கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இனவாதப் பொறியில் சிக்காமல் இருப்பதென்றால்: 24 கேள்வி பதில்கள்

Page 1

சோமவங்கு அமரசிங்க භූකේනඛණ් ජැක්ඨකII

Page 2

உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!

Page 3

இனவாதப் பொறியில் சிக்காமல் இருப்பதென்றால்.
சோமவங்ச அமரசிங்க 1၇ ခေါလဓါဓōT afဓါလ☎ JIT
(). Blaueflii
III

Page 4
சகல தொடர்புகளுக்கும்:
டில்வின் சில்வா 198/19, பஞ்சிகாவத்தை வீதி கொழும்பு 10 தொலைபேசி/தொலைமடல்: 01:345594
E-MAIL: niyamuwa (aslt.lk
சர்வதேச தலைமையகத்தின் முகவரியும் பெக்ஸ் இலக்கமும் ARUNOIDAYA,
B.P.485,
75528,
CEDEX 11,
FRANCE,
FAX:0033 1. 40330414.
P.B.BOX 194, CARNEGIE, VICTORIA 3163, .
AUSTRALIA, FAX:0061 394369312
E-MAIL: jvp (ai bekkoame.or.jp
அச்சிட்டோர்:
ரேடியன்ட் கலர் கிரபிக்ஸ் 722, அவிசாவளை வீதி, வெல்லம்பிட்டி ஊருகொடவத்தை
1999 பெப்ரவரி 25 முதலாவது பதிப்பு
IV

எமது நோக்கம்
6 d மனித சமுதாயம்
சின்னஞ் சிறு அரசுகளாகப் பிரிந்து, பலவகை தேசிய இனங்களாகத் தனித்து வாழ்வதை முடிவுக்கு கொண்டுவருவதும், தேசிய இனங்களை நெருங்கிவரச் செய்வதும் மட்டும் சோஷலிசத்தின் நோக்கமல்ல, அவற்றை ஒன்றோடொன்று இரண்டறக் கலக்கச் செய்வதும் அதன் நோக்கமாகும். 9
லெனின்
(சோஷலிசப் புரட்சியும்.சுயநிர்ணய உரிமையும்)

Page 5
நியமுவா வெளியீடுகள்
நாட்டைக் கட்டியெழுப்பும்,எமது கொள்கைகள் ரோஹன விஜேவீர(சிங்களம்)
தமிழ்ஈழப் போராட்டத்திற்கு தீர்வு என்ன? (தேசியப் பிரச்சினையும் பாட்டாளி வர்க்கத்தின் தீர்வும்)
ரோஹன விஜேவீர (சிங்களம்)
பிரிவினைவாதத்திற்கு எதிராக சமத்துவம்
சோமவங்ச அமரசிங்க (சிங்களம்)
மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சிகர கொள்கைப் பிரகடனம் சிங்களம/தமிழ் இனவாதப்பொறியிலகிக்காமல்இருப்பதென்றால். சோமவங்ச அமரசிங்க~டில்வின் சில்வா சிங்களம/தமிழ்
இருளிலிருந்து ஒளியை நோக்கி.சிங்களம/தமிழ்
சந்தர்ப்பவாதமா, பாட்டாளி வர்க்க சர்வதேசியமா.
ரோஹன விஜேவீர ~(சிங்களம்)
VI

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் சோமவங்ச அமரசிங்க அவர்களின் செய்தி
இனவாதப் பொறியில் சிக்காமல் இருப்பதென்றால்." என்ற இந்தச் சிறிய புத்தகத்தின் மூலம், தேசியப் பிரச்சினை தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி கொண்டுள்ள நிலைபாட்டை சுருக்கமாக விளக்குவதற்கு நாம் முயற்சி செய்கிறோம். சிங்கள மொழிமூலம் அச்சிட்டு பிரசுரிக்கப்பட்ட இதனை, தமிழில் மொழி பெயர்த்து, தமிழ் பேசும் மக்களுக்கும் எட்டச் செய்ய வேண்டுமென்ற மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவின் விருப்பம் இன்று நிறைவேறுகிறது. ம.வி.மு. சிங்கள மக்களுக்குத் தெரிவிக்கும் ஒவ்வொரு வார்த்தையையும், தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் அப்படியே தெரிவிக்க வேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். என்றாலும் சிங்கள மொழியில் வெளியிடும் எல்லாவற்றையும் தாமதிக்காது மொழிபெயர்த்து வெளியிடமுடியாத நிலையிலேயே நாம் உள்ளோம். இந்தக் குறையை நிவர்த்திசெய்வதற்காக நாம் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
போலிச் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் அதிகாரத்தைப் பொறுப்பேற்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் முதலாளித்துவ வர்க்கம், தேசிய சமத்துவமின்மையை அதிகரித்து, இனவாதத்தைத் தூண்டி, மக்களைப் பிரித்து, பிரிவினைவாததுதிற்கு வழியமைத்து கொடுத்ததோடு,
7

Page 6
கடைசியாக, பிரிவினைவாதிகளோடு நீண்ட யுத்த மொன்றையும் செய்து கொண்டு நாட்டையும் மக்களையும் அதாள பாதாளத்தில் தள்ளியுள்ளது.
யுத்தம் செய்யும் இருசாராரும் யுத்தம் இருந்தும் முடியாது, இல்லாமலும் முடியாது என்ற பொறிக்குள் சிக்கிக் கொண்டிருப்பதால், இந்த யுத்தத்திற்கான முடிவு கண்ணுக் கெட்டிய தொலைவில் இல்லை. யுத்த முனையிலிருந்து பேச்சு வார்த்தைக் கும், பேச்சுவார்த்தையிலிருந்து மீண்டும் யுத்தத்திற்கும் சென்ற இந்த இருசாராரும், இன்று யுத்தம் செய்து களைப் படைந்துள்ளனர். இதனால், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழலை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
நீண்டகாலமாக யுத்தத்திலீடுபட்டிருப்பது இலேசான காரியமல்ல என்பதால், இருசாராருக்கும் யுத்தம் தேவையில்லை என்ற நிலை தோன்றியிருப்பதும் தெரிகிறது. ஆனால், மறுபுறத்தில், நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாததற்கு யுத்தம் தான் காரணமென்றும், தாங்கள் செயல்படுத்தும் தவறான கொள்கைகள் அல்ல என்றும் முதலாளித்துவ ஆட்சியாளர் தெரிவிக்கின்றனர். எமது நாட்டை ஆண்ட, ஆண்டுக்கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கம், தனது இயலாமையையும் முதலாளித்துவ முறையின் வங்குரோத்தையும் மூடிமறைப்பதற்காக யுத்தத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். அதனால் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு யுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதனால் மாகாண சபைத் தேர்தல்களையோ, பொதுத் தேர்தலையோ, ஜனாதிபதித் தேர்தலையோ நடத்துவதென்றால் கூட யுத்த முனையில் ஒரு பொய்யான வெற்றியையாவது காட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கத்தைப் போலவே பிரிவினைவாதிகளும் சிக்கலில் மாட்டியிருப்பது தெரிகிறது. தொடர்ந்தும் யுத்தம் செய்வது சிரமமான காரியம் என்பதால் யுத்தத்தைத் தவிர்க்க வேண்டிய நிலையில்
8

அவர்களும் உள்ளனர். அதே நேரத்தில், தமிழ் ஈழத்திற்குக் குறைவான ஒன்றை அடைய முடியாத நிலையில், யுத்தம் தவிர்க்க முடியாது என்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். தமிழீழத்தை அடையாமல் யுத்தத்தை நிறுத்தினால், தமிழ் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலை விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டுவிடும்.
இனி முடிவு காணமுடியாத இந்த யுத்தத்திற்கு பதில் சொல்ல வேண்டிய இருபக்கத்தில் எந்தப் பக்கத்தைத் தெரிவு செய்தாலும் சிங்கள. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடைக்கப் போவதில்லை. இந்த இரு சாராரும் நாடு பிரிக்கப்படுவதைத் தடுக் க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்
நாடு பிரிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை விளங்கிக்கொள்வது அவ்வளவு சிரமமான காரியமல்ல. வடக்கில் வாழ்ந்த சிங்கள, முஸ்லிம் மக்கள் தமிழீழ வாதிகளினால் விரட்டியடிக்கப்பட்டனர். தமிழீழம் அமைக்கப்பட்டால், அங்கே தமிழர்கள் அல்லாத வேறு யாருக்குமே இடமில்லை என்பதை இதன்மூலம் ஈழம்வாதிகள் நன்றாகவே எடுத்துக்காட்டியுள்ளனர். அப்படியான நிலையில் தமிழ் மக்களின் சரிபாதியினம் வாழும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள சிங்கள, முஸ்லிம் இனவாதிகள் தமிழ் மக்களுக்கு இங்கே வசிக்க முடியாது என்று கூறினால், அப்படிக் கூறுவதோடு மட்டுமல்லாது, தமிழீழவாதிகள் செய்தது போலவே அவர்களையும் பலவந்தமாக விரட்டியடிக்கத் தொடங்கினால்? அதனைத் தடுத்து நிறுத்த போலீஸாராலும், ராணுவத்தாலும், முடியுமா?
வருங்காலத்தில் நடக்கப்போகும் பலபயங்கரச் சம்பவங்களில் ஒன்றை மட்டும் தான் இங்கே நாம் குறிப்பிட்டுள்ளோம். அந்தப் பயங்கரச் சம்பவங்களைத் தடுப்பது எம் ஒவ்வொருவரினதும் கடமை. அதற்காக, முதலாளித்துவ அரசாங்கத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் ஒரேயடியாக எதிர்ப்புத் தெரிவிக்க
9

Page 7
பே)ன்ை டும். முதலாளித்துவ அரசாங்கத்தையும் 'வினைவாதத்தையும் தோற்கடிக்க வேண்டும். அதற்காக, சமதர்ம '|சொன்றும் சோஷலிஸ் சமூகமொன்றை வெற்றிகொள்வதற்காக 11ம் மோடு இணைந்துக் கொள்ளுமாறு சிங்கள, தமிழ், முஸ்லிம்
க்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
சிங்கள, தமிழ் முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமை வாழ்க!
தோழர்;~ சோமவங்ச அமரசிங்க தலைவர்
மக்கள் விடுதலை முன்னணி 1999 பெப்ரவரி 25
10

(9த்தியாவசியமான முன்னுரை
பொ. ஜ. மு. அரசிற்கும் LTTE கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்த கால கட்டத்தில் சமாதானத்திற்காகவும், தேசிய ஒற்றுமைக்காகவும் எத்தனையோ பேர் குரல் கொடுத்தார்கள். முதலாளித்துவ அரசாங்கத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கும் இடதுசாரி லேபல்" ஒட்டிக் கொண்டவர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களால் போஷிக்கப்படும் புத்திஜீவிகளும் இந்தப் போலி சமாதானத்திற்காக ஒத்து ஊதினார்கள். ஆனால் தேனிலவு முடிந்தவுடன் குண்டுகள் பேசத்தொடங்கின. மூன்றாவது ஈழ யுத்தம் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த நிமிடத்திலிருந்து. தேசியப் பிரச்சினையைப் பற்றி மக்கள் அதிகமாகப் பேசத் தொடங்கினர். இச்சந்தர்ப்பத்தில்தான் பொ. ஐ. மு. அரசு தனது தீர்வுப் பொதியை" அறிமுகம் செய்கிறது.
பெக்கேஜ்" அல்லது தீர்வுப் பொதி கொண்டு வரப்பட்ட கையோடு தேசியப்பிரச்சினை சம்பந்தமாக, அதுவரை பேசப்பட்ட அனைத்தும் ஒரு குழப்பநிலைக்குள் தள்ளப்பட்டதுடன். கண்ணுக்குத் தெரியாத சமாதானத்தை பிரார்த்தித்த அரசியல் அப்பாவிகள் அரசாங்கத்தோடு ஒன்று சேர்ந்தனர். அதேபோல், 'புலி ஒழிப்பு" யுத்தத்தை முதலாளித்துவ அரசாங்கம் தொடங்கிய போது சிங்கள இனவாதிகளும் யுத்தத்திற்காக அரசாங்கத்தோடு சேர்த்துக் கொண்டனர். லெனினையும் விட லெனில்வாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொண்ட, இது தனவந்த சோஷலிசவாதிகள் முதலாளித்துவ அரசாங்கத்திற்கும், சிங்கள இனவாதத்திற்கும் எதிராக, தமிழ் இனவாத ரத்தம் தோய்த்த கொடியைக்
11

