கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை மனித உரிமைகள் நிலை 2000

Page 1

LLID ற்குமான அறநிலை முகத்திற்
D355

Page 2

இலங்கை:
மனித உரிமைகளின் நிலை
2000
சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையம்

Page 3
இலங்கை:
மனித உரிமைகளின் நிலை
2000
இவ்வறிக்கையானது 1999 ஆம் ஆண்டின் சனவரி மாதத்திலிருந்து
திசெம்பர் மாதம் வரையான காலப் பகுதியை உள்ளடக்குகின்றது.
சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையம்
3, கின்சி ரெறஸ்,
கொழும்பு 8.
இலங்கை.

பதிப்புரிமை
சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையம்
ஒக்டோபர் 2000
ISBN 955-9062-59-X

Page 4
ii.
iii.
iV.
Vi.
vii.
Viii.
xi.
xii.
xiii.
xiv.
XV.
XVi.
XVii.
XViii.
XiX.
பொருளடக்கம்
முன்னுரை
கருத்துக் கண்ணோட்டம்
தனிநபர் கெளரவம்
அவசரகால ஆட்சி
மனித உரிமைகளின் நீதிமுறை பாதுகாப்பு
கருத்துவெளிப்படுத்தற் சுதந்திரமும் ஊடகத்துறையும்
சிறுவர் உரிமைகள்
பெண்கள் உரிமைகள்
சூழல் உரிமைகளும் மனித உரிமைகளும்
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள்
தொழிலாளர் உரிமைகள்
சமவாய்ப்புச் சட்டமூலம் பற்றி ஏற்பட்ட சர்ச்சை
ஆட்கள் கூட்டாக ஒன்று சேருவதற்கும்
பழகுவதற்குமான சுதந்திரம்
முதியோர்களின் உரிமைகள்
வலது குறைந்தவர்களின் உரிமைகள்
உடல் நல உரிமைகள்
குற்றச் செயல்கள், மனித உரிமைகள்
மற்றும் அரசின் பொறுப்பு
மனித உரிமைகள் ஆணைக்குழு
அரச கருமமொழிகள் ஆணைக்குழு
அரசாங்க நிறுவனங்களில் அரசின் தலையீடு:
Χi
17
19
23
26
29
35
41
43
46
50
53
56
60
63
66
70
79
85
(இலங்கை இலஞ்ச ஆணைக்குழு பற்றிய ஓர் விடய ஆய்வு)

வள அனுசரணை
தமரிஸ் விக்கிரமசேகரா, சுமுது அத்தப்பத்து, சூலிகா பர்ணாந்து, ஜானகி
தர்மசேனா, நெலும் சமரக்கோன், ஹர்ஷா சமரவீரா, லக்சிதா
ஜயவர்த்தனா, நவீன் வீரரத்ன, துலீப் சமரவீரா, நடேசன் நிலையம், மனித
உரிமைகளின் ஆய்வு நிலையம், சிவில் உரிமைகள் இயக்கம்.
ஆய்வு அறிக்கைகளை மீளாய்வு செய்தவர்கள்
ஜே.சி.வெலியமுன, தீபிகா உடகம, சூரியா விக்கிரமசிங்கா, மெலோசினி
பெரேரா, சுமுது அத்தப்பத்து, மரியோ ஹோமஸ், எஸ்.எஸ்.விஜேரத்தினா,
செபாலி கோட்டேகொட, குமுதினி சாமுவேல், பிராங்கிளின் அமரசிங்க மற்றும்
பிரசன்னா கூரே.
அட்டை
நெய்மா சித்தீக்
தனக்கோலம் அமைத்தவர்
சித்திரா அருள் ராமலிங்கம்

Page 5
ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பித்தவர்கள்
கருத்துக் கண்ணோட்டம்
எலிசபெத் நிசான்
தனிநபர் கெளரவம்
சுமுது அத்தப்பத்து
அவசரகால ஆட்சி
சூரியா விக்கிரமசிங்கா
மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு
சுமுது அத்தப்பத்து
கருத்து வெளிப்படுத்தற் சுதந்திரமும் ஊடகத்துறையும்
மதுரங்க ரத்நாயக்கா
சிறுவர் உரிமைகள்
ரீமலி ஹேரத்
பெண்கள் உரிமைகள்
இரேஷா ரத்நாயக்கா புத்கமுவ
சூழல் உரிமைகளும் மனித உரிமைகளும்
இரேஷா ரத்நாயக்கா புத்கமுவ
உள்ளநாட்டில் இடம்பெயர்ந்த நபர்கள்
புபுதினி விக்கிரமரத்தின
Vị

தொழிலாளர் உரிமைகள்
மதுரங்க ரத்நாயக்கா
சமவாய்ப்புச் சட்டமூலம் பற்றி ஏற்பட்ட சர்ச்சை
அம்பிகா சற்குணநாதன்
ஆட்கள் கூட்டாக ஒன்று சேருவதற்கும் பழகுவதற்குமான சுதந்திரம்
றுக்ஷண நாணயக்கார
முதியோர்களின் உரிமைகள்
ரீமலி ஹேரத்
வலது குறைந்தவர்களின் உரிமைகள்
சி.எஸ்.தத்தாத்திரேயா
உடல்நல உரிமைகள்
பிரசன்ன எஸ்.கூரே, இரேஷா ரத்நாயக்கா புத்கமுவ
குற்றச்செயல்கள், மனித உரிமைகள் மற்றும் அரசின் பொறுப்பு
சி.எஸ். தத்தாத்திரேயா
மனித உரிமைகள் ஆணைக்குழு
அம்பிகா சற்குணநாதன்
அரசாங்க நிறுவனங்களின் செயற்பாட்டில் அரச தலையீடு: (இலங்கை இலஞ்ச ஆணைக்குழு பற்றிய ஒரு ஆய்வு)
அம்பிகா சற்குணநாதன்
vii

Page 6
இணைப்பாளர்
சுமுது அத்தப்பத்து சூலிகா பர்ணாந்து
நிருவாகி
தமரிஸ் விக்கிரமசேகரா
அச்சுப் பிரதி சரிபார்த்தல்
தமரிஸ் விக்கிரமசேகரா. சுமுது அத்தப்பத்து
viii
ஜாக்குலின் லைமன்

முன்னுரை
இந்த அறிக்கையானது இலங்கையிலுள்ள தற்போதைய மனித உரிமைகளின் நிலையினை விவரிக்க முற்படுகின்றது. அத்துடன் இந்நாட்டுப் பிரஜைகளின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் சர்வதேசக் கடப்பாடுகளுக்கமைவாக எந்த அளவில் தனது கடப்பாட்டைப் பூர்த்தி செய்துள்ளதென்பதையும் மதிப்பீடு செய்கின்றது. இதன் காரணமாக இந்த அறிக்கையானது இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் ஓர் முக்கியமான மூலப்பகுதியாக அமைகின்றது. இந்த அறிக்கையில் அரசியலமைப்பு உத்தரவாதங்கள், சட்டவாக்கங்கள் மற்றும் அடிைப்படை உரிமைகளின் தற்போதைய நடைமுறைப்படுத்தல்களும் வினைப்படுத்தல்களும் எந்த அளவிற்கு மேற்கொள்ளப்படுகின்றன என ஆராயப்படுவதுடன் அவை கொண்டுள்ள மட்டுப்பாடுகளின் தாக்கம் பற்றியும் கலந்துரையாடப்படுகின்றது. இந்த அறிக்கை தனிநபரின் கெளரவம், கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரம், மனித உரிமைகளின் நீதி முறைப்பாதுகாப்பு, அவசரகால ஆட்சி ஆகியவற்றை உள்ளடக்குகின்றது. இத்துடன் கூடுதலாக சிறுவர்களின் உரிமைகள், பெண்களின் உரிமைகள், முதியோர்களின் உரிமைகள் மற்றும் வலது குறைந்தவர்வளின் உரிமைகளுக்கு
தனிப்பட்ட அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
1993 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஓர் நாட்டில் மனித உரிமைகள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் யாவற்றையும் நாளது வரையான தாக்குவதற்கு இவ்வாண்டில் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையத்தினால் இந்த அறிக்கை கூட்டிணைக்கப்பட்டுள்ளது. அந்தந்தத் துறைகளில் விசேட திறமையுடைய தனிப் பட்டவர்களுக்கு குறித்த அத்தியாயங்கள் குறித்தொதுக்கப்பட்டுள்ளன. பின்னர் அவர்களுடைய வரைவுகள் முன்வைப்பின்
செம்மைக்காகவும் குறிக்கோளுக்காகவும தெளிவுபடுத்தலுக்காகவும் பின்னர்
iX

Page 7
மீளாய்வு செய்யப்பட்டுள்ளன. அதன் பின்னர் இந்த அறிக்கை நடைமுறையில் சாத்தியமான வரைக்கும் பாணியிலும் அணுகுமுறையிலும் சீர்மை இருப்பதை உறுதிப்படுத்துவதன் பொருட்டு வரைவு வடிவத்தில் தொகுக்கப்பட்டு விரிவாக பதிப்பு செய்யப்பட்டது. எனினும் அத்தியாயங்களுக்கிடையே சில மேற்படி தகவல்கள் இருப்பதுவும் சில விடயங்கள் மற்றைய விடயங்களைவிட கூடுதலான அளவிற்குக் கையாளப்படுவதுவும் தவிர்க்க முடியாதவைகளாகும். இந்த அறிக்கையானது இலங்கை கையொப்பகாரராகவுள்ள சர்வதேச சாதனங்களின் நிரலொன்றையும் இலங்கையினால் உறுதிப்படுத்தப்பட வேண்டிய நிலையிலுள்ள சாதனங்களின் நிரலொன்றையும்கூட கொண்டுள்ளது. இத்துடன் இந்த அறிக்கையின் ஓர் அட்டவணையாக 1999 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்படட அடிப்படை உரிமைகளின் நிரலொன்றும்
கூட இணைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் மனித உரிமைகளின் பயனுள்ள பாதுகாப்பையும் ஊக் குவிப்பையும் உறுதிப்படுத்துவதன் பொருட்டு சிவில் சமூக நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உரையாடல்
மேற்கொள்ளப்படுவதற்கு தொடர்ந்தும் வசதியளிக்குமென நம்பப் படுகின்றது.
தமிழில் வெளியிடப்படும் இவ்வேடு குறித்த அறிக்கையின் அத்தியாயங்களின் சாராம்சம் மட்டுமே என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இவ்விடயங்களைப் பற்றி விபரமாக அறிந்துகொள்ள விரும்புபவர்கள்
இதன் ஆங்கிலப் பிரதியில் அவற்றை வாசித்து அறிந்துகொள்ள முடியும்.
சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையம்
கொழும்பு
2000 ஒகஸ்ட்

இலங்கையில் மனித உரிமைகள் நிலைதொடர்பிலான அறிக்கை மீதான ஒரு கண்ணோட்டம்
எலிசபெத் நிசான்
1. அறிமுகம்
1999 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நீலன்திருச்செல்வம் அவர்களின் அரசியல் படுகொலையானது குறிப்பாக சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையத்திற்கு ஏற்பட்ட ஓர் பேரிழப்பாகும். இதன் விளைவாக இத்தாபனம் விவேகமும் சுறுசுறுப்பும் தீர்க்க தரிசனமும் உடையவராகச் செயற்பட்ட அதன் ஸ்தாபகரும் பணிப்பாளருமான ஒருவரை இழந்துள்ளது. இலங்கைக்குள்ளும் சர்வதேச ரீதியிலும் வாழுகின்ற சட்ட, மனித உரிமைகள் சமூகத்தினர்களுக்கு இது ஓர் பேரிழப்பாகவிருந்தது. இது ஏனெனில் கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள் சர்வதேச ரீதியில் மதிக்கப்பட்ட ஓர் சட்டவறிஞராகவும் மற்றும் கல்விமானாகவும் அரசியலமைப்பு, மனித உரிமைகளின் பாதுகாப்பு விடயங்களில் தலைசிறந்த நிபுணராகவும் இருந்தாரென்பதனாலாகும். சமூக மாற்றத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்கு சட்டத்தையும் அரசியல் அமைப்பியலையும் ஓர் வழிவகையாகப் பயன்படுத்துவதில் அவர் கொண்டிருந்த ஆழமான அக்கறை இறுதியில்
அவருடைய உயிரையே அதற்காக அர்ப்பணிக்கச் செய்துள்ளது.
இலங்கையில் இடம்பெறும் மோதல்கள், முரண்பாடுகள் மற்றும் கவலைக்குரிய விடயங்களைத் திரட்டியமைக்காக கலாநிதி நீலன்திருச்செல்வம் ஓர் எல்.ரி.ஈ.ஈ. தற்கொலைக் குண்டுதாரியினால் படுகொலை செய்யப்பட்டார். இலங்கையின் மோதல் பரந்த அளவில் மனித உரிமைகள், சமூக சிக்கல்களைக் கொண்டுள்ளன. இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தம்மை முழுமையாக அர்ப்பணித்திருந்த அவர் அரசியலமைப்புச் சட்டத்துறையில் நிபுணராகவும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஈடுபாடுடையவராகவும் மனித உரிமைகளுக்காகப் போராடுபவராகவும் சாதாரண குடிமகனானகவுமிருந்தார். அவர் வரைந்த
அரசியலமைப்பானது பல இனங்களைக் கொண்ட சனநாயகம் சமூகத்தின்

Page 8
விருத்தியை ஊக்குவிக்குமெனவும் சிறுபான்மையினர்களின் துயரங்களுக்கு உண்மையானவொரு தீர்வை ஏற்படுத்துமெனவும் அவர் நினைத்திருந்தார். முரண்பாடுகளினால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் சார்பில் அவர்களுடைய கஷ்டங்களையும் மனித உரிமைகள் தொடர்பிலான விடயங்களை பரந்த அளவில் எடுத்துக் கூறுவதிலும் அவர் முன்னிலையில் இருந்தார். அத்தகைய சிறந்த ஒருவர் தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கென யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதாகக் கூறும் ஓர் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய இறப்பும் அதேபோன்று தலைநகரில் அவ்வாண்டில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களினால் ஏற்பட்ட பல இறப்புகளும் வடக்கு, கிழக்கில் நடைபெறும் யுத்தம் அப்பகுதிக்குள் மாத்திரம் அடக்கப்பட்டிருக்கவில்லையென்பதை அனைவருக்கும் புரிய வைத்துள்ளது. இது இந்நாடு முழுவதிலுமுள்ள ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பாதிக்கின்றது.
சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையத்தின் வருடாந்த அறிக்கைகள் இலங்கையில் மனித உரிமைகளின் நிலை பற்றிய கலாநிதி. நீலன் திருச்செல்வத்தின் விமர்சன ரீதியானவைகளும் ஆனால் எப்பொழுதும் ஆக்க பூர்வமானவைகளுமான உள்ளிடுகள் மற்றும் ஆலோசனைகளினால் வளப்படுத்தப்பட்டிருந்தன. இந்நூல் மீண்டுமொருமுறை அவர் ஆர்வம் காட்டிய அக்கறை கொண்டிருந்த பல விடயங்களைக் காண்பிக்கின்றது. முன்னைய ஆண்டுகளிற் போலவே அது 1999 ஆம் ஆண்டில் அவசரகால விதிகள், ஆட்களின் நேர்மை, மனித உரிமைகளின் நீதித்துறைசார் பாதுகாப்பு, இந்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்களின் நிலை, கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம், மகளிர் உரிமைகள், சிறுவர்களின் உரிமை ஆகியன பற்றிய அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இது மனித உரிமைகள் ஆணைக்குழு, குறைகேள் அதிகாரி, அரச கரும மொழிகள் ஆணைக்குழு, ஊழல், இலஞ்சம் பற்றிய ஆணைக்குழு ஆகிய இந்நாட்டிற்குள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் ஊக்குவித்தல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள சில முக்கிய நிறுவனங்களின் வேலையை
முதன்முறையாக நுணுக்கமாகப் பரிசீலனை செய்கின்றது.

அநேக சந்தர்ப்பங்களில் தங்களுடைய முக்கிய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரங்களோ அல்லது வளங்களோ இல்லாத மனித உரிமைகள் நிறுவனங்களே உருவாக்கப்படுகின்றன. மனித உரிமைகளுக்கான நிறுவன ரீதியான கட்டுக்கோப்பைப் பலப்படுத்துவதற்கு சிவில் சமூக அமைப்புகள் உதவி வழங்கக்கூடிய ஓர் முக்கியமான வழிவகை அத்தகைய நிறுவனங்களின் செயலாற்றுகையை நுண்ணாய்வு செய்து ஆக்கபூர்வமான முறையில் கருத்துரை வழங்குவதும் பொது மக்களுக்கு கணக்குக்காட்ட வேண்டிய விடயங்கள், அவற்றின் பயன் முனைப்பு மற்றும் மூல வளங்களையும் அரசியல் உறுதிப்பாடு ஆகிய விடயங்களையும் விவாதத்திற்கு எடுத்தலும் இந்த அத்தியாயம் இத்துறையில் பலப்படுத்த வேண்டிய தேவையுடைய முக்கியதுறைகளை சுட்டிக்காட்டுகின்ற முக்கிய:nானவொரு ஆரம்பமாகும்.
கலாநிதி நீலன் திருச்செல்வம் மிகவும் முக்கியமானதென நம்பிய இன்னொரு விடயம் யாவருக்கும் சம சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென்பதாகும். இத்துறையில் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முயற்சியானது அதற்கு எதிராகக் காண்பிக்கப்பட்ட தீவிரமான எதிர்ப்பு காரணமாக அச்சட்ட மூலமானது துரிதமாகக் கைவிடப்பட்டுள்ளது. இது பற்றி இந்த விடயம் மீதான அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபிப்பதற்கு அனுமதிக்கப் பட்டுள்ள ஏழு நாட்களைக் கொண்ட நியதிச் சட்டமுறையான கால எல்லைக்குள் 42 தரப்பினர்கள் இச்சட்ட மூலமானது அரசியலமைப்பிற்கு முரணனாது எனக் குறிப்பிட்டு உயர்நீதிமன்றத்திற்கு மனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர். இச்சட்டத்தின் பிரதான நோக்கம் வேலை வாய்ப்புத்துறையிலும் கல்வித் துறையிலும் யாவருக்கும் சிறப்பாகப் பெண்களுக்கு சமவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதாக இருந்தது. அத்துடன் தனியார் துறையானது இந்நோக்கத்தைக் கெளரவிக்க வேண்டிய கடப்பாடுகளையுடையதாக இருக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியிருந்த போதிலும் இவ்விடயம் சம்பந்தமான பொது விவாதங்கள் இன மற்றும் சமய விடயங்களுக்கே தீவிர கவனம்
செலுத்தியுள்ளன. அது குறிப்பாக கல்வியோடு சம்பந்தப்பட்டதாகவும் இருந்தது.
3

Page 9
இந்த ஆட்சேபனைகளில் அநேகமானவை உயர்நீதிமன்றத்தின் நுண்ணாய்விற்கு எடுத்துக் கொள்ளப்படாமலிருந்திருக்கக்கூடிய சாத்தியமும் உண்டு. எப்படியிருந்த போதிலும் அரசாங்கமானது இச்சட்டமூலத்தை மேலெடுத்துச் செல்லாமல் இருப்பதெனத் தீர்மானித்ததன் காரணத்தினால் உயர்நீதிமன்றமானது மனுக்களில் எழுப்பப்பட்ட விடயங்கள் மீது தீர்மானமொன்றை எடுக்கவில்லை. எது எவ்வாறாயினும் வேற்றுமையில் கூடுதலான சமத்துவத்தைப் படிப்படியாக வழங்கச் சகலருக்கும் வாய்ப்பு அளிப்பதற்கு அரசாங்கத்திற்குக் கிடைத்த
குறிப்பிடத்தக்க சந்தர்ப்பத்தை அது இழந்துள்ளது.
சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அற நிலையம் பரந்த அளவிலான சமூக விடயங்களின் மனித உரிமைகள் விளைவுகளைக் காண்பிப்பதற்கு எப்போதும் முயற்சி செய்துள்ளது. இந்நூலில் இலங்கையின் சனத்தொகையில் அதிகமானோர் வயோதிபர்களாகிக் கொண்டுவருவதன் தாக்கங்கள் பற்றி இலங்கையின் சட்டம் உருவாக்குபவர்களுக்கும் கொள்கை வகுப்பவர்களுக்கும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சி தொடர்கின்றது.இந்த விடயம் பற்றி இலங்கையின் மனித உரிமைகள் நிலை பற்றிய நூலொன்றில் ஆராயப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
2. சனநாயக நடைமுறை மீது தாக்குதல்கள்
1999 ஆம் ஆண்டில் சனாதிபதி தேர்தலும் மாகாணசபைத் தேர்தல்களும் வன்முறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் நடைபெற்றன. இலங்கையில் சனநாயக நடைமுறை மீதான தாக்குதல் கள் எல்.ரி.ரி.ஈ.யிடமிருந்தும் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளிடமிருந்தும் எழுந்துள்ளன. இத்துடன் கூடுதலாக இத்தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்படுவதில் வன்முறைகளும் அச்சுறுத்தல்களும் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தின என்பதையிட்டும் ஆட்சியிலிருந்த கட்சி அரச ஊடகத்துறையைத் தமது சுயமேம்பாட்டிற்காக துஷ்பிரயோகம் செய்ததையிட்டும்
பெருமளவில் கவலை ஏற்பட்டது.

1999 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 21 ஆந் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அதாவது திசெம்பர் மாதம் 18 ஆம் திகதி ஆட்சியிலிருக்கும் பொது மக்கள் ஐக்கிய முன்னணியினதும் எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியினதும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் மீதும் எல்.ரி.ரி.ஈ. தற்கொலைப் படையாளிகள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருந்தனர். அத்தேர்தலில் சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க வெற்றி பெற்றதுடன் 4 அரசாங்க அமைச்சர்கள் காயங்களுடன் தப்பினர். ஆனால், துரதிஷ்டவசமாக சாதாரண குடிமக்கள் மொத்தமாக 25 பேர் உயிர் இழந்துள்ளனர். தங்களுடைய பதவிகளிலிருந்து விலகத்தவறிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மீது எல்.ரி.ரி.ஈ.யினர் தொடர்ந்து அச்சுறுத்தியும் தாக்கியும் வந்தனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் சனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிவில் நிருவாகமொன்றை மீண்டும் ஏற்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக அரசு 1998 சனவரி மாதத்தில் உள்ளுராட்சிச் சபைகளின் தேர்தல்களை நடாத்தியுள்ளது. தொடர்ந்தும் இச்சபைகளுக்கு எதிராக எல்.ரி.ரி.ஈ.யினர் நடாத்திய பிரசாரங்களின் நிமித்தம் அச்சபைகள் செயற்படுவது பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. கிழக்கு மாகாணத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்கூட எல்.ரி.ரி.ஈ.யினரின் அச்சுறுத்தலுக்கு ஆளாயினர். அவர்கள் தங்களுடைய அரசியல் நடவடிக்கைகளை இடைநிறுத்தும் படியும் தொகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளும் படியும் அச்சுறுத்தப்படடனர். எல்.ரி.ரி.ஈ.யினர்களின் செல்வாக்குள்ள பகுதிகளில் முரண்பாடுகளைத் தீர்பபதற்கான சனநாயக முயற்சிகளுக்கும் சனநாயக செயற்பாடுகளுக்கும் கடுமையான வரையறைகளை விதிக்கும் அதிகாரம் எல்.ரி.ரி.ஈ.யினருக்கும் இருந்து வருகின்றது. இவ்வகையில் நீண்டகால அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற இப்படுகொலைகள், யூலையில் நடைபெற்ற கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் படுகொலை உட்பட, எல்.ரி.ரி.ஈ. யினர்களுக்கு
வலுவூட்டியுள்ளது.

