கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை: மனித உரிமைகள் நிலை 2001

Page 1
○cm: cm。
at all
 
 
 
 

in zouDisc 5, zoals 2001

Page 2

புலம்பெயர் தொழிலாளர்கள்
எஸ். நிஷாதினி குணரத்ன
சட்டத்துக்கும் சமுகத்துக்குமான அறநிலையம் 8, கின்சி டெறஸ் கொழும்பு 8 இலங்கை

Page 3
(C) சட்டத்துக்கும் சமுகத்துக் குமான அறநிலையம்
பங்குனி 2002
ISBN 955-9062-7 4-3

முன்னுரை
சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை: மனித உரிமைகள் நிலை 2001 என்னும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் “புலம்பெயர் தொழிலாளர்கள்” என்னும் அத்தியாயம் முழுவதும் இங்கு மொழிபெயர்த்து தமிழில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அறிக்கையின் சுருக்கநோக்கின் (overview) மொழிபெயர்ப்பும் இந்நூலில் தரப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டுகளின் மனித உரிமைகள் சம்பந்தமான சில முக்கிய அம்சங்களை இவ்வறிக்கை வெளிப்படுத்துகின்றது. இலங்கை: மனித உரிமைகள் நிலை 2007 என்னும் அறிக்கை ஆங்கில மொழி வாசகர்களிலும் பார்க்க பரந்தளவான வாசகர்களைச் சென்றடைவதற்காகவே இங்கு தமிழில் தரப்படுகின்றது. இது தவிர இம் முழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் ”தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை', “இலங்கையில் காணாமலர் போதலர்களினர் தோற்றப்பாடு”ஆகிய அதிகாரங்களும் தனித்தனியே தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன.
சட்டத்துக்கும் சமுகத்துக்குமான அறநிலையம் LDTsför 2002

Page 4

பொருளடக்கம்
சுருக்கநோக்கு
அறிமுகம்
வாக்குரிமை மீதான தாக்குதல் யுத்தமும் சமாதானமும் சட்டத்தைப் பொருட்படுத்தாமை ஒளடகமும் தணிக்கையும் அடிப்படை உரிமைகள் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பாக
இலங்கையின் கடப்பாடுகள்
இலங்கையில் காணாமல் போதல்களின் தோற்றப்பாடு
அறிமுகம் கொள்கைப் பரமாணமாக தொழிலாளர் ஏற்றுமதி புலம்பெயர் தொழிலாளர்களின் அளவுகளும் போக்குகளும் தொழிலாளர் புலப்பெயர்வினால் கிடைக்கும் நன்மைகள்
புலம்பெயர்தல் செலவுகள் சர்வதேச சாதனங்கள் புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான அரச தலையீடுகள்
பரிந்துரைகள்
முடிவுரை
15
16
16
2
25
29
34
42
46

Page 5

சுருக்க நோக்கு
எலிசபெத் நிசான்*
1. அறிமுகம்
வடக்கு கிழக்கு சண்டை இந்நாட்டில் படுமோசமான மனித உரிமை மீறல்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்குகின்றது எனவும் அவற்றிற்குக் காரணமும் கற்பிக்கின்றது எனவும் அவற்றின் தாக்கங்கள் இந்தப் பிரதேசங்களுக்குள் மட்டுமன்றி, நாடு முழுவதும் உணரப்படுகின்றது எனவும் இலங்கையில் மனித உரிமைகள் பற்றிய விமர்சகர்கள் அடிக்கடி குறிப்பிட்டுள்ளனர். வழமையான குற்றவியல் புலனாய்வுகள், விமர்சனம் செய்யும் பத்திரிகையாளர்களின் வாயை மூடுவதற்கான அவதூறு சட்டங்களின் துஷ்பிரயோகம் போன்று முரண்பாடுகளுடன் சம்பந்தப்படாத சூழ்நிலைகளிலும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெறுகின்றன. இந்த மீறல்களையிட்டு அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆனால் மனித உரிமைகள் பற்றிய சூழ்நிலை நாட்டில் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டுமாயின் சம்பந்தப்பட்டிருக்கும் குழுக்களினதும் தனியாட்களினதும் பல்வேறு வகைப்பட்ட பிரச்சினைகளுக்கு நீதியானதும் நிலையானதுமான தீர்வொன்று காணப்படுவது அவசியம். கடந்த பல ஆண்டுகளாக அத்தகைய தீர்வொன்று காணப்படுவதற்குப் பல தடைகள் காணப்பட்டன. இவற்றுள் ஒன்று திசை திருப்பப்பட்ட பாராளுமன்ற அரசியலின் இயல்பாகும். இணக்கத்துக்கான (reconciliation) கருத்தொருமைப்பாட்டினை விருத்தி செய்வதற்கு கட்சி அரசியல் தடையாக இருந்துள்ளது. இதன் விளைவாக அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன் முதன் முதலாகப் பிரேரித்த, தூரநோக்குக் கொண்டதான அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்ய முடியாத நிலையிலிருந்தது. ஒருபுறம் அரசாங்கத்திற்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் (எல்.ரீ.ரீ.ஈ) ஏதேனும் ஒரு கருத்துப் பரிமாற்றத்தில் பரஸ்பரம் ஆழமான நம்பிக்கையின்மை ஒரு முக்கியமான முட்டுக் கட்டையாக இருந்துவரும் அதேவேளை, ஏனையவற்றுடன் பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் (ஐ.தே.க.) அரசாங்கம் செயல்முறைச் சாத்தியமுள்ள ஒருமைப்பாடொன்றைக் காண முடியாதிருப்பது நிச்சயமாக மற்றுமொரு தடையாகும்.
முரண்பாடும், அனைத்துக் கட்சிகளாலும் இணக்கத்தையும் தீர்வையும் நோக்கி இட்டுச்செல்லக்கூடிய வழிகளைக் காணமுடியாதிருக்கும் நிலையும்
米 தனித்தியங்கும் மனித உரிமைகள் சட்டத்தரணி, இலங்கை தொடர்பாக நிபுணத்துவம்
பெற்றவர்.

Page 6
இலங்கையின் மனித உரிமைகளின் செயற்பாட்டைப் புரிந்துகொள்வதில் முக்கியமான காரணிகளாக விளங்குகின்றன. உதாரணமாக பாதுகாப்புப் படைகளின் கட்டுக்காவலிலிருக்கும் மக்கள் காணாமற்போவது பற்றிய அறிக்கைகள் மோதல்கள் நடைபெறும் வலயங்களிலிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை செய்யப்படுதல், பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்கள் சாதாரணமாக இடம்பெற்று வருகின்றன. (சித்திரவதை செய்யப்படுதல், குற்றவியல் புலனாய்வு நடவடிக்கையிலும் கவலைக்குரிய ஓர் அம்சமாக விளங்குகின்றது என்பதனையும் குறிப்பிட வேண்டும்). வேறு பல உரிமைகளை அனுபவிக்கும் வாய்ப்பும் மோதல்களினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. சுதந்திரமான gbLLDT.Lib, வாழிடம், கல்வி, சுகாதாரப் பராமரிப்பு என்பவற்றிற்கு மட்டுமல்லாமல் உணவு கூட சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை என்பன மோதல் இடம்பெறும் வலயங்களில் வாழும் பல சாதாரண மக்களுக்கு குறிப்பாக தங்கள் இல்லங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் அவசரகால நிலையிலான ஆட்சி அனைவரையும் பாதிக்கின்றது.
இக்கட்டுரைத் தொகுப்பு இவற்றையும் மனித உரிமைகளுடனான விடயங்களையும் ஆராய்கின்றது. ஒரு சில அத்தியாயங்கள் - அவசரகால நிலையிலான ஆட்சி, ஆளின் சுய கெளரவம், அடிப்படை மனித உரிமைகளின் சட்ட இயல்பு, கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம், தொழிலாளர்களின் புலம்பெயர்வு, உளஞரில் இடம்பெயர்ந்த ஆட்களின் உரிமைகள் - என்பன இலங்கை, மனித உரிமைகளின் நிலை என்ற கட்டுரைத் தொகுதியில் வழமைபோன்று உள்ளடக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் குறிப்பாக 2000ஆம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஏனையவை புதிய அல்லது நடப்பு விவகாரங்கள் தொடர்பானவையாகும். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பற்றியதும், நியாய வியாபார ஆணைக்குழு பற்றியதுமான அத்தியாயங்களில் சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம் செயற்பாடுகளைக் கண்காணித்து வருவதுடன் இவ்வமைப்புகள் இரண்டும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்குமான முக்கியமான அமைப்புகளாக உள்ளன. இந்த இரண்டு விடயங்களிலும் அவற்றிற்கு முக்கியமான ஆணை வழங்கப்பட்டடிருந்த போதிலும் இந்நிறுவனங்களின் அதிகாரங்கள் ஒரு குறுகிய வட்டத்திற்கு உட்பட்டதாகவும் அவற்றின் வளங்கள் மட்டுப்படுத்தப் பட்டவையாகவும் உள்ளன. "பயனுறுதியுள்ள போட்டி நிலையை ஊக் குவித்தல், பாவனையாளரைப் பாதுகாத்தல்" ஆகிய பணிகள் ஒப்படைக்கப் பெற்ற நியாய வியாபார ஆணைக்குழு அதன் ஆணையை நிறைவேற்றுவதற்கு போதியளவு ஆளணிகளையும் வசதிகளையும் கொண்டிருக்கவில்லை என்பது ஒர் உதாரணமாகும். அவற்றின் பணிகளை நிறைவேற்றுவதற்குப் போதியளவு தத்துவங்களும் வளங்களும் வழங்கப்படாத அத்தகைய நிறுவனங்கள் உருவாக்கப்படுவதைப் பற்றிய விடயம் ஏற்கனவே திறனாய்வாளர்களுக்குப் பரிச்சயமான ஒரு தலைப்பாக மாறிவருகின்றது. இவ்வத்தியாயங்களில்
2

செய்யப்படுவதுபோன்று இக்குறைப்பாடுகளைப் பற்றி ஆக்கபூர்வமான முறையில் தொடர்ந்து ஆராய்வதன் மூலம் மாற்றத்திற்கான ஓர் உந்துதல் 6JsbuL6). Tib.
2. வாக்குரிமை மீதான தாக்குதல்
மூன்று பெரும்பான்மைப் பாராளுமன்ற ஆசனங்களுடன் மக்கள் முன்னணியின் கீழ் (PA) கூட்டு அரசாங்கம் ஒன்ைைற உருவாக்கிய 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத பாராளுமன்றத் தேர்தல்களில் பாராளுமன்ற ஆட்சிமுறை மீண்டும் இக்கட்டான நிலைக்கு உட்பட்டது. மீண்டும் "வாக்குரிமை" என்னும் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டவாறு பெருமளவிலான வன்முறைகள், மிரட்டல்கள் என்பவற்றின் மத்தியிலேயே தேர்தல்கள் நடைபெற்றன. இவற்றுள் தேர்தல் தினத்தன்று மாத்திரம் நிகழ்ந்த ஏழு கொலைகளும் ஏனைய பல்வேறு விதமான மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுக்களும் அடங்கும். வாக்களிப்பின் ஊடாக கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை மீறப்பட்ட நிலையில் ஏனைய காலங்களைவிட தேர்தல் காலத்தில் பொது மக்கள் பெருமளவில் வன்செயலின் ஆபத்துக்கும் அச்சுறுத்துதலுக்கும் உட்படுத்தப்படுவது கவலைக்குரிய ஒரு விடயமாகும். தேர்தல் கூட்டங்களின் மீது எல்.ரீ.ரீ.ஈ. யினால் அல்லது காடையரினால் கட்டவிழ்க்கப்படும் குண்டுத் தாக்குதல் காரணமாகவும், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்குள்ளேயிருக்கும், குறிப்பாக ஆட்சியிலிருக்கும் மக்கள் முன்னணிக்குள்ளே இருக்கும் சக்திகளினால் புரியப்படும் காடைத்தனம் மற்றும் அச்சுறுத்துதல் காரணமாகவும், அடிப்படை சனநாயக இயக்கம் அச்சத்திற்குரியதாக மாறிவிட்டது. பாராளுமன்றத் தேர்தல்கள் அவசரகால ஆட்சியின்கீழ் நடாத்தப்பட்டன. இவ்விதிகளில் இராணுவ செய்திகளைத் தணிக்கை செய்யும் அவசரகாலத் தத்துவங்களும் அடங்கும். இதன் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயத்தைப் பற்றிய அடிப்படை உரிமைகள் தொடர்பாக வாக்காளர்கள் தகவல் பெறுவது மறுக்கப்படுகின்றது. அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள் உட்பட தேர்தல் பிரசாரத்தின்போது ஆளும் கட்சியால் அரச வளங்களின் துஷபிரயோகம் தடையின்றி தொடர்ந்து இடம் பெறுகின்றது. மேலும், புலம்பெயர்ந்த பல மக்கள் இந்நிலையில் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாகின்றனர். வாக்காளர்களாகத் தங்களைப் பதிவு செய்யவோ வாக்கெடுப்பு நிலையங்களைச் சென்றடையவோ இவர்களால் முடிவதில்லை. தற்போதைய தேர்தல் சட்டத்தை மீளாய்வு செய்வது உட்பட சுயேச்சையான, கட்சி சார்பற்ற தகுதிவாய்ந்த தேர்தல் அதிகார சபையின் அவசியம் பற்றி வினா எழுப்பப்பட்டுள்ளது.
"முன்னைய தேர்தல்களைப் போன்று, குறிப்பிட்ட மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளிலேயே வன்முறை தலைதூக்கியது" என்பதனை தேர்தல் கண்காணிப்பாளர்கள் அவதானித்துள்ளனர் என்ற விடயம் விசேட கவனத்திற்குரியதும் கீழே எடுத்தாளப்படும் பரந்தளவிலான சட்டத்தைப்

Page 7
பொருட்படுத்தாமை பற்றிய பிரச்சினைகளுடன் தொடர்புடையதுமாகும். இருப்பினும் கட்சி அதிகாரிகள் இம்முறைப்பாடுகளைப் பயனுறுதியுடன் புலனாய்வு செய்து இவற்றிற்குப் பொறுப்பானவர்களுக்கெதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முயல்வதில்லை. மக்கள் முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது அதன் கட்சிக்குள் இத்தகைய நடத்தையைத் தான் பொறுத்துக் கொண்டிருக்கப் போவதில்லை என மக்கள் முன்னணி கூறிய போதிலும் அரசியல் வன்முறைகள் தொடர்ந்தும் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்படுகின்றன. ஆயினும், 1994 ஆம் ஆண்டுத் தேர்தல்களின் பின்னர் தேர்தல் காலங்கள் தொடர்பில் மேலும் யதார்த்தமான தோற்றமொன்று வலுவாக உருவெடுத்துள்ளது. அதுதான் குடியியல் சமூக நிறுவனங்களின் பணியாகும். இவை பிரசாரம் நடத்தப்பட்டதைப் பற்றிய அனைத்து அம்சங்களையும் கண்காணித்து அவை கண்டறிந்த விடயங்கள் பற்றிய அறிக்கைகளை வெளியிடுகின்றன. அத்தகைய கண்காணிப்பில் ஈடுபடும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் அவற்றின் பணியினது நோக்கெல்லையும் விரிவடைந்துள்ளது. உதாரணமாக இத் தேர்தல் களின் போதே அரசாங்கத்தினதும் தனியாரினதும் அச்சக, இலத்திரனியல் ஊடகங்களின் நடத்தையை முறையாகக் கண்காணிக்கும் நடவடிக்கை முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் ஒரு சில நிறுவனங்கள் தேர்தல் காலப்பகுதியில் அதிகாரிகளின் நடத்தையின்மீது செல்வாக்கைப் பயன்படுத்துவதற்கு நேரடியான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. உதாரணமாக மாற்றுக் கொள்கைகளுக்கான நடுநிலையம் பொலிஸ் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் அரசியல் சார்புடையதாக மாறுதல், அவற்றின் அச்சுறுத்துதல் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் மனுவொன்றைத் தாக்கல் செய்தது. இதன் விளைவாக ஆணைக்குழு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் ஒன்றை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸ் பகுதியால் வழங்கப்படும் பணிப்புரைகள், சுற்றறிக்கைகள், அறிவுறுத்துதல்கள் அனைத்தையும் பகிரங்கப்படுத்துமாறு பொலிஸ் தலைமையதிபதியைப் பணிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு வேண்டுகோள் விடுத்தது.
மேலும், தேர்தல் பிரசார வன்முறைகளுக்கு பதிலிறுக்கும் வகையில், குடியியல் சமூகங்கள் அரசியல் வன்முறைகளுக்கெதிரான பிரசாரங்களை ஆரம்பித்தன. சனநாயகத்திற்காக கூட்டுச் சேர்ந்தன. தேர்தல் சீர்திருத்தத்துக்கான ஆலோசனைக் குழுவொன்றை உருவாக்கின. அரசியல் வன்முறைகளும் முரண்பாடுகளும் மோசமடையும்போது மக்களின் ஒரு சில பிரிவினராவது யதார்த்தபூர்வமான மாற்று அரசியல் செயன்முறைகளை முன்வைக்க முற்படுகின்றனர்.
அரசாங்கத்தில் சிறுபான்மைச் சமூகங்களையும், சிறிய அரசியற் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகளின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் அனுகூலம் இலங்கையின் விகிதாசார பிரதிநிதித்துவ (Proportional Representation - PR) முறையில் உள்ளது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில், எண்ணிக்கையைப் பொறுத்தளவில் பலவீனமாயிருக்கும் ஒர்