Page 8
கையிலெடுத்துக் கொண்டனர். அவர்கள் பிரபாகரன் சார்பாகவும் சந்திரிக்காவுக்கு எதிராகவும் செயல்பட்டனர். சமாதானத்திற்காகத் தூது" சென்றவர்களைக் காணக்கூடமுடியவில்லை அரசு சார்பற்ற எல்லா நிறுவனங்களதும் (NGO) “பெக்கேஜ்" அல்லது பெக்கேஜ்" என்ற சுலோகத்தின் கீழ் அணிதிரண்டனர். இப்படியாக இந்தத் தேசியப் பிரச்சினை சிங்கள இனவாதமாகவும், தமிழ் இனவாதமாகவும் இரண்டாகப் பிளவுபட்டன. எல்லா அரசியல் மிருகங்களும் தமக்குத் தேவையான இனவாதத்தை விரும்பியவாறு தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
பிரபாகரனுக்கும், சந்திரிக்காவிற்கும் சமாந்திரமாக அவர்கள் எல்லோரும் பிரிவினைவாதத்தை வெற்றி கொள்வதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பாட்டாளி வர்க்கத்தை மொழிவாரியாக பிரிப்பதற்கு எதிரான, இனவாதத்திற்கு அடிபணியாத, எந்த இனவாதத்திற்கும் கப்பம் கொடுப்பதற்கும் எதிரான நாட்டைப் பிரிப்பதற்கு எதிரான ம.வி.மு. (JVP) பாரதூரமான சவால்களுக்கு முகம் கொடுத்தது. இலங்கையில் கருத்தியல் துறையில் இனவாதிகள் காட்டும் கூச்சல்களுக்கு முன்னால் ம.வி.மு. யால் தனது கருத்தைச் சரியாக முன் வைக்கமுடியவில்லை. சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் ஏகாபத்திய மனோபாவத்துக்குள், தெரிந்தோ, தெரியாமலோ சிக்கிக் கொண்டு செயல்பட்ட எல்லா கருத்தியலாளர்களும் ம.வி. மு. (JVP) யின் கொள்கைகளை தமக்கு வேண்டியவாறு அர்த்தம் கூறவழியேற்பட்டது. தேசியப் பிரச்சினை சம்பந்தமான (JVP) ம.வி.மு. யின் நிலைப்பாட்டை தலைகீழாக விளங்கிக் கொண்டதோடு அதனைக் கருவியாக கொண்டு எதிர்க்கவும் செய்தனர்.
JVP ம.வி.மு. யினால பாட்டாளி வர்க்கத் கருத்துக்களை மக்கள் மத்தியில் நிலை நாட்டப்படுவதைத் தடுப்பதற்காகவே முதலாளித்துவ வர்க்கம் 1983ல் ம.வி.மு (JVP) யைத் தடைசெய்தது. இலங்கையின் தேசியப் பிரச்சினை சம்பந்தமாக நன்றாக ஆராய்ந்து அதனைப்புத்தகவடிவில் வெளியிட்ட ஒரே கட்சி ம.விமு (JVP) மாத்திரமே ம.வி.மு. தனது கொள்கைப் பிரகடனத்தில் தேசியப் பிரச்சினைக்கு சரியான தீர்வை முன்வைத்ததும் ம.வி.மு. (JVP) என்றாலும், ஜனநாயக விரோத நிலையின் ஆதிக்க உரிமை
12

பெற்றிருந்த முதலாளித்துவ சிறு முதலாளித்துவ குழுக்களின் பிரச்சாரத்திற்கு முன்னால் கருத்தியல் துறையில் அதன் முக்கியத்துவம் மூடிமறைக்கப்பட்டது. அவர்கள் முதலாளித்துவ முறைக்குள் பிரச்சினைக்கான தீர்வை தேடமுற்பட்டனர் இந்த முயற்சிக்குத் தற்காலிகமாக சமூகத்தின் கவனம் திரும்பியது
1994 பொதுத்தேர்தலில் பலவந்தமாகக் குதித்த ம.வி.மு. (JVP) கருத்தியல் துறையில் சமூகப் பெறுமதியைப் பெற்றிருந்த முதலாளித்துவ சிறுமுதலாளித் துவக் கருத்துக் களையும், அனைத்து இனவாதக் கருத்துக்களையும் ஒட்டுமொத்தமாகத் தோற்கடித்தது. 4 வருடங்கள் கடந்து விட்டன. தேசியப் பிரச்சினைக்கான தீர்வை மாத்திரமல்ல மற்ற எல்லா பிரச்சினைகளுக்குமான தீர்வை, மக்கள் விடுதலை முன்னணி தனது பார்வையில் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சீனுவ" நியமுவா'ரத்துலங்கா","கினிசிலு'ை, 'செஞ்சக்தி" “RED POWER" "காந்தா விமுக்தி” போன்ற பத்திரிகைகள் மக்கள் மத்தியில் தமது கடமைகளைச் செய்துக் கொண்டிருக்கின்றன.
-இனவாதப் பொறியில் சிக்காமல் இருப்பதென்றால்- என்ற இந்தச் சிறிய நூல் தேசியப் பிரச்சினை சம்பந்தமாக ம.வி.மு.வின் கருத்துக்களை மிகவும் துள்ளியமாக விளக்குகிறது. தேசியப் பிரச்சினை சம்பந்தமாக ம.வி.மு. யின் கருத்தினைக் திரித்துக் கூறும் முதலாளித்துவ இடதுசாரி ஏஜென்சிகளுக்குக் கொடுக்கும் சாட்டையடியாகவும் இது அமைகிறது. அறியாத்தனமாக ஏதோவொரு இனவாதத்தை ஆதரிக்கும், ஏகாதிபத்திய தந்திரோபாயங்களுக்குள் விருப்பத்துடன் செயல்படாத அனைவரையும் அவற்றிலிருந்து வெளியேற வேண்டுமென விடுக்கும் வேண்டுகோள் தான் இந்நூல்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் சோமவன்ஸ் அமரசிங்கவுடனும், ம.விமு. பொதுச்செயலாளர் தோழர் டில்வின் சில்வாவுடனுமான இந்தப் பேட்டி புத்தகமாக வெளியிடுவதற்காக நடாத்தப்பட்ட ஒன்றல்ல. 'செஞ்சக்தி" பத்திரிகையில் பிரசுரிப்பதற்காகவே பேட்டி காணப்பட்டது. என்றாலும் அவர்களிடம் கேட்கப்பட்ட 24 கேள்விகளுக்கும் நீண்ட பதில்களையே அவர்கள் தந்தனர். அதனால் இந்தப் பேட்டியை புத்தக வடிவமாக வெளியிடத் தீர்மானிக்கப்பட்டது. தேசியப் பிரச்சினை சம்பந்தமாக பொதுவாக
13

Page 9
எழுப்பப்படும் கேள்விகள் மத்திர மல்ல செயல் ரீதியான கேள்விகளும் இதில் அடங்கும். விஷேடமாக, சில கற்பனாவாத சோஷலிசவாதிகளாலும் இடதுசாரி ஏஜென்டுகளினாலும் திரித்துக் கூறப்பட்ட மிக முக்கியமான கேள்விகளுக்கான விடை இந்நூலில் கிடைக்கிறது.
சிரேஷ்ட ஆசான் தோழர் லெனின் ஒரு முறை இப்படிக்கூறினார் முக்கியமான விடயம் என்னவென்றால், எமது ஆர்பாட்டக் கோஷங்களின் அரசியல் தெளிவும் செயல் ரீதியான தூரநோக்கும் தான். (லெனின் - சுயநிர்ணயம் சம்பந்தமான விவாதம்) எமது ஆர்பாட்டக் கோஷங்களின் அரசியல் தெளிவையும் செயல் ரீதியான தூர நோக்கயைம் விளங்கிக் கொள்ள இச்சிறிய நூல் ஒரளவேனும் உதவுமேயானால், அதுவே எமது வெற்றியின் முதல் படியாகும்.
இந்தச் சிறிய புத்தகத்தை வெளியிட உழைத்த அனைவருக்கும் எமது நன்றி.
வெளியீட்டுக் குழு 1999-பெப்ரவரி-25
14

இனவாதப் பொறியில் சிக்காமல் இருப்பதென்றால்.
நியமுவா - தற்போது பாரிய சிக்கலுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கும் தேசிய பிரச்சினை இலங்கை மண்ணில் தோற்றமும், வியாபிப்பையும் நீங்கள் இனம் காண்பது எப்படி?
தோழர் அமரசிங்க - இலங்கையில் தேசியப் பிரச்சினை மிகவும் தெளிவான காரணங்களோடு தோன்றிய ஒன்று. அதேபோல் அது கடந்த காலத்தில் முதலாளித் துவ அரசாங்களின் செயல்பாடுகளினால் கூர் மையடைந்து. தேசிய பிரச்சினை உருவானது தொடர்பாக சுருக்கமான விளக்கம் தருவது சிரமமான காரியமென்றாலும் கூட எம்மால் அதை இவ்வாறு இனம் காணமுடியும்.
இலங்கையில் முதலாளித்துவ அமைப்பு தோன்றியதோடு தேசியப் பிரச்சினையும் உருவாகிறது. இலங்கையில் முதலாளித்துவம் தோன்றிய விஷேடதன்மையும் அதனோடு இணைந்து பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் தலையீடும் இதற்கு நேரடியான காரணங்களாகும்.
முதலாளித்துவ முறை தோன்றுவதற்கு முன்பு நமது நாட்டில் சிங் கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இனவாரியாகவே வாழ்ந்தனர்.முதலாளித் துவ முறை தோன்றிய போது இன அடிப்படையாக வாழ்ந்த இவர்கள் இலங்கை தேசிய இனமாக மாறவேண்டியிருந்தது. ஆயினும், அடிப்படையில் முதலாளித்துவ
15

Page 10
முறைமை இலங்கையில் இயற்கையாக தோற்றம் பெறாததாலும், பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் அடிமை காலனித்துவ முறையில் இலகுவாக நிர்வாகம் செய்வதற்காக, இன அடிப்படையான வரையறை தொடர்ந்தும் உறுதியான முறையில் செயற்படுத்தியதால்,முதலாளித்துவ முறையினுள் இலங்கையில் தேசியமொன்று தோன்றுவதற்கு பதிலாக, இன அடிப்படையான வரையறை முடிவுறாமல் மூன்று தேசிய இனங்களோடு பல்லினங்களைக் கொண்ட முதலாளித்துவ அரசு உருவானது. பிரித்தானியர்கள் தமது காலனி ஆட்சியின் போதும் அதன் பின்பும் இனங்களுக் கிடையே இருந்த வேற்றுமையை இல்லா தொழிக் காதிருப்பதற்கும் அதை மென்மேலும் விரிவுபடுத்தி அதன் மூலம் மக்களை பிரித்தாளும் ஆட்சியதிகாரத் தை தொடர்ந்தும் செயல்படுத்தினர்.
உதாரணமாக பிரித்தானியர்களின் காலத்தில் அரசியல் அதிகார சபைக் கோ அல்லது அரச நிர்வாக சபைக் கோ பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போதும் இன அடிப்படையான கொள்கையை கடைப்பிடித்துள்ளது என்பதை நான் உங்களுக்கு நினைவு கூற விரும்புகிறேன். சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற இன அடிப்படையிலே பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். சிங்கள இனத்தை கூட பிரிப்பதற்கு மலைநாட்டினர். கீழ் நாட்டினர், என்று பிரதிநிதித்துவம் செய்தனர். பிரச்சினை தோன்றுவற்குரிய அடிப்படை காரணி இவ்வாறே ஆரம்பமாகிறது. அவர்கள் இலங்கையில் மாகாணங்களை பிரிக்கும்போது கூட புவியியல் அடிப்படையின்றி இன அடிப்படைக்கே முதலிடம் கொடுத்தனர்.
தோழர் டில் வினி சில்வா:- ஆம் ! தோழர் தலைவர் தெளிவுபடுத்தியது போல், பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளால் ஏற்படுத்தப்பட்ட மக்களைப் பிரிக்கும் தந்திரத்தை அதன்பிறகு அதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவ வாதிகளும் கையாண்டனர். இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தினரால் 1919ல் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சங்கம் (ஜாதிக சங்கமய) என்ற அரசியல் கட்சியில் சிங்கள, தமிழ் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த முதலாளித்துவப் பிரதிநிதிகள் அங்கம் வகித்த போதிலும்,
16

