கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையின் கல்விச்செலவு

Page 1
silver UBILEE
 
 
 
 

COMMEMORATIVE volume ment of Education
ersity of Jafna
Sri Lanka

Page 2

இலங்கையின் கல்விச் செலவு

Page 3

இலங்கையின் கல்விச் செலவு
மா. சின்னத்தம்பி
BA, BPhil (Hons) Dip. Ed, MA (Econ), MPhil (Ed) தலைவர், கல்வியியல்துறை, இணைப்பாளர், கல்வியியல் முதுமாணிக் கற்கைநெறி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
விஸ்டம் பப்ளிகேசன்ஸ்
2005
வெள்ளிவிழா ஞாபகார்த்த வெளியீடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல்துறை (1980 - 2005) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Page 4
Education expenditure of Sri Lanka
(Book on Economics of Education)
M. Sinnathamby
Title
Author
Copyright
First Edition
Publisher
Printer
ISBN
Price
EDUCATION EXPENDTURE OFSRI LANKA
M. Sinnathamby Head, Department of Education University of Jaffna.
Marimuthu SinnathambyC) July 2005
Wisdom Publishers,
Champion Lane, Kokuvil East, Kokuvil, Sri Lanka.
Techno Print, Colombo - 6 Tel : 0777-301920
955-1204-01-8
Rs. 225/= (In Sri Lanka) US $ 10.00 (In Foreign Countries)
All rights reserved with the author including the right to translate or to reproduce this book or parts
there of except for brief quotations in critical articles or reviews.

முன்னுரை
கல்வி தொடர்பான அணுகுமுறைகளில் பொருளியல் அணுகுமுறையும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. பாடசாலைகள் விழுமியங்களை மேம்படுத்துவதற்காக இயங்கும் நிறுவனங்கள் என்றும் உளவியல் ரீதியில் பிள்ளைகளுக்கு அறிவூட்ட முயல்வன என்றும் நம்பப்படுகிறது. இதே போல் பாடசாலைகள் தேசிய நிதியில் கணிசமான பகுதியை உறிஞ்சிக் கொள்வன வென்றும் அதற்குரிய வருவாய்களை சமூகத்திற்கு தரக்கூடியன வென்றும் கல்விப் பொருளியலாளர் நம்பினர். இந்த அணுகுமுறையில் செலவு நன்மை அளவிடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இத்தகைய பின்னணியில் இலங்கையில் அரசாங்கம் கல்வியில் மேற்கொண்ட செலவுகளின் போக்கு, பயன்பாடுபற்றி இந்நூல் ஆராய முற்படுகிறது. 1971 - 1981 காலப்பகுதியிலான செலவுப்போக்குப்பற்றி ஆராய்வதன் மூலம் கல்விச் செலவின் பன்முக அம்சங்கள் இதில் விளக்கப்படுகின்றன. நாடு இனப்பிரச்சினையின் நேரடிப்பாதிப்புக்கு உட்படுவதற்கு முந்திய காலப் பகுதியிலான அரசாங்க செலவு பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுக்கல்வி தொடர்பாக விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ள போதிலும் 1981 - 2001 வரை. யிலான காலப்பகுதிக்குரிய செலவுப் போக்குபற்றி பிறிதொரு நூலாக - விரிவாக ஆராயும் எண்ணம் எனக்குண்டு.
எனது பட்டப்பின் கல்வி டிப்ளோமாவுக்காக நான் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பதற்காக தேடிய தேடல்களை மையமாகக் கொண்டு இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1983 இன் பின் இலங்கை அரசு தன் கல்விச் செலவுக்கட்டமைப்பில் புதிய மாற்றங்
5 / மா.சின்னத்தம்பி

Page 5
களைச் செய்யவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டது. யுத்தச் செலவை அதிகரிப்பதற்காக கல்விச் செலவைக் குறைக்கும் கொள்கையை கடைப்பிடிக்கலாயிற்று. இதனால் 1981 இன் பின்புள்ள கல்விச் செலவுப்போக்கு பற்றி மற்றொரு கண்ணோட்டத்தில் தொடர்ந்து ஆராய்ந்து எழுதுவேன்
கல்வியின் பொருளியல் என்ற புதிய ஆய்வுப் புலத்தை எனக்குரியதாக தெரிவு செய்து நூல்களை எழுத வேண்டும் என்று எண்ணம் கொண்டதன் முதல் பிரசவமாக இந்நூல் வெளிவருகிறது. இந்த அணுகுமுறை பற்றி எனக்கு முதலில் போதித்தவர் எனது மானசீக குருவான - எனது ஆசான் பேராசிரியர் சபா ஜெயராசா ஆவார். அவருக்கு எனது இதயபூர்வமான நன்றிகள்.
இந்நூலை எழுதுவதற்கு நேரத்தை ஒதுக்குவதற்கு உதவியும் ஊக்கமுமளித்த எனது அன்பு மனைவி சசிலேகாவுக்கும் என் நன்றிகள் உரியன.
இந்த நூலை அழகாக அச்சிட்டுத்தந்த டெக்னோ பிரிண்டேஸ் ஸ்தாபனத்தவர்க்கும் என் நன்றிகள்.
இந்த நூலைத் தமிழ்கூறும் நல்லுலகம் விரும்பி ஏற்று ஆதரிக்கும் என்று நம்புகிறேன்.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக கல்வியியற் துறை தனது இருபத்தைந்தாவது வருடத்தை (1980 - 2005) நிறைவு செய்வதை யொட்டி அதன் ஞாபகார்த்தமாக இதனை வெளியிடுவதில் மன மகிழ்வு அடைகின்றேன்.
மா. சின்னத்தம்பி
தலைவர், கல்வியியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி, இலங்கை
30-04-2005
இலங்கையின் கல்விச் செலவு / 6

உள்ளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 1
அறிமுகம் - இலங்கையில் கல்வி
அத்தியாயம் 2
கல்வியில் அரசும் தனியாரும்
அத்தியாயம் 3
இலங்கையின் குறைவிருத்திப் பண்பும் கல்வியும்
அத்தியாயம் 4
மனித முதலீடாக கல்விச் செலவு
அத்தியாயம் 5
கல்விச் செலவின் அளவும் போக்கும்
அத்தியாயம் 6
கல்வியும் நலத்துறையும்
அத்தியாயம் 7
இலங்கையின் கல்விப் பிரச்சினைகள்
அத்தியாயம் 8
முன்னேற்றமும் முன்மொழிவும்
O5
O9
13
2O
29
41
61
74
94

Page 6
நூலாசிரியர் பிற நூல்கள்
பொருளியல் நூல்கள்
அரச நிதி தேசிய வருமானம் வெளிநாட்டு வியாபாரம்
ப பனம்
வங்கி
சென்மதி நிலுவை
பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு
கல்வியியல் நூல்கள்
ஆசிரிய முகாமைத்துவம் மனித வளமும் கல்வியும் (இணை ஆசிரியர்) ா கல்வித்திட்டமிடல் (இணை ஆசிரியர்)
இலங்கையின் கல்விச் செலவு /8
 
 

அத்தியாயம் 1
இலங்கையிற் கல்வி
அறிமுகம்
இலங்கையில் கல்வி அரசின் பொறுப்பாகவுள்ளது. 2004 இல் தொழிற்பட்ட 10,458 பாடசாலைகளில் 9766 பாடசாலைகள் இலங்கை அரசின் பொறுப்பில் செயற்படுவன. இதில் தேசிய பாடசாலைகளாக நிர்வகிக்கப்படும் பாடசாலைகள் 324ம் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஏனைய தனியார் பாடசாலைகள், பிரிவேனாப் பாடசாலைகளும் அரசாங்க கண்காணிப்புக்கும் உதவிக்கும் தகுதி பெற்றவை.
அரச பள்ளிக் கூடங்களில் மாணவ/ஆசிரிய விகிதம் 21:1 எனப் பேணப்பட்டு வருகின்றது. அரச பாடசாலைகளில் நாற்பது இலட்சம் மாணவர்கள் கல்விபயில்கின்றனர். அவர்களுக்கு பாடநூல், சீருடை, மதிய உணவு என்பவற்றுக்கு அரசாங்கம் பணம் செலவிடுகிறது. மாணவர்களின் போக்குவரத்துக்கு மானியம் வழங்குகின்றது. உடல் நலன் பேணுவதற்கும் உதவி வழங்கிவருகின்றது. 2004 ஆண்டு முடிவில் 196,000 ஆசிரியர்களைப் பாடசாலைகளில் நியமித்து வேதனம் வழங்கி வந்தது. இது மிகப் பெரிய செலவுக்கு வகை கூறி வருகிறது.
9 / மா.சின்னத்தம்பி

Page 7
பொதுக்கல்வி எனப்படும் பாடசாலைக் கல்விக்கென 2004 இன் முடிவில் 42,00 மில்லியன் ரூபாவைச் செலவு செய்திருந்தது. இதில் நடைமுறைச் செலவு 33000 மில்லியன் ரூபாவாக இருந்தமை கவனிக்கத்தக்கது. இதில் ஆசிரியர்களுக்கான சம்பளங்களே முக்கியமானவை. மூலதனச் செலவு 9000 மில்லியன் ரூபாவாக இருந்தது.
இலங்கையில் 12 மரபு வழிப் பல்கலைக்கழகங்களையும் ஒரு திறந்த பல்கலைக்கழகத்தையும் இலங்கை அரசாங்கம் நிருவகித்து வருகிறது. இங்கு 3611 விரிவுரையாளர்களை நியமித்து வேதனம், மற்றும் ஊக்குவிப்புப்படிகள் வழங்கிவருகிறது. மரபுவழிப்பல்கலைக்கழகங்களில் மாத்திரம் 64,801 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இலங்கையின் விரைவான வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும், மனித வள முன்னேற்றத்திற்கும் இலங்கையின் கல்வி முறையைப் பேணுவது அவசியம் என்று கருதி நிதி செலவிட்டு வருகின்றது. பொதுக் கல்வி, தொழில்நுட்ப மற்றும் தொழிற் கல்வி முன்னேற்றத்திற்கும், பல்கலைக்கழகமட்ட உயர் கல்விக்கும் வரவு செலவுத் திட்டத்திலிருந்து வருடாந்தம் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றது. கடந்த தசாப்த காலத்தில் பொதுக் கல்வி முறையில் அரசினால் கவனிக்கப்படாதிருக்கும் இடைவெளியைக் குறைக்கும் வகையில் தனியார் துறையின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்வதில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. 1998 இல் கல்விச் சீர்திருத்தங்களை பின்வரும் நோக்கங்களுடன் நடைமுறைப்படுத்துவதற்கு அதிக நிதியைச் செலவிட்டது.
* பாடசாலைக்கல்வியின் தரத்தை மேம்படுத்தல்
* பணி வழங்கலை வலுப்படுத்தல்
* கல்வி நிறுவனங்களின் சமூக, பொருளாதார தேவை
களை மேம்படுத்தல். இதேபோல் பல்கலைக்கழக மற்றும் தொழிற் கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலும் அதிக வளங்களை ஒதுக்கீடு செய்து மூன்றாம் நிலைக்கல்வியை விரிவுபடுத்துகின்றது.
2004 ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கம் கல்வி மீதான தன் செலவு அதிகரிப்பைத் தொடர்ந்து பேணுவதற்கு நடவடிக்கை
இலங்கையின் கல்விச் செலவு /10

களை மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய செலவின அதிகரிப்பு பின்வரும் நோக்கங்கள் கொண்டவை.
பொதுக் கல்வியிலான பிராந்திய வேறுபாடுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் கிராமிய மற்றும் சிறிய நகரங்களின் கல்வியை முன்னேற்றுவதற்கு நவோதய பாடசாலைத் திட்டத்தின் கீழ் இப் பகுதிகளில் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து ஆசிரியர் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது.
* தொழிற்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கற்றல்
அணுகு முறைகளை முன்னேற்றுதல்
* பாடசாலைக் கலைத்திட்டத்தில் தகவல் தொழில் நுட்ப
கல்வியை உள்ளடக்குதல்
* மாணவர்க்கு உளவளத்துணை வசதிகளை வழங்குதல் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகம் செய்தல்
* ஆங்கிலக் கல்வியை முன்னேற்றுதல்
உலகமயமாதலின் தேவைகளுடன் பாடசாலைக் கல்விமுறையையும், பல்கலைக்கழக கல்வி முறையையும் பொருத்தும் வகையில் பல நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதில் அதிக நிதியை செலவிடுகின்றது. எனினும் இந்த நடவடிக்கைகள் போதுமானதாயில்லை என்றும் அரசாங்கம் உணர்கின்றது. இதனால் பின்வரும் நடவடிக்கைகளிலும் அதிக நிதியை செலவிட்டு வருகின்
நிறது.
1) பட்டதாரி ஆசிரியர்கள் உயர் கல்வியும், தேர்ச்சியும் பெறுதற்கு உதவுதல். புத்தாக்க கற்பித்தல் முறைகளை இவர்கள் அறிந்து கொள்ளவும், கல்வி உளவியலை தெரிந்து கொள்ளவும் ஆசிரிய தொழிலை வாழ்க்கைத்தொழிலாக (Career) ஏற்போரை பாடசாலைகளில் நியமிக்கவும் முயற்சி செய்கிறது.
2) 2004 ஆம் வருடம் டிசம்பர் 26 இல் சுனாமி அனர்த்தம் காரணமாக இலங்கைத் தீவின் பதினொரு மாவட்டங்களிலும் முற்றாகச் சேதமடைந்த 68 பாடசாலைகளையும் ஒரளவு சேத
II / Lom.fl6or6UTš5th

Page 8
மடைந்த 105 பாடசாலைகளையும் மீளமைப்பதற்கு ரூபா 1131 மில்லியனைச் செலவிடுவதற்கும் தீர்மானித்தது.
3) கிராமிய ஏழை மாணவர்க்கு அரச பல்கலைக்கழகங்களில் அதிக வாய்ப்புக்களை வழங்குதற்கு வசதியாக நகர்ப்புறச் செல்வந்தரின் பிள்ளைகள் தம் சொந்தச் செலவில் உயர் கல்வி பெறுதற்கு வசதியாக வெளிநாட்டுக்கல்விநிறுவனங்கள் உயர் கல்வியில் ஈடுபடுதற்கு அரசாங்கம் ஆதரவும் உதவியும் வழங்கி வருகின்றது. தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதியும் ஆதரவும் வழங்கி வருகின்றது.
4) தகவல் தொழில் நுட்ப முறையூடாக, தொலைக்கல்வி முறையூடாகவும் உயர் கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துதல். தகவல் தொழில் நுட்பக்கல்வியை பல்கலைக்கழகங்களிலும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களிலும் முன்னேற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றது.
5) தொழில் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடக்குவதன் மூலம் தொழில் நுட்ப பட்டதாரிகளை உருவாக்கி நாட்டின் தொழிற்துறையையும், தொழில் வாய்ப்புக்களையும் விரிவுபடுத்துதல்.
இத்தகைய பல்வேறு புதிய முயற்சிகளுக்கும் அதிக நிதியைத் திட்டமிட்டு இலங்கை அரசாங்கம் செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையின் கல்விச் செலவு / 12

அத்தியாயம் 2
கல்வியில் அரசும் தனியாரும்
லகநாடுகள் தமது அபிவிருத்தி பற்றிய கொள்கைகள் மற்றும் திட்டமிடல் என்பவற்றில் கல்வியின் முக்கியத்துவத்தை அங்கீ. கரித்து வருகின்றன. செல்வந்த நாடுகளிலும் வறிய நாடுகளிலும் இதே நிலைமை தென்படுகிறது. முதலாளித்துவ நாடுகளிலும், சோசலிச மாதிரியில் செயற்படும் சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளிலும், சோசலிச நாடுகளாகவிருந்து முதலாளித்துவமாதி. ரிக்கு மாறி வருகின்ற நாடுகளிலும் கூட மிகப்பெரியதும், நிலைத்திருக்கக்கூடியதுமான அபிவிருத்தியை உருவாக்கும் உள்நிறை ஆற்றல்களைக் கொண்டதாக கல்வியை ஏற்றுக்கொண்டு செயற்பட்டுவருகின்றன.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதி, சர்வதேச அபிவிருத்தி நிறுவனம், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் போன்ற பலவும் கல்வியை பொருளாதாரத் துறை மாதிரியில் வடிவமைத்து அபிவிருத்திக்கான அதன் வகிபங்கினை ஆழமாக்கியும் அகலப்படுத்தியும் வருகின்றன. கல்வித் திட்டமிடலுக்கான சர்வதேச நிறு
13 / மா.சின்னத்தம்பி

Page 9
வனம் (IEP) போன்றன சர்வதேச நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்களை வடிவமைத்து, செயற்படுவதில் அதீத பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வருகின்றது.
தேசிய ரீதியில் பல நாடுகளின் அரசாங்கங்கள் 1940 களில் நலன் பேண் அரசுகளாக தம்மை பிரகடனப்படுத்தி, இலவச உணவு, நலத்துறை வசதி என்பவற்றை தமது செலவில் வழங்குவதில் அக்கறை காட்டிய அதே காலத்தில் இலவசக் கல்வி வழங்கு வதையும் தமது தார்மீகப் பொறுப்பாக ஏற்றுச் செயற்பட்டன. இந்தியா, இலங்கை, மலேசியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா போன்ற ஆசியாவின் அபிவிருத்தியடையும் நாடுகள் எல்லாமே இதே வகை கொள்கையைக் கடைப்பிடித்தன.
இலங்கை 1940களில் இலவசக் கல்வியை வழங்குவதில் gir6Jib &isitiqugi. (B6urII5g5 C.W.W. கன்னங்கராவின்ச்மத்துவக்கல்வி வாய்ப்பு பற்றிய மேன்மையான உணர்வும் சிந்தனையும் தாய் மொழி மூலக்கல்வி, இலவசக்கல்வி, கட்டாயக்கல்வி பற்றிய கொள்கைகளை அரச கல்விக் கொள்கைகளாக பரிணமிக்கச் செய்திருந்தன. கல்வியை சனநாயகப்படுத்துவது, இலவசப் பண்டமாக கல்வியை வழங்குவது, போன்ற செயற்பாடுகள் கிராமங்களை கல்வியறிவு பெறச் செய்து அபிவிருத்தியின் நலன்களை பகிர்ந்து கொள்வதற்கும்; அபிவிருத்திக்குரிய விளைதிறன் மிக்க வகிபங்கை உறுதிசெய்வதற்கும் அடிப்படையாக அமைந்தன. மத்திய மகாவித்தியாலயங்களைக் கிராமங்களில் உருவாக்கும் அவரது எண்ணமும் செயலும் வசதியும் வளங்களும் கொண்ட கற்றல் சூழலை கிராமிய மக்கள் பெறும்படி செய்தது. அக்கால சட்டசபையில் திரு.ஜே. ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் பாடசாலைப்பிள்ளை. களுக்கு இலவச சீருடையும், இலவச பாடநூலும் வழங்கவேண்டும் என்ற எண்ணத்தை வெளிக்காட்டியிருந்தார். இவை அடுத்து வந்த தசாப்தங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. 1960களில் பெரும்பாலான வளர்முகநாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை மக்களின் எழுத்தறிவும் பொதுக் கல்வித்தரமும் உயர்வாக இருந்தமைக்கு இவை வழிகோலியிருந்தன. எனினும் ஒரே மாதிரி. யான கல்வியை தொடர்ச்சியாக தீவு முழுவதும் வழங்கி வந்தபோது, தேசிய ரீதியாக தொழில்நுட்பம், தொழிற் சந்தை,
இலங்கையின் கல்விச் செலவு /14

ஊழியத்திறன்கள், ஊழிய நியமம் தொடர்பாக உலக ரீதியில் ஏற்பட்ட மாற்றங்களை அரசாங்கங்கள் அதிக சிரத்தையுடன் கூர்மையாக கவனிக்கத்தவறின. பலவீனமான ஆட்சிப் பணித்துறை முறை 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட நலனோம்பு கல்விக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளினால் முரண்பட்ட விளைவை உருவாக்கின. தொழிற் சந்தையுடன் இணங்க முடியாத-இசைவுபட இயலாத அறிவும் திறன்களும் மனப்பாங்கும் கொண்டவர்களை வகை தொகையின்றி உருவாக்கும் கல்வித் தொழிற்கூடங்களாக பாடசாலைகள் வளர்ச்சி பெற்றன என்று கண்டிக்கப்பட்டது. தொழிற்சந்தைக்கும் இலங்கையின் கல்வி முறைக்கும் பொருத்தமின்மை (Mismatch) வளர்ந்திருந்தது. இதற்கு தர்மசிந்தை கொண்ட ஆனால் தொலை நோக்கற்ற நீண்டகாலத்திட்டமும், வினைத்திறனற்ற அரச கல்விச் செயற்பாடுகளும் காரணம் என்றும் விமர்சிக்கப்பட்டது. எல்லா மக்களுக்கும் பயன்பட்டிருக்கக்கூடிய விவசாய, கைத்தொழில் உற்பத்திகள் நலத்துறை வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்ற துறைகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கக்கூடிய இலங்கை மக்களின் வரிப்பணம் கல்வியில் முதலீடு செய்யப்பட்டதால், விரக்தியும், சலிப்பும், முரண்சிந்தனையும் கொண்ட கல்விகற்ற வேலையற்றபட்டாளத்தை மாத்திரமே உருவாக்க முடிந்தது. இவர்கள் சமூக அரசியல் அமைதியின்மைக்கான வலுவான சனநாயக சக்தியாக மாறி தேசத்தின் அபிவிருத்தி மூலங்களை சின்னாபின்னப்படுத்துவதன் மூலம் தாம் உணராமலே அடுத்த தலைமுறையினருக்கு இதே கல்வியுரிமை மற்றும் வசதிகள் கிடைப்பதைத் தடை செய்திருந்தனர். தேசியநிதி, மனித ஊழியநாட்கள், அமைதி, சமூக இணக்கம் போன்ற எல்லாவற்றிலும் விரும்பத்தகாத விளைவுகளை இவை உருவாக்கியுள்ளன. கல்வியிலான அரச முதலீடுகள் அதற்குரியநியாயமான வருமானங்களையும் உற்பத்தியையும், சமூக அமைதியையும் தரத்தவறியதோடு அரசியல் ஸ்திரமின்மைக்கும் காரணமாயிற்று. கல்வியை பொறுப்பேற்பதிலிருந்து அரசாங்கம் பின்வாங்கிக் கொள்ள வேண்டும். என்ற புதிய சிந்தனை, புதிய அணுகுமுறை ஒன்றை உதவிவழங்கும் நாடுகளும் உலக வங்கியும் வற்புறுத்தும் நிலைமை ஒன்று உருவாகி, அதுவே தற்போதைய நிதர்சனமாகியுள்ளது. கல்வித்துறை நலன் பேண்துறை போலவும், தொழி.
15 / மா.சின்னத்தம்பி

Page 10
லின்மையைக் குறைப்பதற்கான மானிய ஏற்பாடு கொண்டதுறை போலவும் இனங் காணப்பட்டுள்ளது. அரை நூற்றாண்டுகால அரச d56ü65 (Public Education System) (p60pu56ór LigusiaOTIrildb6f 60TT6i இலங்கை நொந்து போயுள்ளது.
எமது தேசத்தின் இந்த அனுபவம் புரிந்து கொள்ளக்கூடியது; நாம் பட்டுணர்ந்தது, துயரத்துடன் ஏற்றுக்கொண்ட உண்மையுமாகும். இதே நிலைமை பல்வேறு வளர்முக நாடுகளுக்குமுரியதாகும். கல்வியை ஆன்மீக ரீதியாக, உளவியல் ரீதியாக, சமூக ரீதியாக நோக்குவதைவிடவும் பொருளாதார ரீதியாக நோக்குவது எத்துணை தூரம் சரியானது என்பதை இந்த அனுபவங்கள் விளக்குகின்றன. கல்வியின் வெளியீடுகளின் பொருளாதார தகைமை, பொருளாதாரப் பயன்பாடு பற்றிய மதிப்பீடுகள், அம் மதிப்பீடுகள் வெளிப்படுத்தும் முடிவுகள், அத்தகைய முடிவுகளின் நம்பிக்கை தரும் அம்சங்கள் என்பனவே இன்று கல்வியாளரின் கருத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தசாய்த காலம் தனியார் கல்வி நோக்கிய கொள்கைகளையும், நடைமுறைகளையும் வற்புறுத்திய காலப்பகுதியாகும். தனியார் துறையினர் இலாப நோக்கோடு, குறிக்கோள்களுடன், நிறைந்த போட்டியிடும் ஆற்றலுடன் சந்தை நிலைமைக்கேற்ப திட்டமிட்டு கல்வித் தொழிலை (Education BusineSS) நடாத்தத் தொடங்கினர். ஒழுங்குமுறையான நிறுவனமாதிரி. யிலான முகாமைத்துவத்தில் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கத் தொடங்கினர். நிதிமுகாமைத்துவம், மனித வளமுமைத்துவம், நேர முகாமைத்துவம் என்பவற்றுக்கு அமைவாக கல்விநிறுவனங்களை நிர்வகிப்பதில் அதிக கவனம் கொண்டவர்களாக தனியார் விளங்கினர். வளமுகாமைத்துவம், மாற்றங்களை முகாமை செய்தல், முரண்பாடுகளை முகாமை செய்தல், சுய முகாமைத்துவம் போன்ற பல அணுகுமுறைகளிலும் கவனம் செலுத்துகின்றனர்.
தனியார்துறையினர் பங்குடைமை மாதிரியிலும் பிறநாட்டுநிறுவனங்களுடனான கூட்டு முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். பல்தேசியநிறுவன மாதிரியிலும் கல்விநிறுவனங்கள் தொழிற்படுகின்றன.
இலங்கையின் கல்விச் செலவு / 16

திறமையான முகாமைத்துவ சபை, வினைத்திறன் மிக்க நிர்வாக ஆளணி உதவியுடன் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கின்றனர். மாணவர் அனுமதி, கலைத்திட்டம், கற்றல் முறைகள், கற்பித்தல் ஆளணியினர், கல்வி சார் உட்கட்டமைப்பு, புறக்கலத்திட்டத்தினுடான பல் வகைத் தேர்ச்சி மற்றும் ஆளுமை விருத்தி, மதிப்பீட்டு முறைகள், கல்வித்தகைமைக்கான அங்கீகாரம், கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனை, மாணவர் - கல்விநிறுவன நீண்ட கால நல்லுறவு இணைப்புச் செயற்பாடுகள் போன்ற பலவற்றி. லும் தீவிரமான கவனம் செலுத்திவருகின்றனர். நிர்வாக, முகாமைத்துவ முடிவுகளை மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது; முடிவுகள் விரைவுபடுத்தப்படுகின்றன; யதார்த்த நிலைமைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன; இவற்றால் வினைத்திறனும், விளைத்திறனும் மிக்க முடிவுகளை தனியார் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. தமது முதலீடுகள், தமது இடர்கள் (RiskS) தமது இலாபம் என்ற உள்ளுணர்வுடன் செயற்படுவனவாக தனியார் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன.
இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் மிஷனரிப் பாடசாலைகள் மிக உன்னதமாக ஆங்கில மொழி மூலமாக கற்பிப்பதன் மூலம் மேலைத் தேச கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியை வழங்கின. கிராமங்களில் இயங்கிய சுயமொழிப் பாடசாலைகளைவிட ஆங்கில மொழி மிஷன் பாடசாலைகள் திறமையுடன் செயற்பட்டு அந்த மாணவருக்கு உயர்ந்த தொழில், வருமானம் மற்றும் அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தன. சுதந்திர இலங்கையில் பல்வேறு சுதேசிய மதநிறுவனங்களினால் பாடசாலைகள் நிர்வகிக்கப்பட்ட போது ஆங்கில மொழிமூலமிஷன் பாடசாலைகளும் தொடர்ந்து இயங்கின. 1960 களில் அரசு பாடசாலைகளை சுவீகரித்த போது கூட மிஷனரிமாரினால் நிர்வகிக்கப்பட்ட பாடசாலைகள் தனியார் பாடசாலைகளாகவே இயங்கின. 1970 களில் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான தரப்படுத்தலினால் போட்டிமிக்க தனியார் டியூட்டரிகள் அதிக எண்ணிக்கையில் நகரங்களில் தொடங்கி, படிப்படியாக உபநகரங்களுக்கும், கிராமங்களுக்கும் பரவின. இலாப நோக்குடன், ஒழுங்குமுறையான அரச கண்காணிப்பு ஏதுமின்றி, பாடத்திட்டத்தை நிறைவு செய்து பரீட்சைக்கு வழிகாட்
17 / மா.சின்னத்தம்பி

Page 11
(Bib gafifu it fiti ibgs bei)67 (Teacher Orieanted Education) (up60p கொண்டனவாக தனியார் டியூட்டரிகள் பெருகியுள்ளன. அரச பாடசாலைகளுக்குச் சமாந்தரமாக ஆனால் பாடசாலை முறையைப் பலவீனப்படுத்தி வரும் உப செயலமைப்பாக (Sub-System) தனியார் டியூட்டரிகள் பெருகியுள்ளன. அதிக விமர்சனத்துடன் ஆனால் பெற்றோர், மாணவர் ஆதரவுடன் தவிர்க்க முடியாத பலவீனங்களாக அவை வளர்ச்சிபெற்று வருகின்றன.
1990 களில் மற்றொரு வளர்ச்சிக்கட்டத்தை அவை எட்டிப் பிடித்தன. சர்வதேசியப் பாடசாலைகளையும் சர்வதேச பல்கலைக்கழகங்களின் வளாகங்களையும் தனியார் துறையினர் அதிகளவு முதலீட்டுடனும் மிகுந்த போட்டித்திறனுடனும் நிர்வகிக்கலாயினர். அரசினால் கவனிக்கப்படாது, பேச்சளவில் மாத்திரம் அடிக்கடி குறிப்பிடப்படும் முன் பள்ளிக்கல்வியில் தனியார் கூடிய கவனம் செலுத்தி வந்தனர். சுதேசிய மொழிகளிலும் ஆங்கில மொழி மூலமாகவும் இப்பள்ளிகள் நடாத்தப்பட்டன. சர்வதேச அங்கீகாரம் பெற்ற கற்கை நெறிகளிலும் (Cima போன்ற) தனியார் நிறுவனங்கள் அதிக ஈடுபாடு காட்டிவருகின்றன. தகவல் மற்றும் தொடர்பாடல் கல்வியில் தனியார் கல்வி நிறுவனங்கள் அசாதாரணமான வகையில் கவனம் செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் பொதுக் கல்வி, உயர் கல்வி, தொழில் நுட்பக் கல்வி, போன்றவற்றில் அரசாங்கம் தன் பங்களிப்பை ஒடுக்கி வருவது தெளிவாக தென்படுகிறது. பதிலாக அரசாங்கமே பொருத்தமான சட்டங்களையும் இயற்றி, போதுமான உதவிகள், பாதுகாப்பு, உத்தரவாதங்கள் என்பவற்றை தனியாருக்கு வழங்கி தனியார் கல்வி முறையை ஊக்குவித்து வருகின்றது. அரசின் பங்களிப்பு வெகுவாகக் குறைந்து வருகின்றது. பதிலாக தனியார் துறையின் விரிவாக்கம் பல மட்டத்திலும் ஊக்குவிக்கப்படுகிறது. தனியார், அரச கல்வி நிறுவனங்களுக்கு எதிராக - போட்டியாக பல்வேறு கற்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பல சந்தர்ப்பங்களில் அரச கல்விநிறுவனங்களின் பல்வேறு பணிகள், செயற்திட்டங்கள் கூட தனியார் துறையிடம் ஒப்பந்த வேலைகளாக கையளிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் கல்விச் செலவு / 18