ஆளும் கட்சிக்குத் தமது ஆதரவைத் தெரிவிப்பதில் வலுவான பேரம்பேசும் நிலையை இவர்களால் கடைப்பிடிக்கக் கூடியதாக இருக்கின்றது. அரசியல் முறைமையில் சிறுபான்மையினரின் குரலை ஒலிக்கச் செய்யும் அவசியம் நிச்சயமான ஒரு நன்மையாக அமைகின்ற அதே வேளையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையானது அனைத்தையும் உள்ளடக்கிய பல்லின கலாசாரத்தை விருத்தி செய்வதற்கு உதவவில்லை. "வாக்குரிமை" என்ற அத்தியாயத்தில் சுட்டிக்காட்டப்பட்டது போன்று கூட்டு அரசியலை தேவைப்படுத்தும் பரந்த அரசியல் கூட்டமைப்பில் கூட சட்ட சபை வெகுவாகப் பிளவுபட்டேயிருக்கின்றது.
கடந்த ஆண்டு நாம் பின்வருமாறு எழுதியிருந்தோம்: "பயமின்றியும் தங்கள் மனச்சாட்சிக்கு இணங்கவும் தங்கள் வாக்குரிமையைப் பிரயோகிக்கும் சுதந்திரம் மக்களுக்குண்டு என்பதை உறுதிப்படுத்துவதற்கு சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும". அத்தகைய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது தெளிவு. ஒப்புநோக்கப்பட்டவாறு வாக்காளர்கள் பெருந்தொகையாகத் தங்கள் வாக்குகளை அளிக்கச் சென்ற போதிலும் சனநாயக முறைமைக்கு ஓர் அடிப்படை உரிமையாக விளங்கும் வாக்களிக்கும் உரிமை இலங்கையில் இந்த அளவுக்கு இலகுவில் முறியடிக்கப்படக்கூடிய நிலைமையிலிருப்பது வருத்தத்திற்குரியது.
3. யுத்தமும் சமாதானமும்
ஆண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைமுறையில் இருள் படர்ந்திருந்த போதிலும் 2000ஆம் ஆண்டு ஒரு நம்பிக்கையொளியுடன் உதயமானது. அரசாங்கத்திற்கும் எல்.ரீ.ரீ.ஈ. க்குமிடையில் கருத்துப் பரிமாற்றத்திற்கு வசதி செய்யக் கூடியதாக நோர்வே அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நோர்வே தூதுவர் ஒருவருக்குப் பொது மக்களின் அங்கீகாரம் கிடைத்தது. முன்னர் அரசாங்கம் ஏதேனும் அத்தகைய மூன்றாம் தரப்பினரின் பணியை எதிர்த்தபோதிலும் இது இரு தரப்பினர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய சமாதான நெறிமுறையொன்றை ஆரம்பிக்க உதவும் முக்கியமானதொரு முன்னேற்றமாகக் காணப்பட்டது.
எனினும் தூதுவரின் அமைதியான இராஜ தந்திரம் திரை மறைவில் தொடர்ந்து இடம்பெற்ற போதிலும் இவ்வாண்டில் வடக்கில் புதிதாக இராணுவம் பாரிய யுத்தத்துக்குத் தயாராகும் நிலை உருவெடுத்தது. இதனால் புதிது புதிதாக மக்கள் புலம்பெயர்ந்தனர். இதன் தாக்கம் நாடெங்கும் உணரப்பட்டதுடன் எல்.ரீ.ரீ.ஈ. இராணுவத்திடமிருந்து ஆனையிறவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர் யாழ்ப்பாணத்தையும் மீளக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தென்பட்டமையால் மே மாதத்தில் சனாதிபதி நாட்டைப் போருக்கான தயார்நிலையில் நிறுத்தியிருந்தார். அவசரகால ஒழுங்குவிதி என்ற அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டவாறு மே மாதம் பிரகடனப் படுத்தப்பட்ட புதிய அவசரகால ஒழுங்குவிதிகள் தாங்கள் ஏற்கனவே

Page 8
கொண்டிருந்த மிதமிஞ்சிய தத்துவங்களைவிடக் கூடுதலான தத்துவங்களை பொலிஸ், பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கின.
இந்நிலையில் இராணுவம் யாழ்ப்பாணத்தின் மீது தனது பிடியை இறுகப் பற்றிக் கொண்டிருந்தது. ஆண்டின் இறுதியளவில் (1994 இல் தாங்கள் வலியுறுத்தியவற்றைப் போன்ற) குறித்த சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படுமாயின் இணக்கப் பேச்சுவார்த்தைக்கு தான வர விரும்புவதை சுட்டிக்காட்டும் வகையில் எல்.ரீ.ரீ.ஈ. ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்தியது. இதற்கு அங்கீகாரம் தெரிவிக்கும் வகையில் அரசாங்கம் யுத்த நிறுத்தமொன்றைப் பிரகடனப்படுத்தவில்லை. எனினும் சண்டையின் உக்கிரம் குறைந்தமை அவதானிக்கப்பட்டது.
இந்த நம்பிக்கை ஒளியின் மத்தியிலும் கூட எவையேனும் நேரடியான இணக்கப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறு முன்னர் பல தடைகள் தாண்டப்பட வேண்டும் என்பதனைக் கருத்திற் கொள்ள வேண்டியிருந்தது. மேலும் அரசாங்கம் ஒக்டோபரில் அரசியலமைப்புச் சட்ட மூலமொன்றைப் பாராளுமன்றத்தின் முன்னிலையில் சமர்ப்பித்திருந்தபோது அதன் உத்தேச அரசியலமைப்பு நகல் சட்டம் தொடரபில் முன்னேற்றம் காணமுடியாத நிலையிருந்தமை தெட்டத் தெளிவானது.
கணிசமான அரசியலமைப்புச் சீர்திருத்தம் இல்லாமல் இம் முரண்பாட்டிற்கு எப்படி நிலையான தீர்வொன்றைக் காண முடியும் என நினைத்துப் பார்ப்பது கூட கடினம். இவ்வாறு செய்வதாயின் அர்த்தமுள்ள சமாதான நெறிமுறையொன்றிக்கு அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் அவசியப்படும். இத்தகையதொரு நெறிமுறை அவசியமாகத் தேவை என்பது தெளிவு. அதுவுமன்றி, வடக்கிலும் கிழக்கிலும் பரந்தளவில் தலைவிரித்தாடும் உரிமை மீறல்கள் சிலவற்றிற்கு பயனுறுதியுள்ள நிவாரணம் காண முடியாது. உதாரணத்திற்கு உள்ளுரில் இடம்பெயர்ந்த ஆட்களின் விடயத்தை எடுத்துக் கொள்வோம். ஜெனிவா சமவாயங்களின் பொது உறுப்புரை 3 இல் அடங்கியுள்ள மனிதாபிமான நடத்தையின் அடிப்படைக்கான குறைந்தபட்ச நியமங்களை முழுமையாக அனுசரிப்பதன் மூலம் குடி மக்கள் எதர்கொண்டுள்ள சிரமங்கள் யுத்தம் புரியும் இரு தரப்பினர்களாலும் தணிக்கப்பட்டாலும் கூட - இவர்கள் தற்பொழுது இதனைச் செய்வதாகத் தெரியவில்லை - பெருந்தொகையான புலம்பெயர்தலுக்கும், அதன் விளைவாக ஏற்படும் உரிமை மீறல்களுக்கும் காரணமாக அமையும் நிலைமைகள் எப்போதும் தொடர்ந்திருக்கவே செய்யும். அவ்வாறு நடைபெறும் பொழுது பொது மக்கள் யுத்தம் நடைபெறும் இடங்களிலிருந்து தப்பியோடியே செல்வர். அத்துடன் இவர்கள் ஏனைய கஷ்டங்களுடன் உறைவிடம், தொழில் வாய்ப்புக்கள், மருத்துவ வசதிகள், கல்விச்சேவைகள் எதுவுமேயின்றி உயிர்வாழ வேண்டியிருக்கும். உள்நாட்டுப் புலம்பெயர்வு பற்றிய வழிகாட்டும் தத்துவங்களின் முக்கியத்துவமும் இலங்கைக்கு அவற்றின் ஏற்புடைமையும் என்னும் விடயம் “உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர்” என்ற அத்தியாயத்தில் ஆராயப்படுகின்றது.
2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் தோன்றி மறைந்தவேளை, பலருக்கு புலம் பெயரதல் ஒரு நீண்டகாலத் தலைவிதி என்பது எமக்கு
6

நினைவூட்டப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபரில், சுமார் 100,000 முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்திலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலுமிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டனர். இவர்களால் இன்னமும் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிவர முடியவில்லை. “உள்நாட்டில் புலம்பெயர்ந்த ஆட்கள்” என்ற அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டவாறு இவர்களது துயரங்கள் மேலும் சிக்கலடைந்துள்ளன:
இவர்கள் இடம்பெயர்ந்து சென்று பத்து ஆண்டுகளுக்கு மேலாகின்றன. ஆதலால் இவர்கள் தங்கள் ஆதனங்களுக்குத் திரும்பி வரக்கூடிய வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனெனில் தற்போதுள்ள ஆதனச்சட்டத்தின் கழி ஆதனத்தின் சட்டவிரோதமான இருப்பாட்சியாளர்கள் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னர் அதற்கான ஆட்சி உரிமையைப் பெற முடியும். உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்களான இவர்கள் தங்கள் ஆதனங்களை அத்துமீறியவர்களுக்கு இழந்துவிடும் நிலையிலுள்ளனர்.
4... சட்டத்தைப் பொருட்படுத்தாமை
சட்டத்தைப் பொருட்படுத்தாமை இலங்கையில் முக்கியமானதொரு பிரச்சினையாக இருப்பதுடன், தொடர்ந்தும் பாரிய அளவிலான மனித உரிமை மீறல்களுக்குப் பங்களிப்புச் செய்யும் ஒரு காரணியாகவும் அது விளங்குகின்றது. இலங்கை குடியியல் உரிமைகள் இயக்கம (Civil Rights Movement) எடுத்துக்காட்டியவாறு 2000 ஆம் ஆண்டு ஒக்டோபரில் பிந்துணுவெவ புனர்வாழ்வு நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 28 பேர் கொடுரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், 1983 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் 52 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டமையை பளிச்சென நினைவுக்குக் கொண்டு வருகின்றது. வெலிக்கடை கொலைகளுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவில்லை. இது அரசாங்கம் அதன் மெளனத்தின் மூலம் தமிழ் கைதிகளை பாதுகாக்கத் தவறியுள்ளது மட்டுமல்லாமல் அத்தகைய கொலைகளை பொருட்படுத்தாதும் விட்டுள்ளது. அத்துடன் “நபரின் சுயகெளரவம்” என்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டவாறு சரணடையும் சிறுவர் போராளிகளின் தலைவிதியைப் பற்றிய முக்கியமான கேள்வியும்
1871 ஆம் ஆண்டின் 22 ஆம் மற்றும் 1889 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கால விதிப்பனவு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 3. “தடுத்து வைக்கப்பட்டவர்களினதும் சரணடைந்தவர்களினதும் கொலை: பிந்துனுவெவ புனர்வாழ்வு நிலையத்தில் படுகொலை’ குடியியல் உரிமைகள் இயக்கத்தின் கூற்று 01/11/2000, 2 நவம்பர் 2000.
7

Page 9
எழுகின்றது. இளைஞர் விவகார அமைச்சின்கீழ் வரும் இந்தப் புனர்வாழ்வு நிலையத்திலுள்ளவர்களுள் சரணடைந்தவர்களும் ஏனையோரும் அடங்குவர். “சிறுவர் போராளிகளின் எதிர்காலமும் அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ. யை விட்டு விலகி வந்ததன் பின்னர் இயல்பு வாழ்க்கை வாழும் வாய்ப்புகளும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டியுள்ளது. ஆயுதம் தாங்கிய படையினரிடம் சரணடையும் சிறுவர்கள் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் எல்.ரீ.ரீ.ஈ. யினால் தண்டிக்கப்படுவர் என்ற அச்சத்துடனேயே வாழ்கின்றனர். மேலும் பிந்துணுவெவ சம்பவம் மிகத்தெளிவாகக் காட்டுவது போன்று, அரச அதிகாரிகளிடமும் தங்களது சரணடைவு தங்களின் சொந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை என்பதையே காட்டுகின்றது.”
இக் கட்டுரைத் தொகுதியில் எழுப்பப்படும் சட்டத்தைப் பொருட்படுத்தாமை தொடர்பிலான ஏனைய பிரச்சினைகளில், தேர்தல் வன்செயல்களுக்கும் மிரட்டல்களுக்கும் பொறுப்பாயுள்ள தங்கள் கட்சி ஆதரவாளர்களுக்கெதிராக கட்சி அதிகாரிகள் தர்க்கமான நடவடிக்கையெடுக்கத் தவறும் அதேவேளையில் அத்தகைய வன்செயல்களும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதும் அடங்கும். இந்நாட்டில் சித்திரவதை நடைபெற்றுக் கொண்டிருந்த போதிலும் 2000 ஆம் ஆண்டில் சித்திரவதை செய்தவர்களுக்கு எதிராக ஏழு குற்றப் பத்திரங்கள் மாத்திரமே தாக்கல் செய்யப்பட்ட போதிலும் அவற்றில் ஒன்றிலாவது எதிரிகள் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படவில்லை. இது சம்பந்தமாக உயர்நீதிமன்றம் பல தடவைகளில் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளது. 2000 ஆம் ஆண்டில் இலங்கையில் சித்திரவதை (torture) சம்பந்தமான நிலை பற்றி ஆராய்ந்த ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விசேட அறிக்கையாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: சித்திரவதை பற்றிய தமது அறிக்கையில் “விடுபாட்டுரிமை பற்றிய பிரச்சினையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அதிகப்படியனோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் , குற்றவாளிகளாகக் காணப்படுவதும் அவசியம் என்பது தெளிவு. எவ்வாறாயினும், நட்டஈடு வழங்கப்படும் அவசியம் ஏற்படக்கூடிய வகையிலான காயங்களுக்கு பொறுப்பானவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுதல் வேண்டும்.”*
ஆட்கள் காணாமற் போதல் பற்றிய மூன்று வலய அடிப்படையிலானதும் அதனையடுத்து அனைத்திலங்கை ரீதியிலானதுமான விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளையிட்டு அரசாங்கத்தின் போக்கும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது. “ஆளின் சுயகெளரவம்’ என்ற அத்தியாயத்தில் ஆணைக்குழுவின் அறிக்கைகளின் விளைவாக
3 சித்திரவதை மற்றும் தடுப்புக்காவல் பிரச்சினைகள் உட்பட குடியியல், அரசியல் உரிமைகள்: விசேட அறிக்கையாளர் சேர் நிஜல் ரொட்லியின் அறிக்கை, மனித உரிமைகள் தீர்மானம் 2000/43, ஈ/சீஎன்/2001/66 என்பதனைப் பின்பற்றி சமர்ப்பித்த அறிக்கை, 25 சனவரி 2001.
8

பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக 557 குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட குற்றப் புகார்கள் பெரும்பாலும் கனிஷ்ட அலுவலர்களுக்கு எதிரானவையே எனவும் சிரேஷ்ட அலுவலர்கள் புலனாய்வுக்குப் பொறுப்பான சகாக்களால் பாதுகாக்கப்படுவதாகவும் ஆட்கள் காணாமற்போதல் என்ற அத்தியாயத்தில் எடுத்துக் காட்டப்படுகின்றது. மேலும் புலனாய்வு மிகவும் மெதுவாகவே நடைபெறுகின்றது. ஏற்கனவே செய்யப்பட்ட புலனாய்வுப் பணிகள் மறுமுறையும் செய்யப்படுகின்றன. ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாபனக்கோவையின் தேவைப்பாடுகளுக்கு இணங்கியொழுகுவதில்லை. குற்றத் தீர்ப்பு எதுவும் நிறைவேற்றப்படுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆட்கள் காணாமற்போதல் என்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டதுபோன்று:
“கடுமையான உள்நாட்டு, சர்வதேச அழுத்தங்களுக்குத் திசை திருப்பப்பட்ட ஒரு சில விடயங்கள் தொடர்பாக மட்டுமே நீதி வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பாடுகளுக்கு இணங்கி ஒழுகுவதில்லை. ‘இவர்களுள் எவராவது குற்றவாளிகளாக காணப்படுவாரகளா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். காணாமல் போனவரகள் பற்றி சர்வதேச ரதியிலும், உள்நாட்டிலும் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளான ஒரு சில வழக்குகளிலேயே நியாயம் பெற்றுக் கொடுக்கக் கூடியவகையில் போதியளவு நடவடிக்கை எடுக்க அரசியல் மனோவலிமை நிலவியதுபோல தென்படுகின்றது. இவற்றைப் பொறுத்தளவில் கூட ஒரு சில விவகாரங்களுக்கு எதிராக மட்டுமே வெற்றிகரமாக வழக்கு கொண்டு நடாத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்டுக் கூறக் கூடிய ஓர உதாரணம் 1989 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எம்பிலிப்பிட்டியவில் காணாமற்போன பாடசாலை மாணவர்கள் பற்றியதாகும். அவ்வழக்கிலேயே குற்றம் காணப்பட்டவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டனர்.
இந்த அத்தியாயத்தில் எழுத்தாசிரியர் குறிப்பிடுவதுபோன்று இவ்வகையில் குற்றங்கள் புரிபவர்களுக்கு எதிராக அவர்களது தரத்தையோ அந்தஸ்தையோ பொருட்படுத்தாது துரிதமாகவும் செயல்வலுவுள்ள வகையிலும் நடவடிக்கை எடுப்பதைவிட வேறு மாற்று வழியில்லை. “ஆட்கள் காணாமல் போதல் தொடர்பான வழக்குகளைத் துரிதமாக முடிவுறுத்துவதற்கு சட்டத்திலும் நிர்வாக நடவடிக்கை முறையிலும் சட்டத்துறை அமைப்பிலும் மாற்றம் அவசியம்.” அவ்வாறு செய்யத் தவறின் அவ்வாணைக்குழுக்களின் சட்டச் சீர்திருத்தத்துக்கான ஓர் உந்துதலாக அமையாது அறிக்கைகள் வரலாற்று ஆசிரியர்களுக்கு ஆர்வம் ஊட்டும் ஒர் ஆவணமாக மாத்திரம் இருக்கப்போகும் வாய்ப்பு உள்ளது என கட்டுரை ஆசிரியர் அஞ்சுகின்றார்.