Page 10
இவ்வாண்டு சனவரி மாதத்தில் நடைபெற்ற வடமேல் மாகாணத் தேர்தலின்போது இடம்பெற்ற உயர் மட்டத்திலிருந்து உருவாக்கப்பட்ட பயமுறுத்தல்கள், வன்முறைகள், துணிகரமாக மேற்கொள்ளப்பட்ட வாக்குச் சீட்டு மோசடிகள், அரச ஊடகங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை ஆகியவை பெருமளவு கவலையை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையமானது (தே.வ.க.நி) 80 வன்முறைச் சம்பவங்கள், 2 கொலைகள், 11 கொலை முயற்சிகள் உட்பட பல்வேறு தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் பற்றி தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக அறிவித்திருந்தது. சுதந்திரமானதும் நியாய பூர்வமானதுமான தேர்தலுக்கான இயக்கமும் (சு.நி.தே.இ) சுதந்திரமானதும் நியாய பூர்வமானதுமான தேர்தலுக்கான ஒன்றியமும் (சு.நி.தே.ஒ) அவற்றின் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளன. பல்வேறு சமய அமைப்புகளினதும் மனித உரிமைகள் அமைப்புகளினதும் பிரதிநிதிகளும் கூட இது பற்றித் தங்களுடைய ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளனர். பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் அவற்றுள் பெருமளவிலானவை ஆளும் பொதுமக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கு எதிரானவைகளாவிருந்தன. சனாதிபதி குமாரதுங்க தேர்தல் நடத்தப்பட்ட விதம் பற்றி அதிருப்தி தெரிவித்துள்ள போதிலும் வன்முறைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பல ஐக்கிய முன்னணி உறுப்பினர்களை
அவர் மாகாண நிருவாகத்தில் உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் மேலும் ஐந்து மாகாண சபைகளுக்காக நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரங்களின்போது ஐந்து குடிமக்கள் இறக்க நேரிட்டுள்ளது. யூன் மாதத்தில் நடைபெற்ற தென்மாகாண சபைக்கான தேர்தல்கள் கூடுதலான அளவில் அமைதியான முறையில் நடாத்தப்பட்டன. தேர்தல் வன்முறைகள் மாகாணசபைத் தேர்தல் காலத்தில் குறைந்தமை சிவில் சமூக அமைப்புகள் இவ்விடயத்தில் அளிக்கக்கூடிய பங்கினை வெளியிடுவதன் மூலமும் பொது மக்களின் நலன் குறித்து பக்கச் சார்பற்ற முறையில் செயற்படக் கூடியனவாக
விருந்தமையைச் சான்றுப்படுத்தியதன் மூலமும் எடுத்துக் காட்டக் கூடியனவாக

விருந்தன. எனினும் அவ்வண்ணம் செய்வதற்கான திறமை கூட்டுச் சேரும்
சுதந்திரம் மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரம் ஆகியவற்றையும் உள்ளடக்கிப்
பல உரிமைகளுக்கு வழங்கப்படும் மதிப்பிலேயே தங்கியுள்ளது.
இவ்வுரிமைகளைக் குறைப்பதற்கும் அவ்வமைப்புகளின் நோக்கங்களை
நிறைவேற்றும் ஆற்றலைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்
கவலையுடன் நோக்கப்பட வேண்டியவைகளாகும். ஏப்ரல் மாதத்தில் இரண்டு
அரசாங்க அமைச்சர்கள் சி.எம்.ஈ.வி. அமைப்பின் மீது அரச ஊடகங்களைப்
பயன்படுத்தித் தாக்கியமை போன்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளை
இழிவுபடுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அத்தகைய நடவடிக்கைகளிள்
கவலை ஏற்படுத்தும் உதாரணங்களாகவிருந்தன.
2000 ஆம் ஆண்டில் நடாத்தப்பட வேண்டியுள்ள பாராளுமன்றத்
தேர்தல்களில் இலங்கைத் தேர்தல்களின் அடையாளச் சின்னமாகியுள்ள
வன்செயல்களும் அச்சுறுத்தல்களும் மீளவும் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்குத்
தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையுள்ளதென்பது தெளிவான
விடயமாகும். மக்கள் அச்சமின்றியும் அவர்களுடைய மனச்சாட்சிப் படியும்
சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சகல
நடவடிக்கைகளும் எடுக்கப்படல் வேண்டும்.
3. மனித உரிமைகளும் முரண்பாடும்
இலங்கையின் முரண்பாடு ‘ஈன இரக்கமற்ற ஒரு யுத்தம்’ என
வருணிக்கப்படுகின்றது. போர்க்களத்தில் ஒரு சிலரே கைதிகளாகப்
பிடிக்கப்படுகின்றனர். இவ்வகையான முரண்பாடுகளின் விளைவாக ஏற்பட்ட
வேறு யுத்தங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து இங்கு கைதாவேர்களின
எண்ணிக்கை எதிர்பார்க்கப்படுவதைவிட மிகக் குறைவானதாகவுள்ளது. எனவே
மனிதாபிமானச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறும் வகையில் யுத்தக்
கைதிகளாகப் பிடிக்கப்படுவோர்கள் வழக்க முறையாகக் கொல்லப்படுகின்றனர்
அல்லது இறக்கவிடப்படுகின்றனரென மட்டுமே ஊகிக்க முடியும்.
7

Page 11
இம்மோதலின் விளைவாக வடக்கு, கிழக்கில் வசிக்கும் மக்கள் குறிப்பாக எளிதில் துஷ்பிரயோகத்திற்கும் பரந்த அளவிலான உரிமை மீறல்களுக்கும் இலக்காகக் கூடிய நிலையிலிருந்தனர். இவ்வாண்டில் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்த தருணத்தில் கூடுதலானோர் இடம்பெயரவும் உணவு, இருப்பிடவசதி, கல்வி, சுகாதார சேவைகளைப் பெறக்கூடிய வாய்ப்பு மட்டுப்படுத்தப்படவும் நேரிட்டுள்ளது. இவை உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் பற்றிய அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. இம்மோதல்களில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினர்களும் தமது கட்டுப்பாட்டினுள் உள்ள மக்கள் இடம்விட்டு இடம் செல்வதை மட்டுப்படுத்தியுள்ளடதுடன் அவர்கள் உணவு, வைத்திய வசதி மற்றும் ஏனைய வளங்கள் பெறக்கூடிய வாய்ப்புகளையும் மட்டுப்படுத்தியுள்ளனர்.
மனிதாபிமானச் சட்டமானது குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கு சகல நடடிவகைகளும் எடுக்கப்பட வேண்டுமென்பதை வேண்டுகின்ற போதிலும் மோதல் பிரதேசங்களில் நேரடித் தாக்குதல்கள் நடாத்தப்பட்டபோது சிவில் மக்கள் அவற்றினால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் அவ்வாறான ஓர் பகுதியை செத்தெம்பர் மாதத்தில் விமானம் குண்டு வீசித் தாக்கியபோது சாதாரண குடிமக்கள் 23 பேர் இறந்துள்ளனர். எல்.ரி.ரி.ஈ. முகாம் ஒன்றை இலக்காக்கியே இத்தாக்குதல் நடத்தப்பட்டதென அரசாங்கம் முதலில் கூறிய போதிலும் பின்னர் அது தவறுதலாக நிகழ்ந்தது என ஏற்றுக் கொண்டுள்ளது. நவம்பர் மாதத்தில் மடுமாதா ஆலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த 40 இடம்பெயர்ந்த குடிமக்கள் மோட்டார் தாக்குதலின்போது இறந்துள்ளனர். இத்தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்று தீர்க்கமாக அடையாளம் காண்டுப்பிடிக்காவிடினும் எல்.ரி.ரி.ஈ.யினரோ அல்லது அரசாங்கமோ இடம்பெயர்ந்த எளிதில் பாதிப்புறக்கூடிய நிலையிலிருந்த சாதாரண குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ளனர் என்பது தெளிவாகி உள்ளது.
மேலே குறிப்பிட்ட விமானப் படைத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அம்பாறை மாவட்டத்தில் மூன்று எல்லைப் புறக் கிராமங்களின்
மீது எல்.ரி.ரி.ஈ.யினர் நடத்திய தாக்குதல் மனிதாமானச் சட்டத்தை அப்பட்டமாக

மீறிய மற்றுமொரு வெளிப்படையான செயலாகும். இத்தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டனர். இது மீண்டும் எல்லைப் புறக் கிராமங்களில் சாதாரண குடிமக்களைப் பெருமளவில் எல்.ரி.ரி.ஈ கொலை செய்யும் உத்தி தலைதூக்க ஆரம்பித்துள்ளது என்ற கவலை ஏற்படக் காரணமாக இருந்தது. ஒரு காலத்தில் இவ்வகையான தாக்குதல்கள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட போதிலும் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இவ்வகையான
தாக்குதல்கள் நடைபெறவில்லை.
குறிப்பாக அதிக கவலையை ஏற்படுத்துகின்ற மற்றுமொரு எல்.ரி.ரி.ஈ.யுடன் தொடர்புடைய மனிதாபிமான விடயம் அவர்கள் தொடர்ந்தும் சிறுவர்களை போராளிகளாகச் சேர்த்துப் பயன்படுத்துவதாகும். இது 1998 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் இராணுவ மோதல்களில் சேர்த்துக் கொள்ளப்படுவது பற்றிய ஐ.நா. சபையின் செயலாளர் அதிபதியின் விசேட பிரதிநிதிகளிடம் 18 வயதிற்கு உட்பட்ட எந்தவொரு சிறுவரையும் எந்தவொரு போர் முயற்சியிலும் ஈடுபடுத்துவதில்லை எனவும் 17 வயதிற்குட்பட்ட எந்தவொரு சிறுவரையும் போராளியாகச் சேர்த்துக் கொள்வதில்லை எனவும் எல்.ரி.ரி.ஈ. யினரால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு முரணானதாகும். இதற்குப் பதிலாகச் சிறுவர்களைப் போராளிகளாகச் சேர்த்துக் கொள்ளுவதுடன் போரில் ஈடுபடுத்துவதும் 1999 இல் அதிகரித்துள்ளது என தெரிகின்றது (இது பற்றிய விவரங்கள் சிறுவர்களின் உரிமைகள் பற்றிய
அத்தியாயத்தில் உள்ளது)
ஒரு நபரின் சீர்மை பற்றிய அத்தியாயத்தில் இலங்கையில் இடம்பெற்ற சித் திரவதைகளையும் காணாமல் போனோர் களையும் ஆட்களை தன்னிச்சையாகக் கைது செய்வதையும் தடுத்து வைத்தல்களையும் எக்காரணம் கொண்டும் கடந்த கால நிகழ்வுகள் எனக் கூற முடியாது. இவ்வாறு இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், சட்ட அங்கீகாரமற்ற தன்னிச்சையான
கைதிகள் யாவும் நாட்டில் நடைபெறும் மோதல்களுடன் தொடர்புடையவை

Page 12
என்றும் கூற முடியாது. எனினும் இவ்வாறான அநேக மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு இம்மோதல்கள் நிச்சயம் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. நாம் முன்னைய ஆண்டுகளில் வலியுறுத்திக் கூறியுள்ளதைப் போல தடுத்து வைத்திருத்தல் தொடர்பான சட்டங்களும் தடுத்து வைத்தலைத் துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்த்துக் கொள்வதற்கான சட்டப் பாதுகாப்பு ஒழுங்குகளைக் கடைப் பிடித்தலுக்கும் சித்திரவதை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் முறைப்பாடுகளை ஆய்வு செய்வதற்கு பொலிசாருடன் தொடர்பற்ற சுதந்திரமான அமைப்பொன்றை உருவாக்குதல், பாதிப்புற்றோர்களுக்குக் கிடைக்கக் கூடியதாகவுள்ள நிவாரணங்களைப் பலப்படுத்தல் மற்றும் சித்திரவதை செய்வதில் ஈடுபட்டு உரிமை மீறல்களைச் செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துதல் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட சட்டங்களை மீளாய்வு செய்ய
வேண்டிய அவசரமான தேவையொன்று உள்ளது.
மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தமையினால் 1999 ஆம் ஆண்டு முழுவதும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தணிக்கையைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கான சந்தர்ப்பத்தை அவை கொடுத்துள்ளன. அவசரகால ஆட்சி தொடர்பிலான அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது போல செய்தித் தணிக்கை தொடர்பான ஒழுங்குவிதிகள் நவம்பர் மாதத்தில் திருத்தப்பட்டுள்ளன. எனினும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் முன்னோடியாகக் கருதப்பட்டவாறு தாராளமாகத் தடையின்றி கருத்து வெளியிடும் உரிமை வழங்கப்படாமல் மட்டுப்படுத்தப்பட்டது. இந்த வகையில் செய்தித் தணிக்கை செயல்முறைப் படுத்தப்பட்டதன் நிமித்தம் நவம்பர், திசெம்பர் மாதங்களில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் காலத்தில் வடக்கில் அரசாங்கத் உருப்பினர்களுக்கு ஏற்பட்ட இராணுவப் பின்னடைவுகளுக்கும் ஒப்பீட்டளவில் சிறிதளவு கவனமே செலுத்தப்பட்டது. இக்காலப்பகுதியில் கடந்த 2 வருடமாக அரசாங்கம் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த பெருமளவு நிலப் பிரதேசத்தைப் பாரிய உயிரிழப்புகளுக்கு மத்தியில் மீண்டும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக் கூடியதாயிற்று.
10

4. சட்டத்தைத் துச்சமாக மதித்துச் செயற்படுதல்
இலங்கையில் சட்டத்தைத் துச்சமாக மதித்து இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப் புள்ளி இடப்பட வேண்டுமென மனித உரிமை அமைப்புகள் நீண்ட காலமாக இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளன. எனினும் இவ்விடயத்தில் சில முற்போக்கான ஆக்கபூர்வமான அபிவிருத்திகள் இருந்த போதிலும் 1999 ஆம் ஆண்டு முழுவதும் இது ஓர் தீராத பெரிய பிரச்சினையாக இருந்துள்ளது. 1989 ஆம் ஆண்டின் பிற்பகுதிக்கும் 1990 ஆம் ஆண்டின் முற்பகுதிக்கும் இடையிலான காலத்தில் பல இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பிலான வழக்கில் ஒரு பாடசாலையின் அதிபரும் 6 இராணுவ வீரர்களும் குற்றவாளிகளெனத் தீர்ப்பு வழங்கப்பட்டமை ஓர் முக்கியமான தீர்ப்பாகும் இவ்வழக்கு அவ்வாண்டின் முடிவிலும் மேன்முறையீட்டின் கீழ் இருந்தது. எனினும் குறித்த இக்காலப் பகுதியிலும் அதற்கு முந்திய காலப் பகுதிகளிலும் வடக்கு, கிழக்கில் நடைபெற்ற இவ்வகையான பல்வேறு சம்பவங்கள் இன்னும்
சரியான முறையில் விசாரிக்கப்படாத நிலையிலுள்ளன.
இத்துடன் கூடுதலாக 1998 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட காணாமல் போனவர்கள் பற்றியும் தன்னிச்சையில்லாமல் கடத்திச் செல்லப்பட்டவர்கள் பற்றியும் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட மூன்று சனாதிபதி ஆணைக் குழுக்களினால் ஆய்வு செய்யப்படுவதற்கும் வழக்குத் தொடருவதற்கும் சிபாரிசு செய்யப்பட்ட விடயங்கள் மீது குற்றவியல் ஆய்வுத் திணைக்களத்தினாலும் சட்டத்துறை அதிபதி திணைக்களத்தினாலும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன. 1999 ஆம் ஆண்டின் முடிவில் மேல் நீதிமன்றங்களில் 213 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கைள் கூறுகின்றன. குற்றச்சாட்டுகளின் விவரங்கள் தெரியவில்லை. சட்டத்தைத் துச்சமாக மதித்துச் செயற்படுவது தொடர்பான இன்னொரு மாற்றம் என்னவெனில் 1994 நவம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட சித்திரவதைகளுக்கும் ஏனைய கொடிய மனிதாபிமானமற்ற கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கும் எதிரான

Page 13
சமவாயத்தின் கீழ் பல்வேறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்பதாகும். சித்திரவதை செய்ததனால் தங்களது அடிப்படை உரிமைகள் மீரப்பட்டுள்ளன என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளில் சித்திரவதைகளுக்கு இந்த உத்தியோகத்தர்கள் பொறுப்பானவர்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இக்கட்டுரை எழுதப்பட்ட நேரத்தில் இதுபற்றி மேலதிக விவரங்கள் தெரியவில்லை.
1996 ஆம் ஆண்டில் காணாமல் போன நூற்றுக் கணக்கானவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் செம்மணி என்ற இடத்தில் புதைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. இதுபற்றி சென்ற வருடத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கண்டுபிடிப்பு புதைகுழிகளைத் தோண்டி அவற்றுள் இருப்பவற்றை சட்டமருத்துவ நோக்குடன் ஆய்வு செய்ய வேண்டிய விடயத்தை எடுத்துக் காட்டியுள்ளது. 1999 ஆம் ஆண்டில் இவ்விடயம் சம்பந்தமாகக் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வாண்டின் யூன், செத்தெம்பர் மாதங்களில் புதைகுழிகள் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 15 சடலங்கள் மீட்கப்பட்டன. அச்சமயத்தில் சர்வதேச அவதானிப்பாளர்களாக சர்வதேச மன்னிப்புச் சபையும் மனித உரிமைகளுக்கான மருத்துவர்களும் ஆசியா பவுண்டேசன் தாபனமும் அனுமதிக்கப்பட்டன. ஆனால் இவர்கள் எவ்வகையிலும் புதைகுழி தோண்டும் விடயத்தில் உதவியளிக்க அனுமதிக்கப் படவில்லை. இப்பிரதேசங்கள் தொடர்பிலான குற்றவியல் நுண்ணாய்வுகள் வருட இறுதியிலும் தொடர்ந்து கொண்டிருந்தன. எனினும் யாழ்ப்பாணத்திலுள்ள துரையப்பா விளையாட்டரங்கில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு புதைகுழி அகழப்படவோ அல்லது ஆய்வு செய்யப்படவோ இல்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டை இந்திய அமைதிப்படையினர் நிருவகித்த காலத்தில் காணாமல்
போனவர்களின் சடலங்கள் இப்புதை குழியில் இருக்கலாமெனக் கருதப்பட்டது.
ஒக்டோபர் மாதத்தில் பலாத்காரமாக அல்லது தன்னிச்சையில்லாத முறையில் காணாமல் போனவர்கள் மீதான ஐக்கிய நாடுகள் சபையின்
செயற்குழு இலங்கைக்கு விஜயம் செய்தது. இச்செயற்குழு ஆட்கள் காணாமல்
12

போவதைத் தடைசெய்வதற்கு தங்களால் முன்னர் செய்யப்பட்ட சிபாரிசுகளை அரசாங்கம் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தியுள்ளது என்பதைப் பரிசீலனை செய்வதன் பொருட்டே இந்த விஜயத்தைச் செய்திருந்தது. இது 1991 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இத்தொழிற்படு குழுவின் மூன்றாவது விஜயமாக இருந்தது. 1996 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஏறத்தாழ 540 பேர்கள் காணாமல் போனமை பற்றி சுதந்திரமான விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படாதமையைப் பற்றிக் கவலை தெரிவித்ததுடன் இதுபற்றி சுதந்திரமான விசாரணையொன்று நடாத்தப்பட
வேண்டுமெனச் சிபாரிசு செய்துள்ளது.
5. பால் ரீதியான பாரபட்சம் காட்டப்படுகின்றமை
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தினால் வெளிநாட்டு ஆண் வாழ்க்கைத் துணைகளுக்கு விசாக்களை வழங்குவதில் கைக்கொள்ளப்படும் வழிகாட்டல்கள் பற்றி 1999 ஆம் ஆண்டின் முற்பாதியில் உயர் நீதிமன்றமானது குறிப்பிடத்தக்க முக்கியமான பணிப்பொன்றை விடுத்தது. அவ்வழக்கில் அதாவது பேர்னாட் மாக்சி மில்லியன் பிட்சர் என்பவர் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு ஆணும் அவருடைய இலங்கைப் பிரசையாகிய மனைவியும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் மேலே குறிப்பிட்ட வழிகாட்டல்கள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையில் உத்தரவாதமளிக்கப்பட்ட சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வாசகத்தை மீறியுள்ளன என்ற அடிப்படையில் தமது அடிப்படை உரிமைகள்
மீறப்பட்டுள்ளனவென உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இலங்கைப் பெண்களைத் திருமணம் முடித்த சகல வெளிநாடுகளைச் சேர்ந்த ஆண்களும் அவர்கள் சட்டத்தின் பிற சில ஏற்பாடுகளினால் உள்ளடக்கப் பட்டவர்களாக இருந்தாலன்றி வருடாந்தம் இந்நாட்டில் வசிப்பதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்து அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வது
நடைமுறையில் தேவையானதாக இருந்தது. எனினும் ஆண் வாழ்க்கைத்
13

Page 14
துணைகளும் பெண் வாழ்க்கைத் துணைகளும் வெவ்வேறு நடைமுறைகளைப்
பின்பற்ற வேண்டியதாக இருந்தது. இலங்கை ஆண் ஒருவரைத் திருமணம்
முடித்துள்ள வெளிநாட்டுப் பெண் வதிவிட அனுமதியைப் பெறுவதற்கு தான்
குறித்த நபரைத் திருமணம் முடித்துள்ளதாகக் காட்டினால்
போதுமானதாகவிருக்கும். அதே தறுவாயில் அவ்வகையான வெளிநாட்டு
ஆண் ஒருவர் இலங்கையில் வசிப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்குத்
தன்னையும் தன்னுடைய இலங்கைப் பிரசையான மனைவியையும்
பராமரிப்பதற்கான ஆற்றல் தனக்கு உள்ளது என்பதற்கான அத்தாட்சியைச்
சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
இலங்கைப் பெண்களை மணம் முடித்த வெளிநாட்டு ஆண்கள் கங்களுக்கு
இலங்கை வதிவிட அனுமதிப்பத்திரம் பெறுவதற்குத் தகுதியுள்ளமையைப்
பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரியைத் திருப்திப் படுத்துவதற்கு வருடமொன்றுக்குத்
தங்களுக்கு 9000 ஐக்கிய அமெரிக்க டொலர் அந்நிய நாட்டுச் செலாவணியாக
இலங்கையில் வருகின்றது எனக் காட்ட வேண்டியுள்ளதுடன் ஓர் வங்கியில்
25000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை வைப்பிலிட்டு வைத்திருத்தலும்
வேண்டும். இப்பணத் தொகை குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாளரின் சிபாரிசு
இல்லாமல் வங்கியிலிருந்து எடுக்கப்படவும் முடியாது. இத்துடன் கூடுதலாக
இலங்கைப் பெண்களை மணம் முடித்துள்ள வெளிநாட்டு ஆண்கள்
இலங்கையில் தொழில் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட வழக்கில் மனுதாரர்கள் இலங்கைப் பெண்களை மணம்
முடித்த வெளிநாட்டவர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள்
முழுமையாக நியாயமற்றவைகளாகவும் தன்னிச்சையானவைகளாகவும் சட்ட
அடிப்படைகள் இல்லாதவைகளாக இருப்பதாகவும் தர்க்க ரீதியாக
பிழையானவைகளாகவும் இருப்பதனால் அரசியலமைப்பின் 12(1) ஆம் 12(2)
ஆம் உறுப்புரைகளுக்கு முரணானவைகளாக இருப்பதாகவும் விவாதம்
புரிந்துள்ளனர்.
14

குறிப்பிட்ட நபருக்கு வதிவிட அனுமதிப் பத்திரம் கொடுக்கத் தவறியமை
1948 ஆம் ஆண்டின் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கும் 1996
ஆம் ஆண்டின் சர்வதேச சிவில் அரசியல் உரிமைகள் தொடர்பிலான உடன்
படிக்கைக்கும் பெண்களுக்கு எதிரான எல்லா வகையான பாரபட்சங்களையும்
ஒழிப்பதற்கான சமவாயத்திற்கும் அமைவாக ஒழுக இலங்கைக்கு இருக்கும்
கடப்பாடு முரணான மீறுகை என மனுதாரர்கள் மேலும் வாதம் புரிந்துள்ளனர்.
மனுதாரர் பேர்னாட் மாக்சி மில்லியன் பிசருக்கு இலங்கை ஆணைத்
திருமணம் செய்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு வதிவிட விசா வழங்கப்படும்
அதே நியதிகள், நிபந்தனைகளுக்கு அமைவாக வதிவிட விசா வழங்குவதற்கு
குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் ஒத்துக் கொண்டதுடன் இந்த விடயம்
தீர்வு செய்யப்பட்டுள்ளது.
6. (plg6)
இந்நூல் இலங்கையில் மனித உரிமைகளின் நிலைபற்றிய ஓர் கண்ணோட்டத்தை அளிக்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள அதே
வேளையில் மனித உரிமைகள் சம்பந்தமான முக்கிய விடயங்கள் தொடர்பில்
வாதப்பிரதி வாதங்களைத் தூண்டுவதற்கும் அதன் விளைவாக வரவேற்கத்தக்க
மறுசீரமைப்புகளை ஊக்குவிப்பதற்கும் உதவுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நூல் இலங்கையின் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விவாதத்திற்கு
பங்களிப்பு வழங்குகின்றது. அத்துடன் இவ்விடயங்களில் சிவில் சமூக
அமைப்புகள் தொடர்ந்தும் வலுவுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகின்றன.
மேலும் அவை பரந்த அளவில் சமூகத்துடனும் கொள்கைகளோடும்
சம்பந்தப்பட்ட விடயங்களை ஆவணப்படுத்துவதிலும் அறிக்கையிடுவதிலும்
அவற்றின் சார்பாக பரிந்துரைப்பதிலும் ஈடுபடுகின்றன.
மனித உரிமைகளைப் பயனுறுதியுடன் பாதுகாப்பதற்கு நிறுவனங்களை
உருவாக்குவதும் சட்டங்களை இயற்றுவதும் தனியாக உதவ மாட்டா என்பதை
15

Page 15
இந்த நூலிலுள்ள அத்தியாயங்கள் மிகவும் தெளிவாகக் காண்பிக்கின்றன.
இதை நிறைவேற்றுவதற்கு அரசியல் திட சங்கற்பங்களும் உறுதிப்பாடும்
போதிய வளங்களும் சட்டத்தை வினைமுறைப்படுத்துவதும் தான் அதிக
அளவில் தேவைப்படுகின்றன. இலங்கையில் தற்போது நிலவும் அரசியல்
மயமாக்கப்பட்ட சூழ்நிலையில் சமசந்தர்ப்பங்கள் சட்ட மூலத்திற்கு ஏற்பட்ட
விளைவு முற்போக்கான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படுகின்ற
முட்டுக் கட்டைகளை தெளிவாகக் காண்பித்துள்ளது. என்றோ ஒருநாள்
உண்மையான சீர்திருத்தம் ஏற்பட வேண்டுமாயின் முரண்பாடுகளைக் கொண்ட
பல்வேறு குழுக்களின் ஆதரவைப் பெறுவதற்கான வழிவகைகள் கண்டறியப்பட
வேண்டும். இவை சமசந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்ற விடயத்தில்
மட்டுமன்றி அரசியலமைப்பினைச் சீர்திருத்துவதற்கும் முக்கியமான அடிப்படைத்
தேவையாகவுள்ளது.
16

அத்தியாயம் II
தனிநபர் கெளரவம்
1999 ஆம் ஆண்டில் சமாதானத்திற்கான வாய்ப்புகள் அரிதான நிலையில் இருந்தன. இலங்கையில் சகல பகுதிகளிலும் ஆயுத மோதல்கள் பாரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இலங்கையில் அநேகமாக ஒவ்வொரு குடும்பத்தினரும் இந்த மோதல்களின் விளைவாக மரணத்தையோ அங்கவீனத்தையே அல்லது வேதனை மிக்க மனத்தாக்கத்தையோ அனுபவிக்க
நேரிட்டுள்ளது.
இந்நாட்டில் பெருமளவில் பாதிப்புற்றவர்கள் நாட்டினுள்ளே இடம்பெயர்ந்து வாழும் குடிமக்களேயாவர். அவர்களுடைய வாழ்க்கை நிலை மோசமடைந்துள்ளடன் அவர்கள் தொடர்ந்தும் மோதல்களினால் பாதிப்படையக் கூடிய நிலையிலுள்ளனர். இவர்கள் போதிய உணவின்மை, நீர்ப்பற்றாக்குறை, வசதியின்மை, கல்வி பெறக்கூடிய வாய்ப்பின்மை, சுகாதார வசதிகளின்மை, மருந்துகளின்மை முதலியனவற்றினால் பெருமளவு துன்பத்தை அனுபவித்துக்
கொண்டிருக்கின்றனர்.
தற்போது முன்னரைவிடப் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டுடன் செயற்படுவதாகக் கருதப்படுகின்ற போதிலும் குடிமக்கள் காயமடைவதும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் காணாமல் போவதும் காலங்கடந்த விடயங்களாகி விடவில்லை. எல்.ரி.ரி.ஈ.யினர்கூட குடிமக்களை துஷ்பிரயோகம் செய்கின்றனர். இரண்டு தரப்பினர்களும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்கியொழுகுவதாகத் தெரியவில்லை.
இவ்விடயங்கள் தொடர்பில் எமது தாபனத்தின் முன்னைய அறிக்கையில் நாம் குறிப்பிட்டிருந்த சிபாரிசுகளைக் கடைப்பிடிக்குமாறு நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம். அவற்றுள் பின்வருவனவும் அடங்கும்.
17

