கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரிய முகாமைத்துவம்

Page 1
SILVERJUBILEEco Departime
Univers
S
 

னத்தம்பி
MMEMORATIVE VOLUME nt of Education ity of Jaffna
Lanka

Page 2

ஆசிரிய முகாமைத்துவம்
மா. சின்னத்தம்பி
BA, BPhil (Hons) Dip. Ed, MA (Econ)MPhil (Ed) சிரேஷ்ட விரிவுரையாளர் - (தரம் 1) தலைவர், கல்வியியல்துறை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
விஸ்டம் பப்ளிகேசன்ஸ்
2004

Page 3
ஆசிரிய முகாமைத்துவம்
மா. சின்னத்தம்பி
Title
Author
Copyright First Edition Subject Publisher
Printer ISBN
Price
Asiriya Mukamaiththuvam Teacher Management)
M. Sinnathamby Head, Department of Education University of Jaffna.
M. Sinnathamby© December 2004 Teacher Management, Teacher Promotion
Wisdom Publishers, Champion Lane, Kokuvil East, Kokuvil, Sri Lanka.
Techno Print, Colombo - 6 Tel : 0777-301920 955-1204-00-X
Rs.350/- (In Sri Lanka) US $ 10.00 (In Foreign Countries)

காணிக்கை
2004 டிசம்பர் 26ஆம் திகதியன்று நிகழ்ந்த சுனாமி அனர்த்தத்தில் தம்முயிர் நீத்த பாடசாலை ஆசிரி யர்கள் மற்றும் மாணவச் செலி வங்களுக்கு சொல்லொணாத்துயர உணர்வுகளுடன் இந்நூலைக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.

Page 4

அணிந்துரை 1
பேராசிரியர். எஸ். மோகனதாஸ்
இன்று கல்வி தொடர்பாக பல மாற்றங்கள் விரைவாக ஏற்பட்டு வருகிறது; கல்வியுலகில் பாடசாலைகளின் பங்களிப்பு தொடர்பான புதிய அணுகுமுறைகள் வளர்ச்சியடைந்து வருகின்றன; பாடசாலைகள் திறமையாக செயற்பட வேண்டியதன் அவசியம் பற்றிக் கல்வியியலாளர் அதிக அக்கறை கொண்டுள்ளனர். பாடசாலைகளை முன்னேற்றுவதற்கு ஆசிரியர்களை முகாமைத்துவம் செய்வதில் நுட்பமான செயன்முறைகளும், செயற்பாடுகளும் தேவைப்படுகின்றன.
இத்தகைய பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக ஆசிரிய முகாமைத்துவம் என்ற நூலை எமது பல்கலைக்கழகத்தின் கல்வி யியல் துறைத்தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான திரு. மா. சின்னத்தம்பி எழுதியுள்ளார். ஆசிரிய கல்விப்பணியில் இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்து வெள்ளி விழாவை கல்வித்துறை கொண்டாடும் வேளையில் அதனை பெருமைப்படுத்தும் வகையில் இந்நூலை எழுதி வெளியிட்டிருப்பது பெருமைப்படத் தக்கதாகும்.
ஆசிரியர்கள் சுயமாகத் தம்மை ஒழுங்குபடுத்தி முன்னேறுதற்குரிய பல்வேறு அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் பற்றியதாக இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார்.
பாடசாலைகள் தோல்வியடைந்து விட்டதாக வெகுசன ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. பொது மக்கள் பாடசாலைகளின் குறைபாடுகள் பற்றி அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பாடசாலைகளை எவ்வாறு வெற்றிகரமான நிறுனங்களாக மாற்றுவது என்பதுபற்றியும் கல்வியியலாளர் அக்கறை கொண்டுள்ளனர்.

Page 5
நூலாசிரியர் இத்தகைய பல நிலைமைகளையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு இந்த நூலை எழுதியுள்ளார்.
திரு. மா. சின்னத்தம்பி பொருளியல், மற்றும் கல்வியியல் போன்றவற்றில் முதுமாணி மற்றும் முது தத்துவமாணிபட்டங்களைப் பெற்றவர். ஆசிரியர் கல்வியில் ஒன்றரை தசாப்த காலம் ஈடுபட்டு வருபவர். இத்தகைய கல்வி மற்றும் தொழில் அனுபவப் பின்னணியில் இந்நூலை சிறப்பாக எழுதியுள்ளார்.
இந்த நூல் பாடசாலை ஆசிரியர்கள், கல்விநிர்வாகிகள் ஆசிரிய கல்வியாளர் போன்ற பலருக்கும் மிகவும் பயன்படும்.
நூலாசிரியர் இதேபோல் பல நூல்களை எழுதி வெளியிட வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
பேராசிரியர். எஸ். மோகனதாஸ் துணைவேந்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,

அணிந்துரை 11
பேராசிரியர் வ. ஆறுமுகம்
முகாமைத்துவத்திலான கரிசனை கல்வியுலகில் அண்மைக் காலங்களில் முதன்மை பெற்றுள்ளது. கல்விசார் நடவடிக்கைகளை முகாமைத்துவக் கண்ணோட்டத்தில் நோக்கக் கல்வியியலாளர்கள் தலைப்பட்டுள்ளனர். பள்ளிக்கூட மட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் போன்றோரின் பங்களிப்பும் அதன் பயனும் இன்று முகாமைத்துவப் பார்வையில் அடக்கப்பட்டுள்ளன. இத்தகைய கால கட்டத்தில் "ஆசிரிய முகாமைத்துவம்" என்னும் இந்நூல் அனைவரது வரவேற்புக்குமுரிய ஒன்றாகும்.
ஆசிரியர்களுடைய செயற்பாடுகளை முகாமைத்துவ நோக்கில் பரிசீலனை செய்யும் இந்நூல் இரண்டு அடிப்படைகளைக் கொண்டு அமைந்துள்ளது. ஒன்று - தமது பணிகளைப் பற்றிய ஆசிரியர்களின் சுய முகாமைத்துவப் பார்வை. மற்றையது - ஆசிரியர்களின் செயற்பாடுகள் பிறரால் கணிக்கப்படும் முகாமைத்துவ நோக்கம். பள்ளிக்கூட மட்டம், சமூக மட்டம் ஆகிய இரு மட்டங்களிலும் ஆசிரியர்களது பங்கும் பணிகளும் நூலாசிரியரின் பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
"முகாமைத்துவம்" என்ற எண்ணக்கருவின் விளக்கத்தை முன்வைத்து, ஆசிரியர்களின் பங்கு, ஆசிரியர்களது செயற்பாடுகளில் அவர்களுக்கு அறைகூவல்களாக எழும் பிரச்சினைகள், நேரத்தைச் சரியான முறையில் செலவிடுதல், பொருத்தமான வழியில் வழிகாட்டிகளாக செயற்படுதல், விளைத்திறன் அளவு கோலின்படி மதிப்பிடுதல், போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்துள்ளது. ஆசிரியப் பணியின் செவ்வையான முகாமைத்துவத்தை

Page 6
மேற்கொள்வதற்கு இவை அருந்துணையாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.
நூலாசிரியர் திரு.மா. சின்னத்தம்பி கல்வி யுலகில் நீண்ட அனுபவம் பெற்றவர் புள்ளிக்கூட ஆசிரியராக, பல்கலைக்கழக விரிவுரையாளராக பன்முகப்பட்ட அனுபவங்களைக் கொண்டவர். குறிப்பாக, பல்கலைக்கழகத்தில் அவருடைய கடமைகள் ஆசிரியர்களது செயற்திறனையும் பங்களிப்பையும் சீர் செய்யும் பொறுப்பினைக் கொண்டவை. அந்த அனுபவங்கள் இந்நூலாக்கத்தில் அவருக்குத் துணை நின்றுள்ளன என்பது தெளிவு. அனுபவத்திலிருந்து எழும் ஆக்கம் பிறருக்குப் பயன்படும் வகையில் முன்வைக்கப்பட்டிருப்பது நூலின் சிறப்பம்சமாகும். அதற்கு ஏற்றதாக மொழிநடை அமைந்திருப்பது நூலின் பெறுமதியை மேலும் உயர்த்துகின்றது.
திரு. சின்னத்தம்பி பட்டப்பின் கல்வி டிப்ளோமா மட்டத்திலும், உயர் பட்டதாரி ஆய்வு மட்டத்திலும் எனது மாணவனாக இருந்தவர். அது மட்டுமன்றி யாழ். பல்கலைக்கழகக் கவ்வியியற்துறையில் என்னுடன் சேர்ந்து பணிபுரிந்தவர். இச் சந்தர்ப்பம் ஒவ்வொன்றும் அவரை மதிப்பிடுவதற்கு எனக்குப் பெரிதும் உதவியுள்ளது. அவருடைய ஆற்றலில் நான் கொண்டிருந்த நம்பிக்கையை நிறைவு செய்வதாக இவ்வெளியீடு விளங்குகிறது.
திரு. சின்னத்தம்பியின் இப்படைப்பு கல்வியில் அக்கறை கொண்ட அனைவருக்கும் பயன்படும் என்பது எனது நம்பிக்கை அவர் இத்தகைய நூல்களைத் தொடர்ந்தும் ஆக்கி, கல்வியுலகிற்கு அளிக்க வேண்டும் என்பது எனது அவா.
அவரது இந்த முயற்சியை மனமுவந்து பாராட்டுகிறேன்.
பேராசிரியர் வ. ஆறுமுகம் வாழ் நாள் பேராசிரியர்.

முன்னுரை
ஆசிரியர் கல்வி என்பது இன்று முதன்மைப்படுத்தப்படுகின்ற ஒரு தொழிண்மைக் கல்வியாகும். ஆசிரியர்களை வலுவூட்டுதற்கு இக்கல்வி பயன்படுகிறது; அதன் மூலமாக பாடசாலைக்கல்வியில் தர மேம்பாடு உறுதிப்படுத்தப்படுகிறது.
ஆசிரியர் சுயவாசிப்பு மூலம் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும். “கற்றலுக்குக் கற்றல்’ என்பதே இந்த நூற்றாண்டின் கற்றல் அணுகுமுறையாகும். கல்வியில் புதிய பிரச்சினைகள், நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. பாடசாலைகளில் ஆசிரியர்களை முகாமை) செய்வதில் பல நெருக்கடிகள் புதிதாக தோன்றியுள்ளன. அவை பற்றிய விடயங்களை இந்நூல் விளக்கமாக முன்வைக்கிறது. “ஆசிரிய சுய முகாமை” என்பது பற்றிய கருத்துக்களை முன்வைப்பது இந்நூலின் மற்றொரு அம்சமாகும்.
இது எனது முதலாவது சுயமான கல்வியியல் நூல் என்பதால் என்னளவில் முக்கியமானது. இச்சந்தர்ப்பத்தில் எனக்கு கல்வியியல் கற்பித்த பேராசிரியர்கள் திரு.வ. ஆறுமுகம், திரு. சபா. ஜெயராசா திரு. க.சின்னத்தம்பி ஆகியோர் நினைவுக்கு வருகின்றனர். அவர்களை மிக்க நன்றியோடு நினைவு கூறுகிறேன். இந்த நூலை எழுதுவதற்கு ஊக்கமளித்து அதன் பொருட்டு அதிக சிரமங்களை ஏற்ற எனது அன்பு மனைவி சசிலேகாவுக்கு எனது நன்றியை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
இந்த நூலை எழுதும் போது என்னுடன் துணைநின்ற நண்பர் திரு.தெ. மதுசூதனன் என்றும் எனது நன்றிக்குரியவர். இந்த நூலுக்கு மனமுவந்து அணிந்துரை வழங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக

Page 7
துணைவேந்தர் பேராசிரியர் சு. மோகனதாஸ் அவர் எருக்கும் கல்வியியல் வாழ்நாட் பேராசிரியர் திரு.வ. ஆறுமுகம் அவர்களுக்கும் எனது தூய நன்றிகள்.
இந்த நூலை அழகுற அச்சிட்டு உதவிய டெக்னோ பிறின்டஸ் அச்சகத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த நூல் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மற்றும் கல்வி முகாமையாளர்கள், கல்வியியல் கல்லூரி, மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி விரிவுரையாளர் போன்ற பலருக்கும் பயன்படும். கல்வியியல் என்ற உத்வேகத்துடன் வளர்ந்து வரும் சமூக விஞ்ஞானத்தில் ஆர்வமுடையோருக்கும் இந்நூல் மிகவும் பயன்படும். ஆசிரியர்களுடனான, அவர்களுக்கு கல்வியூட்டுவதிலான ஒன்றரை தசாப்த கால அனுபவங்கள், மற்றும் எனது சுயதேடல் என்பவற்றின் வெளிப்பாடான இந்த நூலை கல்வியுலகம் விரும்பிஏற்று ஊக்குவிக்கும் என்ற நம்புகிறேன்.
மா. சின்னத்தம்பி
சிரேஷ்ட விரிவுரையாளர் (கல்வி) தலைவர், கல்வியியல் துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி இலங்கை

6Q(gb 5lLí5lLLíb !
நூலின் வடிவமைப்பும் நோக்கமும்
இந்த நூல் ஆசிரியர்களது சுயபார்வை, சுயவிமர்சனம், சுயமுன்னேற்றம், சுயநம்பிக்கை என்பவற்றை முன்னேற்றும் நோக்குடன் பல அத்தியாயங்களை உள்ளடக்குகிறது. சுயமுகாமைத்துவம், நேர முகாமைத்துவம், வாண்மை விருத்தி போன்ற அத்தியாயங்கள் இந்த தேவை கருதி எழுதப்பட்டுள்ளன.
பாடசாலை ஆசிரியர்கள் சமூகத்தின் விளைபொருள்கள். சமூகத்தின் பங்காளர் இதனடிப்படையில் சமூகப் பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். யுத்த நெருக்கடியாலும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் தம் வாழ்வின் உறவுகளையும், அடிப்படைகளையும், வாழ்வதற்கான ஆத்ம பலத்தையும் இழந்து நிற்கும் சமூகத்திற்கு கற்பிக்கும்போது புதிய சிந்தனைகளும், புதிய திறன்களும் தேவைப்படுகின்றன. இந்த நோக்கங்களுடன் ஆசிரியரின் சமூக தலைமைத்துவம், பிரச்சினைகளின் பின் பணியாற்றல் தொடர்பான அத்தியாயங்களை எழுதியுள்ளேன்.
நிறைவான தொழிண்மைப் (வாண்மை) பண்புகள் பெற்று பாடசாலைகளையும் தரமுயர்த்தி ஆசிரியர் தாமும் முன்னேற வேண்டும் என்ற நோக்குடன் ஆசிரியரும் வழிகாட்டலும், ஆசிரிய விளைதறன் போன்ற அத்தியாயங்களை எழுதியுள்ளேன். உலக வங்கி கல்வியியலாளர் லொறின் W. அண்டேசனின் ஆய்வு முடிவுகளைப் பின்பற்றி பல ஆலோசனைகள் விளக்கப்பட்டுள்ளன.
இலங்கைப் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் என்ற வகையில் தேசிய ரீதியிலான ஆசிரிய முன்னேற்றம் பற்றிய அரசின் கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றிய மிக அண்மைக்கால

Page 8
அறிவை மேம்படுத்தும் வகையில் இறுதி அத்தியாயமான ஆசிரியரை முன்னேற்றல் எழுதப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பொருத்தமான வகையில் எல்லா அத்தியாயங்களையும் வாசித்து, கிரகித்து பாடசாலைகளில் கற்பித்து, தாமும் முன்னேற வேண்டும் என்பதற்காகவே இந்நூல் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையும் மாணவரும் முன்னேறாவிடில் சமூகம் முன்னேற்றமடையாது. முன்னேற்றங்களை இழந்து விட்ட சமூகங்களில் உள்ள ஆசிரியரும் முன்னேறமுடியாது. உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்; பாடசாலைகளையும் முன்னேற்றுங்கள், உங்கள் சுய முன்னேற்றமும் பாடசாலை மற்றும் சமூக முன்னேற்றமும் இணைந்தே செல்லட்டும்.
சுய கற்றல் உங்களை நிச்சயம் வினைத்திறனும் விளைத்திறனும் உடையவர்களாக மாற்றி உங்களுக்கு வாழ் தொழில் (Career) உயர்ச்சியைத் தரும்.
- நூலாசிரியர்

உள்ளடக்கம்
அணிந்துரை 1
அணிந்துரை I
முன்னுரை
ஒரு நிமிடம் : நூலின் நோக்கம்
ஆசிரிய முகாமைத்துவம்
பாடசாலை முகாமைத்துவம் சுய முகாமைத்துவம்
ஆசிரியரும் வாணிமைத்தகைமையும்
தொழிற்பண்பு வாண்மைப் பண்புநலன்கள்
ஆசிரியரும், வாணிமைத் தகைமையும்
ஆசிரியத் தொழிலின் தளமாற்றம் ஆசிரிய கல்வியில் வாண்மை விருத்தி
ஆசிரியர்களின் வகிபங்கும் அந்தஸ்தும்
ஆசிரியரும் கற்பித்தலும்
ஆசிரியர்களும் சமூக தலைமைத்துவமும்
சமூக நிறுவனங்களும் தலைமைத்துவமும் சமூக வலைப்பின்னலும் தலைமைத்துவமும் தலைமைத்துவ பண்புநலன்கள் தலைமைத்துவ விருத்தியில் ஆசிரியர்கள்
vi
xi
01
0.
08
12
2
14
17
18
20
25
25
36
36
38
39
40

Page 9
ஆசிரியர் சவால்களும் பிரச்சினைகளும்
பாடசாலையும் ஆசிரியரும் அறைகூவல்கள் கல்விச் சீர்திருத்தங்களும் பாடம் தொடர்பான மாற்றங்களும் பாட நூல்கள் கிடைத்தல் தனியார் கல்வி நிறுவனங்கள் சுற்று நிருபங்கள், கூட்டங்கள் முகாமைத்துவ உபாயங்கள் பாடசாலை வசதிகள் போக்குவரத்தும் இடமாற்றங்களும் நீடித்த வேலை நேர உடன்பாடு பெற்றோர் தொடர்பு முன்னேற்றத்திற்கு உதவுதல்
ஆசிரியர் நெருக்கடியில் பங்காற்றுதல்
முரண்பாடுகளுக்குப் பிந்திய புனரமைப்பில் ஆசிரிய முகாமைத்துவம் திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் ஆசிரியர் கல்வி வழிகாட்டல், மேற்பார்வை மற்றும் ஆதரவு
ஆசிரியரும் கல்வி வழிகாட்டலும்
கல்வி சார் வழி காட்டல் பாடங்களையும் கற்கை நெறிகளையும் தெரிதல் மாணவர் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் உளச்சார்புக் கேற்ப வழிகாட்டல் நாட்டத்திற்கேற்ப வழிகாட்டல்
ஆசிரியருக்கான நேர முகாமைத்துவம்
நேரம் - ஒருவளம் நேரப்பயன்பாட்டுக்கான செயன்முறைத்திட்டம் நேரமுகாமை நுட்பங்கள்
44
45
47
48
49
50
50
52
52
53
54
55
56
59
66
70
71
74
75
77
78
83
87
89
91
92
95
98

ஆசிரியர் விளைநிறன் 102
விளைத்திறனை உயர்த்துதல் 107
ஆசிரியர் முன்னேற்றம் 19
தொடருரு ஆசிரியர் கல்வி 124
பின்னிணைப்பு 1 126
பின்னிணைப்பு 2 28
பின்னிணைப்பு 3 130
பின்னிணைப்பு 4 131
பின்னிணைப்பு 5 132
பின்னிணைப்பு 6 133
பின்னிணைப்பு 7 135

Page 10

ஆசிரிய முகாமைத்துவம்
சாலை மட்டத்தில் ஆசிரியர்களை முகாமை செய்தல் மிகவும் முக்கியத்துவமுடையது. ஆசிரியர்களை பாடசாலையின் இலக்குகளை அடைதற்குரியதாக கையாள்வது ஆசிரியமுகாமைத்துவம் என இங்கு வரையறை செய்யப்படுகிறது. அவ்வாறு ஆசிரியர்களை வினைத்திறனுடனும் விளைத்திறன் மிக்கதாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் ஆசிரியர்கள் தம்மளவில் சிறந்த முகாமையாளராயும் முன்னேற வேண்டும். இத்தகைய எண்ணக்கரு சுயமுகாமைத்துவம் (Self Management) என முகாமைத்துறையினர் விளக்குகின்றனர்.
இதனடிப்படையில் இந்த அத்தியாயத்தில் பின்வரும் இரண்டு அம்சங்கள் விளக்கப்படுகின்றன.
1) பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களை முகாமை செய்தல்
i) ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தனிநபர்களாக தம்மை
முன்னேற்றிக் கொள்வதற்கு ஏற்ற முறையில் தம்மைத் தாமே முகாமை செய்தல்
பாடசாலை முகாமைத்துவம்
பாடசாலைகள் தெளிவானதும் அங்கீகரிக்கப்பட்டதுமான குறிக்கோள்களைக் கொண்டுள்ளன. இக்குறிக்கோள்கள் தேசிய ரீதியில் அரசினாலும் சமூகத்தினாலும் அங்கீகரிக்கப்பட்டவை. இலங்கையின் கல்வி முறையின் குறிக்கோள்களாகவும் அவை விளங்குகின்றன.
1 / மாசின்னத்தம்பி

Page 11
இத்தகைய குறிக்கோள்களை அடைவதற்கு பாடசாலை என்ற ஒழுங்கமைப்பை அதன் முகாமையாளர் பயன்படுத்திக் கொள்வர். பாடசாலை முகாமையாளராக நேரடி முகாமையாளராக தொழிற்படும் அதிபர். பிரதி அதிபர், உப அதிபர் ஆகியோர் செயற்படுவர். இவர். களுக்கு அடுத்த நிலையில் பகுதித்தலைவர்களும், வகுப்பாசிரியர்களும் பணியாற்றுவர்.
பாடசாலை முகாமையாளர்கள் பாடசாலையின் குறிக்கோள்களை அடைதற்கு ஏற்ற வகையில், பாடசாலையின் நிலைமைகளையும் (Conditions) கவி நிலை (Environment) யையும் மாற்றியமைப்பர். தனியொரு அதிபரில் தங்கியிருத்தல் எதுவுமின்றி பாடசாலைநீடித்துவளரக் கூடிய வகையில் நிலைமைகளும், கவிநிலையும் ஒழுங்கமைக்கப்படும்.
முகாமைத்துவ மட்டத்தில் செயற்படும் அணியினர் கடமை. களையும், பொறுப்புக்களையும் பொருத்தமாக பகிர்ந்து கொள்வதன் மூலம் சக்தி மிக்க நிறுவனக் கலாசாரத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். பாடசாலை தொடர்பாக தெளிவான நோக்கு (Strong Vision) தீர்மானிக்கப்படல் அவசியமாகிறது.
பாடசாலையில் பணியாற்றும் மானிட சக்தி (Human energy) என். பதை ஊக்குவிப்பதன் மூலமாகவே பாடசாலை மிகப் பெரிய நிறுவனமாக வளர முடியும். இத்தகைய மானிட சக்தியில் முதன்மையானவர்கள் ஆசிரிய அணியினராவர்.
பாடசாலை அதிபர், ஆசிரியர்களை முகாமை செய்வது தொடர்பாக பின்வரும் எண்ணக்கருவை விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. * ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை வெளிப்படையாக அங்கீகரித்தல், எதனையும் திறமையாக நிறைவேற்றுவதற்கு ஆசிரியர்களை மிகத் திறமையாக கையாள்வதே ஏற்புடையதாகும் ஆசிரியரின் போதனையின் தரத்தை உயர்த்துவதன் மூலமாகவே மாணவர் கல்வித் தரத்தையும் உயர்த்த முடியும். ஆசிரியர் பங்கு பின்வரும் இரண்டு அடிப்படை d56flo) (pifujigs/6/Lib ol 60Lugi (Lorin Anderson 1999:02)
1) கல்விக்கான செலவு ஒதுக்கீட்டில் அதிகம் ஆசிரியர் சம்பளங்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் ஆசிரியர் சம்பளங்களுக்கான ஒதுக்கீடு 75% - 95% வரையில் காணப்படுகின்றது.
ஆசிரிய முகாமைத்துவம் / 2

i) மையப்படுத்திய கல்வி முறை நிலவும் நாடுகளில் மாற்றங்களை அல்லது புதுமைகளை அறிமுகப்படுத்துவதைத் தடுக்கும் இரத்து அதிகாரம் (Veto) ஆசிரியர்களிடம் உள்ளது.
மேரி பாக்கள் ஃபல்லற் (Mary Parker Follett) குறிப்பிடுவது போல் மனிதர்களுடாக செயல்களை நிறைவேற்றிக் கொள்ளும் கலைதான் முகாமைத்துவம் என்பதை பாடசாலை அதிபர்கள் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
முகாமைத்துவசிந்தனையின் முன்னோடியும் நிபுணருமான பீற்றர் டிரக்கள் (Peter Drucker) முகாமைத்துவம் பற்றித் தெரிவித்திருக்கும் பின்வரும் கருத்துக்கள் முக்கியத்துவமுடையன.
* குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு நிறுவனங்களில் - பாடசாலைகளில் கிடைக்கும் வளங்களை எவ்வாறு பயன்படுத்துவதென்று முகாமையாளர் சரியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். பாடசாலைகளில் மிகமுக்கியமானவளம் மனிதவளம், அதில் பிரதானமானவர்கள் ஆசிரிய மனிதவளம். இதனால் ஆசிரிய மனிதவளத்தை எவ்வாறு பயன்படுத்துவதென்று சிறந்த முடிவுகளை பாடசாலை அதிபர்கள் மேற்கொள்வது அவசியமாகும்.
* நிறுவனங்களுக்கு வேண்டிய வழிகாட்டல் நெறிகளை (Direc
tions) முகாமையாளர் வழங்குதல் வேண்டும்.
பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் தொழிற்பாடுகள் தொடர்பான பின்வரும் அறிவுறுத்தல்களில் அதிபர் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.
i) தகைமை, ஈடுபாடு, அடைப்படையில் கற்பித்தலுக்கான
பாடங்களை ஒதுக்கீடு செய்தல்.
ii) தேவையான ஆசிரிய பயிற்சிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தல். சேவைக்காலப் பயிற்சி, மீஸ் பயிற்சி என்பவற்றில் பங்கேற் பதற்கான அறிவுறுத்தல்களை வழங்குதல்
i) பாடங்களைத் திட்டமிடும் முறை, ஒழுங்கு, பதிவு செய்தல் தொடர்பான ஆலோசனைகள், வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் என்பவற்றை வழங்குதல்.
3 / மாசின்னத்தம்பி

Page 12
iv) இணைக்கலைத்திட்ட செயற்பாடுகளில் எவ்வாறு, எப்போது யார் பங்கேற்க வேண்டும் என்பது பற்றியும், அத்தகையோருக்கு எத்தகைய உதவிகள், வசதிகள் மற்றும் ஊக்குவிப்புக்கள் வழங்கப்படும் என்பதையும் தெளிவாக அறிவுறுத்த வேண்டும்.
V) மதிப்பீட்டுப்பரீட்சைகள் எத்தகைய முறையில் நடாத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் தெளிவான வழிகாட்டல்களை வழங்கவேண்டும். இதற்கென ஆசிரியர் எத்தகைய வசதிகளைப் பெறுவர் என்றும் தெரிவிக்க வேண்டும்.
vi) மாணவர்களுக்குரிய வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கல் பணிகளில் ஈடுபட வேண்டிய ஆசிரிய அணியின. ருக்கான சிறப்பான ஆலோசனைகளையும் வழிகாட்டு நெறிகளையும் சரியான முறையில் வழங்குதல் வேண்டும்.
vi) பாடசாலையின் சிறப்பு நிகழ்ச்சித்திட்டங்களில் எத்தகைய ஆசிரியர் எவ்வகையில் உதவவேண்டும் என்பது தொடர்பாகவும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படல் வேண்டும். பரிசளிப்பு, விளையாட்டுப் போட்டி, ஸ்தாபகர் தினம், பெற்றோர் ஆசிரியர் தினம் போன்ற சிறப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றி போதிய கால அவகாசத்துடன் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
vii) பாடசாலை ஆசிரியர்கள் தொழில்ரீதியாக முன்னேறுதற்குரிய வாய்ப்புக்கள் பற்றிய சுற்று நிருபங்கள், விளம்பரங்கள், வெகுசன ஊடகத் தகவல்கள் என்பவற்றை சரியான நேரத்தில், முழுமையாக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். இவை தொடர்பாக நேரடியாக கலந்துரையாடி ஊக்கமும் ஆலோசனையும் வழங்க வேண்டும்.
ix) பாடசாலைகள் யுத்தம், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றினால் சிதைந்து போயிருக்க வாய்ப்புண்டு. அத்தகையநிலைமைகளில்பாடசாலையின் உட்கட்டமைப்பை நிர்மாணிப்பதில் ஆசிரியர் பங்கேற்றல் அவசியமாகின்றது. இதனால் இவை தொடர்பாக நன்கு ஆலோசனை செய்து, திட்டமிட்டு செயல்திட்டங்களில் உதவுதற்குரிய ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்க வேண்டும்.
ஆசிரிய முகாமைத்துவம் /4

இவ்வாறு பாடசாலையின் தரம், நிலைமை, வசதி, தேவைகள் என்பவற்றுக்கு ஏற்றதாக ஆசிரியர் வகிபங்கை மேம்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிகளை பாடசாலை அதிபர்கள் வழங்க வேண்டும்.
* நிறுவனத்தில் தலைமைத்துவ பணியையும் அதிபர் பயன்படுத்த
வேண்டும்.
பொதுவாக அரச மேற்பார்வை கட்டுப்பாடு என்பவற்றில் கீழ் இயங்கும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாகவே பெரும்பாலான பாடசாலைகள் இயங்குகின்றன.
இத்தகைய நிறுவனங்களில், மத்திய நிலையில் கல்வியமைச். சினால் தயாரிக்கப்படும் சுற்று நிருபங்களின்படியே அதிபர்கள் முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.
ஆனால் நடைமுறையில் பாடசாலைகளின் சமுதாயச் சூழல் வேறுபடுகின்றது; பாடசாலை தொடர்பான பெற்றோர் அணுகுமுறை வேறுபடுகின்றது; பாடசாலைக்கான வளங்களின் கிடைப்புத்தன்மை வேறுபடுகின்றது; நாளாந்த பாடசாலை மட்டத்திலான பிரச்சினைகளும் நெருக்கடிகளும் கூட வேறுபடுகின்றன.
இத்தகைய பின்னணியில் பாடசாலை அதிபர் ஒரு நிர்வாகியாக மாத்திரம் செயற்படுவது போதுமானதன்று. அவ்வாறு செயற்படுவது சில சமயங்களில் பாடசாலை வளர்ச்சிக்கு எதிரானதாகவும் அமைந்துவிடும். இதனால் தனது பாடசாலையின் தனித்தன்மையான நிலைமைகளையும், கவி நிலைமையையும் கவனித்து அதிபர் ஒரு தலைவர் (Leader) போல செயற்பட வேண்டும். தற்துணிவுடன் தாமதமின்றி முடிவுகளை மேற்கொண்டு ஆசிரியர்க்கு உதவ வேண்டும். அதனுடாக பாடசாலை இலக்குகளை வெற்றிகரமாக அடையவேண்டும்.
இங்கு பீற்றர் டிரக்கரின் வரைவிலக்கணத்திற்கு அமைவாக பாடசாலை அதிபர் எவ்வாறு தனது ஆசிரியர்களை முகாமை செய்யவேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.
இத்தகைய எல்லா விளக்கங்களையும் நன்கு பரிசீலனை செய்த பின் டாவ்ற் (Richard L. Daft 2003: 04) முகாமைத்துவம் என்பது பற்றி முழுமையான நவீன வரைவிலக்கணம் ஒன்றை வழங்கியுள்ளார். அது பின்வருமாறு அமைகிறது.
5 / மாசின்னத்தம்பி

Page 13
நிறுவனத்தின் வளங்களை திட்டமிடல் ஒழுங்கமைத்தல் வழிப்படுத்தல் கட்டுப்படுத்தல் என்பவற்றின் முலம் நிறுவனத்தின் குறிக்கோள்களை வினைத்திறனும் விளைத்திறனும் மிக்க வகையில் நிறைவேற்றுவதே முகாமைத்துவம் ஆகும்
இதனை ஒரு பாடசாலைக்குப் பொருத்திப் பார்க்குமிடத்து பாடசாலை முகாமைத்துவம் என்பதைப் பின்வருமாறு விளக்க முடியும்.
* தேசிய கல்வி ஆணைக் குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட
பாடசாலையின் குறிக்கோள்களை அடைதல்
* நிறுவனத்தின் வளங்கள் என்பதாக பாடசாலையின் பின்வரும்
உள்ளீடுகள் அமைகின்றன.
பெளதீக வளம் காணி, கட்டிடம், தளபாடம், ஆய்வு கூடம், விளையாட்டு மைதானம், பிரார்த்தனை மண்டபம் நூலகம் போன்றன.
மனித வளம்: ஆசிரியர்களினால் பாடசாலை தொடர்பாக வழங்கப்படும் உடல், உள உழைப்பு குறிப்பிடப்படும். இவர்களே முதன்மையான மனித வளமாகும்.
இவர்களுடன் அலுவலக ஊழியர், மற்றும் சிற்றுாழியர், தொழிலாளர் போன்றவர்களையும் உள்ளடக்க வேண்டும். நிதிவளம்: பணமாகவும் பணமல்லாத மாற்றுவடிவிலும் கிடைக்கும் நிதித்தொகையை இது குறிப்பிடுகின்றது.
மாணவர், பெற்றோர், நலன் விரும்பிகள் ஆகியோரிடமிருந்து நேரடியாகத்திரட்டப்படுபவை, அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படுபவை, அரசசார்பற்றநிறுவனங்களினால் வழங்கப்படுபவை போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கும்.
நேரவளம்: பாடசாலைத் தொழிற்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் மனித நேரத்தைக் குறிப்பிடுகின்றது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ஆறுமணித்தியாலங்கள் என்றும் பாடசாலை நாட்கள் இருநூறு நாட்கள் என்றும் கொண்டால் ஒரு வருடத்திற்கான நேரவளம் (6x200) ஆயிரத்து இருநூறு மனித மணித்தியாலங்களாக இருக்கும்.
முகாமையாளர், ஆசிரியர், அலுவலர், மாணவர், பழைய
ஆசிரிய முகாமைத்துவம் /6

மாணவர், நலன் விரும்பிகள் போன்ற பலராலும் பாடசாலைச் செயற்பாடுகளுக்கென ஒதுக்கப்படும் மனித மணித்தியாலங்கள் மற்றும் மனிதநாட்கள் நேரவளமாகப்பயன்படுகின்றன.
தகவல்வளம்: பாடசாலையின் ஒழுங்குமுறையிலான செயற்பாடுகளுக்கு அடிப்படையாக அமைகின்ற எல்லா வகையான தகவல்கள், புள்ளி விபரங்கள் போன்ற பலவற்றையும் குறிக்கிறது.
தற்போது இத்தகவல்களைத் திரட்டல், ஒழுங்குபடுத்தல், பாதுகாத்தல், பயன்படுத்தல், மதிப்பீடு செய்தல் என்ற செயன்முறைகள் விஞ்ஞான பூர்வமாக கணணி உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை கல்வித் தகவல் முகாமைத்துவ செயலமைப்பு (Educational Management Information System - EMIS) 66öp60)păbălsăp6orit.
தகவல் முகாமைத்துவம் பாடசாலை முகாமைத்துவத்தில் அதிமுக்கியமான இடத்தை வகிக்கின்றது.
* முகாமைத்துவத்தின் தொழிற்பாடுகளாக திட்டமிடல், ஒழுங்கமைத்தல்
வழிப்படுத்தல் கட்டுப்படுத்தல் என்பன அமைகின்றன.
பாடசாலை மட்டத்திட்டமிடல், ஆட்கள், பதவிகள், அதிகாரம், பொறுப்பு என்பவற்றை பொருத்தமாக ஒருங்கிணைத்தல், தேவைக்கேற்ப வழிகாட்டி ஆலோசனை வழங்குதல், இலக்கிலிருந்து தொழிற்பாடுகள் விலகுமிடத்து அதிகாரங்களைப் பயன்படுத்தி கட்டுப்படுத்துதல் போன்ற தொழிற்பாடுகளை பாடசாலை அதிபர் மேற்கொள்ள வேண்டும்.
* வினைத்திறன் என்பது பாடசாலைகளின் உள்ளீடுகளுக்கேற்றதாக வெளியீடுகள் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தலாகும். வெளியீடுகளில் எதிர்பார்க்கப்படுபவற்றை விடவும் கூடுதலாக பெறும்போது முகாமைத்துவம் சிறப்பானதாக உணரப்படுகிறது. உள்ளிடுகளினடிப்படையில் எதிர் பார்த்தளவு வெளியீடுகளை (அடைவு, ஆற்றுகை, நன்மதிப்பு, அங்கீகாரம் சமூக ஆதரவு போன்ற) பெற முடியாத போது உள்ளிடுகள் விரயமாக்கப்பட்டதாகவும் முகாமை திறமையற்றதாகவும் கருதப்படும்.
* விளைத்திறன் என்பது எதிர்பார்த்த இலக்குகள் எந்தளவுக்கு அதே மாதிரியில் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதைக்
7 / மா.சின்னத்தம்பி

Page 14
குறிக்கிறது. இது மாணவர், பாடசாலை என்பவற்றின் கல்வித்தரம் (Quality of Education) 6T607 -960)Lu IIT67TIUGBg55i LIGBáling5!.
இலக்குகள் நிறைவேற்றப்படாமை, இலக்குகள் திசைமாறிப் போதல் என்பன விளைதறணின்மையாக இனங்காணப்படும். சித்தி பெறத்தவறுதல், சித்தி பெற்றவர் உரியவாறு செயல்பட முடியாதிருத்தல் அறிவை செயலாகவோ, விளைவாகவோ மாற்ற முடியா. திருத்தல் என்பன கல்வி விளைதிறனின்மையாக கருதப்படும்
மேலே விளக்கப்பட்ட முகாமைத்துவ உட்கூறுகளையும் அவை பற்றிய எண்ணக் கருக்களையும் பாடசாலை அதிபர்கள் விளங்கிக் கொள்வது அவசியம். அவை தொடர்பாக பாடசாலை ஆசிரியர்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது ஆசிரிய முகாமைத்துவம் என விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
U முகாமைத்துவம் (Self Management)
ஆசிரியர்கள் பாடசாலை என்ற நிறுவனத்தின் உள்ளீடுகளில் முக்கியமானவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தமது தேர்ச்சிகளை (Competencies) சிறப்பாக முகாமை செய்வது பாடசாலையின் செயற்பாட்டுக்கு உதவுவதோடு, தனித்தனியாக வாழ் தொழிலில் (Career) முன்னேறுதற்கும் உதவுகின்றது. இதனால் சுய முகாமைத்துவம் பற்றி ஆசிரியர் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதற்கும், அத்தகைய செயற்பாட்டை முன்னேற்றுதற்கும் முயற்சித்தல் வேண்டும்.
சுயமுகாமைத்துவம் என்பது பின்வருவனவற்றை உள்ளடக்குd56öupg5. (Hellriegel and slocum 2004:05)
* ஆசிரியர் தமது பலம் மற்றும் பலவீனங்களை மதிப்பீடு செய்தல்
* தனிப்பட்ட மற்றும் தொழிண்மை (வாண்மை) சார் குறிக்கோள்களை
நிர்ணயித்தல்
* வேலைக்கும், சொந்த வாழ்வுக்குமிடையில் சமநிலையைப்
பேணுதல்
* புதிய கற்றலில் ஈடுபடுதல் - இதில் புதிய அல்லது திருத்தமான திறன்கள், நடத்தைகள், உளச்சார்புகள் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதைக் குறிப்பிடுகின்றது.
ஆசிரிய முகாமைத்துவம் /8

சுய தேர்ச்சிகளை முகாமை செய்தல் என்பது பின்வருவனவற்றை
மேற்கொள்வதற்கான அடிப்படை இயலுமைகளைக் குறிப்பிடுவதாக (Ogsp6üo ffa56ão (Don Hellriegal) uDlibgplb ɼuDITđ5b (John W. Slocum. Jr) போன்றோர் தெளிவுபடுத்துகின்றனர்.
米
உங்கள் ஆளுமையையும் உளப்பாங்கையும் விளங்கிக் கொள்வது போல் மற்றவர்களது ஆளுமையையும் உளப்பாங்கையும் விளங்கிக் கொள்ளுதல் உங்களைப் பற்றியும், ஏனையவர்கள் பற்றியும் சரியான புலக்காட்சி பெறுதல், ஆய்வு செய்தல், வியாக்கியானம் செய்தல். அதேபோல் உடனடியான, அண்மித்ததாயுள்ள சூழலையும் உணர்ந்து மதிப்பிட்டு, விளக்கமளித்தல்.
உங்களது வேலை, ஏனையோரது வேலை, அவ்வேலை தொடர்பான ஊக்குவிப்புக்கள், மனவெழுச்சிகள் என்பவற்றை விளங்கிக் கொண்டு செயற்படுதல்
உங்களது சுய முன்னேற்றம், தனிப்பட்ட வாழ்வு சார்ந்த மற்றும் வேலை தொடர்பான குறிக்கோள்களை மதிப்பீடு செய்து, உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.
உங்களையும், உங்கள் வாழ்வுத் தொழிலையும் முகாமை செய்வ. தற்கான பொறுப்பினை ஏற்றல், அழுத்தம்மிக்க சூழலிலும் முகாமை செய்தற்கான பொறுப்பை ஏற்றல், இதன்படி மனவெழுச்சி மதிநுட்பம் (emotional Intelligence) என்பதும் உள்ளடக்கப்படுகிறது. ஒருவர்
தன்னுடையதும் அதேபோல் ஏனையவர்களினதும் மனவெழுச்சி
களையும் புரிந்து கொள்ள வேண்டும். சுய விழிப்புணர்வு, சுய ஊக்கம், சமூகதிறன் என்பவற்றைக் கொண்டிருப்பதை சுய முகாமைத்துவம் குறிப்பிடுகின்றது. சுய முகாமைத்துவம் பற்றிய தெளிவை ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றிருப்பது ஆசிரியருக்கும், அதேபோல் பாடசாலைக்கும் நன்மையும் முன்னேற்றமும் தரும்
என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
வாழ்வுத் தொழில் விருத்தி பற்றிய அம்சங்களிலும் ஒவ்வொரு
வரும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு ஆசிரியர் தனது வாழ்நாளில் பெறக் கூடியவேலைசார்ந்த பல்வேறு தொடர்ச்சியான பதவிகளையும் அதனுடன் தொடர்புபட்ட முன்னேற்றங்களையும் வாழ்வுத் தொழில் (Career) என்பது குறிப்பிடுகின்றது. மேற்கொள்ளும் பல்வேறு
9 / மாசின்னத்தம்பி

Page 15
வேலைகள் தொடர்பான உளப்பாங்குகளையும் நடத்தைகளையும் அனுபவங்களையும் இதில் சேர்த்து நோக்கவேண்டும்.
ஆசிரியர்களும் முதலில் சாதாரண ஆசிரியராக தொழிலைத் தொடங்கலாம். ஆனால் நீண்ட காலத்தில் புதிய அறிவு, உயர்ந்த கல்வி, புதிய பதவிகள், அனுபவங்கள் என்பவற்றைப் பெறுதற்குரிய சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருக்க வேண்டும். வாய்ப்புக் கிடைக்குமிடத்து அவற்றை கவனமாகப் பயன்படுத்தி உரிய பதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இயன்றளவுக்கு ஆசிரியர், பரீட்சகர், மதிப்பீட்டாளர், சேவைக்கால ஆலோசகர், பகுதித்தலைவர், பிரதி அதிபர், அதிபர், உதவிக்கல்விப் பணிப்பாளர், பணிப்பாளர், ஆணையாளர், மதியுரைஞர் என்று பல படிநிலைகளில் தொழில் முன்னேற்றம் பெறுவதில் நாட்டம் கொண்டிருக்க வேண்டும். இதற்குரியதாக உயர்ந்த படிப்புக்களைப் பெற வேண்டும். புதிய தொழில் அனுபவங்ளையும் பெறவேண்டும். செயல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் அங்கத்துவம் பெற்று செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்க வேண்டும்.
சிறிய தோல்விகளை மதிப்பீடு செய்து படிப்பினைகளைப் பெற வேண்டும். மற்றவர்களின் மதிப்பீட்டை விட சுயமதிப்பீடுதான் மிகவும் சரியானது என்பதை உணர வேண்டும்.
ஆசிரியர்களின் வாழ்வுத் தொழிலின் முன்னேற்றத்தை அளப்பதற்கென திட்டவட்டமானநியமங்கள் ஏதுமில்லை. ஒவ்வொருவரதும் குறிக்கோள்கள், விழுமியங்கள், ஊக்குவிப்புக்கள் என்பவற்றைப் பொறுத்ததாகும். சுயதிருப்தியை வைத்து மதிப்பிடுவதும் அவசியம்,
தொழில், பதவிகள், பதவிகளை மாற்றுதல் தொடர்பாக சரியான முடிவுகளை சரியான நேராத்தில் மேற்கொள்வதும் செயற்படுத்துவதற்கு ஏதுவாக துரிதமாக செயற்படுத்துவதும் அவசியமாகும். உரிய வயதில் உரிய தகைமையையும் பதவியையும் பொருத்திக் கொள்வதில் அதிக சிரத்தை எடுப்பது விரும்பத்தக்கது. ஆனால் எல்லாம் வெற்றியளிக்க வேண்டுமென்பதில்லை.
தனிப்பட்ட ஆசிரியரின் வருமானம்; சொத்து, குடும்ப அங்கத்தவர், உதவிகள், இடம் மாறும் வாய்ப்புக்கள், குடும்ப அந்தஸ்து, தனிப்பட்ட குணவியல்புகள், தொழில் வாய்ப்பு உருவாகும் நிலைமைகள் போன்ற பல காரணிகளும் ஒரு ஆசிரியரின் வாழ்வுத் தொழில் முன்
ஆசிரிய முகாமைத்துவம் / 10

னேற்றத்தைப் பாதிக்கவல்லன என்பதை விளங்கிக் கொள்வது மிகவும் அவசியம்.
ஆசிரியர்கள் நிதானமாக உங்கள் பலத்தில் (கல்வி, திறன், தொடர்புகள்) நம்பிக்கை கொள்ள வேண்டும். தொழில் பற்றிய நீண்ட கால இலட்சியத்தை அடைதற்குரிய திட்டத்தை தன்னளவில் தயாரித்தல் வேண்டும். புதிய திறன்களை விருத்தி செய்ய வேண்டும். உயர் கல்வி கற்க வேண்டும். தயக்கமின்றிப் பொறுப்புக்களை ஏற்று சரியாக நிறைவேற்ற வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்வியை அனுபவங்களாக்கி கற்றுக் கொள்ள வேண்டும். வாய்ப்புக்கள் தென்படும் போது தவறவிடாமல் கைப்பற்றுதற்கு உச்ச மட்டத்தில் முயற்சித்தல் வேண்டும். உடல் உள ஆரோக்கியத்தை பேணிவர வேண்டும். இவ்வாறு செயற்படும் போது வாழ்வுத் தொழிலில் முன்னேற்றம் நிச்சயமாகக் கிடைக்கும். முயற்சியும் நிதானமும், தொலைநோக்கும், தன்னம்பிக்கையும் கவனமாக ஒரு ஆசிரியரால் ஒருங்கிணைக்கப்படும்போது அவர் தொழில் ரீதியாக முன்னேற்றம் காண்பார். மகிழ்ச்சியும் வெற்றியும் தொழில் வாழ்வுடன் இணைந்து வரும் என்பதையும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
Reference:
1) Hellriegel, Don and slocum.W. John. Jr. (2004) Learning about organizational Behaviour Organizational Behaviour, Thompson, south western, USA pp 5 - 6
2) Daft L. Richard (2003) Management, Thompson - South - Western,
USA.
11 / மாசின்னத்தம்பி