Page 10
5. ஊடகமும் தணிக்கையும்
2000 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கும் தனியார் ஊடகத்திற்குமிடையில் கசப்புணர்வு அதிகரித்துக் காணப்பட்டது. கருத்துச் சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகளைக் கண்காணித்த சர்வதேச நிறுவனங்கள் தொடர்பாக அரசாங்கம் கையாண்ட முரண்பாடான அணுகுமுறைகள் பாராளுமன்ற செயன்முறையில் தெளிவாக எதிரொலித்தது. இரண்டு பத்திரிகை நிறுவனங்கள் மூடப்படுவதற்குக் காரணமாயமைந்ததும் மே மாதத்தில் விதிக்கப்பட்டதுமான கடுமையான தணிக்கையுடன் ஊடகம் தொடர்பான அணுகுமுறையில் அரசாங்கம் மிகுந்த கட்டுப்பாடுகளைக் கையாண்டது. பிரதான தலைப்புச் செய்திகளுக்கு ஆளான ஊடகச் சமுதாயம் முக்கியமான பல வழக்குகளில் தணிக்கை நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் ஆட்சேபித்தன. அவசரகால ஆட்சி, கருத்துச் சுதந்திரம், அடிப்படை உரிமை பற்றிய சட்டவியல் ஆகிய அத்தியாயங்களில் இப்பிரச்சினைகள் ஆராயப்படுகின்றன. 2000 ஆம் ஆண்டில் யூலை மாதத்தில் வழங்கப்பட்ட 14 ஆவது அவசரகால ஒழுங்குவிதியை மீளாய்வுசெய்த மனித உரிமைகள் ஆணக்குழு (H.R.C) சனாதிபதியின் செயலகத்திற்கு அனுப்பி வைத்த விஞ்ஞாபனத்தைப் பற்றி இவ்வத்தியாயங்கள் குறிப்பிடுகின்றன. மனித உரிமைகள் ஆணைக்குழு விமர்சகர் ஊடகச் சுதந்திரம் தொடர்பாக சர்வதேச நியமங்களைக் கணிசமான அளவு பயன்படுத்துவதுடன் ஊடகமானது பொது மக்களுக்குக் பதில் சொல்லும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அத்தகைய தலையீடு வரவேற்கத் தகுந்த ஒரு புதிய திருப்பமாகும். கடந்த ஆண்டின் இலங்கை: மனித உரிமைகளின் நிலைமை பற்றிய அறிக்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிகள் பற்றிய பரிந்துரை ஒன்றிற் கூறப்பட்டவாறு மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பாக காலத்துக்கு ஏற்ப சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள விடயம் தொடர்பாகவும் பகிரங்க அறிக்கைகளை முன்வைத்தல் வேண்டும்."
6. அடிப்படை உரிமைகள்
அடிப்படை உரிமைகள் தொடர்பான நியாயாதிக்கம் பற்றி இவ்வத்தியாயம் ஆராய்வது போல, அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்டவியல் துறையில் உயர் நீதிமன்றம் “மிகவும் தனித்துவமான மாறுதல்களையும், புதிய வழிமுறைகளையும் காட்டக்கூடிய’ சில தீர்ப்புக்களை வழங்கியது. நீடித்து நிலைக்கும் அபிவிருத்திக்கான உரிமையையும், இயற்கை வளங்களைத்
4. இலங்கை: மனித உரிமைகளின் நிலைமை 2000 (சட்டத்துக்கும்
சமூகத்திற்குமான அறநிலையம், கொழும்பு, 2000), பக். 315.
10

தேடிப் பெறுவதில் சமுதாயங்களுக்கிடையிலான ஒப்புரவுத் தத்துவத்தை மதிக்கவேண்டிய அரசின் கடப்பாடு என்பவற்றை அங்கீகரிக்கும் தீர்ப்பொன்றும் இதிலடங்கும். மற்றுமொரு தீர்ப்பு “விசேட சட்டங்களின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசியலமைப்பு ரீதியிலான பாதுகாப்பின் நோக்கெல்லையை விரிவுபடுத்தியது.” இத்தீர்ப்புகள் பெருமளவில் சர்வதேச மரபுகளிலேயே தங்கியிருந்ததுடன் சர்வதேச நியமங்களை உள்நாட்டு சட்டத்திலும் சேர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தின.
7. சர்வதேச மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையின்
கடப்பாடுகள்
2000 ஆம் ஆண்டில் இலங்கை பல சர்வதேச சமவாயங்களை ஏற்றங்கீகரித்தது. இவற்றுள் பெரும்பாலானவை சர்வதேசப் பயங்கரவாதம், மற்றும் பணயக் கைதிகளைக் கடத்துதல் ஆகியவற்றுடன் தொடர்பானவை." சிறுவர்கள் ஆயுதந்தாங்கிய போராட்டத்தில் ஈடுபடுவது பற்றிய சிறுவரின் உரிமைகள் மீதான சமவாயத்திற்கான விருப்புரிமைப் பின்னேட்டையும் இலங்கை ஏற்றங்கீகரித்தது. மேலும் 1973ஆம் ஆண்டின் தொழிலுக்குச் சேர்த்துக் கொள்வதற்கான ஆகக் குறைந்த வயது பற்றிய 138 ஆம் இலக்க சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ILO) சமவாயத்தையும் இலங்கை ஏற்றங்கீகரித்தது. இந்த சர்வதேச சமவாயங்களின் அங்கீகாரத்தை நாம் வரவேற்கின்றோம். அதேவேளையில் இந்த சர்வதேச கடப்பாடுகள் பயனளிப்பதற்கு தேசிய மட்டத்தில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் எனவும் நம்புகின்றோம்.
சித்திரைவதை பற்றிய ஐ. நா. விசேட அறிக்கையாளர், சுருக்கமுறை மற்றும் தன் விருப்பப்படியான சட்ட விசாரணையின்றி மரண தண்டனை விதிக்கப்படுபவர்கள் சம்பந்தமான நிறைவேற்றுகை மீதான ஐ. நா. விசேட அறிக்கையாளர், ஆட்கள் காணாமற்போதல் சம்பந்தமான செயற்குழு போன்ற ' குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகள் மூலம் கோரப்படும் மீறல் தொடர்பான தகவல்களை அளிப்பதில் இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்து வருகின்றது. ஆயினும் சித்திரவதைக்கு எதிரான சமவாயம் (CAT), குடியியல், அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச கட்டுறுத்து (ICCPR), பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் மீதான சர்வதேச கட்டுறுத்து (ICESCR),
5 புலங்குலம மற்றும் ஏனையோரும எதிர் கைத்தொழில் அபிவிருத்திச் செயலாளரும்
ஏனையோரும உயர் நீதிமன்ற விண்ணப்பம் இல. 884/99, (அ. உ.). வீரவன்ச எதிர் சட்டத்துறை தலைமையதிபதி உயர் நீதிமன்ற விண்ணப்பம் இல, 730/96. இச்சமவாயங்களின் முழுப் பட்டியலை அட்டவணை 1 இல் காண்க.

Page 11
பெண்களுக்கெதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான சமவாயம் (CEDAW) மற்றும் இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான சமவாயம் (CERD) உட்பட எந்த மனித உரிமை உடன்படிக்கைளுக்கும் இலங்கை ஓர் அரச தரப்பாக இருக்கின்றதோ அந்தப் பல வேறு மனித உரிமை சார்ந்த உடன்படிக்கைகளுக்கு அது எந்த அளவுக்கு இணங்கியொழுகுகின்றது என்பதைப் பிரதிபலிக்கும் அறிக்கைகளை காலத்துக்குக் காலம் சமர்ப்பிக்குமாறு அதன் உடன்படிக்கைக் கடப்பாடுகள் கோரி நிற்கின்றன. பின்வரும் அட்டவணையில் காட்டப்பட்டதுபோல் இந்த உடன்படிக்கை ஒவ்வொன்றின் கீழும் அறிக்கைகள் சமர்ப்பிப்பதில் இலங்கை காலத்தால் பின்னிலையிலிருக்கின்றது.
உரிய திகதி அறிக்கை
i.6.5. (CAT) I.2.1999 2 ஆவது பருவகால அறிக்கை கு.அ.உ.ச.க. (ICPR) 10.9.1996 4 ஆவது பருவகால அறிக்கை பொ.ச.க.உ.ச.க. (ICESCR) 30.6.2000 3 ஆவது பருவகால அறிக்கை Gu.6T.LUFT.g... (CEDAW) 4. I. 1998 5 ஆவது பருவகால அறிக்கை 3.U.T.9.F. (CERD) 23.3.2001 10 ஆவது பருவகால அறிக்கை
சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கைகளை சமர்ப்பிப்பதன் மூலம் இத் தவறுகைகள் சீராக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அறிக்கையிடும் நெறிமுறை சர்வதேச மரபுகள் தொடர்பில் சட்டத்தையும் நடைமுறையையும் நன்றாக மீளாய்வு செய்வதற்கும், சீர்திருத்தத்துக்கான முன்னுரிமைத் துறைகளை இனங்காண்பதற்கும் வாய்ப்பொன்றை அளிக்கின்றது. இக்கட்டுரைத் தொகுதியிலுள்ள அத்தியாயங்களில் எடுத்துக் காட்டப்படுவது போன்று, சர்வதேசரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளை இலங்கையில் முற்று முழுதாக சீர்திருத்தவேண்டிய வலுவான அவசியம் தொடர்ந்திருக்கின்றது. சீர்திருத்தத்துக்கான உண்மையான விருப்பத்துடன் பொறுப்பேற்கப்படின் அறிக்கையிடும் நெறிமுறை இப்பணி தொடர்பில் பங்களிப்புச் செய்வதற்குப் பயன்படுத்தப்படலாம்.
அறிக்கையிடுவதிலும் முன்னைய அறிக்கைகளின் நுண்ணாய்வு தேவைப்படுத்திய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதிலும் தனக்குள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் அசிரத்தையாக இருக்கும் அதே வேளையில் உயர் நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட இலங்கையிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்களது பொருள் கோடல்களை வரைவதிலும் இலங்கைச் சட்டங்களுக்கான பரிந்துரைகளிலும் மேலும் அதிகமாக சர்வதேச சட்ட மரபுகளிலேயே
12

தங்கியுள்ளன. ‘அடிப்படை உரிமைகளின் சட்டவியல்” என்னும் அத்தியாயத்தில் விளக்கப்பட்டவாறு
“அதிகரித்துவரும் வகையில் உயர் நீதிமன்றம் குறிப்பாக அடிப்படை உரிமைகள் பற்றிய தீர்ப்புகளில் பொருள்கோடலுக்கு உதவியாக சர்வதேச மனித உரிமைகளின் நியமங்களையே குறிப்பீடு செய்துள்ளது. ஆனால் சர்வதேச அடிப்படை உரிமைகளின் அரசியலமைப்பு ரீதியிலான பாதுகாப்பின் அளவுருவை விரிவுபடுத்துவதற்கு சர்வதேச நியமங்களைப் பயன்படுத்துவதற்கு வசதியாக பாராளுமன்றத்தால் அல்லது மீயுயர் நீதிமன்றங்களின் வெளிப்படையான அங்கீகாரத்தின் மூலம் சர்வதேசச் சட்டம் விரிவாக்கப்படலாம் என்ற நேரடியான விளம்பல் முக்கியமானவொரு திருப்பு முனையாகும்.”
இது சீர்திருத்தவாதிகளுக்கு மும்முரமான ஒரு வாய்ப்பை அளிப்பதாகவும் அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக அமைவதாகவும் பொருள் கொள்ளப்படலாம். ஏனெனில் அரசாங்கம் சர்வதேச மனித உரிமைகள் பற்றிய கடப்பாடுகளை நிறைவேற்றுவதனை உறுதிப்படுத்துவதற்கு சீர்திருத்தத்தின் கடிவாளத்தை தானே கையேற்காவிடில் மீயுயர் நீதிமன்றங்கள் படிப்படியாக தாமே இப்பணியை மேற்கொள்ளலாம்.
13

Page 12

புலம்பெயர் தொழிலாளர்கள்
எஸ். நிஷாதினி குணரட்ன*
1. அறிமுகம்
1970 ஆம் ஆண்டுகளின் பிற் பகுதிவரை இலங்கையிலுள்ள தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்வது மிகவும் சிறிய அளவில் இடம்பெற்று வந்தது. 1970ஆம் ஆண்டுகளின் பிற்காலப்பகுதிகளில் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்பட்ட எரிபொருட் பணவருவாய்ப் பெருக்கமும் (Petro-dollar boom) அப்பிரதேசங்களில் இடம்பெற்ற துரித அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களும் ஒருங்கிணைந்து முன்னரெப்போதும் இல்லாத அளவுக்கு வெவ்வேறு பகுதிகளுக்கான மனித வலுத் தேவையை உருவாக்க முற்பட்டன. காலப்போக்கில் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பெருமளவு தொழிலாளர்கள் வெளியேற வழிபிறந்தது. தற்போது இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோர் தொடர்பான ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில், அவ்வாறு வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்பவர்களில் ஏறக்குறைய 94 சத வீதமானோர் மத்திய கிழக்கு நாடுகளிலேயே வேலைவாய்ப்பை நாடுகின்றனர் என்பதாகும்.
1970ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி தொடக்கம். இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்குவந்த அரசாங்கங்கள் உள்நாட்டு தொழிலாளர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கும் நோக்கத்துக்காகவும் வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குகளை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துக்காகவும் தொழிலாளர் வெளிநாடுகளுக்கு வேலைபார்க்கச் செல்வதனை ஊக்கப்படுத்தின. இவ்வாறு தொழிலாளர்கள் வெளிநாடு சென்றமை நாட்டுக்குக் அதிகளவிலான நன்மைகளையும் அதேவேளை பிரச்சினைகளையும் கொண்டுவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர், சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம். இந்த அத்தியாயத்தைத் தயாரிப்பதில் எழுத்தாளரினால் மீளாய்வு செய்யப்பட்ட ஆவணங்களுட் சிலவற்றை பெற்றுத் தந்தமைக்காக, LSD ஆராய்ச்சி உதவியாளர் திரு எம்.ஐ.எம். அஸ்வர் அவர்களுக்கு எழுத்தாளர் தனது நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறார்.
புலப்பெயர்வு மீதான புள்ளிவிபரக் கைந்நூல் 1999, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (1999) பக். 5. மற்றும் 2000 ஆம் ஆண்டுக்கான தற்காலிக தரவுகள்.
15