Page 16
இரு தரப்பினர்களும் அடிப்படை மனிதாபினமான உரிமைகளை மனித உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படைத் தரங்களுக்கமைவாகக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தல் வேண்டும். இரு தரப்பினர்களும் சாதாரண குடிமக்கள் பாதிப்படைவதைத் தவிர்த்துக் கொள்வதன் பொருட்டு போதிய முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டு மென்பதோடு கண்மூடித்தனமான தாக்குதல்கள் மேற்கொள்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தவறுகள் இடம்பெறும்போது மனித உரிமை மீறல் களஞக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் சட்டத்தைத் துச்சமாக மதிக்கும் கலாசாரத்தை அற்றுப் போகச் செய்தல். சித்திரவதையை பொருட்படுத்தாமலிருக்கும் தற்போதைய நடைமுறையை
ஒழித்து விடுதல். ஒரு நபரை சட்டத்திற்கு முரணாகக் கைது செய்தல், தடுத்து வைத்திருத்தல் அல்லது விசாரணைக்கு உட்படுத்துதல் போன்ற விடயங்களைத் தவிர்ப்பதன் பொருட்டு சட்ட ஏற்பாடுகளைப் பலப்படுத்துதல் அத்துடன் அந்த ஏற்பாடுகளுக்கமைவாக ஒழுகுவதன் மூலம் இராணுவத்தினரும் பொலிசாரும் கைது நிலையிலுள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல்.
18

அத்தியாயம் II
அவசரகால ஆட்சி
இந்நாட்டின் சில பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் 1998 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து இலங்கை முழுவதையும் அளாவுவதன் பொருட்டு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை 1999 ஆம் ஆண்டு முழுவதும் நீடித்தது. அத்துடன் கைது செய்தல், தடுத்து வைத்தலுக்கான ஏற்பாடுகளும் 1999 ஆம் ஆண்டில் மாற்றமடையாமல் நிலைத்திருந்தன. அப்படியிருந்த போதிலும் ஆண்டின் முடிவில் தடுத்து வைத்திருப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட இடங்களின் நிரலில் எட்டுப் புதிய இடங்களும் சேர்க்கப்பட்டு வர்த்தமானிகளில் நிரற்படுத்தப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட இடங்களின் மொத்த எண்ணிக்கையை 394 ஆக்கியுள்ளது. இவற்றில் ஏழு இடங்கள் வடக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களாகவும் எட்டாவது இடம் பயங்கரவாத நுண்ணாய்வுப் பகுதி,
இல 101, சைத்திய வீதி, கொழும்பு 1 ஆகவும் உள்ளது.
அவ்வாண்டில் அவசரகால விதிகளின் கீழ் எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனவென நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 1999 ஆம் ஆண்டில் முடிவுற்ற 5 மாகாண சபைகளின் காலப்பகுதிகள் அவசரகால விதிகளின் கீழ் ஒத்திவைக்கப்பட்டமை அவற்றுள் ஒன்றாகும். இது சனநாயக ஒழுங்குவிதிகளுக்கு முரணானது 66 நீதிமன்றத்திற்குச் செய்யப்பட்ட மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதன் மூலம் அவசரகாலத் தீர்மானங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதென்பது
உயர்நீதிமன்றத்தினால் ஏற்றுக் கெள்ளப்பட்டுள்ளது.
சாதாரண சட்டவாக்க ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்காமல் அவசரகால விதிகளைப் பயன்படுத்தி சனாதிபதி சட்டங்களை அறிமுகப்படுதிய முயற்சிக்கு எதிராக உயர்நீதிமன்றத்திற்கு மனு செய்யப்பட்டது. இவ்வழக்கின் போது
19

Page 17
அரசியலமைப்பின் 35 ஆம் உறுப்புரையின் கீழ் சனாதிபதியின் எந்தச் செயலுக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட முடியாது என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. அவ்வண்ணம் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள போதிலும் இம்மனுவை ஏற்றுக்கொள்ள முடியாமையையிட்டு நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் சட்டம் அனைவரையும் சமமாகக் கருதுவதற்கு இது முரணானது என எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றமானது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை நியாயப்படுத்த முடியாததெனவும் எதேச்சாதிகாரமானது எனவும் தீர்மானித்தது. இந்த விடயத்தில் தேர்தல் ஆணையாளர் தன்னுடைய பொறுப்புகளை சரியான நிறைவேற்றியுள்ளாரா என்ற சர்ச்சை எழுந்தது. இவ்விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் சுதந்திரமாக செயற்படுவதற்கு அரசியலமைப்பிற்கமைவாக அதிகாரம் கொண்டவராகவுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை பற்றி நீதிமன்றத்திற்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் செயற்படவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டது. ஆகவே அரசாங்க உத்தியோகத்தர்கள் பொதுமக்களுடைய அடிப்படை உரிமைகளைப் பாதிக்கின்ற அவசரகால ஒழுங்குவிதிகளை அல்லது அவற்றின் கீழ் செய்யப்படும் கட்டளைகளை நுண்ணாய்வு செய்ய வேண்டுமென்பதையும் அவற்றைக் கண்மூடித்தனமாக நடைமுறைப்படுத்தக் கூடாதென்பதையும் வலியுறுத்துவதற்கு நீதிமன்றத் தீர்ப்பின் இந்த அம்சம் குறிப்பிடத் தக்கதாகவுள்ளது.
1999 யூன் மாதத்தில் அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்களினால் தீவு முழுவதிலும் வேலை நிறுத்தமொன்று நடாத்தப்பட்டது. அரசாங்கமானது உடனடியாக சுகாதார சேவையுடன் தொடர்புடைய சகல வேலைகளையும்
99
‘அத்தியாவசிய சேவைகளாகவும்’, ‘குறித்துரைக்கப்பட்ட சேவைகளாகவும்” அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் பிரகடனம் செய்து அவ்வேலை நிறுத்தத்தை முடிவுறுத்தியுள்ளது. அதன் நிமித்தம் அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள்
20

சங்கம் சனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சில யோசனைகளை ஏற்றுக்
கொள்ள வேண்டியதாயிற்று. அத்துடன் அக்கட்டளைகளும் இரத்துச்
செய்யப்பட்டன.
அதே ஆண்டில் நவம்பர் மாதத்தில் தணிக்கை தொடர்பிலான ஒழுங்கு விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அம்மாற்றங்களின் படி தகுதி
வாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி ஓர் பத்திரிகையை அச்சிடுவதோ, பிரசுரிப்பதோ, ஒலிபரப்பு நிலையத்தை நடாத்துவதோ, தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள் நடாத்துவதோ தடை செய்யப்பட்டுள்ளது. செய்திகள் என்பதன்
பொருள் கோடலில படங்களைப் பிரசுரிப்பதும் காட்சிப்படுத்துவதும் சேர்த்துக்
கொள்ளப்பட்டன. இப்பிரமாணக் குறிப்புகளில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும்
இராணுவ நடவடிக்கை தொடர்பான விடயங்கள் இருத்தலாகாது என்ற குறிப்பும்
சேர்த்துக் கொள்ளப்பட்டது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான ஓர் ஆலோசனைச்சபையை
அவசரகாலச் சட்டத்தின் கீழ் உருவாக்குவதற்கு அரசாங்கமானது நியாயமான
விரிவான ஏற்பாடுகளைச் செய்தது. அந்த ஏற்பாடுகளில் இச்சபைக்கு 11
முதல் 17 வரையான உறுப்பினர்கள் சனாதிபதியினால் நியமிக்கப்பட
வேண்டுமெனவும் அச்சபையானது ஆளுநருக்கு சிவில் நிருவாகம் மற்றும்
சட்ட ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை வழங்க வேண்டுமெனவும் இம்மாகாணங்களின் அபிவிருத்திக்கான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க
வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடுகளில் குறிப்பிடத்தக்க அமிசங்கள் இச்சபையின் பணிகள் தன்மையில் ஆலோசனை வழங்குவதாக மட்டுமே இருக்குமன்றி நியமனங்கள் சனாதிபூதியினாலேயே முழுமையாகச்
செய்யப்படும் என்பதுவும் உசாவுகையை மேற்கொள்வதற்கான அடிப்படைகள்
அல்லது வழிகாட்டல்கள் இல்லையென்பதுவும் பதவி வகிக்கும் காலம் குறுகியது என்பதுவும் அது எந்நேரத்திலும் முடிவுறுத்தப்படலாமென்பதுவுமாகும்.
2.

Page 18
1999 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் குருனாகல், புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அக்காலமானது வடமேல் மாகாணதில் தேர்தல் நடைபெற்ற காலமாகும். அத்துடன் இவ்வாண்டு திசெம்பர் 18 ஆந் திகதியன்று சனாதிபதி மீது குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதன்
பெரில் ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
மாகாண சபைகள் வழக்கின் தொடர்பில் நீதிமன்றமானது இவ்விடயத்தில் அவசரகால ஆட்சி பயன்படுத்தப்பட்டதை நியாயமானதாகக் கருதவில்லை. ஆகையால் தேர்தலின் ஒத்திவைப்பு முயற்சி சட்டப்படி செல்லுபடியற்றதெனவும் தேர்தலை மூன்று மாதகாலத்திற்குள் நடாத்தும்படி பணிப்பு விடுத்துத் தீர்ப்பளித்துள்ளது. இவ்வண்ணம் தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும் 1999 ஆம் ஆண்டு முழுவதும் பொதுப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் I ஆம் பகுதியை அரசாங்கமானது செயல் வலுவில் தொடர்ந்தும் வைத்திருந்தது. இதன் விளைவாக அவசரகால ஒழுங்கு விதிகளையும் அவற்றின் கீழான கட்டளைகளையும் பயன்படுத்தும் கவலைக்குரிய விடயங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. அரசாங்கத்தினால் அவசரகால ஒழுங்குவிதிகள் மீளாய்வு செய்யப்படவில்லை. அவ்விதிகளின் பொருளடக்கம் அநேக விடயங்களில் தன்னிச்சை யானவைகளாகவும் நியாயமற்றவைகளாகவும் சகிக்க முடியாதனவாகவும் இருந்ததுடன் அவற்றின் சொற்கள் அடிக்கடி திரிபுபட்டனவாக
இருந்துள்ளன.
22

அத்தியாயம் IV
மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு
1999 ஆம் ஆண்டில் உயர்நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட முக்கியமான தீர்ப்புகளை ஆராய்ந்து அடிப்படை உரிமைகள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின்
சட்டவியல் பற்றி இந்த அத்தியாயத்தில் கலந்துரையாடப்படுகின்றது.
நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் அரசியல் அமைப்பிலிருந்தே பெறப்படுகின்றது. அரசியலமைப்பின் 17 ஆம் 126 ஆம் உறுப்புரைகளில் உயர்நீதி மன்றமானது அடிப்படை உரிமைகள் தொடர்பில் முழுமையாகத் தனிப்பட்டதும் பிரத்தியேகமானது மான நியாயாதிக்கத்தைக் கொண்டுள்ளதெனக் கூறப்பட்டுள்ளது. தனியொரு நடுத் தீர்ப்பாளராகவிருப்பதன் நிமித்தம் உயர்நீதி மன்றமானது சமூகத்திற்கான முக்கிய பாகமொன்றை வகிக்க வேண்டியுள்ளது. அடிப்படை உரிமைகள் வழக்குகளில் தீர்ப்பளித்தல் நீதிமன்றமாகவும் சட்டப் பிரச்சினைகள் தொடர்பில் அது முற்றிர்ப்புகளை வழங்குவதாகவும் இருப்பதனால் குறிப்பாக உயர்நீதி மன்றம் முக்கிய பாகத்தை வகிக்கின்றது. மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை நீதி மன்றமானது அரசியலமைப்பின் 17 ஆம் 126 ஆம் உறுப்புரைகளிலிருந்தே பெறுகின்றது. அடுத்தபடியாக முன்னைய ஆண்டுகளிற் போலவே இவ்வாண்டிலும் 12 ஆம் உறுப்புரையின் கீழான வழக்குகள் (சமத்துவம் சம்பந்தப்பட்டது) 11 ஆம் 13 ஆம் உறுப்புரைகளின் கீழான முறையே சித்திரவதை, தன்னிச்சையான கைதுகள், தடுத்துவைத்தல் சம்பந்தப்பட்ட) வழக்குகளைவிட எண்ணிக்கையில் கூடுதலானவைகளாக இருந்தன. பின்னைய
உறுப்பிரைகளின் கீழான வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் இந்த உறுப்புரைகளின் கீழ் மீறுகைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. எவ்வாறாயினும் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்புகள் இந்நிகழ்வுகள்
23

Page 19
நடைபெறுவதை எந்த அளவிலும் குறைக்க உதவவில்லையென்பது
வெளிப்படையானதாகும்.
பல வழக்குகள் பொலிஸாரின் கைகளினால் தாக்கப்படுவதற்கு
உட்பட்டவையாகும். பொலிஸாரின் அத்துமீறல்களுக்கு உள்ளாகித்
தாக்கப்பட்டும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது.
நியாயம் இல்லை என்பது கூட ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட
இவ்விடயத்தில் நீதவான் தன்னுடைய சுய தீர்மானத்தின்படி ஒருவரைத் தடுத்து
வைக்கக் கட்டளையிடலாமெனவும் அதனால் அவ்வாறு செய்யும்போது சந்தேக
நபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழு குற்றம் காணக்கூடிய ஏதேனும் ஓர் செயலில் ஈடுபட்டிருக்கக் கூடுமா என்பதைக் கவனத்திற் கொண்டு அது
தொடர்பான வழக்கு விசாரணை முடிவுறும் வரை மாத்திரமே தடுத்து
வைக்கலாம் என உயர்நீதி மன்றம் தீர்மானித்திருந்தது. உயர்நீதி மன்றத்தினால்
இத்தகைய பல வழக்குகள் விசாரணை செய்யப்பட்டதைக்
காணக்கூடியதாகவுள்ளது. இலங்கையரான பெண்ணொருவர் வெளிநாட்டு
ஆணைத் திருமணம் செய்யும்போது அவருக்கு வதிவிடம் கொடுக்கத் தவறுவது அரசியல் அமைப்பின் 12(2) ஆம் உறுப்புரைக்கு முரணானது என வாதாடப்பட்டு இவ்விடயம் தொடர்பிலான தீர்மானம் இரு பாலாருக்கும் சமமானதாக இருக்க
வேண்டுமென உயர்நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறிப்பிடத்தக்க
வழக்குகளாக அமைந்தவற்றில் ஒன்றாகவிருந்தது. உயர்நீதி மன்றமானது
இவ்வழக்கில் வதிவிட அனுமதிப்பத்திரமானது வழங்குவதற்கான விதிமுறைகள்
அரசியலமைப்பின் 12 ஆம் உறுப்புரைக்கமைய தயாரித்து வெளியிடப்பட
வேண்டுமெனவும் கட்டளையிட்டுள்ளது. எனினும் இக்குறித்த விடயம் தொடர்பில்
இருபாலாருக்கும் இடையில் பாரபட்சம் காட்டப்படுவதைப் பற்றி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளதே தவிர பொதுப்படையான பால் சமத்துவம் பற்றித்
தீர்ப்பளிக்கத் தவறியுள்ளது.
24

சித்திரவதை செய்வது 11 ஆம் உறுப்புரைக்கு முரணான செயல் என நீதிமன்றங்கள் பல தடவைகளில் தீர்ப்பளித்திருந்த போதிலும் அக்குற்றங்களும் உறுப்புரைகள் 12(1), 13(2) ஆம் உறுப்புரைகள் மீறப்படுவது சட்ட விரோதமாகக் கைது செய்தல், தடுத்து வைக்கப்படுதல் தொடர்ந்து நடந்து வருவது வருத்தத்திற்குரிய விடயமாகும். அடிப்படை உரிமைகள் தொடர்பான விடயங்களைத் தீர்த்து வைப்பதில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட விடயங்கள் யாவும் அதிக தாமதத்திற்கு உள்ளாகி திருப்திகரமற்ற தீர்வையே அளித்துள்ளன. எது எப்படியிருந்த போதிலும் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றம் கவனம் செலுத்த முற்பட்டமை ஒரு வரவேற்கத்தக்க விடயமாகும். இம்முயற்சியில் தொடர்ந்தும் நீதிமன்றங்கள் ஈடுபடுமெனவும் அச்செயற்பாட்டில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உதவியையும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும்
எதிர்பார்க்கப்படுகின்றது.
25

Page 20
அத்தியாயம் V
கருத்து வெளியீட்டுச் சுதந்திரமும் ஊடகத்துறையும்
கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரமும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சுதந்திரமும் சனநாயகத்தின் அத்தியாவசியமான அத்திவாரமாகவுள்ள அதேவேளையில் இவை ஏனைய மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களை அனுபவிப்பதற்கான அடிப்படையையும் வழங்குகின்றது. ஊடகத்துறையானது சமூகத்தின் வெவ்வேறு முகவர்களைக் கண்காணிப்பதற்கு உதவுகின்ற வேளையில் அது பொது மக்களின் ஆய்விற்கு அவர்ளின் செயற்பாடுகளைத் திறந்து வைத்து அவர்களை அச்செயற்பாடுகளின் வெளிப்படைத் தன்மையைக் காண்பிப்பதற்கும் வகை சொல்வதற்கும் கூடுதலான அளவில் பொறுப்புடையவர்களாக்குகின்றது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்வுரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தும் அவற்றைப் பேணிப் பாதுகாக்கவில்லை.
1999 ஆம் ஆண்டில் செய்தித் தணிக்கையானது ஓர் சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது. 1998 யூன் மாதத்தில் அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் விதிக்கப்பட்ட செய்தித் தணிக்கை 1999 ஆம் ஆண்டு முழுவதிலும் தொடர்ந்திருந்தது.இவ்வாறு இருந்த போதிலும் ஓர் இராணுவப் பின்னடைவு ஏற்பட்டதன் பின்னரே இநீத ஒழுங்கு விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன. ஊடகத்துறையைக் கடுமையாக ஒழுங்குறுத்தும் நோக்கத்துடன் அரசாங்கமானது தணிக்கை தொடர்பினை இந்த ஒழுங்கு விதிகளை நவம்பரில் திரும்பவும் செயல்வலுவுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த ஒழுங்கு விதிகள் இராணுவச் செயற்பாடுகள் தொடர்பிலான எந்தவிடயத்தையும் வெளியிடுவதையும் அல்லது ஒலிபரப்பப்படுவதையும் அல்லது அனுப்பப்படுவதையும் தடைசெய்திருந்தது. இருந்தபோதிலும் இவற்றை
26

அரசாங்கமானது தேசிய பாதுகாப்புடன் தொடர்பில்லாத வெளியீடுகளையும் தகவல்கள் ஒலிபரப்பப் படுவதையும் தடை செய்வதற்கு உபயோகித்திருந்தது. இந்நடவடிக்கை அநேக சந்தர்ப்பங்களில் அரசியல் வாதிகளுக்குச் சங்கடங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக அல்லது அரசாங்கத்தின் பிழைகளை வெளியே தெரியாமல் மறைப்பதற்பாக எடுக்கப்பட்டுள்ளது. செய்தித் தணிக்கை விதிப்பதற்கு எதிராக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளதுடன் தணிக்கையை நீக்குமாறு கோரிக்கையும் விடுத்துள்ளன. அரசாங்கம் தொடர்ந்தும் தகவல் துறையினரை அச்சுறுத்தும் வகையில் தென்படக்கூடிய அவதூறு தொடர்பான வழக்குகளைத் தாக்கல் செய்கின்றது. மார்ச் மாதம் 4 ஆந் திகதியன்று “லக்பிம” பத்திரிகையின் நிருபர் சிறீலால் பிரியந்தா கடத்திச் செல்லப்பட்டு மோசமாகத் தாக்கப்பட்டுள்ளார். யூலை 15 ஆந் திகதி ஐ.தே.கட்சியின் கூட்டமொன்றுக்குச் சமுகமளித்திருந்த ஊடகத்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர். "சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் பல தடவைகள் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப்படுத்தப்பட்டுள்ளார். “சட்டன” எனப்படும் நாளேட்டின் ஆசிரியர் றோகண குமார நுகேகொடையில் வைத்துச்
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
1999 இல் சனாதிபதி தேர்தலின்போது தேர்தல் தொடர்பான செய்திகள் கடுமையாகத் தணிக்கை செய்யப்பட்டன. சுருக்கமாகக் கூறுமிடத்து 1999 ஆம் ஆண்டில் கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்ட தடங்கல்களை நீக்குவதன் பொருட்டு எந்தவொரு சட்டவாக்கமும் நிறைவேற்றப்படவில்லை. அவ்வுரிமையைப் பேணி வைத்திருப்பதற்கு பொதுசன ஐக்கிய முன்னணியினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேறாத வாக்குறுதியாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. இவ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டுமாயின் சட்டங்களுக்கு இடையேயுள்ள பின்வரும் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும்.
27

Page 21
தண்டனைச் சட்டக்கோவையின் 118 ஆம் 120 ஆம் 479 ஆம் பிரிவுகள் 1995 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள்
சட்டம் 1979 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க இலங்கைப் பத்திரிகை மன்றச்
சட்டம் 1958 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க துன்மார்க்க வெளியீடுகள் சட்டம் 1927 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஆபாசமான வெளியீடுகள் கட்டளைச்
சட்டம்
1947 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்
சட்டம்
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டம்
28

அத்தியாயம் VI
சிறுவர் உரிமைகள்
இந்த அத்தியாயமானது 1999 ஆம் ஆண்டில் சிறுவர் உரிமைகள் துறையில்
ஏற்பட்ட மாற்றங்கள் மீது கவனஞ் செலுத்துகின்றது. 1999 ஆம் ஆண்டில்
தாபரிப்பு, சிறுவர் தொழிலுக்கு அமர்த்தப்படுவது தொடர்பான சட்டங்கள்
நீக்கப்பட்டதுடன் சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாகக் கூடுதலான கவனமும்
செலுத்தப்பட்டது. எனினும் 1998 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை புரிந்த
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அதிபரின் யுத்தச் சூழ்நிலையால்
பாதிக்கப்படும் சிறுவர்கள் விடயங்களுக்கான பிரதிநிதிக்கு எல்.ரி.ரி.ஈ. கொடுத்த
வாக்குறுதியை மீறி அது தொடர்ந்தும் சிறுவர்களை யுத்தத்தில்
ஈடுபடுத்தியுள்ளது.
இந்த அத்தியாயத்தில் தற்போதுள்ள சட்டங்கள் சிறுவர்களை துஷபிரயோகம்
செய்பவர்களிடமிருந்தும் உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும்
சிறுவர்களைத் தங்களுடைய பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்திக்
கொள்வதிலிருந்தும் பாதுகாக்கத் தவறியமை பற்றியும் தற்போது இவற்றைத்
தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகள் பற்றியும்
ஆராயப்படுகின்றது. தொடர்ந்து நடந்த பல்வேறு யுத்தங்களின் விளைவாக
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏறக்குறைய 900,000 சிறுவர்கள் நேரடியாகப்
பாதிப்புற்றுள்ளனர். அத்துடன் மறைமுகமாக இலட்சக் கணக்கான சிறுவர்கள்
பாதிப்புற்றுள்ளனர். குடும்பங்கள் இடம்பெயர்ந்தமையினாலும் சொத்துகளை
இழந்தமையினாலும் தங்களுடைய இளம் பிராயத்தில் இவர்கள் தங்களுடைய
குடும்பங்களுடன் வாழும் உரிமையை இழந்த நிலைமையில் இருக்கின்றனர்.
இதற்கும் மேலாக எல்.ரி.ரி.ஈ.யினர் தொடர்ந்தும் சிறுவர்களைத் தங்களுடைய
போராளிகளாகச் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் ஐக்கிய நாடுகள் சிறுவர்
தொடர்பான சாசனத்தைத் தொடர்ந்தும் மீறிக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச
29

Page 22
மன்னிப்புச் சபை போன்ற தாபனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளபோதிலும்
சிறுவர்கள் தொடர்ந்தும் இவர்களால் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவ்வகையில் பெருமளவிலான சிறுவர்கள் போரினால் பாதிப்புற்றுள்ளதால்
அவர்களின் கல்வி வளர்ச்சி குன்றி அவர்களுடைய ஆளுமை வளர்ச்சியும்
பாதிப்புற்றுள்ளது. மேலும் எல்.ரி.ரி.ஈ.யின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களிலுள்ள
பாடசாலைகளில் படிக்கின்ற 13 வயதிற்கு மேற்பட்ட வயதுடைய சிறுவர்கள்
கட்டாயமாகப் பாடசாலை நேரங்களில் ஒரு மணித்தியாலமாவது உடற்
பயிற்சியில் எல்.ரி.ரி.ஈ.யினரால் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதன் தொடர்ச்சியாக
அவர்களுக்கு இரண்டு வாரங்கள் ஆயகப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றது.
அத்துடன் தாக்குதல் மேற்கொள்ளப்படும் சமயங்களில் பாதிப்பிலிருந்து தப்பித்துக்
கொள்வதற்கான வழி முறைகளும் அவர்களுக்குப் போதிக்கப்படுகின்றன.
அப்பகுதிகளிலுள்ள சிறுவர்கள் பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம்
போதியளவு போஷாக்குள்ள உணவுகளைப் பெறக்கூடிய வாய்ப்பை இழந்த
நிலையில் ஆரோக்கியமற்ற நிலையிலுள்ளனர். இவர்கள் நேரடியாக வன்முறைச்
செயல்களுக்கு ஆளாகக்கூடிய நிலையிலுள்ளனர். பெண்களும் சிறுவர்களும்
பலாத்காரமாக விபசாரத்திற்கும், கற்பழிப்பிற்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
இச்சிறுவர்கள் போரற்ற சமாதான சூழ்நிலையில் வாழும் வாய்ப்பை
அனுபவித்ததேயில்லை. மோதல் பிரதேசங்களிலுள்ளவர்கள் இராணுவத்தினர்,
எல்.ரி.ரி.ஈ ஆகிய இரண்டு தரப்பினர்களினாலும் அச்சுறுத்தப்படுகின்றனர்.
இராணுவப் பயிற்சி முகாமைக்களுக்கு அருகாமையில் வசிக்கும் சிறுவர்கள்
இராணுவத்தினரின் பயிற்சியின் போது தவறுதலாக துப்பாக்கிச் சூட்டிற்கு
இலக்காகி இறந்துள்ளனர். இத்தகைய நிகழ்ச்சிகள் ஒகத்து 5 ஆம் 18 ஆம்
திகதிகளில் பம்பலபிட்டியா என்னும் இடத்திலும் பின்னர் முதலைப்பள்ளி என்னும்
இடத்திலும் நடைபெற்றுள்ளன.
30