அதிகாரம் என்று வந்த போது தத்தமது இன அடிப்படையில் கட்சிகளை அமைக்கத் தொடங்கினர்.
இதன் மூலம் தான் தேசிய சங்கத்திலிருந்து பிரிந்த தமிழ்த்தலைவர்கள் 1921 இல் அகில இலங்கை தமிழர் மகா சபையை அமைத்தனர். 1921ல் மலே (Malay) சமூகத்தின் மலே அரசியல் கட்சியை அமைத்தனர். பிறகு முஸ்லிம் சமூகத்தினர் முஸ்லிம் சங்கத்தையும் பண்டாரநாயக் கா சிங்கள மகாசபையையும் அமைத்துக் கொண்டனர். ஐ.தே.க. 1940ல் ஆரம்பிக்கப்பட்ட போது முஸ்லிம் சங்கத்தினர் அதனோடு இணைந்துக் கொண்ட போதிலும் தமிழ் சங்கம் அதனோடு இணையவில்லை. அதன்பிறகு இந்த எல்லா அரசியல் கட்சிகளும் அதிகாரத்தை கைப் பற்றிக் கொள்வதற்காக, இனத்தையும் மதத்தையும் உபயோகித்தனர். சிங்கள அரிச்சுவடியின் ஒரு எழுத்துக் கூட தெரியாமலிருந்த பிறப்பில் கத்தோலிக் கரான பண்டாரநாயக் கா இவ்வாறு தான் பெளத்தராக மாறினார். 24 மணித்தியாலங்களுக்குள் சிங்களத்தை அரசகரும மொழியாக்க அறைகூவல் விடுத்ததும் அதனால் தான். இப்படியாக சிங்கள தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அதிகாரத்துக்கு வருவதற்காக தொடர்ந்து இனவாதத்தை தாண்டத் தொடங்கினர். முதலாளித்துவத்தின் பொதுவான நெருக் கடிகளின் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கும் போதும் ஏற்படுத்திய வரையறை தான் உரிமைகளை வெட்டுதல், தரப்படுத் தல, கல்வி வெள்ளையறிக் கை, ஐனநாயகத்தை இல்லா தொழித்தல் ..! போன்றவை இந்தப் பிரச்சினையை உக்கிரமடையச் செய்து மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியது. சுருக்கமாகவும் சரியாகவும் சொல்வதெனில் பிரித்தானிய காலனித் துவக் காலக் கொள்கைகளையே, இலங்கையின் நவகாலனித் துவத்துக் குள்ளும் தேசிய முதலாளித் துவ வர்க்கத்தின் மூலம் அப்படியே நடத்திக் கொண்டு போவதுதான் இந்தப் பிரச்சினைக்கு மூல காரணம் என்பதை எம்மால் விளங்கிக் கொள்ளமுடியும்.
நியழுவா:- நீங்கள் சொல்வது போல் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் பிரித்தாளும் கொள்கையும், முதலாளித்துவத்தின் பொதுவான நெருக்கடியினால்
17

Page 11
விரிவடைந்த தேசிய பிரச்சினையையும் நவீன ஏகாதிபத்தியவாதத்தின் உபாயத்தோடு சமனாவது எப்படி?
தோழர் அமரச சிங்க:- இலங்கையின் தேசியப் பிரச்சினை முதலாளித் துவ முறைக் குள் எப்படி வளர்ச்சியடைந்தது என்பதை நாம் முன்பு விளக்கினோம். அந்தச் சூழலில் தான் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியல் பிரிய வேண்டும் என்ற மனோநிலை உணர்வு படிப் படியாக வளரத் தொடங்கியது. தமிழ் முதலாளித்துவவாதிகளிடமும் அப்படியான ஒரு தேவையே மேலோங்கியிருந்தது. இப்படியாகத்தான் இலங்கை அரசியல் வார்த்தைகளில் 'பிரிவினை வாதம் " என்ற சொற்பதம் நிர்மாணிக்கப்பட்டது.
ஏகாதிபத்தியத்திற்குள் முக்கியத்துவம் வாய்ந்த பொதுவான தேவை ஒன்று உள்ளது. அதாவது உலக நாடுகளை கூடியவரை சுரண்டுவது. அதற்காக நேரடியான காலனித்துவமாகவோ, நவீன காலனித் துவ கொள்கைகளின் ஊடாகவோ, உலகிலுள்ள நலிவடைந்த நாடுகளை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டியுள்ளது. மறந்துவிட வேண்டாம். ஏகாதிபத்தியவாதிகள் உலகை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்வதற்காகவே உலக யுத்தத் தை ஆரம்பித்தனர். ஏகாதிபத்திய வாதிகளிடையே உள்ள போட்டியிலும், உலகைப் பங்கு போட்டுக் கொள்ளும் முயற்சியிலும் பலம் வாய்ந்த, பொருளாதாரத்தில் நிறைவு பெற்ற அரசு ஒன்று இருப்பதை ஏகாதிபத்திய வாதிகள் விரும்புவதில்லை. ஒருவகையில் அது அவர்களுக்கு ஒரு அச்சுறுத்தல் மற்ற வகையில் அடிபணிய வைப்பதில் உள்ள சிரமம். ஆகையால், உலக நாடுகளை பல வரையறைகளுக்குள் (இனம், மதம், கோத்திரம்) பிரித்து துண்டாடி நலிவடைந்த சிறிய நாடுகள் பலவற்றை உருவாக்கி அனைத்தையும் வெவ்வேறாக தம் பக்கம் இழுத்துக் கொள்வதே அவர்களது நோக்கமாக உள்ளது. இந்த ஏகாதிபத்திய தேவையின் அடிப்படையில்தான் எமது நாட்டின் தேசிய நெருக்கடி உலகைத் துண்டாடும் அவர்களின் தேவைக்கு சமபாடாக இருக்கிறது. விஷேடமாக சோஷலிச அரசாங்களின் தோற்றத்தோடு இந்தத் தேவை மேலும் அதிகரித்ததாக நாம் நம்புகிறோம்.
18

நியமுவா- ஆனால் இலங்கையின் தற்போதைய பிரிவினைவாத அமைப்பு, ஏகாதிபத்தியத்தின் தந்திரோபாயமாக மாறும்போது, அதற்கு முன்னோடியான பிரதான காரணிகள் என்ன?
தோழர் அமரசிங்க:- ஆம்! நான் அவ்விடத்திற்கு வருகிறேன். மேலே விளக்கியவாறு உலகை சிறுசிறு அரசுகளாக துண்டாடி சுரண்டி விழுங்கும் தேவைக் காகவே ஏகாதிபத்தியவாதிகள் பிரிவினைவாதத்தை சரியான வழியெனக் கருதினர். விஷேடமாக இரண்டாவது உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகளில் ஒரு பலமிக்க நாடாக மாறியதும், முக்கியமான பிரச்சினைகள் சிலவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. உலகில் சோஷலிச முகாம் தோன்றியதும், ஒடுக் கப்பட்ட நாடுகளில் விடுதலைப் பேராராட்டம் உக்கிரமடைந்ததும் , அவற்றில் பிரதான பிரச்சினையாகும். இந்த சோஷலிச அரச அமைப்புக்கள் (சோவியத் உள்ளிட்ட) யுத்தவகையிலும் கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நிச்சயமாகவே அச்சுறுத்தலாக அமைந்தது. இவற்றை பலமிழக்க செய்வதற்கும், விஷேடமாக சோஷலிச முகாம்களை தகர்த்தெறிய திட்டமிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், அதற்காக கண்ட இலகுவான வழிமுறை இந்த நாடுகளிலிருந்த இன, மத, கோத்திரம் , போன்ற பலதரப்பட்ட வேறுபாடுகளே. இப்படியாக மேற்கூறிய வேறுபாடுகளை மேலும் வியாபித்து. அந்த வேற்றுமைகள் மூலம் நாடுகளை துண்டாடுவதற்காகவே அவர்கள் தமது திட்டங்களை வகுத்தனர். இப்படியாக நாடுகளை பிரிப்பது அல்லது துண்டாடுவது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் உபாயமாக இருந்தது. அந்த உபாயத்தை வெற்றி பெறச் செய்வதற்காகவே பிரிவினைவாதத்தை முன்னெடுத்தனர். அப்படியான சூழல் நிலவிய இடங்களுக்கு பலவிதமான தலையீடுகளை செய்தனர் உதவி செய்தனர் இலங்கையின் பிரிவினைவாத மனநிலை கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் அமெரிக்கா தலையிட தீர்மானிக்கப்பட்டதும் இப்படித்தான். இலங்கையின் பிரிவினை வாத அமைப்பை தமது உபாயத்தின் ஊடாக கொண்டு சென்றதும் அப்படித்தான். இந்தியாவை பிரிக்க வேண்டிய தேவையே முதலில்
19

Page 12
ஏகாதிபத்தியவாதிகளுக்கு இருந்தது. ஆனால் அன்றைய சோவியத் நாட் டோடு இந்தியா நட்புறவு கொண்டிருந்த நிலமையில், இந்தியா வை பிரிப்பதற்காக அமெரிக்காவினால் தயாரிக் கப்பட்டதே 'பிரம்மபுத் திர " திட்டம் , இந்தியாவை பிரிப்பதற்கான சிறந்த சாதனமாகவே இலங்கை பிரிவினை வாதத்திற்கு அவர்கள் உதவி செய்தனர்.
நியமுவா:- ஏகாதிபத்தியத்திற்குள் வியாபார சந்தையை மத்தியத்துவப் படுத்தப்பட்டிருப்பதாகவும், பலவித அமைப்புகளின் ஊடாக சில நாடுகளை ஒன்று சேர்த்துக் கொண்டிருப்பதற்காகவும் சிலர் கூறுகின்றனர். அந்நிலைமையில் விஷேடமாக பழைய சோவியத் நாடு இல்லாத நிலைமையில் ஏகாதிபத்தியவாதிகள் செயல்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். அது உண்மையெனில் பிரிவினைவாதத்திற்கும். அதற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறதல்லவா?
தோழர் டில்வின் சில்வா:- நாங்கள் லெனின்வாதிகள் என்ற வகையில் ஏகாதிபத்தியத்தை அறிந்து கொள்வதற்கான அடிப்படை இலட்சணங்கள் சில இருக்கின்றன என்றாலும், பிரிவினைவாதம்" என்பது ஏகாதிபத்தியவாதத்தை அறிந்து கொள்ளும் அடிப்படை இலட்சணமல்ல பிரிவினைவாதம் என்பது உலகத்தை துண்டாடி கரண்டி விழுங்குவதற்கு சோஷலிச நாடுகளை அல்லது அமைப்புக்களை நலிவடையச் செய்வதற்காக கொண்டு செல்லும் உபாயத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஏகாதிபத்தியவாதிகள் கையாளும் தந்திரமாகும். நான் மீண்டும் அதை உறுதியாக கூறுகிறேன்.
ஆயினும், ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். பலவித ஒப்பந்தங்கள் மூலம் பலநாடுகளுக்கிடையில் ஐக்கிய அரசுகளை கட்டியெழுப்பும் முறையில் இருப்பது உண்மை. அவை ஏகாதிபத்திய போட்டிகளுக்கு முகம் கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டது. ஐக்கிய ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்குள் இருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத் தோடு போட்டியிடுவதற்காக ஒன்றுசேரும் தேவையேயன்று வேறொன்றுக்குமல்ல. ஆனால் ஏகாதிபத்தியவாதிகளுக்கு தேவைப்படுவதெல்லாம் இந்த ஒன்றுகூடலின் தாம் பலமுள்ளவராக இருந்துகொண்டு தம்மை சுற்றி
9በጌ

நலிவடைந்தவர்களை சேர்த்துக் கொள்வதற்கும். அதற்காக நாடுகளை துண்டாடி நலிவடையச் செய்து அந்த நாடுகளின் மீது பொருளாதார ஒப்பந்தங்களைத் திணித்து. அந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த |15 || (b B ഞണ് சுரண்டி விழுங்குவதே ஏகாதிபத்தியவாதிகளின் தேவையாகும். இதனால் பிரித்து துண்டாடுவதும் ஒப்பந்தத்தின் மூலம் ஒன்று சேர்ப்பதும், பரஸ்பர விரோதமானதல்ல அவை ஒரே தேவையை பூர்த்தி செய்யும் இரண்டு வகையான வழிமுறைகள்! வட அத்திலாந்திக் ஒப்பந்தத்தை எடுத்துப்பாருங்கள். அங்கே அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோவுக் கிடையில் ஒப்பந்தம் ஏற்படும் போது மெக்சிக்கோ மீதும் கனடா மீதும் அமெரிக்கா பலவந்தமாக தனது ஆதிக்கத்தை திணிக்கிறது. இந்த நாடுகள் இரண்டும் அமெரிக்காவை விட நலிவடைந்திருப்பதால் ஏகாதிபத்திய போட்டியின் போது தமக்கு சவாலாக வேறொரு நாடு உருவாவதை தடுப்பது அமெரிக்காவின் தேவையாக இருப்பதால் பிரிவினைவாதம் அந்த தேவையை பூர்த்திசெய்கிறது.
நியமுவா:- இப்போது சோஷலிச முகாம் சிதைந்துவிட்ட நிலையில் உலகைப் பிரிப்பதற்கான தேவை அமெரிக்காவிற்கு இல்லை என்று அறிவிக்கப்படுகின்றது. இது சம்பந்தமான கட்சியின் கருத்து என்ன?
தோழர் அமரசிங்க:- ஆம் ! அது உலகம் முழுவதும் ஓரளவு பிரசித் திபெற்ற கருத்து சோஷலிச முகாமின் ஒரு பகுதி சிதைந்துவிட்டதினால் தமது பிரிவினைவாத செயற்பாடுகளை கைவிட்டு விடுவதற்கு அமெரிக்கா தீர்மானிக்கும் என்று யாராவது கூறுவார்களானால் அவர்களது அரசியல் அறிவை பற்றி நாம் கவலைப்பட வேண்டும். சோஷலிச முகாம் சிதைந்து விட்டது உண்மைதான். என்றாலும் சோஷலிசம் இப்போதும் நடந்து கொண்டிருக்கும் வகையில் மீண்டும் எழுந்து நிற்பதற்கு முயற்சி செய்யாது என்று நினைக்கும் அளவுக்கு அமெரிக்கா முட்டாளாக இல்லை! சோவியத்நாடும் கிழக்கு ஐரோப்பாவும் வீழ்ந்து விட்டாலும், சீனாவும், கியூபாவும், வட-கொரியாவும், வீழ்ந்து விடவில்லை. அது மாத்திரமல்ல உலகம் பூராவும் சோஷலிச அமைப்புகள், ஏகாதிபத்திய விரோத அமைப்புகளும் விருத்தியடைவது
21