Page 13
இலங்கை மனித உரிமைகள் நிலைமை 1998 என்ற நூலில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்கள் பற்றிய ஓர் அத்தியாயம் இருந்தது. இலங்கை: மனித உரிமைகள் நிலைமை 2000 என்ற நூலில் பெண்களின் உரிமைகளும் தொழிலாளர்களின் உரிமைகளும் என்ற தலைப்பின்கீழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான சில அம்சங் கள் ஆராயப்பட்டுள்ளன. இந்த அத்தியாயம் தொழிலாளரின் புலப்பெயர்வு அளவையும், மாதிரிகளையும், அதன் நன்மைகளையும் செலவுகளையும், புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளையும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமான வழிவகைகளையும் குறிப்பிட முயலுகின்றது.
2. கொள்கைப் பரமாணமாக தொழிலாளர் ஏற்றுமதி
1970ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற எண்ணெய் விலைகளின் அதிகரிப்பு இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சென்மதி நிலுவைப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கியது. இறக்குமதிகளைக் குறைத்து நாணய மதிப்பிறக்கத்தை நடைமுறைப்படுத்தியபோதும் இப்புதிய நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. கொள்கை வகுப்பவர்கள் எண்ணெய்ப் பணப்பெருக்கச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டுச் செலாவணியைச் சம்பாதித்துக் கொள்வதற்காக மனித வலுவை ஏற்றுமதி செய்ய முற்பட்டனர். அக்காலந்தொட்டு வெளிநாட்டுக்கு வேலையாளர்கள் செல்வது, பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, மூன்று காரணங்களுக்காகக் கட்டாயமானதாக இருந்தது: முதலாவது, அரசாங்கத்துக்கான ஆரம்ப முதலீட்டுச் செலவு மிகவும் குறைவானதாகும். இரண்டாவது அதன் மூலம் கணிசமானளவு வெளிநாட்டுச் செலாவணிச் சம்பாத்தியங்கள் கிடைத்தன. மூன்றாவது, தொழிலாளரின் புலப்பெயர்வு உள்நாட்டில வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைத்தது.
3. புலம்பெயர் தொழிலாளர்களின் அளவுகளும் போக்குகளும்
3.1 புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய தரவுகள்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (Sri Lanka Bureau of
Foreign Employment - SLBFE) 198596ă ogl g|T Lîlă 4 L LIL L காலந்தொடக்கம் பதிவு செய்யப்பட்ட அல்லது அதிகாரமளிக்கப்பட்ட முகவர்
6

நிலையங்களுக்கூடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய தரவுகளைப் பேணி வந்துள்ளது.*
புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்வோர் தம்மைப் பதிவு செய்யவேண்டும் என்ற தேவைப்பாடு 1995ஆம் ஆண்டு முதல் கண்டிப்பாக வலியுறுத்தப்பட்டது. இதற்கு முற்பட்ட ஆண்டுகளைக் காட்டிலும் 1995ஆம் ஆண்டு தொடக்கம் புலம்பெயர்ந்தோர் பற்றிய தரவுகள் மிகவும் நம்பத் தகுந்தன எனக் கொள்ளலாம். பதிவு செய்யவேண்டும் என்பதை மிகவும் கணி டிப்பாக வலியுறுத்தியதன் விளைவாக போலி முகவர் நிலையங்களுக்கூடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச்செல்லும் தொழிலாளர்களின் சத வீதமானது 50 சத வீதத்துக்கும் மேற்பட்டதாக இருந்து அண்மைக் காலங்களில் ஏறக்குறைய 30 சத வீதமாகக் குறைந்துள்ளது. (1995 ஆம் ஆண்டிற்கு முன்னுள்ள காலப் பகுதியின்போது)
3.2 தொழிலாளர்களின் புலப்பெயர்வு அளவுகள்
1972ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கை மனித வலுவின் (manpower) புலப்பெயர்வு பற்றிய தரவுகள் அட்டவணை 1 இல் தரப்பட்டுள்ளன. அட்டவணையில் தரப்பட்ட தரவுகள் 1995ஆம் ஆண்டுவரை தொழிலாளரின் புலப்பெயர்வு அதிகரித்துக் கொண்டுசெல்லும் போக்கினையே காட்டுகின்றன. 1995ஆம் ஆண்டு தொடக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் புலம்பெயர் வேலையாட்களின் பதிவை மிகவும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்த காரணத்தினால் இவ்வாண்டில் வெளிநாட்டுக்குச் செல்லும் தொழிலாளர்கள் தொகை அதிகத்தது. 1970 ஆம் ஆண்டுகளில் 2% க்கும் குறைவாக இருந்த பெண் வேலையாட்களின் புலப்பெயாவு விகிதாசாரம் 1997ஆம் ஆண்டளவில் 75% ஆக அதிகரித்தது. எவ்வாறாயினும், 1998-2000 காலப்பகுதியில் பெண் வேலையாட்களின் புலப்பெயர்வு அளவு 1998-1997ஆம் ஆண்டுக் காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் ஓரளவு குறைவானதாகும்.
வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தம்மை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் பதிவு செய்துகொள்ள வேண்டுமெனக் கோரப்படுகின்றன. பதிவு செய்யப் பட்ட முகவர் நிலையங்கள் அதிகாரமளிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் எனக் குறியீடு செய்யப்படும். புலப்பெயர்வு பற்றிய புள்ளிவிபரக் கைந்நூல் - 1999, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (1999) பக். 1.
இதுவுமதுவே, பக். 43.
17

Page 14
அட்டவணை 1
பால் ரீதியாக புலம் பெயர் தொழிலாளர்கள் : புலம் பெயர் வோரின் குறிப்பிட்ட காலப்பகுக்கான சராசரி எண்ணிக்கையும், குறித்த ஆண்டுகளின் எண்ணிக்கையும்.
காலப்பகுதி ತಿಕ್ರಿಪi % பெண் % மொத்தம் ஆண்டு
1972-74* 560 98.6 8 1.4 568 1975 - - 1039 1976-87* 110,81 58.6 78.19 41.4 18900 1988 8309 450 1 0 1 19 55.0 8428 1989 8680 35.0 16044 650 24724 1990 15377 36.0 27248 64.0 42625 1991 21423 33.0 43560 67.0 64983 1992 15493 35.0 291.59 65.0 44652 1993 7153 35.0 31 600 650 48753 1994 16377 27.0 4379 730 60 l 68 1995 46021 27.0 26468 730 72489 1996 43 2 26.5 19464 73.5 62576 1997 37552 25.0 11273 75.0 150283 1998 53867 33.7 105949 66.3 159816 1999 63504 35.5 560 64.5 1794 2000** 5 1850 3.1 14639 68.9 66489
மூலம்: இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் (SLBFE) 1999 இல் பிரசுரிக்கப்பட்ட புலப்பெயர்வு பற்றிய புள்ளிவிவரக் கைந்நூல் பக். 2-3.
: ஒர் ஆண்டுக்கான சராசரி அக்காலப்பகுதிக்கான மொத்தத்தை சம்பந்தப்பட்ட
ஆண்டுகளின் எண்ணிக்கையால் வகுப்பதன் மூலம் பெறப்படும். ** இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வழங்கப்பட்ட
தற்காலிகத் தரவுகள்.
18

தொழிலாளர்களின் புலப்பெயர்வு அரசாங்கக் கொள்கைகளினாலும் உபாயங்களினாலும் பாதிக்கப்பட்ட போதிலும் தொழிலாளரை வேண்டிநிற்கும் நாடுகளில் அவர்களுக்கு நிலவும் கிராக்கியும் புலம் பெயர்ந்து வேலைசெய்வோரை வழங்குகின்ற ஏனைய நாடுகளில் ஏற்படும் கொள்கை மாற்றங்களும் இதில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சில தெற்காசிய நாடுகள் தமது வீட்டுப் பணிப்பெண்கள் புலம்பெயர்வதன் மீது வைத்துள்ள தடை அல்லது கட்டுப்பாடுகள் காரணமாக சமீப காலங்களில் இலங்கைப் பெண்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. சமூகப் பிரச்சினைகள் காரணமாக இந்தியா, பங்காளதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக ஆட்சேர்க்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் துர்ப்பழக்க வழக்கங்களை முறியடிப்பதற்காக இவ்வாறு ஆட்சேர்ப்பதனை மட்டுப்படுத்தியுள்ளது.*
3.3 புலம்பெயர் மனித வலுவின் சேர்க்கை
புலம்பெயர் மனிதவலு பற்றிய தரவுகளை உயர்தொழில் தரங்கள், இடைமட்டத் தரங்கள், எழுதுவினைஞர் தரங்கள், தேர்ச்சிபெற்ற வேலையாட்கள், தேர்ச்சியற்ற தொழிலாளர்கள், வீட்டுப் பணிப்பெண்கள் என வகைப்படுத்த முடியும். (பார்க்க அட்டவணை 2)
அட்டவணை 2 ல் உள்ள தரவுகள் வருடாந்தப் புலப்பெயர்வின் சில முக்கிய அம்சங்களை வெளிக்கொணர்கின்றது. உயர்தொழில் தரத்தைப் பொறுத்தவரை மிகக் குறைந்த தொகையினரே வெளிச் செல்கின்றனர். நடுத்தர மற்றும் எழுதுவினைஞர் தரங்களில் (ஆண், பெண் இருபாலாரும் உட்பட) 6% க்குக் குறைவானவர்களே வெளிச் செல்கின்றனர், தேர்ச்சிபெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத (ஆண்,பெண் உட்பட) வெளிச்செல்வோர் 46% க்கும் குறைவானவர்களே. பெண்களைப் பொறுத்தவரை 75% ஆனோர் வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்கின்றனர்.
3.4 புலம்பெயர் தொழிலாளர்களைக் கவர்ந்திழுக்கும் பிரதேசங்கள்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வழங்கப்பட்ட
2000 ஆம் ஆண்டுக்கான தற்காலிக தரவுகளின் படி 56 க்கு மேற்பட்ட நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்வதாகக் காட்டியுள்ளன.
Supra. n 3, U85. 39.
19

Page 15
அட்டவணை 2
தெரிவு செய்யப்பட்ட ஆண்டுகளில் மனிதவலு மட்டம் மற்றும் பால் ரீதியான புலம் பெயர் தொழிலாளர்கள்
உயர்தொழில இடைநிலை எழுது தேர்ச்சி தேர்ச்சி வீட்டுப் ஆண்டு தரம் வினைஞர் பெற்றவர் பெறாதவர் பணிப் மொத்தம
மற்றும் பெண்கள
හිජ්, பெ ஆ 6 හිජ් | 60 Lu හි, 6tu & 6L
1991 48 64983 34857 2537 .8894 .5978 027 )( 1292 80 88 ך
% 0.2 WW) 3 0. 2.O. O. 5.8 9.2 13.7 4.2 53.6 00
1993 465 4 953 77 607 206 772 4652 646 24 24240 48753
% 0.9 2.0 0. 30 0.4 6.0 9.5 3. 5.0 500 00
995 837 4 2074 421 4088 506 1943 7734,959 3906. 13860.724.89
% 0.5 12 O2 2.4 3 3 4.5 3 2.3 660 100
1997 534 39 1388 251 3008 571 15855 8723.6767 378 99429150283
% 0.3 10 0.2 20 0.4 10.5 6.0 2.S. 660 100
999 39 78 279 433 5256 940 244202.926. 29898 13523 8770.179 14
% 0.6 • 6 0.2 3. 0.5 14.0 70 16.6 7.5 49.0 目00
2000* | 67 1 | 23 | 3433 ; 473 |3997 | 862 12[ 134 | Ꭵ 1981 | 22615 | 8973 92327i66489
% 0.4 0.2 0.3 2.4 0.5 12.7 7.2 13.6 5.4 55.5 100
முலம்: புலப்பெயர்வு பற்றிய புள்ளிவிவரக் கைந்நூல். 1999, இலங்கை வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகம் பக்.8
密 2000ஆம் ஆண்டு தொடர்பான தற்காலிக தரவுகள் இலங்கை வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகத்தினால் எழுத்தாளருக்கு வழங்கப்பட்டது.
இவர்களை ஏற்றுக்கொள்ளும் நாடுகளையும் மனிதவலு மட்டங்களையும் ஒருங்கிணைத்து புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியே செல்லும் எளிதான மாதிரியை வழங்கமுடியும். அட்டவணை 3 இல் வரவேற்கும் நாடுகள் பிரதேசரீதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை மத்திய கிழக்கு, ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளாகும்.
20

அட்டவணை 3 இல் உள்ள தரவுகளின்படி இலங்கை மனித வலுவின் எல்லா வகையினரும் பெருமளவில் செல்லும் இடம் மத்திய கிழக்குப் பிரதேசம் என்பதனைத் தெளிவாகக் காட்டுகிறது.
அட்டவணை 3 மனிதவலு அடிப்படையில் புலம்பெயர் தொழிலாளர்கள்
2000ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் செல்லும் பிரதேசங்களின வகைகளும் தொழிலும்
பிராந்தியம் உயர்தொழில் இடைநிலை argy தேர்ச்சி வீட்டுப் மொத்தம்
வினைஞர் பெற்றவர் பணிப்
பெறாதவர் பெண்கள் ஆண் & பென ஆண் & பெண் ஆண் & பெண் ஆண் & பெண் ஆண் & பெண்
தொகை % தொகை % தொகை % தொகை %| தொகை % தொகை 1 %
ம.கிழக்கு 574 82.7 2385 6. 4337 89.3 61028 94.3 892.43 96.7 57567 94.6
ஆசியா 97 4.0 462 37.4 456 9.4 2970 46 329 l4 634 38
ஆபிரிக்கா 9. 3 l 0.3 2 0.2 10 : 0.2 33 - 66 0.
ஐரோப்பாவும்
வ.அமெரிக்காவும 3 19 48 2 54 604 0.9 76 9 2435 5 ஏனைய நாடுகள் 0. - - 6 - 7 மொத்தம் 694 00 3906 OO 4859 100 64703 100 92327 00 66489 00
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வழங்கப்பட்ட 2000ஆம்
ஆண்டுக்கான தற்காலிக தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
4. தொழிலாளர் புலப்பெயர் வினால் கிடைக்கும் நன்மைகள்
மொத்த நன்மைகளையும் செலவுகளையும் கருத்துக்கெடுத்த பின்னரே, அதன் அடிப்படையில் தேறிய நன்மைகளை மதிப்பிட முடியும். ஆனால் இவற்றுள் சில விடயங்களை அளவிட முடியாது. சம்பந்தப்பட்ட தரவுகள் இல்லாத காரணத்தினால், பண்பு அடிப்படையிலான மற்றும் ஓரளவு தகுதிவாய்ந்த கூற்றுக்களின் மூலமே நன்மைகளின் சில அம்சங்கள் பற்றிக் கூறமுடியும். இப்பிரிவு பிரதானமாக மொத்த நன்மைகள், பற்றியும் நன்மை மதிப்பீட்டுப் பணியைக் கடினமாக்கும் காரணிகள் பற்றியும் குறிப்பிடுகின்றது.
21

Page 16
4.1 அரசுக்குக் கிடைக்கும் நன்மைகள்
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்று எமது நாட்டை விட்டுச் செல்லும் வெவ்வேறு மனிதவலு வகைகளிலுமுள்ள புலம்பெயர்வோர் பற்றிய தொகை தொடர்பான தரவுகள் கிடைத்தபோதும், புலப்பெயர்வுக்கு முன்னதாக வேலை பார்த்தவர்களாக அத்துடன் வேலை பார்க்காதவர்களாக இருந்த புலம்பெயர் வேலையாட்களின் தொகையைக் காட்டும் தரவுகள் எவையும் இல்லை. உயர் தொழில், நடுத்தர தொழில் மற்றும் எழுதுவினைஞர் தொழில் தரங்களில் இருந்தவர்கள் முன்னர் வேலை பார்த்தவர்கள் என ஊகிக்க முடியும். எவ்வாறாயினும், தேர்ச்சி பெற்றோர் மற்றும் தேர்ச்சி பெறாதோர் வகைகளைப் பொறுத்தவரை, உள்ளுரிலும் இவர்கள் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களாக இருக்கலாம் என்பதனால், முன்னர் செய்தது போன்ற ஊகத்தை இங்கு செய்ய முடியாது. இங்கு வழங்கப்படும் சம்பளங்கள் குறைவாக இருப்பதனால் இளம் பெண்களும், மணம் முடித்தவர்களும் வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையில் வேலை செய்யத் தயங்குவர். ஆகவே வேலை வாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறும் பெண்களில் பெரும்பாலானோர் உள்ளுரில் பணியாற்றாதவர்கள் என ஊகிக்கலாம்.
எமது தொழிலாளர் அணியிலிருந்து வேலை வாய்ப்பற்றோரை விலக்கிவிடுவதன் மூலம் எமது நாட்டின் வேலையில்லாதோர் விகிதத்தினைக் குறைக்கமுடியும். ஆகவே, உள்ளூர் தொழிலாளர்களில் வேலை வாய்ப்பற்ற தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத தொழிலாளர்களின் புலப்பெயர்வு வேலைவாய்ப்பின்மை விகிதத்தைக் குறைப்பது தொடர்பாக குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. மேலும், சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்புக்கான காரணமாக வேலைவாய்ப்பின்மை அமைவதோடு வேலைவாய்ப்பின்மை வீதத்தைக் குறைப்பது சமூக, அரசியல் நோக்கில் நன்மை பயப்பதாகவும் கருதமுடியும். புலம்பெயர் வேலையாட்களினால் அனுப்பி வைக்கப்பட்ட பணவனுப்பல்களின் விளைவாக நாட்டின் சென்மதி நிலுவை மேம்பட்டமை தொழிலாளர் இடப்பெயர்வு மூலம் கிடைத்த நேரடியான உணரத்தக்க நன்மையாகும்.
பணவருவாய் பெறுமதி (ரூபாவின்படி) 1991 இல் 18,311 மில்லியனாக இருந்து 2000 இல் 82,000 மில்லியனாக அதிகரித்தது. பணவனுப்பல்களின் (remittances) பெறுமதி ரூபாய்களில் தரப்பட்டுள்ளதினால் 1991-2000 ஆம் ஆண்டுகளில் ரூபா கணிசமானளவு மதிப்பிறக்கத்தை அடைந்துள்ளபடியாலும், அனுப்பு தொகைகளின் பெறுமதியின் உண்மையான அதிகரிப்பு, நாணய பெறுமதியின் மதிப்பிறக்கத்தைக் கருத்துக்கெடுத்துக் கொள்ளாமல், கணிப்பிட முடியாது. (அனுப்பு தொகைகள் டொலர்களில் குறிப்பிடப்பட்டால், உண்மையான அதிகரிப்பை நேரடியாகப் பெற்றுக் காள்ள முடியும்).
22