யுத்தப் பாதிப்புகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சிறுவர்
சமாதான வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது 1996 ஆம் ஆண்டில்
ஐக்கிய நாடுகள் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட மக்கள் அறிக்கையைத் தழுவிய
ஒழுங்கு முறையாகும். இலங்கை அரசாங்கத்திற்குப் பல அரச சார்பற்ற
தாபனங்கள் இம்முயற்சியில் உதவியளித்துள்ளன.
இவ்வாண்டில் சிறுவர்கள் பாலியல் ரீதியில் துஷபிரயோகம் செய்யப்பட்ட
பல நிகழ்வுகள் பற்றித் தெரியவந்துள்ளது. இதற்கு இந்நாட்டில் நிலவிய
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் ஒழுங்கு முறையானது
உதவியளித்துள்ளது. மேற்குக் கரையோரப் பகுதிகளில் வாழும் ஆண் சிறுவர்கள் உல்லாசப் பிரயாணிகளின் துஷபிரயோகத்திற்கு உள்ளாக
நேர்ந்துள்ளது. இதற்கு வறுமையும் இலகுவில் சம்பாதித்துக் கொள்ளும்
வாய்ப்பும் போதைப் பொருட்களின் பாவனையும் காரணமாக இருப்பதாகக்
கருதப்படுகின்றது. மேலும்,இப்பகுதிகளில் பாடசாலைக் காலம் முடியும் முன்னரே
பாடசாலையை விட்டுச் செல்லும் தன்மையும் இவர்களின் மத்தியில் நிலவுகின்ற
ஒரேயினப் பாலியல் முறையும் காரணம் எனவும் கருதப்படுகின்றது.
இந்நிலைமையின் நிமித்தம் உல்லாசப் பிரயாணிகள் மூலம் பாலியல் ரீதியாகத்
தொற்றக்கூடிய நோய்களுக்கு சிறுவர்கள் உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நாட்டில் வர்த்தகத் தாபனங்கள் சிறுவர்களை வர்த்தகக்
காரணங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வது சிறுவர்களுக்கு இழைக்கப்படும்
பாதகங்களில் மற்றொன்றாகவுள்ளது. இம்முயற்சியில் வெளிநாட்டவர்கள்
முதலீடு செய்து 6-8 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை நிருவாணமாகப் படம்
பிடித்தும் அவர்களை இயற்கைக்கு முரணான பாலியல் செயற்பாடுகளில்
ஈடுபடுத்தியும் அவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துகின்றனர். இத்தகைய
பிணிக்கப்பட்ட சிறுவர் அடிமைத்தனத்தின் கீழ் சிறுவர்களுக்கு பாதகம்
ஏற்படுத்தப்படுவதை சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் அறிந்திருந்தும் அவர்கள்
31

Page 23
இந்நடவடிக்கைகளை ஒழிப்பதற்கு முற்படாமலிருப்பது கவலைக்குரிய
விடயமாகும்.
இலங்கையில சிறுவர்களின் உரிமைகள் பல்வேறு உள்நாட்டு
சட்டங்ளினாலும் சர்வதேச சமவாயங்களினாலும் பாதுகாக்கப்படுகின்றன.
சிறுவர்களைப் பாதுகாப் பதற்கென அரசியல் அமைப்பில் பல ஏற்பாடுகள்
உள்ளன. அவை 27(13), 12(4) போன்ற உறுப்புரைகளாகும். தண்டனைச்
சட்டக்கோவையானது 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனை விதிக் கோவைச் (திருத்தம்) சட்டத்தினால் திருத்தப்பட்டுள்ளது. இது 360 ஆ,
365 ஆ பிரிவுகளிலுள்ள பால் துஷபிரயோகத்தின் வரைவிலக்கணத்தைப்
பரவலாக்கியுள்ளது. மிகவும் சமீபத்திய காலத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு
அதிகாரசபைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் அதற்கென ஓர்
அதிகாரசபையும் நிறுவப்பட்டுள்ளது. இத்தகைய பல சட்டங்கள்
இருக்கின்றபோதிலும் பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகங்கள் பரவலாக
இடம்பெற்று வருகின்றன. இதற்கு சட்டவாக்கங்களின் பரிபூரணமற்ற தன்மையும்
உள்ள சட்டங்கள் சரியாக நடைமுறைப் படுத்தப்படாமையும் சிறுவர் பாதுகாப்பை
சரியான முறையில் மேற்கொள்ள வேண்டுமென்ற மனவலுவின்மையும்
காரணங்களாக அமைகின்றன.
1991 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவையினால்
தயாரிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைகளுக்கான சமவாயம் இலங்கையினால்
ஏற்றுக் கொள்ளப்பட்டன. இது ஏற்றுக்கொள்ளப்பட்டு பத்தாண்டு
நிறைவையொட்டி இலங்கை உட்பட பல நாடுகள் இதற்குரிய திட்டங்களை
வகுத்தன. 1999 ஆம் ஆண்டில் இதற்காக நிறுவப்பட்ட அமைப்புகளுள்
சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாப்பதற்காக ஒர் அமைப்பு நிறுவப்பட்டது.
இந்த அமைப்பிற்கு நாடு முழுவதிலும் 32 கிளைகள் உள்ளன. 1999 ஆம்
ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுள்குள் 4100 குற்றங்கள் அதன்
32

கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றுள் 613 குற்றங்கள் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்டவைகளும் 525 சிறுவர்கள் வேலைகளுக்கு அமர்த்தப் பட்டதும் தொடர்பிலானவைகளாகும். இக்காலப் பகுதியில் 32 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 402 சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். 214 பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் தொடர்பிலான குற்றங்களைக் குறைப்பதற்கு அரசாங்கமும் பல்வேறு அரசாங்கம் சாராத அமைப்புகளும் பூர்வாங்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இத்தகைய குற்றங்கள் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. சிறுவர்களின் உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் பற்றிக் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அந்த உரிமைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அரிதாகவே
எடுக்கப்படுகின்றது. அநேக குற்றச் செயல்கள் பற்றி அறிவிக்கப்படுவதில்லை.
1999 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பெண்கள், இளைஞர்கள், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான சட்டத்தின் திருத்தங்களின் விளைவாக 12 வயதிற்குட்பட்ட எந்தவொரு பிள்ளையையும் வேலைக்கு அமர்த்துவது தடை செய்யப் பட்டுள்ளதுடன் வேலைக்கு அமர்த்தப்படுவது தொடர்பில் அவர்கள் 14 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய பராமரிப்புச் சட்டம் 1999 ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் பிரகாரம் தமது பிள்ளைகளைப் பராமரிப்பதில் அசட்டையாகவும் அதேநேரம் அவர்களைப் பராமரிப்பதற்கு போதியளவு வருமானத்தையுடையவர்களுமாக உள்ள பெற்றோர்கள் அப்பிள்ளைகளுக்கு மாதாந்தப் படியொன்றைச் செலுத்த வேண்டும். இப்படித் தொகையானது பெற்றோர்களின் வருமானத்திலும் பிள்ளையின் நிலைமையிலும் தங்கியிருக்கும். இந்த ஏற்பாடுகள் வயதடைந்ததன் பின்னரும் தங்களுக்குத் தாங்களே பொருளாதார ஆதரவைத் தேடிக் கொள்ள முடியாத நிலையிலுள்ளவர்களும் ஏலா வாளிகளாகவுள்ள பிள்ளைகளுக்கு
33

Page 24
ஏற்புடையனவாகவிருக்கும். எனினும் பிள்ளை திருமணம் முடிக்காத பெற்றோர்களுக்கு பிறந்ததாக இருக்குமிடத்து இந்த ஏற்பாடுகள அப்பிள்ளைக்கு ஏற்புடைத்தானதாக மாட்டாது. எது எப்படியிருந்த போதிலும் குறித்த ஆண்டில் சிறுவர்களின் இந்நிலைமையில் இருந்தமைக்கு நிறைவேற்றப்பட்ட சட்டங்களிலுள்ள பூரணமற்ற தன்மை, இருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அக்கறையின்மை, அரசியல் வலுவற்ற தன்மை ஆகியவற்றுடன் சட்டங்களில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாகவிருந்தன. இலங்கையில் நீதிமுறை நடைமுறை நீதிமன்றங்களால் மேற்கொள்ளப்படும் காலதாமதமும் இதற்குக் காரணமாக அமைகின்றது. எனவே நீதிமுறைத் துறையானது கூடுதலான வினைத்திறமையுடையதாகவும் சிறுவர்களின் தேவைக்குக் கூடுதலான உணர்ச்சிகரமானதாகவும் செயற்படக் கூடிய விதத்தில் சீர்திருத்தப்பட வேண்டும். பாலியர் நீதி பரிபாலன ஒழுங்கு முறைகள் கூடுதலான வினைத்திறமை உடையவைகளாக்கப்படுவதன் பொருட்டு சர்வதேச
தரங்களுக்கு தரமுயர்த்தப்படல் வேண்டும்.
34

அத்தியாயம் VII
பெண்கள் உரிமைகள்
1999 ஆம் ஆண்டில் பெண்களின் உரிமைகள் தொடர்பில் பெரிய கொள்கை மாற்றங்களோ அல்லது சமூக மாற்றங்களோ ஏற்படவில்லை. இதனால் இவ்வத்தியாயமானது 1999 ஆம் ஆண்டில் பெண்களின் பல முக்கியமான அம்சங்கள் தொடர்பிலான நிலைமையின் சுருக்கமொன்றை வழங்குகின்றது. அந்த அம்சங்கள் பெண்களும் பொருளாதாரமும்; பெண்களுக்கு எதிரான வன்செயல்; பெண்களும் சுகாதாரமும்; பெண்களின் அரசியல் பங்குபற்றுகை,
ஆயுதமோதல் பிரதேசங்களிலுள்ள பெண்கள் ஆகியனவேயாகும்.
கூலித்தொழில்களில் பெருமளவிலான பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. ஆயினும் படித்த பெண்கள் அனைவருக்கும் படிப்பிற்கேற்ற தொழில் கிடைக்கவில்லை. பெண்கள் பொருளாதாரத்திற்கு பெருமளவு பங்களிப்புச் செய்கின்ற போதிலும் வேலைத்தளங்களில் அவர்களுக்கு தொந்தரவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பெண்களுக்கு அவர்களுடைய உரிமைகள் என்னவென்பது சரியாகத் தெரியாததன் நிமித்தம் அவர்கள் தங்களுடைய உரிமை மீறல்களைப் பற்றி முறையிடுவது மிகவும் குறைவாகவுள்ளது. பெண்கள் உரிமைகள் அவதானிப்புக்குழு எனப்படும் அமைப்பு உயர்மட்டப் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு சம சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை என முறைப்பாடு செய்துள்ளது. இத்தகைய சமவாய்ப்பின்மையை ஒழிப்பதற்கான சட்ட மூலமொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் உயர்நீதி
மன்றத்தின் தீர்ப்பிற்கு அமைவாக அம்முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
விவசாயத்துறையில் பெண்கள் பங்குபற்றுவதிலான விகிதத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. பெண்களுக்கு காணி உரிமை
35

Page 25
பெறக்கூடிய வாய்பின்மை, கடன்வசதி தொழிநுட்ப அறிவு கிடைக்கும் வசதிகள் அவர்களுக்கு ஆண்களுக்குக் கிடைக்கும் அளவிற்குக் கிடைக்காதமையும் ஒரு காரணமாகும். முன்னைய ஆண்டிற் போலவே இவ்வாண்டிலும் சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை வாய்ப்புகள் இருந்த போதிலும் பெண்களுக்கு உகந்த வேலைச் சூழல் மற்றும் வசதிகள் தொடர்ந்தும் வழங்கப்படாமலிருந்து வந்துள்ளன. அவர்களுடைய வதிவிடங்களில் நான்கு அல்லது ஐந்து பேர்கள் இருக்கக் கூடிய அறைகளில் 10-12 பேர்கள் இருந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது. சுதந்திர வர்த்தகவலய வேலையாளர்களின் பாதுகாப்பையும் நலனோம்பல் நடவடிக்கைகளையும் பற்றி ஆய்வு செய்வதற்கு சனாதிபதி செயலகத்தினால் 1998 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட விசேட குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையின் மீது சுதந்திர வர்த்தக வலயத்தொழிலாளர்களின் நலனோம்பலை மேம்படுத்துவதற்கு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இக்குழுவானது பின்வரும் சிபாரிசுகளைச் செய்துள்ளது.
வேலையாட்களுக்கான விடுதி இல்லங்கள் பதிவு செய்யப்படல் வேண்டும்; கடமை மாற்றுமுறைகளை அனுசரித்து அவற்றிற்கேற்ப வேலையாட்களுக்கு போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட வேண்டும்; வீதி மின்விளக்குகள் வழங்கப்பட வேண்டும்; வேலையாட்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு கொடுத்தல் வேண்டும்;
அத்துடன் வேலையாட்களுக்கான கடன் திட்டமொன்று நிறுவப்பட வேண்டும்.
முன்னைய ஆண்டுகளிற் போலவே 1999 ஆம் ஆண்டிலும் வெளிநாடுகளில் பெண் வேலையாட்கள் வேலை பார்க்கும் பணி தொடர்ந்தது. இவ்வாண்டில் வெளிநாடுகளில் பெண் வேலையாளர்களுக்கிடையே இறப்பு வீதம் அதிகரித்தமை கவலைக்குரிய விடயமாகவிருந்தது. அப்படியிருந்த போதிலும் 1995 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு வேலை செய்வதற்காக இடம்பெயர்ந்து செல்லும் வேலையாளர்களின் நிலைமையை மேம்படுத்துவதன் பொருட்டு
36

நியமிக்கப்பட்ட சனாதிபதி சிறப்புப் பணியணியினால் சிபாரிசு செய்யப்பட்ட
ஐந்தாண்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சில நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கென
வேலையாட்கள் நலனோம்பல் நிதியமொன்று உருவாக்கப்பட்டது. 10 நாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு அந்த நாடுகளில் வேலை செய்து இடம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு வசிப்பதற்கு புகலிடம் வழங்குதல் மற்றும்
இலங்கைக்குத் திரும்பி வருவதற்கு விமானப் பயணச் சீட்டுகள் வழங்குதல்
போன்ற விடயங்களுக்காகப் பணம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறப்புப்
பணியணியினால் செய்யப்பட்ட சிபாரிசின்படி மேற்காசிய நாடுகளிலுள்ள
வேலையிலிருந்து திரும்பி வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதன் பொருட்டு
ஓர் புதிய பாதுகாப்புத் திட்டம் நிறுவப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டில் வெளிநாட்டிற்கு வேலை செய்வதற்காக இடம்பெயர்ந்து
சென்றவர்களின் இறப்பு வீதத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
1998 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களுடன் ஒப்பிடும்போது இவ்வாண்டில் 116 மரணங்கள் சம்பவித்துள்ளன. 1811 பேர்கள் அந்த நாடுகளில்
பணிகொள்வோர்களினால் தொந்தரவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இறப்புகள்,
தொந்தரவுகளுக்கு உட்பட்ட புள்ளி விபரங்கள் ஆண்கள், பெண்கள் ஆகிய
இரு சாரார்களையும் உள்ளடக்குகின்றன.
இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் பல சட்ட விரோத வேலைவாய்ப்பு
நிலையங்களும் முகவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். சனவரியில்
அத்தகைய 10 விடயங்களும் பெப்ரவரியிலும் மார்ச்சிலும் முறையே மேலும்
மூன்று விடயங்களும் எட்டு விடயங்களும் பற்றி அறிவிக்கப்பட்டது. இவ்வாண்டின் முடிவளவில் வேலைக்குச் சென்ற பெண்களுள் 2262 பேர்களுக்கு இணங்கிக்
கொண்ட வகையில் சம்பளம் வழங்கப்படாதமை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய 500 பணிப்பெண்கள் குவைத் தூதரகத்தில் இருந்த அலுவலர்களின்
37

Page 26
ஊழல் நடவடிக்கைகளில் இவர்களுடைய பிரச்சினைகள் மேலும்
சிக்கலடைந்துள்ளது.
எது எப்படியிருந்தபோதிலும் விெநாட்டில் வேலைபார்க்கும் பெண்கள் மூலமாக அந்நிய நாட்டுச் செலாவணியில் 50 பில்லியன் ரூபா இலங்கைக்கு
வருமானமாகக் கிடைத்துள்ளது. 1999 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான
வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருந்த போதிலும் இவ்வாண்டில்
வன்முறைகள் குறைவாக இருந்ததாக மகளிர் விவகார அமைச்சர் கூறியுள்ளார்.
அப்படியிருந்த போதிலும் பெண்களுக்கு எதிரான வன்செயல் தாக்குதல்கள்
உயர்ந்த மட்டத்திலேயே இருக்கின்றது. 1999 ஆம் ஆண்டின் முற்பகுதியில்
183 பாலியல் வல்லுறவுகள் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 66 கற்பழிப்புகள் முதிர்மை அடைந்த பெண்கள்
மீதும், எஞ்சியவை சிறுவர்கள் மீதும் புரியப் பட்டுள்ளன. இவற்றுள் பல
விடயங்களில் தந்தைக்கு அல்லது நெருங்கிய உறவினர்களுக்கு எதிராகக்
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவற்றுள் 12 விடயங்கள் கோஷ்டியினர்களால்
மேற்கொள்ளப்பட்ட கற்பழிப்புகளாகவும் 4 இளம் வேலை புரிபவர்களின்
கற்பழிப்புகள் வீட்டு உதவி புரிபவர்களினாலும் மேற்கொள்ளப்பட்டன. 1999
ஆம் ஆண்டு முழுவதிலும் பெண்கள் உரிமைகளுக்கான தீவிர முயற்சியாளர்கள்
“அவளுடைய உடல்; அவளுடைய உரிமை” என்ற சுலோகத்தின் கீழ்
கருச்சிதைவு செய்யும் உரிமைக்கு ஆதரவு தேடியுள்ளனர். இவர்கள் ஒரு
பெண் பாலியல் துஷ்பிரயோகம் அல்லது கர்ப்பத் தடுப்புத் துறைகள சரியாகத்
தொழிற்படாமையினால் ஏற்படும் கர்ப்பத் தரிப்பைக் கலைப்பதற்கு சட்டம்
அனுமதிக்க வேண்டுமென வாதம் புரிகின்றனர். கருச்சிதைவை
சட்டமயமாக்குவது பற்றிக் கொள்கை மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஆனால் ஏற்கனவேயுள்ள சட்டங்களை மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எதுவும்
எடுக்கப்படவில்லை. இலங்கையில் தினசரி 50 இலிருந்து 700 வரையான
சட்ட விரோத கருச்சிதைகள் மேற்கொள்ளப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது.
38

இதன்படி இலங்கையில் ஒவ்வொரு பிறப்பிற்கும் ஓர் கருச்சிதைவும்
மேற்கொள்ளப் படுகின்றது. அநேக கருச்சிதைவுகள் ஆரோக்கியமற்ற மிகவும்
மோசமான நிலைமைகளின் கீழ் செய்யப்படுவதனால் வறிய பெண்கள் இறக்கும்
நிளையும் ஏற்படுகின்றது.
போதிய எண்ணிக்கையில் பெண்கள் தேர்தல்களில் போட்டியிடாத போதிலும்
அவர்கள் தேர்தல் பிரசார வேலைகளிலும் அதனைக் கண்காணிப்பதிலும்
பெருமளவில் பங்கு பற்றியுள்ளனர். இருந்த போதிலும் பெண்கள்
போட்டியிடுவதில் அரசியல் கட்சிகள் சிறிதளவு விருப்பத்தையே அல்லது
அக்கறையையே காண்பித்துள்ளனர்.
போர் வலயங்களில் 1999 ஆம் ஆண்டில் தொடர்ந்தும் ஆயுத மோதல்கள்
இடம் பெற்றுக் கொண்டிருந்ததன் காரணமாக அவ்வலயங்களில் வாழ்கின்ற
மக்களின் வாழ்க்கை நிலைமையில் மாற்றம் ஏற்படாமலிருந்தது.
அப்பகுதியிலுள்ள பெண்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள்
அவர்களுக்கு மறுக்கப்பட்டு அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதும்
சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்தும் இருந்து வந்தன.
இவ்வலயங்களில் தொடர்ந்தும் பாலியல் வல்லுறவுகளும் பாலியல்
வன்முறைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
இலங்கையில் பாதிப்படைந்த பெண்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான
செயற் திட்டங்களின் அவசியம் பற்றி உணரப்பட்டுள்ளது. தேசிய இளைஞர்
மன்றமானது விதவைகளுக்குப் புனர்வாழ்வளிப்பதற்கான நிகழ்ச்சித்
திட்டமொன்றைப் பிரேரித்துள்ளது. எல்லைக் கிராமங்களில் செயற்படுகின்ற
மனிதாபிமான உதவி புரிபவர்களுக்கு போர் வலயத்தில் வசிப்பதன் காரணமாக
அங்கு வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சினைகளையும் சமூகப்
பிரச்சினைகளையும் கையாளுவதற்கு பயிற்சி வழங்கப் பட்டுள்ளது.
39

Page 27
இப்பயிற்சிகளை வழங்குவதற்கு உளவியல் மருத்துவர்கள் சங்கமும் பிற
அரசாங்கம் சாராத அமைப்புகளும் நடவடிக்கைகள் எடுத்துள்ளன.
வெளிநாடுகளில் இவ்வாண்டில் பெண்களின் உரிமைகள் தொடர்பில் குறிப்பிடத்தக்க மாற்றமெதுவும் ஏற்படவில்லை. மோதல் பகுதிகளில் பெண்களின் நிலைமை மோசமானதாகவுள்ள வேளையில் ஆயுத மோதலானது அப்பிரதேசங்
களிலுள்ள பெண்கள் மீது நேரடியத் தாக்கமொன்றைக் கொண்டுள்ளதுடன்
அவர்களுடைய உரிமைகள் அநேகமாக உத்தியோகபூர்வ மட்டத்தில்
அங்கீகரிக்கப் படாத நிலையிலுள்ளன. அத்துடன் இவர்களுக்கு சமவாய்ப்பு வழங்குவதற்கான சட்ட மூலத்தை முன்னெடுத்துச் செல்வதில்லையென
அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானமானது வேலைத்தளத்தில் பெண்களின்
உரிமையை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை இழக்கச் செய்துள்ளது.
40

அத்தியாயம் VIII
சூழல் உரிமைகளும் மனித உரிமைகளும்
இவ்வாண்டில் சூழல் பற்றிய விடயங்களைக் கையாளுவதற்கு
அரசாங்கமானது எந்தப் பயனுள்ள திட்டங்களையும் அல்லது ஒழுங்கு விதிகளையும் அறிமுகப்படுத்த வில்லை. வளிமண்டலம் வாகனங்களிலிறுந்தும கைத்தொழில் பேட்டைகளிலிருந்தும் வெளியேற்றப்படும் அசுத்தங்களினால் மாசுபடுத்தப்படுகின்றன. இந்த மாசுபடுத்தும் பொருட்கள் மனித நரம்புத்தொகுதியைச் சேதமாக்கலாம். எனினும் வளி மாசுப்பாட்டைக் கையாளுவதற்கு சூழலியலாளர்களினால் சிபாரிசுகள் செய்யப்பட்ட போதிலும் பயனுள்ள நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையைக் கட்டுப்படுத்துவதற்கு ‘புகை மானிகள்” இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் அவை உபயோகிக்கப்படாமல் இருக்கின்றன. காடுகளின் பாதுகாப்பிற்கு சட்டங்கள் இருக்கின்றபோதிலும் அவை சரியாக நடைமுறைப்
படுத்தப்படுவதில்லை. பல நீர்த் தேக்கங்கள் கழிவுப் பொருட்களினால் மாசடைந்திருக்கின்ற போதிலும் அவை ஆறுகளுக்குள் செலுத்தப்படுவதற்கு எதிராகத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தேசிய சூழல் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி கைத்தொழில் தாபனங்கள் சூழல் தர்க்க மதிப்பீடொன்றை மேற்கொண்டு அங்கீகாரத்தைப் பெற்றதன் பின்னரே அக்கைத்தொழிலை ஆரம்பிக்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தும் அத்தகைய அங்கீகாரத்தைப்
பெறுவதில் அதிக அக்கறை காண்பிக்கப்படவில்லை.
இந்நாட்டில் மின்சக்திக்கான தேவை அதிகரித்து வருவதனால் நீர் மின்சாரத்தை மட்டும் மின்சாரத் தேவைகளுக்கு நம்பியிருக்க முடியாது. இதன் காரணமாக நிலக்கரியைக் கொண்டு மின்சக்தியை உருவாக்கும் திட்டம்
வகுக்கப்பட்டிருந்தும் அதைத் திருகோணமலையில் நிலக்கரி மின்பொறித் தொகுதியொன்றை நிறுவுதல் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் பொது
41

Page 28
மக்களினால் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைக்காகவும் கைவிடப்பட்டது. அதனை
தெற்கில் மாவெல்ல என்ற இடத்தில் அமைப்பதற்கு எடுத்த முயற்சியும்
கைகூடவில்லை. பின்னர் பொறித் தொகுதியைப் பொருத்தமான இடமாகக்
கருதப்பட்ட புத்தளம் மாவட்டத்திலுள்ள நுரைச்சோலையில் தாபிப்பதற்கு
கருதப்பட்ட போதிலும் அம்முயற்சி பொது மக்களினால் தெரிவிக்கப்பட்ட
ஆட்சேபனை யின் நிமித்தம் கைவிடப்பட்டுள்ளது. காட்டு ஜீவராசிகள் பாதுகாப்புத்
திணைக்களம் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. குறிப்பாக யானைகள்
மக்களையும் உடைமைகளையும் தாக்கிச் சேதப்படுத்துவதன் நிமித்தம் யானைப்
பாதுகாப்பு வலயத்தை லுணுகம்வேஹர, யால தேசிய பூங்கா, உடவளவைத்
தேசிய பூங்கா ஆகிய இடங்களைத் தொடுகின்ற யானைகள் சென்றடையக்
கூடிய பாதையொன்று அமைக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டில் தெஹிவலை
மிருகக் காட்சிச்சாலையில் வைத்திருக்கப்படும் யானைகள் தொடர்பாக வழக்குத்
தாக்கல் செய்யப்பட்டது. யானைகளுள் கொலை செய்யும் யானையொன்றைத்
தனியார் ஒருவருக்கு விற்க முற்பட்டமைக்கு எதிராக வழக்குத் தாக்கல்
செய்யப்பட்ட போது எதிர்காலத்தில் அவ்வகையில் மிருகங்கள் மிருகக்
காட்சிச்சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய
வழி காட்டல்களை நீதிமன்றம் வகுத்துள்ளது.
சரணாலயங்ளில் (தேசிய பூங்காக்கள்) உள்ள காணிகளைப் பயிர்ச் செய்கைக்கு உபயோகிப்பது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டு அது தீர்க்கப்படாத
நிலையிலுள்ளது. பிளாஸ்திக் பொருட்களை மீளவும் பயன்படுத்துவது தொடர்பிலான கருத்திட்டம் முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அது இன்னும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. இவ்வாண்டில்
எப்பாவெல, பொசுபேற்று வளங்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் சர்ச்சை
ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்றது. எனினும் இது தொடர்பில் இறுதித்
தீர்மானம் எடுக்கப்படவில்லை.
42