Page 16
ஆசிரியரும் வாண்மைத்தகைமையும்
சிரியர்கள் சமூகத் தொழிற்பாடுகளின் வேகம், தன்மை,
போக்கு என்பவற்றை நிர்ணயிப்பவர்கள், எல்லாக் குடும்பங்களின் நீண்ட கால குறுங்கால முன்னேற்றங்களின் வழிகாட்டிகள், வரலாற்றுக் காலங்களில் அவர்கள் சமூக மாற்றத்தின் விசையாகிய கல்விச் சேவையை வழங்குவதன் மூலம் வளர்ச்சிப் போக்கினை மாற்றுவதற்கு பங்களிப்புச் செய்தவர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிரியத் தொழில் புனிதமான சேவை என்றும் உளவியல் அறிவு, அனுபவங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது என்றும் விளக்கப்பட்டுள்ளது. கற்பதற்கான அறிவை வழங்குபவர் என்ற நிலையுடன், கற்றலுக்கு உதவுபவர் என்றும் கருதப்படுகிறது.
இவற்றுக்கு மேலாக ஆசிரியத் தொழில் ஒரு உயர் தொழில், - கண்ணியத் தொழில் என்றும் விளக்கப்படுகிறது. இதனடிப்படையில் வாண்மைத்தொழில் என்று விபரிக்கப்படுகிறது. சிலர் ஆசிரியத் தொழில் மருத்துவம், பொறியியல், முகாமைத்துவம், சட்டம் போன்று ஒரு நிறைவான வாண்மைத் தொழில் அல்லவென்றும், அது அரைகுறையான வாண்மைத் தொழிலே என்றும் விளக்கியுள்ளனர். உயர்தொழில் என்பது தொழிண்மை என்றே அழைக்கப்பட வேண்டும் என்ற கருத்து தற்போது நிலவுகிறது.
தொழிற்பண்பு
சமூக மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடிப்படையாக அமையும் சேவை ஒன்றினை வழங்கும் தொழில்களே வாண்மைத்
ஆசிரிய முகாமைத்துவம் / 12

தொழில் எனப்படுகிறது. சமூகத்தில் ஏதோ சில குறித்த விடயங்களில் மற்றவர்களைவிடவும், குறிப்பாக தம்மிடம் வருகின்ற பயனாளிகள் - வாடிக்கையாளர்களை விடவும் உயர்ந்த அறிவு கொண்டவர்கள் வாண்மைத்துறையினர் என்று (hughes: 1963) குறிப்பிடப்படுகிறது.
உண்மையில் மதப்பணியில் ஈடுபடுகின்ற மதபோதகர்கள் தமது பணியில் மேலான அறிவும், ஈடுபாடும் கொண்டவர்கள் என்ற கருத்திலிருந்தே இச்சொல் தோற்றம் பெற்றதாக விளக்கப்படுகின்றது. சாதாரண தொழில்கள் போலன்றி, குறித்த துறை பற்றி மேலான அறிவும் திறன்களும் கொண்டிருப்பதன் காரணமாக மிக உயர்ந்த அந்தஸ்துடைய தொழில்களே வாண்மைத் தொழில் என்று அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு உயர் தொழில் என்பது வாண்மை, வாண்மையாளர் என்று இரு நிலைகளில் தொடர்புபடுத்தப்படுகிறது. பயனாளிகள் நோக்கில் வாண்மையில் திறமை கொண்டது என்று நோக்கப்படுகிறது. பல அறிஞர்கள் (Carr and Saunders: 1963) வாண்மைத் தொழில் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றனர்.
* சிறப்பான மதிநுட்பம் மிக்க கல்வியையும் பயிற்சியையும்
அடிப்படையாகக் கொண்ட தொழில்
* திறன் மிக்க சேவையை அல்லது மதியுரையை பொதுமக்க
ளுக்கு அல்லது தேவைப்படுவோருக்கு வழங்கும் தொழில்.
* தீர்க்கமான கட்டணம் அல்லது சம்பளத்தை நேரடியாக பெற
உரித்துடைய தொழில்.
கோகன் (Cogan 1953) என்ற ஆய்வாளர் கருத்துப்படி “சில வகை விஞ்ஞானம் அல்லது துறைகள் தொடர்பான கோட்பாட்டுக் கட்டமைப்பு பற்றிய அறிவின் அடிப்படையில் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு தொழில் வாண்மைத் தொழில்’ என்று விளக்கப்படுகிறது.
நடைமுறையில் தமது தொழில் என்ற வகையில் பிரயோகிப்பதற்குத் தகுதி மிக்க கோட்பாட்டு அறிவை பெற்றிருப்பது அவசியம் என்பதை இது வற்புறுத்துகிறது. வேறுவிதமாக கூறுவதானால், நடைமுறையில் அறிவைப்பிரயோகித்து மேற்கொள்ளப்படும் சேவைத் தொழிலாகவே இது காணப்படும் என்பதாகும்.
13 / மாசின்னத்தம்பி

Page 17
எல்லா ஆய்வாளருமே இதனை சமூகத்திற்கு மிகவும் இன்றியமையாது வேண்டப்படுகின்ற திறன் மிக்க சேவையாகவும், விஷேடமான நிபுணத்துவ அறிவையும், நுட்பமான நன்கு ஒழுங்கமைத்த பயிற்சியையும் அடிப்படையாகக் கொண்டதாகவும் ஏற்றுக் கொள்கின்(D60IIT.
எல்லியற் (ELLIOTT 1972) என்ற ஆய்வாளர் வாண்மை பற்றிய மற்றுமொரு முக்கியமான கருத்தை விளக்குகிறார். விஷேடமான பணியொன்றை மேற்கொள்ளக் கூடிய நிபுணத்துவ அறிவுத்தொகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வல்லமை கொண்ட அணியினராக வாண்மைத் தொழிற் துறையினரை அவர் இனங்காட்டுகிறார்.
மருத்துவ அறிவை வைத்தியர்களும், நிலவியல். நிர்மாணம் பற்றிய அறிவைப் பொறியியலாளரும் சட்டம், நீதி, உரிமைகள் பற்றிய அறிவை சட்டவியலாளர் மற்றும் நீதிபதிகளும் கட்டுப்படுத்துவது போல கல்வி மற்றும் கற்பித்தல் தொடர்பான அறிவையும், தேர்ச்சியையும் கல்வியியலாளர் கட்டுப்படுத்துகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நுட்ப அறிவுத் தொகுதியை - மற்றவர் அறிய முடியாத நுட்ப அறிவுத் தொகுதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக ஒரு அந்தஸ்தையும், அதிகாரத்தையும் சமூக மட்டத்தில் அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர். இந்த அதிகாரம் அவர்களது சுய இலாப நோக்கை ஊக்குவிப்பதாகவும், பெறுமதியான சமூக தேவையை வழங்குவதில் ஊழல் நடைமுறைகளைக் கையாள்வதற்கு ஊக்குவிப்பதாகவும் எல்லியற் சந்தேகம் கொள்கிறார்.
வாண்மைப் பண்பு நலன்கள்
ஹவுல் (HOULE: 1980) என்ற நவீன ஆய்வாளர் பலரது விளக்கங்களையும் உள்வாங்கி வாண்மைத்தொழிலின் பண்புகளைப் பின்வருமாறு பட்டியற்படுத்தியுள்ளார்.
* தொழிலின் வரையறைகள், எல்லைகள் மிகவும் தெளி
வானவையாக வரையறுக்கப்படல்.
* தொழிலுக்கு அடிப்படையாக அமையும் துறை பற்றிய
நிபுணத்துவ கோட்பாட்டு அறிவைக் கொண்டிருத்தல்.
ஆசிரிய முகாமைத்துவம் / 14

தொழில் தொடர்பாக எழக் கூடிய பிரச்சினைகள் எல்லாவற். றுக்கும் தாமாகவே தீர்வு காணக் கூடியவர்களாக செயற்படுதல்.
கோட்பாட்டு அறிவை - படிப்பதால் பெற்ற அறிவை நடைமுறைகளுடன் சிறப்பாக இணைத்துப் பயன்படுத்தும் ஆற்றல்.
தொடர்ச்சியான சுயமுன்னேற்றத்தை (இத் தொழிலில் ஈடுபடுவோர்) பெறவாய்ப்பு ஏற்படல்.
தொழில் தொடர்பாக நன்கு திட்டமிட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட முறைசார் பயிற்சியை பெற்ற பின்பே பணியாற்றுதல்.
தொழில் புரிதற்கான தகைமை பற்றி மிக உயர்ந்த உத்தரவாதம் வழங்கப்பட்டிருத்தல். பயனாளிகளுக்கு உயர்ந்த நம்பிக்கை ஏற்படும் வகையில் இத்தொழிலில் ஈடுபடுவோரின் தகுதி, சமூக உத்தரவாதத்தைப் பெற்றிருத்தல்.
தொழிலுக்கு உரித்தான - விஷேடமான துணைக் கலாசாரம் (Sub-Culture) ஒன்றைக் கொண்டிருத்தல். கண்ணோட்டம்,நம்பிக்கை, பழக்கம், மொழி, வாழிடம், பொழுது போக்கு முறை, ஆட்களுடனான தொடர்பு போன்ற அம்சங்களில் தனித் தன்மையான நடத்தைக் கோலங்களைக் கொண்டிருத்தல்.
சட்ட வலிமையைப் பெற்றிருத்தல், மிக உயர்ந்த மட்டத்தில் சட்ட அங்கீகாரம் பெற்ற உயர் நிறுவனம் ஒன்றினால் அங்கீகரிக்கப்பட்ட தகைமை உடையவர்கள் மாத்திரமே இத் தொழிலில் பணியாற்ற முடிதல்.
விதிக்கப்பட்ட நியமங்களை மதித்து செயற்படாத நபரை சட்ட ரீதியில் அத்தொழில் செய்யாது தடை செய்யவும் முடியும் என்பதை இது தெளிவுபடுத்துகின்றது.
தொழில் செய்பவரது சேவை அல்லது ஆலோசனையை பயனாளிகள் - வாடிக்கையாளர் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு குறித்த நபரிடம் சேவை பெறுவதை பெருமையாகவும் - புத்திசாலித்தனமான செயலாகவும் பயனாளிகள் கருதுதல் வேண்டும். அதே தொழிலில் பணியாற்றும் ஏனைய சகபாடிகளால் குறித்த நபரின் பணி சிறந்ததென ஏற்றுக்கொள்ளப்படல்.
15 / மாசின்னத்தம்பி

Page 18
* தொழில் தொடர்பாக, தெளிவான, கடுமையான ஒழுக்க நியமங்கள், ஒழுங்குகள் என்பவற்றை இத் தொழிலில் இருப்பவர்கள் பின்பற்றுதல் வேண்டும். பயனாளிகளின் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில், இத்தகைய ஒழுக்க நியமங்கள் பணியில் ஈடுபடுவோர் மீது நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இத்தகைய ஒழுக்க நியமங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருப்பதாலேயே இத்தொழிலின் சமூக அந்தஸ்தும் உயர்ந்து விடுகிறது.
இத் தொழிலில் ஈடுபடுவோர் தம் சேவைக்கு உயர்ந்த வேதனங்களைப் பெறுகின்றனர். அதனடிப்படையில் மேலான சமூக அந்தஸ்தைப் பெறுகின்றனர்.
* இதற்கு மாறாக, தவறு செய்யுமிடத்து - நியமங்களை மீறுமிடத்து மிக உயர்ந்த தண்டனைக்குட்பட வேண்டிய வலிமையான விதிகளையும் இத்தொழில்கள் கொண்டுள்ளன.
* இத் தொழில்களில் ஈடுபடுவோர் எப்போதும் பயனாளிகளுடனான தொடர்பை-நாகரிகமான முறையிலும், நேர்மையாகவும், உண்மை ஈடுபாட்டுடனும் பேணுவதில் அதிக அக்கறை கொண்டவர்களாகவிருத்தல்.
* வாண்மையினர் தனியாகவும், கூட்டாகவும் (நிறுவன ரீதியாகவும்) பயனாளிகள் தொடர்பை சிறப்பாக பேணுவதில் அதிக அக்கறை காட்டுதல்.
* வாண்மைத் தொழில் ஒன்றில் ஈடுபடுவோர் தொழில் ரீதியாக தம்முடன் தொடர்பு கொள்ளும் ஏனையோர் - பிற தொழிலில் இருப்போர் தொடர்பாக கண்ணியமான தொடர்பையும், உறவுகளையும் பேணுவதில் அதிக ஈடுபாடு காட்டுதல்.
இத்தகைய பண்புநலன்கள் பொதுவாக கூறப்படினும், ஒவ்வொரு தொழிலின் தன்மைக்கும் ஏற்ப, எண்ணக்கருக்கள், செயற்பாடுகள், கூட்டுச் செயற்பாடுகள், தொழிற்படிமம் (Image) என்பன வேறுபடுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இத்தகைய பண்புநலன்கள் ஆசிரியத் தொழிலுக்கும் பொருந்தும். எனினும் பலர் இவை ஓரளவுக்கே ஆசிரியத் தொழிலுக்கு பொருந்துகின்றன என்றும் விவாதிக்கின்றனர்.
ஆசிரிய முகாமைத்துவம் / 16

ஆசிரியரும் வாண்மைத் தகைமையும்
சமூகத்தில் வாழும் அனைவருக்கும் சில பொதுவான - ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தைக் கோலங்கள், அணுகுமுறைகள், பழக்கங்கள், செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. இவை புவியியல், அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப நிலைமைகளுக்கேற்ப வேறுபடுகின்றன. இவை ஒழுங்கு முறையில் எல்லாப்பிள்ளைகளுக்கும் வீட்டுக்கு வெளியே கற்பிக்கப்பட வேண்டும். அதற்கான நிறுவனமும், பணியாளரும் அவசியம்.
அத்தகைய நிறுவனமே பாடசாலையாகும். இது பல்வேறு படி நிலைகளில் செயற்படுகின்றது. இப்பாடசாலையின் தொழிற்பாடுகளின் மையவிசைச் சக்கரம் போன்றவரே ஆசிரியர். பெற்றோரால் செய்ய முடியாத பணியை பெற்றோருக்காகவும், சமூகத்துக்காகவும் - சமூக நல்லிணக்கம், சமூக அமைதி, சமூக கூட்டு முன்னேற்றம் போன்றவற்றுக்காக மேற்கொள்பவர்களே ஆசிரியர்.
புதிய தலைமுறையினருக்கான அறிவையும், அறிவுதேடும் விருப்புணர்வையும், அறிவுதேடும் மூலங்களையும் இனங் காண்பதற்கு அடிப்படையாக இருப்பவனே ஆசிரியர். பல்வேறு திறன்களையும், சீரிய மனப்பாங்கினையும் விட சுயநம்பிக்கை, வாழ்வு, மனிதர், சமூகம் பற்றிய நேர்மனப்பாங்கு என்பவற்றையும் விதைப்பவரும், விருத்தி செய்பவரும் ஆசிரியரே.
தனது கல்வி, பயிற்சி, நடத்தை, ஈடுபாடு, சமூக அக்கறை, கடின உழைப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில் புரிபவர் ஆசிரியர். ஒரு சமூகத்தினதும், தேசத்தினதும் விழுமிய ஒழுங்கமைப்பு ஆசிரிய சமூகத்தின் ஆற்றல், தொழில் விசுவாசம், தேசப்பற்று என்பவற்றின் தகைமை, போக்கு என்பவற்றுக்கு ஏற்பவே நிர்ணயிக்கப்படுகிறது.
ஆசிரியர் ஒருவரது தொழில் தொடர்பாக பின்வருமாறு வற்புறுத்தப்பட்டு வருகின்றன.
* அறிவையும், திறன்களையும், மனப்பாங்கையும் தன் மாணவ
ரிடம் விருத்தி செய்பவர்.
* சமூகம் பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை உருவாக்கு
பவர்.
17 / மாசின்னத்தம்பி

Page 19
* கலாசாரம், தேசப்பற்று என்பவற்றை வளர்ப்பவர்.
* அரசியல் சமூகமயமாக்கலுக்கு உதவுபவர்.
* அமைதி, நல்லிணக்கம் என்பவற்றை விருத்தி செய்வதில்
தனியாகவும், நிறுவன ரீதியாகவம் பங்காற்றுபவர்.
* வாழ்வுக்கும், தொழிலுக்கும் வழிகாட்டி உதவுபவர். நம்பிக்
கைக்குரிய வழிகாட்டி
* புதிய தொழில்நுட்பங்களின்படி கற்பிக்கவும், புதிய தொழில் நுட்ப முறைக்கு மாணவர்களை நெறிப்படுத்தவும் ஊக்கமுடன் செயற்படுபவர்.
* மனிதவள விருத்திக்கு வாழ்நாள் முழுவதும் பல வழிகளில்
உதவுபவராக ஆசிரியர் இனங்காணப்பட்டுள்ளார். * ஆசிரியர் சிறப்பான கல்வி, ஒழுங்கமைப்பு, பயிற்சி, மனோ
பாவம், நுட்பவியல் என்பவற்றி அடிப்படையில் பணியாற்றல். * தனியாளுக்கான இலாப மீட்டல், வருமானம் பெறுதல் என்ப
தற்காகவன்றி, சமூக நலன்களுக்காகவும் பணியாற்றுதல். * தொழிலை நெறிப்படுத்தும் ஒழுக்கக் கோவைக்கு அமைய
பணியாற்றல்.
* அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து தமது கல்விச்
சான்றிதழ்களைப் பெறுதல்
* ஆசிரியப் பணியாற்றுவதற்கென சிறப்பான சட்ட அங்கீ.
காரமும் பாதுகாப்பும் வழங்கப்படல்.
ஆசிரியத் தொழிலின் தளமாற்றம்
இன்று கற்பித்தல் பணி அரச கல்வி நிறுவனங்களில் மாத்திரம் மேற்கொள்ளப்படுவதில்லை. தனியார் நிறுவனங்களிலும், வியாபார நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படும் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படும் சேவையாக மாறியுள்ளது.
புதிய உலக மாற்றங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என்பவற்றுக்கு அமைய கற்பித்தல் தொழிலை வாண்மைத் தொழில்
ஆசிரிய முகாமைத்துவம் / 18

பண்புடையதாக்குவதற்கு பின்வரும் மாற்றங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
* 956 660öTLDuJLDITöbbiju” (B. 6) (Ibgb6id (Digitalization of knowl
edge)
* ஆசிரியர் - மாணவர் இடையில் தொழிநுட்பம் - மின்னியல்
தொழில்நுட்பம் வலுவுடன் செயற்படல்
* தொழில்நுட்பம் வலுவுடன் செயற்படல்
* தொழில்நிறுவனங்களும், தகவல் தொடர்புநிறுவனங்களும்,
பாடசாலைகளும் கூட்டாக இணைந்து தொழிற்படல்
* அறிவின் உற்பத்தி, அறிவின் பரவலாக்கம், அறிவின்
முகாமைத்துவம் என்ற மூன்றும் ஒன்றிணைதல்
* தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பங்களினால் நிகள் நிலைப் பல்கலைக்கழகம் (Vertual University) பல நாடுகளின் மாணவர்களுக்கு சமகாலத்தில் கற்பித்தல்.
* புதிய அறிவு மின்னியல் நுட்பத்தினால் தாமதம் ஏதுமின்றி - மிக விரைவில் மாணவரையும், ஆசிரியரையும் சென்றடைதல்.
இவ்வாறான பல வழிமுறைகளில் ஆசிரியர், மற்றும் கற்பித்தல் தொடர்பான நோக்கும், போக்கும் பெருமளவில் மாற்றமடைந்து வருகிறது.
ஆசிரியர்களுக்கு விடயங்களில், எண்ணக்கருக்களில் புதிய அறிவு வழங்கப்பட வேண்டியுள்ளது. புதிய கல்வித் தொழில் நுட்ப கருவிகளை கையாளுவதில் பயிற்சி வழங்கப்பட வேண்டியுள்ளது. மாற்றமடையும் மாணவர் அறிவு நோக்கு, சுதந்திரம் என்பவற்றுக்கு அமைய முகாமைத்துவம் செய்யும் ஆற்றலை விருத்தி செய்ய வேண்டியுள்ளது. பல்கிப்பெருகும் அறிவு, புதிய கற்கை நெறிகள், புதிய மாதிரிக்கல்வி நிறுவனங்கள் தொடர்பாக சரியான ஆலோசனையும், வழிகாட்டலும் வழங்குவதற்குரியவராக ஆசிரியர் வல்லாண்மை பெற உதவவேண்டியுள்ளது.
ஆசிரிய கல்வியை புதிதாக வடிவமைக்க வேண்டும். பாடசாலை மட்டத்தில் ஆசிரியர் வகிக்கும் பங்கினை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. தேசிய கல்வி அபிவிருத்திக்கான ஆசிரியர்களின் புதிய
19 / மாசின்னத்தம்பி

Page 20
பொறுப்புக்களை ஒதுக்கீடு செய்வது பற்றி தேசிய கல்வித் திட்டமிடலில் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இவை பற்றி தொலைநோக்குடனும் கவ்வியின் விளைத்திறனையும், கல்வி முறையின் கட்டுக்கோப்பையும் சமநிலையில் ஒருங்கிணைக்கும் அக்கறையுடனும் ஆசிரியர்களின் வாண்மைத்தகுதியை மேலுயர்த்துவதற்குரிய முயற்சிகள் தேவைப்படுகின்றன.
புதிய சட்டதிட்டங்களை தயாரிப்பதும், புதிய ஒழுங்கமைப்புடன் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை முகாமை செய்வதும், ஆசிரியர் தொடர் கல்வியில் ஈடுபாடு காட்டக் கூடியதான பொருளாதார நலன்களை முன்னேற்றுவதும் அவசியமாகும். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதான ஆசிரியதிட்டம் (Teacher Plan) தயாரிக்கப்பட வேண்டும். தற்போது இத்தகைய முயற்சிகள் இலங்கையில் பல நிலைகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன.
பொருளாதார துறைகளைப் போலவே, கல்வித்துறையையும் வலுவான, பரந்துபட்டதுறையாக அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதன் மையவிசை என்ற வகையில் ஆசிரிய வாண்மையை மேலுயர்த்த முன்வருதல் வேண்டும். அதற்கான ஆய்வுகளை ஊக்குவித்தல் வேண்டும். அவற்றைக் கல்விக் கொள்கையை வகுப்போர் அதிக ஈடுபாட் டுடன் பரிசீலிக்க வேண்டும்.
இத்தகைய ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ஒழுங்கான நடவடிக்கைகள் எதிகாலத்தில் ஆசிரிய வாண்மை முழுமையானதாக அமைவதற்கு நிச்சயம் உதவும்.
ஆசிரிய கல்வியில் வாண்மை விருத்தி
வாண்மையியலை விருத்தி செய்வதில் அத்தொழிற்துறையினருக்கு வழங்கப்படும் கல்வி மிகவும் முக்கியத்துவம் உடையது. வாண்மைக்கல்வி தேர்ச்சிமிக்க நடைமுறைப் பிரயோகிப்பாளர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதாகும். நடைமுறையில் அன்றாட வாழ்வில் தமது தேர்ச்சியைக் கையாண்டே தொழில் செய்யக் கூடியவர்களை உருவாக்குவதாக அக்கல்வி அமைதல் வேண்டும்.
வாண்மைக்கல்வியில் ஈடுபடுவதற்கான உளப்பாங்கு விருத்தி மிகவும் முக்கியத்துவம் உடையது. தனது தொழிலால் தனது வாடிக்கையாளர் - பயனாளிகள் உண்மையான பயன்பெற வேண்டும்
ஆசிரிய முகாமைத்துவம் 120

என்ற மனப்பான்மை விருத்தி செய்யப்படல் வேண்டும். இதனால் மனப்பாங்கினை மதிப்பீடு செய்வதற்கு உதவக்கூடிய அளவீட்டு அம்சங்களையும் அக்கல்விக்குரிய கலைத்திட்டத்தில் சேர்த்தல் வேண்டும். “மாணவர்கள் உண்மையான அறிவைப் பெற வேண்டும்” என்ற இலட்சியத்தோடு கற்பித்தலில் ஈடுபடும் மனப்பான்மையை ஆசிரிய கல்வி விருத்தி செய்தல் வேண்டும்.
அத்தகைய தொழில்சார் மனப்பாங்கை விருத்தி செய்யும் வகையில் ஆசிரிய கல்வியின் கலைத்திட்ட உள்ளடக்கம் அமைதல் வேண்டும். கற்பித்தல் முறையும் அதற்கேற்ப மாற்றப்படல் வேண்டும்.
கற்பித்தலுக்குரிய தேர்ச்சிகளை ஆகக் குறைந்த அளவுக்கேனும் ஆசிரிய மாணவர் பெறுவதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம், சிறந்த கோட்பாட்டு அறிவைப் பெறச் செய்தலும் அதனடிப்படையில் மேற்கொள்ளப்படும் சிறந்த தொழில்நடைமுறைகளை அக்கறையுடன் பின்பற்றச் செய்தலும் ஆசிரியகல்வியில் முக்கிய
D606)6).
தொழில்சார் ஒழுக்கம், ஒழுங்கு என்பவற்றையும் ஆசிரிய மாணவர் தம் கல்வி மற்றும் பயிற்சியின் போது பெறுவதையும் உறுதி செய்தல் வேண்டும். தொடர்பாடல் தேர்ச்சிகளைப் போதியளவில் பெறச் செய்தல் வேண்டும். சமூகத்திறன்களையும் விருத்தி செய்தல் வேண்டும். ஒழுக்கம் சார்ந்த விழுமியங்களை மதிக்கும் மனப்பக்கு வத்தையும் இக்கல்வியினுடாக விருத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கற்பித்தலுக்கான நுட்பங்கள் கல்வித் தொழில் நுட்பங்கள் தொடர்ச்சியாக மாற்றம் அடைவன. கற்றல் - கற்பித்தலில் வினைத் திறனையும், விளைதிறனையும் அவை மாற்றியமைக்கத்தக்கன. இதனால் அத்தகைய கற்பித்தல் நுட்பங்கள் பற்றிய அறிவையும், திறன்களையும் வழங்குவதோடு அவற்றைத் தொடர்ந்து தேடும் ஊக்கத்தையும் வழங்குவது விரும்பப்படுகிறது.
ஆசிரிய கல்வி ஆசிரியத் தொழிலுக்கான அடிப்படை அறிவையும் திறன்களையும் வழங்குவதோடு, அக்கல்விக் காலத்தின் பின்னும் தொடர்ச்சியாக அத்தகைய தராதரத்தை பேணும் உளப்பாங்கையும் உறுதி செய்தல் வேண்டும். தொழில்சார் இலட்சியம் (Professional ideology) உடையவர்களாக மாற்றுவதிலும் இக்கல்வி அதிக கவனம்
21 / மாசின்னத்தம்பி

Page 21
செலுத்த வேண்டியுள்ளது. புதியவற்றை தேடுவது, புதியவற்றைக் கற்பது, புதிய நுட்பங்களையம், திறன்களையும் முயன்று பயில்வது என்பன இந்த இலட்சியத்தின் பாற்பட்ட நாட்டங்களாகும். மாற்றங்களை ஏற்றுக் கொள்வதும், மாற்றங்களின் நலன்களை விரும்புவதும், அதற்கேற்ப தமது தொழிற்பங்களிப்பை வழங்குவதில் உண்மை ஈடுபாடு காட்ட விரும்புவதும் கூட தொழில்சார் இலட்சியத்திலிருந்து விருத்தியாகும் மனப்பாங்குகளேயாகும்.
ஆசிரிய வாண்மையின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு பின்வரும் அம்சங்களில் ஆழமாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸிம்லர் (Zimpler 1987) கருதுகின்றார்.
* ஆசிரிய கல்வி நிகழ்ச்சித் திட்டங்களில் மாணவர்களை அனுமதிக்கும் போது அவர்களது ஆகக் குறைந்த தகைமையை படிப்படியாக உயர்த்திச் செல்லுதல் அவசியம்.
* ஆசிரிய கல்வியினுடாக அவர்கள் பெறுகின்ற தகுதியை மிகவும் வலுவான முறையில் அங்கீகாரம் பெறச் செய்தல் வேண்டும்.
* கல்விபயிலும் காலத்திலான பயிற்சியை மிகவும் ஒழுங்கானதாகவும், விளைதறன்மிக்கதாகவும் வைத்திருப்பதும், அவர்கள் தொடர்ந்து கற்பதற்கு வகை செய்வதும் அவசியம்.
* மாற்றமுறும் சமூக, பொளாதார, கல்வி நிலைகளுக்கேற்ப கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை அடிக்கடி மீளவும் வடிவமைத்தல் வேண்டும்.
* தகுதிமிக்கவர்கள் மாத்திரம் ஆசிரியத் தொழிலில் நுழைவதை நிச்சயித்தல் வேண்டும். அத்தகு உயர் தகுதியுடையவர்களை ஈர்த்துக் கொள்ளத்தக்கதாக கவர்ச்சி மிக்க சம்பள அளவுகளையும் நிர்ணயிக்க வேண்டும்.
இலங்கையில் வழங்கப்படும் ஆசிரிய கல்வி ஏற்பாட்டில் கற்பித்தலில் பிரயோகிக்க முடியாத அளவுக்கு தேவைக்கதிகமாக கலைத்திட்ட உள்ளடக்கம் இருப்பதாக சேதர (Sedera: 1989) குற்றம் சாட்டுகிறார். ஆசிரிய கல்வியில் இன்னும் கூடியளவுக்கு விமர்சன சிந்தனை, விமர்சன ஆற்றல் என்பவற்றை விருத்தி செய்ய வேண்டுமென மொஸ்பேஜன் (Mosbergen: 1982) கருத்து தெரிவிக்கின்றார்.
ஆசிரிய முகாமைத்துவம் / 22

ஆசிரிய கல்வியில் ஆசிரிய முகாமைத்துவ பயிற்சி போதியளவில் இல்லை என்று பேர்ளினர் (13erliner 1982) கருதுகின்றார்.
கற்பித்தல் உபகரணங்கள் பற்றிய அறிவை மேம்படுத்துவதில் போதிய கவனம் செலுத்தப்படும் போதுதான் ஆசிரிய வாண்மை விருத்திசாத்தியமாகுமென்று எவட்ஸன் (Evertson: 1984) கருதுகின்றார்.
இத்தகைய பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கும் வகையில் புதிய கல்வியியற் கல்லூரிகளினதும், பல்கலைக்கழகங்களின் கல்வியியற் துறைகளினதும் ஆசிரிய கல்வி கலைத்திட்ட வடிவமைப்பும், நடைமுறைப்படுத்தலும் தற்போது இடம் பெறுவதை நல்ல அடையாளங்களாக கருத முடியும்.
எனினும் ஆசிரிய வாண்மையை உறுதி செய்வதற்கு எதிர்காலத்தில் பல்கலைக்கழங்களின் கல்வியியற்பீடங்கள், கல்வியியல் கல்லூரிகள், கல்வித் திணைக்களங்கள், கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் என்பவற்றிடையே புரிந்துணர்வுடன் கூடிய பங்காளி நிகழ்ச்சித்திட்டங்கள் (Partnership Programmes) வடிவமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுவது மிகவும் அவசியமாயுள்ளது. அவற்றின் பெறுபேறுகளை காலத்துக்குக்காலம் மதிப்பீடு செய்து தேவைக் கேற்ப நிகழ்ச்சித் திட்டங்களை மாற்றியமைப்பது - இயங்கியல் பண்பு நிறைந்ததாக்குவது அவசியம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இலங்கையில் கல்விஅமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியதர உறுதிப்பாடு பற்றிய நிர்வாக நடைமுறையை ஊக்கு விப்பது விரும்பத்தக்கது. ஆசிரிய தொழிற்சங்கங்கள். ஆசிரிய கல்வி நிறுவனங்கள், ஆசிரிய வாண்மைநிறுவனங்கள் என்பன தேவையான ஆலோசனைகளை வழங்கலாம். இதனை எவரும் முற்றாக நிராகரிக்க கூடாது. அத்தகைய அணுகுமுறைதான் ஆசிரிய வாண்மைத் தகுதியை நிலைத்திருக்கச் செய்யும் என்பது நிச்சயமானது.
உலகரீதியில் கல்வி ஒரு பொருளாதாரப் பண்டமாக அங்கீகரிக்கப்பட்டு கல்வித் தொழிலில் கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டு வருகின்றது. இத்தகைய கல்வித் தொழில் (Education Business) சர்வதேச வியாபார மற்றும் முதலீடு சார்ந்த நடைமுறைகளுடன் மிகுதியாகப் பிணைக்கப்பட்டு விட்டது. கல்வித் தொழில்நுட்பம்பாரியளவில் மாற்றமடைந்து சர்வதேச ரீதியில் வேகமாகப் பரிமாற்றப்பட்டு வருகிறது. அது இலாபகரமான முதலீட்டுத்துறையாகிவிட்டது.
23 / மாசின்னத்தம்பி

Page 22
இத்தகைய அசுரவேக மாற்றத்திற்கு உட்படும் கல்வித் தொழிலின் விளைத்திறனையும். வினைத்திறனையும் தீர்மானிப்பதாக ஆசிரிய வாண்மைத் தன்மையே அமையும் என்பதை அறிவு ரீதியில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதனடிப்படையில் ஆசிரியத் தொழிலை அரைகுறையான வாண்மைத் தொழில் என்பதிலிருந்த சற்று முன்னோக்கி நகர்த்தி முழுமையான - சக்தி மிக்க வாண்மைத் தொழிலாக்க வேண்டும் புதிய ஆற்றலும், வலுவான தொழில் ஈடுபாடும் கொண்டவர்களாக புதிய தொழிற் கலாசாரத்தை விருத்தி செய்து கொள்வதற்கு பல்வேறு ஆசிரிய கல்வி நிறுவனங்களும். ஆசிரிய தொழிற் சங்கங்களும், கல்வி அமைச்சும், இடையறாது பாடுபடல் வேண்டும். இவற்றுக்கு ஊக்கமளிப்பதாக - கோட்பாட்டுத் தளத்தை வளம்படுத்துவதாக - ஆசிரிய கல்வி, ஆசிரிய வாண்மை தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதும். அதற்கு வசதி வழங்கும் ஆசிரிய ஆய்வு நிறுவனங்களை வளர்த்தெடுப்பதற்கான செயற்திட்டங்களை நிறைவேற்றுவதும் காலத்தின் கட்டாயமாயுள்ளது.
References
1. Kularatne, N.G (1991) Educational Policy and Research in Sri
Lanka, National Institute of Education. Maharagama.
2. JARVIS, Peter (1986) Professional Education., Groom Helm,
London.
3. JONES, GERAINT (1993) The Economics of Education, THE
Mc millan Press Ltd., London.
4. Brook over, B, wilbur and Gottieb, David (1964), A Sociology
of Education, American Book Company, New York.
5. Under Wood, Lynn (No. Year), Mastering Time Management,
Infinity Books, New Delhi.
6. ஜெயராசா, சபா (1992) ஆசிரியர் இயல், பூறிலங்கா புத்தகசாலை,
யாழ்ப்பாணம்.
ஆசிரிய முகாமைத்துவம் / 24

ஆசிரியர்களின் வகிபங்கும் அந்தஸ்தும்
சிரியர்கள் பிள்ளைகளை சமூகமயப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் சமூகப் பிரிவினராவர். குடும்பங்கள் தமது பிள்ளைகளின் வளர்ச்சிப் பருவத்தில் அதிக ஈடுபாடும் அக்கறையும் கொண்டுள்ள போது, அதனைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தும் பாரிய பொறுப்பில், தொழில் சார்ந்த வகையில் ஈடுபட்டு வருபவர்கள் ஆசிரியர்கள்தான். சமூக இலக்குகள், சமூக தொழிற்பாடுகள், சமூக அசைவியக்கம், சமூக முன்னேற்றம் போன்ற ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இயங்கியல் நடைமுறைகளின் மையச் சக்கரமாக தொழிற்படும் பாடசாலைகளின் வினைத்திறனையும், விளைத்திறனையும் தீர்மானிப்பவர்கள் ஆசிரியர்களே.
ஆசிரியர்கள் ஒரு தொழில் செய்பவர்கள் என்ற நோக்கில் மாத்திரமன்றி சமூக மாற்றங்களை வழிப்படுத்துபவர்கள் - விசைப்படுத்துபவர்கள் என்ற முறையிலும் முக்கியமானவர்கள். இங்கு குறிப்பிடப்படும் இரண்டாவது வகையான வகிபங்குதான் அவர்களது அந்தஸ்தினை - சமூக நிலையினைத் தீர்மானிக்கின்றது.
ஆசிரியரும் கற்பித்தலும்
உயர்ந்த வாண்மைத் (தொழிண்மை) தகுதி பெறும் அனைவருமே ஆசிரியர்களால் உருவாக்கப்படுபவர்கள். பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள், உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள், உயர்கல்வி மற்றும் வாண்மை நிறுவனங்கள் எல்லாவற்றிலும்
25 / மாசின்னத்தம்பி

Page 23
கற்பிப்பவர்கள். ஆசிரியர்கள் என்றே அழைக்கப்பட்டு வருகின்றனர். பொதுவான நடைமுறையில் வளர்முக நாடுகளில் ஆசிரியர்கள் என்ற பதம் முன்பள்ளி ஆரம்ப இடைநிலை மட்டப் பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபடுவோரைச் சுட்டுவதாகவே நம்பப்படுகிறது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் விரிவுரையாளர் மற்றும் பேராசிரியர்கள் என்று வேறுபடுத்தப்படுகின்றனர். ஆயினும், தொழில்முறைசார் பணிகளின்படி அவர்களும் ஆசிரியர்கள் என்பதே சரியானது. இங்கு வேறுபாடுகள் ஏதுமில்லை என்பதை விளங்கிக் கொள்வது அவசியமாகிறது.
பல்வேறு கல்வி நிறுவனங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் அந்தஸ்து அவர்கள் கல்விகற்பிக்கும் நிறுவனங்களின் சமூக அந்தஸ்துடன் தொடர்புடையதாயமைகிறது. இது வழிவந்த கேள்வி (Derived demand) யுடன் தொடர்புடையதாகிறது. ஒரு கல்வி நிறுவனம் தனக்குரிய சமூக அந்தஸ்தை - கெளரவத்தை பின்வரும் காரணிகளின் அடிப்படையில் பெற்றுக்கொள்கிறது.
கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர் எத்தகைய குடும்பப்பின்னணியிலிருந்து வருகின்றனர் என்பது முக்கியமானது. ஒரு நாட்டின் உயர் ஆட்சிப் பணித்துறையினர், மேட்டுக் குடியினர், நிலப் பிரபுக்கள் தொழில்துறை உயர்வகுப்பினர் போன்றோரின் பிள்ளைகள் கற்கும் பாடசாலைகள் உயர்மதிப்புக் கொண்டிருக்கும்.
போதிய வளங்களைப் பெறவும், உயர்குடியினர் தொடர்புகளை வலுப்படுத்தவும், மேட்டுக்குடியினருக்கே உரித்தான சமூக நடத்தை மற்றும் சமூக திறன்கள் (Social Skilis) என்பவற்றை வளர்க்கவும் இப்பாடசாலைகள் உதவுகின்றன.
இத்தகைய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் இயல்பாகவே உயரிய சமூக தொடர்புகளைப் பெறுவதால் மேலான சமூக அங்கீகாரத்தைப் பெறுகின்றனர். இலங்கையில் தனித்தன்மையான கல்லூரிகள், தேசிய கல்லூரிகள், கிறிஸ்தவ, பெளத்த, இந்துமத பண்பாட்டு முன்னுரிமையுடன் நிர்வகிக்கப்படும் தனியார் கல்லூரி. கள் போன்றவற்றில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான சமூக அந்தஸ்து ஒப்பீட்டு ரீதியில் உயர்வானது.
கல்விக்கு முதலிடம் வழங்கும் சமூகங்களில் தொழிற்படும் பாடசாலைகளும் உயர் அந்தஸ்துடையனவாக விளங்கும். தொழில்
ஆசிரிய முகாமைத்துவம் / 26

முனைவோராதல், வியாபார தலைமை பெறுதல், உயர்ந்த சமயப் பணியில் ஈடுபடல் போன்ற சமூக விருப்புகளைவிட போதியளவு உயர்ந்த கல்வியைதம்பிள்ளைகள் பெறுவது சமூக அந்தஸ்து எனக் கருதும் சமூகங்களில் செயற்படும் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களும் நல்ல கணிப்பையும் அங்கீகாரத்தையும் பெறுவர்.
உயர் வருமானம், ஒழுக்கமுடைமை, சீரிய வாழ்வு முறைமை, நீண்டகால வாழ்வுப் பாதுகாப்பு என்பவற்றை கல்வி வழங்குவதாக நம்புகின்ற சமூகங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் நல்ல கெளரவத்தைப் பெற முடியும்.
சில சமூகங்கள் தமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வாழிடம், வேலைவாய்ப்பு வருமானம் என்பவற்றை போதியளவு பெற்றுக் கொண்ட நிலையிலும் கல்விக்கு அதீத முக்கியத்துவம் வழங்குவதுண்டு. தமது வாழ்வுரிமை, வாழ்வியல் வசதிகள் என்பவற்றைத் தக்க வைத்துக் கொள்வதற்கு கல்வி அவசியமானதென உணரும் சமூகங்களில் ஆசிரியர் அந்தஸ்து சிறப்பாக இருக்க முடியும்.
சில நாடுகளில் அல்லது சில சமூகங்களில் அல்லது சில இனங்களில் தமது நிலை மாற்றம் (transformation) அவசியமானது என்று உணர்கின்ற காலப்பகுதிகளில் அதற்கென தேசிய மற்றும் உள்ளுர் வளங்களையும் நிறுவனங்களையும் தீவிரமாக பயன்படுத்த முனையும் போதும் பாடசாலைகளின் முக்கியத்துவம் முனைப்படையும். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் 1990களின் பிற்பகுதியில் சமவுடைமைக் கருத்துக்கள், நம்பிக்கைகள், நடைமுறைகள் என்பவற்றிலிருந்து மக்களையும், நிறுவனங்களையும் முதலாளித்துவ மாதிரியிலான, போட்டி முறையில் வினைத்திறனை முன்தள்ளுகின்ற தனியார் இயலுமையை ஊக்குவிக்கின்ற சந்தைமுறைசார் பொருளாதாரங்களுக்குரியதாக மாற்றும் போது அத்தகைய நிலைமாற்றுச் செயன்முறையில் பாடசாலைகளும் ஏனைய கல்வி நிறுவனங்களும் அதீத முக்கியத்துவம் பெற்றன. அப்போது ஆசிரியர்களும் முக்கியத்துவம் பெற்றனர்.
உலகமயமாதலில் பொருளாதார எண்ணங்களையும், உழைப்பின் இலக்குகளையும், சந்தைகளின் எல்லைகளையும் மாற்றியமைக்க முயலும் போதும், உலகம் முழுவதிலுமுள்ள கல்விநிறுவனங்களின் பாட ஏற்பாடுகள், கற்றல் - கற்பித்தல் முறைமையியல், கல்வித் தொழில்நுட்பம், மதிப்பீட்டு முறைகள் - தகைமைக்கான அங்கீகாரம் தொடர்பாக பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன; அறிமுகப்
27 / மாசின்னத்தம்பி

Page 24
படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணி ஆசிரியர்களின் வகிபங்கையும் மாற்றி, அந்தஸ்தையும் மாற்றியுள்ளது. உள்ளுர் அல்லது தேசிய ரீதியில் பணியாற்றுவதற்கான மொழியறிவு விடய உள்ளடக்கம், கற்பித்தல் நுட்பங்கள் மற்றும் சமூக திறன்கள் என்பன அவர்களிடம் போதுமானதாயில்லை என்று உணரப்பட்டுள்ளது. புத்துணர்ச்சியும், பன்முக நோக்கும், தொடர் கல்வி ஊக்கமும், பன்மொழித் தேர்ச்சியும், தகவல் தொழில்நுட்ப தகைைைமயும், எங்கும் எப்போதும் பணியாற்றும் மனப்பாங்கும் கொண்டவர்களே ஆசிரியர். களாக செயற்பட முடியும் என்ற புதிய எண்ணக்கரு வலுப்பெற்றுள்ளது. இத்தகைய தகைமையுடையோர் உயர் அந்தஸ்தும் பொருளாதார உயர் மதிப்பும் பெற்றுள்ளனர்.
முன்பும் கூட கிராமங்களை நகரங்களாக்கும் கோட்பாடுகள் வலுப் பெற்ற போதும், ஆசிரியர்கள் அந்தஸ்துப் பெற்றனர். "கிராமங்களைக் கிராமங்களாகவே பாதுகாத்து அபிவிருத்தியடையச் செய்தல்" என்ற காந்திய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆசிரியர்கள் அவசியமானவர்கள் என்று உணரப்பட்டமை இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
சில சமூகங்களில் அல்லது நாடுகளில் அசாதாரண நெருக்கடிகள், அறைகூவல்கள், பிரச்சினைகள், சமநிலையின்மை என்பன ஏற்படும் போதும் சீராக்கச் செயன்முறைகள் (Adjusment Process) முக்கியத்துவம் பெறும். பல்வேறு துறைகளிலுமுள்ள பல்வகை நிறுவனங்களும் மக்களுக்கு கல்வியூட்ட முயலும். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவும், மாற்று வழிமுறைகளைத் தேடவும், குறுகியகால நிவாரண முறைகளை செயற்படுத்தவும் வேண்டிய அறிவு, திறன், மனப்பாங்கு, நம்பிக்கை, சுயமுனைப்பு என்பவற்றை எல்லாக் குடிமக்களிடமும் வளர்க்க வேண்டிய தேவை உணரப்படும். 2004 டிசம்பர் 26 சுனாமி அனர்த்தம் இத்தகைய நிலையை உருவாக்கியுள்ளது.
இத்தகைய சமூக தேவையை நிறைவேற்ற புதிய நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டிருக்க முடியாது. ஆனால், ஆசிரியர்களை வல்லாண்மை மிக்கோராக மாற்றி சமூக தேவைகளை நிறைவு செய்ய முடியும். இத்தகைய நிலைமைகளில் ஆசிரியர்கள் முக்கியமானவர்கள் என அரசாங்கமும் சர்வதேச முகவர் நிறுவனங்களும், சமூக நிறுவனங்களும் உணர்ந்து கொள்கின்றன.
ஆசிரிய முகாமைத்துவம் / 28

