கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மெளனம்: பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழா சிறப்பு மலர் 2003

Page 1

Villaig T DÜULDGUT

Page 2

மெளனம்
பேராசிரியர் சி. மெளனகுரு அவர்களது மணிவிழாச் சிறப்பு மலர்
பதிப்பாசிரியர் திரு. வெ. தவராஜா
இலங்கை நிர்வாக சேவை பிரதேச செயலாளர் கோறளைப்பற்று, மேற் ட்டமாவடி
D றறு, மேறகு ஒ
பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சடை மட்டக்களப்பு

Page 3
25606Նմւ/ மெளனம்
பேராசிரியர் சி. மெளனகுரு அவர்களது மணிவிழாச் சிறப்பு மலர்
பதிப்பாசிரியர் திரு. வெ. தவராஜா, இ.நி.சே.
பதிப்பு முதல் பதிப்பு: 2003
அச்சு
குமரன் அச்சகம் 201, டாம் வீதி, கொழும்பு 12.
வெளியீடு பேராசிரியர் சி.மெளனகுரு மணிவிழாச் சபை மட்டக்களப்பு
<9/160DLL's LJL 62/1262/60)LDL/L/
IOա:Մ6ծ
(இதில் வரும் எந்த ஆக்கத்தையும் எடுத்துப் பாவிக்க அனுமதி பெறவேண்டும்)
Title
MOunam Prof. S. Mounaguru's “Mani Vizha' Special Volume
EditOr Mr. V. Thavarajah, S. L. A. S.
Edition
First : 2003
Printing Kumaran PreSS (PVt) Ltd. 201, Dam Street, Colombo -12.
Publishers
Prof. S. Mounaguru “Mani Vizha''Committee Batticaloa.

பதிப்புரையும் அறிமுகவுரையும்
வயது அறுபது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது வாழ்காலத்தில் ஒரு கடவுப்புள்ளிதான். ஆனால் அப்புள்ளியை கடக்கும் போது அவர்தம் கடந்த காலத்தை சமூகம் நினைத்துப் பார்க்கும் அளவுக்கு ஒருகோடிட்டுச் செல்வதுதான் மனித வாழ்வினை அர்த்தமுள்ளதாக்கி விடுகிறது.
இவ்வாண்டு ஆனித்திங்களில் மணிவிழாக்காணும் மதிப்பிற்குரிய பேராசிரியர் சின்னையா மெளனகுரு அவர்கள் இவ்வாறு வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய மனிதர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். பேராசிரியர் அவர்கள் பத்தோடு பதினொன்றல்ல. தனக்கென ஒரு தனியிடம் பதித்த அர்த்தமுள்ள மனிதன்.
மரபுக் கலைகளிலே காலூன்றி நவீன கலைகளிலே தடம் பதித்து எதிர்காலச் சந்ததியினர் மரபிலிருந்து நவீனத்துவத்தின் உச்சியைத் தொட தன்னை அர்ப்பணித்த ஒரு கலைஞன்.
நடிகர், எழுத்தாளர், நெறியாளர், ஆய்வாளர், திறனாய்வாளர் என அகலித்து வெற்றியும் கண்டவர். இவற்றுக்கெல்லாம் மேலாக ஒரு தனித்துவமுள்ள மனிதன்.
ஆறு வயதிலே நடிகனாக ஆரம்பித்த பேராசிரியரது கலைப்பயணம் அறுபது வயதையும் தாண்டிச் செல்கிறது.
மெளனம் எனும் இச்சிறப்பு மலர் அர்த்தமுள்ள ஒரு மனிதனுக்கு அர்ப்பணிப்புள்ள ஒரு கலைஞனுக்கு மட்டக்களப்புச் சமூகம் சூட்டும் மகுடம்.
ஈழத்தின் அரங்கியலை ஒரு ஆய்வியலாக்கி கிழக்கின் அரங்கியலில் ஒரு புதுப்பரம்பரை உருவாவதற்கு பேராசிரியரது உழைப்பு அளப்பரியது.
கலைஞனாக வாழ்வது ஒரு நிலை; கலைக்காக தன்னை அர்ப்பணித்து ஒரு கலைப்பாராம்பரியத்தையும் கலைப் பரம்பரையையும் உருவாக்குவது

Page 4
இன்னுமொரு நிலை இரண்டாவதுநிலையில் வெற்றி கண்ட மிகச் சிலரில் ஒருவராக திகழ்பவர்தான் பேராசிரியர் சின்னையா மெளனகுரு அவர்கள்.
கிழக்கு மாகாணம் தன்னகத்தே பல கலைகளது ஆணிவேர்களையும் பல கலைஞர்களையும் கொண்டது. கூத்து, மகுடி, பறைமேளம், வசந்தன் என விரியும் DTL நாடகங்களையும் நாடகக் கலைஞர்களையும் சமூக அங்கீகாரத்துக்கு கொண்டுவர முதலாவதாகத் தொழிற்பட்ட கலைஞன் பேராசிரியர் என்பதுதான் உண்மை.
அவர் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளராக இருக்கிறார் என்பது தவறு. அவரே ஒரு பல்கலைக்கழகம் அவரிடம் கற்க வேண்டியது நிறையவேயுள்ளது. அது எம்மால் முடியுமா? நிச்சயமாக முடியும். ஏனெனில் தான் கற்றவற்றை உள்வாங்கி பரிசீலித்து மற்றவர் தெளிவாக விளங்கக் கூடிய வகையில் வழங்கி அத்துறையில் அவரை விற்பன்னராக்குவது பேராசிரியரது தனிச்சிறப்பு.
இவரால் இன்று பலர் நவீன நாடகக்காரராக இருக்கின்றனர். சிலர் மரபு நாடகக் கலைஞராக திகழ்கின்றனர். இன்னும் சிலர் நல்ல நாடக எழுத்தாளராக நெறியாளராக திகழ்கின்றனர். குறிப்பாக கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர் வருகை தந்த பின்னர் மட்டக்களப்பில் ஒரு நாடகப்பரம்பரையே தோன்றியிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் காரணம் பேராசிரியரது அர்ப்பணிப்புள்ள ஈடுபாடே.
பேராசிரியர் அறுவதாவது அகவை அடைவதையொட்டி வெளிவரும் இச்சிறப்பு மலர் வெளியீட்டிலே ஆக்கங்களை பெற்று தொகுத்தது மட்டும்தான் எனது பங்கு. ஆனாலும் கடந்த இருபது ஆண்டுகளாக பேராசிரியர் மீது அன்பும் மதிப்பும் கொண்ட எனக்கு இதைத் தொகுப்பது இரட்டித்த மகிழ்ச்சி.
இம்மலரை தொகுக்கும் போது பிரசித்தி பெற்ற சிற்பியைப் போல உலகப் புகழ்பெற்ற ஒவியனைப் போல மக்கள் நேசிக்கும் கவிஞனைப் போல கிரகித்துப் போனேன் நான்.
இம்மலர் ஐந்து பகுதிகள் கொண்டது முதற்பகுதி பேராசிரியர் பற்றிய அறிமுகத்தையும் இரண்டாவது பகுதி பேராசிரியர் பற்றிய பிறரது கருத்துக்களையும் மூன்றாவது பகுதி பேராசிரியரது புலமைசார் ஆய்வுகளையும் நான்காவது பகுதி அவரது துறைசார் ஆய்வுக்கட்டுரைகளையும் ஐந்தாவது பகுதி பேராசிரியரது படைப்புக்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. ஐந்தாவது பகுதி பேராசிரியரது இன்னுமொரு பக்கத்தைக் காட்டும் என எதிர்பார்க்கின்றோம்.

மலரை நான் தொகுத்தாலும் இதன் வரவுக்கு பலரது ஒத்துழைப்பு முக்கியமாக அமைந்துள்ளது. முதலில் நான் நினைவுகூரவேண்டியது இம்மணி விழாக் குழுவின் தலைவராயிருந்து துடிப்புடன் செயற்பட்ட சே. சீவரெத்தினம் அவர்களை. இம்மலர் வெளியீட்டுக்கும், மணிவிழாவுக்கும் இவரது உழைப்பு அளப்பரியதாயிருந்தது. அன்னாரது மறைவு எமக்கு பேரிழப்பே.
வாழும்போதே கலைஞர்களை வாழ்த்த வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதில் கவனமாயிருந்தவர் அவர். பேராசிரியர் சி. மெளனகுரு அவர்களது மணிவிழாவை நடாத்த தீர்மானித்த வேளையிலிருந்து நாம் சந்தித்த தடைகளையெல்லாம் தாண்டி சிறப்பாக இதனை நடாத்த வழிவகுத்தவரும் இவரே.
மணிவிழாவை நடாத்த எடுத்த முயற்சிகளின் போது ஏற்பட்ட வரவேற்புக்கள்; திருப்திகள், அதிருப்திகள், விமர்சனங்கள் தொடர்பாக தனதுரையில் எழுதுவதாகவிருந்தார். அனைத்தும் அவருடன் உறங்கிப் போயிற்று. அன்னாருக்கு எமது அஞ்சலிகள்.
இம்மலரின் வருகைக்காக ஒத்துழைப்பு வழங்கிய இன்னும் பலரை நன்றியுடன் நினைவுகூரவேண்டியுள்ளது.
தன்னுடைய ஆக்கங்களையும் புகைப்படங்களையும் பெறுமதிமிக்க ஆலோசனைகளையும் வழங்கிய பேராசிரியர் சின்னையா மெளனகுரு அவர்களுக்கும் ஆக்கங்களை வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கும் அட்டை ஓவியத்தையும் ஏனைய ஓவியங்களையும் வரைந்த நண்பர் கிக்கோ அவர்களுக்கும் நிதியுதவி வழங்கிய பெருந்தகைகளுக்கும் மலரை சிறப்புற வெளியிட்ட குமரன் அச்சகத்தினருக்கும் இதனோடு ஒத்துழைத்த இன்னும் பலருக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள்.
வெ.தவராஜா இநிசே பிரதேச செயலாளர் கோறளைப் பற்றுமேற்கு ஒட்டமாவடி

Page 5
பொருளடக்கம்
பதிப்புரையும் அறிமுகவுரையும்
பகுதி 1 - வெட்டுமுகம்
* நண்பர் மெளனகுரு ஓர் அற்புத புருஷர்
மனப்பதிவுகளினூடு வாழ்க்கைக் குறிப்பு
காசுபதி நடராசா
* கல்வியும் தொழிலும்
* வெளியீடுகளும் தயாரிப்புகளும்
1- 65 JillọJuli) (Bibliography)
பகுதி 2 - அகம் கலந்து.
* கலைவாழ்வில் நிலைத்து நிற்கும் மனிதர்
திரு. இ. மோனகுருசாமி
* மெளனகுரு - ஒரு தனித்துவமான ரோசிரியர் பேராசிரியர் மா.செ.முக்கையா
* பேராசிரியர் சி. மெளனகுருவின் இளமைக் கல்லுரி
வாழ்க்கையும் நாய்ப் பண்புகளும்
-r སྐམ་པ་ལྷ་མཚལ། །
iii
17
21
37
57
59
60
62

* விதியையும் வெல்ல வல்ல முயற்பியாளன் 66
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
* மெளனகுருவுக்கு மணிவிழாவா? 69
கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம்
* பேராசிரியர் சி மெளனகுரு பற்றிய சில மனப்பதிவுகள் 77
கவிஞர் வெல்லவுர்க் கோபால்
* பேராசிரியர் சி மெளனகுருவின் கலைப்பணி அது ஒரு தேசப்பணி 80
திரு.கந்தையா பூரீகணேசன்
* மறைவாக நமக்குள்ளே 85
திரு.சே.சிவரெத்தினம்
* பேராசிரியர் சி. மெளனகுடு அவர்களது நாடகப் படைப்பாக்கம் 90
- ஒரு அனுபவப்பகிர்வு
திரு.சு.சிவரெத்தினம்
* ஆப்த்தை நடிiபாக்கிய கலைஞர் 101
திரு.சோ.தேவராசா
* விட்டுக்கொடாத சமரசவாதி 110
திரு. பால. சுகுமார்
* மெளனகுடு - சில மனப்பதிவுகள் 114
அன்புமணி
* இவன் ஒரு சூரியன் 12)
தி.வ. கனகசிங்கம்
பகுதி 3 - புலமை சார்ந்து. 123
* பேராசிரியர் சி. மெளனகுடுவின் அரங்க விகCப்பு 125
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
* பேராசிரியர் சி. மெளனகுருவின் நாடகம் சாரா -ஆர்வுகள் 139
கலாநிதி.செ.யோகராசா

Page 6
4
令
நாடகக் கலைஞனுக்குள் மறைந்து ாேன ஓடு கவிஞன்
திரு.வெ.தவராஜா
சமகால ஈழத்துத் தமிழ் அரங்கச் சூழலில்
- இராவணேசன் பெறும் முக்கியத்துவம்
வடிவேல் இன்பமோன்
பகுதி 4 - பேராசிரியர் சி.மெளனகுரு
->
அவர்களது துறைசார்ந்து.
கி3ம் நூற்றாண்டு தொடக்கம் 6ம் நூற்றாண்டு - வரையிலான தமிழ் நாடகம்
கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ்
அண்மைக்கால நவீன முஸ்லிம் நாடகங்கள் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்
தமிழ் நவீன நாடகங்களில மகாபாரத மறுவாசிப்பு
இ. பார்த்திபராசா
வாய்மொழியும் எடுத்துமொழியும் - மட்டக்களப்பின் கவிதை மரபு பற்றிய சிறு குறிப்புகள்
பேராசிரியை மெள. சித்திரலேகா
கவிதையும் அரசியலும் - ஒரே புள்ளியில் தோன்றிய நான்கு கவிஞர்கள்
பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்
19ம் நூற்றாண்டு வெகுஜன இயக்கமும் இராமலிங்கடும்
பேராசிரியர் வீ அரசு
147
152
159
161
172
182
194
200
211

பகுதி 5 படைப்புலகம்.
பேராசிரியர் சி.மெளனகுரு அவர்களது படைப்புக்கள் சில
* சார்வாகன்
குறுநாவல்
* கவிதைகள்
வாழ்வின் சுவை
பிரசவம்
வெற்றிக் குரல் ஏனோ எழுதுகிறாய் எதைப்பாட
10 d]()
உலகங்கள் முன்று
* முன்னுரை
எறிகணைத் தாலாட்டு
பத்தி எடுத்து
கலாசாரப் பக்குவம்
* இசைப்பாடல்
சின்னச் சின்ன குருவிகள் சேருவோம் ஒன்று சேருவோம்
நன்கொடை வழங்கியோர்
மணிவிழாக்குழு உறுப்பினர்கள்
திடு. சே. சீவரத்தினம் அவர்கட்கு அஞ்சலி
பதிவுகள்
221
223
265
267
269
271
272
274
279
286
289
290
292
296
297
299
1Χ

Page 7

வெட்டு முகம்

Page 8

நண்பர் மெளனகுரு ஓர் அற்புதபுருஷர் மனப் பதிவுகளினூடு ஒரு வாழ்க்கைக் குறிப்பு
- காசுபதி நடராசா -
அறுபதாவது அகவைகாணும் பேராசிரியர் சின்னையா மெளனகுரு அவர்களின் வாழ்வியற் பதிவு - ஒரு தேடலின் அரைநூற்றாண்டு வரலாற்றுக் காவியப் படைப்பு. இதனூடாக மாறிக் கொண்டுவரும் ஒரு சமூக ஒட்டத்தை இனங்காண முடியும்.
அன்றும் இன்றும் ஒரு சாமானியரைப் போல மிகவும் அடக்கத்துடனும், ஆழத்துடனும் வாழ்ந்துவரும் பேராசிரியர் அவர்கள் எனது சமகாலப் பல்கலைக்கழகநண்பர்.
1956க்குப் பின் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் சமூக வரலாற்று மாற்றத்தின் எதிரொலி அறுபதுகளில் சுயமொழிக் கல்வியைப் பல்கலைக்கழகத்துக்குக் கொண்டு சென்றது. அதில் கற்றவர்கள், கற்பித்தவர்கள் உருவாக்கப்பட்டவர்கள் பலரும் தத்தமது வரலாற்று இருப்புக்களைத் தேட முயன்றவர்கள். சாதனை படைத்தவர்கள். இன்றும் நினைவிலிருந்து நீங்காதவர்கள்.
சமதர்மத்தையும், தமிழ்த் தேசியத்தையும் அன்று இறுகத்துக்கிய எனது நண்பர்கள் இன்றும் அவ்வழிகளில் பயணிப்பதை வரலாறு காட்டி நிற்கிறது. அன்றைய தமிழ் மாணவர்களுள் பின்னர் எழுத்தாளர்களாக மலர்ந்த, செ.கதிர்காமநர்தன், செங்கைஆழியான், அங்கையன் கைலாசநாதன் செம்பியன் செல்வன், எம்.எம்.சுக்ரி, அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், யோகேஸ்வரி, துருவன், செ.யோகநாதன் என்று நீளும் பட்டியலில் சிலர் அமரராகிக் காலத்தையும் கடந்து வாழ்கின்றனர்.
இந்த வரிசையில் மற்றவர்களுடன் இல்லாத ஒரு நெருக்கமும் பிணைப்பும் நண்பர் மெளனகுருவுடன் இருந்தது. அறுபதுகளில் பேராதனைப் பல்கலைக்கழகம் புகுந்து மட்டக்களப்பு றெயில் வண்டியில் காலாண்டுக்கு ஒரு

Page 9
4 மெளனம்
தடவை வீடு வந்து செல்லும் மட்டக்களப்பு கோச்சி கூட்டத்தைச் சேர்ந்தவர் இவர். அவரது அடக்கம், ஆளுமை, பேரறிவு, இணக்கப்பாடு, மலர்ந்த முகம் மட்டக்களப்புக் கோச்சிக்குள் ஒரு தனியிடம் பெற்றுக் கொடுத்திருந்தது. அவர் எங்களில் இளையவரும் கூட.
இவரது வீடு செல்லும் சந்தர்ப்பங்களில் அவரது அம்மாவின் உபசரிப்பு அலாதியானது. பகல் பொழுதில் வீடு சென்றால் சாப்பாடு தராமல் விடமாட்டார்கள். இறால் குழம்பு, காரல் மீன் சொதியுடன் கூடிய சோறும் தாராளமாகப் பரிமாறப்படும். இவருக்கு எங்களுர் ஆரையம்பதியிலும் நல்லபுகழ் இருந்தது. அங்குள்ள பரமன் சனசமூக நிலைய கிராம முன்னேற்றச் சங்கத்தின் ஆண்டுவிழாக்களில் மேடைப் பேச்சு நிகழ்த்த அழைக்கும் போது தவறாது சமூகமளித்து விடுவார். இவரது பேச்சுத் திறன் அன்றும் இன்றும் சபையோரைப் பிணித்து வைக்கும் வசீகரமுள்ளது.
நான் இவரது வீடு செல்லும் சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒரு நூலை வைத்து வாசித்துக் கொண்டே இருப்பார். கவனித்துப் பார்த்தால் அது பொதுவுடைமை தழுவிய சித்தாந்த இலக்கிய நூலாக இருக்கும். "வால்காவிலிருந்து கங்கைவரை" என்னும் புகழ்பெற்ற நூலைத் தந்து மனித குல வரலாறு மிகவும் அழகாக அதில் சித்தரிக்கப்பட்டிருப்பதைச் சுட்டி வாசிக்குமாறு என்னைத் தூண்டியது நிழலாடுகிறது.
தான் வாசித்து ரசிக்கும் எந்த நூலையும் அவர் தனது நண்பர்களுக்குக் காட்டாமலும், புகழாமலும் இருக்கமாட்டார்கள். இதற்கு எதிரான ஒரு கருத்தை முன்வைத்து நான் பேச்சை ஆரம்பித்தால் இந்த ஜடத்துக்கு உபதேசிப்பதில் பயனில்லை என்று எண்ணுவாரோ தெரியாது, பேச்சை மிகவும் சாமர்த்தியமாகத் திசைதிருப்பி விட்டு என்னையும் கலகலப்பாக்கிவிடுவார். இன்றும் இப்பண்பு இவரிடமிருந்து மாறவில்லை. யாராவது எதிர்வாதிட வந்தாலும் வாதமாகவன்றி விளக்கமாகப் பதிலளித்துச் சமாளிப்பதில் வல்லவர்.
எங்களது பல்கலைக்கழகத் தொடர்பு மூன்று வருடங்கள் மாத்திரமே. ஆயினும் அது அறாநிலையில் நீடித்த நட்புடனும் தோழமையுடனும் அது இன்றும் விரிந்து செல்கின்றது.
முகிழ்வு - அமிர்தகழி
மட்டக்களப்பு மாநிலத்தில் உள்ள புண்ணியத்திருப்பதிகளில் ஒன்று அமிர்தகழி. அதன்முகப்பாய் அமைந்த பகுதி சீலாமுனை. கூத்துக்கலைகளுக்குப் பெயர் பெற்ற ஊர் சீலாமுனை. ஆண்டுதோறும் ஆடி அமாவாசையில் மாநிலத்து மக்கள் கூடும் மாமாங்கேஸ்வரத்தின் முகப்பில் அமைந்த வீடு. கிராமத்து மண்வாசனையும், புறநகரப் பண்புகளும் இணைந்த ஒரு சூழல். பலராலும் மதிக்கப்பட்டு வாழ்ந்தவர்கள் சின்னையா, முத்தம்மா தம்பதிகள். இவர்களின்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 5
இரண்டாவது மகனாக 1943 ஜூன் 09ஆம் நாள் பிறந்தவர் இவர். இவருக்கு சகோதரிகள் மூவர்.
இவரது ஆரம்பக்கல்வி அமிர்தகழி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில். இன்று அமிர்தகழி மகாவித்திலாயமாக இது விளங்குகிறது. பெற்றோரும் குழந்தைகளும் கல்வியில் ஆர்வம் காட்டாத ஒரு கால கட்டம். பெரிய வாத்தியார். நாகமணி சேர். வீடு வீடாகச் சென்று பெற்றோரைச் சந்தித்து பிள்ளைகளைக் கூட்டி வந்து பாடசாலையை நடத்தினார். மெளனகுரு பெரியவாத்தியாருடன் பிள்ளைகள் உள்ள வீடுகள் காட்டி அழைத்து வருவதுடன் ஒழுங்கு தவறாது பாடசாலை சென்று மற்றைய மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். ஆரம்ப வகுப்பிலிருந்து (1948 - 1953) ஐந்தாது வகுப்புவரையும் இங்கேயே கல்வி கற்றவர். இப்பாடசாலையிலிருந்து ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பெற்று வந்தாறுமூலை மத்திய கல்லூரிக்குச் சென்ற பேறுபெற்றவர். இது பிற்காலத்தில் அவர்பெற்று வந்த முதல் நிலைக்கு ஓர் அடித்தளமாயிற்று.
அமிர்தகழியில் படித்துக் கொண்டிருக்கும் போதே நாடகத்தில் ஈடுபாடும் பேச்சுப் பேட்டியில் வல்லமையும் பெற்றிருந்தார். திரு மத்திய சிங்கம் மாஸ்டர் இவருக்குப் பெரிதும் தூண்டுதலாயிருந்தவர். மெளனகுருவின் தந்தையும் கிராமியக் கலைகளில் ஆர்வமும் பாண்டித்தியமும் பெற்றவர். அவர், வைத்தியம், சோதிடம், மந்திரம், இறைவழிபாடு, கூத்து முதலியவற்றைக் கற்றுணர்ந்தவர். கிராமியக் கலைகளில் ஈடுபாடுடையவர். மேலாக தாமரை இலைத் தண்ணி போல வாழ்ந்த ஒரு மெய்ஞ்ஞானி. இவைகள் யாவும் இவரை முன்னோக்கி நகர்த்தி விட்டன.
அரும்பு - வந்தாறுமூலை
வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் ஆறு தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரை இடைநிலைக் கல்வி கற்றவர். வகுப்புத் தலைவராக, விடுதித் தலைவராக, விபுலாநந்த இல்ல விளையாட்டுத் தலைவராக , பாடசாலைத் தலைவராக, தமிழ் மன்றத் தலைவராக இந்துமன்றத்தலைவராக, விடுதி உணவுப் பகுதிப் பொறுப்பாளராக, சாரணர் இயக்கத் தலைவராக- என்று பல்வேறு தலைமைப் பதவிகளையும் மாணவப் பருவத்திலேயே அலங்கரித்ததுடன் கைப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் முதலிய குழுக்களிலும் இருந்து சாதனைகள் படைத்தவர்.
பாடசாலைப்பரிசளிப்புவிழாக்களிலும் கலைநிகழ்ச்சிகளிலும் நடைபெறும் நாடகங்களில் முக்கிய பாத்திரங்களையேற்று நடித்து சிறந்த நடிப்புக்கான பரிசுகளைப் பல தடவைகள் பெற்றுக் கொண்டவர். இங்கு அரங்கேற்றப்பட்டது பாசுபதம் கூத்து. அதில் இவர் சிவவேடன். இதனைப் பார்த்துக் கவரப்பட்ட பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின்

Page 10
6 மெளனம்
திறந்த வெளியரங்கில் 1959இல் மேடையேற்றினார். கூத்தின் வீரியத்தையும், பெறுமானத்தையும் உணர்ந்தகாலம் இது.
இங்கு படித்த காலங்களில் தமிழரசுக் கட்சியின் அரசியலில் பெரும் ஈடுபாடு கொண்டதுடன் அக்காலத்தில் நடந்த சத்தியாக்கிரக, சட்டமறுப்புப் போராட்டங்களில் பங்கு பற்ற வந்தாறு மூலையிலிருந்து இரண்டாயிரம் மாணவர்களைத் திரட்டி மட்டக்களப்பு கச்சேரிக்கு ஊர்வலமாக அழைத்து வந்தவர். இதனால் கோபங்கொண்ட கல்லூரி நிருவாகம், பாடசாலையை விட்டு இவரை நீக்கத் தீர்மானம் எடுத்த போதிலும் இவரது அதிதிறமைகளைக் கருத்தில் கொண்டு அவ்வாறு வெளியேற்றவிரும்பாததால் பகிரங்க பிரம்படியுடன் தப்பித்துக் கொண்டவர்.
இக் கால கட்டத்தில் சட்டமறுப்புப் போராட்டங்களை நடத்திய, மட்டக்களப்பு தமிழ் மாணவ மன்றத் தலைவராக இருந்து செயற்பட்டவர். தமிழ் உணர்வூட்டும் தெருவெல்லாம் தமிழ் முழக்கம்' - இயக்கத்து உறுப்பினராகவும் இருந்தவர். இவ்வியக்கம் ஊர் ஊராகச் சென்று பாடல்களால் தமிழ் உணர்வூட்டியது. கவிஞர் காசிஆனந்தன், முழக்கம் முருகப்பா ஆரையூர் அமரன், மாஸ்டர் சிவலிங்கம், வித்துவான் சா.இ. கமலநாதன் என்று இப்பட்டியல் நீண்டு செல்லும் வரிசையில் இவர் சிறுபிள்ளையாய்த் தொழிற்பட்டவர்.
மொட்டு - பேராதனை
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலம் தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது தொகுதி - மட்டக்களப்பிலிருந்து சென்ற முதலாவது தொகுதி, தமிழ்மொழிமூலமாணவர் குழுமத்தில் நாங்கள் இருவரும். எங்களுடன் இவரது வந்தாறுமூலை மாணவத் தோழர்களான திரு.க.தியாகராசா, திரு.ச.செல்வரெத்தினம் மற்றும் திரு.ந.பத்மநாதன், திரு.ப. கனகரெத்தினம் ஆகியோரும் கூட்டாகவே செயற்பட்டோம். இதிலிருந்து சற்று தளர்த்திக் கொண்டு இடதுசாரிக் கலை இலக்கிய வட்டங்களுடன் இணைந்து செயற்படுபவராகவே இவர் தொழிற்பட்டார். இதனால் சிங்கள மாணவர்களுடனும், பிற பிரதேச மாணவர்களுடனும் அதிகம் பழகவும், அறியவும் வாய்ப்பு ஏற்பட்டது. அதனால் இவரது கலை இலக்கிய முயற்சிகள் மெருகூட்டப்பட்டன.
பட்டப்பகலில் பாவலர்க்குத் தோன்றுவது'இது அன்று அங்கு அரங்கேறிய ஒரு கவியரங்கின் தலைப்பு. இங்கு வாசிக்கப்பட்ட கவிதையில் அவர், ஈழத் தமிழர் தனிநாடு பெற்று, படை கொண்டு புலிக் கொடியுடன் வாழ்வதாகக் கனவு கண்டிருந்தார். இதற்கு முதற் பரிசு கவியரங்கில் கிடைத்தது. சிறுகதைப் போட்டிக்கு சலனம்' என்ற சிறுகதை ஒன்று எழுதினார். இது மூன்றாம் பரிசைத் தட்டிக் கொண்டது.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர்
முதல் வருடத்தில் தமிழ், சரித்திரம், பொருளியல் ஆகிய பாடங்களில் நானும் இவரும் இந்திய வரலாறு படித்தோம். இது கீழைத்தேசம் பற்றிய பிரக்ஞையை அதிகம் வளர்க்க உதவியது. முதல் வருடத்தின் பின் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்ததால் எங்களுக்குள் வகுப்புத் தொடர்பு அருகத் தொடங்கிவிட்டது. எனினும் அவர் துணைப்பாடமாக வரலாற்றை எடுத்ததால் அதனூடாக எங்களது தொடர்பு அடுத்த இருவருடங்களும் எங்களுக்குள் இருந்தது.
இலங்கைப்பல்கலைக்கழகத்தின் கலைத்துறை பேராதனையில் மாத்திரமே அக்காலத்தில் இருந்தது. அவ்வேளையில் அர்ப்பணிப்புள்ள சேவையாற்றிய பேராசிரியர்களின் பணியையும் இவ்விடத்தில் நினைவுகூர வேண்டியுள்ளது.
பேராசிரியர்களான க.கணபதிப்பிள்ளை கல்வெட்டியல், திராவிட நாகரிகம், எஸ். செல்வநாயகம், ஒப்பியல், யாப்பு, அணி, சு. வித்தியானந்தன் - தொல்காப்பியம், திராவிடநாகரிகம், க.கைலாசபதி-நவீன இலக்கியம், சங்ககால இலக்கியம், எஸ். சதாசிவம், பெரியபுராணம், தொல்காப்பியம், சி. தில்லைநாதன் - சங்ககால இலக்கியம், நவீன இலக்கியம், ச. தனஞ்செயராஜசிங்கம் - யாப்பு அணி, க. இந்திரபாலா, வி. சிவசாமி, சி. பத்மநாதன் . இந்தியச் சரித்திரம், பஸ்தியாம்பிள்ளை - இலங்கைச் சரித்திரம், உலக சரித்திரம், பாலகிருஷ்ணன் - பொருளியலும் அரசியலும் என்று விரிவுரையும், கலந்துரையாடல்களும் நடத்தி அறிவூட்டினர்.
இப்பேராசிரியர்கள் அக்காலத்தில் தமிழ் மொழி மூலமாக பல்கலைக் கழகம் புகுந்த எங்களுக்கு மிகவும் சிரத்தையுடனும் அர்ப்பணிப்புடனும், தோழமையுடனும், நெறிப்படுத்தலுடன் அறுபதுக்குப் பிந்திய ஈழத்தின் சமகால வாழ்க்கை நெறிக்குப் பலமாக அத்திவாரமிட்டுத் தந்தனர். அந்த அத்திவாரக் கட்டமைப்பினுாடாக எழுந்த பலரும் இன்று அரச நிருவாகப் பணிகளிலும், கல்வி, சமூக அபிவிருத்தித் துறைகளிலும், ஈழத்தின் தமிழ் இலக்கிய கலைத்துறை களிலும் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றனர். அந்த வகையில் இவர் ஒரு தனிச் சிறப்பிடம் பிடித்துக் கொண்ட சாதனையாளர்
இவர் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் 1962ல் கர்ணன்போர் -இதில் கர்ணன், 1963ல் நொண்டிநாடகம் - செட்டி, 1965ல் இராவணேசன்-இராவணன் ஆக நடித்தார். 1966ல் இவரது பல்கலைக்கழக வாழ்வுநிறைவுற்ற போதிலும் அப்போது தயாரான 'வாலிவதை' -கூத்துக்கும் உதவி செய்து விட்டே வெளியேறினார்.
ஈழத்துக் கூத்து அளிக்கையில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் செயல் ஒரு மையப்புள்ளி. அவரினுடாக மட்டக்களப்புக் கூத்தியல் ஒரு புதிய வடிவத்தையும், பரிமாணத்தையும் அடைந்து வந்த காலம் அது. பேராசிரியர் சு.வித்தியானந்தனுக்குத் துணையாக இவர் கூத்து நூல்களைச் சுருக்கி வடிவமைத்தார். புதிய கூத்துக்களைக் எழுதினார். மட்டக்களப்பில் அண்ணாவிமாரைத் தேடிப்பிடித்துக்

Page 11
8 மெளனம்
கொடுத்தார். மாணவர்களுக்குக் கூத்தாட்டம் பழக்கினார். கூத்தாட்ட அலங்கார உடைகள் வடிவமைக்கத் துணையானார்.
கர்ணன் போர், நொண்டி நாடகம் - சுருக்கி எழுதப்பட்ட கூத்துக்கள், இராவணேசன், வாலிவதை - புதிதாக எழுதப்பட்ட கூத்துக்கள். இவைகளைச் செய்ய இவருக்கு பேராசிரியர்களான சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் பெரிதும் உதவினர். இவரது நடிப்பாற்றல், பன்முகத் திறமை முதலியவற்றினால் அகில இலங்கைரீதியிலான அறிமுகமும், புகழும் பரவ ஆரம்பித்தது.
பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சு.வித்தியானந்தனுடன் கூத்து, கலை முயற்சிகளில் இருந்த ஆர்வத்தின் மறுபக்கத்தில் பேராசிரியர் க.கைலாசபதியின் முற்போக்கு வட்டத்தில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டார். மார்க்ஸியச் சிந்தனைகளுக்கு அறிமுகமானார். இதனால் சிங்களத் தோழர்களின் உறவும், தொடர்பும் ஏற்படலாயிற்று. மார்க் ஸிய வகுப்புகளுக்கும் சென்று வரத் தொடங்கினார். இது இவரது சிந்தனை வட்டத்தினை மற்றொருபுறம் நகர்த்திற்று. வியட்நாம் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பு, அரசின் வாழ்க்கைச் செலவு உயர்வுக்குப் போராட்டம் - இதற்காகப் பேராதனையிலிருந்து கண்டிக்குப் பாதயாத்திரை. இவைகளிலெல்லாம் முன்னணியில் செயற்படத் தொடங்கினார்.
மலர் - மட்டக்களப்பு
பல்கலைக்கழகக் கல்வியை முடித்துக் கொண்டு பட்டதாரியாக வெளிவந்ததும் மட்டக்களப்பு கல்லூரிகள் இவரது ஆற்றலை இனங்கண்டு கொண்டன. 1967 லிருந்து 1968 வரையும் வின் சென்ற் மகளிர் உயர்தரக் கல்லூரியிலும் சென். மைக்கல் கல்லூரியிலும் அரசினர் கல்லூரி (இன்று இந்துக்கல்லூரி)யிலும் தொண்டர் ஆசிரியராக உயர்வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மொழி பயிற்றுவித்தார். இவரது கற்பித்தலால் கவரப்பட்டு வெற்றி கண்ட ஒருவர்தான் செல்வி சித்திரலேகா பீவீகணபதிப்பிள்ளை அவர்கள்.
மெளனகுரு அரச ஆசிரியர் நியமனம் பெற்றபோது 1968ல் கல்முனை சாஹிராக் கல்லூரியிலும், 1969ல் கல்முனை உவெஸ்லிக் கல்லூரியிலும் 1970ல் வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் கற்பிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இங்கெல்லாம் கற்பித்தலுக்குப் புறம்பாக பாடசாலை நாடக முயற்சிகளிலும், பாடசாலை நாடகப் போட்டிகளுக்கு மாணவர்களைத் தயாரித்தும் வெற்றிகள் பெற்றும் தனது கலையார்வத்தை மாணவர் மத்தியில் பரவ விட்டுக் கொண்டிருந்தார்.
மட்டக்களப்பில் இருந்த காலங்களில் மட்டக்களப்பு இடதுசாரி இயக்கங்களில் தீவிர ஈடுபாடு கொண்டு உழைக்கத் தொடங்கினார். தோழர் கிருஷ்ணக்குட்டி - இவர் ஒரு தொழிற்சங்கவாதியாக இருந்து சேவை செய்தார்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 9
கவிஞர் சுபத்திரன், சாருமதி முதலானோர் மத்தியில் தொழிற்சங்களுக்கு உதவியதுடன், சமூகசீர்திருத்தப் பணிகளிலும் அதனை வலுவூட்டும் நாடக முயற்சிகளிலும் ஈடுபட்டுழைத்தார். மட்டக்களப்பு நூலக அபிவிருத்திக்கு உதவியதுடன் அங்கு ஒரு வாசகர் வட்டமும் உருவாக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டத்துக்கு மட்டக்களப்பிலிருந்து ஆதரவு வழங்கப்பட்டது. இதற்குத் துணையாக 'சங்காரம்' நாடகம் தயாரிக்கப்பட்டது. 1969ல் மட்டக்களப்பில் நாடக சபா ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் மூலம் கொழும்பு லும்பினி அரங்கில் தொழிற்சங்க வாதி திரு.எஸ். சண்முகதாசன் தலைமையில் சங்காரம் மேடையேற்றப்பட்டது. திரு.கி. லஷ்மண ஐயர் உட்படப் பலரும் கலந்து கொண்டனர். இது கூத்து மரபில் புதுமாற்றம் என்று விமர்சகர்களால் வரவேற்கப்பட்டது.
நறுமணம் - கொழும்பு
1972 தொடக்கம் 1976 வரையும் கொழும்பில் கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தில் பாட நூல் எழுத்தாளராக நியமனம் பெற்றிருந்தார். இது இவரது திறமையின் மற்றொரு நிலைக்கு இட்டுச் சென்றது. ஆறு தொடக்கம் பத்தாவது வகுப்பு வரையும் தமிழ்ப் பாடநூலுக்குப் பாடங்கள் எழுதுதல் அப்பாடங்கள் கற்பிக்கும் முறைமையை நாடு பூராவும் சென்று ஆசிரியர்களுக்கு விளக்குதல் முதலிய கடமைகளினால் பரந்துபட்ட அளவில் கல்வியியலாளர்களதும், தமிழறிஞர்களதும் உத்தியோகஸ்தர்களதும் அறிமுகமும் கிடைத்தது.
கொழும்பில் வாழ்ந்த காலத்திலேதான் இவர்களது காதல் திருமணம் நிகழ்ந்தது. செல்வி சித்திரலேகா அவர்கள் மட்டக்களப்பில் வாழ்ந்த தமிழறிஞரும், சமூகத் தொண்டருமான திரு. பி. வி. கணபதிப்பிள்ளை அவர்களின் மூத்த புதல்வி, முற்போக்குச் சிந்தனையாளர். இலங்கைப் பல்கலைக்கழகம் - கொழும்பு வளாகத்தின் தமிழ்த்துறைச் சிறப்புப் பட்டதாரி. அக்காலத்தில் இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவர். இவர்களது அடக்கமான திருமண நிகழ்ச்சி கொழும்பிலேயே நிகழ்ந்தது.
மனைவியாரின் வானொலித் தொடர்பினால் இலங்கை வானொலியில் 'சங்கநாதம்' எனும் இளைஞர் நிகழ்ச்சியையும் 'கிராம சஞ்சிகை' எனும் நிகழ்ச்சியையும் தயாரிக்கும் பொறுப்பு இவருக்குக் கிடைத்தது. வானொலி மூலம் பலருக்கும் அறிமுகமானார். இதனால் வானொலி சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்களையும் தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.
வானொலி உரைச்சித்திரங்களை எழுதியும், சிறப்புப் பேச்சுக்களை நிகழ்த்தியும் வானொலி ஊடகத்துறை எழுத்துக்குப் பரிச்சயமானார். மேலும் மெல்லிசைப்பாடல்களையும் எழுதிக் கொடுத்தார். "சின்னச் சின்னக் குருவிகள்"

Page 12
O மெளனம்
"சேருவோம் ஒன்று சேருவோம்" என்ற இவரது இரண்டு மெல்லிசைப் பாடல்களும் பிரசித்தமானவை. சின்னச் சின்னக் குருவிகள் சிறுவர்களுக்கான பாடல். பிறந்த நாள் வாழ்த்துக்கு இந்தியப் பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது என்பதற்காக எழுதப்பட்ட ஈழத்துப் பாடல் அது. அக்காலத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கு முன்னதாக அப்பாடலையே ஒலிபரப்பினர். அப்பாடலில் "நாளை இந்த ஈழநாட்டை நடத்தப்போகும் குருவிகள்" என்ற வரிகள் இருந்தமையினால் போலும் பின்னர் அது ஒலிபரப்பப்படாதுநிறுத்தப்பட்டதையும் குறிப்பிடாதிருக்க முடியவில்லை.
திருமதி கார்த்திகா கணேசருடன் இணைந்து வடமோடி ஆட்டங்களையும் பரத நாட்டிய ஆட்டங்களையும் கலந்து 'இராமயணம்' நாட்டிய நாடகம் தயாரிக்கப்பட்டது. இது ஒரு பரிசோதனை முயற்சியாக இருந்து பலரது பாராட்டுதல்களையும் பெற்றுவிட்ட ஒன்றாகும்.
கொழும்பில் வாழ்ந்த காலங்களில் அங்கிருந்த நாடகக்காரர்களுடன் தொடர்புகள் ஏற்படலாயிற்று. இவர்களில் திருவாளர்கள் தாசீசியஸ், சுந்தரலிங்கம், சிவானந்தன், சுஹைர் அப்துல் ஹமீட் போன்றவர்கள் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவர்கள். அங்கு திருதாசீசியஸ் தயாரித்தளித்த புதியதொரு வீடு' கந்தன் கருணை ஆகிய நாடகங்களில் இவரும் பங்கேற்று நடித்துள்ளார்.
1971லிருந்து 1977 வரையுள்ள காலப்பகுதியுள் இலங்கைக் கலைக் கழகத்தின் நாடகக் குழுவிலும் இசைக்குழுவிலும் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் நாடளாவிய மட்டத்தில் பரவலாக தமிழ் நாடகக் கலைஞர்களை அறியும் வாய்ப்பு ஏற்பட்டது.
சிங்களக் கலைஞர்களுடனான தொடர்பும் இங்கு ஏற்படலாயிற்று. திருவாளர்கள் தர்ம பூரீபண்டார நாயக்கா, சைமன் நவவத்தேகம, தர்மசேன பத்திரராஜ, சுனில் ஆரியரத்தின, சுனில் விஜயறிவர்த்தன, AJ. குணவர்த்தனா முதலியோரைச் சிறப்பாகக் குறிப்பிட முடியும்.
மட்டக்களப்பு வடமோடி தாளக் கட்டை அடிப்படையாகக் கொண்டு திரு.பரராசசிங்கம், பேராசிரியர் மகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து யுனெஸ்கோ (Unesco) வுக்காக ஒருபாடல் தயாரித்து வெளியிட்டபோது அது மிகுந்த வரவேற்பைப் பெற்று பாராட்டப்பட்டது.
மேலும் அகில இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க நாடகக் குழுவின் செயலவை உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இதனால் முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கும் இவரால் உதவ முடிந்தது.
இக்கால கட்டத்திலேதான் இவரது மகன் சித்தார்த்தன் பிறந்திருந்தார். தனது கல்வித் தகைமைகளையும் வளர்த்துக் கொள்ள விரும்பிய இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுச் சிறப்புற்றார்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர்
வீரியம் - யாழ்ப்பாணம்
இவரது வாழ்வில் யாழ்ப்பாணம் நல்லதொரு களமுனையாக அமைந்தது. இவரது துணைவியார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக நியமனம் பெற்றதும் குடும்பத்தையும், தொழிலையும் அங்கு நகர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது.
1977ல் மீண்டும் ஆசிரிய சேவையில் இணைந்து யாழ்.கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக இருந்தார். அதேவேளையில் யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரியிலும் மூன்று ஆண்டுகள் சிறந்த சேவையை முஸ்லிம் மாணவர்களுக்குச் செய்துள்ளார். 1981 ல் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரை. யாளராகி இரண்டு ஆண்டுகள் ஆசிரிய மாணவர்களுக்குத் தமிழ் போதித்தார்.
1984 தொடக்கம் 1988 வரையும் யாழ்.பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், தொடர்ந்து 1989லிருந்து 1991 வரை சிரேஷ்ட விரிவுரை. யாளராகவும் நியமனம் பெற்றதன் மூலம் ஈழத்தமிழ் கூறும் நல்லுலகின் பட்டதாரிக் கலைஞர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு கொண்டு வெற்றியும் பெற்றார்.
யாழ்ப்பாணத்தில் ஆசிரியப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நாட்களில் பாடசாலைகளில் நாடகமுயற்சிகளில் பெரிதும் ஈடுபட்டுழைத்தார். ஒஸ்மானியாக் கல்லூரி சென்.பொஸ்கோ கல்லூரி, சென்.ஜோண்ஸ் கல்லூரி, சுண்டிக்குளிமகளிர் கல்லூரி, இந்து மகளிர் வித்தியாலயம் உடுவில் மகளிர் வித்தியாலயம் முதலிய பாடசாலைகளில் சிறுவர் நாடகங்களிலும் பாடசாலை நாடகங்களிலும் காத்திரமான பங்களிப்புச் செய்தார்.
நாடக முயற்சிகள் யாவும் பரிசளிப்பு விழா போட்டிகளுக்கான நாடகம்என்ற நிலையிலிருந்து நாடகத்தை நாடகமாக்கி மாணவர்களின் திறன்களை வளர்க்கும் சாதனமாக்கினார். இதனால் இவருக்குப் பரவலான அறிமுகம் அங்கும் ஏற்படலாயிற்று.
1979ல் யாழ் பல்கலைக்கழகத்தில் புதியதொரு வீடு'நாடகம் நடிக்கப்பட்டு பல கிராமங்களுக்கும் அது கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் நவீன நாடக மரபு பரவலாக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வந்த நாடக அரங்குக் கல்லூரியுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர்களுடன் இணைந்து பணியாற்றியதால் பழைய நடிகர்களுக்கு கூத்துப் பயிற்சியும் அளிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இக்கல்லூரியின் அளிக்கைக்காக 'சங்காரம், அபசுரம், குருஷேத்திரோபதேசம்' ஆகிய நாடகங்கள்த் தயாரித்தளித்தார்.
இவ்வாறே யாழ்ப்பாண அவைக்காற்றுக்கலைக்கழகத்துடனும் தொடர்பைக் கொண்டிருந்தார். இக்கழக அரங்கிற்காக, அதி மானிடன், தலைவர் ஆகிய நாடகங்களைத் தயாரித்தளித்தார்.

Page 13
12 மெளனம்
பல்கலைக்கழகத்திலும், கலைவட்டம், பெண்கள் ஆய்வு வட்டம், சினிமா ரசிகர் சங்கம், தமிழ்ச்சங்கம் என்பவற்றிற்கான ஆலோசனைகளையும், உழைப்பையும் வழங்கிச் செயற்பட்டார்.
1983ல் யாழ்ப்பாணக் கலாசாரப் பேரவையுடன் யாழ்.பல்கலைக்கழக நுண்கலைத்துறை இணைந்து நடத்திய பெரிய அளவிலான நாடகப் பயிற்சிப் பட்டறை அமைப்பாளராக இருந்து செயற்பட்டார். விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) ஏறத்தாழ ஒருவருடம் இப்பயிற்சிக் பட்டறை நிகழ்ந்தது. இதன் மூலம் இன்றைய பல முன்னணி நாடகக் கலைஞர்கள் யாழ்ப்பாணத்தில் உருவாயினர்.
அங்கிருந்த காலங்களில் பல ஊர்களிலும் நாடகப் பயிற்சிப் பட்டறைகளும், எழுத்துப் பயிற்சிப் பட்டறைகளும் நாடகக் கருத்தரங்குகளும் எற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. யுத்தத்தின் சூழலுக்குள்ளும் குண்டுகள் வெடிப்பிற்குள்ளும் நாடக முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது ஒரு குறிப்பிடத்தக்க விடயம்.
சங்காரம், இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம், சடங்கிலிருந்து நாடகம் வரை, தப்பி வந்த தாடி ஆடு, ஈழத்து நாடக வரலாற்றில் யாழ் மஹாஜனக் கல்லூரி, ஏழு நாடகங்கள், மெளனகுருவின் மூன்று நாடகங்கள் ஆகியன யாழ்ப்பாணத்திலிருந்த போது வெளியிடப்பட்ட இவரது நூல்கள்.
மட்டக்களப்பு - புதுப்பொலிவு
இவரது வாழ்வில் வந்தாறுமூலை எப்போதும் ஒரு தனித்த இடத்தைப் பெற்று வந்துள்ளது. அங்குள்ள மத்திய மகாவித்தியாலயத்திலிருந்தே இவர் பல்கலைக்கழகம் தெரிவானவர். பிற்பட்ட காலத்தில் இதுவே கிழக்குப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இது ஆங்கில மொழி மூல விவசாய விஞ்ஞானம், அரபு, இஸ்லாமிய பீடங்களை உள்ளடக்கிய தேசியப் பல்கலைக் கழகமாகவே வடிவமைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. கிழக்குப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களதும், இந்துக்களதும் அபிலாசைகள் சிறிதேனும் கவனத்திற் கொள்ளப்படவில்லை.
கிழக்குப் பல்கலைக்கழகமாகத் தொடங்கி பத்து ஆண்டுகளுக்குப்பின் 1992இல் தமிழ் மொழித்துறையை ஆரம்பிக்கும் அழுத்தங்கள் ஏற்பட்டபோது அத்துறைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இவரும் இவரது துணைவியாருமே இத்துறையை வளர்க்கப் பொருத்தமானவர்கள் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதுவே இறுதியாகவும் கை கூடிற்று. யாழ். மட்டக்களப்பு பிரயாணம், தகவல் தொடர்புகள் தடைப்பட்டிருந்த ஒரு கால கட்டத்தில் மிகவும் சிரமப்பட்டு இவர்களது விண்ணப்பம் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டது நினைவிலுள்ளது.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 3
1992ல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை ஆரம்பிக்கப்பட்டது. இவர் அதனை விரிவுபடுத்தி நடத்திக் கொண்டு வரும் முறைமையால் பல்கலைக்கழகம் சமூக மட்டத்தில் சிறந்த வரவேற்பைப் பெறலாயிற்று. நான்கு விரிவுரையாளர்களுடனும் ஐந்து பாடநெறிகளுடனும் இருந்த கலைத்துறை 12 பாட நெறிகளுடன் ஆறு துறைகள் கொண்டதாக வளர்ச்சி கண்டுள்ளது. நுண்கலைத் துறை வளர்க்கப்பட்டு கணிப்பிற்குரிய ஒரு துறையாக இன்று அது உள்ளது.
நுண்கலைத் துறைத்தலைவராக கலை, பண்பாட்டுத்துறைப்பீடாதிபதியாக, பதில் துணைவேந்தராக, சுவாமி விபுலானந்தர் இசை நடன வளாகத்தின் இணைப்பாளராக நூலகக் குழுத்தலைவராக, தமிழ்ச் சங்கப் போஷகராக காலத்துக்குக் காலம் வரும் பல்வேறு விடயங்களின் பொறுப்பாளராக -என்று ஒப்படைக்கப்படும் கடமைகளைக் கனகச்சிதமாகச் செய்து முடிக்கும் வல்லாளர். அரைநூற்றாண்டுகளுக்கு முன் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயக் கட்டிடத்தினுள் மாஸ்டர் மெளனகுருவாக நுழைந்து அதே கட்டிடத்தினுள் பேராசிரியராக வளர்ந்த வரலாற்றுச் சிறப்பு இவருக்கே கிடைத்திருப்பது ஓர் அருட் கொடை. அவரது மொழியில் கடும் உழைப்பின் அறுவடை இது.
பல்கலைக்கழகத்தில் நாடக விழாக்கள். புதியதொரு வீடு, இராவணேசன் ஆகிய நாடகங்களின் அரங்கேற்றம், இன்னிய அணி, கிழக்கிசை, மேளப்பேச்சு, ஈழத்துத் தமிழர்நடனம் - என்று பல்வேறு புதிய முயற்சிகளையும் அறிமுகம் செய்து வருகின்றார்.
மட்டக்களப்பு சமூகத்துக்காக வெளியில் நின்று ஆற்றும் பணிகளின் பட்டியல் நீளும். 1993ல் மட்டக்களப்பில் பிரதேச தமிழ் விழா நடத்தப்பட்டபோது எனக்குப் பெரிதும் துணை நின்று கருத்தரங்குகள் கண்காட்சிகள், சிறப்பு மலர் பயிற்சிப் பட்டறைகள் முதலியன நடத்திச் சிறப்புச் செய்து உதவினார். இவ்வாறே பத்து வருடங்களுக்குப் பின் 2003ல் நடந்த இந்து மகாநாட்டு மட்டக்களப்பு விழாவிற்கு பண்பாட்டுக் கண்காட்சி ஒன்று நடத்தியதுடன் மட்டக்களப்புப் பண்பாட்டை வெளிக் கொணரும் மலர் ஒன்றையும் வெளியிட்டு உதவியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டக் கலாசாரப் பேரவை ஏற்பாடு செய்த கூத்துக்களை ஆவணப்படுத்தும் திட்டத்தில் நெறியாளராக இருந்து மூன்று கூத்துக்கள் 'வீடியோ'வில் ஆவணப்படுத்தப்பட்டதுடன் கூத்துக்கலைஞர்களான நடிகர், அண்ணாவிமார், ஒப்பனையாளர் என்போர் பேட்டிகளையும் பதிவு செய்து வைத்துள்ளார்.
பாடசாலை மட்டங்களிலும், பொது நிறுவனங்களிம் இவரது பங்களிப்ட கிடைக்கத் தவறுவதில்லை. இவரால் மட்டக்களப்பு சென்மைக்கல் கல்லூரிக்காக இரு நாடகங்கள் தயாரித்து உதவப்பட்டது. பாடசாலை பல்கலைக்கழக மட்டங்களில் வருடத்துக்கு மும்முறை நாடகப் பயிற்சிட் பட்டறைகளை 1992லிருந்து 2000 வரையும் நடத்தி முடித்துள்ளார்.

Page 14
14 மெளனம்
பரவுகை - பல்தேசிய அரங்கினில்
1998இல் ஓய்வுகால விடுகை பெற்று சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அழைப்பை ஏற்று தமிழ்நாடு சென்று அங்கு சிறிது காலம் பணியாற்றினார். அச்சமயம் தமிழ்நாடு தெருக்கூத்துக்களை அறியும் முயற்சியிலீடுபட்டார். தமிழ்நாடு தென்னார்க்காடு பகுதிகளின் கிராமங்களுக்கு இரவிரவாகப் பயணம் செய்து அங்கு திரெளபதை அம்மன் கோயிலில் நடைபெறும் கூத்துக்களைப் பார்வையிட்டார். கூத்துக்கலைஞர்களையம் சந்தித்துள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகம், பாண்டிச் சேரிப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களின் அழைப்பின் பேரில் அடிக்கடி அங்கெல்லாம் சென்று விரிவுரைகளும் நிகழ்த்தியுள்ளார்.
ஒல்லாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்துள்ளார். இத்தகைய பல்தேசிய தொடர்புகளினால் இலங்கை வரும் பிறநாட்டு அறிஞர்கள் அடிக்கடி மட்டக்களப்பு வரவும் இவர்களைச் சந்திக்கவும் கலைத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புக்களும் ஏற்படலாயிற்று.
நிலைபேறு - குடும்பம்
"எங்கள் குடும்பம் பல்கலைக்கழகம்' என்ற பாடல் வரியொன்று நினைவுக்கு வரும்போது இவரது குடும்பமே முன்தோன்றும். மனைவி சித்திரலேகா ஒரு பேராசிரியை. கிழக்குப் பல்கலைக்கழகத்தமிழ்த்துறைத் தலைவராக உள்ளார். தமிழில் பெண் இலக்கியங்களை முதன்மைப்படுத்தியவர். மட்டக்களப்பு சூரியா பெண்கள் அமைப்பின் முன்னோடி. இந்த அமைப்பு இப்பிரதேசத்தின் பெண்கள் நிலையைத் தரமுயர்த்தவும் அவர்கள் பற்றிய சமூக விழிப்புணர்வைஏற்படுத்தவும் பாடுபட்டு உழைக்கும் ஒன்று.
யாழ். பல்கலைக்கழக M.A. பட்டதாரியான இவர் பெண் கற்கை நெறிக்காக நெதர்லாந்தில் 1986 இல் M.A. பட்டம் பெற்றவர். அமெரிக்க புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவில் Hunter College City University யில் ஒருவருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். பல நூல்களின் ஆசிரியையாக உள்ளவர். கலைப்பீடாதிபதியாகவும் கடமை புரிந்தவர்.
இவரது மகன் சித்தார்த்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் சிறப்புப் பட்டம் பெற்று அங்கு விரிவுரையாளராக பணியாற்றுகின்றார். இப்போது புலமைப் பரிசில் பெற்று கலாநிதிப் பட்டத்திற்காக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றுக்குச் சென்றுள்ளார் அண்மையில் மிகவும் அடக்கமாக அவரது திருமணத்தைப் பெற்றோர் நடத்தி முடித்துள்ளனர். மணமகளும் முன்னாள் வடகிழக்குப் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. சுந்தரம் டிவகலாலா அவர்களின் இளைய புதல்வி காயத்திரி. டில்லி பல்கலைக்கழகத்தில்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 5
உளவியல் பட்டப்படிப்பை மேற்கொள்பவர். இவரது தந்தையாரும் எங்களது காலத்தில் பல்கலைக்கழகத்தில் இளையவராகப் பயின்றவர். நீண்ட காலம் உள்ளுராட்சி உதவி ஆணையாளராக யாழ்ப்பாணத்தில் பணியாற்றி அச்சேவையை சிறப்புச் செய்தவர்.
பேராசிரியர் மெளனகுரு அவர்கள் பற்றிய மனப்பதிவுகளை மீட்டும்போது எனது பல்கலைக்கழக நினைவுக்குறிப்பேட்டில் இவர் அன்று எழுதிய வரிகள் மீண்டும் நினைவுக்கு வருகின்றது.
பல்கலைக்கழகம்
பேராதனை
தோழரே!
மூன்று வருடங்கள் உன்னோடு நெருங்கிப் பழகியிருக்கின்றேன். உன்னிடமிருந்து நான் கற்றுக் கொண்டவைகள் எத்தனையோ,
நமது இருவரின் இலட்சியமும், எதிர்காலத்தைப் பற்றிய வரையறையும் ஒன்றுதான். ஆனால் அதனையடைய நாமிருவரும் சென்று கொண்டிருக்கும் பாதைகள்தான் வெவ்வேறானவை இல்லையா?லட்சியத்தைநிச்சயம் அடைவோம். அது தவிர்க்க முடியாதது. வரலாற்று நியதி. லட்சியத்தை அடையுமுன் கண்டிப்பாகச் சில மைல்களையாவது ஒரே பாதையில் இருவரும் நடந்துதான் அதனை அடைய வேண்டி வரும். அது யார் பாதை?
எமது பாதையில் உன்னைக் காணும் அந்நாளை வெகுவிரைவில் எதிர்பார்க்கின்றேன். அது நியதி. தவிர்க்க முடியாதது.
நாம் இருவரும் அளவளாவிய நாட்களும், தர்க்கித்த நாட்களும் மறக்க முடியாதவை. மிகுந்த பயனுடையவை.
என்றும் தோழமையுடன்
சிமெளனகுரு
எங்களது பாதைகள் அருகருகே ஒட்டிக் கொண்டிருக்கும் தண்டவாளங் களைப் போன்றவையாகவே இன்றும் உள்ளன. சந்திகள் வரும்போது இணைவதும் பின்பு அருகருகே ஒடிக் கொண்டிருப்பதுமான ஒரு நிலைதான். ஒரு குண்டு வெடிப்பில் நானும் மனைவியும் அகப்பட்டு வைத்திய சாலையில் கிடந்த போது வந்தாறு மூலையிலிருந்து பதறியடித்துக் கொண்டு வந்து எனது கட்டிலுக்கு அருகே நின்று ஆறுதல்படுத்தியது என்னுள் ஆழப்பதிந்து கிடக்கின்றது.
இவரது வாழ்வு பல்வேறு இடையூறுகளையும் கடந்து வந்த ஒன்றுதான். யாழ்ப்பாணத்தில் அவருக்கு ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் அவரது ஒரே பெண்

Page 15
16 6ឃTTឃុំ
குழந்தையை இழந்துவிட்டதுயரம், இருதய சத்திரசிகிச்சைக் குட்பட்டு அதிலிருந்து மீள முயன்ற துன்பம் என்றவாறாக பல்வேறு நெருக்கடிகளையும் மலாந்த முகத்தடன் அன்றும் இன்றும் சமாளித்து வரும் ஓர் அற்புத புருஷராக விளங்குகின்றார்.
மணிவிழா
ஓர் அசாதாரண அற்புத புருஷராக விளங்கும் இவரது அறுபதாவது அகவையை முன்னிட்டு மட்டக்களப்புச் சமூகம் மணிவிழாக்காண முயல்கிறது.
பிரதேசக் கலைகளில் காலூன்றி ஈழத்தமிழ்க்கலைகளில் கைவைத்து இலங்கைத் தேசியக் கலைகளுக்குத் தாவி உலகளாவிய நிலையில் படர்ந்து செல்லும் கலைஞராக, சமூக விடுதலைக்கான உள்ளக்கத்துடன் சாதி மத இன நிற பிரதேச பேதங்களின்றி சமுதாயம் விடுதலை பெற எழுதியும் பேசியும் நடித்தும் சீர்திருத்தவாதியாக கவனிப்பாரற்ற அடிமட்ட மக்களின் கலை வடிவங்களில் ஈடுபாடு கொண்டு பயிற்சியும் பெற்று அவற்றினைப் பேணிக்காக்க முயற்சிகளும் செய்து, வளரும் அடுத்த சந்ததியினருக்குக் கையளிக்கும் வழிகாட்டியாக,
ஈழத் தமிழர் பண்பாட்டியலில் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக மட்டக்களப்பின் கலை வடிவங்களைத் தேர்ந்து சிறப்பாக்கி வளமூட்டி தடம் பதித்து நிலை நிறுத்திக் கொண்டு வரும், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை சுவாமி விபுலாநந்தர் இசை நடன வளாகத் தலைவர் பேராசிரியர் சின்னையா மெளனகுரு அவர்களுக்கு மணிவிழா என்பது அவரது சாதனைகளைக் கெளரவிக்கும் ஒரு குறியீட்டு நிகழ்வே. அவரது வாழ்வு சிறப்புற வாழ்த்துகின்றோம்.

சிமெளனகுருவின் கல்வியும், தொழிலும்
ඊ5ඛOඛ)
1.
l. 4
ஆரம்பக்கல்வி
அமிர்தகளி மெதடிஸ்த மிஷன் பாடசாலை (1948-1953) 1-5 ஆம் வகுப்பு வரை
இடைநிலைக்கல்வி
வந்தாறுமூலை அரசினர் மத்திய கல்லூரி (1954. 1960) 6 - 12 வரை
உயர்கல்வி
பேராதனைப் பல்கலைக்கழகம் (1961 - 1965) - B.A.Hons.
பட்டப்பின் படிப்பு கல்வியல் டிப்ளோமா (Dip in Ed)
கொழும்புப் பல்கலைக்கழகம்
(1974 - 1975)
பட்டப்பின்படிப்பு முதுகலைமாணி (M.A) பேராதனைப் பல்கலைக்கழகம்
(1970 - 1973)
பட்டப்பின்படிப்பு கலாநிதி (Ph.D)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் (1982 س 1976)

Page 16
18
மெளனம்
தொழில்
2.
2.2
2.3
2.4
பகுதிநேர ஆசிரியர்
நிரந்தர தொழிலற்ற காலத்தில், A/L வகுப்புகளுக்குத் தமிழ் கற்பித்தல் 1. மட்டக்களப்பு சென்ற் மைக்கல் கல்லூரி.
2. மட்டக்களப்பு அரசினர் கல்லூரி. 3. மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் பாடசாலை
(1965 - 1966)
நிரந்தர தொழில்
உதவி ஆசிரியர் 1. கல்முனை சாஹிராக் கல்லூரி
(1966-1967)
2. கல்முனை உவெஸ்லிக் கல்லூரி
(1968-1970) 3. கல்முனை சாஹிராக் கல்லூரி
(1970 - 1971) 4. வந்தாறுமூலை மத்திய கல்லூரி
(1971- 1972)
பாடநூல் எழுத்தாளர்
(6ஆம் வகுப்புத் தொடக்கம் 10ஆம் வகுப்பு வரையான தமிழ்ப் பாடநால் எழுத்தாளர். கொழும்பு பாடவிதான அபிவிருத்தி நிலையம். (1972-1973)
பல்கலைக்கழக பட்டப்பின்படிப்பு மாணவன் (M.A.) (Ug536 (8DJůn)
பேராதனைப் பல்கலைக்கழகம் (1970- 1973)

2.S
୭. 6
2.7
3.8.
2.3
2.O
2.jl
2.12
பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 19
பல்கலைக்கழக பட்டப்பின்படிப்பு மாணவன்
(Dip in Ed) (pup (35gb) கொழும்புப் பல்கலைக்கழகம் (1974 - 1975)
பல்கலைக்கழக மாணவன் (Ph.D) (பகுதிநேரம்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (1976 - 1982)
<ණුප්rfujit
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி. (1976 - 1978)
ஆசிரியபயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர்
TeoTe oru uus seosse, யாழ்ப்பாணம் (1979 - 1982)
உதவி விரிவுரையாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (1983 - 1989)
சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் 11
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் (1989 - 1991)
சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் 1
கிழக்குப் பல்கலைக்கழகம் (1992 - 1995)
பேராசிரியர்
கிழக்குப் பல்கலைக்கழகம் (1996- இன்றுவரை)

Page 17
20
2.13。
2.14
2.1S
୭.16
2.17
2.18
மெளனம்
நுண்கலைத்துறைத் தலைவர்
கிழக்குப் பல்கலைக்கழகம் (1992 - 1993)
கலைப்பீடாதிபதி
கிழக்குப் பல்கலைக்கழகம் (1993- 1999)
உபவேந்தர் வெளிநாடு சென்றபோது
பதில் உபவேந்தராகக் கடமை. கிழக்குப் பல்கலைக்கழகம் (1997)
நுண்கலைத்துறைத் தலைவர்
கிழக்குப் பல்கலைக்கழகம் (1992 - இன்றுவரை)
கிழக்குப் பல்கலைக்கழக நூலகக் குழுத் தலைவர்
கிழக்குப் பல்கலைக்கழகம் (2000 - இன்றுவரை)
இணைப்பாளர்- சுவாமி விபுலாநந்தர் இசை நடனக் கல்லூ
கிழக்குப் பல்கலைக்கழகம் (2003 - இன்றுவரை)

l.
சிமெளனகுருவின் வெளியீடுகளும் தயாரிப்புகளும்
பேராசிரியர் சி.மெளனகுருவின் நூல்கள்
அ. அச்சில் வெளிவந்தவை
நாடகம் நான்கு (நாடகம்) (1980) இணை ஆசிரியர்
20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் (1984) இணை ஆசிரியர்
சடங்கிலிருந்த நாடகம் வரை (1985)
தப்பி வந்த தாடி ஆடு. (1987) (நாடகம்)
7 bitLastiles6ft (1987) 896oscoil é8,éfrfuil
மெளனகுருவின் மூன்று நாடகங்கள் (1987)
ஈழத்தத் தமிழ் நாடக மரபில் யாழ்ப்பாண மகாஜனக் கல்லூரி. (1989) (பாவலர் தெ.அ.துரையாப்பிள்ளை நினைவுப் பேருரை)
பழையதம் புதியதம் (1992)
சுவாமி விபுலாநந்த அடிகளாரின் கலை இலக்கியக் கொள்கைகள். (1992) (சுவாமி விபுலாநந்ந அடிகளாரின் நினைவுப் பேருரை.)
சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும். (1992)
சங்காரம் (நாடகம்) ஆற்றுகையும் தாக்கமும் (1993)
ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு (1993)
கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் நீலாவாணன் (1996)
நடிப்பு முறைமைகள் பற்றிய எண்ணக்கருக்கள் (1996)
கலை இலக்கியக் கட்டுரைகள் (1997)

Page 18
22
20.
21.
22.
23.
24.
25.
மெளனம்
சக்தி பிறக்குது (1997) (நாடகம்)
பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும் (1998)
இராவனேசன் (நாடகம்) (1998)
மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள் (1998)
அரங்கு ஓர் அறிமுகம் (2000) (இணையாசிரியர்)
சுபத்திரன் கவிதைகள் (2002) (பதிப்பாசிரியர்)
வனவாசத்தின் பின் (2002) நாடகம்
மட்டக்களப்புத் தமிழகமும் இந்துப் பண்பாடும் (2003) (Llg'üLmeff'uff)
சங்ககால சமூகமும் இலக்கியமும் - ஒரு மீள் பார்வை (2003)
Sigrišlaisuusö (2003)
அச்சில் உள்ளவை
கலையும் பண்பாடும்
நவீன நாடக அரங்கின் நிர்மாணிகள் - மொழிபெயர்ப்பு
அச்சுக்கு ஆயத்தமாயிருப்பவை
ஈழத்துத் தமிழ் அரங்க வடிவங்கள்
தெருக்கூத்துக் கலைஞர் கண்ணப்பதம்பிரானுடன் உரையாடல்
சார்வாகன் (குறுநாவல்)
கவிதைத் தொகுதி
முன்னுரைகள்
மண்ணுலகத்து ஓசைகள் (பத்தி எழுத்துக்கள்)
புலவர் கணபதிப்பிள்ளையின் வாய்மொழி இலக்கியப் பண்புசார் பாடல்கள்.
பாரதிதாசனின் தேசியக் கருத்து நிலையும் ஈழத்தக் கவிஞர்களில் அவரின் தாக்கமும்,
S.O. as GOTsuggeoTg55Gd Batticaloa Monograph 66d 5Lipt is sub

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 23
முழுமை பெறாமல் இருக்கும் ஆய்வுகள்
தமிழ்நாட்டுத் தெருக்கூத்த, கர்நாடக யக்ஷகாணம் அரங்குகளும், மட்டக்களப்பு தென்மோடி, வடமோடி அரங்குகளும் - ஒப்பீட்டாய்வு
ஈழத்தமிழ் மத்தியில் சங்கீதம் வளர்த்ததும், வளர்க்க வேண்டியதும்.
சி. மெளனகுரு எழுதிய நாடகங்கள்
()
()
.
2.
13.
14.
15.
வாலிவதை
இராவணேசன்
eFile:Sub
யாருக்குச் சொந்தம்
கும்பகர்ணன்
சக்தி பிறக்குத
விடிவு
சரிபாதி
நம்மைப் பிடித்த பிசாசுகள்
தப்பி வந்த தாடி ஆடு
வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள்
உயிர்ப்பு
பரபாஸ்
ஓர் உண்மை மனிதனின் கதை
வனவாசத்தின் பின்
* அச்சில் வெளியானவை

Page 19
24
3.
4.
மெளனம்
சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற நூல்கள்
தப்பி வந்த தாடி ஆடு (சிறுவர் நாடகம்) 1989இன் சிறந்த நாடகத்திற்கான தேசிய சாஹரித்திய மண்டலப் Life,
பழையதும் புதியதும் (1992)
ஈழத்தமிழ் நாடக அரங்கு (1993)
மட்டக்களபயு மரபு வழி நாடகங்கள் (1998)
1992, 1993, 1998 களின் சிறந்த ஆராய்ச்சி நூல்களுக்கான சாஹித்திய மண்டலப் பரிசு
பழையதும் புதியதும் வடக்குக் கிழக்கு மாகாணச் சாஹரித்தியப் பரிசு (1992 இன் சிறந்த ஆராய்சி நால்)
மெளனகுருவின் மூன்று நாடகங்கள் யாழ் / கலைவட்டம் சிறந்த நாடகத்திற்கான பரிசு
ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு (1993) கொழும்பு தமிழ்ச் சங்கப் பரிசு சிறந்த ஆராய்ச்சி நால்
சி.மெளனகுரு எழுதிய / நடித்த/நெறியாள்கை செய்த நாடகங்கள் (காலமுறைப்படி)
பிறப்பு 09.06.1943
1948
1949
- பெரிய வைத்தியர்
மட்/அமிர்தகளி மெதடிஸ்த மிஷன் பாடசாலை பாத்திரம் - பெரிய வைத்தியர்
- Golden Tree
மட் / அமிர்தகளி மெதடிஸ்த மிஷன் பாடசாலை பாத்திரம் - திருடன்

1951
1952
1953
1954
1955
1956
1957
1958
1958
பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 25
- என் மகன்
மட் / அமிர்தகளி மெதடிஸ்த மிஷன் பாடசாலை பாத்திரம் - மகன்
- Happy man are we
மட் / அமிர்தகளி மெதடிஸ்த மிஷன் பாடசாலை
IITg5g5jib - Drummer
- குடுகுடுப்பைச் சாத்திரி
மட் / அமிர்தகளி மெதடிஸ்த மிஷன் பாடசாலை பாத்திரம் - சாஸ்திரி
- குடுகுடுப்பைச் சாத்திரி
வந்தாறுமூலை மத்திய கல்லூரி பாத்திரம் சாஸ்திரி
- இரு சகோதரர்கள்
வந்தாறுமூலை மத்திய கல்லூரி பாத்திரம் - தம்பி.
- சிறையிற் சேகர்
அமிர்தகளிகலாமன்றம் பாத்திரம் - வழிப்போக்கன்
- திருமாவளவன்
வந்தாறுமூலை மத்திய கல்லூரி பாத்திரம் - திருமாவளவன்
- இராஜ இராஜசோழன்
வந்தாறுமூலை மத்திய கல்லூரி பாத்திரம் - விமலாதித்தன்
- யார் குற்றவாளி ?
வந்தாறுமூலை மத்திய கல்லூரி பாத்திரம் - திருடன்

Page 20
26
سس 1959
سس 18959
1959 -
1959 .
1959
1960
1961
962
மெளனம்
வெனிஸ் நகரவர்த்தகன்
வந்தாறுமூலை மத்திய கல்லூரி பாத்திரம் - அன்ரோனியோ
இரண்டு லட்சம்
அமிர்தகளி கலாமன்றம் பாத்திரம் - சீர்திருத்தவாதி.
gпubЈт 663антењ60
வந்தாறுமூலை மத்திய கல்லூரி பாத்திரம் - அசோகன்
எல்லாளன் தோற்றானா?
வந்தாறுமூலை மத்திய கல்லூரி பாத்திரம் - துட்டகைமுனு
புலித்தேவன்
வந்தாறுமூலை மத்திய கல்லூரி பாத்திரம் - புலித்தேவன்
பாசுபதாஸ்திரம் (வடமோடி நாடகம்)
வந்தாறுமூலை மத்திய கல்லூரி பாத்திரம் - சிவவேடன்
விஷ ஊசி
சீலாமுனை இளைஞர் கலைக்கழகம் பாத்திரம் - கதாநாயகி (சுகுணா) நெறியாள்கை - சி. மெளனகுரு
அன்பின் முடிவில் (பி.எஸ்.ராமையாயின் பிரசிடண்ட் பஞ்சாரத்தைத் தழுவியது) சீலாமுனை இளைஞர் கலைக்கழகம். பாத்திரங்கள் - சிறிய பாத்திரங்கள் 3 நெறியாள்கை - சி. மெளனகுரு

1962
1963
1964.
1965
1966
1966.
பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 27
- கர்ணன் போர் (வடமோடி நாடகம்)
பேராதனைப் பல்கலைக்கழகம் (தயாரித்தவர் பேராசிரியர் வித்தியானந்தன்) பாத்திரம் - கர்ணன் (மரபுவழிக் கூத்தைச் சுருக்கி எழுதியவர் சி. மெளனகுரு)
- நொண்டி நாடகம் (தென்மோடி நாடகம்)
பேராதனைப்பல்கலைக்கழகம் (தயாரித்தவர். பேராசிரியர் வித்தியானந்தன்) பாத்திரம் - செட்டியார் (மரபுவழிக் கூத்தைச் சுருக்கி எழுதியவர் சி.மெளனகுரு)
இராவனேசன் (வடமோடி நாடகம்) பேராதனைப்பல்கலைக்கழகம் (தயாரித்தவர் - பேராசிரியர் வித்தியானந்தன்) பாத்திரம் - இராவணன் (நாடகப் பிரதியாக்கம் சி.மெளனகுரு)
- வாலிவதை (வடமோடி நாடகம்)
பேராதனைப் பல்கலைக்கழகம்
(தயாரித்தவர். பேராசிரியீர் வித்தியானந்தன்) நாடகப் பிரதியாக்கம் - சி.மெளனகுரு
. கோலியாத்தை வென்ற குமாரன் (வடமோடி நாடகம்)
மட் / திருமறைக் கலாமன்றம் தயாரிப்பு - திரவியம் இராமச்சந்திரன் பாத்திரம் - தாவீது பிரதியாக்கம் திரவியம் இராமச்சந்திரன் உதவி - சி.மெளனகுரு
- பாலன் பிறந்தான் (வடமோடி நாடகம்)
மட் /திருமறைக் கலாமன்றம் தயாரிப்பு திரவியம் இராமச்சந்திரன் பாத்திரம் - யோசேப் பிரதியாக்கம் திரவியம் இராமச்சந்திரன் உதவி - சி. மெளனகுரு

Page 21
28
1967
1967
1968
1968
1969
1969
1969
மெளனம்
- உத்தமன் பரதன் (வடமோடி நாடகம்)
மட் / வின்சன்ற் மகளிர் கல்லூரி தயாரிப்பு - திரவியம் இராமச்சந்திரன் பிரதியாக்கம் திரவியம் இராமச்சந்திரன் உதவி . சி. மெளனகுரு
- குருகேத்திரன் போர் (கூத்து) வந்தாறுமூலை மத்திய கல்லூரி தயாரிப்பு - தம்பிராஜா உதவி - சி.மெளனகுரு
- கர்ணன் போர் (வடமோடி நாடகம்)
மட் /வின்சன்ற் மகளிர் கல்லூரி தயாரிப்பு திரவியம் இராமச்சந்திரன் பிரதியாக்கம் திரவியம் இராமச்சந்திரன் உதவி - சி. மெளனகுரு
- அபகரம் (அபத்த நாடகம்)
கல்முனை / சாஹிராக்கல்லூரி நெறியாள்கை சி.மெளனகுரு (நா.சுந்தரலிங்கத்தின் பிரதிச்சுருக்கம்)
- பவளக்கொடி (கூத்து)
வந்தாறுமூலை மெதடிஸ்த மிஷன் பாடசாலை தயரிப்பு தம்பிராசா உதவி - சி.மெளனகுரு
- கும்பகர்ணன் (வடமோடி நாடகம்)
மட் /வின்சன்ற் மகளிர் கல்லூரி தயாரிப்பு திரவியம் இராமச்சந்திரன் பிரதியாக்கம் திரவியம் இராமச்சந்திரன் உதவி - சி. மெளனகுரு
- சங்காரம் (வடமோடி நாடகம்)
மட்டக்களப்புநாடகச் சபா நெறியாள்கை சி.மெளனகுரு பாத்திரம் - தொழிலாளர் தலைவன் பிரதியாக்கம் சி. மெளனகுரு

1969
1970
1971
1972
1973
1973
1974
பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 29
- யாருக்குச் சொந்தம்?
கல்முனை / உவெஸ்லி உயர்தரப் பாடசாலை நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் சி. மெளனகுரு
- கும்பகர்ணன்
மட் / வந்தாறுமூலை மகா வித்தியாலயம் நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் சி. மெளனகுரு
- யாருக்குச் சொந்தம்?
மட். / வந்தாறுமூலை மகா வித்தியாலயம் நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் சி. மெளனகுரு
- கந்தன் கருணை (ஒயிலாக்க நாடகம்)
கொழும்பு நடிகர் ஒன்றியம் நெறியாள்கை அ. தாசீசியஸ் பாத்திரம் - கந்தன்
- புதியதொரு வீடு (ஒயிலாக்க நாடகம்)
கொழும்பு நடிகர் ஒன்றியம் நெறியாள்கை அ. தாசீசியஸ் பாத்திரம் - எடுத்துரைஞர்
- கானகம் ஏகிய இராகவன் (நாட்டிய நாடகம்
கொழும்பு/ சென்பிறிட்ஜஸ் கல்லூரி தயாரிப்புகார்த்திகா கணேசர் வடமோடி ஆட்டமும்/பிரதியாக்க உதவியும் சி. மெளனகுரு
- இராமாயணம் (நாட்டிய நாடகம்)
கொழும்பு/கார்த்திகா ஆடற்கலையகம் தயாரிப்பு கார்த்திகா கணேசர் வடமோடி ஆட்டமும்/பிரதியாக்க உதவியும் சி. மெளனகுரு

Page 22
30
1976
1977
1978
1979
1979
1980
1981
மெளனம்
- போர்க்களம் (வடமோடி நாடகம்)
யாழ் பல்கலைக்கழகம் தயாரிப்பு சி. மெளனகுரு பிரதியாக்கம் சி. மெளனகுரு பாத்திரம் - அரசன்
எங்கள் நாடு இது
யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி நெறியாள்கை சி. மெளனகுரு
- புதியதொரு வீடு (ஒயிலாக்க நாடகம்)
யாழ்/ பல்கலைக்கழக இந்து மன்றம் நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் - மஹாகவி
- அதிமானிடன் (மேடை நிகழ்வு)
யாழ். ஃ அவைக்காற்று கலைக்கழகம். நெறியாள்கை சி.மெளனகுரு (நுஃமானின் கவிதையைத் தழுவிய மேடையாக்கம்) பாத்திரம் - உயர்த்த மனிதன்
தலைவர் (அபத்த நாடகம்) யாழ்/அவைக்காற்று கலைக்கழகம் நெறியாள்கை சி. மெளனகுரு (அயனஸ்கோவின் பிரதியின் தமிழாக்கம்) பாத்திரம் - தலைவர்
சங்காரம் (ஒயிலாக்க நாடகம்) நாடக அரங்கக் கல்லூரி நெறியாள்கை சி. மெளனகுரு பாத்திரம் - தொழிலாளர் தலைவர் பிரதியாக்கம் சி. மெளனகுரு
- அபசுரம் (அபத்த நாடகம்)
நாடக அரங்கக் கல்லூரி நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் ந. சுந்தரலிங்கம்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர்
1982 - குருஷேத்ரோபதேசம்
நாடக அரங்கக் கல்லூரி நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் ஞானி.
1982 - 69iuejub
யாழ்/நாடக அரங்கக் கல்லூரி நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் ந. சுந்தரலிங்கம்
1982 - esՍւք
யாழ்/ மருத்துவபீட மாணவர் அவை நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் அன்ரன் செக்கோவ்.
1982 - லங்குரு சிம்பிலி சாலா
யாழ்/ மருத்துவபீட மாணவர் அவை நெறியாள்கை சி. மெளனகுரு (நா.சுந்தரலிங்கத்தின் "விழிப்பு" நாடகத்தின் சில காட்சிகளைத் தழுவியது)
1984 - புத்துயிர்ப்பு
யாழ் / உடுவில் மகளிர் கல்லூரி
நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் சி. மெளனகுரு
1985 - மழை
யாழ் ஃ இந்து மகளிர் கல்லூரி நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் சி. மெளனகுரு
1985 - தப்பி வந்த தாடி ஆடு
யாழ்/ சென் பொஸ்கோ ஆரம்பப் பாடசாலை நெறியாள்கை சி. மெளன்குரு பிரதியாக்கம் சி. மெளனகுரு

Page 23
32
1986
1986
1986
1987
1988
1988
1989
மெளனம்
- erflumg
யாழ்/ சுண்டிக்குளி மகளிர் கல்லூரி நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் சி. மெளனகுரு
- வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள்
யாழ். சென் பொஸ்கோ ஆரம்பப் பாடசாலை
நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் சி. மெளனகுரு
- சக்தி பிறக்குது
யாழ்/பெண்கள் ஆய்வு வட்டம் நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் சி. மெளனகுரு
- நம்மைப் பிடித்த பிசாசுகள்
யாழ்/ சுண்டிக்குளி மகளிர் பாடசாலை நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் சி. மெளனகுரு
- பரபாஸ்
யாழ்./உடுவில் மகளிர் கல்லூரி நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் சி. மெளனகுரு
- ஒரு முயலின் கதை
யாழ். சென் பொஸ்கோ ஆரம்பப் பாடசாலை நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் சி. மெளனகுரு
- ஒரு உண்மை மனிதனின் கதை(விவரண அரங்கு)
யாழ்./உடுவில் மகளிர் கல்லூரி நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் சி. மெளனகுரு

1989
1989
1989
1990
1993
பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 33
- கலையில் உயிர்க்கும் மனிதன்
uiltyp/9ibg5 uDéb6rflff கல்லூரி நெறியாள்கை சி. மெளனகுரு, என். சண்முகலிங்கன் பிரதியாக்கம் சி. மெளனகுரு
- புதியதொரு வீடு
யாழ்./பல்கலைக்கழக நுண்கலைத்துறை நெறியாள்கை சி. மெளனகுரு, குழந்தை ம. சண் ചbb பிரதியாக்கம் மஹாகவி
- பரதமும் கூத்தம்
கூத்தைச் செம்மைப்படுத்தி இரண்டு ஆட்டக் கோலங்கள். யாழ்/ பல்கழைலக்கழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரி நெறியாள்கை சி. மெளனகுரு நடன ஒழுங்கமைப்பு சி. மெளனகுரு மேடையேற்றம் - கொழும்பு (கூத்தைச் சாஸ்திரியத்திற்குள் கொணரும் முயற்சி)
ஈழத்தத் தமிழர் நடனம் யாழ்./பல்கலைக்கழக நுண்கலைத்துறை நெறியாள்கை சி. மெளனகுரு (ஈழத்து வடமோடி, தென்மோடி ஆடல் வடிவங்களைக் கோர்த்து ஈழத்துத் தமிழர் நடனமாக அறிமுகஞ் செய்யும் முயற்சி)
கண்ணகி குளிர்த்தி
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை நெறியாள்கை சி. மெளனகுரு
உதவி - பாலசுகுமார் (மட்டக்களப்பு கண்ணகி அம்மன் குளுர்த்திப் பாடல்களை இசைக் கருவிகளின் பின்னணியில் ஒழுங்கமைத்து மேடை நிகழ்வாக அறிமுகஞ் செய்யும் முயற்சி)

Page 24
34
1995
1995
1996
1999
2000
மெளனம்
- கிழக்கு நடனம்
கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை நெறியாள்கை சி. மெளனகுரு நடன ஒழுங்கமைப்பு சி. மெளனகுரு (கிழக்கு ஈழத்தில் ஆடப்படும் பறைமேளம், வசந்தன், மகிடி, தென்மோடி, வடமோடி ஆட்டமுறைகளை தெரிந்து ஒன்றுசேர்த்துமேடை நிகழ்வாக அறிமுகஞ் செய்யும் முயற்சி)
- வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள்
மட்/ சென்ற் மைக்கேல் கல்லூரி நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் சி. மெளனகுரு
- ஒரு முயலின் கதை
மட்/ சென்ற் மைக்கேல் கல்லூரி நெறியாள்கை சி. மெளனகுரு பிரதியாக்கம் குழந்தை ம. சண்முகலிங்கம்.
இன்னிய அணி
கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை (தமிழருக்கான ஓர் இன்னிய அணியை தமிழர் வாத்தியங்களான பறை, உடுக்கு, மத்தளம், மேளம், கஞ்சிரா, தாளம், சங்கு என்பன கொண்டு உருவாக்கும் முயற்சி) கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இது முதன் முறை பரீட்சார்த்தமாக பார்க்கப்பட்டது. ஒழுங்கமைப்பு வடிவமைப்பு சி. மெளனகுரு
. இன்னிய அணி
கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை வடிவமைப்பு சி. மெளனகுரு (இன்னிய அணியில் இன்னும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. வடமொடி, தென்மோடி ஆட்டங்கள் சில புகுத்தப்பட்டு அணி, ஆட்டத்துடன் செல்லும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டது)

2001
2001
2001
2002
2002
பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 35
66ör6ofu &6oof
கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை வடிவமைப்பு சி. மெளனகுரு (இன்னிய அணியில் சங்கும், சலங்கையும் அறிமுகஞ் செய்யப்பட்டு மத்தளங்களின் தொகையும் கூட்டப்பட்டது)
இராவனேசன் (வடமோடி நாடகம்)
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை நெறியாள்கை சி. மெளனகுரு
பிரதியாக்கம் சி. மெளனகுரு (பேராசிரியது வித்தியானந்தன் 1964 இல் தயாரித்த இராவணேசன் நாடகத்தை இன்னொரு தளத்தில் தயாரிக்கும் முயற்சி. ஆடல், பாடல் என்பன நடிப்புக்கும் உணர்வு வெளிப்பாட்டிற்கும் பாவிக்கப்பட்டதுடன் நாடக அளிக்கை முறையிலும் பல மாற்றங்கள் இதில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.)
கிழக்கிசை
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை வடிவமைப்பு, இசைப்பயிற்சி சி.மெளனகுரு (கிழக்கு ஈழத்தில் வழங்கப்படும் சடங்கு, தொழில், பொழுதுபோக்கு சார்ந்த இசை வடிவங்களையும் வசந்தன், தென்மோடி, வடமோடி கூத்திசை ஆகியவற்றையும் ஒன்று சேர்த்து கிழக்குத் தமிழரின் இசையாக மேடை நிகழ்வாக அறிமுகஞ் செய்யும் முயற்சி)
இன்னிய அணி
கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை வடிவமைப்பு சி. மெளனகுரு (ஆடல்கள் சில புதிதாகப் புகுத்தப்பட்டதுடன் அவ்வின்னிய அணியில் தாங்கிச் செல்வதற்கான ஆலவட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
வடமோடி, தென்மோடி ஆட்ட அறிமுகம்
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை வடிவமைப்பு சி. மெளனகுரு (மட்டக்களப்பின் வடமோடி, தென்மோடி ஆட்டமுறைகளை ஓர் ஒழுங்கில் கொணர்ந்து தாளக்கட்டுக்களையும் ஆடல் கோலங்களையும் அசைவுகளையும் செம்மைப் படுத்தி மேடை நிகழ்வாக அறிமுகஞ் செய்யும் முயற்சி)

Page 25
36 மெளனம்
2002 - மேளப் பேச்சு
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மேடை. வடிவமைப்பு சி. மெளனகுரு (மட்டக்களப்பின் தொல் வாத்தியங்களான பறை, தப்பட்டை, மத்தளம், உடுக்கு என்பனவற்றின் இசையையும் சிலம்பு, சல்லரி போன்ற கஞ்சக் கருவிகளின் இசையையும் ஒன்றோடு ஒன்று பேசவிட்டு அக்கருவிகளின் வீரியத்தையம் பிரதேச இசையின் தனித்துவத்தையும் மேடை நிகழ்வாக அறிமுகஞ் செய்யும் முயற்சி)
2003 - இராவணேசன்
மட்டக்களப்பு, யாழ்ப்பாண நகரம், யாழ். பல்கலைக் கழகம், உடுவில் மகளில் கல்லூரி, வவுனியா கல்வியியற் கல்லூரி ஆகிய இடங்களில் மேடையிடப்பட்டது.

பேராசிரியர் சிமெளனகுருவின் ஆக்கங்கள்
நூல் விபரப்பட்டியல் (Bibliography) 1971 முதல்
1971
1972
1975
0l.. ••arrrrrreeeerrr
மட்டக்களப்பு நாட்டுக் கூத்தின் தேக்கநிலை - அஞ்சலி, மட். கிழக் கிலங்கைச் சிறப்பிதழ், 1971, ப. 46-48.
02. assessession
கிராமியக் கலைகளின் மறுமலர்ச்சி - பாவலர் துரையப்பாப்பிள்ளை நூற்றாண்டு விழாமலர், தெல்லிப்பழை நூற்றாண்டு விழாச்சபை, 1972, பக். 40 - 44.
03. successesses.
ஈழத்து மரபுவழிநாடகங்களும் அவற்றின் போக்கும் மட்டக்களப்புநாட்டுக் கூத்தின் அம்சங்கள்-நுட்பம் இலங்கை பல்கலைக்கழக கட்டுப்பெத்தை வளாக வெளியீடு, 1974, பக். 84 - 87.
04 seasons.
தேசிய தமிழ் நாடக விழா - மல்லிகை, யாழ். டொமினிக் ஜீவா, 1975, Uds. 47-49.

Page 26
38
1976
1977
1978
மெளனம்
05. .essesses.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நாட்டுக்கூத்துப் போட்டி - மல்லிகை, யாழ் டொமினிக் ஜீவா, 1976, (நவம்) பக். 36 - 37
06. sessessessesse.
ஆசிய நாடுகளின் பண்பாட்டொருமை - கிராமியக் கலைகள் - தினகரன், 28.11.19763 பநிரை, 1 - 8, 4 பநிரை 7 - 9.
07 sessesses.
தமிழ் நாவலிற் கிராமம் - மல்லிகை, யாழ் டொமினிக் ஜீவா, 1976 (டிசம்)
Lidis. 41 - 45.
O8.
மெளனகுரு சி, பேராதனை தமிழ்ச் சங்கம் - பொன்விழா.நாட்டுக்கூத்துக்கு எமது பங்களிப்பு, தினகரன், 23.04.1977, ப. 4நிரை 6-9
09. ...soope0
ஆக்க இலக்கியமும் நாட்டுப் பண்பாட்டியலும் மட்டக்களப்பு கிராமியக் கலைகள் - ஆக்க இலக்கியமும் அறிவியலும், யாழ். பல்கலைக்கழக ଗଣuଶffiud(8, 1977,
10. sesses.
ஈழத்து தமிழ்நாடகங்களின் அண்மைககாலப் போக்கு - சில குறிப்புக்கள் மல்லிகை, யாழ். டொமினிக் ஜீவா, 1977, (ஆகஸ்ட்), பக். 100 - 103.
11.
பரதநாட்டியமும் கூத்தும் - மல்லிகை, யாழ் டொமினிக் ஜீவா, 1978, (ஆகஸ்ட்) 1979, பக். 21-24.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 39
இன்றைய உலகும் கிராமிய நாடக மரபும்-மல்லிகை, யாழ் டொமினிக் ஜீவா, 1978, (ஜனவரி), பக். 41 - 45.
3. sessessesses.
ஈழத்தமிழ்நாடக உலகு - மல்லிகை, யாழ் டொமினிக் ஜீவா 1979 (ஆகஸ்ட்),
Lld5. 71 - 75.
14. assassis.
புதிய நாடகங்களில் கூத்து முறைகள் - சில குறிப்புக்கள் - சமர், யாழ் டானியல் அன்ரனி, 1979 (ஏப்). ப.
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் (இணை ஆசிரியர்) கல்முனை நூறிமன்ஸிஸ் வாசகர் சங்கம், 1980, பக். 1 - 114.
யாத்ரா, வங்காள மரபுவழி நாடகம் பற்றிய ஓர் அறிமுகம், மல்லிகை, யாழ். டொமினிக் ஜீவா, 1980, (ஆகஸ்ட்), பக். 70 - 73.
17.
சங்காரம் - நாடகம் நான்கு - கொழும்பு நடிகர் ஒன்றியம் வெளியீடு, 1980, Ludö. 1 - 34, 1981.
18. assission
பிரான்சிஸ் ஜெனம்- மல்லிகை, யாழ் டொமினிக் ஜீவா 1981 (நவம்பர்) பக்.
20 - 22.
மட்டக்களப்புக் கிராமியமும் ஈழத்துப் புனைகதைகளும் ஆகஸ்ட் மல்லிகை, 1981, பக். 81 - 84. திருக்குறள் - காலமும் கருத்தும் - திருக்குறள் மாநாடடு மலர், யாழ் திருக்குறள் மன்றம், 1981, பக்.

Page 27
40
1982
1983
மெளனம்
20. ...............
பாரதியின் கல்விச் சிந்தனைகள் - தினகரன் 28 - 2 - 1982ஈ ப6 நிரை 1 - 8. பாரதி காலத்துச் சூழல் - அக்காலக் கல்வி இலக்கியங்களில் அவன் கொண்ட பங்கு.
21 assassesses.
ஈழத்துத் தமிழ் நாட்டுக் கூத்துக்கள் - தமிழியற் கட்டுரைகள் யாழ், ஆசீர்வாதம் அச்சகம், 1982, ப.
22. ...sai.e.
தமிழகம் - ஈழம் அண்மைக்கால நாடக முயற்சிகள் - சில குறிப்புகள் - மல்லிகை யாழ், டொமினிக் ஜீவா, 1983, பக். 35 - 40.
23. ..........
எமது நாடக மரபை புரிந்து கொள்ள முயற்சிப்போம் - மல்லிகை யாழ், டொமினிக் ஜீவா, 1983 (பெப்.) பக். 37 - 43.
24. sassissions.
ஆசியாவின் நாடக மரபு - மல்லிகை யாழ் மொமினிக் ஜீவா, 1983 (மார்ச்) L léib. 44 - 48.
25. -sarassesses.
பாரதியும் மரபும் - மல்லிகை யாழ் டொமினிக் ஜீவா, 1983, 1984, பக்.25 - 28.
26. assessesses.
மட்டுமாநகரில் மணிவிழாக் காணும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் -ே புராசிரியர் வித்தியானந்தன் மணிவிழா மலர், மட். கோட்டமுனை இளைஞர் முன்னணிக் கழகம், 1984, (பக்கங்கள்
இலக்கமிடப்படவில்லை)

1985
பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 4.
27. assessesses.
பேராசிரியர் சு.வித்தியானந்தனும் மட்டக்களப்புத் தமிழகமும்-பேராசிரியர் வித்தியானந்தன் மணிவிழா மலர், மட். கோட்டமுனை இளைஞர் முன்னணிக் கழகம், 1984 (பக்கங்கள் இலக்கமிடப்படவில்லை).
28. --...soccesses.
கலை, அழகு, சமூகம் சில குறிப்புகள் - மல்லிகை யாழ். டொமினிக் ஜீவா, 1984 (ஆகஸ்ட்) பக்.97 - 102.
29. assessesses.
விலாசம் தமிழ்நாடக வகை ஒன்று பற்றிய ஆய்வு-சிந்தனை திருநெல்வேலி இலங்கை பல்கலைக்கழக யாழ் வளாகம், 1984 (நவம்) பக். 15-32.
30,
கலைகளும் பாரதியும், பாரதி பன் முகப்பார்வை, யாழ். 1984, பக். 11 - 132, தேசிய இலக்கியப் பேரவை.
31 sessessesses.
ஈழத்துத் தமிழ்நாடக உலகுக்குப் பேராசிரியரின் பங்களிப்பு-பேராசிரியர் சு. வித்தியானந்தன் மணிவிழா யாழ் மணிவிழாக்குழு 1984, பக்.
32 seasesses.
பெரும் பத்திரிகைகளும் இன்றைய புனைகதை இலக்கியக்காரர்களும் - மல்லிகை, யாழ் டொமினிக் ஜீவா, 1985 (செப்.), பக். 49 - 55.
33. sessesses.
ஈழத்து தமிழ் நாடக உலகில் கலையரசு சொர்ணலிங்கம் மறு மதிப்பீட்டிற்கான சில குறிப்புக்கள், மல்லிகை, யாழ் டொமினிக்ஜிவா, 1985, (ஏப்.) பக். 33 - 42.
34. ---assesses.
இலங்கைத் தமிழ் - சிங்கள மக்களிடையே உள்ள பாரம்பரிய நாடகங்களும் அவற்றின் சமாந்தரத் தன்மைகளும் - மல்லிகை, யாழ். டொமினிக் ஜீவா, 1985 (ஜூன்), பக். 37 - 43.

Page 28
42
1986
மெளனம்
35 sessessesses.
மலர்ந்தும் மலராத வாசகர் பற்றிய சில நினைவுகள் - மக்கள் கலைஞன் கே. எம். வாசகர் நினைவுமலர், 1985, பக்.
36 seasessesses.
சங்கீதம், உடல் - உளம் -நான், யாழ். வின்சன்ட் பெற்றிக், 1986, பக்.5 - 7.
37.
இறப்பும் இழப்பும் - த. சண்முகசுந்தரம் நினைவு மலர் யாழ், நினைவுமலர்க் குழு, 28.08.1986, பக் 41 - 43.
38.
நடன நாடகங்களில் ருக்மணிதேவியின் பாணி-ஈழநாதம், 1986.
39. assessessee.
கூத்து ஒரு நோக்கு - அணையா விளக்கு, கல்முனை கார்மேல் பாத்திமாவின் பத்தாவது ஆண்டு மலர், 1986, பக். 125 - 129.
40, asses.
மறைந்த நாட்டிய மேதை ருக்மணி தேவி அருண்டேல் பற்றிய ஒரு நினைவுகூரல், மல்லிகை, யாழ் டொமினிக் ஜீவா, 1986, பக். 63 - 64.
4. assessessesses.
தமிழர் கலை வரலாற்றில் மறு பாதி, ஈழமுரசு, 5-2, 1986, ப. நிரை
42. sassessessssss
நாமும் நமது கலாசாரத் தனித்துவமும்-விருட்சம், யாழ். பல்கலைக்கழக வெளியீடு, 1986, பக். 157 - 162, 1987
43. assessessessee.
மெளனகுருவின் மூன்று நாடகங்கள், யாழ். நாடக அரங்கக் கல்லூரி வெளியீடு, 1987, ப. 53.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 43
44. .........ac.
தப்பி வந்த தாடி ஆடு, திருநெல்வேலிநாடக அரங்கக் கல்லூரி, 1987, ப. 59.
45. assessesses.
அறுபது வயது இளைஞர், மல்லிகை டொமினிக் ஜீவா, 1987, (ஜூன் அல்லது ஜூலை) பக்.5 - 8.
oo. ----------
ஈழத்துத் தமிழரின் புராதன நாடக வடிவங்கள் பற்றிய தேடலில் மட்டக்களப்பில் மகிடி நாடகம் - முரசொலி, 11.1.1987, ப. 7,நிரை 1-5, ப. நிரை 4 - 5.
47. Issassists.
சிறுவர்களுக்கான நாடகங்கள் - முரசொலி 24.5.1986, ப. 4-நிரை 2-14, ப. 11, நிரை 3.
48. -------.
தமிழருக்கென தனித்துவமான தேசிய நாடக அரங்கு தேவை - சஞ்சீவி, 24.01.1987, Jėjö. 1 1 - 12.
49. ...si.e.
எமது தமிழ்நாடகங்கள் - நான், யாழ். வின்சன்ற் பெற்றிக் 1987, பக். 4 - 8,
1988.
50, series.
சடங்கிலிருந்து நாடகம் வரை - தெல்லிப்பழை நாசலி*ம் நூலாலயம்,
1988, Lldö. 1 - 63.
51. ...
எமதுநாடக மரபு வருகையின் தூதன் சிறப்புமலர் - கிரான் பெரியண்ணன் கலையரங்கள் 1988, ப. 2.

Page 29
44
1989
மெளனம்
52. soccess.
படைப்பின் போக்கும் சுவைஞர் - விமர்சகர் நோக்கும் சொந்த அனுபவத்தினுடாகச் சில குறிப்புகள்.
மல்லிகை யாழ் டொமினிக் ஜீவா (ஜன) 1988,பக். 27-31,
53. access.........
நாடகக் கலைஞர் வி. எம். குகராஜா நினைவுக் குறிப்பு, மல்லிகை யாழ். டொமினிக் ஜீவா, (பெப்-மார்ச்), 1988,பக். 45-47
54. .............d
இங்கிவரை நாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டோம் - யோகம் நினைவுகள், கல்முனை உவஸ்லி உயர்தர பாடசாலை, 1989, பக். 32-33.
55. .............
எழுத்தாளர்களும் விமர்சகர்களும் சமகாலப் பிரச்சினைகளும் -முரசொலி 19.3.1989, ப. 3, நிரை 1 - 4, ப. 14நிரை 1 - 3.
56. ...............
பரதமும் கூத்தும் ஒற்றுமைகள் - நாதவாகினி, யாழ். இராமநாதன் நுண்கலைத்துறை வெளியீடு, 1989, ப.
57. ........
சிறுவர்க்கான நாடகங்களும் ஆசிரியர்களும் - கலைமலர், கோப்பாய் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மலர், 1989, பக். 47 - 52.
58. ...........
ஈழத்து தமிழ் நாடக மரபில் மகாஜனக் கல்லூரி - பாவலர் தெ. அ. துரையப்பா பிள்ளை நினைவுப் பேருரை, 8 தெல்லிப்பழை - தெல்லிபழை பழைய மாணவர் சங்கம், 1987, பக். 1 -23
59. ................
ஈழத்தின் தமிழ் நாடகங்கள் - 1989

1990
பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 45
60. .....reseasons.
மரபும் விழுதும் - ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை அந்தோனி அணர்ணாவியார் நினைவுமலர், ஊர்காவற்றுறை, நினைவுமலர் குழு 26.06.1989, dib. 12 - 14.
6l. assessesses.
மண்ணுலகத்து நல்லோசை, கலாசாரப் பக்குவம், வீரகேசரி 04.11.1990, ப. 5, நிலை 4, 5, 6.
62. areason.
மண்ணுலகத்துநல்லோசை கற்பனை - கலைஞர்கள்-வீரகேசரி, 11.11.1990, ப. 3 நிரை 1, 2.
மண்ணுலகத்துநல்லோசை,இன்றை உலகு, வீரகேசரி 18.11.1990, ப. 5,நிரை
l, 2.
64. ...esses.
மண்ணுலகத்து நல்லோசை, கோவலனின் தலையும் ஆராய்ச்சிக் கொலையும், வீரகேசரி 25.11.1990, ப. 3, சஞ்சிகை நிரை 6, 7, 8.
65. ..............
இலங்கைத் தமிழரிடையே அவைக்காற்றுக் கலைகள் - விமர்சனம், Glä5T(plbu, (SSA) Social Scientists' Association, 1990, U. 8.
66. ............
தமிழ்ப்படம் ஏன் சர்வதேச திரைப்படப் போட்டிக்கு தெரிவு செய்யப்படுவதில்லை. தமிழ் சினிமா சில தகவல்கள் பல குறிப்புக்கள் வீரகேசரி, 09.11.1990, ப. 2 சஞ்சிகை நிரை 1 - 8.
67. rers......
மண்ணுலகத்து நல்லோசை - கருத்துக்களின் களம் என்ன? வீரகேசரி 16.02.1990, ப. 2, சஞ்சிகை நிரை 1 - 5.

Page 30
46
மெளனம்
68. ..............
மன்ணுலகத்து நல்லோசை - எங்கே இவர்கள்? என்ன நடந்தது? பகுதி - 1, வீரகேசரி 23.12.1990, ப. 6, நிரை 4 - 7.
69. a.s.n.
மண்ணுலகத்து நல்லோசை - எங்கே இவர்கள்? என்ன நடந்தது? பகுதி. 2. வீரகேசரி 30.12.1990, ப. 2, மஞ்சரி, நிரை 4-7
70. .........
ஐரோப்பிய நவீன நாடக அரங்கும் - ஆசிய நாடக அரங்கும் பரஸ்பர தாக்கங்கள்,மல்லிகை 25ஆவது ஆண்டுமலர், யாழ் டொமினிக் ஜீவா, 1990,
d5. 69 - 72.
7l ཐ་མ་ཐ་ན་ཐས་མ་ ཐ་མ་ཐ་མ་མ་མ་བབས་
நாடகக்கலை - மணிபல்லவம், நயினாதீவு ஆண்டு மலர், 1990, பக். 29-31.
72. ..............
மண்ணுலகத்துநல்லோசை - வீதிநாடகம், வீரகேசரி 6.1.1991, ப. 3, மஞ்சரி, நிரை 1-4
73. ..........
கூத்தரங்கு புத்தாக்கம் பெற பேராசிரியர் ஆற்றிய பங்கு, வீரகேசரி 1990, ப.நிரை (பேராசிரியர் சு. வித்தியானந்தனின் நினைவு தினத்துக்கு முதல் நாள் வீரகேசரி)
74. .........
பேராசிரியர் வித்தியானந்தனுக்குப் பின் கூத்தரங்கின் போக்குகள் பகுதி 1 கலைமுகம், யாழ் திருமுறைக் கலாமன்றம், 1990 ப. 1991.
பேராசிரியர் வித்தியானந்தனுக்குப் பின் கூத்தரங்கின் போக்குகள் பகுதி 1 கலைமுகம், யாழ் திருமுறைக் கலாமன்றம், 1990 ப. 1991.

