரிப்பது உங்கள் வழக்கம் என்று கூறுகிறீர்கள். எங்களுக்கும் ஒரு வழக்கம் உள்ளது. நீங்கள் ஒரு பெண்ணை உயிருடன் எரித்தால் நாங்கள் உங்களின் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டித் தூக்கில் இட்டு விடுவோம். நீங்கள் ஈமச்சிதையை மூட்டுங்கள். அதற்கருகில் என்னுடைய மரவேலை செய்பவர் ஒரு தூக்குமேடை அமைப்பர். நீங்கள் உங்கள் வழக்கத்தை நடத்துங்கள். அதே நேரம் நாங்கள் எங்கள் வழக்கத்தை நடத்துவோம்.”
இந்திய அரசு 01-10-1987 அன்று ‘இராசஸி தான் உடன்கட்டை ஏற்றத்தடுப்பு உரிமைக் கட்டளை (1987) என்ற சட்டத்தை இயற்றியபின் “உடன்கட்டை ஏற்றத் தடுப்பு ஆணைப்பத்திரச் சட்டம் (1987) என்பதையும் அங்கீகரித்தது. இச்சட்டத்தின்படி உடன்கட்டையேறுவதற்கு தூண்டிவிடல், உடன்கட்டையேற முயற்சித்தல், கட்டாயப் படுத்தல், உடன்கட்டையேற நிர்ப்பந்தித்தல் ஆகியவற்றுக்கு மரணதண்டனை அல்லது வாழ்நாள் சிறையும் விதிக்கலாம். உடன் கட் டையேறுவதைப் புகழ் பாடிப் போற்றும்

Page 42
62
+ பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
குற்றத்திற்கு ஓர் ஆண்டிலிருந்து ஏழு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கலாம்.
கணவன் இறந்துவிட் டான் . மனைவியானவள் உடன்கட்டையேறுவதற்குத் தன்கணவன் சிதையில் ஏறிப் படுத்து விட்டாள். இறந்தவனின் மகன் கொள்ளிவைக்க வருகின்றான். இதில் மகன் தன் தாயை உயிருடன் எரிக்கும் காட்சியைக் காண்கின்றோம். இன்னும் இதில் பங்கேற்ற நூற்றுக் கணக்கான மக்கள் கூட்டம் சூழ்ந்து நின்ற இன்னொரு காட்சியும் தெரிகின்றது. இதைத் தற்கொலை என்று கூறவா? அல்லது தியாகப் ഖിധ என்று கருதவா? அன்றேல் கொலை என்று கணிக்கவா? உயிர் போனபின் எதில் சேர்த்தாலென்ன?
உடன்கட்டையேறலுக்கு எழுந்த எதிர்ப்புகள்
பெண்கள் உடன்கட்டையேறுவதற்கு அமோக வரவேற்பிருந்தாலும்
ஒரு சில தனியார், இயக்கங்கள், சமயத்தவர், சீர்திருத்தவாதிகள், சில குழுக்கள் ஆகியவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் காலத்துக்குக் காலம் எழுந்தன.
உடன் கட் டையேறுவதற்கு ஆழ் வார்கள் எட் டாம் நூற்றாண்டில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு வீர சைவ இயக்கம் 12 ஆம் 13 ஆம் நூற்றாண்டுகளில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
வங்க நாட்டுச் சீர்திருத்தவாதியான ராஜா ராம் மோகன் y Tu (Raja Ram Mohan Roy) 6T6i u61j 1812-sid ஆண்டில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தடை செய்யவேண்டுமென்று வாதாடினார். இவரின் மைத்துணி உடன் கட்டை ஏறியதைக் கண்டு தரிகிலடைந்தார். கல்கத்தா சவச்சாலைக்குச் சென்று கைம்பெண்களைச் சந்தித்துக் குழுக்களை உருவாக்கி இது பற்றி எழுதியும் வந்தார்.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 63
0 பிரித்தானிய குடியேற்றம் சார்பான அதிகாரக்குழு ஒன்றும் 1829-ஆம் ஆண் டில் இச் செயலை நாணயமற்ற, நேர்மையற்ற, இரக்கமற்ற செயலெனக் கூறியுள்ளது.
0 முகம்மதிய சமயம் இதைக் காட்டுமிராண்டிச் செயல் என்று கண்டித்தது. முகம்மதிய அரசுகளும் இதைத் தடைசெய்ய நடவடிக்கை எடுத்தன.
0 சீக்கியரின் முதற் குருவான நானக் (Namak) குரு என்பவர்
இச் செயலை எதிர்த்துப் பேசியுள்ளார்.
கைம்பெண் மறுமணம்
கணவனை இழந்த கைம்பெண்கள் மறுமணம் புரியலாமென்று 1856-ஆம் ஆண்டிலிருந்து சட்டம் அனுமதிக்கின்றது. இதற்குமுன் அவர்கள் மறுமணம் செய்வதை அரசும், சமூகமும் அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகின்றது. வயது முதிர்ந்த கைம்பெண்கள் மறுமணம் செய்யாதிருப்பது நியாயம். ஏன்ெனில் அவர்களைப் பார்க்க அவர்தம் பிள்ளைகள் உள்ளனர். ஆனால் பிள்ளைகள் இல்லாத இளம் வயதினரான கைம்பெண்களை மறுமணம் செய்யவிடாது கைம்மை நோன்பிருந்து தம்வாழ்நாள் முழுவதும் இன்னலுடன் இருந்து அழுந்தவேண்டுமென நாம் எதிர்பார்க்கக் கூடாது. இவர்களின் வயது, உணர்வு, அழகு ஆகியவற்றால் இவர்களுக்கு இடைஞ்சலும், இன்னலும், ஆபத்தும் என்றும் உண்டு. ஆண் வர்க்கமும் சும்மா இருந்துவிடாது. மனைவி இறந்தால் கணவன் மீண்டும் திருமணம் செய்யலாம். ஆனால் கணவன் இறந்தால் மனைவி மறுமணம் செய்யக்கூடாது. இஃது ஆணாதிக்கம் உருவாக்கிய கட்டளை. நாமும் வாழ்வோம்; அவர்களையும் வாழவிடுவோம் என்ற உயர் எண்ணம் பார் முழுக்க உதிக்கவேண்டும். மேற்காட்டிய சட்டம் இளம் கைம்பெண்களுக்கு வானத்தில் மின்னும் நட்சத்திரமாய் அமைந்து, அவர்கள் இப்பூவுலகில் சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டுமென்ற பேரவா யாவர் மனத்திலும் உதிக்கவேண்டும் என்று பிரார்த்திப்போம்.
(լplգ6)յ60J
இதுகாறும் கணவன் இறந்தபொழுதே மனைவியும் உயிர்நீத்த *முதானந்தம்” என்ற நிலை, மனைவியானவள் கணவன் தீச்சிதையில்

Page 43
64 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
ஏறித்தானும் உடன் கட்டையேறும் “பாலை நிலை, மனைவி உடன்கட்டையேறாது தவம்புரிந்து கைம்மை நோன்பிருக்கும் °தாபத” நிலை, தொல்காப்பியம், புறநானூறு, மணிமேகலை, மனுநீதி நூல், விஷ்ணு சுமிருதி நீதிநூல், கருடபுராணம், ரிக் வேதம் ஆகிய நூல்கள் கூறும் செய்திகள், உடன்கட்டையேறுவது தொடர்பில் சில நிகழ்வுகள், தற்பலியூட்டல் தொடர்பான செய்திகள், அரசுகள் விதித்த சட்டதிட்டங்கள், தண்டனைகள், உடன்கட்டையேறலுக்கு எழுந்த எதிர்ப்புகள், கைம்பெண்கள் மறுமணம் புரியலாமென்ற சட்டம் ஆகியவைபற்றி மேலே விரிவுபடுத்திப் பார்த்தோம்.
பிறக்கும் உயிரனைத்தும் வாழத்தான் விரும்புகின்றன. ஒருயிராவது இறக்க விரும்பமாட்டா. மனிதர்கள் அனைவரும் பிறந்து, வளர்ந்து, சீவித்துச் சிங்காரித்து, வாழ்நாளின் இன்பும் கண்டு, வயோதிக நிலையடைந்து, நியதியான மரணமடைவதையே விரும்புவர். இதில் மனிதனின் நிலை சற்று வேறுபட்டது. அவன் ஆசை, விருப்பு, அன்பு, ஆவல், உணர்வு, பாசம், வாஞ்சை, இனப்பற்று போன்றவற்றை வெளிப்படுத்தி வாழ்பவன்.
பிறந்தவர் வளர்ந்து, பாடசாலை சென்று கல்வி கற்று, உத்தியோகத்தில் சேர்ந்து, திருமணம் புரிந்து, பிள்ளைகள் பெற்று, பெற்றோரைப் பார்த்து அவர் கடமைகள் செய்து, தம் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டி, அவர்களுக்கும் திருமணம் நிகழ்த்தி, பேரப்பிள்ளைகளைக் கண்டு, கோயில் குளம் சென்று, தள்ளாத வயதடைந்து, பல்வேறு நிலைகளில் நின்று சாவதையே பெருவாழ்வென்று எல்லோரும் கூறுவர்.
திருமணம் புரியும் வயதுதான் ஆண் பெண் வாழ்வின் ஓர் உச்ச நிலையானது. இதற்குமுன் அவர்களுக்குக் காதல் மலரும். அவர்கள் இன உணர்ச்சியில் உத்வேகம் அடைவர். ஒருவரை ஒருவர் விரும்பிக் காதல் கொள்வர். ஆசைகள், திட்டங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியன அவர்கள் மேனிமுழுக்கப் படர்ந்துவிடும். பெண்கள் தம் ஆசைகளை வெளிப்படுத்தாது அடக்கி வாசிப்பர். குறிக்கோளும் நிதானமும் அடைவர். ஒரு சில ஆண்டுகள் சந்தித்துக் கதைத்துத் திட்டங்கள் தீட்டுவர். இதன்பின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிகழும். பெற்றோர் சம்மதம் கிட்டாதாயின் திருமணம் நிகழாமலும் போகலாம். அல்லது காதலர்கள் பெற்றோரை விடுத்துத் தாமே இருவரும் திருமணம் செய்வதும் உண்டு.

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 65
இவ்வண்ணம் திருமணம் நிகழ்ந்து சில நாளில் கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டையேற வேண்டுமா? இ."து என்ன கொடுமை? அவள் புரிந்த குற்றம்தான் என்ன? அவன் இறந்தான்; அதற்கு இவள் எப்படிப் பொறுப்பாவாள்? அவள் மனத்தால் சமைத்த கோட்டையை யார் அறிவார்? வாழ்வின் வசந்தம் காணத்துடித்தவளுக்கு இதுவா தண்டனை? இத் தண்டனையை உருவாக்கியவனும் ஆண்தான். சகபத்தினி அல்லவா அவள். அவளுக்கு ஏற்படும் இன்னலை நினைந்து துடிக்கவேண்டிய ஆண் இவ்வாறான கொடுமை நிறைந்த தண்டனையை விதித்தானே? யாரை அவள் நோவாள்? பேசா மடந்தையாய் கணவன் தீச்சிதையில் ஏறி எரியுண்டு தன்னைத்தானே மாய்த்துக் கொண்டாளே! இது ஓர் அவச்சாவென்று தெரியவில்லையா? இப் பூமியில் அறம் எங்கே? தர்மம் எங்கே? உடன்கட்டையேறல் முன்னையைவிடத் தற்பொழுது மிகக் குறைந்த, அளவிலேயே காணப்படுகின்ற போதிலும் ஒரு சில நிகழ்வுகள்
இந்திய நாட்டின் கிராமப்புறங்களில் நடந்தவண்ணம் உள்ளனவே?
உடன் கட்டை ஏறலுக்குப்பின் எழுந்தது தற்பலியூட்டல். தற்பலியூட்டலாவது ஒரு செயல்வடிவை முன் வைத்துத் தன்னைத் தானே பலியிட்டிறத்தலாகும். உடன்கட்டையேறல், தற்பலியூட்டல் ஆகிய இரண்டும், தமது உயிரைப் பலியாக்கிக் கொள்வதே. முன்னதில் கைம்பெண்கள் மாத்திரம் பங்கேற்றுத் தமதுயிரைத் துறப்பர். பின்னதில் ஆண், பெண். ஆகிய இருபாலாரும் பங்கேற்றுத் தம்மைத்தாமே பலியிட்டு இறப்பர். இவ்வண்ணம் உயிர் துறப்போர் அவரவரின் அந்தந்தநேர மனநிலை திடமின்மையாய், துவண்டு, கலங்கி, குலைந்து, உணர்ச்சி வேகமடைந்து, சுயநிலை குன்றிய பொழுதில் இச்செயலில் இறங்கிவிடுகின்றனர். அவர்கள் உணர்ச்சி வேகம் குன்றியவிடத்து, மனநிலை மாற்றமடைந்து இச்செயலிலிருந்து பலர் வெளியே வந்துவிடுவர். தற்பொழுது உடன்கட்டையேறுவோர் எண்ணிக்கை மிகக் குறைந்து காணப்பட்டாலும், தற்பலியூட்டல் நிகழ்வுகள் பெருகிக்கொண்டு போவதை நாம் அவதானிக்கக் கூடியதாய் உள்ளது.
உயிர் என்றால் என்ன? அது எங்கிருந்து வந்தது? அதன் தன்மை என்ன? அதற்கு உருவம் உண்டா? நிறம் உண்டா? நம்மால் அதைப் பார்க்க முடியுமா? ஒன்றும் தெரியாத திகில் நிலையில் நாம் உள்ளோம். ஆனால் அது நம் உடலோடு இணைந்து இருப்பதாகக் கூறப்படுகின்றது.

Page 44
66 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
நம்மோடு பல்லாண்டுகளாக இருந்தாலும் அதை நம்மால் பார்க்கவோ கதைக்கவோ முடியவில்லையே! இது ஒரு வாங்குபொருளாயின் அதை வாங்கிப் பொருத்தி மகிழ மனிதக் கூட்டம் தயார்நிலையில் உள்ளது. மேலும் உயிர் நம்மைவிட்டு எப்பொழுது பிரிந்துவிடும் என்பதும் தெரியாது. அது எங்கே போகின்றது என்பதும் தெரியாது. இவை தெரிந்துவிட்டால் மனித வாழ்வில் பல சிக்கல்களும், பெரும் அட்டூழியங்களும் நிரம்பி வழிந்தோடும். உயிருக்கு இரு முக்கிய சிறப்புண்டு. முதலாவது சிறப்பு:- உயிர் உடலுடன் ஒட்டி வாழ்ந்தாலும், அது ஒருவித உறவுமின்றித் தனித்தியங்கும். இரண்டாவது சிறப்பு:- உடலைவிட்டு எந்நேரத்தில் பிரியப்போவதென்பதை உயிர் முன்கூட்டியே சொல்லாதது ஒரு தனித்துவம்.
உடன் கட்டையேறல, தற்பலியட்டலி ஆகிய இரண்டும் அவச்சாவும், வேண்டாச்சாவும் ஆகும்s:வாழவேண்டியவர்கள் விணே மடிகின்றார்களே! இனி நாம் நம்முயிரை மாய்க்காது. வாழ்ந்துகாட்டி, நாட்டுக்கும் மக்களுக்கும் உதவி, உலகத்துக்கும் உறுதுணையாய் இருக் கதி தரிடசித் தம் கொள்ள வேண் டும் . இன் றே தொடங்குவோம்.
(கொழும்பு - வீரகேசரி வார வெளியீட்டில் 19.04.2009, 26.04.2009, 03.05.2009, 10.05.2009, 17.05.2009, 24.05.2009 & 31.05.2009

67 ܛ
குெரல்காப்பியர் காடும் பண்டைத் குமிழர் வாழ்க்கை நெறி
இன்று நம் மத்தியில் தாண்டவமாடும் சாதிப் பிரிவினையும், சீதனக் கொடுமையும் தொல்காப்பியர் காலத்தில் இல்லை.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்.
தொல்காப்பியம் என்னும் அரிய இலக்கிய இலக்கண நூலை “ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றப்படுபவரும் தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) ஐயாயிரம் (5,000) ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவருமான தொல்காப்பியனார் பாடி அருளினார். இந்நூல் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் உயிர் நூலாய் நம் மத்தியில் உலா வருகின்றது. இந்நூலை யாத்த தொல்காப்பியனார் தலைச் சங்க இறுதியிலும் இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவருமாவார்.

Page 45
68 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
“இடைச் சங்கத் தாருக்கும் கடைச் சங்கத் தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்” என்பது நக்கீரனாரின் கூற்றாகும். “தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்” என்று டாக்டர் மு. வரதராசனார் கூறியுள்ளார். தொல்காப்பியனார் ஒரு காப்பியக்குடியில் தோன்றியவர் என்றும், அவர் இயற் பெயர் தொல்காப்பியர் எனவும் சான்றோர் கூறுவர். வேறு சிலர் இவரின் இயற்பெயர் “திரனதுாமாக்கினி’ எனவும், "சமதக்கினியாரின் புதல்வர்” எனவும் கூறுவர். குறுமுனி அகத்தியனாரின் பன்னிரு மாணாக்கர்களுள் முதல் மாணவன் தொல்காப்பியனார் எனவும் ஒரு கூற்றுண்டு. இன்னும், இவர் பரசுராமரின் உடன் பிறந்தவரென்றும் ஒரு கதையுமுண்டு.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது ஒன்பது இயல்களாக ஒருமித்து 27 இயல்கள் உள்ளன. எழுத்ததிகாரத்தில் 483 சூத்திரங்களும், சொல்லதிகாரத்தில் 463 சூத்திரங்களும், பொருளதிகாரத்தில் 656 சூத்திரங்களுமாக ஒருமித்து 1,602 சூத்திரங்கள் தொல்காப்பியத்தில் உள்ளன. ஆனால், இந்நூற் சூத்திரங்கள் 1,595 என இளம்பூரணரும், 1,611 என நச்சினார்க்கினியரும் வகுத்து உரையெழுதியுள்ளனர். இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், கல்லாடர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகியோரும் இன்னும் பலரும் தொல்காப்பிய நூலுக்கு உரை எழுதியுள்ளனர். இவற்றுள் இளம்பூரணர் உரை ஒன்றே காலத்தால் முற்பட்டதும், முற்றாகக் கிடைப்பதும் ஆகும். இனி மேற்காட்டிய விடயம் தொடர்பில் தொல்காப்பியரின் செய்திகளையும் காண்போம்.
தமிழ்நாட்டு எல்லை
வடக்கே திருவேங்கட மலையும், தெற்கே குமரியாறும், கிழக்கு மேற்குத் திசைகளில் கடலாகவும் அமைந்த எல்லைப் பரப்பே ஆசிரியர் தொல்காப்பியர் காலத்துத் தமிழ்நாடு என்றழைப்பர். ஆனால், தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் வழங்கிய பனம்பாரனார் கடல் எல்லைகளைக் குறிக்கவில்லை. அவர் பாயிரம் இவ்வாறு தொடங்குகின்றது.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 69
*வடவேங்கடந் தென்குமர்
ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து
梦罗
பனம்பாரனாரின் பாயிரத்தில் ஒரு சிறப்பு அம்சம் அமைந்திருப்பதை நாம் காணலாம். இங்கே ஆசிரியர் ஒரு விடயத்தை - அதாவது கிழக்கு, மேற்குத் திசைகளில் கடல் எல்லையாக அமைந்துள்ளதென்பதைச் சொல்லாமற் சொல்லிப் போகின்றார். வடக்கே நீண்ட தொடர் வேங்கட மலை. தெற்கே பாய்ந்தோடும் குமரியாறு. இது கடல் வரை சென்று சங்கமிக்கும். எனவே, கடல் எல்லையைக் கூறாமற் கூறியுள்ளார். இன்னும், வேங்கட மலைக்கும், குமரியாறுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு என்று குறிப்பிடுவது கிழக்கு, மேற்குத் திசைகளில் கடல் எல்லைவரை உள்ள நிலப்பரப்பே தமிழ் கூறும் நல்லுலகமாகும் என்பது தோன்றா நிற்கும்.
ஏழு திணைகள்
நம் பண்டைத் தமிழர் இயற்கையோடு இணைந்து, பிணைந்து, ஒன்றறக் கலந்து, மகிழ்ந்து, இன்புற்று வாழ்ந்து வந்தனர். மேலும் நிலம் பற்றிக் கூறுகையில், திருமால் காக்கும் காடாகிய முல்லை இடமும், முருகவேள் காக்கும் மலையாகிய குறிஞ்சி இடமும், இந்திரன் காக்கும் வயலாகிய மருதம் இடமும், வருணன் காக்கும் பெரு மணலான நெய்தல் இடமும், முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முன்னோர்களால் மொழியப்பட்ட பெயர்கள் எனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறுகின்றது.
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.”
- (பொருள். 05)
தொல்காப்பியர் காலத்திற்கு முன் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்கள் இருந்துள்ளமை தெளிவாகின்றது. ஆனால் காலப்போக்கில் முல்லையும், குறிஞ்சியும் முறைமுறை திரிந்து,

Page 46
70 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
நல்லியல்பு இழந்து, வெம்மையால் வளமை குன்றிப் போயுள்ள நிலத்தைப் *பாலை” எனப் பெயரிட்டனர். இதன் பின்தான் நால்வகை நிலங்கள், ജുഖങ്ങ5 நிலங்களாகவும், ஐந்திணைகளாகவும் பெயர் பெற்றன. பாலை பிறந்த கதையைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகின்றது.
“முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து
நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப், பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும். ”
- (காடுகாண் காதை, 64 - 66)
முதற்பொருள்
முதற்பொருள் எனப்படுவது நிலமும், பொழுதும் ஆகிய இயற்கையென உலகவியலை அறிந்தோர் கூறுவரெனச் சூத்திரம் கூறும்.
“முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.
- (பொருள். 04)
33
நிலம் என்பது முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐவகை நிலங்களாக வகுக்கப்பட்டவையாம். பொழுது என்பது அந்த ஐவகை நிலம் சார்ந்தோருக்கு இன்ப உணர்வினைக் கொடுக்கின்ற பெரும்பொழுதும், சிறுபொழுதும் ஆகிய இரண்டுமாம்.
இன்னும், பெரும்பொழுதில் கூதிர், முன்பணி, வேனில், பின்பணி, வைகறை, கார் ஆறு பருவங்கள் ஆகிய காலமும், சிறுபொழுதில் யாமம், நண்பகல், மாலை, எற்பாடு பொழுது, விடியல் ஆகிய பொழுதும் அடங்கும். இனிச் சூத்திரம் கூறும்
IITIt also)6OTub BFTaoir (Sunrib.
* காரும் மாலையும் முல்லை. * - (பொருள். 06)
குறிஞ்சி, * கூதிர் யாமம் என்மனார் புலவர். ” - (பொருள். 07)
* பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப.
- (பொருள். 08)

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 71
*வைகறை விடியன் மருதம். ” - (பொருள். 09)
எற்பாடு
“நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்.
- (பொருள். 10)
yy
“நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே. ”
- (பொருள். 11)
* பின்பணி தானும் உரித்தென மொழிப.”- (பொருள். 12)
நம் பண்டைத் தமிழர் நிலத்தை ஐவகைகளாக வகுத்து, அதற்குப் பெரும் பொழுதும், சிறு பொழுதும் அமைத்து, அவற்றுக்கு இதமான காலப்பகுதிகளும் கணித்து, அததற்கேற்ற இன்ப உணர்வுகளோடு ஒட்டி, உறவுகொண்டு பெரு வாழ்வு பெற்றனர் என்பது தெள்ளத் தெளிவாகின்றது.
பண்டைத் தமிழர் வாழ்வியலை அகம், புறம் என வகுத்து இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டியுள்ளனர். புறம் புறவாழ்வியலோடு இணைந்த ஆண்மை, வீரம் பற்றி எடுத்துக் கூறும். அகம் அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றி விபரிக்கும். மேலும் இதை ஒருதலைக் காமம் எனவும், அன்புடைக் காமம் எனவும், பொருந்தாக் காமம் எனவும் மூன்று பகுதிகளாக்கி அவற்றை முறையே கைக்கிளை எனவும், அன்பின் ஐந்திணை எனவும், பெருந்திணை எனவும், ஒருமித்து ஏழு திணைகளை ஆன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்தில் இவ்வண்ணம் அமைத்துள்ளார்.
“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.” - (பொருள். 01)
அன்பின் ஐந்திணை
முலி லைத் திணை, குறிஞ்சித்தரிணை, பாலைத் திணை, மருதத்திணை, நெய்தல்திணை ஆகியவற்றை அன்புடைக் காமம் என்றும் அன்பின் ஐந்திணை என்றும் கூறுவர். இதில் குறிஞ்சியில் - புணர்தலும், முல்லையில் - இருத்தலும், பாலையில் - பிரிதலும்,

Page 47
72 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும் ------
மருதத்தில் - ஊடலும், நெய்தலில் - இரங்கலும் போன்ற செய்திகளைத் தொல்காப்பியம் இவ்வாறு கூறும்.
“புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.” (பொருள்.16)
ஐந்திணைகளுக்கும் நிலம் அமைந்துள்ளமை காண்க. இருத்தல் - தலைமகன் வரும்வரையும் ஆற்றியிருத்தல். இரங்கல் - ஆற்றாமை,
கைக்கிளை
கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம். (கை - பக்கம், கிளை - உறவு). இதை ஒவ்வாக் காமம் என்றும் கூறுவர். கைக்கிளை புணரா நிகழ்ச்சியாகும். கைக்கிளைக்கு நிலம் ஒதுக்கப்படவில்லை.
தாழ்வான ஒழுக்கங்களான காமவுணர்ச்சி தோன்றாத சிறிய பெண்ணிடத்துப் பாதுகாவல் இல்லாதபொழுது துன்பமுற்றுப் புகழ்தலும், பழித்தலும் ஆகிய இருசெயல்களாலும், தனக்கும், அவளுக்கும் சார்பானவற்றைச் சேர்த்து, அவள் சொற்கேளாமல் தானே சொல்லி இன்பமடைதல், பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு ஆகுமென்று தொல்காப்பியர் சூத்திரம் அமைத்துள்ளார்.
“காமஞ் சாலா இளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. ”
- (பொருள். 53)
பெருந்திணை
பெருந்திணை என்பது ஒருவனும் ஒருத்தியும் ஒருவர்க்கொருவர் அன்பின்றிக் கூடி வாழும் முறையாகும். இதைப் பொருந்தாக் காமம் என்றும் கூறுவர். பெருந்திணை புணர்ந்த பின்னான நிகழ்ச்சியாகும். பெருந்திணைக்கும் நிலம் ஒதுக்கப்படவில்லை.

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 73
ஆண்மகனுக்கே உரிய மடலேறுதல், இளமை நீங்கி முதுமைக் காலத்தும் ஆசை மிகுதியால் தம்முள் கூடி இன்பம் துய்த்தல், தெளிவற்ற நிலையில் காமத்தின் கண் மிகுதிப்பட்டு நிற்றல், ஐந்திணையாகிய ஒத்த காமத்தின் மாறுபட்டு நிற்றல் ஆகிய நான்கும் பெருந்திணை எனத் தொல்காப்பியம் கூறும்.
"ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடும் தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.”
-(பொருள். 54)
பெருந்திணை தாழ்வான ஒழுக்கங்களைச் சார்ந்தது. இளமை தீர்திறம்" என்பது தலைவன் முதியவனாகித் தலைவி இளையவளாதலும், தலைவி முதியவளாகித் தலைவன் இளையவனாதலும், இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கிய பின்பும் அறத்தின்மேல் மனம் நாடாது காமத்தின்மேல் மனம் நாடலும் ' என்னும் மூவகையாம்.
களவொழுக்கம்
பூமிப் பந்தாகிய உலகம் படைக்கப்பட்டதன் நோக்கம் அங்கு வாழும் அனைத்து உயிரினங்களின் இன்பம் கருதியேயாம். மனிதன் இன்பமுற்று வாழ்ந்தால் உலகமே இன்ப மயமாகி விடும். அவனின்றேல் உலகம் காடுதான். மனித வாழ்வுதான் உலகமாகின்றது.
- இன்பம், பொருள், அறம் என்று கூறப்பட்ட அன்புடனிணைந்த ஐந்திணையில் (கைக்கிளை, பெருந்திணை நீங்கிய ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்) நிகழும் காமக் கூட்டமானது எட்டு வகை மணத்துள் அமைந்த யாழினையுடைய காந்திருவரது கூட்டத்தை ஒத்தது போலாகும் என்று களவொழுக்கத்தைப் பற்றித் தொல்காப்பியர் சூத்திரம் அமைத்துள்ளார்.
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டங் காணுங் காலை

Page 48
74 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழத் துணைமையோர் இயல்பே
- (பொருள். 89)
9.
மணம் எட்டாவன: (1) அசுரம், (2) இராக்கதம், (3) பைசாசம், (4) காந்திருவம், (5) பிரமம், (6) பிரசாபத்தியம். (7) ஆரிடம், (8) தெய்வம் ஆகியனவாம். இவற்றுள் அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய மூன்றும் கைக்கிளையைச் சாரும் என்று சூத்திரம் கூறும்.
“முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே.
- (பொருள். 102)
இன்னும், மேற்காட்டிய எண் வகை மணத்துள் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்கும் பெருந்திணையைச் சாரும் என்று தொல்காப்பியம் கூறும்.
yy
“பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே.
- (பொருள். 103)
எண்வகை மணத்துள் எஞ்சிய காந்திருவம் ஐந்திணைக்குரியதாம். ஐந்திணையோடு பொருந்தி வரும் யாழோர் கூட்டம், சிறப்புற்ற ஐவகை நிலத்தையும் பெற்றதனால், யாழோர் கூட்டம் ஐந்தெனப்படுமாம். நிலமும், காலமும் முதல் எனக் கூறப்பட்டுள்ளது. ஐவகைக் கூட்டமாவன:- களவு, கற்பு, உடன் போக்கு, இற்கிழத்தி, காமக்கிழத்தி காதற்பரத்தை என்பனவாம்.
“முதலாகு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே.” - (பொருள.104)
இவ்வண்ணம் எண்வகை மணத்தையும் ஏழு திணைகளுக்கும் வகுக்கப்பட்டமை காண்க.
களவொழுக்கக் காலவரை
களவொழுக்கத்தில் ஈடுபட்டுள்ள பொழுது தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்திருக்கும் வழக்கம் இல்லை. களவுக் காதல் தெய்விகமானது. அவ்வண்ணமே அன்றைய காதலர்கள் கருத்தொருமித்துச் செயற்பட்டனர்.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 75
இருந்தும், தலைவன் தலைவியரிடையே தோன்றிய களவின் காலவரையை இரண்டு மாதம்தான் நிகழுமென்று இறையனார் களவியலில் வரையறை வகுக்கப்பட்டுள்ளது.
“களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம் திங்கள் இரண்டின் அகமென மொழிப." - (நூற்பா. 32)
தலைவன் தலைவியரிடையே ஒரு தவறும் நடந்தேறிவிடக் கூடாதென்ற பேரவாக் கொண்ட பழந்தமிழறிஞர் இவ்வாறான வரையறையை வகுத்துள்ளமை போற்றற்கு உரியதாகும்.
கற்பொழுக்க நெறி
தலைவன் தலைவியர் களவொழுக்கம் வெளிப்படுதலும், தமரின் மூலம் திருமணம் செய்து கொள்ளுதலும் என்று கூறப்பட்ட இவைமுதலாகிய இயற்கை நெறியில் மகிழ்தலும், புலத்தலும், ஊடலும், ஊடல் தீர்த்தலும், பிரிதலும் என்று சொல்லப்பட்டவற்றுடன் கூடிவருவது கற்பு என்று கூறப்படும்.
“மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்
இவைமுத லாகிய வியனெறி திரியாது மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே.
- (பொருள். 488)
gg
அம்பலும் அலரும்
தலைவன் தலைவியர் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது களவு வெளிப்படுதலுமுண்டு. இது 'அம்பல்', 'அலர்' என இருவகையால் வெளிப்படும். அம்பல் என்பது சொல் நிகழா முகிழ்நிலைப் பரவாக் களவாகும். அலர் என்பது சொல் நிகழ்தலான பரவிய களவாகும். இவ்விரண்டிற்கும் தலைவனே பொறுப்பாவான் என்று கூறும் தொல்காப்பியம். தலைவி இவற்றிற்குப் பொறுப்பாகாள் என்றவாறு.
“அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின் அங்கதன் முதல்வன் கிழவ னாவான்.” (பொருள். 137)

Page 49
76 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இரண்டிலும் தலைவன் தலைவி ஈடுபட்டிருக்கும் பொழுது அலர் (பழி) தூற்றுதல் நிகழ்வதுண்டாம். தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து, பரத்தையை நாடிச் சென்று, அவளுடன் சேர்ந்து ஆடல், பாடல் நிகழ்த்தி, ஆற்றிலும், குளத்திலும் நீராடி மகிழ்தலும், அலர் பரவலுக்குக் காரணமாம்.
*களவுங் கற்பும் அலர்வரை வின்றே.” - (பொருள். 160)
“கிழவோன் விளையாட் டாங்கும் அற்றே.”
- (பொருள். 162)
கற்பும் கரணமும்
கரணம் என்பது சடங்கொடு கூடிய மணநிகழ்வு, சடங்கோடு கூடிக் கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவன், கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவியைக் கொடுத்தற்குரிய தலைவியின் தமர் மணஞ்செய்து கொடுக்கும் முறையைக் கற்பென்று சிறப்பித்துக் கூறுவர். இது கொண்டு கொடுக்கும் முறையாம்.
கற்பு, கரணம், கிழவன், கிழத்தி, கொளற்குரி மரபினர், கொடைக்குரி மரபினர், கொண்டு, கொடுத்து என்பன நிரல் படுத்திக் கற்பொடு பொருந்திய மணவிழாவினைக் காண்க.
“கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே." - (பொருள். 140)
தலைவியும் தலைவனும் அன்பினாற்கூடி ஒன்றுபட்டுச் சேர்ந்து சென்ற பொழுதும் , கொடுத் தற்குரிய தலைவியின் தமர் இல்லாதவிடத்தும், சடங்கோடுகூடிய மணநிகழ்வு நடைபெறுதலும் உண்டாம். இவ்வண்ணம் கரணத்தின் சிறப்பு கூறப்பட்டமை காண்க.
“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான." - (பொருள் 141)

நுனாவிலூர் கா.விசயரத்தினம் + 77
நால்வகை வகுப்பினரான அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியவர்களிடையே கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்த காலமொன்று அன்று இருந்தது. அதன்பின் மேலோர் என்று சொல்லக்கூடிய அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவகை வகுப்பாரிடையே கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்தது.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே.
- (பொருள். 142)
தொல்காப்பியர் காலத்துக்கு முன்னர் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகுப்பாரிடையில் கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்ததென்பதும், தொல்காப்பியர் காலத்தில் அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவகுப்பாரிடையில் கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்ததென்பதும், வேளாளர் தமக்குள் மாத்திரம் மணவினை நிகழ்த்தினரென்பதும் புலனாகின்றது. இன்று இம்முறைகள் யாவும் அருகி மறைந்துவிட, நால்வகுப்பினரும் தத்தமக்குள் கொண்டு, கொடுத்து, மணவினை காண்கின்றனர்.
நால்வகுப்பின மக்கள்
இன்னும், நம் பண்டைத் தமிழ் ஆன்றோர் தம்இன மக்கள் அனைவரையும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வகுப்பினரில் அடக்கி, அரசர்களிலும் பார்க்க அந்தணர்க்கு முதலிடம் அளித்து, இரண்டாமிடத்தில் அரசரை அமர்த்தி, மூன்றாம் நான்காம் இடங்களில் முறையே வணிகர், வேளாளர் ஆகியவர்களை நிறுத்தி, அரசன் கையில் செங்கோல் கொடுத்து, மக்களை மாண்புடன் வாழவைக்கும் முறையினை அமைத்தமை காண்க.
மேலும், இன்று நம் மத்தியில் தாண்டவமாடும் சாதிப் பிரிவினையும், சீதனக் கொடுமையும் தொல்காப்பியர் காலத்தில் இருக்கவில்லை என்பதும் தெளிவாகின்றது. நாம் தொல்காப்பியர் வழியில் நிற்கின்றோமா? - இது ஒரு விடையற்ற கேள்வி.