சமூக நோய்கள் தீவிரமடைதல், வெள்ளம், வரட்சி, புவி நடுக்கம், அலை அபாயம், எரிமலைத் தாக்கம், காட்டுத்தீ பரவுதல் போன்ற அச்சுறுத்தும் நிலைமைகளில் தேசிய ரீதியில் அழிவு முகாமைத்துவ (Disaster Management) செயற்பாடுகளில் பயன்படுத்தக் கூடியவர்கள் ஆசிரியர்கள்தான். குடும்பங்களின் முன்னேற்றம் என்ற சமூக இலக்குடன் இணைந்து பணியாற்றுபவர்களில் ஆசிரியர்கள் முக்கியமானவர்கள்.
உலகில் யுத்தமும் ஆயுத முரண்பாடுகளும் அதிகரித்தே வருகின்றன. இத்தகைய முரண்பாடுகளின் நிகழ்வுகள் 1940களில் 10ஆக விருந்து, 1980களில் 30-40 ஆக அதிகரித்தன. 1990களில் இது 100ஆக அதிகரித்திருந்தது. 175 குழுக்களும் நிறுவனங்களும் இவ்வாறு உள்ளுர் மட்டங்களில் இயங்கி வந்தன (Heidemaria 1999) . இராணுவ செலவுக்காக மாத்திரம் 780 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தன. உணவு, மனித உரிமை, இன, மத முரண்பாடு, பொருளாதார சமூக சமத்துவமின்மை, இராணுவச் செலவின் அதிகரிப்பு போன்றவற்றுடன் தொடர்புபட்ட வகையில் உலகம் முழுதும் முரண்பாடுகளும், யுத்தமும், இழப்புக்களும் அதிகரித்த போது அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் ஒரு அம்சமாக யுத்தத்திற்கு பிந்திய கால கல்விப்
புனரமைப்புக்கள் அவசியமாகின. இதில் ஆசிரியர்கள் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்க வேண்டியிருந்தது. 2003 ஜூலை மாத முற்பகுதியில் பாரிஸில் நடைபெற்ற மகாநாடு உலக வங்கி, யுனெஸ்கோ, கல்வித்திட்டமிடலுக்கான சர்வதேச நிறுவனம் என்பவற்றால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அதில் கலந்துரையாடப்பட்ட அம்சங்களில் புனரமைப்பு கிடைக்கச் செய்தல், திட்டமிடல், முகாமைத்துவம் என்பவற்றுடன் ஆசிரியர்கள் பற்றிய அம்சமும் முக்கியத்துவம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் பின்வரும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன (IEP/WB 2003: 19-20). 0 ஆசிரியர் நடத்தை பற்றிய விதிமுறைகளை உருவாக்குதல்
- நாளாந்த பாடசாலை வரவை உறுதிப்படுத்தல்
- மாணவரிடம் பரீட்சைக் கட்டணம் அறவிடாதிருத்தல்
- ஆசிரியர் அன்புடனும் பண்புடனும் பணியாற்றுதல்
0 நாடு முழுதும் போதியளவு ஆசிரியர்களை நியமித்தல்
29 / மாசின்னத்தம்பி

Page 25
ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், எழுத்தறிவு மற்றும் முறைசாராக் கல்விக்கான ஆசிரியர்கள் போன்றோருக்கு யுத்தத்தினால் உள நெருக்கீடுகளுக்கான மாணவர்க்குரியவாறு கற்பிப்பதற்கான உளவியற் பயிற்சியை வழங்குதல். ஆசிரியர்களுக்குரிய தொழில் நிலைமையை முன்னேற்றுதலும், போதியளவு சம்பளம் வழங்குதலும் கற்பித்தலுக்கான வளங்களைப் போதியளவில் வழங்குதலும், பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிகளுக்குரிய சான்றிதழ்களை வழங்குதலும் அவற்றை அரசாங்கம் அங்கீகரித்தலும். பெண் ஆசிரியர்கள் அதிகளவில் நியமிக்கப்படுதலும், நியமன முறைகளில் சமத்துவமும் வெளிப்படையான தன்மைகளும் பேணப்படுதல்.
கற்பித்தல் துணைச் சாதனங்கள், பாடநூல்கள் போன்றவற்றை போதியளவில் வழங்குவதன் மூலமாக கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துதல்,
உள்ளுர் நிலைமைகளைப் புரிந்து கொள்ளத் தக்கவாறு உள்ளுர் சமூகத்திலிருந்து அதே சமூக மொழி அறிந்தவர்களை ஆசிரியர்களாக நியமித்தல், சமூகத்தின் பிரதிநிதிகளும் நியமன செயன்முறையில் பங்கேற்பதற்கும் வாய்ப்பளித்தல். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளுர் மொழிகளில் கற்பிப்பதற்கு வேண்டிய உதவிகளை வழங்குதல். பாதுகாப்புடைய கற்றலுக்கான இடவசதி கொண்ட பகுதிகளில் செயல்முறைக் கல்வி (Practical Education) யை வழங்குதல். பாடசாலை நிர்மாணத்தில் சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியமானதாக் கருதப்படுதல்.
நீண்டகால திட்டத்திற்கு உட்பட்ட குறுங்கால திட்டங்களை உருவாக்குதல். இதில் உதவி வழங்குநர்கள், சமூகம், அரசாங்கம் ஆகியோர் இணைந்து செயற்படுதல்.
குறித்த காலப் பகுதிக்கு ஆசிரிய சம்பளங்களை உதவி வழங்குநர் (Donors) வழங்குதல். பின்பு அரசாங்கம் அதனை நிறைவேற்றுதல்.
ஆசிரிய முகாமைத்துவம் 130

0 உதவுநர்கள் கல்வி முறைமை ஒன்றை இப்பிரதேசங்களில் மீளவும் உருவாக்குதல். இதற்குரியதான ஆளணியினருக்குரிய இயலுமையை உருவாக்குவதும் நிதி வளங்களை வழங்குதலும், அரசாங்கம் தொடர்ந்து இதனை மேற்கொள்வதற்கான ஏற்பாட்டைச் செய்தல். 0 ஆசிரியர்கள் தமது வகிபங்கின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்து கொண்டு, அதற்கேற்றவாறு பொறுப்புணர்வுடனும், தியாக சிந்தையுடனும் செயற்படுதல். 0 கல்வி தேசிய முன்னுரிமையாக விளங்குவதால் எல்லா சமூகங்களும் போதியளவு வளங்களையும் பெறுவதற்கு உதவுதல் வேண்டும். 0 ஆசிரியர்களின் அனுபவ நிலை, தராதரம் என்பவற்றுக்கேற்ப ஆசிரியர்களை நியமித்தல், யுத்தத்தின் போது நாட்டை விட்டுச் சென்ற ஆசிரியர்களுக்கு புத்துக்கப் பயிற்சியை வழங்குதல்.
இவ்வாறு இந்த மகாநாடு மாணவர்கள். ஆசிரியர்கள், சமூக உறுப்பினர்கள், உதவி வழங்குநர்கள், கல்வியமைச்சு சார்ந்தோர் என்ற பல்வேறு பொறுப்புதாரர்களுடன் கலந்துரையாடி இத்தகைய தீர்மானங்களை மேற்கொண்டிருந்தனர்.
நிகழ்காலத்தில் இலங்கை போன்ற நாடுகளில் இத்தகைய ஆசிரிய பணி தொடர்பான புதிய நோக்கும், தேவையும் நன்கு அங்கீ கரிக்கப்பட்டுள்ளது. மிகவும் கவனமாக விருத்தி செய்ய வேண்டிய சமூகப் பிரிவினராக ஆசிரியர்கள் இனங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துரிதமான முன்னேற்றத்தை தூண்டுகின்ற சமூகங்களிலும் ஆசிரியர்களின் பங்கு ஏனையவற்றுடன் இணைந்த வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1970களின் பிற்பகுதியில் கிழக்காசிய நாடுகள் துரித வளர்ச்சியையும், அபிவிருத்தியையும் நோக்கி முன்னேறியபோது ஆசிரியர்களின் ஈடுபாடும், கடின உழைப்பும் எதிர்பார்க்கப்பட்டது. அந்நிலையில் ஆசிரியர்களின் முக்கியத்துவம் சமூக ரீதி. யில் உணரப்பட்டதோடு அவர்களுக்கு போதியளவு அங்கீகாரமும் வழங்கப்பட்டிருந்தது. அத்தகைய நிலையில் ஆசிரியர்களிடம் பின்வரும் கடமைப் பொறுப்புக்கள் சுமத்தப்பட்டிருந்தன (Kai - Ming Cheng and Kam-Leung Wong 1996: 34).
31 / மாசின்னத்தம்பி

Page 26
0 பாடசாலைகளில் குறைந்தது நாளொன்றக்கு பத்து மணித்தி. யாலங்களையேனும் ஆசிரியர்கள் செலவிடுதல் வேண்டும்.
0 7-8 மணித்தியாலங்களைப் பாடத்தைத் திட்டமிடுதல், பரீட்சைத்
தாள் மதிப்பிடுதல் என்பவற்றில் செலவிடுதல் வேண்டும்.
0 2 மணித்தியாலங்கள் வகுப்பறையில் மேற்பார்வை, வழிகாட்டல் மற்றும் புறக் கலைத்திட்ட நடவடிக்கைகளில் செலவிடுதல் வேண்டும்.
0 வாரத்திற்கு 2 மணித்தியாலங்கள் வீடுகளுக்குச் சென்று பிள்ளைகளுக்கான பரிகாரக் கற்பித்தலை (Remedical Teaching) மேற்கொள்ளுதல் வேண்டும்.
0 ஆசிரிய வரவின்மை (Teacher Absenteeism) முற்றாக விரும்பய்
படவோ, அனுமதிக்கப்படவோ இல்லை.
0 எல்லா ஆசிரியர்களும் மிக விரிவான பாடத்திட்டங்களைத் தயாரித்து தொடர்ச்சியாக அவற்றை மீட்டுக் கொண்டிருத்தல்
வேண்டும். 0 பாடத்திட்டமின்றி எந்தப் பாடமும் ஏற்கப்படமாட்டா. 0 ஆசிரியர்கள் தமது வகுப்பு மாணவர் தொடர்பாக முழுமையான
பொறுப்புடையவர்கள். ஒழுங்கமைப்பாளராக, தலைவராக, வழி. காட்டுநராக, சமூகப் பணியாளராக, பரிகார ஆசிரியராக, பலதடவைகளில் ஒரு தாதியாக, சில சமயங்களில் தன்னார்வம் மிக்க தனிப்பட்ட ஆசானாக அவர்கள் பணியாற்ற வேண்டியிருந்தது.
ஆசிரியருக்கான கற்பித்தல் வசதிகள் போதியளவு இல்லாத நிலையில் சம்பளங்களும் குறைவாயிருந்த நிலையிலும் இத்தகைய பொறுப்புணர்வுடன், கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. நாடுகளும், சமூகங்களும் துரித முன்னேற்றத்தை நாடி நிற்கும் போது அந்த நீரோட்டத்தில் இணைந்து கடினமாக உழைக்க வேண்டிய தொழிண்மைப்பிரிவினராக ஆசிரியர்கள் இனங் காணப்பட்டிருந்தனர்.
வேலையின்மை கற்றோரிடையே அதிகரித்து வரும் சமூகங்களில் ஆசிரியர்களின் பணிநிலை தொடர்பான எதிர்பார்க்கைகள் மாற். றமடைந்து விடுவதுண்டு. இலங்கையின் அனுபவம் இதனை தெளிவுபடுத்துகிறது. 1990களின் பின் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று தகைமை பெற்றவர்கள் அதிகளவில், உயர்ந்த
ஆசிரிய முகாமைத்துவம் /32

சம்பளத்துடனும், அந்தஸ்துடனும் தொழில் வாய்ப்பு விரிவடைந்த தனியார் தொழிற்துறைகளில் தொழில் பெறத் தகுதியற்றவராயிருந் தனர். பொருளாதாரம் வேண்டி நின்ற அறிவு, திறன்கள், மனப்பான்மை, சுயமுனைப்பு, நம்பிக்கை எதனையும் இலங்கையின் கல்வி முறை போதியளவில் வழங்கவில்லை எனக் குறை கூறப்பட்டது(National Education Commission 1999). (3.bg, B60)660)LD60)u LDTinju60LDijLugbiogy ஆசிரிய பணிநிலை தொடர்பான எதிர்பார்க்கைகளும் மாறின.
கல்வி நிறுவனங்களில் போதியளவு அறிவை வழங்குதல் மாத்திரம் போதுமானதன்று. அத்தகையஅறிவை நடைமுறை வாழ்வில் பிரயோகிப்பதற்கான தேர்ச்சிகளை (Competences) விருத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அறிவு மட்டத்தை உயர்த்துவது மாத்திரம் ஆசிரியர் கடமையன்று. மாணவப் பருவத்திலிருந்தே சமூகத் திறன்களை (Social Skills) விருத்தி செய்வதும் அவசியம். தொடர்பாடல் திறன், பன்மொழி அறிவு, குழுவாக செயற்படும் விருப்பம்,நீண்டநேரம் எங்கும் பணியாற்றும் விருப்பம், ஆற்றல் மிக்க எவரது (கல்வித் தகைமை போதியளவு இல்லாவிடினும்) அறிவுறுத்தலையும் ஏற்றுச் செயற்படுதல் போன்ற திறன்களை மாணவரிடம் ஆசிரியர் விருத்தி செய்ய வேண்டியது அவசியம்.
தொழில் மற்றும் வேலை பற்றிய தெளிவான, இணக்கமான, நேரிய எண்ணம், கருத்து, விருப்பம் என்பவற்றை கல்வியுடன் இணைந்த வகையில் உருவாக்குவதில் ஆசிரியர்கள் ஈடுபடுதல் வேண்டும். சுயதொழில்முனைப்பை உருவாக்கி வளர்த்தல் வேண்டும்.
அறிவு பெறக்கூடிய மூலங்களை மாணவர் நன்கறியத் செய்தல். ஊடகங்கள், சமூக நிறுவனங்கள், சான்றோர், சமூகப் பணியாளர், அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்ற பல்வேறு அறிவு மூலங்கள் பற்றிய அறிவையும், விருப்புணர்வையும் விருத்தி செய்வதில் ஆசிரியர் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.
பாடத்திட்டம் மற்றும் எண்ணக் கருக்களைக் கற்பித்தல் மாத்திரம் ஆசிரியரின் பிரதான பணியல்ல. இன்று பாடத்திட்டத்தை நிறைவு செய்தல் பணியைக் கட்டணம் பெற்று மேற்கொள்ளுதல் என்பவற்றுக்கென ஏராளமான கல்விக் கைத்தொழில் நிறுவனங்கள் (Education Industry Organalizations) 66Ti ở óf (O) upið spy guur &tő வருகின்றன. மாணவர், பெற்றோர், சமூகம், அரசு என்பவற்றின் ஆதர
33 / மாசின்னத்தம்பி

Page 27
வும் அவற்றுக்கு உண்டு. இதனால், ஆசிரியர்கள் வழமையான கடமைக்குப் புறம்பாக ஆற்ற வேண்டிய பணிகளில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டியுள்ளது.
பிள்ளைகளின் உள முரண்பாடுகள் மற்றும் மன அழுத்தங்களைக் குறைத்தல் மிக அவசியம். சுனாமி அனர்த்தம் இப்பணியை முக்கியமானதாக்கியுள்ளது.
பிள்ளைகள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார, பாலியல் அச்சுறுத்தல்களிலிருந்து மீள்வதற்கும், பாதுகாப்பதற்கும் ஆலோசனை வழங்கி வழிகாட்டல் வேண்டும்.
மாணவர்களின் கடமை, பொறுப்பு, நேர்மை, பற்றுறுதி என்பவற்றைக் கட்டியெழுப்புதல். குடும்பம், பாடசாலை, சமூகம், நாடு தொடர்பான பரந்துபட்ட அறிவையும், ஈடுபாட்டையும் வளர்த்தல்,
தமக்குரிய பொருத்தமான, மகிழ்ச்சிகரமாக மேற்கொள்ளக் கூடிய தொழில் ஒன்றைத் தெரிவு செய்வதற்கும், பிற்காலத்தில் அத் தொழிலை மேற்கொள்வதற்குமான வழிகாட்டல் ஆலோசனை, அறிவு என்பவற்றைப் பொருத்தமான வகையில் வழங்குதலும் அவசியம்.
இவ்வாறு ஆசிரியர்களின் வகிபங்கு மரபுவழியான எதிர்பார்ப்பிலிருந்து மிகவும் வேறுபட்டுள்ளது. இதற்கு தயார் செய்யும் வகையில் ஆசிரியர்களின் அணுகுமுறை, நாட்டம், விருப்புணர்வு என்பவற்றை மாற்றியமைப்பதற்கான கல்வி ஏற்பாடுகளும் தொழிலிட மேற்பார்வை முறைகளும் அமைக்கப்படுதல் வேண்டும். ஆசிரிய மேற்பார்வை தொடர்பான புதிய எண்ணக்கருக்கள் தொடர்பாக கிளாத் ஹோன் (Allan, A. Glathoran, 1987: 78-81) G5sfloggibdb.g5tbab(55g disab6i கவனத்திற் கொள்ளத்தக்கவை.
ஆசிரியர்கள் முழுமையான தொழிண்மைத் (வாண்மை) துறையினராக வளர்க்கப்படுதற்கு மேற்கொள்ளத்தக்க விஞ்ஞான பூர்வமான செயற்பாடுகள் பற்றி பீற்றர் ஜாவிஸ் (Peter Jarvis 1984 : 113 - 123) விளக்கமளித்துள்ளார். அவை பற்றியும் ஆசிரிய கல்வி. யியல் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடும் கல்வியியலாளர்கள், ஆய்வாளர்கள், கல்வி முகாமைத்துவத் துறையினர், கல்வித் திட்டமிடுவோர் போன்றோர் கவனம் செலுத்துவது அவசியம்.
இவ்வாறு செய்யுமிடத்து ஆசிரியர் மாறிவரும் வகிபங்கினை வினைத்திறனுடனும், விளைத்திறனுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும்
ஆசிரிய முகாமைத்துவம் /34

நிறைவேற்ற முடியும். இவை தொடர்பான ஆய்வுகளும் எதிர்காலத்தில் ஊக்குவிக்கப்படுதலும் அவசியமாகும்.
References :
1.
Allan A. Glatthorn (1987), A New Concept of Supervision, Educational Horizons Winter, U.S.A.
Kai - Ming Cheng and Kam - Cheung Wong, (1996), School Effectiveness in East Asia, Journal of Educational Administration, Vol. 34, No. 5, Australia.
IIEP/The World Bank (2003), Post-Conflict Reconstruction in the Education Sector, Summer School Report, Paris, 7 - 15.
Peter Jarvis (1984), Teachers and Teaching in the Education Professionals (chapter 8), Professional Education, Croom Helm, London.
National Education Commission (1992), The First Report of the National Education Commission, Government Piblications Bureau, Colombo.
Sharma, B. M. (1997), Teachers about their pupils, Classroom Administration, Ajay Verma, New Delhi.
Raj Singh (2003), Motivation and Leadership, School Organization and Administration, Ajay Verma, New Delhi.
35 / மாசின்னத்தம்பி

Page 28
ஆசிரியர்களும் சமூக தலைமைத்துவமும்
மூகங்கள் அனைத்தும் தமக்குரிய கட்டமைப்பு செயன்முறை என்பவற்றை பேணுவதற்கு வேண்டிய வழிகாட்டலையும் ஊக்குவிப்புக்களையும் வழங்கக் கூடிய தலைமைத்துவத்தை வேண்டி நிற்கின்றன. இத்தகைய தலை மைத்துவத்தைக் கட்டியெழுப்புவதில் பல்வேறு சமூக, பொருளாதார, அரசியற் காரணிகள் உள்ள போதும் அவற்றில் ஆசிரியர்களின் பங்கும் அவசியமாகிறது.
சமூக நிறுவனங்களும் தலைமைத்துவமும்
பல்வேறுபட்ட மொழி, கலாசாரம், நம்பிக்கை, பொருளாதார தொடர்பு கொண்ட பலரையும் ஒருங்கிணைத்து அவர்கள் தத்தம் இலக்குகளையும் எதிர்பார்க்கைகளையும் நிறைவேற்றுவதற்கு பல சமூக நிறுவனங்கள் உருவாகியுள்ளன. குடித்தொகைப் பண்புகள், உற்பத்திமுறை மாற்றங்கள், வெளிச் சமூகங்களுடனான தொடர்புகள், தொடர்பாடல் மற்றும் ஊடக வளர்ச்சி என்பன சமூகங்களின் பண்பு நலன்களிலும், செயற்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இது தொடர்ச்சியான செயற்பாடாகும். இச்செயற்பாடுகள் புதிய புதிய சமூக நிறுவனங்களுக்கான தேவைகளை உருவாக்கியுள்ளன.
மனித நாகரிகத்தின் அடிப்படையாகவும் வலுவாகவும் விளங்குகின்ற குடும்பம் என்ற நிறுவனத்தின் பங்கு மிக முக்கியத்துவம் கொண்டது. அவ்வாறே பாடசாலைகள், பொது மருத்துவ மனைகள், கோவில்கள், சனசமூகநிலையங்கள் கிராமிய சபைகள் போன்ற சமூக நிறுவனங்களும் வளர்ச்சிபெற்றன. குடும்பங்களில் தலைவன்,தலைவி
ஆசிரிய முகாமைத்துவம் 736

இருவரும் இல்லத்திற்கு வெளியே பணியாற்றும் நிலைமை வளர்ச்சி பெற்றபோது குடும்பத் தலைவியின் மரபுவழிப் பணிகளை பல நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளும் தேவை வளர்ச்சியடைந்து-நகர்ப்புற சமூகங்களில் அவை வளர்ந்தன.
இதன் பின்னணியில் குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் நலனோம்புநிலையங்கள், உணவகங்கள், பொதுநலவாழ்வு மையங்கள், இளைஞர் கழகங்கள், மாதர் மன்றங்கள், உளவளத் துணை நிறுவனங்கள், கல்வி மற்றும் தொழில் வழிகாட்டு நிறுவனங்கள் போன்ற ஏராளமான நிறுவனங்கள் உருவாகி வளர்ந்து விட்டன. இவை கட்டாய சமூக தேவைகளாகியும் விட்டன. இத்தகைய நிறுவனங்கள் தமது பணிகளை ஆற்றுதற்கான தலைமைத்துவம் மிக்கவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது.
இத்தகைய சமூக நிறுவனங்களின் வளர்ச்சி சமூகத்தின் விரிவாக்கத்திற்கும், வளங்களின் உத்தம பயன்பாட்டிற்கும், வினைத்திறன் மிக்க மனிதவள மேம்பாட்டிற்கும், விளைத்திறன் மிக்க பொருளாதார செயன் முறைகளுக்கும் அவசியமாகியுள்ளது. இத்தகைய நிறுவனங்களுக்குரிய திறமைமிக்க தலைவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் பிரதான பங்கு வகிக்க வேண்டியுள்ளது.
இன்று பெரும்பாலான நாடுகளில் அரசாங்கம், தனியார் துறை போன்று மூன்றாவது சக்தியாக அரச சார்பற்ற நிறுவனங்களும் பல்முனைப்பட்டு வளர்ச்சி பெற்று வருகின்றன. இவற்றுக்கான தலைமைத்துவத்தை உருவாக்கும் தேவைகளும் இன்று வளர்ச்சி பெற்றுள்ளன.
சமூகத்தில் தீங்குறு பிரிவினரை முன்னேற்றுவது பற்றிய சிந்தனை சமூகத்தின் எல்லா மட்டத்திலும் முனைப்படைந்து வருகிறது. இந்த நிலையில் மகளிர் அமைப்புக்கள், சிறுவர் உரிமை அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மனித உரிமை அமைப்புக்கள் போன்ற பல சமூக நிறுவனங்களும் புதிதாக வளர்ச்சி பெற்று வருகின்றன.
இவ்வாறு சமூக நிறுவனங்கள் பல்வேறு அடிப்படைகளில் வளர்ச்சியுறும் போது அவற்றுக்கான தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பு பாடசாலைகளுக்கும் குறிப்பாக ஆசிரியர்களுக்கும் உரியதாகியுள்ளது.
37 / மாசின்னத்தம்பி

Page 29
சமூக மாற்றங்கள், நெருக்கடிகள், முன்னேற்றங்கள் பெருமள. வில் சமூக தலைவர்களில் தங்கியுள்ளபோது இயல்பாகவே அப் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் உரியதாகிறது.
சமூக வலைப்பின்னலும் தலைமைத்துவமும்
சமூகங்கள் குறுக்கும் நெடுக்குமான பல உப செயலமைப்புக்கள் மற்றும் தொகுதிகளினால் பின்னப்பட்ட வலையமைப்பு ஆகும். தமிழர், சிங்களவர், இஸ்லாமியர், பறங்கியர் என்ற இனத் தொகுதியினர் உள்ளது போல் எல்லா இனங்களிலும் விவசாயிகள், தொழிலாளர், சமூக சேவைப் பணியாளர் என்போரும் வறியவர், செல்வந்தர் என். போரும் காணப்படுகின்றனர். இந்த வலையமைப்பில் மையப்புள்ளி. களாக அல்லது இணைப்பு முடிச்சுக்களாக வளர்ச்சி பெற்றிருப்பவை சமூக நிறுவனங்களேயாகும்.
இந்த எல்லா சமூக அடுக்கினரும் கிராமிய சமூகங்களிலும், நகர்ப்புற சமூகங்களிலும் காணப்படுகின்றனர். இத்தகைய சமூகக் கட்டமைப்பின் விசைப்படுத்தும் நிறுவனங்களாக சமூக நிறுவனங்கள் விளங்குவதால், அத்தகைய நிறுவனங்களுக்கான தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்களுக்குள்ள வகிபங்கும். பொறுப்பும் முக்கியத்துவமுடையதேயாகும்.
ஒவ்வொரு சமூகத்திலும் வரலாற்றுக் காலத்திலிருந்தே வைத்தியரும், ஆசிரியரும் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தனர். சமூகத்தின் எல்லா வயதினருடனும், எல்லாக் காலத்திலும் தொடர்புபட்ட சேவை வைத்திய சேவை என்பதால் வைத்தியர்கள் முக்கியத்துவம் பெற்றனர்.நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட கிராமிய வாழ்வியலில் காலக் கணக்கர் (சோதிடர்) முக்கியத்துவம் பெற்றார். இதேபோல் தனது அறிவை ஒருவர் இனங் காணவும், தனது சூழலை இனங்காணவும் தனது அபாயங்களை கண்டறியவும் அடிப்படையான எழுத்தறிவு என்பதை உருவாக்குபவராக ஆசிரியர் விளங்கினார். இவரே புராதன கிராமிய வாழ்வின் மைய விசையாக இருந்தார். ஆசிரியரே வைத்தியராகவும், சோதிடராகவும் விளங்கினார். சமூகத்திற்கு தேவைப்பட்ட அதிமுக்கியமான - உன்னதமான மனிதவளமாக ஆசிரியர்கள் விளங்கினர்.
குரு'என்ற பெயர் வழிகாட்டி, முன்னோடி, நிபுணர், முன்னோக்கிச் சிந்திப்பவர் நல்வழிப்படுத்துபவர், மதியுரைஞர் என்ற பல்வேறுபட்ட
ஆசிரிய முகாமைத்துவம் 138

பணிநிலையுடன் ஒன்றிணைந்த தொழில்சார் சுட்டுச் சொல்லாக விளங்குகிறது. குரு - தனிநபர் நிறுவனமாக இருந்தார். பாடசாலையாகவும் அவரே விளங்கினார். தனது சிஷ்யனின் அறிவு, ஆத்மபலம், ஒழுக்கம், மனத்திடம், கடின உழைப்பு என்பவற்றை வளர்த்தெடுப்பதில் அவர் பெரும் பங்கு வகித்தார்.
காலத்தின் மாற்றங்கள் பொருளாதாரம், அரசியல், குடித்தொகை, தொழில்நுட்பம் என்பவற்றில் விசைமிக்க மாற்றங்களை ஏற்படுத்திய போது அவை சமூக நிறுவனங்களிலும், அவற்றுக்கான தலைமைத்துவ தகைமைகளிலும் அதிக மாற்றங்களை வேண்டி நின்றன. இவை ஆசிரியர்களின் வகிபங்கையும் மாற்றலாயின. பலவீனமான ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களும் நிலவிய சமூகங்கள் பல்துறை முன்னேற்றங்கள் தம்மை கடந்து செல்வதை மெளனியாக நின்று ஏக்கத்துடன் பார்த்துச் சோர்ந்து நின்றன. சமூக முன்னேற்றங்களில் அதித ஈடுபாடு கொண்டிருந்த சமூகங்கள் பல்வேறுபட்ட இயற்கையான, செயற்கையான அழிவுகளிலிருந்து தம்மைப் பாதுகாக்க விரும்பிய போதெல்லாம் ஆசிரியர்களையும் அவர்களது நலன்களையும் பேணி வந்துள்ளன.
இன்று எல்லா நாடுகளிலும் பாடசாலைகள் பெரிய நிறுவனங்களாக வளர்ந்த போது ஆசிரியர்களின் பணியும் பொறுப்பும் வேறுபட்டன. இதனால் சமூக தலைமைத்துவ உருவாக்கப் பணி ஆசிரியர்களின் தனிப்பட்ட பொறுப்பாக மட்டுமன்றி ஆசிரிய தொழில் சார் அணி யினரின் கூட்டுப் பொறுப்பாகவும் வளர்ந்துள்ளன. சமூகத் தலைமைத்துவத்திற்கான அதிகரிக்கும் தேவைகளை நிறைவேற்றும் புதிய பணியில் ஆசிரியர் ஈடுபடவேண்டியது கட்டாயமாகியுள்ளது.
தலைமைத்துவ பண்பு நலன்கள்
சமூகங்களின் உறுப்பினராக விளங்கும் தனிநபர்களில் சிலர் முனைப்பும் புத்தூக்கமும் மிக்கவராகி தலைமைப் பங்கேற்பர். தலைமைப் பண்பு என்பது தனிநபர் இயல்புகளிலும், தேர்ச்சிகளிலும் முழுமை பெறும் போது விருத்தியடைவதாகும். தெளிந்த அறிவு, சமநிலை, தொடர்பாடல் திறன், நடுநிலை, பிறருக்காக சிந்தித்தல், முயற்சிகளில் முன்நிற்றல், வழிகாட்டல், நலன்களுக்காக இடர்களை துணிவுடன் எதிர்கொள்ளல் போன்ற பல்வேறு திறன்கள் பெறும் போது தலைவர்களாக வரமுடியும்.
39 / மாசின்னத்தம்பி

Page 30
எந்த ஒரு செயல் தொடர்பாகவும் தெளிவான குறிக்கோள்களை தீர்மானித்துக் கொள்வது. அதற்கான திட்டங்களைத் தீர்மானிப்பது, எதிர்காலம் பற்றிய சாதகமான முன்னோக்கு கொண்டிருப்பது, சூழலை தெளிவாக விளங்கிக் கொள்வது, மாறுபட்ட மனிதர்களுடனும் கலாசாரத்துடனும் முரண்பாடின்றிப் பொருந்துவது, நீண்ட கால வெற். றிக்காக குறுங்கால சிறிய தோல்விகளை ஏற்றுக் கொள்வது, தோல்வியிலிருந்து படிப்பினை ஒன்றை பெற்றுக் கொள்வது, பிரச். சினைகள் பற்றித் தெளிவான அறிவைப் பெறுவது, பாதகமான மன. வெழுச்சிகளை தவிர்ப்பது, வெற்றிவாய்ப்பிற்காக பொறுமையுடன் ஆனால் கூர்மையான அவதானத்துடன் காத்திருப்பது போன்ற திறன். களை பெற்றுக் கொள்பவர் தலைமைத்துவத்தை ஏற்பர்.
பிரச்சினைகளை கண்டு அஞ்சி ஒதுங்காமல் சாத்தியமான மாற்று வழிகளைத் தேடுவதும், அவற்றுள் மிகவும் சிறந்த ஒன்றைத் தெரிவு செய்வதும், அதை நடைமுறைப்படுத்துவதற்கு உண்மையாகப் பாடுபடுவதும், பெறுபேறுகளை மதிப்பீடு செய்வதும் அவசியமாகும். இவையனைத்தும் சமூகத்தில் பல்வேறு மட்டங்களில் பணியாற்ற விரும்பும் தலைவர்களுக்கு அவசியமாகிறது.
ஆசிரியர்கள் தனிநபர் என்ற முறையிலும் தொழில் ரீதியாகவும், எல்லாத் தனிப்பட்ட மாணவரிடமும் இத்தகைய திறன்களை வளர்க்க வேண்டும். தேவையான அறிவையும் திறன்களையும், நம்பிக்கையையும், மனப்பான்மையையும் சிறுவயதிலிருந்தே வளர்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் பிரதான பங்கு வகிப்பர்.
தலைமைத்துவ விருத்தியில் ஆசிரியர்கள்
சமூகத்தில் ஒழுங்கு, ஒழுக்கம், நேர்மை கொண்ட நிறுவனங்களையும், தனிநபர்களையும் வளர்க்கக் கூடிய தலைவர்களை ஆசிரியர்கள் உருவாக்க முடியும். இதற்கு பின்வரும் வழிகளில் ஆசிரியர் பங்காற்ற முடியும்.
1. முன்மாதிரியாக இருத்தல்
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மாணவர்களுக்குரிய முன்மாதிரி
(Model) யாக விளங்க வேண்டும். நிறைவான கல்வி, தெளிவான
சொல்லும் செயலும், மனிதாபிமானத்துடன் பிறரையும், செயல்களை
ஆசிரிய முகாமைத்துவம் /40

யும் நோக்குதல், அறிவையும், ஆற்றலையும் சமூக உயர்ச்சிக்காக பயன்படுத்துதல் போன்ற இயல்பு மற்றும் நடத்தைகளை வெளிப்படுத்துதல் வேண்டும். இதனால் மற்றவர் "பார்த்து நடக்கக் கூடிய மனிதர்களாக" - மேன்மை மிக்கவர்களாக விளங்குதல் வேண்டும்.
2. வழிகாட்டுதலும் கலந்துரையாடலும்
பாடசாலைக்குள்ளேயும், பாடசாலைக்கு வெளியேயும் தேவையான போது, இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர் போன்றோருக்கு நல்வழிகாட்டலில் ஈடுபட வேண்டும்.நாடி வருபவர் இயல்பு. தேவைகள், பிரச்சினைகள், வசதிகள் என்பவற்றை விளங்கிக் கொண்டு, இதமாக வழிகாட்ட வேண்டும். தம்மால் இயலாதவிடத்து உதவக் கூடிய நபர்களையும் நிறுவனங்களையும் பற்றிய விபரங்களையும் வழங்க வேண்டும். பிரச்சினைகள் பற்றி பகுத்தறிவு ரீதியில் கலந்துரையாடி தெளிவினை ஏற்படுத்தி நல்ல முடிவுகளுக்கு அவர்களை இட்டுச் செல்ல வேண்டும்.
3. தலைமைத்துவக் குழுக்களை உருவாக்குதல்
கிராமங்களில் விவசாய மகளிர், ஏழைக்குடும்பப் பெண்கள், விவசாய, கைத்தொழில் தொழிலாளரான பெண்கள் ஆகியோருடன் பெண் ஆசிரியைகள் தமது ஒய்வு நேரங்களில் கலந்துரையாடி அவர்களிடையே செயற்படும் குழுக்களை உருவாக்க வேண்டும். அக்குழுக்கள் தமக்குரிய தலைவரை தெரிவு செய்வதற்கும் வழிகாட்ட வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு, சிக்கனம், சிறுகடன், சிறு சேமிப்பு, பிள்ளைப்பராமரிப்பு, பிள்ளைகளின் கல்வி தொடர்பாக பொது முடிவுகளையும், பொதுவான நலத்திட்டங்களையும் உருவாக்கக்கூடிய தலைவர்களைக் கிராமிய பெண்களிடையே உருவாக்குவதில் பெரும் பணியாற்ற வேண்டியவர்கள் கிராமிய பாடசாலைகளில் பணியாற்றும் பெண் ஆசிரியைகளேயாவார்.
பெண்களே நிர்வகிக்கக்கூடிய பெண்களின் நலன் பேணும் நிறுவனங்களை கிராமிய மட்டத்தில் உருவாக்கி, அதற்கான தலைவர்கள் வளர்ச்சி பெற இத்தகைய ஆசிரியர்கள் உதவ வேண்டும்.
41 / மாசின்னத்தம்பி

Page 31
4. இடர்கால உதவிக் குழுக்கள்
சமூகங்களில் வெள்ளப்பெருக்கு, வரட்சி, சுனாமி போன்ற அனர்த்தம், இடப்பெயர்வு, தொழிலின்மை பொருட்தட்டுப்பாடு, சமூக நோய் பரவுதல் போன்ற நெருக்கடிகளின் போது தாமே தமக்குரிய தீர்வுகளைத் தேடுதற்கான சுய உதவிக் குழுக்களை உருவாக்க ஆசிரியர்கள் உதவவேண்டும். இதன் மூலம் தலைமைத்துவ ஆற்றல் மிக்க பலரை சமூகத்தில் உருவாக்கிவிட முடியும், இடர் முகாமைத்திறன் மிக்கவர்களை வளர்த்தெடுப்பது முக்கியபணியாகும்.
5. இழந்த கல்வியைப் பெறுதல்
யுத்த அனர்த்த காலங்களில் குடும்பங்களின் சிதைவு, நிலையாக ஓரிடத்தில் வசிக்க முடியாமை, பள்ளி செல்லும் மனோநிலை இன்மை, பள்ளி செல்வதற்கான வசதிகளின்மை, பள்ளி செல்வதற்கு உளக்கமளிப்போரின்மை போன்ற ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல காரணிகளினால் ஏராளமான சிறுவர்கள் தமது வயதுக்குரிய கல்வியைப் பெறத் தவறியுள்ளனர். இதனை அரசாங்கம் தனியே ஈடு செய்தல் சாத்தியமில்லை. ஆசிரியர்கள் பல்வேறு சமூக நிறுவனங்களின் தலைவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்போரின் ஒத்துழைப்புடன் இழந்த கல்வியை மீட்கும் செயற்திட்டங்களை ஊக்குவித்தல் வேண்டும். ஒய்வுநாட்கள் மற்றும் மாலை வேளைகளில் உயர்வகுப்பு மாணவர், கிராமிய பகுதிகளில் இருக்கும் பல்கலைக்கழக மாணவர், ஆசிரிய மாணவர் ஆகியோர் கொண்ட குழுக்களை உருவாக்குவதிலும், அதற்கான தலைவர்களை உருவாக்குவதிலும் ஆசிரியர்கள் தனியாகவும் குழுவாகவும் செயற்பட வேண்டும்.
6. குறுந்திரைப்படங்களைத் தயாரித்தல்
சமூகங்களில் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கக்கூடிய குறுந்திரைப்படங்களை ஆசிரியர்கள் தயாரிக்க வேண்டும். பல்கலைக்கழக நாடக, அரங்கியல் பகுதி மாணவர் உதவிகளையும், அரச சார்பற்றநிறுவனங்களையும், வியாபார நிறுவனங்களையும் நாடி இத்தகைய முயற்சிகளை ஊக்கவிக்க வேண்டும். இதற்குரிய தலைமைப்பண்பு மிக்கவர்களையும் இனங்கண்டு வளர்ப்பதில் பாடசாலைகளும் ஆசிரியர்களும் பிரதான பங்கு வகிக்க முடியும்.
ஆசிரிய முகாமைத்துவம் 742

எதிர்காலத்தில் ஆசிரியர்கள் தாம் கற்றல் பாடசாலைகளில் கற்பித்தல் என்பவற்றுக்கு புறம்பாக இத்தகைய முயற்சிகளிலும் ஈடுபடல் வேண்டும். இது சமூகங்கள் தமது பெளதிக, மனித வள விரயங்களைத் தவிர்த்துக் கொள்ள உதவும், அவ்வளங்களில் வினைத்திறனையும் விளைதறனையும் உறுதிப்படுத்தவும் உதவ முடியும். வேறுபட்ட சமூகப் பிரிவினரிடையே நட்புணர்வு, சகோதரத்துவம் என்பவற்றை கட்டியெழுப்புதற்கான தலைமைத்துவ உருவாக்கத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.
ஆசிரிய தொழிற்சங்கங்களும் ஆசிரிய கல்வி நிறுவனங்களும் பிற ஆசிரிய வாண்மை நிறுவனங்களும் இவ்வகை முயற்சிகளில் ஆசிரியருக்கு உதவும் திட்டங்களை வடிவமைத்து தேவையான உதவிகளையும் ஊக்குவிப்புக்களையும் வழங்குவதும் காலத்தின் தேவையாக உள்ளது.
43 / மாசின்னத்தம்பி

Page 32
ஆசிரியர் சவால்களும் பிரச்சினைகளும்
சாலை என்ற சமூக நிறுவனத்தின் மையச் சக்கரமாக செயற்படுபவர்கள் ஆசிரியர்களே. கல்வி அமைச்சு, தொழிற்சங்கங்கள், பெற்றோர், பாடசாலை முகாமைத்துவம், மாணவர்கள் போன்ற பல வகைப்பட்ட பொறுப்புமிக்கவர்கள் பாடசாலையின் தொழிற்பாடுகளில் பங்கேற்கின்றனர். எனினும் அவர்கள் அனைவரையும் விட ஒருபடி உயர்ந்தவர்களாக ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர்.
எனினும், அண்மைக்காலத்தில் அரசியல்வாதிகள், சமூக உளவியலாளர்கள், நீதித்துறையினர், பொருளியலாளர்கள், கல்வித்திட்டமிடலாளர் போன்ற அனைவரும் கல்விமுறைமையின் தோல்வி, குறிப்பாக பாடசாலைக் கல்வி முறைமையின் குறைபாடுகள் பற்றி அதிகமாகவே பேசி வருகின்றனர். அத்தகைய விவாதங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் "ஆசிரியர்கள் பலவீனங்கள்" என்ற கருப்பொருளைச் சூழ்ந்தனவாக அமைந்து விடுகின்றன.
ஆசிரியத்தொழில், பாடசாலைக்கல்வி, மாணவர் செயற்பாடுகள் என்பவற்றுடன் எவ்வகையிலும் தொடர்பற்ற நிறுவனங்கள், நபர்கள் கூட ஆசிரியப்பணி பற்றியும் ஆசிரியர் பண்பு நலன்கள் பற்றியும் விமர்சிப்பதையும் எழுந்தமானமாக புத்திமதிகள் கூறுவதையும் காண முடிகின்றது. சமூக நிறுவனங்களான பாடசாலைகள் சமுதாயத்துக்காகவே பிள்ளைகளை வடிவமைக்கின்றன. இந்த வகையில் சமூகப் பிரக்ஞை உள்ள எவரும் ஆசிரியர் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆசிரிய முகாமைத்துவம் 144
 

எனினும் அவர்களது பக்கத்திற்கு சிறிதுநகர்ந்து சென்று அவர்களது கண்ணோட்டத்தின்படி பார்த்தால் அவர்களது பிரச்சினைகள், உள நெருடல்கள், அறைகூவல்கள் என்பவற்றைப்புரிந்து கொள்ள முடியும். ஆசிரியர் பற்றிநடுநிலையான-நியாயபூர்வமான விமர்சன சூழலை உருவாக்குதற்கு அவ்வாறான புரிந்து கொள்ளல் அவசியமாகிறது.
பாடசாலையும் ஆசிரியரும்
கல்வி என்றவுடன் தொடர்ந்துநினைவுக்கு வரும் மற்றொரு எண். ணக்கரு பாடசாலையாகும். சமூக செயன்முறையின் இன்றியமையாத ஒரு படிமுறை பிள்ளைகள் கல்வி கற்பதும் அதன் வழியாக சமூக இடைவினையுறவுகளை விருத்தி செய்வதுமாகும். பாடசாலையும் ஒரு சமூகக் குழுமம் தான். பல்முனைப்பட்ட தொடர்பாடல்களும் தொடர்பு களும் பாடசாலை ஊடாக, விருத்தி செய்யப்படுகின்றன. மனித உறவுகள் பற்றிய விஞ்ஞான பூர்வமான பொதுமையாக்கல்களை, மனித தொடர்புகள் பற்றிய பொதுமையாக்கல்களை கல்விமுறைமையினுள் உருவாக்குவதில் பாடசாலை என்ற முறைசார் நிறுவனம் பெரும் பங்காற்றுகிறது.
பாடசாலையின் பங்களிப்பை பின்வருமாறு ஒழுங்குபடுத்திக் GabiT6ion (plquib (Brook over and gottlieb 1964).
1) குறித்த கலாசார சூழலுக்கு அமைவாக சமூக வலு மற்றும் கட்டுப்பாட்டுக்கு ஏற்ற முறையில், சமூக, பொருளாதார மாற்ற செயன்முறைகளுக்குரியதாக, சமூகவர்க்கம், அந்தஸ்து நிலைகளின்படி இன, மொழி, ஏனைய குழுமங்களுக்குரிய வகையில் செயற்படுவதன் மூலம் சமூகமயமாக்கலை ஏற்படுத்துகின்றன.
2) நிறுவனக்கட்டமைப்பு முறைமைக்குள்ளேயே தெளிவான மாணவ கலாசாரத்தை பாடசாலை தொழிற்படும் சமூக கட்டமைப்புக்கு இசைவுடைய முறையில், விருத்தி செய்கிறது. விழுமியம், உளப்பாங்கு, நடத்தை என்பவற்றை தேவையானவகையில் ஒழுங்குபடுத்துகின்றது.
3) பாடசாலைக்கும் ஏனைய சமூக குழுக்களுக்கும் இடையில் ஒழுங்கு முறையான இடைவினையுறவை விருத்தி செய்கிறது. சமூகத்தின் பிரதிமை என்ற வகையில் பாடசாலை சமூக
45 / மாசின்னத்தம்பி

Page 33
குழுக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தவல்லது பாடசாலை சாராத சமூக முறைமையை தன் தொழிற்பாடுகளினுடாக பாதித்து சூழல் மற்றும் குடிசனவியல் காரணிகளுக்கு அமைவாக தொழிற்படுகின்றது.
இத்தகைய பாடசாலையில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதும் தாக்கவிளைவுகளை ஏற்படுத்த வல்லதுமாகும். ஆசிரியர்கள் எத்தகைய சமூக பின்னணியைச் சார்ந்தவர் என்பதும், அவர்களது வயது, பால்வகை, திருமண வாழ்வு முறை, அவர்களது கல்விப் பின்னணியும் தொடர் கல்விநாட்டமும் எவ்வாறமைந்துள்ளன என்பதும் முக்கியமானது. தொழில் பற்றிய நோக்கு, தொழில் ஈடுபாடு, தொலை நோக்கு, விழுமிய நம்பிக்கைகள் என்பவற்றுக்கேற்ப அவர்களது பாடசாலைப் பணி அமைகிறது.
இலங்கைப்பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களான இரண்டு இலட்சம் பேரும் கிராமிய, நகர பாடசாலைகளில் தொழில் புரிபவர்களே. பெருமளவுக்கு அரச நிதியில் அரச கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இயங்கும் பாடசாலைகளில் பணிபுரிபவர்களே. அரச உத்தியோகம் என்ற நோக்கில் பாதுகாப்பு மிக்க சுதந்திரம் மிகுந்த தொழிலாக நேரடி முகாமைத்துவ கட்டுப்பாடற்ற தொழிலாக இலங்கையர்கள் ஆசிரிய தொழிலை நோக்குகின்றனர்.
தாதியர் தொழில் போன்றே ஆசிரியத்தொழிலும் பெண்களால் விரும்பித் தெரிவு செய்யப்படும் தொழிலாக விளங்குகிறது. வளர் முக நாடுகள் பெரும் பாலானவற்றில் இதே போக்கு தென்படுகிறது. அமெரிக்காவில் மேற் கொள்ளப்பட்ட காலத்தால் முந்திய ஆய்வு (National Survey, USA 1956) ஒன்று பெண்கள் ஆசிரியர்களாக பெருமளவு விரும்பிப் பணியாற்றுதற்கு பின்வரும் காரணங்களை இனங் கண்டுள்ளது.
* தாய்மைப்பண்புடன் தொடர்புடையதாயிருத்தல் * இளையோரை - சிறார்களை சமூகமயப்படுத்துதல் * இளையோருக்குப் பயிற்சியளித்தல் * இளையோருடன் பணிக்காலம் முழுவதும் வாழ்தல் இலங்கையிலும் ஆசிரியப் பணியில் பெருமளவுக்கு பெண்களே உள்ளனர். ஒரு ஆசிரியரையே வாழ்க்கைத்துணைவராக பெறவிரும்புகின்றனர். இதனால் குடும்ப, வாழ்வுத்தொழிலாக "கற்பித்தல்" அமைந்து விடுகிறது.
ஆசிரிய முகாமைத்துவம் /46