1992
1993
பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 47
76. ..........
மரண வீடு இரு விளக்கங்கள்- வீரகேசரி, 3.2.1991, ப. 2, மஞ்சரிநிரை 1 - 8.
77. sessesses.
விபுலாநந்த அடிகளாரின் சமூக, கலை, இலக்கிய நோக்கு - சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரை, 1 மட்ட சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை, 1991, 41.
78. ........
ஈழத்துத் தமிழர் கலைகள் - பணிபாடு, கொழும்பு இந்து சமய கலாசார
அலுவல்கள் திணைக்கம் 1991, (மார்ச்) பக். 20-30.
79. .............
நாடகம் - அரங்கியல், பழையதும் புதியதும் மட். விபுலம் வெளியீடு,
1992, 24, J. 149.
80.
தமிழரின் இரண்டாவது பக்தி இயக்கம் - சில குறிப்புகள்-பரணி மட். இந்துக் கல்லூரி ஆண்டு மலர், 1992, பக். 43 - 45.
81 seasonians.
இந்திய சினிமா உலகில் இரண்டு திரைப்படங்கள் - மலரும் வாழ்வு மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவளர்களின் வெளியீடு, 1992, ப. 20 - 26.
82. ...............
இலக்கியநாயகர்களும் அடிகளார்களும் -உள்ளக்கமலம், வவுனியா சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை, 1992, ப. 87-90.
83.
சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும் - மட். விபுலம் வெளியீடு, 1993.8 ப.
23.

Page 31
48
மெளனம்
84. --------......
ஐரோப்பிய நவீன நாடக அரங்கில் ஆரம்பகர்த்தா, பணிபாடு, கொழும்பு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 1993 (டிசம்) பக். 43-47.
85 seasons.
பாண்டிருப்பு திரெளபதை அம்மன் கோயில் பாரதச் சடங்கு ஒரு நாடக நிலை நோக்கு -தமிழ் சாஹித்திய விழா சிறப்பு மலர், கொழும்பு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 1993, ய்க. 76 - 84.
86. ...............
திமிலைத் துமிலன் சில மனப்பதிவுகள்-கலைச்செல்வி(திமிலைத் துமிலன் மணிவிழா சிறப்பு மலர்) மட். அரசினர் ஆசிரியர் கலாசாலை, 1993, பக். 12 - 20.
87 season...e.
ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு - யாழ். பல்கலைக்கழகம், 1993, 12, ப. 220.
88. ..........
எழுத்தாளர்களும் விமர்சகர்களும் சமகாலப் பிரச்சினைகளும் படி மட்/ றொட்டரிக் கழகம், 1993, (தை) பக். 4 - 8.
89.
சங்காரம், ஆற்றுகையும் தாக்கமும் - சென்னை சவுத் ஏசியன் புக்ஸ், 1993.
மட்டக்களப்பின் நாடக அரங்கம் - மட்டக்களப்பு பிரதேச சாகித்திய விழா நினைவு மலர், மட்டக்களப்பு பிரதேச சாகித்திய விழா அமைப்புக் குழு, 1993, i léi5. 59 - 62.
91.
மட்டக்களப்பின் அரங்கு - மட்டக்களப்புப் பண்பாட்டில் ஆய்வரங்கு மட் பிரதேச சாகித்திய விழா மலர், 1993, ப.

1994
பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 49
92. assessesses.
மட்டக்களப்பின் மகிடி நாடகம் - ஓர் அறிமுகம் - முத்தமிழ் விழா, 1993,ஈ மட். கலாசாரப் பேரவை, 1993, 01 - 044, ப.
93. essessessessee.
கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் நீலவாணன் வாழ்வும் இலக்கியப்பணியும் - சென்னை, சவுத் ஏசியனன் புக்ஸ், 1994, ப. 96.
94. ...do OOOO88
ஈழத்து தமிழ்நாடக உலகிற்குப் பேராசிரியரின் பங்களிப்பு-நிகழ்கலை மட். பிரமிளா (தை) - மார்ச்சு 1994, பக். 3 - 34
95. usinesses.
சிறுவர்களுக்கான நாடகங்களும் ஆசிரியர்களும் - சுவைத்தேன் திருகோணமலை - வடக்கு - கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள தமிழ்மொழித் தின விழாமலர், 1994, பக். 112 - 117
96. assessesses.
மெல்லிசைக்கு நம் நாட்டின் மூல பிதா - தினகரன், 24.07.1994, 5 நிரை 1 - 6, Li. 18560J 6 - 8.
97.
போராட்ட உணர்வை நாடகமே சரியாக வெளிக்காட்டுகிறது. சுபமங்களா, சென்னை கோமல் சுவாமிநாதன் 1994 (தை), பக்.58 - 64.
மட்டக்களப்பில் நாடக அரங்கு - தொண்டன் வெள்ளிவிழா சிறப்பிதழ் மட் தொண்டன் வெளியீடு 1994, பக். 37 - 80. 1993 (டிசம்பர்) 1994, (ஜன).
99. ...access.
சிறுவர் நாடகங்கள் - சிறுகுறிப்பு - மாஸ்ரர் சிவலிங்கம் மணிவிழா மட். மாஸ்ரர் சிவலிங்கம் மணிவிழாச் சபை.

Page 32
50
1995
1996
மெளனம்
Traditional Theatre of Tamils and Sinhalese in Sri Lanka - A Comparative Study. நெய்தல், இலங்கை கிழக்குப்பல்கலைக்கழக கலைப்பண்பாட்டுப்பீடத்தின் அரையாண்டுச் சஞ்சிகை, 1995, பக். 18-29,
10l. ...............
மட்டக்களப்பில் ஒரு மண்டபம்-தேவநாயக மண்டப கூட்டுறவு கலையரங்கம் திறப்பு விழா சிறப்பு மலர். மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபை.
102.
கலகக்காரன் கம்பன் - கம்பன் மலர் (அகில இலங்கை கம்பன் கழகம் 15ஆம் ஆண்டு நிறைவு மலர்) இலங்கை, அகில இலங்கை கம்பன் கழகம், 1995, Ljóäö. 183 - 191.
103. ...seers.
ஈழத்து நவீன தமிழ்நாடக மரபின் தோற்றம் - சிந்தனை - திருநெல்வேலி, இலங்கை பல்கலைக்கழக யாழ் வளாகம், 1984, பக்.53 - 71.
104. ...Ohio
ஈழத்துத் தமிழ் நாடகம் தோற்றம் வளர்ச்சி - தமிழர் மத்தியில் சங்கீதம் வீரகேசரி (ஞாயிறு 1994 அல்லது 1995)
105.
மட்டக்களப்பு மகிடிக் கூத்துக்கள், தமிழ் நாட்டர் வழக்காற்றியல், கொழும்பு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 1995, 1996, பக். 103 - 125.
நடிப்பு முறைமைகள் பற்றிய எணர்ணக் கருக்கள், சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரை, கிழக்குப் பல்கலைக்கழகம், 1996, 1 - 20.

1997
பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 51
107. .........008
மட்டக்களப்பில் மரபு வழி நாடகங்கள் நாட்டாரியல் தொடர் கருத்தரங்கு மட்டக்களப்பு வாசகர் மட்டம் 11.2.1996.
வைத்திய திலகம் டாக்டர் கே. விவேகானந்தன் MBFRCF பாராட்டு விழா மலர், பழைய மாணவர் சங்கம், சிவானந்த வித்தியாலயம், மட்டக்களப்பு 18.8.1996.
வித்தியஜோதி கந்தையா தியாகராஜா பொன்விழாமலர், 6.10.96, 1997
110. .........
கலை இலக்கியக் கட்டுரைகள. சென்னை, 1997, 127 பக்கங்கள்.
1ll. “
சக்தி பிறக்குது. கொழும்பு, 1997
112. assissan.'
மட்டக்களப்புக் கூத்துக்கலையை ஆவணப்படுத்தும் ஆரம்ப முயற்சி கூத்துக்கலை ஆவணத்தொகுப்பு வீடியோப் பேழைகளின் அறிமுக விழா சிறப்பு மலர் 19.197.
13. .......
தமிழ்ப் பெட்டகத்தை உவந்தளித்த தமிழ்ப் பேரறிஞர், விடிவானம், மட்டக்களப்பு 18.3.1997
114 ει.
ஈழத்து அரங்க வடிவங்களும் அவைக்காற்றப்படும் முறைகளும் (ஆய்வுக்கட்டுரை) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் சென்னைப் பல்கலைக்கழக மொழித்துறையும் இணைந்து நடத்திய கருத்தரங்கு 3,4,5, 1. 1997

Page 33
52
1998
1999
மெளனம்
115.
கைலாசபதிநினைவுகள்,தினகரன், கொழும்பு 8.12.1997
l6. ...........
விடுதலைக்கான கல்வி,கலைச்செல்வி ஆசிரிய கலாசாலை மட்டக்களப்பு 1997, 1998.
17. .........
இராவணேசன், சென்னை 1998.
118.
மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள், சென்னை 1998.
119. ...........
எதிரிவீர சரத் சந்திராவும் தமிழ் நாடக மரபும், கொழும்பு 1998
120. ...........
மரபும் மாற்றமும் அரங்கியல் உத்திகளின் வளர்ச்சி குறித்த பயில் நிலை நோக்கு (ஆய்வுக் கட்டுரை) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும்
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையும் இணைந்து நடத்திய கருத்தரங்கு 6.4.1998
12.
தமிழ் இலக்கியத்தில் இஸ்லாத்தின் தாக்கம் (ஆய்வுக் கட்டுரை) வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த கருத்தரங்கு
அட்டாளைச்சேனை 14.11.1999.
122.
மட்டக்களப்புக் கலைகளை ஆராயும் முயற்சி, கலைச்செல்வி, மட்டக்களப்பு 1999.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 53
வரலாற்றியலும் மட்டக்களப்பு வரலாறும் (சிறப்பு ஆய்வுரை) கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வர சிறப்பு மலர் வெளியீடு 14.2.1999
கலையும் பண்பாடும், நினைவில் மலரும் நினைவு விழாச் சிறப்பு மலர்
1999.
126.
கைலாசபதிநினைவுகள், கைலாசபதிநினைவுக் கருத்தரங்கு, கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒழுங்கு 5.4.99.
பல்கலைக்கழகத்தையும் சமூகத்தையும் இணைக்கும் நாடகவிழா, தினக்குரல், கொழும்பு 22.3.99.
அரங்கு ஓர் அறிமுகம், கொழும்பு 1999
13 sessesses.
புலவர்மணி ஒரு முற்போக்கு பண்டிதமணி, புலவர்மணி நூற்றாணர்டு விழாமலர், மட்டக்களப்பு 1999, பக். 19-22.
வரலாற்றியல் ஓர் அறிமுகம், கிழக்கொளி, மட்டக்களப்பு 1999, பக். 3 - 10.

Page 34
54
2000
2001
மெளனம்
13ஆம் நூற்றாண்டிற்கும் 18ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட தமிழகத்தில் இந்து நாடக மரபு, இந்து கலாசார திணைக்களம் ஒழுங்கு, கொழும்பு 12.8.2000.
134. .........
ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று உருவாக்கத்திற்கு மட்டக்களப்பின் சாதி, இன வரலாறு கூறும் நூல்களின் எதிர் வினைகள், மட்டக்களப்பு நாட்டார் வழக்கியல் கருத்தரங்கு, கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒழுங்கு 23, 24; 1999.
135. ...........
நீண்ட பயணத்தை நம் சூழலில் இருந்து ஆரம்பிப்போம். வித்தியா, மட்டக்களப்பு 2000, பக். 37 - 40.
சங்கீதமும் அதன் பயன்பாடும்,நானிலப் பிரதேச செயலக கலாசார பேரவை வெளியீடு மட்டக்களப்பு 2000,பக். 11 - 14.
அறுபதாண்டுநிறைவெய்தும். சில அவதானிப்புக்கள், அன்பு, கல்முனை 2000, Ludö. 36 - 38.
விழிப்புணர்விற்கான விமர்சனக் கல்விபகீரதம், கல்முனை 2001,பக். 10-12.
140. ...............
ஈழத்துத் தமிழ் அரங்கின் சமகாலச் செல்நெறிகள், காலச்சுவடு நடத்திய கருத்தரங்கு, சென்னை 2001,

2002
2003
பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 55
141.
பின் அமைப்பியல் பின்நவீனத்துவ நோக்கில் கூத்தைப் புரிந்து கொள்ளல், கலைப்பீட ஆய்வு அரங்கு 2001.
வனவாசத்தின் பின் (நாடகம்), சென்னை, 2002.
145.
முன்னுரை, எறிகணை, கல்முனை 2002.
146.
மட்டக்களப்புத் தமிழகமும் இந்துப் பணிபாடும். பதிப்பாசிரியர், கொழும்பு
2003.
47.
சங்ககாலச் சமூகமும் இலக்கியமும் - ஒரு மீள்பார்வை, கொழும்பு, 2003.
"இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய்விடும்" கந்தன் கருனை, கொழும்பு 2003.

Page 35

அகம் கலந்த

Page 36

கலைவாழ்வில் நிலைத்து நிற்கும் மனிதர்
இ. மோனகுருசாமி அரசாங்க அதிபர், மாவட்டச் செயலாளர், மட்டக்களப்பு.
ஈழத்துப் பாடல்கள் என்றதும் வானொலியை நிறுத்தும் வழமை போல் ஈழத்துக் கலைஞர்கள் என்றால் பலர் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள். இந்நிலை மட்டுநகர் கலைஞர் மெளனகுருவுக்கும் ஒரு எதிர்நீச்சல் சோதனை தான். போலிப் பொருட்களை விற்கும் சந்தையில் உண்மைப் பொருட்களை விற்பது எப்படி? மட்டுநகர் மண்ணின் மைந்தன் மெளனகுருவையும் நான் அந்தப்பட்டியலிலே அடக்கி விட்டேன். 1975ம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு பொருளியலும் தமிழும் கற்பிக்க வேண்டும் என்னும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது பாடவிதான சபை ஆலோசகராக இருந்த பேராசிரியர் மெளனகுருவின் ஆலோசனை வழிகாட்டலைக் கற்கும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. படிப்பது, முடிப்பது, மடித்து வைப்பது. இதுவே வழக்கம். ஆனால் இன்னும் இருக்காதா என துடிக்கும் நிலை எனக் கேற்பட்டது. அதனால் அவர் படைப்புக்களை ஆர்வத்துடன் தொடந்து படித்தேன்.
சீலாமுனையில் மலர்ந்த சிட்டுக்குருவி. செந்தமிழ் நாடெங்கும் சிறகடித்துப் பறந்தது கண்டு பெருமையடைந்தேன். அவரது அண்மைக் கால நூல்கள் பலவற்றை அவர் எனக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். எனது அஞ்ஞாதவாச காலத்தில் அவற்றைப் படித்தேன். அவற்றில் அறுபது வயதை என்னால் காண முடியவில்லை. 20 வயது இளம் உள்ளத்தையே காண முடிந்தது.
ஆயிரம் சிறந்த கலைஞர்களை எடுத்து பேராசிரியர் மெளனகுருவை அதனுள் அடக்கி மதிப்பீடு செய்தால் சகோதரன் மெளனகுரு தான் முன் நிற்பார் என்பதை கூறுவதில் தவறு இல்லை எனக் கருதுகிறேன். கலை கலைக்காகவா? அல்லது கலை, வாழ்வை வளம்படுத்தவா? என்னும் இரு கேள்விகளுக்குமே பேராசிரியர் மெளனகுருவின் படைப்புக்கள் உரிய பதில்களாகும். அவர் கலைவாழ்வு, நிலைத்து நிற்கிறது. அவர் நிஜ வாழ்வும் நீடித்து நிலைக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

Page 37
மெளனகுரு - ஒரு தனித்துவமான பேராசிரியர்
பேராசிரியர் மா.செ. மூக்கையா துணைவேந்தர், கிழக்குப் பல்கலைக்கழகம்.
பேராசிரியர் சி. மெளனகுருவிற்கு இவ்வாண்டு மணி விழா ஆண்டு என்பது கிழக்குப்பல்கலைக்கழகம் சார்ந்த எனக்கு மகிழ்ச்சியளிக்கும்ஒரு செய்தியாகும். இவ்வாண்டுக்கான நிகழ்வுகளுள் அது முக்கியமானதொன்றாகவுள்ளது. ஏற்கனவே பேராசிரியர் மெளனகுரு பற்றி அன்னாரது நாடகங்கள், கருத்தரங்கு உரைகள் ஊடாக நான் ஒரளவு அறிந்திருப்பினும் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு வந்த பின்னரே அன்னார் பற்றி அதிகமறிய முடிந்துள்ளது. அவ்விதத்தில் கிழக்குப் பல்கலைக்கழகப் புலமையாளர்களுள் அவர் தனித்துவமுடையவராக இருப்பதையும், அவரது அத்தனித்துவம் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்குப் பயனுடையதாகவிருப்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது அவசியமானது என நம்புகின்றேன்.
அதாவது தனது நாடகத்துறை சார்ந்த புலமையோடு தொடர்புபட்ட தனது ஆற்றல்களையும், ஆளுமைகளையும் அவர் விரிவுரை மண்டபத்துடன் மட்டும் முடக்கிவிடுபவரல்ல. அதற்கப்பால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புகழிற்கு - சிறப்பிற்கு உயர்விற்கு மாத்திரமன்றி, தொடர்ந்த இருப்பிற்கும் அவற்றைப் பயன்படுத்தி வருகின்றார் என்பதே ஒப்பீட்டு ரீதியில் அன்னாரிடம் நான் கண்ட தனித்துவமாகின்றது.
ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன்.
இலங்கையின் பல்கலைக்கழகங்கள் பல உள்ளன. ஆயினும் கிழக்குப் பல்கலைக்கழகம் மட்டுமே. "உலக நாடக தின விழாவினை கடந்த 5 வருடங்களாக வருடந்தோறும் இரண்டு, மூன்று தினங்களுக்கு திறம்பட நடாத்தி வருகின்றது. அவ்விழாவிலே மட்டக்களப்பு பிரதேசப் பாரம்பரியக் கூத்துக்கள் பல அரங்கேறுகின்றன தொலைதூரக் கிராமியக் கலைஞர்கள் பலர் பல்கலைக் கழகப் படி ஏறுகின்றனர் பாடசாலைகள் பல தமது நாடகங்களை இங்கு வந்து அரங்கேற்றுகின்றன! இலைமறைகாயாகவுள்ள கலைஞர் பலரது புகழ்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் Ծ 1
உலகிற்குத் தெரியவருகின்றது. ஆக, உயர்கல்விநிறுவனம் ஒன்றிலே இத்தியாதி விடயங்கள் இலகுவாக இடம் பெற்று வருகின்றன என்பது சாதாரண காரியமல்ல. இவற்றினால் மட்டக்களப்பு பிரதேசச் சமூகம் தன்னை மேம்படுத்திக் கொள்கின்றது. கிழக்குப் பல்கலைக்கழகமும் தனது வளங்களை பிரதேச சமூகங்களுடன் பகிர்ந்து தனது "இருப்பின்" முக்கியத்துவத்தினை இவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கின்றது.
ஆக, வருடந்தோறும் இத்தகைய விழாவினை அதுவும் பற்றாக்குறையாக கிடைக்கும் வளங்களுடன் திட்டமிட்டு திறம்பட நடாத்தி வருவதென்பது பேராசிரியர் மெளனகுருவினால் மட்டுமே இயலக்கூடியது என்பதிலே சந்தேகமில்லை. பல்கலைக்கழகத்தின் உள்ளே இவ்வாறு நிகழ்கின்ற - நிகழ்த்துகின்ற செயற்பாடுகளிளால் மட்டுமன்றி வெளியே நிகழ்கின்ற பலவற்றினுடாகக் கூட பேராசிரியர் மெளனகுருவினுடாக கிழக்குப் பல்கலைக்கழகப் புகழ் ஓங்கி வருகின்றதென்பதையும் இங்கு கூறியாக வேண்டும்.
ஒரு உதாரணம் மட்டும் குறிப்பிடுகின்றேன். உலக இந்து மாநாட்டின் ஒரம்சமாக மட்டக்களப்பு பிரதேச இந்து மாநாடு அண்மையில் மிகச்சிறப்பாக இங்கு நடைபெற்று முடிந்தது. அம் மாநாட்டின் கண்காட்சி நிகழ்வுகளும் கருத்தரங்கு அமர்வுகளும், நூல் வெளியீட்டு முயற்சியும், பிற பிரதேச நண்பர்களால் கூட பாராட்டப்பட்டமையை நானறிவேன். பேராசிரியர் மெளனகுருவே இந்நிகழ்வுகளின் சூத்திரதாரியாக விளங்கியவர் என்பதே எமது கவனத்திற்குரியதாகின்றது.
பேராசிரியர் மெளனகுருவின் இத்தகைய ஆற்றலும் ஆளுமையும் மேன்மேலும் வளரட்டும் என வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன்.
கிழக்குப் பல்கலைக்கழகமும் தமிழ்ச் சமூகமும் இவரால் நீண்டகாலம் பயன்பெற்று வளர வேண்டும்.

Page 38
பேராசிரியர் சி. மெளனகுருவின் இளமைக் கல்லூரி வாழ்க்கையும் நாட்டப் பணிபுகளும்
ஆ. சுந்தரலிங்கம் ஓய்வுபெற்ற ஆசிரியர், முன்னாள் ஆரிய கலாசாலை விரிவுரையாளர்.
பேராசிரியர் மெளனகுரு அவர்கள் தனது இளமைக் கல்லூரி வாழ்க்கையை வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பித்தார். ஐந்தாமாண்டு புலமைப் பரிசுபெற்று 1954 ஆம் ஆண்டு இக்கல்லூரியில் ஆறாம் ஆண்டு மாணவனாக அடி எடுத்து வைத்தார். அக்கால கட்டத்தில் அக் கல்லூரி அதிபராக இருந்தவர். புலமைப் பரிசு பெற்று அனுமதிக்கப்பட்ட 35 மாணவர்களை என்னிடம் ஒப்படைத்துக் கூறிய வார்த்தைகள் இன்றும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இவர்கள் அனைவரும் எங்கள் பொக்கிஷங்கள் இவர்களை வழிநடத்தி முன்னேற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு. இவர்கள் வகுப்பாசிரியர் நீங்களே. தொடர்ந்தும் வகுப்பாசிரியராகவிருந்து அவர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவது உங்கள் பணியாகும்."
12 வயது நிரம்பிய சிறுவன் மெளனகுருவின் வகுப்பு நண்பர்கள் திருகோணமலை, நிலாவெளி, மூதூர், தம்பலகாமம், களுதாவளை, மட்டக்களப்பு போன்ற ஊர்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கூடிய விவேக ஈவையுடையவர்கள். கற்பித்தால் உடனே கிரகிக்கும் ஆற்றல் படைத்தவர்கள். சிறுவன் மெளனகுரு பெயருக்கேற்ப மெளனம் சாதிப்பது மிகக் குறைவு எப்போதும் கலகலப்பாக நண்பர்களுடன் பேசிப் பழகுவார். முகத்தில் எப்போதும் மலர்ச்சியும் சிரிப்பும் தாண்டவமாடும். வாதாடும் இயல்பு பேச்சு வன்மை தன் கருத்தையே முன்வைத்து வெற்றிகாணல் போன்ற இயல்புகள் இவரிடம்நிறையக் காணப்பட்டன. மாணவர்களுக்கு அறிவு விருத்தித் திறன்கள் மனப்பாங்கு விருத்தி ஆகியவை சிறந்த முறையில் வழங்கப்பட வேண்டும் என்பது கல்லூரியின் பிரதான

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 63
நோக்கமாகும். இவ் விலக்கினை நடைமுறைப்படுத்தற் பொருட்டு சிறந்த பொது நூலகம், வகுப்பு நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. அறிவுப் பசி நிறைந்த இளைஞன் மெளனகுரு மிகவும் சிறப்பாக நூல் நிலையங்களை பயன்படுத்தினார். கிடைக்கும் நேரமெல்லாம் தமிழ் அறிஞர்களின் படைப்புக்களை விரும்பிக் கற்றார். மற்ற மாணவர்களை விட இவரிடத்தில் தமிழ் ஆர்வம் நிறைந்து காணப்பட்டது. இவரிடத்தில் காணப்பட்ட இன்னுமொரு திறன் பேச்சுத்திறன். இலக்கிய மன்றங்களில் கருத்துரை வழங்கும் வேளைகளிலும் சரி பேச்சுப் போட்டிகளிலும் சரி மிகவும் சிறப்பாகப் பேசி முதன்மை இடத்தைப் பெறுவார். எழுத்துத் துறையிலும் இவரின் ஆக்கங்கள் பெரிதும் பாராட்டப்பட்டன. தேனருவி என்ற கையேட்டுப்பிரதி வகுப்பு மாணவர்களினால் மாதம் தோறும் பிரசுரிக்கப்படும். அதன் பதிப்பு ஆசிரியராக செயற்பட்டு எல்லோருடைய பாராட்டையும் பெற்றார். நாடகங்கள் எழுதுதல், கவிதைகள் ஆக்கம் போன்றனவற்றிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். இவற்றுக்கெல்லாம் உறுதுணை செய்தது அவருடைய ஆழ்ந்த கற்பனாசக்தி வளமேயாகும். எளிமையான வாழ்க்கையும் உயரிய சிந்தனையும் இவர் புகழோடு தோன்றுதற்கு வழிவகுத்தன.
இளைஞன் மெளனகுரு தனது வயது 16 வரை என் அன்பிற்கும் மதிப்பிற்கு முரிய மாணவனாக என் வகுப்புக்களில் இருந்து செயற்பட்டார். நிறைவான வாசிப்புப் பழக்கத்தை ஆக்கிக் கொண்டதனால் பூரண அறிவாற்றலைப் பெற்றுத் துலங்கினார். நுண்ணறிவுடன் நூல்களோடு, பழகியது மட்டுமல்லாது எல்லா ஆசிரியர்களின் அறிவுரைகளையும் செவிமடுத்ததன் பயனாய் ஆளுமை விருத்தி, தலைமைத்துவப் பண்புகள் இவரிடத்தில் காணக்கூடியதாகவிருந்தது. இவரின் எண்ணம், சொல், செயல் ஆகியவை மூன்றிலும் ஒருமைப்பாடு காணப்பட்டது. உள்ளத்தில் உண்மை ஒளி பிரகாசிக்கத் தொடங்கியது. அதனால் அவருடைய மூச்சிலும் பேச்சிலும் உண்மை ஒளியின் பிரதிபலிப்புக் காணக்கூடியதாக விருந்தது. அவருடைய முகத்தில் முழுமை மலர்ச்சி பிரகாசம் ஆகியவை தோன்ற ஆரம்பித்தது. அவருடைய உள்ளத்தின் நிறைவையும் பக்குவநிலைப்பாட்டையும் வெளிக்காட்டுவனவாக இவை அமைந்தன.
வகுப்பாசிரியர் மட்டுமல்லாது விடுதிப் பொறுப்பாசிரியராகவும் கடமை பார்க்க நேர்ந்ததனால் இளைஞன் மெளனகுருவை பல்வேறு கோணங்களிலும், சந்தர்ப்பங்களிலும் அவருடைய மன எழுச்சி நாட்டங்கள் ஆகியவற்றை அவதானிக்க முடிந்தது. இளைஞன் மெளனகுருவின் தகப்பனார் திரு. சின்னையா அடிக்கடி மகனைப் பார்ப்பதற்கு வருவார். "மகன் நன்றாகப் படிக்கின்றானா" என்று கேட்பதுண்டு. ஒரு சந்தர்ப்பத்தில் அன்னாருக்குக் கூறிய பதில் இன்றும் என் ஞாபகத்திலுண்டு. "உங்கள் மகன் மிகுந்த திறமைசாலி. எதிர்காலத்தில் ஒரு மேதையாக வருவார். எம்து சொந்த பிரதேசத்திற்கும், எமது மணித்திரு நாடாம் இலங்கைக்கும் பெருமை தேடித் தருவார். அவரின் சிறப்பைக் காண்பதற்கு இறைவன் நிறைந்த ஆயுளைத் தர வேண்டும்."எனக் கூறினேன். நீங்கள் உங்கள்

Page 39
(64 மெளனம்
மகனுக்குச் சிறந்த கல்வி கிடைக்கும் வாயப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள்" எனக் கூறி முடித்தேன். "விளையும் பயிரை முளையில் தெரியும் என்பார்களே." அதற்கு ஏற்றாற் போல் பேராசிரியர் மெளனகுருவின் எதிர்கால நிலைப்பாட்டை நன்கறிந்து அவரின் தந்தையாருக்கு ஏறத்தாள 50 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய விடயம் இன்று நனவாகி பூரணத்துவம் பெற்றுள்ளதை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன்.
இளைஞன் மெளனகுரு ஒர் சிறந்த நாடகாசிரியராகவும் தோற்றம் காட்டினார். குறுகிய நேரத்தில் சிறந்த நாடகங்களை எழுதுவார். நடிக்கும் ஆற்றல், இயக்கும் ஆற்றல் ஆகியவைகளும் நிறைந்தவராக விளங்கினார். இல்லங்களுக்கிடையே ஏற்படும் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப் போட்டி,நாடகப் போட்டி ஆகியவை அனைத்திலும் இளம் சிங்கம் மெளனகுருவே முதல் இடத்தைப் பெற்றுத் தனது இல்லத்திற்குப் பெருமை தேடிக்கொடுப்பார். ஒர்முறை கல்குடாத் தொகுதியின் பாராளுமன்ற பிரதிநிதியாகவிருந்த ஜனாப் மாக்கான் மரைக்கார் அவர்கள் பரிசளிப்பு விழாவினுக்கு வந்தவேளை செல்வன் மெளனகுருவின் தயாரிப்பு, இயக்கத்தில் மேடையேற்றிய நாடகம் "எல்லாளன் தோற்றானா?” இடம்பெற்றது. அந்நாடகத்தில் எல்லாளனாக பங்கேற்று நடித்த மெளனகுருவின் நடிப்பாற்றலை வெகுவாகப் பாராட்டி, ஓர் பணப்பரிசு ஒன்றினையும் அளித்துக் கெளரவித்தார். இளமைதொட்டை தமிழ்க் கலை ஆர்வம் மிக்கவராகவே காணப்பட்டார். இவர் வாயிலிருந்து ஊற்றெடுக்கும் தமிழ்ச் சொற்கள், கருத்துக்கள் கேட்போரை நன்கு கவரும் தன்மையுடையன. இளமை தொட்டே ஓர் நடமாடும் கலைப் பொக்கிஷமாகத் திகழ்ந்தார்.
வகுப்பிலே மற்ற மாணவர்களை விட கூடுதலான கேள்விகளை எழுப்புபவர் இளம் மெளனகுரு அவர்களே. அவ்வாறு எழுப்பப்படும் கேள்விகளுக்கெல்லாம் விடைகள் கூறி அவருடைய ஐயங்களைத் தீர்த்து விடும் வல்லமையை யான் பெற்றிருந்ததில பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். தமிழ்ப்பாடம் கற்பித்த ஆசிரியரிடம் பலகேள்விகளை எழுப்பித்திணறவைப்பார். அவ்வாசிரியர் என்னிடம் "மெளனகுரு பாடம் படிப்பிக்க விடுகின்றாரில்லை" என்று கூறுவார். மெளனகுருவைச் சாந்தப்படுத்தி பாடம் முடிவில் கேள்விகள் கேட்கும்படி பணித்தால் உடனே அதன்படி கேட்டு ஒழுகுவார். இப்படியாக ஆசிரியர்களை கேள்வி கேட்டுத் திணறவைப்பதில் அவருக்கு ஓர் குறும்பும் ஓர் ஆசையுமாகும். பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் சு. வித்தியா னந்தன் அவர்கள் தங்களுடைய கலைவிழா ஒன்றினுக்கு ஓர் நாட்டுக் கூத்து நிகழ்ச்சியும் இடம்பெற வேண்டும் என்று விரும்பி எங்கள் அதிபர் P சவரிமுத்து அவர்களிடம் அதற்கான ஒழுங்கினைச் செய்துதரும்படி கேட்டிருந்தார். அதன்படி நாட்டுக் கூத்து ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு அதற்கான பயிற்சியும் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. நாட்டுக்கூத்து அருச்சுனன் தவநிலைச் . சருக்கத்தை மையமாகக் கொண்டது. நடிப்புத்துறை விற்பன்னர் மெளனகுரு

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 65
அவர்கள் பிரதான பங்கேற்று கூத்துப் பயிற்சியும் வழங்கப்பட்டது. வந்தாறு மூலையைச் சேர்ந்த ஒருவர்தான் அண்ணாவியார். கூத்துக் குழுவினரை பேராதனைப் பல்கலைக்கழகத்தினுக்கு கூட்டிச் செல்லும் பொறுப்பு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு தங்கும் வசதிகளெல்லாம் செய்திருந்தார் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள். இயற்கைச் சூழலில் அமைந்திருந்த பல்கலைக்கழக கட்டிடத் தொகுதியைக் கண்ட செல்வன் மெளனகுரு "சேர், இப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைக்குமா?"நிட்சயமாகக் கிடைக்கும் அதிலென்ன சந்தேகம், உங்களைப் போன்றவர்கள் படித்துப் பட்டங்கள் பல பெறுவார்கள்."என்று பதிலளித்தேன். செல்வனின் பிஞ்சு உள்ளம் கேட்டது இன்று நனவாகிநாற்திசையும் புகழ்பரப்பிநன்மேதையாக விளங்குவதை எமதுகால எல்லைக்குள் கண்டுகளிப்படையக் கூடியதாயிற்றே. அன்று சிவவேடன் வேடம் தாங்கி கூத்தாடினார் மெளனகுரு. மேடை அதிர்ந்தது. தாள இசைக்கேற்ப அவர் ஆடிய ஆட்டம் எல்லோர் உள்ளங்களையும் உவகையில் திளைக்க வைத்ததன் பயனாய் கரகோஷம் "வாழ்க தமிழ்கலை வாழ்க தமிழ்க்கலை." கூத்தின் முறையினால் ஆடிக் காட்டிய இளம் கலைச் செல்வத்தை எல்லோரும் ஓடோடி வந்து கட்டித் தழுவி பாராட்டைத் தெரிவித்தனர். எனக்கும் வாழ்த்துக்கள் கிடைத்தன. பேராசான் கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் ஆகியோர் என்னையும் நெஞ்சாரத் தழுவி பாராட்டையும் நன்மதிப்பையும் தெரிவித்தார். பேராசிரியர் மெளனகுரு அவர்கள் பேராதனையில் அன்று கூத்தாடிப் பெற்ற பாராட்டே அவரின் பிற்கால வாழ்க்கையில் ஓர் திருப்பத்தை ஏற்படுத்தி கவின் கலைத் துறையில் நிபுணத்துவம் அடைவதற்கு வழிசெய்தது எனலாம். உண்மை, நன்னடத்தை, அமைதி, அன்பு, அகிம்சை ஆகிய தலைமைத்துவப் பண்புகளில் வாழ்ந்து காட்டி எல்லோருக்கும் உதவும் ஒர் பல்கலைக்கழகாக விளங்குவதை காணும்போது அவருக்கு ஓர் காலத்தில் ஆசானாக இருந்தேனே என்ற மனநிறைவைப் பெறுகின்றேன். தனது அளப்பரிய பேராசிரிய சேவையை எமது சமூகத்தினுக்குத் தொடர்ந்து செய்தற்கு வேண்டிய தேகாரோக்கியத்தையும் உடல் வலுவையும் இறைவன் வழங்கப் பிரார்த்திக்கின்றேன்.

Page 40
விதியையும் வெல்ல வல்ல முயற்சியாளன்
பேராசிரியர் அ. சண்முகதாஸ் முதுநிலைப் பேராசிரியர், தலைவர், தமிழ்த்துறை யாழ்ப்Uாணப் பல்கலைக்கழகம்,
1955ஆம் ஆண்டு மட்டக்களப்பு வந்தாறுமூலை அரசினர் மத்திய கல்லூரியில் ஒன்பதாம் தரத்திலே படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த ஆண்டு ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பெற்றவர்களாக எங்கள் கல்லூரிக்கு வந்தவர்களுள் மெளனகுருவும் ஒருவர். குழந்தை முகம். ஆனால் படிப்பென்று தொடங்கினால் என்னைப் போல அவரும் நித்திரை துரங்கத் தொடங்கிவிடுவார். பின்னர்.
1959ம் ஆண்டு பேராதனையில் அமைந்த இலங்கைப் பல்கலைக் கழகத்தின் திறந்தவெளி அரங்கிலே "அருச்சுனன் தபசு" வடமோடிக் கூத்திலே சிவவேடனாக மெளனகுரு ஆடிய காட்சி கண்டு பரவசப்பட்டேன். பின்னர்.
1961ம் ஆண்டு மெளனகுருவும் என்னுடைய துணைவியார் மனோன்மணியும் மாணவர்களாக இலங்கைப் பல்கலைக் கழகத்துக்கு வந்தனர். இருவரும் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்றனர். என்னுடைய மாணவர்களுமாயினர்.
பல்கலைக்கழகத்துக்கு வருவதற்கு முன்னரே மெளனகுரு அறியப்பட்ட ஒருவராகிவிட்டார். கூத்து அவரைப் பலருக்கும் அறிமுகப்படுத்தியது. மட்டக்களப்பு அமிர்தகழியில் கா.சி.ஆனந்தன் போன்ற இளைஞர்களுடன் மெளனகுருவும் தங்கள் கைகளைக் கீறி இரத்தம் எடுத்துத் தமிழுக்காகத் திலகமிட்டவர்கள். இவர்களுடைய படங்களெல்லாம் அன்றைய பத்திரிகைகளிலே வெளிவந்தன. பல்கலைக்கழகத்திலே மாணவனாக மெளனகுரு வந்து சேர்ந்தவுடனே பேராசிரியர் வித்தியானந்தன் பல்கலைக்கழக மாணவரைக் கொண்டு ஒரு வடமோடிக் கூத்தினை மேடையேற்ற விரும்பினார். மெளனகுரு "கர்ணன் போர்" கூத்துப் பிரதிகளையும் வில்லிபாரதத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு கூத்து நாடகப் பிரதியை உருவாக்கினார். அவர் அக்கூத்திலே 'ioணனாக நடித்து ஆடினார். நான் கண்ணனாக வேடமிட்டேன். மெளனகுருவைப்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 67
போல் நளினமாகவும், அழகாகவும், பாத்திரத்தினுடைய குணநலனுக்கேற்றதாகவும், தாளத்துக்கு இம்மியும் பிசகாமல் ஆடுபவர் எவரையும் நான் காணவில்லை. மேடையிலே இருவரும் தோன்றிய சந்தர்ப்பத்திலே அவருடைய கம்பீரமான கலைமலிந்த ஆட்டத்தைக் கண்டு நான் என்தொழில் மறந்ததுண்டு. பல்கலைக்கழகத்திலே பேராசிரியர் வித்தியானந்தனுக்கு உதவியாக "கர்ணன் போர்", "நொண்டிநாடகம்", "இராவணேசன்", "வாலிவதை" என்றும்நாடகங்களின் பிரதிகளைத் தயாரித்ததுடன் முதல் மூன்று கூத்துக்களிலும் முதன்மைப் பாத்திரமேற்று ஆடியவர். கவித்துவம் இயல்பாக உள்ளதால், மெளனகுருவின் கூத்துப் பிரதிகள் மிகச் சிறப்பாக அமைந்தன.
மெளனகுரு பட்டதாரியாகிய பின்னர் "சங்காரம்" என்றொரு கூத்தினைத் தயாரித்து மேடையேற்றினார். இது ஈழத்துத் தமிழ்க்கூத்து வரலாற்றிலே ஒரு புதிய போக்கினை உருவாக்கியது. வழக்கமாக இதிகாச புராணக் கதைகளையே கூத்துக் கதைகளாகக் கொள்வர். ஆனால் மெளனகுரு இயல்பான சமூகத்திலே தலைதுாக்கக் கூடிய சாதி, வர்க்கம் போன்ற சிக்கல்களுக்கு உருவம் கொடுத்து வடமோடி தென்மோடிக்குரிய பாடல், ஆடல், அரங்கு முதலியனவற்றைப் பயன்படுத்திப் புதிய பாணியிலே கூத்தினை அரங்கேற்றினார்.
கலையிலே பரிசோதனைகள் செய்ய வேண்டுமென்பது மெளனகுருவின் விருப்பமான எண்ணமாகும். ஒருதடவை, கார்த்திகா கணேசர், பணிபரத் ஆகியோருடன் இணைந்து கூத்து ஆடல், பரதநாட்டியம், கண்டிய நடனம் ஆகியனவற்றை இணைத்து ஒரு நிகழ்ச்சி மெளனகுருவாலே அளிக்கை செய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்திலே மெளனகுரு கற்றல்/கற்பித்தல் செயற்பாட்டிலே ஈடுபட்ட காலத்தில் தார்சீசியஸ், ஜெனம் போன்ற கலைஞர்களுக்கு வடமோடிக் கூத்தின் ஆட்டங்களைப் பழக்கினார். யாழ்ப்பாணத்திலே மேடையேறிய பல நாடகங்களிலே தேவைக்கேற்றதாகவும் பொருத்தமாகவும் வடமோடிக் கூத்து ஆடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மெளனகுரு இதற்குக் காரணமாக இருந்தார்.
மெளனகுரு காமஞ் செப்பாது கண்டதுமொழியும் தன்மையுடையவர். கூத்திலே வில்லிலே அம்பு பூட்டிவிடும் அதே பாணியிலே நூல் விமர்சனங்களையும் செய்வார். தப்பாது சில வேளைகளிலே தைக்கும். பல நூல் விமரிசனக் கூட்டங்களிலே நான் இதனை அவதானித்திருக்கிறேன். இவ் விமரிசனக் கணைகளைத் தாங்க முடியாதவர்கள் இவரைச் சில நூல் விமரிசனக் கூட்டங்களுக்குத் தவிர்ப்பது உண்டு.
யாழ்ப்பாணத்திலே நீண்ட காலம் பணிபுரிந்த மெளனகுருவும், அவரது துணைவியார் சித்திரலேகாவும் கிழக்குப் பல்கலைக்கழகம் தொடங்கியபொழுது தங்கள் பிரதேசத்துக்குப்பணிபுரியக்கூடிய வாய்ப்பினை எண்ணி அங்கு சென்றனர். கலை, இலக்கியப் பண்பாடு தொடர்பாக மெளனகுரு திட்டமிட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். தனக்குத் தெரிந்த வித்தைகளெல்லாவற்றையும் இளைய

Page 41
48 மெளனம்
தலைமுறையினர்க்குக் கையளித்து வருகின்றார். பண்பாட்டு நடைமுறைகள் எச்சங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்துவதிலே அயராது பணிபுரிகின்றார். அதேவேளையில் கையில் இருக்கும் கலை முது சத்தை நவீன உலக நடைமுறைகளுக்கு ஏற்ப எப்படி அளிக்கை செய்யலாம் என்பது தொடர்பாக இளைய சமூகத்தினர்க்கு வழிகாட்டியாக இருக்கின்றார். கிழக்குப் பல்கலைக் கழகம் இவருடைய கலைத் தொண்டாலே பெருமையுறும். கிழக்கிலங்கை மக்கள் இவருக்கு நன்றியுடையவர்களாயிருப்பர்.
தன்னுடைய அயராத உழைப்பினாலேயே முதுகலைமாணிப்பட்டம், கலாநிதிப்பட்டம் ஆகியனவற்றைப் பெற்ற மெளனகுரு பேராசிரியராக இன்று பணியாற்றுகிறார். அவரைக் காலம் பலதடவை வஞ்சித்துள்ளது. துன்பத்தையும் துயரத்தையும் அமைதியாகத் தாங்கிக் கொள்ளும் மெளனகுருவின் மனத்துக்குள்ளே7 ஓர் அசுரத்தனமான முயற்சியாற்றல் உண்டு மீண்டும் தெ7டங்கும் மிடுக்கு என அது பணியாற்றும் விதியையும் வெல்லவல்ல முயற்சி அது மெளனகுருவின் உயர்ச்சிக்கு அதுதான் காரணம்.
அறுபதாவது அகவையை எட்டிப்பிடித்துள்ள பேராசிரியர் மெளனகுருவின் ஒருசுற்று வாழ்வு இனிதாகச் சுழன்று விட்டது. அடுத்த சுற்றிலே மேலும் பல விந்தைகள் புரிய வேண்டும். உடல்நலம், உளநலம், பொருள் நலம் எல்லாம் பெற்று வாழ உயர்ந்த அந்த சக்தி உதவும் என்பதில் ஐயம் இல்லை.

மெளனகுருவுக்கு மணிவிழாவா?
இலக்கிய கலாநிதி குழந்தை. ம. சண்முகலிங்கம்
ஸ்தாபகர்,நாடக அரங்கக் கல்லூரி, யாழ்ப்பாணம்,
வயது யாரைத்தான் விட்டது! அது காலத்தோடு சேர்த்து எம்மை வளர்க்கிறது; காலத்தோடு சேர்த்து எம்மைக் கரைக்கவும் செய்கிறது; காலத்துக்குக் காலம் எமக்குப் பெயர் மாற்றங்களும் செய்கிறது-பதினெட்டு வரை சிறுவர், அறுபது வரை வயது வந்தவர், அதன் பின்னர் முதியவர். அறுபதோடு முதுமையைக் கணிக்கும் பண்பாட்டினுள் தமிழர் சமூகமும் அடங்குகிறது. மேலைப் புலத்தவர் முதுமைக்காக அறுபத்தைந்து வரை காத்திருப்பர். சில சமூகத்தவர் எண்பது வரை காத்திருப்பதில் பெருமை கொள்வர்.
எது எப்படி இருப்பினும், வயதுக்கும் எமக்குமிடையில் 'உடலுறவு மட்டும் தான் இருக்க முடியும்; உள்ளத்துறவு என்றுமே இருக்க முடியாது. அதனால்தான் உடலை மட்டும் கொண்டு மனிதப் பருவங்களைப் பெயரிட்டுக் கொள்கிறோம். மனம் என்றுமே முதுமை எய்துவதில்லை. அது படிப்படியாக முதிர்ச்சியடையுமேயல்லாமல் முதுமை எய்துவதில்லை. தான் முதுமை எய்தாதது மட்டுமல்ல, உடலின் முதுமையைக் கூடக் கடிவாளமிட்டுக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது மனம், மனம் உண்டானால் இடம் மட்டுமல்ல இளமையும் உண்டு என்று ஆகிவிடும்.
மனதுக்கும் உடலின் இளமை / முதுமைக்குமிடையில் மிக நெருக்கமான உறவொன்று இருக்கத்தான் செய்கிறது. அதனால் தான் சிலர் நாற்பது வயதிலேயே முதியவராகி விட வேறு சிலர் எண்பதிலும் இளைஞராக இருக்கின்றனர். இது வயதுக்கும் மனதுக்குமிடையே நடைபெறும் போராட்டத்தில் விளையும் வெற்றியும் தோல்வியுமாகும்.
அறுபது என்ற இந்த வயதுக்கு ஏன் விழா எடுக்கிறார்கள் சிலர்?எதற்காக அதற்கு மணிவிழா என்று பெயர் வைத்தார்கள்? இது இளமைக்கான பிரியாவிடை விழாவா? அல்லது, முதுமையின் வரவேற்பு விழாவா? இல்லையேல், பிரியாவிடையும் வரவேற்பும் ஒரு சேரநடை பெறும் விழாவா? எதுவுமே புரியவில்லை!

Page 42
70 மெளனம்
இருப்பினும் ஒன்று மட்டும் புரிகிறது. மெளனகுருவுக்கு அறுபது வயதாகி விட்டது. அரசாங்க உத்தியோகமென்றால் அவர் ஓய்வு பெறவேண்டிய வயது வந்துவிட்டது. பல்கலைக்கழகத்தில் அவர் ஆசிரியப் பணி புரிவதால் அறுபத்தைந்து வயது வரை இருக்கலாம். எது எப்படியாயினும் மெளனகுருவுக்கு அறுபதாகிவிட்டது. தமிழர் தம் தனிப் பண்பாட்டுக்கமைய அவருக்கு 'அறளை பெயரும் வயது வந்துவிட்டது. மெளனகுருவுக்கு 'அறளை பெயர்ந்து விட்டது என்று நாம் கொள்ளப் போகிறோமா? எங்களால் அப்படிக் கொள்ள முடியாது. "எங்களால்' என்பதற்குள் அடங்கும் நாங்கள் யார்? "நாடக அரங்கக் கல்லூரியில் இருந்து மெளனகுருவோடு இணைந்து பணிபுரியக் கிடைத்த எங்களால் தான். எங்களால் ஏன் அப்படிக் கருத முடியவில்லை?அவரை நன்கு அறிந்து கொள்ள வாய்ப்புப் பெற்றிருந்தவர்கள் என்பதால்தான். எங்களுக்குத் தெரிந்த மெளனகுருவுக்கு மனம் எப்பவுமே இளமையாகவே இருக்கும். மனதைக் கொண்டு இளமையையும் முதுமையையும் கணிப்பவர்கள்தான் நாங்கள். அதனால் நாம் மெளனகுருவுக்கு மணிவிழாக் கொண்டாட மாட்டோம். காரணம் மணிவிழாவோடு அவரது மனம் முதுமை எய்திவிட்டால்?. ஐயகோ எத்தகையதொரு அணியாயமது! என்னைப் பொறுத்த வரையில் நான் முதன்முதலாக மெளனகுருவைக் கண்டது நடிகனாக, அவர் மேடையின் ஒளியில் இராவணேசனாக நான் மண்டப இருளில் "இரவு நேசனாக" முதற் சந்திப்பின் போதே அவர் மேடை' எனும் உயரத்தில் நான் பார்வையாளர் கூடம் எனும் பள்ளத்தில். தொலைவைப் பொறுத்தவரையிலும் கூட நீண்ட தூரம் தான் - அவர் மேடையில், நான் பார்வையாளர் கூடப் பின்வரிசை ஆசனத்தில், முதற் சந்திப்பிலேயே மலையும் மடுவுமாகவும், தொலைதூரமாகவும், இருப்பினும் அன்றவரை ஆடல் வல்லானாகக் கண்டேன். பின்னாளில் தார்சீசியஸ் கூறுவார், "மெளனகுரு ஆடினால் அது ஆட்டந்தான். அவன்ரை உடம்புக்கை லயம், பாவம் ஊறிக்கிடக்கு. ஆட்டமெண்டு வந்திட்டால் அவன் விஸ்வரூபம் தான்" என்று.
அன்று வெகுதூரத்தே இருந்து பார்த்த மெளனகுருவின் ஆடலைப் பின்னாளில் அவர் "நாடக அரங்க்க் கல்லூரி"யோடு இணைந்து பணிபுரிந்த காலத்தில் அருகிருந்து பார்க்கும் பேறு பெற்றேன். (யாது நீ பெற்ற தொன்றென்பால்?) அவர் ஆடியதையும் பலரை ஆட்டுவித்ததையும் உடனிருந்து பார்த்தேன். அவர் தானாடினார், என் தசை ஆடிற்று.
1976-77இல் இலங்கையில் "பொன்மணி" என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட மொன்றைத் தயாரித்தார்கள். அதில் மெளனகுரு பாத்திரமொன்றை ஏற்று நடித்திருந்தார்; நானும் ஒரு பாத்திரத்தில் நடித்தேன். மெளனகுரு நடித்திருந்தார், நான் நடித்தேன்' என்று கூறும்போது, அன்று யாரோ கூறியது நினைவுக்கு வருகிறது. பொன்மணிப் படத்துக்கான நடிகர் தேர்வு ஒரு சிலருக்கு நடத்தப்பட்டது. நானும் அந்தத் தேர்வுக்கு முகங் கொடுத்திருந்தேன். கொழும்பு லயனல் வென்ட்' அரங்கில் தான் தேர்வுநடைபெற்றது. அதில் தெரிவானவர்களில் நானும்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 71
ஒருவன். "நடிக்கத் தெரியாதவர்களாகப் பார்த்துத்தான் 'பொன்மணியில் நடிக்கத் தெரிவு செய்திருக்கிறார்கள்" என்று தெரிவுக்கு வந்த யாரோ ஒருவர் சொன்னதாக அறிந்தேன். அந்த அவரது கூற்றுப்படி பார்த்தால் நான் மட்டுமல்ல மெளனகுருவும் நடிக்கத் தெரியாதவர்தான். இதில் இன்றுவரை எனக்கு ஒரு ஆனந்தம். ஒருவர் விழும் போது தனித்து விழாமல் இன்னும் ஒருவராவது கூட விழுவதைக் காணும் பொழுது மனதுக்கு ஒரு சுகம் தென்படுவதுண்டு. வாழ்க்கையில் உயரும் போது இப்படியில்லை. தனித்து உயருவதில் தான் ஆனந்தம்.
நாமிருவரும் பொன்மணியில் நடித்தாலும், ஒருவரை ஒருவர் அறிய வாய்ப்பிருக்கவில்லை. அவர் வந்த காட்சிகளில் நானில்லை. நான் வந்த காட்சிகளில் அவரில்லை. சித்திரலேகா மெளனகுரு நடித்த இரண்டொரு காட்சிகளில் நானும் வந்து போயிருக்கிறேன்.
1976-77இல் நான் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நாடகம் கற்பித்தலில் கல்வியியல் டிப்ளோமா' கற்கை நெறியில் சேர்ந்து கற்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தேன். அந்த வகுப்பில் நாடகச் செய்முறை வகுப்புக்களை நடத்திய, தலைசிறந்த சிங்களநாடகக் கலைஞர்களுள் ஒருவரான தம்ம ஜாகொட என்பவர் சில சமயங்களில் கூறுவார்: "இந்த வகுப்பில் மெளனகுரு இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்" என்று. அந்த வகுப்பில் நாற்பது சிங்கள மாணவர்களும் பதினொரு தமிழ் மாணவர்களும் இருந்தோம். மெளனகுருவும் இருந்திருந்தால் மட்டக்களப்புக் கூத்துக்களின் ஆடல் பாடல்களை எல்லோரும் கற்றறிருந்திருக்க முடியும் என்பது தான் அவரது விருப்பம். ஆகவே, அங்கும் மெளனகுருவைத் தவற விட்டேன். பின்னர் மெளனகுருவைச் சிக்கெனப் பிடிக்க வாய்ப்புக் கிடைக்கும் என அப்பொழுது நான் கருதவில்லை.
கொழும்பில் 'டிப்ளோமா'வை முடித்துக் கொண்ட கையோடு யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரியை ஆரம்பிக்கும் வாய்ப்பு கிட்டியது. 23-011978 இல் அதை ஆரம்பித்தோம். நண்பர் தார்சீசியசை நம்பித்தான் கல்லூரியை ஆரம்பித்தோம். அவரும் கல்லூரிக்காக நிறைய உழைத்தார் 1980இல் அவர் வெளிநாடு செல்லத் தீர்மானித்து வெளியேறினார். வெளியேறுவதற்கு முன்னர் அவர் கூறினார்:"மெளனகுருவைக் கேளுங்கோ, வற்புறுத்திக் கேளுங்கோ. அவன் வருவானெண்டால் எவ்வளவோ நல்லது. நீங்கள் கேட்டால் அவன் கட்டாயம் வருவான், ஓம் கேளுங்கோ" என்றார். எறும்புகள் நாம், கரும்பு தின்ன எமக்கெதற்குக் கைக்கூலி?
தார்சீசியஸ் புறப்பட்ட கையோடு நாம் நா.சுந்தரலிங்கத்தை அணுகி அவரது 'அபசுரம்' நாடகத்தை நாடக அரங்கக் கல்லூரியினரோடு சேர்ந்து தயாரிக்க உதவுமாறு கேட்டோம். அவர் மனமுவந்து சம்மதித்தார். அவர் ஒத்திகைகளை ஆரம்பித்தும் பாத்திரங்களையும் தெரிவு செய்து முடித்தார்.

Page 43
72 மெளனம்
அந்த நிலையில் அவரும் வெளிநாடு செல்லப் புறப்பட்டார். நாடகத்தைத் தொடர்ந்து செய்து முடிக்கும் படி அவர் கூறிச் சென்றார்.
நாங்கள் மெளனகுருவிடம் சென்றோம். எம்முடன் சேர்ந்து பணிபுரிய வருமாறு அழைத்தோம். அபசுரம்'நாடக நெறியாள்கையைப் பொறுப்பேற்குமாறு கேட்டோம். அவர் ஒப்புக் கொண்டார். அன்று முதல் எங்கள் உறவு நெருக்கமானது. அவருடனான எமது நாடகப் பணி நீண்டகாலம் தொடர்ந்தது. அவரோடு இணைந்து பணிபுரிந்த காலம் இன்றும் இனிக்கிறது; என்றும் இனிக்கும் - "மீள நினைந்திடும் போதெல்லாம் பேரானந்தமாகவே" இருக்கும்.
"நாடக அரங்கக் கல்லூரியில்" மெளனகுரு இருந்து பணியாற்றிய காலத்தில் நா.சுந்தரலிங்கத்தின் "அபசுரம்", மெளனகுருவின் 'சங்காரம் குருஷேத்ரோபதேசம் (ஞானியின் நவீன குசேலர் என்ற நாடகம் யாழ்ப்பாணப் பேச்சுமொழிக்கு மாற்றப்பட்டுப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டது) ஆகிய நாடகங்களை நெறியாள்கை செய்து கல்லூரியின் ரசிகர் அவையிலும், வேறுபல மேடைகளிலும் ஆற்றுகை செய்யப்பட்டன.
அந்த நாட்களில் நாடக அரங்கக் கல்லூரி மூலம் எனக்குப் பல வாய்ப்புக்கள் கிட்டின. அவற்றில் ஒன்று, பலர்நாடக நெறியாள்கை செய்யும் போது அருகிருந்து பார்த்துக் கொண்டிருப்பது. இது எல்லோருக்கும் சுலபமாகக் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல. "சும்மா இருந்து சுகம் பெறும்"பாக்கியம். முக்கியமாக இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் முக்கியமானவர்கள் எனக் கூறப்படுபவர்களுள் மூவரின் நெறியாள்கை முறையைக் கண்டு கொண்டேன். தார்சீசியஸ், சுந்தலிங்கம், மெளனகுரு ஆகியோர்தான் இவர்கள்.
நெறியாளர் என்ற வகையில் மெளனகுருவுக்குக் கோபம் வந்ததை நான் காணவில்லை. அப்படிக் கடுமையாகக் கோபிக்க வேண்டிய இடங்கள். சந்தர்ப்பங்கள் வரும் போது அவர் தனது வழமையான "என்ன. என்ற பதப்பிரயோகத்தை மட்டுமே மேற்கொள்வார். அந்த "என்ன"வை அவர் பயன்படுத்தும் முறைமையே தனியானது. தனித்துவமானது. கோபம் வரும் போது கோபத்தை வெளிக் காட்டாமல் 'என்ன என்று உயர்த்தித் தொடங்கி வார்த்தையின் முடிவோடு சிரிப்பைக் கலந்து மெல்ல முடிப்பார். முடித்த கையோடு தானே 'சரி சரி என்று கூறி நிலைமையை உடனடியாக சாதாரண நிலைக்குக் கொண்டு வந்து விடுவார். இதனால், ஒத்திகையின் போது அவரால் எவரும் புண்படுவதில்லை. அந்த வேளைகளில் நல்லதொரு தலைவனுக்கு இருக்க வேண்டிய பண்புகளைக் காண முடியும்.
ஒத்திகை என்று வந்துவிட்டால் ஒத்திகை தான். வேறு கதைகளோ அலுவல்களோ அங்கு இருக்காது. நெறியாள்கையை மட்டுமல்லாது, நாடகத் தயாரிப்பின் அனைத்து விஷயங்களிலும் முழுமனதோடும் உற்சாகத்தோடும் ஈடுபடுவார். நெறியாளர் என்ற பீடத்தில் ஏறிக் குந்திக் கொள்ளமாட்டார். தொண்டரென நின்று எல்லோரோடும் இணைந்து பணிபுரிவார். மற்றவர்கள்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 73
சொல்வதற்குச் செவி சாய்ப்பார். "நாடக அரங்கக் கல்லூரிகளில் எல்லாரும் எப்படியெல்லாம் என்னுடன் ஒத்துழைக்கிறார்கள், என்னுடைய நாடகத் தயாரிப்பைத் தங்களுடைய பணியாகக் கருதி எல்லோரும் பாடுபடுகிறார்களே. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது; பெருமையாகவும் இருக்கிறது. வேறு இடத்தில் இதைக் காண்பது மிகவும் கஷ்டம்" என்று எம்மிடம் பல தடவை கூறி மகிழ்ந்திருக்கிறார். அவரோடு நாங்களும் எங்களோடு அவரும் ஆனந்தமாக இருந்தோம் என்பதே வாழ்வில் தொக்கிநிற்கும் பேறு எனலாமல்லவா?
மெளனகுரு எம்மோடு ஆடவந்து, எமது உள்ளங்களை ஆளவந்தார் எனலாம். பத்துப் பன்னிரெண்டு வருடம் அவரது ஆடலையும் பாடலையும் பார்க்கும் புண்ணியம் எனக்குக் கிட்டியது. ஆடிப்பார்க்க நான் துணியவில்லை. பாடவும் தான். காரணம் மட்டக்களப்பின் கூத்துக்களின் ஆடல்களிலும் பாடல்களிலும் எனக்குப் பயத்தோடு கூடியதொரு பக்தி இருந்து வருகிறது.
யாழ்ப்பாணத்துக்கு வந்தது முதல் ஒஸ்மானியாக் கல்லூரியில் ஆசிரியராக இருந்து வந்த மெளனகுரு 1984 இல் (என்று நினைக்கிறேன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறையில் விரிவுரையாளராகப் பொறுப்பேற்கிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இவரைக் கூத்தாட்டு வித்தவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன். இன்று கூத்துப் பலரால் மறக்கப்படாதிருக்கிறது என்றால் அதற்கு மூலகாரணமாக இருந்தவர் வித்தியானந்தன். கூத்தாடுவது என்பது எந்த வகையிலும் இழுக்கானதொரு செயலல்ல. அது பெருமைப்படக்கூடிய ஒன்று என்று இன்று சிலர் கருதுகிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் வித்தியானந்தன். நாட்டார் கலைகளைக் கழகம் வைத்து வளர்க்கிறோம் என எவரேனும் கூறுவார்களேயானால் அதற்கு ஆதிகாரணம் வித்தியானந்தன். கிளை குனிந்து தாய்மரத்தின் ஆணிவேரை அறுக்க முனைவது நல்லதல்ல.
பேராதனையில் மெளனகுருவை ஆட்டுவித்த வித்தியானந்தன், துணை வேந்தராக இருந்த போதுதான் மெளனகுரு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நாடகமும் அரங்கியலும் போதிக்க வந்து சேர்கிறார். அங்கு வித்தியானந்தனுக்கு நாடகத்திலும் துணையாக இருந்த பேராசிரியர்கள் கைலாசபதியும் சிவத்தம்பியும் கூட, இவர் வரும்போது இந்தப் பல்கலைக் கழகத்தில் இருக்கிறார்கள். அங்கு இவரோடு கூட ஆடிப் பாடிய பேராசிரியர் சண்முகதாசும். இன்னும் எவரவரோ இருக்கிறார்கள். வரலாறு திரும்பத் திரும்ப வரும்' என்பது அப்போ வரலாற்றில் மீண்டுமொருமுறை நிறுவப்படுகிறது.
1986 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறைக்குப் போய் வருகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கும் மெளனகுருவோடு நெருங்கி இருக்கக் கிடைத்தது. ஏதோவொரு ஆண்டில் - ஆண்டுகள் நினைவில் நிற்பதில்லை - மகளிர் தினத்துக்காக மெளனகுரு "சக்தி பிறக்கிறது" என்னும் நாடகத்தை எழுதித் தயாரித்தார். இராமநாதன் நுண்கலைத் துறையில் நடனம்,

Page 44
74 மெளனம்
இசை பயிலும் மாணவர்களைக் கொண்டு இந்த நாடகத்தை தயாரித்தார். இந்தத் தயாரிப்பிலும் அவரருகே இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
மெளனகுருவின் அனைத்து நாடகங்களிலும் காணப்படும் எமது கூத்தினடியாக வரும் பாடலும் ஆடலும் அந்த நாடகத்திலும் இருந்தது. கூத்து ஆடலும் பாடலும் தான் அவரது அரங்க வெளிப்பாட்டின் சாதனமாக, மொழியாக இருக்கும். அவை அவரது உள்ளத்திலும் உடலிலும் ஊறிக்கிடப்பவை.
1983 றுடன் தமிழர் பிரதேசத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. முன்பு போலப் பல இடங்களிலிருந்தும் வந்து ஒன்று கூடி நாடகங்கள் செய்வது சாத்தியமாகவில்லை. அவரவர் தத்தம் கிராமங்களென்று இருந்துவிட வேண்டியிருந்தது. முக்கியமாக மாலை ஆறுமணிக்கு முன்னர் வீட்டுக்குள் அடங்கி விடுவது, உடலாரோக்கியத்துக்கு நல்லது என்ற நிலை வந்துவிட்டது. இதனால் பல இடங்களையும் சேர்ந்தவர் கூடி நாடகங்களை இரவில் மேடையேற்றும் நடைமுறையைக் கைவிட வேண்டி வந்தது. இதனால் நிறுவனமயப்பட்ட நிலையில் நாடக அரங்கக் கல்லூரியின் செயற்பாடுகள் முன்புபோலத் தொடர முடியவில்லை.
தேவை என்பதே அனைத்துக் கண்டுபிடிப்புக்களின் தாய்' என்பார்கள். இங்கு நாட்டில் நிலவிய புதிய சூழ்நிலைமை புதிய மார்க்கங்களைக் கண்டு பிடிக்கத் தூண்டியது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் நாடக நடவடிக்கைக்கான முக்கிய களங்களாக மாறின. அத்தோடு பகலில் நாடகம் நடத்தும் புதிய மரபொன்றும் தோற்றம் பெற்றது.
இவ்வாறு பாடசாலைகளையும் பல்கலைக்கழகத்தையும் தஞ்சமெனக் கொண்டு நாடகம் தயாரிக்கப் புறப்பட்டவர்களுள் மெளனகுருவும் ஒருவர். அவர் 'தப்பிவந்த தாடி ஆடு, வேடனை உச்சிய வெள்ளைப் புறா என்ற இரண்டு சிறுவர் நாடகங்களையும், மழ்ை', 'சரி பாதி , நம்மைப் பிடித்த பிசாசுகள் ஆகிய பாடசாலை நாடகங்களையும் தயாரித்தார். இவை அனைத்தினதும் தயாரிப்புக் காலங்களில் நானும் கூடத் திரிந்தேன். கண்டது கற்றுப் பண்டிதனாகலாம் என்ற எண்ணம் போலும். நானாகக் கற்றுக் கொள்ளாவிட்டாலும் அந்தச் சூழலுக்குள் கிடப்பதால் தானாக ஏதேனும் ஊறியிருக்குமல்லவா?
மெளனகுருவோடு சேர்ந்து பணிபுரிவதில் ஒரு தனித்துவமான அனுபவம் கிட்டும். எதையும் திட்டமிட்டு முறைமைப் படுத்திச் செய்வார். இது என்னுடைய சுபாவத்துக்கு அன்னியமானது. அவரது நாடகவாக்கம் கூத்துப் பாங்கானதான அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் ஆடல் முதன்மை பெறும். ஆடல் முதன்மை பெறுவதால் அசைவுக் கோலங்கள் மோடிமை அழகோடு ஆதிக்கம் செலுத்தும். மேலும், ஆடலின் முதன்மை காரணமாகச் சந்தச் சீர்மிகு பாடல்களும் முதன்மை பெறும். இவற்றின் காரணமாக அவரது நாடகங்கள் பாரம்பரிய நாடகங்களின்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 75
சாயலைத் தாங்கி நிற்கும். அதே வேளையில் அவை பாரம்பரிய நாடகங்களிலிருந்து வேறுபட்டே நிற்கும். எது எவ்வாறாயினும், "இது மெளனகுருவின் நாடகம்" என்று அவரது நாடகங்களை இலகுவில் இனங்கண்டு கொள்ள முடியும். மெளனகுரு யாழ்ப்பாணத்தில் இருந்ததன் புண்ணியமாக அவரது நாடக பாணியும் இங்கு பலரில் செல்வாக்குச் செலுத்தியுள்ளதோடு, அடுத்தடுத்து வந்த சிலரது ஆக்கங்களில் அவரது நாடகச் செல்வாக்கு எங்கோ கலந்திருப்பதையும் காணலாம். அவரது நாடக முயற்சியால் இங்குள்ள சில இளைஞர் கூத்து ஆடல் பாடல்களைக் பயின்றனர். கூத்து ஆடல்களையும் பாடல்களையும் கொண்டதொரு நடன நிகழ்வை அவர் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் அரங்கேற்றினார். அந்தப் பணி தொடரும் என்று எதிர்பார்த்தேன். ஆயினும் அது தொடரவில்லை.
ஈழத்தமிழர் ஒரு தனித்தேசிய இனம் என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. இங்கு நான் அரசியல் பேசவில்லை. ஒரு தேசிய இனத்தில் பிறந்தவன் என்ற வகையில் அவ்வினத்தின் அடையாளத்தைத் தொடர்ந்துநிலை நிறுத்துவதற்காகச் செய்ய வேண்டிய பலவற்றுள் கூத்துப் பாரம்பரியத்தில் வந்து, நாடகம் பற்றிய அறிவையும் பெற்றிருக்கும் மெளனகுருவுக்கு ஒரு மகத்தான கடமை இருக்கிறது. அவர் இங்கு இருந்த காலத்தில் இதுபற்றி நான் அவரோடு பலதடவை கதைத்துள்ளேன். கடைசித் தடவையாக - ஆம் கடைசித் தடவையாக - மீண்டுமொருமுறை அதுபற்றி அவரிடம் கதைக்க வேண்டும் போல உள்ளது. என்னால் ஆக முடியாதது, அவரால் ஆகக்கூடியது. அதனால் தான் அன்றும் பல தடவை கேட்டுக் கொண்டேன். இன்றும் ஒரு தடவை வேண்டிக் கொள்கிறேன்.
எமது நாட்டார் பாடல்கள், கூத்துப்பாடல் என்பவற்றை அடியாகக் கொண்டு ஈழத்தமிழர் தம் இசை மரபொன்றினை அமைத்துக் கொள்ள முடியும். அவ்வாறே எமது பிரதேசங்களில் பாரம்பரியக் கூத்துக்களின் ஆடல் வகைகளை வைத்துக் கொண்டு எமக்கே உரித்தானதொரு நடன வடிவத்தை உருவாக்கமுடியும். சிலர் இதனை முட்டாள் தனமானதொரு எண்ணமெனக் கூற முற்படுகின்றனர். எத்தனையோ தேசிய இனங்கள் தத்தமது நடனங்களையும் இசையையும் இந்தவாறு தான் அமைத்துக் கொண்டுள்ளனர். எங்கள் மத்தியில் இதனைச் சாதித்து முடிப்பதற்கான அர்ப்பணிப்பு மிக்க கலைஞர்கள்/ மனிதர்கள் இதுவரையும் வந்து சேரவில்லை.
மெளனகுரு இதுபற்றிச் சிந்தித்துச் சிறிதுமுயற்சியும் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்வதற்கான ஆற்றலும் அறிவும் பயில்வும் ஆளுமையும் இப்போ ஆளணியும் அவரிடம் இருக்கிறது. கிழக்கிலங்கைப்பல்கலைக்கழக நுண்கலைத் துறை அவருக்கு வேண்டிய் ஆதரவையும் ஆளணியையும் வழங்கும். ஏனைய தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள பலரது ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளும் ஆற்றலும் அவரிடம் இருக்கிறது. இப்போ மணிவிழாவோடு "முதுமை"யும் வந்து சேர்ந்துவிட்டது. முதுமை' எய்திவிட்ட இவர் சொன்னான் எவரும் கேட்பர். )( چور , !F? * * * * * ';

Page 45
76 மெளனம்
"எமக்கெனக் கர்நாடக இசையும் பரதநாட்டியமும் இருக்கப் பிறகெதற்கு இதையெல்லாம்" என்கிறார்கள் சிலர். எமக்கு அவை இருக்கின்றன என்பது உண்மைதான். உங்களை விட இல்லையென்றாலும் உங்களவேனும் பாசமும் பற்றும் எனக்கும் அவைமிது உள்ளது. அவற்றைநிராகரிக்கவும் இழக்கவும் நானும் தயாராக இல்லைத்தான். அவை இரண்டும் எமக்கு மட்டும் உரியன வல்ல. அவை உலகத்தமிழர் அனைவருக்கும் பொதுவானவை; தமிழருக்கு மட்டுமல்லத் தென்னிந்தியர் அனைவருக்கும் கூடச் (தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள்) சொந்தமானவை. ஏன், அது பாரதம் முழுமைக்குமே சொந்தமானது.
மேலும், மொழியென்ற நிலையில் தமிழ் மொழியை எடுத்துக் தொண்டால், செந்தமிழ்' என்றும் பேச்சுத்தமிழ்' என்றும் இருக்கவில்லையா? அது போலவே கலைகளிலும் 'செந்நெறிக் கலைகள்' 'பிரதேசக் கலைகள்' என்று இருக்கின்றனவே? அதனால்தான் ஈழத்தழிழர் என்ற நிலையில் எமக்கொரு பொதுமையான இசைவடிவமும் ஆடல் வடிவமும் உருவாக்கப்பட வேண்டு. மென்கிறேன். இந்த இரு வடிவங்களும் ஈழத்தமிழர் தம் பிரதேசங்களின் பாரம்பரியக் கலை வடிவங்களிலிருந்து உருவாக்கப்பட வேண்டும். இவை உருவாக்கப்படுகின்ற வேளையில் பிரதேசங்களுக்குரியவையும் தத்தம் தனித்துவத்தோடு வளர்க்கப்படும் பாதுகாக்கப்படும்.
"பிரதேசப்பற்று மட்டும்" என்னும் வாமன நிலை கடந்து, "அனைத்து ஈழத்தமிழரும்" என்ற விஸ்வரூப மெடுத்துக் கருமமாற்றக் கூடியவர்தான் எனக்குத் தெரிந்த மெளனகுரு என்று இன்றும் நான் கருதுவதால் தான் இப்பவும் அவரிடமே இதைக் கேட்கிறேன். அவர் மனம் வைத்தால் செய்யக் கூடியவர். பலரையும் இணைத்துப் பணியாற்ற வல்லவர். அவரைத் தூண்டுவார் தேவை. அதைச் செய்யக் கூடியவர் செய்யுங்கள்.
மெளனகுருவே, உங்கள் முதுமையில் எமக்கொரு முதுசொத்தை விட்டுச் செல்லுங்கள். தமிழர் இருக்கும் வரை உங்கள் பெயர் நிலைக்கும். ஈழத்தில் மட்டுமல்ல, இன்று "உலகம் யாவையும் தாமுளதாக்கி"ப் பரந்து கிடக்கும் தமிழர் வாழும் நாடுகளெங்கணும் உங்கள் பெயரும் வாழும்.
நான் இதைச் செய்வேன். ஆனால், ஒருகாட்டில் கழுதை, மயில், குயிலென மூன்றும் இருந்தன. பலகாலம் மயில் ஆடவில்லைக் குயில் பாடவில்லை. ஆடுமாறும் பாடுமாறும் கழுதை இரந்து வந்தது. ஆயினும் அவையிரண்டும் எதுவும் செய்யவில்லை. நானிதைச் செய்தாலென்ன" என நினைத்த கழுதை ஒரு நாள் குதித்துக் குதித்துக் குளறியது. கழுதைக்குப் பைத்தியம் எனக் கருதிய சிலர் அதை அடித்துக் கொன்றனர் என்னால் இந்தக் கதையை மறக்க முடியவில்லை.

பேராசிரியர் சிமெளனகுரு பற்றிய சில மனப்பதிவுகள்
- கவிஞர் வெல்லவூர்க் கோபால் -
1957ஆம் ஆண்டு ஜூன் மாதம். அரசின்5ம் ஆண்டு புலமைப் பரிசில் பெற்று வந்தாறுமூலை அரசினர் மத்திய கல்லூரிக்குள் கால் வைக்கின்றேன். 90 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட வெல்லா வெளிப் பள்ளியில் படித்த எனக்கு 15 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து கிடக்கும் கட்டிடங்கள் பிரமிப்பை தருகின்றன. பார்க்கும் முகங்களெல்லாம் வேற்று முகங்கள். பிரிவும் தனிமையும் அதனோடு கூடியதாழ்வுமனப்பான்மையும் எனக்கு. ஒருவாரம் கூட ஆகவில்லை. சொல்லாமல் கொள்ளாமல் எனது வீட்டுக்கு வந்து விடுகின்றேன். எனது சகோதரர் கோபத்துடன் மீண்டும் என்னை அழைத்து வருகின்றார். அந்த நிலையில் தான் மெளனகுருவின் அறிமுகம் எனக்கு கிடைக்கின்றது.
சின்ன உருவம், வசீகரத் தோற்றம், கனிவான பேச்சு. என்னிலும் மூன்று வயது முந்திக் கொண்ட மெளனகுரு எனக்கு அண்ணாவாக நின்று ஆறுதல் வார்த்தைகள் கூறி தெம்பூட்டுகின்றார். முதுகுப்புறம் வளைந்தோடும் நீல நிறவாவியும் முகப்புப் புறம் மாமாங்கத் தெப்பக்குளமும் செழித்து வளர்ந்த தென்னஞ் சோலைகளும் நிறைந்த சீலாமுனையின் மண்வாசனை, மருதமும் முல்லையும் கமழ, மத்தளத்தின் ஒசையில் நித்தமும் நர்த்தனம் இடுகின்ற வெல்லாவெளியின் மூச்சுக்காற்றில் சங்கமித்து இன்று ஆண்டுகள் நாற்பத்தாறு. எம் உறவோடு ஒன்றிவிட்ட மெளனகுரு பற்றிய சில மனப்பதிவுகளே இங்கு கட்டுரையாகின்றது.
மெளனகுரு சிறுவயது முதலே தமிழ் உணர்வின் ஊற்றுக் கண்ணாக வளர்ந்தவர். அதற்கு காரணம் அவரின் தந்தையார் திரு.சின்னையா அவர்கள் என்றே கூறவேண்டும். பொறுமையும் நிதான சிந்தையும் கொண்ட அப்பெரியாரின் தந்தை வழிப்பூர்வீகம் எமது பகுதியைச் சார்ந்திருந்தது. தமிழரசிக் கட்சியுடனும் மிக நெருக்கமாக இருந்தவர் திரு. சின்னையா. இதனால் அவர் பத்து வயது சிறுவனாக இருந்த போதே மெளனகுருவை அரசியல் மேடைகளில் ஏற்றி அழகு பார்த்தார். அப்போதிருந்தே மெளனகுரு பலராலும் பேசப்பட்டவரானார். பேச்சு, நடிப்பு, விளையாட்டு எனத் தடம் பதித்து கல்லூரிக்குள் முந்திக் கொண்ட

Page 46
78 மெளனம்
மெளனகுரு 1960ல் 'அருச்சுனன் தவநிலை நாட்டுக் கூத்தின் மூலம் சிறந்த கூத்தனாகவும் அறிமுகமாகின்றார். அக்காலகட்டத்தே தமிழீழமெங்கும் உரிமைப்போர் (சத்தியாக்கிரகம்) கொழுந்து விட்டெரிகின்றது. கல்லூரியின் முன்புற மதிலில் ஏறிநின்ற மெளனகுருவின் உணர்ச்சிபொங்கும் உரைகேட்டு வகுப்பறைகளை விட்டு மாணவர் பட்டாளம் மட்டக்களப்பு கச்சேரி நோக்கி கால் நடையாகப் புறப்படுகின்றது. ஆட்சியாளருக்கு எதிராக கோசங்களை எழுப்பிக் கொண்டு மட்டக்களப்பு நீதிமன்றம் முன்னால் மெளனகுருவின் தலைமையில் கைகளைக் கீறி இரத்தத்தால் ஒப்பமிட்ட மனு ஆட்சித் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்காவிடம் ஒப்படைக்க வேண்டி அங்கு கையளிக்கப்படுகின்றது. அதே காலப்பகுதியில்தான் மெளனகுருபத்திரிகையுலகிலும் அறிமுகமாகின்றார். ஞாயிறு தினகரனில் வெளிவந்த அவரது 'சமரசபூமி என்ற சிறுகதை பலராலும் பாராட்டப்படுகின்றது. அதைத் தொடர்ந்து அவரது கவிதைகளும் பத்திரிகைகளில் வெளிவருகின்றது.
1963ன் நடுப்பகுதி வந்தாறு மூலையில் விஞ்ஞான உயர்தர வகுப்பு தொடங்கப்படாமையால் நாங்கள் மட்டக்களப்பு அரசினர் கல்லூரிக்கு (கோட்டமுனை இந்துக்கல்லூரி) வருகின்றோம். மெளனகுரு பேராதனை பல்கலைக்கழகத்துக்குச் செல்கின்றார். இக்காலப்பகுதியில் எனது கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்குகின்றன. மெளனகுருவின் பாராட்டுக்களும் அடிக்கடி வரும். அடுத்தாண்டில் எனது 'கன்னிமலர்'கவிதை நூல் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் வெளியிடப்பட மெளனகுருவின் வாழ்த்துப்பாவும் படிக்கப்படுகின்றது
1965ல் மலையக கல்விச் சபையின் நியமனத்தால் கலகா செல்கின்றேன். பேராதனைக்கும் கலகாவுக்கும் பதினாறு மைல்கல் இடைவெளி இடையிடைநாம் சந்தித்துக் கொள்கின்றோம். மெளனகுருவின் 'இராவணேசன்' நாட்டுக்கூத்து கட்டணக் காட்சியாக கண்டியில் மேடையேறுகின்றது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுடன் மெளனகுருவை இராவணேசனாக பார்த்தது இப்போதும் மனக்கண்முன்நிழலாடுகின்றது.
1967ன் பின் நான் மட்டக்களப்புக்கு வந்துவிட எம் நட்பு மேலும் நெருக்கமாகின்றது. மட்டக்களப்பு எழுத்தாளர்களுடனான நெருக்கம். மகாகவியின் அறிமுகம், ஆனந்தனின் நட்பு எல்லாம் மெளனகுரு மூலம் எனக்கு கிடைக்கின்றது. இக்கால கட்டத்தில்தான் மெளனகுரு சித்திரலேகாவும் பெரிதாகப் பேசப்படுகின்றார். மெளனகுரு - சித்திரலேகாவின் பிணைப்பை எம் போன்ற பலர் சந்தோசமாகவும் இன்னுமொரு சிலர் சங்கடமாகவும் பார்க்கின்றனர். யாழ். அம்பனையில் மகாகவி தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் நான் பாடிய ஆக்கிரோசமான கவிதைகள் இதன் பிரதிபலிப்பென்றே கொள்ள வேண்டும். அத்தோடு "முல்லை" என்னும் குறுங்காவியத்தை 1968ல் நான் வெளியிடுகின்றேன். மெளனகுரு முதல் முதலில் அணிந்துரையெழுதிய நூல் இதுவாகத்தான் இருக்க ைேண்டும்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 79
1970ல் எனக்கு மட்டக்களப்பில் நியமனம் கிடைக்கின்றது. மெளனகுருவும் ஆசிரியப் பணியிலிருக்கின்றார். நான் தங்கியிருந்த வீட்டில்தான் தனது துவிச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு செல்வார். தினமும் நாம் சந்தித்துக் கொள்வோம். இக்காலப்பகுதியில் மட்டக்களப்பில் பெளர்ணமி கலைநிகழ்ச்சியை மாதந்தோறும் நடாத்தும் பொறுப்பு மாநகராட்சியால் என்னிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இதில் மெளனகுருவின் ஆலோசனைகளும் எனக்கு கிடைக்கின்றன. பின்னர் மெளனகுரு கொழும்பு செல்கின்றார்.
மெளனகுரு சித்திரலேகாவை வாழ்க்கைத் துணைவியாக்கிய பின்னர் முதுமாணிப் பட்டத்துடன் (M.A) மட்டக்களப்பு வருகின்றார். இருவருக்குமாக புகையிரத நிலையம் தொடக்கம் மாமாங்கம் வரை பெரும் வரவேற்பளிக்கப்படுகின்றது. இவையெல்லாம் மறக்கமுடியாதவையே.
1979 வாக்கில் மெளனகுரு யாழ்ப்பாணத்திலிருந்தார். முனைவர் (Ph.D.) பட்டத்துக்கான தேடல்களை அவர் மேற்கொண்ட போது ஒருசில நாட்கள் எனது கோவிற் போரதீவு வீட்டில் தங்கினார். அப்போதென்னிடம் பெரிய அளவிலான 250 சி.சி மோட்டார் சைக்கிள் இருந்தது. அதில் பயணிப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கும். எனது படுவான்கரைப் பிரதேசத்தையும் மாங்காடு தொடக்கம் திருக்கோவில் வரையான எழுவான்கரைப் பிரதேசத்தையும் நாங்கள் களைப்பின்றி சுற்றி வந்தோம். வயல்பகுதிகள், ஒற்றையடிப் பாதைகளைக் கொண்ட காட்டுப்பகுதி குக்கிராமங்கள் எல்லாம் சென்றோம்.
அம்மக்களுடன் உரையாடி மகிழ்ந்ததுவும் அவர்களிடமிருந்து மரபுவழிப் பாரம்பரிய கலை வடிவங்களைப் பதிவு செய்ததுவும் வாழ்வில் மறக்க முடியாதவையே.
கிழக்குப்பல்கலைக்கழகத்திற்கு மெளனகுரு வந்தபோது அவரிடமிருந்து பெரும் எதிர்பார்ப்பை மட்டக்களப்பு கொண்டிருந்தது. வந்த ஒரு சில நாட்களில் நாம் ஏற்பாடு செய்த பரதகலாலாயாவின் பத்தாண்டுநிறைவுவிழாவில் மெளனகுரு பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதில் என்னால் தயாரிக்கப்பட்ட விழா மலரையும் அவரே வெளியிட்டார். நீண்ட கால இடைவெளிக்குப் பின் மட்டக்களப்பில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியாகவும் இது இருந்தது.
இன்று அண்ணனுக்கு அகவை அறுபது. எனினும் அன்று என்பதினொரு வயதில் பார்த்த பதினான்கு வயது மெளனகுருவே இப்போதும் கண்முன் நிற்கின்றார். வயது நடக்கிறதா? இறக்கை கட்டிப்பறக்கிறதா? என்பது புரியவில்லை. மட்டக்களப்புசீலாமுனையில் 1943 ஜூன் 9ல் ஒரு தொட்டில் அசைந்த போது மாதரசி முத்தம்மா பாடிய மரபவழித்தாலாட்டே இன்று சின்ன உப்போடையில் புதுக்கவிதைப் பூபாளமாக உருமாறி நிற்கின்றது. பூபாளத்தின் சொந்தக்காரி பேராசிரியை சித்திரலேகா. இத்தமிழ்க்கலவை உறுதியானது. வாழ்க்கையில் இற்றுவிழாதவர்கள் வரலாற்றில் முற்றுப்பெறப்போவதில்லை. என் ஆதங்கமெல்லாம் மெளனகுருவின் பவளவிழாவினையும் பார்த்தாக வேண்டு மென்பதே.

Page 47
பேராசிரியர் சி. மெளனகுருவின் கலைப்பணி அது ஒரு தேசப்பணி
கந்தையா யூரீகணேசன் ஆங்கில விரிவுரையாளர், யாழ்ப்பான பல்கலைக்கழகம், வவுனியா வளாகம்.
கலை அடையாளம்
ஒரு தேசத்தின் அடையாளம் அதன் புவியியல் புலங்களாலும் பொருளியல் நிலைகளாலும் பண்பாடு, மொழி, கலை இலக்கியங்களின் தனித்துவங்களாலும் வரையறை செய்யப்படுகின்றது. ஈழத்தமிழர் பேசும் மக்களின் பிரதேசம் பொருளியல் பகைப்புலம், மொழியின் தனித்தன்மை என்பன யாவரும் அறிந்ததே. ஈழத்துக்கென ஒரு த்னியான பண்பாட்டு இலக்கியப் பாரம்பரியம் ரீலறி ஆறுமுகநாவலர், சுவாமி விபுலாநந்தர், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, கைலாசபதி, சிவத்தம்பி மற்றும் இலக்கிய கர்த்தாக்கள் ஆகியோரால் தெளிவான முறையில் வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கலைப் பாரம்பரியம் தனித்துவமாக இன்னும் வளர்த்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
கலை என்ற வடிவத்துள் சாதாரணமாக இசை,நடனம், நாடகம் முதலிய வடிவங்கள் உள்ளடக்கப்படலாம். இவை தமக்குள் ஒன்றுக் கொன்று கொண்டும் கொடுத்தும், ஊடியும், கூடியும், தனித்தும் வளர்ந்து வரக் கூடியன. தமிழராகியநாம் தவிர்க்க முடியாதபடி தென்னிந்திய இசை மரபுகளிலும் பரதநாட்டிய மரபுகளிலும் எம்மை அடையாளம் கண்டு வருகிறோம். ஆனால் ஈழத்தவராகிய எமக்கு தனித்துவமான ஒரு கலை மரபை நாம் பேண வேண்டிய ஓர் அரசியல் சூழ்நிலையினை இங்கு காண முடிகிறது. கலைகளில் ஒவியம், சிற்பம், கட்டிடக் கலை, சினிமா என்பனவும் உள்ளடக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றிலும் ஈழத்தவர்க்கென்று தனிமுத்திரை இயல்பாக அமைந்துவிடும்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 81
ஆனால், இசை, நடனம், நாடகத்தைப் பொறுத்தவரை எமது தனித்துவங்களை அடையாளப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இவற்றுக்கு அடிநாதமாக எம்நாட்டுக் கூத்துக்களை (இசை ஆட்டம், நாடக வடிவம்) நாம் ஏற்றுக் கொள்ளலாம். மேற்குலக இயற்பண்பு வாதம் மற்றும் யதார்த்தவாதம் நன்கு வளர்ந்திருந்த காலத்திலேயே பேராசிரியர் சு.வித்தியானந்தன் தன் நாடகப் பணியை மேற்கொண்டார். யாழ்ப்பாணப் பேச்சு மொழியில் எழுதப்பட்ட பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் இயற்பண்பு நெறி நாடகங்களை நெறியாள்கை செய்த வித்தியானந்தன் அறுபதுகளில் நாட்டார் கலைகள் மேல் நாட்டம் கொண்டு கூத்தைப் புனரமைப்பு செய்தார்.
மட்டக்களப்பு கூத்துக்கள்
இலங்கையில் காணப்பட்ட கூத்துக்களில் ஆட்டம் விரவி இருந்த கூத்துக்கள் மட்டக்களப்பிலே காணப்பட்டன. எனவே ஆட்டமும் இசையும் நாடகப் பண்பும் நிறைந்த மட்டக்களப்புக் கூத்துக்களில் ஈழத்தமிழர் தம் அடையாளங்களைக் கண்டது வியப்புக்குரியதன்று. வித்தியானந்தனின் மறுசீரமைக்கப்பட்ட கூத்துக்கள் நவீன உலகத்திற்கு ஏற்றதாக அமைவன. கிராமங்களில் கிராமியப் பண்புகளுடன் ஆடப் பட்டுவரும் கூத்துக்கள் அம்மக்களின் கலைத் தேவையை நிவர்த்தி பண்ணுகின்றன. அதேவேளையில் கூத்துமூலங்களை நவீனநாடகங்களுக்கு ஏற்ற முறையில் பயன்படுத்தி வீச்சுள்ள நாடக அரங்குகளைத் தமிழ் நாடக அரங்கு கண்டு வருகிறது. மீண்டும் புதிய சூழ்நிலைகளில் கூத்துக்களை புதிதாக எழுதி புதிய கலை நோக்குடன் படைக்கப்பட்டு வரும் கூத்துக்களும் எம்மத்தியில் காணப்படுகின்றன.
இன்று கூத்தின் ஊடாக நாம் கண்டு கொண்டது என்ன?இன்று இக் கேள்வி பலமாகக் கேட்கப்படுகிறது. கிராம மக்களின் கூத்துக்களை அறிஞர்தம் ஆய்வுத் தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்திவிட்டு கூத்தையும் மக்களையும் கைவிட்டு விட்டார்கள் என்ற கோஷம் பலமாக ஒலிக்கிறது. ஒரு பிரதேசக் கூத்தை மட்டும் முன்னுக்கு கொண்டு வந்துவிட்டால் மற்றைய பிரதேசத்தினர் காரண காரியமில்லாமல் விமர்சனம் செய்வர். உண்மையில் கூத்தின் ஊடாக ஒரு இசைப் பாரம்பரியம், ஒரு நடனப் பாரம்பரியம், ஒரு நாடகப் பாரம்பரியம் வளர்த்தெடுக்கப்பட முடியுமா என்பதே முக்கியமாகும். மட்டக்களப்புக் கூத்தின் ஆட்டச் சிறப்புக் கருதி அதையே ஈழத்தின் தேசிய நடனமாக வடிவமைப்புச் செய்ய வேண்டிய தேவை, ஏற்றுக் கொள்ள வேண்டிய மனப்பாங்கு எமக்கு அவசியம்.

Page 48
82 மெளனம்
சி. மெளனகுருவின் பணிகள்
பாடசாலை மாணவனாக கூத்தில் நுழைந்த மெளனகுரு அவர்கள் பல்கலைக் கழகத்தில் வித்தியானந்தனின் கூத்துக்களில் பிரதான பாகம் ஏற்று ஆடுகிறார். பட்ட மேற்படிப்பிற்கு மட்டக்களப்புக் கூத்தையே ஆய்வுப் பொருளாக்குகின்றார். அவரே முதன் முதலாக ஒரு பிரதேசக் கூத்தினை கலாநிதிப் பட்ட ஆய்வுக்கு துணிந்து தேர்ந்தெடுத்தார். அது மட்டுமல்லாமல் இராவணேசன்' எனும் புதிய கூத்தையும், சமகால பிரச்சினையை (சாதி, இன, மத, வர்க்க பேதம்) கூத்து வடிவத்தினுள் புகுத்தி, 'சங்காரம்' எனும் நவீன கூத்தையும் தயாரித்துள்ளார். தனது நிருத்திய நாடகங்களிலும் சிறுவர் நாடகங்களிலும் கூத்தாட்டங்களை இணைத்து புதிய கலைச்சேர்க்கையை ஏற்படுத்துகிறார். 'சக்தி பிறக்குது நாடகம் மூலம் கூத்தாட்டத்தையும் பரதத்தையும் இணைக்கின்றார். அதுமட்டுமல்லாமல் 80 களின் இறுதியில் 'ஈழத்தமிழர் நடனம்' எனும் நிகழ்ச்சியை கூத்தாட்டங்களை தனித்துவப்படுத்தி தயாரிக்கின்றார். இந்நடனங்கள் ஈழத்தமிழரின் தேசிய நடனமாக இவை முன்னெடுக்கப்படக் கூடியவை. ஒரு கல்விசார் புலமை மட்டத்தில் அடிவேரில் நின்று கொண்டே பரிசோதனை முயற்சிகளின் சாதக, பாதகங்களை உள்வாங்கி விமர்சனங்களை எதிர்கொண்டு அவரால் முன்வைக்கப்பட்ட கலைப்பிரேரணை தான் ஈழத்தமிழரின் தேசிய நடனம், இதை வெறும் மட்டக்களப்பு ஆட்டமாக கருதாமல் வடக்குக் கிழக்கு தமிழரின் - ஈழத்தமிழரின் தேசிய நடனமாக அங்கீகரிக்கப்பட வேண்டிய செயலை அரசும், அரசியல் வல்லாரும் செய்ய வேண்டும். இது அவரது முக்கிய பங்களிப்பாகும்.
கிழக்கு இசை
கிழக்கு மாகாணத்தில் கிராமங்கள் தோறும் காணப்படும் சடங்குகள், நாட்டார் கலைகள், கூத்துக்கள் என்பவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட ஓர் இசைக்கோர்வைதான் "கிழக்கு இசை" எனும் நிகழ்ச்சி. இங்கு பாரம்பரிய் வாத்தியங்களான தாரை, தப்பட்டை, பறை, தாளம், சல்லரி, கொம்பு, சங்கு, உடுக்கு என்பன பயன்படுத்தப்பட்டன. இதனை மேலும் "விருத்தி பண்ணி எமது இசைப் பாரம்பரியத்தை உருவாக்கும் முயற்சியிலும் மெளனகுரு அவர்கள் முனைந்தார். இம் முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கப் போகும் இசைஞர்கள் ஈழத்து இசையை உருவாக்கும் பேறு பெற்றவராவார்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 83
இன்னியம்
கிழக்குப் பல்கலைக்கழக நாடக விழாக்களிலும் ஒரு சில பட்டமளிப்பு விழாக்களிலும் எம்மண்ணுக்குரிய இசைப் பாரம் பரியத்துடனும் இசைக் கருவிகளுடனும் வேட உடுப்புடனும் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் இன்னியம்' எனும் குழுவை அரங்கேற்றி இருந்தார்கள். மேற்கத்தேய பாண்ட் இசைக்குழுவுக்கு மாற்றாக மெளனகுரு அவர்களால் இவ்வின்னியம் 90 களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்குழுவில் தாரை, தப்பட்டை, கொம்பு, பறை, சங்கு, உடுக்கு, தாளம், சல்லரி என்பவற்றுடன் மிருதங்கம், தவில் ஆகிய கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. முழு ஈழத்தையுமே பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கலை சேர்க்கையாக இது காணப்பட்டது. வெறுமனே தவில், நாதஸ்வரத்தை மட்டும் இணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் இன்னியக் குழுவை விட இதில் மண் வாசனை அதிகம் வீசியது. குழுவில் இணைந்தவர்களின் வேட உடுப்பு ஈழத்தமிழரின் பாரம்பரியத்தினைப் பறை சாற்றிற்று.
இவ் இன்னியக் குழுவை தமிழர் பிரதேசமெங்கும் அறிமுகப்படுத்த வேண்டிய கடமை அரசிற்கும், அரசியல் நடத்துவோர்க்கும் உண்டு.
நாடகப் பாரம்பரியம்
70களில் முன்வைக்கப்பட்ட 'தேசிய நாடகம்' எனும் வாதம் இன்று அடிபட்டுப் போய்விட்டது. ஏனெனில் தேசிய நடனத்துக்குரிய கட்டுக் கோப்புக்களை நாடக வடிவத்திற்குள் வைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அது ஒர் ஆக்கப்படைப்பு. அது பல்வேறு அம்சங்களை உள்வாங்கி இயங்கியல் ரீதியில் வளர்ச்சியுற்றுச் செல்வது. கடந்த 30 வருட நாடக வரலாற்றைப் பார்க்கின்ற போது தேசிய நாடகம் என்கின்ற எண்ணக்கரு ஓர் கற்பிதமாக அடிபட்டுப் போய்விட்டது. ஆனால் தேசிய நடனம் ஒரு சாத்தியமான விடயம். அது எம்மை அடையாளப்படுத்துகிறது. ஆனால் எமக்குரிய நாடகம் எனும்போது எமது கூத்துக்கள், இசை, எமது மொழி, எமது பிரச்சனை என்பன இணைந்து அதன் தனித்துவத்தைப் பேணும் அதேவேளையில், எமது நாடகப் பாரம்பரியம் எனும் போதுகூத்துக்கள் முதல்க் கொண்டு இசைநாடகம், வரலாற்றுநாடகம், இலக்கிய நாடகம் போன்றவை சுட்டிக்காட்டத்தக்கன. எனவே எதிர்காலத்தில் இவற்றை எல்லாம் சுருக்கப்பட்ட வடிவங்களாக- அருங்காட்சியக வடிவங்களாகப் பேணுவதிலும்ஆற்றுகை செய்வதிலும் எமக்குத் தேவை உண்டு. அந்த வகையில் இப்படியான சிந்தனைகளிற்கு வழி கோலியவரும் பேராசிரியர் சி. மெளனகுரு E6Ilits.

Page 49
84 மெளனம்
காலத்தால் செய்த பணிகள்
ஒரு அறிஞராக இலக்கியவாதியாக, ஆய்வாளனாக, இரசிகனாக, மூட நம்பிக்கையற்ற முற்போக்காளனாக மற்றும் சமூக மனிதனாக தனது இவ் அறுபது வருட வாழ்க்கையைத் தன் பணிகள் ஊடாக தன்னை தன் நாட்டுடன் இறுகப் பிணைத்துள்ளவர் மெளனகுரு அவர்கள். மெளனகுருவின் அரங்கு தனித்துவமானது. ஆட்டங்கள் நிறைந்தது. கலைத்துவமானது. சமூக மனிதரின் நெருக்கடிகளைப் பேசுவது. அவரது தேசிய நடனம் ஈழத்தவர்க்குரியது. அவர் உருவாக்கிய இன்னியக்குழு எம்மண்ணின் வாசனை வீசுவது. அவர் தொடக்கிய கிழக்கு இசை மற்ற இசைஞர்களால் ஈழத்து இசையாக வளர்க்கப்பட வேண்டியது. இவற்றுக்கும் மேலாக கூத்தியல் ஆய்வையும், அரங்க ஆவணப்படுத்தல்களையும் செய்ததில் அவரே முன்னோடி என்பது மிகையாகாது. இதுவே அவர் தமது காலத்தால் செய்த பணிகளாகும்.