Page 13
நின்றுவிடவில்லை, ஏகாதிபத் தய எத ப்புக்குள் பலவித அமைப்புக்கள் இன்று ஒன்று சேர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றை ஒழித்துவிடுவதற்கான இலகுவான வழிதான் இனரீதியான மதரீதியான அல்லது கோத்திரங்களுக்கிடையிலான குழப்பங்கள் மூலமாக மக்களை கொல்லப்பட்டுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தல், இதனால் அமெரிக் காவில் பிரிவினைவாத தேவை இன்னும் உலகத்தில் உயிரோடு நிலையாக இருக்கின்றது. அதுமாத்திரமல்ல சோஷலிச முகாமின் வீழ்ச்சியோடு ஏற்பட்ட புதிய நிலைமையின் கீழ் உலகத்தை தனியான ஆதிக்கத்தை பெற்றுக் கொள்வதற்கு அமெரிக்கா செயல்பட்டது. சோவியத் நாடு இல்லாத நிலமையில் உலகத்தின் யுத்த, பொருளாதார மறைவிடங்களை தமக்கு கீழ் கொண்டு வருவதற்கும் அவற்றில் குடியிருப்பதற்கும் அமெரிக்கா பொறுமையற்று செயல்படுகிறது. ஐ.நா அமைப்பை கூட வெட்கக் கேடான வகையில் அதற்காக உபயோகித்துக் கொள்கிறது. நினைவுகூர்ந்து பாருங்கள்- ஈராக் - குவைட் நெருக்கடி அங்கே அமெரிக்கா ஈராக் கை தாக்கிவிட்டு குவைட்டில் குடியேறியுள்ளது.
சோமாலியாவில் குடியேற போய் தோல்வி கண்டது. இந்த இரு நாடுகளிலும் உள்ள எண்ணைவளங்கள் தான் அவர்களுக்கு முக்கியமாகப்பட்டது. அப்படியான முக்கிய இடங்களுக்கு நுழையும் போது. அமெரிக் காவிற்கு தேவையான காரணங்களை உருவாக்கிக்கொண்டது. அவற்றிலிருந்து இன. மத. வர்க்க ரீதியான வேறுபாடுகளை இவர்கள் உபயோகித்து கொண்டனர். இது இலங்கைக்கும் அப்படியே பொருந்தும், இலங்கையின் திருகோணமலை துறைமுகம், அமெரிக்காவின் குரல் (ஏழஉைந ழக யுஅநசஉைய) எப்பாவெல பொஸ்பேட் கனியவளம் போன்ற பிரச்சினைகளின் போது நடைமுறையிலிருக்கும் அமெரிக்க எதிர்ப்பை வேறுபக்கத்திற்கு திசைதிருப்பி, நாட்டு பிரச்சினையை தீர்க்கின்ற போர்வையில் நாட்டுக்குள் நுழைவதே அமெரிக்காவின் தேவையாகும். அதற்காக பிரிவினைவாதத்தை முக்கியமாக இலங்கையில் பயன்படுத்துகின்றனர்.
நியமுவா:- தேசியப் பிரச்சினைக்கும் மேலாக வர்க்கப் பிரச்சினை வைக்கப்பட வேண்டுமென்று உங்களுடைய கட்சி அடிக்கடி சுட்டிக் காட்டுகின்றது. இந்த அறிக்கைக்கான விளக்கத்தை நாம் எப்படி விளங்கிக் கொள்வது?
22

தோழர் அமரசிங்க :- உண்மையாகவே தேசியப் பிரச்சினையை திர்க்க வேண்டுமானால் அதனை தெளிவாக நோக்க வேண்டும். தேசியப் பிரச்சினை தோன்றியிருப்பது ஒரு வர்க்க சமூகத்திற்குள் அதனால், ஒரு வர்க்கத்தின் வர்க்கத் தேவையும், இருப்பும் தெளிவாகிறது. இது உயிருள்ள உண்மை. எனவே இதனை வர்க்க அடிப்படையில் நோக்கினால் மாத்திரம் அதற்கான தீர்வை காணக்கூடியதாக இருக்கும்.
தேசியப் பிரச்சினையைப் பல கோணங்களில் நோக்க முடியும். இப்போது சந்திரிக்கா, கிளின் டன் பிரபாகரன், தொண்டமான் மட்டுமல்ல. வாசுதேவாவைப் போன்ற இடது" கள் கூட இதனை முதலாளித் துவக் கண்ணாலேயே பார்க்கின்றனர். அப்போது இதற்குத் தீர்வாக முதலாளித்துவம் பாதுகாக் கப்படுகின்ற வரையரைக்குள்ளேயே தீர்வைக் காணுகின்றனர் சிங்கள, படித்த இனவாதிகள் கூட இந்தப் பிரச்சினையை முதலாளித் துவக் கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். முதலாளித்துவத்தால் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவது முடியாத காரியம். அப்போது நாட்டுப் பரிவினை" என்ற முதலாளித்துவ தர்வுக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை நிலைநாட்டப்பட்டு ஜனநாயகத்தினதும். சமத்துவத்தினதும் அடிப்படையில் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதன் மூலமே இந்தப் பிரச்சினையைத் தீர்க்கமுடியும். இது முதலாளித்துவ வர்க்கத்தால் செய்ய முடியாத காரியம். அடுத்து, தேசியப் பிரச்சினையே நாட்டின் முதலாவது பிரச்சினை எனும் போது சமூகத்தின் முக்கிய பிரச்சினையான வர்க் கப் பிரச்சினை முடி மறைக் கப்படுகின்றது. ●#g方「5Dl望ys。 முதலாளித்துவத்தின் நெருக்கடியும், பிரச்சினைக்குத் தீர்வு காண அதனால் முடியாத தன்மையும் மறைக்கப்பட இடம் கிடைக்கிறது. இதன் அடிப்படையில்தான் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் வடக்கின் யுத்தமே என்று அரசாங்கம் கூறுகிறது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் யத்தம் இல்லையென்றால் நாட்டின் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்திருக்கும். ஆனால் வடக்கின் யுத்தம் இல்லாத காலத்திலும் இது போன்று பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்தன. இதனால், முதலாளித்துவத்தைத்
23

Page 14
தோற்க்கடிப்பதற்குப் பதிலாக வடக்கின் யுத்தத்தை " வெற்றி கொள்வது என்ற மனநிலைக்குள் மக்களைச் சிறைப்படுத்திக் கொண்டு தொடர்ந்து ஆட்சி நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்கிறது. அதனால் தான் நாம் கூறுகிறோம் தேசியப் பிரச்சினைக்கு மேலாக வர்க்கப் பிரச்சினையை வைக்க வேண்டுமென்று
நியமுவா:- தற்போது உங்கள் கட்சி தேசிய பிரச்சினையைப் பற்றி அதிகமாக பேசும்போது தாங்கள் வர்க்கப் பிரச்சினைக்கு மேலாக தேசிய பிரச்சினைIை வைத்திருப்பதாக யாராவது தர்க்கித்தால்?
தோழர் அமரசிங்க: - அது ஒரு போதும் அப்படி நடக்காது. நாம் தேசியப் பிரச்சினையில் மாத்திரமல்ல. வேறு எல்லாப் பிரச்சினைகளின் போதும் நாம் முக்கியமாக, உயர்வாகக் கருதுவது வர்க்கப் பிரச்சினையே. உதாரணமாக, தொழில் பிரச்சினையை எடுப்போம். அதுவும் வர்க்கப் பிரச்சினையின் வடிவமாகும். நாடு முகம் கொடுத் திருக்கும். சமூக. பொருளாதார, அரசியல் போன்ற அனைத்துப் பிரச்சினைகளையும் வர்க்கப் பிரச்சினையாகவே நாம் காண்கின்றோம். அதனை நாங்கள் விமர்சிப்பது கூட வர்க்க அடிப்படையில் சோஷலிசத்தின் கீழ் எப்படியிருப்பினும் தேசியப் பிரச்சினை என்பது வர்க்கப் பிரச்சினையால் தோற்றுவிக்கப்பட்ட ஒன்று. எனவே அதனைக் கூட வர்க் கரீதியில் தான் நாம் பார்க்கிறோம். வர்க்கப் பிரச்சினையை மேலாக வைத்து. அந்தப் பிரச்சினையை தீர்ப்பது சம்பந்தமாக பேசுகிறோம். சோஷலிசத்திற்கு உடன்பட்டு தேசியப் பிரச்சினையைத் திர்ப்பது பற்றி நாம் பேசுவது கூடவர்க்க ரீதியில் தான். முதலாளித்துவ முறையின் கீழ் தேசியப் பிரச்சினையைத் திர்க்க முடியும் என்று நாம் கூறியிருக்கிறோமா? அப்படியெனில் நாமும் வர்க்கப் பிரச்சினையை தேசியப் பிரச்சினைக்கு அடிபணிந்து விட்டதாக கூற முடியும்,
நியமுவா:- இந்தப் பிரச்சினை விருத்தியடைந்த நாள் தொட்டு இருந்த அரசாங்கங்களுக்கும். பிரிவினைவாதக் குழுக்களுக்கும் இடையில் புத்தத்தைப் போலவே பேச்சுவார்த்தையும் அடிக்கடி நடைபெற்றன. இந்த அனைத்து செயற்பாடுகளையும் அரசியல் ரீதியில் தாங்கள் எப்படிக் காண்கிறீர்கள்.?
தோழர் அமரசிங்க:- தேசியப் பிரச்சினையைப் பிரிவினைவாதம் வரை
24

தள்ளிச் சென்று மக்களைப் பிரித்தது சிங்கள. தமிழ் முதலாளித்தும், வர்க்க மேயாகும். இந்தத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே அவர்கள் யுத்தத்தில் ஈடுபட்டதும் பேச்சுவார்த்தைகள் நடாத்தியதும். யுத்தம். பேச்சுவார்த்தை அனைத்திலும் ஒரு ஏமாற்றுத்தன்மையே மலிந்துக் கிடந்தது. தமிழ் பிரிவினைவாத அமைப்புகள் யுத்தத்தின் போது மாத்திரமல்ல. பேச்சுவார்த்தையின் போதும் தமது தனிநாட்டுக் கோரிக்கையின் விளிம்புக் கே அரசாங்கத்தை இழுத்துச் செல்லவே முயற்சி செய்தனர். அதேபோல் முதலாளித்துவ அரசாங்கமும் தான் சமர்ப்பிக்கும் ஏதோ ஒரு தீர்வுக்கு தமிழ் அமைப்புகளை இணங்கவைப்பதற்கு முயற்சி செய்தது. இதன் மூலம் 'நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் இதுதான். இந்த எல்லாச் செயற்பாடுகளினாலும் அரசாங்கத்திற்கும். பிரிவினை வாதிகளுக்கும் இடையில் இருந்தது பிரிவினைவாதத் தீர்வு மாத்திரமே. பிரிவினைவாதத்தை தோற்கடிக்கும் தீர்வு எச் சந்தர்ப்பத்திலும் இருந்ததில்லை.
தமிழ் பிரிவினைவாதிகள் ஒரே தடவையில் நாட்டைப் பிரித்துக் கேட்கும் போது முதலாளித்துவ அரசாங்கங்கள் படிப்படியாக பிரிவினைக் கான முன்னேற்பாடாக மாகாண சபைகளையோ, 3)|ൺ (b பிராந்தியச் U 0) ||bഞ ബ| ({{f யோசனையாக முன்வைத்தனர். எனினும் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணிகளான, சமத்துவமும், ஜனநாயகமும் இல்லாமல் போவதைத் தடுப்பதற்கு முதலாளித்துவ அரசாங்கங்கள் முயற்சி எடுக்கவில்லை. தமிழ்ப் பிரிவினைவாதிகள் அப்படி ஒன்றைக் கேட்கவுமில்லை.அவர்களுக்கு பிரிய வேண்டிய தேவை ஏற்பட்டதோடு அரசாங்கம் அவர்களைப் பலவந்தமாக வைத்துக் கொள்ள அல்லது அவர்களுக்கு கப்பமொன்று கொடுப்பதற்கு தயாரானது. பிரச்சினையைத் திர்ப்பதற்கான உண்மையான செயற்பாடுகள் அனைவரினாலும் கைவிடப்பட்டது. அதுதான் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலமையில் பேச்சுவார்த்தை நடத்துவது யுத்தத்திற்கு தயாராவதற்காகவே யுத்தம் செய்வது பேச்சுவார்த்தைக்காக தள்ளப்படுவதற்காகவே. இவை இரண்டும் ஒன்றோடொன்று செயற்படுகிறது.
நியமுவா:- முதலாளித்துவ அரசாங்கமும் ஈழப் பிரிவினைவாதிகள் என்ற
25