அட்டவணை 4
தனிப்பட்ட கொடுப்பனவுகள் (மில்லியன் ரூபாவில் ) 1991-2000
ஆண்டு கொடுப்பனவுகள்
1991 18,311 1992 24,037 1993 30,592 1994 34,992 995 40,482 1996 46,003 1997 54,445 1998 64,517 1999 74,342 2000* 82,000
மூலம்: புலப்பெயர்வு பற்றிய புள்ளிவிவரக் கைந்நூல் 1999
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வெளியிடப்பட்டது. பக். 37.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் چ
வழங்கப்பட்ட தற்காலிக தரவுகள்.
4.2 புலம்பெயர்ந்தோருக்குக் கிடைக்கும் நன்மைகள்
புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவருக்குக் கிடைக்கும் நிதிசார் நன்மைகள் அவரது சேமிப்புகளாகும். பொதுவாக, பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் தமது பொருளாதார நிலைமைகளைச் சீர்திருத்திக் கொள்கின்றனர். வெளிநாட்டிலிருந்து திரும்பிவரும் புலம்பெயர் தொழிலாளர் தமது சேமிப்பைப் பின்வரும் வழிகளில் பயன்படுத்தலாம்:
(அ) வீடு கட்டிக் கொள்ளுதல் அல்லது ஏற்கனவே உள்ள வீட்டைத்
திருத்தியமைத்தல் (ஆ) வங்கியில் சேமிப்புக் கணக்கை அல்லது நிலையான வைப்புக்
கணக்கைத் திறத்தல்
23

Page 17
(இ) பிள்ளைகளின் கல்வியில் முதலீடு செய்தல்
(ஈ) பாவனையாளர் நெடுங்காலப் பாவனைப் பொருட்கள், ஆபரணங்கள்,
தளபாடங்கள் முதலியன வாங்குதல்
(உ) பெற்ற கடன்களைத் திருப்பிக் கொடுத்தல்.
வெளிநாட்டில் வேலைபார்த்து தமது வருமான இயலளவைப் பெருக்கியுள்ள புலம்பெயர்ந்த பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் உயர் அந்தஸ்தை வகிப்பதோடு அவர்களது பொருளாதாரத் தன்னிறைவு காரணமாக அதிகளவு தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தையும் பிரயோகிக்கின்றனர்.
பொதுவாக, புலம்பெயர்ந்த தொழிலாளரின் சேமிப்பு முழுக் குடும்பத்தினதும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு நேரடியாக அல்லது மறைமுகமாக உதவுகின்றது. எவ்வாறாயினும் புலம்பெயர்ந்தவர் தாம் புலம்பெயர்வதற்கு முன்னர் எதிர்பார்த்த எதிர்பார்ப்புக்களுக்கும், உண்மையாக அவருக்குக் கிடைத்த நன்மைக்கும் இடையே இடைவெளி காணப்படலாம். மார்க்கா நிறுவகத்தினால் நடாத்தப்பட்ட ஆய்வின்படி புலம்பெயர்ந்தவருக்கான நன்மைகள், அவரின் எதிர்பார்ப்புகளையும் அவருக்கு உண்மையாகக் கிடைத்தவற்றையும் பரிசீலனை செய்வதன் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன. வீட்டுப் பணிப்பெண்கள், தேர்ச்சிபெற்ற தொழிலாளர், தேர்ச்சிபெறாத தொழிலாளர்கள், மேற்பார்வைத் தரங்களிலுள்ள தொழிலாளர்கள் ஆகியோர் அடங்கிய 510 நபர்களிடமிருந்து தெரிவுசெய்யப்பட்ட 50 புலம்பெயர் தொழிலாளர்களின் தனிப்பட்ட விவரங்களை அடிப்படையாகக்கொண்டு மார்க்காவினால் இவ் ஆய்வு நடாத்தப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் தெரிவிக்கப்படும் ‘‘வெற்றி’யை அல்லது ‘'தோல்வி’யைப் பொறுத்தே அவ்வேலையாளுக்குரிய நன்மைகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. பொருளாதார வளம், வாழ்க் கைத் தரம் , ஆட்களுக்கிடையேயான உறவு, குடும்பங்களுக்கிடையேயான உறவு, சமூகத்துடனான உறவு என்பவற்றைக்கொண்டு வெற்றி மதிப்பிடப்பட்டது. மொத்த 510 புலம்பெயர்ந்த வேலையாட்களுள் 60% “தோல்வி’யையே வெளிக்காட்டினர். இத்தகைய தோல்விகளுக்குரிய பெரும்பான்மையானவர்கள் வீட்டுப் பணிப்பெண்களே.
கொட்பிறே குணதிலக (பதிப்பு), குடும்பங்களின் மீது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தாக்கம்: ஏழு ஆசிய நாடுகளில் ஓர் ஒப்பீட்டு ஆய்வு, ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் (1992), பக். 227-263.
24

புலப்பெயர்வுக்கு முன்னர் வேலையில்லாதிருந்த ஒருவருக்கும் வேலைபார்த்த ஒருவருக்குமிடையே வேறுபாடு காணப்பட வேண்டும். முதலாவது வகையைச் சேர்ந்த தொழிலாளரைப் பொறுத்தவரை அவரது சேமிப்புகள் அவருக்குக் கிடைத்த நன்மைகளாகும். இரண்டாவது வகையைச் சேர்ந்த தொழிலாளரைப் பொறுத்தவரை, சேமிப்புகளிலிருந்து முன்பெற்ற வருமானம் அல்லது வாய்ப்புச் செலவு கழித்த பின்னர் கிடைப்பதே அவரது நிதிசார் இலாபமாகும். எவ்வாறாயினும், புலம்பெயர்ந்த தொழிலாளர் தமது நிதிசார் நன்மைகளைக் கணக்கிடுகையில் முன்பெற்ற வருமானத்தைக் கணக்குக்கு எடுக்கவேண்டியதில்லை.
5. புலம்பெயர்தல் செலவுகள்
மொத்தச் செலவுகள் என்பது நிதிசார் செலவுகளையும் நிதிசார்ந்தரீதியில் அளவிட முடியாத செலவுகளையும் உள்ளடக்கும். இவ்வாறு அளவிட முடியாத செலவுகளுள் புலம்பெயர்ந்தவர் அனுபவிக்கும் துன்பங்களும் மனவேதனைகளும் அடங்கும்.
5.1 அரசுக்கு ஏற்படும் செலவு
தொழிலாளர் புலம்பெயர்தலுடன் சம்பந்தப்பட்ட அரச செலவினம் அரசினால் பொறுத்துக் கொள்ளப்படும் நிதிசார் செலவாகக் கொள்ளப்படலாம். அரச துறையின் தொழிற்பாட்டைப் பாரதூரமாகப் பாதிக்கும் மனிதசக்தி இழப்புத் தொகை கணிக்கப்பட முடியாத செலவாகும். எமது நாட்டின் பொருளாதாரத்தில் உயர் தொழில் மனிதசக்தியின் வெளியேற்றம் எத்துணையளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றி எந்தவிதமான முறைமையான மதிப்பீடும் செய்யப்படவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுள் உயர்தொழில் புரிவோரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதாக இருந்தபோதும் உயர்திறமைமிக்க ஆளணியினர் நாட்டைவிட்டு வெளியேறுவது அவர்களை வேலைக் கமர்த்திய நிறுவனங்களைப் பெரிதும் பாதித்துவிடும். அனுபவம் வாய்ந்த நடுத்தர மட்ட மற்றும் தேர்ச்சிபெற்ற மனிதசக்தியின் புலப்பெயர்வுகூட எதிர்மாறான தாக்கத்தை நிறுவனங்களின் செயற்பாட்டில் கொண்டுவரமுடியும். இதற்கு மாற்று வழியாக இதே தகைமைகள் கொண்ட வேறு ஆட்களைப் பணிக்கமர்த்தினால், அவர்களிடம் முன்பிருந்தோர் போன்ற அனுபவ அறிவு கிடைக்க மாட்டாது.
25

Page 18
5.2 புலம் பெயர்ந்தோருக்கு ஏற்படும் செலவுகள்
புலம்பெயர்ந்தவர்கள், புலம்பெயர்ந்தோர் பதிவுக் கட்டணங்கள், வேலைவாய்ப்பு முகவர்களுக்குக் கொடுக்கும் கட்டணங்கள், புலப்பெயர்வு தொடர்பான அல்லது அதற்கு அவசியமான வேறு செலவினங்கள் போன்ற பணச்செலவுகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். சில புலம்பெயர்ந்தோர் தாம் தொழில்பார்க்க வந்த நாட்டில் சுரண்டல், ஹிம்சை, அகெளரவம், உடல் துஷபிரயோகம், மற்றும் வேறுவடிவிலான மனித உரிமை மீறல்கள் போன்ற ஒரு வித்தியாசமான தன்மை கொண்ட செலவுகளைத் தாங்கிக் கொள்கின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தாய்நாட்டில் அவர் திரும்பிவந்து அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் உள்ளது. இதற்குப் பலியானவர்களுள் பெரும்பாலானோர் வீட்டுப் பணிப்பெண்களே. தொழிலாளர் புலப்பெயர்வின் எதிர்மறையான அம்சங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகள் குவிமையப்படுத்தியுள்ளன. பலவிதமான துன்புறுத்தல்களுக்கு ஆளான புலம்பெயர்ந்தோரின் சொந்த அனுபவங்கள் ஊடகங்களில் வெளிக் கொணரப்பட்டுள்ன. இவை பெரும்பாலும் ஒரு கதைபோன்று இருக்கும். முன்னணி வகிக்கும் செய்தித்தாள் ஒன்று சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் அடிமைகள் போல் நடாத்தப்பட்ட ஆடைக் கைத்தொழில் தொழிலாளர்களின் பரிதாப நிலைபற்றிய விவரத்தை வெளியிட்டிருந்தது. புலம்பெயர்ந்த வேலையாட்களினால் செய்யப்படும் முறைப்பாடுகள் (தாம் சென்றடைந்த நாட்டில் இருக்கும்போது அல்லது திரும்பி வந்த பின்னர்) பெருமளவு கடினமாக வேலை வாங்கும் நிலைமையை எடுத்துக் காட்டுவனவாகவுள்ளன. இது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்களில் சிறுபான்மையினரைப் பாதிக்கின்றது.
உண்மையாகப் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் தொகையைக் கிடைக்கக்கூடிய தரவுகள் சுட்டிக் காட்டவில்லை. எவ்வாறாயினும், பல்வேறு
கொட்டேகொடஎஸ், இலங்கையில் பெண்களின் உரிமைகள். இலங்கை: மனித உரிமைகள் நிலை. 1999 (சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம், கொழும்பு 1999) பக். 123-124 ஏகாமஸ்.எஸ், “புலப்பெயர்வு தொழிலாளரின் இருதலைக் கொள்ளி எறும்பு நிலை’ 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கொழும்பு, சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அற நிலையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட “இலங்கையில் 50 ஆண்டுகளில் சட்டமும், நீதியும், ஆளுகையும் பற்றிய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை. பக். 1-4. “இழந்துவிட்ட கற்பனைகள்' த ஜலன்ட, 22 நவம்பர் 2000.
26

வகைப்பட்ட பாரபட்சத்துக்கும் துஷபிரயோகத்துக்கும் ஆளாகக்கூடிய புலம்பெயர்ந்தோரின் சத வீதம் பற்றி மதிப்பீடு செய்ய முடியும். சுரண்டலுக்கும் துஷ்பிரயோகத்துக்கும் உட்பட்ட புலம்பெயர்ந்தோருள் பெரும்பான்மையினர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தமது முறைப்பாடுகளைச் செய்கின்றனர் என ஊகிப்பது நியாயமானதாகும். 1999 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முறையே 9,832 மற்றும் 7,353 முறைப் பாடுகள் புலம்பெயர்ந்தோரிடமிருந்து பெற்றுள்ளது. இந்த இரண்டு ஆண்டுக் காலப்பகுதியில் மொத்தப் புலம்பெயர்ந்தோர் தொகை 5 சத வீதமாகும். ஆகவே, சமீப ஆண்டுகளில் மனக்குறைகளுடன் கூடிய புலம்பெயர்ந்தோர் தொகை புலம்பெயர்ந்தோரின் மொத்த எண்ணிக்கையில் 10 சத வீதத்துக்குக் குறைவானதாகும்.
அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட முறைப்பாடுகள், ஆராய்ச்சி முடிவுகள், கதை வடிவிலான விவரங்கள் என்பவற்றின் பகுப்பாய்வு மூலம், அவர்கள் அனுபவித்த துன்பங்களின் வகைகளை ஒரளவு தெரிந்துகொள்ள
(ԼՔԼԳԱվԼՈ:
(அ) புலம்பெயர்ந்தோரில் 10 சத வீதமானவர்கள், குறிப்பாகத் தேர்ச்சியற்ற தொழிலாளர்கள் துஷபிரயோகம் செய்யப்பட்டு, நசுக்கப்பட்டு, ஹிம்சைப்படுத்தப்பட்டு சுரண்டப்படுகிறார்கள்.
(ஆ) சில வீட்டுப் பணிப்பெண்கள் உடல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தினால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
(இ) தேர்ச்சியற்ற ஒப்பந்த தொழிலாளர்கள் சுகாதாரமற்ற நிலைமைகளில் பெரும்பாலும் வேலை செய்கிறார்கள். அவர்கள் வேலைசெய்யும் காலப்பகுதி பொதுவாக தொழில் ஒப்பந்தத்தில் குறித்துரைக்கப்பட்ட வேலை நேரங்களிலும் பார்க்க கூடுதலானதாக இருக்கின்றது.
(ஈ) ஒப்பந்த தொழிலாளர் பெரும்பாலும் தொழில்தருநரின் கருணையில் தங்கியிருப்பார். புலம்பெயர்ந்த தொழிலாளி தொழில்பார்க்கும் நாட்டிலுள்ள தொழிலாளர் ஒழுங்குவிதிகள், வேலையாளின் மனித உரிமைகள் மீதான மீறல்களிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு வலியுறுத்தப்படுவதில்லை.
27

Page 19
(의_)
(i)
(ii)
எமது நாட்டுக்குத் திரும்பிவந்த புலம்பெயர்ந்தோரில் ஒரு சிலர், குறிப்பாகத் தேர்ச்சியற்ற மற்றும் தேர்ச்சிபெற்ற தொழிலாளர்கள், பின்வரும் நிலைமைகளில் ஒன்றுக்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றுக்கு ஆளாகியுள்ளனர்:
அவர்கள் அனுப்பிய பணம் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களினால் வீணடிக்கப்பட்டுள்ளன. சில வாழ்க்கைத் துணைகள் திருமணத்துக்குப் புறம்பான உறவுகளை வைத்திருப்பதோடு பாரம்பரியக் குடும்பப் பிணைப்புகள் சீர்குலைந்துபோகும் நிலையில் உள்ளனர்.
அவர்களின் பிள்ளைகள் அனாதரவாக விடப்படும் நிலையில் உள்ளனர். சிலர் பாடசாலை செல்வதைக் கைவிட்டுள்ளனர். வேறு சிலர் போதைமருந்துப் பாவனைக்கும் ஏனைய துர்ப்பழக்கங்களுக்கும் அடிமையாகி உள்ளனர். சிலர் உடல்ரீதியான துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
(ii) உள்ளுர் தொழில் சந்தையில் அவர்களைத் தொழிலுக்கமர்த்தும்
(iv)
5.2.1
வாய்ப்புகள் வெகு அரிது.
அவர்கள் எச். ஐ. வி/எயிட்ஸ் (HIV/AIDS) போன்ற நோய்களுக்கு ஆளாகி உள்ளனர்.”
பாரபட்சமும் இனவாதமும்
புலம்பெயர்ந்து வேலைசெய்வோரைத் தொழிலுக்கமர்த்தும் பல நாடுகள் புலம்பெயர்ந்த வேலையாட்கள் தொடர்பான தமது கொள்கைளில் பாரபட்சம் காட்டும் நடைமுறைகளை வேரூன்றச் செய்துள்ளன. இவற்றில் கூலிகளில் வித்தியாசம் காட்டுதல், பாரபட்சமான தொழில் நடைமுறைகள். விரோதமான
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் வழங்கப்பட்ட (தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவில் எச்.ஐ.வி மற்றும் அபிவிருத்தி மீதான செயற்றிட்டம், 1999) துண்டுப் பிரசுரத்தின்படி இலங்கையிலுள்ள எச்.ஐ.வி தொற்றியுள்ள ஆட்களுள் 50 சதவீதமானோர் மத்திய கிழக்கிலிருந்து திரும்பி வந்த வீட்டுப் பணிப் பெண்களாவர். எச்.ஐ.வி/எயிட்ஸ் பீடித்தோரின் உண்மையான தொகை அக் குறிப்பிட்ட வெளியீட்டில் சுட்டிக் காட்டப்படவில்லை என்பதை அவதானிக்க வேண்டும்.
28

