கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பங்கேற்பு அபிவிருத்தி

Page 1
வில்பிரட் கரு ன
 

எாரத்ன

Page 2

t
o
ܓ̣ܠ ().
மொழி பெயர்ப்பு
பொதுசன 1y1903. D unitsun ast.
வில்பிரட் கரு ணாரத்ன
தலைவர்
பீடா நிறுவ எம்
ஒ. ஆறுமுகம்
1995

Page 3
வில்பிரட் கருணாரத்ன
ISBN 955-95.435-1-2
முதல் பதிப்பு 1995
அட்டைப்படம்
ஓவன் வீரக்கொடி
அனுசரணை
இலங்கை கனடா அபிவிருத்தி நிதியம்
 
 
 
 

சாதி வே
ருபக்தியுடன் இந்நூல்

Page 4
枋,
蛇
XVI
*
 

அறிமுகம்
1978 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஒரு நாள் பொரளை கிராம அபிவிருத்தி பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்றேன். கிராம அபிவிருத்தியில் புதிய பிரவேசம் என்ற கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்கான கடிதம் கிடைத்தமையாலேயே நான் அங்கு சென்றேன். இக்கடிதம் எவ்வாறு எனக்கு கிடைத்தது என்பது பற்றி எனக்குத் தெரியாது. என்னுடைய பெயர், விலாசம், வேலை செய்யும் இடம் ஆகியவற்றை அறிந்த எவரேனும் அக்காரியாலயத்தில் இல்லை. இதற்கு முன்பு ஒரு நாளும் நான் அக்காரியாலயத்திற்கு சென்றதுமில்லை.
எது எவ்வாறெனினும் கிராம அபிவிருத்தி சம்பந்தமாக எனது ஆழமான அனுபவம் இருந்தமையால் குறிப்பிட்ட நேரத்திற்கு நான் அங்கு சென்றேன். கலந்துரையாடலில் பலர் பங்கு கொள்வார்கள் என்று எண்ணியிருந்தேன். எனினும் நான் மாத்திரமே அங்கு இருந்தேன். நான் அங்கு சென்ற சிறிது நேரத்தில் அங்கு இருந்த அதிகாரி ஒருவர் நான் நேர்முகப்பரீட்சைக்காகவா வந்துள்ளேன் எனக் கேட்டார். அதற்காக நான் வரவில்லை என்றும் கலந்துரையாடல் ஒன்றுக்காக கடிதம் வந்தது பற்றியும் அதற்காகவே வந்துள்ளதாகவும் கூறினேன். புதிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமானவர்களைத் தெரிவு செய்ய ஒரு நேர்முகப் பரீட்சை நடக்க இருப்பதாகவும் அதற்காகவே நானும் அழைக்கப்பட்டுள்ளேன் எனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார். நேர்முகப்பரீட்சைக்காக நான் எவ்விதமான ஆயத்தமும் செய்திருக்கவில்லை.

Page 5
சிறிது நேரத்தில் தேசிய உடை அணிந்த ஒருவர் அறை ஒன்றிலிருந்து வெளியே வந்தார். பருமனில் பெரிதாக இல்லாவிட்டாலும் மிகவும் கவர்ச்சிமிக்க ஆளுமையுடைய நபர் அவர். அவரோடு அங்கு சிரேஷட நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய திரு. வீ. சீ. பீ. உனந்தென்ன அவர்களும் இருந்தார். திரு. உனந்தென்னவுடன் இதற்கு முதல் ஒரு போதும் கதைத்திருக்காவிட்டாலும் அவர் காலி அரசாங்க அதிபராக கடமையாற்றிய காலம் முதல் அவரை நான் அறிந்திருந்தேன். அப்போது திரு. உனந்தென்ன அவர்கள் கிராம அபிவிருத்தி ஆராய்ச்சி சபையின் தலைவராக இருந்ததோடு இலங்கை நிர்வாகப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்தார். சிறிது நேரத்தில் நான் உள்ளே அழைக்கப்பட்டேன். இலங்கையின் கிராம அபிவிருத்தி பற்றி நீண்டநேரம் என்னோடு கலந்துரையாடப்பட்டது. கிராம அபிவிருத்தி தொடர்பாக இவர்களால் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் நான் அறிந்த அளவில் விடை அளித்தேன். இந்நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்ட விதம், விபரங்களைக் கேட்ட தன்மை, கலந்துரையாடலை கட்டியெழுப்பிய முறை என்பன பற்றி என்னுள் ஒரு சிறந்த அபிப்பிராயம் ஏற்பட்டது. இதனாலேயே கிராம அபிவிருத்தி தொடர்பாக மேலும் விபரங்களைத் தேடிப் பெறுவதற்கு என்னுள் ஒரு ஆர்வமும் ஏற்பட்டது.
1978 ஆகஸ்ட் 12 ம் திகதி மேலும் ஒரு கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டிருந்தேன். இந்த கலந்துரையாடலுக்கு இந் நடவடிக் கைகளை மேற்கொள்வதற்காகத் தெரிவு செய்யப்பட்ட மேலும் 22 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இக்குழுவில் நானும் ஒருவன். முன்னையத்தினத்தன்று தேசிய உடையில் கிராம அபிவிருத்தி தொடர்பாக என் மனதில் பெரும் ஆர்வத்தினை ஏற்படுத்திய அப்பிரியமிக்க நபர் ஜி. வி. எஸ். த. சில்வா பெருமகனார்
என்பதை நான் அறிந்து கொண்டது அன்றைய

கூட்டத்திலேயாகும். இலங்கையில் பங்கேற்பு கிராம அபிவிருத்தி தொடர்பாக முதன் முதலாக பரீட்சித்து பார்க்கப்பட்ட "மாற்று முகவர்' வேலைத்திட்டத்தினை உருவாக்கியவர் என்ற வகையில் அவர் இந்த வேலைத்திட்டத்தில் பங்கு பற்றினார். இலங்கையின் மாற்று முகவர் வேலைத்திட்டம் ஆரம்பமாகிய 1978 ஆகஸ்ட் 28ம் திகதி முதல் 1980 நவம்பர் 25ம் திகதி அவர் காலமாகிய நாள் வரை நான் அவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகினேன். அவருடைய முன்மாதிரியான வாழ்க்கையைப்பற்றி மீட்டுப் பார்ப்பதற்கு இங்கு முயற்சி எடுத்துள்ளேன். ஜி வி எஸ் 1928ம் ஆண்டில் பிறந்தவர். அவருடைய தந்தையார் உயர் நீதிமன்ற நீதி அரசராக இருந்ததுடன் சட்டக் கல்லூரியின் அதிபராவும் கடமையாற்றியவர். கொழும்பு ரோயல் கல்லூரியில் உயர்கல்வி பெற்ற ஜி வி எஸ் அங்கு அதி சிறந்த மாணவன் என்ற பரிசையும் பெற்றார். புலமைப் பரிசில் ஒன்றைப் பெற்று இலங்கை பல்கலைக்கழக பிரவேசத்தைப் பெற்ற அவர் தங்கப் பதக்கத்துடன் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினார். பொருளாதாரத்தில் கெளரவ பட்டத்தை அதி உயர்ந்த நிலையில் பெற்றமைக்காக அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றிய ஜி வி எஸ் கலாநிதிப்பட்டம் பெறும் பொருட்டு (லண்டன் ஸ்கூல் ஒவ் எக்கனோமிக்ஸ்) (London School of Economics) g) Giv GB3FiTjög gifbgorTir. 1950, 1951 geg அவர் இங்கிலாந்தில் கழித்த போதும் அவருக்கு கலாநிதிப்பட்டம் பெறுவது பற்றி அவ்வளவு அக்கறை இருக்கவில்லை. ஏதாவது ஒரு குறிப்பிட்ட விடயத்தைப் பற்றிய அறிவிற்கு மாத்திரமே மட்டுப்பட்ட கலாநிதிப்பட்டத்தை விட ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத முழு சமூக அமைப்பிற்குமே தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்கள் சம்பந்தமாக பிரயோகரீதியானதும் கோட்பாட்டு ரீதியானதுமான ஆழமான விளக்கத்தைப் பெற்றுக் கொள்வதே அவரது இலட்சியமாக அமைந்தது.

Page 6
பொதுவுடமை, சமவுடமை, உலக அரசியல் அபிவிருத்தி போன்ற விடயங்களைப் பற்றி மிகவும் ஆய்வு மிக்கதான கற்கைகளை மேற்கொள்வது அவரது நோக்கமாக அமைந்தது. லண்டன் சென்ற ஜீ வி எஸ் சீனாவிற்கும் இந்த நோக்கத்துடனேயே சென்றார். புரட்சிக்கு பின் முதன்முதலாக சீனாவிற்குச் சென்ற இரண்டு மூன்று இலங்கையர்களில் ஜீ வி எஸ் ஒருவராவார். இலங்கையுடன் எவ்வித அரச ரீதியான தொடர்புமற்ற, கம்யூனிஸத்தை மிகவும் பயங்கரமானது எனக்கருதப்பட்ட, சீன, இரஷ்யாவைப்பற்றி கனவில் கூட நினைக்காத ஒரு காலகட்டத்தில், சீனாவிற்கான ஜீ வி எஸ் இன் விஜயமானது வரலாற்று முக்தியத்துவமானதாகும்.
உயர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொள்ளாததால்
இலங்கை திரும்பிய ஜி வி எஸ் இற்கு தொழில் இல்லாமல் போனது. இவ்வாறு 1954 இல் பல்கலைக்கழகத்திற்கு விடை கொடுத்த ஜி வி எஸ் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டலானார். பல்கலைக்கழக மாணவராக, 1947 இல் நடைபெற்ற முதல் பாராளுமன்றத் தேர்தலுக்காக ஜீ வி எஸ் அனுராதபுரத்திற்குச் சென்றார். அங்கு அவர் சென்றமை லங்கா சமசமாஜக் கட்சியில் போட்டியிட்ட சாதாரண வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உதவி புரிவதற்கேயாகும். அவர் ஆரியவன்ஸ குணசேகர ஆவார். இவர் பீ. பீ. புலங்குலம மகாதிசாவையை எதிர்த்துப் போட்டியிட்டார். புலங்குலம திசாவை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான பிரமுகராவார். மேல்நாட்டைச் சேர்ந்த அரச பரம்பரையின் பிரபுவாகிய அவர் சமூக, பொருளாதாரரீதியிலும் புகழ்மிக்க
ஒருவராவார். இதைப் பற்றி மிகவும் தெளிவாகப்
புரிந்துகொண்டு போட்டி யிட்ட ஒரு சாமானியன் சார்பாக ஜீ
வி எஸ் போராடினார். தேர்தலில் ஆரியவன்ஸ் குணசேகர
தோல்வியுற்றார். ஜி வி எஸ் இற்குத் தேவை தேர்தல் வெற்றியல்ல, சவால்களுக்கு பயமின்றி முகம் கொடுப்பதே ஆகும். ஆரியவன்ஸ குணசேகர இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் ஆரம்பகர்த்தா ஆவார். (இது இலங்கையின்
ஆகப்பழைய விவசாயிகள் அமைப்பாகும்)

1956 தேர்தலில் ஜீ வி எஸ் இன்னுமொரு சாமானியனுக்காக முன்வந்தார். அது மத்திய கொழும்புத் தொகுதியில் மக்கள் ஐக்கிய முன்னணியில் போட்டியிட்ட சாமானியனான தபால் தொழிலாளிக்காகவேயாகும். தொழிற்சங்கவாதியும் பொது மக்கள் பிரதிநிதியுமான அவர் எம். எஸ். தேமிஸ் ஆவார். திரு. தேமிஸ் சில்வாவின் சார்பில் ஜி வி எஸ் தேர்தல் களத்திற்குச் சென்றார். வெறுமனே செல்லவில்லை. தேர்தல் தினத்தன்று திரு. தேமிஸ் சில்வாவின் தேர்தல் பிரதிநிதியாக ஜீ வி எஸ் கடமையாற்றினார். திரு. தேமிஸ் சாதாரண தபால் தொழிலாளியான போதிலும் ஒரு அமைச்சர், ஒரு தூதுவர், ஒரு G3 LDuri, ஆகியோரைத் தோற் கடித் து பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றார். தேர்தல் நியமனப்பத்திரம் வழங்கிய நாள் முதல் தேர்தல் முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் வரை ஜீ வி எஸ் திரு. தேமிஸ் உடனேயே இருந்தார்.
1956 தேர்தலில் மக்கள் ஜக்கிய முன்னணி பெருவெற்றி பெற்றது. திரு. பண்டாரநாயக்கா பிரதம மந்திரியானார். அவ்வரசாங்கத்தின் விவசாய உணவு அமைச்சராக திரு. பிலிப் குணவர்தன நிமிக்கப்பட்டதுடன் ஜீ வி எஸ் அவரது செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அப்போது ஜிவி எஸ் 28 வயதுடையவராக இருந்தார். வயதில் குறைந்தவராக இருந்தாலும் அவருக்கு பல்வேறு விடயங்கள் தொடர்பாக இருந்த நடைமுறை அறிவும் கோட்பாட்டு ரீதியான அறிவும் ஒப்பிடமுடியாதவையாகும். மாக்ஸியவாத கோட்பாடு, தேசிய கலாச்சாரம், விவசாய பொருளாதார முறை, வறிய கிராம மக்கள் போன்றவை தொடர்பான புதிய எண்ணக்கருத்துக்கள் கோட்பாடுகள் என்பவற்றில் பூரணத்துவம் பெற்றிருந்தார். அரசாங்க மூலமாக கிராம மக்களுக்கு சிறந்த சேவையாற்ற ஜிவி எஸ் இற்கு புதிய பதவி பெரும் உதவியாக அமைந்தது. இலங்கை, விவசாய மக்களுக்கு அரசாங்கத்துறையின் கூடிய ஈடுபாடு ஏற்பட்டமை பிலிப் குணவர்தன - ஜீ வி எஸ் கூட்டினாலாகும். இக்கூட்டின் பெறுபேறாக அமைந்தது 1957 இல் உருவாக்கப்பட்டு அறிமுகமான நெற் காணிச் சட்டம் ஆகும். இது இலங்கை வரலாற்றில் அமரத்துவமான ஒரு செயலாக அமைந்தது.

Page 7
இலங்கையின் வறிய குத்தகை விவசாயிகளின் மனதிலே என்றுமே மறக்கமுடியாத ஒரே ஒரு சட்டமாகஇருப்பது "நெற்காணிச் சட்டம்". இலங்கைக் கிராமிய சமூக, பொருளாதார அமைப்பில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திய "நெற்காணிச்சட்டம்” விவசாய சமூகத்திலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அதேபோலவே பிலிப் ஜிவி எஸ் கூட்டினால் உருவாகிய பலநோக்குக் கூட்டுறவு சங்கங்கள் கிராம மக்களை அபிவிருத்தியில் பங்குதாரராக ஆக்கிய சிறந்த ஒரு முயற்சியாகும்.
1956 தொடக்கம் 1977 வரை ஆட்சியிலிருந்த சகல முற்போக்கு அமைச்சர்களும் ஜி வி எஸ் இன் சேவைகளைப் பெற்றுக் கொண்டனர். பிலிப் குணவர்தன, டி, பி. இலங்கரத்ன, கொல்வின் ஆர். டி. சில்வா ஆகிய
அமைச்சர்களுடன் ஜி வி எஸ் மக்களுக்கும் சேவையாற்ற
வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பினாலேயே சேர்ந்து இயங்கினார். 1960 களின் முதல் அரை தசாப்த காலத்தில் தனியாருக்குச் சொந்தமாக இருந்த முக்கிய நிறுவனங்களை அரசாங்க கூட்டுத்தாபனங்களாக மாற்றி அவற்றை பொதுச் சொத்துக் களாக மாற்றுவது அப் போது ஆட்சியிலிருந்தவர்கள் நடைமுறைப்படுத்திய முக்கியமான கொள்கை மாற்றமாகும். வர்த்தக, பொருளாதாரத்துறையில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த அடிப்படையாக அமைந்த இந்நடவடிக்கையானது இலங்கை கடுமையான நெருக்குதலுக்கும் ஆளாகக் காரணமாக அமைந்தது. முதன்முதலாக அரச கூட்டுத்தாபனமாக மாற்றிய தொழில் முயற்சிகள் காப்புறுதியும் எண்ணெய் விநியோகமுமாகும். இதற்காக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் அரச எண்ணெய் கூட்டுத்தாபனமும் அமைக்கப்பட்டன. எண்ணெய் விநியோகத்தை அரச கூட்டுத்தாபனமொன்றிற்கு ஒப்படைத்தமையால் அமெரிக்கா பெரும் கோபத்திற்குள்ளாகியது. அப்போது இலங்கையில் எண்ணெய் விநியோகத்தை எஸ்ஸோ, கால்டெக்ஸ், ஷெல்
போன்ற பரிரதான வர்த்தக நிறுவனங் களே
மேற்கொண்டிருந்தன.
W6
 

எண்ணெய் விநியோகத்தை அரச கூட்டுத்தாபனம் மூலம் மேற்கொள்வதாக இருந்தால் இலங்கைக்குக் கொடுக்கப்படும் அமெரிக்க உதவிகளை நிறுத்தவேண்டிய நிலை ஏற்படலாமென அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டார். எனினும் அரசு துணிந்தது. அமெரிக்க உதவிகள் நிறுத்தப்பட்டாலும்கூட எண்ணெய் விநியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அரசு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இவ்வாறான கடுமையான சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டியிருந்த முயற்சிகளுக்கு ஆரம்பத்தின் போது பலமிக்க அத்திவாரம் இட்டது ஜி வீ எஸ் ஆகும். இவ்விரு கூட்டுத்தாபனங்களையும் பிரபல்யமான அரச கூட்டுத்தாபனங்களாக உருவாக்க இவர் மேற்கொண்ட முயற்சிகள் அளவிடமுடியாதவைகளாகும்.
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தோடும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையோடும் தொடர்பு கொண்டிருந்த ஜீ வீ எஸ் அவை செல்லும் வழியில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் முதன்மையானவரானார். அவர் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம். இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச்சபை ஆகியவற்றின் தலைவராகவும் கடமையாற்றினார். இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், இலங்கை எண்ணெய்க் கூட்டுத்தாபனம் மற்றும் மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் ஆரம்ப காலத்தில் கடமையாற்றிய அனைவரும் அவருக்கு தமது கெளரவத்தையும் பக்தியையும் செலுத்துவர். 1956 இல் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட மக்கள் ஐக்கிய முன்னணியில் அமைச்சராக பதவிவகித்த திரு. பிலிப் குணவர்தன போன்ற முற்போக்காளர்களுக்கு தமது கொள்கைகளை நிறைவேற்றக்கூடிய அளவிற்கு அரசாங்க சேவையில் பொருத்தமானவர்களை தெரிந்தெடுப்பது பெரும் பிரச்சனையாகியது.

Page 8
1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்தபோதிலும் 1956 வரை நடைபெற்றதெல்லாம் வெள்ளையர்களுக்கு பொருத்தமான ஆட்சியேயாகும். இந்த நிலையிலிருந்து விடுபட்டு புதிய சிந்தனை ஓட்டத்தோடு நாட்டை முன்னெடுத்துச்செல்லக்கூடிய கோட்பாடு ரீதியாகவும் பிரயோக ரீதியாகவும் அறிவு ஆற்றல்மிக்கவர்களை தேடுவது என்பது கடினமான காரியமாகும். இவ்வகையில் ஜீ வீ எஸ் பிலிப்குணவர்த்தன அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அபூர்வ மனிதராவார்.
1979 இன் பின் ஜி வி எஸ் தென்னை அபிவிருத்திச் சபையின் பிரதான பொருளாதார ஆலோசகராக விளங்கினார். தேங்காய் உற்பத்தியில் புதிய வழி முறையை ஏற்படுத்திய இவ் யுகத்தில் தென்னை உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சிறு உற்பத்தியாளருக்கும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்த முதல் தடவை இதுவாகும்.
ஜீ வி எஸ் மார்சியவாதத்தை ஆழமாகவும் விமர்சன ரீதியாகவும் கற்றறிந்த இலங்கையர் சிலரில் ஒருவராவார். மிக நுணுக்கமாக மார்க்ஸியவாத்தைக் கற்றிருந்தார். எனினும் அவர் அந்தப்பார்வையோடேயே மூழ்கியிருக்கவில்லை. அவரது முழு அறிவு ஆற்றல் அனைத்தையும் ஒன்றுதிரட்டி புதியதோர் நோக்கில் ஆய்வொன்றினை 1977 இல் ஆரம்பித்தார். இக்காலப்பகுதியில் ஜி வீ எஸ் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு நிறுவனங்களின் ஆலோசகராக கடமையாற்றினார். இவ்வாய்வானது அந்த ஆலோசனை சேவையோடும் தொடர்புடையதாகும்.
மரபுவழி அபிவிருத்தி அணுகுமுறைக்குக் கட்டுப்பட்டு பல்வேறு பிடிகளுக்கும் சுரண்டலுக்கும் ஆளாகி உள்ள தெற்காசிய வறிய கிராமங்களின் அபிவிருத்திக்காக மாற்று அபிவிருத்தி முறை ஒன்றினைக் கண்டுபிடிப்பதே இந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். இந்த ஆய்வானது நான்கு

ஆசிய சமூக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டது. இக்குழுவில் ஜி வி எஸ் ஸும் அடங்கி இருந்தார். இவர்களால் ஆசியாவின் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி மக்களை மையமாகக்கொண்ட மாற்று அபிவிருத்தி முறைமை ஒன்றிற்கு கிராமியத் துறையிலே இன்னும் வாய் ப் புக் களை பயன்படுத்திக்கொள்ளமுடி யும் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சமூக விஞ்ஞானிகள் குழு இந்தியாவின் மகாராஷ்ரா மாநில "தாநா" எனும் பிரதேசத்தில் இயங்கிய "பூமிசேனா” இயக்கம் பற்றி மிகவும் ஆழமான ஆய்வை மேற்கொண்டது. மக்களை அமைப்பிற்குட்படுத்துவதன் மூலமும் அவர்களின் சுயசக்தி பங்கேற்பு இரண்டையும் ஒன்றாக்குவதன் மூலமும் மாபெரும் பொதுமக்களின் சக்தி ஒன்றினைக் கட்டி எழுப்பமுடியும் என இச்சமூக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தென்னாசியாவில் கிராமிய வறிய மக்களால் அவர்களது சுய சக்தியால் கட்டி எழுப்பப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சிலவற்றிக்கு அடிப்படையாக அமைந்த காரணங்களை இக்குழு மிகவும் நுணுக்கமாக அலசி ஆராய்ந்தது. மார்க்ஸியவாத பார்வையைக்கொண்ட ஜி வீ எஸ் அதன் மூலம் கிராமமக்கள் மத்தியில் அமைதியான புரட்சியை ஏற்படுத்த பெருமுயற்சி செய்தார். வறிய கிராம மக்கள் மத்தியில் ஆக்க சக்திக்கு உயிர்கொடுப்பதன் மூலம் மக்கள் அபிவிருத்தி இயக்கம் ஒன்றினை மேற்கொள்ள கிராமிய ஆசியாவின் பொருத்தமான சூழலை மிகவும்
வேட்கையுடன் இவர் நோக்கினார்.
ஏனைய சமூக விஞ்ஞானிகளுடன் மிகவும் நெருக்கமாக விபரங்களை தேடி ஆராய்ந்ததன் பெறுபேறாக பின்வரும் நான்கு முக்கிய அம்சங்களை அவர் முன்வைத்தார்.

Page 9
1. அபிவிருத்தி நடவடிக்கைகள் தனியே உற்பத்திக்கும் சமூகசேவை நலன் நடவடிக்கைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படாது மானிட அபிவிருத்திக்கும் இடமளிக்கப்படல் வேண்டும். மக்களிடம் இயற்கை யாகவே உருவாகும் ஆக்கத்திறன் எழுச்சிபெறல் மூலம் அவர்களுக்கு தேவையான அபிவிருத்தியை அவர்களே அடைந்துகொள்ள முடியும்.
2. கிராமிய மக்களை ஒருபொதுப் பிரிவாக எடுக்கக்கூடாது. நாம் நினைப்பதைவிட அது ஏற்றத்தாழ்வானது. அவ்வகையில் அபிவிருத்திக்காக வறியமக்கள் நேராக அடையாளம் காணப்பட்டு அவர்கள் வேறாக ஒழுங்கமைக்கப்பட இடமளிக்கப்படுதல் அவசியம்.
3. வறிய மக்கள் தனியாக அடையாளம் காணப்படும் போது சுயமான இடையீடு மூலம் அது இடம்பெற வேண்டும்.
4 சுயமான இடையீடு கிராம மட்டத்தில் இடம்பெற வேண்டுமாயின் அதற்காகப் பயிற்சிபெற்ற மாற்று முகவர்கள் அல்லது கிராமிய மட்டத்திலான இடையீட்டாளர்கள் அவசியம். அவர்களைப் பயிற்றுவிக்க சிறந்த பயிற்சிபெற்ற அதற்காக அர்ப்பணிக்கக் கூடிய பயிற்றுநர் குழுவொன்று அவசியம்.
ஜி வி எஸ் அபிவிருத்தி தொடர்பாக உருவாக்கிய புதிய எண்ணக்கருவை நடைமுறையில் செயற்படுத்துமுகமாக இலங்கை சமூக விஞ்ஞானியாகிய கலாநிதி பொன்னா விக்னராஜாவுடன் இணைந்து இலங்கை அரசாங்க ஈடுபாட்டுடன் 1978ல் "மாற்று முகவர் வேலைத்திட்டம்" ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் இலங்கை நிர்வாக பயிற்சி நிறுவனம், கிராம அபிவிருத்திப் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இவ்வாறான மாற்று அபிவிருத்தி முறையொன்று அரச இயந்திரத்தினூடாக அமுலாக்கப்படும் போது சிற்சில தடைகள் ஏற்படும் என்பது காலம் செல்லச் செல்ல புரிந்துக்கொள்ளப்பட்டது. ஏனெனில் ஏனைய அரச வேலைத்திட்டங்களுக்குரிய சட்டதிட்டங்கள் இதற்கும் பிரயோகப்படுத்தப்பட்டமையாகும். வேலைத்திட்டத்திற்கு இருக்கவேண்டிய சுதந்திரம், நெகிழ்வுத்தன்மை, யதார்த்த பூர்வமாக மக்களிடம் விடயங்களை கலந்துரையாடுதல் தொடர்பான சுதந்திரம் என்பனவற்றை தொடர்ந்தும் அரச அமைப்பினுாடாக எதிர்பார்க்க முடியுமா? வேலைத்திட்டம் அமுலாக்கப்படும்போது அரச இயந்திரத்தின் மூலம் தடைகள் ஏற்படலாம் எனக் கருதப்பட்டு மிகவும் சுதந்திரமான அரசு σπίτιμήbp அமைப்பொன்றை நிறுவத்தீர்மானிக்கப்பட்டது. இது 1980 இலாகும்.
52 வயதடைந்த ஜி வி எஸ்ஸின் இறுதி முயற்சியும் ஆய்வும் "பீடா" நிறுவனமாகும். பீடா நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அமைக்கப்பட்டது 1980 நவம்பர் 4 ஆம் திகதி ஆகும். ஜி வி எஸ் காலமாகியது 1980 நவம்பர் 25 இல் ஆகும். அவரால் ஏற்றப்பட்ட விளக்கின் ஒளியாக எழுச்சிபெற்ற பீடா நிறுவனத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை அவதானிக்க அவர் உயிர் வாழாவிட்டாலும், 1978 இல் அவரால் ஆரம்பிக்கப்பட்ட "பங்கேற்பு அபிவிருத்தி" செயல்முறையானது சகல அரச திணைக்களங்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள், மற்றும் மக்கள் அமைப்புக்களால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
யசக்தி, பங்கேற்பு, மக்கள் அதிகாரம் என்பன | சகல அபிவிருத்தி செயல்முறைகளுக்கும் மகுடமாக டப்பட்டுள்ளன. இது எதைக்காட்டுகின்றது? பதின்மூன்று
மக்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஒரே வழியாகும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதேயாகு

Page 10
ஜி வி எஸ் புதிய அபிவிருத்தி கோட்பாடு தொடர்பாக கொண்டிருந்த கருத்து கோட்பாடு பற்றியும் மற்றும் அவரின் பரந்த அறிவுத்தன்மைக்கு அவரின் "Social Change" மற்றும் "Some Heretical Thoughts on Economics Development" என்ற இரு ஆக்கங்களில் கொடுக்கப்பட்ட விளக்கங்களே போதுமானது. அவ் விரு நூல்களும் அவ்வளவு சிறப்பானவைகளாகும். ஏனைய சமூக விஞ்ஞானிகளுடன்
9.60600115g) 6TCupgui "Boomisena" (A Struggle for Peoples
Power) என்ற நூல் மக்கள் அபிவிருத்தி செயல்முறை பற்றிய விரிவான விளக்க நூலாகும்.
1980 நவம்பர் 25 ஆம் திகதி கொள்ளுப்பிட்டியிலுள்ள "ரண்முத்து" ஹோட்டலில் நடைபெற்ற "பங்கேற்பு அபிவிருத்தி" பற்றிய தென்னாசிய செயற்கூடத்தில் பங்கேற்பு கிராம அபிவிருத்தி புதிய செயற்பாடுகள் பற்றி பங்குபற்றுநர்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கும் வேளையிலேயே காலை 11.00 மணியளவில் ஜி வி எஸ் திடீர் மாரடைப்பிற்குள்ளானார். அதன் பின் சிறிது நேரத்தில் அப்பெருமகன் இயற்கை எய்தினார்.
இத்துறையில் என்றுமே நிரப்பமுடியாத ஒரு இடைவெளியை ஏற்படுத்திவிட்டு ஜி வி எஸ் எம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
ஜி வி எஸ் ஒரு பொருளாதார அறிஞர். சமூக விஞ்ஞானி, மார்க்ஸியவாத சிந்தனையாளி. சித்தாந்தத்தினையும் நடைமுறையையும் எப்போதுமே ஒன்றாக சிந்தித்த அறிவுஜீவியாவார் அவர்.
சிங்கள மொழியில் ஈடுபாடும் மொழிப் பற்றுமிக்கவர்.
இலக்கிய, கலை ரசிகர். தன்னிடமிருந்த பெரும் அனுபவம் அறிவு எல்லாவற்றையும் எப்போதுமே மற்றவர் வளர்ச்சிக்காக தியாகம் செய்த மானிட அன்பாளன் அவர்.

அவர் அறிமுகம் செய்த "பங்கேற்பு அபிவிருத்தி" முறை கடந்த பத்தாண்டு காலமாக பீடா நிறுவனத்தின் மூலம் இலங்கையின் பல கிராமங்களிலும் அமுலாக்கப் பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அபிவிருத்திப் பணியாளர் அதன் பங்காளராகி உள்ளனர். என்றுமே ஜி வி எஸ் ஐக் காணாத அவரோடு பேசாத அபிவிருத்திப்பணியாளர்கள் அவர் எதிர்பார்த்த அபிவிருத்தி செயற்பாட்டில் ஈடுபாடு கொண்டு இயங்குகின்றனர். அவர் விதைத்த விதை முளைத்துவிட்டது.
அதற்கு நீருற்றி, பராமரித்து பெரும் மரமாக்கும் பணியில் ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றுகின்றனர்.
ஜி வி எஸ் புத்திஜீவிகளுக்கு - சமூக, விஞ்ஞனிகளுக்கு - பொருளியலாளர்களுக்கு மற்றும் அரசியல் அறிஞர்களுக்கு ஆற்றுவதற்காக சில பணிகளை விட்டுவிட்டே இறந்துள்ளார். அவர் அறிமுகப்படுத்திய "பங்கேற்பு அபிவிருத்தி" செயல் முறையின் பிரதிபலன்களை பார்க்கக்கூடிய அளவிற்கு அவர் நீண்டகாலம் வாழமுடியவில்லை. ஆகவே, இப்புதிய கோட்பாடு பற்றி மதிப்பீடுசெய்து, அதுபற்றி விளக்குவது இன்று வாழும் இச்செயல்முறை பற்றி விளக்கம்பெற்றுள்ள, தொடர்புள்ள புத்திஜீவிகளே ஆவர். கிராமமட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வபிவிருத்தி ஓட்டமானது தேசிய மட்டத்தை நோக்கிப் பாய்வதற்கு, சம்பாஷணைகள், கலந்துரையாடல், மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு வகையான பார்வையில் இச்செயல்முறையை அவதானிக்கப்பட்டு போசிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் செயல்முறைகள் அவசியமாகும். 。

Page 11

ናlumቘ'56ማ ዄ"? uTubüur168Hij
முகவுரை
1991 ஆம் ஆண்டில் சிங்களத்தில் நான் எழுதிய "பங்தேற்பு அபிவிருத்தி என்ற இந்நூல் கிராம மட்டத்தில் அபிவிருத்திப் பணிகளில ஈடுபட்டுள்ள அபிவிருத்திப் பணியாளர் மத்தியில் பிரபல்யமாக உள்ளது. சமூக அணிதிரட்டல் தொடர்பான நூல்கள் சரளமான சிங்கள மொழியில் இல்லாதிருந்த குறையை "பங்கேற்பு அபிவிருத்தி என்னும் இந்நூல் ஓரளவாவது குறைத்தருக்கும் என நான் நம்புகின்றேன். இதேபோல் கிராம அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள தமிழ்பேசும் சகோதர சகோதரிகளுக்கும் பயனளிக்க வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் இந்நூலை தமிழ் மொழியிலும் மொழி பெயர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இக்காரியம் மிகவும் சிரமமான ஒன்றாகும். இவ்வாறான நூல் ஒன்றினை மொழிமாற்றம் செய்யும் போது அதன் உள்ளடக்கத்தின் அடிப்படைத் தன்மைகள் சிதைவுறாதிருப்பது மிகவும் முக்கியமான ஒரு அம்சமாகும்.
இக்காரியத்தை பொறுப்பேற்று மேற்கொண்ட இலங்கை மன்றக் கல்லூரி முதுநிலை விரிவுரையாளர் திரு. ஓ. ஆறுமுகம் அவர்களின் இத்துறை சார்ந்த அனுபவம் இதற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது.
கிராம அபிவிருத்திப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாற்றுமுகவர் வேலைத்திட்டத்தில் நான் சம்பந்தப்பட்டிருந்த போது இவ்வேலைத்திட்டத்தை வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலும் விரிவாக்கும் பொருட்டு அப்பிரதேசத்திலுள்ள சில சசோதர சகோதரிகளும்

Page 12
பயிற்றப்பட்டமையை நான் அறிவேன். எனினும் மொழிப் பரிரச் சரினையால் இப் பயிற் சரியானது மொழிபெயர்ப்பாளரின் உதவியுடனேயே நடத்தப்பட்டது. வடக்கு கிழக்கிலுள்ள வறிய மக்களின் பிரச்சினைளைத் தீர்ப்பதற்கு அவர்களாலேயே முன்வைக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக அமுலாக்கி இருந்திருந்தால் இன்று அங்கு ஏற்பட்டுள்ள நிலை தோன்றி இருக்காது. இதற்கு ஒரு தடையாக அமைந்தது தமிழ் மொழியில் அபிவிருத்தி தொடர்பான பிரசுரங்கள் இல்லாமையாகும் என நான் கருதுகின்றேன். எனவே தமிழ்மொழியில் வெளிவரும் இக்கையேடானது தமிழ்பேசும் வறிய மக்களுடன் பணிபுரியும் அபிவிருத்திப் பணியாளருக்கு உதவியாக அமையும் என நம்புவதோடு இதனையிட்டு பெருமிதமும் கொள்கின்றேன்.
இந்நூலின் மொழிபெயர்ப்பு தொடர்பான சகல செலவுகளையும் இலங்கை கனடா அபிவிருத்தி நிதியமே
ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக அந்நிதியத்தின் இயக்குனர் டபிள்யூ. பீ. பீ. அபேதிர அவர்கள் வழங்கிய உதவிகளை நினைவு கூறுகின்றேன். அந்நிதியத்தின்
இயக்குனர் திரு. அபே தீரவிற்கும் ஏனைய சகல பணியாளருக்கும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வறுகின்றேன்.
ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழக தென்ஆசியப் பிராந்திய இணைப்பாளரும் சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் முன்னைநாள் தலைமைச் செயலருமான கலாநிதி பொன்னா விக்னராஜாவிற்கும் மூலப்பிரதிகளை வாசித்து பொருத்தமான ஆலோசனைகளை வழங்கிய பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவரான பேராசிரியர் சிரிசேன திலகரட்ன அவர்களுக்கும் எனது மதிப்பார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். -
இவ்வாறான நூல் ஒன்றினை எழுத எனக்கு அறிவு வளமூட்டிய பீடா நிறுவன பணியாளர் அனைவருக்கும் எனது அன்புடன் கூடிய நன்றி உரித்தாகின்றது.

இந்நூலினை சிறப்பாக மொழிபெயர்ப்பதில் தனது நேரத்தை ஈடுபடுத்திய இலங்கை மன்றக் கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளரும் எனது நண்பருமாகிய திரு. ଜୂତ, ஆறுமுகம் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோல் இதன் தமிழ்ப்பிரதியை தட்டெழுத்தில் பொறித்திட உதவிய செல்வி சுகிர்தா பொன்னம்பலத்திற்கும் எனது நன்றி உரித்தாகட்டும்.
இந்நூலினை நேரகாலத்தில் மிகவும் நேர்த்தியாகவும் கவர்ச்சியாகவும் அச்சிட்டவர்கள் நாவின்ன தரங்ஜி பிரின்ட் நிறுவனத்தினர் ஆவர். அந்நிறுவனத்தின உரிமையாளர் திரு. பாலித பெரேரா உள்ளிட்ட பணியாளர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இறுதியாக இந்நூல் எழுதுவது தொடர்பான சகல காரியங்களையும் மிகவும் பொறுமையோடு கவனித்து எனக்கு சக்தியூட்டி உற்சாகமளித்தவர் எனது அன்பு மனைவி சந்திரா ஆகும். இக்கைங்கரியம் சிறப்பாக நிறைவேற துணைபுரிந்த அவருக்கு எனது மனங்கனிந்த நன்றி உரித்தாகிறது.
வில்பிரட் கருணாரத்ன 32 பீடா நிறுவனம், கோதமி ஒழுங்கை, கொழும்பு 8.

Page 13

உள்ளடக்கம்
பின்னணி .
பங்கேற்பு அபிவிருத்தி
இடையீட்டாளர்
பங்கேற்பு பயிற்சி முறைமை
இடையீட்டாளர்களைப் பயிற்றுவித்தல் (மாதிரி)
பங்கேற்பு அபிவிருத்தி - (முதற்காரிய பரிசோதனை) .
புதிய அமைப்புமுறை ஒன்றை நோக்கி .
சமூக அணிதிரட்டலும் அரசு சார்பற்ற நிறுவனங்களும்
25
45
63
75
103
149
17.3
197

Page 14
'
... '
'
。
 

பின்னணி
தேசிய சுதந்திரம் பெற்றபின்னர் இலங்கையில் கிராம அபிவிருத்தி தொடர்பாக அரச, அரசுசார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியன. குறிப்பாக கல்வி, சுகாதாரம் ஏனைய நலன்புரித் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அதி உயர்ந்த முயற்சிகளின் விளைவாக இன்று ஆசிய நாடுகளுடன் மாத்திரமன்றி முழு உலகுடனும் ஒப்பிடும் போது இலங்கை மிகவும் மேலான ஒரு நிலையில் உள்ளது. அன்றுமுதல் இன்றுவரை மக்களுக்கு இலவசமாக கிடைத்த சுகாதார வசதிகள், பல்கலைக்கழகம் வரையிலான இலவசக்கல்வி, மக்களுக்கான நலன்புரி ஏற்பாடுகள் (உணவு உட்பட) போன்ற நடவடிக்கைகளால் கிராமப் புறங்களில் பெருமளவு மாற்றங்கள் ஏற்படி வழியேற்பட்டன என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
சுகாதாரக்கல்வியிலும் நலன் நடவடிக்கைகளிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளினால் பெளதீக தரம்பற்றிய வாழ்க்கைச்சுட்டெண் இலங்கையின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த நிலையில் காட்டுகின்றது. இலங்கையின் வளர்ந்தோர் எழுத்தறிவு நிலை (எழுதப்படிக்க தெரிந்த) 80-90ற்கும் டைப்பட்டதாயும் சராசரி ஆயுட்கால எல்லை 70 வயதாயுமுள்ளது. சிசு மரண விகிதம் 1000 ற்கு 25 ற்கு குறைவாகவே உள்ளது. இது உலகின் சிறந்த அபிவிருத்தியுற்ற நாடுகளில் காணக்கூடிய அம்சங்களாகும். இவ்வாறான அம்சங்களைக் கொண்ட ஏனைய நாடுகள் உலகின் அபிவிருத்தியுற்ற நாடுகளாக விளங்கும் அதேவேளை லங்கை, உலகின் ஆகக்கூடிய வறுமையான நாடுகள் 20 இல் ஒன்றாக இருப்பது ஒரு முரண்பாடான அம்சமாகும். இலங்கையின் தலாவருமானம் 1989 இல் 370 அமெரிக்க டொலர்களாகும். இது மிகவும் கீழ்மட்டநிலையில் உள்ள வறிய நாடுகளுக்குரிய அம்சமாகும்.
بهلاکو
25

Page 15
கடந்த பத்துப்பன்னிரண்டு ஆண்டுகளுக்கிடையில் வறியோரின் எண்ணிக்கை துரிதமாக கூடியுள்ள அதேவேளை ஏழை பணக்காரர்களுக்கிடையே இருந்த இடைவெளியும் படிப்படியாக அதிகரித்துள்ளது.
இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தின் 50% மிகவும் சிறிய தொகையினரான 10% ஆனோர்க்கே கிடைக்கின்றது. சனத்தொகையில் 40% ஆன அடிமட்ட வர்க்கத்தினருக்கு கிடைப்பதோ மொத்த தேசிய வருமானத்தின் 7% மாத்திரமேயாகும்.
இந்த இலகுவான விளக்கத்தின் மூலம் மேல் வர்க்கத்திற்கும் கீழ் வர்க்கத்திற்குமிடையேயான வருமான இடைவெளியின் தன்மை இலகுவாக விளங்குமென நம்பலாம். ஆனால். சிலவருடங்களுக்கு முன்பு மேல்வர்க்க, கீழ்வர்க்க வருமான விகிதாசாரத்தில் இவ்வளவு பெரிய இடைவெளி இருக்கவில்லை. நாளுக்கு நாள் அசுரவேகத்தில் கூடிக் கொண்டு போகும் விலையேற்றத்திற்கும் பணவீக்கத்திற்குமிடையே வறிய மக்கள் கதியற்றவர்களாகி விட்டனர். பொருளாதாரரீதியாகவும் சமூக ரீதியாகவும் பலவீனமுற்றுள்ளனர். ஆக்கத்திறன் தன்மைகுறைந்து உள்ளனர். மொத்த வேலைப்படையில் 20% ஆனோர் வேலையற்றுள்ளனர். சிறந்த கல்வி மட்டத்தை அடைந்துள்ள கிராமிய வேலையற்ற இளைஞர் போக்கிடமின்றி கதியற்றவராயிருப்பதோடு விரக்தியுற்று முழு சமுதாயத்துடனும் வெறுப்புக்கொண்டுள்ளனர். சனசக்தி பெறுவதற்கு அருகதையுடைய குடும்பங்கள் 14,00000 ஆகும். உண்மையில் நடைமுறை ரீதியிலும் யதார்த்த ரீதியாகவும் நோக்கின் சனசக்தி குடும்பங்களுக்கு உரித்துடைய அங்கத்தவர்கள் முழு சனத்தொகையிலும் அரைவாசிக்கு மேற்பட்டோராவர். மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோர் s இவ்வாறான நிலையில் இருப்பின் வறுமையின் நிலையை
இன்னும் விளக்கத் தேவையில்லை.
26

பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட அபிவிருத்தி ஈடுபாடுகளின் தோல்வியே கிராமிய வறியமக்களின் ஏழ்மையை மேலும் மேலும் கூட்டுவதற்குக் காரணமாக அமைந்தது. ஆட்சியில் அமர்த்தப்பட்ட ஒவ்வொரு அரசும் கிராமங்களில் சமூக, பொருளாதார மாற்றங்கள் பெருமளவில் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புக்களுடனேயே அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்தன. எனினும் அவ்விலக்கினை அடைய முடியவில்லை. கிராமங்களில் அபிவிருத்தித்திட்டங்கள் என மேற்கொள்ளப்பட்டவை பெரும் பாலும் பெளதீக ரீதியான வசதிகளை கூட்டியமையேயாகும். இப்பெளதீக ரீதியான வசதிகள் வறுமையின் அடிப்படை பிரச்சினையை நாடவில்லை. அப்படி இருப்பினும் அது மேலோட்டமாகவேயாகும்.
கிராம மக்களின் அபிவிருத்திக்காக அவர்கள் சார்பில் மேற் கொள்ளப் பட்ட திட்டங்கள் | } 6Ն) : 9 UT IT LID அபிவிருத்திச்சங்கம், கூட்டுறவு இயக்கம், காணிச்சீர்திருத்தம், ஜனாவாச குடியேற்றத்திட்டம், மாவட்ட அபிவிருத்திசபை, உற்பத்தி அதிகரிப்புக் குழுக்கள், கிராமோதய சபைகள், ஒரு முகப்படுத்தப்பட்ட கிராம அபிவிருத்தி திட்டம், மாதிரிக் கிராமத்திட்டம் என்பன கடந்த நாற்பதாண்டு காலத்தில் கிராம மக்களின் அபிவிருத்திக்காக இலங்கை பூராவும் அமுலாக்கப்பட்ட திட்டங்களாகும். இவை கிராம அபிவிருத்திக்காக மேற் கொள்ளப்பட்ட மிகவும் உயர்ந்த திட்டங்கள். இவ்வபிவிருத்தி முயற்சிகள் சரியான வகையில் கிராம மக்களிற்கு கிடைக்கப் பெற்றிருந்தால் இப்போது அவர்களின் சமூக, பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். இவ்வேலைத்திட்டத்தை அமுலாக்கிய பணியாளர்களுக்கும் மக்களுக்குமிடையில் வேலைத்திட்டம் தொடர்பான குறிக்கோள்கள் பற்றி எவ்வித விளக்கமும் இல்லாததால் மக்கள் பங்களிப்பு எவ்வகையிலும் இவற்றிற்கு கிடைத்ததா என்பது சந்தேகமே. எந்த ஒரு வேலைத்திட்டமும் மக்கள் பங்குபற்றல் இல்லாத போது அது பணியாளர் திட்டமாக மாறி பதர் போன்ற நிலைக்காளாகி விடுகின்றது.
27

Page 16
மேற்குறிப்பிட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களைப்பற்றி மேலும், தெளிவான விளக்கம் தரும் வகையில் நான்கு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான சுருக்கமான குறிப்பொன்றினைத் தருகின்றேன். இவை சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்த கூட்டுறவு இயக்கம், சுதந்திரம் பெற்ற காலத்தோடு ஒட்டியதாக ஆரம்பிக்கப்பட்ட கிராம அபிவிருத்தி இயக்கம், 1970 இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை இயக்கம், மற்றும் தற்போதைய (ஐக்கிய தேசியக்கட்சி) அரசினால் முன்வைக்கப்பட்ட கிராமோதய சபை இயக்கம் என்பன
ஆகும்.
இந்நான்கு வேலைத்திட்டங்களையும் தெரிவு செய்ததற்கான காரணம், இவை மக்கள் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு செயற்படுத்தப்பட்டதாகும்.
கூட்டுறவு சங்க இயக்கம்
கூட்டுறவு சங்க இயக்கம் ஒரு தொண்டர் இயக்கமாகவே ஆரம்பித்தது. கிராம மக்கள் தாம் உழைத்த பணத்தில் ஒரு பகுதியை சேமிக்கவும். தேவையானபோது சிறுகடன்களைப் பெற்றுக் கொள்ளவும் அமைப்பொன்றின் அவசியம் பற்றி உணர்ந்ததன் அடிப்படையிலேயே 1906 இல் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த தெல்தெனியாவில் சிக்கன கடன் வழங்கும் சங்கம் உருவாகியது. ஆரம்பத்தில் கிராம மட்டங்களில் சிக்கன கடனுதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கூட்டுறவு இயக்கம் 1940 அளவில் பரந்துபட்ட துறைகளில் விரிவாகி இருந்ததைக் காணலாம். இரண்டாம் உலக யுத்தகாலத்தில் மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிலையங்களாக கூட்டுறவு இயக்கம் விளங்கியது. இதற்கு மூன்று நான்கு தசாப்தங்களின் பின் கிராம மக்கள் தமது அவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்கு நாடியது கூட்டுறவுக்கடையையேயாகும். சில
28

கிராமத்தவர்கள் இதனை சங்கக்கடையென வ ழமையாக அழைக்கத்தொடங்கினர். மற்றும் சிலர் கூப்பன்கடை, கொன்ரோல் கடை என்றெல்லாம் கூட்டுறவுக் கடையை அழைக்கத் தொடங்கினர். தம்தம் விளக்கத்திற்கேற்ப மக்கள் கூட்டுறவு இயக்கத்திற்கு பெயரிட்டனர், "சங்கக்கடை" என்ற பெயர் வரக்காரணம் ஆரம்பத்தில் கிராம மக்களின் பங்குகளை சேகரித்து ஆரம் பரிக் கப் பட்டதானதாலே யாகும் . கூட்டுறவுக்கடையானது இரண்டாம் உலக யுத்தகாலத்தில் பங்கீட்டு அடிப்படையில் உணவுப் பொருட்களை விநியோகிக்கத் தொடங்கியது.
கூட்டுறவுக்கடையானது முதன்முதல் அரசாங்க பொருள் விநியோக மையமானது இக்கால கட்டத்திலேயாகும்.
1956 இற்குப் பின் கூட்டுறவு இயக்கத்தை மேலும் மக்கள் நிறுவனமாக மாற்றும் நோக்கத்தில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதன் நோக்கம் கிராம பொருளாதாரத்தின் கேந்திர ஸ்தானமாக பல்நோக்குக்கூட்டுறவுச்சங்கத்தை உருவாக்குவதேயாகும். பல்நோக்கு என்பதன் மூலம் உற்பத்தி, சந்தை, விநியோகம், கொள்வனவு போன்ற கிராமப் பொருளாதார மற்றும் தொடர்பான அம்சங்களையே கருதப்பட்டது. பல்நோக்கு கூட்டுறவுச்சங்க முறையானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பையும் எழுச்சியையும் ஏற்படுத்தியது. இந்தக் காரணத்தினாலேயே வெகுவிரைவாக கிராமப்புறங்களில் பல்நோக்குக்கூட்டுறவுச் சங்கங்கள் ஆரம்பமாகின. கூட்டுறவு இயக்கத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட முயற்சிகள் அரசுகளின் மாற்றங்ளோடு பின்னடையவும் செய்தன.
சகல பல் நோக்கு கூட்டுறவு சங்கங்களையும் ஒன்றிணைத்து ஒரு தேர்தல் தொகுதிக்கு ஒன்று அல்லது இரண்டு சங்கங்கள் அமையக்கூடியதான முறை 1970 இல் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கங்களுக்கான பணிப்பாளர்களை நியமிக்கும் பொறுப்பானது, அனேக சந்தர்ப்பங்களில்
29

Page 17
பரிரதேச பாராளுமன் ற அங்கத் தவரிடமே யே ஒப்படைக்கப்பட்டுள்ளது. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் பிரதேச அரசியல் வாதிகளுக்குக் கட்டுப் பட்ட நிறுவனங்களாகின. படிப்படியாக இவை மக்களிடமிருந்து விலகி அரச அதிகாரத்தாலும் ஆலோசனை அடிப்படையிலும் இயங்கும் அமைப்பாகின.
இதனோடு இணைந்தாற்ப்போலவே கூட்டுறவு இயக்கம் பற்றிய மக்களின் அவநம்பிக்கை மற்றும் ஊழல், மோசடி என்பன இவ்வியக்கத்திற்கு மக்களின் பங்குபற்றலை இல்லாமல் செய்தது.
1970 களின் பின் கூட்டுறவு என்பது மக்கள் நிறுவனமொன்றல்ல. அது அரச நிறுவனம் என அனேகமானோர் கூறப்பழகிக் கொண்டனர். மக்கள் அரச கூட்டுத்தாபனம் ஒன்றிற்கும் கூட்டுறவு இயக்கத்திற்கும் காட்டிய மனப்பான்மையில் எவ்வித வேறுபாடும் இருக்கவில்லை. சில சமயங்களில் அரசாங்கக்கூட்டுத்தாபன மொன்றைவிட மோசமான ஒரு நிறுவனம் என மக்கள்
யோசித்தமுண்டு.
மக்களுக்கு இடையிடையே கூட்டுறவுச் சங்கம் இயக்கத்தில் உள்ள ஒன்று என்ற உணர்வை ஏற்படுத்தியது நாட்டில் அவசர காலநிலை அல்லது குழப்பநிலை ஏற்பட்டபோதுதான். சமீடகாலத்திலிருந்து கூட்டுறவு சங்கமானது உணவு முத்திரை பெறுவோர் சனசக்தி நன்மைபெறுவோர் ஆகியோருக்கான உணவுப்பொருள்களை விநியோகிக்கும் நிலையமாக இயங்குகின்றதேயொழிய மக்கள் இயக்கமாகவோ அல்லது ஏழைகளின் பொருளாதார அபிவிருத்தியின் பங்காளி அமைப்பாகவோ அமையவில்லை. கூட்டுறவு இயக்கம் மக்கள் நிறுவனம் என்ற கோட்பாட்டிலிருந்து பரிபூரணமாகவே திசைமாறிவிட்டது.
கிராம மக்களின் சொந்த சுயேச்சை ரீதியாக அவர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக அவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு இயக்கமானது அரசதுறையில் ஒரு பிரிவாக மாறியதுடன் மக்கள் பிரச்சினையில் பங்கேற்காததுடன் தோல்வியுற்ற ஒரு இயக்கமாகியது.
30

கிராம அபிவிருத்தி சங்க இயக்கம்
கிராம அபிவிருத்தி இயக்கமானது இலங்கைக்கு அரசியல் சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தோடே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதாகும். கிராம அபிவிருத்தி திணைக்களம் 1948 இல் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் 1940 இலேயே வர்த்தக கைத்தொழில் திணைக்களத்தின் ஒரு பிரிவாக கிராம அபிவிருத்தி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 1955 அளவில் இலங்கை முழுவதும் 6172 கிராம அபிவிருத்தி சங்கங்களும் 2195 மகளிர் கழகங்களும் இருந்தன.
கிராம அபிவிருத்தி இயக்கத்தின் பிரதான குறிக்கோள்களாவன: கிராம மக்களின் மனப்பூர்வமான ஆதரவை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் சக்தி, உழைப்பு, அக்கறையுடன் அரச விரிவாக்கத்திட்டங்களை மிகவும் தாக்கமான முறையில் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லல், கிராம மக்களின் அக்கறைக்கு மேலும் உற்சாக மூட்டி அரச அளவிலான கவனிப்பை மேற்கொள்ளுதல் என்பதாகும். 1956 அளவில் தேசிய சேமிப்பு இயக்கம் கல்வி, சுகாதாரம், காணி, நீர்ப்பாசனம், உள்ளுராட்சி போன்ற திணைக்களங்களும் பொலிஸ் போன்ற நிறுவனங்களும் தமது கடமைகளை மேற்கொள்ள கிராம அபிவிருத்தி சங்க உதவியைப் பெற்றுக்கொண்டன. ஒரு தொண்டர் இயக்கமாகத் தொடங்கிய கிராம அபிவிருத்தி இயக்கத்தை சமூக, பொருளாதார ரீதியில் மேலும் கூடிய சேவையை செய்யும் நிறுவனமாக்கும் நோக்கில் அரசு இவ்வியக்கத்தில் மேலும் கூடியளவு தலையீடு செய்தது.
1970 இல் அரசு ஆதரவுடன் 500 கிராமங்கள் துரித அபிவிருத்தியின் பொருட்டு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்டன. 1977 இறுதியில் சகல கிராமங்களிலும் ஒரு கிராம அபிவிருத்தி சங்கமும் மகளிர் சங்கமொன்றும் அமைக்க வேண்டுமென்பது அரசின் இலக்காக இருந்தது.
31

Page 18
இதன்படி 20,000 சங்கங்கள் அமைக்கும் திட்டம் இருந்தது. எனவே, இக்கால கட்டத்தில் காளான் முளைப்பது போல் கிராம அபிவிருத்தி சங்கங்கள் உருவாகத்தொடங்கின. கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர்களுக்கு சமாதான நீதிவான் பட்டம் கொடுப்பது என்ற வதந்தியும் நாடு பூராவும் பரவத்தொடங்கியதும் இப்பதவிகளைக் கண்ணாகக் கொண்டும் சிலர் கிராம அபிவிருத்தி சங்கங்களை அமைத்தனர்.
கடந்த நான்கு தசாப்தங்களில் மக்களிடையே இயங்கிய கிராம அபிவிருத்திச் சங்கங்கள் பல்வேறு பெறுமதி மிக்க சேவைகளை ஆற்றியுள்ளன. குறிப்பாக, ஏகாதிபத்தியவாத - ஆட்சியின்கீழ் அருகிப்போன எமது பழக்க வழக்கங்கள், பண்பாடு ஆகியவற்றினை மீண்டும் கிராம மக்கள் மத்தியில் நிலைபெறச்செய்ய கிராம அபிவிருத்திச் சங்கங்கள் அதன் ஆரம்ப காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள் எவ்வகையிலும் மறக்கமுடியாதவை என்பதோடு எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடவும் முடியாதவையாகும். சிறுவர்களின் கல்விக்கு பாடசாலை கட்டடங்கள் இல்லாத காலத்தில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் பாடசாலைக் கட்டடங்களை அமைத்து அரசாங்கத்திடம் ஒப்படைத்ததன் மூலம் ஏழைச்சிறார்களின் கல் வரி வளர் சி சரி க்கு மேற் கொண்ட முயற் சரி அதிஉயர்வானதாகும். இதற்கு மேலாக, சனசமூக நிலையங்கள், சிரமதானநடவடிக்கைகள். சுய உதவித்திட்டங்கள், சுகாதார வேலைத்திட்டங்கள் என்பன கிராம அபிவிருத்தி சங்கங்கள் மூலம் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய காரியங்களாகும். கிராம அபிவிருத்தி சங்கம் மக்கள் இயக்கமாயினும் அது படிப்படியாக அரசியல் வாதிகளினது தலையீட்டிற்கு உள்ளாகலாயிற்று. அத்தோடு ஆரம்பகாலம் முதல் இவ்வமைப்பு கிராமத்திலுள்ள உயர்வர்க்கத்தவர்களுக்கு கீழ்ப்பட்ட ஒன்றாகவே இருந்தது. கிராமங்களில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் குறிப்பாக பெளதீக வசதிகளை வழங்குவதில் சேவைகள் செய்தபோதிலும் 80% அளவான வறியவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இச்சங்கங்கள் எவ்வித சேவையும் செய்யவில்லை. கிராமத்தில் பொருளாதார பல தீ  ைதயும் அதிகாரத் தையும்
32