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அரச பாடசாலைகளை ஒரு உற்பத்தி நிறுவன மாதிரியில் நிர்வகிக்க வேண்டும் என்ற நோக்கோடு உள்ளிட்டு - வெளியீட்டு அணுகுமுறையைப் புரிந்து கொள்வதற்கும் அரசாங்கம் அதிபர்களுக்கு உதவி வருகிறது.
இவ்வாறு முதலீடு, வெளியீடு, வினைத்திறன், விளைத்திறன் என்ற அணுகுமுறைப்படி அரசிடமிருந்து கல்வி நிறுவனங்கள் தனியார் துறைக்கு நகர்த்தப்படுவது முக்கியமான தளமாற்றமாகும். இத்தகைய மாற்றம் முழு அளவில் நிகழுமானால் அரசாங்கம் கல்வியில் முதலீடு செய்யும் வாய்ப்புக்கள் வெகுவாகக் குறையும். இத்தகைய அரச கல்வி முதலீட்டின் வீழ்ச்சி எதிர் காலத்தில் ஏற்படுத்த விருக்கும், சமூக பொருளாதார, அரசியல் பாதிப்புக்கள் பற்றி கல்வியாளர் எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை நிச்சயமாக ஏற்படும்.
19 / மா.சின்னத்தம்பி

Page 12
அத்தியாயம் 3
இலங்கையின் குறைவிருத்திப் பண்பும் கல்வியும்
லங்கை வளர்முகநாடுகளில் தாழ்வருமானமுடைய, ஆனால் சமூக அபிவிருத்திநிலைமைகளில் குறிப்பிடத்தக்களவு மேம்பாடுடையதாகக் காணப்படுகிறது. முழுமையான சமூகநல விளைவுகளின்படியும், மறுபங்கீட்டுக் கொள்கையின்படியும் இலங்கை தற்போது பெருமளவு விவாதிக்கப்படும் பெளதீக வாழ்க்கைத் தரச் சுட்டெண்படி (PQL) குறிப்பிடத்தக்களவு வெற்றியடைந்திருந்தது. அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்வதிலும் வெற்றியடைந்த ஏனைய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலும், கூடிய தலாவருமானமுள்ள நாடுகளும் கூட நிறைவேற்ற முடியாத சாதனைகளை இலங்கை அடைந்துள்ளது. இது நான்கு தசாப்தங்களாக அரசாங்கம் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், சுகாதாரம், உணவு மானியம் போன்ற சமூக நலச் சேவைகளை அரசு பொறுப்பேற்றதன் விளைவாகவே ஏற்பட்டதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையின் கல்விச் செலவு /20

இலங்கை குடியேற்ற நாடாயிருந்து விடுதலை பெற்ற போது அதன் அடிப்படைப் பொருளாதார, சமூகக் கட்டமைப்புக்களைத் தொடர்ந்து பேணுவதாகச் செயற்பட்டது. கல்வியமைப்பும் பிரித்தானிய மாதிரியை அடிப்படையாகக் கொண்டு தேவைக்கேற்ப காலத்துக்குக் காலம் சில மாற்றங்களை மேற்கொண்டுவந்துள்ளது.
வாக்குரிமை அடிப்படையிலான கட்சி அரசியல் முறையானது சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்தில் பெரும்பகுதி மக்களையும், புதிய வளங்களையும், பெருந்தொகையான வாக்குகளையும் கொண்ட கிராமியத்துறையில் கல்வியைப் பரவலாக்கும் நடவடிக்கைகள் சார்ந்து புதிய பரிமாணத்தை உருவாக்கின. இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சராக திரு.C.WW. கன்னங்கரா அவர்கள் ஜூலை 9, 1931 ல் அப்போதைய நிர்வாகக்குழுவினால் தெரிவு செய்யப்பட்டார். 1936ன் பொதுத் தேர்தலுக்குப்பின் மீண்டும் கல்வி அமைச்சரானார். தொடர்ச்சியாகப் 16 வருடங்கள் கல்வியமைச்சராக இயங்கிய திரு. கன்னங்கராவின் ஆரம்ப நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கங்கள் கல்வித்துறையில் மிகப் பெரிய பங்கினை வழங்குவதற்கு வழிகாட்டியாக அமைந்தன. அவர் இந்த நாட்டின் சிறுவர், சிறுமியர் அனைவருக்கும் கல்விச் சந்தர்ப்பங்களைத் திறந்து விடுவதன் மூலம் நல்வாழ்வுக்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தினார். அவர்களின் சமூக அந்தஸ்து, பொருளாதார நிலைமை, இனம், சாதி போன்ற எவ்வித வேறுபாடுகளையும் கருத்திற் கொள்ளாமல் இக்கல்வி வாய்ப்பை இலவசக்கல்வி முறையினால் ஏற்படுத்தினார். இதுவே தொடர்ந்து வந்த நான்கு தசாப்தங்களில் இலங்கையின் கல்வித்தராதரம் உயர்நிலையடைவதற்கு காரணமாயிற்று.
இலங்கையில் ஒவ்வொரு மதத்தினரும் தத்தம் சமயம் சார்ந்த பிள்ளைகளுக்கென தனிப்பாடசாலைகளைத் தொடக்கி வளர்த்தனர். இவை சமூகத்தினரைப் பல பகுதிகளாக கூறு போடுவதாயமைந்தன. அரசாங்கம் கல்வியில் தலையிடத் தொடங்கியதால் எல்லோரையும் ஒன்றிணைக்கும் நிறுவனங்களாக அரச பாடசாலைகள் அமைந்தன. தாய்மொழிக்கல்வி எனும் கோட்பாடும் பின்பற்றப்பட்டபோது வருமான வேறுபாடற்ற முறையில் எல்லா வகுப்பினருக்கும், கல்வி வழங்கப்படும் வாய்ப்பு அரசினால் ஒழுங்கு
21 / மா.சின்னத்தம்பி

Page 13
படுத்தப்பட்டது. முன்னைய சோசலிச நாடுகளில் அதிக அழுத்தம் கொடுபடும் முன்பள்ளி முறையில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து அக்கறை காட்டாத போதிலும், ஆரம்பப்பள்ளிப் படிப்பு முதல் பல்கலைக்கழகக்கல்வி வரை இலவசக்கல்வி வழங்கும் அரச நடைமுறையே இலங்கையின் கல்வித்தரத்தை துரித கதியில் அதிகரிக்கச் செய்தது.
சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கை ஒரு சமூகநலன் பேணும் அரசாக செயற்பட்டு வந்துள்ளது. மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அவர்கள் தமது சுய ஆற்றலால் நிறைவு செய்ய முடியாத நிலைமையில், அரசு தானே அவற்றை வழங்கி, வாழ்க்கைத் தரத்தைப் பேண முயன்றது. இவ்வகையில் பின்னணித் துறைகளில் முதன்மையான சமூகத் துறையாக கல்வி கருதப்பட்டு, அதில் அரசாங்கத்தின் நிதி அதிகளவில் செலவிடப்பட்டது. கல்வியின் மீதான செலவுகளினால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் நீண்டகாலத்தில் கல்வி மேம்பாட்டை ஏற்படுத்தக்கூடியன. கல்விப் பொருளியலாளரான ஜோன் வைசி (John Vaizey: 1956) அவர்களின் கூற்றுப்படி "பொருளாதார அபிவிருத்திக்கு கல்வி மிக அவசியமாக வேண்டப்படுகிறது. மறுபுறத்தில் கல்வி, அறிவுசார் முன்னேற்றங்கள் என்பன பொருளாதார அபிவிருத்தியினால் மேம்படுத்தக்கூடியன." இலங்கை அரசும் இவ்வாறே உணர்ந்து செயற்பட்டு வந்துள்ளது.
இலங்கை தான் ஒரு அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற அடிப்படையில் தன்நாட்டில் கிடைக்கும் வளங்களை அடையாளம் காண்பதும், அவற்றைப் பயன்பாட்டுக்குள் கொண்டு வருவதும், அதில் இயன்றளவு சிக்கனங்களை வற்புறுத்துவதும் அவசியமானது. இலங்கையில் மனிதவளம் போதியளவில் உள்ளது. இதை வினைத்திறனுடையதாக மாற்றுவதற்கு கல்விச் செலவுகள் அவசியம் என அரசினால் உணரப்பட்டது. நாட்டின் ஊழியப்படை. யின் வினைத்திறனை அதிகரிப்பதால் துரித வளர்ச்சியைப் பல்துறைகளிலும் ஏற்படுத்துவது சாத்தியமாகும் என உணர்ந்ததால் அரசாங்கம் கல்வித்துறை மீது அதிகளவு பணம் செலவிடலாயிற்று.
இலங்கையின் கல்விச் செலவு /22

கல்வியின் மீதான அரசாங்க செலவு
இலங்கையில் உணவுமானியத்துக்கடுத்த மிகப்பெரியநலன்புரி செலவு கல்வி, சுகாதாரம் என்பவற்றின் மீதானதாகும். 1950 க்குப் பிற்பட்ட காலத்தில் அரசாங்கங்களின் நலன்புரி செலவுகள் சடுதியாக அதிகரித்தன. 1946ல் இறப்புவீதத்தில் ஏற்பட்ட சடுதியான வீழ்ச்சியினால் குடிப்பெருக்கத்தில் ஏற்பட்ட அதிகரிப்பைத் தொடர்ந்து பாடசாலை செல்லும் மாணவர் தொகை பெருகியதன் விளைவாக கல்விச் செலவுகள் அதிகரிக்கலாயின. 1960ல் கட்டணம் அறவிடும் தனியார் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அரசின் கல்விச் செலவு அதிகரிப்பு குறிப்பிடத்தக்கதாயிற்று. இலவசக்கல்விமுறையில், ஆசிரியர் முழுச் சம்பளச் செலவு, உபகரணச் செலவு, கல்விசார் உள்ளமைப்பு பராமரிப்புச் செலவு போன்ற எல்லாச் செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றது. அத்துடன் புலமைப் பரிசில், உதவிக் கொடுப்பனவுகள், இலவச மதிய உணவு, இலவச சீருடை இலவசப் பாடநூல்கள் போன்ற பலவும் காலத்துக்குக் காலம் அரசினால் வழங்கப்பட்டன. எல்லோருக்கும் இலவசமாக கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையினால் பள்ளி செல்லும் மாணவர் தொகையில் சடுதி. யான அதிகரிப்பு தென்பட்டது. 1950 ஐத் தொடர்ந்த இரு தசாய்த காலத்தில் பாடசாலை செல்லும் மாணவர் தொகை இரட்டிப்பாயிற்று. இதே போல் நாட்டின் எழுத்தறிவுவீதமும் குறிப்பிடத்தக்களவில் உயரலாயிற்று. பாடசாலையில் மாணவர் சேரும் விகிதம், வியது வந்தோர் கல்வியறிவு வீதம் என்பனவும் அதிகரித்தன. கட்டாயக் கல்வி வயது பற்றிய சட்டம் எதுவும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படாத போதிலும் ஆரம்பக்கல்வி கட்டாயமானதாகவே வற்புறுத்தப்பட்டு வந்துள்ளது. இடைநிலைக்கல்வி, உயர் கல்வி என்பவற்றிலீடுபடும் மாணவர் தொகையும் அதிகரிக்கலாயிற்று. இவற்றுடன் இணைந்த முறையில் பாடசாலைகளின் எண்ணிக்கையிலேற்பட்ட அதிகரிப்பும் அரச செலவினங்கள் உயர்வதற்குப் பொறுப்பாயிருந்தது.
சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் அந்நிய அரசாங்கங்கள் பொருளாதாரச் சுரண்டலை இலகுவாக மேற்கொள்ளக்கூடிய அரசியல், சமூக சூழலை வளர்க்க விரும்பின. இலங்கையின் சுயமான
23 / மா.சின்னத்தம்பி

Page 14
வளர்ச்சிக்கான ஊற்றுக்களை திறந்துவிட அவை விரும்பவில்லை. இதனால் கல்வி மீதான செலவுகளை அதிகரிப்பதில் அக்கறை காட்டவுமில்லை. ஆனால் சுதந்திரத்தின் பின் மக்களின் ஆதரவுை திரட்டும் எத்தனங்களில் அரசாங்கங்கள் அக்கறை காட்டின. இதனால் சமூகத்துறையான கல்வியில் அதிகளவு பணத்தை செலவிட முனைந்தன.
இலங்கையின் கிராமங்களின் கல்வியில் அதிகளவு அக்கறை காட்டப்பட்ட போதும், பெருந்தோட்டத்துறையில் இத்தகைய ஆர்வம் பரவவில்லை. பெருந்தோட்டங்களும் கிராமியத்தன்மையிலிருந்த போதும் அவற்றின் தனித்தன்மையான பொருளாதார, சமூக இயல்புகளின்படி அவை தனித்துறையாக பிரித்து நோக்கப்பட்டன. 1961ம் தேசிய கல்விக்குழு, தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியோரின் அறிக்கைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையானது "எல்லாத் தோட்டப் பாடசாலைகளும் அரசினால் பொறுப்பேற்கப்படும். அவை ஆதாரப் பாடசாலைகளாக இயங்கும்" என்று கூறியது. ஆனால் இன்றுவரை இவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. நாடற்றவர் என்ற அடிப்படையில் இவர்கள் வாக்குப்பலம் அற்றிருந்ததால் அரசு இத்துறையில் செலவிட தயக்கம் காட்டியது. கல்வியில் அதிகளவு மானியம் செலவிடக்கூடிய பொருளாதார பலத்தைத் தந்துதவும் தோட்டத்துறையினர் அந்த மானியங்களின் நலன்களைப் பெற உரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை."
வளர்முக நாடுகள் பொதுவாகக் கல்வி மேம்பாட்டுக்கு நிதி திரட்டும் பிரதான பிரச்சினைக்குட்பட்டேயுள்ளன. இங்கு கிராமங்கள் அதிகளவு குடித்தொகையையும், விருத்தி செய்ய வேண்டிய வளங்களையும் கொண்டிருப்பதால், கிராமிய ஆரம்பப்பாடசாலை தொடர்பாக, முதலீடு செய்வதற்குரிய மாற்றுத்திட்டத்தை விஞ்ஞானபூர்வ. மாக தெரிவு செய்ய வேண்டிய நெருக்கடியிலுள்ளன. கல்விச் செலவிற்கான வருமானத் தகுதியில் அதிகளவு நம்பிக்கையில்லாத போதிலும் சமத்துவம் பேணும் நோக்கில் இயன்றளவு கிராமிய ஆரம்பக் கல்வியில் தொடர்ந்தும் முதலிடுகின்றன. இதே தன்மையில்தான் இலங்கை அரசாங்கங்களும் கிராமியத் துறைகளின் அடிப்படைக் கல்விச் செலவுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கல்விச் செலவு / 24

இலங்கையில் கல்விச் செலவுகளை அதிகரிப்பதில் நெருக்கடிகள் எதிர்கொள்ளப்பட்டே வந்தன. தைவான், கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கல்வி, சுகாதாரம், போஷாக்கு போன்ற அடிப்படைத் தேவைகளையும் நிறைவு செய்து, பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் இலங்கை, பர்மா, கியூபா, தன்சானியா போன்ற நாடுகளில் இத்தகைய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கான அமையச் செலவாக, பொருளாதார வளர்ச்சி அமைந்துள்ளது. அதாவது பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துக் கொண்டாற்றான் கல்வி போன்ற அடிப்படைத் துறைகளில் அதிகம் செலவிடலாம் என்ற நிலையே காணப்படுகிறது. இதனடிப்படையில் இலங்கையிற் கூட மெய் மூலதனச் செலவுகள் குறைக்கப்பட்டிருந்தன. 1976-1977 ல் உற்பத்தித் துறையிலான மெய் மூலதனச் செலவு 30.0 சதவீதத்தால் குறைக்கப்பட்டபோது கல்விச் செலவினை உள்ளடக்கிய சமூகத்துறையிலான செலவுகள் 40.0 சதவீதத்தால் குறைக்கப்பட்டிருந்தன." ஆயினும் பல தசாப்தங்களாக கல்விக்கு நிதி ஒதுக்குவதில் குறிப்பிடத்தக்களவு முன்னுரிமை அரசியல் மட்டத்தில் வழங்கப்பட்டு வந்துள்ளமை அவதானிக்கத் தக்கதாகும்."
இலங்கையில் கல்விக்குப் பொறுப்பாயுள்ள உயர்ந்த மனிதர்கள் கல்வியில் எங்கு அழுத்தம் கொடுபடல் வேண்டும் என்பது பற்றி, (கிடைக்கும் வளங்கள் போதாநிலையில்) கடினமான தீர்மானம் எடுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என யுனெஸ்கோ (UNESCO) பிரதேச ஆலோசனைக்குழு கருத்துத் தெரிவித்துள்ளது.
கல்வி மீதான செலவுகளை அதிகரிக்கும் போது, இலங்கையில் பின்வரும் நோக்கங்கள் ஒரளவு பின்பற்றப்பட்டன.
இலங்கைக்கு உயர்ந்தளவு சமூக, பொருளாதார விளைவுகளைத் தரும் கல்வித் துறையை ஊக்குவித்தல். இலவச, கட்டாய அடிப்படைக்கல்வி இலக்குகளை நடைமுறைப்படுத்தல். பொதுக்கல்வியுடன் தொழில்நுட்பக் கல்வியையும் மேம்படுத்தல்.
25 / மா.சின்னத்தம்பி

Page 15
தொழில் நுட்பக் கல்வியில் பல்வேறு மட்டங்களைத் தேவைக்கேற்ப விருத்தி செய்தல்.
உயர் கல்வியை தேசிய அபிவிருத்தித் திட்டங்களில் பங்கேற்கச் செய்தல்.
பாடசாலை மட்டத்திலான தொழிற் கல்வி முறைக்கும் வேலைப் பயிற்சி அனுபவத்துக்குமிடையில் சமநிலை ஏற்படுத்த எத்தனித்தல்.
தேசிய அபிவிருத்தி நோக்கில் அரசிறையிலான கல்விச் செலவின் சதவீதத்தை இயன்றளவு பேணுதல்.
கல்வியின் தரத்தைப் பாதிக்காமல் எத்தகைய கல்விப் பொருளியலை அறிமுகப்படுத்தலாம் என முயற்சித்தல்.
கல்வித்தரத்தை உயர்த்தக்கூடியதாக ஆசிரிய கல்வியை விரிவுபடுத்தல்.
பாடசாலை மட்டத்தில் சமூக நீதியைப் பேணும் நோக்கில் பல சேவைகளை வழங்குதல்.
இலங்கை சுதந்திரத்திற்கு முன்பே சமூக அபிவிருத்தித் துறையில் பொதுத்துறை பற்றிய அவதானம் ஏற்படுத்தப்பட்டது. சுதந்திரத்தின் பின் அரசாங்க செயற்திட்டங்கள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டவற்றின் அடிப்படையில் சமூகநலத் திட்டங்களின் பிரதான அம்சங்களாக மாற்றம் பெற்று வரலாயின. இதனால் அதிகரிக்கும் மாணவர் தேவைக்கேற்ப அரசின் இலவச சுகாதாரச் சேவைகளும், கல்வி வசதிகளும் வழங்கப்படலாயின. சமூகநலச் செலவுகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டன. அரச பாதீட்டில் மூன்றில் ஒன்றுக்கு மேலான நிதி இவற்றில் செலவிடப்பட்டது. இதனால் நாட்டின் பல பகுதியிலும் பரவலாக கல்வி வசதிகள் விரிவாக்கப்பட்டன. பெருந்தொகையான கிராமியத்துறை மாணவர் தொகுதி ஆரம்பக்கல்வியிலிருந்து மேல் நோக்கி இடைநிலைக்கல்விக்கு நகரலாயிற்று. சிறு பகுதியினர் பல்கலைக்கழகங்களுக்கும் சென்றனர். சனத்தொகையில் சராசரியாக ஐம்பது வீதமாயுள்ள பெண்களும் கல்வியில் நுழையவும், பின்பு உயர் கல்வி வரை செல்லவும் உதவியது, இலவசக்கல்வியேயாகும். இவ்வாறு கிராமிய
இலங்கையின் கல்விச் செலவு /26

மட்டத்திலான மாணவரும், குறிப்பாக பெண்கள் கல்வி கற்கத் தொடங்கியமை இலங்கையின் கல்விச் செலவு தொடர்ந்து அதி. கரிக்கக் காரணமாயிற்று. பல்வேறு கல்வி மட்டங்களிலும் பெண்கள் பங்கு கூடியே வந்தது. 1946 ல் எல்லாக் கல்வி மட்டங்களிலுமான பெண்களின் பங்கு 43%மாயிருந்தது. 1963ல் இது 63%மாக அதிகரித்தது. தொகை ஆரம்ப, இடைநிலைப் பாடசாலைப் பிள்ளை. களின் எண்ணிக்கை மொத்தம் 2.482 மில்லியனாயிருந்தபோது அதில் பெண்கள் 1.132 மில்லியனாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.*
பல்கலைக்கழகங்களின் மீதான செலவுகள் பல்கலைக்கழக அனுமதிகளின் அதிகரிப்புடனும், புதிய கற்கை நெறிகளின் அறிமுகத்துடனும் இணைந்து அதிகரிக்கலாயின. பல்கலைக்கழக அனுமதியானது மனிதவலு அவதானங்களைக் கவனத்தில் கொண்டதைவிட கூடுதலாக பல்கலைக்கழக கல்விக்கான சமூகக் கேள்வியினடிப்படையிலேயே நிகழ்ந்தது. தொழில்நுட்ப நிபுணத்துவம், உபகரணங்கள் என்பவற்றை பெறக்கூடியதாக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் பல்வேறு தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டதையும் காண முடிகிறது. பல்கலைக்கழகங்கள் நாட்டின் பலபாகங்களிலும் நிறுவப்பட்டமையும் கல்விச் செலவுகளின் அதிகரிப்புக்கு காரணமாயின.
அடிக்குறிப்புகள் 1. Balakrishnan, N (1985), "Sri Lanka as a Walfare State" An
Over view', Economic Review, July/August Peoples Bank, Colombo., p. 45.
2. Jeyasuriya, J.E., (1972)., In forward, History of Education in
Ceylon, Dehiwala., p.V.
3. "கல்வி", (1984) பொருளாதார மீளாய்வு, கொழும்பு: ப. 101.
4. Peoples Bank, (1986) Facets of Development in Independent Sri Lanka. Facilitation Volume to Commomorate the 10" Successive Budget of Hon. Ronnie de mel, Minister of Finance and Planning Colombo, p. 294.
27 / மா.சின்னத்தம்பி

Page 16
5. Jeyasuriya, J.E.(1964) "Estate School”, Some Issue in Ceylon
Education, Peradeniya:, p.53.
6. Jan Hesselberg,(1982), In Preface, Welfare and Development
in Sri Lanka, OSLO:
7. The World Bank, (1985), “School Quality and Educational outcomes in Rural Brazil', Population and Human Resources, The World Bank Research Programme, New York :, p. 161.
8. Norman, L., Hicks, (1980) “Is there a trade off Between Growth and Basic Needs?" Finance and Development, Volume 17, Number 2, New York: World Bank, p. 17.
9. Norman Hicks and Anne Kubisch, (1984) “Cutting Government
Expenditure in LDC.” Finance and Development, Septermber 1984, Volume 21, No. 3, New York: World Bank, p.39.
10. Ministry of Education, (1967), "The Education System of Ceylon Over view' Financing and Costs of First and Second Level Education in Ceylon 1952 - 1964, Colombo., p. 15.
11. Marga Institute and UNESCO, (1983), “The Socio-Economic Background", University Education and Graduate Employment in Sri Lanka, Colombo: , p. 42.
12. Ibid, p. 45.
13. National Planning Division, (1986), “Social Infla Structure', The Medium Term Perspective, A Summary of the Public Investment Programme 1986-90, Colombo:, p. 42.
இலங்கையின் கல்விச் செலவு / 28

அத்தியாயம் 4
மனித முதலீடாக கல்விச் செலவு
s ல்வியானது சமூகத்தில் அபிவிருத்தி ஏற்படுத்தக்கூடியளவு சக்தி வாய்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கல்விச் செலவு மனிதனது உழைப்பாற்றலை தனிப்பட்ட ரீதியிலும், சமூக ரீதியிலும் வினைத்திறனுடையதாக்கும் எனப்படுகிறது. இவ்வகையில் கல்விச் செலவு ஒரு மனித முதலீடாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
சேர் வில்லியம் பெற்றி என்பவரும், பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த வேறுசில பொருளியலாளரும் மனித மூலதனம் பற்றி கருத்து தெரிவித்திருந்தனர். அதிகரிக்கும் மக்கள் தொகை செல்வம் தான் என்ற கருத்தை இவர்கள் கொண்டமை இந்த அடிப்படையில் தான். அடம் சிமித் செலவு செய்யப்பட வேண்டுமானால் முதலீட்டுக்கான சாதாரண இலாபமாவது அதற்குக் கிடைக்கவேண்டும் என்றார். அல்பிரட் மார்ஷல் பெளதீக சொத்துக்களில் முதலிடுவதானாலென்ன, தன் பிள்ளைகளின் கல்வியில் முதலிடுவதானாலென்ன, வருவாய் வீதங்கள் எல்லை நிலைக்காயினும்
29 / மா.சின்னத்தம்பி

Page 17
சமப்படுதல் வேண்டும் என்றார். ஆனால் சமூக, பொருளாதாரக் காரணிகள் மனித முதலீட்டினை கட்டுப்படுத்துவதால் நடைமுறையில் இவ்வாறு வருவாய் வீதங்கள் செலவுகளுக்கு சமனாக்கப்படுவதில்லை. அல்பிரட் மாஷல் கல்விச் செலவு ஒரு தேசிய முதலீடாக அமையும் என விளக்கியதன் மூலம், கல்வியின் முதன்மையை வற்புறுத்தினார். மனிதரில் செய்யப்படும் முதலிடே ஏனையவற்றை விட பெறுமதி கூடியதென்றும் அவர் வற்புறுத்தினார். நவீன பொருளியலாளர்களால் மனிதரிலான முதலீடுகள் அபிவிருத்தித் தொடர்பில் இன்று அதிக முதன்மை பெற்றுவிட்டன.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் தசாப்த அறிக்கையில் அபிவிருத்தி என்பது வளர்ச்சியும் மாற்றமும் எனப்படுகிறது. மாற்றம் என்பது சமூக, கலாச்சார ரீதியில் மட்டுமன்றி, பொருளாதார ரீதியிலும் ஏற்பட வேண்டியதாகும். இவை அளவு ரீதியிலும் தராதர ரீதியிலும் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கும்.
அபிவிருத்தியானது தனியே இயற்கை வளங்கள் பெளதீக மூலதனம் என்பவற்றால் மாத்திரம் ஏற்படக்கூடியதல்ல. உற்பத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்படு முகவரான மனிதனின் செயற்பாடும் அதில் பிரதான பங்கு வகிக்க வேண்டும்.
கல்விச் ச்ெலவானது மனிதவள அபிவிருத்தியை ஏற்படுத்துவதாகும். அறிவைகட்டியெழுப்புதல், ஆற்றல், தொழில் செய்யும் தகுதி போன்ற பல்வகைத் தொழிற்பாடுகளையும் சமூகத்தில் எல்லா மக்களிடத்தும் ஏற்படுத்த இது உதவுகிறது.
மனித வளமானது பல வழிகளில் விருத்தி செய்யப்படக்கூடியது. முறைசார் கல்வியின்படி முன்பள்ளி, ஆரம்பப்பள்ளி, இடைநிலைப் பாடசாலை, பல்கலைக்கழகம், உயர் தொழில்நுட்பக் கல்லூரிகள் போன்றவற்றில் தொடர்ச்சியாகக் கற்பதால் மனிதவளம் விருத்தி செய்யப்படுகிறது. அத்துடன் தனியார் துறையிலும், அரசாங்க துறையிலும் காணப்படும், ஒழுங்குமுறையான அல்லது முறைசாரா தொழில்முறைப் பயிற்சிகளும் இதற்கு உதவுகின்றன. இத்துடன் தனிமனிதன் தொலைக்கல்வி முறையிலோ சுயமுயற்சியால் மற்றவரிடம் கேட்டோ வாசித்தோ தனிப்பட்ட முறையில் தனது
இலங்கையின் கல்விச் செலவு /30