Page 50
78 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
ஐயர் யாத்த கரணம்
தலைவன் தலைவியைக் கண்டு, காதல் கொண்டு, சிலநாட் பழகி, பல நாள் மறைந்தொழுகி, பின் நானறியேன் என்று பொய் கூறுதலும், குற்றப்பட ஒழுகுதலும் மக்கள் வாழ்வில் மங்கா வடுக்களைத் தந்து வாழ்க்கை முறைகளைச் சீரழித்து விடுகின்றன.
தலைவன் தலைவியரிடையே பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோரும், சான்றோரும் சடங்குகளை வகுத்து, வரையறைகளை அமைத்தனர்.
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப. ” - (பொருள். 143)
'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்’ என்று வரும் கூற்றால், பொய்யும் வழுவும் தோன்றாக் காலமொன்றிருந்தமை புலனாகின்றது. அக்காலம் தொல் காப்பியர் காலத்துக்கு முற்பட்டதென் பதும் தெளிவாகின்றது.
பொய்யாவது செய்ததனை மறுத்து நிற்றல். வழுவாவது செய்ததை அதன் கண் நில்லாது தவறி ஒழுகுதல். கரணத்தொடு செயற்படின் பொய்யும், வழுவும் நிகழாவாம். இவ்வண்ணம் கரணம் வேண்டுவதாயிற்று. இன்றும் நாம் கரணத்தொடு கூடிய திருமணம் நடாத்துகின்றோம்.
களவிற் கூற்று நிகழ்த்தற்குரியோர்
பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, தலைவன், தலைவி ஆகிய அறுவகையோரும் களவிற் கூற்று நிகழ்த்தற்குரியோராவர் என்று கூறும் சூத்திரம் இது.
“பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியொடு அளவியன் மரபின் அறுவகை யோரும் களவியற் கிளவிக் குரியர் என்ப. ” - (பொருள். 490)

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 7
கறபிற் கூற்று நிகழ்த்தற்குரியோர்
பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் ஆகிய அறுவருடன் சிறப்பினையுடைய பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி கிழவன், கிழத்தி ஆகிய அறுவரையும் சேர்த்துப் பன்னிருவரும் கற்பிற் கூற்று நிகழ்த்தற்கு உரியோராவார்.
களவிற் கூற்று நிகழ்த்த அறுவரையும், கற்பிற் கூற்று நிகழ்த்தப் பன்னிருவரையும் நியமித்தமை, கற்பின்மேல் அன்றுள்ள ஆன்றோர் காட்டிய கட்டுப்பாட்டினைக் காண்கின்றோம்.
“பாணன் கூத்தன் விறலி பரத்தை
யாணஞ் சான்ற அறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பில் பார்ப்பான் முதலா முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத் தொன்னெடு மரபிற் கற்பிற் குரியர். " - (பொருள் 491)
ஒத்த பத்து வகைப் பண்புகள்
பண்டைத் தமிழர்கள் மணவாழ்க்கைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்துப் பத்து வகைப் பண்புகளில் தலைவனும் தலைவியும் ஒத்திருக்க வேண்டுமென விதிகள் அமைத்துள்ளனர்.
அவையாவன: (1) ஒத்த பிறப்பும், (2) ஒத்த ஒழுக்கமும், (3) ஒத்த ஆண்மையும், (4) ஒத்த வயதும், (5) ஒத்த உருவும், (6) ஒத்த அன்பும், (7) ஒத்த நிறையும், (8) ஒத்த அருளும், (9) ஒத்த அறிவும், (10) ஒத்த செல்வமுமாம். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்தில் பார்ப்போம்.
“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. ”
(பொருள். 269)
இப்படியான பத்து (10) வகைப் பண்புகள் ஒத்திருக்கும் தலைவன் தலைவியரிடையே அன்று திருமணம் நிகழ்த்தப்பட்டு அவர்கள் சீரும்,

Page 51
80 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
சிறப்பும் அமைந்த இல் வாழ்க்கையை நடாத்தி இன்புற்றிருந்தனர். இன்று நாம் திருமணத்துக்குமுன் பதினான்கு (14) வகைப் பொருத்தங்கள் பார்த்து மணவிழா நடாத்துகின்றோம். அவையாவன: (1) நட்சத்திரப் பொருத்தம், (2) கணப் பொருத்தம், (3) மகேந்திரப் பொருத்தம், (4) ஸ்திரிதிர்க்கப் பொருத்தம், (5) யோனிப் பொருத்தம், (6) இராசிப் பொருத்தம், (7) இராசியதிபதிப் பொருத்தம், (8) வசியப் பொருத்தம், (9) இரச்சுப் பொருத்தம், (10) வேதைப் பொருத்தம், (11) புத்திரப் பொருத்தம், (12) ஆயுள் பொருத்தம், (13) விருச்சப் பொருத்தம், (14) நாடிப் பொருத்தம் என்பனவாம். இன்றுள்ள பதினான்கு வகைப் பொருத்தங்கள் அன்றிருந்த பத்து வகைப் பொருத்தங்களிலிருந்து எவ்வண்ணம் மாறுபட்டுப் போயுள்ளன என்பதை மேலே பார்த்தோம்.
தலைவனின் ஊர்திகள்
தலைவன் தலைவியர் காதல் வலையிற் சிக்குண்டனர். தலைவன் தலைவியை நாடிச் செல்வது வழக்கம். தேர், யானை, குதிரை முதலியவற்றிலும், பிறவற்றிலும் தலைவன் விரைந்து சென்று தலைவியைக் கூடுதலும் உண்டென்று சூத்திரம் அமைத்தவர் தொல்காப்பியனார்.
“தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப.” - (பொருள் 209)
தலைவன் ஒருவனிடம் தேரும், யானையும், குதிரையும் பிற ஊர்திகளும் உண்டென்பது அவனின் சிறந்த பொருளாதார நிலையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இன்னும் அவன் நாட்டுச் செழிப்பும் அவ்வண்ணம் அமைந்துள்ளமையும் புலனாகின்றது.
(Լplգ6)յ60Մ
இதுகாறும் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலிருந்து தமிழ் நாட்டின் எல்லை, ஏழு திணைகள், முதற் பொருள், அன்பின் ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை, களவொழுக்கம், களவொழுக்கக் காலவரை, கற்பொழுக்க நெறி, அம்பலும் அலரும், கற்பும் கரணமும், நால்வகுப்பின மக்கள், ஐயர் யாத்த கரணம், களவிற் கூற்று நிகழ்தற்குரியோர், கற்பிற்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 81
கூற்று நிகழ்தற்குரியோர், ஒத்த பத்துவகைப் பண்புகள், தலைவனின் ஊர்திகள் ஆகியவை பற்றி விரிவுபடுத்திப் பார்த்தோம்.
இன்னும், ஐந்திணையில் அவரவர் ஐவகை நிலத்திற்கேற்ற ஒத்த காம உணர்வு, எழுச்சி, நெகிழ்ச்சி ஆகியவற்றோடு ஒன்றறக் கலந்து, இணைந்து, பிணைந்து இயற்கையுடன் வாழ்க்கை நடாத்திய பண்டைத் தமிழரின் பண்பினை தொல்காப்பியர் தொகுத்துக் காட்டிய சூத்திரங்கள் யாவும் ஏழாயிரம் (7,000) ஆண்டுகளாக வலிமை பெற்று இந்நாளிலும் உயிருடன் உலா வருகின்றதை நினைந்து அன்னாரின் வழித்தோன்றலாகிய நாம் அவர் தந்துள்ள செய்திகள் அனைத்தையும் கட்டிக் காத்துப் பேணி அடுத்த சந்ததியினருக்கு விட்டுப் போவது நம்மனைவரின் 85L60)LDUIII (95b. S.
DDD

Page 52
82 --
விளைவுகளும்
திருமணம் என்றால் என்ன? அது ஏன்? எவ்வண்ணம் நிகழ்த்தப்படுகின்றது? திருமண முறைகள் ஒன்றா? அல்லது பலவா? இதனால் பலனுண்டா? அன்றேல் தீமையுண்டா? மணவாழ்வை எவ்வண்ணம் நடாத்தல் வேண்டும்? யார் பொறுப்பில் இது அமைய வேண்டும்? கணவன் தலைமையேற்க வேண்டுமா? அன்றேல் மனைவி தலைமை தாங்க வேண்டுமா? இவ்வாறான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றிற்கான விடைகள் காண்பது முக்கியம். இவைபற்றிச் சற்றே ஆராய்வாம்.
திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையில் நிகழும் தனிப்பட்ட ஓர் உறவு இணைப்பான நெருங்கிய பாலீடுபாடாகும். இதை நாட்டரசும், சமயபீடங்களும், திருமணச் சட்டங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. இவ்விணைப்பைத் திருமணவினை என்பர். இதற்குமுன் நிகழ்த்தும் சமயச் சடங்கை விவாகம் என்று கூறுவர். திருமணம் ஒரு மணவாழ்வு ஒப்பந்தமாகும். படைப்பின் அந்தமாய் ஆண், பெண் உள்ளனர். இவர்களுக்குப் பதின்மூன்று, பதினைந்து அகவையளவில் காதல் மலரும். ஆண் தனக்கு வேண்டியதும், தன்னிடம் இல்லாததுமான ஒன்று
 

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 83
பெண்ணிடமிருப்பதை உணர்ந்து அதை நாடி நிற்கின்றான். அதுதான் பெண் மை. இதேபோல் பெண் தனக்கு வேல்ை டியதும், தன்னிடமில்லாததுமான ஒன்று ஆணிடமிருப்பதை உணர்ந்து அதை வேண்டி நிற்கின்றாள். அதுதான் ஆண்மை. இவ்வண்ணம் ஆண் பெண்மையையும், பெண் ஆண்மையையும் வேண்டி ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டுப் பின்னாளில் சடங்கோடு கூடிய திருமணம் நடாத்தப்பட்டுக் கணவன் மனைவி ஆவர்.
தொல்காப்பியம்
தொல் காப்பியர் காலத்தில நிலவிய மணமுறை இவ்வாறமைந்திருந்தது. தலைவன் தலைவியரிடையே பொய் கூறுதலும், குற்ற உணர்வுடன் ஒழுகுதலும் தோன்றிய பின்னர், சான்றோரும் ஆன்றோரும் (ஐயர்) “கரணம்’ என்னும் சடங்கினை வகுத்துக் கொடுத்தனர். பொய்யும், வழுவும் தொல்காப்பியர் காலத்தில் தோன்றியுள்ளதென்பதும், தொல்காப்பியர் காலத்துக்குமுன் பொய்யும், வழுவும் தோன்றாக் காலமென்பதும், அக்காலத்தில் தலைவன் தலைவியர் அன்பினாற் கூடி இன்புற்ற வாழ்க்ன்க நடாத்தினரென்பதும் இச்சூத்திரத்தால் புலனாயிற்று.
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப. " - (பொருள். 143)
கரணம் என்னும் சடங்கு நிகழ்வோடு கொள்ளுதற்குரிய மரபின் தலைவனை, அதே மரபின் தலைவியைக் கொடுப்பதற்குரிய மரபின் தலைவியின் தமர் (பெற்றோர்,உற்றார்) மணம் செய்து வைப்பதைக் கற்பென்று கூறுவர். இது மரபுவழி நின்ற மணமுறை. இதைக் கற்பு மணம் என்றும் கூறுவர்.
* கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.
(பொருள். 140)
s
தலைவி பெற்றோரை விட்டுத் தலைவனுடன் ஒன்று சேர்ந்து போகுமிடத்தும், கொடுப்பதற்குத் தலைவியின் தமர் இல்லாதவிடத்தும்,

Page 53
84 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
சடங்கு முறையோடு கூடிய மணம் நடைபெறுதலும் உண்டாம். தொல்காப்பியர் காலத்தில் பார்ப்பான் இடம் பெறவில்லை.
“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான” - (பொருள். 141)
நால்வகை வகுப்பினரான அந்தணர், அரசர், வைசிகர், வேளாளர் ஆகியவர்களிடையே கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்த காலமொன்று அன்று இருந்தது. அதன்பின் மேலோர் என்று சொல்லக்கூடிய அந்தணர், அரசர், வைசிகர் ஆகிய மூவகை வகுப்பாரிடையே கொண்டு, கொடுத்து மணவினை நிகழ்ந்தது. வேளாளர் தமக்குள் மணவினை நிகழ்த்தினர். இதனைத் தொல்காப்பியனார் இவ்வண்ணம் சூத்திரம் அமைத்தமை காண்க.
“மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே.
- (பொருள். 142)
s
அகநானூறு
கடைச் சங்கக் காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் தமிழரின் பண்டைய திருமணமரபு பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. பந்தர் இட்டு, தரையில் வெண்மணல் பரப்பி, மனை விளக்கேற்றி, எங்கும் பூமாலை தொடுத்து, மணப் பறையுடன் முரசம் ஒலித்து, புத்தாடை அணிந்து, நல்லவேளை வந்ததும், தலையில் நீர்க் குடமும், கைகளில் புதிய மண் கலயங்களும் தாங்கி, திருமணம் நடாத்துபவராகிய மகனைப் பெற்ற தேமல் படர்ந்த வயிற்றினையுடைய மங்கல மகளிர்கள் நால்வர் பூக்களையும், நெல்லையும் நீருடன் கலந்து தலைவியின் தலையில் தூவி, அவளை மங்கல நீராட்டி வதுவை மணமும் நிகழ்த் தி “கற்பில் வழுவாது, நல்லவை உதவி, உன்னை மனைவியாகப் பெற்ற கணவனைக் காக்கும் துணைவியாவாயாக!” எனக் கூறி வாழ்த்தி நின்றனர்.
அதன் பின்னர், தலைவியின் தமர் (பெற்றோரும், உற்றாரும்) விரைந்து வந்து “பெரிய இல்லக் கிழத்தி ஆவாய்” என்று கூறித் தலைவியைத் தலைவனிடம் கொடுத்தனர். அதன்பின் உழுத்தம் பருப்புப்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 85
பொங்கலும், நெய்யில் ஊறிய இறைச்சியோடு கலந்த வெண்சோற்றையும் மணவினை காணவந்தோர்க்குக் கொடுத்தனர். இங்கும் பார்ப்பான் பங்கு இடம் பெறவில்லை என்பது நோக்கற்பாலது. அன்று மகளிர் முன்நின்று திருமணம் நடாத்தினர் என்பதையும் காண்கின்றோம். இப் பாடலை நல்லாவூர் கிழார் என்ற புலவர் பாடியுள்ளார்.
“உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால் தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி, மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக், .
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென, உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர், பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்,
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று வால்இழை மகளிர் நால்வர் கூடிக், “கற்பினின் வழாஅ, நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆக” - என நீரொடு சொரிந்த ஈர்இதழ் அலரி
பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணம் கழிந்த பின்றைக், கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து, ‘பேர்இற் கிழத்தி ஆக” எனத் தமர்தர: ஓர்இற் கூடிய உடன்புணர் கங்குல், . " - (அகம் 86)
( களிமிதவை- குழைதலையுடைய. வதுவை நன்மணம்குளித்துவிட்டபின் நிகழ்வது. உடன் புணர்தல்- கூடிப்புணர்தல்.)
மேலும், திருமணம் பற்றிய இன்னொரு செய்தியை அகநானூற்றில் உள்ள 136 ஆவது பாடலையும் பார்ப்போம். இப் பாடலை விற்றுாற்று மூதெயினார் என்ற புலவர் பாடியுள்ளார்.
குற்றம் இல்லாத நெய்யில் ஊறிய இறைச்சியோடு கலந்த வெண்சோற்றை மணவினை காணவந்த உயர்ந்தோர்க்குக் குறைவின்றிக்

Page 54
86 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
கொடுத்து, உரோகிணி கூடியதனால் எல்லாக் குற்றமும் நீங்கிய சுபநேரத்தில் மணவீட்டினை அலங்கரித்து, கடவுளை வணங்கி, மணப் பறையுடன் பெரிய முரசம் ஒலிக்க, தலைவியை நீராட்டிய மங்கல மகளிர் தம் கூரிய கணி களால் இமைதி து நோக்கிவிட்டு விலக, வாகையிலையையும் அறுகின் முகையையும் ஒன்றுசேர்த்துக் கட்டிய வெண்ணுாலைச் சூட்டி, தூய ஆடை உடுத்தி, மணப்பந்தலில் ஒன்றுகூடி, மழைச் சத்தம் போன்ற மணவொலி கூடிய பந்தரிலே, ஆபரணங்கள் அணிவித்த சிறப்பினால் ஏற்பட்ட வியர்வையைத் துடைத்து, பெற்றோர் (தமர்) நமக்கு இற்கிழத்தியாகத் தந்த தலைநாள் இரவின் கண். என்று வதுவை மணம் நடந்தேறி முடிகின்றது.
“மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப், . சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்,
கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப், படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ, வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப், பூக்கணும் இமையார் நோக்குபு மறைய, மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை,
பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத் . தண்நறு முகையொடு வெந்நூல் சூட்டித், தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
மழைபட் டன்ன மணன்மலி பந்தர்,
இழைஅணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித்
தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின், .
- (அகம். 136)
(மைப்பு-குற்றம். புழுக்கு-இறைச்சி. புரையோர்-உயர்ந்தோர். சகடம்உரோகிணி. கடிநகர்-மணவீடு. பரூஉப்பணை-பெரிய முரசம். பூக்கண்கூரிய கண். மேவர-விருப்பம். துவன்றி-ஒன்றுகூடி பெயர் வியப்பு ஆற்றிஎழுந்த வியர்வையைத் துடைத்து. )

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 87
மேற்காட்டிய இரு மணவிழாவில், பந்தல் போட்டு அலங்கரித்தல், பெருஞ் சோறு அளித்தல், நல்ல நாள் நேரம் பார்த்தல், கடவுrை வணங்குதல், மணப் பறையுடன் முரசம் ஒலித்தல், வெண்ணுாலைச் சூட் டு, புத்தாடை அணிதல், மங்கல மகளிர் வாழ்த்தல், தமர் அளித்தல் ஆகியன நிகழ்ந்துள்ளன. இதில் பார்ப்பான் பங்கு இங்கும் இடம் பெறவில்லை என்பது நோக்கற்பாலது.
மனு நீதி நூல்
“மனு’ என்பவர் எழுதிய ‘மனு ஸ்மிருதி’ என்ற தர்மசாத்திர நூல் ஒரு சிறந்த சட்ட நூலாகக் கருதப்படுகின்றது. இது கிறித்துவுக்கு முற்பட்ட நூலென்று சிலரும், கிறித்துவுக்குப் பிற்பட்ட நூலென்று வேறு சிலரும் கூறுவர். எனவே இதன் காலம் பற்றித் தெளிவில்லை. எனினும் கி.மு. 200 ஆம் ஆண்டளவில் எழுந்த நூலென்பது பலரின் கருத்தாகும்.
திருமணம் தொடர்பில் மணமகன் ஒருவன் தான் விரும்பும் ஒரு மணமாகா மங்கைக்குரிய ஒத்துக்கொண்ட பணத்தைக் கொடுத்து, அவளைத் திருமணம் செய்யும் முறை ஒன்றை மனு நீதிச் சாத்திரம் கூறுகின்றது. அதாவது ஒரு பெண்ணுக்குரிய விலையை அவள் பெற்றோருக்குக் கொடுத்துவிட்டு அவளை விலைக்கு வாங்கிவந்து திருமணம் செய்து கொள்வது.
உஒரு மணமாகா மங்கையைக் காட்டி வேறொரு பெண்ணைக் கொடுத்தால், அந்த மணமகனுக்கு இவ்விரு பெண்களையும் முன்
பேசிய அதே விலைக்குத் திருமணம் செய்து கொள்ளலாம்.
-(LDgp 6ðLólögó VIII : 204)
9 ஒரு கன்னிப் பெண்ணின் திருமணம் தொடர்பான கொடைப் பணத்தைக் கொடுத்தவர் இறந்தால், அப் பெண்ணின் சம்மதத்துடன் பணம் கொடுத்தவரின் சகோதரனுக்கு அவளைத் திருமணம் செய்து வைக்கலாம். - (மனு ஸ்மிருதி IX : 97)
சிலப்பதிகாரம்
இனி இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தில் திருமணம் பற்றி எவ்வாறு பேசப்படுகின்றது என்பதையும் காண்போம்.

Page 55
88 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
ஆண்டு 16 அகவையான் கோவலனுக்கும் ஆண்டு 12 அகவையாள் கண்ணகிக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களின் பெற்றோர்கள் முடிவு செய்தனர். யானைமீது மகளிரை அமரச் செய்து புகார் நகரெங்கும் திருமணச் செய்தியை அறிவிக்க வைத்தனர். இது அக்கால வழக்கம் போலும். திருமண நாளன்று திருமண மண்டபத்தில் முரசு முழங்கின, மத்தளம் அதிர்ந்தன, சங்குகள் மங்கல ஓசை எழுப்பின, அரசன் ஊர்வலம் வருவதுபோல் வெண்கொற்றக் குடைகள் ஊர்வலமாக எழுந்து பூம்புகார் வீதியூடாக மாலைகள் தொங்கும் வயிரமணித் தூண்கள் நிறைந்த மண்டபத்தில் நுழைந்து, நீலப்பட்டினால் அமைந்த முத்துப் பந்தரில், வானில் உறையும் மதியமானது உரோகிணியைச் சேரும் நல்வேளையில், வானத்து அருந்ததி போன்ற கற்புடைய கண்ணகியை மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட, கோவலன் மணம் புரிந்து, இருவரும் தீவலம் வந்த காட்சியைக் கண்டோர் வியப்பால் பூரித்து நின்றனர். இங்குதான் பார்ப்பான் திருமண வைபவத்தில் முதன்முதலாகப் புகுந்த முறை கண்டீர்.
இருபெரும் குரவரும், ஒருபெரு நாளால், மணஅணி காண, மகிழ்ந்தனர்; மகிழ்ந்துழி, யானை எருத்தத்து, அணியிழையார், மேல் இரீஇ மாநகர்க்கு ஈந்தார் மணம்.
அவ்வழி, முரசு இயம்பின; முருடதிர்ந்தன; முறை எழுந்தன பணிலம்;
வெண்குடை அரசு எழுந்ததோர் படி எழுந்தன; அகலுள் மங்கல அணி எழுந்தது.
மாலை தாழ் சென்னி வயிரமணித் தூணகத்து, நீலவிதானத்து, நித்திலப்பூம் பந்தர்க் கீழ், வானூர் மதியம் சகடு அணைய, வானத்துச் சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன், மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை
- (I: 41-53)

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 89
கலிங்கத்துப் பரணி
கலிங்கத்துப் பரணியைக் கவிச் சக்கரவர்த்தி சயங்கொண்டார் பாடியுள்ளார். இதில் பாட்டுடைத் தலைவன் முதற்குலோத்துங்க சோழமன்னன் (கி.பி.1070 - 1120) ஆவான். இவனின் படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமான் எய்திய கலிங்க வெற்றியே சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியைப் பாடுவதற்குக் காரணமாம்.
பரணியில் குலோத்துங்க மன்னன் போர்க்களம் இறங்கினான். பகையரசர் படைகள் அஞ்சிப் பின்வாங்கி ஓடின. இப்படித் தோற்றோடிய பகையரசர்களின் வெற்றி மகளைக் குலோத்துங்க மன்னன் கடிமணம் புரிந்து கொண்டான். இதைக் கண்ணுற்ற தோற்றோடிய அரசர்கள் தங்களுடைய குதிரைகள், ஆண் யானைகள், பொருட்குவியல்கள் ஆகியவற்றைக் குலோத்துங்க மன்னனுக்குச் சீதனப் பொருட்களாகக் கொடுத்தனர்.
*சரி களம்தொறும் தங்கள்`சயமகள்
தன்னை மன் அபயன் கைப் பிடித்தலும் பரிகளும் களிறும் தன ராசியும் பாரிபோகம் கொடுத்தனர், பார்த்திபர். " - (256)
( பாரிபோகம் - சீதனப் பொருள். )
நூறு ரூபாவில் திருமணம்
மேலும், இந்தியாவில் மலைப்பாங்கான ஒரு சிறு கிராமத்தில் மணமாகா ஆண் ஒருவன் மணமாகா ஒரு பெண்ணை நூறு (100) ரூபா கொடுத்து வாங்கி வந்து அவள் ஆறு மாதக் கர்ப்பவதியாகிய பின்னர்தான் திருமணம் நடாத்தும் முறை உள்ளது. இதில் ஐயர், தாலி, மேளம், தாளம் என்பன இல்லாத திருமணம் ஆகும். அலங்கரித்த திறந்த வெளியில் மக்கள் வட்டமாக நின்று ஆடிப்பாட, மணமக்களை நடுவில் இருத்திப் பெரியோர் மணவினை நடாத்தி வைப்பர். பெண் கர்ப்பம் தரியாதவிடத்துத் திருமணம் நடைபெறமாட்டாது. இம்மணவிழாவினை இரண்டாயிரத்து ஒன்பதாம் (2009) ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்தேன்.

Page 56
90 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
திருமணமும் பின் விளைவுகளும்
‘ஒருத்திக்கு ஒருவன்: ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது தமிழர் மத்தியில் ஒரு தாரக மந்திரம். இது நல்வாழ்வுக்கு நன்று. திருமணம் தொடர்பில், காதல் வயப்பட்டு அன்பினாற் கூடிய திருமணம், சடங்கு முறையில் நடாத்தப்படும் திருமணம், மங்கல நீராட்டிய வதுவை மணம், கண்டதும் கடிமணம், சடங்கு முறையற்ற இரு மனம் ஒத்த காந்தருவ மணம், பன்மனை மணம் (ஒன்றுக்கு மேற்பட்ட ரினைவியர்), பல கணவருடைமை (ஒன்றுக்கு மேற்பட்ட கணல சம்மதத்துடன் பெண்ணைக் கடத்தி மணம் புரிதல், வன்முறை னம், ஓரினப்பால் திருமணம், பதிவுத் திருமணம், வலுக்கட்டாயத் திருமணம் போன்றன நிகழ்கின்றன.
இன்னும் திருமணமாகாத ஒரு சில இருபாலாரும் கணவன் மனைவியர்போல் வாழ்ந்து காட்டி மணமானவர்களுக்கு உரிய கூடிய அரசுக் கொடுப்பனவுகளையும் பெற்றுத் திருமணமாகாமலே குழந்தைகளையும் பெற்றுப் பின்னர் இருவரும் விரும்பினால் திருமணம் புரிந்தும், விரும்பாவிடின் பிரிந்து சென்றும், குடியுரிமையற்றோர் ஒப்பந்தத் திருமணத்தால் குடியுரிமை பெற்றும் வருவதை நாம் வாழும் பிரித்தானியாவில் காண்கின்றோம்.
*ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள்” என்பர். திருமணம் நடந்து தொண்ணுறு நாளில் காதலும், ஆசையும், மோகமும் பறந்து போகும். இனி என் செய்வதென்று கலங்காதீர். ‘அன்பு’ என்றொரு பண்பு உண்டு. அது எவர்க்கும் கை கொடுக்கும். அன்பு என்பது என்றும் வற்றாதது. நிலைத்து நெடுகாலம் ஓடக்கூடியது. எனவே கணவர் மனைவியர் ஒருவர்மேல் ஒருவர் அன்பு வைத்து நடந்தால் சீரிய இன்ப வாழ்வைப் பெறலாம்.
கணவன் மனைவியரிடையில் பிரச்சினை ஏற்படுவது சாதாரணம். இவற்றைத் தொடக்கத்தில் இருவரும் சேர்ந்து மனம் திறந்து கதைத்துத் தீர்க்க வேண்டும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும், விட்டுக் கொடுத்தும் நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும். நடந்தேறிய தவறுக்கு மன்னிப்புக் கோரவேண்டும். அதை மற்றவரும் மன்னித்துவிட வேண்டும். ஏட்டிக்குப் போட்டி போட்டால் பின்விளைவுகள் விபரீதமாகித் துன்பம் அனுபவிக்க வேண்டி நேரிடும்.

நுனாவிலூர் கா.விசயரத்தினம் + 91
மனைவியானவள் புகுந்த வீட்டில் கணவன், மாமி, மாமா, நாத்தனார் போன்ற மற்றவர்களையும் கவனிக்க வேண்டிய பொறுப்புள்ளவளாய் உள்ளாள். மாமி, மருமகள் முறுகல்கள் நாடறிந்த கதை. இதைத் தணிக்கச் சிலர் தனிக்குடித்தனம் போவர். அப்படியிருந்தும் மாமி விட்டு வைக்க மாட்டாள். ‘என்ரை மோனை தலையணி மந்திரமல்லோ சொல்லி மயக்கி விட்டாள்’ என்று கூறிச் சண்டை போடும் மாமியர் பலர் உளர். இதில் மாமா நல்ல பிள்ளை, ஒன்றிலும் தலையிடமாட்டார். மனைவியானவள் பக்குவமாய்ச் செயலாற்ற வேண்டும். அன்றேல் கணவனின் அன்பையும் பகைக்க வேண்டி வரும்.
திருமணம் நடந்ததும் கணவன் குழந்தை வேண்டுமென்று ஆசைப்பட மனைவி பின்பார்ப்போம் என்று கூறுவது வழக்கம். இதில் பிரச்சினைக்குரிய இருவரும் கலந்தாலோசித்து ஒரு முடிவெடுக்க வேண்டும். கணவன் மனைவியர் தமக்குள் ஒளிவு மறைவின்றிச் சேர்ந்து கதைத்துச் செயலாற்ற வேண்டும். கணவன் மனைவி இருவரும் உத்தியோகம் புரிபவர்களாயின் வீட்டு வேலைகளை இருவரும் சேர்ந்து செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் ஒருவர்மேல் ஒருவருக்கு நம்பிக்கை ஏற்படும். வீட்டில் இருக்கும் மனைவி வேலையால் வரும் கணவனை இன்முகம் காட்டி, தேனீர், சிற்றுண்டி கொடுத்து உபசரித்து, அன்று வீட்டில் நடந்தவற்றைக் கூறி, அவனைச் சந்தோசத்தில் ஆழ்த்தி வந்தால் அவர்கள் இல்லற வாழ்வு சிறப்படையும்.
அன்று கூட்டுக்குடும்ப வாழ்வுமுறை நிலைத்திருந்தது. திருமணம் செய்பவர்கள் தாய், தந்தை, சித்தி, சித்தப்பா, மாமன், மாமி ஆகியோருடன் வாழ்ந்தனர். அவர்கள் தேன்நிலவும் வீட்டில்தான் நடந்தது. தம்பதிகளின் குறை நிறைகளைத் திருத்தி வைக்கப் பக்கத்தில் பலர் இருந்தனர். இன்று தனிக் குடித்தனம் என்று தனித்துத் தூரப்போய் சிக்கற்படுபவரும் உளர். சங்ககாலத்தில் தலைவியுடன் என்றும் தோழி, செவிலி, பாங்கி, பரத்தை, பாடினி போன்ற பலரும், தலைவனுடன் என்றும் பாங்கன், பார்ப்பான், பாணன், கூத்தன் போன்ற பலரும் உடனிருந்து புத்திமதி கூறி வழிநடத்தினர். இன்று தலைவன் தலைவியர் தனிவழி மேற்கொள்வதால் இந்த வாய்ப்பு அருகிவிட்டது.
அக்காலத்தில் பரத்தை வாயில் நால்வகுப்பினரான அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோருக்கு உரித்தாயிருந்தது. ‘பரத்தை

Page 57
92 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
வாயில் நால்வர்க்கும் உரித்தே’ என்று தொல்காப்பியம் கூறும். இன்னும் ‘பரத்தை எல்லார்க்கும் உரித்தே’ என்று இறையனார் களவியல் கூறும். இவ்வண்ணமிருந்தும் மணவிலக்குப் பற்றி எங்காயினும் தொல்காப்பியத்தில் பேசப்படவில்லை. அன்றைய தலைவி குடும்ப நலன் கருத, பொறுமை காத்து, குலப் பெருமை நிலைநாட்டத் தலைவன்மேற்கொண்ட சினம் தணிந்து, ஊடிக் கூடுவதும் உண்டாம். இன்று சிறு பிரச்சினைகளுக்கும் மணவிலக்கை நாடிச் சென்று மீளாத் துயரில் மூழ்கி நலிவுறுவோர் பலர். குடும்பம் சிதைந்தால் கணவன் ஒரு பக்கம், மனைவி இன்னொரு பக்கம், பிள்ளைகள் பிறிதொரு பக்கமாகப் பிரிந்து அல்லலுறுவர்.
கலப்புத் திருமணம் நன்றென்பதை மறுப்பதற்கில்லை. இதிற் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவர்களின் மொழி, கலை, கலாசாரம், சமயம், பண்பு, வாழ்க்கைமுறை ஆகியவை வேறுபட்டன. இவற்றைச் சமாளித்துச் செயலாற்றுவது மிகக் கடினம். குழந்தை ஒன்று பிறந்து விட்டால் அப்பா பக்கப் பெயரா, அம்மா பக்கப் பெயரா சூட்டுவது? அப்பா மொழியா, அம்மா மொழியா பயில்வது? அப்பா சமயமா, அம்மா சமயமா பின்பற்றுவது? என்ற பல சிக்கல்கள் எழும். இவர்கள் மத்தியில் பலர் விவாகரத்தை நாடிச் செல்வதும் உண்டு.
திருமணம் மக்களின் இன விருத்திக்கு வேண்டற்பாலதும் தலைவன் தலைவியரை முழுமையடையச் செய்வதுமாகும். எனவே ஒவ்வொருவரும் திருமண வாழ்க்கையைப் புரிந்து கொண்டு அர்த்தமுடன் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.
DDD

Uர் போற்றும் உல்கச் சகுணையாளர் மகாத்மா காந்தி
உலகில தோன்றும் எலி லாச் சீவராசிகளும் முயற்சி வாய்ப்பட்டவை. அவை அன்றும் , இன்றும் , என்றும் இயங்கிக் கொண்டேயிருப்பவை. இவற்றில் மனித இனம் ஒன்றே தொடர் விடாமுயற்சியுடனும், போட்டா போட்டி மனப்பான்மையுடனும், தம் உயர் நலங் கருதிச் செயலாற்றுகின்றனர் என்பது நம் கண்கூடு. “முயற்சி திருவினை யாக்கும்”, “முயற்சி பெருமை தரும்”, “முயற்சிதன் மெய் வருந்தக் கூலி தரும்” என்பன வள்ளுவன் வாக்கு. ஒருவன் ஒரு துறையில் விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயலாற்றின் அதில் அவன் வெற்றி பெற்றுச் சாதனையும் படைக்கலாம். சாதனை படைப்பதற்குப் பற்பல துறைகள் உள்ளன. ஒட்டம், பாய்தல், நீந்தல், பந்தடித்தல், நடனமாடல், மூச்சடக்கல், குத்துச் சண்டை, முத்தமிடல், தொடர்ந்து பேசுதல், ஒற்றைக் காலில் நிற்றல், குறிபார்த்துச் சுடல், வாள்ச் சண்டை, மல்யுத்தம், தர்க்கம், விஞ்ஞானக் கண்டு பிடிப்பு,

Page 58
94 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
சமுக சேவை, போன்றவை ஒரு சிலவாகும். கிராமம், நகரம், வட்டாரம், நாடு, ஆசியா, ஐரோப்பா, உலகம் ஆகிய ரீதியில் சாதனைகள் நிலைநாட்டப் பெற்றுப் பரிசில்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டுக் கெளரவிக்கப் படுகின்றனர். உலக சாதனை இதில் முதலிடம் பெறுகின்றது. இவ்வண்ணம் பார் போற்றும் மகாத்மா காந்தி அவர்கள் நிலை நாட்டிய உலகச் சாதனைகள் சில காண்போம்.
பிரித்தானிய இந்தியாவில் குசராத்தின் போர்பந்தர் நகரத்தின் திவானான (பிரதம மந்திரி) கரம்சாண்ட் காந்தி அவர்களுக்கும் அவரின் நான்காவது மனைவி புட்லிபாய் அவர்களுக்கும் பிறந்த மூன்று புதல்வர்களில் கடைசி மகனாக 1869 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதம் இரண்டாந் திகதி (02-10-1869) மோகன்தாஸ் காந்தி ஓர் இந்துவாக அவதரித்தார். 1876 ஆம் ஆண்டில் பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கையில் இவருக்கு மூன்று முறை நிச்சயதார்த்தம் நடந்தது. இவருக்கு நிச்சயம் செய்திருந்த இரு பெண்களும் ஒருவர்பின் ஒருவராக இறந்து விட்டதால் ஏழு வயது நிரம்பிய கஸ்தூரிபாய் (11-04-1869) என்ற பெண் குழந்தைக்கும் ஏழு வயது நிரம்பிய பையன் மோகன்தாஸ் காந்திக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிவானது. கஸ்தூரிபாய் காந்தியைவிட ஐந்தரை மாதம் மூத்தவர். உயர்நிலைக் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொழுது 1883 ஆம் ஆண்டில் மோகன்தாஸ் காந்திக்கும் கஸ்தூரிபாய்க்கும் அவர்களின் 13வது வயதில் திருமணம் நடந்தேறியது.
தன் அனுமதியின்றி மனைவி எங்கும் போகக் கூடாதென்ற கணவனின் அதிகாரத்தைக் காந்தி கையில் எடுத்ததால் அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்பட்டது. அதிகாரங்கள் கூடக் கூட கஸ்தூரிபாயும் பிடிவாதமாக மீறி நடந்தாள். இது தவறென்று உணர்ந்தார் காந்தி. கஸ்தூரிபாயில் வைத்திருந்த அன்பு காரணமாக அதிகாரம் செலுத்தியதாகக் கூறுகின்றார்.
1887-இல் பல்கலைக் கழகப் புகுமுகத் தேர்வில் (Matriculation Exam) சித்தியெய்தினார். வெளிநாட்டில் படிப்பதற்காக 1888 ஆம் ஆண்டு செப்தம்பர் மாதம் 4ம் திகதி இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக 54 நாட்கள் பிரயாணம் செய்து இங்கிலாந்தை ஒக்தோபர் மாதம் 28ம் திகதி வந்து சேர்ந்தார். மோகன்தாஸ் காந்தி தான் இங்கிலாந்துக்குப்

நுனாவிலூர் கா.விசயரத்தினம் + 95
படிக்கப் போகு முன் தன் தாயார் புட்லிபாயின் வேண்டுகோள்படி மூன்று நிபந்தனைகளான (1) மாமிசம் புசிக்கமாட்டேன் (2) மதுபானம் அருந்தமாட்டேன் (3) பெண்கள் தொடர்பு வைத்திருக்கமாட்டேன் என்று சத்திய வாக்குக் கொடுத்துச் சென்றார். அவர் கடைசிவரை இவற்றை மீறாது நடந்தார்.
இலண்டனில் சைவ உணவையே உட்கொண்டார். சாதாரண வாழ்வியல், சமயம், இலக்கியம் சார்ந்த நூல்களையும், பகவத்கீதை போன்ற நூல்களையும் விரும்பிப் படித்தார். இலண்டன் பல்கலைக் கழகப் புகுமுகத் தேர்விலும் சித்தியெய்திச் சட்டக் கல்லூரியிலும் பயின்று பட்டம் பெற்று 10-06-1891 அன்று மா-வழக்கறிஞர் ஆனார். இதன் பின் பம்பாய் வந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார்.
1893-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தென் ஆபிரிக்காவுக்குச் சட்டத்துறை தொடர்பான ஒரு வேலைக்குச் சென்றார். அங்கு ‘பொது உரிமை இயக்கம்’ (1893-1914) ஒன்றை ஆரம்பித்து அடக்கி ஒடுக்கப்பட்டு வாழும் இந்தியர்களுக்கு உதவினார். 1894-ஆம் ஆண்டு செப்தம்பர் மாதம் நற்றால் உயர் நீதிமன்றில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டு, இவர்தான் முதலாவதாகப் பதிவுசெய்த இந்தியன் என்ற சிறப்பினையும் பெற்றார். தென் ஆபிரிக்காவில் வசிக்கும் இந்தியர் நலன் கருதி "நற்றால் இந்தியன் கொங்கிரஸ்' என்னும் ஒரு கழகத்தையும் நிறுவினார்.
1896-ஆம் ஆண்டு யூலை மாதத்தில் இந்தியாவுக்குச் சென்றார். இந்தியர் தென் ஆபிரிக்காவில் படும் துயரை மக்களுக்கு எடுத்துரைத்தார். இந்நேரம் பம்பாயில் பிளேக் நோய் பரவியது. காந்தி, தானும் உதவுவதற்கு விருப்பம் தெரிவிக்க, சுகாதார அமைச்சு இவரையும் ஒரு குழுவில் சேர்த்துக் கொண்டனர். காந்தியும் வீடு வீடாகச் சென்று மலசல கூடங்களைப் பார்த்து அவை சுத்தமாக இருக்க வேண்டுமென்று அறிவுரை கூறித் தானும் அவற்றைத் துப்புரவு செய்தார். தீண்டாதார் குடியிருந்த வீடுகளைப் போய்ப் பார்க்க மற்றவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். ஆனால் காந்தி மாத்திரம் அவர்கள் வீடுகளுக்குச் சென்று பார்த்து அறிவுரையும் கூறினார். அதே ஆண்டு நொவம்பர் மாதம் 30-ஆம் திகதி தன் மனைவி பிள்ளைகளுடன் மீண்டும் தென்ஆபிரிக்கா சென்றார். அங்கு வாழும்

Page 59
96 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும
இந்தியரின் மனித உரிமைகூடப் பறிக்கப்படுவதைச் சகிக்க முடியாத மோகன்தாஸ் காந்தி கவலையுற்று மக்களை நாடிச் சென்று உதவி புரிந்தார்.
நீதிமன்றத்தில் அவர் அணிந்திருந்த தலைப்பாகையை அகற்றும்படி நீதிபதி கட்டளை இட்டார். மோகன்தாஸ் காந்தி அதற்கு மறுப்புத் தெரிவித்து வாதாடினார். புகையிரதத்தில் முதலாம் வகுப்பில் பிரயாணம் செய்த மோகன்தாஸ் காந்தியை மூன்றாம் வகுப்புக்கு இழுத்துக் கொண்டுவந்து விட்டார்கள். இவைகளைப் பொறுத்துக் கொண்டார். அன்றிலிருந்து மூன்றாம் வகுப்பில் மட்டும் தான் பிரயாணம் செய்தார். இதில் மற்ற இந்தியர்களும் சேர்ந்து கொள்ள அரசுக்கு வருவாய் குன்றியது. ஒட்டல்களுக்கு இந்தியர் போவது தடுக்கப்பட்டது. இவை யாவும் மோகன்தாஸ் காந்திக்கு உரம் ஊட்டப், பொது உரிமை இயக்கம் வலுப்பெற்றது.
இந்தியாவுக்குக் காந்தி புறப்படுவதற்கு முன் பிரிவுபசாரக் கூட்டம் நடத்தி வெள்ளி, வைரம், தங்கம், 52 பவுண் பெறுமதியான ஒரு தங்கச் சங்கிலி (கஸ்தூரிபாயுக்கு) போன்ற பல பொருட்கள் அன்பளிப்புச் செய்தனர். காந்தி அவர்கள் இவற்றை ஏற்காது சமூகத்துக்கே சொந்தமாக்கித் தருமகர்த்தாக்களையும் நியமித்தார்.
மருந்துகள் மீது காந்திக்கு வெறுப்புத் தோன்றியது. தனக்கு நெடு நாள் தொடர்ந்திருந்த தலை வலியைக் காலை உணவு உண்ணாது மாற்றிக் கொண்டார். மலச் சிக்கல் நோய்க்கு ‘மண் சிகிச்சை செய்து மாற்றினார் - சுத்தமான மண்ணை நீரில் நனைத்து மெல்லிய துணியில் அதைப் பரப்பி அடிவயிற்றில் மாலையில் கட்டிக்கொண்டு, காலையில் அதை அகற்றி விடுதல். மண் சிகிச்சையில் நம்பிக்கை வைத்து அதை மற்றவர்களுக்கும் சிபார்சு செய்தார்.
இந்தியர் இருந்த ஒதுக்கு இடங்களில் திடீரென்று கறுப்பு பிளேக் நோய் பரவிக்கொண்டது. இந்தியர், நீக்கிரோக்கள் ஆகிய 23 பேர் இந் நோயால் பாதிக்கப் பட்டனர். இதையறிந்த காந்தியும் வேறு இருவரும் உதவ வந்தனர். இவர்களுக்கு நகர சபையார் காலியாகக் கிடந்த ஒரு கிடங்கைக் கொடுத்தனர். காந்தியும் மற்ற இருவரும் அக் கிடங்கைச் சுத்தம் செய்து, படுக்கைகளும் வேறு உபகரணங்களும் சேகரித்து

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 97
அக் கிடங்கை ஒரு தற்காலிக வைத்தியசாலையாக்கி நோயாளர்களுக்குப் பணி செய்தனர். இந்நோய்க்கு ‘பிராந்தி’ சாப்பிடலாம் என்று அரச வைத்தியர் சிபார்சு செய்ததைக் காந்தி எதிர்த்தார். வேறு மூன்று நோயாளர்களும் இதைச் சாப்பிட மறுத்தனர். இவர்களுக்குக் காந்தி தலைக்கும், மார்புக்கும் ஈர-மண் வைத்துக் கட்டிச் சிகிச்சையளித்தார். இவர்களில் இருவர் பிழைத்துக் கொண்டனர். கிடங்கிலிருந்த மற்ற 20 பேரும் இறந்து விட்டனர்.
1901 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து, அங்கு பல இடங்களுக்குச் சென்று, மக்களைச் சந்தித்து அளவளாவி, உதவி புரிந்து, வைத்திய சாலைகளுக்குச் சென்று நோய்வாய்ப் பட்டோருக்கு உதவி, அறிவுரை ஆறுதல் கூறி, பத்திரிகைகளில் நற்கருத்துக்களை எழுதி, மக்களுடன் ஒன்றுபட்டு இருந்தார். பின் 1906-ஆம் ஆண்டு மீண்டும் தென் ஆபிரிக்கா சென்றார். அங்கு இவர் பல முறை கைது செய்யப்பட்டுச் சிறையிலிடப்பட்டார். இவர் இதே ஆண்டில் தன் 36-வது வயதில் பிரமச்சாரியத்தைக் கடைப்பிடித்தார். இதற்குக் கஸ்தூரிபாயும் மறுப்புத் தெரிவிக்காது உடன்பட்டார். அவர்கள் வாழ்வில் இட்து ஒரு திருப்பு முனை. மனிதரால் முடியாத ஒரு செயல். அதிலும் மணமானவர்களால் கடைப்பிடிக்க முடியாத ஒரு கடுந்தவம். பிரமச்சாரிய விரதத்தின்பின் ஏற்பட்ட சுதந்திரமும் ஆனந்தமும் இதற்கு முன் ஏற்பட்டதில்லை என்றும் இவ் விரதம் தனக்குத் தெரியாமலே சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு அடிகோலியது என்றும் கூறுகின்றார்.
1909-ஆம் ஆண்டில் இந்தியர் வழக்குத் தொடர்பாக ஆறு மாதகாலம் இங்கிலாந்து சென்று வந்தார். 1912-ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய உடுப்பு அணிவதைத் தவிர்த்து வந்தார். 1913-ஆம் ஆண்டுமுதல் கஸ்தூரிபாயும் தன் கணவன் ஆரம்பித்து வைத்த அறப்போராட்டத்தில் இணைந்து கொண்டார். இதனால் இருவரும் கைதானார்கள். மோகன்தாஸ் காந்தி தென் ஆபிரிக்காவைவிட்டு இந்தியாவுக்கு 1915-ஆம் ஆண்டில் வந்தார். அவருக்கு இந்தியாவில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. அவரின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது. இந்தியர் அவர் பின்னால் பணி செய்ய எதிர்பார்த்து நின்றனர்.
காந்தியை ‘மகாத்மா காந்தி’ என்றும், “பாபு என்றும், “தேசப் பிதா” என்றும் அழைத்தனர். ‘மகாத்மா’ என்பது வடமொழிச் சொல்.