கொண்டிருந்தவர்களே கிராம அபிவிருத்தி சங்கத்தின் அதிகாரத்தையும் பெற்றதால், மிகச்சிறிய ஒரு குழுவினரின் விருப்பு, வெறுப்புகளை நிறைவேற்றவே இச்சங்கம் பயன்படுத்தப்பட்டது.
கிராம அவிருத்தி இயக்கமானது ஏழ்மையை இல்லாமலாக்கும் அல்லது குறைக்கும் ஒரு இயக்கமாக அமையாததால் வறிய மக்களின் பங்களிப்பும் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஏழைகளிலிருந்து விலகிய ஒரு இயக்கமாகியது. இந்நிலைமையின் பெறுபேறாக இன்று கிராம அபிவிருத்தி சங்கமானது சமீபகாலத்தில் பெயர் மாத்திரமே கொண்ட இயக்கமற்ற ஒரு அமைப்பாக மாறிவிட்டது.
பிரதேச அபிவிருத்தி சபை இயக்கம்
பிரதேச அபிவிருத்தி சபைகள் 1971 இல் இயங்க ஆரம்பித்தன. அப்போதைய அரசின் கொள்கைத்திட்டமிடல் அமைச்சின் கீழ் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது.
பிரதேச அபிவிருத்திச் சபைகளின் நோக்கங்கள் என்ன? என்ற கேள்விக்கு பின்னர் விளக்கமளிப்போம். பிரதேச அபிவிருத்தி சபைகளுக்குரிய எல்லையானது உள்ளுராட்சி நிர்வாகப்பிரிவாகும். இதை பின்வருமாறு மிக இலகுவாக விளக்களாம். ஏதாவது தேர்தல் ஒன்றில் கிராமிய செயற்பாட்டு சபை பிரதேசம் நான்கும் பட்டின சபை ஒன்றும் அமைந்திருப்பதாககருதுவோமாயின் இதற்கு ஐந்து பிரதேசசபைகள் இருக்கும்.
இவ்வாறான ஒரு பிரதேச அபிவிருத்தி சபைக்காக புதிதாக ஒரு அபிவிருத்திப் பணிப்பாளர் கொள்கைத்திட்டமிடல் அமைச்சினால் நியமிக்கப்பட்டார். "அபிவிருத்தி அலுவலர்” என அழைக்கப்பட்ட இவர் ஒரு இளம் பட்டதாரியாவார்.
33

Page 19
ஒரு உள்ளுராட்சி நிர்வாக பிரிவிற்கு ஒன்று என்ற அடிப்படையில் அமைக்கப்பட்ட இச்சபையானது அப்பிரதேச மக்களின் பங்குபற்றலை மையமாகக் கொண்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டு அமுலாக்கும் பிரதான நிறுவனமாக அமைந்தது. பிரதேச அபிவிருத்தி சபைகள் மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் அரச அலுவலர்களையும் உள்ளடக்கிய ஒரு தொண்டர் நிறுவனம் போன்ற அமைப்பை க் கொண் டதாகும். இந்நிர்வாகப்பிரிவிற்குட்பட்ட கிராம அபிவிருத்தி மக்கள் குழுக்கள் விவசாய நிர்வாகக் குழுக்கள், கூட்டுறவு பிரதேச சபை, கிராம நிர்வாக சபை, மகளிர் அமைப்புக்கள் போன்றவற்றின் தலைவர்கள் அல்லது செயலாளர்கள் பிரதேச சபைகளின் அங்கத்தவர்களாகவும் அதன் தலைவராக பிரதேச உதவி அரசாங்க அதிபரும் அமைந்தனர். அப்பிரதேச உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் எனைய அங்கத்தவர்களாவர், உதாரணமாக கிராம அபிவிருத்தி அலுவலர், விவசாய சேவை அலுவலர், விவசாய ஆலோசகர் போன்ற அரச அலுவலர்களைக் கூறலாம். ஒரு புறம் மக்கள் பிரதிநிதிகளையும் மறுபுறம் அரச அலுவலர்களையும் உள்ளடக்கிய பிரதேச அபிவிருத்தி சபை தலைவராக உதவி அரச அதிபரும் செயலாளராக அபிவிருத்தி உத்தியோகத்தரும் இயங்கினர். பகுதி கிராமாட்சி சபை அல்லது பட்டின சபையின் தலைவர் உபதலைவராவார்.
பிரதேச அபிவிருத்தி சபைகளின் பிரதான நோக்கமாக அமைந்தது, பிரதேசத்திலுள்ள வளங்களை அடையாளம் கண்டு அப்பகுதியிலுள்ள வேலையற்றோர்களை அவற்றுடன் தொடர்புபடுத்தி புதிய அபிவிருத்தி முறையான சிறு அளவு அபிவிருத்தி வேலைகளை ஆரம்பிப்பதாகும். அந்தந்தப் பிரதேசத்திலுள்ள வளங்களை மிகவும் கவனமாகப் பரிசீலனை செய்து அவற்றை உற்பத்தி நடவடிக்கைகளுக்கு குறைந்த செலவில் பயன்படுத்திக் கூடியளவான தொழில் வழங்குதல் இதன் முக்கிய அம்சமாகும். -
34

உதாரணமாக பின்வருவனவற்றைப் பார்ப்போம். நீர்கொழும்புப் பிரதேச அபிவிருத்தி சபையின் அனேக வேலைத்திட்டங்கள் மீன்வளத்தை ஒட்டியதாகும். இப்பிரதேச சபை மூலம் கொள்களன் தயாரிப்பு, கருவாடு காய வைத்தல், மாசி தயாரித்தல், ஐஸ் தயாரிப்பு, மீன்பிடி வள்ளங்களைத் திருத்துதல், மீன்பிடித்தல் போன்ற வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவை அனைத்துமே அப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கே உரிய வளங்களைக் கொண்டு மிகக்குறைந்த செலவில் ஆரம்பிக்கப்பட்டவையாகும்.
வறண்ட பிரதேசத்தில் சில அபிவிருத்தி சபைகள் மிளகாய், கவ்பீ, பாசிப்பயறு உள்ளிட்ட உப உணவுப் பொருட்களின் உற்பத்தி மூலம் இப்பகுதி மக்களுக்கு தொழிலும் மேலதிக வருமானமும் பெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தன. கொத்மலை போன்ற பரம்பரையாக இரும்பு வேலையிலிடுபடுவோர் வசிக்கும் பிரதேசங்களில் பாரம்பரிய தொழில்நுட்பங்களுக்கு புத்துயிருட்டும் வகையில் மண்வெட்டி, போன்ற விவசாய உபகரணங்களைத் தயாரிக்கும் நிலையமாக மாற்றப்பட்டது. பிரயோசனப்படுத்தக் கூடிய அளவில் உள்ளுர் வளங்கள் கிடைக்காதபட்சத்தில் அங்கு புதிய தொழில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கால்நடைவளர்ப்பு, அப்பியாசக் கொப்பிகள் தயாரித்தல், கடிதம் எழுதும் காகிதம், கடிதக் கூடுகள் போன்ற தயாரிப்புக்கள் இவற்றில் சிலவாகும்.
பிரதேச அபிவிருத்தி சபைகள் மூலம் கிராமப்புறங்களில் உருவாக்க எதிர்பார்க்கப்பட்ட சமூக பொருளாதார மாற்றம் அளப்பரிது. இந்த முயற்சியின் இரண்டாம் கட்டம் 1975 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் இதுவரை இருந்த சிறு அளவு அபிவிருத்தி என்ற தன்மையானது மத்திய அளவு கைத்தொழில், விவசாய செயற்திட்டங்களாக பரிணமித்தன. ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் ஒரு அபிவிருத்திச் சபை வேலைத்திட்டம் தொகுதி என்ற யோசனையின் அடிப்படையில் அபிவிருத்திக்கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் புதிய கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அபிவிருத்தி கூட்டுறவு
35

Page 20
சங்கத்தின் தலைவர் பதவி வகித்தவர் அத்தொகுதி பாராளுமன்ற அங்கத்தவராவார். ஏதாவது ஒரு தொகுதிக்கு எதிர்க்கட்சிப் பிரதிநிதி ஒருவர் தெரிவாகி இருப்பின் அப்பிரதேச தலைவர் ஆளும்கட்சியால் நியமிக்கப்பட்ட அமைப்பாளர் ஒருவரேயாகும்.
பிரதேச அபிவிருத்தி சபை கோட்பாடு மிகவும் அர்த்த புஷடியானதும் நடைமுறைச்சாத்தியமிக்கதுமாகும். எனினும், அவை மக்களின் தேவைகள், திட்டமிடல் அடிப்படையில் அமையாததால் தோல்வியில் முடிவடைந்தன. 1977 இல் ஆட்சியிலமர்த்தப்பட்ட அரசாங்கமானது பிரதேச சபை கோட்பாடுகளில் அக்கறை செலுத்தாமை முன்னைய அரசு வழங்கிய ஒத்துழைப்பை வழங்காமை போன்றவை குறுகிய காலத்திற்குள்ளாகவே அபிவிருத்தி சபைகள் கலைக்கப்படுவதற்குரிய காரணங்களாகின. இவற்றைவிட அபிவிருத்தி சபை முயற்சி தோல்வியடைவதற்கான காரணங்கள் அதனுள்ளேயேயும் இருந்தன.
அபிவிருத்தி சபைகள் மூலம் கிராம வளங்கள் அ டையாளம் காணப் பட்டு, கிராமத்தில்
பயன்படுத்தப்படாதிருந்த ஊழியத்தோடு இணைக்கப்பட்டு சிறு அளவு விவசாய, கைத்தொழில் செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் இச் செயற்திட்டங்களின் திட்டமிடல், அமுலாக்கல், பேணல் அனைத்துமே அலுவலரிடமே சார்ந்திருந்தது. இவ்வாறாக பிரதேச அபிவிருத்தி சபை சித்தாந்தமும் கோட்பாடும் எவ்வளவு அதி சிறப்பானதாயினும் நடைமுறையில் மக்களின் துடிப்பான பங்குபற்றல் இல்லாத ஒரு வழக்கமான அரச வேலைத்திட்டமாக மாறியதால் இத்திட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
ஒரு வேலைத்திட்டத்தில் அரசியல்வாதிகளின் அதிகாரம் வரையறையற்றதாக அமையும்போது அத்திட்டத்தின் அபிவிருத்திச் செயல்முறையை விட அரசியல் செயற்பாடுகள் பக்கம் அது சார்வது தவிர்க்க முடியாததாகும். அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைமைப்பதவியைப் பெற்றவர் அப்பிரதேச
36

பாராளுமன்ற அங்கத்தவராவார். எனினும், அப்பிரதேச பாராளுமன்ற அங்கத்தவர் ஆளும் கட்சியைச் சாராதவராயின் அவருக்கு அப்பதவி கிடைக்காது அனேகமாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஆளும் கட்சியைச் சார்ந்தவரே தலைவரானார். இந்த உதாரணமே இவ்வியக்கத்தில் அரசியல் உக்கிரமாக கலந்திருந்தது என்பதைக் காட்டி நிற்கின்றது.
அபிவிருத்தி சபை கோட்பாடானது மக்கள் பங்கேற்றலை அடிப்படையாகக் கொண்ட புதிய அணுகு முறையாகும். எனினும் கோட்பாடு புதிதாயினும் அரச இயந்திரத்தினூடாக அமுலாக் கியமை வழக்கமான ஒரு அ ரச வேலைத்திட்டத்தினைப் போன்றேயாகும். வேலைத்திட்டத்தினை ஆக்கியோரிடம் இருந்த எண்ணமானது கிராமப்புறமக்களால் எந்தளவும் உணர முடியாத ஒன்றாக இருந்மை இதன் பிரதான குறைபாடுகளில் ஒன்றாகும்.
கிராமோதய சபை இயக்கம்
1977 இல் ஆட்சியில் அமர்த்தப்பட்ட அரசு, மக்கள் பரிபூரண பங்கேற்புடன் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் திட்டமிடல், அமுலாக்கம், பேணல், மதிப்பீடு போன்ற சகல காரியங்களையும் மேற்கொள்ளும் பொருட்டு உருவாக்கிய அமைப்பே கிராமோதய சபையாகும். ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு ஒன்று என்ற அடிப்படையில் கிராமோதய சபைகள் அமைக்கப்பட்டதுடன் அக்கிராம சேவகர் பிரிவுக்கு உள்ள அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் தலைவர்கள் கிராமோதய சபையின் அங்கத்தவர்களாக நியமனம் பெற்றனர். உதாரணமாக பிரிவு கிராம அபிவிருத்தி சங்கம், இளைஞர் சங்கம் போன்ற உதவி அரசாங்க அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் தலைவர்கள் இதில் அங்கத்துவம் பெறுவர். இவ்வாறு கிராமமட்டத்தில் அமையும் கிராமோதய சபையின் தலைவர் இதற்கு மேல்மட்டத்தில் அமையும் பிரதேச சபைக்கு நியமனமாவார். உதவி அரசாங்க அதிபர் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் அமையும் இதன் தலைமைப் பதவி சகல கிராமோதய சபைத் தலைவர்களாலும்
37

Page 21
தெரிவுசெய்யப்படும் பிரதேச சபைத் தலைவரால் வகிக்கப்படும். அதேவேளை இதன் செயலாளராக உதவி அரசாங்க அதிபர் கடமை புரிவார்.
கிராமோதய சபைகள் கிராம சேவகர் பிரிவில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். தேசிய, மாவட்ட, பிரதேச, கிராமிய மட்டத்தில் அபிவிருத்தியை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட மிகச்சிறிய அங்கமானது கிராமோதய சபையாகும். கிராமோதய சபை மூலம் கிராமிய மட்டத்தில் யதார்த்தரீதியான அபிவிருத்தியை மேற்கொள்ளும் பொருட்டு கிராமிய மக்களின் பங்கேற்பினை எவ்வித குறைபாடுமின்றி பெற்று அவர்களின் விருப்பு, வெறுப்புகள் முடிவுகளுக்கு ஏற்ப வறுமையை ஒழிப்பதற்கான ஒரு புதிய வழிமுறை எதிர்பார்க்கப்பட்டது.
இக் கிராமோதய நடவடிக்கைகளுக்கு அரசின் ஒத்துழைப்பு மிகக்கூடியளவில் கிடைத்ததுடன் சில சமயங்களில் இது மக்கள் பங்குபற்றலுக்கு மேலானதாகக் கூட இருந்தது. கிராமோதய சபையானது கிராமிய மட்ட அமைப்பென்றபோதிலும் அது கிராமிய வறிய மக்களின் பங்குபற்றுதலைப் பூரணமாகப்பெற்ற ஒரு அமைப்பெனக் கூறமுடியாது. வேறு வகையில் கூறினால் கிராம உயர்வர்க்கத்தாரின் அதிகாரம் வெளிப்பட உதவிய ஒரு அமைப்பாகும். கிராமோதய சபை அங்கத்துவம் கிராமத்தில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களின் தலைவர்களுக்கே கிடைத்தது. கிராமங்களில் அங்கீரிக்கப்பட்ட அமைப்புக்கள் கிராம சம்பிரதாய அமைப்புக்களாகும். இச் சம்பிரதாய அமைப்புக்களின் தலைமைப்பதவி வகித்தவர்கள் பெரும்பாலும் கிராம உயர்வர்க்கத்தினர்களாவர். இவர்கள் கிராமத்தில் ஆட்சி செலுத்தியோராவர். கிராமோதய சபை இயங்கும் போது அது கிராம பலம்படைத்தவர்களின் அமைப்பாகவே இயங்கியது. (ஏழைகளின் பிரதிநிதித்துவம் இல்லை) அவை ஏழைகளின் வெளிப்பிரச்சினைப் பற்றி பேசினவே ஒழிய அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்காத ஒரு நிறுவனமாகும்.
38

பொருளாதார, சமூக ரீதியில் மந்தநிலைக்குட்பட்டு கடன் தொல்லையால் நசுக்கப்பட்டு வறுமையில் உழல்ந்து அதிலிருந்தும் மேலெழும்ப முடியாத பலவீனமுற்ற மக்கள் கிராமோதய சபைகள் மூலம் ஏதாவது பிரதிபலன் பெற்றார்கள் என்றால் அது மிகவும் அற்பமேயாகும். கிராமோதய சபைகள் ஏழ்மையை ஒழிக்கக் கூடிய அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ளவதிலும் பார்க்க பார்ம் பாரிய அ பரிவரிருத்தி செயற் திட்டங்களை அமுலாக்குவதையே இலக்காகக் கொண்டிருந்தன. உதாரணமாகக் கூறுவதாயின் சிரமதான, சமயநடவடிக்கைகள், கட்டடங்கள் கட்டல், பாதைகள் போடல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
1978-1983 ஆண்டுகளுக்கிடையில் 4500 ற்கும் 5000 ற்கும் இடைப்பட்ட கிராமோதய சபைகள் இயங்கியதாக அறிக்கைகள் கூறுகின்றன. கிராமமக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே அமைக்கப்பட்ட இவை படிப்படியாக பலவீனமுற்றன. இன்றைய நிலையில் பெரும்பாலும் கிராமோதய இயக்கமானது இயக்கமற்ற நிலைக்குள்ளாகிவிட்டது எனலாம். கிராமோதய சபையில் அதிகாரம் பெற்றோர் மறுவகையில் பிரதேச அரசியல்வாதிகளாகிவிட்டனர். அனேகமாக இவர்கள் ஆளும்கட்சியின் பிரதேச அமைப்பாளர்களாகினர்.
கிராமோதய சபையின் அடிப்படைப் பிரச்சினையானது அது கிராம சமூக, பொருளாதார அமைப்பின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமையாகும். கிராம மக்களின் நேரடிபங்குபற்றல் மூலமாக அவர்களின் யதார்த்தநிலையை புரிந்து கொள்ளாமையால் அவர்களின் மனவிருப்பத்திற்கேற்ப இந்நிலைமைகளை மாற்றக் கூடிய வேலைத்திட்டங்கள் கிராமோதய சபைகள் மூலம் மேற்கொள்ளப்படவில்லை. கிராம அதிகாரச் கட்டமைப்பை மாற்றக்கூடியதான கிராமமக்களது பங்குபற்றலுடனான அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று இல்லாமையே கிராமோதயசபை வழக்கமான ஒரு மரபுரீதியான அபிவிருத்தி வேலைத்திட்டமாக
*
39

Page 22
மாறியமைக்கு பிரதான காரணமாகும். கிராமோதயம் இந்நாட்டில் அமுலாக்கப்பட்ட ஏனைய வேலைத்திட்டங்களில் இன்னுமொன்று மட்டுமேயாகும். ஏனைய கிராமிய நிறுவனங்களைப் போலவே கிராமோதய சபையும் கிராமத்தின் உயர்வர்க்க ஆட்சிக்கும் ஆணைக்கும் உட்பட்டு இயங்கியது. வறிய மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றினை கிராமோதய சபைகள் மேற்கொள்ளாததால் பிரயோசனமற்றுப் போயின. இவை ஆரம்பமான விதம், இயங்கிய முறை மற்றும் இவற்றால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் என்பவற்றைப் பற்றி வரிமர் சிக்கும் போது கிராமோதய சபை பிரயோசனமற்றதாகப் போய் இல்லாமல் போதல் இயற்கையான ஒரு செயல் என்றே கூறலாம்.
நான் இங்கு கூட்டுறவு இயக்கம், கிராம அபிவிருத்தி சங்கம், பிரதேச அபிவிருத்தி சபைகள், கிராமோதய சபைகள் போன்ற வேலைத்திட்டங்கள் கிராம மக்களின் அபிவிருத்தியில் எந்தளவிற்கு ஈடுபாடு காட்டின என்பதைப்பற்றி ஆராய்ந்து சுருக்கமாக பார்த்துள்ளேன். இவ்வபிவிருத்தி வேலைத் திட்டங்கள் கிராம மக்கள் வாழ்க்கையோடு தொடர்புற்று அபிவிருத்தியை ஏன் ஏற்படுத்தவில்லை? கீழ்க்காணும் காரணங்கள் பொதுவாக இதற்கு அடிப்படையாக அமைந்தன எனக் கூறலாம்.
இவ் அபிவிருத்தி முறைகள் அனைத்துமே மக்கள் பங்குபற் றலை அடிப் படையாகக் கொண்டு இயங்கவேண்டுமென்ற வகையில் உருவாக்கப்பட்ட போதிலும் இது தொடர்பாக வறிய மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்பு மிகச் சொற்ப மேயாகும். ஏனெனில் இவ்வேலைத்திட்டங்களின் திட்டமிடல், அமுலாக்கம், கண்காணித்து வழிப்படுத்தல் அனைத்துமே அலுவலர்களாலும் கிராம உயர்வர்க்கத்தாராலுமே மேற் கொள்ளப்பட்டதால் வறியோர் இவ் அபிவிருத்தி ஓட்டத்தினின்றும் பின்தள்ளப்பட்டுவிட்டனர்.
40

இவ்வபிவிருத்தித் திட்டங்களின் பிரதிபலன்கள் வறியோருக்கு கிடைக்காத அதேவேளை வறியோரின் பெரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இவ்வேலைத் திட்டங்களின் மூலம் எவ்வித பிரயோசனமும் ஏற்படவில்லை. சில அபிவிருத்தித் திட்டங்கள் இம்மக்களின் சுயசக்தியை ஒழித்து ஏழ்மையை மேலும் கூட்டுவதற்குக் காரணமாயின.
கட்டுமான செயற்பாடுகள் உள்ளிட்ட பெளதீக வசதிகளுக்குக் கூடிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. (பாதைகள், கூட்ட மண்டபம், பாடசாலைக் கட்டடம், சமயத்தலங்கள், சிரமதான செயற்பாடுகள்) இவை அனைத்தும் பொதுவாக கிராமத்திற்கு அவசியமானவையே. எனினும் வறுமை அதோடு தொடர்புள்ள பிரச்சினைகளை எந்தவகையிலும் இது தொடர்புபடுத்தவில்லை.
இதில் எந்த ஒரு வேலைத்திட்டமும் கூட கிராமத்தின் அதிகார, பொருளாதார கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதிகாரக் கட்டமைப்பில் மாற்றம் எதுவும் ஏற்படாமை என்பதன் அர்த்தம் வறுமையானது அதேநிலையில் வேரூன்றி இருப்பது என்பதேயாகும். வறுமை வேரூன்றி இருப்பதற்கான காரணத்தை முறையான சமூக பொருளாதார வரிமர்சனத்தின் மூலமே கண்டறிய முடியும் . இவ்வேலைத்திட்டங்களின் மூலம் ஒரு யதார்த்தரீதியான சமூக, பொருளாதார ரீதியான விமர்சன ஆய்வு செய்யப்படவில்லை.
மேற்கண்ட அபிவிருத்தி முறைகள் உட்பட்ட மரபுவழிமுறையில் மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு அபிவிருத்தித் திட்டத்தாலும் கிராமிய மக்களை வறுமையிலிருந்தும் மீட்க முடியவில்லை. வங்கிகள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய கொடுகடன் திட்டம், விரிவாக்க சேவைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சந்தைப்படுத்தல், கொள்வனவு செய்தல் போன்ற விவசாய விரிவாக்க, கைத்தொழில் சேவைகள் எதுவுமே கிராமிய மக்களின் அடிப்படைப்பிரச்சினையான வறுமையைப்பற்றி கணக்கில்
41

Page 23
எடுக்கவில்லை. என்னதான் அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் வறியோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு சென்றதற்கு இதுவே காரணமாகும்.
இந்நிலையில் வறுமையில் பாதிக்கப்பட்டிருக்கும் வறியோரின் பிரச்சினையின் உண்மைத்தன்மையினைப் புரிந்துகொண்ட ஆசிய சமூக விஞ்ஞானிகள் குழுவொன்று இதற்கான தீவொன்றைக்காண பெரும் முயற்சியிலிடுபட்டது. இவர்களது ஆய்வின் முக்கியமான அம்சம், தோல்வியுற்ற அபிவிருத்தி முயற்சிகள் விரிவான விமர்சனரீதியான ஆய்விற்குட்பட்டமையாகும். இவற்றை விமர்சிப்பதன் மூலம் அவற்றின் தோல்விக்கான காரணங்களை அறிந்துகொள்ள முடிந்தது. இவ் அபிவிருத்தித்திட்டங்கள் ஏன் வறியோர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவ முடியாமல் போயிற்று என்று மீண்டும் மீண்டும் ஆய்வு செய்யலாயினர். இதற்கு மேலாக கிராம வறியமக்கள் ஆசியாவின் பல்வெறு நாடுகளில் தம் சக்திக்கேற்ப வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுய அபிவிருத்தித்திட்டங்களையும் மிகவும் ஆழமாக இவர்கள் ஆராய்ந்தனர். இவ்வாறான அபிவிருத்தித்திட்டங்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த அம்சங்கள் என்ன?
தோல்வியுற்ற அபிவிருத்தித்திட்டங்கள் கிராமங்களில் ஆங்காங்கே காணப்படும் வெற்றிகரமான கிராமிய உபாயங்கள் மற்றும் அந்தந்தப் பிரதேசங்களில் நிலவும் கலாச்சார, அர சரியல் நிலைமைகள் உட்பட்ட வேறு கவனத்திற்கெடுக்கப்படக்கூடிய அத்தனை அம்சங்களையும் விளக்கமான ஆய்விற்குட்படுத்தப்படும் போது தீர்வுகளோடு கூடிய மாற்று அபிவிருத்தித் திட்டங்களின் அவசியம் வெளிப்பட்டது.
இதுவரை நடைமுறையிலிருந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களிற்கு வெளியே வீசப்பட்ட அல்லது அதனைப்பற்றி எதுவுமே உணர்ந்திராத (பிரதிபலன் பெறாத) வறிய, பலவீனமான மக்கள் பிரிவினர் மாற்று அபிவிருத்தித்திட்டத்தின் இலக்காக அமையும் அதேவேளை
42

அவ்வாறான அபிவிருத்தி, மக்களின் பங்குபற்றுதலோடு கூடிய பங்கேற்பு அபிவிருத்தி நடைமுறையாக அமைய வேண்டும் . மேலிருந்து கீழாக அலுவலர்கள் அரசியல்வாதிகளின் கூட்டினால் உருவாக்கப்படும் அபிவிருத்திட்டமிடலிலிருந்து விடுபட்டு, கிராமத்தவரின் நிரந்தர அபிவிருத்தித்தேவைகளை யதார்த்த பூர்வமாக அறிந்து, அவர்களின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தக்கூடிய புதிய அபிவிருத்தி முறை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
பங்குபற்றுதலுடன் கூடியதும் தமது சொந்த பலத்தை அடிப்படையாகக் கொண்டதுமான அபிவிருத்தித் திட்டம் அமுலாக்கப்படல் வேண்டும். இத்திட்டமானது பெளதீக அபிவிருத்தியிலும் பார்க்க வறுமையின் அதிமுக்கிய முரண்பாட்டைத்தீர்க்க உதவக்கூடியதாய் அமையவேண்டும்.
வறிய மக்கள் தாம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக யதார்த்த ரீதியாக சிந்தித்து, விமர்சனம் செய்யக்கூடியதாயும் அதிலிருந்து விடுபடத்தக்கதான நடவடிக்கையை எடுக்கவும் அவசியமான உதவியையும் ஊக்குவிப்பையும் இந்த நடவடிக்கையைப்பற்றி பூரணமான தெளிவுமிக்க பயிற்சிபெற்ற ஒரு தலையீட்டாளர் அல்லது இடையீட்டாளர் மூலம் வழங்கப்படல் வேண்டும். இங்கு ஒரு இடையீட்டாளர் ஏன் அவசியப்படுகிறார் என்றால், வறியமக்கள் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைப் பற்றி மிகவும் ஆழமாக ஆராயந்து, அப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய முறையொன்றினைப்பற்றி சிந்திக்கக்கூடியளவிற்கு மனோபலம் உடையநிலையில் இல்லாமையினாலாகும். இவர்கள் இறுகி அடைபட்டுக் கிடக்கும் அமைப்புக் காரணமாகவே, புரையோடிப்போயுள்ள தமது பழக்க வழக்கங்களிலும் கட்டுப்பட்டுக் கிடக்கின்றனர். தீர்வுமிக்க ஒரு அபிவிருத்தி முறை வரவேண்டியதற்கான காரணம் நடைமுறையிலுள்ள அபிவிருத்தி முறைகள் கிராமிய மக்களின் பிரச்சினைகளை முறையாக ஆராய்ந்து தீர்க்கக்கூடிய பொருத்தமான வழியொன்று இல்லாமையாலாகும்.
43

Page 24
கிராமத்தைப்பற்றியும் வறியமக்களின் யதார்த்த நிலையைப்பற்றியும் விளங்கிக்கொள்ள வேண்டுமாயின் கிராமம்பற்றிய விமர்சனம் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். இது ஒரு சாதாரணமான விமர்சனம் அல்ல. வறியமக்களின் பங்குப ற்றலோடு பிரச்சினைகளை விளங்கி அதனூடான அபிவிருத்தி முறை ஒன்றை நாடி மேற்கொள்ளும் விமர்சனமாகும். இது "பங்கேற்பு செயற்பாட்டு ஆய்வு" 6T GOTL'ull uGid. (Participatory Action Research)
ஆசிய சமூக விஞ்ஞானிகளுக்கு இலங்கையில் இப்பங்கேற்பு செயற்பாட்டு ஆய்வினை நடைமுறையில் பரீட்சித்துப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது 1978 ஆகஸ்ட் மாதத்திலேயாகும். முதன் முதலாக அரசாங்க அலுவலர்கள் சுமார் 20 பேர் தமது திணைக்களங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு அரசாங்க நிர்வாக உள்நாட்டளுவல்கள் அமைச்சின் கிராம அபிவிருத்தித்திணைக்களத்தின் கீழியங்கிய கிராம அபிவிருத்தி பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் "மாற்று முகவர்” வேலைத்திட்டத்தினை பரீட்சித்துப் பார்க்கலாயினர். (இன்று மாற்றுமுகவர் என்பது மிகவும் சாதாரண ஒரு விடயமாகி விட்டது). இவ்வேலைத் திட்டத்தின் மூலம் கிராம பங்கேற்பு செயற்பாட்டு ஆய்வுமூலம் கிராம அபிவிருத்தி முறைமையொன்றினை உருவாக்கத் தேவையான ஆதார பயிற்றுனர்களை உருவாக்க எதிர்பார்க்கப்பட்டது.
பங்கேற்பு கிராம அபிவிருத்தி பற்றி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பரீட்சார்த்த முயற்சி இதுவேயாகும்.
1, இங்கு குறிப்பிடப்பட்ட சமூக விஞ்ஞானிகள் குழுவில் இலங்கையைச் சேர்ந்த திரு. ஜீ. வி. எஸ். த. சில்வா, கலாநிதி பொன்னா விக்னராஜா, வங்காள தேசத்தைச் சேர்ந்த அளவிசூர் ரஹ்மான், இந்தியாவைச் சேர்ந்த கலாநிதி நிரஞ்சன் மேத்தா ஆகியோராவர். இதில் இலங்கையைச் சேர்ந்த திரு. ஜீ. வி. எஸ். த. சில்வா, பீடா நிறுவனத்தின் ஆரம்பகர்த்தா ஆவார்.
2. இவ்வாய்வினை மேற்கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்
அரசாங்க அலுவலர் குழுவில் இந்நூலாசிரியரும் அடங்குவார்.
44

2
பங்கேற்பு அபிவிருத்தி
அரச, அரசசார்பற்ற அமைப்புக்கள், பல்வேறு அபிவிருத்தி நிறுவனங்கள், கிராமிய மட்ட தொண்டர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைப்புக்கள் என்பன வறிய மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் மூலம் (அவர்கள் அறிந்தோ அறியாமலோ) அவ்வறியவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக செய்யப்பட்ட முயற்சிகள் மிகவும் அற்பமாகும். அவ்வாறில்லையாயின் இவ் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைப்பற்றி இவ்வறிய மக்கள் அறியாமல் இருந்திருக்கக்கூடும். "அபிவிருத்தி சமூக மாற்றத்திற்காகவே மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால், இலங்கையில் அவ்வாறான அம்சங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் காணப்படவில்லை. -
எமது குடித்தொகையில் 75%-80% மானோர் கிராம மக்களாவர். இவர்களில் அனேகமானோர் விவசாயம், மீன்பிடி, சேனைப்பயிர்ச்செய்கை, பெருந்தோட்ட விவசாயம், குடிசைக்கைத்தொழில், கால்நடை வளர்ப்பு, போன்றவற்றிலும் சாதாரண தொழிலாளர்களாகவும் இருக்கின்றனர். ஆயுள் பூராவும் இவ்வேலைகளில் இவர்கள் ஈடுபட்டு இருந்தபோதும் பரிதாபகரமான அம்சம் என்னவெனில் இவர்கள் வாழ்க்கை மிகவும் வறுமைமிக்கதாகவே இருப்பதாகும்.
மேற் கண்ட பிரிவினர் மிகவும் துன்பமும் கதியுமற்றவராவர், இத்துன்பநிலை வரவர கூடிக்கொண்டே போகின்றது. நாளுக்குநாள் இவர்கள் பலவீனமும் அதிகரித்துக்கொண்டேதானுள்ளது. கிராமிய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு
45

Page 25
அவற்றிற்கு தீர்வுகாணுமுகமாக ஆயிரக்கணக்கான ஆய்வாளர் கணக்கற்ற ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அரச, அரசசார்பற்ற அமைப்புக்கள் சர்வதேச அபிவிருத்தி அமைப்புக்கள் இது தொடர்பாக எழுதியவை, கூறியவை அனேகம். செலவழித்த பணமோ பெரும் தொகையாகும். இருப் பரினும் வறுமையோ வர வர வளர்ந்து கொண்டுதானுள்ளது. R
சமூக விஞ்ஞானிகள், அறிவு ஜீவிகள், சர்வகலாசாலையைச் சேர்ந்தோர் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் மேற்கொண்ட ஆய்வுகளால் கிராம மக்களின் வறுமையை ஒழிக்கக் கிடைத்த உதவிகள் எவ்விதமான போதிலும் இவ்வாய்வுகள்தான் வறுமையைக் கூட்டக் காரணமாயின என்றும் கூற இடமுண்டு. மேலும் வறுமை மிகப் பலமாக வேரூன்றவும் இவ்வாய்வுகள் சாதகமாயின. இவ்வாய்வுகள் ஏன் இவ்வாறாயின? இவ்வாய்வுகள் அனைத்துமே ஆய்வாளர் அல்லது அவரது நிறுவனம், திணைக்களம் ஆகியவற்றின் பலாபலன்கள் பற்றியதாக அமைந்ததேயொழிய வறியவர்களின் நன்மையைப்பற்றியதாக அமையவில்லை. அனேகமான சர்வகலாசாலையைச் சேர்ந்தோர், சமூக விஞ்ஞானிகள், ஆய்வாளர் ஆகியோர் தமது பட்டமேற்படிப்பிற்காகவும் வேறு சமூக பொருளாதார ஆய்விற்காகவும் பயன்படுத்திக் கொண்டது ஏழை எளியோரையேயாகும். அதுதவிர பல்வேறு சிறுகைத்தொழில், குடிசைக்கைத்தொழில், மீன்பிடித்தொழில் போன்றன உள்ள கிராமங்களையாகும். இவ்வாய்வுகளுக்கு அடிப்படையாய மைந்தவை என்னP வறியோர்களிடம் செயற்கையானதும் குடிசைகளில் தாம் பெரும் அக்கறையுடையோராகத் தோன்றி கீழ்மட்டத்தில் புகுந்தவர்கள் அவர்களுடன் ஒன்றுபட்டு கூடிக்குழாவி உண்டு உடுத்து நன்மை தீமைகளில் பங்குகொண்டு தமது எதிர்பார்ப்புகள் நிறைவேறக்கூடிய வகையில் வெளிஆய்வாளர்களாக ஆய்வுகளை மேற்கொள்ளலாயினர். மிகவும் மேல்மட்டத்தில் பழகி
46

அவர்களுக்க உதவி உபகாரம் செய்ய எமது கிராமமக்கள் மிகவும் ஆசையுடையோராயுள்ளனர். தமது ஆய்விற்காக ஏழை கிராம மக்களின் அறிவு எவ்வளவு பிரயோசனமாக இருந்தபோதிலும் இம்மரபுவாத ஆய்வாளர் இம்மக்களுடன் ஒரு போதும் இது பற்றி கலந்துரையாடுவதில்லை. இவர்கள் கண் டு பரிடிப் புக் கள் பற்றி கலந்துரையாடுவது இவ் வாய் வரிற் கான ஒப்பந்தத்தைக் கொடுத்த நிறுவனத்தலைவருடனேயாகும். பல்கலைக்கழகமாயின் தமது பேராசிரியர் அல்லது ஆய்வினை மேற்பார்வை செய் ப வருட னேயாகும் திணைக் களமொன் றின் ஆய்வாளாராயின் திணைக்களத்தலைவருடனேயே இது பற்றி பேசுவார். மாதக்கணக்காக கிராமிய மக்கள் கஸ்டப்பட்டு தங்க இடம் கொடுத்து, உணவு கொடுத்து செய்த உதவிக்கு கிடைக்கும் பயனென்ன? ஒன்றுமில்லை. சில ஆய்வு நிறுவனங்கள் தமது பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆய்வாளர்களை கிராமங்களுக்கு அனுப்பி விபரங்களைப் பெற்றுக்கொள்கின்றன. தமக்குத் தேவையான விபரங்களைப் பெறுவதற்குத் தேவையான கேள்விக் கொத்துக்களைத் தயாரிப்பது கொழும்பு அலுவலகத்தில் என்பதிலிருந்தே இவ்வாய்வுகளின் செயற்கைத்தன்மையைப் புரிந்து கொள் ள (UD L9- u4 Lifb . இவர் களுக்குத் தேவைப்படுவதெல்லாம் தமது கேள்விக் கொத்திற்கு கிராம மக்களின் பதில்களைப் பெறவேண்டும் என்பதேயாகும். கிராமத்தவர் தரும் பதில் சரியாகவோ பிழையாகவோ இருக்கலாம். ஆய்வாளருக்கோ நிறுவனத்திற்கோ இது ஒரு பிரச்சினை இல்லை. இங்கு பெறப்பட்ட விபரங்களைக் கொண்டு விஞ்ஞானபூர்வமாக ஒழுங்குபடுத்தி ஆய்வறிக்கையை தயாரிப்பது அனுபவபூர்வமான இவ்வாய்வாளருக்கு ஒரு பிரச்சனையல்ல.
ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சிறு ஏற்றுமதிப்பயிர்களை
உற்பத்தி செய்யும் கிராமம், ரஜரட்ட பாரம்பரியக் கிராமம் தெற்கே தோட்டமொன்றினை அண்மித்த கிராமம், குடியேற்றக்
47

Page 26
கிராமம் என்ற அடிப்படையில் ஐந்து கிராமங்களில் ஆய்வொன்றினை மேற்கொண்டது. இவ்வாய்வின் மூலம் வெளிப் படுத்தப் பட்ட வரிப ரங் கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோதிலும் இக் கிராமங்களில் உருவாகியுள்ள சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு எந்த வரிதமான முடிவுகளோ தரீர் வுகளோ மேற்கொள்ளப்படவில்லை. எவ்வித மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவுமில்லை. அது மட்டுமல்ல குறிப் பிட்ட காலத்திற்குள்ளாகவே பெற்றுக்கொள்ளக்கூடிய பல விபரங்களுக்காக கிராமங்களில் தங்கி இருந்த ஆய்வாளர்களுக்கு மீண்டும் அங்கே செல்ல வேண்டிய அவசியமுமிருக்கவில்லை. இவ்வாய்வுகளின் பிரதான நோக்கமானது பொருத்தமான தகவல்களைப் பெற்று நூ லொன்றினை எழுதி அதற்கான உதவிகளைச் செய்த நிறுவனத்திற்கு அதனைச் சமர்ப்பிப்பதே அன்றி, கிராம மக்களின் சமூக பொருளாதார வாழ்விலே மாற்றம் ஏற்படுத்துதல் அல்ல.
இவ்வாறான ஆய்வுகளால் கிராமத்தவருக்கு எவ்வித நன் மையும் கிடைப் பதில் லை கல் வரிாரீதியாயும் பொருளாதாரரீதியாயும் வெளியிலிருந்து வரும் ஆய்வாளரே நன்மை பெறுவார். இவ்வாறான ஆய்வுகளால் கண்டுபிடிக்கப்படும் விபரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் வறியோரின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு எந்தவகையிலும் வழிவகுக்கவில்லை. ஆய்வு ஒன்றானது கிராமத்தில் மாற்றமொன்று ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்தால் மட்டுமே அர்த்தமுள்ளதாகும். ஆய்வு ஒன்று கிராமத்தவர்க்கு உண்மைகளை புரிந்து கொள்ளவும் அறிந்துகொண்ட உண்மைகளை அவர்களுக்கு பிரயோசனமிக்க வகையில் மாற்றுவதற்கு வழியேற்படுத்துவதாக அமையும் போதே உயிர்ப்புமிக்கதானது எனலாம். இவ்வாறான தன்மை உருவாக்கப்பட வேண்டுமாயின் கிராமம் சம்பந்தமாக
* >德
48

மேற்கொள்ளப்படும் எந்த ஒரு ஆய்விலும் கிராம மக்கள் ஒரு பங்காளராக ஆக்கப்படல் வேண்டும். வெளி ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் கிராமமும் கிராம மக்கள் "ஊழியம்" என்ற வகையிலும் கணிக்கப்படும் நிலையிலிருந்து கிராமமும் கிராமிய மக்களும் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுமூலம் கிராமம் பற்றிய அம்மக்களின் அறிவைக் கூட்டக்கூடியதாக இருக்கும். இதுவே பங்கேற்பு ஆய்வாகும். இங்கு கண்டறியப்படும் விபரங்கள் நிச்சயமாக கலந்துரையாடலுக்கும் விமர்சனத்திற்கும் ஆய்விற்கும் உட்படும்.
இக் கலந்துரையாடலும் வரி மார் சனமும் கிராமத்தவர்களுடனேயே மேற்கொள்ளப்படும். கிராமத்தை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வு வெற்றிடைய வேண்டுமாயின் இவ்வாய்வின் பிரதிபலனாக கிராம மக்களின் சமூக, பொருளாதார வாழ்வில் மாற்றம் ஏ ற் பட வேண் டு ம் . இவ் வாய் வு அ பரிவரிரு த் தி வேலைத் திட்டமொன் றினை இலக்காக வைத்தே மேற்கொள்ளப்படும். இந்த வகையில் மேற்கொள்ளப்படும் ஆய்வானது "செயற்பாட்டு ஆய்வு” என்றழைக்கப்படும். (செயற்பாட்டு ஆய்வின் மூலம் உருவாகிய வேலைத்திட்டத்தின் அனுபவம் பின்னொரு இடத்தில் தரப்பட்டுள்ளது) கிராமிய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தரீதியில் அணுகாமல் மரபுரீதியான ஆய்வு, கணக்கெடுப்பு, விமர்சனம் மூலம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் கிராமங்களுக்கு அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக மரபுவழி முறையில் சென்ற அமைப்புக்கள் உண்மையை மேலும் உக்கிரம் அடையச் செய்யவே வழிகோலின. இது மாத்திர மில்லை. அனேகமான சந்தர்ப் பங்களில் இவ்வமைப்புக்களால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்கள் கிராமத்தவர் இதுவரையும் முகம் கொடுக்காத l திய பிரச்சினைகளையும் உருவாகக் காரணமாயின. சில காலத்தின்பின் பிரச்சினைகளை கிராமங்களில் அப்படியே விட்டுவிட்டு இந்நிறுவனங்கள் வெளியேறிவிட்டன.
او هی 49 ? M. 2. 幽

Page 27
வறியவர்களின் முன்னேற்றத்திற்காக கிராமங்களுக்குச் செல்லும் மரபுவழி அரச அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களின் அலுவலர்கள் ஏற்கனவே, அவரது நிறுவனத்தால் அல்லது அவரால் தீர்மானித்து எடுக்கப்பட்ட வேலைத் திட்டங் களை வறியோர் களுக்காக அமுலாக்குகின்றனர். (இவர்கள் கிராமங்களுக்கு ஏற்கனவே எடுத்த முடிவுகளை மனதில் வைத்துக்கொண்டே செல்கின்றனர்) ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளை வைத்துக்கொண்டு கிராமங்களுக்கு சென்றாலும் உண்மையில் யதார்த்ததைப் புரிந்து கொள்ள முடியாது. யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு அபிவிருத்தித்திட்டமும் சில காலத்தின் பின் தானாகவே இயக்கமற்றுப் போகும். இதன் மூலம் கூற முற்படுவது என்னவென்றால் அபிவிருத்தி வேலைக்காக கிராமத்திற்குச் செல்லும் ஒருவர் எவ்விதமான எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் தம்மில் எடுத்துச் செல்லக்கூடாது என்பதாகும். இருப்பினும் அவரிடம் பல்வேறு அபிப் பிராயங்கள் இருக்கத்தான் வேண்டும். எனினும் எவை பூரணமான முடிவுகளாக அமைந்துவிடக்கூடாது.
அரச, பல்வேறு அரசசார்பற்ற, கிராம மட்ட சிறு தொண்டர் நிறுவனங்கள் அனைத்தும் பிரதான பிரச்சினைகள் அனைத்தும் பின்னால் இருக்க, அவற்றைத் தீர்க்கக்கூடிய வேலைத்திட்டங்களுக்குப்பதிலாக வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை எப்போதுமே அமுலாக்குவதை அவதானிக்கலாம். இவ்வபிவிருத்தித் திட்டங்கள் பிரதான பிரச்சினைககளோடு எவ்விதமாகவும் சம்பந்தப்படாத அதேவேளை இவற்றால் கிராம மக்களின் வறுமையை குறைக்கவோ இல்லாமல் செய்யவோ முடியாது.
இச் செயற்திட்டங்கள் அனேமாக நலன்புரித் திட்டங்கள், சமய விவகாரம், சுகாதார சமூக சேவைத்தன்மைகளைக்
கொண்டிருப்பது அவதானிக்கத்தக்கது. பின்வருவன அவ்வாறானவற்றில் சில:
50

- முன்னிலைப் பாடசாலை, சுகாதார சிகிச்சை நிலையம்
மற்றும் போசாக்கு வேலைத்திட்டம்
-- இளைஞர்க்காக உருவாக்கப்பட சுயவேலை
வாய்ப்புத்திட்டங்களும் பயிற்சிகளும்
- சிரமதான வேலைகள் (பாதைகள், பொதுக்கட்டிடங்கள்,
நீர்ப்பாசனம்)
- மலசல கூடம் மற்றும் நீர் விநியோகம்
- சமய கலாசார வேலைத்திட்டங்கள்
- பல்வேறு நிவாரணங்கள், வறட்சி, வெள்ளம் மற்றும்
புனருத்தாரண வேலைகள்
மேற்படி வேலைத் திட்டங்கள் கிராம சமூக, பொருளாதார மாற்றத்திற்கு ஏதாவது ஒரு வகையில் காரணமாக அமைந்திருக்கலாம். அப்படி அமைந்திருந்தாலும் கூட அது வறிய மக்களின் வறுமையைக் குறைக்க ஏதுவாகவில்லை என்பது அனுபவத்தால் கண்டறியப்பட்டது. அத்தோடு சில உதவிவழங்கும் வேலைத்திட்டங்கள் வறியோரின் உண்மையான சுயசக்தியை இல்லாமல் செய்யவும் காரணமாகின. அபிவிருத்தி செயன்முறையானது சுயசக்தி, பங்குபற்றல் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஆக்கத்திறனை கூட்டும் சக்தியை ஏற்படுத்த வேண்டும். எனினும் அதற்குப்பதிலாக இங்கு அது மழுங்கடிக்கப்பட்டது.
பங்கேற்பு அபிவிருத்தித்திட்டம் என்பது பல்வேறு அதிகார சக்திகளால் காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த பலவீனமான மக்களின், உருவாக்கத் திறன் மிக்க ஆற்றல்களை, கூட்டு முறையில் வெளிக்கொணரச் செய்து அவற்றின் மூலம் அவர்களுக்கு நன்மையை ஏற்படுத்தக்கூடிய வகையில் இன்றைய நிலையை மாற்ற அவர்களாகவே சிந்தித்து உருவாக்கும் அபிவிருத்தி முறைமையாகும். 蠶
51

Page 28
பங்கேற்பு அபிவிருத்தியின் அடிப்படை அம்சமாக அமைவது கிராம மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளை விளங்கி அவற்றினை தீர்ப்பதற்காக தாம் அமைப்பிற்குட்படுதல் ஆகும். இங்கு பிரதான பிரச்சினைகள் எனக்குறிப்பிட்டது இன்றைய நடைமுறை சமூக, பொருளாதார அமைப்பால் கிராம மக்கள் வறுமைக்குட்பட்டதற்கான பிரதான காரணத்தையேயாகும். பங்கேற்பு அபிவிருத்தியானது நிச்சயமாக எப்போதுமே கிராம மக்களின் பிரதான பிரச்சினைகளையே இலக்காகக் கொள்ளும். இங்கு பிரதான பிரச்சினைகள் தொடர்பான அம்சங்களுக்கு முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. வறுமை ஒழிப்பு அல்லது குறைத்தல் என்ற எதிர்பார்க்கையுடன் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் என்பது கிராமத்தின் வறிய மக்களை மையமாகக் கொண்டு அவர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்படும் சமூக மாற்றத்திற்காக ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களாகும். வறியவர்களுக்காக அபிவிருத்தித்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாயின் அது அவர்களையே மையமாகக் கொண்டதாயும் அவர்களாலேயே சிந்தித்து உருவாக்கப்பட்ட ஒன்றாகவும் அமையவேண்டும். வெளியில் உள்ள ஒரு அபிவிருத்திப் பணியாளர் செய்யக்கூடியதெல்லாம் காரியத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக ஆக்கவும், எதிர்பார்க்கப்படும் நோக்கத்தை அடையவும் அவர்களுக்கு வழிகாட்டி உதவுவதே ஆகும் (இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களில் வெளி இடையீட்டாளர்களின் பங்கு மிகவும் விசேடமானவையாக அமைகின்றது.)
பலவீனமான மக்களுக்கு பங்கேற்பு அபிவிருத்தியின் மூலமே பயன்கிட்டும். பங்கேற்பு அபிவிருத்தியின் ஒன்றுடன் ஒன்று தொடர்பான இரண்டு முக்கிய அம்சங்களாவன சுயசக்தியும் பங்குபற்றலுமாகும். சுயசக்தியில் பங்குபற்றலும் பங்குபற்றலில் சுயசக்தியும் அடங்கியுள்ளதால் இவற்றைத் தனித்தனியாகப் பிரிக்க முடியாது. கிராமமக்கள் ஒரே
52

சமமான மக்கள் பிரிவினருக்கான இலட்சணங்கள், அம்சங்களைக் கொண்டவர்கள் அல்ல. வறிய மக்கள் சதாகாலமும் சமூக பொருளாதார ரீதியில் பலமிக்க பிரிவினரில் தங்கி இருப்பவர்களாக உள்ளனர்.
இவ்வாறான தங்கியிருத்தல் காரணத்தால் உருவாகும் சமத்துவமற்ற தன்மையால் சுயசக்தி, பங்கேற்பு என்ற இவ்விரு அம்சங்களும் கிராம மக்களிடம் அனேகமாக எழுச்சி பெறாமல் உள்ளேயே அடங்கிக்கிடக்கின்றன.
பங்கேற்பு அபிவிருத்தியின் அங்கமானது வறிய மக்கள் அவர்களைச்சுற்றியுள்ள சமூகத்தின் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்வதற்கான விமர்சனத்தை மேற் கொள்வதாகும். வறுமை ஏற்படுவதற்கான காரணங்கள், வறுமையிலேயே உழன்றுவருவதற்கான காரணம் மற்றும் இதற்கெல்லாம் காரணமான அமைப்பு முறை என்பனவற்றை விளங்கிக் கொள்ளலும் அதனை அவர்களுக்கு சாதகமான வழியில் ஆக்கிக் கொள்ளக்கூடிய வகையில் அவற்றை மாற்றும் முறையையே பங்கேற்பு அபிவிருத்தி என அர்த்தம் கொள்ளலாம்.
சமூக யதார்த்தத்தை சமூகமே புரிந்து கொள்ளல் என்பது அச்சமூக அமைப்பினை தமக்கு சாதகமான வகையில் மாற்றிக்கொள்ளுவதற்காக மேற் கொள்ளப்படும் ஒரு செயற்பாடாகும். இதுவே, பங்கேற்பு அபிவிருத்தியின் முதற்கட்டமாகும்.
இச் செயற்பாடு என்ன என எவராலும் கூறமுடியாவிடினும் நிச்சயமாக வறுமையின் கஷ்டநிலை, கடும் வேதனைமிக்க அடிமைவாழ்விலிருந்து மீட்சி பெறுவதற்கான அங்கமொன்றே என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை, இவர்களை ஏழ்மையிலேயே வைக்கக்காரணமான சமூக சக்திகளையும் அமைப்பையும் ஆழமாக ஆராய்ந்து அதனை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் கட்டத்தின் ஆரம்பமே இதுவாகும். பங்கேற்பு அபிவிருத்திச் செயற்படுத்துகையில் முக்கிய பங்கேற்போர் சமூக, பொருளாதார ரீதியில் மிகவும்
53

Page 29
பலவீனமான வறிய மக்களேயாவர். இப்பலவீனமானமக்கட் பரிவினர் தாம் வறியோராக இருப்பதற்காகவும், தொடர்ந்து அது நிலைபெற்று ஆக்கிரமித்திருப்பதற்குமான காரணம் என்ன என்பதை பகுப்பாய்வு செய்து அதிலிருந்து மீட்சி பெற கூட்டான வழியொன்றை மேற்கொள்வர். இவ்வேலைத் திட்டம் சரியானதாயும் விளக்கத்தோடும் ஆரம்பிக்கப்பட்டால் அது வறுமையிலிருந்தும் மீட்சிபெறுவதற்கான முழுமையான அபிவிருத்தி வேலைத்திட்டமாக அமையும். நீண்ட காலத்திற்கு அ ப் பா வரிகளான நிலைமையில் கட்டுண் டு ஆக்கத்திறனற்றவர்களாய் மட்டுப்பட்டிருக்கும் பலவீனமான மக்களை தங்கள் பிரச்சினைகளைப்பற்றி அறிந்து விளக்கம்பெற்று எழுச்சி பெறச்செய்யக்கூடிய சக்தி எது? இப் பிரச்சினைகளை தாமே அடையாளம் கண்டு, அவற்றிற்கான தீர்வுகளைக் காணக்கூடிய சக்தி வறிய மக்களிடம் உண்டா? அதாவது வறியவர்கள் அவர்களின் பிரச்சினைகளை அவர்களாகவே கண்டுபிடித்து அவர்களே தீர்வுகளையும் மேற்கொள்ளக்கூடிய சக்தியை பெற்றுள்ளனரா என்பதே கேள்வியாகும்.
ஒரு வாரத்திற்குள் தம் நிலையை இவர்கள் புரிந்து கொள் வார்களா? அவ்வாறில்லை எனின் வறியோரிடத்திலே அவர்களின் பலம், அறிவு என்பவற்றில் நம்பிக்கைகொண்ட அவர்களிடத்திலே மனிதத்துவ அடிப்படையிலான (அனுதாபம் கொண்டல்ல) ஈடுபாடு கொண்ட வெளி இடைத்தரகர் ஒருவரின் உதவி அவசியமா? என்ற அம்சங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டும். ஆனால், கிராமத்தவர்கள் தமது பிரச்சினைகள், காரியங்கள் சிலவற்றைத் தீர்த்துக்கொள்ள வெளி இடைத்தரகர் இல்லாமல் பல்வேறு அமைப்புக்களையும் தாமே அமைத்துக் கொண்டமை நாம் அனுபவமூலம் கண்ட உண்மையாகும். மரணாதார சங்கம், சிரமதான நடவடிக்கைகள், சமய விழாக்கள், நலன் நடவடிக்கைகள் என்பவற்றை எவ்விதமான வெளியார் தலையீடுமின்றி கிராமமக்கள் தாமாகவே ஒழுங்கு செய்து நிறைவேற்றி வருகின்றனர். இத்தோடு சிரமதான மூலம் பாதைவெட்டல், கிணறுகட்டல், சுகாதார சிகிச்சை நிலையங்கள் போன்றவை மேற்கொள்ளப்படுவதையும் நாம் காணலாம்.
54

இவ்வாறான வேலைத்திட்டங்கள் கிராம மக்களால் மாத்திரமின்றி மரபுவழி அரச உத்தியோகத்தர்கள், அரசு சார்பற்ற நிறுனங்களில் கடமை புரிவோராலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையை அறியலாம். இவை மக்களுக்குத் தேவையானதும் பிரயோசனமனவையுமாகும். எனினும், இவை முக்கியமாக கவனம் செலுத்தத்தக்க விவகாரங்களல்ல. ஆகவே, மேலே நாம் குறிப்பிட்ட வேலைத் திட்டங்கள் கிராமிய மக்கள் முகங்கொள்ளும் பிரதான அடிப்படை பிரச்சினை (வறுமை) யிலிருந்து விடுபட வழிவகுக்குமா என்று ஆராயும் தேவையுமுண்டு.
கிராமிய மக்கள் முகம் கொடுக்கும் s9HL 9-Lʼu L J 60)L.- பிரச்சினை வறுமையாகும். இவ்வறுமையையும் அதோடு தொடர்பான பிரச்சினைகளையும் தீர்க்க இவ்வேலைத் திட்டங்கள் எந்தளவிற்கு வழிவகுக்கும். இவ்வேலைத் திட்டங் களுக்கும் வறுமைக் கும் 35 Π Π 6007 | Ο Π 60T அம்சங்களுக்குமிடையே மிகச்சிறு அளவு தொடர்பே உள்ளது. வறுமையை ஒழிப்பதைநோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட நலன்புரி, சமய, சமூகசேவை, சுகாதார வேலைத்திட்டங்கள் சிலவேளை வறியோரிடம் வளர்ந்திருக்கத்தக்க ஆக்கத்திறன் சக்தியை அடக்கி ஒடுக்கி மழுங்கடித்துவிடும். ஒன்றுக்கொன்று தொடர்பற்ற வகையில் அமுலாக்கப்பட்ட தனிப்படுத்தப்பட்ட சுகாதார கல்வி, போசாக்கு மற்றும் இதுபோன்ற வேலைத்திட்டங்களால் வறியோரின் ஆக்கத்திறன் வெளிப்படவில்லை. ஏனெனில் வெளியில் திட்டமிடப்பட்ட இவ்வாறான செயற்திட்டங்களில் வறியோரின் சக்தியோ அல்லது பங்குபற்றலோ இணைத்துக் கொள்ளப்படவில்லை. சுயசக்தி, பங்குபற்றல் இவை இரண்டும் ஒன்றாக இணைக்கப்படாதவிடத்திலே ஆக்கத்திறன் வளர இடமில்லை. நாம் ஏன் வறுமைக்குள்ளாகி உள்ளோம். அதற்கான காரணங்கள் என்ன போன்ற கேள்விகளை ஒதுக்கி வைத்துவிட்டு இதுபற்றி கலந்துரையாடாமல் வறியோரின் வருமான நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முனையும் செயற்திட்டங்களோ அல்லது வறுமையினால் சீர்கெட்டிருக்கும்
55

Page 30
வறியோரின் சுகாதார, போசாக்கு, கல்வி மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களோ காலப்போக்கில் செயலற்ற நிலைக்கு உள்ளாகிவிடும் என்பது எமது அனுபவத்தால் கண்ட உண்மையாகும். அனேக சந்தர்ப்பங்களில் இவ்வேலைத் திட்டங்களை ஆரம்பித்த திணைக்கள, நிறுவன அல்லது அலுவலரின் ஆர்வம் இருக்குமட்டுமே வேலைத்திட்டங்களும் நடக்கும். அவரது அல்லது திணைக்களத்தின் ஆர்வம், அக்கறை குறையும் போது வேலைத்திட்டமும் அப்படியே இயற்கையான முடிவுக்கு வருகின்ற தன்மை உள்ளது. இதற்குக் காரணம் இத்திட்டங்களில் மக்களின் பங்குபற்றல் அடிப்படையாகக் கொள்ளப்படாமையேயாகும். வேலைத் திட்டத்தை உருவாக்கியோர் வெளியார்கள். இவர்கள் திட்டத்திலிருந்து வெளியேறியதும் அதனைக்கொண்டு நடாத்த, நிலைத்து இருக்க ஏற்பாடுகள் எதுவும் இல்லை. மக்கள் இதன் மையமாக அமையவில்லை.
இங்கு ஒரு பிரச்சினை எழுகின்றது. அதாவது சுகாதார, கல்வி, சமூகசேவை அல்லது நலன்புரி வேலைத் திட்டங்களால் வறிய மக்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணர முடியாதா? இவ்வேலைத்திட்டங்களை சுயசக்தியை மேம்படுத்தவும் பங்குபற்றலைக் கூட்டவும் பயன்படுத்த முடியாதா? எழுதப்படிக்கத்தெரியாமை, சுகாதார நிலைமையில் சீர்கேடு, மந்தபோசனம், பாடசாலை இடைவிலகல் என்பன வறுமையோடு ஒன் றிணைந்த அதன் நேரடி பிரதிவிளைவுகளாகும். அப்படியாயின் இவற்றோடு சம்பந்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களால் வறுமையை ஏன் ஒழிக்க முடியாது? போன்ற கேள்விகள் ஒருவர் மனதில் முெவது இயற்கை. சுகாதாரக்குறைபாடு. மந்தபோசனம் பாடசாலை இடைவிலகல் போன்றவை நிச்சயமாக வறுமையால் ஏற்படும் விளைவுகளாகும். ஆனால், வறுமைக்கான காரணங்கள் இவையல்ல. வறுமை ஏற்படுவதற்கு இதனை விட வேறுபல காரணிகள் உள்ளன.
56