Page 15
இருசாராரும் பிரிவினைவாதம் என்ற ஒரே கொள்கையில் இருப்பதை விளங்கிக் கொள்வது சிக்கலான செயல் அல்லவா?
தோழர் அமரசிங்க:- இது மிகவும் தெளிவான காரணம் ஒன்று. சுருக்கமாகச் சொல்வதானால், இந்த இருசாராருக்கும் முதலாளித்தவ முறையையும் அதன் இருப்பையும் பாதுகாக்க வேண்டும். அதேபோல் இருசாராரும் ஏகாதிபத்திய நோக்கத்தை நிறைவேற்ற கட்டுப்பட்டு உள்ளனர். அதுதான் முக்கிய காரணம். எமது நாட்டின் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியச் சார்புடையது. இச்சந்தர்ப்பத்திலும் ஏகாதிபத்திய வழிகாட்டலின் மீதே முதலாளித்துவ அரசாங்கம் நிலைத்திருக்கிறது. குறிப்பாக எமது நாட்டில் அரசாங்கத்தை நிறுவுவதற்கு உதவி செய்வது ஏகாதிபத்தியவாதிகள். அதனால் அந்த முதலாளித்துவ அரசாங்கம் ஏகாதிபத்தியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கட்டுப்பட்டுள்ளனர். இனரீதியில் பிளவுபட்ட முதலாளித்துவ அரசாங்கமொன்றை தமது சமூகத்திற்கு பெற்றுக் கொடுக்கவே பிரிவினைவாதிகளும் தயாராயிருக்கின்றனர். தமது கைக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்ககூடிய வகையிலான வேறு அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்ள ஏகாதிபத்தியவாதிகள் அவர்களுக்கும் உதவுகின்றனர். நாடு பிரிக்கப்படுவதால் முதலாளித்துவ முறைக்கு திங்கு ஏற்படப் போவதில்லை. பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்கே தீங்கிழைக்கப்படும். தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமைக்கே தீங்கிழைக்கப்படும். இதனால் தான் பிரிவினைவாதம் இருசாராரினதும் கொள்கையாக இருக்கிறது.
தோழர் டிவ்வின் சில்வா:- சொல்லப்பட்ட விடயங்களை மேலும் நாம் இப்படிச் சிந்திப்போம். ஜயவர்த்தனாவின் அரசாங்கம் தீவிர அமெரிக்கச் சார்புடையதாக இருந்தது. பிறகு ஜயவர்தன இந்தியாவுக்கும் அடிபணிந்தார். ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு, இலங்கையைக் காட்டிக் கொடுத்து, மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது மாகாண சபைகளை அமைத்தார். வடக்கையும் கிழக்கையும் இணைத்தார். அது தற்காலிகமானது என்று சொன்ன போதிலும் இன்றும் அப்படியே இருக்கிறது.
பொ. ஜ. மு வம் அப்படித்தான் பொ. ஜ. மு. யின் தலைமைத்துவம்
26

தீவிர ஏகாதிபத்தியச் சார்புடையது. இந்தத் தலைமைத்துவம் தான் திறந்த பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து பொ.ஜ. முன்னணி நிலைப்பாட்டைத் திறந்த பொருளாதாரத்தக்குச் சார்பாக மாற்றியது. தனியார் மயப்படுத்தலும் நாட்டைக் துண்டாடுவதுமே இப்போது இவர்களின் கொள்கையாக உள்ளது. இந்த இரு கொள்கைகளும் ஏகாதிபத்தியத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அமைத்துக் கொண்ட ஒன்று. இனி ஒரு தனி நாட்டுக்கு ராஜாவாக விரும்பும் தமிழ் ஈழ அமைப்புக் கள் 'பிரிவினைவாதத்தை " உபயோகிக்கும்போது நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியாத முதலாளித்துவ அரசாங்கம் பிரச்சினைக் குத் தீர்வாக பிரிவினைவாத்த்திற்குள் நுழைகிறது. முதலாளித்துவமுறையை இல்லாதொழிக்க முடியாதவழி அதுதான். இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வைக் கேட்கும் மக்கள். முதலாளித்துவ முறையை இல்லா தொழிக்க முடிவெடுப் பார்கள். அப்போது முதலாளித்துவத்தைப் பாதுகாக்கக் கூடிய தீர்வான அதிகாரப் பகிர்வை" தேர்ந்தெடுப்பார்கள். அரசியலில் இருக்கும் நாம் இப்படி சிக்கலான பிரச்சினைகளை தெரிந்து கொள்ளப் பயப்படத் தேவையில்லை. அரசியல் என்பது இதுதான்.
நியமுவ:- கடந்த நாட்களில் பொ.ஐ.மு. அரசினால் மேற்கொள்ளப்பட்டதும் வடக்கை வெற்றி கொள்வதற்காக நடத்திய யுத்தத்தை நீங்கள் விளங்கிக் கொள்வது எப்படி?
தோழர் அமரசிங்க:- ஐ.தே.க. அரசைப் போலவே இவர்கள் செய்ததும் பொய். என்றாலும் இந்த யுத்தத்தின் அரசியல் நோக்கம் வேறு. நாம் இப்படிப்பார்ப்போம் 95 ஜூலையில் அரசாங்கம் (இதிரிபிம்ம) முன்பாய்ச்சல் நடவடிக்கையை மேற்கொண்டது ஏன்? ஜூலை 15ல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதாக உறுதியளித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதனை மீறினார். அப்போது தலைதூக்கிய எதிர்ப்பை திசை திருப்புவதற்காக இதிரி பிம்ம" நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்காகக் கொண்டு வரப்பட்ட
27

Page 16
அதிகாரப்பகிர்வு" யோசனைக்கு டுவுவுது யினரை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காகவே சூரியகதிர்" நடவடிக்கையை ஆரம்பித்தனர் . அத் தேடு நாட்டில் தோன்றியிருந்த எதிர்ப்பை மழுங்கடிப்பதற்காகவும் அது பயன்பட்டது. அது மாத்திரமல்ல. JB TL (96) இருந்த பொருளாதாரப் பிரச்சினைகள் தனியார்மயப்படுத்தல் போன்றவற்றால் வெறுப்படைந்திருந்த மக்கள் மத்தியில் யுத்த மனோபாவத்தை தோற்றுவிக்கவும் இது பயன்பட்டது. ' நிலையிலிருந்த அரசு" இன்று யுத்தம் நாளை பேச்சுவார்த்தை என்ற நிலைக்கு தள்ளப்பட்டதும் அப்படித்தான். தெற்கு மக்களின் மனோபாவத்தை தம் பக்கம் இழுத்துக் கொள்வதற்காக இந்த யுத்தம் மேற்கொள்ளப்பட்டது என்று இப்போது நன்கு விளங்குகிறது
சமாதானத்துக்காக பேச்சுவார்த்தை என்ற
அல்லவா?
நியாமுவா:- நாங்கள் முக்கியமான கேள்வியொன்றைக் கேட்கிறோம் நீங்கள் புத்தத்தை எதிர்க்கிறீர்களா?
தோழர் டில்வின் சில்வா :- இது மிகவும் பிரசித்தமான கேள்வியொன்று வாசுதேவ நாணயக்கார போன்ற போலி யுத்தவிரோதிகளிடமுள்ள பதிலை நாம் கூறப்போவதில்லை. வாசுதேவ யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு யுத்தத்தை கொண்டு நடத்துவதற்கான அரசாங்கத்தின் அவசரகாலச் சட்டத்திற்கும். பாதுகாப்பு நிதிக்கும் 望。写J5)」「あ பாராளுமன்றத்தில் கைது க்குகிறார் சந்தர்ப்பவாதத்தையும், முதலாளித்துவத்தையும் சமப்படுத்த முடியாது. இரண்டுங் கெட்டான்" நிலை என்றே அதனை நாம் கருதுகிறோம் பிரிவினைவாதிகளும். முதலாளித்துவவாதிகளும் தமது ஒரே நோக்கத்திற்காக மக்களை ஏமாற்றும் இந்த நடவடிக்கைக்காக, வாசுதேவாக்களைப் போன்ற போலி எதிர்ப்பை காட்ட வேண்டிய தேவை எமக்கில்லை. எமது நிலை மிகவும் தெளிவானது. பொதுவாக யுத்தத்தை எடுத்துக் கொண்டால், அது மனித உயிர்களை நாசமாக்கும் ஒன்று சமூகங்களுக்கு தீங்கிழைக்க கூடியது. அப்படிப் பார்க்கும் போதும் நாம் புத்தத்தை எதிர்க்கிறோம். ஆனால் ஒன்று சொல்ல வேண்டும் இந்த எதிர்ப்பை
28

ஒரு "கவர்ச்சியாகக் காட்ட நாம் தயாரில்லை" யாராவது உண்மையாகவே இந்த யுத்தத்தை எதிர்ப்பதாயிருந்தால் யுத்தத்தை தோற்றுவித்த காரணியைத்தான் எதிர்க்க வேண்டும். இலங்கையில் இப்போது நடக்கும் யுத்தத்தில் யுத்தத்துக்குக் காரணியான பிரிவினைவாதத்தையே நாம் எதிர்க்க வேண்டும். பிரிவினைவாதத்தை ஆதரித்துக் கொண்டு அதனால் ஏற்படும் யுத்தத்தை மேலோட்டமாக எதிர்ப்பது துரோகமாகும். இதனால் இனவாதிகளின் யுத்தம் ஏற்படுத்தும் பிரிவினைவாதத்தை நாம் முழுமையாக எதிர்க்கிறோம். ஏகாதிபத்தியவாதிகளின் அரசியல், பொருளாதாரத் தேவைகள் உலகில் யுத்தத் தைத் தோற்றுவிக்கின்றன. அதனால் நாம் எகாதிபத்தியத்தை எதிர்க்கிறோம். நாம் 'காட்டைக் காணாமல் மரத்தைக் காணும் மனிதர்களல்ல. போர் நிறுத்தம் வேண்டும் என்ற எண்ணம் யாருக்காவது இருந்தால் போரை நிர்மாணிப்பவர்களான ஏகாதிபத்தியத்திற்கும். முதலாளித்துவத்திற்கும், அவற்றின் சுரன்ை டலுக்கும் நாட்டை பிரிகின்ற பிரிவினைவாதக் கொள்கைகளையும் தோற்கடிக்க வேண்டும். அவற்றை எதிர்க்க வேண்டும். அப்படியின்றி போலியாக யுத்தத்தை எதிர்ப்பதும் (3 || 5 || FTB சமாதானத்தைபற்றிப் பேசுவதும் படுமோசமான துரோகமாகும். பாட்டாளி வர்க்கத்தினால் மாத்திரமே யுத்தங்களை நிறுத்த முடியும் சோஷலிசத்தினால் மாத்திரமே யுத்தத்தை நிறுத்தமுடியும், சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட முடியும். ஏகாதிபத்தியத்தையும். முதலாளித்துவத்தையும் அடியோடு தோற்கடிப்பதன் மூலமே அனைத்தையும் வெல்ல முடியும் யதார்த்தமும் அதுதான்.
நியமுவா- தேசியப் பிரச்சினைக்குள் இனவாதச் செயல்பாட்டை நீங்கள் எப்படி விளங்கிக் கொள்கிறீர்கள்.?
தோழர் டில் வின் சில்வ1:- இனவாதத்தின் தேவையின. மீதே இனப்பிரச்சினை தொடர்கிறது. சிங்கள. தமிழ், இனவாதம் பரவத் தொடங்கியதிலிருந்து தேசியப் பிரச்சினை விரிவடைந்தது. இனவாதம் பாட்டாளி வர்க்கத்திற்கு தேவையற்ற ஒன்று. பதவிக்கு
29