மறைவாக நமக்குள்ளே.
(8s.f5dGJ560Ti B.A. (Hons) முன்னாள் மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர், மட்டக்களப்பு.
பேராசிரியர் மெளனகுருவிற்குள் மறைந்து கிடந்த திறமைகள் அனைத்தும் மறைந்து போய்க் கொண்டிருப்பனவும் மறைந்து போக இருந்தனவுமான மட்டக்களப்பின் கலைப் பொக்கிஷங்களைத் தேடி எடுத்து எதிர்கால தலைமுறையினர் சிந்திக்கவும் சுவைக்கவுமாக படையல் செய்வதில் பாய்ச்சப் பட்டிருப்பதனைக் காணுகிறோம். இவை இன்று நேற்றல்ல அவர் உயர் வகுப்பு மாணவனாக 1950 களின் கடைக் கூற்றில் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் பயின்ற காலத்திலிருந்தே இனம் காணப்பட்டன.
பேராசிரியர் தேடி ஆய்ந்த துறைகள் பலவாக இருந்த போதும் என்னைப் பொறுத்தவரை அவரோடு நெருங்க வைத்தது கூத்துக் கலையேயாகும். 1963ம் ஆண்டிலே அம்பாறை மாவட்டம் என்ற ஒன்று துண்டாடப்பட்டுத் தோற்றுவிக்கப்படும் வரை வடக்கே வாகரை - கதிரவெளி தொடக்கம் தெற்கே பாணமை - உகந்தை வரை கடலோரமாக நீண்டு பரந்து கிடந்ததுதான் அன்றைய மட்டக்களப்பு மாவட்டம். மட்டக்களப்பின் சகல சமய பொருளாதார கலாசார பாரம்பரியம் அனைத்தும் இப்பரப்பெல்லைக்குள் பொதுவானவையாகக் காணப்பட்டன. இதனால்தான் தெற்கே "தம்பிலுவில்" கிராமத்திலே பிறந்து வளர்ந்த என் போன்றோர்க்கும் மட்டக்களப்புநகரை அண்டிய சூழலில் வாழ்ந்த பேராசிரியர் மெளனகுருவுக்கும் பல்கலைக்கழகம் இணைதளமாக அமைந்தது. அவரது ஆற்றல் வலுவினை பல்கலைக்கழக மாணவனாக 1966/67ல் பேராதனையிலே அவரைச் சந்தித்த போது என்னால் காண முடிந்தது. நான் கண்டேன் என்பதை விட என்னைக் காணவைத்தார் என்பதே சாலப்பொருந்தும்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வித்தியானந்தனின் இறுதித் தயாரிப்பான "வாலிவதை" கூத்தின் நாயகன் வாலியாக என்னை இனம்

Page 50
86 மெளனம்
கண்டு தெரிந்ததோடு எனது பாடசாலையான தம்பிலுவில் மகாவித்தியாலயத்திலே என் சகமாணவனாக பல்கலைக்கழகம் புகுந்த திரு சிவதாசனை சுக் கிரீவனாக தேர்ந்தெடுத்து நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக அந்நாடகத்தினை பல்வேறு அரங்குகளில் மேடையேற்றிய பெருமை பேராசிரியர் வித்தியானந்தனோடிணைந்ததாக பேராசிரியர் மெளனகுருவிற்கும் உரித்தானதே. வாலி வதைக்கு முன் பல்கலைக்கழகத்தில் அரங்கேறிய "இராவணேசன்" நாடகத்திலும் பிந்திய காலப் பகுதிகளில் அங்கதனாக வேடமெற்று ஆடவும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த நாடகம் 1967 லிருந்து அரங்க மேறியபோதெல்லாம் பாத்திரப் பொருத்தம் கருதி தொடர்ந்து அதன் இறுதி மேடையேற்றம் வரை பேராசிரியர் மெளனகுரு என்னைப் பங்கு கொள்ளச் செய்ததனை நினைவு கூருகின்றேன். இவ்விரு நாடகங்களுடனும் அவருடன் நெருங்கக் கிடைத்த சந்தர்ப்பம் மூலமாகவே கூத்துக்கலையில் பேராசிரியர் மெளனகுருவின் ஆரம்பகால ஈடுபாட்டினை அவரோடு சேர்ந்து அசைபோடமுடிந்தது.
1959ம் ஆண்டில் பேராசிரியர் மெளனகுரு உயர்தர மாணவனாக இருந்த போது "பாசுபதாஸ்திரம்" எனும் கூத்தில் 'சிவவேடன் பாத்திரம் தாங்கி ஆடியபோது பேராசிரியர் வித்தியானந்தன், பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் பார்வையிடுகின்றனர். இதற்கு அண்ணாவியாராக வந்தாறுமூலையைச் சேர்ந்த செல்லையா அண்ணாவியார் செயற்பட்டார். இவரே பேராதனையில் தயாரிக்கப்பட்ட சகல கூத்துக்களுக்கும் அண்ணாவியாக இருந்தவராவார்.
பேராசிரியர் சரச்சந்திரா போன்றோர் சிங்கள கிராமிய கலைகளுக்கு பல்கலைக்கழக அந்தஸ்து கொடுத்துக் கொண்டிருந்த வேளை எமது கூத்துக்கலை அதற்கு எவ்வகையிலும் சளைத்ததல்ல என்பதனை எடுத்துக் காட்ட "பாசுபதாஸ்திரம்" பேராதனைப் பல்கலைக்கழக திறந்த வெளி அரங்கில் பேராசிரியர் வித்தியானந்தனின் பெருமுயற்சியால் மேடையேற்றப்பட்டது.
இந்நிகழ்வோடு பேராசிரியர் வித்தியானந்தனுடன் நெருங்கிப் பணியாற்ற மாணவத்தரத்திலிருந்தே மெளனகுருவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. இவ்வாய்ப்பு உச்சமட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்டது. உள்ளார்ந்த உருவாக்கங்கள் எல்லாம் மெளனகுருவினாற் செய்யப்பட அதன் பூரணத்துவப் பொலிவு பேராசிரியர் வித்தியானந்தனின் விலாசத்துடன் பரிணாமமடைகிறது.
1961 தொடக்கம் 1969 வரை நான்கு பெரும் கூத்துக்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் வித்தியானந்தனின் அனுசரணையோடு அரங்கேற்றம் பெற்றன. இவற்றிற்கான நாடகப் பிரதிமுதல், உடை, வாத்தியம், கதாபாத்திரத் தெரிவு நடிப்புமுறை ஆகிய சகல நுணுக்கங்களும் பேராசிரியர் மெளனகுருவின் உதிரத்தோடு உறைந்திருந்த கலைத்திறனின் வெளிப்பாடே என்பது அவை பல்வேறு மட்டங்களிலும் பாராட்டைப் பெற்ற போதே உணரத்தலைப்பட்டது.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 87
பேராசிரியர் வித்தியானந்தனின் கரிசனையும் கண்டிப்பான நெறியாள் கையும் இவற்றின் ரசனைத்தன்மை தெவிட்டி அலுத்துவிடாமல் பலரும் சுவைத்தமைக்கு அடிப்படைக் காரணங்களாயின. கிராமத்துக்களரியின் விரிந்து பட்ட நாடகப் பாங்கு அடிப்படை அம்சங்களை வகைக் கொன்றாகத் தெரிந்து மூலரசனை கெடாமல் குறுகிய நேரத்துள் ஆட வைத்தமை பேராசிரியர் வித்தியின் வழிகாட்டலே.
இவ்வழிகாட்டலின் கீழ் ஒருமணி ஒன்றரை மணி நேரத்துள் நாடகம் சுருக்கப்படுவதும், வட்டக்களரியில் ஆடியதை படச் சட்டமேடையில் சகலவித நவரச பாவங்களையும் முகத்திலும் அங்க அசைவுகளிலும் தேக்கி நடிக்க வைப்பதும் மெளனகுருவுக்கு பொறுப்பளிக்கப்பட்டவை. எனவே வடிவமைக்கும் அதேநேரம் தானே பிரதான பாத்திரமேற்று நடித்தமை எமது பின்னோக்கிய பார்வைக்குப் புலப்படுவன.
கர்ணன் போர், நொண்டிநாடகம், இராவணேசன், வாலிவதை ஆகியவற்றில் பல்வேறு புதிய உத்திகள் புகுத்தப்பட்டன. மெளனகுரு அவர்கள் முதல் மூன்றிலும் தானே பிரதான பாகமேற்று நடித்ததால் இராவணேசன் பிரதியை தானே எழுதினார். வாலி வதைக்கான பிரதியை தானே தயாரித்து நாடகத்தையும் பழக்கியிருந்தார். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் வேண்டியபோதெல்லாம் இவருக்கு உறுதுணையாயிருந்தார். இது அவர் முயற்சிக்கு மேலும் வலுவூட்டிற்று. பாரம்பரியமான பாணியில் தரு, தாளக்கட்டு, விருத்தம், கொச்சகம், கந்தார்த்தம் ஆகியன கூத்தின் அடிப்படை இலக்கணம் மாறாமல் சுருக்கிநறுக்கி வடிவமைக்கப்பட்டதோடு "அன்னை தமிழ்த்தாயே உன்னை வணங்கினோம். அம்மா." என்ற வாழி பாடல் ஒவ்வொரு கூத்து முடிவினும் பாடும் வழக்கம் பேரா.மெளனகுருவினால் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும்.
கூத்து அதன் கருதிய பலனை வெளிக்காட்ட வேண்டுமென்பதில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்ததன் காரணமாக கூத்து மரபும் வாசனையும் மிளிர்ந்து கொண்டிருக்கும் கிராமங்களுக்குச் சென்று பாசறையமைத்து அவற்றின் தேடலையும் பயிலுதலையும் ஒருங்குசேரச் செய்தார். இதற்கு உதாரணமாக நாம் பங்கு கொண்ட வாலி வதை பயில் நிலை காலத்துள் தம்பிலுவில் கிராமத்திலே பாசறையமைத்து தங்கியிருந்து கலைஞர்களையெல்லாம் சங்கமித்து திறமைகளை வெளிக் கொணர்ந்தமை அவர்தம் தேடலின் ரசனையை உணரவைக்கிறது. அந்தப் பாசறை நினைவுகள் இன்றும் இனித்துக் கொண்டிருக்கின்றன.
பேராசிரியர் வித்தியானந்தனின் மனதுக்கு மிகவும் பிடித்தவரும் அவரது பெருமதிப்புக்குரியவருமான இலக்கிய கலாநிதி வித்துவான் கமலநாதன் அவர்களது இல்லம் பயில் களமாகவும் ஒரு நாடகப் பாடசாலையாகவும் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு மாற்றமடையும். பேராசிரியர் தான் எப்போதெல்லாம் அங்கு வந்து தங்குதற்கு அட்டவணைப்படுத்துகிறாரோ அப்போதெல்லாம்

Page 51
88 மெளனம்
பேராசிரியர் மெளனகுருவுக்கு அவசர அறிவித்தலும் எமக்கெல்லாம் தந்தியும் வந்து சேரும். செல்லையா அண்ணாவியார் உட்பட கலைஞர்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு உரிய இடத்தில் சந்திக்க வேண்டிய பொறுப்பு பேராசிரியர் மெளனகுருவைச் சார்ந்ததாகும். ஏதாவது இடறுதல்கள் இவ் ஒழுங்குகளில் ஏற்படுமிடத்து பேராசிரியர் வித்தியானந்தனின் அன்பிழையோடிய கண்டிப்பும் ஏச்சும் எமக்கு மறைவிலே நின்று இரைமீட்டுச் சிரித்துக் கொள்ளக் கிடைக்கும் துணுக்குகளாகும்.
பல்கலைக்கழகத்திற்கு வெளியே பாடசாலைகளில் மாணவர் மத்தியில் கலையம்சங்களை பயிற்றுவதில் பெரும் பணியாற்றியமை நாம் அறியக்கிடப்பன. மாணவியர் கூத்திலே தம்மை இணைப்பதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த ஆசிரியை திருமதி திரவியம் இராமச்சந்திரன் ஆவார். இவர் வின்சன் மகளிர் மாணவியரை கூத்துக்கலைக்குள் உள்ளிழுக்க பேராசிரியர் மெளனகுரு முழு ஒத்தாசையும் வழங்கி பலநாடகங்கள் மேடையேறி புகழ் சேர்க்க காலாயிருந்தார். வின்சன் மகளிர் பாடசாலை கூத்துக்குப் பேர் பெற்ற காலம் மறக்க முடியாதது, அக்கல்லூரி மாணவியர்"உத்தமன்பரதன்" "கும்பகர்ணன்" "செஞ்சோற்றக்கடன் தீர்த்த செம்மல்" (கர்ணன்) ஆகியவற்றைத் தயாரித்தளிக்க பெரும் பங்காற்றியவர். பிரதியாக்கம், ஆடற்பயிற்சி, நடிப்புப் பயிற்சி, செம்மை செய்தல் ஆகியன அவரது பங்களிப்பால் மெருகேறியவை.
புராண, இதிகாச அடியொற்றி ஆக்கப்பட்ட கூத்துக்களின் வளர்ச்சிப் படியில் பாரம்பரியத்திலிருந்து முற்றும் மாறுபட்ட சமுதாயப் பிரக்ஞையுள்ள எண்ணக்கருவை புகுத்தி "சங்காரம்" என்ற நாடகம் 1969ல் யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டது. இது ஒரு புதிய பாய்ச்சல்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அவர் இணைந்து செயலாற்றத் தொடங்கிய நாள்முதல் பல்கலைக்கழகம் சமுதாயத்தோடு இணைந்திருக்க வேண்டுமென்பதில் மிகவும் கரிசனை கொண்டிருந்தார். நுண்கலைத் துறைத் தலைவராயிருந்தமை இதனை நடைமுறைச் சாத்தியமாக்க உதவிற்று. தானே முன்னின்று உருவாக்கிய நுண்கலைத்துறையூடாக புதிய மாணவர் தலைமுறைக்கு ஆழ்ந்த ஆய்வுணர்வை ஊட்டினார். இது மூலை முடுக்குகளில் முடங்கிக் கிடந்த கலைப் பொக்கிஷங்களுக்கு பல்கலைக்கழக வாசனை வீச வைத்தது.
கிழக்குப் பல்கலைக்கழகம் உலக நாடக தினம் கொண்டாடும் போதெல்லாம் ஒரு கலை வழிந்தோடும் கிராமமாகவே அந்த வளாகம் காட்சியளிப்பது நாம் தவறாது கண்டு களிக்கும் அம்சமாகும். அங்கு தான் அவரால் உருவாக்கப்பட்ட இன்னியமும் அதைத் தொடர்ந்து பல ரக இசைமாலை செறிந்த கிழக்கிசையும் எல்லோர் இதயத்தையும் வருடக் கிடைத்தன. பிரதேச மட்டங்களாக தொட்டும் தொடர்ந்தும் மிளிர்ந்த கலை நிகழ்வுகள் பல்கலைக்கழகத்தில் சங்கமித்து ஆத்ம திருப்திபெற பேராசிரியர் மெளனகுரு ஆற்றிய பணி அளப்பரியது.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 89
இவை ஆக்க உருப்படிகளாக இருக்க தேசிய ரீதியில் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் செய்ய காலத்துக்குக் காலம் அவருக்கு வாய்ப்புகள் வந்து சேர்ந்தன. பேராசிரியர் வித்தியானந்தனின் தொடர்பும், தேசிய ரீதியில் 1968 தொடக்கம் 1976 வரை தன்னை ஈடுபடுத்த வாய்ப்பாயிற்று. அதனால் "கலைக்கழக நடாகத்துறை" குழு உறுப்பினராக கடமையாற்றினார். பேராசிரியர் வித்தியானந்தனுக்கு உதவியாக கூத்துக்களைத் தெரிதல் திருத்துதல் ஆகிய பணிகள் மன்னார் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு அவ்வப்போது சமூகமளித்து ஆற்றப்பட்டன.
இவற்றுக்குப் புறம்பாக எங்கெல்லாம் மட்டக்களப்பு பிரதேசத்தின் சமூக, சமய, கலாசார பாரம்பரியங்கள் அஸ்தமனம் நோக்கி அமுக்கப்படுவதனை அவதானித்தாரோ அங்கெல்லாம் தான் வளர்த்துவிட்ட இளைய தலைமுறை யினரைத் தட்டிக் கொடுத்து ஆய்வுக் களம் அமைத்து அவற்றுக்குப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கி உயிரோட்டமுள்ள கலைகளாக மிளிர வைத்துக் கொண்டிருக்கிறார். காலத்துக்குக் காலம் அவர் செய்த ஆய்வுகளும் படைப்புகளும் அவர் திறமைக்கு கட்டியம் கூறிக் கொண்டிருக்க ஒன்றைவிட ஒன்று மிஞ்சுகிறது என்ற தோரணையில் அவர் தொட்டுச் செல்லும் ஒவ்வொரு செயலும் புதிய தலைமுறையினருக்கு ஆய்வுப் பாதையைத் திறந்துவிடுகிறது.
இரண்டாவது உலக இந்து மகாநாட்டின் ஒரங்கமான மட்டக்களப்பு பிரதேச மாநாட்டில் அவர் தொகுத்த மாநாட்டு மலரும், அங்கே அருங்காட்சியகமாக மட்டக்களப்பின் சமய சமூக கலாசார புராதன பாரம்பரியங்களின் அடையாளங்கள் நிரற்படுத்தப்பட்டமையும் கண்டோர் வியக்கும் வண்ணம் இருந்தமை பேராசிரியரின் ஆய்வு அனுபவத்தோடு கூடிய தேடலின் படைப்புக்குச் சான்றாகின்றது. இது பலரதும் வேண்டுகோளுக்கமைய ஒளிப்பதிவு செய்யப்பட்டு உலகளாவிய ரீதியில் கண்டு ரசிக்க கால் கோள் நடப்படுதல் கண்டு உவகையுறுகிறோம்.
இத்தகைய வளங்கள் நிரம்பப் பெற்ற அறிஞர் பெருமகன் அகவை அறுபதை நிறைவு காணும் இந் நந்நாளில் எம் அகம் பூத்து வாழ்த்து மலர்தூவும் அதேவேளை அவர்தம் ஆயுள் மேலும் பல்லாண்டுகள் சுகம்தேக்கி வாழ எல்லாம் வல்ல இறைவனை மிகவும் சுயநலத்தோடு இறைஞ்சுகிறோம்.

Page 52
பேராசிரியர் சி. மெளனகுரு அவர்களது நாடகப்
படைப்பாக்கம் :- ஓர் அனுபவப் பகிர்வு
- சு. சிவரெத்தினம் (B.A.Hons)
பேராசிரியர் கா. சிவத்தம்பி பழையதும் புதியதும் முன்னுரையில் பேராசிரியர் சி.மெளனகுரு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "ஏறத்தாள பதினைந்து வருடகாலம் யாழ்ப்பாணத்திலிருந்து அங்கு வளமான அறுவடைகள் பலவற்றைச் செய்துவிட்டு இப்பொழுது மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்" வளமான அறுவடைக்கு எவ்வளவு அறிவும், உழைப்பும், திறமையும், அர்ப்பணிப்பும் தேவை என்பதனை அவரிடம் பயிலும் போதுதான் விளங்கிக் கொள்ள முடியும்.
பேராசிரியர் மெளனகுரு இரு பரிமாணங்களை உடையவர்
1. அறிஞர்
2. கலைஞர்
இங்கு நான் அவருடைய கலை ஆளுமையினை எனது அனுபவத்தின் வாயிலாக கூற முனைகின்றேன்.
பேராசிரியரிடம் நாடகம் பயில்பவர்கள் அவர் பின்வரும் விடயங்களில் மிகக் கறாராக செயற்படுவதனை அவதானிக்கலாம்.
1. நாடக ஆர்வத்தைப் பேணுதல்
2. மரபினை நவீன ரசனைக்கு உட்படுத்துவதும், நவீனவடிவங்களில்
மரபினை பயன்படுத்துவதும்.
3. ஒரு நாடகத்தை கலைப்படைப்பாக்க உருவாக்குதல்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 9
1. நாடக ஆர்வத்தைப் பேணுதல்
மட்டக்களப்பில் பேராசிரியரிடம் நாடகம் பயின்றவர்கள் நாடகத்தில் பயிற்சி பெற்றவர்களோ அல்லது தொழில்முறை ரீதியாக நாடகத்தை நடிப்பவர்களோ அல்ல. பெரும்பாலான அவருடைய மாணவர்களும் சில நாடக ஆர்வமுடையவர்களும் மாத்திரமே. இவர்களின் நாடக ஆர்வத்தை மேலும் வளர்த்தெடுத்து அவர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தி ஒரு நல்ல கலைப் படைப்பை உருவாக்க பின்வரும் அணுகுமுறைகளைப் பின்பற்றுவார்.
1. கடமைகளைப் பகிர்ந்தளித்தலும், திட்டமிடப்பட்ட ஒத்திகைகளும்
2. ஒழுக்கமும் கட்டுப்பாடும்.
1.1. கடமைகளைப் பகிர்ந்தளித்தலும் திட்டமிடப்பட்ட
ஒத்திகைகளும்
பேராசிரியருடைய நாடகங்கள் பயிற்சிப்பட்டறைகளின் போதே உருவாகின்றன. இன்ன நாடகம் பழக்கப் போகின்றேன் நடிகர்கள் வந்து இணைந்து கொள்ளுங்கள்' என்று விளம்பரப்படுத்தி நாடகம் பயிற்றுவிப்பவர் அல்ல அவர். பயிற்சிப் பட்டறைகளுக்கான அழைப்பே விடப்படும். நாடக ஆர்வமுடையவர்கள் எத்தனை பேரென்றாலும் அதில் கலந்து கொள்ளலாம். எந்த ஒருவரையும் பயிற்சிப் பட்டறைகளுக்கு நீர் பொருத்தமான ஆள் இல்லை வரவேண்டாம் என ஒரு போதும் அவர் கூறியது கிடையாது. பயிற்சிப்பட்டறைகளில் ஒழுங்காக ஆர்வமுடன் கலந்து கொள்வதே அவருக்கு முக்கியமானதாகும். ஒருவர் பாடவேண்டும், நடிக்க வேண்டும், ஆடவேண்டும், நல்ல குரலுடன் பேசவேண்டும் என்ற எந்த ஒரு தகுதிப்பாடுமே அவருக்குத் தேவையில்லை. "இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்" என்பதே அவருடைய நோக்கமாகும். இதற்கேற்ப ஒவ்வொருத்தருடைய திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஏற்ற ஒரு இடத்தினை தான் பழக்கப்போகின்ற நாடகத்தில் வழங்கியே திருவார். அது நாடக நடிப்புடன் தொடர்பானதாகவோ அல்லது நாடகத் தயாரிப்புடன் தொடர்பானதாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும், நாடக ஆக்கம் தொடர்பான நுட்பங்களை கற்றுக் கொள்ள அது வாய்ப்பாக இருக்கும்.
பிற்காலங்களில் இந்த அனுபவம் நாடக நெறியாழ்கைக்கும் விமர்சனங்களுக்கும் ஆய்வுகளுக்கும் அடிப்படையாய் அமைகின்றது. இன்று ஈழத்தில் தலைசிறந்த நாடக நெறியாளர்களாகவும், நாடக விமர்சகர்களாகவும், நாடக ஆய்வாளர்களாகவும் இருப்பவர்கள் பேராசிரியரின் நாடகப் பயிற்சிப் பட்டறைகளிலிருந்து உருவானவர்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய தொன்றாகும்.

Page 53
92 மெளனம்
நாடக ஆர்வலர்களை ஒன்றிணைத்துநாடகத்தை உருவாக்க முனையும் போது கூடுதலான ஒத்திகைகள் தேவைப்படுகின்றன. அந்த ஒத்திகைகள் நடிகர்களுக்கும் நெறியாளனுக்கும் சலிப்பை ஏற்படுத்தா வண்ணம் அமைய வேண்டும. மேயர் ஹோல்ட் கூட ஸ்ரனிஸ்லொவ்ஸ்கி நடிகர்களை கடுமையாக வருத்துவதாகவும் ஒரு நாடகத்தை உருவாக்க பல மாதங்கள் எடுப்பதாகவும் விமர்சித்து ஸ்ரனிஸ்லொவ்ஸ்கியின் நாடகக் குழுவிலிருந்து வெளியேறினார்.
நடிகர்களை சலிப்படைய வைக்காமல் உற்சாகமாக நாடகத்தில் ஈடுபட வைப்பதில் நெறியாளரின் பங்கு முக்கியமானதாகும். முன்பு செய்த விடயங்களைச் செய்து திருத்திக் கொள்ளவும் வேண்டும். அதே நேரம் தாம் தொடர்ந்தும் இதைத்தானே செய்து கொண்டிருக்கின்றோம் என்ற மனநிலையும் நடிகர்களுக்கு உருவாகக் கூடாது. அவர்கள் ஒவ்வொரு ஒத்திகைகளின் போதும் புதிதாக ஒன்றைப் படைப்பதாக உணரவேண்டும். அப்போதுதான் நடிகர்கள் உற்சாகம் பெறுவதுடன் நாடகப்படைப்பாக்கமும் ஒரு கலைப்படைப்பாக வெளிவரமுடியும். பேராசிரியரிடம் அந்தத்திறனும் அதைத்திட்டமிட்டு வளர்த்துக் கொண்டு எப்படிச் செல்ல வேண்டும் என்கின்ற கலைத்துவ கற்பனையும் இருக்கும்.
இராவணேசன் நாடகம் மிக நீண்ட நாளைய ஒத்திகையினை எடுத்துக் கொண்ட ஒன்று. அதற்குக் காரணம் அது ஆடலையும் பாடலையும் அடிப்படையாகக் கொண்ட மரபுரீதியான ஒரு நாடகமாகும். அதில் நடித்தவர்களில் இராவணனாக நடித்த ஜெய்சங்கர் பேராசிரியரிடம் ஏற்கனவே நடனம் கற்றிருந்தார். இராமனாக நடித்த பரமானந்தம் மரபுக் கூத்தில் ஆடிப் பாடிப் பழக்கப்பட்டவர். அங்கதனாக நடித்த கனகரெட்னம் பேராசிரியரிடம் சங்காரம் நாடகத்தில் நடனப்பயிற்சி பெற்றவர். மற்றவர்கள் எல்லோரும் ஆடல், பாடல் அரிச்சுவடிகளையும் அப்போது தான் பழகவேண்டியிருந்தது. ஆனால் எந்த ஒரு ஒத்திகையின் போதும் ஆட்ட அரிச்சுவடியினை பழகியவர்களுக்கோ அல்லது பழகிக் கொண்டிருப்பவர்களுக்கோ சலிப்பு ஏற்பட்டது கிடையாது. ஏனெனில் பேராசிரியர் நடித்துக் காட்டும்போது எங்களிடம் உண்டாகும் ரசானுபவத்தைப் போலநாங்கள் நடிக்கும் போது உருவாக்க முடியாமல் இருந்தது. அந்தத் திறனை எவ்வாறெனினும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற ஆவல் எங்கள் மனங்களில் ஊன்றி தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபட தூண்டுதலாக அமையும். ஒரு ஒத்திகை முடிந்தால் அடுத்த ஒத்திகை எப்போது எனும் கேள்வியுடன்தான் இருப்போம். பேராசிரியரும் எங்களுடைய விருப்பங்களை ஈடுசெய்யும் வண்ணம் புதிது புதிதாகத் திட்டமிடுவார்.
திட்டமிட்ட விடயத்தை செய்து பார்ப்பார். அது நன்றாக இருந்தால் அதைத் தொடர்வார் இல்லாவிட்டால் அதை விட்டு விட்டு மாற்று யோசனைகளை முன்வைத்து செயற்படுவார். அவர் திட்டமிட்டு ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் போது மற்றவர்கள் குறுக்கிட்டு எதுவும் கூறக்கூடாது. அதை அவர் விரும்புவதும் இல்லை. ஆனால், செய்து முடித்து ஒய்வாக இருக்கும் போது அதன் சரி,

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 93
பிழைகளை பேராசிரியரிடம் கலந்துரையாடுவோம் அவரும் அதை மிக விருப்பமாக ஏற்றுக் கொள்வார்.
இராவனேசனின் காட்சிப்படுத்தலில் கொடிகள் தாங்கிவரும் கோரஸ்சுகள் சரியான கஸ்டப்பட்டிருக்கின்றார்கள். பேராசிரியரின் கற்பனையை காட்சி ரூபப்படுத்த வேண்டியவர்கள்களாக அவர்கள் இருந்தார்கள். இதனால் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு கற்பிப்பது போன்று படங்கள் வரைந்து குச்சிகளைக் கொண்டு யார் எந்த இடத்தில் நிற்க வேண்டும் எவ்வாறு நகர வேண்டும் என்கின்ற விடயங்களையெல்லாம் ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ப அழகாக விளங்கப்படுத்துவார். அவ்வாறு அது திட்டமிட்டு அழகாக செய்யப்படாமல் இருந்திருக்குமாயின் பிரமாண்டமான இராவணேசன் படைப்பினை உருவாக்கியிருக்க முடியாது.
இதுபோன்றுதான் பாடல்களும், ஆட்டங்களும் அமையும். நாங்கள் இராவணேசன் புத்தகத்தினையே முடிவான ஒரு பிரதியாகக் கொண்டிருப்போம். பேராசிரியர் இந்த இடத்தில் இவ்வாறு ஒரு காட்சியினை அமைத்தால் நன்றாக இருக்கும் என்பார். செய்து பார்ப்பார் பிடித்திருந்தால் சேர்த்துக் கொள்வார். இவ்வாறுதான் இந்திரஜித்துடன் இலக்குமணனை போருக்கு அனுப்பும் போது இராமர் கூறுவதாக வரும் தம்பி இலக்குமணா இந்திரஜித்தன் தனை வென்று வா போடா, தம்பி உன்தன்னை யார் வந்தெதிர்த்தாலும் நானறிவேன் அவர் வீரம் எனும் பாடலும், ஆடலுமாகும் அந்த நாடகத்தில் வரும் அழகான பாடல்களில் ஒன்றாகவும் மெல்லிய அசைவோட்டமான ஆட்டத்தினையும் கொண்டதாக அது அமையப்பெற்றது.
1.2 ஒழுக்கமும் கட்டுப்பாடும்
நாடகம் ஒன்றைத் தயாரித்து அதனை மேடையேற்றுவதற்கு நடிகர்களின் ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிகமுக்கியமானதாகும். பேராசிரியர் நேர ஒழுங்கிலும் ஒத்திகையில் கூறப்படுவதை, செய்யப்படுவதை ஞாபகத்தில் கொண்டு மறக்காமல் செய்ய வேண்டும் என்பதில் மிகக் கண்டிப்புடன் செயற்படுவார்.
ஒரு குறிப்பிட்ட நடிகர் ஒத்திகைக்கு காலம் தாழ்த்தி வருவாராக இருந்தால் அந்நடிகரின் வருகைக்காக அந்த நாடகத்துடன் தொடர்புபட்ட அத்தனை நடிகர்களும் காத்திருக்க வேண்டி ஏற்படும். இது மற்ற நடிகர்களுடைய கஸ்டங்களை மதிக்காத பொறுப்பற்ற தன்மையாகும் என்பார். இந்த பொறுப்பற்ற தன்மையினால் நடிகர்களுக்கிடையிலான கூட்டுறவு இல்லாமல் போவதுடன் ஒழுங்காக ஒரு நாடகத்தை பயிலவும் முடியாது என்பார். இதனால் ஒத்திகைக்கு செல்ல முடியாத சந்தர்ப்பங்களிலும் காலம் தாழ்த்திச் செல்கின்ற சந்தர்ப்பங்களிலும் பேராசிரியரிடம் இத்தனை மணிக்குத்தான் வரமுடியும் என்பதை ஏதாவது வழியில் கட்டாயம் முன்கூட்டியே கூறிவிடுவோம். இதனால்

Page 54
94 மெளனம்
அன்றைய ஒத்திகையினை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை அவரும் முன்கூட்டியே திட்டமிடுவார். இதனை மற்ற நடிகர்களுக்கும் தெரியப்படுத்தி ஒத்திகையில் வீண்சிரமங்கள் ஏற்படாமல் ஒத்திகையினை செய்து முடிப்பார். இந்த ஒழுங்கினையும், நேரக்கட்டுப்பாட்டினையும் நாடகத்துடன் தொடர்புபபட்ட எல்லா விடயங்களிலும் பேணுவார். (இது நாடகத்தில் மட்டுமல்லாது அவருடைய விரிவுரைகள், கருத்தரங்குகள், தமது அன்றாட வாழ்க்கை அலுவல்கள் என எல்லா விடயத்திலும்) அதாவது நாடகம் எத்தனை மணிக்கு ஆரம்பிக்க வேண்டும், எத்தனை மணிக்கு முடிய வேண்டும், எத்தனை மணிக்கு நடிகர்கள் தங்கள் ஒப்பனைகளைச் செய்து கொண்டு தயாராக வேண்டும் என்கின்ற அத்தனை விடயத்திலும் மிகக் கண்டிப்பாகச் செயற்படுவார். இந்த ஒழுங்கினை யார் மீறினாலும் அவர் நல்லா பேச்சுவாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
அவருடனான நாடக அனுபவத்தில் ஒருமுறை நேர ஒழுங்கு தவறியமைக்காக பேச்சுவாங்கியதை மறக்கமுடியாது. "புதியதொரு வீடு” நாடகத்தை திருகோணமலையில் மேடையிடச் சென்றிருந்தோம். மட்டக்களப்பிலிருந்து முதல் நாள் சென்று அங்கு ஒரு பாடசாலையில் அன்றிரவைக் கழித்துவிட்டு அந்தப் பாடசாலையிலிருந்து கிட்டத்தட்ட 500 மீற்றர் தூரத்திலுள்ள ஒரு மண்டபத்தில்தான்நாடகம் மேடையிடப்பட வேண்டும். பேராசிரியர் அன்றிரவே எத்தனை மணிக்கு பாடசாலையிலிருந்து மண்டபத்துக்குச் செல்ல வேண்டும். எத்தனை மணிக்கு ஒப்பனை எல்லாம் செய்து நடிகர்கள் ஆயத்தமாக வேண்டும், எத்தனை மணிக்கு நாடகம் ஆரம்பமாக வேண்டும் என்று எல்லாவற்றையும் கூறிவிட்டார்.
அடுத்தநாள் மண்டபத்துக்குச் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்த போது எனக்கும், அன்பழகனுக்கும், தயானந்தனுக்கும் அறிமுகமான இரு ஆசிரியர்கள் எங்களைச் சந்திப்பதற்கு நாங்கள் இருந்த பாடசாலைக்கு வந்தார்கள். அவர்களிடம் கதைக்காமல் மண்டபத்துக்குச் செல்வதும் எங்களுக்கு முறையாகத் தெரியவில்லை. குறித்த நேரத்துக்குள் ஒப்பனை செய்து நாடகத்துக்கு தயாராகி விடுவோம் என்ற நம்பிக்கையும் எங்களிடம் இருந்தது. அதனால் 10-15 நிமிடம் அவர்களுடன் கதைத்துவிட்டு அவசர அவசரமாக மண்டபத்துக்குச் சென்று கொண்டிருந்தோம். எதிரே ஒரு ஆட்டோ வந்து எங்களுக்கு அருகில் வந்துநின்றது. பேராசிரியர் வேகமாக உள்ளிருந்து இறங்கி "இப்ப எத்தனை மணி ஏறுங்கோ" எனச் சொன்ன சொல்லில் மூவரும் ஆட்டோவில் ஏறிக் கொண்டோம். ஆட்டோக்காரரிடம் "இந்தா காசு" என ஒரு தொகை பத்துருபா நோட்டுக்களை எடுத்துக் கொடுக்க அவர் தனக்குத்தேவையான காசை எடுத்துக் கொண்டு மிகுதியைத் கொடுத்த போது "வேண்டாம் போ" என ஆத்திரத்துடன் கூறி விட்டு ஆட்டோவை விட்டு நடக்கத் தொடங்கி விட்டார். ஆட்டோ எங்களை ஏற்றிக் கொண்டு வரும் போது திரும்பிப்பார்த்தோம். Sirநடந்து வாவது மனதுக்கு கஸ்டமாக இருந்தது. நின்று Sir உடன் வருவதற்கும் பயம்,

பேராசிரியர் சி, மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 95
அதனால் ஆட்டோவில் மண்டபத்துக்குப் போய் சேர்ந்து ஆயத்தமாகி குறித்த நேரத்துக்கும் நாடகத்தை ஆரம்பித்து விட்டோம். ஆனால் அன்று எங்களுக்கு மனத்துக்குள் ஒரு சங்கடம் Sirஐ இவ்வாறு அலைய வைத்து விட்டோமே என்று. இதன் பிறகு ஒருபோதும் குறித்த நேரத்தை எக் காரணம் கொண்டும் தவறவிடுவதில்லை. ஒரு நாடகத்தை நான் பயிற்றுவிக்கும் போதுதான் Sir ஏன் நேரத்தில் இவ்வாறான கண்டிப்புடன் செயற்பட்டார் என்பதனை அறிந்து கொள்ள முடிந்தது. குறித்த நேரத்துக்கு ஒரு நடிகர் ஒத்திகைக்கு வரவில்லை என்றால் அது நெறியாளரை மனச்சிக்கலுக்கு உள்ளாக்கி அன்றையப் படைப்பின் முழுமையை உணரமுடியாமல் போய் விடுவதோடு நெறியாளரால் கலைத்துவமாக கற்பனை செய்து புதிய படைப்பாக்கத்தினையும் உருவாக்க முடியாமலும் போய்விடுகின்றது. இது எந்த ஒரு நெறியாளரையும் பொறுமையிழக்கச் செய்யும் ஒன்றுதான். எங்களுடைய செயல் பேராசிரியரை பொறுமையிழக்கச் செய்ததில் ஒன்றும் தவறில்லை.
2. மரபினை நவீன ரசனைக்கு உட்படுத்துவதும், நவீன
வடிவங்களில் மரபினை பயன்படுத்துவதும்
இவ்விடயம் இரண்டுவிதமான செயல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
1. மரபினை பயில்நிலையில் பேணுவதற்கான ஆளணியினரை
உருவாக்குதல்.
2. வெகுஜன மட்டத்தில் மரபார்ந்த விடயத்தில் ரசனையினைத்
தோற்றுவித்தல்.
2. மரபினை பயில்நிலையில் பேணுவதற்கான ஆளணியினரை
உருவாக்குதல்
இவ்விடயம் சம்மந்தமாக மிக சுவாரஸ்யமான அனுபவங்கள் எங்களுக்கும் பேராசிரியருக்கும் உண்டு. நாங்கள் கிராமத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியிருந்தாலும் எங்களுடைய ரசனைகள் எல்லாம் வெகுஜன தொடர்புச் சாதனங்களின் வழி கட்டுண்டவையே. இசை என்றால் அது சினிமா இசை, இசைக்கருவிகள் என்றால் ஒகன், கிற்றார்,றம்:நடனம் என்றால் டிஸ்கோ, விறேக்; நாடகம் என்றால் சினிமாத்தனமான மேடை நாடகங்கள் என்று பார்க்கும் மிக மோசமான ரசனையைக் கொண்டிருந்ததோடு அதையே மிக உயர்ந்தது என எண்ணியிருந்தோம். கூத்து, வசந்தன், பாடல்களும் ஆடல்களும் அவற்றின் இசைக்கருவிகளும் பட்டிக்காட்டானவை என எண்ணியிருந்ததோடு எம்மைப்போல்

Page 55
96 மெளனம்
படித்தவர்களும் நாகரீகமானவர்களும் இவற்றை மதிக்க மாட்டார்கள் என்றும் நம்பியிருந்தோம்.
இந்த நம்பிக்கைகளுடன் தான் 1991 இல் பல்கலைக்கழகத்துக்குச் சென்றோம். நாங்கள் கலை கலாசாரத்தின் முதல் தொகுதி மாணவர்களாக இருந்ததன் காரணத்தினால் நாங்கள் படிப்பதற்கு அரசியல், தமிழ், நுண்கலை, மெய்யியல், பொருளியல் ஆகிய பாடங்கள் மட்டுமே இருந்தன. நுண்கலை பாடசாலையிலும் கற்கவில்லை எங்களுக்கும் புதுப்பாடமாக இருக்கின்றது என்ற வகையில் தவிர்க்க முடியாமல் நுண்கலையையும் ஒரு பாடமாக எடுத்தோம். பேராசிரியர் விரிவுரை எடுக்க வந்து எங்களைப் பற்றி அறிமுகமான பின்பு "நாம் சில இசைக் கருவிகளை வாசிக்க கற்றுக் கொள்வோமா, அதற்கான ஏற்பாட்டையும் நான் செய்கின்றேன்" என்றார். நாங்கள் உடனே "ஓம்" என்றோம். "முதலில் எதைக்கற்பது" எனக் கேட்டார். அதற்குநாங்கள் "கிற்றார், ஒகன்" என்று கூறினோம். பேராசிரியர் சிரித்துவிட்டு "பறை, உடுக்கு, மத்தளம் என்பவை இசைக்கருவிகள் இல்லையா, அவைதானே எமதுபாரம்பரியத்துடன் பிணைந்தது. அதுதான் எங்களுடையது" என்பது பற்றி மிகத் தெளிவான விளக்கத்தையும் தந்து "அவற்றை முதலில் கற்போம்" என்றும் கூறினார்.
அடுத்தவருடம் கண்ணகியம்மன் குளிர்த்திப் பாடல்களை ஒரு இசை அளிக் கையாகத் தயாரித்த போது நாங்கள் அதில் மிக ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டதோடு எங்களுடைய வாயில்களிலெல்லாம் குளிர்த்திப் பாட்டு வரிகள் எங்களை மறந்து பாடிக் கொண்டிருக்கும் அளவுக்கு அதன் இசை லயம் எங்கள் மனங்களில் படிந்தது. ஆனால் இதற்கு முன்பு கண்ணகியம்மன் சடங்கில் என்ன நடக்கின்றது என்றே தெரியாதவர்களாக இருந்திருந்தோம். கோயிலுக்குப் போனால் கோயில் வீதியைச் சுற்றித்திரிந்து விட்டுப் போகும் பொறுப்பற்ற இளைஞர்களாய் இருந்த நாங்கள் அதன் பிறகு கண்ணகியம்மன் சடங்கில், அதனுடைய இசைலயம் எவ்வாறு இருக்கின்றது, இந்தக் கோயிலுக்கும் மற்றக் கோயிலுக்கும் இடையிலான வேறுபாடு என்ன? இந்தப் பாடலும் அந்தச் சடங்கு நிகழ்வுகளும் தரும் ஆத்மார்த்த நிலை என்ன என்று அறிவார்ந்து உணர முயற்சிப்பதோடு மட்டக் களப்பின் பண்பாட்டு வேர்களையும் அவற்றில் அடையாளம் காண முயற்சிக்கும் இளைஞர்களாக மாறினோம்.
இதுபோன்றே கூத்தினுடைய பாடல்களையும் ஆடல்களையும் குறிப்பிட வேண்டும். 1994இல் கொழும்பில் நடந்த கருத்தரங்கொன்றில் பேராசிரியர் மட்டக்களப்புக் கூத்தில் ஒவ்வொரு பாத்திரங்களுக்குமான ஒவ்வொரு ஆட்டமும், தாளமும் இருக்கின்றது என்று அவற்றை ஆடிக்காட்டி விளங்கப்படுத்திய போதுதான் கூத்தில் இவ்வாறு லயமும், அழகும், உணர்வும் நிறைந்த ஆடல்கள் உண்டு என்பதை அறிந்து கொண்டேன். இதற்கு முன்பு நான் பார்த்த கூத்து ஆட்டம் என்பது லயமற்ற வெறும் குதிப்பாகவும் பாடல்கள் இசையற்ற வெறும் கத்தல்களாகவுமே பார்த்துக் கேட்டிருக்கின்றேன். கூத்தாட்டத்தின்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 97
அழகினையும் லயத்தினையும் பேராசிரியரின் ஆட்டம் மூலமாகவே அறிந்து கொண்டேன். நிட்சயமாக அவருக்குப் பின்பு அவரைப் போல் ஆடுவதற்கு மட்டக்களப்பில் எவரும் இல்லை என்பதே எனது எண்ணமாகும்.
பேராசிரியரின் கூத்து ஆட்டத்தில் லயித்ததன் காரணத்தினால் கூத்து ஒன்று பழகி ஆடவேண்டும் என்ற அவா என்னுள் உருவாகியது. எங்கள் சிலரின் வேண்டுதலுக்கு இணங்க கூத்துப்பயிற்சிப்பட்டறை ஒன்றை ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் ஆரம்பித்தார். கூத்து ஆட்டத்தையும் ஒரு செந்நெறிநடனம் போன்று படிநிலையாக ஒரு முறையியலில் பயிற்றுவித்தார். ஒரு தாளத்துக்கு எவ்வாறு ஆடவேண்டும் என்பதை மிக எளிய முறைமூலம் செய்து காட்டுவார். அனேகமாக 1,2,3 எனும் இலக்கங்கள் மூலம் தாளத்தினை எங்கள் மனதில் பதித்து அதற்கு கால் போடுவோம்.
அது மூன்று காலங்களிலும் தொடரும். பின்பு மத்தள ஒலியின் தாளத்துக்கு எங்கள் கால்கள் விளையாடும். அந்த நாட்கள் உணர்வுபூர்வமான சந்தோசமான நாட்களாகவே அமைந்திருந்தன. வீட்டுக்கு வந்தாலும் கூத்துப்பாடல்களே மனதில் ஒடும், நடந்து போகும்போதும் சிறிய ஒரு ஆட்டத்துக்கு கால்கள் துள்ளும். அந்தளவுக்கு கூத்தில் ஆர்வமும், ஈடுபாடும் உடையவர்களாக மாறினோம்.
இவ்வாறு எங்களுடைய மட்டமான ரசனையை களைந்து நல்லரசனையை எங்களிடம் தோற்றுவித்ததோடு மட்டக்களப்புக்கேயுரிய கலைமுறைகளை பயில் நிலையில் பேணுபவர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளோம். அந்த வகையில் பேராசிரியருக்கு நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம்.
2.2 வெகுஜனமட்டத்தில் மரபார்ந்த விடயத்தில் ரசனையினைத்
தோற்றுவித்தல்
பேராசிரியர் இராவணேசன் நாடகத்தை மரபுவழியில் நின்று மேடையேற்றியிருந்தால் அது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்காது. அது இன்றைய ரசிகனின் கலையுள்ளத்தை திருப்திப்படுத்தக் கூடியவாறு அமைந்திருந்ததாலே அது சகல மட்டத்தினராலும் வரவேற்புப் பெற்ற ஒரு கலைப்படைப்பாக அமையப்பெற்றது.
இராவணேசன் நாடகத்தில உடை, ஒப்பனை, மேடை நகர்வுகள், பாடல்கள், எடுத்துரைப்புக்கள், காட்சிப்படுத்தல்கள் என்பவை எல்லாம் நவீன நாடக உத்திகளைக் கொண்டவை. அவை இறுக்கமான மரபுக்குள் கட்டுப்பட்ட ரசிக்க முடியாத ஒரு பழமையாக இருக்கவில்லை. அது மரபும் நவீனமும் கலந்த கலவையாகவே உருக் கொண்டது. அதனை கூத்தினுடைய இன்றைய வளர்ச்சியாகவே கருதவேண்டும். அதன் காரணத்தினால்தான் இராவணேசன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரங்கேறியபோது மண்டபம் நிறைந்த சனம் இரண்டு மணித்தியாலங்களாக அமைதியாக இருந்து பார்த்ததோடு நடிகர்கள்

Page 56
98 மெளனம்
மக்களால் பெற்ற பாராட்டுகளும் வெகுஜன மட்டத்தில் மரபார்ந்த விடயத்தின் ரசனை மட்டத்தைக் காட்டுவதாக அமைந்திருந்தது. இதுபோன்றே அவருடைய நவீன நாடகங்களில் மரபினை உட்செலுத்தும் விதம் அற்புதமானதும் இயல்பானதாகவும் இருக்கும். மரபில் ஆழமான அறிவும், திறனும் இருக்கின்றது என்பதற்காக எடுத்துக் கொண்ட நாடகப்பிரதிக்கு ஒவ்வாமல் தேவையில்லாத இடங்களிலெல்லாம் மரபை இட்டுக் கட்டிச் சேர்த்து தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆவல் பேராசிரியருக்கு இல்லை. எந்த இடத்தில் மரபைக் கையாண்டால் அது காத்திரமான தாக்கத்தினைக் கொடுக்குமோ அந்த இடத்தில் அதைக் கையாழ்வார். "புதியதொடு வீடு"நாடகத்தில் கோரஸ்சுகளின் சில அசைவுகள், ஆட்டங்கள் இவ்வாறு அமைந்தவையே. ஆனால் அவரால் எழுதப்பட்ட "சங்காரம்" "நம்மைப் பிடித்த பிசாசுகள்" "மழை" போன்ற நவீன நாடகங்கள் நவீன வாழ்க்கையின் சிக் கற்பாடுகளை மரபுக்குள்ளால் வெளிப்படுத்திய படைப்புக்களாகும். அந்த நாடகங்களை நவீன நாடகம் தெரிந்தவரோ அல்லது மரபு நாடகம் தெரிந்தவரோ நெறிப்படுத்த முடியாது. அவற்றை நெறிப்படுத்துவதற்கு மரபு நாடகத்தில் நல்ல தேர்ச்சியும் நவீன நாடகத்தில் நல்ல அறிவும் தேவை. இவை இரண்டினுடைய இணைவாகவே அவருடைய நவீனநாடகப் பிரதிகள் அமைந்திருக்கின்றன.
சிறுவர் நாடகங்களிலும் மரபினை பயன்படுத்துவது பேராசிரியரின் தனிச்சிறப்பான பண்பாகும். இயல்பாக சிறுவர்கள் ஆடலிலும் பாடலிலும் விருப்பமுடையவர்களாக இருப்பதனால் அவர்களுடைய விருப்பத்தையே அவர்களுடைய படைப்பாக்கத்திறனை வெளிப்படுத்தும் சாதனமாகவும் கையாள்கின்றார்.
புனித மைக்கேல் பாடசாலையில் "வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள்" எனும் நாடகத்தை பயிற்றுவித்த போது அதனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தச் சிறுவர்கள் பேராசிரியரின் வருகையை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஏனெனில் பேராசிரியர் அவர்களுடைய விளையாட்டுத் தோழனாக இருந்தார். அவர்கள் "அங்கிள் அங்கிள்" என்று தோளில் ஏறுவதும் மடியில் ஏறுவதுமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த விளையாட்டின் ஊடாக அவர்களுக்குள் மறைந்து கிடக்கும் படைப்பாக்கத் திறமைகளை மிகச் சாதுர்யமாக வெளிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அந்தச் சிறுவர்களிடம் மரபான ஆட்டமுறை மிக இயல்பாக வெளிப்பட்டது. ஒவ்வொரு சிறுவர்களும் நடன லயத்தை தம்முள் கொண்டவர்களாகவே காணப்பட்டனர்.
இங்கு வழமையான பாடசாலை மரபு பேணப்படவில்லை. அதாவது ஆசிரியர் சொல்லிக் கொடுப்பவராகவும் மாணவர்கள் அவை அனைத்தையும் வேதவாக்குகளாகக் கேட்டு திரும்பக் கூறும் சீடர்களாக இல்லாமல் எதனையும் கேள்வி கேட்டு தர்க்கரீதியாக முடிவெடுப்பவர்களாக காணப்பட்டனர்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 99
அவர்களுக்குமுற்று முழுதான சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தச் சுதந்திரத்தை தக்கபடி கையாண்டு அவற்றை ஒழுங்குபடுத்துபவராகவே பேராசிரியர் காணப்பட்டார்.
இது இற்றைவரை காலமும் மட்டக்களப்பில் நிலவிவந்த நெறியாளர் மைய நாடக படைப்பாக்கத்தை நிராகரித்து சிறுவர் மைய நாடக படைப்பாக்கத்தை அறிமுகப்படுத்தியது. இதுமட்டக்களப்பில் புதிய சிறுவர் நாடக இயக்குனர் சிலர் உருவாக காரணமாயிற்று.
3. ஒரு நாடகத்தை கலைப்படைப்பாக உருவாக்குதல்
நாடகம் அனைத்துக் கலைகளின் சங்கமாகத் திகழ்வதினால் அதனுடைய கலையாக்கம் என்பது அந்தக் கலைகளின் ஒருங்கிணைவிலும், சமச்சீர்மையிலும்,நாடகக்கலை மூலங்களின் ஒருங்கியைப்பினுமே தங்கியுள்ளது.
பேராசிரியர் இந்த ஒருங்கிணைவினையும் சமச்சீர்மையினையும், ஒருங்கியைப்பினையும் நாடகத்தில் கொண்டுவருவதற்கு அர்ப்பணிப்புடனும் கடின. உழைப்புடனும் ஈடுபடுவார். இருதய சத்திர சிகிச்சைக்குப் பின்பு இராவணேசன் நாடகத்தை அரங்கேற்ற முடியுமா என்ற ஐயம் எங்களிடம் இருந்தது. அதனால் "நீங்கள் பாடாமல் ஆடாமல் சொல்லித்தந்தால் போதும்" எனக் கேட்டுக் கொண்டோம். ஆனால் நாங்கள் ஆடுவதையும் பாடுவதையும் கேட்டுக் கொண்டு அவற்றை செய்து காட்டித் திருத்தாமல் விடமாட்டார். அவருடன் சேர்ந்து பாடி ஆடும்படி கூறி ஆடத் தொடங்கிவிடுவார்.
நாங்கள் எவ்வாறுதான் முயன்றாலும் அவருடைய ஆட்டத்தினையும் பாடலையும் அதே உணர்வுடன் வெளிப்படுத்த முடியாது. பேராசிரியரின் பாடல்களையும் ஆடல்களையும் கேட்காத, பார்க்காத ஒருவர் இராவணேசன் நாடகத்து நடிகர்களின் பாடல்களையும், ஆடல்களையும் சிறப்பானது எனப் போற்றலாம். ஆனால் அவருடைய பாடல்களையும் ஆடல்களையும் பார்த்தால் அது போன்ற உணர்வு வெளிப்பாடு எங்களுடைய பாடல்களில் ஆடல்களில் இல்லை என்றே கூறுவார்கள். அதுதான் உண்மையும் கூட. அவர் பாட்டுக்களையும், விருத்தங்களையும் பாடினால் அந்தப் பாத்திரம் எச்சந்தர்ப்பத்தில் பாடுகின்றதோ அந்த சந்தர்ப்ப சூழலை தனது குரலுக்குள்ளால் வெளிப்படுத்துவார். ஒருவகையில் அவருடைய குரல் அந்த உணர்வுக்கேற்ற வகையில் நடிக்கும். ஆடுகின்ற போது அந்த உணர்வு அவருடைய உடம்பின் ஒவ்வொரு நரம்பினுடாகவும் வெளிப்படும். அந்தக்கலையழகை எங்களிடம் காண கடுமையாக உழைப்பார். ஒவ்வொரு பாத்திரமும் எவ்வகைப்பட்டது அவற்றின் குணாம்சம் என்ன? அதை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்றெல்லாம் கூறுவார். அதற்கேற்றாற்போலத்தான் பாத்திரங்களையும் தேர்வு செய்திருப்பார்.

Page 57
1OO மெளனம்
அந்தப் பாத்திரம் அதுவெளிப்படுத்தும் உணர்வு என்பவைகளின் இணைவில் குறிப்பிட்ட பாத்திரம் உயிர் பெறும்.
பேராசிரியருடைய நாடகங்களில் இசை முக்கியமான ஒரு அம்சமாக செயற்படும். இது பாத்திரங்களின் மன நிலையினை வெளிப்படுத்தவும், சம்பவங்களின் பின்னணியினை விபரிக்கவும் உதவியாக இருக்கும். அவர் இசை பற்றி சிறந்த அறிவுடையவர். அதனால் இசைக் கலைஞர்களை வைத்துக் கொண்டு தமது கற்பனைக்கு வடிவம் கிடைக்கும் வரை அவர்களைப் பிழிந்தெடுப்பார். புதியதொரு வீடு நாடகத்தில் வயலின் முக்கியமான பங்காற்றியது. இதற்கு விபுலாநந்தா இசை நடனக் கல்லூரியில் வயலின் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உதவினார்.
இராவணேசன் நாடகத்தில் நாவலடியைச் சேர்ந்த அண்ணாவியாரை மத்தளம் வாசிக்க எடுத்துக் கொண்டார். அவருடைய மத்தள ஒலி பேராசிரியரின் காதுகளுக்கு கட்டுப்பட்டவையாக இருக்கும். ஆரம்பத்திவ் அண்ணாவியார் மெய்மறந்துமத்தளத்தை நல்ல சத்தமாக வாசிப்பார். பேராசிரியரோ அண்ணாவி. யாருக்குப் பக்கத்தில் இருந்து அந்த ஒலியின் அளவைக் கட்டுப்படுத்தி தனது கட்டுப்பாட்டுக்கள் வைத்துக் கொள்வார். பின்பு அண்ணாவியார் பேராசிரியர் எவ்வாறு விரும்புகிறாரோ அதற்கேற்றாற் போல் வாசிக்கக் கற்றுக் கொண்டார். இராவணேசனில் மத்தளம் மட்டுமல்லாமல் றம், உடுக்கு, நட்டுவமேளம், ஒகன், சிம்பல் போன்ற இசைக்கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. அவற்றின் இசை அமைப்பினை நெறிப்படுத்துவதில் மிகக் கவனமாக செயற்பட்டார். தேவையில்லாத ஒரு சிறு சத்தம் கூட மேடையிலிருந்து வந்தால் மிகவும் ஆத்திரப்பட்டுப் பேசிவிடுவார். இதனால் நாங்கள் மிகக் கவனமாகச் செயற்படுவோம்.
ஆடை, அணிகலன், ஒப்பனை போன்ற விடயங்களிலெல்லாம் மிகக் கவனம் எடுப்பார். இராவணேசன் நாடகத்தில் பாவித்த தோப்பாக்களை இந்தியாவிலிருந்து வாங்கி வந்திருந்தார். ஆடை, அணிகலன், வடிவமைப்பு ஒப்பனை போன்ற விடயங்களுக்கெல்லாம் அது தொடர்பான சிறந்த கலைஞர்களை வைத்துக் கொள்வார். புதியதொரு வீடு நாடகத்தில் ஒவியை அருந்ததி ஒப்பனைக் கலைஞராக பணியாற்றினார். இராவணேசன் நாடகத்தில் ஒவியை வாசுகி ஒப்பனைக் கலைஞராக இருந்தார். வாசுகி, அருந்ததி போன்றவர்கள் தமது துறையில் பெரிய கலைஞர்களாக இருந்தபோதும் பேராசிரியரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே அவர்கள் பணியாற்றினர்.
இவ்வாறு எல்லாக் கலைஞர்களையும் இணைத்து தமது கலைத்துவ கற்பனைக்கு வடிவம் கொடுத்து நாடகப் படைப்பாக்கத்தில் ஈடுபட்டு மரபுவழி நாடக முறையினை அதன் இன்றைய வழிநின்று பேணுபவராகவும் அதற்காக அர்ப்பணிப்புடன் ஈடுபடும் ஒரு பெரும் கலைஞராகவும் அவர் இருக்கின்றார்.

ஆட்டத்தை நடிப்பாக்கிய கலைஞர்
சோ. தேவராஜா சட்டத்தரணி, கொழும்பு,
இருபத்தைந்து வருடங்கள் இருபத்தைந்து நாட்களாகி விட்டன. இதற்கிடையில் இருபத்தைந்து வயதில் இளைஞர்கள் எம் கண்முன் எழுந்து நிற்கின்றனர்.
ஞாலம் சுழன்றத ஞாலம் சுழன்றத நாட்கள் பல சென்றன காலம் சுழன்றது காலம் சுழன்றது மாற்றங்கள் உண்டாயின
இது கலாநிதி மெளனகுருவின் "சங்காரம்”நாடகத்தில் வரும் ஒரு பாடல் வரி. காலங்கள் பல சென்றுவிட்டன. மாற்றங்கள் பல நிகழ்ந்து விட்டன.
பேராசிரியராக மலர்ந்துவிட்ட கலைஞர் மெளனகுருவை நான் முதலில் கண்டது 1973ல் "கடவுள்" முருகனாக, "கந்தன் கருணை" நாடக ஒத்திகையின் போது கொள்ளுப்பிட்டி சீஅவெனியூவில் அமைந்துள்ள ஒரு வீட்டில். நெறியாளர் அ. தாசீசியஸ் நெறியாள்கையில் நடிகர் ஒன்றியத்தின் "கந்தன் கருணை"யில் அம்பலத்தாடிகள் இளைய பத்மநாதன், கவிஞர் இ. சிவானந்தன், க. பாலேந்திரா, வீ. திவ்வியராஜன், முத்துலிங்கம் போன்ற நாடக விற்பன்னர்கள் சிலருடன் கலைஞர் குழாத்தில் கண்டேன்.
யாழ்ப்பாணம் நோக்கிப் போவோமே ~ நாங்கள் யாருக்கும் அஞ்ச மாட்டோமே பூலோகம் நோக்கிச் செல்வோமே - நாங்கள் போர்க்கோலம் பூண்டு செல்வோமே!
முருகன் மெளனகுரு, நாரதர் முத்துலிங்கத்துடன் ஆக்ரோஷமான உணர்வோடு ஆடியதைப் பார்த்து அதிசயித்தேன்.

Page 58
O2 @Tឃុំ
நாடகம் என்பது சினிமாவில் சிவாஜிகணேசன் நடிப்பது போல் - சினிமாப்பாடல்கள் றெக்கோட்டில் முழங்க காதல் காட்சிகளில் ஒடியாடி விளையாடுவதும் -வசனம் பேசுவதும் - எம்.ஜி.ஆர். போல் வாள்ச்சண்டை பிடிப்பது இந்தியப் படங்களில் கதாநாயகன் - கதாநாயகிக்கு இடப்படும் பெயர்களில் பாத்திரங்களை வார்ப்பதும், சினிமாவில் வருவது போல் உடையணிந்தும் முப்பதுக்கு மேற்பட்ட நாடகங்களில் நடித்தும் பல ஆண்டு விழாக்கள் - கலைவிழாக்களில் நல்ல நடிப்பு, நல்ல நாடகம்" என்று பலரதும் பாராட்டைப் பெற்றும் என்னுள் நானே பெருமிதம் கொண்டு கொழும்புப் பல்கலைக்கழகம் புகுந்திருந்த எனது மண்டையில் ஓங்கி ஒர் அடி வீழ்ந்தது போல் அமைந்தது இந்நாடக ஒத்திகை நிகழ்வு.
யாழ்ப்பாணத்தில் திருவிழாக்களில் நடைபெறும் கூத்து எமது அன்றைய நாடக வரம்பினுள் அடங்காதென்றும் "சமூக சரித்திர வசன நாடகங்களும், நகைச்சுவை நாடகங்களுமே நாடகங்க" ளென, மயங்கியிருந்த எனக்கு யாழ்ப்பாண மண்ணின் பிரச்சினையை, யாழ்ப்பாண மொழியில் - மட்டக்களப்பு ஆட்டப் பாங்கில் - அரங்க அசைவில் - ஒழுங்கில் - கட்டுப்பாட்டில் ஓர் வகுப்பறை பயிற்சி போல் நாடக ஒத்திகைக்கு இத்தனை படித்தவர்கள் மிகச் சீரியஸாக செயற்பட்டது பேரதிர்ச்சியைத் தந்தது.
”மேடையில் பார் என்னை, கலக்குறன் அண்டைக்கு" என்ற நினைப்பிலும், பேச்சிலும் திளைத்து ஒத்திகை என்பதை உதாசீனம் செய்து "சிவாஜி - எம்.ஜி.ஆர்’ கற்பனையில் நடிப்பது எமது அன்றைய கலை. எனவே, ஒத்திகையில் எமது நடிப்பாற்றலை முழுமையாகக் காட்டாதுநாடகத்தின் இறுதிநாள் மேடையேற்றம் அன்று சக நடிகர் எல்லோரையும் வெல்லத்தக்க வகையில் நடித்து ரசிகர்களின் கரகோசத்தையும், விசிலடியையும் பெறுவதில் அன்றைய கலைஞர்களுக்கு எத்தகு ஆனந்தம்! எனவே ஒத்திகை என்பது நடிக்க முடியாதவர்களுக்கு நடிக்கப் பழக்கும் ஒரு முயற்சி என்பதனால் ஒத்திகை பற்றி அக்கறையற்றிருந்த எனக்கு மேடையின் அசைவுகளைக் கணித்து - தீர்மானித்து நிகழ்த்தும் இத்தகைய ஒத்திகையைப் பார்த்ததும் இதுவரை நான் நாடகம் என்று நினைத்த எண்ணக்கரு தலைகீழாக மாறிவிட்டதை உணர்ந்தேன்.
நாடகம் நடிக்கும் போது இரண்டு தொங்கவிட்ட ஒலிவாங்கிகளை நோக்கி உலாத்தி, உலாத்தி ஒடி ஒடி நடிப்பதும் சீன்சை மூடுவதும் இழுப்பதும் மேடையின் மத்தியில் நிற்பதில் முழுக்கவனத்தைச் செலுத்திவரும் கதாநாயகராக வலம் வருவதில் நடிகர்கள் ஒவ்வொருவரும் அவ்வப்போது தத்தமது ஆற்றலுக்கும் அடாவடித்தனத்துக்கும் ஏற்ப அசைவுகளைத் தீர்மானித்து நடித்த நாடகத் துக்கும் என் கண்முன்னால் கண்ட "கந்தன் கருணை" நாடக ஒத்திகையின் ஒழுக்காற்றுக்குமிடையிலான பாரிய பேதத்தை கண்டு இந்நாடக கலைஞர்களின் நடிகர் ஒன்றியம்" என்ற பண்பாட்டு நிறுவனத்தால் தடுத்தாட்கொள்ளப்பட்டேன் என்று இப்போது நினைக்கும் போதும் என் நெஞ்சம் விம்முகிறது.
y

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 103
லும்பினி அரங்கில் "கந்தன் கருணை" அரங்கேறிய போது பார்வையாளனாக நான் பெற்ற அரங்க அனுபவம் என் உள்ளத்தில் ஓர் புத்தெழுச்சியை - ஓர் இனம் புரியாத மின்காந்த அதிர்வை ஏற்படுத்தியது.
"கந்தன் கருணை" நாடகத்தில் ஆலயக் கதவைத் திறப்பதற்காக முருகன்" மெளனகுரு வீர சபதம் செய்கிறார்.
வரமாட்டேன் நானும் வரமாட்டேன் வரமாட்டேன் இந்தக் கலியுகச் சூரனைச் சங்காரம் செய்யாமல் வரமாட்டேன் நானும் வரமாட்டேன்
யார்தான் எண்னை எதிர்த்திட்டாலும் நீர்தான் என்னைத் தடுத்திட்டாலும் இந்தப் பொல்லாத அசுரனைச் சங்காரம் செய்யாமல் வரமாட்டேன் நானும் வரமாட்டேன் - வரமாட்டேன்
என்று பாடுவதும் அழகும் துடிப்பும் பொலிவும் மிக்க இளைஞன் "முருகன்" மெளனகுரு சிவதாண்டவம் என்னும் பரதத்துக்கும் அப்பால் மட்டக்களப்பு வடமோடிக் கூத்துக்கலையில் பல்வேறு ஆட்டக் கோலங்களை நிகழ்த்தி - வேகமாகப் பம்பரம் போல் சுழன்றாடி - சில நிமிடங்கள் தொடர்ந்து ஆடி உச்சத்துக்குச் சென்று பக்தர்களிடம் ஆயுதத்தை கையளித்து
சங்கரன் தான் தந்த சக்தி வேலை ~ இன்றே சமத்தவம் காண்பதற்கே தந்தவிட்டேன்
என்று பாடியபோது அவையினரின் கரகோசம் அடங்கச் சில கணங்கள் பிடித்தது. எனது சிறிய கலை அரங்க அனுபவத்தில் - அரங்க ஆற்றுகையில் ஆட்டத்தினூடு நெஞ்சைக் கொள்ளை கொண்ட காட்சியாக அமைந்த மெளனகுருவின் ஆட்டத்துக்குநிகராக நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லையென்று கூறுவேன். இத்தகு வியப்பை ஏற்படுத்திய ஆட்டக்கலை பற்றி சிறிது அளவளாவ ஆசையுறுகின்றேன்.
கால்கள் மேடையைத் தடவி - அந்தரத்தில் பறந்து ஆடிய ஆட்டம் அது. நாடகத்தின் பொருள் நோக்கு, சமகால சமூக அசைவியக்கத்தின் வீரியத்தோடு விளங்கினமையால் அதன் ஆட்ட அழகும் அரங்கியல் நேர்த்தியும் என்னை ஆட்கொண்டதென்பேன்.
கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேல் ஆடிய இந்த ஆட்டத்தில் ஆட்ட முறைகள் பின்வருமாறு அமைந்திருந்தமையை பின்னால் அறிந்து கொண்டேன். பெரும்பாலும் வடமோடி ஆட்டத்தின் அடித்தளமாக அமைந்திருந்த வடமோடித் தாளக்கட்டில் கீழ்வரும் ஆட்ட முறைமைகள் கட்டமைக்கப்பட்டிருந்தன.

Page 59
104 மெளனம்
1. பொடியடி : குதிக்காலால் தட்டியபடி மெல்ல மெல்ல வருதல்
2. குத்துமிதி : தாளலயத்திற்கேற்ப காலைநிலத்தில் குத்தி எறிந்து ஆடுதல்,
காலை மாறி மாறிப் போடுதல்.
3. பாய்ச்சல் : ஆட்டக் கோலத்தை வேகமாக்கி பாய்ந்து பாய்ந்து ஆடுதல்,
4. எட்டு : தாளக் கட்டுக்கேற்ப எட்டு வடிவத்தில் சுழன்று சுழன்று
ஆடிவருதல்.
5. விசாணம் : சிறிய வட்டத்தில் ஆடுதல்.
6. நாலடி காலால் குத்தி அழுத்திநான்கு இடத்தில் கால்களை எறிதல். 7. 6T tọ : நாலடியின் வளர்ச்சி எட்டடியாகும். காலை எட்டு இடங்களுக்கு
எறிந்து ஆடுதல்.
இவையெல்லாம் முறையாக 1980களில் மெளனகுருவால் நாடக அரங்கக் கல்லூரி பயிற்சிப் பட்டறையில் எமக்குப் பழக்கப்பட்டன.
பொதுவாகக் கூத்தர்கள் கால்களைத் தவிர கைகள், உடல் என்பனவற்றை அதிகம் பாவிப்பதில்லை. வெறும் ஆட்டமே (நிருத்தம்) அங்கு இடம்பெறும். ஆனால், மெளனகுருவின் ஆட்டம் மரபுவழிக் கூத்தர்களிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கும். இப்பயிற்சி இவரது பேராதனைப்பல்கலைக்ழக நாடகப் பயிற்சிக்கூடாக வந்திருக்கலாம். இவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் தயாரித்த மூன்று கூத்துக்களில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்தமை யாவரும் அறிந்ததே.
"கந்தன் கருணை"யில் முருகனாக ஆடிய மெளனகுருவின் இறுதி ஆட்டம் முழு வெளியையும் நிறைக்கும் வண்ணம் கைகளை பல திக்குகளுக்கும் விசிறி உடம்பைநாற்கோணங்களுக்கும் பரப்புவதாக அமைந்திருந்தது. சிரசு அதற்குத் தக்கபடி அசைய கண்களின் அசைவுகளோ அதற்கேற்ப பிரமாதமாய் அமைந்திருந்தன. W
கருத்து வெளிப்பாட்டு ஒத்திசைவு தோன்றும்படி சகல மேடை வெளிகளை நிறைத்திருக்கும்படி உடம்பும் உடம்பிலிருந்து வெளிவரும் அதிர்வுகளும் அமைந்திருந்தன. மெளனகுரு ஆடும்போது மேடையில் எத்தனை பேர் நின்றாலும் அவர் மாத்திரமே ஆட்டத்தினுடு தெரிவார். அவ்வகையில் மேடை முழுவதையும் தன் ஆட்டக் கோலத்தால் ஆக்கிரமித்தவர் அவர். இந்த ஆட்டத்தை அன்று பார்த்த அனைவரும் ஒரு பூரணமான கலா அனுபவத்தையும் வியப்பையும் பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம்.
இத்தகைய வேகமானதொரு ஆட்டத்தின் பின் மூச்சு இளைக்காமல் தாளலயத்துக்குப் பாட்டை உச்சாடன ரூபத்தில் பாடி வேலாயுதத்த்ை பக்தர்களுக்குக் கொடுக்கும் போது மேடையில் நின்ற மெளனகுருவின் உடலின்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 105
கம்பீரத் தோற்றம் நிறைவைத் தந்தது. உச்சாடனம் சொல்லும்போது மூச்சு இளைத்தால் பாத்திரச் சிறப்பே பாழாய்ப் போய்விடும். மிகுந்த பயிற்சியினால் மாத்திரமே ஆடலின் பின் மூச்சிரைக்காமல் பாடும் தன்மையைப் பெற முடியும். இப்பயிற்சியைப் பெற்றிருந்தமையே அவர் மூச்சிரைக்காமல் நின்றமைக்கான காரணமாகும்.
மெளனகுரு எங்களுக்குக் கூத்துப் பழக்கும் போது நிலத்தில் கால் அழுத்தும் சத்தம் கேட்காமல் லாவகமாகவே ஆடுதலே அழகைத் தரும்" என்று அடிக்கடி கூறுவார். மெளனகுரு ஆடும்போது மேடையில் சத்தம் எழும்பாது. அவரது கால்கள் தரையை முகர்ந்து முத்தமிட்டுச் செல்வது போல இருக்கும். அவரது கால்கள் நிலத்தைப் பற்றிப்பிடிக்காதுநிலத்தோடு உராய்ந்து உராய்ந்து உறவாடிச் செல்வதாக அமையும். இத்தகைய ஆட்ட அழகு எல்லோருக்கும் வாய்க்குமொன்றல்ல. இந்த அழகினை நான் "கந்தன் கருணை"யில் பூரணமாக அனுபவித்தேன்.
2
நெறியாளர் - நாடக ஆசிரியர் நா. சுந்தரலிங்கம் கதை வசனம் எழுதி நெறியாள்கை செய்த நடிகர் ஒன்றியத்தின் "விழிப்பு" நாடகத்தில் வேலையற்ற பட்டதாரி மாணவர்களுள் ஒருவனாக 1975இல் எனக்கு நடிப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்நாடக ஒத்திகைகள் ஒலிபரப்பாளர் சுந்தா வீட்டின் மேல்மாடியில் இடம்பெற்றன. நெறியாளர் நா. சுந்தரலிங்கம் அவர்களின் ஒத்திகை அனுபவம் எனக்கு மிகவும் உற்சாகமளித்தது.
இதில் ஒரு தாளலயப் பாட்டைப் பாடுகிறோம்.
இத்தனை பேரா வேலையில்லாதவர் இத்தனை பேரா
எனப் பாடி ஆடித் தொழிலாளருடன் இணைவதான காட்சியில் மெளனகுரும் எமக்கு ஒத்திகையில் சில ஆட்டமுறைகளைப் பழக்கியமை இன்றும் இன்ப ; நினைவலைகளை எழுப்புகிறது.
3
1977இல் கொழும்பில் ஏற்பட்ட இன ஒடுக்கலையடுத்து நடிகர் ஒன்றியம்" கொழும்பில் தன் தொடர்ச்சியை இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டது.
நடிகர் ஒன்றியத்தின் தயாரிப்பில் நா. சுந்தரலிங்கத்தின் "அபசுரம்" யாழ் பல்கலைக்கழகத்தில் மேடையேற்றப்பட்டபோது "மெளனகுரு" பிரச்சனை

Page 60
106 மெளனம்
வேடந்தாங்கி "உஸ். சத்தம் போடாதேங்கோ" என்று கதைபேசி நடித்ததும் ஆடியதும் நினைவில் நிழலாடுகிறது.
இதில் முழுமையாக மனுக்குலத்தின் பிரச்சினைகளை மெளனகுரு முகத்தில் கொண்டு வந்ததைக் காணமுடிந்தது. இதில் "பிரச்சினை” என்பது ஒரு குறியீட்டுப்பாத்திரமாகும். அப்பாத்திரமென்பது மனிதனுள் உள்ளும் வெளியுமாக அருவமான பிரச்சினைகளை பாத்திரத்தினுTடு கொண்டுவருதல் வேண்டும். இதனை மெளனகுரு இரு விதத்தில் கொண்டுவந்தார். (1) முகம், (2) ஆட்டம். முகத்தில் ஒரே நேரத்தில் அழுகை, சிரிப்பு, கோபம், ஏமாற்றம், துயரம் ஆகிய அத்தனை உணர்வுகளையும் மாறிமாறிக் கொண்டு வந்தார். பாத்திரம் மேடையில் தோன்றும் பொழுதே மெளனகுரு சிக்கலான தனது ஆட்டமுறைமையாலும் அங்க அசைவுகளாலும் வெளிப்படுத்தி முகபாவத்தினால் மாத்திரமன்றி உடல் அசைவினாலும் முழுப் பிரச்சினையையும் பார்வையாளர்களிடம் தொற்ற வைத்தார்.
4
நடிகர் ஒன்றியத்தினால் மஹாகவியின் "புதியதொரு வீடு" நாடகம் அ. தாசீசியசினால் நெறியாள்கை செய்து கொழும்பில் மேடையேற்றப்பட்டது. இந்நாடக நிகழ்வில் மெளனகுரு எடுத்துரைஞர்களுள் ஒருவராக பாத்திரமேற்றார். தனது உடல் அசைவுகளாலும் நிகழ்த்திக் காட்டுகையாலும் எடுத்துரைஞர் பாத்திரத்திற்கு தனிக் கவர்ச்சியையும் ஆளுமையையும் இவர் அளித்தார்
666 ONTD.
கோடை கொடும்பனி கடுங் குளிரை அஞ்சி கோடிப் புறத்தினில் உறங்கி விடலாமோ
என்ற மஹாகவியின் பாடலுக்கான அவரது அசைவுகளும் ஆடல்களும் இப்போதும் கண்முன்நிற்கின்றன.
யாழ்ப்பாணத்திலிருந்த நெறியாளர்களான அ. தாசீசியஸ், நா. சுந்தர லிங்கம் ஆகியோர் புலம்பெயர்ந்து வெளிநாடு சென்ற பின்னர் யாழ். பல்கலைக் கழக மாணவர்களுக்காக மஹாகவியின் "புதியதொரு வீடு" நாடகத்தை மறுபடி மெளனகுரு நெறியாள்கை செய்து யாழ்ப்பாணத்தில் சில கிராமங்களில் மேடையேற்றினார்.
இதில் கனகசபாபதி நாகேஸ்வரன், தி. யோகேஸ்வரன், க. சிதம்பரநாதன் முதலிய பல மாணவர்கள் நடித்தனர். மாணவிகளும் இணைந்து நடித்தனர்.
பண்டத்தரிப்பில் எமது கால்ையடி மறுமலர்ச்சி மன்றத்தின் நிதியுதவிக் காட்சிக்காக புதியதொரு வீட்டை மேடையேற்றினோம். அந்நாடகம் எமது கிராமத்தில் மட்டுமன்றி வலிகாமம் மேற்குப் பிரதேசமெங்கும் நாடகம் பற்றிய ஒரு

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 107
சமூகப் பிரக்ஞையை ஏற்படுத்தத் தவறவில்லை எனலாம். எமது ஒலிபெருக்கி விளம்பரத்தில் உண்மையான பெண்களும் இணைந்து நடிக்கும் "புதியதொரு வீடு” என்றும் பிரச்சாரம் செய்தோம். அக்காலத்தில் சின்னமேளங்களில் ஆடும் பெண் கலைஞர்களே கூத்துகளில் மட்டும் பங்கேற்பதுண்டு. சமூக நாடகங்களில் ஆண்களே அநேகமாகப் பெண்வேடந்தாங்கிநடிப்பது வழக்கம். பல்கலைக்கழக மாணவ - மாணவியர் நடிக்கும் நாடகம் என்பதனால் பரவலான வரவேற்புப் பெற்றதுடன் ரசிகர்கள் நவீன நாடகத்தை கண்டு களிக்கும் ஒரு நல்ல காலம் அன்று கனிந்தது எனலாம்.
5
நாடக அரங்கக் கல்லூரி குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களால் 1978ல் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நாடக டிப்ளோமா படித்த ஆசிரிய மாணவர்களின் பங்கேற்போடும் யாழ்ப்பாண நாடக விற்பன்னர்களான ஏ. ரி. பொன்னுத்துரை, எஸ். ரி. அரசு, பிரான்சிஸ் ஜெனம், லோகநாதன் போன்ற பல கலைஞர்களுடனும் இளங்கலைஞர்களான வீஎம். குகராஜா, எஸ். ஜெயக்குமார் போன்ற பலரையும் இணைத்து யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
நாடக அரங்கக் கல்லூரியில் நா. சுந்தரலிங்கத்தின் "அபசுரம்" நாடக ஒத்திகை நடந்து கொண்டிருந்த போது நா. சுந்தரலிங்கம் புலம்பெயர்ந்து வெளிநாடு சென்றமையால் மெளனகுரு அவர்களால் அபசுரம் தொடர்ந்து நெறியாள்கை செய்யப்பட்டு மேடையேற்றப்பட்டது. அந்நாடகத்தில் நான் "பொதுவர்" என்ற பாத்திரம் ஏற்று நடித்தேன். அபத்த நாடகமாகிய "அபசுரம்" நாடகமும் யாழ்ப்பாணத்தில் சில மேடையேற்றங்களைக் கண்டது. இந்நாடகமும் பார்வையாளர் மத்தியில் நாடகம் பற்றிய சில புதிய புரிதல்களை ஏற்படுத்திய தெனலாம்.
நாடக அரங்கக் கல்லூரிக்காக 1984ல் நாடக விழாவில் மெளனகுருவின் "சங்காரம்" நாடகம் மேடையேறியது. அதற்காக பல மாதங்கள் கொக்குவில் பெரியபுலம் பாடசாலையில் மெளனகுருவின் நெறியாள்கையில் பயிற்சி பெற்று - ஒத்திகையில் பங்கு கொண்டோம். எனது துணைவியார் கலாலக்டிமி இதில் "சமுதாயம்" ஆக பங்கேற்றார். நான் "உரைஞர்" ஆக பாகமேற்றேன். இந்நாடகத்தில் எஸ். ஜெயக்குமார், க. சிதம்பரநாதன், எஸ். மார்க்கண்டு, கே. தயாளன், பி.எம். கனகரத்தினம், பி. அன்ரன் செல்வராஜ், ஜி. பி. பர்மினஸ், அ. பிரான்சிஸ் ஜெனம், ஏ. ஆர். விஜயன், எஸ். உருத்திரேஸ்வரன், எல். எம். றேமன், சி. மெளனகுரு, ஏ. ரி. பொன்னுத்துரை, சென். ஹென்றீஸ் மாணவர்கள் சிலரும் எனப் பங்கேற்றோம். மேடையின் பின்னால் செல்வ பத்மநாதன், வீ. எம். குகராஜா, எம். கண்ணன், எஸ் ரி. அரசு, ரி. எஸ். லோகநாதன் ஆகிய பல கலைஞர்களின் கூட்டு முயற்சியாக அரங்கேறியது. இந்நாடகமும் பரந்த வரவேற்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியதெனலாம்.

Page 61
108 மெளனம்
1969ல் கொழும்பில் மேடையேறிய "சங்காரம்" மீண்டும் யாழ்ப்பாணத்தில் 1980ல் மேடையேறியபோது மெளனகுரு ஒத்திகையின் போதே அவ்வப்போது ஏனைய கலைஞர்களுடனும் கலந்துரையாடி மாற்றங்களைச் செய்தார். இவ்வாறு மாற்றம் செய்ததில் "இனபேத அரக்கன்" என்ற பாத்திரமும் புதிதாகப் புகுந்து கொண்டது. காலமாற்றத்துடன் நாடகம் சமூக அசைவியக்கத்தில் தனது பங்களிப்பை வழங்கிய மாற்றம் இதுவெனலாம்.
1969ல் மேடையேறிய "சங்காரம்" தீண்டாமைக்கெதிரான போரை முனைப்பாக்கிய போது 1980ல் மேடையேறிய சங்காரம் பேரினவாத எதிர்ப்பை வெளிப்படுத்தியது. வர்க்க கண்ணோட்டத்தில் சமுதாய வரலாற்றை நாடகமாக்கியதுடன் கூத்து வடிவத்தை நவீன கருத்தியலுக்குப் பயன்படுத்திய புதிய முயற்சி இந்நாடகமெனலாம்.
கலைஞர் மெளனகுருவின் நெறியாள்கையில் தயாரிப்புச் செம்மை சிறப்புற்று விளங்கும். ஒருங்கிசைவு நேர்த்தியுடன் துலங்கும். இசை, மேடை அசைவு, மேடை வெளியினை சமமாக பாவிக்கும் முறைமை இவற்றுக்கும் மேலால் மிக அதிகமான மேடை நடிகர்களைப் பயன்படுத்தி மேடையை நிறைத்து நடிகர்களின் மூலமே காட்சியை விரித்துச் செல்லும் பாங்கு தனித்துவமானது. இது சங்காரம், சக்தி பிறக்குது ஆகிய நாடகங்களின் வெற்றிக்கான காரணங்களா. யமைந்தன எனலாம். நாடகத்துறையில் நல்ல கலைஞர்களை தேர்ந்தெடுத்து பாத்திரங்களைச் சீர்ப்படுத்துவதிலும் மிக அவதானமாக நடந்து கொள்வார்.
ஒத்திகையின் போதுநாடகத்தில் பாத்திரங்கள் மேடையில் எவ்வாறுநிற்க வேண்டும். எவ்வண்ணம் அசைய வேண்டும் என்பதனை காட்சி காட்சியாக படங்கிறி மனதில் பதிப்பதுடன் "றெஜிஃபோமி"ல் குச்சிகளைப் பாத்திரங்களாக்கி காண்பியங்களாக (Visual) அவை அசையும் முறைகளினை நடிகர்களுக்கு விளக்குவார். இது நாடகம் எவ்வாறு அமையும் என்கின்ற புறவட்ட (Out Line) கருத்தினை நடிகர்களுக்குத் தரும். இந்தப் புறவட்டத்துக்குள் தாராளமாக நடிகர்கள் கற்பனை பண்ணி பாத்திரங்களாக இயங்குவதற்கான முழுச் சுதந்திரத்தையும் அவர் தருவார். நாடக கட்டுப்பாட்டுடனான இச் சுதந்திரம் நடிகர்களின் கலையாளுமையை செம்மையாகவும் அழகாகவும் முழுமையாகவும் கொண்டுவரும். இது ஏனைய நெறியாளர்களிடமிருந்து மெளனகுருவை வேறுபடுத்திக் காட்டும் முக்கிய அம்சமாகும். இவரது இத்தகைய குணாம்சங்களை "சங்காரம்" ஒத்திகையின் போது கண்டுகொண்டேன்.
நெறியாள்கையின் போது மனம் நோக கலைஞர்களுடன் பழகாது மிகவும் அன்புடன் கூடிய கட்டளையாக பாத்திரக் குணவியல்புகளைப் புரியச் செய்து ஒத்திகையை வழிப்படுத்துவது இவரது வழக்கமாகும்.
சங்காரம் ஒத்திகையின் போது அவரது மகன் சித்தார்த்தனும் அவ்வப்போது வந்து நாடகத்தில் பங்கேற்ற கலைஞர்களுடன் அந்தப் பிஞ்சு வயதில் ஆடிப்பாடி மகிழ்ந்தமையும் கலைஞர்களின் மனதில் உற்சாகத்தை ஊட்டியதெனலாம்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 109
கலைப் பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை அவர்கள் எஜமான் வேடமிட்டு
எந்தண் உப்பையே உண்டு வாழ்ந்திடும் அடிமைகாள் செல்லக்கூடா?
என்று பாடியபடி வந்த காட்சியும் அரசையாவின் ஒப்பனை - உடையலங்காரமும் தயாளன், கனகரத்தினத்தின் வரவேற்பு ஒழுங்கும், உருத்திரேஸ்வரன், விஜயன் ஜெனம், பேர்மினஸ், றேமன் ஆகியோரின் அசுர ஆட்டமும், "சமுதாயம்" கலாலக்டி மி அசுரர்களுக்கு நடுவே நின்று திணறுவதும் பாடி ஆடுவதும், மெளனகுருவும் ஜெனமும் தாளக்கட்டு மாற்றத்திற்கேற்ப ஆடிப் போரிடுவதும் உச்சக் கட்டமும் ஜெயக்குமார் தொழிலாளியாக பாடியதும் ஆடியதும் மெளனகுருவின் நெறியாள்கையின் சிறந்த கலைஞர்களின் கூட்டிசைவின் செயலாய் விரிந்து வெற்றி பெற்ற நாடக வரலாறாகிவிட்டது.
"சங்காரம்", "ஆற்றுகையும் தாக்கமும்" என்ற நூல் தேசிய கலை இலக்கியப் பேரவையினால் 1993ல் நூல் வடிவம் பெற்றுள்ளது.
ாடக அரங்கக் கல்லூரியின் "சங்காரம்" மேடையேற்றத்தைத் தொடர்ந்து மெளனகுரு கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் எழுத்தாளர் சொக்கனின் ஆதரவுடன் வடமோடிக் கூத்தினையும், நாடகப் பயிற்சிப் பட்டறைகளையும் சில மாதங்கள் தொடர்ந்து நடாத்தி வந்தார். இவற்றிலும் நாம் தொடர்ந்து பங்கேற்ற அனுபவங்கள் இன்னும் நினைவில் பசுமையாகவுள்ளன.
6
நாடக வரலாற்றில் பாடலை நடிப்பாக்கிய அரங்கக் கலைஞராக வீவி வைரமுத்து விளங்கினார். அதேபோல் ஆட்டத்தை நடிப்பாக்கிய அரங்கக் கலைஞராக மெளனகுரு விளங்கினார் என்பது நாடகவியலாளரின் ஆய்வு முடிவாகும்.
கலைஞர் மெளனகுரு பல்கலைக்கழக பேராசிரியராகி அறிஞராகி விட்டார். நாடகக் கலை வல்லுனர்களைப் பாராட்டி பட்டங்கள் வழங்குவதற்கு கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடாக முயற்சி செய்துள்ளார்.
வரலாறாகிவிட்ட நாடகக் கலையை எழுத்திலிருந்து மீள்வித்து அரங்க ஆற்றுகைக் கலையாக மீளுருக் கொடுப்பதும் கலைஞர்களை மீளக் காண்பதும் ஈழத்து நாடக ரசிகப் பெருமக்களுக்குக் கைகூடுமா? சிங்கள நாடகங்கள் தலைமுறை இடைவெளியின்றியும் தொடர்ந்து மேடையேற்றங் காண்பது போல் சங்காரம், இராவணேசன் போன்ற நாடகங்களை நிகழ் கலையாக அரங்கத்தில் பார்க்கும் காலம் கனியுமோ? நாடகக் கலை என்பது நிகழ்கால நிழலுரு நீங்கி மீண்டும் நிஜமாவ" தெப்போது என்ற ஆதங்கத்துடன் நிறைவு செய்கிறேன்.

Page 62
விட்டுக்கொடாத சமரசவாதி
பால சுகுமார் விரிவுரையாளர்,நுண்கலைத்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம்.
பேராசிரியர் சின்னையா மெளனகுரு அவர்களுக்கு மணிவிழா என்பது தமிழ் நாடகர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிகரமான செய்தி. பேராசிரியர் பற்றிய அறிமுகம் இன்று மட்டக்களப்பு கூத்தின் மீட்டுருவாக்கம், சிறுவர் அரங்கு, பாடசாலை அரங்கு, நவீன அரங்கு என பல தளங்களில் பல்பரிமாண அரங்கியல் சார்ந்த விகர்சிப்பைப் பெற்றுள்ளது. பேராசிரியர் அவர்கள் அரங்கியல் சார்ந்து மாத்திரமல்லாமல் ஈழத்துகலை இலக்கியத் துறையில் மிக முக்கியமாக பேசப்பட வேண்டிய ஒருவர் என்பதை நாம் மறந்து விடமுடியாது.
பேராசிரியர் கைலாசபதி ஈழத்து இலக்கிய விமர்சனத்துறையில் இன்றுவரை மிகப்பெரிய சக்தியாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. யாரும் விரும்பியோ விரும்பாமலோ அவருடைய ஆளுமை ஈழத்து புலமைகள் மரபில் அதன் செல்நெறிகளில் பிரிக்கமுடியாதபடி அமைந்துள்ளது. அந்த புலமைகள் மரபின் ஒரு கிளையாகத்தான் நாம் பேராசிரியர் மெளனகுருவைப் பார்க்கிறோம்.
பேராசிரியரின் அரங்கியல் பங்களிப்புக்கு அப்பால் கலை இலக்கியத்தில் விமர்சனத்துறையில் கைலாசபதிக்குப் பின்பு முற்போக்கு குணாம்சத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவதை நாம் இங்கு மனங்கொள்ள வேண்டும். இன்று உலகளாவியரீதியில் மாக்சிசம் பற்றிப் பல்வேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் மக்கள் சார்ந்த வேறு ஒரு மார்க்கமாக வேறு எந்த ஒரு தத்துவத்தையும் தரிசிக்க முடியவில்லை. எப்பொழுதும் மக்கள் பற்றிய சிந்தனையை தன் ஆய்வுகளில் பேசுகின்ற பேராசிரியர் மெளனகுரு தன்னுடைய ஆய்வுகளுக்கான அடிப்படையாக மாக்சியத்தையும் அதிலிருந்து பிரிக்க முடியாத இயங்கியலையும் அடிப்படையாகக் கொண்டுள்ளார். இவருடைய எல்லா ஆய்வுகளிலும் படைப்புக்களிலும் நூலிழையாக மாக்சிசமும் முற்போக்கும் சாராம்சமாக தொடந்துள்ளது.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 1
பன்மைப்பாட் டையும் தனித்தன்மையையும் அங்கீகரிக்கின்ற ஒரு தாராள மயப்பட்ட செயற்பாட்டுத் தன்மையுடைய மாக்சிச அணுகுமுறையை நாம் பேராசிரியரிடம் காணமுடியும். எப்பொழுதும் தன்னையும் தான் சார்ந்த கொள்கையையும் விட்டுக் கொடுக்காத சமரசம் ஒன்றை பேராசிரியரிடம் കffബഗ്ഗ//
இன்றுவரை அடக்கப்படுகின்ற எல்லோருக்குமான குரல் அவருடைய படைப்புக்களில் விரவி நிற்பதை அவதானிக்க முடியும். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வித்தியானந்தனின் படைப்புக்காக எழுதிய, கர்ணன் போரிலிருந்து அவரது அண்மைய படைப்பான "வனவாசத்தின் பின்" வரை இந்த பண்பை அவதானிக்க முடியும்.
பண்பாட்டின் வேர்களைத் தேடிப் போய் சமூக மாற்றத்திற்கான அடிப்படைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற மாக்சிச அணுகுமுறை பேராசிரியரிடம் காணப்படுகிறது. ஈழத்து தமிழ் மக்களின் பண்பாட்டு அடையாளங்கள் என்ற அந்த அடையாளங்களை மீட்டெடுத்து அவர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தி மீண்டும் அவர்களிடமே கையளிக்க வேண்டும் என்ற நோக்கு இன்றைய செயல்பாடுகளில் மேலோங்கி நிற்பதை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
ஈழத்துத் தமிழருக்கான இசை,நடனம், நாடகம், ஒவியம், சிற்பம் கலைகள் என இந்த தேடல்கள் அமைகின்றன. பேராசிரியரின் மாணவர்கள் இன்று இந்த துறைகளில் தம் காலடிகளைப் பதித்து புதிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். மட்டக்களப்பில் ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று உலகம் போற்றும் ஒரு பேராசிரியராக உயர்ந்து நிற்கின்றதை பார்க்கின்ற பொழுது அதற்கு பின்னால் இருக்கும் உழைப்பை நாம் கெளரவிக்க வேண்டும்.
வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் நாட்டுக்கூத்து ஆடுகின்ற ஒரு சிறு பையனாக பேராசிரியர் வித்தியானந்தனுக்கு அறிமுகமான பேராசிரியர் மெளனகுரு இன்று அதே கூத்துக்கலையில் தொல்சீர் பிரகிருதியாக அதன் பிண்டப் பிரமாணத் தோற்றமாக வெளிப்பட்டு நிற்கிறார்.
பேராசிரியருடன்கூடவே படித்த பலருடன் உரையாடக் கூடிய வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. வந்தாறுமூலை மத்திய கல்லூரி பல்கலைக்கழகமாக மாறுகின்ற காலம் வரை கிழக்கு மாகாணத்தில் உள்ள சகலரையும் ஒன்றிணைக்கும் ஒரு மையமாகத் தொழிற்பட்டது. வடக்கே தென்னமரவாடி தொடக்கம் தெற்கே பாணம வரை உள்ள தமிழ் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயின்றனர். இந்த காலம் பேராசிரியரை ஒரு விரிந்த மனப்பான்மையுடையவராக வளர்த்தெடுத்தது என்று சொன்னால் மிகையல்ல என்றே சொல்லலாம்.

Page 63
2 மெளனம்
வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் மாணவராக இருந்த பொழுது மாணவர்களை வழிநடத்துபவராக பேராசிரியர் இருந்ததை அவரது நண்பர்கள் அடிக்கடி நினைவு கூருவர். பள்ளிக்குடியிருப்பு இரத்தின சிங்கம் கூறுகின்ற பொழுது மெளனகுரு அண்ணன் தான் எல்லாம் எங்களுக்கு. அவர் என்ன சொன்னாலும் செய்ய நாங்கள் தயாராக இருந்தோம். 1956 சத்தியாக்கிரகப் போராட்டத்தின் பொழுது மாணவர்களுக்குத் தலைமை தாங்கி வந்தாறு மூலையில் இருந்து மட்டக்களப்பு வரை ஒரு மாபெரும் மாணவர் பேரணியை பேராசிரியர் அவர்கள் வழிநடத்திச் சென்றதாகக் குறிப்பிடுவார். அப்போதைய அரசின் அடக்குமுறைக்கெதிரான அகிம்சைப் போரில் இவரது பங்கு முக்கியமாக இருந்தது. தமிழரசுக் கட்சி மேடைகளில் முழங்கினார். காசியானந்தனுடன் இணைந்து தமிழ் இன உணர்வுநாடகங்கள் நடிக்கப்பட்டன.
பேராதனைப் பல்கலைக்கழகம் சென்ற பின்பு பேராசிரியரின் பாதை படிப்படியாக மாறியது. அக்காலத்தில் பல்கலைக்கழங்களில் முக்கியப்பட்ட மாக்சிச சிந்தனை பேராசிரியரையும் ஈர்த்ததில் வியப்பில்லை. மாக்சிசம் பேராசிரியருக்கு அகண்ட சர்வதேசப் பார்வையைக் கொடுத்தது. அன்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட முற்போக்குச் சிந்தனை மரபு இலங்கைப் பல்கலைக்கழக மட்டத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. சீனப்புரட்சியின் தாக்கம் சோவியத் ரஸ்யாவின் எழுச்சி என மார்க்சிய லெனினிய மாவோயிச சிந்தனைகள் இரு கிளைப்பட்டதாக எழுச்சி பெற்றன. அந்த எழுச்சிக்குள் இலங்கையும் ஆட்பட்டு ஒருவர்க்கப் புரட்சிக்கான சிந்தனைகள் வேரூன்றின. இந்த மாற்றங்கள் பேராசிரியர் மெளனகுருவை பெரிதும் பாதித்தன. இதனால்தான் பல்கலைக்கழகம் சென்ற தன் பின்னான பேராசிரியரின் நடவடிக்கைகளில் முற்போக்கும் சமூக அக்கறையும் சமூகமாற்றமும் பிரதான இடத்தைப் பிடித்துக் கொண்டன.
பாடசாலை மாணவப் பருவகாலத்தில் தமிழரசுக் கட்சியின் அதன் நடவடிக்கைகளில் அக்கறை காட்டி ஈடுபட்ட பேராசிரியர் தன் பல்கலைக்கழக படிப்பிற்கு பின்பு மட்டக்களப்பில் கம்யூனிச இயக்கத்தின் செயற்பாடுகளில் தீவிர அக்கறை காட்டினார். கிருஸ்ணக் குட்டியுடனான தொடர்புகள் கவிஞர் சுபத்திரனுடனான தொடர்புகள் என்பன பேராசிரியரை ஒரு தீவிரமான கம்யூனிச செயற்பாட்டாளராக மாற்றியிருந்தன. யாழ்ப்பாணத்தில் நடந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்கள், அதற்கெதிரான கவிதையரங்குகளில் பேராசிரியரின் கவிதைகள் அனல் தெறிக்க சாதியக் கொடுமைகளைச் சாடின.
ஈழத்து இலக்கிய வரலாற்றில் முற்போக்கு இயக்கம் அதன் செயல்பாடு இன்றுவரை வேறு எந்த ஒரு இலக்கிய இயக்கமும் செய்யாத சாதனைகளை செய்தது. இன்று ஈழத்து இலக்கியம் அதன் செல்நெறி என்பன வெறும் வரட்டுத்தனமான பிடிமானங்களைக் கொண்டதாகவே உள்ளன. பிணங்களைத்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 13
தோண்டி எடுத்து முலாம் பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மு. தளையசிங்கம் போன்றவர்கள் ஈழத்து இலக்கியக் கடவுளாக மாற்றப்படுகின்றனர். இவர்கள் எல்லாம் முற்போக்கு இயக்க செயல்பாட்டில் ஒரு திறனாய்வு கூட செய்யாதவர்களாகவே உள்ளனர்.
இன்று பன்மைத் தன்மைகளையும் பின் நவீனத்துவத்தையும் தூக்கிப் பிடிப்பவர்கள் ஒரு வகையான ஒருமைத் தன்மையை வலியுறுத்துபவர்களாக இவ்விடயங்களைப் பேசாவிட்டால் அவர்கள் இலக்கியவாதிகள் இல்லை என்று சொல்கிற இலக்கிய அராஜகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
ஆனால் முற்போக்கு இலக்கிய இயக்கம் சமூகத்தின் சகல மட்டத் தினரையும் இணைத்ததாக இனமொழி எல்லைகளைக் கடந்ததான தொழிற் பாட்டில் அந்த இயக்கத்தின் அறுபதுகளில் பேராசிரியர் ஒரு இலக்கியப் போராளியாகவே செயற்பட்டார். இளங்கீரன், டானியல், முதலான முற்போக்கு இலக்கியகாரர்களுடனான தொடர்புகளும் இணைந்த செயற்பாடும் பேராசிரியரை முற்போக்கு இயக்கத்தின் முக்கியமானவராக முன்னிறுத்தியது.
பேராசிரியர் கைலாசபதியின் நிழல் அவர் இறக்கும்வரை பேராசிரியரை அரவணைத்துக் கொண்டே இருந்தது எனலாம். பேராசிரியருடன் கதைக்கும் பொழுதுதெல்லாம் பேராசிரியர் கைலாசபதியை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வார். தான் ஏறிவந்த ஏணியை எப்பொழுதும் மறக்காத ஒரு மனிதராக காணமுடிகிறது. பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் கா. சிவத்தம்பி என தன் வளர்ச்சியில் அக்கறையுடன் செயல்பட்ட அனைவரையும் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்கின்ற பெருந்தன்மை பேராசிரியரிடமிருந்துநான் கற்றுக் கொண்ட நல்ல குணம்.

Page 64
மெளனகுரு : சில மனப்பதிவுகள்
- அன்புமணி -
மட்டக்களப்பின் தமிழறிஞர் பரம்பரையில் ஒரு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியவர் பேராசிரியர் சி.மெளனகுரு என்றால் அது மிகையாகாது:
தமிழ் இலக்கிய அறிவுடன் சுவாமி விபுலாநந்தர் வழியில் மட்டக்களப்பில் பல தமிழறிஞர்கள் தோன்றினர். ஆனால் இவர்களினின்றும் வேறுபட்டு, அறிவியல் நோக்கில் உருவான, முதல் தமிழறிஞர், முன்னோடித் தமிழறிஞர் மெளனகுரு ஒருவரே! தேசிய மட்டத்தில் அவர் தன்நிலையை நிறுவினார்.
மெளனகுரு மட்டக்களப்பில் மாணவனாக உருவாகி, பட்டதாரியாகி யாழ்.பல்கலைக்கழகத்தில், விரிவுரையாளராகி, கொழும்பில் பல சாதனைகள் புரிந்து, கிழக்குப் பல்கலைக்கழகத்தைக் கட்டி எழுப்பி, கூத்துக்கலை ஆய்வு, உலக நாடக விழா, அறிவியல் பரம்பரை உருவாக்கம், முதலிய சாதனைகள் மூலம் தனது விஸ்வரூபத்தை வெளிப்படுத்தினார். மட்டக்களப்புத் தமிழகம் இந்தப் பரிணாம வளர்ச்சியை நன்கு அவதானித்துள்ளது.
பேராசிரியர் கைலாசபதி மெளனகுருவைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்:
"மாணவனாக இருந்த ஒருவர் விரிவுரையாளராகி, ஆசிரியருக்கே தோழனாகும் அனுபவம் புதுமையானது. மெளனகுரு அதைச் செய்தார்"
நம் அவதானிப்பு இன்னும் ஒரு படிமேல் செல்கிறது. ஈழத்தமிழறிஞர் வரலாற்றில் கைலாசபதி, சிவத்தம்பி, மெளனகுரு என்று அறிவுலகம் பேசும் அளவுக்கு அவர் உயர்ந்தார். மும்மூர்த்திகளில் ஒருவரானார்.
நாடகம்
தனது துறைசார்ந்த பலவிடயங்களிலும் அசாத்திய தேடல் மிக்கவர் என்பதனால் உலகளாவிய ரீதியில் இத்துறைகளின் சமகாலப் போக்குகளை அறிவதுடன் சமகால சிந்தனை ஓட்டங்களையும் புரிந்து கொள்பவர் இவர்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 115
அந்தவகையில், நாவல், நாடகம், சிறுகதை, கவிதை, விமர்சனம் முதலிய துறைகளில் uptudate ஆக இருப்பார்.
நாடகத்தைப் பொறுத்தவரை, நான்கு நாடகம், தப்பி வந்த தாடி ஆடு முதலிய நாடக நூல்கள் இவரது பரீட்சார்த்த நாடகங்களின் பதிவாக வெளிவந்த போதும், "சங்காரம்" என்ற நாடகமே, இம்முயற்சியின் முழுமையை வெளிப்படுத்துகிறது. இதில் கூத்துக் கலை ஆட்டமுறைகளை நளினமாகப் புகுத்தியிருப்பது புதுமை,
நாடகத் துறையைப் பொறுத்தவரை சிங்களக் கலைஞர்கள் புதுமை செய்வதில் முந்திக் கொண்டனர். எதிரிவீர சரத்சந்திராவின் "மனமே" "சிங்கபாகு" முதலிய நாடகங்கள் இதற்கு நல்ல உதாரணங்களாகும். ஆனால் இந்நாடகங்களின் உருவாக்கத்தில் கிழக்கிலங்கைக் கூத்துக்கள் பெரிதும் உதவின என்பதை அவரே மனந்திறந்து கூறியிருக்கிறார். இதனையொட்டி பேராசிரியர் வித்தியானந்தனும் கூத்தில் புதுமை செய்தார். மட்டக்களப்புக் கிராமங்களுக்கு அவரை அழைத்துச் சென்று, கூத்துக்களைப் பார்வையிடச் செய்தவருள் நமது மெளனகுருவும் ஒருவர். (நமது கூத்துக்கள் எத்தகையinspiration ஐ உண்டாக்க வல்லவை என்பதற்கு இது ஒரு உதாரணம்.)
நாடகத்துறையைப் பொறுத்தவரை எதிரிவீர சரத்சந்திர போன்ற சிங்கள நாடகாசிரியர்களும் குழந்தை சண்முகலிங்கம்,தாசீசியஸ், பாலேந்திரா போன்ற தமிழ்நாடகாசிரியர்களும் மெளனகுருவை உயர்வாக மதித்தனர்.
கூத்து
உலக நாடுகள் பலவற்றில் அந்த அந்த நாடுகளுக்குரிய "கூத்துக்கள்" உள்ளன. ஜப்பானின் கபுக்கி, சீனாவின் ட்ரேகன் ஆட்டம்போல், இந்தியாவிலும் வெவ்வேறு மாநிலங்களில் யட்சகானம் (ஆந்திரா) கதகளி (கேரளா) முதலிய கூத்துக்கள் உள்ளன. (நடனம்/Ballet) என இவற்றை நாகரிகமாக அழைப்பர்) மட்டக்களப்பு மாநிலத்தின் கூத்துக்கலையை இந்த நிலைக்கு உயர்த்தியவர் மெளனகுருவே தவிர வேறு எவரும் இலர்.
கூத்துக்கலையை மகிமைப்படுத்துவதில் மூன்று கட்டங்கள் நிறைவேறி. யுள்ளன. அவற்றை நாம் நன்கு கிரகித்துக் கொள்ள வேண்டும்.
(1) கூத்துக்கலையை நவீனப்படுத்தியவர் கவிஞர் மூனாக்கானா (லெச்சுமி
கலியாணம் (1948) பரிசாரி மகன் (1976) முதலியன.)
(2) இக் கலையைப் பல்கலைக்கழகத்துக்கு எடுத்துச் சென்றவர்
சு.வித்தியானந்தன் (இராவணேசன், வாலி வதை, முதலியன.)
(3) கூத்துக்கலையை ஆய்வு செய்து, அது பரதநாட்டியம் போன்ற) ஒl, செந்நெறிக்கலை (Classical Dance) என நிறுவியவர் மெளன.