வறியவர்களால் அவர்களது நிலையைப் பூரணமாக விளங்கிக் கொள்ளக் கூடியதும் வறுமைக்குக் காரணமான அம்சங்களை நீக்கக் கூடியதுமான வேலைத்திட்டங்கள் மூலம் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும். சுகாதாரம், போசாக்கு, கல்வி போன்ற வேலைத்திட்டங்கள் கூட் அவற்றின் விரிவாக்கத் தன்மைக்கு ஏற்ப காலப்போக்கில் வறுமைக்கான மூலகாரணங்களை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்களாக மாற்றிக் கொள்ள முடியும். எனினும், இவ்வேலைத் திட்டங்கள் யாவும் ஆழமான தன்மைகளைக் கொண்டிருக்காமல் மேலோட்டமான அம்சங்களையே கொண்டிருந்தன என்பது எமது அனுபவமாகும்.
சுகாதாரம் போசாக்கு கல்வி மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் என்பன வறியோரை அடைவதற்கான சிறந்த மார்க்கங்களாகும். எனினும், அது எப்படி ஆரம்பிக்கப் பட்டதாயினும் சரி வறிய கிராம மக்கள் தமது யதார்த்தத்தை விளங்கிப் புரிந்து கொள்ளச் செய்து அவர்களுக்கு சாதகமான மாற்றத்தைக் கொண்டு வரத்தக்கதாக மேற்கொள்ளப்பட வேண்டும். பங்கேற்பு அபிவிருத்தி முறைக்கு ஏற்ப இவை அமைய வேண்டும். இதனால் மாத்திரமே வறியோர் இதனால் நன்மை பெறுவர் என்பதே இதன் அர்த்தமாகும். அவ்வாறான அபிவிருத்தி முறை எழுச்சி பெறவேண்டுமாயின் அவர்களின் உண்மையான யதார்த்ததிலையை புரிந்துகொள்ளக்கூடிய அணுகுமுறையை கடைப்பிடித்து, அவற்றிற்கு பொருத்தமான அபிவிருத்தித் திட்டங்களை அமைக்க வேண்டும். பங்கேற்பு அபிவிருத்தி ஏற்படவேண்டுமாயின் வறியமக்கள் தமது கிராமத்தின் யதார்த்தத்தினைப்புரிந்து அதனை அவர்களுக்கு சாதகமாக மாற்றுதல் என்பதை நாம் கண்டோம். இதனை மறுவகையில் கூறுவதாயின் வறியமக்கள் இதுவரை காலமும் தாம் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த சமூக பொருளாதார அமைப்பிலிருந்து விடுபட மாற்று அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பிக்கவேண்டும் என்பதாகும்.
57

Page 31
இன்றைய சமூக, பொருளாதார அமைப்பிலிருந்து விடுபடவேண்டுமாயின் புதிய சமூக, பொருளாதார அமைப்பு கட்டி எழுப்பப்படல்வேண்டும். இது சுயசக்தி பங்கேற்பு என்ற அம்சங்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி முறைமையாலாகும். கிராமிய மக்கள் சமூக, பொருளாதார, உளவியல் ரீதியாக பலவீனமுற்றமைக்குக் காரணம் சதாகாலமும் அவர்களை கட்டுண்டு வைத்திருக்கும் பல்வேறு Flyp 5, பொருளாதார கட்டுப் பாடுகளாகும் . இக்கட்டுப்பாடுகளின் மூலம் நிரந்தரமாக வரப்பிரசாதங்களை வசதிபடைத்தோர் மட்டும் பெற்றுக்கொள்கின்றனர்.
இக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே மீனவர், விவசாயிகள், கிராமிய கொத்தனார் போன்ற தொழிலாளர், சேனைப்பயிர் செய்கையாளர், குத்தகை விவசாயிகள், தொழிலாளர் ஆகியோர் பெரும் வறுமையில் உழல்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளோம். இவர்கள் தமது வாழ்நாள் முழுவதுமே இவ்வாறான தொழில்களில் ஈடுபட்டுள்ள போதிலும் ஏன் வறுமையில் உழல்கின்றனர். இம்மக்கள் பிரிவினர் நிரந்தரமாகவே வறுமைச் சக்கரத்தில் அகப்பட்டுள்ளனர்.
வறியமக்கள் இலகுவில் மீட்சி பெறமுடியாத அளவிற்கு சமூக. பொருளாதார சூழலில் அகப்பட்டுள்ளனர். பொதுவாக எல்லா கிராமங்களிலுமுள்ள மக்கள் வறியோர், பணக்காரர் என்ற இரு பிரிவிற்குள் அடங்குகின்றனர். எனினும் சில கிராமங்களில் இவ்வாறு பிரிக்கப்படமுடியாதபடி வறியவர்கள் மாத்திரமே வசிக்கின்றனர். எனினும் இக்கிராம மக்கள் தமது அயல் கிராமம் அல்லது பக்கத்தில் உள்ள நகரத்திலுள்ள வசதிபடைத்தோரின் பிடிக்குள் அகப்பட்டுள்ளனர். இவர்கள், இவ்வாறான வசதிபடைத்தோரிடம் வட்டிக்குக்கடன் பெறுதல் கடைகளில் கடனுக்கு சாமான் வாங்குதல், தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதல், அவர்களிடம் கூலி வேலை பெறுதல், உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்தல், விவசாயத்திற்குத் தேவையான விதை, உரம் போன் றவற்றைப் பெற்றுக் கொள் தல் , அவசரத்தேவைக்கு கொடுக்கல் வாங்கல் செய்து கொள்தல்,
58

அவர்களின் நிலத்தில் வசித்தல் போன்ற இன்னோரன்ன காரணிகளில் ஒன்றால் அல்லது இரண்டு மூன்று காரணங்களால் சிக்குப்பட்டுள்ளனர். இவ்வாறாக இவர்கள் எவ்வகையில் சம்பந்தப்பட்டிருந்தாலும் நட்டமடைவது வறிய மக்களேயாகும். இக்காரணங்களால்தான் இவ்வுறவு கீழான ஒன்று எனக் கூறினோம்.
பங்கேற்பு அபிவிருத்தி இலக்காகக் கொள்வது வெளியே திட்டமிட்டுக் கொண்டு வரப்படும் அபிவிருத்தித்திட்டங்களில் அல்ல. இவ்வபிவிருத்தி முறையானது வறியவர்களால் அவர்கள் அகப்பட்டுள்ள பிடியைப் பற்றி உணரச் செய்து அதிலிருந்து விடுபடக் கூடிய வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதாகும். இது மிகவும் இலகுவாகவே மேற்கொள்ளக்கூடியதாகும். எனினும் இவ்வேலைத்திட்டத்தை படிப்படியாக ஒரு அபிவிருத்தி வேலைத்திட்டமாக மாற்றச் செய்வதே இதன் முக்கிய அம்சமாகும். இந்த அம்சமானது எந்த வகையிலும் ஏதாவது ஒரே ஒரு அம்சத்தை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் அடைய முடியாது. முன்னிலைப் பாடசாலை, சுகாதார, நலன்புரி வேலைத்திட்டங்கள் அனேகமான சந்தர்ப்பங்களில் அவ்விடயங்களுக்கு மட்டுமே மட்டுப்படும். இவை செயற்றிட்டம் முடியடையும் காலத்தோடு அல்லது அதற்கு முன்னரேயே முடிவிற்கு வந்துவிடும். ஆனால் பங்கேற்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் இவ்வாறான குறுகிய தன்மைகளை எல்லாம் தாண்டி மிக நீண்டதுர எதிர்பார்ப்புடன் மேற்கொள்ளப்படும் திட்டமாகும்.
பங்கேற்பு அபிவிருத்தியானது வறியோரது சுயசக்தியும் பங்குபற் றலும் ஒன்றிணைந்து உருவாக்கப் படும் சக்தியிலிருந்தே ஏற்படுவதாகும். அவ்வகையில் இப்பங்கேற்பு அபிவிருத்தி முறைமையானது மிகவும் ஆழமான அம்சமானதும் அர்த்தமிக்கதுமாகும், இது மக்களை ஆதாரமாகக் கொண்டதாகும். அதுமாத்திரமல்ல, இன்று நடைமுறையில் உள்ள மரபுவழி அபிவிருத்தி நடவடிக்கைக்கு ஒரு மாற்று வழியுமாகும். பங்கேற்பு அபிவிருத்தியானது வெளி நிதி உதவி, பல்வேறு மானியங்கள் அல்லது
59

Page 32
பொருட்கள் ரீதியிலான உதவிகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் ஒரு திட்டமல்ல. மரபு வழி அபிவிருத்தித் திட்டத்தில் மக்களின் ஆக்கச்சக்திக்கு முன்பே வெளி உதவிகள் வரத்தொடங்கிவிடும். இங்கு, பங்கேற்பு அபிவிருத்தி முறையில் வெளி உதவிகளில் தங்காமல் சுயசக்தி, பங்கேற்பு இவை இரண்டும் சேர்ந்து உருவாகும் ஆக்கச்சக்தியே அபிவிருத்தியை எடுத்துச் செல்லும் பிரதான சக்தியாக அமையும். வெளி உதவி, மானியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் அவ்வுதவிகள் நின்றவுடன் தானாக நின்றுவிடும். ஆனால் பங்கேற்பு வேலைத்திட்டங்கள் அவ்வாறு நிற்காது. ஏனெனில், இவ்வேலைத்திட்டமானது வறியோர்களால் அவர்களது சொந்த சக்தியால் ஆக்கப்பட்ட திட்டம் என்பதனாலாகும்.
இதனால் பங்கேற்பு அபிவிருத்தி செயல்முறையில் அரசிடமிருந்து கிடைக்கும் உதவிகள் மானியங்கள், வங்கிக்கடன் என்பவற்றை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணம் ஏற்படக்கூடும். இது முற்றுமுழுவதும் பிழையான ஒரு அம்சமாகும். வறிய மக்களால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்திக் கருமங்களுக்கு வங்கிக்கடன் அரசாங்க உதவி, மானியங்கள் அனைத்தும் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும். இங்கு, எதிர்பார்ப்பதெல்லாம் பங்கேற்பு அபிவிருத்தியில் வங்கிக்கடன் மானியங்கள், அரசாங்க உதவிகள் யாவும் வறியோரின் ஆக்கச் சக்தியை இல்லாமற் செய்துவிடக் கூடாது என்பதாகும். பங்கேற்பு அபிவிருத்தி மூலம் தமக்கு கிடைக்க வேண்டிய வங்கிக்கடன் மானியங்கள் அல்லது நிறுவனங்களின் உதவிகள் பற்றி வறியோர் தாமாகவே புரிந்து கொள்வர். இதுவரை தமக்கு கிடைக்க வேண்டிய வங்கிக்கடன், மானியங்கள் மற்றும் உதவிகளை கிடைக்கச் செய்யாமல்வேறு நபர்களால் பயன்படுததியவற்றை அவர்கள் தொடர்ந்தும் அவ்வாறு செய்யாமல் (வறியோர்) தாமே பெற்றுக்கொள்தல் முக்கியமாக அவதானிக்கக்கூடிய ஒன்றாகும். மரபுவழி அபிவிருத்தித் திட்டத்திற்குக் கிடைக்கும் மானியம், உதவிகள் பாவிக்கப்படும் விதத்திற்கும் பங்கேற்பு அபிவிருத்தி முறையில் கிடைக்கப்பெறும் உதவிகளைப் பாவிக்கும் முறைக்கும் உள்ள வித்தியாசமானது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றதாகும்.
60

பங்கேற்பு அபிவிருத்தி முறையின் கீழ் வங்கிகளிலிருந்து கிடைக்கும் கடன், அரச நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் உதவிகள், அரச சார்பற்ற நிறுவனங்களிலிருந்து பெறப்படும் நன்கொடைகள் என்பன சுய சக்தி, பங்கேற்புடன் ஆரம்பிக்கப்படும் வேலைத்திட்டங்களை பலப்படுத்தவும் ஆழமாக அபிவிருத்தி செய்யவும் யதார்த்தமான வேலைத்திட்டங்களை பலப்படுத்தவும் ஆழமாக அபிவிருத்தி செய்யவும் யதார்த்தமான வேலைத்திட்டமாக ஆக்கவும் பயன்படுத்தப்படும். அதேவேளை, மரபுவழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இக்கடன்கள், உதவிகள் மக்களின் சுயசக்தியையும் பங்கேற்பையும் மீண்டும் கட்டி எழுப்ப முடியாத அதேவேளை அவர்களின் ஆக்கச்சக்தியை அடக்கி மக் களை சதா கால கடன் காரர் களாகவும் பலவீனமானவர்களாகவும் அடிமைகளாகவும் ஆக்க வழிசெய்கின்றன.
பல்வேறு அரசாங்க திணைக் களங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விரிவாக்க சேவைகள் அனேகமான சந்தர்ப்பங்களில் கிராமத்திலுள்ள உயர்வர்க்கத்தாரினதும் வசதிபடைத்த வர்க்கத்தாரினதும் வசதிக்காகவே இயங்குகின்றன. வறியோருக்கு இவ்விரிவாக்கத் திட்டத்தின் வாசனை கூட கிடைப்பதில்லை. முறையான அடிப்படையில் சேவை வழங்கப்படுமாயின் விரிவாக்க சேவை மாத்திரமே கிராம மக்களின் அபிவிருத்திக்கு போதுமானதாகும். ஆனால், முறையான அமைப்புக்கள் இல்லாததால் ஒன்றில் வறியோருக்கு இவ்வுதவிகள் கிடைக்காமல் போகின்றன அல்லது வேறு பிரிவினரால் இவை பெற்றுக் கொள்ளப்படுகின்றன. முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட பங்கேற்பு அபிவிருத்தித் திட்டத்தில், விரிவாக்க சேவையானது வறியோரை ஒதுக்கிவிட முடியாது. அமைப்பானது பலமானது என் ற காரணத் தினாலேயே வறியோரை நாடவேண்டியதாகின்றது. இது பங்கேற்பு அபிவிருத்தியின் மாயத்தன்மை போன்றது. வறியோரின் ஒழுங்கமைக்கும்
61

Page 33
சக்தியை அறிந்துகொள்ளும் விரிவாக்க அலுவலர்களும் தம் கடமைகளை முறையாக செய்யத்துரண்டப்படுகின்றனர். அதுமட்டுமல்ல, வறியோரின் வளர்ச்சியில் இதயபூர்வமான விருப்பமிக்க அலுவலர்கள், அபிவிருத்தி வேலைகளை மேலும் பலமிக்கதாக்க உதவுவர். அலுவலர்களின் முழு ஆற்றலையும் பெறக்கூடியவர்கள் பங்கேற்பு அபிவிருத்தி முறையில் இயங்கும் ஒழுங்கமைப்பிற்குட்பட்ட மக்களேயாகும். பங்கேற்பு அபிவிருத்தியானது பலவீனமான மக்களின் அபிவிருத்தியில் எவ்வளவு ஆழமாக சம்பந்தப்பட்டுள்ளது என்பதை விபரிக்க மேற்கூறிய கருத்துக்கள் போதுமானவை அல்ல. இதில் விவரிக்கப்படுவது மிகவும் எளிதான இரண்டு மூன்று விடயங்களாகும். இது மிக ஆழமாக ஆராயக்கூடிய விடயமாகும்.
வறுமைவயப்பட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ள, இவர்களை நிரந்தரமாக சிறைப்படுத்தியுள்ள வறுமையின் பாரிய பிரச்சினையை நிவர்த்தி செய்துகொள்வதும் அதனைத் தீர்த்துக்கொள்வதற்காக நடவடிக்கையொன்று எடுப்பதும் வறியமக்களுக்கு ஒரு போதும் தனியாக செய்ய முடியாத காரியமொன்றாகின்றது. இது பல்வேறு காலங்களில் பல நாடுகளில் நடந்துள்ள இடையீடுகளின் மூலம் வெளியாகின்றது. ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய வலயத்தில் வாழும் வறியமக்களின் பிரச்சனையை நிவர்த்திக்கும்போது அதிகமாக ஆக்கக்திறமையுடன் கூடிய Go6y6f6 u TrifuunTGOT இடையீட்டாளர் ஒருவரது உதவி அதங்குக் கிடைத்துள்ளது என்பது புலனாகின்றது.
பங்கேற்பு அபிவிருத்தியின் மூலம் மக்களுடன் ஒன்றி ணையும் வெளிவாரியான இடையீட்டாளன் உண்மையிலே சிறப்பானவகையில் அதற்கே இயைந்த முறையையும் சிந்தனையும் கொண்ட வறியவர்களின் பிரச்சனையைத் தமது புத்தியினால் விளங்கிக்கொண்டு உளப்பூர்வமாக அதற்கு உயிரூட்டக்கூடிய அபூர்வமான நபராவார்.
62

**G、
យកបែបn ol li { $၅ ]
இடையீட்டாளர்
பங்கேற்பு அபிவிருத்தி என்பது சமூகத்தில் உள்ள எல்லா மக்கள் தொகுதியினருக்காகவும் செயற்படும் அபிவிருத்தி வேலையொன்றல்ல. இது விசேடமாக வறிய மக்களின் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டதாகும். எந்த அபிவிருத்தி நடவடி க்கையொன்றின்போதும் பிரயோசனத்தை அடையாததும் அத்தகைய எல்லா அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் விடுபட்ட பொருளாதார சமூக அடிப்படையில் பலவீனமடைந்த மக்களே இவ்வபிவிருத்தியின் இலக்காக அமைவர். இக்காரணத்தினையே தான் இவ்அனுபவங்களில் ஈடுபாடு கொள்ளும் இடையீட்டாளர் வறியவர்களுடன் வேலை செய்து அவர்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொள்ளும் மனிதாபிமானத்துடன் கூடிய (பரிதாபத்துடன் அல்ல) அபிவிருத்தி அலுவலராக அமைகின்றனர். இதனை மிக விஷேட அம்சமாகக் குறிப்பிட வேண்டும். ஏன் எனில் வறுமையை ஒழிக்கவோ அல்லது குறைக்கவோ அரச அல்லது அரச சார்பற்ற இயக்கங்கள் அபிவிருத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது அனேகமாக, அபிவிருத்திக்கு உட்படக்கூடியவர்களைத் தெரிவு செய்யாது முழு ஊருக்குமே அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செயற்படுத்துகின்றன. வறியவர்களின் சமூக, பொருளாதார யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு இந்நிலைமையை அவர்களுக்கு விருப்பமான வகையில் மாற்றியமைக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்குகொள்ளும் இடையீட்டாளர் ஊருக்கு, சமூகத்திற்கு கால் வைக்கத் தொடங்கும் போதே ஏனைய அபிவிருத்தி அலுவலர்களை பார்க்கினும் தெளிவான மாற்றத்தினை வெளிக்காட்டுவார்.
63

Page 34
வறியவர்களின் யதார்தத்தினைப் புரிந்துகொண்டு அதனுடன் இணைந்து அபிவிருத்தி நடவடிக்கையொன்றினை ஆரம்பிக்க கிராமத்திற்குச் செல்லும் இடையீட்டாளர் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் மூலம் அல்லது கிராமத்தில் செல்வாக்குள்ள நபர் ஒருவர் மூலம் அல்லது வறியவர்களின் அபிமா னத்திற்குட்படாத ஒரு நபர் மூலம் ஊருக்குள் வருகை தரும்போது இவர்பற்றி வறிய மத்தியில் தப்பபிப்பிராயம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இடையீட்டாளர் பற்றி தப்பபிப்பிராயம் ஏற்படாத முறையில் தனியாக அவர் வருகை தர முடியுமென்றால் இது முக்கியமானதொரு அம்சமாக அமையும். இதில் உள்ள கவர்ச்சித் தன்மையினை தனியான முறையில் வருகை தரும் இடையீட்டாளரின் மதிப்பினை மரபுவழி ரிதியாக அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களால் புரிந்துகொள்ள முடியாது. இதனை விளக்குவதற்கு சிறியதோர் உதாரணத்தைக் காட்டுதல் உசிதம் என நினைக்கின்றேன்.
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வெளியில் இருந்து வருகை தரும் அபிவிருத்தி அலுவலர் முதலில் ஊரிற் பிரவேசிப்பது கிராம சேவை அலுவலர் மூலமாக இருந்தால் இவர் தங்குவது கிராம சேவை அலுவலர் தேடிக்கொடுத்த தங்குமிடத்தில் என்றால் இவர் நிச்சயமாக கிராம சேவை அலுவலரின் நேசத்திற்குரிய ஒருவர் என்று மக்கள் கணிப்பதில் சந்தேகமில்லை. இதனால் நடப்பது என்ன? இவருக்கு ஊரில் சரியான, யதார்த்தமான விபரங்களைத் தேடிக்கொள்வது பிரச்சனையாக அமையும். கிராமசேவை அலுவலர் உட்பட அரசாங்க உத்தியோகத்தர்களின் நடவடிக்கை சம்பந்தமாக சுயாதீனமாகத் தலையிட்டு விமரிசன அடிப்படையில் விடயங்களைச் சமர்ப்பிக்க வறிய மக்கள் விரும்பாதிருக்கலாம். காரணம் உண்மையான நிலைமைகள் வெளியாகினால் ஊரவர்களுக்கு அது பிரச்சினையாக அமையலாம் என்பதனாலாகும். அடுத்து அரசாங்கம்
தொடர்பான எல்லா அபிவிருத்தி நடவடிக்கையிலும்
64.

கிராமசேவை அலுவலர் சம்பந்தப்படுவதால் இந்த நடவடிக்கைகளின் வெற்றி தோல்விகள் பற்றிய அம்சங்களை கூறுவதற்கும் மக்கள் தயக்கமடைவார்கள். வறியோர்களை வருத்தி தனவந்தவராகிய நபர் ஒருவர் மூலமோ, ஏழைகளுடன் சம்பந்தமில்லாது, புகழுடைவதற்காக சமூகசேவைகளில் ஈடுபாடு கொள்ளும் ஊர்ப் பெரியார் ஒருவர் மூலமோ அல்லது இவர்களது ஆலோசனைகளின் கீழோ இடையீட்டாளர் ஊரிற் பிரவேசித்தால், இத்தகைய சந்தர்ப்பத்தில் வறியோர் மத்தியில் இவர் பற்றி நல்லெண்ணம் ஏற்படாது. இடையீட்டாளர் வறியோர்களுடன் தொடர்புபட்டு செயலாற்ற வந்தவரல்ல. ஊரில் உயர் வகுப்பினரின் தேவைகளை நிறைவேற்ற வந்த ஒருவர் என்று மக்கள் முடிவுகட்டுவர். இடையீட்டாளர் கிராமசேவை அலுவலர் மூலம், தனவந்தர் ஒருவர் மூலம் பெரியார் ஒருவர் மூலம் ஊரிற் பிரவேசித்தாலும் இவர் செய்ய இருக்கும் நடவடிக்கை பற்றி தெளிவான விளக்கம் இவருக்கு ஏற்பட இடமுண்டு. அப்படி இருந்தால் இவரது வருகை மூலம் வறியோர்களுக்குள் இவர் பற்றி ஏற்படும் அபிப் பிராயம் இவரது எல்லாப் பாரிய செயற்பாடுகளின் போதும் பாரிய தாக்கத்தினை தோற்றுவிக்கலாம். இதனால் இவரது வருகையை முழு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் ஒரு சைகையாக ஆக்கிக்கொள்ளல் வேண்டும். பங்கேற்பு அபிவிருத்தியில் இடையீட்டாளர் புதிய முறையில் புதிய பாணியில், புதிய நோக்கில் மக்கள் முன் வருகை தரவேண்டும்.
இடையீட்டாளர் செயற்படுவது வறியோர்களுடனாகும். இங்கு நடைமுறையில் உள்ள சமூகப் பொருளாதார செயற்பாட்டினுள் வறியோர்களிடம் இருந்து இல்லாமற் போன ஆக்கத்திறனை திரும்ப ஏற்படுத்திக் கொள்வது இடையீட்டாளர் படிப்படியாக இவர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் நெருங்கிய தொடர்பின் மூலமாகும். இந்தத் தொடர்பு கண்காணிப்பு, விவாதம், கலந்தாலோசனை, போன்றவற்றின் மூலம் நடைபெறலாம். இவ்வாறு
65

Page 35
அடிப்படையாக ஏற்படும் தொடர்பினை, மேலும் அதிகரித்துக்கொண்டு இடையீட்டாளன் ஊரின் சமூக, பொருளாதார நிலைமைகள் பற்றிச் செய்யும் ஆய்வின்போது ஊரில் உள்ள வறியோர்கள் இவரைக் கட்டாயமாக சேர்த்துக்கொள்வர். இவர் இதனை வறியோர்கள் சமூகம் கொடுக்கும் பங்கேற்பு ஆய்வாக ஆக்கிக் கொள்வார். வறிய மக்களை ஆய்வுக்குட்படுத்தும் போது இவர் தனது நடவடிக்கைகளை இலகுபடுத்திக் கொள்கின்றார். இவரால் வறியோர்க்கு விளங்கவைக்க வேண்டிய அம்சங்களை வறியோர்கள் தாமாகவே விளங்கிக் கொள்கின்றனர். இதனாலே மரபு பேணும் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், இதுவரை காலமும் தமது இலாபநோக்கத்திற்காக வறியோர்களை இலக்காக வைத்துச்செய்த ஆய்விற்குப் பதிலாக வறியோர்கள் தம்மையே ஆய்வு செய்துகொள்வதன் மூலம் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடையாளங்கண்டு கொள்வதுடன் ஆய்வு அறிவாளிகளுக்கு மாத்திரம் உரித்தானதல்ல, வறியோராலும் செய்ய முடியுமான ஒன்று என்ற நம்பிக்கை ஏற்படுவது மிக முக்கியமான அம்சங்களாகின்றன. இதுவரை நடந்த ஆராய்ச்சிகளின் குறிப்பிடக்கூடிய சேவையொன்றும் நடக்காமைக்குக் காரணம் இந்த ஆய்வுகள் எல்லாம் வெளிய ஆராய்ச்சியாளர்களின் ஆய்வானதால் ஆகும். ஊர் மக்கள் ஊரின் பிரச்சனைகளைத் தெரிந்துகொண்டு அந்தப் பிரச்சனைகளை நிவர்த்தி செய்துகொள்வதற்கு அவர்களாகவே ஒருங்கிணைவது பங்கேற்பு ஆய்வு மூலம் மெருகூட்டப்படுதல் பங்கேற்பு அபிவிருத்திக்கு முக்கியமான அம்சமாக அமைகின்றது. இங்கு எழும் பிரச்சனை இத்தகைய ஆய்வினை வறியோர்களுக்கு தனியேசெய்ய இயலுமா என்பதாகும். இதனைச் செய்வதற்கு இவர்களை வழிப்படுத்தும் சக்தி யாது? இது ஆரம்பக் கட்டத்தில் வறியோர்களுக்கு தனியே செய்ய முடியுமான ஆய்வொன்றல்ல. இவ்வாய்விற்கு இடையீட்டாளர் கட்டாயமாக ஒத்தாசை புரியவேண்டும்.
66

வறிய Lodhay,6f 66t ஆக்கத் திறமைகளை வெளிக்கொண்டுவர இயலுவது ஆய்வுகள் மூலம் கண்டு பிடித்த விடயங்களை அலசி பகுப்பாய்வுக்குட்படுத்துவதன் மூலமே யாகும். இவ்விடயங்களை விமர்சிக்க இடையீட்டாளர் இவர்களுக்கு உதவி புரியவேண்டும். இடையீட்டாளர் ஒரு போதும் வறியவர்களின் அறிவு பற்றி தாழ்வாக நோக்கு தல் கூடாது. அதனை பிழையான மதிப்பீடு செய்யக் கூடாததுடன் தான் நூல்கள் வாயிலாகப் பெற்ற அறிவு முறைகள் கல்வி மூலம் பெற்ற சான்றிதழ் தொடர்பாக மிகை மதிப்பீட்டில் இல்லாதிருப்பதும் இடையீட்டாளர்களிடம் இருக்க வேண்டிய ஒரு குணவியல்பாகும். தமது முறையான கல்வி அறிவுடன் வறியவர்களின் பிரயோக அறிவும் ஒன்றுபடும் போது புதியதோர் ஆக்கம் உருவாகின்றது. வறியவர்களின் அனுபவங்களை விமர்சிப்பதனால் ஆய்வின் போது பெற்றுக் கொண்ட வரிடயங்களை விவாதத்திற்கு உட்படுத்துவதன் மூலம் இதுவரை நெருங்கி சிறைப்பட்டு, கறைபடிந்து அடக்கப் பட்டிருந்த ஆக்கத்திறனும் செயற்பாடுகளும் அவிழ்க்கப்பட்டு சுதந்திரமடைந்து புனிதமடைவது, இந்நடவடிக்கையின் மிக விசேடமான நிகழ்வாகும். இச்சந்தர்ப்பத்தை இடையீட்டாளர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோன்று வறிய மக்களிடம் விடயங்களை விளக்கும்போது மேலும் பல விடயங்கள் எழுவது இயற்கையானதாகும். வறுமை, அந்த வறுமையுடன் தொடர்ந்து உழல்தல், வறுமை வேரூன்றி விடுதல், அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் செயற்படுத்தப்படும் அபிவிருத்திச் செயற்திட்டங்கள் வறியோர்க்கு புலப்படாமை போன்ற விடயங்கள் தொடர்பாக, மீள நோக்குவதற்கு உந்திவிட முடிவது இந்த பயிற்சியின் மூலமேயாகும். இவ்வாறு சமூக-பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்து அதன் மூலம் பெற்றுக்கொண்ட விடயங்களை மறுமுறை பகுப்பாய்வு செய்து ஊரில் உள்ள குழுவொன்றுடன் யதார்த்தத்தினைத் தேடிக்கொள்வதற்கு இடையீட்டாளருக்கு மாத்திரமல்ல, அந்த யதார்த்தத்தினை வறியோர்க்கும் விளங்கக்கூடிய முறையில் கலந்துரையாடவேண்டும்.
67

Page 36
இடையீட்டாளர் வறியோர்களின் அறிவினால் நன்மை அடைய வேண் டி ய அதேவேளை வ றியோர் இடையீட்டாளர்களினால் நன்மையடைதல் வேண்டும். இவர் வறியோர்களிடம் இருந்து பயின்று கொள்ள விருப்பினை கொண்டிருக்கவேண்டிய அதே வேளை தான் எல்லாம் அறிந்தவன் என்ற மரபுவழி படித்த வர்களின் அடிப்படை இல்லாத நிலையிலிருந்து மாறல் வேண்டும்.
வறியோர்கள் யதார்த்த நிலையை விளங்கிக் கொள்வதற்கு வழிவகுப்பது மாத்திரம் வறுமையில் இருந்து விடுபடுவதற்கு வழியாக அமையாத அதே வேளை அதில் இருந்து விடுதலையாவதற்கு வறியோர் விரும்பக்கூடிய வகையில் அந்த யதார்த்தத்தினை மாற்றும் பயனுள்ள வேலையில் வறியோர்களும் கட்டாயமாக ஈடுபாடு கொள்ள வேண்டும். (இது அபிவிருத்தி வேலைகளின் ஆரம்பப்படியென்று குறிப்பிடலாம்) இச் செயற்பாடு ஏனைய அபிவிருத்தி நடவடிக்கையின் செயற்பாட்டிலிருந்து முறறிலும் மாறுபட்ட ஒன்றாகும். பிரச்சனைகளை விளங்கிக் கொண்டு அப் பிரச்சனைகளுக்கு பரிகாரமாக ஆரம்பிக்கப்படும் நடவடிக்கையே அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றாகும். வறுமையின் எல்லாப் பிரச்சனைகளையும் இனங்கண்டு, அதன் செயற்பாட்டு இயக்கத்தில் ஓரிடத்தின் ஊடாக உட்புகுவது முழு வட்டத்தினையும் மாற்றியமைக்க எடுக்கும் ஒரு நடவடிக்கை முறையாகும்.
இந்த அபிவிருத்தி நடைமுறை வறியோர்களின் ஆக்கத்திறனின் ஊடாக ஆரம்பமாவதொன்றாகும். இந்த செயற்பாட்டின்போது வெளிவாரியான உதவியைப் பற்றி எந்தவொரு சிந்தனையும் ஏற்படாது. இது பற்றியசிந்தனை உண்டாவது வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்திலாகும். இவ்வாறு ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி அலுவல்கள் மனிதர்களின் லெளகீக வசதிகளை அதிகரிப்பதிலும் பார்க்க, அவர்களது வறுமையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்ட
68

செயற்பாடாக அமைகின்றது. பாதை, மின்சாரம், சனசமூக நிலையங்கள் கிராமத்திற்கு அவசியமானதுதான். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட பின்னரும் கூட கிராமங்களில் வறுமை நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. அவ்வாறாயின் இவற்றை விட விசேடமான முதன்மைத்துவமாக இந்த வேலைத்திட்டத்தில் வேறுவிடயங்கள் ஆரம்பிக்கப்படல் வேண்டும். இங்கு வறியவர்களை உரியதிசையில் வழிநடத்தும் செயற்பாட்டிற்கு இடையீட்டாளர் ஒத்தாசை புரிதல் வேண்டும். இந்த வேலைத்திட்டத்தின் வெற்றி மக்களின் சுயசக்தியிலும் இவர்கள் உண்மையாகவே ஒன்றுபடும் போது ஏற்படும் பங்களிப்பின் மீதிலுமே தங்கியுள்ளது. இந்த அடிப்படைக் கோட்பாடு இரண்டும் இல்லாது பங்கேற்பு அபிவிருத்தியொன்று ஏற்படாது. வறியவர்கள் தனித்தனியாக தமது சக்தியைக் கொண்டு ஆரம்பிக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளினுள் உண்மையிலே சுயசக்தி அடங்கிஇருக்கவில்லை. இங்கு சுயசக்தி என்று நான் கருதுவது வறியோர்கள் குழுக்களாக இணைந்து ஏற்படுத்திக்கொள்ளும் சக்தியினையாகும். வறியோர்களிடம் உள்ள ஆக்கத்திறன் சக்தி பிரகாசிக்கத் தொடங்குவது சுயசக்தியும் பங்கேற்பும் இணையும் போதிலாகும். பங்கேற்பு அபிவிருத்தி நடவடிக்கையில் சுயசக்தி இன்றி பங்களிப்பும் பங்கேற்பின்றி சுயசக்தியும் உண்டாக முடியாது. இந்த நடவடிக்கை ஆரம்பமாகும் போது சுயசக்தியையும் பங்களிப்பையும் அடிப்படையாக வைத்து அதன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கையொன்றினை ஆரம்பிப்பதற்கு இடையீட்டாளர் இயன்றளவு உதவி செய்தல் வேண்டும். ஆனால் இடையீட்டாளர் ஒரு அடிப்படை விடயம் பற்றி விசேட கவனம் செலுத்துதல் வேண்டும். இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் வறியவர்களின் சுயசக்திக்கு பாதகம் ஏற்படாத வகையில் இவரது பங்களிப்பு அமைதல் வேண்டும். இவருடன் அநாவசியமான பிணைப்பு வறியோர்களினுள் எற்படாது இருத்தல் வேண்டும். மிகவும்
69

Page 37
எளிதாகக் குறிப்பிடுவதாயின் இவரது எல்லா நடவடி க்கைளில் இருந்தும் வறியோர் இவர்மீது தங்கியிருக்கும் நிலைமை, பிணைப்பு ஆகியன குறைவடைந்து வறியோர்களின் பலம், முதன்மை பெறக்கடிய வகையில் வேலைத்திட்டமொன்றை தயாரித்தல் வேண்டும்.
வறியோர்களுடன் நெருங்கி அவர்களுக்கு உதவி செய்துகொண்டு, மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளைச் செயற்படுத்துவது எல்லாம் வறியோர் இவர் மீது காட்டும் நம்பிக்கையின் மீதே தங்கியுள்ளது வெளியே இருந்து கிராமத்திற்கு வருகை தரும் இடையீட்டாளர் மீது மக்கள் எந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு நம்பிக்கை வைக்கின்றனர்? இவரது வெளிப்படையான குணவியல்புகளும் இங்கு அதிவிசேட இடத்தினை பெறுகின்றன. தான் எந்த சமூகப் பின்னணியில் இருந்து வந்தாலும் சரி, எந்த வகையான சமூகத்தொடர்புகள் இருந்தாலும் சரி. இடையீட்டாளர் தமது வாழ்க்கை மற்றும் நடத்தைமுறை, அமைப்பு என்பனவற்றை வறியோர்களினது வரவேற்பினை பெறும் வகையில் அமைத்துக்கொள்ளுதல் மிகவும் முக்கியமானது ஆகும். (இதிலிருந்து இடையீட்டாளர் நீண்ட காற்சட்டை அணிபவராக இருந்தால் அவர் கிராமத்திற்குச் சென்ற பின் கிராமவாசிகள் அணியும் பாணியினைபோன்றே அணியவேண்டும், என்ற கருத்தல்ல) இவர் வாழ்வது கிராம வாசிகளுடன் ஆகும். கிராமவாசிகள், ஏற்றுக்கொண்டுள்ள மரபுகள், ஒழுக்கங்கள் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை ஒரே முறையில் எதிர்த்தல், விமர்சித்தல் கூடாது. இவை எல்லாவற்றினதும் யதார்த்தத்தினை வறியோர்கள் விளங்கிக் கொள்வதற்கு இடமளிக்கவேண்டும். இடையீட்டாளரின், வாழ்க்கை முறை பழக்கவழக்க பண்புகள், இவர் வறியோர்களை இடையில் விட்டுச் செல்லக் கூடியவர் அல்ல என்ற எண்ணத்தை வறியோர்கள் மத்தியில் வேரூன்றச் செய்வதில் வெற்றியடைய வேண்டும்.
70

இடையீட்டாளரின் வாழ்க்கை மற்றும் பழக்கவழக்க முறைகளுள் இருக்கவேண்டிய அடிப்படை அம்சமாக பொறுமை, மனிதாபிமானம் என்பவற்றைக் கொள்ளலாம். பல நூற்றாண்டுகளாக பல்வேறுபட்ட சமூக, பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் பாதிக்கப்பட்டு அனாதரவான நிலையில் இருக்கும் வறியோர்களின் மத்தியில் சதா காணக் கூடிய இயல்பு கோபமும் பொறுமை இன்மையுமேயாகும். இவர்கள் அனுபவித்த வேதனைகளைப் பார்க்கும் போது இப்படி இவர்கள் நடப்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல. இதனாலேயே இடையீட்டாளர் அதிக பொறுமை உடையவராக இருக்க வேண்டியதுடன் எந்தவொரு பரிரச்சனையையும் பொறுமையாக, கலந்துரையாடுவதன் மூலம் தீர்த்துக்கொள்ளக்கூடிய குணவியல்பு உள்ளவராதலும் வேண்டும். இங்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள்பற்றியும் இடையீட்டாளர் எச்சரிக்கையாக இருத்தல்வேண்டும். வறியோர்களுடன் இணைந்து அவர்களது அபிவிருத்திக்காக செயலாற்றும் போது இதுவரை நன்மைகளை அடைந்து வரப்பிரசாதங்களைப் பெற்ற வகுப்பினர், நிலச்சுவாந்தர், வர்த்தகர், வட்டிகொடுப்போர், இடைத்தரகர்கள், போன்றோர் கட்டாயமாக இந்த பங்கேற்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை அழித்து விடுவதற்கு முயற்சிகளை எடுப்பர். இவர்களிடம் இதுவரை காலமும் இருந்த பொருளாதார இலாபங்களை, வறியோர்களுக் குரிமையாக்க இவர்கள் ஒருபோதும் உடன்பட மாட்டார்கள். சில வேளைகளில் இவர்களாக வேண்டுமென்றே சச்சரவான நிலைமைகளை ஏற்படுத்தவும் இடமுண்டு, இடையீட்டாளர் தமது அனுபவம், கல்வி அறிவு, ஆக்கத்திறன் மற்றும் இந்த நடவடிக்கைகள் மூலம் இவர் பெற்ற அனுபவம் போன்றவைகளை பயன்படுத்தி மிகவும் முன்யோசனையுடன் g5! Dg) அலுவல்களைச் செய்துகொள்ளல் வேண்டும். இது இடையீட்டாளர் எதிர் நோக்கும் பலமான சவாலொன்றாகும்.
71

Page 38
வறியவர்கள் ஏனைய மரபுவழி அலுவலர்கள் போன்றவர் களுடனும் இந்த நடவடிக் கையில் ஈடுபாடுகொள்ளும் இடையீட்டாளருடனும் அவசியமற்ற பிணைப் பொன்றையோ அல்லது தங்கியிருக்கும் தன்மையையோ ஏற்படுத்திக்கொள்ளல் ஒருபோதும் விரும்பத்தக்கதல்ல. அவ்வாறாதல் முழுச் செயற்பாட்டையும் பின்னடையச் செய்யும். இடையீட்டாளரிடம் நிரந்தரமான உதவியை வறியவர்கள் எதிர்பார்க்காதமுறையில், சமூகம் தானே தனது தேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வழியில் தமது பங்கேற்பினைச் செய்தல் இடையீட்டாளரின் அடிப்படைக் காரியமாகும். செயற்பாட்டுக்காலம் முடிவடையும் போதே இடையீட்டாளர் சமூகத்தில் இருந்து ஒதுங்குதல் இத்தகைய அபிவிருத்தி நடவடிக்கையொன்றில் கட்டாயமாக நிகழவேண்டிய ஒன்றாகும். இடையீட்டாளர் ஏற்று நடித்த பாத்திரத்தினை சமூகம் ஏற்கும் போது இதற்குத்தேவையான பலமும் அறிவும் மக்களிடம் இருக்குமென்றால் இடையீட்டாளர் அவரது கடமைமையை செவ்வனே செய்துள்ளார் என உறுதியாகக் கூறலாம்.
இடையீட்டாளர் சமூகத்தில் இருந்து வெளியேறுவது எங்ங்னம்? எந்தச் சந்தர்ப்பத்தில் எந்தக் கட்டத்தில் நடக்க வேண்டுமென்பது மிகவும் ஆழமாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டிய ஒரு விடயமாகும். இது மிகவும் இயற்கையான ஒரு நடவடிக்கையாகும். பங்கேற்பு நடவடிக்கை மூலமான அடிப்படை ஆய்வின் கீழ் தமது பிரச்சனையை விளங்கிக் துன்பத்தில் இருந்து மீள்வதற்காக அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் (பங்கேற்பு மற்றும் சுய சக்தியினை அடிப்படையாகக்கொண்டு) கிராமிய மக்கள் தமக்கு உதவி செய்து உந்திய இடையீட்டாளரின் அலுவல்களை தமது அலுவல்களாக மாற்றிக்கொள்ளும் வகையில் அவரை தமது நடடிக்கையிலிருந்து விடுவிப்பதுடன் இன்னொரு வழியில் இவர்கள் இடையீட்டாளரிடம் இருந்து மீட்சி பெற்ற மக்களாகின்றனர். இது சமூகத்தின் ஆக்கத்திறனை வெளிக்காட்டுவது ஆகும்.
72

இத்தகைய இடையீட்டாளர் கள் தானே தோன்றமாட்டார்கள். வறியவர்களை இலக்காகக் கொண்ட மனிதாபிமானத்துடன் கூடிய செயற்பாடுகள் மூலம் நல்ல திருப்தியினை அடைவோர்களில் இருந்தே இத்தகையவர்கள் உறுவாகின்றனர்.
இதற்காக இடையீட்டாளர் நல்லதொரு பயிற்சியினை பெறல்வேண்டும். அந்தப்பயிற்சி மரபு வழி கிராம அபிவிருத்தி பயிற்சியல்ல. பங்கேற்புப்பயிற்சியாகும். பங்கேற்பு பயிற்சி முறைமை பற்றி பின்னர் கலந்தாலோசிக்கப்படும்.
(இடையீட்டாளருக்கு இருக்க வேண்டிய கல்வித் தகைமை, சமூக நிலைமை, வயது போன்றவை சம்பந்தமாக இங்கு குறிப்பிடப்படவில்லை.)
73

Page 39

பங்கேற்பு பயிற்சி முறைமை
பங்கேற்பு அபிவிருத்தி செயற்பாட்டினுள் இடையீட்டாளரின், தன்மை, கடமை மற்றும் விசேட குணஇயல்புகள் பற்றி இதற்கு முன்னர் மிகவும் எளிதான முறையில் ஆராயப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உயிர்ப்பெறுவது, மக்களை அதற்காக உந்துதலின் மூலமாகவேயாகும். அவ்வாறே மக்களுக்குக் கிடைக்கும் உதவிகள் மூலமுமாகும். இந்த உந்துதலும் உதவியும் மக்களுக்குக்கிடைப்பது வெளிவாரியான இடையீட்டாளரின் மூலமாகும். இங்கு ஏற்படும் பிரச்சனை என்னவெனில் கிராமிய மக்களின் பிரச்சனையை விளங்கிக்கொண்டு அதில் இருந்து மீட்சி பெறுவதற்கு செயற்திட்டமொன்றைத் தொடங்குவதற்காக வெளிவாரியான இடையீட்டாளரின் உதவி அவசியம் தானா என்பதாகும். தமது சமூகத்தில் இருந்தே இத்தகைய ஒருவரை உருவாக்கிக் கொள்ள முடியாதா? இது இந்த செயற் திட்டத் தில் கலந்தாலோசனைக்குட்படுத்தப்படவேண்டிய முக்கியமான கோட்பாட்டு ரீதியான பிரச்சினையாகும். எல்லா இடங்களிலும் போல் சமூகத்திற்கு அபிவிருத்தி வேலையொன்றில் கைகொடுத்து இருப்பது வெளிவாரியான இடையீட்டாளர் என்பது எமது அனுபவப்படி கண்ட உண்மையாகும். மிக அபூர்வமாக சமூகத்தினுள் இவ்வாறான ஒருவர் உருவாகிய சந்தர்ப்பங்கள் காணக்கிடைத்தபோதிலும் சாதாரண நிலைமை அதுவல்ல. வெளிவாரியான இடையீட்டாளர் சமூகத்தின் ஆக்கத் திறனை மேலோங்கச் செய்து பலமான அபிவிருத்தி செயல் நடவடிக்கையொன்றிற்கு வறியவர்களை, உந்துதலின் மூலம் வறுமையில் இருந்து மீளும் முழுமையான வேலைத்திட்டத்திற்கு உதவி செய்வார். இடையீட்டாளர்களை இந்நடவடிக்கைக்கு வழிப்படுத்தும் சக்தி யாது? இவர் இவ்வாறான நடவடிக்கைகளில்
75

Page 40
தெளிவினைப் பெற்றுக்கொள்வது பங்கேற்பு பயிற்சியின் மூலமாகும். வேறுபொருத்தமான உள்ளீடு இல்லாததால் பயிற்சி என்பதனை உள்ளிடாகக் கொண்டாலும் உண்மையிலேயே இது மரபு வழிப் பயிற்சியிலிருந்து பூரணமாக மாறுபட்டதொன்றாகும். இந்தப்பயிற்சியின் அடிப்படை நோக்கம் யாதெனில் நீண்ட காலமாக, சில சமூகப் பொருளாதார சக்திகளால் அடக்கிவைக்கப்பட்டுள்ள வறியோர்களின் நிர்மாண சக்திக்கு புத்துயிர்அளிப்பதன் மூலம் அவர்களது சுயசக்தியால் அபிவிருத்தி செயற்திட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு உதவி செய்யக்கூடிய இடையீட்டாளர் ஒருவரை உருவாக்கல் ஆகும். பங்கேற்பு அபிவிருத்திக்கு கருமமாற்றும் பொருட்டு தெரிவு செயயப்பட்ட இடையீட்டாளர் மூன்று பிரிவுகளில் அடங்கி இருக்கலாம்.
(1) மிக நுணுக்கமான முறையில் (நேர்முகக் கலந்துரையாடல், எழுத்துமூலப் பரிட்சை செயல் அமர்வுகள் , அனுபவஆய்வு, தனிப்பட்ட நோக்குகள், அறிமுகம், - கல்வித் தகைமைகள் என்பவற்றைப் பயன்படுத்தி) இத்தகைய விடயங்களுக்குப் பொருத்தமானவர்கள் எனக்கருதப்படும் ஆட்களைத் தேர்ந்தெடுத்தல். இவர்கள் இந்த விடயத்தில் புதியவர்களாக இருந்தபோதிலும் பலதரப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக அனுபவம் பெற்றவர்களாவர்.
(2) அரசினால் அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களினால் நடாத்தப்படும் கிராம அபிவிருத்தி செயற்திட்டங்களில் ஈடுபாடு கொண்டு அந்த நிறுவனங்களில் அல்லது கிராமத்தினுள் கருமமாற்றும் பங்கேற்பு அபிவிருத்தியில் இதுவரை பயிற்சியினைப் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத அபிவிருத்தி பணியாளர்.
(3) கிராமத்தினுள் அபிவிருத்தி நடவடிக்கையொன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அந்த அபிவிருத்தி
76

நடவடிக் கையின் ஒரு வரிளைவாக அதே செயற்திட்டங்களிலிருந்தே உருவாகும் புதிய பாணியிலான இடையீட்டாளர்கள் (இவர்கள் உள்ளக இடையீட்டாளர்கள் என அழைக்கப்படுவர்)
இந்த மூன்று பிரிவுகளிலும் இங்கு கருத்திற் கொள்ளப்படுவது முதலாவது பிரிவினரேயாகும். இத்தகைய அபிவிருத்தி நடவடிக்கையொன்றில் புதிதாகவே சேரும் ஆட்களை பயிற்றுவிக்கும்போது மேற்கொள்ளப்படும் செயல்முறை இங்கு ஆராயப்படுகின்றது. பங்கேற்பு அபிவிருத்தியின் அடிப்படை நோக்கம் என்னவெனில் சிந்தனைக்கான சக்தியொன்றினைப் பெறும்வகையில் வறிய மக்களின் மனங்களைத் திறந்துவிடுதலாகும். ஆக்க சக்திக்கு புத்துயிர் கொடுத்தல் என்பதன்மூலம் கருதப்படுவதும் இதுவே, இவ்வாறு வறிய மக்களின் சுயசக்தியும் பங்கேற்பும் ஒன்று சேருவதன் மூலம் உருவாகும் ஆக்கசக்தியானது புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உயிரூட்டுவதாக அமையும். அத்தகைய உயிரூட்டலைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வறிய மக்களுக்கு உதவுவது இடையீட்டாளராகும்.
இடையீட்டாளர்களைப் பயிற்றுவிக்கும் பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்காக அத்தியாவசியமாக பூர்த்தி செய்யப்படவேண்டிய விடயங்கள் சில காணப் படுகின்றன. அவற்றில் விசேடமாக கருத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
* பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்த விடயத்துக்கு மிகவும் பொருத்தமானவர்களாக இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுத்தல் மிகக் கவனமான முறையில் மேற்கொள்ளப்படவேண்டியதோடு அது அவசரப் படாது நிதானமாக மேற்கொள்ளப்படவேண்டிய விடயமொன்றாகும்.
* ஆண், பெண் இருபாலாரையும் கொண்டிருத்தல்
மிகச்சிறந்ததாக அமையும்.
77

Page 41
尊信 வயது 21-35 இற்கு இடைப்பட்டிருத்தல் மிகப்
பொருத்தமானதாகும்.
வரிடயங்களை - விளங்கிக் கொள்வதற்கும் விளங்கிக்கொண்ட விடயங்களை ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளவும் கூடிய கல்வியறிவு இருத்தல் வேண்டும்.
* பயிறகிக்கு 20 பேரைக்கொண்ட குழுவொன்று இருப்பின் மிகப்பொருத்தமாக அமையும். ஒருபுறத்தில் 20 பேருக்கு மேலாக குழு விரிவடையுமாயின் பங்கேற்பு குறைவடையலாம். அதேபோன்று அவர்களை இயக்கு வதும் சிரமமாக இருக்கும்.
எமது அனுபவத்தின் படி பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கையில் குழுவிலிருந்து சிலர் விலகிச்செல்ல இடமுண்டு. குறைந்தபட்சம் 15 ஆட்களையாவது வைத்துக்கொள்ள 20 பேரைக்கொண்ட குழுவொன்றைப் பயிற்றுவிப்பது மிகப் பொருத்தமாக அமையும் பயிற்சியில் சேர்ந்து கொள்ளும் அனைவருமே இறுதிவரை அதில் தங்கியிருப்பது என்பது அபூர்வமான விடயமொன்றாகும்.
பங்கேற்பு பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது பொருத்தமற்றதாகக் காணப்பட்ட போதிலும் அதனோடு தொடர்புடைய விடயங்கள் சம்பந்தப்பட்ட தொகுப்பு ஒன்றினை பயிற்சிக்கு முன்னர் தயாரித்து வைத்துக் கொள்வது கடினமான விடயமொன்றல்ல. இதன்படி பங்கேற்புப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்திற்கே உரிய சிறப்பான பண்புகள் சில காணப்படுகின்றன. இந்தப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டமானது மரபுவழி அபிவிருத்திப் பயிற்சிகளுக்கு முற்றிலும் மாறுபட்டவையாகும். இங்கு விரிவுரைகளோ பயிற்சிக்கையேடுகளோ அல்லது முன்னரே தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளோ கிடையாது. அபிவிருத்தி
78

அனுபவங்களை நுண்ணாய்வு செய்தல், கலந்து ரையாடல்கள், விவாதங்கள், சிறு குழு கூட்டம், வெளிக்கள நடவடிக்கைகள் என்பன இவற்றின் முக்கிய அம்சங்களாகும். கிராமமொன்றின் பொருளாதார அமைப்பு முறையினை நுண்ணாய்வுசெய்தல் அபிவிருத்தியில் உள்ளடக்கப்படவேண்டிய மக்கள் பிரி வினை இனங்காணல்; அவர்களுடன் கலந்துரையாடி முக்கிய பிரச்சனைகளை அறிந்து கொள்ளல் ஒன்றுபட்டு அப்பிரச்சனைகளுக்குத்தீர்வு காணல் மற்றும் சுயசக்தியினை அடிப்படையாகக்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளல் என்பன இந்த பயிற்சித்திட்டங்களின் மூலம் வழங்கப்படும்.
"இந்தப் பயிற்சி 10 கட்டங்களில் அமைவதோடு 1-3-5- 7-9 ஆகிய கட்டங்களில் கலந்துரையாடல்கள் நடைபெறுவது இதற்காகவே தெரிவுசெய்யப்பட்ட பொருத்தமான பயிற்சி நிலையங்களிலாகும். இந்த ஐந்து கட்டங்களிலும் இடைக்கிடை 25-30 நாட்கள் இந்த நிலையங்களில் தங்கியிருத்தல் வேண்டும். இது கட்டாயமான வதிவிடப் பயிற்சியாகும். வதிவுடனான பயிற்சியின் பெறுபேறுகள் பலவிதமானவையாகும். இதனால் அனைத்துப் பயிலுனர்களுக்கும் பயிற்றுனர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஏற்படுகின்றது. இதன்மூலம் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அந்நியோன்ய தொடர்பு வளர்ச்சியடைவதும் முக்கியவிடயங்களாகும். பயிலுனர்களும் பயிற்றுவிப்போரும் ஒரே கூரையின் கீழ் உண்டு உறங்குவதன் மூலம் தமது வாழ்க்கைக்கு நெருக்கமான பிரயோக முறையில் மிக நன்மை பயக்கும் பயிற்சியினை பெற்றுக்கொள்வர், நிலையத்தில் பெறும் பயிற்சிக்கு மேலதிகமாக மூன்று முதல் ஐந்து மாத காலப்பகுதியில் வெளிக் களப் பயிற்சியும் மேற் கொள்ளப் படும் . வெளிக்களத்துக்கு அனுப்பும் போது பயிற்சி மிகவும் உபயோகமானதாகக்கூடிய வகையில் குழுக்களாக வெளிக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். இந்த ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் அல்லது நான்கு பேர் அடங்குவர்.
79

Page 42
இந்த பயிற்சி முறையில் காணப்படும் இன்னுமொரு சிறப்பான பண்பு என்னவெனில் பயிலுனர்களுக்கும், பயிற்றுவிப்போர்களுக்குமிடையில் உள்ள தொடர்பாகுமி. எனினும் இது ஆசிரியர் மாணவர்களுக்கிடையில் காணப்படும் தொடர்பு போன்றதல்ல. பயிலுனர்களும் பயிற்றுனர்களும் ஒருவரையொருவர் நெருங்கும் தடை இதனால் முற்றாக அகற்றப்படுகின்றது. பயிலுனர்களுக்கும் பயிற்றுவிப்போர்களுக்குமிடையிலான இடைவெளி இங்கு காணப்படமாட்டாது. உண்மையில் இந்த பயிற்சிமுறையில் காணப்படும் நன்மைகள் எழுத்தில் காட்ட இயலாதவையாகும். தானே பங்கேற்று பெற்றுக்கொள்ளும் பயிற்சியின் உயிர்த்துடிப்பு எழுதுவதனாலோஅல்லது சொல்லுவதாலோ விபரிக்க இயலாததொன்றாகும். இதுவே பங்கேற்புப் பயிற்சிமுறையின் முக்கிய பண்பும் ஆகும். எனினும் சிறிதளவு விளக்கத்தையேனும் பெற்றுக்கொள்ளும் பொருட்டு 10 கட்டங்களும் இங்கு விபரிக்கப்படுகின்றன.
1 வது கட்டம் 5 நாட்கள்
இது பயிற்சியின் முதற்கட்டமாகும். பயிலுனர் அனைவருக்குமிடையில் நட்புறவினை உருவாக்குதலும் இந்தக்கட்டத்தின் குறிக்கோளில் ஒன்றாகும். ஒவ்வொருவரும் மற்றவரை அறிந்து கொண்ட பின்னரே பயிற்சி ஆரம்பிக்கப்படும். இந்த அறிமுகமும் மரபுவழி அறிமுகப்படுத்தலுக்கு மாறுபட்டதாகவே இடம்பெறும். பங்கேற்பு முறை பயன்படுத்தப்படும், பயிற்சிக்காக 20 பேர் சமூகமளித்திருந்தால் ஏதேனும் முறையொன்றினை பயன்படுத்தி இந்த இருபது பேரையும் 10 சோடிகளாக அமைக்க முடியும். ஒவ்வொரு சோடியினைச் சேர்ந்தவர்களும் 10-15 நிமிடங்கள் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்டு தம்மோடு இருக்கும் அடுத்தவரைப் பற்றி நன்கு புரிந்துகொள்வர். அவரது, வயது, தகைமை, மணமானவரா இல்லையா, விஷேடதிறமைகள், தனிப்பட்ட வாழ்க்கை போன்ற
80