அத்தியாயம் IX
உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்கள்
இந்த அத்தியாயத்தில் வன்னி, கிழக்கு மாகாணம், யாழ்ப்பாணம் முதலிய
பகுதசிளிலிருந்து இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் வாழ்பவர்களின் தொடர்பில்
1999 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றி ஆராயப்படுகின்றது.
உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் சிறுவர்கள் பற்றிப் புறம்பாகக்
கலந்துரையாடப்படுகின்றது. வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து மக்கள்
இடம்பெயர்ந்தமை பிரதானமாக இராணுவ நடவடிக்கைகளினால் ஏற்பட்டதாகும். வான் தாக்குதல்களின் நிமித்தம் சொத்துகளும் கட்டமைப்புகளும்
சேதமடைந்துள்ளன. இவை பழுது பார்க்க முடியாத அளவிற்கு
சேதமடைந்துள்ளன. சேதமடையாமல் எஞ்சியுள்ள கட்டடங்களில்
இராணுவத்தினர் வதிகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களில் அநேகர் நலன்புரி
முகாம்களில் வாழ்க்கை நிலைமையும் வசதிகளும் மிகவும் மோசமாகவிருந்த
போதிலும் போர் நிைைமயைத் தவிர்ப்பதன் பொருட்டு இந்நலன்புரி
நிலையங்களில் வந்து வசிக்கின்றனர். குடிமக்கள் மீளவும் வசிக்கக் கூடிய
பிரதேசங்களை இராணுவத்தினர் தீர்மானிக்கின்றனர். வன்னி மாவட்டத்தில்
எடுக்கப்பட கணிப்பொன்றின்படி மக்கள் அவ்வாண்டின் முற்பகுதியில்
இடம்பெயர்ந்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் எல்.ரி.ரி.ஈ.யின் கட்டுப்பாட்டுப்
பிரதேசத்தில் 64,558 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 23,775 பேரும்
இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு உணவு விநியோகம்
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப் படுகின்றபோதிலும் அங்கு வசிக்கும் மக்கள்
பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையக் கூடிய செயல்களில் ஈடுபட முடியாத
நிலைமை நிலவுகின்றது. இம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும்
நடவடிக்கைகளை யூ.என்.எச்.சி.ஆர். மேற்கொள்ளுகின்றது. நவம்பர் மாதத்தில்
இடம்பெற்ற கடுமையான மோதல் ஒன்றின் விளைவாக கிட்டத்தட்ட 350,000
43

Page 29
சிவிலியன்கள் வன்னிப் பிரதேசம் முழுவதிலும் உணவும் பிற அத்தியாவசியப்
பொருட்களுமின்றி தவிக்க நேரிட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டில் நிலக்கண்ணி வெடிகளினால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. நிலக்கண்ணி வெடிகள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அவை புதைத்து வைக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள தங்களுடைய வீடுகளுக்கு மக்கள் திரும்பிச் சென்றதன் காரணமாக ஏற்பட்டுள்ளன. கமத்தொழில், விவசாயச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள்தான் நிலக்கண்ணி வெடிகளினால் ஏற்படும் உயர்ந்த ஆபத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. எல்.ரி.ரி.ஈ.யினர் இவ்வாறு வரும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதன் பொருட்டு ஒட்டிசுட்டானில் நிலக்கண்ணிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 4,068 பேர் இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். இவர்களில் அதிகமானோர் எல்லைக் கிராமங்களில்
வசிப்பவர்களாவர். அம்பாறை மாவட்டத்தில் 7,386 பேர் நலனோம்பல் முகாம்களிலும் 13,180 பேர் அவற்றிற்கு வெளியேயும் வாழ்கின்றனர். 1999 ஆம் ஆண்டில் 600,000 இற்கும் மேற்பட்டோர் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களை மீளவும் குடியமர்த்த வேண்டிய தேவை
உள்ளது. எனவே சமூக, பொருளாதாரச் செயற்பாடுகளை மீளவும் உயிர்பிப்பதன் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைப்பது ஓர் அவசரமான முன்னுரிமையாகியுள்ளது. இதன் பொருட்டு வடக்கில் மீளக் குடியமர்த்தல், புனரமைப்பு அதிகாரசபை மூலமாக மாவட்ட நிருவாகத்திற்கும் பிற முகவர் நிலையங்களுக்கும் மில்லியன் கணக்கில் ரூபாக்களை விடுவித்துள்ளது. 1996 நடுப் பகுதியிலிருந்து 1998 முடிவுவரை யாழ்ப்பாணத்தில் மீளக் குடியமர்த்தல், புனரமைத்தல் செயற்பாடுகளுக்கு வழிப்படுத்தப்பட்ட நிதியங்களின் தொகை 637 மில்லியன் ரூபாவாகவிருந்தது. எனினும் யாழ்ப்பாணத்தில் இடம் பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றுதல் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில பிரதேசங்கள் ‘விடுவிக்கப்படாதவைகள்’ என இன்னும் பிரகடனப்
44

படுத்தப்பட்டவைகளாகவும் திரும்பி வரவிரும்பும் சிலருடைய வீடுகளில்
படைவீரர்கள் தங்கியிருப்பதனாலும் சர்ச்சைக்குரிய தீர்வு செய்யப்படாத
விடயமாகத் தொடர்கின்றது.
1999 ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கைத் தரத்தில்
அரசாங்கத்தினாலும் பிற நிவாரண அமைப்புகளினாலும் பல நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்ட போதிலும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பாடு ஏற்படவில்லை.
அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளில் அநேகமானவை வடக்கு, கிழக்கு
பிராந்தியத்தில் நிலவுகின்ற பாதுகாப்பு நிலைமையுடன்
தொடர்புடையவைகளாகும். இப்பிரச்சினைகள் அவர்களுடைய வேலை வாய்ப்பு, சமூக வாழ்க்கை, அவர்களுடைய உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் ஆகிய
சகல அம்சங்களையும் அநேகமாகப் பாதித்துள்ளன. இந்த மிகவும் பாதிக்கப்பட்ட
பலவீனமான மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான பயனுள்ள
நீண்டகால நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டிய தேவையுள்ளது.
45

Page 30
அத்தியாயம் X
தொழிலாளர் உரிமைகள்
ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் தொழிலாளர்கள் முக்கிய பாகமொன்றினை
வகிக்கின்றனர். அவர்கள் மத்தியில் அமைதியின்மை நிலவுவது பொருளாதார கஷடங்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம். எனவே தொழிலாளர்களின்
உரிமைகள் தகுந்த முறையில் பாதுகாக்கப்படுவதையும் அமைதியின்மை
பொருளாதார வளர்ச்சியையும் நிலைபேற்றையும் அச்சுறுத்தாமலிருப்பதையும்
உறுதிப்படுத்துவதன் பொருட்டு அவர்களுடைய குறைபாடுகள் பற்றி அரசாங்கம்
கவனம் செலுத்துவது அத்தியாவசியமானதாகும். 1994 ஆம் ஆண்டில் பொதுசன
ஐக்கிய முன்னணி தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளுக்கமைய
தொழில், வாழ்க்கைத் தொழில் பயிற்சி அமைச்சர் தயாரித்த தேசிய
தொழிலாளர் பட்டயம் 1995 ஆம் ஆண்டில் சனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த
போதிலும் அது 1999 ஆம் ஆண்டின் இறுதிவரை சட்டமாக இயற்றப்படவில்லை.
இது சட்டமாக்கப்படாதமைக்கு பணிகொள்வோர்களினாலும் பிரதானமாக
இலங்கைப் பணி கொள்வோர்கள் கூட்டமைப்பினால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புமே
காரணமாகும்.
தொழிலாளர்கள் வேலைத் தலங்களில் பாகுபாடாக நடத்தப்படுவதைத்
தவிர்த்துக் கொள்வதற்காக 1999 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட சமவாய்ப்புச்
சட்டமும் தொழிலாளர் உரிமைகளுக்கான சட்ட மூலமும் பாராளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட வில்லை.
ஏறக்குறைய 10 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் தொழில்
புரிகிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 90 நூற்றுவீதத்திற்கும்
அதிகமானோர் பெண்களாவர். இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப்
46

பணியகத்தின் புள்ளி விபரங்களின்படி இப்பெண்களில் அநேகமானோர் பணிகொள்வோர்களினால் பாலியல் துன்புறுத்தல்களும் உட்பட துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 100 இற்கும் மேற்பட்டோர் காயங்கள், தற்கொலைகளையும் உள்ளடக்கிப் பல்வேறு காரணங்களின் நிமித்தம் இறந்துள்ளனர். இப்பணியகமானது மாதமொன்றுக்கு 750 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. இப்பணியகத்தின் கூற்றின் பிரகாரம் 1998 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 1999 ஆம் ஆண்டில் வேலைக்காக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்ற 40 நூற்றுவீதத்திற்கும் கூடுதலான தொழிலாளர்கள் இறந்துள்ளனர். சில தொழிலாளர்கள் இயற்கைக் காரணங்களின் நிமித்தம் இறந்துள்ள வேளையில் ஏனையோர் நோய்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்படாததன் காரணமாக இறந்துள்ளனர். இம்முறைப்பாடுகளில் அநேகமானவை பல வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தங்கள் வாழ்க்கைத் துணைகளை மீளவும் இலங்கைக்கு அழைத்து தரும்படி
விடுக்கப்பட்ட கோரிக்ககைகளாகவிருந்தன.
இவ்வாண்டில் சவூதி அரேபியாவிற்கு வேலை பார்க்கச் செல்வோரை பயிற்றுவிப்பதற்கென ஓர் பயிற்சி நிலையத்தை இலங்கையில் நிறுவிக்கொடுப்பதற்கு சவூதி அரேபியா அரசாங்கம் முன்வந்தது. அத்தோடு வெளிநாடுகளில் வேலை புரியும் தொழிலாளர்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட சனாதிபதி சிறப்புப் பணியணியின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் வேலைபார்த்து இலங்கைக்கு திரும்பிவரும் பெண்களை விமான நிலையத்தில் பாதுகாப்பதற்கு சனாதிபதியின் பணிப்புரைகளுக்கமைவாக அவர்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 1999 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளிலுள்ள பல வேலை நிறுத்தங்களைத் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அவற்றுள் அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்க வேலைநிறுத்தம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. நீதிமன்றம் வரைசென்ற இந்த வேலை நிறுத்தம்
47

Page 31
மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதி மன்றத்தினால் வேலைக்கு திரும்பி வருமாறு கட்டாயப் படுத்தி விடுக்கப்பட்ட நீதிமன்றக் கட்டளையை மீறியதன் நிமித்தம் நீதிமன்றத்தை அவமதித்ததன் பொருட்டு அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பல உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிபதி யூன் 25 ஆந் திகதியன்று பிடியாணைகள் விடுத்துள்ளார்.
1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க பெரும்பாக கொழும்பு பொருளாதார ஆணைக்குழுச் சட்டதின் கீழ் முதலாவது முதலீடு ஊக்குவிப்பு வலயம் கட்டுநாயக்காவில் நிறுவப்பட்டது. இலங்கையில் தற்போது அத்தகைய ஐந்து சுதந்திரவர்த்தக வலயங்கள் உள்ளன. இவற்றில் வேலைபுரியும் தொழிலாளர்களில் 90 வீதமானோர் 20 இற்கும் 35 இற்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்களாவர். இவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் சிங்களப் பெண்களாவரென்பதுடன், இவர்கள் இந்நாட்டின் பல்வேறு பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். அவர்களின் சராசரி வருமானம் மாதமொன்றுக்கு 2500 ரூபாவாகும். இவர்களின் பிரதான பிரச்சினைகள் தங்குமிட
வசதியின்மையும் பாலியல் துன்புறுத்தல்களும் பாலிய வன்புணர்ச்சிகளுமாகும்.
1950 ஆம் ஆண்டின் கைத்தொழில் பிணக்குகள் சட்டத்திற்கு இவ்வாண்டு திசெம்பர் 8 ஆந் திகதியன்று தொழில் அமைச்சரினால் திருத்தமொன்று அறிமுகப் படுத்தப்பட்டது. அது பணிகொள்வோரின் அனுமதியின்றி தொழிலாளர்கள் தொழிற் சங்கங்களில் சேருவதற்கு உரிமை வழங்குவதுடன் பிணக்குகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பணிகொள்வோர் தொழிலாளர்களுடன் கூட்டுப் பேரம் பேச வேண்டியதைப் பணிப்புறுத்துகின்றது. தொகை மதிப்பு, புள்ளி விவகாரத் திணைக்களத்தின் கூற்றின்படி 1999 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 600,000 பேர் வேலையற்றவர்களாக விருந்தனர். இவர்களில் 85 வீதத்தினர் 15 இற்கும் 29 இற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களாக இருந்தனர்.
48

அரசாங்கமானது தொழிலாளர்களுக்கு சமூக நீதி கிடைப்பதையும் சிறந்த சட்டக் கட்டுக் கோப்பும் பயனுள்ளவைகளும் திறமையானவைகளுமான வினைமுறைப்படுத்தல் பொறிமுறைகளும் உருவாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானது ஆகும். எனினும் மறுபுறமாக தொழிற்சங்க நடவடிக்கை அதனளவில் ஓர் முடிவு அல்லவென்பதுவும் உரிமைகள் அசட்டை செய்யப்பட முடியாத சமூகப் பொறுப்புகளினால் சமநிலைப் படுத்தப்படுகின்றன என்பதுவும் உணரப்படல் வேண்டும். இவ்வாண்டில் மருத்துவர்களினால் திரும்பத்திரும்ப மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்த நடவடிக்கை அவர்கள் தங்களுடைய உன்னதமான தொழில் சார் கடமைகளுக்கும் உயர் தொழில் புரிபவர்கள் என்ற வகையில் தங்களுடைய உரிமைகளுக்கும் இடையில் சமநிலையைக் கடைப்பிடிக்கத் தவறியமையைக்
காண்பிக்கின்றது.
பிணக்குகளைத் தீர்ப்பதற்கு புதிய வழிமுறைகளை அறிந்து செயற்படும் தேவை உள்ளது. பிணக்குகளைத் தீர்ப்பதற்கு பிற மாற்று வழிவகைகள் இருக்கக்கூடும் என்ற போதிலும் இந்த வழிமுறைகளில் தொழிலாளர்களுக்கு விசுவாசம் இல்லாமலிருந்தமை முதலாவது வழிவகையாக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. எனவே பிணக்குகளைத் தீர்ப்பதற்கு துரிதமானவைகளும் தொழிலாளர் சமூகத்திற்கு விசுவாசத்தைக் கட்டியெழுப்பும் ஆற்றல் உடையவைகளுமான புதிய
வழிவகைகள் பற்றி ஆராய்ந்தறியப்படுவது முக்கியமானதாகவுள்ளது.
49

Page 32
அத்தியாயம் X
சமவாய்ப்புச் சட்டமூலம் பற்றி ஏற்படட சர்ச்சை
சமவாய்ப்பு என்பது எமது நாட்டிலுள்ள வளங்களைப் பெறுவதற்கு சம அடிப்படையில் நியாயமான நியதிகளில் போட்டியிட்டு அவற்றைச் சகலரும் பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமவாய்ப்பு என்பது சமமான பெறுபேறுகள் என்பதன்று. எனவே ஒருவர் மீது பாரபட்சம் காண்பிக்கப்படாமல் இருப்பது சமவாய்பின் ஓர் முக்கியமான அம்சமாகவுள்ளது. பிற சொற்களில் கூறுவதானால் இது ஒவ்வொருவரும் தமது ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு அவருக்குத் தங்குதடைகள் எதுவுமின்றி செயற்பட வாய்ப்பு அளிக்கப்படுதல் ஆகும். பாரபட்சம் காட்டப்படுதல் அநேக சர்வதேச சாதனங்களில் தடை செய்யப்பட்டுள்ள ஒரு விடயமாகும். எமது நாட்டவர்களுக்கு இதை வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட சட்டமூலமானது பூரணமற்றதாகவிருந்த போதிலும் அது ஏற்படுத்திய சர்ச்சையின் காரணமாக அச்சட்ட மூலத்திற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு அரசாங்கமானது அச்சட்ட மூலத்தை கைவிட
வேண்டியதாயிற்று.
இலங்கை அரசாங்கமானது இச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்வந்தமைக்குப் பல காரணங்கள் உண்டு. அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் எந்தவொரு பிரஜை மீதும் இனம், சமயம், மொழி, சாதி, பால், அரசியல் அபிப்பிராயம் மற்றும் தொழில் காரணமாக பாரபட்சம் காட்டப்படலாகாது. இருந்தபோதிலும் நடைமுறையில் அரசாங்கத் தாபனங்களிலும் அரசாங்கத் சாராத தாபனங்களிலும் இத்தகைய பாகுபாடுகள் இருப்பது தென்பட்டதன் நிமித்தம் அவற்றை நிவர்த்தி செய்வதன் பொருட்டு இச்சட்ட மூலமானது வகுக்கப்பட்டது. இச்சட்டமூலத்தை எதிர்த்தவர்கள் எமது நாட்டில் சகலரும் சமமாக நடாத்தப்பட்டு வருவதாகவும் சட்டம் மூலமாக
50

அப்படி சகலரும் சமமாக நடத்தப்படவில்லையென உலகத்திற்கு காண்பிக்க
முற்படுவதாகவும் தங்களுடைய எதிர்ப்பிற்குக் காரணம் கூறியுள்ளனர்.
மறுபுறத்தில் இந்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன மோதல்
காரணமாக பலர் இறந்தும் பலர் வேறு வகையில் பாதுகாப்பற்ற நிலையில்
இருப்பதன் நிமித்தம் அவர்களுக்கு சமவாய்ப்பு இல்லையென்பதை அரசு
ஏற்றுக்கொண்டு நிவாரணம் வழங்கும் நோக்கில் இச்சட்ட மூலத்தை அரசு
முன்வைத்ததாகக் காரணம் கூறப்பட்டது. சர்வதேச ரீதியில் இத்தகைய பாரபட்சங்களைத் தவிர்ப்பதன் பொருட்டு பிரமாணங்கள் பிரகடனப்படுத்தப்
பட்டிருப்பினும் பல்வேறு நாடுகளில் ஏதோ ஒரு உருவத்தில் இப்பாகுபாடு
காட்டப்படும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எனவே பல நாடுகள்
அவற்றின் குடிமக்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படுவதை உறுதிப்படுத்துமுகமாக
சட்டங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுத்திருப்பதைப் போல
எமது நாடும் முயற்சி மேற்கொண்ட போதிலும் துரதிஷ்டவசமாக இம்முயற்சி
பயனளிக்கவில்லை.
இந்நாட்டில் தொழில் வாய்ப்பு, கல்வி வாய்ப்பு வழங்குவதில் பாரபட்சம்
காண்பிக்கப்படுவதாகக் கருதப்பட்டு அவற்றை நீக்குவதற்கு சமவாய்ப்புச்
சட்டமூலம் வகுக் கப்பட்டிருந்தது. இதன் பொருட்டு சமவாய்ப்பு
ஆணைக்குழுவொன்றும் நியாய சபை ஒன்றும் நிறுவப்பட வேண்டுமெனச்சிபாரிசு
செய்யப்பட்டிருந்தது. இந்த நகல சட்ட மூலத்திற்கு எதிராகப் பல்வேறு குழுக்கள்
வழக்குத் தாக்கல் செய்திருந்தன. ஒரு வழக்கில் இலங்கையின் முதனிலைப்
பெளத்த பாடசாலையாகவுள்ள விசாகா வித்தியாலயம் போன்ற பாடசாலைக்கு
யாவரும் பாகுபாடின்றச் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற நிலை
ஏற்பட்டால் பாடசாலையின் நிலை சீர்குலைந்து விடும் என மனுவில் எடுத்துக்
காட்டப்பட்டிருந்தது. இத்தகைய பல ஆட்சேபனைகள் வலுவடைந்ததன்
காரணமாக இச்சட்டமூலம் கைவிடப்பட்டது.
5.

Page 33
இதனால் இந்த ஆட்சேபனைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில்
நீதிமன்றம் விசாரணை செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விட்டது.
ஆகவே இவ்வாதங்கள் சரியானவை அல்லது பிழையானவை என்பது பற்றிக்
கூறுவதற்கு நீதிமன்றத்திற்கு சந்தர்ப்பம் தவறியுள்ளது. எது எப்படியிருந்த
போதிலும் நிலைத்திருக்கக்கூடிய சமத்துவமான அபிவிருத்தி ஏற்பட வேண்டுமாயின் சகலருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டிய நிலையை
உருவாக்குவது அவசியமானதாகும்.
52

அத்தியாயம் XI
மக்கள் கூட்டாக ஒன்று சேர்வதற்கும் பழகுவதற்குமான
சுதந்திரம்
இலங்கை அரசியலமைப்பின் 14(1) (ஆ) ஆம் 14(1)(இ) ஆம்
உறுப்புரைகளின் கீழ் விவரிக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள் ஒன்று சேர்தல்
மற்றும் பழகுதல் சுதந்திரங்களை இரண்டு வெவ்வேறான அடிப்படை
உரிமைகளாக இலங்கை அரசியலமைப்பு அங்கீகரிக்கின்ற வேளையில்
சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் அவை ஓர் உறுப்புரையில்
இணைக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் கீழ் இலங்கைப் பிரசைகளுக்கு
மட்டுமே கிடைக்கக் கூடியதாகவுள்ள இந்த அடிப்படை உரிமைகள் சில
மட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படலாம். உறுப்புரை 15(3) மக்கள் கூட்டாக
ஒன்று சேரக்கூடிய காரணங்களையும் உறுப்புரை 15(4) மக்கள் பழகுவதற்கான
காரணங்களையும் குறிப்பிடுகின்றன. மேலும் உறுப்புரை 15(7) இந்த
உரிமைகளை அவசரகால ஒழுங்குவிதிகள் மூலமாக மட்டுப்படுத்துவதற்கான
பொதுக் காரணத்தைத் தருகின்றது. ஆகவே இவ்வுரிமைகள் நாட்டில் சமாதானம்
நிலவும் நிலையில் மாத்திரமே பூரணமாக அனுபவிக்கப்படக் கூடியவை என்பது
கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இந்த உரிமையின் அடிப்படையில்
தான் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், பகிஷ்கரிப்புகளிள் ஈடுபடுவதற்கு
அனுமதியளிக்கப்படுகின்றது. சட்டபூர்வமான எந்தவொரு அமைப்பு
உருவாக்கப்படுவதற்கும் ஒருவர் இன்னொருவருடன் சேரும் உரித்து அவசியமானதாகும். தொழிலகங்கள், அரசாங்கம் சாராத தாபனங்கள்
தொழிற்படுவதற்கும் இந்த உரிமை இடமளிக்கின்றது.
1999 ஆம் ஆண்டின் தேர்தல்களின்போது நாட்டின் பல பாகங்களிலும்
ஊர்வலங்கள் நடாத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இத்தகைய
ஊர்வலங்களின்போது ஏற்பட்ட விளைவுகளால் இவ்வுரிமையின் பயன்பாட்டை
53

Page 34
வரையறுக்க வேண்டிய தேவை பற்றி கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய
தேவை ஏற்பட்டது. குண்டுத் தாக்குதல்கள் நடாத்துபவர்களுக்கு ஊர்வலங்கள் வசதிகளைச் செய்திருந்தன. இதனால் இவற்றை வரையறுக்க வேண்டிய
தேவை ஏற்பட்டது. இவ்வுரிமைகளை மட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் எடுத்த
நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
1999 ஆம் ஆண்டில் அரசாங்கம் சாராத நிறுவனங்கள் மீளவும் பதிவு செய்துகொள்ள வேண்டுமென அவற்றிற்கு அறிவித்தலொன்று விடுக்கப்பட்டது. இந்த அறிவித்தலானது இலங்கையிலுள்ள அரசாங்கம் சாராத அமைப்புகள் யாவற்றினதும் அந்தஸ்தையும் கணக்குக் காட்டும் பொறுப்பையும் இறுதியாக அவற்றின் பகிரங்க நிலைப்பாட்டையும் பகுத்தறிவு முறையாக ஒழுங்கு
செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இவற்றின் செயற்பாடுகளை
நெறிப்படுத்துவதற்கான 1980ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க சுயேச்சை சமூக சேவைகள் அமைப்புகள் (பதிவும் மேற்பார்வையும்) சட்டமானது 1998 மார்ச்சில் திருத்தியமைக்கப்பட்டது. இதற்கமைவாக அரசாங்கம் சாராத அமைப்புகளின் செயற்பாடுகள் கூடுதலான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்ட
துடன் ஆட்சேபனைகளும் எழுப்பப்பட்டன.
1999 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் சனாதிபதி அலுவலகதினால்
விடுக்கப்பட்ட ஒரு கட்டளைக்கு அமைவாக நாட்டிலுள்ள சகல அரசாங்கம் சாராத தாபனங்களும் தம்மை மீண்டும் பதிவு செய்ய ஒழுங்குகள்
செய்யப்பட்டன. இதன் பொருட்டு தேசிய செயலகம் உருவாக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துடன் சமூக சேவைகள் திணைக்களத்தினால் பதிவு
செய்யப்பட்டது. இக்கட்டளையின் பிரகாரம், அரச சார்பற்ற நிறுவனங்கள்
கண்டிப்பாக பக்கச் சார்பின்றி செயற்பட வேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்பட்டன.
இவற்றுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத்
தாக்கல் செய்யப்பட்டது.
54

இலங்கையில் மக்கள் கூட்டாக ஒன்று சேர்வதற்கான சுதந்திரமும் பழகுவதற்கான சுதந்நிரமும் முக்கியமான பாகமொன்றை வகிக்கின்றமை மிகவும் தெளிவாகவுள்ளது. இவற்றை இலங்கைப் பிரசைகள் முழுமையாக அடைய வேண்டுமேயானால் இச்சுதந்திரங்களில் அரசு ஆகக் குறைந்த அளவிலேயே தலையிட வேண்டும். அத்தகைய தலையீடு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன் படிக் கையில்
விதித்துரைக்கப்பட்டுள்ள இந்த உரிமைகளுக்கான சட்டமுறைப்படியான மட்டுப்பாட்டின் மீதான எல்லைகளை விஞ்சுதலாகாது. இந்த உரிமைகள் தொடர்பிலான அரசியலமைப்பு ஏற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கமைவானவைகளாக இருப்பதற்காகவும் சிவில் சமூக அமைப்புகள் சுதந்திரமாகப் பழகுவதற்கும் தங்களுடைய சொந்த சட்ட வழிவகைகளைத் தெரிவு செய்வதற்கும் புறம்பானதும் தெளிவானதுமானவொரு அரசியல் பாதுகாப்பை அங்கீகரிப்பதை உள்ளடக்குவதற்குமாகத் திருத்தப்படல் வேண்டும். அத்தகைய திருத்தங்கள் இலங்கையில் இந்த உரிமைகளை முழுமையாக
பெற்றுக் கொள்வதற்கு அத்தியாவசியமானவைகளாகும்.
55