அறிவு, ஆற்றல் என்பவற்றை விருத்தி செய்வதுமுண்டு. சுயவிருத்தியானது நேரடியாக தொழில் தேடவோ, பயிற்சி பெறவோ கூடிய தகுதியையும் ஊக்கத்யுைம் கொடுக்கும். இத்துடன் மனிதவள விருத்திக்காக சேர்த்து கவனிக்கப்பட வேண்டியவை உழைக்கும் மக்கள் தொகுதியின் சுகாதார வசதியும், போஷாக்குத் தராதரமுமாகும.
கல்விச் செலவின் விளைவுபற்றிய மதிப்பீடு சுலபமானதாயில்லை. நேரடியாக பொருட்கள், சேவைகளின் உற்பத்தித் திறனைக் கொண்டோ, தனிமனிதனின் பணவருமானத்தைக் கொண்டோ, பொருளாதாரத்தின் முழு வருமானத்தைக் கொண்டோ கல்வியின் விளைவை மதிப்பிடல் இயலாது.
மானிடவியற் தகுதிகளுக்காகவே கல்வியில் செலவிடப்படுவதாகக் கொண்டால் பொருளாதார ரீதியிலான விளைத்திறன் பற்றிய கருத்து முதன்மை பெறமாட்டாது. அந்த நிலையில் விரைவான பொருளாதார அபிவிருத்தி என்பதையும் கருத்திற் கொள்ள வேண். டியதில்லை. ஆனால் இன்று நவீன மனிதனின் உண்மையான உளப்பாங்கு கல்விச் செலவு பொருளாதார முன்னேற்றத்துக்குதவும் கருவியாக இருக்க வேண்டும் என்பதேயாகும். ஆனாலும் சுதந்திரம், சுயகெளரவம், தனிமனித பெறுமானம் என்பவற்றைப் பேணவும் கல்வி உதவவேண்டும் என்பது மறுக்கப்படவில்லை.
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்கள் எதிர்காலத்திற்கு வேண்டிய ஆற்றல்மிக்க அரசியற் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் சட்டவல்லுனர்கள், நீதிபதிகள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், முகாமையாளர்கள், கலைஞர்கள், நுட்பவினைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரை உருவாக்க வேண்டிய நிலையிலுள்ளன. இவர்களே அபிவிருத்தியின் சகல துறைகளிலும் மக்களுக்கு வழிகாட்டவேண்டியவர். களாக இருப்பர். இவ்வாறான மனிதவலுவை ஒருநாடு விருத்தி செய்யத் தவறுமாயின், எத்தகைய நவீன அரசியற் சித்தாந்தத்தைக் கொண்டிருந்தாலும், ஒருமைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் அவை வளர்ச்சி அடையமாட்டா.
31 / Lorr.floorGOrigh

Page 18
நாடுகள் சில போதியளவு இயற்கை வளங்களைக் கொண்டுள்ளன. அவை தமக்கு வேண்டிய பொருட்களையும், மனித வளத்தையும் இறக்குமதி செய்ய முடியும். குவைத், சவுதி அரேபியா போன்றன இத்தகையனவே. ஆனால் எகிப்து, இலங்கை போன்ற நாடுகள் போதிய மனிதவலுவைக் கொண்டிருப்பினும் இவற்றிடம் போதியளவு இயற்கைவளம் இல்லை. இதனால் மனிதரில் முதலிடுவதுடன், உற்பத்தித் திறனுடைய துறைகளில் போதியளவு முதலிடுவதற்கு ஏற்றதாக சேமிப்பு வீதத்தையும் அதிகரித்தலும்அவசியம். இவற்றுடன் ஒரு நாட்டின் அமைவிடம், வர்த்தக மாற்று விகிதம், ஏனைய நாடுகளுடனான அரசியல் நல்லுறவு போன்றன சீராயிருத்தலும் அவசியமாகும்.
மனித வள அபிவிருத்தி என்ற கருத்துப்படி கல்விச் செலவு உயர்வதால் அரசியல் உறுதிப்பாடு, கலாசார முதிர்ச்சி, பொருளா. தார வளர்ச்சி என்பனவும் கட்டாயம் ஏற்பட வேண்டுமென்பதில்லை. ஆனால் கல்வியிலான காலப் பகுதியும் செலவும் அதிகரித்துச் செல்லும்போது நாட்டின் வருவாயை அதிகரிக்கும் திறனும் கூடியே செல்கிறது. தாய்லாந்தின் ஆய்வு ஒன்றிலிருந்து இடைநிலைக் கல்வியின் வருவாய் ஆரம்பக்கல்வியின் வருவாயைவிட இருமடங்கு அதிகமாயிருந்தது. ஆனால் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் இடைநிலைக் கல்வி கற்றோரைவிட 45%- 60% வரையிலான வருமான அதிகரிப்பைப் பெற்றதாக அறியப்படுகிறது. இவ்வகையில் வருமானப் பெருக்கத்தினை ஏற்படுத்தி, சமூகத்தின் தாழ்நிலையிலுள்ளோரை மேல் நோக்கிநகர்த்தும் முதலீடாக கல்விச் செலவு அமைந்து விடுகிறது.
திட்டமிட்ட கல்வி முதலீடு
கல்வியில் முதலிடுவதென்பது நன்கு திட்டமிடப்பட்ட சூழ். நிலையிலேயே செயற்றிறனுடையதாக அமையும். உண்மையான ஜனநாயகப் பண்புள்ள சமூகப் பொருளாதார வாழ்க்கையை உறுதிப்படுத்தும் பட்சத்திலேயே கல்விச் செலவு எதிர்பார்க்கைகளை நிறைவேற்றும்.முன்னைய சோவியத்யூனியனில் அரசு நன்கு திட்டமிட்டு, கல்வியின் எல்லா மட்டங்களுக்கிடையிலும் தொடர்பு
இலங்கையின் கல்விச் செலவு /32

களை கவனமாக ஏற்படுத்தி, அவற்றை வாழ்க்கை முறையுடன் இணைத்திருந்தது. இதனால் 1917 ன் முன் 76% மான மக்கள் எழுத்தறிவற்றிருந்த அந்த நாட்டில் தற்போது ஒவ்வொரு மூன்று பேருக்கு ஒருவர் ஏதோ ஒரு வகைக்கல்வியில் ஈடுபட்டுள்ளனர். 1959ல் எட்டுவருட கட்டாயக்கல்விஅறிமுகப்படுத்தப்பட்டது. எல்லா இளம்பிள்ளைகளும் இலவசமாக வழங்கப்படும் இடைநிலைக்கல்வியைப் பெறவேண்டும் எனப்பட்டது. 1980ல் 72,000 பொதுப்பாடசாலைகளில் 20 மில்லியனுக்கு மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற்றார்கள். ரஷியாவில் கல்வி முறையானது எல்லோருக்கும் ஒரேமாதிரியான கல்வியை வழங்குவதுடன் ஒரே மாதிரியான சம சந்தர்ப்பங்களையும் (கல்வியைத் தொடர்வதற்கு) வழங்குகிறது. அத்துடன் 760 வகையான வர்த்தக, தொழில்நெறிப் பயிற்சிகளுமிருந்தன. 1985ம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தம் விஞ்ஞான, தொழில்நுட்பம், சமூக, கலாச்சார தேவைகளின்படி கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. அங்கு 512 உயர்கல்வி நிறுவனங்களில் 400 வகைச்சிறப்புத்துறைகளில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் கற்றனர். அத்துடன் 4150 தொழிற்பயிற்சிப் பாடசாலைகளில் 1,101 வகையான பயிற்சியில் இரண்டு மில்லியன் மாணவர்வரை ஈடுபட்டனர். இங்கு கோட்பாட்டு அறிவும், செயல் முறை நிபுணத்துவமும் இணைத்து வழங்கப்பட்டது.
இத்தகைய ஒன்றிணைந்த, வாழ்வுத் தொடர்புடைய சமூக பேதமற்ற கல்வி முறையில் முதலிடுவதே பயனுறுதி மிக்க விளைவ்களை ஏற்படுத்தும், சமூக நீதி, சமத்துவம் என்ற அடிப்படையிலட்சியங்களுடன் அரசு கல்வியில் முதலீடு செய்ததாலேயே மிகக் குறுகிய காலத்தில் முன்னைய சோவியத்யூனியன் தன் கலாச்சாரப் பின்னடைவு, எழுத்தறிவின்மை என்பவற்றிலிருந்து விடுபடவும், பூரண அபிவிருத்தி, மனிதத்துவத்தில் சமத்துவம் என்பவற்றை பேணவும் முடிந்தது.
அநேக குறைவிருத்தி நாடுகள் கல்வியில் அதிகளவு பணம் செலவிடுகின்ற போதிலும் அவை பூரணமான மனித முதலீட்டுப் பயன்பாட்டைப் பெற முடியவில்லை. கல்வி பற்றிய அடிப்படை இலக்குகள் முதலாளித்துவ நாடுகளின் கல்வியியலாளர்களால் அவர்களுக்கு சார்பாக தீர்மானிக்கப்பட்டன. உள்நாட்டில் கட்சி
33 / மா.சின்னத்தம்பி

Page 19
அரசியல் அடிப்படையில் இன, மொழி பேதங்களை வளர்க்கக்கூடிய மாதிரியில் கல்வி நடவடிக்கைகள் அமைக்கப்பட்டன. தேசிய தேவைகளுடன் தொடர்புகொள்ளாத சிந்தனை, மற்றும் வாழ்க்கை முறையில்லாத கல்வியலாளர்கள், ஆட்சிப் பணித்துறையாளர். களே, கல்வி நடைமுறைகளை மேற்பார்வை செய்தனர். இதனால் கல்விச் செலவு முதலீட்டுக்குரிய வடிவில் பயன்தர முடியவில்லை. கற்றோர் தம் மேதாவித்தனங்களால் உழைப்பாளரை தனிமைப்படுத்தினர். செல்வந்தர் புலமைத்துவக் கல்வியில் தனியுரிமை கொள்ளத் தலைப்பட்டனர். உயர் வருமானம் உயர் அதிகாரம் பெற உதவும் கல்வி வாய்ப்புக்கள் சில சமூகப் பிரிவினருக்கு மறுக்கப்பட்டன. கல்வி கற்ற பலர் உற்பத்தித்துறையுடன் எத்தொடர்புமின்றி மேன்மைத் தொழில் தேடி அலைந்தனர். அவர்கள் "கற்றோர் தொழிலின்மை" என்ற பெயருடன் உடல் உழைப்பாளர் வருமானங்களில் தங்கியிருக்கலாயினர். சாதாரண மக்கள் மட்டத்தில் சாதி, மொழி பேதங்கள் வலுவூட்டப்பட்டன. கல்வி கற்றல் ஒரு தனிமனித பொருளாதார பாதுகாப்புக்கான ஒரு வழியாக மாத்திரம் கருதப்பட்டது. கற்றவர் கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு அசைவதை இக்கல்விமுறை தூண்டியது. உயர்கல்வித் தகுதியினர் தமது நாட்டை விட்டு வெளியேறி, முதலாளித்துவநாடுகளில், அங்குள்ள தாழ்மட்டத் தொழில்களைச் செய்து (அவை பெரிதும் அவர்கள் கல்வியுடன் தொடர்பின்றியே காணப்பட்டன.) அங்கேயே நிரந்தரமாகத் தங்கினர். இறக்குமதிக் கலாச்சாரம் கல்வி முறையுடன் தொடர்புடையதாகி நிரந்தரமாயிற்று.
இத்தகைய விரும்பத்தகாத விளைவுகளை உருவாக்காத வகையில் கல்விமுறை ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும். அதற்கான பொருளாதார, அரசியல் பின்னணிகளையும் ஏற்படுத்தல் வேண்டும். அத்தகைய நிலையில் திட்டமிட்ட அடிப்படையில் கல்வியில் நிதி செலவிடப்படுதல் வேண்டும்.
கல்வித் திட்டமிடல் என்பது நாட்டின் ஒன்றிணைந்த பெருந்திட்டமிடலின் முழுநிறைவான இசைவும், ஒன்றிணைப்பும் கொண்ட செயற்பொருளாக விளங்குகின்றது. சமூகப் பொருளாதார இலக்குகளை முன்வைத்து மலர்ந்தெழும் பெருந்திட்டமிடலிற் பிரிக்கவும், பகுக்கவும் முடியாத செறிவும், பரவலும் கொண்டதே கல்வித் திட்ட
இலங்கையின் கல்விச் செலவு /34

மிடலாகும்." ஒரு நாட்டின் நிதியீட்டம், மனித வளம், நிறுவன அமைப்பியல் என்ற முத்தன்மையான இயங்கு பொருள்களைக் கல்வித்திட்டமிடல் நடப்பியல் வழியாக ஒன்றிணைத்து முன்னேற்றம் காணவிழைகிறது.'
திட்டமிடல் எதிர்கால இலக்குகளினடிப்படையிலான நடவடிக்கைகள் சார்ந்த தீர்மானங்களின் தொகுதியாக காணப்படும். திட்டமுறைக்குரிய எல்லாவிடயங்களுக்கும் பணப் பெறுமதி வழங்கிப் பார்ப்பது நிதித்திட்டமிடலாகும், திட்ட நிறைவேற்றங்களுக்கான செலவினங்கள் பற்றிய மதிப்பீடுகளாக அவை அமையும். அரசாங்கம் தனது நிதியை ஒரு துறையில் செலவிட உத்தேசிக்கும் போது அவை தொடர்பாக நிகழக்கூடிய குறுங்கால, நீண்டகால விளைவுகள், சமூக, பொருளாதார விளைவுகள் என்பன கருத்திற் கொள்ளப்படவேண்டும். இவற்றுக்கான நிதியை உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் திரட்டிக் கொள்வதுண்டு. நாட்டில் பணவீக்கமிருந்தால் பணப் பெறுமதி குறையும் வீத அடிப்படையில் செலவுகளை அதிகரிக்க வேண்டியும் ஏற்படும். திட்ட நடைமுறைப்படுத்தலில் ஏற்படும் காலதாமதங்கள் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் செலவினங்களை உயர்த்திவிடுகின்றன. உள்நாட்டில் வரிவிதிப்பு மூலமான வருவாய்களை சுலபமாக அதிகரிக்க முடிந்தால் அரசாங்கம் தன் செலவுகளை மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். ஆனால் அதிக வரி செலுத்தக்கூடியவராயுள்ள செல்வந்தர்கள் தமது பணத்தில் பெரும்பகுதி ஏழைகளுக்கான அடிப்படைக்கல்வியில் செலவிடக்கூடாது என்ற மாதிரியிலும் செயற்படமுனைவர். திட்டமிடும் அதிகாரிகளும் அதே வர்க்கத்தினராயும், அதே உளப்பாங்குகளையும் கொண்டிருந்தால் கல்வித்திட்டமிடல் நாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.
திட்டமிடலும் மனிதவலு விருத்தியும்
மனிதவலு விருத்தியென்பது பல்துறைப் பரிமாணங்களைக் கொண்டது. உடல் நலம், உளநலம், வாழ்க்கை, எதிர்பார்க்கை, செயலூக்கம், கல்வித்திறன், உற்பத்தித் திறன் என்ற பல பரிமாணங்களை உள்ளடக்கிய முழுமையை அது கொண்டுள்ளது."
35 / மா.சின்னத்தம்பி

Page 20
கல்விச் செலவானது மனிவலு விருத்தியில் கூடிய அக்கறை காட்டும் பொழுது நாட்டின் உற்பத்திமுறைகளை நவீனமயமாக்கும் திறன் மனிதனுக்கிருப்பதன் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனிதவலு அபிவிருத்தி பற்றிய உபாயங்களில் அடிப்படையாக ஆறு அம்சங்களுள்ளன.”
1. மனிதவலுத் தேவைபற்றிய சரியான மதிப்பீடுகளைச் செய்தல்.
2. முறைசார் கல்வி அபிவிருத்திக்கான செயல்திட்டம் ஒன்றைத்
தயாரித்தல்.
3. தொழில்களில் பயிற்சியளிப்பதை வலுப்படுத்துவதற்கான
செயல் திட்டம் ஒன்றைத் தயாரித்தல்.
4. தூண்டுதல்களை ஏற்படுத்துவதற்கான ஒரு செயல்திட்டத்தை
தயாரித்தல்.
5. சுகாதார, மருத்துவ அபிவிருத்திக்கான செயல் திட்டம்
ஒன்றைத் தயாரித்தல்.
6. பொதுவான அபிவிருத்தித் திட்டமிடலுடன் இணைந்த வகையில் மனிவலு திட்டமிடலை ஏற்படுத்தக்கூடிய பொருத்தமான முறையொன்றைத் தெரிதல்.
இத்தகைய அம்சங்களுடன் உணவு நுகர்வு, போஷாக்கு, தொழில் வாய்ப்பு, தொழில் செய்யுமிட நிலைமைகள், வீடமைப்பு, உடை, சமூகப் பாதுகாப்பு, பொழுதுபோக்கு,மனித சுதந்திரம் போன்றவற்றையும் மனிதவலு விருத்தியின்போது கருத்திற் கொள்ளுதல் அவசியமாகிறது.
மனிதவலு திட்டமிடலாளர்கள் அல்லது மனிதவலு அபிவிருத்தி உபாயங்களை வழங்குபவர்கள் இதில் கூர்மையான கவனம் செலுத்த வேண்டும். கல்வி, தொழிற்பொருளியல், ஊழியர் பயிற்சி, பொது சுகாதார சேவை போன்ற துறைகளில் அவர்கள் விசேட அக்கறையும், அறிவும் அனுபவமும் உடையவராக இருத்தல் அவசியம். அவர்கள் தம்மை ஒரு விஷேட நிபுணராகவன்றி, அபிவிருத்தித்திட்டமிடலாளர்களாகவே கருத வேண்டும்.
இலங்கையின் கல்விச் செலவு /36

மனிதவலு அபிவிருத்தியானது வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ளக்கூடியது. கல்வியென்பதே உயிரியின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தும் பயிற்சி முறை. இதனால் தொழிலுக்கு முன் பாடசாலை மட்டத்திலும், தொழில் செய்யும் நிலையங்களிலும் கூட அனுபவங்களை மனிதர்கள் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் போதிய கல்வியறிவுடன் நன்கு பயிற்றப்பட்ட ஆளணியினர் போதியளவில்லை என்பது அறியப்பட்டடுள்ளது. இதனால் கல்வித்திட்டமிடுவோர் அரச, தனியார், துறைசார்ந்த, உற்பத்தி, வர்த்தக நிறுவனங்களுடன், முறைசார் கல்வி, தொழில்நிலைப் பயிற்சி என்பவற்றைத் தொடர்புபடுத்துவதில் அக்கறை காட்டவேண்டும். தொழில் நிலையிலான பயிற்சிகளை பாடசாலைகள் வழங்குவதைவிட தொழில் நிறுவனங்களே திறமையாக வழங்குவது தெரியவந்துள்ளது. காலவிரயத்தையும், நிதிவிரயத்தையும் தவிர்க்கவும், பொருத்தப்பாடற்ற உழைப்பு மனோபாவம் வளராமல் தடுக்கவும் தொழில் நிறுவனங்களில் பயிற்சி வழங்குதல் அவசியமெனப்படுகிறது.
எந்தவொரு குறைவிருத்திப் பொருளாதாரத்திலும் வளங்களும், அரச நிதியும் குறைவாகவேயுள்ளன. அவற்றை நேரடியான உற்பத்தித்துறைகளில் செலவிடாமல் கல்வியில் செலவிடும்போது அவை பற்றி மிகவும் அக்கறையுடன் செயற்படல் வேண்டும். இதனால் இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டக்கூடிய உற்பத்தித் திறனுடைய நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆர்வம் உடையவர்களாக ஊழியரை மாற்றுவதற்கான தூண்டுகை நடவடிக்கைகளிலும் திட்டமிடுவோர் அக்கறை காட்ட வேண்டும்." அத்துடன் தொழில்களின் முக்கியத்துவம் என்பது மரபு. வழி வரும் அல்லது குடியேற்றவாத ஆட்சிக்கால மாதிரியில் கொடுபடல் கூடாது. பதிலாக விருத்தியடையும் பொருளாதாரத் தேவைகளினடிப்படையிலான மனிதவலு மதிப்பீட்டின்படியே கொடுபடல் வேண்டும். பட்டதாரிகளைவிட, விவசாயிகளும், தொழில் நுட்பவினைஞர்களும் முதன்மை குறைந்தவர்களாக கொள்ளப்படுதல்
கூடாது.
மனிதவலு அபிவிருத்திக்கு தனியே கல்வியில் முதலிடுவது மாத்திரம் போதுமானதாயிராது. ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ள
37 / மா.சின்னத்தம்பி

Page 21
தொழிலாளர் விவசாயிகள் ஆகியோருக்கும் போதிய ஊக்கமும், பயிற்சியும் வழங்குவதிலும் அக்கறை காட்ட வேண்டும். இது முறை. சார் கல்வியில் சிக்கனங்களை ஏற்படுத்தவும், கல்வி முதலீட்டின் விளைத்திறனை உயர்த்தவும் உதவியாக இருக்கும்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில், மனிதவலுப் பிரச். சினைகள் பற்றித் தெளிவான கருத்து பெறப்படல் வேண்டும். அவை இருவகையினவாக தென்படுகின்றன.
(அ) தேவைப்படுகின்ற போதியளவு அறிவும், ஆற்றலுமுடை
யவர்களில் பற்றாக்குறை நிலவுதல்
(ஆ) தொழிற்பயிற்சி அற்றவர்கள், கல்வி கற்ற மனிதவலு ஆகிய இரண்டு வடிவிலும் மிகை ஊழியம் காணப்படுதல்.
இவற்றைத் திட்டமிடுவோர் கவனத்திற் கொண்டுதான் செலவின ஒதுக்கீடுகளில் அக்கறை காட்ட வேண்டும். அத்துடன் அபிவிருத்தித் திட்டமிடலிலிருந்து கல்வித் திட்டமிடலாளர் தம்மைத் தனித்துவப்படுத்தக்கூடாது. இன்றும் பல அபிவிருத்திப் பொருளியலாளர்கள் கருத்துப்படி, நாட்டின் மூலவளங்கள் அவசரமான பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யப் பயன்படுத்திய பின், மிஞ்சி இருந்தால் மட்டுமே அவை கல்வி, சுகாதாரம், மனிதவலு அபி. விருத்தி என்பவற்றில் செலவிடப்பட வேண்டுமெனக் கருதுகின்றனர். இந்தக் கருத்துநிலை மாற வேண்டும். மனிதவலு அபிவிருத்தித் g5!' LL6L6urI6Tirab6it (Human Resource Development Strategist) பொதுவான அபிவிருத்திக் குழுவில் கட்டாய அங்கத்தவராக்கப்படல் வேண்டும்.
மனிதவலு விருத்தியானது உழைப்புச் செறிவுமூலதனச் செறிவு என்பவற்றை வினைத்திறனுடையதாக்கும். மனிதனது தொழில் புரியும் ஆற்றல் அதிகரிக்கப்படின் இயந்திர இறக்குமதிகளையும், எரிபொருள் இறக்குமதிகளையும் குறைத்து அந்நியச் செலாவணி நெருக்கடிகளிலிருந்து பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியும்.
மனிதவலு அபிவிருத்தி சார்ந்த செலவினங்களினால் நாட்டின் விஞ்ஞான, தொழில் நுட்பத்துறைகளில் புதிய ஆய்வுகளும், கண்டுபிடிப்புக்களும் ஏற்படும். இவை வளச்சிக்கனம், வளங்களின்
இலங்கையின் கல்விச் செலவு /38

தொடர்பு, நீண்டகால தொழில்வாய்ப்புப் பெருக்கம் என்பவற்றை ஏற்படுத்தும்.
கல்வியானது இருபக்கத் தொடர்புகளைப் பொருளாதாரத்துடன் கொண்டுள்ளது. கல்விக்குரிய செலவு மனிதவலு விருத்தி மூலம் மொத்தத் தேசிய உற்பத்தியைப் பெருக்கும். அதாவது பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். மறுபுறம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் கல்விக்கான முதலிகள் அதிகரிக்கும். இதனால் மனிதவலு விருத்தி அதிகரிக்கும். முன்னைய சோவியத் அனுபவங்களைப் பொறுத்து இத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது. சிங்கப்பூர், கொரியா, தைவான் போன்றநாடுகளின் அனுபவங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
கல்விச் செலவானது சரியான முறையில் திட்டமிட்டபடி மேற். கொள்ளப்படுவதற்கு ஏற்ற நிறுவன அமைப்புக்களை நாடுகள் கொண்டிருத்தல் வேண்டும். மனிதவலுத்திட்டமிடல்நிறுவனம் (Human Resources Planning Organisation) go6öig), Blp6ličju L6b வேண்டும். அது பொதுவான திட்டமிடல் செயல் முறைகளிலிடம்பெறும் மனிதவலு அபிவிலுத்தி செயல் திட்டங்களைக் கல்வித் திட்டங்களுடன் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவை மனிதவலு தொடர்பான முன்னுரிமைகள், மனிதவலுப் பிரச்சினைகளின் மதிப்பீடுகள், திட்டச் செயல்முறையை மேம்படுத்தல், நடைமுறைகளை ஒருங்கிணைத்தல், மதிப்பிடல், ஆராய்ச்சித் திட்ட மாதிரிகளைத் தெரிந்தெடுத்தல், உதவிகளைப் பெற உதவுதல் போன்ற வழிகளில் உதவலாம். அத்தகைய நிலையில் கல்விச் செலவு முதலிகளாக செயற்படும்.
அடிக்குறிப்புகள்
1. John Vaizey with Keith Norris And John Sheehan,(1972), "On Human Capital', The Political Economy of Education, London:, p.21
2. Fredrick Harbison,(1964), “Human Resources and Development” in Economic and Social Aspects of Educational Planning, Netherlands: UNESCO, p.60,
39 / மா.சின்னத்தம்பி

Page 22
3. The World Bank, (1983), “Income Distribution in Thailand”
in Resarch News, Volume 4, Number 2, USA, p.22.
4. UNESCO, (1975), “Education and the Development of
Societies” Education on the Move, Paris:, p.30.
5. Gennadi Fyodoron, (1987), The Russian Federation: The Public Education System, Noosti Press Agency Publishing House:,
p.3
6. சபா ஜெயராசா,(1987)"கல்வித்திட்டமிடல்", அத்தியாயம்7, கல்வித்
திட்டமிடல், யாழ்ப்பாணம், ப. 35,
7. Ibid, p.36.
8. Ibid, p.42.
9. Fredrick Harbison, (1964), opcit, p.63
10. Ibid, p.65.
இலங்கையின் கல்விச் செலவு /40

அத்தியாயம் 5
கல்விச் செலவின் அளவும் போக்கும்
ളേ குறைவிருத்திப் பொருளாதாரமாக உள்ளபோதும் கல்வித்துறை வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் கல்வித்துறையிலான பங்களிப்புடன் தொடர்புள்ளது. அரசாங்கம் தொடர்ச்சியாகவே இத்துறையில் தன் செலவினை மேற்கொண்டு வந்துள்ளது.
கல்விக்குரிய அரசின் செலவுகள் முதலீட்டுச் செலவுகள் என். றும், மீண்டெழும் செலவுகள் என்றும் பாகுபடுத்தப்படும். முதலீட்டுச் செலவுகளில் நிலம், கட்டிடம், தளபாடம், நூல்கள், உபகரணங்கள் போன்றவை இடம்பெறுகின்றன. மீண்டெழும் செலவுகளில் ஆசிரியர், நிர்வாகிகளுக்கான சம்பளம், மின்கட்டணம், நீர் கட்டணம், பராமரிப்புச் செலவுகள் போன்றன உள்ளடங்கும். குடிசனத்துறைக்கான மாற்றல்கள் என்பதிலும் இவைசார்ந்த செலவுகளில் ஒரு பகுதி அடங்குகிறது. சமூக நலத்துறைச் செலவுகளில் சுகாதாரம், சமூகசேவை என்பற்றுடன் கல்வியும் அடங்குகின்றது. கல்வி பற்றிய செலவு இவற்றில் முதன்மையானவையாயும் உள்ளன.
41 / மா.சின்னத்தம்பி

Page 23
உலகின் அனைத்துநாடுகளிலும் கடந்த மூன்றுதசாய்தங்களாக கல்விக்கென ஒதுக்கப்படும் செலவுகளிற் படிப்படியான அதிகரிப்புக் காணப்படல் ஒரு பொதுப்பண்பாக விளங்குகிறது. அனைத்து நாடுகளிலும் காணப்படும் பிறதொரு பொதுப்பண்பு ஆசிரியர் நிர்வாகிகளுக்கான சம்பளமே செலவுகளில் முதல் இடத்தைப் பெறுதலாகும்.
கல்விக்கான செலவுகள் அந்நாட்டின்குடித்தொகையின் வளர்ச்சி வீதத்திற்கேற்ப மாறுபடும். வயதுத் தொகுதிக்கேற்ப இச் செலவு அதிகரிக்கப்பட வேண்டி உள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் குடித்தொகையில் பருமட்டாக 40 சதவீதத்தினர் 5-19 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இந்த வீதாசாரம் 25ஆக உள்ளது. இலங்கையின் குடித்தொகையில் பாடசாலை செல்லும் வயதுத் தொகுதியினர் சராசரியாக 60%வரை காணப்படுகின்றனர். அட்டவணை 5.1
குடித்தொகையில் மாணவர் சதவீதம் 1971-1981
வருடம் வயதுத்தொகுதி தொடர்பாக குடித்தொகை
குடித்தொகையில் மாணவர் வளர்ச்சி வீதம் சதவீதம்
1971 61.3 2.20
1972 55.8 2.00
1973 56.3 180
1974 53.9 1.50
1975 515 60
1976 51.3 1.60
1977 50.3 1.60
1978 59.4 1.80
1979 60.6 2.00
1980 62.9 1.80
1981 69.2 1.90
மூலம்: இலங்கை மத்திய வங்கி அறிக்கை
இலங்கையின் கல்விச் செலவு /42