தகவல்களைப் பெற்றுக்கொண்டு அவரைப் பற்றிய நீண்ட விபர மொன்றை குழுவின் ஏனையோர்க்கும் அறியத்தருவர். இதன்படி குழுவின் 20 பேர் தொடர்பாகவும் அறிமுகம் ஒன்று பெறப்படுகின்றது.
இந்த முதலாவது அறிமுகப்படுத்தலுடனேயுே குழுவின் பயிலுனர்களுக்கிடையில் சிறந்த சம்பந்தமும் நல்லெண்ணமும் உருவாகின்றதுடன் தொடக்கத்திலிருந்தே கூட்டு அடிப்படையிலான அணுகுமுறையொன்றும் உருவாகுன்றது. இதற்கு மேலதிகமாகத் தொடக்கத்திலிருந்தே குழுவில் காணப்படும் வேறுபாடுகளை (கல்வி, வயது, சமூக அனுபவங்கள்) சமப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எந்த ஒரு குழுவிலும் சிறுசிறு வேறுபாடுகள் காணப்படுதல் இயற்கையாகும். ஒரே மாதிரியான குழுவொன்றைக் காணமுயலுதல் மிகக் கடினமானதாகும்.
அறிமுகத்தின் பின் பயிலுனர்களால் அபிவிருத்தி தொடர்பாக அவர்கள் பெற்றுள்ள அனுபவங்கள் விபரிக்கப்படும். தான் சமூக அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு பெற்றுக்கொண்ட ஏதேனும் அவதானிப்புக்கள் அல்லது அதற்குச் சமமான ஏதேனும் ஒரு விடயத்தை இங்கு விபரிக்கலாம். இதனால் இரண்டு அம்சங்கள் முன்வைக்கப்படுகின்றன.
1. பயிற்சியில் பங்கேற்கும் அனைவரும் ஏதேனும் அறிவினைப் பெற்றவர் என்ற நம்பிக்கை உருவாகுதல்.
2. அபிவிருத்தி தொடர்பாக தாம் எத்தகைய கருத்தைக் கொண்டிருந்தாலும் அந்தக்கருத்துக்களையே கருப்பொருளாகக்கொண்டு கலந்துரையாடலுக்கு அடிப்படையினை வகுத்தல். 20 பேரைக் கொண்ட
81

Page 43
குழு ஒன்றினால் அபிவிருத்தியுடன் தொடர்புடைய 20 அனுபவங்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்த அனுபவங்கள் குழுவினால் மிக ஆழமாக ஆராயப்படுகின்றன. இந்த நுண்ணாய்வின் மூலம், தான் இதுவரை அறிந்திருந்த ஆனால் இத்தகைய நுண்ணாய்வுக்கு உட்படுத்தப்படாதிருந்த அனுபவம் தொடர்பாக மீளாய்வு செய்து பார்க்கப்படும். இந்த பின்னோக்கலானது, அபிவிருத்தி தொடர்பாக தான் பெற்ற அனுபவத்தின் பெறுபேறுகளை தானே உணரக்கூடிய வகையில் இட்டுச் செல்லும். இதை தெளிவாக விளக்குவோமேயானால் 20 பேர் பங்குகொள்ளும் இத்தகைய பயிற் சரி நிகழ்ச்சித்திட்டமொன்றில் 20 அனுபவங்கள் தொடர்பாக கலந்துரையாடக்கூடிய சந்தர்ப்பம் பயிலுனர்களுக்குக் கிடைக்கின்றது. இந்த 20 அனுபவங்களும் பயிற்றுனரது அனுபவங்கள் அல்ல, ஆனால் பயிலுனர்களினதாகும். இந்த அனுபவங்களை தனித்தனியே முன்ன்ரிலைப்படுத்தி பின்னர் குழுவினால் ஒவ்வொரு அனுபவத்தினையும் சிறப்பாக கலந்துரையாடி அதனைப் பற்றிய தீர்மானமொன்று மேற்கொள்ளப்படும். இதற்காக இக்குழு சிறு குழுக்களாக பிரிக்கப்படும். (இந்த சிறு குழுவில் பொதுவாக மூன்று, நான்கு அல்லது ஐந்து பேர் அடங்குவர்) இந்த சிறு குழுக்கள் வெவ்வேறாகக் கூடி முன்னர் கலந்துரையாடப்பட்ட அனுபவங்கள் தொடர்பாக மீண்டும் தமது கருத்தினைச் செலுத்தி, அந்த அனுபவங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக முடிவான கருத்தினை வெளிப்படுத்துவர். இத்தகைய கலந்துரையாடலுக்கு குறைந்தபட்சம் மூன்றரை மணித்தியாலங்கள் தேவைப்படும்.
82

அனுபவ கலந்துரையாடலின் போது தனது அபிவிருத்தி அனுபவங்களை பின்னோக்கிப் பார்ப்பதற்குப் பயிற்சி பெறும் பங்கேற்பாளர், பின்னர் தான் நன்கு அறிந்த கிராமம் ஒன்றினைப் பற்றி விபரிக்கத் தொடங்குவார். இது அவர் பிறந்த கிராமமாக இருக்க வேண்டியதில்லை. எனினும், அது அவர் நன்றாக அறிந்த கிராமம் ஒன்றாக இருத்தல் வேண்டும். அனுபவ விபரத்தினைப் போன்றே இங்கும் இலங்கையின் 20 வேறுபட்ட கிராமங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் பங்கேற்பாளர்களுக்குக் கிடைக்கின்றது. இந்தப் பயிற்சியினால் அடிப்படை விடயங்கள் இரண்டு பெறப்படுகின்றன.
1. கிராமத்தைப் பற்றிய தனது அறிவு உண்மையிலேயே போதுமானதல்ல என்பது பங்கேற்பாளர்களால் உணரக் கூடியதாக இருத்தல்.
2. இலங்கைக் கிராமங்களில் காணப்படும் பொதுப்பண்புகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் தொடர்பாக பங்கேற்பாளர்கள் விளக்கமொன்றைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருத்தல்.
(மீன்பிடி, விவசாய, சேனைப்பயிர், கிராமிய வீட்டுக் கைத்தொழில், காய்கறித்தோட்டம் ஆகிய பலதரப்பட்ட உற்பத்திகளில் ஈடுபட்டுள்ள கிராமங் கள் காணப்படலாம்)
கிராம விபரிப்பின் பின்னர் பல சிறு குழுக்களாகப் பிரிந்து கிராம விபரிப்பு தொடர்பாக மீண்டும் ஆழமாக ஆராய் ச் சி செய்யும் படி துTண்டுதல் மிக முக்கியமானதாகும். இதன் மூலம் பயிலுனர்கள் மேலும் தாம் அறிந்து கொண்ட விடயங்கள் பற்றி யோசிக்கக் கூடியவர்களாக இருப்பர். அனுபவங்கள் பகிர்வும், கிராம விபரிப்பும் பயிலுனர்கள் தமது அறிவினை எடை போட்டு மீண்டும் பின்னோக்கிப் பார்ப்பதற்கான
83

Page 44
ஆழமான இரண்டு பயிற்சிகளாகும். இங்கு குழுவாக, ஒவ்வொரு வரிபாரிப் பு சம் பந்தமாகவும் மேற்கொள்ளப்படும் நுண்ணாய்வின் மூலம் தமது அனுப்வங்களின் பெறுபேறுகளைவிளங்கிக்கொண்டு தம்மில் வேரூன்றியிருந்த தவறான எண்ணங்களை மனத்திலிருந்து அகற்றி புதிய எண்ணங்கள் கருத்துக்களோடு பங்கேற்பாளர்களுக்கு புதிய சிந்தனைகளை உருவாக்கும் g5? gD 60) u D ஏற்படுத்தப்படுகின்றது.
莎
பயிற்சியின் முதற் கட்டமானது பயிலுனரை ஆக்கபூர்வமான இடையீட்டாளராக ஆக்கும் முயற்சியாவதோடு அவரை சுயசக்தியினையும் பங்கேற்பினையும் அடிப்படையாகக் கொண்ட அபரிவரிருத்தி நடவடிக் கையொன் றில் ஈடுபடுத்துவதாகவும் காணப்படும்.
பயிலுனர்கள் மனதுக்கும் உடலுக்கும் ஓய்வற்ற நிலையில் காணப்படுவதை முதலாவது கட்டத்தில் நாம் அவதானிக்கலாம். எனினும் பயிற்சியில் காணப்படும் சிறப்பான் தன்மையும் அவர்கள் பெறும் புதிய அனுபவங்களும் அவர்களை உறுதியானவர்களாக வைத்திருக்கும். இதன் பின்னர் இரண்டாவது கட்டம் ஆரம்பமாகும். முதலாவது கட்டத்தில் காணப்பட்ட முக்கிய அம்சமானது அபிவிருத்திக்கோட்பாடுகள் மற்றும் உண்மை நிலைமைகள் என்பன தொடர்பாக அவர் கள் மேலும் LJ GU வரிடயங்களை விளங்கிக்கொள்ளவேண்டுமென்பதாகும். அந்த விடயங்களை மிகத் தெளிவாக அறிந்துகொள்ள குழுக்களாக கிராமத்திலேயே தங்கியிருந்து நுண்ணாய்வில் ஈடுபடுதல் அவசியமாகும்.
2 வது கட்டம் - (முன்று வாரங்கள் அல்லது ஒரு மாதம்) O ano அனைத்துப் பயிலுனர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமமொன்றுக்கு மூன்று வாரங்கள் அல்லது ஒருமாத காலத்துக்குச் செல்வர். இவ்வாறு செல்லுவது அந்தக்
84

கிராமங்களின் நிலைமைபற்றி நுண்ணாய் வினை மேற்கொள்வதற்காகும். இங்கு காணப்படும் பிரச்சினை. என்னவெனில் ஒருபோதுமே இந்தக்கிராமத்துக்குச் சென்றிராதவர்கள் அக்கிராமத்தினுள் எவ்வாறு செல்வர், அவர்கள் எதிர்கொள்ளும் இடர்கள் யாவை? கிராமவாசிகள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் எவ்வாறு பதில் கூறுவர்? இவை யாவும் பங்கேற்புப் பயிற்சியின் முக்கிய விடயங்களாகக் காணப்படுவதாகும். ஏனெனில் அவை ஒவ்வொன்றும் சங்கிலி போல் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றமையாகும், இந்தக்கட்டத்தில் கிராமத்தைப் பற்றிய ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கும் நுண்ணாய்வில் ஈடுபடுவதற்கும் கிடைக்கும் சந்தர்ப்பம் போதுமானதல்ல. இதற்குக் காரணம் அவர்கள் அனுபவத்தில் முதிர்ச்சி நிலையினை இன்னும் எய்தாததாகும். குழுவாக கிராமமொன்றில் இருக்கும் வேளையில் தாங்கள் யார் என்ற வினாவுக்கு அளிக்க வேண்டிய விடை கிராமவாசி களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளக்கூடியவராகவும் உண்மையானவராகவும் இருத்தல்வேண்டும் என்பதே இது தன்னைப் பற்றிய அனைத்து விபரங்கள்ையும் உள்ளடக்கியிருக்கத்தேவையில்லை. ஆனால் கிராமவாசிகளிடையே ஆகக்கூடிய எதிர்பார்ப்புகளை உண்டாக்கக்கூடியதாக இருத்தல் கூடாது. உதாரணமாகக் கூறின் கிராமவாசிகள் வெளியிலிருந்து வரும் இடையீட்டாளர்களிடமிருந்து எதையாவது பெற்றுக் கொள்ளவே பழகியுள்ளனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது பணம் அல்லது பொருட்களின் வடிவிலான உதவியாகவே இருக்கலாம். மரபுவழி அரசு சாரா நிறுவனமொன்றின் இடையீட்டாளர் ஒருவரிடமிருந்து கிடைக்கும் உதவி என்ன என்பதை கிராமவாசி நன்கு உணர்ந்திருப்பவராவார், எனினும் கிராமவாசியின் ஆக்கசக்தியிலும் தனது பிரயோக அறிவிலும் நம்பிக்கை வைத்து வறுமையிலிருந்து மீட்சி பெறுவதற்கு, அவர்களின் ஊடாக அபிவிருத்தி நடவடிக் கையொன்றைத்
85

Page 45
தொடக்கிவைப்பதற்கு முன்வந்துள்ள இடையீட்டாளர் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒருவர் ஆவார். அவர் கிராமத்துக்குச் செல்வது கிராமவாசிக்குப் பொய் சொல்லுவதற்கு அல்ல. அவரை எமாற்றுவதற்கும் அல்ல. சமூகபொருளாதார நுண்ணாய்வு ஒன்றின் மூலம் கிராமத்தின் இயல்பான நிலையினை கிராமவாசிக்கு தெளிவுபடுத்திக் கொள்ளுவதற்கு உதவி செய்வதற்காகவாகும்.
பலதரப்பட்ட சமூக பொருளாதார சக்திகளினால் ஒடுக்கப்பட்டிக்கும் வறிய மக்களின் ஆக்கசக்தி பெரும்பாலான சந்தர் ப் பங்களில் பல தரப் பட்ட அபிவிருத்தி நிகழ்ச் சித் திட்டங்களின் மூலம் பலவீனமடைந்து காணப்படுகின்றமையால் வறிய மக்கள் அனைத்து ஆட்களின் மீதும், அனைத்து விடயங்களின் மீதும் சந்தேகக்கண்கொண்டே பார்க்கின்றனர். எனவே இங்கு இடையீட்டாளர் தனது பிரவேசத்தின் தொடக்கத்திலிருந்தே பொருத்தமான உத்திகளைக் கைக்கொண்டு கிராமவாசியுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளல்வேண்டும். கிராமத்தில் பிரவேசிக்கும் முறையும் கிராமவாசியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் முறையும் பலதரப்பட்டவையாகும். அது எவ்வாறு, எப்படி மேற்கொள்ளப்படவேண்டியது என்பது தொடர்பான எத்தகைய ஒழுங்குவிதிகளும் கிடையாது. எனவே அதற்குப் பொருத்தமான ஒரேயொரு ஒழுங்கு விதியானது நீண்டகால அபிவிருத்தி நடவடி க்கையொன்று தொடர்பான அறிவினை கூட்டிக்கொண்டு அதற்கு இசைவான முறையில் பிரவேசத்தினையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்வதாகும். இந்தக்கட்டத்தில் பயிலுனர்களின் அடிப்படை முயற்சியாவது மூன்று வாரங்கள் அல்லது ஒரு மாத காலப்பகுதியினுள் கிராமத்தைப் பற்றிய நுண்ணாய்வு ஒன்றை மேற்கொள்ளலாகும். இந் நுண் ணாய்வு தனியாக மேற்கொள்ளப்படமாட்டாது. குழுவாகவே இடம்பெறும். குழுவொன்றினால் நுண்ணாய்வினை மேற்கொள்ளுவதன் சிறப்பு என்ன? விபரங்களைப்பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைமுறை என்ன?
86

தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உபாயங்களாக அவதானப் பு , திறந்த கலந்துரையாடல் , பயிலுனர்களுக்கிடையிலான கலந்துரையாடல், விவாதங்கள், அனுபவப்பரிமாறல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
குழுக்களாக நுண்ணாய்வில் ஈடுபடுவதன் மூலம் பின்வரும் விடயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
l. கிராமப் பிரவேசத்திலிருந்தே கூட்டு அடிப்படையில்
நுண்ணாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
2. குழுவொன்றாக கிராமத்தில் வாழ்வதன் மூலம் தனிமை நீங்கி உடல், உள்ளம் ஆகியவற்றில் புத்துணர்ச்சி ஏற்படல்.
3. ஒருவருக்கு மறந்துபோன விடயம் குழுவின்
இன்னொருவரிடமிருந்து வெளிப்படும்.
4. குழுவாக கரும மாற் றுவதன் மூலமும் அவர்களுக்கிடையில் தினந்தோறும் இடம்பெறும் கலந்துரையாடல்களின் மூலமும் நுண்ணாய்வின் சிறப்பான அம்சங்கள் தொடர்பாக ஒரு தீர்மானத்துக்கு வர இயலும்.
5. குழுவின் உறுப்பினர்களுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகள் மறைந்து ஒரே குழுவாக கருமமாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தல்.
3 வது கட்டம் (5 நாட்கள் கலந்துரையாடல்)
அனைத்துப்பயிலுனர்களும் பயிற்றுனரும் நிலையத்தில் ஒன்று கூடுவர். இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி மூன்று வாரங்கள் அல்லது ஒரு மாத காலமாக வெளிக்களத்தில் மேற்கொள்ப்பட்ட நுண்ணாய்வினை மேலும் பரிசீலிப்பர். இது மிகவும் விரிவான பரிசீலிப்பாகும். இந்தக் கட்டத்தின் வெற்றியானது பெரும்பாலும் இரண்டாவது கட்டத்தில் கிராமம் தொடர்பாக சேகரித்துக்கொண்ட விடயங்களின்
87

Page 46
முக்கியத்துவத்திலேயே தங்கியுள்ளது. எமது அனுபவத்தின்படி புதிதாக இந்த விடயத்தில் சேர்ந்துகொள்ளும் பயிலுனர்கள் குழுவொன்று முதலாவது நுண்ணாய்வின் போது மிகச்சாதாரண விடயங்களைப்பிரதிபளிப்பனவாகும். இந்த வெளிப்புறத்தோற்றத்தினால் கிராமத்தின் உண்மை நிலைமையினைப் புரிந்து கொள்ளுவது கடினமானதாகும். கிராமத்தின் உண்மை நிலையை கிராமத்தின் சமூக பொருளாதார நிலைமையினைப் பரிசீலிப்பதன் மூலமே அறியலாம். பல பயிலுனர் குழுக்கள் பரிசீலிப்பின் போது பின்வரும் விடயங்கள் தொடர்பான சாதாரண விடயங்களை மட்டுமே அறிந்து கொள்கின்றன.
கிராமத்தின் வரலாற்றுப் பின்னணி குடும்பங்களின் எண்ணிக்கையும் குடித்தொகையும். கிராமத்தின் சங்கங்களும் அவற்றின் தன்மையும். மக்களின் வாழ்க்கைத்தொழிலும். சமூக நிலைமைகளும்
இந்த வரி டய நங் கள் சம்பந்தமான முன்னிலைப்படுத்தல்களை அர்த்தத்துடன் நுண்ணாய்வு செய்து கிராமத்தின் சமூக பொருளாதார நிலைமையின் உண்மை நிலையினைக் காண வேண்டுமாயின் கிராமத்தினை மீண்டும் நுண்ணாய்வு செய்யவேண்டும் என்ற எண்ணம் கட்டாயமாகவே பயிலுனர்களின் உள்ளத்தில் தோன்றும்.
4 வது கட்டம் - முன்று வாரங்கள் அல்லது ஒரு மாதம்
இம்முறை ஆய்வுக்குச் செல்லும்போது ஆராயப்பட வேண்டிய விடயங்கள் பற்றி குழுவாக 3 வது கட்டத்தில் கலந்துரையாடப்படும். கிராமத்தை முழுமையாகக்காண்பதற்கு அந்த கிராமத்தின் வறியமக்கள் அந்த நிலைமைக்கு
88

ஆளாக்கப்பட்டத விதம்பற்றி விளங்கிக்கொள்ளல் வேண்டும். அவர்கள் வறுமையிலே தங்கியிருப்பதற்கான காரணங்களை இனங் காணல் வேண்டும். இதற்காக வறியமக்களின் பிணைப்புக்கள், பிணைப்புக்களின் அமைப்புமுறை, வாழ்க்கைமுறை, காணி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள முறை, கிராமத்தின் சங்கங்களும் அவற்றின் நடவடிக்கைகளும் என்பவற்றை விளங்கிக் கொள்ளல்வேண்டும். இந்த ஆய்வின் போது பங்கேற்பு அபிவிருத்தி முறையின் அடிப்படை அம்சமாக கிராமிய வறிய மக்களையும் ஆய்வின் பங்காளர்களாக ஆக்கிக் கொள்ளல் வேண்டும். பயிலுனர்களைப் போலவே கிராமவாசிகளும் ஆய்வின் பங்காளர்களாக மாறுவதன் மூலம் அவர்களும் தமது கிராமம் தொடர்பாக புதிய விடயங்களை அறிந்துகொள்ளக் கூடியவர்களாக இருப்பர். இந்தக் கட்டத்தின் போது முதலாவது கட்டத்தில் கிராமத்தைப்பற்றி அறிந்து கொண்ட தகவல்களை விட மேலும் விஷேடமான விடயங்களை பயிலுனர்களினால் சேகரித்துக் கொள்ளமுடியும்.
5 வது கட்டம் - (5 நாட்கள்)
ஒரு மாத அல்லது மூன்று வார கால ஆய்வின் பின் 4 வது கட்டத்தில் தெரிந்துகொண்ட விடயங்களுடன் அனைத்துப் பயிலுனர்களும் பயிற்றுனர்களுடன் மீண்டும் 5 நாட்கள் கலந்துரையாடலில் ஈடுபடுவர். முன்னைய கட்டத்தின் ஆய்வின் போது பெற்றுக்கொண்ட அனுபவங்களை மிக நுணுக்கமாக ஆய்வு செய்தல் இந்தக் கட்டத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக்கட்டக் கலந்துரையாடலுக்கு பின்வரும் விடயங்களில் பலவற்றை முன்வைக்கலாம் என்பதை எமது அனுபவங்களின் மூலம் குறிப்பிடலாம்.
举 கிராமத்தின் வாழ்க்கைமுறை, மக்கள் வாழும்முறை, விவசாயம்,மீன்பிடித்தொழில், கிராமிய கைத்தொழில்கள், கூலிவேலை, சேனைப் பயிர்ச்செய்கை,
89

Page 47
* மக்களின் வாழ்க்கை முறையுடன் பிணைப்பினைக் கொண்டிருக்கும் பொருளாதார சமூகத்தொடர்பு (விற்பனை, உள்ளீடு, கடன்பளு, சேமிப்பு)
冰 கிராமத்தின் வாழ்க்கைத் தர வேறுபாடு.
X- கிராமத்தின் மூலவளங்களின் பகிர்ந்தளிப்பு
Χ. இலக்குக் குழுக்களை இனங்காணல், அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளல்.
* கிராமத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி
செயற்திட்டங்கள், மரபுவழிச் சங்கங்கள், சங்கங்களின்
நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் கிராமத்தின் வறுமை நிலைக்குமான தொடர்பு
இந்தக்கட்டத்தின் போது பயிலுனர்களின் ள்ண்ணப் போக்கில் அபிவிருத்தி தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் புரட்சியினை உண்டுபண்ணக் கூடியநிலை இருப்பதைக் காணலாம். நடைபெறும் அபிவிருத்தி என்ன? அது யாருக்காகP அந்த அபிவிருத்தியின் மூலம் நன்மை பெறுபவர்கள் யாவர்? என்பன பற்றி சிந்திக்கத் தோன்றுவது இந்தக் கட்டத்தில் இடம் பெறும் கலந்துரையாடல்களின் மூலமாகும். இந்தக் கலந்துரையாடல் களில் முக்கிய இடத்தை வகிப்பது 6வது கட்டத்தில் கிராமத்துக்குச் சென்று செய்யவேண்டியது என்ன என்பது பற்றி பயிலுனர்களுக்கும் பயிற்றுவிப்போருக்குமிடையில் இடம்பெறும் கலந்துரையாடலாகும். இதுவரை முறையாக வெளிக் களத்தில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், குழுக் கலந்துரையாடல்கள் பயிற்றுவிப்போருடன் மேற்கொள்ளப்பட்ட விவாதங்கள், கருத்துப்பரிமாறல்கள் என்பனவற்றின் மூலம் பயிலுனர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரே வகையான கருத்தினையே கொண்டிருத்தல்வேண்டும். அதாவது இலக்காக்கப்பட்டுள்ள
90

மக்கள் பிரிவினரை (சமூக பொருளாதார முறையில் பலவீனமான அல்லது வறிய மக்கள்) வறுமையிலிருந்து மீட்டுக்கொள்வதற்கான அபிவிருத்தி நடவடிக்கையொன்றில் ஈடுபடுத்தலும் அவர்களை அவற்றில் பங்கேற்கச் செய்தலும் இடையீட்டாளரினால் நிகழ வேண்டியதொன்றாகும். இந்தக் கலந்துரையாடலின் போது வறிய மக்களை வறுமையிலேயே வைத்திருக்கும் பிரச்சினகள் பற்றி ஆழமாக ஆராய்தல் வேண்டும். உற்பத்தியில், சந்தைப்படுத்தலில், நுகர்வில், வட்டி செலுத்துவதில் வறிய மக்களுக்கு அன்றாடம் ஏற்படும் மூலவள இழப்புக்களை தடுத்து அவற்றை அவர்களிடமே வைத்திருப்பதற்கான உபாயங்கள் பற்றி இங்கு கலந்துரையாடப்படும். வறுமைக்கான காரணிகள், பொருளாதாரத்துடன் தொடர்புபட்டிருக்கும் முறை, கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அவதானிப்புக்கள், கலந்துரையாடல்கள் என்பவற்றினால் பயிற்றுனருடன், சேர்ந்து கலந்துரையாடுவதன் மூலம் இவை செப்பனிடப்பட்டு, சந்தேகம் நீங்கி மிகச்சரியானதாக மாறும். அனுபவங்களினதும் கலந்துரையாடல்களினதும் ஊடாகப் பெற்ற அறிவினைப் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கையொன்றை மேற்கொள்ளுவதற்கு காணப்படும் நிலைமைகளையும் சந்தர்ப்பங்களையும் அறிந்து கொள்ள பயிலுனர்கள் அடுத்த கட்டத்திற்காக கிராமத்தை நோக்கிச் செல்வர்.
6 வது கட்டம் (முன்று வாரங்கள் அல்லது ஒரு மாதம்)
பயிலுனர்கள் இப்பொழுது வறிய மக்கள் பிரிவினாை இனங்கண்டு அவர்கள் வறியவர்களாகவும் சமூக பொருளாதார நிலைமையில் பவவினர்களாகவும் இருப்பதற்கான காரணங்களையும் அறிந்துகொண்டனர். இங்கு அரச மற்றும் அரச சார்பற்ற பலதரப்பட்ட சர்வதேச நிறுவனங்களின் அபிவிருத்தி தொடர்பான தலையீடு எவ்வளவுதூரம் வறியோரை அணுகியுள்ளது என்பதை பயிலுனர்களும் ஆய்வுசெய்வர். இந்த அபிவிருத்திச் செயற்திட்டங்கள் எவ்வளவுதூரம் அவர்களது தேவைகள் முன்னுரிமைகள் என்பனவற்றுடன் தொடர்புகொண்டுள்ளன?
桑
91.

Page 48
இதுவரை பெற்ற பயிற்சியின் அடிப்படையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கு பயிலுனர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இதுதவிர வறியமக்களுக்காக செயற்படும் அரச செயற்திட்டப்பணிகள், உதாரணமாக விவசாயப்பணிகள், சுகாதாரம், வங்கிகள், சிறு கைத்தொழில் போன்ற நிறுவனங்கள் எவ்வளவு தூரம் குறிப்பிட்ட மக்களை அணுகியுள்ளன, அத்தகைய பணிகள் வறிய மக்களுடன் அர்த்த பூர்வமான முறையில் தொடர்பு கொண்டுள்ளனவா? இந்த நிறுவனங்களினால் ஏற்பட்டுள்ள அ பரிவரிருத் திக் கும் எ ற் பட் டி ருக்கவேண் டிய அபிவிருத்திக்குமிடையில் எவ்வாறான வேறுபாடுள்ளது?
யதார் த் தமான மாற் று அ பரிவரிரு தீ தி நடவடிக்கையொன்றுக்கான அம்சங்களை ஆராய்ந்த பின்னர் மீண்டும் குழு ஒன்றாகச்சேர்ந்து விடயங்களை அலசி ஆராய்தல் வேண்டும்.
7 வது கட்டம் (5 நாட்கள்)
இந்தக்கட்டம் பெரும்பாலும் அபிவிருத்தி நடவடிக் கையொன்றினை செயற்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்றுக்கு இட்டுச்செல்லும் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆழமான பொருளாதார, சமூக ஆய்வினதும் அது தொடர்பாக பயிற்றுனர்களுடன் மிகப்பெரிய பயிற்றுனர் குழுவான கிராமத்தின் இலக்குக் குழுவினருடனும் மேற்கொண்ட கலந்துரையாடல்கள், விவாதங்கள் மற்றும் கருத்துப் பரிமாறல்களின் விளைவான உள்ளிடுகள் தொடங்கவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பாக இங்கு பெருமளவில் கருத்திற்கொள்ளப்படும். வறிய மக்களிடம் காணப்படும் ஆக்கசக்தியினை அபிவிருத்தி நடவடிக்கையின் மிகப்பெரும் சக்தியாகக் கருதி அந்த ஆக்கசக்தியை உருவாக்கும் சிறு குழுவொன்றாக அபிவிருத்தி நடவடிக்கைகளில்
92

ஈடுபடுவ து தொடர்பாக பயிலுனர்கள் விளக்கமொன்றினைப் பெற்றுக்கொள்வர். மரபுவழி அபிவிருத்தி முறையிலிருந்து விலகி மாற்று அபிவிருத்தி நடவடிக்கையொன்றினைத் திட்டமிடல் தொடர்பாக பிரயோக அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.
8 வது கட்டம் - (முன்று வாரம் அல்லது ஒரு மாதம்)
இது அபிவிருத்தி நடவடிக்கை ஒன்றினைத் தொடங்குவதற்குரிய கட்டமாகும். கிராமத்தில் இக்குழுவினர் பயிலுனர் களின் இடையீட்டுடன் அபரிவரிருத்தி நடவடிக்கையொன்றை தொடங்குவற்குப் பொருத்தமான நிலைமையில் காணப்படுவர். இங்கு பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுவது சிறிய குழுமுறையாகும். மரபுவழி சங்கங்களுக்குப் பதிலாக உண்மையான ஜனநாயக முறையில் 15-20 பேரைக்கொண்ட சிறுகுழுவும் பங்கேற்புமுறையும் புதிய அபிவிருத்தி நடவடிக்கை ஒன்றைத் தொடங்குவதற்கான சிறந்த அமைப்பு முறையாகும். இந்த அபிவிருத்தி நடவடிக்கையானது வறிய மக்களினால் அவர்களுக்கு ஏற்றவிதத்தில் அமைத்துக்கொள்ளப் படுகின்றமையினால் இது எத்தகைய அபிவிருத்தி முறை என ஒருவராலும் கூற இயலாது. தொடங்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கையானது எத்தகையது எனக் கூற முடியாது போனாலும் நிச்சயமாக அது மக்களை வறுமையில் ஆழ்த்தும் வழிமுறையினை விளங்கி அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியாகவே அமையும். எனவே அது வறுமைக்கு உள்ளாக்கும் சுற்றோட்டத்தின் பாதையினை மாற்றியமைக்கும் ஒன்றாக அமைவதோடு அதிலிருந்து வெளிச்செல்லுவதாகாது. அது சுற்றோட்டத்திலிருந்து வெளிச் செல்வதொன் றாக அமையுமாயின் அது மரபு வழி அபிவிருத்தி நடவடிக்கையின் அங்கமொன்றாகவே அமைவதோடு ஏற்கனவே உள்ள வறுமையினை, அதே இடத்தில் வைத்திருப்பதற்கு உதவும் வழிமுறையொன்றாகவே மாறிவிடும்.
93

Page 49
சில வேளைகளில் பரீட்சார்த்த நடவடிக்கையொன்றின் மூலம் மக்களை அணுகி, எதிர்பார்க்கும் பாதையில் செல்லுவதற்கான சந்தர்ப்பம் காணப்பட்டபோதிலும் அது மிக அபூர்வமாகவே நிகழக்கூடியதொன்றாகும். பாலர் பாடசாலைகள் மூலமாக குழந்தைகளின் பெற்றோர்களை அணுகி அதன்மூலம் அபிவிருத்தி நடவடிக்கையினுள் புகும் நோக்கைக் கொண்டு, சில வேளை கிராமமொன்றில் பாலர் பாடசாலையொன்றை ஆரம்பிக்கலாம். அதன் முக்கிய குறிக்கோள் * பாலர் பாடசாலையினூடாக LD5 560)6T அடைவதாகும். எனினும் இவ்வாறு தொடங்கப்பட்ட பாலர் பாடசாலைகள் பல அதற்கு அப்பால் சென்றுள்ளதாகத் தெரியவில்லை. பல சந்தர்ப்பங்களில் பாலர் பாடசாலைகளே,
மூடப்பட்டுமுள்ளன.
சில வேளைகளில் மக்களை அடைவதற்காக சமூகசேவைகள், சமய, நலன்புரி, சுகாதாரம் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பிக்கலாம். எனினும், அத்தகைய நிகழ்ச்சித்திட்டங்களும் பெரும்பாலும் அவற்றோடேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதையும் காணலாம். ஒரே முறையில் மக்களை எய்துவது கஷ்டமாகையால் பாதையொன்றை அமைத்தல் மற்றும் சிரமதானம் போன்ற வற்றினூடாக மக்களை அ றிமுகப்படுத்திக்கொண்டு ஆழமான அபிவிருத்தி நடவடிக்கையொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு சில அபிவிருத்தி நிறுவனங்கள் எண்ணியபோதிலும் அத்தகைய செயற்திட்டங்களும் கூட அந்தவிடயங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், வறிய மக்களால் சமூக, பொருளாதார உண்மை நிலையினைப் புரிந்துகொண்டு செயற்படுத்தப்படும் எத்தகைய அபிவிருத்தி நடவடிக்கையும் நல்ல செயல்முறையொன்றாக விரிவடைவதற்கு இடமுண்டு.
94.

வறியமக்களால் கிராமத்தின் உண்மை நிலைமையினைப் புரிந்து கொண்டு தொடங் கப்படும் அபிவிருத்திச்செயல் முறைகளானாவை பெரும்பாலும் சேமிப்பு, சந்தைப்படுத்தல், உற்பத்தி, நுகர்வு போன்ற விடயங்களினூடாகத் தொடங்கப்பட்டிருப்பதை அனுபவங்கள் காட்டுகின்றன. (இந்த முறையில் தொடங்கப்படும் பல அபிவிருத்தி நிகழ்ச் சித் திட்டங்கள் அபிவிருத்திச் செயல்முறையாக பல விடயங்களில் விரிவடைந்து முன்னேறிச் சென்றுள்ளமை சில பங்கேற்பு அபிவிருத்திச்செயல் முறைகளிலிருந்து தெளிவாகின்றது)
9 வது கட்டம் - (5 நாட்கள்) இறுதிக் கலந்துரையாடல்
இது இறுதி ஐந்து நாள் கலந்துரையாடலாகும். நான்கு மாதக்காலப்பகுதியில் வெளிக்களத்திலும் பயிற்சி நிலையத்திலும் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள், ஆய்வுகள், விபரிப்புக்கள் போன்றன அனைத்தையும் மீண்டும் நுண்ணாயும் நோக்கில் பார்க்கவும் பயிற் சிக்கு முன்னரும் பயிற்சிக்குப்பின்னரும் பயிலுனருக்கிடையே ஏற்பட்ட மாற்றங்கள் என்பவற்றை ஆழமாக ஆராய்தல் இங்கு இடம்பெறுகின்றது. இங்கு அடிப்படையாக கீழ்வரும் அம்சங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும்.
★ நான்கு மாத காலப்பகுதியில் பெறப்பட்ட பயிற்சியின் மீது மீண்டும் கவனம் செலுத்தி அதிலிருந்து பெறப்பட்ட அனுபவங்களையும் அறிவினையும் அபிவிருத்திச் செயல்முறை ஒன்றினை உருவாக்குவதற்கு உபயோகப்படுத்திக்கொள்ளும் விதம்
* பயிலும் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூக பொருளாதார ஆய்வின் மூலம் கிராமத்தின் உண்மை நிலைமையினைப் புரிந்துகொண்டு வறிய மக்களினால் ஆரம்பிக்கப்படும் செயல்முறையில் இடையீடு செய்வதன் மூலம் பெறப்பட்ட அனுபவங்களின் பெறுபேறுகள்
95

Page 50
முழு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் சம்பந்தமாகவும் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளல். இது அனைத்துப் பயிலுனர்களாலும் மேற்கொள்ளப்படவேண்டிய விடயமொன்றாகும், இந்த மதிப்பீடு இருவகைகளில் மேற்கொள்ளப்படல்வேண்டும். ஒன்று இந்தக் கட்டத்தின் இறுதிநாள் கலந்துரையாடலின் போது அனைத்துப் பயிலுனர்களும் பயிற்சி மற்றும் அதனது முறை சம்பந்தமாக பத்து நிமிட நேரத்தில் தமது கருத்துக்களை வெளிப்படையாகக் குறிப்பிடுதல் ஆகும். மற்றது அனைத்துக் கருத்துக்களையும் வெளிப்படையாகக் குறிப்பிட இயலாவிடின் அவற்றினை எழுத்து மூலம் குறிப்பிடலாம். இதனை எழுத்து மூலம் குறிப்பிடும் போது கூட தமது பெயரினைக் குறிப்பிடுதல் பொருத்தமற்றதாகும் எனக்கருதினால் பெயரை எழுதாது விடலாம். இந்த அனைத்து முறைகளாலும் எதிர்பார்க்கப்படுவது என்னவெனில் பயிற்சியைப் பற்றி பயிலுனர்களிடமிருந்து அர்த்தபூர்வமான மதிப்பீடு ஒன்றைப் பெற்றுக்கொள்ளுவதாகும்.
வறிய மக்களின் தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் அனுகூலமான முறையில் அரசின் விரிவாக்கப் பணி, உதவிப் பணி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பை வறிய மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகளையும் வறிய மக்களுக்குக் கிடைக்கக்கூடிய அத்தகைய நன்மைகளை பெற்றுக்கொள்ளுவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய ஒழுங்குமுறை என்பன பற்றியும் ஆழமாக ஆராய்தல். (வறிய மக்களின் ஆக் க சக்தி பொருத்தமான முறையில் வெளிப்படுத்தப்படுமாயின் அவர்களது அபிவிருத்திச் செயல்முறைகள் தொடர்பாக விரிவாக்கப் பணிகளின் அதிகூடிய பயன்பாட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்)
96
 
 

இந்தக் கட் டத் தில் எதிர் காலத் தில் மேற்கொள்ளப்படவுள்ள நிகழ்ச்சித்திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று கட்டாயமாக இடம் பெற வேண்டியுள்ளது.
10 வது கட்டம் - நடைமுறைப்படுத்தும் காலம் (ஒரு வருடம்) .
இந்தக்கட்டம் பின்பற்றப்படவேண்டிய நிகழ்ச்சித்திட்டம் செயற்படுத்தப்படும் காலம் என வழங்கப்படும். நான்கு அல்லது ஐந்து மாத காலத்தில் பெற்ற பயிற்சியினுடாக மீண்டும் அனைவரும் இடையீட்டாளர்களாக அபிவிருத்தி வேலைக்காக கிராமத்தினுள் பிரவேசிப்பர். இவ்வாறு வெளிக்களத்துக்குச் சென்றுள்ள அவர்களுடன் இடைக்கிடையே தொடர் புகளை ஏ ற் படுத் திக் கொள்ளுதல் , கலந்துரையாடல்களில் ஈடுபடல், கருத்துப்பரிமாற்றம், அவர்கள் மக்களுடன் இணைந்துதொடங்கியுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை திரும்பிப்பார்த்தல் என்பன பங்கேற்புப் பயிற்சியின் ஒரு அங்கம்ேயாகும். இதன் கீழ் பின்வரும் விடயங்கள் நடைபெற வேண்டும்.
食 குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையேனும் பயிலுனர்கள் வேலைசெய்யும் வெளிக்களத்துக்கு பயிற்றுனர் செல்வதோடு அவர்களது அபிவிருத்தி உத்திகள் தொடர்பாக கலந்துரையாடவேண்டும். இதற்கு மேலதிகமாக பயிலுனரினது உதவியுடன் இலக்குக்குழு மக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் சம்பந்தமாக அந்த மக்கள் பிரிவினருடனும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளல்
வேண்டும். இந்தக்கலந்துரையாடல்கள் வறியமக்களின் ஆக்க சக்தி யானது முனைப்பாக வெளித்தோன்றும் வகையில் மேற் கொள்ளப் படல் வேண்டும் (இவ் வாறு
நனடமுறைப்படுத்தும் ஆண்டினுள் பயிலுனர்களும் பயிற்றுவிப்பவர்களும் குறைந்தபட்சம் நான்கு தடவைகள் வெளிக்களத்தில் சந்திப்பர்)
97

Page 51
* இந்தக் காலப்பகுதியினுள் இடையீட்டாளர்களின் அறிவு, விளக்கம், என்பவற்றை மேம்படுத்தும் பொருட்டு பங்கேற்பு
அபிவிருத்திச் செயல்முறைகளின் மூலம் இயங்கும் நிலையமொன்றுக்கு அவர்களைக் கொண்டு சென்று அந்த நிகழ்ச்சித்திட்டம் சம்பந்தமாக புதிய அனுபவங்களையும் 。 தெளிவுகளையும் பெற்றுக்கொள்ளுவதற்கு இடமளித்தல்
வேண்டும். .
வறிய மக்களுடன் வேலை செய்வதன் மூலம் வறிய மக்களினால் செயற்படுத்தப் படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை ஆய்வு செய்வதன் மூலமாக, கிராம மட்டத்தில் இத்தகைய நடவடிக்கைக்குப் பொருத்தமானவர்கள் எனக்கருதப்படும் ஆட்களை கண்டுபிடிப்பதில் இடையீட்டாளர் ஈடுபட வேண்டும். இந்தப் பிரதேசத்திலிருந்து இடையீட்டாளர் அகன்று செல்லும்போது அவரினால் மேற்கொள்ளப்பட்ட கருமங்களைக் கையேற்பதற்குப் பொருத்தமான உள்ளுர் இடையீட்டாளர்கள் சிலரை கட்டாயமாக உருவாக்குதல் வேண்டும். இது பங்கேற்புப் பயிற்சியின் அதிமுக்கிய அம்சமாகும். அவ்வாறு நிகழாவிடின் சதாகாலமும் இடையீட்டாளருக்கு மக்களிடமிருந்து பிரிந்து செல்ல இயலாதநிலை எற்படும். இது இடையீட்டாளர் மீதான அவசியமற்ற பிணைப்பாகும். இந்தப் பிணைப்பானது பங்கேற்பு பயிற்சிமுறைக்கு உகந்ததல்ல. எனவே இடையீட்டாளர் எப்பொழுதுமே அபிவிருத்திச்செயல் முறையிலிருந்து உருவாகும் உள்ளுர் இடையீட்டாளர்களை இனங் கண்டு அவர்களை இந்தச் செயல்முறைக்கு உயிரூட்டுபவர்களாக மாற்றவேண்டும்.
★ பயிற்சியில் பங்கேற்ற அனைவரும் பயிற்சி முடிவடையும் வரையில் நிலைத்திருப்பர் என ஊகித்துக்கொண்டால் இந்த இருபது பேரையும் குழுக்களாக பல இடங்களுக்கும் தொடர்புபடுத்தி வைக்கலாம். குழுவொன்றின் அங்கத்தவர் எண்ணிக்கையினை கலந்துரையாடலின் மூலம் தீர்மானித்துக்
کہہ '*
 
 
 
 
 
 
 
 

கொள்ளலாம். செயல்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குழுக்களுக்கிடையில் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் உருவாதல் வேண்டும். ஒரு குழு இன்னுமொரு குழு செயல்புரியும் கிராமமொன்றுக்குச் சென்று மூன்று அல்லது நான்கு நாட்கள் தங்கியிருந்து அவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளுதல், அனுபவங்களைக் கலந்துரையாடுதல், நிகழ்ச்சித்திட்டங்களை அவதானித்தல் மூலம் தமது அறிவினை விருத்தி செய்து கொள்ளலாம், (இந்தப் பயணங்களில் பயிலுனர்கள் மட்டுமல்ல அவர்களது கிராமங்களில் அபிவிருத்திசெயல்முறையில் சம்பந்தப்பட்டுள்ள குழுக்களின் உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்)
10வது கட்டத்தின் இறுதியில் அதாவது பயிற்சியின் ஓராண்டுக் காலத்தின் பின்னர் முழுச் செயற்திட்டம் தொடர்பாக பங்கேற்பு மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளல் வேண்டும்.
இத்தகைய பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் வெற்றிகரமாகவும் நடாத்திச் செல்லவேண்டுமாயின் பயிலுனர்களின் பங்கேற்பு மற்றும் அதில் அவர்களின் உற்சாகம், ஆர்வம் என்பன அவசியமாகும். அது முக்கியமான விடயமொன்றுமாகும். ஏனெனில் முழு நிகழ்ச்சித்திட்டமும் அவர்களது அறிவின் அடிப்படையில் அவற்றைக் கொண்டே முன்னேறுவது என்பதனாலாகும்.
இத்தகைய பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் உள்ளடக்கப்படவேண்டிய ஏனைய விடயங்கள்
பயிலுனர்களின் அறிவினை மேலும் கூட்டுவதற்கு வேறு வழிகளும் காணப்படுகின்றன, உதாரணமாக ஒழுங்கமைந்த சிறு விவசாயிகள் குழுவொன்றினால் கூட வங்கிக் கடன்களைப் பெற்றுக் கொள்ளுவது கடி னமானதாக இருக்கும். இந்தக்குழு எவ்வளவு திறமை வாய்ந்ததாகவும் நம்பிக்கையுடையதாகவும் செயல்திறன் மிக்கதாகவும்

Page 52
இருந்தாலும் கூட வங்கியினால் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளைப் பெற்றுக்கொள்ள இயலாது இருப்பின் அது சிலவேளைகளில் முழு நிகழ்ச்சித்திட்டமும் செயலிழந்து போவதற்குக் காரணமாக அமையலாம். இவ்விடத்தில் இடையீட்டாளரினால் இந்தப்பிரச்சினை தொடர்பாக விவசாயிகளுக்கு உதவி செய்யக்கூடியதாக இருக்கும். இடையீட்டாளர் இது சம்பந்தமாக தனது அறிவை விருத்தி செய்துகொண்டிருந்தால் மட்டுமே அவரால் அவ்வாறு உதவி செய்யமுடியும். வங்கியினதும் அதனது தொழிற்பாடும் தொடர்பாக இடையீட்டாளர் அறிவு பெற்றிருந்தால் மட்டுமே அ வாரின் அறிவு தெளிவாகும் . பயரிற் சரி நிகழ்ச்சித்திட்டத்தின்போது இடையீட்டாளர்களுக்கு இது தொடர்பாக தெளிவினை வழங்குதல் வேண்டும். கிராமியப்பொருளாதாரம், சிறு விவசாயிகளின் கடன்பளு, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய விளக்கம் உள்ள ஒரு வங்கி உத்தியோகத்தருடன் பயிற்சி பெறுவோர்கள் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் ஒன்றினை பெற்றுக்கொடுத்தால் இது பயனுள்ள ஒன்றாக அமைவதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இவ்வாறு பல்வேறு துறைகளுடன் தொடர்புகொண்ட வளமிக்க அறிஞர்களை இணைப்பதன் மூலம் நன்மை பெறுவார்கள். பயிற்சியின் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு தொடர்புபடுத்துதல் கட்டாயம் செய்யவேண்டிய தொரு விடயமாகும். இது வங்கிக்கு மாத்திரமல்ல விரிவாக்கல் பணி, தொழில் நுட்பம் போன்ற எனைய துறைகளுக்கும் பொருந்துவதாக அமைவதுடன் இத்தகைய கலந்துரையாடல் மரபுவழி விரிவுரையின் சாயலில் இருந்து முழுமையாக மாறுபட்ட தோற்றத்தினை எடுக்கின்றது என்பதையும் குறிப்பிடவேண்டும்.
100
 

பங்கேற்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான மற்றொரு நடவடிக்கை தொடர்பாக தயாரிக்கப்பட்ட விடய ஆய்வொன்றினை வாசிப்பதன் மூலமும் கலந்துரையாடுவதன் மூலமும் பயிற்சி பெறுவோருக்கு தமது பார்வையையும் கிரகிப்புத் தன்மையையும் மிகவும் கருத்துள்ள ஒன்றாக்கிக் கொள்ள முடியும். கட்புல செவிப்புல சாதனங்களை பொருத்தமான முறையில் இத்தகைய பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் . பங்கேற்புப்பயிற்சி நடவடிக்கைகளுக்கு பொருத்தமாக தேசிய அல்லது விதேசிய வேலைத் திட்டங்கள் பற்றிய விளக்கத்தினை கட்புல செவிப்புலசாதனங்கள்மூலமாக அதிககாலம், பணம், உழைப்பு இவைகளைச் செலவிடாது பயிற்சியாளர்கள் சிறந்த விளக்கத்தினைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
இங்கு ஒன்றினைக் கவனத்திற்கொள்ள வேண்டும். கலந்துரையாடல் அல்லது விடய ஆய்வு அல்லது கட்புல செவிப்புலசாதனங்கள் என்பவற்றை பிரயோஜனத்திற்கு எடுக்கவேண்டியது எந்தக்கட்டத்தில், எந்தச் சந்தர்ப்பத்தில் என்பதனை மிகக்கவனமாகத் தீர்மானிக்கவேண்டும். பயிற்சியின் ஆரம்பக்கட்டத்திலேயே பயிற்சி பெறுவோருக்கு விளங்கிக் கொள்வதற்கு சிரமமான முறையில் விடய ஆய்வொன்றினை மேற்கொள்ள, கட்புல செவிப்புல சாதனங்களைப் பயன்படுத்துவது இவர்களது அறிவை செயற்கையான முறையில் அபிவிருத்தி செய்வதற்கு பயன்படுத்தும் ஒரு முயற்சியாக அமைவதுடன் அது ஒருபோதும் செய்யக்கூடாத செயலுமாகும். இதை இலகுபடுத்திக் கூறுவதானால் இயற்கையான முறையில் தானே தடிகொண்டு கனியாத காயொன்றினை செயற்கையான முறையில் கனிய வைக்க எடுக்கும் முயற்சிக்கு சமனாகின்றது. இத்தகைய பயிற்சித்திட்டத்தினை நடத்திக்கொண்டு செல்லும் போது அத்ற்குப் பொருத்தமாக எத்தனையோ பயிற்சிகள் உள்ளன.
101

Page 53

இடையீட்டாளர்களைப் பயிற்றுவித்தல் மாதிரி)
பங்கேற்புப் பயிற்சி முறைமையைப் பயன்படுத்தி
அரசசார்பற்ற இயக்கமொன்றில் அபிவிருத்தி அலுவல்களில் ஈடுபடுவோர்களுக்காக நடாத்தப்பட்ட பயிற்சி பற்றிய வேலைத்திட்டமொன்றின் சுருக்கத்தினை கீழே குறிக்கின்றேன்.
*
அந்த வேலைத்திட்டத்தினை நடாத்தியது பீடா நிறுவனமாகும். பங்கேற்பு அபிவிருத்தி நடைமுறையில் பத்து வருடங்கள் வரை இடையீட்டாளர் பயிற்சியாளர்களாக கருமமாற்றி அனுபவத்தினைப் பெற்ற, ஆரம்ப ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள சிரேஷ்ட ஆய்வாளர்கள் மூன்று பேர்களின் மூலம் பயிற்சிகள் வழிப்படுத்தப்பட்டன.
இந்தப் பயிற்சி பாடநெறியில் 16 பேர் வரை பங்குகொண்டார்கள். இதில் 6 பேர் பட்டதாரிகளாக இருந்ததுடன் ஏனையோர்கள் க.பொ.த.சாதாரணதரம், உயர்தரம் சித்தியடைந்தோராக இருந்தனர். இவர்களில் 14 பேர் இலங்கையின் பல்வேறு கிராமங்களில் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டவர்களாக இருந்ததுடன் மீன்பிடி சமூகத்துடன் ஒருவரும் நகர வறியோர்களுடன் மற்றுமொருவரும் அபிவிருத்தி
வேலைகளில் ஈடுபாடுகொண்டிருந்தனர்.
இந்தப் பாட் நெறி 6 மாதங்களுக்கு வரையறைப்படுத்தப்பட்டது.
103

Page 54
பயிற்சி பாடநெறியில் கலந்து கொள்வோர்களை, அவர்கள் அப்போது வேலைசெய்த நிறுவனங்கள் தெரிவு செய் து அனுப் பரின. பயிற் சிக்கு அனுப்பப்படுவோர் எத்தகைய பின்னணியைக் கொண்டிருத்தல்வேண்டும் என்பதை நிறுவனம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவித்திருந்தது. இதன்படி பயிற்சிக்கு அனுப்பப்படும். நபர் : -
அதிக அனுபவங்கள் பெ ற்ற /நிறுவனத்தில் தொடர்ந்து) இருப்பார் என்பதில் நிறுவனம் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒருவராக இருத்தல்.
எதிர்காலத்தில் நிறுவனத்தில் ஏனையவர்களுக்குப்பயிற்சி கொடுக்கக் கூடியளவு தர போதுமான கல் வரித் தகைமையுள்ளவராதல். is
வேறு வேலைகளின்றி 6 மாதங்கள் வரை தொடர்ச்சியாக பயிற்சி வேலைத்திட்டத்தில் பங்குபற்றக்கூடிய, வறியவர்களின் ஆக்கத்திறன் மூலம் அபிவிருத்தி நடைமுறைகளை தோற்றுவிப்பதில் ஈடுபடக்கூடிய ஒருவராதல்.
முதலாவது கட்டம் - 5 நாட்கள்
பயிற்சி வேலைத்திட்டம் பயிற்சியாளர்களை அறிமுகம் செய்வதன் மூலம் ஆரம்பமாகியது. 15-30 நிமிடங்களுக்குட்பட்ட காலத்தினுள் பயிற்சி பெறுவோர் இருவர் ஒன்றிணைந்து, அவர்கள் இருவரது விபரங்களை நன்கு கலந்துரையாடி ஒருவரை ஒருவர் நீண்ட அறிமுகம் செய்தல் இதில் விசேடமானதாகும். தம்மைத்தாமே அறிமுகம் செய்வதற்குப் பதிலாக, தான் வேறு ஒருவரின் விபரங்களை அறிவதன் மூலம் இவர் பற்றிய விபரமான அறிமுகம்செய்தல் இங்கு நடைபெறுகின்றது. இதன் மூலம் அவ்வாறு
104.