Page 60
98 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
‘பாபு என்பது குசராத்திச் சொல். எனினும் அவரை ‘மகாத்மா
காந்தி’ என்றே உலக மக்கள் அழைக்கின்றனர். “மகாத்மா” என்ற பட்டத்தை முதல் முதலில் காந்திக்குச் சூட்டியவர் இரவீந்திரநாத் தாகூராவர். “இந்திய சுதந்திர இயக்கம்’, ‘இந்திய தேசிய அமைப்பு
ஆகியன நிறுவப்பட்டு முழு நிலையில் இயங்கின. காந்தி சத்தியாக்கிரக ஆசிரமம் ஒன்றை அமைத்தார். 1919-ஆம் ஆண்டில் சத்தியாக்கிரக இயக்கத்தை ஆரம்பித்தார். அவரை வெள்ளையர் கைது செய்தனர். கலவரம் மூண்டது. இதில் 400 பேர் துப்பாக்கிச் ஆட்டில் இறந்தனர். 1922-ஆம் ஆண்டிலும் மகாத்மா காந்தி கைதாகி ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்தார். 1927-ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் இலங்கைக்குச் சென்றிருந்தார்.
சக்தியாக்கிரகம் என்ற சொல் கண்டு பிடிக்கப்படும் முன் அதை இன்னதென்று சொல்லக் காந்திக்கே தெரியவில்லை. அதைக் கூற ஆங்கிலச் சொற்றொடரான ‘பாஸிவ் ரெஸிஸ்ட்டன்ஸ்’ (Passive Resistance) - சாத்விக எதிர்ப்பு? என்பதையே உபயோகித்தனர். இச் சொல் காந்திக்கு மனநிறைவைத் தரவில்லை. இது தொடர்பில் சிறந்த யோசனை கூறுபவர்களுக்கு ஒரு பரிசு அளிக்கப்படுமென்று பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தார். இதன் பயனாக மகன்லால் காந்தி என்பவர் “சதாக்கிரகம்’ (சத் - உண்மை; ஆக்கிரகம் - உறுதி) என்ற சொல்லை ஆக்கிப் பரிசும் பெற்றுக்கொண்டார். அது இன்னும் தெளிவானதாக இருக்கட்டும் என்பதற்காக அதைச் ‘சத்தியாக்கிரகம்’ என்று மாற்றிக்கொண்டார் காந்தி அடிகள். இவ்வண்ணம் ஒரு புதுச் சொல்லாகச் ‘சத்தியாக்கிரகம்’ பிறந்தது.
உப்பு வரியை எதிர்த்து 1930-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12ஆம் திகதி முதல் ஏப்பிரல் மாதம் ஆறாம் திகதிவரை அகமதாபாத்திலிருந்து தண்டிவரை உப்பு யாத்திரை (400 கி.மீ - 248 மைல்) சென்று உப்புக் கிள்ளி எதிர்ப்புத் தெரிவித்தார். ஆங்கில அரசு காந்தியைக் கைது செய்து விசாரணையின்றிச் சிறையில் அடைத்தது. இதனால் மக்கள் கிளர்ந்தெழுந்து இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம், கதவடைப்புச் செய்ததில் 1,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் 1931ஆம் ஆண்டு சனவரி மாதம் விசாரணையின்றி விடுவிக்கப்பட்டனர்.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 99
இதே ஆண்டு ஆகத்து மாதம் 29-ஆம் திகதி காந்தி அவர்கள் தேசிய அமைப்பின் ஏகப் பிரதிநிதியாக இங்கிலாந்தின் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்துவிட்டு திசெம்பர் மாதம் 28-ஆம் திகதி பம்பாய் வந்து சேர்ந்தார். இம் மாநாட்டின் முடிவுகள் ஏமாற்றத்தில் முடிந்தது. காந்தி மீண்டும் கைதானார். இந்தியச் சுதந்திரத்திற்காக 1916 ஆம் ஆண்டிலிருந்து 1945-ஆம் ஆண்டுவரை தொடர்ந்து போராடி வந்தார். யேர்மனி போலந்தை ஆக்கிரமிக்க இரண்டாம் உலகப் போர் மூண்டது. அதன்பின் *வெள்ளையனே இந்தியாவை விட்டு வெளியேறு’ என்று குரல் எழுப்பிப் போராட்டம் நடத்தினார். இதனால் காந்தியும், தேசிய அமைப்பின் அனைத்து நிர்வாகக் குழுவினரும், பல நூற்றுக் கணக்கான மக்களும் 1942-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஒன்பதாந் திகதி பம்பாயில் வைத்துக் கைதாகினர்.
காந்தி சிறையில் இருக்கும் பொழுது இரு துக்க நிகழ்வுகள் நடந்தன. அவரின் சிறந்த செயலாளர் திரு. மகாதேவா தேசாய் (42 வயது) மாரடைப்பால் இறந்தார். அவரின் மனைவி கஸ்தூரிபாய் 18 மாதச் சிறைவாசத்தின்பின் 1944-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22-ஆம் திகதி பாரிய இருதய நோயால் இறந்தார். ஆறு வாரங்களின்பின் காந்தி மலேரியா நோய்வாய்ப்பட்டார். அவர் உடல் நலம் குன்றியது. இரண்டாம் உலகப் போர் முடியுமுன் 1944-ஆம் ஆண்டு மே மாதம் ஆறாந் திகதி சத்திர சிகிச்சைக்காக விடுதலை பெற்றார்.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரித்தானியா இந்தியாவுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கொடுப்பதாக அறிவித்தது. இந்நிலையில் இயக்க எதிர்ப்பைக் காந்தி கைவிட்டார். அப்பொழுது ஆங்கில அரசு ஓர் இலட்சம் (1,00,000) அரசியல் கைதிகளை விடுதலை செய்தனர். 1946 ஆம் ஆண்டில் பிரித்தானிய மந்திரிசபைத் தூதுக்குழு ஒரு புதுத் தீர்வுத் திட்டத்தை முன்வைத்தது. காந்தி இத் திட்டத்தை ஏற்க வேண்டாமென்று தேசிய அமைப்புக்குப் புத்திமதி கூறினார். இந்நிலையில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டது. இதனால் 1946- ஆம் ஆண்டிலிருந்து 1948-ஆம் ஆண்டுவரை 5,000 மக்கள் இறந்தனர். இதனைத் தடுக்கத் தேசிய அமைப்பு உயர் பீடம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டது. இத்திட்டத்தின் படி பாகிஸ்தானுக்கு 55-குறோர் (55-கோடி) ரூபாவைக் கொடுக்க வேண்டும். இதை இந்தியா கொடுக்க

Page 61
100 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
மறுத்தது. ஆனால் இப் பணத் தொகையைக் கொடுக்க வேண்டுமென்றும், இனக் கலவரம் வேண்டாமென்றும் கூறிச் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார், காந்தி.
காந்தி, ஹரிஜன், இந்தியன் மதிப்பீடு, இளம் இந்தியா, நவயிவன் ஆகிய பத்திரிகைகளை நடாத்தினார். சத்தியசோதனை, சத்தியாக்கிரகம் போன்ற அரிய நூல்களையும் எழுதியுள்ளார். சத்திய சோதனை என்ற நூலைக் காந்தி அடிகள் குசராத்தி மொழியில் எழுதி, ஆங்கில வடிவம் பெற்று அது தமிழாக்கமாகவும் வெளி வந்துள்ளது. மகாத்மாவின் வாழ்க்கை, அகிம்சை, சத்தியம் என்ற அடிப்படையில் கட்டப்பட்ட ஓர் உயர் கோபுரம். உள்ளத்தில் தூய்மை (உண்மை), செயலில் தூய்மை (மெய்மை), பேச்சில் தூய்மை (வாய்மை) என்பவை அவர் உயிர்நாடி. “கடவுள் என்றால் சத்தியம் மாத்திரமே எனக்கருதி நான் வழிபடுகின்றேன்” என்பது அவர் இறை வழிபாடு. “உலகத்துக்குப் பாடம்சொல்ல என்னிடம் புதிதொன்றுமில்லை. உணி மையும் , அகிம்சையும் மலையைப் போலி பழமை வாய்ந்தவை” என்பது அவர் அடக்கக் கூற்று.
இவர் ஆசிரமம் அமைத்து, பிரார்த்தனைக் கூட்டம் நடாத்தி, மக்களை உண்மை நிலைக்கு வழிப்படுத்தி, உலகினை ஈர்த்து, முன்னணி வாழ்க்கைமுறை காட்டி, கைநூலாடை தயாரித்து வாழ்ந்து வந்தார். ஒரு கிழமையில் ஒரு நாள் மெளனவிரதம் இருந்தார். பேச வேண்டிய சந்தர்ப்பத்தில் எழுத்து, சைகை மூலம் கதைத்தார். இவரின் ஆசிரமம் ஆடம்பரமற்றது. புனிதம் பொங்கும் இடமாக அமைந்துள்ளமை அதன் சிறப்பாகும். கதிரை, மேசை, மெத்தை அற்ற இடமாகும். யாவரும் நிலத்தில் இருந்துதான் செயலாற்றுவர். எப் பிரமுகர் வந்தாலும் நிலத்தில் இருந்துதான் காந்தியுடன் கதைப்பர். நிலத் தொடர்பு மனிதனுக்கு மிகத் தேவை என்பதைத் தீர்க்கதரிசியான காந்தி அடிகள் உணர்ந்திருந்தார்.
அன்று 1948-ஆம் ஆண்டு சனவரி மாதம் 30-ஆம் திகதி மாலை வேளை. காந்தியின் வழமையான உலா நிகழ்வின்போது நாதுராம் கோட்சே என்ற இந்து வெறியனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்செய்தியறிந்து முழுஉலகமும் கலங்கி நின்றது. காந்தியின் எரிசாம்பல் உலகில் சிறந்த நைல், வொல்கா, தேம்ஸ் ஆகிய நதிகளில்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 101
கரைக்கப்பட்டது. மகாத்மா காந்தி சமாதான ஞாபக மண்டபத்தின் அடித்தளத்தில் ஒரு பகுதி எரிசாம்பலை இட்டுச் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. 1969-ஆம் ஆண்டு, ஐக்கிய இராச்சியம், மகாத்மா காந்தரியின் நுாறாவது பிறந்த தினத்தையிட்டு முத்திரைகளை வெளியிட்டது. 1999-ஆம் ஆண்டு இந்திய அரசு காந்தியின் 130-வது பிறந்த தினத்தில் ரூபா 5, 10, 20, 50, 100, 500, 1,000 ஆகிய பண நோட்டுக்களை மக்கள் பாவனைக்கு வெளியிட்டுக் காந்தியைக் கெளரவித்தது. காந்தி பிறந்த தினமான ஒக்தோபர் இரண்டாந் திகதியை உலகளாவிய அகிம்சை நாளாகக் கொண்டாட வேண்டுமென ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2007ஆம் ஆண்டு சூன் மாதம் 15-ஆம் திகதி ஒரு தீர்மானத்தை அங்கீகரித்துள்ளமை போற்றற்குரியது.
காந்தியின் தத்துவமாக: உண்மை, அகிம்சை,~பிரமச்சாரியம், எளிமை, நம்பிக்கை, தாவர உணவு, சத்தியாக்கிரகம் ஆகியன அமைந்துள்ளன. இவை அனைத்தும் மகாத்மா காந்தியின் தனித்துவமான உலகச் சாதனைகளாகும். காந்தி மகான் முன்னாளில், கடவுள் தான் உண்மை என்று உணர்ந்தவர், பின்னாளில் உண்மைதான் கடவுள் என்று கூறினார். மகாத்மா காந்தி அவர்கள் ஒரு நீதித்தேவதை. நீதி நிலைக்க வேண்டி காந்தியின் திருஉருவப் படத்தை நீதிமன்றங்களில் வைத்துத் தீர்ப்புச் சொல்லும் வழக்கமும் உள்ளது. இன்னும் மக்களும் அவர் படத்தைத் தம் வீடுகளில் வைத்துப் பூசித்துப் பூத்துாவி வணங்கியும் வருகின்றனர்.
காந்தி மகான் ஒரு தெய்வப் பிறவி. நடமாடும் தெய்வமாக நம்முடன் 78 ஆண்டுகள் வாழ்ந்தவர். வாழ்ந்து கொண்டே உலகையும் வாழ்வித்தவர். அவர் நாமம் ஒரு பரிசுத்தப் பேரொளி. இன்றும், என்றும் அவர் நம்மத்தியில் ஓர் உயிர்த் தெய்வம்.
D

Page 62
ܛ܂ 102
குங்களும் புராணங்களும் எடுப்பிய உயிர்ப்Uலிகள்
நரபலியிடல், உடன்கட்டையேறல், தற்பலியூட்டல் போன்றவை நடந்தேறுவதற்கு வேதம், புராணம், மதம், இதிகாசம், பண்டைய இலக்கியங்கள் உறு துணை நிற்க, தியாகம் என்ற புனிதப் பெயரில் அவச்சாக்கள், வேண்டாச்சாக்களை எதிர்கொண்டு, வாழ வேண்டிய மக்கள் பல்லாயிரக்கணக்கில் வீணே மடிந்தார்களே!
பிறரின் நலனுக்கெனத் தன் சொந்த நலனை அல்லது உயிரை அதாவது தன்னையே இழக்கத் துணியும் செயலுடன், கடவுளுக்குக் காணிக்கையாக உணவுப் படையல், பொருள், பறவை-உயிர், மிருகஉயிர், மனித-உயிர் ஆகியவற்றைக் கொடுத்து அவரை அமைதிப் படுத்தவும் குளிர வைக்கவுமென, உயிர்க் கொலையில் ஈடுபடுத்தும் செயல் முறைப் பழக்கத்தைக் கூட தியாகம் என்பர். மேலும், இது விரிவடைந்து, உயிர்ப்பலி, பலியீடு, வேள்வி, பலி, பலியிடப்படும் விலங்கு, நிவேதனம், நேர்வு, திருப்படையல், நிவேதனப் பொருள், நேர்வுப் பொருள், படையற் பொருள், தன்மறுப்பு, கைதுறப்பு, மணிமார்ந்த விட்டுக் கொடுப்பு, தன் இழப்பு, இழப்பு நிலை, போரில் உயிர்த் தியாகம், திருச் சிலுவைப்பாடு,
 

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 103
கடையுணாப் படையல், கடையுணா நேர்வு வழிபாடு, உயிர்ப் பலியாகக் கொடு, திருப் படையல் செய், பலியாக்கு, தியாகஞ் செய், துற, விட்டுக்கொடு, நலங் குறைத்துக் கொள், சிறப்புக் குறைத்துக் கொள், துணைநிலைப் படுத்திக் கொள், தாழ்த்திக் கொள், மாளவிடு, அழியவிடு, வேள்விசெய் போன்ற சொற் பதங்கள் வேறொரு மொழிக்கும் இல்ல்ாத பல்வேறு கருத்துகளைப் பல்வேறு கோணங்களில் அமைத்துள்ளமை / தமிழ் மொழியின் தொன்மை, இனிமை, கருத்தின் செழுமை, செப்பம், சிறப்பு ஆகியவற்றைப் பாரெங்கும் தெள்ளத் தெளிய விளக்கிக் காட்டி நிற்கின்றது.
கொலை
சிற்றின்பக் கொலை, தான்தோன்றித் தனமான கொலைத் தண்டனை, பெரிய எண்ணிக்கைக் கொலை, தற்கொலைக்குப் பதிலான கொலை, குடிவெறியாட்டக் கொலை, சித்திரவதைக் கொலை, இரட்டைக் கொலை, தவறான நடத்தைக் கொலை ஆகியன, மனிதக் கொலைகளில் அடங்கும். கடவுட் பற்று மிக்க எல்லா மதத்தவர்களும் நரபலி கொடுக்கும் சடங்கு முறைகளைப் பின்பற்றியுள்ளமை ஒரு வரலாற்றுச் செய்தியாய் மக்கள் மனங்களில் மிக ஆழமாய் வேர் ஊன்றியுள்ளது. இது காலப் போக்கில் ஆடு, மாடு, குதிரை போன்ற மிருகப்பலியாகிப் பின்னாளில் கோழி, சேவல் போன்ற பறவைப் பலியாக மாற்றமடைந்ததையும் நாம் அறிவோம்.
உயிர்ப் பலி
தெய்விக முலாம் பூசப்பட்ட மதங்கள், புராணங்கள் ஏற்படுத்திய உயிர்ப்பலிகள் கணக்கிலடங்கா. அதில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
9 சீனப் பெருஞ்சுவரில் ஆயிரக்கணக்கான மக்கள் கல்லறை ஆக்கப் பட்டுள்ளனர் என்று ஒரு சீனநாட்டுப் புராணக்கதை கூறுகின்றது.
0 யப்பானில் வணங்கப்படும் அழகுத் தூபியின் கட்டடம் பகைவர் தாக்குதல், துன்ப நிகழ்ச்சி, விபத்து ஆகியவை ஏற்படாது இருப்பதற்காகத் தூபியின் அடி வாரத்தில் கன்னிப் பெண்களை உயிருடன் புதைத்தமை பற்றி ஒரு பண்டைய யப்பான் புராணக் கதை கூறுகின்றது.

Page 63
104 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்rேடும்
மெக் சரிகோவரின் பளர் ளத் தாக் கரிலி அமைந்த டெனோச்டிட்லான் (Tenochtitlan) என்ற பெரிய கூர்க்கோபுர மீள்படையல் தொடர்பில் 1487-ஆம் ஆண்டில் நான்கு நாட்களாக 80,400 கைதிகள் பலியிடப் பட்டதாக அஸ்டெக் (Aztec) என்று அழைக்கப்படும் மெக்சிகோ பகுதியின் பழங்குடியினர் தெரிவித்தனர்.
GJIT6ð a56mo aflaĖ (Ross Hassig) என்பவர் மெக்சிகோ போர் நடப்பு விவகாரங்களைக் கூறுகையில் ஒரு சமயச் சடங்கு நிகழ்வில் 10,000 முதல் 80,400 வரையான மக்கள் பலியிடப் பட்டதாகக் கணித்துள்ளார்.
கிறித்தவத் திருமுறைப்படி யேப்தா (Jephthah) என்பவரான ஒரு தந்தை சபதம் எடுத்தபின் தன் மகளைப் பலியிட்டுக் கொன்றுள்ளார்.
கிறித் தவத் திருச்சபைக் கு முரணான கோட்பாடு உடையவர்களைத் தயரில் இட்டு எரிக்கும் மரண தண்டனையை ஆறாம் நூற்றாண்டில் யஸ் டினியன் (Justinian) என்பவர் அறிமுகம் செய்து வைத்தார்.
அசுவமேத யாகம்
இனி, இந்து வீரகாவியங்களான இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் அசுவமேத யாகம் நடந்தேறிய முறையினையும் காண்போம். அசுவமேத யாகம் மன்னர்களால் மட்டும்தான் செய்யமுடியும். இந்த யாகத்துக்குப் பொலிகுதிரையைத் (Stalion) தெரிவு செய்வர். இக்குதிரை 24-வயதுக்கு மேலும் 100-வயதுக்குக் குறைவாகவும் இருத்தல் வேண்டும். வல்லமை பெறுதல், புகழீட்டல், அயல் நாடுகளின்மேல் ஆதிக்கம் வைத்திருத்தல், அரசின் பொதுவாழ்வு வளம் சிறத்தல் போன்றவற்றிற்காக அஸ்வமேத யாகம் செய்யப்படுகின்றது.
மகாபாரதத் தரிலி அஸ்வமேத யாகத் தைத் தருமர் வேதங்களின் விதிக்கேற்ப நடாத்தினார். தெரிந்தெடுத்த குதிரையை அயல் இராச்சியங்களில் சுற்றித்திரிய விட்டுத் தருமரின் சகோதரர்கள் குதிரையைக் கண்காணித்து

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 105
வந்தனர். இக் குதிரையின் நடமாட்டத்தை எதிர்ப்பவர்களை அருச்சுனன் வெற்றிகொண்டான். இந்த யாகத்தில் குதிரை இரண்டாக வெட்டப் பட்டு, கொலை செய்யப்பட்ட குதிரைக்கருகில் திரெளபதை படுத்திருந்தாள்.
இராமாயணத்தில் இராமன் தந்தை தசரதன், அஸ்வமேத யாகத்தைச் செய்தார். வசிட்ட முனிவர் தலைமையில் தசரதன் மனைவி கோசலை சுற்றித்திரிய விட்ட குதிரையைச் சட்ங்கு முறைப்படி குதிரையின் உடலைக் குத்திக் கிழித்துப் பலியிட்டு அதன் கொழுப்பை எரிக்க, யாகம் முற்றுப் பெற்றது.
உயிர்த் தியாகம்
மனைவியானவள் தன் ஆருயிர்க் கணவனை என்றும் காதலித்து அவனைத் தெய்வமென மதித்து இன்ப வாழ்வளித்து வாழ்க்கை நடாத்துபவள். இந்நிலையில் அவள் கணவன் மாண்டவிடத்து அதனைப் பொறுக்க முடியாது அவன் சிதையில் ஏறித் தன்னுயிரையும் பலியிட்டு இறந்து பட்டமை அன்றைய ஒரு சாதாரண வழக்கம். மனைவி தன் இறந்த கணவனை நினைந்து தன்னுயிரையும் மாய்த்தமை அவள் அவனுக்காகப் புரிந்த ஒரு தியாகமாகும். இச் செயலை உடன்கட்டையேறல் என்று அழைப்பர். இது ஒரு வரலாற்றுச் செய்தி. காலத்தால் தொன்மையான தமிழ் இலக்கிய இலக்கண நூல்களான தொல்காப்பியம், மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம், புறநானூறு ஆகியவை மகளிர் உடன்கட்டையேறல் பற்றிக் கூறுவதையும் ஈண்டுக் காண்போம்.
e கணவன் இறந்த பொழுதே மனைவியும் உடனுயிர் நீத்த நிலையை ‘முதானந்தம்’ என்றும், உடன்கட்டையேறலை 'பாலை நிலை" என்றும், உடன்கட்டையேறாது கைம்மை பூண்டு தவம் புரிந்து வாழ்தலை தாபத நிலை’ என்றும், மனைவியை இழந்த கணவன் படும் துயரினை தபுதார ந7லை” என்றும் .தொலி காப்பியனார் தெளிவுபடக் கூறியுள்ளார். ( தொல். பொருள் 77)
0 மகாபாரதத்தில் பாண்டு மன்னன் இறந்ததும் அவன் இரண்டாவது மனைவி மாத்திரி ‘பாலை நிலையில் நின்று

Page 64
106 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
உடன்கட்டை ஏறினாள். ஆனால் பாண்டு மன்னனின் முதல் மனைவி குந்திதேவி உடன் கட்டை ஏறாது °தாபத” நிலையிலி கைம் மை நோன் பரிருந்து தன் ஐந்து பிள்ளைகளையும் வளர்த்து வந்தாள்.
0 இலங்கை வேந்தன் இராவணன் இறந்தபோது அவன் மனைவி மண்டோதரியும் அவனுடன் உயிர் நீத்தாள் என்ற செய்தியையும் இராமாயணத்தில் காண்கின்றோம். இச் செயலை ‘மூதானந்தம்' என்று கூறுவர்.
9 சிலப்பதிகாரத்தில் கோவலன், பாண்டிய மன்னனால்
கொலையுண்டான். கண்ணகி பாண்டிய மன்னன் அரண்மனை ஏகி, நீதி கேட்டு, நீதி தவறியதால் LJITGoigu மணி னன் நெடுஞ செழியனும் , 966i அரசி
கோப்பெருந்தேவியும் உயிர் துறந்தனர். மாதவி கைம்மை நோற்றுத் தவம் புரிந்தாள். கோப்பெருந்தேவி பாண்டிய மன்னனோடு உடன் உயிர் நீத்தமையை மூதானந்தம்” என்றும் மாதவி கைம்மை நோன்பிருந்ததைத் தாபத? நிலை என்றும் கூறுவர்.
9 எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானுற்றிலி உடன்கட்டையேறல் பற்றி ஒரு செய்தி பேசப்படுகின்றது. பெருங்கோப்பெண்டு பூதப்பாண்டியனின் தேவியர் ஆவார். பூதப்பாண்டியன் போர்க் களத்தில் மாண்டான். அவன் மனைவி பெருங்கோப்பெண்டு உடன்கட்டையேறுவதைச் சான்றோர் தடுத்தும் அதை அவள் செவிமடுக்காது அத்தியே தாமரைக் குளத்து நீர்போல் இன்பம் தருவதாகும் என்று கூறிப் பாலை நிலையிலி நின்று தப் பாய் நீ து இறந்துகொண்டாள். (புறநானூறு 246)
தற்பலியூட்டல்
இனி தற்பலியூட்டல் பற்றிப் பார்ப்போம். தற்பலியூட்டல் என்பது
தன் னைத் தானே பலியாக ஒப் படைத் தல என்பதாகும் .
உடன்கட்டையேறலில் கணவனை இழந்த பெண்கள் மாத்திரம் பங்கேற்பர்.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 107
தற்பலியூட்டலில் ஆணி, பெண் ஆகிய இரு பாலாரும் பங்கேற்பர். இதற்குப் புத்த மதமும், இந்து மதமும் சகிப்புத் தன்மையைக் காட்டுகின்றன. அரசியல், பக்தி, அன்பு, எதிர்ப்பு, இணங்காமை, சுயநலம் ஆகியவை தொடர்பாக உலகில் பல பாகங்களில் என்றும் பல தற்பலியூட்டல் நிகழ்வது நம் கண்கூடு. இவற்றில் ஒரு சில நிகழ்வுகளைக் காண்போம்.
புத்தமதத் துறவிகள் வியட்னாம் ஆட்சிமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1963 ஆம் ஆண்டில் தம்மைத் தாமே தற்கொலை செய்துள்ளனர்.
தீக்குளித்து உயிர் நீத்தல் என்ற செயற்கமைய ருசிய மாதா கோயிலின் பெரிய திருச்சபைக் காலத்தில் புராதன தெய்வ நம்பிக்கையுள்ள கிராமத்தவர் தம்மைத்தாமே தீயிட்டுப் பலியாகினர்.
வியட்னாம் யுத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் நோர்மன் மொறிசன் (Norman Morison) என்பவர் 0211-1965 அன்று ஐங்கோண மண்டபத்துக்கு வெளியே மண்ணெண்ணை ஊற்றித் தன்னைத் தானே தியிட்டு இறந்தான்.
இதன்பின் 09-11-1965 அன்று இதே காரணத்திற்காக றோகர் அலன் லாபோற்றே (Roger Allan Laporte) என்பவரும் ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் தன்னைத்தானே தீயிட்டு இறந்தார்.
மாட்டின் லூதரைப் பின்பற்றும் ஒஸ்கார் புறுசிவிட்ஸ் (Oskar BrயSewitz) என்ற குருவானவர் கிழக்கு யேர்மன் பொது வுடைமை நடப்பாட் சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தன்னைத்தானே 22-08-1976 அன்று உயிர்த் தியாகம் செய்தார்.
6Teof 6ā (3urrasto (Esenboga) விமான நிலையத்தில் ஓர் அறையில் தங்கியிருந்த பயணிகள்மீது 1982-ஆம் ஆண்டில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதை எதிர்த்துத் துருக்கிய

Page 65
108 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
அமெரிக்கரான ஆற்ரின் பெனிக் (Artin Penik) என்பவர் திக்கொழுத்தி உயிர்துறந்தார்.
பொஸ்னியாவில் நடந்த யுத்த அட்டூழியங்களை மக்களின் தெரிநிலைக்குக் கொண்டுவருவதற்காக கிறகாம் பாம்வோட் (Graham Bamford) என்பவர் பிரித்தானிய பொதுமக்கள் அவையரின் முன் நின்று தன் னைத் தானே கல்லெண்ணையில் தோய்ந்துகொண்டு 29-04-1993 அன்று எரியூட்டி இறந்தார்.
9 ஈழத்தமிழருக்கு எதிராக நடந்த சிங்கள அரசின் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியா, மலேசியா, பிரித்தானியா ஆகிய இடங்களைச் சேர்ந்த 19 இளைஞர்கள் சனவரி மாதம் 2009-இல் இருந்து மூன்று மாதகால எல்லைக்குள் தம்மைத் தாமே தற்பலியூட்டி மடிந்தனர்.
நரபலியிடல், உடன்கட்டையேறல், தற்பலியூட்டல் போன்றவை நடந்தேறுவதற்கு வேதம், புராணம், மதம், இதிகாசம், பண்டைய இலக்கியங்கள் உறுதுணை நிற்க, தியாகம் என்ற புனிதப் பெயரில் அவச்சாவையும், வேண்டாச்சாவையும் எதிர்கொண்டு, வாழவேண்டிய மக்கள் பல்லாயிரக் கணக்கில் விணே மடிந்தார்களே!.
DDD

- 109
பூவுல்கின்டுலிப்பரப்பில் தோன்றும் உயிரினப் பிறப்பும் இறப்பும்
குரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் பூமிக் கோளில்தான் உயிரினங்கள் வாழ்கின்றன: வாழவும் முடியும். மற்றைய எட்டுக் கோள்களில் உயிரினங்கள் வாழமுடியாது. பூமிக்கு இஃது ஒரு சிறப்பு. இதனால் பூமியானது ஒரு பூவுலகாய் மிளிர்கின்றது. பூமியில் உயிரினங்கள் இல்லையெனில் அஃது ஒரு வனாந்தரமே. உயிருள்ள ஒன்றுதான் பிறக்கவும், இறக்கவும் முடியும். உயிரில்லையெனில் பிறப்பும், இறப்பும் இல்லை. மனிதன் மட்டும்தான் பிறக்கின்றான், இறக்கின்றான் என்றில்லை. ஓரறிவுள்ளவை எனப்படும் புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றிலிருந்து ஆறறிவுள்ள மனிதன்வரை அனைத்து உயிர்களும் பிறப்பதும், இறப்பதும் நியதியாகும். உயிர் தனித்து வாழாது. உடலும் தனித்து வாழாது. உயிர் நிலைத்திருப்பின் அதற்கு ஓர் உடல் வேண்டும். உடலுக்கும் ஓர் உயிர் வேண்டும். உயிருக்குச் சாவில்லை. உடலுக்கு உயிர் பிரிந்ததும் சாவுண்டு.
பிறப்பும் இறப்பும் இல்லாதவன் இறைவன். அவன் அருவானவன்.
உருவற்றவன். மனிதன் தான் இறைவனுக்கு உருவை அமைத்தவன். தன் சிந்தைக்கு எட்டியவரை தன்னைப் போன்ற ஒரு மனித

Page 66
10 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
உருவமைத்துக் கடவுளுக்குக் கொடுத்தவன் மனிதன் தான். இறைவனுக்குப் பிறப்பு உண்டென்றால் அவனும் நம்மைப்போல் இறப்பவனாகி விடுவான். எனவே தான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிவபெருமானை பெயர் சொல்லி அழைக்காமல் “பிறவா யாக்கைப் பெரியோன்’ என்று கூறியுள்ளார். இன்னும் “பெம்மான் முருகன் பிறவான் இறவான்' என்பது அருணகிரியார் வாக்கு. பிறப்பும் இறப்பும் இல்லாதவனிடம் சென்று சேர்ந்தால் நமக்கும் பிறப்பும் இறப்பும் அறும் என்று கூறுகின்றார் பட்டினத்தார்.
*பிறப்பு இறப்பு என்னும் இரண்டின் கடற்படாவகை காத்தல் நின் கடனே.”
திருமந்திரம்
கடவுள், கூற்றை உதைத்தவன். அதாவது கடவுள் யமன் உயிரை எடுத்தவன். எனவே அவனை அண்டினோர்க்கு இறப்பு வராது. அதனால் பிறப்பும் இல்லை என்று கூறுகின்றார் திருமூலர்.
“கூற்றுதைத் தானே யான் கூறுகின்றேனே.”- (02)
மேலும் அவர் ‘பிறப்பிலி நாதன்?- (86) என்றும் ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்" - (81) என்றும் பிறப்ப்ையும் படைப்பையும் கூறுகின்றார். படைப்புக்குத் துணையாயிருப்பவை நாதமும், விந்துவும் ஆகும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் பஞ்சபூதங்களாய் இப் பிரபஞ்சம் உண்டானது.
நீரோடு கலந்து நிற்கும் இப் பூவுலகில் உயிர்த்திரள்கள் தோன்றி வாழும். தாமரைப் பூவின்மேல் வீற்றிருக்கும் பிரமன் உடலோடு உயிரைப் பொருத்தி வைப்பவன். உயிரளிப்பவன் பிரமன். இறைவன் எமக்கு ஆயுளைத் தரும்போது இத்துணை ஆண்டு, மாதம், நாள் என்று கணித்துத் தருவதில்லை. அவன் இத்துணை எண்ணிக்கையான மூச்சுகள் என்றுதான் தருகின்றான். அதனைக் கூட்டுவதும் குறைப்பதும் நம் கையிற்றான் உள்ளதென்று கூறுகின்றார். இச் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நாட்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர் யோகிகள். அவர்களிடம் தியானப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் இருப்பதை நாம் அறிவோம். மூச்சுக்கலையை ‘பிராணாயாமம்’ என்றழைப்பர்.

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 11
தொல்காப்பியம்
புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியனவுக்கு உயிர் இல்லை என்று கூறுவோர் பலர். இந்தியத் தாவரவிஞ்ஞான மேதை ஜே.சி. போஸ் (30.11.1858 - 23.11.1937) அவர்கள் தாவரங்களுக்கு உயிர், உணர்வு, அறிவு உள்ளதென்பதை நிரூபித்துக் காட்டிப் பரிசும், பாராட்டும் பெற்றவர். ஆனால் இற்றைக்கு ஏழாயிரம் (7,000) ஆண்டுகளுக்கு முன்பாகவே தொல் காப்பியனார் தாவரத்தினதும், மற்றைய உயிரினங்களினதும் உயிர், அறிவு, உணர்வு பற்றி விபரமாக எடுத்துக் கூறிச் சூத்திரம் அமைத்துள்ளார்.
புலி , மரம் , கொட்டி, தாமரை ஆகியவை ஓரறிவு உடையனவென்றும் நந்தும், முரளும், சங்கு, நத்தை, அலகு, நொள்ளை, சிப் பரி, கிளிஞ சரி, ஏரலி என்பன ஈரறிவு உடையனவென்றும் சிதலும், எறும்பும், அட்டை முதலியன மூவறிவினை உடையனவென்றும் நண்டு, தும்பி, Dமிறு, சுரும்பு போன்றவை நான்கு அறிவினை உடையனவென்றும் நாற்கால் விலங்குகள், பறவைகள், பர்ம்பு, மீன், முதலை, ஆமை என்பன ஐவகை அறிவினை உடையனவென்றும் மக்கள், தேவர், அசுரர், இயக் கர், கிளி, குரங்கு, யானை முதலாயரின ஆறறிவு உயிர்களென்றும் கூறி உலக உயிரனைத்தையும் ஆறு வகையில் அடக்கிக் காண்பித்தவர் தொல்காப்பியர்.
“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு \முக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனமே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே”
- (பொருள். 571) திருவாசகம்
மாணிக்கவாசகர் தாம் இயற்றிய சிவபுராணத்தில் புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், மிருகமாய், பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய்,

Page 67
12 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
பேயாய், கணங்களாய், அசுரராய், முனிவராய், தேவராய் இவ்வுலகில் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்று கூறுகின்றார்.
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்மிருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர்ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடு உற்றேன்.”
- (26-32)
மேலும் அவர் ‘பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் மெய்கழல்கள் வெல்க- (07) என்றும், ‘மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி?- (14) என்றும் கூறிப் பிறப்பற்ற நிலையை நாடிச் செல்கின்றார்.
தாயுமானவர்
*வினே பிறந்திறந்து வேசற்றேன்.” என்று தான் பிறந்து, இறந்து சோர்வடைகின்ற நிலையினைக் குறிப்பிடுகின்றார் தாயுமானவர். மேலும் அவர் எத்தனை பிறப்போ, எத்தனை இறப்போ எளியேனுக்கு என்று தான் எடுத்த பல பிறவிகளை நினைந்து கசிந்து மனமுருகி இப் பாடலை வடித்துள்ளார்.
“எத்தனை பிறப்போ எத்தனை இறப்போ
எளியனேற் கிதுவரை அமைத்த தத்தனை யெல்லாம் அறிந்தநீ அறிவை அறிவிலி அறிகிலேன் அந்தோ.”
மனுநீதி நூல்
மனிதன் எப்படித் தோன்றினான் என்பதை மனுநீதி நூலார் கூறுவதையும் காண்போம்.
0 பிரமன் தன் மேனியை இரு கூறாக்கி ஒரு பகுதியை ஆணாகவும் மறு பகுதியைப் பெண்ணாகவும் தோன்றினான். - (1:32)

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 13
0 பரிரமணி தனி வாயிலிருந்து பரிராமணனையும் , தோள்களிலிருந்து சத்திரியனையும், தொடைகளிலிருந்து வைசியனையும், பாதங்களிலிருந்து சூத்திரியனையும் அவதரிக்கச் செய்தான். - (1:31)
மேலே உயிரின் பிறப்புப் பற்றிப் பார்த்தோம். இனி உயிரின் இறப்பினையும் சற்று விரிவுபடுத்திக் காண்போம். சில உயிரினங்களான ஆடு, மாடு, கோழி, மான், மரை, பன்றி, தாரா, மீன் போன்றவை மக்களின் உணவாக அமைந்துள்ளன. எனவே உயிர்க் கொலைகள் நாளாந்தம் நிகழ்கின்றன. மக்கள் யுத்தத்தால் பெருமளவு இறக்கின்றனர். இராமாயணத்தில் இராவணனும் அவன் 3,000 கோடி வீரர்களும் இறந்தொழிந்தனர். மகாபாரதப் போரில் 39,36,600 படைவீரர்கள் பங்கேற்று அதில் 10 பேர் தவிர மற்றைய அனைவரும் மடிந்தனர். இவற்றில் பொதுமக்கள் அடங்கவில்லை. மன்னர் புரியும் போரானது மக்கள் இல்லாத இடத்தில், முரசு கொட்டி, இரு சாராரும் எதிரெதிர் நின்று, வில், வேல், வாள், ஈட்டி, கதாயுதம், யானை, குதிரை, தேர் ஆகியவற்றுடன், சூரியன் பிரசன்னமாயிருக்கும் பொழுதில் நடைபெறும். சூரியன் மறைந்ததும் போர் நிகழாது. இதைத் தர்மப்போர் என்பர்.
முதலாம் உலக யுத்தத்தில் (1914-1918) 20 மில்லியன் பேர் இறந்தனர். இரண்டாம் உலக யுத்தத்தில் (1939-1945) 73 மில்லியன் பேர் மடிந்தனர். இவற்றில் நவீன விஞ்ஞான ஆயுதங்களான துப்பாக்கி, ஏவுகணை, குண்டு, எரிகுண்டு, அணுக்குண்டு, எறிகுண்டு போன்றவற்றுடன் யுத்தம் நடைபெற்றது. இதில் பொதுமக்களும் இறந்தவர்களில் அடங்குவர். இது மன்னர் போரில்லை. இது ஒரு நவீன விஞ்ஞானப் போர். பொது மக்களைத் தாக்குவதே இந்த யுத்தத்தின் நோக்கு. முதலாம் இரண்டாம் யுத்தங்களில் முறையே 21 மில்லியன் பேரும், 18 மில்லியன் பேரும் காயமடைந்தனர். இந்த யுத்தங்களால் எய்திய நன்மைகள் பூச்சியமே. நாடும் அழிந்து பொது மக்களும் மாண்டதுதான் கண்ட மிச்சம்.
அன்று மண் ஆசை கொண்ட மன்னன் போர் தொடுத்து மாற்றான் மண்ணைப் பெற்றான். பெண் ஆசை கொண்ட மன்னனும் போர் தொடுத்து மண்ணையும், பெண்ணையும் பெற்றான். அன்று மண்ணும், நாடும், மக்களும் அழியவில்லை. இவை வேறு மன்னன் ஆட்சிக்குள் போனது மட்டும்தான். ஆனால் இன்றைய யுத்தத்தில் எல்லாம் அழிவுமயமே.