வேலை நிலைமைகள், தேசியத்தின் அடிப்படையில் சம்பள அமைப்பு, சம்பளத்தை முடக்குதல் என்பன உள்ளடங்கும்." ஆசியாவிலுள்ள புலம்பெயர்ந்தோர் மன்றம் (டிசம்பர் 18ஆந் திகதியன்று கொண்டாடப்பட்ட) Fij6 (858 L16) bQuurrb(35Tsr footb (International Migrants Day) Qg5|TL frust 3, வழங்கப்பட்ட ஒரு கூற்றில் பின்வருமாறு குறிப்பிட்டது:
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தம்மை ஒழுங்கமைப்பதற்கும் பேரம் பேசுவதற்கும் உள்ள உரிமை மீது விதிக்கப்பட்ட மட்டுப்பாடுகளில் கூட பாரபட்சமான கொள்கைகள் காணப்படுகினர் றன. ஆசிய நாடுகளின் தற் கால அரசியலமைப்புகள் ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்தை அங்கீகரிக்கின்ற அதேவேளை, பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சவூதி அரேபியாவில் இருப்பது போன்று விளையாட்டுகளுக்கும், உடற் பயிற்சிகளுக்கும் தவிர, ஒன்றுகூட முடியாது. சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தம்மை ஒழுங்கமைப்பதற்கோ பகிரங்க இடங்களில் கூட்டம் கூடுவதற்கோ தடை உண்டு. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிறுவனங்கள் காணப்படுகின்றன, ஆனால் அவற்றுக்குப் பேரம் பேசும் அதிகாரம் இல்லை."
மேலும், இலங்கையில் ஒரு குற்றமாக இராத, சோரம் (adulters) போன்ற தவறொன்றைப் புரிந்ததாகக் குற்றஞ் சாட்டப்படும் ஒரு புலம்பெயர்ந்தவர் ஷறியா சட்டத்தின் (Sharia Law) கீழ் விளங்கப்பட்டு மறியற் தண்டனை, கசையடி முதல் கல்லெறிந்து உயிர் பறித்தல் வரை வேறுபடக்கூடிய தண்டனை வகைகளுக்குத் தீர்ப்பளிக்கப்படுவர்.
6. சர்வதேச சாதனங்கள்
பல சர்வதேச சாதனங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப்
பாதுகாப்பதற்கு விரும்புகின்றன. அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு:
“புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச தினம்’, 2000 டிசம்பர் 20, த ஜலநகர்ட் இதுவுமதுவே.
29

Page 20
1949ஆம் ஆண்டின் (திருத்தப்பட்ட) வேலைவாய்ப்புக்கான புலப்பெயர்வு மீதான 97 ஆம் இலக்க சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சமவாயம்.
2. 1975ஆம் ஆண்டின் புலம்பெயர் தொழிலாளர் மீதான 143 ஆம் இலக்க (குறைநிரப்பு ஏற்பாடுகள்) சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சமவாயம்.
3. புலம்பெயர்ந்த எல்லா தொழிலாளர்களினதும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பது மீதான ஐக்கிய
BIT (656ft 3LD6JTub 1990.
97 ஆம் இலக்க சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சமவாயம்
வேலைவாய்ப்புக்காகப் புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதற்கென உருவீர்க்கப்பட்ட ஒரு தொடரான ஏற்பாடுகளைச் சமவாயம் கொண்டுள்ளது. புலம் பெயர் நடைமுறை தொடர்பான செம்மையான தகவலை. வழங்குவதற்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்கென இலவச சேவை வழங்குவதற்கும் அது உறுப்பு நாடுகளை வேண்டி நிற்கின்றது. தேசியம், இனம், சமயம், அல்லது பால் காரணமான எவ்வித பாரபட்சமும் இல்லாமல் புலம்பெயர்ந்தோரின் வேலை தொடர்பிலான பலதிறப்பட்ட சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் பிரயோகிப்பதில் தமது ஆள்புலத்துக்குள் சட்டபூர்வமாகக் காணப்படும் புலம்பெயர்ந்தோரை தமது சொந்த நாட்டினத்தவரைப் போன்ற அதே முறையில் நடாத்த வேண்டுமென சமவாயத்தை பின்னுறுதிப்படுத்தும் நாடுகளைச் சமவாயம் கோரிநிற்கின்றது.
143 ஆம் இலக்க சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சமவாயம்
இச்சமவாயம் வேலைவாய்ப்புக்காகக் தவறான வழிகளில் புலம்பெயர்வில் ஈடுபடுவதனைத் தடுப்பதற்கும் மனித சக்தி கடத்தற் செயற்பாடுகளை அறவே ஒழிப்பதற்கும் எனப் பிரதானமாக உருவாக்கப்பட்டதாகும். மேலும், வேலைவாய்ப்பு, தொழில், சமூகப் பாதுகாப்பு, தொழிற்சங்க மற்றும் கலாசார உரிமைகள் போன்ற விடயங்களில் அரசுகள் சம சந்தர்ப்பம் வழங்கும் கொள்கையை வெளிப்படுத்துவதோடு பின்பற்றவும் வேண்டும்.
30

இலங்கை இந்த இரண்டு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபன சமவாயங்களையும் ஏற்றங்கீகரிக்கவில்லை. எவ்வாறாயினும் சர்வதேச தொழில் தாபனத்தின் வேண்டுகோளின்பேரில் மேற்படி சாதனங்கள் ஒவ்வொன்றின் கீழும் இலங்கை அரசாங்கம் அறிக் கைகளைச் சமர்ப்பித்துள்ளது.*
புலம் பெயர்ந்த தொழிலாளர் களினதும், அவர் களின் குடும்ப உறுப் பினர் களினதும் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றிய
ஐ.நா. சமவாயம்
புலம் பெயர் நீத தொழிலாளர் களினதும் , அவர்களின் குடும்ப உறுப்பினர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றிய சமவாயம் 1990 டிசம்பர் 18 ஆந் திகதியன்று பொதுப் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகளின் எல்லா உறுப்பு அரசுகளினதும் கையொப்பத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. இலங்கை இந்த ஐ.நா.சமவாயத்தை 1996 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆந் திகதியன்று ஏற்றங்கீகரித்தது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களாகத் தகைமை பெறுவோர் இச்சமவாயத்தின் ஏற்பாடுகளின்கீழ் அவர்களது சட்ட அந்தஸ்தைப் பொருட்படுத்தாது மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு உரித்துடையவர்கள் என்பதனை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். பின்வரும் பிரிவுகள் குறித்துரைக்கப்பட்ட தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளையும் அரச தரப்பினர்களுக்குள்ள கடப்பாடுகளையும் பற்றிக் குறிப்பிடுகின்றன.
சமவாயத்தின் VI ஆம் பாகம் தொழிலாளர்களினதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களினதும் சர்வதேச புலப்பெயர்வுக்கான ‘ஸ்திரமான, ஒப்புரவான, மனிதாபிமானமுள்ள மற்றும் சட்டபூர்வ நிலைமைகளை’ ஊக்குவிக்கும் அக்கறையில் அரச தரப்பினர்கள் மீது ஒரு தொடரான கடப்பாடுகளை விதிக்கின்றது. இத்தேவைப்பாடுகளுள் புலப்பெயர்ச்சி மீதான கொள்கைகளை வகுத்தல், ஏனைய அரச தரப்பினர்களுடன் தகவல்
கோமஸ்.எஸ், “புலப்பெயர்வு தொழிலாளர்களின் பிரச்சினை” Supra. n7, பக். 5. பார்க்க இலங்கை: மனித உரிமைகள் நிலைமை 1998 (சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அற நிலையம், கொழும்பு, 1998) ஐ.நா புலம்பெயர்நித தொழிலாளர் பற்றிய சமவாயத்தின் முக்கியத்துவம் நூற்றிய சுருக்கம். பக். 223-224.
31

Page 21
பரிமாற்றம், கொள்கைகள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் பற்றித் தொழில் தருநர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தகவல் வழங்குதல், புலம்பெயர்ந்த வேலையாட்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உதவி வழங்குதல் என்பன உள்ளடங்கும். இச்சமவாயமானது புலம்பெயர் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பதற்கும் அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தார்களோ அந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்வதற்குமான விதிகளை உருவாக்குகின்றது. சட்டவிரோத அல்லது கள்ளத்தனமான புலப்பெயர்வைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றியும் அது விளக்குகின்றது.
சமவாயத்தின் 72 ஆம் உறுப்புரையின்கீழ், புலம்பெயர்ந்த எல்லா தொழிலாளர்களினதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களினதும் பாதுகாப்புக்காக ஒரு குழு உருவாக்கப்பட்டு, வலுவுடையதாக வந்ததும் சமவாயத்தின் பிரயோகம் பற்றி மீளாய்வு செய்யப்பட வேண்டும்.
அரச தரப்பினர், சம்பந்தப்பட்ட அரசில் சமவாயம் வலுவுடையதாகவந்த ஒரு வருடத்துக்குள்ளாகவும் அதன் பின்னர் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையும் சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தாம் எடுத்த வழிவகைகள் பற்றி அறிக்கையிடுவதற்கான கடப்பாட்டை ஏற்றுக் கொள்ளுகின்றன. இந்த அறிக்கைகள் சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்கப்பட்ட பிரச்சினைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் புலப்பெயர்வு அசைவு பற்றிய தகவலை வழங்கவேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த அறிக்கைகளைப் பரிசீலித்த பின்னர் குழுவானது, அது பொருத்தமானவை எனக் கருதும் அத்தகைய கருத்துரைகளைச் சம்பந்தப்பட்ட அரச தரப்பினருக்கு அனுப்பிவைக்கும்.
76 ஆம் உறுப்புரையின்கீழ், அரச தரப்பினர் ஒருவர் சமவாயத்தின்கீழ் வேறோர் அரச தரப்பினருக்குள்ள கடப்பாடுகளை அது நிறைவேற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டி ஓர் அரச தரப்பினரிடமிருந்து முறையீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பரிசீலிப்பதற்கும் குழுவுக்குள்ள தகைமையை அங்கீகரிக்கலாம் . அரச தரப் பினர் குழுவின் தகைமையை அங்கீகரித்திருப்பதோடு உள்நாட்டு நிவாரண முறைகள் அனைத்தும் பயனளிக்காது விட்டபின்னர் மாத்திரமே அத்தகைய முறையீடுகள் ஏற்றுக் கொள்ளப்படலாம்.
77 ஆம் உறுப்புரையின் கீழ், இடருற்றவரான தனியாள் ஒருவர் சமவாயத்தின்கீழ் தமக்குள்ள உரிமைகள் மீறப்பட்டுள்ளன என குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரலாம். ஆயின், குழுவின் தகைமையை அங்கீகரித்துள்ளதும் உள்நாட்டு நிவாரண முறைகள் அனைத்தும் பயனளிக்காததுமான அரசின் நியாயாதிக்கத்தினுள் அத்தனிநபர் இருக்க வேண்டும்.
32

இச்சமவாயம் 20 அரசுகளினால் ஏற்றங்கீகரிக்கப்பட்டதான அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து வலுவுடையதாக வரும். ஆனால் அது இன்று வரை நடைபெறவில்லை. 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆந் திகதியன்றுவரை 15 அரசுகள் மாத்திரமே சமவாயத்தை ஏற்றங்கீகரித்துள்ளன அல்லது ஏற்றுக்கொண்டுள்ளன. அசெர்பைஜான், பொஸ்னியா, கேர்செகொபினா, பொலிவியா, கேப்வேர்டே, கொலம்பியா, எகிப்து, கானா, கயானா, மெக்சிக்கோ, மொறொக்கோ, பிலிப்பைன்ஸ், செனகல், சீசெல்ஸ், இலங்கை மற்றும் உகண்டா என்பனவாகும். மேலே குறிப்பிடப்பட்ட நாள் வரை பின்வரும் அரசுகள் சமவாயத்தில் ஒப்பமிட்டுள்ளன. பங்களாதேஷ், சிலி, கொமொறொஸ், குவாட்டமாலா, கினியா-பிஸ்ஸெள, பரகுவே. சாயோ டோம், மற்றும் பிறின்சிப்பி, சியராலியோன், தஜிகிஸ்தான் மற்றும் துருக்கி என்பன. தொழிலாளரை ஏற்றுக் கொள்ளும் நாடுகள் சமவாயத்தை ஏற்றங்கீகரிக்கத் தவறினால், தொழிலாளர்களை அனுப்பிவைக்கும் அரசுகளும் சர்வதேச சமூகமும் சமவாயத்தினால் விதிக்கப்பட்ட தராதரங்களுக்கு இணங்கியொழுகுமாறு அரசுகளைக் கட்டாயப்படுத்த முடியாது.
புலம் பெயர் நித தொழிலாளர் களின் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக, ஐ.நா.வினால் உருவாக்கப்பட்ட மற்றொரு சமீபகால வழிமுறை 1999 இல் புலம்பெயர்ந்தோர் மீதான விசேட அறிக்கையாளர் (Special Reporteur) ஒருவரை நியமித்ததாகும். இவர் பின்வரும் கருமங்களைச் செய்ய வேண்டியவராக இருந்தார்:
(அ) மனித உரிமை மீறல்கள் பற்றி புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களின் குடும் பங்கள் எண் பன உட்பட, சம்பந்தப் பட்ட எல்லா மூலங்களிலிருந்தும் தகவலைக் கோரிப் பெற்றுக் கொள்ளுதல்;
(ஆ) புலம்பெயர்ந்தோரின் மனித உரிமை மீறல்கள், எங்கெங்கெல்லாம் சம்பவித்தாலும், அவற்றைத் தடுப்பதற்கும், நிவர்த்திப்பதற்குமான பொருத்தமான பரிந்துரைகளை உருவாக்குதல்.
“தாரணி” 2000 4 வது காலாண்டு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான செயற்பாட்டு வலையமைப்பின் செய்திக் கடிதம் (ACTFORM). “தாரணி” 2000 2 வது காலாண்டு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான செயற்பாட்டு வலையமைப்பின் செய்திக் கடிதம் (ACTFORM).
33

Page 22
புலம் பெயர் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான அரச தலையீடுகள்
புலம்பெயர்ந்தவர்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளினதும் அவர்கள் தொடர்பான அளவீடுகளினதும் (Surveys) முடிவுகளைப் பரிசீலிக்கும்போது, புலம் பெயர்ந்தவர்களைப் பாரதுாரமாகப் பாதிக்கும் காரணிகள் தெரியவருகின்றன. அவற்றைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்:
(i)
(ii)
(iii)
(1ν)
(v)
(vi)
(vii)
தாய்நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களினால் சுரண்டப்படுகிறார்கள்.
தாம் சென்று தொழில் புரியும் நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள் சுரண்டப்படுகிறார்கள்.
தாம் சென்று தொழில் புரியும் நாட்டில் வலுவிலுள்ள தொழில் ஒழுங்குவிதிகள் பற்றிப் புலம்பெயர்ந்தவர்கள் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
தமது துன்பங்களிலிருந்து மீழுவதற்கான நிவாரணங்கள் பற்றிப் புலம் பெயர்ந்தோர் அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
தாய்நாட்டை விட்டு வெளியேற முன்னதாக தாம் சென்று தொழில்புரியும் நாட்டிலுள்ள தொழில் நிலைமைகளைப் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
தொழில் புரியும் இடத்தில் நிகழ்ந்த ஏதேனும் காயங்கள் அல்லது தொழிலிலிருந்து நீக்கப்பட்டதற்கு புலம்பெயர்ந்தோருக்கு நட்டஈடு பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை.
வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய வீட்டுப் பணிப்பெண், தொழில் புரியும் இடத்தில் துஷ்பிரயோகத்துக்கு ஆளாவதைத் தவிர வேறு வழி இல்லை.
1980 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையச் சட்டம் புலம்பெயர்ந்த வேலையாட்களின் நலன்களை மேற்பார்வை செய்வதற்குத் தனியான அதிகாரசபை எதனையும் ஏற்பாடு செய்யவில்லை.
34