அறிந்துகொண்டவர்களின் தனிப்பட்ட விபரங்கள் (கல்விதொழில்-விவாகம்-குடும்பப்பின்னணி பிள்ளைகள் - சகோதர, சகோதரிகள்) கூட வெளியாகின அவற்றில்.
சில:-
1. பாடசாலை அல்லது பல்கலைக்கழகக் கல்வியின் பின்னர் தொழில் ஒன்றினை எதிர்பார்ப்பது போன்றே தமக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தின் மூலம் கிராமத்திற்கு அல்லது பிரதேசத்திற்கு ஏதுமொரு சேவை செய்யும் அவசியம் உள்ளவர்களாக இருத்தல்.
2. இப்போது கடமையாற்றும் நிறுவனத்திற்கு வருமு ன் னர் பல் வேறு வேலை களில் தொடர்புகொண்டு அனுபவம் பெற்றவர்களாக இருத்தல்.
3. கிராமிய மட்ட்த்தில் பல்வேறு சங்கங்கள், இயக்கங்கள் பல்வேறு அரசியல் கட்சி இயக்கங்களில் செயற்றிறன் உள்ளவர்களாக அலுவல்கள் செய்திருத்தல்.
4. இந்தப்பயிற்சி பெறுவோர்களில் அதிகம் பேர்
குறைந்தது மத்திய வகுப்பினராக இருத்தல்.
5. வறிய மக்கள் மீது இரக்க சிந்தனையுடன் அலுவல்கள்
புரியும் திறமையுள்ளவர்களாதல்.
6. அதிகமானவர்கள் கிராமியப் பின்னணியில் இருந்து
வந்தவர்களாக இருத்தல்.
அறிமுகத்தின் பின் தமது வெளிக்கள வேலைகளிலோ , அல்லது தனிப்பட்ட முறையிலோ அல்லது சங்கங்களிலோ தாம் தொடர்புபட்ட வேலைகளில் பெற்ற அனுபவத்தினை மிகவும் விபரமாக எடுத்துக்காட்ட கூடியதாக இருக்க வேண்டும். இது தாம் பங்கு கொண்ட சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளில்பெற்ற அனுபவமாயின் மிக நன்று.
105

Page 55
எல்லா பயிற்சியாளர்களும் தமது அனுபவங்களை சமர்ப்பித்த பின்னர் அது தொடர்பான நீண்ட கலந்துரையாடலும் கருத்துப்பரிமாற்றங்களும் ஏற்பட்டது. எல்லா விளக்கங்களும் முடிவடைந்த பின்னர் அந்த அனுபவங்களின் சாராம்சங்களை மிக நுண்ணிய முறையில் கலந்தாலோசிக்க மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டது. இது உன் மை பரிலேயே தமது அனுபவங் களை திரும்பிப்பார்ப்பதாகும். பங்கேற்புப் பயிற்சி முறைமையில் இது மிகவும் முக்கியமான ஒரு கூறாகும். இந்த சிறு குழு எல்லா அனுபவங்களிலும் திரும்ப கவனத்தினைச் செலுத்தி அனுபவங்கள் பற்றிய இவர்களது தீர்மானங்கள் மூன்று குழுக்களாக வேறு வேறாக சமர்ப்பிக்கப்பட்டன. கடைசியில் குழு மூன்றினதும் முடிவுகளை பொதுமைப்படுத்தல் மூலம் பொதுவான முடிவொன்று கட்டியெழுப்பப்பட்டது. இறுதியில்
அனுபவம் பற்றி எழுந்த பொதுமுடிவு இதுவாகும்.
* மக்களது தேவைகளைப்புரிந்து கொள்ளும் இயக்கம்
வெற்றியடையும். -
* மரபு வழி கிராமிய தலைமைத்துவம் பொது அனுபவங்களில் புதிய தலைமைத்துவத்துடன் மோதிக்கொள்ளும்.
* எல்லா கிராமங்களிலும் உற்பத்தி மற்றும் நுகர்வு நடவடிக்கைககளில் ஈடுபட்டுள்ள மக்கள் சலுகைபெற்ற வகுப்பினரால் சுரண்டப்படுகின்றனர். சகல கிராமங் களிலும் ஏற் றத் தாழ்வும் தொழிலின்மையும் காணக்கூடியதாக உள்ளது.
* சிலபேர் அல்லது சில இயக்கங்கள் கிராமங்களில் வறியமக்களுக்கு நம்பிக்கையினை ஊட்டி பின்னர் கைவிட்டமையால் கிராமிய மக்களிடம் இயக்கங்கள் பற்றிய நம்பிக்கை தளர்ந்திருந்தது.
106
 

* வறியவர்களிடையே கடன் சுமை எல்லாக்
கிராமங்களிலும் காணக்கிடைத்தது.
* மதத்தைப் பயன்படுத்தி சிறுபிரிவு மக்களிடம்
மாத்திரமே செல்லக்கூடியதாக இருந்தது.
* அரச நிறுவனங்களில் நிகழும் அலுவல்கள் உயர் அலுவலர் மூலம் நடைபெறுவதால் பெரும்பாலும்
அது தோல்வியடைகின்றது.
இந்த பொதுவான முடிவுக்கு வந்தபின்னர் 3
”粤 மரபுவழி தலைமைத்துவம்
* தேவைகள்
岑、 கடன்பளு
༈ சுரண்டல் போன்ற அம்சங்கள்
விரிவாக கலந்துரையாடப்பட்டன.
அடுத்து பங்குபற்றுவோர் தாம் நன்கு அறிந்த கிராமமொன்றைப்பற்றி விபரிக்க வேண்டியிருந்தது. இது தாம் பிறந்த கிராமமாகவோ கடமையாற்றும் பிரதேசத்தில் ஒரு கிராமமாகவோ, தாம் சில காலமாக குடியிருந்த கிராமம் ஒன்றாகவோ இருக்கலாம். '
இந்தப் பயிற்சியின் மூலம் எல்லா பயிற்சியாளர்களுக்கும் 16 கிராமங்கள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள முடிந்தது. ஒவ்வொரு கிராமம் பற்றியும் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின் மேலும் விபரங்களை தெளிவாக்கிக் கொள்வதற்காக பயிற்சியாளர்களிடையில் நீண்ட கலந்துரையாடல் நடந்தது. எல்லாக் கிராமங்கள் பற்றியும் விபரிக்கப்பட்டு முடிந்த பின் மீளவும் ஒருமுறை ஆரம்பக் கூட்டம் போன்றே மூன்று சிறு குழுக்கள் கூடியது. சிறுகுழுக்கள் கலந்துரையாடிய போது கிராம விளக்கத்தில்
107

Page 56
எழுந் த வரிடயங்கள் மீளவும் ஒரு முறை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு அந்தந்த சிறு குழுக்கள் தத்தமது முடிவுகளை வேறுவேறாக முன்வைத்தன. பின்னர் சிறுகுழுக்கள் மூன்றினதும் அபிப்பிராயம் ஒன்றாக கலந்துரையாடப்பட்டு கிராமம் பற்றி கீழே குறிப்பிடப்படும் பொது அபிப்பிராயத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானங்களின் படி இலங்கைக் கிராமங்களில் சாதாரணமாக இத்தகைய சிறப்பியல்புகள் இருக்கின்றன என்ற முடிவுக்கு வரப்பட்டது. கிராம விளக்க ஆய்வு பயிற்சி பெறுவோருக்கு கிராமம் பற்றி பெற்றுள்ள அறிவினை மீளவும் திரும்பிப் பார்ப்பதாக இது அமைந்தது.
அவை:-
1. கிராமத்தினுள் பொருளாதார சமூக ஏற்றத்தாழ்வுகள்
உண்டு.
2. எல்லாக் கிராமங்களிலும் பெரும்பான்மையினர் சலுகைபெற்ற சிறுபான்மையால் சுரண்டப் படுகின்றனர்.
3. சாதியினால் குறைந்த வறியமக்கள் அதிகளவு
துன்பத்திற்குள்ளான மக்கள் ஆவர்.
4. விளக்கம், சிக்கனம் இல்லாதிருந்தமை வாழ்க்கைநிலை
கீழே சரிய காரணமாக அமைந்தது.
5. அரச சேவைகள் கிராமவாசிக்கு உரியமுறையில்
கிடைப்பதில்லை.
6. குறுகிய கட்சி, அரசியல் தலையீடுகள் காரணமாக
அபாயமான விளைவுகள் ஏற்படுகின்றன.
7. கிராம சங்கங்கள் (பொது என்று ஏகோபித்து கருதப்பட்டவை) பலம்வாய்ந்தவர்களால் கட்டுப்படுத் தப்பட்டுள்ளன.
8. பொது நடவடிக்கைகளில் குலபேதம் அவ்வளவு
பாதிப்பினை ஏற்படுத்தவில்லை.
ノ
108

9. உழைப்பு வளத்தினை அதிகூடிய அளவு
பயன்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் இல்லை.
10. குறைந்த வயதில் பாடசாலையை விட்டு விலகல் வறிய குடும்பங்களில் அதிகமாக காணக்கிடக்கின்றது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஆராயப்பட்டது, கிராமம் பற்றி கிராமாய்வின் போது பெற்றுக்கொண்ட விளக்கத்தை கிராமத்திற்கு சென்று தகவல்களைப்பெறுதில் தொடர்பாக்குவது எப்படி என்பதாகும். ஏனெனில் பயிற்சியின் அடுத்தபடியாக அமைந்தது கிராமம் பற்றி செய்த ஆய்வாகும்.
1. கலந்துரையாடி விளக்கப்பட்ட விடயங்கள் எவ்வளவு தூரம் கிராமம் பற்றிய விபரமான சிக்கலற்ற விளக்கம் ஒன்றினைப் பெற வழியாகின்றது?
2. கிராமம் பற்றி ஆரம்ப ஆய்வினை நடாத்துவதற்கு தெரிவுசெய்யப்படவேண்டியது புதியதோர் கிராமத்தினையா? அவ்வாறு இன்றேல் தாம் இப்போதும் கடமையாற்றும் கிராமத்திலே தானா?
3. பழக்கப்படாத கிராமத்தில் எங்ங்ணம் பிரவேசிப்பது?
4. கிராமத்தில் பெற்றுக்கொள்ளும் விபரம் எத்தகையது?
5. விபரங்களை எங்ங்ணம் பெறுவது?
6. அபிவிருத்தி அலுவலர் ஒருவர் இடையீட்டாளராக எங்களுடைய கிராமத்திற்கு சென்றால் எமது கடமைகளை எவ்வாறு ஆரம்பிப்பது? எந்த இடத்தில்?
இந்த வகையில் கீழே குறிப்பிடப்படும் தலைப்புகளின் கீழ் விரிவாக விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
109

Page 57
* கிராமத்தில் பிரவேசிப்பது யார் என்ற வகையில்?
எவ்வாறு? (ஆய்விற்காக புதியதோர் கிராமத்திற்குச்
செல்லும் போது) என்பது பற்றி குழுவின் அபிப்பிராயம பின்வருமாறு இருந்தது.
1.
வழிபாட்டிடம், சந்தை அல்லது அஞ்சல் அலுவலகம் இவற்றில் ஒன்றிற்குச் சென்று விபரங்களைக் கேட்டறிதல் மூலம்.
2. அலுவலர் என்ற ரீதியில்,
3.
அபிவிருத்தி பற்றி பயிலும் மாணவர் என்ற
ரீதியில்.
4. ஊரில் சங்கமொன்றின் அலுவலர் ஒருவரை
சந்திப்பதன் மூலம்.
5. ஆய்வு செய்பவர் ள்ன்ற ரீதியில்.
6. தங்குவது எந்த நிலைமையிலான வீடு என்பதை
நன்கு பரிசீலனை-செய்து சாதாரண நிலையில் உள்ள வீடொன்றில் தங்குதல் வேண்டும்.
7. விபரங்களைப் பெற்றுக்கொள்வது நேரடியாகக் கேள்வி கேட்பதன் மூலமல்ல. தற்செயலாகவாகும்.
8. கிராமத்தவர் முன் பெற்றுக்கொள்ளும் விபரங்களைக்
குறித்து வைத்துக்கொள்ளல் ஏற்றதல்ல.
* கிராமத்தில் பெற்றுக்கொள்ளும் விபரங்கள் என்ன?
1. கிராமத்தின் வரலாறு.
2. கிராமத்தின் புவியியல் அமைவு (பெளதீகத்தன்மை,
பரப்பு, மற்றும் வரைபடம் ஒன்று.)
110
 
 

நிலத்தைப் பயன்படுத்தல், பயிர் வகைகள், இயற்கைவளம்
குடும்ப எண்ணிக்கை - சனத்தொகை.
நிலஅளவு - துண்டாடப்படல் விபரம்
5. கிராமத்திற்குள்ள வசதிகள் பொதுசேவைகள்
(பாடசாலை, தபாற் கந் தோர் , பிரதேச
கூட்டுறவுக் கடை , சுகாதார நிலையம் , சமய 。
நிலையங்கள்)
- கிராமத்திலுள்ள அமைப்புக்கள்.
7 கிராமத்தின் பொருளாதார அமைப்பு (பிரதான மேலதிக - வாழ்க்கை வழி, நிலமற்ற உழைப்பாளர்
அரச ஊழியர்கள்)
உற்பத்தி, விநியோக முறை (கிராமத்தின் பிரதான விநியோக - நடைமுறை).
9. சமூகப்பிரிவினரை அறிந்துகொள்ளுதல்.
மேலே குறித்த விடயங்கள் தனித்தனியாகவும் நீண்ட முறையிலும் கலந்துரையாடிகிராமத்தினுள் பிரவேசித்தல் மற்றும் அதற்குச் சார்பான விடயங்கள் சம்பந்தமாக பங்கேற்பவர்கள் கடைசியாகத் தீர்மானிக்கும் விடயங்கள் கீழே காட்டப்படுகின்றன.
கிராமத்திற்குள் பிரவேசிக்கும் போது பிரச்சினைகளை இத்தகைய நிலையமொன்றி วิ่ง ผู้ இருந்து கொண்டு தீர்த்துக்கொள்ள முடியாமை ல் இவ்வாறான அனுபவத்தினை எதிர்கொண் நடைமுறைரீதியான ஆய்வினைச் செய்தல் வேண்டும்
111

Page 58
எல்லா நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக அமைவது கிராமத்திற்குள் பிரவேசிக்கும் முறை என்பதால் , அதனை மிகவும் கவனமாக புத்திநுட்பமாகச் செய்தல் வேண்டும்.
மூன்று வாரங்களுக்கு அதிக காலம் கிராமத்தில் வசிப்பதனால் அடுத்த கலந்துரையாடலுக்குத் தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளும் ஒரேவழி கிராமத்தில் பெறக்கூடிய விபரங்களே ஆதலால் முடியுமான அளவு தரவுகளை திரட்டிக்கொள்ள வேண்டும்.
தாம் விபரங்களைத் தேடுவதற்குச் செல்லும் கிராமம் தற்போது செயல்புரியும் இடத்திற்கு அருகே அமைந்திருந்தாலும் தம்முடன் நன்கு தொடர்பற்ற கிராமமாக இருத்தல் வேண்டும்.
மிகவும் பெரிதாகவோ, அல்லது சிறிதாகவோ இல் லாமல் அளவான கிராமமொன்றை தெரிவுசெய்து கொள்ளவேண்டும் (சாதாரணமாக 75-125 குடும்பங்களுக்கிடையில்)
2. ஆம் கட்டம் (ஆரம்ப ஆய்வு - 3 வாரங்கள்)
பயிற்சி பெறுவோர் ஆரம்ப ஆய்வு தொடர்பாக விளக்கம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக கிராமத்திற்குச் செல்லுதல் இந்தக்கட்டத்தில் நடந்தது. (நகரத்தில் மக்களுடன் வேலைசெய்யும் பயிற்சியாளன் நகரச்சூழலில் தெரிவுசெய்த பிரதேசமொன்றினை இதற்காகப் பயன்படுத்திக் கொண்டார்.) இங்கு இன்னுமொரு விசேடமாக அமைந்த அம்சம் யாதெனில் இந்த ஆய்வுக்காக பயிற்சியாளர்கள் சென்றது 3-4 குழுக்களாக அல்ல தனித்தனி ஆகும். அதனால் அது பயிற்சிபெறுவோருக்கு பெரிய சவாலாக அமைந்தது. இத்தகைய பங்கேற்பு பயிற்சி
112

முறைமையில் இருக்கும் வழமையான முறை என்னவென்றால் குழுவொன்றாக கிராமத்தினை ஆய்வு செய்தலாகும். அவ்வாறு இங்கு செல்லாமைக்கு ஒரு காரணமாக அமைந்தது, இவர்கள் ஏற்கனவே அரச சார்பற்ற நிறுவனங்களில் அபிவிருத்தி அலுவலர்களாகக் கடமையாற்றி அனுபவம்பெற்று இருத்தலாகும். இந்தக் கட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக அமைந்தது இ துவரை கிராமம் சம்பந்தமாக அறிந்து இருந்தவற்றை மறந்து கிராமத்தினைப்பற்றி புதிய முறையில் பயில்வதற்கு ஆய்வுசெய்தல் என்பதாகும். இதனால் எவ்வளவு காலம் கிராமத்தில் வேலை செய்திருந்தபோதிலும் இது எல்லோருக்கும் புதிய அனுபவமாகவே அமைந்தது.
3. ஆவது கட்டம் - 5 நாட்கள்
எல்லா பயிலுனரும் 5 நாட்கள் கலந்துரையாடலுக்காக திரும் பவும் நிலையத் தில் கூடினர் , இங்கு கலந்துரையாடலுக்குட்பட்ட முதல் விடயம் கிராமத்தில் பிரவேசித்த முறைபற்றியதாகும். பிரவேச வழிகளில் சில கீழே குறிப்பிடப்படுகின்றன.
* கிராம வழிபாட்டுத் தலத்தில் குருமார்களைச் சந்தித்து, கிராமத் தில் பரிரவேசித்தனர், ஆய் வரினை நடாத்துவதற்கான விடயங்களைச் சேகரித்துக்
கொண்டனர்.
- அயலிலுள்ள அறிமுகமான கிராமமாக இருந்தமையால் பிரவேசிப்பது அவ்வளவு பிரச் சினையாக
அமையவில்லை.
岑 பிரவேசித்தது கடன் கொடுக்கும் அலுவலரின்
மூலமாகும். இதனால் பிரச்சினை ஏற்படவில்லை.
113

Page 59
* 35 வருடங்களுக்கு முன்னர் கிராமத்தில் இருந்து இந்தப்பிரதேசத்திற்கு வந்த ஒருவரைத் தேடுவதற்குச் செல்லும் வழியில் கிராமத்தில் பிரவேசிக்கப்பட்டது, கிராமத்தில் பிரவேசிப்பதில் சிரமம் இருக்கவில்லை.
- கிராமத்திற் பிரவேசித்தது, கிராமத்தைப்பற்றி கற்ற ஒருவராலாகும். ஆனால் அது கல்வி என்ற அமைப்பைப்
பெறவில்லை.
\- கிராமத்தினைப் பார்ப்பதற்கு சென்றமை புகையிலை கம்பனியிலிருந்து வருபவர் என்ற அடிப்படையில் ஆகும்.
* தாம் வேலைசெய்யும் கிராமவட்டத்தில் இக்கிராமமும் அடங்கியதால் அங்கு பிரவேசிப்பது கஷ்டமாக அமையவில்லை.
x. அயல் கிராமத்தில் வசிப்பவராக இருந்தமையால் பிரவேசிப்பது பிரச்சனையாக அமையவில்லை.
* ஊருக்குள் பிரவேசித்தது அயற்கிராமத்தில் இருந்து வந்த கிராமத்தினை ஆய்வுசெய்பவராக ஆகும்.
இந்தப்பிரவேசங்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் சம்பந்தமாக எதுவும் இங்கு குறிப்பிடப்படாத போதிலும் ஊருக்குள் பிரவேசிக்கும் போது பின்பற்றிய முறைகளின் நன்மைகள் போன் றே தீமைகளும் சிலரால் கலந்தாலோசிக்கப்பட்டது. பிரவேசத்தின் போது கிராமவாசிகளுக்கு போலியான எண்ணங் களை முன்வ்ைப்பதிலும் பார்க்க எமது காரியங்களுக்கு பாதகம் ஏற்படாத வழியில் கிராமமக்களின் விசுவாசத்தினைப் பெறும் வழியில் கருத்துக்கள் முன்வைக்கப்படுவது மிகவும் பொருத்தமாக அமைந்தது என்பது குழுவினரின் அபிப்பிராயமாக இருந்தது. "கிராமத்தில் பிரவேசித்தல்"
114

அபிவிருத்தி அனுபவமொன்றில் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த கலந்தாலோசனையின் பின்னர் இவர்கள் புரிந்துகொண்டார்கள். பிரவேசித்த முறைபற்றி நீண்ட கலந்துரையாடலின் பின், பின்வரும் விடயங்கள் மேலும் கலந்துரையாடப்பட்டன.
冰 கிராமத்தின் விபரங்களை பெற்றுக்கொண்டது எங்ங்னம்?
uLu TiffLLDP
岑 பெற்றுக்கொண்ட விபரங்கள் யாது?
岑 பெற்ற விபரங்கள் போதுமானது என்று கருதுகின்றீரா?
冰 கிராமத்தினை அறிந்துகொள்ள, பெற்றுக்கொண்ட விபரங்கள் போதியதாக இல்லாதிருந்தால் திரும்பவும் ஆராயவேண்டிய விபரங்கள் யாவை?
தாம் ஆய்வுசெய்த கிராமம் தொடர்பாக விபரங்களை முன்வைத்த பின்னர் அதுபற்றி விபரமான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் பின்னர் இவ் விடயங்களை மிகவும் நுண்ணிய அடிப்படையில் விளங்கிக்கொள்வதற்காக சிறு குழுக்களாகப் பிரிந்து கலந்துரையாடப்பட்டது. ஆரம்ப ஆய்வாக கீழ்வரும் தீர்மானங்களுக்கு இவர்கள் வந்தனர்.
斗 நில உடமை துண்டாடப்பட்டும் ஏற்றத்தாழ்வும்
இருந்தது.
* நில உடமை சிக்கலாக இருப்பது அபிவிருத்திக்குப்
பாதகமான ஒன்றாகும்.
举 வறுமையான கிராமவாசிகள் சில ரன்
சுரண்டலுக்குள்ளாகினர்.
X- கிராமத்தினை விட்டுப்போதல் கிராம அபிவிருத்திக்குப்
பாதகமானது.
115

Page 60
பிள்ளைகள் பாடசாலை செல்லாதிருக்கக் காரணம்
பொருளாதாரக்கஷ்டங்களாகும்.
岑 அரச சேவைகள் உரியமுறையில் வறிய கிராம
வாசிகளுக்குக் கிடைப்பதில்லை.
இயங்கிக்கொண்டிருக்கும் பொது இயக்கங்கள் மூலம் அதிக லாபம் பெறுவது சிறு பிரிவினராகும்.
单 வறுமை காரணமாகக் கடன்படும் கிராமவாசி அதன்
.மூலமே வறியவனாகின்றான் ܣܛܢ
事 வறிய மக்களின் ஒழுக்கம் குறைந்து செல்வதற்கு குறைவான பொருளாதார வசதி காரணமாக அமைகின்றது.
இவை பற்றி கலந்துரையாடிய பின்னர் திரும்பத்திரும்ப கிராமம் பற்றி ஆய்வுசெய்யும் ஆவல், பயிற்சியாளர்கள் மத்தியில் வெளிப்பட்டது. (இது யதார்த்தத்தினை விளங்கிக்கொள்வதற்குசெய்யும் உற்சாகமாகக் கொள்ளலாம்) இதனை வெற்றியடையச் செய்வதற்கு அடுத்த கட்டத்தில் ஆய்விற்கு சென்றபோது கீழே குறிப்பிடும் விடயங்கள் பற்றி அதிக கவனம் எடுக்கப்படல் வேண்டும் என்பது குழுக்களால் தீர்மானிக்கப்பட்டது. அதுபோல் இந்த ஆய்வு பங்கேற்பு ஆய்வாக இருப்பதால் கிராமவாசிகளும் இதில் பங்காளிகளாகவேண்டும் என்பது. புரியக்கூடியதாக இருந்தது.
* கிராமத்தில் சமூக வர்க்கங்களும் அவை அமைந்துள்ள
முறையும்
- கிராமத்தின் பிரிவு முறைகள்.
* கிராமப் பிளவுகள்
116

இலக்காக இருக்க வேண்டிய குழு
இவர்களது தேவைகளை அடையாளம் கானல்,
இத்துடன் இதற்குப் பொருத்தமான கீழ்வரும் விடயங்கள் பற்றியும் ஆய்வுசெய்யப்படல் வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வரப்பட்டது.
நிலம் துண்டாடப்படுவதும் ஏற்றத்தாழ்வும்
ஒவ்வொரு குடும்பத்தினதும் பொருளாதார அமைப்பு.
கலாசாரப் போக்குகள்
கிராமத்தின் ஒவ்வொரு பகுதியினருக்கும் கிராமத்தினை விட்டுப் போவதற்கு அடிப்படையாக அமைந்த அம்சங்கள்.
L) fTL SF fT 60) GM) Gt j fT G5 fTLD að இருப் பதற்கும் , பாடசாலையைவிட்டுச்செல்வதற்கும் அடிப்படையாக அமையும் காரணிகள்.
விரிவாக்க சேவை கிராமத்திற்குக் கிடைத்துள்ள முறை. கிராமத்தின் பொது நிறுவனங்களின் இயல்பு.
கிராமம் மற்றும் வெளிவாரியான பிரதேசங்களுக்கிடையே உள்ள வர்த்தகத் தொடர்புகள்.
இந்த விடயங்கள் தொடர்பாக கருத்தில்
வைக்கவேண்டியதும் கவனமெடுக்கவேண்டியதுமான விடயங்களை அடுத்த கட்டத்தில் ஆய்வு நடாத்தும் நோக்கத்தில் பயிற்சிபெறுவோர் திரும்பவும் ஆரம்பத்தில் ஆய்வுசெய்த கிராமங்களுக்கு ஒரு மாதங்கள் வரை தங்கியிருப்பதற்காக சென்றனர்.
117

Page 61
4 ஆவது கட்டம் (ஒரு மாதங்கள் வரை)
பயிற்சியாளர்கள் முன்னர் ஆய்வுக்குட்படுத்திய கிராமத்தினுள் ஒருமாதமளவு வாழ்ந்து சமூக, பொருளாதார ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆரம்ப ஆய்வானது ஆழமானதும் விளக்கமானதுமான ஆய்வாக அமைந்தது. இந்தக்கட்டத்தில் இவர்கள் கிராமத்தின் யதார்த்தத்தினைப் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் உற்சாகமெடுத்தனர். அது போன்றே இலக்கக் குழுக்களின் உண்மையான தேவைகள் முக்கியத்துவங்கள் மூலம் எந்த முறையிலான அபிவிருத்தி நடவடிக்கைகள் குழுக்களினால் ஆரம்பிக்கப்படல் வேண்டும்? என்பதை ஆய்விற்குட்படுத்தல் இந்த ஆய்வில் மிகவும் முக்கியமான விடயமாக உள்ளது. கிராமத்தின் வறியவர்கள் சிலரும் ஆய்வில் பங்கு பற்றினர்.
5. ஆவது கட்டம் (5 நாட்கள்)
ஒரு மாதம் சமூக பொருளாதார ஆய்விற்காகச் சென்ற பயிற்சியாளர் மீண்டும் கருத்துப்பரிமாற்றலுக்காக ஓரிடத்தில் கூடினர். மிகவும் ஆழமாகசெய்த ஆய்வாக இருப்பதனால் முன்னைய சந்தர்ப்பத்தினை விட மிகவும் பெறுமதியான கருத்துக்கள் பல பயிற்சியாளர்களிடம் இருந்து வெளிப்பட்டன.
இந்த கலந்தாலோசனையில் வெளிப்பட்ட அடிப்படை விடயமாக அமைந்தது என்னவெனில் பெற்றுக்கொண்ட விபரங்கள் அபிவிருத்தி வேலை ஒன்றை பிழையின்றி ஆரம்பிப்பதற்கு பயன்படுமா? என்பதாகும். அவ்வாறிருந்த போதிலும் கீழே குறிப்பிடப்படும் விடயங்கள் பற்றி மேலும் விபரங்களைத் திரட்டல் மிகவும் பயனுடையதாகும்.
举 இலக்கக் குழுவாக தெரிவுசெய்துகொள்ளவேண்டிய குழு பற்றி மேலும் ஆழமாக ஆய்வு செய்தல் வேண்டும்.
118

பொருளாதார சமூக அடிப் படையில் மனவேதனையடைந்துள்ள பகுதியினரை இந்தக் குழுவினராக அடையாளம் காணலாம்.
உற்பத்தி, விநியோகம், நுகர்வு, கடன் மற்றும் உழைப்பு மூலம் வறுமையான மக்கள் அடக்கப்பட்டுள்ள
முறையைக் கண்டறிதல்.
மனிதர்களுக்கு பாதிப்பான கொழுந்து விட்டெரியக்கூடிய பொதுவான பிரச்சினைகளின் விபரங்களைப் பெற்றுக்கொள்ளல்.
அடையாளங்கண்ட குழுக்களின் நோக்கம் பற்றி தெளிவான விளக்கமொன்றினைப் பெற்றுக்கொள்ளல்.
ஏனைய சமூகப் பிரிவினைகளை அடிப்படையாகக் கொண்டு வர்க்கங்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டுள்ள முறையை ஆழமாக ஆராய்தல்.
இடையீட்டாளர் மூலம், தனிக்கலந்துரையாடல், விவாதம், கண்காணிப்பு மூலம் வெளிப்படும் விபரங்களையும் வெளியிலிருந்து கிடைக்கும் விபரங்களையும் தமது நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டிய முறை. இந்த கருத்து மற்றும் முடிவுகளை முன்வைக்கும் போது நீண்டமுறையில் கலந்தாலோசிக்கக் கூடிய விடயங்கள் அதிகம் உள்ளன. அது போன்றே இந்தக்குழுக்களுக்கிடையில் தர்க்கமும் காணப்பட்டது. கீழே குறிப்பிடும் விடயங்கள் தொடர்பாக எல்லோரினதும் கருத்துக்களை முன்வைத்து கலந்தாலோசனை நடந்தது. மிகவும் நீண்ட கலந்தாலோசனைகளின் பின் அதுபற்றிய விடயங்கள் கீழே குறிப்பிடப்படுகின்றன.
இடையீட்டாளரின் இயல்பு எவ்வாறு இருக்கவேண்டும்?
119

Page 62
2. இலக்கக்குழுபற்றி செய்யும் ஆய்வில் அவர்கள் சிலரது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுள்ள முறைமைக்குப் புறம்பாக மேலும் தேடக்கூடிய விடயங்கள் என்ன? இவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சனை என்ன?
3. உற்பத்திக்குழுவினரை எங்ங்னம் தெரிவுசெய்தல்?
4. வறியவர்களின் சுயசக்தி மற்றும் பங்கேற்பினை அடிப் படையாக ண்வ ஆக அ பரிவரிரு தீ தி நடவடிக்கையொன்றை எங்ங்னம் ஆரம்பிப்பது?
5. வறியவர் களை ஆய் வரின் gd 60i 60 LD u T 60T
பங்காளர்களாக்குவது எங்ங்னம்?
இந்தக் கலந்துரையாடலின் போது தாம் தாமாகவே அறிந்துகொள்ளவேண்டிய இலக்கககுழுவும் அதனை தேடிக்கொள்ள வேண்டிய முறைபற்றியும் பலகருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமது பழைய அனுபவங்களின் மூலம் இலக்கக்குழுவாக அடையாளம் காணப்பட்டது உரிய ஆட்கள் இல்லை, என்பது பங்கேற்பாளர் மூலம் வெளியாகிய அபிப்பிராயமாக அமைந்தது. இதற்கிடையில் நடந்த கலந்துரையாடலின் முக்கிய விடயமாக அமைந்தது அபிவிருத்தி பணியாளர் ஒருவராக, இந்தக் குறுங்கால பயிற்சி மூலம் பெற்ற புதிய அணுகுமுறையில் இதற்கு முன்னர் தாம் ஈடுபாடுகொண்டிருந்த நடவடிக்கைகளை எந்த வகையில் நோக்கமுடியும் என்பதாகும். திரும்பவும் இந்தத் துறைக்குள் புகுவதாக இருந்தால் தாம் அந்தத்துறையில் திரும்ப தொடர்புபடுவது எங்ங்னம் என்பது இங்கு கவனிக்கவேண்டிய அம்சமாகியது.
பயிற்சிக்கு வருமுன்னர் தாம் ஈடுபாடு கொண்டிருந்த (இயக்க அலுவல்களில்) நடவடிக்கைகளைத் திரும்ப நோக்குவதன் மூலம் அந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்கள்
120

ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் கிராமத்தினுள் நடைமுறையில் இருந்த சமூக, பொருளாதார பின்னணியும் அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் வெளிவாரியான முறையில் அல்லது ஏதும் மாற்றம் நடந்திருந்தால் அந்த மாற்றங்களில் பெறுபேறு என்ன என்பது பற் றியும் 

Page 63
தாம் முன்பு பெற்றுக்கொண்ட அனுபவங்களுக்கு திரும்பவும் புதிய நோக்கில் பிரவேசிப்பதும் அபிவிருத்தி அலுவலர் ஒருவராக ஆய்வின் மீது காட்டக்கூடிய கவனத்தை விளக்கிக் கொள்வதும் இங்கு நடந்தது. இந்தக் கலந்துரையாடல் சுற்று பயிற்சியாளர்களின் உற்சாகத்தினை தெளிவாக உணர்த்திய சந்தர்ப்பமாக அமைந்தது. அபிவிருத்தி பற்றி இதுவரை இவர்களிடமிருந்த எண்ணங்களில் மாற்றம் நடந்துள்ளது என்பது புலப்பட்ட இச்சந்தர்ப்பமானது, இவர்கள் பற்றி சுயமதிப்பீடு செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது. பயிற்சி பாடநெறியின் காலனல்லையில் சரிபாதி அளவு இதுவரை முடிந்து விட்டது. இந்தச் சந்தர்ப்பம் சுயமதிப்பீடு செய்வதற்காகும் என்பது பயிற்சியாளர்களின் அபிப்பிராயமாக அமைந்தது. இதன்படி இந்தப் பயிற்சிக்கு தொடர்புபட்டதன் பின்:
1. தனிப்பட்ட முறையில் தத்தமக்கிடையிலும்
2. அபிவிருத்தி அலுவலர் ஒருவராக தாம் முன்னர் பெற்ற அனுபவத்துடன் ஒப்பீடொன்றும் புதிய மாற்றம் நடந்திருந்தால் ஏதும் அவைகளை முன்வைக்க அவகாசம் கிடைத்தது. இதன்படி இவர்களில் சிலர் கூறிய விபரங்களை இங்கே தருகிறோம்.
அவர்கள் கூறிய வார்த்தைகளின்படியே இங்கே தர முயற்சிக்கின்றோம். ". அபிவிருத்தி என்பது பாதைகள் அல்லது கட்டிடங்கள் போன்ற வெளிப்புறத்தில் தோற்றமளிப்பவை என்று நாம் கருதியிருந்தாலும் அது அவ்வாறானதல்ல என்பதை இன்று உணர்ந்துகொண்டோம். கிராமங்களில் பல வருடங்களாக வேலைசெய்துள்ளோம். தனிப்பட்ட ரீதியில் கிராமம் முன்னேறுவதைப் பார்க்க ஆசையாக இருந்தது. ஒற்றுமையின் மூலம் கிராம முன்னேற்றத்தை ஆரம்பிக்கலாம் எனக்கருதினோம். இதனால் தான் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று கூறினோம். எனினும் கிராமத்தின் ஏற்றத்தாழ்வின் காரணத்தினால் அது
122
 

நடைபெறாத ஒரு காரியம் என்று புரிந்தது. அபிவிருத்தி எங்கே ஆரம்பிக்கவேண்டும் எப்படி என்பது பற்றி விளக்கம் கிடைத்தது. அங்குமிங் குமாகக் கிடைத்த அறிவு ஒருமுகமாகியது. வெற்றிகரமாக ஏதாவது ஒன்றைப் பார்ப்பதற்கு முடிந்தது. கலந்துரையாடலில் கிடைத்த உட்கருத்துக்கள் மூலமும் கருத்துக்களை முன்வைத்தது மூலமும் அறிவுகூடியது".
" . . . . . . எனக் குள் இருந்த பல வீனத் தை அறிந்துகொண்டேன். அபிவிருத்தியைப்பற்றிப் பேசியது கூட அந்த வார்த்தையைப் பற்றியாகும். விளக்கம் இல்லாமலேயே அபிவிருத்தியடையவேண்டியவர்கள் பெரும்பான்மையோரே என்று கருதிக்கொண்டு இருந்தேன். பொதுவாகவே இலக்கை நிர்ணயித்தோம். ஏதாவது ஒன்றைப்பற்றி சிந்தித்ததும் அவ்வாறே. அது எப்போது, எவ்வாறு நடைபெற வேண்டுமென்று கூட சிந்திக்கவில்லை. இந்த எண்ணப்படி சிந்திக்கும் போது இன்று இருக்கும் விளக்கமானது மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசத்தைப் போன்றதாகும். இன்றுவரை அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இன்றுள்ள அறிவுக்கு எட்டியவரை பார்க்கும் போது மிகவும் முரண்பாடானது என்பது தெரியவருகின்றது."
"...இதுவரை காலம் அபிவிருத்தியைப்பற்றி நாம் சென்ற பாதை பிழையானது என்பது புலப்படுகின்றது. இதற்கு முன்பு எப்போதுமே நாம் திட்டங்களை மக்களுக்குக் கொடுத்தோம். இன்று அது பிழையானது என்று விளங்கிக்கொண்டுள்ளோம். அபிவிருத்தி முறைமையானது அபிப்பிராயங்கள், எண்ணங்கள், விருப்பு வெறுப்புக்கள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படல் வேண்டும் என்று அறியக்கூடியதாக இருக்கின்றது. இன்று எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு உட்பட்டு வேதனையுற்று இருக்கும் மக்கள் அவர்களுடைய பிரச்சினைகளை அவர்களாகவே விளங் கிசெய்து அப்பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய புதிய முறைமை ஒன்றை அவர்களே உருவாக்க வேண்டும் என்பது தெரிகின்றது."
123

Page 64
"..எனது சிந்தனையில் ஏதோ ஒரு மாற்றம்
இப்பயிற்சியின் மூலம் ஏற்பட்டு இருக்கின்றது என்பதைக்
குறிப்பிட்டாக வேண்டும். நான் சிந்திக்கும் முறையில் இருந்த
சிற்சில குறைபாடுகள் மாற்றத்திற்குட்பட்டதோடு அது ஒரு ஒழுங்கு முறைக்குட்பட்டது.
வாசிப் பாலும் ஏனைய மூலங் களினாலும் கிடைக்கப்பெற்ற அறிவானது பிரயோகத்தில் இல்லாவிட்டால் அவற்றால் எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை என்பது தெரியவந்தது."
"நான் அபிவிருத்தி அலுவல்களில் சேர்ந்தது 7-8 வருடங்களுக்கு முன்னராகும். எல்லா வேலைகளின் போதும் சமூகத்தினுள் ஒருவித அநீதி நடப்பது பற்றித் தெரிந்து இருந்தேன். நூல்கள் வாயிலாகவும் சுரண்டல் பற்றி தெரிந் திருந்தேன். சுரண் டலைத் தடுப் பதற்கு செய்யவேண்டியது என்னவென்றால் முழு சமூகமும் ஒன்றுபட்டு ஒரு இயக்கத்தினை ஆரம்பிப்பது என்று கருதி இருந்தேன். சுரண்டல் கிராமத்திற்குள் செயற்படுவது எங்ங்னம் என்று நான் இதுவரை அறிந்து வைத்திருக்கவில்லை. நான் இதுவரை வேலைசெய்தது பொதுவாக மக்கள் வறுமையானவர்கள் என்ற உணர்வுடனாகும். கிராமம் ஒன்று அபிவிருத்தியடைய ஏதுமொரு நிறுவனத்தின் மூலம் கட்டாயமாக உதவிகிடைக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தாலும் வெளிவாரியான உதவிகளிலும் பார்க்க வறியவர்களின் சக்திமீது நம்பிக்கை வைப்பது முக்கியம் என்று எனக்குப் புலப்பட்டது."
' . . . . . . அபிவிருத்தித் துறையில் சிறிது காலம் வேலைசெய்ததின் மூலம் கிடைத்த அனுபவம் இருந்தது. ஆனால் அபிவிருத்திக்கும் சுரண்டலுக்குமிடையில் உள்ள தொடர்பினை அறிந்திருக்கவில்லை. இன்று சுரண்டல் என்ன என்பது தொடர்பாக தெளிவான விளக்கம் உள்ளது.
124

சுரண்டலுக்கு ஆட்பட்டிருப்பது யார்? அபிவிருத்தி என்றால் என்ன? அபிவிருத்தி என்பது வெளிவாரியான முறையில் உதவி பெற்றுக் கொடுப்பதா? என்ற அடிப்படையில் நான் சிந்திக்கத் தொடங்கினேன். எமது அபிவிருத்தி என்பது உதவிகள், பங்கீடு செய்யப்படுவது மாத்திரம் தான் என்று நான் விளங்கிக் கொண்டேன். வறியவர்கள் என்போர் புத்தியுள்ள பகுதியினர் அல்லர் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் வறியோர்கள் என்பவர்கள் திறமை நிறைந்த, ஆனால் அவற்றின் மூலம் பிரயோஜனம் எடுக்க முடியாதுள்ள ஒரு பகுதியினர் என்பதை இன்று விளங்கிக்கொண்டேன்."
"...... அபிவிருத்தி அலுவலர் ஒருவராக செயற்படுவது 6T L i Lu L.q. என் ற 67 6007 6007. Lf5 தற் போதைய தை விடவேறுபட்டதாகவே முன்பு இருந்தது. இதன்படி வேலை செய்தேன். ஆனால் கிராமவாசிகளுடன் அதிக காலம் செலவிடும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனால் எங்களுடன் தொடர்பு பகுதியினர் அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அல்லர் என்பது இப்போது புரிகின்றது. விரிவுரை, கருத்தரங்குகள் நடாத்தப்பட்டபோதிலும் அவைகள் வெற்றியடையாதது ஏன் என்பது இப்போது தெளிவாகின்றது. நிரந்தரமாக சலுகைபெறாத மக்கள் தொகுதியினருடன் வாழ்தல் அந்த மக்களை அபிவிருத்தி செய்வதற்கு நல்லதோர் முறை என்று இப்போது புரிகிறது. இடையீட்டாளர் கிராமத்தில் ள்வ்வளவு அலுவல்கள் செய்தாலும் அபிவிருத்திக்கு இலக்காக வேண்டியவர்கள் சமூகமளிக்காமலிருந்தால் அது தோல்வியான வேலைத்திட்டமொன்று என்று விளங்கியுள்ளது. எழுச்சிபெற வேண்டியவர்கள் யார்? பங்குபற்றச்செய்துகொள்ளக் கூடியவர்கள் யார்? என்பதில் தெளிவான அபிப்பிராயத்திற்கு தற்போது வந்துள்ளேன்."
125

Page 65
".அபிவிருத்தி அலுவலர் ஒருவராக இருந்த 13 வருட அனுபவமுண்டு. நாம் இதுவரை செயற்பட்டுள்ளது அபிவிருத்தி பற்றிய வைத்தியர்களாக. எங்களிடம் இருந்த பட்டியலின் அடிப்படையில் நாம் மருந்துகொடுத்தோம். இதுபற்றி நாம் விளங்கிக்கொண்டுதான் இருந்தோம். காலம் கடந்த பின் எமது கண்கள் திறந்தன. பயிற்சி மூலம் கிராமத்தில் உள்ள சமூக அடித்தளத்தினை அறிந்து கொள்வதற்கு இந்தப் பயிற்சி மூலம் முடிந்தது. இயக்கமொன்றின் நடைமுறை பற்றி போதிய தெளிவு பெற்றுக்கொண்டேன். கலந்தாலோசிக்கும் முறையை மதிக்கின்றேன்."
“. . . . . . அபிவிருத்திதொடர்பாக செயற்பட்டுக் கொண்டிருந்தது பழைய முறைகளைத்தழுவியேயாகும். கிராமத்தின் அடிப்படை தேவைகள் என்ன என்பதைப்பற்றிய விளக்கம் எமக்கு இருக்கவில்லை. அபிவிருத்தி எவ்வாறு இடம்பெற வேண்டும்? எங்கே ஆரம்பிக்க வேண்டும்? என்று நாம் அறிந்திருக்கவில்லை. மக்களுக்கு இன்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்ததும் நாங்களே. அந்த அடிப்படையில் அந்தப் பிரச்சனைகளுக்கு ஒன்றாகத் தீர்வுகாண திட்டத்தை ஆக்கியவர்களும் நாங்களே. ஆனால் அந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தினதும் பலாபலன்களை அனுபவித்தோர் வேறு தேவையற்ற ஒரு பிரிவினர் என்று அறியக்கூடியதாக இருக்கின்றது. எவ்வாறு நடவடிக்கைகள் எடுப்பது என்பது பற்றி இப்பயிற்சியால் தெளிவான விளக்கம் ஏற்பட்டது."
"...... கலந்துரையாடல் முறையின் முக்கியத்துவம் பற்றி ஒரு விளக்கம் ஏற்பட்டது. நான் 1972ல் குடியேற்றத் திட்டப்பயிற்சி உத்தியோகத்தராக எனது தொழிலை ஆரம்பித்தேன். எனது கடமையானது அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட தோட்டங்களில் குடியேற்றத் திட்டங்களை ஆரம்பிக்கும்போது அதைப்பற்றி விளக்கம் ஏற்படுத்திக்
126

கொடுப்பதாகும். அன்று நாங்கள் விவசாயத்தில் திறமையானவர்களுக்கே எமது விரிவுரைகளை நடத்தினோம். குடியேற்றத்திட்டம் தோல்வியடையக் காரணம் என்ன என்று மீண்டும் பார்க்கும் போது அதற்கான விளக்கம் கிடைக்கின்றது. மேலோட்டமாகப் பிரச்சனைகளைப் பார்ப்பது முறையற்ற ஒன்று என இப்போது எமக்கு விளங்குகின்றது. விடுதலை பெறுவதற்கான தேவை இருக்கும் அதேவேளை விடுதலை பெறமுடியாமல் இருக்கும் பிரிவினரை அடையாளம் காணுதலே பிரதானமான காரியம் என இப்போது விளங்குகின்றது. அவ்வாறே இந்த பங்கேற்புப் பயிற்சியில் பொறுமைகொள்ளும் சக்தியையும் அதிகரித்துக்கொண்டோம்."
பயிற்சியாளர் 10 பேர்களின் கருத்துக்களை மேலே குறிப்பிட்டுள்ளோம். இவர்கள் கூறிய கூற்றுக்களின் அடிப்படையில் அபிவிருத்திப் பணியாளர்கள் என்ற வகையில் அவர்களிடையே தெளிவான மாற்றம் ஏற்படுவதற்கு ஆரம்ப மாகியுள்ளது என்பது தெரியவருகின்றது. அவர்கள் புதிய அணுகுமுறைகளையும் புதிய யுக்திகளையும் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.
பயரிற் சரியாளர் களால் மேற் கொள்ளப் பட் ட இம்மதிப்பீட்டின் பின்பு உருவாக்கப்படவிருக்கும் பயிற்சிக் கட்டத்தினைப்பற்றியும் கலந்துரையாடப்பட்டது. முன்னைய இரு தடவைகளிலும் பயிற்சியாளர்கள் ஆய்வுக்காகத் தம்முடன் கூடுதலான தொடர்புகளற்ற கிராமங்களுக்கே சென்றனர். அவ்வாறு அங்கு சென்றமைக்குக் காரணம் புது கிராமம் ஒன்றினைப்பற்றி புதிய அறிவினூடாக தாம் இதுவரை அபிவிருத்திப் பணிகளில் கடமையாற்றிய கிராமத்திற்கு மீண்டும் சென்று அங்கு அதுபற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டியது அடுத்த காரியமாக இருந்தது. இதன்மூலம் அடிப்படையில் எதிர்பார்க்கப்படுவது என்னவென்றால் இக்குறுகிய காலத்திற்குள் கிடைக்கப் பெற்ற பயிற்சியால் அவர்களிடையே ஏற்பட்ட புதிய
127

Page 66
பார்வையில் அவர்களே ஈடுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தை விமர்சன அடிப்படையில் ஒப்பு நோக்குதலாகும். இவ்வாறு ஒப்புநோக்குவதன் ஊடாக அபிவிருத்தித் திட்டமொன்றின் மூலம் இடம்பெற வேண்டியது 6 ன் னP இடம் பெற்றுள்ளமை ତt ବନ୍ଦୀr ତ0ti ? என்பனவற்றிற்கிடையான வித்தியாசத்தை அவர்களே விளங்கிக்கொள்ள முடியும் என்பதாகும். இதற்காக அவர்கள் தாம் கடமையாற்றிய கிராமங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஆய்வு நடத்தினர்.
6 வது கட்டம் (ஒரு மாதம்)
ஐந்தாம் கட்டத்தில் நாம் விளக்கியபடி இம்முறை நடந்தது என்னவென்றால் தாம் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கிராமங்களுக்குச் சென்று தமது இடையீடுகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி மீண்டும் நோக்குதலாகும். இதன் அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்கள் இரண்டு:
* இந்தக்குறுகிய காலத்திற்குள் கிடைக்கப்பெற்ற பயிற்சியினால் அவர்களிடையே ஏற்பட்ட புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தி அவர்களாலேயே செயற்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தை விமரிசனரீதியாக பார்ப்பதாகும்.
* * இவ்வாறு விமர்சன ரீதியாக அபிவிருத்தி செயற்பாடுகளைப் பார்ப்பதன் மூலம் அதைப்பற்றித் தெளிவான விளக்கம் பெற்று அதனுள்ளிருக்கும் குறைபாடுகளை விளங்கிக்கொள்ள இது உதவியாக அமையும். குறைபாடுகள் ஏதுமிருப்பின் அவற்றை நீக்கி சரியான பாதையில் இந்த அபிவிருத்திச் செயற்பாடுகளைக் கொண்டு செல்லக்கூடிய முறைகளைப்பற்றி விளக்கம் பெற வேண்டும்.
128
 

இதனைவிட சரியான இடையீட்டாளராக எவ்வாறு இயங்கமுடியும்? ஒரு முறையான இடையீட்டாளராக இயங்கி இருக்கின்றேனா? போன்ற விஷயங்களை அவர்களே விளங்கிக்கொள்ளல் வேண்டும். இவ்வாறு தமது வேலைத்திட்டத்தைப்பற்றி விமர்சனம் செய்வதற்கு அவர்களுக்கு ஒருமாத காலம் கிடைக்கும்.
7 வது கட்டம் (ஐந்து நாட்கள்)
இம்முறை பயிற்சியாளர்கள் கடந்த கலந்துரையாடல் நேரத்தின் போது தீர்மானித்துக் கொண்டபடி, அவரவர் இதுவரை தமது இடையீட்டு மூலம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஒருமுறை புதிய அணுகுமுறையின் ஊடாகப் பார்த்து அதனைப்பற்றி விளக்கம் தருவதற்கே இவ்வேலைத்திட்டத்தினை மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாக்குவதற்கு எவ்வகையான செயற்பாட்டை இலக்கக் குழுவினர் மேற்கொள்ளவேண்டுமென்பதைப் பற்றியும் இவர்கள் கவனம் செலுத்தியிருந்தனர். /08
தத்தமது வேலைத்திட்டங்கள் மீது பயிற்சியாளர்கள் நோக்கிய விதம் அவர்களது விளக்கம் மூலம் தெளிவாகியது.
சமுக அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று
நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு வேலைத்திட்டத்தினாலும் கிராமத்தில் உள்ள ஆகக்குறைந்த வருமானம் பெறுவோருக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை. உண்மையிலேயே இவர்களுக்கு பாதிப்புதான் ஏற்பட்டதாகத்தெரியவருகின்றது. கடனும் கிராமத்தின் கெளரவமான வசதிப்படைத்தவர்களாகவே பெற்றுள்ளனர். வட் டி இல் லாவரிவசாயக் கடன் பெற்றுக்கொண்ட கிராமப்பணக்காரர்கள் அதன் மூலம் செய்வது என்னவென்றால் வறிய விவசாயிகளின் நெல்லினை முன்னையதிலும் பார்க்க குறைந்த விலையில்
129

Page 67
பெற்றுக்கொண்டதாகும். இது தவிர இவர்கள் மரம் தறிக்கும் நடவடிக்கைகளுக்கும் இந்தப் பணத்தை இட்டுள்ளனர். முன்னிலைப் பாடசாலைகளுக்கு வந்தவர்களும் கிராமத்தின் உயர்வகுப்புக் குடும்பங்களின் பிள்ளைகளேயாகும்.
மலகூடம் உபயோகிக்காத குடும்பங்கள் பல மலகூடம் உபயோகித்தமையும் ஆற்றுநீரைக் குடித்த சிலர் கிணற்றுநீர் குடிக்கப்பழக்கப்பட்டமையும் கிடைத்தசில பெறுபேறுகளாகும். புதிய உறவுகளை கட்டியெழுப்பும் போது வறிய மக்கள் நல்லமுறையில் ஒத்தாசை அளித்தனர் ஒரு கிாமவாசி மாட் டோடு அன் றி, மாடு கட்டும் துTணுடன் தொடர்புவைத்திருப்பது பிரயோசனமற்றது என்றார்
கால்நடை வளர்க்கும் செயற்திட்டம்
Lu  ở53560)6MT வளர்க்கும் செயற் திட்டத்திற்கான சங்கமொன்று முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 75 அங்கத்தினர்கள் இருந்தனர். அபிவிருத்திமுறை செயற்பட்ட கிராமத்திற்கு 4 மைல்கள் தூரத்தில் உள்ள பிரதேசங்களில் இருந்தும் அங்கத்தவர்கள் தெரிவாகி இருந்தனர். படிப்படியாக அங்கத்தினர்கள் தொகை குறைந்து அது மிகவும் கீழ்மட்டத்திற்குள்ளாகியது. அரச ஊழியர்கள் நான்குபேரும் வியாபாரிகள் மூவரும், விவசாயி ஒருவரும் பசுக்களைப் பெற்றுக்கொண்டனர். கடன் கிடைத்தது பட்டினி ஒழிப்பு இயக்கத்தின் ஆதரவில் இலங்கை வங்கி மூலமாக வாகும். முதலில் ரூபா 250/= வங்கிக் கணக்கொன் று ஆரம்பரிக்கப் படல் வேண்டும் அரச ஊழியர்கள் கூலியாட்களைப் பயன்படுத்தி பசுமாடுகளைக் கவனித்தனர். இவர்களது நடவடிக்கை தோல்விகண்டது. ஜீவனோபாயத் தொழிலாக பசுமாடுகளை வளர்த்த நபர்களுக்கு இதன் மூலம் நன்மை கிடைத்தது. இப்போது வங்கிக்கடன் கொடுப் பதும் நிறுத்தப்பட்டுள்ளது. பாலுற்பத்தி செய்தபோதிலும் விற்பனை செய்யமுடியாது. பால் சேகரிக்கும்
130

நிலையமொன்றும் நிறுவும் அபிப்பிராயம் இயக்கத்தினுள் இருந்தது. ஆனால் இப்போது இந்த எல்லா நடவடிக்கைகளும் தோல்வி கண்டதாகக்கூறலாம். இந்தத் தோல்வி காரணமாக இரண்டாவது கட்டத்தில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரி களிடமிருந் து LJ IT @ű உ ற் பத்தியாளர் களைத் தெரிவுசெய்துகொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் எவரும் முன்வரவில்லை. பாற்பண்ணை செயற்திட்டம் தோல்வியுற்றதற்கான காரணங்களைப் பயிற்சியாளர்கள் தமது அறிவுக்கேற்றபடி இங்கு விளக்கிக்கூறினர்.
* கிராமங்களில் உள்ள உயர் வர்க்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கவே கிராமமொன்றினைத் தெரிவு செய்தல்.
* உய்ர்வர்க்கத்தாரே குழுக்களையும் தெரிவுசெய்தல்.
* உற்பத்தியாளர்கள் எனத் தெரிவு செய்யப்பட்டோர் வேறு கூலியாட்களைப் பயன்படுத்தி பாலுற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டமை.
* தெரிவு செய்யப்பட்ட குழுவினர் முறையான ஒரு
அமைப்பிற்குட்படாமை.
&া বা কৃষ্ণাঙ্গতো কি?
கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம் 633 الفالألم اليا D
154 குடும்பங்கள் வாழும் இக்கிராமத்தில் அபிவிருத்தித் திட்டங்களில் உண்மையாக பங்களிக்க வேண்டியவர்களின் எவ்வித பங்களிப்பும் இல்லாது வெளியார்கள் பயன்படுத்தப்பட்டு இச்செயற்திட்டங்கள் செயற்பட்டமை. இதன்படி ஆரம்பிக்கப்பட்ட எல்லா செயற்திட்டங்களும் கிராமத்தின் உயர்ந்த வருமானமிக்கவர்களுக்கு மேலும் சலுகைகளைக்கொடுத்ததாகவே கருதமுடியும். கூடுதலான ஏக்கர் தென்னை களைக் கொண்டவர்களின் நிலங்களிலேயே தென்னை உற்பத்தி கூடியுள்ளது. முன்னிலைப்
131

Page 68
பாடசாலைகளுக்கு சென்ற பிள்ளைகளும் இக்குடும்பங்களைச் சேர்ந்தோரே ஆவர். கிராமங்களின் வறியமக்கள் இச்செயற்திட்டத்தில் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்க வில்லை.
சேனைப்பயிர்ச்செய்கைக் கிராமமொன்று
இது பிரதானமாக சேனைப்பயிர்ச்செய்கை செய்யப்படும் கிராமமொன்றாகும். கிராமத்தில் பிரதான மக்கள் மூன்று பகுதியினராவர். வர்த்தகம் செய்து வாழும் பணக்காரப் பிரிவினர், தமது நிலங்களிலும் விவசாயம் செய்துகொண்டு கூலிவேலைகளிலும் ஈடுபடும் பிரிவினர், பொருளாதார மட்டம் மிகவும் குறைந்த அனுமதியளிக்கப்படாத நிலங்களில் வாழும் கிராமத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பிரிவினர் என்போராகும். மூன்றாம் குழுவினரின் பிரதானவருமானம் கூலி வேலையாகும். இந்தக் குடும்பங்களின் எண்ணிக்கை முறையே 7, 15, 60 ஆக இருந்தது. இந்த வேலைத்திட்டம் மூலம் 10 அம்சங்கள் பற்றி கவனம் எடுக்கப்பட்டது.
* முன்னிலைப்பாடசாலை ஒன்று ஆரம்பித்தல்.
* பப்படத்தொழில்
* மத அலுவல்கள்
* செஞ்சிலுவைச் சங்க மூலம் பால் மா போன்றவை
usläufl. 6iv .
* வீட்டுத்தோட்ட போட்டிகள் நடாத்துதல்.
* தெங்கு அபிவிருத்தி வேலைகள்.
* பருத்திச் செய்கை
* சமூக சுகாதார வேலைத்திட்டங்கள் மூலம் நோய்
நிவாரணமுறை - தொடர்பான ஆலோசனை.
132

* சுயதொழில் பயிற்சித்திட்டம்
* கோழி, பன்றி, பால்பசுக்கள் வளர்ப்பு சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தல், 7 1 1 ] -- '
இந்த வேலைத்திட்டம் மூலம் தெளிவாகும் முக்கிய அம்சங்கள் சிலவாகும். கிராமத்தின் பொருளாதார அடிப்படையும் அதன் மூலம் துன்பமடைவோர்பற்றியோ அந்த விடயங்கள் சம்பந்தமாகவோ இங்கு ஆரம்பக் கணிப்பு எடுக்கப்பட்டிருக்கவில்லை. வெளியே இருந்து கிடைக்கும் உதவிக்கு கூடிய கவனம் செலுத்தப் பட்டுள்ளது,
மேற்கொள்ளப்பட்டவேலைகளின்மூலம் நன்மையடைந்துள்ளது. கிராமத்தில் சலுகைபெற்ற வகுப்பினரேயாவர். 娜薇
கடன் கொடுக்கும் சங்கம்
1981ல் கடன் கொடுக்கும் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டது. இந்த சங்கம் மூலம் மாவட்ட சங்கத்தினர் உதவியுடன் சங்க மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டது. குடியேற்ற அலுவலர் இந்தச் சங்கத்திற்கு எதிரானார். ஆனால் சங்கம் பலத்துடன் செயற்பட்டது. இன்று அதன் சொத்தின் பெறுமதி 60,000/= ரூபாய்களாகும். இந்தச்சங்கம் ஓரளவு வெற்றியானதாகும்.
1982ல் 2000A ரூபா வீதம் 8 பேர்கள் குழுவாக கடன் பெற்றனர். இந்தக்கடனை மூன்று வருடங்களில் தாய்ச்சங்கத்திற்கு மீளக்கொடுத்தல் வேண்டும். வட்டி 8% ஆகும். சங்க அங்கத்தினர்களுக்கு பயிர்ச்செய்கை பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மண் பாதுகாப்பு வேலைத் திட்டமொன்றும் நில அபிவிருத தி வேலைத்திட்டமொன்றும் சங்கமூலம் செயற்படுத்தப்பட்டது.
133

Page 69
சிறு விவசாயிகள் அபிவிருத்தி வேலைத்திட்டம்.
இதன் கீழ் பின்வரும் வேலைகள் நடாத்தப்பட்டன.
* சோயா அவரை செய்கை.
* தேனீ வளர்ப்பு
* உணவுப்பொருட்கள் தயாரித்தல்
单 சுகாதார வேலைத்திட்டங்கள்.
இந்த வேலைகள் கிராமத்தின் இலக்குக் குழுவினருடன் சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. நிறுவனத்தினால் பொதுவாக முழுக்கிராமத்திற்கும் முன்வைக்கப்பட்ட புதியதோர் வேலைத்திட்டமாகும். 10 விவசாயிகள் அளவில் சோயா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். அடுத்த போகத்தில் அவர்களும் உற்பத்தி செய்யவில்லை. தேனி வளர்ப்புக்காக பெண்களுக்கு பெட்டிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டு ஈடுபடுத்தப்பட்டனர். உணவுவகை தயாரிக்கும் வேலை கிராமத்தின் பணக்காரப் பெண்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது. அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் எவ்வித நடவடிக்கையிலும் இலக்குக் குழுவினருக்கு நன்மை கிடைக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மேலே குறிப்பிட்டவை பயிற்சியாளர்களால் முன்வைக்கப்பட்டவற்றில் சிலவாகும். இவற்றை நீண்ட அடிப்படையில் விரிவான பகுப்பாய்வுக்குட்படுத்துதல் மூலம் பொதுவாகக் கீழே குறிப்பிடப்படும் முடிவுகளுக்கு வரப்பட்டது.
அதிகமான அபரிவரிருத் தித் திட்டங் கள் இடையீட்டாளர்களினதும் நிறுவனத்தினதும் அணுகுமுறையில் ஆரம்பிக்கப்பட்டமையால் அவை தோல்விகண்டுள்ளன.
134
 

அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் நன்மைகளைப் பெற்றுக்கொடுத்ததும் பெற்றவர்களும் வசதிபடைத்த வர்க்கமேயாகும்.
உதவி கொடுப்பதால் மக்களிடம் இருந்த சுதந்திரத்தன்மையும் சுய சக்தியும் இல்லாமலாகி இவர்கள் உதவிகளை எதிர்ப்பார்ப்பவர்களின் நிலைமைக்குள்ளாகினர்.
சுரண்டலுக்குட்பட்ட பகுதியினர் அதிகமான துன்பத்திற்குள்ளாகியுள்ளனர்.
இடையீட்டாளரின் நடவடிக்கையும் இயல்பும் பங்கேற்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஏற்றமுறையில் இல்லாதிருந்ததால் வறியவர்களின் ஆக்கத்திறன் சக்தி வெளிப்பட அவகாசம் கிடைத்ததாகத் தெரியவில்லை.
வறிய மக்களின் சுயசக்தி மற்றும் பங்களிப்பு இவைகளை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி நடவடிக்கை ஒன்று இல்லாததால், இவர்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக அமையும் வேலைத்திட்டமொன்று உருவாகவில்லை.
சேமநலன், மதம், சுகாதார, சமூகசேவை போன்ற துறைகளுக்கு பொருத்தமாக ஆரம்பிக்கப்பட்ட செயற்திட்டங் களில் வறியவர் களின் சில பிரச்சனைகளுக்கு ககாயமளிக்கப்பட்டிருந்தது. (முன்னிலைப்பாடசாலை, போஷாக்கு, மலகூடம், பாதைகள் போன்றவைகள்)
இவ்விடயங்கள் அனைத்தையும் கவனத்திற்கு எடுத்ததன்
பின்னர் பயிற்சியாளருக்கு ஒருவகையான சவாலினை எதிர்கொள்ளவேண்டியேற்பட்டது. அதாவது தற்போது கிராமிய மட்டத்தில் செயற் படுத்தப் பட்டுள்ள வேலைத்திட்டத்தினை தாம் பெற்ற பயிற்சி அடிப்படையில் புதியநோக்கில் உருவாக்குவது எங்ங்னம்? -
135

Page 70
மூலம் செயற்படுத்தமுடியும். விளக்கம் இல்லாது ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டம் சம்பந்தமாகத்தான் பிரச்சனை உள்ளது. தற்போது செயற்படும்
இந்த வேலைத் திட்டத்தை பங்கேற்பு அபிவிருத்தி நடவடிக்கையாக அமைத்துக்கொள்வது எங்ங்னம்?
இந்தக் கலந்துரையாடலில் கீழே காட்டப்படும் விடயங்கள்
மீது கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
I.
தற்போது முழுக்கிராமத்திற்கும் செயற்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டம் இலக்குக்குழுவினருக்கு அதிக பலனளிக்கக் கூடிய வகையில்
உருவாக்கக்கூடியமுறை.
தாம் தலையிடுவதன் மூலம்-நிறுவனத்தின் ஆதரவுடன் செயற்பட்ட வேலைத்திட்டம் தொடர்பாக கிராமவாசிகள் காட்டும் ஆதரவும் அவர்களது மதிப்பீடும்.
இலக்குக்குழுவினரில் அதிக விளக்கத்தினைக் கொண்டவர் என்று எண்ணுவோர்களுடன் நெருங்கிய தொடர்புடன் நீண்டதுாரம் கலந்துரையாடுவதன் மூலம் இவர்களை புதிய அபிவிருத்தி மாற்று வழிகளில் ஈடுபடுத்தல்.
சுயசக்தியும் பங்கேற்பும் எல்லா அபிவிருத்தி செயற்பாடுகளதும் சாரமாகக் கணித்து அதன்மூலம் வறியவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்திக் கொள்ளல்.
இலக்குக் குழு ஆட்களில் (15-25 அளவில்) சிறு குழுக்களை உருவாக்கிக் கொள்ளல். இத்தகைய
36
 