Page 65
16 @0 ឃុំ
இந்த ஒழுங்கு முறையை நாம் மாற்றி விடக்கூடாது மிகமுக்கியமான விடயம். கூத்து என்பது கூத்துத்தான் அதை நாட்டுக்கூத்து' என்று அழைப்பதில்லை. ஆனால் சு.வித்தியானந்தன் கூத்துக்களை பல்கலைக் கழகத்துக்கு எடுத்துச் சென்றபோது அதை நாட்டுக்கூத்து' எனக் குறிப்பிட்டார். இன்றுவரை இந்தத் தவறான பெயரை படித்தவர்கள், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் 'கூத்து' என்பதே இதன் மூலப் பெயர் என்பதை க.தங்கேஸ்வரி, பேராசிரியர் மெளனகுரு முதலியோர் மிக அழுத்தந்திருத்தமாகக் கூறியிருப்பதை இங்கு நாம் மனங்கொள்ள வேண்டும்.
கூத்தாட்டம்
பல்கலைக்கழகத்தில் உள்ள பலர் இன்று மட்டக்களப்பின் கூத்துக்கள் பற்றி விஸ்தாரமான கட்டுரைகளை எழுதிவருகின்றனர். ஆனால் இவர்களில் பலர் கூத்து ஆடியதில்லை. பேராசிரியர் (சு.வித்தியானந்தன் பேராசிரியர் கா.சிவத்தம்பி உட்பட) அரங்கக் கலைகளில் Theoryயை விட Practice மிக முக்கியம் என்பதை யாவரும் அறிவர்.
மெளனகுருவைப் பொறுத்தவரை கூத்தாட்டத்தின் சகல நுட்பங்களும் அவருக்கு அத்துப்படி, ஆட்டம், பாட்டு, தாளக்கட்டு முதலிய யாவற்றையும் அனுபவ ரீதியாக அறிந்தவர் அவர். கூத்து ஆடியவர், கூத்துப் பழக்கியவர். கூத்தை நெறிப்படுத்தியவர். "இராவணேசன்" "வாலிவதை" கோலியாத்தை வென்ற குமரன்" முதலியன இவர் ஆடிய கூத்துக்களிற் சில.
இவை தவிர கூத்துக்கலை தொடர்பாக நாளும் பொழுதும் இவர் ஆற்றிவரும் பணிகள் பல. ஒருசில வருமாறு.
(1) கூத்துக்கலை ஆவணப்படுத்தலை நெறிப்படுத்தியவர். (மட்.கச்சேரி
கலாசாரப் பேரவை ஏற்பாடு)
(2) கூத்துக்கலைப் பயிற்சிக் கருத்தரங்குகள் பலவற்றை நெறிப்படுத்தியவர்
(மட்.பிரதேச செயலாளர் ஏற்பாடு)
(3) வெளிநாட்டிலிருந்து வரும் ஆய்வாளர்களுக்கு கூத்துக் கலை
ஆய்வுக்கு அனுசரணையாகச் செயற்படுபவர்.
(4) கிராமப்புறங்களில் உள்ள கூத்துக்கலைஞர்களை மகிமைப்படுத்துபவர்.
(5) கூத்துக்கலைஞர்களுக்குத் கிழக்குப் பல்கலைக்கழகம் "தலைக்
கோல்" விருது வழங்கிக் கெளரவிப்பதற்கு வழிசமைப்பவர்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 7
(6) கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கூத்துக்கலை ஒரு பாடமாக இடம்
பெறுவதற்கு உதவியவர்.
(6) "மட்டக்களப்பின் மரபுவழி நாடகங்கள்" எனும் பாரிய ஆய்வு நூலை
எழுதியவர்.
g5pts)II6OI L-6)6O)Ln
திறமான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" என்றான் பாரதி. வெளிநாட்டார் மட்டும் அல்ல உள்நாட்டவரும் அதை மதிக்க வேண்டும். பேராசிரியர் மெளனகுரு இதைப் பலதடவை நிரூபித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அவருக்கிருந்த தனிமதிப்பு யாவரும் அறிந்த விடயம். பேராசிரியர்களால் மதிக்கப்பட்ட ஒரு விரிவுரையாளராக அவர் திகழ்ந்தார். பல விரிவுரையாளர்களை அவர் உருவாக்கினார்.
யாழ்.பல்கலைக்கழகம் உருவாகிப்பல வருடங்களுக்குப்பின்பே கிழக்குப் பல்கலைக்கழகம் உருவானது. இதன் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் மெளனகுரு கணிசமான பங்களிப்பைச் செய்தார்.
மெளனகுருவின் திறமான புலமைக்கு அவரது பேச்சுக்களும் கட்டுரைகளுமே உரைகல்ஆகும்.
பேச்சைப் பொறுத்தவரை, பொருளடக்கம் கூறி அதற்கமைவாக விடயங்களைக் கூறி ஈற்றில் அதன் தொகுப்புரையையும் கூறி நிறைவு செய்வார். எடுத்துக் கொண்ட பொருளுக்கு வெளியே ஒரு கணமும் உலவ மாட்டார். பல பேராசிரியர்களிடம் இல்லாத ஒரு தனித்துவப் பண்பு இது.
அவ்வாறே, கட்டுரைகளையும் வகுத்துத் தொகுத்து வடிவமைப்பார். எந்த விடயமானாலும், பிறர் சொல்லாத பலதகவல்களை உள்ளடக்கி, உள்ளார்ந்த பார்வையுடன், அறிவியல் நோக்குடன் அவரது கட்டுரைகள் அமைந்திருக்கும். அத்தகைய இவரது பேச்சுக்களும் கட்டுரைகளும் தொகுப்பு நூல்களாக வெளி வரவேண்டும்.
இந்து விஞ்ஞானம்
தமிழர்களின் பாரம்பரிய அறிவியல் கலைகளில் மூன்று விடயங்கள் முக்கியமானவை. அவை வைத்தியம், சோதிடம், மாந்திரீகம் என்பனவாகும். மேல்நாட்டு விஞ்ஞானத்தால் இவற்றைக் கிரகிக்க முடியாது. எனவே இவற்றை மூடநம்பிக்கையின் பாற்பட்டவை என அவ்விஞ்ஞானம் ஒதுக்கித் தள்ளிவிட்டது. ஆனால் நுணுகி ஆராயும் போது இவையும் ஒருவகை விஞ்ஞானமே என்பதை உணரலாம். சித்தர்களும் முனிவர்களும், இவற்றைத் தக்க முறையில்

Page 66
118 மெளனம்
பயன்படுத்தியுள்ளனர். ஏடுகள் இவற்றின் மகத்துவத்தை எடுத்துக் கூறுகின்றன. ஆனாலும் நீண்ட காலமாக இவை படித்தவர்களால், பல்கலைக்கழகத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டன.
ஆனால் பேராசிரியர் மெளனகுரு இவற்றை நுணுகி ஆராய்ந்து, இவற்றின் உண்மைகளை உணர்ந்து இவை மூன்றும் நம்மவர்களால் பேணி வளர்க்கப்பட வேண்டிய அபூர்வ கலைகள் என்பதை வெளிப்படுத்தினார். அதன் அடிப்படையில் இவற்றுக்கு இந்து விஞ்ஞானம்' என்ற பொருத்தமான பெயரையும் சூட்டினார்.
AStronomy என்பது வானசாஸ்திரம், பூமியில் அவற்றால் எற்படும் விளைவுகளைக் கூறுவது Astrology என்னும் சோதிடம். இரண்டிலுமே தமிழர்கள் விற்பன்னர்கள். அவ்வாறே மருத்துவத் துறையிலும் மாந்திரீகத் துறையிலும் அவர்கள் விற்பன்னர்கள் ஆக இருந்தார்கள். பேராசிரியர் மெளனகுரு இவ் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
பாரம்பரியமும் மரபுகளும்
மட்டக்களப்புப்பிரதேசத்தின் பாரம்பரியமும், மரபுகளும் தனித்துவமானவை. மட்டக்களப்பு மக்கள் இலங்கையின் பூர்வ குடிகள் என்பதை எடுத்துக்காட்டும் இச்சிறப்பை நம்மவர்கள் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை. இவ்விடயத்தில் மெளனகுரு அதிக அக்கறை கொண்டிருந்த்ார்.
யாழ்ப்பாணத்தில் கந்தபுராண கலாசாரம் முக்கியத்துவம் பெறுவதுபோல், மட்டக்களப்பில், மகாபாரத கலாசாரம் முக்கியத்துவம் பெறுகிறது. வடபுலத்தில் ஆகம வணக்கம் முக்கியத்துவம் பெறுவது போல் மட்டக்களப்பில் பத்ததி வணக்க முறை முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு நூறு அல்லது இருநூறு வருஷங்களுக்கு முன் பிராமணர்கள் இங்கு வரும் வரை பத்ததி வணக்கமுறையே மட்டக்களப்புப் பிரதேசமெங்கும் நிலை பெற்றிருந்தது. இன்றும் கிராமப்புறங்களில் இவ்வணக்க முறை தொடர்கிறது. இதில் சக்தி வணக்கமே அடிநாதமாக உள்ளது. காளியம்மன், பேச்சியம்மன், கடலாச்சியம்மன் எனப்பல்வேறு பெயர்களால் இவை அழைக்கப்பட்டாலும் இவை அனைத்தும் சக்தி வணக்கத்தையே குறிக்கின்றன. இஃது மனிதனின் ஆதிகால வணக்கமான தாய்த் தெய்வ வணக்கத்தோடு தொடர்புபட்டது. இவ்வுண்மையை பேராசிரியர் மெளனகுரு அறிவியல் நோக்கில் வெளிப்படுத்தினார்.
அண்மையில் (6.5.2003- 8.5.2003) மட்டக்களப்பில் நடைபெற்ற 2வது உலக இந்து மாநாட்டின் மட்டக்களப்புப் பிரதேச விழாவில், அவர் மூன்று வழிகளில் இதைப் பதிவு செய்தார். அவை (1) கருத்தரங்கின் ஆய்வுரைகள் (2) அம்மன் வணக்க முறை பற்றிய கண்காட்சி(3) மட்டக்களப்பின் பாரம்பரிய வணக்க முறை பற்றிய சிறப்பு மலர்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 119
வரலாறு படைத்தவர்
நாம் நமது வரலாற்றைப் படிக்கவில்லை. நாம் நமது இலக்கியத்தைப் படிக்கவில்லை. நாம் நமது சூழலைப் படிக்கவில்லை. காரணம், அவை நமது பாடப்புத்தகங்களில் இடம் பெறுவதில்லை. இன்றைய துரதிர்ஷ்டமானநிலை இது. ஆனால் பேராசிரியர் மெளனகுரு தமது பல்கலைக்கழக மாணவர் மத்தியில் இவ்விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் இன்று எதையும் அறிவியல் நோக்கில் பார்க்கின்றனர். ஆழமாகச் சிந்திக்கின்றனர். வரலாற்றைப் படிப்பவர் பலர். ஆனால் வரலாற்றைப் படைப்பவர் ஒரு சிலரே. அந்த ஒரு சிலரில் மெளனகுரு ஒருவராகிறார். அவருடைய சாதனைகள் இதை எடுத்துக் காட்டுகின்றன். யாழ். பல்கலைக்கழகப் பதவி, கிழக்குப்பல்கலைக்கழக உருவாக்கம், உலக நாடக விழா, கூத்துக்கலை வளர்ச்சி, பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வு எனப் பல சாதனைகளை நிகழ்த்திய மெளனகுரு, விபுலாநந்த இசை நடனக்கல்லூரிய்ை, கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைத்து, அங்குள்ள மாணவர்கள், விரிவுரையாளர்களின் எதிர்காலத்தை அர்த்தமுள்ளதாக்குவதிலும் கணிசமான பங்களிப்பைச் செய்தார். ஆனால் - இந்தப் பரிணாம வளர்ச்சியில், நமது இரண்டு எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. அவர் விபுலாநந்த இசை நடனக் கல்லூரியின் பொறுப் பை ஏற்பார் என எதிர்பார்த்தோம் - அது நடைபெறவில்லை. அவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகி இளைப்பாறுவார் என எதிர்பார்த்தோம் - அதுவும் நிறைவேறவில்லை.
அன்று முதல் இன்று வரை நம்மைத் தொடர்ந்துவரும் சோகம் - துரதிர்ஷ்டம் இதுவே!

Page 67
இவன் ஒரு சூரியன்
கிழக்குத் திசையெலாம் ஒளிக்கொலை, இருட்குவை பரந்த கடலெலாம் தொடர்ந்த கார்நீலம் கதிரவன் வரவு காணக் கடுந்தவம் ஒற்றைக் காலில் நிற்கும் நாரைகள் விடியலுக்காகத் தடிக்கும் மனிதம் அடிவானத்தில் ஒரு சிறு ஒளிக்கீற்று மெதவாய் ~ திடமாய் இருள் கிழிகிறது ஒளியின் வெள்ளம் வழி தெரிகிறத மட்டக்களப்பின் தலை நிமிர்கிறது பூரிப்போடு புதிய நல் வரவாய் ஆழியில் குதித்தெழும் நீளொளிப் பிளம்பு
- வ. கனகசிங்கம் -
பரிதியின் உதயம் இருள் உடைகிறது கண், உடல், மண்ணெலாம் பசுமையின் படர்ஒளி தடங்கலே இல்லை அடங்காச் சுடர் அலை கடற்கரை ஓரம் கடுகதிப்புகுந்த தெண்னஞ்சோலைத் திசை ஊடுருவி வாவியின் மேலே தாவிச் சாந்தமாய் பசிய வயல்களைப் பார்த்து மேலெழுந்து வருகிறான் கதிரவன் அவன் தொழிலாளி விடியலில் குழந்தை மேனியில் சந்தனம் பூமியை மோந்த புன்னகை புரிந்த
.به0bfک _]p உயர்ந்த நடக்கிறான்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 2
கிளர்ந்த சூரியன் கிழக்கின் இருளை விரட்டி அடித்தப் புரட்சி விளைக்கிறான் திட்டுத் திட்டாய் திணிந் தாங்காங்கே உறங்கும் இருளினை தயங்கா உளத்தொடு சொல்லால் செயலால் தரத்தி அடிக்கிறான் விளைவெதிர் நோக்கா வினையாற்றுகிறான் மடமை இருளைத் திடமதால் எரித்து உச்சிப் பொழுதாய் உயர்ந்து நிற்கிறான் ஒளிக்கர வீச்சால் கிழக் கொளிர்கிறது முதிர்ந்த போனாலும் மூச்சிரைக்காது
இதனண்கைகள்
இது என்பேரு இது எண் அறிவு எண் மண்ணுக்கே, மறைந்து இந்த மண்ணுளேகிடக்கும் புதையலைத் தோண்டி விதி, படைத்திடவே என்பின் வருவீர் என்று முன் நிற்கும் சொல்லின் செல்வன், தொடர் செயல்வீரன்
அதோ முன்நோக்கி அழகாய் நடக்கிறான் சுணக்கமா இன்னும் தொடர்வோம் இவனை அணியாய்க் கைகோர்த்து அவன் வழி செல்வோம் அவன் அறிவொளியே
அகல் விளக்காகி
வழிகாட்டிடுமே விழி திறந்தெழுவோம்.

Page 68

புலமை சார்ந்தது.

Page 69

மெளனகுருவின் அரங்க விகசீப்பு: 'வனவாசத்தின் பின்'. எழுத்துருவுக்கான முன்னுரையான ஓர் அரங்கியல் விமர்சனப் பதிகை
- பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி -
ஈழத்தின் தமிழ் மொழி வழி அரங்கியற் கல்வி வளர்ச்சியில் இத்தகைய ஒரு புலமை முயற்சி இன்று அவசியம் என்று கருதுகின்றேன். அரங்கியலானது, பட்டப்படிப்பு, மேற்படிப்புக்கான ஒரு துறையான பின்னரும், நாம் தமிழ் அரங்க வரலாறு வளர்ச்சிகள் பற்றிப் பேசும் பொழுது, தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட பெயர்களைக் குறிப்பிட்டு இதைச் செய்தார்கள் என்ற தரவு வழங்கலை மாத்திரம் நோக்காது, அவர்களின்பங்களிப்புக்களை அரங்கியல் வரலாற்று (Theatrical History) பின்னணியில் வைத்து நோக்குவது அவசியமாகிறது. வரலாறு பற்றிய பிரக்ஞை இல்லாது அபிப்பிராயங்களை ஆய்வாகக் கொண்டு விடும் ஒரு சிறு பிள்ளைத் தனமான போக்கு ஈழத்தின் வரன் முறையான அரங்க வரலாறு தோன்றுவதற்கு ஊறு விளைவிக்கக் கூடாது.
1960 முதல் 1990 வரையுள்ள காலப்பகுதியில் ஈழத்தில் தமிழ்க் கலைத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியில் மெளனகுரு பெறும் இடம் பற்றிய ஒரு குறிப்பினை அவரது "பழையதும் புதியதும்" என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். (1992)
"வனவாசத்தின் பின்." என்ற நாடக எழுத்துருவுக்கான முன்னுரை எழுதும் இவ்வேளையில் மெளனகுருவின் அரங்க வளர்ச்சி எவ்வாறு அமைந்தது? அதன் பண்புகள் யாவை? என்பது பற்றி ஒரு சிறிது நோக்கப்பட வேண்டும் என்று கருதுகின்றேன்.
1960 களில் இருந்து ஈழத்துத் தமிழ் அரங்கல் முக்கியத்துவம் பெற்று வந்தவர்கள் பற்றிய நியாயமான அரங்கியல் ஆய்வு இப்பொழுது தேவைப்படுகிறது. அந்தப் பட்டியல் மிக நீளமானது. அதில் மரபு வழி நாடகப்

Page 70
126 மெளனம்
பயில் வாளர்களும், (பூந்தான் ஜோசப், செல்லையா அண்ணாவியார் போன்றவர்கள்) பிறமொழி அரங்கியல் பற்றிய பரீட்சயத்துடன் தமிழ் அரங்கிற் தொழிற்பட்டவர்களும் (தாசீசியஸ், நா. சுந்தரலிங்கம், பாலேந்திரா, சிவானந்தன்) கொழும்பு நகரத்து அரங்கப் பாரம்பரிய வழியாக வந்தவர்களும் (லடீஸ் வீரமணி, சுஹைர் ஹமீட், கலைச்செல்வன். அன்ரனி ஜீவா உதயகுமார்) பல்கலைக்கழக அரங்கின் வழியாக வந்தவர்களும் (மெளனகுரு, சுந்தரலிங்கம், சிவானந்தன்) தளமாற்ற (Radical) அரங்கு வழியாக வந்தவர்களும் (இளைய பத்மநாதன்) மன்னார், முல்லைத்தீவு நாடகப் பாரம்பரியங்களின் வழியாக வந்தவர்களும் (குழந்தை, ஞானம் லம்பேர்ட், மெற்றாஸ் மெயில், அருணா செல்லத்துரை) யாழ்ப்பாண கத்தோலிக்க அரங்கு வழியாக வந்தவர்களும் (பிரான்சிஸ் ஜெனம், பாலதாஸ், கொன்ஸ் ரன் ரைன்) யாழ்ப்பாண நாடக சபா மரபு வழியாக வந்தவர்களும் (அரசு, சானா) நாடக எழுத்துருக்களின் வழியாக வந்தவிர்களும் (கணபதிப்பிள்ளை, அ.ந. கந்தசாமி, சொக்கன், முத்துலிங்கம்) வானொலி அரங்கின் மூலமாக வந்தவர்களும் (றொசாரியோ பீரிஸ், பிலோமினா சொலமன், ஜோர்ச் சந்திரசேகரன், கே.எம்.வாசகர்.வி.சுந்தரலிங்கம். ரி.வி.பிச்சையப்பா, செல்வஜோதி செல்லத்துரை, சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்ராஜன், செந்திமணி) வானொலி, தொலைக்காட்சி வழி வந்தோரும் (பி.விக்கினேஸ்வரன்) நகைச்சுவை நடிகர்களாகப் பெயரீட்டியவர்களும் (சக்கடத்தார் ராஜரட்னம், மரிக்கார் ராமதாஸ்) என இந்தப் பட்டியல் விரியும். இச்சிறு பட்டியலிலே விடுபட்ட பெயர்கள் பலவுள்ளன.
இத்தகைய ஒரு முயற்சி மேற்கொள்ளப்படும் பொழுது விடுபட்ட பெயர்கள் பற்றிச் சண்டைகள் போடப்படுகின்றனவேயன்றி, இந்தப் பெயர்களுக்கு மேலே சென்று இவர்கள் வளர்த்த அரங்குகள் (Their Theatre) எத்தகையன? அவற்றின் பிரதான முறைமைகள் யாவை? என்பன பற்றி நோக்கும் தன்மை இன்னம் வளரத் தொடங்கவில்லை.
மேலும், அண்மையில் வெளிவந்த காரை சுந்தரம்பிள்ளையின் வைரமுத்துவின் வாழ்க்கையும் அரங்கும் பற்றிய நூல் ஒன்றைத் தவிர (1997) தனி ஒருவரின் அரங்கியற் பரிணாமம் பற்றிய உன்னிப்பான வரன்முறை ஆய்வுகள் இன்னும் வரத் தொடங்கவில்லை என்பது தெரிகிறது. வைரமுத்துவின் அரங்கு பற்றி குழந்தை சண்முகலிங்கம் எழுதியுள்ள ஒரு கட்டுரை மிக முக்கியமானது.
இந்த நிலையிலே தான் நாம் அரங்கியல் ஆய்வில் மேலும் ஒரு படிநிலைக்குச் செல்வது அத்தியாவசியமாகின்றது.
1950கள் முதல் வளர்ந்து வந்த நாடக ஈடுபாட்டு நெருக்கம் காரணமாக, தமிழ் அரங்கு ஒருகாத்திரமான கலை முயற்சியாக மேற்கிளம்பும் தன்மையை நாம் காணலாம். அந்த வளர்ச்சியில் பல்கலைக்கழகங்கள் பிரதான மையங்களாகின்றன. பேராதனை, கொழும்பு, கட்டுப்பெத்தை ஆகிய உயர்கல்விநிலையங்கள் | யத்தைச் செந்நெறி மனோபாவத்துடன் வளர்க்கத் தொடங்கின.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 127
கொழும்பு நகர்ப் புறத்து இளைஞர்கள் சிலரும் இந்தச் செந்நெறிப் போக்கில் இணைந்து கொண்டனர். அக்காலத்தில் தமிழ் மாவட்டங்களிற் பலர் நாடக ஈடுபாடு கொண்டுபல தயாரிப்புக்களை மேடையேற்றினரெனினும் நாடகக் கலையின் அடிப்படை வெளிப்பாட்டுத் தன்மை, அதன் தொடர்புமுறைமை போன்ற கலாரீதியான விடயங்களிற் பரீட்சார்த்தம் செய்தவர்கள் என்று கொள்ள முடியாது. அவர்கள் குறிப்பிட்ட ஒரு சில முறைமைகளையே கையாண்டு வந்தனர்.
இத்தகைய ஒரு சூழலில் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்களும், பல்கலைக்கழகத்தின் வழியாக வந்தவர்களும் பிறமொழி நாடகப் பரீட்சயம் உடையவர்களும் நாடகத்தினை காத்திரமான கலையாகக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இக் கால கட்டத்தில் நாடகத்தின் பிரதான வளர்ச்சிப் போக்கில் முக்கியமான மைல் கல்லாக அமைபவர்கள் பற்றி ஆழமாக ஆராய வேண்டியது அவசியமாகின்றது. ஏனெனில் 1970 களில் நாடகம் நிச்சயமான செந்நெறிப் பாங்கினை பெறத் தொடங்குகின்ற பொழுது இவர்கள் முக்கியமானவர். களாகின்றார்கள்.
இக்கட்டத்தில் இது சம்பந்தமாக முக்கிய உண்மையைப் பதிவு செய்தல் வேண்டும், கலை, இலக்கிய வரலாற்றில் எவ்வாறு அவற்றின் வளர்ச்சி, மாற்ற நிலையினைப் பிரதிபலிப்பவர்கள் முக்கியமாகின்றார்களோ,நாடக வரலாற்றிலும் அத்தகையோரே முக்கிய இடம் பெறல் வேண்டும். நாடகத்தின் போக்கைத் தீர்மானித்த ஒருவர் பற்றிய குறிப்பையும், அத்துறையில் மேலும் ஒருவராக ஈடுபட்டிருந்த ஒருவரையும் ஒரே நிலையில் வைத்து ஆராய்வது சிரமமே.
இவ்வாறு ஆராயப்படுபவர்களும், அவரவரின் தனிப்பட்ட செயல் வீச்சுக்களுக்காக அல்லாது, அவர்களின் பங்களிப்பு அரங்கச் செழுமைக்கும், அதன் மேற்செல்லுகைக்கும் எந்தளவுக்கு உதவியிருக்கின்றது என்பதையும் அறிவதற்கு உதவ வேண்டும்.
இத்தகைய ஆய்வுக் கட்டுப்பாட்டுணர்வுடனும் கட்டுப்பாட்டுடனுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
அப்படிப் பார்க்கின்ற பொழுது சில பேர்கள் (பலர் விரும்பாவிடினும்) முக்கியமாகின்றன.
வித்தியானந்தனின் மரபு வழி அரங்க மீட்பினை ஒரு பிரிகோடாகக் கருதினால், அதன் பின்னரும் பிரதான அரங்க மேற்செலவு, அரங்கம் பற்றிய புலமைத்துவ உந்துதல்களுடனும், பிறமொழி அரங்குகளின் செல்வாக்கிற்குட்பட்டும் தொழிற்பட்ட ஒரு குழுவினராலேயே ஏற்பட்டது.
இந்தக் குழுவினரிடையே அரங்கு பற்றிய அடிப்படைக் கருத்து நிலை ஒருமைப்பாடோ அரங்க அணுகுமுறைகளோ இருந்தது என்று கூறமுடியாது. ஆனால் இவர்களது ஒட்டுமொத்தமான தாக்கம் ஈழத்தில் தமிழ் நாடக வளர்ச்சியை இன்னொரு படி நிலைக்குக் கொண்டு சென்றது (தமிழ்ச் சிறுகதை

Page 71
128 மெளனம்
வளர்ச்சியில் இன்னொரு படிநிலைக்கு கொண்டு சென்றது). தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் மணிக் கொடியினருக்குள்ள இடம் இப்பொழுது நினைவுக்கு வருகின்றது.
அவ்வாறு ஆராயப்பட வேண்டியவர்களுக்குள்ளே பின்வருவோர் முக்கிய மானவர்கள்.
தாசீசியஸ்
நா.சுந்தரலிங்கம் (சிவானந்தனை இவருடன் இணைத்துப்பார்க்க வேண்டும்)
மெளனகுரு
சுஹைர் ஹமீட்
பாலேந்திரா
சண்முகலிங்கம்
சிதம்பரநாதன்
இந்தப் பெயர்கள் 1960 - 1990 காலப்பகுதியின் நாடக வளர்ச்சியில் முக்கியமான பெயர்களாகும். நாடகப் பரம்பலில் (அகல விஸ்தரிப்பில்) முக்கிய இடம்பெறும் பிறர் இல்லாமலில்லை. அரங்க வரலாற்றில் அவர்கட்கு இடமுண்டு. அரங்க வளர்ச்சியில் அல்ல.
இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும் பொழுது தான் நாம் தொடர்ந்து உரையாடலாம். இல்லையேல் ஒருவர் பேசுவதை மற்றவர் கேட்காது. தான் பேசுவதிலேயே தீவிரம் காட்டுவதாக அமைந்து விடும்.
இது சம்பந்தமாக இன்னுமொரு உண்மையையும் பதிவுசெய்து கொள்ளுதல் வேண்டும் மேலே தரப்பட்ட பெயர்களைப் பட்டியலிடும் பொழுது, இக்கால கட்டத்தின் நாடகத் தொழிற்பாடுகளில் இவர்கள் தான் ஈடுபட்டிருந்தனர் என்று ஆகாது. வேறு சிலரும், வேறு நிறுவனங்களும் உண்டு. ஆனால் அவை ஈழத்துத் தமிழ் அரங்கின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனவாவென்று நிதானித்துப் பார்க்க வேண்டியது அவசியம். அப்பொழுது இரண்டு விடயங்கள் மிக மிக முக்கியப்படும்.
1. தமிழ் அரங்கின் வளர்ச்சி (பல்வேறு செல்வாக்குகளினூடே அதன்
வளர்ச்சி அமைந்த முறைமை)
2. சர்வதேச அரங்கின் வளர்ச்சி
முதலாவது இரண்டாவதனுள் "இயைபுற" வேண்டும்.
இத்தகைய விரிந்த, அகன்ற வினாக்களைப் பின்புலமாகக் கொண்டே நாம் அரங்கியல் வரலாற்றையும், அரங்கியற் பங்களிப்புக்களையும் நோக்க வேண்டும்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 129
மெளனகுரு அண்மைக்காலத்து ஈழத்துத் தமிழ்நாடக வரலாற்றில் பெறும் ஒட்டுமொத்தமான இடம் என்ன என்பது பற்றிய ஒரு பிராரம்பத் தெளிவு இருத்தல் அவசியமாகிறது.
1959 இல் அசாதாரண ஆற்றல் மிக்க கூத்துக் கலைஞனாக இனம் காணப்பட்ட மெளனகுரு, கடந்த 36 வருடங்களாக அரங்கிற் தொழிற்பட்டு வருகின்றார். இவருடைய பங்களிப்பை வாய்ப்பாட்டு ரீதியில், நடிகர், எழுத்துரு வாக்குநர், நெறியாளர், நாடக ஆய்வாளர், நாடக ஆசிரியர் எனவும் பகுத்து நோக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் அவரது முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மெளனகுரு, மீட்டெடுக்கப்பட்ட கூத்து மரபின் அரங்கியற் சாத்தியப்பாடுகளையும் அந்தக் கூத்து மரபு தொடர்ந்து வளரும், வாழும் அரங்கின் இன்றியமையா முதன்மையாகியுள்ளமையையும் உருவகப்படுத்தி நிற்கின்றார்.
கூத்து மரபிலிருந்து வந்து கூத்து மரபினை நவீன நாடக மரபின் இன்றியமையா அங்கம் ஆக்கியமையில் மெளனகுருவின் இடம் முக்கியமானது. இந்த ஆட்டமோடிமையை கல்வி அரங்குக்குக் கொண்டு சென்று வழக்கமான "மோடிமை"க்கு (Stylization) அப்பாலான ஆட்ட அரங்காக்கியுள்ளார்.
கூத்தின் ஆட்டமும், அரங்கின் நாடகத் தன்மையையும் ஈழத்தின் சிறுவர் அரங்கில் இணைந்துள்ளமை இவரது முக்கிய பங்களிப்பாகும்.
இந்தப் பரிணாம வளர்ச்சி எவ்வாறு அமைந்துள்ளன என நோக்குவோம். மெளனகுரு முதலிற் "கண்டு பிடிக்கப்பட்டது" 1959 இல் ஆகும். மட்டக்களப்பில் இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக் குழு நடாத்திய பாடசாலைகளுக்கான முதலாவது மாநில அடிப்படையிலான கூத்துப் போட்டி அது. அதில் வந்தாறுமூலை மத்திய கல்லூரி அளித்த அருச்சுனன் தபசில் மெளனகுரு சிவ வேடனாக வேட மேற்று நடித்திருந்தார்.
இந்த ஆற்றுகையின் பொழுது இவரிடத்திலிருந்த ஆற்றுகைச் சாத்தியப்பாடு யாவும் நன்கு புலனாயின. (போட்டி முடிந்து கொழும்பு செல்லும் வழியில் இந்த மாணவனைக் கண்டு வாழ்த்திச் செல்ல வேண்டும் என்று பேராசிரியர் வித்தியானந்தன் தீர்மானித்து, வந்தாறுமூலை மத்திய கல்லூரி சென்று பார்த்துச் சென்றது நேற்று நடந்தது போல இருக்கிறது. அப்பொழுது அப்பாடசாலையின் அதிபராக திரு. சவரிமுத்து இருந்தார்)
அடுத்த கட்டம் மெளனகுரு பல்கலைக்கழக மாணவனாக 1962இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு வந்தமை.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் போது மெளனகுரு, பேராசிரியர் வித்தியானந்தன் மேற்கொண்ட பாரம்பரிய நாடக மீட்பிற்கு தளமானார். இக்காலகட்டத்தில் மெளனகுரு ஒருவர் தான் இத்திறமையுடன்

Page 72
130
வந்தவரல்லர். அத்தகையோர் பலர் - குறைந்தது 5, 6 பேர் - இருந்தனர். அவருள் இருவரை என்னால் மறக்க முடியாது. ஒருவர் (கர்ணன் போரில் சல்லியனுக்கும், நொண்டிநாடகத்தில் நொண்டியனுக்கும் நடித்த) பேரின்பராசா, மற்றவர் (கர்ணன் போரில் வீமனுக்கும், நொண்டி நாடகத்தில் பொன்னக் கோனுக்கும் நடித்துப் பின்னர் அந்நியநாட்டு நிர்வாகச் சேவையில் இடம்பெற்ற) கனகரத்தினம்.
கர்ணன் போரில் குந்தியாக நடித்த ஈஸ்வரறிதி இராசரத்தினமும், கர்ணன் போரில் கிஷ்ணனாக நடித்து, பின்னர் பேராசிரியராகப் பணிபுரியும் அ. சண்முகதாசும் மறக்கக்கூடியவரல்லர்.
அந்தக் காலகட்டத்தின் முக்கியத்துவம் யாதெனில், மூன்று வருட கால எல்லைக்குள் மெளனகுரு மூன்று முக்கிய தயாரிப்புக்களில் ஆடி நடித்ததாகும். கர்ணன் போரில் கர்ணனாகவும் (1962) நொண்டிநாடகத்தில் செட்டியாகவும் (1963) இராவணேசனில் இராவணனாகவும் (1964) இவர் நடித்தார். இந்த மூன்று நாடகங்கள் மூலமாகவும் கூத்து, நாடக மாக்கப்பட்டிருந்தது. ஒப்பனை, நடிப்பு, நடிப்புக்கேற்ற கட்டங்கள், புதிய இசை, இறுக்கமானகட்டமைப்பு ஆகியன அந்தத் தயாரிப்புக்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு சிம்பனி (Symphony) ஆக்கியிருந்தன. மெளனகுரு இந்த நாடகங்கள் மூலம் நாடகத்தின் நெளிவு சுழிவுகள் முழுவதையும் உணர்ந்து கொண்டிருந்தார். கூத்துக்கான எழுத்துருவைத் தயாரிக்கும் அனுபவம் இராவணேசன் மூலம் அவருக்குக் கிட்டிற்று. இந்தத் தயாரிப்புக்களின் விளைவு அவருக்குக் கிடைத்த கருத்துருவ, செயல் முறை அறிவுறுத்தல்கள் பலவற்றைத் தனதாக்கிக் கொண்டு அவற்றைத் தனது பயிற்சியினுள் ஒன்றாக உள்வாங்கிக் கொண்டார். 1962 - 1964 இல் பெற்ற பயிற்சி காரணமாக 1968ல் வாலிவதை எனும் வடமோடி நாடகத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வித்தியானந்தன் தயாரிக்க உதவுகிறார். வாலிவதை நாடகத்தை எழுதியதும் மெளனகுருவே.
இந்தக் கட்டத்தில் பிரதான அம்சம் இவர் கருத்துநிலை ரீதியாக பெற்றுக் கொண்ட உள்வாங்கல்களே. மாக்ஸியக் கண்ணோட்டத்தின் புலமைத்துவ அடிப்படைகளுக்கு இவர் பரீட்சயமானார். சுமூகமாகப் பழகும் UTF (5, ஆட்டத்துக்கான ஆளுமைக் கவர்ச்சி ஆகிய இயல்பான ஆளுமைப் பண்புகளுடன் இவை சேர்ந்த பொழுது இவரது முன்னேற்றத்துக்கான சாத்தியப்பாடுகள் அதிகரித்தன. இவரோடு பேராதனைக்கு வந்து, கூத்தில் இவரளவு திறமை காட்டிய சிலர் அந்த ஆர்வத்தை தொடர்ந்து பேணவில்லை. அடுத்த படிநிலைக்குச் செல்லும் ஆர்வம், திறமை, நட்புச் சூழல் யாவும் இவருக்கிருந்தன.
அடுத்த கட்டம் கூத்தை நவீன உள்ளடக்கத்துக்கான கலை வாகனமாக மாற்றுவதாகும். இதில் அவர் இயங்கிய நட்பு- புலமைச் சூழல் இவரது இலட்சியங்களையும், தொழிற்பாடுகளையும் தீர்மானித்தது எனலாம். கந்தன் கருணை, சங்காரம் ஆகிய இரண்டுநாடகங்களும் 1969இல் மேடையேறுகின்றன.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 3
கந்தன் கருணை, யாழ்ப்பாணக் காத்தவராயன் கூத்து மரபைப் பயன்படுத்த, சங்காரம் மட்டக்களப்பு வடமோடிக் கூத்துமரபை பயன்படுத்திற்று.
சங்காரம் முற்றிலும் அரசியல் மயப்பட்ட சூழலிலே பிரபல மெய்திற்று. 1969 இல் கொழும்பு லும்பினில் அரங்கில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மாநாட்டின் போது சங்காரம் மேடையிடப்பட்டது. மட்டக்களப்புநாடக சபாவினால் தயாரிக்கப்பட்ட இந்நாடகத்தை கொழும்பு நாடக நண்பர்கள் முன்னின்று மேடையிட்டனர். (கே.கந்தசாமி, ச.முத்துலிங்கம், நா.சுந்தரலிங்கம், இ.சிவானந்தன் ஆகியோர் உதவினர் என்ற குறிப்பு மெளனகுருவின் ஆற்றுகைகள் பற்றிய பத்திரிகைச் செய்தித் தொகுப்பில் உள்ளது) இது சங்காரம் அரங்கேறிய பின்புலத்தைக் காட்டுகின்றது.
சங்காரத்தின் எழுத்துருத்தளம் மாக்ஸியம் எடுத்துக் கூறும் மனிதனின் சுதந்திரத்திற்கான போராட்டமாகும்.
கூத்துமரபினை நவீன அரங்குடன் இணைதத eபாழுது அவற்றுக்கான நாடக எழுத்துருவை தயாரிப்பதில் மெளனகுருவிற்கு ஒரு வாய்ப்பு நிலை இருந்தது. அது அவரின் கவிதையாக்கத்திறனாகும். 1960, 1970 களில் ஈழத்தின் கவிதை வளர்ச்சியில் கவியரங்குகள் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பெறுகின்றன. மெளனகுரு அக்காலகட்டத்தில் பிரசித்தி பெற்ற கவியரங்கக் கவிஞர்களுள் ஒருவராக விளங்கினார். இவரிடத்திலிருந்த இந்த "செய்யுளியற்றல்" ஆற்றல், தாம் எழுதும் நாடகங்களுக்க வேண்டிய பாடல்களை எழுதுவதற்கான திறமையை வழங்கிற்று. இந்தப் பண்பு, குழந்தைகளுக்கு நாடகம் எழுதத் தொடங்கிய பொழுது மிகத் துல்லியமாக பயன்படுகிறது.
இவருக்கிருந்த இன்னொரு வாய்ப்பு, மட்டக்களப்பின் கூத்து ஆட்டங்கள் சகலவற்றையும் (வடமோடி, தென்மோடிக்குரிய எல்லா ஆட்டங்களையும்) அறிந்திருந்தமையே. இதனால் இவரது நாடகங்களில் ஆட்ட அமைப்பு நன்கு அமைந்தது. குழந்தைகளுக்கான அரங்கில் இவர் தொழிற்பட்ட போது இந்த ஆட்ட அமைப்புத் திறன் மிகவும் பிரயோசனமாக இருந்தது.
கூத்து வடிவத்தை அகண்ட மனித வளர்ச்சிகள், போராட்டங்கள் பற்றிப் பேசுவதற்கான ஒரு சாதனமாக்க நடந்த முயற்சிதான் சங்காரம், இது மெளனகுருவின் இரண்டாவது படைப்பியற் பாய்ச்சல்,
1970- 1974 காலத்தில் இவர் கொழும்பில் இருந்ததாலும் கொழும்பில் அக்க்ாலத்தில் தொழிற்பட்ட இளம் நாடகக் கலைஞர்கள் எல்லோருடனும் தொடர்பு கொண்டிருந்ததாலும் (குறிப்பாக நா.சுந்தரலிங்கம், அ.தாசீசியஸ், சுஹைர் ஹமீட் போன்றோருடன் ஏற்பட்ட ஊடாட்டம்) அரங்கம் பற்றிய இவரது எண்ணக்கரு விசாலிக்கத் தொடங்கியது. பிறமொழி அரங்குகளின் போக்குகள், மோடிமை முறையின் தன்மைகள் அக்காலத்துச் சர்வதேச நாடகத் செல்நெறிகள் போன்றவை பற்றிய பரீட்சயம் இவருக்கு ஏற்பட்டது.

Page 73
132 மெளனம்
மெளனகுருவின் அரங்கு பிரதானமாக ஆட்ட அரங்குதான். அந்த ஆட்டத்தை, அவர் செம்மைப் படுத்திய முறைமை முக்கியம். பல்கலைக்கழக நிலையில் பெற்றுக் கொண்ட "நாடகத் தன்மையான ஆட்டம்" (Dramatised Dance) என்ற எண்ணக் கருவை அவர் 1970, 74 காலகட்டத்தில் மேலும் விரிவடையச் செய்கின்றார். அது ஒரு முக்கிய விடயமாகும். கூத்தின் ஆட்டத்தைப் பரதத்தின் செந்நெறி ஆட்டத்துடன் இணைத்து இரண்டினது ஆற்றலையும் வலுப்படுத்துகிற ஒரு வாய்ப்பு, முதன்முதலில் கார்த்திகா கணேசர் தயாரித்த நாடகத்தின் பொழுது இவருக்குக் கிடைக்கிறது. இந்த அறிமுகம் பின்னர் சாந்தா பொன்னுத்துரை (சக்தி பிறக்குது) சாந்தி சிவனேசன் (விடிவு) போன்ற சாஸ்திர முதிர்வுள்ள பரதக் கலைஞர்களோடு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பொழுது பெரும் பலனைத் தந்தது. இது 1985 - 86 ல் நடைபெற்றது.
அந்த பரீட் சார்த்தத்தை விளங்கிக் கொள்வதற்கு மெளனகுருவின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்குதல் வேண்டும். அது யாழ்ப்பாணத்தினைத் தளமாகக் கொண்டது.
இந்தக் காலகட்டத்தின் முற்பகுதியில் (1976-82) பல்கலைக்கழக நாடக முயற்சிகளுடனும், (இவர் பல்கலைக்கழக விரிவுரையாளராகச் சேர்ந்தது 1984(86)(31. 1976-82 காலப்பகுதியில் ஆசிரியராகவும், ஆசிரியப் பயிற்சி கல்லூரி விரிவுரையாளராகவும் இருந்தார்). நாடக அரங்கக் கல்லூரியின் முயற்சிகளுடனும் (1978 முதல்) சம்பந்தப்பட்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில் சண்முகலிங்கம், தாசீசியஸ், சிதம்பரநாதன் ஆகியோருடன் பிரான்சிஸ் ஜனம், அரசு, ஏ.ரி.பொன்னுத்துரை முதலியோருடனும் இணைந்து பணியாற்றினார்.
நாடக அரங்குக் கல்லூரியின் முக்கியத்துவம் பற்றி முன்னரும் குறிப்பிட்டுள்ளேன். (முன்னுரை அன்னை இட்ட தீ 1997) அதனை மிகச் சுருக்கமாக இங்கு மீட்டுக் கூறுதல் நல்லது.
யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி நாடகம் என்பது பயிற்சிகளின் அடிப்படையில் வளர்க்கப்பட வேண்டிய காத்திரமான கலை வடிவம் என்பதை வற்புறுத்தி பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட நாடக ஆர்வலர்களையும், அதனோடு தொடர்பில்லாது ஆனால் நாடகக் கலையைச் சிரத்தை பூர்வமாக மேற்கொண்டிருந்த குழுவினரையும் இணைத்தது. தாசீசியஸ் வகுப்புக்கள் நடத்தினார். நடிப்புப் பற்றிய அணுகுமுறையே மாறிற்று. சண்முகலிங்கம், தாசீசியஸ், சிவானந்தன் தங்கள் நாடக டிப்ளோமா அறிவினைக் கையளித்தனர். அந்தக் கையளிப்புக் குழுவில் மெள்னகுரு தனது கூத்துத் திறமையுடன் இடம் பெறுகின்றார். மெளனகுருவின் மூன்று நாடகங்களை நாடக அரங்கக் கல்லூரி 80 களில் மேடையிடுகிறது. நாடக அரங்கக் கல்லூரிக்காக சங்காரம், அபசுரம், குருஷேத்ரோபதேசம் ஆகியவை மேடையேற்றப்படுகின்றன. இந்நாடகங்களுக்கு மெளனகுரு நெறியாளராயிருந்தார்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 133
ஆனால் இக்காலகட்டத்தில் மெளனகுருவின் முக்கிய பங்களிப்பு பாடசாலை / கல்வி அரங்கிலேயே காணப்படுகின்றது. இந்த அரங்கு வளர்ச்சி யாழ்ப்பாணத்தின் நாடக அரங்கிலேயே காணப்படுகின்றது. இந்த அரங்கு வளர்ச்சி யாழ்ப்பாணத்தில் நாடக வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுத்தது. இத்துறையிலே தொழிற்பட்டவர்கள் நால்வர். சண்முகலிங்கம், மெளனகுரு, சிதம்பரநாதன், பிரான்சிஸ் ஜெனம். சிதம்பரநாதன் தனித்தும் சண்முகலிங்கம், மெளனகுரு ஆகிய இருவருக்கும் உதவியும் நாடக நெறியாள்கையில் ஈடுபட்டார்.
மெளனகுருவின் கல்வி அரங்கில் மெளனகுருவின் அரங்கின் தன்மை துல்லியமாகப் புலப்படுகின்றது. அவரது சமூகக் கருத்து நிலையும் (ஒடுக்கு முறைகளற்ற ஒரு சமூக சமத்துவ சூழலை வேண்டி நிற்றல்) அவரது நாடக அணுகுமுறையும் (ஆட்டங்கள் மூலம் நடித்தும் / நிகழ்த்தியும் காட்டல்) இங்கு நன்கு இணைகின்றன.
தப்பி வந்த தாடி ஆடு - 1985 யாழ்/சென் ஜோன் பொஸ்கோ
விடிவு - 1985 யாழ்/ இந்துமகளிர் கல்லூரி
வேடரை உச்சிய வெள்ளைப்
புறாக்கள் - 1986 யாழ்/ சென்ஜோன்ஸ் பொஸ்கோ
நம்மைப்பிடித்த பிசாசுகள் - 1987 யாழ்/சுண்டிக்குளி மகளிர் கல்லூரி
புத்துயிர்ப்பு - 1987 யாழ் / உடுவில் மகளிர் கல்லூரி
பரபாஸ் - 1987 யாழ் / உடுவில் மகளிர் கல்லூரி
ஒரு முயலின் கதை - 1989 யாழ்/ சென் ஜோன்ஸ் பொஸ்கோ
ஒரு உண்மை மனிதனின் கதை (டானியல் பூவர்) - 1989 யாழ்ப்பாணக் கல்லூரி
பாடசாலைகளை மையமாகக் கொண்டு மெளனகுரு 1985 - 1989 வரை நெறியாள்கை செய்த நாடகங்கள் இவை. தப்பி வந்த தாடி ஆடு தொகுதிக்கு முன்னுரை எழுதியுள்ள சென் ஜோன்ஸ் பொஸ்கோ பாடசாலை அதிபர், அம்முன்னுரையில் இவரதும் இவருடன் இணைந்து தொழிற்பட்ட சிதம்பரநாதனும் சிறுவர் நாடக அணுகுமுறை பற்றிக் கூறுவன முக்கியமானவையாகும்:
முதல் நாடகமான தாடி ஆட்டை (தப்பி வந்த தாடி ஆட்டை) அவரே எழுதிப் பழக்கினார். அதனை அவர் பழக்க வந்த போது அவரும், அவருக்கு உதவியாக வந்த திரு. சிதம்பரநாதனும் எமது சிறுவர்களுடன் பழகிய விதத்தினை மீண்டும் நினைத்துப் பார்க்கின்றேன். சிறுவர்களுக்கு அவர்கள் நாடகம் பழக்குகையில் மகிழ்ச்சிகரமான ஒரு சூழல் அங்கு நிலவியது. ஆடலும் பாடலும் சிரிப்புமாக சிறுவர்களின் பொழுதுகள் கழிந்தன. அவர்களின் வரவையும், நாடகம் பழகும்

Page 74
34 மெளனம்
நேரத்தையும் சிறுவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பர். சிறுவர்களின் இயல்பான திறன்களை வளர்ப்பதில் சிறுவர் நாடகத்திற்குப் பெரும் பங்குண்டு o,514 அடிக்கடி கூறுவார். நாடகம் பழகிய நாட்களில் அவருடன் கலந்து)ை வாய்ப்புக்கள் பல கிடைத்தன. அவ்வுரையாடல் மூலம் சிறுவர் நாடகம் பற்றி இவர் இப்படியெல்லாம் சிந்திக்கிறாரே என்று நான் வியப்படைந்ததுண்டு. பின்னால் தான் அவர் கல்வியிலும் உயர் பட்டம் பெற்றவர் என்பது தெரியவந்தது.
அவர் நாடகம் பழகுவதை நான் நன்கு அவதானித்திருக்கின்றேன். எனது ஏனைய சக ஆசிரியர்களையும் அவதானிக்கும்டி கேட்டிருக்கின்றேன். பிள்ளைகளுடன் விளையாடுவது போலத்தான் அது இருக்கும். ஒரு விளையாட்டில் ஈடுபடுவது போலத்தான் அது இருக்கும். ஒரு விளையாட்டில் ஈடுபடுவது போல மகிழ்வுடன் பிள்ளைகள் அதில் ஈடுபடுவர். செயல் மூலம் கற்றல் என்பதற்கு அது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
வகுப்பறைக்குள் வைத்துப் புகட்டும் கல்வியினால் மாத்திரம் ஒரு மாணவனின் திறமைகள் வளர்ந்து விட முடியாது. வகுப்பறைக்கு வெளியே நடைபெறும் ஆக்க முயற்சிகள் மாணவனின் திறமை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. விசேடமாக ஆரம்பப் பாடசாலைகளில் செயல்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் தம் பிள்ளைகள் கணக்குகளைப் பிழையின்றிச் செய்யவும், ஆங்கிலத்தை ஸ்டைலாகப் பேசவும் வேண்டும் என்பதில் அதிகளவு ஆர்வம் காட்டும் பெற்றோர் அவர்களின் ஏனைய திறன் வளர்ச்சி பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. சிறுவர்களை இயல்பாக வளர விட வேண்டும். விளையாட விட வேண்டும். புறவேலைகளில் ஈடுபட விட வேண்டும். வகுப்பறைக்குள் மட்டும் பெறுவது கல்வியாகாது. இவற்றையெல்லாம் ஆசிரியப் பயிற்சியின் போது படித்திருப்பதனாலும், அனுபவம் மூலம் உணர்ந்திருப்பதனாலும் பெற்றாருடனும், சமூகத்துடனும் சில வேளைகளில் முரண்பட வேண்டியும் வந்துள்ளது. இவற்றை யெல்லாம் கலாநிதி மெளனகுரு அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார். இதனால் அவர் பழக்கும் சிறுவர் நாடகங்கள் சிறுவர்கட்கு நாடகங்களாக மாத்திரமன்றி திறமைகளை வளர்க்கும் வகுப்புக் களாகவும் அமைந்து விடுகின்றன. ஒரு தடவை அவர் இல்லாமலேயே அவர் பழக்கிய நாடகமான தாடி ஆட்டினை மாணாக்கர் சிறப்பாகத் தாமாக நடித்துக் காட்டினர். சிறுவர் நாடகம் மூலம் தன்னம்பிக்கையை வளர்க்க முடியும் என்பதை அன்று நேரிற் கண்டேன். அவரது சிறுவர் நாடகங்களில் ஆடலும் பாடலும் நிறைய இடம்பெறும். ஆடல் பார்க்க அழகாக இருக்கும். சிறுவர் கட்கு ஆடுவது என்பது மிக விருப்பத்திற்குரிய விடயம்.
தாடி ஆட்டில் (தப்பி வந்த தாடி ஆடு) சிங்கத்தின் ஆட்டத்தையும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வில் (வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள்) வேடர்களின் ஆட்டத்தையும் மறக்க முடியாது.
(முன்னுரை தப்பி வந்த தாடி ஆடு. அருட்சகோதரி ஸ்ரனிஸ்லஸ் மேரி, அதிபர், சென் ஜோன் பொஸ்கோ பாடசாலை)

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 135
இந்த முன்னுரைக்குள் சிறுவர் அரங்குக்கான (Children Theatre) இலக்கணம் இருக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் இக்கால கட்டத்தில் (1980 -90) யாழ்ப்பாணததில் வளர்ந்த கல்வியரங்கின் ஒரு முக்கிய இயல்பினை எடுத்துக் கூற வேண்டும். இக்கால கட்டத்தில் மாணவர் நிலையில் நாடகம் இரண்டு நிலைகளில் வளர்க்கப்பட்டது. ஒன்று ஆரம்பப் பாடசாலை நிலை. மற்றது இடைநிலைப் பாடசாலை நிலை.
மெளனகுருவும், சண்முகலிங்கமும் இரண்டு நிலைகளுக்குமான நாடகங்களை நெறிப்படுத்தியுள்ளரெனினும் மெளனகுருவின் அரங்கு பாடசாலை ஆரம்பநிலைக்கும் (Primary School) சண்முகலிங்கத்தின் அரங்கு பாடசாலை இடைநிலைக்கும் (Secondary School) பொருத்தமாக அமைந்திருந்தன. சண்முகலிங்கம் சுண்டுக்குளிமகளிர் கல்லூரிக்கு எழுதிய நாடகங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் (மாதொரு பாகம், தாயுமாய் நாயுமானார்).
மெளனகுருவிடத்துள்ள இயல்பான, குழந்தைகள் பற்றிய ஆர்வமும், அவரது கல்வியியற் பயிற்சியும், ஆட்டத்திறனும் இதற்கு உதவுகின்றன எனலாம். மெளனகுரு தனது நாடகங்கள் சிலவற்றை நிருத்திய நாடகங்கள் என்று கூறுவதையும் அவதானித்துக் கொள்ளல் வேண்டும். ஆட்டத்தைத் தனது அரங்கின் பிரதான வெளிப்படுத்துகை முறைமையாகக் கொண்டதனால், இவர் தனது சக்தி பிறக்குது ஆற்றுகையை "ஒரு மேடை நிகழ்வு, நாடகமாகவும் இருக்கலாம்" என்று விபரிக்க முயல்வதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த மேடை நிகழ்வு முறைமை அவரை ஓர் உண்மை மனிதனின் கதை (டானியல் பூவர்) பற்றிய ஆற்றுகையில் விவரண நாடக முறைமைக்குக் (Documentary Theatre) GabiT60iiGB GóF6ia5pg5.
மெளனகுரு தனது பாடசாலை சாராத யாழ்ப்பாண அளிக்கைகளின், கூத்து ஆட்டத்தைப் பரதத்துடன் இணைத்து அரங்க அசை வியக்கங்களைச் செழுமை செய்து கொண்டது பற்றி இங்கு மீளக் குறிப்பிடுதல் வேண்டும். "சக்தி பிறக்குது"நாடகக் குணாம்சங்கள் கொண்ட நிருத்தியமாகவும் அமைந்தது. அது உண்மையில் நடனம் மூலம் புலப்படுத்தப்பட்ட ஒரு கருத்துநிலைவாதமாகும்.
நாடக அளிக்கை முறைமை பற்றிய கருத்துக்களில் இத்தகைய முயற்சிகள் விஸ்தரிப்புக்களை ஏற்படுத்தின.
தனது நாடகங்களுக்குத் தானே எழுத்துரு தயாரிப்பது மெளனகுருவின் இயல்பு. இந்த விடயத்தில் அவருக்குள்ள பாட்டெழுதும் ஆற்றல் அவருக்குப் பெரிதும் உதவியுள்ளது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். தப்பிவந்த தாடி ஆடு முதல், சக்தி பிறக்குது வரையுள்ள நாடக எழுத்துருக்களை நோக்கும் பொழுது, மெளனகுருவின் நாடகங்களிற் காணப்படும் மோதுகை (Conflict) பெரிதும் மனித நிலைப்படுத்தப்படாத, எண்ணக்கரு நிலை மோதல்களாகவே இருக்கும். இது

Page 75
136 மெளனம்
அவரது கருத்து நிலையினடியாக வரும் ஒரு குணாம்சமாகும். சங்காரம் முதல் இந்தப் பண்பினைக் காணலாம்.
உணர்ச்சிமோதுகையிலும் பார்க்கக் கருத்து மோதுகை பலமாக இருக்கும் (வனவாசத்தின் பின் நாடகத்தின் பின்னால் இந்தப் பண்பில் மாற்றம் ஏற்படுகின்றது). சிறுவர் நாடகங்களில் உணர்ச்சி மோதுகையிலும் பார்க்கக் கருத்து மோதுகையே கவனத்தை ஈர்த்து நிற்பதாகையால் இவரது சிறுவர் நாடகங்களில் ஓர் இயைபுச் செம்மை காணப்படுகின்றது.
இந்தச் சிறுவர் அரங்க வளர்ச்சியும், ஆட்ட அரங்க வளர்ச்சியும் அண்மைக்கால ஈழத்து நாடக வரலாற்றின் முக்கிய பண்புகளாகும். இவை இரண்டிலும் மெளனகுருவுக்கு முக்கிய இடமுண்டு. அந்த அளவில் ஈழத்தின் அரங்க வரலாற்றில் இவர் முக்கியம் பெறுகின்றார்.
இக்கட்டத்தில் முதலில் எடுத்துக் கூறப்பட்ட விடயத்தை மீண்டும் அழுத்திக் கூற வேண்டியது அவசியமாகும். அதாவது கலை வடிவங்களின் வரலாறு பற்றிப் பேசும் பொழுது அதன் முக்கிய பயில்வாளர்கள் பற்றி அறியும் அதே வேளையில், அந்தக் கலை வடிவத்தின் படைப்பாக்கப் பாய்ச்சல்கள் (Creative Leaps) யாவை என்பதை மிக நுண்ணியதாகக் கவனித்துக் கொள்ளல் வேண்டும். மிகவும் செம்மையாகப் படைக்கும் ஒருவர் படைப்பாக்கப் பாய்ச்சலைச் செய்யாது விடலாம். அதேவேளையில் மிகக் குறைந்த அளவே தொழிற்படும் ஒருவர். ஒரு படைப்பாக்கப் பாய்ச்சலைப் செய்யலாம். (தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் இப்பண்பு தொழிற்பட்டுள்ள முறைமை பற்றி விரித்துரைக்கும் வாய்ப்பு அண்மையிற் கிட்டியது.)
மெளனகுரு என்ற அரங்கியற் கலைஞனின் விகச்சிப்பையே இங்கு கோடிட்டுக் காண முனைகின்றோமெனினும் 1975 - 1991 க் காலப் பகுதியில் மெளனகுரு ஈழத்து அரங்கியல் ஆய்வாளனாகப் பரிணமிப்பதையும் குறிப்பிடுதல் அவசியம். மட்டக்களப்புக் கூத்து மரபு பற்றித் தனது கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வை 1986இல்நிறைவுசெய்து கொள்கின்றார். அதன் பின்னர் பல்கலைக்கழக ஆசிரியன் எனும் வகையில் தான் முக்கிய ஈடுபாடு கொண்டிருந்த ஈழத்து நாடக வரலாறு பற்றி ஒரு நூலை வெளியிடுகிறார்.
III
மெளனகுருவினது அரங்கியல் வளர்ச்சியில் அடுத்த கட்டம் யாது? வனவாசத்தின் பின். என்ற இந்த எழுத்துரு அதற்கான தடயத்தைத் தருகின்றது. இந்த எழுத்துரு மெளனகுருவின்நாடக வளர்ச்சியில் ஒரு புதிய பாய்ச்சலைச் சுட்டி நிற்கின்றது. மெளனகுரு எழுதிய நாடகங்களை வைத்துக் கொண்டு பார்க்கும் பொழுது அது துல்லியமாகத் தெரிகிறது. இராவணேசன், சங்காரம், சக்தி

பேராசாயா ச. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 137
பிறக்குது, தப்பி வந்த தாடி ஆடு, வேடரை உச்சிய வெள்ளைப் புறாக்கள், வனவாசத்தின் பின். ஆகிய நாடகங்களை ஒழுங்கு சேரப் பார்க்கும் பொழுது இது நன்கு புலனாகின்றது.
மெளனகுருவின்நாடக எழுத்துருக்களை அவற்றின் அமைப்பு, அரங்கியல் வெளிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில்' வைத்து நோக்கும் பொழுது இரண்டு மட்டங்களில் வைத்து நோக்கலாம்.
ஒன்று பொது அரங்குக்கான எழுத்துருக்கள். மற்றது சிறுவர் அரங்குக்கான (Children Theatre) 6TCupg5g/Gbdb.d56i.
இவை இரண்டினுள்ளும் சிறுவர் அரங்கில்-குறிப்பாக ஆரம்பப் பாடசாலை மாணவர் நிலையில் - இவரது எழுத்துருக்கள் அம்மட்டத்து மாணவர் உள நிலைக்கும், திறன் வெளிப்பாட்டிற்கம் மிகப் பொருத்தமாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
இங்கு பொது அரங்கிற்கான எழுத்துரு வளர்ச்சிச் செல்நெறி பற்றிப் பார்ப்பது பொருத்தமாகும். அவ்வாறு நோக்கும் பொழுது மூன்று கட்டங்களை அவதானிக்கலாம்.
முதலாவது கட்டம் இராவணேசன், வாலி வதை (இதற்கு முன்னர் மெளனகுரு, கர்ணன் போர், நொண்டிநாடகம் ஆகிய கூத்துக்களை நாம் செய்த மாற்றங்களுக்கியைய அமைத்துத் தந்தமையைக் குறிப்பிடல் வேண்டும்)
இரண்டாவது கட்டம் சங்காரம், சக்தி பிறக்குது. மூன்றாவது கட்டம் வனவாசத்தின் பின். இராவணேசனிலும் வாலி வதையிலும் இலக்கியச் செம்மையை கூத்து மரபுக்குள் கொண்டு வரும் முயற்சி பொலிவுறுகின்றனது.
மெளனகுரு இரண்டாவது கட்டத்திற்கு வரும் பொழுது தரும் தயாரிப்புகள் உண்மையில் கருத்து நிலை,அளிக்கையாகவே (Ideological Presentation) அமைகின்றன. அதாவது கருத்து நிலைப்பட்ட கருத்துருவங்களை பாத்திர நிலைப்படுத்தி அந்தப் பாத்திரங்களை எடுத்துக்காட்டும் முறையிலேயே இந்த அளிக்கைகள் அமைந்துள்ளன. நாடகத்திற்குரிய மோதுகை, (Conflict) அந்த மோதுகை தரும் "போட்டி" (Agon) (இது உணர்ச்சிநிலைப் போட்டியாக இருக்கும்.) ஆதியன நாடகத்துள்ளிருந்து வெளிக்கிளம்பாமல், புறநிலை எடுத்துரைப்பால் தெரியப்படுத்தப்படுகின்றன. இந்த எடுத்துரைப்பை மெளனகுரு ஆட்டம் மூலம் சொல்வதால் இந்தப் பண்புமுனைப்புப் பெறாமல் போய்விடுகிறது. ஆனால் இந்தப் புறநிலை எடுத்துரைப்பு அவரது சிறுவர் அரங்கில் அதிக முக்கியத்துவம் பெறாது போய்விடுகிறது. குழந்தைகளின் அளிக்கையில் இந்த அம்சம் முனைப்புப் பெறாது அவர்களின் உள இயல்புக்குத் தேவையான முறையில் இணைகிறது.
சக்தி பிறக்குது அளிக்கையின் ஆட்டங்களை விட்டு நோக்கும் பொழுதுதான் சங்காரமும், சக்தி பிறக்குதுவும் அடிப்படையில் ஒரே தன்மையான அளிக்கை முறையைக் கொண்டவை என்பது புலனாகின்றது. இராவணேசனில்

Page 76
138 மெளனம்
ஆட்டத்தை உணர்ச்சி முனைப்புக்குப் பயன்படுத்திய மெளனகுரு பின் வந்த நாடகங்களில் சித்தரிப்புக்கும் (Representation) பயன்படுத்துகின்றார்.
வனவாசத்தின் பின். எழுத்துருவில் நிலைமை முற்றிலும் மாறுகின்றது. இங்கு நாடகம் புறநிலை எடுத்துரைப்பின் சித்திரிப்பாக அல்லாது அதனுள்ளிருந்தே மேற்கிளம்புகிறது.
"மோதுகை" (Conflict) "போட்டி" போராட்டம் (Agon) நிலைப்பாடாகின்றது. அந்த மோதுகையும், போட்டி நிலையும் நாடகத்தின் கட்டமைப்புக்குள் அந்த அந்தப் பாத்திரங்களின் மோதுகை / போட்டி போராட்டமாகவும் அந்த அந்தப் பாத்திரங்களால் தெளிவுற இணைக்கப்படுகின்ற பொழுது (Articulate) அது பார்ப்போரின் பிரச்சனைகளான மோதுகை / போட்டி / போராட்டங்களாகவும் மாறுகின்றன.
இந்த நாடகத்தின் கட்டமைப்பு முன்பு வந்த இவரது "நிருத்திய" ஆட்ட நாடகங்களிலிருந்து வெகுதூரம் தள்ளி வந்து விட்டது. இதில் பாடல்கள் முக்கியமானவையேயெனினும் நாடகத்தின் தொடர்புவலு "உரைநடையிலேயே" உள்ளது. இங்கு உணர்ச்சிமோதுகையும், கருத்து மோதுகையும் ஒன்றையொன்று தழுவி நின்று, ஒன்று மற்றதற்கு வலுவூட்டுகின்றது. அரங்கோ முந்திய வற்றிலிருந்து வேறுபட்டு, யப்பானிய கபுகி, நொஹற் அரங்கினையும், மற்றும் பீற்றர் புறுக் போன்றோரது அரங்கினையும் நினைவூட்டுகின்றது.
அரங்கியல் விரிவுரையாளர் ஒருவரை இதனுடே துல்லியமாக இனம் காண முடிகிறது.
இங்கு ஐதீகம் ஒன்று அரசியலை உணர்த்தப் பயன்படுத்தப்படுகிறது. பாரதப்போரை தடுக்க முடியாத ஒன்றாகவே மெளனகுரு காண்கின்றார்.
ஒருவேளை இந்த நாடகம் இந்த நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் வாசிக்கப்படுகின்ற பொழுது இந்தக் கருத்தைத் தராமல் போகலாம். இருப்புக்கள் தானே அர்த்தத்தைத் தருகின்றன. அது சொல்லானால் என்ன பொருளானால் என்ன?
மெளனகுரு என்ற அரங்கியற் கலைஞன் மேலும் மேலும் சிறக்க, மேலும் மேலும் புதிய புலங்களில் நடக்க, புதிய நட்சத்திரங்களைத் தொட, தொட்டுத் தன் வசமாக்க வாழ்த்துகிறேன்.

பேராசிரியர் சிமெளனகுருவின் நாடகம் சாரா ஆய்வுகள் : ஒரு பார்வை
கலாநிதி. செ.யோகராசா தலைவர், மொழித்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம்,
முனனுரை
ஆய்வுத்துறையைப் பொறுத்தவரையில் பேராசிரியர் சி.மெளனகுருவிற்கு பன்முகங்களுள்ளன. அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.
ஈடுபட்டுள்ள ஆய்வுப் புலங்கள்
ヘレ
Nレ ] 6666's
H) தமிழர் سN நாடகக்கலை 666Eul வரலாறு
கலைகள் V−
Nレ Nレ -> பண்பாடு தமிழ் இலக்கிய தமிழ்
' வரலாறு இலக்கியம் P மொழி
Jz ملا அ கல்வி usorgoLu நவீன இலக்கியம் இலக்கியம் இந்துமதம்
I - ↓2 இலக்கிய புலவர்கள் தமிழகம்
நூல்கள்

Page 77
140 மெளனம்
மேற்கூறியவாறு ஆய்வுப் புலங்கள் பலவாகவிருப்பினும், நாடகத்துறை சார்ந்த அன்னாரது ஆற்றல்களும் செயற்பாடுகளும் ஆய்வுகளும் அத்துறை சார்ந்த அன்னாரது முகத்தையே வெளியுலகிற்கு இனங்காட்டியுள்ளன. இதனால் நாடகத்துறை சாராத அவரது ஆய்வுகள் பற்றிய முக்கியத்துவமோ தேடலோ பலராலும் அறியப்படாதுள்ளன. மணிவிழாக் கொண்டாடப்படும் இந்நிலையில் அவ்விடயம் பற்றி - நாடகம் சாரா ஆய்வுகள் பற்றி - ஓரளவு சிந்திப்பது பொருத்தமானதும் அவசியமானதாகும்.
<翌IJ6。 சசூழல
மேற்கூறியவாறு நோக்குவதற்கு முன் அதற்கு அனுசரணையாக முதலில்
ஈழத்துத் தமிழ் ஆய்வுச் சூழல் பற்றி நினைவுகூர்வது அவசியமாகிறது இவ்விதத்தில் பின்வரும் விடயங்கள் கவனத்திற்குரியன.
(1) கடந்த கால்நூற்றாண்டிற்கு மேலாக தமிழ்நாட்டிலே அமைப்பியல் வாதம், பின் அமைப்பியல் வாதம், பின்நவீனத்துவம் முதலான் நவீன கலை, இலக்கியச் சிந்தனைகள் நன்கு பரவிவந்துள்ளன. ஈழத்தில் அத்தகைய நிலைமை இன்னமும் உருவாகவில்லை.
(2) தொல்லியற்துறை நன்கு வளர்ச்சியடைந்தமையினால் தமிழ்நாட்டில் புதிய புதிய அகழ்வுகள் இடம் பெற்றுவருகின்றன. இதனால் பண்டையத் தமிழ்க் கலைகள், இலக்கியங்கள் தொடர்பான புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. எனினும் இவை பற்றி தேடல்கள் ஈழத்து ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மத்தியில் அபூர்வமாகவே இடம் பெறுகின்றன.
(3) ஈழத்துப் புலவர்கள், கவிஞர்கள் பலர் ஈழத்து ஆய்வாளர்களது
கவனிப்பிற்குள்ளாகாமலுள்ளனர்.
(4) ஈழத்து ஆய்வாளர்களிடம் மரபார்ந்த சிந்தனைகளே பரவலாக
வேரூன்றியுள்ளன.
(5) ஈழத்திலே புதிய நூல்களின் வரவு அருமையாகவும் அருமையான
வற்றைத் தேடி வாசிப்பது அரிதாகவும் காணப்படுகின்றன.
ஆய்வு முயற்சிகள்
மேற்கூறிய, ஈழத்து ஆய்வுலகின் அவல நிலையை மனங்கொண்டு இனி, தொடர்ந்து பேராசிரியர் மெளனகுருவின் ஆய்வுமுயற்சிகள் பற்றி ஆரம்பத்திலே வகைப்படுத்தியுள்ள முறைமைக்கேற்ப, அவதானிப்போம்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 41
தமிழ் இலக்கிய வரலாறு
தமிழிலக்கிய வரலாறு தொடர்பாக - சங்ககாலந்தொடக்கம் விஜயநகர, நாயக்கர் காலம் வரையில் - மாக்சிய நோக்கிலான ஆய்வுகளும் (எ-டு சங்ககாலம் பற்றிய பேராசிரியர் சிவத்தம்பி தொடக்கம் கேசவன் வரையான ஆய்வுகள்) மேனாட்டு அறிஞர்களின் ஆய்வுகளும் (கமில் சுவலபில் தொடக்கம் நொபுறு கறோசிமா வரையான ஆய்வுகள்) கணிசமாக இடம் பெற்றுவந்துள்ளன. இடம் பெற்று வருகின்றன. இத்தகைய பின்னணியில் இத்தகைய ஆய்வுகளை உள்வாங்கி, தமது கருத்துக்களை முன்வைக்கும் ஆய்வுகள் பேராசிரியர் மெளனகுருவினால் நடத்தப்பட்டுள்ளன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, சங்ககாலம் எனப்படும் காலமும் சங்க இலக்கியம் எனப்படும் இலக்கியங்களும் என்ற கட்டுரையைக் குறிப்பிடலாம்.
மிகவிரிவாகவுள்ள மேற்கூறிய ஆய்வுக் கட்டுரையில் தமிழ் நாட்டில் இதுவரை நடந்தேறியுள்ள அகழ்வாய்வுப் பின்னணியில் சங்க இலக்கியங்களைப் புரிந்து கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
அதற்கு அனுசரணையாக, மானிடவியலாளரின் மனித சமூக வரலாறு பற்றிய கருத்துக்களும் சரித்திரவியலாளரின் பகுப்பு முறைகளும் பற்றிய தெளிவான விளக்கமும் முதலிலே தரப்படுகின்றன. பின்னர் புராதன தமிழர் பற்றியும் திராவிடர் வருகை, திராவிடரின் வளர்ச்சி என்பன பற்றியும் கூறப்படுகின்றன. ஆதாரமாக, அரிக்கமேட்டு அகழ்வு ஆய்வுகளும், காவிரிப் பூம்பட்டின அகழ்வாய்வுகளும் அமைகின்றன. இதன் பின் ஆரியர் வரவு பற்றிக் கூறப்படுகின்றது. ஆக, தமிழ்நாட்டு வரலாற்றுக் காலம் ஆரம்பமாகும் சூழலில் மூன்றுவிதமான தமிழர்கள் (புராதன தமிழர், திராவிடத் தமிழர், ஆரியத் தமிழர்) இருக்கின்ற பின்னணியில் சங்க இலக்கியங்கள் பற்றிப் பேசப்படுகின்றது. சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டமை, அவை பற்றி எழுந்த கருத்துருவம், சங்ககாலம், சங்க இலக்கியம் பற்றிய கருத்துக்கட்டமைப்பு, கருத்துக் கட்டமைப்பு பற்றி எழுந்த விமர்சனங்கள் என்பன எடுத்துரைக்கப்படுகின்றன.இறுதியாக சங்க இலக்கியங்களின் - திணைக்கோட்பாட்டின் -அடிப்படை பற்றியும் அரச உருவாக்கம் பற்றியும் விரிவாக அலசப்படுகின்றன. இவ்விதத்தின் இக் கட்டுரையின் முடிவுரை எமது கவனத்திற்குரியதாகிறது. அது பின்வருமாறு:
உலகின் சகல இனமக்களும் இந்த வரலாறு விதிமுறைகளுக்கு இயையவே ஆரம்பகாலத்தில் வளர்ந்து வந்துள்ளனர். உலக சரித்திர ஆய்வு இதனையே காட்டுகின்றது. தமிழ் மக்களும் அவ்வாறே வளர்ந்து வந்தமைக்குச் சங்க இலக்கியம் எனப்படும் இலக்கியங்களிலேயே சான்றுகளுள்ளன. அச்சான்றுகள் தொல்லியல் ஆய்வுகளாலும் உறுதி செய்யப்படுகின்றன. இவ்வகையில் சங்ககாலத் தமிழகம் என அழைக்கப்பட்ட தமிடுகம் பற்றிய புதியகட்டமைப்பு ஒன்றைச் செய்யவும் முடிகிறது.

Page 78
142 மெளனம்
மேலுள்ள கோடிட்ட பகுதிகள், அக்கட்டுரையூடாக, எமக்கு ஆசிரியர் தெரிவிக்கின்ற செய்திகளை மறைமுகமாக உணர்த்தி நிற்பதனை உணரமுடிகிறது.
தமிழ் நூல்கள்
இவ்விதத்தில் பண்டைத் தமிழ் நால்களில் மிக முக்கியம் வாய்ந்த திருக்குறள் பற்றி பேராசிரியர் மெளனகுரு எழுதிய கட்டுரை கவனத்திற்குரியது. ஏனைய தமிழ் நூல்களுக்குக் கிடைக்காத பெருமை திருக்குறளுக்குக் கிடைத்தமைக்கான காரணம் பற்றி திருக்குறள் எழுந்த காலச்சூழலில் நின்று
நோக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது. பல்வேறு ஆதாரங்களை அடியொற்றி இவ்வாறான - பொருத்தமான - முடிவிற்கு வருகின்றார் கட்டுரையாசிரியர்
சமண பெளத்த செல்வாக்கினால் வாழ்க்கை நிலையாமையைத் தத்துவத்தை ஏற்று உலக வாழ்விற் பிடிப்பற்றுப்போக இருந்த தமிழ் மக்களைத் தடுத்துநிறுத்தி வாழ்க்கை உண்மை, காதல் உண்மை இன்பம் உண்மை என்று வற்புறுத்தி அவ்வாழ்வுக்கு ஓர் அற ஒழுக்க வடிவம் கொடுத்தமையினாலேதான் திருக்குறளைத் தமிழ்மறை என்று இன்று போற்றுகின்றனர்.
தமிழ்ப் புலவர்கள்
'கம்பன் - கலகக்காரன்' என்றதொரு கட்டுரையை இவ்வழி இங்கு நோக்கலாம். இலக்கியத்தினை எதிர்ப்பு இலக்கியம்' (Resistance Literature) என்ற அடிப்படையில் அணுகும் மேலைத்தேய நவீன அணுகுமுறை அண்மைக்காலமாக தமிழில் முக்கியம் பெற்றுவருகின்றது. இத்தகைய எதிர்ப்பு இலக்கிய கர்த்தாக்களை 'கலகக்காரர்" என்றழைக்கின்ற கட்டுரையாளர் கம்பன் பற்றி கூறுவதாவது:
வாழையடி வாழையென வரும் இக் கலகக்காரத் திருக்கூட்ட மரபில் கம்பனுக்கு ஒரு தனி இடமுண்டு. தமிழ்நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தவன் என்பது மாத்திரமல்ல. தன் கால அரசுக்கும் அதனை நியாயப்படுத்திய சமூக தர்மத்திற்கும் எதிராக தன் கலகக் குரலை ஏனையோரை விடத் தெளிவாகவும் அழகாகவும் எழுப்பிய பெருமையும் அவனுக்குண்டு.
பக்தி இயக்கத்தை கம்பன் தனக்குச் சார்பாக பயன்படுத்தியமை, அவன் கையாண்ட கிளைக்கதைகள் (எ-டு: மாவலிகதை, இரணியன் கதை) முதலியன. மேற்கூறிய விடயத்திற்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 143
நவீன கவிஞர்கள்
இவ்விதத்தில் "பாரதியும் மரபும்" என்ற கட்டுரையை கவனத்திற் கொள்ளலாம். "பாரதி என்றதும் புதுமை என்ற நினைவே எம்மனக்கண் முன் வருமளவுக்கு அவனைப்பற்றியமனப்பதிவு எமக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் பாரதி பழமை பற்றியும் மரபு பற்றியும் சரியான கருத்துக்களைக் கொண்டிருந்தான் என்பதும் தன் எழுத்துக்களில் அவற்றினை நடைமுறைப்படுத்தினான் என்பதும் இதுவரை அதிகமாக அழுத்தப்படாத ஒரு கருத்தாகும்.
ஆக, புதுமைக் கவிஞன் பாரதி - புதியதொரு கோணத்தில்- வித்தியாச மானதொரு நோக்கில்-கட்டுரையாசிரியரால் அணுகப்படுகின்றான். முடிவில், மரபு பற்றி முழுமையான விளக்கத்தைப் பெற்றுக் கொள்வது மட்டுமன்றி, அவ்வடிப் படையில் புதுமை பற்றியும் தெளிவு பெற முடிகின்றமை மனங்கொள்ளத்தக்கது.
ஈழத்துக் கவிஞர்கள் / ஆய்வாளர்கள்
ஈழத்து இலக்கியந் தொடர்பான பேராசிரியர் மெளனகுருவின் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கன. இவ்விதத்தில், ஈழத்துக் கவிஞரான நீலாவணன் பற்றியும் ஆய்வாளரான சுவாமி விபுலானநந்தர் பற்றியும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் முதன்மை பெறுகின்றன.
மேற்கூறியவற்றுள் நீலாவணன் பற்றியது "காலஓட்டத்தினுரடே ஒரு கவிஞன் நீலாவணன் வாழ்வும் இலக்கியப் பணியும்" என்ற நூலாக வெளிவந்துள்ளமை பலருமறிந்ததொன்றே. எனினும், தனியாள் ஆய்வு' என்ற விதத்தில் அது ஈழத்து நவீன கவிஞனொருவன் பற்றி வெளியான முதல்நூல் என்பதனைப் பலரும் அறிந்திருக்கமாட்டார். பேராசிரியர் தில்லைநாதன் அணிந்துரையில் கூறியவாறு, "காலப்பின்னணியில் நீலாவணனின் ஆளுமையும் படைப்புக்களும் உருப் பெற்றவற்றை மெளனகுரு இந்நூலில் ஆராய்கிறார். நீலாவணனின் பலங்களையும் பலவீனங்களையும் சுட்டிக் காட்டுகின்றார்" மேலும், "நீலாவணனைப் புரிந்து கொள்வதோடு, நவீன தமிழ் இலக்கியப் போக்குகளைச் சிறப்பாக ஈழத் தமிழிலக்கியப் போக்குகளை விளங்கிக் கொள்ளவும் இந்நூல் உதவுகிறது" என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
சுவாமி விபுலாநந்தர் பற்றிய ஆய்வுகளும் (மூன்று ஆய்வுகள்) "சுவாமி விபுலாநந்தர்: காலமும் கருத்தும்" என்ற பெயரில் நூலுருப் பெற்றுள்ளன. "இக்கட்டுரைகள் சுவாமிகளின் சில கருத்துக்களையும் அக் கருத்துக்களின் உருவாக்கத்தில் அவர் வாழ்ந்த காலம் செலுத்திய செல்வாக்கையும் இனம் காணமுயல்கின்றன."
சுவாமி விபுலாநந்தர் பெரும்பாலும் மரபுவழிச் சிந்தனை சார்ந்த போக்கிலேயே நூற்றாண்டுவிழாக் கொண்டாடப்பட்ட காலக்கிள் கூ

Page 79
144 மெளனம்
அணுகப்பட்டுவந்த சூழலில் மிகச் சிலரே ஆழமான நோக்கில் அவரை அணுகமுற்பட்டிருந்தனர். அவ்விதத்தில், பேராசிரியர் மெளனகுருவின் இக்கட்டுரைகளும் கவனத்திற்குரியனவாயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் வரலாறு/பண்பாடு/கல்வி / மொழி
தமிழர் வரலாற்றினை சமூகவியல் நோக்கிலே முதன்முதலாக அணுகிய பெருமைக்குரியவர் மல்லாகம் வி.கனகசபைப்பிள்ளை (நூல் : 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்) அவரது ஆய்வுநூல் வெளியாகி இன்று ஏறத்தாழ 100 வருடங்களாகிவிட்டன. இவ்விடைப்பட்ட காலத்தில் பல்வேறு அணுகுமுறைகளில் தமிழர் வரலாறு அணுகப்பட்டு வந்துள்ளது. அஃது அண்மைக்காலமாக, பின் அமைப்பியல், பின்நவீனத்துவ நோக்குகளில் அணுகப்பட்டு வருகின்றது. இவ்விதத்தில் "அடையாளமும் தமிழ் அடையாளமும்' என்ற பேராசிரியர் மெளனகுருவின் கட்டுரை எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பது. தமிழர் வரலாற்றை.
(1) கி.மு. 200க்கு முற்பட்டகாலம்
(2) கி.மு. 200 தொடக்கம் 600 வரை
(3) கி.பி. 600 தொடக்கம் 900 வரை
(4) கி.பி. 900 தொடக்கம் கிபி 1200 வரை
(5) கி. பி. 1200 தொடக்கம் 1800 வரை
(6) கி.பி. 1800 தொடக்கம் 2000 வரை.
(7) கி.பி. 2000க்குப் பின்னர்
என்றவாறு வகுத்து ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்திலும் முறையே தமிழரது அவ் அடையாளம் பின்வருமாறு அமைந்திருந்தமை பற்றி எடுத்துக் காட்டப்படுகின்றது:
(1) ஐவகைப் பூக்கள் : புலி, மீன், வில் கொடிகள்
(2) சமணமும் தமிழும் : பெளத்தமும் தமிழுப்
(3) சைவமும் தமிழும் ; வைணவமும் தமிழும்
(4) தஞ்சைப் பெருங்கோவில் : நடராஜ சிற்பம்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 145
(5) மதுரை மீனாட்சியம்மன் கோயில்: முருகன், மடங்கள், சைவ சித்தாந்தம், பள்ளு முதலிய நாடகங்கள், கர்நாடக இசை, பரதம் முதலியன.
(6) மேலைத்தேயப் பண்பாடு, சமயசமரசநோக்கு, மானிடநேயம்
(7) தலித்தியம், பெண்ணியம்
மேற்கூறிய கட்டுரையனுாடே வெளிப்பட்ட நவீன, கலை இலக்கியம் தொடர்பான சிந்தனைகள் குறிப்பாக ஈழத்து ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மத்தியிலே சிந்தனை விகரிப்பை ஏற்படுத்தக் கூடியன என்பதிலே ஐயமில்லை.
முற்குறிப்பிட்ட கட்டுரையோடு, ஒரு விதத்தில் தொடர்புபட்டனவாகவே அரசர் வரலாறு, சமூகவரலாறாக மாறிய கதை" (வரலாறு எழுதும் இன்றைய தேவையை யொட்டிய சில குறிப்புகள்), விழிப்புணர்விற்கான விமர்சனக்கல்வி 'விடுதலைக்கான கல்வி மொழியும் அதிகாரமும் அல்லது அதிகார மொழி பற்றிய ஆய்வுகளும்' ஆகிய கட்டுரைகளும் காணப்படுகின்றன. இவற்றின் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடக்கூடியனவல்லவெனினும் விரிவஞ்சியே இவை பற்றி இங்கு பேசப்படவில்லை.
இந்துப் பண்பாடு
இந்துப்பண்பாடு தொடர்பான கட்டுரைகள் ஒரு சிலவும் பேராசிரியர் மெளனகுருவினால் எழுதப்பட்டிருக்கின்றன. இத்தகையனவற்றுள் 'இந்துப் பண்பாட்டில் கவனிக்கப்பட வேண்டிய பக்கம்' என்ற கட்டுரை முக்கியமானது. இது, மட்டக்களப்பின் சிறுதெய்வ வழிபாட்டினை மையப்படுத்திய சில சிந்தனைகளை முன்வைப்பது.
இத்தொடர்பில், மேற்கூறிய கட்டுரையின் ஆரம்பப்பகுதியில் ஓரிடத்திலே கட்டுரையாளர் பின்வருமாறு குறிப்பிடுவது எமது கவனத்தை அவாவிநிற்கிறது:
- - - - - - - பெருந் தெய்வக் கோயில் கட்டிடங்களையும், சிற்பங்களையும், தேவார திருவாசகங்களையும், கர்நாடக இசையினையும், பரதத்தையும், இந்துக் கலைகளாகப் போற்றும் இந்து கலாசார மரபு சிறு தெய்வ கோயில் கட்டிடக் கலைகளையும் சிறுதெய்வ விக்கிரகவார்ப்பு முறைகளையும் காவியம், அம்மானை, ஊஞ்சல், குளிர்த்திப் பாடல்களையும் குறிப்பிடுவதில்லை. இந்து மதத்தின் மிகவலிமையான இன்னொரு பக்கத்தை ஏன்நமது இந்து கலாசார மரபு பார்க்கவில்லை என்பது பிரதானமானதும் முக்கியமானதுமான ஓர் வினாவாகும்.
இதற்கு விடைதேட வேண்டுமாயின் இந்து மதத்தின் வரலாற்றையும் அதனைக் கட்டியமைத்தவர்களின் கருத்துநிலை (Ideology) சமூகப் பின்னணிகளையும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஆரம்பத்தில் சொன்ன பன்முகப்பார்வையும் ஆய்வுமே இதற்கு விடைதநம்"

Page 80
146 மெளனம்
மேலுள்ள மேற்கோள்பகுதி சற்று நிண்டுவிட்டதாயினும் இவற்றினடியாக இரு விடயங்கள் எமது கவனத்திற்குரியனவாகின்றன. மேற் குறிப்பிட்ட கட்டுரை எதுபற்றி அலசுகின்றது என்பதனை நாம் அறிந்து கொள்கின்றோம் என்பது ஒன்று. இதனைவிட முக்கியமானது, மற்றொன்று அதாவது இக்கட்டுரையாளரது ஆய்வு அணுகுமுறை எத்தகையதென்பதைனையும் (வரலாறுகூறல், கருத்துநிலை காணல், சமூகப்பின்னணி பேசல்,பன்முகப்பார்வையை மேற்கொள்ளல் முதலியன) இது புலப்படுத்தி நிற்கிறது. இவ்விடத்தில் நான் குறிப்பாகக் கூற விழைவது யாதெனில், இங்கு குறிப்பிடப்படும் அணுகுமுறையே ஆசிரியரது கணிசமான கட்டுரைகளுடு இழையோடுகின்றது என்பதாம்.
கவனத்திற்கு.
இறுதியாக வற்புறுத்திக் கூறவேண்டிய தொன்றுண்டு. மேலே பேராசிரியர் மெளனகுருவின் ஆய்வு முயற்சிகளை வகைப்படுத்தி விளக்கிய வேளைகளில் வகைமாதிரிக்காகவே ஒவ்வொரு கட்டுரை பற்றி எடுத்துக்காட்டப்பட்டுள்ளதே தவிர, ஆசிரியரால் அவ்வத்துறையில் பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன என்பதே அதுவாகும்.
முடிவுரை
சுருக்கமாக இதுவரை கூறப்பட்டவற்றைத் தொகுத்து நோக்கும் போது பின்வருவன எமது கவனத்திற்குரியனவாகின்றன:
(1) பேராசிரியர் மெளனகுருவின் ஆய்வுப் புலங்கள் பலவகைப்பட்டவை",
விரிந்தவை, பரந்தவை.
(2) மாக்சியம் தொடக்கம் பின்நவீனத்துவம் வரையான அணுகு
முறைகளைப் பின்பற்றுபவை.
(3) ஆரோக்கியமற்ற ஈழத்து தமிழ் ஆய்வுச் சூழலில் -புதிய, புதிய
நூல்களின் வரவு குன்றிய சூழலில் - இருமடங்கு பயன்விளைப்பவை.
(4) கணிசமான ஆய்வுகள் முன்னோடி முயற்சிகளாக உள்ளன.

நாடகக் கலைஞனுக்குள் மறைந்து போன ஒரு கவிஞன்
- வெ. தவராஜா, எஸ்.எல்.ஏ.எஸ் -
பேராசிரியர் சி. மெளனகுரு அவர்கள் ஒரு நாடகக் காரராகவும் (நவீன மரபு) ஆய்வாளராகவுமே பெரிதும் அறியப்பட்டுள்ளார். அதேவேளை அவர் ஒரு நல்ல விமர்சகர், மேடைப்பேச்சாளர் என்பதெல்லாம் அவர் பற்றிய இன்னும் சில உண்மைகள். ஆனால், அவர் ஒரு கவிஞர் என்பதும் அவரது ஆரம்ப கால எழுத்துக்கள் கவிதைகளாகத்தான் இருந்தன என்பதும் பலராலும் அறியப்படாத உண்மையாகவே உள்ளது.
1960 களின் ஆரம்பத்திலேதான் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் பேராதனைப்பல்கலைக்கழகம் செல்கிறார். அக்காலத்திலே தமிழரசுக்கட்சியின் அரசியல் செல்வாக்குக்குள் பல புத்திஜீவிகள் உள்ளிர்க்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவராக பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் காணப்பட்டார் என்பதும் இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டிருந்தார் என்பதும் அவரோடு படித்த பழகிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.
இவரது இக்கருத்துக்களை கவிதை வடிவில் வழங்கக்கூடிய வாய்ப்பினை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் அவருக்கு வழங்கியது.
1961- 1963 வரையான காலப்பகுதியில் ஒரு கவியரங்க கவிஞனாக பேராதனை பல்கலைக்கழகம் தொடங்கி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கொழும்பு தமிழ்ச்சங்க மென வலம் வந்தார். இதற்கு காரணம் இவரது கவிதைகளில் இருந்த கவித்துவமும் தமிழ் உணர்வும்தான்.
இக்காலத்தில் இவரது கவிதைகள் தமிழ் உணர்வை, தமிழ் தேசியத்தை பேசுவனவாக காணப்பட்டன.
இவரது கவிதைகள் கவியரங்குகளில் மட்டுமல்லாது தினகரன் ஈழத்தேசிய பத்திரிகை, மணிக்கொடி, தமிழ்க்கொடி போன்ற இந்திய சஞ்சிகைகளிலும் ஈழத்தமிழ்த் தேசியம் பேசிற்று.

Page 81
148 மெளனம்
1961ல் பேராதனைப் பல்கலைக்கழக கவியரங்கொன்றிலே இவர் படித்த "பட்டப்பகலில் பாவலர்க்குத் தோன்றுவது" எனும் கவிதை சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்ட தமிழ் நாட்டைப் போல ஈழத்தமிழ் நாடும் அதற்கென ஒரு தனிப்படையும் அமைய வேண்டுமென எழுதப்பட்டுள்ளது. இக்கவிதையில் படை எனும் உபதலைப்பின் கீழ் வரும் பின்வரும் வரிகள் இதை உணர்த்தும்.
அப்பக்கம் சிறிதாக நடந்த சென்றேன் அங்கே நம்படை வரிசை தன்னைக் கண்டேன் அப்பப்பா இப்படைக்கு இந்தப்பாரில் ஆர்படைதான் ஒக்குமென எண்ணிப் பார்த்தேன்
இப்படியோர் படை எமக்கு இருக்குமானால் எம் தமிழர்க்கோர் நாடு பெற்றுப்பின்பு ஒப்பரிய ஆட்சிமுறை அங்கமைத்த உலகுக்கு எம்பெருமை காட்டலாமே
0 d SLLLLLLLLLL00LLLLLSLLLLLLGLLLLLLLSS se a P &
இதே ஆண்டில் தமிழ்க் கொடி (சென்னை) சஞ்சிகையிலே பிரசுரமாகிய "வெற்றிக்குரல்" எனும் கவிதை தமிழ் இளைஞர்களே தமிழ்நாட்டைப் பெற எழுந்து வாருங்கள் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என அழைப்பதாக அமைந்துள்ளது. அவ்வரிகள் வருமாறு
வெற்றிக்குரல் ஒன்று கேட்குதடா விண்ணகத்தே நிண்றொலிக்குதடா வெற்றி உனக்கெனக் கூவுதடா வீரனே வாவென்றழைக்குதடா
இதே சஞ்சிகையில் "தமிழ்க் கொடி" எனும் தலைப்பில் எழுதிய கவிதை தமிழர்க்கென ஒரு தனிக் கொடி பறப்பதாகவும் அதன்கீழ் ஒன்றுசேர்ந்து வரவேண்டும் என அழைப்பதாகவும் அமைந்துள்ளது. இதன் இறுதி வரிகள் இவ்வாறு அமைந்துள்ளது.
 

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 149
தடிப்புள்ள கொடி கண்டேன் தடித்தெழுந்தேன்
தாயகொடி எங்கள் கொடி தயரம் போக்கும் நெடியகொடி நீண்ட தமிழ்க் கொடியைக் கண்டேன்
நேர்மை கண்டேன் நீளத்தில் நெறியைக் கண்டேன் அடிமை பெற்ற தமிழ் விலங்கை ஒழிக்க இன்று
ஆர்வமுடன் தலைதாக்கி முன்கால் வைக்கும் உரிமையுடன் தமிழ்க்கொடி கீழ் ஒன்று சேர்வோம் உலகுக்கு எம்பெருமை உணரவைப்போம்.
இவ்வாறு தமிழுணர்வுக் கவிதைகளாகவே இவரது இக்காலத்து அனேக கவிதைகள் அமைந்த போதிலும் தமிழுணர்வுக்கப்பால் சாதிய முதலாளித்துவ அடக்குமுறை பெண்ணடிமைத்தனம் ஏழையின் துயர் என சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சமூக அடக்குமுறைகளுக்கெதிராகவும் இவர் குரல் கொடுத்ததை இவரது கவிதைகளுக்கூடாக அறியலாம்.
1963ல் இவர் எழுதிய "சேச்சேச்சே நீங்களும் ஒரு மனிதர்களா" எனும் கவிதை விதவைகளுக்கு மறுமணம் செய்து வைக்காத சமூகத்தை சாடுவதாக அமைந்துள்ளது. இக்கவிதையின் பின்வரும் இறுதியடிகள் இதை நமக்குணர்த்தும்,
வீழ்ந்த விட்டார் அவள் துணைவர் விதவை என்றீர் வீணும்சொல் அவள் இளமை விதவைதானா இழந்துவிட்ட பூ பொட்டு அவளுக்கிட்டு இன்பமாய் அவள்வாழச் செய்திடாமல் இறந்துவிட்ட பின்னவளுக்கு பூ பொட்டுக்கள் இடுகின்றீர் நெஞ்சில் கை வைத்தச் சொல்வீர் குறைத்தவிட்டீர் பெண்நிலைமை இந்த நாட்டில் கொள்கைதனை மாற்றுங்கள் கூடி வாழ்வோம்.
பெண்விடுதலை தொடர்பாக அவர் கொண்டிருந்த கருத்துக்கள் பின்வந்த காலங்களிலும் இவரது படைப்புக்களிலும் காணப்பட்டது. குறிப்பாக அவரது சரிபாதி, மழை, சக்தி பிறக்குது போன்ற நிருத்திய நாடகங்களில் பெண் விடுதலையை வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல சமுதாய விடுதலை பற்றி பல்வேறு தளங்களில் குரல் கொடுத்துள்ளதை இவரது கவிதைகளினூடாக அறிய முடியும்.

Page 82
150 மெளனம்
"எதைப்பாட" எனும் தலைப்பில் இவர் பாடிய (1964) கவிதை ஏழையின் வாழ்வின் துன்பங்களையும் அதனைப் போக்க மனிதர் நாம் முன்வரவேண்டும் என்கிறது அக்கவிதை.
1974இல் மல்லிகையில் வெளிவந்த "புதிய குரல்" எனும் கவிதை அடக்கப்பட்ட சமூகத்தில் மாற்றம் வேண்டும் எனவும், அடக்கி வாழும் சமூகம் அதை உணரவேண்டும் எனும் தொனியிலும் அமைந்துள்ளது.
மேலும் எழுத்துக்கள் சமூக விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாக இருந்துள்ளார். இதனை தன்னுடைய "ஏனோ எழுதுகிறாய்" எனும் கவிதையில் நேரடியாகவே குறிப்பிட்டுள்ளார்.
முட்டி நிற்கும் சமுதாய விடுதலை மோதிட வில்லையா சொல் ~ அதை வெட்டி விலக்கி எழுதுகிறாய் நீயும்
வீணே எழுதுகிறாய்
ஆழ்பவன் பக்கத்தில் நின்றுந்தன் பேனையை ஆட்டி எழுதுகிறாய் ~இங்கு மாழ்கின்றதோரினம் மாற்ற முண்டாக்கிட மாற்றி எழுது எழுது!!
இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னுமொரு விடயம் அடக்கப்பட் சமுதாயத்தின் விடுதலையின் பால்தான் இவரது கவனம் இருந்தது என்பதாகும்.
1975 களுக்குப் பின்னர் பேராசிரியரது ஈடுபாடு நாடகத்துறையாக இருந்ததன் காரணமாக இவரது கவிதை எழுதும் வேகம் குறைவடையத் தொடங்குகிறது. ஆனாலும் இடைக்கிடை கவிதைகளையும் எழுதியுள்ளார்.
இவரது கவிதை ஆற்றல் இவரது நாடகங்களுக்கு வளம் சேர்த்தன. நவீன நாடகத்தின் ஒரு திருப்புமுனையாக விருந்த "சங்காரம்" தொடங்கி மழை, சரிபாதி, சக்தி பிறக்குது போன்ற நாடகங்கள் நிருத்திய நாடகங்களாக அமைந்துள்ளமையை நாம் அவதானிக்க வேண்டும். இவரது இந்நாடகங்கள் வெற்றி பெற்றமைக்கு இவரது கவிதை ஆற்றலும் பலமாகவிருந்தது என்பது sd-603760LD.
2000 ஆண்டுகளுக்கு பின்னர் இவர் மீண்டும் கவிதைகளை எழுதத் தொடங்கியுள்ளார். இக்காலத்து அனேக கவிதைகள் மனித இருப்பு, வாழ்வின் சுவை, இளமைக்கால அனுபவங்கள் போன்றவற்றை பிரதிபலிப்பனவாகவே உள்ளன.
 

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச சிறப்பு மலர் 151
வாழ்தலின் இனிமை, நோக்கு அனுபவம் முதுநிலையில் கூறப்பட்டுள்ளது. இவரது "வாழ்வின் சுவை" எனும் கவிதையூடாக இது புலப்படும்.
வயதோ சென்றத வாழ்க்கையில் பலநாள் வறிதே சென்றது இனி என்ன மரணமே மீதி என்றனை நீயும் வாஇரு நண்பா! என்கதை கேள் நீ
உடல் இனும் தளரா நிலையிலே உண்டு உடல் மிக உறுதியாய் இன்னமும் உள்ளது வயததான் போனது ஆயினும் நண்பா வாழ்வதில் ஆர்வமோ மிக மிக மிக மிக
என்று தொடங்கும் கவிதை
வாழ்ந்துதான் வாழ்வின் சுவையை சுவைக்கலாம்
நடந்து தான் நமத பயணத்தை முடிக்கலாம்.
வாழவே பிறந்தோம் நண்பா நாங்கள் வாழவே பிறந்தோம் இறப்பதற்கல்ல
என நிறைவுறுகிறது.
இவ்வாறு இன்றும் கூட இவர் கவிதைகளை எழுதிய போதிலும் அவரை ஒரு கவிஞனாய் நான் கண்டு கொள்ளுமளவுக்கு அவர் அதை வெளிக்காட்டவில்லை. நாடகங்களினுTடு கவிதைகள் வெளிவந்தாலும் கவிதையின் தனித்துவம் இழந்தது என்பது தான் உண்மை.

Page 83
சமகால ஈழத்துத் தமிழ் அரங்கச் சூழலில் இராவணேசன் பெறும் முக்கியத்துவம்
- வடிவேல் இன்பமோகன் B.A.(Hons.) -
பேராசிரியர் சி. மெளனகுரு அவர்கள் தனது இராவணேசன் நாடகத்தை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையினர் நடத்திய உலக நாடகதின விழாவில் அரங்கநிகழ்வாக்கினார். கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவர்கள், பல்கலைக்கழகம் சாராக் கலைஞர்கள் என்போரைக் கொண்டு இந் நாடகத்தை தயாரித்திருந்தார். மட்டக்களப்பில் பேராசிரியர் மெளனகுரு மஹாகவியின் "புதியதொரு வீடு" நாடகத்தை மேடையிட்டு சுமார் 8 ஆண்டு இடைவெளியின் பின்னர் இராவணேசனை அரங்க நிகழ்வாக்கியது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் சி. மெளனகுரு அவர்களால் சமகால அரங்கச் செயற்பாட்டில் இராவணேசன் முக்கியமானதொரு கலையறுவடையாகவே அமைந்து விளங்குகின்றது. இராவணேசன் பெறும் முக்கியத்துவத்தை காலனியாதிக்கத்தின் பின்னர் ஆசிய அரங்கச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னணியிலேயே விளங்கிக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான ஆசிய நாடுகளின் மீது மேற்கொள்ளப்பட்ட காலனியாதிக்கம் இந்நாடுகளின் சுதேசிய அடையாளங்களை வலுவற்றதாக்கியதுடன் காலனியாதிக்கத்தின் விழுமியங்களையே பல்வேறுநிலையிலும் திணித்தது. இது இந்நாடுகளிடையே தங்களின் சுதேசிய அடையாளம் பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் அதனை புனரமைத்து புதிய சமூகச் சூழலுக்கு ஏற்ப வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தேவையையும் உறுதிப்படுத்தியது. இதன் விளைவாக மொழி, மதம், அறிவியல், கலை, கலாசாரம் என பல துறைகளிலும் தமது சுதேசிய அடையாளங்களை வெளிப்படுத்த முற்பட்டனர். இதன் ஒரு பகுதியாகவே அரங்கு சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் நோக்க வேண்டும்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 153
பாரம்பரிய, மக்கள் வழக்காக இருந்த அரங்க வடிவங்கள் புதிய கலைப்பரிமாணங்களைப் பெற்று அவர்களின் தேசிய கலையிருப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வளர்த்தெடுக்கப்படுகின்றன. இப்பின்புலத்திலேயே மே-லாங்-பாங் சீன மக்களிடம் இருந்த மரபுவழி அரங்க வடிவங்களின் பண்புகளை இணைத்து "பீகிங்ஒபேரா"வை சீனமக்களின் தேசியத் தனித்துவம் மிக்க அரங்காகக் கட்டமைக்கின்றார். இதற்கு சமாந்தரமாகவேயப்பானில் நோகபுக்கி, இந்தியாவில் கதகளி, யகூடிகானம் என்பன அவர்களின் பாரம்பரிய அரங்க மரபுகளில் இருந்து வளர்த்தெடுக்கப்படுகின்றன. இவ்வுருவாக்க முயற்சிகளில் இவ்வரங்க வடிவங்களின் பாமரத்தன்மைகள் களையப்பட்டு அவற்றுக்கு செந்நெறிவலு ஊட்டப்பட்டு அவர்களின் தேசிய அரங்கின் குறுக்கு முகத்தோற்றம் வெளிப்படுத்தப்படுகின்றது.
இச்செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக இலங்கை சிங்கள சமூகத்தின் அரங்கச் செயற்பாடுகள் பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர அவர்களினால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. ஆசிய அரங்கில் ஏற்பட்ட மாற்றங்களையும், சர்வதேச ரீதியில் அரங்கியல் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் பிரக்ஞை பூர்வமாக உள்வாங்கி சிங்கள மக்களின் நாட்டார் வழக்காக இருந்த நாடகம்" வடிவத்தை அடித்தளமாகக் கொண்டு "மனமே", "சிங்கபாகு" என்னும் நாடகங்களை உருவாக்கி அவற்றையே சிங்கள மக்களின் தேசிய அரங்கின் தனியடையாளமாகவும் காட்டினார்.
சிங்கள சமூகத்தில் பேராசிரியர் சரத் சந்திரா அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் தாக்கம் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களுக்கு ஈழத்துத் தமிழ் மக்களின் தேசிய அரங்க அடையாளங்களைத் தேடுவதற்கான தூண்டுதலை வழங்கியது. இதன் விளைவாக தமிழ் மக்களிடம் நாட்டார் வழக்காக இருந்த கூத்துவடிவங்களை சில மாற்றங்களுக்குட்படுத்தி நகரப் பார்வையாளர்களின் கவனத்துக்கு கொண்டு சேர்த்த அவரால் சரத்சந்திராவின் உருவாக்கத்துக்கு சமாந்தரமான விதத்தில் முழுவீரியத்துடன் r தனது அரங்க முயற்சியை மேற்கொள்ள முடியவில்லை என்றே குறிப்பிட வேண்டும். இப்பின்னடைவுக்கு பல்வேறு காரணிகளின் தாக்கத்தைக் குறிப்பிடலாம்.
எமது பாரம்பரிய அரங்க வடிவங்கள் எமது தேசிய கலையடையாளங்களை பிரதிபலித்தாலும் அவற்றை சமகால அரங்கச் சூழலில் எமது தேசிய அரங்காக கட்டமைப்பதில் இரு வேறுபட்ட சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
1. பாரம்பரிய அரங்க வடிவங்கள் அவற்றின் கலையம்சங்களைக் காட்டிலும் அவற்றின் சமூக பண்பாட்டு அம்சங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தன. இவை அந் நாடகங்களின் அன்றைய சமூகத் தேவையாகவும் இருந்தன. ஆடல், பாடல், அபிநயம் போன்ற

Page 84
154 மெளனம்
அம்சங்களில் ஒழுங்கு, நேர்த்திஇன்மை பாத்திரங்களுக்கு ஏற்ற அலங்காரம் இன்மை எனப் பல குறைகளை சுட்டிக் காட்டலாம்.
2. பாரம்பரிய அரங்க வடிவங்களின் நிகழ்த்துகை, குறிப்பாக ஆடல், பாடல் என்பன தேர்ந்த பயிற்சியுடனும் கலைஞனின் திறனுடன் உருப் பெற வேண்டியவை. பரதநாட்டியத்தை வரன்முறையாகப் பயின்ற ஒரு நர்த்தகியால் மாத்திரம் ஒரு பரத நாட்டிய நிகழ்த் துகையை நிகழ்த்திக் காட்ட முடிவது போன்று, ஆட்டக் கோலங்களை வரன்முறையாகப் பயின்ற, பாடக் கூடிய குரல்வளம் உள்ள கலைஞனாலேயே ஒரு கூத்து வடிவத்தை நிகழ்த்திக் காட்ட முடியும்.
இவை பாரம்பரிய அரங்க வடிவங்களின் ஆழமான பரிட்சயம். சமகாலத் தேவைக்கு ஏற்ப அதனை உருவாக்கும் திறன், தமது காலத்தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய கலைஞர்களின் இணைவு என்பன சமகாலச் சூழலில் பாரம்பரிய அரங்க மூலங்களை அடித்தளமாகக் கொண்டு அரங்கை கட்டமைக்கும் நெறியாளருக்கு அவசியம் தேவை என்பதை வலியுறுத்தின.
பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கட்கு பாரம்பரிய அரங்க வடிவங்களில் ஆழமான பரிட்சயம் காணப்படாததால் பாரம்பரிய அரங்க வடிவங்களின் நடிப்பு நுணுக்கங்களைக் கற்றுக் கொடுக்கவோ, அதன் ஆடல், பாடல், அபிநயம் போன்றவற்றை பூரணமாக இணைக்கவோ கூத்து மரபுடன் புதிய அரங்க மூலக் கூறுகளை இணைக்கவோ முழுமையான வாய்ப்பு இருக்கவில்லை. இவை பேராசிரியர் அவர்களின் அரங்க முயற்சி முழுவீரியத்துடன் வெளிவராதமைக்கான அடிப்படைக் காரணமாக விளங்குகின்றது.
மேற்சுட்டிய தவறிவிடப்பட்ட செயற்பாட்டினை நிவர்த்தி செய்து தமிழ் மக்களுக்கான தேசிய அரங்கினை கட்டமைக்கும் பிரயத்தனம் இராவணேசன் மூலம் பேராசிரியர் மெளனகுரு அவர்களில் தென்பட்டது. இவருக்கு பாரம்பரிய அரங்க வடிவங்களில் இருந்த ஆழமான பரிட்சயம் சர்வதேச ரீதியில் நாடகத்தில் சமகாலத்தில் ஏற்பட்ட மாற்றங்ளை உள்வாங்கிநாடகம் தயாரிக்கக் கூடிய திறன் என்பன அவரை இம்முயற்சிக்கு தூண்டியது. இங்கு நாட்டார் வழக்காக இருந்த வடமோடிக் கூத்து வடிவத்தை புதிய அரங்கச் சூழலின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களுக்குட்படுத்திகட்டமைப்பதற்கான பிரயத்தனத்தையே காண்கின்றோம். இக் கட்டுரையின் அடுத்த நிலையில் இராவணேசன் நாடகத்தில் கலையுருவாக்கத்தில் நடந்தேறியது என்ன என்பதனை நோக்குவோம்.
இராவணேசனின் கலையுருவாக்கத்தில் பாத்திர உருவாக்கம், பாத்திரங்களுக்கிடையேயான ஊடாட்டம் பாத்திரங்களுக்கு இடையேயான மோதல்(முரண்பாடு) என்பன சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட்டு இருந்தன.
சீதையை இராவணன் சிறை பிடிப்பதும் சிறையில் இருக்கும் சீதையை இராமன் மீட்க எடுக்கும் பிரயத்தனங்களும் அப்பிரயத்தனத்தின் விளைவாக /iபட் யுத்த நிகழ்வுகளுமே நாடக இயக்கமாக அமைந்திருந்தன.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 155
அங்கதன் இராவணன் வீரத்தை இகழ்ந்து பேசவே யுத்தகளம் புகுந்து இராமனை வென்று தனது வீரத்தையும் புகழையும் நிலைநாட்ட முயற்சிக்கின்றான் இராவணன். யுத்தகளத்தில் தான் எதிர்பார்த்திராத விதத்தில் இராமன் முன் தோல்வியடைந்துவிடுகின்றான். இத்தோல்வியை தனது வீரத்துக்கும் புகழுக்கும் ஏற்பட்ட சவாலாக கருதியதால், சீதையைச் சிறை வைத்திருப்பது நீதிக்கும் தர்மத்துக்கும் முரணானது, தான் சீதைக்காக நடத்தும் யுத்தம்நியாயமற்றது என அறிந்திருந்தும் இராமனை யுத்தத்தில் வென்றதன் பின்னரே சீதையைச் சிறை விடுவேன் என உறுதி பூணுகின்றான். இம்முரண்நிலையே நாடக ஓட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வுறுதியான முடிவால் பாசத்துக்குரியமகன், அன்புக்குரிய தம்பி, தன்னை நேசித்த ஏனைய படைவீரர்கள் யாவரையும் யுத்த களத்தில் இழந்து தானும் வீரச்சாவு அடைகின்றான். வீரத்துக்காகவும், புகழுக்காகவும் தனது அதிகாரம் பலம் அனைத்தையும் இழந்து வீரச்சாவு எய்தும் துன்பியல் நாயகனாக இங்கு இராவணன் சித்திரிக்கப்படுகின்றான்.
இம்முரண்நிலையூடாக இராவணன் என்னும் பாத்திரத்தினை முதன்மைப் படுத்தி சகல பாத்திரங்களினதும் குணாம்ச வளர்ச்சியும் சிறப்பான முறையில் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தது.
யுத்தத்தில் எவ்வாறாயினும் வெற்றி கொள்ள வேண்டும் என்னும் போர்க்குணம் கொண்ட இராவணனின் உணர்வுநிலை. அதே நேரம் மகன், சகோதரனின் இழப்புக்காக வருந்துதல், இருந்தும் சோகத்தால் துவண்டு போகாத மனவுறுதி, மனைவியின் வார்த்தையைக் கேட்டு எதையும் செயற்படுத்த வேண்டும் என்னும் ஆர்வம், தனது வெற்றியிலும் புகழிலும் உள்ள பேர் அவா என இங்கு இராவணனின் குணாம்சங்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றன. அது போன்று தந்தையின் தோல்வி தனக்கு ஏற்பட்ட தோல்வியாகக் கருதி தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் மகன் இந்திரஜித்து, செஞ்சோற்றுக் கடனுக்காக தன்னுயிர் களம் விட்ட தம்பிகும்பகர்ணன் என சகல பாத்திரங்களினதும் குணாம்ச வளர்ச்சியையும் சிறப்பாகக் காணக்கூடியதாக இருந்தது.
இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து, மண்டோதரி என்னும் பாத்திரங்களுக்கு எதிர்நிலைப் பாத்திரங்களாக இராமன், இலக்குமணன், அங்கதன் என்னும் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. எதிர்நிலைப் பாத்திரங்களின் மோதலும் முரண்பாடும் அடிப்படையாக இருந்தாலும் ஒத்த பாத்திரங்களுக்கிடையேயான மோதலும் முரண்பாடும் நாடக ஓட்டத்தினைச் சுறுசுறுப்பாக்கி யதுடன் பாத்திரங்களின் குணாம்ச வளர்ச்சியையும் வெளிக்காட்டியது. இருந்தும் இராவணனுடன் ஏனைய பாத்திரங்களுக்கு ஏற்பட்ட மோதலுடனும் முரண்பாட்டுடனும் நாடகம் எடுத்துச் செல்லப்பட்ட தென்றே குறிப்பிட வேண்டும்.
மேற்குறித்த மோதலையும், முரண்பாட் டையும் அவற்றின் மூலம் மேற்கிளம்பும் உணர்வுகளின் கொந்தளிப்பையும் பார்ப்போருக்கு கொண்டு சேர்ப்பதற்கான ஊடகமாக ஆடல்பாடலுடன் இணைந்த அபிநயம் விளங்கியது.