ஆகவே, அரசாங்கம் புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்புக்கும் அவர்களின் நலனை மேம்படுத்துவதற்குமென பூரண அர்ப்பணிப்புள்ள மத்திய அதிகாரசபை ஒன்றை உருவாக்க முடிவு செய்தது.
7.1 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
1980ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையச் சட்டத்தை நீக்கஞ் செய்ததான, 1985ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்தது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தனியார் துறைப் பொறுப்பு முயற்சியினால் அல்லது பகிரங்கக் கூட்டுத்தாபனத்தினால் இலங்கைக்கு வெளியே வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை ஆட்சேர்ப்பதனை ஒழுங்குபடுத்துவதற்காக நிறுவப்பட்டது.
சட்டத்தின் 15ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட சட்டத்தின் குறிக்கோள்கள் பணியகத்தின் பணிகளை வரையறுக் கின்றன. இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களை மேம்படுத்துதலும் அபிவிருத்தி செய்தலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் தொழிலை ஒழுங்குபடுத்துதல், தொழில் ஒப்பந்தங்களுக்கான இலக்குகளை வகுத்து இணக்கிக் கொள்ளுதல் என்பன மேற்படி பணிகளுள் அடங்கும்."
7.2 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்
தத் துவங்கள்
7.2.1 உரிமமளிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின்
ஒழுங்கு விதிகள்
ஆள் ஒருவர் பணியகத்தினால் வழங்கப்பட்ட உரிமமொன்றை வைத்திருப்பவராக இருந்தாலொழிய, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றின் தொழிலைக் கொண்டு நடாத்துவதிலிருந்து இலங்கை
பார்க்க, இலங்கை மனித உரிமைகள் நிலை 1980 (சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அற நிலையம், கொழும்பு, 1988) நோக்கங்களின் விரிவான விபரம் தரப்பட்டுள்ளது. பக். 232-233,
35

Page 23
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின் 24ஆம் பிரிவு அவரைத் தடைசெய்கின்றது. உரிமமொன்றைப் பெறுவதற்கான விண்ணப்பம் குறித்துரைக்கப்பட்ட படிவத்தில் பணியகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் (பிரிவு 26). உரிமத்தை வழங்க முன்னர் குறித்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை விதிப்பதற்குப் பணியகத்துக்குத் தத்துவம் உண்டு (பிரிவுகள் 27, 28). உரிமம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும் (பிரிவு 30). குறித்துரைக்கப்பட்ட ஏதுக்களின் மீது உரிமமொன்றை நீக்கஞ் செய்வதற்கான அல்லது புதுப் பிக்க மறுப்பதற்கான தத்துவம் பணியகத்துக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது (பிரிவுகள் 31,32). இந்த நீக்கஞ் செய்வதற்கான அல்லது உரிமத்தைப் புதுப்பிக்க மறுப்பதற்கான தத்துவம் இடருற்ற தரப்பினரால் மேன்முறையீடு செய்வதற்கான உரிமைக்கு அமைந்ததாகும் (பிரிவு 33). 62 முதல் 68 வரையான பிரிவுகள் சட்டத்தின்கீழான தவறுகளுக்குரிய தண்டங்களை விதிக்கின்றது. இதில் மறியல் தண்டனையும் குற்றப்பணக் கொடுப்பனவும் அடங்கும்.
7.2.2 ஆட் சேர்க் கப்படுவதற்காக வெளிநாடு செல்லும்
இலங்கையர்களின் பயிற்சியும் நிலைப்படுத்தலும்
கொரியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் தேர்ச்சியற்ற எல்லாப் பெண் தொழிலாளர்களுக்கும் தேர்ச்சியற்ற ஆணி தொழிலாளர்களுக்கும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்படுகின்றன.' இந்நிகழ்ச்சித்திட்டங்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைமை அலுவலகத்திலும் பல பிராந்திய அலுவலகங்களிலும் உரிமமளிக்கப்பட்ட முகவர் நிலையங்களினாலும் அரசசார்பற்ற நிறுவனங்களினாலும் நடாத்தப்படும் ஒரு சில நிலையங்களிலும் நடாத்தப்பட்டன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் நடாத்தப்படும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் புலம்பெயரவிருப்பவர்கள் சென்று தொழில் செய்யவுள்ள நாட்டின் மொழியைப் போதிப்பதும் உள்ளடங்கும். வீட்டுப் பணிப்பெண்கள் நவீன வீட்டு உபயோக உபகரணங்களின் பயன்பாட்டிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் பற்றியும் பயின்ற பின்னர், அவர்களுக்கு பயிற்சிச் சான்றிதழ்கள்
2001 மார்ச்சில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட்ட உத்தியோகத்தர் ஒருவருடனான நேர்காணல் மூலம் பெறப்பட்ட தகவல். பெண் புலப்பெயர்வு: கொள்கையும் அமுலாக்கத்திலுள்ள இடைவெளிகளும். மார்க்கா நிறுவகம் மற்றும் சீடாவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை (1999), பக். 5.
36

வழங்கப்படுகின்றன. பணியகத்துடன் பதிவு செய்துகொண்டவர்களான புலம்பெயரவுள்ளவர்கள் மட்டுமே பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தைப் பின்பற்றமுடியும் என்பதனை அவதானிக்கவேண்டும். புலம்பெயர்வோருக்கு தொழில் தருநரினால் வழங்கப்படும் சம்பள அடிப்படையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பதிவுக் கட்டணத்தை விதிப்பதனால், மிகவும் ஏழையான ஒருவர் தம்மைப் பணியகத்துடன் பதிவு செய்துகொள்ளமாட்டார்."
7.2.3 புலம் பெயர்ந்த தொழிலாளர்களைப் பதிவுசெய்தல்
சட்டத்தின் 53(3)ஆம் பிரிவின்படி, வெளிநாடுகளில் வேலை செய்வதற்காக நாட்டைவிட்டு வெளியேறுகின்ற புலம்பெயரும் தொழிலாளர் பணியகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தேவைப்படுத்தப்படுகிறது. தொழிலாளர்களின் புள்ளிவிவரப் பதிவேடுகளையும் அவர்களின் தொழில் வகை பற்றிய ஆவணத்தையும் நிருவகிப்பதற்கு இந்தப் பதிவு செய்யும் முறை பணியகத்துக்கு வசதி செய்கிறது. பதிவுசெய்யப்பட்ட புலம்பெயரும் தொழிலாளர் ஒருவர் பின்வரும் நன்மைகளை அனுபவிக்கிறார். புலம்பெயரும் தொழிலாளர்கள் சட்டபூர்வமான தொழிலாளர்களாகத் தாம் வேலைசெய்யச் செல்லும் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியும். போலி வேலைவாய்ப்பு முகவர்களினால் வேலை தேடுவோர் ஏமாற்றப்படுவதனை இந்தப் பதிவு தடுக்கின்றது. எல்லாத் தேர்ச்சிபெற்ற பெண் தொழிலாளர்ளுக்கும் தெரிவு செய்யப்பட்ட வகைகளைச் சார்ந்த ஆண் தொழிலாளர்களுக்கும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்படுகின்றன. புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு di Jais619 BTLLOgg, gL556 (SURAKSHA insurance Scheme) dip காப்புறுதி நன்மைகள் வழங்கப்படுகின்றன. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் பொறுப்பேற்கப்பட்ட ஒரு திட்டத்தின்கீழ் மக்கள் வங்கியிடமிருந்து (SIYATHA) கடன்களையும், இலங்கை வங்கியிடமிருந்து (RANSAVIYA) கடன்களையும் குறைந்த வட்டி வீதத்தில் அவர்கள் பெற முடியும். புலம்பெயர்ந்த வேலையாட்களின் பிள்ளைகள் புலமைப் பரிசில்கள் பெறுவதற்கும் உரித்துடையவர்கள். பிரச்சினைகளோடு தாய்நாட்டுக்குத் திரும்பிவரும் புலம்பெயர்ந்தோரின் நன்மை கருதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் தற்காலிக இல்லமொன்றும் (transit home) (Su600T U(B 6 (53.6irpg).
முன்னர் குறிப்பிடப்பட்டது போன்று வெளிநாட்டு தொழில்தருநரால் வழங்கப்படும் மாதாந்தச் சம்பளத்தை அடிப்படையாக வைத்து இலங்கை
இதுவுமதுவே, பக். 6
37

Page 24
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பதிவுக் கட்டணத்தை அறவிடுகின்றது. புலம்பெயர்பவரால் செலுத்தப்பட வேண்டிய பணத்தொகை கீழே காட்டப்பட்டுள்ளது.*
eb. 10,000 e5. 5,200
ტენ. , 10,000 - 20,000 eb. 7,700
ღIხ. 20,000 eb. 10,200
பதிவு செய்யப்படாத வேலையாட்கள் புலம்பெயர்ந்து நாட்டுக்கு வெளியே செல்வதைத் தடுப்பதற்காக, கடவுச்சீட்டில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக முத்திரை பொறிக்கப்பட்டிருந்தால் மாத்திரமே பயணச் சீட்டுக்களை வழங்கவேண்டுன்ெறு விமானக் கம்பெனிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. நாட்டை விட்டு வெளியேறும் புலம்பெயர்பவர்களைக் கண்காணிப்பதற்காக விமான நிலையத்தில் ஒரு கரும பீடம் (desk) நிறுவப்பட்டுள்ளது.* பணியக முத்திரை இல்லாமல் நாட்டைவிட்டு வெளியேற புலம்பெயர்வோருக்கு உதவுபவர்கள் பணியகச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறியவர்களாகிறார்கள். ஒழுங்குவிதிகளை மீறி வெளியே செல்பவர்களைக் கண்டுபிடிப்பதில் விமான நிலையக் கண்காணிப்பு முறை பெருமளவுக்குப் பயனுள்ளதாக இருக்கின்றது. எவ்வாறாயினும் , வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்ல அனுமதிக்கப்படாத, பதிவு செய்யப்படாத புலம்பெயர்பவர்கள் மிகவும் துரதிஷ்டவசமான நிலையில் உள்ளனர். இவர்கள், சட்டவிரோத வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினால் வாக்குறுதியளிக்கப்பட்ட தொழில் மறுக்கப்பட்டபோது கூட, அதற்குச் செலுத்திய பணத்தை மீளப்பெற முடியாதிருக்கின்றனர்.
7.2.4 வேலைவாய்ப்புத் தொடர்பாக நியம ஒப்பந்தங்களை
உருவாக்குதல
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் புலம்பெயர்ந்த வீட்டுப் பணிப்பெண்களின் உரிமகளைப் பாதுகாப்பதற்காக நியம ஒப்பந்தமொன்றை
20 கோமஸ்.எஸ், “புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள்’, Supra.
n.7, பக். 15. Supra. n. 18, Luais. 9.
38

அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஆதரவாளர் அல்லது முகவர் கையொப்பமிட்டு வேலை செய்யப்போகும் நாட்டின் இலங்கைத் தூதரகத்தினால் மெய்யென்று உறுதிப்படுத்தப்பட வேண்டும். நியம ஒப்பந்தம் பின்வருவனவற்றை உள்ளடக்கும்.*
கடல் கடந்த ஆதரவாளரினதும் வீட்டுப் பணிப் பெண்களினதும் விவரங்கள்;
ஒப்பந்தமானது எந்த நிபந்தனைகளின் கீழ் வழங்கப்பட்டனவோ அந்த நிபந்தனைகள்;
மாதாந்தச் சம்பளம்;
கடமைகளும் வேலை நேரமும்;
ஓய்வு நாட்களும் விடுமுறையும்
உணவு, தங்குமிடவசதி, மருத்துவப் பராமரிப்பு என்பவற்றை வழங்குவதற்கான பொறுப்பேற்பு;
வேலை பார்க்கப் போகும் நாட்டுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதியை ஏற்பாடுசெய்தல் தொடர்பான பொறுப்பேற்பு;
ஒப்பந்த முடிவுறுத்தலும் பிணக்கு நடவடிக்கை முறையும்;
காப்புறுதி மேவுகை, அத்துடன்
ஊழியர் இறக்கும் சந்த்ர்ப்பத்திலான ஏற்பாடு.
7.2.5 புலம்பெயரும் ஒளழயர்களின் நலன்புரியும் பாதுகாப்பும்
தொழிலாளரை ஏற்றுக்கொள்ளும் நாட்டில் புலம்பெயர்ந்த வேலையாட்களின் நலன்புரி விடயங்களை மேற்பார்வை செய்வதற்கென அந்நாடுகளில்
22
இதுவுமதுவே, பக். 17.
39

Page 25
பணியகத்தின் பிரதிநிதிகளாக நலன்புரி அலுவலர்களை நியமிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின் 21ஆம் பிரிவு ஏற்பாடு செய்கின்றது.
தற்போது லெபனான், துபாய், அபுதாபி, குவைத், றியாத், ஜெட்டா, ஜோர்தான், கட்டார், ஓமான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் நலன்புரி அலுவலர்கள் உள்ளனர்.?
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக சட்டத்தின் 22 ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட, நலன்புரி அலுவலர்களின் கடமைகளைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்:
(அ) தொழிலாளரை இறக்குமதி செய்யும் நாட்டில் இலங்கையர்களின்
வேலைவாய்ப்பை மேம்படுத்தல்;
(ஆ) இலங்கை ஊழியர்களின் நலனை மேம்படுத்தல்;
(இ) தொழில்தருநர்களுடனான பிணக்குகளைத் தீர்த்து வைத்தல் உட்பட,
இலங்கை ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்தல்;
(ஈ) இலங்கை ஊழியர்களின் முறைப்பாடுகளைக் கவனித்து பொருத்தமான நிவாரணங்களைக் காணுதல் அல்லது பணியகத்துக்கு பரிந்துரைகளைச் செய்தல்;
(உ) பணியகத்துக்கு அவ்வப்போது அறிக்கைகள் அனுப்புதல்
நலன்புரி அலுவலர்களுடன் மேலதிகமாக இலங்கையிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு புலம்பெயர்ந்த வேலையாட்களின் தொழில் நிலைமைகளைக் கண்காணிப்பதற்காக குவைத், லெபனான், ஓமான், சவூதி அரேபியா, சிங்கப்பூர், மற்றும் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தொழில் இணைப்பதிகாரிகளை நியமித்துள்ளது.* முறைப்பாடுகளை ஏற்றுக் கவனிப்பதே நலன்புரி அலுவலரின் பிரதான பணியாகும். 2000 ஆம் ஆண்டில் 7353 முறைப்பாடுகள் பெறப்பட்டன. 2000 ஆம் ஆண்டில் பெறப்பட்ட முறைப்பாடுகளின் தொகை விவரணம் 5 வது அட்டவணையில் தரப்பட்டுள்ளது
23
Supra. n.7, Luais. 10.
இதுவுமதுவே, பக். 17.
40

அட்டவணை 5: பெறப்பட்ட முறைப்பாடுகளின் வகைகள்
சம்பளம் கொடுக்கப்படாத சம்பவங்கள் 1779 ஒப்பந்த மீறுகை 1241 தொடர்பாடல் இல்லாமை 1720 தொந்தரவு 1407 கைவிடப்பட்ட உரிம விடயங்கள் 36 இறந்தோர் தொகை 108 ஏனையவை 1062 மொத்தம் 7353 தீர்த்து வைக்கப்பட்ட விடயங்கள் 58.35
மூலம்: இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வழங்கப்பட்ட
தற்காலிகத் தரவுகள்.
1999 ஆம் ஆண்டில் அறிக்கையிடப்பட்ட இறந்தோர் தொகை 116 ஆகும். 1999-2000 ஆம் ஆண்டுகளின்போது புலம்பெயர்ந்தோரிடையே நிகழ்ந்த மரணங்களின் தொகையில் ஏற்பட்ட மாற்றம் வெகு சொற்பமானதே. பெரும் கவலைக்குரிய விடயமான கூடுதலான தொகையினர் தொடர்ந்தும் இறப்பதன் காரணமாக, இலங்கைத் தூதரகத்துடன் இணைக்கப்பட்ட நலன்புரி அலுவலர்களின் செயலாற்றுகை பற்றி மதிப்பீடு செய்யப்பட வேண்டியதன் அவசியம் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகின்றது. துரதிஷ்டவசத்துக்குட்பட்ட ஒரு வீட்டுப் பணிப்பெண்ணால் பல தடவை முறைப்பாடு செய்யப்பட்டபோதும் இலங்கைத் தூதுவராலயத்திலுள்ள நலன்புரி அலுவலர் காலந்தாழ்த்தாது நடவடிக்கை எடுத்திருந்தால், 1999 செப்ரெம்பரில் குவைத்தில் இடம்பெற்ற இலங்கைப் பணிப்பெண்ணின மரணம் தவிர்க்கப்பட்டிருக்க முடியும் எனக் குற்றம் சாட்டப்பட்டது.* சமீபத்தில் இரண்டு நலன்புரி அலுவலர்களைத் திரும்ப அழைத்த சம்பவம் இவர்களால் வகிக்கப்படும் வினைத்திறமையற்ற பங்கினையே எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது.'
இலங்கை: மனித உரிமைகள் நிலை. 2000 (சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம், கொழும்பு, 2000), பக். 184. ஆசியாவின் புலம்பெயர்ந்தோர் ஆண்டு நூல் 2000, புலப்பெயர்வு மையம் (2000), Uë. 243.
Supra.. n. 7
26
4