 

சிறுகுழுக்களுடன் நடவடிக்கைகளில் ஈடுபடுவது
இலகுவானது மாத்திரமல்ல, இதன் மூலம்
வறியமக்களின் உண்மையான பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவும் முடிகின்றது.
6. வறியமக்களை சமூக, பொருளாதார ஆய்வின் பங்குதாரர்களாக ஆக்குவதற்கும் அதன் மூலம் யதார்த்தத்தினை ஃஃகு பிரதானமான பிரச்சனையை புரிந்துகொள்வதற்கும் உதவிசெய்தல்.
இக்கட்டக் கலந்துரையாடலின்போது பயிற்றுனர்களி ன் தலையீட்டின் மூலம் ஒரு பயிற்சியாளன் தான் செயற்படும் கிராமத்தில் உள்ள தெங்கு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு அக்கிராமத்திலிருந்து வெளியே செல்லும் மிகை வருமானம் சம்பந்தமாக மிகவும் விரிவான பகுப்பு ஆய்வு ஒன்றினைத்தந்தார். விசேடமாக அந்தக் கிராமத்தின் வறிய மக்கள் பிரிவினர் தமது தேங்காய் விற்பனையின்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அது தொடர்பாக இருக்கும் கட்டுப்பாடு என்பன இங்கு விளக்கப்பட்டது. கிராமத்தில் வசிக்கும் 150 குடும்பங்களில் மிகவும் வறிய 125 குடும்பங்களுக்கு இரண்டு மாத தேங்காய் உற்பத்தி அண்ணளவாக 37500 காய்களாகும். இந்த தேங்காய்கள்
கிராமத்தில் உள்ள தேங்காய் சேகரிப்போர்களினால் ஒரு
ரூபாய் சதம் 50 வீதம் வாங்கப்பட்டது. ஆனால் இதற்கு ஒருமைல் அளவு தூரமுள்ள இடத்தில் இருக்கும் தேங்காய் சேகரிப்பவன் இந்த தேங்காய்களை ரூபா 2A வீதம் வாங்குகிறான். நகரத்திலுள்ள பிரதான தேங்காய் முதலாளி தேங்காய்களுக்கு கொடுக்கும் விலை ஒருபுறமிருக்க, ஒரு
மைல் தூரத்திற்கு தேங்காய்களை எடுத்துச்செல்லாததால்
இரண்டு மாதத்திற்கு ஏற்படும் நஷ்டம் ரூபா 18750A ஆகும். இதன்படி வருடாந்தம் தேங்காயின் மூலம் இழக்கும் இலாபம் 12,500A ரூபாவாகும். இந்த உதாரணத்தை முன்வைத்ததன் பின்னர் பயிற்சியாளர்கள் அதிகம் பேர்
137

Page 71
தமது கிராமங்களில் உற்பத்தியாகும் பால், தானியவகை, மரக்கறி போன்றவைகள் மூலம் வறியவர்கள் இழக்கும் பணத்தொகையை அறிந்து மனவேதனையடைந்தனர். இவ்வாறு அதிகளவு பணம் கிராமங்களில் இருந்து வெளியே செல்வதுபற்றி இவர்களுக்கு விளங்கவைத்தது மிகவும் எளிதாக செய்யப்பட்ட இந்த கணிப்பின் பின்னராகும்.
உற்பத்திகளின் விற்பனை மூலமும் நுகர்வுப்பொருட்களை விலைக்கு வாங்குவதன் மூலமும் தாம் பட்ட கடன்களுக்காக வட்டிக்கொடுத்தல் மூலமும் வேறு நடவடிக்கைகள் மூலமும் வறியோர்களிடம் இருந்து வீணாக வெளியே செல்லும் பணத்தின் அளவு எல்லா பயிற்சியாளர்களினதும் கவனத்தை ஈர்த்தது மாத்திரமல்ல, இவர்களது உள்ளத்தினை திறந்துவிட்ட ஒன்றாகவும் அமைந்தது. இங்கு வறிய மக்களிடம் இருந்து நழுவிச் செல்லும் அதிக பணத் தை (மேலதிகமானவை) அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கை ஒன்றினை ஆரம்பிக்கமுடியுமா? இதனை வறியவர்களுக்குள் தேக்கி வைப்பது எங்ங்னம்? இது போன்றவைகள் பற்றி மிக ஆழமாக கலந்தாலோசிக்கப்பட்டது. வறியவர்களுக்கு உரித்தாக வேண்டிய அவர்களது வளங்கள் நழுவிச்செல்லும் போது அதற்குப் பரிகாரம் செய்யாது தொடங்கும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் நன்மை பயக்குமா? இந்தப் பயிற்சியில் காட்டப்படும் பங்கேற்பு அபிவிருத்தி செயற்பாடுகளின் வித்து மேலதிகமாக (மிகை) உள்ளவைகள் தான் என சிலர் எடுத்துக்காட்டினார்கள். மிகையாக அமையும் இவற்றை வறியவர்களிடம் தேக்கிவைத்தல் என்பதை வேறு வழியில் குறிப்பிடுவதாக இருந்தால் கிராமத்தின் பொருளாதார அமைப்பை மாற்றுதல் என்றே கூறலாம். பொருளாதார கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுதல் என்பது பல்வேறு சக்திகளின் தாக்கத்திற்கு உட்பட்டு இருந்த வறியவர்கள் அந்த தாக்கங்களில் இருந்து Sவிடுதலை பெறுவதாகும். பங்கேற்பு அபிவிருத்தி நடவடிக்கையின் பின் வெளிவாரியான
138

உதவிகளை விட சுயசக்தி மற்றும் பங்கேற்பு மூலம் வெளிப்படும் வறியவர்களின் ஆக்கத்திறன் சக்தியினை அடிப்படையாக வைத்து இந்த மிகையை பிடித்து கொள்வதன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கை ஆரம்பமாகி பூரணத்துவம் அடையமுடியும் என்பது பயிற்சியாளர்களின் அபிப்பிராயமாக இருந்தது. w
வறியவர்களிலிருந்து நழுவிச்செல்லும் மிகைபற்றி நீண்ட கலந்துரையாடல்கள் செய்வதன் மூலம் இவர்கள் தற்போது கடமையாற்றும் கிராமங்களின் நிலைமையை விளங்கிக்கொண்ட பின்னர் கீழ்வரும் முடிவுகளுக்கு வந்தனர்.
* இலக்குக் குழுவினருக்கு கிடைக்காத மிகையின் பெறுமதியை பற்றிய புரியவைப்பதற்கு வழிவகை செய்வதன் மூலம் அவர் களே இதனை பெற்றுக்கொள்வதற்கு ஒருங்கிணைவர்.
* உழைப்பு, உற்பத்தி, விநியோகம், பயன்பாடு,
நுகர்வுப்பொருள் போன்றவற்றிற்கு வட்டிகொடுப்பதன் மூலம் அதிகளவு மிகையை கிராமவாசிகள் இழக்கின்றனர்.
* வறிய மக்கள் நிரந்தரமாக உடல், உளரீதியில் இவர்களது மிகையை சுரண்டி எடுக்கும் வகுப்பினரின் சுரண்டலுக்கு உட்பட்டுள்ளனர்.
இதன் முடிவினை ஆழமாக கலந்துரையாடுவதன் மூலம் கிராமத்தின் சமூக பொருளாதார கட்டமைப்பினை அறிந்து கொள்வதும் மிகைபற்றி தெளிவினை அடைந்து கொள்வதும் இலக்குக் குழுவினரை கட்டி எழுப்புவதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய செயல்முறையாக இருப்பது தெளிவாகின்றது. ஆனால் இதனை மிகவும் நுணுக்கமாக ஏற்படுத்துதல் வேண்டும். இதற்காக இடையீட்டாளருக்கும் இலக்குக்குழுவினருக்கும் இடையில் இருக்கவேண்டிய
139

Page 72
தொடர்பின் தன்மை பற்றியும் கலந்துரையாடப்பட்டது, அன்னியோன்யமான முறையில் குழுவினருக்குமிடையிலும் இடையீட்டாளர்களுக்குமிடையிலும் நெருங்கிய தொடர்பினை எங்ங்ணம் கட்டியெழுப்புவது என்பது பற்றி எல்லோரதும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
* இலக்குக் குழுவினருடன் உக்கிரமான பிரச்சனைகள் பற்றி கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்ளுதல் மூலம் நம்பிக்கையினை கட்டியெழுப்புதல்.
* மிகை வருமானத்துடன் தொடர்புடைய பிரச்சினையை அதன் பயங்கரமான தன்மையுடன் தொடர்புபடுத்தல் மூலம் பிரச்சனையை அடையாளம் கண்டு அந்தப் பிரச்சனையின் நிரந்தர பங்காளிகள் என்பதை
வெளிக்காட்டுதல் மூலம்.
* எப்போதும் கலந்துரையாடுதல் மூலம் அடிப்படை பிரச்சினைகளை அறிந்துகொண்டு அவைகளுக்கான தீர்வினை தேடுவதன் மூலம் இவர்களுக்கு ஒத்தாசை புரியும் ஒருவராக ஆவதன் மூலம்.
* இலக் குக் குழுவினர் இடையீட்டாளருடன் கலந்துரையாடுவதன் மூலம் நன்மை அடையலாம் என்பதனை சிந்திப்பதற்கு வழிவகுத்தல்.
இலக்குக் குழுவினருக்கும் மிகைவருவாய்க்குமிடையில் தொடர்பு ஒன்றினை கட்டியெழுப்பும் முறை அதிகளவு கலந்துரையாடலுக்கு உட்பட்டது. அடுத்த கலந்துரையாடலாக அமைந்தது மிகை வருமானம் கிராமத்திலிருந்து வெளியே செல்கையில் அபிவிருத்தி நடவடிக்கை ஒன்றினை ஆரம்பிக்க கிராமத்திற்கு வெளியிலிருந்து உதவி, நிவாரணம் பெற வேண்டுமா என்பதாகும். உதவி கொடுப்பதனை கொள்கையாகக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு இதனை மாற்றியமைக்க முடியாதிருந்தால், குறைந்தளவு உதவி
140
 

கொடுப்பதற்கு அல்லது கொடுக்கவேண்டியது எந்தவகையில், எந்தச் சந்தர்ப்பத்தில் யாருக்கு என்று ஆழமாக கலந்துரையாட வேண்டும் என்பது பயிற்சியாளர்கள் மூலம் வெளியாகியது.
இந்த செயல்முறையினை ஆரம்பிக்கும் போது இலக்குக் குழுவினருடன் தொடர்பினை எந்படுத்திக்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம் என்பதும், ஒருவரையொருவர் தனிப்பட்ட ரீதியில் அறிந்து கொள்வதன் மூலம் , குழுக்களாக கலந்துரையாடுவதன் மூலம் கண்காணிப்பதன் மூலம், இதற்கு அவசியமான பின்னணியை கட்டியெழுப்பவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. பீடா நிறுவனத்தின் தலையீட்டினால் தற்போது அதிகமான பகுதிகளில் செயற்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்த்து அறியும் சந்தர்ப்பம் தமக்கு பெற்றுக் கொடுத்தல் பொருத்தமானது என்பது பயிற்சியாளர்களின் அபிப்பிராயமாக இருந்தது. இத்தகைய அபிவிருத்தி நடவடிக்கையின் தன்மையை விளங்கிக்கொள்ளுவதற்கே ற்ற நெகிழ்வுத் தன்மையினை பயிற்சியாளர் கொண்டிருக்கின்றனர் என்பது பயிற்சியாளருக்கு
தோன்றிய ஒரு விடயமாக இருந்தது. இந்தப் பிரதேசங்களில்
மூன்று நாட்கள் வரை தங்கியிருந்து அந்த அபிவிருத்தி நடைமுறையினால் அனுபவத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு
அவகாசம் அடுத்த கட்டத்தில் எற்படுத்திக்கொடுக்க
கலந்துரையாடப்பட்டது. இதன் பிரதான நோக்கமாக
அமைந்தது பங்கேற்பு அபிவிருத்தி நடைமுறை பற்றி
பிரயோ கரீதியான அனுபவம் ஒன்றினைப் பெ ற்றுக்கொள்வதாகும். -
இந்த எல்லா அனுபவங்கள் மூலமும் தமது கிராமத்தில் புதிய அபிவிருத்தி நடைமுறையொன்றினை ஆரம்பிப்பதற்கான 。 அத்திவாரம் இடப்பட்டு ஒரு மாதத்தின் பின்பு பயிற்சியின் இறுதி கலந்துரையாடலுக்கு வருமாறு பயிற்சியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

Page 73
8 வது கட்டம் (ஒரு மாதம்)
கட்டம் 7 இல் மிகவும் விரிவாக ஆராய்ந்த அடிப்படையில், இக்கட்டத்தில் தமது கிராமங்களில் இலக்கக்குழுக்கள் மிகவும் சிறிய அளவில் அல்லது புதிய அணுகுமுறையின் மூலம் ஆரம்பிக்கக்கூடிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தை மேற்கொள்ள ஊக்கமூட்டலும் அதற்கு ஆதரவு வழங்கலும் பயிற்சியாளரின் வேலையாக அமையும்.
இதற்கு மேலாக இக்கட்டத்தில் பங்கேற்பு அபிவிருத்தி முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றைப்பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு பயிற்சியாளர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து நாட்டின் மூன்று பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
9 வது கட்டம் (5 நாட்கள்)
இக்கட்டம் பயிற்சியின் இறுதிக்கட்டமாகும். சுமார் ஐந்து மாதகாலமாகக் கிடைத்த வெளிக்கள பிரயோக ரிதியானதும் கோட்பாட்டுரீதியானதுமான பயிற்சியும் "பீடா" நிறுவனத்தின் இடையீட்டின் மூலம் உருவாகிய அபிவிருத்தி முறைமையை ஆய்வு செய்து பெற்றுக்கொண்ட விளக்கம் என்பவற்றின் மூலமும் பின்வரும் அம்சங் கள் இக்கலந்துரையாடலில் வெளிப்பட்டன. அப்படியாயின் அவர்கள் தற்போது கடமையாற்றும் பிரதேசங்களில் :-
率 பயிற்சியாளர்களில் சிலர் அபிவிருத்தி முறைமையில் சேர்க்கக்கூடிய சிறு அளவான அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
* இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மிகவும் சிறு அளவானதாக இருந்தாலும் அவை அடிப்படைப் பரிரச் சனைகளை தொடர்புபடுத்திய அர்த்த மிக்கதானவையாகும்.
142
 

சேமிப்பு, சந்தைப்படுத்தல், நுகர்வு நடவடிக்கைகளோடு தொடர்புபட்ட சிறுகுழு அமைப்புக்கள் உருவாகின.
அடிப்படையில் இலக்குக்குழுக்கள் முதன்மையான பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளும் வழியில் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
* f LIT 9 நிறுவனத் தின் இடையூட்டுடன் மேற்கொள்ளப்படும் பங்கேற்பு அபிவிருத்தி முறைமை பற்றி பயிற்சியாளர் முன்வைத்த அபிப்பிராயங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.
இலக்கக்குழுவில் உள்ள சகலருக்கும் அபிவிருத்தி முறைமைபற்றி மிகச் சிறந்த விளக்கம் இருந்தது. இவ்விளக்கம் கிடைப்பதற்குரிய வழிகளில் ஒன்று, மாதம் இருமுறை கூடிக்கலந்துரையாடுவுதாகும்.
சகல சிறுகுழுக்களும் சேமிப்பு நிதியம் ஒன்றினை ஆரம்பித்திருந்தன.
தாம் தனியாக மேற்கொள்ளப்படும் விவசாயத்திற்கு மேலதிகமாக ஒவ்வொரு குழுவிற்கும் கூட்டுப்பண்ணை ஒன்று இருந்தது. மாதத்திற்கு இருமுறை இவர்கள் தமது உழைப்பை இதற்குக் கொடுத்தனர். இதிலிருந்து கிடைக்கும் முழு வருமானமும் குழு நிதியத்திற்கு சென்றது.
தம்மிடமிருந்து இல்லாமல் போகும் மிகைவருமானம் பற்றிய இலக்குக் குழுக்களின் அறிவும் விளக்கமும் மிகவும் உயர்ந்ததாகும்.
இதுவரை நடைமுறையில் இருந்த சங்கங்களில் இருந்து இவ்வேலைத்திட்டமானது மாற்றமுறும் விதம் பற்றி இலக்குக்குழு மிகவும் தெளிவான விளக்கத்தைக் கொண்டுள்ளது.
143

Page 74
ஒரு குழு அமைக்கப்பட்ட பின் அதே குழுவினர் அவ்வாறான பிரச்சனைக்கு உள்ளாகி சிக்குப்பட்டுள்ள இன்னொரு பிரிவினரிடம் சென்று அவர்களையும் அமைப்புக்குட்படுத்துதல் ஒரு விசேட அம்சமாகும்.
ஆரம்பிக்கப்பட்ட எல்லா அபிவிருத்தித்திட்டங்களும் வறுமையுடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை விளங்கி, அதிலிருந்து விடுபடுவதற்குரிய முயற்சிகளைத் தவிா அவற்றிற்குப் புறம்பாக விடுபட்டு செல்லாதிருத்தல் ஒரு முக்கிய அம்சமாகும்.
இ வ் விவகாரங்களை கலந்துரையாடிய பின் பயிற்சியாளர்களால் பயிற்சிக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பங்கேற்பு அபிவிருத்தி முறைமையில் அமையக்கூடியவகையில் சகல வழிவகைகளும் மேந்கொள்ளப்படல் வேண்டும் எனத் தீர்மானித்தனர்.
இதற்கு மேலாக கீழ்வரும் யுக்திகளைக்கடைப்பிடிக்கவும் தீர்மானித்தனர்.
தற்போது தாம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள பிரதேசத்திலிருந்து சிறிது தூரத்தில் சுதந்திரமான கிராமங்கள் சிலவற்றைத் தெரிவுசெய்து பயிற்சியின் மூலம் கிடைத்த தமது அனுபவ வாயிலாக புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தல்.
தற்போது தெரிவுசெய்துள்ள கிராமமொன்றில் இம்முறைமையை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, தற்போது நடைமுறையில் உள்ள மரபு முறையிலான அபிவிருத்தி நடவடிக்கைகளில் செய்யக்கூடிய மாற்றங்களில் கவனம் செலுத்துதல்.
தமக்கு மேல் மட்டத்திலிருக்கும் அதிகாரியிடம் தாம் , பெற்ற பயிற்சிபற்றி ஏற்கனவே உரையாடியுள்ளனர். இந்தப் பயிற்சிக்கேற்ப தாம் செய்யவேண்டிய
44

கருமங்களைப் பற்றி அவர்களுக்கு விளக்கத்தை ஏற்படுத்தி புதிய பிரதேசமொன்றில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படல்.
தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புதிய அணுகுமுறைக்கு ஏற்ப மாற்றியமைத்தல் மிகவும் கவனமாக மேற்கொள்ளப்படல் வேண்டும். அது தொடர்பாக சிறு சிறு ஆரம்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. எனினும் பயிற்சியாளர்கள் புதிய ஒரு பிரதேசத்திற்குச் சென்று எவ்வித பிழையுமின்றி அர்த்தமிக்கதாக ஆரம்பம் முதலே திட்டத்தை அமுலாக்கமுடியுமென்றும் கூறினர்.
இதன்பின் பொதுவான பயிற்சி வேலைத்திட்டங்கள் தொடர்பாக பயிற்சியாளரின் கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டிய அதேவேளை, வேலைத்திட்டம் பற்றி அவர்களது மதிப்பீடும் எதிர்பார்க்கப்படுகிறது. சகலரின் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு ஒத்த தன்மை உள்ளதாக மாற்றப்பட்ட பின் ஒவ்வொருவரின் கருத்துக்களிலும் மிகக் குறைவான வேறுபாடுகளே இருந்தன. முழுப்பயிற்சித் திட்டத்தையும் அவர்கள் ஒரு புதிய அனுபவமாகவே கருதினர்.
அவர்களிலிருந்து வெளிப்பட்ட கருத்துக்கள் 。 தொகுக்கப்பட்ட பின் பின்வருமாறு இருந்தன.
* இவை மிகவும் புதிய அனுபவமாகும்.
* "பயிற்சித்திட்டங்கள் பலவற்றில் பங்கேற்றுள்ளேன் ஆனால் இவ்வாறான பயிற்சியில் பங்குபற்றியது இதுவே முதல் தடவையாகும்"
* வெளியிலிருந்து வரும் நிபுணர்களின் சம்பிரதாயமான விரிவுரைகளுக்குப் பதிலாக பயிற்சியாளர்களின் கருத்துக்களை விருத்தியடையச் செய்து அவர்களின் அனுபவத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட பயிற்சித்திட்டமாகும்.
145

Page 75
༈ வறியோரின் பிரச்சினைகளை அடையாளம் காண இவ்வளவு தூரம் உதவிபுரிந்த இவ்வாறான வேலைத்திட்டத்தில் இதுவரை பங்குபற்றவில்லை.
* எம்மில் எவ்வித காரியத்திற்குமே பயன்படாமல் அடங்கி கிடந்த கருத்துக்களை வெளியே கொண்டு வந்து பட்டை தீட்டியது மாணிக்கத் திற்குப்பட்டை தீட்டியது போலவாகும்.
* அபிவிருத்தி வேலைத்திட்டத்துடன் தொடர்புபட்டுள்ள அரச, அரசசார் பற்ற நிறுவனங் களிலுள்ள எல்லோருக்கும் இப்பயிற்சியை வழங்க முடியுமாயின் இலக்குக்குழுவின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணுதல் இலகுவாக அமையும்.
மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் பயிலுனர்களால் வழங்கப்பட்ட அபிப் பிராயங்களில் சிலவாகும். பயிற்சியாளர்களும் பயிற்றுனரும் சேர்ந்து மீண்டும் பயிற்சி நெறியைப்பற்றி மீட்டுப்பார்த்தபோது அதில் விசேட அம்சங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. இங்கு பயிற்சி வேலைத்திட்டத்தின் முதல் பாகம் முடிந்ததும் இரண்டாம் பாகமான அமுல் நடத்தும் வேலைத்திட்டம் பற்றி திட்டம் ஒன்று தயாரித்தல் பற்றியே பின் ஆராயப்பட்டது.
கட்டம் 10 (பயிற்சியின் பின் ஒரு வருட காலம்)
இது பயிற்சியின் பின் ஒருவருட காலத்திற்கு பயிற்சியாளரோடு அவர்களின் வேலைத்திட்டங்களைப்பற்றி அவதானிக்கும் செயற்பாட்டுக் கட்டமாகும். எனினும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால் இடையீட்டாளர்களால் நடவடிக்கைகளை கண்காணிக்கவோ, பரிட்சிக்கவோ முயற்சிக்கப்படமாட்டாது. இதில் ஆழமான அர்த்தம் பொதிந்து இருக்கின்றது. விளக்கமாகக் கூறுவதாயின் வறியமக்களை அபிவிருத்தியின் பங்காளிகளாக ஆக்கும் முறையில் பயிற்சியானது எந்தளவிற்கு இடையீட்டாளருக்கு உதவியாக அமைந்துள்ளது என்பதை ஆராய்வதேயாகும்.
146

*
இக் காலப் பகுதியில் பின் வரும் விபரங்கள்
கிடைக்கக்கூடியதாக அமைந்தது.
பயிற்சியாளரால் அவர் பெற்ற பயிற்சியை ஏனைய அபிவிருத்தி பணியாளரிடையே விரிவுபடுத்த முயற்சிக்கப்பட்டது.
பயிற்சியில் பங்குபற்றாத தனது மேலதிகாரியின் கருத்துக்கள் அபிப் பிராயங்கள், மனப் பாங்கு என்பவற்றில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்த பயிற்சியாளருக்கு இயலக்கூடியதாக அமைந்தது.
அடிக்கடி பயிற்றுனர்களும் பயிற்சியாளரும் வெளிக்களங்களில் கூடிப் பேசியதன் பயனாக பங்கேற்பு அபிவிருத்தி முறைமையில் இலக்குக் குழுக்களை வழிப்படுத்தக்கூடியதாக இருந்தது. இக் கலந் துரையாடலில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பங்குகொணட இலக்குக் குழுவில் ஒரு பிரிவினரும் சம்பந்தப்பட்டனர்.
பயிற்சியின் பின் சில மாதங்களில் பயிற்சியாளர் மீண்டும் சிலநாட்கள் கலந்துரையாடுவதற்காகக்கூடினர். இதன் மூலம் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததோடு தமது அணுகு முறையை மேலும் சரியா ன வழியரில் அமைத்துக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டது.
பயிற்சிக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் பயிற்சியின் பின் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் ஆகியவற்றின் வித்தியாசங்கள் பற்றி ஆராயப்பட்டது.
பயிற்சியாளர் தமது குழுவில் உள்ள சிலருடன் வேறு வேலைத்திட்டங்களை பார்வையிட செல்ல ஒன்று அல்லது இரண்டு சந்தர்ப்பங்களே கிடைத்தன.
147

Page 76
举 நிதி, பிரயாணகஷ்டம், நிறுவன பிரச்சினைகள் ஆகிய காரணங்களால் இது அவ்வளவு வெற்றியடையவில்லை.
* பங்கேற்பு அபிவிருத்தி முறைமையைப் பயன்படுத்த முற்படும் போது சில நிறுவன பிரதானிகள் அதற்கு எதிராக இருந்தனர். ஆகையால் இவற்றிலிருந்து விலகி சுயமான வேலைத்திட்டங்களை ஆரம்பித்த பயிற்சியாளரும் உள்ளனர்.
* இப்பயிற்சியாளர்களில் 75% ஆனவர்கள் சிறந்த இடையீட்டாளர்களாக வரக்கூடிய சிறந்த சாத்தியக் கூறுகள் உள்ளன. இது மகிழ்ச்சி தரும் அம்சமாகும்.
இவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தில் பயிற்றுநர்களுக்குக் கிடைக்கக்கூடிய திருப்தி இதுவே யாகும்.
148
 

பங்கேற்பு அபிவிருத்தி - முதற்காரிய பரிசோதனை)
பீடா நிறுவனத்தின் அனுபவம்
தென் பகுதியில், ஹம்பந்தொட்டை மாவட்டத்தில்
அங்குனுகொலபெலஸ்ஸ உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அடங்கிய புராதன கிராமம் ஒன்றே அத்தனயால. 黴
இக்கிராமம் தங்கல்ல நகரத்தில் இருந்து 13 மைல் தொலைவில் உள்ளது. (தங்கல்ல நகரத்திலிருந்து வீரகெட்டிய வரை 8 மைல். அதிலிருந்து வீரகெட்டிய தெபொக்கால வழியாக 5 மைல் தூரம் சென்றவுடன் இக்கிராமத்தை அடையலாம்) கொழும்பிலிருந்து தூரம் சுமார் 138 மைல் ഋ.
இங்குள்ள முழு குடும்பத்தொகை 198, சனத்தொகை 1200 அளவில் அடங்கும். கிராமத்தில் 95 சதவீதமானே விவசாயத்தையே நம்பியுள்ளனர். பிரதான சீவனோபாய விவசாயமேயாகும். அவ்வாறிருந்தும் சிறுபோக, பெரும் போக காலங்களிள் நெல் உற்பத்தி செய்வதற்கு தேவையான நீர் வசதியின்மையால் நெல் உற்பத்தி பெரும்போகத்தில் மாத்திரமே நடக்கிறது. சிறு போகத்தில் வயல்களில் காய்கறி உற்பத்தி செய்தல் நீண்டகாலமாக விவசாயிகளிடையே நிலவும் வழக்கம். இப்பிரதேசத்திற்கு நீர்கிடைக்கும் வழிகள் பல ஒன்று பருவகால மழை, அடுத்தது இப்பருவகால மழையினால் நிரம்பிய சிறு குளம். இதுதவிர புயுல் ஆறு எனப்படும் சிறு ஓடை கிராமத்தின் ஊடாக ஓடி

Page 77
இக்கிராமத்திற்கு நீரைக்கொடுக்கிறது. மரக்கறி உற்பத்திக்காக சிறு போகக் காலங்களில் கிடைக்கும் நீர் போதுமானதாக உள்ளதாலும் இக்காலத்தில் மரக்கறி உற்பத்தியில் கூடிய பலன் கிடைக்கக் கூடியதாக இருப்பதாலும் விவசாயிகள் மரக்கறி உற்பத்தியை ஒரு போகமாகக் கொண்டார்கள்.
சமுக பொருளாதார நிலை
108 குடும்பங்கள் வாழும் இக்கிராமத்தில் 70% வீடுகள் நிரந்தரமற்றவை. நிரந்தர வீடுகள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. அனேக பிள்ளைகள் சிறு வயதிலேயே பாடசாலைக்கு செல்கின்றனர். இருந்தும் 6-7-8 வகுப்புகளுக்கு வந்தவுடன் பாடசாலையை விட்டு விலகிவிடுகின்றனர். க.பொ.த (சா.த.) சித்தியடைந்தவர்கள் 10 பேர்களுக்கு மேல் இக்கிராமத்தில் இல்லை. அதோடு பிள்ளைகளிடையே மந்தபோசனத்தையும் காணக்கூடியதாக உள்ளது. அரசாங்கத்தொழில் செய்தவர்களின் தொகை மூன்றே ஆகும். சாதாரணமாக ஒரு விவசாயிற்கு சொந்தம் 1 ஏக்கர் நிலம் என்ற அடிப்படையிலேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சிறுபோக காலங்களில் அரை ஏக்கர் நிலத்தில் மாத்திரமே மரக்கறி பயிரிடப்பட்டது. இக்கிராமத்தவர் கடன் பெற்ற முறை கொடியது. இவர்கள் கடனாளிகளாக காணப்பட்டது வரிவசாயத் திற்கு தேவையான உபகரணங் கள் போன்றதேவைகளை பெற பணவசதியின்மையாலேயாகும். இதனால் விதை, உரம், விவசாய இரசாயனப் பொருட்கள் என் பன பணம் கொடுத் து வாங் குவதற்கும் உற்பத்திக்காலங்களில் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கும் இவர்கள் பெருந்தொகையாக கடன்பட வேண்டியதாக இருந்தது. இக்கடனுக்காக 10% மாத வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு தனிப்பட்ட முறையில் கடன் கொடுப்போர் அனேகம். இதில் அனேகமானோர் வீரகெடிய என்னும் இடத்திலுள்ள முதலாளிமார்கள் ஆவர்.
150
 

இக்கடன் காரணமாக எந்தளவு உற்பத்தி செய்தாலும் இலாபம் ஈட்டினாலும் விவசாயியின் வறுமைநிலை அவ்வாறே அதே நிலையிலேயே காணப்படுகிறது. ཞ༣
పt ಗೆ
இடையீடு;- لوآلا
(لا الله 1981 ம் வருடம் வெளி இடையீட்டாளர் ஒருவர் (இவரை அபிவிருத்திப் பணியாளர், மாற்று முகவர் என அடையாளம் காணலாம்) வீரகெடிய கிராமத்திற்கு வந்த பிறகு இக்கிராமத்துடன் தொடர்பு கொள்வது வசதியாக இருந்தது. இத்தொடர்பின் வழியாக பங்கேற்பு அபிவிருத்தி முறைமையை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஆராய்ந்து பார்க்கப்பட்டது. கிராமம் சம்பந்தமான ஆரம்ப விபரங்களை பெற்ற இடையீட்டாளர் கிராமத்திலேயே வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து குடியேறினர். கிராமத்தில் நடமாடுவதனால் வெவ்வேறு விடயங்களை பரீட்சித்து பார்ப்பதும் சாதாரணமாக பேசி கலந்துரையாடல் மூலம் அதிகாரிகன்ஸ் கண்டு கிராமத்தில் யதார்த்த நிலையை விளங்கிக் கொள்வதற்கு முயற்சித்தத்ததுடன் அதன் மூலமாக நாளுக்கு நாள் கிராமம் தொடர்பாக , ஆழமான விடயங்களை விளங்கிக்கொள்வதற்கும் வாயப்பாக இருந்தது.
۳۲۶۰
கிராமத்தவர் பலருடன் அடிக்கடி கலந்தாலோசித்ததன் மூலமாக இடையீட்டாளர் காணக்கூடியதாக இருந்த விடயமானது சபை, சங்கங்களில் கிராமத்தவர் மிகவும் விரக்தியடையும் அளவில் இருப்பதும் ஆதலால் இது சம்பந்தமாக கிராமத்தவர் இடையே அதிக வெறுப்பும் ஏற்பட்டு இருந்தது. கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அவர்களின் பங்குபற்றலுடன் சுயசக்தியுடன் செயல்படக் கூடிய அபிவிருத்தி செயல்திட்டம் சம்பந்தமாக இடையfட் டாளர் வரிடயங்கள்ை முறையாக விளங்கிக்கொண்டதோடு, கிராமத்தவரிடையே இருந்த விரக்தி, விருப்பமின்மை காரணமாக அபிவிருத்தி நடவடிக் கைகளில் கிராமத்தவர்களுக்கு ஊக்கமூட்டுவது பெரும் பிரச்சினையாக இருந்தது. கிராமத்தவரின் அபிவிருத்திக்கான விதையை
151

Page 78
அவர்களுடன் சேர்ந்து விதைப்பதற்கு முயற்சி െമി இடையீடு ஊடாக திறமையான பயன் பெற முடியாமல் போய்விட்டது. கிராமத்தவருடன் பல்வேறுபட்டவர்கள் இக்கட்டத்தில் தொடர்பு மேற்கொன்டிருந்தாலும், அபிவிருத்தி செயற்பாட்டை ஆக்கபூர்வமாக செயல்படுத்துவதற்கு அத்தொடர்புகள் போதுமானதாக காணப்படவில்லை.
செயற்பாட்டிற்கான பிரவேசம்-ஆரம்பித்தலும் அபிவிருத்தியும்
கிராமத்தவர் இதுவரை உதவிகளை அடிப்படையாகக் கொண்ட சம்பிரதாய கிராம அபிவிருத்தி நடவடிக்கை களுக்கு பழகி வந்துள்ளார்கள். ஆனாலும் புதிய அணுகு முறையான இடையீடு மூலம் உதவி எதுவுமே கிடைக்காததால் மக்கள் இதுபற்றி அவ்வளவு அக்கறை காட்டவில்லை. 1983 சிறுபோகம் மூலமாக பயிச்செய்கைக்கு தேவையான நீர் (மழை நீர்) தேவையான நேரத்தில் கிடைத்ததாலும், காலநிலை சாதகமாக காணப்பட்டதாலும் மிகவும் நல்ல அறுவடை விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடியதாக இருந்தது. அத்தோடு மரக்கறிவகையை எடுத்துக்கொன்டால் பறங்கிக்காய் அறுவடையே மிக அதிகமானதாகும். பறங்கிக்காய் அறுவடை பலன் கொடுத்தாலும் கிலோவொன்றிற்கு மிகவும் குறைந்த அளவு விலையே கிடைக்கக்கூடியதாக இருந்தது. எலகட, அத்தனயால பிரதேசத்தில் 1 கிலோ பறங்கிக்காய்க்கு ரூபா 1.25 - 1.50 அளவிலேயே விலை போனது. ஏனைய மரக்கறிகளின் நிலையும் அதுவே. வட்டிக்கு பணம் வாங்கி மாதக் கணக்கில் மிகவும் சிரமப்பட்டு இறுதியாக கிடைத்தப் பலனையும் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கியது. எனினும் என்ன செய்வது. மாற்று வழி இல்லை. (இது வரை விவசாயிகள் மாற்று வழி எதையும் தேடுவதையிட்டும் முயற்சி எடுக்கவில்லை) இவ்வாறு அப்பாவிகளாக காணப்பட்ட விவசாயிகளின் ஒரு பகுதியினருக்கு (ஆறு
152

பேருக்கு) தமது கிராமத்திலேயே குடியேறியுள்ள (அடிக்கடி இது தொடர்பாக கலந்தாலோசித்த) இடையீட்டாளர் பற்றிய ஞாபகம் ஏற்பட்டது இச்சந்தர்ப்பத்திலேயேயாகும். இவ்விவசாயிகள் ஆறுபேர் ஒரு நாள் இரவு இடையீட்டாளரைத்
தேடி அவரது வீட்டி க்குச் சென்றனர். விவசாயிகளின் உடனடி தேவையும் அவசியமும் பறங்கிக்காயை விலையில் விற்க ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதை
தவிர வேறொன்றுமில்லை. விவசாயிகளின் வறுமைக்ே 5 காரணமாக உள்ள வறுமை நிலையை குறைப்பதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த இடையீட்டாளருக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகியது. விவசாயிகள் தங்களது பிரச்சினையை கூறியவுடன், இடையீட்டாளர் அவர்கள் திருப்தியடையும் வகையிலும் தைரியப்படுத்தும் வகையிலும் இன்னும் விபரங்களைத் தேடும் வகையிலும் ஒரு பதிலை அவர்கள் முன்வைக்கவேண்டும். இவ் விடயத்தில் இடையீட்டாளர் பறங்கிக்காயை இன்னும் கூடிய விலையில் விற்பனை செய்யமுடியும் எனினும் இன்னும் நாம் இது தொடர்பாக சிறிது விளக்கங்களுடன் பேசுவோம் என்றார்.
இங்கு உற்பத்தி சம்பந்தமாக மேலும் மேலும் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளுக்கிடையில் இக்கலந்துரையாடலால் தமது உற்பத்தி, உற்பத்தி விலை ஆகிய விடயங்கள் சம்பந்தமாக மேலும் சிந்திப்பதற்கு வாய்ப்பு காணப்பட்ட கலந்துரையாடல் பல மணித்தியாலங்கள் நடைபெற்றாலும் விவசாயிகளுக்கு அவர்களின் பிரச்சினைகள் உருவாக கலந்துரையாடல் மேலும் மேலும் தொடர்ந்த முறை, நீண்ட முறை கலந்துரையாடலை விட அல்லது நிறுத்திக்கொள்ளக் கூடிய நிலை இருக்கவில்லை. விவசாயிகளின் பிரச்சினைகள் சமபந்தமாக வெளிப்படையாக பார்ப்பதற்கும் யதார்த்தமாக சிந்திப்பதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாகியது. அவர்களின் பிரச்சினை சம்பந்தமாக இம்முறையில் கலந்து ஆலோசித்தது அவர்களின்

Page 79
வாழ்க்கையிலேயே இதுவே முதல் சந்தர்ப்பமாக அமைந்திருக்கலாம்.
பேச்சுவார்த்தையில் சந்தைப்படுத்தலே பிரதான இடம் வகித்தது. விவசாயிகள் அவர்களது உற்பத்திகளை சந்தைப்படுத்தும் வழிகள் இரண்டு. ஒன்று கிராமத்திற்கு லொறிகளில் வரும் முதலாளிகளுக்கு விற்பது. இரண்டாவது கிராமத்திலிருந்து 4 மைல் தொலைவில் இருக்கும் வீரகெடிய வார சந்தையில் விற்பனை செய்வது.
இவ்விரண்டு முறைகளில் மிகவும் பிரபலமானது 6) 1 Π.Π. சந்தைக்கு கொண்டு செல்வதுதான். கலந்துரையாடலின்படி சந்தை வாரத்திற்கு இரண்டுமுறை நடைபெற்றது. சந்தை நாளைக்கு முன்னைய நாள் இரவே மரக்கறியை சந்தைக்கு கொண்டு செல்வது நடைமுறை. வண்டி, வேன், டிரக்டர் ஆகியவற்றின் மூலமாக இம்மரக்கறி சந்தைக்கு போக்குவரத்து செய்யப்பட்டது. அவர்களின் உற்பத்திகளை வெவ்வேறு குவியலாக வைத்திருக்கும் விவசாயிகளின் உற்பத்திகளை விலை கொடுத்து வாங்குவது பெரும்பாலும் வியாபாரிகள் அன்றி தரகர்களே. சந்தைக்கு வரும் லொறிகள் அதிகமாகும் போது அவற்றை மறைத்து வைப் பதற் கு தரகர் களால் தந் திர வழிகள் மேற்கொள்ளப்பட்டன. லொறிகள் அதிகமாகும் அளவிற்கு தேவைகளும் கூடும் என்ற எண்ணம் விவசாயிகளிடையே ஏற்பட்டால் பொருட்களை அதிக விலைக்கு விற்க முடியும் என்ற எண்ணத்தை விவசாயிகளிடையே இல்லாமல் செய்வதே இதன் குறிக்கோளாகும்.
சந்தையில் என்ன விலையில் பொருட்களை விலை கொடுத்து வாங்கவேண்டும் என்பதை தீர்வு செய்வது தரகர்களே. அவர்கள் நியமித்த ஒரு விலை இருந்தது, உற்பத்தியாளர் யாரிடம் எங்கே விசாரித்தாளும் அவர்களுக்கு கிடைக்கும் விலை தரகர்களால் நியமித்த விலை அல்லது இதைவிடக் குறைந்த விலையாகும். இசசெயல்களால்
154
 

விவசாயிகளின் நிலைமை இன்னும் மோசமாகியது. சந்தைக்கு மரக்கறி கொண்டு செல்வதற்காக அவர்கள் போக்குவரத்து செலவையும் தாங்க வேண்டும். சந்தையில் மரக்கறி என்ன விலை போனாலும் பொருட்கள் கொண்டு சென்ற போக்குவரத்துச் செலவை உடனே வழங்க வேண்டும், 麾 சந்தையில் மரக்கறி விலை குறைந்து காணப்பட்டாலும் அவைகளை மீண்டும் கொண்டு செல்வது பெரும் பிரச்சினையாகும். அதற்கு காரணங்கள் பல அவையாவன.
凑 மீண்டும் கொண்டு செல்வதற்கான
செலவைத் திரும்பவும் செலுத்த வேண்டும்.
粤 மரக்கறி சந்தைக்கு கொண்டு வருவதற்காக
ஓரிரண்டு நாட்கள் முன்னதாகவே பிடுங்கப்படுவதால் அவை அடிபட்டு, நைந்து, வதங்கி காணப்படும் நிலையை அடைகின்றது. ஒழுங்கு செய்யும் முறைகளினால் சீக்கிரமாக அவை பழுதடைந்து விடுகின்றன.
* 10% Longs வட்டிக்கு கடன் வங்கி மரக்
கறி பயிரிடுவதால் உடனே கடன் கட்டப்படல் வேண்டும். அதனால் மரக்கறிகளை உடனடியாக விற்று பணம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
* சந்தை நாட்களில் விவசாயிகள்
வீட்டிலிருந்து புறப்படுவது மரக்கறிவிற்பனை செய்து பெற்ற பணத்துடன் வீட்டுற்கு தேவையான சகல பொருட்களையும் கொண்டு செல்லும் நோக்கத்துடனாகும்.
இதனால் உற்பத்தி செய்பவர் சாதாரண ஏழைவிவசாயி. அவனுடைய ஒரே குறிக்கோள் குறைந்த விலைக்காவது விற்றுவிட்டு வீட்டிற்கு போவதேயாகும். தமது பொருட்களை விற்பது சம்பந்தமாக விவசாயிகளிடையே
போட்டி ஏற்படுகின்றது. அவர்களிடையே எத்தகைய
155

Page 80
ருமைப்பாடோ ஒற்றுமையோ இல்லை. தனித்தனியா பொருட்களை விற்கும் விவசாயிகளை தமக்குத்தேவையான வகையில் கொண்டு நடத்தும் தகுதி (தங்களுக்கிடையி
ஒழுங்குபட்டுள்ள) தரகர்களுக்கு உண்டு. இக்காரணங்களால்
* பொருட்களின் விலை குறையும்.
மரக்கறி நிறுவையின் போது இடைப்பட்டோர் தமக்கு சாதகமான வகையில் ( நிறுத்துக் கொள்வர். (கள்ளமாக நிறுப்பது பற்றி விவசாயிகள் அறிவர். எனினும் ஒன்றும் செய்ய முடியாது.)
* சூட்சுமமான வகையில் விவசாயிகளிடையே
ஒற்றுமையின்மையை எற்படுத்த (தரகர்) இடைப்பட்டோர் வெற்றி கண்டுள்ளனர்.
举 விவசாயிகளிடையே ஒரு பகுதியினரை தம்
சார்பாக வைத்துக்கொள்வதன் மூலம் 歇* எப்பொழுதும் இவர்கள் தமது பிர்ச்சினை
சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெறாத வகையில் இடைப்பட்டோர் செயற்பட்டனர்.
இக்கலந்துரையாடலில் விற்பனை திணைக்களம் விலை
கொடுத்து வாங்குதல் சம்பந்தமாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. விற்பனைத்திணைக்களம் விவசாயிகளிடம் ன்றி இடைப்பட்டோரிடமே பொருட்களை விலைகொடுத்து வாங்கும் நிறுவனம் என்பதே விவசாயிகளின் எண்ணமாகும். அடுத்தது விற்பனைத்திணைக்களத்திடம் கொடுக்கும் பொருட்களுக்கு ஒரே முறையில் பணம் கிடைப்பதில்லை.
"இதுதான் ஐயா எமது பிரச்சினை எந்தநாளும் பயிரிடுகின்றோம். இப்படி பாடுபட்டு உற்பத்தி செய்து கள்ளமாக நிறுவை செய்யும் குறைந்த விலைக்கு) பொருட்கள்
வாங்கும் இடைப்பட்டோருக்கே விற்பனை செய்கிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடுத்த அறுவடைக்கு வைத்துக்கொள்ள கூட பணமில்லை. அதனால் மீண்டும் 10% வட்டிக்கு கடன் வாங்குகின்றோம். , விவசாயம் செயகிறோம். கடன் அடைக்கிறோம். வட்டிக்கு வாங்குறோம். எந்தநாளும் நாம் ஏழைகள். இதுதான் எமது கதை." கலந்தாலோசிக்கும் போது ஒரு விவசாயி சொன்ன கருத்து இது. விவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ் விபரங்கள் வெளிப்பட்டபின் இடையீட்டாளா பறங்கிக்காய் ஒன்றை கிராமத்திலிருந்து வீரகெட்டிய சந்தைக்கு கொண்டு செல்ல எவ்வளவு செலவாகின்றது எனக்கேட்டார். பறங்கிக்காய் ஒன்றுக்கான போக்குவரத்துச் செலவு ஒரு ரூபாய். அதேவேளை சந்தையில் ஒரு பறங்கிக்காயின் விலை ஒரு ரூபாய். இதன்படி பறங்கிக்காய் ஒன்று சந்தையினுள் கொண்டு செல்வதற்கு இரண்டு ரூபாய் செலவாகும். இதன் பிறகு கலந்துரையாட இடையீட்டாளர் எடுத்துக்கொண்ட அம்சம் பறங்கிக்காயின் நிறை.
சாதாரணமாக பறங்கிக்காய் ஒன்று 7 அல்லது 8 கிலோ நிறையுள்ளது என்பது விவசாயிகளின்கணிப்பாகும். பிற்கு ஒரு லொறியில் எத்தனை காய்கள் அடுக்கலாம் எனகேட்கப்பட்டது. சாதாரணமாக ஒரு லொறியில் பறங்கிக்காய் 900-1000 ற்கு இடைப்பட்ட அளவு அடுக்கலாம். இதன்படி இடையீட்டாளர் விவசாயிகளுடன் சிறு கணக்குப்போட்டார். வீரகெட்டிய சந்தைக்கு பறங்கிக்காய் 1000 கொண்டு செல்வதற்கான செலவு ரூபாய் 2,000 ஆகும். இந்தப் பறங்கிக் காய்களை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கென்றால் எவ்வளவு செலவாகும். அனேகம் பேர் ரூபாய் 2,000க்கு குறைவாக லொறியொன்று கொண்டு செல்ல முடியுமென்றே கூறினர்.
மிகவும் இரவாகியதால் கலந்துரையாடல் நிறுத்தப்பட்டு
மூன்று விடயங்களையிட்டு மறுநாள் மாலை சந்திக்கும்
எதிர்ப்பார்ப்புடன் எல்லோரும் சென்றனார். அம்மூன்று விடயங்களும் இவையே+
157

Page 81
* அத்தனயாலவில் இருந்து கொழும்பு
வரை லொறிக்கு தேவையான போக்கு வரத்துச்செலவு.
岑 கொழும்பு புறக்கோட்டை சந்தையில்
பறங்கிக்காய் கிலோ ஒன்றுக்கு கொடுக்கும் விலை. 侬*
பறங்கிக்காய் நிறுப்பதற்கு தராசு தேடுதற்கு ܐ ܕ݂
வசதி
முதல் நாள் கலந்துரையாடலில் ஏற்பட்ட இவ்விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து மறுநாள் எல்லா விவசாயிகளும் (ஏற்கனவே கலந்துரையாடலில் கலந்து கொண்ட 6 விவசாயிகள்) இடையீட்டாளர் வீட்டில் மீண்டும் சந்தித்தனர்.
*、 போக்குவரத்து செலவு சம்பந்தமான விடயங்களை அறியச்சென்ற விவசாயிகள் கொழும்புக்கு பொருட்கள் கொண்டு செல்லும் லொறி சொந்தக்காரர்கள் பலருடன் பேசினர். ரூபா 18004 ற்கு போக்குவரத்து வசதி கிடைக்கும் என அவர்கள் கூறினர். கொழும்பு புறக்கோட்டை சந்தையில் பறங்கிக்காய் ஒரு கிலோவின் விலையைஅறிந்து கொள்ள இடையீட்டாளர் உதவியும் கிடைத்தது. இதற்கு முன்பே அமைக்கப்பட்டிருந்த விவசாயிகள் குழுவினால் புறக்கோடை மரக்கறி சந்தையுடன் விற்பனை தொடர்பு ஏற்கனவே இருந்தது. அக்குழுவைச்சந்திக்க இடையீட்டாளரோடு சென்ற குழு அறிந்து கொண்டபடி அந்நாட்களில் புறக்கோட்டை யில் பறங்கிக்காய் 1 கிலோவிற்கான விலை 2.50 ற்கும் 2.75 ற்கும் இடைப் பட்ட தொகையாகும் என கண்டுபிடிக்கப்பட்டது.
இப்படியாக தேடியெடுக்கப்பட்ட முழு விபரங்களூ டாக பெற்றுக்கொண்ட புள்ளி விபரப்படி தற்போதைய சந்தைப்படுத்தல் முறையின் படி அவர்களுக்கு கிடைக்காது போகும் தொகையையிட்டு அறிந்து கொள்வதில் விவசாயிகள்
ஓரளவு வெற்றி கண்டனர்.
158
 
 
 

இவ்விவசாயிகள் ஆறு பேரிடமும் பறங்கிக்காய் மூன்று லொறிகளுக்கு போதுமான அளவு இருந்தது. எதிர்வரும் இரண்டு நாட்களுககுள் பறங்கிக்காய்களை கொழும்பிற்கு கொண்டு போக வேண்டுமென விவசாயிகள் தீர்மானித்தனர். சம்பந்தமான வேலைகளை செய்து கொள்ளுமுகமாக மறுநாள் மீண்டும் சந்திப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
அடுத் தநாள் கலந்துரையாடலின் போது கொழும்பிற்குப் போகும் பயணத்தில் இதற்கு முன் அமைப்பிற்குட்பட்டுள்ள விவசாய குழுவில் ஒருவரையும் கூட்டிக்கொண்டு செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது, அவ்வாறே குழுவில் ஒவ்வொருவரும் தாங்கள் செய்ய வேண்டிய காரியத்தை பகிர்ந்து கொண்டனர்.
குறிப்பிட்டபடி ஒழுங்கு செய்த திகதியில் மாலை 5.00 மணிக்கு விவசாயிகளின் ஒருங்கினைக்கப்பட்ட முயற்சியால் முக்கிய முன்னேறறத்தின் ஒருபடி ஆரம்பிக்கப்பட்டது. இது கூட்டு வியாபாரம் சம்பந்தமாக வாழ்க்கையில் முதல் முதலாக எடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கைமிக்க எனினும் துணிச்சலான தீர்மானமாகும். கிராமத்தவர் அனேக மானோரின் கேலிப்பேச்சுக்களுடன் விவசாயிகள் இரண்டு பேர் ஏற்கனவே விவசாய அமைப்பிற்குட்பட்ட அங்கத்தவர் ஒருவருடன் கொழும்பு நோக்கி பயணம் ஆனார்கள்.
கொழும்பு சென்றவர்கள மறுநாள் இரவு கிராமத்திற்கு திரும்பினர். வந்த மறுநாள் மாலை விவசாயிகளின் கலந்துரையாடல் மீண்டும் நடைபெற்றது. இந்த பயணம் சம்பந்தமான அனைத்து விடயங்களும் விரிவாக (அத்தனயாலஆரம்பித்த இடத்திலிருந்து அனைத்து விபரங்களும்) ஏனைய விவசாயிகளுக்கு விளக்கிக்கூறப்பட்டது. கொழும்பிற்கு கொண்டு சென்ற பறங்கிக்காய் கிட்டத்தட்ட 8000 கிலோவாகும். இப்பறங்கிக்காய் விற்கப்பட்டது ரூபா 2.50 க்கு ஆகும். (அக்காலத்தில் கிராமத்தில் விலை கிலோ 1.50 சதம்)
159

Page 82
இதன்படி பயணத்தில் கிடைத்த மேலதிக ஆதாயம் ரூபாய் 8000A ஆகும். லொறி கூலி, பயண செலவு, உணவு மற்றும் வேறு செலவுகள் ரூபாய் 2500A ஆகும். இதனால் சுத்த இலாபம் கிட்டத்தட்ட ரூபாய் 5,500/. இவ்வளவு காலமும் தரகர்களுக்கு இடையில் சிக்கிய பணம் ரூபாய் 5500A முழுமையாக இப்பொழுது விவசாயிகளுக்குக் கிடைத்தது.
விவசாயிகள் 6 பேரின் முயற்சியில் தேடிய ரூபாய் 5500A ஐ என்ன செய்வது. முன்பு இது அவர்களுக்கு கிடைக்காமல் போன பணமாகும்.
冰 இப்பணத்தை விவசாயிகள் 6 பேர்களுக்கிடையில்
சமமாக பிரித்துக்கொள்வதா?
。米 மேலதிக ஆதாயத்தில் நுகர்வுப்பொருட்களை
விலை கொடுத்து வாங்குவதா?
* விவசாயிகள் எப்பொழுதும் துன்பத்திற்கு
உட்பட்ட 10% வட்டியில் இருந்து மீட்சிபெறக்கூடிய வகையில் நிதி ஒன்று ஆரம்பிப்பதா?
இந்த விடயமாக தீர்வுகாண விவசாயிகளுக்கு இடையில் ஆழமாக கலந்துரையாடப்பட்டது. இப் பணத்தை அவசியமானால் விவசாயிகளிடையில் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம். இருந்தாலும் இப்பணம் இல்லாமலேயே அவர்கள் ஏற்கனவே தத்தமது தேவைகளை செய்து கொண்டனர். இப்பணத்தில் சிலவேளை ஒரு சில நாட்கள் மிகவும் நன்றாக உணவு குடிவகைகளை பாவிக்கலாம். பயணங்களும் போய் வரலாம். உடுதுணிகள் வாங்கிக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். மிக முக்கியமானவை அவையா? மிகவும் தேவையானவை என்ன?
விவசாயிகள் சதாகாலமும் துன்பத்திற்குள்ளாகும் 10% வட்டியிலிருந்து விடுபட ஒரு நிதியத்தை ஆரம்பிப்பதற்கு
160
 

தீர்மானம் எடுக்கப்பட்டது. இம்முடிவு எடுக்கக்காரணம் கலந்துரையாடல் மூலமாகவே அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளைப் பற்றி அவர்களை ஆழமாக சிந்திக்க தூண்டியதாகும்.
இரண்டு நாட்களுக்குப்பின் மீண்டும் கலந்துரையாடல் நடத்தினர். இக்கலந்துரையாடல் விவசாயிகளின் பிரச் சினைகளை இன்னும் அர்த்தமானதாகவும் யதார்த்தமாகவும் சிந்திக்ககூடிய வழியை ஏற்படுத்தியது. விவசாயிகள் ஆரம்ப கலந்துரையாடலில் வெளியிட்டதன்படி விவசாயம் செய்வது 10% மாதவட்டிக்கு பெறும் கடன் பணத்திலாகும். ஒரு போகத்திற்கு ஒருவர் கடன்படும் பணம் ரூபாய் 2000A ஆகும். இதன்படி2 போகத்திற்கு ரூபாய் 4000A கடனாகும். 6 பேர் கடன் பெறும் அளவு ரூபாய் 24,000A ஆகும். ஒரு போகத்திற்கு பெறுவது ரூபாய் 12,000A மே. அதனால் அறுவடை இறுதியில் (சாதாரணமாக 5 மாதத்தில்) ரூபாய் 6,000A உம் வட்டியும் கட்ட வேண்டும். வேறு வழியாக விளங்கப்படுத்துவதென்றால் விவசாயிகள் ரூபா 12,000/- வட்டி கட்டுவது ரூபாய் 12,000A இல்லாததனால்ே ஆகும். அவர்களுக்கு என ரூபாய் 12,000A இருந்தால் இப்போது வட்டிக்காரர்களுக்கு கொடுக்கும் ரூபாய் 12,000A த்தை மிகுதிப்படுத்திக் கொள்ள முடியும். அன்னறய முழு கலந்துரையாடல் நேரம் இந்த விடயத்திற்காககாகவே செலவழிக்கப்பட்டது. ரூபாய் 12,000/ நிதியமாக ஆரம்பிக்ககூடியதாக இருந்தால் விவசாயி வட்டியிலிருந்து விடுதலை அடையலாம். பறங்கிக்காய்களின் மூலம் கிடைத்த மேலதிக பணத்தில் நிதியத்தை ஆரம்பிக்க முடியாதா?
இடையீட்டாளரின் பங்கேற்புடன் விவசாயிகளுடன் நடந்த கலந்துரையாடல் அர்த்தமிக்கதாகும். பறங்கிக்காய் விற்பனையில் கிடைத்த இலாபத்தில் 50% நிதியத்தை ஆரம்பிப்பதற்கு ஒதுக்கப்படலாம் என தீர்மானிக்கப்பட்டது. மிகுதி 50% உற்பத்தியாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டது.
161

Page 83
இதன்படி விற்பனை வேலைத்திட்டம் முடியும் போது ரூபாய்6500A நிதியத்திற்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கே விசேடமாக குறிப்பிட வேண்டிய அம்சமானது வறுமையிலிருந்து மீட்சியடைவதற்கான இலட்சியத்துடன் தாமே விளங்கி எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவதாகும். இந்த நிதியத்துடன் "அத்தனயால ஐக்கிய விவசாய அமைப்பு" என்ற பெயரில் விவசாயிகளின் அமைப்பு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது.
மரக்கறி பயிரிடுதல் மூலமாக ஏற்பாடாகிய இந்தக்குழுவினர் இதற்கு பின் பெரும்போக காலத்தில் நெல் உற்பத்திக்கும் ஒரு குழுவாக முகம் கொடுத்தனர். இதே நேரத்தில் இப்பிரதேச இலங்கை வங்கி யும் விவசாயிகளின் புதிய அனுபவ பரீட்சிப்பு சம்பந்தமாக விவசாயிகளின் வேலைத்திட்டத்துடன் தொடர்பு கொண்டது. விவசாயிகள் இடையீட்டாளரின் உதவியோடு வங்கி உத்தியோகத்தர்களுக்கு விபரங்களை விளக்கினர். அவர்கள் கிராமத்திற்கு வந்து கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலின் பெறுபோக அறுவடைக்காலத்தில் நெல் உற்பத்திக்காக நிதியத்திக்கு புறம்பாக தேவையாக இருந்த ரூபாய் 5500A ஐ வங்கி வரிவசாயிகளுக்கு கொடுத்தது. வரிவசாயரிகள் இவ்வடிப்படையில் பெரும்போகத்தில் முறையான உற்பத்தியை மேற்கொன்டு கூடிய அறுவடைசெய்து மேலும் ஒரு படி முன்னேறினர்.
ஆறு விவசாயிகள் குழுவின் வேலைத்திட்டங் களைப்பற்றி ஏனைய விவசாயிகளுக்கு இடையிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது. ரூபாய் 1.50 க்கு, கிராமத்தில் விற்பனை செய்த பறங்கிக்காய் ரூபா 2.50 க்கு 10% வீதம் மாத வட்டிக்குப்பதிலாக 0.75 (75 சதம்) வட்டியில் கடன் பெறல், நிதியம் ஒன்றை ஆரம்பித்தமை மூலம் ஏனைய விவசாயிகளும் சேர தூண்டுவிக்கப்பட்டனர். இதன்படி இன்னும் சிலர் இச்சங்கத்தில் சேருவதற்கு முயற்சித்தாலும் ஆறுபேர் குழு
162