இவ்வாறே இளைய வயதினரும் உயர் கல்விமற்றும் மிகுபயிற்சி கொண்டவரும், சொந்தப் பிரதேசங்களிலேயே வாழ்நாள் முழுதும் வசதிமிக்க பாடசாலைகளில் கற்பிப்பவர்களுமான தொகுதியினர் உள்ளனர். இவர்கள் பாதுகாப்பும் வசதியும், மகிழ்ச்சியும் கொண்டவர்களாக இனங்காணப்படுவர்.
மற்றொரு தொகுதியினர் வயதில் கூடியவர்களாகவும், உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் கிட்டாதவர்களாகவும், குடும்பங்களை விட்டு விலகி தொலை தூரகிராமங்களில் வசதிகளற்ற பாடசாலைகளில் தீங்குறு சமூகத்தின் பிள்ளைகளுக்கு வசதி வாய்ப்புக்களற்ற சூழலில் வாழ் நாள் முழுதும் கற்பிக்கின்றனர். இவர்கள் கவனிக்கப்படாதவர்கள். தமது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் பற்றி வெளிப்படுத்துவதற்கு ஊடக செல்வாக்கும், அரசியல் செல்வாக்கும் அற்றவர்கள், புதுமையான கல்வி பற்றிய உணர்வுகளுக்கு உட்படாமலே தமது வாழ் தொழிலை நிறைவு செய்பவர்கள்.
இந்த இரண்டாவது தொகுதி ஆசிரியர்களே அதிகளவுக்கு பிரச்சினைகளையும் அறைகூவல்களையும் எதிர் கொள்கின்றனர். இதன் கருத்து, முதல் தொகுதியினருக்கு இத்தகைய தடைகள் இல்லை என்பதல்ல.
அறைகூவல்கள்
ஆசிரியர்கள் தெளிவானதும், மிகவும் இறுக்கமாக பின்பற்றப்படுவதுமான விதிமுறைகளின்படிநியமிக்கப்படுவதில்லை. முழுமையான வாண்மைத்துறையாக வளர்ப்பதற்கான விதிமுறைகளும், வள ஒதுக்கீடும், நிறுவன ஏற்பாடுகளும், அரசியல் ஆதரவும் இன்றுவரை முறையாக வளர்க்கப்படவில்லை. சமூக முரண்பாடுகள், பொருளாதார நெருக்கடிகள், அரசியல் தேவைப்பாடுகள் என்பன தொடர்பாக எழக்கூடிய நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக தொழில் வாய்ப்பு வழங்கக்கூடிய வசதிமிக்க துறையாக ஆசிரிய நியமனம் விளங்குகிறது. வேறு வகையில் கூறுவதானால் ஆசிரியத் தொழில் நியமனம் சார்ந்த நெகிழ்வுப்பண்புகளே இத் தொழிலை பலவீனமானதாக்கி சமூக மதிப்பும், வலுவும் குறைந்ததாக்கியுள்ளது.
இத்தகைய பலவீனமான துறையினுள் இணைந்து கொண்டவர்கள் எவ்வாறு பலமானவர்களாக - வல்லாண்மை மிக்கவர்களாக
47 / மாசின்னத்தம்பி

Page 34
தொழிற்பட முடியும்?இது ஆசிரிய தொழில் முறைமையின் கட்டமைப்புப் பற்றிய பலவீனமும் பிரச்சினையுமாகும்.
பெரும்பாலான ஆசிரியர்கள் பொருளாதார ரீதியில் பலவீன. மானவர்கள், உளவியல் ரீதியில் தாழ்வுணர்ச்சிக்குட்பட்டவர்கள்; நேர் கோட்டிலான நிலைக்குத்துமாதிரி தொழில் முன்னேற்ற வாய்ப்பு அற்றவர்கள், ஆசிரியர்கள் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் உயர் அலுவலர் தொடர்பாக எதிர்மறை உணர்வு-அவநம்பிக்கை கொண்டவர்கள், தமது சொந்த உணர்வு, கருத்து என்பவற்றை வெளிப்படுத்த தயங்குபவர்கள், அதற்கேற்ற நிறுவன முறைப்பலம் அற்றவர்கள், தொழிற்சங்க செயற்பாடுகளிலும் அரை குறை நம்பிக்கையுடையவர்கள்.
இவ்வாறு பலவீனமான தொழிற்துறையினராக ஆசிரியர்களை மாற்றிய வலு மிக்க காரணிகளை இனங்காண வேண்டும். அவைதான் ஆசிரியர்கள் எதிர் கொள்ளும் அறைகூவல்களும் பிரச்சினைகளுமாகும். இவற்றைப் பின்வருமாறு குறிப்பிட முடியும்.
கல்விச் சீர்திருத்தங்களும் பாடம் தொடர்பான மாற்றங்களும்
இலங்கை அனுபவத்தில் கற்பிக்கப்படும் பாடங்களின் உள்ளடக்கம், தொடர்பாக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில பாடங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன். சில பாடங்களில் சில பகுதிகள் அகற்றப்படுகின்றன. முற்றிலும் புதிதாக சில பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இதற்கான முன் பயிற்சி போதிய கால அவகாசத்துடன் வழங்கப்படுவதில்லை. அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதனால் கற்பிக்கும் ஆசிரியர் அதிக நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். கற்பித்தலில் மனநிறைவு ஏற்படுவதில்ல்ை, மாணவர்களிடமும் பாடசாலை நிர்வாகத்திடமும் திருப்தியை ஏற்படுத்த முடிவதில்லை; வேண்டாத மன உழைச்சலுக்கும் உட்படுகின்றனர். 1972 கல்விச் சீர்திருத்தத்தின் போது சமூகக்கல்வி பாட ஆசிரியர்கள் இத்தகைய நெருக்கடிகளை எதிர் கொண்டனர். 1997 இல் அறிமுகப்படுத்தப்பட்டு 2000 ஆண்டளவிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய கல்விச் சீர்திருத்தத்திலும் இணைந்த கணிதம், உயிரியல் பாடங்கள் தொடர்பாகவும் இதே நெருக்கடிகளை ஆசிரியர்கள் எதிர் கொண்டனர்.
ஆசிரிய முகாமைத்துவம் 148

வேறு பல சந்தர்ப்பங்களில் கற்பித்தல் முறைகளிலும் புதிய மாற்றங்கள் வேண்டப்படுகின்றன. அதற்கும் உரியவாறு, உரியகாலத்தில் பயிற்சிகளை வழங்குவதற்கு ஒழுங்கான ஏற்பாடுகள் இருப்பதில்லை. புதிய கணிதம், ஆங்கில பாடபோதனை தொடர்பாக அப்பாட ஆசிரியர்கள் இதேவகை நெருக்கடிகளை எதிர் கொண்டு வந்தனர். சில மாற்றங்கள் சேவைக் காலப் பயிற்சி வகுப்புகள் மூலமாகவே அறிவுறுத்தப்படுகின்றன. குறுகிய கால பயிற்சிகள் அவ்வப்பிரதேசங்களில் சேவைக்கால ஆலோசகர்களினால் நடாத்தப்படுகின்றபோதிலும் எல்லாப் பாடசாலைகளிலும் கற்பிக்கும் அதே பாட ஆசிரியர்கள் அனைவரையும் ஒரேநாளில் பாடசாலை நிர்வாகம் அனுப்புவதில்லை. பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பது இதற்குக் காரணமாகும். ஆனால் பயிற்சி வகுப்புச் செல்லாமலே கற்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். இது ஆசிரியர்களால் தவிர்க்க முடியாத பிரச்சினையாகும்.
பாட நூல்கள் கிடைத்தல்
தெற்கில் நகரங்களிலுள்ள பாடசாலைகள் தவிர்ந்த பெரும்பாலான பாடசாலைகளுக்கு குறிப்பாக வட - கிழக்கு பிரதேச பாடசாலைகளுக்கு பாட நூல்கள் உரிய காலத்தில் எல்லா மாணவர்க்கும் போதியளவில் வழங்கப்படுவதில்லை. ஆனால் தேசிய பாடத்திட்ட நடைமுறை என்ற வகையில் பாடப்புத்தகங்களின்றி கற்பித்தல் பொருத்தமற்றது. கலைச் சொற்கள், எண்ணக்கருக்கள், புள்ளிவிபரங்கள், விளக்கப்படங்கள் என்பன எவ்வித முரண்பாடுகளுமின்றி கட்டாயமாக கற்பிக்கப்படவேண்டுமென வற்புறுத்தப்படுகின்றது.
போதிய நூல்கள் வழங்கப்படாத நிலையில் ஆசிரியர் வகுப்பறைச் சூழலை ஒழுங்குபடுத்த முடிவதில்லை பாடக் கவன ஈர்ப்பை அதிகரிக்க முடிவதில்ல்ை; கற்பித்தலில் வினைத்திறனையும் பேண முடிவதில்ல்ை, மாணவர் கற்றலில் விளைதறனையும் உயர்த்த முடிவதில்ல்ை, மொத்தத்தில் ஆசிரியர் தமது வகுப்பறை மட்டத்தி. லான பணியை திருப்திகரமாக நிறைவேற்ற முடிவதில்ல்ை; வகுப்பறை முகாமைத்துவத்தையும் திருப்திகரமாக மேற்கொள்ள முடிவதில்லை. இதனால் சகபாடிகள், மாணவர், பெற்றோர், பாடசாலை நிர்வாகம் ஆகியோரின் விமர்சனத்திற்கு உட்படுகின்றனர். தமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத காரணிகளினால் அவர்கள் அல்லற்படுகின்றனர்.
49 / மாசின்னத்தம்பி

Page 35
வேண்டாத உள நெருக்கீடுகளுக்கும் உட்படுகின்றனர். அவர்களது பணி தொடர்பான நற் பெயரும் பாதிக்கப்படுகிறது.
தனியார் கல்வி நிறுவனங்கள்
எல்லாப் பாடங்களும் பெருமளவுக்கு எல்லா வகுப்பு மட்டத்தின. ருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணம் பெற்று போதிக்கப்படுகின்றன. பாடசாலைக்கு சமாந்தரமான கல்வி நிறுவனங்களாக அவை வளர்ந்து விட்டன. மாணவர், பெற்றோர், அரசாங்கம், பிற சமூக நிறுவனங்கள் ஆகிய அனைவரும் அவற்றின் தொழிற்பாடுகளை நிராகரிப்பதில்லை. ஆனால் அவற்றின் பாடநேர ஏற்பாடுகள், கற்பித்தல் முறை, பாடத்திட்டத்தை நிறைவு செய்தற்கான கால எல்லை, வகுப்பறைக்கான பெளதிக, மாணவர் எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடுகள், ஆசிரியர் தகைமை, முன்பயிற்சி, கற்றல் உளவியற் தேவைகள் போன்ற பல்வேறு காரணிகளை கண்காணிக்க, வழிப்படுத்த, முரண்பாடற்றனவாக்க, மாற்றியமைக்க தேசிய ரீதியிலோ, மாகாண மாவட்ட ரீதியிலோ எவ்வித ஏற்பாடுகளுமில்லை. எந்த சுற்று நிருபங்களும், கல்வி உளவியல் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளும் அவர்களது செயற்பாடுகளைப் பாதிப்பதில்லை.
ஆனால் முறைசார் பாடசாலைகள் தொடர்பாக இவை அனைத்தும் கடுமையாக கவனிக்கப்படுகின்றன. இந்த நிலையில் பாடசாலை ஆசிரியர்களுக்கான சுதந்திரம், வசதி, மாணவர் மீதான கட்டுப்பாட்டு உரிமை போன்ற அனைத்தும் மட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் ஆசிரியர்கள் நெருக்கடிகளுக்கு உட்படுகின்றனர். மாணவர் பாடசாலை வரவினை கட்டாயப்படுத்த முடிவதுமில்லை. பாடத்திட்டத்தை கட்டுப்படுத்த முடிவதுமில்லை. பாடத்திட்டத்தை கட்டுப்படுத்திய நேர அட்டவணைப்படி நிறைவேற்றி முடிப்பதும் சாத்தியமில்லை. இதனால் கூடியளவு உளநெருக்கடிக்கும், மன அழுத்தங்களுக்கும் உட்பட்டு விரக்தியடைகின்றனர். அவர்கள் தமது நற்பெயரையும், தொழில் சார் மதிப்பையும் பேண முடியாது அல்லற்பட்டு விரக்தியடைகின்றனர்.
சுற்று நிருபங்கள் கூட்டங்கள்
பாடசாலை தொடர்பான செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவன
வாக பல அரச சுற்று நிருபங்கள் விளங்குகின்றன. குறிப்பாக நிதிசார் விதிகள், ஒழுங்குமுறைகள் (FRR), நிர்வாகம் சார் விதிகள், ஒழுங்கு
ஆசிரிய முகாமைத்துவம் 150

முறைகள் (ARR) என்பன மிகவும் முக்கியமானவை. இவை பெரும்பாலானவை மிகப் பழையன; சில புதிதாக மாற்றம் செய்யப்பட்டவை.
ஆசிரியர்களது தொழில், வேதனம், விடுமுறை, மாணவர் மீதான உரிமை, மாணவர்க்கான தண்டனை, ஆசிரியர்க்கான முகாமைத்துவ மற்றும் மதிப்பீட்டு பணி தொடர்பான உரிமை போன்ற பலவற்றைப் பற்றியும் இச்சுற்று நிருபங்கள் தெளிவுபடுத்துகின்றன; எல்லையிடுகின்றன.
ஒரு வங்கி முகாமையாளர் தமது தொழில்சார் விதிகளை அறிந்திருப்பது போல், பாடசாலை ஆசிரியர்கள் இவை பற்றி அறிந்திருப்பதில்லை. தெளிவாக கூறுவதானால் இவை பற்றி போதியளவு கற்பிக்கப்படுவதில்லை.
தொழிலில் புதிதாக இணையும்போது முன் பயிற்சி (Pre-Service) வகுப்புக்களில் மேலோட்டமாக சில சமயங்களில் அவை அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால் நிறைவான ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கு அவை போதுமானதன்று.
கல்வியியல் கல்லூரிகள், பல்கலைக்கழக கல்வித் துறைகள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள், தேசிய கல்வி நிறுவன தொலைக்கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றில் ஆசிரிய கல்வி பாடத்திட்டங்களில் கல்வியின் சட்ட அம்சங்கள் (Legal Aspects of Education) போதியளவு போதிக்கப்படுவதேயில்லை. இத்தகைய அவர்களைப் பாதிக்கும் சட்ட அம்சங்கள் பற்றிய அறிவை அவர்கள் கொண். டிருப்பதில்லை.
இதனால் பாடசாலை மட்டத்திலும், கல்விஅமைச்சு மட்டத்திலும் அவர்களது உரிமை, வசதிகள், எதிர்கால வாய்ப்புக்கள், அவர்களுக்கான பாதுகாப்புக்கள் பற்றி எதுவும் தெரியாது. இதனால் தங்களுக்கு உரியவற்றைப் பெறாமலும், அதன் நன்மைகளைப் பயன்படுத்தாமலும் வாழ்கின்றனர். அவர்களது தன்னம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது; வேண்டாத பயம் நிறைந்துள்ளது; அதிக நிதி இழப்புக்களுக்கு ஆளாகின்றனர்; அவர்களது சுய கெளரவம் பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் பெரும்பாலும் அனைத்து ஆசிரியருக்குமான நெருக்கடியாகும். தொடரும் பிரச்சினையாகும். இதனால் அதிகளவு மனம் நொந்து போன தொழில் அணியினராக ஆசிரியர்கள் இயங்குகின்றனர். ஆசிரியர்களின் சுயதேடல் இன்மையும் இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது.
51 / மாசின்னத்தம்பி

Page 36
முகாமைத்துவ உபாயங்கள்
பாடசாலையின் உள்ளேயும், பாடசாலைக்கு வெளியே கோட்ட, வலய, மாகாண, மத்திய அலுவலக மற்றும் அமைச்சு மட்டத்திலும் முகாமை செய்யப்படுபவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர்.
முகாமைத்துவ கோட்பாடு மற்றும் உபாயங்கள் நுட்பங்கள் என்பவற்றுக்கு அமைவாகவே எந்த மட்டத்திலும் முகாமையாளர்கள் செயற்படுகின்றனர். பாடசாலை அதிபர், பணிப்பாளர் போன்றோர் அவ்வாறே தொழிற்பட வேண்டுமென வற்புறுத்தப்படுகின்றனர். இதனால் பல முறைசார் வழிமுறைகளும் முறைசாராத வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. நிலவுகின்ற பொருளாதார, சமூக, அரசியல் முறைமைக்கு அமைவாக அவர்கள் சிலவற்றை மாற்றியும், விலக்கியும் செயற்படுகின்றனர். அவர்களது நோக்கில் இவை சரியனவை.
ஆனால் பாடசாலை ஆசிரியர்களை பல சமயங்களில் அவை பாதிக்கின்றன. பகுதித்தலைவர், பிரதி அதிபர், உப அதிபர் பதவி. களும் சில சமயங்களில் பதில் அதிபர் பதவிகளும் தமக்கு தகுதிப்படி கிடைத்தல் வேண்டும் என்றும், ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை என்றும் பல ஆசிரியர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். தனிநபர் செல்வாக்கு, பணித்துறை உயர் நிலைத் தொடர்புகள், தொழிற்சங்க தொடர்புகள், பிரதேச உணர்வுகள் போன்ற பல காரணிகள் தமது பதவியுயர்வைத் தடை செய்வதாக குறைப்படுகின்றனர்.
இவற்றை இயன்றளவுக்கு ஒழுங்குபடுத்தி அவர்களது நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். வெளிப்படையான அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதானால் மனித உரிமை மன்றங்களில் ஆசிரியர்கள் முறையிடுவதைக் குறைத்துக் கொள்ளலாம்.
பாடசாலை வசதிகள்
பாடசாலைகள் பலவற்றில் ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள் பற்றிய அக்கறையும், செயற்பாடும் போதியளவில் இருப்பதில்லை. ஆசிரியர்அறை, வாகன தரிப்பிடம், கழிவறை, தேனீர்ச்சாலை, குடிநீர் வசதி, போன்ற எதுவுமே சீராக வழங்கப்படாத அனேக பாடசாலைகள் உள்ளன. கிராமப்புற சிறிய பாடசாலைகள், நகர்ப்புற சிறிய வறிய பாடசாலைகள் பலவற்றில் கற்பிக்கும் ஆசிரியர்கள் நாளாந்தம் இத்தகைய பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர்.
ஆசிரிய முகாமைத்துவம் /52

வசதிகளை வழங்காமல் எவ்வாறு பாடசாலை அவர்களது கடமைகளை வற்புறுத்த முடியும்? அது எவ்வகையில் நியாயமானது?
தொலை தூரத்திலிருந்து பயணம் செய்யும் ஆசிரியர்கள், குறிப்பாக பெண் ஆசிரியர்கள் அதிக துன்பப்படுகின்றனர். இதனால் அதிக நாட்கள் லீவு எடுக்கின்றனர். வயது முதிர்ந்த ஆசிரியர்கள், கர்ப்பிணியான ஆசிரியர்கள், நோய்க்குட்பட்ட ஆசிரியர்கள், உடல் ஊன. முற்ற ஆசிரியர்கள் போன்ற அசாதாரண நிலையில் உள்ளோர்க்குக் கூட எவ்வித வசதியும், பாதுகாப்பும் பாடசாலைகள் பலவற்றில் இல்லை. அதிகளவு துயரங்களுடன் அவர்கள் கற்பிக்கின்றனர். அவர்கள் அர்ப்பணிப்பும் வினைத்திறனும் கொண்டவர்களாக பணியாற்ற முடிவதே. யில்லை. வடகிழக் குப்பாடசாலைகளில் இன்று வரை இத்தகைய அசெளகரியங்கள் அகற்றப்படவேயில்லை.
பெற்றோர் ஆசிரியர் சங்கம், வெளிநாட்டில் வசிக்கும் பழைய மாணவர், அரச சார்பற்றநிறுவனங்கள் என்பவற்றின் உதவியைப் பெற்று பாடசாலைநிர்வாகம் இப்பிரச்சினைகளை தீர்க்கமுயல வேண்டும். இது கட்டாயமானதாகும்.
போக்குவரத்தும் இடமாற்றங்களும்
ஆசிரியர் பிரச்சினைகளில் தேசிய ரீதியாகவே முக்கியமானது இடமாற்றம் தொடர்பான பிரச்சினை தான். எனினும் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் இது ஒரு அரசியல், சமூக பிரச்சினையாகவும் வடிவெடுத்து பலமடைந்து விட்டது. அமைச்சும், தொழிற்சங்களும், கல்வித் திட்டமிடுவோரும் இணைந்து ஒழுங்கான இடமாற்ற செயற் திட்டங்களை வடிவமைக்க வேண்டியுள்ளது.
பல ஆசிரியர்கள், வசிப்பிடங்களிலிருந்து தொலைவில் உள்ள பாடசாலைகளுக்கு செல்கின்றனர். அதிக தொலைவானால் குடும்பத்துடன் சென்று வசிக்க வேண்டும். அவ்வாறன்றி 20 - 25 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பாடசாலைக்கு பெண் ஆசிரியைகள், வயது முதிர்ந்த ஆசிரியர்கள் வாரத்தில் ஐந்துநாட்கள் பயணம் செல்வதில் பல இடர்ப்பாடுகளை எதிர் கொள்கின்றனர். அயலிலிருந்து அதே பாடசாலைக்கு வருபவர்களை விட அதிக நேரம் பயணத்தில் செலவிடுகின்றனர். மேலதிக பணச் செலவு ஏற்படுகிறது. காலை மற்றும் மதிய உணவு உண்பதில் ஒழுங்கினம் ஏற்படுகிறது. இது அவர்களது உடல், உளநிலையைப் பாதிக்கிறது.
53 / மாசின்னத்தம்பி

Page 37
அவர்கள் குடும்பத்திற்கு உதவும் வாய்ப்பும் அற்றுப்போகிறது. துணைவருமானத்திற்கான பொருளாதார மூலங்களைக் கை விட வேண்டியுள்ளது. இத்தகைய பிரச்சினைகளை ஏற்று கற்பிக்கும் ஆசிரியர்க்கு உரிய வசதிகள், உதவிகள், ஊக்குவிப்புக்கள், பதவியுயர்வுக்கான வாய்ப்புகள், உயர் கல்வி வாய்ப்புக்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை.
பாடசாலை நிர்வாகம், பெற்றோர், கல்வித் திணைக்களம், போக்குவரத்து ஏற்பாட்டாளர் சங்கம் ஆகியோருடன் கலந்துரையாடி சீரான போக்குவரத்தினைநியாயமான கட்டணத்தில் ஏற்பாடு செய்தல் அவசியம். தங்கியிருப்பதற்கான வாடகை ஏதுமற்ற வதிவிட வசதி. களும், சுகாதாரமான சத்துள்ள மதிய உணவு பெறும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டால் அவர்கள் விரக்தியைக் குறைக்க முடியும். பணிக்கான ஈடுபாட்டை அதிகரிக்கலாம்.
நியாயமான பதவியுயர்வுகள், உயர்கல்வி வாய்ப்புக்கள் என்பவற்றை அவர்கள் பெறுதற்கான ஒழுங்கான புள்ளித் திட்டங்களை ஏற்படுத்தி, நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு உண்மையான நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஏற்படுத்தி அவர்கள் மன விரக்தியை அகற்றி உண்மை ஈடுபாட்டை கற்பித்தலில் ஏற்படுத்துவது அவசியம். அதை நிறைவேற்றாத வரையில் அவர்களிடம் வினைத்திறனையும், விளைதறனையும் எதிர்பார்க்க முடியாது.
நீடித்த வேலை நேர உடன்பாடு
பாடசாலை ஆசிரியர்கள் வருடத்தில் சராசரியாக 1200 மனித மணித்தியாலங்களே பணியாற்ற வேண்டியுள்ளது. இதில் இணைப் பாடத்திட்ட செயற்பாடுகளுக்குரிய நாட்களைத் தவிர்ப்பின் கற்பித்தலுக்கான நாட்களும் பாடவேளையும் போதா. ஒழுங்கான வரவு இல்லாத மாணவர், மெல்லக்கற்கும் மாணவர், உடல் உள பாதிப்புக்குட்பட்ட மாணவர் ஆகிய சிறப்புக்கவனம் தேவைப்படும் மாணவர்க்கு பரிகாரக் கற்பித்தல், மேலதிக கற்பித்தல் மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஆசிரியர்கள் ஒரு நாளில் மேலதிகமாக இரண்டு மணித்தியாலங்களேனும் மேனும் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு கற்பிப்பவர்களுக்கான மேலதிக உதவிகள், வசதிகள், மதிப்பு, முன்னுரிமை பாடசாலை மட்டத்தில் நேர்மையாக பல
ஆசிரிய முகாமைத்துவம் 154

சமயங்களில் வழங்கப்படுவதில்லை. இது எல்லாப் பாடசாலைகளுக்கும் உரிய குறைபாடல்ல. எனினும் பாடசாலை ஆசிரியர்களின் ஊக்கமின்மைக்கு இதுவும் காரணமாயுள்ளது. பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு ஏற்படும் நிதி, நேர விரயங்களைப் பாடசாலை முகாமை கண்டு கொள்வதில்லை. உள்ளார்ந்த பதவி உயர்வுகளும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
பாடசாலை முகாமையாளர் இவர்களுக்கென சிறப்பான ஏற்பாடு ஒன்றைச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். விளம்பரப்பலகை ஊடாகவும், ஆசிரியர் கூட்டங்களின் போதும் அவர்களுக்கு உரிய மதிப்பையும், ஊக்குவிப்பையும் உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யத்தவறும் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் நீடித்த நேரம் பணியாற்றுவதை விரும்புவதில்லை. ஒழுங்காக பாடசாலை வருவதையும் விரும்புவதில்லை. பாடசாலைக்கு வெளியேதான் தமது திருப்தி, முன்னேற்றம் என்பவற்றை எதிர்பார்த்து செயற்படுகின்றனர். இத்தகைய நிலை தொடர்வது மாணவர்க்கும், சமூகத்திற்கும் உகந்ததல்ல; இது விரும்பத்தக்க நிலைமையுமல்ல.
பெற்றோர் தொடர்பு
மாணவர் பிரச்சினைகளை, அவர்களது குடும்ப மட்டத்திலான தேவைகளை பெற்றோர் பலர் நிறைவு செய்வதில்லை. இது அவர்களது அறியாமை, பொருளாதார பலவீனம், குடும்ப சமநிலையின்மை போன்ற பல நிலைமைகளுடன் தொடர்புடையது. இவற்றை அகற்றுவதில், அதனடிப்படையில் மாணவர் - குடும்ப இடைவினையுறவை வளர்ப்பதில் ஆசிரியர் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்வதால் ஆசிரியர் தம் தொழிலை எளிமையாகவும், வினைத்திறனுடனும் ஆற்ற முடியும்.
இதற்கு ஆசிரியர்கள் அப்பாடசாலையின் பெற்றோருடனும், அப் பிரதேச சமூக நிறுவனங்களின் செயற்பாடுகளுடனும், உறுப்பினர்களுடனும் காலத்திற்குக் காலம் கலந்துரையாடுவதற்கு பாடசாலை நிர்வாகம் ஏற்பாடு செய்தல் வேண்டும். இதனால் தமது பிரச்சினைகளைத் தெளிவுபடுத்த முடியும். அப்போதுதான் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள், ஆளுமைச்சிதைவுகள் தொடர்பாக ஆசிரியர் வகைகூற கடமைப்பட்டவர்களாக முடியும். இதனைச் செய்யாது - அவர்கள் தம் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பளிக்காது
55 / மாசின்னத்தம்பி

Page 38
அவர்களைப் பாடசாலையின் தோல்விகளுக்காக குற்றம் சுமத்துவது மட்டும் நியாயமாகாது. இதனால் பல ஆசிரியர்கள் விரக்தியுடன் ஊக்கமின்றி பணியாற்றி வருகின்றனர்.
முன்னேற்றத்திற்கு உதவுதல்
பாடசாலை ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் மேல் உயர்வதற்கு உதவும் உயர் கல்வி, மேலதிக வருமானம் பெறும் வாய்ப்பு, மேலதிக சமூகத் தொடர்பு, பதவி உயர்வு போன்றன தொடர்பான விளம்பரங்களை ஆசிரியர்களுக்காக தேடிப்பெற்று உரியகாலத்தில், உரிய விபரங்களுடன் பாடசாலை முகாமை வழங்க வேண்டும். அதற்காக உரிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு செயற்பட வேண்டும்.
இத்தகைய சிந்தனை மற்றும் செயலூக்கம் பல பாடசாலை முகாமையாளரிடம் காணப்படுவதில்லை. இத்தகைய ஊக்குவிப்புக்கள் பற்றி அறியாத அல்லது அறிந்தும் நடைமுறைப்படுத்தாத பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தொழில் உயர்ச்சியை இழந்து விரக்தியுடன் வினைத்திறனின்றி பணியாற்றி வருகின்றனர்.
இத்தகைய பல்வேறு அறை கூவல்கள் மற்றும் பிரச்சினைகள் ஆசிரியர்களின் வினைத்திறனையும் விளைத்திறனையும் தொடர்ச்சியாகவே பாதித்து வருகின்றன.
பாடசாலை மட்டத்தில் இத்தகைய பல்வேறு நெருக்கடிகளை இலங்கையின் எல்லாப் பாடசாலைகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்கள் எதிர் கொள்கின்றனரெனினும், உண்மையில் மேலே விபரிக்கப்பட 'பலவீனமான ஆசிரியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இரண்டு தசாப்த காலமாக தேசிய விருத்தி வெளிச்சம் படாதுள்ள வடக்கு கிழக்குப் பிரதேச ஆசிரியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இவை தொடர்பாக தெளிவான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதனடிப்படையில் செயற்திட்டங்களும், அவற்றை உள்ளடக்கிய நீண்ட கால ஆசிரிய விருத்தித் திட்டங்களும் (Teacher Development Plans) தயாரிக்கப்பட்டு கட்டம் கட்டமாக, இடை நிலை மதிப்பீட்டு செய்முறைகளின்படி மாற்றியமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
ஆசிரிய முகாமைத்துவம் 756

இத்தகைய விளைவுகளை உறுதிப்படுத்தும் தொழிற்பாடுகள் மற்றும் செயல்கள் பற்றிப்பின்வருவோர் ஆழமாக கவனம் செலுத்த வேண்டும்.
ck
ஆசிரிய கல்விநிறுவனங்கள்-பல்கலைக்கழகங்கள் (திறந்த பல்கலைக்கழகம் உட்பட) தேசிய கல்வி நிறுவகம், கல்வி யியற் கல்லூரிகள்
மாகாணக்கல்வி அமைச்சு - பல்வேறு செயலமர்வுகளை ஏற்பாடு செய்து - சிறியளவில் - பிரச்சினைகளைக் கண்டறிய வேண்டும். பொருத்தமான பணிக்குழுக்களை அமர்த்தி செயற்திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்த (36o60ö(Бib தொழிற்சங்கங்கள் - தமது நிதிவளம், கட்டமைப்பு, ஆளணி, அதிகார முன்னுரிமை என்பவற்றைப் பயன்படுத்தி ஆசிரிய தொழிற்சங்கங்கள் ஆசிரிய நெருக்கடிகளைக் குறைப்பதற்: கான நடைமுறை சாத்தியமான திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அரச சார்பற்ற நிறுவனங்கள் - உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது சமூக அபிவிருத்தித் திட்டங்களுடனும், கல்வி, சுகாதார அபிவிருத்தித் திட்டங்களுடனும், பாடசாலை ஆசிரியர்களை இணைப்பதன் மூலம் அவர்களது நெருக்கடிகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தலாம். யுத்தம், இயற்கை அனர்த்தம் என்பவற்றால் பாதிக்கப்பட்ட இலங்கை போன்ற நாடுகளில் இத்தகைய நிறுவனங்களே சுதந்திரமும் சக்தியும் நிறைந்தனவாயுள்ளன.
ஊடகங்கள் - வானொலி, தொலைக்காட்சி பத்திரிகைகள் சஞ்சிகைகள், அரங்கு என்பன இத்தகைய ஆசிரிய அறைகூவல்களை சமூகத்திற்கு தெரியப்படுத்தி அவர்களது கவன யீர்ப்பை ஆசிரியர்கள் பால் அதிகரிக்க வேண்டும். தமது வளங்களில் ஒருபகுதியை அவர்களுக்கு ஒதுக்குவதற்கான, உதவுவதற்கான உளப்பாங்கினை அவர்களிடம் விருத்தி செய்தல் வேண்டும்.
இத்தகைய முயற்சிகள் ஒன்றிணைக்கப்படுமாயின் ஆசிரி
யர்களை ஊக்கம் நிறைந்த சமூகப் பொறுப்புமிக்க உயர் வாண்மைத்
57 / மாசின்னத்தம்பி

Page 39
துறையினராக உயர்த்த முடியும். பாடசாலைகளின் வினைத்திறனும், விளைத்திறனும் அதிகரிக்கும். சமூகம் பாடசாலைகளை சமூகத்தின் இன்றியமையாத சொத்துக்களாக ஏற்று அதனை வளர்க்கமுன் வரும். இதுவே பாடசாலைகளை வெற்றிகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்கான புதிய உபாயமும் வழிமுறையுமாகும்.
உசாத்துணை நூல்கள்
I. Brookover, B. Wilbur and Gottlier, David (1964) A Sociology of
Education, New York - USA
2 Raj Singh (2003) School Organization and Administration, New
Delhi - India
3. Hess, Juergen (Ed) (1999), Education and Social Change: Empirical Studies for the Improvement of Education in Eastern Africa, Bonn, Germany
4. Landis, H. Paul (1972) Sociology Ginn and Company, Lexington –
USA
King, Gail (1999), counselling skills for Teachers, Bulkingham-UK 6. Das.G. (1998) Rural Sociology, Delhi, India.
ஆசிரிய முகாமைத்துவம் 158

ஆசிரியர் நெருக்கடியில் பங்காற்றுதல்
மைதி நிலவுகின்ற நாடுகளில் ஆசிரியர்கள் எவ்வாறு தொழிற்படவேண்டும் அவர்களது வகிபங்கு யாது என்பது பற்றி தெளிவான ஏற்றுக்கொள்ளப்பட்ட அணுகு முறைகளும், நடைமுறைகளும் உள்ளன.
ஆனால் அண்மைக்காலமாக உலகம் முழுதும் அசாதாரணமான நிலைமைகள் அதிகரித்து வருகின்றன. நெருக்கடிகளும் சமூக வாழ்வுக்கான அச்சுறுத்தல்களும் பல நாடுகளில் அமைதியின்மையை உருவாக்கியுள்ளன. இவை இரு வகைப்பட்டனவாயுள்ளன.
இனமுரண்பாடுகளும், குடிமையியல் குழப்பமும், யுத்தங்களும், தொடர்ந்து செல்கின்றன. 1990 களிலிருந்து 42 நாடுகள் முரண்பாடுகளினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இவை பற்றிய சர்வதேசக் கருத்தரங்கு 2000இல் பாரிஸ் நகரில் நடைபெற்றது. உலக வங்கியும், கல்வித் திட்டமிடலுக்கான சர்வதேச நிறுவனமும் (IEP) இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. இங்கு இத்தகைய பிரதேசங்களில் கல்வியை மீளவும் வடிவமைப்பது மற்றும் முன்னேற்றுவது பற்றிப் பரவலாக விவாதிக்கப்பட்டது.
90 பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மகாநாட்டில் இலங்கை, கொங்கோ, ஜவரி கினியா, சூடான், திமோர் போன்ற பாதிக்கப்பட்ட பல நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கல்வி முன்னேற்றம் தொடர்பான பல புதிய புனரமைப்பு ஆலோசனைகளை இங்கு தெரிவிக்கப்பட்டன.
59 / மாசின்னத்தம்பி

Page 40
2. 2004 டிசம்பர் 26 இல் தென்னாசியாவில் இடம் பெற்ற சுனாமி கடல் அனர்த்தங்களும் இப் பிரதேசங்களை முழுதாகவே நாசம் செய்து விட்டன. இந்தோனேசியா, மலேஷியா, இந்தியா, வங்காளதேசம், இலங்கை, மாலைதீவு போன்ற பல நாடுகள் கரையோரங்களை இழந்து விட்டன. கரையோரக் கிராமங்கள், வளங்கள், பொருளாதார, சமூக கட்டமைப்பு போன்றன அனைத்துமே அழிந்துபோய்விட்டன.
இலங்கையின் கரையோரங்களும் மிகப் பெரிய பேரழிவுக்குட்பட்டு விட்டன. இதனால் பொருளாதாரக் கட்டுமானம் முற்றாகவே சிதைந்து விட்டது. இதன் தொடர்ச்சியாக கல்வி செயலமைப்பு முற்றாகவே பாதிக்கப்பட்டு விட்டது.
இப்பிரதேசங்களும் யுத்தத்தின் பாதிப்புக்குரிய பிரதேசங்கள் போலவே கருதப்படத்தக்கன. இலங்கை யுத்தத்தினால் இரு தசாப்தங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. சுனாமி அனர்த்தம் இப் பிரதேசத்தின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இத்தகைய இருவகைப் பாதிப்புக்களுக்கு முட்பட்ட பிரதேசங்களில் கல்விச் செயற்பாடுகளை முன்னேற்றுதற்கு பல அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
இவற்றில் ஆசிரியர்களின் வகிபங்கு, அவர்களது முகாமைத்துவம் தொடர்பான அம்சங்கள் முக்கியத்துவமுடையன. இவை தொடர்பான அடிப்படைகளைத் தெளிவாக விளங்கிக் கொள்வதும், ஒழுங்கான அணுகுமுறையின்படி அவற்றை முன்னேற்றுவதும் அவசியமாகிறது.
எந்தவொரு நாட்டின் கல்விச் செயலமைப்பிலும் அரசாங்கம், உதவி வழங்கும் நாடுகள், ஆசிரியர்கள் மாணவர்கள், சமூக மக்கள் என்போர் பொறுப்புதாரர்களாக காணப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்களை முன்னேற்றுதற்கு ஆசிரியர்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தவேண்டுமென சர்வதேச மகாநாட்டில் (பாரிஸ் 2003) உடன்பாடு காணப்பட்டது. ஆசிரியர்களைத் தெரிவுசெய்தல், பொருத்தமான கல்வி மற்றும் பயிற்சியை வழங்குதல், மேற்பார்வை செய்தல், கண்காணித்தல், கல்வித் தரத்தைப் பேண உதவியளித்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் சார்ந்த பிரச்சினை. களிலும் கவனம் செலுத்தி சிறப்புக்குழு நிலையில் ஆராயப்பட்டது.
ஆசிரிய முகாமைத்துவம் / 60

பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் தனித் தன்மையுடைய கலாசார சமூக நிலைமைகளுடன் முரண்படாதவாறு ஆசிரியர்கள் தொழிற்படுவதற்கு ஏற்ற வகையில் தரமான ஆசிரியர் கல்வியை வழங்குவது தொடர்பாகவும் ஆழமான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு பொறுப்புதாரர்களும் பல ஆய்வுக் குழுக்களாகப் பிரிந்து ஆராய்ந்தனர். இந்த ஆய்வுக் குழுக்கள் பின்வரும் அம்சங்களை இனங்கண்டிருந்தனர்.
யுத்த மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் இப் பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பலர் இங்கிருந்து வெளியேறி வருகின்றனர். வெளிநாடுகளுக்கும், பாதுகாப்பான வேறு பிரதேசங்களுக்கும் சென்று விடுகின்றனர். இதன் காரணமாக மோசமான ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. இருபது வருட யுத்தம் நடைபெற்ற இலங்கையிலும் பதினைந்து வருட குடியியல் யுத்தம் நடைபெற்ற லெக்ரோரியாவிலும் இப்பிரச்சினை இனங்காணப்பட்டது.
* பல ஆசிரியர்கள் அகதிகளாகி விட்ட நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிகழ்ச்சித் திட்டங்களில் ஆசிரியர்களாக பணியாற்றினர். அரச சார்பற்ற நிறுவனங்கள் அத்தகைய ஆசிரியர்களுக்கு அவசியமாகவிருந்த பயிற்சியை வழங்குவதன் மூலம் பொருத்தமான வகையில் கற்பித்தல் பணியில் அவர்கள் ஈடுபடுவதற்கு உதவின.
* இத்தகைய பிரதேசங்களில் 65% மான ஆசிரியர்கள்
கற்பிக்கும் தகுதியற்றவர்களாயிருந்தனர். தகுதியற்ற ஆசிரியர்கள் கற்பிப்பதன் பாதக விளைவுகளுக்கு பாதிப்புக்குப் பிந்திய பிரதேச மாணவர் உள்ளாகியிருந்தனர்.
* பல மாதங்களாக ஆசிரியர்களின் சம்பளங்கள் ஒழுங்கான முறையில் வழங்கப்பட்டிருக்கவில்லை. அதனால் ஆசிரியர்கள் கற்பித்தலை விடவும் பணவருமானம் தரும் வேறு முயற்சிகளில் நாட்டம் செலுத்தினர். இது ஆசிரிய பணியை ஈடுபாட்டுடன் மேற்கொள்வதற்குத் தடையாயிருந்தது.
இலங்கையின் நிலைமைக்கும் இவை அனைத்தும் பொருந்தும் என்பதை கவனத்திற்கொள்ள முடியும்.
61 / மாசின்னத்தம்பி

Page 41
இந்த மகாநாட்டில் பல ஆய்வுக்குழுவினரும் ஆசிரியமுகாமைத்துவத்தை இத்தகைய பிரதேசங்களில் மேம்படுத்துவதற்கு ஏற்றதான பல அம்சங்களை இனங் கண்டு சுட்டிக்காட்டினர்.
1) மாணவர் குழுவினர் என்ற ஆய்வுக் குழுவினர் பின்வருவனவற்றை
சிபார்சு செய்திருந்தனர்.
i.
ஆசிரியர் நடத்தை தொடர்பான விதிமுறைகளை உருவாக்குதல்
ஆசிரியர்களுக்கென சிறப்பான சில அடிப்படை விதிகள் உருவாக்கப்படல் வேண்டும். இவற்றை சமூக அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர், கல்வியமைச்சைச் சார்ந்தவர்கள் போன்ற பலரும் ஏற்று ஆதரவு வழங்குதல் வேண்டும். கல்வியமைச்சு இவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏற்கவேண்டும்
ஆசிரியர்களின் தின வரவு (attendance) மிகவும் முக்கியமானது. இது நாளாந்தம் கண்காணிக்கப்படல் வேண்டும்.
பரீட்சைகளுக்குரிய கட்டணங்களைச் செலுத்துமாறு ஆசிரியர்கள் மாணவர்களைக் கோரக் கூடாது.
ஆசிரியர்கள், அன்புடனும், மிருதுவாகவும், கவனிப்புணர்வுடனும் (caring) தொழிற்பட வேண்டும்.
i) பிரதேசம் முழுவதும் அதிக எண்ணிக்கையான ஆசிரியர்கள்
பொருத்தமான வகையில் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். இதில் கல்வியமைச்சு மாத்திரமன்றி, சமூகமும் பொறுப்புணர்வுடன் செயற்படல் வேண்டும்.
ii) போதிய பயிற்சியும் தகுதியும் கொண்ட ஆசிரியர்கள்
கிடைக்கச் செய்தல் அவசியம். பின்வரும் வகையிலான ஆசிரியர்களை வழங்கவேண்டும்.
- ஆரம்பப்பாடசாலை ஆசிரியர்கள் - தொழிற் கல்விப்பாட ஆசிரியர்கள் - எழுத்தறிவு நிகழ்ச்சித்திட்ட ஆசிரியர் - முறைசாராக்கல்வி நிகழ்ச்சித்திட்ட ஆசிரியர்.
ஆசிரிய முகாமைத்துவம் / 62

இவர்களுக்கு ஒழுங்குமுறையில் வடிவமைக்கப்பட்ட உளவியற் பயிற்சி(PsychologicalTraining) வழங்கப்படல் வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களை, குறிப்பாக உளநெருக்கீடுகளுக்கு உட்பட்ட மாணவர்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு கற்பிப்பதற்கு இது அவசியமாகவுள்ளது.
(2) ஆசிரியர் குழுவினர் என்ற இரண்டாவது ஆய்வுக் குழுவினர் தமது கலந்துரையாடல் மூலமாக பின்வருவன அவசியம் என இனங் கண்டு சிபார்சு செய்திருந்தனர்.
i) ஆசிரியத் தொழிலுக்கான சம்பளங்களையும் பணிநிலைமை (conditions) களையும் முன்னேற்றுதல் அவசியம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகள் போன்ற பிரதேசங்களில் போதியளவு வேதனம் வழங்கப்படாமையினாலும், சமூக ரீதியிலான நன்மைகள் கிடையாமையினாலும், கற்பித்தல் பணியிலிருந்து விலகி வாகனச்சாரதிகளாகவும், சர்வதேச நிறுவனங்களில் மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கினர். பாட நூல்கள், கற்பித்தல் சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் கிடையாமையினாலும் இத்தொழில் தொடர்பான ஈடுபாட்டையும் இழந்தனர். இவர்களது தொழிண்மையை சட்டபூர்வமான முறையில் அங்கீகரிப்பதும், மரியாதை செய்வதும் அவசியம். இதற்கு அரசாங்கம் போதிய உதவியும் ஆதரவும் வழங்க வேண்டும்.
i) ஆசிரிய பயிற்சிக்கான மதிப்பை உறுதி செய்தலும் சான்றிதழ்ப்படுத்தலும் நெருக்கடியான காலப்பகுதிகளில் அரச சார்பற்ற நிறுவனங்களில் நிர்வகித்த அகதிமுகாம்களில் பல ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் பயிற்சி வழங்கப்பட்டபோதிலும் அவை அங்கீகரிக்கப்படவுமில்லை, அவற்றுக்கு சான்றிதழ் வழங்கப்படவுமில்லை. இவற்றை ஒழுங்குபடுத்தி அரசாங்கம் அங்கீகரித்தல் வேண்டும்.
i)ஆசிரியர் நியமனம்: அதிகளவு எண்ணிக்கையிலான பெண் ஆசிரியர்கள் தொழிலில் அமர்த்தப்படல் வேண்டும். பால்வகை (Gender) தொடர்பாகவும் இனத்துவம் (ethnicity) தொடர்பாகவும் ஒளிவு மறைவற்ற சமத்துவமான நியமன செயன்முறை பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
63 / மாசின்னத்தம்பி