Page 68
14 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
எல்லா உயிர்களும் தாயின் கருவறையிலிருந்துதான் பிறக்கின்றன. ஒருயிரான புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றுக்குப் பூமிதான் தாய். எனவே அவைக்குக் கருவறையும் பூமிதான். நாம் ஒரு விதையை நிலத்தில் நாட்டி நீர் ஊற்றிவிட்டால், அது நாலு, ஐந்து நாட்களில் உயிர் பெற்று வெளியே வந்து வளரத் தொடங்கிவிடும். இவ்விதையை வெளியில் போட்டால் இவ்வண்ணம் வராது இறந்துவிடும். பூமித் தாயின் கருவறை மகிமை கண்டீர்.
சில உயிரினங்களின் கருவுற்றிருக்கும் காலம் இவை: யானை - 21-22 மாதம், ஒட்டகம்-13 மாதம், குதிரை-11 மாதம், மனிதன்- 10 மாதம், குரங்கு - 8 மாதம், ஆடு - 6 மாதம், வெளவால் - 7 மாதம், சிங்கம் - 4 மாதம், புலி - 3 மாதம் 15 நாள், அணில்- 1 மாதம், முயல் - 25 நாள், சுண்டெலி - 21 நாள்.
உலக உயிரினங்கள் அனைததும் இப்பூவுலகப் பந்தில் வாழத்தான் விரும்புகின்றன. ஒருயிராயினும் சாக விரும்பமாட்டா. வாழ்வின் வசந்தத்தைக் கண்டும், அனுபவித்தும் வாழத்தான் துடிக்கின்றன. இந்நிலையில் போர், யுத்தம் என்று தொடங்கி அவர்கள் வாழ்வைச் சீர்குலைத்துச் சின்னாபின்னமாக்கி அவலநிலைக்கு உள்ளாக்குவதை நாம் கண்டு மனம் குலைகின்றோம். இப்பொழுது உலகில் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால் பயன் ஏதும் வாராது. விஞ்ஞான வளர்ச்சி கண்டுபிடித்த பயங்கர யுத்தக் கருவிகளின் பாவனைகளை உலகளாவிய ரீதியில் தடைசெய்ய வேண்டும். இதற்கு உலகநாடுகளின் வல்லரசுகள் ஒன்று சேர்ந்து ஆக்கப்பூர்வமான செயலாற்றின் பூமித்தாயின் மக்கள் பூரிப்படைவர். நாடு சிறப்புறும், உலகில் செல்வம் கொழிக்கும். அதன்பின் மக்கள் முகம் சிரிக்கும். மக்கள் தெம்புடன் தெளிவுறுவர். நாடும், உலகமும் முன்னேறும்.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதுTஉம்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதுTஉம்.”
- (சிலம்பு. பதிகம் 55, 57)
-(கொழும்பு- வீரகேசரி வார வெளியீட்டில் 22-02-2009)
DDD

15 ܛ
அதன் வளர்ச்சியம்
நெடுங்காலத்துக்குமுன் பாண்டிய மன்னர்கள் தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் ஆகிய முச்சங்கங்களை நிறுவித் தமிழ்ப் புலவர், கவிஞர் ஆகியோரை ஒருங்கு கூட்டி இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்து வந்தனர். இதில் தலைச் சங்கம், இடைச் சங்கம் ஆகியவற்றில் எழுந்த அரிய இலக்கிய நூல்கள் அத்தனையும் கடற்கோளுடன் சங்கமமாகி அழிந்துபோய் விட்டன. இருந்தும் கடைச் சங்கக் காலத்தில் எழுந்த சில நூல்களைச் சங்க கால இலக்கியங்கள் என்று அழைத்தனர். இச் சங்க இலக்கியங்களான பத்துப் பாட்டு, எட்டுத் தொகை நூல்களைப் பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும், சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் முப்பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர் ஆன்றோரும் சான்றோரும்.
பத்துப் பாட்டு
பத்துப் பாட்டு நூல்களாவன :- (1) திருமுருகாற்றுப்படை, (2) பொருநராற்றுப் படை, (3) சிறுபாணாற்றுப் படை,

Page 69
16 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
(4) பெரும்பாணாற்றுப்படை, (5) முல்லைப்பாட்டு, (6) மதுரைக் காஞ சரி, (7) நெடுநல வாடை, (8) குறிஞ சிப் பாட்டு, (9) பட்டினப்பாலை, (10) மலைபடுகடாம்.
“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வடமதுரைக் காஞ்சி மருவினிய கோலநெடு நல்வாடை கூர்குறிஞ்சி பட்டினப் பாலை படுகடாம் பத்து.”
என்று பத்துப் பாட்டையும் ஒரு வெண்பாவில் அழகுற அமைத்துக் கூறிய சிறப்பினையும் காண்க.
எட்டுத் தொகை
எட்டுத் தொகை நூலிகளாவன :- (1) நற்றிணை, (2) குறுந்தொகை, (3) ஐங்குறுநூறு (4) பதிற்றுப் பத்து, (5) பரிபாடல், (6) கலித்தொகை, (7) அகநானூறு, (8) புறநானூறு.
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
றொத்த பதிற்றுப் பத்தோங்கு பரிபாடல் கற்றறிந்தார் போற்றுங் கலியோ டகம்புறமென் றித்திறத்த வெட்டுத் தொகை.”
என்ற வெண்பாவில் தொகை நூல்கள் எட்டும் அடக்கப்பட்ட சீரினையும் காண்கின்றோம்.
புதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண் கீழ்க் கணக்கு நூல்களாவன : (1) நாலடியார், (2) நான்மணிக் கடிகை, (3) கார் நாற்பது, (4) களவழி நாற்பது, (5) இனியது நாற்பது, (6) இன்னா நாற்பது, (7) ஐந்திணை ஐம்பது, (8) ஐந்திணை எழுபது, (9) திணை மொழி ஐம்பது, (10) தணை மாலை நுாற்றைம்பது, (11) கைந்நிலை, (12) திருக்குறள், (13) திரிகடுகம், (14) ஆசாரக் கோவை, (15) 'பழமொழி, (16) சிறுபஞ்சமூலம், (17) முதுமொழிக்காஞ்சி, (18) ஏலாதி.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 17
இப் பதினெண் நூல்களையும் பின்வரும் நாலடி வெண்பாவில் அமைத்துப் பாடியுள்ள திறனை மெச்சாதிருக்க முடியவில்லை.
“நாலடி நான்மணி நானாற்ப தைந்திணை முப் பால் கடுகங் கோவை பழமொழி - மாமூல மின்னிலை சொல் காஞ்சியுட னேலாதி யென்பவே கைந்நிலைய வாங் கீழ்க் கணக்கு.?
எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, திருக்குறள் ஆகிய நூல்களுக்கு முற்பட்டது தொல்காப்பியமும் திருமந்திரமுமாகும். கடைச் சங்கம் தி.பி (திருவள்ளுவருக்கு பின்) மூன்றாம் நூற்றாண்டுவரை மதுரையில் நிலைத்து நின்று இயங்கியதோடு சங்க இலக்கியங்களும் செழித்து விளங்கின.
ஐம்பெரும் / ஐஞ்சிறும் காப்பியங்கள்
தி.பி. மூன்றாம் (03) நூற்றாண்டு முதல் எட்டாம் (08) நூற்றாண்டுவரை ஐம்பெரும் காப்பியங்களான சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி ஆகிய நூல்களும், ஐஞ்சிறு காப்பியங்களான சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாகசூமார காவியம், உதயகுமார காவியம் ஆகிய நூல்களும் எழுதப்பட்டன. சங்க மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பலவற்றுள் சிறந்தனவாகக் கருதப்படுவன ஐம்பெரும் காப்பியங்களாகும். மேலும் திருவாசகம், பதினெண் சித்தர், உபநிடதங்கள், தத்துவ நூல்கள், நீதி நூல்கள் போன்றனவும் மனித மேம்பாட்டிற்கு உதவி நின்றன.
இதையடுத்துத் தி.பி. எட்டாம் (08) நூற்றாண்டுமுதல் பத்தாம் (10) நூற்றாண்டுவரை வாழ்ந்தது சமய இலக்கியங்களாகும். இதன் பின்னர் பெருகியவைகளே பிரபந்த இலக்கியங்களும், புராண இலக்கியங்களுமாகும். கந்த புராணம் தி.பி. 11ஆம் நூற்றாண்டிலும், பெரிய புராணம் தி.பி. 12ஆம் நூற்றாண்டிலும் எழுதப்பட்டன. புராணக் கதைகள் மக்கள் மத்தியில் சுலபமாகப் பரவத்தொடங்கின. அதனால் புராணக் கதைகளைச் சமயத்துள் புகுத்தினர். இதனால் சமயம் நிலைத்து நின்று மக்களை நாடிச் சென்றது.

Page 70
118 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
பண்டைத் தமிழர்கள் தமிழ் இலக்கியத்தைப் பின் வருமாறு வகுத்தும், பகுத்தும் அததற்குரிய நூல்களைத் தெரிந்தும் வைத்திருந்தனர்.
9 பெருங்காப்பியம் (Epic) :- இதிகாசம் கூறும் மகாபாரதம்,
இராமாயணம்.
• உணர்ச்சிப் பாடல் (Lyric) :- நைடதம்
0 gól örsib (Ethic) :- ഖണബ്രഖ], ഉണങ്ങഖuj.
9 நாடகம் சார்ந்தது (Dramatic) :- சிலப்பதிகாரம்.
• ஆய்வறிவு சார்ந்தது (Scientific) :- அகத்தியர், மற்றைய
சித்தர்கள்.
9 தத்துவ ஞானம் (Philosophic) - சித்தாந்த சாத்திரம்.
தமிழ் இலக்கிய வளர்ச்சி
இனி, மக்கள் மத்தியில் இன்றைய தமிழ் இலக்கிய நிலை குறித்துச் சற்று ஆராய் வாம். அன்றைய கடினமான தமிழ் இலக்கியங்களைப் பல நாடுகளிலுள்ள தமிழ் எழுத்தாளர்கள் பலர் இலகு தமிழில் எழுதி வருகின்றனர். இவை மக்கள் மத்தியில் போய்ச் சேரும் பொழுது அவர்களிடம் குதூகலம் காணப்படுகின்றது. இதனால் மேலும் பல எழுத்தாளர்கள் அறிவுப் பூர்வமான ஆக்கங்களையும், மக்களின் தேவைக்குரிய படைப்புகளையும் சமைப்பதில் உந்தப்படுகின்றனர். இவை தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு உதவிகரமாய் அமைகின்றது.
இன்று ஈழத்தின் சில பகுதிகளில் நாட்டுநிலைக் குலைவால் அங்கு தமிழ் இலக்கிய வளர்ச்சி ஒரு தற்காலிகப் பின்னடைவு பெற்றுள்ளது. இந் நிலையும் கூடிய சீக்கிரம் மாறிவிடும். இன்னும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோநேசியா, கனடா, சிறி லங்கா போன்ற நாடுகளிலுள்ள தமிழர்களின் தமிழ் இலக்கிய வளர்ச்சி குன்றாதிருக்கிறது. அங்கு கம்பன் கழகம், திருக்குறள் மனனப் போட்டி இலக்கிய ஆய்வு, பேச்சுப் போட்டி, தர்க்க மேடை, கட்டுரைப் போட்டி, தமிழ் மொழிப் பரீட்சை, மாணவர் கருத்துக் களம், கலை நிகழ்ச்சி, நாடகம் போன்றன நடைபெறுகின்றன. இவற்றால் தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெறுகின்றது.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 19
புலம் பெயர்ந்த தமிழர்
ஈழத்திலிருந்து மேலை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் மொழிகளில் கல்வி கற்க வேண்டிய நிலையில் உள்ளனர். இருந்தாலும் அதிகமான பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியையும் கற்பிக்க வேண்டும் என்ற பெரு நோக்குடன் செயற்பட்டு வருவது போற்றற்குரியது.
நம் கலாசாரத்துக்கும், தமிழ் மொழிக்கும், சமயத்துக்கும் கூடிய நெருக்கம் உண்டு. நாம் நமது மொழியைப் பேணிக் காப்பாற்றாது விட்டால் நம் கலாசாரமும், சமயமும் இழந்து, அடையாளமற்றவராவோம். மொரிஷியஸ், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தம் மொழியைக் கைவிட்டதன் காரணமாகத் தம் அடையாளம், கலாசாரம், சமயம் ஆகியன இழந்து, தம் தாய் நாட்டுத் தொடர்பறுந்து தவிக்கின்றனர். இதைக் கருத்திற் கொண்டுதாம் புலம் பெயர்ந்து மேலை நாட்டில் வாழும் நம் உறவுகள் முன்கூட்டியே தம் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழி, கலை, கலாசாரத்தைப்புகட்டத் தொடங்கியுள்ளனர். சனி, ஞாயிறு தினங்களில் கோயில்களில் நடைபெறும் வகுப்புகளில் இப் பிள்ளைகள் பங்கேற்று இவற்றைக் கற்கின்றனர். இவை யாவும் இப் பிள்ளைகளின் பின்னாளின் தமிழ்ப் பணிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாகும்.
புலம் பெயர்ந்து மேலை நாட்டில் வதியும் தமிழ் எழுத்தாளர்கள் அறிவுப் பூர்வமான கருத்தமைந்த ஆக்கங்களையும், ஆய்வுகளையும் படைத்து, நூல் வடிவிலும், முன்னணிப் பத்திரிகைகளிலும் வெளியிடுவதை நாம் காண்கின்றோம். இவர்கள் முன்பெல்லாம் தம் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தம் முழு ஆற்றலையும், நேரத்தையும் செலவழித்தனர். ஈழத்தில் ஏற்பட்ட திருப்புமுனையால் இன்று அவர்கள் தம் இனத்தையும் மொழியையும் காப்பாற்றவும், உதவவும் முன்வந்துள்ளனர். தமிழ் ஆர்வம் கொண்டோர் சங்கங்கள், சபைகள், கழகங்கள், தமிழ் விழாக்கள், அரங்கங்கள், அவைகள் போன்றவற்றை அமைத்துத் தமிழ் இலக்கியம் வளர அளப்பரிய செயலாற்றுவதை நாம் காண்கின்றோம். இதற்கு s gbTJ600TLDIT85 “பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் (ELAB)" என்ற நான் சார்ந்த எமது அமைப்பினைக் கூறலாம்.

Page 71
120 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
மேலை நாட்டில் எம் இளைஞர்
இனி, நம் பார்வையை மேலை நாட்டில் வாழும் எம். இளம் சந்ததியினர் பக்கம் திருப்புவோம். இவர்கள் ஒன்று கூடல், பழைய மாணவர் சங்கம், கவியரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சி, வழக்காடு மன்றம், நாடகம் போன்றவை அமைத்துத் தம்மைத் தாமே மேல் நிலைப்படுத்திக் கொள்வதைப் பார்த்து வியந்து நிற்கின்றோம். இவர்கள் களங்கமற்ற, துணிவு கொண்ட, ஆய்வுடைய, அறிவுப் பூர்வமான, உயிர்த் துடிப்புடையவர்கள். எதற்கும் 'ஏன்? என்று கேள்விக் கணை தொடுத்துத் தகுந்த விடை எதிர்பார்ப்பவர்கள். நாம் வளர்ந்த முறை வேறு. அவர்கள் வாழும் முறையும் வேறு. நாம் எம் பெற்றோரை ஏன்? ஏன்று கேட்டால் நமக்குக் கிடைத்த பரிசு அவர்களுக்கு இன்று கிடைப்பதில்லை. எனவே அவர்கள் ஏன்? ஏன்? என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவை பற்றி ஒரு சில கேள்விகளையும் விடைகளையும் பார்ப்போம்.
9 திருமண மேடையில் தாலி கட்டும் பொழுது புரோகிதர் கூறும் மொழி புரியாத மந்திரம் எதற்கு? இதைத் தமிழில் கூற முடியாதா? புரோகிதர் மந்திரம் இது. “மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபகே தீவம் ஜீவ சரத்ச்சதம்.” இம் மந்திரத்தின் கருத்தென்ன தெரியுமா? "எனது வாழ்வுக்குக் காரணமான மங்கள நுாலை உன் கழுத்தரிலி அணிவிக் கரிறேன். நீயும் என்னுடன் நுாறானி டு வாழவேண்டும்’ என்பதுதான். மணமகன் கூற வேண்டியதைப் புரோகிதர் கூறி மணமகளைத் தன் மனைவியாக்கிக் கொண்டாரே! மங்கள நூல் கட்டும் வழக்கம் ஒழிந்து பவுண் தாலிக்கொடி கட்டும் வழக்கம் வந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகி விட்டாலும், இன்றும் நூல் மந்திரம் மாறாதுள்ளதே! தவறான மந்திரத்துக்கு என்ன சக்தி உண்டு? தெரியாத மொழியைப் புரோகிதர் மனப்பாடம் செய்து சொல்வதை மந்திரம் என்று கூறுகின்றோமே!
0 சுவாமிக்கு அபிடேகம் செய்யும்பொழுது குடம் குடமாகப் பால் ஊற்றுவதையும் நமக்குப் புரியாத மொழியில் மந்திரம் ஒதுவதையும் பலர் எதிர்க்கின்றனர். ஓதும் மந்திரத்தைத் தமிழில் சொன்னால் யாவருக்கும் புரியும் என்ற வாதத்தை முன்நிறுத்துகின்றனர். ஊற்றும் பால் வீணே அவமாகிறதே! அதை வறிய குழந்தைகளுக்குக் கொடுக்கலாமே என்பது அவர்கள்

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 121
அவா. மேலும் “பூசைக்குப் பூவுண்டு, நீருண்டு, இலையுண்டு? எனத் திருமூலர் சாட்சியாகிறார்.
பிட்டுக்கு மண் சுமந்த கதையைக் கூறி “பிரம்பால் அடித்த அடி யாவர் முதுகிலும் விழுந்தது. ஆனால் சாப்பிட்ட பிட்டு அனைவர் வாயிலும் ஏன் போகவில்லை? என்று கேள்வி தொடுக்கின்றனர்.
வட நாட்டுத் திருமணங்களில் மணமகளைப் பார்த்துச் சொல்லப் படுகின்ற இன்னொரு மந்திரம் இது. “சோமஹ ப்ரதமோ! விவதே கந்தர் வோ விவித உத்ரஹ! த்ரதயோ அக்னிஷ்டே! பதிஸதுரியஸ்தே மநுஷ்யஜாஹ!” இதன் பொருள்:- “சோமன் என்னும் தேவன் உன்னை முதலில் அடைந்தான். கந்தர்வன் உன்னை இரண்டாவதாக அடைந்தான். அக்கினி தேவன் உன்னை மூன்றாவதாக அடைந்தான். மனிதனாகிய நான் உனக்கு நான்காவது நாயகன்” உண்மையில் மந்திரம் கூறிய புரோகிதன் நான்காவது நாயகனாகின்றான். மணமகன் ஐந்தாம் இடத்துக்குத் தள்ளப் பட்டுள்ளான். ஒரே மேடையில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஐந்து கணவன்மாரை வரித்தவளாகின்றாள் அந்த மணமகள். அவள் என்ன இன்னொரு திரெளபதியா? இந்த மந்திரத்தின் பொருள் அறிந்தால் அவள் என்ன பாடுபடுவாள்?
முன்னொருநாள் இறைவன் பயிரவத் துறவியார் கோலம் பூண்டு சிறுத்தொண்ட நாயனாரிடம் சென்றார். சிறுத்தொண்டர் துறவியாரை வணங்கி உணவு உண்டருள வேண்ட, அதற்குத் துறவியார் “நான் உண்ண விரும்புவோன் ஒரு குடிக்கு ஒரு மகனாய் இருத்தல் வேண்டும். அவனைத் தாய் பிடிக்கத் தந்தை அறுத்து, இருவரும் விரும்பிச் சமைத்த கறியையே யாம் உண்போம்.” என்றார். இதைச் சிறுத்தொண்டர் தம் மனைவிக்கு உரைத்துப் பாடசாலை சென்றிருந்த தம்மகனை அழைத்து வந்து அவனை அறுத்துக் கறி சமைத்துத் துறவியாருக்கு உணவு படைத்தனர். “உம் மகன் இங்கு வந்தால் தான் நான் உண்பேன். அவன் வரும் வழியை நோக்கி அழையும்” என்றார் துறவியார். சிறுத்தொண்டர் தம்மனைவியுடன் வெளியே வந்து “குழந்தாய்! வருவாய்.” என்றதும் பாடசாலையிலிருந்து ஓடி வருபவனைப் போல் அவர்களுடைய மகன் ஓடி வந்தான். இது பெரியபுராணக் கதை.

Page 72
122 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
இக் கதை என்ன பாடத்தைக் கூறுகின்றது? தூய்மை வாய்ந்த இறைவன் நரபலி உண்பாரா? இறைவன் ஓர் உயிரை இவ்வண்ணம் வருத்த விரும்புவாரா? தம் ஒரேயொரு மகனைத் தாய் பிடிக்கத் தகப்பன் அரிந்து கறி சமைப்பார்களா? இப்படியும் ஒரு பெற்றோரா? அறிவு சார்ந்த செயலாக ஒன்றும் அமையவில்லையே என்று கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றனரே!
9 ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட நலிவு நீக்க ஒரு தந்திர மந்திரவாதி அழைக்கப் பட்டார். வந்த மந்திரவாதி ஒரு பழத்தைப் பெட்டியொன்றுள் வைத்து அதை ஒரு கிளி ஆக்கித் தன் திறமையை எடுத்துக் காட்டி மற்றவர்களின் பாராட்டும் பெற்றார். அதன்பின் மந்திரவாதி “உங்கள் குடும்பத்தில் ஏவி விடப்பட்ட Liல தரீய சக்திகள் நிலவுகின்றன. அவற்றை நான் விரட்டியடித்து உங்களை நிம்மதியாக வாழ வைக்க மு:யும். இதற்கு நீங்கள் எனக்கு அறுநூறு பவுண் (2600.00) தரவேண்டும்.” என்று கூறினார். இவை யாவையும் உற்று நோக்கிக் கொண்டிருந்த அக் குடும்பத்தாரின் பாடசாலை செல்லும் மகன் “ஐயா! மந்திரவாதியாரே! நீங்கள் ஒரு பழத்தைக் கிளியாக மாற்றும் வல்லமை பெற்றுள்ளிர். நீங்கள் எங்களிடம் கேட்ட அறுநூறு பவுணையும் (2600.00) மந்திரத்தால் வரவழைத்துக் கொண்டு எங்களுக்கு உதவலாம் அல்லவா!” என்று கூறிய பொழுது மந்திரவாதி மலைத்து விட்டார்.
நம் இளந் தலைமுறையினர் இப்படியான அறிவு சார்ந்த நோக்கில் சிந்திப்பதையி நாம் பெருமைப்பட வேண்டும்.
இவ் வ"ப“ன அறிவுப் பூர்வமுடைய ஓர் இளம் தமிழ்ச் சமுதாயமும் மேலை பாடுகளில் தோன்றித் தமிழை வளர்க்கும். இன்னும் தொல்காப்பியமும், திருமந்திரமும், பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும், பதினெண் கீழ்க் கணக்குமான சங்க கால நூல்களும், திருவாசகமும் , ஐம் பெரும் காப்பியங்களும் , ஐஞ சிறு காப்பியங்களும் நம்மிடையே இருக்கின்றவரை தமிழ் இனி வீறுநடை போட்டு மேலும் தளிர்க்கும், துளிர்க்கும். மேலை நாடுகளிலும் தமிழ் இனி முழங்கும்.
DD

123 ܛ
செய்ந்நன்றி மறுப்பது அறும் அன்று
*நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.” - (குறள். 108)
ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் ஆகாது; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும் என்று தெய்வப் புலவர் திருவள்ளுவர் உத்தர வேதத்தில் கூறியுள்ளார். இஃது ஒரு வேதவாக்கு. உலகம் உய்ய இவ்வேதவாக்கு ஓர் அருள் வாக்காய் அமைகின்றது. இதை நிலைப்படுத்திச் செயலில் ஆற்றுப்படுத்தல் நம் அனைவரின் தலையாய கடமையாகும்.
நன்றி என்ற பதத்திற்கு நன்மை, உதவி, அறம், செய்ந்நன்றி, விசுவாசம் ஆகிய கருத்துகள் உள்ளன. நன்றி என்பது ஒரு பெருமகனின் உணர்வு வெளிப்பாடாகும். ஒருவர் பெற்ற உதவிக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் நோக்கில் தன் உணர்ச்சி வேகத்தாலுமி, ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையாலும் எழுந்த செயல் தான் நன்றிக் கடனாகும். பல உலக மதங்களின் வரலாற்றுக் குவிமையமாக நன்றியின் செயற்பாடு அமைந்துள்ளது. இது ஒழுக்கத் தத்துவ ஞானி ஆடம் சிமித் (Adam

Page 73
124 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
Smith) போன்றவர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. மனோதத்துவ சாத்திரத்துக்கமைய நன்றியைப் பற்றிய திட்டப்படியான ஆழ்நிலை ஏடாய்வு 2000ஆம் ஆண்டளவில்தான் தொடங்கியது. நேர் உணர்ச்சி வேகத்தை அறிவதிலும் பார்க்க, இக்கட்டு இன்னலை அறிவதில் கூடிய மனநிலை செலுத்தப்பட்டதன் காரணத்தால் மேற்காட்டிய ஆய்வு வேண்டியதாயிற்று.
செய் உதவிகளும் நன்றி கூறலும்
ஒருவர் உதவி பெற்றவிடத்து அந்த நிலையை அவர் எவ்வாறு கருத்தில் எடுக்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் நன்றி கூறல் அமைகின்றது. மக்கள் தாம் பெற்ற உதவியை வேறுபட்ட நிபந்தனையான மதிப்பு, விலை, கொடையாளரின் பரந்த உட்கருத்து, அதைக் கொடுத்ததன் நோக்கம் ஆகியவற்றை வைத்துக் கணிப்பதனால் நன்றி கூறல் முறைகளும் வேறுபட்டு அமைகின்றன.
நாம் செய்யும் உதவிகளைப் பல வகைகளில் அடக்கலாம். சரீர உதவி, பொருளுதவி, பணவுதவி, அறிவு சார்ந்த உதவி, பாதுகாப்புதவி, கண்தானம், சிறுநீரகத் தானம் போன்றவை ஒரு சிலவாகும். செய்த உதவிக்கு நன்றி கூறல் ஒரு பண்புச் செயல். நன்றி” என்று கூறும் வாய்ச்சொல், நன்றிக்கடிதம் எழுதுதல், முகச் செயலான புன்சிரிப்பு, கைகூப்பி வணங்கல், கை குலுக்குதல், கண்வழிக் கருணைப் பார்வை, உணர்சி வயப்பட்ட கட்டியணைப்பு, சொல்லை விஞ்சும் முத்தமிடல், பெற்ற உதவிபோல் வேறுவகையில் உதவல் ஆகியனவும் நன்றி கூறும் முறைகளாகும்.
தாய் தந்தையர், ஆசிரியர், உயிர்த் தோழன், உற்றார் உறவினர் செய்யும் உதவிகளை நாம் என்றும் மறக்கக் கூடாது. இவர்கள் பலனை எதிர்பார்த்து உதவுவோரல்லர். நன்றி மறவேல்” என்று ஆத்திசூடியில் ஒளவையார் கூறியுள்ளார். நாம் பலனை எதிர்பார்த்து மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்று ஆன்றோர் கூறியுள்ளனர். ‘நன்றி ஒருவற்குச் செய்தக்காலி அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா..? என்று ஒளவையார் மூதுரையில் கூறியுள்ளார். ஆனால் நாம் அனைவரும் பலனை எதிர்பார்த்தே உதவி புரிகின்றோம்.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 125
இனி நன்றிக்கடன் பற்றித் தொல்காப்பியம், பகவத்கீதை, மகாபாரதம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருவாசகம் போன்ற நூல்கள் கூறும் செய்திகளையும் காண்போம்.
தொல்காப்பியம்
ஓர் ஆண்மகன் தன் வாழ்க்கைத் துணையாக ஒரு பெண்மகளை வரித்துக்கொண்டு, அவளின் காலம்பூராவும் அவளுக்கு உடை, ஊண், உறை கொடுத்து, இவற்றால் உயிரும் கொடுத்து, வெளியுலகம் காட்டி, அவளை என்றும் பாதுகாத்து, அவளுக்கு இனிய இன்ப வாழ்வளித்துக் கணவன் நிலையில் நின்று செயலாற்றுகின்றான். இதனால் அவள் காண்பதெல்லாம் அவன்தான். ஆதலால் அவள் அவன்மேல் தீராக் காதல் வைத்திருப்பாள். இந்நிலையில் அவளை வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டோன் இறந்துபட்டவிடத்து அவன் தலையோடு தன் முலைகளையும் முகத்தையும் சேர்த்து இறக்கும் நிலையைக் காண்கின்றோம். கணவனோடு இறந்த மனைவியின் இறப்பைக் கண்டோர் பிறர்க்கு எடுத்துக் கூறிய ‘முதானந்தம்’ என்ற நிலையையும், கொடிய பாலைவனத்தின் வழியில் தன் ஆருயிர்க் கணவனை இழந்து தனியளாய்த் தவித்து நின்று தலைவி வருந்திப் புலம்பிய ‘முதுபாலை” (உடன்கட்டையேறல்) நிலையையும், காதலன் இறந்துபட்ட விடத்து, அவன் மனைவி உடன்கட்டையேறாது கைம்மை பூண்டு தவம் புரியும் °தாபத” நிலையையும் படம்பிடித்துக் காட்டுகின்றார் தொல்காப்பியர்.
*முலையும் முகனும் சேர்த்திக் கொண்டான் தலையொடு முடிந்த நிலையொடு .
- (பொருள். 77-16-17)
“கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந் தமும்.”
- (பொருள். 77-22-23)
“நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையும்.”
- (பொருள். 77-24-25)
“காதலன் இழந்த தாபத நிலையும்.”-(பொருள் 77-29)

Page 74
126 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
பெண்கள் தம் கணவரை இழந்த நிலையில் பின்வரும் மூன்று நிலைகளில் நின்று தம் நன்றிக் கடனைச் செலுத்தி நிறைவடைகின்றனர்.
0 மூதானந்தம் - கணவன் இறந்த பொழுதே
மனைவி உடனுயிர் நீத்த நிலை.
0 பாலை நிலை - உடன்கட்டையேறும் வழக்கம்.
9 தாபத நிலை - உடன்கட்டையேறாது கைம்மை
பூண்டு தவம்புரி நிலை.
பகவத்கீதை
அருச்சுனனுக்கு கிருஷ்ணனின் விசுவரூபத்தைக் காண்பதற்கு ஞானக்கண் கொடுத்தார் கிருஷ்ணபகவான். கிருஷ்ணன் தன் ஈசுவர வடிவத்தைக் காட்டினார். அருச்சுனன் கண்ட விசுவரூபத்தை வியந்து கண்கொள்ளாக் காட்சியென்று பூரிப்படைந்தான். இதற்காகத் தேவனைத் தலையால் வணங்கிக் கைகூப்பி நன்றி கூறினான் அருச்சுனன். மேலும் கிருஷ்ணன் உபதேசித்த உபதேசங்களுக்கும் அருச்சுனன் நன்றி கூறி வணங்கி நின்றான்.
LD&ETLIFTyg5 5
குந்திதேவி கன்னியாயிருந்தபொழுது பெற்ற குழந்தையைப் பழிச்சொல்லுக்கஞ்சி ஒரு பேழையுள் வைத்துக் கங்கையில் விட்டாள். அப்பேழையைத் திருதராட்டிர மன்னனின் தேர்ப்பாகன் எடுத்து அக்குழந்தைக்குக் கர்ணன்' எனப் பெயர் சூட்டி வளர்த்து, கெளரவர் பாண்டவரோடு சேர்ந்து வில்வித்தை கற்று வந்த பொழுது, துரியோதனனுடன் கர்ணனுக்கு நட்பு ஏற்பட்டது. அருச்சுனன் வில்வித்தையில் சிறந்து விளங்கினான். இதனால் மனம் உடைந்த கர்ணன் தன்னுடன் விற்போர் செய்ய வருமாறு அருச்சுனனுக்குச் சவால்விட, தேர்ப்பாகனான கர்ணன் அரச குமாரனுடன் போட்டியிடத் தகுதி அற்றவன் என்று கிருபாச்சாரியார் தெரிவிக்க, இதையறிந்த துரியோதனன் கர்னனுக்கு முடிசூட்டி அங்க நாட்டுக்கு அதிபதியாக்கினான். பாரதப்போர் தொடங்கிய பொழுது குந்திதேவி கர்ணனை நாடித் தான்தான் கர்ணனின்

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 127
தாய் என்றும், பஞ்சபாண்டவரான தருமர், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அவனுக்குத் தம்பிமார் என்றும், இப்போரில் கர்ணனையும் பாண்டவர் பக்கம் வருமாறு வேண்டி நின்றாள். இதற்குக் கர்ணன் இசையாது, துரியோதனனுக்குத் தான் கடமைப்பட்டவன் என்றும், அவன் போட்ட அன்னத்துக்கும், உதவிக்கும் அவனுடன் நின்றே யுத்தம் புரிவேன் என்றும் கூறித் தாயை அனுப்பி வைத்தான். இங்கு நாம் கர்ணனின் நன்றிக் கடனைக் காண்கின்றோம்.
பாண்டு மன்னன் இறந்த பொழுது அவன் இரண்டாவது மனைவி மாத்திரி பாலை” நிலையில் நின்று உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துத் தன் நன்றிக்கடனை வெளிப்படுத்தினாள்.
&5bLITTLDTuu6OOT Lb
இலங்கை வேந்தன் இராவணன் இறந்த போது அவன் மனைவி மண்டோதரியும் அவனுடன் உயிர் நீத்தாள் என்ற செய்தியையும் கம்பராமாயணத்தில் காண்கின்றோம். இது அவளின் நன்றிச் செயல். இச் செயலை ‘முதானந்தம்' என்று கூறுவர்.
இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனை முடிசூட்டி மன்னன் ஆக்கினான். இப் பேருதவிக்காக சுக்கிரீவன் தன் படைகளுடன் இலங்கை சென்று சீதையை மீட்கும் பணியில் ஈடுபட்டு இராமன் செய்த உதவிக்குச் செய்ந்நன்றி செய்து காட்டினான்.
வீபீடணன் தன் அண்ணன் கும்பகருணனை இராமனிடம் வந்து சேருமாறு வேண்டினான். அதற்குக் கும்பகருணன் “அன்பான தம்பியே! நீண்டகாலம் என்னை மிக அருமையாய் வளர்த்து இன்று போர்க்கோலமும் செய்து போர்க்களத்திற்கு அனுப்பியிருக்கிற என் அண்ணன் இராவணனுக்காக உயிரை விடாமல் இராமனிடம் வரமாட்டேன்” என்று கூறித் தன் செய்ந்நன்றி நிலையைக் காட்டுகின்றான்.
சிலப்பதிகாரம்
கோவலன் கொலையுண்ட பொழுது கண்ணகி பாண்டிய மன்னன் அரண்மனை ஏகி, நீதி கேட்டு, நீதி தவறியதால் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனும், அவன் அரசி கோப்பெருந்தேவியும் உயிர் துறக்க

Page 75
128 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
கண்ணகி பாண்டிய நாட்டை அழித்துத் தானும் தெய்வமாகினாள். மாதவி கைம்மை நோற்றுத் தவம் புரிந்தாள். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் மணிமேகலை பிக்குணியானாள். கோப்பெருந்தேவி பாண்டிய மன்னனோடு உடன் உயிர் நீத்தமையை ‘முதானந்தம்’ என்றும் மாதவி கைம்மை நோன்பிருந்ததைத் தாபத' நிலை என்றும் கூறுவர்.
திருவாசகம்
“நான் தகவிலன் என்பதை அறிந்தும் என்னை ஆட்கொள். என் உள்ளத்தை உருக்கி அதை விலகச் செய். உடலை ஒதுக்கிவிட்டு நான் விரைவில் முக்தி அடையும் படி செயப். கங்காதரா! உன்னை நான் மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.” என்றும், “என்னை ஏற்றுக்கொள். உன்னை நான் வணங்குவேன். என்னை உன் கருணையினால் அடிமை ஆக்கினாய். எனக்குத் துவக்கமும் முடிவும் நீயே. அப்பனே! உன்னை வணங்குகிறேன்.” என்றும் கூறி மணிவாசகர் இறைவனை வேண்டுகின்றார். இங்கு மணிவாசகர் உதவி பெறமுன்பே நன்றி கூறும் பாங்கினைக் காண்கின்றோம்.
கன்னிப் பெண்கள், மார்கழி மாதம் பனிகொட்டும் அதிகாலை எழுந்து நீராடி, கோவிலில் தரிசனம் செய்து, திருவெம்பாவை பாடித் தெருவழி நடந்து மீண்டும் கோவிலை அடைந்து தமக்கு நற்கணவரைத் தந்தருளும்படி கடவுளை வேண்டிநிற்பர். ‘உன்னைப் பிரானாகப் பெற்ற உன்சீர் அடியோம், உன் அடியார் தாள் பணிவோம், ஆங்கு அவர்க்கே பாங்கு செய்வோம், அன்னவரே எம் கணவர் ஆவார். எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்! எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க எம்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க!.” என்று நம் கன்னிப் பெண்கள் பாடித் துதித்து நின்று கடவுளுடன் பேரம் பேசி முன்கூட்டியே நன்றியும் தெரிவித்துப் பின்னாளில் நற்கணவரையும் அடைகின்றனர். இங்கும் பலன் கிட்டுமுன் நன்றி கூறிப் போற்றி நிற்கும் கன்னியரைப் பார்த்து மகிழ்கின்றோம்.