இந்த ஆலோசனைக்கு உடன்படவில்லை. புதிய விவசாயிகளுக்கு வேறு குழு ஒன்றை உருவாக்க அவர்கள் ஒத்துழைத்தனர். இடையீட்டாளரும் இதற்கு தேவையான ஒத்துழைப்பைக் கொடுத்தார்.
இதன் பெறுபேராக 1984 அரையாண்டில் சிறிய குழுக்கள் 30 அளவில் அமைக்கப்பட்டு இருந்தன. இவ்விற்பனை செயல் முறைகள் 1984, 1985, 1986 வரை இவ்வாறே நடைபெற்றதுடன் விவசாயிகளின் ஒற்றுமையின் சக்தியினால் சந்தைப் படுத்தல் திணைக் களத்திற்கு விவசாயிகளை அலட்சியப்படுத்த முடியாமல் போனது. இதன்படி விற்பனைத்திணைக்களம் மரக்கறிகளை விலைகொடுத்து வாங்குவதால் கொழும்புக்கு அவற்றை எடுத்துச்செல்வது தேவையற்றதானது.
சந்தைப்படுத்தலில் தொடங்கிய நடவடிக்கைகள் வேறு பகுதிகளுக்கும் பரவியதுடன், கடந்த 2 வருடங்களாக இப்பிரதேசத்தில் இருந்த அமைதியற்ற தன்மையால் இவ்வேலைத்திட்டங்களில் பின்னடைவுகள் ஏற்பட்டன. எவ்வாறான போதும் இது விவசாயிகாள் அவர்களாகவே அமைத்த ஒன்று. ஆதலால் இயக்கத்தில் இருந்த ஒரே ஒரு அமைப்பும் இதுவேயாகும்.
அபிவிருத்தி செயற் திட்டம் - ஒர் ஆய்வு
வெளி இடையீட்டாளர் ஒருவரின் ஒத்துழைப்பு தூன்டுதலின் மூலமும் ஏழைகளின் பங்களிப்பும் சுயசக்தியும் ஒன்றுபடுவதன் மூலமும் உண்டாகும் ஆக்கத்தன்மையான திறன்களின் ஊடாக செயற்படும் அபிவிருத்திச் செயல் திட்டத்தின் பண்புகள் அத்தனயால விவசாயிகளின் சொந்தப்பேச்சுகளின் மூலம் வெளிப்படுகின்றது என விமர்சனம் செய்வது நன்றென நினைக்கிறேனர். பங்கேற்பு அபிவிருத்தி நடைமுறையில் வெளி அம்சங்கள் பல இவ்வனுபவத்தின் மூலம் வெளிப்பட்டன அவற்றில் சிலவற்றை
163

Page 84
சுருக்கமாக ஆராய எண்ணியுள்ளேன. இடையீட்டாளரின. கிராமப்பிரவேசம் முதல் அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆாம்பமானது வரை படிப்படியாக இவற்றை ஆராயவேண்டியுள்ளது.
இடையீட்டாளரின் தன்மை - விசாரிப்பும் ஒன்றுபடுத்தலும்
வறியோரின் சுயசக்தி, பங்குபற்றல் என்பனவற்றின் அடிப்படையில் அவர்களது ஆக்கத்திறன் பண்பில் உருவாகும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நம்பிக்கை வைத்த இடையீட்டாளர் ஆரம்பத்தில் மேற்கொண்ட முதற் காரியம் தனக்கு வசதியான கிராமங்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து இக்கிராமங்களைப் பற்றி விரிவாக விசாரிப்பு முலம் விபரம் பெற்றைமயாகும். அவர் ஆரம்பத்தில் தங்கியது வீரகெடிய கிராமத்திலாகும். அது 1981ல் ஆகும். வீரகெடிய கிராமத்தில் குடியேறியிருந்தபோதே சுற்றியுள்ள கிராமங்கள் சம்பந்தமான சமுதாய பொருளாதார ஆய்வு செய்வது இடையீட்டாளரின் காரியமாகக் காணப்பட்டது.
இந்த ஆய்வுகளின் மூலமாக தமது நடவடிக்கைகளின் இலக்காக வைத்துக் கொள்ளக்கூடிய பொருத்தமான சமுதாய பொருளாதார பின்னணி கொண்ட மக்கள் பிரிவினர் (வறிய பலவீனமான) காணப்படும் கிராமத்தை தேர்ந்தெடுத்தல் இடையீட்டாளரின் நோக்கமாகும் , இதன் படி வீரகெடியாவிலிருந்து அத்தனயால கிராமத்தை அவர் தேர்ந்தெடுத்தார். வீரகெடியாவில் இருக்கும் போது அத்தனயால கிராமத்துடன் ஏற்படுத்திக்கொண்ட சம்பந்தத்தின் அடிப்படையில் அத்தனயாலக் கிராமத்திற்கு சுதந்திரமாக பிரவேசிக்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. (இடையீட்டாளர் ஒருவர் கிராமத்திற்குள் சுயமாக உட்பிரவேசிப்பதன் முக்கியத்துவம் பற்றி ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது). இதனால் அவர் எந்த விதமான பிரச்சினைகளோ சிக்கலோ இன்றி அத்தனயால கிராமத்துவாசியாகும் வாய்ப்பு கிட்டியது. இடையீட்டாளர் கிராமவாசியாக எடுத்த முயற்சியும்
164

நடைமுறையும் இவ்வாறான அபிவிருத்தி முயற்சிக்கு எவ்வளவு பொருத்தமானது என்பது முக்கியமாக அவதானிக்க வேண்டிய அம்சமாகும். கிராமத்தில் வசிக்கத்தொடங்கிய இடையீட்டாளர் அறுவடைக்காலம் பற்றி நடைமுறையில் நன்றாக ஆழமாகவும் அமைதியாகவும் ஆய்வு செய்ததுடன் விவசாயம் சம்பந்தமாக விவசாயிகளின் தொடர்பையும் முறையாக புரிந்துகொண்டார். ஆராய்ச்சி செய்வதில் பெற்றுக்கொண்ட விபரங்களை மிகவும் அர்த்தமுள்ளதாக்குமுகமாக தனிநபர்களிடையேயான கலந்துரையாடல்களுடன் வேறு வழிவகைகளையும் ஏற்படுத்திக்கொண்டார்.
விவசாயிகளின் சந்தைப்படுத்தல் பிரச்சினைப்பற்றி இடையீட்டாளர் ஆரம்பத்திலேயே விளக்கிக் கூறிவந்துள்ளார். அப்பிரச்சினை விவசாயிகளிடமிருந்தே உண்டானது. நீண்ட காலம்தொட்டு அவர் சந்தைப்படுத்தல் சம்பந்தமாக தேடி பெற்ற விபரங்களை விவசாயிகளுக்குத்தரவில்லை. அவர் செய்ததெல்லாம் ஆக்கச்சக்தியை எழுப்பிவிட்டு காரணங்களை தேடுவதற்காக விவசாயிகளை ஊக்குவித்ததேயாகும். கொழும்பு பறக்கோட்டையில் விலை விபரங்கள் பெறும் ஆர்வம் தூண்டப்பட்டது வாழ்க்கையில் முதல் தடவையாக இருக்கும். விவசாயிகள் வருடக்கணக்காக அனுபவித்த பிரச்சினைகளை மீண்டும் திருப்பி நோக்குவதற்கு தூண்டுவதன்மூலமாக பிரச்சினையின் சுபாவங்களை அறிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.
பிரச்சினை உண்டானது சந்தைப்படுத்து தலிலேயாகும். அவர்கள் இடையீட்டாளரை அணுகியமை பறங்கிக்காய் சந்தைப்படுத்தலுக்காக மாத்திரமே ஆயினும் சந்தைப்படுத்தலின் பின் தொடர்ந்து நிலையாக செல்வதற்கு தூண்டுகோள் ஏற்பட்டது. சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினையை முன்வைத்தபோது இடையீட்டாளர் அதனை தொடர்பு எற்படுத்தும் பிரவேசிப்பிற்கான அம்சமாக வைத்து ஒரு அர்த்தமுள்ள கலந்துரையாடலில் விவசாயிகளை பங்கு கொள்ளவைத்தார்.
165

Page 85
விவசாயிகள் பறங்கிக்காய் விற்பனைக்காக கொழும்பு சென்றது கலந்துரையாடல் இரண்டு அல்லது மூன்று நடத்தியதன்மூலம் பெற்ற அனுவத்தினூடாகவாகும். எனினும் அந்த அனுபவத்தை கிரமமாக வளர்ச்சியடையச்செய்வது அவர்கள் ஆரம்பித்த நடவடிக்கைகள் சம்பந்தமாக மீண்டும் மீண்டும் திரும்பி பார்த்து அதை விமர்சனம் செய்வதன் மூலமேயாகும். இவ்வாராய்சி பங்கேற்பு அபிவிருத்திக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். சந்தைப்படுத்தலில் ஆரம்பித்த அபிவிருத்தி வேலைத்திட்டம் மூலமாக விவசாயிகள் அவர்களின் மேலதிக பணம் வெளியில் எடுத்து, செல்லுதலை நடைமுறை மூலமாகவே புரிந்துகொண்டனர். உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டுள்ள மிகவும் வறுமையான மக்களை அமைப்பிற்குற்படுத்துவதற்கான அவர்களின் ஆக்கத்திறனை வளர்ச்சியடையச் செய்வதில் மிகவும் முக்கிய அம்சமாக அமைவது மேலதிகப் பணம் தொடர்பான விவரங்களை விளக்கி ஆராய்வதாகும்.
நாம் வறியவர்கள் என்பதால் சந்தைப்படுத்தும் புதியவழிமுறை மூலம் கிடைத்த மேலதிக பணத்தை சமமாக எம் மத்தியில் பகிர்ந்து கொள்வதா? அப்படியில்லாமல் எமது ஏழ்மைக்கும் தரித்திரத்திற்கும் காரணமாகஇருந்து எம்மை வாட்டும் நெருப்பு வட்டியிலிருந்து விடுதலை அடைவதற்காக நிதியம் ஒன்றை ஆரம்பிப்பதா? இங்கு விவசாயிகளின் அறிவை விரிபடுத்துவதில் இடையீட்டாளர் முக்கியமான பங்கை வகித்து கொண்டார். பொதுவான நிதியம் ஆரம்பிப்பதற்கு இடையீட்டாளர் அவர்களை ஊக்குவித்தார். அவர்களுக்கு கிடைத்த பணத்தில் 50% நிதியத்திற்கு சேர்த்துக் கொள்ளப்பட்டது. கிரமமாக நிதியத்தை மேம்படுத்தவதற்காக அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.
சந் தைப் படுத் தலிருந்து சேமிப் பதற்கும் அச்சேமிப்பினை, நெருப்பு வட்டியிலிருந்து விடுதலைப் பெறுவதற்கு நிதியமொன்றுக்குமாக பரிமாற்றம் ஏற்பட்டது. இவ்வனைத்தையும் இணைத்ததன் முலம் இதுவரை
166

நெருக்கப்பட்டு, அடிமைக்கட்டுப்பாட்டிலிருந்த வறிய விவசாயிகளின் சிந்தனை சக்தி கிரமமான முறையில் வளர்ச்சியடைந்தது என்றநிலை உருவாகின்றது. வேறுவகையில் கூறுவதானால் ஆக்கத் திறமை சக்தி வெளிப்படுதலாகும் என்பதே. இதனை இன்னும் விளக்கமாக அர்த்தம் கொள்வதானால் இதுவரை அவசியமற்ற வெளியாரின் அபிவிருத்திநடைமுறை வழியாகச் சலிப்படைந்து இடைநடுவில் கதியற்றுள்ள பலவீனமானமக்கள் பிரிவினர் தாம் வறுமைக்கு உட்பட்டதற்கான பிரதான பிரச்சினை எது? என கிரமமாக விளங்கிக் கொள்வதாகும்.
அமைப்பும் விரிவும்
மேற் காணப்பட்ட அனுபவத்தின்படி விவசாய அமைப்பு சந்தைப்படுத்தல் முறையின் பெறுபேற்று அடிப்படையியே உருவாகியது. விவசாய அமைப்பு ஒன்று உண்டாக்கப்பட்டு அதன் மூலமாக சந்தைப்படுத்தல் செயல்திட்டம் ஆரம்பமாகவில்லை. எமது வழக்கமான அனுபவமென்றால் செயல்திட்டம் ஆரம்பமாகு முன் அமைப்பு ஒன்று உருவாகி அதன் மூலமாகவே செயல் திட்ட நடவடிக்கை ஆரம்பிப்பதாகும். விவசாயிகள் பறங்கிக்காய் விற்றது ஒரு அமைப்பாக அன்றி ஒருசிறு குழு என்ற வகையில் தான். ஆயினும் அவர்களால் ஆரம்பித்தசெயல் முறையின் பெறுபேறாக கிடைத்த மேலதிகப்பணம் மூலம் ஒரு நிதியம் உண்டானது. அந்நிதியத்தினூடாக "அத்தனயால ஐக்கிய விவசாயிகள் அமைப்பு" உருவாகியது. அமைப்பொன்று ஏற்பட்டு அதன்பின் செயற்பாடு ஏற்படுவது என்பது உகந்த ஒன்று அல்ல என்று இங்கு அர்த்தப்படமாட்டாது. இங்கு ஏற்பட்ட விஷேசத்தன்மையும் குறிப்பிடக்கூடிய அம்சமும் யாதெனில் செயற்பாடுகளுக்குப் பொருத்தமான வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டது என்பதாகும்.
இவ்வாறு உருவாகிய அமைப்பு தொடர்பான கலந்துரையாடல் வாதவிவாதங்களின் பெறுபேறானது கிராம
167

Page 86
விவசாயிகள் இதனை விமர்சன் ரீதியாக பார்த்து அனுபவத்தை பெற்றுக்கொண்டதும் கற்றுக்கொண்டதுமாகும். ஆரம்பத்தில் உண்டான சிறு குழுக்களின் செயற்பாடுகளின் அடிப்படையில் அவர்கள் வழிகாட்டலில் கீழ் மேலும் பல சிறு குழுக்கள் ஆரம்பமாயின. அக்குழுக்கள் அனைத்துமே வறுமைக்கும் அதோடு தொடர்பான பிரச்சினைகளுக்கும் முதலிடம் கொடுத்து அதிலிருந்து விடுபட பலதரப் பட்ட வேலைத்திட்டங்களை ஆரம்பித்தன. 1984 ம் ஆண்டளவில் 30ற்கும் அதிகமானகுழுக்கள் இருந்தன. ஒருபக்கம் குழுக்கள் பரவலாக விரிவடைந்தன. இது வேகமாக பக்கத்திலிருக்கும் கிராமங்களுக்கும் பரவியது. இந்த விரிவாக்கம் இரண்டு வேறுபட்ட வகையில் எற்பட்டன. ஒன்று குழுக்களின் தொகை கூடி பல்வேறு கிராமங்களுக்கும் பரவி செல்லுதல், அடுத்தது குழுவிலேயே ஒரு செயல்திட்டத்தில் இருந்து இன்னொரு செயல்திட்டத்திற்கு விரிவடைதல் ஆகும். பங்கேற்பு அபிவிருத்திசெயல் முறையில் இந்த வேலைத்திட்டங்கள் இரண்டுமே மிகவும் முக்கியமானதாகும். எமது ஆரம்பக் குழுவின் வேலைத்திட்டங்களின் விரிவாக்கத்தை உதாரணமாக எடுத்தோமாயின் சந்தைப்படுத்தலில் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையானது சேமிப்பிற்கு சென்று பொது நிதியமாக மாறியது. அந்த பொது நிதியம் வட்டியிலிருந்து மீள்வதற்கு ஒரு ஆயுதமாக பாவிக்கப்பட்டது மாத்திரமல்ல, முறையாக நிதியமும் விருத்தியடைந்தது. மரக்கறி உற்பத்தியோடு உருவாகிய குழு, பெரும்போகத்தில் நெல் உற்பத்திக்கு முகங்கொடுக்கும் போது நெல் உற்பத்தியோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்தது. வங்கியில் தங்களுக்கு கிடைக்ககூடிய உரிமைகள் சம்பந்தமாக விபரங்களைப் பெற்றுக்கொண்டதுடன் இதுவரை நெருப்பு வட்டிக்காரர்களுக்கு கொடுத்த 10% மாதாந்த வட்டிக்கு பதிலாக ரூபா 100/ ற்கு 0.75 சத மாத வட்டிக்கு வங்கியில் கடன் பெற்றுக்கொண்டனர். அறுவடை முடிந்து சூடு மிதித்த உடனேயே நெல்லை விற்ற விவசாயிகள், நெல்லின் விலை கூடும் வரை காத்திருக்கும் அளவிற்கு சக்தி
168

கிட்டியது. நெல் விலை கூடியபின் விற்று வருகின்ற (முன்பு தரகர்களுக்கே சென்றது) மேலதிக பணத்தை (மிகை) தாமே பெற்றுக்கொண்டனர். விவசாய இரசாயனங்கள், உரம், டிரக்டர் போன்றன சம்பந்தமாக பங்குகொன்டமை பலதரப்பட்டதாகும். இந்த எல்லாவிடயங்களிலும் அறிந்து கொள்ள முற்பட்டது செயல் பாட் டி ன் வரிரிவாக் கத்தையேகாட்டுகின்றது. சிறிய குழுக்களுக்கு கிராமமட்டத்தில் செய்ய வேண்டிய செயல்களுக்கு ஒருவரம்பு உண்டு. தனியாக செய்யமுடியாத செயலாக இருந்தால் அதைவிட பெரிய ஒரு அமைப்பின் ஒத்துழைப்பு அவசியம். இந்ததேவையை நிறைவேற்று முகமாக "அத்தனயால ஐக்கிய விவசாய அமைப்பு" என்ற பெயரில் இணைந்த விவசாய அமைப்பு ஒன்று விவசாயிகளால் உண்டாக்கப்பட்டது. இவ்வமைப்பு இன்னும் விரிவான பொதுவான விடயங்களில் சம்பந்தப்பட்டு செயல்பட்டாலும் சிறு குழுக்களிள் சுதந்திரம் அல்லது நிர்வாகத்தில் எந்த தலையீட்டையும் செய்யவில்லை. அதற்கு எந்த ஒரு உரிமையும் தரவில்லை. பிரதேசத்தில் அரசியல் செல்வாக்குப்படைத்த தலைவர்களிடம் ஒரு காரியத்தை செய்து கொள்ள பத்து, பன்னிரண்டு குழுக்களை விட முன்னூறு நானுாறு என்ற தொகை மிகவும் உகந்தது ஆகும். பாராளுமன்ற அங்கத்தவர் செயல்களினால் அல்ல சம்பந்தமான மக்களின் தொகையைக் கொண்டே சங்கத்தின் சக்தியை அளப்பர். இவ்வாறான செயல்களுக்கு முன்னின்றது ஐக்கிய விவசாய அமைப்பாகும். அவ்வாறே விவசாயிகள் பத்து பன்னிரண்டு பேர்களுக்கு உரம், கிருமிநாசினிகள், இரசாயனப்பொருட்கள், வேறு விவசாய உபகரணங்கள் என்பனவற்றைக் கொண்டு வருவதைவிட ஒரேநேரத்தில் 300 - 400 பேருக்கு கொண்டுவருவது காலம், உழைப்பு பணம் போன்ற வகையில் அதிக இலாபம் தரக்கூடியதாகும். இவ்வாறான செயல்கள் ஒன்றுபட்ட விவசாய அமைப்பின் செயல்களாகும்.
169

Page 87
செயல்முறை ஆய்வு சம்பந்தமான சில விபரங்கள் "அத்தனயால அனுபவத்தில்" இல்லை, நெல்லை, காலம் கடந்து விற்பது, விவசாய உபகரணங்கள் சம்பந்தமான பங்களிப்பு ஐக்கிய விவசாய அமைப்பை உண்டாக்குதல் போன்ற அனுபவங்கள் கூறப்படவில்லை. அவை பிற்கால நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவையாதலால் அவற்றை இதில் சேர்த்துக்கொண்டேன்.
இடையீட்டாளர் வெளியேறல்
பங்கேற்பு அபிவிருத்தி செயல் முறையின் விசேட பண்பானது இடையீட்டாளரின் நடவடிக்கைகளை கிரமமான முறையில் மக்கள் ஏற்றுக்கொள்ளல் ஆகும். நடைமுறையிலுள்ள பங்கேற்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் மூலமாகவே அவ்வேலைத்திட்டத்தினை எடுத்துச்செல்ல முறையான இடையீட்டாளர்கள் (உள் மாற்றுமுகவர்கள், அபிவிருத்தி பணியாளர்கள், வழிகாட்டிகள்) உருவாவது இவ்வாறான (இயற்கையான) வேலைத்திட்டங்களில் காணக்கூடிய ஒரு அம்சமாகும்.
ஆய்வுசெய்தல், கண்காணித்தல், கலந்துரையாடல், சம்பாசனை போன்ற அபிவிருத்தி செயல்களின் மூலம் ஆக்கச்சக்தியைபெறும் இலக்குக் குழுவானது அதன் அங்கத்தவர்களின் சுய சக்தி, பங்கேற்பின் மூலம், (கிரமமாக இதுவரை அவர்கள் நெருக்கப்பட்டிருந்த) சமூக பொருளாதார கட்டுப்பாட்டுகளிலிருந்து விடுதலை அடையும். அவ்வாறே இக்காரியத்திற்காக அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து அவர்களைத் தூண்டுதல் செய்த இடையீட்டாளரில் நிரந்தரமான தங்கி இருத்தலையும் எதிர்ப்பார்ப்பதுமில்லை.
இதனால் செயற்பாடுகள் பூரணமடையும் சந்தர்ப்பம் எற்படும்போது மேலும் இடையீட்டாளரில் தங்கியிருக்கும் எண்ணத்தை கொண்டிராமல் அவர்களது செயல்களை அவர்களாகவே செய்து கொள்ளக்கூடிய நிலைக்கு உட்படுவார்கள். இந்நிலைமையில் விவசாயிகளின் காரியங்களை
170

விவசாயிகளிடமே ஒப்படைத்துவிட்டு இடையீட்டாளர் வெளியேற முடியும். இதனால் இடையீட்டாளர் தான் ஏற்கனவே செய்த காரியங்களை விட இன்னும் பரந்த அளவு காரியங்களில் ஈடுபடக்கூடிய நிலையிருக்கும். அவர் கிராமத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் செயல் திட்டங்கள் நிலைக்கும். இந்நிலைக்கு ஆளாவது விவசாயிகளின் ஆக்க சக்தியின் வளர்ச்சியோடேயாகும்.
பங்கேற்பு அபிவிருத்தியின் போது உருவாகும் சமூகத்துக்குள்ளேயே உள்ள இடையீட்டாளர் அதை முன்கொண்டு செல்லும் செயற்பாட்டாளர்களான அதேவேளை செயற்திட்ட பயன்பாட்டாளர்களாகவும் இருப்பர். இவர்கள் தொண்டர் சேவையாளர்களில் சேரமாட்டார்கள், இது மிக முக்கியமான அம்சமாகும். ஏனென்றால் எவருக்கும் நீண்டகாலமாக தொடந்தும் வேலைசெய்யக் கூடியதாக இருக்காது. இது அபிவிருத்தி செயற்பாட்டை முன்கொண்டு செல்ல முக்கியமான ஒரு சாதகமான அம்சமாகும். இச்சமூக இடையீட்டாளரின் அறிவு விருத்திபெற அடிக்கடி வெளி இடையீட்டாளரோடு கலந்துரையாடலும் பேச்சுவார்த்தையும் நடத்துவது அவசியமாகும்.
இந்நிலை தற்போது அத்தனயால அபிவிருத்தி செயற்முறையின் மூலம் யதார்த்தமாக்கப்பட்டுள்ளது.
அத்தனயால அபிவிருத்தி செயற்பாட்டில் இடையீட்டாளராக "பீடா" நிறுவன ஆய்வாளர் டேனியல் பர்னாண்டு அவர்களே பணியாற்றினார். இந்த கட்டுரையில் குறிப்பிட்ட சகல தகவல்களும் அவர் மூலம் கொடுக்கப்பட்ட விபரங்களின்படியே ஒழுங்கு செயயப்பட்டது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். இக்கட்டுரையில் கையாளப்பட்ட புள்ளிவிபரங்கள் 1983 ஆம் வருடத்திற்குரியவை எனக்கூற விரும்புகிறேன்.
171

Page 88

புதிய அமைப்பு முறை ஒன்றை நோக்கி
பங்கேற்பு அபிவிருத்தியின் முக்கிய பண்பானது கிராம மக்கள் தாங்கள் முகம் கொடுக்கும் முக்கிய பிரச்சினைளை விளங்கிக் கொண்டு அப்பிரச்சினைகளை
தீர்க்கக்கூடிய வழியை தேடிக்கொள்ள அமைப்பிற்குட்படலாகும். பங்கேற்பு அபிவிருத்தி முறை நடைமுறைப் படுத்தப் படும் போது அதில்
இணைந்துகொள்வோர் சமுக பொருளாதாரரீதியில் பலவீனமான மக்களாகும், (வறியவர்கள்) இப்பலவீனமான மக்கள் தமது ஏழ்மைக்கும் அவ் ஏழ்மையிலேயே உழல்வதற்கும் உரிய காரணங்களை ஆராய்ந்து அதிலிருந்து விடுதலை பெறுவதற்கு கூட்டான அடிப்படையின் கீழ் செயல்பட கூடிய வழியில் ஊக்கப்படுத்தப்படுவர். இந்நூலின் ஒரு அத்தியாயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பந்திகள் மேலே குறிப்பிடப்பட்டன. இதனால் அறியக்கூடியது யாதெனில் வறியோர் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கான விடைகாண வேண்டுமென்றால் அவர்கள் அமைப்பொன்றின் கட்டுப்பாட்டிற்கு உட்படவேண்டும் என்பதாகும். அது ஒரு சாதாரண அமைப்பு அல்ல். ஒற்றுமையான அடிப்படையின் கீழ் ஆக்கபூர்வமானதாகவே இருக்க வேண்டும். வறுமையை ஒழிப்பதன் முதல் கட்டமானது அவர்கள் தைரியத்தை வளர்ச்சியடைய செய்துகொள்வது ஆகும். அதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வது அவசியம். இதன் அர்த்தமானது வறியோர் தம் சக்தியை வளர்ச்சியடையச் செய்துகொள்வதன் மூலம் அபிவிருத்தி செயல்களை செயற்படுத்தல், கண்காணித்தல், பரிபாலித்தல் என்பதாகும். வறுமையின் பொதுவான பிரச்சினைக்கு தீர்வுகாணக்கூடியது இவ்வாறான நடைமுறை மூலமேயாகும்.
173

Page 89
அபிவிருத்தியின் செயற்பாடு என்ற வகையில் வறியோர் அதன் இயக்குனர்களாக இடம் பெற்றுக் கொள்ளுதல் அ பரிவரிருத்தியை அவர் களது பொறுப் பு என ஏற்படுத்திக்கொள்வதன் மூலமாகவேயாகும். வறியவர்கள் தமது திறமைகளை வளர்ச்சி அடையச்செய்வது, அபிவிருத்தி செயல்களை ஆரம்பிப்பது மற்றும் அபிவிருத்தியின் இயக்குனர்களாக உருவாக்கிக் கொள்ளல் என்பன, அதற்குப் பொருத்தமான முக்கிய அமைப்பு முறையை அவர்கள் அமைத்துக் கொண்டால் மட்டுமே எற்படுத்திக் கொள்ள முடியும். இப்பிரபல அமைப்பு முறை என்பது என்ன?
வறியோர் தாங்கள் வசிக்கும் சூழலில் சமுக, பொருளாதார நிலைமையை தாமே விளங்கிக் கொள்தல் (யதார்த்தத்தை விளங்கிக்கொள்வது) என்ப தன் மூலம் அர்த்தம் கொள்வது யாதெனில் அவர்கள் வறியோர் ஆவதற்கு காரணமானதும் அதன் தொடர்புடையதானதுமான பிரச்சினைகளை ஆழமாக விளங்கிக்கொள்வதாகும். இவ்வாறு விளங்கிக்கொண்ட, அறிந்து கொண்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டுமென்றால், வறியவர்களின் கையில் இருந்து விலகிப்போன அவர்களது அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் கட்டாயமாக அதற்கான அமைப்பு அவசியமானதாகும் என்பதை ஏழைகள் தெரிந்து கொள்வர். இங்கே,
學. தனித்தனியாக தங்களது பிரச்சினைகளுக்கு
தீர்வுகாண இயலாது என்பதையும்.
- நடைமுறையிலுள்ள சம்பிரதாய
பூர்வ அமைப்பின் மூலம் அவற்றை பூர்த்தி செய்துகொள்ள இயலாது என்பதையும்.
அதற்காக கட்டாயமாக புதிய அமைப்பு ஒன்று அவசியம் என்பதையும் ஏழை மக்கள் விளங்கிக் கொள்வர்.
174

கிராமத்தில் இருக்கும் சம்பிரதாய சங்கங்கள் (கிராம அபிவிருத்தி சங்கம், சிககூ. சமூக அபிவிருத்திசங்கம் கிராமோதயம் போன்ற) யாவும் பெரும்பாலும் கிராமத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களால் நிர்வகிக்கப்படுதல் நாம் யாவரும் அறிந்த ஒன்றாகும். ஆதிக்கம் செழுத்துவோர் நிர்வகிக்கும் அமைப்புக்களை விட இடைஇடையே காணக்கூடியதாக இருக்கும் அமைப்புக்களும் ஆதிக்கம் நடத்துபவர்களின் சங்கங்கள் மூலமாக நடைபெறும் செயல்களையே செய்கின்றன. நடைமுறை அதிகார அமைப்பு முறையினுாடாக வறியோர் பின்னால் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் வறியோரின் பிரச்சினையை பற்றி ஆலோசிக்க வேண்டுமென்றால், அக்கலந்துரையாடலின் மூலமாக தீர்வுகாண வேண்டுமானால் மாற்று அமைப்பு ஒன்று கட்டாயமாக அவசியம்.
இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை ஆகிய தென்ஆசிய நாடுகளில் வறியோரால் ஆக்கம் செய்யப்பட்ட அபிவிருத்தி செயல்களினைக்கொண்டுநடத்துவதற்கான அமைப்பு என்றால் அது சிறுகுழு முறையேயாகும். இச்சிறிய குழுக்களின் செயற்பாடுகள் பொதுவாக "சிறு குழுமுறை" என்று அழைக்கப்படும். இதன்படி சிறுகுழுமுறை என்பதன் அர்த்தமாவது "சிறு சங்கம்” என்பதே எனக் கூற விரும்புகிறேன்.
சிறு குழு அமைப்பு
வறியோரை மையமாகக் கொண்ட அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த கிராம மட்டத்தில் உண்டான மிகவும் சிறிய அமைப்பு ”சிறு குழு” ஆகும். கிராம மட்டத்தில் ஏற்பட்ட மிகவும் அர்த்தமுள்ளதும் விமர்சனம் செய்யக் கூடியதும் ஒற்றுமையானதுமான சிறு குழுவினை மிகவும் ஜனநாயக ரீதியான ஓர் அமைப்பு என்று கூறலாம். எமது அறிவுக்கெட்டியபடி இவ் அபிவிருத்தி முறையானது முதன்முதல் இலங்கையில் ஏற்பட ஆரம்பித்தது,
175

Page 90
1978 இல்ஆரம்பித்த மாற்றுமுகவர் வேலைத்திட்டத்தின் மூலமே ஆகும். கிராம அபிவிருத்திக்கு புதிய அணுகு முறையான மாற்று முகவர் வேலைத்திட்டம் செயல்பட புதிய அமைப்பு முறை ஒன்று அவசியமானது. இவ்வாறான அமைப்பு முறையை செய்து கொடுப்பது சிறுகுழு மூலமே. மாற்றுமுகவர் திட்டம் பரீட் சார்த்தமாக செயல்பட மெட்டிக்கொட்டுமுள்ள, கம்புறுகமுவ, மாத்கமுவ, பின்னவல போன்ற நான்கு செயற்பாட்டு பகுதிகளில் முதன்முதலில் இவ்வாறான குழுக்கள் உருவாகின என்பது குறிப்பிடப்படல் வேண்டும்.
துடிப்பான செயற்பாடுள்ள சிறுகுழு ஒன்றின் அங்கத்தவர் தொகை 15-25 ற்கு இடைப்பட்டதாகும். சிறு குழுவின் அங்கத்தவர் தொகையானது 15-க்கு குறைவதோ அல்லது 25 ஐ விடக் கூடுவதோ அதன் பண்புகளுக்கு தீங்காகும், சிறுகுழு நிரந்தரமான பங்கேற்பு அமைப்பாக இயங்குவது அனைவரும் அதற்கு சமூகமளிக்கும் விதத்திலேயே ஆகும். குழு ஒன்றின் அங்கத்தவர் தொகை 25 ஐ விடகூடுதல் எல்லோரினதும் பங்குபற்றுதலுக்கு தடையாகக்கூடும். குழுவின் எண்ணிக்கை கூடுவதால் எல்லோருக்கும் தத்தமது எண்ணங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாம். மறுவகையில் 15ஐ விட குறைவதினால் கலந்துரையாடலில் சம்பந்தப்படும் விடயங்களின் அனுபவதன்மை குறைவதோடும் விடயதானங்களும் கூட குறைவடையும். இதன் மூலம் 15 க்கு குறைவான அங்கத்தவர்கள் உள்ள குழுக்கள் இருக்கக்கூடாது என்பது அல்ல. சில இடங்களில் 5 பேர் கொண்ட வெற்றிகரமான குழுக்களும் அமைந்துள்ளன.
சிறுகுழு ஒன்று மிகவும் ஜனநாயகதன்மைமிக்கதாகும். இங்கு அங்கத்தவர் அனைவருமே முகத்திற்குமுகம் பார்த்து சம்பாஷனை மேற்கொள்வர். வாதப்பிரதிவாதம் செய்வர். கலந்துரையாடலில் ஈடுபடும் சகல தீர்மானங்களும் எல்லோருமே சேர்ந்து தீவிர ஈடுபாடுகொண்டே மேற்கொள்ளப்படும்.
176

சிறுகுழுவில்மிகவும் இறுக்கமாக ஒழுக்கம் நிலவுவதைக் காணலாம். இந்த ஒரே காரணத்தினாலேயே இவர்கள் எப்பொழுதும் ஒற்றுமையாக காரியங்களில் ஈடுபடுவர். தீர்மானிக்கப்பட்டபடி குறிப்பிட்ட தினத்தில் கலந்துரையாடலை நடாத்தல் அதில் சகலரும் பங்குபற்றுதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட சேமிப்பு பணத்தொகை இருப்பின் அதனை முறையாக வைப்பிடல், சுய விமர்சனம், ஒவ்வொருவருக்கும் இடையில் இருக்கமான இணைப்பையும் நம்பிக்கையையும் வைத்தல் என்பது இவ்வொழுக்கத்தன்மையை வெளிப்படுத்திக்காட்டும் அம்சமாகும்.
சிறுகுழுமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் மூலம் புதிய முறையிலான அபிவிருத்திப்பணியாளர் உருவாகும் தன்மை காணப்படுகிறது. இவ்வாரான அபிவிருத்திப்பணியாளர்களை உள்ளே இருந்து இயக்கும் உயிர்ப்பூட்டுனர் எனக் கூறலாம். இவ்வாறானவர்கள் ஏனைய அங்கத்தவர்களின் அறிவைக்கூட்டவும் அபிவிருத்தி செயற்பாடுகளை விரிவுபடுத்தவும் உதவுகின்றனர். மரபுரீதியான சங்கங்களில் இவ்வாறானவர்கள் உருவாக வழியில் லை. அதோடு அவை எப் பொழுதும் உயர்வர்க்கத்தாரின் அதிகாரத்திற்கு உட்பட்டே இருக்கும்.
தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் வறியமக்களைத்தொடுவது கூட இல்லை. அவர்கள் அபிவிருத்தியில் இருந்தும் விடுபட்டுப் போனவர்களாக இருக்கின்றனர். அரச விரிவாக்க சேவைகளிலிருந்தும் உதவிசேவைத் திட்டங்களிலிருந்தும் வறியோருக்குக் கிடைக்க வேண்டிய பயன்கள் யாவற்றையும் அனுபவிப்பது பொருளாதார ரீதியாக பலம் படைத்தவர்களேயாகும். எனினும் வறியமக்கள் சிறுகுழுக்களாக அமைப்பிட்குட்பட்டதால் ஏற்பட்ட நன்மையாதெனில் குறிப்பாக விரிவாக்க சேவைத்திட்டம் இவ்வறியோரைத் தட்டிக்கழிக்க
177

Page 91
இயலாமல் போனதாகும். சிறுகுழுவாக ஒழுங்கமைந்த குழுவினர் தமக்குக் கிடைக்கவேண்டிய அனைத்து உரிமை பயன்களையும் தவறாமல் பெற்றுக்கொண்டனர். அரசின் உதவிச்சேவைத்திட்டத்தினை தமக்கு ஏற்றவாறு நெகிழ்வாக்கிக் (மாற்றி) கொள்வதில் இவ்வாறான குழுவினர் வெற்றிபெற்றனர்.
சிறுகுழு ஒன்று பிரவேசிக்கக்கூடிய பொருளாதார நடவடிக்கைகள்
எமது கலந்துரையாடலுக்கு உட்பட்டிருக்கும் சிறுகுழுவில் இருப்போர் வறியோர்களாவர். சிறு விவசாயிகள், கூலிக்காரர், சிறுமீனவர், குடிசைக்கைத்தொழிலாளர், வறியபெண்கள், சேனைப்பயிர்ச்செகையாளர் மற்றும் எவ்வித வருமானமும் அற்ற வறியோர், பல்வேறு அலங்காரப் பொருட்கள் உற்பத்தி செய்யும் சிறு உற்பத்தியாளர் (சிற்ப, சித்திர, பித்தளை, ரேந்தை, கைத்தறி தொழிலிடுபடுவோர்) ஆகியோர் சிறுகுழுவில் அங்கத்துவம் பெறலாம்.
சிறு குழு ஒன்று பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முயலும் போது, முதலாவது அது செய்யக்கூடிய காரியம் அவர்களிடத்தேயுள்ள சக்தியையும் தம்மால் ஒன்று சேர்க்கக்கூடிய வளத்தையும் பற்றிய ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாகும். இவ்வாறான குழுக்கள் முதலில் அபிவிருத்தித்திட்டங்களில் அவர்களது திறமை, சக்தி மற்றும் வளங்களை ஒன்றுபடுத்தல் நலமாகும். வெளி உதவிகள் (பொருட்கள் அல்லது பணமாக) நன் கொடைகள் , கடன் வசதிகள் வரும் வரை எதிர்ப்பார்த்திருக்காமல் தாம் அறிந்த அளவில் வறியோருக்கு பயன்தரக்கூடிய வகையிலான அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பிக்கவேண்டும். இவ்வபிவிருத்தித்திட்டம் மிகவும் சாதாரணமானவையாக - சிறியளவாக அமையலாம். எனினும்
178

அவை ஆக்கப்பூர்வமானவையாகும். நாம் ஏன் வறியோராய் ஆகினோம்? அது எப்படி நிலையானதாக மாறியது - எவ்வாறு அதிலிருந்து மீட்சி பெறலாம்? போன்றவற்றைப் பற் றிய வfளக் கத் தோடு ஆரம் பரிக் கப் படும் அபிவிருத்தித்திட்டங்கள் வெளியிலிருந்து திட்டமிடும் அமுலாக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விட எத்தனையோ மடங்கு மேலாகும். பல வகையிலும் வேறுபட்டவையாகும். எமது அனுபவத்தின்படி இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட்ட சிறு குழுக்கள் அவர்களின் முதல் அபிவிருத்தித்திட்டங்களை சிறு சேமிப்பு மூலமே ஆரம்பித்துள்ளன. தாம் இதுவரை செலவழித்த பணத்தின் ஒருசிறு தொகையை கூட்டுறவு அடிப்படையில் சேர்த்த இத்திட்டமானது நிதி அவசியப்படும் போது வெளியார் உதவி (வட்டிக் கடன்காரர் உதவி) யின்றி தமது வளங்களின் மூலமே முன்னேறிச்செல்லும். இவ்வாறான சேமிப்புத்திட்டங்கள் பிற்காலத்தில் மிகப்பெரும் நிதியமாக உருவாகியமை அவதானிக்கலாம். இப்பணமானது கடன் எடுக்க அவசர தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, விவசாய உபகரணங்கள், விதை நெல், உரம்,முதலியவற்றை வாங்கப்பயன்பட்டன. சுருக்கமாக கூறினால் இவ்வாறான வேலைத்திட்டங்களால் கட்டியெழுப்பப்படும் மனவலிமையும் நம்பிக்கையும் இன்னும் பரந்த பல்வேறு காரியங்களுக்கும் பரிரவே சரிக் க அ டி கோலு ம. அவ் வாறான சிறு அபிவிருத்தித்திட்டங்களின் முக்கியத்துவமானது அடங்கி ஒடுங்கிப்போயிருந்த வறியோரின் சக்தி மீண்டும் எழுச்சி பெறுதலாகும்.
இவ்வாறு ஆாம்பித்த சிறுசேமிப்புத் திட்டம் போலவே தமக் குச் சாதகமான ஒரு சந் தைப் படுத் தும் வேலைத்திட்டத்தினையும் சிறுகுழு ஒன்று ஆரம்பிக்கலாம். உதாரணமாகக் கூறுவதென்றால் கூட்டுச்சந்தைப்படுத்தல் தொடர்பான மிகவும் சிறிய வேலைத்திட்டத்தினை குழு அங்கத்தவர் ஒரு ஆரம்பமாக மேற்கொள்ளல் முடியும். இதுவரை தனித்தனியாக சந்தைக்குக் கொண்டுவரப் பட்டு
179

Page 92
விற்கப்பட்ட தமது உற்பத்திப் பொருட்களை கூட்டாக ஒரு அமைப்பாகக் கொண்டு வந்தால் சாதகமான பல அம்சங்கள் இருக்கும். இதன் போக்குவரத்து செலவினைச் குறைத்துக்கொள்ளலாம். முன்பு பெற்றதை விடகூடுதலான பணத்தைப் பெறலாம். குழுவாக விற்பதால் சரியான நிறையையும் (நிறுவையில் இடம்பெறும் வஞ்சனைகளை இல்லாமலாக்கி) பெற்றுக்கொள்ளலாம். இவையெல்லாம் மிகச்சாதாரண விடயங்களாகும். எனினும் இதன் உள்ளார்த்தம் மிகவும் உயர்ந்தது. ஆரம்பம் மிகவும் சிறியதாக இருப்பினும் இது ஒரு ஆழமானதும் சிறப்பானதுமான எதிர்காலத்தை நோக்கி நடைபோடும். இவ்வாறு மிகவும் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் மிகப்பெரும் சக்திபடைத்தோர், இடை நடுவிலிருந்து தடுத்தோர் ஆகியோரை எல்லாம் மீறி சிறப்பான அபிவிருத்தி முறையாக நிறைவேற்றக்கூடிய பல திட்டங்கள் உள்ளன.
சிறுழு அங்கத்தவர்கள் ஒன்றாக இணைந்து தமது நுகர்வு முறையை ஒழுங்குப்படுத்திக் கொள்வதற்காக மேற்கொண்ட பல வழிமுறைகள் பற்றிய பல உதாரணங்கள் உள்ளன. எது நுகர்வு செய்யப்படுகின்றது? நுகர்வுக்காக எப்படி பணம் செலவழிக்கப்படவேண்டும், நுகர்வுப் பொருட்களை எங்கே வாங்கலாம்? போன்ற அம்சங்கள் பற்றி தெளிவாக விளக்கத்தைப்பெற்ற சிறுகுழு அமைப்பு மிகவும் வெற்றிகரமான நுகர்வு சம்பந்தமான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர். நுகர்வுப்பொருட்களை வறியோர் வாங்கும் போது பல்வேறு விதமான சுரண் டல் களுக்கும் ஏமாற்றுதலுக்கும், உட்படுத்தப்படுகின்றனர். தமது நிதி நிலைமைக்கு ஏற்றவாறு நுகர்வுப் பொருட்களை வாங்குவோர் மிகவும் குறைவானோரே. உதாரணமாக பருப்பு. சீனி போன்றவற்றை 50 கிராம், 100 கிராம்களாகவே வாங்குவர். இவ்வாறாக மொத்தமாக ஒரு கிலோ அளவான பொருட்களை வாங்க 10 அல்லது 20 தடவைகள் (வாங்கவேண்டும்) செல்லும். இவ்வாறு
180

வாங்கும்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் அளவைக் கூட்டிப்பார்த்தால் ஒரு கிலோவிற்கு உண்மையில் கிடைக்கும் அளவு 850 கிராம் மாத்திரமேயாகும். கூட்டுறவுக்கடையில் பருப்பு ஒரு கிலோ ரூபா 25.00 ஆகும். ஆனால் ரூ. 25.00 ஒருவரிடம் மொத்தமாக இல்லாததால் அதை தனியார் கடையில் தான் வாங்குவார்கள். அங்கு பருப்பு ஒரு கிலோ ரூபாய் 30.00 ஆகும்.
ஐந்து தடவைகள் வாங்கும்போது ரூபாய் 30.00 பெறுமதியான பருப்பிற்கு கொடுக்கும் தொகை ரூபாய் 34.50 ஆகும். இந்த சிறு உதாரண மூலம் ரூபாய் 25.00 பெறுதியான பொருளுக்கு வறிய நுகர்வோன் ரூபாய் 9.50 கூடுதலாகக் கொடுக்கின்றான். (இது விமர்சனம் செய்வதால் வெளிவந்த அம்சமாகும்). இவ்வாறு வறியோர் முகங்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை கூட்டான நுகர்வு ஒழுங்குமுறையின் மூலம் வெற்றிகொள்ள முடியும். குழுக்கள் ஒன்றாக இணைந்து தொகையாகப் பொருட்களை வாங்குவதால் இரண்டுவித பயன்கள் கிடைக்கின்றன என இக்குழுவினர் அறிவார்கள். அதாவது சரியான அளவு பொருட்களை சரியான பணத்திற்கு வாங்கலாம் என்பதாகும். வறியவர்கள் உழைத்துப்பெறும் பணம் எந்த வகையில் வஞ்சக ரீதியாக வியாபாரிகளிடம் சேர்கின்றது என்பது இவ்வாறான விடயங்களை ஓரளவாவது கவனிப்பதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம். அரசாங்க வங்கியில் ரூபாய் 100.00 வைப்பிலிட்டால் அதற்கு ஒரு வருடத்திற்கு கிடைக்கும் வட்டி 15.00A மாத்திரமேயாகும். எனினும் இந்நூறு ரூபாயை கூட்டு நுகர்வுத் திட்டத்தில் பயன்படுத்தினால் சகலவிதமான பயன்களையும் பெற்ற பின்பும் வருட முடிவில் ரூபாய் 72.00 வட்டியாகப்பெறலாம். இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட சிறு குழுவினர் அனுபவமூலம் கூட்டு நுகர்வு வேலைத்திட்டம் உடனடியாகவே அதன் பிரதிபலனைக் காட்டுவதால் வறியோர் இதன்பால் ஈர்க்கப்ப்ட்டு முன்னேற்ற நிலையை காட்டும் ஒரு திட்டமாக இடம் பெற்றுள்ளது. குழு நடவடிகைகளில் பங்குபறுவதனால்
181

Page 93
சிறுகுழு அங்கத்தவர்களின் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவிற்கு கூடியுள்ளமையும் பல இடங்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமது வயலுக்குத் தேவையான உரம், இரசாயனப் பொருட்கள் கிருமி நாசினிகளை முறையாக பாவிக்க முடியாததால் உற்பத்தி குறைவடைகின்றது. எனினும் குழுவாக ஒழுங்கமைவதால் இப்பிரச்சினையைத் தீர்க்கலாம். ஒரு உற்பத்தியாளர் தனது உற்பத்தியின் அளவை குறைந்தது 10% ஆவது கூட்டிக்கொள்ள இயலுமாயின் அதன் மூலமே அவரது பொருளாதார நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். (நெல் விவசாயம் செய்வோர், சேனைப்பயிர்செய்கையாளர் வீட்டுத்தோட்டம் செய்வோர், குடிசைக் கைத்தொழில் செய்வோர் ஆகிய எல்லோரினது வாழ்க்கைக்கும் இதுபொருந்தும்)
விவசாயக்குழுவினர் ஒன்றாக இணைவதன் மூலம் அதாவது சகலரும் ஒன்றாக (அவரவருடைய வேலையை முடித்தபின்) மற்றவரின் வேலையைச் செய்து கூட்டுறவு முறையில் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு உற்பத்திச் செலவுகளைக் குறைத்துக்கொண்ட அனுபவமுண்டு. இவ்வாறான செயற்பாட்டினாலேயே தமது கடன் தொல்லைகளை இவர்கள் குறைத்துக்கொண்டுள்ளனர்.
சிறுகுழு அமைப்பின் மூலம் சேமிப்பு, சந்தைப்படுத்தல், உற்பத்தியைக்கூட்டுதல் முதலிடு, நுகர்வு போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முடியும் என்பதை ஏற்கனவே குறிப் பரிட்டுள்ளோம் . ஏற்கனவே இவ்வாறான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறு குழு நடவடிக்கைகளில் ஒரு செயற்பாடு மட்டுமே இடம் பெறுகின்றது என்பதல்ல. அது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். சேமிப்பில் இருந்து உற்பத்தி, சந்தைப்படுத்தல், நுகர்வு, முதலீடு. உற்பத்தியை அதிகரித்தல் என இது விரிவுபடும். இவை ஒவ்வொன்றும் சங்கிலியில் ஒரு வலையம் போன்றதாகும். ஒன்றுடன் ஒன்று
182

இணைந்து முன்னேறிச்செல்லுதலை இது குறிக்கின்றது. இங்கு தேவைப்படும் முக்கிய அம்சம் என்னவெனில் யதார்த்தத்தை தெளிவாகப்புரிந்து காரியத்தை செய்வதால் கிடைக்கும் அனுபவம் அதனைவிட விரிவான வேலைத்திட்டத்தை மேற்கொள்ள ஊக்கம் வழங்கும். வறியோரின் ஆக்கத்திறனை வெளியே கொண்டு வருதல் என்று கூறுதல் இக்காரியத்தையே ஆகும். சிறுகுழு ஒன்றிற்கு அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றினை மேற்கொள்ள ஊக்கமேற்பட்டதன் அடிப்படையில் நிச்சயமாக அவர்களின் திறமையும் வளர்ச்சிபெறும் என்பது இயற்கையாகும்.
சேமிப்பு சந்தைப்படுத்தல், நுகர்வு சமபந்தமான வேலைத்திட்டங்களின் ஆரம்பத்துடன் வறியோருக்கும் எளிய முறையிலான கணக்குவைக்கும் முறைபற்றிய விளக்கமும் கிடைத்தது. சிறுகுழு சங்கக்குழுக் கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல் பற்றிய அறிக்கைகளை எழுதுவதன் மூலம் இதுபற்றிய விபரங்களும் வறிய மக்களுக்கு ஏற்பட்டது குறிப்பிடக்கூடியது. இதன் மூலம் வறியோருக்கு இதுவரை தாம் தொடர்புராத பல விடயங்களில் விபரங்களைப் பெரும் ஆர்வமும் ஏற்பட்டது. கிராம உயர்வர்க்கத்தார், கல்விமான்கள் ஆகியோருக்கு மாத்திரமே கட்டுப்பட்டிருந்த சங்கங்களின் நிர்வாகம் பற்றிய பிரயோக அனுபவம் வறியோருக்கும் கிடைத்தது. விவசாய வேலைத்திட்டங்களின் மூலம் சிறு கைத்தொழிலில் ஈடுபடுவதன் மூலம் அடிப்படைக் கைத் தொழில் பற்றிய அறிவையும் வறியோர் பெறத்தொடங்கினர்.
எழுத்தறிவை வைத்துக்கொண்டு வறியோரைக் கீழ்மைப்படுத்தி வைத்திருந்த கிராம பாரம்பரிய தலைமைத்துவம் வறியோரின் திறமை வளரத்தொடங்கவும் அப்பாவிகளாக மாறிவிட்டனர்.
183

Page 94
சிறுகுழு வளர்ச்சியுடன் வறியோர் தமது திறமையைக்கொண்டு அரசாங்க, அாசு சார்பற்ற அமைப் புக்கள், அரசாங்க வங்கி போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து தமக்கு கிடைக்ககூடிய பயன்கள் பற்றிய தெளிவான அறிவைபெற்றுக்கொண்டனர். இதன் பெறுபேறுகள் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய பிரதிபலன்கள் யாவும் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
"வறியோர் நம்ப முடியாதவர்கள்" "அவர்கள் சோம் பேறிகள் ": "அவர்கள் பெற்ற கடனைத் திருப்பித்தரமாட்டார்கள” போன்ற கருத்துக்கள் பொதுவாக வங்கியாளர்களிடம் நிலவுகின்றது. எனினும் முறையாக அமைக்கப்பட்ட ஒரு சிறுகுழுவானது அதன் திறமையையும் அறிவையும் பெருக்கிக்கொண்டதன் பயனாக வங்கியாளரின் சகல பிழையான கருத்துக்களையும் தீர்க்கக்கூடியதாக இருந்தது. அநேகமான குழுக்கள் கடனை நூற்றுக்கு நூறு வீதம் திருப்பிச் செலுத்தியுள்ளன. இவ்வாறான செயல்களால் வறியோருக்குக்கூட திருப்பிச்செழுத்தமுடியும், இவர்கள் வங்கியால் நம்பக்கூடிய பிரிவினர் என்ற எண்ணத்தை வறியோரிடமிருந்து பெற்ற சிறந்த அனுபவம் மூலம் வங்கி ஏற்படுத்திக்கொண்டது.
சிறுகுழு அமைப்புக்களை தொடந்தும் இயக்கிச்செல்ல:-
பல்வேறு காரியங்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் கிராமங்களில் உருவாக்கப்பட்ட கிராமப்புற சங்கங்கள் சிறிது காலத்துக்குள் செயலிழந்து போவது பொதுவான அம்சமாகும்.
இதற்கு பிரதானமான காரணம் அநேகமான சங்கங்கள் வறியோரின் பிரச்சினைகள் தொடர்பாக அக்கறை காட்டாமையே என்பதனைப்பற்றி முன்னைய அத்தியாயத்தில்
குறிப் பரிட் டோம். எனினும் புதிய அபிவிருத்தி அணுகுமுறைக்கேற்ப உருவாக்கப்பட்ட சிறுகுழு அமைப்புகள்
184

வெற்றிகரமாகத் தொடர்ந்தும் இயங்கிவரும். அவ்வாறு இயங்கிவருவது பற்றியும் அனுபவ மூலம் அறியக்கூடியதாக உள்ளது. அவ்வாறு வெற்றிகரமாக இயங்கும் இவ்வாறான சங்கங்களைப் பற்றி விமர்சித்துப்பார்க்கையில் அவை சிறந்த மக்கள் அமைப்புக்களாக மாறும் தொடர்ச்சியான இயக்கத்திற்கும் பல காரணிகள் ஏதுவாக அமைந்தன
9,606) tufta) 1607:-
இக்குழுக்கள் தொடர்ச்சியாக கூட்டம் நடத்துவன. இங்கு நடத்தப்படும் கலந்துரையாடல் எப்பொழுதுமே அங்கத்தவரின் அறிவைக்கூட்டுவதற்கு காரணமாயின. இச்சிறு குழுக்கள் ஆரம்பகால நடவடிக்கைகளுக்காக ஒரு இடையீட்டாளரின் உதவியைப்பெற்றுக்கொண்டன. இவரின் உதவியுடன் தங்கள் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளவும் அதன் மூலம் அதற்கு பரிகாரம் காணும் முயற்சியும் இடம்பெறும். இச்செயல்முறை மூலம் கிடைக்கும் அறிவும் பொருளாதார ரீதியில் கிடைக்கும் இலாபமுமே வறியவர்கள் தொடர்ந்தும் பங்குபற்றுவதற்கு காரணமாக அமைந்தன.
சிறுகுழு ஒன்றின் வாழ்க்கையானது அங்கத்தவர்கள் அன்றாடம் அறிவையும் விபரங்களையும் பெற்றுக் கொள்ளக்காட்டும் ஆர்வத்திலேயே தங்கியுள்ளது. அறிவைக்கூட்டிக்கொள்வதற்கு கற்றுக்கொள்ளும் செயல் முக்கியமான ஓர் அம்சமாகுமி. ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி செயல்திட்டங்கள் வெற்றியுடன் முன்னெடுத்து செல்லுவதானது அங்கத்தவரிடையே மறைந்து கிடக்கும் ஆக்கத்திறன்களை வெளிப்படுத்தும் செயற்பாடே ஆகும். இது அறிவை ஏற்படுத்துவதன் மூலமே இடம்பெறும்.
மக்கள் அபிவிருத்தி செயற்பாடுகளில் வெற்றியாக அமைவது, அதில் உள்ள தொடர்பு, கொள்கைகளைப் பொறுத்தே அமையும். சிறுகுழுக்களில் காணக்கூடிய மிக முக்கிய அம்சம் இத்தொடர்புகொள்ளலாகும்.
185

Page 95
அங்கத்தவரிடையே கலந்துரையாடல். விவாதம் சம்பாஷனை விளக்கங்கள் என்பவை மூலம் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லக் கூடியதாக இருக்கும். அபிப்பிராயங்கள் மூலம் கிடைக்கும் போசனையானது சிறுகுழுவின் தொடர்ந்த இயக்கத்திற்கு பாலமாக அமைகின்றது. சகல குழுக்களும் தாம் ஆரம்பித்து எடுத்துச்செல்லும் சகல வேலைத்திட்டங்களையும் மீட்டுப்பார்ப்பது அவசியமாகும். இவ்வாறு திரும்பிப்பார்த்தல் நிரந்தரமாக இடம்பெறவேண்டும். இம்முறையின் மூலம்தான் பிழைகளை நீக்கி முன்னேறிச் செல்லமுடியும். அங்கத்தவர்கள் வாரத்திற்கு ஒருமுறை அலி லது இரு வாரங்களுக்கு ஒருமுறைக்கூடிப்பேசுவதன் சாரம் இதுவாகவே அமையும். இம்முறை மூலம் குழுவானது குறைபாடுகளை நீக்கி முன்னேறிச்செல்ல முடியும்.
gep d5, பொருளாதார அடிப் படை யரில் பலவீனமுற்றிருக்கும் வறிய பிரிவின் அபிவிருத்தி செயற்திட்டத்தை முறையாக ஒழுங்கமைத்துக் கொள்வதற்காக வெளி இடையீட்டாளர் ஒருவரின் ஒத்துழைப்பு ஆரம்பக்கட்டத்தில் பெற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம் அவர்களின் அறிவு கூட்டிக்கொள்ளப்படும். எனினும் இந்நிலை தொடர்ந்தும் நீடிக்கமுடியாது. நிரந்தரமாக இவ்வாறான வெளி இடையீட்டாளர் உதவியை எதிர்ப்பார்க்கமுடியாது. ஏனெனில் அவரின் வெளியேற்றத்தின் பின் அபிவிருத்தித் திட்டம் அப்படியே நின்றுவிடும் என்பதனாலாகும். ஆகவே சிறுகுழுக்கள் தாம் ஆரம்பிக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்குள்ளேயே இயங்கக்கூடிய உள்உயிர்பூட்டுனர்கள் சுயமாக உருவாகவேண்டும். இது பங்கேற்பு அபிவிருத்தி முறைமையில் முக்கியமான ஓர் அம்சமாகும். இவ்வாறு அடையாளம் காணப்படும் உள் உயிர் பூட்டுணர்களினலால் தான் மேலும் தம்மைப் போன்றவர்களை உருவாக்கவும் அத்தகையோரின் தொகையைக்கூட்டவும்முடியும்.
186