Page 42
1V) வளங்கள்: கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு ஏதுவாக, கற்பித்தல் துணைச்சாதனங்கள், உபகரணங்கள், பாடநூல்கள் போன்றன போதியளவுக்கு ஆசிரியர்களுக்கு கிடைக்கச் செய்தல் வேண்டும். (3) சமூகங்களுக்கான குழுவினர் என்ற ஆய்வுக் குழுவினர் வேறு பல விடயங்களிலும் கவனம் செலுத் தினர். அவை பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தன.
i) உள்ளுர் ஆசிரியர்களை நியமித்தல்: தமது சமூகத்தையும் அதன் உறுப்பினர்களையும், உள்ளுர் மொழிகளையும் நன்கு அறிந்தவர்களாயும், சமூக மக்களின் நம்பிக்கையை எளிதாக பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாயுமுள்ளவர்களே இத்தகைய பிரதேசங்களில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவதற்குப் பொருத்தமானவர்கள். சமூகத்தவரின் கருத்துக்களை பிரதிபலிக்கக் கூடிய சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யக் đơniņu (0) fib(8mpTiT sig,ớfffuu sÉgpj6IJ60Tb (Parent Teacher Organization) நிறுவப்பட்டு அந் நிறுவனம் உள்ளுர் ஆசிரியர்களை தெரிவு செய்யும் செயன் முறையில் பங்கேற்பது அவசியம்.
i) ஆசிரிய பயிற்சி. நன்கு பயிற்றப்பட்டவர்களினால் மாத்திரமே உள்ளுர் மொழிகளில் விடயங்களை மிகச்சரியாகவும், தெளிவாகவும் தெரிவிக்க முடியும். இதனால் பயிற்சி முறை அவசியமாகிறது.
ii) கற்றலுக்கான இடவசதி: பாதுகாப்பானதும் போதியளவானதுமான இடங்களில் செயல்முறை சார்ந்த கல்வியை வழங்கவேண்டும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவைக்கேற்றளவு பாடசாலைகளை சமூகம் ஒன்று சேர்ந்து நிர்மாணித்தல் வேண்டும் சிதைவடைந்திருந்தால் மீளவும் நிர்மாணிக்க வேண்டும். 4) உதவி வழங்குநர் குழுவினர் என்ற மற்றொரு ஆய்வுக் குழுவினர்
பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தினர்.
1) நடைமுறைப்படுத்தும் திட்டம்: குடிமக்கள் சமூகம், அரசாங்கம், உதவி வழங்குநர்கள் ஆகிய எல்லாப்பகுதியினரும் ஒன்றிணைந்த வகையில் ஆசிரியர்களுக்குரியதான நீண்டகாலத்திற்குரிய செயற்படுத்தும் திட்டங்களைத் தயாரிக்க
ஆசிரிய முகாமைத்துவம் / 64

2)
3)
வேண்டும். அவற்றில் குறுங்காலத்திற்கான தந்திரோபாய திட்டங்கள் (Strategic Plans) பலவும் உள்ளடக்கப்படுதல் அவசியம்.
ஆசிரியர்களுக்குரிய ஆதரவு: நெருக்கடியான பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளங்களை தொடக்கநிலையில் உதவி வழங்குநர்கள் வழங்குவர். அதன் பின்னர் அரசாங்கம் அவற்றை வழங்குதற்குரிய ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
அவசரமான தீர்வுகள்: கல்வி செயலமைப்பு சிதைவடைந்துள்ள நிலைமை. உதவி வழங்குநர் அவற்றை மீளவும் தொடங்குவதற்கு அவசியமான திறன்களை கட்டி எழுப்புதற்கு (Capacity Building) உதவுவர். தேவையான நிதிவளங்களையும் வழங்குவர். அரசாங்கம் தாமாக நிதியிடும் ஆற்றலைப் பெறும் வரை அத்தகைய உதவிகளை வழங்குநர் வழங்குவர்
(5) கல்வியமைச்சினரின் குழுவினர் என்ற குழுவினரும் கலந்துரையாடி
பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
i)
ii)
விழிப்புணர்வுப் பிரச்சாரம்: தாம் கல்வியியலாளர் என்பதையும் தேச நிர்மாணிகள் என்பதையும் ஆசிரியர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தமது வகிபங்கிற்கு ஏற்றதான பொறுப்பினை ஏற்றுக் கொண்டு அதற்கேற்பதியாகம் செய்தல் வேண்டும். வளங்கள்: கல்வி எந்தவொரு நாட்டிலும் தேசிய முன்னுரிமையாகக் கருதப்படுவதால், வளங்கள் நாட்டுக்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் இத்துறை நோக்கிநகர்த்தப்படல் வேண்டும். சமூக மட்டத்திலிருந்து பல்வேறுபட்ட மட்டங்களிலும் போதியளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ii)நியமனமும் பயிற்சியும்; ஆசிரியர்களை அவர்களது அனு
பவங்கள், பயிற்சி, என்பவற்றுக்கேற்ப வழங்கப்படல் வேண்டும். நாட்டில் யுத்தம், இனக்குழப்பம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பி வந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
65 / மாசின்னத்தம்பி

Page 43
முரண்பாடுகளுக்குப் பிந்திய புனரமைப்பில் ஆசிரிய முகாமைத்துவம்
இலங்கை போன்ற முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கல்விப் புனரமைப்பை எவ்வாறு மேற்கொள்வதென்பது, முரண்பாடுகளுக்குப் பிந்திய நிலைமை எவ்வாறு உள்ளது என்பதில் தங்கியிருப்பதில்லை. பதிலாக, முன்பு அந்தக் கல்வி முறைமை எவ்வாறு இருந்தது என்பதையும் பொறுத்து அமைகிறது.
ஏற்கனவே ஒரு நாட்டின் கல்வி முறையில் எண்ணிக்கையில் குறைந்தளவு பாடசாலைகளும் மிகவும் பலவீனமான ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளும் இருந்திருந்தால், முரண்பாடுகளுக்குப்பின் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி விட முடியாது.
எல்லா நாடுகளிலும் முரண்பாடுகளுக்குப் பின்பு ஒரே மாதிரி முன்னேற்றங்களை ஏற்படுத்தி விடமுடியாது. அங்குள்ள கல்வி முறையில் தரநிலையைப் பொறுத்தே முன்னேற்றங்களை உருவாக்க (P92 ULUD.
பிரச்சினைகள்
முரண்பாடுகளுக்குப் பிந்திய பிரதேசத்தில் ஆசிரிய முகாமைத்துவம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன.
i) ஆசிரியர்களை இனங்காணலும் தெரிவு செய்தலும்:
முரண்பாடுகளுக்குப்பிற்பட்ட பிரதேசங்களில் பாடசாலைக்குச் செல்லாமல் விடுபட்டுள்ள மாணவர் தொகை, ஒவ்வொரு வகுப்பிலும் அனுமதிக்கப்படக்கூடிய மாணவர் எண்ணிக்கை, எத்தனை தடவை பாடசாலை இயங்கும் முறை உள்ளது போன்ற காரணிகளைப் பொறுத்தே எத்தனை ஆசிரியர்கள் தேவைப்படுவர் என்பதைத்தீர்மானித்தல் வேண்டும். தகுதிமிக்கவர்கள், தகுதி குறைந்தவர்கள் ஆண் ஆசிரியர், பெண் ஆசிரியர் போன்றோரிடமிருந்து எவ்வாறு பொருத்தமான ஆசிரியர்களைத் தெரிவு செய்தல் வேண்டும் என்பது பிரச்சினையாகும்.
பல்வேறுபட்ட சமூக, இன, பிரிவு மக்களும் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களைப் பிரதி நிதித்துவம் செய்யும்
ஆசிரிய முகாமைத்துவம் 166

வகையிலும் ஆண்களிலிருந்தும் பெண்களிலிருந்தும் ஆசிரியர்களைத் தெரிவுசெய்துநியமிக்க வேண்டும். பெண் ஆசிரியர்களை ஈர்ப்பதற்கென விஷேட ஊக்குவிப்புக்கள் வழங்குவதும் அவசியம். ஆகக் குறைந்தளவான ஆசிரியர் தகைமையை உறுதிசெய்வதற்கான தேர்வு ஒன்றைநடாத்தி அதில் சித்தியடைவோரை மாத்திரம் தெரிவு செய்தல் வேண்டும்.
i) ஆசிரியர் பயிற்சி:
தகுதிமிக்க, தகுதி குறைந்த ஆசிரியர்களுக்கு இத்தகைய யுத்தம், இயற்கை அனர்த்தம் என்பவற்றினால் பாதித்து உளரீதியில் பாதிக்கப்பட்டு அசாதாரண மன அழுத்தத்துடனும் விரக்தியுடனும் வசதிகளின்றி குடும்ப ஆதரவு ஏதுமின்றி வாழுகின்ற பிள்ளைகளை பொறுமை ஈடுபாடு என்பவற்றுடன் அணுகி, அவர்களுக்கு ஏற்ற வகையில் கற்பிப்பது அவசியமாகின்றது. இதற்கு ஏற்றதாக ஆசிரியர் பயிற்சி வழங்கப்படல் வேண்டும். இத்தகைய பயிற்சிக்கான நிகழ்ச்சித் திட்டம் பொருத்தமான உள்ளடக்கத்தையும், கற்பித்தல் முறையியலையும் கொண்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய பயிற்சி சேவைக்காலப் பயிற்சியாகவே அமைதல் வேண்டும். பணியாற்றுதலிலிருந்து விலகாமலும் விருப்பில் செல்லாமலும் இத்தகைய பயிற்சியை வழங்குதல் வேண்டும். அத்துடன் தொடர்ச்சியான பயிற்சியாகவும் இது அமைதல் வேண்டும். இத்தகைய பயிற்சியின் முன்னேற்றத்தையும் பயன்களையும் உறுதி செய்வதாயின் அடிக்கடி பயிற்சிக்காலத்திலான அவர்களின் கற்பித்தல் மேற்பார்வை செய்யப்படல் வேண்டும்.
i)ஆசிரியர் வேதனம்:
பணியாற்றுதற்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண வடிவிலான மற்றும் பொருள் வடிவிலான ஊக்குவிப்புக்களையே இங்கு வேதனம் என்று கருத வேண்டும். பொதுவாகவே எல்லா நாடுகளிலும் கல்விக்கான வரவு - செலவுத் திட்டத்தில் ஆசிரியர் சம்பளக் கொடுப்பனவுகளே மிக அதிகமாக காணப்படுவதுண்டு. பொதுவாக அவை 80% - 90% வரை காணப்படுகின்றது.
இத்தகைய புனரமைப்புப் பிரதேசங்களில் கற்பிப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர் எண்ணிக்கை தீர்மானிக்கப்
67 / மாசின்னத்தம்பி

Page 44
பட்ட பின்பு தான் எவ்வளவு சம்பளம் எவ்வாறான வடிவில் பொருள் பணம் வழங்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். அரசாங்கம் எந்தளவு ஒதுக்கீட்டைத் தாங்கிக் கொள்ள முடியும் என்பதும் தீர்மானிக்கப்படல் அவசியம். சம்பளம் கொடுப்பதற்கு சில சமயம் போதியளவு நிதி கிடையாதிருக்கலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில், உணவு வசிப்பிடம், நிலத்துண்டு, போன்ற ஏனைய மாதிரி வெகுமதிகளை வழங்குவது பற்றியும் பரிசீலனை செய்வது சிறந்தது. iv) ஆசிரிய பங்கீடு
இலங்கைத்தீவின் எல்லாப் பகுதிகளும் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு விட்டன. எல்லாப் பகுதிகளுக்கும் ஆசிரியர் தேவைகள் உண்டு. இதனால் எவ்வாறு எல்லாப் பிரதேசங்களுக்கும் ஏற்ற அளவில் பொருத்தமான முறையில் ஆசியர்களைப் பங்கீடு செய்து பணியை ஒதுக்குவது என்பது முக்கியமானது. மிகவும் பின் தங்கிய வசதிகளற்ற, உள் ஒதுக்கியுள்ள பிரதேசங்களில் சென்று கற்பிப்பதற்கான தூண்டுதல்களை வழங்குதல் வேண்டும். அத்தகைய பிரதேசங்களில் பணியாற்ற முன்வருவோர் தொடர்பாக பின்வரும் நடைமுறைகளைக்கையாள முடியும். * அவர்களது பணிக்கு சிறப்பான தொழிற் குறியீடு / தொழில் அடையாள இலக்கம் வழங்கப்படல் வேணடும். அதற்கு சிறப்பான மதிப்பும் அங்கீகாரமும் தேசிய ரீதியில் வழங்கப்படல் வேண்டும். * வழமையான அடிப்படைச் சம்பளத்துடன் மேலதிகமான ஊக்குவிப்புப்படி தீர்மானிக்கப்பட வேண்டும் பிரதேச நிலைமையும் வசதிகளும் மோசமானதாயிருப்பின் அப்பிரதேச ஆசிரியர்க்கான ஊக்குவிப்புப்படி ஏனைய ஊக்குவிப்புப்படித் தொகையை விட உயர்ந்ததாயிருத்தல் வேண்டும். * இவர்கள் இப்பிரதேசங்களில் பணியாற்றும் காலத்திலான சம்பள அதிகரிப்பு அளவு வழமையான அளவினை விட உயர்ந்ததாக இருத்தல் வேண்டும்.
* அவர்கள் தங்கியிருப்பதற்குரிய வதிவிடங்கள், வீடுகள் குறைந்த வாடகையில் அல்லது வாடகை ஏதுமின்றி வழங்கப்படல் வேண்டும். நிரந்தரமாக அங்கு இருப்பதற்கு உடன்படு
ஆசிரிய முகாமைத்துவம் / 68

வாராயின் அவர்கள் அதன் உரிமையாளராவதற்கு உரிய திட்டத்தையும் நிர்மாணிக்க வேண்டும். இங்கு கற்பிக்கும் காலத்திற்கான மானிய அட்டை (Subsidy Card) வழங்கப்படல் வேண்டும். உணவு, உடை, மருந்து, அத்தியாவசிய போக்குவரத்து என்பன தொடர்பாக அவர்கள் பணம் செலவிடும்போது, ஆசிரியர்கள் இந்த அட்டையைப் பயன்படுத்தி ஐம்பது சதவீத கட்டணக் குறைப்பை மானியச் சலுகையை பெறும் வசதியையும் வழங்க முடியும்.
அவர்களது பிள்ளைகள் படிப்பதற்கான சிறந்த பாடசாலைகளிலான அனுமதியில் முன்னுரிமை வழங்க வேண்டும் இவர்களுக்கென ஒரு அனுமதிப் பங்கு (Quota basis) முறையை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த முடியும்.
குறிப்பிட்ட வருடங்கள் இத்தகைய பிரதேசங்களில் தொடர்ச்சியாக, அதிக நாட்கள் (லீவு) விடுப்பு எடுக்காமல், குறிப்பிட்டளவு வருடங்களுக்குப் பணியாற்றுவோருக்கு கல்வி முன்னுif60LD& TIT6öpfgbp (Education Priority Certificate) 6ypifiggb6i வேண்டும். முதுகல்வி மாணி போன்ற ஆசிரிய உயர் கல்வி தொடர்பாக அச்சான்றிதழ் வைத்திருப்போர் முன்னுரிமை பெறுதற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.
இத்தகைய சிறப்பு நடைமுறைகளைக் கையாளுமிடத்து பின்தங்கிய, நெருக்கடிக்குள்ளாகிய பிரதேசங்களில் பொருத்தமான ஆசிரியர்களை ஏற்ற முறையில் பகிர்ந்தளிக்க முடியும். ஆசிரியர்களை ஒழுங்காக வழங்காத நிலையில், ஏனைய பெளதீக மற்றும் கல்விசார் உட்கட்டமைப்பு புனரமைப்பின் மூலம் எதிர்பார்க்கும் இலக்குகளை நிச்சயம் அடைய முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சான்றிதழ்ப்படுத்துதல் இப்பிரதேசங்களில் மக்களுடன் தொடர்பு கொள்ளுதல், பிள்ளைகளை அணுகுதல், பிள்ளைகளைப் புரிந்து கொள்ளல், மிகவும் பற்றாக்குறையான செம்மையற்ற கற்பித்தல் சாதனங்களுடன் கற்பித்தல், பாதுகாப்பும் வசதியும் குறைந்த பெளதிக, சமூக சூழலில் பணியாற்றுதல் போன்ற பல்வேறு விடயங்களை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
69 / மாசின்னத்தம்பி

Page 45
இவை தொடர்பான அறிவை மேம்படுத்தவேண்டும். வேண்டப்படுகின்ற சிறப்பான ஆற்றல்களையும் திறன்களையும் ஒழுங்குபடுத்த வேண்டும். உடன்பாடான - நேரிய மனப்பாங்கை விருத்தி செய்தல் வேண்டும்.
இதற்கென முன்னாரம்பப்பயிற்சியை புதிதாக இத்தொழிலில் அமர்த்தப்படுவோருக்கு வழங்குதல் வேண்டும். ஏற்கனவே ஆசிரியர்களாக இருப்போருக்கு போதியளவான சேவைக்கால புத்துக்கற் பயிற்சியை வழங்க வேண்டும். இப்பயிற்சியில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்ளச் செய்வதற்கும் இதில் இடையீடு ஏதுமின்றி தொடர்ச்சியாக ஊக்கத்துடன் ஈடுபடுவதற்கும் இத்தகைய பயிற்சி வகுப்பில் பங்கேற்பதை உறுதிப்படுத்தும் தகைமைச் சான்றிதழ்களை அங்கீ. காரமுடைய வகையில் வழங்குதல் வேண்டும். இவற்றை அவர்களது அங்கீகரிக்கப்பட்ட தகைமையாக்குதற்கான சட்ட ஏற்பாடுகளும் மேற் கொள்ளப்படுதல் வேண்டும். இவற்றை அவர்களது பதவியுயர்வுக்கான ஏற்புடைத்தகைமையாகவும் பரிசீலிக்க வேண்டும்.
சில ஆசிரியர்கள், இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், போன்ற அயல் நாடுகளில் இடம் பெயர்ந்தபோது வாழ்ந்திருப்பர். அக்காலப்பகுதியில் அப் பிரதேசங்களில் இத்தகைய பயிற்சிகளை எவரேனும் பெற்றிருப்பின் அவற்றையும் அங்கீகரிப்பது நன்று.
அயல் நாடுகளுடனும் நன்கு வளர்ச்சியடைந்த இலங்கைக்கு உதவி வழங்க முன்வருகின்ற ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், நோர்வே, ஜேர்மனி அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் இணைந்தும் இலங்கை இத்தகைகய அனர்த்தங்களுக்குப் பிற்பட்ட பிரதேசங்(b6ffsi) disiblfgig56) (Teaching in Post disaster areas) Glgb/TLiruit GOT விஷேடித்த கல்வியை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
திட்டமிடலும் ஒருங்கிணைப்பும்
யுத்தம், இயற்கை அனர்த்தம் என்பவற்றினால் பாதிக்கப்பட்டு தமது வழமையான கட்டமைப்பையும், ஒழுங்குமுறைகளையும், செயற்பாடுகளையும் இழந்திருக்கும் பிரதேசங்களில் கல்வியை மீளவும் புனரமைப்பதற்கு பெரும் எண்ணிக்கையிலான சர்வதேச மற்றும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களும், ஏனைய சர்வதேசிய முகவர்களும் முனைப்புடன் ஈடுபடும் போக்கு நிலவுகிறது.
ஆசிரிய முகாமைத்துவம் 170

இத்தகைய நிலைமையில் கல்வியமைச்சு புதிய தந்திரோபாய திட்டம் (Strategic Plan) ஒன்றை தயாரிக்க வேண்டும். ஏனெனில் ஒழுங்குமுறையானதும் உறுதியானதுமான செயற்பாடுகளை இத்தகைய பிரதேசங்களில் மேற்கொள்வதானால், அரசாங்கமும் அதனால் ஏற்றுக் கொள்ளப்படும் சட்டபூர்வமான தன்மையும் அவசியமாகின்றது. அல்லது நெருக்கடிகளினால் சமநிலை இழந்திருக்கும் பிரதேசங்களில் திட்டவட்டமான செயற்பாடுகளை உருவாக்குவது கடினமாகும். அத்தகைய திட்டம் ஒன்றில் பின்வருவன கவனிக்கப்படுதல் வேண்டும்.
i) அரசின் வகிபங்கும், ஆசிரியர் கல்வி தொடர்ப, அரசாங்
கத்தின் முன்னுரிமையும்
i) அரச சார்பற்ற நிறுவனங்களின் வகிபங்கு
ii) சர்வதேச முகவர்களின் வகிபங்கு
இத்தகைய நிலைமைகளில் கல்விக்கென ஒரு முகவரை அல்லது பலரை ஒன்றிணைத்த முகவர் குழு ஒன்றையோ வழிப்படுத்துவதற்கு ஏற்றதாக இடைக்கால அதிகார சபை (Interim Authority) ஒன்றை உருவாக்க வேண்டும். இதனுடன் தொடர்புடைய பல்வேறு உதவி வழங்குநர்களுடன் நெருக்கமாக இணைந்து பொறுப்புடன் அந்நிறுவனம் செயற்படும்.
ஆசிரியர் கல்வி
இத்தகைய நெருக்கடி மிக்க நிலைமைகளில் ஆசிரியர்களை இனங்காணுதல், பொருத்தமானவர்களைத் தெரிவு செய்தல் போன்ற செயன்முறைகளில் ஈடுபடும். அதே நேரத்தில் ஆசிரியர் கல்விக்கான பாட உள்ளடக்கத்தையும் தீர்மானித்துக் கொள்ளுதல் வேண்டும். பாடத்திட்டம் தொடர்பாகவும் ஆசிரியர்கள் தொடர்பாகவும் கூடிய அக்கறை செலுத்த வேண்டிய தேவையுள்ளது.
பிள்ளைகளுக்கு எழுதவும், வாசிக்கவும், கணிக்கவும், பிற மரபு வழியான பாடங்களைக் கற்பிப்பது மாத்திரம் அவர்களது பொறுப்பன்று. அனர்த்தங்களுக்குப் பிற்பட்ட பிரதேசம் ஒன்றில் வாழ்வதற்கு குறிப்பாக வேண்டப்படுகின்ற பல்வேறுபட்ட புதிய அறிவையும், திறன்களையும், மனப்பான்மையையும் மேம்படுத்தக்கூடிய புதிய பாடங்களையும் நிச்சயம் கற்பிக்கவேண்டும். புவியியல் சூழலியல்
71 / மாசின்னத்தம்பி

Page 46
சூழற் கல்வி, எயிட்ஸ், சமாதானக் கல்வி, மனித உரிம்ைக்கல்வி, இடர் முகாமைத்துவம் போன்ற பல்வேறு பாடங்களையும் கற்பிப்பது விரும்பத்தக்கது. அடுத்த தலைமுறையினர் தற்போதையவர்கள் போன்று பாதிக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது. புதிய நம்பிக்கையுடனான தொலைநோக்குக் கொண்ட புதிய சமுதாயம் ஒன்றை மீளவும் கட்டி எழுப்பும் வகையில் புதிய கல்வி ஏற்பாடு அமைதல் வேண்டும்.
பல்வேறு நாடுகளில் இத்தகைய அனர்த்தங்கள் மற்றும் நெருக்கடிகளின் பின்பு காணப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் பின்வரும் மாதிரிகளை இனங்கண்டுள்ளனர்.
i) உளவியல் அம்சங்கள் தொடர்பான அறிவும் திறன்களும்
பற்றாக்குறையாகவுள்ளன.
i) பிள்ளைகளை மையமாகக் கொண்டதும் இடைவினையுறவை முன்னேற்றக்கூடியதுமான முறைகள் போதியளவு பயன்படுத்தப்படுவதில்லை
ii) கற்பித்தலுக்கு உதவக்கூடிய பொருட்களின் விருத்தியும்,
பயன்பாடும் சிறிதளவாகவேயுள்ளது
iv) மாணவர்களிடம் கற்பதற்கான இயல்பூக்கத்தையும், செயற்படக்கூடிய மாதிரியிலான பிரச்சினை தீர்க்கும் முறையையும் கையாளக் கூடியவர்கள் மிகவும் குறைவாகவேயுள்ளனர்.
V) பெரும் எண்ணிக்கையான ஆசிரியர்கள் தமது பாடங்களைத் திட்டமிடுவதுமில்லை. அவற்றுக்கென போதியளவு நேரங்களைச் செலவிடுவதுமில்லை.
இத்தகைய பிரதேசங்களில், யுத்தத்தினாலும், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளினாலும் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் உளரீதியில் அதிக மன அழுத்தங்களுக்கு உட்பட்டிருப்பர். இதனால் அவர்களை மையமாகக் கொண்ட கற்பித்தலிற்தான் இப்பிரதேச ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இக்காரணத்தினால் இப்பகுதி ஆசிரியர்கள் அதிகளவுக்கு குழந்தை உளவியல் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளை அறிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் பிள்ளை மையக் கற்பித்தலை மேற்கொள்ள முடியும். பிள்ளை எவ்வாறு மதிநுட்பம் மிக்கதாகவும்,
ஆசிரிய முகாமைத்துவம் /72

சமூக ரீதியில் இணக்கமாகவும் விருத்தியடைகின்ற தென்பதையும் அறிந்து கொள்வதன் மூலமாகவே ஆசிரியர்கள் ஏற்றமாதிரியில் கற்பிக்க முடியும்.
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் ஆசிரியர் தரமான கல்வியை வழங்குவது மிகவும் அவசியமாகின்றது. தரம் (Quality) என்பது எல்லா இடத்தும் ஒரே மாதிரி வரையரை செய்யப்படக் கூடியதல்ல. ஒவ்வொரு குறிப்பிட்ட நிலைமை மற்றும் கலாசார சூழல் என்பவற்றுக்கேற்ப தீர்மானிக்கப்படுவதாகும். அறிவு திறன்கள் மற்றும் விழுமியங்கள் போன்ற கற்றல் வெளிப்பாடுகளைப் பேணுவதே தரம் எனப்படும். அங்கோலாவின் வடபகுதியில், அடிப்படையான வளர்ச்சி ஏதுமிருக்கவில்லை. இதனால் தொடக்கத்திலிருந்தே ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது. பாடத்தைத்திட்டமிடுதலிருந்து, ஆசிரியர் பயிற்சி வரை எல்லாவற்றையும் படிப்படியாக முன்னேற்ற வேண்டியிருந்தது. ஆய்கானிஸ்தானின் அகதிமுகாம்களிலான கல்வித் தேவை வேறாயிருந்தது. அங்கு நன்கு வளர்ச்சியடைந்த கல்விமுறைகாணப்பட்டதால்நவீன கற்பித்தல் முறைகள் மற்றும் உளவியல் விடயங்கள் பற்றியும் கவனம் செலுத்த முடியும் என உலக வங்கியின் முரண்பாடுகளின் பின்னான கல்வித்துறை பற்றிய கருத்தரங்கில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் (பரிஸ், 2003) ஆசிரியர்களையும், பயிற்றுநர். களையும் பயிற்றுவிப்பதற்குப் பல்வேறு முறைகள் சிபார்சு செய்யப்பட்டுள்ளன.
1) முழுநேரப் பயிற்சி - ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளினால்
மேற்கொள்ளப்பட்டது
ii) (86F60D6) lábábsT6ADŮ Jussipdf? (In - Service traning) iii) LJ6üDLJọ É6760D6ao uDITg5?ff (Cascade Model) iv) Gg5sr6OD6uocibéb6üb6 (Distance Education)
ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில் பல வகையான பயிற்சி மாதிரி. களையும் ஏற்படுத்தி ஒருங்கிணைத்தல் வேண்டும். சேவைக்காலப் பயிற்சி முறை விரும்பத்தக்கது. பாடசாலை நாட்களிலும் தேவைப்பட்டால், விடுமுறை நாட்களிலும் கூட இவற்றை நடாத்த வேண்டும்.
பல்படி நிலை மாதிரியின்படி பல படி நிலைகள் கொண்டதாக இருக்கும்.
73 / மாசின்னத்தம்பி

Page 47
i) ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்களுக்கு
பயிற்சி வழங்கப்படும்
i) பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமது சகபாடிகளான ஆசிரி.
யர்களுக்குப் பயிற்சி அளிப்பர் இது மிகவும் குறுகிய காலப் பயிற்சி முறையாக இருப்பதும், பயிற்சிக்கான தொடர் கவனம் இல்லாமலிருப்பதும் குறைபாடுகளாகும். இவ்வாறே தரப்படும் விடயங்கள் அவற்றின் நியமத்தன்மையிலிருந்து நலிவடைந்து செல்லும் அபாய நிலையுமுள்ள தென கருத்துத் தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் வசிக்குமிடம், எதுவாயிருந்தாலும் விளக்கமாகவும், நன்கு திட்டமிட்ட ரீதியிலும் கற்றல் சாதனங்கள் மற்றும் கற்பித்தல் முறைகளை ஏற்பாடு செய்வதால் தொலைக் கல்வி விரும்பத்தக்க தெரிவாக அமைந்து விடுகிறது.
வழிகாட்டல் மேற்பார்வை மற்றும் ஆதரவு
எந்தவொரு நிகழ்ச்சித்திட்ட நடவடிக்கைக்கும் தொடர் அவதானம் (Follow-up) தேவை. கற்பித்தல் தொடர்பான வகுப்பறை வழிகாட்டல்களை வழங்க வேண்டும். செயல் முறைக் கற்பித்தல் அனுபவங்களும் பொருத்தமானமுறையில் வழங்கப்படல் வேண்டும்.
நகரும் ஆசிரிய அணி (Mobile team) மூலம் மேற்பார்வை செய்யும் முறை அவசியம். நிறுவனத்தின் ஆசிரிய தலைவர்களும், சகபாடிகளும் கூட தேவையான அளவுக்கு செயல் முறைக் கற்பித்தலின் போது உதவியளித்து மேற்பார்வையும் செய்ய முடியும்.
ஆசிரிய வள நிலையங்களில் ஒன்று கூடுகின்ற ஆசிரியர்கள் பலரும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது மற்றொரு பயனுறுதிமிக்க நடவடிக்கையாக அமையும் என்றும் கருத்தரங்கு ஆய்வுக் குழுவினர் சிபார்சு செய்திருந்தனர்.
ஆசிரிய முகாமைத்துவம் / 74

ஆசிரியரும் வழிகாட்டலும்
டசாலைகளில் அறிவையும் திறன்களையும் உளப்பாங்கையும் நம்பிக்கையையும் விருத்தி செய்வதில் ஆசிரியர் முக்கியமானவர்கள் என்பதுபோல் சமூகம் நோக்கி மாணவர் உளப்பாங்கினை மாற்றி யமைப்பதிலும் ஆசிரியர்கள் ஈடுபாடு காட்ட வேண்டும். சமூகம் கொண்டுள்ள பிரச்சினைகள், சமயம், ஒழுக்கம் என்பன பற்றி மாணவர் விளங்கிக்கொள்வதற்கும், அவை தொடர்பான தம் கடமைகள் மற்றும் பொறுப்புக்களை அவர்கள் உணர்ந்து கொள்வதற்கும் ஆசிரியர்கள் பாடசாலை மட்டத்தில் பங்காற்ற வேண்டும்.
பிள்ளைகள் வளரும் போது இயல்பாகவே நாட்டம், வேணவா, தடை, அச்சம், ஆசை, உளப்பாங்கு என்பவற்றை விளங்கிக் கொள்ள. வும் முயல்வர். சமூகத்தின்நிலைமைகளுக்கும் தேவைகளுக்குமேற்ப தம்மைச்சீர்செய்து கொள்ளவும் படிப்படியாக கற்றுக் கொள்வர். சமூக தொழிற்பாடுகளின் போது பல விரும்பத்தகாத சந்தர்ப்பங்களையும் எதிர்மறை உணர்வுகளையும் பெற்றுக் கொள்வர். அத்தகைய நிலைமைகளில் நேர்மனப்பாங்கும், ஒருங்கிணைவுப் பண்பும் கொண்டவர்களாக மாணவர்களை மாற்றும் வகையில் ஆசிரியர் வழிப்படுத்துவர். வழிகாட்டுதலில் முக்கியமான அம்சம் எதிர்மறை உணர்வுகளையும் முரண்பட்ட மனப்பாங்குகளையும் அகற்றுதலேயாகும்.
பாடசாலைப் பிள்ளைகள் அறிவைப் பெறுவது அவசியம் தான். ஆனால் அது மாத்திரம் போதுமானதன்று. அவர்கள் சமூகத்தில் சிறப்பாக, நிதானமாக வாழ்வதற்கு சமூக விழுமியங்களைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். தம் எண்ணங்களையும் உணர்வு
75 / மாசின்னத்தம்பி

Page 48
களையும் தெளிவாக வெளிப்படுத்தும் ஆற்றலைப் பிள்ளைகளிடம் வளர்க்க வேண்டும். பெருமளவுக்கு பாடசாலைப்பருவத்தில் தோல்வி மனப்பாங்கு பிள்ளைகளிடம் வளராதவாறு அவர்களை வழிப்படுத்துவது அவசியமாகிறது.
பாடசாலைகளில் முறைசார் ஒழுங்கின்படி பிள்ளையின் கற்றல் தொடர்பாக அடைவு மட்டத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை அளவிடுவதற்கு பரீட்சைப் புள்ளிகள், தரம், பரிசுகள், என்பன வழங்கப்படுகின்றன. ஆனால் பல சந்தர்ப்பங்களில் பிள்ளைகளிடையே தவறான உணர்வுகளை உருவாக்கி பெரும்பாலான பிள்ளைகளிடையே தாழ்வுணர்ச்சியையும் வளர்த்து விடுகின்றன. அவர்கள் உரியமுறையில் ஊக்கமளிக்கப்படுவார்களாயின், பல்வேறு துறைகளிலும் வெற்றி பெறும் மனிதர்களாகி விடுவர்.
பாட உள்ளடக்கங்கள் மூலமாக பெருந்தொகையான விடய அறிவைக் கற்பது எந்தளவுக்கு முக்கியத்துவம் உடையதோ அதேயளவுக்கு, சுயநம்பிக்கை, ஒத்துழைப்புணர்வு ஊக்கம், தாங்கிக் கொள்ளும் தன்மை, தாழ்வுணர்ச்சி, தனிமைப்படுத்தல், போன்ற பல்வேறு விடயங்கள் பற்றியும் அறிந்து கொள்வதும் அவசியமாகிறது.
வாழ்வில் பல்வேறு வாய்ப்புக்கள் மற்றும் வசதிகள் பெறும்போது சரியான தெரிவுகளை அவர்கள் மேற்கொள்வதற்கு ஆசிரியர் வழிகாட்ட வேண்டும். தடைகளையும், பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும் வெற்றிகரமாக எதிர் கொள்ளும் நம்பிக்கை, துணிவு என்பவற்றை பெற்றுக்கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களை வழிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
வகுப்பறைகளும், பாடசாலைகளும் ஒத்த தன்மைகளைவிட, வேறுபாடுகளையே வெளிப்படுத்தி நிற்கின்றன. மாணவர்கள் பல வேறுபட்ட சமூக, பொருளாதார, கலாசார நிலைமைகளிலிருந்து வருவதால் நிச்சயமாக வேறுபாடுகள் காணப்படும். எனினும் அவர்களது ஆளுமை, தொழில் முறை தொடர்பாக இயன்றளவு ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஆசிரியர் ஈடுபடுவது அவசியமாகிறது.
தனி நபர் இயல்புகளுக்கு அமைவாகவும் அதேசமயம் பாடசாலை முழுவதற்குமான நிகழ்ச்சித்திட்டத்துடன் இணையக்கூடியதாகவும் வழிகாட்டலுக்கான கல்வி நிகழ்ச்சித்திட்டத்தை பாடசாலை நிர்வாகம் வடிவமைப்பது இன்றியமையாதது.
ஆசிரிய முகாமைத்துவம் /76

பாடசாலைகளில் பிள்ளைகளை மகிழ்ச்சிகரமாக வைத்திருப்பதற்கு உரிய கவி நிலையை உருவாக்க வேண்டியது அவசியம். அண்மைக்காலத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பிள்ளைகளின் உள நெருக்கீடுகள் அதிகரித்திருந்தன. இதனால் அவர்கள் விரும்பத்தக்க சூழலை பாடசாலையில் உருவாக்குவதில் கல்வித்திணைக்களம், யுனிசெஃப் போன்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலை உருவாக்கிய பின்புதான் பிள்ளைகளுக்கு வழிகாட்டுதற்கு உரிய ஒழுங்கான நிகழ்ச்சித்திட்டத்தை வடிவமைத்துநடைமுறைப்படுத்த முடியும்.
கல்வி சார் வழி காட்டல்
இலங்கையில் 1997 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பொதுக்கல்விச் சீர்திருத்தம், ஆலோசனை வழங்கல் வழிகாட்டல் தொடர்பான பாடசாலை நிகழ்ச்சித்திட்டம் பற்றி அதிருப்தி தெரிவித்துள்ளது இலங்கையில் இத்தகைய சேவை அவசியமாக வேண்டப்படுகின்ற போதிலும் பாடசாலைகளில் அவை வழங்கப்படுவதில்லை எனக் குறிப்பிடுகிறது. பின்வரும் விடயங்களில் வழிகாட்டல் அவசியமாul6iT6TGlĝ56ör [p] (ég5/ĵiuĵL liut (Bd5n0g5J. (General Education Reform 1997:27)
1) கற்பதற்கு தமக்குப் பொருத்தமான பாடங்களையும், கற்கை நெறிகளையும் மாணவர் தெரிவு செய்வதற்கு உதவுதல்.
2) தமது இயல்பூக்கம், விஷேடமான திறன்கள், புத்தாக்க இயல்பு என்பவற்றுக்குப் பொருத்தமான தொழிலை இனங்காண்பதற்கு உதவுதல்.
3) வீட்டில் நிலவும் நிலைமைகள், பாடசாலைகளில் நிலவும் நிலைமைகள், என்பன போல் பொதுவாக சமூகத்தில் காணப்படும் நிகழ்வுகளும் மாணவர்களுக்கு மன அழுத்தங்களை உருவாக்கி விடுகின்றன. இதனால் ஏமாற்றம், அவநம்பிக்கை, விரக்தி என்பன நிரம்பிய மாணவர்களைக் கொண். டனவாகப் பாடசாலைகள் மாறிவிட்டன. இதிலிருந்து மீள்வதற்கும் உதவுதல்.
இவற்றை ஆசிரியர்கள் தெளிவுற விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவற்றை விளக்கமாக நோக்குவது பயனுடையது.
77 / மாசின்னத்தம்பி

Page 49
பாடங்களையும் கற்கை நெறிகளையும் தெரிதல்
அ) மாணவர்கள் க.பொ.த சாதாரண வகுப்பு மட்டத்திலும் சில பாடங்களைத் தெரிவுப் பாடங்களாகக் கொண்டுள்ளனர். அழகியற்பாடங்களுள் எதைத் தெரிவது என்பதிலும் ஆங்கில இலக்கியம் போன்ற பாடங்களைத் தெரிவதிலும் போதிய கலந்துரையாடலோ, வழிகாட்டலோ இடம் பெறுவதில்லை. சகபாடிகளின் எழுந்தமானமாக அமையும் தீர்மானங்களை உணர்வுபூர்வமாக ஏற்றுக் கொள்ளும் மாணவர்களே அதிகம். இவை பற்றிய விபரங்களை உரிய நபர்களை நாடி பெற்று, வழிகாட்டக்கூடிய நேரமும், பொறுமையும், ஈடுபாடும் பெற்றோர்கள் பெரும்பாலானவர்களிடமில்லை.
தலை நகரிலும் வேறு புற நகர்ப்பகுதிகளிலும் வசிக்கும் உயர் கல்வி கற்று உயர் தொழில் புரியும் உயர் வருமான வகுப்பினரான சில பெற்றோர் போதிய வளங்களையும் வசதிகளையும் கொண்டிருப்பதால் நவீன மொழிகளையும் கற்பிக்கின்றனர். ஜப்பானிய மொழி, ஜேர்மனிய மொழி, பிரெஞ்சு மொழி, ஹிந்தி மொழி என்பவற்றை மேலதிகமாகக் கற்பிக்கின்றனர். இதனால் தாய்மொழி, ஆங்கிலம் என்பவற்றுடன் மேற் குறிப்பிட்ட நவீன மொழிகளிலும் ஒன்றை அல்லது இரண்டைத் தெரிவு செய்து கற்பிக்கின்றனர். இதனால் புலமைப்பரிசிலுடன் உயர் கல்வி பெறும் வாய்ப்புக்களை உறுதி செய்கின்றனர். சர்வதேச ரீதியில் தொழிற்படும் பல்தேசியக் கம்பனிகளில் தொழில் வாய்ப்புப் பெறுவதிலும், அரச சார்பற்ற நிறுவனங்களில் கவர்ச்சிகரமான தொழில் வாய்ப்பைப் பெறுவதிலும் முன்னுரிமை பெற்றுக் கொள்கின்றனர். பெரும்பாலான கிராமியப்பாடசாலைகளிலும், நகரங்களிலிருந்து விலகித் தொழிற்படும் பாடசாலைகளிலும் இவ்வாறான வாய்ப்புக்களை மாணவர் பெறுதற்கும், அதன் அனுகூலங்களை விளங்கிக் கொள்வதற்குமான எவ்வித வழிகாட்டல்களுமில்லை.
நவீன மொழிகளை நேரடியாகவும், தொலைக் கல்வி மாதிரியில் மின்னியல் கற்றல் சாதன உதவியுடன் கற்பிப்பதிலும் பல்வேறு நாடுகளின் தூதராலயங்களும், தகவல்நிலையங்களும், அவர்களால் நிருவகிக்கப்படும் கல்வி நிலையங்களும் முனைப்புடன் செயற்படுகின்றன. பாடசாலைகளுக்கு இவ்விடயத்தில் உதவுவதற்குமான பல நிகழ்ச்சித்திட்டங்களையும் அவை கொண்டுள்ளன. இவை பற்றியும் ஆசிரியர்கள் தான் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆசிரிய முகாமைத்துவம் 778

வெகுசன ஊடகங்கள் மூலமாக வெளியிடப்படும் தகவல்கள் மற்றும் விளம்பரங்களை ஆசிரியர்கள் கிரமமாக அவதானித்து இத்தகைய தகவல்களைத் திரட்ட வேண்டும். மாணவர்களுக்கு வழிகாட்டுதற்காக இத்தகைய தூதரங்களின் தகவல் நிலையங்களுடன் தொடர்புகளையும் மேற்கொள்ளவேண்டும். ஆசிரியர் அணியாக தொழிற்படவும் வேண்டும். தேவையான தகவல்களை அவர்கள் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளவும் வேண்டும்.
ஆ) க.பொ.த உயர்தர வகுப்பு மட்டத்தில் பாடங்களைத் தெரிவு செய்வதற்கு வழிகாட்டுதல் மற்றொரு முக்கியமான பிரச். சினையாகும். சரியான தொடர்ச்சியான வழிகாட்டலில் ஆசிரியர்கள் ஈடுபடாமையினால் மாணவரும் பெற்றோரும் சமூகமும் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. அவற்றை எல்லா ஆசிரியர்களும் அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
சிரேஷ்ட இடைநிலை மட்டத்தில் (9-11 வகுப்புவரை) மிகவும் குறைந்த புள்ளிகளைப் பெற்ற பாடத்துறைகளில் க.பொ.த உயர் தர வகுப்பு மட்டத்தில் கற்பதற்கு அனுமதித்துள்ள நிலைமை பரவலாக காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 9 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரையிலான ஆறு தவணைப் பரீட்சைகளில் எந்தவொரு பரீட்சையிலும் நாற்பது புள்ளிகளுக்குமேல் விஞ்ஞான பாடத்தில் பெறாத மாணவர்கள் க.பொ.த உயர்தர வகுப்பில் உயிரியல் பாடங்களைக் கற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மூன்று தடவை தோற்றியும் அதிகுறைந்தளவான பல்கலைக்கழக அனுமதிப்புள்ளிகளைப் பெறாதவர்களாகவுள்ளனர். இதனால் பல நட்டங்கள் ஏற்படுகின்றன.
* பிள்ளை தனக்கு இயலாத பாடங்களை முயன்று படித்ததால் உடல், உளரீதியிலான களைப்பை அதிகம் பெற்றிருக்கும். இந்த உழைப்பிற்குரிய-மனித மணித்தியால விரயத்திற்குரிய பயன்பாடு ஏதுமில்லை.
* பாடசாலை மட்டத்திலும், நண்பர்கள் மட்டத்தில் உறவினர் மற்றும் சமூக மட்டத்திலும் பிள்ளை புத்திசாலித்தனமற்றவர் என்ற நியாயமற்ற அவமானப் பெயரையும் பெறவேண்டி வரும். இதனால் அவமானமும், மன விரக்தியும் ஏற்பட்டு விடுகிறது.
79 / மாசின்னத்தம்பி

Page 50
எதிர் காலத்தில் தொடர்ந்து முன்னேறுதற்கான உள நிலையை முற்றாக இது சிதைத்து விடுகிறது.
* இதற்குப்பதிலாக உரிய வழிகாட்டல் கிடைத்து அதன்படி உகந்த கற்கை நெறியில் கற்று முடித்திருக்கக் கூடிய வாய்ப்பும் இழக்கப்பட்டு விட்டது. தற்போது வயது கூடிய பரீட்சார்த்தியாக இவர் இனங்காணப்பட்டு விடுவார்.
இத்தகைய இழப்புக்களிலிருந்து மாணவர்களைக் காப்பாற்றுதற்கு ஆசிரியர்களின் வழிகாட்டல் மிகவும் அவசியமாயுணரப்படுகின்றது.
இவ்வாறு பாடங்கள் அவற்றினடிப்படையில் கற்கை நெறிகள் என்பவற்றை மாணவர் மிகவும் சரியாகத் தெரிவு செய்வதற்கு வழிகாட்டலில் ஈடுபடும் ஆசிரியர்கள் பின்வருவனவற்றைக் கவனத்திற்கொள்ள வேண்டும். தனித்தனியாக ஒவ்வொரு மாணவர் தொடர்பாகவும் பின்வருவனவற்றைக் கருத்திற்கு எடுத்து வழிகாட்ட வேண்டும்.
1) பிள்ளையின் இயல்பான நாட்டம் அதாவது உளச்சார்பு
எவ்வகையான பாடத்திற்கு அதிகம் பொருந்துகின்றது.
2) குறித்த பாடப்புலத்தில் இடைநிலைக் கல்வி மட்டத்தில் அவரது ஈடுபாடுமற்றும் அடைவுநிலை பற்றி மதிப்பீடு செய்தல் வேண்டும். கடந்த கால பரீட்சைப்புள்ளிகளை அட்டவணைப்படுத்தி பகுப்பாய்வு செய்தல் வேண்டும்.
3) குறித்தபாடத்தை உயர் வகுப்பில் கற்பதற்கு வேண்டிய கடின உழைப்பு ஊக்கம் குறித்த மாணவனிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மிகுந்த போட்டி மிக்க மருத்துவ, பொறியியல், முகாமைத்துவ, சட்ட பீடங்களில் கற்க விரும்பினால் நாளொன்றுக்கு குறைந்து பத்து மணித்தியாலங்களேனும் சுயமாகக் கற்கும் ஊக்கம் தேவைப்படுகிறது. கடுமையான மீட்டல் தேவைப்படுகிறது. இதற்கான இயல்பு மாணவரிடம் உள்ளதா என்பதை ஆசிரியர் தொடர்ச்சியான அவதானிப்பிலிருந்து மதிப்பிடல் வேண்டும்.
4) குறித்த பாடநெறியில் பிள்ளையின் சந்தேகங்களை அகற்றவும், தெளிவுபடுத்தவும் குடும்ப மட்டத்தில் கிடைக்கத்தக்க உதவிகளையும் கவனித்தல் வேண்டும் மூத்த சகோதரர் அல்லது பெற்றோர் குறித்த பாடத்தில் புலமை பெற்றோரா
ஆசிரிய முகாமைத்துவம் /80