இக்காலப்பகுதியில் மாணவர் வீதம் ஆகக்குறைந்தது 50.3 சதவீதத்தில் இருந்து ஆகக்கூடியது 69.2 சதவீதம் வரை காணப்படுகிறது. இலங்கையின் குடித்தொகையில் சிறுவர்களின் சதவீதம் உயர்வாய் இருப்பதன் விளைவு இதுவாகும். இக்குடித்தொகை மாதிரி அரசின்கல் விச் செலவினங்களின் அதிகரிப்புக்கு நேரடியாகப் பொறுப்பாகிறது.
இதேபோல் இலங்கையின் பணவீக்கத்துக்கு ஏற்ப அரசின் செலவினங்கள் அதிகரிக்கப்படுகின்றன. 1971ல் 2.7%த்தினால் அதிகரித்த பொதுவிலைமட்டம் 1980ல் 26.1%த்தினால் அதிகரித்து இருந்தது. 1981ல் 18.0% த்தினால் அதிகரித்திருந்தது. இவை செலவினங்களை அதிகரிக்கக் காரணமாயிருந்தன.
மொத்தச் செலவு
இலங்கை அரசின் கல்வியின் மீதான மொத்தச் செலவு இக்காலப் பகுதியில் தொடர்ச்சியாக கூடிச் சென்றுள்ளது. 1971ல் 527 மில்லியனாகவிருந்த மொத்த கல்விச் செலவு 1981ல் 2020.7 மில்லியனாக உயர்ந்தது. இது 73.9 சதவீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதே காலத்தில் அரசாங்கத்தின் மொத்தச் செலவு 3898.6 மில்லியனில் இருந்து 29485.5 மில்லியனாக அதிகரித்திருந்தது. இது 86.7 சதவீத அதிகரிப்பாகும். அரச செலவின அதிகரிப்புடன் ஒப்புநோக்கும்போது குறைவாக இருந்தாலும் கல்விச் செலவின் அதிகரிப்பு குறிப்பிடத்தக்கதாகவே உள்ளது.
இக் காலப் பகுதியில் குடித்தொகையின் வளர்ச்சி வீதம் வருடாந்தம் சராசரியாக 1.8 வீதமாகவே காணப்பட்டது. வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் இதே காலத்தில் வருடாந்தம் சராசரியாக 9.7 சதவீதமாக இருந்தது. இந்த இரண்டினதும் வளர்ச்சி வீதத்துக்கேற்ப செலவு உயர்வதானால் 1746 சதவீதமாயிருத்தல் வேண்டும். ஆனால் அதனிலும் குறைவாக 11.78 சதவீதமாகவே செலவின அதிகரிப்பு காணப்பட்டது.
மொத்த அரச செலவிலான கல்விச் செலவின் பங்கு 1965-75 காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்துள்ளது. 1971-1975 காலப்பகுதியில் 27.4 சதவீத வீழ்ச்சியை இது காட்டுகிறது. 1976 லிருந்து இரண்டு வருடங்களுக்கு கூடிச் செல்வது போலிருந்தாலும் பின்பு வீழ்ச்சியடைந்தே
43 / மா.சின்னத்தம்பி

Page 24
அட்டவணை 5.2
அரச செலவின் போக்கு 1971-1981
வருடம் | மொத்தச்செலவு வளர்ச்சி மொத்தச்
(மில்லியன் ரூபா) வீதம் செலவின் வீதம்
1971 527.0 --- 13.5
1972 7 10.8 25.8 13.1
1973 602.0 - 18.1 11.9
1974 624.5 3.7 0.7
1975 707.6 1.7 9.8
1976 90.8 22.3 10.5
1977 976.6 6.8 I 1.1
1978 1 39.5 14.3 6.4
1979 1390.8 18.0 6.8
1980 1845.7 24.6 6.5
1981 2020.7 8.7 6.9
104.45 1.78 9.74
மூலம் : மத்திய வங்கி அறிக்கை - மீளாய்வு, 1978, 1984
செல்கிறது. 1976-1981 காலப்பகுதியில் 30.6 சதவீத வீழ்ச்சியை இவை வெளிக்காட்டின.
ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போதுமொத்தத்தேசிய உற்பத்தியிலான கல்விச் செலவின் சதவீதம் இலங்கையில் திருப்தி தருவதாயில்லை. இந்தோனேஷியா, வங்காளதேசம் தவிர்ந்த ஏனை ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியிலான கல்விச் செலவின் சதவீதம் குறைவாகவேயுள்ளது.
இலங்கையின் கல்விச் செலவு /44

பொதுக்கல்வி
நாட்டின் பாடசாலை ஒழுங்கமைப்பின்படி அமையும் கல்வி இதுவாகும். இது ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி என அமைகிறது. இடைநிலைக் கல்வியும், இள இடைநிலை, முது இடைநிலை என மேலும் இரண்டு பிரிவாக நோக்கப்படுகின்றது.
இலங்கையில் ஆரம்பப் பாடசாலை சேரும் வயது 5 ஆகவும் ஆரம்பக்கல்வி வருடம் 5 ஆகவும் காணப்படுகின்றது. இடைநிலைக் கல்வியில் நுழையும் வயது 10 ஆகவும் சராசரி கல்விக்காலம் 7 வருடங்களாகவும், பல்கலைக்கழக நுழைதற்கான வயது 17 ஆகவும் காணப்பட்டது. ஆசியநாடுகளில் குறைந்த வயதில் பாடசாலை செல்லும் நிலை இலங்கையிலும் உண்டு. இது கல்விச் செலவினைப் பெருமளவில் மாற்றியது. 1972ல் அரசாங்கம் பாடசாலை சேரும் வயதை 6 ஆக உயர்த்தியது. உலகின் பெரும்பாலான நாடுகளில் அத்தகைய நிலையே காணப்பட்டது.
ஆயினும் 1977ல் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் மீண்டும் பாடசாலை செல்லும் வயதை 5 ஆகக் குறைத்தது. இது மாணவர் தொகையிலும் செலவிலும் அதிகரிப்பை ஏற்படுத்துவதாய் அமைந்தது. இள இடைநிலைக் கல்விக் காலமும் ஒரு வருடத்தால் அதி. கரிக்கப்பட்டது. மீளமைக்கப்பட்ட எண்ணக்கருக்கள், தொடர்ந்து செல்லும் கல்வி என்ற அடிப்படையில் அவ் அரசாங்கம் முழுக்கல்வி அமைப்பையும் புதுக்கிய வடிவில் அமைக்கலாயிற்று. இம் மாற்றங்கள் பாடசாலை மட்டத்தில் கல்வி தொடர்பான செலவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின. ஆரம்பக் கல்வியின் ஒரு வயதுக் குறைப்பு, இள, இடைநிலை வகுப்பின் ஒரு வருட அதிகரிப்பு என்பன தொடர்பாக ஆசிரியர்களை நியமித்தல், உள்ளமைப்பு வசதிகளை ஏற்படுத்தல் தொடர்பான செலவுகள் முன்பு காணப்பட்டதைவிட மிகவும் அதிகமாய் இருந்தன.
பொதுக்கல்வியில் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் (தரம் 1-5) உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள் (தரம் 8-10,12) பிரிவேனாக்கள், தோட்டப் பள்ளிக்கூடங்கள், தனியார் பள்ளிக்கூடங்கள் தொடர்பான செலவுகள் அடங்குகின்றன.
45 / மா.சின்னத்தம்பி

Page 25
இலங்கையில் பொதுக் கல்வி தொடர்பான செலவினங்கள் பின்வருவனவற்றின் மாற்றங்களுடன் தொடர்புடையனவாக அமைந்
தன.
பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கை (தொகை) மாணவர்களின் மொத்த எண்ணிக்கை (தொகை) ஆசிரியர்களின் எண்ணிக்கை (தொகை) தோட்டப்பாடசாலைகளின் கையேற்பு. இலவசப் பாட நூல் விநியோகம்.
இலவசச் சீருடை
இலவச மதிய உணவு
போக்குவரத்துப் பருவச்சீட்டு
1. பாடசாலைகளின் தொகை:
1971ல் 9777 ஆக காணப்பட்ட பாடசாலைகளின் மொத்த எண். ணிக்கை 1981ல் 9789 ஆக அதிகரித்துக் காணப்பட்டது. ஆனால் இக்கால இடைவெளியில் பாடசாலைகளின் எண்ணிக்கையில் கூடுதலும், குறைதலும் காணப்பட்டதை அவதானிக்க முடிகிறது. இத்தகைய எண்ணிக்கை தொடர்பான மாறுதல்கள் தொடர்ச்சியாகவே காணப்பட்டன. உள்ளுர்க் கலவரங்களால் சில பாடசாலைகள் மூடப்பட்டும், சில பாடசாலைகள் ஒருங்கிணைக்கப்பட்டும் வந்தமை இதற்குப் பிரதான காரணங்களாகக் கூறப்பட்டன. இங்கு பாடசாலைகள் 1AB, 1C,2,3 என்ற தராதர அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டிருந்தன. பாடசாலைகளின் தரத்துக்கேற்ப அவற்றுக்கான செல. வினங்களும் கூடிச் சென்றன. பாடசாலைகளில் உயர் விஞ்ஞான, வர்த்தக கலை வகுப்புக்களிருந்ததால், ஆய்வுகூட மற்றும் தங்குமிட வசதிகளுமிருந்தன. இதனால் இவற்றுக்கு செலவு கூடுதலா. யிருந்தன. இவை மொத்தப் பாடசாலைகளின் எண்ணிக்கையில் 16 சதவீதம் வரையே காணப்பட்டன. இவை ஒப்பீட்டு ரீதியில் செலவு கூடியவை. ஆனால் 1C தரத்திலுள்ள பாடசாலைகள் உயர்தரகலை வர்த்தக வகுப்புக்களை மட்டுமே கொண்டிருந்தன. "தரம் "2" வகையில் ஆரம்ப வகுப்பிலிருந்து வகுப்பு 10 வரையுள்ள பாடசாலைகளும் வகுப்பு 6லிருந்து வகுப்பு 10 வரையுள்ள பாடசாலைகளும்
இலங்கையின் கல்விச் செலவு /46

அடக்கப்பட்டன. இவை மொத்தப் பாடசாலைகளில் 44 சதவீதம் வரையே காணப்பட்டன. இவை ஓரளவு செலவு குறைந்தவை. "தரம் 3" வகையில் ஆரம்ப வகுப்பில் இருந்து வகுப்பு 5 வரையுள்ள பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டன. இவை 40 சதவீதம் வரையிலமைந்திருந்தன. இவையே குறைந்தளவு செலவுடையனவாய் இருந்தன.
அட்டவணை 53
இலங்கைப் பாடசாலைகள் 1971 - 1981
வருடம் மொத்தப்பள்ளிக் அரச பள்ளிக் ஏனைய பள்ளிக்
கூடங்கள் கூடங்கள் கூடங்கள்
1971 9736 8585 15
1972 9644 8551 1093
973 8952 7868 1084
1974 964.5 857 1074
1975 9629 9386 1058
1976 96.83 8655 028
1977 970 8673 1028
1978 9726 9072 654
1979 9626 9052 574
1980 97.94 1 7 677
1981 9789 952 358
மூலம்: இலங்கை மத்திய வங்கி மீளாய்வு அறிக்கைகள்
இலங்கையில் அரச பள்ளிக்கூடங்கள் என்பதில் ஆரம்பப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் என்பன அடங்கும். ஏனைய பள். ளிக்கூடங்கள் என்பதில் பிரிவேனாக்கள், தோட்டப் பள்ளிக்கூடங்கள், தனியார் பள்ளிக்கூடங்கள் என்பன அடங்கும்.
பாடசாலை மட்டத்தில் காணப்படும் செலவுகள் ஆசிரியர் சம்பளம், சகாயப்பயணம், என்பவற்றை மாத்திரம் உள்ளடக்குவதில்லை.
47 / மா.சின்னத்தம்பி

Page 26
தலா மாணவர் செலவுகள் ஒவ்வொரு தேவை சார்ந்தும், ஒவ்வொரு வகைப் பாடசாலைக்குமேற்ப வேறுபடுவனவாக தீர்மானிக்கப்படுவதுண்டு. 1964ம் ஆண்டு தேசிய கல்வித்திட்டதிற்கான யோசனைகளில் பின்வருமாறு ஒதுக்கிடலாம் எனப்பட்டது."
அட்டவணை 54
தலா மாணவ கல்விச் செலவு
நோக்கங்கள் தலா மாணவர்க்கான செலவு (ரூபாவில்)
ஆரம்ப பாடசாலை மகாவித்தியாலயம்
1. பேணுதல், தளபாடம்
உபகரணங்கள் O 20
2. நூல் நிலையம் 3 5
3. வேலைக்களம்,
விவசாயம், 净
மனையியல் oos 6
4.ஒவ்வொரு விஞ்ஞான
பாடத்திற்குமான
பரிசோதனைச் செலவு o 2
மூலம்: பொருளியல் நோக்கு இதழ் 7, 1976
இவற்றுடன் கனிஷ்ட பிரிவில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும், வேலைக்களம், விவசாயம், மனையியல் பாடங்களுக்கு 6 ரூபாவும், பொது விஞ்ஞானத்திற்கு 6 ரூபாவும் ஒதுக்கப்படலாம் எனப்பட்டது. இவ்வாறு பாடசாலை மட்டத்திற்கும் மாணவர் தொகைக்குமேற்ப பல்வேறு நோக்கங்களினடிப்படையில் செலவுகள் ஏற்பட்டன.
அரசாங்கம் பொதுக்கல்விமுறையுடன் இணைந்ததாக குருடர், செவிடர், குறை வளர்ச்சியுடையோர் ஆகியோருக்கான விஷேட கல்வியையும் இணைத்துள்ளது. சுகாதார, சமூகநல அமைச்சுக்களுடன் இணைந்து கல்வி அமைச்சு இதை மேற்கொள்வது தொடர்பாகவும் செலவு ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் கல்விச் செலவு /48

2. மாணவர் தொகை
மாணவர் தொகையின் அதிகரிப்பானது கல்விச் செலவிலும் அதிகரிப்பை ஏற்படுத்துவதாயுள்ளது. கல்வியின் பொருட்டு செய்யப்படும் செலவுகள், நாட்டின் சகலதுறைகளின் முன்னேற்றத்திலும் இன்றியமையாத மனித, சமூக வளத்திற்கான முதலீடாகும். இலங்கையில் தலா மாணவருக்கான பொதுக் கல்விச் செலவு தொடர்ச்சி. யாகக் கூடிச் செல்வதைக் காட்டவில்லை. ஆயினும் பொதுவான உயர்போக்குத் தென்படுகிறது.
அட்டவணை 55
தலா மாணவ கல்விச் செலவு 1971-1981
வருடம் மாணவர் தலா மாணவண் தலா மாணவனின் எணர்ணிக்கை செலவு செலவு அதிகரிப்பு (மில்லியனில்) (ரூபாவில்) வீதம்
1971 2.82 17 -
1972 2.63 220 28.6
1973 2.69 183 - 16.8
1974 2.62 189 3.2
1975 2.54 221 16.9
1976 2.56 265 12.5
1977 2.56 298 - 5.4
1978 3.08 282 1.7
1979 3.21 315 20.3
1980 3.39 379 12.7
1981 3.45 427
மூலம்: இலங்கை மத்திய வங்கி மீளாய்வு அறிக்கைகள்
அரசாங்க பாடசாலை செல்லும் பிள்ளைகளின் வறுமைநிலையைப் போக்கி கல்வியில் நாட்டம் கொள்ளச் செய்ய வேண்டுமென விரும்பி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் அதற்
49 / மா.சின்னத்தம்பி

Page 27
கேற்ப செலவு கூடி வருகிறது. ஒரு மாணவருக்கு சராசரியாக 10 சதுர அடி இடம் ஒதுக்க வேண்டுமெனப்படுகிறது. இதற்கமைய வகுப்பறைகள், நூலக வசதிகள் பெருக வேண்டியிருப்பதால் செலவுகூடும்.
அத்துடன் வறிய பிள்ளைகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்தல், இலவச பகற்போசனம் வழங்குதல், விடுதி. களை ஏற்பாடு செய்தல், புலமைப்பரிசில் வழங்குதல், கல்வி உதவிப்பணம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளிலும் பணம் செலவிடப்படுகின்றது. மாணவர் தொகையின் அதிகரிப்புக்கேற்ப இவ்வகைச் செலவுகள் கூடியே செல்லக்கூடியன.
1977இல் மீண்டும் பாடசாலை செல்வதற்கான வயதெல்லையை அரசாங்கம் குறைத்ததால் சாதாரணமாக படிப்பதற்கு குறித்த வருடத்தில் சேர்ந்தவர்களுடன் மேலதிகமாக 0.3 மில்லியன் மாணவர் சேரலாயினர். இவர்களுக்கான உள் கட்டமைப்பு வசதிகளுக்கும் மேலதிகமான பணம் செலவிட வேண்டியதாயிற்று.
1971-1981 காலப்பகுதியில் தலா மாணவனுக்கான செலவு 150 சதவீதத்தினால் கூடியிருந்தது. எனினும் இச்செலவுதளம்பிச் செல்லும் போக்கில் காணப்படுகின்றது. 1973ல் பொதுவான பொருளா. தார மந்த நிலையுடன் தொடர்புடையதாக, தலா மாணவர் செலவு 16.8 சதவீத வீழ்ச்சி காணப்பட்டது. 1978 லும் 54 சதவீத வீழ்ச்சி தென்படுகின்றது. ஆகக்கூடிய தலா செலவு 1972 ம் ஆண்டிற்கான 28.6 சதவீத அதிகரிப்பாகும்.
மாணவர் தொகைக்கேற்ப தலா செலவினடிப்படையில் மொத்தப்
பொதுச் செலவு கூடியுள்ளது. 1971-1981 காலப்பகுதியில் மாணவர் தொகை 22 சதவீதத்தினால் உயர்ந்தமை இச்செலவைக் கூட்டின.
3. ஆசிரியர்தொகை
ஆசிரியர்களே கல்வியினை செயற்படுத்துபவர்களாவர். மாணவர் தொகைக் கேற்ப ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது. பாடசாலையின் வரவுச் சராசரிகளினடிப்படையிலும் ஆசிரியர்கள் நியமனம் பெறுவதுண்டு.
இலங்கையின் கல்விச் செலவு /50

ஆசிரியர் மாணவர் விகிதம் சீராக பேணப்படுவது கல்வி வளர்ச்சியின் ஒரு படிநிலையாகும். இலங்கையில் 1971ல் 28.4 ஆக இருந்த ஆசிரியர் மாணவர் விகிதம் 1981ல் 25.6 ஆக முன்னேற்றமடைந்திருந்தது. எனினும் இவ்விகிதம் ஆசிரியர்களின் போதிய தன்மை, அல்லது அவர்களின் கிடைத்தற்தன்மை என்பவற்றின் பெறுமதியான குறிகாட்டியாக அமையாது. ஏனெனில் நேர அட்டவணை, மாணவர் தொகுதி, வகுப்பு தொடர்பான மாற்றங்களும் இவற்றுடன் தொடர்புடையன.
ஆரம்பப் பாடசாலைகளில் ஆசிரியர்களின் நியமனம் 1ம், 2ம் தரங்களில் பாடசாலை வருடத்தின் முதல் மாதம் ஒவ்வொரு 23 வரவுச் சராசரிகளுக்கு ஒருவர் என்பதாயும் 3-8ம் தரம்வரையுள்ள பாடசாலை வருடத்தின் முதல் மாத ஒவ்வொரு 27 வரவுச் சராசரிகளுக்கு ஒருவர் என்பதாயும் மேற்கொள்ளப்படலாம் எனப்பட்டது. சிரேஷ்ட பாடசாலைகளில் க.பொ.த (சாதாரண) வகுப்பின், ஆரம்ப, இறுதி நிலைகளில் மாதம் ஒவ்வொரு 25 வரவுச் சராசரிகளுக்கும் ஒரு ஆசிரியரும் நியமிக்கப்படலாம் என முன்பு விதிமுறைகளிருந்தன. இவற்றில் மாற்றங்கள் செய்யப்படக்கூடியதான நடைமுறைகள் இருந்தபோதும், வரவுச் சராசரிகளினளவே ஆசிரியர் எண். ணிக்கையை நிர்ணயம் செய்வனவாயிருந்தன.
ஆசிரியர் சம்பளக் கொடுப்பனவுகள் கல்வியின் நடைமுறைக் கொடுப்பனவுகளில் முதன்மையானவையாக காணப்படுகின்றன. ஆசிரியர் தொகையடிப்படையில் சம்பளச் செலவுகள் கூடிச் சென்றன.
1971ல் 90,625 ஆகவிருந்த அரச ஆசிரியர் எண்ணிக்கை 1981ல் 131,656 ஆக அதிகரித்திருந்தது. 1980ம் ஆண்டு நீங்கலாக, ஏனைய வருடங்களில் தொடர்ச்சியாக, ஆசிரியர் தொகை கூடியே சென்றுள்ளது. இக்காலப் பகுதியில் ஆசிரியர்களினதிகரிப்பு வீதம் 45 ஆகக் காணப்படுகிறது. இது அரசின் நடைமுறைச் செலவினை அதிகரிப்பதற்குக் காரணமாயிற்று.
ஆசிரியர் நியமனங்கள், ஆசிரியர் கல்வி, ஆசிரியர் மேம்பாடு தொடர்பாக கல்வி அமைச்சு அதிகளவு பணத்தை செலவிட வேண்டியுள்ளது. 1980களில் மாவட்ட ஆசிரியர் சேவைமுறை அறிமுகப்படுத்
51 / மா.சின்னத்தம்பி

Page 28
தப்பட்டது. விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் போன்றவற்றுக்கான ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்தில் பெறமுடியாதுள்ளது. இந்த மாவட்ட ஆசிரிய சேவை முறை அரச செலவைக் குறைக்க உதவும். கஷ்டப்பிரதேசத்தில் சேவையாற்றுவோருக்கான விஷேட கொடுப்பனவுகள் செலவுகளைப் பாதிக்கின்றன.
அட்டவணை 5.8
ஆசிரியர் எண்ணிக்கை
வருடம் அரச ஆசிரியர்களின்
எணர்ணிக்கை
1971 90,625
1972 92,558
1973 96,703
1974 98,691
1975 99,067
1976 105,950
1977 113,379
1978 125,466
1979 138,488
1980 136,714
1981 131,656
மூலம்: இலங்கை மத்திய வங்கி மீளாய்வு அறிக்கைகள்
ஆசிரியர் பயிற்சியில் 5000 ஆசிரியர்களை அனுமதிக்கக் கூடியதாக 28 ஆசிரியர் கல்லூரிகள் 1980 களில் இயங்கின. இரண்டு வருட கல்விச் செயல் திட்டம் வாண்மைக் கல்வி, புலமைத்துவக் கல்வி, பொதுக்கல்வி என்ற மூன்று நிலைகளில் வழங்கப்பட்டது. கல்வி. யமைச்சின் ஆசிரியர் கல்விப் பிரிவின் அலகும் அஞ்சல் வழிப் பயிற்சிக்கு உதவிற்று. இவை தொடர்பாகவும் செலவுகள் ஏற்பட்டன. பட்டதாரிகளை சம்பளத்துடனான ஒருவருடப் பயிற்சிக்கு அனுமதிப்பதி
இலங்கையின் கல்விச் செலவு /52

லான நிதி இழப்பும் செலவினைப் பாதிப்பதாயமைந்தது. தற்போது இவ்வாறு சம்பளத்துடன் கல்வி டிப்ளோமா நெறி கற்கச் செல்வ. தற்கு விடுமுறை வழங்கும் முறை கைவிடப்பட்டுள்ளது. இது திருப்தியற்ற நடைமுறையானாலும் அரசின் நிதிச்சுமையைக் குறைக்க இது உதவுகிறது. 2000 ஆண்டிலிருந்து மீண்டும் கல்வி விடுமுறை அனுமதிக்கப்படுகிறது.
4. தோட்டப் பாடசாலைக் கையேற்பு
தோட்டப் பாடசாலைகள் தொடர்பான செலவினங்களும் இக்காலத்தில் ஒரளவு அதிகரிக்கப்பட்டன. 1980ல் 380 தோட்டப் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றது. பின்பு அவற்றை அரச பாடசாலைகள் போல நிர்வகிக்கலாயிற்று. இது தொடர்பாக 600 ஆசிரியர்களையும் அரசு பணிக்குள் ஏற்றுக்கொண்டது. இவை அரச செலவினை உயர்த்த உதவின.
பெளத்த பிக்குமார் தர்ம கல்வி கற்பதற்கான பிரிவேனாக்கள்
முன்பு தன்னிச்சையானவையாக கருதப்பட்டாலும், 1947ன் கல்வித்
திருத்தச் சட்டம் நிதியுதவியை அரசு வழங்கும்படி செய்தது.
மாணவர்தொகைக் கேற்ப இச் செலவு அமைவதாயிற்று. 1980 ஜனவரியிலிருந்து செயற்பட்டுவந்த "புதிய பிரிவேனாச்சட்டம்" அரச
நிதி ஒதுக்கீட்டினை வற்புறுத்தியது.இக்காலத்தில் 285 பிரிவேனாக்
கள் 11,200 மாணவருடன் செயற்பட்டு வந்தன. இவற்றுக்கு சரியாக
23 மில்லியன் வரை ஒதுக்கப்பட்டு வந்தது. கட்டணம் அறவிடப்படாத
பதியப்பட்ட 25 பாடசாலைகள் 32,000 மாணவருடனும், 1500 ஆசிரி. யருடனும் செயற்பட்டு வந்தன. அரசாங்கம் அரச பாடசாலைகளைப் போலவே இவற்றுக்கும் நிதியுதவி வழங்கிற்று. ஆசிரியர் சம்பளங்களை முழுதாக அரச கொடையாக வழங்க 1980 ஜனவரியிலிருந்து தீர்மானிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
5. இலவசப் பாட நூல் விநியோகம்
பாடசாலைப் பிள்ளைகளுக்கு இலவசப் பாட நூல்களை வழங்குவதில் அரசாங்கம் ஈடுபட்டமை மேலதிகச் செலவினை ஏற்படுத்துவதாயிற்று. 1944ல் அரச சபையில் இலவசக்கல்வி பற்றிய
53 / மா.சின்னத்தம்பி

Page 29
விவாதத்தின் போது, முன்னைய ஜனாதிபதியான திரு.ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் "மாணவர்களுக்கு இலவசப்புத்தகங்களும், சீருடைகளும் அரசினால் வழங்கப்பட வேண்டும்" என வற்புறுத்தினார். இதனடிப்படையில் முதலாம் தரத்திலிருந்து பத்தாம் தரம் வரையுள்ள மாணவருக்கு இலவசப்பாட நூல்களை 1980 ஜனவரியிலிருந்து வழங்குதென தீர்மானிக்கப்பட்டது. இப்புத்தகங்கள் அரச பாடசாலைகளினதும், தனியார் கட்டணம் அறவிடுகின்ற, கட்டணம் அறவிடாத பாடசாலைகளினதும் பிள்ளைகளாகிய 3 மில்லியன் மாணவருக்கு 160 வகையான 15 மில்லியன் பிரதிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு 75 மில்லியன் ரூபா செலவாகுமென 1980 இல் மதிப்பிடப்பட்டிருந்தது.
அட்டவணை 5.7
பொதுக்கல்விச் செலவு 1971 - 1981
வருடம் நடைமுறைச் செலவு மொத்த தேசிய
(மில்லியன் ரூபா) உற்பத்தியின்
சதவீதம்
1971 483.4 3.7
1972 576.7 4.1
1973 493.0 2.9
1974 495.0 2.2
1975 562.8 2.2
1976 681.8 2.4
1977 764.8 2.2
1978 869.5 2.0
1979 1009.9 2.
1980 1284.0 1.9
1981 1473.5 ---
வருடாந்த
சராசரி 790.41 2.2
இலங்கையின் கல்விச் செலவு /54

நடைமுறைச் செலவுகள்
பாடசாலை செயற்பாடு, பராமரிப்பு, சம்பளக் கொடுப்பனவு தொடர்பான கொடுப்பனவுகள் நடைமுறைச் செலவுகள் எனப்படும். பொதுக்கல்வி தொடர்பான இத்தகைய நடைமுறைக் கொடுப்பனவுகள் 1971ல் 438.4 மில்லியனாயிருந்த 1981ல் 1473.5 மில்லியனாக கூடியது. ஆண்டு ஒன்றுக்கான சராசரிச் செலவு 790.41 மில்லியன் ரூபா வரை காணப்பட்டது.
மொத்தச் செலவுரீதியாக நோக்கும்போதுநடைமுறைச் செலவு கூடியே செல்கின்றது. ஆனால் மொத்தத் தேசிய உற்பத்தியின் சதவீதமாக நோக்கும்போது செலவு படிப்படியாக குறைந்து செல்வதையே காணமுடிகின்றது.
1971 இல் 3.7 வீதமாக இருந்த இச்செலவு 1981ல் 1.9 வீதமாக
வீழ்ச்சியடைந்து விட்டது. வருடாந்தம் சராசரியாக 2.2 சதவீதமாகவே காணப்படுகின்றது. இது திருப்தியளிக்கும் போக்காக இல்லை.
உயர் கல்வி
இலங்கையில் 1980 களில் உயர்கல்வி குறிப்பிடத்தக்களவில்
வளர்ச்சியடைந்திருந்தது. பின்வரும் உயர்கல்வி நிறுவனங்கள் இயங்கின.
உயர் கல்வி மானியக்குழு
பல்கலைக்கழகங்கள்
பல்கலைக்கழக வளாகங்கள்
சுதேசிய வைத்திய நிறுவனம்
தொழிலாளர் கல்வி நிறுவனம் மருத்துவப் பட்டப்பின்படிப்பு நிறுவனம்
பாளி, புத்தசமய கல்வி நிறுவனம்
விவசாயப் பட்டப்பின் படிப்பு நிறுவனம்.
அழகியற் கல்வி நிறுவனம்
55 / மா.சின்னத்தம்பி