நுனாவிலூர் கா. விசயரத்தினம் + 129
இதுவரை ‘நன்றி கூறல்’, ‘நன்றிக்கடன் செய்தல்” என்ற மனஉணர்ச்சிச் செயலானது கடந்த எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவிருந்தே நம்முடன் ஒட்டிக் கலந்து உறவாடி ஒரு நீண்ட முடிவிலாப் பெரும் பயணத்தை மேற்கொண்டு இற்றைவரை வீறுநடை போடுவதை எண்ணி மனம் பூரிப்படைகின்றது. குறளில் தொடங்கிய இக் கட்டுரையைக் குறளில் முடிக்கச் சித்தம் கொண்டேன். எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாம். ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. " - (பொருள்.110)

Page 76
ܛ 130
நூன் விடும்பும் இலக்கிய நூயகன் சிலிம்பில் இளங்கோ
' శిక్ష శఈ4 %, జ*? భ**
*** : జి షోడr:
, - ... ix.
, . . . . . . . . . . . . . . ... :: *, r*.,,,
... s.
குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்ற சேர மன்னனுக்கும் நற்சோணை என்ற நங்கைக்கும் பிறந்த இரண்டாவது மைந்தர் இளங்கோவடிகள் ஆவார். இவரின் மூத்தவர் சேர மன்னர்களில் ஒல் காப் புகழ் பெற்ற சேரன் செங்குட்டுவன் ஆவர். இவர் கற்பின் கண்ணகிக்குக் கற்கோயில் சமைத்துப் பாரறியப் பத்தினித் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்தவர். இளவரசனான இளங்கோ துறவறம் பூண்ட கதையையும் காண்போம்.
கணியன் கூற்று
அன்றொரு நாள் ஒரு கணியன் அரண்மனை ஏகி இளங்கோவைப் பார்த்து
 
 
 
 
 

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 131
“இளவரசர் வெகுவிரைவில் பார் போற்றும் மன்னனாவதற்குரிய அறிகுறிகள் உள்ளன.” என்று கூறிவிட்டுச் சென்றான். இதையிட்டுக் கலக்கமடைந்தார் இளங்கோ. தன் மூத்த சகோதரன் சேரன் செங்குட்டுவன்தான் அரியாசனத்துக்கு உரியான். அதற்குத் தான் தடையாக இருக்கக் கூடாது என்று மனங்குலைந்தார். அரச குடும்ப மரபை மீறக் கூடாது என்று மனத்திடங்கொண்டு, அண்ணனுக்கு இடமளித்து, அரசைத் துறந்து, துறவறம் பூண்டார். இச் செயல் சேர நாட்டு மக்களைக் கலங்க வைத்து விட்டது.
சிலப்பதிகாரம்
இளவரசர் இளங்கோவடிகள் தி.பி. (திருவள்ளுவருக்குப் பின்) இரண்டாம் நூற்றாண்டு அளவில் சிலப்பதிகாரத்தை எழுதினார் என்பர். ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையானதும் காலத்தால் முந்தியதும் சிலப்பதிகாரமாகும். சிலம்பின் வரலாற்றைக் கூறுவதால் இந்நூல் *சிலப்பதிகாரம்” என்ற பெயர் பெற்றது. இந் நூல் கோவலன் கண்ணகி கதையைக் கூறுகின்றது. சோழ நாட்டுக் காவிரிப்பூம் பட்டினத்தின் மாசாத்துவான் என்னும் வணிகனின் மகன் கோவலன் ஆவான். இவன் பேரழகன், பெரும் புகழினன், கலைஞன். அந்நகரிலுள்ள மாநாய்கன் என்னும் வணிகனின் மகள் கண்ணகி. அழகும், பண்பும், கற்பும் மிக்கவள். பதினாறு வயதினனான கோவலனுக்கும் பன்னிரண்டு வயதினளான கண்ணகிக்கும் திருமணம் நடைபெறுகின்றது. அவர்களின் இல்லற வாழ்க்கை மிக இனிமையாகச் சில ஆண்டுகள் நடைபெறுகின்றது. ஆடல், பாடல், அழகு என்னும் முக்கலைகளிலும் தேர்ச்சி பெற்ற மாதவியின் அரங்கேற்றத்தில் மன்னன் தலைக்கோலும், ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன்மாலையும் பரிசாக அளித்துப் பாராட்டுகின்றான்.
இம் மாலையைப் பெறுவோன் மாதவிக்கு உரியவனாவான் என்று கூறஃகலையார்வம் மிக்க கோவலன், மாலையை வாங்கி, மனைவியையும் குடும்பத்தையும் மறந்து, மாதவியுடன் வாழ்கின்றான். சில திங்கள் கழிந்தபின் கானல்வரி ஊடலால் மாதவியையும் பிரிந்து, பெருஞ் செல்வமெலாம் இழந்து, கண்ணகியிடம் வந்து நடந்தது எல்லாம் கூறிக் கலங்குகின்றான். கண்ணகி அவனை வரவேற்றுத் தேற்றிக் காற்சிலம்பு உள்ளதெனக் கூறி, ஒரு சிலம்பை விற்று வணிகம் செய்வதற்கு மதுரைக்குச் செல்கின்றனர். பொற்கொல்லன் ஒருவன் அச் சிலம்பை

Page 77
132 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
வாங்குவதாகக் கூறி, பாண்டிய மன்னனிடம் சென்று பாண்டிமாதேவியின் சிலம்பு திருடிய கள்வன் கிடைத்தானென்று கூற, பாண்டிய மன்னனும் கோப்பெருந்தேவியின் ஊடலில் ஊறித் தீர விசாரியாது கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வருக என்று ஆணையிடக் கோவலன் வெட்டிச் ஈரிக்கப்படுகிறான்.
நீதி கேட்கும் கண்ணகி
இதை அறிந்த கண்ணகி மற்றச் சிலம் பைக் கையில் எடுத்துக்கொண்டு அரண்மனை நாடி நீதி கேட்டுத் தன் சிலம்பின்-பரல் மாணிக்கம் எனக் கூறி நிற்க, மன்னன் தன் தேவியின் சிலம்பின்-பரல் முத்து எனக் கூறிச் சிலம்பை வைக்க, கண்ணகி சிலம்பை எடுத்து உடைக்க மாணிக்கப் பரல்கள் தெறித்துப் பறக்கின்றன. குற்றம் உணர்ந்த பாண்டிய மன்னன் தானே கள்வன், அரசனல்லன் என்று கூறி மயங்கி விழுந்து உயிர்விடுகின்றான். கோப்பெருந்தேவியும் மன்னன்மேல் விழுந்து உயிர் விடுகின்றாள்.
மேலும் கண்ணகி தன் இடது மார்பைத் திருகி வீசி எறிகின்றாள். தீ எழுகிறது. தீக் கடவுள் தோன்றி அவள் ஆணை கேட்டு நல்லுயிர்கள் நீக்கித் தீயவர்களை எரித்தழிக்கின்றான். பின் கண்ணகி வையை ஆற்றின் ஓரமாகச் சென்று சேர நாட்டில் உள்ள திருச்செங்குன்றம் ஏறி ஒரு வேங்கை மர நிழலில் நிற்க, கோவலன் விண்ணவர் சூழ வந்து கண்ணகியை அழைத்துச் செல்கின்றான். இதைக் கண்ணுற்ற குறவர் கண்ணகியே தமது குலதெய்வம் என்று குரவை ஆடி, முருகனைப் பாடி, சேர மன்னனை வாழ்த்தினர். சேரன் செங்குட்டுவன் எதிர்கொண்ட ஆரிய மன்னரை வென்று இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டிக் கண்ணகிக்குக் கோட்டம் எழுப்பி விழா நடாத்தி மகிழ்கின்றான். கண்ணகியின் தாயும், மாமியும் உயிர் நீத்ததும், மாமனும் தந்தையும் துறுவு பூண்டதும், மாதவியும் மணிமேகலையும் துறவிகளானதும் ஆகிய நிகழ்வுகளுடன் சிலப்பதிகாரக் காப்பியம் முடிவுறுகின்றது.
சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் ஆகிய மூன்று காண்டங்களைக் கொண்டது. இவற்றில் உட்பிரிவுகளாக 30 காதைகளும், அவற்றில் 5,270 வரிப்பாடல்களும் உள்ளன. கோவலன், கண்ணகி சோழ நாட்டில் பிறந்து வளர்ந்து, பாண்டி

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 133
நாட்டில் வாழ்ந்து கோவலன் கொலை செய்யப்பட்டு, சேர நாட்டில் கண்ணகி தெய்விகமடைந்த பற்பல காட்சிகள் கொண்டது சிலப்பதிகாரக் காப்பியம். இவ்வண்ணம் மூன்று நாடுகளையும் (பூம்புகார், மதுரை, வஞ்சி), மூவேந்தர்களையும் (சேரர், சோழர், பாண்டியர்) தரிசனம் செய்த காப்பியமாகும். இக் காப்பியத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் பொதிந்துள்ளன.
நூலை யாக்கும் ஆசிரியர்கள் கடவுள் வணக்கத்துடன் பாடலைத் தொடங்குவர். இது நம் முன்னோர் பின்பற்றும் மரபாகும். ஆனால் இளங்கோவடிகள் திங்கள்”, “ஞாயிறு’, ‘மாமழை’, ‘பூம்புகார்’ ஆகிய இயற்கையை முதலிற் போற்றுகின்றார். திங்களைப் போற்றுதும், . ஞாயிறு போற்றுதும், . மாமழை போற்றுதும் ..” என்று கூறி இயற்கையிற் கடவுளைக் காண்கின்ற பெருந்தகை அவர். இதில் அவர் ஒரு திருப்புமுனையைக் கொணர்ந்தமை போற்றற் குரியது.
தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியார் இளங்கோவைப் புகழ்ந்து கவி தொடுத்துப் பாடும் பாங்கு ஒன்றிது.
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனும் பிறந்ததில்லை."
- (பாரதியார் கவிதைகள்- பக்கம் 154)
“நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு.”
- (பாரதியார் கவிதைகள்- பக்கம் 151)
நாமக்கல் கவிஞர் இக் காப்பியத்தை “சித்திரச் சிலப்பதிகாரம்” என்று கூறி மகிழ்வர்.
இளங்கோவடிகள் சமண சமயத்தவரென்று சிலரும், சைவ சமயத்தவரென்று வேறு சிலரும் கூறுவர். இவர் இன்ன சமயத்தாரென்று கூறமுடியாத அளவிற்குத் தம்மை ஆக்கிக் கொண்டமை இவரின் மதச்சார்பற்ற தன்மையை எடுத்துக் காட்டுகின்றது.

Page 78
134 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
நீதி கூறும் காப்பியம்
இளங்கோ, கண்ணகி-கோவலன் காலத்தில் பூம்புகாரிலும், மதுரையிலும், வஞ்சியிலும் நிகழ்ந்தவற்றை நேரில் கண்டும், அறிந்தார் வாய்க் கேட்டும் காலத்தால் அழிக்க முடியாத சிலப்பதிகாரக் காவியக் கோயிலை எழுப்பிப் பெரும் புகழ் பெற்றவர். இவர் முத்தவரான சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கற்கோயில் அமைத்திப் பெரும் புகழ் FFLQuJ6)J.
(1) அறநெறி தவறிய மன்னனை அறக்கடவுள் இயமனாக நின்று அழிக்கும்,
(2) கற்புடைய மகளிரை இவ்வுலகத்தவரும், வானோரும் போற்றுவர்,
(3) ஊழ்வினை எவரையும் உருத்து வந்து ஊட்டும்,
என்னும் முப்பெரும் நீதிகளைத் தெளிவாக இக் காப்பியம் எடுத்தியம்புகின்றது.
*அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதுTஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதுTஉம்.”
- (பதிகம் 55-57)
திருமணச் செய்தி அறிவிப்பு
யானைமீது மகளிரை அமரச்செய்து பூம்புகார் நகரமெங்கும் கோவலன், கண்ணகி திருமணச் செய்தியை அறிவிக்கச் செய்தனர். இது அக்கால வழக்கம் போலும். இவர்கள் திருமணம் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் வந்து நடைபெறுகின்றது. பார்ப்பான் பங்குபற்றுவதும், தீவலம் வருவதும் இதுவே முதல் முறையாக நடைபெறுகின்றது. சிலப்பதிகாரத்துக்கு முந்திய காலத்தில் பார்ப்பான் பங்குபற்றலும், தீவலம் வருவதும் நடைபெறவில்லை என்பது நோக்கற்பாலது.
மாதவி ஒரு விலைமாதுக் குடும்பத்தினள். ஆனால் அவள் அத்தொழிலில் ஈடுபடாது கோவலனுடன் மாத்திரம் சிறுகாலம் வாழ்ந்து

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 135
மணிமேகலையைப் பெற்றெடுத்தாள். கண்ணகி கற்புக்கரசியெனின் அதை விடக் கூடிய கற்பு மாதவிக்கும் உண்டு. ஆனால் இது தொடர்பில் அவள் ஒதுக்கப்பட்டுள்ளாள். தன் மகள் மணிமேகலையைத் துறவறம் பூணச் செய்து தானும் துறவறம் பூண்டு விலைமாதர் குடும்பத்தை இல்லாதொழித்தவள் மாதவி. இன்னும் விலைமாதர் பரம்பரை இனி வேண்டாமென்ற பேரெண்ணத்துடன் சிலப்பதிகாரக் காப்பியத்தை எழுதிப் பெரும் புகழ் பெற்றவர் இளங்கோவடிகளார்.
இக் காப்பியத்தில் பலியிடல், இடக் கண் துடித்தல், வலக் கண் துடித்தல், கனாக் காணல், தெய்வமுற்றாடல் போன்ற நிகழ்ச்சிகள் அதிகமாகக் காணக்கூடியதாக உள்ளன. ‘உயிர்க் கொலை நீங்குமின்!” என்ற காப்பியத்தின் கருத்துக்கு மாறாக உயிர்ப் பலியிடல் நிகழ்ந்துள்ளது. கோவலன் முற்பிறப்பில் (பரதன்) 'சங்கமன் என்பவனுக்கு “ஒற்றன்’ என்று மன்னனிடம் புறங்கூறிப் பொய்த்து அவனுக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்தவன். அத் தீவினையே ஊழாய் வந்து நின்று கோவலன் உயிரைப் பறித்து விட்டதாகக் காப்பியம் கூறுகின்றது.
கோவலன் மாதவியிடம் சென்றதையும், செல்வமெலாம் இழநததையும் கண்ணகி தட்டிக் கேட்கவில்லை. பேசா மடந்தையாயிருந்து விட்டாள். கோவலன் மாதவியை வெறுத்து வறுமையடைந்து வந்தவிடத்து இன்முகம் காட்டி வரவேற்றுத் தன் காற்சிலம்பைக் கொடுத்து அவனை உற்சாகப்படுத்தியவள் கண்ணகி. அக்காலப் பெண்மை அவளைக் கட்டி வைத்தது போலும்.
கண்ணகி உணவு சமைத்துக் குமரி வாழையின் குருத்தில் படைத்துக் கோவலனுக்குக் கொடுக்கின்ற காட்சி இது.
“தண்ணிர் தெளித்துத் தன்கையால் தடவிக் குமரி வாழையின் குருத்து அகம் விரித்து - ஈங்கு, *அமுதம் உண்க: அடிகள்! ஈங்கு” என” (16-41-43
கோவலனைப் பெயர் சொல்லிக் கூப்பிடாது ‘அடிகள்” என்று அழைத்தமை அவளின் பெருங் குணத்தையும், பண்பையும் , அடக்கத்தையும், பெண்மையையும் பேருருவில் காட்டி நிற்கின்றது

Page 79
136 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
தமிழ் நாடெங்கும் கண்ணகி வழிபாடு நிறைந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
* இவள் போலும் நம்குலக்கோர் இருந்தெய்வம் இல்லை; ஆதலின்
சிறுகுடியிரே! சிறுகுடியிரே!
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியிரே" - (24-10-12)
அண்ணாவும் கலைஞரும்
பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் செந்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரச் சிறப்புப் பற்றிப் பேசும் பாங்கினையும் ஈண்டுக் காண்போம்.
*தமிழகத்தின் சிறப்பெழிலை உயிர்ப்பித்து, இயற்கை அழகை நம் முன் காட்டி, பலவண்ணக் காட்சிகளை நம் பார்வைக்குக் கொணர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளின் அணி வகுப்பைத் தொகுத்துரைத்துப் - பழம் பெரும் வாழ்வின் நாடித்துடிப்பை - நல்லோர் புகழ நாற்புறமும் சூழ்ந்த அந்நாள் நல்லறிவை இளங்கோ நமக்குக் காட்டுகிறார் - இக்காப்பியம் மூலம்” என்று பாராட்டுகிறார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
V “தமிழ்த் துறவி இளங்கோவடிகள் சித்தரித்த கண்ணகியும் கோவலனும் கனிமொழியாள் மாதவியும் நீதிக்கு உயிர் தந்த நெடுஞ்செழிய பாண்டியனும் இமயம் சென்று கண்ணகிக்குச் சிலை வடிக்கக் கல் கொணர்ந்த வீர செங்குட்டுவனும் நம்மைப் பார்த்துத் தமிழரின் புகழை எத்தனை முறை பாடினாலும் தெவிட்டாது என உரைக்கின்றார்கள்” என்று வியந்துரைப்பார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
காப்பியக் கருப்பொருள்
இனிக் காப்பியக் கருப்பொருளையும் காண்போம்.
“பரிவும், இடுக்கணும், பாங்குற நீங்குமின்!
தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின் பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்!

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 137
ஊனுண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின் தானம் செய்மின்! தவம்பல தாங்குமின் செய்நன்றி கொல்லன்மின்! தீநட்பு இகழ்மின்! பொய்க்கரி போகல்மின் பொருண்மொழி நீங்கல்மின் அறவோர் அவைக்களம், அகலாது அணுகுமின் பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின் பிறன்மனை அஞ்சுமின் பிழைஉயிர் ஒம்புமின் அறமனை காமின் அல்லவை கடிமின் கள்ளும், களவும், காமமும், பொய்யும், வெள்ளைக் கோட்டியும், விரகினில் ஒழிமின்! இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா;
உளநாள் வரையாது, ஒல்லுவது ஒழியாது;
செல்லும் தேயத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லல் மாஞாலத்து வாழ்வீர், ஈங்கு, என்."
- (வரந்தரு காதை 186-202)
மேற்கூறப்பட்ட அறிவுரைகள் உலகம் முழுவதற்கும் பொதுவானவையாய் அமைந்து மக்களை மேல் நிலையடைவதற்கு உறுதுணையாய் உள்ளமை இந் நூலின் சிறப்பாகும்.
DDD

Page 80
ܥܛ 138
மண்ணின் கிேமையும் அகுன் வாசனையும்
பரந்து விரிந்த எல்லை கடந்த வெட்ட வெளியான வானத்தில் நம் சூரியக் குடும்பம் அந்தரத்தில் மிதந்து ஊர்ந்த வண்ணமுள்ளது. sig56, B60ör L56ir (Mercury), sidisaggi (Venus), is (Earth), GlaF6i6aTui (Mars), 6îlu ITp6ö (Jupiter), JF6os (Saturn), 6îl6oti LDLb (uGB606mö-Urenus), Gersö uouð (Gbü9ul,6öst-Neptune), GöF600 Tablö (புளுட்டோ-Pluto) ஆகிய ஒன்பது கோள்களும் அடங்கும். நம் சூரியன் சுமார் 456 கோடி 80 இலட்சம் (456,80,00,000) ஆண்டுகளுக்கு முன் தோன்றினான் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும். சூரியன், நட்சத்திரங்கள், ஒன்பது கோள்கள் ஆகிய ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தியால் இவைகள் வானில் தரித்து நிற்கின்றன.
எம் மண்ணாகிய பூமி
இற்றைக்கு சுமார் 454 கோடி (454,00,00,000) ஆண்டுகளுக்குமுன் இயற்கை மாற்றத்தால் சூரியன் வெடித்த பொழுது நாம் வாழும் பூமியானது சூரியனிலிருந்து தெறித்துச் சூரியனைப்போல் எரிந்து கொண்டிருந்தது. நீண்ட காலத்தின்பின் பூமியின் மேற்பரப்பு
 

நுனாவிலூர் காவிசயரத்தினம் + 139,
குளிர்ச்சியடைந்தது. ஆனால் பூமியின் மையப் பகுதி இன்றும் எரிந்த வண்ணம் உள்ளது. இன்றைய ஆய்வின்படி இந்த ஒன்பது கோள்களில் பூமி ஒன்றில் மட்டும்தான் உயிரினங்கள் வாழக் கூடிய காற்று, நீர், வெப்பம் உள்ளன. எனவே மற்றைய எட்டுக் கோள்களிலும் உயிர் வாழ முடியாது. இந்த வகையில் மற்றைய கோள்களிலும் பார்க்கப் பூமி பல இயற்கை அற்புதங்கள் நிறைந்து அதி சிறப்புற்று விளங்குகின்றது. பூமியைத் தோண்டத் தோண்ட வற்றாக் கனிமப் பொருள்கள் பொதிந்திருப்பதைக் காண்கின்றோம். பூமியின் 71 சதவீதப் பகுதி உப்பு நீர் கொண்ட கடலால் மூடப்பட்டுள்ளது.
அதி ஆற்றலுடைய இயற்கை வேதியியல் தன்னைத் தானே பெருக்கக் கூடிய மிகச் சிறிய உயிரினமான அணுத் திரண்மத்தை (molecule) சுமார் 400 கோடி (400,00,00,000) ஆண்டுகளுக்குமுன் பூமியில் (upg56ir (pg56)T855 (85Fribq6ig5g, 2 luj LD6).jöFaf (evolution of life) முறையை ஆரம்பித்ததாக நம்பப்படுகின்றது.
நிலக்கரி
பூமியின் மேற்புறத்திலிருந்து 1,800 மைல் (2,880 கி.மீ) ஆழத்தில் கற்பாறைகள் உருகி மலைக் குழம்பான (lawa) நிலையில் காணப்படுகின்றன. இவை சில சமயங்களில் பூமித் தரையைப் பிறிக் கொண்டு பூகம்பமாகவும், எரிமலையாகவும் சீறிப் பாய்ந்து உயிரினங்களையும், நாட்டையும் அழித்து விடுகின்றன. சதுப்பு நிலங்களிலும் பள்ளப் பகுதிகளிலும் வளர்ந்த மரங்களும், அடர்ந்த காடுகளும் காலப் போக்கில் இயற்கை அனர்த்தங்களால் மண்ணில் புதைக்கப் பட்டு அதன் பார அழுத்தத்தால் நிலக்கரிப் பாறையாக மாறுகின்றது. நிலக்கரி உண்டாவதற்குச் சுமார் 20 கோடி (20,00,00,000) ஆண்டுகள் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
பாறை எண்ணெய்
உலகளாவிய ரீதியில் பூமியடியின் ஆழத்திலுள்ள மலைகளின் வளைமுகடுகளில் பல இலட்ச ஆண்டுகளுக்கு முன் பொறியுட்பட்ட எண்ணெய்க்கும், நிலத்திலிருந்து வெளிப்படும் வாயுவுக்கும் தேடுதல் நடாத்தப்படுகின்றது. இவ்வாறான எரிபொருள் பாரிய கைத்தொழில்களின் மூலப் பொருளாய் அமைந்துள்ளன.

Page 81
140 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
நீரொழுக்கற்ற கடற் பகுதிகளின் சேறு வண்டல்களுடன் திரண்ட மிருக தாவர உறுப்புக்களிலிருந்து பாறை எண்ணெய் (petroleum) உருவாகின்றது. உயரிய தனித்தன்மை வாய்ந்த நுண்ணுயிரிகள் (bacteria) தமக்குத் தேவையான பிராணவாயுவை உறுப்புக் கழிபொருளிலிருந்து உறிஞ்சிப் பெறுகின்றன. இதனால் உறுப்புக் கழிபொருள் கொழுப்பாகவும், மெழுகாகவும் உருமாற்றம் அடைகின்றது. இவை திரண்ட வண்டல்களால் புதைபடும் பொழுது, அமுக்கமும் தட்பவெப்ப நிலையும் அதிகரித்து பாறை எண்ணெய்யாக உருமாற்றம் அடைகின்றது. அப்பொழுது இதனைச் சுற்றியுள்ள சேற்றுப் பகுதிகள் களிப்பாறை (shale) என்று சொல்லப்படும் பாறையாக மாறிவிடும். பாறை எண்ணெய் உருவாவதற்கு சுமார் ஒரு கோடி (1,00,00,000) ஆண்டுகள் ஆகின்றன.
பூமியின் விட்டம்
பூமியின் விட்டப் பாதையான 8,000 மைல்களைக் (12,880 கி.மீ) குடைந்து கொண்டு போவோமாகில் முதலில் மணல், களிமண், கூழாங்கல், நீர், மலை, வாயு, நச்சு வாயு, பெரும் பாறை, மலைக் குழம்பு, மீண்டும் பெரும் பாறை, நச்சு வாயு, வாயு, மலை, நீர், கூழாங்கல், களிமண், மணல் என்ற அமைப்பினைக் காணலாம். இவ்வாறு பூமியின் மேற்பரப்பு மணலால் மூடப்பட்டுள்ளது. நம் காலடியில் உள்ள மண்ணானது, சிதைவுபட்ட பாறை, பதனழிவுற்ற தாவரம், மிருக உயிர் எச்சம் ஆகியவற்றின் சேர்மமாகும். இச் சேர்மத்தின் மேற் பகுதி உலக விவசாயத் தாவர வளர்ச்சிக்குப் பயன் படுத்தப்படுகிறது.
மண்ணின் பொருள் வரையறை
மண்ணியல் ஆய்வு, 0.0625 (1/16) மில்லி மீட்டருக்கும் 2 மில்லி மீட்டருக்கும் இடைப்பட்ட விட்டமுள்ள வண்டல் துகள்களை ‘மண்' என்று வரையறுத்துச் சொற்பொருள் விளக்கமும் தருகின்றது. பாறைத் துண்டுகள் காற்று, மழை, ஆறு ஆகியனவற்றால் உடைக்கப்பட்டு மண் என்ற நிலையடைகின்றது. மண்ணானது செடி, கொடிகளை வளர்க்கக் கூடிய நீர், சூடு, உணவு போன்றவற்றைக் களஞ்சியப் படுத்தியும் செடி, கொடியின் வேருக்கு உறுதுணையாகவும் நின்று செயற்படுகின்றது.

நுனாவிலூர் கா.விசயரத்தினம் + 141
"ހ
வியக்கத்தக்க சிக்கலான ஒரு பொருளாய் மண் இருப்பதினால் அதை நில இயலாளர், வேதியியல் வல்லுனர், நாட்டுப்புற பொருளாதார நூலார், உயிர்நூல் அறிஞர், மண் ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு செய்த வண்ணம் உள்ளனர். இயற்கையின் பெரும் வியப்புக்குரிய பொருள்களில் மண்ணும் ஒன்றாயுள்ளது என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும். மண் ஒரு நிலையில் நில்லாது, நீர்க்கசிவுச் (percolating) செயல், உயிரியக்கஇயற் (organic) செயல் என்பன மூலமாய் மாற்றமடைந்தும் உருமலர்ச்சி பெற்றும் வருகின்றது. மழைக் காலங்களில் மண்ணில் உள்ள கரைபொருள்கள் கழுவப்பட்டும் கரைந்தும் மண்ணடிக்குள் சென்று விடுகின்றன.
மண்ணின் பகுப்பு
உலக மண்ணை (1) மணல், (2) வண்டல், (3) களிமண், (4) களிச்-சேற்று வண்டல், (5) தூள்மண், (6) சுண்ணம் நிறைந்த மண் என்று ஆறு (06) பெரும் பிரிவுகளாக வகுத்துள்ளனர் மண்நூல் துறையார். உலக மக்கள் தாம் பிறந்த மண்ணின் தரத்தையும், செழிப்பையும் அறிந்து அததற்கேற்ற பயிரை நாட்டி விவசாயம் செய்து உலகப் பசியைப் போக்கி வாழ்கின்றனர்.
தொல்காப்பியம்
இனித் தொல்காப்பியர் மண் கதை பற்றிக் கூறும் பாங்கினையும் காண்போம். திருமால் காக்கும் காடாகிய “முல்லை” இடமும், முருகவேள் காக்கும் உயர்ந்த மலையாகிய “குறிஞ்சி” இடமும், இந்திரன் காக்கும் நன்னீர் பொருந்திய வயலாகிய மருதம் இட்மும், வருணன் காக்கும் பெருமணல் பொருந்திய ‘நெய்தல்’ இடமும் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முன்னோர்களால் கூறப்பட்ட பெயர்களாகும் என்று தொல்காப்பியச் சூத்திரம் கூறுகின்றது.
* மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.”
- (பொருள 05)

Page 82
142 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
தொல்காப்பியர் காலத்துக்கு முன் இருந்த நம் பண்டைத் தமிழர்கள் தாம் வாழ்ந்த மண்ணை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனப் பெயரிட்டு நால்வகை நிலங்களாக வகுத்துள்ளமை புலனாகின்றது. இன்னும் காலப் போக்கில் முல்லையிலும் குறிஞ்சியிலும் உள்ள சில பகுதிகள் முறை முறை திரிந்து, நல்லியல்பு இழந்து, மழை குன்றி, வெம்மையடைந்து, தரிசுபட்ட வனாந்தர நிலத்தைப் 'பாலை” எனப் பெயரிட்டு, அதைக் காக்கக் கொற்றவை” என்ற தெய்வத்தை நியமித்தனர். உதவாத தரிசு நிலமென அறிந்திருந்தும் அதற்கும் ஒரு பெயரிட்டமை நோக்கற் பாலது.
நால்வகையாய் அமைந்த நிலங்கள், பாலை நிலத்துடன் ஐவகை நிலங்களாகவும், ஐந்திணைகளாகவும் பெயர் பெற்றன. இவ்வண்ணம் ‘பாலை’ பிறந்த கதையைச் சிலப்பதிகாரம் கூறும் பாங்கிது:
“முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப், பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்."
-(காடுகாண் காதை, 64 - 66)
காடும் காடுசார்ந்த நிலத்தை முல்லை என்றும், மலையும் மலைசார்ந்த இடத்தை குறிஞ்சி என்றும், வனாந்தரமும் அதனைச் சார்ந்த இடத்தை பாலை என்றும், வயலும் வயல்சார்ந்த இடத்தை மருதம் என்றும், கடலும் கடல்சார்ந்த இடத்தை நெய்தல் என்றும் மேற்கண்டோம். இந் நிலங்களின் தன்மையை அறிந்த மக்கள் முல்லையில் காத்து இருத்தலும், குறிஞ்சியில் புணர்தலும், பாலையில் பிரிதலும், மருதத்தில் ஊடலும், நெய்தலில் இரங்கலும் நிகழ்த்தித் தம் வாழ்வியலைச் சீரும் சிறப்புடனும் நடாத்தி இன்புற்று வாழ்ந்தனர்.
தமிழ் இலக்கியங்கள்
இன்னும் மண்ணின் மகிமை பற்றித் தமிழ் இலக்கியங்களான புறநானூற்றில் நிலம் பெயரினும், நிலம்புடை, மலர்தலை உலகம், நாடா கொன்றோ, நிலனே, ஊரே என்றும், அகநானூற்றில் மண்கண், தருமணல், இடுமணல் என்றும், பரிபாடலில் பருமணல், மண்மிசை, நிலன் என்றும், பதிற்றுப் பத்தில் நிலம், மண்ணுடை என்றும், ஐங்குறு

நுனாவிலூர் கா.விசயரத்தினம் + 143
நூற்றில் வெண்மணல், நுண்மணல், வார்மணல், நெடுமணல் என்றும், நற்றிணையில் தருமணல், நிலம், நிலந்தாழ் என்றும், மணிமேகலையில் நிலாமணல், நெடுமணல் குன்றம், இடுமணல் என்றும், குறுந்தொகையில் நிலத்தினும் என்றும், திருக்குறளில் நிலம், மண்ணோடு, நிலத்தியல்பால் என்றும், கலித் தொகையில் நிலம்பூத்த, மண்கடல், மணல் நோக்கி என்றும் பற்பல கோணங்களில் நின்று பேசப்படும் தன்மையைக் காண்கின்றோம்.
இந்திரனைச் சூழ்ந்த பழி
ஒரு சமயம் இந்திரன் பல பாவச் செயல்களைப் புரிந்து விட்டான். அதனால் ஏற்பட்ட பழி பாவங்கள் அவனைச் சுற்றிச் சூழ்ந்து கொள்ள அவன் செயற்பாடுகள் தடைப்பட்டன. இதனால் கவலை கொண்ட இந்திரன் தன் பழி பாவங்களைப் போக்க மரத்தையும், மண்ணையும், பெண்ணையும் நாடிச் சென்று உதவி கேட்டு நின்றான். முதலில் மரத்திடம் போய் தன் பழி பாவங்களை மரத்திலிருந்து பாலாகவும், பிசினாகவும் கழிக்குமாறுமி, அதற்காக மரங்களை வெட்ட வெட்டத் தழைக்கும் வரம் தருவதாகக் கூற, மரங்களும் அதற்கு உடன் பட்டன. . இரண்டாவதாக மண்ணிடம் போய் தன் பாவத்தை மனிதர் மண்மேற் போடும் கழிவுப் பொருள் மூலம் கழிக்கும் படியும் அதற்காக மண்மேற் போடப் பட்ட கழிவுப் பொருள்கள் தானே உக்கி மண்ணுக்கு எருவாய் மாறும் வரத்தையும், மண்ணை அகழ்ந்து விட்ட பொழுது அது தானாகவே மூடும் வரத்தையும் தருவதாகவும் கூற, மண்ணும் அதற்கு ஒத்துக் கொண்டது. மூன்றாவதாக இந்திரன் பெண்ணை நாடிச் சென்று, தன் பழி பாவங்களைப் பெண்களின் மாத விடாய் மூலம் கழிக்குமாறும், இதற்காக அவர்கள் கருவுற்றிருக்கும் காலத்திலும் தம் கணவருடன் மருவி வாழலாம் என்ற வரம் தருவதாகக் கூற, அவர்களும் புன்முறுவலுடன் ஒத்துக் கொண்டனர். இவ் வரத்தால் பெண்களின் வாழ்வியல் பெருகிக் குடும்ப மகிழ்வும் பெறுகின்றனர். இங்கு மண்ணின் மகிமையும், அதன் வாசனையும் பேசப்படுவதையும் காண்கின்றோம். அதே நேரத்தில் இந்திரனைச் சூழ்ந்த பழி பாவங்களும் நீங்கித் தன் செங்கோல் ஆட்சியைத் திறம்பட நடாத்தத் தொடங்கினான் என்பது ஓர் ஐதிக வழிவழிச் செய்தியாகும்.

Page 83
144 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
மண்ணின் செயற்பாடு
மக்கள் தமக்கு வேண்டாக் கழிவுப் பொருட்களையும், இறந்து படும் மிருக மனித உடலங்களையும், மனித மிருக எச்சங்களையும், வெட்டி எறியும் மரம், செடி, கொடிகளையும் மண்மேற் போட்டும், மண்ணை அகழ்ந்து புதைத்தும் விடுகின்றனர். இதை மண் ஏற்றுக் கொண்டு அவற்றைச் சீரணித்துப் பசளையாக்கித் தன்னை வளப்படுத்தித் தன்மேல் வளரும் மரம், செடி, கொடி, பயிர்களுக்கு உணவாக்கி அவற்றின் விளைச்சலை அதிகரிக்கச் செய்து, உலகிலுள்ள 680 கோடி மக்களுக்கும் உணவளித்து, பசிக் கொடுமை தணித்து, உயிர் கொடுத்தும், மற்றைய உலகச் சீவராசிகள் அனைத்திற்கும் உணவளித்துக் காத்துக் கடந்த 400 கோடி (400,00,00,000) ஆண்டுகளாக இத் தொடர்ச் செயலைப் புரிந்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் மண்ணைத் தம் உயிரினும் மேலாக நேசிக்கின்றனர்.
சேமப் பெட்டி
தி, காற்று, நீர் போன்ற இயற்கை அனர்த்தங்களில் இருந்தும், கள்வர்களிடமிருந்தும் தமது பொருள்களான பணம், பொன், அணிகலன்கள், செல்வம், முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள் ஆகியவற்றைக் காப்பாற்றுவதற்காக இவற்றை மண்ணில் புதைத்துப் பின் வேண்டிய நேரத்தில் எடுத்துப் பாவிக்கின்றனர். சில நாட்டார் தம் நாட்டின் வரலாற்றுப் பொக்கிசங்களைப் பேழையில் வைத்து மண்ணில் மிக ஆழத்தில் புதைத்து விடுகின்றனர். இவை மண்ணில் மறைந்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் சென்றாலும் மங்காது சேமப் பெட்டியில் வைத்ததுபோல் சேமித்துக் காப்பாற்றப்படுகின்றன.
நம் கிராமியப் பெண்கள் சமயலறையின் அடுப்பங்கரையைத் தோண்டித் தம் நகைகளையும், பணத்தையும் அதில் வைத்து மண்ணால் மூடி, அதை மெழுகி, அதன்மேல் அடுப்புகளை வைத்துச் சமையல் செய்வர். இன்னும் குடங்கரையிலும் இவற்றைப் புதைத்துக் காப்பாற்றி வருகின்றனர். இவ்வாறான அடுப்பங்கரையும், குடங்கரையும் சமசியப்படாத இடங்களாகும். இம் மண்ணின் பெருமையை அந்த மக்கள்தான் நன்கு அறிவர்.