5)
6)
யிருப்பதும் பிள்ளைக்கு அனுகூலமாக அமையும் என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.
தற்போது க.பொ.த உயர்தர வகுப்புக்கான பாடத்திட்டங்கள் பாடசாலைகள் பெரும்பாலானவற்றில் உரிய காலத்தில் நிறைவு செய்யப்படுவதில்லை. போதியளவு தகைமை பெற்ற ஆசிரியர் இன்மை, கற்பித்தலுக்கென கிடைக்கும் பாடசாலை நாட்கள் போதாமை, பாடசாலையின் நேர அட்டவணைக் கட்டுப்பாடுகள், பாட ஆசிரியர் அதிக லிவு எடுத்தல் போன்ற பல்வேறுபட்ட காரணங்களினால், உரிய காலத்தில் பாடத் திட்டம் நிறைவு செய்யப்படுவதில்லை. பாடசாலை நிர்வாகமும் சில சமயங்களில் ஒரு தரத்தில் பல வகுப்புக்கள் (Divison) உள்ள நிலையில் ஒரு குறிப்பிட்ட வகுப்புமாணவரின் அடைவு நிலையை உயர்த்துவதில் மாத்திரம் கூடிய அக்கறை காட்டுவர். ஏனைய வகுப்பிப்பிரிவினரை நிராகரித்து விடுவர். இதற்குரிய நியாயங்களையும் தயாரித்து வைத்துக் கொள்வர். இத்தகைய சம நிலையற்ற முகாமைத்துவ நடத்தைகளினாலும், பாடசாலைகளின் இயல்பான பலவீனங்களினாலும் மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களை அதிகம் நாடுகின்றனர்; அதிகம் நம்புகின்றனர்; அதற்கென பெற்றோர் பணத்தை அதிகம் செலவிடுகின்றனர்.
இந்த பின்னணியையும் ஆசிரியர்கள் விளங்கிக் கொண்டு குறித்த மாணவரின் குடும்பத்தவரின் தனிப்பட்ட படிப்புக்கு Li600TD (old 665 d5óniqugu gó0LD60)u Jub (Financial Capacity) கணித்துக் கொள்ள வேண்டும். அதனடிப்படையில் பாடத் தெரிவுக்கு ஆலோசனை வழங்க முடியும்.
குறுகிய காலத்தில் தொழில் உத்தரவாதம் பெற விரும்பும் குடும்ப சமூகப் பின்னணி கொண்ட மாணவர்களாயின் அவர்களுக்கு பொருத்தமான பாடங்களைத் தெரிவு செய்வதற்கு உதவி செய்வது ஆசிரியர்கள் கடமையாகும். எடுத்துக் காட்டாக சில வறிய குடும்பத்தின் மூத்த பிள்ளை. கள் மிகவிரைவில் தொழில் தேடவேண்டுமென்ற தேவையுடனிருப்பர். அத்தகைய நிலையில் பின்வருவனவற்றை ஆசிரியர் கருத்திற் கொள்ள வேண்டும்.
81 / மாசின்னத்தம்பி

Page 51
* கல்வியியல் கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கு அப்பிரதேச நிலைமையில் மாணவர் எத்தகைய பாடங்களைத் தெரிவு செய்து கற்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.
* அப்பிரதேசத்தில் உயர் தொழில்நுட்பக் கல்லூரி இருப்பின் அதில் இணைந்து கற்பதற்கு எத்தகைய பாடங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தெரிந்து அறிவுரை கூற வேண்டும்.
* வெளிவாரியாக பட்டப்படிப்பை மேற்கொள்ள வேண்டிய மாதிரியில் குடும்பத்தின் பொருளாதார நிலை, குடும்ப உறுப்பினரிடமிருந்து கற்பதற்கு கிடைக்கக்கூடிய ஆதரவு மற்றும் உதவி காணப்படின் ஆசிரியர் அதற்கும் ஆலோசனை கூறவேண்டும். எத்தகைய பல்கலைக்கழகங்களில் (தேசிய மற்றும் வெளிநாட்டு) இவ்வாறு வெளிவாரிப்படிப்பை மேற்கொள்ள முடியும் எவ்வளவு பணச் செலவு ஏற்படும் என்பன போன்ற ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
இவை தொடர்பான முழுத்தகவல்களையும் தேடிப் பெற்று, வாசித்து விளங்கி ஆலோசனை கூற வேண்டும்.
* மரபு வழியான பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு சில மாணவர்களின் குடும்பநிலைமை இடம் தருவதில்லை. வயது முதிர்ந்த பெற்றோர், அவர்களைப் பேணுதற்கு சகோதரர், உறவினர் அயலில் இல்லாமை, விவசாயச் சொத்துக்களை (நிலம், மந்தை, உபகரணங்கள் நீர்ப்பாசன வடிகால்கள்) பேண வேண்டிய தேவை, பணம் செலவிட வசதியின்மை போன்ற நெருக்கடிகளை மாணவர் எதிர் கொள்வதுண்டு.
இவ்வாறான நிலைமைகளில் திறந்த பல்கலைக்கழகங்களில், எத்தகைய கற்கை நெறிகளைக் கற்கலாம்? எத்தகைய பாடங்களை அதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்? எவ்வகையில் மரபு வழிப் பல்கலைக்கழகக் கல்விக்கு அது சமமானது இத்தகைய கல்வியினால் கிடைக்கும் சிறப்பான அனுகூலங்கள் யாவை?என்பன போன்ற பல விளக்கங்களை ஆசிரியர்களை வழங்கக்கூடியவராயிருத்தல் வேண்டும்.
மாணவரிடமும் பெற்றோர் மற்றும் சமூக மட்டத்திலும் திறந்த பல்கலைக்கழக கல்வி வாய்ப்பு அதற்குள்ள அங்கீகாரம் என்பன
ஆசிரிய முகாமைத்துவம் /82

பற்றித் தவறான அபிப்பிராயங்கள் உள்ளன. இவற்றை பாடசாலை மட்டத்தில் தெளிவுபடுத்த வேண்டியவர்கள் வழிகாட்டும் ஆசிரியர்களேயாவர்.
இவ்வாறு பாடங்களைத் தெரிவு செய்யும் போது உயர் கல்வி வாய்ப்பு பற்றியும் தெளிவான அறிவை உருவாக்க வேண்டிய கடமை இந்த வழிகாட்டல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உரியதாகும். உயர் கல்விக்கு பல்வேறு மாற்று வாய்ப்புக்கள் (alternative opportunities) உள்ளன என்பதை தெளிவுபடுத்தி வழிகாட்ட வேண்டியவர்கள் க.பொ.த உயர் வகுப்புக்களில் கற்பிக்கும் எல்லா ஆசிரியர்களுமாவர். பாடசாலை மட்ட வேலையின் ஒரு பகுதியாக இவற்றை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மாணவர் எதிர் கொள்ளும் பிரச்சினைகள்
மாணவர் எத்தகைய பிரச்சினைகளை பாடசாலை மட்டத்தில் எதிர் கொள்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மாணவர்களது பிரச்சினைகளை பின்வருமாறு வகைப்படுத்தி விளக்க முடியும்.
1) கற்றல் சார்ந்தவை
மாணவர்கள் ஈடுபாட்டுடன் பாடங்களைக் கற்பதற்கு சில சமயங்களில் தடைகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு வாசிப்பதில் பிரச்சினைகளிருக்கும். சரியாகவும், விரைவாகவும், புரிந்துகொண்டு வாசிப்பதில் சிரமங்களை எதிர்கொள்வர். இது அவர்கள் பரீட்சை அடைவு மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இவ்வாறு பரீட்சை புள்ளிகள் குறையும் போது குறித்த பாடத்தில் விருப்பமின்மை ஏற்பட்டுவிடும்; படிப்பில் ஈடுபாடு குறைந்து விடும்; துடுக்குத்தனமா செயல்களில் ஈடுபடுவர்.
இவ்வாறு பிள்ளைகளில் கற்றல் தடங்களுக்குட்பட்டுவிடும். பாடசாலைக் கல்வி தொடர்பாக எதிர்பார்க்கப்படும் இலக்குகளை பிள்ளைகள் அடைய மாட்டார்கள். இது பாடசாலை முறையினதும் கல்வி முறையினதும் தோல்வியாகும். இதில் ஈடுபடுத்தப்படும் நிதிவளம், நேர வளம், மனிதவளம், தகவல் வளம் என்பன விரயமாக்கப்பட்டு விடும்.
இவற்றைத் தவிர்ப்பதற்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வழி. காட்டல் நிகழ்ச்சித் திட்டம் (Guidance Programme) அவசியமாகிறது.
83 / மாசின்னத்தம்பி

Page 52
மாணவர்களை இத்தகைய பாதிப்பிலிருந்து படிப்படியாக மீட்டெடுப்பதற்கு வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம் தயாரிக்கப்படவேண்டும் சரியான நேரத்தில் தேவையான தீர்வு நடவடிக்கைகளை பொருத்தமான படிமுறைகளின் படி மேற்கொள்வதற்கு சிறப்பான வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம் அடிப்படையாக அமையும்.
மாணவர் ஒவ்வொருவரும் தம்மைப் பற்றிய தெளிவான சுயநோக்கை (insight) உருவாக்கிக்கொள்ள ஆசிரியர் உதவ வேண்டும். தனது பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் அதற்கே உரித்தான பின்னணிகளில் மாணவர் விளங்கிக் கொள்வதற்கு ஆசிரியர் உதவி செய்ய வேண்டும்.
மாணவர்கள் தாம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளில் பாடசாலை நிர்வாகிகளுடன் இணங்கிச் செல்வதன் மூலம் அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்கு உரிய ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆசிரியர் வழங்க வேண்டும்.
இவ்வாறெல்லாம் உதவுவதன் மூலமாக பாடங்களைக் கற்பதில் மிகப் பெரிய முன்னேற்றத்தைப் பெறுவதற்கு ஆசிரியர்கள் உதவ முடியும்.
2) தொழில்சார் எதிர்காலம் பற்றியவை
இடைநிலைப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர் முன்னுள்ள முக்கியமான கேள்வி படிப்பு முடிந்த பின் எத்தொழில் செய்வது என்பதாகும். எத்தொழில் மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரும்? அதனைப் பெறுவதற்கு எத்தகைய அறிவும் திறன்களும் தேவைப்படுகின்றன?அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது?என்பன போன்ற கேள்விகள் மாணவரிடம் எழும். இத்தகைய வினாக்களுக்கு திருப்திகரமான விடைகளை மாணவர் காண்பதற்கு பாடசாலை தான் உதவ வேண்டும்.
மாணவர் ஒவ்வொருவருக்கும் அவர்களிடம் புதைந்திருக்கும் உண்மையான ஆற்றல்களையும் திறன்களையும் அவர்கள் தாமாகவே இனங்காண்பதற்கு ஆசிரியர் உதவவேண்டும். இதற்கு ஏற்றதாக ஆலோசனையை வழங்கவும் வேண்டும். பாடசாலைப் பருவத்தில் பெரும்பாலான மாணவர் வேலை பற்றிய எந்தவொரு தெளிவான எண்ணமும், அபிப்பிராயமும் இல்லாதவராகவே இருப்பர். ஆசிரியர்கள் தான் இதற்குரிய வழிகாட்டும் ஆலோசனையை ஒழுங்குமுறையில் வழங்க வேண்டும்.
ஆசிரிய முகாமைத்துவம் /84

* நியமமான உளவியல் கருவி யொன்றை கையாண்டு அதனடிப்படையில் மாணவர்களின் இயலுமை, உளச்சார்பு வேலை பற்றிய நாட்டம் என்பவற்றை மதிப்பீடு செய்தல் வேண்டும். வேலை பற்றிய தெளிவான புரிந்துணர்வை உருவாக்கும் வகையில் விளக்கமளிப்பது அவசியமாகிறது.
* தொழில் வாழ்வுமுறை (Career) பற்றிய தகவல் உரையாடல்களையும் கலந்துரையாடல்களையும் மாணவரிடையே உருவாக்கி விடவேண்டும்.
* ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான தொழில்கள், அவற்றின் முன்னுரிமை, அவர்களுக்கு விரும்பமில்லாத தொழில்கள் போன்ற விபரங்களை எழுதித் தருமாறு வேண்டுவதன் மூலம் இவை பற்றிய தெளிவான எண்ணங்களை அவர்களிடம் உருவாக்க முடியும்.
நடைமுறையில் இந்த விடயங்களில் பெரும்பாலான பெற்றோரால் உரிய வகையில் வழிகாட்ட முடிவதில்லை. அதே சமயம் இதற்கு மாறான நடவடிக்கைகளிலும் பெற்றோர் ஈடுபட்டு விடுகின்றனர்.
பிள்ளைகளின் உளவியல் பண்பு நலன்களைப் பெற்றோர் அநேகள் தெரிந்து கொள்வதில்லை. பிள்ளைகளுடன் எக்கருத்தையும் பரிமாறிக் கொள்ளாது தாமாகவே முடிவுகளை மேற்கொள்கின்றனர். பெற்றோர் தம்மளவில் நிறைவேற்ற முடியாது தோல்வியடைந்து அடிமனதில் உறைந்து போயுள்ள அபிலாஷைகளை தமது பிள்ளைகளைக் கொண்டு நிறைவேற்றத் துடிக்கின்றனர். ஆனால் அதற்கு ஏற்ற உளவியல் பலமும், திறன்களும் அவர்களிடம் உள்ளனவா என்று கண்டறிய முயல்வதில்லை. தொழில் தொடர்பான பிள்ளைகளின் அபிலாஷைகள் அடக்கப்பட்டு விடுகின்றன.
இதனாலேயே பெற்றோரைவிட ஆசிரியர்களே இத்தகைய தொழிற் தெரிவு வழிகாட்டல் ஆலோசனை வழங்குதற்குப் பொருத்தமானவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். புத்திசாலித்தனமான முறையில் ஒவ்வொருவரும் தொழில் உலகையும் தம்மையும் புரிந்து கொண்டு மிகவும் பொருத்தமான தொழிலைத் தெரிவு செய்வதற்கு ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்.
85 / மாசின்னத்தம்பி

Page 53
3) தனி நபர்களிடையிலான தொடர்புகள் சார்ந்தவை.
பிள்ளைகள் வளர்ந்து வரும் போது இயல்பாகவே உடல் உறுப்புக்களில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்வது போல மனவெழுச்சிப் பாதிப்புக்களையும் அனுபவிப்பர். பல சமயங்களில் உடலியல் மாற்றங்களும் உளவியல் மாற்றங்களும் இசைந்து போகாமல் முரண்படும் போது மனவெழுச்சிச்சிக்கல்களுக்கு உட்பட்டு விடுவர்; தம்மைச் சீராக்கம் செய்ய முடியாது துன்பப்படுவர். இது அவர்களது பாடசாலைக் கல்வி மீதும் சகபாடிகளுடனான தொடர்புகள் மீதும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
இத்தகைய நெருக்கடிகளிலிருந்து பிள்ளைகளை மீட்பதற்கு போதிய தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்கி வழிகாட்ட வேண்டும்.
சகபாடிகளிடையே உறவாடும் போது எவ்வாறு பிறரைப் புரிந்து கொள்வது? எதனை விட்டுக் கொடுப்பது? எவ்வாறு பிறரது மதிப்புக்குரிய அம்சங்களைத் தாமும் மதிப்பது? போன்ற பல ஐயப்பாடுகளுக்கு விடைகாண ஆசிரியர்கள் உதவ வேண்டும். அதிகளவு வெட்கமுடன், ஒதுங்கியிருப்பதிலிருந்து மாணவர்களை எவ்வாறு மீட்பது என்பதில் ஆசிரியர் கவனம் செலுத்த வேண்டும். சுய நம்பிக்கையைக்கட்டி எழுப்புதல், அவர்களிடமுள்ள தனித்தன்மையானதும் பிறர் மெச்சத்தக்கதுமான ஆற்றல்களை அவர்களே இனங்காண உதவுதலும் அவசியமாகிறது.
மனிதாபிமானமற்றவராகவும், முரட்டுசுபாவம் கொண்டவராகவும் பொறுப்பற்றவராகவும் நடந்து கொள்ளாதவாறு அவர்களை நிதானமான சிந்தனையும்,நடத்தையும் கொண்டவர்களாக மாற்ற வேண்டும். பிள்ளைகள் ஒவ்வொருவரையும் பாடசாலை மட்டத்தில் சிறந்த மாணவர் என்ற தளத்திலிருந்து சமுதாய மட்டத்தில் நல்ல குடிமகனாக மாற்றுதற்குரியவாறு ஒழுங்கான ஆலோசனைகள் வழங்கப்படுவது இன்றியமையாதது.
இவ்வாறு கற்றல், தொழில்சார் எதிர்காலம் மற்றும் தனி நபரிடையிலான தொடர்புகள் சார்ந்து எழக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும் வகையில் ஆசிரியர் வழிகாட்டலில் ஈடுபடல் வேண்டும்.
ஆசிரிய முகாமைத்துவம் /86

உளச்சார்புக் கேற்ப வழிகாட்டல்
சில வகையான விசேட திறன்களை எந்தவொரு பிள்ளையிடமும் விருத்தி செய்வதாயின் அதற்கு அடிப்படையான உளச்சார்பு (Aptitude) இருத்தல் வேண்டும். அதன் பின்பு ஏற்ற பயிற்சியை வழங்குவதால் விசேட திறன்களை வளர்த்து விடமுடியும்.
உளச்சார்ப்பு இயல்பாகவே பிள்ளையிடம் இருப்பதா? அல்லது முயற்சியினால் பிள்ளையினால் தேடிக் கொள்ளக் கூடியதா? என்ற கேள்வி பலரிடம் இன்றும் காணப்படுகின்றது.
பிள்ளைகளிடம் காணப்படும் மதிநுட்பம் (Intelligence) அவர்களது இயலுமை தான். நிலைமைக்கேற்ப சீராக்கம் செய்து கொள்ளவும், பிரச்சினையொன்றுக்குத் தீர்வுகாணவும் ஒவ்வொரு பிள்ளையிடமும் உள்ள மதிநுட்பம் உதவுகின்றது. இந்த மதி நுட்பம் உளச்சார்பை ஒத்தது என்று சிலர் விளக்குகின்றனர். ஒரு பிள்ளை எதிர்காலத்தில் எவ்வாறு வடிவம் பெறுவான் அதாவது எவ்வாறான திசையில் முழுமை பெறுவான் என்பது அவனது உளச் சார்பைப் பொறுத்ததாகும். சீரான பயிற்சியை வழங்கும் போது உளச்சார்புக் கேற்ற மாதிரியில் பிள்ளைகள் முன்னேறி விடுவர். இசைக்கலைஞர், ஒவியர், பொறியியலாளர் போன்றவர்களின் அடிப்படை இயல்பில் அதற்கே உரித்தான உளச்சார்பு காணப்படும் என உளவியலாளர் விளக்கமளிக்கின்றனர்.
ஆசிரியர் இத்தகைய எண்ணக்கரு பற்றி தெளிவாக விளங்கியிருப்பது அவசியமாகின்றது.
பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அவர்களது உளச்சார்ப்புக்கு அமைவாகவே முன்னேறுதற்கு வழிகாட்ட வேண்டும். இதற்கு முதலில் ஒவ்வொரு மாணவரினதும் தகைமை மட்டம், இயல்பு என்பவற்றை அளந்தறிய வேண்டும். இதற்கென மதிநுட்பச் சோதனைகள் (Intelligence Tests) உள்ளன. ஆசிரியர்கள் பல வகையிலான இச்சோதனை. கள் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
* சொல் சார்ந்தனவும் சொல் சாராதனவும்
* தனிநபர் மற்றும் குழு சார்ந்தவை
* சாதனைகள் அல்லது ஆற்றுகை சார்ந்தவை
* வேகம் மற்றும் ஆற்றல் சார்ந்தவை
87 / மாசின்னத்தம்பி

Page 54
இவற்றை சரியான முறையில் நடாத்த வேண்டும். வேறுபட்ட உளச்சார்புச் சோதனைகள், பொது உளச் சார்புச்சோதனைகள், பல்வகை உளச் சார்புச் சோதனைகள், போன்ற பலவற்றைப் பற்றிய அறிவைப் பெற்று அதனடிப்படையில் சோதனைகளை நடத்தி மாணவர் தனிவேறுபாடுகளை இனங்காண வேண்டும்.
இவற்றினடிப்படையில் எத்தகைய தொழிலுக்கு ஒரு மாணவர் பொருத்தமானவராக இருப்பார் என கணித்தல் வேண்டும் ஒரு மாணவனிடம் உள்ளடங்கியிருக்கும் மதிநுட்பம், திறன், மொழி விருத்தி, எண்தேர்ச்சி போன்ற பல தகவல்களை துல்லியமாகக் கண்டறிவதற்கு இத்தகைய சோதனைகள் உதவுவதால், மிகப்பொருத்தமான தொழில் நோக்கி மாணவரை வழிப்படுத்த அவை கருவிகளாகப் பயன்படுகின்றன.
சோதனைப் புள்ளிகளை எவ்வாறு ஒரு வழிகாட்டும் ஆசிரியர் வியாக்கியானம் செய்கின்றார் என்பதும் மிகவும் முக்கியத்துவம் உடையது. பிள்ளையின் பலம் மற்றும் பலவீனங்களை இனங்காண அது உதவுகின்றது. வழிகாட்டுபவர் தெளிவுபடுத்திக் கொண்டு மாணவர் ஒருவருக்கு இயலக்கூடிய பல மாற்று வழிகளையும் சிபார்சு செய்வது அவசியமாகிறது. நேர்மனப்பாங்குடையவராக செயற்பட்டு மாணவர் சுயமாக தெரிவுகளை மேற்கொள்ள ஊக்குவித்தல் வேண்டும். தேவையானால் மாணவரது சில பலவீனங்களைக் குறைப்பதற்கு அல்லது அகற்றுவதற்கு வழிகாட்டும் ஆசிரியர் உதவுவது மிகவும் விரும்பத்தக்கது.
நாட்டத்திற்கேற்ப வழிகாட்டல்
தனிநபர்களின் ஆளுமையின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் தான் நாட்டம் (Interest) என்று உளவியலாளர் விளக்குகின்றனர். மாணவர்களிடையிலும் அவர்களது விருப்பங்கள் முன்னுரிமைகள் என்பன ஒரே மாதிரி அமைவதில்லை. உள்ளிருந்து தோற்றம் பெறுவதாகவோ அல்லது வெளிச்சூழலின் தாக்கத்தினால் வளர்ச்சி பெறுவதாகவோ தனிநபர்களது நாட்டம் அமைகிறது.நாட்டத்திற்கு ஏற்ப தொழிற்படும்போது ஒவ்வொருவரும் திருப்தியும் மகிழ்ச்சியும் காண்கின்றனர். இதனால் நாட்டத்தின் பாற்பட்டு நடத்தைகளை மாணவர்களும் வடிவமைக்க முயல்வது இயல்பாகி விட்டது.
ஆசிரிய முகாமைத்துவம் /88

உளச்சார்பைப் போலன்றிநாட்டம் மாணவர் ஒவ்வொருவரினதும் படிமுறை வாழ்வு முறை முன்னேற்றங்களினடிப்படையில் உருவாகக்கூடியது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். நாட்டம் நிரந்தரமானதாய் அமைய வேண்டியதில்லை. அது சகபாடிகள், வாழிட வசதிகள், வெளித்துண்டல்கள் போன்ற பலவற்றிற்கு அமைவாக மாறிச் செல்லத்தக்கது என்பதே உண்மையாகும். எனினும் சில நாட்டங்கள் சிலரிடம் நீடித்திருக்கவும் வாய்ப்புண்டு.
சில நாட்டங்கள் எளியன; வேறு சில சிக்கலானவை. மாணவர்களின் நாட்டத்தை அளவிடுவதற்கு பல உளவியற் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன ஆண்கள் / பெண்கள் என்போருக்கான ஸ்ரோங்கின் தொழில் நாட்ட வங்கி (SVIB) இத்தகைய சிறந்த கருவியாகக் கொள்ளப்படுகின்றது. ஆனால் இதற்கு நீண்ட நேரம் தேவைப்படுவதால் இது கடினமானதாக கருதப்படுகிறது. எனினும் பாடசாலை மட்டத்தில் தேஸ்ரனின் நாட்டம் பற்றிய பட்டியல் (Thurston's Interest Schedule-TIS) மாணவர் நாட்டத்தைக் கணிக்க பயன்படக் கூடியதாகும்.
அடைவு, உளச் சார்பு, ஆளுமை போன்ற அடையாளங்களின்படி மாணவர் தமது ஆளுமையை இனங்காண இது உதவும். இது வழி. காட்டலில் நேர்முகங்களை நடாத்தவும் உதவும்.
ஆசிரியர்கள் இவை பற்றிய அறிவைப் பெற்று உண்மை ஈடுபாட்டுடன் எல்லாச் செயன்முறைகளையும் மேற்கொண்டு வருவார். களாயின், பாடசாலை மட்டத்தில் வழிகாட்டல் பணியை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியும்.
இலங்கையில் 1997இல் அறிமுகப்படுத்தப்பட்ட பொதுக் கல்விச் சீர்த்திருத்தம் வழிகாட்டல் தொடர்பாக பின்வரும் சிபார்சுகளை முன் GLDITgibgcbibgbg. (The Presidential Task force on General Education 1997:27)
1) பாடசாலைகளில் சில ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படுவர். அவர்களுக்கு வாழ்வுத்தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடர்பாக விசேட பயிற்சி வழங்கப்படும்.
அவர்கள் பாடசாலைகளின் நேர அட்டவணையில் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளப்படும் வழிகாட்டல் ஆலோசனைக் கடமைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
89 / மாசின்னத்தம்பி

Page 55
தற்போது (2004) இதற்குரிய ஆசிரியர்கள் தகுதி, நேர்முகத் தேர்வு முறைகளினடிப்படையில் தெரிவு செய்யப்படுள்ளனர்.
2) பாடசாலைகளும், பாடசாலைக்குடும்பங்களும் தமது பிரதேசத்தில் கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்புக்கள் பற்றியும் தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நெறிகள் தொடர்பான தகவல் மற்றும் தரவுகளைத் திரட்ட வேண்டும். அவற்றினடிப்படையில் தரவுத் தொகுப்பு (Databases) முறையொன்றை உருவாக்குதல் வேண்டும்.
3) வாழ்வுத்தொழில் வழிகாட்டல் அலுவலர்கள் (Careet Guidance Officers) நியமிக்கப்படுவார்கள். அவர்கள் பாடசாலை மாணவர்களை ஒழுங்கான கால இடைவெளியில் சந்திப்பார்கள். அப்போது அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடுவர். தேவையேற்படுமிடத்து மாணவர்களின் பெற்றோருடனும் அவர்கள் கலந்துரையாடுவர்.
இத்தகைய முன்மொழிவுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
Reference
1. Ministry of Education and Higher Education (1997), Counselling and Career Guidance, General Education Reforms, Colombop.27
2. Narayana Rao, S (1994) Chapter 10 - Guidance and Counselling in the Educational Setting, Counselling and Guidance, Tata Mcgrew - Hill publishing Ltd. pp 188 - 200
ஆசிரிய முகாமைத்துவம் 190

ஆசிரியருக்கான நேர முகாமைத்துவம்
சிரியர்கள் பாடசாலை மட்டத்தில் பணியாற்றும் நிலையில் தனிப்பட்டமுறையில் அவர்களைப் பாதிக்கும் அம்சங்களில் முதன்மையானவற்றுள் நேரம் போதாமை என்பது முக்கியமானது. "நேரம் போதாமை" என்ற காரணம், அவர்களது தாமதமான செயல்கள், பணியிலிருந்து ஒதுங்குதல், வினைத்திறனற்றுச் செயலாற்றுதல், வகை கூறலுக்கு இணங்காமை, போன்ற பலவற்றுக்குரிய நியாயப்படுத்தலுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒருவகையில் தொழில் சார்ந்த பலவீனமாக இனங் காணப்படுகிறது.
நேரம் போதாமை என்பதுபல சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட வகையில் பரபரப்பு, பதகளிப்பு, மன அழுத்தம், கோபம் கொள்ளல், விரக்தியடைதல் போன்ற பல நலக்கேடான நடத்தைக் கோலங்கள் அல்லது மனவெழுச்சிகளை ஏற்படுத்தி விடுகிறது.
இதனால் உடல் ரீதியான பாதிப்புக்களுக்கும், உளரீதியான பாதிப்புக்களுக்கும் அவர்கள் உட்படுவதுடன் பாடசாலை மட்டத்திலும், பாடசாலை சார்ந்த சமூக மட்டத்திலும் அவர்களது நற்பெயர் பாதிக்கப்படுவதற்குரிய வளர்ப்புக்களும் அதிகரித்து விடுகின்றன.
நேரம் சார்ந்த நெருக்கடி உளவியல் ரீதியானதாகவும் உடலியல் மருத்துவ அம்சம் சார்ந்ததாகவும், சுயமுகாமைத்துவம் சார்ந்ததாகவும் இனங்காணப்படுகிறது.
91 / மாசின்னத்தம்பி

Page 56
இவ்வடிப்படையில் ஆசிரியர்கள் தொடர்பான நேர முகாமைத்துவம் பற்றிய சில அடிப்படைகளையும் அணுகுமுறை மற்றும் நுட்பங்களையும் விளக்கிக் கொள்ள வேண்டும்.
நேரம் - ஒருவளம்
எந்தவொரு மனிதனதும் ஒரு நாள் என்பதை 24 மணித்தியாலங்களாக நோக்குவதும் பயன்படுத்த முயல்வதும் வழக்கமாகும். ஆசிரியரது நோக்கில் இந்த 24 மணித்தியாலங்களை பாடசாலையிலும் வீட்டிலும், சமூகத்திலும் செலவிட வேண்டியுள்ளது. அதாவது பின்வரும் தேவைகள், கடமைகள் தொடர்பாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
* தனிப்பட்ட தேவைகள் - உணவு, சுத்தம், ஒய்வு, மகிழ்ச்சி கெளரவம்
போன்ற தேவைகளை நிறைவு செய்தல்.
* குடும்ப மட்ட தேவைகள் - தாய், மனைவி சகோதரர், மக்கள் சார்ந்த தேவைகளை நிறைவு செய்தல் இது குடும்பத்தலைவர் என்ற நிலையில் அல்லது வீட்டின் பங்காளர் என்ற ரீதியில் நிறைவேற்றப்படவேண்டியவை.
இவை தனிப்பட்ட ரீதியிலான வசதிகள், மதிப்பு, பாதுகாப்பு என்பவற்றுடனும் மறைமுகமாகத் தொடர்புடையவை என்பதால் இவையும் முக்கியமானவை
* பாடசாலை மட்ட தேவைகள் - தொழில், வருமானம், என்றவகையில் இவை முதன்மையானவை எனினும் தனிப்பட்ட மகிழ்ச்சி, மரியாதை, நற்பெயர், என்பவற்றுக்கும் இவை அடிப்படையாக இருப்பதால் இவற்றையும் புறக்கணிக்க முடியாது.
* சமூக மட்டத் தேவைகள் - சமூகத்தின் அங்கத்தவர், சமூகத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தவல்லவர், சமூக பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர் என்ற வகையில் ஆசிரியர் இத்தேவைகளில் அதிக ஈடுபாடும் கவனமும்செலுத்த வேண்டும். சமூக நிறுவனங்கள், சமூக கொண்டாட்டங்கள், சமூக செயன்முறைகள், சமூக நெருக்கடிகளுக்கான தீர்வு நடவடிக்கைகள் போன்ற பலவற்றிலும் தம் பங்கினை ஆற்றவேண்டுமென்பதை இது குறிப்பிடுகின்றது.
இத்தகைய எல்லாவகையிலுமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு பல்வேறு வளங்கள் மற்றும் இயலுமைகள் அவசியமாகின்றன.
ஆசிரிய முகாமைத்துவம் /92

சொத்துக்கள், பணவருமானம், துணை ஆட்கள், நற்பெயர், நல்ல தொடர்புகள் என்பவற்றோடு போதியளவு நேரமும் தேவைப்படுகிறது. இந்த வகையில் பொருளியலாளரும், முகாமைத்துவ நிபுணர்களும் நேரம் என்பது மனிதனின் பல்வகைப்பட்ட தேவைகளையும் நிறைவேற்றும் ஆற்றல் கொண்ட வளமாகவே நோக்குகின்றனர். வளம் என்பதில் ஆசிரியர் நேரம் தொடர்பாக பின்வருவன பற்றிப்பரிசீலித்தல் அவசியம்.
1)
2)
3)
நேரத்தை உருவாக்குதல்:- தனது தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக - நேரத்தை உருவாக்கிக் கொள்ளுதல். மகோன்னதDIT 60T ởFITgb6Op6OT படைத்தவர்களுக்கும் ஒரு நாளில் 24 மணித்தியாலங்களே இருந்தன என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.
நேரத்தைத் திட்டமிடல் - தனது குறுங்காலமற்றும் நீண்டகால தேவைகளை சிந்தித்து, தெரிவு செய்து, ஒழுங்குபடுத்திக் கொள்வது இதில் முதல்நிலையாகும். அவை ஒவ்வொன்றுக்கும் உத்தேசமாக தேவைப்படக்கூடிய மணித்தியாலங்களைக் கணித்துக் கொள்வது இரண்டாவது நிலையாகும். தேவைகளையும் கிடைக்கும் நேரத்தையும் பொருத்தமாக இணங்கச் செய்வது மூன்றாவதுநிலையாகும். அவ்வாறு இணங்கச் செய்யும் முறையை விஞ்ஞான பூர்வமாக - நிதானமாக எதிர்கால நோக்குடன் மேற்கொள்ளும் போது அது நேரத்திட்டமிடலாகும். இதில் ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்தவேண்டும்.
நேர முகாமைத்துவம்:- தீர்மானிக்கப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு நேரத்தைப் பயன்படுத்துவதற்கான அனைத்து அம்சங்களையும் ஒழுங்குபடுத்துதல், கட்டுப்படுத்துதல், கண்காணித்தல், வழிப்படுத்துதல் இதில் முக்கியமானது. ஆசிரியர் சுய கட்டுப்பாடு உடையவராயுள்ள நிலையிலும் தனது இலக்கு அடையவேண்டிய குறிக்கோள் தொடர்பாக தெளிவான தீர்மானங்கள் கொண்ட நிலையிலுமே நேர முகாமைத்துவம் நடைமுறைச் சாத்தியமாகிறது. ஆசைப்படுவது எளிது; ஆனால் நிறைவேற்றி முடிப்பது கடினம். சீரான முகாமைத்துவத்தினாலேயே இது சாத்தியமாகும்.
ஆசிரியர் தன்னளவில் சுயகட்டுப்பாடு கொண்டிருப்பதும், தனக்குகிடைக்கும் பெளதிக, நிதி வளங்களில் கட்டுப்பாடு கொண்டிருப்பதும், தன் சூழல் மீது மேலாதிக்கம் கொண்டி
93 / மாசின்னத்தம்பி

Page 57
ருப்பதும், தனக்கு உதவக்கூடிய நபர்களிடையில் நன்மதிப்பை வளர்த்துக் கொள்வதும் நேர முகாமைத்துவத்திற்கு அடிப்படை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
4) நேரப் பயன்பாடு பற்றிய மதிப்பீடு- எந்த ஒரு ஆசிரியரும் நாளாந்தம் தனது நேரம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். இது உணவு உண்பது போல, உறங்குவது போல வாழ்வுச் செய்முறையின் பிரிக்க முடியாத செயலாகி விடவேண்டும். தனது திட்டத்தின் செயற்பாடுகள் எவ்வாறு, எந்தளவு நிறைவான முறையில் பூர்த்தி செய்யப்பட்டன என்று பரிசீலனை செய்ய வேண்டும். இதேமுறையில் வாராந்தமும் மாதாந்தமும் மதிப்பீடு செய்து பார்த்தல் வேண்டும். வருடத்தின் இறுதி வாரத்தில் கடந்து போன ஐம்பத்தியொரு வாரங்களிலான நேரப் பயன்பாடு பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். அவை தொடர்பான பரிசீலனையின் போது பின்வருவனவற்றைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
1) செய்ய வேண்டிய வேலைகள், அவற்றுக்குட்பட்ட நடவடிக்கைகளின் தெரிவில் தவறுகள், பொருத்தப்பாடின்மைகள் இருந்தனவா என பரிசீலித்தல்
i) ஒவ்வொரு வேலைக்குமான நேர ஒதுக்கீட்டு ஏற்பாடு திருப்திகரமானதா? அவை தொடர்பாக யாதேனும் குறைபாடுகள் இருந்தனவா என பரிசீலனை செய்தல்.
ii) வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டவை எவை? அதற்கு பெருமளவு பங்களிப்புச் செய்த செயல், அணுகுமுறை அல்லது நுட்பம் யாது? அதற்கு ஆசிரியரிடம் காணப்பட்ட சிறப்பார்ந்த அறிவு அல்லது ஆற்றல் ஏதேனும் உதவியதா? அவ்வாறு உதவியிருந்தால் அதனை தரமுயர்த்துவது சாத்தியமா? அதற்கு எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் யாவை? என்பன போன்ற வினாக்களைக் கேட்டு அதற்கான விடைகளைத் தேடுதல்,
iv) சில வேலைகள், நடவடிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டிருக்கலாம்; சில அரைகுறையாக நிறைவேற்றப்பட்டிருக்கலாம்; சில மிகவும் காலதாமதமாகிநிறைவேற்றப்பட்டிருக்கலாம். இவ்வாறு பாதிக்கப்பட்ட நடவடிக்கை
ஆசிரிய முகாமைத்துவம் 194

யின் முக்கியத்துவம் யாது? பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட நட்டம் அல்லது இழப்பு யாது? அவை குறுங்கால பாதிப்பை ஏற்படுத்த வல்லனவா? அல்லது நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தவல்லனவா?
இத்தகைய தவறுகளுக்கு பொறுப்பாக இருந்த நபர், சூழல், தடைகள் பற்றி தெளிவாக சிந்தித்து இனங்காணல் அவசியமாகிறது. இவற்றை ஒரு அனுபவமாக - பாடமாக -பின்பற்றுதற்கான வழிகாட்டு நெறியாக உணர்ந்து மனதில் பதித்துக் கொள்ளுதல் வேண்டும்.
இத்தகைய நான்குபடி முறைகளிலும் கூடிய கவனம் செலுத்தினால் மாத்திரமே நேரம் ஆசிரியருக்கு நன்மை தரும் வளமாக பயன்பட முடியும்.
நேரப்பயன்பாட்டுக்கான செயன்முறைத்திட்டம்
ஆசிரியர் ஒவ்வொருவரும் தமக்குக் கிடைக்கும் மணித்தியாலங்களை சிக்கனமாகவும் வினைத்திறனுடனும் விளைதறன் மிக்கதாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நேரம் பற்றிய தெளிவான எண்ணக்கருவை விளங்கிக் கொள்வதும் அதனை ஒழுங்காக திட்டமிட்டு, கவனமாகப் பயன்படுத்துவதும் அவசியமாகும்.
ஒருநாள் என்பது பொருளியல் கருத்துப்படி 8 மனித மணித்தியாலங்கள் எனப்படுகிறது, ஒருநாள் வேலை செய்தல் என்பது குறைந்தது எட்டு மணித்தியாலங்கள் ஏதேனும் உற்பத்திச் செய்முறைக்கு உதவுவதற்கு மனித உடல், மூளை உழைப்பை வழங்குவதன் மூலம் தனக்குரிய தொழில் வாய்ப்பைப் பயன்படுத்தி வருமானம் பெறுவது என்பதாகும். இங்கு மனித மணித்தியாலம் என்ற எண்ணக்கரு, உழைப்பு, உற்பத்தி, வருமானம் என்பவற்றை ஒன்றிணைந்த வகையில் விளக்க முயல்கின்றது. தற்போது உலகம் முழுவதும் இந்த வேலைக்கான மணித்தியாலங்கள் பற்றிய கருத்தும் அணுகுமுறையும் பல நிலைகளில் மாற்றமடைந்துள்ளது.
பாடசாலைகள் பொதுவாக வருடமொன்றுக்கு சராசரியாக 200 நாட்கள்செயற்படுகின்றபோது நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆறு மணித்தியாலங்களே கற்றல் - கற்பித்தலுக்கான நேரமாக அமையுமிடத்துவருடமொன்றுக்கான ஆசிரியரிடம் எதிர்பார்க்கப்படுகின்றபணிக்குரியநேரமாக ஆயிரத்துஇருநூறுமணித்தியாலங்கள்விளங்குகின்றன.
95 / மாசின்னத்தம்பி

Page 58
இந்த நிலையில் ஆசிரியரைப் பொறுத்து பின்வரும் முடிவுகள் எடுப்பது முக்கியமாகின்றது.
1) பாடசாலைப் பணிக்கான மணித்தியாலங்களை கற்பித்தல், புறக்கலைத்திட்டச் செயற்பாடுகள், பாடசாலை நிர்வாகத்திற்கான துணைச் செயற்பாடுகள், பாடசாலை - சமூக தொடர்புகள் சார்ந்த செயற்பாடுகள் என்பற்றுக்கு வினைத்திறனுடைய முறையில் எவ்வாறு ஒதுக்கீடு செய்வது? இதில் ஆசிரியர் மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் என்பன பேணத்தக்க முறையில் மாணவர் கல்வி, ஆளுமை விருத்தி, பாடசாலையில் விரும்பத்தக்க சூழல், இணக்கமான சமூகத் தொடர்பு என்பவற்றை முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் யாவை? என்பன போன்ற கேள்விகளுக்கு திருப்திகரமான விடைகளைக் கண்டறிய வேண்டும்.
2) பாடசாலை தொழிற்படாத மிகுதி 165 நாட்களும் எவ்வாறு தனது சுய முன்னேற்றம், தனது மகிழ்ச்சிகரமான ஒய்வு முறை, குடும்ப அங்கத்தவரின் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பவற்றுக்கு எவ்வாறு ஒதுக்கீடு செய்வதென்பதும் முக்கியத்துவமுடையது.
* தனது பொருளாதார வசதிகளையும், பண வருமானத்தையும் அதி. கரிப்பதற்கு நேரத்தை ஒதுக்கீடு செய்தல் வேண்டும். விவசாயம், சிறுவியாபாரம் போன்ற முயற்சிகளையும், ஆசிரியர் மேற்கொள்ளலாம்.
* தனது கற்பித்தல் பணியை திருப்திகரமாக மேற்கொள்வதற்கான ஆயத்தங்களைச் செய்தலும் முக்கியம், நூலகங்களைப் பயன்படுத்தல், தேவையான நூல்கள், குறிப்புக்கள் மற்றும் துணைச் சாதனங்களைச் சேகரித்தல், சக ஆசிரியர்களுடன் கலந்துரை. யாடி தனது வேலையை எளிதாக அதேசமயம் விளைதறன் மிக்கதாக மாற்றியமைத்தல், கல்விசார் கருத்தரங்குகள், செயலமர்வுகளில் பங்குபற்றல் போன்ற நடவடிக்கைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
* தனது தொழிலை வளம்படுத்துவதற்கான துணைச் செயற்பாடுகளிலும் ஈடுபடவேண்டும். அதற்கு உதவக்கூடிய நபர்கள், நிறுவனங்கள் என்போருடன் நல்ல தொடர்புகளை உருவாக்கவும் நன்மதிப்பை விருத்திசெய்யவும் முயற்சித்தல் வேண்டும். குறிப்பாக தேசிய மட்டப் பரீட்சைகள் நடாத்துவதற்கு உரிய பணிகளில் ஈடுபடலாம். பரீட்சைநிலையங்களில் மேற்பார்வையாளர்
ஆசிரிய முகாமைத்துவம் / 96

மற்றும் கண்காணிப்பாளராக பணியாற்றுவதால் பணவருமானம் கிடைப்பதுடன் தொழில்சார் அனுபவங்களையும் கற்றுக்கொள்ள முடியும்.ஒய்வு நாட்களில் ஏற்படக்கூடிய வீண் செலவுகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும். இதேபோல் விடைத்தாள் திருத்தும் பணியிலும் ஈடுபடல், அதற்கான தொடர்பாடல்களை கவனமாக மேற்கொள்ளுதல் என்பவற்றுக்கும் திட்டமிட்ட வகையில் நேரத்தை ஒதுக்கீடு செய்தல் அவசியம்.
தனது சம்பள நிலுவை, சம்பள அளவுத் திட்ட மாற்றம், சிக்கன சங்கங்களில் கடனுதவி பெறல் போன்ற வேலைகளையும் விடுமுறை நாட்களில்திட்டமிட்டு செய்தல். இதுமனஅழுத்தங்களைக் குறைக்க உதவும். வேலைநாட்களில் பரபரப்புடன் கல்வி அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கது.
தொழிற்சங்கங்களுடன் தொடர்பு கொண்டு தொழில் சார்ந்த சட்ட பாதுகாப்பு முறைகள், பெறக்கூடிய அனுகூலங்கள் என்பன பற்றிய விபரங்களைப் பெறுவதற்கும் விடுமுறை நாட்களைப் பயன்படுத்த வேண்டும். தொழிற்சங்கங்களுடன் இணக்கமான தொடர்புகளுக்கான நேர ஒதுக்கீடு செய்தல் தொழில் சார் நலன்களை உறுதிப்படுத்துவதாகவும் விளங்கும். இதில் போதியளவு கவனம்செலுத்த வேண்டும். குடும்பத்தில் மனைவி, மக்களுடன் ஒய்வாக இருந்து கருத்துப் பரிமாறுவதற்கு சிலநாட்களையும், தினமும் சில மணிநேரங்களையும் கட்டாயம் செலவிட வேண்டும். சில குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் வேலை செய்யும் நிலையில், ஒய்வாக உரையாட விடுமுறை நாட்களை கவனமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு சிறிதளவு பணத்தையும் ஒதுக்கிமனைவி;பிள்ளைகள் ஆகியோருடன் குறுகிய சுற்றுலாக்களை மேற்கொள்ளலாம். உறவினரையும் கோவில்களையும் தரிசிக்கச்செல்லலாம். சற்றுத் தொலை தூர சுற்றுலாத் தலங்களுக்கு அல்லது மகிழ்ச்சிகரமான விழாக்களுக்கு அழைத்துச் செல்வதற்கு விடுமுறை நாட்களை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும். இது ஆசிரியர் உழைப்பாற்றலை மேலுயர்த்தும்; குடும்ப அங்கத்தவரிடையே பரஸ்பர நல்லுணர்வு நம்பிக்கை என்பவற்றை மேம்படுத்தும். குடும்ப வாழ்வின் மகிழ்ச்சியையும் கட்டுக் கோப்பையும் இது உறுதிப்படுத்தும். இதற்கு திட்டமிட்டு சில நாட்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
97 / மாசின்னத்தம்பி

Page 59
மேற்கூறியவையனைத்தும் பலருக்கும் தெரிந்ததுபோல் உணர்வர். நடைமுறையில் அதிக விடுமுறை நாட்கள் கொண்ட ஆசிரியர்களால் தான் இத்தகைய அனுகூலங்களை அனுபவிக்க முடியும். எனினும் பெரும்பாலானவர்கள் இதனை சரியாக பயன்படுத்துவதுமில்லை; இதன் பயன்களைப் பெற்றதுமில்லை.
நேரமுகாமை நுட்பங்கள்
ஒருநாள்,ஒருவாரம், ஒருமாதம், ஒருவருடம் போன்ற எந்த ஒரு காலத்தையும் உச்ச பயனும் மகிழ்ச்சியும் தரத்தக்கதாக பயன்படுத்த வேண்டுமாயின்சரியான நுட்ப முறைகளைக் கையாள வேண்டுமென முகாமைத்துவ வியலாளர் வற்புறுத்துகின்றனர். நேரத்தைப் பயன்படுத்தும் நுட்பங்களை ஆசிரியர்கள் சரியாகக் கையாளுமிடத்து சூழலையும் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களையும், நிகழ்வுகளையும் நீங்கள் நோக்கும் முறையில் - கண்ணோட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தைக் காண முடியும்.
மற்றவர்களும் உங்களைநோக்கும் முறையிலும் சாதகமான, விரும்பத்தக்க மாற்றம் ஏற்படும். இதனால் பின்வருவனவற்றை விளங்கிக்கொள்வதும் அவற்றை நடைமுறையில் பின்பற்றுவதும் அவசியமாகின்றது.
1) தற்போது உங்கள்ஒரு நாளில் என்ன செய்கிறீர்கள்? எத்தனை மணி நேரம் உண்மையாக வேலை செய்கிறீர்கள்? எத்தனை மணி நேரம் பயன்மிக்க மகிழ்ச்சிகரமான தீமை ஏற்படுத்தாத ஒய்வில் செலவிடுகிறீர்கள்? இக்கேள்விகளை நீங்களே உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு எத்தகைய விடை கிடைக்கிறது. அத்தகைய விடையில் நீங்கள் திருப்தியடைகின்றீர்களா? இது ஒரு சுய பரீட்சை, சுய மதிப்பீடு.
ஒரு நாட்குறிப்பு அல்லது கையேடு அல்லது வாராந்த திட்டத்திற்கான குறிப்பு போன்ற ஏதேனும் ஒன்றை எடுத்து ஒருவாரம் ஒன்றுக்கு எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதை மணித்தியாலங்களில் பதிவு செய்யுங்கள். நீங்கள் செயல்படும்முறையை எழுத்தில் திட்டவட்டமாக பதிந்து பாருங்கள். இது சுலபமானது போல் தென்படும்; ஆனால் தொடக்கத்தில் கடினமானது. அவ்வாறு எழுதி முடிப்பீர்களானால் நீங்களே அதைப்பார்த்து ஆச்சரியம் அடைவீர்கள்.
ஆசிரிய முகாமைத்துவம் /98