Page 30
10. திறந்த பல்கலைக்கழகம் 11. தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள்
ஆய்வுக்குரிய காலப்பகுதியின் இறுதி ஆண்டான 1981ல் 8 பல்கலைக்கழகங்களும் ஒரு திறந்த பல்கலைக்கழகமும், 21 தொழில் நுட்பக் கல்விநிறுவனங்களும் இயங்கின. 1978ம் ஆண்டு 16ம் இலக்க புதிய பல்கலைக்கழகச் சட்டம் 1972ம் ஆண்டு 1ம் இலக்க இலங்கைப் பல்கலைக்கழக சட்டத்திற்கு பதிலாகக் கொண்டு வரப்பட்டது. இப்புதிய சட்டம் பல்கலைக்கழகங்களை புதிதாக தன்னாதிக்கமுள்ளதாக நிறுவவும், திறந்த பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவவும், பல்கலைக்கழகக் கல்லூரிகள் அங்கீகரிக்கப்படக்கூடிய உயர் கல்விநிறுவனங்கள் போன்றவற்றை நிறுவவும் அனுமதி வழங்கிற்று. 1978ம் ஆண்டு மார்ச் 29ந் திகதி புதிதாக திறக்கப்பட்ட உயர் கல்வி அமைச்சின் கீழ் கல்வி அமைச்சின் தொழில்நுட்பக் கல்விப் பிரிவு கொண்டு வரப்பட்டமையும் கவனிக்கத்தக்கது. இந்தப்பரப்புக்கேற்ப உயர்கல்விச் செலவும் கூடிவரலாயிற்று. இந்த உயர் கல்விச் செலவும் மாணவர் தொகை, ஆசிரியர் தொகை, கல்வி நெறிகளின் விரிவாக்கம் என்பவற்றுக்கேற்ப அதிகரிக்கும். இச் செலவுகளில் மீண்டெழும் செலவுகள் பின்வருவன தொடர்பாக வகைப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன.
1. பொது நிர்வாகமும், ஆளணிச் சேவையும்,
2 கல்விச் சேவைகள்
3 நலன்புரி சேவைகள்
4. பராமரிப்புச் சேவைகள்
5 வேறு செலவுகள்
பல்கலைக்கழக மட்டத்தில் மாணவர்களுக்கான ஆசிரியர்
விகிதம் உயர்வாயிருப்பது இச் செலவுகளின் அதிகரிப்பைத் தீர்மானிக்கிறது. இது பல்கலைக்கழக மட்டத்தில் சராசரியாக 10:1 என்ற முறையில் காணப்படுகிறது. திறந்த பல்கலைக்கழகத்தில் 107:1 என்ற முறையில் காணப்படுகின்றது. இது செலவைக் குறைக்க உதவுவதாயமைகிறது.
இலங்கையின் கல்விச் செலவு /56

மூலதனச் செலவுகளும் பின்வரும் வகைகளில் மேற்கொள். ளப்படுகின்றன.
1. நிர்மாணம்
1.1 தொடரும் வேலைகள் 1.2 புதிய வேலைகள்
2. உபகரணம், தளபாடம், நூலகம், புத்தகங்கள், சஞ்சிகைகள்.
3. வாகனங்கள்
4. முதற் சொத்துக்களின் புனரமைப்பும், பராமரிப்பும். பொதுவாக உயர் கல்விச் செலவுகளில் 80% வரை பல்கலைக்கழகங்களுக்கு உரியனவாகவே காணப்படுகின்றன. உயர்கல்விச் செலவுகளில் மூலதனச் செலவுகளின் பங்கு 1977ல் 16.4% மாயிருந்து 1981ல் 52% மாக உயர்ந்திருந்தது. இவ்வாறு மூலதனச் செலவுகளின் பங்கு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்க அம்சமேயாகும். இச் செலவின உயர்வானது புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கும் போக்கினை வெளிப்படுத்துவதாயுள்ளது.
உயர் கல்விக்கான செலவு பற்றிய தனியான புள்ளிவிபரங்கள் உயர் கல்வி அமைச்சு உருவாக்கப்பட்ட பின்பே ஓரளவு தெளிவாகக் கிடைப்பதை அவதானிக்க முடிகிறது. அதற்கு முன்பு அவற்றைத் தனியாகப் பிரித்து நோக்கும் முறைகள் புள்ளிவிபர ரீதியில் ஒழுங்காக காணப்படவில்லை.
உயர் கல்விக்கான மொத்தச் செலவு 1977ல் 59.9 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. ஆனால் 1981ல் 285.4 மில்லியனாக அதாவது 375 சதவீத அதிகரிப்பைக் காட்டிநிற்கிறது. இதே காலப்பகுதியில் நடைமுறைச் செலவினங்களைவிட மூலதனச் செலவு அதிகரிப்பு பத்து மடங்கு வரை அதிகமாகக் காணப்பட்டது.
கல்வித் திணைக்களத்தினால் ஆசிரியர் பயிற்சிக்காக செலவிடப்பட்ட தொகை 1971ல் 15.3 மில்லியனிலிருந்து 1981ல் 19.6 மில்லியனாக மாத்திரம் அதிகரித்திருந்ததையும் இங்கு ஒப்பு நோக்குதல் குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பக் கல்விக்கான செலவுகள்
57 / மா.சின்னத்தம்பி

Page 31
கல்வித்திணைக்களத்தினால் 1971லிருந்து 1978 வரை மேற். கொள்ளப்பட்டன. 1979ல் உயர் கல்வி அமைச்சின் கீழ் அவை சேர்க்கப்பட்டு விட்டன. திணைக்களம் இதற்கென 1971ல் 38.7 மில்லியன் ரூபாவைச் செலவிட்டது. ஆனால் 1978ல் 20.8 மில்லியன் ரூபா வரையே
செலவிடப்பட்டிருந்தது. இது திருப்தியற்ற போக்காகும்.
உயர் கல்வி நிறுவனங்கள் ஒரளவு வருமானம் பெறக்கூடியன வாயுமிருந்தன. ஆனால் இவ்வருமானங்கள் அவற்றின் செலவினங்களுக்குப் போதியதாக இருக்கவில்லை. ஆனால் இவை படிப்படியாக அதிகரித்து வருவதாக உயர் கல்வியமைச்சின் புள்ளிவிபரப் பதிவேடுகள் காட்டி நிற்கின்றன. 1978ல் இவ்வாறு 75.97 மில்லியன் ரூபா பெறப்பட்டது. இது 1981ல் 133.9 மில்லியன் ரூபாவாகக் கூடியிருந்தது. இவற்றின் வருமானங்கள் அரச கொடைகள் நீங்கலாக பின்வருவனவாக காணப்படுகின்றன."
1. முதலீடு, கடன்கள் ஆகியவற்றின் வட்டி 2. சொத்துக்களின் வாடகை
3. பழைய களஞ்சியம், உற்பத்திப்பண்டம். வெளியீடுகள்
என்பவற்றின் விற்பனை வருமானம்
4. பதிவுக்கட்டணம், கற்பித்தல், பரீட்சை, மருத்துவக்
கட்டணம்
5. விடுதி மீள் பெறுகைகள்,
6. நூலக தண்டம், உபகரண வாடகை, போன்றன.
இவற்றில் கட்டணங்களின் பங்கு கூடுதலாக காணப்பட்டது. அரச கொடைகள் 1978ல் 72.3 மில்லியனாக இருந்து 1981ல் 121.9 மில்லியனாக அதிகரித்துக் காணப்பட்டது.
இலங்கையின் உயர் கல்வியின் மொத்தச் செலவு மொத்த வருமானம் என்பவற்றை ஒப்புநோக்குதல் அவசியமாகிறது.
இவ்வாறு உயர்கல்விக்கான செலவுகள் கூடிச்சென்றபோதும் இவை போதுமானதல்ல. ஆராய்ச்சிகளைத் துண்டுதற்கான ஊக்குவிப்புக்களுக்கும், நூலக விஸ்தரிப்புக்கும், மாணவர் விடுதி வசதி.
இலங்கையின் கல்விச் செலவு /58

களுக்குமானநிதி ஒதுக்கீடுகள் போதியளவில் அதிகரிக்கப்படுதல் வேண்டும்.
அட்டவணை 5.8
உயர் கல்விச் செலவும் வருமானமும் 1971-1981
வருடம் மொத்தச் செலவு மொத்த வருமானம்
1971 32.40 36.30
1972 40.90 48.60
1973 34.00 39.80
1974 36.20 39.00
1975 38.30 37.30
1976 41.70 33.30
1977 52.90 45.90
1978 71.21 75.97
1979 89.00 105.10
1980 9.0 23.80
1981 139.0 33.90
மூலம்: இலங்கை மத்திய வங்கி மீளாய்வுகள்
அரச செலவுகள் உயரும்போது உயர் கல்வி வருமானங்களும் ஒரளவு அவற்றை ஈடுசெய்யக்கூடியதாக உயர்ந்துள்ளன. இதனால் எதிர்காலத்தில் அரச செலவுகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். இலங்கை தொழில்நுட்ப மாற்றங்களுக்கும், உயர் மட்ட ஆய்வுகளுக்கும் கைத் தொழில் முதலாளித்துவ நாடுகளில் தங்கியிருப்பதைக் குறைக்க உயர் கல்விக்கான செலவினங்கள் போதியளவு அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு நோக்கும் போது இச் செலவின அதிகரிப்பு போதுமானதாயில்லை.
59 / மா.சின்னத்தம்பி

Page 32
அடிக்குறிப்புகள்
1.
10.
ஜெயராசா, சபா (1987) கல்வியின் பொருளியல், அத்தியாயம் 1, கல்வித் திட்டமிடல், ப.9.
(8шршцу, ш.9.
Mahammad Shamsul Huq, (1976), Chapter, 7, Educational Systems in South East Asia, Table 7.1, p.133
இலங்கை மத்திய வங்கி, மீளாய்வு (1984) அத்தியாயம் 4, பொருளாதார சமூக நலன்புரிச் செலவுகள், ப. 102.
தேசிய கல்வித்திட்டத்திற்கான ஆலோசனைகள் 1964, அத்தியாயம் 5,நிருவாகம் (288-361/2), இலங்கை அரசாங்கம்,
i. 35.
(SuDipt Ilg, U. 35.
இலங்கை மத்திய வங்கி மீளாய்வு (1978), அத்தியாயம் 5, சமூக நலன்புரி செலவுகள், ப. 99.
தேசிய கல்வித்திட்டத்திற்கான யோசனைகள் (1964), அத்தியாயம் 6, ஆசிரியர் சேவை (91-93/1, 320-329/2), ப. 31.
Year Book - 1980.
University Grants Commission (1981) Basic Statistics on Higher Education in Sri Lanka, Colombo.
இலங்கையின் கல்விச் செலவு / 60

அத்தியாயம் 6
கல்வியும் - நலத்துறையும்
வ ளர்முக நாடுகளில் சமூகநலன் விரும்பும் அரசுகளாக அரசாங்கங்கள் தம்மைக் கருதிக்கொள்வதால் சமூகசேவைகளில் நிதியிடுவதில் பொதுத்துறை பிரதான இடம் வகிக்கிறது. இலங்கையும் இதே மாதிரி தொழிற்பாடு உடையதாக 1940 ஐத் தொடர்ந்த காலப்பகுதியிலிருந்தே செயற்பட்டு வந்துள்ளது. மலேரியா ஒழிப்பு இயக்கம், கல்வியிலுமான அரச செலவினை கட்டாயமானதாக மாற்றியமைத்தது. இலத்தீன் அமெரிக்கா, ஆசியா, மேற்கு ஆபிரிக்கா போன்ற இடங்களில் ஆரம்பக்கல்வி மட்டத்தில் 82-87 சதவீதம் வரை அரச பாடசாலைகளில் சேர்ந்துள்ளனர். இடைநிலைக் கல்வி மட்டத்தில் 67-71 சதவீதம்வரை அரச பாடசாலைகளில் சேர்ந்து உள்ளனர். பல்கலைக்கழகங்களிலும் அரசாங்கம் பிரதான இடம் வகிக்கிறது. இப்போக்கு அரச செலவில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் செலவில் மிகவும் சிறிய பங்கையே அவை வருமானமாக திரட்டுகின்றன. மாணவர் உதவிப் பணக்கொடைகள், தனியார் பாடசாலைகளுக்கான உதவிப்பணம்
61 / மா.சின்னத்தம்பி

Page 33
தொடர்பான செலவுகளும் நிதிச்சுமையை ஏற்படுத்தி வருகின்றன. வளர்முக நாடுகளில் கல்விக்கான சராசரிச் செலவு பொதுச் செல. வில் 16 சதவீதம் வரை காணப்படுகின்றது. மேற்கு ஆபிரிக்காவில் 22 சதவீதம் வரை அதிகரித்துக் காணப்படுகின்றது. இலங்கையில் சராசரியாக 6 வீதத்துக்கும் குறைவாகவே காணப்படுகின்றது.
நலத்துறைச் சேவைகள் பற்றிய வரையறைகள் நாடுகளுக்கேற்ப வேறுபடுகின்றன. பொதுத்துறைச் செலவில் நலத்துறைச் செலவுகள் வெவ்வேறு வீதங்களில் காணப்படுகின்றன. ஆபிரிக்காவில் பொதுத்துறைச் செலவில் நலத்துறைச் செலவு 62 சதவீதமாகவும், லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் 51 சதவீதமாகவும், ஆசியாவில் 30 சதவீதமாயும் காணப்படுகின்றன. தாழ்வருமான நாடுகளில் 3 சதவீதம் வரையிலேயே காணப்படுகின்றது. இலங்கையில் 3.2 சதவீதமாக (1981ல்) காணப்படுகின்றது.
கல்வி, நலத்துறை இரண்டுமே மனிதாபிமான ரீதியில் நாட்டு மக்களின் வாழ்க்கையின் மதிப்பை பேணுவதற்காக அல்லது மேம்படுத்துவதற்காக கட்டாயமாக பேணப்பட வேண்டிய துறைகளாக அரசாங்கங்கள் உணர்கின்றன. எழுத்தறிவு போலவே சிசுமரணம், தாய்மரணம், போன்றனவும் சமூக அபிவிருத்தியை வெளிப்படுத்தும் குறிகாட்டிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நீண்டகால சமூக முன்னேற்றம், ஊழியப்படையின் உற்பத்தித்திறன் என்பவற்றுடன் இச் செலவுகள் தொடர்புடையனவாயும் உள்ளன. வளர்ச்சியடைந்த நாடுகளில் மட்டுமன்றி வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலும் "எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் நலத்துறை வசதிகள்" என்ற கருத்துநிலைப் பிரசாரம் முதன்மை உடையதாகிவிட்டது. சமூகத்தின் கூட்டு மொத்தமான உற்பத்திப் பெருக்கம் என்ற நோக்கிலும் வளர்ச்சியை சமூகத்தினரிடையே நியாயபூர்வமாக பகிர்ந்து அளித்தல் என்ற நோக்குநிலையிலும் இவ்விரு துறைகளிலும் அரசாங்கங்கள் பணம் செலவிடுதல் முதன்மையானதாகி. விட்டது. வருமானப் பகிர்வினை சமூக நீதி உடையதாக மேற்கொள்வதற்கு உயர்வருமான வகுப்பினர் மீது விருத்திமுறை வரி விதிப்பினால் திரட்டிய நிதியை தாழ்வருமானம் உடையோருக்கு இச் சேவைகளை வழங்குவதற்குப் பயன்படுத்தினால் திருப்தியுடையதாயிருக்கும்.
இலங்கையின் கல்விச் செலவு /62

கல்வி, நலத்துறை ஆகியவற்றில் தனியார் மாத்திரம் ஈடுபட முடியாதநிலை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தனிப்பட்ட நுகர்வோர் இச் சேவைகளை குறைவாக மதிப்பிட்டுக் கொள்வார்கள். பல சந்தர்ப்பங்களில் சமூகரீதியில் கொடுபடக்கூடியதிலும் உயர்ந்த விலைகளை அவர்கள் அறவிட முயற்சிக்கலாம். தனியார் இதில் பூரணமாக ஈடுபடுதற்கான வளங்களை திரட்ட முடியாதநிலை ஏற்படும் போது, இத்துறை பாதிப்படையலாம். இந்த அடிப்படையில் அரசின் செலவு இத்துறைகளில் அதிகரித்து வருகின்றது.
செலவு மாற்றங்கள்
இலங்கையில் நலத்துறைப் பணிகளிலான மொத்தச் செலவு 1972ல் 272.2 மில்லியனாகவிருந்து படிப்படியாகக் கூடிச் சென்றது. ஆனால் 1973ல் கல்விச் செலவில் ஏற்பட்டது போலவே இதிலும் வீழ்ச்சி தென்படுகின்றது. 1980ல் இச்செலவு 1341.8 மில்லியனுக்கு உயர்ந்திருந்த போதும் 1981ல் 998.9 மில்லியனாகக் காணப்பட்டன. வைத்தியர் சம்பளம், மருந்துவகை, பராமரிப்புச் செலவுகள் போன்றன இதில் அட்ங்கும். இவை பெரும்பங்கினைக் கொண்டிருந்தன. இச்செலவு தொடர்ந்தும் கூடிச் சென்றது. 1981ல் 857.5 மில்லியனாக அதிகரிக்கப்பட்டிருந்தது.
மொத்த அரச செலவிலான நலத்துறைச் செலவின் பங்கு 1971ல் 70 சதவீதமாகக் காணப்பட்ட போதும் இது படிப்படியாகக் குறைந்தே வந்துள்ளது. அரசாங்கத்தின் ஏற்றுமதி வருமான உறுதியற்ற தன்மை, அரச பாதீடுகளில் பற்றாக்குறைகளின் அதிகரிப்பினால் ஏற்படும் நிதியீட்டப் பிரச்சினைகள் என்பன இவ்வகைச் செலவினங்களைக் குறைத்துச் செல்ல வேண்டிய நெருக்கடிகளை உருவாக்கின. 1978ல் இவற்றில் சதவீதம் 3.9 ஆகக் காணப்பட்டது. பின்பு சிறிதளவு அதிகரித்தபோதிலும் 1981ல் 3.2 சதவீதமாகவே காணப்பட்டன. ஆனால் கல்வியில், குறிப்பாக பொதுக்கல்வியிலான சதவீதம் 1972ல் 11.9 சதவீதமாகவும், 1978ல் 5.1 சதவீதமாகவும் காணப்பட்ட போதிலும் 1981ல் 5.5 சதவீதமாகக் காணப்பட்டன. நலத்துறைச் செலவுகளை விடவும் கல்விச் செலவு கூடுதலாகவே காணப்பட்டது.
63 / மா.சின்னத்தம்பி

Page 34
மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதமாக நோக்கினால், 1978ல் கல்விச் செலவின் பங்கு 8.5 சதவீதமாயும், நலத்துறைச் செலவின் பங்கு 4.6 சதவீதமாகவுமே காணப்பட்டன. இவற்றின்படியும் கல்விச் செலவினை விட நலத்துறைச் செலவு குறைவாக இருந்ததை அவதானிக்க முடிகின்றது.
கிடைக்கத்தக்க தரவுகளின் அடிப்படையில் தலா மாணவனுக்கான பொதுக்கல்விக்கான செலவு, தலா நடைமுறைச் செலவு போன்றவற்றை ஒப்பிட்டு நோக்க முடியும்.
அட்டவணை 6.1
தலா நலத்துறை, பொதுக்கல்விச் செலவுகள் 1971 - 1981
வருடம் தலா நடைமுறைச் தலா பொதுக்கல்விச்
செலவு நலத்துறை செலவு (ரூபாவில்) (ரூபாவில்)
1971 18.90 7
1972 24.60 220
1973 20.00 183
1974 2.98 189
1975 24.04 221
1976 28.03 265
1977 33.70 298
1978 36.53 282
1979 43.07 315
1980 50, 18 379
1981 60.64 427
மூலம்: இலங்கை மத்திய வங்கி மீளாய்வு 1983, 1984
1971-81 காலப்பகுதியில் கல்விச் செலவானது 256 ரூபாவினால் அல்லது 149.7 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. ஆனால் இதே காலத்தில் நலத்துறைக்கான தலா நடைமுறைச் செலவு (41.74) 42
இலங்கையின் கல்விச் செலவு / 64

ரூபாவினால் அல்லது 220.8 சதவீதத்தினால் அதிகரித்திருந்ததை அவதானிக்க முடிகிறது. இங்கு தலா அடிப்படையில் நலத்துறைச் செலவு கல்விச் செலவினதிகரிப்பைவிட கூடியளவான அதிகரிப்பை காட்டுகிறது. ஆயினும் நலத்துறையில் மூலதனச் செலவும், கல்வியில் உயர் கல்வி சார்ந்த செலவுகளும் உள்ளடக்கப்படாதிருப்பதால் இந்த ஒப்பீடு முழுமையானதாக கொள்ளப்பட முடியாததாயும் காணப்படுகின்றது.
இலங்கையில் சமூக நலப்பணிகள் என்பதில் கல்வி, நலத்துறை, சிறப்பு நலப்பணிகள் என்பன அடங்குகின்றன. சிறப்பு நலப்பணிகள் என்பதில்நல்நடத்தையும், பிள்ளைய்பராமரிப்பும், சமூகத் தொண்டுப்பாடசாலை, தொழில் சார்ந்த பணிகள் என்பன அடங்குகின்றன.
அட்டவணை 82
மொத்த சமூக நலச் செலவிலான கல்வி, நலத்துறை செலவுகளின் பங்கு 1971 - 1981
நடைமுறைச் செலவின் % மூலதனச் செலவின் % 6) (I5L LD கல்வி நலத்துறை கல்வி நலத்துறை
1971 64.7 3.9 42.3 26.9
1972 64.9 31.7 37.3 19.5
1973 65.7 30.6 29.1 27.5
1974 63.9 32.1 33.8 30.3
1975 64.0 3.8 26.5 43.3
1976 64.5 31.5 40.4 37.4
1977 62.9 33.3 48.6 18.
1978 62.9 33.2 25.6 29.1
1979 61.6 33.9 20.2 29.7
1980 62.6 33.4 36.6 48.2
1981 62.4 33.5 57.5 9.3
மூலம்: இலங்கை மத்தியவங்கி மீளாய்வு 1978, 1983
O) யா.சனனத்தம்பி

Page 35
இவற்றில் கல்வி, நலத்துறை தொடர்பான செலவினங்களே குறிப்பிடத்தக்களவினதாகக் காணப்படுகின்றன.
இப்புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நோக்கும்போது நடைமுறைச் செலவுகளில் கல்விச் செலவின் பங்கு 62-66 சதவீதம் வரை காணப்படுகின்றது. இதன்படி சமூகநலப்பணிகளில் கல்விச் செலவின் பங்கு எப்போதும் 61 சதவீதத்திலும் கூடுதலாக இருப்பதன் மூலம் முதன்மையான இடத்தைப் பெற்றே வந்துள்ளது. நலத்துறைச் செலவு 31-34 சதவீதம் வரை காணப்படுகின்றது. சமூகநலப் பணிகளில் இச் செலவின் பங்கு எப்போதும் 30 சதவீதத்திலும் உயர்வாக இருப்பதன் மூலம் இரண்டாவது இடத்தைப் பெற்று வந்துள்ளது. கல்விக்கான செலவில் ஏறக்குறைய அரைப்பங்கே நலத்துறையில் செலவிடப்பட்டுள்ளது.
மூலதனச் செலவு அடிப்படையில் நோக்கும்போது சமூகநல செலவுகளில் கல்விச் செலவானது 20-58 சதவீதம் வரை காணப்படுகின்றது. இதில் ஒரு சீரான போக்கு தென்படவில்லை. 1979ல் மிகக்குறைவான 20.2 சதவீதமாயுள்ள போதும் அதே அரசின் ஆட்சிக்காலத்தில் காணப்படும் 1981ல் இது 57.5 சதவீதமாகக் கூடுவதன் மூலம் நிதிப்பயன்பாட்டில் விரும்பத்தக்கநிலை ஏற்பட்டுள். ளது. அதாவது கல்வியிலான மூலதனச் செலவின் பங்கு கூடிவருவது மிகவும் சிறப்பானதாகவே கருதப்பட்டத்தக்கது. ஆனால் நலத்துறைச் செலவுகள் இதேகாலப்பகுதியில் 18-48 சதவீதம் வரை காணப்படுகின்றன. 1980ல் 48.2 சதவீதமாயிருந்த இதன் பங்கு 1981ல் 19.3 சதவீதமாக குறைக்கப்பட்டமை திருப்தியற்ற போக்காகும்.
இவற்றின்படி கல்வித்துறையில் கூடியளவு செலவிடப்படுகின்றது என்பதோடு மூலதனச் செலவுகள் அதிகரித்துவருகின்றன என்பதையும் அவதானிக்க முடிகிறது. நலத்துறையிலான பங்கு குறைவாக உள்ளது என்பதோடு இதில் நடைமுறைச் செலவுப் போக்கில் காணப்படும் உறுதியான தன்மை மூலதனச் செலவு தொடர்பாக கடைப்பிடிக்கப்படவில்லை. இது விரும்பத்தக்கதான போக்காக இல்லை. இலங்கை அரசாங்கம் ஆய்வுக்குரிய காலப்பகுதியில் கல்வியில் காட்டியளவு ஆர்வத்தை நலத்துறை தொடர்பாக வெளிப்படுத்தி இருக்கவில்லை என்பதை இச்செலவின்
இலங்கையின் கல்விச் செலவு / 66

போக்குகள் வெளிப்படுத்துகின்றன. ஆயினும் நலத்துறை பற்றிய இலங்கை அரசின் அக்கறையைக் குறைத்து மதிப்பிட முடியாது.
முழுக்குடித்தொகைக்குமான ஏற்கத்தக்க மட்டத்தில் நலவசதிகளை வழங்குவதே இலங்கை தேசிய நலத்துறைக் கொள். கையின் குறிகோளாக காணப்படுகின்றது. இக்கடப்பாடு 1980 இல் நலத்துறை அபிவிருத்திப்பட்டயத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மேலும் வலுவடைந்ததுடன் தொடக்க நல பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டமும் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது." இதன்படி தற்போதையநலத்துறை வழிவகைகள் குடித்தொகையின் வேறுபட்டதுறைகளினது நலத்துறை தரத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதனையும் அத்தகைய வசதிகள் பொதுமக்களைச் சிறந்த முறையில் அடைவதனை உறுதிப்படுத்துவதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
கல்விச் செலவு நாட்டின் நலத்துறை முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக பயன்படுத்தப்படுகின்றது. தற்போதைய சந்தர்ப்பத்தில் எங்களுடைய மக்களைத் தூண்டுவதற்கு சிறந்தவழி, சுகாதாரக்கல்வி வாயிலாகவே உள்ளது. எனினும், இது பயனளிக்க வேண்டுமானால் எங்கள் குடிஜனங்களில் பெரும்பகுதியினரிடையே நிலவும், குருட்டு நம்பிக்கைகளையும், தீங்கான பழக்கங்களையும் அகற்றும் நோக்கம் சுகாதாரக்கல்விக்கு இருக்க வேண்டியதவசியமாகும். சுகாதாரக்கல்வி குருட்டு நம்பிக்கைகளை அகற்றும் அதேவேளை தொற்று நோய்களில் கிருமிகள் எடுக்கும் பங்கு போன்ற நவீன விஞ்ஞானக் கருத்துக்களையும் போதிக்க வேண்டும் என்ற கருத்து பலமாயுள்ளது. பாடசாலைகளில் நோய்த்தடுப்பு ஊசிகள் ஏற்றப்படுதலும், அதனை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை பாடசாலை அனுமதிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறைகளும் நாடுகளில் பின்பற்றப்படுகின்றன. பாடசாலை நிதியில் ஒரு பகுதி கட்டாயமாக சுகாதாரமான சூழலைப் பேணல், சுத்தமான குடிநீர் வழங்கல், சுகாதாரமான மலசல கூட வசதிகளை ஏற்படுத்தல் போன்றவற்றுக்கும் செலவிடப்படவேண்டும் எனப்படுகிறது. நலவசதிகளை உறுதிப்படுத்தும் ஒரு செயல் திட்டமாகவே பாடசாலைப் பிள்ளைகளுக்குப் பால் விநியோகித்தல், மதிய உணவு
67 / மா.சின்னத்தம்பி

Page 36
வழங்குதல் போன்றனவும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஐக்கிய நாடுகள் தாபனங்கள், கெயர் தாபனம் போன்றனவும் இவை தொடர்பான உதவிகளை வழங்கியிருந்தன. வளர்ச்சியடைந்த நாடுகளில் வகுப்பறை மட்டத்தில் நலத்துறை தராதரங்களைப் பேணுதற்குப் பொறுப்பாக "வகுப்பறைத் தாய்"மாரும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
கல்விச் செலவின் அதிகரிப்பு சுகாதாரப் பழக்கத்தை மேம்படுத்தி சுகாதார வாழ்வினை உறுதிப்படுத்த உதவுவதாக இருக்கும். பாடசாலை மட்டத்தில் நலத்துறை வாழ்வைப் பற்றிய அறிவு போதிக்கத்தக்கதான கலைத் திட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மனைப்பொருளியல், உடல் நலவியல், உடற் பயிற்சி போன்ற பாடங்கள் போதிக்கப்படுதல் நலத்துறை மேம்பாட்டுடன் தொடர்புடையதே. அதேபோல் நலத்துறைக் கருமங்களை சீராக மேற்கொள்ள கல்வி நிறுவனங்கள் நேரடியாகவே உதவுகின்றன. தொற்று நோய் தடை, மருந்து வழங்குதல், தொற்று நோய் பற்றிய எச்சரிக்கையைப் பரப்புதல், பற்சிகிச்சை, பராமரிப்பு வசதிகளை வழங்குதல் என்பன பாடசாலை மட்டத்திலும் பரவலாக மேற்கொள்ளப்படுகின்றன. கல்வித்தரம் உயர்த்தப்படுதல் இயல்பாகவே சுகாதாரமான பழக்கங்களுக்குரியவர்களாக மக்களை மாற்ற உதவும். இலங்கையில் பெண்களின் கல்வித்தரம் கூடிச் செல்லும் நிலையும் சுகாதார வாழ்வினை உறுதிப்படுத்துவதாக காணப்படுகின்றது. பெண்களின் எழுத்தறிவு விகிதம் மகத்தான பயன்களை அளித்துள்ளதாகவும், பிறப்பு விகிதம் குறைந்து வந்தமைக்கு மட்டுமன்றி, சுகாதார சேவைகளை ஏற்றுக்கொள்ளுதல், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுதல், சுகாதார உத்தியோகத்தருடன் தொடர்பு கொள்ளுதல் போன்ற தன்மைகள் பரவியமைக்கும் உதவி உள்ளதாக பேராசிரியர் பிரியானி. ஈ. சொய்ஸா கருதுகின்றார்."
இலங்கையில் மட்டுமன்றி, பொதுவாக எல்லா நாடுகளிலுமே கல்விக்கான செலவைவிட நலத்துறைக்கான செலவுகள் குறைவாகவேயுள்ளன. 1980ம் ஆண்டின்படியான ஒப்புநிலைப்புள்ளிவிபரங்கள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.
இலங்கையின் கல்விச் செலவு /68