Page 85
156 மெளனம்
ஆட்டத்தில் வடமோடிக் கூத்தின் ஆட்டக் கோலங்கள் பல பயன்படுத்தப் பட்டதுடன், பாடலில் இக் கூத்து வடிவத்தின் பல பாவகைகள் சேர்க்கப்பட்டன. ஆடலில் காணப்பட்ட துல்லியம், நேர்த்தி, உறுப்பமைதி என்பனவற்றையும் பாடலில் காணப்பட்ட மென்மை, கனிவு, இனிமை, உறுதி, குரல் வேறுபாடு, சொற்பொருள் அழுத்தம், தெளிவு என்பனவற்றையும் பாரம்பரிய கூத்து வடிவங்களில் காண முடியாதபடி ஒழுங்கமைத்திருந்தார் நெறியாளர். இங்கு இவையிரண்டும் பாத்திரங்களின் உணர்வு வெளிப்பாட்டை வெளிப்படுத்தும் விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரங்கக் காட்சியமைப்பு. காட்சிமாற்றம் (அரண்மனை, யுத்தகளம், வியூகம் அமைத்தல், யுத்தத்தின் தீவிரம் முதலிய காட்சிகள்) பாத்திரங்களின் வரவு, வெளியேற்றம் யாவற்றையும் புலப்படுத்துவதற்கு யுத்தத்தில் யுத்த வீரர்கள் பயன்படுத்தும் கேடயம் பிரமாண்டப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தது. இது யுத்தத்தின் குறியீடாகவும் விளங்கியது. நாடகத்துக்கு பிரமாண்டத்தன்மையை வழங்கியதுடன் பார்ப்போரின் கவனத்தை நாடகத்தின் பால் ஈர்த்து வைத்திருப்பதிலும் இக்காட்சியமைப்பு பெரும்பங்காற்றியது.
பாத்திரங்களின் ஆடை, அலங்காரம் மோடிப்படுத்தப்பட்டதாக அமைந்திருந்தது. பாத்திரங்களின் இயல்பு, உணர்வு நிலை, என்பனவற்றை சிறப்பாக வெளிக்காட்டியது.
நாடக ஓட்டத்தின் தொடர்ச்சியைப் பேணுவதிலும் நாடக கதை விபரிப்பை இலகுபடுத்தவும், பாத்திரங்களின் குறித்த கணப்பொழுதிலான உணர்வு நிலையினை வெளிப்படுத்தவும் எடுத்துரைஞரின் பங்களிப்பு காரணமாக அமைந்திருந்தது.
மேடையில் பின்னணியில் இருந்த மேற்கத்திய வாத்தியங்களுடன் இணைந்த தமிழ் கலாசாரப் பாரம்பரியத்தில் முக்கியமான வாத்தியங்களாக பயன்படுத்தப்படும் மத்தளம், சல்லரி, பறை என்பன தளர்ச்சியற்ற நாடக இயக்கத்திற்கு மிகுந்த பங்காற்றியது.
இராவணேசன் நாடகத்தின் மூலம் பாமர மக்களிடம் அவர்களின் சமூக நிகழ்வின் ஒரு பகுதியாக விளங்கிய பாரம்பரிய அரங்கவடிவமொன்று பாத்திர உருவாக்கம், பாத்திரங்களின் முரண்பாடு, பாத்திரங்களின் குணாம்சங்களை வெளிப்படுத்தும் ஆடை, அலங்காரம், காட்சிப்பின்புலம்,நாடகத்தின் வளர்ச்சிக்கு இயைபுடையதும், அதனைத் துரிதப்படுத்துவதுமான பின்னணி இசை என அவ்வடிவம் கண்டிராத பல பண்புகளை இணைத்து, அதில் காணப்பட்ட பாமரத் தன்மைகளை நீக்கி ஈழத் தமிழரின் தேசிய அரங்கு பற்றிய நோக்குடன் அதன் குறுக்கு முகத் தோற்றத்தை வெளிக்காட்டும் நோக்குடன் உருவாக்கப் பட்டிருந்தமை இங்கு நடந்தேறிய முதல் நிகழ்வாகும்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 157
நாடக இயக்கத்தின் அச்சாணியாக விளங்கிய ஆடல், பாடல் என்பன பாரம்பரிய நிலையில் இருந்து மாறுபட்டு வரன்முறைக் குட்படுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு அளிக்கைக்குட்பட்டிருந்ததன் மூலம் தமிழ் மக்களிடம் பயில் நிலையில் இருந்த ஆட்ட வடிவம் இசைவடிவத்தின் ஒரு பகுதி என்பனவற்றை பார்ப்போரின் கவனத்துக்கு கொண்டு வந்தமை அடுத்துக் குறிப்பிட வேண்டியது. ஈழத்து தமிழ் மக்களின் சுதேசிய அடையாளங்களாக பரதநாட்டியம், கர்னாடக சங்கீதம் என இந்திய தமிழ் சுதேசியத்தின் கலையடையாளங்களாக மலர்ந்த இவற்றை கொள்ளும் மயக்கநிலையில் இருந்த மக்களுக்கு எமது சுதேசிய கலையடையாளத்தின் வேர்கள் இங்குதான் உள்ளன என்னும் உணர்வின் வெளிப்பாட்டிற்கு இவை வழி சமைத்துக் கொடுத்தன.
இராவணேசன் தமிழ் மக்களின் அரங்க அடையாளத்தை வெளிப்படுத்தும் நோக்கில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், இன்றைய யுத்த சூழலில் வாழும் மக்களுக்கு அவர்களின் வாழ்வியல், அவலங்களுக்கு என்ன ஆறுதல் அளித்தது என சிலர் அபிப்பிராயப்படலாம். இராவணேசனில் இராம- இராவண யுத்தம் சித்திரிக்கப்பட்டாலும் அவ்யுத்தத்தின் மூலம் ஈழத்து தமிழ் மக்கள் படும் வாழ்வியல் அவலங்களை வெளிப்படுத்த முயன்றதே அதன் அடுத்த சிறப்பாகும். யுத்தம், அது தரும் அவலம், யுத்தத்தை தொடங்கி விட்டேன் எப்படியோ வெற்றியடைய வேண்டும் என்னும் வேட்கை, யுத்தத்தை எப்படிமுடிவுக்கு கொண்டு வருவது என்னும் ஞானம், யுத்தம் வேண்டாம் என்னும் அவல ஒலம் என பல அழுத்தங்கள் நாடகத்தின் மூலம் இழையோடுகின்றன. இதிகாசப்பாத்திரங்களின் மூலம் இவை வெளிப்ப்ட்டாலும் இன்றைய சமூக அரசியற் செயற்பாட்டில் நாம் எதிர்கொள்ளும் வாழ்வியல் அம்சங்களாக அமைந்து விடுகின்றன.
மேற்குறித்த பின்புலத்தில் இரு அம்சங்களில் இராவணேசன் ஈழத்து சமகால அரங்கச் சூழலில் முக்கியத்துவம் உடையதாக விளங்குகின்றது.
1. ஈழத் தமிழரின் தேசிய அரங்கு பற்றிய நோக்கை பூர்த்தி செய்ய வேண்டும் என்னும் பிரயத்தனத்துடன் அரங்கக் கலைக் கட்டமைப்பை உருவாக்கியது
2. இவ்வடிவத்தின் மூலம் ஈழத்தமிழரின் இன்றைய வாழ்வியல்
யதார்த்தத்தையும் கூற முற்பட்டது. இவை இன்றைய சமகால அரங்கச் சூழலில் முக்கியமான அம்சங்களாகவே அமைகின்றன. நெறியாளருக்கு திறன் மிகுந்த நடிகர்கள் (ஆட்டக் கலைஞர்) இசைக் கலைஞர் (பாடகர், பின்னணி இசையினர்) ஒப்பனையாளர், அரங்க ஒழுங்கமைப்பாளர் என யாவரும் சிறப்பான முறையில் வாய்க்கப் பெறுமாயின் நெறியாளரின் தேசிய அரங்கு பற்றிய நோக்கு முழுப்பூரணப்பாடு உடையதாக விளங்கும் என்பது உறுதி. இதனால் இங்கு மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வை இப்பூரணப்படுத்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட பிரயத்தனத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளலாம்.

Page 86

பேரா. சி. மெளனகுரு அவர்களது தறை சார்ந்தது.

Page 87

கி.பி. 3ம் நூற்றாண்டு தொடக்கம் 6ம் நூற்றாண்டு வரையிலான தமிழ் நாடகம்
கலாநிதி. அம்மன்கிளி முருகதாஸ் பீடாதிபதி, கலை பண்பாட்டுப் பீடம், கிழக்குப்பல்கலைக்கழகம்,
தமிழ் நாடகம் பற்றி நோக்கும் போது நாடகம் பற்றிய சில அடிப்படை விடயங்களை நோக்க வேண்டியுள்ளது.நாடகத்தின் பிரதான அம்சம் நாடகம் ஒரு நிகழ்த்து கலை என்பது ஆகும். அங்கு மனித அனுபவம் ஒருமக்கட் கூட்டத்தின் முன் நிகழ்த்தப்படுகிறது. அதாவது நாடகம் நடைபெறுவதற்கு நடிகரும் பார்வையாளரும் தேவை. இவர்கள் இருபகுதியினரும் குறிப்பட்ட ஒரு இடத்திற் குறிப்பிட்ட நேரத்திற்குச் சமூகமளிக்க வேண்டும். ஒருமேடையில் அல்லது விசேட இடத்தில் நடிகர் பார்வையாளர் முன்னால் தோன்றி மனிதவாழ்வின் அனுபவங்களை நடிப்பர். அதில் பார்வையாளர் தம்மை ஈடுபடுத்தி தமது உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்வர். இதனால் இக்கலை உடனடிக்கலை (immediate art) எனப்பட்டது. அது பொழுது போக்கிற்கும் அறிவூட்டலுக்கும் பயன்படுத்தப்பட்ட வசதியான கலையாயிற்று. இந்த வகையில் தமிழ் "நாடகமும் 6?(5 gisbsp760)ébébé560)6u" (Performing art) "bsibé5/765ébébé56O)6o" (Temporary Ary) என்று கூறப்படுகின்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந் நாடகம் தமிழ் மரபில் முத்தமிழில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளதெனினும் கிரேக்கம் போன்ற சமூகங்களில் பேணப்பட்டவாறு நாடக அரங்கங்களோ, வேட அணிகளோ, நாடக எழுத்துக்களோ எம்மிடையே பேணப்படவில்லை என்பது முக்கியமானது. அதற்கான விடை தமிழ் நாடகம் பேணப்பட்ட முறையிலும் பேணிய கலைஞரது சமூக அந்தஸ்திலும் தங்கியிருக்கிறது.
எனவே நாடகம் பற்றி அறிவதற்கான சான்றுகளாக எமக்குக்கிடைத்த இலக்கியச் சான்றுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். அந்தவகையில் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், கலித்தொகை போன்றவற்றை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

Page 88
62 மெளனம்
இந்த இலக்கியங்கள் மூலம் பெறப்படும் தகவல்களைக் கொண்டு அக்காலத்து நாடகக் கலையை இரண்டு வகையாக வகுக்கமுடிகிறது.
1. சாஸ்திரியக்கலை / தொல்சீர்க்கலை
2. சமயம் சார்ந்த சடங்கு வடிவங்கள் என்பன அவை
அத்துடன் இந்தக்கலை ஏன் அதிக முக்கியப்படுத்தப்பட பூமல் பேணப் படாமல் "நிகழ்த்து" கலையாக மட்டுமே நடந்து முடிந்திருக்கிறது என்பதையும் அறியமுடியும்.
1.1. தொல்காப்பியம் "நாடக வழக்கு" பற்றிப் பேசுகிறது. இந்த நாடக வழக்கு 'கலி பரிபாடல், என்ற பாவகையிலே அமையும் எனவும் கூறுகிறது.
1.2 சிலப்பதிகாரம் இக்கால நாடகத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக அமைகின்றது. கி.பி. 1-3 ஆம் நூற்றாண்டிலிருந்த நாடகங்களின் வளர்ச்சியை சிலப்பதிகாரம் விஸ்தரிக்கின்றது. பிரபுக்களின் வளர்ச்சி கலையில் ஏற்படுத்திய மாற்றத்தை அதிற் காணலாம்.
1.3 மேலும் வெறும் விறலி ஆடலாக இருந்த ஆடற்கலை மிக வினைத்திறன் பெற்ற ஆடற்பெண்ணினால் அதற்குரிய இலக்கணங்கள் அனைத்துடனும் ஆடப்படுகின்றது. ஆடற் பெண்ணின் இயல்பு தொடக்கம். ஆடும் அரங்கம், பார்ப்போர், கேட்போர் பற்றிய முழு விபரணமும் பேசப்படுவதை அவதானிக்கலாம்.
ஒரு பெண் பல பாத்திரமாகத் தன்னை உருவகித்து ஆடும் நாடக மரபும் பலபாத்திரங்கள் பாகமேற்று ஆடும் ஆடல் மரபும் இருந்துள்ளன.
தொல்சீர்க்கலை
ஒரு ஆடற் பெண்ணால் மிகவும் கைதேர்ந்த முறையில் இலக்கண விதிகளுக்கேற்ப ஆடப்பட்ட கலைபற்றி சிலப்பதிகாரத்துட் கூறப்படுகிறது. அதனை தொல்சீர்க்கலை என்ற வகைக்குள் அடக்கலாம்.
ஆடற்பெண்: குறிப்பிட்ட குலத்தில் பிறந்தவள். (தேவலோகத்து மாதவிபரம்பரையினள் எனப்படுகிறது) ஆடல் பாடல் அழகு ஆகிய மூன்றில் ஒன்றிலும் குறைவு படாதவள். ஐந்து வயது தொடக்கம் 12 வயது வரை ஏழாண்டுகளாக நடனம் பயின்றவள். 12 வயதில் தனது அரங்கேற்றத்தை மன்னர் முன்னிலையில் வெளிப்படுத்துவதற்கு உரியவள் என சிலப்பதிகாரம் கூறுகிறது.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 163
ஆடல் ஆசான்: இருவகைக் கூத்தின் இலக்கணமறிந்தவன். இருவகைக் கூத்தும் தேசி மார்க்கம் என உரையாசிரியரால் கூறப்படுகிறது. தேசி என்பது உள்ளுர்க்குரியது. மார்க்கம் என்பது வடநாட்டுக்குரியது. ஆடல்களையும் அதற்குரிய தாளங்களையும், பாடல்களையும் விதிப்படி அறிந்தவன். ஆடல் வகைகள், (அகக்கூத்து, புறக்கூத்து) பாடல் வகைகள், தாளங்கள் துரக்குகளை அறிந்தவன் இதைவிட ஒற்றைக் கை, இரட்டைக் கை. எழிற்கை, தொழிற்கை ஆகியவற்றின் உபயோகத்தை அறிந்தவன், (ஒற்றைக்கை, இரட்டைக்கை என்பன புறக்கூத்துக்கும் எழிற்கை தொழிற்கை என்பன" அகக்கூத்துக்கும் உரியன எனப்படுகிறது) அவற்றுடன் குரவைக் கூத்தும் வரிக்கூத்தும் அறிந்தவன் எனவும் கூறப்படுகிறது. எனவே தொல்சீர் வடிவங்களின் அபிநயங்களையும் உள்ளுர் வடிவங்களின் (திருந்தாத) அபிநயங்களையும் உணர்ந்திருக்கிறான் 616ÖI6)[[[D.
இசையோன்
யாழ், குழல், தாளம் ஆகியவற்றையும், குரலையும் பாடலுடனும், ஆடலுடனும் இணைக்கத் தெரிந்தவன்; செந்துறை வெண்துறை என்று சொல்லப்பட்ட இருவகைப் பாடல்களுக்குப் பொருளான இயக்கம் நான்கையும் அமைத்து, கூடியவரை இயற்சொல், திசைச்சொல், வடசொல், எனப்பட்ட சொற்களின் ஒசைகளை அறிந்து அவற்றின் பொருளுணர்ந்தவன். கவியினது குறிப்பை உணர்ந்து ஆடல் வரவையும் பாடல் பொருளையும் உணர்ந்து அதற்கேற்ப இசை வகுக்கக்கூடியவன்.
கவிஞன்
தமிழகமெங்கும் வழங்குகின்ற தமிழ் மொழிச் சொற்கள் அனைத்தையும் அறிந்தவன். வேத்தியல், பொதுவியல் என்ற இரு வகையையும் கூறிய நாட்டிய நன்னூலின்படி, இசையோனின் பண்ணின் தன்மையை உணர்ந்து வசைச் சொற்களை நீக்கி நாடகக் கவி செய்யக்கூடியவன்.
தண்ணுமையோன்
ஆடல் ஆசான் அறிந்த அனைத்தையும் இசையோன் அறிந்ததையும் அறிந்தவன். இசைக்கேற்றபடி வாத்தியம் வாசிக்கத் தெரிந்தவனாக இருப்பதுடன் மற்றக் கருவிகளையும் இணைத்து அதற்கேற்ப வாசிக்கத் தெரிந்தவன்.

Page 89
164 மெளனம்
குழலோன்
இசையோன் பாடிய இசையின் இயற்கை அறிந்தவன். அந்த இசையை ஒற்றி குழலை வாசிப்பவன். வசைப்பாடலை வாசிப்பதில் மிகவல்லவன்.
யாழாசிரியர்
ஏழு பாலைகளையும் வாசிக்கத்தக்கவன், ஏழுஸ்வரங்களையும் சிதையாமல் வாசிக்கத்தக்கவன் என ஆடற்கலைஞருடன் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடுவர்.
அரங்கம்
முதலில் அதற்குரிய நிலத்தை தேர்ந்தெடுத்து அரங்கமைக்கும் கோல் ஒன்றைத் தயாரித்து அந்தக் கோலின்படி (உத்தமன் கைபெருவிரல் 24 அளவு) அரங்கம் அமைத்தனர்.
7 கோல் அகலம்
8 கோல் நீளம்
அரங்கின் தளத்திலிருந்து உத்தரப்பலகையின் உயரம் 4 கோல் ஆக அமைக்கப்பட்டது. இரண்டு வாயில்கள் அமைக்கப்பட்டு மேலே பூதர் எழுதப்பட்டனர். அமைக்கப்பட்ட அரங்கில் மூன்றுவகைத் திரைகள் அமைக்கப்பட்டன. இடப்புறத்திலிருந்து பொருத்தப்பட்ட ஒருமுக எழினியும் (திரை) வலப்புறமிருந்து பொருத்தப்பட்ட பொருமுக எழினியும் மேலிருந்து இடப்பட்ட கரந்துவரல் எழினியும் எனப்பட்டவை அவை, விதானத்தில் மாலைகள் அலங்கரிக்கப்பட்டு அழகாக்கப்பட்டன. இந்த அரங்கு முதன்முதலில் அரங்கேறும் பெண்ணுக்காகத் தயாரிக்கப்பட்டது என அறியமுடிகிறது.
ஒளியமைப்பு: ஒளியமைப்பு செய்யப்பட்டதாக அறியமுடிகிறது. தூணின் நிழல் அரங்கிலே விழாதவாறு விளக்குகள் பொருத்தப்பட்டன என்பதை சிலப்பதிகாரம் "தூணிழிற் புறப்பட மாண்விளக்கெடுத்தாங்கு" எனக் கூறுகிறது.
இருக்கைகள்: அரசன் முதலானோர் அவரவர் தகுதிக்கேற்பத் தகுந்த இருக்கைகளில் அமர்ந்தனர் எனப்படுகிறது. இந்தச் செய்தியானது இருக்கைகள் சமூகப் படிநிலைக்கேற்ப அமைக்கப்பட்டிருந்தமையைக் காட்டும்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 165
அரங்கில் ஏறுதல்: இசைக்கருவியாளர் தாம் நிற்கவேண்டிய இடங்களில் வந்து அமர்வர். ஆடல் மகள் வலக்காலை முன்னே வைத்து அரங்கத்தில் வலத்தூண் பக்கத்து வந்து நிற்பாள். தோரிய மடந்தையர் அவ்வாறே வந்து இடத்தூண் பக்கத்தில் நிற்பார்கள்.
ஆடல்களை ஆரம்பித்தல்: நன்மை உண்டாகவும் தீமை நீங்கவும் தெய்வத்தை நோக்கி வாரப்பாடல்களை பாடியதும் இசைக்கருவிகள் எல்லாம் இசைக்கத் தொடங்கின. அதன்பின் ஆடல் தொடங்கிற்று.
ஆடல்கள்: ஆடல் ஆசிரியன் பற்றிக் கூறும்போது அவன் இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்தவன் எனப்பட்டது. அவை வேத்தியல் பொதுவியல் என வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் வேறுவகைகளாகவும் வகுக்கப்பட்டுள்ளன.
மார்க்கம், தேசி/அகக்கூத்து புறக்கூத்து,
வசைக்கூத்து, புகழ்கூத்து,
வரிக்கூத்து, வரிச்சாந்திக் கூத்து,
சாந்திக் கூத்து, வினோதக்கூத்து,
ஆரியக் கூத்து, தமிழ்க்கூத்து,
இயல்புக் கூத்து, தேசிக்கூத்து.
வசைக் கூத்து என்பது நகைச்சுவை சார்ந்தது. பல்வகை உருவமும் பழித்துக்காட்ட வல்லவனத்தல் வசை எனப்படுமே.
வினோதக்கூத்து என்பதில் குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என்பன உள்ளடக்கப்படுகின்றன.
ஆடற் பெண்ணால் இந்திரவிழாவில் பதினொரு வகை ஆடல்கள் ஆடப்பட்டன எனப்படுகிறது. (புறக்கூத்துக்கள்) அவையாவன. இந்தப் பதினொரு வகையில் நின்றாடல் ஆறும் வீழ்ந்தாடல் ஐந்தும் கூறப்படுகின்றன.
1. கொடுகொட்டி: உமையவள் ஒரு கூற்றினளாக (அர்த்தநாரி)
சிவன் ஆடியது நின்றாடல்
2. பாண்டரங்கம் வெண்ணிறனிந்து சிவன் ஆடியது. நின்றாடல்
3. அல்லியம்: அஞ்சனவண்ணன் ஆடிய ஆடல் பத்தில்
ஒன்று நின்றாடல்

Page 90
(6
4 மல்
5. துடி
6. குடை :
7 குடம் (கரகம்):
8. பேடியாடல் :
9. மரக்காலாடல்:
10. பாவைக் கூத்து:
1 1. d560DLutb:
மெளனம்
வாணனைவெல்ல நெடியவன் ஆடிய ஆடல்
நின்றாடல்
முருகன் கடலை அரங்கமாகக் கொண்டு ஆடியது
வீழ்ந்தாடல்
முருகன் அவுணரை வெல்ல ஆடிய ஆட்டம்
வீழ்ந்தாடல்
வாணரை எதிர்த்து நீனிற வண்ணன் ஆடியது
வீழ்ந்தாடல்
வாணனை எதிர்த்து பெண் வேடம் கொண்டு திருமால் ஆடியது வீழ்ந்தாடல்
அவுணரைக் கொல்ல மாயோன் ஆடியது. வீழ்ந்தாடல்
கொல்லிப்பாவையாக நின்று திருமகளால் ஆடப்பட்டது வீழ்ந்தாடல்
வாணன் அரண்மனை வாயிலில் உள்ள வயல் புறத்தில் இந்திராணி ஆடியது வீழ்ந்தாடல்
இந்த ஆடல்கள் அனைத்தும் சமயச்சடங்கின் "திரும்ப நிகழ்த்தல்" என்பது அவற்றின் பொருள்மூலம் புலனாகின்றது.
ஆடல் மகளின் அகக்கூத்து
இவள் வரிக்கூத்துக்களை ஆடினாள் எனப்படுகிறது. இக்கூத்துக்கள் உள்ளுர் அபினயத்துக்குரியவை என அறிய முடிகிறது. (சில: பக்.235) அவ்வரி எட்டு
வகைப்படும்.
1. கண்கூடுவரி :
2. காண்வரி:
3. உள்வரி :
4. புறவரி :
முதல் முதல் காணும் காதலனிடம் காதலை முகத்திற்தேக்கி நடத்தல்
தலைவரிடம் புன்னகையுடன் வா எனவந்து போவெனப் போகும்வரி.
வேற்றுருக்கொண்டு நடத்தல் (தலைவனிடம்)
காதலை உடையாள் போலவந்து தலைவரிடம் சேராது புறம்பே நின்ற நடிப்பு.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 167
5. கிளர்வரி: புணர்ச்சி நோக்கிய புலவியை உணர்த்தும் நடிப்பு
A. தேர்ச்சிவரி: தலைவன் தன் துன்பங்களை தன்கிளைகட்குச்
சொல்லும் நடிப்பு
7. காட்சிவரி: தன்வருத்தத்தை பலரும் காணும் படி நடத்தல்.
8. எடுத்துக்கோள்வரி: தான் மயங்கிவிழ மற்றவர் எடுத்துக்கொள்ளும்
படியாக நடிக்கும் நடிப்பு
இந்த நடிப்புக்கள் இன்றைய பரதநாட்டியத்தில் "அஸ்டநாயகி பாவம்" எனப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தும் ஆக ஆடல்கள் என்பது அவற்றின் உட்பொருளிலிருந்து விளங்கிக் கொள்ளப்படுகிறது. ஆடற் பெண்கள் மன்னனை, பிரபுக்களை சார்ந்திருந்தமை காரணமாக ஆடலின் உட்பொருள் அகம் சார்ந்ததாக மாறியதுடன் அவளது அழகும் முக்கியப்படுத்தப்பட்டது. மேலும் அவள் அரங்கேறியவுடனேயே 1008 கழஞ்சு பொன்னுக்கு உடனடியாக விற்கப்படுகிறாள் என்பதும் அவளது சார்நிலையைத் தெரிவிக்கிறது.
பலபாத்திரங்கள் ஆடிய உள்ளூர் (கிராமிய) வடிவங்கள் ஆடல் தெரிவு/வடிவம்
ஆயர் பாடியில் எருமன்றத்தில் மாயவருடன் தம் முன்னாடிய வாலசரிதை (பாலசரிதை) நாடகங்களில் பிஞ்ஞையோடாடிய குரவையை ஆடுவோம் என்று குரவையைத் தேர்ந்தெடுக்கின்றனர். இது தெட்டத்தெளிவாக நாடகம் என்பதைத் தெரிவிக்கின்றது.
பாத்திரத் தெரிவு
எதிர்காலத்தில் தமது கணவராகப் போகின்றவர் அடக்குவதற்கென வளர்க்கும் காளையையுடைய பெண்களை ஆய்ச்சியர் குரவை ஆடுவதற்குப் பாத்திரங்களாகத் தெரிவு செய்கின்றனர்.
பழைய முறையிலே அவர்களை நிறுத்தி (தொன்று படுமுறையில்) அவர்களுக்கு குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப் பெயரிட்ட பின்னர் மீண்டும் குரலை மாயவன் என்றும் ஆயவன் (பலராமன்) என்றும் துத்தத்தை பின்னை என்றும் பெயரிடுவர். அவர்கள் செந்நிலை மண்டலத்தில் (வட்டமாக) நிறுத்தப்பட்டனர்.

Page 91
168 மெளனம்
ஆடல்
பின்னை துழாய் மாலையை மாயவரின் கழுத்தில் போட்டு குரவைக்
கூத்துள்படுகிறாள். அவ்வாறு ஆடும் அவர்கள் மாயவனை முல்லைப் UIT600fuji
பாடுகின்றனர். அதனுடன் மாயவனின் வீரதீரங்களைக் கூறிப்பாடுகின்றனர்.
துத்தம் (பின்னை)
குரல் (மாயவன்) ༤སོ།།
கைக்கிளை
இளி (ஆயவன்)
இறுதியில் ஆடுநரைப் புகழ்ந்து மன்னரைப் புகழ்ந்து துயரை நீக்குமாறு வேண்டுவதுடன் ஆடல் நிறைவுறுகிறது.
சடங்குநாடகமாக மாறும் போது கலைஞனுக்கும் சமூகத்துக்குமிடையே அதிகமான விலகல் தோன்றிவிடும். சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்ற வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை குன்றக்குரவை என்பன மக்கள் பாத்திரமாகி நடக்கின்ற சடங்காகவும் நாடகமாகவும் காணப்படுவதை அவதானிக்கலாம்.
வேட்டுவவரி
இக் கூத்து கொற்றவையை நோக்கிஆடப்பட்டது. இந்த கூத்து ஆடியகாலம் வேனிற்காலமாகும். ஏனெனில் கொற்றவையின் கோயிலில் திருமுன்றலில் மலர்கள் சொரிந்தன எனப்படுகின்றது.
ஆடிய காரணம்
சாலினி தெய்வமாடி எயினருடைய மன்று பாழ் பட்டன என்றும் எயினர் அறக்குடி போல அடங்கினர் என்றும் கூறி அவர்கள் மீண்டும் பழைய மட்டுண் வாழ்க்கையை வேண்டின் கொற்றவைக்குக் கடன் கொடுக்க வேண்டும் என்றும் கூற உடனடியாக வேடுவர் வேட்டுவ வரியை ஆடத் தொடங்குகின்றனர்.
 

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 169
கொற்றவையாக ஒருபெண் (வேடமிடுதல்)
மறத்தாலன்றி இறந்து போகாத எயினர் குடியிலிருந்து குமரி ஒருத்தியை தெரிவுசெய்து அவளின் தலையிலே பொன்னாற் செய்த ஒரு பாம்பை அணி செய்து கூந்தலை நெடுமுடியாகக் கட்டி தோட்டத்தினை அழித்த ஏனத்தின் கொம்பைப் பறித்துதலையிலே பிறையாகச் சார்த்தி புலியின் வாயைப் பிளந்து பெற்ற பல்லை தாலியாகக் கோர்த்து புலித் தோலை அவளுக்கு உடுத்தி, முறுக்குண்ட கொம்பையுடைய கலையின் மேல் அவளை ஏற்றி வணங்கினர். வணங்கிய அவர்கள் அவளை மடைப் பொருள்களுடனும், பறை, மற்றும் கொம்பு, குழல் வாத்தியங்களுடன் அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் மக்கள் அவளின் குலனை வாழ்த்தி கூத்தை ஆடினர் (இது வள்ளிக்கூத்து எனப்படுகின்றது) மக்கள் கூத்தாடிக் கொண்டிருக்கும் நிலையில் சென்றாள் என்றும் இறுதியில் அவர்கள் ஆனிரைகள் கொணர்ந்து கொற்றவைக்கு பலி கொடுத்தனர் என்றும் கூறப்படுகிறது. வேட்டைக்குப் போகுமுன் வேட்டையாடச் செல்வதாக பாவனை செய்யும் இவ்வாறான நடனங்கள் இன்றும் ஆபிரிக்க சமூகங்களிடையே காணப்படுகின்றன என்பர். இது சடங்கும் கலையும் இணைந்த நிலையை தெளிவுபடுத்தும், கொற்றவையாக அலங்கரிக்கப்பட்ட பெண்ணும் அக்கூத்தில் கலந்து கொள்வாள். கூத்தின் இறதியில் மறவன் நிரை கொள்வதற்காகச் செல்வான் என்றும், கொற்றவையும் சேர்ந்து செல்வாள் என்றும் கூறப்படுகிறது.
குரவைக் கூத்து
சமய ஆடல்களுள் ஒன்றாகத்தோன்றிய இக்கூத்து பின் சமூக நடனமாக மாறியது. இதுநாளடைவில் காமத்தையும் வெற்றியையும் பொருளாகக் கொண்டு குரவைப்பாடல்களுடன் ஒரு எட்டு அல்லது ஒன்பது பேர்கள் கைபிணைந்தாடிய கூத்தாகமாறியது. (சக்திப் பெருமாள் 1990:20) சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை என்ற இருவகைக் கூத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடியவாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கட் பிஞ்ஞையோடாடிய குரவை ஆடுதும் யாம் என ஆய்ச்சியர் குரவை ஆடிய இடம் பற்றியும் கதை பற்றியும் சிலப்பதிகாரத்துட் கூறப்படுகிறது. எனவே மாயவனின் சிறுபருவநாடகங்கள் பல ஆடப்பட்டன என்பது புலனாகிறது.
ஆய்ச்சியர் குரவை
ஆய்ச்சியர் நகரப் பகுதியை அண்டி வாழ்ந்தவர்கள் என்ற முறையில் அவர்களது சடங்கில் வேட்டுவ வரியை விட வளர்ச்சி தென்படுவதை அவதானிக்க முடியும்.

Page 92
170 மெளனம்
ஆடப்பட்ட காரணம்: கண்ணகி அடைக்கலமாக இடைச்சேரியில் விடப்பட்ட பின்னர் நிகழும் துர்ச்சகுனங்கள் காரணமாக அதை நீக்க வேண்டி ஆடப்பட்டது. அங்கே பால் உறையவில்லை. மறிதெறித்தாடவில்லை பசுக்கள் நடுங்குகின்றன. ஏற்றின் கண்ணிலிருந்துநீர் சொரிகின்றது, வீட்டில் துர்ச்சகுனங்கள் நிகழ்கின்றன எனவே தீய சம்பவம் ஒன்று நிகழப் போகிறது என நினைத்து அது நடைபெறாமல் தடுப்பதற்காக அந்த ஆடலை நிகழ்த்தத் தொடங்கினர்.
குன்றக்குரவை
கண்ணகியைத் தெய்வமாகக் கண்ட குறவர் இக்குரவையை ஆடுகின்றனர். இங்கு குறப்பெண்கள் எல்லோரும் இச்சடங்கில் ஈடுபட்டதாக அறிய முடிகின்றது. வேங்கை நீழலில் கண்ணகியைத் தெய்வமாக்கி பறைகள், கோட்டுவாத்தியம், தெண்டகம் போன்றவற்றை இசைக்குமாறு கூறுகின்றனர். பெண்கள் கோலமிட்டு (தம்மை அலங்கரித்து) ஆடியுள்ளனர். இவர்கள் அருவிக்குச் சென்று அருவியாடி வேலேந்திய இறைவனைப் பாடி ஆடுகின்றனர். வேலேந்திய தெய்வத்தை பரவுகையில் அவனது வீரச் செயல்கள் (அவுணரைக் கொல்லும்) கூறப்படுகின்றன. தொடர்ந்து இந்தப் பாடல்கள் வெறியாட்டுப்பாடல்களை நினைவூட்டுவனவாகவும் வேலனை (பூசாரி) நகையாடுவனவாகவும் அமைகின்றன. மேலும் அப்பெண்கள் இறைவனிடம் மணவணி வேண்டுவனவாக இவை அமைகின்றன.
சாக்கைக் கூத்து
இவ்வடிவம் பறையூர்க் கூத்தச் சாக்கையனால் ஆடப்பட்ட செய்தியும் கூறப்படுகிறது. அவனால் ஆடப்பட்ட ஆடல் கொட்டிச்சேதம் (கொடுகொட்டி) எனப்படுகிறது. இதே கொடுகொட்டி ஆடலை மாதவியும் சபையில் ஆடினாள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே ஆடலை இங்கு சாக்கையன் ஆடுகிறான். இது சேர மன்னர் முன்னிலையில் ஆடப்படுகிறது.
தொகுத்து நோக்கும் போது முற்றிலும் சடங்கிலிருந்து விடுபட்ட நாடகங்கள் இருந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. அவற்றில் ஒரு பாத்திரம் பல பாத்திரமாக ஆடிய நடன வடிவங்களும் பல பாத்திரங்கள் ஆடிய நாடகங்களும் இருந்திருக்கின்றன. அவை முற்றிலும் சாஸ்திரியமயப்பட்டனவாக இருந்தன.
சடங்குசார் நாடகங்கள் அவற்றிற்கே உரிய பண்புகளுடன் முற்றிலும் சடங்குகளிலிருந்து விடுபடாமல் பக்தியுடன் அல்லது நம்பிக்கையுடன் நடத்தப்பட்டுள்ளன.
அரங்குகளை நோக்கும் போது அவை தற்காலிக அரங்குகளாக இருந்திருக்கின்றன. மாதவியின் அரங்கு அரங்கேற்றத்தின் போதுதான்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 171
கட்டப்பட்டது. அது மரத்தால் ஆக்கப்பட்டது என்பதற்கான குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் உள்ளன. அரங்கேற்றம் முடிந்ததும் அது கழற்றப்பட்டிருக்கலாம். சடங்குசார் அரங்குகள் கோயில் முன்றலில் (வேட்டுவவரி, குன்றக்குரவை அல்லது எருமன்றத்தில் (ஆய்ச்சியர் குரவை) நடைபெற்றுள்ளன. அவற்றிற்கு ஒரு அரங்க நிரந்தரமான அமைப்பு இல்லை எனலாம்.
ஆண்களும் பெண்களும் நடிப்புக் கலையில் ஈடுபட்டுள்ளனர். துணைக் கலைஞர்கள் பலரும் சேர்ந்துநாடகத்தை நிகழ்த்தியுள்ளனர். அவர்களுக்கான ஒப்பனை பற்றி சிலப்பதிகாரத்தில் நிறையக் குறிப்புகள் காணப்படுகின்றன.
நாடகம் பற்றிய கருத்துக்கள்
தமிழ்நாடகம் பற்றிய அக்காலக்குறிப்புகள் நாடகம் பகை பழிதீச்சொல் சாக்காடு என்பவற்றுக்குக் காரணமாகும் என்கின்றன (ஏலாதி 25). குடும்பத் தலைவர்களைச் சீரழிக்கும் (சிலப்: 16.131.134) என்றும் கூறப்பட்டது.
ஆகவே நாடகம் பற்றிய தகவல்கள் பேணப்படுவதில் அக்கறை காட்டப்படவில்லை. மேலும் அது குடும்பக்கலையாக இருந்தது என்பதும் முக்கியமானது.
ஆகவே தமிழ் நாடகம் பற்றிய தகவல்கள் கிடைப்பது அருமை எனினும் மேற்குறிப்பிட்ட நூல்களின் ஊடாக ஒரளவுக்கேனும் அதுபற்றிய தகவல்களைப் பெற முடிவது ஆராய்ச்சியாளர்களுக்கும் சமூகவியலாளர்களுக்கும் உதவியாக அமைந்துள்ளது எனலாம்.
உசாத்துணை நூல்கள்
1. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் - உ.வே.சா.பதிப்பு.
2. தொல்காப்பியம் பொருளதிகாரம் - கணேச ஜயர் பதிப்பு - 1956, சுன்னாகம்.
3. Sivathamby K. Drama in Ancient Tamil Society -NCBH-1981 Madras.
4. சக்திப் பெருமாள், தமிழ்நாடக வரலாறு, 1981, சென்னை.

Page 93
அண்மைக்கால முஸ்லிம் நாடகங்கள்
கலாநிதி எம். எஸ். எம். அனஸ் முதுநிலை விரிவுரையாளர், பேராதனைப்பல்கலைக்கழகம்.
1970 கால பேராதனைப் பல்கலைக்கழக வாழ்வு நாடகக் கலையோடு எமக்குப் பெரும் தொடர்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழகத் திறந்த வெளி அரங்கிலும் பொறியியற் பீடத்தின் பெரேரா கலை அரங்கிலும் அக்காலத்தில் புகழ் பெற்ற பல சிங்கள நாடகங்களும் தமிழ் நாடகங்களும் அரங்களிப்புச் செய்யப்பட்டன. பேராசிரியர் சரச் சந்திரவின் மனமே, சுகதபால சில்வா, சைமன் நவகத்தேகம போன்ற பிரபல நாடக நெறியாளர்களின் நாடகங்கள் படிப்படியாக நாடக ரசனையில் நல் அனுபவங்களைப் பெற உதவின.
தாஸிஸியஸின் பிச்சை வேண்டாம், கந்தன் கருணை, வைரமுத்துவின் மயான காண்டம், வன்னிப்பிரதேச கோவலன் சரித்திரம், சிங்களக் கோலம் சொக்கரி என தமிழ் சிங்கள நாடகப் படைப்புக்களும் கிராமிய நாடகங்களும் அரங்கங்களை அலங்கரித்தன. பிச்சை வேண்டாம், கந்தன் கருணை போன்ற நாடகங்கள் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவரின் நாடக ரசனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
இக்காலத்தில் தாஸிஸியஸ், சுஹைர் ஹமீத், மெளனகுரு, பாலேந்திரா, நிர்மலா நித்தியானந்தன் போன்றோரின் நாடகத்துறைப் பங்களிப்புக்கள் தமிழ் நாடக வளர்ச்சி பற்றிய பெரும் எதிர்பார்ப்புக்களை வளர்த்தன. உதாரணமாக கண்ணாடி வார்ப்புக்கள் மொழி பெயர்ப்பு நாடகம் மேடையில் மட்டுமன்றி தொலைக்காட்சியிலும் நாடக ரசனை வளர்ச்சிக்கு வழிவகுத்தது.
சிங்கள நாடக உலகுக்குச் சமமாக அல்லது அதனையும் கடந்து செல்லக்கூடும் என்று எதிர்பார்ப்புக்களை வளர்க்கக் கூடிய அளவு தமிழ்நாடகச் சூழல் மொழி பெயர்ப்பு, சுய ஆக்கம், பாரம்பரியக் கூத்து முறை நாடகங்கள் என பல துறைகளில் நடந்து கொண்டிருந்த நாடக இயக்கம் 1983 ன் பின்னர் வீழ்ச்சி காண்கிறது.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 173
கந்தன் கருணை பல்கலைக்கழகத் திறந்த வெளி அரங்கில் ஆடப்பட்ட போது நாடக பாத்திரமாகத்தான் முதலில் நான் பேராசிரியர் மெளனகுரு அவர்களைக் கண்டேன். சமகாலப் பிரச்சினை ஒன்றைப் பாரம்பரியக் கூத்து மரபுடன் சேர்த்துச் சொல்ல முயன்ற அந்த நாடகத்தில் மெளனகுரு அவர்களின் ஆட்டம் பெரும் பங்கு வகித்தது.
யாழ்ப்பாணத்திலிருந்த போது சிறுவன் சித்தார்த்தன் மெளனகுருவின் நடிப்பையும் ஆட்டத்தையும் பற்றி யாழ் நகரத் தினசரி ஒன்றில் நான் எழுதிய ஒரு விமர்சனக் குறிப்பின் பின்னர், தமது நாடகத்துறை அனுபவங்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் என்னிடம் பகிர்ந்து கொள்வதை மெளனகுரு பெரிதும் விரும்பினார்.
இலங்கைக் கலைக்கழகத்தின் எமது முஸ்லிம் நுண்கலைக்குழு முஸ்லிம் நாடகம் பற்றிய கருத்தரங்கு மற்றும் பாரம்பரிய முஸ்லிம் நாடகங்களில் ஒன்றை பாணிமைப்படுத்துவதற்கு (அல்லது ஒயிலாக்கம் செய்வதற்கு) சி.மெளனகுரு அவர்களையே பிரதானமான வரைவாளராகவும் வழிகாட்டியாகவும் ஏகமனதாகத் தெரிவு செய்தது. கொழும்புமிலேனியம் புத்தக விற்பனை நிலையத்தில் வைத்து இதனை நேராகவே அவரிடம் கூறியபோது அதனை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
முஸ்லிம் அரங்கக்கலை பற்றிய தேடலையும் ஈடுபாட்டையும் வளர்ப்பது தற்காலச் சூழலில் முக்கிய பணியாகக் கருதவேண்டும்.நீண்டகாலமாக பாரம்பரிய மற்றும் நவீன கலை இலக்கிய ஊடகங்களை இலங்கை முஸ்லிம்கள் புறக்கணித்துப் பழகியுள்ளனர். அது தவறான தென்ற கருத்தைச் சமூகத்திற்கும் சொல்ல வேண்டியுள்ளது. சிங்கள, தமிழ்நாடக மரபுகள் பற்றி கூறப்படுவதுபோல் முஸ்லிம் நாடக மரபு பற்றிக் கூற முடியாத நிலை தொடர வேண்டியதில்லை. சினிமாவும், ஒவியமும் கார்ட்டூனும், தொலைக்காட்சி விவரணங்களும் முஸ்லிம் உலகை ஆக்கிரமித்து வரும் நூதன கலை ஊடகங்களாகியுள்ளன. அல் - ஜெஸிரா தொலைக்காட்சிநிறுவனம் ஒவ்வொரு முஸ்லிமும் உச்சரிக்கும் பொதுச் சொல்லாக இன்று ஆகியுள்ளது. ஈரானின் சினிமாவைப் பற்றிப் பேசாது இன்றைய உலகக் கலைச் சினிமா பற்றிய உரையாடல் நிறை பெறாது என்ற நிலை இன்று தோன்றியுள்ளது.
முஸ்லிம்கள் நாடகம் பற்றிக் கொண்டுள்ள கட்டுப்பெட்டித்தனமான கருத்துக்கள் உடைத்தெறியப்பட வேண்டும். நாடகமும் இலக்கியமுமில்லாது நவீன கலை ஊடகங்களையும் நவீன பாணிக் கலைகளையும் பற்றி நாம் அதிகம் பேசமுடியாது. இலங்கையில் முஸ்லிம் நாடக மரபின் தேக்கத்திற்கு அல்லது அப்படியொரு கருத்து வளர்ச்சி பெறாததற்கும் சில காரணங்கள் உள்ளன. ஒன்று தமிழ்நாடக மரபுகளுடன் அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லிம்கள் கொண்டுள்ள தொடர்பு. நடிப்பு, தயாரிப்பு, நெறியாள்கை போன்ற பல துறைகளில் முஸ்லிம் நாடகக் கலைஞர்களின் பங்களிப்புக்கள் தமிழ்நாடக வளர்ச்சிக்கே போஷணை

Page 94
174 மெளனம்
ஆகியது. முஸ்லிம்களுக்கான நாடக மரபு அதன் பண்டைய மரபுகளின் தொடர்ச்சியாகவோ நவீன போக்குகளின் பாதிப்பிலிருந்தோ வளராத அல்லது வளர முடியாத ஒரு சூழ்நிலையே தொடர்ந்தது.
முஸ்லிம்கள் தனியாகத் தமது நாடகங்கள் என்ற பின்னணியில் இயங்க முடியாததற்கு சமூக - சமய கருத்து மேலாண்மையும் ஒரு பிரதான காரணியாகியது. நாடகம் பற்றித் தவறான கருத்துக்களும் மயக்கமான ஆதாரமற்ற எதிர்ப்புணர்வுகளும் இங்கிருந்து தான் எழுந்தன. 19ம் நூற்றாண்டு இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் முஸ்லிம் நாடகப் பாரம்பரியம் பற்றிக் கூற அநேக தகவல்களும் சாட்சியங்களும் இருந்த போதும், 20ம் நூற்றாண்டின் முன்னரைப் பாதிக்கு முன்னரே அத்தொடர்புகளும், சான்றுகளும் புதிய மாற்றங்களில் அமிழ்ந்து போயின.
கதையம்சம், பெண்பாத்திரங்கள் பற்றி முஸ்லிம் நாடகக்காரர் அதிகம் கவலைப்பட வேண்டியிருந்தது. ஆபாசம், குடும்ப மற்றும் சமூக உள் விவகாரங்களை மேடைகளில் பெண்பாத்திரங்கள் சகிதமாகச் சொல்வதற்கு சமூகத்திலிருந்து எழும் கடும் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க முடியாத நிலை இருந்தது. இத்தடைகள் காணப்பட்ட போதும் நாடக ஆர்வமும் ஈடுபாடும் அவ்வப்போது முஸ்லிம் நாடகங்களை சில சமயங்களில் பெண் பாத்திரங்களுடனும் மேடையேற்றும் வழமை இருந்தது. எடுத்துக் கொண்ட விடயத்தில் நியாயமும் உண்மையும் இருக்குமானால் பெண்பாத்திரங்களுடனும் நாடகங்களை அனுமதிக்கும் பக்குவம் இருந்ததை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது முஸ்லிம்கள் தமது கலாசாரப் பெறுமானங்கள் சமய நடை முறைகளுக்கு சவாலாக இல்லாத நாடகத் தயாரிப்புக்களை அங்கீகரிக்க முன்வந்தாக இதனைக் கூறலாம்.
இந்தப்பின்னணியில் கடந்த மூன்று தசாப்தங்களாக முஸ்லிம்நாடகங்கள் என்று கூறக் கூடிய நாடகங்களின் அரங்களிப்பு மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றி இக்கட்டுரை பரிசீலிக்க முயல்கிறது.
I
முஸ்லிம் நாடகம் என்ற கருத்தாக்கத்தை வரையறை செய்வதில் பிரச்சினைகள் இருந்தாலும் முஸ்லிம் வானொலி நாடகங்கள், பாடசாலை மற்றும் ஊர் மட்ட வைபவங்கள் விழாக்களில் மேடையேற்றப்படும் முஸ்லிம் நாடகங்கள் முஸ்லிம்களின் வரவேற்பைப் பெற்று வருவதை நாம் அவதானிக்க முடிகிறது. இந்த முயற்சிகளும் ஆர்வமும் உதிரியானவையாக இருந்தாலும் நாடகத்தின் மீதுள்ள அவர்களின் ஆர்வத்தையும் தொடர்பையும் இவை வெளிப்படுத்துவனவாகக் கருதலாம்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 175
அப்பாஸ் நாடகம், அலிபாதுஷா நாடகம் ஜின்ராஜன் சரித்திரம், கடிகார நாடகம், நொண்டி நாடகம் வகை என பாரம்பரிய முஸ்லிம் நாடக மரபொன்று இலங்கையில் காணப்பட்ட போதும் சமூக மாற்றங்களினாலும் நவீன பொழுது போக்குகளின் வருகையினாலும் அவை அழிந்து போயின. கவிதை மற்றும் புனை கதை இலக்கியத் துறைகளில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக நடத்தி வந்த சாதனைகள் பிரதானமாக ஏனைய இரு பிரதான துறைகளில் நிகழவில்லை. அது ஒவியமும், நாடகமும் இத்துறைகளில் இரசனையும் ஆர்வமும் காணப்பட்ட போதும் தடைப்பட்ட நிலையில் அல்லது செயற்பாடு குன்றிய நிலையில் மறைவாகவோ சிதறிய நிலையாலோ இவை ஆங்காங்கே நிகழ்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது. எனினம் நாடகத்துறையில் அண்மைக்காலமாக ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதைக் காணமுடிகிறது.
கலையும், இஸ்லாமும், அழகும் இஸ்லாமும் பற்றிப் பேசப்பட்டு வந்த பழைமைவாதக் கருத்துக்கள் இன்று மறைந்து வருகின்றன. புகைப்படம் எடுக்கலாமா உருவப்படம் வரையலாமா என்ற கேள்விகளுக்கு சமய சட்டப் புத்தகங்களை மார்க்க மேதைகளும் மற்றவர்களும் ஆராய்ந்துமுடிவுகள் வழங்கு முன்னரே புகைப்படங்கள் ஒவியங்களுக்கு அப்பால் இணையத்தளமும் செயற்கைக் கோள்களினூடாக இராணுவ இரகசியங்களைப்படமாக்கி எதிரியை அவனது மறைவிடத்தில் வைத்தே தாக்கும் தொழில் நுட்ப ஜாலங்களைப் பார்த்தபின்னர் அதிகம் பேர் இந்த விடயங்களைப் பேசுவதை இப்போது கைவிட்டுவிட்டனர். புத்திபூர்வமாகவும் நடைமுறைரீதியிலும் சிந்திப்போர் இத்துறைகள் அனைத்திலும் தீவிரமாகப்பிரவேசிப்பது கடமை என்று வாதிடத் தொடங்கியுள்ளனர்.
ஜாஹிலியாக்குடும்பம்
அண்மைக்காலமாக இஸ்லாமிய இயக்கங்கள் சில, நாடகத்தில் ஈடுபாடு காட்டுவதைக் காணமுடிகிறது. ஈரான்நாட்டின் திரைப்படப்பிரவேசத்தின் பின்னர், புகைப்படக் கண்காட்சிகள், கார்ட்டூன் சித்திரங்கள் மூலம் பலஸ்தீனப் போராட்டங்கள் உலகத்திற்கு எடுத்துக்காட்டும் முயற்சிகள் வளர்ச்சி கண்டதன் பின்னர் முஸ்லிம் உலகின் கவனம் கலை ஊடகங்களின் தேவையையும் சக்தியையும் உணர ஆரம்பித்ததன் பிரதிவிளைவுகள் என இதனைக் கருத முடியும்.
1998ம் ஆண்டு புத்தளம்நகரில் தேசிய அளவில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் இளைஞர் மாநாட்டின் இரவு நிகழ்ச்சிகளில் ஒன்றாக குகை வாசிகள்' என்ற நாடகம் இடம் பெற்றது. இதன் கதை அல்-குர்ஆனின் சூரத்துல் கஃப் அத்தியாயத்தின் வரலாற்றுச் செய்திகளையும் இது தொடர்பான ஹதீஸ்களின் ஆதாரங்களையும் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.

Page 95
76 மெளனம்
1995 அளவில் மாவனல்லையில் இதே இயக்கத்தினரின் இளைஞர் பிரிவினர் நடத்திய பரிசளிப்பு வைபவத்தில் ஜாஹிலியாக் குடும்பம்' (பெயர் சரியா என்பது தெரியவில்லை.) என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. பிரதி தயாரிப்பு, நெறியாள்கை, நடிப்பு என்ற எல்லாத் துறைகளிலும் மத்ரஸா மாணவர்கள் இதில் பிரதான பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இஸ்லாமிய ஒழுக்கவாழ்வின் உயர்வைக் கூறுவதே இந்நாடகத்தின் நோக்கமாகும். பிரசாரத்தொனி மட்டுப்படுத்தப்பட்டதாக, இருகுடும்பங்களை எதிர் எதிராகக் காட்டி அவற்றின் நாளாந்த செயற்பாடுகளிலிருந்து ஒழுக்கவாழ்வின் உயர்வு எடுத்துக் காட்டப்படுகிறது. ஒரு குடும்பம் மேற்கத்தைய போலி நவநாகரிகத்திற்கு அடியைான முஸ்லிம் குடும்பம். மற்றக் குடும்பம் எளிமையான இஸ்லாமிய வாழ்வை மேற்கொள்ளும் அமைதியான குடும்பம். இவ்விரு குடும்பங்களிலும் எழும் பிரச்சினைகளையும் பாதிப்புக்களையும் மாறி மாறிக் காட்சிப்படுத்தி இஸ்லாமிய வாழ்வுநெறியின் ஸ்திரமான எளிமையான நிலை வெளிப்படுத்தப்படுகிறது. இயல்பான குடும்பக் காட்சிகள் சிறிய எளிய உரையாடல்கள் பொருத்தமான உடையலங்காரம் என்பன இந்த நாடகத்திற்கு வலிமைதரும் அம்சங்களாக விளங்கின.
1950களில் மடவலைப் பாடசாலையில் 'அனாதை நிஸாம், நிரபராதி ஸாஜான்' என்ற இருநாடகங்கள் மேடையெற்றப்பட்டுள்ளன. "ஏழையின் கண்ணீர் என்ற நாடகமும் மடவலையில் ஒரு பொது விழாவில் ஊர் நாடக ஆர்வலர்களால் மேடையேற்றப்பட்டதாக அறியமுடிகிறது.
பாலைவனத்தில் ஓர் நாள்
புத்தளம் மாவட்ட கல்பிட்டி அல்அக்ஸா (தற்போது தேசிய பாடசாலை) கல்லூரி. இப்பிராந்தியக் கலைவளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. 1950 அளவில் புலவர் செய்கு அலாவுத்தினால் (1896 - 1938) எழுதப்பட்ட அமணன் என்ற நாடகத்தை இப்பாடசாலை மாணவர்கள் அரங்கேற்றியதாக அறிய முடிகிறது. முகத்துவாரம் கிராமத்திலும் கல்பிட்டி நகரிலும் 1930 களிலிருந்து கூத்து மற்றும் டீட்டர் பாணி நாடகங்கள் அவ்வப்போது மேடையேற்றப்பட்டன. இவற்றில் முஸ்லிம்களும் பங்கேற்றனர்.
1960களின் பிற்பகுதியில் மருத முனையைச் சேர்ந்த சக்காய் மெளலானா அல்-அக்ஸாவில் ஆசிரியராகப் பணிபுரிந்த போதுநாடகம், பேச்சுக்கலை போன்ற துறைகளில் பாடசாலை மாணவ மாணவியரிடையே ஒரு புத்தூக்கத்தை ஏற்படுத்தினார். 'பராசக்தி சோக்கரட்டீஸ் போன்ற கலைஞர் கருணாநிதியினால் வசனம் எழுதப்பட்ட நாடகங்களையும் ஒரங்க நாடகங்கள் பலவற்றையும் அவர் தாமே நடித்துக் காட்டியதோடு மாணவர்களையும் பங்கேற்கச் செய்தார். கிரேக்க நாகரிகத்திற்குரிய உடைகளோடும் உருவ வடிவமைப்புக்களோடும் சோக்ரட்டீஸ்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 77
நாடகம் பாடசாலை கலைவிழாக்களின் போது மேடையேற்றப்பட்டது கலைஞரும் ஒவியருமான காலம் சென்ற எம்.எச்.எம். ராஸிக் (ஆசிரியர்) மாணவராக இருந்த போது சோக்ரட்டீஸ் பாத்திரத்தை சிறப்பாகப் பிரதிபலித்தார்.
இக்காலப்பகுதியில் மாணவர்களைக் கொண்டு அவர் மேடையேற்றிய முக்கிய நாடகம் 'பாலைவனத்தில் ஓர் நாள் இஸ்லாமிய வரலாற்று நாடகமான இதில் சுபைர்தீன், எம்.எச்.எம். ராஸிக், காசிம், அஸிஸ் போன்ற முதுநிலை மாணவர்கள் பிரதான பாத்திரமேற்றனர். உருவவழிபாட்டிலிருந்து உமர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் சம்பவங்களை அந்நாடகம் பொருளாகக் கொண்டிருந்தது. மக்கா நகரின் பாலைவனக் காட்சிகளையும் ஒட்டகம், நீர்ச்சுனை முதலியவற்றையும் பிரதிபலிக்கும் பெரிய ஓவியக் காட்சிகளும் அரேபியருக்குரிய உடைகள், அசரீரி ஒலியமைப்புக்களும் கொண்டதாகஒரு கலை விழாவின் போது பொதுமக்கள் முன்னிலையில் இது மேடையேற்றப்பட்டது.
அப்பாஸ் நாடகம்
மிக அண்மைக்காலமாக பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் சபை அதன் இஸ்லாமிய தினங்களின் போது நாடகங்களையும் மேடையேற்றி வருகிறது. இது ஒரு முன்மாதிரியான நடவடிக்கை எனக் கருதப்பட வேண்டும். பெரும்பாலும் 1996க்கு பின்னர் ஏற்பட்ட இந்த மஜ்லிஸின் நாடக ஈடுபாட்டில் பல்கலைக்கழக கன்னங்கர அரங்கில் தமிழ்தின விழாவில் முதற்பரிசு பெற்ற அப்பாஸ் நாடகத்தின் முக்கிய பகுதிகள் ஆடிக்காண்பிக்கப்பட்டன.
கூத்து முறைகளுடன் பாடல், கவிதை நடை கொண்டதாக அமைந்த அந்த அப்பாஸ் நாடகம் பாரம்பரிய முஸ்லிம் நாடகங்களில் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.
கல்பொறி கொண்ட கவி
முஸ்லிம் மஜ்லிஸ் அதன் 2000ம் ஆண்டு இஸ்லாமிய தினத்தில் கல்பிட்டி எஸ்.ஐ.எம்.எ.ஜப்பாரின் 'கல்பொறிகொண்ட கவி' என்ற நாடகத்தை சிறப்பு நிகழ்ச்சியாக மேடையேற்றியது. புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த அந்தகப் புலவரான வரகவி செய்கு அலாவுத்தீனின் வாழ்க்கை வரலாற்றில் முக்கியமான பகுதிகளைக் கொண்டதாக ஜப்பாரினால் இந்நாடகம் எழுதி நெறிப்படுத்தப்பட்டிருந்தது. 19ம் நூற்றாண்டு முஸ்லிம்களின் வாழ்க்கைப் பின்னணியும் இலக்கியமரபுகளும் புலவரின் சொந்த வாழ்வோடு ஒன்றிணைக்கப்பட்ட விதத்தில் மறைந்து போன முஸ்லிம் கலாசார அடையாளத்தை அது மக்கள் அரங்கிற்குக் கொண்டு வந்தது என்பது அந்நாடகத்தின் தனிச்சிறப்பாகும்.

Page 96
178 மெளனம்
'வரகவி செய்கு அலாவுத்தீன்' என்ற இக்கட்டுரையாசிரியரால் எழுதப்பட்ட நூல் 1994 இல் புலவரின் பிறந்த ஊரான காரைத்தீவில் முஸ்லிம் கலாசார அமைச்சினால் வெளியிடப்பட்டபோது அன்றைய விழாவில் கல்பொறி கொண்ட கவி'அரங்களிப்புச் செய்யப்பட்டது.
இது ஆரம்பத்தில் வானொலிக்காக எழுதப்பட்டு பின்னர் மேடைக்காக மாற்றம் செய்யப்பட்டது. காரைதீவு பொது மேடையிலும் வானொலி முஸ்லிம் நிகழ்ச்சி நாடகத்திலும் இலங்கையின் புகழ் பெற்ற முஸ்லிம் நாடகக் கலைஞர்களான எஸ்.ஐ.எம்.எ.ஜப்பார், கே.ஏ.ஜவாஹர், ஒ.நாகூர், அஸ்வத் கான், மஹ்திஹஸன் இப்றாஹீம் போன்றோர் பங்கேற்றனர். பின்னர் கல்பொறிகொண்ட கவிநாடக நூலாகவும் வெளியிடப்பட்டது.
இதுவரை இவர்கள்
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் வருடந்தோறும் நடத்தும் தமிழ் நாடக விழாவில் பொதுவாக முஸ்லிம்களின் நாடகங்கள் மேடையேறுவதில்லை. நாடகங்களில் முஸ்லிம் மாணவர் நடிகர்களாகப் பங்கேற்பதுண்டு. மிகவும் அரிதாக 1996ல் தமிழ்ச்சங்க நாடகவிழாவில் முஸ்லிம் பட்டதாரி மாணவர்களின் இதுவரை இவர்கள்'நாடகம் மேடையேறிது. அக்காலப்பகுதியில் தமிழ்ச்சங்க நாடக விழா நாடகங்களில் பெரும்பாலானவை நாட்டின் இனப்பிரச்சினையையும் யுத்தகுழலையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூறும் அரசியல்நாடகங்களாகவே இருந்தன. மாணவர்கள் தத்தமக்கு இயல்பான அல்லது உடன்பாடான அரசியல், சமூகவியல் விளங்கங்களை இந்நாடகங்களினுடாக வெளியிட்டனர்.
இதுவரை இவர்கள்' நாடகத்திலும் முஸ்லிம் மாணவ மாணவியர் இனப்பிரச்சினையின் மற்றொருபகுதியான வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் அகதிகளின் துயரத்தையும் உடனடிச் சம்பவங்களையும் காட்சி வடிவங்களாக்கி இப்பிரச்சினையை பேச முற்பட்டனர். வட பகுதியின் ஒரு முஸ்லிம் கிராமத்தையும் ஒரு தமிழ்க் கிராமத்தையும் காட்டி இதனுடாகவே நாடகக் கதை வளர்த்தெடுக்கப்பட்டது. துயர சம்பவங்களும் துயரங்களும் உரையாடல்களால் மட்டுமன்றி ஒளிமாற்றம், இசை, பாடல் ஆகியவற்றினாலும் பொருத்தமாக உணர்த்தப்பட்டன.
எதிர்பாராத வெளியேற்றத்தால் நிகழ்ந்த துயரங்களையும் மனக்கசப்புக்களையும் வெளியிடுவது நாடகத்தின் ஒரு முக்கியமான நோக்கமாக இருந்த போதும் சாதாரண தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் இருந்த அந்நியோன்னிய உறவுகளுக்கு நாடகம் அழுத்தம் தந்தது. பல நூறு வருடங்களாக நீடித்திருந்த நல்லுறவுக்கு நாடகம் தமிழ் முஸ்லிம் குடும்பங்களிற்கிடையில் இருந்த உறவுகளை பாத்திரங்களினூடாகவ்ே

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலா 179
காட்சிப்படுத்தியது. ஆனால், வெளியேற்றப்பட்ட அந்தத் தினத்திலும் அதன் பின்னர் புதிய வாழிடங்களைத் தேடி அகதிகளாக அலைந்து திரிவதில் முஸ்லிம் குடும்பங்கள் அனுபவித்த சோகங்களை முதன் முதலில் காட்சிப் படிமமாக மேடையில் தந்தது இந்நாடகமே. நாடகத்தை எழுதியவர் இத்துறைக்குப் புதியவராக இருந்தபோதும் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினையின் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை நாடகக் காட்சிகள், உரையாடல்கள், பாடல்கள், ஊடாக அலச முற்பட்டது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். நடுவர்கள் உட்பட பலரது பாராட்டையும் பெற்ற இதுவரை இவர்கள் பல சிறப்புப் பரிசில்களையும் பெற்றுக் கொண்டது.
புனித பூமியிலே நாடகம் 2002ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் இஸ்லாமிய தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒ.பி.இ.பெரேரா அரங்கில் மேடை ஏற்றப்பட்டது. பட்டதாரி மாணவ மாணவியர் மட்டுமன்றி அன்று அங்கு சமூகத்திருந்த விரிவுரையாளர்கள் பொதுமக்கள் அனைவரதும் முழுமையான பாராட்டுதலை அன்று அந்நாடகம் பெற்றது. தமிழ்த் தின விழாவில் முதல் இடத்தைப் பெற்றதாகக் கூறப்படும் இந்நாடகம், பின்னர் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டின் சிறப்புநிகழ்ச்சியாகவும் மேடையேறியது. உள்ளுர் பொதுமக்கள் மட்டுமன்றி தமிழ்நாடு, மலேஷியா, சிங்கப்பூரை சேர்ந்த இலக்கியப் பிரமுகர்களும் இந்நாடகத்தைப் பாராட்டினர். நாற்பது நிமிடங்கள் கூட நீடிக்காத அந்நாடகத்தை பயங்கர நிசப்தத்துடனும் கண்ணிர் பெருகிய கண்களுடனும் பார்த்து வழங்கிய பாராட்டு புதிய போக்கிலான முஸ்லிம் நாடகங்களின் வரவுக்கான கட்டியங் கூறல் போல் இருந்தது.
புனித பூமியிலே நாடகம் கிழக்கு மாகாணத்தின் வாழைச்சேனை அந்நூர் பாடசாலையின் படைப்பு. சாதாரண பாடசாலை மாணவ மாணவியரின் சாதாரணமான முயற்சியாக புனித பூமியிலே உருவானபோதும் முஸ்லிம் நாடகத்தின் கருவையும், வடிவத்தையும் செப்பனிடுவதிலும் தற்காலப் பாணிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்லக்கூடிய புதிய உத்திகளுக்கான துணிகரமான பிரவேசத்தையும் சாதாரணமாக, ஆர்ப்பாட்டமின்றி ஆனால் நூரு முஸ்லிம் நாடகத்தின் புதிய தொடக்கத்தை அது அமைதியாக வெளிப்படுத்தியது. ஒரு சிறிய கதைப்பின்னலிலிருந்து அந்நாடகம் உருவாக்கப்பட்டிருந்தாலும் உலக முஸ்லிம் போராட்டத்தின் ஒரு ன்மயப் பிரச்சினையில் அது வேர் கொண்டிருந்தது. அமெரிக்க எதிர்ப்புணர்வு கண்டிக்கத்தக்க இஸ்ரேலியரின் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தின் அத்துமீறிய மனித அழிப்பு நடவடிக்கைகள் மிக இயல்பாகச் சொல்லப்படுகிறது. உணர்ச்சியலையை ஏற்படுத்தும் வகையில் குறுகிய நேரத்திற்குள் சந்தர்ப்ப சூழ் நிலைகள் உரிய வகையில் நாடகத்தில் கட்டியெழுப்பப்படுகின்றன. இந்நாடகத்தின் வெற்றிக்கும் மக்களின் ஆர்வத்திற்கும் இது ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது.

Page 97
18O மெளனம்
அத்துடன் மரபுநாடகச் சட்டகத்திற்கு மாற்றமாகவும், பிரச்சினையை அது பிறந்த களத்திலேயே சொல்ல முற்பட்டதனாலும் ராணுவ அணியுடன் கூடிய கூட்டக் காட்சியுடன் நாடகம் அதிரடியாக ஆரம்பமாவதனையும் முஸ்லிம் பார்வையாளரில் இந்நாடகம் பாரியதாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கருதலாம்.
எழுத்தாளர் வை. அகமத் எழுதிய "புனித பூமியில்" சிறுகதைதான். இந்நாடகத்தின் அடிப்படைக் கதையாகும். உலக முஸ்லிம்களின் போராட்டத்தின் பிரச்சினை மையமான பலஸ்தீனத்தின் அல்-அக்ஸா புனித பூமியில் உள்ள அகதி முகாமொன்றில் நடந்த குறிப்பிட்ட ஒரு சம்பவத்தைச் சுற்றி இக்கதை படர்கிறது. அகதி முகாம்களைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு இஸ்ரேலிய இராணுவத்தினர் முகாமைச் சுற்றிலும் காவல் புரிகின்றார்கள். முகாம் இளைஞர். களுக்கும் இராணுவத்தினருக்குமிடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. அதில் ஒரு சம்பவமே இக்கதை. ஒரு முஸ்லிம் இளைஞன் ஒரு இஸ்ரேலியப் படைவீரைைனக் குண்டெறிந்து கொல்வதிலிருந்து இக்கதை ஆரம்பமாகிறது.
நவீன அரங்கக்கலை உத்திகள், இசை, பாடல், கதைச் சம்பவங்களை நாடக மயப்படுத்தியமை சிறிய நேரடியான வார்த்தைப் பிரயோகங்கள் நடிக, நடிகையரின் கட்டுப்பாடான நடிப்பு, கூட்டக் காட்சிகளில் மேடையைப் பயன்படுத்த முற்பட்ட விதம். என்பன இந்நாடகத்தின் முன்னேற்றகரமான அம்சங்களாகும். ஒரு பாடசாலை நாடகம்என்ற மட்டத்திலிருந்து நோக்கும்போது இது வியப்புக்குரிய முன்னேற்றமாகும். முஸ்லிம் நாடகங்கள் இதுவரை இயங்கிய மரபுமுறைகளைக் கைவிட்டு நவீனஉத்திகளோடு உணர்ச்சித் தூண்டல்மிக்கவகையில் நாடகக் கதையைப் பயன்படுத்திய இரட்டை நெறியாளர்களான யூ.அகமத், யு.எம்.எம். இஸ்மாயில் ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
சிறுகதையில் தாயினால் பலிகொடுக்கப்படும் (பேதைச்) சிறுவன் நாடகத்தில் மேடையில் நிரந்தர ஆனால் மர்மக் குறியீடாக கையில் காற்றாடியுடன் நாடகம் முழுக்க நின்று இறுதியில் தாயின் க்ைகளாலேயே பலிக்கடாவாகும் காட்சிதரும் அதிர்ச்சி சிறுகதை தராதது. சிறுகதையை நாடக மயப்படுத்தியதில் இந்த உத்தியின் பங்கு பலமிக்கதாகக் கருதலாம்.
மனவளர்ச்சி குன்றிய ஆனால், ஒரு பிள்ளையாக 'உம்மாவென அழைத்த படி அந்த முகாமைச் சுற்றி வந்து கொண்டிருந்த தனது மகனை பலஸ்தீனத் தாய் இஸ்ரேலிய இராணுவக் குண்டர்களுக்குப் பலியாக்குகிறாள். இராணுவக் குண்டர்களின் கைகளிலிருந்து இராணுவ குண்டர்களைத் தாக்கும் துணிவுள்ள மற்றொரு சிறுவனைக் காப்பாற்றுவதற்கு இப்பலியை அத்தாய் கருவியாய்ப் பயன்படுத்துகிறார். அவளுக்கு தேவையாக இருந்தது மகன் அல்ல. இஸ்ரேல் குண்டர்களை அழிக்கும் வீரன். ஒரு சந்தர்ப்பத்தில் பலஸ்தீனத் தாய் கூறுகிறாள்:
எனது மகன் ஒரு மூடன் அவன் தன் தந்தையை உயிரோடு எரித்த படுபாவிகளை, அழிப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை, அவன் சுரணையற்றவன். விடுதலைக்காகக் போராடும் வீரனே வேண்டும்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 181
இது கொடூரமான முரண்நிலையாகும். இது ஒரு புதிய கதையல்ல. யுத்தங்கள் மண்டிக்கிடக்கும் உலக வரலாற்றுப் புத்தகங்களில் இத்தகைய கதைகளுக்குப் பஞ்சமில்லை. வியட்நாம் யுத்தத்திலோ அல்லது அதுபோன்ற மற்றொரு யுத்தத்திலோ இராணுவக் குண்டர்களுக்குப் பயந்து பெரிய பாலத்துக் கடியில் இரவில் நூற்றுக்கணக்கில் ஒளிந்திருந்த போது மேலே பாலத்தில் காவல் புரியும் குண்டர்கள் அறிந்து கீழே வந்து விடுவார்கள் என்ற பயத்தில், நூற்றுக் கணக்கான மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் தூக்கம் கலைந்து தனது மடியில் அழ ஆரம்பித்த தனது குழந்தையின் வாயை அடைத்த தாய் குழந்தையின் இறுதிமூச்சு முடிந்த பின்னரும் கைகளை குழந்தையின் முகத்திலிருந்து எடுக்கவில்லை. யுத்தங்கள் தரும் மனிதத்தன்மைக்கு எதிரான LITLIËJab6h 360)6)I.
உண்மையில் தாய் தாயாக இல்லாமற் போவதுதான் இதில் உள்ள தாங்க முடியாத மனித வீழ்ச்சியாகும். யுத்தம் தாயை தாய் அற்றவளாக்குகிறது. இராணுவத்தினர் அவளது மகனை அடித்து நொறுக்கி இழுத்துச் செல்கின்றனர். 'உம்மா' என்ற சிறுவனின் அலறல் அரங்கு முழுக்க அதிர்கிறது. காலா காலமாக தாயின் அரவணைப்பைத் தேடும் எந்தக் குழந்தைக்கும் சொந்தமான அம்மா என்ற ஒசையை அந்த மூடச் சிறுவனும் எழுப்பினான். கண்முன் பலியாவதைப் பார்த்தும் தாய் சிலையாக நிற்கிறாள். தியாகம் உண்மைதான். ஆனால் தாய்மை அங்கு அழிந்து போகிறது. தமது சிறுகதையில் வை. அகமத் பின்வருமாறு கூறுகிறார்: "ஒரு தாய் செய்யக்கூடிய வேலை இல்லைதான் இது. அவள் வெளியை எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்'
ஆயினும் எந்தநிலையிலும் தாயின் அரவணைப்பும் பாதுகாப்பும் தனது பிள்ளைக்கு என்ற மாபெரும் வாக்குறுதி தகர்ந்து போகிறது.
"புனித பூமி"யில் கதை அதிகமானோரின் அனுதாபத்தை இலகுவில் பெற்றுவிடக் கூடியது. ஆனால் நாடகமாக அது வெற்றி பெற்றதில்தான் அதன் முக்கியத்துவம் இருக்கிறது. சில இராணுவ வீரர்களும் சில பெண் பாத்திரங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த விதமும் அவர்களின் இயக்கமும் நாடகத்திற்கு நவீன தன்மையையும் அழுத்தத்தையும் தருகிறது. யுத்தத்தில் பங்கு கொள்ளாத ஆனால் யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்படும் பெண்களின் அவலம் இந்நாடகத்தின் முக்கிய சக்தியாகும். தாய்' பாத்திரம் மட்டுமல்ல அங்கு கூடிச் செயல்படும் பெண்பாத்திரங்கள் அனைவருமே நாடகத்தின் உயிரோட்டமாக விளங்குகின்றனர். அத்தாய்மாரின் அமெரிக்காவுக்கு எதிரான சினமும், ஆக்ரோஷமும் இறுதியில் ஈடில்லாத இழப்புக்களால் அவர்கள் படும் துயரமும் நாடகத்தை நிமிர்த்தும் அம்சங்களாக உயர்ந்து நிற்கின்றன.
ஒரு முஸ்லிம் நாடகம் எடுக்க வேண்டிய வடிவம், பிரச்சிரனகள் பற்றிய விவாதத்திற்கும், வழிகாட்டுதலுக்கும் 'புனித பூமியில்'நாடகம் ஒரு உதாரணமாக விளங்குகிறது என்பதே முக்கியமாக கருத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.

Page 98
தமிழ் நவீன நாடகங்களில் மகாபாரத மறுவாசிப்பு
கி. பார்த்திபராஜா தமிழியல் ஆய்வாளர், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
இந்தியச் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியதாகவும் காலந்தோறும் புதிய புதிய விடயங்கள் வழங்கும் ஊற்றுக்கண்ணாகவும் விளங்குவது மகாபாரதம். இராமாயணம் என்ற,கற்றோர் புகழும் இதிகாசத்துடன் ஒப்பிடும்போது, சாதாரண அடித்தட்டு மக்களிடம் நெருங்கும் தன்மையினை அழுத்தமாக மகாபாரதம் பெற்றிருக்கின்றதுஎனலாம். தமிழகத்தின் கதை தழுவியநிகழ்த்துக் கலைகளை - குறிப்பாகக் கூத்து- ஒட்டு மொத்தமாய் நோக்கும் போது மேற்குறித்த கருத்து வலுப்பெறுகிறது. தமிழின் மரபார்ந்த கூத்து வடிவங்களில் மிகுதியானவை, மகாபாரதம் மற்றும் அதன் கிளைக் கதைகளே ஆகும். இவை மட்டுமன்றி தமிழ் நாடக உலகில் இருபெரும் போக்குகளைக் கிளர்த்திய தவத்திரு. சங்கரதாச சுவாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் மகாபாரதம் மற்றும் கிளைக் கதைகளை நாடகப் பாடங்களாக ஆக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் நவீன நாடகங்களைப் பொறுத்தவரையில் இதிகாச, புராண, மரபுத் தமிழிலக்கிய மறுவாசிப்பு என்பதற்கு வலுவான தொடர்ச்சி உண்டு எனலாம். உண்மையில் இந்த மறுவாசிப்பு என்பது தனித்த ஒன்றாக நிகழவில்லை; மாறாக தமிழக அரசியற் சூழலில் ஒரு பகுதியாகவே நிகழ்ந்தது. இன்றைய புராண, இதிகாச, மரபுத் தமிழிலக்கிய மறுவாசிப்பிற்கு வித்திட்டவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் ஆவார். அவருடைய எதிர்நிலை நோக்கும் பார்வையும் பல புனிதங்களைக் கேள்விக்கு உள்ளாக்கின. புராண, இதிகாசங்களின் மீதான பக்திப்படுகை மிகுந்த அதிர்ச்சியை அடைந்தன எனலாம். அவருடைய கேள்விகள் பலவற்றைத் தர்க்க நியாயங்களுடன் நாடகங்கள் முன்வைத்தன (எ.கா.கீமாயணம்).

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 183
1950-களில் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும் தமிழ் இன அடையாளம் குறித்த தேடல், பல தளங்களில் மிகுதியாயிற்று. 1960-களின் பிற்பகுதியில் இத்தேடலின் ஒரு பகுதியாகத் தொன்மங்களைக் கேள்விக் குள்ளாக்குதல் என்பது நிகழ்ந்தது. திராவிட இயக்கங்களின் வெளிப்படையான கருத்துநிலைகளின் (ideolisms) அடிப்படையில் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நவீன நாடக முன்னோடிகளில் ஒருவரான ந.முத்துசாமி தொடங்கிய கூத்துப்பட்டறை எனும் அரங்க இயக்கம் (Theatre Movement) தமிழகத்தின் வடமாவட்டங்களில் வழங்கும் தெருக் கூத்தினை புனருத்தாரணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது. எனவே, அந்த நெருக்கம் ந. முத்துசாமிக்கு மகாபாரத நிகழ்த்துக் கலையுடன் நெருக்கத்தை வழங்கிற்று. பின்னாட்களில் மகாபாரத மறுவாசிப்பையே முதன்மையாகக் கொண்ட ந. முத்துசாமியின் நாடகப் பிரதிகள் (Text) உருவாக இதுவும் ஒரு வகையில் காரணம் எனலாம். எனவே, ந.முத்துசாமியின் தொடக்கக்கால நாடகப் பிரதிகளில் இதற்கான அறிகுறிகள் இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடியும்.
1974-இல் வெளிவந்த நாற்காலிக்காரர்" நாடகம் இரு விளையாட்டுக் கோஷ்டிகளுக்கிடையேயான போட்டியுணர்வைச் சொன்ன போதிலும் அது பல்வேறு சமூக விமர்சனங்களை முன்வைப்பதாக உள்ளது. கோலிக்குண்டு, சீட்டுக்கட்டு எனும் இரு விளையாட்டுக்களில் எது சிறந்ததென தீர்ப்புரைக்க வரும் நாற்காலிக்காரர், சீட்டுக்கட்டு விளையாட்டு அந்நிய விளையாட்டு என்பதாலும் அது சூதாட்டத் தன்மையுடையது என்பதாலும் கோலிக்குண்டுக்கு ஆதரவாக வாக்களிக்கிறார். அவர் மீது கோபங் கொண்ட சீட்டுக் கட்டுக் கோஷ்டி பின்வருமாறு சொல்லி, நாற்காலிக்காரரைக் குத்துகிறது:
'சூதாட்டம் நம்ம மரபுன்னு குத்து 'பொண்டாட்டியே கூடப் பந்தயம் வைக்கலாம்னு குத்து நம்ம மரபுலே இல்லாததே இல்லேன்னு குத்த
என்று கோஷமிடுகின்றது. மனைவியைப் பந்தயம் வைக்கும் மகாபாரதத் தருமனின் செயல் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. மேற்குறித்த வாக்கியங்களின் எள்ளல் தொனிதான் நாடகத்தின் மிக முக்கியமான உயிர்ப்பு ஆகும்.
தமிழ் நவீன நாடகச் செயல்பாட்டாளர்கள் (Tamil Theatre Activists) சிலர் தேசிய நாடகப் பள்ளி (National School of Drama) யுடன் தொடர்பு கொண்டு உறவாடினார். பிற மொழி நாடகங்களில் மகாபாரத மறுவாசிப்பு குறித்த அவர்களுக்கு பரிச்சயம் அவர்களுக்கு ஏற்படலாயின. குறிப்பாக வங்கம், கேரளம் முதலிய நாடக அரங்குகள் புதிய வெளிச்சங்களைத் தமிழ் நாடகச் செயல்பாட்டாளர்களுக்கு வழங்கின. ஒரு சில மொழி பெயர்ப்புகளும் வெளிவந்தன.

Page 99
| 84 மெளனம்
I
1996-இல் வெளியிடப்பட்ட "மெளனக்குறம்"என்ற பேரா.சே.இராமானுஜத்தின் படைப்பு. "குறவஞ்சி" யைச் சமகாலப் பார்வையுடன் அணுகுகிறது. பெண்நிலை வாதம் என்பது கோட்பாடு ரீதியாக முன்வைக்கப்பட்டதிலிருந்தே இம்முயற்சிகள் முனைப்புப் பெற்றதையும் அதன் மூலம் சிறந்த மறுவாசிப்புகள் மேற்கொள்ளப்பட்டதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
"மெளனக் குறத்தின் குறத்தி, தனக்குக் கிடைத்த பரிசுப் பொருள்களைக் காட்டிப் பேசும் போது, சந்திரமதி அரிச்சந்திரனால் விலைகூறப்பட்டதையும் சூதாட்டப் பணயமாகப் பாஞ்சாலி பயன்படுத்தப்பட்டதையும், சந்தேகத்தின் பேரில் சீதை தியுள் பாய்ந்ததையும் சுட்டிக் காட்டுகிறாள்.
சிங்கி : அஞ்சு பேருக்கு பெண்சாதி ஆன பின்னும்
ஆட்டக் கதைபோல சிங்கா நெஞ்சிலே என்னையும் சூதாட்டக் காயாக நினைத்திடு வாயோடா சிங்கா?
சிங்கன் : கழலுக்கும் கவணுக்கும் பெண்ணையே போய் நானும்
காயாக்கிநிற்பேனோ சிங்கி? தன்னையே இழந்தாலும் உன்னை இழந்து நிற்கும் திறங்கெட்டுப் பேவேனோ சிங்கி?
மேற்குறித்த உரையாடல் பெண்நிலைவாத நோக்கில் எழுப்பப்பட்ட கேள்வியை உள்ளடக்கியதாக உள்ளது.
இளைய பத்மநாதனின் "மீண்டும் இராமாயணம் மீண்டும் பாரதம்" குறிப்பிடத்தக்க நாடகம் ஆகும். இராமாயணக் கதை நடத்த வந்த கூத்துக் குழுவினரிடம் பார்வையாளர்கள் "எவ்வளவு நாளைக்குத்தான் புராணக் கதைகளை ஆடுவீங்க? எங்க கதையை ஆடுங்க" என்று கூற நாடகத்திற்குள் நாடகமாக துகிலுரிதலும் கிருஷ்ணன் தூதும் நடக்கின்றன.
இராவணனாக நடித்தவர் துச்சாதன வேடத்தையும் சீதையாக நடித்தவர் திரெளபதி வேடத்தையும் ஏற்பது என்ற முடிவில் ஒரு சிறு குழப்பமேற்பட்டு,
இராவணன் துச்சாதனன் ஆகலாம் வேஷம் பொருந்தும் ஆனால் சீதை பாஞ்சாலியாக முடியாது
ஏன் முடியாது இரண்டும் தலைவிரிகோலம்தான் இரண்டுக்கும் ஒரே வேஷம்தான்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 185
- சீதையாக நான் நடிக்க வந்தேன்
துகில் உரியும் காட்சியில் என்னால் நடிக்க முடியாது
- கேட்டா துகில் உரிவது
போய்நில் அந்தப் பக்கம் இன்னும் எத்தனை பாஞ்சாலிகள் வேண்டும் கொண்டுவா பெண்களை
என்று உரையாடல் நீள்கிறது. இராவணனையும் துச்சாதனனையும் இணை நிலையாகக் கொள்ளும் வெகுசன மனோபாவம் சீதையையும் பாஞ்சாலியையும் அவ்வாறு கொள்ளாமல் எதிர்நிலை முரணாகக் கொள்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இளையபத்மநாதனின் இந்நாடகத்தில் துகிலுரியும் காட்சி, மனித உரிமைகள் பறிக்கப்படுவதைக் குறித்து நிற்கிறது. பெண்ணை மானபங்கம் செய்தல் என்ற இரண்டாம் நோக்கிலிருந்து இது புதிய, முற்றிலும் மாறுபட்ட நோக்கு என்பதைக் குறிப்பிட வேண்டும்.
குடி உரிமை ...,2_尔 @_的 வாக்கு உரிமை . உரி உரி மொழி உரிமை . உரி உரி மத உரிமை .... 20 Ls 20 s கல்வி உரிமை . உரி உரி தொழில் உரிமை . உரி உரி நில உரிமை .... 20 Ls 20ff மனித உரிமை . உரி உரி
என்பது பாஞ்சாலி துகிலுரியப்படும் போது துச்சாதனர்களால் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் ஆகும். மகாபாரதத்தின் பாஞ்சாலிசபதம், மகாகவி பாரதியால் சுதந்திரப் போராட்டக் குறியீடாய் பயன்படுத்தப்பட்டதைப் போல, குறிப்பிட்டதொரு தேசிய இனத்தின் வாழ்வுரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுதலைக் குறிக்க இப்பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
1990-களில் எழுதப்பட்ட கலாநிதி. சி. மெளனகுருவின் "வனவாசத்தின் பின்" என்ற நாடகப் பிரதி, துகிலுரியும் காட்சியினைப் புதுமாதிரியாகச் சித்திரிக்கிறது. அதாவது கண்ணன் அல்லது கிருஷ்ணன் என்ற இதிகாசப் பாத்திரம், மக்கள் திரளைக் குறிப்பதாக மறுவாசிப்புச் செய்யப்பட்டுள்ளது. தனிநபர்களால் வரலாறு மாற்றப்படுவதில்லை; மாறாக மக்கள் திரளின் ஒருங்கிணைந்த செய்கையே வரலாற்றைப் புரட்டிப் போடுகிறது என்ற சமூக சிந்தனை இன்வ1) oன

Page 100
86 மெளனம்
மறுவாசிப்புக்குப் பலம் சேர்த்து நிற்கிறது. வனவாசத்தின் பின், பாஞ்சாலி துகிலுரியப்படுதலை இப்படிச் சித்திரிக்கின்றது:
துச்சாதனன் ஒரு தரம் கண்ணா! கண்ணா! என்று அலறுபவர்களைப் பார்க்கிறான். மீண்டும் வேகமுடன் பாஞ்சாலியின் அருகிற் சென்று அவளைக் கீழே தள்ளி, மேலே தூக்கி நிறுத்தி துகிலினை வேகமாக வெறியுடன் உரிவதுபோலப் பாவனை தொடங்குகின்றான். மக்கள் மத்தியிலிருந்து நிறுத்து நிறுத்து! விடோம்! துகிலுரிய விடோம்" என்ற சத்தங்கள் எழுகின்றன. பார்வையாளர்கட்குள் இருந்து சேலைகள் மேடைக்குள் எறியப்படுகின்றன. எடுத்துரைஞர்கள் அவற்றை எடுத்து பாஞ்சாலிக்கு அபிநயிப்பவருக்கு அருகில் குவிக்கிறார்கள் துச்சாதனன் தீவிரமாகத் துகிலுரியும் தொழிலில் ஈடுபடுகிறான். அவன் தீவிரத்திற்கு ஏற்ப மக்கள் மத்தியிலிருந்து சேலைகளைப் பெற்றுக் குவிக்கும் செயலில் (பாவனையில்) எழுத்துரைஞர் ஈடுபடுகின்றனர்.
மேற்குறித்த பகுதி, "நெட்டை மரங்களென" நின்றிருந்ததாக பாரதி சித்திரித்த மக்கள் வெகுண்டெழுந்து பாஞ்சாலிக்கு உதவியதாகச் சித்திரிக்கிறது. இவ்வாறான சித்திரிப்பு மிக முக்கியமான -தெய்வீகத் தன்மைகள் கலைக்கப்பட்ட- சித்திரிப்பாக ஆகின்றது எனலாம்.
III
மகாபாரதப் பகுதிகளில் மிகவும் மறுவாசிப்புச் செய்யப்பட்டது. ஏகலைவன்கதை ஆகும். ஆளும் வர்க்கத்தின் பொறாமைத் தீயில் எழுந்த சூழ்ச்சியால் கட்டைவிரல் இழந்த ஏகலைவன் கதையானது பல்வேறு அரசியல், சமூகக் கருத்துநிலைகளுக்கேற்ப விளக்கப்பட்டு வந்திருக்கிறது. குருதட்சணையாகக் கட்டைவிரலைக் கேட்ட துரோணாச்சாரி, பார்ப்பனியத்தின் குறியீடாக்கப்பட்டார். ஏகலைவனுக்கும் அர்ச்சுனனுக்கு மிடையே விளைந்த மோதல் தொல்குடி x பேரரசு என்ற எதிர் முரண் என்பது போன்ற வாசிப்பும் மலை மக்கள் X சமவெளி மக்கள் என்ற முரண் என்பதான வாசிப்பும் அறியக் கிடைக்கின்றன.
1985- இல் கரிவள்ளூர் முரளி என்ற மலையாளக் கவிஞர் எழுதிய "ஏகலைவன் பெருவிரல்" என்ற இசைச் சிற்பப் பிரதியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. "கருமாடிச்சக்கன்" என்ற மலையாளப்பதம் "சூத்ரன்" "வேடக்குறமகன்" என்று மொழி பெயர்க்கப்பட்டதை அறியும் போது ஏகலைவன் கதையை வருண முரண்பாடாக (முன்வைக்கும் வாசிப்பு வெளிப்படுகின்றது.
பெருவிரல். சூத்ரண் வேடக்குறமகனின் பெருவிரல் . குருகேஷத்ரப் போர்க்களத்தில்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 187
வெற்றிகாணச் சதி புரிந்த யுவராஜ கிரீடங்கள் மணி தெறித்துச் சிதற இடிபோலக் கணை தொடுத்த பெருவிரல்
என அம்மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது.
பிரளயனின் "உபகதை" எனும் நாடகம் ஏகலைவன் கதையை முற்றிலும் மாறுபட்ட நிலையில் அணுகுகிறது. ஏகலைவனின் காதலியாக வன்யா, என்ற பாத்திரத்தைப் படைத்துள்ளார் பிரளயன், ஏகலைவனுக்கும் வன்யாவுக்குமிடையான உரையாடலில் சமவெளி மனிதர்கள் குறித்த விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.
சமவெளி மனிதர்கள் அபாயமானவர்கள் வரைமுறையின்றி மிருகங்களை வேட்டையாடுவார்கள். காடுகளை அழிப்பார்கள். இயற்கையின் மீது அவர்களுக்கு எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை.
மலைமக்களின் வேட்டைக்குச் சில வரைமுறைகள் உண்டு. இறைச்சிக்காக எல்லா மிருகங்களையும் நாம் வேட்டையாடுவதில்லை. இனப்பெருக்கம் அதிகம் செய்கிற மிருகங்களைத்தான் தேர்வு செய்து வேட்டையாடுகிறோம். அதிலும் சினையுற்றவை, இளங்கன்று இவற்றை நம் அம்புகள் தீண்டாது.அரிதாகிவிட்ட மிருகங்களை நாம் வேட்டைாடுவதில்லை. தாக்க வரும் போது தப்பிப்பதற்காகக் காயப்படுத்துவோம் அவ்வளவுதான். இந்தக் காடும், மிருகங்களும் பிற உயிரினங்களும் நாமும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கின்றோம். ஆனால் சமவெளி மனிதர்களுக்கு இப்படிப்பட்ட நியதிகள் எதுவும் இல்லை. கண்ணில் படுகிற எல்லா மிருகங்களையும் கொல்வார்கள். வேட்டை அவர்களது குரூரமான பொழுது போக்கு
என்று பேசுகிறான் பிரளயனின் ஏகலைவன்.
மலைமக்கள் X சமவெளிமக்கள், இயற்கை நேயர்கள் X இயற்கையை அழிப்பவர், வேட்டையை வயிற்றுப் பிழைப்பாய்க் கொண்டவர் x பொழுது போக்காய்க் கொண்டவர் என்ற எதிர் முரண்கள் இவ்வாசிப்பில் மேற்கிளம்புகின்றன. எனவேதான் அர்ச்சுனனையும் ஏகலைவனையும் நேரே மோதவிட்டு ஏகலைவனின் திறமையை வெளிப்படுத்துகிறார் நாடக ஆசிரியர். "யார் உனது குரு" என்ற துரோணரின் கேள்விக்கு "இந்த நிஷாதமும் இதிலுள்ள சகல ஜீவராசிகளும்" என்று பதிலளிக்கிறான் ஏகலைவன். தான் ஒருவனுக்காக நிஷாதமும் அதிலுள்ள மக்களும் பலியிடப்படக் கூடாது என்ற எண்ணத்திலேயே ஏகலைவன் கட்டைவிரலை இழக்க உடன்படுகிறான் என்கிறது இந்நாடகம், வேட்டையையே தொழிலாகக் கொண்ட ஏகலைவன் ஏன் துரோணரி ம் வில்வித்தை கற்க வேண்டும்?மீன்குஞ்சுக்குநீந்தக் கற்றுக் கொடுப்பது யார்? என்) தர்க்கம் ஆழமான அர்த்தங்களுடன் முன் வைக்கப்பட்டுள்ளது.

Page 101
188 மெளனம்
சி. என் ! நீ துரோணரிடம் வில்வித்தை பயில முயன்றாய். நீ தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்பதால்,அவர் உன்னை மாணவனாக ஏற்கவில்லை. பிறகு துரோணரை மானசீகக் குருவாக வரித்து நீயே வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். இதுதானே கதை.
ஏகலைவன் : என்ன சொன்னாய். நான் தாழ்ந்த குலத்தில் பிறந்தவனா. அப்படியென்றால். மனிதருக்குள் உயர்வு தாழ்வு பார்க்க எங்கள் நிஷாதம் எங்களுக்குக் கற்றுத் தரவில்லை. அதிருக்கட்டும். நான் ஏன் துரோணரிடம் சென்று வில்வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வில்லும் அம்பும் எங்கள் மூச்சு
வில்லும் அம்பும் எங்கள் வாழ்வு வில்லும் அம்பும் எமது கரங்களின் நீட்சி
அப்படியிருக்க, நான் ஏன் துரோணரிடத்தில் வில்வித்தை கற்க முயல வேண்டும். வேண்டுமானால் அந்த துரோணர் எமது மூதாதையர் எவரிடத்திலாவது வந்து வில்வித்தையைக் கற்றுச் சென்றிருக்கலாம். இன்னொன்றும் சொல்கிறேன் கேள். துரோணரது வித்தையின் சூட்சுமத்தை நான் முழுவதும் அறிவேன். துரோணரது அம்புகளில் உலோகங்கள் உண்டு. எங்கள் அம்புகளில் அவை இல்லை. குறி தவறாமல் அம்பு எய்வதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. எங்கள் அம்புகள் தாக்குண்டவைகளைக் களைப்புறச் செய்யும், காயப்படுத்தும், மூர்ச்சையுறச் செய்யும் ஒரு போதும் அவை கொல்லாது. ஆனால் துரோணரது அம்புகளோ, குறி தவறாவிடில் தாக்குண்டவைகளைக் கொன்றுவிடும். இப்படிப்பட்ட வில்வித்தை எங்களுக்குத் தேவையுமில்லை. இதை யாரிடத்திலும் நாங்கள் கற்றுக் கொள்ளவும் மாட்டோம்.
மேற்குறித்த தர்க்கம் தமிழ் நாடகத்தின் மகாபாரத மறுவாசிப்பில் மிக முக்கியமான புள்ளி ஆகும்.
இளைய பத்மநாதனின் ஏகலைவன் 1970 களிலேயே அரங்கேற்றப்பட்ட நாடகம் ஆகும். இந்நாடகத்தின் தொல்குடி அரசர்கள் என்ற எதிர்முரண் முன்வைக்கப்படுகிறது. வேட்டையிற் சிறந்த ஏகலைவன் கானகத்தில் வேட்டை மிருகங்கள் ஏதுமற்றதனால் வெறுங்கையோடு திரும்புகிறான். மிருகங்கள் இல்லாமைக்குக் காரணம் வேட்டையைப் பொழுதுபோக்காய்க் கொள்ளும் ஆள்வோரே என அறிந்து, அந்த கொலைத் தொழில் பயில துரோணரை , அணுகுகிறான். அவர் ஒப்புக் கொள்ளாததால் துரோணர் பதுமை முன் பயிற்சியில்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 89
வித்தை கற்கிறான். இறுதியில் துரோணருக்குக் காணிக்கையாகக் கட்டைவிரல் தருகிறான்.
பொதுவான மகாபாரதக் கதைப் போக்கினை இந்நாடகம் கொண்டிருந்த போதும் ஆங்காங்கே சில முக்கியமான விமர்சனங்களையும் புதிய பார்வைகளையும் முன்வைக்கிறது. நாட்டை ஆளும் வீரர்களைப் போலக் காட்டு வீரர்களும் ஆக வேண்டும் என வித்தை கற்கப் புறப்படும் ஏகலைவனைத் தடுக்கின்றார் ஏகலைவனின் தந்தை. தந்தை பாத்திரம் இந்நாடகப் பிரதியில் குறிப்பிடத்தக்க இடம் பெறுகிறது. நாடகம் ஏகலைவனின் தந்தையின் நீண்ட ஒப்பாரியுடன் நிறைவுறுகிறது.
அரசர் சதியீதடா எண் மகனே ஏகலைவா - உந்தன் விரலை வெட்டிக் கொண்டாரடா
எண் மகனே ஏகலைவா
என அரசர் சதியாக நிகழ்வைச் சித்திரிப்பதைக் காணலாம். துரோணர், பீஷ்மரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு குருதட்சணையாக ஏகலைவன் விரல் கேட்கத் துணிந்தார் என்கிறார் இளைய பத்மநாதன். பார்ப்பன சூழ்ச்சி என்ற வாசிப்பிலிருந்து விடுவிக்க இப்பார்வை துணையாய் அமைகிறது என்ற போதிலும் அத்தகு நோக்கம் இப்பிரதிக்கு இருப்பதாய் பிரதியில் பதிவேதும் இல்லை.
IV
பெண்நிலைவாதம் (Feminism) தமிழகச் சூழலில் சிரத்தையாய் முன்னெடுக்கப்பட்ட போது அது பல பிரச்சினைப்பாடுகளைக் கிளப்பியது. கடந்த காலத்தின் அத்தனை அம்சங்களையும் பெண்நிலைவாதம் கேள்விகளால் துளைத்தது. பெண் விடுதலைச் சிந்தனையை வளர்த்தெடுத்த பாரதியைக் கூட "பெட்டைப்புலம்பல்" பத்தினிப்பெண்" என்ற பதங்களுக்காகக் கூண்டிலேற்றியது. "மகாபாரதத்தில் பெண்ணியம்" என்ற மொழிபெயர்ப்பு நூல் தமிழ்ப் பெண்நிலைவாத அரங்கில் (Feminist Theatre) புதிய சிந்தனைகள் வெடிக்கக் காரணமாக அமைந்தது.
மகாபாரதத்தில் இடம் பெறும் அம்பை கதை பெண் நிலைவாதிகளை மிகவும் ஈர்த்தது எனலாம். விரும்பிய மன்னனை மணம் முடிக்க முடியாமல் அலைக்கழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சபதமும் அதைத் தொடர்ந்த போராட்டமும் இவர்களைக் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை.
எம்.எஸ். காந்திமேரியின் "மேடை பேசுது” புராண இதிகாசப் பெண் பாத்திரங்கள் பேசாமல் விட்ட குரல்களைப் பதிவு செய்கிறது. இதில் அம்பையின் கதை ஒரு பகுதியாக இடம்பெறுகிறது. பீஷ்மரால் தன் தம்பி விரித்ர

Page 102
190 மெளனம்
வீரியனுக்காக சிறையெடுத்து வரப்பட்ட அம்பை, தான் சால்வனைக் காதலித்ததை பீஷ்மரிடம் தெரிவிக்கின்றாள். பீஷ்மரும் அம்பையை சால்வனிடம் அனுப்புகிறார். ஆனால் சால்வனோ அம்பையை ஏற்க மறுக்கிறான். "பெண்ணாகிய உனக்கு இந்த உலக நியாயம் புரியாது”என்கின்றான் சால்வன். மீண்டும் அம்பை பீஷ்மரை அடைந்து தன்னை ஏற்க வேண்டுகின்றாள். பீஷ்மர் அவளை உதாசீனம் (olớuiu,
ஒய்ந்து விட்டேன் என்று கருதாதே. உன் தோள் வலியைக் காட்டிச் சால்வனைத் தோற்கடித்தாய். என்னை அங்கும் இங்கும் உருட்டி விளையாடினாய். என் முகம் அழித்தாய். என் சுயம் தொலைத்தாய். பெண்தானே என்று ல்ேசாய் நினைத்து விட்டாய். ஆயுதங்களோடே பழகிய உன்னை நானும் ஆயுதங்களோடு எதிர் கொள்வேன். சிகண்டியாகி உன் முன் நிற்பேன். மீண்டும் பிறந்தும் அடங்காத கோபம். சிகண்டியின் வலிமையாய் உன்னைத் தீண்டும். நெஞ்சில் அடங்காது அணை மீறும் வேகம், வருகின்ற போரில் தேர்க்காலை உருட்டும். என் கண்ணின் கனலோ கணையாகப் பாயும். அன்று காண்பாய் இந்த அம்பை சிறுவதை சிகண்டிக்குள் இருந்து அம்பை சீறுவதை!
என அனல் தெறிக்கப் பேசுகிறாள் அம்பை, அம்பையின் தார்மீகக் கோபத்தை நியாயப்படுத்திப் பேசுகிறது காந்திமேரியின் நாடகப் பிரதி.
அ. மங்கையின் "பனித்தி” அம்பையின் உள்மனக் குரலைப் பதிவு செய்கிறது. பெண்ணைத் தொடா விரதம் பூண்ட பீஷ்மன், தன்னை ஏன் சிறையெடுக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறாள் அ. மங்கையின் அம்பை. பெண்ணாய்ப் பிறந்த சிகண்டி ஆணாய் மாறியது கடுமையான பயிற்சிகளாலேயே என்று பதிவு செய்கிறது "பனித்தி" அதிலும் கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு களத்தில் பீஷ்மனை எதிர்கொண்ட சிகண்டி, தன் அம்பினாலேயே பீஷ்மன் வீழ்ந்தான் என்கிறாள். பீஷ்மனோ அர்ச்சுனனால் தான் வீழ்த்தப்பட்டதாகப் பெருமையுறுகிறான். அம்பெய்து சபதம் முடித்தும் தன்னால் வீழ்த்தப்பட்டதை ஒப்புக் கொள்ளாத ஆண் திமிர்ப் பிண்டமான பீஷ்மனைச் சாடுகிறாள் அம்பை.
சின்னப் புத்தி உனக்கு, சிகண்டி நாண் அறிவாய் என்னைத் தாண்டி ஓர் அம்பு உன்னைத் தைத்ததென்றால் எண்பின் நின்றவன் மேல் உண் அம்பு பாயவில்லை என்னைத் தொட வேண்டாம். அம்பை ஏன் தடுக்கவில்லை?
என்று கேள்வி எழுப்புகிறாள் அம்பை. திரெளபதியின் சபதம் முடிக்க உடன்பிறப்பு உடன் நின்றதையும் கணவன்மார்கள் துணை நின்றதையும் சுட்டிக்காட்டும் அம்பை, தான் தனித்துநின்று சபதம் முடித்ததற்காய் பெருமைப்படுகிறாள்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் ()
வேறென்ன செய்ய? திரெளபதி சபதம் முடிக்க வீமன் இருந்தான். வில்விசயன் இருந்தான். திட்டத்துய்மன் சபதம் செய்தான். உடன்பிறப்பின் மானம் காக்க இறுதிவரை உடன் நின்றான். ஆனால் நான்- பெண்ணாகிய எனக்கு மணாளன் இல்லை. மைந்தனும் இல்லை. பெண் என்றாள் பின் நிற்பாள், ஏவி விடுவாள் என நினைப்போர் முன்னே எதிர்நின்றேன், போரிட்டேன்; சபதம் முடித்தேன்.
என்ற அம்பையின் குரலில் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் வலுவும் துணிவும் தென்படுவதை அவதானிக்கலாம். ஆண்தலைப்பட்ட சமூகத்தின் குறியீடாகிய பீஷ்மனை எதிர்த்த அம்பை என்ற பெண்ணின் கதை மகாபாரதக் கதைப் போக்கை அதிகம் மாற்ற வேண்டிய அவசியமே இன்றி, சிறப்புற்றிருப்பதை இப்பெண் நாடகாசிரியர்களின் எழுத்துக்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன எனலாம்.
V
மகாபாரதக் கிளைக் கதைகளில் ஒன்றான நளாயினிக் கதை தமிழ்நவீன நாடகத்தில் மிக நுட்பமாகக் கையாளப்பட்டிருக்கிறது. எம்.எஸ். காந்திமேரியின் நளாயினி என்ற ஒருத்தி.தி." என்ற நாடகப் பிரதி நளாயினி கதையினை விரிவாகப் பேசுகின்றது. மெளத்கல்யரிஷியின் துன்புறுத்தல்களில் மனம் கோணாது சேவை செய்யும் நளாயினி, ரிஷியைத் தாசி வீட்டுக்கும் கூடத்துக்கிச் செல்கிறாள். என்னை விடப் புகழ் பெற்ற உன்னைச் சோதிக்கவே இதைச் செய்தேன் என ரிஷி கூறும் பொழுது நளாயினி வெடிக்கிறாள்.
தங்களின் சரிபாதியான நான் புகழ்பெறக் கூடாதா? யாரும் என்னைப் பாராட்டக் கூடாதா? ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்கிறார்களே. ரிஷியான தாங்கள் கூட பெண்ணைச் சமமாக நடத்தமாட்டீர்களா?
என்று கேள்விகளை அடுக்குகிறாள். சூரியன் உதித்தால்தான் மாண்டுபோவோம் என்ற நிலையில் மெளத்கல்யரிஷி நளாயினியினது கற்புத்திறத்தால் சூரியனை உதிக்க விடாமற் செய்ய வேண்ட,
மெளத்கல்யரிஷியே, வெட்கமாக இல்லை. பெண்ணிடம்காப்பாற்றச் சொல்லிக் கெஞ்சுகிறாய். எப்போதும் பெண்ணை இழிவாகவே பேசுவாயே! அந்தப் பெண்ணால் காப்பாற்றப்பட்டால் அது இழுக்கில்லை.?
என்று குமுறுகிறாள். ஒருவரின் சுயநலத்திற்காக உலகம் இருளில் மூழ்கக் கூடாது என்று சூரியனை விரைந்து வருமாறு அழைக்கின்றாள். சூரியன் மேலே வர வர ரிஷியின் ஒலம் எழுந்து அடங்குகிறது.
என் கடன் பணி செய்து கிடப்பதே என கணவன்மாரது வேலை ||பா', மனைவி இருந்தால் அவளுக்கு "கற்புக்கரசி" என்ற பட்டம் கிடைக்கிறது. பந்தர், கணவனுக்காக ஒடி ஒடிப் பணிவிடை செய்தாளோ, எந்தக் கனவர்ை.1:11, 11

Page 103
92 மெளனம்
வீட்டுக்குக் கூடை சுமந்தாளோ அந்தக் கணவனின் ஆண்திமிரை அழித் தொழிப்பில் அடக்குகிறாள் நளாயினி. இவ்வாறான பெண்நிலைவாத நோக்குகள் மகாபாரத மறுவாசிப்பில் புதிய கதவுகளைத் திறந்து விட்டுள்ளன என்பது உண்மையே ஆகும்.
VI
பவளக் கொடி கதை மகாபாரதக் கிளைகளில் ஒன்று ஆகும். கே.ஏ.குணசேகரனின் பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு பவளக்கொடி நாடகம் நிகழ்த்த வரும் நடிகைகளின் குடும்பப் பிரச்சினையைப் பேசுவதேயானாலும் மேடை நாடகத்தில் கோமாளி வாயிலாகவும் அல்லி ராணியின் சேடிகளின் வாயிலாகவும் அர்ச்சுனன், கிருஷ்ணன் குறித்த விமரிசனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப் பிரதியில் நாடகத்தின் இறுதிக்காட்சியில் அர்ச்சுனனின் நான்கு மனைவியரே இடம்பெற, கே.ஏ. குணசேகரனோ அர்ச்சுனனின் ஆறு மனைவிகளும் ஒன்று சேர்ந்து சண்டையிடுவதாகவும் பெண்கள் ஒன்றாய்ச் சேர்ந்து அர்ச்சுனனையும் கிருஷ்ணனையும் உதைத்து விரட்டுவதாகவும் நாடகத்தை அமைக்கிறார். இவ்வாறான சேர்க்கைகள் கருத்துக்களுக்குப் புதிய வலிவையும் பொலிவையும் ஊட்டுகின்றன எனலாம்.
"அல்லியிடம் நயமாகப் பேசிப்பார் இயலாவிடில் தற்செயலாக அங்கு வருவதைப் போல் வந்து உன்னைக் காப்பாற்றுகின்றேன்" என அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் யோசனை கூறுவதைக் கேட்கும் கோமாளி, "பொம்பளைங்கள ஏமாத்துறதில ரெண்டு பேரும் பலே கில்லாடிங்க. திருட்டுப் பசங்க. அன்னையில இருந்து இன்னைக்கி வரையிலும் இவனுகதான் நாடு பூராம் பெருகிப் போயிருக்கானுக” எனத் துணிச்சலாய் கிண்டல் செய்கிறாள். அதைப்போலவே அல்லிராணியிடம் சமாதானம் பேசும் அர்ச்சுனனை விளாசித் தள்ளுகிறாள் அல்லியின் மந்திரி ஒருத்தி.
அர்ச்சுனன் : மாதரசே நீ இவ்வித கடின கோபஞ் செய்யலாமா..? பாதகனாய் இருந்தாலும் அவன் வீடுதேடி வந்துவிட்டானானால் அவனுக்கு உபச்சாரம் செய்ய வேண்டுமென்று பெரியோர்கள் சொல்லு வார்களே.!
மந்திரி : ஏய்யா! அர்ச்சுனரே! பெரிய மனிதர்கள் சொன்ன மொழிகளை யெல்லாம் அவுத்து விடுறியே! நீ எந்தப் பெரிய மனுசன் பேச்சுக் கேட்டு ஊருல திரியுறே. சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது போல பொம்பளையைக் கண்ட இடம் படுக்கைன்னு அலையுறே. உங்களுக்கு எங்க அம்மா கருணை செய்யனுமா?