Page 35
அத்தியாயம் XI
முதியோர்களின் உரிமைகள்
இன்று உலகில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் குடிநிலைப் புள்ளியியல்
மாற்றங்கள் சனத்தொகையில் முதியோர்களின் (60 வயதிற்கும்
மேற்பட்டோர்களின்) விகித சமத்தை பெருமளவில் மாற்றியுள்ளது. படிப்படியாக
முதியோர்களின் நூற்றுவீதமானது அதிகரித்துக் கொண்டிருக்கின்ற வேளையில்
சிறுவர்களினதும் வளரும் பிராயத்தினர்களினதும் விகித சமம் குறைந்து
கொண்டிருக்கின்றது. தற்போது உலகத்தின் முதியவர்களில் 60 வீதத்தினர்கள்
ஆசிய - பசுபிக் பிராந்தியத்தின் அபிவிருத்தியடையும் நாடுகளில் வசிக்கின்றனர்.
துரிதமாக முதுமையடையும் சனத்தொகையுடைய சவாலை எதிர்நோக்குகின்ற
நாடுகளில் இலங்கையும் ஒன்றாகவிருப்பதுடன் இந்த மாற்றத்திற்காக தனது
சமூகக் கொள்கைகளுக்கான ஏற்பாடு செய்ய வேண்டிய தேவையைக்
கொண்டதாக இலங்கை இருக்கின்றது. முதியோர்கள் அநேக சமூக,
பொருளாதார, சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இவற்றை
நிவர்த்தி செய்வது அரசாங்கத்திற்கு அடிக்கடி கஷ்டமானதாகவுள்ளது. இந்த
அத்தியாயத்தில் துரிதமாக முதுமையடைந்து கொண்டிருக்கும் சனத்தொகைக்கு
அரசாங்கத்தினாலும் அரசாங்கம் சாாத அமைப்புகளினாலும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அமைப்புகளினாலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி
பரிசீலனை செய்யப்பட்டு விரிவாக விவரிக்கப்படும்.
2025 ஆம் ஆண்டளவில் ஆசிய - பசுபிக் பிராந்தியத்திலுள்ள ஐந்து
பேர்களில் இரண்டு பேர்கள் முதியோர்களாகவிருப்பர் எனக் கணிக்கப்படுகின்றது.
அடுத்த முப்பது ஆண்டுகளில் இலங்கை அதன் முதியோர்கள் சனத்தொகையில்
முன்னர் எப்பொழுது மில்லாத அதிகரிப்பைக் காணும். இந்த குடிநிலைப்
புள்ளியியல் மாற்றங்களுடன் ஆசியாவிலேயே முதியோர்களின் எண்ணிக்கை
அதிகரித்த நாடுகளில் மூன்றாவது இடத்தை வகிக்கும். தற்போது
56

சனத்தொகையில் 60 இற்கும் மேற்ப்பட்ட வயதுடையோர்களின் சனத்தொகை 8 வீதமாகும். இது 2025 ஆம் ஆண்டளவில் 20 வீதமாக அதிகரிக்கும். இதைப்போலவே பிறப்பு வீதத்தினதும் (1.2 ) இறப்பு வீதத்தினதும் (1000 பேர்களுக்கு 6 பேர்கள்) வீழ்ச்சி ஆயுட் காலத்தை அதிகரித்துள்ளது. தற்போது சராசரி ஆண்களின் ஆயுட்காலம் 68 வயதாகவும் பெண்களின் ஆயுட்காலம் 64 வயதாகவும் முறையே மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டளவில் பெண்களுக்கு 80 வயதாகவும் ஆண்களுக்கு 75 வயதாகவும் அதிகரிக்கும். எனவே எதிர்கால சமூகக் கொள்கைகளில் முதியோர்களுக்கான சமூக சேவைகளை மேம்படுத்துவது முக்கியமானதாகும். 1978 ஆம் ஆண்டின் அரசிலமைப்பிலும் சரி 1997 ஆம் ஆண்டில் பிரேரிக்கப்பட்ட வரைவு அரசியலமைப்பிலும் சரி முதியோர்களைப் பாகுபாட்டிற்கு உட்படுத்தப்படக்கூடிய ஓர் தொகுதியினர்களாகவும் இதற்கெதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதற்கு யோக்கியதை உடையதவர்களாகக் காட்டப்படவில்லை. அரசியலமைப்பின் 12(4) ஆம் உறுப்புரையானது பெண்கள், சிறுவர்கள் அல்லது வலது குறைந்தவர்கள் அவர்களின் முன்னேற்றத்தின் பொருட்டு சட்டத்தினால் அல்லது துணைச் சடத்தினால் அல்லது நிறைவேற்று நடவடிக்கையினால் விசேட ஏற்பாடுகள் வழங்கப்படுதற்கு தகுதியுடையவர் களென்பதை ஏற்றுக்கொள்ளுகின்றது. “வயது” தொடர்பில் இணையொத்த ஏற்பாடு
ஏதுவுமில்லை.
1999 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கமானது பாகுபாடு காண்பிக்கப்படாத வாசகத்திலுள்ள காரணங்களில் ஒன்றாக முதியோர்களுக்கான ஏற்பாட்டைக் கொண்ட சமவாய்ப்புச் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவதற்கு முயற்சிசெய்துள்ளது. துரதிஷ்ட வசமாக இச்சட்ட மூலமானது பொதுமக்களின் சில பிரிவினர்களினால் எதிர்க்கப்பட்டு அரசாங்கத்தினால் கைவிடப்பட்டுள்ளது. முதியோர்களின் சட்டத் தேவைப்பாடுகள் அநேக அபிவிருத்தியடைந்த நாடுகளில் கவனிக்கப்படுகின்றன. 1999 ஆம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை
57

Page 36
முதியோர்களின் ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஐநா.சபையானது அரசாங்கங்கள், அரசாங்கம் சாராத தாபனங்கள், தனியார் நிறுவனங்கள், சர்வதேச தொழிலாளர் அமைப்பு, சர்வதேச சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டது. முதியோர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியதற்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் தம்பதிகள் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடிப்பதனால் தங்களுடைய பிள்ளைகளுக்கு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் பிள்ளைகள் இருந்தமை, நாட்டின் போர்ச் சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து வாழ்தல் என்பன காரணங்களாகும். தற்போது இந்நாட்டில் 158 வயோதிபர் இல்லங்களில் 5000 வயோதிபர்கள்
வாழ்கின்றனர்.
முதியோர்களின் பிரச்சினைகளில் முதன்மையான பிரச்சினை மனோவியல் கோளாறுகளினால் ஏற்படும் நோய்களாகும். இதன் நிமித்தம் அவர்கள் தொடர்ச்சியாக மருந்தில் தங்கியிருக்க வேண்டியவர்களாகவுள்ளனர். மேலும் கண்பார்வை குறைதல், காது கேட்காத நிலை முதலியவற்றுக்குரிய உபகரணங்களும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது. இந்நிலையிலுள்ள முதியோர்கள் சமூகத்தினால் ஒதுக்கப்படுவதன் நிமித்தம் தனிமையில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதனால் அவர்கள் சமூகத்தின் மீது வெறுப்புடன் வாழ்கின்றனர். அவர்களுக்குக் கிடைக்கும் குறைந்த ஓய்வூதியத்தில் விலைகூடிய மருந்துகளை வாங்க நிர்ப்பந்திக்கப்படுவதன் காரணமாக அவர்கள் பல பாதிப்புகளுக்கு உட்படுகின்றனர். ஆயுட்கால வயதெல்லை அதிகரித்துள்ள போதிலும் ஒய்வுபெற வேண்டிய வயதெல்லை மாற்றமடையாமலே தொடர்ந்தும் இருந்து வந்துள்ளது. சராசரியாக 70 வயதுவரை ஆண்களும் 75 வயது வரை பெண்களும் ஆயுட் காலத்தைக் கொண்டவர்களாக வாழக் கூடிய வாய்ப்பு இருந்த போதிலும் 55 வயதில் தொழிலிலிருந்து ஓய்வுபெற வேண்டியுள்ளது. இந்த ஓய்வுபெறும் வயதெல்லையில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். அத்துடன் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்பட வேண்டிய தேவையும் உள்ளது. அரசாங்கம்
58

சமுர்த்தி, ஜனசவிய, உணவு முத்திரை போன்ற சமூக சேவைத் திட்டங்களை
நடைமுறைப்படுத்தி வருகின்ற போதிலும் போக்குவரத்துச் செலவிலும்
மருந்துகளின் விலைகளிலும் முதியோர்களுக்கு சலுகை எதனையும்
வழங்கவில்லை.
முதியோர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அவர்களுடைய
குடும்பத்தவர்களுக்கும் அரசிற்கும் உள்ளதெனினும் அரசாங்கம் சாராத
துறையினரும் இத்தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொண்டர்
தாபனங்கள் ஏறக்குறைய 140 முதியோர் இல்லங்களையும் 29 பகல் நேர
பாதுகாப்பு நிலையங்களையும் தொழிற்படுத்தி வருகின்றன. முதியோர்களின்
நூற்றுவிதமானது இலங்கையில் அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்காகி
விடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. முதியோர்களுக்கான திட்டத்தை வகுத்து
நலனோம்பல் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வரும் ஒரே தாபனமாக "ஹெல்ப்
ஏஜ் என்ற தாபனமே இலங்கையில் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
பணியணியினர்களுக்கு ஓய்வூதியத் திட்டங்கள் போன்ற வருமான ஆதரவை
அதிகரிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். முதியோர்கள் மதிப்பான
வாழ்க்கையை நடத்துவதற்கும் அவர்கள் மற்றவர்கள் மீது தங்கியிருப்பதை
ஆகக் குறைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
59

Page 37
Sigbgslu ITuild XIV
வலது குறைந்தவர்களின் உரிமைகள்
1996 ஆம் ஆண்டில் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
வலது குறைந்தவாகளின் உரிமைகள் சட்டத்தின் கீழ் வலது குறைந்தவர்கள்
தேசிய மன்றமானது நிறுவப்பட்டுள்ளது. தாபிக்கப்பட்டதிலிருந்து இச்சபையானது
தேசிய மட்டத்தில் கொள்கை வகுத்தல், நடைமுறைப்படுத்தல் பணிகளைப்
புரிந்து கொண்டிருந்தது. இச்சட்டத்தின் 20 ஆம் பிரிவு வலது குறைந்தவர்களுக்கு
உதவி வழங்குகின்ற அரசாங்கம் சாராத அமைப்புகளை (அ.சா.அ)
இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யுமாறு தேவைப்படுத்துகின்றது. இச்சட்டமானது 1996 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட போதிலும் அரசாங்கம் சாராத
அமைப்புகளின் பதிவிற்கான ஒழுங்கு விதிகள் 1999 சனவரி மாதத்திலேயே
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.
தேசிய மன்றத்தின் செயலகத்தின் பிரதான பணிகளில் ஒன்று வலது
குறைந்தவர்களுக்குப் பொருத்தமான உதவியளிக்கும் துணைக் கருவிகளை
வழங்குவதாகும். 1998 ஆம் ஆண்டில் தேசிய மன்றத்தின் செயலகத்தினால்
மூக்குக் கண்ணாடிகள், முச்சக்கர, துவிச்சக்கர வண்டிகள், சக்கர நாற்காலிகள்,
ஊன்றுகோல்கள் முதலியன வழங்கப்பட்டன. 1999 ஆம் ஆண்டில் இச்செயலகம்
மேலே குறிப்பிட்ட துணைக்கருவிகளை வழங்குவதற்கு i இலங்கை
ரூபாவைச் செலவு செய்துள்ளது.
கண்பார்வை குறைந்தவர்கள் இலங்கை நிருவாக சேவைப் (இ.நி.சே)
பரீட்சைக்குத் தோற்றும் சாத்தியம் விடயத்தை பற்றியும் பொது நிருவாக
அமைச்சுடன் கலந்துரையாடலை மேற்கொண்டது. பொது நிருவாக அமைச்சு
இதற்கு மறுமொழியாக இயையுள்ள ஒழுங்கு விதிகள் இதற்கு
அனுமதிக்கவில்லையெனக் கூறியுள்ளது. வலது குறைந்தவர்களினால்
60

உபயோகிக்கப்படும் சில உற்பத்திப் பொருட்களின் விற்பனை மீது அரசாங்கத்தினால் விதிக்கப்படும் பொருட்கள், சேவைகள் வரியிலிருந்து அவற்றிற்கு விலக்களிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
படை வீரர்களினதும் பொலிஸ் ஆளணியினர்களினதும் அவர்களைச் சார்ந்து இருப்பவர்களினதும் சொந்தப் பிரச்சினைகளைக் கவனிப்பதற்கு ரணவிரு சேவைகள் அதிகாரசபை என அழைக்கப்படும் விசேட சபையொன்றின் தாபிப்பதைப் பற்றி சனாதிபதி 1999 ஆம் ஆண்டு செத்தெம்பரில் அறிவித்துள்ளார். இந்த அதிகாரசபை தற்போது கிடைக்கக் கூடியதாகவுள்ள நலனோம்பல் சேவைகளை ஒழுங்குறுத்தி சேவை ஆளணியினர்களினதும் அவர்களுடைய குடும்பங்களினதும் விசேடமாக செயற்பாட்டின் போது கொல்லப்பட்ட அல்லது வலது குறைந்த ஆளணியினர்களின் குடும்பங் களினதும் பிரச்சினைகளை கவனிக் கவுள்ளது. முன் னாடியாகக் கருதப்பட்ட நலனோம் பல நடவடிக்கைகளிலொன்று நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட ஆளணியினர்களுக்கு காணிகளை வழங்குவதாகவுள்ளது. சமூக சேவைகள் திணைக்களம் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி, வலது குறைந்த மக்களினால் உபயோகிக்கப்படும் விசேட கருவிகளின் வழங்கல், கல்வி, ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றையும் உள்ளடக்கி வலது குறைந்த மக்களின் நன்மையின் பொருட்டு பல சேவைகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. இச்சேவைகளின் கீழ் திருமணம் முடிக்காத வலது குறைந்த 18 இற்கும் 35 இற்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்களும் பெண்களும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சியைப் பெறுவதற்கு தகுதியுடையோர்களாவர். இப்பயிற்சி கம்பஹா மாவட்டத்தில் உள்ள சீதுவையிலும் அமுனுகும் புரவிலும் கண்டி மாவட்டத்திலுள்ள கெற்றவலவிலும் வத்தேகமவிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள தெலம்புயாயவிலுமுள்ள பதின்மூன்று அரசாங்க வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிலையங்கள் மூலமாக வழங்கப்பட்டது. மேலும் ஆறு வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிலையங்கள் தனியார் துறையினால்
61

Page 38
ஹொரணையிலும் களுத்துறையிலும் பலாங்கொடையிலும் பாலத்துறையி லும் தாபிக்கப்பட்டுள்ளன. இப்பயிற்சி நிலையங்களிலும் பயிற்சி வழங்கப்படுகின்றது.
இந்நாட்டின் 76 நிருவாகப் பகுதிகளில் சமூக சேவைகள் அமைச்சினால் நடத்தப்படட ஆய்வின்போது 6,010 வலது குறைந்த பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்களின் 3,105 சிறுவர்கள் போக்குவரத்து வசதிகளைப் பெறுவதிலுள்ள கஷ்டங்களின் நிமித்தமும் உதவியளிக்கும் துணைக் கருவிகள் இல்லாமலிருந்தன காரணமாகவும் பாடசாலை செல்வதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. வலது குறைந்தவர்களுக்கு கல்வி போதிப்பதற்கு தகைமையுடைய ஆசிரியர்களைப் பெற்றுக் கொள்வதில் பற்றாக்குறை நிலவுகின்றது. ஆயிரத்தித் தொளாயிரத்தி எண்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதிகளில் தேசிய கல்வி நிறுவகம் இப்பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் வலது குறைந்தவர்ளுக்கு கல்வி போதிப்பதற்கு முதனிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் முயற்சியைத் தொடங்கியிருந்தது. இந்த நிகழ்ச்சித் திட்டமானது அநேகமாக பத்து ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் நிதி இல்லாததன் காரணமாக இந்நிகழ்ச்சித் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
62

அத்தியாயம் XV
உடல்நல உரிமைகள்
உடல் நல உரிமைகள் பற்றி 1995 ஆம், 1998 ஆம், 1999 ஆம் ஆண்டுகளின்
இலங்கை மனித உரிமைகளின் நிலை அறிக் கைகளில்
கலந்துரையாடப்பட்டுள்ளது. உடனலம் பற்றி அநேக வரைவிலக்கணங்கள்
தரப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படுவதும்
பின்பற்றப்படுவதுமான வரைவிலக்கணம் 1948 ஆம் ஆண்டில் உலக சுகாதார
அமைப்பினால் தரப்பட்டுள்ள வரைவிலக்கணமாகும். இதன்படி “உடனலம்
என்பது முழுமையாகப் பெளதிக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக
நலன் ரீதியாகவுமுள்ள ஓர் நிலையென்பதுடன் இது நோயும் பலவீனமும்
மட்டும் உள்ள ஓர் நிலையன்று’ சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும்
ஆக்க பூர்வமான வாழ்க்கையை நடாத்தக் கூடிய திறமை” என்பது சேர்த்துக்
கொள்ளப்பட்டுள்ளது. குடியியல், அரசியல் உரிமைகளை மீறுவது
தனிப்பட்டவர்களின் பெளதிக உடனலத்தையும் உளவியல் சுகாதாரததையும்
பாதிப்பதாகத் தெரியவந்துள்ளதுடன் தற்போது உடனலமானது ஓர் அடிப்படைச்
சமூக உரிமையாகவும் பொருளாதார உரிமையாகவும் கருதப்படுகின்றது.
சுலபமாகத் தடுக்கக்கூடிய அல்லது குணமாக்கப்படக்கூடிய நோயினால்,
அரசாங்கமானது அவருக்கு அடிப்படைச் சுகாதார வசதிகளை வழங்க மறுப்பதன்
விளைவாக, இறப்பாராயின் அது மனித உரிமைகளின் மீறுகையொன்றாகக்
கருதப்படலாம்.
இலங்கையின் சுகாதாரக் கொள்கையின் பருமட்டான நோக்கம் மக்களின்
எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலத்தை அதிகரிப்பதுவும் வாழ்க்கைத் தரத்தை
மேம்படுத்துவதுமாகும். இது தடுக்கப்படக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்துவதன்
மூலம் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலமும் அடையப்படவுள்ளது. இது
தொடர்பில் தேசிய சுகாதார கொள்கையொன்றை வகுப்பதன் பொருட்டு 1992
63

Page 39
ஆம் ஆண்டிலும் 1997 ஆம் ஆண்டிலும் இரண்டு சனாதிபதி சிறப்புப்
பணியணிகள் நியமிக்கப்பட்டன. 1997 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சிறப்புப்
பணியணியானது உடனயடியாக நடைமுறைப்படுத்துவதற்கு ஐந்து முக்கியமான
விடயங்களைக் கண்டறிந்துள்ளது. அவற்றை 2002 ஆம் ஆண்டளவில்
அடைவதன் பொருட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இலங்கையின் மருத்துவ முறைகளின் பன்மை நிலை நன்கு தெரிந்துள்ள
ஒரு விடயமாகும். இந்நாட்டில் மேற்கொள்ளப்படும் வெவ்வேறு மருத்துவ
முறைகள் மேல்நாட்டு மருத்துவ முறை, ஆயுர்வேத மருத்துவ முறை, பாரம்பரிய
மருத்துவ முறை, ஹோமியோபதி மருத்துவமுறை, சித்த மருத்துவ முறை,
யுனானி மருத்துவ முறை, அக்கியுபங்சர் மருத்துவ முறை ஆகியவற்றை
உள்ளடக்குகின்றது. இந்நாட்டில் சுகாதார அதிகாரிகள் மேல் நாட்டு மருத்துவ
முறை தான் மிகவும் ஜனரஞ்சகமான முறை என்ற கூற்றினால் வழிகாட்டப்பட்ட
போதிலும் சமூக விஞ்ஞான ஆராய்ச்சியானது மக்களுக்கிடையே ஆயுர்வேதமும்
கூட விசேடமாக சில வகை நோய்களுக்கு மிகவும் பிரபல்யமானாகவிருக்கின்றது
என கண்டறிந்துள்ளது.
1999 ஆம் ஆண்டின் முடிவில் 14,850 மேல் நாட்டு மருத்துவத்
தொழில் புரிபவர்கள் இலங்கை மருத்துவ மன்றத்துடன் பதிவு
செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 15,785 மேல் நாடு சாராத மருத்துவத் தொழில்
புரிபவர்கள் ஆயுர்வேத மருத்துவ மன்றத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அநேக மேல்நாட்டு மருத்துவத் தொழில் புரிபவர்கள் அரசாங்கத் துறையில்
பணிக்கமர்த்தப்பட்டிருப்பதாகக் கருதப்படுகின்ற வேளையில் அநேக மேல்நாடு
சாராத மருத்துவத்தொழில் புரிபவர்கள் தனியார்துறையில் பணியாற்றுகின்றனர்.
இலங்கையின் சுகாதாரப் புள்ளி விபரங்கள் இப்பிராந்தியத்திலுள்ள பிற
அநேக நாடுகளுடன் ஒப்பு நோக்குகையில் அவற்றை விட நல்ல
64

நிலையிலிருப்பதாகத் தோற்றுகின்ற போதிலும் இவற்றின் செம்மை
சந்தேகத்திற்கிடமானதாகவுள்ளது. அறிவித்தலுக்கும் பதிவிற்கும் கூடுதலான
அளவில் சிறந்த முறைமையொன்று தேவைப்படுகின்றது. இந்நாட்டின் சுகாதார
நிலைமை பற்றிய உண்மையான தோற்றப்பாடு தெரியும் வரை
எதிர்காலத்திட்டமிடல் பிழையான புள்ளி விபரங்களை அடிப்படையாகக்
கொண்டிருக்கும். இது விரும்பத் தக்க பெறுபேறுகளைத் தரமாட்டாது. இந்நாட்டிலுள்ள முழுமையான சுகாதார நிலைமையை மேம்படுத்துவதற்கு
மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
இலங்கை மனித உரிமைகளின் நிலை 1995 இல் சுகாதாரத்தை
மேம்படுத்துவதற்கு ஜயவர்த்தனாவினால் செய்யப்பட்ட சிபாரிசுகளில் அநேகமான
சிபாரிசுகள் இன்னும் செல்லுபடியாகக் கூடிய நிலையிலுள்ளன. அரசாங்க
(அல்லது தடுப்பு) சுகாதார நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் சுதேச மருத்துவத்திற்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது.
வெவ்வேறு மருத்துவ முறைமைகளுக்கிடையே ஓர் ஒத்துழைப்பு அணுகுமுறை
மேற்கொள்ளப்படுவது மிகவும் விரும்பத்தக்கது. இந்நாட்டின் கிராமப்
பிரதேசங்களில் சீர்கேடடைந்து வரும் சுகாதார நிலைமைகள், விசேடமாகப்
போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சீர்கேடடைந்து வருகின்ற சுகாதார நிலைமைகள் பற்றி உடனடியாகக் கவனம் செலுத்தப்படல்
வேண்டும்.
65

Page 40
அத்தியாயம் XVI
குற்றச் செயல்களும் மனித உரிமைகளும் அரசாங்கத்தின் பொறுப்பும்
இலங்கை மனித உரிமைகளின் நிலை 1999 என்பதில் குற்றச் செயல்களும்
மனித உரிமைகளும் அரசாங்கத்தின் பொறுப்பும் பற்றி முதற் தடவையாகக்
கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த அத்தியாயம் இந்நிலைமை மீது சுருக்கமான
நாளது வரையான தகவல்களைத் தருகின்றது. இன முரண்பாடு காரணமாக
எழுகின்ற பெண்கள் மீது புரியப்படும் வன்செயல்கள், மனித உரிமை மீறல்கள்,
குற்றச் செயல்கள் இந்த அத்தியாயத்தில் கையாளப்படவில்லை. 1999 ஆம் ஆண்டில் புரியப்பட்ட குற்றச் செயல்கள் பற்றிய முழுமயான புள்ளி விபரங்கள்
எமக்குக் கிடைக்கவில்லை. 1999 ஆம் ஆண்டிற்கான உத்தியோக பூர்வமான
குற்றச் செயல்களின் புள்ளி விபரங்கள் 1998 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களுடன்
ஒப்பிடும்போது ஏறத்தாழ 4.5 வீதத்தினால் குறைந்துள்ளமையைக்
காண்பிக்கின்றன. 1999 ஆம் ஆண்டின் தொடர்பில் அறிவிக்கப்பட்ட பாரதூரமான
குற்றச் செயல்களின் எண்ணிக்கை 9,056 ஆக இருந்தது. இது 1998 ஆம்
ஆண்டில் 9,478 ஆக இருந்தது. இப்புள்ளி விபரங்கள் குற்றச் செயல்களின்
தொடர்பில் 1999 ஆம் ஆண்டில் கணிசமான அதிகரிப்பொன்றைக் காண்பிக்காத
போதிலும் பொதுமக்களின் மனதில் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன என்ற
உணர்வு நிலவுகின்றது. இந்த உணர்வு குற்றச் செயல்கள் பற்றி அறிவிக்கும்
ஊடகங்களினால் வலுவூட்டப்படுகின்றதுடன் இது இப்பிரச்சினைக்கான
அரசாங்கத்தின் அனுசரணை மீது பெரிய தாக்கமொன்றைக் கொண்டுள்ளது.
1999 ஆம் ஆண்டில் புரியப்பட்ட பாரிய குற்றச் செயல்களுள் பின்வருவன
அடங்கும். ஹோகந்தரவில் ஒரே குடும்பத்தைச் சோந்த ஆறு பேர்
கோடரிகளினாலும் கத்திகளினாலும் வெட்டிக் கொல்லப்பட்டமை. கொழும்பு
வடக்கு பகுதியில் கடற்கரையில் சென்று கொண்டிருந்த புதிய தம்பதிகளாகிய
66