அட்டவணை 83
பொதுச் செலவிலான கல்வி, நலத்துறை சதவீதங்கள்
பிரதேசம் கல்வி நலத்துறை
ஆபிரிக்கா கிழக்கு 14.1 5.3 மேற்கு 2.5 4.7
ஆசியா கிழக்கும் பசுபிக்கும் 14.0 5.
தென் ஆசியா 8.8 3.7 இலங்கை 6.5 4.7
லத்தீன் அமெரிக்கா 16.4 8.2
வளர்ச்சியுறும் நாடுகள் 15.5 5.4
ஐரோப்பா, மத்திய
கிழக்கு வட ஆபிரிக்கா 14.6 4.2
உலகின் பிரதேச ரீதியில் ஒப்பிடும்போது இலங்கையின் கல்விச் செலவுகள் குறைவாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. தென் ஆசியாவின் செலவு 8.8 சதவீதமாயுள்ள போதும் இலங்கையின் செலவு அதைவிடவும், வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளின் செலவு 15.5 சதவீதமாயுள்ளபோது அதைவிடவும் குறைவாயிருப்பது தெளிவாகிறது.
நலத்துறைச் செலவுகளும் பல்வேறு பிரதேசங்களை விடவும் இலங்கையில் குறைவாகவேயுள்ளன. எனினும் மேற்கு ஆபிரிக்கா. வின் செலவினை ஒத்ததாயும், ஐரோப்பா, மத்தியகிழக்கு, வட ஆபி. ரிக்கா என்பவற்றைவிட கூடுதலாகவும் இருப்பது தெளிவாகிறது.
தொழில் ரீதியாக ஒப்புநோக்கும் போது ஆசிய நாடுகளில் விவசாயிகள் மொத்தக் குடித்தொகையில் 58 சதவீதத்தினராயுள்ள போதும் அரச பாடசாலை வளங்களில் 34 சதவீதமே அவர்களுக்கு செலவிடப்பட்டு உள்ளது. உடல் உழைப்பாளர், வியாபாரி. கள் போன்றோர் 32 சதவீதத்தினராகவும் வெள்ளுடை உத்தி
69 / மா.சின்னத்தம்பி

Page 37
யோகத்தர் 10 சதவீதத்தினராயும் உள்ளனர். அரச பாடசாலை வளங்களில் இவர்களுக்கான பங்கு முறையே 38 சதவீதமாயும், 28 சதவீதமாயும் காணப்படுகின்றது. இலங்கையிலும் விவசாயிகளைவிட நகர்ப்புற, வெள்ளுடை உத்தியோகத்தர்களே கல்வியிலான அரச வளங்களில் பெரும் பகுதியை அனுபவிக்கின்றனர். விவசாயி. கள் அதிகம் வாழும் கிராமிய மட்ட பாடசாலைகளுக்கு செலவிடப்படுவதைவிட நகர்ப்புறத்து பெரிய பாடசாலைகளுக்கு அதிக பணம் செலவிடப்படுவது இதை உறுதி செய்வதாயுள்ளது. வாய்ப்பு வசதிகள் கொண்ட பாடசாலைகள் என்றும், வாய்ப்பு வசதிகள் குன்றிய பாடசாலைகள் என்றும் வேறுபாடு நிலவுவதுடன் சமூக வர்க்கநிலை சார்ந்த கல்வியமைப்பும் தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றது. தலா மாணவனுக்குரியநிதி ஒதுக்கீட்டு முறையிலான பாரிய வேறுபாடுகள் இதை உறுதி செய்கின்றன.
அட்டவணை 64
இலங்கையில் தலா மாணவ செலவு - 1987
I F6D6) ரூபா சதம்
மகாவித்தியாலயம் - தெறிப்போ 4.75
நமுனுகுல வித்தியாலயம் - நாவல 5.52 றோயல் கல்லூரி - கொழும்பு 24.85
மூலம்: ஆய்வு 1987 நலத்துறையைப் பொறுத்து கிராமியத் துறையிலான நலத்துறை மீதான பொதுச் செலவின் அதிகரிப்பு காரணமாக சனத்தொகையில் வறிய 40 சதவீதத்தினர் சார்பு ரீதியில் கூடியளவான மானியங்களைப் பெறுகின்ற நிலை கொலம்பியா, மலேஷியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகின்றது."
இதன்படி இலங்கையில் ஒப்பீட்டு ரீதியில் ஈரான் தவிர ஏனைய நாடுகளைவிட இலங்கையில் வறிய மக்கள் கூடுதலான மானியங்க. ளைப் பெறக்கூடியதாயுள்ளமை சிறப்பான அம்சமாகும். ஏனைய வருமான வகுப்பினரைப் பொறுத்தமட்டில் ஏனைய நாடுகளில் காணப் படும் நிலையை ஒத்த போக்கே இலங்கையிலும் காணப்படுகின்றது.
இலங்கையின் கல்விச் செலவு / 70

அட்டவணை 8.5
வருமான குழுவினடிப்படையில் பொது நலத்துறை மானியங்களின் சதவீதங்கள்
வருமானக் குழுவினர்
நாடுகள் வறிய- 20%- 40% 60% 80%
20% 39% 59% 79% 100%
இலங்கை 25 2. 20 19 14
ஈரான் 30 21 19 18 13
மலேஷியா 21 26 15 22 17
பிலிப்பைன்ஸ் 14 13 15 18 40
கொலம்பியா 20 21 20 20 20
அரச நிதி திரட்டப்படுவதில் வரி வருமானங்கள் பிரதானமாய் உள்ள நிலையில் நேர்வரியில் வருமானவரிகள் விருத்தி முறை வரி விதிப்பின்படி அறவிடப்படும் போது செல்வந்தர்களிடமிருந்தே அதிகம் திரட்டப்படும். ஆனால் கல்வி, நலத்துறை மானியங்களை ஏழைகளுக்கு அதிகமாகக் கொடுக்க முடியுமானால் வருமானப் பங் கீட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த முடியும் எனப்படுகின்றது. ஆனால் இலங்கையில் 80 சதவீதம் வரை நேரில் வரிகளினால் திரட்டப்படுவதுடன் அவை அத்தியாவசிய நுகள் பண்டங்களின் மீதும் அதிகளவில் விதிக்கப்படும் போக்கும் தெளிவாகத் தென்படுகிறது. இதனால் அரச வருமானங்கள் கணிசமாக சாதாரண மக்களிடமிருந்தே திரட்டப்படுகின்றன. ஆனால் அவை செலவிடப்படும் போதுநலத்துறையைப் பொறுத்து ஏழைகளுக்கு போதியளவு செலவிடப்படும் என்பது ஒரளவுநிறுவக்கூடியதாக அமையலாம். ஆனால் கல்வி தொடர்பாக இது திருப்தி அற்றதாகவே காணப்படுகின்றது. தனிப்பட்ட செலவுகள், வேறுபாடான செலவுகளும், நன்மைகளும், அரச செலவின மாதிரிகள், பங்கீட்டுமுறைகள் போன்ற நடவடிக்கைகள் செல்வந்தர்கள் போதியளவு அரச மானியங்களைப் பெற வகை செய்கின்றன.
71 / மா.சின்னத்தம்பி

Page 38
இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், கல்வி கற்பதற்கான செலவு முழுவதும் இலவசமானது என்பதாகாது. பாடசாலைப்புத்தகங்கள், எழுது கருவிகள், போக்குவரத்துக் கட்டணங்கள் தொடர்பான செலவுகளை ஏழைகள் தாங்கிக் கொள்ள முடியாதிருப்பதனால் குடும்பத்தில் பல குழந்தைகள் உள்ள நிலையில் எல்லோரையும் பாடசாலைக்கு அனுப்பும் நிலையில் இல்லை. ஆனால் செல்வந்தர்கள் இதை தாங்கிக் கொள்ள முடிவ. தால் அதிக நலன்களைப் பெறமுடிகிறது. ஏழைகைைளப் பொறுத்தவரை அவற்றை முதலீடாகவே கருதிக்கொள்ள வேண்டியுள்ளது. தலாவருமானத்தில் இவ்வகைச் செலவின் பங்கு கூடுதலாக இருப்பதாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மலாவியில் ஆரம்ப பாடசாலைக்கு ஒரு பிள்ளையை அனுப்புவதற்கான சராசரிச் செலவுதலாவருமானத் தில் 20 சதவீதமாக காணப்பட்டது. இத்துடன் ஏழைகளின் பிள்ளைகள் கல்வி கற்பதிலான மறைமுகச் செலவுகளும் குறிப்பிடத்தக்கன. பல வறிய குடும்பங்களில் தமது பிள்ளைகள் பண்ணை வேலைகள், வீட்டு வேலைகள் போன்றவற்றில் உதவி செய்வதால் உழைக்கக்கூடிய அல்லது சேமிக்கக்கூடிய பணவருமானத்தையும் இழக்க வேண்டியுள்ளது. பெண்கள், தொழில் செய்ய வேண்டிய நிலையிலுள்ள குடும்பங்களில் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக மூத்த பெண் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைமைகளும் காணப்படுகின்றன. இவற்றின் விளைவாக அரசின் இடைநிலைக்கல்விக்கான செலவுகளில் பெரும்பகுதி ஏழைகளுக்கு கிடைக்க முடியாதநிலை தென்படுகிறது. சிறுவர் ஊழியத்தின் அதிகரிப்பானது ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகள் சார்ந்ததாகவே உள்ளது. இதனால் பாடசாலை செல்லாமல் விடுதல் ஏழைகளிடையே அதிகரிக்கிறது.
இதேபோல் மருத்துவ மனைகள் கிராமங்களில் அதிகரிக்காமை, வைத்திய சிகிச்சைக்காக காத்திருப்பதால் நாளாந்த உழைப்பு வருமானத்தை இழந்து விடுதல் போன்ற காரணங்களினாலும் ஏழைகள் மருத்துவ மானியங்களையும் போதியளவில் பெறமுடியாத நிலைகளும் காணப்படுகின்றது.
உயர் கல்வியிலும் செல்வந்தரின் பிள்ளைகளே பெருமளவு கல்வி கற்கும் வாய்ப்பு இருப்பதோடு ஆரம்பக் கல்வியை விட உயர் கல்விக்கான செலவுகளை அதிகரிக்கும் அரச செலவு பற்றிய
இலங்கையின் கல்விச் செலவு /72

கொள்கைகளும் சமனற்ற செலவுப் போக்கினைக் காட்டுகின்றன. கொலம்பியாவில் 32 சதவீதமான இடைநிலைக் கல்வி வயதினர் அரசின் அதற்கான செலவில் 19 சதவீதத்தையே பெற்றனர். இந்தோனேஷியாவில் இதே வயதினரான 76 சதவீதத்தினர் அரச செலவில் 50 சதவீதத்தையே பெற்றுள்ளனர். இலங்கையில் இவை பற்றிய தெளிவான புள்ளி விபரங்கள் கிடையாவிடினும் இதையொத்த போக்குத் தென்படுகிறது என்பதை அறிய முடிகிறது.
இவற்றின்படி இலங்கையின் கல்விச் செலவு, நலத்துறைச் செலவுகள் இரண்டும் அடிப்படை மனித தேவைகள் என்ற புரிந்துணர். வின்படி மேற்கொள்ளப்படுவதுடன் இயன்றளவு அதிகரிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் கல்விச் செலவினைவிட நலத்துறைச் செலவு குறைவாயிருப்பதும், ஏழைகள் சார்ந்ததாக இவ்வகைச் செலவினய் போக்குகள் மாற்றமடையவில்லை என்பதும் அதிருப்தியளிக்கின்ற முடிவுகளாகவே தென்படுகின்றன.
அடிக்குறிப்புகள் 1. Emmanuel Jimenez, (1986), “Research Observer - Volume 1,
Number 1, January Washington, U.S.A., p.iii. Ibid, p. iii. இலங்கை மத்திய வங்கி (1978) பொருளாதார மீளாய்வு, கொழும்பு, ப. 102 4. இலங்கை மத்திய வங்கி (1985) பொருளாதார மீளாய்வு,
கொழும்பு, ப. 120. 5. மக்கள் வங்கி (1976) பொருளியல் நோக்கு மலர் 2. இதழ் 7,
கொழும்பு, ப. 7 6. மக்கள் வங்கி (1981) பொருளியல் நோக்கு மலர் 6 இதழ்
10/11 கொழும்பு, ப. 8 7. ஜெயராசா, (1987) ஆய்வு - ஏப்ரல் யூன், யாழ்ப்பாணம், ப. 17
Emmanuel Jimenez, (1986) “Research Obsever - Volume 1, Number 1, January Washington, U.S.A., p. 113.
73 / மா.சின்னத்தம்பி

Page 39
அத்தியாயம் 7
இலங்கையின் கல்விப் பிரச்சினைகள்
லங்கையில் கல்வித்துறை சார் செலவுகள் தொகை ரீதியாக அதிகரிக்கப்பட்டிருப்பினும், கல்வி தொடர்பான எதிர்பார்க்கைகள் சார்ந்தும்,நிதியின் பயன்பாடு தொடர்பாகவும் பல்வேறு பிரச்சினை. களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இலங்கையில் வாழும் நாம் எழுத்தறிவு விகிதம், பாடசாலையில் மாணவர் சேரும் விகிதம், போன்ற மரபுவழி குறிகாட்டிகளின் அடிப்படையில் உயர்ந்த கல்வி மட்டத்திலிருப்பதாக இரகசியமாக எம்மை நாமே வாழ்த்தி வருகிறோம். ஆனால் இத்தகைய துதிபாடலிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்பதை இலங்கையின் கல்வி தொடர்பான பிரச்சினைகள் வெளிப்படுத்துகின்றன. அதேபோல் சமூகநல நோக்கு, மனித முதலீடு என்ற அடிப்படை மனப்பிரமைகளுடன் அரச நிதியில் கணிசமான பங்கு இத்துறையில் செலவிடப்பட்ட போதிலும் அவற்றின் செயலாற்றம் மனநிறைவு தருவனவாயிருக்கவில்லை. இவற்றைப் பின்வரும் பிரச்சினைகள் தெளிவுபடுத்துகின்றன.
இலங்கையின் கல்விச் செலவு /74

கல்வி முதலீட்டின் உற்பத்தித்திறனின் சமமின்மை
பல்வேறு வகையான கல்விசார் அரச செலவுகள் ஒரே மாதிரியான விளைவுகளைத் தரக்கூடியனவாயிருக்கவில்லை. பல்வேறு சமூகப் பொருளாதாரக் குழுக்கள் சார்ந்தும், இச் செலவுகள் சரியான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கவில்லை. எல்லா வகைக் கல்விச் செலவுகளினதும் உற்பத்தித் திறன் சமமாயிருக்கவில்லை.
வளர்முக நாடுகளில் பொதுவாக ஆம்பக் கல்விக்கான சமூக ரீதியிலான விளைவு வீதம் மிகவும் உயர்வாக இருந்தது. ஆரம்பக்கல்வியின் பின் இவற்றின் விளைவு வீதம் குறைவாயிருந்தது.
கல்வி தொடர்பான பாடசாலைக் காலங்கள் பூர்த்தியாக்கப்பட்டதால் கிடைத்த மேலதிக வருமானத்தை கல்வியின் நன்மையாகக் கொண்டு, அத்தகைய கல்வி கற்பதற்காக ஏற்பட்ட பணச்செலவு அவ்வாறு கற்பதற்காக, அக்காலப்பகுதியில் இழக்கப்பட்ட உழைப்பு வருமானம் என்பவற்றை உள்ளடக்கிய செலவுகள் ஒப்புநோக்கி கல்வியின் வருவாய் வீதங்கள் கணிக்கப்படுகின்றன. ஆனால் இதில் நற்பிரஜைகளினால் சமூகம் பெறக்கூடிய நலன்கள், எழுத்தறிவுள்ள குடித்தொகையினால் ஏற்படும் நலன்கள் போன்ற பணவடிவில் அளவிடமுடியாத நலன்கள் கணிப்பில் சேர்க்கப்படவில்லை. இத்தகைய நலன்கள் உயர்நிலைக் கல்வியிலும் பார்க்க கீழ் மட்டக் கல்வி நிலைகளில் அதிகம் கிடைக்கிறது. வளர்முக நாடுகளின் ஆரம்பக்கல்விக்கான இத்தகைய நலன்கள் அட்டவணை 7.1 ல் காட்டப்பட்டவாறு உயர்வாகவே உள்ளன.
கல்வியிலான செலவுகள் சமூக விளைவு வீதங்களை சமப்படுத்தக்கூடியனவாக காணப்படவில்லை. ஆரம்பக் கல்வியின் பின்பும், குறிப்பாக பல்கலைக்கழக மட்டத்திலும் இந்த சமூக பயன் வீதம் குறைவாகவே காணப்படுவதாக முதலாளித்துவ சார்பு பொருளியலாளர் கருதுகின்றனர். ஆனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சுயமான ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் பல்கலைக்கழக கல்வியிலான ஊக்கத்தைக் குறைப்பதற்கான முன்மொழி. வாகவே இவற்றைக் கொள்ள வேண்டும் என இந்நாடுகளின் கல்வி. யாளர்கள் கருதுகின்றனர். இவற்றில் தனிநபர் நோக்கில் தனிநபர்.
75 / மா.சின்னத்தம்பி

Page 40
களுக்கு ஏற்படும் செலவுகளுடன் ஒப்பிடும்போது வழங்கப்படும் மானியங்கள் மிகவும் கூடுதலாகவேயுள்ளன. தனியார் வருமான விளைவுடன் ஒப்பிடும்போது இது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது. அட்டவணை 7.1 இன் படி சமூகவிளைவுடன் தனியார் கல்வி விளைவு ஒப்புநோக்கப்படுமிடத்து, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலும், அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் இடைநிலைக்கல்வியை விட, உயர்நிலைக் கல்வியில் தனியார் கல்வி வருவாய்கள் உயர்வாக இருப்பது தெளிவாகிறது. இவ்வகையில் தான் சோசலிச நாடுகளல்லாத நாடுகளில் தாழ்வருமான நிலையிலுள்ள குடும்பங்கள் உயர்வருமான மட்டத்துக்கு நகர்த்தப்படுவதற்கு உயர்கல்வி உதவுவதாய் உள்ளது. ஆபிரிக்காவில் ஆரம்பக் கல்வியிலான தனியார் வருமான விளைவு உயர்கல்வியிலான விளைவை விடவும் மிகவும் உயர்வாயிருப்பது தெரியவந்துள்ளது.
அட்டவணை 71
பல்வேறு மட்டங்களிலான கல்வி முதலீடுகளின் வருவாய் வீதங்கள் (1978)
பிரதேசங்கள் சமூகவிளைவு வீதம் தனிப்பட்ட விளைவு வீதம்
ஆரம்ப இடைஉயர் ஆரம்ப இடை உயர் நிலை நிலை தரம் நிலை நிலை | தரம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் ஆபிரிக்கா 28 17 13 45 26 32
ஆசியா 27 15 13 31 15 18 லத்தீன் அமெரிக்கா 26 18 16 32 23 23 அபிவிருத்தியடைந்த
நாடுகள் -- 1 9 12 12
மூலம்: உலக அபிவிருத்தி அறிக்கை
தனியாரின் பாடசாலை செல்லும் வருடங்கள் அதிகரிக்க தனியார் செலவு கூடுமாயினும் அதன் அதிகரிப்பு வீதம் குறிப்பிடத்தக்கதாயில்லை. மறுபுறமாக தனியார் வருமானத்தை நோக்கினால்
இலங்கையின் கல்விச் செலவு /76

ஆரம்பக் கல்வியினால் பெறக்கூடிய வருமானத்தைவிட, இடைநிலைக் கல்வியினால் கூடிய வருமானம் தேடமுடியும். இவற்றை விடவும் மூன்றாம் நிலைக்கல்வியான உயர் கல்வியினால் உழைக்கக்கூடியதென எதிர்பார்க்கப்படும் தனியார் வருமானம் மிகவும் உயர்வாகவே இருக்கும். ஆனால் உயர்கல்வி கற்பதற்காக தனிப்பட்ட ஏனைய செலவுகளைத் தாங்கிக் கொள்வது கடினமாக இருப்பதால், உயர்கல்வியில் ஏழைகள் கற்கும் சதவீதம் குறைவாகவே உள்ளது. இதனால் ஏழைகள் தமது வருமானத்தை உயர்த்த முடியாத நிலையிலுள்ளனர்.
இலங்கையிலும் இவ்வாறான சமனற்ற உரிமை முறையே வளர்ச்சி பெற்றிருப்பது அதிருப்தியளிப்பதாகும். பாடசாலை செல்லும் வருடங்கள் அதிகரிக்கும் போது அதிக வருமானம் பெறும் வாய்ப்புக்களும் அதிகரிக்கும். ஏழைகள் மட்டத்தில் பாடசாலை மட்டத்திலான இடைவிலகல் அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் தமது வறுமையின் தொடர்ச்சியாக பாடசாலை செல்லும் வருடங்கள் குறைக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் உயர்கல்வி அதிகம் கற்பதில்லை. இந்நிலையில் உயர் கல்வியில் அரசு வழங்கும் மானியத்தில் பெரும்பகுதி ஏழைகளுக்கு கிடையாமல் போவதுடன் எதிர்காலத்திலும் போதிய வருமானம் பெறும் வாய்ப்பையும் அவர்கள் இழந்து கொண்டிருக்கின்றனர்.
விளக்கப்படம் 71
பாடசாலை மய வருடங்களும் தனியார் வருமானமும், செலவும்.
எதிர்பார் ik Süubb . Saifuuni Gasubravík
பாடசாலை முடிவடையும் வருடங்கள்
மூலம்: மூன்றாம் உலகில் பொருளாதார அபிவிருத்தி (1978)
77 / மா.சின்னத்தம்பி

Page 41
பாடசாலை வருடங்களுக்கும், சமூகநலன்கள், செலவுகள் என்பவற்றுக்கும் இடையிலான தொடர்பும் விளக்கப்படுகிறது. இதன். படி ஆரம்பக்கல்விநிலையில் சமூகரீதியிலான செலவுகுறைபோக்கிலிருந்தாலும், சமூகரீதியிலான விளைவும் வருமானமும், குறிப்பிடத்தக்களவில் அதிகரிக்கும். இங்கு சிறிய பண்ணைகள் சுயதொழில்கள் ஆகியவற்றின் உற்பத்தித்திறன் அதிகரிப்பதற்கு ஆரம்பக்கல்வி அடிப்படையாகவுள்ளது. பாடசாலை நாட்கள் மேலும் அதிகரித்துச் செல்ல, சமூக எல்லை நலன்களும் கூடுகின்றன. இடைநிலைக்கல்வி நிலையில் சமூகரீதியிலான செலவு கூடியே செல்கின்றது. பேர்மன், பேட்சல் ஆகியோரின் ஆய்வுகள் இவ்வாறு தெரிவிக்கின்றன.
இலங்கையில் மகாபொல புலமைப்பரிசில்கள் பல்கலைக்கழக மட்டங்களில் ஏழை மாணவர்களுக்கு உதவுவனவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அண்மைக்காலம்வரை ஆரம்ப பாடசாலை மட்டத்திலும், இடைநிலைப் பாடசாலை மட்டத்திலும் ஏழை மாணவர்களுக்கு உதவ இத்தகைய திட்டம் எதுவுமில்லை. ஆனால் ஏழைகளின் நலனை பரவலாக அதிகரிப்பதாயின் ஆரம்பக்கல்வியின் மீதான செலவினையே அதிகரிக்க வேண்டும். என்று விளக்கப்படுகிறது.
விளக்கப்படம் 72
பாடசாலை மய வருடங்களும் சமூக வருமானமும், செலவும்.
sys,
**
દિલ دو شب س%5-anه
பாடசாலை முடிவடையும் வருடங்கள்
மூலம்: மூன்றாம் உலகில் பொருளாதார அபிவிருத்தி (1978)
இலங்கையின் கல்விச் செலவு /78
 
 
 
 
 
 

உயர் கல்வியிலான சமூக விளைவு எதிர்க்கணியமாக அமையும் என்ற விளக்கத்தை இலங்கை போன்ற நாடுகள் ஏற்றுக்கொள்வதும் இயலாது. விஞ்ஞான ஆய்வுகள், தொழில் நுணுக்க நெறிகளின் வளர்ச்சி என்பவற்றை ஏற்படுத்தக்கூடிய புலமைத்துவக் கல்விக்கு உயர்கல்வியிலும் பணம் செலவிடுதல் அவசியமே. எதிர் காலத்தில் விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு மீண்டும் முதலாளித்துவ நாடுகளை எதிர்பார்க்கும் நிலையைத் தவிர்க்க வேண்டுமானால் உயர் கல்வியில் நிதியை ஒதுக்கீடு செய்வதும் அவசியமே. ஆனால் உயர் கல்வியில் ஏழைகள், சாதாரண விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் பிள்ளைகளுக்கான வாய்ப்புக்களை திட்டமிட்டு உருவாக்க வேண்டும். சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் என்ற இனரீதியான பல்கலைக்கழக அனுமதிமுறைக்கு மாறாக உழைக்கும் வர்க்கத்தினருக்கும், தாழ்வருமான வர்க்கத்தினருக்கும் சார்பான அனுமதி முறை உருவாக்கப்படல் வேண்டும்.
ஆனால் இலங்கையில் அத்தகைய போக்கு இல்லாதிருப்பது குறைபாடாகும். எதிர்கால தொழில் வாய்ப்பு பற்றியநிச்சயமின்மை, உலகில் வேறு நாடுகளில் தொழில் வாய்ப்புக்கள் பெற முடியாத தன்மைகள் கொண்ட கலைத்துறையில் 70 சதவீதமானவர்கள் விவசாயிகள், வர்த்தகர்கள், சாரதிகள், பொலிஸ்காரர்கள் போன்றோரின் பிள்ளைகளாயுள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன." கலைப்பீடத்தின் உற்பத்திகள் அரசதுறை தவிர்ந்த ஏனைய துறைகளில் தொழில் வாய்ப்புப் பெறுவது கடினமாயுள்ளது. இத் தேக்கநிலை கலைப்பட்டதாரிகளிடையே வேலையின்மையை அதிகரிக்கின்றது. இத்தகைய வேலைவாய்ப்புநிலைமையில் நாளைய எதிர்காலம் குறித்த அச்சம் கல்வி முறைக்கு மாறான பல்வேறு வழிகளிலும் வெளிப்படுதலைக் காணமுடியும். ஆனால் பல்கலைக்கழக முழுநேர மாணவர்களில் கலைத்துறைக் கற்கை நெறிகளில் 1972 ல் 65.2 சதவீதமானவர்களிருந்தனர். 1981/82 ல் கூட இது 59.2 சதவீதமாகவேயிருந்தது. இவ்வகையில் உயர் கல்வியிலான அரச செலவு செயற்திறனுடையதாக இருக்கவில்லை என்பதை கருத்திற் கொள்ள வேண்டும்.
79 / மா.சின்னத்தம்பி

Page 42
உயர் கல்விச் செலவின் உற்பத்தித் திறனின்மை
உயர் கல்வி எனும் போது சிறப்பாக அது பல்கலைக்கழக கல்வியையே குறிக்கின்றது. உயர் கல்வி நிதி ஒதுக்கீடுகளில் கணிசமான பங்கை அது எடுத்துக் கொள்கின்றது. ஆனால் எதிர்பார்க்கைகளை நிறைவு செய்வதில் பல்கலைக்கழகங்கள் வெற்றியடைந்துள்ளனவா என்பதே பிரச்சினையாகும். பல்கலைக்கழகங்களின் அடிப்படைக் கருதுகோள்களில் பிரதானமானவை பின்வருவனவுமாகும்.
1. ஒரு பல்கலைக்கழகத்தின் பிரதான குறிக்கோள் அறிவைப் பேணிப் பாதுகாப்பதும், பரப்புவதும், விரிவாக்குவதுமாகும். இது போதனை, ஆராய்ச்சி, விரிவாக்க வேலைகள் மூலம் சாதிக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் மற்றும் நடவடிக்கைகள் இவற்றிலிருந்தே தோன்றுகின்றன.
2. ஒரு பல்கலைக்கழகத்தின் உற்பத்தி தொழிற் சந்தையில் உயர் மட்டத்தில் உள்ளிட்டை வழங்குகிறது. பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு நிர்வாகத்திலும், உயர் தொழிற்துறைகளிலும் மிக உயர்ந்த நியமனங்கள் திறந்திருக்கின்றன.
ஆனால் இலங்கையில் அறிவைப் பரப்புவதற்கான முறையில் இவை போதியளவு அனுமதிகளை வழங்கவில்லை. எல்லோர்க்கும் இலவசக்கல்வி என்ற கொள்கை, தாய்மொழிக் கல்வி என்பவற்றால் க.பொ.த. உயர் தர வகுப்பு மாணவரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தபோது வழங்கப்பட்ட அனுமதிகள் குறைவாகவேயிருந்தன. இப்பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவான அனுமதி விகிதாசாரத்தையே இலங்கை கொண்டிருந்தது. 1943ல் விண்ணப்பித்தோரில் 56.3 சதவீதத்தினர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 1972ல் இது 10.8 சதவீதமாகவும் 1977ல் 5.9 சதவீதமாகவும் குறைந்தது.
இடைநிலைக் கல்வியில் கூடிய தொகையான இலங்கையர் பங்கு கொள்வதற்கு தடைவிதிப்பதாக இது அமையலாயிற்று. க.பொ.த. உயர்தரப் பரீட்சை நாட்டின் தீவிர போட்டிப் பரீட்சையாக
இலங்கையின் கல்விச் செலவு /80