நுனாவிலூர் கா.விசயரத்தினம் 145 ܛ
(լքlգ6)յ60J
பூமியின் மேற்பரப்பில் அமைந்த மண்தான் பூமியின் உயிர். அம்மண்தான் மனிதனின் உயிர். மனிதன் மண்ணில் பிறந்து, உருண்டு, புரண்டு, தவழ்ந்து, எழுந்து, விழுந்து, நடந்து, ஓடி விளையாடி, எழுதிப் படித்து, கொத்தி, உழுது, பயிரிட்டு, விவசாயம் செய்து, படுத்து, உறங்கி, பகல் இரவென்று பாராது தம் வாழ்நாள் முழுவதையும் மண்ணுடன் ஒட்டி உறவாடிப் பிறந்த அதே மண்ணில் மடிந்து மண்ணாகிப் போகின்றான். எந்த மண்ணை நேசித்தானோ அதே மண்ணில் அவன் கதை முடிகின்றது. ஆனால், அவன் மண்மேல் வாழும் நாட்கள் இன்பகரமானவை. இது தான் மண்ணின் மகிமை. அவன் இறந்துபட்டது பெரிதல்ல. அவன் மண்ணில் எப்படி வாழ்ந்தான் என்பது தான் கேள்வி. அவன் மண்ணுடன் இணைந்து மாண்புடன் வாழ்ந்தான் என்பதுதான் அதன் விடையாகும்.
அவன் இரவில் மண்மேல் படுத்து உறங்கினான். வயலில் வேலை செய்து களைப்புறும் பொழுதும் அருகிலுள்ள மரநிழலில் வெண் மணல்மேல் படுத்துத் தூங்கினான். அவனை மண்ணின் ஈர்ப்புச் சக்தி நோய் நொடி வராது காப்பாற்றியது. ‘மண் சிகிச்சை” என்ற முறை அந்நாட்களில் மலிந்து காணப்பட்டது. மகாத்மா காந்தி அவர்களும், மறைமலை அடிகளாரும் மணி சிகிச்சை முறைகளைக் கைக்கொண்டு பலனும் கண்டனர்.
இன்று நம்மவர் அநேகர் நிலத்தில் படுப்பதில்லை. நிலத்திலிருந்து மூன்று, நான்கு அடி உயரத்தில் கட்டில் மெத்தைகளில் சொகுசாகப் படுத்து உறங்குகின்றோம். விஞ்ஞானம் நம் திசையை மாற்றிவிட்டது. நாமும் புதுப் புது நோய்களால் பீடிக்கப்பட்டு வாடி வதங்குகின்றோம். இவற்றிற்குப் பரிகாரம் அவசியம் தேடல் வேண்டும்.
நம் பண்டைத் தமிழர்கள் தமிழ் மண்மேற் காதல் கொண்டு அதன் தன்மை, தரம், மகிமை, வாசனை ஆகிய இயற்கை நிலைகளை உற்றறிந்து அதற்கமைந்த வாழ்வினை அமைத்துப் பெருவாழ்வு வாழ்ந்து காட்டி அதன் எச்சங்களை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். நாமும் அவ்வண்ணம் மண்ணோடு சேர்ந்து அவர் வழி நின்று, அற வழி நாடிப் பெருவாழ்வு காண்போம்.
DDD

Page 84
جھ 146
یہ تمٹ****مسی
፨ ጎ
భ్మీ, ': ಫ್ಲಿಫ್ಟಿ م* * .4 1 * %܆ 3. نجه** & *
×४’×)': '..
** ** * * * :
செந்நூப்பேரகுர்திடுவள்ளுவடும் குெய்விக நூல் திடுக்டுறடும்
திருவள்ளுவர் கி.மு. 31 ஆம் ஆண்டில் அவதரித்தார். இவர் கடைச்சங்க காலத்தவர். திருவள்ளுவர் = திரு + வள்ளுவர். திரு = சிறப்பு, புகழ். வள்ளுவர் = துணி நெய்வோர். வள்ளுவர் என்பது இயற் பெயரா? குலப் பெயரா? தொழிற் பெயரா? என்று தெரியவில்லை. இவரைப் பற்றிய செவி-வழி மரபாகச் சில செய்திகள் உள்ளன. இவருக்குப் பகவன் என்ற
திருவள்ளுவர்
பார்ப்பனத் தந்தையும் ஆதி என்ற புலைச்சித்
தாயும் இருந்துள்ளனர் எனவும்
கூறப்படுகிறது.
இவருக்கு உடன் பிறந்ததாக ஒளவையார், உப்பை, உறுவை, வள்ளி, கபிலர், அதிகைமான் ஆகிய அறுவரும் உளர். தமக்குப் பிறந்த ஏழு குழந்தைகளையும் பெற்ற இடங்களில் உள்ளார்க்கே
 

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 147
தந்து விட்டுப் பற்றின்றிச் சென்றனர் தாய் தந்தையர். இதன்படி திருவள்ளுவர் தொண்டை மண்டிலத்தில் திருமயிலாப்பூரில் பிறந்து ஒரு துளுவ வேளாளரிடத்தில் வளர்ந்து வந்தார். மேற்கூறிய கதைகள் யாவும் முற்றிலும் போலியானவை என்று பேரறிஞர் கா. அப்பாத்துரை அவர்கள் கூறி முரண்படுகின்றார். ஆனால் உண்மை நிலையை ஆய மருண்டார் போலும்.
தரிருவள்ளுவருக்கு நாயனார், தேவர், முதற் பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில்புலவர் என்ற சிறப்புப் பெயர்களும் உள.
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.”
என்று பாரதி வள்ளுவனை உலகச் சொத்தாக்கித் தமிழ் நாடு வான்புகழ் பெற்றதைப் பெருமையுடன் கூறி நிற்கின்றார். உலகப் புகழ் பெற்ற திருவள்ளுவருக்குத் தாய் நாடு உட்பட உலகம் முழுவதும் சிலை எடுத்து அவரைப் போற்றுகின்றனர்.
திருக்குறள்
திருவள்ளுவர் யாத்த நூலான திருக்குறள் உலகப் பொதுமறை என்னும் சிறப்பினை உடையது. தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் புரட்சியைச் செய்தவர் திருவள்ளுவர். இஃது ஒரு வாழ்வியல் நூலாகும். எல்லாச் சமயத்தாரும் ஒப்பப் போற்றும் பெருமை இந்நூலுக்கு மட்டுமே உண்டு. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றானது திருக்குறள். இவற்றில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம் , ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகிய பதினொரு (11) நூல்களும் நீதியைக் கூறுவன.
நீதியை இயம்புவதில் திருக்குறளும், நாலடியாரும் ஏறக்குறைய ஒரே தன்மையான முறையைப் பின்பற்றுகின்றன. இரண்டடிகளால் திருக்குறள் இயம்ப, நாலடி கொண்டு இயல்கிறது நாலடியார். திருக்குறள் ஒரே ஆசிரியரால் பாடப்பட்டது. நாலடியார் பல ஆசிரியர்களால் பாடப்பட்ட தொகுப்பாகும்.

Page 85
148 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
திருக்குறளை முப்பானுால், உத்தரவேதம், தெய்வ நூல், திருவள்ளுவர், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை என்று பல பெயரால் அழைப்பர். திருக்குறளின் சிறப்பை இவ்வாறமைத்துக் காட்டுகின்றார் ஓர் அறிஞன்.
*மனிதன் கேட்க இறைவன் சொன்னது - கீதை இறைவன் கேட்க மனிதன் சொன்னது - திருவாசகம் மனிதன் கேட்க மனிதன் சொன்னது - திருக்குறள்.”
திருக்குறள் நூலின் பெருமை பற்றி மனோன்மணியம் பேசும் பாங்கினையும் காண்போம்.
“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி.”
திருவள்ளுவ மாலையில் திருக்குறளின் பெருமை பற்றிப் பேசப்படுவதையும் பார்ப்போம்.
“கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்.” - இடைக்காடர்.
*அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்." - ஒளவையார்.
இடைக்காடர் கடுகைத் துளைத்து வைத்தியத்துறைச் சிறப்பினைப் பேசுவதையும் ஒளவையார் அணுவைத் துளைத்து நவீன விஞ்ஞானம் பேசுவதையும் காண்கின்றோம்.
மேலும் திருக்குறளின் மேன்மையைக் கூறும் திருவள்ளுவ மாலையில் சீத்தலைச் சாத்தனார்,

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 149
“மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும் தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார்அன்றோ யாமுரைதேர் வள்ளுவர்முப் பால்.”
எனப் போற்றுகின்றார்.
திருக்குறளுக்குப் பத்து உரையாசிரியர்கள் தெளிவுரை எழுதிச் சிறப்பித்துள்ளதை ஒரு பாடலில் காண்போம். (ஆனால் இதன்பின்னர் வந்த உரைகள் ஏராளம் எனலாம்.)
“தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பருதி பரிமேலழகர் திருமலையார் மல்லர் பரிப்பெருமான் காளிங்கர் வள்ளுவர்நாற்கு எல்லையுரை செய்தார் இவர்.”
இவற்றிலி பரிமேலழகர் உரைதான் புகழ் பெற்று முன்னணியில் நிற்கின்றது.
திருவள்ளுவர் திருக்குறள் நூலை ஆயிரத்தி முன்னுாற்றி முப்பது (1,330) குறள்களையும் பன்னிரண்டாயிரம் (12,000) சொற்களில் பாடித் தந்துள்ளார். இதில் ஐம்பதுக்கும் (50) குறைவான வடமொழிச் சொற்கள் மாத்திரம் உள்ளன.
திருவள்ளுவர் தமிழ் நெடுங்கணக்கிலுள்ள “அ” என்ற முதல் எழுத்தை முதற்குறளின் முன் வைத்து, தமிழ் நெடுங்கணக்கிலுள்ள இறுதி எழுத்தான ‘ன்’ என்ற எழுத்தைக் கடைசியான குறளில் ஈற்றெழுத்தாக அமைத்துத் திருக்குறள் யாத்தமை ஒரு சிறப்பம்சமாகும்.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு." - (குறள் 01)
“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்' - (குறள். 1330)
திருக்குறளின் சிறப்பும், புகழும் கருதி இந்நூல் எண்பது (80) உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அதிக

Page 86
150 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாவது (03) இடத்தைப் பிடித்துள்ள பெருமை திருக்குறளைச் சாரும். முதலாவது இடத்தில் பைபிளும், இரண்டாவது இடத்தில் குரானும் உள்ளன. இவ்வண்ணம் திருக்குறளும் உலக நூலாகிவிட்டது.
திருவள்ளுவர் உலகத்தைப் படித்தார். உலக மக்களையும், அவர் தம் வாழ்வியலையும் நினைந்து அவர்களுக்காக இத் தெய்வ நூலை ஆக்கிக் கொடுத்துள்ளார். மக்கள் மத்தியில் எழும் பிரச்சினைகள் அத்தனைக்கும் திருக்குறளில் தீர்வு காணலாம். அதனால் குறள் மக்கள் நூலாகியது.
திருக்குறள் முப்பத்தெட்டு (38) அதிகாரங்களுடன் அறத்துப் பாலும், எழுபது (70) அதிகாரங்களுடன் பொருட் பாலும், இருபத்தைந்து (25) , அதிகாரங்களுடன் காமத்துப் பாலும் ஆகிய முப்பெரும் பிரிவு கொண்டது. இதில் ஒருமித்து நூற்றி முப்பத்து மூன்று (133) அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துப் பத்துக் குறள்கள் வீதம் ஒருமித்து ஆயிரத்து முன்னூற்றி முப்பது (1,330) குறள்கள் அமைந்துள்ளன.
1. அறத்துப்பால் - தனி மனிதனின் வாழ்வின் மேன்மை
குறிக்கும். ( தர்மம் )
2. பொருட்பால் - சமுதாய வாழ்வைச் சுட்டிக் காட்டும்.
3. காமத்துப்பால் - வாழ்வின் வெற்றியைச் சிறப்பித்து
உரைக்கும். (இன்பத்துப்பால்)
அறத்துப் பாலின் பாயிரத்தில் நாலு (04) அதிகாரங்களில் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகியவற்றின் சிறப்புப் பேசப் பட்டுள்ளது. கடவுள் வாழ்த்தில் முதற் குறளில் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பது போல, உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது என்று கூறி எழுத்துக்கு முதன்மை கொடுத்துள்ளமை காண்க. பின்னர் இல்லறவியலை இருபது (20) அதிகாரங்களிலும், துறவறவியலைப் பதின் மூன்று (13) அதிகாரங்களிலும், ஊழியலை ஒரு (01) அதிகாரத்திலும்-குறள் அமைத்து அறத்துப் பாலைச் சிறப்பித்துள்ளார்.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 151
அடுத்து பொருட் பாலில் எழுபது (70) அதிகாரங்களில் நாற்பது (40) அதிகாரங்களை மக்களைக் காத்து ஆளும் அரசருக்கு ஒதுக்கி அவர்களின் கடமைகள், நாட்டைக் காக்கும் சீர் முறைகள், அரசியல், அமைச்சியல், அரணியல், படையியல் போன்ற விடயங்களை எடுத்து இடித்துக் கூறியுள்ளார். அன்று அரசனும் அறநெறி நின்று நாட்டை ஆண்டான்.
இறுதியான காமத்துப் பாலில் இருபத்தைந்து (25) அதிகாரங்களில் களவியல் பற்றியும் கற்பியல் பற்றியும் கூறப் பட்டுள்ளது. களவியலை ஏழு (07) அதிகாரங்களில் மற்றவர்க்குத் தெரியா வண்ணம் களவுக் காதல் நடைபெறுவதைக் காணலாம். களவு நாட்படின் அம்பலும், அலரும் வந்து களவைக் காட்டி நிற்கும். ஆனால் கற்பியலை பதினெட்டு (18) அதிகாரங்களில் கற்பின் வழி நின்று, பசலையிலிருந்து தப்பி, காமத்திற்கு இன்பம் ஊடுதலென நினைந்து, ஊடல் முடித்துக் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும் என்று கூறிச் செல்கின்றார் வள்ளுவர்.
'கொல்லாமை”, “கள்ளுண்ணாமை”, “பிறனில் விழையாமை” (பிறன் மனைவியை நாடாமை), “வரைவின் மகளிர்” (பொது மகளிர்), “சூது’ போன்ற அதிகாரங்களிற் காணும் கண்டிப்பு திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்த நோக்கை மையப்படுத்தி நிற்கின்றது. இவற்றைச் சங்க கால ஆன்றோர் கடிந்தாரில்லை.
திருவள்ளுவர் தாம் எழுதிய திருக்குறள் நூலைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டார். ஈற்றில் ஒளவையாரின் துணையுடன் அரங்கேற்றினார் எனவும் செய்தி வாயிலாக அறிகிறோம்.
தமிழன் தொடர் ஆண்டு
தமிழனுக்குத் தொடர் ஆண்டு ஒன்றில்லாத குறையால் ஈர்க்கப்பட்ட பல தமிழ்ப் பற்றாளர்கள் பேரறிஞர் மறைமலை அடிகள் தலைமையில் பச்சையப்பன் கல்லூரியில் 1921-ஆம் ஆண்டு கூடி, தமிழ் நாட்டுக்குப் புகழ் ஈட்டித் தந்த திருக்குறள் நூலை யாத்த திருவள்ளுவர் பிறந்த காலத்திலிருந்து தொடராண்டாக ஏற்பதென ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.

Page 87
152 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
இத்தீர்மானத்தை 1971-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசும் ஏற்று நடைமுறைப்படுத்தியது. இதன்படி இன்று ‘திருவள்ளுவர் ஆண்டு 2041” ( 31 + 2010) நடந்து கொண்டிருக்கின்றது.
இத் திருவள்ளுவர் ஆண்டு ஒவ்வொரு வருடமும் தமிழ்த் தைத் திருநாளில், முதலாம் மாதம், முதலாந் திகதி, தைப்பொங்கலன்று பிறக்கின்றது. இன்னும் தமிழர் வருடப் பிறப்பையும் அன்றே கொண்டாடலாம் என்று தமிழ்நாடு அரசு இணங்கி உள்ளதும் ஒரு நற்செய்தியாகும்;<
மக்களாகிய நாம் திருவள்ளுவர் காட்டிய அறவழி நின்று, பொருள் வழி ஈட்டி, காமத்தில் திளைத்து, வீடாகிய முக்தி நிலை அடைவதை நோக்கிப் பயணித்து, வள்ளுவத்தைக் கட்டிப் பேணிக் காத்து, அன்னாரையும் முன்னிறுத்தி, அவர் நினைவில் நின்று சீரும் சிறப்புமெய்தி வாழ்வாங்கு வாழ்வோமாகுக!.
DDD

கவியரசு கண்ணகுரசன்
ஓரறிவிலிருந்து ஐயறிவுடைய உயிரினங்கள் அத்தனையும் சிரிப்பதும் இல்லை, சிந்திப்பதும் இல்லை. ஆனால் ஆறு அறிவுடைய மனிதன் மட்டும் தான் சிரிக்கின்றான், சிந்திக்கின்றான். அதனால் அவன் மற்றைய உயிரினங்களை விஞ்சி உயர் நிலை எய்தி, சிந்தனை அடியெடுக்க, முயற்சி வடிவமைத்து, அளப்பரிய செயல் களையும் , சாதனைகளையும் நிலைநாட்டி உலகை வழி நடாத்துகின்றான். இவ்வண்ணம் முன்னிலைக்கு வந்து பேரும்
153
புகழும் பெற்றோர் பலர். அவருள் ஒருவர் செயல் பற்றிக் காண்போம்.
முத்தையா
தமிழ்நாடு, இராமநாதபுரம், சிறுகூடல்பட்டிக் கிராமத்தில் தன வணிகர் குலத்து சாத்தப்பன், விசாலாட்சி ஆகிய பெற்றோருக்கு

Page 88
154 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
24-06-1927 இல் ‘முத்தையா? என்ற பெயருடன் பிறந்த மகனே பிற்காலத்தில் கண்ணதாசனானார். இவருக்கு உடன் பிறந்தோர் எண்மராவர். இவர் சிறுகூடல்பட்டி, அமராவதி புதூர் ஆகிய இடங்களில் அமைந்த பாடசாலைகளில் எட்டாம் வகுப்புவரை கல்வி கற்றார்.
1943-ஆம் ஆண்டில் திருவொற்றியூர் அஜாக்ஸ் நிறுவனத்தில் தனது முதற் பணியைத் தொடங்கினார். 1944-ஆம் ஆண்டில் இலக்கியப் பணியாற்ற ‘திருமகள்’ ஆசிரியரானார். அங்கே அவர் தன் முதற் கவிதையை எழுதினார். 1945/46-ஆம் ஆண்டுகளில் திரைஒலி’, “மேதாவி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியரானார். 1949இல் "சண்டமாருதம்’ ஆசிரியராகித் திரைப்படத் துறையில் பயிற்சி பெற்று, *கன்னியின் காதலி என்ற திரைப் படத்துக்கு “கலங்காதே திருமனமே" என்ற முதற் பாடலை எழுதினார். அதே ஆண்டில் தி.மு.க.வில் ஆரம்ப கால உறுப்பினராய் அரசியலிலும் சேர்ந்து கொண்டார்.
தன் தந்தை பற்றி விசாலினி
முத்தையா 1950-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று (03) மனைவியர்கள் (1. பொன்னழகி, 2. பார்வதி, 3. பெயர் தெரியவில்லை), ஒன்பது (09) ஆண்களும் ஐந்து (05) பெண்களுமாக ஒருமித்து 14 பிள்ளைகளைப் பெற்றனர். இவரின் ஒரு மகளான நடிகை விசாலினி தன் தகப்பனைப் பற்றி “என் அப்பா 14 பிள்ளைகளின் தந்தையாகவும் , மூன்று மனைவியரின் கணவனாகவும், ஏராளமான கவி புனையும் கவிஞனாகவும், இனப் பெருக்க வளமிக்க தகப்பனாகவும் திகழ்கின்றார்” என்று பெருமைப் படுகின்றார்.
முத்தையா கண்ணதாசன் ஆனார்
முத்தையா ஒர் உறுதி கொண்ட நாத்திகனாய் திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றி வந்தாலும் தமிழ்மொழி, கலை, கலாசாரம், தமிழ் இலக்கியம், கவிதை, உரைநடை ஆகியவற்றில் மிகுந்த தகைமை பெற்றிருந்தார். மேலும், இவர் ஆண்டாளின் திருப் பாவையின் இறைநிலைப் பாடல்களால் மிகவும் ஈர்க்கப் பட்டார். இதே நோக்கில் இந்து மதத்தையும் அறிய விரும்பி, தன் பெயரைக் “கண்ணதாசன்” என

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 155
மாற்றிக்கொண்டு, இந்து மதத்தை ஆழ்ந்து ஆராய்ந்து ‘அர்த்தமுள்ள இந்து மதம்” என்ற பத்துப் (10) பாகங்கள் கொண்ட அரியநூலை எழுதியுள்ளார். இவ்வண்ணம் மூத்தையா, கண்ணதாசன் ஆனார்.
அவர் படைப்புகள்
1952/53 ஆம் ஆண்டுகளில் சிறையில் இருந்தவாறு ‘மாங்கனி", *இல்லற சோதி” என்ற திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதியுள்ளார். 1954/56 ஆம் ஆண்டுகதிரில் தென்றல் (வார இதழ்), சண்டமாருதம் (மாதம் இருமுறை), முல்லை (இலக்கிய மாத இதழ்) ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கி நடாத்தி வந்தார். 1957இல் திருக்கோசடியூர் தொகுதித் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிக் கொண்டார். இன்னும் கண்ணதாசன் அவர்கள் காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி என்ற புனைப் பெயர்களிலும் எழுதி உலா வந்துள்ளார்.
1958/59 ஆம் ஆண்டுகளில் ‘சிவகங்கைச்சீமை’, ‘கவலையில்லா மனிதன்” ஆகிய படங்கள் தொடர்பில் ஈடுபட்டிருந்தார். 1960-61களில் ‘குழந்தைக்காக” என்ற படத்துக்குச் சிறந்த உணர்ச்சிப் பாடல் எழுதியமைக்காகத் தேசியத் திரைப்படப் பரிசு வழங்கப்பட்டது. தி.மு.க. விலிருந்து விலகித் தேசியக் கட்சியைச் சம்பத் தலைமையில் ஆரம்பித்தார். தென்றலை நாளிதழ்ப் பத்திரிகை ஆக்கினார். 1962-63 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார். "வானம்பாடி’, ‘இரத்தத் திலகம்’, ‘கறுப்புப் பணம்’ ஆகிய படங்களுக்குத் திரைப்படப் பாடல்கள் எழுதினார். 1964-66 ஆம் ஆண்டுகளில் அகில இந்தியக் காங்கிரசில் செயற்குழு உறுப்பினரானார்.
கண்ணதாசனின் ஊடுருவிப் பாயும் கண்களும், ஆர்வம் நிறைந்த கூர்நோக்கும், தொடர் ஆற்றலும் அவரின் உயர்ச்சிக்கு உறுதுணையாய் அமைந்தன என்பதல் ஐயப்பாடு ஏதுமில்லை. அவர் ஒரு பட்டுப்பூச்சிக்கூடு போன்ற வாழ்க்கையை அமைத்து வாழவில்லை. தமிழ்நாடு வழங்கிய மது, மாது, மயக்கப் பொருள், சூதாட்டம், அரசியல், விவாதக் கலை, நாத்திகம், சமயம் தொடர்பான் தெய்வமனை போன்ற அத்தனைகளிலும் மூழ்கி, அமிழ்ந்து

Page 89
156 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
இன்புற்றிருந்தார். இவ்வாறு அகமகிழ்ந்து எழுந்தவர் தான் பெற்ற அனுபவங்கள் யாவையும் முன்வைத்துப் பல்லாயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடல்களில் எளிமை, கருத்து, சொல்வளம் ஆகியன நிறைந்திருக்கின்றன. இவர் பாடல்கள் எல்லா வாழ்க்கைத் துறையினரான பாடசாலை மாணவர், பட்ட-முன் மாணவர், குடும்பத் தலைவியர், உழவர், தொழிலாளி, தோட்டத் தொழிலாளி, நடுத்தர வகுப்பினர், உயர்ந்தோர் குழாம் ஆகியோரின் உணர்வலை நாளங்களைத் தட்டி எழுப்பின. கம்பன் பாடலையும், வள்ளுவன் குறளையும் வாசித்துப் படிக் கத் தெரியாதவர்களும் கண்ணதாசன் பாடல்களை மெட்டெடுத்துப் பாடுகின்றனர்.
1970-ஆம் ஆண்டில் ருசியாவுக்குப் பயணம் செய்திருந்தார். மத்திய மாநில அரசுகள் இவரைப் பாராட்டிச் சிறந்த பாடலாசிரியர் விருதை வழங்கினர். 1971-ஆம், 1975-ஆம் ஆண்டுகளில் மலேசியாவுக்குத் தமிழ்ச் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தார். 1978-ஆம் ஆண்டில் அரசவைக் கவிஞர் ஆனார். 1979-ஆம் ஆண்டில் “சிறந்த கவிஞர்” என்ற அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசைப் பெற்றுக்கொண்டார். 1980ஆம் ஆண்டில் 'சேரமான் காதலி" என்ற நாவலுக்கு சாகித்திய அகாடமி விருதைப் பெற்றுக்கொண்டார்.
கண்ணதாசன் கவிஞனாய், நாவலாசிரியனாய், உணர்ச்சிப் பாடகராய், அரசியல்வாதியாய், திரைப்படத் தயாரிப்பாளனாய், பதிப்பாசிரியராய், பேச்சாளனாய், எழுத்தாளனாய் பற்பல திக்கில் நின்று பணியாற்றியுள்ளார். 1944-ஆம் ஆண்டுமுதல் 1981-ஆம் ஆண்டுவரை நாவல், வீரகாவியம், கட்டுரை, நாடகம், கவிதை நூல், அர்த்தமுள்ள இந்து மதம் ஆகியவை அடங்கிய 232 நூல்களுடன் 5,000 உணர்ச்சிப் பாடல்கள், 6,000 கவிதைகள் ஆகிய அனைத்தையும் தன் 54 ஆண்டு வாழ்க்கையில் எட்டாம் தரக் கல்வியறிவுடன் நிறைவேற்றி வைத்தமை பாராட்டுக்குரியதே. இவரின் படைப்புகள் வேற்று மொழிகளில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதும் ஒரு வருத்தச் செய்தியாகும்.
*கண்ணதாசன் இராமநாதபுரம், சிறுகூடல் பகுதியில் பிறவாது
ஐரோப்பா அல்லது அமெரிக்கா நாடுகளில் பிறந்திருந்தால் உலகளாவிய அங்கீகாரம் பெற்று இலக்கியத்தில் ஓர் அரசவைக்

நுணாவிலூர் கா.விசயரத்தினம் - 157
கவிஞனாகியிருப்பார். அதேநேரம் தமிழராகிய நாம் ஓர் அசாதாரண பேருயர் கொண்ட ஒரு மாமனிதனை இழந்திருப்போம்.” என்று டாக்டர் சச்சி சிறி காந்தா கூறியுள்ளார். ‘கண்ணதாசன் பாமர மக்களின் மக்கள் கவிஞன்” என்று கூறுபவர் செபிபில் (ZWebebil) அவர்கள்.
பட்டம் பெற்ற ஒரு சிலர் கண்ணதாசன் பற்றி எதிர்க் கருத்துகளையும் வைத்துள்ளனர். அதில் டாக்டர் சி.ஆர். கிருஸ்ணமூர்த்தி அவர்கள் ‘கண்ணதாசன் சினிமாத்துறையில் நாட்டம் கொண்டவர். இது, இலக் கரிய மேதைகளினதும் பங்காளிகளினதும் தமிழ்க்கலை இலக்கிய மறுமலர்ச்சிக்கு முழுப் பங்களிப்பையும் கொடுக்கவில்லை. இவரைப் புதுக்கவிதை நடைக்கு ஒரு முன்னோடியாகக் கருதலாம். இவரின் பல்சீரான தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் நிறைந்த கருத்து மாறுபாடுகள் காணப்பட்டன. ஒரு கவிஞனாக அரசியல், சமுதாய, மத, கருத்தாய்வு போன்றவற்றின் முழு ஆற்றலையும் செயற்றிறனையும் தன் பிழைக்கும் வழிக்காக்கிக் கொண்டார்’ என்று தன் சொந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
சில ஆக்கங்கள்
இனி, கண்ணதாசன் தன் பாடல்களில் சொல்லாக்கம், கருத்தாக்கம், பொருளாக்கம், எழுத்தாக்கம் ஆகியவற்றுடன் தான் தெரிந்தெடுத்த சொற் பதங்களை அடுக்கி அமைத்துள்ள சிறப்பின் பிரயோகம் சிலவற்றைக் காண்போம். பின்வரும் ஆங்கில மொழிபெயர்ப்பு டாக்டர் சச்சி சிறி காந்தா அவர்களால் வழங்கப்பட்டது.
1. மனிதன் பிறந்தான்; வளர்ந்தான்; ஆசை கொண்டான்; ஆடினான்; ஓடினான்; பாடினான்; தேட்டம் தேடினான்; மெல்ல மாண்டு விட்டான். எதையாவது அள்ளிச் சென்றானா? என்று கேள்விப் பா தொடுத்துள்ளார்.
ஆடை இன்றி பிறந்தோமே Though born without a dress ஆசை இன்றி பிறந்தோமா? Did we come without passions? ஆடி முடிக்கையிலே அள்ளி When we complete the merriment
சென்றோர் யாருமுண்டா? Can anyone carry their possessions?

Page 90
158 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
2. உறவுண்டு, மனைவியுண்டு, பிள்ளையுண்டு. இவர்கள் வீடு வரையும், வீதி வரையும், காடு வரையும்தான். கடைசி வரை யாரோ? எவரும் இல்லை என்று கூறுகின்றார்.
வீடு வரை உறவு The kin till the house வீதி வரை மனைவி The wife till the street காடு வரை பிள்ளை The son up to the cemetery கடைசி வரை யாரோ? Who will come beyond that?
3. உள்ளம் - உண்மை, சொல்லில் - நெஞ்சில், ஆமை - ஊமை, பாதி - நீதி ஆகிய சொற்பிரயோகங்களை ஆண்ட அழகு காணிர்.
உள்ளம் என்பது ஆமை Mind is like a tortoise - in which
அதில் உண்மை என்பது ஊமை the truth hides in silence
சொல்லில் வருவது பாதி Words can bring out only the half
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி. While justice calmly sleeps.
4. வாழ்வில் வரும் துன்பம், சுகம், கனவு, காலம், கணக்கு யாவையும் நால்வரிப் பாவில் அமைத்த திறம் காண்கின்றோம்.
வாழ்வில் துன்பம் வரவு Sorrows are credit of life
diasib QF606 305ug5 5606 while the joys are debit, with
காலம் வகுத்த கணக்கை the balances being mere dreams, and who
இங்கே யார் காணுவார்? Can comprehend? The arithmetic of fate.
5. கண்ணதாசன் கருத்துள்ள சொல்லாக்கத்துடன் இலக்கியப் பாணியும், இலக்கண வடிவும் சேர்த்து அமைத்துள்ள பாடல்கள் கவர்ச்சியைத் தருகின்றன.
அன்புக்கோ இருவர் வேண்டும் அழுகைக்கோ ஒருவர் போதும் இன்பத்துக் கிருவர் வேண்டும்
ஏக்கத்துக் கொருவர் போதும்.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 159
6. காமராச நாடார் பற்றி நாடார்’ என்ற சொற்பதப் பிரயோகச்
சிறப்பினை ஈண்டுக் காண்போம்.
சொத்து சுகம் நாடார், சொந்தந்தனை நாடார் பொன்னென்றும் நாடார், பொருள் நாடார், தான் பிறந்த அன்னையையும் நாடார், ஆசைதனை நாடார் நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத நாடாரை நாடென்றார்.
7. போலவும்? என்ற சொல்லை உவமை உருவாக்கிப் பாட்டிசைத்துக் “கூடினாளின்றித் துவள்கின்றேன்” என்று தோழிக்குக் கூறும் செய்தி இது.
ஆடுவா ரில்லா அரங்கம் போலவும் பாடுவா ரில்லாப் பாடல் போலவும் தேடுவா ரில்லாச் செல்வம் போலவும் கூடினாள் இன்றித் துவள்கிறேன் தோழி!
8. கருத்தோட்டம் நிறைந்த வரிகள் சொல்லும் கதைகள் இவை.
(1) “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத்
தெரியாதா? பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா? (படம்: ஆனந்த சோதி)
(2) “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? கலையெல்லாம்
கண்கள் சொல்லும் கலையாகுமா? (படம்: ஆலயமணி)
(3) ‘நலநிதானா? நலந் தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? (படம்: தில்லானா மோகனாம்பாள்.)
(4) "காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை.’ (புதுக்கவிதை)
இவ்வண்ணம் இளவயதிலேயே ஏணிப்படியின் உயர் உச்சி நிலையெய்திய கவியரசு கண்ணதாசன் அவர்கள் 1981-ஆம் ஆண்டு

Page 91
160 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
தமிழ்ச் சங்கவிழா இறுதி நாட்களில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். ஆங்கே அவர் உடல்நிலை காரணமாக 24-07-1981 அன்று சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதக் கப்பட்டு 17-10-1981 அன்று இவ்வுலகை விட்டேகி அமரநிலை எய்தினார். இவர் பூதவுடல் 20-10-1981 அன்று அமெரிக்காவிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு இலட்சக் கணக்கான மக்கள் இறுதியஞ்சலுடனும் அரச மரியாதையுடனும் 22-10-1981 அன்று தகனக் கிரிகைகளுடன் எரியூட்டப்பட்டது.
‘கவியரசு கண்ணதாசன் நகர்’, ‘கவியரசு கண்ணதாசன் நினைவுச் சின்னம்’ ஆகியனவும் தமிழ் நாட்டில் எழுந்து அவர் நாமம் பேசுகின்றன. கவியரசு கண்ணதாசன் பூதவுடல் மறைந்தாலும் அவர் பாடல்கள், படைப்புகள், எழுத்துக்கள் ஆகிய ஆக்கங்கள் அனைத்தும் மக்கள் மனத்தில் பதிவாகி உலா வருகின்றன.
*முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கிணங்க அவரின் தொடர் விடா முயற்சி அவரை உயர் ஏணிப் படிக்கு எடுத்துச் சென்றுள்ளது. அன்னார் நாமமும், புகழும் மங்காது என்றும் நிலைத்திருக்கக் காண்போம்.

161 ܛ
இற்றுை உல்டும் குமிழர் கல்ாசரடும்
நிம் பண்டைத் தமிழர் கலை, கலாசாரம், பண்பாடு, மொழி, நாகரிகம், உடை, ஊண், உறை போன்றவற்றுடன் ஒன்றறக் கலந்து தனித்துவமாகப் பேரின்ப வாழ்வு வாழ்ந்திருந்தனர். அவர்கள் இவற்றைத் தமக்கென வகுத்து வாழ்ந்து காட்டித் தம் பின்சந்ததியினருக்கும் விட்டுச் சென்றுள்ளனர். மொழி, உடை, ஊண், பண்பாடு, நாகரிகம் போன்ற அனைத்தும் சேர்ந்ததுதான் கலாசாரம் என்பர். இவற்றின் நீண்ட வரலாறு யாவையும் நம் தமிழ் இலக்கியங்கள் இயம்பி நிற்கின்றன.
ஐந்து தசாப்தத்துக்குமுன் செக்கச்சுலோவிய பேராசிரியரும் முனைவருமான கமில் சிவெலிபில் (Dr. Kamil Zvelebil) என்பவர் ‘உலக நாகரிகத்துக்குத் தமிழர் ஆற்றிய பங்களிப்பு’ என்ற தலைப்பில் *தமிழர் கலாசாரம்' பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார்.
“தமிழர் கலாசாரம் உலக நாகரிகத்தின் பெரும் அழியாப்
புதையல் என்பதில் கருத்து வேறுபாடில்லை.”

Page 92
162 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
கலாசாரம் பற்றி மகாத்மா காந்தி அவர்களின் கூற்றையும் பார்ப்போம்.
“என் வீட்டை நாலா பக்கமும் சுவர் எழுப்பி சாளரங்களையும் மூடி வைக்க நான் விரும்பவில்லை. எல்லா நாட்டுக் கலாசாரமும் சுயாதீனமாக என் வீட்டில் உலா வரவேண்டும்.”
ஈழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கூற்று இவ்வாறு அமைகின்றது.
“மொழியும் கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும்
உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம்
பெறுகின்றது, பலம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம் உன்னதம் பெறுகின்றது.”
குறிப்பிட்ட இடத்து ஓர் இன மக்களின் பழக்க வழக்கம், நம்பிக்கை, கலை, சிந்தனை வெளிப்பாடு முறைகள் ஆகியவை அனைத்தும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபடுகின்றன என்பது வரலாற்று உண்மை. இந்நிலையில் நாம் எந்தக் கலாசாரத்தைப் பின்பற்ற வேண்டுமென்பதில் ஒரு தயக்கம் எழலாம். இது உணர்வு பூர்வமான தயக்கமே.
தொல்காப்பியம்
தொல்காப்பியர் காலத்துக்குமுன் (இற்றைக்கு சுமார் 7,000 ஆண்டுகளுக்குமுன்) தலைவன் தலைவியர் காதலித்து, மனத்தால் ஒன்றிணைந்து, கொண்டு கொடுத்து, மணவினை நிகழ்த்தினர். இங்கு தலைவன் தலைவியரின் அறநிலை மாண்பைக் காண்கின்றோம். பிறகு தொல்காப்பியர் காலத்தில் தலைவன் தலைவியரிடையே பொய் கூறுதலும், குற்ற உணர்வுடன் ஒழுகுதலும் தோன்றிய பின்னர் “கரணம்” என்னும் சடங்கு முறையினை வகுத்துக் கொடுத்தனர் ஆன்றோரும் சான்றோரும். ‘ஐயர்’ என்பது இங்கு பார்ப்பனரைக் குறிக்கவில்லை.
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஜயர் யாத்தனர் கரணம் என்ப." -(தொல் பொருள் 143).

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 163
அகநானூறு
இனி கடைச் சங்கக் காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் தமிழரின் பண்டைய திருமணமுறை பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
பந்தலிட்டு, மண விளக்கேற்றி, பூமாலை தொடுத்து அலங்கரித்து, மணப் பறையுடன் பெரிய முரசம் ஒலிக்க, நல்ல வேளையில் மகனைப் பெற்ற புத்தாடை அணிந்த மகளிர் நால்வர் கூடிநின்று “கற்பில் வழுவாது, நல்லவை உதவி, உன்னை மனைவியாகப் பெற்ற கணவனைக் காக்கும் துணைவியாவாயாக!” எனக் கூறி வாழ்த்தி, பூக்களையும் நெல்லையுழ் நீருடன் கலந்து அவள் தலையில் தூவி, அவளை மங்கல நீராட்டி, ‘வதுவை மணம் முடிவுற, அவளின் பெற்றோர் வந்து “பெரிய இல்லக் கிழத்தி ஆவாய்!” என்று கூறித் தலைவியைத் தலைவனிடம் கொடுத்தனர். மணவினைகாண வந்தோருக்கு உழுத்தம் பருப்புப் பொங்கலும், நெய்யில் ஊறிய இறைச்சியோடு கலந்த வெண்சோறும் கொடுத்து உபசரித்த செய்தியும் காண்கின்றோம்.
“உழுந்துதலைப் பெய்த கொழுங்கனி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப. " - (அகம். 86:1-2)
*நீரொடு சொரிந்த ஈர்இதழ் அலரி
பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக் .
- (அகம். 86:15-17)
“மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப் .
- (அகம். 136:1-2)
*மனு சுமிருதி” நூல்
இனி, தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) 200 ஆம் ஆண்டளவில் எழுந்த ‘மனு சுமிருதி’ என்ற தர்மசாத்திர நூல் திருமணம் தொடர்பில் பேசப்படும் செய்தியையும் காண்போம்.

Page 93
164 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
9 ஒரு பெண்ணுக்குரிய விலையை அவள் பெற்றோர்க்குக் கொடுத்துவிட்டு அவளை விலைக்கு வாங்கி வந்து திருமணம் செய்து கொள்வதும், மணமாகா ஒரு மங்கையைக் காட்டி வேறொரு பெண்ணைக் கொடுத்தால் அந்த மணமகனுக்கு இவ்விரு பெண்களையும் முன் பேசிய அதே விலைக்குத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முறைகளை மனு நீதி கூறுகின்றது. - (மனு 8iL6qU5g5) VIII : 204)
சிலப்பதிகாரம்
இன்னும் தி.பி. (திருவள்ளுவருக்குப் பின்) இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தில் திருமணவிழா பற்றிக் கூறுகையில் யானைமீது மகளிரை அமரச் செய்து புகார் நகரெங்கும் திருமணச் செய்தியை அறிவித்து, திருமண மண்டபத்தை அலங்கரித்து, முரசு முழங்கி, மத்தளம் கொட்டி, சங்குகள் மங்கல ஓசை எழுப்பி, நீலப் பட்டினால் அமைத்த முத்துப் பந்தரில், வானில் உறையும் மதியமானது உரோகிணியைச் சேரும் நல்ல வேளையில், வானத்து அருந்ததி போன்ற கற்புடைய கண்ணகியை மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட, கோவலன் மணம் புரிந்து, இருவரும் தீவலம் வந்த செய்தி பேசப்படுகின்றது.
*. யானை எருத்தத்து, அணியிழையார், மேல் இரீஇ,
மாநகர்க்கு ஈந்தார் மணம். .
மாலை தாழ் சென்னி வயிரமணித் துணகத்து, நீலவிதானத்து, நித்திலம்பூம் பந்தர்க் கீழ் வானூர் மதியம் சகடு அணைய, வானத்துச் சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன், மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!"
(1:43-44, 48-53)
நம் திருமணவிழாவில் பார்ப்பான் ஒருவன் முதல் முறையாகத் தீவலம் செய்விக்கவும், மந்திரம் ஒதவும் புகுந்த முறை கண்டீர். அன்றிலிருந்து இன்றுவரை பார்ப்பான் மந்திரம் ஓதுவதும், நாம் கேட்பதும், பொருள் புரியாது திகைப்பதும், நடந்த வண்ணம் உள்ளன. இதில் மாற்றம் ஏற்படின் வரவேற்புக்குரியது.