குழு அமைப்பாக தொடர்ந்தும் இயங்குவதற்கு இவ் வாறானவர் கள் மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றனர். வெளி இடையீட்டாளரிடமிருந்து இம்முறையின் மூலம் மட்டும்ே விலகி இயங்கமுடியும். இவ்வாறான குழுக்களின் உள்ளேயே உயிர்ப்பூட்டுனர்கள் உருவாகியுள்ளமையை எமது அனுபவத்தின் மூலம் அறிந்துள்ளோம். இது ஒரு குழுவின் தொடர்ச்சியான இயக்கத்திற்கும் அதனை நடத்திச்செல்லவும் காரணமாக அமைந்துள்ள.
ஒரே வரிதமான அ பரிவரிருத் தி முறையில் சிக்கிக்கிடப்பதால் சில குழுக்கள் செயலற்றுப் போகின்றன. இவ்வாறு குழு முன்னேறிச் செல்லவேன்டுமாயின் இவ்வாறான தனித்தன்மையில் இருந்து விடுபடவேண்டும். ஒரு அபிவிருத்தி முறையின் மூலம் இன்னொரு முறையை இணைத்துக் கொள்ளவேண்டும். வேலைத்திட்டமானது நெகிழ்வாக, நீக்குப்போக்காக அமைய வேண்டும். அவ்வாறு அமைவதற்கு வேலைத்திட்டம் நன்கு ஆழமாகவும் பரந்தும் அமைவது அவசியம், அவ்வாறு அமைவதற்கு குழு அங்கத்தவரிடையே நிரந்தர கலந்துரையாடலும் விவாதமும் இடம்பெறவேன்டும்.
சுயவிமர்சனம் மிகவும் அவசியமாகும். சகல அம்சங்களும் கலந்துரையாடலுக்கு குறிப்பாக தெளிவான விமர்சனத்திற்கு உட்படவேண்டும். ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு அங்கத்தவர்கள் செவிசாய்த்து மதிப்பளிக்க வேண்டும். குறைபாடுகளை, ஆக்கபூர்வமாக விமர்சிப்பதன் மூலம் மாத்திரமே தவிர்த்துக்கொள்ளமுடியும். சகல பெறுபேறுகளும் விமர்சன ரீதியான பகுப்பாய்விற்கு உட்படல்வேண்டும். அமைப்பின் தொடர்ச்சியானதும் அர்த்தபூர்வமானதுமான இயக்கத்திற்கு இவை உதவியாக அமையும்.
எந்தளவு சிறு அமைப்பாக இருந்தபோதிம் அதிகாரம், பதவி என்பன காலத்திற்கு காலம் மாறவேண்டும். குழுவில் உள்ள மிகவும் அமைதியான அங்கத்தவரும் கூட ஒரு நாளில் பதவி வகித்தே ஆகவேண்டும். சங்கப்பதவிகள் ஒரு சிலரிடமே தங்கிவிடல் என்ற சம்பிரதாயம் இத்துடன்
187

Page 96
முடிவடையும். இவ்வாறாக காலத்திற்குக்காலம் பதவிகள் பல்வேறுபட்டவர்களுக்கும் மாறி மாறி கிடைப்பதால் சகல பதவிகளையும் வகிக்க எல்லா அங்கத்தவர்களுமே பொருத்தமானவர்களாக உருவாக்கப்படுகின்றனர். ஒவ்வொருவரின் உள்ளேயும் மனறந்து கிடக்கும் திறமைகள் வெளிவரும். தனக்கு சங்கத்தில் ஒரு பதவி வகிக்க முடியாது. அப்பதவிகளுக்கு விசேட திறமை படைத்தோர் உள்ளனர் என்ற பழைய எண்ணங்களை உடைத்தெறிந்து சிறுகுழு அங்கத்தவர் சிறந்த செயல்வீரராக மாறுவர். சிறுகுழு அமைப்பின் போது ஏற்படும் மாற்றம் மிகவும் உயர்வானதாகும். இவ்வகையில் அதிகாரம் கைக்குக் கை மாறிச்செல்லும். சங்கங்கள் கிராம மக்களின் பாராட்டுக்களைப் பெறுகின்றது. அதேபோல் அமைப்புக்களின் நீண்டகால இயக்கத்திற்கும் இது வழிகோலுகின்றது.
சிறு குழுக்களும் இணைந்த அமைப்புக்களும்
சிறு குழுக்களுக்கு அவர்களின் சக்தி, வளங்கள். விளக்கம் என்பவற்றின் மூலம் இயங்கக்கூடிய அளவு வரையறை ஒன்றுள்ளது. இந்த பூரண நிலையை அடைந்த ஒரு குழு தான் செய்த காரியங்களைவிட மேலும் விரிவான காரியங்களில் ஈடுபட ஆவலும் ஊக்கமும் எற்படுவது இயற்கையே. எனினும் இது ஒரு சிறுகுழுவால் மாத்திரம் செய்யக்கூடிய காரியமல்ல. எமது அனுபவத்தின்படி ஒரு சிறுகுழு உருவாகியதும் அதனது அனுபவத்தின் அடிப்படையில் அதனை மாதிரியாகக்கொண்டு மேலும் சிறு குழுக்கள் உருவாவது சாதாரண அம்சமாகும். 125 குடுமபங்கள் உள்ள ஒரு கிராமத்தில் 7 அல்லது 8 அல்லது அதற்கும் கூடுதலான (20அளவு) எண்ணிக்கையிலான சிறுகுழுக்கள் இருக்கக்கூடும். சிறுகுழு ஒன்று அதனது சக்தியைக் கூட்டி ஸ்திரமடைந்தபின் அதற்கு சமமான குழுக்களுடன் இணைவதால் பெறக்கூடிய பலன்கள் மிகவும் அதிகம். அவ்வாறு இணைவதன் மூலம் ஒருபெரிய அமைப்பை
188

ஏற்படுத்தித் கொள்ளமுடியும். இவ்வகையில் உருவாக்கப்பட்ட ஒன்றிணைந்த அமைப்புக்கள் ஏற்கனவே இலங்கையின் பலபகுதிகளிலுமுள்ளன இவ்வாறான ஒன்றிணைந்த அமைப்புக்களால் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் பல உள்ளன. சிறு குழுக்கள் பலவும் ஒன்றிணைந்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் கலந்துரையாடவும் வாய்ப்பு கிடைக்கின்றது. பங்கேற்பு அபிவிருத்தி நடைமுறையில் வறியோர் ஒன்றுகூடி கலந்துரையாடுவது மிகவும் அர்த்தபுஷ்டியானதாகும். ஏனெனில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த இப்பயிற்சி மிகவும் பிரயோசனமாகும். ஒருகுழு பெற்ற அனுபவம் மற்ற ஒரு குழுவினருக்கு கட்டாயமாகப் பெறுமதியாக அமையும். இவ்வாறான கலந்துரையாடலின் பின் அவரவர் குழுக்களை மேலும் பலப்படுத்திக்கொள்ள சக்தி கிடைக்கிறது. குழுக்களின் பலத்தைப்பற்றிப்பேசுவது போல், பலவீனம் பற்றிப் பேசுவதன் மூலம் புதிய முறையின் அனுபவத்தை அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறான ஒன்றிணைந்த அமைப்பிற்கு ஒவ்வொரு சிறுகுழுவிலிருந்தும் இரு அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் உள்ளன. அந்த அங்கத்தவர்கள் சிறுகுழுவிற்கும் ஒன்றிணைந்த அமைப்பிற்குமிடையே தொடர்புகளை ஏற்படுத்துவர்.
சிறு குழுக்களின் அபிப்பிராயங்களை கருத்துக்களை ஒன்றிணைந்த குழுவில் இப்பிரதிநிதிகளே முன்வைப்பர், இப்பிரதிநிதிகள் அநேகமாக ஆறுமாதத்திற்கு ஒருதடவை மாறுவர். ஆறு மாதத்தின் பின் வேறு இருவரை சிறுகுழுப் பிரதிநிதிகளாக நியமனம் செய்யும். இவ்வாறு சிறுகுழுவின் எல்லா அங்கத்தவர்களுமே ஒன்றிணைந்து அமைப்பில் பிரதிநிதிகளாக நியமனம் பெறும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறாக நிரந்தர ஜனநாயகம் இங்கு இடம் பெறும். ஒன்றிணைந்த அமைப்பின் நிர்வாகிகளும் இவ்வாறே
189

Page 97
காலத்துக்குக்காலம் மாறுவர். முழு அங்கத்தவரின் தேவைகளையும் சிறுகுழு நிறைவேற்றுவது சிரமமாகும். அவற்றை இவ்வாறான பெரிய அமைப்புகளால் மாத்திர மே மேற்கொள்ள முடியும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட கால்வாயின் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் தொகை 250 பேராயின், இக்கால்வாய் தொடர்பான பிரச்சினையில் 20 அல்லது 25 சிறு குழுக்களால் செய்யக்கூடிய நடவடிக்கை ஒன்றுமில்லை. இது தொடர்பாக பலமான குரலெழுப்ப வேண்டியுள்ளது. 250 பேரும் பிரநிதித்துவம் வகிக்கும் ஒன்றிணைந்த அமைப்பின் மூலமே இவ்வாறான குரல் எழுப்பமுடியும்.
பிரதேசத்திலுள்ள அரசியல் வாதி அல்லது பாராளுமன்ற அங்கத்தவர் மூலம் ஏதாவது ஒரு காரியத்தை மேற்கொள்ளவேண்டிய தேவையிருப்பின் அதற்கு எண்ணிக்கை கூடுதலாக இருக்கவேண்டும். 25 பேருக்கு குறைந்த குழுவினரின் குரலைவிட 500 பேரடங்கிய அமைப்பிற்கு பாராளுமன்ற அங்கத்தவர் கட்டாயம் செவிமடுப்பர். பாராளு மன்றப்பிரதிநிதியால் இவ்வாறான ஒழுங்கமைப்பிற்குட்பட்ட அமைப்பின் கோரிக்கைகளை நிராகரிக்கமுடியாது. இன்னொரு மிக முக்கிய அம்சம் யாதெனில் இவ்வாறான ஒழுங்கமைப்பிற்குட்பட்ட அமைப்புக்கள் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைக்கமாட்டா. அரசாங்க திணைக்களங்கள், உதவிபுரியும் நிறுவனங்கள். வங்கி போன்ற நிதி நிறுவனங்களோடு இயங்கும்போது அவை கூடிய எண்ணிக்கையானோரின் சக்திக்கு இடம் கொடுப்பது அவதானிக் கக்கூடியது. ஆகவே இவ்வாறான நிறுவனங்களிடமிருந்து உரிமைகளைப் பெற்றுக்கொள்ள பலமான ஒன்றிணைந்த அமைப்புக்கள் மிகவும் பிரயோசனமானவையாக அமையும். வங்கிகளின் கடன் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரவும், அவற்றை வறியோருக்கு பொருந்தக்கூடியதாக ஆக்கிக்கொள்ளவும் ஒன்றிணைந்த அமைப்பிற்கு பல வாய்ப்புக்கள் உள்ளன என்பது அனுபவத்தில் கண்டவைகளாகும். -
190

வெளியில் உள்ள நிறுவனங்களுடன் இயங்கும்போது பிரதான பெரிய அமைப்புக்களின் தேவை நன்கு புலப்படும். பெரிய அமைப்புக்களில் இருக்கும் மிக முக்கிய அம்சம் அவற்றின் பேரம்பேசும் சக்தியாகும். வறியோர் எல்லாச்சந்தர்ப்பங்களிலுமே தமக்கு பேரம் பேசும் சக்தியற்ற காரணத்தினாலேயே சமூக, பொருளாதார ரீதியில் பாதிக்கபபடு கின்றனர், பேரம்பேசும் சக்திமூலம் சமூக நன்மை பெற்றது பற்றிய சில உதாரணங்களைப் பார்ப்போம்.
ஒரு ஒன்றிணைந்த விவசாயிகள் அமைப்பு அதன் முழு அங்கத்தவர்கள் தொகையான 350 பேருக்கும் உரம், கிருமிநாசினி. விவசாய இரசாயனப் பொருட்களை மொத்தமாக கொண்டு வந்தது ஒரே முறைதான். இங்கு விவசாயிகளது போக்குவரத்துச் செலவினம் குறைந்தது. நேரம் மீதமானது. வட்டியற்ற கடனைப் பின்பு திருப்பிச்செலுத்தக் கூடிய நிலை இருந்தது. இவை அத்தனையோடும் பெரும் இலாபமும் கிடைத்தது. மொத்தமாக வாங்கியதால் 15% கழிவும் கிடைத்தது. இது ஒன்றிணைந்த அமைப்புக்குட்பட்டதால் தான் ஏற்பட்டது.
வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த தயாராக இருந்த விவசாயிகளுக்கு நெல்லை உடனடியாக விற்பதன் மூலம் மிகவும் சிறிய தொகையே பெறக்கூடிய நிலை இருந்தது. இதே நெல்லை மூன்று மாதங்கள் வைத்திருந்தால் பெரும் தொகைப் பணம் கிடைக்கக்கூடிய நிலை இருந்தது. அதே வேளை கடனை மூன்று மாதத்தின் பின்பு வங்கிக்கு செலுத்துவதால் கூடக்கூடிய தொகை மிகவும் சொற்பமே.
விவசாயிகளுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளை எடுத்துக்கூறிய பின் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு வங்கி செவிசாய்த்து கடன் செலுத்துதலை பிற்போட்டது. இந்த நன்மை ஏற்பட்டதற்குக் காரணம் குழுக்கள் ஒன்று சேர்ந்து கலந்துரையாடியமையேயாகும்.
191

Page 98
தென்னிலங்கையில் சமூக பொருளாதார ரீதியில் கிராமப்பிரபுக்கள் பலமிக்கவராக இருக்கின்றனர். ஒரு நிலப்புரபுவின் மாடு வறிய விவசாயி ஒருவரின் வயலுக்குள் நுழைந்து விவசாயத்தை எல்லாம் நாசம் செய்துவிட்டது. வரிவசாயி சங் கத்தின் ஒர் அங்கத்தவராவார். மாட்டைக்கட்டிவைத்துவிட்டு நிலப்பிரபுவிடம் நட்டஈடு GBgSri ff6ðffTft. ஆனால் நிலப்பிரபு பலமான பிரபலமான ஒருவர் என்பதால் மாட்டை பலாத்காரமாக கொண்டு சென்றதுடன், விவசாயியையும் நிந்தித்தார். இதற்கு முன்பெல்லாம் இச்செயல் ஒரு சாதாரணமானது ஆகும். விவசாயிகள் அமைப்பிற்குட்பட்டிருந்ததால் நிலைமை மாறியது. விவசாயிகள் சங்கம் கூடியது. சிறுகுழு ஒன்றிணைந்த குழுவிற்கு அறிவித்தது. சிறு குழுவின் பலம் குறைவாக இருந்தபோதிலும் ஒன்றிணைந்த குழு முறையாக சக்தியாக அமைந்திருந்தது. ஒன்றிணைந்த விவசாயிகள் அமைப்பிற்கு முன் நிலப்பிரபு முதன் முதலாக சரண் அடைந்தார். பொதுக்கூட்டத்தில் அவர் வறிய விவசாயியிடம் மன்னிப்புக் G35|TrfaoTfift. நட்டஈட்டையும் செலுத்தினார். மீண்டும் இவ்வாறான ஒரு செயலில் ஈடுபடமாட்டேன் என ஒத்துக்கொண்டார். வறிய விவசாயிகளின் சக்திக்கு முன் பலமிக்க நிலப்பிரபு விருப்பத்தோடில்லாவிட்டாலும் சரணடைய வேண்டியதாயிற்று.
இச்செயல்கள் சிறியவையாக இருக்கலாம். எனினும் சமூக பொருளாதார ரீதியில் பலவீனமுற்ற பிரிவினரிடம் இல்லாமல் போன தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முன்வந்தமையும் அநீதிக்கு முன் வளைந்து கொடுக்காமலும் இருப்பதற்கு பலம் கிடைத்தது. இவ்வாறான அமைப்புக்களால் தான் என்பது கவனிக்கத்தக்கது.
ஒன்றிணைந்த இயக் கத்தின் மூலம் போராட்டங்களை நடாத்திய சந்தர்ப்பங்களும் உண்டு. மக்கள் எதிர்நோக்கும் சில பிரச்சனைகளைப்பற்றி போராட சிறு குழுக்களுக்குப் பலம் போதாது. அதற்காக ஒன்றிணைந்த அமைப்பு அவசியமாகும்.
192

இங்கு ஒருமுக்கிய அம்சத்தைக் கவனிக்கவேண்டும். ஒன்றிணைந்த அமைப்பில் சேர்ந்தவுடன் சிறுகுழு ஒன்றின் சுதந்திரமான பண்புகள், பலமும் அதனுடைய சுதந்திரமும் இல்லாமல் போகாது. சிறுகுழு ஒன்றிணைந்த அமைப்பில் தனது தனித்துவத்தோடு தான் இணைகின்றது. இவ்வாறு ஒன்றிணைந்த அமைப்பில் சேர்வதால் சிறுகுழு ஒன்று பலவீனமோ அல்லது உடைந்தோ விடுவதில்லை. U
கிராமிய மட்ட அமைப்பு தேசிய மட்டத்தில் பிரவேசிக்கும் போது ܘܨ 臀 鬣 N
கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்தும் リgFリ@l) வெற்றிகரமான வேலைத்திட்டங்களிலும் பலமிக்க நிலையைப்பெறும் இலக்கக்குழு அதிலிருந்து மேலும் ஒருபடி தம் மால் போகமுடியும் என்ற நம் பரிக் கையை ஏற்படுத்திக்கொள்ளும். இந்தக் காரணத்தினாலேயே மேலும் விரிவான பல துறைகளையும் நோக்கி அவர்கள் செல்வார்கள்.
புதிய அபிவிருத்தி முறையின் கீழ் வறியோர் தங்களின் ஆக்கத்திறன் சக்தியை எழுச்சிப்பெறச் செய்ததன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகளை ஒழுங்குபடுத்தி சரிப்படுத்திக் கொள்கின்றனர். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் சிறு சேமிப்பு இயக்கத்தின் மூலம், சிறுகுழு ஒன்றினால் ஆரம்பிக்கப்பட்ட பொது நிதியமானது வறியோரின் திறன்களை வெளிக்கொணர்ந்தது. இந்தத்திறன் வளர்ச்சியானது அதனைவிடவும் மேலும் ஆழமான அபிவிருத்தி செயல்முறையை நோக்கிச் செல்லும் சக்தியாக உருவாகியது. சேமிப்பு மூலம் உருவான வறியோரின் கூட்டு அபிவிருத்தி வேலைத்திட்டம் சந்தைப்படுத்தல், நுகர்வுப்பொருள் உற்பத்தி மற்றும் முதலீடு போன்ற துறைகளை நோக்கி விரிவடைந்த அனுபவம் எமக்குண்டு. இதன் மூலம் வறியோரின் தைரியமும் சக்தியும் கூடியது. பொருளாதார அபிவிருத்தியானது பொதுவான அபிவிருத்தியாக இவ்வபிவிருத்தி முறை மூலம்
193

Page 99
பரிணமித்ததும் கிராம மட்ட அனுபவத்தின் மூலம் நாம் தெளிவாக உணரக்கூடிய ஒன்றாகும். வறிய மக்களைப்பற்றிய பிரயோகரீதியான பரந்த அறிவு (அவர்களது ஆக்கத்திறன் உருவாக்க) அடிப்படையில் விமர்சிக்கப்பட்டும் அவற்றை விமர்சிப்பதற்கு எவ்வாறு உதவுதல், பல்வேறு சமூக பொருளாதார பின்னணியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வெற்றி மிக்க அபிவிருத்தி நடைமுறைகளை எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும் என்பன பற்றிய உதாரணங்கள் பல எம்மிடம் உண்டு. கிராமமட்டத்தில் சிறுகுழுக்கள் ஒன்றாக இணைந்து உருவாக்கப்பட்ட ஒருமுகப்பட்ட அமைப்புக்கள், கொத்தணி சங்கங்கள், மத்திய அமைப்புக்கள் போன்ற அமைப்புக்கள் உருவாகியுள்ளன. கிராமிய மட்டத்திலிருந்து பிரதேச மட்டத்திற்கு இவ்வாறான சங்கங்களின் வளர்ச்சியைப்பற்றி அறியக்கூடியதாக உள்ளது. இந்த அமைப்புக்கள் தேசியமட்டத்தை நோக்கிச்செல்வது பற்றிய அனுபவங்கள் எம்மிடம் இல்லை. பிரதேச மட்டத்தில் உருவாகியுள்ள இவ்வாறான அமைப்புக்கள் அந்நிலையில் இருந்தும் உயர்ந்தும் தேசிய மட்டத்தை நோக்கிச் செல்லும் சக்தியைக் கொண்டுள்ளனவா.P
பிரதேச அளவில் கட்டியெழுப்பப்பட்ட அதிகாரம் தேசியமட்டத்திற்கு விரிவடைந்து செல்லக்கூடிய நிலைக்கு தடையாக இருப்பது என்ன? (இங்கு அதிகாரம் என்று கருதப்படுவது சமூக பொருளாதார நடைமுறையில் ଈJ றியோர்களை அவ்வறுமைக்குள்ளாக்கிய சக்திகளுக்கு எதிராக கட்டியெழுப்பப்பட்ட எதிர் சக்தியையே குறிக்கும்.)
பிரதேச மட்டத்தில் வறியோரால் ஆரம்பிக்கப்பட்ட மாற்று அபிவிருத்தி வழிமுறையானது வெற்றியடைவது பங்கேற்பு சுயசக்தி மூலம் கட்டியெழுப்பப்பட்ட பலத்தின் அடிப்படையிலாகும். கிராமிய அளவில் வறியோரின் அமைப்பு சக்தியானது உயர் மட்டத்தை அடைந்து செல்வதாயின் அதற்கு இரண்டு மாற்றங்கள் ஏற்படவேண்டும். முதலாவது,
194

வ றியோர் அவர் களது ஆக்கத் திறன் மூலம் கட்டியெழுப்பப்படும் அமைப்பு முறையின் அதிகாரத்தின் மூலமாக கிரமமான முறையில் கீழிருந்து மேலாக பரந்துசெல்லும் நடைமுறை ஒன்றை உருவாக்குதல். (இங்கு குறிப்பிடுவது யாதென்றால் - வறியோர் தமக்கெதிரான அதிகார சக்திகளை நீக்கி ஒதுக்கித் தள்ளிவிட்டு முன்னேறுதல் என்பதாகும்)
இரண்டாவது, வறியோரால் கீழ்மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட மாற்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு பொருந்தக்கூடியதாக மேல் மட்டத்தில் உள்ள சமூக, அரசியல் தடைகள் அகற்றப்பட்டு தேசிய அளவில் Gaffro? 6 EE) L u j; கூடிய தாக வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பதாகும். இதனை ஆற்றக்கூடியவர்கள் வறியோர் முன்னேற்றம் பற்றி மிகவும் அக்கறையும் அனுதாபமும் பக்தியுமிக்க ஆட்சியாளர்கள் மாத்திரமேயாகும். இந்த வகையில் இரண்டாவது மாற்றமானது, நடைமுறையில் இடம் பெறுமா? என்பதுபற்றி சிந்திப்பது கஷ்டமாகவுள்ள ஒன்றாகும். எனினும் நான் ஏ ற் கனவே குறிப் பயிட்ட முதலாவது மாற் றம் நடைபெறக்கூடியதாகும். இருப்பினும் அது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கோ அல்லது அமைப்புக்கோ தனியாக மேற்கொள்வது என்பது கடினமான காரியமாகும். இங்கு தேசியமட்டத்திற்கு புதிய அபிவிருத்தி முறைமையை எடுத்துச்செல்வதாயின் தெளிவான பார்வை, வழிமுறைகள் ஆகியவற்றைக் கொண்ட அரசு சார்பற்ற அமைப்புக்கள், பல்வேறு குழுக்கள். நிறுவனங்கள் மற்றும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவு தரக்கூடிய பல்வேறுபட்ட பிரிவினர் யாவரும் ஒன்று பட ல் வேண் டும் . இந் த அமைப்புக்களுக்கிடையில் ஒரு தொடர்பு முறை இருக்கவேண்டும். இதன் மூலம் சகல நிறுவனங்களுக்கும் சக்தியும் பாதுகாப்பும் கிடைப்பது மாத்திரமல்ல அது ஒரு பொதுச்சக்தியாகவும் அமையும் வாய்ப்பும் கிடைக்கும்.
195

Page 100
பங்கேற்பு, சுயசக்தி மூலம் வெளிப்படும் வறியோரின் ஆக்கத்திறன் சக்தியின் மூலமாக சமூக மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் எனக் கருதும் சகல அமைப்புக்களும் இதற்காக ஒன்றுபடல் வேண்டும். இவ்வாறு ஒன்றுபடுவதன் மூலம் பிரதேசமட்டத்தில் உருவாக்கிய எதிர்ச்சக்தியை தேசிய மட்டத்ததோடும் பிரதான அபிவிருத்தி நீரோட்டத்தோம் இணைக்கக்கூடியதாகக் கொண்டு செல்லமுடியும்.
இறுதியாக வறியோரின் அதிகாரம் எனக்கருதப்படுவது என்ன என சுருக்கமான விளக்கம் ஒன்றைத் தரலாமெனக் கருதுகின்றேன். “வறியோரின் அதிகாரத்தைக் கட்டி எழுப்புவது என்பது இன்னுமொரு பிரிவினரை நசுக்கவோ, அதிகாரம் செலுத்தவோ அல்லது சுரண்டவோ அல்ல. மாறாக தமது விடுதலைக்கே ஆகும். அதிகாரமிக்கோரின் அடக்குமுறையிலிருந்து விடுபடவும், சுரண்டலிலிருந்து மீளவும் ஆகும்." இது பொதுவாக இன்று சமூகத்தில் காணப்படும் அதிகாரத்தைவிட முழுமையான வித்தியாசமான ஒன்றாகும். இன்றைய சமூகப் பொருளாதார அமைப்பில் அதிகாரம் என்பது இன்னுமோர் பிரிவினரை அதிகாரம் செலுத்தி ஆளவும் கீழ்ப்படுத்தவும் பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகவே உள்ளது. “
வறியோரால் ஆக்கப்படும் அதிகாரத்தில் அவர்கள் மற்றவர்களின் சுரண்டலுக்கு உட்படாத பிரிவினராக இருப்பார்கள். அவ்வாறே இந்த அதிகாரமானது மற்றவர்களைச் சுரண்டவும் அடக்கவும் பயன்படுத்தப்படாத ஏனையோர் மீது அதிகாரம் செலுத்தாத அதி உயர்ந்த விசேடமான அதிகாரமாகும்.
196

சமுக அணிதிரட்டலும் அரசு சார்பற்ற நிறுவனங்களும்
வறியோரை மையமாகக் கொண்ட அபிவிருத்தி வேலைத் திட்டம் தொடர்பான சம்பாசனைகள், கருத்தரங்குகள், செயற்கூடங்கள், கலந்துரையாடல் போன்ற சகலவற்றிலும் சமுக அணிததிரட் டல் மற் றும் வறியோரை அமைப்பிற்குட்படுத்தல் என்பன பற்றி கூடுதலான கவனம் செலுத்தப்படுவது யாவரும் அறிந்ததே. கடந்த 15 வருட காலமாக பல்வேறு அரசு, அரசு சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமைப்புக்கள் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் பின் 1990 ஆம் தசாப்த காலத்தில் "வறுமையை ஒழித்தல்" என்பது அபிவிருத்தித் திட்டமிடலாளர்களின் பிரதானமான விடயமாக அமைந்துள்ளது.
வறியோரை அணிததிரட் டலுக் குட் படுத் தல் (வறியோரிடத்திலே மறைந்து கிடக்கும் ஆக்கத் திறன்களை வெளிக்கொணரல்) மற்றும் வறியோரை அமைப்பிற்குபடுத்தல் என்பவை இன்று பிரதேச மட்டம் முதல் சர்வதேச மட்டம் வரை மிகவும் ஆழமாக கலந்துரையாடப்படும் விடயங்களாகி விட்டன. சமூக அணிதிரட்டலைப் பற்றி பல்வேறு வரைவிலக்கணங்கள் எழுதப்பட்டுள்ளன. இது பற்றி எவ்வளவு வரைவிலக்கணங்கள் வெளிவந்த போதிலும் சர்வதேச ரீதியாக சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரைவிலக்கணம் இதுவரை முன்வைக்கப்படவில்லை, இதுபற்றி பல்வேறு கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.அத்தகைய வரைவிலக்கணம் கருதுகோள்கள், விளக்கங்கள் இருப்பினும்
197 R

Page 101
燃
வறியோர் தம்மில் மறைந்து கிடக்கும் ஆக்கத்திறனை வெளிக்கொணர்ந்து இன்று நடைமுறையிலுள்ள சமூக, பொருளாதார யதார்த்தத்தை அவர்களுக்கு பொருத்தமானதாக மாற்றியமைத்து, தமது சுயசக்தியில் நம்பிக்கை வைத்து. இன்றைய அதிகார சக்திகளுக்கு எதிரான ஒரு சக்தியைக் கட்டி எழுப்புவதற்கான சமூக, பொருளாதார செயற்பாடே சமூக அணிதிரட்டல் என்பதையே நான் விளக்கமாக கொடுக்க விரும்புகின்றேன்.
ஆசிய, ஆபிரிக்க கண்டத்தின் அமெரிக்க நாடுகளில் மக்கள் தொகையில் அதிகமானோர் வறியோராவர். எனினும் அந்நாடுகளின் சமூக, பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் இவர்கள் பங்கோ மிகவும் சொற்ப மேயாகும். திட்டமிடும்போதும் முடிவெடுக்கும்போதும், அவற்றை செயற்படுத்தும்போதும் அவர்களின் பங்களிப்பு
இல்லை, அவர்களின் எழுச்சிக்குரல் இல்லை, அபிவிருத்தி
பலாபலன்கள் எதுவுமே அவர்களிடம் வருவது இல்லை. எந்த அபிவிருத்தி வேலைத்திட்டமும் அவர்களால் உணரப்பட முடியாது. அவர்கள் பொருளாதார, சமூக நிலையில்
பலவீனமானவர்கள். இயங்கமுடியாதோர். எதிப்பார்ப்புக்களெல்லாம் தவிடுபொடியாகிப் போன உணர்வுடன் நிச்சயமற்ற எதிர்பார்ப்போடு அன்றாட
கஞ்சிக்காக போராடுவோராவர். இதனாலேயே மூன்றாம்
உலகத்தில் வறியோர் அபிவிருத்தி செயற்பாடுகளில் பங்குகொள்ள முடியாமல் பின் தள்ளப்பட்டிருப்பதோடு
பிரதான அபிவிருத்தி நீரோட்டத்திலிருந்தும் புறம் தள்ளப்பட்டுள்ளனர்.
வறுமையின் பிரதான வெளிப்பாடுகளான வேலையின்மை, போசாக்கின்மை மற்றும் பாடசாலை இடைவிலகல் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்காக மூன்றாம் உலக அரசுகள் பல்வேறு விதமான நலன்புரி வேலைத்திட்டங்கள். சேவைகளை அறிமுகப்படுத்தினர்.
198

மேலிருந்து கீழாக அமுலாக் கப் பட்ட இவர் வேலைத் திட்டங்களால் இந்நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் கூறப்பட்டது போல் நன்மையடைந்தோர் கிராமிய மட்டங்களில் இவ்வேலைத்திட்டங்களை அமுலாக்கிய வறியோரல்லாத வசதி படைத்தோரேயாவர். அப்படியாயின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் வறியவர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டாலும் கூட திட்டமிட்டோர் அவர்களின் தேவைகள், அவசியங்கள் என்பவற்றை தெரிந்து வைத்திருக்காமையால் இத்திட்டங்களில் வறியோர் சேர்ந்து செயற்பட முடியவில்லை. ஆகவே, பிரதிபலன் பெறமுடியாதவர்களாயும் ஆகினர். எனவே, இத்திட்டங்கள் வழமையான திட்டங்களாக மாறின. இதனாலேயே வறுமை என்ற பிரதான பிரச்சினையை இவ்வபிவிருத்தி முயற்சிகளால் தீர்க்கமுடியாமல் போய்விட்டது. அவை வெறுமனே தோல்வியான முயற்சிகளாகின.
இம்மரபு ரீதியான செயற்திட்டங்களுக்கு மாற்றுத் திட்டமொன்றினைக்காணுமுகமாக 1975 அரைப்பகுதிக்குப் பின் பல்வேறு சர்வதேச அபிவிருத்தி அமைப்புகளின் ஈடுபாடுகளோடு வறியோரின் ஏழ்மையை இல்லாமற் செய்யும் பொருட்டு, "வறிய மக்களிடையே உள்ள ஆக்கத்திறனை வெளிப்படுத்தி, அவர்களின் மத்தியிலுள்ள சுயசக்தியை ஒன்று திரட்டி, அதன் வறுமைப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்த்து வெற்றிகொள்வதற்கான அபிவிருத்தி முயற்சி ஒன்றிற்கு வழிப்படுத்துவதற்காக எடுக்கக் கூடிய முயற்சியையே நவ அபிவிருத்தி அணுகுமுறை” என்போம். வறியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு பங்கேற்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இலங்கையிலும் தெற் காசியாவிலும் காணக் கூடியதாக உள் ளது . இவ்வேலைத்திட்டங்கள் யாவுமே வறியோரை அணிதிரட்டி அவர்களின் ஆக்கத்திறனை உருவாக்கும் பங்கேற்பு அபிவிருத்தி வேலைத்திட்டமென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவ் வேலைத்திட்டங்களின் தன்மை, செயல்முறை உபாயமார்க்கம் என்பனவற்றில் பல்வேறு வேறுபாடுகள் gd 6iven goT.
199

Page 102
இலங்கை உட்பட தென்னாசியாவில் வறியோரின் ஊனநிலையை மேம்படுத்த அங்குள்ள அரசு சார்பற்ற
நிறுவனங்களின் பங்கு என்ன? வறியோரின் அடிப்படைப்
பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்து அப்பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்கான பலத்தைப் பெற்றுக் கொடுத்தல்,
அவ்வாறாகவே வறியோரால் உருவாக்கப்பட்ட மாற்று
அமைப்பிற்கான உதவிகளை பெற்றுக்கொடுத்தல், நடைமுறையிலுள்ள செயற்பாட்டு முறையில் கொண்டுள்ள
பிடிப்பை நீக்க வழிமுறையை ஏற்படுத்தல் என்பன இவற்றின் கடமைகளாம். சில அரசு சார்பற்ற அமைப்புக்கள் அரசாங்க நிறுவனங்களிலும் பார்க்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட விதிமுறைகளில் மூழ்கிப்போன அமைப்புக்களாக உள்ளன
என்பதை அறியலாம், ஒவ்வொரு அரசு சார்பற்ற
நிறுவனங்களின் நோக்கங்களும் வேறுபட்டவை
என்பதைப்பற்றி விவாதிக்க தேவையில்லை. சமய மற்றும் புண்ணிய கருமங்களில் ஈடுபாடுகொண்டுள்ள அரசு சார்பற்ற அமைப்புக்கள் பலவற்றை நாம் காணலாம். இவற்றில்
நலன்புரி நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபாடு கொண்டுள்ள
அரசு சார்பற்ற நிறுவனங்கள் பலவும் எம்மத்தியிலே உள்ளன. அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சனசமூக நிலையம் பாதைகள் ஏற்படுத்திக்கொடுப்பதில் கவனம் செலுத்தும் பெருந்தொகையான அமைப்புக்களும் எம்மத்தியில்
இயங்குகின்றன.
அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதான நோக்கம் அரசால் செய்யப்படாத, செய்ய முடியாத எனினும் செய்ய
வேண்டிய காரியங்களை அடையாளம் கண்டு அவற்றிக்காக
மாற்று வேலைத்திட்டமொன்றினை அமுலாக்குதலாகும். இங்கு ஆற்ற வேண்டிய காரியங்கள் எவை என்பதைக் கண்டுபிடிப்பதனைவிட வறுமையை நீக்குவதில் பயன்படுத்தக் கூடிய பெளதீக, உளவியல் ரீதியான தேவைகளை அறிந்து அவற்றை நிறைவே ற்றிக்கொள்ள மக்களுக்கு உ தவுவதே முக்கியமாகும். 臀
 

அபிவிருத்தியில் ஓரளவாவது தொடர்புள்ள எந்த ஒரு அரசு சார்பற்ற நிறுவனமும் செய்யக்கூடியதெல்லாம் சமூக அணிதிரட்டல் மூலம் வறியோரை அமைப்பிற்குட்படுத்தலோடு அதற்கான காரியங்களை மேற்கொள்ளுதலாகுமி, அது தொடர்பான ஆரம்ப காரியபரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். (பரீட்சாத்த வேலையை மேற்கொள்ள வேண்டும்) இவற்றை மேற்கொள்ள வேண்டுமாயின் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு தமது செயற்பாடுகளைப் பற்றிய தெளிவான விளக்கம் இருப்பது அவசியம். சிறந்த அத்திவாரம் இருப்பது அவசியம். பிரச்சினையை அடையாளம் காணல், அவை தோன்றுவதற்கான காரணம், அவற்றிக்கான தீர்வைத்தேடல், தீர்வுகளை நடைமுறைப்படுத்தல, நடைமுறைப்படுத்தியது முதல் பல்வேறு கட்டங்களிலுமான மதிப்பீடு செய்தல் வரையிலுமான சகல கட்டங்களிலும் இலக்குக்குழுக்களே முதன்மை இடம்பெறல் வேண்டும். நடைமுறையில் பார்க்கும் போது இங்கு கூறப்பட்ட கட்டங்கள் எல்லாவற்றிலும் வறியோர் முதன்மைத்தானம் பெற்றிருந்தனர் என்பது அருமையாகவேயாகும். அவ்வாறான வகையில் பங்கேற்பு அபிவிருத்தி செயற்பட முடியாது.
இந்நூலின்ஆரம்பத்தில் கூறப்பட்டிருப்பது போல் பங்கேற்பு அபிவிருத்தியின் இரு அடிப்படை அம்சங்கள் மக்களின் ஆக்கத்திறன் சக்தியை எழுச்சி பெறச்செய்தல் மற்றும் அதன் மூலம் உயிர்ப்பெற்று எழும் செயற்பாடுகளை கொண்டு செல்வதற்கான மாற்று அமைப்புக்களை எழுச்சி பெறச்செய்தல் என்பவையாகும்.
அணிதிரட்டல் மற்றும் பங்கேற்பு அபிவிருத்தி செயற்பாடுகளின் போது அரசு சார்பற்ற அமைப்புக்களின் பங்கானது மிகவும் அவசியமானதும் முக்கியமானதாகவும் உள்ளது. இத்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் விசேடமானவையாகும். அணிதிரட்டல் திறன், மற்றும் அது தொடர்பான சந்தர்ப்பம் என்பன அரசு சார்பற்ற
201

Page 103
நிறுவனங்களுக்கு உள்ளது போல் அரசுத்துறைக்கு இல்லை. இக்காரணத்தாலேயே அணிதிரட்டல் செயற்பாடு அத்தோடு தொடர்பான பங்கேற்பு அபிவிருத்தி அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதான கருமமாக அமைகின்றது. பங்கேற்பு அபிவிருத்தி முறை மூலமாக சமூக அணிதிரட்டல் வறியோரை அமைப்பிற்குட்படுத்தல் என்பது மிகவும் ஆழமானதும் சூட்சுமமானதுமான செயற்பாடாகும். அணிதிரட்டல் மற்றும் வறியோரை அமைப்பிற்குட்படுத்தல் போன்ற செயற்பாடுகள் அபிவிருத்தியில் முதன்மையானதும் முக்கியமானவையாயும் ஏற்றுக்கொள்ளப்ப்டடபோதிலும் அனேக அரசுகளின் தேசிய அபிவிருத்தி கொள்கைளில் இது சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அணிதிரட்டலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள அதேவேளை மரபுவழி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எமது நாட்டின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் 90% பணம் மின்சாரம், பெருந்தெருக்கள், கட்டடங்கள் ஆகிய பெளதீகவசதிகளை முன்னேற்றவே செலவழிக்கப்படுகிறது. மக்களை மையமாகக் கொண்ட மாற்று அபிவிருத்தி செயல் முறைகளைக்கட்டி எழுப்பும் வகையில் அரசுசார்ப ற்ற நிறுவனங்களின் பங்கு அவசியமாகத்தேவைப்படுவது இச்சந்தர்ப்பத்திலேயாகும். அரசு சார்பற்ற அனேகமான நிறுவனங்கள் தமது அபிவிருத்தி நடைமுறையில் இலக்காகக் கொண்டது சகல பொதுமக்களையுமாகும். பொதுமக்களை நோக்கி முன் வைக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் வறியோர் பெற்ற பலனானது மிகவும் அற்பமேயாகும். வறியோர் தொடர்பாக தனியே வேறான பொருளாதார, சமூக, அபிவிருத்தி வேலைத்திட்டம் உருவாக்கப்படல் வேண்டும், அவ்வாறான வேலைத்திட்டங்கள் மரபுவழிவந்த வேலைத்திட்ட முறைகளை விட வேறுபட்டதாகவே -9||60ւՕսկմ0,
இவ் வுதாரணம் தொடர்பாக எமது கவனத்தைச்செலுத்துவோம்.
202
 
 

பொருளாதார, சமூக நிலையில் பலவீனமான இயக்கமற்ற வறியோரை அபிவிருத்திக்கான செயற்பாடுகளில் ஈடுபடுத்த முனையும்போது, இக்காரியம் மேலும் தாக்கமானதாக அமைவதற்கு ஏதுவாக நிறுவனரீதியான வசதிகள் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படல் அவசியமாகும், ஏனெனில் அவர்களுக்கு சொத்து உரிமைகள் இல்லாததேயாகும். கடன் பெற்றுக்கொடுத்தல் என்பதால் அர்த்தப்படுவது இதுவேயாகும். கடன் பெற வேண்டியது மிகவும் அத்தியாவசியமானதாக இருந்தாலும் அது நடைமுறைக்கு உட்படுத்தப்படும்போது கிடைக்கும் பிரதிபலனானது தீமையானதும் பயங்கரமானதுமாகும், சில வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் கடன் வழங்கும் வழிமுறையைப்பற்றி எவ்வித விளக்கமும் இல்லாமல் உள்ளன. இதனால் சிலர் பெற்ற கடன் எ வி வரிதமான பொருளாதார க் காரியங் களுக் கும் பயன்படுத்தப்படவுமில்லை. இதனால் கடனைத் திருப்பிச் செலுத்தும் வழிவகை இல்லாமல் காலக்கிரமத்தில் இவர்கள் கடன்காரர்களாகின்றனர். அணிதிரட்டல் செயற்பாடுமூலம், அமைப்பிற்குட்பட்டவர்களுக்கு மாத்திரமே கடன் கொடுக்க முடியும், இவ்வாறான காரியங்களில் அரசுசார்பற்ற நிறுவனங்களுக்கு பெரும்பங்கினை ஆற்றமுடியும், கடன் பெறுவதனூடாக வறியோரின் சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய செயற்திறன் வளர்ச்சியே அச்செயற்பாடாகும். அணிதிரட்டலுக்கு உட்படாமல் வெளியே வழங்கப்படும் கடனானது நுகர்விற்காகவும் வேறு அனாவசிய செலவுகளுக்கும் பயன்டுத்தப்படும். ஆகவே கடனோ அல்லது வேறு நலன்புரி சேவைகளோ வறியோரை நாடும் ஒரே காரணத்தினால் மட்டுமே அவை வறுமையை ஒழித்துவிடும் என்பதற்கில்லை.
வறுமைப்பிரச்சினைகளைத் தீர்க்க முற்படும் போது அடிப்படையாக அமையவேண்டியது வறியோரிடம் உள்ள சொந்த அறிவும் விளக்கமுமே ஒழிய வேறு வெளி உதவிகள்
203 af *st as wo?‛

Page 104
அல்ல. முறையான உயிரோட்டமான வேலைத்திட்டத்தில் வெளி உதவியானது இரண்டாமிடத்துக்குப் போய் மக்களின் அறிவு விளக்கம் முதலிடம் பெறும் அணிதிரட்டல் என்பது வெளி ஆட்களின் சிந்தனையில் உருவாகி மக்கள் மீது திணிக்கப்படும் அபிவிருத்தித்திட்டங்களுக்குப் பதிலாக திட்டமிடல், அமுலாக்கள் மதிப்பீடு செய்தல் போன்ற சகல காரியங்களும் மக்களால் ம்ேற்கோள்ளப்படலே ஆகும். அவ்வாறான வேலைத்திட்டங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தோல்வியடையாது. ஏனெனில் அவை மக்கள் திட்டங்களாகும். இவ்வாறான முயற்சிகள் பூரணத்துவம் பெற பயன் தரத்தக்கதாக அமைய வெளி நிறுவனங்களின் இடையீடு இருக்கவேண்டும், உதவவேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும்.
குறிப்பிட்ட ஒரு நிறுவனம் வறியோருக்காக கடன் வேலைத் திட் டமொன் றினை ஆரம்பித்து. "கடன் வேலைத்திட்டம்" என அதற்குப் பெயரிடப்பட்டது. இந்நிறுவனம் இக்கடன் திட்டத்தை வறியோரின் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஒரு முன்னோடி அணுகுமுறையாக மேற்கொண்டு, அவர்களின் "சமூக பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தல்" என்ற தூய்மையான நோக்கத்தோடு அறிமுகப்படுத்தியது. இக்குழு 30 பேரைக் கொண்டிருந்தது. அவர்கள் நிச்சயமாக இலக்குக்குழுவினரே தான். இவர்களின் பிரதான வருமானமானது சிறு விவசாயம் மற்றும் கூலிவேலையாலேயே தினமும் கிடைத்தது. நிறுவனத்தின் தேவைக்கேற்ப இம்முப்பது பேரும் (ஐந்து) 5 பேர் கொண்ட (ஆறு) 6 குழுக்களாகப் பிரிந்தனர். இக்குழுவினர் நிறுவனத்தால் கொடுக்கப்படும் கடன் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தனர். ஆகவே நிறுவனத்தின் நோக்கங்களுக்கேற்ப கடன் பெற்றுக்கொள்ள அவர்களின் குறிக்கோளாக இருந்தது. இதற்கேற்ப ஆட்டு வளர்ப்பிற்காக ரூபா 5000/- வீதம் பதின்மூன்று பேறும் விவசாயக்கடனாக ரூபாய் 4500/- வீதம் இரண்டுபேரும் , ரூபாய் 7500/- ஐ பசுமாட்டு வளர்ப்பிற்காக ஒருவருமாக கேட்டிருந்தனர்.
204

நிறுவனத்தின் தேவைக்கேற்ப குழுக்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்ததால் இவ்விருபது பேருக்கும் நிறுவனத்தின் மூலமாக கடன் கொடுக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டத்திற்கான அபிவிருத்தி பணியாளர் ஒருவரும் இக்கிராமத்தில் இந்நிறுவனத்தால் அமர்த்தப்பட்டிருந்தார். கடன் பெற்றோர் முழுத்கொகை 20 பேர், கடன் கிடைக்காதோர் 10 பேர்.
முதலில் வெளிப்பட்ட பிரதிவிளைவாக கடன் கிடைக்காத 10 பேர் விரக்தியுற்று அமைப்பிலிருந்து விலகினர். இதனால் கடன் கொடுத்தபின் அமைப்பில் மீதமுற்றோர் 20 பேர் மட்டுமே. அதன் பின் நடந்தது என்ன? கடன் பெற்றபின், கடன்பெற்றோர் சிறிது சிறிதாக அபிவிருத்திப் பணியாளரை விட்டு ஒதுங்கத்தொடங்கினர்.
ஆடு வளர்ப்பிற்கு கடன் வாங்கிய ஒருவரின் ஆடுகள் சில நோயால் இறந்தன. இதனால் அவர் ஏனைய ஆடுகளையும் விற்றுவிட்டார், இதை சாட்டாக வைத்துக் கொண்டே ஆடுகளை வைத்திருந்த ஏனையோரும் அவற்றை விற்றுவிட்டனர். பசு மாட்டை வாங்கியவரும் அதனை விற்றுப் பணமாக்கிக் கொண்டார். விவசாயக்கடன் பெற்ற இருவரும் அதனை அந்த நோக்கத்திற்குப் பயன்படுத்தவில்லை, அந்த வேலைத்திட்டத்தால் புதிய 20 பேர் உருவாகினா. இடையீடு செய்த நிறுவனம் இவர்களோடு தொடர்ச்சியாக தொடர்பு வைத்துக்கொள்ள முயன்றது. இவர்களோடு பேச்சுவார்த்தை மேற்கொள்ள முயற்சித்தபோதெல்லாம் அது தொடர்பான "தலைப்பு” ஆக அமைந்தது. "கடனைத் திரும்பப் பெறுதலாகும்" என்பதால் இதுவரை ஒரு கலந்துரையாடலையாவது நடாத்த முடியவில்லை.
இந்த வேலைத்திட்டம் முற்றுமுழுதும் தோல்வியான ஒரு திட்டமாகும். இதன் தோல்விக்குப் பிரதான காரணமாக அமைந்தது "மக்கள் அணிதிரட்டல்" செயற்பாட்டிற்கு உட்படுத்தப்படாமையாகும். இக்கடன் வேலைத்திட்டத்தை நிறுவனம் பல்வேறு பரந்த குறிக்கோள்களை வைத்து
205

Page 105
அமுலாக்கி இருக்கும்.ஆனால் நிறுவன மக்கள் இதனைக்கடன் கொடுக்கும் ஒரு வேலைத்திட்டமாக மாத்திரமே பார்த்தனர். (இடையீட்டாளர் மக்களுக்கு சரியான தகவலை கொடுக்கத் தவறிவிட்டார்) நிறுவனம் கடன் கொடுப்பதென்றால் அதனைப்பெற வேண்டும் என மக்கள் கருதினர். கடன் பெறுவதற்காக அமைப்பிற்குட்பட வேண்டும் எனக் கருதினர். கடன்கொடுத்தல் மற்றும் கடனைத் திரும்பப் பெறல் என்பதனை அடிப்படையாக வைத்து அதனோடு தொடர்பான அபிவிருத்தியோடு இணைந்ததாக எந்தவித சம்பாசனையும் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. அவ்வாறு சம்பாசனை இடம் பெற்றிருந்தாலும் அது முறையாக இடம்பெறவில்லை என்பது தெளிவாகும். அவ்வாறு இடம்பெறாதபோது இவ்வாறான வேலைத்திட்டங்கள் கடன் வாங்குவதற்கு மாத்திரமே மட்டுப்படும். ஆகவே, நிறுவனம் கடன் கொடுத்தது. மக்கள் கடன் பெற்றனர். அதன்பின் இடம்பெற வேண்டிய வேலைத்திட்டங் கள் காரியங்கள் பற்றி எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. இவ்வாறான நில்ையில் குழுக்கள் பிரிந்துசெல்லல் இயற்கையேயாகும்.
குழுவில் 10 பேர் கடன் கிடைக்காததால் விலகிச் சென்றனர்.ஏனைய 20 பெரும் கடன் பெற்று கடன்காரராக விலகிச் சென்றனர். வேலைத்திட்டத்திற்கு முன்பிருந்ததை விட வேலைத்திட்டத்தின் பின்பு கிராமம் தாழ்நிலையானது இது வேலைத்திட்டப்பிரதிபலன் ஆகும்.
இவ்வேலைத்திட்டத்தை 9 Déf சார்பற்ற நிறுவனமொன்றே அமுலாக்கியது. அது வறியோருக்காகவே உருவாக்கப்பட்டது. அதில் சிறுகுழுமுறையும் இருந்தது. வறியோருக்கு உதவும் பொருட்டான இடையீடும் இருந்தது. அப்படியாயின் இதன் மூலம் வெளிப்படும் முக்கியமான அர்த்தமென்ன?
206

அரசு சார்பற்ற நிறுவனமொன்று வறியோரை இலக்காகக்கொண்டு குழுமுறை மூலம் இடையீட்டாளர் ஒருவரை ஈடுபடுத்தி வேலைத்திட்டமொன்றினை நடை முறைப்படுத்தியதால் மாத்திரம் அது வெற்றியடையமாட்டாது என்பதாகும், அணிதிரட்டல் இன்றி வறியோரிடம் எவ்வளவுதான் வேலைத்திட்டங்களை ஆக்கியபோதும் அவை தோல்வியடைதல் தவிர்க்கமுடியாததாகும். அரசு, அரசு சார்பற்ற நிறுவனங்களால் அமுலாக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தோல்வியுற்றமைக்குக் காரணம் வறியோரை அணிதிரட் டல் செயல் முறைக் கு உட்படுத்தாமையேயாகும். இங்கு அவதானிக்கவேண்டிய முக்கிய அம்சம் வறியோரை அணிதிரட்டாமல் வறுமையை ஒழித்து நிரந்தர அபிவிருத்தித்திட்டங்களை அமுலாக்க GUD 9.- lIl s’T SEJ என் பதாகும் . (நலன் தொடர்பான வேலைத்திட்டங்களை அமுலாக்கும் போது இந்நிலை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.) வறியோரிடத்திலே மறைந்து கிடக்கும் செல்வங்களை வெளிக்கொண்டுவரவும் அவர்களை ஆக்கத்திறன் மிக்கோராய் ஆக்கவும் அபிவிருத்தியின் அச்சாணிகளாகவும் உருவாக்க வேண்டுமாயின் வறியோர் சுய விழிப்புணர்வு பெறல் வேண்டும், இவ்வாறாக இன்று வறுமையை ஒழிப்பது என்ற சவாவை எதிர்நோக்கியுளள சகல அரசு சார்பற்ற நிறுவனங்களும் "பங்கேற்பு அபிவிருத்தியை" பிரதான விதிமுறையாக ஏற்றுக் கொள்ளவேண்டும் , அமைப் பின் இடையீடோடு ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் காலகட்டத்தின் பின் மக்களின் வேலைத்திட்டமாக மாறுவதற்கு மக்களுக்கு படிப்படியாக அவர்களது தேவைகளை அறிந்து சக்தியை வழங்கி, நிறுவனத்துடன் அவர்களுக்கு இருந்த பற்றுதலை. குறைத்து ஒரு கட்டத்தில் முற்றாக விலகிக்கொள்ளல் வேண்டும். மூன்றாம் உலக நாடுகளின் அபிவிருத்தியில் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டின் முறையான
207

Page 106
அணுகுமுறையை மேற்கொள்ளாவிடின் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மக்களின் வெறுப் பிற்குள்ளாவது தவிர்க்கமுடியாததோடு அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஒரு
பிரச்சினையாகவும் மாறுகின்றன. "அரசு சார்பற்ற
நிறுவனங்கள் மக்களை ஆக்கத்திறனுள்ளோராக ஆக்குவதா
அல்லது இயக்கமற்றோராக்குவதா? உண்மையில்
அரசுசார்பற்ற நிறுவனங்கள் மக்களை ஆக்கத்திறன் மிக்கவர்களாக்கவேண்டும். அவ்வாறு ஆக்குவதற்கு அரசு சார்பற்ற இந்நிறுவனங்களுக்கு அணிதிரட்டல் பற்றிய மிகத்தெளிவான விளக்கம் இருப்பது அவசியமாகும். இத்தெளிவுமிக்க அறிவு மூலம் மக்களை பலமிக்கவர்களாக்க முடியும் அவர்களது இயலுமையை கட்டி எழுப்பமுடியும்.
“ஒரு வெளியார் தயாரித்த தீர்வுகள், ஆலோசனைகளைக் கொண்டுவரும் போது அவை வெறுமனே வீணானவை என்பது மட்டுமல்ல எத்தகைய பிரயோசனமற்றவையுமாகும். அவர் முதலில் எம்மிடமிருந்தே விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எமது பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்து அது பற்றி மேலும் விளக்கம் பெற்றுக்கொடுக்கும் அவர் தீர்வுகளைக் காண எமக்கு உதவவேண்டும். வெளியார் எமது பிரச்சினைகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவுவதற்கு முன் தன்னைத்தானே திருத்திக்கொள்ளவேண்டும். எமக்கு வெளியார் உதவி தேவைப்படுவதெல்லாம் எமது நிலையை
பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வதற்கேயாகும், இல்லாமல்
நாம் என்ன செய்யவேண்டும் என்று எமக்கு சொல்வதற்கல்ல".
பூமிசேனா
208
 
 


Page 107
அபிவ கிராப வில்பி ஆரம்
L I LLg
கொண்டிருக்கும் போது அரசாங்க ே உதறிவிட்டு 1978 இல் ஆரம்பம திட்டத்தில் இணைந்த மூலகர்த்தா இலங்கையின் நூற்றுக்கணக்கான கி அல்ல அபிவிருத்தி பணிகளில் பணியாளர்களுக்கும் பங்கேற்பு 9|L வறுமையை ஒழிக்கும் நோக்குட முன்வைக்கப்பட்ட பல அபிவிருத்த கடமையாற்றியவர் “கரு”. பங்கேற்ப தொடர்பான விவகாரங்களில் சிற இவரும் ஒருவராவார்.
பீடா நிறுவனத்தின் தை நூற்றுக்கணக்கான அரசு சார்பற்ற நிறு அரசு சாரா அமைப்புக்களின் தேச அமைப்பாளாராகவும் பணியாற்றுவ முகாமைத்துவ அபிவிருத்தி நிலைய கடமையாற்றுகின்றார்.
உள்ளூரிலும் வெளிநாடுக பெற்றுள்ள “கரு”, 1991 ஆம் ஆ அபிவிருத்தி பணியாளர்களிடையே அபிவிருத்தி என்ற இந் நூலை நோக்கம் அபிவிருத்தி பணியில் ஈ( சகோதரிகளுக்கு இது ஒரு கையேடாக
ISBN - 955-95.435-1-2
 

1970 இல் உருவாக்கப்பட்ட மாவட்ட பிருத்திச் சபை இயக்கத்தின் மூலமாக ) அபிவிருத்தித் துறையில் நுழைந்த பிரட் கருணாரத்தின 1960 களின் பகால இலங்கை பல்கலைக் கழக தாரி ஆவார்.
சமூக, பொருளாதார ரீதியில் மிகவும் தங்கி பலவீனமுற்று பல்வேறு ப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் வறிய 0 மக்களுடன் மிக நெருக்கமாக பாற்ற வேண்டும் என்ற ஆர்வம் ஸ்ாங்கப் பெற்றிருந்த காரணத்தால் கருணாரத்தின திட்டமிடல் அமைச்சின் திட்ட அலுவலராகக் கடமையாற்றிக் சேவையின் அனைத்து வசதிகளையும் ான மாற்று முகவர் அபிவிருத்தி க்களில் ஒருவர் ஆவார். இவர் ராம ஏழை எளியவர்களுக்கு மட்டும் ஈடுபட்டிருக்கும் அபிவிருத்தி பிவிருத்தி தொடர்பான குருவாவார். ன் பல்வேறு அரசாங்கங்களால் தித் திட்டங்களின் ஆலோசகராகவும் பு அபிவிருத்தி, சமூக அணிதிரட்டல் ப்புத்தேர்ச்சி பெற்ற மிகச் சிலரில்
லவராக கடமையாற்றும் இவர் றுவனங்களை உள்ளடக்கிய இலங்கை சிய நடவடிக்கை அணியின் தேசிய துடன் அரசு சாரா அமைப்புக்களின் த்தின் இயக்குனர்களிள் ஒருவராயும்
ளிலும் சிறந்த அநுபவங்களைப் ஆண்டில் சிங்களத்தில் வெளியிட்டு மிகவும் பிரல்யம் அடைந்த பங்கேற்பு தமிழில் வெளியிடுவதன் பிரதான டுபட்டுள்ள தமிழ் பேசும் சகோதர, ப் பயன்படவேண்டும் என்பதேயாகும்.
eib. 100/=
ܥܶ.ܶ