மாறும் அளவுக்கு இது வழி வகுத்தது. கல்வியின் குறிக்கோளை இது நாசப்படுத்தியுள்ள அதேவேளை பரீட்சைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் பாடங்களை உருப்போடுகின்ற நிலைக்கு மாணவர்களைத் தள்ளியுமுள்ளது. மேலும் நாட்டின் பல இடங்களிலும் வர்த்தகரீதியான தனியார் கல்வி நிலையங்களின் தோற்றத்துக்கும் இது வழி வகுத்துள்ளது."
பல்கலைக்கழக அனுமதிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்ற போர்வையில் "பின் தங்கிய பிரதேசம்" என்ற அடிப்படை நோக்கப்பட்டது. இவ்வாறன்றி சமூகப் பொருளாதாரக் காரணிகளினடிப்படையில் இதை தீர்மானித்திருக்க முடியும். சிறுபான்மையோர், தமக்கு பாகுபாடு காட்டப்படுவதாயும் குறைகூறி, அதனைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடிகளும் ஏற்பட்டு பொதுநிதி விரயத்துடன் நாட்டில் அமைதியின்மையும் அதிகரிக்கலாயிற்று.
பல்கலைக்கழகங்கள் கலைத்துறை சார்ந்த கற்கைநெறி. களிலேயே அதிகளவு அனுமதிகளை வழங்கி வந்தன. மறுபுறத்தில் விஞ்ஞான அடிப்படையிலான கற்கை நெறிகளில் அனுமதிகள் திருப்தியற்றனவாகவே காணப்பட்டன. அபிவிருத்திப்பிரச்சினைகளுக்குரிய நிவாரணியாக விஞ்ஞானம் நீண்டகாலமாக பெயர் பெற்றிருந்தது. பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் விஞ்ஞான முறைகளைப் பிரயோகிப்பதன் மூலம் எமது வாழ்க்கைத் தரத்தில் மாற்றங்களைக் கொண்டு வரலாம். சுதந்திரமாக இயங்கும் மிகப்பலம் பொருந்திய மூலம் என அழைக்கப்படும் விஞ்ஞானம் சார்ந்த கல்வித்துறைக்கு பல்கலைக்கழக அனுமதியில் முதன்மை அளிக்கப்படாமை நிதியின் செயற்திறனற்ற தன்மையையே காட்டுகிறது. 1942ல் விஞ்ஞான நெறி சார்ந்த துறைக்கான மாணவர் விகிதம் 56.2 ஆக இருந்தது. ஆனால் 1972 ல் இது 34.8 ஆகக் குறைந்தது. 1977ல் 39.4 வீதமாகவும் 1981/82ல் 40.8 ஆகவும் மாத்திரமே உயர்ந்திருந்தது.
இலங்கையின் நீண்டகால வளர்ச்சிக்கு நவீனதுறைகளின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுதல் வேண்டும். 1970-73 காலப்பகுதிவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து விவசாயத்துறையில் 224 விஞ்ஞான, ஆராய்ச்சித்திட்டங்கள் மேற் கொள்ளப்பட்ட அதே
81 / மா.சின்னத்தம்பி

Page 43
வேளை பொறியியல், தொழில் நுட்பத்துறையில் 34 ஆராய்ச்சித் திட்டங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டமை தெரிகிறது." இலங்கை பத்து வருடகாலத்துள் ஆராய்ச்சி அபிவிருத்திநடவடிக்கைகளுக்குத் தனது மொத்த தேசிய உற்பத்தியில் 0.25 சதவீதத்தினை மாத்திரமே செலவிட்டுள்ளது. 1966 - 1975 காலகட்டத்தினை உள்ளடக்கிய தேசிய விஞ்ஞானக் கவுன்சிலின் ஆய்வின்படி விஞ்ஞான ஆராய்ச்சி அபிவிருத்திச் செலவில் 3 சதவீதத்தையே உயர் கல்வித்துறை பயன்படுத்தி உள்ளமையும் தெளிவாகிறது.”
இவற்றை நோக்கும் போது இலங்கையில் ஆராய்ச்சி அபிவிருத்தி தொடர்பாக அரசின் நிதி திருப்திகரமான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
துறைவாரியான சமத்துவமின்மை:
அரசாங்கத்தின் கல்விச் செலவு கிராமியத்துறை, நகர்ப்புறம், பெருந்தோட்டத்துறை போன்றவற்றில் சமமான முறையில் செல. விடப்படவில்லை. கல்வியானது எல்லாத்துறையிலும் ஒரே மாதிரியான பொருளாதார பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவத்தக்கதாக பரப்பப்படல் வேண்டும். இலங்கையில் இத்தகைய செயலாற்றம் காணப்படவில்லை.
இருண்ட பிரதேசம் என்றழைக்கப்படக்கூடிய ஒரு பிரதேசமி. ருப்பின் அது தோட்டத்தொழிலாளரின் கல்வித்துறையேயாகும். வரலாற்றுரீதியான கல்விப் புறக்கணிப்பு இன்னும் பெருந்தோட்டங்களில் நிலவி வருகிறது. ஏனைய துறைகளில் உள்ள கல்வித் தரத்தை விடவும் இத் துறையின் கல்வித்தரம் மிகவும் பின் தங்கியுள்ளது. பெண்களின் கல்வித்தரத்தை பொதுக்கல்விப் புள்ளிவிபரம் சிறப்பாகக் காட்டுகின்றது. இலங்கைத் தீவில் பெண்களின் கல்வியறிவு அற்ற விகிதாசாரம் 30 சதவீதமாக உள்ள அதேவேளை தோட்டத்துறையில் 52 சதவீதமாக உள்ளது." இலங்கையில் இலவசக்கல்விமுறை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதிலும் பெருந்தோட்டப் பிள்ளைகள் மிகக் குறைந்தளவு நன்மைகளையே பெற்றனர்.'
இலங்கையின் கல்விச் செலவு /82

அட்டவணை 72
நாடுமுழுதும் பெருந்தோட்ட கல்விக் குறிகாட்டிகள் 1981 / 82
ாடுமுழுதும் பெருந்தோட்டம்
எழுத்தறிவு: ஆண்கள் 89.9 78.0 பெண்கள் 81.1 52.6 இருபாலாரும் 85.4 64.8
பாடசாலை செல்லாதோர் விகிதம் - எல்லா வயதினரிலும் 15.14 36.07 இடைநிலைக் கல்வி கற்றோர் 25.77 8.46 க.பொ.த. (சாதாரணம்) 9.37 1.71 க.பொ.த (உயர்தரம்) 1.40 0.15 பட்டதாரி மாணவர் 0.11 OPM பட்டதாரிகள் 0.43 -
மூலம்: சமூக பொருளாதார ஆய்வு 1981/82
இத்தகைய புள்ளிவிபரங்கள் இலங்கையில் கல்விச் செலவுகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் ஒப்பீட்டு ரீதியில் தோட்டத்துறை கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வந்ததைக் காட்டுகிறது. இது கல்வி இலக்குகள் நிறைவேறாத நிலையை வெளிப்படுத்துவதாகும்.
இதேபோல் கிராமிய,நகர வேறுபாடுகளைக் குறைத்து கல்வித் தரத்தில் சமநிலையை ஏற்படுத்துவதிலும் இலங்கை வெற்றியடையவில்லை. தொடர்ச்சியாக எல்லாத்துறைகளிலும் கல்வி தொடர்பாக பணம் செலவிடப்பட்டு வருகின்ற போதும் துறைகட்கிடையிலான சமமின்மை அகற்றப்படவில்லை. இதனை கல்வி தொடர்பான பின்வரும் விபரங்கள் (அட்டவணை 7.3) தெளிவுபடுத்துகின்றன.
இப்புள்ளிவிபரங்களின்படி ஆரம்பக்கல்வித் தரம் மாத்திரம் நகரங்களைவிட கிராமியத்துறை சிறப்பானதாகக் காணப்படுகின்
83 / மா.சின்னத்தம்பி

Page 44
அட்டவணை 73
கிராமிய, நகர கல்விக்குறிகாட்டிகள் 1981/82
நகரம் கிராமம்
எழுத்தறிவு விகிதம்: ஆண்கள் 92.9 90. பெண்கள் 86.8 82. இருபாலாரும் 89.7 86.0
பாடசாலை செல்லாதோர்
விகிதம் - எல்லா வயதினரும் 10.64 14.51 ஆரம்பக்கல்வி 31.44 38.99 இடைநிலைக்கல்வி 30.45 26.10 க.பொ.த. (சாதாரணம்) 14.38 8.77 க.பொ.த. (உயர்தரம்) 2.44 1.25 பட்டதாரி மாணவர்கள் 0.21 0.10 பட்டதாரிகள் 0.97 0.32
மூலம்: சமூக பொருளாதார ஆய்வு 1981/82
றது. ஏனைய கல்வி நிலைகளைப் பொறுத்து நகரப் பகுதியைவிட கிராமியப் பகுதி பின் தங்கியதாகவே வளர்ந்து வருகின்றது. கிராமிய - நகர இடைவெளியைக் குறைக்கும் இலட்சியம் ஈடேறவில்லை என்பது தெளிவாகிறது.
பால் வகை சமமின்மை
கல்வித்துறையில் செலவிடும் போது சமூகத்தின் ஆண்கள், பெண்கள் ஆகிய இருசாராரினதும் கல்வித் தகுதி சம அளவில் உயர்த்தப்படல் வேண்டும் என்ற எதிர்பார்க்கையும் அடிப்படையாக அமைகிறது. ஆனால் இலங்கையில் இவ்வாறான செயற்பாடு திருப்தியளிப்பதாயில்லை. ஆய்வுக்குரிய காலப்பகுதியில், குறிப்பாக பெண்களின் கல்வித்தகுதியை அதிகரிக்கும் கோரிக்கைகள்
இலங்கையின் கல்விச் செலவு /84

வலுவடைந்தே வந்துள்ளன. பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பெண்களின் கல்விநிலை மேம்பாடுடையதுபோல் தென்படுகின்றது. ஆயினும் 1971-81 காலப்பகுதியிலான செயற்பாடுகள் "பெண் கல்வி மேம்பாடு" என்ற நோக்கில் நிறைவுடையதாக வளர்ச்சியுற்றிருக்கவில்லை.
"உணவு, உயிர் வாழ்க்கைத் தயாரிப்பாளர்கள்" எனப் பெண்கள் மரபுரீதியாகக் கருதப்படுவதனால், கற்பதற்குரிய நேரம் அவர்களுக்கு அவசியமானது எனக் கருதப்படுவதில்லை. இதன் விளைவாக மிகச்சிறிய எண்ணிக்கையிலான பெண்களே கல்வி அல்லது திறமைப்பயிற்சியினைப் பெறும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். பாட விதானம் பெண்களுக்கு மாத்திரம் பொருத்தமான தையல், சமையல் போன்ற பாடங்களை நீக்காத வரையில் கல்வியின் நோக்கம், உள்ளடக்கம் என்பன தொடர்பாக பால் வகையினரிடையே நிலவும் பாகுபாடுகளை நீக்க முடியாது. எனப்படுகிறது. சிங்கப்பூரில் தொழில்நுட்ப, விஞ்ஞான பாடங்களுக்கு சிறுமியர்கள் சேர்க்கப்படுகின்றனர். இடைநிலை வகுப்புகளில் அடிப்படை மின்சாரம், உலோக வேலை, மரவேலை என்பவற்றுக்குரிய தொழில்நுட்ப வேலைக்களத்தில் இவர்கள் வரவும் திறமையும் கட்டாயமானதாகும். மூன்றாம் நிலைக் கல்வியில் கூட இளம் பெண்கள் மின்னியல் துறைப்பாட நெறிகளைத் தெரிவு செய்வதனால் இப்பாடநெறிகளில் பெண்களின் விகிதாசாரம் ஆண்களை விடவும் கூடுதலாக இருக்கின்றது. ஆனால் இலங்கையில் குடும்ப முகாமையாளராக - ஒரு தாயாக மாற்றக்கூடிய கலைத்திட்ட முறைக்கு முதன்மையளிக்கப்பட்டு வருவதால் அவர்களைக் கல்வி ரீதியிலான உயர் தொழிலில் தடுக்கவும், அவர்களைச் சுரண்டிவிடவும் முடிகிறது. பெண்களுக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே செயலற்றிருக்க ஊக்கமளிக்கப்படுவதால் அவர்கள் பலவீனமாயிருக்கிறார்கள் எனப்படுகிறது." பெருந்தோட்டத்துறையில் இப்பால்வகை வேறுபாடு கூடுதலாயுள்ளது. இலங்கையின் நகர, கிராமிய, பெருந்தோட்டத்துறையிலான கல்வி நிலையில் ஆண்களின் நிலைக்குச் சமனாக பெண்களை உயர்த்திவிடும் இலக்கு நிறைவேறாததை புள்ளிவிபரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
85 / மா.சின்னத்தம்பி

Page 45
அட்டவணை: 7.4
ஆண், பெண் கல்வித்தகுதி பற்றிய சுட்டிகள் 1981/82
எழுத்தறிவு விகிதம் (எல்லா வயதிலும்) ஆண் பெண்
நகரம் 92.9 86.8
கிராமம் 90.1 82.
பெருந்தோட்டம் 78.0 52.6
நாடுமுழுவதும் 89.9 81.1
மூலம்: சமூக பொருளாதார ஆய்வு 1981/82
நிதி விரயம்
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் கல்வி விரிவாக்கம் தொடர்பான உறுதியற்ற பரிமாணமாக கருதப்படுவது உரிய காலத்திற்குமுன் பாடசாலையில் இருந்து இடைவிலகல் அல்லது ஒரே தரத்தில் மீளக்கற்றல் என்ற வடிவிலமையும் விரயமாகும். இது எல்லா மட்டங்களிலும் எல்லாவகைக் கல்வி தொடர்பாகவும் காணப்படக்கூடியன.
இத்தகைய அனுபவம் கல்வி வெளியீட்டை குறைத்துச் செல்வ. தன் மூலம் கல்வி முதலீட்டுக்கான வருமானத்தை குறைக்கச் செய்கின்றது. இத்தகைய இடை விலகல், மீளக்கற்றல் வகையிலான நிதி. விரயம், பற்றாக்குறையான வளங்களின் விரயத்தை அதிகரிப்பதுடன், சர்வஜனக் கல்வி இலக்கின் முன்னேற்றத்தையும் மெதுவானதாக்கி,பல்வேறுவகையில் தேவைப்படும் மனிதவலுவின் நிரம்பலை. யும் குறைக்கச் செய்து விடுகிறது. இந்த வகையில் இது பொதுமக்கள் கவனத்திற்குரிய பிரச்சினையாகவும் முதன்மை பெற்றுள்ளது.
இப்பிரச்சினை, கல்விசார் உற்பத்திப் பொறிமுறையின் உள். ளார்ந்த திறமையுடன் இணைந்த அமைப்புரீதியான பிரச்சினையாக தென்பட்டாலும், அத்தகைய ஒன்றுமட்டுமல்ல. பல்வேறு மாறிகளும் அத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. பெற்றோரின் பொருளாதார அந்தஸ்தும் உளப்பாங்கும், குடும்ப சூழலின் தராதரங்கள் பொது
இலங்கையின் கல்விச் செலவு /86

சுகாதாரம், தொடர்பூட்டல், தகுதிநிலைகள் (சிறப்பாக கிராமிய துறைகளில்), தொழில் வாய்ப்புக்கான வயதெல்லை பற்றிய உள்ளுர் பழக்க வழக்கங்களும் சட்டங்களும், கல்வித் துறையிலான வளங்களில் தங்கியுள்ள உள்ளிடுகளின் தராதரம் போன்றனவும் அத்தகையன."
இலங்கையில் 1974 ல் மேற்கொள்ளப்பட்ட பாடசாலைக் கணக்கெடுப்பின்படி பாடசாலைக் காலத்தின் பல்வேறு கட்டங்களிலும் மாணவர்களின் தொகை பாடசாலையை விட்டு விலகுதல் பற்றிய விபரங்கள் பின்வருமாறு காணப்படுகின்றன.
அட்டவணை 75
பாடசாலை மாணவர்களும் விலகுபவர்களும்
பாடசாலையில் பாடசாலையை விட்டு உள்ள மாணவர்கள் % விலகுபவர்கள் %
1ம் தரம் - 100 | 1ம் தரம் mm 5ம் தரம் - 53 5ம் தரத்தில் 47% 9ம் தரம் - 46 9ம் தரத்தில் 54% உயர் தரம்- 14 உயர்தரத்தில் 86%
மூலம்: பொருளியல் நோக்கு: டிசம்பர் 1981/ஜனவரி 1982 மலர் 7, இதழ் 9/10.
உலகவங்கியின் 1980ம் ஆண்டுக்குரிய கல்வி தொடர்பான அறிக்கையின்படி இலங்கையில் ஒரு வகுப்பில் ஒரு வருடத்திற்கு மேல் தரித்து நிற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை 1976ல் பின்வருமாறு காணப்பட்டதாக கூறப்படுகிறது.
1ம் வகுப்பில் 14% 2ம் வகுப்பில் 12% 3ம் வகுப்பில் 12% 4ம் வகுப்பில் 12% 5ம் வகுப்பில் 18%
87 / மா.சின்னத்தம்பி

Page 46
முதலாந்தர ஆரம்பக் கல்வி தொடர்பாக இலங்கையின் உண்மை நிலைமை இவ்வாறு உள்ளது. ஆரம்ப மட்டத்தில் இலங்கையின் கல்வித்துறையில் உள்ள மோசமான,குறைபாடு இதுவா. கும் என திரு.டீ. அரம்பத்த கருதுகின்றார்." உலக வங்கியின் பிரகாரம் வளர்முக நாடுகளில் சமூக வினைதிறனில் ஆரம்பக்கல்வியின் பங்கு 26.2 சதவீதமாகவும், இரண்டாந்தரக் கல்வியில் 13.5 சதவீதமாகவும் இருப்பதுடன் உயர் கல்வியில் 11.30 சதவீதமாகவும் உள்ளது.' ஆய்வுக்குரிய காலப்பகுதியில் மீளக்கற்றல் ஆரம்பக்கல்வியிலேயே அதிகமாயிருந்தமை சமூக வினைத்திறனை இழப்பதனையும், கல்வியிலான நிதி விரயத்தையும் காட்டுகின்றன. இலங்கையில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி ஆகியவற்றை உள்ளடக்கும் பொதுக் கல்வியில் பாடசாலை இடைவிலகல் இக்காலப் பகுதியில் குறைந்து செல்வதுபோல் காணப்பட்டாலும் 1977 க்குப் பின் கூடிச்செல்வது திருப்தியற்ற போக்காகும்.
இலங்கையில் பாடசாலை செல்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடனும் அரசாங்கம் கல்வித்துறையில் அதிகளவு நிதியைச் செலவிட்டது. ஆனால் இலங்கையில் பாடசாலை செல்வோரின் விகிதாசாரத்தின் அதிகரிப்பு திருப்தியளிப்பதாக இருக்கவில்லை. மூன்று தசாப்த காலத்திற்குள் இலங்கையின் சனத்தொகை 75 லட்சத்திலிருந்து 1/, கோடி அளவுக்கு இருமடங்காகி உள்ள போதிலும் பாடசாலை செல்வோரின் விகிதாசாரம் 3.7 சதவீதத்தினால் மாத்திரம் அதிகரித்துள்ளது. 6-11 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் இலங்கையின் மொத்த பாடசாலை உள்நுளைவு விகிதாசாரம் 1970ல் 82.5 ஆக இருந்தபோதும் 1975ல் 65.0 ஆக வீழ்ச்சியுற்றது. அதாவது இலங்கையில் 6-11 வயதுக்குமிடைப்பட்ட பிள்ளைகளுள் மூன்றிலொரு பங்கினர் பாடசாலை அமைப்பிற்குள் நுளைவதில்லை."
இவ்வாறு பாடசாலை இடைவிலகல், மீளக்கற்றல் விகிதாசாரம் உயர்வாயிருத்தல், உள்விளைவு விகிதாசாரம் குறைந்து செல்லுதல் போன்றவற்றால் ஆய்வுக்குரிய காலப்பகுதியின் கல்விச் செலவின் பயன்பாடு அதிருப்தி தருவதாகவே உள்ளது.
இலங்கையின் கல்விச் செலவு /88

சமூகக் குழுக்களிடையிலான சமமின்மை
கல்வி வசதிகள் சனநாயக அடிப்படையில் நாட்டின் எல்லா சமூக குழுக்களிடையிலும் நியாயமாகப் பகிரப்படல் வேண்டும். ஆய்வுக்குரிய 1971-81 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் கல்வி வாய்ப்பு தொடர்பாக திருப்திகரமான சமவாய்ப்பு நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த மாதிரியிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன. 5-13 வயதுக்குட்பட்ட பிள்ளை. களில் பாடசாலை செல்லாதோரை கவனத்தில் எடுத்து மேற்கொள். ளப்பட்ட ஆய்விலிருந்து வசதியான பாடசாலை இல்லாததால் பாதிக்கப்பட்டோர் விகிதம் இன, சமூக குழு அடிப்படையில் நியாயமாக அமைந்திருக்கவில்லை. அட்டவணை 5.6 ன்படி இந்தியத் தமிழருக்கான வசதிகள் போதியளவு வழங்கப்படவில்லை என்பதும் அதற்கடுத்து இலங்கைத் தமிழருக்கும் வழங்கப்படவில்லை என்பதையும் இது காட்டுகின்றது. இவ்வகைப் போக்கு இனங்களிடையிலான ஒற்றுமை, புரிந்துணர்வு, கூட்டு வாழ்வு என்பவற்றை விருத்தி செய்வதற்கு தடையானதாக அமைந்துள்ளது என்பதைக் கவனிக்கும் இடத்து கல்விச் செலவின் சமூக ரீதியிலான விளைவு திருப்தியற்றது என்பது தெளிவாகிறது.
அட்டவணை 78
இனக்குழு அடிப்படையில் வசதியான பாடசாலை கிடையாததால் பாடசாலை செல்லாதோர் விகிதம் 1981 / 82
இனக்குழுக்கள் பாடசாலை செல்லாதோர் விகிதம்
கண்டிச் சிங்களவர் 3.7 தாழ்நிலச் சிங்களவர் 2.9 இலங்கைத் தமிழர் 7.6 இந்தியத் தமிழர் 23.0 முஸ்லீம்கள் 1.8
மலேயர்கள் dan
பறங்கியர் mm
மூலம்: சமூக பொருளாதார ஆய்வு 1981/82
89 / மா.சின்னத்தம்பி

Page 47
கற்றோர் தொழிலின்மை
வளர்முக நாடுகளிலான கல்விசார்ந்த நிதிவிரயத்தின் மற்றொரு வடிவம் கற்றோர் தொழிலின்மையாகும். அதிகளவு கற்ற மனிதவலு சார்ந்தே அபிவிருத்திச் செயல்முறை ஏற்படலாம் என்ற நிலை உள்ளபோது, கற்றோரை அதிகளவில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புக்களும் அதிகரிப்பதில்லை. இது வளர்ச்சியைச் சிதைக்கும் ஒரு ஆபத்தான பிரச்சினையாக காணப்படுகின்றது. இலங்கையில் 1971ன்படி கல்விகற்காதோரில் வேலையற்றோர் 5 சதவீதமாக இருந்தனர். க.பொ.த. (சாதாரண) தகுதியுடனும் கூடிய தகுதியுடனும் உடையோர் வேலையற்றோரில் 28 சதவீதமாக காணப்பட்டனர். சுயமான மதிப்பீடுகள் 1970ல் 9000 பட்டதாரிகள் வரை வேலையின்றி காணப்பட்டதாக தெரிகின்றது." கல்வி வெளியீடுகளின் மாதிரிகளுக்கும், பொருளாதாரத்தின் சிலதுறைகளின் பற்றாக்குறை சார்ந்த கேள்விகளுக்கும் இடையிலான பொருத்தமின்மை இதற்குக் காரணமாகும். பாடசாலைகளைத் தொடங்குவோருக்கும், தொழில் வழங்குவோர், குடிமக்கள், இளைஞர் ஆகியோரின் விருப்பத்துக்கும் அதிக வேறுபாடு இருப்பதையும் கற்றோர் தொழிலின்மை வெளிப்படுத்துகிறது." தொழில் வாய்ப்புத் தரக்கூடிய தொழில்நுட்பக் கல்வி நெறிகள், முறைசாராக்கல்வி நெறி. கள் போன்றவற்றில் அதிக அக்கறை காட்டப்படாமல் இருப்பதே இதற்குக் காரணமாகும். கல்வி முறையானது ஊழியச் செறிவான துறைகளை விருத்தி செய்யவும், சுயதொழில் திறனையும், சுயதொழில் ஊக்கத்தையும் வளர்க்கவும் கூடியதான கல்வி நெறிகள் வளர்க்கப்படாமையும் காரணமாகும். டட்லி சீயர்ஸ் அறிக்கை இலங்கை இளைஞர்களின் வேலை பற்றிய பொருத்தமற்ற மனோபாவமே கற்றோர் தொழிலின்மைக்கு பிரதான காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது. கல்விச் செலவு மனிதவலுவை பொருளாதாரத்திற்கும், தனிமனிதனுக்கும் பயனுடையதாக்கக்கூடிய விதத்திலேயே மேற்கொள்ளப்படல் வேண்டும். இலங்கையில் அவ்வகையில் அது பயன்படுத்தப்பட்டிராமை தெளிவாகிறது.
இலங்கையின் கல்விச் செலவு /90

மூைைளசாலிகளின் வெளியேற்றம்
இலங்கையில் பொது மக்களிடமிருந்து அறவிடப்பட்ட வரிப்பணத்தில் இருந்தே பாடசாலை மட்டத்திலும், பல்கலைக்கழக மட்டத்திலும் இலவசக்கல்வி வழங்கப்பட்டது. ஆனால் இவ்வாறு கல்வித் தகைமை பெற்றவர்கள் தமது சுய நன்மை கருதி - அதாவது கூடிய சம்பளங்கள், ஆடம்பர வாழ்வு என்பன கருதிநாட்டைவிட்டு வெளியேறியதுடன், அங்கு நிரந்தரமாகத் தங்கிவிடுவோராயும் இருந்தனர். இவ்வாறு வெளியேறும் தொழிற் தகுதியுடையவர்கள் இலங்கையிலும் பற்றாக்குறையாக இருப்பவர்கள். இதனால் எமது நாட்டின் பலதுறைகள் தடைப்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது. துரிதமகாவலித்திட்ட செயற்பாடு தாமதம் அடைவதற்கும் நில அளவையாளர், தொழில் நுட்பவியலாளர் போன்றோரின் மேற்காசியாவுக்கான வெளியேற்றம் காரணம் எனப்பட்டது.
1977 மே மாதத்திலிருந்து 1976 டிசம்பர் மாதம் வரை வெளிநாடுகளில் தொழில் பெறச் சென்றோர் விபரம் வருமாறு:
வைத்தியர்கள் 1254 பொறியிலாளர் 1074 கணக்காளர் 499
பல்கலைக்கழக போதனாசிரியர் 141
தொழில் நுட்ப நிபுணத்துவம் உடையோர் 1325
இவர்களது வெளியேற்றம் தொடர்ந்தும் இடம்பெற்றது. இலங்கையில் பற்றாக் குறையாகக் காணப்படும் வினைத்திறன்கள் இவை என்பதை மனங்கொள்ள வேண்டும். உயர் மட்ட மனிதவலுவானது அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கே குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கே சென்று சேர்ந்தது? 1.1.1976 முதல் 30.6.78 வரை 20,000 பேர் மேற்காசிய நாடுகளுக்கும் சென்றனர். இவர்களும் அபிவிருத்திக்கு உதவக்கூடிய தொழில்நுட்பவியலாளர்களும், பயிற்சியுள்ள தொழிலாளர்களுமாவர். இத்தகைய வெளியேற்றம் எந்தவித ஆரம்ப செலவுகளுமின்றி மேற்குலக நாடுகள் இலங்கை மனிதவலுவி
91 / மா.சின்னத்தம்பி

Page 48
லிருந்து ஏராளமாக இலாபம் பெறுவதாக அமைகிறது. இத்தகைய மூளைசாலிகள் வெளியேற்றத்தினால் வருடாந்தம் இலங்கை இழந்தது 128 மில்லியன் ரூபாவாகும். இதனால் செல்வந்த நாடுகளுக்கு இலங்கை கொடுத்து உதவிய தொகை ஏறக்குறைய வருடாந்தம் 110 மில்லியன் ரூபா பெறுமதியானதாகும்* ஆனால் வருடாந்தம் இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைத்த மொத்த தொழில்நுட்ப உதவி 88 மில்லியன் ரூபா மாத்திரமே. இலங்கையி. லிருந்து வெளியே போகும் உதவியின் தொகை இலங்கைக்கு கிடைக்கும் தொகையைவிடவும் குறிப்பிடத்தக்களவு கூடுதலானதாகும். இதுவும் இலங்கையின் கல்விச் செலவின் நிதி விரயத்தையே விளக்குவதாயமைகிறது.
இலங்கை அரசாங்கங்கள் தேர்தல் வெற்றிகளை மனதிற்கொண்டு தமது கல்வி சார்ந்த கொள்கைகளை அடிக்கடி மாற்றி வந்தமையும், முதலாளித்துவ மனப்போக்குடையவர்கள் கல்விக் கொள்கை வகுப்போராயுமிருந்து வந்தமையும் இத்தகைய சமமின்மைக்கும், செயற்றிறனின்மைக்கும் அடிப்படையாக அமைந்தன.
அடிக்குறிப்புகள்
1. Emmanuel Jimenez, (1986) “Research Obsever - Volume 1,
Number 1, January Washington, U.S.A., p. 123.
2. Micheal P. Todaro, (1985) Economic Development in The
Third World Longman, New York, London, p. 341.
3. மக்கள் வங்கி (1987) பொருளியல் நோக்கு, மலர் 12, இதழ் 11,
பெப்ரவரி 1987, கொழும்பு, ப.8. 4. சுவர்ணா ஜயவீர, (1981) "இலங்கையில் பெண்கல்வியும் வேலை வாய்ப்பும்-பிரச்சினையின் பரிமாணங்கள்" மலர் 7,இதழ் 1, ஏப்ரல் மக்கள் வங்கி, கொழும்பு, ப. 30. 5. மக்கள் வங்கி (1983) "பல்கலைக்கழகக் கல்வி" - பொருளியல்
நோக்கு, மலர் 9, இதழ் 1, ஏப்ரல் கொழும்பு, ப. 10. 6. மேற்படி, ப. 18
7. மக்கள் வங்கி (1981) "ஆராய்ச்சி அபிவிருத்திச் செலவினங்கள்",
மலர் 7, இதழ் 6, செப்டம்பர் கொழும்பு, பக். 18.
இலங்கையின் கல்விச் செலவு /92