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 165
கலிங்கத்துப் பரணி
மேலும் தி.பி. 11 ஆம் நூற்றாண்டில் உதித்த கலிங்கத்துப் பரணியில் குலோத்துங்க சோழ மன்னன் போர்க்களம் இறங்கியதும் பகையரசர்கள் அஞ்சிப் பின்வாங்கி ஓடியவிடத்து அவர்தம் வெற்றி மகளைக் குலோத்துங்க மன்னன் "கடிமணம்’ புரிந்து கொண்ட செய்தியும் பேசப்படுகின்றது.
இற்றைய திருமண விழா
இந்நாளில் நடைபெறும் திருமண வைபவங்களையும் சற்றுக் கவனிப்போம். சோடனை கூடிய மண்டபத்தில் மணவறை அமைத்து, கன்னிக்கால் நாட்டி, மேளம் நாதசுரம் இசைத்து, பார்ப்பான் குண்டம் சமைத்து, ஓமம் வளர்த்து, அவி சொரிந்து, வேதம் ஓதி, அம்மி மிதித்து, அருந்ததி காட்டி, இந்திரரும் சந்திரரும் சூரியரும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் கூவி அழைத்துச் சபையில் சாட்சியாக நிறுத்தி, குறித்த முகூர்த்த நேரத்தில் ஆயிரக்கணக்கில் அமர்ந்துள்ள ஆன்றோர் முன்னிலையில் கொட்டு மேளம் கொட்ட மங்கல நாணை மணமகள் கழுத்தில் மணமகன் மூன்று முடிச்சிட்டுக் கட்டியபின் மணமக்களைச். சபையோர் அறுகரிசி தூவி ஆசீர்வதித்து, உணவருந்தியபின் மணவிழா இனிதே முடிவுறும்.
ஆயிரக்கணக்கில் சபையில் ஆன்றோர் முன்னிருக்க சபையில் பிரசன்னமில்லாத இந்திரர், சந்திரர், சூரியர், முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோரைச் சாட்சியாக நிறுத்தியமை மணமக்கள் ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் இறுக்கமான மனவுறுதிக்கும், நம்பிக்கைக்கும் பங்கம் ஏற்படாதிருந்தால் யாவும் நன்றே.
மேற்காட்டிய தமிழர் திருமண முறைகள் சென்ற ஏழாயிரம் ஆண்டுக் காலப் பகுதியில் பல மாற்றங்களைக் கொணர்ந்தமை கண்டோம். ஆனால் கரணம் என்னும் சடங்கு முறை தொல்காப்பியர் காலத்திலிருந்து இற்றைவரை தொடர்ந்த வண்ணம் நிலைத்திருப்பது கண்கூடு.
கலாசாரச் சீரழிவு
கலாசாரம் பற்றி நிறையப் பேசிப் பெருமைப்படுகின்றோம். அதே நேரம் நமக்குத் தெரியாமல் கலாசாரத்தைச் சீரழித்துக்

Page 94
100 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
கொண்டிருக்கின்றோம். “உன் கலாசாரம் என்று எதைச் சொல்கிறாய்? என்று கேட்டால் பதில் வராது. நம் உணவுப் பொருளான அவரை, கடலை மிட்டாய், பனம் பழம் ஆகிய தின்பண்டங்களை மறந்து விட்டோம். இவை சத்துணவுகள் என்றும் ஞாபகம் வருவதில்லை. ஆனால் சத்துணவற்ற மேல்நாட்டுப் பொருள்களை விரும்பி உண்கின்றோம். நம் பிள்ளைகளுக்கும் நாமே முன்னோடியாகி விட்டோம்.
அலுவலகம் செல்லும் பொழுது சேட்டு, காலுடை, காலுறை, கழுத்துப் பட்டி, சப்பாத்து அணிந்து கொண்டு செல்கின்றோம். ஆங்கிலத்தில் உரையாடிச் செயலாற்றுகின்றோம். எம் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் முறையில் வேட்டி, சட்டை, சேலை அணிந்து கொண்டு அலுவலகம் சென்று கடமையாற்றி வரலாமே என்றொரு ஆதங்கம் எழலாம். வழமைபோல் அலுவலகம் செல்லலாம். ஆங்கிலத்தில் உரையாடலாம். எதற்கும் நாம் சளைத்தவரில்லை என்றும் காட்டலாம். ஆனால் வீட்டுக்கு வந்து தமிழனாக இருந்து, தமிழ் நூல்களை வாசித்து, நம் மொழிப் படங்களைப் பார்த்து, தயிர்ச் சாதிம் சாப்பிட்டு, பிள்ளைகள் மனைவியுடன் தமிழ் மொழியிற் கலந்துரையாடி, பிள்ளைகளுக்கு நாளொரு வண்ணம் குறள் ஒன்று கூறி, தேவாரம் பாடி, கலை கலாசாரம் சொல்லிக் கொடுத்து வாழ்ந்தால் நாம் கலாசாரத்துடன் நிற்பவராவோம்.
இதை விடுத்து ஆங்கில உடை, மொழி, உணவு, மதம், பண்பாடு, கலை, நாகரிகம் ஆகியவற்றில் மோகம் கொண்டு பின்பற்றிச் சென்றால் நம் கலாசாரத்தை நாமே அழித்தவர்களாவோம். கலாசாரத்தை மனதில் மட்டும் வைத்துக்கொண்டு செயலிற் காட்டாது வாளாவிருக்கும் பொழுது பண்பாட்டைத் தவிர மற்ற அனைத்தையும் கலாசாரச் சீரழிவுக்கு இழுத்துச் செல்கின்றோம். நாளை வரும் நம் இளம் தலைமுறையினர் பண்பாட்டையும் அழிக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம். ‘ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது தமிழர் தாரக மந்திரமும் அவர்தம் கலாசாரமுமாகும். இக் கோட்பாட்டால் தான் அவர்கள் வாழ்க்கை சீராகவும், சிறப்பாகவும், இன்புற்ற ஒத்தமனத் தோடு ஓடிக்கொண்டிருக்கின்றது. இதுவும் மாறாதென்பதற்கு என்ன உறுதி?
உலகில் ஆறரைக் கோடி (6 1/2) தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள்.
தென் இந்தியாவும், வடக்குக் கிழக்கு இலங்கையும் இவர்கள் தாயகம். இவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து பிரித்தானியா, அமெரிக்கா,

நுனாவிலூர் கா. விசயரத்தினம் + 161
கனடா, யேர்மனி, நோர்வே, டென்மார்க், ஆபிரிக்கா, சுவிற்சர்லாந்து, மத்திய கிழக்கு நாடுகள், அவுத்திரேலியா, பிரான்சு போன்ற நாடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல. இவர்களுக்கு நாடு, மொழி, உணவு, உடை, உறை, கலாசாரம், மதம், பண்பாடு, மக்கள், சூழ்நிலை போன்றவை யாவும் வேறுபட்டன. இவர்கள் இவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியவர்கள் ஆகின்றனர். நாளடைவில் தம் மொழி, உணவு, உடை போன்றவற்றில் தளர்வு ஏற்பட்டு விடுகின்றது. ஆனால் இவர்களின் இளந் தலைமுறையினர் தம்மை அந்தந்த நாடுகளுக்கு ஏற்றவாறு நிலைப்படுத்திக் கொள்கின்றனர். இச் செயல் நம் கலாசாரத்தை முற்றாகச் சீர்குலைத்து விடுகின்றது. சில ஆங்கில மோகங் கொண்ட பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் காட்டி நிற்கின்றனர். இதன் விளைவு உடன் தெரியாவிட்டாலும் நாளடைவில் தெரிய வரும். அந்த நேரம் திருத்த முடியாத சோக நிலைக்கு உள்ளாவர்.
ஆனால் ஒரு சில நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்வோர் இதற்கு மாறுபட்டவர்களாய் உள்ளனர். சுவிற்சர்லாந்து, டென்மார்க், யேர்மனி போன்ற சில நாடுகளில் வாழ்வோர் தம் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழி கற்பிக்கின்றனர். தமிழ் மொழியில் உயர் வகுப்புப் பரீட்சைகளில் சித்தி பெறுகின்றனர். வீட்டில் தமிழ் மொழியிற் பேசுகின்றனர். இங்குள்ளோர் நாலு, ஐந்து மொழி தெரிந்தவர்கள். சங்கீதம், நடனம், வாத்தியம், தேவாரம், திருக்குறள், பேச்சுப் போட்டி ஆகியவற்றில் பங்கேற்கின்றனர். கோவிலுக்குப் பாவாடை, சட்டை, தாவணி, சேலை, வேட்டி, சேட் ஆகியன அணிந்து செல்கின்றனர். படிப்பிலும் முன்னணி வகிக்கின்றனர். இவர்கள் கலாசாரத்தை ஓர் அளவில் பேணிக் காக்கின்றனர் எனலாம்.
நாம் சோறு சாப்பிட்டுப் பழகிவிட்டோம். நம் பிள்ளைகள் ‘பிஸ்ஸா’ (pizza), நூடுல்ஸ் (noodles) போன்றவற்றைச் சாப்பிடுகின்றனர். இவற்றில் “கேர் ப்ஸ் ' (herbs) என்ற மூலிகை மருத்துவ இலைகள் பாவிக்கப்படுகின்றன. அவை நமது கற்பூரவள்ளி, துளசி என்று எத்தனை பேருக்குத் தெரிகின்றது? ஒரு சிலருக்குக் கிண்டலாகவும் தோன்றலாம். இவற்றின் சொந்தக்காரர் நாம். இதன் சொந்த உரிமையைக் கொண்டாட மறந்ததால் தான் நிறைய இழப்புக்களைச் சந்திக்கின்றோம். வேம்பு, பாசுமதி போன்ற நம் பொருட்களை அயல் நாட்டினர் உரிமை கொண்டாட விட்டிருப்போமா?

Page 95
168 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
மொழி மாற்றம், மத மாற்றம் செய்வதற்கு எத்தனையோ பிற சக்திகள் இன்றும் எதிர்பார்த்து நிற்கின்றன. மொழி, மதம் மாறினால் வேலை வாய்ப்பு, பாடசாலை அனுமதி, பல சலுகைகள் ஆகியன கிடைப்பதால் மக்கள் சிலர் தாம் கட்டிக் காத்து வந்த பாரம்பரியத்தை விட்டு விலகுகின்றனர். இது கலாசாரச் சீரழிவில் போய் நிற்கின்றது.
தமிழ்ப் பெண்கள் பூவும் பொட்டுமாய் வலம் வருவர். வீட்டு முற்றத்தில் வண்ண வண்ணக் கோலம் போடுவர். பண்டைத் தமிழ்ப் பெண்கள் இருபத்தொன்பது (29) வகையான ஆபரணங்களை அணிந்தனர். இவற்றில் அதிகமானவை இன்று வழக்கில் இல்லை. காலத்துக்கேற்ற புதுவித ஆபரணங்கள் இன்று நடைமுறைக்கு வந்துள்ளன. இன்று பெண்கள் மூக்கில் மூக்குத்தியும், கால்விரலில் மெட்டியும் அணிவதுபோல் அன்று முக்கு அணியும், கால்விரல் மெட்டி அணியும் இருக்கவில்லை. r :” மூக்குத்தி, மெட்டி அணிவது அவர்களின் கலாசாரமாகும். அவர்கள்
உடை அவரின் கலாசாரத்தை உணர்த்துகின்றது.
வன்னி மக்கள் வாட்டம் - ஊண் இல்லை, உடை இல்லை, உறை இல்லை, மருந்து இல்லை, பணம் இல்லை, உறவு இல்லை, நிம்மதி இல்லை, உயிரும் இல்லை. இவரின் கொடும் பசியை யார் தணிப்பார்? வயிறு கொதிக்கும் பொழுது கலை என்ன? கலாசாரம் என்ன? பண்பாடு என்ன? நாகரிகம்தான் என்ன? எல்லாம் ஒன்றுதான், ஒரு நேர உணவு கிடைக்காதவிடத்து. ܓ
நமக்குச் சரியானதாகவும், புனிதமாகவும் இருக்கும் எந்தவொன்றும் மற்றவர்களுக்கும் அவ்வாறே இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அதைத் தீர்மானிக்க வேண்டியது அவரவருடைய வாழ்க்கைச் சூழல் மட்டும்தான்.
D

* **్క
} *్య. }; 17 ई: بنی با اند.
^*** *. *. * ** ** ** ४: .११४. **
தொல்காப்பியப் பெடுநூல் யாத்கு குொல்காப்பியனார்
தொல்காப்பியர்
தொல்காப்பியம் என்னும் நூலைத் K. ད།གལ་ தொல்காப்பியனார் என்ற பெரும் புகழ் பெற்ற
புலவர் பாடியருளினார். தொல்காப்பியம் | தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) 5,000 ஆண்டுகளுக்கு முன் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஒரு பெரிய இலக்கண, இலக்கிய உயிர் நூலாய் நம்
மத்தியில் உலா வருகின்றது. இந்நூலை யாத்த தொல்காப்பியனார் தலைச் சங்க இறுதியிலும் , இடைச் சங் கதி
தொடக்கத்திலும் வாழ்ந்தவரென்று கூறுவர்.
Literary Doyen Tholkappiar
169

Page 96
170 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
"இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்.“ என்று நக்கீரனார் கூறியுள்ளார். மேலும் , “தொலர் காப்பரியம் பண டைதி தமிழர்களின் தொண்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்." என்பது டாக்டர் மு. வரதராசனாரின் கூற்றாகும்.
இன்னும், "ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றப்படுகின்றார் தொல்காப்பியனார். இவர் ஒரு காப்பியக் குடியில் தோன்றியவரென்றும், அவர் இயற்பெயர் தொல்காப்பியர் எனவும் சான்றோர் கூறுவர். வேறு சிலர் இவரின் இயற்பெயர் “திரனதுTமாக்கினி" எனவும் “சமதக் கபினியாரினர் புதலிவர் ' எனவும் கூறுவர். அகத்தியனாரின் பன்னிரு மாணாக்கர்களுள் முதல் மாணவன் தொல்காப்பியனார் ஆவார். இன்னும், இவர் பரசுராமரின் உடன் பிறந்தவரென்றும் ஒரு கதையுமுண்டு.
ஐந்நிலங்கள்
தொல்காப்பியர் காலத்து மக்கள் இயற்கையோடு இணைந்து, பினணிப் பிணைந்து, மகிழ்ந்து வாழ்ந்தனர். தாம் வாழ்ந்த மண்ணை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நால்வகை நிலங்களாக வகுத்தனர். நாளடைவில் முல்லையும், குறிஞ்சியும் திரிந்து, வெம்மையால் வளம் குன்றிய பகுதியைப் 'பாலை” என வகுத்து ஐந்நிலங்களாக்கினர். இவற்றுடன் “கைக்கிளை’, ‘பெருந்திணை' ஆகிய இரண்டையும் சேர்த்து, திணைப் பெயருமிட்டு ஏழு திணைகளாக வகுத்தனர்.
அதாவது, கைக்கிளை - ஒரு தலைக் காமம், அன்புடைக் காமம் - அன்பின் ஐந்திணை, பெருந்திணை - பொருந்தாக் காமம் என மூன்று நிலைப்படுத்தி வகுத்தனர். இவற்றுள் அன்புடைக் காமம் என்பது ஐவகை நிலங்களின் தன்மைகளைச் சார்ந்தனவாய் அவற்றின் சூழல்களோடு பின்னிப் பிணைந்தனவாய் நிகழ்வனவாம். ஐந்திணைகளுக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் வகுத்து, பெரும்பொழுது, சிறுபொழுது கணித்து, குறிஞ்சியில் புணர்தலும், முல்லையில் இருத்தலும், பாலையில் பிரிதலும், மருதத்தில் ஊடலும், நெய்தலில் இரங்கலும் நிகழ்த்தி நிறைவு கண்டனர்.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 171
தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும் தலைவன் தலைவியர் காதற் களவியல், கற்பியல் ஒழுக்கத்தில் இறங்கி அன்பின்ாற் கூடி மகிழ்வுற்று வாழ்ந்தனர். இது நெடுநாள் நிலைக்கவில்லைப் போலும். தலைவன் தலைவியரிடையில் பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோர் “கரணம்’ என்னும் சடங்கு முறைகளை வகுத்து வரையறை செய்தனர். இச் சடங்கு முறைகள் இன்றும் நம்முடன் ஒட்டி, உறவாடி, நிலைத்து நிற்பதை நினைந்தால் மனம் பூரிப்படைகின்றது.
தொல்காப்பியர் காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் அனைவரையும் அந்தணர், அரசர், வைசிகர், வேளாளர் ஆகிய நால்வகை வகுப்பினரில் அடக்கிய சிறப்பினையும் காண்கின்றோம். தொல்காப்பியர் காலத்தில் சாதிப் பிரிவினையும், சீதனக் கொடுக்கல் வாங்கலும் இல்லாத ஒரு பொற்காலமாகும். அக்கால மக்கள் இவ்வண்ணம் நிறைந்த வாழ்க்கை நடாத்தி மகிழ்வுற்றிருந்தனர்.
மேலும், தொல்காப்பியர் உயிர்களின் பகுப்பும், சிறப்பும், மரபும் பற்றிக் கூறுகையில் ஓரறிவுள்ள புல், மரம் முதலியனவற்றிலிருந்து ஆறறிவுள்ள உயிரான மனிதன்வரை பகுத்து வகுத்துக் கூறிப் புல், பூண்டு, மரம் ஆகியவற்றுக்கும் உயிர் உள்ளது என்பதை எடுத்துக் காட்டியமை அக்காலத்திலும் விஞ்ஞானம் சிறப்புற்றிருந்தமை தெளிவாகின்றது.
சங்ககால அரசியல் இலட்சினைகள்
சங்க காலத்தில் சேரர்க்குக் கருவூரும் (வஞ்சியும்), முசிறியும், சோழர்க்கு உறையூரும், காவிரிப்பூம் பட்டினமும், பாண்டியர்க்கு மதுரையும், கொற்கையும் தலை நகரங்களாக விளங்கின. இன்னும், சேரர்க்கு வில்லும், சோழர்க்குப் புலியும், பாண்டியர்க்கு மீனும் அரசியல் இலட்சினைகளாய் இருந்தன. தமிழகத்தை ஆண்ட பல்லவர்க்கு நந்தி இலட்சினையாய் இருந்தது. இவர்கள் காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை என்னும் முப்படைகளை வைத்திருந்தனர் என்று தொல்காப்பியம் கூறும்.
“தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும்.
- (பொருள். 72-1-2)
s

Page 97
172 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
இங்கு சங்க காலத்தில் தேர்ப்படை ஒன்று இருந்தமைக்குச் சான்றில்லை என்பது கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.
ஆனால் காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை ஆகிய முப்படைகளையும் மேற்கூறிய தொல்காப்பியர் தேர்ப்படை ஒன்று இருந்ததாக இங்கு கூறவில்லை. அன்று தேர்ப்படை ஒன்று இருந்திருந்தால், முப்படைகளுடன் சேர்த்துத் தேர்ப்படையையும் குறிப்பிட்டாக வேண்டிய இடம் இதுதான். இன்னும், தொல்காப்பியர் பிறிதோரிடத்தில் (பொருள்-75) தேர்ப்படையைப் பற்றிக் கூறியுள்ளார். எனவே, அன்று முப்படைகள் மட்டும்தான் போர் தொடுக்க மன்னர்க்கு இருந்துள்ளமை தெளிவாகின்றது.
தொல்காப்பியம்
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் போன்ற நூல்களுக்கு முற்பட்டது தொல்காப்பியம். இயல் தமிழுக்கு மட்டும்தான் தொல்காப்பியம் இலக்கணம் அமைத்துத் தந்துள்ளது.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது ஒன்பது இயல்களாக ஒருமித்து 27 இயல்கள் உள்ளன. எழுத்ததிகாரத்தில் 483 சூத்திரங்களும், சொல்லதிகாரத்தில் 463 சூத்திரங்களும், பொருளதிகாரத்தில் 656 சூத்திரங்களுமாக ஒருமித்து 1,602 சூத்திரங்கள் தொல்காப்பியத்தில் உள்ளன. ஆனால், இந்நூற் சூத்திரங்கள் 1,595 என இள்ம்பூரணரும், 1,611 என நச்சினார்கினியரும் வகுத்து உரை எழுதியுள்ளனர்.
செந்நாப்புலவரான பனம்பாரனார், தொல்காப்பியனாரின் ஒரு சாலை மாணவர். இவர் தொல்காப்பிய நூலுக்குச் சிறப்புப் பாயிரம் ஒன்றினைச் செய்துள்ளார். இஃது இந்நூலின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றது. நிலந்தரு திருவிற் பாண்டியன்’ என்பானின் அரச அவையிலே அதங்கோட்டாசிரியர் என்பவரின் முன்பாக அந்நாளில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்ற செய்தியும் அப்பாயிரத்தின் மூலம் பின்வருமாறு அறியக்கிடக்கின்றது.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 173
“வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற் கரிதபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே.”
இப் பாயிரத்தின் பொருள்:- ‘வடக்கின்கண் வேங்கட மலையும் தெற்கின்கண் குமரி ஆறும் எல்லையாகி அதனிடைப்பட நிலவியது தமிழ் கூறும் நலி லுலகமாகும் . அதன் கணி நிலவிய வழக்குகளையும், செய்யுட்களையும், அவற்றிற்குரிய எழுத்து, சொல், பொருள் இலக்கணங்களையும் ஆராய்ந்தனர். செந்தமிழின் இயற்கையோடு பொருந்திய வழக்குகளையும் நோக்கி, முன் எழுந்த நூல்களையும் கற்றுத் தெரிந்தனர்.
வெற்றிச் செலி வனான பாணி டியன் மாகர் தீதரியின் அவையத்தே, அறத்தினைக் கூறும் நாநலத்தை உடையவனும், நான்மறைகளைக் கற்றறிந்தவனும், அதங்கோடு என்னும் ஊரின் ஆசிரியனுக்குக் குற்றமில்லாத இப் பனுவலையும் தம் அறிவுத் திறனால் தொகுத்துத் தந்தனர். மயக்கம் இல்லா நெறியோடு எழுத்து இலக்கணத்தைக் காட்டி, அதன் பிரகாரம் அமைந்து விளங்கும் சொலிலும் பொருளுமாகிய இலக்கணங்களை முறைமையாகக் காட்டினர்.

Page 98
174 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
நீர் நிறைந்த கடலாகிய எல்லையைக் கொண்ட உலகில், இந்திரனால் இயற்றப்பட்ட ஐந்திரத்தைக் கற்று, நிறைந்த அறிவு பெற்றவரும், “பழைய காப்பியக் குடியினர்’ எனத் தம் பெயரை உலகில் நிலைநாட்டியவரும், மற்றும் பல்வேறு புகழையும் தாங்குபவரான சிறப்பினையுடைய தொல்காப்பியனார் ஆவார்.”
இளம் பூரணர், பேராசிரியர், சேனாவரையர், கல்லாடர் நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகியோரும் இன்னும் பலரும் தொல்காப்பிய நூலுக்கு உரை எழுதியுள்ளனர். இவற்றுள் இளம்பூரணர் உரை ஒன்றே காலத்தால் முற்பட்டதும், முற்றாகக் கிடைப்பதும் ஆகும்.
வடக்கே திருவேங்கட மலையும், தெற்கே குமரியாறும், கிழக்கு மேற்குத் திசைகளில் கடலாகவும் அமைந்த எல்லைப் பரப்பே ஆசிரியர் தொல்காப்பியர் காலத்துத் தமிழ்நாடு என்றழைப்பர். ஆனால், தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் வழங்கிய பனம்பாரனார் கடல் எல்லைகளைக் குறிக்கவில்லை. அவர் பாயிரம் இவ்வாறு தொடங்குகின்றது.
"வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து
பனம்பாரனாரின் பாயிரத்தில் ஒரு சிறப்பு அம்சம் அமைந்திருப்பதை நாம் காணலாம். இங்கே ஆசிரியர் ஒரு விடயத்தை - அதாவது கிழக்கு, மேற்குத் திசைகளில் கடல் எல்லையாக அமைந்துள்ளது என்பதைச் சொல்லாமற் சொல்லிப் போகின்றார். வடக்கே நீண்ட தொடர் வேங்கட மலை. தெற்கே பாய்ந்தோடும் குமரியாறு. இது கடல் வரை சென்று சங்கமிக்கும். எனவே, கடல் எல்லையைக் கூறாமற் கூறியுள்ளார். இன்னும், வேங்கட மலைக்கும், குமரியாறுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு என்று குறிப்பிடுவது கிழக்கு, மேற்குத் திசைகளில் கடல் எல்லைவரை உள்ள நிலப்பரப்பே தமிழ் கூறும் நல்லுலகமாகும் என்பது தோன்றா நிற்கும்.
தமிழுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டென்று சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளார் இவ்வாறு கூறியுள்ளார்.

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 175
“ւս..gյ6if யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும், இமயமும் கொண்டு, தென்திசை ஆண்ட தென்னவன் வாழி. ”
- (மதுரைக்காண்டம் 11-19-22)
தமிழ் நாட்டின் தென் திசையில் நெடுதூரம் பரவியிருந்த பட்றுளி ஆறும், பல மலைத் தொடர்களும், குமரி மலையும் கடல் கொண்டு போனதாக இளங்கோ அடிகளார் ஒரு வரலாற்றுச் செய்தியைத் தந்துள்ளார். கடல் கொண்டு எஞ்சிய பகுதிதான் கடலோரக்குமரி என்பதாகும். அதுவே இன்றைய கன்னியாகுமரியாம். அதேபோல் அக்கடற் கொந்தளிப்பில் எஞ்சிய ஒரேயொரு தமிழ் நூல்தான் தொல்காப்பியம் ஆகும்.
நால் வகுப்பினர்
நால்வகை வகுப்பினரான அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியவர்களிடையே கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்த காலமொன்று அன்று இருந்தது. அதன்பின் மேலோர் என்று சொல்லக் கூடிய அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவகை வகுப்பாரிடையே கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்தது.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே. ”
- (பொருள். 142)
தொல்காப்பியர் காலத்துக்கு முன்னர் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகுப்பார் இடையில் கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்தது என்பதும், தொல்காப்பியர் காலத்தில் அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவகுப்பாரிடையில் கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்ததென்பதும், வேளாளர் தமக்குள் மாத்திரம் மணவினை நிகழ்த்தினரென்பதும் புலனாகின்றது. இன்று இம்முறைகள் யாவும் அருகி மறைந்துவிட, நால்வகுப்பினரும் தத்தமக்குள் கொண்டு, கொடுத்து, மணவினை காண்கின்றனர்.
இன்னும், நம் பண்டைத் தமிழ் ஆன்றோர் தம் இன மக்கள் அனைவரையும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு

Page 99
176 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
வகுப்பினரில் அடக்கி, அரசர்களிலும் பார்க்க அந்தணர்க்கு முதலிடம் அளித்து, இரண்டாமிடத்தில் அரசரை அமர்த்தி, மூன்றாம் நான்காம் இடங்களில் முறையே வணிகர், வேளாளர் ஆகியவர்களை நிறுத்தி, அரசன் கையில் செங்கோல் கொடுத்து, மக்களை மாண்புடன் வாழவைக்கும் முறையினை அமைத்தமை காண்க.
மேலும், இன்று நம் மத்தியில் தாண்டவமாடும் சாதிப் பிரிவினையும், சீதனக் கொடுமையும் தொல்காப்பியர் காலத்தில் இருக்கவில்லை என்பதும் தெளிவாகின்றது. நாம் தொல்காப்பியர் வழியில் நிற்கின்றோமா? இது ஒரு விடையற்ற கேள்வியாகும்.
Ruj u T55 8600 lb
தலைவன் தலைவியைக் கண்டு, காதல் கொண்டு, சிலநாட் பழகி, பல நாள் மறைந்தொழுகி, பின் நானறியேன் என்று பொய் கூறுதலும், குற்றப்பட ஒழுகுதலும் மக்கள் வாழ்வில் மங்கா வடுக்களைத் தந்து வாழ்க்கை முறைகளைச் சீரழித்து விடுகின்றன. தலைவன் தலைவியரிடையே பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோரும், சான்றோரும் சடங்குகளை வகுத்து, வரையறைகளை அமைத்தனர்.
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப. ” - (பொருள். 143)
'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் என்று வரும் கூற்றால், பொய்யும் வழுவும் தோன்றாக் காலம் ஒன்றிருந்தமை புலனாகின்றது. அக்காலம் தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டது என்பதும் தெளிவாகின்றது.
பொய்யாவது செய்ததனை மறுத்து நிற்றல். வழுவாவது செய்ததை அதன் கண் நில்லாது தவறி ஒழுகுதல். கரணத்தொடு செயற்படின் பொய்யும், வழுவும் நிகழாவாம். இவ்வண்ணம் கரணம் வேண்டுவதாயிற்று.
தலைவன் ஊர்திகள்
தலைவன் தலைவியர் காதல் வலையிற் சிக்குண்டனர். தலைவன் தலைவியை நாடிச் செல்வது வழக்கம். தேர், யானை, குதிரை

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 177
முதலியவற்றிலும், பிறவற்றிலும் தலைவன் விரைந்து சென்று தலைவியைக் கூடுதலும் உண்டென்று சூத்திரம் அமைத்தவர் தொல்காப்பியனார்.
*தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப."- (பொருள். 209)
தலைவன் ஒருவனிடம் தேரும், யானையும், குதிரையும் பிற ஊர்திகளும் உண்டு என்பது அவனின் சிறந்த பொருளாதார நிலையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இன்னும் அவன் நாட்டுச் செழிப்பும் அவ்வண்ணம் அமைந்துள்ளமையும் புலனாகின்றது
நம் பண்டைத் தமிழர் கைக்கொண்ட இயற்கையோடு அமைந்த வாழ்க்கை முறைகளைத் தொல்காப்பியனார் தொகுத்தளித்து, நம்மையும் ஆற்றுப்படுத்தியமை ஓர் அரும் பெரும் அற்புதச் செயலாகும்.
D

Page 100
178 -
*? 18
உயரத்திலும் பல்ல்டுக்டு மாடிகளிலும் உல்கச் சரகுணை பெற்று நிற்டும் கடிடம்
The Burj Khalifa - Opened January 04, 2010
துபாய் நகரில் 160 மாடிகளுடன் நிர்மானிக்கப்பட்டு உலகின் அதியுயர் கட்டிடம் என உலக சாதனை பெற்ற கட்டிடம் 04.01.2010-இல் திறந்து வைக்கப்பட்டது.
LDனிதன் தன் அறிவாலும், ஆற்றலாலும், விடா முயற்சியாலும் இற்றைய நவீன உலகத்தைக் கட்டியமைத்துக் காத்து வருகின்றான்.
 

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 179
மனித ஆக்கங்கள் அத்தனையும் உலகெங்கிலும் பூத்து நிற்பதைக் காணலாம். ‘நினைத்ததை முடிப்பவன் மனிதன்” என்பது இன்று தாரக மந்திரமாய் அமைகின்றது. அவன் விஞ்ஞானம், விண்வெளி, பொறியியல், கல்வி, பொருளாதாரம், மருத்துவம், ஆய்வு, கலை, கலாசாரம், அறிவியல், ஆத்மீகம், கட்டிடக் கலை, கணினி, தத்துவம், கணிதம், கணக்கியல், கணக்காய்வு போன்ற எல்லாத் துறைகளிலும் மேம்பட்டுக் கணக்கில் அடங்காச் சாதனைகள் புரிந்த வண்ணம் உள்ளான். இந்த வகையில் அண்மையில் நடந்தேறிய ஓர் உலகச் சாதனை பற்றிக் காண்போம்.
“J& 56.5l6)IT” (Burj Khalifa) disi lgLib
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் என்ற நகரில் ‘பூர்ச் கலிவா? (Bur Khalifa) என்ற பெயர் கொண்ட கட்டிடத்தின் நிர்மான வேலைகள் 21-09-2004 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் கட்டிட வேலைகளையும் இயந்திரப் பொறியமைப்பையும் சிகாகோ நாட்டைச் சேர்ந்த “ஸ்கிட்மோர் 696ñrÉ16mö, Giuppól6ö” (Skidmore Owings and Merill of Chicago) 616öngo நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இதில் ‘அட்றியன் ஸ்மித் (Adrian Smith) என்பவர் பிரதம கட்டிடக் கலைஞராகவும், “பில் பேக்கர்’ (Bill Backer) என்பவர் பிரதம பொறியமைப்பாளர் ஆகவும், தென் கொரியாவைச் சேர்ந்த ‘சம் சுங் (Sumsung C&T) என்ற நிறுவனம் முதல்-நிலை ஒப்பந்தக்காரராகவும் பணியாற்றினர். இத் திட்டத்தின் முழுச் செலவினங்களாக அமெரிக்க டாலர் 1.5 பில்லியன் (US$1.5 Bion) செலவானது.
இக் கட்டிடம் 160 அடுக்குகளைக் கொண்ட மாடிகளுடன் 828 மீட்டர் (2,717-அடி) உயரத்துடன் எழுந்து நின்று மனிதனால் ஆக்கப்பட்ட அதியுயர் கட்டிட அமைப்பு என்று வானில் பறைசாற்றிக் கொண்டு நிற்கின்றது. இக் கட்டிடத்தின் மாடிகளின் தளப் பரப்பளவு 334,000 சதுர மீட்டர் (3,595,100 சதுர அடி) ஆகும்.
04-01-2010 அன்று இக் கட்டிடம் வெகு விமரிசையாகத் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு முன்பிருந்த ‘பூர்ச் துபாய்’ (Bயர் Dubai) என்ற பெயரை அன்றே ‘பூர்ச் கலிவா? (Buri Khalifa) என்ற பெயராகத் தற்போதைய ஐக்கிய அரபு இராச்சியத்தின் சனாதிபதி

Page 101
180 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
அவர்களின் நற்பெயர் கருத்திற் கொண்டு இப்புதுப் பெயர் மாற்றம் செய்தனர்.
as' (BLDITGOTib (Construction)
43 மீட்டர் உயரமும் 1.5 மீட்டர் விட்டமும் கொண்ட 192 கலவைப் பிழம்பு உருக்குத் தூண்கள் செய்வதற்கு 45,000 கன மீட்டருக்கு (58,900 கன யார்) மேற்பட்ட கலவைப் பிழம்பு பாவிக்கப்பட்டது. இது நிறையில் 110,000 தொன்கள் ஆகும். இவ்வாறான 192 தூண்களும் 50 மீட்டர் (164 அடி) ஆழத்தில் புதைக்கப்பட்டுக் கட்டுமானம் தொடங்கியது. இக்கட்டுமானத்தில் ஒருமித்து 330,000 கன. மீட்டர் (431,600 கன. யார்) கலவைப் பிழம்பும், 55,000 தொன் உருக்குக் கம்பியும் பாவனைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் 22,000,000 மனித மணித்தியாலங்களுக்கு வேதனமும் வழங்கப்பட்டது.
மிக அடர்த்தியான, குறைந்து ஊடுருவ இடந்தரும் இயல்பான கலவைப் பிழம்பு இந்த அத்திவாரத்தில் பாவிக்கப்பட்டது. இக் கலவை 19-08-2007 வரை நீர் மின் ஆற்றல் மூலம் 532 மீட்டர் (1,745 அடி) வரை பிறிட்டுச் செலுத்தப்பட்டது. இதன்பின் மே மாதம் 2008-இல் இருந்து கலவைப் பிழம்பை 156-ஆம் மாடி மட்டும் 606 மீட்டர் (1988 அடி) உயரம்வரை குழாய் மூலம் வீச்சு முறையில் செலுத்தப் பட்டது. மிகுதிக் கட்டிட அமைப்பான 157-ஆம் மாடியிலிருந்து 160-ஆம் மாடிவரை இலேசான உருக்கு உலோகத்தால் கட்டி முடிக்கப்பட்டது. இக் கட்டிடத்தைக் கட்டுவதற்கு 17-06-2008 வரை 7,500 திறமையான தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
தளத்திலிருந்து 160-ஆம் மாடிவரை 2,909 ஏணிப் படிகள் உள்ளன. இக் கட்டிடத்தில் குறித்த ஒரு நேரத்தில் 25,000 மக்கள் கூடக்கூடிய வசதிகள் உள்ளன. இங்கு 57 மின் ஏற்ற மாடங்களும் (Elevators) எட்டு (08) இயங்கும் படிக் கட்டுகளும் (Escalators) Juugogól60d6Mo இணைப்பில் இயங்குகின்றன.

நுணாவிலூர் கா. விசயரத்தினம் + 181
35'lgL LITIElg (Architecture)
இத் திட்டத்தில் 4,000 தொன்னுக்கு மேற்பட்ட கட்டிட உருக்குக் கம்பிகள் பாவனைப் படுத்தப்பட்டுள்ளது. உட் கட்டிடத்தை 1,000-க்கு மேற்பட்ட கலை வேலைப் பாடமைந்த படங்கள் அலங்கரிக்கின்றன. தலைவாயின் முகப்பில் உலகின் 196 நாடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு வெண்கலம், பித்தளை உலோகத்தால் உருமாதிரி அமைத்து அலங்கரித்துள்ளனர். வெளிப் பக்கத்தில் 142,000 சதுர மீட்டர் (1,528,000 சதுர அடி) கொண்ட ஒளிக்-கதிர்களை வாங்கி எறிகிற கண்ணாடி, அலுமீனியம், மாசற்ற உருக்கு ஆகியவற்றை அணு ஆற்றல் எதிர்வு இயக்க அமைவில் உலோகப் பொறிகாப்பு முறையில் (Cladding) அமைக்கப்பட்டுள்ளன. இவ்வமைப்பு துபாய் நாட்டின் கோடைகால வெப்ப நிலையை எதிர்த்து நிற்கக்கூடியது. இதன்படி 160-ஆம் மேல் மாடியின் வெப்பம் கீழ் மாடியிலும் பார்க்கக் குறைந்த நிலையான 6-சென்டிகிரேட் பாகை (43-பாரன்ஹீட் பாகை) என்ற அளவைக் காட்டி நிற்கிறது. இதற்காக 26,000 கண்ணாடிப் பளிங்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வேலைக்காகச் சீனாவிலிருந்து 300 வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டனர்.
LugTLDsŮL (Maintenance)
24,348 சன்னல்களைக் கழுவிச் சுத்திகரிப்பதற்கு 40-ஆம், 73-ஆம், 109-ஆம் மாடிகளில் ஒவ்வொன்றும் 1.5 தொன் நீர் கொள்ளக்கூடிய மூன்று (03) கிடைநிலை இயந்திரச் சுழல் நிறைப் பட்டைகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை கிடைநிலையாகவும், செங்குத்தாகவும் சுழன்று சன்னல்களைக் கழுவுகின்றன. 109 ஆவது மாடிக்குமேல் உள்ள சன்னல்களைக் கழுவுவதற்குப் பாரந்தூக்கும் பொறி நிறுவனம் வழமையான தொட்டில்களைப் பாவிக்கின்றது. கோபுரக் கூம்பில் அமைந்த சன்னல்கள் அனுபவம் பெற்ற 36 யன்னல் கழுவுனர்களிடம் கொடுக்கப் பட்டுள்ளது. இதை அவர்கள் ஒரு முறை கழுவ மூன்று (03) அல்லது நாலு (04) மாதங்கள் ஆகின்றது.