Page 17
வரவேண்டியதற்காக, தமிழ் தனவந்தர்கள் தமிழ் இனவாதத்தையும். சிங்கள தனவந்தர்கள் சிங்கள இனவாதத்தையும் துவினர். அத்தோடு இனவாதக் கண்ணோடு ஒருவரையொருவர் நோக்கிக் கொள்ளவும் பழக்கப்படுத்தினர். இனவாத அடிப்படையிலேயே அரசியல் கட்சிகளையும் ஆரம்பித்தனர். தமிழ் தனவந்தர்கள் 50க்கு 50 கேட்டும் தமிழ் அரசுக் கட்சிகளை அமைத்தும் முதலாளித்துவ அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் இருந்தனர். சிங்கள இனவாதிகள் சிங்களத்தை அரச மொழியாக அமைத்ததோடு. சிங்கள மகா சபையை அமைத்தனர். இனவாதக் குழப்பங்களை உருவாக்கினர். இப்படியாக இனவாதத்தை மக்கள் மத்தியில் நிலை நாட்டினாலும், மக்களைச் சுரண்டும் போது முதலாளித்துவ வாதிகளுக்கு இனவாதம் தேவைப்படவில்லை. கடந்த இரு அரசாங்கங்களிலும் அமைச்சராகும் வாய்ப்பு தொண்டமானுக்கு கிடைத்ததும் அப்படித்தான் முதலாளித்துவ வர்க்கம் (சிங்கள, தமிழ், முஸ்லிம்) ஒரே அமைச்சரவையில் இருந்து கொண்டு இனவாத அடிப்படையில் மக்களைப் பிரித்தார்கள். சிங்கள இனவாதிகள் தமிழர்களைக் கொன்று விரட்டும் போது தமிழ் இனவாதிகள் சிங்கள, முஸ்லிம் கிராமங்களைத் தாக்கி நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றனர்.
இப்போதும் கூட மிகப் பாரதூரமான முறையில் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. சிங்கள இனவாதத்திற்கு எதிராக தமிழ் இனவாதத்திற்குள் விழுவதும்.தமிழ் இனவாதத்துக்கு எதிராக சிங்கள இனவாததிற்குள் விழுவதும் தீர்வாக அமையாது. அதனால் பிரச்சினை அதிகரிக்குமே தவிர, குறையப் போவதில்லை. செய்யவேண்டியது என்னவென்றால், எல்லா இனவாதத்தையும் ஒதுக் கித் தள்ளிவிட்டு, பாட்டாளி வர்க்கத்தின் பரந்த ஒற்றுமைக்காக செயல்பட வேண்டும். பிரிவினை வாதம் இருக்கும் வரையும் நிலைமை மோசமாகவே இருக்குமென்பதால், அதனைத் தோற்கடிக்க வேண்டுமென்று சொல்கிறோம்.
நியமுவா- பிரிவினைவாதத்தை எதிர்ப்பதும், பாட்டாளி வர்க்கத்தன் பரந்த ஒற்றுமைக்காக தோற்றுவதும் இந்த இரண்டுகாரணிகளும் ஒன்றாக செயல்படுவதை சற்று விளக்கமாகக் கூறுங்கள்.
தோழர் அமரசிங்க:- இச்சந்தர்ப்பத்தில், இந்த இருசாராரினது
30

அரசியலும் இனவாதத்திலேயே தங்கியுள்ளது. ஒரு பக்கத்தில் தமிழ் இனவாதம், ஏகாதிபத்திய வலையில் சிக்கியுள்ள ஆயுதபாணியான ஒரு அமைப்பும், சந்திரிகாவின் அரசாங்கமும். தமிழ் இனவாதததிற்குள் வீழ்ந்து விட்டது. அது மட்டுமல்ல, ராவய" யுக்திய" பத்திரிகையாளர்கள் உட்பட புேழு துரைமாரும் போலி அறிவாளிகள் படித்தவர்கள் ஆகியோரும் கூட தமிழ் இனவாதத்திற்குள்ளேயே வாழ்கின்றனர். சிலபேர் பயத்தினால், இன்னும் சிலபேர் டொலர்"களுக்காக அப்படிச் செய்கின்றனர். தமிழ் இனவாதத் தேவைக்கு மார்க்ஸிச விளக்கம் கொடுக்குமளவுக்கு சிலர் முன்னேறியுள்ளனர். சுயநிர்ணயத்தை" இனவாதத்தோடு சிக்கிக்கொண்டுள்ளனர்.
மறுபக்கத்தில் தமிழ் இனவாதத்திற்கு எதிராக 'சிங்கள மக்களின் உரிமைகளுக்காக சத்தமிடும் சிங்கள இனவாதம், பிரச்சினைக்கு சரியான தீர்வொன்றை அளிப்பதை சிக்கலாக்கிக் கொண்டுள்ளது. ஜனதா மிதுரோ" நளின் டி சில்வா. அமரசேகர போன்றோர் சிங்கள இனவாதத்தைத் துண்டுகின்றனர். இன்று வடக்கின் இனவாதம் தனிநாடு கேட்குமளவுக்குத் தள்ளப்பட்டதற்கும், சாதாரண தமிழ் மக்கள் தனி ராஜ்ஜியமொன்றுக்காகத் தூண்டப்பட்டதற்கும், சிங்கள இனவாதமும் கடந்த காலங்களில் அவர்கள் நடந்து கொண்ட முறையுமே காரணமாக இருந்தன. ஆகவே, சிங்கள இனவாதத்தினால், தமிழ் இனவாதத்தை ஒரு போதும் தோற்கடிக்க (UptÇ? (LIFT göl. தமிழ் இனவாதத்தைப் பலப்படுத்தவும், மக்களுக்கிடையில் சந்தேகத்தையும், எதிர் மனப்பான்மையை அதிகரிப்பதை மாத்திரமே அவர்களால் செய்ய முடியும். எனவே இந்த நாட்டு மக்கள் இனவாத வலையில் சிக்கக் கூடாது என்று நாம் கேட்டுக்கொள்கிறோம்.
நியமுவா:- இந்த இரண்டு இனவாதப் பிரிவுகளுக்கிடையில் முதலாளித்துவ அரசாங்கத்தின் தலையீட்டை நீங்கள் எப்படி காண்கிறீர்கள்.
தோழர் டில்வின் சில்வா:- எம்நாட்டு அரசாங்ககள் அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இனவாதத்தைப் பயன்படுத்தினர். அதனால் தான் பண்டாரநாயக சிங்கள இனவாதியாக மாறினார்.
3.

Page 18
அதேபோல் சந்திரிக்காவும் தனது அதிகாரத்தையும் உயிரையும் பாதுகாத்துக்கொள்வதற்காக தமிழ் இனவாதத்திற்கு சார்பாக உள்ளார். இப்போதும் கூட பாராளுமன்றத்திலுள்ள தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களின் வாக்குப் பலத்திலே சந்திரிக்காவின் அரசாங்கம் தங்கியுள்ளது எனவே, அதிகாரத் தைப் பாதுகாத்து கொள்வதற்காகவும், உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தமிழ் இனவாதத்திற்குள் நுழைந்துள்ளனர். அத்தோடு சிங்கள இனவாதத்திலிருந்து வரும் வற்புறுத்தல்கள் இல்லாம லாக்குவதற்கும் முயற்சி செய்கிறார்.
சிங்கள இனவாதிகளையும், தமிழ் இனவாதிகளையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் முயற்சி செய்ததையும் பார்த்தோம். தீர்வுப் பொதியைச் சமர்ப்பித்து அதன் மூலம் தமிழ் இனவாதிகளை தனது பக்கம் திருப்பிக் கொண்டுள்ளதோடு. வட-கிழக்கு யுத்தத்தின் மூலம் சிங்கள இனவாதிகளையும் தனது பக்கம் திருப்பியுள்ளாாகள். இரு இனவாதத்தையும் நிராகரிப்பவர்களை அவர் தாக்குகிறார். எப்படியிருப்பினும், கடைசியாக சிங்கள இனவாதத்தைப் பகைத்துக் கொள்ளாமலேயே தமிழ் இனவாதிகளுக்கு கப்பம் கொடுக்க முயற்சி செய்வது தெரிகிறது. பழைய முதலாளித்துவ அரசாங்கங்களும் இப்படித்தான் நடந்து கொண்டன. தாம் தொடர்ந்தும் பதவியிலிருப்பதற்காக, ஏதாவது ஒரு இனவாதத்தோடும் சோரம் போவது. அல்லது எல்லா இனவாதத் தோடு சோரம் போவது முன்னைய அரசாங்கங்களின் வழக்கமாக இருந்தது.
நியமுவா:- இந்தப் பேச்சுவார்த்தையின் போது நீங்கள் கூறினீர்கள் பாட்டாளி வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் பிரிவினைவாதத்தை எதிர்ப்பதாக, ஆனால் தமிழ் மக்கள் பிரிவினைவாத அரசியலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் அவர்களைச் சோஷலிஸ வேலைத்திட்டத்திற்குள் சேர்த்துக் கொள்வது இந்த நிலைமையில் எவ்வாறு முடியும்?
தோழர் அமரசிங்க:- தமிழ் மக்கள் அனைவரும் பிரிவினைவாதத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்களென்று நாம் நம்பவில்லை. பிரபாகரனின் பலவந்தத்தினால் பெரும்பான்மையோர்
32

பிரிவினைவாதத்தை ஆதரித்தாலும், எல்லோருமே அந்த நிலையில் இல்லை. அரசாங்கத்தின் செயல்பாட்டினால் அவர்களதும் பிரிவினைவாதத்திற்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்படியிருப்பினும், 1977ல் அமிர்தலிங்கம் தமிழ் ஈழத்திற்காக வாக்கு கேட்டபோது தமிழ் மக்கள் எல்லோருமே அவர்களுக்கு வாக்களிக்க வில்லையென்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் பிரிவினை வாதத்தோடு எவ்வளவு தூரம் தொடர்பு வைத்தள்ளார்கள் என்பதைப் பார்க்க வேண்டுமானால், LTTE யும் அரசாங்கமும் தமது பலாத்கார நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்க வேண்டும். அப்போதுதான் யதார்த்தம் தெரியும்.
அடுத்து, சோஷலிஸப் புரட்சிக்காக தமிழ் மக்களை எப்படி சேர்த்துக் கொள்வது என்ற கேள்வியே தவறு. சமூகங்களைக் கோடு கீறி பிரிக்காமல், இலங்கை மக்கள் அனைவரையுமே சமுதாயப்புரட்சிக்காக சேர்த்துக் கொள்வது எப்படி என்றே நாம் சிந்திக்க வேண்டும். அதற்காக பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தை நிலைநாட்ட வேண்டும். சிங்களம். தமிழ், ஆங்கிலம், பேசக்கூடிய மக்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் மக்களை சமூகப் புரட்சிக்கு இட்டுச் செல்ல தடையாக உள்ள அனைத்து தடைகளையும் தகர்த்தெறிய வேண்டும். இந்சந்தர்ப்பத்தில், முக்கியமாக பிரிவினைவாதத்தை தோற்கடிக்க வேண்டும். எல்லா மொழிகளைக் கொண்டும் அரசியல் நடவடிக் கைகளை நாம் மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு சமூகத்தையும் புரட்சிக்கு இழுத்துக் கொள்வது சம்பந்தமான உங்கள் கேள்வி செல்லுபடியாகாது.
நியமுவா:- தமிழ் மக்களை பாட்டாளிவர்க்கப் போராட்டத்துக்கு வென்றெடுக்க வேணடுமென்றால். அவர்களின் பிரிவினைப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று சிலர் சொல்கிறார்கள். மேற்பார்வைக்கு அதில் ஒரு தர்க்கர்தியான சுபாவம் இருக்கிறது. இது சம்பந்தமான நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.?
தோழர் அமரசிங்க: - அது முற்றிலும் தவறான ஒரு யோசனை பிரிவினைவாதப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதால் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டம் கரைந்து விடும் இனவாதமும்,
33

Page 19
பாட்டாளி வர்க்க சர்வதேசியமும், எப்போதுமே ஒன்றுக்கொன்று ஒத்துப் போகக் கூடியதல்ல. எனவே, எவ்வகையான தர்க்கரீதியினாலும் பிரிவினை" வாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்க பாட்டாளி வர் க் கத்தால் முடியாது. நாம் செய்யவேண்டியது என்னவென்றால் பிரிவினை வாதத்திற்குள்ளிருக்கும் உண்மையான அரசியலை வெளிக் கொணர்ந்து தமிழ் மக்களை அந்த தவறான நடவடிக்கையிலிருந்து விடுவித்து வருவதேயாகும். அப்படியல்லாமல் அந்த தவறான செயலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதல்ல.
தோழர் டில்வின் சில்வா:- இது சம்பந்தமாக சிறிய உதாரணமொன்று சொல்ல முடியும், பிரிவினைவாதப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும். தனி ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ளும், மார்க்ஸியவாதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் சில சிறிய குழுக் கள் தற்போது நமது நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் மக்கள் ஈழத்தைக் கைவிட்டு விட்டு அந்தக் கட்சி:" களுக்கு வந்து விடல்லை இதனால் நடப்பது என்னவென்றால், அந்தக் கட்சிகளின் செயல்பாடுகள், பிரிவினைவாதிகளினால் தம்மை நியாயப்படுத்திக் கொள்வதற்காகப் பயன்படுத்திக் கொள்வது மாத்திரமே.
இது சிறுபிள்ளைத்தனமான தர்க்கம். ஐ.தே.க குள் இருக்கும் எமது வர்க்க மக்களை வென்று கொள்வதற்காக நாம் ஐ.தே. கவை ஆதரிக்க வேண்டுமா? பொ.ஐ.மு.யில் இருக்கும் எமது மக்களை வென்று கொள்வதற்காக நாம் பொ. ஜ. மு யின் சொல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் சரியாக விடுமா? சரியான வழி என்னவென்றால், அந்தக் கட்சிகளின் தன்மையை வெளிக் கொணர்ந்து மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பது தான் எமது நடைமுறை.
நியமுவா- தேசியப் பிரச்சினை முதலாளித்துவ முறையின் கீழ் தீர்த்திருக்க வேண்டிய ஒரு பிரச்சினை என்றாலும் இச்சந்தர்ப்பத்தில் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதில் முதலாளித்துவ முறை வெற்றி கண்டுள்ளதா?
தோழர் அமரசிங்க:- இதில் ஒரு உண்மை இருக்கிறது. முதலாளித்துவம் தோன்றிய போதே தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். முதலாளித்துவம் இயற்கையாகவே
34