10.
1.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
மேற்படி, ப.18
(3DfIDLJọ, Lu. 19. மத்தியூ பீ,"(1981) தோட்டங்களில் வேலை செய்யும் பெண்கள்", மலர் 6, இதழ் 10/11, ஜன/பெய், மக்கள் வங்கி, கொழும்பு, ப.7 Nawaz Dawood, (1980), Tea and Poverty, Honk Kong, p. 139. சோண்டேர்ஸ், எப்.ஈ. (1981) "வகுப்பறையில் பாலியல் உரு அமைப்புக்கள்", பொருளியல் நோக்கு, மலர் 6, இதழ் 10/11, ஜன/ பெய், மக்கள் வங்கி, கொழும்பு, க.11.
மேற்படி, ப. 12
மேற்படி, ப. 18 Mohammad Shamsul HUQ, (1976) “Education Manpower and Development in South and South East Asia', Sterling Publishers PVT LTD, New Delhi, p. 15. அரம்பத்த, டீ. (1981) "கல்வி வெள்ளையறிக்கை முன்மொழிவுகளும்கல்வி வாய்ப்புக்களைத் தயாரித்தலும்," பொருளியல் நோக்கு, மலர் 7, இதழ் 9/10, டிசமக்கள் வங்கி, கொழும்பு, ப. 20. சுவர்ணா ஜெயவீர், (1981) "இலங்கையில் பெண்கல்வியும் வேலைவாய்ப்பும் பிரச்சினையின் பரிமாணங்கள்", பொருளியல் நோக்கு, மலர் 7, இதழ் 1, ஏப்ரல் மக்கள் வங்கி, கொழும்பு, ப. 31. மேற்படி, ப.19. Perera NM (1971) M.P. Minister of Finance, Chapter III,
Employment, "The Ecomony of Ceylon, Trendand Prospectus', Ministry of Finance, Colombo, p. 35. John Simmons,(1978) "Can Education Promote Development” Finance and Development Volume 15, Number 1, March p. 37. தேவநேசன் நேசையா, (1979)"இலங்கையின் மூளைசாலிகளின் வெளியேற்றம்", பொருளியல் நோக்கு, மலர் 4, இதழ் 12, மக்கள் வங்கி, கொழும்பு, ப. 29. மக்கள் வங்கி (1976) "மூளைசாலிகள் வெளியேற்றம்: வெளியேற்றத்தின் பரிமாணம்", பொருளியல் நோக்கு, மலர் 1,இதழ் 11, மக்கள் வங்கி, கொழும்பு, ப.3.
93 / மா.சின்னத்தம்பி

Page 49
அத்தியாயம் 8
செயற்பாடுகளும் முன்மொழிவுகளும்
இலங்கையில் அரசாங்க செலவினங்கள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டபோது கல்வித்துறையில் பூரணத்துவம் ஏற்பட்டு விட்டதாகக் கொள்ள முடியாது. எந்தவொரு குறைவிருத்தி நாட்டிலும் வளர்ச்சியும் குடித்தொகை, பற்றாக்குறையான வளங்களிடையிலான இணைப்பு சிக்கலானதாகவேயுள்ளது. இதனால் இலட்சிய ரீதியிலான எதிர்பார்க்கைகள் அனைத்தும் ஆய்வுக்குரிய காலப்பகுதியில் நிறைவேற்றப்படவில்லை. ஆயினும் இலங்கையின் கல்வி நிலையில் சில அம்சங்களில் ஒரளவு முன்னேற்றங்கள் தென்பட்டுள்ளன.
மாணவர் பாடசாலை செல்லும் விகிதம்
1981ல் ஆரம்ப வயது மாணவரில் 84%தினர் பாடசாலை சென். றனர். ஆயினும் மாவட்ட மட்டங்களில் வேறுபாடு உள்ளது. மன்னாரில் இது 43%மாகவும் கம்பஹாவில் இது 89% மாகவும் காணப்படுகின்றன.
இலங்கையின் கல்விச் செலவு /94

இவ்வாண்டில் 5-9 வயதினரில் 84%தினரும் 10-14 வயதினரில் 82%தின. ரும் 15-19 வயதினரில் 42%மும் பாடசாலை சென்றனர்.
1971ல் மாணவர் பாடசாலையில் பங்குகொள்ளும் வீதம் ஆகக் குறைந்தது 40.5% மாகவும் காணப்பட்டது. அரசமுயற்சிகளினால் இவற்றில் முன்னேற்றம் தென்பட்டது. 1981ல் மாணவர் பாடசாலையில் பங்குகொள்வீதமானது ஆகக்கூடியது 76. 8%மாக கூடியதோடு ஆகக்குறைந்த வீதம் 56.3% மாக உயர்ந்திருந்தது. மாவட்டரீதி. யாக இவற்றில் முன்னேற்றம் தென்பட்டது. மன்னார் மாவட்டம் தவிர, ஏனைய மாவட்டங்கள் பொறுத்த மிகச் சிறந்தவை - மிக மோசமானவை என்ற அடிப்படையிலமையும் வேறுபாடுகள் வெகுவாகக் குறைந்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் திருப்தியான மாற்றம் நிகழவில்லை. இவை தவிர ஏனைய மாவட்டங்களில் விரும்பத்தக்க வகையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பெண்கள் கல்வி
அரசாங்க செலவின முயற்சிகள் பெண்கள் கல்வி நிலையில்
குறிப்பிடத்தக்க வெற்றியை ஏற்படுத்தியுள்ளன. 1971 - 1981 காலப்
அட்டவணை 81
பாடசாலையில் மாணவர் பங்குகொள் வீதம் 1971
பங்குகொள் வீதம் மாவட்டங்கள்
56.8 - 64.7 யாழ்ப்பாணம், களுத்துறை, காலி, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருணாகலை, கண்டி (08)
48.7 - 52.8 அம்பாந்தோட்டை, மாத்தளை,
வவுனியா, பொலநறுவை, பதுளை,
இரத்தினபுரி, அனுராதபுரம், புத்தளம், மன்னார், நுவரெலியா (10)
40.5 - 45.3 திருகோணமலை, அம்பாறை,
மொனறாகலை, மட்டக்களப்பு (04)
95 / மா.சின்னத்தம்பி

Page 50
பகுதியில் 5 - 19 வயதுக்குட்பட்ட பெண்களின் பாடசாலை செல்லும் பங்கு 11 மாவட்டங்களில் ஆண்களை விடக்கூடியுள்ளது. அதே சமயம் 15 - 19 வயதுக்குட்பட்ட பெண்களின் பங்கு நாடுமுழுவதன் சராசரியாக கூடியுள்ளதுடன், 15 தனி மாவட்டங்களிலும் கூடியுள்ளது. ஆனால் தமிழர், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் எல்லா வயதிலும் ஆண்கள் விகிதமே உயர்வாயுள்ளது. ஏனைய மாவட்டங்களில் 5 - 19 வயதினரில் ஆண்களின் பங்கு கூடியுள்ளது. ஆனால் கிராமிய மட்டத்தில் பெண்களின் கல்வி நிலையில் மேம்பாடு போதியளவில் ஏற்படவில்லை.
அட்டவணை 82
பாடசாலையில் மாணவர் பங்குகொள் வீதம் 1981
பங்குகொள் வீதம் மாவட்டங்கள்
71.7 - 76.8 யாழ்ப்பாணம், களுத்துறை, காலி,
மாத்தறை, அம்பாந்தோட்டை, கொழும்பு, குருனாகலை, கண்டி (09)
62.5 - 68.5 மாத்தளை, வவுனியா, பொலநறுவை,
பதுளை, இரத்தினபுரி, அனுராதபுரம், புத்தளம், மன்னார், அம்பாறை (09)
56.3 - 60.9 திருகோணமலை, நுவரெலியா
மொனறாகலை, மட்டக்களப்பு (04)
வருமானப் பரம்பல்
நாடுகளின் அபிவிருத்தி நிலைமைகளை வெளிப்படுத்தும் பிரதான குறிகாட்டிகளில் ஒன்று அவற்றின் வருமானப் பரம்பலாகும். தேசிய வருமானம் நாட்டு மக்களிடையே எந்த முறையில் பகிரப்பட்டுள்ளது என்பதாகும். கல்வியானது உழைப்புச் சக்தியைத் தருவதால் வருமான சமமின்மையைக் குறைத்து சமநிலையை ஏற்படுத்தக்கூடியது. கல்வியினால் வருமான சமத்துவம் ஏற்பட வேண்டுமானால் இருநிலைமைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என (JEAN PERREJALLADE) ஜின் பெரே ஜல்லேட் கூறுகின்றார்.?
இலங்கையின் கல்விச் செலவு / 96

1) தாழ்வருமானத்தவர் உயர் வருமானத்தவரைவிட
கல்வியில் அதிகம் முதலிடவேண்டும்.
2) தாழ்வருமானத்தவரின் கல்விச் செலவுதவிர்ந்த முதலீட்டு வருமானம் உயர்வருமானத்தவர்க்குச் சமனாக இருத்தல் வேண்டும்.
இத்தகைய மாற்றங்களை இலங்கையில் ஏற்படுத்த முடியவில்லை. பிறேசில், கொலம்பியா போன்ற நாடுகளிலும் கல்வியின் நன்மைகள் செல்வந்தர்களுக்கே அதிகம் கிடைத்துள்ளன. அரசகல்வி மானியங்களை எல்லோரும் சம அளவில் பெற உரிமை உண்டு. ஆனால் செல்வந்தர்கள் தமது பிள்ளைகளை ஏழைகளிலும் பார்க்க கூடிய காலம் கல்வியில் ஈடுபடுத்துவதால் அரசமாணியங்களில் அதிகளவை அனுபவிக்கின்றனர். இலங்கையிலும் இதேநிலைமையுண்டு. அத்துடன் ஏழைகளிடமிருந்து திரட்டப்படும் நேரில்வரிகளே இலங்கையில் மிகவும் அதிகமாகும். இதனால் செல்வந்தர்கள் மீதான நேர்வரிகள் முக்கியம் இல்லை. இந்த இரு தொடர்பின்படியும் கல்வி தொடர்பான அரச நடவடிக்கைகளினால் வருமானப் பரம்பலைச் சமனாக்க முடியவில்லை. தொடக்க காலத்தில் இலங்கையின் வருமானப் பரம்பல் சீராகவேயிருந்தது. 1963 - 1973 காலப்பகுதியில் சிறந்த வருமானப் பரம்பல்கொண்ட நாடுகளில் தைவான், யூகோஸ்லாவியா, கொரியா, கோஸ்ராரிகா என்பவற்றுடன் இலங்கையும் காணப்பட்டதாக அஹல்வாலியா, கார்ட்டர்,
அட்டவணை 83
வருமானப் பரம்பலின் மாற்றம்
குடித்தொகையின் தேசிய வருமானத்தின் சதவீதம் சதவீதத்தினர் 1969 / 70 1980/81
மிகவும் தாழ்நிலை 10% 2.0 1.5
கீழ்மட்ட 40% 13.2 17.1
மிகவும் உயர்ந்த நிலை 10% 28.0 33.5
மூலம்: நுகர்வோர் ஆய்வு - 1981
97 / மா.சின்னத்தம்பி

Page 51
சேர்ணி ஆகியோரின் ஆய்வுகள் வெளிப்படுத்தின. ஆனால் அண்மைய மாற்றங்கள் சமமின்மையையே பலமாக்கியுள்ளன. இது திருப்தியற்ற விளைவேயாகும்.
முன்மொழிவுகள்
எதிர்காலத்திலும் அரசாங்கம் கல்வியிலான தன் பங்கைக் குறைத்துக்கொள்ளக்கூடாது. சமூகநீதி குலைந்துபோகாமல் அபி. விருத்தியை உருவாக்க நீண்டகால நோக்கில் அமைந்த நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும். பொருளா. தாரத் தேவைகளுக்கும் மக்கட் தொகுதிக்குமிடையே சமநிலையை உருவாக்கும் பணிகளில் அக்கறை காட்டப்படல் வேண்டும்.
1) அரசகல்விச்செலவுகள் ஏழைகளுக்குநியாயபூர்வமாகப் போய்ச் சேர்வதில் அக்கறை காட்ட வேண்டும். வளர்முகநாடுகளில் ஒரு பரம்பரையில் குடித்தொகையில் 71% தினர் ஆரம்பக் கல்வியில் ஈடுபடுகின்றபோதும் கல்வியில் ஒதுக்கப்படும் வளங்களில் 22% மாத்திரமே அவர்களுக்குக் கிடைப்பதாகவும், மாறாக உயர் கல்விக்குச் செல்லும் குடித்தொகையின் 6% தினர் மொத்த வளங்களில் 39% ஐ அனுபவிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர்ப்பதில் அக்கறை செலுத்தப்படல் வேண்டும். இதேபோல் அரசாங்கங்கள் கிராமியபாடசாலைகளில் குறைந்த அளவில் பணத்தையே செலவிடுகின்றன. கொலம்பியாவில் கிராமிய மட்டத்தில் இடைநிலைக் கல்வியில் மாணவர் தொகையில் 32% தினர் கற்கின்றனர். ஆனால் இடைநிலைக் கல்விக்கான அரச செலவில் 19% தையே பெறுகின்றனர். இந்தோனேஷியாவில் கிராமியமட்ட முது இடைநிலையில் 76% மான குடித்தொகையினர் பாடசாலை வயதில் உள்ளபோதும் அரச செலவில் 50% மே அங்கு செல்கின்றது. இலங்கையிலும் இத்தன்மை நிலவுகின்றது. தலா மாணவனுக்கான நிதி ஒதுக்கீடு கிராமியமட்டத்தில் குறைவாகவேயுள்ளது. எதிர்காலத்தில் இவ்வேறுபாடுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படல் அவசியம். இலங்கைப் பாடசாலைகளில் 30% மானவை புறக்கணிக்கப்படும் சிறிய பாடசாலைகளாயுள்ளன.
இலங்கையின் கல்விச் செலவு /98

அட்டவணை 84
தலா மாணவனுக்கான நிதி ஒதுக்கீடு
ILF6D6) நிதி ஒதுக்கீடு
ரூபா. ச
மகாவித்தியாலயம் - தெறில்பே 4. 75
நமுனுகுல வித்தியாலயம் -நாவல 5. 52
றோயல் கல்லூரி - கொழும்பு 24. 85
2)
3)
எதிர்காலத்தில் இலங்கையில் இனத்துவம் சார்ந்து கல்வி வசதிகள் வழங்குவதைக் கைவிடல்வேண்டும். மொத்தக் குடித்தொகையில் 9.3 சதவீதத்தைக் கொண்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள், பாடசாலை செல்வோர் தொடர்பான மொத்த எண்ணிக்கையில் ஒரு சதவீதமாகவேயுள்ளனர் எனப்படுகிறது. தமிழர், சிங்களவர், இந்தியத் தமிழர், முஸ்லிம் என்ற வேறுபாடுகள் அற்ற முறையில் கல்வி வசதிகளை வழங்கக்கூடியதாக அரசாங்கம் தன் செலவினங்களில் நேர்மையான நடைமுறைகளில் அக்கறை காட்டவேண்டும்.
பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் இடை விலகுவதைக் குறைக்க அதிகளவு அக்கறை காட்டப்படல் வேண்டும். ஏழைகள் தான் ஆரம்பக் கல்வியுடன் தம்படிப்பைக் கைவிட்டு விடுகின்றனர். வறுமையின் இழைகளில் கட்டுண்டு கிடக்கும் அவர். களை அரசாங்கம் மீட்கவேண்டும். மிகவும் ஏழைகளான பிள். ளைகளுக்கு இலவச உணவு, இலவச உடை, இலவச போக்கு வரத்து வசதி போன்றவற்றை வழங்கவேண்டும். பல்கலைக்கழக மட்டத்தில் "மகாபொல" பரிசுத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை விடவும் இது அவசியமானது. ஏனெனில் நமது சிறார்கள் இந்த அடிப்படை வசதிகளற்ற நிலைமைகளிலிருந்து தலை தூக்கி நிமிர்ந்து நிற்பதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல போதிய போஷாக்கு அற்ற சிறுவர்கள் பாடசாலைகளில் பின் தங்கியவர்களாக இருக்கின்றனர் என
99 / மா.சின்னத்தம்பி

Page 52
4)
5)
பேராசிரியர் மைரன்வினிக் கூறுகிறார். இதனால் இலவச நிறை உணவை அரசு வழங்குதல் மிகவும் அவசியம்.
மூளைசாலிகளின் வெளியேற்றம் பற்றிய பிரச்சினையில் அரசு அதிக அக்கறை காட்டவேண்டும். இலங்கையில் காணப்படும் திருப்தியின்மைகளே தொழில் நிபுணர்கள் வெளியேறக் காரணம் எனப்படுகின்றது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் பிரான் ஸ்டிலிற் கூறும் கருத்து இலங்கைக்குப் பொருத்தமாயுள்ளது. பதவியுயர்வுகள், புலமைப்பரி. சில்கள், கல்வி லீவு முதலியன சார்ந்த சன்மானங்கள் பெறும் வாய்ப்பு மிகவும் குறைவு அல்லது அறவே இல்லை. இதனால் ஏற்படும் விரக்தியும் எதிர்காலம் பற்றிய ஐயப்பாடும் அவர்களை நாட்டை விட்டு வெளியேறத் துரண்டுகின்றன என்கிறார்."
இலங்கையில் சிங்களவர் - தமிழர் என்ற மொழிவாரியான பேதங்களைக் கைவிட்டு தகுதியடிப்படையில் பதவியுயர்வு, புலமைப்பரிசில்கள் போன்றன வழங்கப்படுமானால் பெறுமதி மிக்க மூளைசாலிகளை நாடு இழப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
இலங்கையிலிருந்து இவ்வாறு வெளியேறுவோர் சம்பந்தமான தீர்மானங்கள் நிதானமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு வெளியேறுபவர்களால் நாட்டுக்கு அவசியமான அந்நியச் செலாவணி போதியளவில் வந்து சேர்வது மிகவும் பயனுடையதே. ஆனால் எமது சுய வளாச்சி தடைப்படாத மாதிரிமாற்று ஒழுங்குகளில் அக்கறை காட்டப்படல் வேண்டும். பல்கலைக்கழகங்களில் கேள்வி அதிகம் உள்ள கற்கை நெறிகளில் போதியளவு மாணவரைச் சேர்த்து கற்பித்தல் வேண்டும். சிவில் பொறியியலாளர்கள். விவசாய தொழில்நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானப் பட்டதாரிகள் ஆகியோரை அதி. கரிக்கக்கூடியதாக நிதி, ஆளணி ஒதுக்கீடுகளைச் செய்தல் வேண்டும்.
அபிவிருத்தியுடன் இணைந்து செல்வதாக கல்விமுறை விருத்தி செய்யப்படுதல் வேண்டும். இலங்கையில் தீவிரமான பொருளா. தார மாற்றங்களில்லாமலேயே கல்வி தன் போக்கில் வளர்ச்சி. யடைந்தது. கல்வி, வேலை வாய்ப்பு என்பவற்றினிடையிலான
இலங்கையின் கல்விச் செலவு / 100

6)
சமவலுவின்மை தேசிய அபிவிருத்திக் கொள்கையில் சமூக, பொருளாதார இரட்டைத் தன்மையைப் பிரதிபலித்தது. இவற்றை இணைத்துப் பொருத்திச் செல்வதில் கல்வி வலுவற்றிருந்தது. உழைப்பாளர் படையை பயன்படுத்தக்கூடிய அளவுக்குத் திறமையானமுறையில் பொருளாதாரம் அபி. விருத்தியுறாத நிலையில் கல்வி விரிவடைந்தாலும், விரிவடையாவிட்டாலும், பாரியளவிலான வேலையின்மை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். கல்வியானது பொதுவான வேலையின்மையை படித்தோர் வேலையின்மையாக மாற்றும் பணியை மட்டுமே செய்தது.
கல்வியால் மட்டும் தொழில் வாய்ப்பைப் பெருக்க முடியாது. "கானா"வில் பாடசாலைகளைத் தொழில்கூடமாக மாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. பர்மாவில் தொழில்நுட்பக் கல்வியில் பெருந்தொகையான முதலீடு செய்யப்பட்டபோதும் அங்கு திறன்வாய்ந்த தொழில் நுட்ப ஆளணியினரின் தொழி. லின்மை அதிகரித்துவிட்டது. இதனால் பொருளாதார வளர்ச்சி சார்ந்த முதலீடுகளை விரிவுபடுத்தும் எத்தனங்களைக் குறைக்காமலே கல்வியிலான செலவினங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கையின் தேசிய உற்பத்தியில் 25% வரையிலும் தொழில் வாய்ப்பில் 50% வரையிலும் வழங்கும் துறை விவசாயத்துறையேயாகும். ஆனால் இத்துறையிலான கல்வித்துறைத் தொடர்பு போதியளவில் இல்லை. பாடசாலை மட்டத்திலிருந்து விவசாயக்கல்வி, விவசாயச் செயல்முறை, மாதிரிப்பண்ணையில் வெளிக்களப் பயிற்சி கடல்வளக் கல்வி என்பவற்றை ஏற்படுத்தவேண்டும். வேளாண்மை அபிவிருத்தி ஆராய்ச்சி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் வேளாண்மைப் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். அவற்றின் செயற்திறனும் அதிகரிக்கப்படல் வேண்டும்.
விவசாயக் கற்கை நெறிகள் கிராமிய மட்டத்தில் விவசாயிகளுடன் தங்கியிருந்து அவர்களின் தேவைகள், பிரச்சினைகள் என்பவற்றைக் கண்டறிந்து அதனடிப்படையில் வடிவமைக்கப்
101 / மா.சின்னத்தம்பி

Page 53
பட்டனவாக அமைதல் வேண்டும். விதையினம், பசளை உபயோகம், மண் பரிசோதனை, நீர் முகாமை போன்றவற்றில் கூடிய அக்கறை விவசாயபீடங்களால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதேபோல் பல்கலைக்கழக பொறியியற் பீடத்தினரும் பொருத்தமான, சிக்கனமுடைய புதிய விவசாய உபகரணங்களையும், கருவிகளையும் கண்டுபிடிப்பதிலும், மாற்றியமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அதில் அரசாங்கம் கூடிய நிதியை ஒதுக்க வேண்டும். தனியாக விவசாயப் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்படவேண்டும். இதில் மீன்பிடித்துறை வளர்ச்சியிலும் அதிக நாட்டம் செலுத்தப்பட வேண்டும். காடு வளர்ப்பு பற்றி கூடியளவு புதிய முயற்சிகளை பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ளவேண்டும். பல்கலைக்கழகங்கள் அறிவை இடம் மாற்றுவோராகவன்றி, அறிவை உருவாக்குவோராகவும், மேம்படுத்துவோராகவும் இருத்தல் வேண்டும்.
7) தொழில்நுட்பக் கல்வி, தொழிலிடப் பயிற்சி, உயர்நிலை தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கள் என்பவற்றில் கூடியளவு கவனம் செலுத்தப்படல் வேண்டும். சோவியத் ருஸ்யாவைப் பின்பற்றி இதில் நடந்து கொள்ளலாம். அங்கு பாடசாலைகள், தொழிற்சாலைகள், கடைகள், பண்ணைகள், மருத்துவ மனைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என்பவற்றிடம் தொழில் நுட்பக்கல்வி கையளிக்கப்பட்டுள்ளது. அவை உயர் பாடசாலை மாணவர்களுக்கு நடைமுறைத் தொழிற்பயிற்சி வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது? எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் தொழிற் பயிற்சி என்ற முறையில் இலங்கையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டால் தொழிலின்மை ஏற்படாது தடுப்பதுடன், நிதியின் பயன்பாடும் உச்சமடையும். சமூக பேதங்களை அகற்றக்கூடிய வகையில் எல்லா வகைத் தொழிற்பயிற்சிக்கும் சமமான முதன்மையளித்து வந்தால் குறுங்காலத்திலில்லாவிடினும் நீண்டகாலத்தில் இவை வெற்றியளிக்கும். பயிற்சிக் காலங்களை பிரதேச இயல்புகளுடன் தொடர்புபடுத்தி மேற்கொள்ளலாம்.
இலங்கையின் கல்விச் செலவு / 102

8)
கல்வியின் ஸ்தாபன அமைப்புக்களில் தொழிலாளர் கல்வியை முதன்மைப்படுத்த வேண்டும். அத்தகைய கல்விக்குரிய பாடவிதானங்களை உருவாக்குவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அபிவிருத்தியுற்ற உலகிற் கூட ஏழைகளையும், தொழிலாளரையும், விவசாயிகளையும் கல்வி அப்புறப்படுத்தி வைத்துள்ளது." ஏனெனில் அவர்களது கல்விக்கேற்ற உள்ளார்ந்த பாடவிதானத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கத் தக்க ஆய்வுகள் வளரவில்லை. மொழி ஆற்றலையும் விருத்தி செய்து, தொழிலாளர் தமது விடுதலைக்கு உழைக்கக்கூடிய தகுதியை வழங்கக்கூடியதாக அவர்கள் கல்வியில் நாட்டம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அபிவிருத்தியில் அவர்கள் தீவிர பங்கேற்க முடியும்.
இத்தகைய பல்வேறு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவ
தால் எதிர்காலக் கல்விச் செலவினங்களில் பூரண பயன்பாட்டைப் பெற முடியும் என எதிர்பார்த்தல் முடியும்.
அடிக்குறிப்புகள்
1.
Ministry of Planning and Implementation, (1984)Public Investment Programme 1984 - 1988, Colombo.
JEAN PIERRE JALLADE, (1979) “Financing Education for Income Distribution' in FINANCE AND DEVELOPMENT March, 1979, Vol. 16, Number 1, p. New York: p. 33.
IBID., p. 33
ஜெயராஜா, சபா (1987) "சமூகத்தேவைகளை பூர்த்தி செய்வதில் எமது கல்வி முறையின் ஆற்றாமை", ஆய்வு, ஏப்ரல்-யூன் கொக்குவில், ஆய்வு நிறுவனம்: பக். 7
Ibid., p. 7
மக்கள் வங்கி ஆராய்ச்சிப்பிரிவு (1979)"சிறுவரும் அபிவிருத்
தியும்", பொருளியல் நோக்கு, மலர் 4, இதழ் 12, கொழும்பு; மக்கள் வங்கி, பக். 6
I03 / மா.சின்னத்தம்பி

Page 54
7. சுசான் லீம், (1979) "மூளைசாலிகளின் வெளியேற்றம் - மலேஷிய அனுபவம்" பொருளியல் நோக்கு, மலர் 4, இதழ் 10/ 11, ஜன! கொழும்பு: மக்கள் வங்கி, பக். 33.
8. அனிஸா வேட், (1979)"இலங்கையில் கல்வி - சில உண்மைகளும் சில பொய்களும்" பொருளியல் நோக்கு, மலர் 4, இதழ் 12, கொழும்பு: மக்கள் வங்கி பக். 21.
9. GENIN ADI FYODOROV, (1987) THE RUSSIAN FEDERATION: THE PUBLIC EDUCATION SYSTEM, Novosti Press Agency Publishing House: Moscow, p. 4.
10. உடகம, பி (1976) "கல்வியின் பாரம்பரியமற்ற வடிவங்கள்" பொருளியல் நோக்கு, மலர்2, இதழ் 5, கொழும்பு:மக்கள் வங்கி
lä5. 27.
இலங்கையின் கல்விச் செலவு / 104


Page 55
SBN 955-1204-01-8
நூலாசிரியர்
T-366) ஆசிரிய ಟ್ವಿಟ್ಟೀ பணியாற்றி துறையிலும் କ୍ଷୁଣ୍ଟୁ
முதுமாணிப்பு | jမ္ဟုန္ဟစ္ထိ (၂ါရို့)
இருந்து கல்:
இரண்டும் இ
assogi (Eco துறையில்
а стани.
என்னோடு கல்வியும் ம இரு நூல்க ໆ. போதும் அ6 பரந்த அறி முடிந்தது
என்பவற்றைக் இருந்துவரும்
தெளிந்த வி
இலங்கைவா
ç Ü ၂f† g:ွဋ်)၉ါဣ)၊ தனித்துவமா யாழ்ப்பாணப் துறையின் த6 பின்படிப்புக் ஊக்கமுடனு பெருமை
இவர் எழு ஆசிரியர்களு பணியாற்றும் 56) Gufujauonto
560600TLIFT5 -
இந்நாலுக்கு வரவேற்டை
GaucrărGGET
GLINJITěřftur
கல்வியியல் கொழும்புப்
 

மா. சின்னத்தம்பி அவர்கள் ஆசியராகவும் பல்கலைக்கழகத்தின் ல்வித் துறையிலும் நீண்டகாலம் அனுபவம் பெற்றவர் பொருளியல்
கல்வியல் துறையிலும் ஆய் செய் இரு துறைகளிலும் சட்டம் பெற்றவர் இவர் அடிப் பொருளியல் துறைசார்ந்தவராக வியலிலும் துறை போகக்கற்று இந்த இணைந்த துறையான பொருளியல் nomics of Education) argrgh ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக
இணைந்து கல்வித் திட்டமிடல் னித வள விருத்தியும் ஆகிய ளை எழுதியபோதும் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்ட வருடைய கல்வியியல் துறைசார்ந்த வினை என்னால் இனங்கான ஆங்கிலத்தில் வெளிவரும் புதிய ஆய்வுச் சஞ்சிகைகள் கற்றறிந்து உலகளவில் தற்போது கல்வியல் செல்நெறிகள் பற்றி ந்த புரிந்துணர்வைக் கொண்டவர் தி அனைத்து தமிழர்களினதும் பொறுத்தவரையில் ஓர் * உன்னதமான இடத்தைப் பெறும் பல்கலைக் கழகத்தின் கல்வியியல் லைவராக இவர் இருந்து பல பட்டப்
கற்கை நெறிகளை ம் உற்சாகத்துடனும் நடத்தி வரும்
இவருக்கு 2 fuugi.
தி வெளியிட்டுள்ள இந்நால் க்கு மட்டுமன்றி கல்வித்துறையில்
உயர் கல்வியியலாளர் ஆசிரிய
ஆகியோருக்கும் 월 அமையும் என்பது எமது நம்பிக்கை
தமிழ் கூறும் கல்வியுலகம் உரிய வழங்கவேண்டுமென்பது எமது
சோ. சந்திரசேகரம்
பல்கலைக்கழகம்