றிட்டா ஜோன், மனோகரன் ஆகியோர் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு றிட்டாஜோன் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை, சட்டன என்ற சிங்களப்பத்திரிகையின் ஆசிரியராகிய றோகண குமார செத்தெம்பர் 8 ஆந் திகதியன்று முச்சக்கர வண்டியில் வீட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டமை, லக்பிம என்ற சிங்களப் பத்திரிகையின் நிருபரான ரீ லால்பிரியந்த என்பவர் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு மரத்தில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப் பட்ட சம்பவம், கொழும்பு நுகேகொடையில் செத்தெம்பர் மாதத்தில் கோஷ்டி மோதல்களின் விளைவாக ஆறுபேர் கொல்லப்பட்டமை, செத்தெம்பர் 12 ஆந் திகதியன்று மாளிகாவத்தைப் பொலிஸார் அப்பிரதேசத்தில் பாதாள உலகக் கோஷ்டியொன்றினால் தொழிற்படுத்தப்பட்ட ஒர் “சித்திரவதைக் கூட்டத்தை” திடீர்ச் சோதனையிட்டு போட்டிக் கோஷ்டியொன்றைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைக் காப்பாற்றியமை, திசெம்பர் மாதத்தில் 22 ஆந் திகதியன்று கொழும்பு கொள்ளுப்பிட்டி டுப்பிளிகேஷன் வீதியிலுள்ள சில்வர் சிலிப்பர் கசினோ களரியை ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டிருந்த இரவு நேரத்தில் ஆயுதம் தாங்கிய கோஷ்டி திடீரென உள்நுழைந்து சாமக் காவலாளர்களை தாக்கி எரித்துள்ளது. இதனால் கசினோ களரிக் கட்டடம் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இச்சம்பவம்
பலாத்காரத்தினால் பணம் பறிக்கும் சம்பவத்துடன் தொடர்புடையதாக விருந்தது.
கொழும்பில் முக்கிய பிரமுகர் ஒருவரைக் கடத்திச் சென்று 20 மில்லியன் ரூபாவை அவரை விடுவிப்பதற்கு மீட்புப் பணமாக செலுத்தியமை, கடத்திச் செல்லப்பட்ட 8 வயதுச் சிறுவனை விடுவிப்பதற்கு 2.5 மில்லியன் ரூபாவை மீட்புப் பணமாகக் கேரிய சம்பவம். இச்சம்பவமானது முதுமையடையாத இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியதனால் நிகழ்ந்தது. பொலிஸாரிடம் இது பற்றி அறிவித்தமையினால் அச்சிறுவன் அவர்களினால்
கொலை செய்யப்பட்டமை, கந்தானையில் பகல் வேலைகளில் களவெடுத்த
67

Page 41
சந்தேக நபரொருவர் கோபமடைந்த பொது மக்களினால் அடித்துக் கொல்லப்பட்டார். இன்னொரு சம்பவத்தில் 12 வயதுப் பாடசாலைச் சிறுமியைக்
கற்பழித்த வேலை நீக்கஞ் செய்யப்பட் படைவீரரொருவரின் வீடு களுத்துறை மாவட்டதிலுள்ள தொடன்கொடவில் அக் கிராமத்திலுள்ள மக்களினால் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட சம்பவம், நீர்கொழும்பில் 14 வயதுச் சிறுவனொருவனைத் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியமைக்காக நோர்வே நாட்டைச் சேர்ந்த ஜான் நில்சென் என்பவர் குற்றவாளியாகக் காணப்பட்டு அவர் மீது 14 வருடக்
கடும் சிறைத்தண்டனையும் 100,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்ட சம்பவம்.
1999 ஆம் ஆண்டில் பொலிஸ் துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொழும்பில் குற்றப்புலனாய்வுப் பகுதிக்குப் பொறுப்பாகவிருந்த சிரேஸ்ட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கொட்டகதெனியா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு அவர் பல தடவைகள் தமிழர்களுக்கு எதிரான கூற்றுகளை நிகழ்த்தியவர் எனத் தமிழ் அரசியல் கட்சிகளினால் பொருள் கோடப்பட்டமையே காரணமாகும். 1999 ஆம் ஆண்டில் மூன்று மாகாண சபைத் தேர்தல்களும் சனாதிபதித் தேர்தலும் இடம்பெற்றுள்ளன. பொதுவாக இத்தேர்தல் காலங்களில் வன்செயல்கள் இடம்பெற்ற போதிலும் குறிப்பாக வடமேல் மாகாண சபைத் தேர்தலின்போது முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் வன்செயல்களும் மோசடிகளும் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது. குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையில் மரண தண்டனை விதிப்பதற்கு ஏற்பாடுகள் இருந்த போதிலும் நீதிமன்றங்களினால் மரண தண்டனைத் தீர்ப்பு தொடர்ந்தும் விதிக்கப்பட்டுமிருந்த போதிலும் 1976 யூனிலிருந்து மரண தண்டனைகள் நிறைவேற்றப் படவில்லை. எனினும் 1999 மார்ச் நடுப்பகுதியில் சனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பின்படி எதிர்காலத்தில் கொலை, போதைப் பொருட்கள் கடத்தல் குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்
என அறிவிக்கப்பட்டது.
68

இவ்வாறு அறிவிக்கப்பட்ட போதிலும் 1999 ஆம் ஆண்டில் எவருமே தூக்கிலிடப்படவில்லை. அப்படியிருந்த போதிலும் இது வெலிக்கடை, போகம்பரை சிறைச்சாலைகளிலிருந்த மரண தண்டனை விதிக்கப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட கைதிகளுக்கடையே தாங்கள் தூக்கிலிடப்பட்டு விடலாமென்ற நிச்சய தன்மையையும் அங்கலாய்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. சர்வதேச ரீதியில் மரண தண்டனை என்பது மனிதன் வாழ்வதற்கான உரிமையைப் பறிக்கும் செயலாகக் கருதப்படுவதனால் இதனை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது இவ்வாண்டின் குற்றவியல் தொடர்பிலான நிர்வாக ஒழுங்குகள் மீளாய்வு செய்யப்பட வேண்டிய
தேவையை ஏற்படுத்தியுள்ளது.
குற்றச் செயல்கள் புரிவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆளணியினர்களின் நுண்ணறிவு மேம்படுத்துவதற்கும் அவர்களுடைய எண்ணிக்கையை அதிகரிப்பதற்குமான அவசியத் தேவை பற்றி உணரப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் மக்கள் சட்டத்தைத் தங்களுடைய கையில் எடுத்துக் கொண்டு செயற்படுவதைத் தடுப்பதன் பொருட்டு குற்றச் செயல்கள் புரியப்படும்போது அரசு துரிதமாகச் செயற்பட்டு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். மரண தண்டனையை மீண்டும் அறிமுகப்படுத்துவது மனித உரிமைகளின் மேம்பாட்டிற்கு பின்னடைவை ஏற்படுத்துமாகையினால் அரசு தனது தீர்மானத்தை
மீளாய்வு செய்ய வேண்டும்.
69

Page 42
அத்தியாயம் XVI
மனித உரிமைகள் ஆணைக்குழு
1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவானது அரசியலமைப்பின் பிரகடனப்படுத் தப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்டதுமான அடிப்படை உரிமையொன்றின் எந்த உரிமைத்தலையீட்டையும் ஆய்வு செய்து பொருத்தமான நிவாரணம் வழங்குவதற்கானவொரு நிரந்தர தேசிய நிறுவனமாகும். இவ்வாணைக்குழுவானது பெருமளவு எக்காள முழக்கம், நன்னம்பிக்கை, எதிர்பார்ப்பு ஆகியவற்றுக்கிடையே உருவாக்கபபட்டுள்ளது. ஆனால் 1999 ஆண்டு வரையிலான அதன் செயற்பாடுகளை நோக்குமிடத்து
எதிர்பார்த்த பலாபலன்கள் கிடைக்கவில்லை.
இச்சட்டத்தின் கீழ் இவ்வாணைக்குழுவின் வேலை மீது விதிக்கப்பட்ட ஓர் முக்கியமான வரையறை என்னவெனில் அது இவ்வாணைக்குழுவிற்கு மனித உரிமைகளில் உரிமைத் தலையீடு பற்றிய ஆய்வைச் செய்வதற்கு அதிகாரம் வழங்காமல் அடிப்படை உரிமைகளில் உரிமைத் தலையீடு செய்வதற்கு அதிகாரம் வழங்குகின்றது என்பதாகும். பிற சொற்களில் கூறுவதானால் இலங்கை அரசியலமைப்பில் வரையப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கும் வாழ்வதற்கான உரிமையையும் உள்ளடக்குகின்ற சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள பரந்த அளவிலான உரிமைகள், சுதந்திரங்களுக்குமிடையே இச்சட்டத்தில் வித்தியாசமொன்று வரையப்பட்டுள்ளது. இதன்படி ‘‘அடிப்படை உரிமை” என்ற சொல்லின் உபயோகம் இவ்வாணைக் குழுவின் நியாயாதிக்கத்தையும் பொறுப்பாணையையும் வரையறைவு செய்கின்றது; இவ்வாணைக் குழுவானது மனித உரிமைகள் யாவற்றினதும்
மீறுகைகளை ஆய்வு செய்ய முடியாது.
70

இவ்வாணைக்குழுவின் ஆய்வு செய்தல், இணக்க அதிகாரங்கள் ‘அடிப்படை
உரிமைகளுக்கு’ மட்டுமே நீடிக்கின்றது. ஆனால் அதன் கல்விப் பணிகள்
சி.அ.உ.ச.ச.விலும் பொ.ச.க.உ.ச.ச.விலும் வரையறைவு செய்யப்பட்டதன்
பிரகாரம் பரந்த அளவிலான உரிமைகள் தொகுதியொன்றை
உள்ளடக்குகின்றது. மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டமானது
அரசியலமைப்பிற்கமைவாக நிறைவேற்று அல்லது நிர்வாகச் செயற்பாட்டினால்
உரிமைகளில் உரிமைத் தலையீடு செய்வதற்கு இவ்வாணைக் குழுவின்
அதிகாரங்களை வரையறைவு செய்கின்றது. இருந்த போதிலும் ‘தங்களுடைய
அரசியல் இலட்சியங்களை அடைவதன் பொருட்டு ஆயுதங்களைத் தூக்கிய
குற்றவியல் தொகுதியினர்களின்’ நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கு 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 14 (ஆ)
பிரிவிலுள்ள ஏற்பாடு இவ்வாணைக் குழுவிற்கு அதிகாரமளிக்கின்றது. இந்தப்
பிரிவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான குறியிலக் கைக்
கொண்டுள்ளதாகத் தோற்றுகின்றது. இவ்வாணைக் குழுவினால் இது
பிரயோகப்படுத்தப்பட்டால் அது இவ்வாணைக்குழுவானது ஓர் சுதந்திரமான
மனித உரிமைகள் சபையல்ல என்ற கருத்தை பொது மக்களிடையே
ஏற்படுத்தும் . இவ்வாணைக் குழுவானது எல்லா நேரங்களிலும்
அரசாங்கத்திலிருந்தும் படைக்கலந்தாங்கிய படைகளிலிருந்தும் வேறுபட்ட
சுதந்திரமான அமைப்பாக இருக்க வேண்டுமென்பது மட்டுமன்றி
அவ்வண்ணமானதாகக் காணப்படவும் வேண்டும்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பின்வரும் பொறுப்பாணையும்
அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
(அ) அடிப்படை உரிமைகள் தொடர்பிலான அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகள்
கடைப்பிடிக்கப்படுவதையும் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பு
அளிக்கப்படுவதையும் அவை பின்பற்றப்படுவதையும் உறுதிப்படுத்தும்
71

Page 43
(ஆ)
(@)
(RF)
(@一)
(2611)
நோக்குடன் நடைமுறைகள் தொடர்பில் செய்யப்படும் முறைப்பாடுகளை
விசாரணை செய்தலும் ஆய்வு செய்தலும்.
அடிப்படை உரிமைகளின் உரிமைத் தலையீடு அல்லது நேரிடக்கூடிய உரிமைத் தலையீடு தொடர்பில் செய்யப்படும் முறைப்பாடுகளை விசாரணை செய்தலும் ஆய்வு செய்தலும் மத்தியஸ்தம், இணக்கம்
மூலம் தீர்மானம் எடுத்தல்.
அடிப் படை உரிமைகளை மேலும் மேம்படுத் துவதற்கும்
பாதுகாப்பதற்குமாக சட்டத்தையும் நிர்வாகப் பணிப்புகளையும்
நடைமுறைகளையும் வகுப்பதில் அரசாங்கத்திற்கு ஆலோசனைகளையும்
உதவியும் வழங்குதல்.
தேசிய சட்டங்களும் நிர்வாக நடைமுறைகளும் சர்வதேச மனித
உரிமைகள் குறியிலக் குகளுக்கும் நியமங்களுக்கும்
அமைவாகவிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு சிபாரிசுகளைச் செய்தல்.
மனித உரிமைகள் துறையில் பொருத்தனைகளுக்கும் பிற சர்வதேச சாதனங்களுக்கும் பங்களிப்பதற்கான அல்லது சம்மதமளிப்பதற்கான
தேவை பற்றி அரசாங்கத்திற்கு சிபாரிசுகளைச் செய்தல்; அத்துடன்,
மனித உரிமைகள் தொடர்பிலான விழிப்புணர்விற்கு ஊக்கமளித்தலும்
கல்வியூட்டுதலும்
இங்கு காணப்படுவதன்படி இவ்வாணைக் குழுவிற்கு பரந்த அளவிலான
பொறுப்பானை வழங்கப்பட்டுள்ளது. இது ஆக்கபூர்வமான முறையில்
பயன்படுத்தப்படுமிடத்து அது விளைபயனுடனும் வினைத்திறமையுடனும்
இவ்வாணைக்குழு செயற்படுவதை இயலுமானதாக்கும். எனினும் இவ்வாணைக்
குழுவானது அதற்குக் குறித்தொதுக்கப்பட்ட பணிகளில் தற்போது உபபிரிவுகள்
(அ)வையும் (ஆ) வையும் மட்டுமே நிறைவேற்கின்றது. பிற சொற்களில்
72

கூறுவதானால் அது தனது முறைப்பாடுகளை ஆய்வு செய்வதற்கும் இடைநின்று
இணக்குவிப்பதற்குமான அதிகாரத்தை மட்டுமே நிறைவேற்றுகின்றது.
இவ்வாணைக்குழுவானது 1997 - 1998 இற்கான தனது வருடாந்த அறிக்கையில்
தனது பிரதான பணிகள் உப பிரிவுகள் (அ)விலும் (ஆ)விலும் 11(ஈ) யிலும்
விதித்துரைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை
சுட்டிக் காட்டியுள்ளதன்படி இப்பணிகள் தானும் பயனுள்ள முறையில் பூர்த்தி
செய்யப்படவில்லை.
மேலே குறிப்பிட்ட பொறுப்புகளில் ஏனையவை முக்கியம் வாய்ந்தவைகளாக
இருந்த போதிலும் அவை தொடர்பில் எந்த நடவடிக்கைகளும்
எடுக் கப்படவில் லை என்பதை ஆணைக் குழுவின் தலைவரே
ஏற்றுக் கொண்டுள்ளார். மனித உரிமைகள் தொடர்பான கல்வி
நடவடிக்கைகளுக்கும் அனுபவமுள்ள பதவியினர்கள் இல்லாமலிருந்தமையே
காரணமாகக் கூறப்பட்டது. இது தொடர்பில் எமது நிறுவனமானது 1999 ஆம்
ஆண்டில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தற்போதைய தலைவரைப்
பேட்டி கண்டபோது அவர் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு
நிகழ்வுகளை நடாத்த வேண்டிய தேவை எதுவுமில்லையெனவும் இது பற்றிய
விழிப்புணர்வு ஏற்கனவேயுள்ளது எனவும் கூறினார். இது அவரது கூற்றாக
இருந்த போதிலும் மனித உரிமைகள் தொடர்பில் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள்
மேற்கொள்ளப்படுவது அவசியம் என்பது உணரப்படுகின்றது.
உயர் நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான
முறைப்பாடுகளை விசாரணை செய்து அறிக்கை செய்யும் ஆணைக்குழுவிற்கு
அனுப்பியுள்ளது. இவ்வாண்டில் தலைவரின் கூற்றின்படி 40 வழக்குகள் உயர்
நீதிமன்றத்தினால் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த வழக்குகள்
தாமதமின்றி உடனடியாக விசாரிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைப்
பற்றி தலைவர் பதில் வழங்கவில்லை.
73

Page 44
பிராந்திய மட்டத்தில் 10 கிளை அலுவலகங்கள் இவ்வாணைக்குழுவிற்கு இருந்தன. அவை அநுராதபுரம், அம்பாறை, பதுளை, வவுனியா, மட்டக்களப்பு, கண்டி, கல்முனை, திருகோணமலை, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் என்பனவாகும். மேலுத் தடுத்து வைக்கப்படுபவர்களின் நலனோம்பல் தொடர்பில் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும்போது சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்திலும் விதிகளிலும் குறிப்பிடப் பட்டுள்ள அடிப்படை ஒழுங்கு முறையேனும் தடுத்து வைக்கப்படுபவர்களின் விடயத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பது பற்றி கண்காணிக்கப்படுவதில்லை. இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் இவ்வாணைக்குழு பிணிப்புறுத்தும் தீர்மானங்களை வழங்குதவற்கான அதிகாரமும் கூட இச்சட்டத்தினால் மட்டுப்படுத்தப் படுகின்றது. இவ்வாணைக்குழுவிற்கு சிபாரிசுகளைச் செய்யும் அதிகாரம் மட்டுமே உள்ளது. இச்சிபாரிசுகள் பின்பற்றப்படாவிட்டால் ஆணைக்குழுவானது அது தொடர்பில்
சனாதிபதிக்கு அறிக்கையொன்றையே சமர்ப்பிக்க முடியும்.
இவ்வாணைக் குழுவிற்கான உறுப்பினர்களின் நியமனம், பதவி நீக்கல்
நடைமுறைகளும் கூட விரும்பத்தக்கனவன்று. இவ்வாணைக் குழுவிற்கு உறுப்பினர்கள் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான பிரேரணைகளில் முன்னாடியாகக் கருதப்பட்டதன்படி அரசியலமைப்பு மன்றத்தினால் செய்யப்படும்
சிபாரிசின் மீது சனாதிபதியினால் நியமிக்கப்படுவர். எனினும் அரசியலமைப்பு
மன்றமொன்று தாபிக்கப்படும்வரை சபாநாயகரினதும் எதிர்க்கட்சித்
தலைவரினதும் உசாவுதலுடன் பிரதம அமைச்சரின் சிபாரிசின் மீது சனாதிபதி உறுப்பினர்களை நியமித்தல் வேண்டும். சில காரணங்களின் பேரில்
உறுப்பினர்கள் சனாதிபதியினால் பதவி நீக்கஞ் செய்யப்படலாம்.
இவ்வாணைக்குழு ஐந்து ஆண் உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
இவர்களில் இரண்டு பேர் முழுநேரம் பணிபுரிபவர்களாகவும் மூன்று பேர்கள் பகுதி நேரம் பணிபுரிபவர்களாகவும் உள்ளனர். தலைவர் முழு நேரம்
பணியாற்றும் உறுப்பினராவர்.
74

அவுஸ்திரேலியா போன்ற பயன் முனைப்புடனான மனித உரிமை ஆணைக்
குழுக்களைக் கொண்டுள்ள நாடுகள் முழுநேரம் பணியாற்றும் உறுப்பினர்களைக்
கொண்டுள்ளது. இலங்கை கூட இந்த முறையைப் பின்பற்ற வேண்டும்.
அப்போதுதான் உறுப்பினர்கள் ஆணைக் குழுவில் நேரத்தையும் சக்தியையும்
முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றக் கூடியதாகவிருக்கும். இவ்வாணைக்
குழுவிற்கு இளம் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது சிறந்ததாகும். அவர்கள்
இப்பதவிகளை வகிப்பதற்கு பொருத்தமான தகைமையுடையவர்களாகவிருத்தல்
வேண்டும். இவ்வாணைக் குழுவிற்கு மேலதிக ஆளணியினர்களை
சேர்த்துக்கொள்ளுவதற்கு நிதிவசதி வழங்கப்படவில்லை. இவ்வாணைக் குழுவின்
அலுவலகம், பதவியினர்களின் பற்றாக்குறை முதலியன இவ்வாணைக்
குழுவிற்கு போதியளவு நிதியளிக்கப்படுவதில்லை என்ற அபிப்பிராயத்தை
ஏற்படுத்துகின்றது. இவ்வாணைக் குழுவின் செயற்பாடுகளின் திட்டமிட்ட
விரிவாக்கத்திற்கு 14.235 மில்லியன் ரூபாவிலிருந்து 25.1 மில்லியன் ரூபாவரை
ஒதுக்குவதாக அரசாங்கமானது 1999 ஏப்ரலில் தனது அறிக்கையில் மனித
உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள் ஆணைக் குழுவிற்கு வாக்குறுதி
அளித்துள்ளது. இவ்வாணைக் குழுவானது தனது உறுப்பினர்களுக்கு பிற
மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் அரசாங்கம் சாராத அமைப்புகளின்
உறுப்பினர்களுடன் பயிற்சியையும் பின்னிய செயல் விளைவுகளையும்
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களையும் நிராகரிப்பது ஒர் மனவருத்தத்தை
ஏற்படுத்துகின்ற விடயமாக உள்ளது. உதாரணமாக இவ்வாறான
பயிற்சியளிப்பதற்கு சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையமானது
கொழும்பில் நடாத்தப்பட்ட மனித உரிமைகளும் சம வாய்ப்பும் மீது இரண்டு
நாள் வேலைக்களத்தில் பங்குபற்றுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
பிராந்திய அலுவலகங்களிலுள்ள உத்தியோகத்தர்களுக்கு அழைப்பு விடுத்த
போதிலும் தலைவர் அவர்கள் கொழும்பிற்கு வருவதற்கு விரும்பிய போதிலும்
அதற்கு அனுமதி வழங்க மறுத்தமை மன வருத்தத்திற்குரிய விடயமாகும்.
75

Page 45
1999 ஆம் ஆண்டிலேயே இவ்வாணைக்குழுவின் 1997 - 1998 காலப்பகுதிக்கான
முதலாவது ஒரேயொரு வருடாந்த அறிக்கையை இவ்வாணைக்குழு
வெளியிட்டுள்ளது. எந்த ஆணைக்குழுவினதும் வருடாந்த அறிக்கை விசேடமாக
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை மிகவும் முக்கியமானதாகும்.
இது ஏனெனில் இந்த அறிக்கையானது ஆணைக்குழுவின் வேலையையும்
வேலையாற்றும் முறைகளையும் காண்பிக்கின்றது என்பதனாலாகும். எனவே
இந்த அறிக்கையின் பொருளடக்கத்தையும் அமைப்பையும் பரிசீலனை செய்தல்
கட்டாயமானதாகும். இந்த ஆணைக் குழுவின் அறிக் கையானது
சுருக்கமானதாகவும் 10 பக்கங்களைக் கொண்டதாகவும் பெருமளவில் சேர்த்துக்
கொள்ளப்பட வேண்டிய முக்கியமான தகவல்கள் இல்லாததாகவுமிருந்தது.
இந்த அறிக்கையின் முழுமையான போக்கு அது அசட்டையான பாங்கில்
தயாரிக்கப்பட்டுள்ளமையைக் காண்பிக்கின்றது. எத்தனை கைதுகள் அல்லது
கட்டுக்காப்பில் வைத்தல்கள் இடம்பெற்றன என்பவை பற்றிய முறைப்பாடுகள்,
புள்ளி விபரங்கள் எதுவும் அதில் தரப்படவில்லை. மனித உரிமைகள் ஆணைக்
குழுவானது ஒழிவு மறைவின்றி வெளிப்படையாகச் செயற்பட னேடிய ஓர்
தாபனமாகும். அது எல்லா நேரங்களிலும் மனித உரிமைகள், பொது மக்களின்
பாதுகாப்பு மற்றும் அவர்களுடைய உரிமைகளின் மேம்பாடு தொடர்பிலான
தகவல்களை சாத்தியமான வரை கூடுதலான அளவில் அவர்களுக்கு
வழங்குவதற்கு முயற்சி செய்தல் வேண்டும். இத்தகைய நிலை இவ்வாண்டில்
நிலவியதற்கான அறிகுறிகள் இல்லை.
இலங்கையில் பல்வகைப்பட்ட மனித உரிமைகள் நிறுவனங்கள் இருப்பதாகப்
பெருமையாகக் கூறிக்கொள்ள முடியுமென்ற போதிலும் அவற்றிற்கிடையே
76

எத்தகைய கூட்டிணைப்பும் இல்லை. மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டமும்
கூட நியாயாதிக்க முரண்பாடுகளை தவிர்ப்பதற்கும் பொதுக்கொள்கைகளை
ஊக்குவிப் பதற்குமாக ஒத்துழைப்பும் உசாவுகையும் மற்றைய மனித
உரிமைகள் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதைக்
குறித்துரைக்கும் அல்லது கட்டாயப்படுத்தும் ஏற்பாடு எதனையும்
கொண்டிருக்கவில்லை. இவ்வாணைக்குழுவின் வருடாந்த அறிக்கையானது
குறைகேள் அதிகாரி அலுவலகம் அல்லது அரச கருமமொழிகள் ஆணைக்குழு
போன்ற பிற எந்த மனித உரிமைகள் ஆணைக் குழுவுடனும் இணைப்புகளைக்
கொண்டிருந்ததாக அல்லது ஒத்துழைத்ததாகக் குறிப்பிடவில்லை. மனித
உரிமைகளின் பாதுகாப்பு, மேம்பாடுகளுக்கான தேசிய நிறுவனங்களின்
அந்தஸ்தும் தொழிற்பாடும் (பாரிஸ் கோட்பாடுகள்) 1992 தொடர்பிலான
கோட்பாடுகளிலுள்ள செயற்பாட்டு முறைகளின் கோட்பாடு (ஊ) எந்த தேசிய
மனித உரிமைகள் ஆணைக்குழுவும் “மனித உரிமைகளின் மேம்பாட்டிற்கும்
பாதுகாப்பிற்கும் நியாயாதிக்க ரீதியாக அல்லது பிற விதத்தில் பொறுப்பாகவுள்ள
பிற அமைப்புகளுடன் உசாவுதலை’ பேணி வைத்திருத்தல் வேண்டும் எனக்
குறிப்பிடுகின்றது. இதுவரை இந்த ஆணைக்குழுவானது உள்நாட்டு அரசாங்கம் சாராத அமைப்புகளுடன் ஒத்துழைத்ததாகத் தெரியாததனால் இவ்வாணைக்குழு
செயல் நிகழ்ச்சித்திட்டத்தை எவ்வண்ணம் செயற்படுத்தவுள்ளதென்பது
தெளிவாகவில்லை. ஒத்துழைப்பு இல்லாமலிருப்பது அரசாங்க
நிறுவனங்களுக்கும் அரசாங்கம் சாரா அமைப்புகளுக்குமிடையே எந்த எதிர்கால
சாட்டுகளுக்கும் நல்ல சகுனமாக அமைய மாட்டாது.
மனித உரிமைகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டதன் குறிக்கோள்களில்
ஒன்று மனித உரிமைகள் மீறப்படும்போது சம்பந்தப்பட்ட மக்களுக்கு இலகுவாக
77

Page 46
குறைந்தளவு முறைமையுடையதும் அதிக செலவின்றியதும் சிக்கலற்றதுமான முறையில் நிவாரணம் பெற்றுக் கொடுப்பதாகவிருந்தது. இன்னும் இவ்வாணைக் குழுவானது எதிர்பார்க்கப்பட்ட தண் படி வளர்ச்சியடையவில்லை. இத்தவறுகைக்கான பொறுப்பை இவ்வாணைக் குழு மீது மட்டும் சுமத்த முடியாது. இதில் பல காரணிகள் சம்பந்தப்பட்டுள்ளன. அதிலொன்று அரசாங்கத்திற்கு இவ்விடயத்தில் உள்ள உறுதியின்மையும் செயற்படாத நிலையுமர்கும். இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குக் கூடுதலான சுறுசுறுப்பும் அர்ப்பணிப்புடன் செயற்படும்
திறமையும் உடைய தலைமைத்துவம் தேவைப்படுகின்றது.
78