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 93
அம்மா கையில பெரிய கத்தி இருக்குதே பாத்தியா, கருணைக் கிழங்கச் சீவுற மாதிரி சதக் சதக் அவ்வளவுதான். ஒன்னைய மாதிரித் திரியுற ஆம்பிளைங்களைப் புடிச்சு அறுத்தாத்தான் பெண்களுக்கு மரியாதை ஏற்படும்.
கோபியர் கொஞ்சும் ரமணனான கிருஷ்ணனையும் அவனுடைய பிரிய தோழனையும் கூறு போடுகிறது இந்த விமர்சனம், பரமாத்வாகப் பார்க்கப்படும் கிருஷ்ணனை விமர்சிப்பது தமிழ்ச் சமூகத்தை அதிர்ச்சியடைய வைக்கும்தான். அதிர்ச்சியடைய வைக்காமல் கதை சொல்ல நான் ஒன்றும் வியாசனல்ல என்ற பிரளயனின் நாடகக் கூற்று இதற்கான பதிலாகவும் இருக்கக் கூடும்.
ந.முத்துசாமியின் படுகளம்" மகாபாரதத் தெருக்கூத்தை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட நாடகம் ஆகும். நிஜத்திற்கும் புனைவிற்குமான இடைவெளி அழியும் தருணங்களை இந்நாடகம் பதிவு செய்கிறது. குருஷேத்ரம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. துரியன் வீம்பு பேசிக் கொண்டேதான் இருக்கிறான். பீமன் அவன் தொடை பிளக்கக் துரத்திக் கொண்டேதான் இருக்கிறான் என இந்நாடகப் பிரதி சுட்டிக் காட்டுகின்றது. 'துரத கடோத்கஜம்" "காண்டவ வனதகனம்" இரண்டும் ந. முத்துசாமியின் மகாபாரதத்துடன் தொடர்புடைய பிற நாடகங்களாகும்.
VI
தமிழ் நவீன நாடகத்தில் தொன்மங்கள் பல கேள்விக்குள்ளாகியிருக்கின்றன; மறுவாசிப்புச் செய்யப்படுகின்றன. மரபு மறுவாசிப்பில் ஒரு பகுதியாய் மகாபாரதம் மற்றும் மகாபாரதக் கிளைக்கதைகள் முன்வைத்துப் பேசப்படுகின்றன. வெகு மக்களிடையே மகாபாரதம் பெற்றிருக்கும் அழுத்தமான தாக்கம், இத்தேர்வுக்கு முதன்மையான காரணியாகின்றது. தமிழ் நவீன நாடகங்கள் மகாபாரத மறுவாசிப்பில் குறிப்பிடத்தக்க உடைப்புகளைச் செய்திருக்கின்றன. அவற்றுள்ளும் பெண் நிலைவாத நோக்கு முனைப்பாய் முதன்மை பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.
அதில்தான் (மகாபாரதத்தில் தான்) எத்தனை மனிதர்கள், எத்தனை குணாதிசயங்கள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது போல அது அமைந்திருப்பதுதான் அதன் மகா குணாதிசயம். இன்றைய நடப்புகள் அன்றும் நடந்தன போல இருப்பது தான் மகாபாரதம் எனக்குள் ஏற்படுத்தும் வியப்பு. மகாபாரதம் வியாசரின் கதை அன்று. அது ஒரு சமூகம் உருவாக்கிய கதை. சமூகக் கதை ஒன்றுக்கு வியாசரின் வியாக்கியானமே வியாசர் மகாபாரதம். மகாபாரதத்தை நாம் நமக்கு ஏற்ப வியாக்கியானிக்கலாம். பயனும் பெறலாம்,
என்பார் கலாநிதி சி. மெளனகுரு ("வனவாசத்தின் பின்" முன்னுரை). தமிழ் நவீன நாடகம் அதைச் செய்கிறது. இன்னும் செய்ய வேண்டும்.

Page 104
வாய் மொழியும் எழுத்து மொழியும்: மட்டக்களப்பில் கவிதை மரபு பற்றிய சில குறிப்புகள்
- பேராசிரியை மெள. சித்திரலேகா -
நீண்ட காலப் பாரம்பரியமுள்ள மொழிகளின் கவிதை வரலாற்றை இலக்கிய ஆய்வாளர், வாய்மொழிமரபு, எழுத்து மரபு என இரண்டாகப் பகுத்து நோக்குவர். கவிதை உருவாகும் முறைமையையும் அது வழங்கும் / பயிலும் முறைமையையும் அடிப்படையாகக் கொண்டே இப்பாகுபாடு செய்யப்படுகிறது. வாய்மொழியாக உருவாகி வாய்மொழியாகவே வழங்கி வருபவை வாய்மொழிப் பாடல்/கவிதை எனவும் எழுத்து மூலம் உருவாகி எழுத்தில் பயின்று வருபவை எழுத்திலக்கியம் எனவும் கூறப்படும்.
வாய்மொழி உருவாக்க முறைமை ஒருவகை. எழுத்து மூலம் கவிதை உருவாகும் முறைமை இன்னொரு வகை. இத்தகைய உருவாக்க முறைமை வேறுபாடுகளால் இவற்றின் மொழியாடல் பண்புகளும் வெவ்வேறாக அமைகின்றன என வாய்மொழி எழுத்து மொழி வித்தியாசத்தை வற்புறுத்துவோர் குறிப்பிடுவர். (குறிப்பாக ஐரோப்பிய இலக்கிய வரலாற்றில் அனுதாபம் X ஆண்டுகள் வரை செந்நெறி இலக்கியங்கள், காவியங்கள் ஆகியவற்றின் வரலாறானது எழுதப்பட்ட இலக்கியங்களை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டது. கிரேக்க ஆதி காவியங்களான இலியாட், ஒடிசி என்பவற்றைக் கூட எழுத்து வடிவில் உருவான காவியங்களாகவே கருதிய போக்கும் காணப்பட்டது. மில்மன்பரி (Milman Pary) அல்பேட் லோட் (Albert Lord) ஆகியோர் யூகோசிலாவிய வாய்மொழிக் காவியங்கள் பற்றி நடத்திய ஆய்வு 1960 களில் வெளியானதன் பின்னரே ஐரோப்பிய காவிய மரபில் வாய்மொழி இலக்கியத்தின் பங்களிப்பும் உள்ளது என உணரப்பட்டது. எனினும் இத்தகைய ஆய்வுகள் வாய்மொழியாகத் தோன்றும் இலக்கியங்களுக்கும் எழுத்து ரீதியாகத் தோன்றும் இலக்கியங்களுக்கும் இடையே பாரிய வேறுபாடு உள்ளன என்ற கருத்தையே முன்வைத்தன. அதாவது அவற்றின் மொழியாடல் பண்புகள் வேறுபட்டதாகவும் முரண்பட்டதாகவும்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் ().5
காணப்படும் எனக் கூறின. மில்மன்ரியின் ஆய்வை அடிப்படையாகக் கொண்டே அல்பேட்லோட் சில குறிப்பிட்ட மொழியாடல் பண்புகளை வாய்மொழிக்குரியதென வகுத்தார். இத்தகைய பண்புகளையுடைய இலக்கியம் வாய்மொழியாக உருவாகியிருக்கும் என ஊகிக்கலாம் என்ற கருத்தையும் முன்வைத்தார்.
வாய்மொழிமரபின் மொழியாடல் ஆள்நிலைப்பட்ட குறிப்பான உணர்ச்சித் தன்மையான, நெகிழ்ச்சியான, சுழல்போக்கான, உயர்நவிச்சியான போக்குகளைக் கொண்டிருக்கும். எழுத்து மூலமான மொழியாடலோ ஆள்நிலைப்படாத, கருத்துருவம் சார்ந்த, அறிவுரீதியான, கட்டிறுக்கமான, நேர்ப்போக்கான, குன்றக் கூறும் தன்மை வாய்ந்ததாக இருக்கும். இவ்வாறாக வாய்மொழி, எழுத்து மொழிப் பண்புகள் வேறுபடுத்தப்பட்டன. வாய்மொழியாகவா? எழுத்து மொழியாகவா தொடர்பாடல் நடைபெறுகின்றது என்பதைப் பொறுத்து சிந்திக்கும் முறைமையும் சிந்தனைப் போக்கும் வித்தியாசமானதாக அமையும். இதுவே இவ்விரு மரபுகளின் வேறுபட்ட பண்புகளுக்கு காரணமாகும்.
எனினும் மேலே நான் குறிப்பிட்ட ஆய்வுகளும் அவற்றினடியாகத் தோன்றிய கருத்தாக்கங்களும் தென்னாசிய, தென்கிழக்காசிய இலக்கிய மரபுகளுக்கு முற்றும் பொருந்துவதாக இல்லை. ஏனெனில் இங்கு இலக்கியங்கள் அளிக்கை நிலையில் வழங்குகின்றன. குறிப்பாக இராமாயணம், பாரதம் போன்ற காவியங்கள் எழுத்து மூலமாக அன்றி அளிக்கை நிலையிலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளன. கதைப் பாடல்களாக, கூத்துக் களாக, ஒதப்படுபவைகளாக வழங்குவதே எழுத்து மொழியாக வழங்கும் முறையிலும் அதிகமானதாகும். இதனால் வாய்மொழிக்கும் அளிக்கைக்கும், எழுத்துக்கும் இடையே இடையறா பரஸ்பர ஊடாட்டம் ஒன்று நிலவுகின்றது. இதன் காரணமாக எழுத்து மரபின் பண்புகளும் வாய்மொழி மரபின் பண்புகளும் கலந்ததும் இரண்டிற்கும் இடைப்பட்டதுமான ஒரு மொழியாடல் முறையுள்ள இலக்கியங்கள் தோன்றுகின்றன.
மீப காலமாக வாய்மொழி, எழுத்து மரபுகள் பற்றிய ஆய்வுகளில் இவ்விரண்டின் வேறுபட்ட தன்மைகளை அழுத்துவதை விட அவற்றுக் கிடையிலான தொடர்புகளையும் கலப்புகளையும் அழுத்துவதே முக்கியம் பெறுவதைக் காணலாம். வால்டர் ஒங் (Walter Ong) என்பவர் எழுதப்பட்ட இலக்கியங்களில் காணப்படும் வாய்மொழிக்குரிய மொழியாடல் பண்புகளை வாய்மொழியிலிருந்து எழுத்து மொழிக்கு முழுமையாக மாற முதல் உள்ள ஒரு படிநிலையாகக் காண்கின்றார். இது உண்மையில் வாய்மொழிக்குப் பழக்கப்பட்ட மனம் எழுத்து மரபின் சகல பண்புகளையும் முழுமையாக உள்வாங்க முன்னர் உள்ள நிலைமையாகும். தொடர்பாடல் பாணிகள், சிந்தனை ஓட்டங்கள் ஆகியவற்றை எழுத்துமுறை படிப்படியாகத் தனக்கேற்றவாறு ஆக்கிக் கொள்ளும், ஆனால் மாற்றம் முழுமையாக ஏற்படும் முன்னர் காணப்ப{}i மாறுநிலையைப் புறக்கணித்தல் முடியாது.

Page 105
96 மெளனம்
பலம் வாய்ந்த வாய்மொழிக்கவிதைப் பாரம்பரியமொன்றைச் சமீபகாலம் வரை கொண்டிருந்த மட்டக்களப்புப் பிரதேசத்தில் இன்று எழுத்து மரபு வேரூன்றி விட்டது. ஆனால் வாய்மொழி மரபின் எச்சங்களும் அவற்றின் செல்வாக்கும் தனிநபரினதும் சமூகத்தினதும் ஆழ்மன உணர்ச்சியிலும் படிந்து கிடக்கின்றன. குறிப்பாக அதிகம் கல்வியறிவு பெறாத கிராமத்துப் புலவர்கள் இத்தகைய பாடல்களை இயற்றுகின்றனர். இவை முற்றிலும் எழுத்து மரபில் வளர்ந்த இளைய தலைமுறையினரின் கவிதையாக்கத்திலிருந்து வேறுபட்டவை. எழுத்தில் உருவாக்கம் பெற்று, சில சமயம் அச்சேறிநூல்களாக உலவினாலும் வாய்மொழி மரபில் காலூன்றிநிற்பவை. இவையே மட்டக்களப்புக் கவிதைப் பாரம்பரியத்தில் எண்ணிக்கையில் அதிகமானவையாகும். கோயில் வரலாறுகள், சமயப்பாடல்கள், பிரதேசத்தின் முக்கிய நிகழ்வுகளை ஒட்டிய நெடும் பாடல்கள், நாடகக் கூத்துப் பாடல்கள் ஆகியவை இவற்றுள் அடங்கும்.
இவை வாய்மொழி இலக்கியத்தின் பண்புகளையும் எழுத்துமொழி இலக்கியத்தின் பண்புகளையும் ஒரு சேரக் கொண்டிருக்கும். ஆபிரிக்க இலக்கிய ஆய்வாளர்கள், ஆபிரிக்கக் கவிதை மரபின் அடிப்படையில் இத்தகைய கவிதை ஆக்கத்தை Orature எனக் கூறுவர்.
மட்டக்களப்பில் இத்தகைய கவிதைப் பாரம்பரியம் ஒன்று இன்னும் வலுவுடையதாக இயங்கி வருகின்றது. ஒவ்வொரு கிராமத்திலும் இத்தகைய பாடல்களை இயற்றுவோர் உளளனர். இவர்கள் ஒரளவு கல்வி பெற்றவர்கள். எழுத்துப் பயிற்சி உள்ளவர்கள். ஆனால் பழைய செய்யுள் வடிவங்களின் இலக்கணத்தையோ யாப்பு முறைகளையோ கற்றவர்கள் அல்லர். பேச்சு மொழியின் ஒசை தழுவி பேச்சுமொழிச் சொற்களையும் சொற் றொடர்களையும் கொண்டவையாக இவர்களது பாடல்கள் அமையும். ஆனால் இவர்கள் பாடல்களை எழுதுவதன் மூலமே உருவாக்குவர்.
மட்டக்களப்புநகரை அண்டியுள்ள ஊறணிக் கிராமத்தில் வாழ்ந்த புலவர் நல்லதம்பி பூபாலப்பிள்ளை காவடிச்சிந்து , கும்மி போன்ற வடிவங்களில் பாடல்களை இயற்றியுள்ளார். அரசடி விநாகர் காவடிச்சிந்து, பெரிய ஊறணி முற்சந்தி விநாயகர் காவடிச் சிந்து கொக்கட்டிச்சோலை ஈஸ்வரர்காவடிச்சிந்து, கொத்துக் குளத்து மாரியம்மன் காவடிச்சிந்து, இருதயபுரம் மேற்கு பாலமுருகன் சிந்து, திராய் மடுவேலன் காவடிச்சிந்து, கல்லடி திருச்செந்தூர் முருகன் காவடிச்சிந்து முதலானவையும் வன்செயல், கும்மிப்பாடல், சின்ன ஊறனி மாவடிப்பிள்ளையார் பாடல் ஆகியவையும் இவர் இயற்றிய பாடல்களாகும்.
இவை தெய்வங்கள் பற்றிப் பாடப்பட்ட போதும் சமகாலச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட உணர்வோட்டங்களையும் உள்ளடக்கியுள்ளன. அரசடி விநாயகள் காவடிச்சிந்தில் பின்வரும் பகுதி கவனிக்கத்தக்கது:

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 197
ஊரெங்கும் உண்னைப் போல் தெய்வம் மக்கள் உலகத்தில் கண்டறியாது இருந்திட்டார்கள் காரெங்கும் கலவரங்கள் நடக்குதப்பா கண் திறந்த கவலை போக்க அருள்வதெப்போ பாரெங்கும் வெடிகுண்டும் செல்லும் வீச்சும் பட்டிவர்கள் உயிரிழச்த மாள்கிறார்கள் ஊர்மக்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்கு உணதருளைக் காட்டும் அரசடித் தேவே
எங்கெங்கு சென்றாலும் இன்னலே தான் எடுத்து அடி வைக்கவே மனக்கலக்கம் தங்கி எங்கும் பரந்து இருந்த மக்கள் தங்கித் தொழில் செய்யவே முடியாதப்பா மங்கியே பேர் பெற்ற தொழிலாலைகள் மண்ணோடு மண்ணாகிப் போச்சுதப்பா பொங்கியே தொழிலாலைகள் ஓங்கி வாழ புகழருழைக் காட்டும் அரசடித் தேவே.
கொக்கட்டிச்சோலை ஈஸ்வரர் காவடிச்சிந்திலிருந்து ஒரு பகுதி பின்வருமாறு:
இனத்தோடு சேர்ந்து வாழ்ந்த காலம் போச்சு இருப்பிடமாய் வாழ்ந்திருந்த இடமும் போச்சு சனத்தோடு சனஞ்சேரா நாளுமாச்சு தனம் தேடித் தொழில் புரிந்த பட்டி போச்சு தக்கவுணவளிக்கும் நெல் வயலும் போச்சு மனம் வருந்தி கரங் கூப்பி வேண்டுகிறேன் ஈஸ்வரனே உனையன்றி யாரும் காணேன் இந் நிலையைத் தீர்ப்பதற்கு ஓடிவாரும் பாசுபதம் அர்ச்சுனனுக்கு எழுந்தாற்போலே பரதேசி ஆனவர்க்கும் அருள் புரியும் சேரியிலே வைகைக்கரை அடைக்க பாட திகைத்த உனை வணங்க உதவினாற் போல புவி மீதில் மக்கள் படும் பாட்டைப் பாாத்து புவியாளும் ஈஸ்வரனே அருள் செய்வாயே.

Page 106
氯》氨 OS மெளனம்
பாடலின் மொழியாடலும் , ஒத்திசையும் பெரும்பாலும் வாய்மொழிப் பண்பையே கொண்டுள்ளன. ஆனால் புலவர் இதனை எழுத்து வடிவிலேயே ஆக்கியுள்ளார். எழுத்தில் எழுதப்பட்ட போதும் அதன் உள்ளியல்பு வாய் மொழியாகவே காணப்படுகிறது. இத்தகைய பாடல்கள் இயற்றும் முறை பரவலாக மட்டக்களப்பில் காணப்படுவதாகும். சிந்து, காவியம், ஆகியவை இறுதியில் ஒரிரு வழிப் பாடல்களையும் கொண்டிருக்கும். அவையும் மேலே காட்டியது போன்று சமூக நிலை பற்றிய உணர்வோட்டத்தைக் கூறுவதாகவும் மிகச் சாதாரண மொழியாடல் கொண்டதாகவும் இருக்கும்.
உலகத்தில் நடத்துகின்ற வன்செயல்தான் உடனடியாகய் மறைந்து ஓடிப்போக வாழி நரகத்தில் வாழுகின்ற மக்கள் யாவும் கவலையின்றி இருக்குமிடம் வாழ வாழி கல கல என வெடிக்கின்ற வெடியும் குண்டும் மள மள எனக் கடலில் வீழ்ந்து குளிர வாழி பள பள என உனது பாதம் புகழ்ந்து காட்டி தான் தோன்றீஸ்வரனும் வாழவாழியவே.
கொக்கட்டிச்சோலை ஈஸ்வரர் காவடிச் சிந்தின் இறுதியில் அமைந்த வழிப்பாடல் பகுதியே மேலே தரப்பட்டதாகும்.
மேலே காட்டியது போன்ற கவிதைகள் நீண்ட காலமாகவே மட்டக்களப்பில் ஆக்கப்பட்டு வருகின்றன. கோயில் சடங்குகளை ஒட்டியும் அவ்வப்போது இப்பாடல்கள் இயற்றப்படும்.
பேச்சியம்மன் சடங்கை ஒட்டி சிறி பேச்சியம்மன் மீது காவிய மாலை என்ற தலைப்பில் ஒரு நீண்ட பாடல் இயற்றப்பட்டது. இயற்றியவர் கோட்டைக் கல்லாற்றைச் சேர்ந்த முருகப்பன் கணபதிப்பிள்ளை. இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். எழுத்தறிவு உள்ளவர், கல்வி கற்றவர். எனினும் அவரது கவிதை வாய் மொழிப் பண்புகளை வெளிக்காட்டுகிறது.
மாதாவே இன்றிங்கு மக்கள் படுதன்பம் வாயாலே சொல்லவே முடியாத அம்மா ஏதேனும் உன் கருணை இல்லாது போனால் எமது குலம் இன்றே அழிந்த விடுமம்மா வாதாட யாருண்டு எம் தயரை இண்று வையகத்தோராலே மாற்ற முடியாத ஆதாரம் உண்னையன்றி யாருமில்லையம்மா அம்பிகையின் அருள் தந்து எங்கள் துயர் தீராய்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 199
தாயேயுன் பாதமலர் சரணம் புகுந்தோம் தாங்கொண்ணா வேதனைகள் தானகல வேணும் நீயே வந்தெங்கள் தயர் தீராத விட்டால் நிம்மதியே எங்களுக்கில்லையினியம்மா நாயினும் கேடாக வாழும் நிலை கண்டும் நற் கருணை தர மனது இல்லையோ அம்மா. சேய் வாடத் தாய் பார்த்திருந்த செயல் உண்டோ? தேவியரே ! உப்போடை வாழும் மாதாவே.
மேலே உதாரணங்களைக் காட்டியவற்றைப் போல பல நூறு பாடல்கள் காட்டலாம். இவை யாவும் மட்டக்களப்புக் கவிதைப் பாரம்பரியத்தின் பகுதிகள் என்பதை எவரும் மறுக்க முடியாது.
இத்தகைய கவிதைகளையும் மனங்கொண்டு அவற்றினுடைய பண்புகளைக் கற்பதன் மூலம்தான் மட்டக்களப்பின் கவிதைப் போக்குகளைச் சரியானபடி அடையாளம் காண முடியும்.
இக் கவிதைப் போக்குகளை வாய்மொழி, எழுத்து என இரு வேறு வேறான பகுதிகளாகப் பிரித்து நோக்குவதில் சிக்கல்கள் உள்ளன என்பதையே மேற் கூறியவை போன்ற பாடல்கள் காட்டுகின்றன.
எழுத்து மரபும், அதற்குரிய இயல்புகளும் வாய்மொழி இலக்கிய ஆக்கங்களைக் காலப் போக்கில் வெற்றி கொண்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை. இலக்கிய கர்த்தாக்களின் சிந்தனையோட்டமும், தொடர்பாடல் பாணிகளும் கூட அதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டு விடும். ஆனால் தற்போதுள்ள மாறுநிலைச் சூழலும் கவிதையில் அது வெளிப்படுத்தும் பண்புகளும் கணக்கிலெடுக்கப்பட வேண்டியவை. மட்டக்களப்புக் கவிதைப் பாரம்பரியம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் இத்தகைய அவதானங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Page 107
கவிதையும் அரசியலும் ஒரே புள்ளியில் தோன்றிய நான்கு கவிஞர்கள்: சில குறிப்புக்கள்
பேராசிரியர் எம். ஏ. நுஃமான் தலைவர், தமிழ்த்துறை, பேராதனைப்பல்கலைக்கழகம்.
1950களில் தான் இலங்கைத் தமிழ்க் கவிதை வெளிப்படையான அரசியல் சார்புடையதாக மாறியது. இரண்டு எதிரெதிரான அரசியல் போக்குகள் அல்லது கருத்துநிலைகள் இக்காலப் பகுதியில் கவிதையில் வெளிப்படத் தொடங்கின. ஒன்று மார்க்சிய சார்புடைய இடதுசாரி முற்போக்கு அரசியல், மற்றது தமிழ்த் தேசியவாத அரசியல். சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்ற சிங்களப் பெருந்தேசியவாத அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தமிழ் உணர்ச்சியும் மொழி உரிமைப் போராட்டமும் 1950களில் இலங்கைத் தமிழ்க் கவிதையில் தீவிரமாக்ப் பிரதிபலித்தன. அதே வேளை வர்க்க சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான இடதுசாரி அரசியல் குரலும் கவிதையில் வெளிப்பட்டது. 1958 இனக்கலவரத்தின் பின்னர் இலங்கைக் கவிதையில் தமிழ்த் தேசிய உணர்வு ஓரளவு பின்னணிக்குச் செல்ல 1960, 1970களில் இடதுசாரிக் கருத்துநிலை ஆதிக்கம் பெற்றது. 1970களில் ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றங்களினால் இடதுசாரி இயக்கம் படிப்படியாக ஒரு பின்னடைவு நிலைக்குள்ளாக, இனமுரண்பாடு உக்கிரமடைந்து தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்ட வடிவத்தைப் பெற்ற 1980களில் இலங்கைத் தமிழ்க் கவிதையில் மீண்டும் தமிழ் தேசியவாதக் கருத்துநிலை ஆதிக்கம் பெறத் தொடங்கிற்று.
இந்தப் பின்னணியில் கடந்த நாற்பது ஆண்டுகால ஈழத்துக் கவிதையின் அரசியல் உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்கும் நான்கு கவிஞர்களை நான் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன். சண்முகம் சிவலிங்கம், புதுவை

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் Z} ||
இரத்தினதுரை, சுபத்திரன், சாருமதி ஆகியோரே இவர்கள். கடந்த நான்கு தசாப்தங்களில் ஈழத்துக் கவிதை வர்க்க விடுதலை, இன விடுதலை என்ற அரசியல் கருத்து நிலைகளை எவ்வாறு எதிர்கொண்டது என்பதை இவர்களது கவிதைகள் நமக்கு ஓரளவு இனங்காட்டுகின்றன. இந்தக் கட்டுரை ஒரு விரிவான ஆய்வாக அன்றி அத்தகைய ஒரு ஆய்வுக்கான சில முன்குறிப்புகளாகவே அமைகின்றது.
எனது ஆய்வுக்குட்படும் நான்கு கவிஞர்களும் - சண்முகம் சிவலிங்கம், புதுவை இரத்தினதுரை, சுபத்திரன், சாருமதி - கிட்டத்தட்ட சமகாலத்தவர்கள். சாருமதிதான் சற்றுப் பின்பு 1970களில் எழுதத் தொடங்கினார் என்று நினைக்கிறேன். மற்ற மூவரும் 1960களில் கவிதை உலகில் காலடி எடுத்து வைத்தவர்கள். கருத்து நிலையைப் பொறுத்தவரை இந்நால்வருமே ஒரே புள்ளியில் இருந்து தொடங்கியவர்கள்தான். 1960,70களில் ஈழத்து இலக்கியத் துறையில் மேலோங்கியிருந்த தீவிர இடதுசாரிக் கருத்துநிலைதான் இந்தப்புள்ளி இவர்கள் எல்லாரும் சோசலிசப் புரட்சியிலும் ஆயுதப் போராட்டத்திலும் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள். அந்த வகையில் மாஒசேதுங் சிந்தனைகளால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தவர்கள். இலங்கைத் தொழிலாளிவர்க்கம் இனவேறுபாடு இன்றி வர்க்கரீதியில் ஒன்றிணைந்து சோசலிசப் புரட்சியை முன்னெடுக்கும் என்று உறுதியாக நம்பியவர்கள். புதுவை இரத்தினதுரை இந்த நம்பிக்கையை பின்வருமாறு ஒரு கவிதையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மாத்தறையில் பொடிமெனிக்கே தவக்கெடுப்பாள் மாதகலில் கந்தையா பொல்லெடுப்பான் நாத்தாண்டியாவினிலே காசிம் லெவ்வை நாருரிக்கும் கத்தியினைக் கரமெடுப்பான்
வாடாத கார்ள் மார்க்ஸியின் தத்துவங்கள் வழிகாட்டும் அந்த வழி நடந்த சென்று ஓடான பாட்டாளி வர்க்கமிங்கு உயர்ச்சி பெறும் கட்டாயம் இருந்த பாரும்
இந்த நம்பிக்கையை சண்முகம் சிவலிங்கம் தனது கவிதை ஒன்றில் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்.
சுமந்த மக்கள்வெந்தெழுவார் சமர் செய்வார்
வில் நிமிர்த்தும் தரியர் படை வென்றிடுவார், நல்ல பல விதி செய்வார்.

Page 108
202 மெளனம்
இந்த நம்பிக்கை தான் இந்த நால்வருக்கும் பொதுவான தொடக்கப்புள்ளி. இந்தத் தொடக்கப்புள்ளியில் இருந்து கடந்த மூன்று நான்கு தசாப்தங்களில் வெவ்வேறு பாதைகளில் இவர்களது பயணங்கள் எவ்வாறு நிகழ்ந்துள்ளன? தம் பயணத்தில் இவர்கள் சந்தித்த சவால்கள் எவை? அவற்றுக்கு இவர்கள் எவ்வாறு முகம் கொடுத்தனர்?அதனால் நமது கவிதை அடைந்த பயன்கள் எவை? என்பன பற்றிச் சிந்திப்பது இச்சந்தர்ப்பத்தில் பயனுடையது என நினைக்கிறேன்.
கவிஞன் காலத்தின் குரலாக இருக்கின்றான்.தன் காலத்தின் தேவைகளை இவன் எவ்வாறு இனங் கண்டு கொள்கிறான். அதற்கு எவ்வாறு குரல் கொடுக்கிறான் என்பன கவிஞன் பற்றிய மதிப்பீட்டில் முக்கியமானவை என்று நினைக்கிறேன். எனது ஆய்விற்கு உட்படும் இந்த நான்கு கவிஞர்களும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் ஒரே வகையான சமூக, அரசியல் சூழலில், ஒரே கருத்துநிலைப்புள்ளியில் இருந்து தம் கவிதைப் பயணத்தைத் தொடங்கியவர்கள். எனினும் இவர்களது தனிப்பட்ட ஆளுமையும், கவிதை இலக்கியம் பற்றிய இவர்களது கொள்கைகளும், நமது சமகால வரலாறும் இவர்களது வேறுபட்ட கவிதைப் போக்குகளைத் தீர்மானித்துள்ளன எனலாம்.
முதலில் சுபத்திரன், சாருமதி இருவரையும் ஒன்றாக நோக்கலாம். இவர்கள் இருவரும் தாங்கள் தொடங்கிய புள்ளியில் உறுதியாகக் காலூன்றிநின்றவர்கள். கட்சி சார்ந்த மார்க்சிய வாதிகளாக குறிப்பாக மாஓ வாதிகளாக செயற்பட்டவர்கள். சுபத்திரனுக்கு தொடக்க காலத்தில் தமிழரசுக்கட்சி தொடர்பு இருந்த போதிலும் அவர் ஒரு மார்க்ஸியவாதியாக மாறிய பின்னர் சீனச் சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர செயற்பாட்டாளராக விளங்கியவர். 1970களின் நடுப்பகுதியில் கட்சியில் அதிருப்தியுற்று வெளியேறிய போதிலும் வர்க்கப் போராட்டம் பற்றிய கோட்பாட்டில் இறுதிவரை உறுதியானவராகவே இருந்தார். சாதி அமைப்பில் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவராயினும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். உழைக்கும் அடிமட்ட மக்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தார். இது அவரது குடும்பத்துள் முரண்பாடு வளர்வதற்கும் இறுதியில் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கும் காரணமாய் அமைந்தது என்று அவரை நன்கு அறிந்த நண்பர்கள் கூறுகின்றனர். 1971ன் பின்னர் இலங்கையில் இடதுசாரி இயக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து தோலிவியுற்ற பின் உண்மையான இடதுசாரிகள் பலர் வேறு பற்றுக்கோடற்று விரக்தியுற்று வீழ்ச்சியடைந்தமை நமது சமகால வரலாறு.சுபத்திரனின் தற்கொலையைஇந்தப் பின்னணியிலும் விளங்கிக் கொள்ள முடியும் என்று தோன்றுகின்றது.
ஒரு மார்க்சியவாதி என்ற வகையில் சுபத்திரன் மக்கள் சக்தியில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 203
மக்கள் என்ற வைத்தியர்கள்தான் எனது ஊமைக் கவிதைகளைப் பேச்ச் செய்தனர்
என அவரது கவிதை ஒன்று தொடங்குகின்றது. "மானுடத்தின் சக்தியால் அண்டமே மாநிலத்தின் காலடி வீழ்த்துவோம்" என அவரது பிறிதொரு கவிதை வரிகள் கூறுகின்றன. சுபத்திரனைப் பொறுத்த வரை மக்கள் என்பவர் உழைக்கும் மக்கள்தான். வர்க்கப் போராட்டத்தின் மூலமே உழைக்கும் மக்கள் விடுதலை பெற முடியும் என்ற சித்தாந்தமே அவரது கவிதையின் அடிப்படை எனலாம்.
பாடையிலே ஏறகிற வரையும் அந்தப் பாட்டாளிப் புரட்சிக்கே பாட வந்தேன்.
என அவர் ஒரு கவிதையில் பாடுகிறார். சாதி ஒழிப்பு பாட்டாளிப்புரட்சியின் ஒரு அங்கமாகவே அவரால் பார்க்கப்படுகின்றது. அவரது இரத்தக் கடன் தொகுதி தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டக் கவிதைகளைக் கொண்ட முதல் தொகுப்பாகும், "சாதித் திமிருடன் வாழும் தமிழன் ஓர் பாதித் தமிழனடா" எனத் தொடங்கும் புகழ் பெற்ற பாடல் இத்தொகுப்பில்தான் இடம்பெற்றுள்ளது. சங்கானையில் தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சியைப் பாடும் அவரது சங்கானைக்கென் வணக்கம் அக்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.
சுபத்திரன் கவிதைகளை சாருமதி நான்கு வகையாகப் பிரிக்கின்றார். கட்சிக் கவிதைகள், அரசியல் கவிதைகள், பொதுவான கவிதைகள், அக உணர்வுகு கவிதைகள் என்பன அவை. நான்காவதாக அவர் குறிப்பிடுபவை அவரது குடும்ப உறவில் ஏற்பட்ட விரிசல் தொடர்பாக அவர் சில எழுதிய கவிதைகளை என்று நினைக்கிறேன். அவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் சுபத்திரனின் மிகப் பெரும்பாலான கவிதைகள் அரசியல் கவிதைகள்தான். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் வர்க்க அரசியல் கவிதைகள் எனலாம்.
சுபத்திரன் 1979இல் இறந்தார். அவரது வாழ்வின் கடைசித் தசாப்தம் இலங்கை அரசியலைப் பொறுத்த வரை ஒரு மாறும் காலம் எனலாம். இடதுசாரி இயக்கத்தின் படிப்படியான வீழ்ச்சியும் தமிழ்த் தேசிய வாதத்தின் எழுச்சியும் இக்காலகட்டத்தின் முக்கியநிகழ்வுகள் எனலாம். 1977ல் சிங்களப் பெருந்தேசிய வாதமும் தமிழ்த்தேசியவாதமும் முதல்முதல் இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிரும்புதிருமாக அமர்ந்தமை இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்திய முக்கிய நிகழ்ச்சி. இதன் உடனடி விளைவு தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட 1977ம் ஆண்டின் இன வன்முறை. தமிழ்த் தேசிய எழுச்சியின் நியாயப்பாட்டை உறுதிப்படுத்திய சம்பவங்கள் பல இதைத் தொடர்ந்து நிகழ்ந்தன. இந்த அரசியல் மாற்றத்தை சுபத்திரன் போன்ற மார்க்சியக் கவிஞர்கள் எவ்வாறு நோக்கினர் என்பது நம் கவனத்திற்குரியது.

Page 109
204 மெளனம்
எல்லா வகையான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானவர் என்ற வகையில் சுபத்திரன் இந்த இனத்துவ ஒடுக்குமுறையையும் எதிர்த்துக் கவிதைகள் எழுதினார். அதே வேளை இந்த இன ஒடுக்குமுறை உழைக்கும் மக்கள் வர்க்க ரீதியாக ஒன்றிணைவதைத் தடுக்கும் முதலாளித்துவத்தின் வஞ்சகச் செயல் என்ற புரிதல் அவருக்கு இருந்தது. 1977 கலவரத்துக்குப் பின்னர் அவர் எழுதிய கவிதைகளில் இந்தப் பார்வையையே முன்வைக்கின்றார். இவரது அடக்கப்பட்ட இனத்தின் கவிதை இந்த வகையில் குறிப்பிடத்தக்கது. சிங்களத் தோழனை தமிழரின் உரிமைக்காகப் போராட வருமாறு அழைக்கிறது அந்தக் கவிதை. வாழும் உரிமை எங்கே உண்டு என்பதாகும். இந்த வகையில் அவருடைய குறிப்பிடத்தகுந்த பிறிதொரு கவிதை இன, சாதி, வர்க்க ஒடுக்குமுறைகளின் பின்னால் ஒரே வகையான மிருகமே செயற்படுகின்றது எனச் சுட்டும் இக்கவிதை வர்க்கப் போராட்டத்தின் மூலமே மனிதனுக்கு வாழும் உரிமை இறுதியாகக் கிடைக்கும் என்பதை வலியுறுத்துகின்றது. அக்கவிதையின் கடைசி வரிகள் சில பின்வருமாறு:
மாகோச் சந்தியில் இனத்தின் பெயரால் மாவைக் கோயிலில் சாதியின் பெயரால் மலையில் கொழும்பில் வர்க்கத்தின் பெயரால் இரத்த தானம் செய்த எனக்கு வாழும் உரிமை எங்கே உண்டு? அடக்கப்பட்ட சாதியும் இனமும் வர்க்கரீதியில் குதிக்கும் போது ஈழம் முழுவதும் எரிந்து பொங்கும் விடுதலைப் போரில் மட்டுமே உண்டு.
சுபத்திரனின் இந்த நிலைப்பாட்டை தமிழ்த் தேசியவாத நோக்கில் நடைமுறைக்கு உதவாத, பாரம்பரிய கற்பனாவாத முற்போக்குச் சித்தாந்தம் என எள்ளிநகையாடுவோர் உளர். ஆயினும் ஒரு கருத்து நிலையின் சரிபிழையை வரலாற்றுப்போக்கே தீர்மானிக்கிறது என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும். எது சரி எது பிழை என்பது எவ்வாறாயினும், சுபத்திரன் பாரம்பரிய முற்போக்கு இலக்கியச் சட்டகத்துள் கச்சிதமாக அடங்கும் ஒரு கவிஞன் என்பதில் கருத்து வேறுபாடு இருக்காது என்றே நம்புகின்றேன்
சாருமதி சுபத்திரன் வழிநின்ற ஒரு முற்போக்குக் கவிஞரே. இவரும் மாஓ சித்தாந்தத்தை உறுதியோடுபற்றிநின்றவர். இந்தியாவின் நக்சல்பாரி இயக்கத் தலைவர் சாரு மஜும்தாரை நினைவூட்டும் வகையிலேயே சாருமதி என்ற புனைபெயரை இவர் தனக்கு வைத்துக் கொண்டார் என நினைக்கிறேன்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 2በና
சாருமதியின் கவிதைத் தொகுதி எதுவும் இதுவரை வெளிவராதிருப்பது துரதிஷ்டவசமானது. இந்தக் குறிப்புக்காகப் பழைய சஞ்சிகைகளிலிருந்து அவரது கவிதைகளைத் தேடிய் பெறமுடியவில்லை. பத்திரிகைகளில் அவ்வப்போது இவரது கவிதைகளைப் படித்த மனப்பதிவை வைத்துக் கொண்டு சொல்வதாயின் இவரும் சுபத்திரன் போல் முற்போக்குச் சட்டகத்துள் கச்சிதமாய் அடங்குபவர்தான். பாரம்பரிய முற்போக்குச் சட்டகம் வெளி ஒதுக்கல் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. வர்க்க அரசியலைத் தவிர பிற அக உலக அனுபவங்களைக் கவிதையின் பாடுபொருளாக அது அங்கீகரிக்கவில்லை. அவ்வகையில் சண்முகம் சிவலிங்கத்தின் கவிதைகளில் காணப்படுவது போல் சுபத்திரன், சாருமதிகவிதைகளில் ஒரு பன்முகப்பாட்டை நாம் காணமுடிவதில்லை. அடுத்து புதுவை இரத்தினதுரை பற்றி நோக்கலாம். முன்னைய இரு கவிஞர்களிலிருந்து புதுவை ஒரு முக்கிய அம்சத்தில் வேறுபடுகிறார். 1960களில் புரட்சிகர மார்க்சிய அரசியல் புள்ளியிலிருந்து தொடங்கி 1980களில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தை நோக்கி நகர்ந்தவர்இவர். இந்த நகர்வு ஏன் நிகழ்ந்தது என்பதை 1986ல் எழுதிய "தென்னிலங்கைத் தோழனுக்கு" என்ற சற்று நீண்ட கவிதையில் புதுவை வெளிப்படுத்துகின்றார். இது ஒரு இடதுசாரி தமிழ்த் தேசியவாதியாக மாற நேர்ந்த வரலாற்று நிர்ப்பந்தம் பற்றிய பிரகடனமாக அமைகின்றது. இந்தக் கவிதையை சுபத்திரனின் அடக்கப்பட்ட இனத்தின் கவிதையுடன் ஒப்பு நோக்குவது பொருத்தமானது. தங்கள் கவிதையின் இறுதி வரிகளில் இருவரும் தமது சிங்களத் தோழனுக்கு அறைகூவல் விடுக்கின்றனர்.
தேயும் எங்கள் உரிமை மீட்க
நீயும் எம்முடன் ஒரு படை யாகி பாயும் நம்மைப் பிரித்த வைக்கும் பகைவன் பதற எழுடா தோழனே
என்று அழைப்பு விடுக்கின்றார் சுபத்திரன்
இன்னும் முற்றாக இருள் சூழா வேளையித
உன்னால் முடிந்தால்.
உன்னைப் போல் ஆயிரம் பேர்
வீதிக்கு வீதி
வீட்டுக்கு வீடெல்லாம்
நீதிக்குப் பக்கமதாய் நிழல் விரித்து நில்லுங்கள்
என்று வேண்டுகிறார் புதுவை. ஆனால் சிங்களத் தொழிலாளிவர்க்கம் ஏற்கனவே காயடிக்கப்பட்டு இனவாதச் சேற்றுள் மூழ்கடிக்கப்பட்டு விட்டது. சிங்களத்

Page 110
206 மெளனம்
தொழிலாளி வர்க்கம் தமிழரின் உரிமைக்காகக் கிளர்ந்தெழும் சாத்தியப்பாடு அற்றுப் போன வரலாற்றுச் சூழலில் விரக்தியுற்று, மனமுடைந்து, மதுவில் சரணடைந்து, குடும்பச் சச்சரவில் சிக்குண்டு தற்கொலை செய்து கொண்டார் சுபத்திரன். இது ஒரு புரட்சிவாதியின் அவலச்சாவு புதுவை வேறு வழியைத் தேடினார்.
கேட்க ஒரு நாதி கிளர்ந்தெழும்ப ஒரு கூட்டம் மீட்க ஒரு இயக்கம் மூச்சுவிட ஒரு கவிஞன் கட்டாயம் தேவை.இத காலத்தின் குரலாகும்
என "மரணங்கள் மலிந்த பூமி” என்ற கவிதையில் அவர் பிரகடனம் செய்வது போல தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் குரலாக மாறினார். "விடுதலை நோக்கிய போராட்டத்துடன் இணைந்திருக்க விரும்புகிறேன். விடுதலை தேடிப் புறப்பட்ட அணியில் ஒருவனாக வேங்கைகளில் ஒருவனாக இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்பது புதுவையின் வாக்குமூலம் (நினைவழியா நாட்கள்).
விடுதலை என்பது மிகப் பொதுமையான அதேவேளை மிகக் கவர்ச்சியான கருத்து. எதில் இருந்து விடுதலை, எதற்காக விடுதலை, யாருக்கான விடுதலை, எதன் மூலம் விடுதலை என்பன போன்றன வினாக்கள் இங்கு எழுகின்றன. இதற்கான விடைகள் விடுதலை வேண்டிப் போராடுவோரின் வரலாற்றுநிபந்தனை சார்ந்தவை. ஒவ்வொரு விடுதலைப் போராட்டத்திற்கும் அதற்கே உரிய நியாயப்பாடுகள் உள்ளன. அதே வேளை அது எழுப்பும் வினாக்களும் உள்ளன. என்னைப் பொறுத்தவரை இவை இரண்டும் முக்கியமானவை. 1980களுக்கு முந்திய புதுவையின் கவிதைகள் வர்க்க விடுதலையின் நியாயப்பாட்டை பேசுவன. 1980க்குப் பிந்திய அவரது கவிதைகள் இன விடுதலையின் நியாயப்பாட்டைப் பேசுவன. இரண்டுமே நமது வரலாற்று நிபந்தனையும் கவிஞரின் சுயதேர்வும் சார்ந்தவை.
புதுவையின் "இரத்தபுஷ்பங்கள்"தொகுதி பற்றி சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு புதுசுவில் நான் ஒரு விமர்சனம் எழுதினேன். அது சற்றுக் காரமான வார்த்தைகளில் அமைந்திருந்தது. இன்று அதே கருத்தை நான் வேறு வகையில் எழுதக் கூடும். அதற்குப் பதிலாக புதுவை எனது கவிதைகளை மல்லிகையில் எள்ளல் விமர்சனம் செய்திருந்தார். இது கருத்து வேறுபாடு, மதிப்பீடு சார்ந்ததே தவிர தனிப்பட்ட முரண்பாடு சார்ந்ததல்ல.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 207
புதுவையினுடைய பலம் அவரது லாவகமான, சரளமான, வீறார்ந்த செய்யுளாட்சி, இதில் எப்போதுமே எனக்கு ஒரு கவர்ச்சி உண்டு. தங்கள் கவிதைகளைக் கைப்பிரதியைப் பார்க்காது சரளமாகவும் லாவகமாகவும் பொருள் உணர்ச்சிக்குரிய ஏற்ற இறக்கங்களுடனும் கவியரங்குகளில் சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தியவர்களில் இருவர். ஒருவர் பா. சத்தியசீலன், மற்றவர் புதுவை இரத்தினதுரை. சத்தியசீலன் புரட்சி, விடுதலை என்ற கருத்துநிலையை வரித்துக் கொண்ணடவர் அல்ல. அந்த வகையில் அவரது செய்யுள் சரளமானதெனினும் வீறார்ந்ததல்ல. ஆனால் புதுவை போராட்ட உணர்வுகளுக் கேற்ற ஒரு வீறார்ந்த செய்யுள் நடையை வளர்த்திருக்கிறார். இது முதலில் பாரதிதாசன் வளர்த்தது. இலங்கையில் 1950களில் தமிழ் இயக்க எழுச்சிக் கட்டத்தில் முருகையன்,நீலாவணன், மஹாகவி, முதலியோரால் வளர்க்கப்பட்டது. கற்பனையில் சோசலிசப் புரட்சிக் கோஷம் எழுப்பிய ஆரம்ப காலத்தை விட உண்மையான ஆயுதப் போராட்டம் நிகழும் சமகாலத்தில் போராளிகளுக்குக் கிளர்ச்சி ஊட்டுவனவாகப் புதுவையின் செய்யுளின் பொருளும் மொழி வீச்சும் அமைகின்றன. இது புதுவை இரத்தினதுரை மூலம் தமிழ்ச்செய்யுள் மரபு அடைந்த புதிய பரிமாணம் எனலாம்.
புதுவை பற்றிய எனது விமர்சனம் அவரது உள்ளடக்கம் சார்ந்தது. புதுவையின் முதற்கட்ட முற்போக்குக் கவிதைகளும் இரண்டாம் கட்ட தமிழ் ஈழ விடுதலைப் போராட்டக் கவிதைகளும் சுபத்திரன் சாருமதி போன்றவர்களுடைய கவிதைகளைப் போன்றே பெரும்பாலும் வெளி ஒதுக்கல் கொள்கைக்கு உட்பட்டவைதான். அதாவது மனித அனுபவத்தின் ஒரு பகுதியை - பாட்டாளி வர்க்க அரசியலை அல்லது இனவிடுதலைப் போராட்ட அரசியலை மட்டும் உள்ளடக்கமாகக் கொண்டவை.
இலக்கியத்தில் பொருள் சார்ந்த இந்த வரையறை காலத்தின் தேவை என்று ஒருவர் வாதிக்கக் கூடும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் அக்காலக்கட்ட வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட பொருள் முதன்மை பெறுவது தவிர்க்க முடியாதது, அவசியமானது எனினும் எல்லாக் காலகட்டங்களிலும் மனிதனின் மொத்த அனுபவங்களுக்கும் இலக்கியத்தில் இடம் இருக்க வேண்டும் என்பதே எனதுநிலைப்பாடாகும்.
எனது இரண்டாவது விமர்சனம் இனத்துவக் கருத்துநிலையின் சமுதாயப் பின்விளைவுகள் பற்றியது. ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் எந்த ஒரு இனமும் தனது விடுதலைக்காகப் போராடும் உரிமையை யாரும் நிராகரிக்க முடியாது. அதே வேளை ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் கட்டமைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட இனத்துவக் கருத்துநிலை அதே வரலாற்றுச் சூழலில் வாழும் பிற இனத்துவக் குழுமங்களையும் அதன் ஒவ்வொரு உறுப்பினரையும் எதிரிநிலையில் வைத்து நோக்கும் ஆபத்தையும் அதன் உடன்விளைவாகக் கொண்டுள்ளது. இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனக் குழுமங்கள் ஒன்றை ஒன்று

Page 111
208 மெளனம்
எதிரியாகக் கட்டமைத்துள்ளது. இவ்வகையில்தான் "சிங்களவன் கொல்லுகிறான் சோனகன் வெட்டுகிறான்" என்று புதுவை போன்றவர்களே பாடும்போது (நினைவழியா நாட்கள் பக்.72) இந்தக் கருத்து நிலையின் ஆபத்து வெளிப்படுகின்றது. கடந்த இருபது ஆண்டுப் போர் இதனை நமது நடைமுறை அனுபவமாக்கியுள்ளது. இனவிடுதலையை முழுமையான மனித விடுதலையின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகக் கட்டமைப்பது நம்முன் உள்ள பாரிய சவாலாகும். ஒரு குறிப்பிட்ட இனத்தின் விடுதலைக்காக நாம் எழுப்பும் குரல் எல்லா இனங்களுக்குமான விடுதலைக் குரலாகவும் பரிணமிக்க வேண்டும்.
இந்த நால்வருள்ளும் சண்முகம் சிவலிங்கம் முற்றிலும் வேறுபட்ட ஒரு கவித்துவ ஆளுமையாகத் தனித்து நிற்கிறார். மற்ற மூவரும் 1960,70களில் மேலோங்கியிருந்த முற்போக்கு இலக்கிய கோட்பாடுகளுள் கச்சிதமாகப் பொருந்தியிருக்க, இவர் அதற்குள் இருந்து திமிறிக் கொண்டு வெளியில் நிற்கிறார். இவர் கட்சி சார்ந்த மார்க்சியவாதியாக ஒரு போதும் இருந்ததில்லை. இவரது மார்க்சியப் பார்வை சுயாதீனமானது. 60,70களில் மேலோங்கியிருந்த நமது முற்போக்கு இலக்கியம் உள்ளடக்க ரீதியில் ஒரு வெளி ஒதுக்கல் கொள்கையைப் பேணி வந்தது. அதாவது உழைக்கும் வர்க்கத்தின் விடுதலை சார்ந்த அரசியல் உள்ளடக்கத்தை மட்டும் இலக்கியத்தில் ஏற்றுக் கொண்டு ஏனைய மனித அனுபவங்களை இது வெளி ஒதுக்கியது. சண்முகம் சிவலிங்கம் இப் போக்கை முற்றிலும் நிராகரித்தவர். புற உலக அரசியல் மட்டுமன்றி அரசியல் சாரா சுய அனுபவங்களும் அக உணர்வு நிலைகளும் கவிதையில் அதே அளவு முக்கியத்துவம் உடையன என்ற கொள்கை உடையவள் இவர். அவ்வகையில் இவரது கவிதைகள் வாழ்வின் பன்முகத் தன்மையின் வெளிப்பாடாக அமைகின்றன. இது ஈழத்துக் கவிதையில் மஹாகவி, முருகையன், நீலாவணன் மரபின் பிறிதொரு வளர்ச்சியாக அமைகின்றது. கவிதையில் அவர் வெளிப்படுத்தும் அனுபவங்களும் உணர்வுகளும் அவற்றை வெளிப்படுத்துவதற்கு அவர் பயன்படுத்தும் படிமங்களும் மொழியும் தற்புதுமையானவை. 1988இல் வெளிவந்த அவரது நீர் வளையங்களும். சமீபத்தில் வெளிவர உள்ள அவரது கொல்லனின் உலையில் என்ற தொகுதியும் தற்காலத் தமிழின் மிகச் சிறந்த கவிஞர்களுள் அவரையும் ஒருவராக அடையாளப்படுத்துகின்றன.
1980க்குப் பின்னான கடந்த இருபது ஆண்டுகளின் யுத்த சூழலை, மனிதப் படுகொலைகளை,அரசியற் சூதாட்டங்களை ஒரு கவிஞன் என்ற வகையில் சிவலிங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பது முக்கியமானது. தமிழ் ஈழ விடுதலைப் போரில் போராளியாக ஒரு மகனைப் பலிகொடுத்தவர் கவிஞர். உலகெங்கும் ஒடுக்கு முறைக்கெதிராக உயிர் கொடுக்கும் அனைத்து மாவீரர்கனையும் தனது புதல்வராகவே காண்கிறார். ஒரு கவிதையில் (மாவீரர்களுக்கு). அந்த வகையில் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கு

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலா 209
முறைக்கு எதிரான போராட்டமாகவே அவர் நோக்குகின்றார். ஆயினும் இந்த யுத்தத்தில் அரச படைகளின் படுகொலைகளையும் விடுதலை இயக்கங்களின் படுகொலைகளையும் அவர் வேறுபடுத்தி நோக்கவில்லை என்பது முக்கியமானது. சுடுகாடு, புனிதர்கள் போன்ற கவிதைகள் சில விடுதலை இயக்கங்களின் கண்மூடித்தனமான படுகொலைகளுக்கு எதிரான அவரது தார்மீக உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. கடந்த இருபது ஆண்டுகால ஆயுத கலாசாரத்தில் பொது மனிதன் ஒரு மண் புழுவாக வீழ்ச்சி அடைந்ததை அவரது வீழ்ச்சி என்ற கவிதை மிகவும் தாக்கமாக சித்தரிக்கின்றது. துப்பாக்கியின் எதிரில் மனிதன் தன் ஆளுமை அழிந்து மண் புழுவாக மாறி படியோரம் ஊர்ந்து கொண்டிருப்பதான அவரது படிமம் அவரது கவித்துவ வெளிப்பாட்டின் உச்சங்களுள் ஒன்று எனலாம். அந்தக் கவிதையை இங்கு முழுமையாகத் தருவது பொருந்தும்.
காய்ந்த சருகு போல் ஒரு மண்புழு ஊர்ந்து கொண்டிருந்தது படியோரம் நான் மனிதன் என்னும் இரக்கம் மீதார அதனைப் பார்த்துவிட்டு போனேன் ஒருகணம். சுர் என்று சருகு இரைதல் போல் கேட்டத திரும்பிப் பார்த்தேன் மண்புழு வாசலில் நின்றது. வாயைத் திறந்தத கூரிய பல் தெரிய நாக்கு எங்கே என்று நினைக்கையில், நாக்கிலிருந்து தீச்சுவாலை பறந்தது. மண்புழுவிற்கு பல்ஏது? நாக்கு ஏத? நினைக்கையில் தெரிந்தது மண்புழு உருமாறிவிட்டதென்று எனினும் அஞசவில்லை. குனிந்தேன் தடி எடுக்க,
நிமிரும் போது மண்புழுவின் கையில் தப்பாக்கி இருந்தது அல்ல
ஒரு பாம்பின் கைத்தப்பாக்கி அதவும் அல்ல, ஒரு சிப்பாயின் கைத்தப்பாக்க நான் குனிந்த பாம்பாய் நெளிந்த காய்ந்த சருகின் மண்புழு ஆகி ஊர்ந்த கொண்டிருக்கிறேன் படியோரம்

Page 112
210 மெளனம்
அவரது நீர் வளையங்கள் என்ற தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரையில் இருந்து சில வரிகளுடன் அவர் பற்றிய இந்தக் குறிப்பை முடிக்க விரும்புகிறேன். "சண்முகம் சிவலிங்கம் தன் சுயத்தை முழுமையாக வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதை விரும்பும் ஒரு கவிஞன். இருத்தலும் இருத்தலுக்குப் பிரக்ஞையாய் இருத்தலும் முக்கியமானது என்று கருதுபவர். தனது மூல விக்கிரகத்தை நாம் காண வேண்டும் என்பதற்காக அதில் நமது மூல விக்கிரகத்தையும் தரிசிக்க வேண்டும் என்பதற்காக தன்னை திரை நீக்கிக் காட்டுகிறார் அவர். எல்லா நல்ல கவிதைகளையும் போல அவரது கவிதை அவரது முகமாக இருக்கின்றது" கவிதை அவருக்கு ஒரு முகமூடியல்ல.

19-ம் நூற்றாண்டு வெகுசன இயக்கமும் இராமலிங்கரும்
பேராசிரியர் வீ. அரசு தலைவர், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப்பல்கலைக்கழகம்,
மக்களின் சமூக வாழ்க்கை முறை என்பது தனித் தனிக் குழுக்களாக இருந்தபோது, அவர்களுக்குள் ஒர் அடையாளம் இருந்தது. மொழி சார்ந்து, பகுதி சார்ந்து, சாதி சார்ந்து இயங்கும் சூழல், சமூக வரலாற்றில் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. பிரித்தானியர்களின் வருகை மற்றும் அவர்களது ஆட்சிமுறை, இந்தியச் சமூகத்தில், தமிழ்ச் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கின. இவ்வகையில் மக்கள் கூட்டம், மக்கள் திரளாக, முகமாற்றக் கும்பல்' என்று அறியப்படும் மாற்றம் நிகழ்ந்தது.நவீனக் கருவிகள் கண்டுபிடிப்பால் ஏற்பட்ட தொடர்புச் சாதன வளர்ச்சி, இவ்வித வெகுசனத்தை உருவாக்கிற்று. சார்புத் தன்மையற்ற வெகுசன வாழ்க்கை என்பது, சமூகத்தில் அந்தந்தக் காலங்களில் இயங்கும் நிறுவனங்களோடு தம்மை இணைத்துக் கொண்டு இயங்கும். இவற்றில் சமயம் முதன்மையான இடத்தைப் பெறுகிறது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் தான் வெகுசனங்கள்' என்று கருதப்படும் மக்கள் திரள், உருப்பெறத் தொடங்கிய காலமாகும். இங்கிலாந்தில் நடந்த தொழிற் புரட்சியும் பிரான்சில் நடைபெற்ற சனநாயகப் புரட்சியும் நடைமுறைப்படுத்தப்படும் சூழல் 19ம் நூற்றாண்டின் தான் உருப்பெறத் தொடங்கியது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கிறித்துவ மத வருகையும் அதன் மூலம் நடைபெற்ற பல்வேறு நடவடிக்கைகளும் வெகுசன இயக்கப் போக்குகளைப் புரிந்து கொள்ள உதவும்.இராமலிங்கரைப் பொறுத்தரைகீழ்க்காணும் கூறுகளில், ள்வ்வகையில் வெகுசன இயக்கப் போக்குகளோடு தம்மை இனம் கண்டு கொண்டார். அதன் மூலம் அவரது செயல்களை நாம் எப்படிப் புரிந்து கொள்ள முடியும் என்பதை இங்கு தொகுத்துப் பார்க்க முயலுவோம்.

Page 113
22 மெளனம்
- சமூக இயக்கத்தில் புதிதாக உருப்பெற்ற வசனம் குறித்த இராமலிங்கர்
அணுகுமுறை.
- கிறித்துவமதப் பரவல் சார்ந்து உருப்பெற்ற கருத்துக்களோடு குறிப்பாக மாயூரம் வேதநாயகம் -பிள்ளையோடு கொண்டிருந்த தொடர்பு.
- சைவர்களோடு இராமலிங்கருக்கு ஏற்பட்ட முரண்பாடுகள்.
- பிரித்தானியருக்கு எதிராக இராமலிங்கர் செயல்பாடுகள்.
மேற்குறித்த நிலைப்பாடுகளில், இராமலிங்கரின் செயல்களைப் புரிந்து கொள்வதின் மூலம், அவரது கருத்துக் கள், நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாற்றைப் புரிந்து கொள்ளமுடியும்.
வின்சுலோ 1862-இல் அகராதியை உருவாக்கிய போது அதன் முன்னுரையில் பின்கண்டவாறு எழுதுகிறார்
தமிழனுடைய வசனநடை இன்னும் உருவடையா நிலையில்தான் இருக்கிறது. அதனைச் சரியாக உருப்படுத்துவதற்கு அறிஞர்கள் செய்யும் முயற்சிநல்ல பலன் தரும். சுதேசிகள் பலர் பாக்களை விரைவாகப் பாடக்கூடியவர்களாக இருந்தும், பிழையின்றி வசனம் எழுதத் தெரியாமல் இருக்கிறார்கள்.
தமிழ் அச்சுப் புத்தகங்களின் பட்டியலை உருவாக்கிய ஜான் மர்டாக் 1865இல் பின்கண்டவாறு எழுதினார்.
பாட்டுகளுக்கு எழுதப்பட்ட உரைகள் தவிர, மருத்துவம், கணக்கு, இலக்கணம், அகராதிகள் உட்பட எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பாட்டாகவே எழுதப்பட்டுள்ளன. ஐரோப்பியரின் தொடர்பினால், தமிழ் வசன இலக்கியம் வளர்ச்சி பெற்றது என்று கூறலாம்.
விசாகப் பெருமாள் அய்யர் என்னும் வீரசைவர் தாம் 1852-இல் இயற்றிய 'பாலபோதம் முன்னுரையிலும் நமது சிறுவர்கள் வசனநடையில் படிக்க வாய்ப்பு இல்லாமையால், நெடுங்காலத்தை வீணாக்குவதாகவும் எளிதில் கற்பதற்கு மாறாக கடினப்பட்டுப் பயில்கின்றனர் என்றும் கூறுகிறார். இதே கருத்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை விரிவாகப் பேசியுள்ளார்.
கிறித்துவ சமயச் சார்புடையவர்கள் மட்டுமன்றி விசாகப் பெருமாள் அய்யர் போன்ற வீரசசைவப் பெருமக்களும் இவ்விதம் வசனம் பற்றிப் பேச நேர்ந்த சூழல் எப்படி நேர்ந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இத்தன்மை அச்சு எந்திர வருகையால் உருப்பெற்றதாகும். 16-ஆம் நூற்றாண்டு முதல் நமக்கு அச்சுக் கருவி வந்திருந்தாலும், 1835 முதல்தான் எல்லோரும் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் தொட்க்கத்தில் ஏற்பட்ட இழிநிலை, எழுத்தறிவுப் பரவலோடு மிகவும் வளரத்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 23
தொடங்கியது. திண்ணைப் பள்ளிக்கூட முறைமைகள், படிப்படியாக கிறித்துவ தொண்டுழியச் சபைகள் நடத்தும் பள்ளிகளாக உருப்பெற்றன. பாதிரியார்கள் மூலம் கிடைத்த கல்வி, சாதிய முரண்களை உடைக்கத் தொடங்கியது. ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரும், இடைநிலைப்பட்ட பிரிவினரும் எழுத்தறிவு பெறும் வாய்ப்பு முதன் முதல் உருவாயிற்று. இவ்வகை வாய்ப்பு, வாசிப்புப் பழக்கத்திற்கு வழிகண்டது. இவ்வகையான வாசிப்பு என்பது, பேச்ச மொழியோடு நெருக்கமாக இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏனெனில் எழுத்தறிவு என்பது, சரஸ்வதி வரமல்ல: பயிற்சி பெற வாய்ப்புள்ளோர் அனைவரும் பெறக்கூடிய ஒன்று என்பது நடைமுறைப் படுத்தப்பட்டது. இவ்வகையில் எழுத்தறிவு மற்றும் வாசிப்பு என்ற நிகழ்ச்சிகள் வெகுசனமயப்படும் சூழல் உருவாயிற்று. எழுத்தறிவு, வெகுசனங்களிடம் இடம்பெறும் போது, அவை சமூக இயங்குதளத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது இயல்பு. இவ்வகையில் இராமலிங்கர், வசனநடையில் தமது கருத்துக்களை வெளிப்படுத்த முற்பட்ட வரலாறு, இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இவரது காலத்தில் வசனநடையில் ஆர்வம் செலுத்தியவர்களில் ஆறுமுகநாவலரும் முக்கிய இடம் பெறுகின்றார். இராமலிங்கர் 1854-இல் எழுதிய 'மனுமுறை கண்ட வாசகம்' என்ற நூல் முழுதும் வசனநடையில் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. மிகுதியாக பழமொழிகளைப் பயன்படுத்தி எழுதியிருக்கிறார். 'கும்பகோணத்துப் பள்ளன் கொள்ளை கொண்டு போக, தஞ்சாவூர்ப்பார்ப்பான்தண்டங்கொடுத்தான், எழுத்தறியாதவன் ஏட்டைச் சுமந்தது போல', 'கொண்ட மனைவியாளிருக்கக் கூலிவாங்க வநதவளைத் தாலிவாங்கச் சொன்னதுபோல' என்ற அவர் பயன்படுத்தும் பழமொழிகள் சுவையானவை. மனுநீதி கொண்ட சோழனைப் பற்றிய பெரிய புராணக் கதையிலிருந்து சற்று வேறுபட்ட கதையை உரைநடையில் எழுத இராமலிங்கர் மேற்கொண்ட முயற்சி, வெகுசன இயக்கத்தோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டது என்று கரத முடியும். அந்நூலில் வரும் நடை அமைப்பு இதனை உறுதிப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக ஒரு பகுதி.
அவர் ஆளுகைக்குட்பட்ட உலகங்களில், பூவே பறிபடுவது, புனலே சிறைபடுவது, காற்றே அலைபடுவது, கல்லே கடினமுடையது. மாவே வடுப்படுவது, வாழையே குலைபடுவது, வண்டே மதுவண்பது, பந்தே அடிபடுவது, பரியே கட்டுண்பது, நெல்லெ குத்துண்பது, நெற்கதிரெபோர்படுவது, வயலே வளைபடுவது, மாதரிடையே கறைபடுவது, தரித்திரமே தரித்திரப்படுவது, துக்கமே துக்கப்படுவது, பொய்யே பொய்படுவது. இவையல்லாமல், பொருள் பறிக்கப்படுவோரும், சிறைச்சாலையில் வைக்கப்படுவோரும், பகைவரால அலைக்கப்படுவோரும், கடினமணமுள்ளவர்களும், வடுப்படுவோரும், குலைபடுவோரும், கடின மனமுள்ளவர்களும், வடுப்படுவோரும், குலைபடுவோரும், மதுவுண்போரும், அடிபடுவோரும், கட்டுண்போரும், குத்துண். போடும், போரிற்படுவோரும், வளைபடுவோரும், குறைபடுவோரும், தரித்திரப்படுவோரும், துக்கப்படுவோரும், பொய்படுவோரும் வேறேயில்லாமல் மேன்ேை விளங்கியிருந்தது. (மனுமுறை கண்ட வாசகம் : 1972:7)

Page 114
214 மெளனம்
இந்நூலில் மனுநீதிச்சோழன் அரற்றிப் புலம்புவதாக, இராமலிங்கர் எழுதியுள்ள பகுதி மொழிநடைமீது அவர் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங்கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகதைக் கலகஞ் செய்தேனோ! மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ! குடிவரி உயர்த்திக் கொள்ளைக் கொண்டேனோ! ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ! தருமம் பாராத தண்டஞ் செய்தேனோ! மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ! உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரங் செய்தேனோ! களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ! பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ! வரவு போக்கொழிய வழியடைத்தேனோ! வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ! பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ! கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ! நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ! கலங்கியொளிந்தோரைக் காட்டிக் கொடுத்தோனோ! கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ! காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ! கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ! கருப்பமழித்தக் களித்திருந்தேனோ! குருவை வணங்கக் கூடசி நின்றேனோ! கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ! பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ! பஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ! கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ! ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ! கல்லும் நெல்லும் கலந்து விற்றோனோ!

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 215
அன்புடையவர்க்குத் தன்பஞ் செய்தேனோ! குடிக்கின்ற நீருள்ள குளந் தார்த்தேனோ! வெய்யிலுக் கொதுங்கும் விருஷ மழித்தேனோ! பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ! ஆலையக் கதவை அடைத்த வைத்தேனோ! சிவனடியாரைச் சீறி வைதேனோ! தவஞ் செய்வோரைத் தாழ்வு சொண்னேனோ! சுத்த ஞானிகளைத் தாஷணஞ் செய்தேனோ! தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ! தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ! என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!
(மனுமுறை கண்ட வாசகம் : 1972 : 2627)
இராமலிங்கர் தமது, சத்த சன்மார்க்கத்தின் ஆவணமாக உருவாக்கியது 'ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் நூல்" இந்நூல் பசிக் கொடுமை குறித்த இராமலிங்கரின் அணுகுமுறையை முதன்மையாகக் கொண்டது. அன்றைய சென்னை இராஜதானியில் 18-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி தொடங்கி 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை தொடர்ச்சியாகப் பஞ்சம் விட்டுவிட்டுநிலவியது. 172933, 1781 - 1802, 1807, 1833-34, 1854, 1866 பிறகு 1878 ஆகிய ஆண்டுகளில் கடுமையான பஞ்சம் நிலவியது. இராமலிங்கர் பத்து வயது சிறுவராக இருக்கும் காலம் தொடங்கி, ஏறக்குறைய அவர் மறைவதற்கு மூன்று முறை கடும் பஞ்சம் தமிழ்நாட்டில் நிலவியது. இதன் கொடுமைகளைக் கண்ட இராமலிங்கர், பசிக் கொடுமை தீர்ப்பதற்கு சாத்திய தருமச்சாலைகளை உருவாக்கத் திட்டமிட்டிக்கிறார். மக்கள் பசியால் சாவதை நேரடியாகக் கண்ட அவர், தமது தத்தவார்த்தநிலைப்பாடுகளை அதனை நோக்கி உருவாக்கிக் கொண்டிருந்தார். அவ்வகையில் அவர் தொடக்கத்தில் 'மனுமுறை கண்ட வாசகம்' என்னும் உரைநடை நூல் எழுதியவர்: இறுதிக் காலத்தில் 'ஜீவகாருண்ய ஒழுக்கம்' நூலையும் உரைநடையில் எழுதியுள்ளார். சமூக இயங்குதளத்தில் இராமலிங்கரைப் புரிந்து கொள்ள இந்நூல்கள் உதவுகின்றன.
சீவர்களுக்குப் பசி அதிகரித்த காலத்தில் சீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது. அதுவே மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது- அது மறையவே புருடதத்துவம் சோர்ந்து விடுகின்றது. அது சோரவே பிரகிருதிதத்துவம் மழுங்குகின்றது- அது மழுங்கவே, குணங்களெல்லாம் பேதப்படுகின்றன. மனம் தடுமாறிச் சிதறுகின்றது. புத்தி கெடுகின்றது- சித்தம் கலங்குகின்றது- அகங்காரம் அழிகின்றது. பிராணன் சுழல்கின்றது. பூதங்க ளெல்லாம் புழுங்குகின்றன. வாத பித்த கிலேட்டுமங்கள் நிலைமாறுகின்றன. கண்

Page 115
216 மெளனம்
பஞ்சடைந்து குழிந்து போகின்றது- காது கும்மென்று செவிபடுகின்றது- நா உலர்ந்து வறளுகின்றது. நாசி குழைந்து அழல்கின்றது- தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது. கை கால் சோர்ந்து துவஞகின்றது. வாக்குத் தொனிமாறிக் குளறுகின்றது. பற்கள் தளருகின்றன. மலசலவழி வெதும்புகின்றதுமேனி கருகுகின்றது. ரோமம் வெறிக்கின்றது. நரம்புகள் குழைந்து நைகின்றன. நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன. அலும்புகள் கருகிப் பூட்டுகள் நெக்கு விடுகின்றன. இருதயம் வேகின்றது. மூளை சுருங்குகின்றது. சுக்கிலம் வெதும்பி வற்றுகின்றது- ஈரல் கரைகின்றது- இரத்தமும் சலமும் சுவறுகின்றன - மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது. வயிறு பகிரென்றெரிகின்றது. தாப சோபங்கள் மேன் மேலும் உண்டாகின்றன. உயிரிழந்து விடுவதற்கு மிகவஞ் சமீபித்த அடையாளங்களும் அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு அவத்தைகளும் தோன்றுவது சீவர்களக் கெல்லாம் பொதுவாக வேயிருக்கின்றது.
(மனுமுறை கண்ட வாசகம் : 1972 : 67 - 68)
தொடர்ந்து பசித்துன்பம் குறித்து விரிவாகவே இராமலிங்கர் பேசுகின்றார். தமது சமகாலச் சிக்கல்களுக்கு அவருக்குத் தெரிந்தவகையில் தீர்வுகாண முயல்வதை காணமுடிகிறது.
தமிழ்ச் சமூகத்தில் கிறித்துவம் வந்தபோது, அதனை மண்வயப்படுத்தும் முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டோர்களில் வேதநாயகருக்கு முக்கிய பங்குண்டு. 19-ஆம் நூற்றாண்டில், சாதி மற்றும் பொருளாதார நெருக்கள்களால் பாதிக்கப்பட்ட மக்கள, தங்கள் விடுதலை நோக்கிக் கிறித்துவத்திற்கு மதம் மாறினார். இச்சமயத்தில் வாழ்ந்தவர் இராமலிங்கர். இக்காலத்தில் மாயூரம் வேதநாயகம் பிள்ளையோடு இராமலிங்கர் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். வேதநாயகம் இயற்றிய நீதி நூலுக்குச் சாற்றுக்கவி வழங்கியதோடு, அவரது 'சர்வ சமய சமரச கீர்த்தனைகள்' நூல் அரங்கேற்றத்திலும் கலந்து கொண்டார். இச்செயல்பாடுகள், கிறித்தவக் கருத்துக்கள் பால், இராமலிங்கர் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டுவதாக அமைகிறது. 19-ம் நூற்றாண்டில் கல்வி, சாதி மறுப்பு, பெண்களுக்கான உரிமை போன்ற கூறுகள் வெகுசனத் தளத்தில் உருவாயின. இதற்குமுன் இவை பேசாப் பொருட்கள். கல்வி, குறிப்பிட்ட பிரிவினருக்கு உரியது என்றும், சாதிகள் இயற்கை நீதிகள் என்றும் பெண்கள் ஆண்களுக்குச் சேவை செய்யவே கடவுளால் படைக்கப் பட்டவர்கள் என்னும் நம்பிக்கைகள் ஆட்டம் காணத் தொடங்கின. இப்பணியைச் செய்ததில் கிறித்துவம் முதன்மையான இடத்தைப் பெற்றது. பாரம்பரிய சைவ மரபுகளில் இல்லாத இக்கூறு 19-ம் நூற்றாண்டில் கிறித்தவத்தால் நமக்குக் கிடைக்கிறது. இதனை முதன்மைப் படுத்தியவர்களில் வேதநாயகர் ஒருவர். இவரோடு இராமலிங்கர் கொண்டிருந்த தொடர்பு, வெகுசன இயக்கத்தில் அவர் தம்மை இணைத்துக் கொண்ட போக்கைக் காட்டுகிறது. மேலும் இறந்தவர் பிழைத்தல், உடலைப் புதைத்தல், ஒளிவழிபாடு போன்ற பலசுறுகளைக் கிறித்தவ மதச் சடங்குகளிலிருந்து

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 27
இராமலிங்கர் பெற்றிருக்கக்கூடும் என்று பலர் கருதுவது எளிதில் ஒதுக்கக்கூடியது அன்று. பெரும் சமூக இயக்கமாக இருந்த கிருத்துவ சமூகத்தோடு இராமலிங்கர் உறவுப்பாலம் கொண்டிருந்தார் என்றே கூறவேண்டும்.
இராமலிங்கரின் கருத்துக்கள் சைவர்களால், கண்டனத்திற்கு ஆளாக்கப்படுவதற்கான அடிப்படைகள் என்பவை இராமலிங்கர் முதன்மைப் படுத்திய கிறித்தவச்சார்பு கருத்துநிலைதான் என்று சொல்ல முடியும். ஆனால் நேரடியான கிறித்தவ மரபை அவரால் ஏற்க முடியாத நிலையில், தாயுமானவர் மரபை இவரது காலத்தில் பெரிதும் வளர்த்தெடுக்கிறார் என்று கருத இடமுண்டு. இம்மரபு தவிர்க்க முடியாமல் கிறித்தவ மரபுகளோடு ஏதோ ஒருவகையில் தொடர்புடையதாக இருப்பதைக் காண்கிறோம். இவ்வகையில் 19-ஆம் நூற்றாண்டின் வெகுசனக் கருத்தியலில் உருப்பெற்ற கருத்துக்களுக்கு இராமலிங்கர் உரிய கவனம் செலுத்தியுள்ளார் என்பதைப் புரிய முடிகிறது.
ஆறுமுகநாவலர் ஈழத்தில் கிறித்தவப் பரவலுக்கு எதிரான செயல்பாட்டை மேற்கொண்டார். அச்செயல்பாடுகள், கிறித்தவ நிறுவனம் மேற்கொண்ட வழிமுறைகளை தமக்கான வழிமுறைகளாகக் கைக்கொள்ளும் முயற்சியாக இருந்தது. இதற்கு எடுத்துக்காட்டாக பள்ளிக்கூடம் நடத்துதல் போன்ற செயல்பாடுகளைக் கூறலாம். அதெ நேரத்தில் தமிழகத்தின் நிலைமை வேறுபட்டது. பரந்த நிலப்பரப்பில் கிறித்துவ செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு எதிர்நிலை எடுக்காத இராமலிங்கர், அவற்றில் பல கருத்துக்களைத் தன்வயமாக்கினார். ஒருவகையில் ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்ற அமைப்புகள் செயல்படுவதற்கு முன்னோடியான நடவடிக்கையாக இராமலிங்கர் செயல்பாட்டைக் கருதலாம். பிரம்ம சமாஜகருத்துநிலைகளுக்கும் இராமலிங்கர் கண்ணோட் டத்திற்கும் பல ஒற்றுமைக்கூறுகள் இருப்பதைக் காணமுடியும். அதேநேரத்தில் பிரம்ம சமாஜத்தின் உருவ வழிபாட்டை இராமலிங்கர் மறுத்துப் பேசியதாகவும் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன (1867). எனவே, இராமலிங்கர் கிருத்துவம், பிரம்ம சமாஜம் ஆகியவற்றின் அணுகுமுறைகள் குறித்து அக்கறையுடையவராகவே இருந்தார் என்று கருத முடியும். தமிழகச் சூழலில், வெகுசனக் கருத்துப் பரவலின் தவிர்க்க இயலாத நிலைபாடு இதுவாகும். ஆனால் ஆறுமுகநாவலர், ஈழத்தில் சைவத்தை முதன்மைப்படுத்தி இராமலிங்கரை மறுக்கிறார்.
சிதம்பராலய பூசகர்களுடைய சிவநிந்தை, சிவாகமநிந்தை, சிவனடியார் நிந்தை எல்லாம் ஒருபுறத்திருக்க கருங்குழி இராமலிங்கம்பிள்ளையென்னுமொருவர்தாஞ் சிவானுபூதி பெற்றவரென்றும் ஒதாதுணர்ந்தவரென்றுந் தம்மைச் சொல்லியும் அம்மட்டில் நில்லாது உள்ளபடி சிவானுபூதி செல்வர்களாகிய திருஞான சம்பந்முர்த்தி நாயனார், திருநாவுக்கரச நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய உண்மை நாயன்மார்கள் சிவாநூக் கிரகத்தைப் பெற்று அவ்வதுக்கிரகத்தினாலே அவரகளருளிச் செய்த அருட்

Page 116
218
மெளனம்
பாக்களைத் தள்ளிதாஞ் செய்து கொண்ட பாக்களை ஆன்மார்த்த பூசைபரார்த்த பூசைகளிலும் உற்சவங்களிலும் சந்தியா காலங்களிலும் மூடசனேந்திரர்களாகிய சிலரைப் பாராயணம் பண்ணும் படி செய்தும், தம்மை திருவருட் பிரகாச வள்ளலென்றும் தாஞ் செய்தபாக்களை அருட்பாக்களென்று தாமாகச் சொல்லியும் பிறரைக் கொண்டு சொல்லுவித்தும் அம்மட்டில் நில்லாது மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருவாசகம், திருக்கோவையார் என்னுமிரண்டையும் சபாநாயகர் நமது அழுது திருக்கரங்களால் எழுதியதுபோல வந்து எழுதுவரென்றும் அவைகளை எழுதும் பொருட்டு பொன்னோடும் பொன்னெழுத் தாணியுந் தாம் செய்த ரசவாத்தினாலே பெற்றுக் கொண்ட பொன்னினாலே செய்தல் வேண்டுமென்றும், அம்மட்டோ அத்திரவியத்தைக் கொண்டு தாமே பார்வதி புரமெனப் பெயர்பெற்ற ஓராலையமும் அதனுள்ளே ஒரு கனகசபையுங் கட்டிச் சிதம்பர சபாநாயகரை அதிலே அல்லாருங்காண நடுப்பகலில் எழுந்தருளி வந்து நின்று நிருத்தம் பண்ணும்படி செய்வாரென்றும், அம்மட்டில் நில்லாது செத்தவர்களை உயிர்ப்பிப்போமென்றும், புத்திரரில்லாதவர்களுக்குப் புத்திரபாக்கியங் கொடுப்போமென்றும், குருடர் செவிடர் முதலானவர்களுடைய குறைவுபாடுகளை நீக்குவோமென்றும், பசித்தவர்களெல்லாருக்கம் அன்னங் கொடுப்போமென்றும், தண்ணிரால் விளக்கெரித்தோமென்றும் பிரம விட்டுணுக்காளலுந் தேடி அறிதற்கரிய கடவுள் பருக்கைக் கற்கணிறைந்த சென்னைப்பட்டணத் தெருவிலே அர்த்தராத்தியிலே நடந்துவந்து தமது வீட்டுக்கதவைத் திறப்பித், மகனே! இதை வாங்கிக்கொள் என்று தமக்கொன்று தந்தாரென்றும், அம்மட்டில் நில்லாது மாணிக்கவாசக சுவாமிகள் சிதம்பரத்திலே சபாநாயகருடன் இரண்டறக் கலந்தது போலத் தாமுங் கலப்போமென்றும் இன்னும் இவைபோலப் பல பிரயோசனமற்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டுத் திரிவாராயினர். (பார்க்க. கயிலாசப்பிள்ளை, த, 1954, 'போலியருட்பா மறுப்பு, ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு, பக், 89.121)
(வே.கனகரத்தின உபாத்தியாயரின் பூரீலயூரீநல்லூர் ஆறுமுக நாவலர் சரித்திரம். பதி.வை.கனகரத்தினம் 1994 : 71-73)
இங்கு இராமலிங்கர் மரபு வேறு, நாவலர் மரபு வேறு என்பதைப் புரிந்து
கொள்ள வேண்டும். இதுவே பின்னர் அருட்பா மருட்பா போர் என்ற வடிவத்தில் செயல்படத் தொடங்கியது.
இராமலிங்கர் வாழ்ந்த காலம்என்பது பிரித்தானியர் படிப்படியாக நமது
ஆட்சி அதிகாரத்திற்கு உட்படுத்திய காலம் ஆகும். இவரது காலத்தில் வந்த தண்டபாணி சுவாமிகளோடு இராமலிங்கருக்கு உறவு இருந்திருப்பதை அறியமுடிகிறது. தாயுமானவர்தான் இராமலிங்க சுவாமிகளாகப் பிறந்து இருப்பதாக தண்டபாணி சுவாமிகள், முருகன் தனக்குக கூறியதாகவும் எழுதுகிறார். இவ்வகையில் இராமலிங்கர் பற்றிப் பேசும் தண்டபாணி சுவாமிகள் பிரித்தானியர் எதிர்ப்புப் போரில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிகிறது. அவர் எழுதியுள்ள 'ஆங்கிலேயர் அந்தாதி இதற்கு நல்ல சான்று.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 219
நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்" என்று சமணராட்சியை எதிர்த்து முழங்கிய வீரத்துறவியான அப்பர் சுவாமிஜகளின் வழித்தோன்றலான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் ஆங்கிலியராட்சிக் கெதிராக முழங்கியுள்ள முழக்கங்களை அவரது அனைத்து நூல்களிலும் ஆங்காங்கே காணலாம்.
நிரைபடப் பசுவனந் தந்தினம் கொண்றுதினும்
நீசர் குடைநிழலில் வெம்பித்
தரைமகள் அழும்தயர் சகிக்கறிகிலேன்: மனச்சாட்சி யன்றியுண்டோ?
(திருத்தணிழைகப்பதிகம்)
வெள்ளையராட்சியைக் கொடுங்கோலென்றும் அவர் குடையை 'கருங்குடை' என்றும் அவர்களை இழிந்த பேய் போன்றவர் எனுங் கருத்துடன் குணுங்கர் எனும் சொல்லால் இழித்தும் பழித்தும் குறிக்கின்றார்.
"நாயச் சிறுவாலே யனைய குணுங்கர்’
‘புலை வெண் குணுங்கர்’
"வீணுரையாடும் வெண் குணுங்கர்"
"எமன் ஒக்கும் ஆங்கிலியர்
"எல்லாம் கொன்றுண்ணும் குணுங்கர்"
"மானம் அணுவளவேனும் இலாக் கொடுவஞ்சகர்’
"புல்லறிவாண்மை பொலி ஆங்கிலியர்'
'திருட்டுத் தனமை கை வந்த ஆங்கிலியர்'
இவ்வாறு ஆங்கிலேயரைச் சாடுகின்ற சுவாமிகள் ஆங்கிலியர் ஆட்சியை அகற்றும் வல்லமை படைத்த தலைவன் ஒருவனை, வீதனை, சித்தனைப் படைத்துத் தருமாறு இறைவனிடம் வேண்டுகின்றார். ஆங்கிலியர் ஆட்சியால் விளைந்த போடுகள் ஆங்காங்கே சுட்டப்படுகின்றன. செந்தமிழ்ப் பயிற்சி மறைந்து ஆங்கில மொழி மோகம் மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் செந்தமிழ்ப் புலவர்கள் வாடுகின்றனர் என,
"கன்னி நண் நாட்டில் பிறந்தாரும் ஈனக்கலை பயில இன்னிசைச் செந்தமிழ்ப் பாவாணர் வாடுறும் இக்கொடுமை'
எனக் குறிக்கின்றார். மேலும் கீர்த்தனைப் பாடலொன்றில் கள், சாராயம்) தேனுbr) மேலாகச் சிறப்புப் பெற்றமையும் 'வேளாண்மைத் தொழிலிலிலும் பெரும் லாபம்

Page 117
22 ()
மெளனம்
வக்கில் தொழிலில் கிட்டுவதும் மனைவி கணவனை அடக்குவதும் வெள்ளையராட்சியால் விளைந்த கொடுமைகள் எனக் குறிப்பிடுகின்றார்.
(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், ஆங்கிலியர் அந்தாதி, 1985 :முன்னுரை : 3-4)
இந்தப் பின்புலத்தில் வெகுசன இயக்கமாக இருந்த பிரித்தானியரது
எதிர்ப்புப் போரில் இராமலிங்கரின் மெளனம் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுபற்றியும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
எனவே இராமலிங்கர் 19ஆம் நூற்றாண்டின் சமூக இயக்கமான சமயம்
சார்ந்த செயல்பாடுகளில் வெகுசனப் போக்கிலேயே அவர் செயல்பட்டிருக்கிறார். அவர் பேசும் 'சமரச சுத்த சன் மார்க்கம் இதனை முதன்மைப் படுத்துகிறது. அதற்கென அவர் எளிய பாடல்களையும் உரைநடைகளையும் கையாண்ட போக்கு வெகுசனக் கருத்தியல் நோக்கியதாக இருக்கிறது. நாவலர் மரபு, சாதி ஆதிக்க நிலை மரபாகவே இருக்கிறது.
சான்று நூல்கள்.
1.
கனக ரத்தினம்.வை. (பதி) வே.கனகரத்தின உபாத்தியாயரின் பூரீலழரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம், ஏழாலை- புவனேஸ்வரிஅம்மன் கோயில், 1994. தண்டபாணி சுவாமிகள், வண்ணச்சரபம், ஆங்கிலியர் அந்தாதி,முத்தமிழ் அருள் நெறிமன்றம், 1985, சென்னை 600 005 ராஜ் கெளதமன், கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக..! சி.இராமலிங்கம் (1823 -1874) தமிழினி 2001, சென்னை-600 014 வள்ளலார் அருட்பிரகாச, திரு அருட்பா உரைநடைப் பகுதி. (பதி) ஊரன் அடிகள், இராமலிங்கர் பணிமன்றம், இரண்டாம் பதிப்பு, 1981, சென்னை-600 086

பேரா. சி. மெளனகுருநாடக ஆய்வு, தமிழியல் ஆய்வு, நாடக எழுத்து, நாடக வாக்கம், என்பனவற்றில் ஈடுபட்டதுடனர், இலக்கியப்
படைப்பாளியாகவும் இருந்தார். சிறுகதை, குறுநாவல், கவிதை, இசைப்பா என்ற வடிவங்களையும் ஆக்கியுள்ளார். பேரா. சி. மெளனகுருவின் படைப்புலகம் பகுதி V ஆக வருகிறது. நாடகம் தவிர்ந்த அவரது படைப்புக்கள் வகைக்கு ஒன்றாக இங்கு
தரப்பட்டுள்ளன.
வெ. தவராஜா (பதிப்பாசிரியர்)
பகுதி V
படைப்புலகம்

Page 118

குறுநாவல்
BFT6B560Ť
- சிமெளனகுரு -
குருஷேத்திர யுத்த களம்
பாரதப் போருக்கு பாண்டவரும் கெளரவரும் தேர்ந்து எடுத்த இடம் சமந்த பஞ்சகம், பாரதப் போர் முடிந்து ஒரு மாத காலமாகி விட்டது.
கெளரவரும் பாண்டவர்களும் அவர்கள் சார்பில் ஆரியவர்த்தத்தைச் சார்ந்த அனைத்து கணங்களும் அரசுகளும் மோதிய வெட்டவெளி. இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய வெறுமையிலே தனித்துக் கிடக்கின்றது.
இரத்த ஆறு ஓடி உலர்ந்த பூமியிலே அழுகிய உடல்களின் பிணநெடி இன்னும் நாறிக் கொண்டு தான் இருந்தது. சிறிய மலைகள் உருகி ஓடுவது
7
స్టీ
രല്ല
போல இறந்த யானைக் குவியல்களிலிருந்துநினம் ஒழுகிக் கொண்டிருந்தது.
குவியல் குவியலாக குதிரைகளின் கபாலங்கள், மண்டை ஓடுகள்,
தலைமயிர்கள், எத்திசை நோக்கினும் எலும்புகள், எலும்புகள், எலும்புகள்.
போர்முடிந்ததன் பின்னர் யுத்தபூமிக்கு தினமும் வந்து சோகமும் துயரமும் விரக்தியும் கலந்த முகத்துடன் யுத்த பூமியை வெறித்து தினமும் பார்த்துச் சென்ற பெண்களினதும் முதியவர்களினதும் கூட்டம் இப்போ வருவதில்லை. யுத்த நாட்களில் மிக வேகம் மிகுந்த மனிதர்கள் அசைந்து திரிந்த அப்பகுதியில் இன்று
மனித நடமாட்டமே இல்லை.
குருசேத்திரத்தைச் சுற்றியிருந்த பத்துக் கிராமங்களிலும் வசித்த எவரும்
இல்லை. காற்று மட்டுமே அக்கிராமங்களில் நடமாடித் திரிந்தது.
வெறுமை, வெறுமை, வெறுமை எங்கும் வெறுமை நிறைந்திருந்தது.

Page 119
n n மெளனம்
மனித மனங்களின் குரோதங்களுக்குச் சாட்சியாக குருசேத்திரமும் காட்சி தந்து கொண்டிருந்தது.
மக்கள் நடமாட்டமேயில்லாத அந்த மயான பூமியில் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
யோக தண்டத்தை ஒருகையால் பூமியில் ஊன்றிக் கொண்டு மறுகையை இடுப்பிற்பதித்தபடி அவன் நின்ற நிலை ஒரு சிற்பத்தை நினைவூட்டியது.
நாற்பது ஆண்டுபிராயத்தினன். கெளமீனதாரி. உடல் முழுவதும் சாம்பல் பூச்சு. கையிலே ஒரு தண்டம். தலையின் சடாமுடிகள் மார்பிலும் முதுகிலும் தவழ, சிவந்த கண்களால் யுத்த களத்தை வெறித்துப் பார்த்தபடி அவன் நின்று கொண்டிருந்தான்.
சிந்தனா வயப்பட்டவனாக நிற்கும் அவன் வெகு தொலைவில் இருந்து நீண்ட பயணம் செய்தவன் போல தெரிகின்றான். வெறுமை நிறைந்த யுத்த பூமியில் தன்னந் தனியனாக நிற்கும் அவனை ஒரு நாய் தூரத்திலிருந்து பார்த்துக் குரைத்து விட்டு தன் வேலையைத் தொடர்கின்றது. w−
அதைத் தினையளவுதானும் கவனிக்காதவனாக யுத்த களத்தைப் பார்த்தபடி அத்தினாபுரி நகரை நோக்கி அவன் செல்ல ஆரம்பிக்கின்றான்.
அத்தினாபுரம்
ஆரிய வர்த்தத்தின் தலைநகர்
துரியோதனின் அரவக் கொடி பட்டொளி வீசிப் பறந்த பூமி. இப்போது தருமனின் முரசக் கொடி பறந்து கொண்டிருக்கின்றது.
அரவக் கொடிக்குப் பழக்கப்பட்ட மக்கள் : மெல்ல முரசக் கொடிக்கு பழக்கமாகிக்
காண்டு வருகின்றார்கள்.
அத்தினாபுரத்தின் ஆட்சி கைமாறி விட்டது. துரியோதனன் த/ தம்பிமாரோடும், கர்ணனோடும் நடந்தும் ரதத்திலும் கலகலப்பாகப் பவனிவந்த அத்தினாபுர வீதிகளில் பாண்டவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் நடந்தும் ரதத்திலும் பவனிவருகிறார்கள்.
யுத்த சோர்வு, தம் உற்றார் உறவினரை இழந்த வருத்தம் எல்லா முகங்களிலும், மக்கள் முகங்களிலும் கூட சோர்வும், வாட்டமும், அத்தினாபுர மக்களின் மகிழ்ச்சியைக் காலம் அடித்துக் கொண்டு சென்றுவிட்டது.
 

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 225
போர் தந்த இறுக்கமான மனோபாவம் அவர்களிடம் தளர்ந்து வட்டது. எனினும் பாரதப் போர்ச் சிந்தனைகளிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.
போரின் சாதக பாதகமான கதைகளிலும் இழப்பின் துயரங்களிலும் மக்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
சுவைத்துச் சாப்பிடுவதில் மக்களுக்கு நாட்டம் குறைந்திருந்தது. உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுவது போல சாப்பாட்டை நினைக்கிறார்கள். ருசிபேதம் நாவை விட்டுச் சென்றுவிட்டது.
துயரமும் சோகமும் வெறுமையும் மனத்தை ஆக்கிரமித்திருக்கையில் நாவில் ருசி எப்படித் தோன்றும்?
துரியோதனனும் தம்பிமாரும் வாழ்ந்து சுகித்திருந்தஅறைகளையும், மாளிகைகளையும் இடங்களையும் பாண்டவர்கள் ஐவரும் தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். துரியோதனன் மாளிகையில் தர்மர் இருக்கிறார். துச்சாதனன் வீட்டை வீமன் தனதாக்கிக் கொண்டான். அத்தினாபுர அரண்மனைக்குள் பாண்டவர்களும், அவர் தம்மைச் சார்ந்தோரும் இருந்து கொள்ள கெளரவ குடும்பத்தினர் வேறு இடங்களில் ஒதுங்கிக் கொண்டனர்.
ஒருமாத காலம் பிதிர்களுக்கான பிதுர்க்கடன்கள் நடைபெற்றன. இப்போது தருமனின் பட்டாபிசேகத்திற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உற்சாகமற்ற மக்களுக்கு உற்சாகமூட்டும் வேலைகளைச் செய்யும்படி புதிய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இந்தப் பின்னணியிலே அந்தக் குரல் மீண்டும் கேட்கிறது. அந்தக் குரல் அத்தினாபுர வாசிகளுக்கு புதிய குரல் அல்ல. நான்கு திசைப்பாதைகளும் சந்திக்கும் நடு மையத்திலே ஓங்கி வளர்ந்து கிளைபரப்பி நிழல் தந்து நிற்கும் பெரிய சடைத்த அரசமரத்தின் கீழ் அக்குரலுக்குரியவன் நிற்கிறான். அம்மரத்தின் கீழ் மக்கள் கூட்டமொன்று அக்குரலை செவிமடுத்தபடி நிற்கின்றது.
மக்கள் கூட்டத்தினுள் ஒருவராக பூர்சிரவஸ் நிற்கிறார். அறுபது ஆண்டு அவர் வாழ்ந்து விட்டாலும் கட்டுக்குலையாத உடம்பு ஏர் பிடித்து உழுதமையால் வலுவேறிய கையும் உடலும், ஏர் பிடிக்காத காலங்களில் துரியோதனன் அரண்மனையில் வாயில் காவலன் வேலை. அரண்மனையில் சில காலமும், வயல்வெளியில் சில காலமுமான வாழ்க்கை. அத்தினாபுரத்தை உள்ளும் புறமும் அறியும் வாய்ப்பு அவருக்கிருந்தது.
அண்மையில் நடந்து முடிந்த குருசேத்திர யுத்தக்களத்திலே அவரது வயது முப்புக் காரணமாக போரில் கலந்து கொள்ள அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. தன் எஜமானுக்கு விசுவாசத்தைக் காட்ட முடியவில்லையே என்ற துயர் அவருக்கு. வயது மூப்பினால் சண்டைக்கு அவர் லாயக்கற்றவராகி விட்டார். துரியோதனன் சேனையில் ஒரு பிரிவினருக்கு சமைத்துப் பரிமாறும் பரிசாரகனாகத்தான் அவரின் போர்ப்பங்களிப்பு இருந்தது.