தோன்றிய சிலநாடுகளில் தேசியப் பிரச்சினை தீர்க்கப்பட்டுமிருக்கின்றது. முதலாளித்துவம் ஜனநாயக புரட்சி நடந்த நாடுகளில் முதலாளித்துவம் பிறந்த காலகட்டத்தில் முற்போக்கான திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டன. ஆனாலும் தற்போது முதலாளித்துவம் சாகும் நிலையில் உள்ளது. முதலாளித்துவம் நெருக்கடிக்குள்ளான கடைசி கால கட்டத்தில், தேசியப் பிரச்சினை மாத்திரமல்ல, சாதாரண சிறிய பிரச்சினைகளைக் கூட அதனால் தீர்க்க முடியாமல் போயுள்ளது. குறைந்த பட்சம் பாண்விலையேற்றம், பஸ்கட்ட உயர்வு போன்ற சிறிய பிரச்சினைகளைக் கூட கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத முதலாளித்துவ முறையினால், தேசியப் பிரச்சினை போன்ற பாரிய பிரச்சினையை எப்படி திர்க்கப் போகிறார்கள்.? முதலாளித்துவத்தினால் அது முடியாது, இலங்கையைப் பொறுத்தவரையில் இது விஷேடமானது. இலங்கையில் முதலாளித்துவம் அலங்கோலமாகவே பிறந்தது. அது முன்னேற்றமடைந்திராத ஒன்று. தேசியப் பிரச்சியைத் தீர்க்க அதனால் முடியாது. பிரச்சினையை உக்கிரமடையச் செய்ய முடியும். புதிய முதலாளித்துவ முறையினால் தேசியப் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதற்கு உலகம் பூராவும் உதாரணங்கள் உண்டு. இந்தியா, பங்களாதேஷ, ஸ்பெய்ன், கனடா, தற்போது யூகோஸ்லேவியா, ஆப்பிரிக்காவின் அநேக நாடுகளில் இந்தப் பிரச்சினை இருக்கிறது. முதலாளித்துவம் அதனைத் தீர்க்கவில்லை. இலங்கையில் முதலாளித்துவ முறை தோன்றி விருத்தியடைந்த போது, ஏற்கனவே இருந்த குலவேதம், மலைநாட்டு, கரைநாட்டு பேதம், பெண்கள் ஒடுக்குமுறை போன்றவற்றை அப்படியே வைத்துக் கொண்டே விருத்தியடைந்தது. முதலாளித்துவ முறைதான் இலங்கையின் தேசியப் பிரச்சினையை உருவாக்கியது. எனவே இலங்கை முதலாளித்துவ முறை உருவாக்கியபிரச்சினையை அவர்களாகவே எப்படி தீர்க்க போகிறார்கள். அதனால் தான் நாங்கள் சொல்கிறோம் மற்ற எல்லாப்பிரச்சினைகளையும் போன்று தேசியப் பிரச்சினையையும் சோஷலிசத்தின் மூலமே தீர்க்க முடியுமென்று.
நியமுவா:- நல்லது தேசியப் பிரச்சினையை சோஷலிசத்தின் மூலமே தீர்க்க
35

Page 20
முடியுமென்று சொல்கிறீர்கள். அப்படியானால் தமிழ் மக்கள் சோஷலிசம் வரும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எழுகிறது.
தோழர் அமரசிங்க:- ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மாத்திரமல்ல, எந்த ஒடுக்கப்பட்ட மக்களும் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தேசியப் பிரச்சினைக்கு [Ꮭ ᎿᏉ ᏣᏰLᎠ6Ꮝ 6u வேறு எந்தப் பிரச்சினைகளுக்காகவும் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. செய்ய வேண்டியதெல்லாம் என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்துப்போராட வேண்டியதுதான். ஆனால், ஒன்று கூடுதல் போராடுதல் போன்றவை வர்க் கப் பிரச்சினைக்கு உட்படுத்த வேண்டும். முதலாளித்துவத்தின் எல்லாப்பிரச்சினைகளும் முதலாளித்தவத்தின் நெருக்கடியினால் உருவாக்கப்படுபவையே, எந்த மொழி பேசினாலும், பாட்டாளி வர்க்கம் இந்தப் பிரச்சினைகளினால் பல வழிகளில் பாதிப்படைகிறது. அதனால்,சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து பாட்டாளி வர்க்க மக்களும், தம்மை துன்புறுத்தும் முதலாளித்துவத்தை தோற்கடிப்பதற்காக போராட வேண்டும். ஒன்று சேர வேண்டாம். ஒன்றுமைப்பட வேண்டும். சோஷலிசத்துக்குள் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்குள், சமதர்மத்துக்குள் தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். இதனைத் தவிர வேறு வழி, எந்தச் சமூக பாட்டாளி வர்க்கத்திடமும் இருக்குமென்றுநாம் நம்பவில்லை.
நியமுவா:- இந்தப் பிரச்சினையோடு அடிக்கடி பிரயோகிக்கும் ஒரு வசனம் "தேசியங்களின் சுயநிர்ணயம்” என்ற மார்க்ஸ்ச தத்துவம். இதனால் சொல்லப்படுவது என்னவென்று சற்று விளக்கமாகச் சொல்ல முடியுமா?
தோழர் டில்வின் சில்வா:- இது சம்பந்தமாக எமது கட்சியின் ஸ்தாபகர் அன்புக்குரிய தோழர் ரோஹண விஜேவீர, தனது இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு பாட்டாளி வர்க்கத்தின் தீர்வு என்ற நூலில் மிக ஆழமாக தெளிவுபடுத்தியுள்ளார். முதன் முதலாக ரஷ்யாவுக்காக லெனினால் பயன்படுத்தப்பட்ட ஒன்று இதில் சொல்லப்படுவது என்னவென்றால், ஏகாதிபத்தியவாதத்திலிருந்தும்
36

காலனித்தவ வாதத்திலிருந்தும் விடுதலை பெற மக்களுக்கு இருக்கும் உரிமையேயன்றி ஒரு நாட்டில் வசிக்கும் மக்களை பிரித்து வேறாக்கும் உரிமையல்ல.
தோழர் அமரசிங்க:- சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போகும் உரிமைதான். இங்கே இது யாருடைய உரிமை என்பது சிந்திக்க வேண்டும்.
ஒன்று பாட்டாளி வர்க்கத்தின் உரிமையாக இருக்க வேண்டும் அல்லது முதலாளித்துவ வர்க்கத்தின் உரிமையாக இருக்க வேண்டும். உரிமை என்பது நீண்ட காலம் நிலைத்திருக்க கூடியதோ, வரலாற்று ரீதியில் பதில் தேட வேண்டிய ஒன்றோ அல்ல. பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று ரீதியான ஒன்று சுயநிர்ணயத்துக்கான தேசியங்களின் உரிமை என்பதில் மார்க்ஸியவாதிகளின் கருத்து என்ன வென்றால், பாட்டாளி வர்க்க மக்கள் முதலாளித்துவ அமுக்கத்திலிருந்து மீள்வதற்கான உரிமையேயன்றி, சமூக விடுதலைக்கான உரிமையேயன்றி நாடுகளைத் துண்டாடும் உரிமையல்ல. ஆனால் தனவந்தர்களும், சந்தர்ப்பவாதிகளும், இனவாதிகளும், இது நாட்டைத் துண்டாடும் உரிமையாகும். பிரிவினைவாதமென்பது வெற்றி பெறுவதற்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சுலோகமாகும்.
சுயநிர்ணயத்துக் காக என்று சொல்லிக் கொண்டு, ஏகாதிபத்தியவாதிகளும், முதலாளித்துவ இனவாதச் சக்திகளுமே உலகம் பூராகவும் போராடிக் கொணடிருக்கிறார்கள். கடந்த காலங்களில் சுயநிர்ணயத்துக்காகப் போராடிய லட் வியா, லித்துவேனியா, அசர்பைஜான், ஆர்மேனிய, யுக்ரேன், சம்பியா, பொஸ்னியா போன்றவற்றின் இனவாத தனவந்தர்கள் காட்சிக்கு வைத்தது இனவாதிகளின் சுயநிர்ணய உரிமையையேன்றி, பட்டாளிவர்க்கத்தின் தேவையல்ல. இதனால் பாட்டாளி வர்க்கத்தின் உரிமைகளே பறிபோயின. இலங்கையிலும் இதே நிலைதான்.
நியமுவா:- பொ. ஐ. மு. முன்பு கொண்டு வந்த தீர்வு பொதிக்குப் பதிலாக இப்போது புதிதாக ஒன்றுக்கொண்டு வந்துள்ளது. இது சம்பந்தமாக உங்களது அபிப்பிராயம் என்ன?
37

Page 21
தோழர் அமரசிங்க:- முனபு கொண்டு வந்த தீர்வுப் பொதியைப்
போன்று இதுவும் ஏகாதிபத்தியத் தேவைக்காகக் கொஞ்சம் 1ெ1(0,11:11, 1ாட்டைப் பிரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஒன்று இது ரம்பர்தl11 நாட்டைப் பிரிப்பதற்காக தயாரிக்கப்பட் ஒன்று. இது
Jப்பந்தமாக நாம் பெரிய ஆர்ப்பாட்டமொன்றைச் செய்கிறோம். அந்த பதவிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாம் தயார் செய்தது சிங்கள இனவாதமாக அல்ல. பாட்டாளி வர்க்கத்தையும் நாட்டையும் பிரிப்பதற்கு எதிராக, உண்மையான வர்க்கத்தெளிவுடனேயே நாம் அதனைச் செய்தோம். மக்கள் மத்தியில் ஒற்றுமைக்காகவே நாம் முன்வந்தோம் இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தால் அரசாங்கம் தனது செயலிலிருந்து பின்வாங்கியது. அரசாங்கம் பின்வாங்குமளவுக்கு tO d'ib & b 6ir எதிர்ப்பு சக்தியானது. இந்த எதிர்ப்பை சீர்குழைப்பதற்காகவே அரசாங்கம் சூரியக்கதிர்" தாக்குதலைத் தொடங்கியது.
இப்போது அரசாங்கம் 'புதிய யோசனைகளைக் கொண்டு வந்துள்ளது. இந்தப் புதிய யோசனையில் புதிதாகச் சில வார்த்தைகள் மாத்திரமே உள்ளன. இரண்டுமே ஒன்று தான். இரண்டுமே நாட்டைப் பிரிப்பதற்காகச் செயல்படுகிறது. இந்த இரண்டு யோசனைகள் மூலமும் சமத்துவமின்மை சட்டபூர்வமாக்கப்படுகிறது. பிரதேச வேறுபாடுகள் உறுதி செய்யப்படுகின்றன. ஐனநாயகம் மேலும் அழிகிறது. மக்களை ஏமாற்றுவதற்காக பிரித்து வேறாக்க முடியாத " என்ற வார்த்தையை உபயோகித்தாலும் பிரித்து வேறாக்குவதற்கான சட்டரீதியான, சாசனரீதியான, அரசியல் ரீதியான சாத்தியக் கூறுகள் தேவயைான அளவு இருக்கின்றன. இது புதிய ஐசிங்" போடப்பட்ட பழைய கேக்" என்று மக்கள் சொல்வது அதனால்தான். இவை எல்லாவற்றுக்கும் மேலாக,தேசியப் பிரச்சினையை உருவாக்கிய பிரதான காரணியான சமத்துவமின்மையும் ஜனநாயக விரோதமும் இல்லாமல் போகப் போவதில்லை. இவைகள் மேலும் உறுதியாக நிலைநிறுத்தப்படும் அதனால் தான் நாங்கள் சொல்கிறோம். சமத்துவமில்லாத, ஜனநாயகமில்லாத அதிகாரப் பகிர்வை நாம் எதிர்ப்பதாக,
நியமுவா:- இன்றைய நிலைக்கு ஏற்ப தேசியப் பிரச்சினையோடு இந்தியாவின்
38