Page 102
182 + பண்டைத்தமிழரும் சமுதாயச்சீர்கேடும்
g5UTu Bijggs|T60J (Dubai Fountain)
The Dubai Fountain performing to the song "Bassbor Al Fourgakom'
இக்கட்டுமானத்துக்கு வெளியில் துபாய் நீர்த்தாரையை 217 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அமைத்துள்ளனர். இது கலிலே Eயா ‘வெட் டிசைன்’ (WET Design- California) 6T6örs நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. நீர்த்தாரை 275 மீட்டர் (900 அடி) நீளமுள்ளது. இங்கு 6,600 வெளிச்ச விளக்குகளும் 50 வண்ண ஒளி எறிவுக் கருவி அமைவுகளும் (Projectors) பொருத்தப்பட்டுள்ளன. அராபி, உலக இசைகளுடன் ஆகாயத்தில் 150 மீட்டர் (490 அடி) உயரத்துக்கு நீரைப் பாய்ச்சிப் பரவசப் படுத்துகின்றது. இத் தேக்கத்தை “துபாய் Bij g5 25T 60) J” (Dubai Fountain) 616oï (BI 26-10-2008 96oï (B) அறிவிக்கப்பட்டது.
6T66 (560) LÖg5606).ju III6Tij (Parachutists)
வான்குடை மிதவையாளர்களான நஸ சார் அல் நியாடி (Nasser All Niyadi) , ?LDj SÐ6ò GomBuî6d6ÖT (Omar Al Hegelan) ஆகிய இருவரும் 2010-ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் வாரத்தில் ‘பூர்ச் கலிவா? கட்டிட உச்சியான 828 மீட்டர் (2,717 அடி) உயரத்திலிருந்து தளத்திற்கு 90 செக் கனில் குதித்து
 

நுணாவிலூர்கா.விசயரத்தினம் + 183
உலகச் சாதனை படைத்துள்ளனர். இவர்கள் மணித்தியாலத்துக்கு 220 கி.மீ. (140 மைல்) வேகத்தில் குதித்துள்ளனர். இவ்வண்ணம் இதுவரை எவரும் குதித்ததில்லை என்பது ஒரு செய்தி.
மாடிகள் பற்றிய ஒரு பார்வை
2004-ஆம் ஆண்டில் நில அகழ்வும், அத்திவாரமும் ஆரம்பித்து. 2005-இல் கட்டுமானம் தொடங்கி, 2006-இல் 50 ஆம் மாடி கண்டு, யூலை 2007-இல் 5092 மீட்டர் உயரமான ரெய்பி 101 (Taipei 101) என்ற கட்டிட உயர்வைத் தாண்டி 141-ஆம் மாடியில் நின்று உலகின் அதியுயர்ந்த கட்டிடம் எனப் புகழ் பெற்று, செப்தம்பர் 2007 இல் 150ஆம் மாடியில் 555.3 மீட்டர் உயரத்தில் கனேடிய ‘சி. என். ரவர்’ (C.N. Tower) என்ற கோபுரத்தின் 553.3 மீட்டர் உயரத்தை மழுங்கடித்து, ஏப்ரல் 2008-இல் 629 மீட்டர் உயரமெய்தி கே.வி.எல்.வை. ரி.வி. மாஸ்ற் (KVLY-TV Mast) என்பதின் 628.8 மீட்டர் உயரத்தை விஞ்சி நின்று, சூன் 2008 இல் 636 மீட்டர்வரை உயர்ந்து, செப்தம்பர் 2008-இல் 688 மீட்டர் உயரமெய்தி, 17.01.2009-இல் 828 மீட்டர் உயரத்தில் 160-ஆம் மாடியில் கால் பதித்து, உலகப் புகழ் பெற்று, உலக மக்களுக்குச் செய்தி கூறி நிற்கின்றது இக் கட்டிடம்.
இம் மாடிகளில் வழித்-தங்கல் மனை, குடியிருப்பு, கூடல் அறை, அலுவலகம் , உணவகம், இசை நிகழ்வு அரங்கு, திறந்த வெளி அரங்கு, இயந்திரப் பகுதி, நீராடு தடாகம் ஆகியனவும் உள்ளன.
திறப்புவிழா
கட்டிடத் திறப்புவிழா 04-01-2010 அன்று 10,000 வாணவெடி வேடிக் கைகளுடன் , கட்டிடத்திலும் அதனைச் சுற்றிலும் வண்ண ஒளி வீச்சுகளை எறிந்து, இன்னிசை நிகழ்ச்சிகள் பல பரப்பி, நீரை வானில் உயரப் பாய்ச்சி, 300 ஒளி எறிவுக் கருவிகளின் உதவியுடன் கோபுரத்தின் கட்டமைப்பு முறைகளை இயக்க ஒளி நிழற்
Opening Ceremony's
"Lightshow on 04-01படங்களாகக் காட்டி விழாவைக் குதூகலமாக 2010
நடாத்தினர்.
V

Page 103
184 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
திறப்புவிழா நிகழ்ச்சிகள் யாவும் அகன்ற காட்சித்-திரை, பல தொலைக் காட்சிகள், நூற்றுக் கணக்கான ஊடகங்கள் ஆகியவற்றில் நேரடி அஞ்சல் செய்யப்பட்டது. இவ் விழாவில் சுமார் 6,000 விருந்தினர் பங்கேற்றனர்.
இவ்வுலகில் உலகச் சாதனைகள் படைப்பவர்கள் பலர். இவை என்றும் நிலைத்திருப்பதில்லை. இன்றைய சாதனை நாளை Dilab6Ostb. வேறொன்று அச் சாதனையை முறியடித்துப் புதுச் சாதனை ஒன்றை நிலைநாட்டும். ஆனால் சில சாதனைகள் பல காலம் ஓடிக்கொண்டிருக்கும். அந்த வகையில் ‘பூர்ச் கலிவா’ கட்டிடச் சாதனை பல ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்று சிந்திக்க இடமுண்டு. இதைக் காலந்தான் கூறவேண்டும். இதைவிட்டு நாம் இச் சாதனையில் நிலைத்து நிற்போம்.
(கொழும்பு - வீரகேசரி வார வெளியீட்டில் 24-01-2010)
DDD

185 ܛ
மேல்நூடுக்கேற்ற சைவ டுறைகள்
சிெவ சமயம் ஒன்றே கடவுள் என்னும் தத்துவத்தைத் தெளிவுற எடுத்துரைக்கின்றது. முழுமுதற் கடவுளாகிய சிவத்தை அடைவிக்கும் நெறியே சைவ சமயமாகும். உலகிலுள்ள சமயங்களில் சைவ சமயமே மிகவும் தொன்மை வாய்ந்தது என்பது ஆராய்ச்சியால் உறுதி பெற்றுள்ளது. அதிகமான சைவ மக்களுக்குச் சைவம் ஒரு தத்துவமாகவோ அல்லது பகுத்தறிவுச் சிந்தனையாகவோ அமையவில்லை. மாறாக அது அவர் உயிராய் அமைகின்றது.
சைவ மக்களாகிய நாம் இறைவனையும், சிவசக்தியையும் வணங்குகின்றோம். கடவுளை வழிபடும்போது முதலில் அம்மையையும், பின்னர் அப்பனையும் நினைந்து ‘அம்மையே!* ‘அப்பா!” என்று அகங்குழைந்து நின்று பிரார்த்திக்கின்றோம். சைவமும் தமிழும் நம் இரு கண்கள். அவை எம்மைத் தாங்கும் தூண்கள்.
தொல்காப்பியம்
இற்றைக்குச் சுமார் ஏழாயிரம் (7,000) ஆண்டுகளுக்குமுன் எழுந்த பழந்தமிழ் இலக்கிய நூலான தொல்காப்பியம் நானிலங்களுக்கும்

Page 104
186 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
உரிய தெய்வங்களாக முல்லையில் மாயோன் (கண்ணன்), குறிஞ்சியில் முருகன் (சேயோன்), மருதத்தில் இந்திரன் (வேந்தன்), நெய்தலில் வருணன் ஆகியோரைக் குறிக்கின்றது. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களையும் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய நால்வகைத் தெய்வங்களும் காத்து நிற்றலைக்
85T605.
“மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீன்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும்.” -
(தொல் பொருள் 05)
இந் நானிலத் தெய்வங்களில் சிவன் என்ற பெயரோ சிவன் பற்றிய செய்திகளோ இடம் பெறவில்லை. ஆனால் கடவுள் பற்றித் தொல்காப்பியம் பேசுகின்றது.
“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.”
- (தொல் பொருள் 85)
மேலும் திருமூலர் திருமந்திரம் நெடுகிலும் இறைவன், ஈசன், நந்தி, சிவம், சைவம் பற்றிய செய்திகளைப் பல மந்திரங்களிற் காட்டியுள்ளார். தமிழ் நாட்டுக் கடவுளான சிவனது வளர்ச்சியைத் தொல்காப்பியர் காலம்முதல் தமிழ் இலக்கியங்கள், சைவ இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது.
நாடோடித் தவசிகள்
சைவத் துறவியர் பற்றி மேல்நாட்டார் ஒருவரின் (DanielouAlain) பார்வை இவ்வாறு அமைகின்றது.
“பண்டைத் திராவிடரின் மதமான சைவம் என்றும் மக்களின் மதமாகவே இருந்துள்ளது. ஆரியர்களால் நாடோடி என்றும், தீண்டத் தகாதவர் என்றும், பிச்சைக்காரர் என்றும் ஏளனஞ் செய்யப்பட்ட

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 187
சமுதாயத்தின் விளிம்பில் வசிக்கும் நாடோடித் தவசிகளால் இம் மதத்தின் ஆய்வுக் கோட்பாட்டியல் (metaphysical), அண்டப் படைப்புக் கோட்பாடு (c0Sm00gical), கரணவியல் கருத்து (ritual conceptions) ஆகியவை பாதுகாக்கப் பட்டுள்ளன. சைவர் கடுந் துறவிகளாகவும் (ascetic), காமம்_மரிக் கவர்களாகவும் (ascivious) இருந்துள்ளனர். சைவத் துறவியர் திறந்த மேனியராய், சாம்பல் - பூசிக் கொண்டு, தெய்விக ஆடல் பாடலுடன் (0rgiastic) திரிவது அவர் வழக்கச் செயலாகும். அவர் சிக்குத் தலைமுடியுடன் வல்லுறுப் பார்வையோடு கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் அப்பால் வசித்துக் கொண்டு சமுதாயச் சீர்திருத்த நீரோட்டத்தில் பங்கேற்க மறுத்து நிற்பர்.”
தாய் நாட்டில்
நம் தாய் நாட்டில் வாழும் தமிழர் தம் நாடு, மொழி, கலை, உடை, உணவு, உறை, சமயம், பண்டிகை, திருவிழா, விரதம், சடங்கு போன்றவற்றை நேசித்து அதன் விதிகளுக்கமைய ஒழுகி வருவர். இவ்வொழுகலுக்கு அங்குள்ள காலம், நேரம், சூழ்நிலை உதவ அவர்களும் நாடோடு ஒட்டி ஒடப் பழக்கப்பட்டு விட்டனர். ஆங்கு சைவநெறி முறைகளும் சீர் சிறப்புடன் பொலிவுற்று நடந்தேறுகின்றன.
எம் தாய் நாட்டில் இறந்தவரைத் தத்தமது வீட்டில் பல நாட்கள் வைத்திராமல் ஓரிரு நாளில் அடக்கம் செய்துவிடுவர். ஈமச்சடங்கன்று பிணத்தை மஞ்சள் கலந்த நீரில் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து அலங்கரித்து, சைவக்குருக்கள் ஈமச்சடங்காற்றி, பிணத்தைப் பாடையில் வைத்துச் சுமந்துகொண்டு, பறை அடித்து, சங்கு சேமக்கலம் ஒலித்து, தேவாரம் சிவபுராணம் பாடி, படலைவரை பெண்கள் அழுது புலம்பி வழியனுப்பி வைக்க, வெடிச் சத்தத்துடன் ஊர்வலமாகச் சுடலைவரை சென்று தகனக்கிரியை செய்து வைப்பர்.
மேல் நாட்டில்
இனி மேல்நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள் அந்தந்த நாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சற்றுக் கவனிப்போம்.

Page 105
188 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
மேல்நாட்டின் காலநிலை மாற்றம் அந்நாட்டு மக்களை மந்த நிலைக்கு உட்படுத்தி விடுகின்றது. தாய் நாட்டு உடைகள் இங்கு பாவனைக்கு உகந்தவையல்ல. அதனால் அவர்கள் தம் உடைகளைக் குளிருக்கேற்றவாறு மாற்றியமைக்க வேண்டிய நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளனர். உயிர் காத்தற் பொருட்டு இது வேண்டுவதாயிற்று.
நாம் சைவ சமயத்தில் ஊறியவர்கள். இதை நன்கறிந்த ஆன்றோர் சிலர் இங்குள்ள சிலவீடுகளிலும், பிறமதத்தார் மூடிவைத்திருக்கும் சில நிலையங்களிலும் கோயில்களை அமைத்துச் சைவத்தொண்டு ஆற்றி வருகின்றனர். இவ் வண்ணம் கோயில்கள் பல எழுந்துள்ளன. *அன்னதானம்’ என்ற இலவச உணவால் பக்தர் கூட்டமும் பெருகியது. கோயில் வருமானமும் பெருகித் தர்மகர்த்தாக்களின் தில்லு முல்லுகளும் பெருக்கெடுத்தன. கோயில் நிதி சரியான முறையில் கணக்கீடு செய்யப்பட்டுக் கணக்காய்வு நடாத்தப்படின் இத் தவறுகளைத் தணிக்கலாம். யாவும் வியாபார நோக்குடன் ஓடிக்கொண்டிருக்கின்றது.
இங்கு மக்கள் சைவ முறைப்படி திறந்த மேனியராய் (ஆண்கள்) வேட்டி, சேலை உடுத்திக் கொண்டுதான் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று ஒரு நிபந்தனையும் இல்லை. சூழலுக்கேற்ற உடுப்பணிந்து நல்மனதோடு சிவனை நாடிச் செல்வதுதான் சிறந்த பலனைத் தரும். தெய்வம் நம்மை ஒரு நாளும் நிந்திப்பதில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
இந்நாட்டில் தமிழர் மத்தியில் சைவ முறைப்படி திருமணங்கள் நடாத்தப்படுகின்றன. பெண்கள் முறைப்படி சேலை அணிந்து வருவர். மணமக்களின் உற்றார் உறவினரான ஆண்கள் பட்டு வேட்டி, சால்வை, சட்டை அணிந்து வருவர். மற்றைய ஆண்கள் மேல்நாட்டுடை அணிந்து கொள்வர். தாய்நாட்டில் தத்தமது வீட்டில் பந்தர் இட்டுத் திருமண வைபவங்கள் முகூர்த்த நேரத்தில் நிகழும். இங்கு இடவசதி குறைந்த காரணத்தால் தூர இடங்களிலுள்ள மண்டபங்களை வாடகைக்கமர்த்திப் போக்குவரத்து நெரிசல் மத்தியில் முகூர்த்த நேரத்தைக் கடைப்பிடிப்பது கடினமாகின்றது.
மேலும் மணமக்கள் மணமேடையில் பத்து மணித்தியாலங்களுக்கு மேல் வீற்றிருக்க, அந்தணர் வேதமோதி, மாங்கலியம் மணமகள் கழுத்தில்

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 189
ஏற்றி, மணமக்களை அறுகரிசி தூவி வாழ்த்தி, பரிசில்கள் வழங்கி, படப்பிடிப்பாளர் மணமக்களைப் பதினாறு திக்கில் அமர்த்திப் புகைப்படம் பிடித்து, விருந்துபசாரத்தோடு மணவினை முடிவுறும். இம்முறைகளில் மாற்றம் வேண்டும். பிற மதத்தினரின் மண-வினைகளைப் பார்த்தால் இது புரியும்.
மேல்நாடுகளில் ஈமச்சடங்கு நடாத்தப்படும் முறைகளையும் காண்போம். இங்கு ஒருவர் இறந்தால் அவர் உடலை வீட்டில் வைக்காது சாச்சடங்கு மேற்பார்வை கொள்பவரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் பிணத்தை நறுமணமூட்டிப் பேணி வைத்திருப்பார். இது நாட்டின் சட்டம். மேலும் நாம் நினைத்தவுடன் சுடலை சென்று தகனக்கிரியை செய்ய முடியாது. இதற்கு நாம் அனுமதி பெறவேண்டும். நாம் காலம், நேரம் கருதி அதிகமாக விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு தினங்களில் தான் ஈமச்சடங்குகளை நடாத்துகின்றோம். வாடகை மண்டபம் ஒன்றில் ஈமச்சடங்கு சைவக்குருக்கள் கும்பம் வைத்து, மந்திரம் ஓதி, தேவாரம் சிவபுராணம் பாடி, சுண்ணம் இடித்து, ஆண், பெண் ஆகிய இருபாலாரும் சுடலைவரை சென்று இரங்கலுரையுடன் தகனக்கிரியை முடிவுறும். இது நாட்டுக்கும், காலத்துக்கும் ஏற்றவாறு முறைகளில் மாற்றம் ஏற்படும்.
விதவையின் பொட்டு, பூ, வளையல் ஆகியவற்றை அழித்து, தாலியைக் கழற்றிப் பிணம்மேல் சாத்தி அவள் நிலையை மேலும் அவலப்படுத்தும் கிரியை முறைகளையும் காண்கின்றோம். அன்றிலிருந்து அவள் தாலியைக் கழுத்தில் அணியும் உரிமையற்றவள் ஆகின்றாள். ஒரு பெண்ணானவள் தன் கணவன் கட்டிய தாலியைக் காக்கும் தெய்வமாகக் கணிப்பவள். தன் தாலியைக் கண்ணில் ஒத்தி வணங்குபவள். “தாலி பெண்ணுக்கு வேலி’ என்ற கோட்பாடுக்கு மாறுபடாதவள். கணவன் இல்லாது இறந்துபட்ட பொழுது இத்தாலித் தெய்வம் அவளைக் காத்து நிற்க, அவள் சற்றுப் பூரிப்படைவாள். இவ்வுரிமை அவளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து ஆண்களும் பச்சைக்கொடி பிடிக்க முன்வர வேண்டும். ஒருவர் இறந்தால் நாம் குறிப்பிட்ட காலத்துக்குத் தொடக்கை அனுசரிக்கின்றோம். ஆனால் குருக்கள் அவர்கள் இதற்கு மாறுபட்டவராய் உள்ளார். எம்மைப் பற்றும் தொடக்கு அவரைப் பற்றாதோ? காலநேரத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு இவற்றில் மாற்றம் தேவை.

Page 106
190 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
திருவிழாவும் பண்டிகையும்
நாவலர் பெருமான் விரதம் பற்றி இவ்வாறு கூறியுள்ளார். *விரதமாவது மனம் பொறிவழிப் போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன் போடு விதிப்படி விசேடமாக வழிபடல்.”
சைவ சமயவழியில் நிற்கும் தமிழர் திருவிழாக்கள், விரதங்கள், பண்டிகைகள் ஆகியவற்றை ஆண்டுதோறும் கடைப்பிடித்து ஒழுகுவர். ஓர் ஆண்டில் பன்னிரண்டு மாதங்களிலும் ஏதோ ஒரு நிகழ்வு வந்து அவர் கதவைத் தட்டும். ஒரு வருடத்தில் இருபத்தாறு (26) அதி விசேட தினங்கள் உள்ளன. அவற்றால் வரும் நன்மை கருதி அன்றிருந்த சமய ஆன்றோர் இவற்றை வகுத்து வைத்தனர்.
திருவிழா, விரதம், பண்டிகை ஆகியனவற்றை நம் தாய்த்திரு நாட்டில் கடைப்பிடித்து ஒழுகிவருவது மிகச் சுலபம். நாம் அவ்வழியில் ஆண்டாண்டுகளாகப் பழக்கப் பட்டவர்கள். அங்கு நாம் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இதை நம்மால் மேல்நாடுகளிலும் கடைப்பிடிக்க முடியாத நிலையிலுள்ளோம். திருவிழாக்கள், விரதங்கள், பண்டிகைகள் என்னென்ன என்பதும், எப்பொழுது நிகழும் என்பதும், அவற்றை எப்பொழுது கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் இங்குள்ள நமக்குத் தெரிவதில்லை. இயந்திர வாழ்க்கை குறுக்கே நின்று தடுத்து விடுகின்றது போலும்.
ஆவணிச் சதுர்த்தி, திருக் கார்த்திகை, மார்கழித் திருவாதிரை, நவராத்திரி போன்ற திருவிழாக்களையும் தைப்பொங்கல், தீபாவளி, சித்திரை வருடப்பிறப்பு, கந்தசட்டி, விளக்கீடு, தைப்பூசம், ஆடிப்பிறப்பு, மாசி-மகம், பங்குனி உத்தரம், சோமாவாரம், வைகாசி விசாகம், ஆணி உத்தரம், மாளயம் ஆகிய பண்டிகைகளையும் ஐப்பசி வெள்ளி, புரட்டாதிச் சனி, ஆடி அமாவாசை, சித்திரைப் பெளர்ணமி, மகா-சிவராத்திரி, பங்குனித் திங்கள் போன்ற விரதங்களையும் நாம் இங்கு பாவனையில் வைத்திராத படியால் அவற்றை முழுமையாக இழந்து விட்டோம். இன்று நம் தமிழ் ஆண்டு என்ன? தமிழ்த் திகதி என்ன? என்றுகூடத் தெரியாத வாழ்வு

நுனாவிலூர் கா.விசயரத்தினம் + 191
வாழ்கின்றோம். நம் இளம் சந்ததியினருக்குக் கொடுத்து விட்டுச் செல்ல நம் கையில் அதிகம் இல்லா நிலையில் உள்ளோம்.
நாம் வதியும் நாட்டின் சூழலுக்கேற்ற முறைகளை வகுத்துக் கொண்டு, வேதம் ஓதல், பால் குடங்குடமாக அபிடேகத்துக்கு ஊற்றல், செடில் காவடி எடுத்தல், பறவைக் காவடியில் பறத்தல், அலகு குத்தல், தீ மிதித்தல், ஆணி மிதியடியில் நடத்தல் போன்றவற்றில் சீர்திருத்தம் செய்து மக்களைக் காப்பது சைவப் பெரியோரின் கடமையாகும்.
(இலண்டன் தமிழர் தகவல்- சித்திரை மாதம், 2010)

Page 107
ܛ 192
பன்னிடு திைேறகளும் அதிலிடங்கிய பெரிய புராணடும்
“சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும் நம் சுந்தரனும்
சிற்கோல வாதவூர்த் தேசிகனும் . முற்கோலி வந்திலரேல் நீறெங்கே மாமறைநூல் தானெங்கே எந்தைபிரான் ஐந்தெழுத்தெங்கே.” -சிவானந்தமாலை
சிவனடி மறவாச் சிவ சிந்தையரான மெய்யடியார்கள் பலர் காலத்துக்குக் காலம் இறைவன்மீது அருட்பாடல்கள் பலவற்றைப் பாடியிருக்கின்றனர். இவற்றுள் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் தேவாரப் பதிகங்கள் தொடக்கம் சேக்கிழாரின் பெரிய புராணம் வரை பாடப்பட்ட பாடல்கள் பலவற்றின் தொகுப்பே பன்னிரு திருமுறைகள்
(35LD.
திருமுறைகள் பிரணவத்தின் விரிவாய் அமைந்துள்ளன. இவை ஓகார உயிரொலியில் “தோடுடைய செவியன்” என்று முதலாம் திருமுறையான சம்பந்தரின் தேவாரத்தில் தொடங்கி மகர ஒற்றில் “உலகெலாம்” என்று பன்னிரண்டாம் திருமுறையான சேக்கிழாரின் பெரிய புராணத்தில் முடிகின்ற சிறப்பினையும் காண்கின்றோம். இத்
 

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 193
திருமுறைகள் தெய்வீக சக்தி வாய்ந்தவைகளாய், ஓதுவார் உள்ளங்களைத் தூய்மையாக்க வல்லவைகளாய், நோய் நொடி தீர்ப்பவைகளாய், நல்வினைகளைப் பெருக்குபவைகளாய், ஆலயங்களிலும் இல்லங்களிலும் தினமும் ஓதப்பட்டு வருகின்றன.
இத் திருமுறைகளை இறை வழிபாட்டிலும் சமய நிகழ்ச்சிகளிலும் ஒதுவது மரபாகும். சிவன் கோயில்களிலும் பஞ்ச தோத்திரங்களான தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் ஆகியவை வரிசைக் கிரமத்தில் ஒதப்படுவது வழக்கம். திருமுறைகளில் சிவனின் தத்துவம், அவனின் சீலம், திருவிளையாடல்கள், திருநீற்றின் பெருமை, திருவைந்தெழுத்தின் மகிமை, சித்தாந்தக் கருத்துக்கள் பலவும் பரந்து செறிந்து கிடக்கின்றன. “அன்பே சிவம்” என்னும் தத்துவம் கருப்பொருளாய் அமைந்து சிவநெறியில் ஒழுகுவோருக்கு வாழ்க்கையின் வழிகாட்டியாய் அமைந்துள்ளது.
பன்னிரு திருமுறைகள்
திருமுறைகளில் தேவாரங்கள் கொண்ட முதல் ஏழு திருமுறைகளும் ‘அடங்கன் முறை” என்று கூறுவர். இவற்றை அருளிச் செய்த சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் ‘தேவார முதலிகள்” என்று அழைக்கப்படுகின்றனர். திருமுறை எண்கள் 12 எனவும், திருமுறையின் பெயர்கள் 12 எனவும், பதிக எண்கள் 917 எனவும், பாடல் எண்கள் 18,288 எனவும், திருமுறை ஆசிரியர் பெயர்கள் 27 எனவும் கீழ்க் காட்டிய அட்டவணையில் தரப்பட்டுள்ளதைக் காண்கின்றோம்.
திருமுறை திருமுறையின் பதிக பாடல் திருமுறை ஆசிரியர் - 66 šī QLuis என் எண் Gutui
01. தேவாரம் 136 திருஞானசம்பந்த
02. தேவாரம் 122 4,158 மூர்த்தி நாயனார்
03. தேவாரம் 25 KKS KK
04. தேவாரம் 113 திருநாவுக்கரச நாயனார். OS. தேவாரம் 100 3,066 KK G
06. தேவாரம் 99 GG G
07. தேவாரம் 100 1,026 சுந்தரமூர்த்தி நாயனார்

Page 108
194
O8.
O9.
10.
1.
+ பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
திருவாசகம் 51 656 திருக்கோவையார் 400
திருவிசைப்பா 28 288
திருப்பல்லாண்டு O1 13
திருமந்திரம் O 3,000
40 பிரபந்தம் 40 1,400
12.–Gufu LIIGIIb O1 4.281
2.
12 917 18.288
மாணிக்கவாசக
சுவாமிகள்
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூர்த்தேவர் நம்பிகாடநம்பி கண்டராதித்தர் வேணாட்டடிகள் திருவாலியமுதனார் புருடோத்தமநம்பி சேதிராயர்
சேந்தனார்
திருமூலர்
திருவாலவாயுடையார் 85/T6DJ is85ITSOb60LDLIT
ஐயடிகள் காடவர்
கோன்
சேரமான் பெருமான் நக்கீரதேவர் கல்லாடதேவர் கபிலதேவர் பரணதேவர் இளம்பெருமானடிகள் அதிராவடிகள் பட்டினத்துப்பிள்ளையார் நம்பியாண்டார் நம்பி
சேக்கிழார் மிகள்
27
திருமுறை, தமிழர்களின் தனிச் சொத்தான நூலாகும். இதன் சொந்தக்காரர் சைவத் தமிழர். பன்னிரு திருமுறைகள் மக்களின் பெருவாழ்வுக்கு வழிகாட்டும் நூல்களாய் அமைந்துள்ளன. இவை சித்தாந்த

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 195
சைவர்களின் வேத நூல்களாகும். இவையே தமிழர்களின் வேதமுமாகும். இதனைச் சேக்கிழார் கூறும் பாங்கினையும் காண்போம்.
* திருத் தோணிமிசை மேவினார்கள் தங்கள்
திருமுன்பு தாழ்ந்து எழுந்து நின்று, தமிழ்வேதம் பாடினார் தாளம் பெற்றார்.”
பெரிய புராணம்
இறைவனுக்குப் பெரும் தொண்டு செய்த அடியார்களின் இறை மாண்பினை விரித்துக் கூறும் பெருநூல் “திருத்தொண்டர் புராணம்” என்பதாகும். இதை அருளிச் செய்தவர் சேக்கிழார் சுவாமிகள். செயற்கரிய அற்புதங்கள் புரிந்த சிவனடியார்களின் சரித்திரங் கூறும் நூலாதலின் இது “பெரிய புராணம்” என்று பிற்காலத்தில் வழங்கலாயிற்று. இதில் 63 தனி அடியார்கள் பற்றியும் ஒன்பது தொகை அடியார்கள் பற்றியும் கூறப்படுகின்றது. இறைவனார் ‘உலகெலாம்? என்று அடியெடுத்துக் கொடுக்க, இறைவன் அருள் திறத்தைக் காப்பியம் முழுவதும் இறை மணம் வீசச் செய்த சேக்கிழார், நூலை முடிக்கும் போதும் ‘உலகெலாம்” என முடித்தமை சிறப்பாகும்.
சைவத் தரிருமுறைகள் பன்னிரணி டில காணப்படும் தேவாரங்கள், திருவாசகம், திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், பிரபந்தங்கள், பெரிய புராணம் ஆகிய யாவும் சைவ இலக்கியங்களாகும். இவை அனைத்தும் உலகத்துச் சைவர்களாகிய எம்மை என்றும் ஆற்றுப் படுத்தி நிற்கின்றன.
(இலண்டன் சைவமாநாடு- புரட்டாதி மாதம், 2009)
DDD

Page 109
196 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
உசாத்துணை நூல்களின் விவரங்கள்
1. தொலி காப்பியம். (முழுவதும்), புலியூர் கி கே சிகன் தெளிவுரையுடன், 469 பக், பாரி நிலையம், சென்னை, பன்னிரண்டாம் பதிப்பு, 2003. ( 2, 3, 4, 5, 6, 8, 9, 11, 13, 16, 17, 19 )
2. திருக்குறள் தெளிவுரை, டாக்டர் மு.வரதராசனார், MA, MOL, Ph.D. 291 பக், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். லிட். சென்னை. 136 ஆம் பதிப்பு, 1997 - ( 13, 14 )
3. நற்றிணை, புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன், முதற் பகுதி436 பக், இரண்டாம் பகுதி- 468 பக், பாரி நிலையம், சென்னை. முதற் பகுதி. நான்காம் பதிப்பு 2001, இரண்டாம் பகுதி முதற் பதிப்பு 2001 - ( 13 )
4. மணிமேகலை, மூலமும் தெளிவுரையும், பேராசிரியர் ஜெ.ழரீசந்திரன் எம்.ஏ. 437 பக், வர்த்தமானன் பதிப்பகம், 141, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை. மூன்றாம் பதிப்பு 2002. ( 4, 13 )
5. திருமூலர் திருமந்திரம், உரைவிளக்கம் ஞா.மாணிக்க வாசகன், 1424 பக், உமா பதிப்பகம், சென்னை. முதற் பதிப்பு 2003. - ( 9, 19 )
6. பரிபாடல், புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன், 312 பக், பாரி நிலையம், சென்னை. ஐந்தாம் பதிப்பு 2002-( 13)
7. குறுந்தொகை, உரையாசிரியர் தருமாளிகைச் செளரிப்பெருமாள் அரங்கன், 384 பக், முல்லை நிலையம், பாரதி நகர், சென்னை, முதற்பதிப்பு 2000. - ( 13 )
8. கலித்தொகை, புலியர்க்கேசிகன் தெளிவுரையுடன், 416 பக், பாரி நிலையம், சென்னை. ஆறாம் பதிப்பு 2000-(13)

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 197
10.
11.
12.
13.
14.
15.
16.
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள். 244 பக், பூம்புகார் பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு 1996 - ( 3, 5, 6, 8, 9, 11, 12, 13, 16, 17 )
அகநானு று, புலியூர்க் கேசிகன் தெளிவுரையுடன் , களிற்றியானை நிரை - 304 பக், எட்டாம் பதிப்பு 2002, மணிமிடை பவளம் - 464 பக், ஏழாம் பதிப்பு 2002, நித்திலக்கோவை - 296 பக், ஆறாம் பதிப்பு 2002, பாரி நிலையம், சென்னை. - ( 3, 6, 13, 16 )
திருவாசகம் - விளக்கியவர் சுவாமி சித்பவானந்தர், 994 பக், தபோவன அச்சுப் பள்ளி,தருப்பராயம் த துறை, திருச்சிராப்பள்ளி, பதின்மூன்றாம் பதிப்பு 2005. ( 2, 9, 11 )
புறநானூறு, புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன், 563 பக், பாரி நிலையம், சென்னை. முதற்பதிப்பு 1958, விரிவாக்கிய புதிய பதிப்பு 2002. ( 4, 8, 13 )
மகாபாரதம் உரைநடையில் - பேராசிரியர் ஜெ.ழரீசந்திரன் எம்.ஏ. 564 பக். வர்த்தமானன் பதிப்பக வெளியீடு.40, சரோஜினி தெரு, தி.நகர். சென்னை. முதற்பதிப்பின் மறு பதிப்பு 2007 - ( 8, 11 )
கம்ப இராமாயணம் - மோரணம் புலவர் சி. திருநாவுக்கரசு,
512 பக். நூர்த்தமா பதிப்பகம், 10, நானா தெரு, தி. நகர், சென்னை. முதற் பதிப்பின் மறு பதிப்பு 2004. -( 8, 11 )
ஐங்குறுநூறு, உரையாசிரியர் புலவர் அ. மாணிக்கனார், M.A. முதல் தொகுதி, 371 பக், புதிய பதிப்பு 2001, இரண்டாம் தொகுதி, 442 பக், புதிய பதிப்பு 2001, வர்த்தமானன் பதிப்பகம், தி.நகர், சென்னை - ( 13 )
நீதிநெறி நூல்கள் - கொன்றை வேந்தன்- ஒளவையார், 6T6x (BILDT DET6l6ör விளக்கவுரையுடன், 413 பக், வானதி பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு 2005. - ( 11 )

Page 110
198 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
17
18.
19.
20.
21.
22.
23.
24.
“மனு ஸ்மிருதி” (ஆங்கில மொழிபெயர்ப்பு), மனு சாத்திர நூல். ( 2, 3, 4, 6, 9, 16 )
பூரீமத் பகவத்கீதை- பூரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் வியாக்கியானம், 916 பக். றிராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சிராய்ப்பள்ளி மாவட்டம். முப்பதாம் பதிப்பு 2006. - ( 11 )
கலிங்கத்துப் பரணி, புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன், 296 பக், பாரி நிலையம், சென்னை. பதின்மூன்றாம் பதிப்பு 2001. - ( 6, 16 )
பாரதியார் கவிதைகள், பதிப்பாசிரியர் முனைவர் ச. மெய்யப்பன், 478 பக், தென்றல் நிலையம், சிதம்பரம். பதிப்பு 2001. ( 4, 12 )
பதிற்றுப் பத்து - கவிஞர்கோ ஞா. மாணிக்கவாசகன், 320 பக். உமா பதிப்பகம், 18, பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை. பதிப்பு ஆண்டு 2005. - ( 13 )
கூகிள்ஸ் இணையத்தளம். ( 1, 2, 4, 7, 8, 12, 13, 14, 15, 16, 18, 19 )
அர்த்தமுள்ள இந்து மதம்- கவிஞர் கண்ணதாசன். முதல் மூன்று பகுதிகள். பதிப்புகள் முறையே எழுபதாம் பதிப்பு 2005, அறுபத்தி ஒன்றாம் பதிப்பு 2005, ஐம்பத்து ஏழாம் பதிப்பு 2005. வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை - ( 15 )
தொல்காப்பியத் தேன் துளிகள். கா.விசயரத்தினம், 200 பக். வெளியிட்டோர். சென்சுரி ஹவுஸ், 35, எச்ஏ1 2ஜேயு, மிடில் செக்ஸ் , யுகே. உதவி- மணிமேகலை பிரசுரம், சென்னை, தமிழ் நாடு, தென் இந்தியா. பதிப்பு ஆண்டு 2008. ( 1, 2, 3, 5, 6, 9, 13, 17, 19 )

25
26.
நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 199
மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை, மகாத்மா காந்தி, தமிழாக்கம் ரா.வேங்கடராஜுலு. 605 பக். நவஜீவன் பிரசுராலயம், அகமதாபாத்- 380 014. (7)
பெரிய புராணம் - சேக்கிழார், உரையாசிரியர் பேராசிரியர் புலவர் அ.மாணிக்கம், எம்.ஏ, நல்லறப் பதிப்பகம், 21, விவேகானந்தர் தெரு, தியாகராய நகர், சென்னை 600 017. முதற் பதிப்பு 2006. - ( 20 )
குறிப்பு:- (நகவளைவுக் குள் இருப்பவை கட்டுரைகளின்
எண்களாகும்.)
חחח

Page 111
200 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
ஆசிரியரின் நூல்களும் பெறும் விவரங்களும்
1. கணினியை விஞ்சும் மனித மூளை (2005, தமிழ்,
240-பக்கம், E3.99"
2. Essentials of English Grammar (2007, English, 104-pages,
£2.99")
3. பூந்துணர் (பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தின் தமிழ்ஆங்கில தொகுப்பு நூல், 2007, 210 பக்கம் E4.99"
4. தொல்காப்பியத் தேன் துளிகள், (2008, தமிழ், 200-பக்கம்,
£ 4.99)
5. Professor Kopan Mahadeva's 75th Year Volume (2009, Illustrated, Tamil & English, Co-Edited by this Author, 144Pages, £ 4.99*)
6. பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும் (2010, தமிழ்,
இந்நூல், E3.99"
(பிரித்தானியாவுக்குள் தபாற் செலவு நூல் ஒன்றுக்கு ஒரு பவுண் மேலதிகம். ஐரோப்பாவுக்கு நூல் ஒன்றுக்கு இரண்டு பவுண். மற்ற உலக நாடுகளுக்கு நூல் ஒன்றுக்கு மூன்று பவுண் மேலதிகம். நூல்களின் விலைகளும் மேலதிகத் தபால் கட்டணமும் முன்பணமாக ஆசிரியரின் பெயரில் எழுதி, கீழ்

நுணாவிலூர் கா.விசயரத்தினம் + 201
உள்ள விலாசத்துக்கு காசோலையாக அனுப்பவும். பிரித்தானியாவுக்கு வெளியே விமானத்தபால் பாவிக்கப்படும். மேற்கூறிய நூல்களில் சில, சென்னை மணிமேகலைப்
பிரசுரத்திடமிருந்தும் பெறலாம்.)
தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம்:
K. Wijeyaratnam (Crossed cheques to be sent in this name) 86, Sangley Road, Catford, London, SE62JP, U.K. (Telephone (UK) 0208695 1225; e-mail: wijeyOtalktalk.net)

Page 112
202 + பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்
டுறிப்புகளுக்காக.


Page 113
NUNAVILOOR H6OOTTGilgpÜ
நுணாவிலுர் திரு. கா. விசயரத்தி திருநாட்டின் வடமாகாணத்தின் சாவகச்சேரியில் ஆன்றோரும், சான் அமைந்த கோயில்களின் உறை தெ என்னும் அழகிய பச்சைப் பசேலெ6 கல்வியை மட்டுவில் தெற்கு சர மேற்படிப்பைச் சாவகச்சேரி டிறிபேர்க்
இவர் படிப்பை முடித்து, அர போட்டிப் பரீட்சைகளில் சித்திபெற்று ஆட்களை உள்ளிர்க்கும் நோக்கில் பட்ட இலங்கை அரசின் கணக்கா கொழும்புக் கணக்காய்வுத் திணைக் கடமையாற்றி, 1991-ஆம் ஆண்டில் விசயரத்தினம் அவர்கள் அரச, சபை, கணக்காய்வு செய்து, அறிக்கைகளை நாடாளுமன்ற பொதுக்கணக்குக்குழுக் உடையவர். இவர் ஒரு கணக்கியற்
2005-ஆம் ஆண்டில் வெளிவர் ஆய்வு நூலினதும், 2007-ஆம் ஆன Grammar" என்ற ஆங்கில இt பிரித்தானிய ஈழவர் இலக்கியச் ச “பூந்துனர்” இல் ஒருவராகவும், 2008 தேன் துளிகள்” என்ற இலக்கிய ஆ கட்டுரைகளினதும் ஆசிரியராகிய நு5 இலண்டனில் வசித்து வருகிறார்.
PUBLISHERS:
CENTURY HOUSE
35, HA1 2JU, UK
ISBN: 97.
 

| K. WIJEYARATNAM கா. விசயரத்தினம்=
னம் அவர்கள், தமிழன் தாயகமாம் ஈழத் தென்மராட்சிப் பகுதியில் சிறந்த நகரான றோரும், கற்றோரும் நிறைந்து, நாற்றிசையும் யவங்கள காத்து நிற்கும் நுணாவில் மேற்கு ன்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்து, தமிழ்க் சுவதி வித்தியா சாலையிலும், ஆங்கில
கல்லூரியிலும் கற்றவர்.
ச சேவையில் சேர்ந்து, படிப்படியாகப் பல று, இலங்கையின் கணக்காய்வுச் சேவைக்கு பரீட்சைத் திணைக் களத்தினால் நடாத்தப் ய்வுச் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து bகளத்தில் கணக்காய்வு அத்தியட்சகராகக் b ஒய்வு பெற்றார். நுணாவிலுர் திரு. கா. கூட்டுத்தாபன சேவைகளின் கணக்குகளைக் இலங்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்து, கூட்ட விவாதங்களிற் பங்கேற்ற அனுபவமும் பட்டதாரியும், கணக்காய்வாளரும் ஆவார்.
ந்த “கணினியை விஞ்சும் மனித மூளை” எனும் för L26ò G6J6f 6 usbgb “Essentials of English லக்கண நூலினதும், 2007-ஆம் ஆண்டின் ங்கமாகிய ELAB-இன் தொகுப்பு நூலாகிய -ஆம் ஆண்டில் வெளிவந்த 'தொல்காப்பியத் பூய்வு நூலினதும், நூற்றுக் கணக்கான ஆய்வுக் னாவிலுர் கா. விசயரத்தினம் அவர்கள் இன்று
ASSISTED BY:
MANIMEKALA PIRASURAM
Post BoxNo.: 1447 7, Thanikaiachalam Road, T.Nagar Chennai-600 017. S. india Phone: 24342926 Teefax:0091-44-24346082 E-mail : manimekalai1 Gciatatone.in
Website: http://www.tamidwanan.com
8-1-873265-72-7