அத்தியாயம் XVIII
அரச கருமமொழிகள் ஆணைக்குழு
இந்த அத்தியாயம் அரச கருமமொழிகள் ஆணைக்குழு வகிக்கும்
பாகத்தையும் அதன் பணியையும் பரிசீலனை செய்கின்றதுடன் அது தனது
பொறுப்பாணையை எந்த அளவிற்கு பூர்த்தி செய்துள்ளது என்பதை
மதிப்பிடுவதற்கும் முயல்கின்றது. அரச கருமமொழிகள் ஆணைக்குழுவானது
1991 ஆம் ஆண்டில் மொழி என்ற காரணத்தின் அடிப்படையில் நபர்களின்
அடிப்படை உரிமை பாகுபாடு காண்பிக்கப்படாமல் உறுதிப்படுத்தப்படுவதையும்
அரச கருமமொழிகளின் உபயோகம் தொடர்பிலான அரசியலமைப்பு ஏற்பாடுகள்
நடைமுறைப்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்தப்படுவதை முழுமையான
நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியலமைபபானது சிங்களத்தையும் தமிழையும் இலங்கையின் அரச
கரும மொழிகளாகவும் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும் வரையறைவு செய்கின்றது. சிங்களம் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த
ஏனைய சகல மாகாணங்களினதும் நிருவாக மொழியாகவிருக்கும். தமிழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிருவாக மொழியாகவிருக்கும். இத்துடன் ஓர் உதவி அரசாங்க அதிபரின் எந்தப் பகுதியிலும் எதிர்ரெதிராக அப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகைக்கு தமிழ் அல்லது சிங்கள மொழி
பேசும் சிறுபான்மை இனத்தின் விகித சமத் தைப் பொறுத்து பிரகடனப்படுத்தப்படுவதன் பிரகாரம் சிங்களமொழி அல்லது தமிழ்மொழி உபயோகிக்கப்படலாம். சிங்களம் நிருவாக மொழியாகவுள்ள எந்தப் பிரதேசத்திலும் ஆளொருவர் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் கடிதத்
தொடர்புகளைப் பெற்றுக் கொள்வதற்கும் தொடர்பு வைத்துக் கொள்வதற்கும்
கருமம் ஆற்றுவதற்கும் எந்த உத்தியோக பூர்வமான இடாப்பினதும் அல்லது பதிவேட்டினதும் அல்லது பிற வெளியீட்டினதும் பிரதிகளைப் பார்வையிடுவதற்கும்
79

Page 47
அல்லது பிரதிகளைப் பெறுவதற்கும் உரித்துடையவராவர். தமிழ் நிருவாக மொழியாக இருக்குமிடத்து ஆளொருவர் அத்தகைய தகவல்களை சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் வழங்குமாறு கோரிக் கை செய்வதற்கு
உரித்துடையவராவர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த சகல மாகாணங்களிலும் நிருவாக மொழியாகவும் அரசாங்க பதிவேடுகள் பேணப்படும் மொழியாகவும் கருமம் ஆற்றப்படும் மொழியாகவும் சிங்கள மொழி உள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிருவாக மொழியாகவும் அரசாங்க பதிவேடுகள் பேணப்படும் மொழியாகவும் கருமம் ஆற்றப்படும் மொழியாகவும் தமிழ்மொழி உள்ளது. இந்த வித்தியாசமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையினர்களாக இருப்பதன் நிமித்தம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் நிருவாக மொழியாகவுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த பிற சகல பிரதேசங்களிலும் அமைந்துள்ள நீதிமன்றங்களின் மொழியாக சிங்களம் உபயோகிக்கப்படுகின்றது. நீதிமன்றங்களில் உபயோகிக்கப்படும் மொழியில் பரிச்சயமில்லாத ஒருவர் அரசாங்கத்தினால் வழங்கப்படும் பேச்சுப் பெயர்ப்பாளரொருவரைப் பெற்றுக் கொள்வதற்கு உரித்துடையவராவர். அரசியலமைப்பானது சகல சட்டங்களும் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புடன் சிங்களத்தில் அல்லது தமிழில் வரையப்பட வேண்டுமென விதிக்கின்ற போதிலும் உண்மையில் சட்டங்களில் அநேகமானவை ஆங்கிலத்திலேயே வரையப்படுகின்றன. உயர்நீதிமன்றத்திலும் மேன் முறையீட்டு நீதிமன்றத்திலும் உபயோகிக்கப்படும் மொழி ஆங்கிலமாகும்.
அரச கரும மொழிகள் ஆணைக் குழுவானது 1951 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டில் “அரச கருமமொழிகள் திணைக்களம்” என அழைப்படும் ஓர் நிரந்தரமான திணைக்களமாக மாற்றப்பட்டது. 1989 ஆம் ஆண்டில் இன ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையத்தினால் ஒழுங்கு
80

செய்யப்பட்ட ஒர் வேலைக்களம் அரச கரும மொழிகள் ஆணைக்குழு தாபிக்கப்படும் விளைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணைக்குழுவானது 1991 திசெம்பர் 21 ஆந் திகதியன்று நியமிக்கப்பட்டது. இது அரசாங்கத்தின் மொழிக் கொள்கையை நடைமுறைப்படுதுதுவதில் முன்னைய ஆணைக்குழுவை
விடப் பரந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தது. அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு அரச கருமமொழி சம்பந்தமாக அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளை அரசாங்க திணைக்களங்கள் பேணுவதை உறுதிப்படுத்தும்
பொறுப்பு அளிக்கப்பட்டது. அது தொடர்பான கொள்கை அறிக்கைகளை வெளியிடுவதற்கும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குமான அதிகாரம் அதற்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆணைக்குழு இதுவரை தனது கடமைகளைப் பயனுள்ள முறையில் பூர்த்தி செய்யவில்லை. இந்த ஆணைக்
குழுவானது சனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆறு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மட்டுமே முழுநேரம் கடமை
செய்பவராவர். மனித உரிமைகள் ஆணைக் குழுவைப் போலன்றி இவ்வாணைக் குழுவிற்குத் தனக்குத் தேவையான உத்தியோகத்தர்களையும் சேவகர்களையும்
நியமிக்கும் அதிகாரம் உண்டு. எனவே தலைவர் தமக்குத்தேவையான
உத்தியோகத்தர்கள் அலுவலகத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த ஆணைக்குழுவும் மனித உரிமைகள் ஆணைக் குழுவைப் போலவே
நிதியங்களைப் பெறுவதற்கு அரசாங்கத்தின் மீது தங்கியுள்ளது.
இவ்வாணைக்குழுவானது தனக்கு சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடு ஒவ்வொன்றையும் ஆய்வு செய்யும் கடமையுடன் பிணிக்கப்பட்டுள்ளது. தன்னிடம் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகளை அது விசாரணை செய்து தன்னால்
எடுக்கப்படும் தீர்மானத்தை 14 நாட்களுக்குள் முறைப்பாட்டாளருக்கு அறிவித்தல் வேண்டும். எந்தவொரு அரசாங்க நிறுவனமும் அரச கரும மொழிகள் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறியிருக்குமிடத்து அல்லது நடைமுறைப்படுத்துவதைத் தவிர்த்திருக்குமிடத்து அதுபற்றி நடவடிக்கை எடுப்பதற்காக அந்த அரசாங்க
8

Page 48
நிறுவனத்தின் தலைவருக்கு இவ்வானைக்குழு அறிவித்தல் வேண்டும். இச்சட்டத்தின் கீழ் இவ்வாணைக்குழுவிற்கு ஓர் நபர் முறைப்பாடு செய்திருக்குமிடத்து அம்முறைப்பாட்டிற்கான விசாரணையின் பெறுபேறுகள் அம் முறைப் பாடு செய்யப்பட்டதிலிருந்து 120 நாட்களுக்குள் கிடைக்கவில்லையாயின் அடுத்து வரும் முப்பது நாட்களுக்குள் அந்த நபர் நிவாரணத்தை அல்லது பரிகாரத்தைப் பெறுவதற்கு உயர்நீதி மன்றத்திற்கு
விண்ணப்பிக்கலாம்.
இயைபுள்ள மொழிகளில் கருமம் ஆற்றுவதற்கு வேண்டுமென்றே தவறுகின்ற அல்லது அசட்டை செய்யும் அரசாங்க உத்தியோகத்தர்கள் தவறொன்றை இழைத்த குற்றத்திற்கு ஆளாதல் வேண்டுமென்பதுடன் அவர்கள் நீதவான் முன்னிலையில் சுருக்க விளக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு குற்றத் தீர்ப்பு வழங்கப்படுவதன் பேரில் ஆயிரம் ரூபாவிற்கு மேற்படாத தண்டப்பணம் செலுத்துவதற்கு அல்லது மூன்று மாதங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனை வழங்கப்படுவதற்கு அல்லது இரண்டு தண்டனைகளும் வழங்கப்படுவதற்கு உட்படுத்தப்படுவர். வழக்குத் தொடுப்பதற்கு சட்டத்துறை அதிபதியின் முன் அனுமதி தேவை. அரசாங்க உத்தியோகத்தரொருவரின் வேண்டுமென்றே செய்யப்பட்ட அசட்டையை நிரூபிப்பதற்கு வழக்குத் தொடுப்பதற்குத் தேவையான விதிக்கப்படும் சான்றுகளின் உயர்ந்த தரம் காரணமாக இந்த ஏற்பாடு இதுவரை பயன்படுத்தப்படவில்லை. இவ்வாணைக் குழுவின் தற்போதைய தலைவரின் கூற்றின்படி கடந்த ஆறு மாதங்களில் முறைப்பாடுகள் எதுவும் ஏற்கனவேயுள்ள கட்டமைப்புகளில் விசுவாசம் இல்லாததன் காரணமாகச் செய்யப்படவில்லை. இவ்வாணைக் குழுவானது இவற்றைக் கையாளுவதற்கான ஆகச் சிறந்த பயனுள்ள வழிவகை அரசாங்கமும் ஆணைக்குழுவும் ஓர் அகல் விரிவான கல்வி பிரசாரத்தைப் பொறுப்பேற்பதுடன் விளைவுகளை ஏற்படுத்துவதன் மூலம் பொது மக்களின் விசுவாசத்தை கூடுதலான முக்கியத்துவத்துடன் கட்டியெழுப்புவதாகும்.
82

ஆசிரியருக்கு வழங்கிய பேட்டியின் போது இவ்வாணைக்குழுவின் தலைவர்
பின்வரும் சிபாரிசுகளைச் செய்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு
வெளியே தமிழ்மொழியே பேசுபவர்களின் திருமணங்கள் பதிவு செய்யப்பட
முடியாமலிருப்பதனால் இந்நாட்டின் எப்பகுதியிலுமுள்ள தமிழ்மொழி
பேசுபவர்களின் திருமண, பிறப்புப் பதிவுகள் தமிழில் பதிவு செய்யப்படல்
வேண்டும். அலுவலகங்கள், வீதிகள் முதலியனவற்றின் பெயர்ப்பலகைகளும்
கூட தமிழில் எழுதப்பட வேண்டும். மும்மொழி களிலும் இல்லாத சகல
தற்போதைய உத்தியோகபூர்வ படிவங்களும் மீளப் பெறப்பட்டு மும்மொழிப்
படிவங்கள் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும். அரச கரும மொழிகள்
கொள்கையை நடைமுறைப்படுத்தும் பிரதான பொறுப்பு அரசாங்க நிருவாக
அமைச்சின் வசமுள்ளது. எனினும் இந்த அமைச்சு சகல அரசாங்கப்
படிவங்களும் மும் மொழிகளிலும் இருப்பதை உறுதிப் படுத்தும்
தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யவில்லை. தலைவரின் கூற்றின்படி
இவ்வாணைக்குழு அமைச்சிற்கு சிபாரிசுகள் செய்த போதிலும் அமைச்சு
இந்த விடயத்தில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரச
கருமமொழிகள் கொள்கை கடைப்பிடிக்கப்படுவதைக் கண்காணிப்பதற்கு
ஒருவரும் நியமிக்கப்படவில்லை எனவும் தலைவர் கூறியுள்ளார்.
இருந்தபோதிலும் இச்சிறப்புப் பணியானது அரச கருமமொழிகள்
ஆணைக்குழுவின் பொறுப்பாகும். இப்பொறுப்பை இவ்வாணைக்குழு
நிறைவேற்றத் தவறியுள்ளது. முழுமையாகப் பார்க்குமிடத்து அரச
கருமமொழிகள் ஆணைக்குழுவானது தனது பொறுப்பாணையை நிறைவேற்றத்
தவறியுள்ளது. இவ்வாணைக் குழுவானது அது நியமிக்கப்பட்ட நோக்கத்தை
அடைய வேண்டுமாயின் இந்நாட்டின் அரச கருமமொழிகள் கொள்கை
தொடர்பில் தவறிழைக்கும் நபர்களுக்கு எதிராக அவர்கள் வேண்டுமென்றே
அத்தவறுகளை இழைத்தார்கள் என்பதை நிரூபிப்பதற்கான நிபந்தனை
இலகுவாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் இச்சீர்திருத்தங்கள் குறைந்த
83

Page 49
மட்டத்திலுள்ள உத்தியோகத் தர்கள் மீது கட்டமைப்பு ரீதியான குறைபாடுகளுக்காக வழக்குத் தொடுக்கப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாணைக்குழு தனது பொதுக் கல்வி வழங்கும் பாகத்தை அதிகரித்தல் வேண்டும். அரசாங்கத் திணைக் களங்களில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு மொழிப்பயிற்சி கிரமமாக வழங்கப்படுவதற்கு ஒழுங்குகள் செய்தல் வேண்டும். இவ்வாணைக் குழு இனிமேல் நாளது வரையான தனது வேலை பற்றிய விரிவான அறிக்கையை வெளியிட்டு தனது பணியின் சகல அம்சங்களையும் கொண்ட முழுமையான வருடாந்த அறிக்கையையும் தனது சிபாரிசுகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய தனது நியதிச் சட்டமுறையான கடப்பாட்டைப் பூர்த்தி செய்தல் வேண்டும். இவ்வாணைக் குழுவானது அரச கரும மொழிகள் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத் திணைக்களங்களுக்கு தெளிவான வழி காட்டல்களை விதித்துரைப்பதுடன் அதைச் செய்வதற்கு நியாயமான கால எல்லையையும் விதித்தல் வேண்டும். இவ்வாணைக் குழுவின் உறுப்பினர்கள் சுறுசுறுப்பாகக் கருமமாற்ற வேண்டும் என்பதுடன் ஆகக் குந்ைதது இரண்டு உறுப்பினர்களாவது முழு நேரக் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இவ்வாணைக் குழுவானது அரசாங்க அமைச்சுகள், திணைக்களங்கள் யாவற்றிலும் அரச கரும மொழிகள் கொள்கை தகுந்த முறையில் நடைமுறைப்படுத்தப் படுவதை உறுதிப்படுத்துவதன் பொருட்டு
அரசாங்க நிருவாக அமைச்சுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டும்.
84

அத்தியாயம் XIX
அரசாங்க நிறுவனங்களில் அரசாங்கத்தின் தலையீடு: (இலங்கை இலஞ்ச ஆணைக்குழுவின் ஓர் விடய ஆய்வு)
இலஞ்சமும் ஊழலும் உயர்ந்த அளவுகளில் நிலவுவது ஆளுகையின்
பயனற்ற நடைமுறையையும் உரிய நடைமுறை எடுக்கப்படாதமையையும்
விளக்குகின்றது. மனித உரிமைகளின் பாதுகாப்பையும் மேம்பாட்டையும்
உறுதிப்படுத்துவதற்கு சிறந்த ஆளுகை கட்டாயமானதாகும். அரசாங்கமானது
அநேக மனித உரிமைகள் நிறுவனங்களை நிறுவியுள்ள போதிலும் அரசாங்க
தலையீடு காரணமாக அவை தங்களுடைய அதிகாரங்களைப் பிரயோகித்துத்
தங்களுடைய பொறுப்பாணையை நிறைவேற்ற முடியாத நிலையிலுள்ளன.
அத்தகைய நிறுவனங்களில் இலஞ்சமும் ஊழலும் நிலவுவதும் அவற்றில்
அரசாங்கத் தலையீடு மேற்கொள்ளப்படுவதும் சிறந்த ஆளுகையின்
கோட்பாடுகள் சீர்கேடடைவதற்கும் பொதுமக்களின் நம்பிக்கை இழப்பிற்கும்
வழிவகுக்கும்.
1994 ஆம் ஆண்டின் பொதுசன ஐக்கிய முன்னணியினால் பெருமளவில்
பகிரங்கப்படுத்தப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளிலொன்று இலஞ்சத்தையும்
ஊழலையும் ஒழிப்பதாகவிருந்தது. பொதுசன ஐக்கிய முன்னணி இலஞ்சம்,
ஊழல் பற்றிய குற்றச் சாட்டுகளை ஆய்வு செய்வதற்கு நிரந்தர
ஆணைக்குழுவொன்றை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தது. பொதுசன
ஐக்கிய முன்னணி தனது தேர்தல் விஞ்ஞர்பனத்தில் “இலஞ்சம், ஊழல்
பேரிலான நிரந்தர ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான அதிகாரம்
நடைமுறையிலுள்ள அரசாங்கத்தின் மீது வழங்கப்படாமல் அரசியலமைப்பு
மன்றமொன்றின் மீது வழங்கப்படல் வேண்டும்” என பரிந்துரைத்துள்ளது.
அதற்கேற்ப பொதுசன ஐக்கிய முன்னணிக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று
ஆட்சிக்கு வந்ததும் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த முதலாவது சட்டம்
85

Page 50
1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலஞ்சம், ஊழல் குற்றச் சார்த்துகைகளை ஆய்வு செய்வதற்கான ஆணைக் குழுச் சட்டமாகவிருந்தது. இது பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எனினும் இச்சட்டத்தினால் பிறப்பிக்கப்பட்ட உயர்ந்த எதிர்பார்ப்புகள் விரைவில் படிப்படியாக மறைந்து 1999 ஆம் ஆண்டளவில் இலஞ்ச ஆணைக்குழு பயனற்ற நிலைக்கும் செயலற்ற நிலைக்கும் வந்துள்ளது. இந்த ஆணைக்குழு இத்தகைய கீழ்நிலைக்கு
குறைக்கப்பட்டமை சிக்கலானதும் சர்ச்சைக்குரியதுமானவொரு விடயமாகும்.
இவ்வாணைக்குழுவின் ஆணையாளர்களை நீக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடைமுறை கேள்விக்குரியதாகுமென்பதுடன் இச்சட்டத்தில் விதித்துரைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுடன் முரண்படுகின்றது. இலங்கையில் நீதி நிருவாகத்தின் மீது இச்சம்பவங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் குறிப்பிடப்படும். இந்த ஆணைக் குழுவானது மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இவர்களில் இரண்டு பேர் உயர்நீதிமன்றத்தின் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஒய்வுபெற்ற நீதிபதிகளாகவும், ஒருவர் குற்றம், சட் டவினை முறைப் படுத்தலின் ஆயப் வு தொடர்பில் பரந்த அனுபவமுடையவராகவும் இருத்தல் வேண்டும். இவர்கள் அரசியலமைப்பு மன்றத்தின் சிபாரிசின் பேரில் சனாதிபதியினால் நியமிக்கப்படல் வேண்டும். அரசியலமைப்பு மன்றமானது தாபிக்கப் படுவதற்கு முன்னர் இவர்கள் சபாநாயகரின் உசாவுதலுடன் பிரதம அமைச்சரினால் செய்யப்படும் சிபாரிசின் மீது சனாதிபதியினால் நியமிக்கப்படுதல் வேண்டும். இன்னும் அரசியலமைப்பு மன்றமொன்று உருவாக்கப்படாததன் நிமித்தம் 1994 ஆம் ஆண்டில் பின்னைய நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் கெட்ட நடத்தை அல்லது திறமையின்மை காரணமாக பாராளுமன்றத்தின் உறுப்பினர்களின் மொத்த எண் ணிக் கையில் (சமூகமளிக் காதவர்களையும் உள்ளடக் கி) பெரும் பாணி மையான உறுப் பினர்களினால் பாராளுமன்றத் தில் ஆதரவளிக்கப்பட்டால் மட்டுமே சனாதிபதியி னால் பதவி நீக்கம் செய்யப்பட
86

முடியும் என 5 ஆம் பிரிவினால் ஆணையாளர்களுக்கு பதவிக்காலப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களைப் பதவி நீக்கஞ் செய்வதற்கான தீர்மானமானது பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றிலொரு பங்கிற்கும் குறையாத எண்ணிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களினால் கையொப்பமிடப்பட்டிருந்தாலன்றி பாராளுமன்றத்தின் கட்டளைப் பத்திரத்தில் வைக்கப்படலாகாது. இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒவ்வொருவரும் ஐந்தாண்டுக் காலத்திற்கு பதவி வகிப்பரென்பதுடன் மீள
நியமனத்திற்கு தகுதியுடையவரல்லர்.
இவ்வாணைக்குழுவிற்கு இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பில் பெறப்படும் எந்தக் கடிதத்திலும் தெரிவிக்கப்பட்ட எந்த விடயங்களையும் அந்த விடயங்கள் அது நியமிக்கப்பட்ட திகதிக்கு முற்பட்ட காலம் தொடர்பிலானதாக இருந்தாலும் பிற எந்தச் சட்டத்திற்கும் முரணான எந்த விடயம் பற்றியதகாவிருந்தாலும் அதைக் கவனியாமல் ஆய்வு செய்வதற்கான அதிகாரம் உள்ளது. ஆய்வு செய்யப்படும் நபர் தொடர்பில் அவருடைய வங்கிக் கணக்குத் தகவல்களையும் உள்நாட்டு இறைவரித் தகவல்களையும் பெறுவதற்கான அதிகாரத்தையும் பெறுவதற்கான அதிகாரத்தையும் உள்ளடக்கி சொத்துகள், பொறுப்புகள் பற்றிய பிரகடனத்தைச் செய்யுமாறு அவரிடம் கோருவதற்கும் அவருடைய எந்த இருப்பிடத்தையும் கப்பலையும் வாகனத்தையும் அல்லது வானூர்தியையும் பரிசோதனை செய்வதற்கும் அவற்றில் காணப்படும் எந்தப் பொருளையும் பறிமுதல் செய்வதற்குமான பரந்த அளவிலான அதிகாரத்தை இவ்வாணைக்குழு கொண்டுள்ளது. குற்றம் ஒன்று புரியப்பட்டதாக ஆய்வு புலப்படுத்துமிடத்து இவ்வாணைக்குழு அந்த நபருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடுக்கும்படி பணிப்பாளர் அதிபதிக்கு பணிப்பு விடுக்கும் அதிகாரமும் உள்ளது.
இவ்வாணைக்குழுவில் 1997 ஆம் ஆண்டில் திரு. சிவா செல்லையா இறந்ததன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மூன்றாவது உறுப்பினரொருவர் நியமிக்கப்படாதமை நீதிமன்றம் ஒன்றில் வழக்குகளைத் தொடுப்பதற்கான
87

Page 51
இவ்வாணைக்குழுவின் திறமை பற்றி பெருமளவு விவாதத்தை எழுப்பியுள்ளது. இலஞ்சம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் நியமிக்கப்படாமல் அது வெற்றிடமாக இருந்தமை பற்றி ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு முழுநேரச் சர்ச்சையொன்று ஏற்பட்டது. எஞ்சியிருந்த இரண்டு ஆணையாளர்களில் நம்பிக்கை இழந்த சனாதிபதி அவர்களை பதவிகளை விட்டு விலகுமாறு கோரிய போது அவர்கள் அவ்வண்ணம் செய்வதற்கு மறுத்து விட்டனர். எனவே அரசாங்கமானது இவ்வாணைக் குழுவின் செயற்பாடுகளை ஸ்தம்பித நிலைக்குக் கொண்டு வருவதற்கு வேறு வழிகளைக் கையாண்டது. ஆணக்குழுவின் செயற்பாடுகளை விசாரணை செய்வதற்கு ஓர் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. இத்தெரிவுக் குழுவின் நடவடிக்கைகள் ஸ்தம்பித்த தன் நிமித்தம் இவ்வாணைக்குழுவின் ஆணையாளர்கள் இருவரும் தொடர்ந்தும் இரண்டு வருட காலத்திற்கு (1999 திசெம்பர் முடிவுவரை) ஆணையாளர்கள் பதவிகளை வகித்தனர்.
இக்காலப்பகுதியில் தொடர்ந்தும் முறைப்பாடுகள் குவிந்தன.
இந்த விடயத்தை அரசாங்கம் கையாண்ட விதம் ஏற்கனவேயுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, அரச கருமமொழிகள் ஆணைக்குழு மற்றும் உத்தேசிக்கப் பட்டுள்ள பெண்கள் மீதான தேசிய ஆணைக்குழு போன்ற ஆணைக்குழுக்களில் பொது மக்களின் விசுவாசத்தைத் திரும்பவும் கொண்டு வரவில்லை. இது சட்டங்கள் எந்த அளவிற்கு ‘பூரணமான’ சட்டங்களாக இருந்தபோதிலும் அரசாங்கக்தின் உறுதியான விருப்பமும் பொதுமக்களின் விழிப்புணர்வும் ஒத்துழைப்பும் இல்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாதென்பதுடன் அவற்றை செயல் வலுவுடன் நடைமுறைப் படுத்த முடியாததென்பதையும் நிரூபித்துள்ளது. இவ்வாணைக்குழுவின் செயற்பாடுகள் உள்ளார்ந்த குறைபாடுகளினால் உட்பூசல்களினாலும் அரசியல் தில்லு முல்லு நடவடிக்கைகளினாலும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கு இடமளிக்காத முறையில் கணிசமான அளவு மாற்றம் கொண்டு வரப்பட்டலான்றி இவ்வாணைக்குழு பயனுள்ள முறையில் பணியாற்ற முடியுமா என்பது
கேள்விக்குறியாகவிருக்கும்.
88


Page 52


Page 53
இல
மனித உரிமை
இது இலங்கையில் 200 சம்பவங்களைக் கு மனித உரியை விவரமான அறிக்ை
சட்டத்துக்கும் சமுக 8, ஹின்சி டெ
இ6
Tel: 691228, 6 E-mail: StG) eurak Webside : http://ww
PRINTED BY UNEARTS (F
 
 

müao5
கள் நிலை 2000
0ஆம் ஆண்டில் இடம் பெற்ற குறிக்கும் இலங்கையின் Dகள் நிலை பற்றிய கையின் சுருக்கமாகும்.
த்திற்குமான அறநிலையம் றஸ், கொழும்பு - 8
orgos.
84.845 Fax. 686843 a.lk/ stadmin Gstnet.lk
w.lawandsociety trust.org
RS. 170/-
VT) LTD, COLOMBO 13, TEL: 330195,