தொடர்பு எத்தகையது?
தோழர் அமரசிங்க:- எமது பிராந்தியத்தில் பலம் பொருந்திய நாடாக வர இந்தியா முயற்சி செய்கிறது. இதனால், அவர்கள் தமது அயல் அண்டை நாடுகளைத் தனக்குச் சார்பாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அமெரிக்க சார்பு இலங்கையை, இந்தியாசார்பு நாடாக மாற்றுவதற்காக வேண்டி இந்தியா, ஆரம்பத்தில் வடக்கின் போராளிக் குழுக்களுக்கு உதவி செய்தது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஒரு முறை அதனை சாதித்துக் கொள்ள இந்தியாவால் முடிந்தது. இந்தியா 'பிரிவினைவாதத்திற்கு உதவி செய்தது. ஒரு தந்திரோபாய தேவைக்காகவே, இலங்கை பிரிக்கப்படுவது இந்தியப் பிரிவினைவாதிகளுக்கு ஆதாயம். எனினும், இந்தியா அவ்வளவு தூரம் நினைக்காமல், குறுகியகால தேவைக்காகவே தமிழ் ஈழத்துக்கு உதவி செய்தது. இது பெருமளவில் மாறுபடவில்லை. இந்தியாவைப் பிரிப்பதற்காக இலங்கையின் பிரிவினைவாத அமைப்புக்களை பயன்படுத்திக் கொள்ள முடியாத காரணத்தால் இலங்கையின் வடபுலத்தில் இந்திய சார்பு அரசு ஒன்று இருப்பதை இந்தியா எதிர்க்காது. எனினும் நாட்டை ஒரேயடியாகப் பிரிக்கும் LTTE யை விட மற்றைய தமிழ் அமைப்புகளுக்கே இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது. இந்தியாவினால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சக்தியாக LTTE செயல்பட்டாலும், ஏனைய தமிழ் அமைப்புகளில் பெரும்பான்மையானவை இந்தியாவுக்குச் சார்பானவையே.
இலங்கை முதலாளித்துவ அரசாங்கத்தின் நன்மதிப்பை வைத்துக்கொண்டு. அதிகாரப்பரவல் திட்டத்தின் மூலம் இந்தியச் சார்புக் கோஷ்டியொன்று வடக்கில் அதிகாரத்துக்கு வருவதற்காக உதவி செய்யவே இந்தியா நினைக்கிறது. இதனால் தற்போதைய பிரிவினைவாத யோசனைகளை இந்தியா, ஆதரிக்கிறது. தற்போது, இலங்கை வியாபாரச் சந்தையின் பெரும் பகுதியை இந்தியா கைப்பற்றிக் கொண்டிருப்பதோடு சார்க் அமைப்பில் பலசாலியாக இருந்து கொண்டு அயல்நாடுகளை வற்புறுத்தக் கூடிய சக்தி இந்தியாவுக்கு இருப்பதால் அரசியல் சாசனரீதியான ஈழமொன்றுக்கு ஆதரவளிக்கக் கூடும் இலங்கையில் பாட்டாளி வர்க்க
39

Page 22
ஆட்சியொன்று அமைவதை இந்திய முதலாளித்துவ வர்க்கம் எவ்வகையிலும் ஆதரிக்க மாட்டாது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்,
நியமுவா:- இந்தப் பிரச்சினையின் போது UNP யின் பங்களிப்பு சம்பந்தமாக உங்களுடைய நிலைப்பாடு எத்தகையது?
தோழர் அமரசிங்க:- இந்தப் பிரச்சினை மேலோங்கியதற்கான பொறுப்பிலிருந்து UNP விடுதலையடைய முடியாது. அவர்கள் ஆட்சியிலிருந்த காலத்தில்தான். என்றுமில்லாதவாறு இந்தப் பிரச்சினை மிகவும் சிக்கலானது. 17வருட UNP ஆட்சியின் போதுதான் தேசியப் பிரச்சினை பாரதூரமாக விருத்தியடைந்தது. பரவலாகியது. அது ஆயுதபாணியான அமைப்பாக மாறும்போதுUNP யின் ஜனநாயக விரோதச் செயல்கள் ஈழத்துக்கான அடித்தளத்தை இட்டுக் கொடுத்தன. அழுக் கடைந்த இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டு இலங்கையை வெளிநாட்டுக்குக் காட்டிக் கொடுத்ததும் அவர்கள்தான் நாடு பிளவுபடுவதற்கு துண்டும் மாகாணசபைகள் அமைத்ததும் அவர்களே முழுநாட்டு மக்களினது எதிர்ப்பையும் பொருட் படுத்தாது அதைச் செயல்படுத்தியதும் அவர்களே. அது மாத்திரமல்ல மக்கள் அபிப்பிராயத்தைக் கேட்காமல் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி தான் தோன்றித்தனமாக வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்ததும் அவர்களே. வடக்கில் வாழும் மக்கள் தமிழீழத்தை நோக்கித் தள்ளப்பட்டதும் UNP யின் நடவடிக்கைகளின் காரணமாகத்தான் நினைத்துப்பாருங்கள். 83.கருப்பு ஜூலை, மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலின் போது செய்த வாக்கு மேசடி, யாழ்ப்பாண நூலகத்தைக் கொளுத்தியமை போன்ற செயல்களினால், சாதாரண மக்களும் ஆயுதமேந்தக் கூடிய பின்னணியை ஏற்படுத்தியதும் அவர்கள்தான். எனவே இந்தப் பொறுப்பிலிருந்து அவர்களால் நழுவமுடியாது. இந்தப் பிரச்சினையின் போது இன்றும் அவர்கள் ஏகாதிபத்தியவாதிகளின் பக்கமே இருக்கிறார்கள். பொ. ஜ. மு. யின் அதிகாரப் பரவல் யோசனைகள் சம்பந்தமாக நிச்சயமற்ற நிலையிலேயே அவர்கள்
40

கெட்டவர்களாகி விட்டனர் மக்களின் மனோபாவம் எந்தப் பக்கம் திரும்புகிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கொடிபோகும் திக்கில் கொப்பு ஊன்றுவதற்காக இதனால், இந்நாட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் பாட்டாளி வர்க்கம் UNP யின் கடந்த காலத்தை மறக்க மாட்டார்களென்று நாம் நம்புகிறோம்.
நியமுவா:- நல்லது இந்த அனைத்து நிலைமைகளுக்கும் முன்னால் தேசியப் பிரச்சனை சம்பந்தமாக உங்களது தீர்வு என்ன?
தோழர் அமரசிங்க: - மிகவும் தெளிவானது. மிகவும் நம்பிக்கையானது. சமத்துவத்தின் மூலமும், பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் மூலமும் எல்லா மக்களுக்கும் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதேயாகும். எல்லா ஒடுக் குமுறைகளையும் சமத்துவமின்மையையும் ரத்துச் செய்வதேயாகும். இது சம்பந்தமாக எமது கொள்கையை கொள்கை விளக்கத்தில் தெளிவாகக் கூறியுள்ளோம்.
நியமுவா:- இதனை மேலும். விளக்கமாகக் கூறினால்?
தோழர் டில் வின்:- நாம் மாக்ஸிய வாதிகள், மாக்ஸ் தனது கம்யூனிஸப் பிரகடணத்தில் கூறுகிறார். ஒரு வர்க்கத்தால் இன்னொரு வர்க்கம் சுரண்டப்படுவதற்குச் சமாந்திரமாக, ஒரு இனத்தால் இன்னொரு இனம் சுரண்டப்படுவதும், வர்க்கக் குரோதம் ரத்துச் செய்யப்படும் போது, தேசியக் குரோதமும் ரத்துச் செய்யப்பட்டுவிடுமென்று. அதாவது, வர்க்கச் சுரண்டலை ரத்துச் செய்யாமல் தேசியச் சுரண்டலையும், வர்க்கச் குரோதங்களை ரத்துச் செய்யாமல் தேசியக் குரோதங்களையும், வர்க அமுக்கத்தை ரத்துச் செய்யாமல் தேசிய அமுக்கத்தையும் ரத்துச் செய்ய முடியாது. எனவே, வர்க்கக் குரோதங்களையும், சுரண்டலையும் ரத்துச் செய்வதைக் கொண்டே எமது தீர்வும் அடங்கியிருக்கிறது. வர்க்க ஆட்சியை ரத்துச் செய்வதன் மூலம் கட்டியெழுப்பப்படும் சோஷலிச ஆட்சியில், சமத்துவ ஜனநாயக அடிப்படையில் தேசியப் பிரச்சினை தீர்க்கப்படும்.
நியமுவா:- கடைசியாக, இலங்கையின் தேசியப்பிரச்சினை பரந்துபட்டுள்ள
41

Page 23
இந்த நிலையில், அது சம்பந்தமாக இலங்கை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் தரும் செய்தி என்ன?
தோழர் அமரசிங்க:- இலங்கை மக்கள் முக்கியமானதொரு சந்திஸ்தானத்துக்கு வந்துள்ள நேரம் இது. நாம், மிகவும் சகோதர மனப்பான்மையோடும், வர்க்க உணர்வோடும் சிங்கள. தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இப்படிக் கேட்டுக் கொள்கிறோம். இன்று இலங்கை மக்கள் முகம் கொடுத்திருக்கும் தேசியப் 'பிரச்சினை உட்பட எல்லாப் பிரச்சினைகளையும் நிர்மானிக்கும் சமூக பொருளாதார அரசியல் நெருக்கடிகளிலிருந்து விடுபட்டு, இந்த நாட்டைக கட்டியெழுப்புவதற்காகவும், எல்லா நெருக்கடிகளுக்கும் சரியான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காகவும் சோஷலிச சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முன்வாருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். அதற்காக ஒன்றுபடுமாறும் போராடுமாறும் கேட்டுக்கொள்கிறோம். அதோடு, முதலாளித்துவ வர்க்கத்தினதும், சந்தர்ப்ப வாதிகளினதும் சூழ்ச்சிகளினால் வழிதவற வேண்டாமென்றும் அவர்களுடைய வலையில் சிக்க வேண்டாமென்றும் கேட்டுக் கொள்கிறோம். பிரிவினைக் கான எல்லாக் கோடுகளையும் முதலாளித்துவ அரசியலுக்குச் சொந்தமாகும் பாட்டாளி வர்க்கத்தினராகிய எமக்கு, ஒற்றுமைக்குத் தடையாக இருக்கும் ஒன்றுமே தேவைப்படாது. அவை முதலாளித்துவ வர்க்கத்துக்குச் சொந்தமானவை இந்தக் குழப்பமான, பரந்துபட்டுள்ள நிலையிலும் நாம் எமது வர்க்கத்தின் முன்னேறிய ஒற்றுமைக்காக அறைகூவல் விடுக் கிறோாம். அதேபோல், ஒன்றுபடுங்கள். என்றும் அறைக்கூவல் விடுக்கிறோம். முதலாளித்துவ முறையை வீழ்த்தும் வரலாற்றுக் கடைமைக்கு முன்னோடியாகச் செயல்பட வருமாறு, எமது வர்க்க மக்களை வர்க்க உணர்வோடு அழைக்கிறோம். எமது அன்புக்குரிய தாய் நாட்டை சிங்கள, தமிழ், முஸ்லிம் போன்ற எல்லாமக்களுக்கும் சொந்தமான தாய்நாட்டை ஏகாதிபத்தியச் சூழ்ச்சியிலிருந்து விடுவிக்கும் தேவை க்காக நேரடியாக தலையிடுமாறு மீண்டும் கேட்டுக் கொள்கிறோம். எமது வர்க்க ஒற்றுமையை சீர்குலைவதற்காக விரிக்கப் பட்டிருக்கும், விரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வலைகளை
42

அறிந்துகொள்வதற்கும், அவை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைத்துத் தோற்கடிப்பதற்குத் தேவையான சக்தியும், துணிவும். விளக்கமும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கிறோம்.
ஏகாதிபத்தியத்திற்கு அழிவு ! மக்களுக்கு விடுதலை!
43

Page 24
(ിഖണിf سی)
44


Page 25


Page 26


Page 27
இந்த சிறிய புத் தகம் 1999 ஆண்டு முறி பகுதயில
தேசியப் பிரச் சினை பல கு விரிவடைந்துக் கொணடிருக் கற சிங் களவர் முஸ்லிம் அனை
சிக்கவைப்பதற்கான அதிகரித தருக் கறது இ படைகளை தரட் டி. ஆயுதங்க இனவாததி தற்கான பேர
உக கரமடைய  ெ இவி வாறான நல மைகளில ம தேசியப் பிரச் சினை தெ நிலைபாட்டை மகத தெ முனி வைப்பது அத தயாவச
s so of , it to இனவாதத் இனவாதத்தை தோற்கடி தறி
முன் னண மினாடு மேற்கொள் முதலாளித துவ வெகுஜன தரித்தே கூறுகின்றன எனவே அளிக்கும் த லா கவம If मू தேசிய ச னை தொ | ( j ! வ ள குவதாகவு
 

ங் களின் கரங்களுக்கு டைக் கும் இலங்கையின் ழறுபடிகளினி மத த பல து. இப் பிரச் சினை தமிழ
ரையும் இனவாததி த அபாயம் இப் போது வெறியால் ஒரு சாரார் ளை சேகரிப் பதனி மூ
ിത ഖ u് ഖp" , i ) Li LIGG) (Up Lg Lg Lif
கள விடுதலை முன் டர்பாக கொண டுள்ள ளிவாக சமூகத
g ( ഖuru് ഉ தற்கு எத ராக ாகவும் மக கள
படுக ன ற மு 1 " | , , , ബ് ബ്ലൂ :)
இப் புத தக கள் விடுதலை Lju T 5, G5 TOT or
6. இருக கு
հարյոIII հl515