Page 120
226 மெளனம்
கெளரவர் பக்கம்தான் அவர் செயற்பட்டார். போரிலே தனது இரண்டு அன்புப் புதல்வர்களையும், தனது மூன்று மருமகன்மாரையும் இழந்திருந்தார். அவரோடு இப்போது கணவன்மாரை இழந்த அவரது இரண்டு பெண்பிள்ளைகளும், மூன்று மருமக்களும் இருக்கிறார்கள். இவர்களோடு அவர்களது சின்னம் சிறு பிள்ளைகளும். அவரது குடும்பம் பெரியது. ஐந்து ஆண்களை ஒரே நேரத்தில் இழந்தமை அக் குடும்பத்தின் அத்திவாரத்தையே உலுக்கியிருந்தது.
உற்சாகமாகத்தான் போரில் இறங்கினார்கள். மன்னன் துரியோதனுக்காகக் களத்தில் இறங்குவதை மகிமையாகத்தான் கருதினார்கள். போர்ப்பயிற்சி பெறும் போது பூரித்துப் போனார்கள். தன் கையால் சமையல் செய்து சேனைகளுக்கு பரிமாறுகையில் பூர்சிரவஸ் தன் வாழ்வின் பயனையே அடைந்து விட்டதாக இறும்பூதெய்தினார்.
போர் முடிந்து யதார்த்த நிலைக்கு வந்த பின்னர்தான் இழப்பின் உக்கிரம் அவருக்குப் புரிந்தது.
எப்போதும் கண்ணிரோடு இருக்கும் அன்பு மக்களும், மருமக்களும், இழந்த தந்தையரை நினைத்து பேசும் பேரப்பிள்ளைகள். வாழ்வையே தொலைத்து விட்டதுபோல சோகம் அவரை வாட்டியது. வீட்டுப் பெண்களின் துயரம் தோய்ந்த முகங்களும், பெருமூச்சுகளும். வெறித்த பார்வையும் அவர் மனதில் பெரும் சலிப்பினையே ஏற்படுத்தியிருந்தன. தந்தையரை அடிக்கடி நிவுைகூரும் பேரப்பிள்ளைகளின் குரல்கள்.அவருக்குக் தாள முடியாத துயரத்தையே தந்தன. காலையில் தனது கடமைகளை முடித்து விட்டு வீதிக்கு வந்த பூர்சிரவஸ் அந்தக் குரலால் கவரப்பட்டு தன்னையறியாமலே நாற்சந்தி நடுவில் நிற்கும் அரசமரத்தடிக்கு வந்துவிட்டார். அந்தக் குரல் மீண்டும் கேட்கிறது. பூர்சிரவஸ் அக் குரலை தன் வாழ்நாளில் மூன்றாவது தட வையாகக் கேட்கிறார். அக் குரலையும் அக்குரலுக்குரியனையும் அவரால் எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. இதே குரலை அவர் பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் இதே அத்தினாபுர நகரில் இன்னொரு பகுதியிலே கேட்டிருக்கிறார். அப்போது பூர்சிரவஸசக்கு நாற்பத்தியேழு வயது. இளமையின் கடைக்கூற்றில் அவர் வாழ்ந்த காலம், துரியோதனாதியோருடன் பாண்டவர்கள் சூதாடித் தோற்ற மறுநாள் தனது நண்பர்களுடன் அது சம்பந்தமாக தனது கருத்துக்களை விவாதித்துக் கொண்டு நின்ற போது இக்குரல் அவருக்குக் கேட்டது. அக்குரலில் தெரிந்த எச்சரிக்கைத் தொனி இன்றும் அவர் மனதில் இருக்கின்றது.
முதற் தடவையாக அத்தினாபுர தெருவொன்றிலே ஒலித்த அக்குரலை அத்தினாபுர மக்களின் கணிசமானோர் கவனித்ததை பூர் சிரவஸ் அவதானித்திருந்தார். அவரும் அக்குரலால் கவரப்பட்டிருந்தார்.
சரியாக பதின் மூன்று வருடங்களின் பின் அந்தக் குரல் மீண்டும் அத்தினாபுரத்தின் இன்னொரு தெரு மூலையிலே இரண்டாவது தட வையாக ஒலித்தது. அது முக்கியமான ஒரு காலகட்டம். பஞ்சபாண்டவர்கள்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 227
அஞ்ஞாதவாசம் முடித்து வந்த பின்னர் கண்ணனைத் தூதனுப்பி துதெல்லாம் பயனற்றுப் போய் போரே இறுதி முடிவு என்றாகிய பின் கெளரவரும் பாண்டவரும் போருக்குரிய ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்த காலப்பகுதி அது. ஆரியவர்த்தம் முழுதுமே போர்ச் சூழலுக்குள் அகப்பட்டு போர் வெறி கொண்டு வேறு எந்தச் சிந்தனைகளுமேயில்லாது ஒரே முகமாக போர் என்று நின்ற காலம் அது. போர்முனைப்புக்களிலிடுபட்டு நின்ற அத்தினாபுர மக்களுக்கு அக் குரலை கேட்க நேரமிருக்கவில்லை. கேட்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. ஒரு சிலரே அக்குரலை அவதானித்தனர். பதின்மூன்று வருடங்களின் பின் அக்குரலில் ஒரு முதிர்வு தெரிந்தது. நிதானம் இருந்தது. குரலுக்குரியவன் தோற்றத்திலும் ஒரு முதிர்ச்சி தெரிந்தது. பூர்சிரவஸ" க்கு அப்போது அறுபது வயதாகி விட்டது. அனுபவங்கள் தந்த அறிவினால் அக்குரலின் அர்த்தங்கள் பல புலனாகியும் அவரால் அவற்றை முழுதாக அன்று ஏற்க முடியவில்லை. ஏற்காமலும் இருக்க முடியவில்லை. எனினும் போர்ச் சிந்தனைகளினால் குரல் தந்த கருத்துக்கள் மழுங்கடிக்கப்பட்டு விட்டன.அப்போது அக்குரலிலே தொனித்த ஒரு விமர்சனத் தன்மையினை போரின் கொடுமை பற்றி விஸ்தரிப்புக்களை இன்றும் அவர் மறக்கவில்லை. அன்று மக்களால் கல்லடி பட்ட அக்குரலுக்குரியவன் இறந்து விட்டான் என்றே பூர்சிரவஸ் எண்ணியிருந்தார்.
இப்போது -
அதே குரலை பூர்சிரவஸ் மீண்டும் கேட்கிறார். போரினால் ஏற்பட்ட பெரும் இழப்புக்களினால் ஏற்பட்ட அனுபவங்களினால் நெகிழ்ந்த மனதோடு இப்போது அக்குரலைப்பூர்சிரவஸ் செவிமடுக்கிறார்.
இப்போது குருசேத்திரப் போர் முடிந்து ஒருமாதகாலமாகிவிட்டது. போர் எற்படுத்திய மனப்புண்களும் உடற்புண்களும் உலர்ந்தும் உலராத நிலையிலே தருமனின் பட்டாபிஷேகத்துக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. போரினால் அலமந்துபோன அத்தினாபுரம் மீண்டும் உயிர்பெற ஆரம்பிப்பது போல இருக்கிறது. அத்தினாபுர தெருக்களில் வண்டில்களும், மனிதர்களும் மீண்டும் நடமாட ஆரம்பித்து விட்டார்கள். எத்தனைவிதமான முகங்கள். குருசேத்திரக் களத்தில் ஈடுபடாதோர் எவருமில்லை. யாராவது ஒருவர் வெற்றி பெற்றவர் பக்கம் சார்ந்தவராயிருப்பார். அன்றி தோல்வியுற்றோர் பக்கம் நின்றிருப்பார். தோல்வி பெற்றோர் முகமெல்லாம் சோர்ந்து கிடந்தன. வெற்றி பெற்றோரும் சோர்ந்தே இருந்தனர். வெற்றியோ தோல்வியோ போர் எனில் எஞ்சுவது என்ன? இழப்பு, துயரம், சோகம் இவைதானே.
இந்தப் பின்னணியிலேதான் மூன்றாவது தடவையாக அக் குரலை பூர்சிரவஸ் கேட்கிறார். இம்முறை அக்குரலில் தொனிக்கும் உணர்ச்சி என்ன? பூர்சிரவஸ் முதற்குரலை ஞாபகப்படுத்துகிறார். அக்குரலில் தொனித்தது விமர்சனம். இரண்டாவது குரலை மீட்டு மனசுக்குக் கொணர்கிறார் பூர்சிரவஸ். அக்குரலில் ஒலித்தது கண்டனம். இப்போது ஒலிக்கும் குரலை நன்ாா 1

Page 121
228 மெளனம்
அவதானிக்கிறார். இதில் ஒலிப்பது என்ன?ஆம். இதில் ஒலிப்பது முழுக்க முழுக்க ஒருவகைக் கிண்டல், ஆம் நொந்த மனதின் கிண்டல், கோபம் கலந்த கிண்டல், "மடையர்களே" என மக்களைப் பார்த்து மட்டம் தட்டும் கிண்டல், அந்தக் குரலை பூர்சிரவஸ் அவதானிக்கிறார்.
பிசிறு அல்லாத வெண்கலத்தொனி, வார்த்தைகள் அளவாய், அழகாய், தெளிவாய் வருகின்றன. சொற்களைக் குரலுக்குரியவன் ஏற்ற இறக்கத்துடன் இடைவெளிவிட்டு கூறுகிறான். அவன் ஹற்ருதயத்திலிருந்து அவ்வார்த்தைகள் வருவதை அவனின் உணர்ச்சி மிகுந்த குரல் காட்டுகிறது.
அக்குரலிலே இப்போது மக்கள் கூட்டத்தின் பெரும்பான்மை தன்னை இழந்து கிடக்கிறது. பூர்சிரவஸ0ம் அக்குரலில் கட்டுண்டு கிடக்கிறார். அக்குரல் அங்குள்ளோர் நினைப்பதையல்லவா கூறுகிறது.
பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் அக்குரலுக்குரியவன் தன்னை அறிமுகம் செய்தமை பூர்சிரவஸ7க்கு ஞாபகம் வருகிறது.
"பிரகஸ்பதியின் மாணவனான சார்வாக சிந்தனைப் பரம்பரையில் வந்த சார்வாகன் வந்திருக்கிறேன். தர்மம் என்ற பெயரிலே அதர்மம் நடக்கிறது. வேதசூத்திரங்களின் துணையோடு அதர்மம் தர்மமாக ஆதிக்கம் செலுத்துகிறது. நாலுவருணப் பாகுபாட்டையும் ஞாயப்படுத்துகிறது பிராமணதர்மம். அதற்கு எதிராக நான் குரல் தருகின்றேன் வேத உபநிடத விற்பன்னர்களே வாருங்கள்! தவளைகள் போல் வேதங்களை ஓயாமல் கூவிச் சத்தமிடும் மூடர்களே என்னுடன் வாதிட வாருங்கள் மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் உங்களுடன் வாதிட வந்துள்ளேன்."
கொய்யாமரக் கிளையினால் செய்யப்பட்ட தண்டத்தை நாட்டி அதன முன்னால் பத்மாசனமிட்டபடி இருந்த ஓர்இளைஞன் தான் இதனைக் கூறினான். நீண்டநாசியும், அகன்ற பெரிய நெற்றியும், சிவந்த மேனியுமாகக் காட்சி தந்த அவ்விளைஞன் சாம்பல் பூசிய வெற்று மேனியுடன் பெருச்சாளித் தோலினாலான கெளமீனம் அணிந்து காட்சி தந்தான். அவன் கண்களில் தெரிந்த அமானுஷ்ய ஒளி அனைவரையும் அவன்பால் ஒருவித பயம் கொள்ள வைத்திருந்தது.
அவனைச் சந்தித்த முதற் சந்திப்பும் பூர்சிரவஸ" க்கு நன்கு ஞாபகமிருக்கிறது. அவரும் சில கணப்பொழுதுகள் அவன் குரலிலும், கண்களின் ஒளியிலும் கட்டுண்டு கிடந்தவர் தான்.
பதின்மூன்று வருடங்களின் பின் மீண்டும் அவனைப் பார்க்கையில் அவனது உடல் சற்று தளர்ந்திருந்தது. முப்பது ஆட்டைப் பிராயத்தினனாக அன்று இருந்த இவனுக்கு இப்போதுநாற்பத்திரண்டு ஆட்டை இருக்கும். உடல் தளர்ந்திருப்பினும் அவன் கண்களில் பார்வை முன்னை விடத் தீட்சண்யமாக இருந்தது. முகத்தின் பிரதாசம் முன்னைவிட அதிகம் இருந்தது. தலையில் பல நரைமயிர்கள் அவன் முதுமையின் வாசலில் காலடி வைப்பதைக் கட்டியம் கூறின. ஆனால் முன்னைய

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 229
விட நிதானமான பேச்சு. அட்டகாசமான, துரக்கி எறிந்த அவன் பேச்சு இப்போது gണ്ഡങ്ങണ്ഡ,
அவன் வாய் அசைவினையும் தடி சுழற்றும் இலாவகத்தையும், தீட்சணியம் மிகுந்த அவனது கண்களையும் வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றனர் மக்கள். பலரது முகங்களில் வியப்பு. சிலரது முகங்களில் சினம். அவன் நின்று கொண்டிருந்தான். அவன் தலையிலிருந்து விரிந்த சடைகள் அவன் மார்பிலும் முதுகிலும் அவன் பேச்சினதும் அங்க அசைவினதும் தாளத்திற்கு ஏற்ப அசைந்த படி இருந்தன. அவன் மேல் முழுதும் சாம்பல், நெற்றியில் இருந்த நீளமான செம்மை நிறக் கோடு மூன்றாவது கண்போல தோற்றமளித்தது. அவனது நீண்ட கெளமீனம் ஆடைகள் துறந்த பற்றற்ற மனநிலையை உணர்த்தியது. தீட்சண்யம் மிகுந்த அவன் பார்வை அவனது அறிவுக்குச் சான்று பகன்றது.
நீண்டு வளைந்து கொய்யாத் தடியை வலது கையால் சுழற்றிச் சுழற்றி அவன் பேசினான்.
"அத்தினாபுரத்துமக்களே, குருசேத்திர யுத்தக்களத்திலே கணவர்களை இழந்த மனைவியரே, காதலனை இழந்த காதலியரே, புதல் வரை இழந்த பெற்றோரே, சகோதரர்களையும், அன்பிற்குரியவர்களையும் அன்பிற்குரிய ஆனை குதிரைகளையும் போரிலே பறிகொடுத்த பாவிகளே! சற்று உங்கள் செவிகளை என் சொற்களுக்கு கடன் கொடுங்கள்"
"யாருக்காக உங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தீர்கள்? துயரத்தின் இருட்போர்வையால் மூடுண்டு எதிர்கால சூனிய வெளியை இப்போதே கண்டு நடுநடுங்கி நிற்கும் அற்ப நெஞ்சங்களே யாருக்காக இத்துயரைச் சுமந்து கொண்டு வாழ்கிறீர்கள்?
பெரும் சூதாட்டக்காரனும், தன் மனைவியின் சம்மதம் கேட்காது அவளைச் சூதிலே பணயம் வைத்தவனும், வில்வித்தை பயிற்றிய குருவான துரோணரைக் கொல்ல யுத்தக்களத்திலே பொய் சொன்னவனும் மகா தர்மவான் என்று பிராமணர்களால் பிரசாரப்படுத்தப்பட்டவனுமான தர்மன் முடி சூடப்போகிறான். தம்பியர் நூற்றுவரைக் கொன்று தனையர்கள் பலரைப் பலிகொடுத்து ஆயிரக்கணக்கான வீரர்களின் குருதியை கங்கை நதியோரத்தில் ஒடவிட்ட கயவன் வெட்கமில்லாது புரோகிதர்கள் யாகம் செய்ய, பூரண கலசங்கள் வைக்க நாளை முடிசூடப்போகிறான்.
துரியோதனனுக்குரிய அத்தினாபுர நகரம் பாண்டவர்கள் கைகளுக்கு மாறிவிட்டது. அதிகாரத்தை கைப்பற்ற இரண்டு அதிகாரக் கும்பலுக்குமிடையே நடந்த யுத்தத்தில் நீங்கள் மந்தைகளாக யாரோ ஒருவர் பக்கம் நின்றீர்கள். வெறியுடன் ஒருவரையொருவர் கொன்றீர்கள். வெறி அடங்கியது. பாண்டவர் வென்றார்கள். மற்றவர்கள் தோற்றார்கள். மக்களும் தோற்றார்கள்".
"மக்களும் தோற்றார்கள்" என்பதனை அழுத்திச் சொல்லி விட்டு தொடர்கிறான் சார்வாகன்.

Page 122
230 மெளனம்
"வெற்றிக்களிப்பிலே பாண்டவர்கள் இருக்கிறார்கள். வெற்றியா அது? சொந்த பந்தங்களின் பிணத்தின் மேல் கட்டப்பட்ட வெற்றி ஒரு வெற்றியா? ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட வெற்றி மகிழ்ச்சி தருமனின் முகத்திலே. அந்த யுத்தத்தை தர்மயுத்தம் என்று ஞாயப்படுத்தும் கிருஷ்ணனின் வாதங்கள் வேறு"
இவ்வளவும் கூறி விட்டு சார்வாகனன் தன் முன் நின்று மக்களின் முகங்களின் அவர்களின் உணர்வுகளையும் தன் தீட்சண்ய பார்வையால் அவதானிக்கிறான். மக்களின் முகவாட்டம் அவன் கண்களில் படுகிறது. பேச்சைத் தொடர்கிறான்.
"உங்கள் முகத்திலே ஏன் இந்த வாட்டம்? வியாசமுனிவர் பார்வையிலே கிருஷ்ணரின் ஆசியுடன் தருமன் முடி சூடப்போகிறான். தர்மராஜ்யமல்லவா வரப்போகிறது. மகிழ்ச்சிகரமான புதுயுகமல்லவா தோன்றப் போகிறது. அந்த மகிழ்ச்சியின் அடையாளத்தை உங்கள் முகங்களிற் காணவில்லையே? அனைவரும் உங்கள் இழப்பின் பாரங்களை நெஞ்சிலே சுமந்தபடி நிற்கிறீர்கள். அவர்கள் நினைவுகள் தீயாக உங்கள் ஹற்ருதங்களைத் தகிக்கின்றன. இழந்த உம் புதல்வர்கள், இழந்த உம் கணவர்கள் உங்கள் கனவுகளில் வருகிறார்கள். அவர்கள் நினைவுகள் உங்களை அழுத்துகின்றன."
பூர்சிரவளியின் மனம் இரும்புக் குண்டாய் கனத்தது. 'ஓ சார்வாகா என்மனதில் எழும் எண்ணங்களை எப்படி இனம் கண்டாய்? என் இழப்புக்களை எப்படி அறிந்தாய்' பூர்சிரவளியின் இரண்டு இளம் புதல்வர்களினதும் முகங்கள் அவன் முன் தோன்றின. அவர்கள் இருவரையும் மார்பிலும் தோளிலும் சுமந்து வளர்த்த காலங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. அவன் கண்களில் மட்டுமா கண்ணிர் அருகில் நின்ற இன்னொரு முதியவரின் கண்களிலும் கண்ணிர். அவர் தன் குடும்பத்தில் எத்தனை பேரை இழந்தாரோ? மெளனம் இரைச்சலாக மாறியது. தமது இழப்புக்களை அப் பெண்கள் எண்ணினரா? போரிலே பறிகொடுத்த அவர்களது புதல்வர்களதும், கணவரதும், நினைவுகள் மனதை ஆக்கிரமித்தனவா? "ஐயோ என்ரமகனே, யுத்தகளத்தில் பலிகொடுக்கவா உன்னைப் பெற்று வளர்த்திருந்தேன்” என்ற ஒரு பெண்ணின் ஓங்கிய ஒப்பாரி ஒலி அனைத்து விசும்பல் பேரிரைச்சலையும் கிழித்தபடி மேலெழுந்தது.
மக்களின் விசும்பற் பேரிரைச்சலையும், இரைச்சலையும் கிழித்த எழுந்த ஒப்பாரியை நிதானமாக உள்வாங்கிய சார்வாகான் தனது பேச்சைத் தொடர்ந்தான்.
"அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அதிகாரமே அடிநாதம். ஆளும் கூட்டத்தினர் அதிகாரத்தை, கையில் எடுத்துக் கொள்கிறார்கள். அறிஞர்களும், இலக்கியங்களும், மதங்களும் அதிகாரத்திற்குச் சார்பாகவேயுள்ளனர். தம் கருத்துக்களால் மக்கள் மனதிலே அதிகாரத்தை ஞாயப்படுத்தும் மனோநிலையை உருவாக்கி விடுகிறார்கள். அதிகாரம் சார்ந்த கருத்துக்கள்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 23
உருவாக்கப்படுகின்றன. உருவாக்கப்பட்ட கருத்துக்களுக்கு மக்களும் அடிமைகளாகி விடுகிறார்கள்"
"கெளரவரின் அதிகாரம் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டது. இதோ பாண்டவரின் அதிகாரம் ஆரம்பமாகப் போகிறது. பாண்டவரின் அதர்மங்களை ஞாயப்படுத்த இனி வியாசர் வந்துவிடுவார். கிருஷ்ணன் ஒத்து ஊதுவான்.
"பாண்டவர்கள் அதர்மர்களா என்ன உளறுகிறாய்?" கூட்டத்திலிருந்து எழுந்தது ஒரு குரல், "குரலுக்குரியவரே என் முன் வாருங்கள்" என்றான் சார்வாகன். ஒரு முதியவர் அவன் முன் சென்றான். "பாண்டவர்கள் தர்மவான்கள், கெளரவர்கள் அதர்மவான்கள் என்ற கருத்து வேதியரால் திட்டமிட்டு பரப்பப்பட்ட கருத்துகள் தமக்குரித்தில்லாத நாட்டைப் போர் புரிந்து வென்ற பாண்டவரா தர்மவான்கள்"? சார்வாகன் வினா எழுப்பினான்.
கூட்டத்தினர் மத்தியில் சிறிது சலசலப்பு எழுந்தது. "என்ன இவன் உளறுகிறான்" என்றனர் சிலர். "இவன் யாருடைய ஆள்?" என்றனர் சிலர். "பயித்தியகாரன் என்றனர் சிலர்" யோசித்தபடி நின்றனர் சிலர். "பாண்டவர்கள் பாண்டுவின் புத்திரரா?" வினாக் குண்டை வீசி எறிந்துவிட்டு மக்கள் திரளிடமிருந்து பதிலை எதிர்பார்த்தபடி நின்றான் சார்வாகன்.
சனத்திடமிருந்து பதில் வரவில்லை. சார்வாகனே பதில் கூறினான். "அவர்கள் குந்தியின் புதல்வர்கள், பாண்டுவின் புதல்வர்களல்ல. குந்திக்கும், மாத்ரிக்கும் பிற கணவன்மார்களான இயமன், வாயு, இந்திரன், அசுவினி தேவர்கள் மூலம் பிறந்த புத்திரர்கள் அவர்கள். பாண்டுவின் அரச இரத்தம் பாண்டவர்கள் உடலில் ஓடவில்லை எப்படி அவர்கட்கு அரசுரிமை சேரும்?"
அரச தர்மப்படி திருதராட்டிரன் மகன் துரியோதனனுக்குத் தானே அரசுரிமை. தமக்குரித்தில்லாத நாட்டை லட்சக்கணக்கான அப்பாவி மக்களைப் பலிகொடுத்துப் பறித்தெடுத்த பாண்டவர்கள் தர்மவான்களா?"
இக்கருத்துக்களை மக்கள் ஏற்கனவே தமக்குள் பேசியிருக்கிறார்கள். சார்வாகன் அவற்றுக்கு அழகாக உருவம் தருகிறான். பகிரங்கமாக உரத்து உண்மை பேசப்படுகையில் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
பாதையிலே முடிசூட்டு விழாவுக்காக யாகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் அத்தினாபுர அரண்மனை நோக்கிச் சென்றபடி இருந்தன. புரோகிதர் கூட்டமொன்று அதன்பின்னால், சார்வாகன் அவற்றைக் கண்ணுற்றான். அவன் முகத்தில் கோபம் பொங்கியது. முகம் சினத்தால் நிரம்பியது.

Page 123
232 மெளனம்
"இதோ யாகம் செய்து வயிறு வளர்க்கும் புரோகிதர் கூட்டம் அரசனுக்கு கடவுளரின் ஆசியைப் பெற்றுக் கொடுக்கக் கூட்டமாகச் செல்கிறது. மக்கள் உழைப்பிலே விளைந்த பொருட்கள் யாவும் யாகத்திற்காக வண்டி வண்டியாகச் செல்கின்றன. வென்று அடக்கிய ஒருவனின் விழாவைக் கொண்டாட துரியோதனனுக்கு புகழ்பாடிய அதே புரோகிதர் கூட்டம் செல்வதைப் பாருங்கள். யாராண்டால் என்ன? அவர்களின் பாதம் கழுவித் தம் வயிறு வளர்க்கும் இக்கூட்டத்தைப் பாருங்கள். அக்கினியை வளர்த்து ஆடுகளை அறுத்து அவியாக்கும் அறிஞர்களைப் பாருங்கள். தாம் படைக்கும் அவியைத் தேவர்கள் வந்து சாப்பிடுவார்கள் என்று கதை விடும் கயவர்களைப் பாருங்கள். இவர்கள் கட்டி விட்ட கதைகள்தான் நான்கு வர்ணம்.
பிரஜாபதியின் தலையிலிருந்து தோன்றிார்களாம் பிராமணர்கள். அவரின் தோளிலிருந்து தோன்றினார்களாம் ஷத்திரியர்கள். அவரின் தொடையிலிருந்து தோன்றினார்களாம் வைசியர்கள். அவரின் பாதத்திலிருந்து புறப்பட்டார்களாம் சூத்திரர்கள். ஒரு பிரமத்திலிருந்து வெளிப்பட்ட இவர்களுக்குள் எத்தனை வேற்றுமைகள். பிராமணர்களின் ஆசியுடனும், வைசியரான வணிகரின் உதவியுடனும் அரசரான ஷத்திரியர் நாட்டை ஆளுகிறார்கள். ஆட்சி புரிய உதவிய பிராமணருக்கு அரசன் தானம் வழங்குகிறான். வணிகரான வைசியரின் சொத்துக்களுக்குத் தன் படைபலத்தால் பாதுகாப்பளிக்கின்றான். சூத்திரர்களின் உடலுழைப்பில் இம் மூவரும் சுகிக்கிறார்கள். கூட்டுக் கொள்ளை, மக்களை சுரண்டிக் கொழுக்கும் இம் மூவர்கட்கும் தர்ம சாஸ்திரங்களில் பாதுகாப்பு.
வர்ண தர்மம், அதை மீறுதல் கூடாது, அதர்மம் என்ற தர்ம போதனைகள்" சார்வாகனன் முகத்திலே பயங்கரமான வெறுப்புணர்வு, புரோகிதர் கூட்டத்தை நோக்கி சார்வாகன் உரத்த குரலில் கூறினான்.
"பாவிகளே உங்கள் அறிவின் அதிகாரத்தை ஏன் மக்களை அடக்கப் பயன்படுத்துகிறீர்கள். ஆயுதம் ஏந்தி உயிர் பறிக்கும் அரக்கர்களுக்கு ஏன் நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள்?"
புரோகிதர் கூட்டத்துள் ஒருவன் சார்வாகனை திரும்பிப் பார்த்தான். பூர்சிரவளUCம் அவனை அவதானித்தார். பார்த்தவன் தேவதத்தன் என்ற பிராமணன். அவன் முகத்திலே குரோத பாவம் தெரிந்தது. அவனை பூர்சிரவஸ் அறிவார். துரியோதனன் அரசவையில் புரோகிதனாக யாகம் செய்தவர்களுள் பின்னிலையில் நின்ற அவன் பாண்டவர்கள் ஆட்சிக்கு வந்ததும் பிரதான புரோகிதர்களுள் ஒருவனாகி விட்டான்.
முதற்தடவை பிராமண தர்மத்தை சார்வாகன் விமர்சித்தபோது அவனோடு வாதிட்டுத் தேவத்தன் அவமானப் பட்டமை பூர்சிரவஸ" க்கு ஞாபகத்திற்கு வந்தது.
"டேய் சார்வாகா தர்மத்திற்கு புதுவிளக்கம் தரும் கலகக்காரா! உன் உடம்பெல்லாம் விஷமடா"

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 233
சார்வாகனைத் திரும்பிப் பார்த்து தேவதத்தன் கூறினான். "உன் பார்வையில் என் உடம்பில் மாத்திரம் தானடா விஷம். நீங்கள் எல்லாம் ஆரியவர்த்தத்தின் மக்கள் மனதில் எல்லாம் வர்ணாச்சிரம தர்மம் என்ற விஷத்தைப் பரப்பி வைத்துள்ளிர்களே! அது தெரியாதா?"
பதிலடி தந்தான் சார்வாகன். சார்வாகனுடன் பேச்சுக் கொடுத்தால் மக்கள் முன் தம்மைப் புட்டுப் புட்டு வைப்பான் என்பது தேவதத்தனுக்கு நன்கு தெரியும். பழைய அனுபவங்களை அவன் மறந்து விடவில்லை.
ஒரு மூடனின் பேச்சை காதில் வாங்காத பாவனையுடன் அவன் யாகப் பொருட்கள் ஏற்றிய வண்டிகளைப் பின் தொடர்ந்தான். இப்போது அவன் சாதாரண புரோகிதன் அல்ல. தலைமைப் புரோகிதர்களுள் ஒருவன். அரசவையின் கெளரவத்திற்குரிய புரோகிதன். நாளைநடக்கவிருக்கும் தர்மனின் பட்டாபிஷேக விழாவில் யாக காரியங்களின் ஒரு பகுதிக்கு அவனைத்தான் பொறுப்பாக்கி. யிருந்தார்கள் விதுரனின் ஆலோசனையுடன்.
தர்மன் தேவதத்தனுக்கு நாளை யாகம் முடிய கனகாபிசேகமும் பதினைந்து தட்டுகள் நிறைய பொற்காசுகளும் தரவுள்ளதாக தேவதத்தன் ஏற்கனவே அறிந்திருந்தான்.
தன் எதிர்காலத்தையும் அதன் பிரகாசத்தையும் மனதில் எண்ணியவாறே அரசாட்சி புரியப் போகும் தர்மனை விமர்சனம் பண்ணும் சாம்பல் பூசிய வெற்றுடம்பினனும், கெளமீனதாரியுமான ஒன்றுக்கும் வழியில்லாத, எதிர்கால இன்பங்களைத் தொலைத்துவிட்ட சார்வாகனை வெறுப்புடன் பார்த்தபடி யோசனையுடன் நடந்தான் தேவதத்தன்.
பூர்சிரவஸசக்கு சார்வாகன் கூற்றுக்களில் நிறைய உண்மைகள் இருப்பது தெரிந்தது. அரண்மனையிலும், மக்கள் மத்தியிலும் இருக்கும் வாய்ப்புப் பெற்ற பூர்சிரவஸ் தன் அறுபது வருட அனுபவத்தில் பல உண்மைகளை அனுபவ பூர்வமாக அறிந்திருந்தார்.
அரண்மனையில் நடைபெறும் அநியாய விரயங்களை மெளன சாட்சியாக இருந்து அவர் கண்டிருக்கிறார். மக்களைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தன் மகன்மாரின் நலன்களில மிக அக்கறை கொண்ட திரிதராட்டிரனையும், அவனுக்கு ஒத்துதிய காந்தாரியையும், அவர் அறிவார். திருதராட்டிரனின் வாயிற் காவலனாக இருக்கும் சந்தர்ப்பங்கள் அவருக்குக் கிடைத்தபோது திருதராட்டிரனதும், காந்தாரியினதும், துரியோதனன், துச்சாதனனதும் உரையாடல்களைக் கேட்கும் சந்தர்ப்பங்கள் அவருக்குக் கிடைத்துள்ளன.
சார்வாகன் சொன்னதுபோல அதிகாரம் ஒன்றுதான் அவர்கட்குத் தேவையாக இருந்தது. தனக்குப் பின் அதிகாரமும் அரசும் தன் மகனுக்குச் சேர வேண்டும் என்பதில் திருதராட்டிரன் மிகுந்த கவனமாக இருந்தான். அண்ணனின்

Page 124
234 மெளனம்
மனைவியின் புதல்வர்கள் என்று சிறிது நெகிழ்வு வந்தாலும் அருச்சுனனும், வீமனும் தன் பிள்ளைகளை விட யுத்தக் கலைகளிற் சிறந்தவர்களாயிருக்கிறார்கள் என்பதைத் திருதராட்டினரால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.
காந்தாரியிடம் திருதராட்டிரன் கூறும் வார்த்தைகள் இரவுக் காவலனாக அவர்கள் அறைவாசலில் நின்ற இளைஞனாக பூர்சிரவஸ0க்கும் கேட்கும்.
"காந்தாரி யுத்தக் கலைகளிற் சிறந்தவர்களே அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வார்கள். துரோணாச்சாரியாரிடம் பாண்டவர்களை யுத்த வித்தைகள் பெற அனுமதித்தது தவறோ என்று யோசிக்கிறேன். அவர்களின் திறமை, அதிகாரத்தை என் மக்களிடமிருந்து பறித்து விடுமோ என்று அஞ்சுகிறேன்."
ஒரு சாதாரண தந்தையாக திருதராட்டிரன் கூறியவை அன்று பூர்சிரவஸPக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
சார்வாகனின் விளக்கத்தில் அவ் வார்த்தைகளுக்கான முழு அர்த்தம் இப்போதுதான் புரிகிறது.
இரண்டு அதிகார வெறியர்கட்கிடையில் நடந்த பெரும்போரில் சாதாரண மனிதனான நான் என் குடும்பத்தில் ஐந்து பெரும் ஆண்களைப் பலிகொடுத்து விட்டேனா? இதனால் நான் பெற்ற நன்மை என்ன?
பூர்சிரவஸ் சிந்தனை வயத்திலாழ்ந்தார். சார்வாகனின் முதல் குரல் இரண்டாவது குரல் மூன்றாவது குரல் மூன்றிலும் ஒரு தொடர்ச்சியான தர்க்கமும் பெரும் உண்மையும் புதைந்து கிடப்பது பூர்சிரவஸஸுக்குப்புலனாகத் தொடங்கியது.
"சார்வாகா நீ அரண்மனைக்குள் சென்றதில்லையா?" மக்கள் கூட்டத்துள் ஒருவன் கேட்டான். "அரண்மனைக்குள் சென்றவர்கள் அரண்மனைத் தத்துவங்களுக்குள் மாட்டிக் கொள்வார்கள். மீள முடியாது தத்தளிப்பார்கள். அரண்மனையின் சுகபோகங்கள் அவர்களின் சிந்தனைகளை மழுங்கடித்துவிடும்"சார்வாகன் பதில் கூறினான்.
கூட்டத்தில் இருவர் பேசிக் கொண்டார்கள். "யாகசாலையிலே இக் கோவணாண்டியைநான் கண்டேன். யாகத்திற்காக அடுக்குப் பண்ணிக் கொண்டிருந்த புரோகிதர்களைப் பார்த்து அவர்கள் யாகத்திற்காக பல நூற்றுக்கணக்கான ஆடுகளையும், குதிரைகளையும் கொல்வதைப் பரிகசித்துக் கொண்டிருந்த போது அவர்களால் இரத்தம் கொட்டக் கொட்ட அடித்துத் துரத்தப்பட்டவன் இவன்"
யாகத்திற்காக மிருகங்கள் கொண்டு வரப்பட்டபோது நடுவீதியிலேயே அவற்றை மறித்து "விடுங்களடா வாயில்லாச் சீவன்களை. உங்கள் அதிகாரத்திற்காக மக்களைத்தான் பலி கொடுத்தீர்கள். இப்போது வாயில்லாச் சீவன்களில் குரல்வளைகளையுமா அறுக்கப்போகின்றீர்கள் என்று வாதிட்டவன் இவன்"

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 235
அவனைத் தம்முடன் சேர்க்க புரோகிதர்கள் தயங்கினர். ஒதுக்கினர். ஒதுங்கினர்.
"ஆம் அவன் மலைவாசிகளுடனும், சூதர்களுடனும் சுற்றியலைந்தான். சாதாரண மக்களைக் கனிவுடன் பார்த்தான். ஆட்டுக்குட்டிகளை ஆதரவோடு அணைத்துக் கண்ணிர் மல்கினான். சாதாரண சனங்கள் சமைத்த எளிய உணவைப் புசித்து அவர்களின் வீட்டின் வெளிமுற்றத்திலே தன் யோக தண்டத்தை ஊன்றி அதன் கீழ் சிந்தனைவயப்பட்டவனாக படுத்துக்கிடந்தான்"
"மக்களைக் காணும் போதெல்லாம் அவன் கண்களிலிருந்து கண்ணிர் திரளும், புரோகிதர்களையும் அதிகார வர்க்கத்தினரையும் காணும் போதெல்லாம். அவன் கண்கள் தீயை உமிழும்"
கூட்டத்தினரின் சார்வாகன் பற்றிய விமர்சனங்கள் பூர்சிரவஸ0 க்கு புதியதொரு சார்வாகனைக் காட்டியது. அவர் இதுநாள்வரை அரண்மனையிலும், வெளியிலும் பெற்ற அனுபவங்கள், அண்மையில் குருஷேத்திர யுத்தத்தால் அவருக்கு ஏற்பட்ட பேரிழப்பு எல்லாமே அவர் சிந்தனைகளையும் சற்று மாற்றியிருந்தன.
பதின்மூன்று வருடங்களுக்கு முன் ஒலித்த அவன் முதற் குரலைபூர்சிரவஸ் மிகுந்த கஷ்டப்பட்டுத் தன் ஞாபக வட்டத்தினுட் கொண்டு வர முயன்றார். தன்னையும் தன் பாரம்பரியத்தையும் அறிமுகம் செய்து யோகதண்டத்தை ஊன்றி தன்னுடன் வாதிட வரும்படி புரோகிதருக்குச் சவால் விட்டு நின்ற இளைஞனான சார்வாகனின் முகம் அவரது ஞாபகத்திற்கு வருகிறது. பதின்மூன்று வருடங்களுக்கு முந்திய அத்தினாபுரப்பின்னணியை நினைவுக்குக் கொண்டுவர முயல்கிறார் பூர்சிரவஸ்.
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் | பாண்டவர்கள் வனவாசம் புறப்பட்டார்கள். அதற்கும் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அத்தினாபுர அரண்மனையிலே சூதாட்டம் நடைபெற்றது. அன்று % பூர்சிரஸPக்கு அரண்மனைக் காவல் வேலை. : JKR
சகோதரர்களான கெளரவரும் பாண்டவரும் N : எதிரிகளாக மாறிச் சூதாடியதும் சூதிலே ), பாண்டவர்கள் தோற்றுத் தலை குனிந்ததும். )ރަޛް பாஞ்சாலியை அவர்கள் பணயம் வைத்ததும், துச்சாதனன் சென்று பாஞ்சாலியை இழுத்து வந்து சபை முன் எறிந்ததும் துரியோதனன் ஆக்ஞையிட அவள் துகிலினை துச்சாதனன் உரிந்து, முடியாமல்

Page 125
236 மெளனம்
சோர்ந்து விழுந்ததும், அரசவையிலிருந்த அறிவாளிகள் செய்வதறியாது ஒன்றும் பேசாது திகைத்து நின்றதும் பாண்டவரும், பாஞ்சாலியும் சபதம் செய்ததும் ஒப்பந்தம் ஒன்றின் பின் பாண்டவர் வெளியேறியதும் பூர்சிரவளியின் ஞாபகத்திற்கு வருகின்றன. வாயிற் காவலனாக நின்றமையினால் அவருக்குப் பலரின் குரல்கள் காதில் விழுந்திருந்தன. சகுனியின் எக்காளமிட்ட சிரிப்பு, துச்சாதன் துரியோதனா. தியோரின் கைகொட்டிய பெரும் சய்தம். அதற்கு எதிராக எழுந்த பீமனின் கர்ஜனை அருச்சுனனின் சபதம் எல்லாமே பூர்சிரவஸ0க்கு ஞாபகத்திற்கு வந்தன.
விதுரன், பீஷ்மர் ஆகிய பெரியவர்களின் அனுங்கிய குரலும் அவனுக்குக் கேட்டது.
இரண்டு குழுக்களுக்கிடையில் ஒரு குழு இன்னொரு குழுவை அடக்க நினைக்கும் சண்டையாகவும், பெரியவர்கள் என்போர் முடிவெடுக்காமல் தர்ம ஞாயங்கள் பேசியதாகவுமே பூர்சிரவசுக்கு ஞாபகம்.
அந்நிலை பார்த்துபூர்சிரவஸ் தனக்குள் அதிருப்திப்பட்டுக் கொண்டார். "என்ன பெரியவர்கள் இவர்கள். அதிகாரப் போட்டியிலே உண்மையை பட்டவர்த்தனமாக உரைக்க முடியாது. அதிகாரத்திலிருக்கும் திருதராட்டினன் மனங்கோணாமல் தர்ம ஞாயங்களை அதற்கேற்ப விளக்கும் தர்மவான்கள்.
சாதாரண மனிதனான அவரால் என்ன செய்ய முடியும்? எல்லாம் முடிந்து அனைவரும் வெளியேறிய பின் அரண்மனைப் புரோகிதர்கள் அனைவரும் ஒன்றுகூடிக் கதைத்தபடி நின்றனர்.
பாண்டவர் கெளரவர் ஆகிய இரு குழுவினருள் யாரோ ஒருவர் பக்கம் நின்று அவர்கள் வாதித்தனர்.
துரியோதனனை ஞாயப்படுத்தியது ஒரு புரோகிதர் குழாம். தர்மனை ஞாயப்படுத்தியது இன்னொரு புரோகிதர் குழாம். ஏதோ ஓர் அதிகார வர்க்கத்தின் பால் அவர்கள் சார்ந்திருந்தனர்.
பாண்டவர்கள் வனவாசம் புறப்பட்ட வேளையிலும் அத்தினாபுரம் முழுவதும் ஒருவகை ஊமைநிறைந்து கிடந்தது. துரியோதனனின் அதிகாரத்தை எதிர்த்துக் குரல் தர யாரும் இருக்கவில்லை. பீஷ்மரும், விதுரனும் பின்னடித்த பின்னர் வேறு யாருக்குத்தான் துணிவு வரும்.
ஒரு சோகப் பார்வையுடன் மக்கள் பாண்டவர்களை வனவாசம் அனுப்பி வைத்தனர்.
பாண்டவர்கள் வனவாசம் சென்ற மறுநாள் சார்வாகன் அத்தினபுரத்துள் பிரவேசித்தான்.
நடந்து முடிந்த விடயங்கள் அவனுக்கு எரிச்சலையூட்டியிருக்க வேண்டும். மக்களின் மெளனத்தைக் கலைக்க அவன் விரும்பினான். யோகதண்டம் ஊன்றி பத்மாசனமிட்டிருந்து தன்னுடன் வாதிட வரும்படி புரோகிதர்களை அழைக்கின்றான். அவனுடன் வாதிட வருகிறான் தேவதத்தன். இருவரும் சம" வயதினர். அறிவின் ஒளி இருவர் முகங்களிலும் பிரகாசிக்கின்றது.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 237
தேவதத்தன் கூறுகிறான். "சார்வாகனே நீ உலோகாயுத வாதி, பிரமத்தையும் தேவர்களையும் நிராகரிப்பவன், ஜடத்தையே நம்புபவன். ஜடமில்லாத பொருள் எமது தேவர்கள். உனக்குப் புரியாது பிரம்ம ஞானம்"
சார்வாகான் நிதானமாக அவன் கூறியதை உள்வாங்கிக் கொள்கிறான். "தேவர்கள் ஜடமல்ல என்றால் அவர்களின் உருவம் என்ன? வடிவமில்லாமிட்டால் அவர்களை எப்படிக் காண்பீர்கள். அக்கினியில் அவிஸைச் சொரிந்து தேவர்கட்கு அளிக்கின்றீர்களே ஜடமல்லாத அவர்கட்கு அதை உண்ண வாயுண்டா?சமிபாடடைய வயிறுண்டா. உண்டவற்றை கழிக்க மல்வாசல் சலவாசல் உண்டா?"
சார்வாகனின் பதில் கிண்டலும் கேலியுமாக தேவதத்தனைக் குத்துகிறது. கிண்டல் தாங்க முடியாத தேவதத்தன் சற்று ஆவேசத்துடன் கூறினான். "டேய் மூடா! நால் வருண தர்மங்களும் பிரமமும் பொய் என்றா கூறுகிறாய்?"
"நால் வருண தர்மங்களையும் பிரமத்தையும் பொய் என்று கூறும் என்னைப் பார்த்து நீ மூடா என்றால், இல்லாத ஒன்றைப் பிரமம் என்று கற்பனா ரூபம் கொடுத்துப் பொய் கூறும் உன்னையும், சமமாக வாழ்ந்த மக்களை நாலு வர்ணமாகப் பாகுபடுத்தி அதுவும் பிரமத்திலிருந்துதான் வந்தது என்று கூறிபேதா பேதங்களை உங்களது பொய்யான சாத்திரங்களால் ஞாயப்படுத்தும் உன்னை மகா மடையன் என்று நான் கூறலாம் அல்லவா?"
கிண்டலாகக் கூறிவிட்டு தேவதத்தின் ஆடை அலங்காரங்களை உற்றுநோக்கினான் சார்வாகன். "பிரமத்தையும், பேரின்ப ஞானத்தையும் தேடும் உனக்கு ஏனடா தேவதத்தா அரண்மனை உத்தியோகம். பட்டுப் பீதாம்பரம், பல்லக்கு பவனிகள்? வீட்டில் வேலையாட்கள். மூன்றுவேளை மூக்கு முட்டச் சாப்பாடு?
சார்வாகனின் உதடுகள் துடித்தன. "உலோகாயுத இன்பங்களிலே நீங்கள் திளைத்துக் கொண்டு மக்களைப் பார்த்து லோகாயுத இன்பங்களை விடுங்கள் என்று கூறும் உங்களின் இரட்டை வாழ்க்கைக்கு வேதங்களில் இடம் உண்டா?"
சார்வாகனின் வினாக்களும், விடைகளும் தேவதத்தனின் வாழ்க்கையை விமர்சனம் பண்ணுவனவாக இருந்தன.
வாதத்தைக் கேட்டபடி நின்ற புரோகிதர்கள் பலர் குமுறியபடி நின்றனர். சார்வாகன் மீது அவர்களின் குர்ோதப் பார்வை சென்றது. ஆயினும் சார்வாகனின் வார்த்தைகளைக் கேட்ட மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினருக்கு சார்வாகன் தமக்காகப் பேசுவதாகப்பட்டது. சார்வாகனின் எதிர்வாதங்களிலும் உண்மை தெரிந்தது.
பளபளவென்ற உடை அணிந்து, உலக இன்பங்களெல்லாம் அனுபவித்தபடி, பிரம்மம் பற்றியும், தேவர் பற்றியும் மோட்சம் பற்றியும் துறவு பற்றியும் பேசும் தேவதத்தனும் சாம்பலை மேலிற் பூசியபடி கெளமீனதாரியாக இன்பயெல்லாம்

Page 126
238 மெளனம்
துறந்து சாதாரண மனிதனாக நின்று இவ்வுலகம் பற்றியும் மக்கள் பற்றியும், இவ்வுலக வாழ்வு பற்றியும் பேசும் சார்வாகனும் மக்களுக்குப் புதிராகத் தோன்றினர்.
உலோகாயுத இன்பங்களோடு இருப்பவன் துறவறம் பேசுவதும், துறவி போலத் தோற்றமளிப்பவன் உலோக இன்பங்கள் பற்றிப் பேசுவதும் மக்களுக்கு வியப்பளித்தது.
மக்கள் கூட்டம் சார்வாகன் கருத்துக்களுக்கு எதிரானதாயில்லை என்பதை அறிந்து கொண்ட தேவதத்தன்.
"வேதநிந்தனை புரியும் வீணனுடன் வாதிட நான் தயாரில்லை" என்று கூறிய படியே விரைந்தான். அவனது சகபாடி புரோகிதர்கள் முகத்தில் கோபமும், ஆத்திரமும் கொப்பளிக்க அவனைப் பின் தொடர்ந்தனர்.
தேவதத்தன் போன பின்னர் அவன் போன திக்கைப் பார்த்த படி சிறிது நேரம் நின்ற சார்வாகன் மக்களைப் பார்த்து பின்வருமாறு கூறினான்:
அத்தினாபுர மக்களே! அதிகாரத்தின் ஆட்டம் தொடங்கி விட்டது. இனி இது நிற்காது. அதிகாரத்திற்கான போரிலே குருவம்சம் இரண்டாகப் பிரிந்து விட்டது. இதோ செல்கிறானே தேவதத்தன் இவன் குருவம்சத்தின் ஒரு கிளையான கெளரவரின் அதிகாரத்தை ஞாயப்படுத்தும் புரோகிதர்களுள் ஒருவன். சத்திரியரான கெளரவர்களுக்கு இவனது வேத சிந்தனைகளும், யாக நெறிகளும் தேவைப்படுகின்றன.
பாண்டவர்களினதும், கெளரவர்களினதும் சொத்துக்களெல்லாம் யார் சொத்துக்கள் ஆயிரக் கணக்கான ஆரியவர்த்த மக்கள் உழைத்த சொத்துக்களே. தமது படைபலம், ஆட்பலம் மூலம் அவையாவும் அரச சொத்துக்களாக்கி விட்டார்கள். உழைக்கும் மக்களின் சொத்துக்களை சூதிலேயே பணயம் வைத்து ஆடும் உரிமையை கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் தந்தது யார்?"
சார்வாகனின் குரலின் தொனி மெல்ல மெல்ல கூடிக்கொண்டு வந்தது. "சூதாட்டம் விளையாட்டும் மகிழ்ச்சியும் அரசர்களுக்குரியது. அதன் துயரமெல்லாம் மக்களுக்குரியதா? தர்மரின் பக்கத்து ஞாயங்களை விளக்க இனி கிருஸ்ணன் வந்து விடுவான். தர்ம தேவதைகள் சூதாட்டத்தில் தோற்று விட்டார்களென்று கதை பரப்புவான்.
ஆரிய வர்க்கத்தில் நகரப்புற பகுதிகளிலே உள்ள மக்கள் நலிந்து போயிருக்கையில் ஆரிய வர்த்தத்தின் ஆளுகைக் குட்பட்ட மக்கள் அரைவயிறாய் இருக்கையில் கெளரவரும், பாண்டவரும் பணயம் வைத்துச் சூதாடுகிறார்கள்.
எலிகளாம் மக்களுக்குப் பிராணன் போகிறது பூனைகorாம். குரு வம்சத்தினருக்கு சூதாட்டம் ஒரு விளையாட்டு"

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் ()
"சூதாடுவது அரச தர்மம். சூதிலே வைத்த பொருட்கள் யாவும் அவர்கள் சொத்து" கூட்டத்திலிருந்து எழுந்தது ஒரு குரல்.
"தர்மம், எது தர்மம்? தன்நாட்டை, தன் மக்களை, தன் தம்பிமாரை, தன் மனைவியை பணயம் வைப்பது தர்மமா? பஞ்சமா பாதகங்களுள் ஒன்று சூது, பாதகச் செயலை அரசர் புரியலாமா?சூதிலே வைத்த பொருட்களெல்லாம் மக்கள் இதுகால வரை உழைத்தசொத்து. தர்மனுக்கும் துரியோதனனுக்கும் அவற்றை வைத்து சூதாட என்ன உரிமை இருக்கிறது"? சார்வாகன் தொடர்ந்தான்.
"அரசர் விட்ட பிழைகளைச் சரியென நியாயம் கற்பிக்கும் ஜனங்களே உங்கள் அழிவுக்கான விதையை குருகுலம்நாட்டி விட்டது. ஐவரும் சபதம் செய்து விட்டு சென்றுள்ளனர்.
சகுனியின் வினைத்திறனால் துரியோதனன் வென்று விட்டான். அவன் வெற்றியைக் கொண்டாட நாளை யாகம் நடக்கப் போகிறது. சத்திரிய தர்மத்தை நிறுத்தும் புரோகிதக் கும்பல் நாளை ஆடு வெட்டி அவிசொரிந்து யாகம் செய்யப் போகின்றார்கள். அந்த யாகத்தில் துரியோதனன் கும்பலின் துஷ்டத்தனமெல்லாம் மறைக்கப்பட்டுவிடும்.
பாண்டவர்கள் சும்மா இரார். கண்ணன் குருகுலத்தைப் பழி வாங்குவான். பாண்டவரை காய்களாகப் பயன்படுத்துவான். பலரின் நலன்கள் இதிலே சம்பந்தப்பட்டு விட்டன மக்களே!
கறுப்பும் வெள்ளையுமாகத் தான் பிரச்சினைகளை நீங்கள் காண்கின்றீர்கள். அதிகாரத்திற்கான போட்டிகள் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
தன் தங்கை ஏமாற்றப்பட்டதற்காக குரு குலத்தின் மீது கோபம் கொண்டிருக்கிறான் காந்தார மன்னன் சகுனி தனது யாதவ குலத்தின் மேன்மை குரு குலத்தின் பலகீனத்தில்தான் உள்ளது என்பதை அறிந்து வைத்துள்ளான் யாதவக் குலக் கிருஷ்ணன். குரு குலத்தின் அழிவிற்காக வித்துக்களைச் சகுனியும் கிருஸ்ணனும் இட்டு விட்டனர். சூது என்ற பெயரிலேயே சகுனி துரியோதனாதியர் உள்ளங்களை வென்று விட்டான். ஆடை தந்து அபயம் அளித்தவன் என்ற பெயரில் கிருஸ்ணன் பாண்டவர்களின் மனங்களை வென்று விட்டான். இனி என்ன சகுனி இயக்க கெளரவர்தம் ஆதிக்கத்திற்காக இயங்குவர். கண்ணன் இயக்க பாண்டவர் தம் அதிகாரத்திற்காக இயங்குவர். இரண்டு குழுவினரும் நடத்தும் போரில் அறிஞரும் புலவரும் முனிகளும் இரண்டாகப் பிரிவர். இருபாலரையும் ஞாயப்படுத்தும் கருத்துக்கள் பரப்பப்படும். சூதர்கள் அவற்றைப் பாடிய படி ஆரியவர்த்தம் எங்கும் திரிவர். ஆரிய வர்த்த மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் மறைந்து விடும். அம்மக்கள் இரு பிரிவினராகப் பிரிவர். ஒப்பந்தங்கள் மீறப்படும். யுத்தம் வரும். அதிகாரத்தின் இறுதி வடிவம். அதுதான் யுத்தம்! ஆம் பெரும் யுத்தம்."

Page 127
240 மெளனம்
நீண்ட பேச்சினை நிறுத்தி அமைதியாக சார்வாகனன் தூர நோக்கில் எதையோ பார்த்த படி வெறித்து நின்றான். தூரத்தில் பார்வையை பதித்தபடி தொடர்ந்தான்.
பதின்மூன்று வருடங்களுக்கு பின்னால் வரவிருக்கும் பாரதப் போர் எனக்கு இப்பொதே தெரிகிறது. யுத்தத்திற்கான விதையை நட்டு விட்டால் பின் அது வளர்ந்த மரமாகத் தானே வேண்டும். உண்மையை உணருங்கள் மக்களே. யுத்தம் வராமல் தடுக்க ஆவன செய்யுங்கள். சத்திரிய தர்மத்தை கட்டிக்காக்கும் பிராமணப் புரோகிதர்களின் வார்த்தைகளுக்கு இடம் கொடாதீர்கள்.
யுத்தத்தின் விஷ விதைகளை கண்டறிந்து எடுத்தெறியுங்கள். விழித்தெழுங்கள். இப்போது விழிக்கா விட்டால் யுத்தம் உங்கள் அனைவரையும் விழுங்கிவிடும்."
சார்வாகனன் நீண்ட பேச்சினைப் பேசிய படியே நின்றான். காலைமுதல் நண்பகல் வரை அவன் பேசினான். அவன் பேச்சை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
யுத்தமாவது வருவதாவது' என்ற அலட்சியத் தோரணையிலேயே அனைவரும் சார்வாகனை வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.
அவன் தோற்றமும், கூற்றுக்களும் சிலருக்கு நகைப்பை உண்டுபண்ணின. பூர்சிரவஸ0 க்கு அவன் குரலில் ஒரு ஞாயப்பாடு தெரிந்தது. அரசவையில் "துரியோதனனின் இரத்தம் தடவித்தான் தலைமுடிப்பேன். அதுவரை முடியேன்” என்று ஆவேசத்துடன் தலையை விரித்துவிட்ட பாஞ்சாலியின் கோப விழிகளோடு கூடிய ஒலியும் வீமனது சபத கர்ஜனைகளும் பூர்சிரவளியின் காதுகளில் வீழ்ந்தமையினால் அவமானப்படுத்தப்பட்ட பாண்டவர்கள் சும்மா இரார் என்பது பூர்சிரவளUசக்கு புரிந்து விட்டது.
"ஒப்பந்தப்படி பன்னிரு வருட வனவாசமும் ஒரு வருட அஞ்ஞாதவாசமும் முடித்து வந்தால் பாதிநாடு கிடைக்கும்" என்ற சபைப் பெரியோரின் கூற்றுக்களை பூர்சிரவஸ் நம்பினான். பெரியவர்கள் போர் நடக்க விடமாட்டார்கள் என்பது பூர்சிரவஸ் நம்பிக்கை.
எனினும் பாஞ்சாலியினதும் வீமன், அருச்சுனனதும் கோப விழிகள் அவனுக்கு எதையோ கூறின. அவன் அந்தராத்மா போர் வருமோ என்ற ஐயத்தை இயம்பிக் கொண்டிருந்தது. போர் வருவதாயினும் இன்னும் பதின்மூன்று வருடங்களின் பின்தானே. அதற்கிடையில் எத்தனையோ நடைபெற்றுவிடும் என்ற ஆறுதலில் பூர்சிரவாஸ் சார்வாகனனின் குரலை அவ்வளவு பெரிதாக அன்று எடுக்கவில்லை.
"போர் வரும். கவனம் மக்களே. போர்களைத் தவிர்க்க முடிவுகளை மேற்கொள்ளுங்கள்" என்ற சார்வாகனனின் ஆரம்ப எச்சரிக்கைக் குரலையும் அத்தினாபுர மக்களைப் போல பூர்சிரவஸoம் அவ்வளவு பெரிதாக எடுக்கவில்லை.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 241
மக்கள் தன் கருத்துக்களை பெரிதாக எடுக்காவிடினும் போர்வரும் எனவும் அதற்கான வித்துக்கள் ஊன்றப்பட்டு விட்டன என்றும் அதைத் தடுக்க முயற்சிகளை மக்களே மேற்கொள்ளுங்கள் என்றும் ஆரிய வர்த்தம் முழுதும் அலைந்து அலைந்து சார்வாகன் மக்களுக்குக் கூறிவந்ததாக பூர்சிரவஸ் நண்பர்கள் மூலம் அறிந்தான். சிலநாட்களில் பூர்சிரவஸ் சார்வாகனனை மறந்தும் விட்டான்.
• • • • •
பூர்சிரவஸ் அருகில் நின்ற ஒருவர் உரையாடுவது பூர்சிரவளியின் காதில் விழுந்தது. அவர்கள் பக்கம் பூர்சிரவஸ் தன் பார்வையைத் *一交 திருப்பினார். இருவரும் முதிய வயதினர். பிரகாசமான 籤 முகத்தினர். அறிவின் தீட்சண்ய ஒளி அவர்கள் !!!\ இருவரதும் விழிகளில் தெரிந்தன. ஒருவர் சஞ்சயர் سبح امریکا تحت - S மற்றவர் வைஜம்பாயனர். ർ
"வேதநெறிகளை எடுத்தெறிந்து பேசி புரோகிதர்களின் அதிகாரபக்கச் சார்பை அழுத்திக் ( ސިރު கூறும் இவ்வறிஞன் யார் வைஜம்பாயனரோ?" *<\やてTe சார்வாகனனின் கருத்துக்களால் கவரப்பட்டு Z->'; நின்ற வைஜம்பாயனருக்கு சஞ்சயர் சார்வாகனனின் வேத நெறி எதிர்க்கருத்தக்களைக் கேட்ட பின்னரும் அவனை அறிஞன் என அழைத்தமை வியப்பைத் தந்தது. சஞ்சயரைத் திரும்பிப் பார்த்தார் வைஜம்பாயனர். "அறிஞன் தான் அவன் சஞ்சயரே சந்தேகமேயில்லை. அவன் கருத்துக்களுக்கும் தர்க்கத்திற்கும் ஓர் அறிவுப் பாரம்பரியம் உண்டு. சார்வாக மதத்தினன் அவன். மோட்சம். மறு உலகம் என்பதும், தேவர்கள் தேவ உலகம் என்பதும் கற்பனை. நிஜ உலகே உண்மை. அதிலுள்ள வாழ்வே உண்ம்ை இறப்பு நிஜம். வாழ்வே இருப்பு" என்று கூறும் சர்வாக மத்தின் வாரிசு அவன். ரிசி பிரகஸ்பதியின் பாரம்பரியம். இவர்களின் தத்துவங்களிலே கூறப்படுவது என்னவென்றால்." வைஜம்பாயனார் முடிக்கு முன்னரேயே.
"பிரகஸ்பதி அசுரர்களின் குருவின் குரு என்றல்லவா கதைகள் கூறுகின்றன. அப்படியாயின் சார்வாக மதம் அசுர மதமா?” ஆச்சரியம் முகத்தில் ததும்ப சஞ்சயர் கேட்டார்.
தன் தோளிலுள்ள உத்திரியத்தை எடுத்து மறு தோளில் போட்டபடி, அசுரர் தேவர் என்பதெல்லாம் பின்னாளில் கட்டப்பட்ட கதைகள் தானே. அசுரர்கள் இந்நாட்டில் வாழ்ந்த குடிகள், தேவர்கள் வந்தேறு குடிகள் வாழ்ந்தோருக்கும், வந்தோருக்கும் நடந்த கதைகளையும் யுத்தங்களையும் தான்

Page 128
242 மெளனம்
தேவ அசுர கதைகளாகவும் யுத்தங்களாகவும் கட்டிவிட்டார்கள் நமது புரோகிதர்கள். கதை கட்டிய புரோகிதர் மீது சார்வாக மதத்தினருக்குச் சரியான கோபம்" என்று பதிலளித்த வைஜம்பாயனர் மீண்டும் தன் உத்தரீயத்தை மறுதோளுக்கு மாற்றிய படி தொடர்ந்தார்.
"வைதீக மதம் நால்வர்ணப் பாகுபாட்டை ஏற்படுத்தி விட்டது. அதைக் கட்டிக் காக்க கவிதைகள் மூலம் ஒரு கருத்துருவைத் தோற்றுவித்துள்ளது. அது அதிகாரத்திற்கு துணை போகின்றது. யாகங்கள் மூலம் அரசரைக் கவர்ந்து விட்டது. அதுபோரை ஊக்குவிக்கின்றது. போரில் வெற்றி பெறும் அரசர்கட்கு ஊக்கம் தருகின்றது. செய்த பாவங்கள் எல்லாம் யாகங்கள் மூலம் கழுவி விட முனைகிறது. இதனால் அது மக்கள் நலனுக்கு எதிரானது என்று கூறும் சார்வாக மதம் மக்களையே மையமாகக் கொண்டது. சார்வாகனனின் கருத்துக்களை கூர்ந்து கவனியுங்கள். அவன் மக்கள், மக்கள் என்றே பேசுகிறான். மன்னர்களுக்கு எதிராகக் கதைக்கிறான். அவன் கதைகளில் தெரிவது என்ன ஆளும் கும்பல் ஆளப்படும் கும்பல் என்ற பிரிவுதானே. அவன் கருத்துக்கள் யாவும் ஆளும் கும்பலுக்கு எதிரான கருத்துக்கள்."
"அப்படியாயின் ஆளும் கும்பல் இவன் கருத்துக்களை அனுமதிக்குமா? அதிகாரம் மிகுந்தவர் இவனை உயிரோடு விட்டுவைப்பார்களா? நீங்கள் கூறும் கருத்துக்கள் யாவும் எனக்கு புதியனவாகப்படுகின்றது. வைஜம்பாயனரே சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்."
சஞ்சயர் விளக்கம் கேட்கத் தயாரானார். "சார்வாகன் சொல்வதில் நிறைய உண்மைகள் உள்ளன. பிரச்சினைகளை யதார்த்த ரூபத்தில் காண்கின்றான் சார்வாகன். பலநூறு வருடங்களுக்கு முன்னரே ஆரிய வர்த்தம் முழுவதும் கண அரசுகளே இருந்து வந்தன.
விஸ்தாரமாகக் கூற ஆரம்பித்தார் வைஜம்பாயனர், "கனஅரசுக்கள் என்பது இரத்த உருத்துள்ள மக்களின் கூட்டம். அவர்கள் மத்தியிலேயே வர்ணங்கள் இருந்தன. வர்ண பேதங்கள் இருக்கவில்லை. அனைவரும் சேர்ந்து உழைத்தனர். உழைப்பில் கிடைத்த பயனை அனைவரும் பங்கிட்டுக் கொண்டனர். பேதாபேதங்கள் இல்லாது கிடைத்ததை அனைவரும் பகுத்து இயற்கையோடு வாழ்ந்த காலம் அது. அரசுகள் தோன்றாத காலம். தாய்வழியிலேதான் கணம் அறியப்பட்டது. அதிதி, திதி. தன. ஸார்த்யை எனப் பதினெட்டுக் கணங்கள் இருந்ததாகவும் அதிலிருந்து தான் ஆதித்தியர்கள் தைத்தியர்கள், தானவர்கள், சாத்தியர்கள் முதலான நாமறிந்த கணக் கோத்திரங்கள் தோன்றின என்றும் எம்பாட்டனார் கூறியிருக்கிறார்.
"ஆனால் நாமறிந்த கணங்களிடையே வர்ணப்பாகுபாடுகள் இருக்கின்றனவே. கணத்துள் ஒருவரிடம் பெரும் செல்வமும் இன்னொருவரிடம் வறுமையும் நிறைந்திருக்கிறதே. கணங்களுள் சண்டைகளும் நடக்கின்றனவே." சந்தேகம் எழுப்பினார் சஞ்சயர்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 243
"பழைய கண வாழ்க்கையிலே ஜனநாயகம் நிலவியது. இரத்த உருத்துடையோர் சண்டை போடுவது பெரும் பாவம் எனக் கருத்தப்பட்டது. ஆனால் பெரும் சொத்துச் சேகரிப்பும், சேகரித்த சொத்துக்களை குடும்பங்கள் தமக்குள் சேமித்து வைத்த செயலும் கணங்களுக்குள் சண்டைகள் தோன்றக் காலாகிவிட்டன. உள்ளோர் இல்லார் என்ற பிரிவு கணத்துக்குள் மெல்ல மெல்ல ஏற்படலாயிற்று. ஏற்கனவே இருந்த வர்ணப்பிரிவுக்கு இப்போது புது அர்த்தம் தரப்பட்டது. சத்திரியரும், பிராமணரும் உயர்ந்தோர். சொத்துடையோர், வைசியரும், சூத்திரரும் தாழ்ந்தோர், சொத்தில்லாதோர். கண அங்கத்தவர்கள் பலர் பணக்காரர் ஆயினர். பணக்காரர் மேற்குடியினராயினர். மேற்குடியினர் மேலும் மேலும் போர் புரிந்து சொத்துக்களையும் நிலங்களையும், அடிமைகளையும் சேகரித்னர். அதிலிருந்துதான் சஞ்சயரே அரசுகள் தோன்றின.
"வியப்பாக இருக்கிறது. எல்லாவற்றையும் தலைகீழாகச் சொல்கிறீர்கள்" "இல்லை சஞ்சயரே நீங்கள் தலைகீழாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். இல்லை. இல்லை. அப்படிக் கருத்துக்களை புரோகிதக் கும் பல் கட்டி வைத்திருக்கிறது.
மதராவில் கம்சனும் மகதத்தில் ஜராசந்தனும் பெரும் இராச்சியத்தை அமைக்க விரும்பினார்கள். அஸ்தினாபுரத்தில் கெளரவர்கள் பெரும் இராச்சியத்தை அமைக்க விரும்பினார்கள். பெரும் இராட்சியம் அமைக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும் சஞ்சயரே பெரும் போர் நடத்தத்தானே வேண்டும்:
"தம் மக்கள் நலனுக்கான ஒரு பெரும் இராச்சியம் அமைக்க எண்ணியதில் என்ன தவறுண்டு வைஜம்பாயினரே.?"
"தம்மக்களுக்காகவா இராச்சியம் அமைத்தார்கள்? இல்லை சஞ்சயரே. தமக் காகத் தம் பிற் சந்ததிகளுக்காக. என்ன நடந்தது துரியோதனன் அரண்மனையில் சஞ்சயரே? ஜனநாயகத்தின் காவலர்களாகக் கருதப்பட்ட பீஷ்மர், கிருபர் போன்ற மூத்தோர்களே கொலைகாரர்களாகிவிட்டார்களே ஏன்? அவர்கள் செல்வமும், நிலமும், அடிமையும் உடையவர்கள். அச்சுகபோக வாழ்வை இழந்து விட அவர்கள் விரும்பவில்லை.
"துரோணரைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் அவரிடம் பெரும் செல்வமில்லையே."
"சொத்துப் பெருக்கத்தில் கெட்டிக்காரர்கள் கூட பொம்மைகளாகி விடுவார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணம் துரோணர். போர்க்கலையில் மிக வல்லவரான துரோணர் வறுமையின் பிடியிலே வாடினார். அவர் மகன் அசுவதாமனுக்குக் கொடுக்கக் கூட அவரிடம் பால் வாங்கப்பணம் இருக்கவில்லை. அடிமைச் சொந்தக்காரனனான பீஷ்மருக்கு அவர் தன் வித்தைகளையெல்லாம் விற்ற கதைதான் சஞ்சயரே துரோணர் கெளரவ பாண்டவருக்கு வில்வித்தை பழக்கிய கதை."

Page 129
244 மெளனம்
"குருவம்சத்தினர் அடிமைகளின் சொந்தக்காரர்கள். கெளரவரின் அத்தினாபுரத்திலும்பாண்டவரின் இந்திரப் பிரஸ்தத்திலும் இருந்த அடிமைகளின் தொகை அதிகம். ஏனைய சிறு சிறு கணங்களை அடக்கித்தான் இவர்கள் அடிமைகளாக்கினார்கள் அருச்சுனன் காண்டவனத்தை அழித்து வேடர்களையும், நாகர்களையும் அடிமையாக்கியது உமக்குத் தெரியும் தானே சஞ்சயரே."
"அடிமைகள் ஆயுதம் ஏந்தக் கூடாது என்பதற்காக வேடர் குலத்தினரான ஏகலைவன் விரலைக் கூட மிக நல்லவரான துரோணர் தம் எஜமான் விஸ்வாசத்தைக் காட்ட குரு தட்சணையாக வாங்கிய கதை அத்தினாபுர மக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஆரிய வர்த்தம் முழுவதும் சுற்றிப் பல திறப்பட்ட மக்களோடும் பழகி வரும் எனக்குத் தெரியும் சஞ்சயரே." வைஜம்பாயனரின் கருத்துக்களால் சஞ்சயர் குழம்பிப் போனார். வைஜம்பாயனார் வைசியராமையினால் அவர் வாணிப நிமித்தம் பல ஊர்களுக்கும் செல்பவர் என்பதும், வைசியரை வர்ணத்தில் மூன்றாம் இடத்தில் வைத்தமையினால் அவர் பிராமண தர்மம் மீது சற்று விமர்சனப் பார்வையுடையவர் என்பதும் பூர்சிரவஸ7க்கும் தெரியும், வைஜம்பாயனரின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகம் உண்டு. ஆனால் அவர் பகிரங்கமாக தனது கருத்துக்களை கூறமாட்டார். ஆளும் அரசையும் புரோகிதக் கும்பலையும் பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. ஆனால் தன் மனதில் ஓடிய கருத்துக்களை துணிவாக மரண பயமின்றி எடுத்துச் சொன்ன சார்வாகனின் கருத்துக்களை ஊன்றிக் கவனித்தார். அவன் மீது பெரு விருப்பமும் கொண்டார். அவன் துணிவு அவருக்கு அவன் மீது வியப்பு கலந்த மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.
இரு பெரியவர்களின் உரையாடல்களையும் கவனித்ததில் சார்வாகனனின் பேச்சின் தொடர்ச்சியை நழுவவிட்ட பூர்சிரவஸ் மீண்டும் சார்வாகன் பேச்சில் கவனத்தை திருப்பினார்.
"சிந்தியுங்கள் மக்களே! இப்போதாவது சிந்தியுங்கள் உங்களைப்பற்றிச் சிந்தியுங்கள்" என்ற சார்வாகனது குரல் பூர்சிரவஸ் காதுகளில் விழுந்தன. இவன் மக்களைப் பற்றித்தான் இன்றும் பேசுகிறான். இரண்டாவது முறையும் இதே குரலில் இதே அத்தினாபுரத்தில் ஓர் ஒரத்திலே நின்று மக்களே சிந்தியுங்கள் என்றுதான் கூறினான். அக் காலகட்டமும் காட்சியும் பூர்சிரவளியின் கண்முன் படமென விரிந்தன.
விராட நாட்டிலிருந்து பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் முடித்து வெளிவந்து விட்டார்கள் என்ற கதை மக்களுக்கு தெரியவந்துவிட்டது. ஒப்பந்தப்படி அவர்கள் அனைத்தையும் செய்து விட்டமையால் பாதி நாடு அவர்கட்கு கிடைத்துவிடும் என்றுதான் மக்களில் மிகப் பெரும்பாலானோர் நம்பியிருந்தனர். ஆனால் சூதாட்டத்தின் போது போருக்காக இடப்பட்ட விதை பின்னர் மெல்ல மெல்ல வளர்ந்து வந்ததைப் பலர் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 245
அஞ்ஞாதவாசம் முடிந்த பின்னர் பாண்டவர்கள் மத்தியில் நடந்த உரையாடல் அவர்களிற் சிலரின் எண்ணங்கள் போரினை மையம் கொண்டே இருந்தமைக்கு சான்றுகளாகும். துரியோதனனின் சபையிலே பாண்டவர் செய்த சபதங்களை முடிக்க போர் நடைபெற்றே ஆக வேண்டியிருந்தது.
வாழ்நாள் பூராவும் கையினால் தண்ணிர் அள்ளிக் குடியாமல் இருக்க வீமன் விரும்பவில்லை.
அவிழ்ந்த கூந்தலோடு இறக்கும் வரை வாழ்ந்து விட திரெளபதி விரும்பவில்லை.
கர்ணனைக் கொல்லாமல் வீணே வாழ்வதை அருச்சுனன் ஒப்பவில்லை. செய்த சபதங்களும் மனதில் இருந்த வன்மமும் வாழ்நாளிற் பெரும்பகுதியை வனத்திலேயே கழித்துவிட்டமையும் அவர்களை மேலும் மேலும் கோபம் கொள்ள வைத்தன.
இத்தனைக்கும் மேலால் துரியோதனின் ஆளுகையின் கீழ் ஒரு அரசாக இருக்க அவர்கள் விரும்பவில்லை.
துரியோதனன் கும்பல் மீண்டும் மீண்டும் தொல்லை தரும். பாண்டவரின் அழிவு ஒன்றையே தமது குறிக்கோளாகக் கொண்டிருக்கும் துரியோதனாதியோருடன் சக வாழ்வு வாழ்வதென்பது வெறும் போலித்தனம் என்பதை பாண்டவர் நன்கு புரிந்து வைத்திருந்தனர். தருமனின் மனதிலே சமாதானத்திற்கான எண்ணங்கள் இடைக்கிடை தோன்றுமாயினும் தம்பிமாரின் கோபத்திற்கும், சபதங்களுக்கும் முன்னால் அதுவும் மங்கி மறைந்து விடும்.
பாஞ்சாலி போரில் மிக உறுதியாக இருந்தாள். தருமர் தவிர்ந்த மற்றைய தன் கணவன்மாரைத் தயார்படுத்தி வைத்திருந்தாள். மற்றவர்கள் மூலம் தருமரையும் ஒரு கட்டுக்குள் வைத் திருந்தாள். தனக்கு அவையில் இழைக்கப்பட்ட அவமானங்களுக்கு தம் கணவர்கள் பழிதீர்க்க வேண்டும் என்பது அவளது பிடிவாதமாக இருந்தது.
கண்ணனும் பாஞ்சாலியும் ஒரு நாள் சந்தித்த போது பாஞ்சாலியிடம் கண்ணன் கேட்டான்.
"பாஞ்சாலி என்னால் உனக்கு என்ன ஆக வேண்டும் வேண்டியவைகளைக் கேள்!"பாஞ்சாலி சொன்னாள்.
"கண்ணா பாரதப் போர் நடக்க வேண்டும். துரியோதனன் அழிய வேண்டும் அவன் உதிரம் தலை தடவி என் கூந்தல் முடிக்க வேண்டும்."
கண்ணன் பதில் கூறினான். "பாரதப் போர் நடக்கும்." கிருஷ்ணன் தூது போக முன்னமேயேநடந்த நிகழ்வுகள் இவை. கிருஷ்ணன் பாண்டவர்க்காக கெளரவரிடம் தூது சென்றான். தூது சென்ற கிருஷ்ணன் உலகோர் கண்ணுக்குத் தூதுவனாக நடந்து கொள்ளவில்லை.

Page 130
246 மெளனம்
துரியோதனனிடம் தூது சென்ற கண்ணன் துரியோதனன் அரண்மனையிற் தங்கவில்லை. விதுரனின் வீட்டிலே வேண்டுமென்று தங்கினான். இந்த அவமதிப்பின் மூலம் துரியோதனன் கோபத்தை சமாதானப் பேச்சுவார்த்தைகளின் முன்னரேயே கிளறிவிட்டான். விதுரன் மீது துரியோதனனை வெறுப்படையவும் வைத்தான்.
ஒரு கல்லிலே இரண்டு மாங்காய்கள். துரியோதனன் அவையிலே கிருஷ்ணன் வைத்த வாதங்கள் கெளரவரைச் சாந்தப்படுத்துமாய் போல இருக்கவில்லை."
"பாண்டவர்கள் ஒழுக்கமும் நேர்மையும் உடையவர்கள்." "இந்த அரசவையிலே தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அவர்கள் இன்னும் மறக்கவில்லை. கோபம்அவர்கள் நெஞ்சைவிட்டு இன்னும் ஆறவில்லை." "பதின்மூன்று வருடம் வனத்திலும், பிற நாட்டிலும் தம் இளமைக் காலங்களை அவமே கழித்து விட்ட ஆத்திரமும் இன்னும் போகவில்லை."
"அண்ணன் தர்மனின் சொல்லுக்கு அங்கே தம்பிமார் கட்டுப்படுகிறார்கள்." "அவர்கள் வளர்ந்த இடம் அப்படி.." "அங்கு தலையிருக்க வால் ஆடுவதில்லை" "இன்னும் பொறுமை காக்கிறார்கள்." "பொறுமைசாலிகளே பெரும் வீரர்கள்" "சமாதானம் தான் அவர்களின் நோக்கு" "நாடு கிடைக்காவிட்டால் போர்புரிந்தேனும் நாட்டைப் பெறுவார்கள். போர் நடக்குமெனில் தோல்வி உங்களுக்கு நிட்சயம்"
"அருச்சுனனையும், வீமனையும் வெல்வது உங்களுக்கு மகா சிரமமாயிருக்கும்."
சாமார்த்தியமாகத் தன் வாதங்களை கெளரவரைக் கோபப்படுத்துமாய் போல கிருஷ்ணன் வைத்தான்.
கிருஷ்ணனின் கேலியும், கிண்டலும் குத்தலும் நிறைந்த வார்ததைகள் துரியோதனாதியோரை மேலும் கோபத்திற்குள்ளாக்கியன. கிருஷ்ணனின் நோக்கமும் அவர்கள் கோபமுற்று போருக்கு ஆயத்தமாக வேண்டும் என்பது தான்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளைச் சமாதானத்தை நோக்கித் திருப்பாமல் போரை நோக்கித் திருப்பினான் கிருஷ்ணன். கிருஷ்ணனின் வாதத்திறமைகள், திட்டமிட்ட வார்த்தைகள் யாவும் துரியோதனனைக் கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றன. துரியோதனன் இறுதியாகவும் அறுதியாகவும் கூறினான்.
"ஒப்பந்தப்படி எதுவுமே செய்ய முடியாது. எள் இருக்கும் இடம் தானும் பாண்டவருக்குத் தரமாட்டேன். எமக்குரிய நாட்டை பாண்டவருடன் பங்கிட்டுக் கொள்ள எமக்கு இஷ்டமில்லை போர் நடக்கட்டும். நாடு யாருக்குரியது என்பதைப்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 247
போர் தீர்மானிக்கட்டும். வீமனும் அருச்சுனனும் அங்கிருந்தால் கர்ணனும் துச்சாதனும் இங்கிருக்கிறார்கள்."
"போர்தான் முடிவா? போரில் நீங்கள் அழிவது உறுதி. அதை நிட்சயப்படுத்திக் கொண்டீர்களா?"
எரிந்து கொண்டிருந்த துரியோதனன் மனதில் கிருஷ்ணன் வார்த்தைகள் எண்ணையாக ஊற்றப்பட்டன.
'அழிவு எமக்கல்ல. பாண்டவர்க்கும், உனக்கும்" என்ற துரியோதனன் சகுனியை வஞ்சகமாகப் பார்த்தான்.
சகுனியின் ஏற்பாட்டின் படி கிருஷ்ணன் அமர்ந்திருந்த சிம்மாசனம் அதன் கீழ் அமைக்கப்பட்டிருந்த குழிக்குள் சென்றது. அதனுள் தன்னைக் கொல்ல அமர்த்தப்பட்டிருந்தோரைச் சம்ஹாரம் செய்தபடி அட்டகாசமாக துரியோதனன் அவையினின்று புறப்பட்டான் கிருஷ்ணன்.
'கூறுவது கண்ணனடா கூறுவது கண்ணனடா கூறு கூறாக வீழ்வீர்' என்று சப்தமிட்டபடி கண்ணன் விதுரன் துணையாக வர சபாமண்டபத்தை விட்டு வெளியில் வந்தான். சபா மண்டபத்திற்கு இருவரும் ஒன்றாகத் தான் காலையில் பிரவேசித்தார்கள். விதுரன் வீட்டில் கிருஷ்ணன் தங்கிய செய்தி அன்றே அத்தினாபுர அரண்மனையிற் பரவி விட்டிருந்தது. கிருஷ்ணனும், விதுரனும் ஒன்றாக வருவதைக் கண்டதும் அன்று காலை சபா மண்டபத்தில் துரியோதனன் மிகுந்த ஆத்திரப்பட்டு கொண்டிருந்தான். இப்போது விதுரன் கிருஷ்ணனுக்குத் துணையாக வெளியேறுவதைக் கண்டதும் துரியோதனால் பொறுக்க முடியவில்லை.
"சாப்பிடுவது கெளரவரிடம், சகாயம் புரிவது பாண்டவர்க்கு, வெட்கம் கெட்ட விதுரா! போ! எதிரிகளுடன் போ! என்று சத்தமிட்டான், துரியோதனன் . அவன் சப்தத்தை பொருட்படுத்தாது கிருஷ்ணனுடன், சபா மண்டபம் வாசல் வரை துணை வந்தான் விதுரன்.
துரியோதனன் கோபத்தை மேலும் தூண்டி விதுரனையும், துரியோதனையும், பிரிக்கும் திட்டம்ராஜதந்திரியான கிருஷ்ணன் மனதிலே தோன்றியது. மனதுக்குள் புன்னகைத்தவாறே தான் கையில் அணிந்திருந்த மோதிரத்தை தரையில் நழுவ விட்டான் கிருஷ்ணன். கைநழுவிச் சபாமண்டப வாசலில் தரையில் விழுந்த மோதிரத்தை குனிந்து எடுத்துகிருஷ்ணனிடம் கொடுத்தான் விதுரன், சடாரென விதுரனுக்கு கிருஷ்ணன் வானத்து சூரியனைக் காட்டி பார் சூரியன் பரிதி வட்டம் போட்டிருக்கிறது. நாட்டிலே பயங்கரங்கள் நிகழப்போகின்றன என்றான்.
"ஆமாம்" என்று துயருடன் தலையசைத்தான் விதுரன். மோதிரத்தை கையில் வாங்கிக் கொண்ட கிருஷ்ணன். "நீங்கள் சபா மண்டபம் செல்லுங்கள் விதுரரே' என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.

Page 131
248 மெளனம்
கிருஷ்ணனை வணங்கிவிட்டு விதுரன் சபாமண்டபத்துக்குள் தன் இருக்கையை நோக்கி நடந்தான்.
சபையில் அமைதி. எல்லா கண்களும் விதுரனில் மொய்த்துக் கிடந்தன. சகுனியின் மூளை மள மளவென்று வேலை செய்தது. துரியோதனன் அருகில் தான் சகுனி இருந்து கொண்டிருந்தான். மற்றவர்க்குக் கேட்காமல் துரியோதனிடம் சகுனி கூறினான்.
"துரியோதனா வானம் பூமி தொட்டு, பாண்டவர் பக்கம் தான் நிற்கப் போவதாக விதுரன் கிருஷ்ணனிடம் சத்தியம் செய்து விட்டு வருகிறான் என்று நினைக்கிறேன் என்ன மனுஷன் இவன். சாப்பிடுவது உன் உப்பை உதவி செய்வது உன் எதிரிகட்கு"
தன் ஆசனத்தில் விதுரன் இருக்கு முன்னரேயே துரியோதனின் வாயிலிருந்து வெடித்தன வார்த்தைகள்.
"விதுரா! எங்களிடம் வயிறும், பாண்டவர்களிடம் மனமுமா? ஏன் மீண்டும் வருகிறாய்?கிருஷ்ணனுடனேயே சென்றிருக்கலாமே. ஏன் வருகிறாய்! போ, போ! கிருஷ்ணனுடன் போ! உன் உதிரத்தில் முழுமையாக எமது கெளரவ இரத்தம் ஓடவில்லை தானே"
விதுரனின் பிறப்பை இழுத்துத் துரியோதனன் பேசியமை விதுரனின் கோபத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
"துரியோதனா! அதிகாரத்தின் உச்சத்திலிருந்து கொண்டு என்னைப் புண்படுத்துகிறாய் உன் அதிகாரத்திற்குப் பணிந்து போக என் மனம் மறுக்கிறது. போரிலே நான் பங்கெடுக்க மாட்டேன். அதற்க அடையாளமாக என் வில்லை இதோ முறித்தெறிகிறேன்."
ஆத்திரத்துடன் தன் பெருவில்லை முறித்து எறிந்தான் விதுரன். "துரியோதனா அருச்சனனுக்கு நிகரான வில் விதுரனின் வில் அது. இதுவரை உன் பக்கம் இருந்தது அதை இழந்து விட்டாயே." கிருபாச்சாரியார் கூற்று துரியோதனனைச் சிறிது அசைத்ததாயினும்,
'விதுரனை விடப் பெரிய வில்லாளி கர்ணன் என் பக்கம் இருக்கிறான்." என்று கூறிவிட்டுக் கர்ணனைப் பார்த்தான் துரியோதனன். கர்ணனின் புன்னகை துரியோதனனுக்கு ஆறுதல் தந்தது.
போர் நடப்பதை உறுதியாக்கிய கிருஷ்ணன் போரை நடத்தி, பாண்டவர் பக்கம் வெற்றியை கொணர்வதற்கான இராஜதந்திர முயற்சியாக இதனைச் செய்தான் என்பதைச் சபையிலுள்ள சிலர் அறியாமலும் இல்லை. அறிந்து மெளனிகளாய் இருந்தனர்.
பாண்டவர்கள் மாத்திரமல்ல கெளரவர்களும் சமாதானத்திற்கு விருப்பமாயிருக்கவில்லை. அத்தினாபுரத்தை பங்கு போட்டுக் கொண்டு பாண்டவர்களுடன் தானும் ஆட்சி புரிவதை துரியோதனன் விரும்பவில்லை. இந்திரபிரஸ்தத்தினை உருவாக்கி, பெரும் செல்வத்துடன், அடிமைக்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 249
கூட்டங்களுடனும் பாண்டவர் இருந்தமை ஏற்கனவே துரியோதனன் மனதில் பொறாமைத் தீயை வளர்த்திருந்தது. தனது அரசு விரிவாக்கல் திட்டத்திற்கு பாண்டவர் தடை என்பதை துரியோதனன் எப்போதோ உணர்ந்து விட்டான். சுயநலத்தின் அத்திவாரத்தில் அரசுகளை, உருவாக்குகையில் சகோதர பாசங்கள் எல்லாம் துச்சமாகி விடுகின்றன.
சூதாடி அவர்களைக் காட்டுக்கு அனுப்பியமை பாண்டவர்களை ஒழிக்க துரியோதனன் தீட்டிய முதல் திட்டம், கானகத்தில் அவர்கள் இருக்கும் போதே ஜவரையும் கொல்வதற்கான கடும் முயற்சிகளில் துரியோதனன் ஈடுபட்டிருந்தான். விராட நாட்டில் பாண்டவர் அஞ்ஞாத வாசம் புரிகின்றனர் என்பதை ஒற்றர் மூலம் அறிந்த துரியோதனன், அந்தநாட்டின் மீது படையெடுத்தான். வீமன், அருச்சுனன், பாஞ்சாலி, கண்ணன் போல கெளரவர் பக்கத்திலும் துச்சாதனன், கர்ணன், சகுனி, ஆகியோரும் சமாதானத்தை விரும்பவில்லை.
சகுனியிடம் துரியோதனன் அடிக்கடி கேட்பான். "மாமா பாண்டவர் மீண்டும் வருவார்களா? ஒப்பந்தப்படி எல்லாம் முடித்து மீண்டால் அவர்களுக்குப் பாதிநாடு தர வேண்டி வருமே"
சகுனி அட்டகாசமாகச் சிரித்தபடி சொல்வான். "சமாதானம் வராது போர் தான் நடக்கும். பாண்டவர்க்கு ஆட்சி கிடைக்காது.கிடைக்கக் கூடாது"
துரியோதனனுக்கு ஏற்ற தாய்மாமன். கிருஷ்ணன் சமாதானத் தூது வருகின்றான் என்பதைக் கேள்வியுற்று துரியோதனனும் சகுனியும் சற்றுக் கலங்கி விட்டனர்.
சபையில் உள்ள பெரியோர்களும், கிருஷ்ணனும் சேர்ந்து சமாதானத்தைக் கொண்டு வந்து விடுவார்களோ என்று
"கிருஷ்ணனைக் கொல்ல வழிவகுப்போம்" அவனுக்கு அமைக்கப்படும் ஆசனத்தின் கீழ் குழி உண்டாக்குவோம் அதற்குள் வீரர்களை படைக் கலன்களுடன் அமர்த்துவோம். குழிக்குள் கிருஷ்ணனை வீழ்த்துவோம் ஒன்றில் கிருஷ்ணன் அழிவான். அல்லது கோபப்பட்டு போர்தான் என்ற முடிவுக்கு வருவான். இரண்டாலும் நடக்கப்போவது ஒன்று தான் சமாதானப் பேச்சுக்கள் முறிவு.
"அதன் விளைவு போர்" சகுனியின் மதிநுட்பத்தை துரியோதனன் வியந்து மகிழ்ந்தான். உலக ஒப்புக்காகத் தான் தூது, பேச்சு வார்த்தைகள், தர்மஞாயங்கள் எல்லாம் என்பது இரு சாராருக்கும் தெரியும். கெளரவர் பாண்டவர் இரு சாரார் மத்தியிலும் அடிமனதில் இருந்தது வெஞ்சினம், பகை, போருணர்ச்சிதான். ஒருவர் அழிவிலே தான் மற்றவர் வாழ முடியும் என்பதே அவர்கள் எண்ணமாக இருந்தது. கண வாழ்க்கையைத் தாண்டி அரசுகள் உருவாகிக் கொண்டிருந்த அக்காலகட்டத்தில் அரசு உருவாக்கத்திற்கு தடையாக இருந்த அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டன. போர் மூலமாகத்தான் அரசுகள் உருவாக

Page 132
250 மெளனம்
வேண்டியிருந்தது. சொத்துக் குவிப்பும், செல்வச் சேகரிப்பும், இரத்த உறவுகளை துச்சமாக்கி விட்டன.
இரு சாராரும் போர்தான் என்ற முடிவினை எப்போதோ எடுத்துவிட்டார்கள். மக்கள் என்ன செய்ய முடியும்? மக்கள் வரலாற்றின் கைதிகளாகி விட்டார்கள். அரசுக்கும் சொத்துக்கும் போர் நடத்தும் கும்பல்களில், யாரோ ஒருவர் பக்கம் நிற்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.
எனினும் அப்பாவி மக்கள் தர்ம ஞாயங்களை நம்பியிருந்தனர். ஒப்பந்தப்படி பாண்டவர் வனவாசமும் அஞ்ஞாதவாசமும் முடித்து வருவார்கள், துரியோதனன் சபையிலுள்ள தர்மவான்களான முதியோரும், அறிஞரும் போர் நடக்க விடமாட்டார்கள். ஒப்பந்தப்படி பாதி இராச்சியத்தை பாண்டவர்க்கு கொடுத்து விடுவார்கள். பாரதப் போர் நடைபெறாது. தர்மன் செய்த சிறுபிழைக்காகப் பாண்டவர் பன்னிரண்டு வருடம் காட்டிலே பல துன்பங்களையும் பாண்டவர் அனுபவித்து விட்டார்கள். நாடு பெற்றதன் பின் அனைவரும் சமாதானமாக வாழ்வார்கள் இப்படித்தான் மக்கள் நினைத்திருந்தார்கள்.
மக்கள் எப்போதுதான் போரை விரும்பினார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் நிம்மதியான வாழ்வு. அமைதியான வாழ்வு, மகிழ்ச்சிகரமான வாழ்வு. பிரச்சினைகள் இல்லாத வாழ்வு. ஆனால் வரலாற்றின் சூத்திரக் கயிறுகள் அதிகாரமுடையோரின் கையில் இருக்கையில் அவர்கள் என்ன செய்ய முடியும்? நடந்தேறிய நிகழ்வுகள் அவர்களையும் போருக்குள் இழுக்கப் போகின்றது என்பதையும், அதனால் தாம் பெரும் இழப்புகளைச் சந்திக்கப் போகிறார்கள் என்பதையும் அந்த அப்பாவி மக்கள் நினைத்திருக்கவில்லை.
கிருஷ்ணன் தூது தோல்வியில் முடிந்தமை கண்டு மக்கள் திகைப்படைந்து விட்டார்கள்.
போர் என்பது முடிவாகிவிட்டது. தொடர்ந்து வந்த செய்திகள் மக்களுக்கு மேலும் மேலும் திகைப்புகளை உண்டுபண்ணின. போருக்குரிய இடம் தெரிந்தாகி விட்டது. அத்தினாபுரி நகரின் மேற்கு தொலைவிலுள்ள பெருவெளி - சமந்த பஞ்சகம் - குருசேத்திரம் தான் போர்க்களம்.
போருக்கான ஆயத்தங்களுக்காக இருபாலாருக்கும் மூன்று திங்கள் அவகாசம்.
இன்னும் நூறு நாட்களுக்குள் இருசாராரும் போருக்கு ஆயத்தமாகி விட வேண்டும்.
குரு சேத்திரத்தை சூழவுள்ள பத்துக் கிராமத்திலும் இருந்த மக்களை உடனடியாக வெளியேறி விடும்படி அரசு உத்தரவிட்டது. போரின் முதல் பலியான மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் கிராமங்களை விட்டு வெளியேறினர்.
தினம் தோறும் பட்டி, தொட்டிகள், நாற்சந்திகள், கிராமங்கள், நகரங்கள் தோறும் காலையிலிருந்து நடுஇரவு வரை யுத்தத்திற்காக ஆயத்தமாகும் படியும்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 25
போர்ப்பயிற்சிகளுக்கு வரும் படியும் அரச உத்தரவுகளும் போர் சம்பந்தமான பிரசாரங்களும் முடுக்கிவிடப்பட்டிருந்தன.
போரை எப்போதும் மனதில் இருத்தும்போர் முரசும் அடிக்கடி ஒலித்தபடி இருந்தது.
அரண்மனைச் சூதர்கள் துரியோதனன் புகழையும் போரில் அனைவரும் ஈடுபட வேண்டும் எனவும் பாடித்திரிந்தனர்.
மெல்ல மெல்ல மக்களும் போர் சூழலுள் இழுபடலாயினர். இரு சாராரும் யுத்தத்திற்கான தீவிர ஆயத்தங்களில் இறங்கிவிட்டார்கள். ஆரிய வர்க்கம் முமுவதிலுமுள்ள பிரதேசங்களுடனும் கெளரவரும், பாண்டவரும் தொடர்பு கொண்டனர். பிற பிரதேசங்களில் இருந்து படைகள் அத்தினாபுரத்தை நோக்கி வர ஆரம்பித்து விட்டன.
விவசாய வேலைகள் யாவும் வெகு வேகமாக முடிக்கப்பட்டன. விவசாயிகள் பலர் இரு தரப்பிலும் கலந்து கொண்டு போர்ப்பயிற்சிகள் பெற ஆரம்பித்து விட்டனர்.
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்பட வில்லை.
எனினும் வீட்டுக்கு ஒருவராயினும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டமையினால் ஒவ்வொரு வீட்டிலும் போர் பற்றிய கதை தினமும் நடந்தது.
காலையிலிருந்து இரவு வரை தெருக்களை கடந்து செல்லும் பிற நாட்டிலிருந்து வந்து கொண்டிருக்கும் காலாட்படையினரையும் குதிரைப் படையினரையும் வேடிக்கை பார்த்தனர் சிறுவர்கள். அவை எழுப்பிச் சென்ற புழுதிகள், சிறுவர்கள் உடலில் படிந்தன.
வேறு வேறு பாசைகள் பேசிய படி சென்ற படை வீரர்களை வேடிக்கை பார்த்த படி நின்று கொண்டிருந்தனர் சிறுவர்கள்.
ஐம்பத்திமூன்று நாட்கள் ஆகியது படைகள் யுத்தகளத்தின் அருகே வந்து சேர்வதற்கு.
பீஸ்மர், விதுரர் ஆகியோர் யுத்த விதிகளை வகுத்தனர். இன்னாருடன் இன்னார் தான் யுத்தம் செய்ய வேண்டும். இரவில் யுத்தமில்லை. முதலில் வாயால் சண்டை. பிறகு தான் ஆயுதப் பிரயோகம். ஆயுதமில்லாதோர் மீது ஆயுதம் பாவிக்கக் கூடாது.
குதிரைப்படை குதிரைப்படையுடன் தான் மோத வேண்டும். காலாட்படை காலாட்படையுடன் தான் மோத வேண்டும். சாரதிகளைக் காயப்படுத்தக் கூடாது. படைகள் இலக்கின்றி மோதக் கூடாது.

Page 133
252 மெளனம்
அவர்கள் வியூகங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நால்வகை வியூகங்களை மானுஷ, தெய்வ, கந்தர்வ, அசுரவியூகங்களுள் ஒன்றை வடிவமாகக் கொள்ளலாம்.
குருசேத்திர யுத்த களத்தின் பத்துக் கிராமங்களில் தர்மன் படைகள் தங்கும்.
பத்துக்கிராமங்களில் துரியோதனன் படைகள் தங்கும். போர் உணர்வுகள் ஆரம்பத்தில் மெல்ல மெல்ல மக்களைப் பற்ற ஆரம்பித்தன.
தினமும் காலை முதல் மாலை வரை போர் பற்றிய செய்திகளைப் பேசிப் பேசி ஏனைய எவற்றையுமே மனதில் எடுக்காதவர்களாக மக்கள் மாறினர். போர் உணர்வுகள் மெல்ல மெல்ல போர் வெறியாக மாறத் தொடங்கியது.
கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒருவனைக் கொல்லும் மிருக உணர்ச்சி மக்கள் மனங்களில் பிரவகிக்க ஆரம்பித்தது. அனைவரும் ஒருமுகமாக போர் போர் போர் என்றே நின்றனர்.
சமாதானக் குரல்கள் மெல்ல ஒலித்து அனுங்கி ஒலித்து அதைப்பற்றி பேசுவோர் சமூகத்தின் புறநடைகள் என்றாகி விட்டது.
வரப்போகும் மாபெரும் அழிவுக்காக எதிர்க் குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை.
சமாதானம், போர் எதிர்ப்பு மனதில் இருந்ததாயினும் அதை வெளிப்படுத்தி மக்கள் எதிர்ப்பையும் அரசு எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொள்ள யாருக்கும் துணிவு வரவில்லை.
மெளன சாட்சிகளாக அவர்கள் மனம் கணக்க ஒன்றில் போர்முயற்சிகளில் ஈடுபட்டனர். அல்லது ஒளித்து வாழ்ந்தனர். சிலர் நாட்டை விட்டு வெளியேறியும் இருந்தனர்.
பூர்சிரவளியின் மகன்மார் இருவரும், மருமகன்மார் மூவரும் போர் பயிற்சிக்குச் சென்றார்கள். மருமகன்கள் மூவரும் காலாட்படையிலும் மகன் ஒருவன் குதிரைப்படையிலும், இன்னொரு மகன் யானைப்படையிலும் இணைக்கப்பட்டிருந்தான்.
பூர்சிரவஸ் வயது காரணமாக படையில் இணையமுடியவில்லை. சமையற்காரர்களுள் ஒருவரானார். அவருக்கான அழைப்பு இன்னும் ஒரு திங்களுள் வர உள்ளதாக அரண்மனை நிருவாகம் அறிவித்து இருந்தது.
உணவுக்கான ஆடுகளும், கோழிகளும், மதுவும் பெருவாரியாக திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் பல்நூற்றுக்கணக்கில் பரிசாரகர்கள் நாடு பூராகவும் திரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அரண்மனையிற் பேசிக் கொண்டார்கள்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 253
அன்று அரண்மனை விட்டு நடக்கவிருக்கும் போர் பற்றியும், தன் பங்கு பற்றியும் எண்ணியவாறு அந்தி மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் பூர்சிரவஸ். அப்போது தான் அக்குரலை மீண்டும் கேட்டான்.
இப்போது அக்குரலை இரண்டாவது தடவையாக கேட்கின்றார். பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் கேட்ட எச்சரிக்கைக் குரல்.
தெருவின் ஒரத்தில் கெளமினதாரியாத சடைகள் நெஞ்சிலும் மார்பிலும் புரள தன் கொய்யாத்தடியாலான யோக தண்டத்தை சுழற்றிய படி நின்ற அதே மனிதன், இளமையின் அந்திமக் காலத்தை அறிவிக்கும் நரை மயிர்களுடன். ஆனால் உறுதியான குரலிலே மக்களை நோக்கி பேசிக் கொண்டிருந்தான்.
அவனைச் சூழ மக்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தது. "போர் வந்து விட்டது மக்களே! நீங்கள் விரும்பாத போர் வந்தே விட்டது" போர் உங்கள் மீது திணிக்கப்பட்டு விட்டது. பதின்மூன்று வருடங்களுக்கு முன் உங்களை எச்சரித்தேன். போருக்கான வித்து நடப்பட்டு விட்டது என்று.
வித்து செடியாகி மரமாகி இப்போது விருட்சமாகி விட்டது. பயங்கரமாக வெகுசனப் படுகொலை ஒன்று குருசேத்திர யுத்தகளத்திலே நடக்கப் போகிறது. மக்கள் சுயவிருப்பின்றி போருக்குள்ளே இருபக்கத்தாராலும் இழுக்கப்படுகிறார்கள்.
யோசியுங்கள் மக்களே யோசியுங்கள். நடக்கும் போர் ஆயத்தங்களை அறிவீரா? கெளரவர்கள் பதினொரு அக்றோணி சேனைகளையும், பாண்டவர்கள் ஏழு அக்றோணி சேனைகளையும் திரட்டி விட்டார்கள்.
ஆயிரக்கணக்கான மக்கள் போர் புரியப் போகிறார்கள். இறக் கவிருக்கும் அவர்கள் உண்பதற்காக இலட்சக் கணக்கான ஆடுகளும், கோழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாமே கொல்லப்படப் போகின்றன. போருக்காகச் சேர்க்கப்பட்ட உணவுகள் மலையென குவிக்கப்படுகின்றன. போர் வெறியூட்ட பறைகளும் சங்குகளும் மலையென இன்னோர் புறம் குவிக்கப்படுகின்றன.
மது, குடம் குடமாக சேகரிக்கப்படுகின்றது. போர் நெறிமுறைகள் வகுக்கப்பட்டு விட்டன. நெறிமுறைகள் அறிவீரா? "போர் முனையில் அரசனை சாதாரண வீரன் எதிர் கொள்ளக்கூடாது. பிறப்பால் தாழ்ந்தவர் எவரும் உயர் பிறப்பாளன் மீது அஸ்திரம் ஏவுதல் கூடாது. யுத்த சமயத்தில் உயர்ந்த மந்திரங்களை தாழ்வான எவனும் உச்சரிக்கக் கூடாது."
யுத்த விதிகளை பீஸ்மரும், கிருபரும், விதுரரும், கிருஸ்ணனும் வகுத்தார்களாம்.