2)
3)
4)
குறிப்பேட்டில் உங்கள் வாரத்திற்கான (எதிர்வரும்) வேலையைக் கவனமாகத்திட்டமிடுங்கள். நித்திரைக்கு செலவிடும் நேரத்தை கணித்துப்பாருங்கள். ஒரு நாள்ஒன்றுக்கு எட்டு மணித்தியாலங்கள் நித்திரை செய்பவராயின் வார மொன்றுக்கு ஐம்பத்தியாறு மணித்தியாலங்களை செலவிட்டு விடுவீர்கள். அவை பயன்படுத்துவதற்கு உங்களது கையில் உள்ள மனித மணித்தியாலங்கள் தான் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
மிகுதி நூற்றுப்பன்னிரண்டு மணித்தியாலங்கள் வேலைக்காக உள்ளன என்பதை அடுத்து எண்ணிப் பாருங்கள். இதனை முன்பு விபரித்ததுபோல பல்வேறு தேவைகளுக்கும் பங்கீடு செய்ய வேண்டும். இந்த வேலைக்கான மணித்தியாலங்களை உங்கள் பல்வேறு பட்ட தேவைகளுக்கும் முன்னுரிமையின்படி ஒதுக்கீடு செய்யுங்கள். முன்னுரிமைகள் சரியானவைதானா என்பதை பரிசீலித்து உறுதிப்படுத்துங்கள்.
இதனை தெளிவாக தீர்மானிக்க முடியாது திண்டாடுவீர்களேயானால் பின்வரும் நெருக்கடிகளுக்கு உட்படுவீர்கள். * கடைசி நேரம் வரை வேலைகளைத் தள்ளிப் போடுவீர்கள். * முழுமையாகவே அதனை நிறைவேற்றாமல் விட்டுவிடுவீர்கள் * செய்யாமல் விடுவதற்கு விடுபட்டமைக்கு நீங்களாகவே பொய்யான காரணத்தை போலிநியாயத்தைக் கற்பிதம் செய்து கொள்வீர்கள். இவை அனைத்துமே ஆசிரியராகிய உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய நன்மைகளை இல்லாமற் செய்வனதான் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும், நேரத்தை-வாரமொன்றுக்கு திட்டமிட்டிருப்பின் அதன் பின் உங்கள் திட்டத்துள்வராத வேலைகள் எதுவாயினும் அதற்கு இல்லை - இயலாது என மறுத்துரைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு இல்லையென்பது உங்களை மற்றவர்கள் நிராகரிப்பதற்கு காரணமாகிவிடும் என்று எண்ணாதீர்கள். உங்கள் திட்டத்தில் நீங்கள் தெளிவாக இருப்பது பற்றி நீண்ட காலத்தில் உங்கள் மீது நிச்சயமாக நல்லெண்ணம் ஏற்படும்.
வேண்டாத தொலைபேசி அழைப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பணியிலிருக்கும் போது தொலைபேசி
99 / மாசின்னத்தம்பி

Page 60
5)
5)
6)
அழைப்புக்களை ஏற்பதில்லை என்ற முடிவுக்கு வந்து உங்கள் குடும்பத்தவரிடமும் அதனை தெளிவுபடுத்தி விடுங்கள். அவர்கள் உங்களைக் காப்பாற்றுவார்கள். மிகவும் அவசரமான தேவையெனில் அவர்கள் தாமாகவே இரண்டாம் முறை அழைப்பர். அப்போது அதற்கு மதிப்பளித்தால் போதுமானது.
மாதாந்த கலண்டர் ஒன்றைப் பயன்படுத்தி பலவாரங்களுக்குமுரியதான உங்கள். வேலைத்திட்டத்தை (Work Schedule) ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தவணைக்குமுரியதாக திட்டமிடுங்கள். ஒரு தவணைக்குரிய வாரங்களில் உங்கள் வழமையான வேலை, பிரத்தியேகவேலை, பயணங்கள்,வங்கிப் பணிகள், சமூக தொடர்புப்பணிகள் போன்றவற்றை மிகவும் கவனமாக பரிசீலித்து திட்டமிட்டு குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கலண்டர் உதவியுடன் மிகவும் முக்கிய தினங்களையும் திகதிகளையும் உங்கள் நாட்குறிப்பில் அல்லது குறிப்பேட்டில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். பரீட்சை நாட்கள், வலய, கோட்ட நிர்வாக அணியினரின் மேற்பார்வை நாட்கள், வங்கி, காப்புறுதி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டிய நாட்கள், பாடசாலை தொடர்பான அவசியநாட்கள் என்பவற்றைக் குறித்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும். இவற்றுக்கு உமக்கு தேவைப்படும் நாட்களையும் கணித்து, அவற்றையும் குறித்துவையுங்கள்.
தீர்மானித்தவற்றை இயன்றளவுமுதலிலேயே நிறைவேற்றப்பழகிக் கொள்ள வேண்டும். கடைசித் தினங்கள் வரை ஒத்திப் போடுதல் பாதகமானது. பரபரப்பும், கோபமும் வேண்டாத மன அழுத்தங்களுக்கும் உட்படவேண்டிவரும். பணியும் நிறைவானதாக அமைய மாட்டாது. உரிய காலத்திற்கு முன்னரே வேலைகளைச் செய்யும் பழக்கத்தை வாழ்வின் நெறிமுறையாக - கலாசாரமாக வளர்த்தெடுத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.
எந்த ஒரு வேலையையும் செய்யும் போது, இடைக்கிடையே சிறிது நேரம் ஒய்வெடுத்துக்கொள்வது உங்கள் வினைத்திறனை அதிகரிக்க உதவும். அதேநேரம் அந்த ஓய்வு நேரத்தை சரியாக நிறுத்தி மீண்டும் பணியில் ஈடுபடும் பழக்கம் அவசியம். ஜப்பான் நாட்டில் தொழில் நிறுவனங்களில் தொழில் புரியும் பணியாளர்களின் வினைத் திறனையும், தொழில் ஈடுபாட்டையும் அதிகரிப்பதற்கு இவ்வாறு ஊக்கமளிக்கும் குறுகிய ஒய்வு நேர ஏற்பாடும்
ஆசிரிய முகாமைத்துவம் / 100

அணுகுமுறையும் கவனமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய நுட்பங்களை விளங்கிக் கொண்டு படிப்படியாக, கவனமாக கையாண்டுவருவதால் நேர முகாமைத்துவத்தின் எல்லா நன்மைகளையும் ஆசிரியர்கள்முழுமையாகப் பெற்றுக்கொள்ளமுடியும்.
இத்தகைய நேர முகாமைத்துவம் பற்றிய எண்ணக்கரு, நடைமுறை, அணுகுமுறை மற்றும் நுட்பங்களை பாடசாலை ஆசிரியர்கள் மட்டுமன்றி பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை முகாமைத்துவத்தில் ஈடுபடுவோரும், விளங்கிக் கையாளுமிடத்து பாடசாலை என்ற நிறுவனம் முழுமையாகவே வினைத்திறனும்,விளைத்திறனும் மிக்கதாக விளங்கும். பாடசாலையின் பெளதிக, நிதி மற்றும் மனித வளம் தொடர்பாக விரயங்கள் ஏற்படுவதையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.
ஆசிரியர்கள் நடத்தையில் செம்மையும், ஆற்றலும் துலங்கும். இதனால் மனித உறவுகளில் இணக்கமான சூழ்நிலை விருத்தியடையும்; நட்புணர்வு வளரும்; பாடசாலை மகிழ்ச்சியும் உயர் விழுமியங்களும் கொண்ட இடமாக சமூகத்தினாலும், உயர் மட்ட கல்வி அமைச்சினா. லும் இனங்காணப்பட்டு உரியவாறு மதிப்பும் உதவிகளும் அளிக்கப்படும்.
இதனால் ஆசிரியர்களிடம் நேரமுகாமைத்துவ திறன்களை வளர்ப்பதில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களும், கல்வி நிர்வாகிகளும், தொழிற்சங்கங்களும், பெற்றோர், பழைய மாணவர் சங்கங்களும் ஒன்றிணைந்து ஆர்வம் காட்ட வேண்டும்; அவர்களை ஊக்குவிப்பதற்கான உபாயங்களை வடிவமைத்துநடைமுறைப்படுத்த வேண்டும். சேவைக்காலப் பயிற்சியின் போதும் நேர முகாமைத்துவத்தை விளக்க வேண்டும்.
ஆசிரியர்களை முழுமையான வாண்மைத் துறையினராகவும் பாடசாலைகளை வினைத்திறனும் விளைத்திறனும் மிக்கனவாகவும் மாற்றியமைப்பதில் "நேரமுகாமைத்துவம்" முக்கியமான பங்குவகிப்பது பாடசாலைப் பொறுப்புமிக்கவர்களினால் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
Referance: 1) Lynn Underwood (1998) MasteringTime Management, Infinity
Books, New Delhi.
2) Everard and Morris, Gewffrey (1991) Exectre Sche
101 / மாசின்னத்தம்பி

Page 61
ஆசிரியர் விளைகிறன்
டசாலைகளின் தரத்தை உயர்த்துவது பற்றிச் சிந்திக்கும் போது கவனத்திற்கு வரும் முதன்மையான அம்சம் ஆசிரியர்களின் விளைத்திறனை உறுதிப்படுத்துவதாகும். பாடசாலைகளின் தரத்தை முன்னேற்றுவதற்குரிய வழிமுறைகள் பல சிபார்சு செய்யப்படுகின்றன.
* பாடசாலைக்குரிய வளங்களின் தொகை மற்றும் தரத்தை
அதிகரித்தல்
* பாடசாலையின் ஒழுங்கமைப்பை மாற்றியமைத்தல், இதில் வகுப்பறையின் ஒழுங்கமைப்பை மாற்றியமைத்தல் முக்கிய
மானது.
* மாணவர்களுக்கு போதியளவான கற்றல் உபகரணங்களை
வழங்குதல்
* ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் தரத்தை
மேம்படுத்தல்
இத்தகைய முயற்சிகளை முன்னேற்றுவதில் ஆசிரியர் விளைதிறனை உயர்த்துவதே மிகவும் முக்கியத்துவம் உடையது.
ஆசிரியர்கள் பணி தொடர்பாக மாணவர்கள் அடைவையும் ஆற்றுகையையும் எதிர்பார்க்கை மட்டத்திற்கு உயர்த்துவது முக்கியமானது மாணவர் எத்தகைய தகைமைகள், தேர்ச்சிகள், மனப்பாங்குகளுடன் பாடசாலையிலிருந்து வெளியேற வேண்டுமென்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோ அதனை அடையும் வகையில் ஆசிரியர்
ஆசிரிய முகாமைத்துவம் / 102

தொழிற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதுவே ஆசிரியர் விளைதிறனை உறுதிப்படுத்துவதாகும்.
சர்வதேச ரீதியில் பாடசாலைகள் மற்றும் வகுப்பறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அன்டேசன் (1987) பின்வரும் கருத்துக்களை வெளியிடுகிறார் (அன்டேசன் 1999:03)
* மாணவருடன் ஆசிரியர் தொடர்பு கொள்ளுதலும் உரையாடு
தலும்.
* வகுப்பறையில் அல்லது ஆய்வுகூடங்களில் ஒப்படைகளைச்
செய்தல். ஆசிரியர்கள் அவற்றைச் செய்வித்தல்
* வகுப்பறை முகாமைத்துவச் செயற்பாடுகளை ஆசிரியர் மேற்கொள்ளல். மாணவர் வரவை எடுத்தல், விநியோகம் அல்லது சேகரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுதல்.
பொதுவாக மாணவனது வகுப்பறை மட்டத்திலான நடத்தைகளை ஆசிரியர் எந்தளவுக்கு முன்னேற்றுகிறார் என்பதே மாணவரது அடைவை உயர்த்தும் முயற்சியில் முதன்மையானது.
பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியருக்கென இலக்குகள் பல வகுக்கப்பட்டுள்ளன. அவை இலங்கை போன்ற அரச கல்வி முறை (Public Education System) வலுவானதாகக் காணப்படும் நாடுகளில் ஆசிரியருக்குத் தொழில் வழங்கி பாடசாலைகளை பேணி வருகின்ற கல்வி அமைச்சினால் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆசிரியர் நிறைவேற்றுவதற்கு உதவுதல், வழிகாட்டுதல், கட்டுப்படுத்துதல், கண்காணித்தல் போன்ற பணிகளில் மாகாண மட்ட, வலய, கோட்ட மட்ட கல்வி நிர்வாகிகள் ஈடுபடுகின்றனர். நேரடியாக ஆசிரியருடன் தொடர்பு கொண்டு இத்தகைய இலக்குகளை ஆசிரியர்கள் அடைவதை மேற்பார்வை செய்வோராகவும் அதனை ஊக்குவிப்போராகவும் பாடசாலை மட்ட முகாமையாளர் செயற்படுகின்றனர். தமக்கென வகுக்கப்பட்ட இலக்குகளை ஆசிரியர்நிறைவேற்றுமிடத்து அவர்கள் விளைத்திறன் மிக்கோராக இனங்காணப்படுகின்றனர்.நடைமுறையில் வகுக்கப்பட்ட இலக்குகளை நன்கு அறிந்து விளங்கிக் கொண்டவர்கள் தமது வினைத்திறனையும், விளைத்திறனையும் அதிகரிப்பதற்கு ஏற்றதாக தாமாகவே இலக்குகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இவ்வாறு தேசிய ரீதியாக வகுக்கப்பட்ட இலக்குகளையும், தனி நபராக தாமாகவே ஏற்படுத்திக் கொண்ட இலக்குகளையும் முழுமை
103 / மாசின்னத்தம்பி

Page 62
யாக நிறைவேற்றுமிடத்து ஆசிரியர் விளைத்திறன்மிக்கோராக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர்.
ஆசிரியர்கள் தமது இலக்குகள் பற்றிய தெளிவான அறிவைப் பெற வேண்டும்; தேவைப்படும் பல்வகைத் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும், பொருத்தமான மனப்பாங்கையும் விருத்தி செய்யவேண்டும். இவ்வாறு செய்து கொள்ளுமிடத்து அவரது தேர்ச்சி மட்டம் உயர்ந்து விடுகிறது. இது முதல் நிலைத்தேவையாகவுள்ளது.
அவ்வாறு பெற்றுக்கொண்ட தேர்ச்சிகளை வகுப்பறை மட்டத்தில் பயன்படுத்துவது அவர்களது ஆற்றுகை (Performance) ஆகும். வகுப்பறையில் தேர்ச்சிகளை உகந்த முறையில் பிரயோகிப்பதற்கான அறிவையும், பயிற்சியையும் ஆசிரிய கல்வி நிகழ்ச்சித் திட்டங்களூடாக வழங்க வேண்டியுள்ளது. இதனால் சிறப்பான ஆசிரிய கல்வியைப் பெற்றவர்களுக்கு போதிய வளங்களும், ஊக்குவிப்புக்களும் பாடசாலை மட்டத்தில் வழங்கப்படுமிடத்து ஆசிரியர் விளைத்திறனை உயர்த்துவது சாத்தியமாகின்றது.
ஆசிரியர்கள் தமது தொழில் சார்ந்த இலக்குகள் பற்றி மிகவும் பரந்துபட்ட, தெளிவான நோக்குகளைக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு இசைவுடைய செயல் அணுகுமுறைகளைத் தெரிந்திருக்க வேண்டும். மாணவர் மீது இலக்குகளைப்பிரயோகித்தல்பற்றிய உண்மை அக்கறையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மாணவர்கள் மீதும் அவர்களது கற்றலை முன்னேற்றுதல் மீதும் உண்மையான ஈடுபாட்டை தாமாகவே ஆசிரியர் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர் கற்றலுக்கு தடையாக அமையும் காரணிகள்,நிலைமைகள்பற்றிய பூரண அறிவைப்பெற்று அவற்றை அகற்றும் வழிமுறைகளில் பயிற்சியும் பெற்று அதனை வினைத்திறனுடன் நிறைவேற்றுதல் மிகவும் அவசியமாகிறது. ஆசிரியர் வினைத்திறன் வெற்றியை மாணவர் அடைவு மற்றும் ஆற்றுகை சார்ந்த குறிகாட்டிகளில் ஏற்படும் முன்னேற்றங்களினடிப்படையில் மதிப்பீடு செய்வது பற்றி ஆசிரியர் அறிந்துகொள்ள வேண்டும். அறிவுரீதியான முன்னேற்றுதல் மனவெழுச்சி ரீதியாக சமநிலையை உருவாக்குதல், நடத்தை ரீதியில் இணக்கப்பண்பை வளர்த்தல் முக்கியமானவை என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
இதன்படி விளைத்திறன் பற்றி ஆசிரியர் தெரிந்து கொள்வதாயின் பின்வருவன பற்றிய நிறைவான அறிவையும், தேர்ச்சியையும் கொண்டிருக்க வேண்டும் என்பது இங்கு வற்புறுத்தப்படுகின்றது.
ஆசிரிய முகாமைத்துவம் / 104

1) தேசிய ரீதியில் ஆசிரியருக்கென வகுக்கப்பட்ட இலக்கு
களை அறிதல்.
2) பா சாலை மட்டத்தில் - நுண்மை மட்டத்தில் (Micro Level)
தனிப்பட்ட இலக்குகளை ஏற்படுத்திக் கொள்ளுதல்.
3) மாணவர் அடைவையும், ஆற்றுகையையும் உயர்த்துவதற்கான மிகச் சிறந்த வகுப்பறைப் பணிகளை அறிந்திருத்தல்.
4) இலக்கை அடைதற்கான தமது ஆற்றலை மேம்படுத்துவதற்குதவும் பல்வகைப்பட்ட கற்றலை மேற்கொள்ளுதல்.
5) இலக்குகளைத் தடைப்படுத்தும் காரணிகள், இலக்குகளை நிறைவு செய்ய உதவும் காரணிகளை இனங்காண உதவும் பாடசாலை மய குறிகாட்டிகளை விளங்கிக்கொள்ளுதல்.
6) கற்றல் - கற்பித்தல் தொடர்பான ஆற்றுகை பற்றிய அளவீடுகளையும் மதிப்பீடுகளையும் ஒழுங்கான கால ஒழுங்கில் மேற்கொள்ளுதல்.
மாணவர்களது அடைவு, ஆற்றுகை தொடர்பான முன்னேற்றங்கள் ஆசிரியர் விளைதறனை அளவிட்டுக் கொள்வதற்கான பிரதான குறிகாட்டிகள் என்று கொள்ளப்படுமிடத்து அத்தகைய மாணவர் முன்னேற்றங்களைத்தீர்மானிக்கும் காரணிகளையும் ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும். அவை
* பிள்ளைகளின் பரம்பரை இயல்புகள், வீட்டுப் பின்னணி போன்றவற்றின் ஒன்றிணைந்த இயல்பினால் தீர்மானிக்கப்படும் அம்சங்களை அறிதல் பிள்ளை பாடசாலையில் நுளையும் போதுள்ள தகைமை மட்டம் இது அப்போதிருந்த மாணவரது அறிவு, ஆற்றல்கள் உளச்சார்புகள், விழுமியங்கள் என்பவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.
* பாடசாலைகளின் வசதிகள், பாடசாலை நிர்வாகத்திற்கும் ஆசிரியர் பணியாற்றலுக்கும் வழங்கப்படுகின்ற தார்மீக ஆதரவு, உதவிகள், ஊக்கங்கள் என்பவற்றை வழங்குவதில் பெற்றோரின் பங்களிப்பு
* பிள்ளைகளின் பாடக்கலைத்திட்டம் இணைக்கலைத்திட்டம் மற்றும் சமூக உணர்வு, தேசியப்பற்று, அமைதி,நல்லிணக்கம்
105 / மாசின்னத்தம்பி

Page 63
பற்றிய நாட்டம் என்பவற்றை முன்னேற்றுதற்குரியதாக பாடசாலை மட்டத்தில் நிறைவேற்றப்படும் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள். இவற்றில் பெற்றோரினதும், ஆசிரியரினதும் பங்களிப்பு.
* ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் கொண்டு செல்லுகின்ற பாடங்கள் மற்றும் கற்பித்தல் முறைமையியல் பற்றிய அறிவு, ஆற்றல்கள், உளச்சார்புகள், மனப்பாங்குகள், மற்றும் விழுமியங்கள். இவை தொடர்பாக ஆசிரியர்களிடையே நிறைந்த வேறுபாடுகள் இருப்பது இனங்காணப்பட்டுள்ளது.
கற்றல் அனுபவம், குணப்பண்புகள், நடத்தைப் பண்புகள் தொடர்பாக நீண்டகாலம் கற்பிக்கும் ஆசிரியர், புதிதாக சேர்ந்த ஆசிரியர், ஆண் ஆசிரியர், பெண் ஆசிரியர் போன்றோரிடையில் பெரிய வேறுபாடுகளிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் நீண்டகாலம் மாணவருடன் இடைவினையுறவு கொண்டு கற்பிக்கும் போது கற்றலின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென காப்புகள் தெரிவிக்கின்றன (அன்டேசன் 1999:11) பாடசாலையும் ஆசிரிய தொகுதியும் இணைந்து ஏற்படுத்தும் பேரின மாதிரியிலான (Macro Level) தாக்கமாக இதனை இனங்காண முடியும்.
இவ்வாறே தனிப்பட்ட ஆசிரியர்கள் தனிப்பட்ட மாணவர் மீது கூர்மையான அவதானம், அக்கறை ஈடுபாடு காட்டி வரும் போது மிகப் பெரிய தாக்கங்களை இனங்காண முடியும். கல்வியிலும், தொழிலிலும் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்விலும் சாதனைகள் நிகழ்த்திய பலர் அச்சாதனைகளின் பின்னால் சில தனிப்பட்ட ஆசிரியர்களைக் குறிப்பிட்டிருப்பது இதனை உறுதிப்படுத்துகிறது. இந்திய அரசியல் யாப்பை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர், இந்திய சனாதிபதி அப்துல் கலாம் போன்றோர் தம் சாதனைகளின் பின்னுள்ள தனிப்பட்ட ஆசிரியர்கள் சிலர் பற்றி நிறையவே எழுதியுள்ளனர். நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது வாழ்வுப் பாதையை திருப்பி விடுவதில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி வலியுறுத்தியுமுள்ளனர்.
ஆசிரிய முகாமைத்துவம் 1106

விளைகிறனை உயர்த்துதல்
பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களின் விளைத்திறனை அதிகரிப்பதற்கு சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அனுபவங்களிலிருந்து பல விதப்புரைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அவற்றை பின்வருமாறு குறிப்பிட முடியும்.
கல்வி சார்ந்த பணிகளை மேம்படுத்தல்
மாணவர்கள் கற்பதற்கு பாடசாலைகளிலும், இலாப நோக்குடனான தனியார் கல்வி நிலையங்களிலும், வீட்டிலும் சமூக நிறுவன உதவியுடன் சமூக மட்டத்திலும் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.
பல சிறிய, கிராமிய பாடசாலைகளில் பிரதான பாடங்களான கணிதம், விஞ்ஞானம், நவீன சர்வதேச மொழிகள் போன்றவற்றைக் கற்பதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை. பாடங்கள் வழங்கப்பட்டாலும் போதியளவு ஆசிரியர்கள் காணப்படுவதில்லை. எல்லா" மாணவரும் சிறப்பாகக் கற்பதற்குரியவாறு ஆசிரிய வழங்கல் மற்றும் பங்கீடு காணப்படுவதில்லை. போதிய எண்ணிக்கையுடைய ஆசிரியர்கள் இருப்பின் போதிய பயிற்சியும் வழங்கப்படுமாயின் கற்றலுக்கான வாய்ப்புக்களை ஆசிரியர் உறுதிப்படுத்த முடியும். ஒழுங்கான முறையில் இத்தகைய பாடங்களைக் கற்கும் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றனவா என்றும் அப்பாடங்கள் போதிய அளவுக்கு அல்லது முழுமையாக கற்பிக்கப்பட்டனவா என்றும் மதிப்பீடு செய்தல் வேண்டும். இவை திருப்திகரமாக கற்பிக்கப்படுவதற்குரிய சீரான கண்காணிப்பு பாடசாலை முகாமையினால் மேற்கொள்ளப்படவேண்டும்.
கற்பிக்கப்படும் விடய எண்ணக்கரு, பாடவேளைகள், கற்பித்தல் முறை, மாணவர் செயற்பாடுகள் தொடர்பாக பொருத்தப்பாடு பேணப்படுவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இது சிறப்பாக நிறைவேற்றப்படுமிடத்து விளைத்திறன் அதிகரிக்க முடியும்.
ஆசிரியர் மாணவருக்குரிய ஒப்படைகளை வழங்கும் போது மாணவர் நோக்கில் மிகவும் இலகுவானதாகவோ, மிகவும், கடினமானதாகவோ இருத்தல் கூடாது. மாணவர் முயன்று கற்பதற்கான தூண்டுதல்களையும் வாய்ப்புக்களையும் ஆசிரியர் வழங்க வேண்டும்.
மாணவர்கள் மீளக்கற்பதற்கும், சுயமாகக் கற்பதற்கும், கற்றலுக்கு அதிக நேரம் ஒதுக்குவதற்கும் ஆசிரியர் போதிய வீட்டு
107 / மாசின்னத்தம்பி

Page 64
வேலைகளைத் திட்டமிட்டு வழங்கவேண்டும். தேவைப்படுவோர்க்கு மேலதிக உதவிகளையும் வழங்கவேண்டும். ஹொங்கொங் போன்ற நாடுகளில் வீட்டுவேலைகளில் உதவி செய்வதற்காக மாணவர்களின் வீட்டுக்குச் சென்று உதவுவதற்கென்றே மேலதிக நேரம் திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறது. இத்தகைய முயற்சிகள் பாடசாலை மட்டத்தில் அவசியமாகிறது.
வகுப்பு வேலைகளையும் வீட்டு வேலைகளையும் செய்து முடிப்பதற்கு வேண்டிய அறிவையும் ஆற்றலையும் ஆசிரியர் விருத்தி செய்தல் வேண்டும். இதற்கு வேண்டிய அறிவு, அனுபவங்கள், பயிற்சிகள் பிரச்சினைகளை விடுவித்தல் போன்றன தொடர்பாக மாணவர்களை முன்னேற்ற ஆசிரியர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் செய்யும் வேலைகள், அது தனியாக மாணவர் மேற்கொள்வதாகவோ அல்லது குழுவாக பணியாற்றுவதாகவோ உள்ளபோது அவற்றை மேற்பார்வை செய்து உதவி வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர்களின் வேலைகளை மதிப்பீடு செய்யும் போது அவர்களிடமுள்ள தவறுகள் கண்டறியப்பட்டு, அவற்றைத் திருத்துவதற்கான மேலதிகக் கற்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றுக்கு வேண்டிய கற்பித்தல் நிகழ்ச்சித்திட்ட தயாரிப்பையும், துணைச் சாதன பயன்பாட்டையும் விருத்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பிரதான பாடங்களில் மாணவர் உண்மையாகக் கற்றவற்றைக் கண்டறிவதற்குரிய கணிப்பீட்டு வினாக்கொத்துக்களைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருட முடிவிலும் இவ்வாறான கணிப்பீடுகளை மேற்கொண்டு அதற்கேற்றவாறு ஒப்படைகளையும் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.
இத்தகைய விடயங்கள் தொடர்பான அறிவையும், தேர்ச்சிகளையும் மேம்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்கி வருதல் வேண்டும்.
வகுப்பறைச் சூழலையும், முகாமைத்துவத்தையும் மேம்படுத்துதல்
ஆசிரியர்கள் தம் விளைதறனை அதிகரிக்கும் வகையில் செயற்படுவதாயின், வகுப்பறைச் சூழல்களின் நிலை என்பவற்றை
விளங்கிக்கொள்ளும் திறமையுடையவர்களாக இருத்தல் வேண்டும் அவை தொடர்பாக பின்வரும் அம்சங்கள் முக்கியமானவை.
ஆசிரிய முகாமைத்துவம் / 108

1) வகுப்பறைகளை செயற்படுதன்மை கொண்டதாகவும் அதே சமயம் மாணவர்களுக்கு கவர்ச்சியுடையதாயும் மாற்றியமைக்க வேண்டும். வகுப்பறைகள் அரச கட்டிட பொறியியல் பகுதியினரின் அங்கீகரிக்கப்பட்ட நியமங்களுக்கு அமைவாகவேநிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. எனினும் வெளிச்சம், காற்றோட்டம், இடவசதி, வர்ணம் தொடர்பாகவும் வகுப்பறைக்கு அயலிலுள்ள காட்சி தொடர்பாகவும் ஆசிரியர்கள் கவனம் செலுத்தி இயன்றளவு மாற்றியமைக்க முயற்சி செய்தல் வேண்டும். தளபாடங்களும் மாணவர்களின் வயது, பாடங்கள், வகுப்பறைச் செயற்பாடுகள், இடவசதி மாணவர்களின் எண்ணிக்கை, இயல்பு என்பவற்றுக்கேற்றதாக வடிவமைக்கப்படல் வேண்டும். பொருத்தமாக அவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் வேண்டும். தளபாட ஒழுங்கமைப்பு பிள்ளைகளின் வகுப்பறைச் செயற்பாட்டைப் பாதிப்பது பற்றி தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெளிவுப்படுத்தியிருப்பதாக அண்டேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
2) ஆசிரியர் மாணவர் ஆகியோரின் வகுப்பறைச் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் வகுப்பறை அமைக்கப்படல் வேண்டும். கற்றல் - கற்பித்தல் சார்ந்த ஆற்றுகையை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வகையில் வகுப்பறை அமைதலில் ஆசிரியர் கவனம் செலுத்த வேண்டும்.
3) மாணவர் மத்தியில் உயர்ந்த மதிப்பை உருவாக்கும் செயல்களில் ஆசிரியர் ஈடுபடல் அவசியமாகிறது. ஆசிரியர் மாணவருடனான தொடர்பாடலில் மிகவும் நேர்மையாக செயற்படல் வ்ேண்டும். மாணவர் சந்தேகங்கள், மற்றும் வினாக்களுக்கு உரிய விடை தெரியாத விடத்து ஆசிரியர் நேர்மையுடன் தெரியாதென்றே விடையளிக்க வேண்டும். மாணவர் உரையாடும் போது ஈடுபாட்டுடன் செவிமடுத்து மாணவர் நம்பிக்கையை உயர்த்திக் கொள்வதில் ஆசிரியர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சகபாடிகள் என்ற வகையில் மாணவர் தமக்கிடையே கலந்துரையாடவும், இணைந்து செயற்படவும் தேவையான அனுசரணையையும் ஊக்கங்களையும் ஆசிரியர் வழங்குதல் வேண்டும்
109 / மாசின்னத்தம்பி

Page 65
மாணவர்களுடனான தொடர்புகளில் நடுநிலை உணர்வையும் செயலையும் ஆசிரியர் வெளிப்படுத்த வேண்டும். தம்மை ஆசிரியர் சமமாகவே மதிக்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் செயற்படல் வேண்டும். மாணவர் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி உரையாடுவதை ஆசிரியர் தவிர்க்க வேண்டும். அவர்களை ஒப்பிடுவதையும் இயன்றளவுக்குத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர் அடைவையும், ஆற்றுகையையும் உயர்த்துவதற்கு ஏற்றதாக வெகுமதிகள் கிடைக்கும் என்ற எண்ணத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதில் ஆசிரியர் கவனமாக செயற்பட வேண்டும்.
பாடசாலை முகாமையாளரும், கல்வி அமைச்சும் இத்தகைய வகுப்பறைச் சூழலை விருத்தி செய்வதற்கு தேவைப்படுகின்ற பெளதிக வசதிகள், பாடநூல்கள் என்பவற்றை வழங்குவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வகுப்பறைகளில் பாடநூல்களுக்கு மேலதிகமாக துணைவாசிப்பு நூல்களின் தொகுதியொன்றை ஒவ்வொரு வகுப்பறையிலும் கிடைக்கச் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஜப்பானிய நாட்டின் வகுப்பறைகளில் இத்தகைய துணை (மேலதிக) வாசிப்பு நூல்கள் அதிகம் கிடைக்கச் செய்வதில் அந்நாட்டின் கல்வித் திட்டமிடலாளர் கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர்.
மாணவர் நோக்கிய பயன்மிக்க மனப்பாங்குகள், வினைத்திறன் மிக்க வகுப்பறை நடத்தைகள் என்பவற்றை ஆசிரியரிடம் ஏற்படுத்துவதில் பாடசாலை முகாமைத்துவமும், கல்வி அமைச்சும் கவனம் செலுத்த வேண்டும்.
வகுப்பறை ஒழுங்கமைப்பையும், முகாமைத்துவத்தையும் முன்னேற்றுதல்
புதிய பாட அலகுகளையும், எண்ணக்கருக்களையும் கற்பிக்கத் தொடங்கும் போது பெரிய குழுப்போதனை விரும்பத்தக்கது. தனிப்பட்ட முறையில் அல்லது சிறிய குழுப்போதனை முறையில் கற்பிப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
எல்லா மாணவரும் கற்றுக் கொள்வதற்கு சாத்தியமான வகையில் சிறிய குழுக்களை உருவாக்குவது முக்கியமானது. தேவைக்கேற்ப ஆசிரியர் இக்குழுக்களின் அளவை மாற்றியமைக்கலாம், சுயமாக அபிப்பிராயங்களை வெளியிடல், விவாதித்தல்,
ஆசிரிய முகாமைத்துவம் / 110

கிரகித்தல், பிரச்சினைகளைத் தீர்த்தல். போன்ற திறன்களை மாணவர்களிடம் விருத்தி செய்வதற்கு ஏற்றதாக கற்றல் செயற்பாட்டுக்குரிய சிறிய குழுக்களை ஆசிரியர் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் சில நெருக்கடிகளை குறைப்பதற்கு அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். வழிகாட்டி, உரையாடல்களை ஒழுங்குபடுத்தி, கலந்துரையாடல்களை எண்ணக்கருவாக்க உதவுதல் வேண்டும்.
வகுப்பறை மட்டத்தில் இக் குழுக்களுக்கு ஒப்படைகளை வழங்கும் போது ஆசிரியர் அவர்களுக்கு சவால்களை ஏற்படுத்தி சிந்தனைக் கிளறலுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். உள்ளடக்கத்திற்கு ஏற்றதாக நேர ஒதுக்கீட்டையும் மேற்கொள்ள வேண்டும்.
குழுக்களில் வேறுபட்டதிறன்களும், கற்றல் தேர்ச்சியும் கொண்ட மாணவர்களை ஒருங்கிணைப்பதில் ஆசிரியர் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு தேவைப்படும் பொருத்தமான ஆதரவையும் ஆலோசனையும் வழங்குவதன் மூலம் கற்றல் குழுக்களின் வினைத்திறனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், பங்குபற்றலிலிருந்து ஒதுங்கியிருக்கும் மாணவர்களை இனங்கண்டு அவர்களின் குழுநிலைப் பங்கு பற்றலை உயர்த்துவதற்கு உரிய வழிமுறைகளை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும்.
இத்தகைய வகுப்பறை ஒழுங்கமைப்பில் விளைத்திறனை உறுதிப்படுத்துவதற்கு ஆசிரியர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுடன் ஒன்றிணைந்த வகையில் வகுப்பறை முகாமைத்துவ செயற்பாடுகளையும் ஆசிரியர் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். இவை தொடர்பாக பின்வருவன அவசியம் என ஆய்வுகளினடிப்படையில் அண்டேசன் விளக்குகிறார்.
1) பாடசாலைகளைத் தொடங்குதல், பாடங்களை நிறைவு செய்தல் என்பவற்றை குறிப்பிட்ட நேரத்தின்படியே செய்தல் வேண்டும். ஒரு பாடத்திலிருந்து அடுத்த பாடத்திற்கு மாறும்போது நேரவிரயம் ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் வகுப்பறையில் எவ்வாறு விரும்பத்தக்க நடத்தைக் கோலங்களைப் பேண வேண்டும் என்பது பற்றியும் விரும்பத்தகாத நடவடிக்கைகள் எவை என்பது பற்றியும் தெளிவாக எழுதப்பட்டு, மாணவருக்கு உரிய வகையில் கற்பிக்கப்பட வேண்டும். எக்காலத்தும் இவற்றை ஒரே மாதிரி
III / மாசின்னத்தம்பி

Page 66
யாகப் பேண வேண்டும் என்பதில்லை. இவற்றை மீள்பார்வை செய்துகொள்வது விரும்பத்தக்கது. விரும்பத்தக்க நடத்தைகளை மாணவர் கொண்டிருக்கும்போது பாராட்டும் ஊக்குவிப்பும் ஆசிரியர்களால் வழங்கப்படுதல் வேண்டும்.
2) மாணவர்களது நடத்தைகள் வகுப்பறைச் செயற்பாட்டுக்கும் பாடசாலை விழுமியத்திற்கும் தடையாக உள்ளபோது தண்டனை வழங்குவது அவசியமென்று ஆசிரியர் கருதுமிடத்து எல்லா மாணவருக்கும் சமமான தண்டன்ைகளையே வழங்கவேண்டும். பாரபட்சம் காட்டப்படுவதைத் தவிர்க்க வேண்டும். எனினும் மாணவனின் உள நெருக்கீடுகளுக்குக் காரணமாகி விடாது பார்த்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் ஒரே வகையான துர்நடத்தையில் இரு மாணவர் ஈடுபடும் போது ஆசிரியர்கள் சிலர் சமூகத்தில் செல்வாக்கு, பணபலம் மிக்க பெற்றோரின் அல்லது தமது நண்பர்களாகிய ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு சில விலக்குகள் வழங்கி பாதுகாத்துக் கொண்டு ஏனையோருக்கு தண்டனை வழங்குவதும் உண்டு. இது எவ்வாறேனும் பிள்ளைகளினால் நன்கு உணரப்பட்டு விடும். அவ்வாறான நிலைமைகள் ஆசிரியர் மீதான மாணவர் நம்பிக்கையை சிதைத்துவிடும். எதிர்காலத்தில் குறிப்பட்ட ஆசிரியர் எந்தளவு நேர்மையாக நடுநிலையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும். அதே தொகுதி மாணவர்கள் குறிப்பிட்ட ஆசிரியர் மீது நம்பிக்கை கொள்ள மரட்டார்கள். ஆசிரியர் நடத்தை பற்றிய ஒரு முற்சாய்வு உணர்வு அவர்களிடம் வலுவாக வளர்ந்து விடும் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வகுப்பு வேலைகளில் கவனம் செலுத்தி அவற்றின் நோக்கங்களை விளங்கி தொழிற்பட வேண்டியதன் அவசியம் மாணவர்க்கு உணர்த்தப்பட வேண்டும். மாணவரின் அடைவு மற்றும் ஆற்றுகை அவர்களது பொறுப்புமிக்க வகுப்பறைத்தொழிற்பாட்டிலேயே தங்கியுள்ளதென்பதை மாணவர் உணரும்படி அறிவுறுத்துவது ஆசிரியர் கடமையாகின்றது.
கல்வித்திட்டமிடலாளரும், முகாமைத்துவ மற்றும் நிர்வாக, உயர் அலுவலர்கள், பாடசாலை ஒழுங்கமைப்பு, முகாமைத்துவம் என்பவற்றின் இலக்குகளை அடைவதற்கு ஆசிரியர்கள் வகுப்பு
ஆசிரிய முகாமைத்துவம் / 112

மட்டத்தில் உள்ள மாணவர்களின் பல்லினத்தன்மையை விளங்கிக் கொண்டு செயலாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கான வழிமுறைகளை தீர்மானித்துக் கொள்வது அவசியமாகும். மெல்லக்கற்போர்,மீத்திறன்மிக்கோர், உள சமநிலையுடையோர், உள நெருக்கீடுகளுக்கு உள்ளானோர் போன்ற வேறுபட்ட மாணவ இயல்புகளை இனங்கண்டு கொள்ளவேண்டும் என்பதை வற்புறுத்த வேண்டும். கட்புல, செவிப்புல, மற்றும் உடலியல் குறைபாடுடையவர்களையும் சாதாரணமானவர்களுடன் கலந்து அமர்ந்து ஒரே வகுப்பில் கற்பிக்க வேண்டும் என்று அண்மைக்காலத்தில் கல்வி உளவியலாளர்கள் கருதுகின்றனர். இதனை உள்ளடக்கும் கல்வி (Inclusive Education) என்று கருதுகின்றனர். சாதாரண மாணவர்களும் உதவி தேவைப்படும் மாணவர்களும் காணப்படுகின்ற வகுப்பறைகளில் சிறுகுழுக்களை பொருத்தமான முறையில் உருவாக்கி கற்பிக்க வேண்டும் என்பதை ஆசிரியர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏகவினமான மாணவர்களைக் கொண்ட வகுப்பறைகளாக இருப்பின் அதற்குரிய முறைகளையே கையாளவேண்டும். இத்தகைய பல்லின மற்றும் ஏகவின மாணவர்களுக்கு உரிய இருக்கை ஏற்பாடுகளிலும் பொருத்தமான முறைகளை ஆசிரியர் கையாள வேண்டும். ஆசிரியரின் ஆசனத்திற்கும் மாணவர்களின் ஆசனத்திற்குமிடையிலான இடைவெளி, இட ஏற்பாடு என்பவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.
குறித்த பாடவேளைகளில் பல மாதிரியாக அமையும் வகுப்பறைகளில் வினைத்திறன் மிக்கதான கற்பித்தல் பணியை உறுதி செய்வதற்கு ஆசிரியர்கள் ஆசன ஏற்பாடு, தொடர்பாடல், கற்பித்தலுக்கான ஒழுங்கான நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குரிய சேவைக் காலப் பயிற்சியை வழங்க வேண்டும். சில நாடுகளின் அனுபவங்களிலிருந்து கண்டறியப்பட்டவற்றிலிருந்து திட்டமிடுவோர் சில வழி காட்டல்களை மேற்கொள்ள முடியும். பாடத்தின் கற்றல் - கற்பித்தல் சந்தர்ப்பங்களை முன்னேற்றுதல்
ஆசிரியர் பணியை பாடவேளைகளை விளைதறனுடையதாக்குவதன் மூலம் முன்னேற்ற முடியும். குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஒருவகுப்பறையில் தரப்பட்ட நேரத்துள் மேற். கொள்ளப்படுகின்ற கற்பித்தல் கற்றல் தொடர்பான ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ஒழுங்குமுறையிலமைந்த செயற்பாடுகளின் தொகுதி பாடவேளை என விளங்கிக் கொள்ள வேண்டும்.
113 / மாசின்னத்தம்பி

Page 67
வகுப்பறையில் அறிகை சார், எழுச்சிசார், உள இயக்கம் சார் நோக்கங்களுக்கமைய ஆசிரியர் தொழிற்பட வேண்டியுள்ளது. தரப்படும் (40 நிமிடம் பொதுவாக) பாடவேளையில் பின்வரும் செயற்பாடுகளை மிகக் கவனமாக ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும்.
ஆசிரியர் தயாராதல், மாணவர்களைத் தயார்ப்படுத்தல் மாணவர் குறிக்கோளை இனங்காண உதவுதல் மாணவர் விளங்கிக் கொள்வதை உறுதிப்படுத்தல்
சுய பயிற்சியை முன்னேற்றுதல்
வகுப்பறைப் பணியை நிறைவு செய்தல் சில சமயங்களில் கணிதம், கணக்கியல், மனைப்பொருளியல், போன்ற பாடங்களைக் கற்பிக்கும் போது பாடவேளைக்கான செயற்பாடுகளில் விசேட கவனம் செலுத்த முடியும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டு பாடவேளைகளை இணைந்த வகையில் கற்பிக்கும் சந்தர்ப்பங்களில் சிறப்புக்கவனமும், திட்டமும் தேவைப்படுகிறது.
எச்சந்தர்ப்பத்திலும் பாட குறிக்கோளிலிருந்து விலகி விடாதவாறு துணைச்சாதனங்களைக் கையாள்வதும் பாட விளக்கங்களை வழங்குவதும் அவசியமாயுள்ளது. பல சந்தர்ப்பங்களில் ஆசிரியர்கள் இதில் பலவீனமானவர்களாயிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆசிரியர் சுய கண்காணிப்பு முறையாக அமைகிறது.
இதே போல மாணவர்கள் கற்றல் குறிக்கோளிலிருந்து விலகி. விடாதவாறு பாதுகாப்பதற்கும் ஆசிரியர் உதவ வேண்டும். பொருத்தமான வகுப்பறை ஒப்படைகளை வழங்கி கண்காணிக்குமிடத்து மாணவரின் தனிப்பட்ட வேலைகளில் மேன்மையை ஏற்படுத்த முடியும். விளங்கிக் கொள்ளும் திறனையும், பிரயோகிக்கும் திறனையும் எந்தளவுக்கு பெறுகிறார்கள் என்பதையும் உறுதிப்படுத்துவது ஆசிரியர் கடமையாகும். இதற்காக பின்னூட்டல்களும், திருத்தங்களும் பொருத்தமான முறையில் கையாளப்படவேண்டும், என்று அண்டேசன் வற்புறுத்துகிறார்.
இத்தகைய பாடவேளைச் செயற்பாட்டில் வழிகாட்டல் கையேடுகளைத் தயாரித்து வழங்குவதில் கலைத்திட்டங்களை திட்டமிடுவோரும் கல்வி முகாமைத்துவதுறையினரும் ஈடுபாடு காட்டவேண்டும்.
ஆசிரிய முகாமைத்துவம் / 114