Page 26
5 ஆம் அட்டவணையில் காணப்படும் “தொடர்பாடல் இல்லாமை” (lack of communication) Lobgjib '' 660)60Tu60)6' 616ip g(56160556f முறைப்பாட்டின் தன்மையைச் சுட்டிக் காட்டத் தவறியுள்ளமை பற்றி இங்கு குறிப்பிடலாம். இவ்விரு வகைகளும் முறைப்பாட்டின் விடயப்பொருளைச் சுட்டிக்காட்டும் உப வகைகளாகப் பிரிக்கப்பட வேண்டும்.
7.3 புலம்பெயர்வோரைப் பாதுகாப்பதற்கான அரசுசாரா நிறுவனத்
தலையீடுகள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான செயற்பாட்டு வலையமைப்பு (Action Network For Migration Workers-ACTFORM) (6dubGUJu uit Gg5Tĝ6oT6TTîræ56ff6őT பிரச்சினைகளைத் தீவிரமாக ஆராய்ந்து புலம்பெயர் தொழிலாளரின் நேர்க் கணிய, ஆக்கபூர்வமான அம்சங்களை ஆய்வதற்காகத் ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வலையமைப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினை பற்றி கவனஞ் செலுத்தி அதற்காகப் பாடுபடும் 23 அரசுசாரா நிறுவனங்களும் தனிநபர்களும் அடங்கியுள்ளனர். இவ்வலையமைப்பு அரசுசாரா நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தையும் ஏனைய சம்பந்தப்பட்ட அரசாங்க அமைச் சுக்களையும், ஊடகங்களையும் ஒருங்கிணைக்கின்றது. வலையமைப்பின் உறுப்பினர்கள் தகவலைச் சேகரித்துப் பரப்பி, அரச கொள்கை அமுலாக்கத்தைக் கண்காணித்து, கொள்கைச் சீர்திருத்தத்துக்காக உழைக்கின்றனர். இவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆலோசனை மற்றும் பரந்த நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதோடு, புலம்பெயர்ந்தோர், அவர்களின் குடும்பங்கள் மற்றும் திரும்பி வந்தோர் ஆகியோரின் நிலை பற்றி ஆராய்ச்சி செய்வதுடன் சட்ட உதவியும் வழங்குகின்றனர். இவ்வலையமைப்பு 2000 மார்ச்சில் ஆசியாவிலுள்ள புலம்பெயர்ந்தோர் மன்றத்தில் (MFA) உறுப்பினராக வந்துள்ளது.*
8. பரிந்துரைகள்
புலம்பெயர்வோரைச் சுரண்டலிலிருந்தும் துஷபிரயோகங்களில் இருந்தும்
பாதுகாப்பதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தலையீடு செய்துள்ளது. புலம்பெயர்ந்தோருக்கும் வெளிநாட்டு
28
Supra.. n.26, uds. 246-247.
42

தொழில்தருநர்களுக்குமிடையே பிணக்குகளைத் தீர்த்துவைப்பதில் நடுவராகத் தனது பங்கினை அது வகித்துள்ளது. பல வருட காலமாக பால், மனித சக்தி வகைகள், தொழிலாளரை இறக்குமதி செய்யும் நாடுகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் துஷபிரயோகம் போன்ற தலைப்புகளிலான தரவுகளை அது வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், மனக்குறை முகாமைத்துவம் பற்றிய விவரங்களும், வழங்கப்பட்ட நிவாரணங்கள் பற்றிய விவரங்களும் கிடைக்கவில்லை. குறிப்பிட்ட தலையீடுகளின் தாக்கத்தை அறிந்துகொள்வதற்கு அடிப்படை அல்லது மூலாதாரத் தரவுகள் அவசியமானவையாகும். எவ்வாறாயினும் அத்தகைய தரவுகளை உடனடியாகத் தற்போது பெறப்பட முடியாதுள்ளது.
புலம்பெயர்ந்தோர், அவர்கள் சென்று தொழில் புரியும் நாடுகளில் அனுபவித்த சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் பற்றிய ஆய்வுகளும் அவர்கள் திரும்பிவந்து எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய ஆய்வுகளும் கிடைக்கக் கூடியனவாகவுள்ளன. எவ்வாறாயினும் இவ்வாய்வுகளை வைத்துக் கொண்டு போக்குகளை வெளிக் கொணர்வதற்கான காலத்தொடர் பகுப்பாய்வுக்கு அவசியமான தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. இச்சூழ்நிலையில், புலம்பெயர்ந்தோரின் மனக்குறைகளைத் தீர்ப்பதற்கு அரச தலையீடுகளின் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கு வேண்டிய புள்ளிவிவரத் தகவலைச் சேகரிப்பதும் வகுப்பாக்கம் செய்வதும் அவசியத் தேவையாக வந்துள்ளது.
புலம்பெயரும் தொழிலாளர்களின் சகல விடயங்களுடன் தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய தேசியக் கொள்கையின் அடிப்படையை உருவாக்கும் பரிமாணங்கள் பற்றி அறிக்கையிடுவதற்கும் 1997 இல் சனாதிபதி செயலண்க் குழுவொன்று நியமனம் செய்யப்பட்டது. எனினும் செயலணிக் குழுவின் அறிக்கை ஒரு பொது ஆவணமாகப் பார்வைக்குக் கிடைக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்களிக் கும் புலம் பெயரும் தொழிலாளர்களினால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு அரசும், அரசுசார்பற்ற நிறுவனங்களும், ஆர்வமுள்ள ஆய்வாளர்களும் ஒத்துழைக்க வேண்டிய தேவை உள்ளது.
இச் சந்தர்ப்பத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நன்மை கருதி அரச தலையீட்டின் தாக்கத்தை அதிகரிப்பதற்காக பின்வரும் பரிந்துரைகள் செய்யப்படுகின்றன. அரசு, அரசுசாரா நிறுவனங்களும் ஆராய்ச்சியாளர்களும் ஒருங்கிணைய வேண்டும். ஏனெனில் புலம்பெயர் தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறிவதற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் இது மிகவும் முக்கியமானது.
43

Page 27
இச்சந்தர்ப்பத்தில் புலம்பெயர்ந்த வேலையாட்களின் நன்மைகருதி
அரச தலையீட்டின் தாக்கத்தை அதிகரிப்பதற்காகப் பின்வரும் பரிந்துரைகள் செய்யப்படுகின்றன:
(i)
(ii)
(iii)
(iv)
(i)
(ii)
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமானது பின்வரும் தரவுகளை வழங்கும் பொருட்டு புலம்பெயர்ந்தோர் மனக்குறைகள் பற்றிய அறிக்கையொன்றை ஆண்டுதோறும் வெளியிட வேண்டும்.
தாய்நாட்டிலுள்ள பதிவுசெய்யப்பட்ட முகவர் நிலையங்களுக்கூடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்ற முறைப்பாட்டாளர்களின் எண்ணிக்கை.
தாய்நாட்டிலுள்ள பதிவு செய்யப்படாத முகவர் நிலையங்களுக்கூடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்ற முறைப்பாட்டாளார்களின் தொகை.
மேலே () அத்துடன் (i) என்பவற்றின் கீழான முறைப்பாடுகளின் வகுப்பாக்கம்
முறைபபாடுகளின் வகைகளுக்கிணங்கத் தீர்த்து வைக்கப்பட்ட பிணக்குகளின் தொகையும் வழங்கப்பட்ட நிவாரணத்தின் தன்மையும.
புலம்பெயர்ந்த வேலையாட்களுள் வீட்டுப்பணிப் பெண்களே பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்ற காரணத்தினால் அவர் களர் வேலை பார்க் கும் நாடுகளில் அவர் களைப் பாதுகாப்பதற்கான ஒரு முற்காப்பு முறைமை வடிவமைக்கப்பட்டு தொழிற்படுத்தப்பட வேண்டும். அத்தகைய முறைமைக்குள் பின்வரும் அம்சங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்:
ஒவ்வொரு வீட்டுப் பணிப்பெண்ணுக்கும் தாம் தொழில் பார்க்கும் நாட்டில் பணியகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நலன்புரி அலுவலரின் முகவரியும், தொலைபேசி இலக்கமும் கொடுக்கப்பட வேண்டும். இதேபோன்று நலன்புரி அலுவலர் தமது நாட்டிலுள்ள வீட்டுப் பணிப்பெண்களின் முகவரிகளையும் தொலைபேசி இலக்கங்களையும் வைத்திருக்க வேண்டும்.
ஓர் அவசர நிலைமையின்போது ஒவ்வொரு வீட்டுப் பணிப்பெண்ணும் நலன்புரி அலுவலருடன் தொடர்புகொள்ள வேண்டும். அவர்களுக்குக் குறிப்பிடத்தக்க மனக் கவலை எதுவும் இல்லை என்பதைக்
44

(iii)
(iv)
(v)
காட்டுவதற்காக மூன்று மாதங்களுக்கொரு தடவையாவது அலுவலருடன் தொடர்பு கொள்ளவேண்டும்.
வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கேட்டுக்கொள்ளப்பட்டவாறு நலன்புரி அலுவலருடன் தொடர்பு கொள்ளத் தவறினால், நலன்புரி அலுவலர், (அவசியமாயின் பணிப்பெண் பணிபுரியும் நாட்டின் சம்பந்தப்பட்ட அரச அலுவலரின் உதவியுடன், தேவைப்படும் தகவலைத் தெரிவிக்கத் தவறியமைக்கான காரணங்களைக் கண்டறிவதற்காக அவ்வீட்டுப் பணிப்பெண்ணுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
துஷபிரயோக அச்சுறுத்தலின்கீழ் வீட்டுப் பணிப்பெண்ணொருவர் இருப்பாராகில் அவ்வீட்டுப் பணிப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கு நலன்புரி அலுவலர் காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டுப் பணிப்பெண்ணுக்கு அவசியமாயின் சட்ட உதவி வழங்கப்பட வேண்டும் நலன்புரி அலுவலர் இந்நோக்கத்துக்காக அவர் வேலைசெய்யும் நாட்டிலுள்ள சட்டத்தரணி ஒருவரின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் போலித்தனமாகத் தொழிற்படுகின்ற, உரிமமளிக்கப்படாத வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை ஊக்கங்கெடுக்கும் ஒரு மேலதிக வழிவகையாக, இலங்கையில் தொழிற்படும் சட்டவிரோத முகவர் நிலையங்களுக்கூடாக வீட்டுப் பணிப்பெண்கள் இறக்குமதி செய்யப்படுவதனைத் தடைசெய்யுமாறு சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசாங்கங்களை எமது அரசாங்கம் கேட்டுக்கொள்வதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பாக, பதிவுசெய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் பட்டியல் ஒன்று தொழிலாளரை இறக்குமதி செய்யும் ஒவ்வொரு நாட்டினதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிடைக்கச் செய்தல் வேண்டும்.
புலம்பெயர்ந்தோர் வேலைசெய்யும் நாடுகளில் அவர்களுக்குள்ள உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்கள் பற்றிய போக்குகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான தரவுகளை வழங்குவதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அதற்கெனப் பொருத்தமான சாதனங்களைப் பயன்படுத்தி திரும்பி வருவோரில் ஒரு சிலரின் மதிப்பீடொன்றை வருடாந்தம் கொண்டு நடாத்த வேண்டும். அத்தகைய மதிப்பீடுகளின் முடிவுகள், ஆராய்ச்சியாளர்களால் மேலும் ஆராயப்படுவதற்கு வசதியாக வெளியிடப்படுதல் வேண்டும்.
45

Page 28
(9)
(ஆ)
9.
எச்.ஐ.வி.எயிட்ஸ் மனித உயிர்வாழ்வுக்கும் பெரும் சவாலாக இருப்பதனால் பின்வருவன தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்:
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் தனிப்பட்ட சுகாதாரத்துக்கும் எச்.ஐ.வி/எயிட்ஸ் கல்விக்கும் கூடுதலான கவனஞ் செலுத்தப்பட வேண்டும்;
புலம்பெயர்ந்து திரும்பிவந்த ஆண், பெண் ஆகிய இருபாலாரும், தனிப்பட்ட அந்தரங்கத்தை உறுதிப்படுத்தும் நிலைமைகளின்கீழ், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுவதற்கான வசதிகளை அவர்களுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
வங்கிகள் கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ் பதிவு செய்வதற்கான ஆரம்பச் செலவுகளையும் ஏனைய செலவுகளையும் சமாளிப்பதற்காகப் புலம்பெயர்ந்த வேலையாளர்களுக்கு கடன் வழங்குமாறு ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் புலம்பெயர்ந்தோர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடும் நோக்கத்துக்காகவும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகை களைக் கண்டறிவதற்காகவும் வருடாந்த மாநாடொன்றை ஒழுங்குசெய்ய வேண்டும். எமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்கும் தேசிய முயற்சியின் ஒரு பாகமாக, கிடைக்கக்கூடிய மூலவளங்களை ஒன்று திரட்டுவதனை வசதி செய்யுமுகமாக சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும், அரசுசாரா நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஆராய்ச்சியாளர்களும் இத்தகைய மாநாட்டில் பங்குபற்றுமாறு அழைக்கப்பட வேண்டும்.
(!pl് ഖ| ഞ]്
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுள் சிலர் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருக்கிறார்கள். இலங்கையிலுள்ள நீதி நேர்மையற்ற வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களினால் அவர்கள் சுரண்டப்படுகிறார்கள். இவர்கள் சென்று வேலைசெய்யும் நாட்டில் பாரபட்சத்துக்கு அல்லது துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தேர்ச்சியற்ற பெண் தொழிலாளரைப் பொறுத்த
46

வரை மனிதாபிமானப் பிரச்சினைகள் பெரும் பாரதூரமானவையாகும். திரும்பி வருபவர்களிற் பலர் எமது நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவதில்லை. சிலருக்கு சமூக மற்றும் உளவியல் புனர்வாழ்வு அவசியமாகின்றது.
அரசானது புலம்பெயர்ந்த வேலையாட்களைப் பாதுகாப்பதற்கான பல வழிவகைகளை ஆரம்பித்துள்ளது. எவ்வாறாயினும் மனக்குறையுள்ள புலம்பெயர்ந்தோருக்கு நிவாரணம் வழங்குவதற்கு எடுக்கப்படும் வழிவகைகள் வலியுறுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது. மனக்குறை முகாமைத்துவம் என்பது ஒரு தேசிய அக்கறையுள்ள விடயமாதலின், துஷ்பிரயோகத்தைத் தடுத்தல், பிணக்குகளைத் தீர்த்துவத்ைதல், பலியானவர்களின் புனர்வாழ்வு போன்ற விடயங்களில் மிகவும் வினைத்திறன்மிக்க அணுகுமுறைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துக்காக அளவீடுகளை நடாத்துவதிலும் முடிவுகளைப் பகுப்பாய்வு செய்வதிலும் அரச முகவர் நிலையங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், மற்றும் அக்கறையுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
பல சர்வதேச சாதனங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து நிற்கின்றன. எவ்வாறாயினும், தொழிலாளரை இறக்குமதி செய்யும் நாடுகள் இச் சாதனங்களை ஏற்றங்கீகரிக்கத் தவறினால் தொழிலாளரை ஏற்றுமதிசெய்யும் நாடுகளும் சர்வதேச சமூகமும் சம்பந்தப்பட்ட சாதனங்களில் விதிக்கப்பட்ட தராதரங்களுக்கு இணங்கி ஒழுகுமாறு அத்தகைய நாடுகளைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதைக் கவனிக்கவேண்டும். மேலும் இச்சாதனங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளினால் ஏற்றங்கீகரிக்கப்பட்டாலும், அவை சம்பந்தப்பட்ட நாடுகளின் உள்ளுர் சட்டத்துக்குள் இடம்பெறச் செய்யப்படும் வரைக்கும், வெறும் அழுத்தத்தைக் கொடுக்க முடியுமே தவிர அதற்கப்பால் சென்றுவிட முடியாது.
47

Page 29


Page 30


Page 31
○○エ cm ● 7の 三、 、
gigarctic sig),
王s,GusGuß。 losions தரப்பட்டிரு CDIÓGLLILL gyjTalai
ਹੁੰ
|33
○。
GrossGJ (69228, 68 óGGTGGGö: St Caleure Gogolf - http://ww
PRINTED BYERS
 
 

*' 、 @s 。
UPIUGEI @(
கும் リ。 (Overvie
V) 王sLL
ー○cm © Dinasoeso.
Lapan
3
தொலைந: 686,343
"stadminosine an Society ruso
ISBN 55-90627
OLCOATE De TET - 'ー