Page 134
254 மெளனம்
அழியப் போவதோ உயிர். அதற்குள்ளும் வர்ணாச்சிரம பேதம். இறப்பிலும் பேதம் பார்க்கும் புரோகிதக் கும்பலுக்கு நல்ல வேட்டை. ஏன் போரிடுகிறோம் என்று தெரியாமல் யாருடன் போரிடப் போகிறோம் என்று அறியாமல் இருபக்கத்திலுமுள்ள பொதுமக்களும் மோதிக் கொள்ளப் போகிறார்கள்.
தர்மன் முடிசூட அல்லது துரியோதனன் தன் முடியை தலைநின்று இறக்காமல் இருக்கத் தம் உயிர்களை எல்லாம் தர முன்வந்து விட்டார்கள் மக்கள். அறிஞர்களும், பெரியவர்களும் அதற்குத் திட்டமிடுகிறார்கள். யுத்த விதிகளை வகுக்கிறார்கள். அவர்கள் அதற்குத் தரும் அழகான பெயர்.
யுத்த தர்மம்' சார்வாகன் பேச்சுக்களை இம்முறை அதிகமானோர் ஆர்வமின்றியே அவதானித்தனர். கடந்த இரண்டரைத் திங்களாக யுத்தம் யுத்தம் என்று பேசி யுத்தச் சுவைக்குள்ளே மூழ்கிக் கிடந்தவர்கட்கு சார்வாகன் குரலும், கருத்தும் வேற சுவையைத் தந்தன.
ஒரிருவர் தான் உன்னிப்பாகக் கவனித்தனர்.
ாம் சொல்லப் பயந்ததை இவன் கூறுகிறானே என்ற வியப்பும், மதிப்பும் அவர்களின் முகங்களில் தெரிந்தன.
சார்வாகன் எவரையும் பொருட்படுத்தாது உரத்த குரலிற் பேசிக் கொண்டே இருந்தான். தம் மனதிலுள்ள அனைத்தையும் மக்கள் முன் கொட்டி விட வேண்டும் என்ற தீவிரம் அவனிடம் காணப்பட்டது.
"அரச சூழ்ச்சிகளையெல்லாம் உங்களுக்கு அறியும் வாய்ப்பில்லை. பாண்டவர்களைப் பாதுகாக்கும் கிருஷ்ணனின் இராஜதந்திரங்கள் ஆரம்பமாகி விட்டனவாம். கதைகள் கசியத் தொடங்கியுள்ளன. இரக்கம், அன்பு, நேயம் போன்ற மனித குலம் கண்டெடுத்துள்ள அனைத்தும் இராஜதந்திரம் என்கிற பலிபீடத்தில் பலியிடப்படப் போகின்றன. அடிமைகளையும், பெரும் சொத்துக்களையும் மேலும் மேலும் தமக்குள் வைத்துக் கொள்ள ஒரு குலத்தில் தோன்றிய இரு பிரிவுகள் தமக்குள் மோதிக் கொள்ளப் போகின்றன."
அத்தினாபுரப் பேரரசு உருவாக்கும் திட்டத்தில் பழைய கண அரசுகள் எல்லாம் இணைந்து விட்டன.
வரமறுத்தால் பேரரசு கோபித்து விடும் என்ற பயம். வந்தால் கிடைக்கும் லாபத்தில் பங்காவது கிடைக்கும் என்ற அர்ப்ப ஆசை அல்லது பெரும் போரிலே பெரிய அரசுகள் அழிந்து விடும். மீண்டும் நலம் தந்த பழைய நாட்களுக்கு திருப்பி விடலாம் என்று கண அரசுகளின் நடக்க முடியாத ஆசையில் தான் அவை இப்போரில் இணைந்துள்ளன.
பாவம்! அவர்கள்! காலத்தின் ஓட்டத்தை அறியாதவர்கள். இந்தப் போரோடுஅந்தக் கால அரசுகளும் முற்றாக அழிந்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரியாது.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 255
அழியப் போகிறதெல்லாம் அழியப் போகிறது. மனித சங்காரம் நடக்கப்போகிறது.
யாருக்காகவோ மக்கள் தம் உயிரைத் தரத் தயாராகி விட்டார்கள். சார்வாகனின் குரலை எதிர்த்துக் கொண்டு எழுந்தது இன்னுமொரு குரல். "அழியப் போவது மக்களல்ல துறவியே!" குரல் எழுப்பியவன் ஒரு இளைஞன். விருபக்ஷன். போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருபவன். பூர்சிரவஸ0க்கு அவனைத் தெரியும் அவன் தந்தையும் துரியோதனின் அரண்மனையிலே தான் களஞ்சிய அறையில் வேலை பார்த்தார்.
'அழியப் போவது அநியாயம்' நிதானமாகக் கூறியவாறு தொடர்ந்தான் இளைஞன். வாரிசு உரிமைக்குப் பாண்டவர்கள் உரியவர்கள் அல்ல. அவர்கள் பாண்டுவின் புத்திரர்களும் அல்ல. அநியாயமாகச் சண்டையிட்டு என் அரசன் துரியோதனுக்குரிய நாட்டைப்பிடிக்கப் பார்க்கிறார்கள். எம்நாட்டின் ஒரு பிடி நிலத்தைத் தானும் நாம் பாண்டவர் பெற அனுமதியோம். போரில் அநியாயமாக பாண்டவர் அழிவர். அழியப் போவதோ அநியாயம் தான்!"
விருபக்ஷனுக்கு ஆதரவாக குரல்கள் பல எழுந்தன. கூட்டத்தின் கோபம் சார்வாகன் மீது திரும்பியது. "துரியோதனன் மன்னனுக்கும் அவர் நடத்தும் நியாயமான போருக்கும் எதிராக பேசும் துரோகி இவன்"
"இந்த சாம்பலாண்டியை கலையுங்கள்" "அவனை அடியுங்கள்." :இவனைக் கொல்லுங்கள்" "கருத்துக்களைப் பரப்ப அவனை விடாதீர்கள்" கோஷங்கள் கிளம்பின. சார்வாகனின் உரைகளைக் கேட்டுகொண்டுநின்ற மக்கள் பலர் முகத்தில் ஒருவித வெறுப்பின் அறிகுறி.
எங்கிருந்தோ வந்த ஒரு கல் சார்வாகனின் நெற்றியைத் தாக்கியது. தலையைப் பொத்தியபடி சாய்ந்தான் சார்வாகன்.
அவன் தலையில் இருந்து கசிந்த இரத்தம் அவன் விரல் இடுக்குகளினூடாக வெளிப்பட்டது.
சாம்பல் பூசிய உடலில் இரத்தத் துளிகள். இதை எதிர் பார்த்தவன் போல் சார்வாகன் கூறினான்.
"மூடர்களே! உங்கள் உடலில் போர் வெறி தாண்டவமாடுகிறது. போர் வெறியின் அறிகுறிதானடா அந்தக் கல்வீச்சு. வேல் எறிந்து பழகும் கைகளுக்கு கல் எறிவது இலகு தானே!"
"எம் மன்னனுக்காக உயிர் விட வந்த என்னை மூடா என்றா சொல்கிறாய்"

Page 135
256 மெளனம்
குரல் கேட்ட கையோடு இன்னொரு கல் சார்வாகன் மீது வீழ்ந்தது. தொடர்ந்து பல கற்கள் அவன் மீது வீழ்ந்தன. இரத்தம் சொட்டக் கீழே வீழ்ந்தான் சார்வாகன்.
"யாரும் இவனுக்கு உதவக்கூடாது உதவுவோர் இராஜதுரோகிகளாகக் கருதப்பட்டு தண்டனைக்குள்ளாவார்கள்."
"போருக்கு எதிராகக் குரல் தருவோருக்கு இவன் உடல் ஒரு பாடமாய் ஆகட்டும். இப்படியே இவன் கிடந்து சாகட்டும். மக்கள் அவனைப் பார்க்கட்டும்"
எச்சரிக்கைத் தொனியில் கூறியவாறு விருபக்ஷன் சென்றான். சூழ்ந்துநின்றவர்கள் மெல்ல மெல்ல கலையத் தொடங்கினர். பூர்சிரவஸ0க்கு சார்வாகனை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லை. சார்வாகன் கூற்றுக்களில் காணப்பட்ட ஞாயங்கள் சில அவருக்கு உடன்பாடாய் இருந்தன. எனினும் தான் சார்வாகனுக்கு உதவினால் தான் இராஜதுரோகியாக கணிக்கப்படுவதுடன் தனக்குப் போரில் கிடைக்கவிருக்கும் பரிசாரகன் பதவியும் போய் விடுமோ என்ற பயந்தார்.
கல்லடிபட்டு இரத்தம் கசியமயங்கிக் கிடந்த சார்வாகனையும் அவனுக்கு அருகில் கிடந்த அவன் யோகதண்டத்தையம் பார்த்த படிநின்றார்.
"போரை எதிர்த்துப் பேசினால் இரத்தம் சொட்டச் செய்வார்களா?" "சமாதானக் குரலுக்கும் உண்மைப் பேச்சுக்கும் பரிசு கல்லெறியா?" தான் மட்டும் தனியாக நிற்பதையும் தன்னை தூரத்தில் இருந்து சிலர் அவதானிப்பதையும் உணர்ந்த பூர்சிரவஸ் துக்கம் தோய்ந்த உளத்தோடும் இருண்ட மனத்தோடும் தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
பதினெட்டு நாட்கள் போர் நடந்தது. =چہ:صحت۔ جہ:درج....... کہ ---- وجہ ہے جسے ع அதிகாலையிலே இரு தரத்துப் படைக் E. கூடாரங்களில் ஒசைகள் கேட்கத் தொடங்கி விடும். w? rs படைக்கல ஓசை, குதிரை, தேர், யானைகளின் ஒசை རྗེ། དེ་གས་ تNصح படை வீரர்களின் ஒசையென ஒருவித கதம்ப ஓசை.
சூரியோதயத்துக்கு முன்னரேயே இருதரத்துப் UDÀ སྐད་༽ படைகளும் யுத்த கோலம் பூண்டு விடுவார்கள்.
சூரியன் கிழக்குத் திசையில் உதயமானதும்
குருசேத்திர யுத்த களத்திற்கு இரு தரத்து சேனாதிபதிகளும் தம் அன்றைய யுத்த வீரர்கள் சூழ ང་། வந்து விடுவார்கள் சேனாதிபதிகளின் சங்கு N முழக்கங்களைத் தொடர்ந்து யுத்த பேரிகைகள் S. ': வெறி ஊட்டும்படி அதிரும். திட்டமிட்டபடி ஒவ்வொரு

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 257
பகுதியினரும் தனியாகப் பிரிவர். தமக்குரிய எதிரிகளைத் தேடி யுத்த கோஷமிட்ட படி ஆக்கிரோஷத்துடன் சமர்களத்தில் இறங்குவர்.
பகல் முழுதும் யுத்த கோஷங்களும், யானை, குதிரைகளின் கனைப்பும், பிளிறல்களும் தேர்களின் ஒசையும் மனிதரின் அலறலும் கேட்ட படி இருக்கும்.
மேற்குத் திசையில் சூரியன் மறையும் போது சேனாதிபதிகளின் சங்குகள் ஒலிக்கும். படையினர் சண்டையை நிறுத்தி தம் பாடி வீடுகளுக்குத் திரும்புவர்.
மிகுந்த துயரத்தோடும், சோர்வோடும் இரத்தக்கறை படிந்த ஆயுதங்களையும் கனத்த மனதையும் சுமந்த படி பாடி வீடுகளுக்குத் திரும்புவர்.
அவர்களோடு யுத்தகள உதவியாளர்கள் தட்டிகளைச் சுமந்தபடி வருவர். தட்டிகளிலேயே காயம்பட்ட வீரர்கள். கையிழந்தோர். காலிழந்தோர், கண்ணிழந்தோர், வாளால் வெட்டுண்டோர், அம்புதைத்தோர், யானையால் துவைக்கப்பட்டு எலும்பு நொறுங்கியோர் எனப்பலர் உயிருக்குப் போராடியபடி அலறிக் கொண்டும் அனுங்கிக் கொண்டும் கிடப்பார்கள்.
இருவரது பக்கங்களிலும் பாடி வீடுகளுக்கு ஒரமாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வைத்தியக் கூடாரங்களில் அவர்களின் இரத்தம் துடைத்து காயங்களுக்கு மருந்திட்டு எலும்புகளை ஒழுங்காக்க வைத்தியர்கள் ஆயத்தமாக நின்றனர்.
சிறு சிறு காயங்கள் அடைந்தோர் அன்றிரவே அதற்கு மருந்திட்டுக் கட்டுப்போட்ட பின்னர் பாரிய வலியையும் பொருட்படுத்தாது மறுநாள் யுத்தகளம் செல்லத் தயாராகினர்
ஒருவரிடமும் வாழும் ஆசையைக் காணவில்லை. எல்லோருக்கும் மற்றவரை அழிக்கும் வெறி. யுத்தத்தில் அழியும் வெறி. அந்த வெறிமயக்கத்திலேயே யுத்த சூழல் அவர்களை வைத்திருந்தது.
சிலர் பகற் பொழுதில் தாம் கொன்ற மற்றவர்களைப் பற்றியும், அவர்கள் வீழ்ந்த விதம் பற்றியும் விளக்கினர்.
சிலர் தமக்கு வந்த ஆபத்துக்களைத் தாம் தடுத்த விதம் பற்றிப் பேசினர். சிலர் போர் தந்த அதிர்ச்சியில் ஒன்றும் பேசாது மற்றவர் சொன்னதைக் கேட்டபடிநின்றனர்.
சிலர் எங்கோ வெறித்துப் பார்த்தபடி தம் மனைவி மக்களை, உற்றார் உறவினரை எண்ணியபடி புழுங்கி, நாளையும் போர்க்களம் செல்லும் அருவருப்பில் நின்றனர்.
ஒவ்வொரு பகலும் யுத்த மோதலுக்கும் ஒவ்வொரு இரவும் உயிர் நீத்தாருக்குமான ஞாபகச் சடங்குகளுக்கும் உரித்தாகி விட்டன.
தினமும் சகோதரர்களும், பிள்ளைகளும் இரத்த உறவுகொண்டோர்களும் இறந்து கொண்டே வந்தார்கள்.

Page 136
258 மெளனம்
யுத்தத்திற்குப் பாண்டவர்கள் கெளரவர்கள் என்ற பேதமில்லை. அறிஞர், பாமரர் என்ற பேதமில்லை. முதிர்ந்தோர், இளையோர் என்ற பேதமில்லை. சொத்துடையோர் இல்லாதோர் என்ற பேதமில்லை.
இறந்த உடலுக்குரிய சடங்குகள் ஒரு பக்கம் நடக்கையில் அவன் உடமைகள் நதியில் வீசி எறியப்பட்டன.
அடையாளம் காணமுடியா உடல்களை கழுகுகளும், நாய்களும், நரிகளும் உண்ணுகின்றன.
இரவு வேளைகளில் சாவுச் சடங்குகளுக்காக ஒன்று கூடுகையில் வீரர்களின் முகங்கள் இறுகிப் போயிருக்கின்றன. கண்கள் தாழ்ந்திருக்கின்றன. மூன்று தலைமுறையினர் யுத்தத்திலீடுபட்டுள்ளனர். பீஷ்மர், துரோணர் போன்ற வயது முதிர்ந்தோர். தருமர், துரியோதன் போன்ற நடுத்தர வயதினர். அபிமன்யு, கடோத்கஜன், இலக்கணகுமாரன் போன்ற இளைஞர்கள்.
இலக்கணகுமாரன் அபிமன்யுவால் இறந்ததைக் கேள்வியுற்றதுரியோதனன் புத்திர சோகத்தில் உடல் குலுங்கக் குலுங்க அழுதான்.
அபிமன்யுவின் இறப்பினைக் கேள்வியுற்ற அர்ச்சுனன் தலையிலே அடித்துக் கொண்டு அழுதான்.
கடோத்கஜனின் இழப்பில் வீமன் கதறிய கதறலில் அவன் உடல் குலுங்கிக் குலுங்கிச் சோர்ந்தது.
மகனைப் பறிகொடுத்த சகுனியின் அழுகை பலரை வியப்பில் ஆழ்த்தியது. தந்தையான துரோணரை இழந்த அசுவத்தாமாவின் அலறல். உத்தரனை இழந்த விராட மன்னனின் அழுகை,
யுத்தகளத்தில் வீரர்களின் புலம்பல். மன்னர்கள் மட்டுமா அழுதனர் தம் மக்களை இழந்த, சோதரனை இழந்த படைவீரர்களும் அழுகிறார்கள்.
மன்னருக்கு மட்டுமா உணர்வுகளும், துயரங்களும்? ஆரம்பத்தில் யுத்தம் பூர்சிரவஸ" க்கு ஆர்வமாகத்தானிருந்தது. ஆயிரக்கணக்கான படை வீரர்களையும், யானை குதிரை தேர்களையும் பல்லாயிரக்கணக்கான படைக் கலங்களையும் கண்டு பரவசப்பட்டு விக்கித்துப் போனார் பூர்சிரவஸ். ஆனால் ஆயிரக்கணக்கான மக்களின் இறப்பும், அலறலும், இரத்தமும், அவருக்குப் பின்னால் அதிர்ச்சியைக் கொடுத்தன. துரியோதனன், வீமன், அருச்சுனன், சகுனி, ஆகியோர்தம் புதல்வரைப் பறிகொடுத்து அழுது புலம்பியதைக் கேள்விப்பட்ட போது இன்னும் சோர்ந்து விட்டார்.
போர் வீரர்களுக்குரிய சமையல் பரிசாரகனாக நியமிக்கப்பட்டிருந்த அவர் போர் தொடங்கி எட்டாம் நாளில் துரியோதனன் பக்கத்தினரின் வைத்திய கூடாரத்திற்கு மாற்றப்பட்டிருந்தார்.
கையிழந்து காலிழந்து, கண்ணிழந்து படுகாயமடைந்து கெளரவர் பக்கம் சார்ந்த வீரர்களைக் கண்ட போது அவர் மனம் மிகவும் தளர்ந்து விட்டார்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 259
ஒன்பதாம் நாட் போரில் அவரது இரண்டு மருமகன்மாரும், பத்தாம் நாள் போரில் மூன்றாவது மருமகனும் இறந்தது கேட்டு அவர் மனமுடைந்தே போனார். குவியலோடு குவியலாக அவர்களின் உடல்களும் எரிக்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு நாளும் யுத்தச் செய்திகளை கேள்விப்படுவார். பீஷ்மர் துரியோதனன் படைக்குத் தலைமை தாங்கினார். வெல்லற்கரிய அந்தக் கிழவரின் தலைமையிலே துரியோதனன் வெற்றிவாகை சூடுவான் என பூர்சிரவஸ் நம்பியிருந்தார். ஆனால் அருச்சுனனின் அம்பால் அவர் வீழ்த்தப்பட்டார் என்ற செய்தி பூர்சிரவஸைத் தடுமாற வைத்துவிட்டது.
துரோணர் வீழ்ந்து விட்டார். சிகண்டி அவர் தலையை வாங்கிவிட்டான் என்ற செய்தி பூர்சிரவஸை மேலும் நிலை குலைத்ததுடன் துரோணரின் இறப்புக்குத் தருமரின் பொய்யே காரணம் என்று கதை வந்த போது அவர் திக்பிரமை அடைந்து விட்டார்.
ஒருநாள் தட்டியிலே தூக்கிவரப்பட்ட குற்றுயிரான வீரர்களுள் பூர்சிரவஸ் தன் மகன் இருவரையும் கண்டார்.
ஒருவன் தன் வலது கரத்தை இழந்திருந்தான். மற்றவனின் நெஞ்சிலே அம்பு பாய்ந்து உயிர் போகும் நிலையில் திணறிக் கொண்டிருந்தான்.
இரண்டாவது மகன் இறந்து விட்டான். பூர்சிரவளU9ம் துரியோதனன் போல, வீமன் போல ஓவென்று மகனைக் கட்டிக் கொண்டு அழுதார்.
மற்ற மகன் அருகில் விடிய விடிய விழித்திருந்து அவனைக் கவனித்தார். தந்தையும் மகனும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. இருவர் கண்களிலுமிருந்து நீர் பெருகிய படியிருந்தது. மறுநாள் பகல் பொழுதில் அம்மகனும் அதிக உதிரப் பெருக்குக் காரணமாக இறந்து போனான்.
இருமகன்மாரையும் இழந்த பூர்சிரவஸஸுக்கு அதற்குப்பிறகு யுத்தகளத்தில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. சோர்வின் உச்சத்துக்கே வந்து விட்டார்.
துரியோதனன் பக்கத்தில் சேனாதிபதிகளாக நின்ற கிருபர், துரோணர், சல்லியன், ஜயத்ரதன் சுதக்சினன், கிருதவர்மன், பாகுவிதன் கருணன், சகுனி ஆகிய சேனாதிபதிகள் மாண்ட செய்தி பூர்சிரவளியின் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தியிருந்தன.
கர்ணனின் வீழ்ச்சி பூர்சிரவஸ்ஸை மேலும் கலங்கடித்து விட்டது. அவன் குந்தியின் மகன் என்ற இரகசியம் பரகசியமான போது பூர்சிரவஸ் உறவுகளையும், பந்தங்களையும் புத்திர பாசங்களையும் பிய்த்தெறியும் இப் போரில் மிகுந்த வெறுப்படைந்தவரானார்.
துரியோதனன் குரு சேத்திரத்தை விட்டு அகன்று விட்டான் என்ற செய்தி படை வீரர்கள் மத்தியில் நிலை குலைவை ஏற்படுத்தி இருந்தது.

Page 137
260 மெளனம்
பதினெட்டாம் நாள் துரியோதனன் வீமனால் கொல்லப்பட்டதுடன் பாரதப் போர் முடிவுற்றது.
துயரமும் சோகமும் இழப்புகளுமாக வீரர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினார்.
பூர்சிரவஸ் அத்தினாபுரத்திலுள்ள தன் வீட்டுக்கு ஒரு நாள் மாலைப் பொழுதில் யுத்த களத்திலிருந்து சோர்வுடன் வந்து சேர்ந்த போது அவரது மகள்மாரும் மருமக்களும் தேம்பி அழுதுகொண்டே அவரின் கை கால்களைப் பிடித்துக் கொண்டனர். பேரப்பிள்ளைகள் காரணம் தெரியாமல் அவரைப் பார்த்து அழுதபடிநின்றனர்.
பூர்சிரவளியின் வீட்டில் மட்டுமா இந்நிலை?
இல்லை. ஆரிய வர்க்கத்தின் எல்லா வீடுகளிலும் இதே அழுகை ஒலியும், துயர கீதமும் தான்.
3.
2.
C
g
போர் முடிந்து ஒரு மாத காலமாகிவிட்டது. போர்ச் சூழலிருந்து மக்கள் மனம் மெல்ல மெல்ல விடுபட ஆரம்பித்திருந்தது. தருமனை அத்தினாபுர ராஜ்சியத்தின் அரசனான முடி சூட்டுவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன. அத்தினா புரத்தின் தருமனின் அரசாட்சி அரசுயந்திரங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. துரியோதனின் அனுதாபிகள் கலகம் செய்யக்கூடும் என்ற ஐயத்தில் அவர்களைக் கண்காணிக்கவும், கைது செய்யவும், முடிந்தால் அழிக்கவுமான உளவுப்படை உருவாக்கப்பட்டிருந்தது. கெளரவர்களின் சொத்துக்களும் அடிமைகளும் பாண்டவருக்குரியதாகிவிட்டது. தம்முடன் இணைந்து சண்டையிட்ட அரசர்கட்கு அவற்றின் சில பகுதிகளை அள்ளி வழங்கினர் பாண்டவர், அத்தினாபுரத்தினின்ற துரியோதனாதியோரின் செல்வங்களை யானைகளிலும் பல்லக்குகளிலும் தம் நாடுகட்கு செல்லும் அரச பரிவாரம் எடுத்துச் செல்வதைப் பார்த்த அத்தினாபுர LDéisabóir
"துரியோதனனிடம் அடித்த ஒரு பகுதியை மற்றவர்க்கும் பாண்டவர்கள் பங்கிடுகிறார்கள்" என்று அக்கம்பக்கம் பார்த்து விட்டு இரகசியமாகத் தமக்குட் பேசிக் கொண்டனர்.
ஒர் அரசு வீழ்ந்து விட்டது. அதனுடைய இடத்திற்கு இன்னொரு அரசு வந்துவிட்டது. இந்நிலையில் தான் யுத்த முடிவின் பின் அத்தினாபுரம் வந்தான் சார்வாகன்.
 

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 261
நடந்தேறியவை அனைத்தும் அவனுக்குப் பெரும் சினத்தை மூட்டியிருந்தது.
அரசு போட்டியிலே மக்கள் பகடைக்காய்களாக்கப்படுவதும், அரசுக்குச் சார்பாக அறிவு என்ற போர்வையில் பிராமணதர்மம் துணை நிற்பதும் அவனுக்கு மிகத் தெளிவாகப் புரிந்திருந்தது.
தனக்குப் புரிந்தது மக்களுக்குப் புரியவில்லையே என்ற மனக்கொதிப்பு, ஆதங்கம், கோபம், துக்கம், மிகப் பெரிதாக எழும் ஒர் பேரரசுப் பெருக்கத்தின் முன்னால் தான் ஒரு தூசு என்பதை அவன் அறிந்திருந்தாலும் 'உண்மை அறிவு என்கிற மாபெரும் ஆயுதம் தன் பக்கம் மாத்திரமே உண்டு என்பதை அவன் தீர்க்கமாக அறிந்திருந்தான். இவ்வாயுதத்தை ஏற்கும் பக்குவத்தை மக்களுக்கு ஏற்படுத்துவதே தனது பிறப்பின் பயன் என்பதை அவன் உணர்ந்தான். இதற்கான மரணம் என்ற வெகுமதியை புதிய அரசு தனக்குத் தரும் என்பதும் அவனுக்குத் தெரியும்.
இந்தச் சூழலிலேதான் அத்தினாபுர நகரத்தின் நான்கு திசை வீதிகளும் சந்திக்குமிடத்தில் தன் மூன்றாவது குரலை அவன் ஒலிக்க ஆரம்பித்தான்.
பூர்சிரவஸசம் அவன் குரலை அவதானித்தார். "மக்களே! மக்களே" என்று சார்வாகனன் அடிக்கடி விழித்தமை அவன் மீது அவருக்கு மிகுந்த பிரியத்தை ஏற்படுத்தியிருந்தது. மனித உயிர்கள் அழித்தொழிக்கப்படுவதை அழிப்பின் போது மனித உயிர் படுவேதனையை அரச போட்டியில் மனிதர்கள் வீணே அழிந்ததை அவன் கடுமையாக சாடினான்.
"சிலரது அந்தரங்க ஆசைகளின் வெளி வடிவமே யுத்தம்" என்றான். "இனியும் யுத்தம் நிகழக்கூடாது. மனித? குல வரலாற்றில் இருந்து அது அகற்றப்பட வேண்டும் என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.
அவன் சொற்களுக்கு கட்டுப்பட்டு நின்ற மக்கள் கூட்டத்துள் பாண்டவ அரசின் உளவுப்படையினரும் நின்று கொண்டிருந்தனர். அரசுக்கு எதிராகவும், ராஜ்ய பாரமேற்கப்போகும் தர்மனுக்கு எதிராகவும் காலையிலிருந்து பேசிநிற்கும் இவனைக் கண்காணித்தபடி அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
"பாண்டவர்கள் பாண்டவர்கள்" என்ற சலசலப்பு மக்களிடம் எழுந்தது. மக்களை விலக்கியபடி குதிரை வீரர்கள் முன்னால் வர பின்னால் வந்த இரதங்களில் பாண்டவரதங்கள் ராஜபாட்டையால் வந்து கொண்டிருந்தன.
"விலகுங்கள்! விலகுங்கள்! " என்று மக்களை விலக்கியபடி குதிரை வீராகட்கு முன்னால் மெல்ல ஒடியபடி சென்றனர் முன்னணிக் காவலாளர்கள்.
முதலாவது இரதத்திலே தருமனும் பாஞ்சாலியும் இருந்தனர். இரண்டாவது இரதத்திலே கிருஷ்ணனும் வீமனும் அருச்சுனனும் இருந்தனர். மூன்றாவது இரதத்திலே நகுலனும், சகாதேவனும், விதுரனும் இருந்தனர். மக்கள் பாண்டவரையும், அவர் ரதங்களையும் நோக்கினர்.

Page 138
2(2 மெளனம்
கூட்டத்தினருள் ஒரு சிலர் கைகளை அசைத்தனர். இன்னும் சிலர் எவ்வித உணர்ச்சியுமின்றி அவர்களை வெறித்துப் பார்த்தபடி நின்றனர். சார்வாகனன் நின்ற இடத்தை இரதங்கள் தாண்டின.
"தர்மனே உதிரக்கறையுடன் நீமணிமுடிதரிக்கப் போகின்றாய். மக்களை நசுக்கும் அரசை மீண்டும் உருவாக்கப் போகிறாய்"
"இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றும் இன்னும் உனக்கு இரத்த வெறி தீரவில்லையா?முடிசூடியதும், புரோகிதர் துணையுடன் அஸ்வமேத யாகம் செய்வாய். உன் குதிரையை உலகெங்கும் அனுப்புவாய். உன் பிரதாபங்களை அதன் நெற்றியில் எழுதி நானே பேரரசன் எனக்கு அடங்க நினைப்போர் குதிரையை உங்கள் நாட்டுக்குள் அனுமதியுங்கள். அடங்க விரும்பாதோர் சமர் புரியுங்கள் என்பாய். பிறகு என்ன போர்! மீண்டும் போர்! அழிவு, பிறகும் அழிவு."
"உன் அரசப் பெருக்கத்திற்கு இவ் ஆரியவர்க்க மக்களை மீண்டும் மீண்டும் பலி கொடுக்கப்போகிறாயா? உனக்குப் பேர் தானா தருமன்?"
உரத்த குரலிலே சார்வாகனன் கூறினான். தருமன் மீதும், புதிய அரசுமீதும் அவன் கொண்ட வெறுப்பு அவன் வார்த்தைகளிலும் தொனிகளிலும் மாத்திரமல்ல. தருமனை அவன் பார்த்த அருவருப்பான பார்வையிலும் தெரிந்தது. தருமனை அக்குரல் அசைத்துவிட்டது. சார்வாகனனின் கண்களும், தர்மன் கண்களும் ஒரு தடவை சந்தித்தன. சார்வாகனனின் தீட்சணியம் மிகுந்த பார்வையையும், அவன் உண்மையினைப் பயமின்றி எடுத்துக் கூறுவதையும் உள் வாங்கிய தர்மன் தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டான்.
எல்லோருடைய ரதங்களும் ஒரு கணம் அவ்விடத்தில் நின்றன. "தர்மா நீயும் உன் மனைவியும் லட்சக்கணக்கான மக்களைப் பலி வாங்கியவர்கள். உங்கள் ஆசைக்கும், சபதத்திற்கும், பலியான உயிர்களின் கணக்கு உங்களுக்குத் தெரியுமா? அந்த உயிர்களின் சொந்த பந்தம் இன்று படும் வேதனை புரியுமா..?உனக்கு தேசத்திற்கு அதிபதியாக உரிமை இல்லை. மீண்டும் மீண்டும் மக்களை அழிப்பாய்."
"உதிரக்கறை படிந்த உனக்கேன் அரசு?" அந்தக் குரலின் வன்மையை தருமன் அவதானித்தான். அது அவனைக் குத்திக் கிழித்ததாயினும் அதில் உண்மை இருப்பது தருமனுக்குத் தெரியும். ஒரு மாத காலமாக இதே வினாக்களைத் தான் தருமனின் மனம் எழுப்பியபடி இருந்தது.
"இத்தனை மக்களையும் கொன்றா நான் இந்த முடியைச் சூட வேண்டும்" வரலாற்று விதிக்குள் சிக்கிக் கொண்ட தருமனுக்கு அத்தோடு அடிபட்டுச் செல்வதை விடத் தப்பிக்க வழி தெரியவில்லை.
"தருமா! உன் மேனியில் வீசும் பிண நெடியை என்னால் பொறுக்க முடியவில்லை. போ! என் முன் நிற்காதே"
சார்வாகனன் தன் வெறுப்பெல்லாம் திரட்டி தர்மன் முன் எறிந்தான்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 263
தர்மன் அவன் கேள்விக் கணைகளைத் தாங்கியவாறு அவனைப் பார்த்துச் சொன்னான்.
"துறவியேநான் நிர்ப்பந்தத்தின் பொருட்டே அரசபாரம் ஏற்கிறேன். பாரதப் போரை நிறுத்தவே நான் முயற்சித்தேன். ஐந்து ஊராவது தாருங்கள் என்று கேட்டேன். ஒன்றும் நடக்கவில்லை. போர் நிர்ப்பந்தம், அரசபாரம் நிர்ப்பந்தம். தொடரப் போகும் ஆட்சியும் நிர்ப்பந்தம்"
தர்மனுக்கும் தன் வழி தெளிவாகத் தெரிந்தது. வீமனின் முகத்திலே பயங்கரமான ஆவேசம்
"அண்ணனை எதிர்த்துப் பேசும் இவனை அழிக்க வேண்டும்" வாளுடன் எழுந்த வீமனை கிருஷ்ணன் கையமர்த்தினான். "இப்போது நீர் பழைய வீமன் அல்ல. புதிய ஆட்சியின் ஓர் முக்கிய உறுப்பினன். உன் சொற்கள் மக்கள் மத்தியில் உமக்கும் உன் ஆட்சிக்கும் எவ்வித பங்கத்தையும் ஏற்படுத்தி விடக் கூடாது."
அவனை அழிக்கும் பணியை மக்களையே செய்யப்பண்ண வேண்டும். "மக்களெல்லாம் அவன் பேச்சில் கட்டுண்டு கிடக்கிறார்களே" ஆத்திரப்பட்டான் அருச்சுனன். அனைவரையும் கையமர்த்திய கிருஷ்ணன். "ரதங்கள் புறப்படட்டும்" என்று குரல் கொடுத்தான். அனைவரின் ரதங்களும் புறப்பட்டன. சார்வாகனனின் சத்தியக் குரலுக்கு அஞ்சி ஒடுவது போல அந்த மூன்று ரதங்களும் வேகமாக அத்தினாபுரத்தின் தருமனின் அரண்மனை நோக்கி சென்றன.
சார்வாகனின் ஆட்சி எதிர்ப்புக் குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. சிறிது நேரங்களில் சார்வாகனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நின்ற சனக்கூட்டத்தின் தொகை மும்மடங்கானது. மிகுந்த சனக்கூட்டத்தினரைக் கண்ட சார்வாகனின் உற்சாகம் கூடியது. தன் கருத்துக்களுக்கு மக்கள் செவி சாய்க்கிறார்கள் எனக் கண்ட சார்வாகனனின் கண்டனத் தொனிகள், கிண்டல் உரைகள் மேலும் மேலும் கூடின.
பூர்சிரவஸ் மனம் சங்கடப்பட்டது. திடீரென சனக்கூட்டம் கூடியமை அவருக்குச் சந்தேகத்தைக் கிளப்பியது. அவர் சந்தேகத்தை உறுதிப்படுத்துவது போல சனக்கூட்டத்துள் இருந்து வந்தது ஒரு குரல்.
"டேய் சார்வாகா தர்மத்தை நிலைநிறுத்த நடந்த யுத்தத்தை அதர்ம யுத்தம் என்றா கூறுகிறாய்?"
சார்வாகனன் பதில் சொன்னான்." "அடே முழு முடா யுத்தம் என்றாலே அதர்மம் தானடா" "யுத்தம் என்று தோன்றியதோ அன்றே அதற்கான எதிர்ப்புக் குரலும் தோன்றி விட்டதடா! அரசுகள் தானடா யுத்தத்தை நடத்துகின்றன."

Page 139
264 மெளனம்
"டேய் சார்வாகா அரச நிந்தனையை நிறுத்து"
"தருமனைக் குறை கூறாதே" "பாஞ்சாலியைக் குறை சொல்லாதே" "வைதிக மதத்தை இகழாதே" "புரோகிதர் வசைமாரியை நிறுத்து"
நாலாதிக்கிலும் இருந்து குரல்கள் வரத் தொடங்கின. காலை முதல் தன் பேச்சை அதிக எதிர்ப்பின்றி கேட்டுக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் இப்போது ஆக்கிரோஷத்துடன் எதிர்ப்பதன் பின்னணியை
சார்வாகனன் புரிந்து கொண்டான்.
"இவன் துரியோதனனின் கையாள் அரசுக்கு எதிராகக் கலகம் புரியும்
கலகக்காரன்"
"கலகக்காரன்!" "கலகக்காரன்!" "துரோகியைக் கொல்லுங்கள்" "துரோகியைக் கொல்லுங்கள்" சனக்கூட்டம் தத்தளித்தது.
சார்வாகனன் மெளனமானான். அவன் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்க
வில்லை. அவன் நினைத்தது நடந்து விட்டது.
கூட்டத்துள் நின்ற ஒருவன் யாக காரியங்களுக்காக வைத்திருந்த நெய்யை சார்வாகன் தலை மீது ஊற்றினான். சனக்கூட்டத்தினர் சிலர் ஐயோ!
ஐயோ அவரை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று குரல் எழுப்பினர். பூர்சிரவஸ0க்கு சார்வாகனைத் தெரியவில்லை. கூட்டம் அவனை மறைத்துக் கொண்டது.
திடீரென ஓர் நெருப்புச் சுவாலை எழுந்தது. சார்வாகன் எரிந்து கொண்டிருந்தான். சார்வாகனின் உண்மை கலந்த சமாதா னத்தின் தொனி காலையில் அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தோரின் மனங்களில் ஒலித்தபடி இருந்தன. எரிந்துகொண்டிருக்கும் சார்வாகனின் சடலத்தைக் காப்பாற்ற வழி தெரியாது அவர்கள் திக்பிரமையுடன்நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் மனங்கள் குருசேத்திர களங்களாயின.
 

கவிதைகள்
வயதோ சென்றத வாழ்க்கையில் பல நாள்
வறிதே சென்றது இனி என்ன
மரணமே மீதி என்றனை நீயும் வா! இரு நண்பா! என் கதை கேள் நீ,
உடல் இனும் தளரா நிலையிலே உண்டு உடல் மிக உறுதியாய் இன்னமும் உள்ளத. வயததான் போனது. ஆயினும் நண்பா வாழ்வதில் ஆர்வமோ மிக மிக மிக மிக
தன்பம் ஓர் புறம் இன்பம் மறு புறம் நஷ்டம் ஒரு புறம் நயமோ மறு புறம் ஏற்றம் ஒரு புறம் இறக்கம் மறுபுறம்
வாழ்வின்
55
சுகமோ ஓர் புறம் தக்கம் மற புறம் சிரிப்பு ஒர் புறம் அழுகை மறு புறம் மலர்ச்சி ஓர் புறம் வறட்சி மறு புறம்
இத்தனை வளமாய் வாழ்வு தெரிகையில் இறப்பதற்கு ஆசை எப்படித் தோன்றும்? வாழ வேண்டுடும், வாழ வேண்டும் அனைத்தையும் ஏற்று வாழ வேண்டும்.
தன்பமோ இன்பமோ நயமோ நஷ்டமோ ஏற்றமோ இறக்கமோ சுகமோ தக்கமொ மலர்ச்சியோ வரட்சியோ
அனைத்தையும் ஏற்று வாழ வேண்டும்

Page 140
266
குளிலும் நெருப்பிலும் கிடைப்பத ஒருசுகமே கசப்பிலும் இனிப்பிலும் கிடைப்பத ஒரு சுவையே
தன்பம் மேல் தண்பமாய் வாழ்வு வாட்டுகையிலே தக்கமோ தக்கமாய் வாழ்வு வரட்டுகையிலே நஷ்டமோ நஷ்டமாய் கணக்கு மீள்கையிலே மேலும் மேலும் மிக அதிகமான
தீவிரமாக வாழ்ந்திட வேணும்.
வாழ்வின் தீவிரம் அனைத்தையும் புரட்டும்
மெளனம்
வாழ்ந்ததான் வாழ்வின் சுவையைச் சுவைக்கலாம் நடந்துதான் நமத பயணத்தை முடிக்கலாம்.
புதித புதிதாய் காணவும் கேட்கவும் புதிய புதிய அனுபவம் தேடவும் புதுமை விரியும் இவ்வுலகைப் பார்க்கவும் மேலும் ஆசை மனதிலே விரியுத.
வாழவே பிறந்தோம் நண்பனே நாங்கள் வாழவே பிறந்தோம் இறப்பதற்கண்று.
மூன்றாவது மனிதன் 2002

பிரசவம்
எங்கும் சூனியம் எங்கும் வெறுமை எங்கும் அமைதி அமைதி - உலகில் எங்கும் அமைதி அமைதி,
விண் வெளியிடையில் மேகம் நடுவில் அண்டம் அதிர ஒருகுரல் - ஆமாம் அண்டம் அதிர ஒருகுரல்.
வான முகட்டில் மேகம் மோத ஞான ஒளியென ஓரொளி - சட்டென ஞான ஒளியென ஒரொளி.
சூறைக் காற்று சுழற்றிச் சுழற்றி வேரைப் பிடுங்குத பிடுங்குத ~ பாரின் வேரைப் பிடுங்குத பிடுங்குத.
மேகம்' சிசுவை வெளியில் வீசிட வேகத் தோடத முனகுத ~ விண்ணில் வேகத் தோடத முனதுகு.
எங்கும் சப்தம் எங்கும் குழப்பம் எங்கும் கூச்சல் கூச்சல் ~ ஆமாம் எங்கும் கூச்சல் கூச்சல்.

Page 141
268
மெளனம்
மேகச் சூலின் மேனி வெடிக்கப் போகப் பெருமழை பொழியுத ~ பாய்ந்த போகப் பெருமழை பொழியுத.
LLLLLLLL0L000L000LzY000L00L LL0L0L00z00L00L00L0LL0L0LLLLLL00LLLLLL0LLLY0LLL 0L LLLLL LLLLLLLL0
LLLYY0000Y0L0L0LYLLLLLL0LLLL0L0LYLL0LLLL0LL LLLYLLLLLL0z0z00L
ஆட்டம் ஓய்ந்தது வாட்டம் தீய்ந்தது கூட்டங் கலைந்தது கலைந்தத ~ மேகக் கூட்டங் கலைந்தத கலைந்த
சூல் சுருங்கிடச் சூழல் மயங்கிடக் கால் ஒடுங்கிட ஒடுங்கிட ~ எங்கும் கப்பென அமைதி அமைதி.
வெள்ளச் சிசு தன் காலை யுதைதத
மெள்ள மெள்ளப் பாயுத ~மண்ணில் மெள்ள மெள்ளப் பாயுது.
எங்கும் சூனியம் எங்கும் வெறுமை எங்கும் அமைதி அமைதி - மீண்டும்
எங்கும் அமைதி அமைதி.
வீரகேசரி - 1963

வெற்றிக் குரல்
காலையிற் கண்ணை விழித்தேன், வாசலிற் கனத்த சத்தம் கேட்டத, அம்மா யாரையோ ஏசினாள். ஏச்சா அத ஆம் ஏச்சென உணர்ந்தேன் எங்கள் வண்ணான் எதிரில் நிற்க இவளோ அவனுக் கதிகம் ஏசினாள். நின்றவன் மயிலனின் மகன் வடிவேலன். மயிலனோவந்தால் வளைவான், நின்றால் நெளிவான் தலையைச் சொறிந்து பல்லைக் காட்டுவான். மெல்ல அந்தக் குந்தில் அமர்வான். இவனோ அப்படியில்லை. வளைதல் நெளிதல் வாயைப் பிளத்தல் தலையைச் சொறிந்து பல்லைக் காட்டுதல் எதுவும் இல்லை நிமிர்ந்தே நிற்கிறான். எதிர் காலத்தைப் படைப்பவன் போல இவன் எண்முன்னே நிமிர்ந்தே நிற்கிறான் இவனை நான் விரும்பினேன்.
‘என்னடா வேலா எங்கடா கொப்பன்? இத்தனை நாளாய்ப் போட்ட உடுப்பு எங்கடா? ஏன் இன்னும் கொண்டு வரல்ல' அதிகாரத் தொனியில் அம்மா கேட்டா.

Page 142
270
மெளனம்
"என்னம்மா செய்ய? இத்தனை நாளும் மழையோ பெய்தது, வெயில் எறிக்கல்ல ஏசிறியள் இது தெரி யாதோ? வேலனின் குரல்தான் விண்ணென் றொலித்தது.
"என்னடா என்னை எதிர்த்தொ பேசுறாய்" உங்களுக்கும் வாய் வந்திட்டோ உங்களுக்கெல்லாம் நாங்க கொடுத்த இடம்
அம்மாவின் குரல் அண்டை அயல் எல்லாம் கேட்கும் படியாய்க் கிடு கிடுத்தத. அம்மா தொடர்ந்து அலறினாள் அலறினாள்.
'ஏனம்மா சும்மா எனக்கு ஏசிறியள் எதிர்த்தப் பேசுதல் எமக்குத் தகாதோ? நாங்களும் மணிசர்தான், நாங்களும் மனிசர்தான்' வேலன் குரலே, மேலால் ஒலித்தது.
அம்மா முகத்திலோ எள்ளும் கொள்ளும்.
எனக்குத் தெரியும் இக்குரலின் ஓசை புதிய தலைமுறை குரல் இத அறிவேன் புதிய யுகத்தின் ஓசை ஈதறிவேன்.
எதவும் தெரியா எனத அம்மாவோ அழியுத என்றே அடக்குர லிடுகிறாள் அழியுத என்றே அடக்குர விடுகிறாள்.
மல்லிகை ஆகஸ்ட் 1974

ஏனோ எழுதுகிறாய்
நாளையே தோன்றிடும் நாளினை எண்ணாத ஏனோ எழுதுகிறாய் - இந்த வேளைக்கு வேண்டிய தேவை மறந்த நீ வீணாய் எழுது கிறாய்.
பஞ்சமொடாடி உயிர் வளர்த்தே நிற்கும் பாவியைப் பார்க்கவில்லை - அவன் கெஞ்சல்கள் உன் செலி ஏறவில்லை பேனைக் கீறல் உனக் கெதற்கு?
ஏழைகள் கூட்டமுன் கற்பனையோட்டிட இடந்தர வில்லையா சொல் - மலைத் தோழை எழுதிய கை சிறு ஏழையைத் தாக்கவோ என் றெண்ணமா?
முட்டி நிற்கும் சமுதாய விடுதலை மோதிட வில்லையா சொல் - அதை வெட்டி விலக்கி எழுதுகிறாய் நீயும் வீணே எழுதுகிறாய்.
பண்டைய நம்மவர் வீரப் புகழினைப்
பகட்டி எழுது கிறாய் - நீயும்
இன்றைய நம்மவர் வாழ்வை எழுதாது
ஏனோ எழுதகிறாய்.
ஆழ்பவன் பக்கத்தில் நின்றுந்தன் பேனையை ஆட்டி எழுதகிறாய் - இங்கு மாழ்கின்றன தோரினம் மாற்ற முண்டாக்கிட
மாற்றி எழுது எழுத: மணிக்குரல் 1983

Page 143
6T60)ğ5ü LumTL?
பனிப்படல மன்ன வெளிர் பட் டாடை நீக்கி எனைப் பார்த்துக் கண்சிமிட்டி ஏன் சிரித்தாய் நிலவே? உனைப்பார்த்த முன் போல உணர்ச் சியுடன் பாட இனிப்பான நினை வேதும் என் நெஞ்சில் இலையே.
வாழ் வோடு போராடி வாடு கிற ஏழை, மாள் கின்ற நிலை போக வழி யேதும் இலையா? கழுதடி தயர் நெஞ்சிஸ் மீறி வான் நோக்கி ஆழ்கின்ற உனைப் பாட ஆர்வ மிங் கிலையே.
வளி போன டயர் போல மடி கின்ற வயிறும் சளி வழியம் முக்கோடு குளி கொண்ட கண்ணும் ஒளி யற்ற வாழ்வோடு உணவு அற்ற நிலையும் வெளி யுள்ள பிரபஞ்ச விண் ணாணக் காட்சி.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர்
ஒரு நேரச் சோற்றோடு உயிர் என்ற கிளியை உரமற்ற உடற் கூட்டில் அடைக்கின்ற நிலை ஏன்? சருமத்தின் தோல் ஆடை. தண் ணீரே வியர்வை பெமுச்சு பெருமூச்சு!! பிற மூச்சு இலை ஏன்?
எனைச்சூழ வாழ்கின்ற ஏழையர் தம் நிலைமை தனைத் தீர்க்கும் வழியில் நான் நடக்கின்றே னிங்கே, உனைப் பார்த்து இந்நிலையில் ஒரு கவிதை செய்ய நினை வில்லை நெஞ்சதனில் நில்லாதே ஒடு.
273
தினகரன் 1964

Page 144
சிறுகதை
உலகங்கள் மூன்று
பின்னேரம் இரண்டு மணி. நான் என் அறைக்குள் படுத்தபடியே வாசித்துக் கொண்டிருக்கிறேன். வழக்கம் போலக் கேட்கும் சப்தங்கள் எதுவும் இல்லை. வீதியால் வண்டிகள் தினமும் உறுமிக் கொண்டு ஓடும். பக்கத்து வீட்டு மனுஷி யாருடனாவது உரத்த தொனியிற் பேசுவாள். வீட்டு மதில்மேல் இருந்து காகம் ஒன்று பெரும்பாலும் கரைந்து கொண்டிருக்கும்.
இச்சப்தங்கள் எதுவும் இப்போது இல்லை. காற்றில் அமைதி கரைந்து கிடக்கிறது. சூழ நிசப்தம். அமைதியின் அணைப்பின் சுகிப்பு. அல்லது வாசிப்பின் இலயிப்பில் அமைதியின் உக்கிரம், அது ஓர் அருமையான புத்தகம். ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றி நான் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருக்கும் மூன்றாவது நூல் இது. அந்தக் குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக நேற்றுக் காலை தொடங்கிய வாசிப்பு இது. நேற்றுக் காலை இருந்து இப்போதுவரை இடையிடையே அன்றாடக் கடமைகள் இடையிட்டாலும் அந்த குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக இந்த வாசிப்பே நேற்றிலிருந்து இப்போது வரை பிரதான அம்சமாக எல்லாவற்றையும் முந்திக் கொண்டு நிற்கிறது.
வாசிப்பின் மையம் நவீன ஒவியத்தைப் புரிந்து கொள்ளுதல் பற்றியது. வெளியேயிலிருந்து கர்.கர். என்று வந்த அபஸ்வர ஒலி சூழலின் அமைதியைக் கெடுத்து என் வாசிப்பின் இலயிப்பையும் அது தரும் சுகத்தையும் குழப்புகிறது. வெளியே,
என் மகன் ஹோலில் உட்கார்ந்து மொசாய்க் தரையில் ஏதோ ஒரு பொருளை அழுத்தி அழுத்தித் தேய்க்க அபஸ்வரமாக எழும் அந்தச் சப்தம்.
கர்.கர். கர். கிறீச். என் வாசிப்புக் குலைகிறது. என் உலகம் உடைகிறதா? என்ன பொருளாக அது இருக்கும்? அவனிடமுள்ள - அவன் விசேடமாக விரும்பும் விளையாட்டுக் காராக அது இருக்க வேண்டும். அழுத்தி அழுத்தி அவன் தேய்க்கிறான்.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 275
தொடர்ந்தும் தொடர்ந்தும் தேய்க்கும் சப்தம். எனக்கு அச்சப்தம் அபஸ்வரமாக ஒலிக்கிறது. என் அமைதியைக் கெடுக்கிறது. என் வாசிப்பைக் குலைக்கிறது.
மீண்டும் மீண்டும் அவன் அக் காரைத் தேய்க்கிறான். மீண்டும் மீண்டும் அதே அபஸ்வர ஒலிகர்.கர்.கர்.கிறிச்
என்னால் அவ்வொலியைச் சகிக்க முடியவில்லை. அது என்னை மிகவும் குழப்புகிறது.
அவனுக்கு வயது ஒன்பது. அவன் புத்திசாலிப் பையன் என்பதில் ஒரு தகப்பனுக்குரிய பெருமை எனக்கு.
இந்த வயதில் அவன் நிறைய வாசிப்பான். ஆனால் அவன் வாசிப்பது இந்திர ஜாலக் கொமிக்ஸ் புத்தகங்கள்தான். 007 ஜேம்ஸ்பொண்ட், மாயாஜால மண்ட்ரக், ஸ்பைடர் மேன், வேதாளன் இவர்கள்தான் அவனின் கதாநாயகர்கள்.
"இந்த விழல் கதைப்புத்தகங்களுக்கு வீண் காசு கொட்டுகிறீர்கள்" என்று என் மனைவி அடிக்கடி என்னைக் குறை கூறுவாள்.
தரமான நூல்களை வாசிக்கக் கொடுக்க வேண்டும் என்பது அவளின் வாதம், அதில் மிகவும் உண்மையுண்டு. எனினும் அவளின் தரக்கோட்பாடு மகனுக்குப்பிடிப்பதில்லை.
எப்படியாவது என்னை வளைத்து ஒரு கொமிக்ஸ் நூல் வாங்கி விடுவான். அந்தப் புத்தகங்களைக் காணுகையில் அவனின் கண்கள் விரிவது. அவற்றை வாசிக்கையில் அவனின் முகத்தில் ஏற்படும் உணர்வு மாற்றங்கள், அதை வாசித்த பின்னர் அக்கதை சம்பந்தமாக கையை ஆட்டி ஆட்டி இயல்பான உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் அவன் அக்கதை நிகழ்ச்சிகளை எனக்கு விளக்கும் முறை, இவையெல்லாம் எனக்குப் பிடித்தமான நான் ரசிக்கின்ற விஷயங்கள்.
தனியான ஒரே பிள்ளை என்பதனால் அவனுக்கு வீட்டில் சலுகைகள் கூட. விளையாடுவதற்கு அவனோடொத்த யாரும் வீட்டில் இல்லை என்பது ஒரு குறை, அவனுக்கும் எங்களுக்கும்.
கண்ணாடிக்கு முன்னால் நின்று தன்னோடு தானே அவன் பேசியும் கொள்வான். அது வலு சுவராஸ்யமாயிருக்கும்.
என் மனைவி கொஞ்சம் கண்டிப்புப் பேர்வழி. அவனின் இயல்பான உற்சாகங்கள் சிலவேளை அவளால் தடைப்பட்டு விடும்.
கர்.கர். கர். கிறீச். கர். மீண்டும் மீண்டும் தரையில் விளையாட்டுக் காரைத் தேய்ப்பதால் எழும் ஒலி அபஸ்வரமாக என்னைச் சூழ்கிறது.
அடுத்த அறைக்குள்ளிருந்து மனைவியின் குரல் கேட்கிறது. "வசந்த் சத்தம் போடாத, அரியண்டமாக இருக்கு" வசந்தனின் அம்மா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றுகிறாள்.

Page 145
276 மெளனம்
ஒரு மணியிலிருந்து ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறாள். மறுநாள் ஒரு பத்திரிகைக்குக் கொடுக்க வேண்டிய கட்டுரை அது. மத்தியானம் சாப்பிடும் போது அவள் சொன்னாள்.
"நான் பின்னேரம் எப்படியும் கட்டுரை எழுதி முடிக்க வேண்டும்"
புத்தகங்களை மேசையில் பரப்பியபடி இப்போது அவள் அவற்றிலிருந்து தன் கட்டுரைக்குரிய ஆதாரங்களை ஒரு தீவிர லயத்துடன் தேடிக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள்.
கட்டுரை எழுது முன்னர் சில்லறை வேலைகள் அனைத்தையும் முடித்து விடுவாள். மேசை முழுக்க நூல்கள் பரவிக் கிடக்கும். அவளது கண்கள் கூர்மையாக நூல்களின் வரிகளைத் துழாவி நிற்கும். சூழலை மறந்து போயிருப்பாள்.
இப்போதும் அப்படித்தான் அவள் இருந்து கொண்டிருக்க வேண்டும்.
"வசந்த் சத்தம் போடாத, அரியண்டமா இருக்கு"
மகன் அவள் குரலை அவ்வளவு பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் காரைத் தரையில் இழுக்கிறான்.
கர்.கர்.கிறீச்.
அதே அபஸ்வர ஒலி.
அந்த இழுப்பு விளையாட்டில் அவன் தன்னை மறந்து இலயித்திருக்க வேண்டும். அது அவன் இயல்பு எதை எடுத்தாலும் அதில் ஒன்றி விடுவான். சூழலை மறந்து விடுவான்.
அவனுக்குள் ஒர் உலகம்.
மீண்டும் மனைவியின் குரல் கேட்கிறது. இப்போது அதில் கண்டிப்புத்தொனி கலந்திருக்கிறது.
"வசந்த் நான் சொன்னது கேக்கேல்லையா?"
தனக்குச் சொன்னது கேட்கவில்லை, அல்லது அக்கட்டளை தனக்கு உடன் பாடில்லை என்பதை வாயாற் கூறாமல் தாய்க்குப் புலப்படுத்த மீண்டும் மீண்டும் காரைத் தரையோடு தேய்க்கிறான்.
அவ்வொலி மீண்டும் மீண்டும் காதில் மோதி என் அமைதியைக் குழப்புகிறது.
அவ் அபஸ்வர ஒலி என்னைத் தடை செய்கிறது என்ற எண்ணம் எனக்குள் விதையாகி, முளையாகி, மரமாகி, கிளைவிரித்து பூத்துக் கனிந்து விஸ்வரூபமெடுத்து வியாபித்து வளருகையில் அவ்வொலி வீடு முழுவதையும் நிறைத்திருப்பதை உணருகிறேன்.
மீண்டும் மீண்டும் அவன் காரைத் தேய்த்தடி,
கர்.கர்.கிறீச்.
"வசந்த்"

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 277
நான் உரத்துக் கூப்பிடுகிறேன்.
அவன் ஒருகணம் உராய்வதை நிறுத்துகிறான்.
"என்னப்பா"
அவன் தன்னுடைய உலகினின்று வெளி வந்து என் குரலைச் செவி மடுக்கிறான். என் உணர்வை அவன் மதிக்கிறான். அவன் கை இன்னும் அந்தக் காரின் மேல்தான் இருந்திருக்க வேண்டும். அவன் உலகை நான் ஏன் குழப்ப வேண்டும்? அவன் உணர்வை நான் மதிக்க வேண்டாமோ?
"என்னப்பா,"
மீண்டும் அவன் வினாவுகின்றான்.
"ஒண்டுமில்லை. இந்தப் பென்னை எங்க வைச்சனிங்கள்?"
அவன் உலகை நான் குழப்பிவிடக்கூடாது என்பதிற் கவனத்துடன் நான் கதையை மாற்றுகிறேன்.
"மேசைக்கு மேலதான்"
என்னையும் அவனையும் பிணைத்த வார்த்தைச் சங்கிலிகள் முறிந்து விடுகின்றன. ஓர் எல்லைக் கோட்டில் என்னைச் சந்தித்த அவன் மீண்டும் விலகிவிடுகிறான்.
மீண்டும்.கர்.கர். கர். கிறீச்.
அதே அபஸ்வரஒலி. அவன் தன் உலகுக்குள்
"அப்பா இந்த வசந்தப் பாருங்கோ"
மனைவியின் குரல் என்னை நோக்கி வருகிறது.
மகனை அடக்க சில வேளை நானும் ஒரு கருவியாக வீட்டில் பயன்படுத்தப்படுவதுண்டு.
வசந்தனின் உத்தியையே நானும் பயன்படுத்துகின்றேன். பதில் சொல்லவில்லை, வாசிக்கிறேன்.
மீண்டும் கர். கர். கா. கிறீச்.
மனைவிக்குத் தன் எழுத்து, சிந்தனை தடைப்பட்டுவிட்டதே என்ற சரியான கோபம்.
"அப்பா நான் சொன்னது உங்களுக்குக் கேக்கேல்லையா?"
மீண்டும் மனைவியின் குரல் மோதுகிறது.
என் மகனின் உலகத்துக்குள் நான் புகுந்து, என் உலகத்துக்குள், அவனைக் கொண்டுவர வேண்டிய, எனக்குப் பிடிக்காத ஒரு நிலை,
நெருக்கடிநிலையை எவ்வாறு தீர்க்கலாம்?
என் வாசிப்பை விட்டுவிட்டு நான் வசந்தனின் உலகத்திற்குள் போய் வெளியே சென்று குழந்தையாகி அவனுடன் ஏதாவது விளையாடலாம். என் வாசிப்பிலும் அது தரும் சுகத்திலுமிருந்து போக எனக்கு விருப்பமில்லாமல் இருக்கிறது. இது என் உலகம், என் உலகத்தை இழக்க எனக்கு விருப்பமில்லை.

Page 146
278 மெளன்ம்
தொடர்ந்தும் அபஸ்வர ஒலிகர். கர். கர். கிறீச்.
இன்னும் அவன் தேய்த்தபடி இருக்கின்றான்.
மனைவியின் வாயிலிருந்து வரும் அடுத்த ஒலிக்கு நான் Response பண்ணத்தான் வேண்டும்.
எனக்குள் அந்தரம்.
திடீரென கர். கர். அபஸ்வர ஒலி நின்றுவிடுகிறது.
சபேசனின் குரல் கேட்கிறது.
சபேசன் வசந்தனின் வகுப்பு மாணவன். வசந்தனுக்க மிக நெருக்கமான நண்பன்.
இருவரும் ஏதோ கதைக்கிறார்கள்.
அபஸ்வர ஒலிநிறுத்தம் வீட்டில் அற்புதமான அமைதியைத் தருகிறது. இரு சிறுவர்களினதும் முணுமுணுத்த கதைகள் அமைதியைக் குலைத்தாலும் முந்திய கர். கர். அபஸ்வர ஒலியுடன் ஒப்பிடுகையில் சூரியனுக்கு முன்னர் விளக்குப் போலாகிவிடுகிறது.
"அம்மாநானும் சபேசனும் வெளியில விளையாடப் போறம்"
குழந்தைகள் இருவரும் தம் உலகங்களுக்குள் சென்று விடுகிறார்கள்.
நான் வாசிக்க ஆரம்பிக்கிறேன்.
மனைவி எழுதிக் கொண்டிருக்கின்றாள்.
விருட்சம் 1984

முன்னுரை
"எறிகணைத் தாலாட்டு” என்ற கவிதை நூலுக்கான முன்னுரை
அன்புசால் ஆ கண்ணப்பன் அவர்கட்கு வணக்கம்,
மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒருநாள் உங்களை நண்பர் வீரசிங்கம் என்னிடம் அழைத்து வந்தார். நீங்கள் உங்கள் கவிதைகள் சில அடங்கிய தொகுதி ஒன்றினை என்னிடம் தந்தீர்கள். விரைவாக அதற்கு ஒரு முன்னுரை தரும்படியும் கேட்டுக் கொண்டீர்கள். ஒவ்வொரு நாளும் அதில் ஓரிரு கவிதைகளப் படிப்பதும், இரசிப்பதுமாக நாட்கள் கழிந்தன. முன்னுரை எழுதிமுடிக்க மிகவும் தாமதமாகிவிட்டது.
என் தாமதம் உங்களுக்கு மிகுந்த சலிப்பை ஏற்படுத்தியிருக்கும். பெரும் கோபமும் என் மீது ஏற்பட்டிருக்கும். அச்சலிப்பையும் கோபத்தையும் இதுவரை ஒரு கவிதையாக்கி இருந்திருப்பீர்கள். 'படித்தவர்களின் அலட்சியம்' என்ற கருத்துப் புலப்பட உங்களுக்கேயுரிய படிமங்கள், உவமைகள் கிண்டல்களுடன் அக்கவிதை உருவாகியிருக்கவும் கூடும். உருவாக்கியிருப்பின் மகிழ்ச்சி. ஒரு நல்ல கவிதை உருவாக நான் எத்தனை ஏச்சுப்படவும் தயார்.
முன்னுரை எழுதத் தாமதித்தமைக்கு எனக்கிருந்த வேலைப்பளுக்கள் ஒரு காரணமாயினும் இன்னொரு காரணம் உங்கள் கவிதைகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள்தான்.
இத்தொகுதியிலுள்ள சில கவிதைகள் ஓரிரு வாசிப்பில் அபிப்பிராயம் கூறக் கூடியவையல்ல. மீண்டும், மீண்டும் வாசிக்கையில் புதுப்புது அர்த்தங்களைத் தருவதுடன் அவை புதிய அனுபவப்புலங்களுக்கும் இட்டுச் செல்பவை. நல்ல கவிதைகளுக்குரிய குணாம்சங்களுள் இதுவும் ஒன்று. இத்தகைய கவிதைகள் கொண்ட தொகுதிக்கு அவசரமாக முன்னுரை எழுதுவதை விட ஆறுதலாக, எழுதலாம் என்று எண்ணியதும் தாமதத்திற்கான காரணங்களுள் ஒன்று.
நம்மத்தியில் வாழ்ந்து மறைந்த மாபெரும் கலைஞர் ஆனைக்குட்டியின் மகன் தாங்கள் என்பதை நான் அறிந்த போது பெருமகிழ்வடைந்தேன். இந்த

Page 147
280 மெளனம்
நாட்டில் வாழ்ந்து பெரும் பாராட்டுக்களைப் பெற்ற எந்தப் பெரும் கலைஞருக்கும் இளைத்தவரல்ல அவர் நமது தமிழ்ச் சமூகத்தை அரித்து இன்றும் தின்று கொண்டிருக்கின்ற புற்றுநோயால் அவர் சரியானபடி இனம் காணப்படவில்லை. அவரின் திறமைகள் உணரப்படும், மதிக்கப்படும் காலம் வரும். அவர்மீது எனக்கு மிகுந்த பெருமதிப்புண்டு.
பேராதனைப் பல்கலைக்கழகச் சமூகத்திற்கு அப்பெரும் கலைஞனை பேராசிரியர் சு.வித்தியானந்தன் 1960 களில் அறிமுகம் செய்த போது எனக்கு ஆனைக்குட்டி அறிமுகமானார். அவர் கலையிலே ஒரு மணிநேரம் ஆயிரக் கணக்கான சிங்கள தமிழ் மக்கள் கட்டுப்பட்டுக் கிடந்தமை பசுமையாக இன்றும் ஞாபகத்திலுள்ளது. நான் அப்போது அப்பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவனாயிருந்தேன்.
1970களில் எனது ஆராய்ச்சிக்காக நிறைந்த தகவல்களை ஆனைக்குட்டி அவர்கள் தந்தார்கள். கழுதாவளையில் அவர் வீட்டில் அவரை நான் சந்தித்தேன். நக்கலும், கிண்டலும், நகைச்சுவையும் கலந்த அவரது கணிரென்ற வெண்கலக் குரல் இப்போதும் காதுகளுக்குள் ஒலிக்கின்றது.
தான் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தை அதன் போலித்தனத்தை அவர் எதிர்கொண்ட விதத்தின் பிரதிபலிப்புத்தான் அந்த நக்கல், கிண்டல், நகைச்சுவை, உரத்த சத்தம் நிரம்பிய பேச்சு.
தந்தையின் குணாம்சங்கள் உங்களிடம் இன்னொரு விதத்தில் பிரபலிக்கின்றன. அவர் சமூகத்தின் தாக்கத்தை எதிர்கொண்ட காலம் வேறு, நீங்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் காலம் வேறு. அவரது அனுபவம் வேறு. உங்களது அனுபவம் வேறு. அவரது தலைமுறை வேறு, உங்களது தலைமுறை வேறு.
அவர் சடங்கிலும், கூத்திலும், மகிடியிலும் திளைத்தார். நீங்களோ நாடகத்தில் ஊறினீர்கள். 1975களில் கழுதாவளையில் அண்ணா கலைக்கழகம் நிறுவி 15க்கு மேற்பட்ட நாடகங்களைக் கிழக்கு மாகாணமெங்கும் 2500 தடவைகட்கு மேல் மேடையிட்டு ஊர்தோறும் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினிர்கள்.
அவரோ நாட்டார் பாடல்களையும், வசந்தன் பாடல்களையும் லாவகமாகக் கணிரென்ற இனிமையான குரலிலே பாடினார். நீங்களோ இன்றைய கவிதையை உங்களின் கருத்து அனுபவ வெளிப்பாட்டு ஊடகமாகக் கொண்டுள்ளிர்கள்.
என்னைச் சந்தித்து இத்தொகுதியைத் தந்தபோது உங்களின் புனைபெயர் "சாத்தானின் சகோதரன்" என்று கூறினீர்கள். வேதங்களுக்கும், புராணங்களுக்கும், கடவுளுக்கும் எதிரான சாத்தானைச் சகோதரனாக வரிக்கும் உங்கள் ஓமத்தில் ஒரு ஞாயப்பாடும், தெளிவும், கொள்கைப் பிடிப்பும் தெரிந்தன.

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 28
வேதங்களும், புராணங்களும், கோயில்களும் மானுடத்திற்கு எதிராகப் பயன்படும் நிலையில், தெய்வம் கூட வசதி படைத்தோரினதும், சுரண்டல்காரர்களதும் கைகளுக்குள் அடைக்கலமாகிவிட்ட நிலையில் அவற்றை எதிர்த்து நிற்கும் சாத்தானின் பக்கத்தைத் தெரிவு செய்வதை விட வேறு எந்தப் பக்கத்தை தெரிவு செய்ய முடியும் என்று தாங்கள் நினைத்திருக்கலாம். சாத்தானின் சகோதரன் என்ற அந்த மாற்றுமனோபாவத்தன்மை - புரட்சி. மனோபாவத்தன்மைஉங்கள் கவிதைகளைப் புரிந்து கொள்ள எனக்கு வெகுவாக உதவியது. உங்கள் கவிதைகள் முழுவதையும் வாசித்து உள்வாங்கிய பிறகு பின்வரும் படிமம்தான் உங்களைப் பற்றி எனக்குள் உருவாகியது.
கொதிக்கும் அனல் பிழம்புகளை தனக்குள் உட்சுமந்து கொண்டு இறுகியபடி வெளியிலே சாதாரணமாகக் காட்சிதரும் குளிர்மையான மலை முகடு. சமூகத்தின் போலித்தனங்களை, அநியாயங்களை அதிகாரங்களை அம்பலத்துக்கு கொண்டு வருவது கலைஞனின் குணாம்சங்களுள் ஒன்று. மற்றவர்கள் காணாத பகுதிகளை இவன் காண்கிறான். மற்றவர்க்கு புலப்படாதவை இவனுக்கு புலப்படுகின்றன.
அநியாயங்களை அம்பலப்படுத்தும் செயலை ஆர்ப்பாட்டமாகச் செய்யும் கலைஞர்களுமுண்டு. அழுத்தமாக, மறைபொருளாக ஆழமாகச் செய்யும் கலைஞர்களுமுண்டு. முன்னைய கவிதைகளைப் பிரசாரத்தொனி மிகுந்த கவிதைகள் எனக் குறிப்பிடும் விமர்சகர்கள் பின்னைய கவிதைகளை கவிதாழகு மிகுந்த கவிதைகள் என்பர். உங்கள் கவிதைகளின் பெரும்பாலனவை இரண்டாவது வகைக்குள் வருகின்றன. ஒருவேளை 1975 களில் உங்கள் நாடகங்கள் முதலாவது வகைக்குள் வந்திருக்கக்கூடும். இக்காலச் சூழலும் உங்கள் அனுபவ முதிர்ச்சியும் இப்போது உங்களை வழிநடத்துகின்றன என்று நினைக்கிறேன்.
கலைஞன் எப்போதும் ஒரு கொதி நிலையில்தான் நிற்கிறான். அது வெடித்துப் பாய்ந்து கிளம்பும் கொதிநிலையாயுமிருக்கும். எப்போதும் கள கள வென்று கொதித்துக் கொண்டிருக்கும் கொதி நிலையாயுமிருக்கும். உங்கள் கவிதைகளில் அக்கொதிநிலை அதிகமாகவே தெரிகிறது. அநீதி நிறைந்த இவ்வுலகும் அதனை இயக்கும் இறைவனும் நிர்மூலமாகி விட வேண்டும். அல்லது இவையிரண்டையும் நிர்மூலமாக்கிவிட வேண்டும் என்பதே உங்கள் எண்ணமாகத் தெரிகின்றது.
முடிவுகளின் தொடக்கத்திலே எனும் கவிதையில் கை நழுவிப்போன கைலாயம் தேடிச் செஞ்சடைச் சிவனாரைப்பாடையிலே அனுப்புகிறீர்கள். (பக்-1). வெள்ளைப்பிரம்பு எனும் கவிதையில் உலகை நிர்மூலமாக்க அண்ணன் செய்யும் ஆராய்ச்சி பற்றிக் கூறுகின்றீர்கள் (பக்-5) தொலைபன்னி உபதேசம் எனும் கவிதையில் சாதிக் கோயிலில் இறைவனுக்கு விதிக்கப்பட் rர ஒன தண்டனையைக் குறிப்பிடுகிறீர்கள் (பக்-8) மின்சார சோசியம் எனும் Joலதயில்

Page 148
282 மெளனம்
நாளை உலகமே நம்மிடம் நிர்மூலம் என முழங்குகிறீர்கள் (பக்-10). இவ்வகையில் கடவுள் செத்துவிட்டார் என்று பிரகடனப்படுத்திய 18ஆம் நூற்றாண்டு ஜேர்மனியத் தத்துவவாதிநீட்சே உங்களின் ஆதர்சமாகிவிடுகிறார் (பக்-1).
ഉ-ബങ്ങക நிர்மூலமாக்கும் கொள்கை நமது மரபுக்குப் புதிய தொன்றல்ல. சிவனின் ருத்திர சங்காரத்தின் பின்தான் படைத்தல் தொடங்குகின்றது. சிவனது ஊழித்தாண்டவம் இந்து மரபில் முக்கியமானதோர் அம்சம். உலகத்தை அழித்து விடும் ஞானத்தை நாம் ஏலவே இந்திய இந்துமரபு மூலம் பெற்றுத்தானுள்ளோம்.
அழி! அழி! அழி! நிர்மூலமாக்கு என்ற உங்களின் தீவிரத்தின் பின்னணியில் ஆக்கம் என்ற நிதானமும் காணப்படுகின்றது. அந்தச் சமநிலை என்னை வெகுவாகக் கவர்ந்தது. பார்வையுள்ள அண்ணன் உலகை நிர்மூலமாக்க ஆராய்ச்சிபண்ணினாலும் குருடனாயினும் வெள்ளைப் பிரம்புதாங்கி பாதை கண்டு நடந்து செல்லும் தம்பியாகத்தான் தங்களைக் காட்டிக் கொள்கின்றீர்கள். (பக் - 7). தேர் ஒன்று ஊருக்கீந்து திருக்கோயிற் தலைமை தாங்கி ஊர்ச்சாமி ஆகிப்போன பெரும் மனிதனை அற்பனாய் ஆகாமல் மனிதம் வாழப் பணி செய்ய அழைக்கிறீர்கள். (பக் -19)
மலை ஏறிப்பார்! உச்சியிலே உனைத் தேடு துணிவோடு துள்ளிக்குதி! பறந்து சென்று மனிதத்தைப் பற்றிக் கொள்! என்று மக்களுக்கு ஆணையிடுகிறீர்கள் (பக் -22)
உலகத்தை நிர்மூலமாக்குவதும் சாம்பலிலிருந்து அதனைப் புதுப்பிப்பதும் மனிதத்தை உயிர்ப்பித்து மானுடம் வாழும் ஒர் புத்துலகை உருவாக்கவே என்பதுதான் உங்கள் கருத்து என்பது புலனாகின்றது. மக்கள் நலனாட்டம் கொண்ட அனைத்துக் கவிஞர்களதும் கனவும் அதுதான்.
புதியதோர் உலகம் செய்வோம் ~ கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
என்று பாடியவன் பாரதிதாசன்.
படிமங்கள் உங்கள் கவிதைகளில் நன்றாக அமைந்துள்ளன. முடிவுகளின் தொடக்கம் அருமையான ஒரு படிமக் கவிதை. இன்றைய மரணச்சடங்கினுடாக நீங்கள் புலப்படுத்தும் அனுபவமும், கருத்தும் சிந்தனைக்குப் பெருவிருந்து. துர்க்கை தாலி அறுக்க, லெட்சுமி மாரடிக்க, கலைமகள் தலைமை தாங்க, பிள்ளையார் பறைமேளம் அடிக்க, மாயவனார் சீலை விரிக்க, முயலகன் கிரியைகள் செய்ய, வைரவன் பாசுரம் இசைக்க, தேவர்கள் வாய்க்கரிசி போட, வேலவன் முட்டி தாங்க, கறுப்பு வெள்ளைக் கடவுளர்கள் கடமை செய்ய இந்திரனார் கட்டிய பாடையிலே சிவனார் ச்வமாகி மயானம் செல்வதும் அஞ்சலி
உரையை நியட்சே செய்வதும் பிரமாண்டமான கற்பனை.
இக்கவிதைக்குள் தெரியும் கிண்டலும் துயரமும் மனதைக் கவர்கின்றன. கடவுளர்க்குள்ளும் கறுப்பு வெள்ளைநிறபேதமுள்ள கடவுளர்கள். மக்களுக்குள்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 283
சாதி பேதம் போல கடவுளர்க்குள்ளும் நிறபேதம் என்ற கிண்டல், அற்புதமான கைலாயம் கை நழுவிவிட்ட துயரம். இப்படியொரு கவிதையை நான் இதுவரை சந்திக்கவில்லை. ஈமெயில் சங்கதி எனும் கவிதையில் மேகம், பெருமழை, பேய்க்காற்று, வெள்ளம், தவளைச் சத்தம், வெளிப்பு, வெயில் என்ற இயற்கை விளைவுகளுக்குத் தாங்கள் தரும் உவமானங்கள் நன்றாகவேயுள்ளன.
மேகம் கருக்கொள்கின்றது. நீர்வெட்டுச் செய்தி கேட்ட பாவனையாளர் சேமிப்பது போல. பெருமழை பெய்கிறது, ஷெல் விழுந்த வீட்டு மக்கள் கண்ணிர் போல, பேய்க்காற்று வீசுகிறது, வன்முன்றயாளன் போல, வெள்ளம் பாய்கிறது அகப்பட்டதைத் தூக்கிக் கொண்டோடும் அகதிகள் போல. தவளைச்சத்தம் கேட்கிறது, புதுப்பணக்காரன் ஆர்ப்பாட்டம் போல. வெளிப்பு விட்டுவிட்டு வெளிக்கிறது, அடிக்கடி ஏற்படும் யுத்த நிறுத்தம் போல. இந்த உவமைகளின் இறுதியில் வரும் வெயில் பண்டிகையின் மறுநாள் பசியால் பற்றி எரியும் ஏழை வயிறு போல வழமையாய் மீண்டும் எரிப்பது முத்தாய்ப்பாய் அமைவதுடன் பண்டிகை வந்தாலும் எப்போதும் பசியால் வாடும் ஏழையின் துயரில் கவிதையின் மையம் குவிவது நன்றாக உள்ளது.
மேகம், பெருமழை வெள்ளம் முதலியன இயற்கை. இவற்றிற்கு உவமிக்கப்படும் பாவனையாளர் நீர் சேகரித்தல், முதலியன வாழ்க்கை. இங்கு இயற்கையையும் மனிதனையும் இணைக்கும் இரசவாதமும், அதனுடு புலப்படும் மனித நேயம் மிகுந்த ஆவேச உணர்வும் அக்கவிதைக்குப் பெரும் அழகு தருகின்றன. அதற்கு இடப்பட்ட ஈமெயில் சங்கதி என்ற தலைப்பும் அர்த்தம் பொதிந்ததாயுள்ளது.
வெள்ளைப் பிரம்பு என்ற கவிதையிலே பாட்டி, தாத்தா, அம்மா, அக்கா, தங்கை, அண்ணா ஆகியோரிடம் கலாசாரம், அறிவு, மதம், ஆயுதம் என்ற அதிகாரங்கள் தங்கிவிட்ட நிலையில் வெள்ளைப் பிரம்பு தாங்கி பயணம் மேற் செல்லும் நம்பிக்கை மிகுந்த குருடனாய் உங்களைக் காட்டுவதில் கவிதாழகு தெரிகிறது. தொலை பன்னி உபதேசத்தில் ஹைக்ஹ0 கவிதைப் பாணியில் இறுக்கமான சொற்பிரயோகங்கள் மூலம் ஆழம்ான கருத்துக்களை விதைப்பது அக் கவிதைக்கு இன்னொரு அழகு சேர்க்கிறது.
இறைவன் நடத்தும்
மாநாடு
மனிதர்க்கில்லை
அழைப்பு
என்ற நான்கு வரிகளில் ஆயிரம் அர்த்தம் புலப்படும்.
எத்தனை எத்தனை பெரிய மாநாடுகளை உலக நாடுகள் நடத்துகின்றன. நமது நாடும் தான் நடத்துகின்றது. மனிதர்களைப்பற்றி யாருக்கும் 1610ல இல்லை. நமது நலன்களிலேதான் மாநாட்டுக்காரருக்கு அக்கரை).
இறைவன் கூட அதற்கு விதிவிலக்கல்ல.

Page 149
284 மெளனம்
தலைவர்கள் பேசும்
பொதுக்கூட்டம்
கைகளைத் தட்டும்
கால்நடைகள்
இவ்வரிகள் இன்றைய எமது அரசியல் கலாசார மத அறிவுலகம் தலைவர்களுக்கு வெகுவாகப் பொருந்தும். மக்கள், மக்களின் தன்மை இழந்து மாக்களாகி தலைவர்கள் கூறுவதற்குத் தலையாட்டி கை தட்டும் இன்றைய அவலம் நறுக்காக இவ்வரிகளில் கூறப்படுகின்றது. மக்களைக் கால்நடைகள் என்று கவிஞர் கூறலாமா என்று கண்டிப்பார் சிலர் மகன் பிழை விட்டால் மகன் மீது வைத்த பாசத்தால் கழுதையே என்று ஏசுவது போலத்தான் இதுவும். மக்கள் மீது வைத்த அன்புதான் அவர்களைக் கால் நடை என்று உங்களை அழைக்க வைத்தது என்று நினைக்கிறேன்.
புளுதிப் பூக்கள்ஒர் இசைப்பா வடிவில் அமைந்தது போல் இருக்கிறது. இசைப்பாவிலும் ஏழைகளின் துயரமே கூறப்படுகின்றது. வாழாத வாழ்வொன்றை வாழ்ந்திடும் மக்களான அவ் ஏழை மக்கள் உங்கள் பார்வையிலே சாதனைப் பூக்களாகத் தெரிகிறார்கள்.
பெரிய பெரிய சாதனைகளைச் சாதிக்கும் பிரபலங்களைத்தான் சாதனையாளர் என்பர். உங்கள் பார்வையில் இந்த உலகில் ஏழைகள் வாழ்வதே பெரும் சாதனைதான். துயரத்தில் பிறக்கும் கிண்டல் கலந்த நகையுணர்வு.
கூட்டுக்குள் இருக்கும் குயிலாக, பூட்டுக்குள் மறைந்த பொன்னாக, ஏட்டுக்குள் இருக்கும் பொருளாக, கேட்டுக்குள் வாழும் பயிராக உங்களை நீங்கள் காண்கிறீர்கள் (பக்-34) உங்களைப் பற்றிய சுய மதிப்பு(Selfassessment) அது. இது ஒரு கவிஞனுக்கு ஞாயமாக இருக்க வேண்டிய ஒன்று இரைச்சல்களிலும் அமைதி காண்பது எங்கள் பக்குவங்களில் ஒன்று (பக்-39) என்ற வரிகளிலும் உங்களை நீங்கள் மதிப்பிட்டுக் கொள்கிறீர்கள். அவ்வரிகளின் அர்த்தம் மிக ஆழிமானது. எத்தனை இரைச்சல்கள் எங்களைச் சுற்றி? அவற்றின் மத்தியில் அமைதியாயிருப்பது மிகக் கஷ்டம். மிக மிகக் கஷ்டம். ஆனால் அமைதி காக்கத் தானே வேண்டும். காலத்தின் நிர்ப்பந்தமா அது?
எழுந்து நடக்கும் எலும்புக்கூடுகள் கவிதை சற்றுவித்தியாசமான கவிதை போலப்படுகின்றது. ஒவ்வோர் முறை வாசிப்பிலும் ஒவ்வொரு கோலம் காட்டுகின்றது. ஒன்றோடொன்று தொடர்பற்ற விடயங்களைத் தந்து அதனுடே ஓர் இணைப்பை ஏற்படுத்தும் நவீன படைப்பாகவும் அதனை வாசிக்கலாம்.
உண்மையின் உண்மைகள் கவிதையில் வாழ்க்கை இருப்பின் அர்த்தம் பேசப்படுகின்றது. வந்தது பொய் வாழ்வது பொய் என்போர் மத்தியில்
பொய்யான வாழ்விதிலும்
பொய்க்காத கருமங்கள்
புவியிதிலே புரிந்தால்

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 285
பொய்யெல்லாம் உண்மை என்று கூறுதல் மூலம் வாழ்தல் எனும் பொய்க்காத கருமமே உண்மை என்று வலியுறுத்தி வாழ்வின் அர்த்தத்தைக் காட்டுகிறீர்கள்.
உங்களின் ஒவ்வொரு கவிதையைப் பற்றியும் தனித்தனியாக எழுதலாம். முன்னுரை ஒன்றில் அது முடியாத காரியம். எல்லாப் பெரும் கவிஞர், சிறுகவிஞர், மரபுக் கவிஞர், புதுக் கவிஞர்களின் தாக்கமும் உங்கள் கவிதைகளிற் காணப்படுகின்றது. மரபுக் கவிதை, புதுக்கவிதை இசைப்பா யாவற்றையும் கையாண்டுள்ளிர்கள்.
உங்கள் தனித்துவங்கள் சில கவிதைகளில் தூக்கலாகத் தெரிகின்றன. அவற்றை விரித்தெழுத இது இடமன்று. முன்னோர்களின் செல்வாக்கிற்குட்படுதல் ஆரம்பத்தில் தவிர்க்க முடியாததே. அதனின்று மீண்டெழுதலே வளர்ச்சி, மீண்டெழுந்து தனித்துச் செல்லவும் தனிப்பாதை படைக்கவுமான அனுபவம், ஆளுமை, கவிதாதிறன் உங்களிடம் காணப்படுகின்றன.
தனித்துவத்தோடு வளர்தலே சிறந்த கவிஞருக்குரிய பண்பு. சில கவிதைகள் சராசரிக் கவிதைகளாகவும் உள்ளன. ஒரு கவிஞர் எப்படி சிறந்த கவிதைகளையும் சராசரிக் கவிதைகளையும் எழுத முடியும் எனப் பலர் வினாவலாம். பெயர் பெற்ற கவிஞர்களிடமும் இக் குணாம்சம் காணப்படுகையில் நீங்கள் எம்மாத்திரம்? எறிகணைத்தாக்குதல் எனும் பெயரில் அமைந்த இத்தொகுதியின் பல கவிதைகள் எறிகணைகளாகவே உள்ளன. இக்கவிதைத் தொகுதியின் ஆரம்பக் கவிதைகளிற் காணப்படும் ஆழமும், சிந்தனா வீச்சும் படிமத்திறன்களும் பின்னால் வர வரக் குறைந்து செல்வது போலத் தெரிகின்றது. இது இக் கவிதை தொகுதிக்குப் பெரும் பலகீனத்தைத் தருவதாக நான் கருதுகிறேன். பின்னாளில் புதிய தொகுதிகளை வெளியிடும் போது இக் குறிப்புக்களை கருத்திற் கொள்வீர்கள் என்ற எதிர்பார்க்கின்றேன்.
தொகுத்துரைப்பின் உங்களின் கவியுலகு வருகை நம்பிக்கை தருகின்றது. வித்தியாசமான அனுபவங்களும் கவிதைகளும் தமிழ்க் கவிதை உலகுக்குள் புகுதல் ஈழத்து இலக்கிய உலகுக்குள் மேலும் அழகு தரும். என்றும் கொதி நிலையில் நின்றபடி இவ்வுலகை நோக்கும் உங்கள் பார்வையும், சாதாரண மக்கள் பால் தாங்கள் காட்டும் அன்பும் அனுதாபமும் அவர்களின் வீழ்ச்சியில் நீங்கள் கொள்ளும் ஆவேசமும் மென்மேலும் வளர்ந்து கவிதை ஊடாக பிரவகித்து ஈழத்து தமிழ்க் கவியுலகைச் செழிக்கச் செய்ய என் வாழ்த்துக்கள்.
மிகுந்த அன்புடன்
(சிமெளனகுரு) தலைவர் நுண்கலைத்துறை கிழக்குப்பல்கலைக்கழகம்.

Page 150
பத்தி எழுத்து
கலாசாரப் பக்குவம்
தமிழ் மாணவர் கற்கும் பல்கலைக்கழகம் அது. மத்தியான வேளை. விரிவுரை வகுப்புகளுக்கு வெளியே மாணவர் கும்பல் கும்பலாக நின்றுகதைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டு ஆரம்பமான படியால் றாக்கிங் அமுலாகிறது. தீவிரமாக ஒரு பெண்பிள்ளை ஜீன்ஸ் சேட் அணிந்திருக்கிறாள். வேகமாக ஒடுகிறாள். பின்னால் சில ஆண் மாணவர்கள் அவளைக் கலைத்தபடி, ஒவ்வொருவரின் கையிலும் தண்ணிர்வாளி. ஏற்கனவே ஒரு வாளித் தண்ணிர் அபிசேகம் நடந்திருக்கவேண்டும்.
அவள் தலை நனைந்திருக்கிறது. மிரள மிரள விழித்தபடி துணைவேந்தர் அறை நோக்கி ஓடுகிறாள். புதினம் பார்த்தபடி நின்ற மாணவர்களிடம் நான் கேட்கிறேன்.
"ஏன் குறிப்பாக அந்தப் பிள்ளை மீது தண்ணிர் வீசுகிறார்கள்?" "அவள் புது மாணவி தமிழ் கலாசாரப்படி வரவில்லை அதனால்தான்" "எப்படி வரவேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? பூ வைத்து, பொட்டு வைத்து சேலை அணிந்து அடக்க ஒடுக்கமா." ܬ݂ܳܗܝ
ஒரு மாணவன் இடைமறித்து சற்று உரத்தகுரலில் கூறுகிறான். "தலைகுனிந்து" நான் வியப்படையவில்லை. அவர்களை விளங்கிக் கொள்கிறேன். அவர்கள் கோபம் ஒரு வகையில் நியாயமானதாகவும் இருக்கலாம். சிறுபான்மை இனங்களின் தனித்துவம் கலாசாரத்தில் தான் இறுதியில் காணப்படுவதால் தம் தனித்துவங்களை காட்ட அவற்றைத் தீவிரமாக பாதுகாக்க அவ்வினங்கள் முயல்வது இயல்பு. வரலாற்றுநியதி. ஆனால் கலாசாரம் பற்றிய அகண்ட நோக்கம் அவசியம். நான் மூன்று கேள்விகளை அவர்களிடம் கேட்கிறேன். "பூவைக்காத, பொட்டு வைக்காத எல்லாத் தமிழ்ப் பெண்களும் தமிழ்க் கலாசாரத்துக்கு மாறானவர்களா?
இவற்றை அறியாத மேற்கு நாட்டவர் அல்லாது ஏனைய இனத்தவர் கலாசாரம் அற்றவர்களா?நீங்கள் போட்டுக் கொண்டிருக்கும் நீளக் காற்சட்டை உங்கள் வாதப்படி தமிழ்க் கலாசாரத்துக்குள் அடங்குமா?

பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 287
மாணவர்கள் முணுமுணுக்கிறார்கள். தமிழ்க் கலாசாரம் என்றதும் நம் கண்முன்னே சில கருத்துக்கள் தோன்றுகின்றன.
குங்குமம், தாலி, கோயில், நாதஸ்வரம், மாலை, பரதநாட்டியம் என அவற்றை அடுக்கலாம். உண்மையில் கலாசாரம் என்பதுதான் என்ன? குறிப்பிட்ட சமூகம் வரலாற்றுப் போக்கில் தன் இயங்கியலுக்கு ஏற்ப உண்டாக்கிக் கொண்ட மதம், சட்டம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, தத்துவம், அரசியல் ஆகிய இன்னொரன்ன விடயங்களே அச் சமூகத்தின் கலாசாரமாகும். இவற்றுள் நாம் கலைகளையும், பழக்கவழக்கங்களையுமே கலாசாரம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம். சமூக விஞ்ஞானிகள் இவற்றைச் சமூகத்தின் மேல்மட்ட அமைப்பு என்பர். சமூகத்தின் பொருளாதார அமைப்பை கீழ்மட்ட அமைப்பு என்பர். கீழ்மட்ட அமைப்பிற்கும் மேல்மட்ட அமைப்பிற்கும் இடையே ஊடாட்டம் இருந்து கொண்டே இருக்கும். கீழ்மட்ட அமைப்பு சமூகத்தின் உள் முரண்பாடுகளாலும் வெளித்தாக்கல்களாலும் அடிக்கடி மாறும். இக் கீழ்மட்ட அமைப்பு மாற மேல்மட்ட அமைப்பு மாறும். இது சமூக விஞ்ஞான உண்மை. எனவே கலாசாரமும் சமூக மாற்றத்திற்கு இயைய மாறி வருவதேயாகும்.
கலாசாரம் காலம் தோறும் மாறும் என்ற உண்மை உணர்ந்தோர் இதுதான் கலாசாரம் என்று விடாக்கண்டனாக இரார். பரத்தமை ஒழுக்கம் சங்ககால கலாசாரம், பரத்தையிடம் செல்வது பிழை ஒருத்தனுக்கு ஒருத்தியே என்பது பின்னாளில் ஊறிய கலாசாரம். மாமிசம் அருந்திய கலாசாரம் பண்டைய தமிழ்க் கலாசாரம், மரக்கறிக்கு மாறியது இடைக்காலத்தில் தமிழ்க்கலாசாரம், இன்று மரக்கறி, மாமிசம் இரண்டும் உண்பது எமது கலாசாரமாகிவிட்டது. கலாசார சின்னங்கள் எல்லாமே இவ்வாறுதான்.
கலாசாரத்தைத் தமிழில் பண்பாடு என்று கூறலாம். பண்படுவதே பண்பாடு. நிலத்தைப் பண்படுத்துகிறோம் நல்ல விளைச்சலைப் பெற, மனித இனத்தைப் பண்படுத்துகிறோம் நல்ல பிரஜைகளை உருவாக்க, பண்பாடு என்பது மனிதனின் வளர்ந்த நிலையை மட்டுமன்றி சமுதாயத்தின் படிந்த நிலையையும் எடுத்தக்காட்டுகின்றது. படிந்த நிலை பரம்பரைச் சொத்து, வளர்ந்த நிலை. பின்னால் வந்த சொத்து. மத்தியூ அர்னால்ட் "பண்பாடு உயர்ந்த நோக்கங்களைப் போற்றக் கூடியது" என்பார்.
"ஒருவன் தன் குணநலன்களை நிரப்புவதிலும் தன்னைச் சூழ்ந்து நிற்கும் சமுதாயத்தின் நலன்களைப் பேணுவதிலும் பேரவா கொண்டிருக்கும் பக்குவ நிலைதான் பண்பாடு" என்று மேலும் கூறுவார். பக்குவ நிலை என்ற சொற்றொடர் அற்புதமான சொற்றொடர். மனிதன் முழுமையானவன் அன்று. ஆனால் முழுமையானவன் ஆகமுடியும், அம் முயற்சிக்கு உறுதுணை புரிபவைதான் கலாசாரச் சின்னங்கள். கலாசாரம் பற்றி நிறைய ஆய்வுகள் நடைபெறுகின்றன. நவீன சமூக விஞ்ஞானங்களான மானிடவியல், சமூகவியல் துறைசார்ந்த ஆய்வுகள் கலாசாரம் பற்றிய நம் எண்ணக்கருவை மேலும் காட்டுவன.

Page 151
288 மெளனம்
மனித இனம் உருவாகி பல இலட்சம் வருடங்களாகி விட்டன. மனிதனை மனிதன் தன்னைப் போல் மதிக்கின்ற பக்குவ நிலை நடைமுறையில் மனித குலத்திற்கு இன்னும் வாய்க்கவில்லை. ஏடுகளிலும், ஞானிகளின் போதனைகளிலும் அது உண்டு. இந்தப் பக்குவ நிலை நோக்கி முழுச் சமூகத்தையும் தள்ளும் படிகளே அவ்வச் சமூகத்திற்குரிய கலாசாரங்களாகும்.
உயர்ந்த பக்குவநிலை நோக்கி சமூகம் முன்னேற இக் கலாசாரம் உதவா விட்டால் சமூகமே அதனைக் கைவிட்டுவிடும். சமூகம் கைவிட்ட பொருளை தனி மனிதர் கட்டி அழ முடியுமா?
கலாசாரம் என்ற பெயரில் நாமும் காலத்துக்கொவ்வாத பல விடயங்களை வைத்துக் கொண்டிருக்கின்றோம். காலத்தின் தேவையையும், கலாசாரத்தின் அவசியத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும். நம் முன்னோர் இவற்றைத் தெளிவாக அறிந்திருந்த படியினாலேதான்.
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்று கூறிச் சென்றனர். சில வினாக்களை நாம் கேட்டுப் பார்ப்போம். கலாசாரமானது யாது? பழைமைகள் அனைத்தையும் பேணத்தான் வேண்டுமா? கலாசாரம் மாறாத ஒன்றா?
வீரகேசரி
04.11.1990

GeFÜLLÜ
சின்னச் சின்னக் குருவிகள்
சிண்ணச் சின்னக் குருவிகள் ~ எங்கள் சிறுவர் சிறுமிக் குருவிகள் வண்ண வண்ணச் சட்டை போடும் வாயாடிக் குருவிகள்
சின்னச் சின்னக் குருவிகள்.
பள்ளிக்கூடம் சென்று கல்வி பயிலுகின்ற குருவிகள் மெல்ல மெல்ல அறிவு சேர்க்கும் மிக உயர்ந்த குருவிகள்
சின்னச் சின்னக் குருவிகள்.
அம்மா சொல்லை கேட்டு நடக்கும் அன்பு நெஞ்சக் குருவிகள் அநீதி கண்டு கோபம் கொள்ளும் அதியுயர்ந்த குருவிகள்
சின்னச் சின்னக் குருவிகள்.
நாளை இந்த ஈழநாட்டை நடத்தப் போகும் குருவிகள் ஈழ நாட்டின் புகழை உலகில் ஏற்றப் போகும் குருவிகள்
சின்னச் சின்னக் குருவிகள்.
எழுதியது 1974ல்

Page 152
சேருவோம் ஒன்று சேருவோம்
சேருவோம் ~ ஒன்று சேருவோம்
திரளுவோம் - ஒன்று திரளுவோம்
இந்த நாட்டையே இன்ப நாடதாய்
இந்த உலகினில் இனி இங்கமைத்திட
சேருவோம் ~ ஒன்று சேருவோம்
காற்றில் ஏறியே அவ்விண் கடந்தமே கனமழை இங்கு கொணருவேர்ம் சேற்றையே பிழிந்து அங்கு உள்ள நீர் திரட்டியே வயலிற் பாய்ச்சுவோம்
மின்னலைக் கொணர்ந்து எங்கள் வீதியில் விளக்கு ஏற்றுவோம் ஏற்றுவோம் மேகம் ஏறியே இந்தச் செய்தியை மேதினிக் கெலாம் கூறுவோம்
சேருவோம் - ஒன்று சேருவோம் ஏழை என்றொரு அடிமை வாழ்வினம் இலாததோர் உலகை ஆக்குவோம் கோழை போலவே வாழ்ந்த வாழ்வினை கொள்கிலோம் மனதிற் கொள்கிலோம் சூரியக்கதிர் போன்ற தலைமுறை தோன்றவே வினைகள் ஆற்றுவோம் மேகம் ஏறியே இந்தச் செய்தியை மேதினிக் கெலாம் கூறுவோம்
சேருவோம் ~ ஒன்று சேருவோம்

பேராசிரியர் சி, மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர் 29 |
உலக நாடுகள் நடுவில் எம்நிலம் உயர்ந்த நிலையிலே நிமிர்ந்து நிற்குமே புதிய வார்ப்பிலே பூத்த பிரஜைகள் புதிய சிந்தனையோடு தோன்றுமே இனியதாகவே வாழ்க்கை அமையுமே இல்லை என்றதோர் தொல்லை அகலுமே ஒளிகள் வீசுமே அகம் முகம் எலாம் உலக மெங்கணும் புதுமை பூக்குமே புதமை பூக்குமே
புதுமை பூக்குமே

Page 153
பேராசிரியர் மெளனகுருமணிவிழாநன்கொடை வழங்கியோர்
1. ஓர் அன்பர் 10,000.00 2. திரு. ந. பத்மநாதன் (கொழும்பு) 3000.00 3 பேராசிரியர் M.S. மூக்கையா 2500.00 4. திரு. எஸ். நடேசமூர்த்தி 2000.00 5. திரு. K. உதயகுமார் 2000.00 6. திரு & திருமதி VI.M. கெனடி 2000.00 7. Dr. S. J6i55J515 1500.00 8. திரு. S. ஸ்ரனிஸ்லோஸ் 1500.00 9. திரு. க. தியாகராஜா 1500.00 10. திரு. சே. சீவரெட்ணம் 1000.00 11. திரு. வ. கனகசிங்கம் 1000.00 12. திரு. சு. சிவரெட்ணம் 100000 13. திருமதி. சாந்திகேசவன் 1000.00 14. திரு. கு. ரவிச்சந்திரன் 100000 15. திரு. காசுபதி நடராசா 1000.00 16. திரு. த. யுவராஜன் 1000.00 17. திரு. வ. இன்பமோகன் 000.00 18. திரு. சா. இ. கமலநாதன் 1000.00 19. திரு. ஆ. சுந்தரலிங்கம் 1000.00 20. திரு. வெ. தவராஜா 1000.00 21. திரு. த. மலர்ச்செல்வன் 1000.00 22. திரு. எஸ். எதிர்மன்னசிங்கம் 1000.00 28. திரு. த. செல்வநாயகம் 1000.00
24. திரு. சண. தவராஜா 100000

25.
26.
27.
28.
29,
30,
31.
33.
34.
36.
38,
39,
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
5.
52.
53.
54.
55,
பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர்
திரு. எஸ். ஆலாலசுந்தரம் திரு. M. செல்வராஜா திருமதி. M. முருகதாஸ் திரு. செ. புண்ணியமூர்த்தி திரு. K. புகேந்திரன் திரு. பொன் செல்வராஜா திரு. S. வடிவேல்
திரு. S. ஜெயராம்
திரு. இ. கணபதிப்பிள்ளை திரு. வே. சண்முகம் திருமதி. அ. யோகராஜா திரு. பொ. பேரின்பராசா திருமதி. இ. பிரியா திரு. க. விமலநாதன் திரு. எஸ். அமலச்சந்திரன் திரு. வை. வீரசிங்கம் திரு. த. செல்வநாயகம் திரு. ச. இராஜேந்திரம் திரு. ராஜன்சத்தியமூர்த்தி திரு. R. மாணிக்கராசா திரு. சி. பொன்னம்பலம் திரு. என். பத்மநாதன் திரு. N.W. ரஞ்சன் திரு. K. குகமூர்த்தி திரு. மாஸ்டர் சிவலிங்கம் திரு. க. தியாகராசா திரு. மூ. கனகரெத்தினம் திரு. M.N. ஞானச்சந்திரன்
செல்வி. S. பொன்னையா
திரு. S. செந்தில்நாதன் திரு.G. ரகுராகவன்
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
100000
1000.00
100000
1000.00
293

Page 154
294
56.
57.
58.
59.
60.
6.
62.
63.
64.
65.
66.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
மெளனம்
Dr. S. ஜெயசிங்கம் செல்வி. S. பிரியந்தினி
Dr. S. (Gurg, Jrry st திருமதிT அருள்நந்தி திரு. V. கனகரெட்ணம் திரு. C. நடராஜா செல்வி, S. சின்னத்துரை திரு. K. மகேசன் திரு. S.S. சுந்தரம்
திரு. M. ரூபாகரன் திரு. M. பவளகாந்தன்
Dr. P. விக்னேஸ்வரன்
திரு. S. ஜெயராஜா திரு P சச்சிதானந்தம் திரு. V. கனகரெட்ணம் திரு. V. அழகரெட்ணம் திரு. பாலசுகுமார் திருமதி, CH. தேவதாசன் திரு. சி. ஜெயசங்கர் திரு. A. செளந்தரலிங்கம் பேராசிரியை M. சித்திரலேகா திரு. K. தம்பையா திரு. W ). ஜெயராஜா திரு. S. சந்திரசேகரம் திரு. K. பிறேம்குமார் திரு ஞா. தில்லைநாதன் திரு. ரி. பார்த்திபன் திரு. ஆர். குணசீலன் திரு. மு. சதாகரன் திரு. ஏ. டி. ஹரிஸ் செல்வி ஜே. குமுதினி
100000
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
100000
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00
1000.00

(gg6) 19910091) f Doo) 169 1990)

Page 155
(oggi) yısĜọgo mĠovioggggfià IỀUĞĝisto losjol, s pross @@solovio- -
(6931) ||190909$ ĝojų, įrs 1999||J. filgio@@199.190.19
 

(1985)
கலாநிதிப் பட்டம் (1983)

Page 156

88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
98.
99.
100.
101.
102.
103.
104.
105.
106.
107.
108.
109.
110.
111.
112.
13.
114.
115.
116.
117.
118.
பேராசிரியர் சி. மெளனகுரு மணிவிழாச் சிறப்பு மலர்
திரு. எஸ். பத்மநாதன் திரு. ஆர். ஜெகநாதன்
திரு. கே. சிறிதரன்
திரு. எஸ். மகேந்திரன்
திரு. பி. பேரின்பராஜர்
செல்வி. பி. பரமேஸ்வரி
திரு. S. பகீரதன்
திர V கோவிந்தராஜா
திரு. V. கனகசிங்கம்
திரு. A. அன்ரன் அருள்ராஜ் திரு. M. அனுலா
திரு. க. ஞானப்பிரகாசம்
Dr. P. 666OTTLIT
செல்வி. S. பரமேஸ்வரி
செல்வி, த. சுரமஞ்சளி திரு. B. பிரசாந்தன்
திரு T பிரபாகரன்
திரு. எஸ். பாலேந்திரன்
Dr. J. N. JTT6225,5)JT
Dr. D. சாமிநாதன்
திரு. இரா. இராஜேஸ்வரன்
திரு இரா. நாகலிங்கம் அன்புமணி கவிஞர். மூனாக்கானா திரு T மதிவேந்தன் திரு T கிருபாகரன்
திருமதி. D.Y. செளந்தரராஜா
திருமதி. S. சக்கரவர்த்தி
திரு N. தவராஜா
திரு T கந்தசாமி
திரு. P கேதீஸ்வரன்
அன்பர்
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
500.00
250.00
250.00
250.00
100.00
295

Page 157
பேராசிரியர் சி. மெளனகுரு மணி விழாச் சபை
மட்டக்களப்பு
தலைவர்
திரு. சே. சீவரெத்தினம்
உபதலைவர்
திரு. வ. கனகசிங்கம்
6)grш6uт6тfa66ї
திரு. சு. சிவரெத்தினம் திரு. காசுபதி நடராசா
பொருளாளர்
திருமதி. சாந்தி கேசவன்
சபை உறுப்பினர்கள்
வித்துவான் சா.இ. கமலநாதை திரு. ஆ. சுந்தரலிங்கம் திரு. த. செல்வநாயகம் திரு. எஸ். எதிர்மன்னசிங்கம் திரு. இரா. நாகலிங்கம் திரு. த. யுவராஜன் திரு. எஸ். ஸ்ரனிஸ்லோஸ் திரு. வெ. தவராஜா திரு. வ. இன்பமோகன் திரு. த. மலர்ச்செல்வன் திரு. சண். தவராஜா
பதிப்பாசிரியர்
திரு. வெ. தவராசா

திரு. செ. சீவரத்தினம் அஞ்சலி
மட்டுநகர் மண்ணின்ற மாணிக்கம்! எம்மையெலாம் விட்டுவிட்டு சென்றீரே விம்முகிறோம் நெஞ்சத்தால்! சட்டென்று காலனிட்ட சதிவலையில் நீர்வீழ்ந்த மட்டுநகர் தயர்மூழ்க மண்விட்டுச் சென்றீரே!
உயர்வங்கி அதிகாரி உத்தியோகம் பார்த்தாலும் அயராது எம்மண்ணின் அரியகலை பேணியநின் உயர்வான சேவையினை ஒருபோதும் நாம் மறவோம்! வியர்வையினால் இம்மண்ணை
விளைவித்தாய் வாழ்கடிகழ்
பழைய தலைமுறையின் பாதையிலே வந்தாலும் இளைய தலைமுறையின் இன்றைய நாட்டத்தில் நழுைவதிலே வெற்றிகண்டீர் நோகாமல் முரண்பாடு களைந்தே பாலமொன்றை கட்டுவித்தீர் போற்றுகிறோம்!

Page 158
298
மெளனம்
எங்களுடை உயர்ச்சிக்காய் எச்சங்கம் உதித்தாலும் தங்களையோர் பதவியிலே தயங்காமல் நாம்வைப்போம் பங்கம் விளைக்காமல் பகலிரவாய் உழைப்பதனை பொங்கலாய் படைத்தவனே! போனீரே போனீரே!
கடத்தக் கலைகளிலே கூடிக் களித்தவனே! நேற்றையநம் கலைகளதை நெஞ்சிலே பதித்தவனே! நாளையநம் கலையுலகு நலமுடனே பொலிகவென வேளைபாராத பின்னணியில் வேலைபல செய்தவனே!
சேவகனே உனை இழந்தோம் சினேகிதனே உனை இழந்தோம் சோகம் தளைத்தாலும் சொல்லுகிறோம் ஒர்வசனம் : நிலையிலாத வாழ்க்கையிலே நிறைந்த பல சேவைகளால் கலையுலகில் உயிர்த்தரவிட்டீர்! காலனைநீர் தோற்கடித்தீர்

层
경
目 (68
'.

Page 159
- சங்காரத்தில் தலைவனாக, அரக்கனான ஜெனத்துக்கு முன்னால் (1980)
திருமணம் (1978
(1980)
சங்காரத்தில் தலைவனாக ”
(1980)
 
 
 
 
 
 
 

சித்தார்த்தனனின் (மகன்) பட்டமளிப்பில் (2002)

Page 160
ஆ. சுந்தரலிங்கம் ஆசிரியருடன் (1978)
 


Page 161
கர்ணன் போரில் கர்ணனாக (1962)
 

நொண்டி நாடகத்தில் செட்டியாராக (1963)

Page 162
இராவணேசனில் இராவணனாக (1964)
நொண்டி நாடகத்தில் செட்டியாராக (1963)
垂
 
 
 

ዘዘ
燃
I
Wի
իի կի|
կի
կի
կ կիիիիիի III: I
ենի
தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர்
பேரா. சுந்தரமூர்த்தியுடன் (2002)

Page 163
பேரா. சுப்பராயுலுவுடன் சென்னையில் o (2002)
 

பரிசு (1961)

Page 164
ந.முத்துசாமி, கண்ணப்ப தம்பிரானுடன் கூத்துப் பட்டறையில் (1998)
 

பாலுமகேந்திராவுடன் (1999)
பேரா. அ. மாக்ஸுடன் (2002)

Page 165
கண்ணப்ப தம்பிரானுடன்(1998)
 


Page 166
左
է: 慈
$
է: է: H
ଜ୍ଞା ֆ է:
ֆեի
է:
է: է: է:
Ա.
ֆ: ֆֆ է:
蒸
தவராஜா குடும்பத்துடன் (2003)
 

துவிச்சக்கர வண்டியில் (1998)
மனைவியுடன் கனடாவில் (2003)

Page 167
இன்னிய அணிக்கு ஒரு சாட்சி (2002)
 

விச் செயலாளரிடமிருந்து
சாகித்திய பரிசு (2001)
ககு கல
வட- கிழ

Page 168
ஆளுனர் விருது (2002)
 

கனடா தமிழ்ச்சங்க அழைப்பின்பேரில் (2002)

Page 169
殲
ன தஞ்சாவூத
JITL fyg ITL fuq L6iāi
(U)
tբLi பலகலைககழகத
( |
(2002)
தில்
o
தமி
 

娜
ாகளுடன
65 yT606
னிய அணி
இன்
(2001)

Page 170
தலைக்கோல் விருதுபெற்ற நாகமணிபோடி அண்ணாவியார் மற்றும் பிரான்சிஸ் ஜெனத்துடன் (2002)
 


Page 171

rivate inmed Colombo.12