வகுப்பறைத் தொடர்பாடலை தரமுயர்த்தல்
ஆசிரியர்களுக்கும் மாணவருக்குமிடையிலான தொடர்புகள் தொடர்பா லின் சீரான தன்மை, வினைத்திறன் என்பவற்றிலேயே தங்கியுள்ளது.
கற்பித்தல், வினாக்களைக் கேட்டல், விளக்கமளித்தல், அறிவுறுத்தல்களை வழங்குதல், கட்டுப்படுத்தல், ஊக்கமளித்தல், தனிப்பட்ட தேவைகளில் மாணவர்களுக்கு அனுசரணை வழங்குதல் போன்ற பல மாதிரி தேவைகளுக்குரிய தொடர்பாடலையும் ஆசிரியர் கவனமாக மேற்கொள்வது அவசியம்.
சரியான, பொருத்தமான, இசைவான சொற்களையும் வசனங்களையும் தெரிவு செய்து உரிய தொனி மாற்றங்களுடன் பயன்படுத்திக் கொள்வது அவசியமாயுள்ளது. பேசுதல் செவிமடுத்தல் என்ற இரண்டையும் பொருத்தமாக இணைத்துக் கொள்ள வேண்டும். சம்பாஷணைகளாயின் எவ்வாறு குழப்பமின்றி ஒழுங்குபடுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். பாடசாலை மட்டத்திலான செயல் நிலை ஆய்வுகள் மூலமாக தொடர்பாடலின் பயனுறுதித் தன்மையை பரிசோதனை செய்து கொள்ளவும் முடியும்.
மாணவர் அடைவையும் ஆற்றுகையையும் முன்னேற்றுதல்
ஆசிரியர்கள் மாணவர் அடைவு மற்றும் ஆற்றுகை இலக்குகள், மட்டங்கள் பற்றிய தெளிவான எண்ணத்தையும், ஈடுபாட்டையும் மாணவர்களிடம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது வகுப்புநிலை, பாடங்கள் என்பவற்றுக்கேற்ப வேறுபடக்கூடியது. மாணவர் தமது இலக்குகளை அடைவதைத் தடைப்படுத்தும் அவரது இயல்புகள், நடத்தைகள் என்பவற்றையும் தடைப்படுத்தும் காரணிகளையும் மாணவர் இனங்காண்பதற்கு ஆசிரியர் முயற்சித்தல் வேண்டும். இதனை நிறைவுடையதாக்குமிடத்து ஆசிரிய விளைதறனை அதிகரிப்பது சாத்தியமாகிவிடுகிறது.
குறுகியகால ஒழுங்கும், ஈடுபாடும், தொடர்ச்சியும் கொண்ட மாணவர் கற்றல் செயற்பாடுகளே அவர்களது நீண்ட கால சாதனையைநிறைவேற்ற உதவும் என்பதை மாணவர்க்கு உணர்த்த வேண்டியது ஆசிரியர் கடமையாகும். வெற்றியடைதல் என்பதை புலப்படும் எளிய குறிகாட்டிகளினூடாக குறுகிய காலத்தில் கண்டறிய முடியாது
115 / மா.சின்னத்தம்பி

Page 68
என்பதையும் அது பெரிதும் அகவயமானதாகவே அமையும் என்பதையும் உணரச் செய்ய வேண்டும். முன்னேற்றங்களுக்குரிய இலக்குகள் மாற்றமடையும், படிப்படியாக உயரும் என்பதை மாணவர் அறியும் படியும் செய்ய வேண்டும். எவ்வாறு வினைத்திறன் மிக்கதாக பாடங்களைப் படிப்பது, மனனம் செய்வது.நினைவைமிட்பது, பரீட்சைகளில் சமர்ப்பிப்பது தொடர்பான அறிவையும், பயிற்சியையும் கூட ஆசிரியர் வழங்கவேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகின்றனர். கற்றலுடன் இணைந்த தொழில் நுட்பங்கள் மற்றும் உபாயங்களை மாணவர் கைக்கொள்ளுவதற்கான பாராட்டு, ஊக்கல் என்பவற்றையும் ஆசிரியர் சிறப்புக் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். மாணவரிடையிலான கலந்துரையாடல்களில் அவர்களது அடைவு, ஆற்றுகை இடம் பெறுதற்குரிய உபாயங்களை ஆசிரியர்களும் கையாள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய விடயங்களில் ஆசிரியருக்கு சேவைக் கால பயிற்சிகளை வழங்க வேண்டும். தேவையான வழிகாட்டிக் கையேடுகள், பரிசோதனைப்பட்டியல்கள் என்பவற்றையும் தயாரித்து, காலத்துக்குக் காலம் மீள்பார்வை செய்து வழங்குவதில் கல்வித் திட்டமிடுவோரும், முகாமைத்துவத் துறையினரும் கவனம் செலுத்தி வருதல் அவசியம் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் விளைத்திறனை அதிகரிப்பதென்பது பெருமளவு வகுப்பறையிலான அவர்களது செயற்பாடுகளின் பூரணத்துவம், வெற்றி என்பவற்றில் தங்கியிருப்பதாக உலகள்ாவிய ரீதியில் மேற்கொள். ளப்பட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டியதன்படி பல முயற்சிகள், செயற்பாடுகள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது.
கற்பித்தல், வகுப்பறைச் சூழலையும் கவின் நிலையையும் மேம்படுத்துதல், வகுப்பறை ஒழுங்கமைப்பு மற்றும் முகாமைத்துவத்தைச் சிறப்பானதாக்குதல், பாடத்தின் கற்றல்-கற்பித்தல் சந்தர்ப்பங்களை முன்னேற்றுதல், வகுப்பறை மட்டத்திலான தொடர்பாடலை தரமுயர்த்துதல், மாணவர் அடைவையும் ஆற்றுகையையும் முன்னேற்றுதல் போன்ற பல நடவடிக்கைகளிலும் தமது விளைத்திறனை ஆசிரியர்கள் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
இதற்கான ஆசிரிய சேவைக் காலப் பயிற்சிகள், மற்றும் செயலமர்வுகள் கவனமாகத் திட்டமிடப்படல் வேண்டும். அவற்றின் வினைத்திறன் மிக்க நடைமுறைப்படுத்தலிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாயுள்ளது.
ஆசிரிய முகாமைத்துவம் /I6

கலைத்திட்டங்களை வடிவமைப்போர், கல்வித்திட்டமிடுவோர், கல்வி நிர்வாகிகள், கல்வி முகாமைத்துவத்துறையினர் போன்ற பல பகுதியினரும் ஆசிரிய விளைத்திறனை உயர்த்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். அந்த நிலையில் எமது பிரதேசத்தின் புவியியல், பொருளாதார, சமூக, தொழில் நுட்ப தர நிலைமைகளைக் கவனத்திற் கொள்ள வேண்டும். மாணவர்களின் குடும்ப மற்றும் ஊட்ட நிலைமைகளையும் கருத்திற் கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் பொருளாதார, சமுக, வாழ்க்கைத்தரம், அவற்றிடையிலான ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றையும் பரிசீலனை செய்ய வேண்டும். பாடசாலைகளின் பெளதிக வசதிகள், பாடசாலைகளின் பரம்பல், பாடசாலைகளிடையிலான தூரம் என்பனவும் கூர்ந்து நோக்கப்படல் வேண்டும் பாடசாலைகளுக்குரிய பாடநூல்கள்,தளபாடங்கள், கற்பித்தல் பலகைகள், ஆய்வு கூட உபகரணங்கள் போன்றவற்றின் விநியோகம் உரிய காலத்தில் எல்லாப் பாடசாலைகளுக்கும் சமமாக மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதும் முக்கியமானவை. யுத்தத் தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேச பாடசாலைகளுக்கான வளங்களின் விநியோகம் தொடர்பாக பல குறைபாடுகள், ஒழுங்கீனங்கள் தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பாடசாலைக் குறிக்கோள்கள், கலைத்திட்டம், ஆசிரிய கல்வி ஏற்பாடு, மதிப்பீட்டுச் செய்முறைகள் என்பன மத்திய நிலைப்படுத்தப்பட்டுள்ளன; அவை தேசிய ரீதியிலானவை இதனால் ஆசிரிய விளைத்திறனை உயர்த்துவதற்கு அடிப்படையாக இனங் காணப்படுகின்ற தேவைகள், வளங்கள், ஏற்பாடுகள் என்பன தொடர்பான குறைபாடுகள் அனைத்தும் கல்வி அமைச்சினால் அகற்றப்படல் வேண்டும். இவற்றை அகற்றும் நடவடிக்கைகளிலான தாமதங்கள் நிச்சயமாக ஆசிரிய விளைதறனை உயர்த்துவதற்கு தடையாக அமையும் என்பதை கொள்கை வகுப்போரும் நடைமுறைப்படுத்துவோரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இணையத்தளப்பாடசாலை (Internet Schools) முறை வளர்ச்சியடைந்துவருகிறது. ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் வகுப்பறைகள் கல்விசார் இணையத் தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மின்னியல் நூல்கள் (e-Books) பயன்படுத்தப்படுகின்றன; மின்னியல் கற்றல் (e-Learning) ஊக்குவிக்கப்படுகிறது; மின்னியல் கற்பித்தல் (e-teaching) வளர்ந்துவிட்டது. “அறிவை வழங்குபவர் என்ற முன்னைய மரபு வழிப்பணியிலிருந்து
117 / மாசின்னத்தம்பி

Page 69
ஆசிரியர்கள் அறிவைத் தேடி மாணவர்க்கு இனங்காட்டுபவர்கள்” என்ற புதிய பணிக்கு மாறிவருகின்றனர்.
米
இப்புதிய மாற்றங்களை எமது பாடசாலைகளுக்கும் அறிமுகப்படுத் துவது அவசியமானது எல்லாப்பாடசாலைகளுக்கும்மின்சக்திவழங் குவது அல்லது மாற்று சக்திவளத்தை வழங்குவது அவசியமாகிறது. ஏற்கனவே கணணிகளைப் பெற்ற பாடசாலைகள் சக்தி வழங்கலின்மையினால் கணணிகளை வெறுமனே "துய காட்சிப் பொருட்களாக” பேணிவருவதைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமானது. சக்தி வழங்கலின் மூலம் மின்னியல் வகுப்பறைகளை உருவாக்க முடியும்
தொலைபேசி தொடர்புகளை இயன்றளவுதாங்கிக் கொள்ளக்கூடிய செலவுகளில் எல்லாய் பாடசாலைகளும் பெறுதற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்
வகுப்பறைகளின் பெளதிக கட்டமைப்புக்களையும் (தூசியற்ற, தூய்மை மிக்க) ஏற்றதாக மாற்றியமைக்க வேண்டும். சரியான தொழில்நுட்ப தராதரங்களைப் பேணுவதும் இதில் அவசியமாகிறது.
ஆசிரியர்களுக்கு போதியளவான மின்னியல் கற்பித்தல் பயிற்சி. களை வழங்க வேண்டும். தேவையான தொழில் நுட்ப அலுவலர்களையும், உதவியாளர்களையும் பாடசாலைகளில் நியமிப்பதும் அவசியமாகிறது.
பாடசாலைகளின் நேர அட்டவணை, நேரஒதுக்கீடு தொடர்பாகவும் போதியளவு, பொருத்தமான மாற்றங்களைய்பாடசாலை முகாமைத்துவம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பல மாற்றங்களை மேற்கொண்டு இணையத்தள
பாடசாலை முறையையும் அறிமுகம் செய்தல் வேண்டும். இப்பாடசாலைகளிடையிலும் தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும். இதற்கேற்றதாக ஆசிரிய வேலைகளையும், பயிற்சி முறைகளையும்; வசதிகளையும் உருவாக்கிக் கொள்வது இன்றியமையாதது.
இவ்வாறுமாறும் புதிய கல்வி தொடர்பான நிலைமைகளை எதிர்
காலத்தில் கவனத்திற்கொண்டு அதற்கேற்ப ஆசிரிய செயற்பாடுகளையும் முன்னேற்ற வேண்டும். இதனால் காலத்தின் தேவைக்கு அமைவாக ஆசிரிய விளைதறனை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதையும் நினைவிலிருத்திக் கொள்வது அவசியம்.
ஆசிரிய முகாமைத்துவம் / 118

ஆசிரியர் முன்னேற்றம்
லங்கையில் கல்விச் செயலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்குரிய ஏற்பாடாக அரசாங்கம் மேற்கொள்ளும் சட்டபூர்வமான செயற்பாடாக கல்விச் சீர்திருத்தங்கள் அமைகின்றன. புதிய கொள்கைகளின் செயல்படுத்தும் வடிவங்களாக கல்விச்சீர்திருத்தங்கள் அமைகின்றன. கல்விக் கொள்கைகளை செயற்படுத்துமிடத்து மாற்றங்களின் முகவராக அதிபர்களைப் போன்று ஆசிரியர்களும் முக்கியமானவர்கள்.
கல்விச் சீர்திருத்த செயல் முறைகள் ஆசிரியர்களின் கல்வி மற்றும் உயர் தொழில் தகைமைகள், ஈடுபாடு, அவர்களுடைய நாடளாவிய பரவுகை, அவர்களுடைய சேர்ப்புகள், பதவியுர்வுகள் மற்றும் சேவை நிபந்தனை என்பவற்றில் தங்கியுள்ளன. காலத்திற்குக் காலம் ஏற்படுத்தப்படும் கொள்கைகள் மற்றும் குறுகிய கால அரசியல் முன்னுரிமைகளினால் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். (மனித விருத்திக்கான கல்வி பற்றிய தொலை நோக்கு 2003:164) ஆசிரியை பயிற்சிகள் பொருத்தப்பாடாக அமையவில்லை என்றும் ஆசிரிய நியமன மற்றும் பதவியுயர்வுகளில் சமத்துவ ஏற்பாடுகள் ஏதுமில்லையென்றும் குறை கூறப்படுகிறது. ஆசிரியர்கள் அனைவரும் வாண்மைத்தகைமையுடையவர்களாக இருத்தல் வேண்டும் என்னும் அரசின் கொள்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனினும் 1990 களில் பின்பற்றப்பட்ட துரித நிகழ்ச்சித்திட்டங்களினால் தொழிற்தகைமையுடைய ஆசிரியர் தொகை 2000 ஆம் ஆண்டில் 84.2% ஆக அதிகரித்தது. ஆசிரியர்களில்26.7% பட்டதாரிகளாகவும் அவர்களுள் 16.5% எவ்வித தொழிற்தகைமை அற்றவர்களாகவுமிருந்தனர் (2003)
119 / மாசின்னத்தம்பி

Page 70
ஆசிரியர்களில் தகைமை பெற்றவர்கள் பரம்பலில் அதிகளவு சமமின்மை காணப்படுகிறது. இலங்கை முழுவதிலும் பயிற்றப்படாத ஆசிரியர் 15% மாகவுள்ளனர். அம்பாறை, மொனராகலை மாவட்டங். களில் இவர்கள் தொகை 20% - 27% வரையிற் காணப்படுகிறது. மோதல்களினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இத்தகைய பயிற்றப்படாதவர் தொகை ஒப்பீட்டு ரீதியில் அதிகமாகும். ஆனால் தேசிய ரீதியான புள்ளிவிபரங்களில் அவை உள்ளடக்கப்படவில்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியற்துறை, மற்றும் திறந்த பல்கலைக்கழக கல்வியியற்துறை என்பவற்றின் ஆசிரிய கல்வி நிகழ்ச்சித்திட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக்களின்றி கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட மாணவர்களிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தேசிய புள்ளி விபரங்களின்படி நோக்கும் போது 6-11 ஆம் தரங்களில் விஞ்ஞானம்; கணிதம் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குரிய பற்றாக்குறை மேல் மற்றும் தென்மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் காணப்படுகிறது. இம் மாகாணங்களில் ஏனைய பாடங்களுக்கும் பற்றாக்குறை உண்டு. இத்தகைய ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலைகளிலான ஆசிரிய விளைத்திறனை அதிகம் பாதித்து வருகிறது.
தேசிய ரீதியில் கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதெல்லாம் கற்றல் - கற்பித்தல் நுட்பங்களைப் பொருத்தமான முறையில் மாற்றியமைப்பதில் காணப்பட்ட தடைகள் ஆசிரிய விளை திறனைப் பாதித்தபோது அவை நீண்ட காலத்தில் கல்வியின் தர வீழ்ச்சிக்கும் காரணமாகி விட்டன.
பல்வேறு சர்வதேச உதவிகளில் தங்கியிருக்கும் ஆசிரிய கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் பல தடவைகளில் தோல்வியடைந்திருந்தன. இலங்கையில் பல்கலைக்கழகங்களின் கல்வியியல் துறைகளினால் நடாத்தப்படும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறிகளுக்கும் திறந்த பல்கலைக்கழக கல்வி டிப்ளோமா கற்கை நெறிகளுக்கும் வுேறுபாடு காணப்படுகின்றது. அதேபோல் தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாத்தப்படும் கல்விடிப்ளோமா கற்கை நெறி பல அடிப்படை. களில் பல்கலைக்கழகங்களின் கற்கை நெறியின் உள்ளடக்கம்; மதிப்பீடு, கல்வியின் தரம் தொடர்பாக வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இதனால் ஆசிரியர்களை பணிநிலை தொடர்பாக வலுவூட்டு
ஆசிரிய முகாமைத்துவம் / 120

தல் என்பது திருப்திகரமாக நிறைவேற்றப்படவில்லை. தேசிய கல்வியியற் கல்லூரிகள் முழுமையாக ஆசிரிய கல்வியில் ஈடுபடுகின்ற போதிலும், வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஆசிரிய பயிற்சிக்கால சாலைகளை முடிவிடும் வசதிகளும் எதுவும் காணப்படவில்லை. இதனால் பழைய முறையிலான ஆசிரிய பயிற்சி முறையை முழுமையாக தடை செய்யாத போது சம காலத்தில் புதிய மாதிரியில் ஆசிரிய கல்வி நிகழ்ச்சித்திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
ஆசிரிய கல்வியை மேம்படுத்துவதற்குரிய பல புதிய ஆலோசனைகள் தேசிய கல்வி ஆணைக்குழுவின் பொதுக்கல்வி பற்றிய தேசிய கொள்கைச் சட்டக மொன்றுக்கான புதிய ஆவணத்தில் (2003) தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை
1) இலங்கையில் 1991 இன் 19 ஆம் இலக்கச்சட்டப்படி உருவாக்கப்பட்ட தேசிய கல்வி ஆணைக்குழுவின் முதன்மையான பணி ஆசிரிய கல்வி பற்றிய புதிய கொள்கைகளை உருவாக்குதலாகும். இதற்காக தேவையான நிறுவனங்களுடனும் தனிநபர்களுடனும் ஆலோசனைகளை மேற்கொள்ள முடியும்.
i) கல்வி, மனிதவள அபிவிருத்தி, கலாசார விவகாரங்கள் அமைச்சில் ஆசிரியர் கல்விச்சபை ஒன்றை உருவாக்குதல் வேண்டும். அச்சபை பின்வரும் விடயங்களுக்குப் பொறுப்பாக இருக்கும்.
அ) பாடசாலை முறைமையின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் ஆசிரிய கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை இயைபுபடுத்தல் ஆ) அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் வருகின்ற தேசிய கல்விக் கல்லூரிகளையும் ஆசிரியர் தொடரு கல்வி நிலையங்களையும் ஒழுங்குபடுத்துதல் சுயமாக சுதந்திரத்துடன் தொழிற்படும் பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வி நிறுவகம் (NIE) என்பன இவற்றில் உள்ளடக்கப்படவில்லை. இ) ஆசிரிய கல்விநிறுவனங்களில் மேற்கொள்ளக் கூடிய கற்கை நெறிகளை இனங்காணல், பகிர்தல் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தலும் கண்காணித்தலும், ஈ) கல்வியமைச்சிலுள்ள திட்டமிடல் பிரிவுடன் இணைந்து திட்டமிடலும், இத்தகைய ஆசிரிய கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்த்தலும், பகிர்தலும்.
121 / மாசின்னத்தம்பி

Page 71
உ) திட்டமிடல் பிரிவுடன் இணைந்து வெற்றிடங்கள் மற்றும் பாடசாலை அமைப்பில் காணப்படும் ஆசிரியர் தேவை தொடர்பான தகவல்களை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் தேசிய கல்வி நிறுவனங்களுக்கும் வழங்குதல், ஊ) நிபுணர் குழுக்களை நியமித்தலும் பின்வரும் தர உறுதிப்பாடு
பற்றிய செயன்முறைகளைக் கண்காணித்தலும், * தேசிய கல்விக்கல்லூரிகள், ஆசிரிய கல்வி நிறுவனங்கள், ஆசிரியர் நிலையங்களின் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள்
* தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டப்படிப்பல்லாத நிகழ்ச்சித் திட்டங்கள், சேவைக்கால ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள்.
எ) ஆசிரியர் கல்வியாளரின் தொழில் சார் விருத்தியை உறுதி செய்யும் வகையில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் பதவியாளரின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதலை ஆரம்பித்து வைத்தலும் உதவுதலும். i)பின்வருவோர் ஆசிரியர் கல்விச் சபையின் உறுப்பினர்களாக
இருத்தல் வேண்டும்.
அ) கல்வியமைச்சின் செயலாளர்
ஆ) சபையின் செயலாளராக செயற்படுதற்காக கல்வியமைச்சின் ஆசிரிய கல்விப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம்/பிரதம ஆணையாளர்
இ) தேசிய ஆணைக் குழுவின் தலைவர் அல்லது அவரால்
நியமிக்கப்படும் ஒருவர்
ஈ) பல்கலைக்கழக கல்விப்பீடங்களின் அல்லது கல்வித்துறை
யின் தலைவர்கள்
உ) தேசிய கல்வி நிறுவகப் பணிப்பாளர் நாயகம் அல்லது
அவரால் நியமிக்கப்படும் ஒருவர்
ஊ) தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி அலுவல்கள் சபைத்
தலைவர்
ஆசிரிய முகாமைத்துவம் / 122

எ) தேசிய கல்விக் கல்லூரித்தலைவர்களின் இரண்டு பிரதி.
நிதிகள்
ஏ) தொடருரு ஆசிரிய கல்வி நிறுவனங்கள் / நிலையங்களின்
இரண்டு பிரதிநிதிகள்
ஐ) பாடசாலை அதிபர்களின் இரண்டு பிரதிநிதிகள்
ஒ) கல்வியில் அனுபவமுள்ள இரண்டு உறுப்பினர்கள். இச் சபை
யின் தலைவராகக் கல்விக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சரவை செயலாளர் பணியாற்றுவார்.
iv) இச்சபையை உருவாக்குதற்கென தனியான சட்டம் ஒன்று
இயற்றப்பட வேண்டும்
V) ஆசிரிய கல்விச் சபையின் செயலகமாக கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விப் பிரிவு செயற்படுவதுடன் அது நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் பொறுப்பாக இருக்கும்
இக்கல்விப் பிரிவு தொடக்க நிலை ஆசிரியர் கல்வி மற்றும் தொடருரு கல்வி என்பவற்றின் பணிப்பாளர்கள் இருவர், பிரதிப் பணிப்பாளர் இருவர் உதவிப்பணிப்பாளர் இருவர் ஆகியோரைக் கொண்டிருக்கும். அத்துடன் பொருத்தமான துறைச் சேவைப் பதவியாளரையும் கொண்டிருக்கும்.
vi)ஆசிரியை கல்விக்கான கலைத்திட்ட அபிவிருத்தி மற்றும்
பரீட்சைகளுக்கு பின்வரும் நிறுவனங்கள் பொறுப்பாக இருக்கும்
அ) பல்கலைக்கழகங்கள் (தமது கற்கை நெறிகளுக்கு மாத்திரம்)
ஆ) தேசிய கல்வி நிறுவகம் (தனது சுய நிகழ்ச்சித்திட்டங்கள், தேசிய கல்விக்கல்லூரிகளின் நிகழ்ச்சித் திட்டங்கள், தொடருரு கல்வி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு மாத்திரம்)
பரீட்சைத்திணைக்களம், தேசிய மதிப்பீடு மற்றும் சோதனைச் சேவைகள் மற்றும் தேசிய கல்விக்கல்லூரிகள் என்பவற்றுடன் இணைந்து பரீட்சைகளை நடாத்தும்
தொடருரு ஆசிரியர் கல்வி
பாடசாலைக் கலைத்திட்டத்தினால் பூர்த்தி செய்யப்படாத தேவைகளை நிறைவேற்றுவது இதன் நோக்கமாகும் ஆசிரிய கல்வி
123 / மா.சின்னத்தம்பி

Page 72
வாய்ப்புக்கள், ஆசிரிய தொழில் விருத்தி என்பற்றை மேம்படுத்துவதாக இக்கல்வி விருத்தி செய்யப்படும்.
இதற்கான துரித நிகழ்ச்சித்திட்டங்கள் ஆங்கில தேர்ச்சி மட்டத்தை உயர்த்தல், தகவல் தொழில்நுட்பம், அழகியற்பாடம் என்பவற்றில் ஆலோசனையும் வழிகாட்டலும் வழங்குதல், புதிய கல்வித் தொழில்நுட்பத்தை முன்னேற்றகரமான முறையில் அறிமுகம் செய்தல், மனித உரிமை, சமூக நியாயத்தன்மை, தேசிய ஐக்கியம், பால்நிலைச்சமத்துவம் தொட்ர்பாக சிறந்த மனப்பாங்கை ஏற்படுத்துதல் என்பன இதன் முக்கிய இலக்குகளாகவுள்ளது.
2004 - 2008 காலப்பகுதியில் பின்வரும் நிறுவனங்கள் சேவைக்கால துரித நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபடும்
* மகரக ஆசிரியர் கல்லூரி * பேராதனை ஆசிரியர் கல்லூரி/ஆங்கிலக் கற்கை நிறுவனம் * கம்பளை ஆசிரியர் கல்லூரி * உணவட்டுன ஆசிரியர் கல்லூரி (காலி)
கட்டம் கட்டமாக நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் 1000 இடங்களில் இவை நிறைவேற்றப்படும்.
தொழில் நுட்பத்திறன்கள், வழிகாட்டல் மற்றும் ஆலோசனை, அழகியற்பாடங்கள் போன்ற ஏனைய துறைகளில் சேவைக்கால ஆசிரியர்நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குவதற்கு பின்வரும் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களும் பயன்படுத்தப்படும்.
* பலப்பிட்டிய ஆசிரியர் கல்லூரி * இராகம ஆசிரியர் கல்லூரி * அனுராதபுரம் ஆசிரியர் கல்லூரி
தகவல் தொழிநுட்பம் ஒன்பது மாகாண, மத்திய வள நிலையங்களில் உள்ள கணினி வள நிலையங்களின் மூலம் நுட்பத்திறன் விருத்தி மாதிரியில் மேம்படுத்தப்படும்
ஆசிரியர் நிலையங்களும், பிராந்திய ஆங்கில துணை நிலையங்களும் வலய அடிப்படையில் தேவைக்கேற்ப பொருத்தமான தொடருரு கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை நிறைவேற்றும்.
ஆசிரிய முகாமைத்துவம் / 124

பாடசாலை அதிபர்களும் தமது பாடசாலை ஆசிரியர்களின் தொழில்சார் விருத்திக்கு ஏற்றதாகவும், தமது பாடசாலைக்கு ஏற்றதாகவும் தொடருரு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்த வேண்டும்.
இவற்றுடன் ஆசிரியர் முன்னேற்றத்திற்காக தர உறுதிப்பாடு, பதவியாளர் விருத்தி, பதவியுயர்வுகள் என்பவற்றிலும் கவனம் செலுத்த வேண்டுமென்று புதிய 2003 இன் மனிதவள விருத்திக்கான கல்விபற்றிய தொலை நோக்கு சிபார்சு செய்கிறது.
125 / மாசின்னத்தம்பி

Page 73
பின்னிணைப்பு 1
வகுப்பறையில் ஆசிரியர் கையாள வேண்டிய உபாயங்களும்
நுட்பங்களும்
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)
11)
12)
13)
முதலில் மாணவர் தொடர்பை கடுமையான முறையில் உருவாக்குதல் - பின்பு எளிமையானதாக்கிக் கொள்ளலாம்.
வகுப்பில் மாணவருடன் உரையாடுவதன் முன் சிறிது மெளனமாக இருத்தல்,
வகுப்பினுள் மாணவர் எதேச்சையாக நுழைவதைக் கட்டுப்படுத்துதல்.
மாணவர் பெயர்களை அறிந்து பயன்படுத்தல்.
பாடங்களை சிறப்பாக தயார் செய்து, தெளிவான முறையில் கட்டமைப்புக்குட்படுத்துதல்.
மாணவர் வருவதற்கு முன்பே வகுப்பறைக்குச் செல்லுதல்.
மாணவர் வருவதற்கு முன் தளபாடங்களையும், உபகரணங்களையும் தயார் செய்தல்.
பரிசோதனைகள், செய்முறைகள் என்பவற்றை வகுப்பில் மேற்கொள்வதன் முன்பே ஆசிரியர் செய்து பார்த்தல்.
வகுப்பில் ஒரே இடத்தில் நிற்காது சிறிது நடந்து கற்பித்தல்.
சிறிது மாணவர் கவனத்தை ஈர்த்து நாட்டத்தையும் ஆர்வத்தையும் உருவாக்குதல்.
தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குதல்
தொனிக்கட்டுப்பாட்டைக் கற்றுக்கொள்ளல்
தேவையான மேலதிக சாதனங்களைத் தயார் செய்தல் (மெல்லக் கற்போர், மீத்திறன் மிக்கோருக்கு ஏற்றதாக)
ஆசிரிய முகாமைத்துவம் /126

14)
15)
16)
17)
18)
19)
20)
21)
22)
23)
24)
25)
கற்பித்தலுக்காக பேசும் போது வகுப்பை நேராக பார்த்தல் வேண்டும். கண்களுடாக ஊடுறுவிப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.
பொருத்தமானவற்றை எழுதி வைத்துக் கொள்ளுதல் (பிள்ளைகளின் வயது, இயலுமை, பண்பாட்டுப்பின்னணி போன்ற விபரங்கள்)
விளைத்திறன்மிக்க வினாவுதல்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுதல். தரப்படும் பாடவேளையில் கற்பித்தலை நிறைவு செய்வதற்கேற்றவாறு நேர முகாமைத்துவத்தை அறிந்து பின்பற்றுதல் தேவைக்கேற்றவாறு கற்பித்தல் நுட்பங்களை மாற்றியமைத்தல் ஒழுங்கு தொடர்பான மாணவர் பிரச்சினைகளை எதிர்பார்ப்பதும் விரைவாக அதனை தீர்க்கும் வகையில் செயற்படுத்தலும் மாணவர்க்கு தண்டனை வழங்குவதாயின் உறுதியாகவும் ஒரே மாதிரியாகவும் நடந்து கொள்ளுதல் வகுப்பறையில் மாணவருடன் முரண்படுவதைத் தவிர்த்தல் ஆசிரியர் தனது தரநிலையை விளங்கி அதனை வலியுறுத்தி வருதல் மாணவருக்கு உதவி செய்பவர், வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பவர் ஆசிரியர் என்பதை வெளிப்படுத்தல் மாணவருக்கு தேவையற்ற வகையில், அவர்கள் விருப்பப்படி இயங்குவதற்கு இடமளிக்காது பொறுப்புடையவர்களாக நடந்து கொள்ளச் செய்தல் ஆக்கபூர்வமான வகையில் நகைச்சுவையுணர்வைப் பயன்படுத்தல்.
குறிப்பு :
Wragg என்பவர் தனது மாணவ ஆசிரியர்களிடமிருந்து கண்டறிந்த உபாங்களும் நுட்பங்களும் இவை.
127 / மாசின்னத்தம்பி

Page 74
பின்னிணைப்பு 2
பாடசாலை மட்டத்தில் ஆசிரியரிடம் விரும்பப்படுகின்ற
விழுமிய மாற்றங்கள்
முன்னையது / பழையது
米
米
米
水
தொகை ரீதியில் அதிகவேலை
சுயமாக செயற்படுதல்
இயற்கை நிலையில் மேலாதிக்கம் செலுத்தல்
போட்டி மனப்பான்மை
செயற்படலும் திட்டமிடலும்
தொழில்நுட்ப வினைத்திறனில் கவனம் செலுத்துதல் ஒழுங்கமைப்பு வசதிகளை வேண்டி நிற்றல் அதிகாரம் செலுத்தும் முறையில் செயற்படல்
ஒரே மாதிரியான மற்றும் மத்திய நிலைப்படுத்தும் விடயங்களில் ஈடுபடல்
வேலை என்பது கடினமானது, தவிர்க்க முடியாதது என எண்ணுதல்
தற்போதையது / புதியது
хk
米
水
ck
ck
ck
தரரீதியில் சிறந்த வேலை
ஏனையோருடன் இணைந்து செயற்படல் இயற்கை நிலைமையுடன் இணங்கிச் செயற்படல்
ஒத்துழைக்கும் மனப்பான்மை தொழிற்படுவதில் திட்டமிடலை உள்ளடக்கியிருத்தல் சமூகநீதி, சமத்துவம் என்பவற்றை முதன்மைப்படுத்தல்
ஆசிரிய முகாமைத்துவம் / 128

நிறுவனத்தின் ஓர் உறுப்பினர் என்ற வகையில் சுயமுன்னேற்றத்தில் ஆர்வம் கொள்ளல்
எல்லாவற்றிலும் பங்கு கொள்பவராயிருத்தல்
பல்லினத்தன்மையையும் பன்முகப்படுத்தலையும் ஏற்றுக் கொள்ளல்
வேலை தெளிவான நோக்கத்துடன் சுயதிருப்தியையும் ஒய்வையும் தரக்கூடிய பெறுமதியுடைய நடவடிக்கை என எண்ணுதல்
epub: Graham Pike& David Selby - Global Teacher p 15
129 / மாசின்னத்தம்பி

Page 75
பின்னிணைப்பு 3
குழுச்செயற்பாட்டில் ஆசிரியர் வகிபங்கு
விரும்பத்தக்கவை
1)
2)
3)
4)
5)
6)
ஆதரவளிப்பவர் பிறர் செய்வதை உற்சாகப்படுத்தல் இணக்கத்தை உருவாக்குபவர்-இருவரிடையில் ஏற்படும் முரண்பாடுகளை அகற்றுதல் சமவாய்ப்பை வழங்குபவர் - எந்த ஒரு தனிநபரும் மேலதிக நலன் பெறாது பார்த்துக் கொள்ளல் ஒழுங்குபடுத்துபவர் - சரியான திசையில் குழு செயற்படுவதை உறுதிப்படுத்தல் வினா எழுப்புபவர் - தெளிவு ஏற்படுத்துவதற்காக பொருத்தமான வினாக்களைக் கேட்பவர்
எண்ணங்களைத்தூண்டுபவர் - மற்றவர் தமது எண்ணம் மற்றும் அபிப்பிராயத்தை வெளியிடுமாறு தூண்டுதல்
விரும்பத்தகாதவை
1)
3)
4)
5)
6)
தொடர்ந்து கதைப்பவர் - தேவை ஏதும இல்லாத விடத்தும் விடயங்களின்றி கதைத்துக் கொண்டிருத்தல் போலியாக புகழுரைத்தல் - குழுவில் உள்ள ஒரு தனிப்பட்டவரைப் பற்றி எல்லா வேளைகளிலும் பொய்யாகப் புகழ்தல் தீவிரமானவராயிருத்தல்-தமது கருத்தொன்றுதான் உயர்ந்தது என்ற எண்ணத்தைப் பல நிலையிலும் பிறர் மீது திணித்தல் வெளிப்பகட்டாளராதல் - தாம் திறமைசாலி என்று எண்ணி உண்மைகளையும், பிறரையும் வெளிப்படுத்தாது மறைத்தல் அழுத்துபவர் - பிறர் வெளிப்படுத்தும் சிறந்த கருத்துக்களையும் தரக்குறைவானதாக்க முயலுதல் எஜமானாதல்-தமது கருத்துக்களை கட்டாயமுறையில் பிறரை ஏற்கச் செய்ய தொடர்ந்து முயலுதல்
elpouth: Graham pike& David Selby - Global Teacher - p. 131,132
ஆசிரிய முகாமைத்துவம் / 130

பின்னிணைப்பு 4
géflui 6560607 gigp6i (Efficiency of Teachers)
ஆசிரியர்கள் மாணவரினதும் பாடசாலையினதும் தேவைகளை
நிறைவேற்றுவதற்கான கடமைப்பாட்டையும் திறன்களையும் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில்
.
தமக்கு திறமையான, வினைத்திறன் மிக்க ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உரிமை கொண்டவர்கள் மாணவர்கள் வினைத்திறனுடனும் தேர்ச்சி மிக்கதாகவும் தமது கடமைகளை ஆற்றவேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. ஆசிரியர்கள்தாம்நியாயபூர்வமாக நடாத்தப்படவேண்டும், கெளரவிக்கப்படவேண்டும், பெறுமதியுடைய பின்னுரட்டலைப் பெறவேண்டும், தம்மைப் பாதிக்கும் விடயங்கள் தமக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் தம்மைப்பற்றியமுடிவுகள், விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வாய்ப்புக்கள் தரப்படவேண்டும், தமது தொழிண்மை (வாண்மை) விருத்திக்கு தேவையான ஆதரவும், உதவியும், பயிற்சியும் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும் உரிமை கொண்டவர்கள். இத்தகைய எல்லா செயல்முறைகளிலும் தமது ஆதரவு வழங்கும் ஒருவரை உதவிக்கு வேண்டுதற்கு உரிமையுடையவர் ஆசிரிய வினைத்திறன் சார்ந்த விடயங்களை தாமதமின்றியும் நியாயபூர்வமாகவும் கையாள வேண்டிய பொறுப்பு அதிபர்களுக்கு உண்டு. ஆசிரியரை முன்னேற்றுதற்குரிய வினைத்திறன் மிக்க சூழல் பாடசாலையில் இருத்தல் வேண்டும். மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் படி போதியளவு பொறுப்புணர்வுடன் செயற்படத் தவறும் ஆசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் தேவையெனில் பதவியிலிருந்து இடைநிறுத்தவும் கூடியதாக கல்வித்திணைக்களம் செயற்படவேண்டும்.இது அதன் பொறுப்பாகும்.
131 / மா.சின்னத்தம்பி

Page 76
பின்னிணைப்பு 5
விளைகிறன்மிக்க ஆசிரியர்கள் பணிபுகள்
போதனா இலக்குகள், குறிக்கோள்களை விளங்கிக் கொள்வர் இக்குறிக்கோள்களுக்கு ஏற்றதாக போதனையை வடிவமைப்பர் குறிக்கோள்களை மாணவருக்கு விளக்குவர்
ஆக்க பூர்வமான சிந்தனையாளர்களாகவும் அறிவை கற்றுக் கொள்வோராகவும் மாணவரை முன்னேற்றுவதற்காக கற்கும் சூழலையும் உருவாக்கி பல்வேறு வகையான போதனா அணுகுமுறைகளையும் பயன்படுத்துவர் 5. பொருத்தமான வகையில் வெளிப்படுத்துவர் 6. தம்மைத்தாமே மதிப்பீடு செய்வர்
குறிப்பு : போட்டர் (Porter) மற்றும் புறோஃபிBrophy (1998) ஆகியோர் இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்
விளைநிறன்மிக்க போதனா தலைவர் பணிபுகள்
1) விரும்பத்தக்க வெளியீட்டை ஏற்படுத்தும் வகையில் பாடசாலை ஒழுங்கமைப்புக்குரிய தொலைநோக்கு (Vision) ஒன்றைக் கொண்டிருத்தல் 2) நிறுவனத்தில் (பாடசாலையில்) உள்ள ஒவ்வொருவரதும் ஆதரவைப் பெறும் வகையில் தொலைநோக்கை ஒவ்வொருவரும் அறியச் செய்தல் 3) தொலை நோக்கை நிறைவேற்றும் வகையில் தேவையான வளங்களைப் (பல்வேறு சாதனங்கள், தகவல்கள், வாய்ப்புக்கள்) பெற்றுக் கொள்ளுதலும் வழங்குதலும். 4) மேலே குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றும் வகையில்
முகாமைத்துவம் செய்தல் குறிப்பு : பாபேக் (Bamburg) மற்றும் அண்டுரூஸ் (Andrews) போன்றோர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
ஆசிரிய முகாமைத்துவம் 1132

பின்னிணைப்பு 6
gy flui gp6i56i (Teachers’ Skills)
1.
ஊக்குவிப்புத்திறன்கள் - மாணவர் செயல்கள், கற்றலில் ஈடுபாடு, என்பவற்றை ஊக்குவித்தல் வேண்டும். வெளிப்படையாக மாணவரைச் சந்தித்து அவர்களது தேவைகளையும் நிறைவேற்றுதல்
கற்பித்தல், தொடர்பாடல் திறன்கள் - விளக்கமளித்தல், நாடகமயமாக்கல், வாசித்தல், கட்புல செவிப்புல சாதனங்களைப் பயன்படுத்தல், அமைதியைப் பேணுதல், தெளிவாக வெளிப்படுத்தல், பொருத்தமான இடைவெளியை பேணுதல், பின்னூட் டலை ஊக்குவித்தல், திட்டமிட்ட வகையில் மீட்டல் போன்ற பல்வகைத்திறன்களை நிறைவேற்றுதல்,
வினாவும் திறன்கள் - மீளவும் கவனம் செலுத்துதல், மீளவும் வழிப்படுத்துதல், மாணவர் செயல்களில் தலையிடல், உயர்ந்த தரத்தில் வினாக்களைக் கேட்டல், குவியும் சிந்தனை மற்றும் விரியும் சிந்தனை வினாக்களைக் கேட்டல், மாணவர் தன்னார்வத்தை தூண்டுதல் போன்ற திறன்கள். தனிப்பட்ட மாணவருக்கும் சிறு குழு மாணவருக்கும் போதனை செய்யும் திறன்கள் குழுக்களை ஒழுங்கமைத்தல், சுயமான கற்றலை விருத்தி செய்தல், ஆலோசனை கூறல், மாணவர் செயற்பாடுகளை ஊக்குவித்தல், மாணவரிடையிலான இடைவினையுறவை ஊக்குவித்தல், சிறுகுழுவுக்கும், தனிப்பட்ட மாணவருக்குமான போதனை முறையை மேற்கொள்ளல் மாணவரை முன்னேற்றும் திறன்கள் - விசாரணைக் கற்றல், கண்டறிய வழிகாட்டல், எண்ணக்கரு விருத்தி, பாவனை செய்தல், வகிபங்கு விளையாட்டு முறை மூலம் தூண்டுதல் பிரச்சினை தீர்க்கும் திறன்களை மாணவரிடம் விருத்தி செய்தல்,
133 / மாசின்னத்தம்பி

Page 77
சுயமதிப்பீட்டை தாமே செய்யும் வகையில் மாணவரை ஊக்குவித்தல் விமர்சன சிந்தனையை அதிகரித்தல் தொடர்பான ஆசிரியர் திறன்கள்
6. மதிப்பீடு செய்யும் திறன்கள் - மாணவர் முன்னேற்றங்களை இனங்காணல், அங்கீகரித்தல், மதிப்பீடு செய்தல், இத்துடன் அவர்களது கற்றல் இடர்பாடுகளைக் கண்டறிந்து, தீர்வுக்கு உரிய நுட்பங்களைக் கையாளல், மாணவர் சுய மதிப்பீட்டை ஊக்குவித்தல், மதிப்பீட்டு நுட்பம் பற்றிக் கலந்துரையாடுதல் தொடர்பான திறன்கள்
7. வகுப்பறை முகாமைத்துவதிறன்கள் - மாணவர் வருகை, வரவு, கவனம், ஒழுங்கு, ஒழுக்கம் என்பவற்றை வகுப்பறையில் உறுதிப்படுத்தும் திறன்கள் செயல் சார்ந்து செயலாற்றுதல் குழுவாக வகுப்பில் தொழிற்படல் என்பவற்றுக்கு வழிகாட்டுதலும் பல் தரப்பட்ட சூழ்நிலைகளில் மாணவரை பொருந்தச் செய்தலும் தொடர்பான திறன்கள்
குறிப்பு ரேணி (Turncy) யும் ஏனையோரையும் உள்ளடக்கிய அவுஸ்திரேலிய குழுவினர் (1973) இப்பட்டியலை சிபார்சு செய்துள்ளனர்.
ஆசிரிய முகாமைத்துவம் / 134

பின்னிணைப்பு 7
ஆசிரியர் முன்னேற்றத்திட்டத்திற்கான வலையுரு
நேரம்
இவ்
வாரம்
அடுத்த வாரம்
மூன்று மாதம்
e, மாதம்
ஒரு வாழ்நாள் வருடம் முழுவதும்
ഖങ്ങബ
குடும்ப ഖങ്ങബ
TIL FAT60)6 வேலை
கிராமிய
சமூக LDÜL
வேலை
நாடு! தேசிய ரீதியிலான வேலை
பிற
நாடுகள் தொடர்பா வேலை
135 / மாசின்னத்தம்பி

Page 78
1)
2)
3)
4)
5)
6)
7)
0.
1.
உசாத்துணைகள்
அன்டேசன் W. லொறின் (1999) ஆசிரிய விளைதரிறனை அதிகரித்தல், தேசிய ஆசிரிய கல்வி அதிகாரசபை, கொழும்பு சந்திரசேகரன். சோ. சின்னத்தம்பி. மா (2002) கல்வியும் மனிதவள விருத்தியும், எஸ். எச். பதிப்பகம், கொழும்பு தேசிய கல்வி ஆணைக்குழு (2003) மனித விருத்திக்கான கல்வி பற்றிய தொலைநோக்கு தேசிய கல்வி ஆணைக்குழு, கொழும்பு சனாதிபதி துரித செயலணி (1997) பொதுக்கல்விச் சீர்திருத்தங்கள், கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு, கொழும்பு Jayaweera, Swarna and Gunawardena, Chandra (2002) Education
for All. Commonwealth Education Fund, Sri Lanka, Colombo.
Narayana Rao (1994) Counselling and Guidance, Tata McGraw - Hell Publishing Company, New Delhi
Hess, Juergen (Ed) (1999) Education and social Change, Education, Science and Documentation Centre (ZED) Bonn, Germany
Sharma, B. M (2002) Class Administration, AJAY Verma, New Delhi.
Vashist S. R (Ed) (1999) Class Room Administration, Anmol Publication Pvt Ltd, New Delhi.
Raj Singh (Ed) (2003) School Organization and Administration Common wealth Publications, New Delhi.
Pike, Graham & Selby, David (1988) Global Teacher, Global
Learner, Hodder & Stoughton, London.
ஆசிரிய முகாமைத்துவம் / 136


Page 79

இ சின்னத்தம்பி அவர்கள் ஆசிரியராகவும் பல்கலைக்கழகத்தின் வித் துறையிலும் நீண்டகாலம் பணி பவம் பெற்றவர் பொருளியல் துறை யியல் துறையிலும் ஆய்வுகளைச் ந துறைகளிலும் முதுமாணிப்பட்டம் இவர் அடிப்படையில் பொருளியல் வராக இருந்து கல்வியலிலும் துறை இந்த இரண்டும் இணைந்த துறை ருளியல் கல்வி (Economics of Edu ன்னும் துறையில் ஆழ்ந்த ஈடுபாடு Tiga 2 GITGIFTET
இணைந்து கல்வித் திட்டமிடல் கல் த வள விருத்தியும் ஆகிய இரு எழுதியபோதும் பல்வேறு கல் ருத்தரங்குகளில் கலந்து கொண்ட டைய கல்வியியல் துறைசார்ந்த ன்னால் இனங்காண முடிந் கிலத்தில் வெளிவரும் புதிய புதிய ய்வுச் சஞ்சிகைகள் என்பவற்றைக் கற் களவில் தற்போது இருந்து வரும் கல் நெறிகள் பற்றி தெளிந்த விரிந்த புரிந் கொண்டவர் இலங்கைவாழ் தமிழர்களினதும் உயர்கல்வியை ரையில் ஒர் தனித்துவமான உன்ன
3 யாழ்ப்பாணப்
துறையின்
நிய வெளியிட்டுள்ள ஆசிரிய முக
எனும் இந்நால் ஆசிரியர்களுக்கு கல்வித்துறையில் பணியாற்றும் உயர் ாளர் ஆசிரிய கல்வியியலாளர் ஆகி உறுதுணையாக அமையும் என்பது
தமிழ் கூறும் கல்வியுலகம் உரிய வழங்கவேண்டுமென்பது எமது
山f Góm。 சந்திரசேகரம்
துற்ெ. பல்கலைக்கழகம்
|ISBN955-12000x